கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொழில் வழங்குனர்க்கான அறிவுரைகள் கையேடு

Page 1
தொல்
لالا آین
 


Page 2

ஊழியர் சேமலாப நிதியம்
தொழில் வழங்குனர்க்கான அறிவுரைகள் கையேடு
இலங்கை மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதிப் பகுதி 1999

Page 3

பொருளடக்கம்
k
மத்திய வங்கி ஆளுநரின் செய்தி தொழில் ஆனையாளரது செய்தி சமர்ப்பணம்
பகுதி tysdrg - Lgisi GlsTGiba Bouaipuu UnflaiTofBGum
k
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உதவுதொகை செலுத்த வேண்டிய தாபனங்கள். விசேட சூழ்நிலைகளில் மட்டும் செலுத்தவேண்டியதாபனங்கள் தொழிலின் தன்மை, உதவுதொகைக் கொடுப்பனவு மீது தாக்கத்தைக் கொண்டுள்ளதா?
இப்பணியாளர் தொடர்பிலும் உதவு தொகைகள் செலுத்தப்படல் வேண்டும்.
பகுதி இரண்டு - உதவு தொகைகளை எவ்வாறு செலுத்துவது?
米
பணி கொள்பவர் ஒருவர் எவ்வாறு தன்னை நிதியத்தில் பதிவு செய்வார்? அங்கத்துவ இலங்கங்களைக் குறித்து ஒதுக்குதல். உதவு தொகைகள் செலுத்துவதற்கான பொறுப்பு. உதவு தொகைகள் மொத்த சம்பாத்தியத்தின் மீது கணிக்கப்படும்.
உதவு தொகைகளைச் செலுத்தும் முறை. தவறுதலாக நிதியத்திற்குச் செலுத்திய உதவு தொகை ஒன்றை எவ்வாறு திருப்பிச் செலுத்த முடியும். உதவு தொகையைச் செலுத்துவதைத் தாமதிப்பது உமக்குப் பிரதிகூலமாக அமையும்.
பகுதி மூன்று - ஊழியர் சார்பில் நிறைவேற்ற வேண்டிய பிற
Usefashit
* அங்கத்துவச் சான்றிதழ்களைப் பெறுதல். * உறுப்புரிமைக் கணக்குகளை இணைத்தல்.
xk உறுப்புரிமை இலக்கங்களில் பிழை ஏற்படும் போது. * உறுப்பினர்களது பெயர்களில் பிழை ஏற்படும் போது. 本
பேண வேண்டிய இடாப்புக்கள்.

Page 4

மத்திய வங்கி ஆளுநரது செய்தி
பணிகொள்பவர் என்ற முறையில், ஊழியர் சேமலாப நிதியமும் அதன் முயற்சிகளும் பற்றிய தங்களது அறிவினை நிறைவுறுத்தும் நோக்கில் நாம் இக் கையேட்டினை வெளிகொணர உத்தேசித்துள்ளோம். நீண்ட கால தேவை ஒன்று இதன் மூலம் நிறைவுபெறும் என நாம் நம்புகிறோம்.
சேமலாபநிதியத்துடன் சம்பந்தப்பட்ட வேலைகளின் போது பல பணியாளர்கள் தொடர்புள்ள விடயங்களில் பூரண அறிவு இன்மை காரணமாக அல்லது தெளிவின்மை காரணமாக உதவு தொகைகளை அனுப்புவதற்கு, சி- சி3 அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு, உறுப்பினர்களின் இலக்கங்களைச் சரியாகப் பதிவு செய்யவதற்கு, சகாய காசோலைகளையும் கணக்குகள் பற்றிய கூற்றுக்களையும் உரிய நேரத்தில் ஒப்படைப்பதற்கு தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டதுடன் இச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விளைவாக உறுப்பினர்கள் கடந்த ஆண்டுகளில் தமது நலன்களைப் பெற்றுக் கொள்ளவதில் பற்பல இடர்பாடுகளை அனுபவிக்க வேண்டி இருந்துள்ளது.
இந்த சூழ்நிலைகளில் நீங்கள் சரியான நேரத்தில் தேவையான தரவுகள், தகவல்கள், உதவு தொகைகளை எமக்கு அனுப்பி வைத்தால் நீங்கள் பணியாளர்களின் சார்பில் சட்ட முறையான கட்டுப்பாடுகளை நிறைவேற்றுகிறீர்கள் என்று கருதப்படுவீர்கள்.
இந்தக் கருமத்தில், மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியப் பகுதியை சேர்ந்தவர்களும், தொழில் தினைக்களத்தைச் சேர்ந்தவர்களுமாகிய நாம் தங்களோடு கைகோர்த்து நிற்பதற்கு என்றென்றும் மகிழ்வடைவோம். இச் சிறுநூலினை வெளியிடுவதற்கு கூட்டு முயற்சி எடுத்த தொழில் ஆணையாளர், ஊழியர் சேமலாப கண்காணிப்பாளர்கள், அவர்களின் பதவியினர் ஆகியோர் யாவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
எச்.பி. திஸ்ஸநாயக்க,
ඡෂණl51bit, மத்திய வங்கி.

Page 5

தொழில் ஆனையாளரது செய்தி
ஊழியர் சேமலாப நிதியத்தைப் பேணுவதில் சம்பந்தப்படும் நிர்வாக முயற்சி பற்றிய அகல்விரிவான புரிந்துணர்வு ஒன்றைத் தங்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்தச் சிறுநூல் தயாரிக்கப்பட்டுள்ளது,
உதவு தொகைகளைப் ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்புச் செய்வது தொடர்புற்ற நடைமுறையானது நியதிச் சட்டம் விதித்துரைத்த சட்டமுறையான ஒரு செய்முறை என்பதில் ஐயமில்லை. எனவே, இது தொழிலிருந்து ஓய்வு பெற்ற, நிதியத்தின் நலன்களை தாமே பெற்றுத் துய்க்கும்நிலையில் உள்ள, பணியாளர்களுக்கு உதவும் வகையில் உதவு தொகைகள் முறைமையாக வைப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது உங்கள் கடப்பாடு ஆகும்.
பணியாளர் நோக்கில் நீங்கள் உங்கள் கடப்பாடுகளை நிறைவெற்றும் அதே வேளையில் அவர்கள் அதனைத் தெரிந்திருப்பதும் முக்கியமாகிறது. ஊழியர் சேமலாபநிதியத்தில் பதிவு செய்யப் பெற்றும் அவர்கள் நிலுவைகள் பற்றிய கூற்றுக்கள் வினியோகிக்கப்பட்டும் நலன்களுக்கான விண்ணப்பங்கள் முறைப்படி பூர்த்தி செய்யப்பட்டும் அவர்களது வீடமைப்புக் கடன் திருப்பிச் செலுத்துதல் தவணைக் கட்டணங்கள் உரிய நேரத்தில் செலுத்தப்பட்டும் இருந்தால் பணியாளர்கள் செவ்வனே சேவையாற்றப்பட்டவர்கள் ஆவர்.
இந்தச் சிறு நூலைத் தொகுப்பதில் தமது காலத்தையும் சிரமத்தையும் செலவிட்ட தொழில் திணைக்களத்துக்கும் மத்திய வங்கியின் ஆளுநரது பணியினருக்கும், ஊழியர் சேமலாப நிதியத்தின் கண்காணிப்பாளர்களுக்கும் அவரது பதவியினருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி. வீரக்கோன், தொழில் ஆணையாள்.

Page 6

FLIDTLIGOTLİ)
தனியார் துறையைந்சேர்ந்த பணியாளர்களினதும் அரச ஓய்வு திட்டங்கள் வராத அரச கூட்டுத்தாபனங்களைச் சேர் பணியாளர்களினதும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிபப்படுத் நோக்கத்திற்காகவே ஊழியர் சேமலாப நிதியம் தாபிக்கப்பட்ட இச்சிறு நூநுாலானதுமத்திய வங்கியினால் பூரண அரச பாதுகாப்புட பேணப்பட்டு வரும் இந்த நிதியத்திற்கு தமது பணியாளர்களை சேர்த்துக் கொள்வதில் பணிகொள்பவர்களுக்கு வழிகாட்டியாக அமைவதற்காகவே தயாரிக்கப்பட்டது. மேலும், இது உதவு தொகைளைச் செலுத்துவதில் பணிகொள்பவருக்கு இருக்கும் பொறுப்புக்கள் கடப்பாடுகளையும் எடுத்துக் கூறுகின்றது.
இந்த நிதியத்திற்குப் பொறுப்பாக உள்ள தொழில் திணைக்களமானது பணிகொள்பவர்கள், பணியாளர்கள் ஆகிய இரு சாராரும் தொடர்புள்ள சட்டவாக்கத்தின் கீழ் தம்மீது பாரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தெளிவுறப்புரிந்து கொள்ளமை காரணமாக அனுபவிக்கும் இடர்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டுள்ளது. எனவே, நாம் இந்தச் சிறு நூலைக் கவனமாகப் படித்து தம்மிடம் இருந்து எதிர்பாக்கப்படுவது பற்றிய எண்ணத் தோற்றத்தை விருத்தி செய்து அதற்கமையவாகத் தொழில்பட்டு பணிக்கொள்பவர் - பணியாள் உறவுகளை ஆரோக்கியமான வகையில் பிணைக்க வேண்டுமென பணிக்கொள்பவர்களை வேண்டிக் கொள்கிறோம். பணியாளரும் தாம் பணிபுரியும் தொழில் முயற்சி வெற்றியுறுவதற்கு உதவ வேண்டும் என நாம் அவர்களுக்கும் வேண்கோள் விடுகிறோம்.
இந்லூலைத் தொகுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பெருவிருப்புடன் கணித்துதவிய ஊழியர் சேமலாப நிதிய ஊ.சே.நி. பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள பிரதித் தொழில் ஆணையாளர் திரு.என். ஏ. அத்துக்கோறளை அவர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கை மத்தியவங்கியின் தகவல் பணிப்பாளரான திரு. டி போயகொட அவர்களும் அவரது பதவியினரும் இச் சிறுநூலை அச்சிடுவதற்கு உதவியுள்ளனர். இவர்களும் நாம் எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
கே. சி. எம். குணசேகர, கண்காணிப்பாளர், ஊழியர் சேமலாப நிதியம்.

Page 7

உமது தாபனம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊ.சே.நி உதவு தொகை செலுத்துவதற்கு உட்பட்டதா?
உமது தொழிலின் பகுதி அல்லது தன்மை எதுவாக இருப்பினும், ஒரு பணியாளர் தாமும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டால் நீர்நிதியத்திற்கும் உதவுதொகை செலுத்துவதற்குச் சட்ட முறையாகக் கட்டுப்பட்டுள்ளி.
எனவே, தாபனமான இளம் தவறாளர்கள், ஆதரவாளர்கள். கட்புலன் செவிப்புலன் அற்றவர்களுக்கு கைத்தொழிர் பயிற்சி வழங்குகின்ற ஒரு சமூக சேவை நிறுவனமாக இருந்தால் அல்லது அது 10 பணியாளர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையினரைப் பணிக்கமர்த்தும் ஒரு தர்ம நிறுவனமாக இருந்தால் அத்தகைய தாபனம் உதவுதொகை செலுத்தும் தேவையிலிருந்து விலக்குப் பெற்றிருக்கும்.
மேலே தறிப்பிடப்பட்டவற்றை விட, பின்வரும் நிறுவனங்கள் உதவுதொகை செலுத்த வேண்டியவையா?
1. அரசாங்க உள்ளூராட்சி நிறுவனங்கள்:-
உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள நிரத்தரமற்ற பணியாளர்கள் தொடர்பில் உதவு தொகைகள் செலுத்தப்படுதல் வேண்டும்.
2. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தொழில் புரியும் தாபனங்கள்:-
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தொழில் புரியும் ஒரு தாபனம் உதவுதொகைகளைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை எனினும், வெளியில் இருந்து தனி ஒரு பணியாள் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் தொழில் புரிந்தால் அந்தப்பணியாளர்கள் தொடர்பிலும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பிலும் உதவு தொகைகள் செலுத்தப்படுதல் வேண்டும்.

Page 8
3. பணிப்பாளர்கள் அல்லது பங்காளர்கள் மட்டும் தொழில் புரியும்
தாபனங்கள்:-
இவர்கள் தாம் புரியும் செவைகள் தொடர்பில் வேதனம் ஒன்றை அல்லது படி ஒன்றைப் பெற்றால் அவர்களுக்கு ஊ.சே.நி. உதவு தொகைகள் செலுத்தப்படுதல் வேண்டும்.
உதவு தொகை செலுத்துவதற்கு உங்களை உட்படுத்துவதற்கு உங்கள் பணி எவ்வகையான பதவியை வகித்தம் வேண்டும் அல்லது தொழிவைப் புரிதல் வெளர்ம்ே?
பதவியின் அல்லது தொழிலின் தன்மை கவனத்திற்கு எடுக்கப்பட மாட்டாது. சகல, இன, வகைதொழிலாள்கள் தொடர்பிலும் அவர்கள் நிரந்தர, தற்காலிக பயிற்சியை. நிரந்தரமற்ற, அமைய, பகல் வேளைகளில் முறைமாற்று அடிப்படையில் வேலை செய்கின்ற, ஒரு நாளைக்குக் குறைவாகத் தொழில் புரிகின்ற பணியாளர்களாக இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி உதவு தொகைகள் செலுத்தப்படுதல் வேண்டும். மேலும், துண்டு வீதத்தில், ஒப்பந்த அடிப்படையில் தரகு அடிப்படையில் அல்லது புரிந்த வேலையின் அளவின் அடிப்டையில் அல்லது வேறு எந்த விதத்திலாவது தொழில் புரியும் பணியாள்களுக்கு காசாக அல்லது வேறு வழியில் கொடுப்பனவு செய்யப்பட்டால் அத்தகைய வேலையின் பெறுமானம் தொடர்பில் உதவு தொகைகள் செலுத்தப்படுதல் வேண்டும்.
பின்வரும் வகுதிகளைச் சேர்த்த பணியாளர்கள் தொடர்பில் பனிகொள்பவர் உதவு தொகை செலுத்த வேண்டுமா?
1. ஓய்வுதியம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு உங்கள் தாபனத்தில்
சேவையாற்றும் ஒரு பணியாள்.
2. உங்கள் தாபனத்தின் பாடசாலை நேரத்துக்குப் பின்னர்
சேவையில் ஈடுபட்டுள்ள 14 வயதிற்கு மேற்பட்ட பாடசாலைச் சிறுவர்கள்.

3. இன்னொரு தாபனத்தில் வேலை செய்யும் அதே வேளையில்
உங்கள் தாபனத்தில் வேலை செய்பவர்கள். 4. நிலையாகநின்று தொழில்புரியாமல் வேறு இடங்களுக்குச் சென்று
கொண்டிருப்பவர்கள். 5. மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட
வேலையில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். 6. ஊ.சே.நி. நலன்களை ஒரு முறை பெற்றுக் கொண்ட பின்னர்
இப்பொழுது மீளப் பணிக்கமர்த்தப்பட்டிருப்பவர்கள். 7. வெளி நாட்டிலிருந்து வந்து தற்போது இந்த நாட்டில் தொழில் புரிபவர்கள் ஆம். இவர்கள் அனைவரதும் தொடர்பில் உதவு தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.
ஒரு பனிகொள்பவர் என்ற முறையில் நீங்கள் நிதியத்தடண் எவ்வாறு உங்களைப் பதிவு செய்து கொள்வது?
முதலாம் பணியாள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 நாட்களுள் படிவம் - டீ" இனை இணைப்படிகளில் பூர்த்தி செய்து அதனை உறுதிப்படுத்திப் பதிவுத் தபாலில் அண்மையில் உள்ள தொழில் அலுவலகத்திற்கு அல்லது நேரடியாகத் தொழில் ஆணையாளருக்கும் அனுப்பி வையுங்கள். விரைவில் நீங்கள் பதிவு இலக்கம் ஒன்றைப் பெறுவீர்கள். இறைவரி மாவட்டம் ஒன்றைக் குறிப்பதற்காகக் அதன் இறுதியில் ஆங்கில நெடுங்கணக்கில் உள்ள எழுத்து ஒன்று இடப்பட்டிருக்கும்.
(1997 மார்ச்சு மாதத்தின் பின்னர் அத்தகைய இரண்டு எழுத்துக்கள் இடப்படும்)
பணியாள் ஒருவருக்கு உறுப்புரிமை இலக்கத்தைக் குறித்து ஒதுக்குபவர் யார்? அது எவ்வாறு செய்யப்பகம்?
இது உங்களது பணியாகும். இலக்கங்கள் ஒன்றின் பின் ஒன்றான வரிசை ஒழுங்கில் குறித்தொதுக் கப்படுதல் வேண்டும். உதாரணமாக : முதலாவது பணியாளர்களுக்கு O, இரண்டாவது பணியாளர்களுக்கு O2 என்ற ஒழுங்கில் இலக்கங்கள்
3

Page 9
குறித்தொதுக்கப்படுதல் வேண்டும். பணியாளின் உறுப்புரிமை இல: உமது பதிவு இலக்கத்துடன் பணியாளின் உறுப்புரிமை இலக்கத்தை இணைத்து உருவாக்கப்படும். அதாவது:
உமது பதிவு இலக்கம்:
623563/ஏ/02 (அல்லது 653563/ஏ. என்/01) ஆகவிருந்தால்
உமது முதலாவது பணியாளின் உறுப்புரிமை இலக்கம்:
623563/ஏ/01 (அல்லது 623563/ஏ. என்/01) ஆகவிருக்கும்
உமது இரண்டாவது பணியாளின் உறுப்புரிமை இலக்கம்:
623563/ஏ/02 (அல்லது 623563/ஏ.என்/02) ஆகவிருக்கும்
பணியாள் ஒருவர் உம்முடைய தாபனத்தை விட்டு விலகி பின்னொரு கட்டத்தில் அதற்கு திரும்பி வந்தால் அவருக்கு முன்னைய உறுப்புரிமை இலக்கம் குறித்துரைக்கப்படலாம். எனினும், அவர் தனது நலன்களைப் பெற்றிருப்பாராயின் அவருக்குப் புதிய இலக்கம் குறித்தொதுக்கப்படுதல் வேண்டும்.
முக்கியம் :-
உறுப்புரிமை இலக்கமே பணியாளின் கணக்கு இலக்கமாகும்.
இந்த இலக்கம் இன்னொரு உறுப்பினருக்கு எந்த நியாயம் பொருட்டும் குறித்தொதுக்கப்படலாகாது.
உதவு தொகையை யார் செலுத்துதல் வேண்டும்?
இது பணிக்கொள்பவரது பொறுப்புஆகும். உதவு தொகை செலுத்தவதற்கு பணியாள் விரும்பவில்லை என்ற நியாயத்தின் மீது இந்தப் பொறுப்பிலிருந்து நீர் விலக்களிக்கப்படமாட்டீர். உதவு தொகையைப் பின்வருமாறு கணியுங்கள்.

பணியாளின் உதவுதொகை
அவரது மொத்த மாதச் சம்பாத்தியத்தில் 8% (இந்தத் தொகையை அவரது வேதனத்தி லிருந்து கூலியிலிருந்து கழிக்கவும்)
பனிகொள்பவரது உதவுதொகை
பணியாளின் மொத்த மாதாந்தச் சம்பாத்தியத்தின் 12% ற்குச் சமமான ஒரு தொகை (பணியாளின் மொத்த மாதாந்த சம்பாத்தியம்
மீது இதனைக் கணித்து அவ்வாறு
கணித்துப் பெறப்படும் தொகையை உமது சொந்த நிதியத்திலிருந்து கழித்து பணியாளின் உதவு தொகையுடன் சேர்க்கவும்)
மொத்த மாதாந்த உதவு தொகை வேதனத்தின் 20வி
உதாரணம்:
ரூபா சதம்
உமது பணியாளின் மொத்த மாதாந்த சம்பாத்தியம் 2500.00 பணியாளின் வேதனத்திலிருந்து/கூலியிலிருந்து கழிக்க வேண்டிய தொகை - 250 8 200.00
100
அதற்கான உமது உதவு தொகை 2500 12 300.00
100
500.00
இந்த இருபது சதவீதத்தினை (20%)எந்த மாதத்திற்கு வேதனம்/ கூலிகள் கொடுக்கப்பட வேண்டியுள்ளதோ/உள்ளனவோ அந்த மாதத்திற்கு உடன் பின்பான மாதத்தின் கடைசி நாளில் அல்லது அதற்கு முன்பாக கண்காணிப்பாளர் அதனை நிதியத்தில் வைப்புச் செய்வதற்கு உதவும் வகையில் கண்காணிப்பாள், ஊழியர் சேமலாப நிதியம், இலங்கைமத்தியவங்கி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Page 10
உதவு தொகை கணிக்கப்பட வேண்டிய வேதனம் எது?
உதவு தொகையை பணியாள்களின் மொத்த சம்பாத்தியத்தின் மீது கணிக்கவும். மொத்த சம்பாத்தியத்தில் பின்வருவன அடக்கப்படுதல் வேண்டும். t
1. வேதனம், கூலிகள் அல்லது கட்டணங்கள்.
2. வாழ்க்கைச் செலவுப்படி, விசேட வாழ்க்கைப்படி, இவை போன்ற
பிற படிகள்.
3. விடுமுறை தொடர்பிலான கொடுப்பனவு.
4. பணிக்கொள்பவர் பணியாளுக்கு வழங்கும் சமைத்த அல்லது சமக்ைகாத உணவினது காசுப் பெறுமதி (அந்தப் பெறுமதியானது இறுதியில் தொழில் ஆணையாளரினால் தீர்மானிக்கப்படும்.)
5. உணவுப்படி
6. குறித்துரைக்கக்கூடிய வேறு எவையேனும் பிற வகையிலான ஊதியம். கழிவு உருவிலான (தரகுக்கூலி) கொடுப்பனவு, துண்டு வீதக் கொடுப்பனவுகள், ஒப்பந்த அடிப்படையிலான கொடுப்பனவு celefuso.6.
உதவு தொகைகள் எவ்வாறு செலுத்தப்படுகின்றன
நிதியத்துடன் நீங்கள் பதிவு பெற்றதும் உமது பிரதிநிதி ஒருவரை அண்மையில் உள்ள தொழில் அலுவலகத்திற்கு அனுப்பி படிவம் - 'சி' யினது 3 பிரதிகளை பெற்றுக் கொள்ளவும். (இவை இலவசமாகக் கொடுக்கப்படும்). படிவம் 'சியினை முப்படிகளில் சரியாகநிரப்பி படிவம் - 'சி' யினது மூலப் படியை எடுத்துச் சென்று "ஊ.சே.நி." இனது கண்காணிப்பாளரின்" சார்பில் எழுதப்பட்ட காசோலை ஒன்றுடன் மிக அண்மையில் உள்ள "மக்கள் வங்கியில்" அல்லது இலங்கை வங்கியில்" கையளித்து அதற்கான பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் பின்னர் அதனைக் கோப்பிலிட்டுக் கவனமாகப் பேணுதல் வேண்டும். அதன் பின்னர் நீர் உமது சொந்தப் படிவம் 'சி' இணைத் தயாரித்தல் வேண்டும்.

படிவம் 'சி'இனது இரண்டாவது பிரதி, தாபனம் எந்தப்
பிரதேசத்தில் அமைந்துள்ளதோ அந்தப் பிரதேசத்திலுள்ள தொழில் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். மூன்றாவது பிரதி கவனமாகக் கோப்பிலிட்டுப் பேணப்படுதல் வேண்டும். எப்போதும் உறுப்பினரது பெயர் சி/சி3 அறிக்கையில் கொடுக்கப்படுதல் வேண்டும்.
முக்கியம் :سے
நீர் உம்மை நிதியத்துடன் பதிவு செய்து பல மாதங்களுக்கு உதவு தொகைகளைச் செலுத்தியபின்னர் மத்திய வங்கியானது உங்கள் 'சி' அறிக்கையினது கணனி அச்சீட்டுப் பிரதி ஒன்றை உமக்கு அனுப்பி வைக்கும். அதனைப் பூர்த்தி செய்து பொருத்தமான உதவு தொகையுடன் ஊழியர் சேமலாப நிதியக் கண்காணிப்பாளருக்குத் திருப்பி அனுப்பி வைத்தல் வேண்டும். இரண்டு மேலதிக 'சி' அறிக்கைப் படிவங்களப்ை பார்த்து உமது சொந்தப்படிவங்களைத் தயாரிக்கவும். மத்தியவங்கியிலிருந்து'சி' அறிக்கைகளின் பிரதிகளைப் பெறுவதில் தாமதங்கள் இருக்கும் போதெல்லாம், மத்திய வங்கியிலிருந்து அவற்றை எதிர் பாராமல் தங்களது சொந்த அறிக்கை படிவங்களைத் தயாரிப்பது அறிவுபூர்வமானது.
பணியாளின் பெயர், உறுப்புரிமை இலக்கம், அடையாள அட்டை இலக்கம் உங்களது பதிவு இலக்கம் ஆகியன 'சி' அறிக்கை படிவத்தில் சரியாகக் கூறபட்டுள்ளனவா என்பதை எப்போதும் செவ்வை பார்த்தல் வேண்டும். மொத்த உதவு தொகைக்கும் அனுப்பிய உதவு தொகைக்கும் இடையில் ஒரு சிறு வேறுபாடு தானும் இருந்தால் பணத்தை உறுப்பினர்களின் கணக்குகளில் வைப்புச் செய்வது சாத்தியம் இல்லை. எனவே, இதன் நோக்கில், மொத்த உதவு தொகை சரியாக இருப்பதை உறுதிப்படுத்தி பணத்தை அனுப்பி வைப்பது விரும்பத்தக்கது. உங்கள் தாபனத்தில் உள்ள பணியாள்களின் எண்ணிக்கை 150ஐ மெஞ்சினால் நீங்கள் படிவம்'சி'ல் மாதாந்த உதவு தொகைகளை

Page 11
அனுப்ப முடியும். ஒவ்வொரு பணியாள்களினதும் உதவு தொகைகளின் விபரங்களை படிவம் 'சி' 3 இல் 6 மாதங்களுக்கு ஒரு தடவை அனுப்பி வைப்பதற்கு நீங்கள் தொழில் ஆணையாளரிடமிருந்து விசேட அனுமதியைப் பெறுவதற்கு அவரை நாடலாம். இந்த ஆறு மாத காலப் பகுதி ஜனவரி முதல் யூன் வரையினதாகவும் யூலை முதல் திசெம்பர் வரையினதாகவும் இருத்தல் வேண்டும்.
6. உதவு தொகைகள் 'சி' அறிக்கை இல்லாது அனுப்பப்பட்டால் அவை பணியாளர்களின் கனக்குகளில் பதியப்படமாட்டா. ஒரு புறத்தில் அவர்கள் அவற்றுக்குரிய வட்டிகளை இழப்பதுடன் மறுபுறத்தில் நீர் 1 சதவீத தண்டப்பணம் விதிக்கப்படுதற்கும் ஆளாவீர்.
நிதியத்திற்கு தவறுதலாக செலுத்தப்பட்ட உதவுதொகை ஒன்றை எவ்வாறு திருப்பிப் பெற முழயும்.
இந்த நோக்கத்திற்கு படிவம் 'கியூ இனைப் பூர்த்தி செய்து பிரதேசத்தின் தொழில் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். அத்துடன் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடைந்ததும் அது, திருப்பி செலுத்துவதற்கான விதப்புரையுடன் ஊ.சே.நி. கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். கண்காணிப்பாளர் பெற்ற தொகையையும் படிவம் 'கியூவில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களையும் செவ்வை பார்த்து தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையினை உமக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை. அத்தகைய கோரிக்கைகள் யாவும் தொகையை வரவுவைத்த ஒரு ஆண்டினுள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
உதவு தொகைள் உரிய காலத்தினுள் செலுத்தப்படவில்லையாயின் ஏற்படக்கூடிய பிரதிகூலம் யாது?
தாமதங்களுக்கு 5வீ முதல் 50வீ வரையிலான தண்டப்பணம் செலுத்தத்தக்கதாக இருக்கும்.

தாமதம் Olநாள் முதல் 10 நாட்கள் வரையிலானால் . 56
தாமதம் 10 நாள் முதல் O நாட்கள் வரையிலானால் . lse
தாமதம் Ol மாதம் முதல் O3 மாதம் வரையிலானால். 2Cබද් தாமதம் 03 மாதம் முதல் 10 மாதம் வரையிலானால். 3O6 தாமதம் 06 மாதம் முதல் 12 மாதம் வரையிலானால் . 4O6 தாமதம் 12 மாதங்களுக்கு மேலானால் . SO6
2. பணியாளின் வேதனத்தில் இருந்து கழிக்கப்படும் 8வீ ஐ
பணிக்கொள்பவர் தானே செலுத்துதல் வேண்டும்.
3. பெரிய தொகை ஒன்றச்ை செலுத்த வேண்டியிருந்தால். அது
தொழில் தாபனத்திற்கு நிதி இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூடும்.
4. இது உங்களை வழக்குப் பிரச்சனைகளில் மாட்டிவிடக் கூடும்.
5. பணிக்கொள்பவர் - பணியாளர்கள் நல்லென்னங்கள் பாதிப்புறக்
கூடும்.
6. உமது தொழில் தாபனம் அவமானத்தைத் தாங்க நேரிடலாம்.
7. உமது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சாத்தியக் கூறுகளும்
உண்டு.
பணியாளர்களுக்கான உறுப்புமைச் சாண்றிதழ்கள் எவ்வாறு பெறப்படுகின்றன?
இந்த நோக்கத்திற்கு ஒவ்வோர் பணியாள் பொருட்டும் மிக அண்மையில் உள்ள தொழில் அலுவலகத்திலிருந்து ஏ. பி. எச் படிவங்களின் தொகுதி ஒன்றைப் பெற்று அவற்றைப் பணியாள் சமர்ப்பிக்கும் விபரங்களைக் கொண்டு நிரப்பி. சான்றுப்படுத்தி அப்பிரதேசத்தின் தொழில் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். தொழில் அலுவலகம் பணியாளை ஓர் உறுப்பினராகப் பதிவு செய்து உறுப்புரிமைச் சான்றிதழ் பீ" இனை உங்களிடம் வழங்கும். படிவத்தில் ஏதாவது பிழையான தகவல்கள் பதியப்பட்டிருந்தால் அல்லது தரப்பட்ட தகவல்கள் தெளிவற்றிருந்தால் பணியாள் தனது நலன்களைப் பெறும் போது இடர்களை எதிர்நோக்க

Page 12
வேண்டியிருக்கும். எனவே, சரியான, தெளிவான தகவல்களை நீர் வழங்குவது மிக முக்கியமானது. பெருவிரல் அடையாளம் தெளிவாக இடப்படல் வேண்டும் என்பதை கவனத்திற்கு எடுங்கள்.
ZMT TTMTTYT CTLLLLLLL LM LLTT MLM கனக்கினை அவரது புதிய உறுப்புரிமைக் கனக்குடன் இனைப்பது எவ்வாறு?
உங்கள் தாபனத்திற்குச் சேரும் பணியாள் ஒருவர் முன்னர் பிறிதொரு தாபனத்தில் சேவையாற்றியிருக்குமிடத்து ஏ. பி. எச். படிவங்களை மீண்டும் நிரப்பி அவரது முன்னைய கணக்கினை அவரது தற்போதைய கணக்குடன் இணைப்பதற்கு படிவம் 'ஜி இனை நிரப்பி அதனை முன்னைய தாபனத்தின் பீசான்றிதழுடன் சேர்த்து, உங்கள் தாபனம் அமைந்துள்ள பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திற் சமர்ப்பித்தல் வேண்டும். தொழில் அலுவலகம் அதன்பின்னர் உங்கள் தாபனத்தில் உள்ள அவரது அங்கத்துவ இலக்கத்தை முன்னைய பீ" சான்றிதழில் பதிவு செய்து அதனை உங்களிடம் திருப்பி அனுப்பும். அத்தகைய இலக்கங்களை பீ சான்றிதழில் நீங்களே பதிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கணக்குகளை இணைப்பதன் மூலம் தற்போதைய கணக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. பெயரிலோ அங்கத்துவ இலக்கங்களிலோ எவையேனும் வேறுபாடுகள் காணப்படின்
அவற்றைச் சரிசெய்ய முடியும்.
அங்கத்துவ இலக்கங்கள் மாற்றப்பட்டாள் பின்பற்ற வேவர்டிய
Op.
கனக்குகளைத் திருத்துவதற்கான அறிக்கை
சேவைப்பதிவு இலக்கம்:-
தாபனத்தின்/தோட்டத்தின் பெயர் :-
10

ണ്ണീർ SangguTa runsa உதவு குறிப்புரை மாதமும் உறுப்பினரின் பெயர் Saidiadau salaisiai || Tsani
மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் உண்மையானவை எனவும். சரியானவை எனவும் நான் உறுதிப்படுத்துகிறேன். கணக்குகளில் பிழையாகப் பதிவு செய்த உதவு தொகை, மேலே காட்டப்பட்டவாறு திருத்தப்பட வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்.
பணிக்கொள்பவர்
வங்கிக்கு எந்தப் பீ சான்றிதழ்கள் 'சீ' அறிக்கைகளுடன் உதவு தொகைகள் அனுப்பப்பட்டனவோ அவை இரண்டிலும் உள்ள இலக்கங்கள் பிழையானவையாக இருந்தால் ஒவ்வொரு உறுப்பினர் தொடர்பிலும் (மேலே காட்டப்பட்டுள்ளவாறு) படிவம் ஒன்றைத் தயாரித்து அதில் முழுக் காலப்பகுதியைத் தழுவும் விபரங்களைக் கொடுத்துபிழையான இலக்கங்கள் தரப்பட்டுள்ள பீசான்றிதழ்களைப் பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கவும்.
11

Page 13
'சீ' படிவத்தில் வங்கிக்குப் பணம் அனுப்பப்டும் போது மட்டும் இலக்கங்கள் கலப்புற்றிருந்தால், பிழையான இலக்கங்களின் கீழ் உதவு தொகைகள் அனுப்பப்பட்ட காலப்பகுதி தொடர்பில் மேலே சுட்டிக் காட்டியவாறு அறிக்கைப் படிவம் ஒன்றைத் தயாரித்து அதனைக் கண்காணிப்பாளர், ஊழியர் சேமலாப நிதியம், இலங்கை மத்திய வங்கி, கொழும்பு - O என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
பி பழவத்தில் மட்டும் இலக்கங்கள் கலப்புற்றிருக்கும் போது
உறுப்பினரது பெயர், பிழையான அங்கத்துவ இலக்கம், சரியான அங்கத்துவ இலக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதுடன் பிழையான இலக்கத்தைப் புகுத்தியதற்கான நியாயத்தையும் குறிப்பிட்டு உமது தாபனம் அமைந்துள்ள பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திடம் விபரங்களை, வழுவை களை சரி செய்வதற்கான வேண்டுகோளுடன் சமர்ப்பிக்கவும். பிழையான இலக்கங்கள் புகுத்தப்பட்ட உறுப்பினரது 'பி' சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
பெயர் மட்டும் பிழையாகக் குறிக்கப்பட்டருக்கும் போதுபின்பற்ற வேண்டிய நடைமுறை
உதவு தொகைகளை அனுப்புகையில் ’சி படித்வத்தில் மட்டும் பெயர் பிழையாகக் குறிக்கப்பட்டிருந்தால், விடயத்தை விளங்கியும் சரியான பெயர், தொகை ஆகியவற்றைக் கொடுத்தும் ஊழியர் சேமலாப நிதியக் கண்காணிப்பாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்புவதோடு அதன் பிரதி ஒன்றை பிரதேசத்தின் தொழில் அலுவலகத்தற்கும் அனுப்பி வைத்தல் வேண்டும்.
ஏ.பீ.எச் படிவங்கை அனுப்புகையில் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு, இருந்தால் பணிக்கொள்பவர் வேறுபாட்டை சரியான பெயரைக் கொடுத்தும் பிரதேசத்தில் தொழில் அலுவலகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தல் வேண்டும். சம்பந்த உறுப்பினரும் தனது பெயரைத் திருத்த வேண்டும் என்று கோரிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தல் வேண்டும்.
12

ஏதாவது ஒரு கட்டத்தில் உறுப்பினர் தனது பெயரில் மாற்றத்தை உண்டு பண்ணினால் அவர் அந்த நிகழ்வை, பெயர் மாற்றத்தை அனுமதித்த நீதிமன்றத்தின் ஆணைப்பத்திரம், விவாகம் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றுடன் பணிக்கொள்பவருக்கு அறிவித்தல் வேண்டும். பணிக்கொள்பவர் பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திற்கு பெயர் மாற்றத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.
தொழில் தாபனம் ஒன்றினர் சொந்தக்காரர் பேண வேர்ைழய இடாப்புக்கள்/ஆவனங்கள் யாவை?
1. வேதன இடாப்புக்கள், பெயர் இடாப்புக்கள்; எவையேனும்
பிறபடிகள் தொடர்பான ஆவணங்கள்.
2. தினவரவு இடாப்புக்கள்.
3. ஊழியர் சேமலாப நிதியத்தில் உதவு தொகைகளை வரவு வைத்தமைக்கான சான்றுகள் (மத்திய வங்கி பற்றுச் சீட்டுக்கள், காசோலை இலக்கங்கள், அஞ்சல் பொருள்களின் பதிவுப் பற்றுச் சீட்டுக்கள் போன்றவை.)
4. முப்படிகளில் அமைந்த 'சி அறிக்கைகள்.
உதவி ஆணையாளர் அல்லது தொழில் உத்தியோகத்தர் கோரும் போது சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு உதவுவதற்கான நீங்கள் இந்த அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும்.
பணியாளர்களை, ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்கள் ஆக்குவதும் உதவு தொகைகளை அனுப்புதல், இடாப்புக்களைப் பேணுதல், நலன்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்புதல் ஆகியவற்றைச் செய்தலும். உறுப்பினர்கள் பொருட்டு ஊ.சே.நி. ஆவணங்களைச் சரியாக நிரப்புவதும் எல்லாம் பணிக்கொள்பவரது பொறுப்பாகும். உங்கள் பணியாளர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதுப்படுத்துவதற்கும் அதனைக் கவனிப்பதும் உமது கடமையாகும்.
உங்களுக்குத் தேவையான விபரங்கள், அறிவுறுத்துரைகள், படிவங்கள் போன்றவற்றிற்கு மிக அண்மையில் உள்ள தொழில் அலுவலகத்தில் தொழில் உத்தியோகத் தரை, உதவி தொழில் ஆணையாளரைச் சந்திக்கவும்.
13

Page 14
தலைமை அலுவலகம் :
பிரதித் தொழில் ஆனையாள், ஊழியர் சேமலாப நிதியம், த. பெ. இல. 1725
கொழும்பு. தொலைபேசி (கொழும்பு) 533966, 532954
நலன்களுக்கான விண்ணப்பங்களுக்கு :-
தொலைபேசி (கொழும்பு) 532735 சாதாரனம் 584467 (பி. கே. பகுதிகள்) 589706 இறந்தோர் (எல் பகுதி) 58864 திருத்தம் (ஆர். பகுதி)
பொது விசாரனைகள்: 532647 அல்லது
S8ll4l 58l42
58l43, 58l46
நீட்டங்கள் : 208, 393, 394, 399, 382
பாக்ஸ் (கொழும்பு):533966
நலன் பெறற் காசோலைகள் : கணக்கு வீதங்கள், வீடமைப்புக் கடன்கள் போன்றவற்றின் விபரங்களுக்கு பின்வருவோரை விசாரிக்கவும்.
கண்காணிப்பாளர், ஊழியர் சேமலாப நிதியம், இலங்கை மத்திய வங்கி, த. பெ. இல. 1299 கொழும்பு.
14

தொலைபேசி (கொழும்பு)
கண்காணிப்பாளர் 4477 மேலதிக கண்காணிப்பாளர் m 3 பிரதிக் கண்காணிப்பாளர் - 5448,3W. சிரேட்ட உதவிக் கண்காணிப்பாள் - 344.7 (அறிக்கைகளும், வீடமைப்புக் கடன்களும்) - 34437
சிரேட்ட உதவிக் கண்காணிப்பாள் - 39958
(கணக்கு மீதங்கள்)
பாக்ஸ் (கொழும்பு) - 34319
பிரதான சட்டம் :1958 15ம் இலக்க ஊழியர் சேமலாபசட்டம்
திருத்தங்கள்:
()1970 இன் 16 ஆம் இலக்கம் (2) 1971 இன் 08 ஆம் இல. (3) 1971 இன் 21 ஆம் இல. (4) 1975 இன் 06 ஆம் இல. (5) 1981 இன் 26 ஆம் இல. (6) 1985 686ör Ol esagho 66). (7)1988 இன் 42 ஆம் இல. (8) 1992 இன் 44 ஆம் இல.
15

Page 15


Page 16