கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கோணேசப் பெருமான் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நினைவு மலர்

Page 1
韃
a - " ܨܕ " .
।
蠱 திருஞானசம்பர்
திருப் துமையா
இருக்கோணேஸ்வரப் டெ
LD36П (з5йош
烹 ©2012) 鰲
2 மில்க்வைற் சவர்க்காரத் தெ
|- 羲
.
 

ந்தமூர்த்தி நாயனுர் ணேஸ்வரத்
பதிகம்
i। பருமான் திருக்கோயில்
ாபிஷேக | LD Ga)ñi
வேர்
ܒܬܐ
நாழிலகம், யாழ்ப்பாணம்'
-
'ဒွါ
點

Page 2

6. சிவமயம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் திருக்கோணேஸ்வரத் திருப்பதிகம் மாதுமையாள் சமேத திருக்கோணேசப் பெருமான் திருக்கோயில் அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக
நினைவு மலர்
வெளியிடுவோர்: சிவநெறிப்புரவலர், சிவதர்மவள்ளல்,
மில்க்வைற் தொழிலதிபர்”சமாதான நீதவான் 86. கனகராசா அவர்கள் ೩.ಹಕ್ಕಿ: க. சி. குலர்த்தினம் (மில்க்வைற் ་་་་་་་་་་་་་ ஆசிரியர்) யாழ்ப்பால்னம்.
25 - a 1981

Page 3
முன்னுரை
சிவபூமி எனப் பெயர்பெற்றதும், தமிழ் மண்டலங்கள் ஐந்தனுள் ஒன்றென நிலவுவதும், ஈழம் என்றும், இலங்கை என்றும், பூரிலங்கா என்றும் சிறப்புப் பெயர்கள் பல பெற்றதும், தமிழ்பேசும் நல்லுலகம் என மதிக்கப்பெற்றதும், செந்தமிழ் அன்பும் சிவநேயமும் பொருந்திய பழங்குடிப் பெருமக்கள் வாழ்வதுமான தொல்பதியில் மாதுமையாள் சமேத கோணேஸ்வரப்பெருமான், சரித்திரகாலத்துக்கு முந்திய இதிகாச காலந்தொடக்கம் இனிது வீற்றிருக்கின்ருர்.
கோணேஸ்வரப் பெருமானையும் மாதுமையாள் பெருமாட்டிவை யும் திருக்கோணமலைப் பதியையும், பாவநாசம் எனப்பெயர்பெற்ற புண்ணிய நீர்ச்சுனையையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மும்மைச் சிறப்பமைய மூர்த்தி கரம் நிறைந்த திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடியருளிச் சிறப்பித்தார்.

** அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னின் மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்து செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி மகிழ்ந்து பாடி’
என்று சேக்கிழார் சுவாமிகள் இந்நிகழ்ச்சிச் சிறப்பைப் பாடி யருளியுள்ளார். ஈழத்திலே தே வார ம் பாடப்பெற்ற ஈஸ்வரங்கள் இரண்டு கண்கள்போல அமைய அவற்றுள் ஒன்ருக நிலவும் திருக்கோ ணேஸ்வரத்துக்கு அருணகிரிநாதர் பாடல்களும் அணிசெய்கின்றன.
ஈழத்துப் பழைய ஈஸ்வரங்கள் யாவும் நன்கு பரிபாலிக்கப்பெற்று வருகின்ற இக்காலத்தில் மக்கள் இதயபூர்வமான பக்திப் பணிவன்புடன் இறைவழிபாடு செய்து திருவருட்பேறு பெற்றுவரும்போது, சொல்லிய பாட்டினைப் பொருளுணர்ந்து பா டுவதற்கு வாய்ப்பாக இச் சிறு சுவடியைச் சிவதர்மவள்ளல் கிழக்கிலங்கை வாழும் அபிமானிகள் ஆதர வாளர்கள் அன்பர்கள் கைகளில் வைத்துத் தமது தயாரிப்புகளுக்கு எல்லோரும் ஆதரவுகொடுப்பதை நினைந்துருகி நன்றி கூறுகிருர்,
எல்லோருக்கும் மாதுமையாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமான் திருவருள் பெருகுவதாக. கந்தபுராண வீதி, கந்தமடம், வாழ்க, வணக்கம். யாழ்ப்பாணம், 25-1-815 க. சி. குலரத்தினம்

Page 4
6. சிவமயம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் திருக்கோணேஸ்வரப் பதிகம் பண் - புறநீர்மை" திருச்சிற்றம்பலம் நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பு நிமலர் நீறணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் . கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.

( 5 )
திருவடிகளில் வீரக்கழலின் ஒலியும் சிலம்பின் ஒலியும் கலந்து ஒலிக்குமாறு கட்டப்பெற்ற, இயல்பாகவே பாசம் இல்லாதவரும், திரு வெண்ணிறுசண்ணித்த திருமேனியினரும், மலையரசன் திருமகளாராகிய உமாதேவியாரை இடப்பாகத்திற் கொண்டவரும், இடபக்கொடியின ருமான சிவபெருமான், கரையின்கண்ணே ஒதுக்கப்பட்ட சந்தன மரங்கள், கரிய அகிற்கட்டைகள், அளவற்ற இரத்தினங்கள், முத்துக் கள் ஆகியவற்றை வாரியள்ளிக் கொளிக்கின்ற ஒலிபொருந்திய கடற் றிரைகள் அமைந்த திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திற் கோவில் கொண்டருளியுள்ளார்.

Page 5
( 6 )
கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனுய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலையமர்ந் தாரே.
:

( 7 )
விரைந்து வந்த கயாசுரன் என்னும் யானை வடிவத்தையுடைய சுரனைக் கொன்று அவன் தோலையுரித்துத் தமது பேரொளி பாருந்திய திருமேனியிற் போர்த்துக்கொண்டவராகிய சிவபெருமான்; பண்யானை போன்ற நடையுடையவரும், வளையல்கள் அணிந்தவரும், 'றைபோன்ற அழகிய நெற்றியை உடையவருமான உமாதேவி ாரோடு கேட்டோர் கொடிது என்று கூறும்படியாகப் பயங்கர ரைச்சல் பொருந்திய கடலானது முத்துக்களை எவரும் எளிதில் ாரிக்கொள்ளும்படியாகச் சுமந்துவந்து குடிகள் நெருங்கி வாழுகின்ற ஊரைச்சூழ்த்து பெருக்கோடு தோன்றும் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார். 2

Page 6
( 8
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர் வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ விழித்தழ ஞகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

( 9 )
குளிர்ச்சி பொருத்திய இளம்பிறையையும், பசியதலையையுடைய பாம்பினையும் பரந்த சடாமுடியிலே தரித்தருளியவரும், பவளத்தைப் போன்ற அதரங்களையுடையவராகிய உமர் தேவியாரைத் தமது இடப் பாகத்திலே வைத்தவரும், மிகநீண்ட் உருவத்தையுடையதும் நெருப் புக் காலுகின்ற கண்களையுடையதுமான வாசுகி என்னும் பெரிய பாம்பை நாளுகப் பூட்டி மகா மேருமலையை வில்லாக வளைத்துத் திரிபுரத்தார் நகரங்களாகிய முப்புரங்களை எரித்தருளியவராகிய சிவ பெருமான், இரைச்சலைச் செய்கின்றதாகிய கடல் சூழ்ந்துள்ள திருக் கோணமலை என்னும் திருத்தலத்தில் எழுந்ததுளியுள்ளார்.
驚

Page 7
( 10 )
பழித்திளங் கங்கை சனடயிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலஞர் கமலமாரி பாதர் தெழித்துமுன் னரற்றும் செழுங்கடற் றரளஞ்
செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமா மலையமர்ந் தாரே.

(, 11 )
இளமை வாய்ந்த கங்கையானது உலகத்தை அழிப்பதுபோலும் பெருக்கெடுத்து வந்தபோது அதனை ஒரு சிறு திவலையாக்கி ஒரு சடையின் ஒர் உரோமத்தின் நுனியில் அதனைப் பழிப்பதுபோல் வைத்து, அழகுத்தெய்வமாகிய மன்மதனைச் சாம்பராக்கும் வண்ணம் தமது நெற்றிக்கண்ணுற் பார்த்து, அவனுட்ைய தேவியாகிய இர தி யென்பாள் இரந்து வேண்டியபோது அவளுக்கு முன்னர் மாத்திரம் உருவாக எழுப்பியருளிய நிமலரும், சிவந்த தாமரை மலர்போன்ற திருப்பாதங்களையுடையவருமான சிவபெருமான், எதிரே உரப்புதலேச் செய்து மிகுந்த இரைச்சலைச் செய்கின்ற கடலிலுள்ள முத்துக்களையும் சிறந்த பொன்னையும் சிப்பியையும் அக்கடற்றிரைகள் அள்ளிக் கரை யிலே ஒதுக்குகின்ற திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே கோயில் கொண்டருளியுள்ளார் 金

Page 8
(工ta )
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் - வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னிக்கி
நுழைதரு நூலின்ர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

( ; )
தாயைக் காட்டிலும் மிக்க அன்புள்ள தலைவரென்று கருதி மெய்யடியார்களாய் உள்ளவர்கள் இறைவன் திருவடிகளைத் தோத் நிரஞ் செய்வார்கள். அவர்களுக்கு நோய்கள் உறுத்தாது உடல் மாழாய்க் கழியும். வாக்கினுல் வாழ்த்தியும், மனத்தினுல் தியானித்தும் வழுவாது போற்றிசெய்யும் ஞானிகள் தரிசித்துக் கொள்வதற்கான நிருவடிகளைக் கொண்டருளுபவருமாகிய சிவபெருமான், தீவும் அதனுட் கோயிலும் அதன் பாவநாசச் சுனையுமாக எல்லாவற்றையும் கடல்சூழ்ந்துள்ள திருக்கோணமலை என்னுந் திருப்பதியிலே கோயில் கொண்டருளியுள்ளார். 5

Page 9
( 14 ). பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல் வருங் கூற்றைத் திரிந்திடா வண்ணம் உதைத்தவர்க் கருளுஞ் செம்மையார் நம்மையா ஞடையார் விரிந்துயர் மெளவுல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந்தாரே.
亡

பரிசுத்தமான அன்புமணத்தினஞய்த் தம்மைப் பக்தி யோ டு பூசித்து வழிபட்ட பிரமசாரியான மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை வரம்பு கடவாமல் தம் திருவடியால் உதைத் துத் தள்ளி, அந்த மார்க்கண்டேயருக்கு நீடிய ஆயுளும் அருளும் பாலித்தருளிய நிறப்போடு கூடியவரும் எம்மையெல்லாம் ஆண்டருள் புரிபவருமாகிய சிவபெருமான், பரந்து உயர்ந்து விளங்கும் காட்டுமல்லிகை, குருக்கத்தி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், குருந்துமுல்லை என்பன கொடி விட்டு வளரும் சோலைசூழ்ந்த திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே கோயில் கொண்டுள்ளார். 6
ஏழாவது திருப்பாடல் கிடைக்கவில்லை;

Page 10
( 16 )
எடுத்தவன் தருக்கை யிழித்தவர் விரலா
லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு
மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வுங் கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோணமா மலையமர்ந் தாரே.

திருக்கைலாய ம லே  ையப் பெயர்த்து எடுக்க முயன்றவஞகிய ராவணனுடைய கர்வத்தைத் தமது திருவடிப் பெருவிரலால் ஊன்றிக் கடுத்தவர். அவ்விராவணன் பின்னர் துதித்துப் பாட அன்புகொண்டு ந்திரவாள், அதிகாரம் முதலிய பேறுகளைக் கொடுத்தருளியவர், 'றப்பு இறப்பு என்பன இல்லாதவர், தம்மை மருமகன்தானே என் றண்ணிப் புறக்கணித்துத் தக்கஞர் செய்த பெரிய வேள்வியைத் டுத்தவர், பின்னர் தம்மிடத்தே இயல்பாயுள்ள பெருங்கருணையினலே க்களுருக்கு வாழ்வும் பெருமையுங் கொடுத்தருளியவர், மெய்யடியார் ளால் விருப்பத்தோடு போற்றப்படும் பெரும் புகழுடையவர் திருக் காணமலையெனுந் திருப்பதியிலே எழுந்தருளியுள்ளார்.
D

Page 11
( ੪ ) ,
அருவரா தொருகை வெண்டல்ை யேந்தி
யசந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவருமறியா வண்ண மொள் ளெரியா
யுயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்குங் குருவராய் நின் ருர் குரைச ழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
帝解

( 19 )
அருவருத்தல் இல்லாமல் ஒரு திருக்கரத்திலே வெண்ணிறக் கபாலத்தை ஏந்தி வீடுகள் தோறும் பிச்சையேற்கும் பெருந்தன்மை புள்ளவர், சிறப்பினையுடைய பெருங்கடல் போலும் நீலநிறம் பொருந் திய திரு மாலும் பிரமதேவரும் அடி முடி அறிய முடியாவண்ணம் சோதி சொரூபராக வளர்ந்தவர்; திருவடியைக் காணவியலாது வந்து போற்றிய திருமாலுக்குக் குருவாக அருள்செய்தவர், அத்திருநெடுமால் வணங்கும் வண்ணம் சப்திக்கின்ற சழலணிந்த திருவடியுடையவர் திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே எழுந்தருளியுள்ளார்.
,<联冷

Page 12
( 0. )
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரரும்
நெறியலா தனபுறங் கூற வென்று நஞ் சுண்ணும் பரிசினர் ஒருபான்
மெல்லிய லொடுமுட னுகித் குன்றுமொண் பெளவ மெளவலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொன் கானல் 'வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே. O

( 21 )
நின்றுகொண்டே உணவுகொள்ளும் சமணரும், இருந்து உண்கின் றவர்களாகிய தேரர் என்னும் பெளத்தமதப் பிரிவினரும், பொருத்த மில்லா வகையில் வாதஞ்செய்ய அவர்களை உண்மைகூறி வென்றவரும், ஆலகாலவிடத்தினை அமுதமெனவுண்டவரும் மெய்யடியார்கள் ஒரு றத்தே நிற்கவும், ஒரு பக்கத்திலே தல்லசாயலையுடைய உமாதேவியா மரப் பொருந்தியவரான சிவபெருமான், காட்டுமல்லிகைச் செடிகளைச் நழ்ந்து கடற்றிரைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் மோதி, உயர்ந்த கடற் 1ரைச் சோலைகளிலும் மலையிடங்களிலும் வாசனை வீசுகின்ற திருக் காணமலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியுள்ளார்.

Page 13
( 2.2 )
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலயமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உரிறசெந் தமிழார் மாலையீ ரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
திருச்சிற்றம்பலம்

( 3 )
எவ்வித குற்றமும் இல்லாதவராகிய ஒலிக்கின்ற கடலாற் சூழப் பட்ட திருக்கோணமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் கல்வி யறிவோடு கேள்வியறிவிலும் மேம்பட்டுச் சீகாழியில் வாழ்பவராகிய அறிவாளிகளுக்குத் தலைவரும் திருவருளால் சிவஞானமுணர்ந்து அதிலே பதிந்தவராகிய திருஞானசம்பந்தர், இனிய செந் தமிழாற் செய்த பத்துத் திருப்பாடல்களைக்கொண்ட பாமாலையை உரைப்பவர்களும் உரைப்பக் கேட்பவர்களும் ஞானத்தாற் சிறந்துயர்ந்தவர்களைத் தமக்குச் சுற்றத்தவராகக் கொண்டு தாம் முன்னர் ஈட்டிய வினையாகிய சஞ்சிதத் தொகுதி தீண்டப்பெருதவராய் வானுலகத்தி.ை மேலான பதவியில் வாழ்வார்கள்.

Page 14
一二重二 H - alie
-
மில்க்வைற் ui
ஒன்பதும் ஒவ்வொருவை
|-
T சலவைக்குகந்தவை
நீராடும்போது
நிம் ரோப், மெடிக்கேட்
轟 எண்ணெய் Արվե3յելՄ
।
Jul.
விட்டல் கொக நம்பு போர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

- IւկB5ii - |
கயிற் சிறந்தவை, தரமானவை
கு, உறைவிடத் தூய்மைக்கு
ETT
நியூ யில்க் வம் சோப் பார் FTI,
Tf fil Ll.