கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தில் தமிழ் நாடகம்

Page 1


Page 2

幫
莒
堑

Page 3


Page 4

ಖ್ವ.: தமிழ் நாடகம்

Page 5
ஈழத்தில் தமிழ்நாடகம் டு அந்தனி ஜீவா முதற்பதிப்பு ஏப்ரல் 1981 அச்சும் வெளியீடும் அகரம் சிவகங்கை விலை: ரூ 4-00

psor GifB Guyrfrui Sr. GIGITLDa) B.A., L.T.
ஈழத்தில் தமிழ்நாடகம் என்ற நூலை அந்தனிஜீவா எழுதியிருக்கிருர், அதன் உள்ளடக்கம் மிகவும் கனமாகவே இருக்கிறது. உலக நாடகப் பின்ன ணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சியை அந்தனி ஜீவா ஆராய்கிருர், நூலின் முதற்பகுதி யில் ஷேக்ஸ்பியர், பெர்னுட்ஷா,இப்ஸன் முதலிய நாடகப் பேராசான்களின் நாடகங்களில் சமூகதாக் கத்தையும், இலக்கியப் போக்காக மக்கள் மனதை மாற்றிய பான்மையையும் சுட்டிக் காட்டுகிருர்,
மரபு வழியிலான கூத்து தெருவில் நடிக்கப்பட்டு வந்தது. சாதாரண மக்களது ரசனையை இது தன் பால் ஈர்த்துக் கொண்டது. நாட்டுப் பாடல்கள், நாட்டுநடனம் இரண்டும் கலந்த கலவையாக இது இருந்தது. ஆங்கில நாடகங்களைக் கற்ற நடுத்தர மக்களில் ரசனை வேறுபாட்டால் வசனம் முக்கியத் துவம் பெற்றது. நாட்டுப் பண்பாடும் அன்னியர்

Page 6
பண்பாடும் கலந்ததோர் புதிய பாணியாக புதிய நாடகங்கள் தோன்றின. இம்மாற்றம் FOLK ART -POPULAR ART 6tsi, D L IT paa Gbit didi சென்றது. புத்தர் ஜாதகக் கதைகளும், ஷேக்ஸ் பியர் நாடகங்களும் தமிழில் ஜனரஞ்சகமான நாட கங்களாக வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜனரஞ்சக நாடகங்களைப் பரப்பிய முன்னுேடி சங்கரதாஸ் சுவாமிகள். அவர் இசை முக்கியத்துவம்வாய்ந்த கூத்துப் பணியின் வளர்ச்சி யாக மேல்நாட்டு நாடகப் பாணியோடு சேர்ந்த POPULAR DRAMA66 9inocypa, ČLu6ž56ř. இதன் தாக்கம் இலங்கையிலும் இருந்தது. மேல் நாட்டுப் பாணியை முற்றிலும் தழுவி மக்கள் பேசும் மொழியை சிறிது இலக்கியப் போக்கில் செம்மை செய்து வசனத்துக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்ட பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங் கள் தமிழகத்து நகர்ப்புறங்களில்நடுத்தர மக்களின் ரசனையைக் கவர்ந்தது. அமெச்சூர் நடிகர் குழுக் கள் பல தோன்றின. பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கிலம் கற்றவர்களுடைய ரசனையை ஜனரஞ்சக மாக்கி நூற்றுக்கணக்கான நாடகங்களை எழுதினுர். இவரை குருவாகக் கொண்டு ஈழத்தில் கலையரசு சொர்ணலிங்கம் பம்மலின் நாடகங்களை மேடை யேற்றினுர், ஈழத் தெருக்கூத்து, நகரங்களில் மறை வதற்கு இந்நாடகங்கள் காரணமாயின. நவீன நாடகங்களின் முன்னுேடி இவர், நாட்டுக்கூத்து பற்றிய குறிப்பிட்ட ஆய்வுகளை பேராசிரியர் கண பதிப்பிள்ளை நிகழ்த்தி ஒரு நூல் எழுதினர்.நாட்டுக் கூத்தில் இரு வகைகளை அவர் சுட்டிக்காட்டினுர், தென்மோடி, வடமோடி என்பவை அவை, பரம் பரையாக தமிழகத்திலும் ஈழத்திலும் ஆடப்பட்டு வந்த பாணி தென்மோடி என அழைக்கப்பட்டது, வடமோடிக் கூத்து தமிழகத்திலிருந்து 40 ஆண்டு களாகத் தடையின்றி வந்த மக்களால் கொண்டு

வரப்பட்டது. வடமோடி யாழ்ப்பாணத்தில் பரவி யது என்று கணபதிப்பிள்ளை எழுதினர்கள்.
நாட்டுக்கூத்தை கிராமப்புறத்து விவசாயிகள் ஆடி ணுர்கள். இது கிராமியக் கலைவடிவம். இதனை தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு கிறிஸ்த வக்கூத்தாக ஆடினுர்கள், சிங்கள மக்களது நாடக மரபில் பல மாற்றங்களை பார்ஸி இசை மரபு ஏற் படுத்தியது.
கிராமியக் கலை வடிவங்கள் மாற்றமடைந்தன. தமிழகத்தில் மாற்றமடைந்த கூத்து புதிய உருவில் தமிழக நாடகக் கலைஞர்களால் படைக் கப்பட்டது. கூத்து உருவங்களின் உருமாற்றம் நகர்ப்புற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூத்துப் பணியை அதன் போக்கில் வளர்க்க பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பின்னர் கலா நிதி வித்தியானந்தன் முக்கியமான பங்குபற் றிஞர். சமுதாய உள்ளடக்கம் கொண்ட கூத்துக் களை பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதி அறிமுகப் படுத்தினர். அவர் தமது கூத்துக் களில் பேச்சு வழக்கு மொழியைக் கையாண்டார்.
தற்காலத் தமிழ் நாடக மேடையின் விழிப்புணர்ச் சிக்குக் காரணம் பல்கலைக்கழக முயற்சிகளும், தி.மு க. பிரசார நாடகங்களின் வழிவந்த முயற்சி களுமாகும். தமிழ் நாடகங்களின் தோல்விக்கு கார ணம் அது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை யதார்த்த பூர்வமான கலைப் படைப்புக்களாக ஆக் கத் தவறியதாகும்.
நாடக வளர்ச்சியிலும், கூத்து ஆராய்ச்சிகளிலும் பங்குபற்றிய சில பிரபலமான பெயர்களைக் குறிப் பிட்டு அவர்களது பணியையும் ஆசிரியர் சுருக்க மாகச் சொல்லியிருக்கிருர்,

Page 7
இலங்கை தமிழ் நாடகத் துறையில் முற்போக்கு நாடகங்கள் இப்போதுதான் துளிர்விடத்தொடங்கி யுள்ளது. இதுபற்றிய விவரங்கள் கொடுத்திருக்க லாம். அந்தனி ஜீவாவின் அக்கினிப்பூக்கள் முற் போக்கு நாடகங்கள் என யூகிக்கிறேன். ஈழத்து முற்டோக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூக ஆய்வுக் கருவுள்ள நாடகங்கள் எழுதி நடிகர்களைப் பயிற்றுவித்து அரங்கேற்ற வேண்டும். கதைக் கருக்கள், ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புக்களிலேயே இவர்கள் நாடகங்களுக் கான இக்கதைகளை மாற்றி எழுதலாம். வர்க்கங் களிடையே வெளிப்படும் சமூக உணர்ச்சியை மனத் தில் கொண்டு பல சமூக நாடகங்கள் எழுதி அரங் கேற்றலாம்.
கலையை மக்களுக்காக கலைத் துறையிலும், இலக்கி யத் துறையிலும் தீவிர முயற்சி செய்யவேண்டும் என நான் இலங்கை இலக்கியத்தோழர்களை வேண் டிக்கொள்கிறேன்.
நாடகக் கலைஞரான அந்தனி ஜீவாவின் இச் சிறு
நூல் ஈழத்து தமிழ் நாடகம் என்ற வரலாற்று நூலுக்கு ஒரு வழிகாட்டியாக அமையட்டும்.
J5 (r. 6nI 1r6oIʼID1TItèa) ஆராய்ச்சி 28, திருச்செந்தூர் ரோடு பாளையங்கோட்டை தமிழ்நாடு

YOUNG TAMM/L DRAMATIST
K. S. SIVAKU MARAN. B.A. ,
Former Tamil Drama Advisory Panned.
Asst. News Editor Sri Lanka Broadcasting Corporation
Anthony Jeeva, a young Tamil Dramatist from Colombo is perhaps one of the first few of th: clan to have understood the necessity to Colaborate with the Sinhala theatremen to evolve a National Drama in our country. He has been a keen absorver of the advancing Sinhala Theatre and had been associating with people like Mr. Dayananda Gunawardena and others. He is a very enthusiastic and artistically inclined youth and in concernsed with the portrayal of social problems in his plays. Apart from writing plays, h has also written a few short stories and critical essays. He has also directed a few plays himself.

Page 8
For the last ten years or so he has been possitively engaged in the field of drama. In 1970, he produced his own play 'Mulil Roja' and in the following year his direction of the play ''Theer pu' earned him scme notice by the critics. He has directed about ten plays so far. His ''Akkini Pookal' in 1972 tried to portray the class struggle of the proletariat, and was perhaps the first of its kind on Tamil stage. Anthony Jeeva is also a journalist having edited a film journal called 'Kavitha'
It wil be interesting to read what a practising dramatist has got to say about 'Tamil Drama in Sri Lanka'. Further such a bicok will fill the gap that has persisted till now. A course of discipline in drama and training abroad will definitely help our dramatists to progress and thus build up our repertoire of good Tamil plays in the whole range of National Drama.
K. S SVAKUMARAN, B.A.

ஒரு நிமிடம்.
1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற கலை, இலக்கியப் பெரு மன்ற மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற கட்டுரையே நூலுருவில் வெளிவருகிறது.
நேரில் எனது உரையைக்கேட்டது மாத்திரமின்றி, இதனைப் படித்துப் பார்த்து முன்னிடு’ வழங்கிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்கட்கும், இத னைத் தொடராக தினகரன் (இலங்கை) பத்திரிகை யில் பிரசுரித்து ஊக்குவித்த ஆசிரியர் திரு.சிவகுரு நாதன் அவர்கட்கும், கலை, இலக்கிய மகாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திய திரு. கல்யாணசுந்தரம் எம். பி. அவர்கட்கும் இதனை நூலுருவில் வெளியிட உதவியாக இருந்த அகரம் அச்சகத்தார்க்கும் "வானம் பாடி'களுக்கும் வெறும் வார்த்தைகளால் நன்றி செலுத்த முடியாதவனுக இருக்கிறேன்.
காலம் அவர்களுக்கு அதனைச் செலுத்தும்.
57, மகிந்த பிளேஸ் அந்தனி ஜீவா கொழும்பு. 6 பூரீலங்கா.
23-11-1978

Page 9

நுழைவாயில்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறுகதை, கவிதை நாவல் ஆகிய முத்துறைகளிலும் புதிய சகாப்தம் உருவாகத்தான் செய்கிறது. ஆனல் நாடகம் மட்டும் ஆகாத பிள்ளையாய் இலக்கியத் துறைக ளினின்று ஒதுங்கி நிற்கிறது. நாடகம் மட்டும் ஒதுங்கி நிற்பது ஏன்? நாடகம் இலக்கியத்தில் ஒர் அம்சம் தானே; அப்படியானுல் நாடகம் தனித்து நிற்பது ஏன்?
ஈழத்தில் இலக்கியத் துறைகளைப் பற்றி சர்ச்சை கள் எழும் பொழுதும், திறனுய்வுக் கணக்கெடுப்பு கள் நடைபெறும்பொழுதும், விமர்சன அரங்கு கள் கூடும் பொழுதும் சிறுகதை, நாவல், கவிதை ஆகிய துறைகளைப் பற்றிப் பேசப்படுகின்றன.

Page 10
ஆனல் நாடகங்களைப் பற்றியோ அல்லது நாடகக் கலைஞர்களைப் பற்றியோ எந்தவித திறனுய்வுகளும் கணக்கெடுப்புகளும் சரிவர வெளிவந்ததில்லை. ஈழத்தில் தமிழ் நாடகத்தின் வளர்ச்சியையும், தோற்றத்தையும் முழுமையாக ஆராயும் முயற்சி எதுவும் இதுகாலவரை நடைபெற்றதாகத் தெரிய வில்லை. ஈழத்து இலக்கியத்தில் ஏனைய துறை களைப்பற்றி அக்கறை காட்டும் விமர்சகர்கள் கூட ஏனுே நாடகத்துறையைப்பற்றி அக்கறைகாட்டுவ தாக இல்லை.
ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சியைப் பற்றி ஆரா யப் போகும் வரலாற்று ஆசிரியனுக்கோ அல்லது நாடக வளர்ச்சியைப் பற்றி அறிய விரும்பும் சுவை ஞர்களுக்கோ இந்த நூல் ஒரு வழிகாட்டியாக "ஈழத்து தமிழ் நாடகம்’ என்ற தனித்துவம்மிக்க கோட்டைக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என் பதே என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப் படையில் கலா விமர்சகர்களின் குறிப்புக்களையும் தகவல்களையும், நேரடி அனுபவங்களையும் கொண்டு 'ஈழத்தில் தமிழ் நாடகம்' பற்றி எழுது கிறேன்.
உலக நாடக மேடை
ஈழத்துத் தமிழ் நாடக மேடையை தரிசிப்பதற்கு முன்னுல், உலக நாடக மேடையை சிறிது அவ தானிப்பது நமது நிலை பற்றி பார்ப்பதற்கு ஒரு முன்னுேட்டமாகும். மேல்நாடுகளில் மற்றெல்லாக் கலைகளையும் விட நாடகம் செழித்தோங்கி சிறப் பாக வளர்ந்துள்ளது. நாடக இலக்கியத்தில் பிர பல்யம் படைத்தவர்கள் ஆங்கில நாடக இலக்கிய மேதைகள் தான்.
உலக நாடக மேடையில் ஷேக்ஸ்பியருக்குத் தனி இடமுண்டு. மனித உள்ளத்தில் உணர்ச்சிகளை
8

ஆராய முயலும் வெறும் மேதையாக மட்டுமல்லா மல், நாடக மேடையின் வளர்ச்சியில் பெரிதும் நாட்டங்கொண்டவர். நாடக அரங்கில் நாற்காலி எடுத்துப்போடும் வேலையிலிருந்து ஒப்பனை செய் வது, நடிப்பது. நாடகப் பயிற்சி அளிப்பது ஆகிய நாடகத்துறையின் சகல விதமான பணிகளை ஆற்றி யவர். அதனுல் அவைகள் அவரது நாடகப் படைப்புகளுக்கு பெரிதும் உதவின.
உலக நாடக இலக்கியத்தில் கூட அமரத்துவ மிக்க சிருஷ்டிகளை படைத்துள்ள ஷேக்ஸ்பியர் இருபத்தேழு நாடகங்களை எழுதியுள்ளார். மேடை அமைப்பு முறையிலும், காட்சி அமைப்பு முறை யிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு முன்பு சோபாக்கிள்ஸ் முறைதான் நாடக மேடையில் கையாளப்பட்டு வந்தது. சோபாக்கிள்ஸ் காலத்தில் நாடகக் கொட்டகை திறந்த வெளியில் தான் இருக்கும். பல்லாயிரக் கணக்கானவர்கள் நாடகத்தை காண வருவார்கள். நாடக நடிகர்கள் முகமூடி அணிந்தே நடிப்பார்கள். அலாக்சாண்டர் காலத்தில் தான் நாடகக் கொட்ட கையில் திரை தொங்கவிடப்பட்டது. சோபாக் கிள்ஸ்ஸின் நாடக முறையை உலக நாடகமேடை கள் பின்பற்றியுள்ளன. சோபாக்கிள்ஸ்க்குப் பின் னர் 19ஆம் நூற்ருண்டில் நாடக மேடையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இதன் பின்னர்தான் ஷேக்ஸ்பியர் பெரும் புதும்ைகளைச் செய்தார். சோபாக்கிள்ஸ் முறையை மாற்றியமைத்தார். காட்சி முறைகளிலும் பல மாற்றங்கள் செய்தார். ஷேக்ஸ்பியருக்கு பின்னர் வந்த நாடகாசிரியர்கள் இப்ஸன், பெர்னட்ஷா, ஒஸ்கார் வைல்ட் ஆகி யோர் மிக முக்கியமானவர்கள். இம்மூவரும் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந் துள்ளார்கள். இவர்களின் படைப்புகள் சமுதாயத்
தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 11
உலக நாடக இலக்கியத்தில் ஹென்றிக் இப்ல னுக்கு சிறப்பான இடமுண்டு. நவீன நாடக மேடையைப் பொறுத்தவரை உலக நாடக இலக் கியங்களில் இவரைத்தான் முன்னுேடி என்று குறிப்பிடுவார்கள். இவருடைய நாடகங்கள் சமு தாயப் பார்வையுடன் பிரச்சனைகளைக் கூர்ந்து நோக்கியது. இவர் கையாண்ட நாடக உத்தி முறைகள் நாடக மேடைக்கு வலுவூட்டியது. புதியதொரு சமுதாயத்தைத் தன் நாடகப் படை புகள் மூலம் படைக்க முனைந்தார் இப்ஸன் go fair Gustibgod D66 (The Doll House) last பெற்ற நாடகமாகும். ஐரோப்பாவின் பெண்கள் விடுதலைக்கு இந்த நாடகமே ஆதாரமாக இருந் 3535.
பெர்ணுட்ஷாவின் நாடகங்களில் பல புரட்சிகர மான கருத்துக்கள் இடம் பெற்றன . இப்ஸனை தன் இலக்கிய முன்னுேடியாக ஷா ஏற்றுக்கொண் டார். இப்ஸன், ஷா போன்றவர்களின் நாடக இலக்கியத்துக்கு ஒப்பானது அண்டன் செகோவின்
நாடகங்கள். இவர் நாடகத்தை யதார்த்த பூர்வ மான கலை வடிவமாகப் படைத்தார். செகோ வின் நாடகங்கள் பரீட்சார்த்த நாடகங்கள். இவருடைய நாடகப் படைப்புகளை மாஸ்கோ 9,ril 6ho si Guy' Li Giu (Moscow Arts Theatre) மூலம் நாடகமேதை ஸ்டெனிஸ்லாவ்ஸ்கி தயாரித் தளித்தார்.
உலக நாடக மேடைக்கு ஸ்டெனிஸ்லாவ்ஸ்கியின் பங்களிப்பு மகத்தானது. யதார்த்த பூர்வமான நடிப்பை இவரின் மாஸ்கோ ஆர்ட்ஸ் தியேட்டர் உலகிற்கு உணர்த்தியது. உலக நாடகக் கலைஞர் கள் இந்த மேதையின் பாணியை பின்பற்றினுர் கள். மற்றும் உலக நாடக இலக்கியத்தில் ரஷ்ய இலக்கியகர்த்தா மெக்ஸிம்கோர்க்கி, அயர்லாந்
10

தைச் சேர்ந்த ஸின்ஜ், ஸின் ஓ கோஸி ஆகியவர் கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
"மேல்நாட்டு நாடக இலக்கியத்துக்கு ஈடாக தமி ழில் எந்தக் காலத்திலும் நாடக இலக்கியம் சிறப் பாக செழித்தோங்கி வளரவில்லை' என்று தமிழகப் படைப்பாளியும், விமர்சகருமான சிதம்பர ரகு நாதன் குறிப்பிடுகின்ருர், (நூல்-இலக்கிய விமர்சனம்) ..
உலகத்தொடர்பினுலும், ஆங்கிலப்புலமையினுலும் மேடை நாடக வடிவம் தமிழுக்குக் கிடைத்தது.
தமிழ் நாடக மேடை
நாடகம் என்பது வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒர் அம்சமாகும். நடிப்பும் கூத்தும் பழங்காலந் தொட்டே நம் நாட்டில் பழகிவரும் கலைகளாகும். சரித்திர நிகழ்ச்சிகளையோ புராண இதிகாச சம்ப வங்களையோ நாடகமாக ஆடிவருவது தமிழ் நாடகமரபாகும்.
நாடகத்தில் இரண்டுவிதமான புலனுராய்ச்சி களுக்கு இடமுண்டு. ஒன்று கேட்டல், மற்றது பார்த்தல். கண்ணுக்கும் காதுக்கும் ஒரே சமயத் தில் விருந்தளித்து இன்பம் தருவது நாடகம். ஆகவே நாடகத்தில் கண்ணுக்கு ரம்மியமான வர்ண விஸ்தாரங்கள், ஆடை அணிகள், ஒளி ஜாலங்கள் முதலிய கலைகளும் கலந்திருக்கின்றன. ஆகவே நாடகம் என்பது தனித்தது அல்ல. நடிப்பு, இசை, வர்ணம், விஸ்தாரம், பேச்சு, வேஷம் முதலிய பற்பல கலைகளின் சம்மேளனம் என்றே கூறலாம் என்கிருர் சிதம்பர ரகுநாதன் (நூல் - இலக்கிய விமர்சனம்)
11

Page 12
ஈழத்தில் தமிழர்கள் மத்தியில் மரபு வகையான கூத்துக்கள் காணப்பட்டதைப் போல சிங்களவர் களிடையே சோகரி, கோலம் போன்ற கிராமிய * கலை மரபான கூத்து வடிவங்கள் இருந்து வந் துள்ளன. சோகரி, கிராமப்புறங்களில் திறந்த வெளிகளில் இரவு முழுவதும் நிறுத்தாமல் ஆடப் படும் ஆட்டக் கூத்தாகும். தமிழில் வசன நாடகம் எழுதும் முறை பிரித் தானியர் கல்வி முறையில் தான் தோற்றுவிக்கப் பட்டது. போர்த்துகேயரும் ஒல்லாந்தரும் நம் நாட்டினை பிரித்தானியருக்கு முன்னர் ஆண்டவர் களாக இருப்பினும் அவர்கள் இலங்கையின் மீது ஆட்சி செலுத்தியது கிடையாது. மேலும் அவர் களுக்கு தனித்துவமிக்க பாரம்பரியம் இருந்த தில்லை. போர்த்துக்கேயருடைய ஆட்சிக்காலத் தில் கத்தோலிக்க மதத்தினை இங்கு பிரச்சாரம் செய்ய விழைந்த கிறிஸ்தவ பாதிரிமார்கள் சுதேசிய கலை இலக்கிய வடிவங்களை தேர்ந்தெடுத் தார்கள் என்பதற்கு கிறிஸ்தவ நாடகங்கள், கூத்துக்கள் இன்றும் நமக்கு சான்று பகரு கின்றன. போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக் கும் இல்லாத ஒரு வாய்ப்பு பிரித்தானியருக்கு அமைந்தது. பிரித்தானியருடைய ஆட்சிகாலத் தில் 1815-ஆம் ஆண்டிலே இலங்கை முழுவதும் வியாபித்தது. அத்துடன் தமது அண்டை நாடாக இந்தியாவிலும் அவர்களுடைய ஆட்சி முழுமை யாக வேரூன்றியது. தமது அரச அலுவல்களுக்கு ஆங்கிலம் கற்ற சுதேசிகளைப் பயிற்றும் தேவை ஆங்கிலேயருக்கு ஏற்பட்டது. ஆங்கில மொழிப் பயிற்சியுடன் ஆங்கில கலை இலக்கிய மரபுகளில் சுதேசிகளுக்கு பயிற்சியும் ஓரளவு ரசனையும் ஏற்படு வதாயிற்று. அப்பொழுதுதான் ஆங்கிலமொழியில் அமைந்துள்ளது போல வசனங்களில் அமையும் நாடகங்கள் எழுதும் முயற்சிகள் தமிழ் மொழியில் எழலாயின.
12

பிரித்தானியர் புகுத்திய கல்வி முறையின் தாக்கம் காரணமாகவே தமிழில் வசன நாடகங்கள் எழுந் தன. தமிழ் மொழிக்கு ஏற்கெனவே தொன்மை யான ஒரு நாடக மரபு இருந்தது. அதே மரபில் இசைக்கும் ஆட்டத்திற்கும் சிறப்பிடங்கள் தரப் பட்டன. இந்த பாரம்பரிய மரபின் சுமையை இலகுவில் தூக்கி எறியமுடியவில்லை.
ஈழத்தில் பாரதம், இராமாயணம் போன்ற இதி காச கதைகளும், தேவசகாயம் போன்ற கிருஸ்தவ கதைகளும் கூத்துக்களாகவும், விலாசங்களாகவும் எழுதப்பட்டன. சாதாரண மனிதர்களை நாடகப் படைப்புகளில் நாயகர்களாக படைக்கும் தன்மை ஈழத்தில் முதன்முதலில் ஏற்பட்டது. சமய நம்பிக்கைக்காக தம்முயிரைக் கொடுத்த தென் னிந்திய கத்தோலிக்கரான முத்துக்குமார புலவர் *தேவசகாயம்’ என்ற நாடகத்தை வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதினுர்,
பின்னர் நாடகத்துறையில் 1880ஆம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்பட்டது. இவ்வாண்டில் இலங்கைக்கு வந்த பம்பாயைச் சேர்ந்த எல்பின்ஸ்டன் நாடகக் கம்பெனியார் பார்ஸி இசை வடிவ நாடகத்தை (Parsi Theatrical) இங்கு நடத்தியதனுல் இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த பார்ஸி குழுவினரின் நாடகங்கள் உள்ளூர் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. பார்ஸி நாடகக் குழுவினரின் நாடகங்களின் தாக்கமானது 'டவர்ஹோல்" சகாப்தத்தை உருவாக்கியது. ஜோன் த சில்வா வின் டவர்ஹோல் நாடகங்களை சிங்கள மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். ஜோன் த சில்வா தமது பண்டைய பெருமைகளை ஒதுக்கிய நகர்ப் புற நவநாகரிக மக்களை தமது நாடகப் படைப்புக் களின் மூலம் தாக்கிக்கொண்டேயிருந்தார். அவ ரது நாடகங்கள் புத்தரைப் பற்றிய ஜாதகக் கதை
13

Page 13
களையும், சிங்களவர் வரலாற்றில் வீரஞ் செறிந்த சம்பவங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஆகிய வற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன.
ஜோன் த சில்வா, தொன் பஸ்தியான், சார்ள்ஸ் டயஸ் போன்றவர்களின் நாடகங்கள் பழைய மரபு வழிக் கூத்துக்களைத் தழுவியும், பார்ஸி நாடக வடிவத்தில் கலப்பு உருவமாக இருந்தது. தனித் துவமிக்க நாடக மரபு ஒன்றை உருவாக்கத் தவறியது.
பேராசிரியர் சரத் சந்திராவினுல் 1956ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட "மனமே" என்ற நாடகமே சிங்கள நாடக மேடையின் திருப்பு முனையாயிற்று. "மனமே" ஏற்படுத்திய தாக்கத்திற்கு பின்னர் தொடங்கிய நாடக இயக்கமே நாடக மேடைக்கு ஒரு புதுயுகத்தை தோற்றுவித்தது. ஆணுல் இந்த தாக்கம் ஈழத்தில் தமிழ் நாடக மேடைக்கு ஏற்பட வில்லை.
பிரித்தானியரின் கல்வி முறையின் காரணமாக தமிழில் நாடகம் எழுதப் பட்டாலும் ஒரே நாடகத் தில் வசனங்களையும் இசைப்பாடல்களையும் நட னங்களையும் கூட்டு மொத்தமான நாடக வடிவ மாக நம் முன்னுேடிகள் உருவாக்கினுர்கள்.
“இருபதாம் நூற்ருண்டில் உரை நடை இலக்கியம் வளர்ச்சியுற்றதைப் போல, அத்துணை சிறப்பாக நாடக இலக்கியம் வளர்ச்சியுறவில்லை என்றே கூறலாம். 20-ஆம் நூற்ருண்டுக்கு முன் தோன் றிய பள்ளு, குறவஞ்சி முதலிய இலக்கிய வகை களை நாம் கூத்து வகைகளுக்கு அடக்கலாமே யொழிய, சாகுந்தலம் முதலிய வடமொழி நாடக வகைகளுக்குள்ளே அடக்க முடியாது. ஆங்கில நாடகங்களைக்கற்ற சுந்தரம்பிள்ளை முதலிய ஆசி
14

ரியர்கள் ஷேக்ஸ்பியர் முதலிய ஆங்கில நாடக ஆசிரியர்கள் இயற்றிய நாடகங்களைப் பின்பற்றித் தமிழ் நாடகம் இயற்றத் தொடங்கிய பின்னரே இக்காலப் பகுதியில் நாடக நூல்களை ஒரளவிற்கு விருத்தி செய்ய முடிந்தது' என்று பேராசிரியர் வி. செல்வநாயகம் குறிப்பிடுகின்ருர், (நூல்தமிழ் இலக்கிய வரலாறு)
தமிழகத்தில் நாடக முன்னுேடிகள் எனப் போற்றப் படும் சங்கரதாஸ் சுவாமிகளை அடுத்துப் புகழப் படும் நாடக ஆசான் பம்மல் சம்பந்த முதலியார் பிறமொழி நாடகங்களுக்குத் தமிழ் வடிவம் கொடுத்தார். இவர் மொழிபெயர்த்தவற்றில் பெரும்பாலானவை ஷேக்ஸ்பியர்நாடகங்களாகும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழிபெயர்த்த பம்மல் சம்பந்த முதலியார் தமது பாரம்பரிய மரபு முறை களை மீற முடியாது,நாடகாசிரியரின் மனுேதத்துவ அணுகல் முறைகளை நீக்கி தமிழ் மக்கள் விரும்பும் வகையில் நாடகங்களை எழுதினுர், இது பம்மல் நாடகங்களையும், ஷேக்ஸ்பியர் நாடகங்களையும் படித்தவர்களுக்கு நன்கு புரியும். பம்பல் சம்பந்த முதலியார் நாடகங்களை எழுதியது மட்டுமல்லாது, நாடகங்களில் பங்கு பற்றினுர்; பயிற்சியளித்தார். தமிழ் நாட்டில் நாடகத் துறை யின் வளர்ச்சிக்காக பெரிதும் தொண்டாற்றினுர், பார்ஸி நாடக வடிவங்களின் தாக்கம் இவரின் நாடகங்களில் காணப்பட்டன. இவரைத்தன் குருவாய்க் கொண்டு ஈழத்தில் கலையரசு சொர்ண லிங்கம் நாடகங்களை மேடையேற்றினுர், ஈழத்தில் நவீன நாடகங்களின் முன்னுேடி என கலையரசு
சொர்ணலிங்கத்தைக் குறிப்பிடலாம்.
நாட்டுக் கூத்து நம் நாட்டில் பழம் பெரும் கலைகளில் ஒன்று நாட்டுக்கூத்து. இது தமிழ் மக்களின் பாரம்பரிய
15

Page 14
கலைகளில் மிக முக்கியமானது. நாட்டுக்கூத்து இருவகைப்படும். ஒன்று கூத்து. மற்றது விலா சம். நாட்டுக் கூத்தை இரண்டு வகையாகப் பிரிப் பார்கள். ஒன்று தென்மோடி. மற்றது வடமோடி எனப்படும்.
தென்மோடிக் கூத்துக்களில் பழைய இசை மரபு முறைப்படி பாட்டுக்கள் அமைந்திருக்கும். ஆணுல் வடமோடியில் தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்து வந்த இசை முறைகளும் கலந்திருக்கும். தென் மோடியில் தமிழ் கூத்தும், வடமோடியில் ஆரியக் கூத்தும் கலந்திருக்கும். தமிழ் நாட்டில் ஏனைய பாகங்களில் நிலவி வந்தது போல் யாழ்ப்பாணத் தில் முதன்முதலில் தென்மோடியே நிலவி வந்தது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப் பாணத்தில் தென்மோடிக் கூத்து ஆடப்பட்டு வந் தது. ஆணுல் தமிழ் நாட்டில் வடநாட்டு இசைப் பாணிகளும் கூத்து முறைகளும் வந்துசேர மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூத்து முறை யும் மாறியது. வடமோடிக் கூத்தும் வந்து சேர்ந் தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு தடையு மின்றி மக்கள் வந்து போகக் கூடிய ஏதுக்கள் இருந்தமையால் தென்னிந்தியாவினின்று யாழ்ப் பாணத்துக்கு முறைக்கு முறை வந்த நாடகக் குழு வினரால் வடமோடிக் கூத்து இங்கு கொண்டு வரப்பட்டது. அதனுல் வடமோடி யாழ்ப்பாணத் தில்பரவியது” என்கிருர் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை (நூல்-ஈழத்து வாழ்வும் வளமும்)
நாட்டுக்கூத்தில் இரண்டுமரபுகள் காணப்பட்டன. முதலாவது யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விவ சாயத்துடன் இணைந்து சமயசடங்குகளாக கூத்துக் கள் இணைந்து கிடந்தன. இதனை கிராமப்புற விவ சாயத் தொழிலாளர்கள் ஆடி வந்தனர், இதை
16

கிராமிய கலை வடிவமாக கிராமிய மக்கள் போற்றி வந்தனர். மட்டக்களப்பில் இக்கூத்து மற்றைய இடங்களிலும் பார்க்க போற்றப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சமூகம் இக்கூத்தி னைப் பெருமையுடன் போற்றி வளர்த்து வந்தது. மலைநாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் வடிவமாக காமன்கூத்தை இந்த நாட்டுக் கூத்து மரபுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து அண்ணுவி நாடக மரபு அல்லது "டிருமா மோடி' மரபு, பார்ஸி நாடக இயக்கம் தமிழகத் தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே தோன்றியது. இத்தகைய பார்ஸி இசை வடிவங் கள் சிங்கள மக்களின் பாரம்பரிய கலை இலக்கியங் களிடையே ஊடுருவி மாற்றங்களை ஏற்படுத்தியது. பம்பாயிலிருந்து இங்கு வந்த எல்பின்ஸ்டன் நாட கக் கம்பெனியார் பார்ஸி இசைநாடகவடிவத்தைப் புகுத்தினர்கள். இது கிராமியக் கலைஞர்களின் இசை வடிவத்தில் புதிய மாறுதலை ஏற்படுத்தியது. பார்ஸி வாலாவின் மெட்டுக்களால் மக்கள் பெரி தும் விரும்பப்படுதல் கண்டு, சிங்கள எழுத்தாளர் கள் பழைய நாடகங்களை புதிய முறையில் மாற்றி யமைக்கத் தொடங்கினுர்கள். அங்ங்ணம் அமைத்து அவற்றுள் எல்லோர் செவிகளிலும் எதி ரொலித்துக் கொண்டிருந்த இந்துஸ்தானி மெட் டுக்களைப் புகுத்தினர்' என்கிருர் கலாநிதி சரத் சந்திரா. (கட்டுரை- கல்வி நூற்ருண்டு மலர்) பார்ஸி இயக்கத்தின் காரணமாக " "ஸ்பெஷல் நாடகங்கள்' தோன்றின. இவைகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மேடையேற்றப்பட்டு வந்தன. தமிழகத்தில் இருந்து இங்கு வந்த எம். ஆர். கோவிந்தசாமி, எஸ்.ஜி கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், வேலுஜி நாயக்கர் முதலியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இங்கு வந்து
17

Page 15
இத்தகைய நாடகங்களை மேடையேற்றிஞர்கன். இத்தகைய நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் மேடை யேற்றப்பட்ட பொழுது யாழ்ப்பாணத்தில் புதிய தொரு விழிப்புணர்ச்சி உண்டாயிற்று. நாடகம் பார்ப்பவர்கள் தொகை பெருகிற்று. யாழ்ப் பாணத்தவர்கள் இத்தகைய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினர்கள். ஆணுல் இந்திய நடிகர்களது நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு உள்ளூர் நடிகர்களது நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை. கிருஷ்ணுழி வார், பபூன் செல்லையா, சரவணமுத்து சின்னையாதேசிகர், இரத்தினம்பிள்ளை என்போர் கள் இத்துறையில் முன்னணியில் நின்றுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுக் கூத்துக்களும் நாட்டுப் பாடல்களும் பொதுமக்களின் உயிர்மூச் சாக இருந்து வருகின்றது. இவற்றை அரசு தேசீய கலைவடிவங்களாக பேணிப் பாதுகாக்கின்ற னர். அதைப் போல நாட்டுக் கூத்து, காமன் கூத்து போன்றவற்றை அழித்துவிடாமல் பாது
காக்க வேண்டும்.
காமன்கூத்து என்ற பாரம்பரிய கூத்தை மலையக மக்கள் ஒரு விழாவாக நடத்தி வருகின்றனர். * கதக்களி’ நாட்டிய அம்சத்தைக் கொண்ட இந்த காமன் கூத்து ஒரு தத்துவார்த்த உண்மையை அடிப்படை அம்சமாகக் கொண்ட புராணக் கதை யாகும். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வழங்கி வரும் நாட்டுக்கூத்துப் போன்ற கலையுருக் கொண்டதே காமன் கூத்து. இதனை நாட்டுக்கூத்து மரபுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
காமன்கூத்து ஆண்டு தோறும் மாசி மாதத்தில் அமாவாசை கழிந்த மூன்ரும் நாள் கொண்டாடப் படும். இக்கூத்து மன்மதன் - ரதி கல்யாணம் , சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன்
18

ரதியிடம் விடை பெறுவதையும், சிவனுர் தவத்தை மன்மதன் கலைத்து அவரால் எரிக்கப்படுவதையும் ரதிதேவியின் புலம்பலுக்கும் வேண்டுதலுக்கும் அருள் கூர்ந்து ரதிதேவிக்கு மட்டும் தெரியும் வகை யில் மன்மதனைச் சிவபெருமான் எழுப்புவதையும் பிரதானமாகக் கொண்டது காமன் கூத்து.
காமன்கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் ஆகியன மலையகத்தில் இன்றும் ஆடப்பட்டு வரும் பிரதான கூத்தாகும். மேல்நாட்டு "ஒப் பேரா’ போன்ற வகைகளுக்கு ஒப்பானது நாட்டுக் கூத்து. மறைந்து வரும் கலை வடிவங்களான நாட்டுக் கூத்தை நகர மக்களும் களிப்புறும் வகை யில் முன்னின்று உழைத்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தணுகும். நாட்டுக் கூத்துக்கு புத்துயிர் கொடுத்தவர் என்று இவரைக் குறிப்பிட 6υίτιο.
நாட்டுக் கூத்துக்களை பேணிப் பாதுகாக்க வேண் டும் என்று காலஞ்சென்ற பேராசிரியர் க. கணபதி பிள்ளையவர்கள் எழுதி வந்த போதிலும் பேராசிரி யர் சு. வித்தியானந்தனே இதற்கான பெரும் உழைப்பை மேற்கொண்டவர். கிழக்கு மாகாணத் தில் வடமோடி நாடகங்கள் புது மதிப்படைய அவரே வழிகோலினர். பல்கலைக்கழக மாணுக் கர்களைக் கொண்டு வடமோ டி நாட்டுக் கூத்துக் களை மேடையேற்றினர். நாட்டுக்கூத்தின் மறு மலர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை இவர் செய் துள்ளார். இராவணேசன், நொண்டி நாடகம் போன்ற நாடகங்களை மேடையேற்றியது போக மட்டக்களப்பு, மன்னுர் மாவட்டங்களில் பயின்று வரும் சில நாடக ஏடுகளைத் தேடிப் புதுப்பித்தும் கூத்து விழாக்கள், அண்ணுவிமார் நாடகம் நடத்தி யும் பழம் பெரும் நாடகக் கலைஞர்களை கெளரவித் துள்ளார்.
9

Page 16
பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நாட்டுக் கூத்துப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரின் மாணவரான சி. மெளனகுரு "சங்கார" த்தை மேடையேற்றினுர். இது கூத்து வடிவத்தை தழுவிய நவீனநாடகமாகும். பலர் பழைய கூத்துக் களை புதிய மெருகுடன் மேடையேற்றினர்கள். நெறியாளர் தாஸிஸியஸ் நெறிப்படுத்திய அம் பலத்தாடிகளின் ‘கந்தன் கருணை' என்ற காத் தான் கூத்து பார்வையாளர்களின் கருத்தை ஈர்த்தது."
யாழ்ப்பாணத்தில் பயின்று வரும் தென்மோடிக் கூத்துக்களை கத்தோலிக்க சமயத்தவர்களே இன் னும் ஆடி வருகிருர்கள். இத்துறையில் பிரசித்த பெற்ற அண்ணுவிமார்களாக காலஞ் சென்ற கோமாளி சவரிமுத்து, கட்டை செல்லையா, ம. கி. பொன்னுத்துரை, சில்லாலைலூயிஸ் போன்றவர் களுடன் வாழ்ந்து வரும் நாட்டுக் கூத்து சக்கர வர்த்தி புகுந்தான் யேசேப்பு, நாரந்தனை ச. அரு ளப்பு, சில்லாலைச் சவரிமுத்து முதலிய பலரும் கிறிஸ்தவ சமயத்தவர்களே. கிறிஸ்தவப்பின்னணி கொண்ட கதை கூறும் தென்மோடி நாடக ஏடுகள் இன்றும் கிடைப்பதற்கு இதுவே முக்கிய
காரணங்களாகும்.
தென்மோடி நாடகத்துறையின் மறுமலர்ச்சியாக "ஞான செளந்தரி தென்மோடி நாடகத்தை ஏடாக பதிப்பித்தும், மேடையேற்றியும் வெற்றி கண்டுள்ளார் சில்லையூர் செல்வராசன். இவர் போன்ற சிலரின் முயற்சியால் பழம் பெருமை வாய்ந்த கலை வடிவங்கள் அழியாமல் காப்பாற்றப் படுகின்றன.
பல்கலைக் கழகப் பணி ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பல்கலைக்கழ
笼Q

கம் சிறப்புறப் பணியாற்றியுள்ளது. நாடக வளர்ச் சிக்கு மாத்திரமின்றி ஈழத்து இலக்கிய முயற்சி கள் தனித்துவமிக்கதாக சிறப்புற்று விளங்கு வதற்குப் பல்கலைக்கழகத்துப் பணிகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெருந் தொண் டாற்றியுள்ள தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களின் புதல்வரான வண. பிரான்சிஸ் கிங்ஸ்பரி பல்கலைக்கழகத்தில் 1926-ம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார். இவர் சமயத் துறை யிலும் தமிழ் இலக்கியத் துறையிலும் மட்டுமன்றி நாடகத்துறையின் வளர்ச்சிக்கும் தம்மாலியன்ற பணியினைச் செய்துள்ளார்.
அழகுசுந்தர தேசிகர் என்றழைக்கப்பட்ட வண. பிரான்சிஸ் கிங்ஸ்பரி மகாபாரதக்கிளைக் கதை ஒன்றைத் தழுவி "சாந்திரகாசம்' என்ற பெயரில் நாடகமாக எழுதினர். அத்தோடு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் நாடக இலக்கியமான மனுேன்மணியத்தை சாதாரண மக்கள் படிக்கவும்,
நடிக்கவும் ஏற்ற வகையில் எழுதினர். 'சாந்திர காசம்’ ‘மனேன்மணி" ஆகிய இரண்டும் எல்லோ ருக்கும் விளங்கக்கூடிய வகையில் எழுதிய தமிழ் நாடகங்களாகும். இது பற்றி தாம் எழுதிய முக வுரையில் "இதுகாறும் நான் தமிழில் எழுதிய நூல் இயற்றமிழ் நூல். இது நாடகத் தமிழில் நான் பிரசுரஞ் செய்யும் முதல் நூல்" எனக் குறிப் பிட்டுள்ளார். நாடக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட வண. பிரான்சிஸ் கிங்ஸ்பரிக்குப் பிறகு நாடக வளர்ச்சிக்காக “யாழ்நூல் தந்த விபுலாநந்த அடிகளாரே முன்னின்று உழைத்தார்.
உலகிலேயே முதல் தமிழ்ப்பேராசிரியராக அண்ணு மலைப் பல்கலைக் கழக தமிழ் பீடத்தை அலங்கரித்த
21

Page 17
சுவாமி விபுலாநந்த அடிகளார் 1942-ம் ஆண்டு இலங்கைப்பல்கலைக்கழகத்திலும், முதலாவது தமிழ் . பேராசிரியராக 1943-ம் ஆண்டு துவக்கம் 1947-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
இயல், இசை, கூத்து ஆகிய முத்துறைகளின் வளர்ச்சியில் நாட்டங் கொண்டிருந்த அடிகளார் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நாட்டங் கொண்டிருந் தார். அவைகளின் இலக்கியத்தன்மைகளை சுவைத் துப் பர்ர்த்த அடிகளார் மேலை நாடுகளில் நாடகம் மக்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்ட ஒர் அம்ச மாகத்திகழ்வதைக் கண்டார். ஷேக்ஸ்பியருக்கு இணையாக தமிழ் நாடக இலக்கியங்கள் இல்லை எனக் கண்டு மனம் வருந்தினுர். மதுரையில் நடை பெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த விபுலாநந்த அடிகளார் ஷேக்ஸ்பியர் நாடகங் களைப்பற்றி ஆய்வுரை நிகழ்த்தினர். இவரின் ஆய் வுரை “மதங்க சூளாமணி’ என்ற பெயரில் நூலுரு வில் வெளிவந்துள்ளது. அடிகளாருக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக கடமையாற்றிவந்த பேராசிரியர் க. கணபதிப் பிள்ளையவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் நடிப் பதற்காக முற்றிலும் சமூக உணர்வுடைய நாட கங்களாகவே எழுதினுர், யாழ்ப்பாணத்து மத்திய தர வர்க்கத்து குடும்பப் பிரச்சனைகள், சமூகப் பிரச் சனைகள் யாவற்றையும் பேராசிரியர் கணபதிப் பிள்ளை பிரதேச மொழி நடையிலேயே எழுதினர். இவரைத் தொடர்ந்து பேராசிரியர் சு. வித்தியா னந்தன் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை
தமிழ் நாடக வளர்ச்சிக்கு பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை ஆற்றிய பணி அளப்பரியது. பேராசிரிய ரின் நாடகங்களைப் படிக்கும் பொழுது அவற்றின்
22

இலக்கியத்தரமும் தேசாபிமானமும்மொழிப்பற்றும் நமக்குத் தெளிவாக விளங்குகின்றது. பேராசிரி யரின் நாடக ஆற்றலைப் பல்கலைக்கழக அரங்குகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. நாடகம், கவிதை, ஆகிய ஆக்க இலக்கியத்துறையில் பேரா சிரியர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நாடக இலக்கியத்தின் மூலம் சமுதாயத்தில் ஒரு தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமூகத்தை கூர்ந்து நோக்கிய பேராசிரியர் சமு தாயத்தின் பல்வேறு சமூகத்தினரின் குணநலன் களை ஆராய்ந்தார். அவற்றைத் தமது நாடகத்தில் புகுத்தி சமூகத்தில் மாற்றம் காண விழைந்தார். மக்களின் மூடப்பழக்க வழக்கங்களைக் கண்டித்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் * சுந்தரம் எங்கே?, துரோகிகள், உடையார் மிடுக்கு, ஆகிய நாடகங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. பேராசிரியர் தமது நாடகங்களில் பேச்சு வழக்கு மொழியைக் கையாண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
அந்நிய நாகரிக மோகத்தால் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறந்த மக்களுக்கு விழிப் புணர்ச்சியூட்ட பிரித்தானியர்களை எதிர்த்த ‘சங் கிலியன்’ என்ற வீரனின் வரலாற்றை நாடகமாக எழுதி பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு மேடையேற்றினுர். இந்த நாடகம் 1956-ம் ஆண்டு நூல்வடிவில் வெளியிடப்பட்டது.
விடுதலைக்குப் பின்னர் ஈழநாட்டில் ஏற்பட்ட தேசீய விழிப்புணர்ச்சி கலை, இலக்கியத் துறை களையும் ஊடுருவியது. இதனுல் பல்வேறு துறை களிலும் மாற்றம் ஏற்பட்ட்து. இதனைப் பேராசிரி யரின் நாடகங்களில் காணலாம். பேராசிரியர் நாடகங்களை எழுதியதோடல்லாமல் "ரத்னவளி’
23

Page 18
என்ற புகழ் படைத்த வட்மொழிக் காவியத்தைத் தழுவி உரைநடையும் செய்யுளும்கலந்த"மாணிக்க மாலை" என்ற நாடகத்தை எழுதினர்.
நாடகங்களில் பெரும்பாலும் பேச்சுவழக்கு மொழி நடையை கையாள்வது சுலபமல்ல. அது பேராசிரி யருக்குக் கைவந்த கலையாகும். பேராசிரியரின் நாடகங்களில் யாழ்ப்பானப் பேச்சு மொழி தத்ரூப மாக இருக்கும். இதனைப் படித்து சுவாமி விபுலா நந்த அடிகளார்கூடப் பாராட்டியுள்ளார். யாழ்ப் பானப் பேச்சு வழக்குத் தமிழிலே பேராசிரியர் கணபதிபிள்ளையால் எழுதப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களால் நடிக் கப்பட்ட உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகர வாழக்கை, ஆகியவை "நானுட கம்’ என்ற பெயரில் நூலுருவில் வெளிவந்துள் ளது. தவருண எண்ணம், பொருளோ பொருள், என்ற நாடகங்கள் "இரு நாடகங்கள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்களால் "துரோகிகள், சுந்தரம் எங்கே?" ஆகிய நாடகங்கள் நடிக்கப்பட்டுள்ளன.
ஈழத்தில் தமிழ் நாடக மேடையின் வளர்ச்சிக்குச்
றப்பாகப்பணியாற்றியுள்ளபேராசிரியர் கணபதிப் பிள்ளை தான் முதன் முதலில் யாழ்ப்பானப் பேச்சுத் தமிழில் நாடகம் எழுதி வெற்றி பெற்றவராவார். இவரைப் போன்றே சிங்கள நாடக மேடைக்கு பங்களிப்புச் செய்தவர் ஜோன். த. சில்வாவாகும்.
1956-ம் ஆண்டுக்குப் பின்னர். . .
1956-ம் ஆண்டுக்குப் பின்னர் நம் நாட்டில் அரசி
யல் ரீதியாக ஒரு தேசீயவிழிப்புணர்வு ஏற்பட்டது. இன ச் சகோதர சிங்கள இனம் கலை, இலக்கியத்
24

துறைகளில் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பேராசிரியர் சரத் சந்திரா போன்ருேர் சிங்கள நாடக மேடைக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி ஞர்கள். பழைய கிராமியக் கதைகளையும் கூத்துக் களையும் மிக உன்னிப்பாகக் கவனித்தார்கள். தற் கால நவீன நாடக மேடைக்கு ஏற்ற வகையில் நவீன நாடகங்களை எழுத முனைந்தார்கள். உலக நாடகாசிரியர்களின் நாடகங்களைச் சிங்கள நாடக வடிவமாக்கி மேடையேற்றினுர்கள்.
1956-ம் ஆண்டுக்குப் பின்னர் பேராசிரியர் சரத் சந்திரா மனமே" என்ற நாடகத்தை மேடை யேற்றிஞர். பழைய கொட்டகைக் கூத்து பாணி யில் அமைந்த நாடகங்களைப் பார்த்து திருப்தி யடைந்த சிங்கள மக்களிடையே "மனமே" நாடகம் சிங்கள நாடகமேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. "மனமே" நாடகத்தின் புதிய சுருதி யினைச் சிங்களபுத்தி ஜீவிகள் உணர்ந்து கொண் டார்கள். கலை இலக்கியத்துறைகளில் புதிய பார்வைகளை அவர்கள் விரும்பி வரவேற்ருர்கள். பேராசிரியரின் "மனமே" பற்றிப் பரந்த அளவில் பாராட்டவும் பேசவும் முனைந்தனர். புத்தி ஜீவிகளுடைய இத்தகைய பிரதிபலிப்பு களுக்கு தேசீய பத்திரிகைகள் உரிய மதிப்பு அளித்தன. கலா விமர்சகர்கள் "மனமே" போன்ற சிறந்தசிருஷ்டிகள் மலரவேண்டும்என்றுபாராட்டிப் பேசியும் எழுதியும் ஊக்கப்படுத்தினுர்கள். இத் தகைய எண்ணங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஊடுருவிப் பாய்ந்தது. இதனுல் "மனமே" சிங்கள நாடக மேடையில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தியது. "மனமே ஏற்படுத்திய தாக்கத்தை பேராசிரியர் சரத் சந்திராவிற்குப்பின்னர் வந்த நாடகக் கலைஞர் கள் நன்கு புரிந்து கொண்டார்கள். ஹென்றி ஜயசேணு, தயானந்த குணவர்த்தன போன்றேர்
25

Page 19
சிங்கள நாடக மேடையின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் தங்களின் சிறப்பான பங்களிப்பை செய்ய முன் வந்தார்கள். இந்த முயற்சி ஒரு இயக்க ரீதியான வேகத்தினை பெறுவதாயிற்று. இதனுல் சிங்கள நாடகமேடையில் 1950-க்குப் பின்னர் புதிய சகாப்தம் பிறந்தது.
1956-ம் ஆண்டிற்குப் பின்னர் சிங்கள நாடக மேடையில் ஏற்பட்டது போன்ற விழிப்புணர்ச்சி தமிழ் நாடக மேடையில் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆணுல் தமிழ் நாட கத்தைத் தவிர இலக்கியத் துறையின் ஏனையபகுதி கள், நன்கு தனித்துவமிக்கதாக பிரகாசித்தன. படைப்பாளிகள் தனித்துவமிக்க தங்களின்படைப்பு களின் மூலம் பங்களிப்பைச் செய்தனர். திடகாத் திரமான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. தமிழ் நாடக மேடையில் வறட்சி தென்பட்டாலும் அத்திபூத்தாற் போல நல்லமுயற்சிகள் ஓரிரண்டு நடைபெற்றன.
சிங்கள நாடக மேடையின் முன்னேற்றத்தின் வெற்றிக்கு 1956-ம் ஆண்டுக்குப் பின்னர் நிறுவப் பட்ட கலாச்சாரஅமைச்சின் ஒத்துழைப்போடு, கலை ஞர்கள் கலாச்சார உபகார நன்கொடைகள் பெற்று பிறநாடுகள் சென்று நாடகப் பயிற்சி பெற்று திரும்பி வந்தார்கள். அதன் பின்னரே உலக நாடக மேடையின் வெற்றியை சிங்கள நாடக மேடையின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினுர் கள். இத்தகைய வாய்ப்பு தமிழ்க் கலைஞர்களுக்கு கிட்டாது போனது பெரும் குறையே.
தற்காலத் தமிழ் நாடக மேடையின் விழிப்புணர்ச் சிக்கு காரணமாக அமைந்தது பல்கலைக்கழக முயற்சிகளும் , திராவிட முன்னேற்றக் கழக பிர சார நாடகங்களின் வழிவந்த முயற்சிகளுமாகும்
26

தமிழ் நாடகங்களின் தோல் விக்குக் காரணம் அது மக்கள் பிரச்சனைகளே யதார்த்த பூர்வமான கலைத் துவ சிருஷ்டியாக எடுத்துக் கூறத் தவறியதுதான். போலி ரசனை உணர்வைத் தூண்டும் பகிடி நாட கங்களை மேடையேற்றுவதற்கு பலர் முன்னின்று உழைத்தனர். சமூகப் பார்வையற்ற மனித பிரச் சனைகளை அணுகாத பகிடி நாடகங்கள் பலமுறை மேடையேற்றப்பட்டன. வானுெலியில் கூட இத் தகைய நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டதால் இவை களுக்கு ஒரு மெளசு ஏற்பட்டு ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனுல் ஒரு சிலர் சத்திய வேட்கை யுடன் சமூகப் பார்வை கொண்ட நாடகங்களை மேடையேற்றினர்கள். ஆல்ை அவைகளுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவிலலை.
1956-க்குப் பின்னர் அரங்கேற்றப்பட்ட நாடகங் களில் அறிஞர் அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்" பலரின் விமர்சனத்துக்குள்ளாகியது. 1956-க்கும் 1970-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமூகப் பார்வை கொண்ட மனிதப் பிரச்சனைகளை மைய மாகக் கொண்ட பல நாடகங்களை பலர் அரங்கேற் றினுலும், அறிஞர். அ. ந. கந்தசாமியின் "மத மாற்றம்’ நாடகமே புத்திஜீவிகளின் பாராட்டு தலைப் பெற்றது.
இந்தக் கால எல்லைக்குள் நடிகவேள் லடீஸ் வீர மணியின் நாடகங்கள், நடிகமணி வைரமுத்துவின் முயற்சிகள், நெறியாளர்சுஹைர் ஹமீட்டின் நாட கங்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்றது.
1970-க்குப் பின்னர் நாடக மேடையின் முன் னேற்றத்திற்காக நாடக நெறியாளர்களில் சுஹைர் ஹமீட், அ. தாஸிஸியஸ் , என். சுந்தர லிங்கம், ஆகியோருடன் அந் தனி ஜீவா, ஜே. பி. ருெபர்ட், எஸ். எஸ். கணேசப் பிள்ளை, ஆகியவர்
27

Page 20
களைக்குறிப்பிடலாம் என்று கலாவிமர்சகர் கே. எஸ் சிவக்குமாரன் குறிப்பிட்டுள்ளார் (*டிரிபியூன்” கட்டுரை)
மற்றும் தேவன் யாழ்ப்பாணம், சி. சண்முகம் கே. எம். வாசகர், எ. சி. பொன்னுத்துரை, கலைச் செல்வன், பெளசுல் அமீர், மாத்தளை கார்த்தி கேசு, ஆகியோர்கள் நாடகப் பிரதிகளை எழுதி மேடையேற்றியுள்ளார்கள்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
தமிழ் நாடக மேடையின் வரலாற்றில் தனியிடம் பெற்ற சிலரில் மிக முக்கியமான வர்களில் ஒருவர் பேராசிரியர் சு. வித்தியானந்தணுகும். இலங்கை கலைக்கழக நாடகக் குழுவிற்குத்தலைவராக இருந்து பணியாற்றிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் நாட்டுக்கூத்து போன்ற கிராமிய கலைச் செல்வங் களின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் நடிப்பில் வல்லவர்கள் என்பதை பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாட கங்கள் எடுத்துக் காட்டியதைப் போல, பழம் பெருமை வாய்ந்த கூத்துக்களைக் கூட காலில் சலங்கை கட்டி ஆடிப்பாடி நடிக்க வல்லவர்கள் என்பதை பேராசிரியர் சு. வித்தியானந்தன் தான் மேடையேற்றிய நாட்டுக் கூத்துக்களால் எடுத்துக் காட்டினுர், நாட்டுக் கூத்துக்குப்புத்துயிர் கொடுத்த பேராசிரியர் வித்தியானந்தன் தயாரித்து அளித்த கர்ணன் போர், வாலிவதை, ஆகிய வட மோடிக் கூத்துக்களும் , நொண்டி நாடகம் என்ற தென் மோடிக் கூத்துக்களும் பழம் பெருமை வாய்ந்த பழைய மரபு நாடக முயற்சிகளைப் பலரும் பார்த்து பயன் பெறும் முறையில் நவீன கலைத்துவ வடிவத் துடன் மேடையேற்றினுர்,
28

'நாட்டுக்கூத்துக்கு புத்துயிர் அளித்த பெருமை சு.வித்தியானந்தனையே சாரும்.’’ என்று கலையரசு சொர்ணலிங்கம் குறிப்பிடுகிருர். (நூல்- ஈழத்தில் நாடகமும் நானும்) பேராசிரியர் சு. வித்தியானந் தன் நடிக மணி வி. வி. வைரமுத்துவின் மயான காண்டம், பக்தநந்தனர், கோவலன் ஆகிய அண் ணுவிமரபு நாடகங்களை மேடையேற்றுவதற்கு முன்னின்று உதவியுள்ளார். 1956-ம் ஆண்டு கலைக் கழகத்தின் தலைவராக இருந்த இவரின் முயற்சி யால் பாடசாலைகளுக்கிடையேயும், தனிப்பட்ட நாடக மன்றங்களுக்கிடையேயும் ஏற்படுத்தப்பட்ட நாட்டுக்கூத்துப் போட்டிகனில் மீண்டும் மறு மலர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது, கிராமப் புறங்களில் ஆடிப்பாடி வந்த கூத்தினை நகர்ப்புற மாந்தரும் கண்டு இன்புறும் வண்ணம் அவற்றை நகர்ப்புற மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை சு.வித்தியானந்தனையே சாரும். இவரையடுத்து நம்மிடையே கலைக்கோவிலாகக் காட்சியளிப்பவர் கலையரசு சொர்ணலிங்கமாகும்.
க. பரசு சொர்ணலிங்கம்
**நாடகமே தன் வாழ்வு” என வாழும் கலையரசு ச. சொர்ணலிங்கம் நாடகமேடையின் வளர்ச்சிக் காக பல்வேறு வகையிலும் பணியாற்றியுள்ளார். இவர் த டியூன்றி தள்ளாடும் வயதில் கூட நாடகத் தொண்டாற்றி வருவது பெருமைக்குரியதாகும். தமிழகத்து நாடகமேதை டி. கே. சண்முகம், நவாப் ராஜமாணிக்கம் போன்றவர்கள் இவர் நாடகத் திறமையைப் பாராட்டி கெளரவித்தார்
356]] •
கலே பரசு சொர்ணலிங்கம் அவர்களைத்தான் நவீன
நாடக மேடையின் பிதாமகன் எனக் குறிப்பிடுவார் கள். 1911-ம் ஆண்டு இலங்கையில் பம்மல் சம்
29

Page 21
பந்த முதலியாரின் சென்னை சுகுண விலாஸ் சபையார் கொழும்பிலும் யாழ்ப்பானத்திலும் நாடகங்களை நடத்திஞர்கள். இதனுல் புதிய தாக்கங்கள் ஏற்பட்டன. இதைப்பற்றி “இது நடந்த 1911-ம் ஆண்டு ஜூன் 10-ம் திகதி ஈழத்து நாடக உலகில் புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று எனலாம். அன்று தான் நாடகம் என்ருல் எப்படி அமைக்கப்பட வேண்டும் , நடிப்பு என்ருல் எவ் வாறு இருக்க வேண்டும், பாட்டுப் பாடுவதன் நோக்கம் என்ன என்பன போன்றவை எல்லாம் புரிந்தது. பார்ஸி கம்பெனியின் தாக்கம் சுகுண விலாஸ் சபையாரின் இரண்டு முறை விஜயம் , இதுவே தமிழ் நாடக மேடைக்கு அத்திவாரமிட் டது எனக் கூறலாம்” என்று கலையரசு குறிப்பிட் டுள்ளார். (நூல்: ஈழத்தில் நாடகமும் நானும்)
கலையரசு சொர்ணலிங்கம் பம்மல் சம்பந்த முதலி யார் எழுதிய நாடகங்களை இலங்கை சுபேத விலாஸ் சபா என்ற நாடக மன்றத்தினை நிறுவி அரங்கேற்றி அக்கால சமூக அமைப்பில் முக்கிய அந்தஸ்து பெற்றிருந்த உயர்தர உத்தியோகஸ்தர் கள், வழக்கறிஞர்கள், வைத்திய கலாநிதிகள் அர சாங்க உத்தியோகஸ்தர்கள் ஆகியவர்களுக்கு பயிற்சி அளித்து நாடகமேடை வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டு பங்காற்றினுர், கலையரசு 1960-ம் ஆண்டுக்குப் பின்னர் கூட முதுமைப் பருவத்தில் நாடகத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் யாழ் பிரதேச கலா மன்றத்தினர் நடத்திய கலைவிழாவில் இடம்பெற்ற ‘தேரோட்டி மகன்’ என்ற நாடகத்தில் சகுனியாக நடித்து பல ரின் பாராட்டைப் பெற்றிருக்கிருர். இவரது 75-வது வயதிலும் நாடகத்தில் நடிப்பதை நாம் எண்ணிப் பார்க்கும்போது வியப்பும் பெருமையும் அடையாமல் இருக்க முடியாது.
“கலையரசு அவர்களது நாடக முயற்சிகள் பட்டின
30

வாசிகளுக்கு நாடகத்தை ஏற்புடையதான ஒரு கலைத்துறைஆக்கிற்று. பிற ஜனரஞ்சகக்காட்சிகளை, இல்லாத அக்காலக் கட்டத்தில் இந்நாடகங் களுக்கு பெரு வரவேற்பு இருந்தது. இவ்வியக்கம் முற்றிலும் மத்தியதர வர்க்கம் நிலைப்பட்டதே. மத்தியதர வர்க்கத்து ஒழுக்க சீலங்களுக்கு இழுக்கு வராவண்ணம் ஆண்களே பெண்வேடம் தாங்கினர். இவர்களது நாடகங்களில் சமூக உணர்வு இருக்கவில்லை. சமூகப் பிரச்சனைகள் தேசீயப் பிரச்சனைகள் ஆகியன நாடகங்களில் இடம்பெறவில்லை. இவ்வியக்கத்தில் இவர்கள் தம் ஞான குருவான பம்மல் சம்பந்த முதலியாரை அரசியல் நோக்கில் பின்பற்றினுர் எனலாம். ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழ்ப்படுத்தி தமிழில் நடிப்பதை பெருமையுற்றனரேயன்றி, தமிழில் நாடகத்தை சமூக சக்தியாக்க முனையவில்லை' என்று கலாநிதி சிவத்தம்பி குறிப்பிடுகிருர், (கட்டுரை-மல்லிகை)
கலையரசு சொர்ணலிங்கம் எழுதிய 'ஈழத்தில் நாட கமும் நானும்’ என்ற நூலுக்கு பூரீலங்கா சாகித்ய மண்டலம் பரிசளித்து கெளரவித்துள்ளது.
நடிகமணி வைரமுத்து
கலையரசுக்கு அடுத்து நம் கண் முன்னே காட்சி யளிப்பவர் நடிகமணி வி.வி. வைரமுத்துவாகும். இவர் நாடகமாடுவதைத் தொழிலாகக் கொண்ட வர். வாழ்வோடு கலையை பிணைத்துக் கொண்ட வைரமுத்து போன்ருேரால் தான் நாடகமே சாகா மல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நடிகமணி வைரமுத்துவின் "மயான காண்டம்" ஆயிரத்துக்கு அதிகமானமுறை மேடையேறியுள்
31

Page 22
ளது. நவீன உத்தி முறைகளைத் தழுவி இந்த நாடகம் தொடர்ந்து மேடையேறுவது நடிகமணி யின் நடிப்பிற்கும். குரல் இனிமைக்கும் கிடைத்த வெற்றியாகும். கொழும்பு சரஸ்வதி மண்டபத் தில் "மயான காண்டம்' மேடையேறியபொழுது பல சிங்கள கலைஞர்களே இவர் நடிப்பை நேரில் பார்த்து வியந்து பாராட்டினர்.
“ஈழத்தில் பல காலமாக தமிழ் நாடகக் கலை நிலை பெற்று வந்திருக்கிறது. ஆணுல் இடையே சில காலம் குறிப்பாக அந்நியர் ஆட்சிக் காலத்தில் இக் கலை தளர்ச்சி அடைந்ததுண்டு. இக் காலத் தில் நாடகக் கலையின் பிரதான பிரிவுகளில் ஒன் ருகிய மரபு வழிக் கூத்தினை அண்ணுவி மரபு நாடகத்திலே ஈடு இணையற்ற முறையில் பேணிப் பாதுகாத்து வருபவர் நடிகமணி வைரமுத்து என் பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிருர்கள்’-இவ் வாறு பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடுகின் ருர் . (மயாணகாண்டம் நாடகமலர்)
இன்று கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் கலா சார பேரவை சிங்கள நாடக முன்னுேடிகளில் ஒருவரான ஜோன் த சில்வாவின் நாடகங்களைப் பாதுகாப்பது போல நடிகமணி வைரமுத்துவின் நாடகங்களான அண்ணுவி மரபு நாடகங்களை பேணி பாதுகாக்கவேண்டும்.
நடிகவேள் லடீஸ் வீரமணி
கடந்த கால் நூற்ருண்டுகளுக்கு மேலாக நாடகக் கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் லடீஸ் வீரமணி. நாடகத்தை தன் தொழிலாக; தன் வாழ்வாக, கடமையாற்றிக் கொண்டு வாழும் கலைஞர் நடிகவேள் லடீஸ் வீரமணி தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூப தரிசனம் தரும்
2

ஒரு அபூர்வக் கலைஞராவார். நாடக மேடையில் நல்ல பல சாதனைகளை நிலை நாட்டி வருபவர்.
நடிகவேள் லடீஸ் வீரமணி நாடக மேடையின் சகல நுட்பங்களையும் அறிந்தவர். ஒப்பனை முதல் காட்சி அமைப்பு வரை இவருக்குக் கை வந்த கலை யாகும். இன்று சிறந்த நடிகர்களாகத் திகழும் பலர் இவரிடம் பயிற்சி பெற்றவர்களே. “பொம்ம லாட்டம்’ நாடகத்தில் இவரின் நடிப்டை ஆங்கிலப் பத்திரிகைகள் கூட சிறப்பாக விமர்சித்தன . தமி ழகப் படைப்பாளி ஜெயகாந்தனின் ‘* யாருக்காக அழுதான் ‘’ கதையினை மேடை நாடகமாக்கி அதில் அப்பாவி ஜோசப்பாக நடித்துப் பலரின் பாராட்டைப் பெற்ருர், * வீரபாண்டிய கட்ட பொம்மன், நாடற்றவன், சலோமி, கங்காணி யின் மகன், வீரத்தேவன் , மனிதர் எத்தனை உல கம் அத்தனை, போன்ற நாடகங்களில் நடித்தும், நெறிப்படுத்தியும் உள்ளார். மேற் கூறப்பட்ட நாடகத்தின் சில நாடகப் பிரதிகளை இவரே எழுதி பபுள்ளார். 1970-ம ஆண்டு அரங்கேற்றப்பட்ட கவிஞர் அம்பியின் ‘வேதாளம் சொன்ன கதை" என்ற கவிதை நாடகத்தில் நடிகவேள் லடீஸ் வீர மணியின் நடிப்பைப் பலரும் பாராட்டினர்கள். இந்த நாடகத்தில் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்புத்தான் நாடகத்திற்கு உயிரூட்டியது என்று நாடக விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்புத்துறையில் மாத்திரமின்றி தமிழர்களின் பாரம்பரிய கிராமியக் கலைகளான வில்லிசையிலும் லடீஸ் வீரமணி சிறப்புற்று விளங்குகிருர், கவிஞர் மகாகவியின் "கண்மணியாள் காதை’ என்ற காவி யத்தைவில்லுப்பாட்டுநிகழ்ச்சியாக வில்லிசைத்துப் பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சி இலங்கையின் பல பாகங்களிலும் அரங்கேறியுள்ளது. இத்தகு வில் லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் வில்லிசைக்கு ஓர் வீர
33

Page 23
மணி என்ற பாராட்டினைப் பெற்றுள்ளார். அமர ரான அறிஞர் அ.ந.கந்தசாமி இவரதுகலையுலகமுன் னேற்றத்தில் பெரிதும் அக்கறை காட்டியுள்ளார்.
தழுவல் நாடகங்கள்
சிங்கள நாடக மேடையின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் காரணம் அங்கு தழுவல் நாடகங்கள் அதிகம் இடம் பெற்றதே காரணமாகும். சுய ஆக்கங்களை விட அங்கு தழுவல் நாடகங்களே சிங்கள நாடக மேடையை ஆக்கிரமித்துக் கொண்
6t.
தழுவல் நாடகங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் என்ன? தழுவப்படும் மூல நாடகங்களி லேயே நாடக ஆசிரியர் நெறியாளருக்கான மூலக் குறிப்புகளை கொடுத்துவிடுகிருர்கள். அதனுல் அந்த நாடகங்களைத் தழுவி மேடையேற்றும் தயா ரிப்பாளர்சளுக்கு அல்லது நெறியாளர்களுக்கு அந்த நாடகத்தைப் பற்றிய சுமை பெருமளவில் குறைந்து விடும். இந்தநாடகங்கள் வெற்றி பெறு வதற்கு இன்னுெரு காரணம் தழுவ எடுத்துக் கொள்ளப்படும் நாடகம் தலைசிறந்தது என்றுவிமர் சகர்களால் கருதப்படுபவையாக இருக்கும்.
'சிங்கள மொழியில் தழுவப்படும் நாடகங்கள் இலக்கிய ரீதியில் பிரபல்யம் அடைந்திருக்க தமி ழில் தழுவப்படும் நாடகங்களோ இரண்டாம் , மூன்ரும் தர பிறமொழி நாடகங்களாகவே இருக் கின்றன. நோர்த், லெஸ்லி சோண்டர்ஸ், வோல் டஸ் , ஹெகிஸ்லி, எல்மரை ஸ், சமர்செட் மாம் போன்றவர்களின் நாடகங்களைத்தழுவுவதற்கு நம் மவர்கள் முயலுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்த நாடகங்களில் விறுவிறுப்பான அம்சங்கள் உண்டு. துப்பறியும் நாடகங்களாக
34

வும், மர்ம நாடகங்களாகவும் இவை இருப்பதால் மேடை உத்திகளும் திருப்பங்களும் புதுமையாக தமிழுக்கு அமைந்து விடுகின்றன’’ என்று கலா விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் குறிப்பிடுகிருர். (டெயிலி நியூஸ் கட்டுரை)
விமர்சகரின் குறிப்பிலும் உண்மை இல்லாமல் இல்லை. 1960-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பெற்ற "டயல் எம் வோர் மேடர்’ என்ற துப்பறியும் நாடகம் மூன்று முறை அரங்கேற்றப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்றது. மீண்டும் இந்த நாடகம் பத்தாண்டு களுக்குப் பின்னர் "லிட்டில் ஸ்டேஜ்’ குழுவின ரால் 1971-ம் ஆண்டு கொழும்பில் மேடையேற்றப் பட்டது. இந்தத் துப்பறியும் நாடகம் உலகின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டது. பிரட ரிக் நோர்த் என்பவர் எழுதிய இந்த நாடகத்திற் குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் எழுத்தாளரான
எம். எம். மக்கீன்.
நெறியாளர் சுபைர் ஹமீட்டினுல் நெறிப்படுத்தப் பட்ட "பொம்மலாட்டம்’ அவளைக் கொன்றவள் நீ, நகரத்துக் கோமாளிகள், ஆகின தழுவல் நாடகங்களாகும். மொம்மலாட்டத்தில் வெற்றி நெறியாளர் சுபைர்ஹமீட்டிற்கு தமிழ் நாடக மேடையில் ஒரு நிலையான இடத்தைத் தேடிக் கொடுத்தது. அவளைக் கொன்றவள் நீ’ பல முறை மேடையேறியது. மெக்சிக் கோர்க்கியின் *அதள பாதாளமே நகரத்துக் கோமாளிகள். யாழ்ப்பாணத்துத் தேவனுல் தமிழ் வடிவம் தரப் பட்ட இப்ஸனின் “பொம்மை வீடு" பெண்பாவை என்ற பெயரில் மேடையேறியது. இரு துயரங் கள், பேசும் நெஞ்சங்கள், கடலின் அக்கரை போவோர்,காட்டுமிராண்டிகள்,மேகலை, சுவர்கள் ஆகியன தழுவல் நாடகங்களாகும்.
35

Page 24
சிங்களக் கலைஞரான தயானந்த குணவர்த்தணு வின் இபிகட்ட’ (ஆமை ஒடு) என்ற நாடகத்தை கிளரிக்கல் கிளாஸ் திரீ என்ற பெயரிலும் 'நரி பேணு' என்ற சிங்கள நாடகத்தை நரி மருமகன்’ என்ற பெயரிலும் மேடையேற்றினுர்கள்.
தமிழ் நயடக மேடையில் தழுவல் நாடகங்களைவிட கவிதை நாடகங்களே நன்கு பிரகாசிக்கின்றன. நாடக அறிவும், பிற மொழிப் பரிச்சயமும் உள்ள படைப்பாளிகளின் கவிதை நாடகங்கள் வெற்றி யீட்டின.
கவிதை நாடகங்கள்
ஈழத்து இலக்கியத்தில் கவிதைத்துறைதனித்துவத் துடன் சிறப்புற்று விளங்குகிறது. கவிதைத் துறையில் ஈழத்தவர்கள் பல சாதனைகளையும் பரி சோதனைகளையும் செய்துள்ளார்கள். ஈழத்துக் கவி ஞர்கள் நாடகங்களின் வளர்ச்சிக்காக பல கவிதை நாடகங்களை எழுதியுள்ளார்கள். ஈழத்து நாடக டையில் கவிதை நாடகங்கள் மேடையேற்றப் பட்டுள்ளன. இவற்றில் சில நூலுருவில் வெளி வந்துள்ளன. "
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சாகிரா கல்லூரியில், நடத்திய மகாநாட்டில் கவிஞர் இ. முருகையனின் "குற்றம் குற்றமே என்ற கவிதை நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்தக் கவிதை நாடகமே படைப்பாளிகளின் மத்தியில் கவிதை நாடகம் மேடையில் வெற்றிபெற முடியும் என நம்பிக்கையூட்டியது.
கவிதை நாடகங்களாக மகாகவியின் கோடை,
புதியதொரு வீடு, கவிஞர் முருகையனின் கடுழியம் கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை
36

ஆகியன மேடையேற்றப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர் இ. ரத்தினத்தின் மன்னன் ஈடிபசு என்ற கவிதை நாடகம் நூலுருவில் வெளிவந்துள் ளது. கல்முனை எழுத்தாளர் சங்க விழாவில் கவி ஞர் நீலாவண்ணனின் மழைக்கை என்ற கவிதை நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு கவிதை மேடை நாடகங்களை அளித்த பெருமை ஈழத்துக் கவிஞர்களையே சாரும் ,
நாடக விழாக்கள்
1956-க்குப் பின்னர் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச் சியைப் பற்றிப் பார்ப்போமானுல் 1960-ம் ஆண்டு நடைrெற்ற நாடக விழாதான் நம் கண் முன்னே வந்து நிற்கிறது. இலங்கையில் முதன் முதலில் தனி மனிதராக ஐந்து நாட்கள் நாடக விழாவை நடத்திய பெருமை கொழும்பு கலைச்சங்க செயலாளர் கே. பாலச்சந்திரனையே சாரும். 1960-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டுவரை கடந்த பத்து ஆண்டுகளாக நாடக வளர்ச்சிக்காக விளம்பர சாதனங்களின் மூலம் மத்தியதர வர்க்கத் தினரையும் மேல்மட்டங்களில் வாழ்வோரையும் தமிழ் நாடக மேடைப்பக்கம் திரும்பிய பெருமை இவரையே சாரும். லண்டன் கந்தையா, பதிவுத் திருமணம், குண்டலகேசி, லண்டன் வாழ்வு, புரோக்கர் கந்தையா போன்ற நாடகங்களையும் நாடக விழா, நகைச்சுவை விழா ஆகியவற்றை யும் வெற்றியாக நடத்தியுள்ளார். வாழும் போது கலைஞர்களை கெளரவிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தமிழ்-சிங்களவர் என்ற பாகுபாடு காட்டாது கலையரசு சொர்ணலிங்கம், ஓவிய மேதை கேட் முதலியார் ஏ.ஜி.எஸ். அமரசேகரா கவிஞர் கருணுரத்ன அபயசேகரா போன்ற கலைஞர் களை தமது கலைச்சங்கத்தின் மூலம் பாராட்டிக் கெளரவித்துள்ளார்.
37

Page 25
1968-ம் ஆண்டு 'நிழல்' மாதப் பத்திரிக்கை குழுவினர் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஏழு நாட்கள் இலவசமாக ஒரு நாடக விழாவை சிறப் பாக நடத்தினர்கள். இந்த நாடக விழாவில் ஆகா யப்பயணத்தின் அபாயம். ஊர் சிரிக்கிறது, சொல மியின் சபதம், பார்வதி பரமசிவம், அவளைக்கொன் றவள் நீ, சாணக்கியன், ஆகிய நாடகங்கள் இடம் பெற்றன.
இலங்கையின் பிரபல நாளிதழான 'தினகரன்' 1969-ம் ஆண்டு தலைநகரில் தமிழ் நாடகவிழா வொன்றை சிறப்பாக நடத்தியது. இந்தநாடகத் தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு தென்னகத்து திரைப்பட நடிகை ஒருவரை அழைத்து பரிசில் வழங்கி கெளரவித்தது. தினகரன் நாடகவிழாவில் சுபைர்ஹமீட் நெறிப்படுத்திய வாடகை அறை, எஸ். எஸ். கணேசப்பிள்ளையின் கறுப்பும் சிவப்பும், கலைச்செல்வனின் மனித தர்மம், ரகுநாதனின் கொலைகாரன், கே. எம். வாசகரின் சுமதி ஆகியன நாடக விழாவில் பங்குபற்றின. சிறந்த நடிகராக எம். எஸ். பத்மநாதனும், சிறந்த நடிகையாக குமாரிராஜமும், சிறந்த நெறியாளராக கலைச்செல் வனும், சிறந்த நாடகாசிரியராக கே. எம் . வாசகர், சிறந்த தயாரிப்பாளராக சுபைர் ஹமீட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
கலாசார அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாசாரப் பேரவை ஆண்டு தோறும் தமிழ் சிங்கள நாடக விழாக்களை நடத்தி வருகிறது.
1918-ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு மத்திய வங்கி தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியில் நாடக விழா வொன்றை நடத்தியது. சிறந்த மூன்று நாடகங்களாக முறையே ஆ. த. சித்திரவேலின் "செவ்வானத்தில் ஒரு', அந்தணி ஜீவாவின் ‘அக்கினிப்பூக்கள், எஸ்.வாசுதேவனின்
38

*மனிதன் - பகுத்தறிவு-மிருகம்' ஆகிய நாட கங்கள் தெரிவு செய்யப்பட்டது. மற்றும் இந் நாடக விழாவில் விடிவெள்ளி, சிந்தனைகள், பொம் மைகள் ஆகிய நாடகங்கள் இடம் பெற்றன. நாடக விழாவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரி சும் பண முடிப்பும் வழங்கி கெளரவித்தனர்.
பிற முயற்சிகள்
ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்காக எத்தகைய பிற முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம். எழுத்தாளரான அமரர் இலங்கை யர்க்கோன், சிறுகதைத் துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்டு பணியாற் றியுள்ளார். இவரின் சிறுகதைகளில் கூட நாட கப்பண்புகள் காணப்படுவதாக விமர்சகர்கள் கருது கின்றனர். இலங்கை யர்க்கோன் வானுெலி நாட
கங்கள் எழுதுவதில் அக்கறை காட்டினர். 'விதா னையார் வீட்டில்’’ என்ற நாடகம் வானுெலியில் தொடராக ஒலிபரப்பப்பட்டது. மாதவி மடந்தை, மிஸ்டர் குகதாசன், ஆகியமேடை நாடகங்களை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் சொக்கன்" சிலம்பு பிறந்தது’, ‘சிங்ககிரி காவலன்", ஆகிய நாடகப் பிரதிகளுக்கு கலைக்கழக பரிசில்களைப் பெற்றுள்ளார். இலக்கியத்தின் பல் வேறு துறைகளிலும் தமதுஆற்றலை வெளிப்படுத்தி யுள்ள எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை "முதல் முழக்கம்’, வலை”, ஆகியநாடகங்களைனழுதியுள்ளார். கல்லூரிஆசிரியராக பணியாற்றிய எஸ். பொன்னு துரை மாணவர்கள் நடிப்பதற்காக பலஓரங்க நாட கங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். மட்டக் களப்பு எம்.எஸ்.பாலு (பாலுமாஸ்டர்) ஆர். பால கிருஷ்ணன் போன்றவர்கள் நடிப்பதற் கென்று நாடகங்களை எழுதியுள்ளனர்.
39

Page 26
* வாழ்வு பெற்ற வல்லி" என்ற நாடக நூலுக்கு சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றுள்ள த. சண் முகசுந்தரம் 'பூதத்தம்பி’ என்ற நாடக நூலையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தேவன்"நளதமயந்தி" “கற்புக்கனல்", ஆகிய நாடகங்களை நவீன நாடக மேடைக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளார். "தென்ன வன்பிரமராயன்' என்றநாடகநூலையும் நூலுருவில் வெளியிட்டுள்ளார்.
நடிகரும் நாடகாசிரியருமான ஏ. ரி. பொன்னுத் துரை பத்துக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். இவரின் “நிறைகுடம்” பல இடங்களில் மேடையேறியுள் ளது. சி. சண்முகம் நூற்றுக் கணக்கான வானுெலி நாடகங்களை எழுதியுள்ளதுடன் வானுெலி நாடகத் தயாரிப்பாளராக கடமையாற்றுகிருர். வானுெலி நாடகதயாரிப்பாளராக கடமையாற்றிய இலக்கிய வாதியான காலஞ்சென்ற அ. கைலாசநாதன் சில வானுெலி நாடகங்களை எழுதியுள்ளார். மேடை நாடகத்தை விட வருவாய் காரணமாக வானுெலி நாடகங்கள் எழுதுவதில் பலர் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தலைநகரான கொழும்பில் நடிகவேள் லடீஸ்வீரமணி, சுபைர் ஹமீட், அ.தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம், கலைச் செல்வன், ஜெ.பி. நெபட், எஸ்.எஸ். கணேச பிள்ளை, எம்.எம். மக்கீன் அந்தனிஜீவா, ஏ. ரகுநாதன், க.பாலேந்திரா, ஹீசைன்பாருக் எம். வி. எட்வர்ட், கே.சி.ஆனந்தன், எம்.சோம சுந்தரம் மாத்தளை கார்த்திக்கேசு ஆகியவர்கள் நாடகங்களை எழுதியும் நெறிப்படுத்தியும் மேடை யேற்றி வருகின்றனர்.
முடிவுரை ஈழத்து தமிழ் நாடகம் பற்றியும் குறிப்பாக மேடை
40

நாடகம் பற்றிய தகவல்களையும் வரலாற்று உண்மைகளையும் கூறியுள்ளேன். தமிழ் நாடக மேடையைப்பற்றி முழுமையாக ஆராயப்போகும் வரலாற்று ஆசிரியனுக்கோ அல்லது நாடகத்
துறையைப்பற்றி அறிய விரும்பும் சுவைஞ னுக்கோ இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது என் நம்பிக்கை.
41

Page 27
பின் குறிப்பு
ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற இந்நூலில் காணப் படும் கருத்துக்கள் அனைத்தும் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் திருப்பூரில் நடைபெற்ற கலை,இலக் கியப் பெருமன்ற மாநாட்டில் பேராசிரியர். நா. வானமாமலை முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங் கில் என்னுல் சமர்பிக்கப்பட்ட கட்டுரையாகும். அந்த கட்டுரையில் எவ்வித திருத்தமோ, மாற் றமோ செய்யாமல் நூலுறுவில் தரப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு வெளிவரவேண்டிய இந்நூல் என் கவனக்குறைவினுலும், வேறு பணிகளில் ஈடுபட்ட. தாலும் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வருகின்றது. 1978-க்கு பின்னர் ஈழத்து நாடக மேடையில் நாடக நெறியாளர் க. பாலேந்திரா வின் முயற்சிகள், யாழ்ப்பாணத்தில் நாடகத்துறை யில் மாற்றத்தை ஏற்படுத்திய நாடக அரங்க கல்லூரிமுயற்சிகள் பாராட்டுக்குரியன. அத்துடன் *அரங்கம்’ என்ற பெயரில் நாடக அரங்க கல்லூரி நாடக வளர்ச்சிக்கென சஞ்சிகை ஒன்றையும் வெளி யிடுகிறது. ஈழத்தில் சிங்கள நாடக மேடையில் 1956க்கு பின் ஏற்பட்ட மாற்றமும், தமிழ் நாடக மேடையில் 1960களுக்கு பின் ஏற்பட்ட மாற்றமும் ஈழத்து தமிழ் நாடக மேடையை 1980களில் சர்வ தேச நாடக அரங்க வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சி யடைந்து வந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக யிருக்கிறது. கடந்த இரு சகாப்தங்களாக நாடக மேடை நவீன பார்வையுடன் முன்னேற்றங்கண் டுள்ளது. கடந்த ஒரிரு ஆண்டுகளாக தமிழக நாடக மேடை போலி சினிமா ரசனையினின்றும், சபா நாடகங்களினின்றும் வேறுபட்டு பரிசோதனை களில் ஈடுபட்டுள்ளது.ஆனல் ஈழத்து தமிழ் நாடக மேடை உலகநாடக அரங்கின்தூரத்திற்கு வளர்ச்சி யடைந்துள்ளதை வரலாற்று ஆய்வாளர்களே ஒப் புக்கொள்வார்கள்.
42


Page 28


Page 29
நமக்குத் リ 。 முத்தைத் தொழிலாக நி:ண்டிருக்கீருர், ஈழத்து நாடக மேழிை நிதிங்சனங்களேயும்
யேற்றி வருகிருர், 1970-க்குப்பின் தெ' தமிழ் நாடக அறிமுகப்படுத்திகு 1974-° ஆண்டு நாடகத்திற்கு அரசு சிறுகதை, நாடகம் வி தனது ஆளுமையை புதிய வார்ப்புகள் முற எழுத்தார்கள் Եսային QLFir uճալதியுள்ளார். மலேயகக் ல்ே இலக்கி திருக்கிருள் கவிதா
ரியிட்டுள்ளார்.
 
 
 

எழுத்து' என்ற கூற்றுபடி வாழ்வாக அந்தனிஜ்வா
ாண்ட நாடகங்கள் Tugi,
இார் வர்க்கப்
துக்கினிப்பூக்கள் மூலம்
鹽曹翌 னே அழுகிறது" -àg要·
தன்ம் ஆகிய துறைகளில் நாட்டியுள்ளார்.
ன்ற வரியிைல் இது
பும் பெண்
ாரியுேம் அறிமுகப்படுத்
போதுவ செயலாளராகவும்
என்ற பெயரில் சஞ்சிகை
SMS D S அட்டை வம்சாத்தி

Page 30
TAM L. P.
Anthony Jecwa, who re and Literary Conference of the distinction of having hecause it offended tible tal
The 32 years old playwri in Tamil literary circles, Theatre in Sri Lanka' Anti stress that the first Taninil pola in Sri Lanka by the poet P the 19th century Till then folk play and street drama
Anthony Jeeva has ab Akkini Pookal" a play second prize at the Centr: ation Drama Festival held the class struggle and is kind on the Tamil stage.
Among his other plays audiences are Mulli Raja The last named has only th in the Tamil theatre.
Jeeva who was born at Sinhala fluently. It was th him to tako to playwriting dena's “Nari Berna" and Katawa" he says, Were t
( BLI
 
 

AYWRIGHT
presents Sri Lanka at the Art
Tamil Nadu naxt month, has one of his plays banned
te of the CCI SOTS.
ght, who is a familiar figure will read paper on "Tamil lony Jeeva says his paper will y as we know it was written Lulla var Mutu kumaraswa Tyin
he says there were only the
L5
out ten plays to his credit he wrote in 1972, won the Bank Tamil Literary Associrecently. The play portrays said to be the first of its
that a Te Well known to Tamil '' Paravaigal" and 'Kavidha" ree characters and is unusual
ld grew up in Colombo, speaks e Sinhala theatre that inspired in Tamil. Dayananda Guna Wr Henry Jaya sena's Hunu Wataya , he main influences.
Ehsan Souljah
nday Observer July 30, 1978)