கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்றலும் கற்பித்தலும்

Page 1
கற்றலும்
" LLE/AARRNING A
 

AM GANES | S), Dip. in Ed.
னரு வெளியீடு

Page 2

கற்றலும் கற்பித்தலும்
LEARNING AND TEACHING
PERAMPALAM GANESH B.A. (Hons), Dip, in Ed.

Page 3
TITLE KATTALUM KATIPITHTHALUM.
SUBJECT LEARNING AND TEACHING.
AUTHOR PERAMPALAM GANESH.B.A. HONS, DIPINED.
N
ADDRESS M/VIDYANANDA COLLEGE, MULLIYAWALAI.
COPYRIGHT AUTHOR
FIRST EDITION 10TH SEPTEMBER 1997.
PRINTERS "VEEAHRGEEKAY" COLOMBO-13.
PUBLISHER PESUM PENA PUBLICATION
169, GEORGE RIDE SILVA MAWATHA, KOTAHENA, COLOMBO - 13. TEL - 347903 FAX: 074 - 612934
PRICE RS. 50/-

8.
9.
பொருளடக்கம்
அணிந்துரை
முகவுரை
பதிப்புரை
கற்றல் ஒரு தொடர் நிகழ்வு
கற்பித்தலும் ஆசிரியரும்
அதிபரும் பாடசாலையும்
கல்வியில் மதிப்பீடு
கல்வி ஒரு கூட்டுமுயற்சி
பக்கம்
o1
06
07
O
17
24
29
பின்தங்கிய மாணவரை வழிப்படுத்துவது எப்படி 32

Page 4

முல்லை. மாவட்ட முன்னை நாள் கல்விப் பணிப்பாளர் முல்லைமணி வே. சுப்பிரமணியம் B.A.Hons. E.T. SILEAS அவர்கள் அளித்த அணிந்துரை "ரொம் என்பவருக்கு லத்தீன் கற்பிக்கும் ஆசிரியர் லத்தீன் மொழியை மாத்திரமன்றி ரொம்மையும் தெரிந்திருத்தல் வேண்டும்" கல்வி உலகில் பிரசித்தி பெற்ற இந்தத் தொடர் குழந்தை மையக் கல்வியை வலியுறுத்துகின்றது. ஆசிரியரின் கற்பித்தல் பாடத்தை மையமாகவன்றி குழந்தையை மையமாகக் கொண்டே அமைய வேண்டும். குழந்தையின் அறிவு, திறன், மனப்பாங்கு, உடல்நிலை குடும்பச் சூழல், நாட்டம், ஆயத்த நிலை போன்ற பல்வேறு அம்சங்களை நன்கு அறிந்த ஆசிரியரே வெற்றிகரமாகக் கற்பிக்க (փlԳեւյID.
ஆசிரியர் கற்பித்த விடயங்களை மாணவன் கற்றானா என மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். கற்றல் நிகழவில்லை என்றால் ஆசிரியர் தனது கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் கற்றல் ஒரு தொடர் நிகழ்வு, கற்பித்தலும் ஆசிரியரும், அதிபரும் பாடசாலையும், கல்வியில் மதிப்பீடு, மெல்லக் கற்போரை வழிப்படுத்தல, கல்வி ஒரு கூட்டுமுயற்சி எனும் ஆறு அத்தியாயங்களில் மிகவும் சுருக்க மாகவும், தெளிவாகவும் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.
கற்றல் பற்றி ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் மிகவும் பொருத்தமானதும் தெளிவானதுமாகும். " கற்றல் என்பது உளரீதியாக அல்லது உடல் ரீதியாக அல்லது இரண்டும் இணைந்த இயக்கத்தின் மூலம் ஓர் உயிரி பெற்றுக் கொள்ளும் அனைத்தையும் உள்ளடக்கும் செயல் முறையாகும்" இவ்விளக்கத்தின் மூலம் மனிதன் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் கற்கின்றன என்பது தெளிவாகின்றது.
கற்றல் வாழ்நாள் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
1

Page 5
வீட்டுச்சூழல், விளையாட்டிடம், கடைத்தெரு, ஆலயம், விழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மனிதன் முறைசாராக் கல்வியைப் பெறுகிறான். பாடசாலைக்கு வருமுன்பே ஒரு குழந்தை தனது அனுபவத்திற்கு உட்பட்ட விடயங்கள் பற்றி தனது தாய்மொழியில் பேசவும் பிறர் பேசுவதை விளங்கிக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருக்கிறான். பாடசாலையில் மட்டுமன்றி அதற்கு வெளியேயும் குழந்தை கற்றுக் கொள்கிறது. பாடசாலையில் அளிக்கப்படும் முறைசார் கல்வியில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும். ஆசிரியர் கற்பித்தலுக்கான விருப்பத்தினைக் கொண்டிருக்க வேண்டும். கற்பிக்கப் போகும் பாடப்பகுதியின் எந்த அளவை எவ்வாறு கற்பிக்க வேண்டும், என்ன துணைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். "கற்பித்தலும் ஆசிரியரும்" என்னும் அத்தியாயம் இவற்றை விளக்குகின்றது.
கற்பித்தலுக்கேற்ற சூழ்நிலை பாடசாலையில் உருவாக்கப்படல் வேண்டும். பாடசாலை அதிபரின் ஆளுமையும் அர்ப்பணமும், நிர்வாக முகாமைத்துவத் திறன்களும் இந்தவகையில் பயன்படும். அதிபர் தனது தலைமைத்துவக் கவர்ச்சியால் ஆசிரியரையும் மாணவர் களையும் கவர்ந்து, சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று நிறுவனத்தைக் கட்டுக் கோப்புடனும் இயங்கவைத்தல் வேண்டும். "அதிபரும் பாடசாலையும்" என்னும் அத்தியாயம் இதனை வலியுறுத்துகின்றது.
கல்வியில் மதிப்பீடு மிகவும் முக்கியமான அம்சமாகும். ' பொதுவாக மாணவரின் அடைவினை மதிப்பீடு செய்வதையே மதிப்பீடு என்னும் பதம் சுட்டுவதாகக் கருதப்படுகின்றது. கற்பிக்கும் ஆசிரியர் தன்னைத்தானே மதிப்பிடுவதற்கும் இது பயன்படல் வேண்டும். கல்விக் கொள்கைகள் மாணவ நிலைக்கேற்ப கலைத்திட்டங்களாக ஒழுங்கு படுத்தப்பட்டு, அவை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றதா என அறிவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் மதிப்பீட்டுக்கு உட்படுத் தப்படுகின்றனர். “கல்வியின் மதிப்பீடு" என்னும் அத்தியாயம் இவற்றை விளக்குகின்றது.
மாணவர்களை மீத்திறன் மாணவர்கள், சராசரித்திறனுடையோர், மெல்லக் கற்போர் என மூவகையினராக வகைப்படுத்தலாம். ஆசிரியர்
2

மெல்லக் கற்போரில் தனியான கவனம் செலுத்தி அவர்களின் அடைவினை மேம்படுத்த முனைதல் வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் தருகிறது. " பின்தங்கிய மாணவரை வழிப்படுத்துவது எப்படி" என்னும் அத்தியாயம்.
கல்வி ஒரு கூட்டுமுயற்சி என்னும் அத்தியாயம் மாணவர், ஆசிரியர், அதிபர், பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியின் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றது.
இந்நூலின் ஆசிரியர் திரு. பேரம்பலம். கணேஸ் B.A.Hons. Dip in Ed. அவர்கள் அனுபவம் மிக்க ஆசிரியர். தான் கற்ற வற்றிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பெற்ற அறிவின் வழியாக அமைகிறது இந்நூல். கல்வியியல் தொடர்பான பல நூல்களையும் படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவும் சிறந்ததோர் அறிமுக நூலாக இது அமைகிறது. ஆசிரிய கலாசாலை, கல்விக்கல்லூரி ஆகியவற்றில் பயில்பவருக்கும். கல்வித்துறையில் ஈடுபாடுடை யோர்க்கும் பயனுள்ளது.
முல்லைமணி நாவல வீதி முள்ளியவளை 28.8.1997

Page 6
முகவுரை மனித சமூகம் அதிவேகத்தில் முன்னேறிச் செல்கின்றது என்றால் அதற்கு அடிப்படையாக அமைவது பலதரப்பட்ட அறிவியல் வளர்ச்சியேயன்றி வேறெதுவுமல்ல. சமையலறைதொட்டு சந்திர மண்டலம் வரை அறிவின் உச்சநிலைக்காக மனிதன் சதா முயன்று கொண்டேயிருக்கிறான். இலகுவானதும் வசதியானதுமான வாழ்வுக்கு அறிவு அடிப்படையாகிறது. இவ் அறிவுக்கு அடித்தளமமைப்பது பாடசாலைக் கல்வி. நிலையறிந்து திட்டமிட்டு கல்விப்பணியாற்றும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களின் பங்கும் பணியும் மகத்தானது. மாணவனை மையப்படுத்தி, நவீன உளவியல் அணுகு முறைகளை பின்தளமாகக் கொண்டு கல்விச் செயற்பாடுகள் நெறிப்படுத்தப்படும் இன்றைய நிலையில், இத் தொழிற்பாடுகள் சார்ந்த உண்மையானதும் உணரவேண்டியதுமான பல உள்ளடக்கங் களைத் தாங்கி நாளாந்தம் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன. ஆயினும் தமிழ் மொழி மூலமான நூல்களின் பிறப்புக்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே உள்ளன. மேற்கத்தேய நாடுகளைப் பொறுத்து இவ்வாறான தேவைக்கான பற்றாக்குறை அரிதாகவே உள்ளது.
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் அடிப்படைப் பாடசாலைக் கருமங்களுடன் தொடர்புபட்ட பயனுள்ள சில விடயங்களை உள்ளிட்ட ஆக்கமொன்றினை வெளிக்கொணர வேண்டும் என்ற உள நிலையின் விளைவே இச் சிறு நூல். முன்மொழியப்பட்ட கருத்துக்களுக்குப் புறம்பாக, எனது கடந்த கால பாடசாலை அனுபவங்கள் இந்நூலின் உருவாக்கத்திற்கு பெரிதும் உதவியுள்ளன. அதிபர், ஆசிரியர்களுக்கு பெருமளவிற் பயன்படக் கூடிய வகையில் பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு முதல் முயற்சி என்ற வகையில் இங்கு தேர்ந்தெடுக் கப்பட்ட விடயங்கள் முழுமைத்தன்மையைப் பற்றி நிற்கின்றன என முடிவாகக் கூறிவிடுவதற்கில்லை. உள்ளடக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தர்க்க ரீதியான சில கருத்துக்கள் சந்தேகங்களை எழுப்பலாம். இவை தொடர்பான ஆலோ சனைகளும் இச்சிறு ஆக்கத்திற்கான உங்கள் ஆதரவும் இத்துறை யில் தொடர்ந்து என்னை முன்னேற்றும். மேலும் பல ஆக்கங்களுக் காக என்னைத் தூண்டவும் துலங்கவும் உந்தும்.
4

இறுதியாக இந்நூலுக்கு பொருத்தமான அணிந்துரை ஒன்றினை வழங்கிய முன்னாள் முல்லை மாவட்ட கல்விப்பணிப்பாளர் உயர் திரு. வே. சுப்பிரமணியம் அவர்களுக்கு எனது நன்றி. இவ்வாக்க முயற்சிக்கு ஊக்கமளித்து உதவிய ஆசிரிய நண்பர்களான க சுகுமார், செ. மகேந்திரன் ஆகியோருக்கும் வெளியீட்டு உதவி பேசும் பேனா பதிப்பகத்தாருக்கும், அழகுற அச்சிட்ட அச்ச7 தாருக்கும் எனது நன்றிகள்.
பேரம்பலம் கணேஸ் முவித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை.
10.09. 1997

Page 7
பதிப்புரை
கல்வித்துறைக்கென பல்துறை சார்ந்த பல நூல்களை வழங்கிய பேசும் பேனா பதிப்பகம் தற்போது “கற்றலும் கற்பித்தலும்" எனும் இந்நூலை வெளியிடுகின்றது. இந்நூலின் ஆசிரியர் திரு. பேரம்பலம் கணேஷ் அவர்கள் தனது அறிவினையும், அனுபவத்தையும் ஒன்று திரட்டி எளிய நடையில் அழகு தமிழில் அறிவுக்கு விருந்துாட்ட பயன்மிக்க பல தகவல்களை இதில் தெளிவாக எழுதியுள்ளார். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு அம்சமும் கற்போர் சிந்தன்ையைத் தூண்டி கற்றல் கற்பித்தல் நிகழ்விற்கும் அதன் விளைவிற்கும் ஆதாரமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனால் கல்வி உலகம் இந்நூலை நன்கு வரவேற்கும் என நம்பு கிறேன். இத்தகையதோர் காத்திரமான படைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடை வதோடு திரு. பேரம்பலம் கணேஷ் அவர்கள் இதுபோன்ற பல படைப்புக்களைத் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
வி. இராஜேந்திரம் பேசும் பேனா பதிப்பகம் கொழும்பு - 13 தொலைபேசி: 347903

* கற்றல் ஒரு தொடர் நிகழ்வு
(Learning is a continuous process) கற்றல் என்னும் பதத்தினை திட்ட வட்டமாகவும் நேர்த்தியாகவும், அதேவேளை சுருக்கமாகவும் வரையறுத்துக் கொள்வதென்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. ஏனெனில் கற்றல் என்பது பலதரப்பட்டதும், சில வேளைகளில் ஒன்றில் இருந்து மற்றது வேறுபட்டதுமான உளம் சார்ந்ததும், உடல் சார்ந்ததுமான இயக்கத்துடன் (Function) தொடர்புடையதொன்றாகும். உதாரணமாக ஒரு கோட்பாட்டைக் கற்றல், ஒரு வாகனத்தை ஒட்டக் கற்றல், ஒரு குறித்த சூழலுக்கேற்ப மனப்பாங்கை வடிவமைத்துக் கொள்ளல் என்பவற்றிற்கிடையே ஒன்றில் இருந்து மற்றொன்று தன்மையிலும் அதனை அடையப் பின்பற்றிக் கொண்ட வழிகளுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு. கற்றல் என்பதைப் பொதுவாக அறிதல் அல்லது தெரிதல், பெறுதல், உணர்தல், விளங்குதல், பழகுதல், பொருத்தப்பாடடைதல் எனப் பல்வேறு பதங்களால் சுட்டிக் கொள்கிறார்கள். இதுதான் கற்றல் எனத் தனித்துச் சுட்டிக்காட்டிவிட முடியாமைக்குக் காரணம் உண்மையில் இவை அனைத்துமே கற்றல்
என்பதனால் ஆகும். $፡ ፡
பல்வேறுபட்ட கற்றல் செயல்முறைகள் ஒவ்வொன்றும் தன்மையிலும், அவை பெறப்பட்ட வழிகளிலும் அவை ஒரு உயிரியில் ஏற்படுத்தும் மாற்றங்களிலும் வேறுபடுகின்ற போது கற்றல் என்பதனை இலகுவில் விளங்கிக் கொள்வதோ, எடுத்துக் கூறுவதோ இலகுவானதன்று. ஆனால் கற்றலின் விளைவுகளை நாம் அறிவு (Knowledge) 5.16 (Skill) LD6OT LITIElg (Attitude) 6T6 is வகையினுள் ஒன்றினுள்ளோ பலதினுள்ளோ அடக்கிவிட முடியும். ஆகவே கற்றல் என்பது உள அல்லது உடல்ரீதியான அல்லது இரண்டினதும் இணைந்த இயக்கத்தின் மூலம் (Function) ஓர் உயிரி பெற்றுக் கொள்ளும் அனைத்தையும் உள்ளடக்கும் செயல் முறை எனக் கூறிக் கொள்ள முடியும். கற்றல் ஒரு உயிரின் நடத்தையில் மாற்றத்தினை (Change) உண்டு பண்ணுவதாக அமையுமதே வேளை, அது நிரந்தரமானதாக (Permanent) அமைய வேண்டுமென கூறப்படுகின்றது. கற்றல் என்பது ஆங்கிலத்தில் Learning எனக் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக அவன் இந்த ஆங்கிலக் 356,60560)uds Esbq6, LT6, 6T66FL605 He has learnt this English
7

Page 8
poem எனவும் அவன் கார் ஒட்டப்பழகி விட்டான் என்பதை He has learnt to ridea car எனவும், அவன் அமைதியாக இருக்கப் பழகி 6LT6 6T6TLJ605 He has learnt to be silent 6T66F6D Jinpids கொள்கிறார்கள். இங்கு தழிழில் பல தரப்பட்ட சொற்பிரயோகங்கள் பயன்படுத்துவதைப் போலன்றி learnt எனும் ஒரு பதமே பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் உரித்துடைய ஒரு செயல் முறையெனத் தவறாக விளங்கிக் கொள்ளலாகாது. விலங்குகள், ஊர்வன, பறப்பன, தாவரங்கள் என அனைத்துமே கற்கின்றன. தாவரங்களும் கற்கின்றன என்ற உண்மையினை அண்மைக்கால ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆயினும் மனிதனே கற்றல்ச் செயல்முறையுடன் அதிக தொடர்புடையவன். மனிதனின் சிந்திக்குமாற்றலும் மொழி வளர்ச்சியும் கற்றலில் மென்மேலும் முன்னேறிச் செல்ல சாதகமாக அமைகிறது. கற்றல் என்பது சதா காலமும் நிகழ்வதொன்று. இது குறித்த இடத்திலோ, நேரத்திலோ, சந்தர்ப்பத்திலோ தான் இடம் பெறுமெனக் கூறுவதற்கில்லை. அது எதிர் பாராமலே நிகழ்வதொன்று. ஒரு உயிர் தான் கற்கின்றேன் என்ற உணர்வுக்கு வெளியில் நிற்பதாக உணரப்படுகின்ற போதே கற்றல் இடம் பெறுகின்றது. இன்று மனிதன் காலம், இடம், சூழலைத் திட்டமிட்டுக் கற்கின்றான். இது காலத்தின் தேவையாகி விட்டது. இவ்வாறான திட்டமிடலுக்குப் புறம்பான கற்றல் நிலைமைகளும் நிறையவே உண்டு. கற்றலால் அனுகூலங்கள்தான் இடம்பெறும் என்றில்லை; பிரதிகூலங்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் அதனை நோக்கமாகக் கொண்டு கற்றல் இடம்பெறுவதில்லை இதனால் தான் கற்றல் திட்டமிடப்படுகின்றது. பொருத்தமான ஒன்றை பொருத்தமான நேரத்தில் முறையாகக் கற்று பொருத்தமான இடத்தில் உரிய வகையில்ப் பயன்படுத்துகின்றபோது கற்றல் பயனுடைய தாகின்றது.
கற்றலின் விளைவு நடத்தை மாற்றம் எனக் கூறப்பட்ட போதும் இது எதிர்பார்க்கப்பட்ட மாற்றமாக அமைய வேண்டுமேயன்றி வேறு வகையில் அமைதல் கூடாது. இந் நடத்தை மாற்றமானது உடனடியாகவன்றி காலந்தாழ்த்தியும் ஏற்படலாம். நடத்தை மாற்றத்தை எதிர் விளைவாகக் கொள்ளாத கற்றல்ச் செயல்முறை
8

எதுவுமில்லை என வாதிடவும் முடியாது. கல்வி மனித வாழ்வை மேம்படுத்துகின்றது; எதிர் காலச் சவால்களை பொருத்தமான வகையில் எதிர் கொண்டு வாழ்வில் சிறக்க வகை செய்கிறது. அக் கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவும் கற்றல்ச் செயல் முறையினை சரியாக விளங்கிக் கொண்டு கற்றலில் மாணவரை பொருத்தமான வகையில் ஊக்கிவிப்பதும், வினைத்திறனுள்ள கற்றலுக்கு வகை செய்வதும் கல்விசார் துறையைச் சேர்ந்த அனைவரினதும் அவசியமான கடமையாகின்றது.

Page 9
கற்பித்தலும் ஆசிரியரும் (Teaching and Teacher)
கற்றல்ச் செயல் முறையை எளிதாக்கும் கருமம் கற்பித்தல் எனச் சுருக்கமாகக் கூறிக் கொள்ளலாம். கற்பதனால் மாணவன் * பெற்றுக் கொள்ள முயலும் அனைத்தையும் அடைவதில் மாணவனுக்கு ஆற்றும் பல்வேறுபட்ட ஆசிரியச் செயற்பாடே கற்பித்தல் (Teaching) ஆகும். கற்பதற்கான நிபந்தனைகளுள் மாணவன் சார்பாக முன்னுக்கு வருவது கற்பதற்கான விருப்பம் (Desireto learn) எனின், கற்பித்தலைப் பொறுத்து முதலில் ஆசிரியர் கற்பிப்பதற்கான விருப்பத்தினை (Desire to teach) உடையவராக இருத்தல் வேண்டும். பாடசாலையில் மணியோ சையின் நிர்ப்பந்தத்திற்கு எழுந்து வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியரின் கற்பித்தல் நல்ல விளைவை உண்டு பண்ணுவதில்லை. இதனால் தான் வகுப்பறைக்கு ஆசிரியர் சென்று மாணவர்கள் கற்கும் அளவைக் காட்டிலும், சிலவேளை அவர்கள் செல்லாத நிலையில் அதிகமாகக் கற்கிறார்கள் எனக் கூறப்படுகின்றது. இதில் உண்மை எதுவும் இல்லையென அடித்துக் கூறிவிட முடியாத அளவுக்கு எம் மத்தியில் சில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு நியாயமான பல அக, புற நிலைக் காரணங்களும் இருக்கலாம். ஆகவே கற்பவனும் கற்பிப்பவரும் சம நேரத்தில் தயார் நிலைக்கு வருதல் கற்றல்ச் செயன் முறையிைன் முதல் நிபந்தனையாகும். வகுப்பறைச் சூழல், மாணவ, ஆசிரிய குடும்பச் சூழல், கல்லூரி நிர்வாகம், ஏனைய நிலைமைகள் சாதகமாக அமைதல் வேண்டும்
என்பது அடுத்த நிலையில் உள்ளன.
கற்பித்தல் என்பது பல்வேறுபட்ட ஆயத்த நிலைகள் இணைந்த ஒட்டு மொத்தமான ஒரு செயற்பாடு. இன்றைய கற்பித்தலில் ஆரம்ப கால குரு சிஷய முறையிலிருந்து பாரிய முறையில் வேறுபட்டதாக கற்பித்தலுக்கான முன்னாயத்தம் என்பது அமைகின்றது. முன்னாயத்தத்தின் முதல் நிலையில் ஆசிரியர் குறித்த விடயத்தினை அது சார்ந்த புதிய நிலைமைகளுடன் கற்க வேண்டப்படுகின்றார். நவீன அறிவியற் பாதையில் பலதரப்பட்ட தரவுகளையும் திரட்டி, அது விடயத்தில் ஆசிரியர் தன்னை நன்கு தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதனையே விடயம் சார்ந்த புலமை என்கிறார்கள். விடயத்தின் எந்த அளவை, எப்போது, எவ்வாறு கற்பிப்பது என்பது
- 10

அடுத்த அம்சமாகும். இங்குதான் கற்பித்தலின் திட்டமிடல் (planning in teaching) என்பது வலியுறுத்தப்படுகிறது. குறித்த பாடம் சார்ந்த பொதுவான இலக்குகள், சிறப்பான இலக்குகள் என்பவை இனங் காணப் படல வேண்டும் . தெரிவு செய்யப் பட்ட உள்ளடக்கத்தினுள் (பாட அலகினுள்) இவற்றில் எவை அடங்குகின்றன என்பதையும் அடையாளங்காணல் வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாகக் கற்பித்தல் முறையினையும், முழுமையான கற்பித்தல் வெற்றிக்கு அவசியம் எனக் கருதும் துணைசாதனங்களையும் தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும். இதன் பின்னர் பாடத்தினை எவ்வாறு நடத்திச் செல்வது என்பது பற்றிய திட்டமிடல் ஆகும். இங்கு மாணவனின் முன்னறிவு கருத்திலெடுக்கப்படல் வேண்டும். இறுதி நிலையில் கற்பித்தல் வெற்றியளித்துள்ளதா அல்லது கற்றல் எந்தளவு இடம் பெற்றுள்ளது என்பதை அறியப் பொருத்தமான மதிப்பீட்டுத் திட்டமொன்றினை வகுத்துக் கொள்ளல் வேண்டும். இம் மதிப்பீட்டுத் திட்டமானது ஏற்கனவே இனங்காணப்பட்ட இலக்குகளை மையப்படுத்தியதாக அமைதல் வேண்டும்.
மேற்படி அனைத்து விடயங்களையும் உள்ளடக்குவதுதான் பாடக்குறிப்பு (Notes of Lession) என்பதாகும். வேலைத்திட்டம் (Scheme ofwork) பாடக் குறிப்பு என்பவற்றை அழகாகப் பேணி வகுப்பறையினுள் அரைகுறையாக, முழுமையும் தெளிவுமின்றி பாடத்தை நடாத்தி முடிக்கும் ஆசிரியர்கள் பலர். இவை எதுவுமின்றி பாடத்தைச் சிறப்பாக நடாத்தி முடிக்கும் ஆசிரியர்களும் உளர். இது அவர்களுடைய தனிப்பட்ட புலமையிலும் அனுபவத்திலும் தங்கியுள்ளது. எவ்வளவு தான் அனுபவமும், புலமையும் இருப்பினும் புதிய நிலைமைகளைக் கருத்திலெடுத்து திட்டமிடலுடன் கற்பிப்பதே முழுமையான கற்பித்தலாக அமைய முடியும். காரணம் ஒவ்வொரு துறை சார்ந்த அறிவியலும் நாளாந்தம் மாற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் உட்பட்டுக் கொண்டிருப்பதும், மாணவர் சூழலும் ஏனைய நிலைமைகளும் அவ்வாறே மாற்றத்திற்குட்பட்டுக் கொண்டிருப்பதனாலாகும்.
கற்பித்தற் பணியின் சிறப்பு கற்றல்ச் செயல் முறையை எளிதாக்கும். கற்றல் என்பது ஒரு உளச் செயற்பாடாக அமைகின்ற
11

Page 10
போது அதனை அடைந்து விடத் துணை புரியும் கற்பித்தற் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மணவர்களின் உள்ளம் (Soul) பற்றியும், அதன் இயல்புகள் பற்றியும் அறிந்து கொள்ளல் அவசியமாகின்றது. அப்போது தான் மாணவரின் உள நிலைமைகளை உணர்ந்த வகையில் பொருத்தமாக தனது கற்பித்தற் பணியினை மேற்கொள்ள முடியும். இவ் உளம் சார்ந்த இயல்புகளை விளக்குவதாகவே உளவியற் கல்வி அமைகின்றது. பரந்து விரிந்த இத்துறையின் ஒரு பிரிவாகிய கல்வி உளவியல் (Educational, Psychology) ஆசிரியரைப் பொறுத்து அவரது தொழிற் சிறப்பிற்கும், துறைசார்ந்த விருத்திக்கும் உறுதுணையாக அமைகிறது. ஆகவே ஆசிரியர்கள் கல்வி உளவியல் மீது அக்கறை கொண்டவர்களாக, அதனை அறியும் ஆர்வம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். இதனால் தான் ஆசிரியர் பயிற்சியில் கல்வி உளவியல் இணைக்கப்பட்டுள்ளது.
இன்றைய கல் விக் கொள்கைகள் கோட்பாடுகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் உளவியற்கல்வியை வலியுறுத்தி அவற்றைத் திணித்து விட்டாலும், அதனை ஒரு புறம் தள்ளி விட்டு தமது பாரம்பரிய போக்கிலே வகுப்பறையை நடாத்திச் செல்லும் ஆசிரியர்கள் இன்னும் நம் மத்தியில் உள்ளனர். மாணவனின் முன்னறிவு, அதற்கு அடிப்படையான பின்னணி, குடும்ப நிலை என்பவற்றை கருத்திற் கொள்ளாது மீத்திறன் மாணவனுடன் அவனை ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்வார்கள். இது மேலும் அவனை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தனியார் வேறுபாடுகளையும், அதற்கான அக, புறக் காரணிகளையும் புறந் தள்ளி விட்டு சாத்தியமற்ற எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கும் இவர்களின் ஆசிரியத்துவம் உண்மையில் வேதனைக்குரியது. கற்பித்தலில் ஜனநாயகத் தன்மை பின்பற்றப்பட வேண்டும். எந்தவொரு விடயத்திலும் பாரபட்சமோ, பாகுபாடோ காட்டலாகாது. கற்றலில் அவதானமும், விருப்பமும் காட்டாத மாணவன் ஏனைய விடயங்களில் அவ்வாறே பாராமுகமாக இருப்பான் என எதிர்பார்க்க முடியாது. வகுப்பறையில் ஒரு ஆசிரியரின் பாகுபாடான நடத்தையினை அவன் இலகுவில் இனங்காண்பான். ஆகவே பாரபட்சமற்ற நடவடிக்கைகள் ஆசிரியர் மேல் வெறுப்பையும், அதன் வழி அப்பாடத்திலும் வெறுப்பை உண்டு பண்ணுவதாக
12

அமையும். என்பதை ஆசிரியர் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைப் பொறுத்து குறித்த வகுப்பறையில் கற்றலில் ஆர்வமும் அதற்கான பொருத்தமான பின்னணியும் உள்ள மாணவர்கள் மிகவும் குறைந்த தொகையினரே இருப்பர். இச்சிறு குழுவினருடனே தனது கற்பித்தற் பணியினை முடித்து விடும் ஆசிரியர்கள் பலர் உளர். உண்மையில் இவர்களுக்கு ஆசிரியர்களின் தேவை மிகவும் குறைவு என்றே கூற வேண்டும். அதிலும் அரசாங்கப் பாடசாலைகளைப் பொறுத்து ஆர்வமுள்ள வசதியுள்ள இச் சிறு குழுவினர் சிறிய அளவிலேயே ஆசிரியர்களில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் எப்படியோ எங்கோ கற்றுவிடுவார்கள். இவ்வாறான மாணவருக்குக் கற்பிப்பதும் ஆசிரியருக்கு இலகுவாகவே உள்ளது. பாடசாலையையே நம்பி வரும் ஏனைய பெரும்பகுதி மாணவரின் நிலை பரிதாபத்திற்குரியது. சில ஆசிரியர்கள் தமது அதிகாரத் தொனியால் அவர்களை ஊமையாக்கிவிட்டு மேற்படி சிறு குழு மாணவர்களுடன் தமது கருமத்தை முடித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான ஆசிரியர்களால் அடக்கப்பட்டுக் கொண்டு வரும் மாணவர்கள் தமது பாதிப்பை உணர்ந்த ஒரு நிலையிற் கூட அது பற்றி எடுத்துக் கூறுவதற்குத் திராணியற்றவர்களாகிவிடுகிறார்கள். இது பொதுவாக எல்லாப் பாடசாலைகளிலும் நிலவும் சர்வ சாதாரண விடயமாகி விட்டது. இம்மாணவர்கள் கருத்திலெடுக்கப்பட்டு, படிப்படியாக வளர்க்கப்பட்டு, அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதே உண்மையான ஆசிரியப் பணி. இதை விடுத்து மீத்திறனும் ஆர்வமும் உள்ள ஒரு சிறு பகுதி மாணவருடன் காலத்தைக் கழித்து விட்டு அவர்களது பெறுபேறுகளுடன் திருப்திப்படும் ஆசிரியர்கள் தங்களால் முன்னுக்கு கொண்டு வரமுடியாத பெரும்பகுதி மாணவர்களைப் பற்றி எண்ணாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
பின்தங்கிய மாணவர்களுக்குக் கற்பிக்கவே ஆசிரியர்கள் பரின் னிற் களிறார் கள் . இது விடயத் தில் அதிபருடன் முரண்பட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. இது நியாயம் எனின் இவர்களை யார் கற்பிப்பது? அல்லது வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்வதா? அல்லது இம் மாணவர்களை குழி தோண்டிப் புதைப்பதா? துலங்கல் போதாது
13

Page 11
  

Page 12
நிர்வாகம் தொடர்பானதுமான முழுமையான நிறைவான ஆசிரியர்களை ஒரு பாடசாலை பெற்றுவிட்டால், அங்கு அதிபருக்கு கையொப்பமிடுவதைத் தவிர வேறு வேலைகள் அதிகம் இல்லை என்றே கூறி விடலாம். சிலபாடசாலையில் அதிபர்கள் அமைதியாக இருக்கிறார்கள்; கருமங்கள் யாவும் செவ்வனே இடம் பெறுகின்றன. சில பாடசாலைகளில் அதிபர்கள் அமைதியாக இருப்பதே அரிது. அதே வேளை எதுவும் செவ்வனே இடம்பெறுவதில்லை. காரணம் அப்பாடசாலை கொண்டுள்ள ஆசிரியர் குழாத்தினது தன்மையே எனின் தவறாகிவிடாது.
16

* அதிபரும் பாடசாலையும்
( Principal and School )
பாடசாலை எனும் நிறுவனத்தின் தலைமை முகாரி அதிபராவர். நாகரீகமடைந்த ஒரு சமூகத்தின் (Civilized Society) நல்ல பாடசாலை ஒன்றின் அதிபர் பதவி என்பது உண்மையில் மதிப்பும் கெளரவமும் உள்ள ஒரு பதவியாக இருந்து வருவதை அவதானிக்க முடியும். கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளின் மையமான பாடசாலையின் தலைமை அதிகாரியான அதிபர், பிரித்தானியாவின் பிரதம அமைச்சருக்கு (Prime Minister) ஒப்பிடப்படுகிறார் என்றால் அவருடைய பங்கும் பணியும் எப்படிப் பட்டது என்பதை எண்ணிப் பார்க்கமுடியும். அமைச்சரவைத் தலைவரான பிரதம மந்திரியும் அவரின் கீழுள்ள அமைச்சர்களும் திறமையாகவும் விசுவாசமாகவும் கூட்டுப் பொறுப்புடனும் செயற்படுகின்ற போது தான் நாட்டின் நிர்வாகம் நல்ல முறையில் அமைய முடியும். அவ்வாறு இல்லையேல் குழப்பமும் சச்சரவும்தான் மலியும். இதேபோன்று தான் அதிபரும் அவரின் தலைமையரின் கீழுள்ள ஆசிரியர் களும் திறமையானவர்களாகவும், விசுவாசமானவர்களாகவும் குறித்த இலக்கை நோக்கிய கூட்டுப் பொறுப்புள்ளவர்களாகவும் (Collective Responsibility) இருக்கின்ற போதுதான் பாடசாலையில் முறையான கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் இடம் பெற முடியும். இல்லையேல் ஏனோதானோ என்ற போக்கில் ஆசிரியர்களும் அதன்படி மாணவர்களும் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.
தனது தலைமைத்துவக் கவர்ச்சியால் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கவர்ந்து, சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று நிறுவனத்தைக் கட்டுக்கோப்புடனும் சிறப்புடனும் இயங்க வைப்பது அதிபரே. நல்ல ஆசிரியக் குழாம் அமைந்து விட்டால் அதிபருக்கு அதிக வேலையே இல்லை எனச் சாதாரணமாகக் கூறிக் கொண்டாலும், அவ்வாறான ஆசிரியக் குழாமினை ஆக்கிக் கொள்வதிலும், அதனைத் தொடர்ந்து பேணிக் கொள்வதிலும் அதிபருக்கே பெரும் பங்கு உண்டு. நல்ல அதிபரால் நல்ல ஆசிரியர்கள் உருவாக்கப்படுவதுமுண்டு; நல்ல ஆசிரியர்கள் அதிபரின் பொருத்தமற்ற அணுகுமுறைகளால் செயற்திறன் குன்றி வீணே பயன்படாது போவதுமுண்டு. எனவே அதிபர் எனப்பட்டவர் 17

Page 13
எதிலும் சாதுரியமாகவும் பொருத்தமாகவும், சந்தர்ப்பம் அறிந்தும் தனது கருமங்களை ஆற்றுகின்ற போதுதான், அவரது பணி சிறக்க முடியும். ஒரு பாடசாலையை உயர்நிலைக்குக் கொண்டு வருவதும் அதேவேளை கீழ் நிலைக்கு கொண்டு வருவதும் அதிபரின் கையிற்றான் உள்ளது. ஒரு பாடசாலை பற்றிய கணிப்பு (Image) அப்பாடசாலையின் அதிபராலேயே தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு பெரிய பாடசாலையில் அதிபர் பதவி என்பது சாதாரண வேலைகளுடன் கூடிய தொன்று எனத் தவறாக விளங்கிக் கொள்ளலாகாது. காலையில் பாடசாலைக்கு வந்ததும் தலையை உடைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவல் நாடிவருபவர்கள் மீது சினந்து கொண்டு நாளாந்தப் பொழுதைக் கழிக்கும் அதிபர்கள் பலர். இங்கு கருமங்கள் எதுவும் செவ்வனே இடம் பெறுமென எதிர்பார்க்க முடியாது. வரவேற்பு அறையில் இருப்பவர்கள் போல் இருந்து கொண்டு மிகவும் சாதுவாகவும் சாதுரியமாகவும் விழிப்பகவும் தன்னை நாடிவரும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனையோருக்கு ஆலோசனை கூறியும், வழிகாட்டிக் கொண்டும் நிர்வாகம் நடாத்தும் அதிபர்களும் இருக்கிறார்கள். இங்கு பாடசாலைக் கருமங்கள் சிறப்பாகவும் திட்டமிட்டபடி ஒழுங்காகவும். இடம்பெறும், அந்தளவுக்கு பாடசாலையின் உள்ளக நிள்வர்கக் கட்டமைப்புகள் பொருத்தமான வகையில் திட்டமிடப்பட்டிருக்கும்.
அதிபருக்குரிய கடமைகளோ ஏராளம். இவற்றை கல்விப்பிரிவு, நிர்வாகப்பிரிவு, இணைப்பாடவிதானப்பிரிவு என மூன்று துறை களுக்குள் அடக்கி விடலாம். கல்விப்பிரிவு பாடத்திட்டத்துடன் சார்ந்து மாணவனின் வகுப்பறைக் கற்பித்தலுடன் தொடர்புபட, இணைப்பாட விதான பிரிவு கலைத்திட்டம் எனும் மேல்வட்டத்தினுள் மாணவனை உள்வாங்கி, அவனது முழுமையான கல்விக்கும் ஏனைய உடல், உள ஆழுமை விருத்திக்கும் வகை செய்வதாக உள்ளது. இவ்விரு துறையினையும் பொருத்தமான வகையில் இயங்க வைக்கவென அமைக்கப்படுவதே நிர்வாகப்பிரிவாகும். அதிபரும் அவரின் தலைமையிலான ஆசிரியர்களும் இம் முத்துறைகளையும் நடைமுறைப் படுத்துபவர்களாக இருப்பார்கள்.
அதிபர் முதலில் ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களின்
18

இயலுமை, இயலாமையினை வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். இதற்கு பல்வேறு நேரடி, மறைமுக உத்திகளை அவர் பின்பற்றலாம். கிடைக்கும் வளங்களைக் கொண்டு உச்சப் பயன் பெறும் விதத்தில் பொருத்தமாகவும், சரியாகவும், நிதானமாகவும் பாடசாலைக்கான நேர சூசியினைத் தயாரித்தல் வேண்டும். இது அதிபரது முக்கிய பணி. இது விடயத்தில் சில அதிபர்கள் தவறிக் கொள்வதுண்டு. சில வகைப் புறக்காரணங்களை வைத்துக்கொண்டு பொருத்தமற்ற நேர சூசியை அதிபரென்ற வகையில் ஆசிரியர்களுக்குத் திணித்து விடுவதுண்டு. ஒரு ஆசிரியர் தான் மனமுவந்து ஏற்றுக்கொள்ளாத எந்த நேர சூசியையும் பொறுப்புடனும் திருப்திகரமாகவும் நடைமுறைப்படுத்துவர் என எதிர்பார்க்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களே. அதேவேளை குறித்த ஆசிரிய ரால் இயலாத ஒன்றை அவர் விரும்பிக் கொள்கிறார் என்பதற்காக கையளிக்கவும் கூடாது. இது விடயத்தில் அதிபர் பொருத்தமான வகையில் நடந்து கொள்ளல் வேண்டும்.
அடுத்த நிலையில் உள்ளக நிர்வாகத்திற்கான ஆட்களை நியமித்தல் அமைகின்றது. கல்வித் தகுதியும் சேவை மூப்பும், ஒப்படைக்கப்படும் வேலைகளைத் திறமையுடன் செய்யும் ஆற்றலும் பிரதி அதிபர், உப அதிபர், பகுதித் தலைவர்கள், பாட தர இணைப்பாளர்கள் ஆகியோரை நியமிக்கும் போது கருத்தி லெடுக்கப்பட வேண்டியவையாகும். தனிப்பட்ட, மற்றும் ஏதேனும் காரணத்திற்காக பொருத்தமற்ற ஆசிரியர்களை இவ்வாறான பதவிகளுக்கு அமர்த்துதல். பொருத்தமுள்ளவர்களைத் தவிர்த்தல் போன்றன பாடசாலையின் ஒட்டு மொத்தமான வளர்ச்சிக்கு இடையூறாக அமைவதுடன், அதிபர், ஆசிரியர்கள் கூட்டுப்பொறுப்பு எனும் தத்துவத்திற்குப் பிரதிகூலமாகவும் அமைந்துவிடும். மேலும் பாடசாலையில் வேறுபட்ட ஆசிரிய அணிகள் உருவாகுவதற்கும், ஒத்துளையாமை போன்ற பொருத்தமற்ற இயல்புகள் தலை தூக்கு வதற்கும் இது காரணமாக அமைந்துவிடும். இது விடயத்தில் அதிபர் மிக அவதானமாக நடந்து கொள்வது அவசியம். அவ்வாறன்றி அதிபர் தனது அதிகாரத்தைக் காட்டி ஆசிரியர்களை அடக்கி விட முயல்வது சில வேளைகளில் குறுங்காலத்தில் சாத்தியப்படினும், நீண்ட காலத்திற்கு பாதகமான விளைவுகளையே உண்டுபண்ணும்.
19

Page 14
இதற்கு அடுத்த நிலையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளை திட்டமிடலும் அதற்கான ஆளணியினரைப் பொறுப்பாக்கலும் ஆகும். இது விடயத்தில் பொருத்தமானவர்களை இனங்கண்டு உரிய பொறுப்புக்களைக் கையளிப்பதுடன், அவற்றை ஆற்றக் கூடிய ஏனைய சாதகமான நிலைமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் அதிபரின் கடமையாகிறது. அதிபர் தலைமையிலான பாடசாலையின் முகாமைத் துவக் குழு இது விடயத்தில் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்படல் வேண்டும்.
பாடசாலையில் வகுப்பறைகளைத் திட்மிட்டு அமைப்பதும், மாணவர்களை வகைப்படுத்தி அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றிக் கொடுப்பதும் அதிபரின் கடமையாகும். சமாந்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலை எனின் மாணவர் எண்ணிக்கை, அவர்கள் வகைப்படுத்தப்படும் அடிப்படை போன்ற விடயங்கள் இங்கு முக்கியமானவை. இது விடயத்தில் ஆசிரியருடன் கலந்து பேசி அவர்களின் ஏகோபித்த கருத்தைத் திரட்டி, வகுப்புக்கள் அமைக்கப்படுவது நன்மை அளிக்கும். கற்றல் கற்பித்தலுக்கான 53585 (5p606) (Academic, atmosphere) 960 LD5glds (odb|T(65g) இது விடயத்தில் ஆசிரியர்கள், மாணவர்களைப் பயனுள்ள வகையில் தூண்டி விடுபவராக அதிபர் இருத்தல் வேண்டும். அப்போது தான் ஆசிரிய, மாணவச் செயற்பாடுகள் சிறப்பாக அமைய முடியும். இவ்வாறான அடிப்படை ஏற்பாடுகளைத் தக்க முறையில் அமைத்த பின்னர் ஏனைய கீழ்நிலை மேற்பார்வையாளர்களுடன் இணைந்தும் தனித்தும் அனைத்துக் கருமங்களையும் மேற்பார்வை செய்து தொய்வுகள் ஏற்படுகின்ற இடங்களில் வேண்டிய உட்னடி ஒழுங்குகளை மேற்கொண்டு, கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் செவ்வனே இடம் பெற வகை செய்தல் (3660öT(BLD,
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, மற்றும் உடல், உளத்திறன் விருத்தி போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட பாடசாலை மட்ட அமைப்புக்களை உருவாக்குவதும், அது விடயத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்களைப் பொறுப்பாக்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்கிவிப்பதும், அதிபரின் கடமையாகிறது. வெறுமனே பாடப் புத்தகத்துடன் ஒன்றிவிட்டால் மட்டும் மாணவன் முழுமையடையப்
20

போவதில்லை. மாணவ மன்றங்கள், வணிகமன்றங்கள், சமூகவியல் மன்றங்கள், சாரணியம், முதலுதவிப்படை, பாண்டு வாத்தியக் குழு, இந்து மன்றம் கிறிஸ்த்தவ மன்றம், போன்ற அமைப்புக்களில் அங்கம் வகிப்பதும், பதவிகளைத் தாங்குவதும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியினை மேம்படுத்தும். இவ்வாறான அமைப்புக்களில் பயனுள்ள வகையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள்தான் பாட சாலையில் இருந்து வெளியேறும் போது முழுமையான மாணவர்களாகத் திகழ முடியும். பாடசாலைகளில், குறிப்பாக பெரிய கலவன் பாடசாலைகளில் இன்று மாணவர் ஒழுங்கு (Discipline) என்பது பெரிய பிரச்சினையாகவுள்ளது. பாடசாலையின் ஒழுங்குக்குப் GLITOBILLJT60T (5(g (Discipline Committee) 3gs 6Lugbg56) அவதானமாகவும், சாதுரியமாகவும், விழிப்பாகவும் அதே வேளை நேர்மையாகவும் இருந்து ஒழுங்கு தொடர்பான விடயங்களைக் கவனித்தல் வேண்டும்.
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை அமைப்புகளும் அவற்றின் நடைமுறைகளும் மாத்திரம் கற்றல், கற்பித்தல் மற்றும் செயற்பாடுகளை உச்சநிலையிற் பேணப் போது மானவையல்ல. கல்விசார் வெளிநிலை நிர்வாக அமைப்புக்கள் (கோட்டம், திணைக்களம், அமைச்சு) பாடசாலை அபிவிருத்திச்சபை ஏனைய சமூக மட்ட அமைப்புக்கள் (கிராம முன்னேற்றச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள்) அரசாங்க அலுவலகங்கள் (பிரதேச சபை, பிரதேச செயலகம், கச்சேரி, வைத்திய சாலை போன்றன) கூட்டுறவு அமைப்புக்கள், அரச சார்பற்ற தேசிய, சர்வதேச அமைப்புக்கள் (சர்வோதயம், லயன்ஸ் கிளப், றெட்பான, செஞ்சிலுவைச் சங்கம்) போன்றன பாடசாலையின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவு செய்ய அவசியமான அமைப்புக்களாகும். இவ்வாறான அமைப்புக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி அவற்றின் மூலம் பாடசாலை பயன் பெற வழி செய்வது அதிபரின் கடமையாகும். வளங்கள் எங்கும், எதிலும் வரையறையுடையவையாகவே உள்ளன. மேற்படி அமைப்புக்களில் இருந்து வளங்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவராக அதிபர் இருத்தல் வேண்டும் கல்விசார் மேல்நிலை அமைப்புக்களுடன் நல்லுறவைப் பேணுபவராக அவர் இருத்தல் வேண்டும். பாடசாலையின் தலைமை மீதும், அவரின் செயற்திறன் மீதும்
21

Page 15
நம்பிக்கை கொண்ட திணைக்களம் போன்ற அமைப்புகள் அதனை மேலும் வளர்த்து விட ஆர்வமுள்ளனவாக இருக்கும். பெற்றோர் ஆசிரிய சங்கத்துடன் இவருடைய உறவு பலமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைதல் வேண்டும். பழைய மாணவர்களைப் பாடசாலை வளர்ச்சியில் பங்கேற்பதற்கான திட்டங்களைத் தீட்டுபவராகவும் செயற்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். சமூகத்தின் நன்மதிப்பைப் பெறுமளவுக்கு பாடசாலையில்
உண்மையான அக்கறை கொண்டவராகவும் அவர் இருத்தல் வேண்டும். சமூகம் பலதரப்பட்ட மக்கள் கூட்டங்களைக் கொண்ட ஒரு தொகுதி. இதனால் பலதரப்பட்ட அழுத்தங்கள் அதிபரை வந்து சேரும். இவை அனைத்தையும் சாதுரியமாக வெற்றி கொண்டு நிறுவனத்தின் கட்டுக்கோப்பைப் பேணும் திறன் படைத்தவராக அதிபர் இருத்தல் வேண்டும்.
புதிய கல்விசார் மாற்றங்களை விரைவில் அறிந்து கொள்பவராகவும், அவை பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறுபவராகவும் அவர் இருத்தல் வேண்டும். எந்தவொரு புதிய விடயங்களும் முதலில் அதிபர் வாயிலிருந்துதான் ஆசிரியர், மாணவர்களுக்குச் சென்றடையத் தக்க வகையில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள், மற்றும் தேசிய, சர்வதேச கல்விசார் அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுடன் தொடர்புகள் வைத்துக்கொள்பவராக இருத்தல் வேண்டும். எதையும் திறந்த மனத்துடன் பேசுதல், ஆசிரிய மாணவரிடத்தில் உண்மையான அன்பும் விசுவாசமும் காட்டல், பிரச்சினைகளைக் கண்டு தளம்பாதிருத்தல், தற்துணிவு, நம்பிக்கை, மனோதிடம் என்பன ஒரு நல்ல அதிபருக்குரிய பண்புகளாகும்.
கவர்ச்சிகரமான அலுவலகச் சூழல், நிர்வாகச் சூழல், பாடசாலைச் சூழல் என்பன ஒரு நல்ல அதிபர் நிர்வாகத்தின் இலட்சணங்களாகும். பாடசாலையின் அலுவலகச் சூழல் அழகாகவும் தொடர்பாடலுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டும் இருத்தல் வேண்டும். வகுப்பறைச் சூழலும் அவ்வாறே அமைதல் வேண்டும். (பொருத்தமான வகையில்) பாடசாலைச் சூழலைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தும் ஆர்வம் உள்ளவராக அதிபர் இருத்தல் வேண்டும். இதற்கென தனது தலமையில் சில ஆசிரியர்கள், உயர்
22

வகுப்பு மாணவர்கள், சிற்றுாழியர்கள் கொண்ட ஓர் அமைப்பினையே ஏற்படுத்தி குறுங்கால, நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டி பழைய மாணவர், மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உதவியுடன் கவர்ச்சிகரமானதும், பயனுள்ளதுமான பாடசாலைச் சூழலை அமைக்கும் ஆற்றல் படைத்தவராக அவர் இருத்தல் வேண்டும்.
ஒரு பாடசாலையின் அனைத்து அம்சங்களையும் அலுவலகத்தினுள் இருந்து கொண்டே அவதானிக்கத் தக்க வகையில் கவர்ச்சிகரமானதும் எளிமையானதுமான விளக்கத்தைக் கொண்ட வரைபடங்கள், அட்டவணைகள் போன்றன பொருத்தமான இடங்களில் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். பாடசாலையின் கிடைப்படம், உள்ளக நிர்வாகக் கட்டமைப்பு, இணைப்பாட விதானச் செயற்பாடுகள் தொடர்பான படங்கள், நேர சூசிகள், வரைபுகள், பகுப்பாய்வு அட்டவணைகள், பெளதிக, ஆசிரிய, மாணவ வளங்களை அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் விளக்கும் அட்டவணைகள், பாடசாலையின் வரலாற்றைச் சுருக்கமாகக் காட்டும் படம், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் சாதனைகளைக் காட்டும் படங்கள் என்பன இவற்றுள் அடங்கும். இவை பாடசாலை பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும், அது தொடர்பான பல்வேறு நிலைமைகள் பற்றியும் அவ்வப்போது அனைவரும் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறான ஏற்பாடுகள் பாடசாலையின் இயங்கு நிலைத் g566,60)LDuja GOT (Active state of school) 66T1585 606juu6076). T85 இருக்கும்.
பாடசாலையில் அதன் செயற்பாடுகள் தொடப்பான பதிவேடுகளைத்
நினைத்தவுடன் தாமதமின்றி வேண்டிய தரவுகளையும் தகவல்களையும் GLmë பில் அவை ரிக்கiபட்டு-தயாநிலையில் இருத்தல் வேண்டும். இவை அதிப் ஆரிய விே வேண்ட்iபடுவதோடு வெளி நிலை மேற்பர்வை அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் தாமதமின்றிக் காண்பிக்கவும் உதவியாக இருக்கும் இவை மிகவும் குறைந்த நேரத்தில் பாடசாலை பற்றி மதிப்பிடுவதற்கும் பயனுள்ளதாக அமையும் மேற்படி அனைத்து அம்சங்களையும் பொருத்தமான வகையில் உள் வாங்கிக் கொண்ட
Bf5 ன பங்களிபே ஒரு நல்ல பாடசாலையின் நல்ல வி இடமளி ಆ.
23

Page 16
* கல்வியில் மதிப்பீடு Y (Evaluation in Education)
பாடசாலை எனும் அமைப்பினுள் இடம் பெறும் முக்கிய தொழிற்பாடுகள் கற்றலும் கற்பித்தலுமாகும். இவ் இரு தொழிற்பாடு களும் செவ்வனே இடம் பெற வேண்டும் எனும் நோக்கிலேயே பாடசாலை தொட்டு கல்வி அமைச்சு வரை நிர்வாக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களின் பணிகளுள் மதிப்பீடு என்பதும் அடங்குகின்றது. பாடசாலைகளில் மேற்படி இரு செயற்பாடுகளும் திட்டமிட்டபடி சரியாகவும் சிறப்பாகவும் இடம் பெறுமெனின் இவ்வாறான நிர்வாக மையங்களுக்கு மதிப்பீடு எனும் பணி அவசியமற்றதாகி விடுகிறது. பாடசாலையில் ஆசிரிய மாணவ செயற்பாடுகளை வழிநடத்தவும், சீரான முறையில் பேணவும் அதிபர் g56ð60)Dufl6ð sóls 6)|T85 S6UG556s ( Administrative Units) ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் பாடசாலைகளின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யவென திணைக்கள, அமைச்சு மட்ட ஏற்பாடுகள் உண்டு. மேல் நிலையில் உள்ளவர்கள் தனக்கு நேரே கீழ் நிலையில் உள்ளவர்களை மதிப்பிடுகின்றனர். தவறுகளுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேல் நிலையில் வகுக்கப்படும் கல்விக் கொள்கைகள் கலைத்திட்டங்களாக வடிவமைக்கப்பட்டு, மாணவநிலைக் கேற்ப பாடத்திட்டங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, அமுலாக்கத்திற்கான ஆலோசனைகளுடனும் திட்டங்களுடனும் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட கடமைக் கூறுகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்களாலும் ஆசிரியர்கள், அதிபர், முகாமைத்துவக் குழு, மற்றும் திணைக்கள உத்தியோகத்தினராலும், திணைக்கள உத்தியோகத்தர்கள் அமைச்சு அதிகாரிகளாலும் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படுகின்றனர். இவற்றுள் பாடசாலைமட்ட உள்ளக மதிப்பீடுகள் குறிப்பாக மாணவர் மீதான ஆசிரியர் மதிப்பீடு எனபதும், ஆசிரியர் மீதான மதிப்பீடு என்பதும் முக்கியமான தொன்றாகவும், தினமும் இடம் பெறுகின்ற ஒன்றாகவும் உள்ளன. ஒருவர் தன்னால் ஆற்றப்படுகின்ற கருமம் எவ்வளவு தூரம் சரியானது என உறுதிப்படுத்திக் கொள்ளவும். தொடர்ந்தும்
24

நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அதில் முன்னேறவும் மதிப்பீடு என்பது அவசியப்படுகின்றது. மனித வாழ்வின் எத்தகைய கருமங்களும் திட்டமிட்டுள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை மதிப்பிடுவடு என்பது, குறித்த கருமத்தை எதிர் காலத்தில் சிறப்பாகச் செய்யவும், அதில் நன்மை பெறவும் இடமளிக்கும். எக்கருமமாயினும் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அது பற்றிய பொருத்தமான மதிப்பீடொன்றின் மூலமே தீர்மானித்துக் கொள்ள முடியும். கல்விச் செயற்பாடுகளைப் பொறுத்து இவ்வாறான மதிப்பீடென்பது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
இவ் அத்தியாயத்தில் மதிப்பீடென்பது பொதுவாக பாடசாலை மட்ட கற்றல், கற்பித்தல் தொடர்பானதொன்றாகவே உள்ளது. எதை, யார், எவற்றால், எவ்வாறு மதிப்பிடுவதென்பது இது விடயத்தில் முக்கியமானதொன்றாகும். கல்வியில் மதிப்பீடு எனும் செயற்பாட்டில் மூன்று அம்சங்கள் தொடர்புபடுகின்றன. மதிப்பீட்டுக்குட்படுவோன் (மாணவன் அல்லது ஆசிரியன்) மதிப்பீட்டுக்குட்படும் விடயம், (கற்பிக்கப்பட்ட விடயம் அல்லது கற்பித்தல்) மதிப்பிடு கருவி (சோதனை அல்லது நோக்கல்). என்பன அவைகளாகும். மாணவர் மதிப்பீடு எனின் குறித்த விடயம் சார்ந்த அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியங்கள் என்பவற்றுள் ஒன்றோ, பலவோ எந்தளவுக்கு அடையப்பட்டுள்ளது என அளவிடு கருவியொன்றின் மூலம் அளவிட்டு, மதிப்பிட்டுக் கொள்வதாகும். வகுப்பறை மாணவர் செயற்பாட்டைப் பொறுத்தவரை மதிப்பீட்டுப்பணியின் முதற்படி அளவீடாகும்.(Measure ment) எதிர்பார்க்கப்படும் இலக்குகள் எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளன என்பதை அளவிடு கருவி (சோதனை) ஒன்றின் மூலம் புள்ளிகள் வடிவில் பெற்றுக்கொள்வதே அளவீடாகும். இவ்வாறு பெறப்பட்ட புள்ளிகளுக்கு (Marks) பல்வேறு நிலைகளில் விளக்கமளிப்பதும், விமர்சிப்பதும், பகுப்பாய்வதுமே மதிப்பீடாகும்.
வழமையான சோதனை (Test) எனும் அளவிடு கருவி மூலம் மாணவனின் அடைவினை அளவிடத் துணிகின்ற போது அது எந்தளவுக்கு பொருத்தமானது என்ற வினா எழுகின்றது. மாணவர் சார்பாகவும், அளவிடும் ஆசிரியர் சார்பாகவும் (புறவய வினாக்களுக்கு இது பொருந்தாது) அளவிடு கருவி (சோதனை) சார்பாகவும் தவிர்க்க முடியாமல் இடம் பெற்றுவிடுகின்ற தவறுகள்
25

Page 17
முற்றிலும் சரியானதும் திருத்தமானதுமான அளவீட்டுக்குச் சவாலாக அமைந்து விடுகின்றன. இத்தவறுகளை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வதற்கு முயல்வதை விட மாற்று வழி எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை.
கல்வியில் மதிப்பீடென்பது அதன் இலக்குகளை அடைவதில் முக்கியத்துவம் பெறுவதொன்றாக அமைகின்ற போது, பொருத்தமான மதிப்பீடொன்றிற்கு மாணவரை உடபடுத்தி விடுதல் என்பது சரியான திட்டமிடலின்பாற்பட்டதாகவே உள்ளது. அனேகமாகப் பாடசாலை களில் பயன்படுத்தப்படும் மதிப்பிடு கருவியான வினாத்தாளினைத் திட்டமிட்டுச் சரியாக அமைத்துக் கொள்வதென்பது முக்கியமான தொன்று. அதிகமான அடைவைப் பெற்ற மாணவர்கள் பொருத்தமற்ற வினாத்தாள் காரணமாக குறைவான புள்ளிகள் பெறும் சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. மதிப்பீடு என்பது மாணவர்கள் மிக அதிகமான புள்ளிகள் பெறுவதற்காக அல்ல; எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளைச் சரியாக அளவிடவும், மேலும் அடைவினை அதிகரிப்பதற்குமே. அவ்வாறாயின் முடிந்த வரை பொருத்தமானதொரு மதிப்பீட்டுக் கருவியினை (வினாத்தாளினை) எவ்வாறு தயாரித்துக் கொள்வதென்பது அடுத்த அம்சமாகின்றது.
வினாத்தாள் தயாரிப்பதற்கான சரியான திட்மிடலும் அதன் வழியான ஏனைய நடவடிக்கைகளுமே இது விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. என்ன நோக்கத்திற்கான மதிப்பீட்டின் பொருட்டு வினாப்பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. என்பதை விளங்கிக் கொள்ளுதல் இது தொடர்பான திட்டமிடலின் முதற் படியாகும். வகுப்பையும், பாடத்தையும் தெரிவு செய்து கொண்டு, எந்தப் பாடப் பரப்புகள் உள்ளிட்ட வகையில் மாணவர்களிடம் இருந்து அறிவு, திறன், மனப்பாங்கு சார்ந்த எத்தனை வினாக்களை, என்ன விகிதத்தில் எடுப்பது எனத் தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும். வினாத்தாள் கொண்டிருக்க வேண்டிய குறுவிடை வினாக்கள், கட்டுரை வகை வினாக்கள், அவற்றின் தன்மைகள் என்பவும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகின்றன. பாடப்பரப்புகளிற்கேற்ப தெரிவு செய்யப்படும் வினாக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வினாத்தாள் அட்டவணை ஒன்றை முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்ளல் என்பது சிறப்பானது. வினாத்தாள்களின் நேரத்தைக்
26

கருத்திலெடுத்து தேவையான வினாக்களை விட இரு தொகுதிகளில் இருந்தும் சற்றுக் கூடுதலான வினாக்களைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டும். காரணம் பொருத்தமற்றவை என சில வினாக்கள் தவிர்க்க வேண்டி ஏற்படலாம்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களை பொருத்தமான வகையில் முன்பின்னாக ஒழுங்குபடுத்தல் வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள விகிதங்கள் பேணப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வதுடன் வினாத்தாள்களுக்கான அறிவுறுத்தல்கள் இலகுவான மொழி நடையில் தெளிவாக இடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் நேரொத்த மாணவ குழுவொன்றுக்கு வழங்கப்பட்டு அவர்களின் விடையளித்தல் தொடர்பாகப் பகுத்தாய்தல் வேண்டும். இதில் மிகவும் கடினமான, இலகுவான வினாக்கள் தவிர்க்கப்பட்டு, பதிலாக வேறு வினாக்கள் சேர்க்கப்படல் வேண்டும். மாணவர் பிழையாக விளக்கம் பெற்ற வினாக்களுக்கும் வேண்டிய திருத்தங்கள் செய்யப்படலாம். வழங்கப்பட்ட நேரத்தின் பொருத்தப்பாட்டினையும் கருத்திலெடுத்து சரியான நேர அளவினையும் நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். வினாக்கள் மாணவர்களின் இயல்பு நிலைக்கு அப்பாலும் அதே வேளை மிக இலகுவாகவும் அமைதல், வேறு வகை விளக்கங்களை கொடுக்கக் கூடிய வகையில் கட்டுரை வகை வினாக்களை அமைத்தல், புறவய வினாக்களெனின் மாணவனின் தர்க்கரீதியான செயற்பாட்டின் மூலம் விடைகாணுமளவுக்கு விடைத் தெரிவுகளை மேற்கொள்ளல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும்.
மதிப்பீட்டின் பயன்கள் பலதரப்பட்டவை. ஒரு மாணவன் தான் எவ்வளவு கற்றுள்ளான் என்பதை அறியவும், திருப்திகரமாகத் தொடர்ந்து முன்னேறவும், தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், காலக்கிரமத்தில் அவ்வப்போது சுயமதிப்பீட்டுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளவும் அளவீடும் அது சார்ந்த மதிப்பீடும் உதவுவதாகவுள்ளது. ஆசிரியரைப் பொறுத்து தனது கற்பித்தல் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளது; திட்டமிடப்பட்டுள்ள வகையில் இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, ஆசிரியர் செயற்பாடனது சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றதா போன்றன பற்றி
27

Page 18
அறிந்து கொள்ளவும் தனது பக்கத்திலுள்ள தவறுகளைத் திருத்திக் கற்பித்தற் செயற்பாட்டைத் திறம்பட அமைத்துக் கொள்ளவும் மதிப்பீடானது உதவியாக உள்ளது. அடைவு குறைந்த மாணவர்களை இனங்காணவும், அவர்களுக்கான மாற்றொ ழுங்குகளைச் செய்யவும் மதிப்பீட்டம்சங்கள் பயன்படுகின்றன.
வகுப்பறையிற் கற்பிக்கப்படும் விடயங்கள் எல்லா மாணவர்களையும் ஒரேயளவிற் சென்றடைவதில்லை. எத்தனை வீதமானோர் என்ன அளவிலான அடைவுகளைப் பெற்றுள்ளனர் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும் அதற்கான காரணங்களைக் கண்டறியவும், தகுதி நிலைக்கேற்ப அவர்களை வேறுபடுத்தி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கவும், பாடசாலை நிர்வாகத் தினைப் பொறுத்து இவ்வாறான மதிப்பீட்டம்சங்கள் வேண்டப்படுவனவாக உள்ளன.
மாணவர்கள் மீதான மதிப்பீட்டம்சங்கள், ஆசிரியரின் வகுப்பறைச் செயற்பாடு பற்றிய நல்ல அம்சங்கள், பொருந்தாத அம்சங்கள், புகுத்தப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய் அம்சங்கள் என்பன தொடர்பாக ஆலோசனை வழங்கவும் அதிபர் உள்ளிட்ட முகாமைத்துவக் குழுவிற்கு பயன்படுவனவாக அமைகின்றது. ஆசிரியர் செயற்பாடு, மாணவர் அடைவு பற்றி அவ்வப்போது சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் அவதானித்துக் கொள்வதற்கு மதிப்பீடு சம்பந்தமான இவ்வாறான பதிவேடுகள் உதவுகின்றன. மேற்பார்வையாளரின் பார்வைக்கு எளிதில் காண்பிக்கவும், உரிய ஆலோசனைகள் பெறவும் அளவீட்டம் சங்களும், அதனை அடியொற்றிய மதிப்பீட்டு அம்சங்களும் (வரைபுகள், அட்டவணைகள், பகுப்பாய்வுகள் போன்றன) உறுதுணையாக உள்ளன எனலாம்.
28

* கல்வி ஒரு கஉட்டுமுயற்சி
( Education is a Collective Effort)
திட்டமிட்ட வகுப்பறைக் கல்வி ஏற்பாட்டின் முழுமையான 660)6O155.3606iT6T (Perfect and Effective) 91(p6)T5E55ig மாணவரதோ, ஆசிரியரதோ அல்லது இரு சக்திகளினது இணைந்த முயற்சியோ மட்டும் காரணமாகிவிட முடியாது. இவற்றுடன் மேலும் பல சக்திகளின் ஏகோபித்த ஒத்துழைப்பும் வேண்டப்படுவதாக உள்ளது. பெற்றோர், வீட்டுச் சூழல், வகுப்பறை மற்றும் பாடசாலைப் பெளதீகச் சூழல், புறச்சூழல் (சமூகச் சூழல்) பாடசாலை மற்றும் மேல் நிலை நிர்வாகம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், தொண்டரமைப்புக்கள் போன்ற வற்றைக் குறிப்பிட முடியும். இவை அனைத்தினதும் அனுகூலமான பங்களிப்புக்கள் தடங்கலற்ற கல்விப் பயணத்தின் உந்து சக்திகள்.
ஒரு மாணவன் கற்பதற்கு முழுமனத்துடன் தயாராகி விட்டான் எனின் அது விடயத்தில் எதிர்காலத்தில் நிறைவேற்றவென தீர்மானிக்கப்பட்டுள்ள கல்வி சார் செயற்திட்டங்களின் சாத்தியப்படு தன்மை 50%க்கு மேல் எனத் தீர்மானித்துக் கொள்ள முடியும். மாணவனது நிலை மாறாக அமையும் எனின் வேறு எந்த நிலைமைகளும் எவ்வளவுதான் அனுகூலமாக அமையினும் கற்றலின் எதிர்பார்ப்பு மிகக் குறைவு என்றே கூற முடியும். ஆகவே கற்றற் பணியின் முதல் நிபந்தனை மாணவனது தயார் நிலை (Readiness for learning) என்பதில் சந்தேகமிருக்க முடியாது. அடுத்ததாக கற்பித்தலுக்கான ஆசிரியரின் தயார் நிலை (ReadineSSforteaching) அமைகின்றது. இதனுடன் இணைத்துப் பார்க்கின்ற பொழுது தீர்மானிக்கப்பட்ட கல்விசார் செயற்திட்டங்களின் சாத்தியப்படு தன்மையினதும், மாணவ, ஆசிரியர் சார்பான அனுகூலமான விளைவினதும் எதிர்கால நம்பகத் தன்மை உயர் நிலைமையில் உள்ளது என்பதாகும். இவ் உயர் நிலையை உறுதிப்படுத்தி திட்டமிட்ட கல்வி ஏற்பாட்டின் முழுமைக்கு உரமிடும் உந்து சக்திகளே ஏனையவை.
மாணவனும் ஆசிரியரும் தயாராகி விட்ட போது, அவர்களது ஒவ்வாத குடும்பநிலை திட்டமிட்ட செயற்பாட்டினை வறிதாக்கி விடலாம். பெற்றோர், மாணவனது கல்வியின் முதன்மை கருதி,
29

Page 19
அதற்கான பொருளாதார மற்றும் சூழலை முடிந்தவரை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சித்தல் இது விடயத்தில் பயனளிக்கும். ஆசிரியரும் தனது திட்டமிட்ட கல்விப் பணிகளைப் பாதிக்காத வகையில் சுய குடும்ப நிலைமைகளைப் பொருத்தமான வகையில் பேணிக் கொள்ள முயல வேண்டும். வகுப்பறைச் சூழல், பாடசாலைச் சூழல், புறச் சூழல் என்பன கல்விசார் செயற்பாடுகளின் அமுலாக்கத்திற்கான அடுத்த நிலைமைகளாகும். வகுப்பறை, பாடசாலைச் சூழல் என்பது அதிபர் ஆசிரியர்களால் தக அமைத்துக் கொடுப்பதொன்று. இது விடயத்தில் அவர்களது ஆர்வமும், பயனுள்ள ஏற்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. புறச் சூழல் என்பது சமூகச் சூழல் உட்பட ஏனைய நிலைமைகளைக் குறிக்கும். இவை கல்விச் செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடையூறாக அமைதல் கூடாது. பாடசாலை பற்றிய சமூகக் கணிப்பினை வளர்ப்பதற்கான அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் சமூகத்துடனான பயனுள்ள நல்லுறவு இது விடயத்தில் சாதகமான நிலைமையினைத் தோற்றுவிக்க முடியும். குறித்த இலக்கை நோக்கி பாடசாலை சமூகத்தினுள் நுளைவதும், சமூகம் பாடசாலைக்குள் நுளைவதும், இதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும், மாறி மாறி அமையும் ஒரு தொடர் நிகழ்வாக அமைதல் வேண்டும்.
திட்டமிட்ட வகுப்பறைச் செயற்பாடுகளை உறுதிப்படுத்த அவசியப்படும் அடுத்த நிபந்தனையாக பொருத்தமான பாடசாலை நிர்வாகம் அமைகிறது. இது பற்றி முன்னைய அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் எனும்போது அதிபர், அவர் உள்ளிட்ட முகாமைத்துவக் குழுவினை குறிப்பதாகவுள்ளது. மாணவர் ஆசிரியர்களுக்கேற்ப கல்விச் செயற்பாடுகளுக்கான சூழலை அமைத்துக் கொடுத்தல். நேரசூசி உட்பட பொருத்தமான உள்ளக நிர்வாக ஏற்பாடுகள், மாணவர் ஆசிரியர்களுக்கான பயனுள்ள தூண்டுதல்கள், விளைவு கருதிய விசுவாசமான வினைத்திறனுள்ள நிர்வாகச் செயற்பாடுகள் இது விடயத்தில் அவசியமான நிலைமைகளாகும். வள ஒதுக்கீடுகளைப் பொறுத்து, திணைக்கள அமைச்சு நிர்வாகங்கள் பாடசாலைகளுக்கான கிடைப்பனவுகளை உரிய நேரத்தில் உறுதி செய்து கொள்ளல் திட்டமிட்ட வகுப்பறைக் கருமங்களுக்கு அனுகூலமாக அமையும் மற்றொரு நிபந்தனையாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய
30

மாணவர் சங்கம் போன்றன தினமும், பாடசாலை பற்றிய உயர்வினை நோக்காகக் கொண்டு செயற்படுவனவாக அமைதல், பாடசாலைக் கருமங்களை செம்மைப் படுத்துவதுடன் அதன் இலட்சியத்துக்கும் உதவுவனவாக அமையும். சமூகமட்ட ஏனைய அமைப்புகள், நலன் விரும்பிகள், தேசிய, சர்வதேச தொண்டர் அமைப்புக்கள் போன்றவற்றின் சாதகமான பார் வை பாடசாலையின் வளப்பற்றாக்குறையை வறிதாக்கி அதன் வளர்ச்சிக்கு வகை செய்வனவாக அமையும்.

Page 20
* பின்தங்கிய மாணவரை வழிப்படுத்துவது எய்படி?
(How to guide the slow learners? ) பல்வேறுபட்ட காரணிகளின் பின்புலம் பின் தங்கிய மாணவர் என்றொரு பிரிவினரைக் தொடர்ச்சியாகப் பிறப்பித்துக் கொண்டு இருப்பதால், பிணி நீக்கக் கற்பித்தல் எனும் பிரத்தியேக ஏற்பாடு பிறக்கிறது. இவ்வாறான மாணவர்களை வழிப்படுத்தல் எனும் திட்டத்தின் முன் நிபந்தனையாக ஒவ்வொரு மாணவர்பற்றிய தனித்துவ அம்சங்கள், அது தொடர்பான பிற நிலைமைகள் பற்றிய பயனுள்ள உசாவல்கள் அமைகின்றன. மாணவனின் எளிதான குடும்ப நிலை காரணமாகத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை. கற்றலுக்கு ஒவ்வாத குடும்ப உறுப்பினர்களின் நடத்தை, பொருத்தமற்ற சமூகச் சூழல் மாணவன் சார்ந்துள்ள சகபாடிகளின் இயல்பு, மன அழுத்தங்கள் போன்றன பின்னடைவுக்கான பின்னணிகளாக அமைந்து விடுகின்றன.
மாணவர் பக்கத்திற்குப் புறம்பாக அதிபர், ஆசிரியர்களின் பொருத்தமற்ற அணுகு முறைகள், உதாரணமாக கற்றலில் மேல் நிலையிலுள்ள சகபாடிகளுடன் ஒப்பிடல், குறைவான அடைவுகளுக்காக ஏளனம் செய்தல், ஒதுக்குதல், உயர் அடைவைப் பெறும் மாணவர்களின் இவர்கள் மீதான அழுத்தங்கள், தவறான அணுகு முறைகள் போன்றனவும் அவர்களின் கற்றல் விருப்பையும், தொடர்ச்சியான துலங்கலையும் தடுத்து விடுவனவாகவுள்ளன. பொருத்தமற்ற வீட்டுச் சூழலால் பின்தங்கிக் கொண்ட மாணவன், பின்னர் மாற்றத்துக்குள்ளான சாதகமான சூழல் காரணமாக முன்னேறத் துடிக்கின்ற போது, ஏற்கனவே தடங்கலின்றி தனது கற்றற் செயன் முறையினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களின் வேகத்துடன் போட்டி போட முடியாமல் உள்ளது. இது விடயத்தில் ஆசிரியரின் விசேட அவதானிப்பும், பொருத்தமான நடைமுறைகளும் இல்லை எனின் அவ்வாறான மாணவரின் முயற்சி வெற்றியளிக்காமல் போய்விடும்.
அதிபர் ஆசிரியரின் மாணவர் மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வுகளும் அதையொட்டிய நடவடிக்கைகளும் பின்தங்கிய மாணவர்களை மேலும் கீழ் நிலைக்குச் செல்ல வகை செய்கின்றன. எல்லா நிலைமைகளும் சரியாகப் பொருந்தியும் கற்க மறுக்கும் 32

மாணவனும் உள்ளான். அடிப்படையில் ஏதேனும் காரணத்திற்காக தற்செயலாக தவறிக் கொண்ட மாணவர்களில் பலர் இவ்வகை யினராக உள்ளனர்.
பின்தங்கிய மாணவரை வழிகாட்டப்புறப்படும் உன்னத பணியின் முதற்படி ஒவ்வொரு மாணவர் பற்றிய தனித்துவ ஆய்வு என ஏற்கனவே நோக்கப்பட்டது. குடும்ப சமூக சூழலில் மாணவன் எதிர் நோக்கும் கற்றலுக்கு ஒவ்வாத நிலைகளை சீர்படுத்துவதற்கு எந்தளவு தூரம் அக்கறை செலுத்த முடியும் என்பது ஆய்வுக்குரிய வினாவாகின்றது. இது விடயத்தில் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும். ஆலோசனை கூறுதல், வழிகாட்டல் என்ற வகையில் மட்டுமே அதிபர் ஆசிரியர்களைப் பொறுத்து உதவ முடியும் வகுப்பறை, பாடசாலைச் சூழலை தக அமைத்து மாணவரை வழிகாட்டுவதில் முடிந்த வரை முழுமையான பங்களிப்புக்கு வகை செய்ய முடியும். பாடசாலை எனும் நிறுவனத்தினுள் மேற்கொள் ளப்படும் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பின்தங்கிய மாணவரை வளர்த்து விடுவதில் உதவுவனவாகவுள்ளன.
இவ்வாறான மாணவர்களின் விமோசனத்தினை மையப்படுத்தி தொடர்ச்சியான பல்வேறு பட்ட திட்டங்களை தீட்டுவதும் நடைமுறைப் படுத்துவதும், மாற்றுத்திட்டங்களை வகுப்பதும், உத்திகளைக் கையாள்வதும், தொடர்ச்சியாக இம்மாணவர்கள் பற்றி பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்வதும் ஒரு தொடர் நிகழ்வாக அமைதல் வேண்டும். இவ்வாறான திட்டங்கள், உத்திகளை நடைமுறைப்படுத்து வதற்கு முன் மாணவர்களை இயல்பொத்த வகையில் வகைப்படுத்தல் வேண்டும். பொருத்தமான வகைப்படுத்தற் திட்டமொன்றின் கீழ் இப்பணியினை நிறைவேற்ற முடியும். வகைப்படுத்தப்பட்ட இவ் வகுப்புக்களை A,B,C எனச் சுட்டுவதைத் தவிர்த்து, ஒப்பிட முடியாத கவர்ச்சியான வேறெதும் பெயர்களால் சுட்ட முடியும். சிறிய எண்ணிக்கை கொண்ட (10-20) வகுப்புக்களாக இவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையும் அனுபவமும் உள்ள ஆசிரியர்களே இவ்வகுப்புகளுக்கு கற்பிக்கவென அமர்த்தப்படல் வேண்டும். வகுப்புக்கள் வசதியுள்ளனவாகவும், கற்றல் கற்பித்தலுக்கு ஏற்றனவாகவும், மாணவரது கவனத்தை வேறுதிசைக்குத் திருப்பாத சூழலைக் கொண்டனவாகவும் அமைதல் வேண்டும். பாடநேரங்களும்
33

Page 21
வழமையினை விட சற்றுக் குறைவாக இருத்தல் நன்று.(20 - 30 sólóLLD) ܗܝ
ஆசிரியர் மாணவர்களை மானசீகமாக விரும்புபவர்களாகவும் அவர்களுடன் நல்லுறவைப் பேணுபவராகவும் அமைதல் வேண்டும். கலந்துரையாடல் மூலம் கற்றற் சூழ்நிலைக்கு மாணவரை அழைத்து வரல் முதல் நிலையில் அமையும். தெரிவு செய்யப்படும் பாட அலகுகள் வழமையை விட சிறியனவாக இருத்தல் வேண்டும். மாணவ நிலைக்கேற்ப அடிப்படையில் இருந்து கற்பித்தல் ஆரம்பிக் கப்பட வேண்டும். எளிமையான மொழி நடையும், தெளிவான பேச்சும், ஆறுதலான விளக்கமும் இவர்களைப் பொறுத்து அவசியப்படும் என்பதை ஆசிரியர் மனதிற் கொள்ளல் வேண்டும். கற்பித்தல் நிகழும் போதே இடையிடையே வாய்மூல மதிப்பீடுகள் மேற்கொள்ளல் நன்று. எல்லா மாணவர்களுக்கும் பதிலளிக்கச் சந்தர்ப்பமளித்தல், துலங்கும் மாணவர்களை வெகுமதிகள் மூலம் தூண்டிவிடல் பொருத்தமானது. ' குறித்த விடயம் தனக்கு விளங்குகிறது என்ற உணர்வினைப் பெறுமளவுக்கு வெற்றிக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி மாணவர் களிடத்தில் தன்னம்பிக்கையை ஊட்டல் வேண்டும். மாணவரது அடைவு தொடர்பாகப் பாராட்டி பேசுதல், அடிக்கடி அவர்கள் முன்னிலையிலும், பிறர் மத்தியிலும் உயர்வாகப் பேசிக் கொள்ளுதல் பொருத்மானது. இவை மாணவனை மேலும் உற்சாகத்துடன் துலங்கத் தூண்டும். கிண்டல் பண்ணுதல், ஏசுதல், சரிவராது, கஷரம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் முன்கூறுதல் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
கற்பித்தல் முறை எப்பவும் ஒரே மாதிரியாக இருத்தல் பொருத்த மற்றது. இது மாணவருக்குச் சலிப்பை உண்டு பண்ணும் கற்பிக்கப்படும் விடயங்களைப் பொறுத்து இவை மாறுபடும் என்பதற் குப் புறம்பாக, ஆசிரியர் திட்டமிட்டு கற்பித்தல் முறைகளில் மாற்றங் களைக் கொண்டு வரல் வேண்டும். பேச்சு, உடை, நடை பாவனை என்பவற்றிலும், வகுப்பறையினுள் எப்பவும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளாது, திட்டமிட்ட வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கற்பித்தல், மாணவரைப் பொறுத்து உற்சாகமளிப்பதாக அமையும்.
வகுப்பறையில் கரும்பலகையைப்(Black board) Ju 6ir
34

படுத்துவதிலும் எப்பவும் ஒரே தன்மையினைப் பின்பற்றாது வேறுபட்ட வகையிலான கரும்பலகைப் பிரயோகங்கள் சிறப்பானதாக இருக்கும். எழுத்துக்களின் மாதிரிகள் அளவில், வடிவில், வேறுபடுவனவாகவும், அவை மாணவன் எதிர்பார்க்காதவையாகவும் அயுைம்போது கவன ஈர்ப்புக்கும் கவர்ச்சிக்கும் இடமளிப்பதாக அமைந்து விடுகின்றது. குறித்த பாடத்திற்கு எப்பவும் ஒரே ஆசிரியர் செல்லாது வெவ்வேறு ஆசிரியர்கள் மாறிமாறிச் செல்வதும் அவர்களது துலங்கலை மேம்படுத்தும் மற்றொரு உபாயமாகும். ஒரு பாடத்தை இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் கற்பிக்கலாம். இவ்வாறான மாணவர்கள் முன் ஆசிரியர்கள் மொழியிலோ அல்லது விடயத்திலோ தமக்குள்ள புலமையைக் காட்ட முயலக் கூடாது.
செயல் முறைக் கற்பித்தலுக்கு அதிக சந்தர்ப்பங்கள் வழங்கப்படல் வேண்டும். வகுப்பறைக்க வெளியே பாடம் சார்ந்த கற்றல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங் களுக்கு ஏற்பாடுகள் செய்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் ஆசிரியர்கள் ஆர்வங்காட்டி மாணவர்களைத் தூண்டுதல் வேண்டும். எல்லா மாணவர்களைப் பொறுத்தும் சமசந்தர்ப்பம், சமவாய்ப்பு, ஜனநாயக அணுகு முறைகள் போன்றவற்றைப் பின்பற்றுவதில் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். இது போன்ற பல்வேறுபட்ட ஏற்பாடுகள், நடைமுறைகள் இவ்வாறான மாணவர்களை உய்விக்கும்; உள்வாங்கும் ஆற்றலை விருத்தி செய்து அடைவு மட்டத்தில் உயர்வினை உண்டுபண்ணும்.
35

Page 22
10.
11.
Reference: முத்துலிங்கம். ச. கல்வியியல் - ஒர்துறிமுக கீதாஞ்சலி, நல்லூர், யாழ்ப்பாணம். 1974.
சந்திரசேகரம், ப. கல்வியியற்கோவை, கல்விக்கழகம், uTpuLIT600TLD. 1987.
முத்துலிங்கம். ச. கல்வி உளவியல். பாகம் 11, ஆசிர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். 1980,
ஜெயராசா. ச. ஆசிரியரும் உளவியலும், அம்மா வெளியீடு, uuTp JLIT600TLD. 1990.
கல்வியின் நோக்கங்களும் குறிக்கோளும், தேசிய கல்வி நிறுவகம் (தொலைக்கல்வித்துறை) 1990.
ஜெயராசா. ச. உளவியலும் நவீன கற்பித்தலும், பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு 1993.
சந்தானம். எஸ். கல்வி உளவியல் - ஓர் அறிமுகம், கார்த்திகேயன் அன் கம்பனி, சென்னை, 1989.
சின்னத்தம்பி. க. கல்வியில் அளவீடும், மதிப்பீடும், செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம். 1986,
சிவத்தம்பி. கா. "ஆசிரியரும் சமூகமும்", விளக்கு, தாசன் அச்சகம், யாழ்ப்பாணம். (தை 1995) பக்.29.
Perrott, Elizabet, Effective Teaching, Long man, London. 1983.
Brown. F. C., Principle of Education and Psychological testing, Dryden press, 1970. .


Page 23