கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுதொழில் முயற்சியாளர்

Page 1
சிறுதொழில் முயற்சியாளர்
 
 

அபிவிருத்தி ஆலோசனை கேந்திரம்,
இலங்கை வங்கிக் கட்டிடம், ஹைலெவல் றோட் PEJT5s.

Page 2

சிறுதொழில் முயற்சியாளர்
வழிகாட்டலும் ஆலோசனைகளும் திரு. சந்திரா முனசிங்க (பணிப்பாளர், பொருளாதார ஆராய்ச்சி)
sebélfluuit: சிறிசேன வீரசுந்தர
தமிழ் வடிவம்: மடுளுகிரியே விஜேரத்ன எஸ்.பி.முத்து

Page 3

C) தொழில்நுட்ப ஆலோசனை கேந்திரம்
ISBN 955 - 907 - O7 - 6
முதற் பதிப்பு:
ஆசிரியர்:
தமிழ் வடிவம்:
அட்டைப்படம்:
அச்சிட்டோர்:
1997
சிறிசேன வீரசுந்தர
மடுளுகிரிய விஜேரத்ன எஸ்.பி. முத்து
ஸாரித்த திசானாயக்க
லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்
50/19, கன்னாரத்தெரு, கொழும்பு - 13.
தொழில்நுட்ப ஆலோசனை கேந்திரம்
இலங்கை வங்கிக் கட்டிடம், ஹைலெவல் றோட்,
மஹரகம.
தொலைபேசி/ பெக்ஸ்: 851831

Page 4

உள்ளடக்கம்
l.
சிறுதொழில் முயற்சியாளர் என்பவர் யார்?
1.1 சிறுதொழில் முயற்சியாளரை அறிவது எவ்வாறு?
அபிவிருத்தித் திட்டங்களில் சிறுதொழில் முயற்சியா ளரின் பொருளாதார, சமூக முக்கியத்துவம்.
சிறுதொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் யாவை?
சிறந்த தொழில் முயற்சியாளர் யார்?

Page 5

சிறுதொழில் முயற்சி
சிறு தொழில் முயற்சியாளர் என்பவர் யார்?
ஒரு உற்பத்தியை செய்வதற்கு அல்லது ஒரு சேவையை மேற்கொள்வதற்கு உழைப்பு, இடம், மூலதனம் மற்றும் தேவைகளும் இன்றியமையா தன. இத்தகைய அத்தியாவசியமான சாதகங் களை தகுந்தவாறு அமைத்துக் கொள்பவரே சரியான தொழில் முயற்சியாளர் ஆவார். உற் பத்திமுயற்சிக்கு தேவையான சாதனங்களான உழைப்புக்கு ஊதியம், நிலத்துக்கு வரி, மூலதனத் துக்கு வட்டி என்பனவற்றைத் தருவது மட்டுமல் லாமல் தொழில் முயற்சியாளருக்கு தொழில் முயற்சிக்கான லாபமும் வழங்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட சாதனங்களை ஒன்றிணைத்து செயல்படும்போது அம்முயற்சியாளர் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய வராகின்றார்.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்துகொள்ளுங்கள்” என்ற கைநூலுக்கு அமைய உண்மையான
I

Page 6
.
தொழில் முயற்சியாளர் ஆவதற்கு புதிய தொழில் ஒன்றை வெற்றிகரமாக நடத்த வேண்டும் இல்லையேல் தற்போது உற்பத்திசெய்யப்படும் பொருளையோ, சேவையையோ நவீனமாக்கி, புதிய உதிரிப்பாகங்களால் தயாரித்த பொருட் களை சந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய சக்தியை அவர் பெறவேண்டும். இந்த உற்பத்தி கள் விவசாயம், தொழில், வர்த்தகம் அல்லது சேவை போன்ற எல்லாத்துறைகளிலும் பொது வான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறு தொழில் முயற்சியாளரை அறிவது
எவ்வாறு ?
ஒரு கைத்தொழில் முயற்சியாளர் தனது உற்பத்தியையும், சேவையையும் மூன்று வகையில் பிரித்து நடைமுறைப்படுத்தலாம். அவையாவன: சிறியவை, நடுத்தரம், பெரியவை, அதுபோன்று தொழில் முயற்சியாளரையும் சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று வகையினராகப் பிரிக்கலாம். சிறிய/நடுத்தர வர்க்கத் தொழிலாளர்களிடையே பெரிய தொழிலாளரை இனங்கண்டு கொள்வதற் கான கணிப்புமுறையொன்று இதுவரை அறி முகப்படுத்தப்படவில்லை. காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு இயங்கும் பல்வேறு திணைக் களங்களிடையிலும் சிறுகைத்தொழிலை, வியாபா ரத்தை, சிறுதொழில் முயற்சியாளரை அறிமுகப் படுத்துகின்ற முறையானது பலவாறும் வேறு படும். ஆயினும் இந்த அலகுகளுக்கான முறையில்
2

பொதுவான அடிப்படைக்காரணங்கள் சிலவு உள்ளன.
* கைத்தொழிலுக்கான குழல்
* முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துக்களின்
/6776/ھی
* முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை
* ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்களும்,
தொழில்நுட்பங்களும்
ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உழைப்பு
* எதிர்பார்க்கப்படுகின்ற புறள்வு
என்பவையே அவை. ஆயினும் இந்த அடிப்படைக் காரணங்களை உள்ளடக்கிய குணாதிசயங்களும், பிரமாணங்களும் காலத்துக்குக் காலம் திணைக் களங்களிடையே வேறுபடுகின்றன .
அபிவிருத்தித் திட்டங்களில் சிறு கைத் தொழில் முயற்சியாளரின் பொருளாதார, சமூக முக்கியத்துவம்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர் கொள்ளும் நெருங்கியதும் முக்கியமானதுமாகிய இரண்டு சவால்கள் உள. அவை முதலாவது தொழிலின்மை, இரண்டாவது வறுமை.
3.

Page 7
இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தினர் மொத்தம் 61 இலட்சம். அதில் தொழிலின்றி இருப் பவர்கள் 8 இலட்சம். உழைக்கும் வர்க்கத்தி னரோடு வருடாவருடம் சுமார் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை இணைந்து கொள்கின்றனர்.
இந்த உழைக்கும் வர்க்கத்தினருள் தொழிலின்றி இருப்பவர்களில் பெரும்பாலோர் க.பொ.த. சித்தியடைந்த 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டோரே ஆவர்.
ஆனால் இலங்கையின் ஜனத்தொகையில் 35 வீதத்திற்கும் 40 வீதத்திற்கும் இடைப்பட்ட தொகையினர் வறுமையில் வாடுபவர்களாவர்.
இலங்கையின் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கைைளயும், வழங்கு கின்ற சேவைகளையும் அவைகளை நடத்துகின்ற தொழில் முறையையும், வியாபாரத்தையும் நோக்கும் பொழுது அவற்றில் பெரும் பாலானவை சிறுகைத் தொழிலைச் சார்ந் ததாகவே இன்னும் உள்ளன. பெரும்பாலான பிரிவுகளில் தொழில் இருந்தாலும், அதை நடத்துகின்ற தொழில் முயற்சியாளர்கள் இருந்தாலும் அதனுரடாக அதிகளவில் தொழில் வாய்ப்புகளை வழங்கமுடியாத நிலையே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் என்ன வெனில், லாபத்துக்கு முக்கியத்துவம் வழங்கி புதிய விஞ்ஞான நுட்பங்களின் மூலம், முத
4

லீட்டைக் காப்பாற்றிக் கொள்கின்ற நவீன யுக்தியாகும். லாபத்தை உச்சநிலைக்கு கொண்டு வர இயன்றளவு மனித உழைப்பை வெகுவாக உபயோகப்படுத்திக்கொள்வர்.
இதற்கிடையில் இலங்கையில் சிலகாலமாக அரச துறையைச் சார்ந்த அலுவலகங்களைக் கலைத்து விட்டு தனியார்துறை வசமிருக்கும் வர்த்தக ஸ்தாபனங்கள் ஆரம்பமாகியுள்ளன. அதனால் எமது நாட்டில் உழைக்கும்வர்க்கத்துடன் வரு டாந்தம் சேர்ந்துகொள்பவர்களின் எண் னிக்கையை சமாளிக்கமுடியாத நிலையில் அரச பிரிவுகள் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு குடும்பத்தின் வருமானத்தைப் பாதிப்பது மட்டுமன்றி, இளைஞர்களின் மனங்களில் விரக்தியையும் ஏற்படுத்தி விடுகின்றது. பரந்துவிரிந்திருக்கும் அரசதுறைக்கும் ஸ்திரமான சமூக அமைப்புக்கும் இன்று எழுந்துள்ள முக்கிய சவால் என்னவெனில், வேலையில்லாப் பிரச்சினையால் இளைஞர்கள் மத்தியில் தோன்றுகின்ற விரக்தியேயாகும். அதனால் பெருகிவரும் உழைப்பாளர்களின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், வறுமையால் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சிறிய/ நடுத்தர வர்க்க உழைப் பாளிகளின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தற்போது முக்கியமானதாகும். அத னால் சிறுகைத்தொழிலாளருக்கு பொருளாதார
5

Page 8
துறையில் இருக்கின்ற பங்களிப்பு சாதாரண மானதல்ல.
அதனால் இலங்கை முழுவதும் பரந்த அளவில் நடாத்தத்திட்டமிட்ட சிறிய, நடுத்தர தொழில் திட்டங்களை நிறைவேற்ற கிராமியமட்டத்தில் பயன்டுத்தப்படாமல் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தலாம். அதேவேளை கிராம மட்டத்தில் உருவாகும் தொழிலார்வத்தையும், திறமைகளையும் பயன்படுத்த ஏற்பாடு செய்யலாம்.
இத்திட்டங்களின்கீழ் இளைஞர்களும், யுவதிகளும் வேலை தேடி கிராமங்களிலிருந்து நகர்ப் புறங்களை நோக்கி நகர்வதும் குறைய வாய்ப்பேற்படும். தமது சொந்த இடங்களிலேயே தொழில் செய்வதனால் நகர்ப்புற வாழ்க்கைச் செலவிலும் பார்க்க குறைந்த அளவான வாழ்க்கைச் செலவு அமையும்.
அரசதுறையிலும், பெரிய அளவிலான தனியார் துறையிலும் உழைப்பில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை அடைவதற்கும்,
புதிய உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் பெரும் பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்வம் காட்டினாலும் அது சில சமயங்களில் மட்டுமே. ஆனாலும் சிறிய, மத்தியதரங்களில் திட்டங்களை ஆரம்பிக்கும்போது தொழிலையும், திறமையையும் இணைத்து முன்னேற்றமுடியும். அதனால் தேசிய பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கவும்
6

முடியும். சிறிய, மத்தியதர சிறுகைத்தொழில் முயற்சியாளர்களில் பெரும்பாலோர் நடை முறையில் இருந்துவரும் உற்பத்திகளையும் நுட்பங்களையும் நன்கறிவர். போதியளவு அனுபவமும் பெற்றிருப்பர். அவர்களின் இத்தகைய திறமைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் உற்பத்தியை மேற்கொள்ளமுடிவது மட்டுமன்றி, திட்டங்களை செயல்படுத்திவரும் வேளையில் புதிய நுட்பங்களையும் இணைத்துக் கொள்ளமுடியும். அதனால் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள முடிவதனால் சிறுகைத்
தொழில் முயற்சியாளருக்கு பெருமளவில்
பயன்பெற வாய்ப்புண்டு.
சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்
கொள்ளும் பிரச்சினைகள் யாவை?
சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவர் தொழில் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக வங்கிக்கடன் ஒன்றை பெற்றுக்கொள்ளச் செல்லும் போது
வங்கி கோருகின்ற ஈட்டைச் சமர்ப்பிப்பதற்கு
பெரும்பாலும் இயலாத நிலையில் இருப்பார்கள்.
அவர் ஏதாவது திட்டமொன்றை ஆரம்பித்தாலும், அவரது அறிவு, அனுபவம் மற்றும் பயிற்சி தற்காலத்திற்கேற்றவாறு பயன்பட முடியாவிடில் தனது திட்டத்தை முன்னோக்கிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
7

Page 9
இதனிடையே சிறியதர திட்டங்களில் பெரும் பாலானவை புறநகர் பக்கத்திலும், கிராம மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவைகளுக்கு மின்சார போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவானவையாகும். உற்பத்திச் செலவும் உச்சநிலையைக் காட்டும்.
அதைப் போன்று குடும்ப, சமூக, அல்லது சாதி அடிப்படைகளைக் காரணமாகக் கொண்டு உருவான சில சிறுகைத்தொழில்கள் பரம்பரை யாகவும், வழக்கமாகவும் இருந்துவரும் நடை முறைகளின் படியே அமையும். அத்தொழில் நுட்பத்தில் பயிற்சி இருப்பினும், வழக்கத்தில் இருந்துவரும் பயிற்சியானது நவீன நுட்பங்களைக் கொண்ட பயிற்சியாக இருக்காது.
விஞ்ஞானரீதியில் சிறந்த அறிவும், புதிய தொழில் நுட்பமும், நவீன இயந்திரங்களும் பாவனையில் குறைவானதே. அதனால் உற்பத்திப் பொருளின் நிறைவானது பூரணத்துவம் அடையாது எனக்கருதலாம். அதன் தரமும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படும்.
உற்பத்தியாகும் பொருள் வரையறுக்கப்பட்ட நிலையில் சுற்றாடலில் சந்தைப்படுத்தும் சந்தர்ப்பம் உள்ளது. அதனால் இலாபமும் வரையறைக்குட்படும். இந்த சந்தைப்படுத் தலுக்கும் அப்பால் செல்வதற்குத் தேவையான சந்தைப்படுத்தல் அறிவு, திறமை, அதற்குத் தேவையான பணம் ஆகியவையும் இல்லை.

திறந்த பொருளாதாரச்சூழலில் போட்டியிடும் சந்தைகளுக்குள் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தற்போதைய சூழலில் ஒரு கட்டுக்கோப்புக்குள்ளேயே பெரிய வர்க்க உற்பத்திப்பொருட்களுடன் போட்டியிட வேண்டும். அதனால், நெருக்கமாக உள்ள சூழல் வட்டத்துக்குள்ளேயே கொடுக்கல் வாங்கல்செய்யவேண்டும்.
அதுமட்டுமல்ல, இலங்கையில் உள்ள சிறுகைத் தொழில் முயற்சியாளர்களில் பெரும்பான்மை யினர் விவசாயத்திலேயே இருப்பார்கள். உற்பத்திக்கான கோரலும் நிரந்தரமற்றதாக இருக்கும். விநியோகஸ்தர்களிடையே ஏற்படும் போட்டியானது சந்தைப்படுத்தலில் பிரச்சினை களை உருவாக்கும்.
சிறிய வர்க்க சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபார செயல்பாடுகளுக்கு தமது குடும்ப அங்கத்தவர்களைப் பயன்படுத்திக் கொள்வர். பெறப்படும் இலாபத்தை குடும்பச் செலவுக்கும், கடனை அடைப்பதற்கும் வட்டிக் கொடுப்பதற்கும் செலவிட வேண்டும். குடும்ப அங்கத்தவர்களுக்கென ஊதியம் கொடுப்ப தற்காக பணம் ஒதுக்கப்படுவதில்லை. கிடைக் கின்ற சிறிய லாபத்திலேயே திருப்திபட்டுக் கொள்வர். ஊதியம் வழங்குவதற்காக செலவிடப் படும் அதேவேளை இலாபத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

Page 10
ஒரு குறிப்பிட்ட மூலதனத்திலேயே சிறுகைத் தொழில் முயற்சியாளரின் செயல்பாடு அடங்குகின்றது. சேமிக்கப்பட்ட சிறிய நிதியு டனோ, கைமாற்றுமூலமோ, வங்கிக்கடனுடனோ தொழில்திட்டத்தை ஆரம்பிப்பார்கள். இப்படி யான பாதுகாப்பற்ற நிலையானது தொழில் முயற்சியாளரை பலஹினமான நிலையில் வைத்தி ருக்கும். அதைப்போலவே பெரியதர வர்க்க தொழில்முயற்சியாளரின் நெருக்குதலாலும் பாதிப்பை எதிர்நோக்குவர். சந்தையில் ஏற்படு கின்ற மாற்றங்களுக்கேற்றவாறு தாக்குப் பிடிக்கவும் சக்தியற்ற நிலை இருக்கும். இதனால் சிறிய தவறு நேரும்பட்சத்தில் கூட தொழில் திட்டம் சிதைந்து போவதற்கு அநேக வாய்ப்புண்டு.
தொழில்திட்டமோ, வியாபாரமோ எந்தத் தரத்தில் செயல்படுத்தும் போதும், நிர்வாகத் துறையே மிக முக்கியத்துவம் பெறுகின்றது. சிறிய வர்க்க தொழில் முயற்சியாளரை நோக்கும்போது அவர்களிடம் நிர்வாக அறிவு மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதுபற்றி அவதானிப்பதுமில்லை. உற்பத்தியாளர் , முகாமையாளர், விநியோகஸ்தர், விற்பனையாளர் எல்லாம் பெரும்பாலும் ஒரே நபராகவே இருப்பார். இப்படி எல்லாத்துறையிலும் அவர் செயல்படுவதனால் எளிதாக களைப்படைந்து விடுகிறார். அதனால் நிர்வாகத்தில் குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு. சிறுகைத் தொழில்
I0

グ
முயற்சியாளர்களின் வழியில் இவ்வாறான தடங்கல்கள் இருப்பதனால் அவர்கள் தெளிவா கவும், விழிப்போடும் செயல்படவேண்டும்.
சிறந்த தொழில்முயற்சியாளர் யார்?
தொழில் முயற்சியாளருக்கான நல்ல அம்சங் களைப் பற்றி பல்வேறான நபர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலமும் அவர்களின் கல்வி மூலமும் சிறந்ததொழில் முயற்சியாளருக்குள் காணப்படுகின்ற அம்சங் களை நாம் காணக்கூடியதாக இருக்கும். அவை பின்வருமாறு:
தொழில் திட்டங்களுக்கேற்ற வாய்ப்புகளை அறிந்துகொள்ளல்
- எத்தகைய பொருளாதாரத்திலும், குழலிலும் தொழிலுக்கான வாய்ப்புகள் இருக்கின் றன. தங்களின் தகமைகளுக்கேற்றவாறு வாய்ப்புகளை பயன்படுத்த தொழில்முயற்சி யாளர் முன்வரவேண்டும்.
- அப்பகுதியில் காணப்படுகின்ற வளங்கள்
Alf/7606)/?
- நுகர்வோருடைய தேவை என்ன?
III

Page 11
விருத்தி செய்வதற்கேற்ற தொழில் சந்தர்ப்
பங்கள் என்ன? போன்றவையை அறிந்து கொள்வதான தகமை சிறந்த தொழில் முயற் சியாளருக்கு இருக்கவேண்டும்.
4) பாதுகாப்பற்ற நிலைக்கு முகம் கொடுக்கும் தன்மை
ID)
தொழில் முயற்சியாளர் ஏதாவதொரு தொழில் முயற்சிக்காக ஈடுபடுத்துகின்ற வளங்கள் சில சந்தர்ப்பங்களில் அழிந்து போகலாம் அல்லது நஷ்டங்களை சந்திக்கலாம் அல்லது வெற்றி வாய்ப்பு இல்லாமல் போகலாம். இதனால் தொழில் திட்டமானது வெற்றி தோல்வியை அறியா நோக்கில் செயல்படுத்தப் படும்போது, தனது முதலீடு, உழைப்பு, மற்றும் ஏனைய வளங்களையும் பாதுகாப் பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதையும் எதிர் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்தவாறு முகம்கொடுக்கும் தன்மையும், திட்டங்களை வெற்றியை நோக்கிச் செலுத்துவதற்கான அர்ப்பணிப்பும், விட/7 முயற்சியும் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்
தொழில் முயற்சியாளர் என்ன செய்ய முயற்சிக் கின்றாரோ, அதில் கிடைக்கும் பலனைப் பற்றிய தன்னம்பிக்கையே இதன் அர்த்தமாகும்.
I2

/2)
தொழிலில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு விடை காண்பதற்கும் எண்ணத்தைப் பூர்த்திசெய்து கொள்வதற்கும் தனது மன உறுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். எந்த வெற்றிகரமான தொழில் முயற்சியாளரை எடுத்துக்கொண்டாலும் அவர் முகம் கொடுத்திருக்கும் தோல்விகள், தடங்கல்கள், வீழ்ச்சிகள், கழிவிரக்கம் ஆகியவையே அந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பதைக் காணலாம். அதனால் வெற்றியையும் தோல்வியையும் தனது தீர்மானங்களின் விளைவாகவே கருதி பொறுப் பேற்க வேண்டும்.
சிக்கல்களிலிருந்து விடுபடுவதும், சரியாக முடிவு களை தீர்மானிக்கின்றதுமான தன்மை
மேலெழுந்துவருகின்ற பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டும். அதற்கான சரியான காரணங்களையும் ஆராய்ந்து விடைகாண்பது தொழில் முயற்சியாளரே. மூலதனத்தை அடைதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், விற்பனைசெய்தல் போன்ற எல்லாத்துறையிலும், சமூக குழவிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு சரியான தீர்வு காண்பதும், எடுக்கப்படுகின்ற தீர்மானங் களும் துரிதமாக அமைய வேண்டும். எல்லாவித சிறுகைத்தொழில் திட்டங்களிலும் எடுக்கப் படுகின்ற முடிவுகள் தொழில்திட்ட முயற்சியா ளராலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அதன்
I3

Page 12
VŽ)
தவறுகளற்ற தன்மையினாலேயே வெற்றி
தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
தலைமைத்துவமும், ஆளுமையும்
சிறுகைத்தொழில் முயற்சியாளர் சுயமாகவே செயல்படவேண்டும். அதுபோலவே தொழில் துறையின் உள்ளும், வெளியிலும் பழகுகின்ற வர்களின் மட்டத்தில் நல்ல உறவும் தொடர்பும் இருப்பது அவசியம். தமது செயல்பாடுகள் மற்றவர்கள் கிரகிப்பதற் கேற்றவாறு இருத்தல் வேண்டும். வளங்களை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். ஊழியர்களை நிர்வகிப் பதிலும் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வதிலும் நேரடியாக தலையிடுவது மிக முக்கியம். அதற்கான ஆளுமை சிறுதொழில் முயற்சியாளருக்கு அவசியம்.
சமூகத்தில் விழிப்போடு இருத்தல்
வளங்களைப் பாதுகாத்து பயன்படுத்தல், சூழல் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளல், சுற்றாடலைக் காப்பாற்றுதல், சமுகசேவை போன்றவை இதிலடங்கும்.
14

7) நேரத்தை அதிக அளவில் பயன்படுத்தல்
சிறுதொழில் முயற்சியாளர்கள் எந்தவொரு தெ7ழிவிலும், திட்டத்திலும், செயலிலும் தானாகவே அவதானம் செலுத்திவர வேண்டும். தனது தொழிலுக்கு பல விதத்திலும் சேவை செய்கின்ற வெளிநபர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவேண்டும். அன்றாட வாழ்க்கையில் தனது தனிப்பட்ட காரியங் களையும், ஏனைய எல்லா காரியங்களையும் நிறைவேற்றும் பொருட்டு நேரத்தை ஆகக்கூடிய அளவில் பயன்படுத்தவேண்டும்.
M) தாமதமாக பெறப்படும்தகவல்களால் பயன்பெறுதல்
ஏதாவது பொருளை தயாரிப்பதோ அல்லது சேவையை வழங்குவதோ சிறு/தொழில் முயற்சியாளரின் வெற்றிக்குக் காரணமாகமாட்டா. சந்தையில் உள்ள வாடிக்கையாளரின் எண் ணத்தில் இருக்கும் பொருளின் மீதான விருப்பு வெறுப் பற்ற தன்மை, பொருளின் மீதான வாடிக்கையாளரின் அட்பிப்பிராயம் ஆகியவற்றை ஆராய்ந்தறிதல் வேண்டும். அதன் பின் அதற்கேற்றவாறு திட்டங்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள், விநி யோகஸ்தர்களைப் பற்றிய தகவல்களைத்
I5

Page 13
தேடவேண்டும். அதுபோன்றே, தொழிலை விருத்தி செய்வதற்குத் தேவையான வளங்கள், நுட்பங்கள் போன்றவையை பெற்றுக்கொள் வதற்கும் அதற்கான நிறுவனங்கள். நபர்கள், வழிகளையும் தேடிக்கொள்ளவேண்டும்.
இதற்கு மேலும் இருக்கவேண்டிய அம்சங்கள் சுருக்கமாக வருமாறு:
: ஏதாவது நோக்கத்தைப் பூர்த்தி செய்வ தற்கான தேவை இருப்பவராக இருக்க வேண்டும்
* தலைமைத்துவத்திற்கான தகுதி
本 மற்றவர்களை ஊக்குவிக்கும் தன்மை
净 g/7 did, LO/7607 difL//76)/th
尊 பணிந்து செல்லும் குணம்
事 நிர்மாணிப்பதில் உள்ள தகைமை
* மற்றவர்களின் சுதந்திரத்தை மதித்தல்
- நேரத்தின்படி வேலைசெய்தல்
ஊழியர்களுடன் நல்லமுறையில் தொடர்பு ܝܬ
வைத்தல்
率 மாற்றீடுகளை மதிப்பீடு செய்வதற்கான
தகுதி
16

事
போட்டிகளிடையே முன்னேறும் விருப்பு/
சிறந்த மனப்பாங்கு இருத்தல்
பொறுப்பேற்க விருப்பம் உள்ள தன்மை
மேற்பார்வை
அபிப்பிராயங்களுக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
முதலீட்டை நல்லமுறையில் பயன்படுத்தல்
திறமையான நிர்வாகம்
விற்பனை வல்லுனர்களை அறிதல்
தமது தொழிலில் உள்ள பலம், பலஹரீ னத்தை அறிதல்
அடிக்கடி தகவல்களை அறிவதில் ஆர்வம்
எதிர்காலத்தைக் காண்பதற்கான தகுதி
சிறந்த தொழிலுக்கேற்றதாக கருதப்படுகின்ற மேற்படி லட்சணங்கள் சில உற்பத்தி மூலமாகவும் கிடைக்கலாம். மற்றும் சில லட்சணங்கள் தேவைக் கேற்றவாறு வளர்ச்சியடையும். எப்படியெனினும் ஒரு தொழில் முயற்சியாளரிடம் தனக்குள் இருக்கும் இவ்வாறான அம்சங்களில் கூடிக்குறைந்த தன்மை
யினால்
அவருடைய தொழில் வெற்றியிலும்
தோல்வியிலும் அமையும்.
17

Page 14


Page 15
தொழில்நுட்ப அபிவிருத்தி
நோக்கங்கள் :
இலங்கையின் பொருளாதார வன் மிகக்கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு தொழில் அபிவிருத்தி செய்வதற்கு
சிறிய, மத்தியத்தர தொழில் முய படுகின்ற பல்வேறான கடன்திட்டங் கொள்வதற்குத் தேவையான சேவை
ரேறகள் :
தொழில் முயற்சியாளர்களுக் சிக்குத் தேவையான பயிற்சி
சிறிய, மத்தியத்தர திட்டங்க பீடு செய்து நிர்வாகம் செய் விநியோகித்தல்
முன்மாதிரியான திட்டங்களி
சிறிய, மத்தியத்தர திட்டங்க சேகரித்துக்கொள்வதற்கான தகவல்களை விளங்கிக்கொள்
ஆலோசனை சேவைகள் துெ
துரித சேவைகள் வழங்கு செயல்படுதல்
சிறிய மத்தியத்தர தொழிலான தகவல்கள் அறிக்கைகள், தி சேகரித்தல், அவைகளை பரி
விமர்சன நூலக சேவை நட
 
 

ஆலோசனை கேந்திரத்தின்
ார்ச்சிக்கும் தொழில் வாய்ப்புகளை ம் அரசகோட்பாடுகளுக்கு இணங்க பங்களித்தல்
ற்சியாளருக்கு நடைமுறை செய்யப் ளை சிறந்த முறையில் அமைத்துக் களை மிக பூரணமாக வழங்குதல்.
கும். முகாமைத்துவத்திற்கும் வளர்ச் சுள் நடாத்துதல்
ளை அறிந்துகொண்டு அதை மதிப் வதற்கான நூல்கள் பத்திரிகைகள்
இன் அறிக்கைகளைத் தயாரித்தல்
ஞக்குத் தேவையான தகவல்களை பிற்பனை பரிசோதனை நடத்துவதும் வதற்கு ஏற்றவாறு சமர்ப்பித்தலும்
ய்தல்
அலுவலகங்களுடன் இணைந்து
ார்களின் பயனுக்கேற்றவாறு நூல்கள் ட்ட அறிக்கைகள் போன்றவையை
சீலனை செய்வதற்குத் தேவையான ாத்துதல்
SBN 955 - 90711 - 07 - ES