கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனம்போன போக்கில்

Page 1


Page 2

மனம் போன போக்கில்
ஆசிரியர்
ராஜகுரு சேனாதிபதி கனகரெட்னம்
வேங்கடவன் பதிப்பகம் 13/3, அலெக்சாண்ட்ரா வீதி கொழும்பு-6
இலங்கை,

Page 3
முதல் பதிப்பு: 15-9-1988
வெளியிட்டோர் : வேங்கடவன் பதிப்பகம்
133 அலெக்சாண்ட்ரா வீதி கொழும்பு-6 இலங்கை,
அச்சிட்டோர் : டார்வின் பிரிண்டிங் வேர்க்ஸ்
3, வேனல்ஸ் ரோடு, எழும்பூர் சென்னை-8
உரிமை : ஆசிரியருக்கே

முகவுரை
இது 1987ம் ஆண்டு ஒக்டேர்பர் 27ந் திகதிக்கு முன் எழுதியது. ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை கேட்டவுடன் அப்பப்போதே எழுதியவை. ஆகையினால் மொழிநடையில் வித்தியாசமிருக்கிறது. நீதியும் நேர்மையும் சாகாது நல்லது
நடக்க வேண்டும். எல்லோரும் வாழக்கூடிய நிலைமை எற்பட வேண்டும். என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். எனவே இதில்
சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை தெரிவித்துக் கொள் கிறேன்.
இப்படிக்கு
-छोuf

Page 4

IDSO (f GLITSOT G III difái
ஜூலை எண்பத்தி மூன்றைத் தமிழர்கள் மறக்க மாட் டார்கள், அதுபோல ஜூலை எண்பத்தேழையும் தமிழர்கள் மறக்க முடியாது. ஜூலை எண்பத்தி மூன்றை மறக்க முடி யாது. ஏனென்றால் அம்மாதம் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். ஜூலை எண்பத்தேழை மறக்க முடி யாது, தமிழுக்கென்று சொல்லிக் கொள்ளும் ஒரு உடன்பாடு அந்த ஜூலையில் ஏற்பட்டது. சுருங்கச் சொன்னால் ஒரு ஜூலையில் அழிவு துவங்கியது; இன்னுமொரு ஜூலையில் துவங்கிய அழிவுக்கு முடிவு வருவதுபோல் இருந்தது. தமிழர் கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு வருகிறது என்று சொல்லப்பட்டது,
எண்பத்தி மூன்று முதல் எண்பத்தேழு வரை யாழ்ப் பாணத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாக்கப்பட்டன. தமிழர்கள் அல்லோல கல்லோலப் பட்டார்கள். கைகொடுக்க ஒருவருமே இல்லை என்ற நிலையில் முழுக்க முழுக்க கடவுளையே நம்பி யிருந்தார்கள். அந்த நம்பிக்கையைக் கூட இறுதியில் கோயில் களைத் தகர்த்து நாசமாக்கினார்கள். கோயில்களிலே இருப் பவையெல்லாம் தெய்வங்களல்ல. பொம்மைகள் என்று அவர்கள் நினைத்தார்கள். அவை பொம்மைகளல்ல, தெய் வங்கள் என்பது இப்போது புரிந்திருக்கிறது. தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்ற உண்மை இப்போது தெரிய வந்திருக்கிறது. م. * * ؟.; r

Page 5
2
வாளை எடுப்பவன் வாளால் மடிவான் என்பதுபோல குண்டை எடுப்பவன் குண்டால் அழிவான் என்பதை ஒரு சில நிகழ்ச்சிகள் உணர்த்தியிருக்கின்றன.
தமிழருக்கு ஏதாவது நன்மை விளையுமென்றால் அது ஜே. ஆர் காலத்தில் வந்தால் அல்லாமல் இல்லை என்று தமிழர்களில் சிலர் நம்பியிருந்தார்கள். அவர்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
கலிங்கத்திற்குப் பின்பு அசோகன் தர்ம அசோகனானது போல வடமராட்சி குண்டு வீச்சுக்குப் பின்பு ஜெயவர்தன தர்மவர்தன ஆனார்;
தமிழர்களும் எழுபத்தைந்து கோடி இந்தியரும்; குண்டு வீசித் தகர்த்த கோயில் தெய்வங்களும்தான் அவருக்கு துணை போயின.
அந்த நம்பிக்கையில் துணிந்து நின்றார். துணிச்சல்” அவரை உயர்ந்த இடத்திற்கு ஏற்றி விட்டது. அவரைப் போல் ராஜதந்திரி இல்லையென்று உலகம் சொல்லுமளவுக்கு உயர்த்திவிட்டது.
இதனால் அவர் செய்த சிறு சிறு பிழைகளைக் கூட. தமிழர்கள் மறந்து விட்டார்கள்.
இதற்கு மேல் நிம்மதியாக இருக்கலாம் என்ற நம்பிக்கை தமிழருக்குப் பிறந்திருக்கிறது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அந்த ஆண்டவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தொன்பதாம் திகதி ஒன்பது ஐம்ப துக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

莺
பத்து மணிக்கு முப்பத்தாறு விமானங்களில் மூவாயிரம் இந்தியத் துருப்புகள் யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் அமைதி ஏற்படுத்துவதே இப்படை அங்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையில் நாட்டில் ஆங்காங்கே வன் செயல்கள் தலையெடுத்தன. நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுலுக் குக் கொண்டு வரப்பட்டது. தெற்கிலே தலை தூக்கிய வன் செயல்களை அடக்க யாழ்ப்பாணத்திலிருந்த இலங்கை ராணு வம் கொண்டுவரப்பட்டது. V
ஒரு வாரத்திற்குள் நாடு சாதாரண நிலைமைக்குத் திரும்பி விட்டது.
ஆனால் வன் செயல்களினால் ஐநூறு கோடிக்குமேல் அழிவு என்று கணக்கிடப்பட்டது.
எண்பத்தி மூன்றில் சிங்கள மக்களைத் தவிர்த்துத் தமிழ ரைக் கொலை செய்தார்கள். எண்பத்தேழில் தமிழரைத் தவிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்த சிங்களவரைத் துன்புறுத் தினார்கள்:
ஒப்பந்தம் கையெழுத்தான அன்று அகில இந்திய வானொலி தமிழருக்கு விடிவு பிறந்துவிட்டது. தமிழர்கள் இனிமேல் இலங்கையில் சகல உரிமைகளோடும் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் வகை செய்கிறது என்று அறிவித்தது.
விடிவு வந்திருக்கிறது. இனிமேல் இருளுக்கு இடமில்லை என்ற நம்பிக்கையில் எண்பத்தி மூன்று ஜூலை முதல் எண்பத். தேழு ஜூலை வரை தமிழர்கள் இழந்தவற்றை மீண்டும் அடைய முடியுமா என்று நினைத்துப் பார்த்ததன் விளைவே இந்த சிறு நூல்,

Page 6
4
எண்பத்து மூன்று பூசல்களுக்கு முன்பு ஒரு பெண்மணி இலங்கை வானொலி தமிழ்ப் பகுதிக்குத் தலைவராகவிருந் தார். அவர் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் அந்த பாரதியை நினைவூட்டின.
பத்து ஆண்களுக்கு ஈடு கொடுக்கும் திண்மையிருந்தது: இனிமையாகப் பேசுவார். அந்த இனிமையிலும் ஒரு தாய்மை இழையோடியது. அந்த அம்மாவின் தலைமை யில் தமிழ் செங்கோலோச்சியது என்று சொல்லலாம், தமிழுக் கென்று எத்தனையோ ஒலிபரப்புகள் இருந்தன.
இரண்டு உள்நாட்டு ஒலிபரப்புகள். ஒரு ஆசிய ஒலி பரப்பு, ஒரு தென்னிந்திய ஒலிபரப்பு, ஒரு மத்திய கிழக்கு ஒலிபரப்பு, ஒரு இரவு ஒலிபரப்பு. காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை எத்தனையோ நிகழச்சிகளைக் கேட்க முடிந்தது.
எண்பத்திமூன்று ஜூலைக்குப் பின் தமிழர்கள் என்னென்னவெல்லாம் இழந்தார்கள். தமிழ் என்னென்ன வெல்லாம் இழந்தது என்று கணக்கிட முடியாது. கணக்கி லடங்காத அளவு இழப்பு தமிழுக்கு ஏற்பட்டது. தமிழர்கள் தங்கள் சொந்தங்களையிழந்தார்கள்; பதவிகளை இழந்தார் கள். கணவன் மனைவியை இழந்தான் மனைவி கணவனை இழந்தாள். தமிழ்ப் பெண்கள் கற்பை இழந்தார்கள். பெற் றோர் பிள்ளைகளை இழந்தார்கள். பிள்ளைகள் பெற்றோரை இழந்தன. அண்ணன்மார் தம்பியரையும், தம்பிமார் அண்ணன் மாரையும், சகோதரர்கள் சகோதரிகளையும் பிரிந்தார்கள்.
உறவுகள் பிரிக்கப்பட்டன. பெற்றோர் சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு இங்கேயே இருந்தார்கள்.

5
எண்பத்தி மூன்றிலிருந்து எண்பத்தேழுவரை வேதனை யைக் காணாத வீடு இங்கில்லை.
அவர்கள் எவ்வளவு வேதனையில் வெந்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்,
உடன்பாடு கையெழுத்தான மறு வாரத்தில் யாழ்ப்பாணத் திலிருந்த பெரும்பாலான பெற்றோர் கொழும்புக்கு ஓடி வந்தார்கள்.
இவர்கள் ஏன் கொழும்புக்கு வந்தார்கள். இங்குதான் பெத்த மனம் பித்து என்பது புரிகிறது.
பல வருடங்களுக்கு முன் பிற நாட்டுக்கு அனுப்பிவைத்த பிள்ளைகளோடு ஓரிரு நிமிடம் பேசிக்கொள்ளலாம் என்று இரவிரவாக கொழும்பிலுள்ள சொந்தக்காரர் வீடுகளில் தங்கி, தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தார்கள்.
சில தாய்மார் பிள்ளைகளைப்பார்த்து பத்து வருடங் களுக்கு மேலாகின்றன என்றார்கள். இன்னும் சிலர் ஐந்து வருடங்கள் என்றார்கள். பிள்ளைகளோடு பேசிய பின்பு அந்த ஆறுதலில் பெற்றோர் நிம்மதியோடு திரும்பிச் சென்
றார்கள்.
ஒரு ஊழிக்காலம் முடிந்து அமைதி ஏற்பட்டது போன்ற நினைப்பு அவர்களுக்கு. அக்கினியை கக்கிய எரிமலை இப் போது அமைதியாயிருக்கிறது. இது எப்போதும் இப்படியே இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. இந்த ஆசை நிராசையாகிவிடக் கூடாது, இனிமேல் நிரந்தரமாக நாட்டில் நிம்மதி ஏற்படும் என்று நம்பியிருந்தார்கள் .
எண்பத்திமூன்று பூசலுக்குப் பின்பு தமிழர்களை எல்லோ ருமே சந்தேகக் கண் கொண்டே பார்த்தார்கள். இதற்கு வானொலி மடடும் விலக்கல்ல. நம்பிக்கையோடு அவர்கள்

Page 7
எண்ணங்களை செயலாக்கக்கூடிய ஒருவர் வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள்; ஏற்கனவே எங்கேயோ விருந்து கொண்டுவந்த ஒருவரை மேலதிக இயக்குநராக்கி ஏற்கனவே அங்கிருந்த அந்த அம்மாவை மாற்றி விட்டார்கள். அவர் வருகை ஒருவருக்கும் பிடிக்கவில்லையென்றாலும் எதிர்க்க முடியாத நிலையில் வாளா இருந்து விட்டார்கள்.
வந்தவர் ஏதாவது புதிதாக செய்ய வேண்டுமென்று நினைத்து தனித்தனியேயிருந்த இரண்டு சேவைகளை ஒன்றாக்க ஆலோசனை சொன்னார். எனவே இரண்டு சேவை களும் ஒன்றாக்கப்பட்டன. இதற்குச் சில நாட்களுக்கு முன்பு இரண்டு மணிநேர தென்னிந்திய சேவை நிறுத்தப்பட்டது. இன்னமும் குறையப் போகிறது. மெல்ல தமிழ் இனிச்சாகும் என்று பலர் மனம் நொந்தார்கள்.
முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போல தமிழனைக் கொண்டு தமிழை ஒதுக்கினார்கள்.
இரவு ஏழு முப்பதுக்கு ஆரம்பமாகி பத்து முப்பதுக்கு முடிந்த மூன்று மணித்தியாலங்களும் ஓரிரு மாதங்களில் நிறுத் தப்பட்டன. நாலு முப்பதுக்கு ஆரம்பமான ஆசிய நிகழ்ச்சி கள் ஐந்து மணிக்கு ஆரம்பமாயின. இவ்வாறு தமிழ் கேட்பா ரற்று அனாதையாக்கப்பட்டது.
தமிழுக்காகப் பேச ஒருவருமே இல்லாத நிலை. முன்வந்த ஒரு சிலரை பேச முடியாமலாக்கி விட்டார்கள் ராஜ்த்துரோகி கள் என்று அவர்கள் கணிக்கப்பட்டார்கள். இம்மென்றால் வன வாசமும் அம்மென்றால் இடமாற்றமும் கொடுக்கப்பட்டன. இவ்வாறு கறையான் மெல்ல மெல்ல அரிப்பது போல தமிழின் பல வேர்கள் முற்றாக அரிக்கப்பட்டன. இருக்கும் ஒன்றிரண்டு கூட நிலைக்குமா ? என்பதற்கு உறுதியில்லாத நிலை உண்டாயிற்று.

7
தன் எண்ணங்களுக்கு ஒத்துவராதோரை ஒழிக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டன.
யார் குத்தினாலும் பரவாயில்லை. அரிசி கிடைத்தால் போதும் என்பது போல யார் எய்தாலும் சரி எதிரி மடிந்தால் போதும் என்பது ஒன்றே குறிக்கோள். இந்தக் குறிக்கோளை அடைய பரம்பரை விரோதியாயிருந்தால் கூட தன் காரியம் முடியும்வரை அவனைப் பயன்படுத்திக் கொள்ளும் ராஜ்தந் திரம். இப்படி இங்கு பல இருந்தன.
மனசாட்சியில்லாதவன் இன்றைய மனிதன். நண்ப னைப்போல இருப்பான், அடுத்த கணம் மாறி விடுவான். தான் ஆசைப்படுவதற்கு தனக்கு அருகதையுண்டா ? என்பதை அவன் நினைத்துப் பார்ப்பதில்லை. அருகதையுண்டோ இல்லையோ அது வேண்டும். அது வந்துவிட்டால், அண்ணன் வருவாய்க்கு வழி, மகளுக்கு உத்தியோகம், மருமகனுக்கு வேலை, சின்ன வீடுகளுக்கு வழி, இவற்றைத் தவிர நல்ல வழியில் அந்த மூளை வேலை செய்வதே இல்லை. இந்த களையெல்லாம் எடுக்கப்படல் வேண்டும். இந்தக் கறையான்கள் அழிக்கப்பட்டாலன்றி தமிழுக்கு விடிவு கிடையாது. ኁ
எண்பத்தி நான்கு முதல் வானொலியில் நல்ல நிகழ்ச்சி என்று ஒன்றுமில்லை. வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு செய்திகளை பொய் பொய்யாகச் சொல்லி மக்களின் அதிருப் தியைத் தேடிக்கொண்டிருக்கிறது. அத்தி பூத்தாற்போல எப்போதாவது ஒரு புது நிகழ்ச்சி வரும். வந்தாலும் அது நிகழ்ச்சியாக இல்லை. செய்தி சேகரிப்பவர் தயாரிப்பாள ரானால் அது நிகழ்ச்சியாக இருக்காது, அறிவித்தல்தான். வானொலிக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிலைமரீஇப் போது நிகழச்சிக்காகத்தான் வான்ெர்லி என்றாகி விட்டது. எப்படி தயாரிக்கிறார்களோ அதுதான் தயாரிப்பு, எப்படி

Page 8
8
வாசிக்கிறார்களோ அதுதான் வாசிப்பு; நிர்வாகத்தைப் பொருத்தமட்டில் பிச்சைக்காரர் கூரை வேய்ந்த கதை தான். இப்படியிருக்கும்போது எப்படிக் கலை வளரும். பண்பாடு மிளிரும், இங்கு நாய்களே சேலை கட்ட ஆரம்பித்து விட்டன. ஆனால் ஒரு சிலருக்கு அந்த நின்ைவே இன்னும் வரவில்லை.
எட்டு மணிக்கு வாத்திய விருந்து. ஒவ்வொரு நாளும் ஒரே நிகழ்ச்சி. இதுவரை ஆயிரம் முறை ஒலிபரப்பாகியிருக்கும். நாடகம் என்றால் அராலியூர் சுந்தரம் பிள்ளை மட்டும் தான் எழுதுவார். எப்போதாவது ஒரு ஜெயலிலாவின் நாடகம் கேட்கும்; இப்படி ஒரு சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கு என்றாகி விட்டது வானொலி. நாடகங்களில் சின்ன வீடென் றும்,பெரிய வீடென்றும் பல வீடுகள். அவற்றைப் பராமரிக்கவே இந்த நாடகங்கள். தரத்திற்கு பஞ்சம், நடிப்புக்குப் பஞ்சம் இப்படி இப்போது எத்தனையோ கலைப் பஞ்சங்கள்.
செய்தி கேட்க முடியாமலிருக்கிறது. சிலர் முதுகெலும்பு வளைந்திருப்பது போல அவர்கள் தமிழும் வளைந்திருக்கிறது. அவர்களுக்குத் தன் வளைவு தெரியவில்லையென்றாலும். வாசிப்பவராவது கண்டுபிடிக்க வேண்டாமா ? வாசிப்பவர்கள் அந்த நிலையிலில்லை. என்ன கொடுக்கப்படுகிறதோ அதை வாசிப்பதுதான் அவர்கள் வேலை, வாசித்து முடித்து விட்டால் போதும்.
எப்படி வாசித்தாலும் சரிதான். செய்தியாகக் கேட்டாலும் சரி. செத்த வீட்டறிக்கைபோல் வாசித்தாலும் சரி, உள்ளது சாண். அதை வைத்துக்கொண்டு முளம் போட முடியாது என்பது சிலருக்குத் தெரியாது.
உலகில் எல்லா நிலையங்களிலும் செய்திகள் இடம் பெறு கின்றன. ஆனால் தமிழைப் பொருத்தமட்டில் எல்லோரும் தமிழ்நாட்டை எதிர்பார்ப்பது சகஜம். டெல்லி, சென்னை,

9
திருச்சி ஆகிய நிலையங்களிலிருந்து செய்திகள் தமிழில் ஒலி பரப்பாகின்றன,
இரண்டாவது உலக யுத்தம் நடக்கும்போது செய்தி வாசித்த சாம்பசிவன் இன்னமும் சில வேளைகளில் செய்தி வாசிக்கிறார். ஒலிபரப்புத் துறையில் இவருக்குத் தாமிர பத்திரம் வழங்கி இந்திய அரசாங்கம் கெளரவித்தது. அவர் வாசிப்பு இப்போது தெளிவாக இல்லை. செய்தி வாசிப்பதை இனிமேல் அவர் தவிர்த்துக் சுொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால்தான் அவர் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வ தாக முடியும்.
டெல்லியில் வெங்கட்ராமன் விஜயம் போன்ற சிறந்த செய்தி வாசிப்பாளர்கள் முன்பு இருந்தார்கள். எப்போதாவது வால் வெள்ளி முளைப்பதுபோல் வெங்கட்ராமன் இப்போது வந்து சென்று விடுவார். விஜயம் தனது நாற்பதாவது வயதில் புற்று நோயினால் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அவர் விசிறிகளில் ஒருவரும் உயிர் துறந்தார். விஜயம் எப் போது செய்திகளோடு வருவார் என்று வானொலிக்கருகில் காத்திருந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவனாக என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சிலர் செய்திகளை வாசிப்பது என்கிறார்கள். சிலர் வாசிப் பவர் என்று சொல்கிறார்கள். இதனால் ஒரு போராட்டமே. நடந்தது.
தேசிய சேவையில் அமைப்பாளராகவிருந்த ஒரு தமிழ் டாக்டரிடம் வாசிப்பது என்று டெல்லியிலும் வாசிப்பவர் என்று கொழும்பிலும் சொல்லுகிறார்களே, நீங்களும் வாசிப்பது என்று சொன்னால் என்ன ? என்று ஒரு நாள் கேட்டுவிட் டேன். அவர் "என் அறிவிப்பாளர்களை நான் மிருகங்க ளாக்க விரும்பவில்லை; நீ டைரக்டராக வந்த பின்பு அவ்வாறு மாற்றிக்கொள்' என்று சொன்னார். யான் எனது என்னும்

Page 9
10
செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்ற குறளைச் சொல்லி, வாசிப்பவர் என்பதிலுள்ள-ஆர், உயர் வைக் குறிக்கிறது, வாசிப்பவரே தன்னை உயர்த்திக் கொள்ள லாமா ? என்று அவரிடம் கேட்டேன். அவர் அப்போதும் ஏற்றுக்கொள்ள மறுத்தார், வாசிப்பது வினை முற்று அல்ல, பெயரெச்சம், எப்படி வாசிப்பவர் மிருகமாவார் என்றேன்.
அதற்குமேல் அவர் பேசவே மறுத்து விட்டார்.
எங்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வாசிப்பவர் வாசிப்பது பிரச்சனை அடுத்தவாரம் குமுதத்தில் வெளிவந்தது. வாசிப்பது தான் கூடப் பொருத்தம் என்று எழுதியிருந்தார்கள். சஞ்சிகையை வாங்கிக் கொடுத்தேன். அப்போதுகூட அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவருக்குப் பின்பு இருவர் டைரக் டர்களாக வந்தார்கள். ஆனால் வாசிப்பவர் வாசிப்பவராகவே
இருக்கிறது.
ஒலிபரப்பாளராகவிருந்தால்தான் இந்த உண்மை புரியும், தானே வாசிப்பவர் என்று தன் பெயரையும் சொல்லி செய்தி களை வாசிக்கும்போது வாசிப்பவர் குறுகிப் போய்விடுவார்.
வாசிப்பவர் என்று ஒருவர் சொல்ல வேறொருவர் வாசித் தால் சரி, அல்லது சொல்பவரே வாசிப்பதென்றால் வாசிப்ப தென்றே சொல்வது நல்லது. இந்த உண்மை சிலருக்குப் புரிவதில்லை.
பணியுமாம் என்றும் பெருமை என்பது குறள்.
இப்போதும் டெல்லியில் பலர் வாசிக்கிறார்கள். சுவர்ண லதா சுப்பிரமணியமும் ஹேமா சத்திய மூர்த்தியும் பரவா யில்லை. சரோஜ் நாராயணஸ்வாமி பல வருடங்களாக வாசிக்கிறார். மற்றவர்கள் ஒருவரும் நினைவில் நிற்பதில்லை. ஹேமா சத்தியமூர்த்தி சென்னையிலிருந்து இப்போது டெல்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஹேமா சத்தியமூர்த்

11.
தியும் சுவர்ணலதாவும் நல்ல செய்தி அறிவிப்பாளர்களாக வரக் கூடிய அறிகுறிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஹேமா சத்தியமூர்த்தி தனது சமஸ்கிருத உச்சரிப்பு தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
டெல்லியில் ஆங்கிலச் செய்தி வாசித்த மெல்வில்-டி- மெல்லோவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கைநிறைய ஊதியம் கொடுத்தார்கள் நாட்டில் முக்கியமான நிகழ்ச்சி ஏதும் ஏற்படும்போது செய்திகளோடு டிமெல்லோ வந்து விடு வார். சீனாவோடு சண்டை மூண்டபோது, பாகிஸ்தானோடு போர் நடந்தபோது டிமெல்லோ ஒரு நாளைக்குப் பல தடவை கள் வந்தார் டிமெல்லோ பண்டித நேருவின் நெருங்கிய நண்பரென்றும், சில விஷயங்களை அவரோடு பேசி நேரு தெரிந்து கொள்வாரென்றும் சொன்னார்கள்.நேருவின் இறுதி ஊர்வல வர்ணனையைக் கேட்டிருந்தால் ஒலிபரப்பில் அவர் ஒரு இமயம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள். சில வேளை சுர்ஜித்சேன் என்றொருவர் வாசிப்பார். கிட்டத்தட்ட. டிமெல்லோ வாசிப்பதைப் போலவே இருக்கும். குறைக்க வேண்டிய இடங்களில் குறைத்து நிறுத்த வேண்டிய இடங் களில் நிறுத்தி வாசிக்கும் அழகுக்கு பதினைந்து நிமிடம் உட் கார்ந்து கேட்பதில் நஷ்டமில்லை.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர் மூண்ட நேரம். பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த நான் வீதிக்கடை வானொலியில் டிமெல்லோவின் குரலைக் கேட்டு மேலே செல்லாமல் இறங்கி விட்டேன். இறங்கி வீதி ஓரமாக பஸ்ஸ9க்காகக் காத்திருப்பவனைப்போல வானொலியைக் கேட்டுக் கொண்டு நின்றேன்.
பதினைந்து நிமிடங்களுக்குப்பின் பேச்சு முடிந்தது. கலையகத்திலிருந்த அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் சொன்னார்.
**இதுவரை டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசக் கேட்டீர்கள்'

Page 10
2
என் ஏமாற்றத்தை எண்ணி, எனக்கே சிரிப்பு வந்தது. ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆங்கிலத்தைக் கேட்டு பிரமித்துப் போனேன். டிமெல்லோ வாசிப்பது போலவே இருந்தது.
இவ்வாறு டிமெல்லோவின் குரலால் கட்டுண்ட பலர் இருந் தார்கள், இப்போதும் பலர் வாசிக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் திருச்சியில் சந்தித்த சந்திர லேக்கா இப் போது டெல்லியில் செய்தி வாசிக்கிறார். அனால் ஒருவரும் நினைவில் நிற்பதில்லை
சென்னையிலும் பலர் வாசிக்கிறார்கள். இப்போதுள்ள மாநிலச் செய்திகள், பிராந்தியச் செய்தியாகவிருந்த காலத் தில் பார்வதி ராமதாதன் என்றொருவர் நன்றாக வாசித்தார். நாடகங்களிலும் அவர் குரலை இனம் கண்டு கொள்ள முடிந்தது.
இப்போதும் பலர் வாசிக்கிறார்கள். அவ்வளவு பேரிலும் ஜெயா பாலாஜி விரைவாகவும் தெளிவாகவும் வாசிக்கிறார். ஆனால் வளர்வதற்கு இன்னும் நிறைய இடமிருக்கிறது முன்பு டெல்லியிலிருந்த விமலா ஜெயராமை இப்போது மாநிலச் செய்திகளில் கேட்க முடிகிறது.
டெல்லி செய்திக்குப் புகழ் பெற்றது.
அந்தப் புகழ் இவர் சென்னையிலிருந்தால் சென்னைக்கு வந்துவிடும் குரலை அடக்கி அருமையாக வாசிக்கிறார். இவர் வாசிக்கும்போதுதான் செய்தி செய்தியாகவிருக்கிறது. மொத்தத்தில் விமலா ஜெயராமனின் செய்திகள் கவிஞரின் கவிதை போன்றிருக்கிறது. பத்து நிமிடம் வானொலி அருகிலி ருந்து செய்தியைக் கேட்காவிட்டாலும், விமலா ஜெயராமனின் வாசிப்பை கேட்கலாம். பிழை பிழையாய் தட்டுத் தடுமாறி வாசித்தால்கூட அதில் ஒரு அழகிருக்கிறது. ஆனால் ஒன்று,

13
இவர் தன் சமஸ்கிருத உச்சரிப்பை நிறுத்திக்கொள்ள முயல
வேண்டும். விமலா ஜெயராமன் போன்றோரையாவது
பார்த்து செய்தி வாசிப்பவர்கள் நன்றாக வாசிக்க முயல
வேண்டும். ஒலிபரப்பு ஒரு கலை, சுடச்சுட ஒளிவிடும் தங்கத்
தைப் போல, வெட்ட வெட்ட கூராகும் கத்தியைப் போல
எவ்வளவு முயற்சி எடுக்கிறோமோ அவ்வளவு அத்துறையில் வெற்றி பெறலாம்.
கலையுலகில் போட்டியிருக்க வேண்டும். அப்போதுதான்
கலை வளரும். ஆனால் தங்கள் இயலாமையினால் கலை
யுலகில் கொலையை வளர்க்கக் கூடாது. கொலையை வளர்த்தால் கலை செத்துவிடும்:
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் நேய அறிவிக்கும் அந்த அம்மைக்கு ஓர் விண்ணப்பம்,
கலைவாணியே !
உன் கலையுலகை நீ ஒரு முறை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கலை வளர வேண்டிய இடத்தில் அது வளர வில்லை, அங்கு காமமும் குரோதமுமல்லவா தலைவிரித்தாடு கிறது.
கோயிலாய் இருக்க வேண்டிய இடங்கள் குப்பை மேடுகளா யிருக்கின்றன.
கலையைக் கட்டிக் காக்க வேண்டியவர்கள் காமப் பேய்க ளாயிருக்கிறார்கள்.
கலை ஞானமே இல்லாத கட்டாந்தரைகளுக்கு முடி சூட்டி வைத்திருக்கிறாய். அந்தா தர்பரில் நடப்பது என்ன வென்று ஒரு முறை எண்ணிப் பார்த்தாயா ? ஒவ்வொரு கலைக் கூடமும் ஒவ்வொரு அந்தப்புரமாயிருக்கும் ரகஸ்யம் உனக்குத் தெரி வில்லையா ? அந்த ஆதாமையும் எவாளை

Page 11
14
யும் நீ கண்டிருக்க மாட்டாய். நீ விரும்பினால் அவர்களை அங்கே பார்த்து விடலாம். கலைக்காக நீ நியமித்திருக்கும் அந்த காமராஜனைப் பற்றி என்ன கேள்விப்பட்டாய். அங்கு கலை வளர்ந்ததாகப் பேச்சுக்கூட இல்லையே ! அங்கு காமத் திற்காகப் போடப்பட்டிருக்கும் அந்த மேடையில் இதுவரை எத்தனைபேர் அரங்கேற்றம் நடத்தினார்கள் என்பது உனக்குத் தெரியுமா ?
கலை யென்ற போர்வையில் அவன் விரித்திருக்கும் அந்த வலையில் எத்தனை புள்ளி மான்கள் விழுந்துவிட்டன. அவற். றின் தொகையாவது உனக்குத் தெரியுமா ? கலை என்று காம மல்லவா அங்கு வளர்கிறது. காமராஜன் ஆட்சியில் ராம ராஜன்கள் இருக்க முடியாதா? ஏன் விழிகளை மூடிக்கொண்டு ஊமையாயிருக்கிறாய் ?
நாவிலே குடியிருப்பவள் நீ. அந்த நாவினால் இதுவரை நல்லது நடந்ததுண்டா ? ஒவ்வொரு நாளும் நாச வேலையே யன்றி வேறேதும் நடந்ததில்லையே !
கலைக்காக நீ ஏன் கொஞ்சம் கருணை காட்டக் கூடாது.
அந்த நாக்கை அடியோடு வெட்டிவிடு. நாவு அசையாது விட்டால் நாசவேலை அற்றுப் போகும். நாட்டிலே நல்லது நடக்க வழி பிறக்கும்.
மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் வயது ஏறிக்கொண்டே போகிறது. அவன் சில வேளை நூறாண்டுகள் சீவிக்கலாம். அல்லது அதற்கு முன்பு இறந்தும் போகலாம்.
சாவு எப்போது வரும் என்று ஒருவரும் இதுவரை சொன்னதில்லை.
சில வேளை அது இன்றும் வரலாம். அல்லது நாளை நடக்கலாம், அதற்கு முன் நல்லது செய்ய வேண்டுமென்று எல்லோரும் சொன்னார்கள்

15
எப்போதாயினும் அந்தக் கூற்றுவன் வருவான் அப்போதந்தக் கூற்றுவன் தன்னை போற்றவும் போகான் புகழொடும் போகான் நல்லார் என்னான் நல்குரவறியான் அதனால்,
ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும், நன்றும் இன்றே செய்யவும் வேண்டும், இன்றும் இன்னே செய்யவும் வேண்டும், என்று அந்தக் கபிலன் சொல்லிச் சென்றான். ஆகையினால் எனக்கோர் ஆசை. இவ்வளவு காலமும் இந்த கலையுலகை ஒருவராலும் திருத்த முடியவில்லை. நாளை திருந்தும், மறு நாள் திருந்தும் என்று எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன.
வந்து போகும் ஒவ்வொருவனும் மற்றவனின் அப்பனாக இருக்கிறான். எனவே இவ்வளவு காலமும் அந்த இரண்டு கைகளிலும் வீணையையும் ஏட்டையும் ஏந்தியது போதும்.
அந்ந வீணையையும் ஏட்டையும் எறிந்துவிட்டு அந்தக்
கைகளில் வாளை எடு. t
இப்போது இங்குள்ள இந்த கலையுலகத்தையும் காம ராஜர்களையும் அழித்து ஒழித்துவிடு. உனக்கு இது புதிய தல்ல. மாமன் சொன்னதைத்தான் இப்போது நான் நினை வூட்டியிருக்கிறேன்.
இப்போதுள்ள கலையுலகு அழிந்தாலல்லாமல் கலை வளர இடமில்லை. புதிதாக ஒரு கலையுலகு உருவாகும் போது கலை ஞானம் உள்ளவராய்ப் பார்த்து முடிசூட்டு.அங்கு கலையைத் தவிர காமமோ குரோதமோ தலையெடுக்கா வண்ணம் பார்த்துக்கொள்.

Page 12
16
கலைபால் உள்ள பற்றினால் இதைச் சொன்னேன். கலைக் காக் உழைத்துக் கலையினால் அழிந்தவன் நான். ஏழை எப்போது விழிகளை மூடிக் கொள்ளப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சில வேளை உனக்குத் தெரிந்திருக்கும்.
கலையுலகு கலைக்காகத்தான், காமத்துக்காக அல்ல என்ற குறையில்லாமல் சந்தோசமாக நான் சாக விரும்பு கிறேன், என் சாவுக்கு முன்பு, எனது இந்த ஆசை நிறை வேற வேண்டும். அதை நீதான் நிறைவேற்ற வேண்டும்.
இப்படிக்கு அன்புள்ள
பக்தன்
மரம் பழுத்திருக்கும்போது சொல்லாமலே பறவைகள் வருகின்றன. பழம் முடிந்து விட்டால் இருந்த பறவையும் சொல்லாமலே ஓடிவிடுகிறது. என் தோட்டத்தில் இப்போது பழங்கள் இல்லை, ஆகையினால் அங்கு பறவைகள் இல்லை. பறவைகள் பறந்துசென்ற பின்பு அங்கு வானொலி ஒன்றுதான் மிஞ்சியிருக்கிறது.
பட்டி மன்றங்கள், இலக்கியப் பேருரைகள் அடிக்கடி இந்திய வானொலியில் இடம் பெறுகின்றன. ஒரு பட்டி
மன்றத்தில் பரதன், குகன், ஜடாயு ஆகியோரில் யார்மேல் :
நமக்குக் கூடுதலான நெகிழ்ச்சி ஏற்படுகிறது என்று பலர் பேசினார்கள். குகன் மேல் என்று பேசியவர் பேசும்போது எல்லோரையும் ராமன் கரையேற்றினான். ராமனையே கரை யேற்றினான் குகன் என்று சொல்லி முடித்தார். தீர்ப்பு வழங்கிய உயர் நீதிபதி இஸ்மைல் அவர்கள் கூடுதலான நெகிழ்ச்சி குகன் மேல்தான் என்று தீர்ப்பு வழங்கினார்.

17
அங்கு இடம்பெறும் சில விளம்பரங்கள் நினைத்து நினைத்து சிரிக்கக் கூடியனவாயிருக்கின்றன. ஒரு விளம், பரத்தில் ஒருத்தி எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது என்று சொல்லுவாள்.
** என்னைத்தானே' என்று ஒருவர் கேட்பார். அவள் சிரித்துவிட்டு 'இல்லை சுகந்த பாக்கை" என்று சொல்லும் போது சிரிக்காமலிருக்க முடியவில்லை. நிறைய விளம்பரங் கள் இடம் பெறுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக விளம்பரங் களை ஒலிபரப்பி நிகழ்ச்சிகளில் வெறுப்புத் தட்டச் செய்கி
றார்கள்.
சிலவேளை இரண்டு மூன்று விளம்பரங்கள் ஒரு விளம் பரம் போலிருக்கும். வித்தியாசம் கண்டு கொள்ள இடை வெளி கூட இல்லை. அனுபவம் இல்லாமையும், கற்பனைப் பிரயோகம் இல்லாமையும் தான் காரணம் என்று நினைக்கிறேன். கர்நாடக அறிவிப்புகள் நன்ருக இருக்கின்றன. ஆனல் சினிமாப் பாடல் அறிவிப்புகள் நன்றாக இல்லை. சென்னையில் ஜெயங்கொண்டானும், திருச்சியில் ராதாவும் அலட்டிக் கொள்ளாத இரண்டு அறிவிப்பாளர்கள். தனலட்சுமி கண்ட இரண்டு பேட்டிகளைக் கேட்டேன். அறிவிப்பாளர்கள் தோற்று விடுவார்கள். அவ்வளவு அருமையாக இருந்தன. இப்போது இலங்கையிலிருக்கும் இந்தியப் படைக்காக பிற் பகல் ஒன்று முப்பதுக்கு ஒன்றும், மாலை ஐந்து முப்பதுக்கு ஒன்றுமென இரண்டு நிகழ்ச்சிகள் சென்னையிலிருந்து ஒலி பரப்பாகின்றன. இந்த நிகழ்ச்சிகளை திருச்சி திருநெல்வேலி நிலையங்கள் அஞ்சல் செய்கின்றன. நிசழ்ச்சியென்று பார்க் கும்போது அவற்றில் ஒன்றுமில்லை. அந்தந்த வேளைக்கு எதையோ போட்டு சமாளிக்கும் நிகழ்ச்சி போன்றிருக்கின்றன
கற்பனையோ கடின உழைப்போ இல்லாமல் ஒலிபரப் பாகும் நிகழ்ச்சிகள் என்று தெரிகின்றன.

Page 13
18
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு அனுபவம் போதாது என்பது நிகழ்ச்சிகளிலிருந்து தெரிகிறது.
இந்த விஷயத்தில் இலங்கை வானொலியிடமிருந்து எடுப் பதற்கு அவர்களுக்கு நிறைய இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகள் யாருக்காக ஒலிபரப்புகிறார்களோ அந்தப் படை அமைதியை நிலை நாட்டவென்றே இலங் கைக்கு வந்தது. கொஞ்சநாள் அமைதி வருவது போல இருந்தது. கொழும்பிலிருந்து தமிழ்ப் பகுதிகளுக்கும், தமிழ் பகுதிகளிலிருந்து கொழும்புக்கும் மக்கள் பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்கள். சிறையிலிருந்த கைதிகளில் சிலர் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டார்கள்.
மாகாணச் சபைக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. நிர்வாக பொறுப்புக்கு சிவ ஞானம் நியமிக்கப்பட்டார். விடு தலைப் புலிகள் பத்மநாதன் வேண்டுமென்று கோரிக்கை விடுத் தார்கள். இதனால் இதன் இயக்கம் தடைபட்டது. ஒப்புக் கொண்டதுபோல் ஒன்றும் நடக்கவில்லையென்று திலீபன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணா விரதம் தொடங்கி
பதிமூன்றாம் நாள் அவர் இறந்து விட்டார்.
இந்தியா விடுதலைப் புலிகளைத் திட்டிக்கொண்டே இருந்தது. இதற்கிடையில் வீடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த புலேந்திரன் குமரப்பா ஆகியோரோடு பதினேழுபேரை இலங்கை கடற்படை கடலில் வைத்துக் கைது செய்தது, சிங்களப் பகுதிகளில் நடைபெற்ற கொலைகளுக்கு இவர்கள் தான் காரணமாய் இருந்தார்கள் என்று அவர்களை கொழும் புக்குக் கொண்டுவர அரசாங்கம் ஆயத்தம் செய்தது. இதை யறிந்த இவர்கள் எங்களை கொழும்புக்குக் கொண்டு செல்வ தற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நாங்கள் கொழும் புக்குக் கொண்டு செல்லப்பட்டால் சைனைட் உண்டு இறந்து விடுவோம் என்று தங்கள் தலைவருக்கு அறிவித்தார்கள்

19
தலைவர் இதைத் தன் அரசியல் தலைவர் மஹாத்யாவிடம் கூறி, தமிழருக்கு நாங்களே பொறுப்பு என்று வந்திருக்கும் இந்தியப் படை தளபதிக்கு மஹாத்யா அறிவித்தாராம்.
எந்த நிலையிலும் இவர்கள் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படாது என்றும் அவர் கேட்டுக் கொண்டாராம். இந்தியப் படைத் தளபதி இந்தியத் தூதுவருக்கு அறிவித்து இத்தியத் தூதுவர் ஜனாதிபதியோடு இது பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கொழும்புக்குக் கொண்டு செல்வதற் காக இவர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டார்கள்,
விமானம் ஒடு பாதையில் ஒடிக்கொண்டிருக்கும் போதே சைனைட் உண்டு பன்னிரண்டு பேர் இறந்து விட்டார்கள். எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே இறந்தார்கள். -s
இவர்களை கொழும்புக்குக் கொண்டு வரும்படி ஜனாதிபதி ஆணையிடவில்லையென்று அறிவிக்கப்பட்டது.
அப்படியானால் ஆணையிட்டது யார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
உங்களைக் காப்பாற்ற வந்திருக்கிறோம் என்று சொல் லும் இந்தியப் படையால் இந்தப் பதினேழு பேரின் உயிரை யும் காப்பாற்ற முடியாமல் போனது ஒரு பதட்ட நிலையைத் தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கியது.
இதற்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு திரு கோண மலையில் குடியேற்றப்பட்ட சிங்களவரை அகற்றுவதில் ஒரு சிலர் இறங்கினார்கள். இவர்கள் யாரென்று ஒருவரா லும் இதுவரை அறிய முடியவில்லை.
பல சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தீக் கிரையாக்கப்பட்டன. இதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை

Page 14
20
யென்றும் பூசா ராணுவ முகாமில் சித்தரவதை செய்யப்பட் டோர் செய்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இது நடைபெறும்போது யாழ்ப்பாணத்தில் புலிப்படை பிடித்து ஆறு மாதத்திற்குமேல் வைத்திருந்த ஏழு ராணுவ வீரர்களையும், காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலை யில் கடமையாற்றிய இருவரையும் தங்கள் பதினேழு பேரை கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சுட்டுக் கொன் றது. இதைக் கண்ட இந்தியப் படை விடுதலைப் புலிகளிட மிருந்து ஆயுதங்களை பறிக்கத் தொடங்கியது. எனவே இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை ஆரம்பமாயிற்று.
அமைதியை ஏற்படுத்த வந்த இந்தியப்படை இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் குலைத்து விட்டுத் தன் வல்ல மையைக் காட்ட முனைந்து நிற்கிறது. வரையறையில்லாமல் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருக்கிறது,
பணத்திற்கு வழி இல்லை, பொருட்களுக்கு வெளியே செல்ல வழியில்லை. இத்துடன் சண்டையும் நடந்தால், மக்கள் எங்கே போவது,
அன்றாடம் உழைத்து உண்பவன் உணவுக்கு என்ன செய்வான்
என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திண்ட்ாடிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளை விட்டுச் சென்று கோயில் களிலும் பள்ளிகளிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள், யாழ். நகரில் மட்டும் மூன்று லட்சம் அகதிகள் என்று சொல்லப்படு கிறது. முடிந்தவரை மக்கள் நகரை விட்டு வெளியேறுவதாகத் தெரிகிறது. இந்தியப்படை மக்களை வெட்டிக் கொலை செய்வதாகவும் டெண்களை கற்பழிப்பதாகவும் இலங்கை, ராணுவம் இந்திய ராணுவத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேல் என்றும் கொழும்புக்கு ஓடி வருவோர் விபரிக்கிறார்கள்.

21
ஊரடங்குச் சட்டத்தையும் போட்டு நிருபர்களையும் தடை செய்து இந்திய ராணுவம் பொதுமக்களை கொலை செய்கிறது என்று எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.
உணவு பொட்டலங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் விமானம் மூலம் இந்திய ராணுவம் போடுவதாக இந்திய வானொலி அறிவித்தது. இந்தத் துண்டு பிரசுரங்களில் உங் களுக்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்களாம்.
ஜூலை இருபத்தொன்பதாந்திகதி வந்திறங்கும் போது மாலை போட்டும், கை அசைத்தும் வரவேற்ற தமிழ் மக்க ளுக்கு நாங்கள் உங்களுக்காகத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை இந்திய ராணுவத் திற்கு ஏற்பட்டால் மக்கள் இந்திய ராவணுத்தை விரும்ப வில்லை என்பதே அர்த்தம் என்று தமிழர்கள் சொல்லு கிறார்கள்.
மக்களின் துன்பம் சொல்லிலடங்காது. புலிகள் சண்டையை நிறுத்தி பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று வேண்டுகோள் விடுத்தன. அத்தோடு மக்களைச் சுட வேண்டாம், பொது இடங்களைத் தாக்க வேண்டாம், நாம் பிடித்து வைத்துள்ள இருபத்தேழு பேரையும் விடுவிக்கிறோம் என்றும் கூறின. ஆனால் மக்களும் பொது இடங்களும் தாக்கப்பட்டன. ஆயு தங்களை ஒப்படைக்காமல் சண்டை திறுத்தம் கிடையாது என்று இந்தியா சொல்லியிருக்கிறது.
அமைதிக்காக வந்த படை இருபக்கமும் பேசி அமைதி யைக் கொண்டு வந்திருக்கவேண்டும், அது வரும்போதே மற்றைய இயக்கங்களோடு சேர்ந்து, புலிகளை ஒழிப்பது என்ற நோக்கத்தோடே வந்தது. மற்ற இயக்கங்கள் எட்டப்பன் வேலை செய்கின்றன. 6 +rizrp፡LL] ኃ"°'ኳ ه" وع

Page 15
22
இவர்கள் மக்களுக்கு கிளிநொச்சி வீதியில் செய்யும் கொடுமையை இந்திய ராணுவம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. இவர்களைத் தடுத்து நிறுத்தி மக்களை நிம் மதியாகப் போகவிடும் பொறுப்பு இந்தியப் படைக்கு கிடை யாதா ? அப்படியானால் அமைதிப்படையென்று ஏன் வந்தீர் கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இப்போதுள்ள நிலையில் தமிழ்ப் பகுதிகளுக்கு அமைதியே வராது போலிருக்கிறது. அங்கேயுள்ள உண்மை நிலை கூறப்படுவதே இல்லை. இந்திய வானொலிகள் பத்து நாட்களாக யாழ்ப்பானத்தில் அமைதிப் படை முன்னேறுகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக் கின்றன. முன்னேறுகிறது என்ற சொல்லுக்கும் அமைதிப் படைக்கும் என்ன சம்பந்தம் என்று புரிந்து கொள்ள முடிவ' தில்லை. அமைதிக்காக வந்த படை எங்கே முன்னேறுவது. போராட வந்த படையில்லையே இந்தியப் படை நாடு பிடிக்க வந்திருக்கிறது என்று கூட பேசிக் கொள்கிறார்கள்.
பி.பி.ஸி ஒன்றுதான் உண்மை நிலையை எடுத்துச்
அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வும் யாழ் நகரில் ஒரே குண்டு சத்தம் கேட்டதாகவும் பி.பி.ஸி அறிவித்தது. தான் பேச்சுக் கொடுத்தபோது படைத்தளபதி களில் ஒருவர் சண்டை பலகாலம் நீடிக்கும் என்று சொன்ன தாகவும் அதே பி.பி.ஸி கூறியது.
மறுநாள் இருபத்துநான்கு மணி நேரம் என்ற நிகழ்ச்சி யில் லண்டனிலிருந்து பி.பி.ஸி அறிவிப்பாளர் கொழும்பு நிருபர் ரெட்டியுடன் யாழ்ப்பாண நிலைமை பற்றி உரையாடி னார். அப்போது போர் தொடங்கி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாகி விட்டன இன்னமும் யாழ் நகர் புலிகள் வசமே இருப்பதாக அவர் கூறினார்.
புலிகளை அழிப்பதால் இந்தியா ஒரு நன்மையும் அடை யப் போவதில்லை, புலிகளை ஒதுக்கிவிட்டு யாழ்ப்பாணத்

23
திற்கு ஒரு நTளும் அமைதியைக் கொண்டுவர அவர்களால் முடியாது. புலிகளோடு சமரசம் பேசி அவர்களையும் சேர்த் துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் மக்கள் அமைதியாக வாழ வழி பிறக்கலாம், அல்லது யாழ்ப்பாணத்திற்கு அமைதியே இல்லாமல் போய்விடும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இந்தியா இறங்கிவர மறுக்கிறது. எண்பத்தி மூன்று முதல் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டோம். இப் போது இந்திய ராணுவத்தால் துன்புறுத்தப் படுகிறோம். இந்தியா தமிழரைக் காக்க வரவில்லை. திரிகோண மலை யைக் கேட்க வந்திருக்கிறது என்றுகூட மக்கள் பேசிக்கொள் கிறார்கள்.
பேசும் மக்கள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சண்டை நடந்து கொண்டேயிருக்கிறது. யாழ்ப்பாண செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் எந்த நாடாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பி.பி.ஸி மூலம் அறைகூவல் விடுத் திருக்கிறார்.
சண்டையில் அகப்பட்டுத் தத்தளிப்போர் துன்பம் தீர வழியில்லை.
யாரிடம் போய் சொல்லுவது
தேவர்களே இறங்கி வாருங்கள். அமைதிக்காக வந்த இவர்களால் அமைதி குலைந்த இந்த அவலத்தை பார்க்க வாருங்கள். வலியான் மெலியானை அடிக்கும் இந்த துன் பத்தை ஒருமுறை வந்து பாருங்கள். தர்மம் அழியும்போது பிறப்பேன் என்று கண்ணன் சொன்னானே. அந்த கண்ண னைக் கூப்பிடுங்கள். அவன் கீதை சொன்ன குருஷேத்திரமாக இந்தத் தமிழ்ப் பூமி ஆவதை நிறுத்தச் சொல்லுங்கள். அந்தச் சக்கரத்தை ஏன் கையில் வைத்திருக்கிறான். அதை எறிந்து அமைதியைக் கொண்டுவரச் சொல்லுங்கள். மகிஷியைக்

Page 16
24
கொன்று தேவர்களைக் காத்தான், இரணியனைக் கொன்று தர்மத்தையும் தன் நாமத்தையும் காத்தான். பஸ்மாசுரனைக் கொன்று நீலகண்டனைக் காப்பாற்றினான். அவனுக்கு இங்கு தேம்பி அழும் இந்த மக்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைக் காப்பாற்றச் சொல்லுங்கள்.
ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கும் இந்த மக்களின் உயிரைக் காப்பாற்ற ஓடிவரச் சொல்லுங்கள். உயிர் போன பின்பு அவன் வருகை பயனற்றுப் போகும். அவனை உடனே வந்துவிடச் சொல்லுங்கள். அந்த சக்கரத்தினால் இங்கு சாந்தி பிறக்கட்டும். அதனால் இந்தத் தமிழர் இங்கு அமைதியில் வாழட்டும்.
 


Page 17
|- |-| " |-
ராஜகுரு ே
கனகரெட்ன
D60Tib(8
(8LITě
★

+---+ +----
—鼻s——劑==劑——劑——*「*「*「=*
* | |
== Niffe H =
சனுதிபதி
ாத்தின்
T
;ဌါ6\)