கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒட்டுசுட்டான் அருள்மிகு தான்தோன்றி ஈசுவரர் ஆலய மஹா கும்பாபிஷேக மலர்

Page 1
ஒட்டு
அருள்மிகு தான்
அ
こ
மஹா கும்ப
 

ட
FL-IT iii
தோன்றி ஈசுவரர்
!,հմա
பிஷேக மலர்

Page 2


Page 3
நல்லை திருஞானச இரண்டாவது குரும யூரீலழறீ சோமசுந்தர தே
பரமாச்சாரிய சுவா
ஆசியு
வன்னிப் பிரதேசத்தில் தா மிசைப் பாதமலர் சூட்டி அடியா செய்கின்றான். சுயம்புலிங்கமான மூ என்ற திருப்பெயரும் வழக்கில் உண்
தேவி பெயர் பூலோக நாயகிய புதுமைக் கோலங்கொள்ள எடுத்த வில் நிறுத்தியுள்ளமை மகிழ்வைத்
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈ: இனிதே நிறைவேறி குறைநீக்கி மக்க வும், இதன் நினைவாக வெளியிட பாக அமைந்து எல்லோருக்கும் பய தான்தோன்றி ஈஸ்வரரின் திருவடிக திப்போமாக
"என்றும் வேண்டும் .
இன்ப அன்பு'
Lu s

ம்பந்தர் ஆதீன கா சந்நிதானம் சிக ஞான சம்பந்த மிகள் வழங்கிய
ரை
ன்தோன்றியான ஈசன், சென்னி ர்களை வாழவைக்கும் அருளாட்சி pலமூர்த்திக்கு வேகாவ னேஸ்வரர்
ாடு.
Tf பழைமையான இத்திருக்கோயில் நன் முயற்சி கும்பாபிஷேக நிகழ் தருகிறது.
ஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நளை நல்லவண்ணம் வாழச் செய்ய ப்படும் கும்பாபிஷேக மலர் சிறப் ன்படவும் பூலோக நாயகி சமேத ளைப் பணிந்து வணங்கிப் பிரார்த்
ரீலபூg குருமகா சந்நிதானம்

Page 4
மாகாண கலாசார அலுவ
திரு. எஸ். எதிர்மன்
ஆசிச்
முல்லைத்தீவில் உள்ள மிகப்புரா தலங்களுள் ஒன்றுதான் ஒட்டுசுட்டான் வாலயம் வன்னிப் பிரதேசம், யாழ்ப்பு தேசத்துக்கோயிலாகக் கொள்ளப்படுகி சர்கள் ஆகியோரின் ஆதரவைப் பழ விளங்கியதை நாம் அறிய முடிகின்றது. ஆவுடையார் இல்லாத சிவலிங்கமே ( தோன்றிய சுயம்புலிங்கம் அமையப்ெ என்ற நாமம் நிலைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாகத் திருப்பணிே கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது பணி வேலைகளுக்கு எமது கல்வி கல: நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்த வரப்பெருமானுடைய வருடாந்த உற் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பெ நடைபெறும். ஆடி அமாவாசைத்தீர் போது தான்தோன்றி ஈஸ்வரர் கோயி தமாடுவது வழக்கமாகும். இவ்விதம் சிற தான்தோன்றி ஈஸ்வரர் குடமுழுக்கு விழாவின்போது சிறப்பு மலரொன்று மேற்கொண்டுள்ள முயற்சி மிகப்பார ஷே கவிழாமலர் சிறப்புடன் மலர ந கின்றேன்.

கள் உதவிப்பணிப்பாளர்
சிங்கம் அவர்களின்
செய்தி
தன வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தான்தோன்றீஸ்வரன் ஆலயம், இவ் ாணம் அனைத்திற்கும் பொதுவான எறது. குளக்கோட்டன், வன்னி அர ங்காலத்தில் பெற்று மிகச்சிறப்பாக திருவானைக்காவில் உள்ளது போன்று இங்கு காணப்படுகின்றது. தானாகத் பெற்றமையால் தான்தோன்றீஸ்வரர்
வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மகா மனநிறைவினைத் தருகின்றது. திருப் "சார அலுவல்கள் அமைச்சு ஓரளவு க்கதொன்றாகும். தான்தோன்றி ஈஸ் சவம் ஆனி மாத அமாவாசையில் ார்ணமி தினத்தன்று தீர்த்தோற்சவம் த்தம், கெருடமடுவில் தடைபெறும் லிலிருந்து சுவாமி எழுந்தருளித் தீர்த் ப்புக்கள் பலபொருந்திய விம்பெருமான் காணவும், அதனோடு தொடர்பான வெளியிடவும் திருப்பன்னிச்சபையினர் ாட்டப்படவேண்டியதாகும். *கும்பாபி லாசி கூறுவதில் பெருமகிழ்ச்சியடை
எஸ். எதிர்மன்னசிங்கம், மாகாண கலாசார அலுவல்கள்
உதவிப்பணிப்பாளர்,

Page 5
முல்லை மாவட்ட அரசா ஆசிய
பழம்பெருமை வாய்ந்த ஒட்டுசுட் பத் திருப்பணி நிறைவேறி கும்பாபி6ே பதைக் கேள்வியுற்று மன மகிழ்வுறுகி களரல் மிகவும் பாதிக்கப்பட்ட இந்து 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற வா ஆலயத்தினைத் திருத்துவதற்கு, ஆலய யில், நடவடிக்கை எடுத்தமை பாராட்டு ஏற்பட்ட பற்றாக் குறையின் மத்திய முயற்சிகளின் பலனாக, திருப்பணி 6ே வன் அருள் பாரித்துள்ளான்.
ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈ அறிய விரும்பிய போது, முல்லைமணி தகமொன்று கைக்குக் கிட்டியது. அ இவ்வாலயத்தின் வரலாற்றினை எடுத்து பிரதேசத்தில் கடமையாற்றியபோது, ே ஈஸ்வரனின் பெருமைகளை அறிந்து, ( னொரு தான்தோன்றி ஈஸ்வரர் ஒட்டு வாலய தரிசனத்தினை அடிக்கடி மே மையையிட்டும், எல்லாம் வல்ல இறைவ
e': *
இவ்வாலயம் 1500 ஆண்டு காலப் டின் ப்ல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவ திகழ்கின்றது. இத்தலத்தில் இண்றவ6 பூலோக நாயகியாகவும் காட்சி கருகி வன்னிமன்னர்களின் ஆதர்வைப்பெற்று மேலும் வளம் பெற இறைவன் அருள்

"ங்க அதிபர் அவர்களின்
புரை
ட்டான் தான்தோன்றி ஈஸ்வரன் ஆல ஷகம் அண்மையில் நடைபெற இருப் ன்றேன், அண்மைக்காலக் கலவரங் ஆலயங்களில் ஒன்று இதுவாகும். னக்குண்டு வீச்சினால் சேதமடைந்த நிர்வாகத்தினர், சிரமங்களுக்கிடை தெற்குரியது. கட்டிடப்பொருட்களுக்கு பிலும், மனம் சோர்வுறாது எடுத்த வலைகள் இன்று நிறைவேற இறை
ஸ்வரரின் வரலாற்றுப் பெருமையினை அவர்களின் பாடல் வடிவிலான புத் ல்வாக்கத்தின் மூலமாக சுருக்கமாக 1க் காட்டியுள்ளார். மட்டக்களப்புப் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி கொண்டேன். ஈழத்தில் உள்ள இன் டுசுட்டானில் அமைந்திருப்பதும் அவ் ற்கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டிய னுக்கு நன்றியுடையவனாகின்றேன்.
பழமைவாய்ந்த தோடு, வன்னி நாட் பர்களுக்கும், புண்ணிய சிவபூமியாக ன் வேகாவனேஸ்வரராகவும், தேவி ன்றனர். குளக்கோட்டன் உட்பட வளம் பெற்ற இவ்வாலயம், மென் வேண்டி இறைஞ்சுகின்றேன்.
இ. தர்மகுலசிங்கம்

Page 6
6. சிவம
ஒட்டுசுட்டான் உதவி அரச
ஆசிய
冷
வன்னிப் பிரதேசத்தில் மிகவு வது ஒட்டுசுட்டான் தான்தோன்றி நாயகி சமேத வேகா வனப் பெரும அடியார்களுக்கு அருள் பாலிக்கிற FF u qlib வேகாவனேஸ்வரர் ஈழத்தில் வரையும் தன்பால் ஈர்த்து அருள்
ஆலயப் புனருத்தாரண வேலை நடைபெற்று வந்ததை நான் நோ றாக்குறை, சீமெந்து, கம்பி, ஒடு பெறுவதில் ஏற்படும் சிரமம், சமாளித்துத் திருப்பணி வேை உழைத்தவர்கள் பாராட்டுக்குரியவ
இக்கட்டான இச்சூழ்நிலையி கும்பாபிஷேகம் நடைபெறத் திரு யைத் தருகிறது. . . ...
புனராவர்த்தன கும்பாபிஷே யொட்டி வெளியிடப்படும் கும்பா வும் எனது நல்லாசிகளைத் தொ

யம்ஐ)
ாங்க அதிபர் அவர்களின்
புரை
ம் புராதன சிவாலயமாகத் திகழ் ஈஸ்வரன் ஆலயமாகும். பூலோக ான் சுயம்பு லிங்கமாகத் தோன்றி )ார். வேண்டுவார் வேண்டுவதை வாழும் சைவ அன்பர்கள் அனை மழை பொழிகின்றார்.
}கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் fல் தரிசித்துள்ளேன். நிதிப் பற் போன்ற கட்டிடப் பொருட்களைப் இத்தனையையும் வெற்றிகரமாகச் லயை நிறைவேற்ற முன்னின்று பர்கள்.
− '' /ʻ •; ...
"... ۰ : " . هام.
ல் திருப்பணிகள் முற்றுப்பெற்று வருள் பாலித்துள்ள்து மிக்க மகிழ்ச்சி
ம் இனிது. நிறைவேறவும் இதனை பிஷேக மலர் தெய்வமணம் கமழ வித்துக் கொள்கிறேன்.
. கந்தசா

Page 7
முல்லைத்தீவு பிரதேசச் திரு. நா. தணிகாசலம்
ஆசிய
ஈழத்தில் வரலாற்றுப் பெருமைமி கள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவர் தான்தோன்றிகவரர் ஆலயமுமாகும். வட யொரு பழைமையும், பெருமையும், ட சுட்டான் தான்தோன்றீசுவரர் ஆலயம் தின் பல்வேறு கிராம மக்களின் சிவ
ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டுகளு பெருமையுடையது இத்தலம். குளக்சே வாலயத்திற்கும் நீண்ட நெருங்கிய ெ றோம். அவன் இவ்வாலயத்தின் திருப்பணி சொல்லப்படுகின்றது. பின் வந்த வன் நிறைவேற்றி இவ்வாலயத்தை வளர்த்து
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் ஈழ ஆலயங்கள் பல இடித்து அழிக்கப்பட்ட அந்நியரால் சிதைக்கப்படாது நிலைெ அண்மைக்காலங்களில் வானுரர்தி விமா கான மை துர்ப்பாக்கியமே, ஆனாலும் ஆ கும்பாபிசேகம் நடைபெற இறையருள். வரரின் அருள் சைவப்பெருவுலகிற்குக் கி
கும்பாபிசேகத்தையொட்டி வெளிய வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைவதோடு கும் நன்றி கூறக்கடமைப்பட்டவனாவேன்

கல்விப்பணிப்பாளர் பிள்ளை அவர்களின்
புரை
க்க தான்தோன்றிசுவரர் தேவாலயங் ஆலயமும், கொக்கட்டிச் சோலைத் மாகாண சைவப் பெருமக்களின் ஒரே 1516ծԼDպւծ Փ– 60ւ-լյ சிவதலம் ஒட்டு என்றே கூறலாம். வன்னிப்பிரதேசத் ண்ணிய தலமும் இதுவே.
நக்கு முன்னர் தோன்றிய வரலாற்றுப் 5ாட்டன் என்ற அரசனுக்கும் இவ் தாடர்புகள் உண்டென்று அறிதின் ரி வேலைகளை செய்வித்தான் என்றும் ‘னியரசர்கள் பலரும் திருப்பணிகள்
வந்துள்ளார்கள்.
த்தின் பல பாகத்திலுமுள்ள சைவ -ன. ஆனால் இவ்வாலயம் மட்டும் பற்று விளங்குகின்றது. ஆனாலும் னங்களின் குண்டுத்தாக்குதலுக்கிலக் பூலய புனருத்தாரணம் இடம் பெற்று பாலித்துள்ளது. தான்தோன்றிசு ட்டும் என்பதில் சந்தேகமில்லை.
பிடப்படும் இம்மலருக்கு ஆசிரியுரை , இதற்கு அருள் கூர்ந்த ஈசுவரனுக் r ܗܝ
நா. தணிகாசலம்பிள்ளை, பிரதேசக் கல்விப் பணிப்பாளர்.

Page 8
சிவ வேகாவனேஸ்
'ஏகம் ஷத் விப்ரா பகுதி "வேற்றாகி விண்ணாகி ழ
பூவுலகில் வாழும் ஆன்மாக்களி பரம்பொருளான சிவ பெ ரு மா ன் ஆகமம் என்னும் சிறப்பு நூலையும் அ( சிவனின் அருவுருவ வடிவான சிவலிங்கத் கூறப்பட்ட சிவலிங்கங்கள் பல. அவையா? லிங்கம், காணபத்தியலிங்கம், மானுஷ லிங்க் லிங்கம் என்பது தானே சுயமாக வள, தாபிக்கப்பட்டது. காணபத்திய லிங்கம் க மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. பான லிங்க
இவற்றுள் சுயம்புலிங்கமே சிறந்தத தொடக்கம் இல்லை. பலவகைப்பட்ட உற்ப செய்யக்கூடியது. சிதைவுகளை வெள்ளி டெ பூஜை முதலியவை செய்யப்படாவிடினும் செய்வார் என்றும் சிறப்பித்துக் கூறப்படுவ
கருணைக் கடலான சிவபெருமான் இ எழுந்தருளியுள்ளார். நம் நாட்டில் மூன்று
இவற்றுள் சிறந்து விளங்குவது ஒட்( மாகும். இப்படிப் பெருமைவாய்ந்த இந்த கூறப்படும் ஆவர்த்தனம் புனராவர்த்தனம் களில் புனராவர்த்தனம் நடைபெற்றது. யாகசாலை அமைக்கப்படவேண்டும் என் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நம் நாட்டில் இன்னல்கள் பல மத் பெருமான் திருவருளால், 33 குண்ட கும்ப காரணம் மணிவாசகப் பெருமானின் திருவ தாள் வணங்கி" என்னும் பெருமானின் வருடங்களுக் கொருமுறை நடைபெறும் உதவிகள் பல புரிந்தோரும், உலகில் வாரு அருள்மிகு பூலோக நாயகி சமேத வே வணங்கி வாழ்த்துகிறேன்.
ஸர்வே ஜனா! சுகினோ பவந்து.
தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தானம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.

ம் ரர் துணை
வதந்தி' ாறாய் போற்றி"
நன்மை கருதி எ ல் லா ம் வல்ல வதம் என்னும் பொது நூலையும் ளினார். சிறப்புநூலாக 28 ஆகமங்களில் தப் பற்றிக் கூறப்படுகின்றன. அப்படிக் ன சுயம்புலிங்கம், தைவிகவிங்கம் ஆரிஷ ம், பாணலிங்கம் என்பவையாகும். சுயம்பு வது. தைவிகம் என்பது தெய்வங்களால் னங்களால் தாபிக்கப்பட்டது. மனுஷலிங்கம் ம் சங்கை நீரில் دمjلا گزئیل نj T لیتے کہ •
ாகும். ஏன் எனில் இந்த லிங்கத்துக்குத் தங்கள் ஏற்படினும் திரும்பவும் பிரதிஷ்டை ான் முதலியவற்றால் நிரப்பி பூஜிக்கலாம். சிவபெருமான் சாந்நித்தியமாக வாசம் தால் சுயம்புலிங்கமே சிறந்ததாகும்.
ந்தியாவில் 68 ஸ்தலங்களில் சுயம்புலிங்கமாக தலங்களில் எழுந்தருளியுள்ளார்.
டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய த ஆலயத்தில் ஆகமங்களில் சிறப்பித்துக் , அத்தரிதம் என்னும் நான்கு பிரதிஷ்டை இதி~ம் சுயம்பு லிங்கமாயின் 33 குண்டனும் விதிக்கமைய, உத்தமோத்தம மஹா
தியில் எல்லாம் வல்ல வேகாவனேஸ்வரப் ா பிஷேகம் நடைபெற்றது எனின் அதற்குக் ாசக வாக்கியமான 'அவனருளாலே அவன் கருணையேயாகும். இங்ங்ணம் பன்னிரண்டு இந்தக் கும்பாபிஷேகத்தை தரிசித்தோரும் ழம் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ காவனேஸ்வரப் பெருமானின் பாதங்களை
பம்.
ஒவறி ந. இராஜாராம் குருக்கள். வேதாக கிரியாதிலகம், கிரியா பூஷணம் ஆலய பிரதம குரு, பிரதிஷ்டா பிரதமகுரு.
6 ཐགས་མཁལ་མ་

Page 9
ஒட்டு *தான்தோ
பாதம்பன அரியான் பொய்கை, கவிசேகர
களப்பு
**தான்தோன்றி யீசுரரே' தய நான்னயந்து வந்தேன், நற்றமி ஏற்றே யருள்வா, யென்வினை போற்றினேன் பொற்பாதப் ே
பதிகம்
அருமறைக்கு மெட்டாதே, மன சிந்தனைக்கு மப்பாலா யா பெருமானைப் பேசுகின்ற வார் பின்னாக முன்னின்ற பெம் அருளுருவப் பூலோக நாயகியா ஆவுடையா ராயமர்ந்த அட திருவளருந் 'தான்தோன்றி யீ தேராதே நாயடியேன் திரி
திரிபுரங்கள் தனையெரித்தோன் தீண்டா வண்ணங் காத்தே மருமலர்ப்பூங் கொன்றைநிழல்
மாநிலத்தில் *"தான்தோன் அருமலரிட் டருச்சிக்கு மடியார் அருவினைக ளகல்விக்கு மரு பெருமையுற வே**யொட்டுச் சு
*多:
* பெருமானை நான்பேணா :
பேணாதார் தங்குறையும் நீக்கு
பெருமதஞ்சேர் யானைகளை வீணாகா வண்ணமுயர் கோவில் வித்தகனாங் “ குளக்கோட் காணாத புதுமையெல்லாங் காட கணக்கருக்கே திருவமுத மு. பூணாக வரவணிந்த புனிதன் த போற்றாதே யிற்றைநாள் (

6.
வமயம்
சுட்டான் ன்றி ஈசுவரரின்
ரி பதிகம்”
ன். தமிழ்மணி கை. செல்லத்துரை
Nழ்ப்பதிகம் தான்பாட ழே-தான்தந்து கள் தாமகலப்
tungi.
றையோர் தங்கள் “னான் தன்னைப் த்தை எல்லாம் மான் தன்னை ர் தம்மை ம்மான் தன்னைத் சன்" தன்னைத் ந்த வாறே.
", திகழொட்டைத்தீ ான்
மகிழ்ந்திருந்து றி** யாயினானை
தங்கள்
மருந்தைப் ட்டான்' மேவும்
திருந்தவாறே.
ம் நீரான்
ாப் பிடிக்கச் செய்தே
கொண்டான்
ட" டிைமை யானான்
ட்டி நின்றான்
தவினானைப்
ன்னைப்
போக்கினேனே.
7 -

Page 10
போக்குவர வொடுபுணர்ப்பொன்
புதுமலரில் மணம்போலப் டெ ஆக்கியே காத்தழிக்கு மறச்சீ மா யம்மைதனை யகலாதே யை பூக்கின்ற வுலகில்வினை புசிப்பித் பூங்கழல்கள் காட்டி யருளுத நாக்குழறப் போற்றியடி நாடா
நாநிலத்தி லேன்படைத்தாய், நாதனே, யரசடியி லிறக்கி வைத் நற்பீப்பா வத்தனையும் ந6ை கோதகலுங் கோவில்தனிற் கொடு கொதிநீரா லபிஷேகஞ் செய் யாதரவா யறுகுதனை நந்தி யுண் அற்புதமே காட்டியமர் கடந் பூதலத்திற் போற்றாதே பிறந்து
போய்நிரயம் புகுதாமற் போ
போற்றரிய திருக்குளமொன் றை பொற்பாத மேயிறஞ்சி யாரட ஆற்றரிய சேவையெலா மாற்றிப் மரும் பொருளும் பூமிகளு ம சாற்றரிய திருத்தொண்டு சாதித்
சரணமலர் தஞ்சமென நின்ற மாற்றரிய பிறவியறுத் தாண்ட வ மாநிலத்தி லெனையாள மன
மனம் விரும்பி மணியகாரன் தானு மருவுசுவைக் கதலியிளனிர் க சினமகல்வா யெனக்கவை தான் திருவுளங்கொண் டேதேற்றி தினமன்றங் க்வர்பால்நீ பூண்டவ
சிறுமையுளேன் தன்பாலும் மனம் வாக்குக், காயமொத்து ே மாயை களைந் தெனையாண்
ஆண்டருள வேண்டுமென்றே வே ஐம்புலனாம் வேடர்களை ெ காண்டகைய சப்பறமாங் கவினா கருதரிய ஞானவுப தேசம்செ ஆண்டிரத மீதிவர்ந்தே யாணவ: யகற்றியே யமிர்தமழைத் தீ வேண்டரிய மெய்ப்பொருளே, வி வனத்தானே? " விரும்பியென

றில்லான் தன்னைப் ாலிந்தே யெங்கும் -9 ாத்தும் மேவிப் துப்பின்
வானை தேனை
நாதரூபா
ாயா வண்ணம் போய் வைத்துக் பித் தோனை ணும் தான் தன்னை
பின்னும் ற்று வீரே.
மக்க வேண்டிப் b பித்தே
பொன்னு *ப்பணித்தே
தேத்திச் ானுக்கே
iTip ங்கொள்ளிரோ
னுண்ட னிகள்தன்னைச் கிடைத்ததென்று மகிழ்வித்திட்ட ன்பைச் f : காட்டுகென்றே வண்டுகின்றேன் ாடே யருள்வீரிசா
ட்டையாடி வல்வீரையா ர் வீட்டில்
Filari
த்தை
ர்த்தமாடும்
மலா, "வேக, ன யாட்கொள்வீரே
8 -

Page 11
* ஆண்டருள்கே தீச்சரத்தி லடிபணி னரியபெருங் கீர்த்தியுற்றே ன நீண்டதல யாத்திரையின் பயனாய் நிதிபெற்றே நீணிலத்தில் வாழ் பூண்டவுன் தன் திருவருளாற் குருவ போற்றுகின்ற பிரார்த்தனைய ஆண்டவனே யடியேன்றன் பிழைே
யாட்கொண்டே யடியினைக்கீ
இருந்தருள்' 'வே காவனமே சிதம்
இமையவர் செய் பூசையொலி பெருந்தவஞ் செய் சிவ முனிவன் ெ
பேசரிய தலமான தொட்டுச் அருந்தவரும் வந்தடியே வணங்குப் **அருவுருவ மான" ப் **தான் பெருந்த கமை யிவையென்றே பே
பெற்றியிலேன் பிழை பொறுத்
வாழ்
வானமழை பொழிந்து வள( வானவருந் துதிக்கின்ற வேத வானமிர்த ம7னதமிழ் வாழ் ஞானமொடு, தரணியுள்ளே
உலகில் மனிதர் செய்யும் எந்தக் க. ஒன்று அவசியம். அற்பமான ஒரு சிறு தெ போனாலும் தொழிலதிபரோ தொழில் திெ களை மேற்கொள்ளும் தகுதிச் சான்றான எங்கள் சமய காரியங்களுக்கும் அவசியமா யொன்று இருக்கவே இருக்கிறது. எம் சமய சிவதீட்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எ எமக்கு அடிப்படைத்தகுதி.

ந்தே
தன் பின்னாக
பின்றும்
ழ் கின்றேன்யான்
மானேன் ாற் புகழும் பெற்றேன்
பாறுத்தே ழிருத்துவீரே,
!ரந் தான்' "
காதிற்கேட்டேன் பருமையாலே
சுட்டான்
வண்ணம்
தோன்றியீசா!' சிவிட்டேன்
தே யாள்வாய் போற்றி
த்து
மெங்கும் மல்க 5ம் வாழ்க கச் சைவ
ார், நயந்தே வாழ்க
ாரியத்துக்கும் அடிப்படைத்தகுதி என 5ாழிலில் நம்மைச் சேர்த்துக் கொள்ளப் ணைக்களமோ எத்தனையோ விசாரணை அத்தாட்சிப் பத்திரங்களையும் கேட்கும் கக் கருதப்படும் அடிப்படைத் தகுதி த்தவர் எவரும் ஏழு வயதாகுமளவிலேயே ன்ற விதி இருக்கிறது. அதுவேதான்
- பண்டிதர் மு. கந்தையா

Page 12
கிரியைகள் நிறை * க. சி. குல
பிறவிப்பயன்
**இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்' என்பது பூரீலழரீ ஆறுமுக நாவலரின் அருமைத் திருவாக்கு. இது சைவாகமங்களின் சாரமா யுள்ள ஒரு வாசகம். சைவாகமங்கள் சைவசமயத்துக்குரிய வாழ்க்கை, வழி பாட்டு முறைகளைக் கூறுவன. அவை சைவப் பண்பாட்டின் பண்டாரம்.
சிவபெருமான் தம்மைத் தாபித்து வழிபட்டு உய்தி பெறுவதற்கே நமக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்தருளி னார். எங்கும் நிறைந்துள்ள இறைவனை எல்லோரும் கூடி ஒரிடத்தே நின்று வழி படுவதற்கு வாய்ப்பானது ஆலயம். ஆலயம்" கோயில் கோட்டம் முதலியன இறைவன் இருப்பிடங்களுக்கு வழங்கும் பெயர்கள்: ஆலயம் தனிக்கோயில், மலைக்கோயில்,
குடக்கோயில் என மூவகைப்படும் என்பர்.
தமிழர் வாழ்வில் சைவம் வளர்ந்த காலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் எழுந்தன. இன்றைய உலகில் ஐம்பெருங் கண்டங்களாக வகுக்கப்பட்ட பெருநிலப் பரப்பெங்கும் மிகப் பழைய காலத்தில் ஆலயங்கள் நிலவின. தென்ன :மெரிக்காவில் பழைய சைவாலயங் கள் மண் மூடுண்டு கிடைக்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளில் பல்வேறு இடங் களில் பாரிய அளவில் சைவாலயங்கள் பழுதுபட்டுக் கிடக்கின்றன. ஆபிரிக்காக் கண்டம், மத்திய கிழக்கு நாடுகள் எங் கும் சைவாலயங்கள் பல மறைந்து கிடக் கின்றன. பாரத தேசத்தின் பாகிஸ்தான் பகுதியின் வட பால் பஞ்சாப் மாநிலத் தில் பழைய சிவாலயங்கள்> மண் மூடுண்டு கிடைக்கின்றன. இவை 5,000 ஆண்டுப் பழைமை வாய்ந்தவை.

த கும்பாபிஷேகம்
த்தின்ம் அவர்கள்
ஆன்மா லயப்படும் இடமாதலால் ஆலயம் எனப் பெயர் பெற்ற கோயில் வழிபாடு இன்றியமையாதது. பெரும் பயன் தருவது. எனவே” பழந்தமிழர் கோயில் அமைந்த இடங்களிலேயே குடி யேறினர். கோயில் இல்லா இடங்களில் கோயில் அமைத்தனர். "ஆலயம் தொழு வது சாலவும் நன்று" என்னும் கோட் பாட்டைக் கொண்டொழுகினர்.
நாற்பெரும் படைகள் சூழ ஊர்வலம் சென்ற முடியுடை மன்னர்களும் கோயில் வலம் வந்து விணங்கிச் சென்றனர். முற் றுந் துறந்த முனிவர்களும் ஞானவொடுக் கம் பெறக் கோயில்களுக்கருகில் குடில் களில் உறைந்தனர். ஆலயங்கள் தோறும் சித்தர்களின் சமாதிகள் அமைந்தமையும் இவ்வாறே. இறைவன் ஆலயங்களில் உறையத் தொடங்கிய நாள் எந்நாளோ என்று நாயன்மார் இறைவனையே கேட் டுப் பாடியுள்ளனர். எனவே ஆலயவழி பாடு ஆரம்பித்த நாள் எவருக்கும் தெரி யாது. வழிபாடு வாழ்வளிக்கிறது. வாழ் வளிக்கும் வழிபாடு முத்தியின்பம் நல்கு கிறது. முத்தி பெறுவதற்குப் பக்தி நெறி அறிவிப்பது ஆலயம்.
ஆலய அமைப்பு
ஆலய அமைப்பு, மூர்த்திகள், திருவு ருவங்கள், அவற்றின் பிரதிஷ்டை அவற் றுக்கான கும்பாபிஷேகம், உற்சவங்கள் பிராயச்சித் தம் முதலியன யாவும் சைவா கமங்களில் விரிவாகவுள்ளன. ஆகமவழியில் நாம் ஒழுகினால் இறைவன் நமக்கு அண் மையில் வருகிறான். என்று மாணிக்க வாசக சுவாமிகள் அருளியுள்ளார். ஆலயம் பெரிய அண்டத்தின் பிரதியமைப்பு. அது எங்கள் உடம்பின் அமைப்பாகும். ஆலயம் கர்ப்பக் கிருகத்தை மூலத்தானமாகக் கொண்டு, மூலவரைப் பிரதிஷ்டைசெய்து, அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகிய
سمي 10
Y

Page 13
அமைப்புகளில் அமைய வேண்டிய நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியன அமை த்து அப்பால் தேவசபை, வசந்த மண்ட பம், யாகசாலை முதலியன அமைத்துக் கோபுர வாசலின்மேலே தூலலிங்கம் எனத் தூரத்திலே கண்டு வணங்கத் தக்க தாக வானளாவிய கோபுரம் எழுப்பி நற்பெரு மதில்கள் அமைத்து. அப்பால் பெருவீதிகள் தீர்த்தக் குளங்கள், நந்த வனங்கள், பசுமடங்கள், திருத்தொண்டர் உண்டுறங்கும் அம்பலங்கள் யாவும் அமைப் Luri”. *
ஆலயம் அழைக்கிறது
நாம் சைவ நன்நெறியிலே பீடு நடை.
நடப்பதற்கு நம்மை அழைத்து அருள் சுரப்பது ஆலயம். ஆலயந்தானும் அரனெ னத் தொழுமே" என்பது சைவ சித்தாந் தத்தின் முடித்த முடிபு. "திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிதன்னைச் சிவனெ னவே நினைத்தவர்க்குச் சிவனுறைவான் ஆங்கே. திருக்கோயில் பக்தி நிலையம் , திருவருளான மூலபண்டாரம் வழங்கும் பத்தாயம். அது பண்பாட்டு நிலையம்.
ஆலயத்துக்கு அருள் சுரக்கும் சாத் நித்தம் அளிப்பது கும்பாபிஷேகம் . கும்பாபிஷேகத்தைக் குடமுழுக்கு என்று தமிழில் வழங்குவர். கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற திருக்கோயில் மக்களுக்குப் பெருவாழ்வளிக்கும் அருள்தேக்கம். மின் சாரத் தேக்கம், நீர்த்தேக்கம்போலத் திருக்கோயிலும் ஒரு தேக்கம்.
ஆலயம் ஒரு பசு. அதன்மடி சர்ப்பக் கிருகம். பசுவின்மடி பால்சுரத்தல்போல் கருப்பக்கிருகம் திருவருள் சுரக்கிறது. பால் உடலுக்கு ஆதாரமானாற்போல் திருவருள் உயிருக்கு ஆதாரம். இந்த ஆதாரம் இம்மைக்கேயன்றி மறுமைக்கும் பயன்தருமாதலால், அருளில்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்பர்.
கருப்பக் கிருகமாகிய மடியில் முலைக் காம்புபோல உள்ளது மூலமூர்த்தி, மூலமூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் போது முழுமூச்சளிப்பது கும்பாபிஷேகம்.
- ll -

மூலத்தானம் ஒரு ஞான வாபி. அதில் திருவருள் வெள்ளம் தேங்கி நிற்கும். அதைச் செழுநீர்த்திரள் என்று தேவாரம் போற்றுகின்றது. திருக்கோயில் திருவிருள் சுரக்கிறது. மூலபண்டாரம் வழங்குவ தற்குத் திருக்கோயில் அழைக்கிறது. வாருங்கள் வாருங்கள் என்று மணிய்ோசை கேட்கிறது.
யந்திரஸ்தாபனம்
ஆலயத்தில் எவர் கண்ணுக்கும் புலப் படாமல், ஆதிமூலத்தில் மூர்த்தியின் பீடத்தின் கீழ் வைக்கப்பெற்றிருக்கும் ஒரு தகடு யந்திரம் ஆகும். அது பொன். வெள்ளி, செம்பு ஆகிய ஒரு லோகத்தால் செய்யப்பெற்று, கோடுகள் வரையப் பெற்று மந்திர அட்சரங்கள் எழுதப் பெற்று, புனிதமாக்கப்பெற்று மந்திர உருஎற்றப்பெற்று பீடத்தில் மறைத்து வைக்கப்பெற்று மருந்து சாத்தப் பெறுவ தாகும். இயந்திரத்தின் மேல் பிம்பம் தாபித்தலும் அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்காக அஷ்டபந்தனம் என்னும் மருத்து சாத்துதலும், மந்திரங்கள் ஒலித் தஅலும், பலவித தீர்த்தங்களால் அபிடேகம் செய்தலும் விதியாகும். (சுயம்புலிங்கத் திற்கு விதிவிலக்குண்டு.)
கும்பாபிஷேகம். '
இறைவனை ஆலயத்துள் எழுந்த குளச்செய்து, அவரை அன்புடன் ஆரா தனை செய்து, அருள்பாலித்தருளும் J6T600rth நாம் வணங்குவற்கு அவசிய மான ஆதாரமான இயல்பான ஈடுபடுத் நுவனவான, உடன்பாடான ஊக்கமுள்ள, ாடுப்பான, ஏதுவான ஐயமில்லாத ஒப்புரவான கிரியா கருமங்கள் உள்ளன. அவற்றுள் கும்பாபிஷேகம் என்னும் குட pழுக்கும் ஒன்றாகும். ஆலயத்துக்கெனத் ரெட்டப்பெற்ற பொருளில் மூன்றில் ஒரு ாகம் கும்பாபிஷேகத்தின் பொருட்டுச் சலவிடல் வேண்டும் என்பது பொது
தி:
கும்பாபிஷேகம் என்பது குடத்தி புள்ள புனித நீரைக்கொண்டு இறை

Page 14
வனை நீராட்டுதல் என்பது பொருள். சாதாரணமாக அவ்வாறே அபிடேகம் செய்வதும் வழக்கமும் விதியுமாகும் , ஆனால் என்னும் அபிஷேகம் கும்பாபி ஷேகம் சிறப்பாக மந்திர பூர்வமாகப் பெருமளவில் இரியைகள் மலியச் செய்வ தொன்றாகும்:
கும்பாபிஷேகம் ஆவர்த்தம், புனரா வர்த்தம், அனாவர்த்தம் , அந்தரிதம் என நால்வகைப் பிரதிஷ்டைகளின்போது நடை பெறு ib பெருங்கிரியையாகும். ஆவர்த்தம் என்பது புதிதாக நிர்மாணிக் கப்பெற்ற திருக்கோயிலில் செய்வதாம். புனராவர்த்தம் என்பது பழுதுபட்டுச் தீர்குலைந்த ஆலயத்தைப் பசிே திருத் திப் புதுப்பித்தமைத்துப் பல பாக ங் களையும் அழகுபடுத்திய வேளையில் செய்வதாம். இது செய்யும் வேளையிலே தான் ஆலயத்தின் மூலமூர்த்தி முதலான தெய்வத்திருவுருவங்கள் பாலஸ்தாபனம் செய்து நாளாந்த பூசைகளைச் செய்கி றார்கள். அனாவர்த்தம் என்பது திருக் கோயிலில் ஏதாவது தாறுமாறாகப் பிறழ் வாக நடைபெற்றால் அக்குற்றங்கள் நீங்குவதற்குப் grru-Jé ஒத்தபூர்வமாகச் செய்யப் பெறுவது. அந்தரிகம் என்பது திருமேனிகளான டிம் பங்களில் ஏதாவது பிளவுகள், வெடிப்புகள், குறைவுகள் உண்டாதல், ஆலயத் திரவியங்கள் களவு போய்க் குறைவுகள் உண்டாதல் முதலிய வேளைகளில் குறைநீக்கிச் செய்வதாகும்.
இவ்வாறாக ஆவர்த்தம், புனரா வர்த்தம் என்னும் இரண்டு வேளை களிலும் செய்யும் கும்பாபிஷேகம் பெரு மளவில் எவ்வித லோபமும் இன்றிச் செய்வதாகும். புனராவர்த்தம், பன்னி ரண்டு ஆண்டுகளுக் கொருமுறை செய்தல் உத்தமோத்தமம். இத்தகைய கும்ப பிஷேகப் பெருவிழாவைக் கண்கொண்டு பார்த்தல் பிறவியெடுத்ததன் பெரும் பேறென்பர்.
கும்பம்
சாதாரணமாகச் சைவச்சடங்குகள் சமஸ்காரங்கள் நடைபெறும் போதெல்

லாம் நடுநாயகமாக நிறைகுடம் வைக்கும் வழக்கத்தில் கும்பம் இடம்பெறுகின்றது. புரட்டாதி மாதத்தில் நடைபெறும் நவ ராத்திரி விழாவுக்குக் கும்ப பூசை என்றே பெயர். திருக்கோயிலில் கொடியேறித் திருவிழா நடைபெறும் போது யாகசாலை யில் கும்டம் இடம் பெறுகின்றது. கும்பம் வைப்பதற்கத் தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்கள் பயன் தருகின்றன. இவற்றுள் தாமிரமே பெருவழக்கில் உள் ளது. தாமிரம் மின்சாரத்தை ஈர்ப்பது போல, மந்திரவொலியையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது.
செப்புக் குடத்திலுள்ள நீர் யாகசா லையில் வேதமந்திரங்கள் ஒதும் ஒலியை ஈர்த்து ஓசை ஒலியெலாமான இறைவனை மூலத்தான மூர்த்தியில் லயிக்கச்செய்கிறது. மந்திரவொலி பாய்ச்சப்பெற்ற மூலமூர்த்தி
நிதித்தம் பெற்று அருள்சுரக்கிறது அதற்கு ஆதாரமாக அடிப்பாகத்திலே தங்கத் தகடு அல்லது வெள்ளி தாமிரத் தகடு மந்திரம் பாய்ச்சப் பெற்று வைக்கப் பெறுகிறது. அது ஒரு பரபி இரகசியம்.
கும்பத்தில் வருணபகவான், கண் கண்ட தெய்வ நதிகளான கங்கை முதலிய நீர்களில் நிரம்புகிறார். கங்கை நீர் கிடை பாவிட்டால் எந்த நீரையும் பாவனையால் கங்கை நீராக்கிக் கொள்வது சம்பிரதாய மும் சடங்குமாகும். சாதாரணமாகத் தீபா வளி நாளில் நீராடுதல் கங்கா ஸ்நான Longb.
கும்ப ல ட்சணம்
கும்பலட்சணம் கூறுங்கால் அதிலே போர்த்த புடவை தோலாகவும், கும்பம் சிவப்பேறப் பூசியமண் இரத்தமாகவும், குடத்துமண் மாமிசமாகவும், கும்பத்து நீர் மேதசாகவும், தர்ப்பையினால் செய்த கூர்ச்சம் எலும்பாகவும், நன்றாக நாற்புற மும் சுற்றிய நூல் நரம்பாகவும் கும்பத் துள் இடப்பெற்ற இரத்தின பொன் பூ சுக்கிலமாகவும் நியசிக்கப்பெற்ற மந்திரம் உயிராகவும், கீழே பரப்பிய நெல், அரிசி, எள், பயறு, உளுந்து, துவரை, கோதுமை
- 12 അ

Page 15
என்பன ஆசனமாகவும் கொள்ளப் பெறும். இஃது பாவனையின் உச்சம். பக்தி வயப் படுத்தவிலும் உச்சம். எனவேதான் இவ் வித கிரியா கிரம காலங்களில் மக்கள் ஆயிரவராக ஆலயத்தை மொய்க்கிறார் கள், இது சைவப் பண்பாட்டின் உச்சம்.
ibu 7 îGas Sfisontu
ஆலயத்தை எவ்வாறமைத்தல்" அதிலே மூர்த்தியை எவ்வாறு பிரதிஷ்டை செய்தல் என்பனவாகிய கிரியைகளைக் கூறும் ஆகமம், கும்பாபிஷேகத்திற்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளது. கும்பாபிஷே கம் கிரமமாகச் செய்யும் நெறியில் ஆசா ரியவரணம், விப்ரானுக்ஞை, தேவா னுக்ஞை விக்னேச ஸம்பூஜநம், வாஸ்து சாந்தி, ரட்சோக்ன ஹோமம், பிரவேச பலிதேனுவாசம் என்னும் கோபூசை, புண்ணியாக வாசனம், விப்ரயோஜனம் நவக்கிரகமகம், ஷம்ஹிதா ஹோமம்" காஷ்டா ஹோமம், சாந்தி ஹோமம் மூர்த்தி ஹோமம், மிருத் சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் , ஆசாரியரட்சா பந்த னம். பிரஸ்ன்ன பூஜை, யாக அலங்காரம், கும்பாலங்காரம், கலா கர்ஷணம், யாத்ரா ஹோம், யாத்ரா தானம், கடம் உலா, tum ᏯᏏᎯ- tᎢ ᎧᎼ)ᏍᎬᎢ1 பிரவேசம், யாகபூசை ஹோமம், யந்திர ஸ்தாபனம், இரத்தின நியாசம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந் தன்ம், பிம்பசுத்தி, ரட்சா பந்தனம், தத் துவ திரயோசனம், யாஹாவஸ் நகம யாத்திரா தானம், கிரஹப் பிரத்தானம் கும்ப உத்தாபனம், கும்பலிங்க சமயோஜ னம், மஹா கும்பாபிஷேகம், சாங்கோ பாங்க பூசை, மஹாபிஷேகம் , திருக்கல் யாண உற்சவம், திருவீதி உலா, ஆசார்ய உற்சவம், எஜமான உற்சவம் அவயிருதஸ் நானம், ரட்சாவிஸர் ஜனம், மண்டலாபி (ஒஷகம், பூசை சகஸ்ர சங்காபிஷேகம் சண்ட யாகம் என்பனவாம். இவற்றில் குற்றங் குறைகள் இன்றிச் செய்தல் நாட்டின் சுபீட்சத்துக்கு ஏதுவாகும். பிழைகள் உண்டானால் பீடை உண்டாகும். பீடை
i ! .

உண்டாகாதிருப்பதற்காக மூலமந்திரத் தாலும் அஸ்திர மந்திரங்களாலும் ஹோமம் செய்துநிறைவு செய்தல் Ամ 600rfr குதியாகும்.
கும்பத்தை எழுந்தருளச் செய்தல்
யாகசாலையில் உருவேற்றப்பெற்ற கும்பங்களை மூர்த்திகளுக்கு அபிஷேகிப் பதற்கு எடுத்துச் செல்லும் காட்சி அற் புதமானது, பக்தி மயமானது, கண்ணீர் மல்கச் செய்வது. பல்லியங்கள் ஒலிப்ப, வேதமந்திரங்கள் ஒலிப்ப திருமுறைகள் ஒலிப்ப பக்தர்களின் பஜனை கோஷங்கள் ஒலிப்ப அடியார்கள் மலர்மாரி பொழிய, இராஜ கெம்பீரத்தோடு கொடி, குடை, ஆலவட்டம், சாமரை ஆகிய உபசாரங்கள் மலிய சிவப்பிராமணர் சிரசின்மேல் பய பக்தியுடன் குடும்பங்களைச் சுமந்து செல்வதைப் பார்ப்பது ஒரு பேறு.
மஹா கும்பாபிஷேகம்
நல்ல நேரம் முகூர்த்தம் பார்த்துக் குடத்துநீரை, மூலமூர்த்தி பரிவார மூர்த்தி கள், விமானத்துக் கலசம் முதலிய இடங் களில் அபிஷேகம் செய்வதைக் கண்ணாற் காணும் பேறு மனிதப் பிறப்பெடுத்த பயனாகும்.
எஜமானர் அபிஷேகம்
கும் பா பிஷேகத் துக் குப் பெரும் பொருள் செலவிட்டு முன்னின்று சங்கற் பஞ் செய்து கிரியை யாதியன செய்தவர் எஜமான் என வழங்கப்பெறுதலோடு நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களோடும், சூரியன், சந் திரன் ஆகிய சுடர்களோடும் சேர்த்து எட் டாம் இடத்தில் எண்ணப்பெற்று நிலவும் பேறு பெற்றவருமாவர் இறைவன் உறை யும் இயமானன் அவர் எனவே அவருக்கும் அபிஷேகம் செய்யப்பெறுகிறது.
நன்றி -
இணுவில் யூனி பரராசசேகரப் பிள்ளையார் கோயில்
மஹா கும்பாபிஷேக மலர்

Page 16
@f த்தை
பல்லவி
தான் தோன்றி ஈஸ்வரனே தந்தருள் நின்பதமே தருணமிது
அனுபல்8
வான்குழும் புவிமேல் தேன்சுவைே ஊன்சேரும் உடலாலே உன்பதம் வேண்டா இல்வாழ்வை நம்பி வீ6 வேகா வனப் பொருளே. வேண்டி6ே
சரனட்
பட்டுப்பீ தாம்பரமும் பாழாகும் இட்டும்நின் பதமென்று கீழாய் கட்டுக் குலைந்துடலம் கெட்டு ஒட்டுசுட் டான்பதியே உன்பதந்
I
س
9
பல்ல
ஒட்டுசுட்டான் பதியில் உறையும் கிட்டி வந்தோம் எமக்கு கிருடை
அனுப8
முட்டி எமைவதைக்கும் கெட்ட கட்டி எமையணைத்துக் காரும்ே
sJso
காட்டில் ஆனை தாக்கைப் பை வீட்டில் பிணியகல வேடனாய் காட்டிக் கெருடமடுத் தீர்த்தம் வாட்டி எமைவதையா வரமின்

னகள்
(தான் தோன்றி)
பாடு வாழ்ந்தாலும்
காணேனே ணாக்கி நின்றுவிட்டேன் னன் நின்பதமே
b :
பணத்தாலும்
அழியுமுன்னம்
தந்தருளே (தான்தோன்றி)
வி
உமாபதியே
யளியுமையா (ஒட்டு)
isosa
பினி அகல வ காவனரே (ஒட்டு)
rio
Eக்கனுக்குக் கொடுத்தாடி
ஆடவைத்தாய் அருளியவா
று தாருமையா. (ஒட்டு)

Page 17
ஒட்டுசுட்டான் ஈசுவரர்
- முல்லை
ஈழத்தில் பழைமையும் பெருமையும் வாய்ந்த பல சிவாலயங்கள் உள. இவற் றிற் பல இடிந்தும் சிதைந்தும் போய் விட்டன. தான்தோன்றி ஈசுவரன் ஆல யம் என்னும் பேரில் இரண்டு பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இலங்கையில் உண்டு. கிழக்கு மாகாணத்திலுள்ள கொக் கட்டிச் சோலைத் தான்தோன்றி ஈசுவரன் ஆல யம், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசு வரன் ஆலயம் என்னும் இவ்விரண்டு கோவில்களும் சைவ நன்மக்களின் பெரு மதிப்பைப் பெற்றவை. பாடல்பெற்ற தலங்களான திருக்கேதீச்சரம், திருக் கோணேஸ்வரம் என்பவை பறங்கியரால் இடித்துச் சிதைக்கப்பட்டன. இவை பின் னர் அண்மையிலேயே புனருத்தாரணம் செய்யப்பெற்றன. ஆனால் ஒட்டுசுட் டான் தான்தோன்றி ஈசுவரன் ஆலயம் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை அந்நியரால் அழிக்கப்படும் நிலை ஏற் படவில்லை. 1983 ஆம் ஆண்டிற்குப்பின்பு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள், வன்செயல்கள், பதட்டநிலை ஆகிய சூழ் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தி லுள்ள பிரபல ஆலயங்கள் சில பூசை யின்றிப் பூட்டிக் கிடந்த காலத்திலும் இவ்வாலயத்தில் மூன்று காலப்பூசைகளும் தினமும் நடைபெற்றன.
தோற்றம்
இவ்வாலயம் தோன்றிய காலம் பற் றித் திட்டவட்டமாக அறிய முடிய வில்லை. நமக்குக் கிடைத்த பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகளையும், வரலாற் றுக் குறிப்புக்களையும் நுணுகி ஆராயும்

தான்தோன்றி வரலாறு
LD50 –
போது இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாலயம் தோன்றியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.இவ்வாலயத் திருப் பணி வேலைகளைக் குளக்கோட்டன் செய்தான்எனச்செவிவழிச்செய்தியொன்று உண்டு. இவன் ஈழத்திலே கோணேசர் கோயில் திருப்பணியை மேற்கொண்டான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின் றது. ஒட்டுசுட்டானுக்கு அண்மையிலுள்ள முத்தரையன் கட்டுக் குளத்தைக் குளக் கோட்டன் கட்டுவித்தான் எனக்கர்ணபரம் Ll 6ori கதையுண்டு. குளக்கோட்டன் நந்தி உடையாரின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான் என்றும் ஆனால் நந்தி உடையார் குளக்கோட்டனுக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டான் என் றும் இதனால் சீற்றமடைந்த குளக்கோட் டன் உடையாரின் வயல்களுக்கு நீர்ப்பா சனம் அ O க் கும் ஆ ற் றை மறித் துக் குளமாகக் கட்டினான் என்றும், நீரின்றிப் பயிர்கள் வாடும் நேரத்தில் நந்தி உடையார் கவலையுற்றிருக்க கார்த்திகை மாதக் கர்க்கடக இராசியில் பெருமழை பெய்து உடையாரின் பயிர் கள் செழித்துப் பயன் தந்ததாகவும் முதி யோர் வாயிலாக அறிகிறோம். “ஆற்றை மறித்தான் குளத்தை மறித்தான் கார்த் திகை மாதத்துக் கர்க்கடகத்தையும் மறிக்கப் போகிறானா?" என்று நந்தி உடையார் கூறினாராம். குளக்கோட் டன் தான்தோன்றி ஈஸ்வரன் ஆலயத் திருப்பணியிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கொள்ளுதல் தவறாகாது.
i
குளக்கோட்டன் என்பவன் LTP ஒரு வரலாற்று நபரா? கற்பனைப் Lun5
*.

Page 18
திரமா என்பது தெளிவாகவில்லை. கி.பி. 436 ஆம் ஆண்டிற்குச் சமமான சாலி வாகன சகாப்தம் 388 ஆம் வருஷத்திலே மனுநீதி கண்ட- சோழன் மகன் குளக் முடன் கோணேசர் ஒவாலயத்தைத் தரிசித்துத் தம்பலகாமத்தில் அழிக்கப் பட்டுக் கிடந்த G5rGa可夺f ஆலயத்தைப்
lu (LPġl பார்ப்பித்தான். யாழ்ப்பாண
வைபவமாலை தம்பலகாமத்துக் கோணே சர் ஆலயத்தைப் பழுதுபார்த்ததாகக் கூற கோணேசர் ல்டு வட்டு திருகோன மலை கோணேஸ்வரர் ஆலயத்திருப்பணி வேலைகளைக் குளக்கோட்டன் மேற் G历rajr一凸ró列 குறிப்பிடுகின்றது. இலங் கைக்கு வன்னியரை அழைத்துக் குடி யேற்றியவனும் குளக்கோட்டனே at gif பது யாழ்ப்பான வைபவமாலையில்
கூறப்படும் கருத்து.
வைபவமாலையில் குறிப்பிடப்படும் ஓ டி. 436 ஆம் ஆண்-ை ஏற்றுக்கொண் டால் ஒட்டுசுட்டான் தான்தோன்றி FF ଟfi) வரன் ஆலயத்தின் தோற்றம் 1500 ஆண்டு களுக்கு முந்திய தென்ற முடிவுக்கு வர லாம்.
தட்சிண கைலாய புராணத்தில் வரும் பாயிரச் செய்யுள் ஒர் தாங்கு குளக் கோட்டனெனும் சோழகங்களை நம் சிந்தை வைப்பாம்" எ க்குறிப்பிடுகின் p@· குளக்கோட்டனுக்குச் சோழகங் கன்பதும் ஒரு பெயராகும் சோழகங் தன் அல்லது சோடகங்கன் என்னும் பெய ருடன் ஒன்றுக்கு மேற்பட்ட அரசர்களை அடையாளங் காணமுடிகிறது. இரண் டாம் கஜபாகுவின் காலத்தில் ஒரு சோழ தங்க குமாரன் வாழ்ந்ததாக சூளவம்சம் குறிப்பிடுகிPது. இவன் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும். ഞഖt_ഖ LD IT @് குறிப்பிடும் குளக்கோட்டன் தி. பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்வன. கலாம்.
மூன்று சித்தர்கள்
ஆலயத்தின் தோற்றம்பற்றி மூன்று சித்தர்களின் கதையொன்றும் உண்டு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்பு மூனறு சததாக வனனப் பிரதே ஈத்துக்கு வந்தனர். வர்கள் மூவரும் தற்போது ஒட்டுசுட்டான் என அழைக் கப்படும் இடத்தில் பிரிந்து சென்றனர் முதலாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தென் மேற்கே இரண்டு மைல் தொலை விலுள்ள வாவெட்டி மலையில் தியானத் திலிருந்து சமாதியடைந்தார். இரண்டா வது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தெற்கே இரண்டு ഞഥuി தொலைவில் காதலியார் ம்மளங்குளத்தில் சமாதியடைந்தார்" மூன்றாவது சித்தர் ஒட்டுசுட்டானில் ஒரு கொன்றைமரத்தின் கீழ் நிள்டையில் இருந்து ஈமாதியடைந்தார். இவர் பூசித்த சிவலிங்கமும் இவருடனேயே சமாதியடைந் திருத்தல் வேண்டும் இவ்விடத்திலேயே பிற்காலத்தில் சிவலிங்கம் தோன்றியது.
தான்தோன்றி சுவரர் - வேகாவனம்
யாழ்ப்பாணம் இடைக்காட்டைச் Gg庁あ多 திரபுத்திரர் என்னும் சைவ வேளாளரும் அவருடைய இரண்டு பிள்ளை களும் வன்னிக்கு வந்து குடியேறினர். அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்த இடம் தற்போது ஒட்டுசுட்டா னில் இடைக்காடு , என அழைக்கப்படு திரபுத் திரர் காடுவெட் அந் நிலத்தில் குரக்கன் பயிர் இட்டார். குரக் கன் கதிர்களை வெட்டி எடுத்தபின்னர் குரக்கன் ஒட்டுகளுக்குக் தீயிட்டுக் கொளுத்தினர் துப்படிச் செய்தபோது ஒரு கொன்றை மரத்தடியில் ஒட்டுக்கள் எரியாமல் இருப்பதைக் கண்டார். எப்படி யும் ஒட்டுக்களை நீக்கவேண்டும் என்னும்
ஆவலால் மண்வெட்டியால். வெட்டினார். வெட்டிய இடத்தில் இரத்தம் கசிவதைக் கண்டார். இந்த நிகழ்ச்சியை தான் தோன்றி ஈஸ்வரர் பாமாலை பின்வருமாறு கூறுகின்றது.
எரித்தவிடம் அத்தனையும்
எரிந்துபோக எஞ்சியது. கொன்றைமர
நிழலில் உள்ள பெருத்தஓட்டு எரியாமல் இருந்த ஈதை எப்படியும் தீமூட்டி எரித்திட் டாலும்
---- دس۔ 16

Page 19
கறுத் தெரியா திருந்ததனால்
கோபங் கொண்டு கடிதான மண்வெட்டி
யதனால் வெட்ட தெறித்துரதிம் பெருகுவதைக் கண்டு பீதி
டன்னன் வன்னியனுக்
கெடுத்து ரைத்தார்.'
இந்நிகழ்ச்சியின் மர்மத்தை அறியாத தீர- கிரர் அப்பதியை ஆண்ட வன்னி பகிடட் இதனை அறிவித்தார். வன்னி மன்னன் குறிப்பிட்ட இடத்தைப் பார்வை பி .ட பின்னர் அவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபாடு செய்யுமாறு கூறி எான். கொன்றையடிப் பிள்ளையார் என்னும் பெயரில் சிறு ஆலயம் அமைக்கப் பட்டு வழிபாடு நடைபெற்றது. சில நாட் களின் பின் அவ்விடத்திலே சிவலிங்கம் சுயமாகத் தோன்றியதை மக்கள் கண்ட னர். தானாகத் தோன்றிய லிங்கமாகை யால் தான் தோன்றி ஈஸ்வரர் எனப் பெயரிடப்பட்டது. எரியாத இடத்திலே தோன்றியதால் வேகா வ னே ஸ் வர ர், வேகா வனப் பெருமான் என்னும் பெயர் கள் வழங்கின. ஒட்டுக்களைச் சுட்ட தனாலே பிரபலமான அந்த இடம் ஒட்டு சுட்டான் எனப் பெயர் பெற்றது.
முதலில் பிள்ளையாராகவும் பின்னர் சிவலிங்கப் பெருமானாகவும் வணங்கப் பட்ட நிலையை மட்டக்களப்பு மாமாங் கப் பிள்ளையார் பற்றிய வரலாற்றோடு ஒப்புநோக்கலாம். மாமாங்கேஸ்வரத்தில் 'மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கமானது, பெரும்பாலும் விநாயகர் அங்கியுடனே காட்சியளிப்பதால் விநாயகரே மூலஸ் தானத்தில் எழுந்தருளி இருக்கிறார் என்று பக்தர்கள் கொள்கிறார்கள்’’ என வி. சீ. கத்தையா அவர்கள் குறிப்பிடுவது நோக் சுத்தக்கது (ம ட் ட க் க ள ப் பு ச் சைவக் கோயில்கள் 1983.)
ஆலயத் திருப்பணி வேலைகள்
குளக்கோட்டு மன்னன் ஆலயத் திருப் பணிவேலைகளில் ஈடுபட்டிருந்தான் என
மேலே கண்டோம். வன்னிக் குறுநில
-- II"

மன்னர்களும் இவ்வாலயத்துக்குத் திருப் பணி வேலை செய்தனர். போர்த்துக் கேயர் காலத்தில் (1505 - 1658) நடை பெற்றதாகக் கூறப்படும் கதையொன் றுண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பிடித்தபின்னர் வன்னி மீது தம் மேலாணையைச் செலுத்த முனைந்தனர். வன்னியர் திறை தருவதாக ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் யானை கள் அனுப்பும் வழக்கம் இருந்தது. காட் டில் யானைகளைப் பிடிப்போர் பணிக்கர் என அழைக்கப்பட்டனர். காக் கைப் பணிக்கனுக்கு வன்னியரசர்களால் மானிய மாக கொடுக்கப்பெற்ற குளமும் அதனைச் சார்ந்த வயல்களும் காக்கைப்பணிக்கன் குளம், காக்கைப்பணிக்கன் வயல் என இன்றும் அழைக்கப்படுகின்றது. குறிப் பிட்ட காலக்கெடுவின் முன் யானைகள் பிடித்துத் தருமாறு வன்னியர் பணிக்கன் ஒருவனுக்குக் கட்டளையிட்டார். எங்கு தேடியும் யானைகள் அகப்படவில்லை. யானைப் பணிக்கன் தான்தோன்றி ஈஸ் வரனிடம் முறையிட்டான். யானைகள் கிடைக்கும் பட்சத்தில் கோயிலைப் பெருப் பித்துக் கட்டுவதாக நேர்த்திக்கடன் வைத் தான். இறைவன் பணிக்கனின் கனவில் தோன்றிப் "பெரிய இத்திமடுவிலுள்ள கிளிமடு என்னும் இடத்தில் பெளர்ணமி தினத்தில் ஏராளமான யானைகளைக் காண்பாய்' எனக்கூறினார். அதன்படியே தேவையான யானைகள் கிடைத்தன. பணிக்கன் கோவிலைப் பெருப்பித்துக் கட்டுவித்தான்.
பிரித்தானியர் காலத்தில் கோவில் திருப்பணி வேலைகளில் இன்னொரு கட்டம் இடம்பெற்றதற்குச் சான்றுண்டு. ஜே.பி. லீவிஸ் எழுதிய வன்னிக் கைநூலில் 1874 ஆம் ஆண்டு வரையில் ஒட்டுசுட் டானுக்கண்மையிலுள்ள தட்டயமலை என்னும் இடத்தில் இருந்த அழிபாட டைந்த பெளத்த மடாலயத்தின் கற்கள் ஒட்டுசுட்டானில் சைவக் கோயில் கட்ட உபயோகிக்கப்பட்டதெனக் கூறப்பட்டுள் ளது. -

Page 20
@西亞 நூற்றாண்டின் முற்பகுதியில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒவசியர் திரு. த Ga缸6可ég°刃 அவர்கள் சிவன் கோயில் இருப்பணிவேலையில் முன்னின்று உழைத் தார். இவரின் பெரு முயற்சியாலேயே கோயிலும் திருக்குளமும் ஒறப்பாகக் கட் Lபெற்றன. ஆலயத்தின் அருகே திருக் குளம் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று இவரின் துணைவியார் ஒரு நாள் கூறினாராம். இதனை எம்பெரு மானின் திருவுளமாகவே கொண்டு திருக் குளத் திருப்பணிவேலையைத் தொடங் னொர். பணமுடையினால் வேலை தடைப் படும்போது வேகா வனப் பெருமானையே வேண்டுவார். அப்போது பகிரங்கப் பாதையில் மண்சரிவு ஏற்படுமாம் சிவ் வேலையைச் செய்து பெற்ற லாபத்தைக் கொண்டு திருப் பணி வே லை யை த் தொடர்ந்து செய்வாராம். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் தனது சொந்தக் காணி களை விற்றுத் திருப்பணியை மேற்கொண் டார் என இப்பகுதி மக்கள் நன்றிப் பெருக்குடன் கூறிக்கொள்கின்றனர்.
1964 ஆம் ஆண்டும் பெரும்புயலி னால் ஆலயத்தின் வெளிமண்டபம் முற் றாகச் சேதமடைந்தது. மூன்று தேர்களும் சேதமடைந்தன. சேதமுற்ற வெளிமண்டபத்தை ஆலய பரிபாலன சபையினர் திருத்தியமைத்தனர்.
1989 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி திருப்பணிச் சபையொன்று ஆரம் பிக்கப்பட்டது. இத்திருப்பணிச்சபை ஆலயத்தின் தெற்குவீதி மண்டபத்தை அமைத்தது. திருக்குளத்தில் திருத்த வேலைகள் சிலவற்றைச் செய்தது. னர் பரிபாலன சபையும் திருப்பணிச் சபையும் ஒன்றுசேர்ந்து ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளை மேற்

கொண்டன. அம்மன் ஆலயமும், வைரவர், சண்டேசுரர் ஆ ல யங் கள் புதிதாகக் கட்டப்பட்டன. மூலத்தானத் தூபி, பிள்ளையார் தூபி, முருகன் தூபி ஆகியன திருத்தி அமைக்கப்பட்டன. கர்ப்பக் கிருகம் முற்றாகப் பிரிக்கப்பெற்றுத் திரும்பக் கட்டப்பெற்றது.
அற்புதங்கள்
வேண்டுவார் வேண்டுவதை ஈயும் வேகாவனம் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் பல.
வாழைப்பழக் கதை
கோவில் மணியகாரனும் அப்பகுதி முதலியாருமான சுப்பிரமணிய முதலி யார், நாட்டுவளப்பம் அறிவதற்காகப் பல்லக்கில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது மாறா இலுப்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆலயத்திற்கென வாழைப்பழக் குலையைச் சுமந்து சென் றான். இடைவழியில் அவரைக் கண்ட முதலியார் விசாரித்தபோது சிவன்கோவி லுக்குச் செல்வதாக பக்தர் கூறினார். பல்லக்கில் இருந்தபடி இரண்டு வாழைப் பழங்களிைப் பிடுங்கி உண்டுவிட்டு மிகுதி யைக் கோயிலுக்குக் கொண்டுபோகும்படி கூறினார். வேகாவனப் பெருமானுக்குக் கொண்டு சென்ற வாழைப்பழத்தை மணியகாரன் உண்டது பக்தனுக்குப் பெரும் வேதனையைத் தந்தது. கோயி லுக்குச் சென்று வணங்கிய பின்னர் பெருங்கவலையுடன் கோயில் மண்ட பத்திலே படுத்திருந்தபோது நித்திரை யாகிவிட்டார். அப்பொழுது வேகாவனப் பெருமான் அவன் கனவில் தோன்றி 'நீ கவலைப்படாதே, நீ கொண்டுவந்த வாழைப்பழ்ங்களில் சுப்பிரமணிய முதலி
யார் உண்ட இரண்டு பழங்கள் மாத்
18 as མེ་

Page 21
திரமே என்னைச் சேர்ந்தன" எனக் கூறிய ருளினார். பக்தர் திருவருளின் குறிப்பை உணர்ந்து வியந்தார்.
சிமெந்துப் பீப்பா உருட்டிய அற்புதம்
கோயில் திருப்பணிக்கெனச் சின்னத் துரை ஒவசியர் சீமெந்துப் பீப்பாக்களை அரசமரத்தின் கீழ் இறக்குவித்தார். பொழுதுபட்டுவிட்டபடியால் அடுத்த நாள் காலை பாதுகாப்பான இடத்தில் உருட்டி விடலாம் என நினைத்தார். அன்றிரவு பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது. வேலை செய்த அலுப்பில் சின்னத்துரை ஒவசியரும் நன்கு துயின்று விட்டார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்தபோதே பெருமழை பெய்த விடயம் அவருக்குத் தெரிந்தது. பெரு மானின் திருப்பணிக்குக் கொண்டுவந்த சீமெந்து அனைத்தும் மழையால் நனைந் திருக்குமே எனப் பதறினார். ஆனால் அப்பீப்பாக்களை யாரோ மழையில் நனையவிடாது உருட்டிப் பாதுகாப்பான இடத் தி ல் வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். விசாரித்தபோது எவரும் இப்பணியைச் செய்ததாகக் கூற வில்லை. அன்றிரவு அர்ச்சகரின் கனவில் பெருமர்ன் தோன்றி சீமெந்துப் பீப்பா உருட்டியதால் உடலெங்கும் நோகின்ற தென்றும் வெந்நீரால் அபிஷேகம் செய்யும் படியும் கூறினார். இதனைக் கேட்ட ஒவசியர் பெருமானின் திருவருளை நினைத் துமகிழ்ந்தார்.
ஒவசியருக்கு உணவளித்தது
ஒரு நாள் சின்னத்துரை ஒவசியர் நள்ளிரவில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒட்டு சுட்டானுக்கு வந்தார். கடும்பசி ஆலயக் கதவு திறந்திருந்தது. கோயில் குருக்கள்
தாம்பாளத்தில் சர்க் கரை ச் சாதமும்
ー 19

வாழைப்பழங்களும் வைத்துக் கொடுத் 5irt†. தாம்பாளத்துடன் அதனை எடுத் துச் சென்று தன் இருப்பிடத்தில் வைத்து பசியாறினார். அடுத்த நாள் தாம்பா ளத்தை எடுத்துச் சென்று கோயில் குருக்களிடம் கொடுத்தார். குருக்களுக்கு வியப்பாக இருந்தது. தான் தாம் பாளத் தைத் தரவில்லையே யெனக்கூறினார். இது வேகாவனப் பெருமானின் திருவிளை யாடல் என இருவரும் வியந்தனர்.
கெருடமடுத் தீர்த்தம் தோன்றிய கதை
ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பாதையில் எடடுக் கிலோமீற்றர் தொலை வில் கெருடமடு என்னும் வற்றாத நீர்ச் சீனை ஒன்றுண்டு. இதில் ஆடி அமா வாசையின் போது இப்பகுதி மக்கள் தீர்த்தமாடுவர். இந்தத் தீர்த்தத்தில் தீர்த்தமாடும் வைபவம் தொடங்குவதற்கு முன்னர் வசதியுள்ளவர்கள் யாழ்ப்பாணம் கீரிமலைக்குச் சென்று ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டித்துத் தீர்த்தமாடுவது வழக்கம். இது தோன்றியதை விளக்கும் கதையொன்றுண்டு.
வடமராட்சியிலிருந்து வந்த கொள் ளைக் கூட்டத்தினர் புதுக்குளத்தில் வீடு களுள் புகுந்து கொள்ளையடித்தனர். மக்கள் சுப்பிரமணிய முதலியாருக்கு முறையிட்டனர். துப்புத் துலக்குவதில் கெட்டிக்காரரான முதலியார் எப்படியோ அவர்களை இனங்கண்டு களவெடுத்த பொருட்கள் அனைத்தையும் மீட்டு விட்டார். கொள்ளையர்களுக்கெதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. முதலியார் அரசதரப்பு முக் கிய சாட்சியாகத் திகழ்ந்தார். இவ்வழக் கில் கொள்ளைக் கூட்டத்தலைவன்(முன்பு கொலையொன்றிலும் ஈடுபட்டிருந்தது நிரூபணமாயிற்று. அவனுக்கு மரணதண்

Page 22
டனை விதிக்கப்பட்டது. முதலாம் எதிரி யின் மருமகன் முதலியார் மீது வஞ்சம் தீர்ப்பதாகச் சபதம் கூறினான். யாழ்ப் பாணத்திலிருந்து ஊருக்குச் செல்லும் பாதையில் முதலியாரைத் தீர்த்துக்கட்டு வதற்குத் திட்டம் தீட்டியிருந்த தை முத லியார் உணர்ந்தார். குஷ்டரோகி போல வேடமிட்டுத் தந்திரமாக ஒட்டுசுட்டா னுக்கு வந்து சேர்ந்து விட்டார். இதனை யறிந்த எதிரியின் மருமகன் கீசிமலைத் தீர்த்தத்துக்குவரும்போதுபார்த்துக்கொள் வதாகக் கூறினான். ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் முதலியார் தாம் தீர்த்தமாடக் கீரிமலைக்குப் போகமுடி யாத நிலையைப் பெருமானுக்கு முறை யிட்டார். ஈஸ்வரன் கனவில் தோன்றி * கற்சிலைமடுவிற்கு அண்மையில் கருட னால் தோற்றுவிக்கப்பட்ட வற்றாத நீர் நிலையொன்றுண்டு. அதுபுண்ணிய தீர்த்த மாகும். அதில் தீர்த்தமாடிப் பிதிர்க் கடன்களைச் செய்வாயாக’ எனத் திரு வாய் மலர்ந்தருளினார். அன்று தொடக் கம் இன்றுவரை கெருடமடுவில் இப்பகுதி மக்கள் ஆடி அமாவாசையில் தீர்த்த மாடி வருகின்றனர். பேராற்றின் ஒரு கிளையாகிய இந்நீர் நிலை எவ்வளவு வரண்ட காலத்திலும் வற்றுவதில்லை.
ஆவுடையாா, கவசம்
சுயம்புலிங்கத்திற்கு ஆவுடையார்ப் பகுதி இல்லை. கோவில் தர்மகர்த்தாக் கள் மூல லிங்கத்துக்கு ஆவுடையார்ப் பகுதியை இந்திய சிற்பிகளைக் கொண்டு பொளிவித்தனர். ஆனால் ஈஸ்வரன் கன வில் தோன்றி சுயமாகத் தோன்றிய லிங் கத்தை அப்படியே விடும்படியும், ஆவுடை. யார் தேவையில்லை என்றும் கூறினார். அதன்படி இன்றும் ஆவுடையார் இல் லாத லிங்கமாகவே காட்சியளிக்கின்றது.

இதுபோலவே லிங்கத்துக்கு ஒரு பொற் கவசம் செய்யப்பட்டது. அதனை அணி வதற்கு இறைவனின் அனுமதி கிடைக்க வில்லை.
இப்படி எத்தனை அற்புதங்கள் நாளாந்தம் நடந்து கொண்டே இருக் கின்றன. மெய்யடியார்கள் எம்பெரு மானின் எல்லையற்ற கருணையினால் நிகழும் அற்புதச் செயல்களை அனு! வித்துக் கொண்டிருக்கின்றனர்.
பூசையும் திருவிழாவும்
தான்தோன்றி ஈஸ்வரர்க்குத் தினமும் மூன்று காலப்பூசை நடைபெற்று வரு கின்றது. இந்திய அமைதிப்படை ஒட்டு சுட்டானில் பரவியபோது மக்கள் அச் சத்தினால் ஊரைவிட்டே இடம்பெயர்ந்து விட்டனர். ஆலய அர்ச்சகரும் செல் வதற்கு ஆயத்தம் செய்து விட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் நோய்வாய்ப்பட்டி ருந்த மணியகாரர் ஒ. உ. சிவராசா அவர்கள் அர்ச்சகரை மறித்துத் தினமும் ஆலயப் பூசையை நடத்துவித்தார். அமைதிப்படையினர்அர்ச்சகருக்கும் ஆலய மணியகாரர் சிவராசா அவர்களுக்கும் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத் தனர். எனினும் தினமும் பூசை ஒழுங் காக நடைபெற்றது. இது வேகா வனப் பெருமானின் அருட் கடாட்சம் என்றே கூறவேண்டும். நித்திய பூசைகளைவிட விசேட தினங்களில் அவ்வத் திதிக்கேற்ற விதத்தில் பூசைகள் நடைபெறும் .
வருடாந்த உற்சவம் ஆனிமாதத்து அமாவாசையில் தொடங்கும். தீர்த்தம் பெளர்ணமியில் நடைபெறும். பதின்மூன் றாம் நாள் வேட்டைத்திருவிழா நடை பெறும். தீராத நோயினால் நீடிக்கப்பட் டோர் தாம் வேட்டைத்திருவிழாவின் போது விரதமிருந்து வேடனாக வடுெ தாக நேர்த்திக்கடன் வைப்பர். சிறப்பு நிகழ்ச்சி எதுவும் இல்லாதவிடத்தும் பெருந் தொகையான பக்தர்களை வன்னிப்பிர தேசத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்
20 నాడా

Page 23
தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஈர்க்கும் வேட்டைத் திருவிழாவின்போது ஆயிரக் கணக்கான அடியார்கள் வேடுவ உடை தரித்துப் பெருமானுக்குப் பின் செல்வர். உடம்பெங்கும் கரிபூசி வாகங்குளைகளா லான உடுப்பு அணிந்து கையில் வாகந் தளிர் கட்டிய தடியொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு செல்வர். தலையில் தென்னோலையால் அல்லது வாகங்குளை யாலான தொப்பி அணிந்திருப்பர். வேடு வர் தலைவன் சுரைக் குடுவினுள் தேன் வைத்திருப்பார் இத் தலைமைப்பதவி பரம்பரையானது. தலைமை வேடனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஏனையோர் ஒழுகவேண்டும். வேட்டைத்திருவிழா வின் போது சுவாமி வேட்டையாடும் இடத்தில் குழுமி நிற்கும் வேடுவர் கூட் டம் கண் கொள்ளாக் காட்சியாகும். சுவாமி வேட்டையால் வந்ததும் சுவாமிக் கும் அம்மனுக்குமிடையே வாதாட்டம் நடைபெறும். சுவாமிக்கும் அம்மனுக்கு மிடையே இடம் பெறும் ஊடலை மணிய காரனே தீர்த்துவைப்பார். சுவாமி ஆல
யத்துள் பிரவேசித்ததும் வேடுவர் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்பர். தலைமை வேடனின் சமிஞ்ஞையைப் பின் பற்றி எல்லா வேடர்களும் வீழ்ந்து வணங்குவர். பின்னர். கோவிலை வலம் வந்து ஒட்டுசுட்டான் கட்டைக்காட்டுக்
சுயம்பு லிங்க மதுவாய்த் ே துயரம் துடைக்கும் அ கயம்சூழ் ஒட்டு சுட்டான் ே கதிர் சேர் சோதி யது முயல்வார் எவரும் உனையே
முன்னின் றருள்வாய்
கயல்வெல் விழியாள் பங்கா
கர்த்தே அருள்வாய்
لري . .

குளத்துக்குச் சென்று தம் வேடுவ உடை களை நீக்கிய பின்னர் நீராடுவர். வேடுவ ராக வருவோர் விரதமிருந்தே இந்நேர்த் திக் கடனைச் செய்வர். பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழா, இதுவும் பதினா றாம் நாள் நடைபெறும் தீர்த்த வைபவ மும் பெருந்திரளான மக்களைக் கவரும்.
இலக்கியம்
தான்தோன்றி ஈஸ்வரர் மீது கொக்கு வில் குகதாசர் சு. சபாரத்தின முதலி யார் பாடிய ஒ ட் டு சு ட் டா ன் சிவ பெருமான் ஆசிரிய விருத்தமும் (1833) ஓர் ஊஞ்சற் பதிகமும் வேட்டைத் திரு விழாவின் போது படிக்கப்படும் வாதாட் டப்பாடலும், தான்தோன்றி ஈஸ்வரர் பாமாலையும் உள. ஊஞ்சற்பதிகத்தை சுதுமலைப்பண்டிதர் ஆ. சி. நாகலிங்க மும் பாமாலையை (1976) முல்லைமணி பும் பாடியுள்ளனர். இவ்வூஞ்சற் பதிகத் தைத் தவிர பெயர் தெரியாத வேறொரு வர் பாடிய ஊஞ்சற் பதிகத்தின் மூன்று பாடல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் இப்பதியுறையும் ஈசன் தான்தோன்றி ஈசர், வேகாவன முடையார், சுயம்புலிங்க மூர்த்தி எனவும் தேவி பூலோகநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். Ք6I(65 சற்பதிகத்தின் காப்புச் செய்யுளில் ஒட்டு சுட்டான் "தேவர்பதி" என அழைக்கப் படுகின்றது.
தான்றி
ருள்சேர் மூர்த்தி ്ഥ ഖി
வாய் நின்றாய்
Ꭵ >9Ꮋ 6Ꮌ) L -u Ꭵ -
முதல்வா எனையும்
உவந்தே
கனியே இறைவா.
- தமிழ்மணி -
21 -

Page 24
மலரும் நிலை
கலாநிதி. நா.
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவ என்ற செய்தியைச் செவியுற்றபோது என பின்னோக்கி நீந்தினேன். 1956 ஆம் ஆண்டு 6 ஐயர் அவர்கள் அப்பெருமானுக்கு வழிபாட நாட்கள் நினைவுத்திரையில் வந்தன. அப்பெருமானை முப்பொழுதும் திருமேனி இன்றும் என் நினைவில் பசுமையாக உள்வி வாகப் பெற்றுள்ளேன் என்பது எனது glu
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வர னத்திற்கு வரும் முக்கிய அம்சம் அத்தெய் அப்பால் வன்னிப் பிரதேசம் முழுவதுக்குமெ4 யாகும். ஒட்டுசுட்டான் கிராமத்தைச் சூழ பாட்டில் பங்கு கொண்டிருக்கும் நிலை விழாக் காலத்தில் இந்த, "பல்வேறு GITT L னிக்க முடியும். அவ்வகையில் வன்னிப் பிர தந்தையாக - ஆட்கொள்ளும் அப்பனாகத் இவர் அப்பன் ஆகக் கொள்ளப்பட்டால் ஏற்கனவே உள்ள விடை வற்றாப்பழை கண்
முற்றாத இளந்திங்கள் கு முன் ஒட்டு சுட்டான வற்றாத பழைதனிலே சி வளர் கருணையாலெ
என இவ்விருவரையும் இணைத்துச்
தான்தோன்றி ஈசுவரருக்கு மஹா ( னுள்ள முக்கிய பணி அப்பெருமானின் சி வெளிக் கொணருவதாகும். பொதுவாக ஆல துரைக்கும் புராணமரபுக் கதைகளின் இை நிலையினின்று விலகி சமூக-பண்பாட்டு வள அணுகுமுறை அண்மைக்காலத்தில் முனை ஆலய வரலாறும் இவ்வாறு இனங்காணப் னிப்பிரதேச சமூக - பண்பாட்டு வரலாற்ற கொள்ளப்பட வேண்டும்.
தான்தோன்றி ஈசுவரனுக்குத் திருக்கு
எமது நாட்டில் அமைதி ஏற்பட்டு எல்லே பெருமானிடம் வேண்டுகோளாக முன்வைத்
தழிழ்த் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

னவுகளில்.
சுப்பிரமணியன்
ரருக்கு மஹா கும்பாபிஷேகம் நிகழவுள்ளது து நினைவுகளில் முப்பத்தேழு ஆண்டுகள் ானது தந்தையார் பிரம்மபூரீ ஜெ. நாகராஜ ட்டுப் பணிபுரிய என்னை அழைத்துச்சென்ற ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தீண்டி வழிபட எனக்குக் கிடைத்தபேறு ாது. அவ்வழிபாட்டின் பலனை நான் நிறை ான நம்பிக்கை.
ரைப்பற்றிச் சிந்திக்கும் வேளையில் எம் கவ வம் ஒரு கிராமம் சார்ந்தது என்ற நிலைக்கு ன தனிப்பெரும் தெய்வமாகத் திகழும் நிலை வுள்ள பல கிராமங்களும் அத்தெய்வ வழி இதனைத் தெளிவுபடுத்தும். குறிப்பாக திரு Dங்களின் இணைப்புநிலை யை நன்கு அவதா தேசத்தின் தந்தைத் தெய்வமாக - தெய்வத் திகழ்பவர் தான் தோன்றி ஈசுவரர் எனலாம். அன்னை யார்? என்ற வினா எழும். அதற்கு ணகை அம்மன் என்பதாகும்.
சூடும் ஈசன் ரில் அருள் பெய்கின்றான் ன்னை அம்பாள் மது வருத்தம் தீர்ப்பாள் சிந்திக்கும் மரபு உளது.
தம்பாபிஷேகம் நிகழும் இந் நாளில் எம் முன் ருளாட்சிச் சூழலின் வரலாற்றை உரியவாறு ப வரலாறுகள் அற்புத நிகழ்ச்சிகளைப் புனைந் ணப்பாகத் திகழ்வதே பெரும்பான்மை. அந் *ச்சியூடாக ஆலய வரலாறுகளை இனம்காணும் ப்புற்று வருகின்றது. தான் தோன்றி ஈசுவரர் பட வேண்டும். அதற்கு முதற்படியாக வன் ‘ய்வுக்கான தொடக்கநிலை முயற்சிகள் மேற்
டத் திருமஞ்சனம் நிகழும் இந்தச் சூழலில்
ாரும் இன்புறவேண்டும் என்ற பேராவலை அப்
து எனது இவ்வுரையை நிறைவு செய்கிறேன்.
- . . . கலாநிதி. நா. சுப்பிரமணியன் முதுநிலை விரிவுரையாளர் (தரம் 1)
2 ജ

Page 25
திருவேட்டை
வாரீர் வாரீர் ஆலகாலசுந்தரரே எங்கள் பரமேசுவர ரானவர் கே வரும்படி கட்டளை கற்பிக்க விே பரமேஸ்வரன் அருளிப் பாடு.
6. It ifri airfri ஆலகாலசுந்தரரே உங்கள் பரமேசுவரனானவர் திருே காட்டினிடமாய்ப் போய் கெங்கா கேவலம் பண்ணியும் மீண்டும் சு இங்கே வரக்கடவர் அல்லர் என
வாரீர் வாரீர் ஆலகால சுந்தரரே யாதொரு சோரமார்க்கத்துக்குப்
வெடி குடை மேளவாத்தியத் து இது எல்லாம் பெண்புத்தியினாலே சொல்லவேண்டும் எங்கள் பரமேசு கோயிலிடமாக வரும்படி கட்டை என்று பரமேசுவரன் அருளிப் பா
வாரீர் வாரீர் ஆலகால சுந்தரரே எங்கள் புத்தி பெண்புத்தி என்று தங்கள் பெரிய புத்தியினால் அல் அரவை அணிந்தும் சுடலையில் அ தலையோட்டில் இரந்துண்டும், த ரிஷி ஈசுவரர்கள் பத்தினிமார்கள் என்பை அணிந்தும் சாம்பலைப் பூ புலித்தோலை உடுத்தும் பிட்டுக்கு பிரம்பினால் அடிபட்டும், இப்படிக் இயற்றினாரல்லவோ? இதுவெல்லா தூது நடந்தும், பிதாவின் கால் சாட் சிகொடுத்த வாரப்பாட்டின் ( சொல்லுகிறீர்கள் உங்கள் பரமேசு இங்கே வரக்கடவர் அல்லர் என்று தேவி அருளிப் பாடு.
வாரீர் வாரீர் ஆலகால சுந்தரரே நாங்கள் செய்யப்பட்டதெல்லாம் ! தங்கள் தமையனாகிய மகாவிஷ்ணு இடைய தெருவில் வளர்ந்தும் மா வேய்ங்குழல் ஊதியும் வெண்ணெய் உரலோடு கட்டுண்டும் தாம்பினால் குருந்திலே ஏறியும் கோபால ஸ்தி அநேக லீலாவிநோதங்கள் பண்ணி இப்படிச் சிறுதொழில் இயற்றினா
- 23

60 IZTEG T’L". Lò
ஆதிசண்டீசுரரே ாயிலிடமாக
பணும் என்று
ஆதிசண்டீசுரரே - ܀ - வட்டைக் கெழுந்தருளுகிறோமென்று
பரமேசுவரியுடனே த்தமானவர்களைப் போல் த் தேவி அருளிப்பாடு.
ஆதிசண்டீசுரரே போகிறவர்கள் டனேயும் போவார்களா? 0 ஏன் விருதா வார்த்தை
வரனானவர் ள பிறப்பிக்க வேண்டும் C.
ஆதிசண்டீசுரரே இகழ்ந்தீர் அல்லவோ லவோ *գպմ ாருகாவனத்து
கற்பை அழித்தும் பூசியும்
மண்சுமந்தும் * சிறு தொழில் ாம் பரவை வாசலுக்கு
தறித்ததற்கு பேரில்
வரனானவர்
", ஆதிசண்டீசுரரே சிறுதொழில்தான் றுமூர்த்தி ாடுமேய்த்தும்
திருடியும் ஸ் அடிபட்டும்
ரீகளுடனே
யும் ர் அல்லவோ?

Page 26
இது எல்லாம் விருதா வார்த்ை சொல்லவேணும் எங்கள் பரமே கோயிலிடமாக வரும்படி கட்ட வேணும் என்று பரமேசுவரன்
வாரீர் வாரீர் ஆலகால சுந்தர உங்கள் பரமேசுவரனானவர் தி எழுந்தருளுகின்ற போது கொன வஸ்துக்கள் ஒன்றும் யாதொரு இல்லாமல் கணக்கின்படி ஒப்புவி இந்தச் சோரமாக்கத்தை உண்டு இன்னார் என்று அறிவித்து கே வரலாமென்று தேவி அருளிப்ப
வாரீர் வாரீர் ஆலகால சுந்தர நாங்கள். திருவேட்டைக் கெழுந் கொண்டுபோகப்பட்ட வஸ்துக்க ஆலவட்டம், கண்ணாடி, சாமல் மோகனமாலை இடக்கை முடிம தும்பிப் பதக்கம், முத்துச்சரப்ப அங்கிஷச்சோடு, சவடி, சங்கிலி பூரணகும்பம், நட்டுமுட்டுக்காரர் வேல், வாள், வில், சூலம், த6 பிண்டி பாலம், முரசம், சங்கப் பூரி, நாதசுரம் - இதுவன்றியும் சோர மார்க்கத்தை உண்டு ப அர்ச்சிக்கும் ஆசாரியனென பரமேசுவரன் அருளிப்பாடு.
வாரீர் வாரீர் ஆலகால சுந்தர இந்தச் சோரமார்க்கத்தை உண் வாழைத்தார் கொண்டடித்து கோயிலிடமாக வரலாம் என்று தேவி அருளிப் பாடு.
திருகோயிலுள்ளிருக்கும் சிவலிங்க அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தை என ஐந்து வகைப்படும். அவற்றுள் சுயம் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கன லிங்சம் விட்டுணு முதலிய தேவர்களா களாலே தாபிக்கப்பட்டது மானுடலி மானுடலிங்கத்தின் உயர்ந்தது ஆரிடலி அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.

ந என்று ரனானவர் ள கற்பிக்க அருளிப்பாடு.
ரே, ஆதிசண்டீசுரரே *வேட்டைக்கு ாடுபோகப் பட்ட
சோரமார்க்கம்
த்து
பண்ணினவர்களை ாயிலிடமாக
டு.
ரே, ஆதிசண்டீசுரரே தருளுகிறபோது ர் வெடி, குடை ர, முத்துமாலை ாலை, முத்துக் கண்டம் R, இரத்தின குண்டலம்
அர்த்த கவசம் , தேவ அடியார் ண்டாயுதம் b , மத்தளம் இந்தச் ண்ணினவர்
ரே ஆதிசண்டீசுரரே டுபண்ணினவர்களை பிழைதீர்த்துக்
பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும் விதலிங்கம், ஆரிடலிங்கம் மானுடலிங்கம் புலிங்கம் தானே தோன்றியது. காணலிங்கம் ‘ங்களாலே தாபிக்கப் பட்டது. ல தாபிக்கப்பட்டது. ஆரிடலிங்கம் இருடி கம் மனிதர்களாலே தாபிக்கப்பட்டது கம், அதனினுயர்ந்தது தைவிக லிங்கம்,
- ஆறுமுக நாவலர்
سي. 4'

Page 27
வன்னி வளநாட்டில்
க. சரவணப்வன் 8
வன்னியர் என்ற குலமரபினர் ஆண்ட பகுதிகள் ஈழத்தில் இன்றும் வன்னி என அழைக்கப்பட்டுவருகிறது. ஏறத்தாள 13ம் நூற்றாண்டிலிருந்து வன்னியர் ஆட்சி இடம்பெற்று வந்துள்ளது. போத்துக்கே யர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலப்பகுதியி லும் இப்பகுதி வேறான ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்ததாக வரலாற்று ஆதாரங்களால் அறிகின்றோம். ஆங்கிலே யராட்சிக்காலத் தொடக்கத்தில் பண் டாரவன்னியன் இப்பகுதியில் பெரும்பா லான பகுதியைதன்னாட்சிக்குட்படுத்தியிரு ந்தான். இன்று முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களையுள்ளடக்கிய பகுதியாக "வன்னி" என்பது அழைக்கப் படுகின்றது. சிறப்பாக இப்பகுதிகளிலுள்ள கிராமப்பகுதிகளை "வன்னி" என அழைக் கப்படுவதுமுண்டு. நிலவளம், நீர்வளம், காட்டுவளம், கடல்வள மென நிறைய வளங்களையுடையது இப்பகுதி. கிராமிய வாழ்க்கைக்குரிய பண்பாட்டுக் கோலங் களை இப்பகுதிகளில் நிறையக் காண லாம். நாட்டார் வழக்கியல்கள் பல இன் றும் இப்பகுதிகளில் போற்றிப் பேணப் பட்டு வருகின்றன. இப்பிரதேச மக்களின் வழிபாட்டு மரபுகளும் சிறப்புடையவை, தனித்துவமானவை.
வன்னி வள நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயப் பெருங்குடிமக்களாகவே வாழ்கின்றனர். சிறு சிறு குளங்களோடு மக்கள் அண்டிவாழும் கிராமங்களையுடை யது இப்பகுதி. அக்கிராமங்களின் பெயர் களும் குளத்தோடு அண்டிய காரணப் பெயர்களையுடையவை. இப்பகுதி மக்கள் தொகையில் ஏறத்தாள 80 சத வீதத்தி னர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். மிகுதி 20 சத வீதத்தினர் றோமன் கத் தோலிக்க, புரட்டஸ்தாந்து, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தவர்கள். ஐரோப்பியர் ஆதிக்கக் காலத்தில் முல்லைத்தீவு நக
25 ܚܝܢ

வழிபாட்டு மரபுகள்
A. Dip-in-Ed.
ரத்தை அண்டிய கரையோரக் கிராமங்களில் உள்ளவர்களில் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்டார்கள். அளம்பில் புதுக்குடியிருப்பு, சிலாவத்தை ஆகிய கிராமங்களில் இம் மதத்தவர்க்குரிய வழிபாட்டுத்தலங்கள் இருப்பதையும் நோக்கலாம்.
வன்னி வள நாட்டிலுள்ள சைவ மக் கள் சிவ வழிபாட்டையும், சக்தி வழி பாட்டையும் பெருமளவில் போற்றுகின் றனர். சிவ வழிபாட்டினைக் குறிக்கும் சிவாலயங்கள் பல இங்குண்டு. அவற்றுள் ளும் மிகப்பழைமையும், பெருமையும், புதுமையுமுடையது. ஒட்டுசுட்டான் தான் தோன்றீசுவரர் ஆலயமாகும். இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெருமையுடையது இவ்வாலயம், தானா கத் தோன்றிய சிவலிங்கத்தையுடைய ஆலயமாதலால் இக்காரணப்பெயர் பெற் றது. வன்னிப் பிரதேச கிராம மக்கள் அனைவர்க்குமுரிய ஒரேயொரு சிவ தேவா லயமாக இது காணப்படுகின்றது. நெடுங் காலமாக பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த மக்கள் மாட்டு வண்டிகளில் சென்று வழிபடும் மரபுண்டு. சிறப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளிலும் அதிலும் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் பெருந் தொகையான மக்கள் சென்று வழிபட்டு வருவதுண்டு. இவ்வாலயத்தில் தினமும் மூன்று காலப்பூசைகள் நடைபெறுவது டன் ஆனிமாத அமாவாசையோடு அண்டி பதினைந்து நாட்கள் திருவிழா நடை பெறுவதுமுண்டு. வன்னி மக்களின் நினை வில் நீங்காத இடத்தை ஒட்டுசுட்டான் தான் தோன்றீசுவரர் பெற்றுள்ளார் என லாம்.
சிவவழிபாட்டோடு சக்தி வழிபாட்டி னையும் வன்னி வள நாட்டு மக்கள் பெரி

Page 28
தும் போற்றிவருகின்றனர். சிவமின்றிச் சக்தியில்லை, சக்தியின்றிச் சிவமில்லை யென்ற சைவ சித்தாந்த உண்மைக் கேற்ப சக்தி வழிபாடும் போற்றப்படு கின்றது. சக்தி பற்பல நாமத்தோடும், வடிவத்தோடும் அன்பர்க்குக் காட்சி கொடுக்கின்றது. அதில் கண்ணகி என்ற நாமத்தோடு வழிபடும் மரபு வன்னி வள நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரு கின்றது. கஜபாகு மன்னன் பத்திணித் தெய்வ வழிபாட்டினை ஈழத்தில் அறி முகப்படுத்தியதிலிருந்து இப்பகுதியிலும் அம்மரபுஆரம்பித்திருக்கலாம். “மதுரையை எரித்த பின் கோபந் தணியாத கண்ணகி ஈழத்திலும் பல தலங்களில் குடிகொண்டு அடியார் பூசனையில் குளிர்ச்சி பெற்றாள்" என்றும் பத்தாவது தலமாகக் குடி கொண்டதே வற்றாப்பளை என்ற தல மென்றும் சிலம்பு கூறல் பாக்களால் அறி கின்றோம். அன்றிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம் வன்னி வள நாட்டு மக்களின் சிறந்ததோர் சக்தி வழி பாட்டுத் தலமாக இருந்து வருகின்றது.
வன்னி வள நாட்டு மக்கள் மட்டு மின்றி ஈழத்துச் சைவ மக்கள் கூட தமது குல தெய்வமாக வற்றாப்பளை கண்ணகி அம்பாளை வழிபட்டு வருகின்றனர். வைகாசி மாதம் பெளர்ணமியோடு அண்டி வரும் திங்களன்று பொங்கல் விழா நடை பெறும். அதற்கு முன்னைய திங்கள் நாட்களில் பாக்குத் தெண்டல், தீர்த்த மெடுத்தல் என்ற நிகழ்வுகள் இடம் பெறு வதுண்டு. தீர்த்தமெடுத்த கடல் நீரில், முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத் தில் விளக்கெரியும் அற்புதம் அம்பாளின் கருணையென்ற நம்பிக்கை மக்கள் மன தில் இன்னும் இருந்து வருகின்றது. பொங் கல் மரபுரீதியான சில நடை முறைகளு டன் இடம் பெறும். பொங்கல் நாளன்று இரவு முழுவதும் சிலம்பு கூறல் பாக்கள் பாடப்படுவதும், மக்கள் அவற்றைப் பய
பக்தியோடும் கேட்பதுமுண்டு.
பங்குனித்திங்கள் நாள்கள், கார்த்தி கைத் திங்கள் நாள்களில் விசேட பூசை கள் இடம்பெறுவதுடன் அத்தினங்களில்

மக்கள் விரதமிருந்து அம்பாளை வழிபடு வதுண்டு. கண் வருத்தம், அம்மை, சின்ன முத்து போன்ற நோய்கள் அம்பாளை வழிபட்டால் அகலுமென்ற நம்பிக்கை மக்களுக்குண்டு. காவடி எடுத்தல், பாற் செம்பு எடுத்தல், அங்கப்பிரதிஷ்டை செய்தல் என்பவற்றின் மூலம் மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்வர்.
சக்தி வழிபாட்டின் வெளிப்பாடாக வட்டுவாகல் கன்னிமார் வழிபாட்டு மரபும் இருந்து வருகின்றது. தென்னிந்தியாவில் தோன்றிய இவ்வழிபாட்டுமரபு ஈழத் திலும் பரவி வன்னிவளதாட்டிலும் இடம் பெறலாயிற்று. மன்னாகண்டல் எனும் காட்டுப் பகுதியில் கன்னிமார்களுக்கென கோயில்கள் இருந்தமைக்கு இடிபாட்டுச் சான்றுகளுண்டு. 'கன்னியர்கேணி என்ற பெயரோடு இன்றும் சிறு குளமொன்று இருப்பது நோக்கத்தக்கது. வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தில் ஆனிமாதப் பெளர்ணமி தினத்தோடு அடுத்து வரும் திங்கள் நாளன்று பொங்கல் உற்சவம் நிகழ்வதுண்டு.
சிவ சக்தி வழிபாடுகளுடன் பிள்ளை யார், முருகன் வழிபாட்டு மரபுகளும் சைவப் பெருமக்களிடையே இருந்து வரு கின்றன. புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலயம் முள்ளியவளைக் காட்டு விநாயகர் ஆலய குமுளமுனை கொட்டு கிணற்றடிப் பிள்ளையார்ஆலயம், தண்ணீரூற்று, ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம், கணுக்கேணி கற்பகப்பிள்ளையார் ஆலயம், முல்லைத்தீவு வீரகத்திப் பிள்ளை யார் ஆலயம் என்பன குறிப்பிடக்கூடிய விநாயகர் ஆலயங்களாகும்.
விவசாய விருத்திக்கு பிள்ளையாரே வழிகாட்டும் தெய்வமென மக்கள் வழி பட்டு வருவதுண்டு விவசாயத்தோடு தொடர்பான கருமங்கள் அனைத்தும் தொடங்கும் நேரங்களில் க ற் பூ ரம் கொழுத்தி தேங்காய் அடித்துத் தொடங் கப்படுவதுண்டு. வயல் நிலங்களுக்கண் மையில் மரமொன்றிடையில் பிள்ளை யாரை அமர்த்தி விடுவார்கள். ஆலமரம்,

Page 29
அரசமரம், மருதமரம் என்பனவற்றிற்கிடை பில் பிள்ளையார் அமர்ந்திருப்பார். காலத் திற்குக்காலம் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்குவதுண்டு. விதைப்பு ஆரம்பிக்கும் தேரத்தில் தேங்காய் நேர்த்தி கட்டப் படுவதுண்டு. அறுவடைமுடிந்து சூடு அடிக் கும் நேரத்தில் அந்தத் தேங்காயையும் எடுத்து பிள்ளையாருக்கு அமுது சமைத்துப் படைப்பார்கள். அதோடு மோதகம் அவித்துப்படைப்பதை " நி  ைற ம ணி " போடுதல் என அழைப்பதுண்டு பிள்ளை யாரின் கருணையினால் பெருமளவு நெல் பொலியுமென்றநம்பிக்கை மக்களுக்குண்டு. மாதாந்த சதுர்த்தி தினங்களிலும் விசேட மாக ஆவணி மாதச் சதுர்த்தி தினத்தில் விநாயகர் ஆலயங்களில் விசேட பூசைகள் நிகழ்வதோடு மக்கள் விரதமிருந்து விநாயகரை வழிபடுவதுமுண்டு.
*ლა->
வன்னி வள நாட்டு சைவப் பெருங்
குடிமக்கள் முருக வழிபாட்டினையும் மேற்கொள்கின்றார்களென்பதற்காதார மாக முருகன் ஆலயங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. புதுக்குடியிருப்பு ஞான வேலாயுதர் ஆலயம் குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம், முள்ளியவளை கல் யாண வேலவர் ஆலயம் என்பன குறிப் பிடக் கூடியவை. குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம் மிகப்பழைமை யானதும், புதுமையுடையதும், போர்த்துக் கேயர் வருகைக்கு முன்னரே இவ்வாலயம் இருந்தமைக்கு ஆதாரங்களுண்டு. போர்த் துக்கேயரால் இடிக்கப்பட்ட சைவ ஆலயங் களுள் இதுவுமொன்று அவ்வேளை ஆலயத் தின் மூர்த்தி பாதுகாக்கப்பட்டு பின்னொரு காலத்தில் மூர்த்தி வைத்து புதுப்பிக்கப் பட்டது. முருகனாலயங்களில் கந்தசஷ்டி விரதம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படு
றது. கந்தபுராணப்படலமும் அக்காலங் களில் படிக்கப்படுவதும் குறிப்பிடக் கூடி யது. நாவலர் காட்டிய வழியில் கந்தர் புராணப்படலம், தி ரு வா த வூ ர டி க ள் புராணம் படிக்கப்பட்டு உரை சொல்லும்
வழக்கம் இருந்து வருகின்றது.
வன்னியர் ஆட்சிக் காலத்தில் இருந்து
வந்த மற்றோர் பழைமை மிக்க ஆலயம்
புதூர் நாகதம்பிரான் ஆலயமாகும்.
-- }

ஆண்டு தோறும்  ைவ கா சி மாதம் பெளர்ணமியோடு அண்டிவரும் திங்கள் தினத்தில் புதுரர் நாகதம்பிரான் பொங்கல் வைபவம் நிகழும் அந்நாளில் பெருந் தொகையான மக்கள் கூடி நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபட்டு வருதல் வழக்கம். புதூர் நாகதம்பிரானை நினைந்து வீடு களில் காசு நேர்ந்து போடும் வழக்கம் உண்டு. பொங்கல் நாளன்று அல்லது அதற்கு முன்னர் காசு வேண்ட வருபவர் கள் மூலம் அவற்றை கோயிலுக்குச் சேர்ப் பிப்பதுண்டு. விவசாயப் பெருங்குடிமக்கள் பயிர்களுக்கு நோய் பீடைகள் ஏற்படும் போது புதூர் மருந்து கரைத்துத் தெளிப் பார்கள். பொங்கல் நாளன்று பெறப் படும் புதூர் மருந்து வீடுகளில் பேணிப் பாதுகாக்கப்படுவதுண்டு.
வன்னிவள நாட்டுக் கிராமங்கள் பல வற்றில் கிராமியத் தெய்வங்கள் பல வைத்து வழிபடும் மரபுமுண்டு. வைரவர், வீரபத்திரர், ஐயனார், காளி பேச்சியம் மாள் முதலிய தெய்வங்கள் வழிபடப் படுவதுண்டு. சடவன்குளம் ஐயன் வழி பாடு இவற்றுள் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் ஐயனார் பொங்கலுக்கு மக்கள் நிறைந்து கூடிவழி பாடு நிகழ்த்துவர். அப்பகுதியைச் சூழ்ந்த ஆண்கள் நெல்குற்றி பொங்கும் வழக்கம் அங்குண்டு. ஆடு, கோழி நேர்ந்து விட்டு ஐயனுக்கு வழங்கும் வழக்கமும் உண்டு. பல இடங்களிலுமிருந்து ஐயன் கோயில் பூசாரியிடம் சென்று திருநீறு போடுவதும், வேளை போடும் மரபுமுண்டு.
வன்னி வள நாட்டில் வழிபாட்டு மரபுகளைப் பொறுத்தவரை பழைமை பேணப்படுகின்றது. மரபு ரீதியான பண் பாட்டுக் கோலங்கள் அழிந்தொழியாது பாதுகாக்கப்படுகின்றன. கிராமிய வாழ்க் கையும், கிராமியப் பண்பாடுகளும் இன் னும் காணப்படுகின்றன. சைவ வழிபாட்டு மரபுகளுக்கு ஏற்படும் சவால்களைப் பொறுத்தவரை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்நியராட்சிக்கால மத மாற்றம் நடவடிக்கைகள் இன்னும் தொடர்வது போலத் தெரிகிறது. ஆங் காங்கே மறைமுகமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து சைவ வழி பாட்டு மரபுகளை பாதுகாக்கவும் வளர்க் கவும் தாமனைவரும் பாடுபடவேண்டும்.
மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்'

Page 30
தான்தோன் - ஆசிரி
தானாகத் தோன்றித் த ஏனோ என்மீது இரங்கை வந்து பணியவருள் வள்ள சந்ததமும் உன்னருளைத்
ஒட்டுசுட வேகாத துன்ன கிட்டிவந்தும் பாவிகுரல் போதாதோ இன்னும் G ፲BFr፰ባr இரங்குவை இந்ந1
தான்தோ ஏன் ே
- கு
தான்தோன்றி ஈசன் வ அண்டசராசரம் அனைத் வான்தோன்ற வில்லை மண்தோன்ற வில்லை கான்தோன்ற வில்லை கடல்தோன்ற வில்லை நான் நான் என்று தம் ஆனவ உணர்வுகளும் இங்கே கருவாகவில்லை
ஆசையை ஈசனோடாயி வைக்காத தூயவர்கள் ஈசனாகி விடுகிறார்கள் அவர்களின் தேகங்கள் இலிங்கமாகி விடுகின்ற அதிலொன்றுதான் ஒட தான்தோன்றி ஈஸ்வரன்
பிறவியின் நோக்கம் நிறைவுறும் வேளை தேகமே ஆண் பெண் அதன் சிற்றின்ப வடிவ பேரின்ப வடிவங்களாகி பேரருள் புரிகின்றன
ஒட்டுசுட்டான்
தான்தோன்றி ஈஸ்வர
ஏன் தோன்றினார் கெட்டழியும் எங்கள் \iä. L-ilu
ஒளியானார்

ாறீசர் வெண்பா யர் முருகேசு -
ளைத்தோங்கும் ஈஸ்பரனே
லநீ - வானோர்கள்
ாலே எந்தனுக்கு
தா
ாருளோ இல்லையோ கேட்டிலையோ - பட்டதுயர் பாறுக்கவெனக் காற்றலுண்டோ 'rcir
ன்றி ஈஸ்வரன் தான்றினார்? முழமருதன் -
ருமுன்னர்
திலும்
பட்டமடிக்கின்ற
னும்
ட்டுசுட்டான்
பிறப்புறுப்புக்களாகி 1ங்களை இழந்து
ன்
மனம்

Page 31
தான்தோன்றியீச
ஆசிரியர், சோதிடர், வெண் கணுக்கேணியூர்
நேரிசை
தான்தோன்றி ஈசுரனாய்த் தக் வான்போன்று நன்னகராய் வை இன்னருளை யேற்றமுடன் ஈடிஎ அன்றொருநாள் வந்தமர்ந் தா
அன்றொருநாள் வந்தமர்ந்தான்
என்றுமொரு தான்தோன்றி ஈசு பூலோக நாயகியார் அம்மையுட காலோனைச் சாய்த்தவனே கா
காலோனைச் சாய்த்தவனே கா நீலோனாய்க் கண்டமதில் நீறணி ஆலரவுந் தானணிந்தோன் தான் சீலனவன் ஒட்டுசுட்டான் தேன்.
ஒட்டுசுட்டான் தேன்பாலாய் ஒ6 கட்டுமலம் விட்டகலக் கண்டு ( வைத்திய நாதனாக வந்தமர்ந்த சித்தியுள தேவியுடன் சேர்ந்து
சித்தியுள தேவியுடன் சேர்ந்து முத்தியுல கேத்தும் முதல்வனவன்
தான்தோன்றி ஈசுரானாய்ச் சார் கான் தோன்று நன்னகரே காண்.
கான்தோன்று நன்னகரே காண்ட தான்தோன்றி ஈசுரனே சங்கரே செய்வயலில் தேவியுடன் தேவுல உய்வடைய லிங்கமென வொன்பூ
உய்வடைய லிங்கமென வொன்று தெய்வமெனச் சீருலகிற் சீர்பெற போக்குதற்குப் பூலோக நாயகிய நீக்க மறக் கண்டுதொழாய் நெஞ்
2 --سی

ன் சரணவந்தாதி
பாச் சிங்கம், கணியன் புலவனார்,
ஐங்கரலிங்கன்
வெண்பா
கவொட்டு சுட்டானை ாப்பதற்கு - தேன்போன்ற ன்றி யேநல்க
ன்
ஒட்டுசுட்டான் அம்மருந்தாய் ரனாய் - நன்றருளப் -ன் பூவிலங்கக் ண்,
ண்பதற்கோர் லிங்கமென ரிந்தோன் - சூலோன் கை ாதோன்றி யம்மரனே
ண்ணாரின் நன்கணியாய் தொழத் - தொட்டபிணி ான் தான்தோன்றி
திகழிலிங்கம் ண் - பத்திசெயத் ர்ந்தமர்ந்தான் ஒட்டுசுட்டான்
பதற் கொட்டுசுட்டான் ன - தேன்குரக்கன் கும் பூவுலகும்
OJ :
வகை நாங்கூப்பித் வே - மெய்வருத்தம் ம் பொன்னரனும்
リ。
مسس 9

Page 32
நீக்கமறக் கண்டுதொழாய் நெஞ்சு தீக்கையோன் சீறரவும் சென்னிபி வேங்கைப் புலித்தோலும் வீரனெ பாங்கொட்டு சுட்டான் பரன்.
பாங்கொட்டு சுட்டான் பரனேதா ஐங்கரன் ஆறுமுகன் அந்தைசிவன் தானணிந்த சங்கரனே மாங்கனிை கூனவிளந் திங்கடலை கொண்டு.
கூணலிளந் திங்கடலை கொண்டு தேனமுத ஒட்டுசுட்டான் சென்று தேங்காய் கமுகின்காய் சேர்ந்தோ நாங்கள் தொழுமிலிங்கம் நாடு.
நாங்கள் தொழுமிலிங்கம் நாடு ட பாங்காகத் தேவர் பரவுலிங்கம் - தீங்கவிகள் செப்பத் திசையிலங்கு
நீங்காமல் தான்தோன்றி நெய்.
நீங்காமல் தான்தோன்றி நெய்யெ தூங்காமல் வண்டு சுகம்பாட - ம மந்தி பறித்தாட மஞ்ஞை நடம சிந்தைமலி யொட்டுசுட்டான் !ே சிற்தைமலி யொட்டுசுட்டான் சே சந்திமலி மூன்று தலமதிலே - எந்
தான்தோன்றி வந்தமர்ந்தான் ச, ஊன்றியாட் கொண்டருளி ஓய்ந்
ஊன்றியாட் கொண்டருளி ஓய்ந்: தான்தோன்றி யான தயாபரன்
நிர்மலனே பிட்டுக்கு மண்சுமந்த தர்மமுள வொட்டுசுட்டான் சாr
தர்மமுள வொட்டுசுட்டான் சா கர்வமெலாங் காற்றாய்க் கனிந்தி பத்தித்தேன் பாய்ந்தோடும் பஞ் சித்திக்கு மெல்லாச் செயல். சித்திக்கு மெல்லாச் செயலொட் முத்திக்கு முந்து முருகுலிங்கம் - பாகானது பங்கயத்தை நன்கு ஏகாது பார்ப்பீர் இவை.

ணுாலணிந்தோன் D - தூக்கிமான் த் தானணிந்த
தோன்றியிறை கங்கைமழு த் தாங்கமந்தி
குரக்கன்செய் தாழ - மீனா ற்றில் நி மொட்டுசுட்டான்
கழிலிங்கம் பூங்குயில்கள்
மொட்டுசுட்டான்
னவே ரீங்காரம்
rங்காய்கள்
ாடுஞ்
Fτί.
ர்ந்து திருப்பணிசெய்
தைசிவன் ‘‘ برچہ ت۔ ۔ ۔ ::: ற்குருவாய் வாசகனை
து.
துமே ஓயாமல், - மூன்றுகண்
நேசனவன்
i.
ந்தலிங்கம் கைதொழவே நிழியும் - சர்வசன நசம் பிணியகலும்
-டு சுட்டானில்
சத்தியுமை பரவியதும்
80 ജ

Page 33
ஏகாது பார்ப்பீர் இவைதா ெ போகாத மான்மரைபார் பூங்கி பச்சை வயல்பார்ப்பீர் பாய்நதி, அச்சமுள ஆனையும் பார் அங்
அச்சமுள ஆனையும்பார் அங்கு மிச்சமுள ஆனிரைபார் வேங்கை எல்லா வியற்கைவள மிங்கொட்( நல்லா யிலிங்கமருள் நாடு.
நல்லாமி லிங்கமருள் நாடு நலம் சொல்லத்தான் தோன்றி துணை பாரிற் பதினாறும் பல்முத்தி சி. ஊரிலோர் ஒட்டுசுட்டான் உண்டு
கட்டளைக்
ஊரிலோ ரொட்டுசுட் டானுண்
நேரிலோ சித்தி நெடுமாலின் .ை பாரிலோ பல்சீர் பகரிலா முத்தி சாரிலோ லிங்கமே தான்தோன்றி
' ' “ په չ::
நல்லூர், மாவிட்டபுரம், கீரிமலை, ஒட்டுசுட்டான், வெருகல், சித்தாண்டி, தி( இடங்களிலும் பாடல்பெற்ற திருத்தலங்கள் வரம் ஆகியவற்றிலும் "தேசத்துக் கோயில் சேர்ந்த ஆலயங்கள் அமைந்திருந்தன.

வையெனிலோ பார் - சாகாத
ார் ஒட்டுசுட்டான்
வணங்குவதை பும்பார் - எச்சமுள
சுட்டானில்
பெறவாப் பாவான் - அல்லாமல் த்திக்கும்
.
கலித்துறை *。
டுளமகிழ்ந் தோடிடுவாய்
மத்துனன் நீறணிந்து
பல நலனும்
யீசன் சரணமதே.
நயினாதீவு, செல்வச்சந்நிதி, வல்லிபுரம், நக்கோவில் கொக்கட்டிச்சோலை ஆகிய rான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ் கள் என்று கொள்ளத்தக்க வகையைச்
- பேராசிரியர் சி. பத்மநாதன்

Page 34
திருவூஞ்சற்
1. திருவளருந் தென்னிலங்கை திகழுமொட்டு all-T6 பெருவளரும் சுயம்புலிங்க பேசரிய ஊஞ்சலிசை மருவளர்சண் gst DIT606
மத்தகய வதனமுடை உருவளர உயர்ஞானம் g
aast Cup 5 LDT யெப்போ
2. சீராரும் மறைநான்கும்
சிவாகமந் நாலேழுபு பேராகு முபநிடதம் வித
பேசரிய ஒட்டுசுட்டான் பாராரும் பழவடியார் ட
பண்ணவர்கள் மலர் நீரார்செஞ் சடையுடைய நீத்தியகல் யாணியுட
ஆதவனும் மதியுமுயர் ே அம்புயனும் மாஇசிே காதல்வளர் மருத்துவுயர் கண்கனல் நற் கட-T? பாதலத்தோர் தாங்குமு பரவரிய ஒட்டுசுட்ட காதல்வளர் அடியவர்கள்
கனங் குழையாள்
4. நீடுபரா பரத்திலுயர்
நிகழுமுயர் பிரண6 நாடறிய உயர்ஞான ( நற்கிரியை பெறவி பாடரிய சதாசிவத்தா6 பகர்வரிய உருத்திர
தேடரிய மாலயனுந்
தெய்வவே as a 60
5. ஓங்கார மூலமெனும்
உபரகர வுகரவுதி நீங்காத நாதசக்தி உ நித்யநட ராசனும் ஆங்காத லுறுமடியா அயனரியாம் முதி பூங்கோதை 9Lülf
புண்ணியவே காவ
sai

பதிகம்
த் தீவி னோர்பாற்
அதனில் மேவும் மூர்த்தி மீது
Lurt Log- uufTLL-- வல்லி பெற்ற
முன்னோன் LJrrgb ங்கி மல்க
து மேத்துவாமே கால்க ளாகச்
ரி நாண தாகப் ான மாகப்
பீடமாகப் ாடி யேத்தப்
ரி பணிந்து துவ நிமல மூர்த்தி
Lன் ஆடீர் ஊஞ்சல்
நடைகைத் தாங்க பர் வட்டம் தாங்க
699应 5万向列 புடையோன் உடைவாள் பற்ற لاساگا مLurf Lg Lد rair நகரின் மீது ா பாடி யாட்டக் பாங்குடையீர் ஆடீர் ஊஞ்சல்
சக்தி நோக்க வமும் உருவாய்த் தோன்ற மூர்த்தி தோன்றி ந்து அதனில் தோன்றி "மகேசந் தோன்றிப் ானும் அதனில் தோன்றித் தோன்று மூர்த்தி ரே ஆடீர் ஊஞ்சல்
குழலை மீது
մ) Ց5Մ மாகி ருப்பெற் றோங்கி ர் வாசி யாகி ர்க் கெழுத்து மாகி லாய மூர்த்தி யாகி கத் தமைய ஆடும் னரே ஆடீர் ஊஞ்சல்
. 88 അ

Page 35
se
ஐந்தெழுத்தும் எட்டெழுத்த ஆறெழுத்தும் நாலெழுத் பிஞ்செழுத்தும் பெருவெழுத் பேசியிடும் பேசாத எழு நெஞ்சழுத்தம் மெய்யடியார்
நேரிழையாள் இடப்பா வஞ்சமுடைக் கயவர்களாக்
வளர் வேகா வனமுடை
ஆரூரும் அம்பலமும் கோயி ஆனைக்கா அனிமதுரை பாரூரண் ணாமலையும் கே பகரும்வட காசிநகர் ே சீரூர்ரா மேச்சரமும் கோயி செகம்புகழ்கோ ணேச்ச நீரூர்கே தீச்சரமும் கோயில் நிறைவேகா வனமுடையீ
குறுமுனிவன் காணமொடு பூ
குமரியொடு வரைமகளு கெறுவமுடன் அறம்வளர்ப்ே கெம்பிரமாய் வசுக்களுே மறுவிலுயர் பூமுனிவர் பூ!ை
வானவரும் தானவரும் நறுமலர்மென் மலர்ப்பாதம்
தாயகவே காவனமே ஆ
பூமானும் கலைமானும் வட புகழ்மானும் செயமானுட கோமானும் புலோமசையும்
கொந்தலர்பூங் குழல்மட தேமானும் உருப்பசியும் வட தெய்வதமெல் லியலாகும் நாமான ւսtքauւգաn"ri al நங்கையொரு பங்குடையீர்
по. சாலொகம் முதற்பதவி பெறு
சந்திரசூ ரியருலகத் தாரு மாலோகம் மகலோகம் மார் மன்பொருநற் சிவலோக,
rat. ss ~'

ாய் அமையும் போதும் தாய் அமையும் போதும் i தாய் வைகும் போதும் ழத்தாம் போதும்
நினைக்கும் போதும் ஈத் தமரும் போதும்
கானா மூர்த்தி யீர் ஆடீர் ஊஞ்சல்
ல் கொண்டீர்
கோயில் கொண்டீர் ாயில் கொண்டீர் காயில் கொண்டீர் ல் கொண்டிர் ரமும் கோயில் கொண்டீர்
கொண்டீர்
* ஆடீர் ஊஞ்சல்
சை செய்யக் ம் பூசை செய்யக் பார் பூசை செய்யக் மார் பூசை செய்யக் ச செய்ய
பூசை செய்ய
காட்டி ஆடும் ஆடீர் ஊஞ்சல்
ந்தொட் டாட்டப் ம் வடந்தொட் டாட்டக்
வடந்தொட் டாட்டக் வார் வடந்தொட் டாட்டத் -ந்தொட் டாட்டத் ) வடந்தொட் டாட்ட
டந்தொட் டாட்ட
ஆடீர் ஊஞ்சல்
றுவோரேத்தச்
மேத்த ண்பொ டேத்த த் தாரு மேத்த

Page 36
ஆலோக நாயக வெள் அந்தணருய் முன் பூலோக நாயகியாம் புகழ்லோக, நாங்
6 திருவோங்கு நல்லீழ சிவசங்கர சிவச உலகோங்கிய புரமூ உமையாளொரு கருவோங்கிய பிறவி
காலன்தனைக் மருவோங்குசண் பக மகிடன்தலை வி
θέμιτO5th தென்னிலங்
செகம்புகழ்வே காராரும் ஆணவத் கற்பகமே சொ நீராருந் தென்னில நீலிமக DIT u D பாரார் சுயம்புலிங்க பங்கயன் மால்
3. r ஏலயேலோ த G3Luitg5g5 Lunt - 1
பேரான புண்டரிக பிரமமே தான நேரான ஆணவு G நித்தம் அநித்த நேரான நுண்ணறிவு தானான தாம
சிற்சத்தி பாதமாம் திருவடித் தாய் ஐம்பாத உபதேச
ஆறத் வாெ சிவபோக மீதினிற் * சிவமாகி நின்று
மங்கள்ம் மங்க எங்கள் வரரா அங்குச பாசருக்கு
துங்க்மலி வேகாவ சுயம்புலிங்க மூர்த்

ன் றமரர் ஏத்த ரிவர்களும் அன்போ டேத்தப்
அம்மை கூடப் བན་་ பகரே ஆடீர் ஊஞ்சல்
ச்சரிக்கை ந் திகழ்தேவே எச்சரிக் 8 க ங்கர சிவமே எச்சரிக்கை ன்றையும் உடைத்தாய் எச்சரிக்கை
பாகம்முறை உரவோப் |ப்பிணி காப்போய் எச்சரிக்கை காலால் உதை கடலே எச்சரிக்கை வல்லியை மணந்தாய் எச்சரிக்கை அறச்செய்தவள் மணாளா எச்சரிக்கை
பராக்கு கைத் தேவே பராக்கு காவனத்தின் செல்வா பராக்கு தைக் களைவோய் பராக்கு ற்பதமே கண்ணே பராக்கு ங்கை நிமலா பராக்கு கிழ் நித்தா பராக்கு ப் பரனே பராக்கு
முதலோர்பணி பரனே ப்ராக்கு
ப்பற்பாட்டு த்தெய்யா ஏலவலி மாயா தீபக்கப்பல்
த் துறையில் ஓர் நாள் ாகச் சுக்கான் பிடிக்க நெல் மூட்டை கட்டி 5மாங் காற்றினுட்பட்டு |ப் பாயுமே கட்டித் ாணைத் தள்ளியே கட்டி م
- ஏலயேலோ
பீரங்கி யோடு மரைக் கொடியினைப் பேசு
நங்கூரம்போடு வனும் படிமீது தாண்டு செல்வதை வேண்டு நீ சென்மத்தை மாற்று
- ஏலேயேலோ
losé Tib தளம் மங்களம்: "ச நாயகர்க்கு மங்களம்
மம்பிகைக்கும் மங்களம் . $கும் அமரர்கட்கும் மங்கள்ம்' னச் சுகிர்தனுக்கு மங்களம் தியெனுஞ் சிவனவர்க்கு மங்களம்
۔ جع .*
حسب 4 است.

Page 37
நன்றி
வன்னிப் பிரதேசத்தின் இருதயஸ்த தான்தோன்றி ஈஸ்வரன் ஆலயத்திருப்பணி பாபிஷேகம் நிறைவேறத் திருவருள் பாலி ணைப் பேற்றாலேயே இப்புண்ணிய கைங் மூர்த்தியாகத் திகழும் சிவபெருமான் உயிர் வர் ஆடாதாரே?
இவ்வாலயத்தின் பாலஸ்தாபனம் புனருத்தாரண வேலைகள் ஆரம்பிக்கப்பட் வீச்சுச் சம்பவத்தினாலும் நாட்டில் நிலவிய வேலைகள் தற்காலிகமாகத் தடைப்பட்டன தாரண வேலைகள் நடைபெற்று முற்றுப்
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வா கொடுத்த நிதியினாலும் வடக்குக் கிழக்கு துறை அமைச்சினால் வழங்கப்பட்ட சிறிய வேறியுள்ளது. சைவ அன்பர்கள் சிலரும், கள் சிலரும் திருப்பணி வேலைகள் சிலவற்ே
நிறைவேற்றப்பட்ட திருப்பணி வே
1. Lufa umrgur Gir 69 GMT unrriř கோயில் புனரு
களுடன் தூபி அமைக்கப்பட்டது
2. மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாப
பட்டுப் புதிதாக அமைக்கப்பட்டன. சி சிற்பங்களுடன் அமைக்கப்பட்டது
3. பரிவார முருகன் கோயில் புனருத்தாரவி பங்களுடன் திகழ்ந்த நிலையில் விமான திரும்பவும் புனருத்தாரணம் செய்யப்பட
4. அம்மன் கோயில் புதிதாக அமைக்கப்பட
5. சண்டேஸ்வரர் கோயில் முற்றாகப் பிரி
ull-gil.
6. வைரவர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்க
7. யாகசாலை, நவக்கிரக ஆலயம் புனருத்
8. கொடித்தம்பம் புதிதாக அமைக்கப்பட் பூசப்பட்டதுடன் மாவிலைக் கலசம், ெ
9. மணிக்கூட்டுக் கோபுரம் புதிய சிற்பங்க 10. உள்வீதியிலுள்ள மேற்கு, தெற்கு port

யுரை
தானமாக மிளிரும் அருள்மிகு ஒட்டுசுட்டான் வேலைகள் முற்றுப் பெற்று மஹாகும் த்துள்ளது. வேகாவனேஸ்வரரின் பெருங்கரு கரியம் நிறைவேறியுள்ளது. சுயம்புலிங்க க்குயிராய் நின்று ஆட்டுவித்தால் யாரொரு
8-12-1989 இல் நடைபெற்றது. உடனே டன. 27-11-90 இல் இடம் பெற்ற குண்டு அசாதாரண நிலையினாலும் புனருத்தாரண 7. மீண்டும் இவ்வாண்டு தொடர்ந்து புனருத் பெற்றுள்ளன.
ழும் எண்ணிறைந்த சைவ நன்மக்கள் அள்ளிக் மாகண கல்வி சலாச்சார விளையாட்டுத் நிதியுதவியினாலும் இப்புனித பணி நிறை அரசாங்கத் திணைக்கள உத்தியோகத்தர் றை முன்வந்து ஆற்றியுள்ளனர்.
லைகள் பின்வருமாறு:-
த்தாரணம் செய்யப்பட்டுப் புதிய சிற்பங்
மண்டபம் ஆகியவை முற்றாகப் பிரிக்கப் வன் மூலஸ்தானத் தூபி முற்றாகப் புதிய
ண வேலைகள் முற்றுப் பெற்றுப் புதிய சிற் ாக் குண்டு வீச்சினால் சேதமடைந்தது. . لكن سL-
ته القياسات
க்கப்பட்டுப் புதிதாகத் தூபியுடன் கட்டப்
ப்பட்டது.
தாரணம் செய்யப்பட்டன.
கொடித்தம்பக் கவசம் வெள்ளி முலாம் ه 7ر سا பட்டி ஆகியன புதிதாகச் செய்யப்பட்டன.
ளுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டன. டபங்கள் திருத்தப்பட்டன.
' asser

Page 38
11.
I.
ஆலயத்தின் சிதைவடைந்த கூன்ர்கள் தி
திருக்குளத்தின் அடிப்புறத்தில் அரிப்பின வேலை நடைபெற்றது.
இத்திருப்பணி வேலைகள் அனைத்ை
அன்பர்கள் உதவியபோதும் விசேடமாகச் சில
l.
ஆலயத்தின் முன்னைநாள் மணியகாரர் நினைவாக இங்கிலாந்தில் வசிக்கும் அவரின் நன்கொடையைக் கொண்டு அம்மன் கே!
சிவன்கோயில் மூலஸ்தான தூபிவேலைக சிவராணி குடும்பத்தினர் மனமுவந்து வழி
. கந்தசாமி கோவில் புனருத்தாரண வேை
வல்லிபுரம் சின்னப்பிள்ளை (ஜெமின்) கு
. பொலிஸ் திணைக்களத்தினர் நாட்டில் அ
ஆலய வேலைகளுக்கான நிதியின் ஒருபகு
உதவி அரசாங்க அதிபர், பணிமனை உ யோகத்தர் ஆகியோர்கள் சண்டேஸ்வ பகுதியை உதவியுள்ளனர். மிகுதிப் பண எதிர்பார்க்கப்படுகின்றது.
திருப்பணிச் சபையினர் ஆலய உள்வீதி திருக்குளத்தின் அடியில் திருத்த வேலைக
அமரர் சி. உ. சிவகுரு அவர்களின் குடும் கட்கான நிதியையுதவ முன்வந்துள்ளனர்.
பரிபாலன சபையினரும், திருப்பணிச் சை
குறிப்பிடத்தக்கது.
. தீர்த்தக் கிணற்றை வெட்டுவதற்குரிய நீ
உவந்தளித்துள்ளார்.
திருப்பணி வேலை சளிலும் முப்பத்து
வேலைகளிலும் நம்மோடு தோளோடு தோன் கும், இளைஞர்கட்கும் நாம் நன்றி கூற கட
தேவஸ்தானப் பிரதம குருக்கள் வேதசி
குருக்கள் கும்பாபிஷேக ஆரம்ப வேலைகள் மாத்திரமன்றி மஹா கும்பாபிஷேக பிரதம டன் இணைந்து குடமுழுக்குப் பணியை இ6 களுக்கும் ஏனைய அர்ச்சகர்களுக்கும் எம் ந
பிரயாணக் கஷ்டத்தின் மத்தியிலும்
வேலைகள் அனைத்தையும் அழகுற வடித்து சேகரம் (சந்திரன்) அவர்களுக்கும் அவரின்
- 3

த்தப்பட்டன
ஏற்பட்ட பாந்தைகள் நிரப்பும்
யும் நிறைவேற்ற நூற்றுக்கணக்கான் ன் பாரிய பணியைக் குறிப்பிட வேண்டும்.
சி. உ. சிவராசா ஜே. பி. அவர்களின் புத்திரன் திரு. சி. சிவகுமார் அளித்த யில் புதிதாக அமைக்கப்பட்டது.
நக்குரிய நிதியை திரு. க. பஞ்சாட்சர்ம்ங்கியுள்ளனர்.
லக்சான நிதியின் ஒருபகுதியை புதுக்குளம் டும்பத்தினர் அளித்துள்ளனர்.
மைதி நிலவிய காலத்தில் பிள்ளையார் தியை ஈந்துள்ளனர்.
த்தியோகத்தர்கள் கிராமசேவை உத்தி ரர் ஆலய வேலைக்கான நிதியின் ஒரு மும் அவர்களிடமிருந்து கிடைக்கும் என
தெற்கு மண்டபத்தை அமைத்ததுடன்
ளைச் செய்துள்ளனர்.
。整零° பத்தினர் மணிக்கோபுர திருப்பணி வேலை திருப்பணி வேலைகள் அனைத்திலும் ஆலய பையினரும் இணைந்து செயற்பட்டமை
தியை கற்சிலைமடு ஆ. சேனாதிராசா
மூன்று குண்ட மஹா கும்பாபிஷேக i நின்ற அன்பர்களுக்கும் பெரியார்களுக் டமைப்பட்டுள்ளோம்.
வாகம கிரியா பூஷணம் சிவபூரீ ந.ராஜாராம் அனைத்திலும் முன்னின்று உழைத்தது கிரியா முதல்வராகவும் திகழ்ந்தார். இவரு னிது நிறைவேற்றிய முப்பத்திரண்டு குருக் ன்றி உரித்தாகுக. யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தூபி சிற்ப தவிய ஸ்தபதி, சிற்பி சுப்பிரமணியம் சந்திர உதவியாளர் மாத பாலச்சந்திரன் அவர்க
6 -

Page 39
ளுக்கும், சிற்பங்களுக்கும் தூபிக்கும் வர்ண கேசரி ஒவியர் திலகம் விஸ்வம் நடராசா அ தெரிவித்துக் கொள்கிறோம்.
எமதுரைச் சேர்ந்த மேசன் மார்களு களுக்கும் எமது நன்றி
யாகசாலை மண்டபம் அமைக்க உத யாற்றியவர்கள், சமித்துக்கள் சேகரித்து உத புரிந்த ஒட்டுசுட்டான், சம்மளங்குளம் கிரா யும் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தன்
கும்பாபிஷேக மலருக்கு ஆசியுரை அ6 சாரியார் அவர்களுக்கும் கலாச்சார அலுவல் மன்ன சிங்கம் அவர்களுக்கும் முல்லை மாவ1 சிங்கம் அவர்களுக்கும் முல்லைத்தீவு பிரதேச கி பிள்ளை அவர்கட்கும் ஒட்டுசுட்டான் உதவி அவர்கட்கும் எமது உள்ளங்கனிந்த நன்றி.
மலருக்கான கட்டுரைகளையும் கவிதை கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி நா.சு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் முல்6 உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ச க. செல்லத்துரை, வெண்பாச் சிங்கம் இ. ஐ எமது மனங்கனிந்த நன்றி.
கும்பாபிஷேக விழா சிறப்புறப் பல்வே ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கும் எமது ந4
சி. மகேஸ்வரன் 瑟9。 இராசசேகர தலைவர் (οι μπ பரிபாலன சபை பரிபால
சிவலிங்கம், திரிபுண்டரம் (விபூதி), உருத்திராக்கம், நந்தி, மயில், மூஷிக குத்துவிளக்கு, கமண்டலம், அங்குசம் சுவஸ் மாங்கோலம், ஆல். வில்வம் கொண்றை
37 سس

தீட்டி ஒளிபெறச் செய்த வண்ணக் கலா பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றியைத்
க்கும், ஆசாரியர்களுக்கும் தொழிலாளர்
யவர்கள் சிரமதான அடிப்படையில் பணி வியவர்கள், பல்வேறு விதங்களில் உதவி பங்களையும் அதனையடுத்த கிராமங்களை றிக்குரியவர்கள்.
த்த நல்லை ஆதீன ஞானசம்பந்த பரமாச் கள் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். எதிர் ட்ட அரசாங்க அதிபர் திரு. இ. தர்மகுல ல்விப்பணிப்பாளர் திரு. நா. தணிகாசலம் அரசாங்க அதிபர் திரு. வி. கந்தசாமி
களையும் உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக் ப்பிரமணியன், மூதறிஞர்க.சி.குலரத்தினம், லைமணி, முல்லைத்தீவு கல்வித் திணைக்கள 1. சரவணபவன் அரியான் பொய்கை ங்கரலிங்கம், குமுழமருதன் ஆகியோருக்கும்
று கிராமங்களிலிருந்தும் வந்து குழுமியுள்ள ன்றி.
(துரை) ஆ. சேனாதிராசா
ருளாளர் செயலாளர் RT éF@88) திருப்பணிச் சபை
னங்கள்
ஓம் எனும் பிரணவம், திரிசூலம் வேல், , சேவல், நாகம், ஹோமம் கும்பம், நிக்கா (பதி) சட்கோணம், திரிகோணம்,
ਲੇ56u
- ஹவாய் சைவசித்தாந்த ஆலயம்

Page 40
முல்லை
சைவ ஆல
முள்ளியவளை காட்டுவிநாய தண்ணீரூற்று ஊற்றங்கரை கணுக்கேணி கற்பகப் பிள் முல்லைத்தீவு வீரகத்திப் ! புதுக்குடியிருப்பு உலகலந்த புதுக்குடியிருப்பு மந்துவில் குமுழமுனை கொட்டுக் 6. கொக்குத்தொடுவாய் கோட் குமுழமுனை கற்பகப் 6i பழம்பாசி தவசிகுளம் Sai தண்டுவான், புளியங்குளம் சிலாவத்தை காயா மோட்டி அம்பலவன் பொக்கணை அம்பகாமம் மம்மில் பிள்ை கரிபட்டமுறிப்பு விநாயகர் மாங்குளம் சித்தி விநாயக் கற்சிலைமடு சம்மளந்துளf ஒட்டுசுட்டான் மாணிக்கப் ஒட்டுசுட்டான் வித்தியாபு ஒட்டுசுட்டான் சாளம்பன் கெருடமடு தீர்த்தக்கரை
முள்ளிவாய்க்கால் மேற்கு கற்சிலைமடுபெருமுறிப்பு செம்மலை மாணிக்க விந தண்ணிமுறிப்பு சித்திவிநா வற்றாப்பளைப் பிள்ளைய கருவேலங்கண்டல் பூரீ விர முத்தரையன் கட்டுப் பின் உடையாகட்டு சுதந்திரபு கருநாட்டுக்கேணி கற்பக
துணுக்காய் பிள்ளையார் கலவிளான் பிள்ளையார்
அணிஞ்சயன் குளம் பிள் பனங்காமம்(பிள்ளையார் பாண்டியன்குளம் பிள்ை தச்சடம்பன் பிள்ளையார் கொக்கிளாய் அரசடிப் கல்லடியான் விநாயகர்
முறிகண்டி பிள்ளையார்
கொக்கிளாப் வீதி ஆறா வெள்ளா முள்ளிவாய்க்க

ாவட்டச்
யங்கள்
ussri
சித்திவிநாயகர் sporu Tř
பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் ணற்றுப் பிள்ளையார்
ட்சுக்கேணிப் பிள்ளையார் ளையார்
ாளையார்
பிள்ளையார் டை பூரீ விநாயகர் ஆலடி விநாயகர் ளையார்
5i rய்ப் பிள்ளையார்
பிள்ளையார் rîb 16řT GO GMT ULITrif
பிள்ளையார் விநாயகர்
குமார கணபதி ப் பிள்ளையார் ாயகர் "யகர்
mrtř ாயகர் rossar uu Trif ரம் விநாயகர் விநாயகரி "
ን@m ዚዛrሱ
irurrri.
பிள்ளையார் ..
ங்கட்டை திருமுருகன் ால் குருந்தடி விநாயகர்

Page 41
கூழாமுறிப்பு ஒட்டுத் தொ கற்சிலைமடு வீரையடிப் பி. பெரிய இத்திமடு பிள்ளைய ஒட்டுசுட்டான் பழைய விர கற்சிலைமடு தகட்டுப் பிள் ஒட்டுசுட்டான் தான்தோன் புதுநகர் சிவன்கோயில் வவுனிக்குளம் சிவபுரம் சிவ தண்ணிமுறிப்பு குருந்தூர் 8 கொக்குத் தொடுவாய் மகாலி வற்றாப்பளை கண்ணகை அ புதுக்குடியிருப்பு முத்துமாரி கற்கிடங்கு கண்ணகை அம்ப வன்னிவிளாங்குளம் முத்துமா வட்டுபாகல் சப்த கன்னியர் முள்ளியவளை சண்ணகை அ முள்ளியவளை அம்பாள் சந் சிலாவத்தை கண்ணகை அம் சிலாவத்தை தீர்த்தக் கரை புதுக்குடியிருப்பு துர்க்கை அ கொக்கிளாய் கண்ணகை esgyll ஆறுமுகத்தான் குளம் கண்க கொக்குத் தொடுவாய் முத்து நெடுங்கேணி கறடிப் பிலவு கற்சிலைமடு நாகம்மை துணுக்காய் முத்துமாரி அம்ம கல்லிருப்பு கண்ணகை அம்ம விநாயகபுரம் துர்க்கையம்மன்
குமாரபுரம் சித்திரவேலாயுதர் முள்ளியவளை கல்யாண வே புதுக்குடியிருப்பு கந்தசாமி அளம்பில் முருகன் வற்றாப்பளை முருகன் மாமூலை முருகன் மன்னகண்டல் முருகன் உடையார்கட்டு முருகன் புலிமைக்கினாதிகுளம் கந்தசா, முள்ளிவாய்க்கால் கடற்கரை கொக்குத் தொடுவாய் பணிச் குமிழமுனை குன்றின்மேல் கு வற்றாப்பளை ஞானமூர்த்தி கரிபட்டமுறிப்பு கந்தசாமி காதலியர் சம்மளங்குளம் கந் மல்லாவி கந்தசாமி முள்ளியவளை பளை வைரவ
* : : 3 8.

மிற்சாலை பிள்ளையார் ள்ளையார்
5 Itusii
መማ)6ar ዘ!firrት .
றி ஈஸ்வரர்
76) Titjib சிவன் ங்கேஸ்வரர் அம்மன்
அம்மன்
மன் "ரி அம்மன்
ble 6ör தி கண்ணகை
மன்
கண்ணகை அம்மன் ம்மன் : ་་་་་་་་་་་་་་ ம்மன்
னகை அம்மன் மாரி அம்மன் முத்துமாரி அம்மன்
yer
o
லவர்
t
முருகன் MYK - W சையடி முருகன் மரன்
தசாமி
伊

Page 42
முள்ளியவளை நரசிங்க வைரவ கள்ளப்பாடு ஆதிவைரவர் முல்லைத்தீவு கடைத்தெரு ை கற்சிலைமடு வைரவர் அணிஞ்சயன்குளம் நரசிங்க வை
மாமூலை மகாவிஷ்ணு முள்ளிவாய்க்கால் கிருஷ்ணன் முள்ளியவளை ஐயனார் முள்ளியவளை பழையகுடியிருப் ஆண்டான் குளம் ஆதி ஐயன குருந்தூர் ஐயனார்
குமுழமுனை நாகதம்பிரான் முத்தரையன்கட்டு தான்தோன். இத்திமடு நாகதம்பிரான்
நாயாறு (மணியப்பர்
விநாயகரை வேளாண்மைக்குக் காவல் செய்யும் வேளாளர் கருதி வழிபட்டனர். வன்ன தெய்வத்தின் அழிந்துபோன கோயில்களைக் க. பார்க்கச் செல்வப் பெருக்கை மனத்திற் கெ வணங்குகின்றனர். சிலகாலத்துக்கு முன் அனு எதிரில் ஒரு கணேசர் சிலை இருந்துவந்தது. இ போல் புத்தமதத்தினர் பாற்சோறு படைத்துப் புரத்தையும் அரசமரத்தையும் பாதுகாக்கும் தேவி
، 0ته س- |

ஆதி ஐயனார்
நாகதம்பிரான்
தெய்வமாகப் பயிர்த் தொழில் யின் எல்லாப் பகுதிகளிலும் இத் "ணலாம் ஆத்மீக வளர்ச்சியிலும் ண்டு சிங்களவர் பிள்ளையாரை ாதபுரத்திலுள்ள அரசமரத்துக்கு க்கணேசருக்கு இந்துக்கள் செய்வது பணிந்துவந்தனர். இவர் அனுராத காவலர் என்றே எண்ணப்பட்டார்.
- சி. எஸ். நவரத்தினம்

Page 43


Page 44
SS
Pri Inte; KUMARAN 2011, D34. DI Colom

at | PRESS, Street, bo-12.