கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இடைநிலைப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஒப்பீட்டு ஆய்வு

Page 1
யாழ்ப்பாணம் தேசிய க
ஐந்தாம் ஆண்டு
பேராசாண் மூதறிஞர் க
(சொக்கன்) நிை
இடைநிலைப் பா வழிகாட்டல் ஆலோசனைச்
நோர்வே - எத்தியே
Guidance and Co in Secondary school -
Norway - Ethiol
கலாநிதி திருநாவுக் பீடாதி யாழ்ப்பாணம் தேசிய
திரு. பாலசுப்பிரமன உப பீடாதிபதி (கல்வி யாழ்ப்பாணம் தேசிய
 

ல்வியியற் கல்லூரியின் நிறைவை ஒட்டி லாநிதி சொக்கலிங்கம் னவுப் பேருரை
ாடசாலைகளில்
சேவை - ஒப்பீட்டு ஆப்வு ாப்பியா - இலங்கை
unselling service Comperative Research pia - Sri Lanka
கரசு கமலநாதன்
கல்வியியற் கல்லுனரி
ரிையம் தனபாலன் ரியும் தரமேம்பாடும்), கல்வியியற் கல்லுனரி

Page 2

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் உரை ' . ' " .
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் எமது மண்ணுக்குக் கல்விச்சேவையும், தொண்டும் ஆற்றிய மூதறிஞர்கள் ஞாபகார்த்தமான நினைவுப் பேருரைகளில் இன்றைய நிகழ்வாக பேரறிஞர் கலாநிதி சொக்கன் (கந்தசாமிச் செட்டியார் சொக்கலிங்கம்) நினைவான நினைவுப் பேருரை ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.
பேரறிஞர் சொக்கன் அவர்கள் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி ஆவரங்கால் கிராமத்திலே பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆக்கத்திறன்களில் ஆர்வமான சொக்கன் மாணவனாக இருந்ததிலிருந்து இறக்கும் வரை தனது கற்றலை நிறுத்தவில்லை. வித்துவான், கலைமாணி, முதுகலைமாணி, கலாநிதி என அவர் தன் கல்விப் புலமையை விரித்துக் கொண்டார். எனது கிராமமான நாயன்மார்கட்டு கிராமத்திலே திருமண வாழ்வை மேற்கொண்ட சொக்கன் அவர்களிடம் கற்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. எனது ஞானகுருவாக கல்வி வழிகாட்டிய பெருமகன் சொக்கன் அவர்கள்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, நாவலர் பாடசாலை, கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம் சொக்கன் அவர்களை உயர்ந்த கல்வியியல் பேரறிஞராக்கின. ஆசிரியராக (1952-1973), அதிபராக (1973-1982), இலங்கை கல்வி நிர்வாக சேவையாளராக, கொத்தணி அதிபராக (1982-1990) விளங்கியதுடன் அரசாங்கப் பாடநூல் உறுப்பினராகக் கடமையாற்றி தமிழ், சைவநெறி ஆகிய பாடநூல் எழுத்தாக்கத்திலும் ஈடுபட்டார்.
தமிழையும், சைவத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார். பல பொதுமன்றங்களையும் அமைப்புக்களையும் ஏற்படுத்தித் O1

Page 3
தமிழையும் சைவத்தையும் வளர்த்தார். இலக்கியத் துறைகளான சிறுகதை, கவிதை. நாவல், நாடகம், கட்டுரை ஆகிய பல்துறை ஆற்றல் பெற்ற பேரறிஞராக அவர் விளங்கினார். எண்ணற்ற புனைபெயர்களில் எழுதிக் குவித்தார். (சொக்கன், வேனிலான், திரிபுராந்தகன், ஆராமுதன், சுடலையூர் சுந்தரம், பரிமேலழகியார், தேனி, கற்றுக்குட்டி, ஞானம், சாம்பவன், எதார்த்தன், பாலன்)
கட்டுரையியலில் கைவரப் பெற்ற சொக்கன் அவர்கள் கட்டுரைகளின் தொகுப்பாகப் பத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவையனைத்தும் அவரது தமிழ்ப்பற்றையும், சைவசமயப் பக்தியையும் எடுத்தியம்புகின்றன. அவை பொது விடயங்கள், ஆய்வுகள், பாடநூல் வழிகாட்டிகள், பாரதி பாடிய பராசக்தி, பைந்தமிழ் வளத்த பதின்மர், நல்லை நகர தந்த நாவலர், சேர். பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப் பேரன்பர் வித்துவான் வேந்தனார், படிப்பது எப்படி, ஈழத்து நாடக இலக்கிய வரலாறு, விபுலானந்தக் கவியமுதம், இரு பெரும் நெறிகள், இலக்கணத் தெளிவு, இந்து நாகரிகம் எனப் பல நூல்களாக விரிவடைகின்றன. சைவ சமயக் கருத்துக்களை யாவரும் விளங்கும் வகையில் எழுதும் ஆற்றல் இவருக்கே உரியது.
தமிழ் மொழி மீதும், இலக்கியங்கள் மீதும் மட்டுமல்லாது விடுதலை வேண்டி நிற்கும் தமிழ் தேசம் மீதும் பேரறிஞர் சொக்கன் அவர்கள் மிகுந்த பற்றுக் கொண்டு உழைத்தார். ஒரு கல்வியாளன் தனது தேசத்திற்கு எவ்வாறு உதவமுடியும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த பெருந்தகை பேரறிஞர் சொக்கன். அவர்களுடைய ஞாபகார்த்தமாக இந் நினைவுப் பேருரையை ஆற்றும் பாக்கியம் பெற்றதை எண்ணிப் பூரிப்படைகின்றேன். இறையருள் துணை நிற்பதாக.
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன்
பீடாதிபதி 30.05.2005 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
02

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பேராசான் மூதறிஞர் கலாநிதி சொக்லிங்கம் (சொக்கன்) நினைவுப் பேருரை
இன்றைய நவீன காலத்தின் தரிசனம் மிக்க தமிழறிஞரும், தமிழ்ப்பற்றாளரும், இலக்கியவாதியும் மகத்தான எனது குருநாதருமாகிய பேராசான் மூதறிஞர் சொக்கன் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப் பேருரையை நிகழ்த்தக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டுப் பெருமையடைகின்றேன். இங்கு நான் முன் வைக்கும் ஆய்வியற் சிந்தனைகளை எனது பேராசான் சொக்கன் அவர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
எந்த ஒரு இனத்தினதும், சமூகத்தினதும், எதிர்காலத்திற்கும், நல்வாழ்விற்கும், இருப்பிற்கும் முழு நிறைவான கல்வி இன்றியமையாதது. மானுடவியல் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் இன்று முழு நிறைவான கல்வியின் சகல முகங்களையும் உள்ளடக்கி அபிவிருத்தி நோக்கிய நகர்வுகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. உலக நாடுகள் அனைத்துமே நிலையான அபிவிருத்தியை நோக்கிக் கல்வியை முன்னெடுக்கின்றன. ஆனாலும் தற்போது இலங்கைத் தீவின் நிலைமையை ஆராய்கின்ற போது அது தோல்வியுற்ற - பன்முக நெருக்கடியில் சிக்கித் தவிப்பது புலனாகின்றது.
காலனித்துவத்திலிருந்து விடுபட்டு 56 வருட சுதந்திரத்திற்குப் பின்னர் தோல்வி உணர்வைக் கொண்டுள்ளோம். தோல்வியுற்ற அரசு, தோல்வியுற்ற மக்கள், தோல்வியுற்ற சமூகங்கள் என்ற உணர்வுகளே முனைப்பாகவுள்ளன. நிகழ்காலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் உள்ள நம்பிக்கைதான் சமூக நிலை பற்றிய அளவு கோல் எனின் கடந்த காலத்தில் சிற்சில வெற்றிகளையும் நோக்க வேண்டியுள்ளது. மனித அபிவிருத்திக் குறிகாட்டி, பால்நிலை சமத்துவக் குறிகாட்டி, பெருந்தோட்டங்கள், ஆடைக்கைத்தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வீடமைப்புத் திட்டங்கள் என்பவை வெற்றிகளுக்கான உதாரணங்களாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு முற்பட்டவை.
O3

Page 4
பின் வந்த இரு தசாப்தங்களும் தோல்விகளையே தளமாகக் கொண்டவையாகவுள்ளன. இவற்றில் உள்நாட்டு யுத்தம், இளைஞர் கிளர்ச்சிகள், இனவாத அடக்கு முறைகள், விழுமியங்களின் சீரழிவுகள், திறமையற்றவர்களினதும் சுயநலவாதிகளினதும் நிர்வாகம், சந்தர்ப்பவாத அரசியல், தடையற்ற நுகர்ச்சி விளம்பரக் கலாசாரம், கலாசாரச் சீரழிவுகள், வரட்சி, இயற்கைச் சூழல் மாசடைதல், சுனாமித் தாக்கங்கள், ஏற்க முடியாத அளவில் இளைஞர் வேலையின்மை, மாயமாகி நிற்கும் நிரந்தர சமாதானம், வன்முறைகள், போதைப் பொருட் பாவனை, சிறு பாலியற் துன்புறுத்தல்கள் இவை தான் இன்றைய இலங்கைத் தீவின் நிலைகள். இவை தோல்வியுற்ற மாறும் நிலையினுடு நெருக்கடியை எடுத்துக் காட்டுகின்றன.
மேலும் சிறந்த வாழ்க்கையை நடாத்துவதற்கு வேண்டிய அறிவு, விளக்கம், செயற்றிறன்கள், மனப்பாங்குகளைக் கொண்ட மாணவர்களை எமது கல்வி முறை வழங்கத் தவறிவிட்டது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. புத்ததாக்கங்கள் (Innovative), guu af T &š ab Ei ab 6ĩ (Modifications), Lu6ð Ta5 G66tfü Lu(Bjö 56ða56ff (Multimedia Presentation), 9(paša5b, மற்றவர்களுக்கு மதிப்பளித்தல, சகிப்புத் தன்மை, அன்புடைமை என்பவற்றுடன் கூடிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட முழுமையான ஆளுமை விருத்தியை மாணவர்களுக்கு அளிக்க முடியாத பாடசாலைச் சூழ்நிலைகள் நிலவுகின்றன. இவற்றிலிருந்து விடுதலை பெற
1. கல்வியினூடும், ஆசிரியர்களினூடும் வழிகாட்டல் சேவையைப்
பிரயோகித்தல் 2. கல்விக்கான வாய்ப்புக்களை விரிவாக்குதல் 3. கல்வியின் தரத்தை மேம்படுத்தி, பாரம்பரிய விழுமியங்களைக் கைக்கொள்ளும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல் 4. செயல்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை விருத்தி
செய்தல் 5. ஆசிரியர் அதிபர்களுக்கு வினைத்திறனான பயில்வுகளை
வழங்குதல்
04

6. Siu 35fibb6) absib35ds assig6) (85jöföf (Learning to learn), சேர்ந்து வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளல் (Leaning to live together), ஆற்றுவதற்காகக் கற்றுக் கொள்ளல் (Leaning to do), அறிந்து கொள்வதற்காகக் கற்றுக் கொள்ளல் (Leaning to know), ஆவதற்காகக் கற்றுக் கொள்ளல் (Leaning to be) என்ற திறன்களை மாணவர்களுக்கு வழங்குதல்.
என்ற வகையில் சமூக வியாபகமான நோக்குகளின் தீய விளைவுகளில் இருந்து வளரும் பிள்ளைகளைப் பாதுகாத்தல், பெற்றோர் - பிள்ளைகள் - சமூகத்தவர்கள் ஆகியோருக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்கல் என்பனவும் புதிதாகச் சாதிக்க வேண்டியவையாகவுள்ளன. தற்போதைய எமது கல்வி முறையானது முறைசார் - முறைசாரா ரீதியில் பல்வேறு பரிமாணங்களில் கல்வியியல் நிபுணர்களினால் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புக்கள் கல்விக் கொள்கை உருவாக்கங்களில் புகுத்தப்படுகின்றன. இத்தோடு ஏனைய நாடுகளின் கல்வி முறைமைகள் ஆராயப்பட்டு அவற்றுள் நல்ல அம்சங்கள் எமது கல்விச் சீர்திருத்த முன்மொழிவுகளில் சேர்க்கப்படுகின்றன. இவ்வடிப்படையில் இன்று சர்வதேச ரீதியாகக் கல்வியியல் ஆய்வுச் செல்நெறிகளில் ஒப்பீட்டு ஆய்வே (Comperative Research) முதன்மையாகவுள்ள சூழலில் நோர்வே, இலங்கை, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இடைநிலைப்பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை தொடர்பான எனது ஆய்வை இயம்ப முற்படுகின்றேன். இவ்வேளை நான் கல்வி ஆய்வுகள் நிமித்தம் நோர்வே, கனடா, யப்பான், பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் நிறைந்த அனுபவங்களை எனக்குத் தந்தன. பல ஒப்பீட்டுக் கல்வியியல் ஆய்வு அடிப்படைத் திறன்களைப் பெற வாய்ப்பாக இருந்தமையையும் இவ்வேளை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
05

Page 5
வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் (Guidance and Counselling)
உலகளாவிய ரீதியில் இன்று மிக வேகமான சமூக மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. இம் மாற்றங்கள் குடும்பம், பாடசாலை ஆகிய முக்கிய சமூக அலகுகளைப் பல்வேறு தாக்கங்களுக்கு உட்படுத்துகின்றன. இத்தாக்கங்களின் விளைவாகப் பிள்ளை - பெற்றோர் தொடர்பு குறைதல், ஆசிரியர் - மாணவர் உறவு சிதைதல், பிளவுபட்ட குடும்பங்கள், கலாசாரச் சீர்கேடுகள், விழுமியங்களின் சிதைவு, இடைவிலகல், மனித உரிமை மீறல்கள் போன்ற தீய தாக்கங்களுக்கு சமூகங்கள் ஆளாகி மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையிலிருந்து விடுபட உகந்த நெறிமுறையாக வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவை காணப்படுகின்றது. பண்டைய சமூகத்தில் நிலவிய பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்ப உறவுகள்,மூத்தோர் வழிகாட்டல்கள், சமயப் பழக்க வழக்கங்கள் இயல்பாகவே வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் அம்சங்களாகச் செயற்பட்டன. இன்று இந்நிலை முற்றாக மாற்றமடைந்துள்ளது. இம்மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இயைபாக்கம் அடையவைக்கும் செயன்முறையாகவும் ஆலோசனை வழிகாட்டல் சேவை அமைகின்றது.
இங்கு வழிகாட்டல் என்பது சரியானதைச் தெரிவு செய்தல் பொருத்தப்பாடு காணல், பிரச்சினை தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றவருக்கு ஆற்றும் உதவியாகவே வழிகாட்டல் அமைகின்றது. அதாவது வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும், எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும், சுயதிறன் விருத்தி செய்யவும், தீர்மானங்களை மேற்கொள்ளவும், உளவியல் அணுகுமுறை அடிப்படையில் வழங்கப்படும் உதவியாகவும் வழிகாட்டல் பரிணமிக்கின்றது. இப்பரிணமிப்பின் ஒரு முக்கிய கூறாகவே ஆலோசனை வழங்கல் அமைந்துள்ளது. இது ஆலோசனை நாடி தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண
O6

ஆலோசகரை நேர்முகமாகச் சந்தித்துப் புரிந்துணர்வுடன் கலந்துரை யாடி சுயவிளக்க அடிப்படையில் தனது பிரச்சினைகளைத் தானே தீர்ப்பதற்கான உதவி வழங்கும் அம்சமாக ஆலோசனை வழங்கல் சேவை உள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் மனிதர்கள் அனைவருக்குமே இவ் ஆலோசனை வழிகாட்டல் சேவை மிக அவசியமாகவுள்ளது. இது உள வளத்துணைக்கான அடிப்படை களையும் வழங்குகின்றது.
அடிப்படையான உளவளத்துணை இருவருக்கிடையில் ஏற்படும் நெருங்கிய உறவை வளர்க்க உதவுவதற்காகப் பயன்படுகின்றது. தொடர் உள ஆற்றல்கள், திறன்கள், உறவாடும் நிலைகள் இம்முறைமையின் மையங்களாகவுள்ளன. மேலும் அடக்கி ஒடுக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆறுதல் பெறுவதற்கு ஒரு பாதுகாப்பான சூழலையும் இது உருவாக்குகின்றது. இவ்வாறான செயற்பாட்டில் உளவியல் விழிப்புணர்வும், உள்ளார்ந்த ஆற்றலும், ஆளுமை வளர்ச்சியும் ஏற்படுகின்றது. மன நலவியலில் (Mental Hygine) புத்தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது. இவ்வகையில் பாடசாலைக் கல்வியுடன் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவையும் மாணவர்களுக்கு மிகுந்த அவசியமாக இன்றைய நிலையில் உள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டுதலின் முக்கியத்தவம் (Importance of Guidance)
1. தற்போது கல்வியின் நோக்கம் விரிவடைந்துள்ளது. மாணவர்களது ஆளுமையைப் பல பரிமாணங்களில் விருத்தி செய்ய வேண்டியுள்ளமை.
2. விரைவாக மாறிவரும் சூழ்நிலையுடன் சிறந்த, உயர் நிலைப்பட்ட பொருத்தப்பாட்டினைப் பெறும் திறன்களை அபிவிருத்தி செய்ய
07

Page 6
ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர்களது தேவைகள், விருப்பங்கள், நாட்டங்கள் ஆகியவற்றுடன் கல்வியை இணைத்துச் செல்வதற்கு
மாணவர்களது கல்வியை இடையூறு செய்யும் காரணிகளைக் கண்டு பிடித்து நீக்குவதற்கு
கல்விக்கும், எதிர்காலத் தொழில் வழிகாட்டலுக்குமான ஆற்றல்களைப் பெருக்குவதற்கு
மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், மனமுறிவுகள், தாழ்வு மனப்பான்மை, கவலைகள், இழப்புக்கள் போன்றவற்றிலிருந்து மீள்வதற்கும், சமூகத்தில், நாட்டில் எதிர்கால நற்பிரசைகளாக மாணவர்களை உருவாக்கவும் வழிகாட்டுதல் மிக முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
மேற்கூறியவற்றிலிருந்து குறிப்பாக இடைநிலைப்
பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த நோர்வே, இடைநிலை அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை இதைவிட அபிவிருத்தியில் பின்னோக்கியிருக்கும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை ஒப்பீட்டு ஆய்வு (Comperative Research) அடிப்படையில் அணுகி நீண்ட பயன்பாடுள்ள நோக்கில் இவ் நினைவுப் பேருரையை ஒழுங்கமைத்துள்ளேன்.
08

நோர்வே (Norway)
அமைவிடம்
ஸ்கன்டிநேவிய குடாநாட்டின் மேற்கு மற்றும் வட பகுதியை உள்ளடக்கியதாகவும் ஆட்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள ‘ஸ்வல்பாட்’ (Svalbard) என்ற தீவுக் கூட்டங்களைக் கொண்டதாகவும் நோர்வே உள்ளது. நோர்வேக்குக் கிழக்காக சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா உள்ளன. மேற்கில் வடகடலும் அத்திலாந்திக் சமுத்திரமும் உள்ளன. வடக்கில் பரெண்ட்ஸ் கடல் (Barents Sea) உள்ளது. ஸ்வல்பாட் தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நோர்வே நாட்டின் பரப்பளவு 386,958 சதுர கிலோமீற்றர் கொண்டதாகவும் எத்தியோப்பியாவின் சுமார் மூன்றிலொரு பகுதியாகவும் உள்ளது. பிரதான தரைப்பகுதி, தெற்கிலிருந்து வடமுனைவரை 1752 கிலோமீற்றர் நீளமானதாக உள்ளது. நோர்வேயின் கரையோரப் பகுதியானது உலகிலேயே மிக நீளமானதும் மிகவும் கரடுமுரடானதும் கிட்டத்தட்ட 50,000 தீவுகளைக் கொண்டிருப்பதும் ஆகும் (Visitnorwey o) இங்கு 01.01.2000 ஆண்டைய கணக்கின் படி 4,525,000 சனத்தொகை காணப்பட்டது.
கலாசாரம்
நோர்வே பொதுவாக ஓர் ஓரின நாடாகக் கருதப்படுவதுடன் பரவலான சனத்தொகையைக் கொண்டதாகவும் உள்ளது. இந்நாட்டு மக்கள் ஒரே மொழியை - நோர்வேஜிய மொழி - பேசுபவர்களாவும், ஒரே கலாசாரத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். அமெரிக்கா அல்லது எதியோப்பியா அல்லது இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அது இன்னும் ஓரின நாடாகவே உள்ளது. இருந்தபோதும் - அநேகமாக ஏனைய நாடுகள் ஒவ்வொன்றைப் போலவும் நோர்வே இனரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மக்களின் கலப்பினை எப்பொழுதும் கொண்டிருந்தது. சமி (Sami) மற்றும் பினிஷ் (Finnish) மொழி பேசும் மக்கள் அங்கு சிறுபான்மையினராகவும், அவர்களின் பாரம்பரியம் நீண்டதொரு வரலாற்றைக் கொண்டதாகவும் உள்ளது.
09

Page 7
இருந்தபோதும் நோர்வேயில் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற பிரச்சினை கடந்த 15 வருடங்களாக மட்டும் இருந்து வருகின்றது. இதற்கான பல காரணிகள் இருந்த போதும் ஐரோப்பியர் அல்லாத நாடுகளிலிருந்து குடிவரவே இதற்கான முக்கிய காரணியாக உள்ளது.
பாக்கிஸ்தானியர், துருக்கியர், பெருமளவில் குடியேறினர். தொடர்ந்து அகதிகளாக சிலி, ஈரான், எரித்திரியா, சோமாலியா, இலங்கை, வியட்நாம், துருக்கி, குர்கிஸ்ரான் மற்றும் முன்னைய யுகோசிலாவியா போன்ற நாடுகளிலிருந்து அங்கு வந்தனர். இவர்களில் அனேகர் பெரிய நகரங்களில் குறிப்பாகத் தலைநகரில் குடியேறினர். எனவே இவர்கள் ஒரே அயலில் வசித்தனர். சில நகரங்களின் பகுதிகள் திடீரென உண்மையான பல்லினச் சமூகமாக மாறிவிட்டன - இது வழமைக்குமாறானதாகவும் நோர்வே இனத்தவர்களுக்கு அச்சம் ஊட்டுவதாகவும் இருந்தது. இவ்வாறு குடியேறினவர்களில் 70,000 பேர் முஸ்லிம் ஆவர். மொழி மற்றும் கலாசார வேறுபாடுகள் ஆகிய இரண்டும் ஒன்றிணைவதற்கு ஒரு பாரிய தடையாக இருக்கின்றது. எனவே பாகுபாடு பரந்தளவில் உள்ளதென்பதில் சந்தேகமில்லை. இனவாத சம்பவங்களையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. நோர்வேயில் இன்று வழிகாட்டல் ஆலோசனைகள் பலர் கையாள வேண்டிய பிரச்சினையாக இது உள்ளது. இப் பிரச்சினை அரசியலிலும், மக்களின் விவாதங்களிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
நோர்வேயின் கல்வி முறை
சிறுவர்களுக்கான சர்வதேச, பாடசாலைக் கல்வி முறை நோர்வேயரில் 250 வருடங்களுக்கு முன் பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1889 ஆம் ஆண்டிலிருந்து ஏழு வருடககட்டாயக் கல்வி முறை ஏற்படுத்தப்பட்டு 1969 இல் அது 9 வருடங்களாகவும், 1997 இல் 10 வருடங்களாகவும் அதிகரிக்கப்பட்டது. மேல் இடைநிலைப் பாடசாலைக் கல்வி (Upper Secondary School) fiuu6sic5.JLi6ö 9Lqu60)Lui6ò 96oLDb5 போதும் நடைமுறையில் பெரும்பாலும் சகல மாணவர்களும் சமூகமளிக்கின்றனர். 10

கட்டாயமாக பாசாலைக்குச் செல்லவேண்டிய காலப்பகுதி நோர்வேயில் 10 வருடங்களாகும். சிறுவர்கள் 6 வயதில் தமது கல்வியை ஆரம்பிக்கின்றனர். ஆரம்ப மற்றும் கீழ் இடைநிலைக் கல்வியானது தனியானதொரு தேசிய பாடவிதானத்தின் அடிப்படையில் சமத்துவமான ஒருங்கிணைக்கப்பட்ட பாடசாலை முறைக் கோட்பாட்டுக்கு அமைய நோர்வேயில் ஸ்தாபிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யப்படுவதுடன் தற்போதுள்ள கல்விமுறைக்கு “யாவருக்கும் கல்வி’ என்பது அடிப்படைக் கருத்தாக உள்ளது. சகல சிறுவர்களுக்கும் அவர்களின் சமூக, கலாசாரப் பின்னணியைக் கருத்திற் கொள்ளது கல்வி புகட்டப்படுகின்றது. மேல் இடைநிலைக் கல்வி உட்பட அரசினால் வழங்கப்படுகின்ற கல்வி வசதிகள் யாவும் இலவசமானவையாகும். நாம் இங்கு கட்டாயக் கல்வி எனக் குறிப்பிடுவது யாதெனில் -நோர்வேயிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் 10 ஆம் தரம் வரை பாடசாலைக்கு சமூகமளிக்கின்றது என்பதாகும்.
கல்வியின் பிரதானகட்டங்கள்
கீழ் ஆரம்பக் கல்வி (தரங்கள் 1 - 4 வரை) மேல் ஆரம்பக் கல்வி (தரங்கள் 5 - 7 வரை) கீழ் இடைநிலைக் கல்வி (தரங்கள் 8-10 வரை) மேல் இடைநிலைக் கல்வி (தரங்கள் 11 - 13 வரை) உயர் கல்வி
மாநகரசபைகள் (Kommune) ஆரம்ப மற்றும் கீழ் இடைநிலைப் பாடசாலைகளுக்குப் பொறுப்பாக உள்ளன. இதே வேைைள மாவட்டங்கள் (Counties) மேல் இடைநிலைக் கல்விக்குப் பொறுப்பாக உள்ளன. அத்துடன் அரசு உயர்கல்விக்குக் பொறுப்பாக உள்ளது. சகல மட்டங்களிலும் சில தனியார் பாடசாலைகள் உண்டு. - ஆரம்ப மற்றும் கீழ் இடைநிலை மட்டங்களில் கிட்டத்தட்ட 2% சதவீதத்தினதாகத் தனியார் பாடசாலைகள் உள்ளன.
1.

Page 8
Gtosó GIson_gssosoá asóa? (Upper Secondary Education)
நோர்வேயில் எனது நேர்முகங்காணல்களை இந்த மட்டத்திலிருந்து நான் தெரிவு செய்த காரணத்தால், இவ் அறிக்கையில் இடைநிலைக் கல்வி பற்றி அதிகளவு விரிவான தகவல்களை நான் தரவுள்ளேன். 1994 இலையுதிர் காலத்திலிருந்து 16-19 வயதுப் பிரிவினருக்கு, உயர் கல்விக்கு அல்லது தொழிற்கல்வித் தகைமைகளுக்கு வழிவகுக்கின்ற மேல் இடைநிலைக் கல்வியை 3 வருடங்களுக்குப் பெறுகின்ற உரிமை உள்ளது. விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கின்ற மூன்று அடிப்படைக் கற்கைநெறிகளில் ஒன்றினைக் கற்பதற்கு உரித்துடையவர்களாவர். தொழிற்கல்விக்கு விண்ணப்பித்தோர் உயர்கல்வியைப் பெறுவதற்குத் தேவையான மேலதிக தகைமைகளைப் பெற்றுக் கொள்வது சுலபமாக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போன்று, இளைஞர்கள் பாடசாலை செல்லாது அல்லது வேலை வாய்ப்பற்று இருக்காது பார்த்துக் கொள்வது மாவட்ட அதிகாரிகளின் சட்டரீதியான கடமையாகும். விசேட கல்வித்தேவைகளையுடைய மாணவர்கள் 3 வருடங்களுக்கும் கூடுதலான இடைநிலைக் கல்வியைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.
மேல் இடைநிலைக் கல்வி நாடு முழுவதிலும் வழங்கப்படுவதுடன், யாவருக்கும் சமமான கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். முன்பு பல்வேறு வகையான இடைநிலைப் பாடசாலைகள் இருந்த போதும், 1976 ஆம் ஆண்டிலிருந்து பொதுக்கோட்பாடு மற்றும் தொழிற்பயிற்சியை இணைத்த ஒரே சீரான மேல் இடைநிலை உயர் பாடசாலைகள் நோர்வேயில் இருப்பதுடன், செய்முறை மற்றும் கோட்பாட்டு ரீதியான கல்விக்கு கொள்கை ரீதியிலாவது சம அந்தஸ்து வழங்கப்படுகின்றது. இக்கல்வி அருகருகே - ஒரே கட்டிடத்தில் வழங்கப்படுகின்றது. முதலாவது வருடத்தின் போது அடிப்படையான 15 கற்கைநெறிகளில் ஒன்று வழங்கப்படுகின்றது. அடுத்த இரு வருடங்களில் விசேட கற்கைநெறிகளும், பயிலுனர் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. முதலாவது இரு வருடங்களிலும் பாடசாலையில் பயிற்சி
12

வழங்கப்படுகின்றது. கடைசி வருடத்தில் ஒரு வேலைத்தளத்தில் வேலையுடன் சேர்ந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.
போதியளவு வேலைத்தளம் கிடைக்காத போது முழுப்பயிற்சியும் பாடசாலையிலேயே வழங்கப்படுகின்றது. எனினும் ஒரே சான்றிதழே மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
நோர்வேயில் வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்
வழிகாட்டல் ஆலோசனை வழங்கற் சேவையானது நோர்வே பாடசாலைகளில் ஒப்பீட்டளவில் புதிய ஒரு விடயமாக உள்ளது. புதிய கல்வி ஒழுங்கு முறையின் அறிமுகப்படுத்தல் காரணமாக இது கிட்டத்தட்ட 1960 இல் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கிடையே சரியான கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கான நடத்தைவாதத்தையும் (Behaviourism), விடயம் சார்ந்த சோதனையில் நம்பிக்கையையும் (Objective Testing) eigju60Lustebais Gabsió05L segb35 gbit.' 356ffair சித்தாந்தத்தை இச் சித்தாந்தம் பிரதிபலிப்பதாக உள்ளது.
1970 இல், பல்வேறு சமூக, உணர்ச்சி அல்லது நடத்தைப் பிரச்சினைகளைக் கொண்ட மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதான சமூக, கல்விப் பணிகளுக்கு இந்த நோக்கு மாற்றப்பட்டது. அதாவது ஒருவகையில் பாடசாலையின் சமூகப் பணிகளுக்கு 1970 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை தேவையான தகைமைகள் குறித்து அதிக விவாதம் இடம்பெற்றது. அதாவது இப்பணிக்கு ஒரு சாதாரண ஆசிரியரா அல்லது நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரா (உதாரணமாக ஒர் உளவியலாளரா) தேவையென விவாதிக்கப்பட்டது. முதலாவது நிலைப்பாடு வெல்லப்பட்டது. 1990 6) 60) J விசேடத்துவமான தகைமைகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை இப்பொழுது இது மாற்றமடைந்து வருகின்றது. மாவட்டங்கள், மாநகர சபைகள் போன்ற அதிகளவான பாடசாலை அதிகார அமைப்புகள் இவ்வகையான பணிக்கு ஆகக் குறைந்தது விசேடத்துவமான கல்வி தேவை எனக் கோருகின்றன. சமூகத்தில் பாடசாலையின் பாதுகாவலர் பாகம் (Caretaker Role) 1980 மற்றும் 90 களில் நன்கு வலியுறுத்தப்பட்டது.
13

Page 9
ஒர் ஒழுங்கமைப்பு என்ற வகையில் தனிப்பட்ட முறையிலன்றி பாடசாலை தொடர்பாக அதிக ஒழுங்கு முறையாக ஆலோசனை வழங்குபவர் பணியாற்றலாம் என்ற போக்கு இப்பொழுது உள்ளது. அத்துடன் சமீப காலங்களில் இச்சேவையை இரு பிரிவுகளாகப் பிரிப்பதிலுள்ள அனுகூலம் தொடர்பாக சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது ஒரு பணியின் ஒரு பகுதியாக ஒரு சமூகப் பணியாளர் மற்றும் இரு தொழிற்கல்வி வழிகாட்டல் வழங்குவோர் ஆகியோர் இவ் ஒழுங்கு முறையின் நன்மைகள் குறித்து வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவோரிடையே அதிக விவாதம் நடைபெறுகின்றது.
நோர்வேயில் கலாசாரம் மற்றும் கற்றல் பற்றிய நாடாளுமன்ற வெள்ளை அறிக்கையானது (White Paper) தொழிற்கல்வி வழிகாட்டல் குறித்துக் கவனம் செலுத்துவதுடன் கல்வி, தொழிற்கல்விப் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த வழிகாட்டல்களைப் பெறுவதற்கு மாணவர்களுக்குச் சட்டரீதியான உரிமை இருப்பதாகக் கூறுவதுடன் ஆலோசனை வழங்கலானது மேலோட்டமானதாகவும், வழிகாட்டல் ஆலோசகரின் தகைமை குறைவாக இருப்பதைப் பல மாணவர்கள் உணர்வதாகவும் தெரிவிக்கின்றது. அதாவது இந்த வழிகாட்டல் ஆலோசகர்கள் ஒப்பீட்டளவில் வழிகாட்டுவதில் குறைவான தகைமையைக் கொண்டிருக்கின்றனர் என்பது பல மாணவர்களின் அனுபவமாகும். தொழில் மற்றும் நிர்வாகத் திணைக்களத்தின் அறிக்கையிலும் இதே விடயத்தைக் காணக்கூடியதாக உள்ளது. வழிகாட்டல் ஆலோசகர்களின் திறைமையை விசேடமாகத் தொழிற்கல்வி ஆலோசனை வழங்குதலைப் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு இவ்விரு அதிகார அமைப்புகளும் ஆதரவு வழங்குகின்றன. கல்வித் திணைக்களம் எமது விடயத்தை பொறுத்தவரையில் “பாடசாலை நிர்வாகத்திடம்” அதனைக் கையளித்த போதும், ஆலோசனை வழங்குவதில் பயன்படுத்தப்படும் ஆளணியினர் மற்றும் ஏனைய மூலவளங்கள் குறித்துத் தீர்மானிப்பது மாவட்ட மட்டத்திலாகும். இந்த வகையில் இன்று நோர்வேயின் அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரலில் ஆலோசனை வழங்கல் இடம்பெற்றுள்ளதென்பதைக் கூறக் கூடியதாக உள்ளது.
14

எத்தியோப்பியா (Ethiopia)
அமைவிடம்
எத்தியோப்பியா கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 65% சதவீதத்திற்கு விவசாயம் செய்யக்கூடிய காணிகளை எத்தியோப்பியா கொண்டிருந்த போதும் 15% சதவீதம் மட்டுமே தற்பொழுது விவசாயத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது ஆபிரிக்காவின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. இந்நாடு தரையால் சூழப்பட்டிருந்தாலும் டிஜிபொற்றி (Djibouti) மற்றும் கென்யா (Kenya) ஆகிய நாடுகளின் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருகின்றது. இந்நாட்டின் எல்லைகளாக எறிற்றீரியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்நாட்டின் பூகோள ரீதியான அம்சங்களாக 4500 மீற்றர் வரை உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பாலைவனங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளன. இங்கு பரந்தளவிலான சுவாத்திய மாற்றங்கள் உள்ளன. எத்தியோப்பியாவுக்கு பருவ காலங்கள் மூன்று உண்டு. பெப்ரவரியிலிருந்து மே மாதம் வரையான சிறிதளவு மழைவீழ்ச்சிக்காலம், யூனிலிருந்து செப்ரெம்பர் வரையான அதிக மழைவீழ்ச்சிக் காலம், ஒக்ரோபரிலிருந்து ஜனவரி வரையான வரண்ட காலப்பகுதி சில வருடங்களில் வெள்ளப்பெருக்குகள் மற்றும் வரட்சியும் ஏற்படுவதுண்டு. ஆனால் சாதாரணமாக ஒரு வருடத்தில் இந்நாட்டின் பல பகுதிகளில் இரு அறுவடைகளைப் பெறக்கூடியதாக உள்ளது. இதனது தலைநகரான - அடிஸ் அபாபா - (Addis Ababa) மத்திய மலைப்பகுதியில் 2400 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.
15

Page 10
கலாசாரம்
Qni 65 Lól6iosuusör upábasest enfraSaiprof. இதன் கலாசாரத்தின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் இலக்கியத்துறையில் உள்ளது. இக் கலாசாரம் பெரும்பாலும் கிரேக்க, அராபிய மற்றும் ஏனைய மொழிகளிலிருந்து புராதன ஜீஸ் (eெeZ) மற்றும் நவீன அம்கரிக மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டவையாகும். அநேகமான படைப்புக்கள் சமய ஆராய்ச்சி அல்லது புராணக்கதைகள் போன்ற தன்மையுடையவையாக உள்ளன. உலக விவகாரங்கள் குறித்த இலக்கியங்கள் பெரும்பாலும்
வரலாற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன.
இந்நாட்டில் கிறிஸ்தவ மதம் ஆரம்ப காலந்தொட்டு இந்நாட்டில் பரவியதன் காரணமாக சமயத்துடன் தொடர்புடைய கட்டடக்கலை இங்கு ஒப்பீட்டளவில் சிறப்பானதாக உள்ளது. இவ்வாறான கட்டமைப்புகளும் அவற்றின் சுவர் ஒவியங்களும் பிசான்ரீன் (Byzantine) மற்றும் கொப்ரிக் (Coptic) செல்வாக்குக் கொண்டவையாக உள்ளன. எத்தியோப்பியாவின் தேர்ச்சியும் கற்பனை வளமும் கொணி ட வெள்ளி ஆபரண வேலைப் பாடு குறிப்பிடத்தக்கதாகும்.
எத்தியோப்பியாவின் கல்வி முறை
எத் தியோப்பரியாவிலி மக்களின் கல வியரின் நிலை மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. உதாரணமாக, 1994 இன் குடிசன மதிப்பீட்டின்படி 5 வயதும் அதற்கும் கூடுதலான வயதுடையவர்களின் மொத்த சனத்தொகையில் 11% சதவீதத்தினர் ஆண்களாகவும், 8% சதவீதத்தினர் பெண்களாகவும் இருந்ததுடன் இவ்விருபாலாரில் 10% சதவீதத்தினர் பல்வேறு மட்டங்களில் பாடசாலைக்குச் சமூகமளித்தனர். நகர்ப்புறங்களில் கல்வி கற்போர் 34% சதவீதமாகவும் கிராமப்புறங்களில் கற்போரின் வீதம் 6% சதவீதமாக மட்டுமிருந்தது. எத்தியோப்பியாவின் மொத்த சனத்தொகையில் 10 வயதும் அதற்குக் கூடுதலான வயதுடையோரில் 30% சதவீதத்தினர் 16

ஆண்களாகவும், பெண்கள் 17% சதவீதத்தினராகவும் இவ்விரு பாலாரில் 23% சதவீதத்தினர் கல்வியறிவு உடையவர்களாகவும் இருந்தனர். நகர மற்றும் கிராமியப் பகுதிகளில் கல்வியறிவு வீதம் முறையே 69% சதவீதமாகவும் 15% சதவீதமாகவும் காணப்பட்டது. (CSA 1998)
எத்தியோப்பியாவின் புதிய கல்வி மற்றும் பயிற்சிக் கொள்கையானது கல்விக் கட்டமைப்பை மாற்றிவிட்டது இதன் பிரகாரம் 6-2-4 என்ற கட்டமைப்பு (ஆரம்பக் கல்வியில் 6 வருடங்கள், கனிஷ்ட இடைநிலையில் 2 வருடங்கள், சிரேஷ்ட இடைநிலையில் 4 வருடங்கள்) 8-2-2 என மாற்றமடைந்தது (ஆரம்பக்கல்வி 8 வருடங்கள், கீழ் இடைநிலை 2 வருடங்கள், மேல் இடைநிலை 2 வருடங்கள்).
கல்வித்துறையின் தந்திரோபாயமானது (TGE, 1994 B Habtamu வில் மேற்கோளாகக் காட்டப்பட்டது) அடிப்படைப் பொது, உயர் மற்றும் விசேடத்துவக் கல்வியின் கட்டமைப்பைப் பின்வருமாறு விபரிக்கின்றது.
* 4-6 வயது வரையான சிறார்களுக்கான பாலர் பாடசாலை
முறை * 1 ஆம் தரத்திலிருந்து 8 ஆம் தரம் வரையான ஆரம்பக்கல்வி இரு உப பிரிவுகளாக அடிப்படை (1-4 ஆம் தரம் வரை) மற்றும் பொதுக் கல்வி (5-8 ஆம் வரை) எனப் பிரிக்கப்பட்டுள்ளது. * பொதுவானதொரு இடைநிலைக்கல்வி, 9-10 ஆம் தரம்
ഖങ്ങj * இரு வருட சிரேஷ்ட இடைநிலைக் கல்விக்குத் தயார்ப்படுத்தலும் இதற்கு சமாந்தரமாகத் தொழிற்கல்வி மற்றும் தொழினுட்பக் கல்வியும் * டிப்ளோமாவுக்கான 1-2 வருடங்கள் வரையான உயர்கல்வியும், பட்டதாரிப் பட்டத்துக்கான 3-5 வருடங்கள் வரையான பட்டப்படிப்பும், பட்டப்பின் படிப்புக்கான மேலும் 1-3 வருடங்கள் வரையான கல்வியும்
17

Page 11
* பாடசாலைக் கல்வியுடன் சமாந்தரமாக தொழில் சார் தொழினுட்பப் பயிற்சி முறையும் ஒன்றிணைக்கப்படுதல்
* விசேட கல்விமுறையும், கல்விமுறையின் ஏனைய பகுதியுடன் தொலைக்கற்றலை ஒன்றிணைத்து அனுசரணை வழங்குவது
தமது சொந்த மொழியைச் சிறார்கள் கற்றுக் கொள்வதற்கு இப் புதிய கொள்கை அனுமதிப்பதாக உள்ளது. சகல மட்டங்களுக்காகத் தொழிற்கல்வியை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவத்தையும் இக் கொள்கை வழங்குகின்றது. பாட விதானத்தில் இவ்வாறான மாற்றங்களும் செய்முறை ஆற்றல்களுக்கு முக்கியத்துவமும் கற்பித்தலுக்கான மொழி மூலமும் ஊனமுற்ற பிள்ளைகளுக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் ஒவ்வொரு பிள்ளையும் அதனது சமூகத்தில் வசித்து வேலை செய்யக்கூடியவாறு தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதனாலாகும். (Tibebu 1995)
கல்வி பற்றிய புள்ளிவிபரங்களைக் கொண்ட வருடாந்த அறிக்கையின்படி 2000/2001 கல்வியாண்டில் எத்தியோப்பியாவில் கல்விரீதியில் பங்களிப்பு வீதம் :-
ஆரம்பக்கல்வி 75%
இடைநிலைக்கல்வி 12%
எத்தியோப்பியாவில் வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்
- எத்தியோப்பியாவில் பாரம்பரியமாக இளைஞர்கள் தமது கல்வி அல்லது சமூகப் பிரச்சினைகள் பற்றிய வழிகாட்டலையும் ஏனைய ஆலோசனைகளையும் மூத்தோரிடமிருந்து பெறுகின்றனர். சம்பிரதாயமற்றதாக இருந்தபோதும் ஒரு நபரின் பிரச்சினையைப் பொறுத்து ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குவதில் நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் ஒரு குடும்பத்தின் ஏனைய மூத்த அங்கத்தவர்கள் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். பிரச்சினையானது அதிகளவு தனிப்பட்டதாக இருக்குமாயின் குடும்ப அங்கத்தவர்களை விட
18

நண்பர்களிடம் தமது பிரச்சினையை அநேகமானோர் கொண்டு செல்வது வழக்கமாகும்.
தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்ற சமய நிறுவனங்களிலுள்ள செல்வாக்குள்ள மனிதர்களும் தமது மதத்தினைப் பின்பற்றுவோருக்கான வழிகாட்டல் சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
எத்தியோப்பியாவின் கல்வியின் நீண்டகால வரலாற்றுடன் ஒப்பிடுகையில் எத்தியோப்பியப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் சேவையானது அதனது ஆரம்ப கட்டத்தில் இருந்தது போன்று உள்ளது. இச்சேவை பிரதானமாக இடைநிலைக் கல்விப் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வழிகாட்டல் ஆலோசனை வழங்குவோர் பலர் உளவியலில் ஆகக் குறைந்தது ஒரு முதலாவது வகுப்புப் பட்டத்தைக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர்.
Suomiårsoas (Sri Lanka)
அமைவிடம்
இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள அழகான இயற்கை வளம் கொண்ட நாடாக இலங்கை உள்ளது. நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவு தென்னாசியாவில் இந்தியாவுக்கு அண்மையில் உள்ளது. இது 65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இலங்கையின் பழைய பெயர்கள் தம்பபண்ணி, தப்ரோபேன், செரண்டிப், சீலதுவிபம், சிலோன், இலங்காபுரம், ஈழம் என்பவையாகும். இந்து சமுத்திரத்தின் முத்து, இராஜகுமாரி எனச் சிறப்பிக்கப்படும் இலங்கையின் மத்திய பகுதி அழகான மலைப்பிரதேசங்களைக் கொண்டது. உலகளாவிய இயற்கையான சர்வதேசத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகமும் இலங்கையிலேயே உள்ளது.
19

Page 12
கலாசாரம்
பாரம்பரிய கலாசாரங்களைத் தன்னகத்தேயுடைய இலங்கை சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர்களைக் கொண்ட நாடாகும். பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கின்றார்கள். எனவே இங்கு பன்மைக் கலாசார அம்சங்கள் பிரதிபலிக்கின்றன. இக் கலாசார அம்சங்களைப் பின்பற்றும் விழாக்களும் சடங்குகளும் பண்டைய நாள் தொடக்கம் சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.
சராசரி எழுத்தறிவு வீதம் 92 சதவீதமாகும். பாரம்பரியமான கலாசாரத்தைக் கொண்ட இலங்கை, சமூக அபிவிருத்தியில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையிலும் இலங்கை வறுமையான உலகின் கடைசி 40 நாடுகளில் ஒன்றாகவுள்ளது. வறுமை மற்றும் தொழிலின்மை ஆகிய பிரச்சினைகளைச் சமாளிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகிய இரண்டையும் இணைத்து அதனுடாக வறுமை ஒழிப்பைத் தீவிரமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருந்தொகையான அரச சார்பற்ற அமைப்புகளும் பலவித இயல்பான மற்றும் அளவிலான வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பிரச்சினையின் அளவை ஒப்பிடும் போது தாக்கம் விரிவானதாகவே உள்ளது. இதனோடு வர்த்தக நியதிகளும் திருப்தியாக இல்லை. தொடர்சசியான நாணய மதிப்புக் குறைவு மற்றும் உயர் பணவீக்கம் வறுமையரின் விரிவை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகப் பல ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதுடன் பொருள் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இது நாட்டின் அபிவிருத்தியையே சிதைத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் கிட்டத்தட்ட 10 சதவீத தொடர்ச்சியான பாதிட்டுப் பற்றாக்குறை
20

உள்ளதாக இருக்கிறது. மொத்த வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 சதவீதமாக உள்ளதுடன், மொத்த செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமாக உள்ளது. நாட்டின் அரசியல் இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை இந்நிலையை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது.
இலங்கையில் கல்வி முறை
பாரம்பரிய, கலாசாரச் செழுமையைச் கொண்ட இலங்கை 16 ஆம் நூற்றாண்டில் அந்நியரின் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டு 1948 இல் சுதந்திரமடைந்தது. அதிலிருந்து பல கல்விச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன இவற்றுள் 1972, 1981, 1997 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்த்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
1992 ஆம் ஆண்டு இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழு பொதுக்கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை முன்வைத்தது. இதன் நோக்கங்களாக
1. கல்வி வாய்ப்புக்களில் சர்வசன மற்றும் சமத்துவ அடைதற் தன்மையை உறுதிப்படுத்தக் கல்வியை சனநாயகத் தன்மையானதாக்கல் 2. தேசிய நோக்கங்களையும், கல்வி நோக்கங்களையும்,
குறிக்கோள்களையும் ஒழுங்கமைத்தல் 3. ஒவ்வொரு தனியாளுக்கும் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தலும், அவரின் முழுமையான சமநிலை ஆளுமையை அபிவிருத்தி செய்தலும் 4. சமூக, பொருளாதார, கலாசார, சமய மற்றும் அரசியல் குறிக்கோள்களைப் பூரணப்படுத்தக்கூடிய கல்வியை வழங்கல் 5. இயற்கைச் சூழலுடன் இணைந்த குடிமக்கள் வாழ்வுக்கு
வழியமைத்தல்
என்ற வகையில் இச்சீர்திருத்தங்கள் நெைமுறுைழ்ழ்டுத்தப்பிடுகின்றன்க
21

Page 13
இலங்கையின் இன்றைய கல்வியமைப்பு
சேரும் 65
19- பல்கலைக் தொழில் சர் திறந்த
35p35D
ZA 4 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றுப் அதே போன்ற நிறுவனங்கள்
ல்லூரி 17- ங்கள் 12-13) தொழில்துறை
15- சிரேஷ்ட (தொழில்நுட்ப அலகுகள்)
இடைநிலை (g്ക്ക് 10-11) முறைசாராக் கனிஷ்ட 驴 கல்வி 10+ இடைநிலை நிகழ்ச்சித் (தரங்கள் 6-9) திட்டங்கள்
ஆரம்ப நிலை 5- (தரங்கள் 1-5)
இலங்கையில் வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்
இலங்கையில் 1950 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாணவர்களதும் விபரங்கள் அடங்கிய திரள் பதிவுகள் பேணப்பட்டன. இதற்கென வடிவமைக்கப்பட்ட படிவங்களை ஆசிரியர்கள் பூரணப்படுத்தினர். மேலதிகமாக இது தொடர்பான ஏனைய விடயங்கள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து 1960 தொழிலுக்கு வழிகாட்டல் சேவை ஆரம்பமானது. பின் 1981 கல்வி வெள்ளையறிக்கையில் 34 தொடக்கம் 50 வரையான பகுதியில் வழிகாட்டலின் முக்கியத்துவம் எடுத்தியம்பப்பட்டது. 1981 இல் இளைஞர் சேவை மன்றமும் கல்வியமைச்சும் இணைந்து இலங்கை
22

மன்றக் கல்லூரியில் வழிகாட்டல் சேவையை இனங்கண்டு கொள்ளலும் அதற்கான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுதலும் பற்றிய செயலமர்வு நடாத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1982 இல் யொவுன் மித்துரோ ஆலோசனைச் சேவை அமைப்பு கொழும்பில் தொடக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு இந்நிலையம் 30 இற்கு மேற்பட்ட நாடளாவிய ஆலோசனைச் சேவை நிலையங்களைக் கொண்டு இயங்கியது.
மேலும் களனிப் பல்கலைக்கழகம், தெரிவு செய்யப்பட்ட இளைஞர் சேவை மன்றங்கள், ஜனரத்தின தொழில்நுட்பக் கல்லூரி, தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகள், சுயாதீனமாக இயங்கும் தனியார் வழகாட்டல் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களும் தற்போது இயங்கி வருகின்றன.
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப் 'படுகின்ற கல்விச் சீர்திருத்தத்தினுடாக எல்லாப் பாடசாலைகளிலும் வழிகாட்டல் ஆலோசனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், அதற்கான தகுந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ஆசிரியப் பயில்வில் ஈடுபடும் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணிப் பட்டப் பாடநெறிகளில் ஆலோசனை வழிகாட்டல் பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த பயில்வை எல்லா ஆசிரியர்களும் பின்பற்றுதல் மிகப் பொருத்தமானது என்ற வகையில் இன்று இலங்கையில் இத்துறை சார்ந்த அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மாணவர்கள் எதிர்நோக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணவும் தொழில் வழிகாட்டல்களுக்கு உதவவும் இத்துறை அபிவிருத்தி நோக்கி இன்று நகர்த்தப்படுகின்றது.
ஆய்வின் நோக்கமும் பிரயோகமும்
நோர்வே, எத்தியோப்பியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடைநிலைப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனை
23

Page 14
வழங்கும் நிலைமைகளைக் கண்டறிதலுடன், இந்நாடுகளின் பன்மைத்துவக் கலாசார அம்சங்கள், ஒற்றுமைகள், வேற்றுமைகள், சமூக-பொருளாதார நிலமைகளினூடாக ஆலோசனை வழங்குவோர் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறிதல் மற்றும் ஆலோசனை பெற விளையும் இடைநிலை வகுப்பு மாணவர்களின் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் தீர்வுகளுக்கான வாய்ப்புக்களைத் தீர்மானிக்கும் காரணிகள் பற்றிய விளக்கங்களைப் பெறுதல் என்பவை ஆய்வின் முக்கிய நோக்கங்களாகின்றன.
இந் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இம் மூன்று நாடுகளிலும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளைப் பகுத்தாராய்ந்த போது பாடசாலைப் பாடங்கள் அல்லது பாடசாலை வெறுப்புக்குரியதாகக் காணப்படுதல், கருத்துக்களை முன்வைக்கும் போது சிரமப்படல், முதியோருக்கும் இவர்களுக்குமான இடைவெளிகள், சமூக நடவடிக்கைகளின் போது ஏற்படும் குழப்பம், மனதை ஒரு நிலையில் வைத்திருக்க முடியாதிருத்தல், பாடவேளையில் அல்லது வேறு சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பிதியடைதல், ஏகாந்த நிலையிலிருத்தல், அதிக துக்கம், ஆர்வம் குறைதல், தம் விருப்பங்களுக்குப் பெற்றோர்களின் அனுமதியைப் பெற முடியாமை, குடும்பத்தில் தாய் - தந்தை பிரச்சினைகள் மாணவர்களைப் பாதித்தல், காதல் மற்றும் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் முதலானவை இடைநிலை வகுப்பு மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன.
இப் பிரச்சினைகளால் கல்வி மற்றும் பாடசாலைச் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான மனோநிலையை மாணவர்கள் இழக்கின்றனர். இச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனை கூறுதல் ஒழுங்கான முறையில் வழங்கப்படுமானால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். தம்மைக் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் வசதி உண்டாகும்.
இந்த வகையில் இவ் ஆய்வின் குறிக்கோள்களாக இம் மூன்று நாடுகளின் இடைநிலைப் பாடசாலைகளின் வழிகாட்டல் 24

ஏற்பாடுகளின் நிலைமைகளைக் கண்டறிவது, இம் மூன்று நாடுகளிலுமுள்ள மாணவர்களின் பிரதான பிரச்சினைகளை இனங்காணல், அதனோடு இந்நாடுகளில் ஆலோசனை வழிகாட்டல் வழங்குவோரின் அனுபவங்கள், சவால்கள் ஆகியவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு ஆலோசனை வழங்குவோர் மாணவர்களுடன் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்துகின்றனர், பெற்றோர் மற்றும் ஆலோசனை வழங்குவோருக்கிடையே நிலவுகின்ற உறவுகள், ஏனையோருடன் ஆலோசனை வழங்குவோரின் தொடர்புகள் என்ற வகையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனை பெறவதற்குச் சமூகமளித்த மாணவர்களின் பிரச்சினைகள்
எத்தியோப்பியா
1. வறுமை பொருளாதாரப் பிரச்சினைகள் - பெரும்பாலான மாணவர்களின் கல்வி - உளவியல் பிரச்சினைகளுக்கான அடிப்படை மூலாதாரங்கள் பொருளாதார வறுமை நிலையே காணப்படுகின்றது. 2. ஆட்கடத்தல் கட்டாயத் திருமணங்கள் மிக அதிகமாக நடைபெறுதல், பாடசாலைக்கு வரும் வழிகளில் பெண்கள் கடத்தப்படல் 3. பாலியல் பிரச்சினைகள் - இளம் மாணவிகள் பலர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுதலுடன் கருவுற்றிருக்கின்றமை 4. குடும்பச் சீர்குலைவுகள் பிரச்சினைகள் சமூகப் பிரச்சினைகள் 5. நடத்தை ரீதியான பிரச்சினைகள் - பாடசாலைகளுக்கு வராது மறைந்திருத்தல், இடைவிலகல், ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் 6. தம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மைகள்
இலங்கையிலும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றுடன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பாடசாலைகளில் மாணவர் விருப்பங்களுக்கு ஏற்ப 25

Page 15
பாடத்திட்டம் அமையாமை, கற்பித்தல் முறைக் குறைபாடுகள், மாணவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கல், வகுப்பறைச் செயற்பாட்டுக்கு மாணவர்களுக்குத் தகுந்த உற்சாகப்படுத்தல் வரவேற்புக் கிடைக்காமை, நாளாந்தம் பாடசாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்ற ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப்படாமை என்பவையாகவுள்ளன.
நோர்வே
*1. சமூகப் பிரச்சினைகள் ஒய்வு நேரத்துடன் தொடர்பான பிரச்சினைகள் பொலிசாருடனான பிரச்சினைகள், ஏனையோரைத் துன்புறுத்தல், வகுப்பைக் குழப்புதல் 2. பாலியல் பிரச்சினைகள் - தம் வயது மாணவியரைப் பாலியல்
இம்சைக்கு மாணவர்கள் உள்ளாக்குதல் இ. போதைப் பொருட் பாவனை தொடர்பான பிரச்சினைகள்
பாடசாலை ஆசிரியர் - மாணவர் முரண்பாடுகள், பிரச்சினைகள் 5. பாடங்களைத் தெரிவதில் ஏற்படும் சிக்கல்கள் 6. குடும்ப உறவு முரண்பாடுகள்
இலங்கை
வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள், கலாசார மாற்றங்கள் பிள்ளை பெற்றோர் உறவு சிதைவு, பிளவுபட்ட குடும்பங்கள் யுத்த சூழ்நிலைத் தாக்கங்கள், வன்முறைக் கலாசாரம் பாடசாலைக்குச் செல்லாமை, இடைவிலகல் கட்டிளமைப் பருவப் பிரச்சினைகள், போதைப் பொருள் பாவனை, இயற்கை அனர்த்தங்கள்
இவ்வகையிலே ஒப்பீட்டு ரீதியாக உலகின் மிகச் சிறந்த செல்வந்த நாடுகளுள் ஒன்றான நோர்வேயில் பொருத்தமான வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் நிலைமைகள் காணப்பட்டும் இடைநிலை மாணவர்கள் சார்பாகப் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
26

ஆனாலும் எத்தியோப்பியா, இலங்கையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்கின்ற போது நோர்வேயில் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்ட கணனிகள், பெருந்தொகையான வளங்கள், பாடநூல்கள், வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் அறை, மாணவர்களுடன் உரையாடுவதற்கும் உரையாடல்களைப் பதிவு செய்து இரகசியம் பேணி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒழுங்கமைப்புத் திட்டம் பாடசாலைக் கல்வியினுTடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஆனால் எத்தியோப்பியாவில் மாணவர்களுடன் அந்தரங்கமாகக் கதைப்பதற்கு ஒரு தனியான இடமோ அறையோ இல்லாத நிலையில் மர நிழலே தஞ்சமாக உள்ளதைப் பெரும்பாலான ஆலோசகர்கள் எடுத்தியம்புவதுடன் அரசாங்கம் இத்துறையில் எதுவித அக்கறையையும் மேற்கொள்ளவில்லை. இலங்கையில் தற்போது அரசாங்கம் இது தொடர்பாகத் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடசாலைகளிலும் இதற்காக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எத்தியோப்பியாவின் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் அபிவிருத்திக்கான தடைகளாகப் பின்வருவன எடுத்தியம்பப்பட்டன.
1. இச்சேவைக்குக் கல்வியமைச்சு எதுவித கவனமும்
செலுத்தாமை 2. வழிகாட்டல் ஆலோசனை வழங்குவோருக்கு எதுவித
பயிற்சியும் வழங்கப்படாமை 3. இவர்களுக்கான எவ்வித ஊக்குவிப்புக்களோ, போதுமான
ஊதியமோ வழங்கப்படுவதில்லை 4. போதுமான வளங்கள் வசதிகள் இன்மை
எனினும் எத்தியோப்பியாவை விட இலங்கையில்
ஓரளவு வளங்கள் இருப்பதுடன் அரசாங்க உதவிகளும் கிடைக்கின்றன.
27

Page 16
மேலும் இம் மூன்று நாடுகளிலும் வழிகாட்டல் ஆலோசகராக இருப்பதற்கான அளவுகோல்களில் வேறுபாடுகள் இருப்பினும் எத்தியோப்பியாவில் முழுநேரமாக இப்பணியில் ஈடுபடுவோர் அதிகமாகவுள்ளனர். ஆனால் நோர்வேயிலும் இலங்கையிலும் பெரும்பானோர் பகுதி நேர அடிப்படையிலேயே இச்சேவையை ஆற்றுகின்றனர். பொதுவாக இச்சேவையை ஆற்றுவோர் தமக்குப் பொருத்தமான ஊதியம் தேவை என்பதை எடுத்துரைக்கின்றனர். மற்றும் நோர்வே நாட்டு ஆலோசனை வழிகாட்டல் சேவை வழங்குவோர் அனைவரும் முறையான பயிற்சியைப் பெற்றுள்ளனர். ஆனால் எத்தியோப்பியாவிலும் இலங்கையிலும் இந்நிலை காணப்படவில்லை.
நோர்வே - எத்தியோப்பியா ~ இலங்கை வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் ஒத்த தன்மைகளும் ~ தீர்வுகளும்
நோர்வே, எத்தியோப்பியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடைநிலைப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை தொடர்பான ஒப்பீட்டாய்வை மேற்கொண்ட போது மிக முக்கியமான விடயங்களில் ஒத்த தன்மைகள் (Similarities) காணப்பட்டன. அதாவது மாணவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் ஒரே மாதிரியானவையாகக் காணப்பட்டன. இப்பிரச்சினைகள் பெரும்பாலும் பாடசாலையுடனும், குடும்பத்துடனும் தொடர்புடையவையாக இருந்தன. அவற்றுள் கற்றலில் கவனம் செலுத்தாமை, ஞாபக மறதி, பாடசாலை ஒழுங்கு முறை, முரண்பாடுகள், ஆசிரியர் - மாணவர் உறவில் பொருத்தப்பாடின்மை, வன்முறைகள் அதிகரிப்பு, பாடசாலைக் கலைத்திட்ட விடயங்கள், குடும்பத்தில் தாய் - தந்தை முரண்பாடுகள் பிரச்சினைகள், பிளவுபட்ட குடும்பத்தாக்கங்கள் என்பவை இம் மூன்று நாட்டு இடைநிலை வகுப்பு மாணவர்களையும் பெருமளவு தாக்கத்துக்குள்ளாக்குகின்றன. எனவே இவற்றிலிருந்து விடுதலை பெற மாணவர்களுக்கு உதவுதல் மிக அவசியம் என்பதே இவ் ஒப்பீட்டு ஆய்வின் முக்கிய அபிவிருத்தி நோக்கிய தீர்வாக முன் வைக்கப்படுகின்றது. இவ்வகையில் கல்வி வழிகாட்டல் தொடர்பான மேலதிக செயற்றிட்டங்கள் தேவையாகவுள்ளன.
28

கல்வி வழிகாட்டலிலும் தகவல் திரட்டலிலும் ஆசிரியரின் பங்கு
பாடசாலை மாணவர்கள் திறமையாகக் கற்கவும், கற்கை நெறிகளை, பாடங்களைத் தேர்ந்தெடுக்கவும், மேம்பட்ட கல்வி அடைவுகளை எட்டுவதில் எதிர்ப்படும் இடர்களை அகற்றவும் உதவுதல் கல்வி வழிகாட்டலாகப் பரிணமிக்கின்றது. மேலும் மாணவர்கள் தங்களுக்குக் கல்வியில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறவும் கல்வி வழிகாட்டல் துணைபுரிகின்றது. புதிய பாடங்கள், கற்கைநெறிகள், அவற்றைப் பின்பற்றத் தேவையான தகுதிகள் என்பவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளச் செய்து மாணவர்களை அதற்குத் தகுந்தவாறு திட்டமிடச் செய்தலும் கல்வி வழிகாட்டலின் பயன்பாடாகவுள்ளது. இது Qg5 TLjust 35ds 856)6f 6fasst LT6T) (Education Counsellor) மாணவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து ஒவ்வொரு மாணவரும் எதிர்நோக்கும் இடர்களை அறிந்து அவர்களுடன் சுமுகமாக உறவாடி நல்வாழ்வுக்கு வழிகாட்டுதலே இன்றைய தேவையாகவுள்ளது. இவ் வழிகாட்டலை ஆசிரியர்களே செய்தல் மிகப் பொருத்தமானது என்பதையும் இவ் ஒப்பீட்டாய்வு புலப்படுத்துகின்றது.
வழிகாட்டும் திட்டத்தில் ஆசிரியரின் பங்கு (Role of teacher in guidance programmes) g6örgi Lós (upda5uuLDITs நோக்கப்படுகின்றது. அதுவும் இடைநிலைக் கல்வி மாணவர்கள் பல பிரச்சினைகளுடனே தமது கருமங்களை ஆற்றுகின்றனர். யாராவது தமக்கு வழிகாட்டுவார்களா எனவும் பெரும்பாலானவர்கள் தவிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வழிகாட்டுதல் சிறந்த நல்லாசிரியர்கள் மூலமே நடைபெறுகின்றது. ஏனையோரை விடக் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர்களுடன் மாணவர் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் கஷ்டங்கள், குடும்பச் சூழல், பணப்பிரச்சினைகள், அவர்களைத் தொந்தரவு செய்யும் இதர பிரச்சினைகள் என்பவற்றை நன்கு அறிந்து மாணவருடன் பரிவுடன்
29

Page 17
நடந்து கொள்வதன் மூலமும், அவர்களிடம் அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலமும் மாணவர்களுக்கு ஆசிரியர் நல் வழிகாட்டலாம். இந்நிலை நோர்வே, இலங்கை, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஓரளவு சிறப்பாகவுள்ளது.
ஆனாலும் இவ் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் செயலாற்றுகையில் முக்கியமாக நோக்க வேண்டிய அம்சமாக மாணவர்களின் தனியாள் வேறுபாடு உள்ளது. தனியாளுக்குரிய தனித்துவங்கள் நிராகரிக்கப்படும் போது உள முரண்பாடுகளும், நெருக்குவாரங்களும் ஏற்படத் தொடங்குகின்றன. சீராக்கப் பிரச்சினைகள் எழுகின்றன. நடத்தைகளிலே பிறழ்வுகள் ஏற்படத் தொடங்குகின்றன. இந் நிலையில் பெற்றோர், ஆசிரியர்கள் அவர் களைக் கண் டிக் கும் பொழுது சிக் கலி நிலை முறுகலடைகின்றது.
தனியாள் வேறுபாடுகள் நிராகரிக்கப்படும் பொழுது நிறைவு பெறாத ஆளுமை உருவாக்கம் நிகழ்கின்றது. ஒவ்வொரு மாணவரிடமும் மலர வேண்டிய புத்தாக்கங்களும், புதிய கண்டுபிடிப்புக்களும் ஏற்படாமல் போய்விடுகின்றன. தனித்துவம் மிக்க கலைஞர் களையோ, விஞ்ஞானிகளையோ, சிந்தனையாளர்களையோ, ஆற்றுகைத் திறனுள்ளவர்களையோ உருவாக்க முடியாமல் போய்விடுகின்றது. அச்சில் வார்த்து எடுத்தல் போன்ற அபத்தமான செயல்முறையைக் கல்வி முறைமை உருவாக்கிக் கொண்டிருத்தலை மாற்றியமைக்கும் முயற்சிகளை விசைப்படுத்த வழிகாட்டல் ஆலோசனைச் சேவை பெரிதும் உதவுகின்றது. இதன் உயிர்ப்பான செயற்பாடுகள் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கே வழிகாட்டுகின்றன.
30

REFERENCES
. Shertger and Shelley - Fundamentals of Guidance
(1976), Houghton Mifflin Co. USA, 1976
. Osipow, Walsh - A survey of Counselling Methods
(1980), The Dorsey Press, USA
. Salvatove and R. Maddi — Personality Theories -
A Comparative Analysis (1976), The Dorsey Press, i USA
. S.P.Chaube and A. Chaube - Comparative Educa
tion(2000), Vikas Publishing , New Delhi
. Robert and D. Byrne - Social Psychology (2004),
Prentice Hall of India, New Delhi
. Tara Chand - Educational Psychology (1993),
Anmot Publications, New Delhi.
. www.uniceforg Web site
31

Page 18
கழுத்தமிழின் அதறம்தந்த வாழும் சொர்ே)க்கம்!
ஈழத் தமிழின் இதயம் நிலைத்த இமயம் ஒன்று இமைகள் மூடியது: தமிழர் நெஞ்சில் கமழும் தங்கச் சிந்தனைச் சிகரம் வந்தனம் சொன்னது:
சாதித்த படைப்பினால் சாஹித்திய மண்டலங்கள் சந்தித்த “சுந்தரே' நூற்றுக்கணக்கில் நூல்களை நாட்டிய நாற்றுப் பயிரே. நேற்றுவரை உன்னை நெஞ்சிருத்தினோம்; நேராது உனக்கேதுமன்று. கூற்றுவன் கூட குறிபார்த்திருந்தான். வேற்றிடத்தில் உனக்கு வேட்டுவைக்க.
மூத்த சொத்தே மூதறிவே உந்தன் முழக்கம் என்றும் முடக்கம் கொள்ளாது! ஈழ மண்ணில் இலக்கியத் தளத்தில் ஆழ இருந்த அற்புத சொ(ர்)க்கமே! நாளது ஆயினும் வீழாது உந்தன் விதைப்புகள் விளையும்!
இருப்பினும், சொக்கையா ஒரு துக்கமையா! கன்னியர் சைக்கிளில் மின்னிடும் வெள்ளாடை மிடுக்குடன் பவனி வரும்உன் புலமை வலத்தின் புதுமைப் பொலிவை எண்ணிறைந்து கண்டுஇனி தன்னிறைவ தெப்போது? நின்நிறைவை பெண்ணி, 8 مجم கண்ணிறைகின்ற்திப்போது.
ratDrey ரட்னேஸ் ாழ்தேசய்கல்வியியற் கல்லூரி 32


Page 19