கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கேதீச்சரத் திருப்பதிகங்கள்

Page 1
  

Page 2

. த. நூ. ப. வி. க. வெளியீடு, 2.
G சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுரும் சுந்தரமூர்த்தி நாயனுரும் அருளிச்செய்த
திருக்கேதீச்சரத்திருப்பதிகங்கள்
தருமபுர ஆதீனத் தமிழ்ப் புலவரும் சைவசித்தாந்தச் செம்மலுமாகிய சைவத்திருவாளர் காஞ்சிபுரம் க. வச்சிரவேலுமுதலியார், B, A,I.T. எழுதிய உரையும் வண்ணை - நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முன்னுள் தலைமையாசிரியர் வித்துவானும், பண்டிதமணியுமாகிய ந. சுப்பையபிள்ளை எழுதிய உரைக்குறிப்பும் ,
பாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்
செட்டியார் மடம் வட்டுக்கோட்டை

Page 3
முதற் பதிப்பு: 1968 1100 படிகள்
பதிப்புரிமை. விலை சதம் : 60.
Published by
JAFFNA. CO-OPERATIVE TAMIL BOOKS PUBLICATION & SALES SOCIETY LTD. (Regd. No. J/1538 of 10-11-67)
CHETIAR MADAM awan WAIDDUKODDAI
அச்சுப்பதிவு: கூட்டுறவு அச்சகம்,
57, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

3சிவமயம்
திருச்சிற்றம்பலம்
பதிப்புரை
என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே- திருமந்திரம்.
ஈழத் திருநாட்டிலே தேவாரப்பாடல் பெற்ற சிவத் தலங்கள் இரண்டினுள் ஒன்ருகிய திருக்கேதீச்சரம் வடமா காணத்திலுள்ள மன்னர் மாவட்டத்தில் மாதோட்டத்தில் உள்ளது. இத்திருக்கேதீச்சரத்திற்குத் திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் பாடியருளிய திருப்பதிகமொன்றுஞ் சுந்தர மூர்த்திநாயனர் பாடியருளிய திருப்பதிகமொன்றும் இருக் கின்றன. இவற்றிற்குத் தருமை ஆதீனத் தமிழ்ப் புலவரும் சித்தாந்தக் கலைச்செல்வருமாகிய, காஞ்சிபுரம் சைவத்திரு வாளர் க. வச்சிரவேலுமுதலியார் ஆக்கிய உரையினையும், வண்ணுர்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமை ஆசிரியராயிருந்த வித்துவான், பண்டிதமணி திரு வாளர் ந. சுப்பையபிள்ளை எழுதியுதவிய உரைக்குறிப்புக் களையும் கொண்ட இந்நூலைத் தமிழ்மக்கள் முன்னிலையிற் சமர்ப்பிப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்ருேம்.
திரு. வச்சிரவேலுமுதலியார் சென்ற 1967 ஆம் ஆண்டு சூன்திங்கள் இரண்டாம் நாள் திருக்கேதீச்சரத்துக்கு வழிபாட்டுக்காகச் சென்ருர்கள். அங்கே அன்று மாலை குழு மியிருந்த அடியார்கள் முன்னிலையிலே, கோப்பாய் நாடாளு மன்ற உறுப்பினர் திரு. சி. கதிரவேலுப்பிள்ளையின் கேள்விக் கிணங்கி, ஓர் அரிய விரிவுரை நிகழ்த்தினர்கள். அவ்விரிவுரை

Page 4
யிலே திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகங்களிலே பொதிந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துக்களையும் பிற நயங் களையும் பலருமுவக்கும் வண்ணம் விளக்கினர்கள். தேவா ரங்களுக்கு அவர் கூறிய விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த அடியேன் அவற்றை உரை வடிவாக்கித் தரும்படி அப்போது வேண்டிக்கொண்டதற்கிணங்க, அவர்கள் அன்பு கூர்ந்து இப்போது எழுதியுதவினர்கள்.
திரு. வச்சிரவேலு முதலியார் எழுதிய உரையினைப் பார்வைசெய்த பெருமதிப்புக்குரிய இயற்றமிழாசிரியர், வித்துவான், பண்டிதமணி திரு. ந. சுப்பையபிள்ளை சில இன்றியமையாக் குறிப்புரைகளை அன்பு கூர்ந்து எழுதியுதவி ஞர்கள். அவை இவ்”வுடுக்குறியிட்டுக் காட்டப்பட்டன.
திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகங்களைப் படித்து உண்மைப் பொருளை யும் ஏனைய சிறப்புக்களையும் அறிந்து சுவைத்தும் படித்தும் பயன்பெற இவ்வுரைகள் துணைசெய்யு மென எண்ணுகின்ருேம்,
உரையினை எழுதியுதவிய திரு. வச்சிரவேலுமுதலி யார்க்கும் விளக்கக் குறிப்புக்களையும் இலக்கணக் குறிப்புக் களையும் எழுதியுதவிய திரு. ந. சுப்பையபிள்ளைக்கும் எமது நன்றியைச் செலுத்துகின்ருேம்
இந்நூல் எங்கள் இரண்டாவது வெளியீடெனினும், எங்கள் கழகம் கூட்டுறவுச் சங்கமாகப் பதிவு செய்யப்பட்ட பின்வரும் முதல்வெளியீடு ஆகும். எனவே, இச்சந்தர்ப்பத்தில் எங்கள் கழகத்தில் அதிக சிரத்தைகொண்டு அதனைக் கூட்டு றவுச் சட்டத்துக்கமையப் பதிவுசெய்யப் பலவழிகளிலும் உதவிய, கூட்டுறவுச் சங்கப் பரிசோதகர்கள், திரு. மா. தில்லைநாயகம், திரு. க. சரவணமுத்து ஆகியோர்க்கும், பதிவுசெய்துதவப் பெருந்தொண்டாற்றிய யாழ். மேற்குக் கூட்டுறவு அபிவிருத்தித் துணை ஆணையாளர், திரு. பூ. குமார சுவாமிக்கும் எங்கள் நன்றிக்கடப்பாட்டைக் கூறிக்கொள்ளு கின்ருேம்.

இந்நூல் அச்சாகுங்காற் பிழை திருத்தஞ்செய்த எங்கள் கழகச்செயலாளர் சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் திரு. இ. செல்லத்துரைக்கும், இதனை இங்ங்ணம் அச்சிற் பதிப்பித்துதவிய யாழ்ப்பாணக் கூட்டுறவு அச்சக அதிபர், எழுது வினைஞர், தொழிலாளர் ஆகிய அனைவர்க்கும் எங்கள் நன்றி உரியது.
அனைவருக்கும் கெளரியம்மை சமேதகேதீச்சரப்பெரு மானின் திருவருள் பெருகிப் பொலிவதாக,
எங்கள் முதல் வெளியீடாகிய சேக்கிழார் நாயனூர் புராணத்தை ஆதரித்த தமிழ்மக்கள் இதனையும் ஆதரிப்பார்
கள் என்று எண்ணுகின்ருேம், வணக்கம்.
சி. சிவகுருநாதன், செட்டியார்மடம், தலைவர், வட்டுக்கோட்டை. யாழ். கூட்டுறவுத் தமிழ்நூற்பதிப்பு
13- 368 விற்பனைக் கழகம் (வ-து)

Page 5
Gl சிவமயம் திருச்சிற்றம்பலம்
முன்னுரை
சிவனுேடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
என்பது திருமூலர் வாய்மொழி. அம்முழுமுதற் பரம் பொருள் தன் அருமையில் எளிய அழகினை உலகத்தார்க்கு வரலாற்று முழுவொளியில் விளக்கியருளிய புண்ணிய நாடு தெய்வத்தண்டமிழ் நாடேயாகும். அந்நாட்டு மக்கள், உலக வாழ்க்கையில் எழும் துன்ப அலைகளால் அலைக்கப் பட்டுப் பிறவிக் கடலில் ஆழாதபடி, முதல்வன் திருவடி யாகிய புணையைப் பற்றி நின்று, இம்மை மறுமைப்பயன்களை ஒருங்கே பெற்றுய்தற்பொருட்டு அம்முதல்வனுற் கொடுக் கப்பட்ட திருவருட்கொடையே தேவாரத்திருப்பதிகங்க ளாகும். அவை ‘கண்ட பெரு மந்திரம்" எனப்படும் பெருமையினை உடையவை. இத்தகைய திருப்பதிகம் பெற்ற அருணிலைத் தானங்கள் ஈழநாட்டில் உள்ளவை திருக் கேதீச்சரம், திருக்கோணமலை என்னும்இரண்டும் ஆம்.
இவற்றுள்ளே திருக்கேதீச்சரஞ் சென்று தொழும் பேறு அடியேனுக்குச் சென்ற வைகாசித் திங்களில், திருவருள் வயத்தால் யாழ்ப்பாணத்துக் கல்வி நிலையங்களிற் பணி யாற்றும் சைவ ஆசிரியர்களுடைய அன்பின் வலியாற் கிட்டியது. அப்பொழுது அத்தலத்திற்குரிய திருப்பதிகங்க ளைப் படித்து அவற்றின் அரும்பொருளைச் சிந்திக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. அங்கு உடனிருந்த உழுவல் அன்பர் திரு. சி. சிவகுருநாதன் அவர்கள் அத்திருப்பதிகங்களுக்கு அடியேனுடைய உரை இருத்தல் வேண்டும் என்று உளம் பற்றினர்கள். அவர்தம் இறவாத இன்ப அன்பின் விளைவே இவ்வுரையின் வெளியீடு. இச்சிவபத்தி அவர்க்கு முன்னைத்

தவத்தாலும், “வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பு" என ஆத்திரையன் பேராசிரியன் பகர்ந்த தவஞ்செய்த நற்சார்பாலும் வந்தது. இவர்களையும் இவர்தம் சுற்றத்தின ரையும் இறைவன் திருவருள் காத்தருளும் என்பது உறுதி.
இலங்கையினின்றும் காஞ்சிபுரம்போந்தபின் அத்திருப் பதிகங்களுக்குச் சுருங்கிய உரை ஒன்றனைச் சில பாடல்களுக் குப் பதவுரையாகவும், ஏனையவற்றுக்குப் பொழிப்புரையாக வும், எழுதி முடித்து அனுப்பினேன். அதனை, இருமொழிப் பயிற்சியும், வரன்முறையாற் பெற்ற பழுத்த புலமையும், நிரம்பிய ஆராய்ச்சியும் உடையராய் விளங்கும் தோலா நாவின் மேலோராகிய, வித்துவான் உயர்திரு ந. சுப்பைய பிள்ளையவர்கள் மீளநோக்கிச் சிற்சில திருத்தங்களைச் செய் தும், அங்ங்னம் நோக்கும்போது தம் உணர்விற் கிளர்ந்து எழுந்த சிறந்த உரைக்குறிப்புக்களைக் கொடுத்தும் உபகரித் துள்ளார்கள்.
மேலும், எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரி யர் உயர் திரு. மு. கந்தையா, B, A, அவர்கள் இன்றியமை யாத வரலாறுகளை எழுதியுதவியுள்ளார்கள்.
இங்ங்ணம் திருப்பதிக உரையை அலங்கரித்தருளிய இவ் விரு பெருஞ்சான்ருேர்க்கும் எனது அன்பு கலந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இவ்வுரையைக்கொண்டு திருப்பதிகங்களின் பயன் உணர்ந்து பாராயணஞ்செய்யும் அன்பர்கள் பின்வரும் உண்மைகளைக் கருத்திற் கொள்ளுதல் நன்று:-
1. ஆங்காங்குள்ள மக்கள் அவ்வத்திருப்பதிகங்களை அன் றன்று காலையும் மாலையும் ஒதி முதல்வனை வழிபடவேண்டும் என்பது திருப்பதிகங்களை அருளிச்செய்த அருளாசிரியர்களு டைய திருவுள்ளக்கிடை.
2. திருப்பதிகங்கள் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழியாகிய மந்திரங்களாம்.

Page 6
3. பாடல்களிற் குறிக்கப்படும் முதல்வன் திருவுருவ மும் செயல்களும் உயிர்களுக்குப் போகம், மோட்சம், வினை நீக்கம் என்னும் பயன்களை அவ்வப்போதே விளைக்கும் ஆற்ற லுடையவை.
4. சிவபிரானுக்குக் கூறப்படும் திருவுருவம் கருதுவார் கருத்தோடு ஒன்றி எழுந்து அவரை அநித்தப் பொருளினின் றும் நித்தப்பொருளுக்கும், இருளினின்றும் ஒளிக்கும், அழிநிலையினின்றும் சாவா மூவாப் பெருநிலைக்கும் அழைத் துச் செல்லும் அருளுருவம். அதுவே நமக்கு நம்முன்னேர் தேடிவைத்த அருநிதி.
* யாதே ருத்ர சிவாத நூர் அகோரா (அ) பாபகாசிநீ
தயா நஷ்த நுவர சந்தமயா கிரிசந்த அபிசாஹசீ ஹி யாதே ருத்ர சிவாத நூ சிவா விச்வாஹ பேஷ ஜி
சிவா ருத்ரஸ்ய பேஷ ஜீ தயா நோம்ருட ஜீவசே".
(இன்னல் களைந்து ஆளும் இறைவ, கயிலையிலிருந்து இன்பந்தருவோய்! உனது மங்கலமும் அமைதியுமுடைய பரமுத்தியை விளக்கும் எவ்வுருவம் உண்டோ உயர் நலம் அளிக்கும் அவ்வுருவாய் எங்களுக்கு மெய்யுணர்வை அருளுக!
இடர்களைந்தருளும் முதல்வ, என்றும் பிறவிப்பிணிக்கு மருந்தாக உள்ள, உன்னேடு உடனுகி இன்புறுத்தும் மருந் தாகிய எந்த உனது திருவருள் உருவம் உண்டோ அவ்வுரு வாய் எங்களை வாழ்வாங்கு வாழ அருள் புரிக.)
காஞ்சிபுரம், இங்ங்னம் 14 - 0-1967 க, வச்சிரவேலுமுதலியார்

Gl சிவமயம்
திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிச் செய்த
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்
(உரையுடன்)
திருஞானசம்பந்தர் திரு இராமேச்சரம் பணிந்து பாடி, அவ்வூரிலே நின்றசீர்நெடுமாறர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்னும் அன்பர்களோடு எழுந்தருளி யிருந்த காலத்தில், ஈழநாட்டில் உள்ள திருக்கோணமலை, திருக்கேதீச்சரம் என்னும் சிவத்தலங்களை நினைந்து பணிந்து திருப்பதிகம் பாடி ஏத்தியருளினர். பின்வருவது அங்ங்னம் அவர் *திருக்கேதீச்சரத் தண்ணல் செய்ய பாதம்-உன்னி மிகப்பணிந்து ஏத்தி அருளியது.
இரண்டாந் திருமுறை 107 ஆம் திருப்பதிகம் பண்-நட்டராகம் இராகம்: பந்துவராளி. திருச்சிற்றம்பலம் விருது குன்றமா மேருவில் நாணர வாஅன லெரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே. (1) (இதன் பொருள்): விருது குன்ற-(திரிபுரத்து அசுரர்க (ளுடைய) வெற்றி கெடும்படி, மாமேருவில் அரவு நாண் ஆ(க)அனல் எரி அம்பா(க) பொருது மூவெயில் செற்றவன்பெரிய மேருமலையை வில்லாகவும், ஆதிசேடனை நாணுக வும், சுடும் நெருப்பை அம்பின் முனையாகவும் கொண்டு போர் செய்து (பறந்து திரிய வல்ல) முப்புரங்களையும் நீருகும்படி அழித்தருளிய சிவபெருமான்; பற்றி நின்று

Page 7
2
உறைபதி-இடமாகக் கொண்டு என்றும் உறைகின்ற தல மும்; எந்நாளும் கருதுகின்ற ஊர் கணைகடல் கடிகமழ் பொமில் ணி மாதோட்டம்-(போகம் வேண்டுவோர்
ஆ நாடோறும் நினைக்கின்ற ஊருமாகிய ஒலிக்கும் கடல் சூழ்ந்த நறுமணம் பொருந்திய சோலைகள் அழகைச் செய் கின்ற மாதோட்டத்தில் உள்ள கருத நின்ற கேதீச்சரம்(வீடுபேற்றை விரும்புவோர்) எண்ணும்படி நிலைத்துள்ள திருக்கேதீச்சரத்தை; கைதொழ கடுவினை அடையாவேகைகூப்பித் தொழுதால் (அங்ங்னம் தொழுவாரை) அடை தற்குரிய கொடிய வினைகள் காரியப்பட்டு வருத்த மாட்டா என்பது நிச்சயம் என்றவாறு,
"ஆகையால், யாம் கைகூப்பித் தொழுவோமாக’ என் பது இசையெச்சத்தால் வருவித்துரைக்க நின்றது. குறிப்பு: இறைவன் உறையும் பதியும் மக்கள் எந்நாளும் கருதுகின்ற ஊரும் ஆகிய மாதோட்டம் என்க. மாதோட்டம் என்பது ஊரின் பெயர்; சோலைகளின் மிகுதி பற்றி வந்த பெயர் எனல் பொருத்தம், மகாதுவட்டாபுரம் என்பதன் திரிபு எனப் புராணம் கூறும். கேதீச்சரம்-திருக்கோயிலின் பெயர், கேது வழிபட்டு மக்களுக்கு மெய்யுணர்வும் வீடுபேறும் செய்விக்கும் கோள் நிலைமை பெற்றமையால் வந்த பெயர். திரிபுரங்களை நீறுபட்டழியச் செய்த முதல் வனிடம் ஆதலின் அதனே வழி படுவோர்க்குப் பகையாக உள்ள வினை நீறுபடுதல் நிச்சயம் என்பது கருத்து, முப்புரம் எரித்த வரலாற்ருல், "சிவபிரான் ஒருவனே முழு முதல்வன்; ஏனைய கடவுளர் அவனல் செலுத் தப்படும் கருவிகளே என்பதும், சிவவழிபாடு உள்ளவர் என்றுங் காக்கப்பெறுவர் என்பதும் பிறவும் ஆகிய சமய உண்மைகள் உணரத் தக்கவை.
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈடமாவது இருங்கடற் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் கேடிலாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினை தானே. (2)
(இ-ள்): பாடுதலோடு வீணையை இசைப்பவரும், பற்பல வரலாற்றை உடையவரும், தரும தேவதையாகிய விடை

3
யைச் செலுத்துபவரும், பிறரால் செய்தற்கரிய பஞ்சகிருத் திய நடனத்தை ஆன்மாக்களின் ஈடேற்றத்தைக் குறித்துச் செய்பவரும், தம் திருவருளின் துணையைத் தொடக்கத்திற் கருதாத தேவர்கள் பின்னர் உணர்ந்து வணங்கி வேண்டிக் கொள்ள அதற்கு இரங்கி ஆலகாலம் என்னும் நஞ்சை உட்கொண்டு கழுத்தில் நிறுத்தினமையால் அந்நஞ்சின் நிற மாகிய கருமையைப் புலப்படுத்தாநிற்கும் கழுத்தை உடை யவரும் ஆகிய சிவபிரானுக்கு எந்நாளும் உறையுமிடமா யுள்ளது, பெரிய கடலின் கரையில் அமைந்துள்ள அழகு விளங்கும் மாதோட்ட நகராகும்; அந்நகரத்தில் உள்ள அழிவில்லாத திருக்கேதீச்சரத்தைத் தொழா நின்று எழுந் தால், துன்பங்களைத் தரும் வினை தானே கெடும். எ-று.
குறிப்பு: எருது உகைத்து எனப்பிரிக்க. உகைத்தல். செலுத்துதல், அஃதாவது, ஊர்தியாகக் கொண்டும் கொடியாக உயர்த்தி யும் நடத்துதல். ஈடம்-இடம் என்பதன் நீட்டல் விகாரம்.
உயிர்கள் போகமும் வீடும் வினை நீக்கமும் பெற்று உய்தற் பொருட்டு இறைவன் முறையே போக வடிவு, யோக வடிவு, வீர வடிவு என்னுந் திருக்கோலங்களைக் கொண்டு நிகழ்த்திய செயல்களை வேதமும் புராணமும் பலவாகக் கூறுதலின், பல பல சரிதையர் என்ருர், ஈண்டுத் திருநடனம் என்றது தூல, சூக்கும, அதிகுக்கும ஐந்தொழில்களையும் பர நடனத்தையும் குறித்தலின், அதனைச் செய்தல் சிவபிரானுக்கன்றி ஏனை உயிர் களுக்குக் கூடாமையின் அருநட்டம் என்ருர், திருநீலகண்டம் உயிர்கள் செய்யும் வினையால் விளையும் தீமையை நீக்கித் தன்னை நினைத்தலால் வரும் பரபோக விளைவைத் தருவது. * எழின்' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ‘எழ’ எனத் திரிந்தது: ""ஊனுண்ண, அண்ணுத்தல் செய்யா தளறு’ என்ற திருக்குறளிற்போல. துயிலப்புகும்போது திருக்கேதீச்சரம் தொழுது துயின்று, பின் உணர்வு தெளிந்து எழும்போது தொழாநின்று எழுக என்பார் "தொழுதெழ’ என்றருளிச் செய்தார்.
சிவபெருமான் நஞ்சுண்ட நிகழ்ச்சி விவரத்தினைக் கந்த புராணம் - ததிசியுத்தரப்படலம் 334 - 359 செய்யுட்களிற் பார்க்க.

Page 8
பெண்ணுெர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ணம் ஆதரித் தாடுவர் பாடுவர்
அகந்தொறும் இடும்பிச்சைக்(கு) உண்ணல் ஆவதோர் இச்சையின் உழல்பவர்
உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடையவர்க்
கருவினை அடையாவே. . (3)
(இ-ள்): தமது திருமேனியில் ஒரு பாகத்தைத் திருவரு ளாகிய பெண் உருவாகக் காட்டி நிற்பவரும், பிறைமதி தவழும் சடை முடியினரும், தமது வீரத்தைச் சொல்லும் கழலும் சிலம்பும் ஒலிக்கும்படி திருநீற்றையும் அன்பர்கள் சாத்தும் பொற்சுண்ணத்தையும் விரும்பிப் பூசிக்கொண்டு திருக்கூத்து ஆடுவோரும், கீதங்களைப் பாடுவோரும், தாருகாவனத்துப் பெண்டிர் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்ணுதற்கு விருப்பம் உடையவர்போல அவர்தம் வீடு தோறும் சென்றவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி யுள்ள, உயர்ந்த மரங்களையுடைய மாதோட்டத்தின்கண் ணதாகிய திருக்கேதீச்சரத்தை அடைக்கலமாகப் புகுந்து வழிபடுவோரைக் காணுதற்கு அரியனவாய் வந்து விளையும் இரு வினைகளும் வந்து பொருந்தமாட்டா; அன்னுேர் வினையின் நீங்கி வீடுபேறடைவர். எ-று.
குறிப்பு: உரையில் உள்ள இறுதி வாக்கியம் குறிப்பெச்சத்தால் வருவித் துரைக்க நின்றது. கழல்-வீரத்தையும் கொடைபினையும் புலப் படுத்தும் கால் அணி. சிலம்பு-ஒரு நெறிய மனமுடைய யோகியர்க்கு முதல்வன் திருவடியைக் காட்டும் ஒலி தோன் றுதற்குக் காரணமாகிய விந்து. சுண்ணம்-திருநீற்றையும் பொற்கண்ணத்தையும் இரட்டுற மொழிதலாற் குறிக்கும். உயர் தரு: வினைத்தொகை, தரு-மரம்; உயர்தரு-உயரும் எனினும் பொருந்தும். ஆதரித்து-விரும்பி, அஃது உபசார வழக்குப்பற்றிப் பூசுதல் மேல் நின்றது. ஆடுவர் - நட னஞ் செய்வார். இனி "சுண்ணம் ஆதரித்து ஆடுவர்-சுண்

5
ணத்தை விரும்பிப் பூசுவர்" என உரைப்பினும் பொருந்தும். அண்ணல்-தலைவன், இங்குச் சிவபிரான், அண்ணல் நண்ணு கேதீச்சரம், மாதோட்டத்துக் கேதீச்சரம் எனக் கூட்டுக.
சிவபிரான் பிறையை அணிந்த வரலாற்றினைக் கந்தபுரா ணம்- சந்திர சாபப் படலத்துக் காண்க.
பொடிகொள் மேனியர் புலியதள் அரையினர்
விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்(து) அடிகள் ஆதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினை போமே. (4)
(இ-ள்): திருநீற்றைக் கொண்டு விளங்கும் திருமேனியை யுடையவரும், புலித்தோலை உடுத்த அரையினரும், ஒன்று மூன்ருய்க் கிளைத்துள்ள, கூரிய முத்தலை வேலைக் கையிற் கொண்டவரும், பூணுரல் அணிந்தவரும் ஆகிய முதலாசிரி யர் விரும்பி எழுந்தருளியுள்ள, அலைகள் கீழ் மேலாகப் புரளும் கடலின் கரையில் உள்ள மாதோட்டத்தின் கண்ண த கிய திருக்கேதீச்சரத்தை அன்பு கொண்ட நெஞ்சுடன் தலையால் வணங்கி அம்முதல்வனது அருள்வழி நிற்க வல் லார் மேல் கூடித் தாக்கவரும் வினைகள் தம்வலி கெட்டு அழியும் எ~று.
குறிப்பு: விரிதரு மூவிலை எனக் கூட்டுக. திரோதான சக்தி ஒன்றே சனனி. உரோதயித்திரி, ஆரிணி என மூன்ருக விரிந்து முறையே அயன், மால். உருத்திரன் என்னும் மூவரிடத்துத் தங்கிப் படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கின்றது என்பதன் அடையாள்மே மூவிலைச்சூலம்: "மூன்று மூர்த்தி யுள் நின்றியலுந் தொழில்-மூன்றும் ஆயின மூவிலைச் சூலத் கன்' என்பது அப்பர் அருள்வாக்கு. "மூவிலை ஒரு தாட் குலம் ஏந்து தல்-மூவரும் யான் என மொழிந்த வாறே"

Page 9
என்னும் பட்டினத்துப்பிள்ளை யார் திருவாக்கும் சிந்தித்தற்கு உரியது.
முடிகள் சாய்த்தல்-யான் எனது என்னும் செருக்கற முதல் வனே டு ஒற்றுமைப்பட்டு நிற்றலையும், அடிபேணல்-அங்ங்ணம் நின்று அவன் அருளால் அன்றி ஒன்றையும் அறிந்தியற்றிடா மையினையும் குறித்து நின்றன. இங்ங்னம் "சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுவார்க்குச் சார்தரு நோய் சார் தரா' எனத் திருவள்ளுவரும், "மலமாயை தன்னெடு வல்வினை இன்றே" என மெய்கண்டமுதல்வரும் அருளிச் செய்தமை ஒப்பு நோக்குதற்கு உரியது.
புலித்தோல் உடுத்த விவரத்தைக் கந்தபுராணம்-ததீசி யுத்தரப்படலம் 100-101 ஆம் செய்யுட்களிற் காண்க.
நல்லர் ஆற்றவும் ஞான நன் குடையர்தம்
மடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசை வான் பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்(து) எல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி அல்ல லாசறுத் தரனடி யிணைதொழும்
அன்பராம் அடியாரே. (5)
(இ-ள்): மலிகடல் மாதோட்டத்து-முத்து முதலிய வளங்கள் மிகுந்த கடற்கரையின் கண்ணதாகிய மாதோட் டம் என்னும் ஊரில் உள்ள, எல்லை இல் புகழ் எந்தை கேதீச் சரம்-முடிவில்லாத புகழையுடைய எமக்குத் தந்தையாகிய சிவபெருமான் விளங்கி நிற்கும் திருக்கேதீச்சரத்தை, இராப் பகல் நினைந்து ஏத்தி அல்லல் ஆசு அறுத்து-இரவும் பக லும் சிந்தித்துத் துதித்தலால் துன்பத்திற்குக் காரணமா கிய மலமாயை கன்மங்களை முற்றிலும் கழுவி, அரன் அடி இணை தொழும் அன்பராம் அடியார்-சிவபிரானது ஞான சத்தி கிரியாசத்திகளாகிய இரண்டு திருவடிகளைத் தம் முடைய ஞானக் கிரியாசத்திகளுக்கு வியாபகமாகக்

7
கொண்டு தாடலைபோல் அடங்கி நின்று மெய்யன்பால் இன்புறு நிலையைப்பெற்றுள்ள அடியார்கள், ஆற்றவும் நல்லர்-உலகிற்கு உறுதியைக் கூறுதலில் மிகவும் நல்லர், ஞானம் நன்கு உடையர்-குற்றமற்ற மெய்யுணர்வினை உடையர், தம் அடைந்தவர்க்கு அருள் ஈய வல்லர்தம்மைப் புகலாக அடைந்த பக்குவர்க்கு முதல்வன் திரு வருளை விளங்கச் செய்ய வல்லர், பார்(மிசை) வான்மிசை பிறப்பு இறப்பிலர்- நிலவுலகத்திலும் விண்ணுலகத்திலும் பிறந்து இறப்பார் அல்லர் எ~று. குறிப்பு: இப்பாட்டுச் சிவஞானிகளது தன்மையினையும் அவர் பிறப் பறுத்து வீடு பேறெப்து மாற்றையும் கூறிற்று. மேலைப்பாட்டு சிவஞானபோதத்தின் பத்தாஞ் சூத்திரப்பொருளையும், இஃது அதன் பதினென்று பன்னிரண்டாஞ் சூத்திரப்பொருளையும் கருக்கொண்டு நிற்குந்தன்மை உணர்ந்து ஏத்துதற்கு உரியது. அன்பராம் அடியார் என்னும் தொடரில் அன்பு என்றது அயரா அன்பையும் அதன் விளைவாகிய பேரின்பத்தையும் குறித்து நின்றது. பேழை வார்சடைப் பெருந்திரு மகடனைப்
பொருந்தவைத் தொருபாகம் மாழை யங்கயற் கண்ணிபால் அருளிய
பொருளினர் குடிவாழ்க்கை வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக் * கேழல் வெண் மருப் பணிந்த நீண் மார்பர்ே
தீச்சரம் பிரியாரே. (6)
(இ-ள்): பெருந்திருமகள்தனை-பெரிய திருவை உல கிற்குப் பயக்கும் மகளாகிய கங்கையை, வார்சடைபேழை பொருந்த வைத்து-தமது நீண்ட சடையாகிய பெட்டியுள் அ1 ங்கி நிற்கும்படி வைத்து, ஒரு பாகம் மாழை அம் கயல் கண்ணிபால் அருளிய பொருளினர்-தமது இடப்பாகத்தைக் கயல்மீன் போன்ற மிகுந்த அழகுள்ள கண்ணையுடைய உமை யம்மைக்குக் கொடுத்தருளிய பொருண்மையினை உடைய

Page 10
8
வரும், கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர்-திரு மாலின் பிறப்பாகிய பன்றியின் வெண்மையாகிய எயிற்றை அணியாகக் கொண்ட அகன்ற மார்பினை உடையவரும் ஆகிய சிவபிரானர், (கடலிடத்தார் கண்டு பூசித்து விரும்பிய பேறுபெறுதற்குத் திருவுளங்கொண்டு); மந்திகள் களிப்புற மருவிய வாழை அம்பொழில் மாதோட்டக் கேதீச்சரம்குரங்குகள் மகிழ்ச்சியோடு வாழும் அழகிய வாழைகளை யுடைய சோலைகள் நிறைந்த மாதோட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரத்தை, குடி வாழ்க்கை பிரியார்-தேவி குமாரர்கள் அடியார்களுடன் தாம் வாழுமிடமாகக் கொண்டு என்றும் பிரியாது தங்குவர் எறு.
குறிப்பு: *பின் வரும் 7-ஆம் பாடலில் உள்ள “கடலிடங் கைதொழ’’ என்ற தொடர் சிங்க நோக்காக நின்று முற்பாடலிலும் பிற் பாடலிலும் இயைந்து பொருள் தரும் பான்மையால், வட கயிலையிலுள்ள சிவபிரான் மானுடர் அங்குச் சென்று பூசித்து வழிபட்டு விரும்பிய பேறு பெறுதற்கு இயலாமை கருதி, அம் மானுடர்க்கு எளி வந்து அருளும் பொருட்டாக வடகயிலையிற் போலவே திருக்கேதீச்சரத்திலும் குடிவாழ்க்கை மன்னி என் றும் பிரியாது உறைவாராயினர்’ எனக் குடி வாழ்க்கை பிரி யாமை"க்கு ஏதுவை விளக்கி நின்றது; அதனல், "கடலிடங் கைதொழ’ என்ற அத்தொடர் ஈண்டும் அவாய் நிலை யால் வருவித்து உரைக்கப்பட்டது. அவாய் நிலையாற் சொல் வருவித்து முடித்தலை வடநூலார் "அத்தியாகாரம்' என்பர். கங்கையைச் செருக்கடக்குதலும் உமையம்மையை உடன் இருத்தி உலகிற்கு அறக்கருணை வழங்குதலும் கருதினர் ஆத லின், ‘‘வைத்து, அருளிய பொருளினர்' என்ருர், இறைவன் செயல்கள் எல்லாம் பயன் குறித்தவை என்பது கருத்து, இறைவனது பெருவடிவில் (விசுவரூபத்தில்) ஆகாயமே முடி யும், அங்குள்ள செவ்வொளியே சடையும், நீராவியே கங்கை யும் ஆம் எனக் கொள்க. அந்நீராவியே மழையாகவும் ஆருக வும் வந்து வளந் தருதலின் "பெருந்திருமகள்’’ என்ருர் .
இனி, “அருளிய பொருளினர் குடிவாழ்க்கை கேதீச்சரம்: நீள்மார்பராகிய அவர் அதனைப்பிரியார்’ என இரு தொடராக
வைத்து முடித்தலும் பொருந்தும். மாழை-அழகு.
கேழல் வெண் மருப்பணிந்த வரலாற்றைக் கந்தபுராணம்த தீசியுத்தரப்படலம் 16-21 ஆம் செய்யுட்களிலும், கங்கை யைச் சடையில் வைத்த விவரத்தை 363-377 ஆம் செய்யுட் களிலும் உமாதேவியை இடப்பாகம் வைத்த வரலாற்றைத் த தீசியுத்தரப்படலம் 378-388 ஆம் செய்யுட்களிலும் காண்க,

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை கண்ட நாதனுர் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழின் மஞ்ஞை
நடமிடு மாதோட்டம் தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே
தீச்சர மதுதானே. (7)
(இ-ள்): தேனீக்கள் பண்களை எழுப்பும் சிறந்த மலர்ச் சோலைகளில் மயில்கள் நடம் ஆடுகின்ற மாதோட்டத்தில் உள்ளதாகிய, திருத்தொண்டர்கள் நாள்தோறும் (இறை வரது) திருப்புகழைப் பாட (அதற்கு அவர் உவந்து) அருள் செய்யுந் தலமாகிய திருக்கேதீச்சரமானது மிகப் பழைய காலத்தில் சநகாதி நான்கு முனிவர்களுக்கு அறமுதற் பொருள்களை முதற்கண் உணர்த்தியருளி, அதனுல் பல பிரிவு களையுடைய நிலவுலகத்தில் மக்கள் அவ்வுறுதிப் பொருள் க%ளக் குறிக்கொண்டு வாழ்தலை மேற்கொண்டு ஒழுகச்செய்த தலைவராகிய சிவபிரான் கடலாற் சூழப்பெற்ற உலகத்தார் கைகூப்பித் தொழும்பொருட்டு விரும்பி (எப்பொழுதும் விசேட சாந்நித்தியமாகி) உறைகின்ற திருக்கோயில் ஆகும் 6T-goi.
குறிப்பு: *சிவபிரான், தம்மைக் கடலிடங் கைதொழுது உய்யும் பொருட்டு மற்றும் பல தலங்களின் ஆலயங்களிலும் காதலித்து உறைவாராயினும், வடகைலையிற் போலவே 'தென்பாலுல கிற்கு அருளும் பொருட்டுத் தமது சகல பரிவாரங்களோடும் எப்பொழுதும் விசேடசாந்நித்திய முடையராய் உறையுமிடம் இத்திருக்கேதீச்சர மே" என்னுங் கருத்தினை உள்ளடக்கி நின்றது இச்செய்யுள் என்க. இக்கருத்து, மேலைச்செய்யுளிலே "கேதீச் சரம் குடி வாழ்க்கை பிரியார்' என்று கூறி, அதனைச் சார வைத்து இங்ங்னங் கூறிய வகையாற் பெறப்பட்டது. அதனுல், 'குடி வாழ்க்கை பிரியார்" என்னுந் தொடர் அவாய்நிலையால் Nண் டும் வருவித்து, "எப்பொழுதும் விசேட சாந்நித்தியராகி

Page 11
10
என்று உரைக்கப்பட்டது. "மாதோட்டம்' என்னும் பதf "மாதோட்ட நகரிலுள்ளது" என்னும் பொருளை இலக் கணையா லுணர்த்தி, "கேதீச்சரம்' என்பதற்கு அடையாய் நின்றது; 'கேதீச்சரம்” என்ற ஆலயத்தின் பெயர், இக்காலத்தில் அத னைத் தன்னகத்தே கொண்டுள்ள மாதோட்டப்பகுதிக்குப் பெயராகி வழங்குவதும் ஆகுபெயரெனப்படும் இவ்விலக்கண நெறி வழக்கின் பாற்பட்டதேயாகும்; அதுபோல என்றுணர்க கேதீச்சரம் அது-கேதீச்சரம் எனப்படும் அவ்வாலயம்; அவ் வாலயம் தமக்கு அண்மையில் இல்லாமற் கடலிடையிட்ட தூர தேயத்தேயிருத்தல்பற்றி, 'அது' என்னுந் தூரச் சுட்டுப் பெயராற் குறித்தார். தான், ஏ: அசை நிலைகள்,
*இனி இவ்வாறன்றி, "கோயில்’ என்பதனை எழுவாயாக வும், "மாதோட்டம்' என்பதனை அதற்குப் பயனிலையாகவும் முதல் வாக்கியமாக்கி, ‘அதுவே கேதீச்சரம்' என்பதனை இரண்டாம் வாக்கியமாக்கி, இரு வாக்கிய நிலைகொண்டு, "வட கைலையில் என்றும் பிரியாது விசேட சாந்நித்தியராய் உறையும் நாதனுர் கடலிடங் கைதொழுது உய்யும்பொருட்டுக் காதலித்து வடகைலையிற்போலவே என்றும் மன்னிக் குடி வாழ்க்கை பிரியாது உறைகோயில் மாதோட்டத்தில் உள்ளது; அந்தக் கோயிலே கேதீச்சரம்' என யாற்று நீர்ப் பொருள் கோளாக உரைப்பினுமாம். அதுவே-அத்தன்மையதே இப் பொருட்டு, 'அது' : குறிப்புவினையாலணையும் பெயர்; ஏ: தேற்றப்பொருட்டு.
*இச்செய்யுளிலும் மேலைச்செய்யுளிலும் முதலீரடிகளிலும் சிவபிரானுக்கு எடுத்தோதப்பட்ட அடைமொழிகள், ‘தேவர் களும் தெய்வத்தன்மை வாய்ந்த முனிவராதியரும் எந்தக் காலத்திலுஞ் சென்று தம்மைத் தஞ்சமென்றடைந்து வேண் டும்போதெல்லாம் விரும்பிய பேறுபெற்று உய்யும்படியாக வடகைலையிற் சதாகாலமும் சாந்நித்தியராய் உறையுந் தன்மை யராகிய சிவபிரான்" என்னுங் கருத்தினை உட்பொதிந்து ஒர்ந்துணர நின்றன; 'அவ்வடை மொழிகளாற் குறிக்கப் பட்ட வரலாறுகள், வடகைலையில் நிகழ்ந்த திருவருட் செயல் களாகிய நிகழ்ச்சியாய், இக்கருத்தினை ஒர்ந்துணரத்தக்க ஏதுவாகுஞ் சூசகமாய் நின்றன" என்க.

I
தென்னி லங்கையர் குலபதி மலை நலிந் தெடுத்தவன் முடிதிண்டோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள் செய்த
தலைவனுர் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்(து) உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே. (8) (இ-ள்): திருக்கைலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற தெற்கில் உள்ள இலங்கையில் வாழ்ந்தவர்க்கு அரசனுகிய இராவணனுடைய தலைகளையும் வலிய தோள் களையும் அவன்றன் செருக்கு அழியும்படி நெரித்து, பின் பிழையை உணர்ந்து பணிந்து இரந்து வேண்டிய அவனுக்கு நீண்ட ஆயுளும் வாளும் அருளிய முதல்வராகிய சிவபிரா ஞர், கடலின்கண் உள்ள அப்பொன்னும், ஒளியுள்ள முத் தும் மணியும் பொருந்திய மாதோட்டத்தில் உள்ள, அடி யவர்கள் தியானித்து அன்போடு தாழ்ந்து வணங்குதற்கு எதுவாகிய திருக்கேதீச்சரத்தில் என்றும் பிரியாது உள்ள பனர் எ-று. குறிப்பு: "கடல்வாய பொன்'- என்பது பாடமாயின் கடலின் கண் உள்ள பொன் என உரைக்க, ஒற்றுமிக்க பாடத்திற்குப் பண்டறி சுட் டைக் கொள்ளுதல் வேண்டும்.
பூவு ள எனுமப் பொருகடல் வண்ணனும்
புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் னடியிணை காண்கிலா
வித்தக மென் னுகும் மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித் கேவி தன்னுெடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தவெம் பெருமானே. (9)

Page 12
2
(இ-ள்): மாவும் கமுகும் வாழையும் நெருங்கியுள்ள மாதோட்டம் என்னும் நல்ல நகரில் கெளரியம்மையோடு திருத்தமாகிய திருக்கேதீச்சரத்தில் நிலையாக எழுந்தருளி யுள்ள பெருமானே! (நீ இங்ங்ணம் வெளிப்பட இருத்தலால்) மலரவனுகிய பிரமன் அன்னப்பட்சி வடிவு கொண்டு ஆகா யத்து எழுந்து பறந்து சென்று தேடியும், அலைகள் வீசும் கடல்போன்ற நீலவண்ணத்தணுகிய திருமால் பன்றி வடி வாகிப் பூமியைத் தோண்டிச் சென்று நாடியும் அவ்விரு வரும் முறையே உனது முடியினையும் இணையடிகளையும் காணமாட்டாதபடி கடந்து நின்ற உன் சாதுரியம் யாது ஆகும்? எ-று. குறிப்பு: திருமால் பிரமனுக்குக் காணப்படாத நீ தேவியோடு யாவருங் காணத் திருக்கேதீச்சரத்தில் பிரியாது எழுந்தருளுதல் உன் அருமைக்கு இழுக்கு அன்ருே என வினவுகிருர் . தேவர்க்கும் அரியன் ஆயினும் திருந்திய அன்பர்க்கு எளியன் என்பது கருத்து. ‘அருமையில் எளிய அழகே போற்றி' என்னுந் திருவாசகம் ஈண்டு ஒப்பிட்டு நோக்குதற்கு உரியது.
பூவுளான் எழுந்தோடியும், அப்பொரு கடல் வண்ணன் புவி இடந்தும் மேவி நாடிக் காண்பிலாமைக்குக் காரணமா கிய (உன்) வித்தகம் என் ஆகும்? என்க. முதலாமடி "எதிர் நிரல் நிறைப்பொருள்கோள்' வகையால் மொழிமாற்றிக் கூட்டிப்பொருள் கொள்ள நின்றது. வித்தகம்-சாதுரியம். சாமர்த்தியம். "நீ இங்கனம் வெளிப்பட இருத்தலால்’ என்பது ஆற்றலால் வருவித்துரைக்க நின்றது.
பிரம விட்டுணுக்கள் அடி முடி தேடிய விவரத்தைக் கந்த புராணம்-அடிமுடி தேடு படலத்திற் காண்க.
புத்த ராய்ச்சில புனை துகி லுடையவர்
புறனுரைச் சமணு தர் எத்த ராகிநின் றுண்பவர் இயம்பிய
ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்(து) அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே. (10)

I 3
(இ-ள்) (நல்லோர்களே,) புத்த சமயத்தவராய்ச் சில ஆய்வுரைகளைப் படைத்துக் கூறும் மஞ்சள் உடையை உடுப் பவரும், வேதாகமங்களை ஒப்பாத (அங்கீகரியாத) புறச் சமயம் பற்றி நின்று நம்மனேரை இகழ்ந்து கூறும் உரை களைக் கொண்ட சமண் சமயத்து மூடர்களாகிய, வஞ்சனை யுடையராய்த் தெருவில் நின்று உண்பவரும் ஆகிய இவர் கள் ஆரவாரமாகப் பேசும் அறிவின்மையைப் புலப்படுத் தும் பேச்சுக்களைப் பொருட்படுத்திக் கேளாதீர்கள். கயா சுரணுகிய மதமயக்கத்தையுடைய யானையைக் கலங்கும்படி கொன்று அதன் தோலை உரித்துத் தம் திருமேனிமேற் போர்த்துக்கொண்ட நம் தந்தையாகிய சிவபிரான் நீங்காது எழுந்தருளியுள்ள, மாதோட்டத்திலே பாலாவி தீர்த்தக் கரையில் பொருந்திய திருக்கேதீச்சரஞ் சென்று தொழு மின்கள் எ-று.
குறிப்பு: தொழுதால் இகபரத்துயர் நீங்கி இன்புறலாம்-என்னும் முடி
வுரையைக் குறிப்பெச்சத்தாற் கொள்க.
*இனி, பின் ஈரடிகளுக்கும் "மாதோட்டத்து அத்தர் + மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்; (அன்னர்) மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அ டைமின்' என இரண்டு வாக்கியமாகக்கொண்டு,
"மாதோட்ட நகரில் எழுந்தருளிய உலகுயிர்கட்கெல்லாம் பரமபிதாவாயுள்ள சிவபெருமானனவர், காசியிலிருந்த முனி வர் கூட்டத்தைக் கொல்லக் கருதிக் கயா சுரணுகிய மதமிக்க யானை செருக்குற்றுச் செல்லுதலும், அம்முனிவர்கள் அஞ்சி யோடிக் "காசி விசுவநாதா, அபயம்' என்று ஒலமிட்டு அங்கேயுள்ள தமது ஆலயத்துட் புகுந்து தம்மைச் சரண மடைந்தாராக, அப்பொழுதும் அவ்யானை அங்கும் விடாது தொடர்ந்து கொல்ல நெருங்கியமையால், சரணுகதர்களாகிய அம்முனிவர்களை அவ்வாபத்தினின்றும் நீக்கிக் காத்தற் பொருட்டாக, தாம் வெளிப்பட்டு அசுரனுகிய அவ்யானையைக் கொன்று அதன் தோலைத் தம் திருமேனியிற் போர்த்தருளிய பெருங்கருணையாளராவர்; அத்தகைய பெருமானது அநுக் கிரகத்தை இலகுவிற் பெறவேண்டின், அவர் மன்னிய கேதீச் சரத்தை அடைந்து அவரை அன்புடன் வழிபடுங்கள்; வழி

Page 13
14
பட்டால், அவர் தம் பெருங்கருணையால் உங்கள் பிறவித் துன்பங்களையெல்லாம் நீக்கி, இம்மை மறுமையின்பங்களையும், முத்தியின்பத்தையும் உங்களுக்குத் தந்து காத்தருளுவர்?"
என்று இங்ஙனம் பொருள் உரைப்பினும் அமையும். இதற்கு இடையிலே வருவிக்கப்பட்டவை இசையெச்சத்தாலும், இறு தியில் வருவிக்கப்பட்டதாய் அடைதலின் பயனைக் குறிப்பதா யுள்ள தொடர் குறிப்பெச்சத்தாலும் வருவித்துரைக்க எஞ்சி நின்றன
*மத்த-மதவெறி கொண்ட, போர்த்தவர்: தெரிநிலைவினை யாலணையும் பெயர்; இது "அத் தர்" என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய், அப்பெருமான் சர்வவல்லமையும் சரணடைந் தாரைக் காக்கும் பெருங்கருணையு மாகிய இயல்புகளையுடை யவர் என்பதைப் புலப்படுத்தி நின்றது. இவ்வாக்கியப் பொருளானது பின்வரும் வாக்கியப்பொருள்களை உறுதிப் படுத்தும் ஏதுப்பொருளாந் தன்மையைத் தன்னகத்தே பொதிந்திருத்தலும் ஒர்ந்துணரற்பாலது.
யானையுரி போர்த்த விவரத்தைக் கந்தபுராணம்-ததீசி யுத்தரப்படலம் 128-153 செய்யுட்களிற் காண்க.
மாடெ லாமண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்(து) ஆட லேறுடை யண்ணல்கே தீச்சரத்
தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே. (11)
(இ-ள்) அன்பர்களே! பக்கமெங்கும் கடலொலியானது மனமுரசின் ஒலிபோலப் பிற ஓசைகளை அடக்கி எழுகின்ற மாதோட்ட நகரில் உள்ள வெற்றியையுடைய விடையை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட முதல்வனகிய, திருக்கேதீச்சரத்தில் விளங்கி நிற்கும் முதலாசிரியனை, நில வுலகிற்கு அணியாகவுள்ள சீர்காழி நாட்டுள்ளார்க்குத் தலை

5
வனகிய ஞானசம்பந்தனனவன், புகழைச் சொல்லி ஏத்து தலால் உண்டாகிய பாமாலையாகிய இத்திருப்பதிகப் பாடல் களைப் பாடுங்கள். மேலான பதவியையும் முத்தியையும் பெறுதல் இம்மையிலும் கைகூடும் எ-று. குறிப்பு: கவர்தல்-உள்ளத்தைக் கவர்ந்து இன்புறுத்தலும் ஆம். சொல்
புகழ். நவின்று எழு-நவிலுதலினுல் எழுந்த;
*நவின்று என்னுஞ் செய்தென் வாய்பாட்டு வினையெச்சம் காரணப் பொருட்டு. நவிலுதல் - சொல்லித்துதித்தல். ஆடல் - வெற்றி, வீரம். 'சொல் நவின்று என்னும் இரண் டாம் வேற்றுமைத் தொகை ஒரு சொன்னீர்மையாய் நின்று "அடிகளை' என்பதற்கு முடிபாயிற்று; அடிகளது புகழை நவின்று என்பது கருத்து. பரகதி-மேலான பதவி (-மேலான நிலைமைதுன்ப நீக்கமும் இன்ப வாழ்வும் குறித்தது); முத்தி: இரட்டுற மொழிதல். பதிகத்தின் பயன் முதலிய கூறிய பாடல் இது.
திருச்சிற்றம்பலம். ー※ー
இப்பதிக வரலாற்றினைக் குறிக்கும் பெரியபுராணச் செய்யுள். திருச்சிற்றம்பலம்.
அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச் சென்னிமதி புனைமாட மாதோட்டத்திற்
றிருக்கேதீச் சத்தண்ணல் செய்ய பாதம் உன்னிமிகப் பணிந்திேத்தி'ய்ன்ப் ரோடும் ** * "est
உலவாத கிழிபெற்ருர் உவகை யுற்றர்.

Page 14
16
(இ-ள்); அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவிஅத்திருப்பதியில் விரும்பி இனிதாக அவ்விடத்து எழுந் தருளி ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழந்தன்னில் - கடல் புடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழநாட்டில்; மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண் மழ விடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடி-நிலைபெற்ற திருக்கோணமலையில் மகிழ்ந்து எழுந்து அருளியிருக்கும் சிவந்த கண்களையுடைய இளமை பொருந்திய இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெரு மானைத் துதித்து வணங்கிப் பதிகம் பாடி; சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்-சிகரத்தின்கண் சந்திரனைச் சூடிய மண்டபங்களையுடைய மாதோட்டம் என்னும் திருப் பதியில்; திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் உன்னி-திருக்கேதீச்சரம் என்னும் ஆலயத்தில் எழுந்தரு ளிய சிவபெருமானது சிவந்த திருவடிகளை மனதிற் சிந்தித்து; மிகப்பணிந்து ஏத்தி-மிகவும் வணங்கித் திருப்பதிகம் பாடி, அன்பரோடும் உலவாத கிழி பெற்றர் உவகையுற் முர்-திருவடியார் திருக்கூட்டத்தோடு உலவாக்கிழி பெற்ற ஆளுடைய பிள்ளையார் மகிழ் கூர்ந்து அருளினர் - எ-று.
-ஆறுமுகத்தம்பிரான் உரை, (திருஞா. பு. 890)
திருச்சிற்றம்பலம்.
一※一

ΘΩ -- சிவமயம் திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி நாயனர் அருளிச்செய்த
திருக்கேதீச்சரத் திருப்பதிகம் (உரையுடன்)
திருப்பதிக வரலாறு. சுந்தரமூர்த்தி நாயனுர் சேரமான் பெருமாள் நாயனருடன் திருவிராமேச்சரம் பணிந்து அவ்வூரில் தங்கியிருந்தபோது திருக்கேதீச்சரத்தினை அத்திக்கு நோக்கித் தொழுது நினைந்து துதித்துப் பாடியரு
ரியது இப்பதிகம்.
ஏழாந்திருமுறை 80 ஆம் திருப்பதிகம்.
பண்--நட்டபாடை இராகம்: நாட்டை திருச்சிற்றம்பலம். நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான் திருக் கேதீச்சரத் தானே. (இதன் பொருள்): உயர்ந்தோர் தம்முடைய உள்ளத்தே 1ண்பு நிறைந்து (மிகு பக்தி கொண்டு) அதனுல் அடையப் பறும் அறிவு உருவினனும், விடையை ஊர்பவனும், மத நீரால் நனைந்த தொங்குகின்ற வாயினையும் மதிமயக்கத் தினையும் உடைய செருக்குள்ள (கயாசுரனகிய) யானையி னது தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட உமை மனுள றும், திருமால் முதலிய இறந்தவர்களுடைய எலும்பை
wa

Page 15
I 8
அணிபவனும் ஆகிய சிவபெருமான் அன்பர்களாகிய அடிய வர்கள் தொழும் பாலாவி யாற்றங்கரைமேல் திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளியுள்ளான். (என்றவாறு )
குறிப்பு: நத்தார்படை என்னுந் தொடரை நத்து ஆர்பு அடை எனப் பிரிக்க. நத்து-அன்பு: எழுவாய் அவாய் நிலையான் வந்தது. "நத்து ஆர் படை' எனப் பிரித்து, ‘அன்பு பொருந்திய சேனை யையுடைய’ என்றுரைத்து, "நத்து ஆர்” என்ற அடையைப் பூதப்படைக்கு ஏற்றினும், 'சங்கு (கரத்தில்) பொருந்திய படைக்கலம்" எனப்பொருள் கொண்டு, முப்புரம் எரித்தபோது கொண்ட அம்பாகிய திருமாலுக்கு ஏற்றினும் பொருந்தும். பத்து-பற்று. 'நணைகவிழ் வாயையுடைய யானை, மத்தயான, மதயானை என அடைகள் தனித்தனி யியைந்து பொருள் பயக் கும். "ஏறிந் நனை", "மத்தம் மத" என்ற தொடர்களின் இடையேயுள்ள மெய்கள் விரித்தல் விகாரம்.
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறை கீளும் கடமார்களி யானையுரி யணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாவுறை கின்றன்றிருக் கேதீச்சரத் தானே. (2) (இ-ள்): சுடப்பட்ட நுண் பொடியாகிய திருநீற்றையும், களங்கமில்லாத பிறைத்துண்டையும், கிழிக்கப்பட்ட சீலைக் கச்சையும், மதம் நிறைந்த செருக்கினையுடைய யானையினது தோலையும் அணிந்த ஆலகால நஞ்சாகிய கறையைத் தோற்றுவிக்கும் கழுத்தையுடைய சிவபெருமான் பட மெடுத்த நாகம்போலும் இடையினையுடைய உமையம்மை யோடு பாலாவியாற்றின் கரைமேல் திருக்கேதீச்சரத்தானுய் நிலையாகத் தங்கியிருக்கின்றன் எ-று. குறிப்பு: வார்-நுட்பம்; ஏர்-உவம உருபு படம்-ஆகுபெயர்: உம்மை
யைப் பிறை, உரி என்பவற்றேடுங் கூட்டுக.
அங்கம்மொழி யன்னுரவ ரமரர்தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்த பிறைதடினன் பாலாவியின் கரைமேற் செங்கண்ணர வசைத் தான்றிருக் கேதீச்சரத் தானே. (3)

19
(இ-ள்): தக்கணுல் கலைகள் குறைந்தழியச் சாபமிட்டு மானபங்கஞ் செய்யப்பட்ட சந்திரன் தஞ்சமென்றடைந்து வணங்கி வேண்ட அவனது ஒரு கலையாயின பிறையைச் சூடினவனும் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டிக்கொண்டவனுமாகிய சிவபிரான் வேதத்தின் அங்கங் களை ஒதுகின்ற அந்தணர்களும் மற்றும் அவர் போன்ற இயல்புகளையுடையவர்களும் தேவர்களும் வணங்கித் துதிக் கும்படி மரக்கலம் நிறைந்த கடற்கரையிலுள்ள மாதோட் டம் என்னும் நல்ல நகரில், பாலாவியின் கரைமேல் திருக்கேதீச்சரத்தில் உளன். எ-று. குறிப்பு: இறைவன் தன்னையடைந்தாருடைய குறை குற்றங்களை நீக்கி அருளுதல் குறிக்கப்பட்டது. செய்த-செய்யப்பட்ட கருத்தா வருவிக்கப்பட்டது.
கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணுன் வரியசிறை வண்டியாழ்செயு மாதோட்டநன் னகருள் பரியதிரை யெறியாவரு பாலாவியின் கரைமேல் தெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே. (4)
(இ-ள்): கருநிறமுள்ள நஞ்சை அணிந்த கழுத்தினனும், இரு கண்களுக்கு மேலாக ஒரு கண்ணை நெற்றியிலே உடைய வனும், ஆராயப்படும் வேதங்களை அருளியவனும் ஆகிய சிவபிரான் இரேகைகளையுடைய சிறகுகள் கொண்ட வண்டு கள் யாழின் இசைபோன்ற இசையைச் செய்யும் மாதோட்ட நன்னகருள் பருத்த அலைகளை வீசிக்கொண்டுவரும் பாலா வியின் கரைமேல் திருக்கேதீச்சரத்தை இடமாகக் கொண்டு o_erröör 6T-g). குறிப்பு: நெற்றிக்கண் விரூபாக்கமாக லின், ஏனையவை நல்ல கண் எனப்
- G. அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி வங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே. (5)

Page 16
20
(இ-ள்): தன் அடியார் மேல் அவர்தம் உடம்பில் பொருந் தும் நோய்களை நீக்கியருளும் சிவபிரான் தன் இடப்பாகத் தில் உள்ள உமையம்மையுடன் மரக்கலங்கள் நிறைந்த கடற்கரையிலுள்ள மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரைமேல் தென்னஞ்சோலை சூழ்ந்துள்ள திருக்கேதீச் சரத்தை இடங்கொண்டுளன் எ-று.
குறிப்பு: அங்கம்-உடம்பு. அருளி:- வினைமுதற் பொருளை யுணர்த்திய
இகர வீற்று வினைப்பெயர்.
வெய்யவினை யாயவடி யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே. (6)
(இ-ள்): அடியார் மேல் வரும் கொடிய பிராரத்த வினையை உயிரைத்தாக்கி வருத்தாது உடல் ஊழாய்க் கழி யும்படி அருள்பவனும் சிவந்த சடைமுடியானுமாகிய சிவ பிரான் படத்தையுடைய நாகம்போலும் இடையினையுடைய உமையுடன் உலகில் உள்ளார் நினைந்து மகிழ்ச்சி நிறைகின்ற கடற்கரையில் உள்ள மாதோட்ட நன்னகரில், பாலாவியின் கரைமேல் உள்ள திருக்கேதீச்சரத்தை இடமாகக் கொண் டுளன் எ-று.
குறிப்பு: பை-படம், அஃது ஆகுபெயராய்ப் பாம்பை உணர்த்திற்று. அருளி:- வினைப்பெயர்; முற்செய்யுளிற்போலவே கொள்க: வருஞ் செய்யுளிலும் அதுவே.
ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடன் மாதோட்டநன் னகரில் பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே. (7) (இ-ள்): அடியார் மேல் உவ்விடத்து (நிலவுலகத்து) வந்து பொருந்துவனவாகிய துன்பங்களை நீக்கியருள்வோ

21
ணுகிய, பன்றியின் கொம்பை அணிந்த சிவபிரான் வெண்மை யான சங்குகள் பொருந்திய நீர் நிறைந்த கடற்கரையில் உள்ள மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரைமேல் தன் இனிமைத் தன்மையைப் பெறுதற்குப் பாலும் அவாவுவதற் கேதுவாகிய இனிய மொழியையுடைய உமையம்மையுடன் திருக்கேதீச்சரத்தை இடமாகக்கொண்டு வீற்றிருக்கின் Coast 6t-gy. குறிப்பு: ஊன்-உவ்விடம்; அத்து சாரியை. "ஊனம்’ குறைவு எனக் கொண்டு குறையறிவு பொருந்திய நிலைமையாகிய சகலநிலை யில் உறும் எனினும் பொருந்தும். வானத்துறு வால் + நத்து + உறு; வால்-வெள்ளிய, நத்து. சங்கு, "நந்து' என்பது "நத்து’ என வலித்தல் விகாரமாயிற்றுத் தொடை நோக்கி. பானத் துறு-(பால் + நத்துறு)-பால் அவாவுகின்ற, திருமாலின் பிறப் புக்களுள் ஒன்ருகிய வராகத்தின் செருக்கை அழித்துக் கைக் கொண்ட எயிற்றை அணிந்தான் என்பது வரலாறு.
அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழின் மாதோட்டநன் னகரிற் பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன் நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே. (8)
(இ~ள்) அட்டமூர்த்தம் எனப்படும் எண்வகை வடிவங் சுஃபி யுடையவனும் மேலோனும் நம்மை ஆள்வோனுமாகிய சிவபிரான் வண்டுகள் தேனையுண்டு ஒலிக்கும் பொழில் குழ்ந்த மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரைமேல் அரையில் பாம்பினை நாணுக அழகுறக் கட்டிக்கொண்டு, பட்டத்தை அணிந்த இரேகை பொருந்திய நெற்றியை யுடைய உமையம்மையுடன் திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளி யுளன். எ-று. குறிப்பு: "அட்டன் - அட்டமூர்த்தங்களையுடையவன்; அட்டம்-எட்டு: "அஷ்ட என்ற வடசொல்லின் திரிபு; இது தொகைக்குறிப்பு மொழியாக நின்று சிவபிரானுக்குச் சொல்லப்படும் எண் வகை வடிவங்களை யுணர்த்தியது; அவ்வடிவங்களாவன: நிலம், நீர், தீ, காற்று, வெளி என்னும் பஞ்ச பூதங்களும், சூரியனும், சந்

Page 17
22
திரனும், இயமாநனு மாம்; இயமாநன்-ஆன்மா திருக்கேதீச்
சரத்தான் குறிப்புவினைமுற்று.
அட்டன் சிட்டன் நமை ஆள்வான் ஆர்த்து நுதலாளொடு
திருக்கேதீச்சரத்தான் எனக் கூட்டுக.
மூவரென விருவரென முக்கண்ணுடை முர்த்தி மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்ட நன் னகரிற் பாவம் வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவனெனை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே. (9)
(இ-ள்); அயன் அரி அரன் என்னும் மூவர்க்குங் காரணரா யுள்ளவர் எனவும் சத்தி சிவம் என்னும் இரு வடிவு கொண்ட வர் எனவும் உலகினர் உணரும்படி நின்ற முக்கண்ணரும் நீலலோகிதமாகிய ஒளிவடிவினனும் (: தேவன்) என்னை யாள்வோனும் ஆகிய சிவபிரான், மாங்கனி தூங்கும் சோலை களையுடைய மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரை மேல் பாவத்தை நீக்கிக்கொள்ளும் உலகரும், இருவினைகளை யும் அறுக்கும் சத்திநிபாதரும் பயில்கின்ற திருக்கேதீச் சரத்து உளன் எ-று.
குறிப்பு: "மூவர்க்குங் காரணர் என்பதை "மூவர்' என்று காரணத்தைக் காரிய வாசகத்தாற் கூறியது உபசாரவழக்கு, "நின்ற" என் பது சொல்லெச்சத்தால் வருவித்துரைக்கப்பட்டது. "தேவன் எனையாள்வான்’ என்னும் எழுவாய்க் கூற்றுப்பதங்கள் "முக் கண்ணுடைய மூர்த்தி" என்பதன் பின்னர்க்கொண்டு கூட்டி யுரைக்க நின்றன. முக்கண் உடைமை மூவரென நின்றமை யினையும், நீலச்செம்மையொளியுடைமை (- நீலலோகிதன்) "இருவரென' நின்றமையினையும் குறிக்கும் என்பது "மூவரெனஇருவரென - முக்கண்ணுடை மூர்த்தி - தேவன்" என்ற தொட ரின் கருத்தாகும்.
இறைவனது வலக் கண்ணிலிருந்து அயனும், இடக் கண்ணி லிருந்து அரியும், நெற்றிக்கண்ணிலிருந்து உருத்திரனும் தோன்றியமையைப் புராணங் கூறும்; இறைவனது ஒளிவடிவு பெண்ணழகும் ஆணழகுங்கொண்ட கிருஷ்ணபிங்கள நிற முடைமையை (நீலலோகிதன்1 வேதம் கூறும்.

23
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ் செயுங் கேதீச்சரத் தான மறையார்புக மூரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.(10)
(இ-ள்): கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, உப்
பளங்கள் உள்ள மாதோட்டம் என்னும் பெயருள்ள நல்ல
நகரில்,
சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழின் இசை
போன்ற இசையைச் செய்யும் பொழில்களின் நடுவில் உள்ள திருக்கேதீச்சரத்திற் குடிகொண்டெழுந்தருளிய பரமனை மறைகளை ஒதும் புகழையுடைய ஆரூரணுகிய அடிமைத் தொண்டன் பாடிய திருவருள் குறைவின்றி மிகுவதற்குச் சாதனமாகிய தமிழ்ப்பாடல்கள் பத்தினையும் ஒருவர் பாடி வழிபட அவரைக் கொடியனவாகிய வினைகள் பொருந்தா தொழியும் (வருத்தாது கழியும்) எ-று.
குறிப்பு:
மறை ஆர் புகழ்-மறையை ஆர்த்தலால் வரும் புகழ்: ஆர்த் தல்-பண் பொருந்தப் பாடியருளுதல்; மறை-தமிழ் மறை: ‘நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க-அற்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென் ருர் தூமறை பாடும் வாயார்’ என்னும் திருத்தொண்டர் புரா ணம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது.
*இனி, "மறை ஆர் புகழ் . உரை செய்த குறையாத் தமிழ்' என்பதற்கு, "நால்வே தங்களிலே பொருந்தியுள்ள அப்பிரான் புகழை ஆரூரன் எடுத்து விரித்துப் பாடித் துதித்த தமிழ்ப்பாடல்கள் - வேதசாரமாகிய தமிழ்ப்பதிகம்)' என்று பொருள் கொள்ளினும் அமையும். *இச்செய்யுள், இத்திருப்பதிகத்தினைப் பக்தியுடன் நியமமாகப் பாராயணஞ்செய்வார்க்கு எய்தும் பயன் முதலாயினவற்றைக் குறிக்கும் பாயிரமாகிய திருக்கடைக்காப்புச் செய்யுளாம் என்க.
திருச்சிற்றம்பலம். 一※一

Page 18
24
இத்திருப்பதிக வரலாற்றினைக் குறிக்கும்
பெரியபுராணச் செய்யுள்.
திருச்சிற்றம்பலம்.
மன்னுமிரா மேச்சரத்து மாமணியை முன் வணங்கிப் பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றர் பாம்பணிந்த சென்னியர்மா தோட்டத்துத் திருக்கேதீச் சரஞ்சர்ந்த சொன்மலர்மா லைகள் சாத்தித் தூரத்தே தொழுதமர்ந்தார்.
(இ-ள்): இராமேச்சரத்து மன்னு மாணியை முன் வணங்கி-திரு இராமேச்சரத்தில் வீற்றிருக்கும் சிந்தாமணி போலும் பெருமானை எதிர் வணங்கி; பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பயில்கின்ருர்-கீர்த்தி பெற்ற தமிழ்ப் பாமாலை சாத்தி வசிப்பவராகிய அந்நாயனர் பாம்பணிந்த சென்னியர்-பாம்புகளை அணிந்த சடையையுடைய பரமர் உறையும்; மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்தமாதோட்ட நன்னகரிலுள்ள திருக்கேதீச்சரத்தைச் சுட்டிய சொன் மலர்மாலைகள் - சொற்களாகிய மலர்களால் தொடுத்த திருப்பதிகப்பாமாலையை தூரத்தே தொழுது சாத்தி அமர்ந்தார்-அங்கு இருந்தே வணங்கிச் சாத்தி யருளி அமர்ந்திருந்தார்-என்றவாறு.
குறிப்பு: பயில்கின்ருர் சார்ந்த மாலைகள் சாத்தி அமர்ந்தார் என
இயையும்.
-ஆறுமுகத்தம்பிரான் உரை. (சேரமான், பு. 109)
திருச்சிற்றம்பலம்.
திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகவுரை
முற்றிற்று.
A4 ←-==-ጿ(k፻ *^


Page 19
-اے-ایس-اسبت سست--------------------- ست==
SqSqSqqqSqSqqSSASSASSASSASSASSASqS
டே
எங்கள் அடுத்த
H
சேக்கிழார் பிள்?ளத்தமி
பண்டிதர் மு. சுந்தை செய்த விளக்கவுரை
2. பெரியபுராணம் என்னு
புராணம் - மறைத்தி சுவாமிக
சேக்கிழார் நாயனுர் புர
-மறைத்திரு ஆறுமுக
உரையுடன்
யாழ்ப்பாணக் கூட்டுறவி
விற்பனைக் கழகம்
Fu T LELL;

~
வெளியீடுகள் :
m
E.T. B. A. புடன்.
ம் திருத்தொண்டர் ரு ஆறுமுகத்தம்பிரான் ள் உரையுடன்,
IᎦᏛlᎢ II $த்தம்பிரான் சுவாமிகள்
விலே ரூபா 250
புத் தமிழ்நாற் பதிப்பு -(வரைவுளது)
பட்டுக்கோட்டை