கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 12 மணி நேரம்

Page 1
Issour 23 g * + ခေါ် ဒေါ် ဒို့ပြို|ရှိုး கிழக் ா'என்ற இரைச்ச ليتهsuےيما 默
రTత్త59రUT Sa5
தீ எத்ததின் இச
5○琴み三らテ
ܒ ܒ ܒ -
 

சிநேரம் ஆசிரியர்
- [ } |
)DJ O)
Srs, 7 Dez ಶà 856)II. DuB 5. ல் சூறலுளி! களபடி

Page 2

"24 மணி நேரம்’ ஆசிரியர்
'நீலவண்ணன்”
வரதர் வெளியீடு

Page 3
12 மணி நேரம்?
ஆக்கம்: நீலவண்ணன்
ம்ேலட்டை ஓவியம்: ரமணி
போட்டோக்கள்: திரு. ந. புவனச்சந்திரன்,
ஜனப் யூ. சம்சுதீன்
வெளியீடு: "வரதர் வெளியீடு"
அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்
விற்பனையாளர்; ஆனந்தா புத்தகசாலை
226, காங்கேசன்துறைவிதி, யாழ்ப்பாணம்
ଉନଥିବା) ।

பதிப்பாளர் குறிப்பு
மட்டக்களப்புப் பகுதியில் குருவளி அடித்தது unum நாடெங்கும் ஒரே பரபரப்பு! பரபரப்பான சம்பவங்களை-பரபரப்பான சில நாள்களோடு மறையவிட்டுவிடாமல், எழுத்தில் வடித்து வைக்க வேண்டு ம்ென்ற விருப்பம் எனக்குண்டு. சும்மா, மேலோட்டமாக எழுதித் தள்ளிவிடாமல் ஆதியோ டந்தமாக-விரிவாக, தெளிவாக, ஒரு நல்ல சரித்திரமாகப் படைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.
நான் எதிர்பார்க்கிறபடி இத்தகைய சமகால வ ர ல |ாறு களு க் கு எழுத்துருவம் கொடுக்கக்கூடிய ஒரு எழுத்தாள நண்பர் பக்கத்திலேயே இருந்தார். நண்பர் "நீல வண்ண"னை வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. ஈழத்து நூல் வெளியீட்டுத்துறை யில் ஒரு மகத்தான சாதனையை ஏற்படுத்திய "24 மணி நேரம்’ என்ற நூலை எழுதிய அதே 'நீலவண்ணன்'தான்! எனது கருத்தை அறிந்த நண்பர் "நீல வண்ணன் மிக உற் சாகத்துடன் மட்டக்களப்புக்குப் புறப்பட்டார். அங்கேஎங்கெங்கே போக வேண்டுமோ அங்கெல்லாம் போனுர், யார் யாரைப் பார்க்க வேண்டுமோ அவர்களையெல்லாம் பார்த்தார். விஷயங்களைச் சேகரித்தார். நூற்றுக் கணக் கான போட்டேர் படங்களையும் கொண்டு வந்து தந்தார். மட்டக்களப்பிலிருந்து திரும்பி வந்த நீலவண்ணன் ஒரு கணமும் ஓய்வு எடுக்கவில் : - தமது சேகரிப்புகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினர். அவர் எழுத எழுத,-அவை உடனுக்குட ன அச்சாகிக்கொண்டிருந்தன. மேலட்டைக்கான ஒவியத்தை புகழ்பெற்ற ஓவியர் 'ரமணி" ஒரே நாளில் வரைத்து உ த ஷி ன ர். யாழ். கொழும்பு ஸ்ரூடியோவினர் தேவையான படங்கள் எல்லாவற்றையும் மிக மிக விரைவாக "புளொக்" ஆக்கித்தந்தார்கள். மட்டக்களப்பில் அடித்த குரு வளியின் த7 க்கம் ஒயுமுன் னரே-இத்தனை விரைவாக இந்த "12 மணி நேரம்" இத் தனை சிறப்பாக வெளிவந்த வரலாறு இது.
உதவி புரிந்தோருக்கு ந்ன்றி. 8 O
கீெழும்புதமி ¥ eq -مشسس யாழ்ப்பாணம் ○ AMN**NSYN www.max
0-1 - 1979 Stu Toit st

Page 4
|-
 
 
 
 

==--
1.
■
Eso@gųo os tīrītī işgsso - †
‘s’ a’toqslono sportos@@ · =
Essas sērī£, qiris s-aửīdī) og 『「ショg gag@ f
3)
— quaiena*、(€)
N 鵝

Page 5
சூா?வளியின் அமைப்பு
குழு வளியின் பயணப்பாதை
 
 
 
 

1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் திகதி5
இலங்கை வளிமண்டலவியல் அவதான நிலையம் தனது எச்சரிக்கையை வெளியிட்டது. வானெலியும் தினசரிப் பத்திரிகைகளும் இந்த எச்சரிக்கையை இலங்கை எங்கும் எடுத்துச் சென்றன. வழமைபோல மக்கள் இந்த எச்ச ரிக்கைச் செய்தியை அலட்சியமாக எடுத்துக்கொண்டனர். மீண்டும் 22-ஆம் திகதி வளிமண்டலவியல் அவதான நிலை யம், எச்சரித்தது: ጰ
**. கிழக்குக் கடலில் வீசும் சூரு வளி இப்போது மட்டக்களப்பை நோக்கி வருகின்றது. 200 மைல்களுக்கு அப்பாலேயே இப்போது வீசுகின்றது. இன்று காலை மட் டக்களப்புக் கரையை அடையலாம் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.இதன் விளைவாகக் கடும் புயல் காற்றுவீசும், கிழக்குக் கடல் கொந்தளிப்புக் காணும். s
இந்த இறுதி எச்சரிக்கையையும் கிழக்கு மாகாண மக்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டனர். மனி னும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் சிலர் இந்த எச்சரிக்கையால் விழிப்படைந்தனர். அவர்களால் என்ன தான் செய்ய முடியும்?
இயற்கை அன்னை கோபாவேசத்துடன் கிழக்கு மாகா ணத்தில் படையெடுத்து விட்டாள். கர்ற்றரக்கனையும் கடல் பிசாசையும் வெள்ளப் பேயையும் தன் படைக்கலங் களாகக் கொண்டு, பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டாள். இயற்கையின் யுத்தகளம். இயற்கைக்கு வெறி பிடித்துவிட்டால், அவளாகத் தணியும் வரை அவளைத் தணிப்பார் எவரும் இல்லை.
2-LD. Gip.

Page 6
8 12 மணி நேரம்
சூருவளியின் உற்பத்திக் களம்
1978, நவம்பர், 23
கிழக்கு மாகாணத்தைப் பயங்கரமான குரு வளி முழுப் பலத்துடன் தாக்கியது.இத்தாக்குதல் நிகழ்த்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்தான். இதன் பிறப்பு உருவாகியது சுழற்சியையும் அசைவையும் கொண்ட காற்றைத்தான் குழு வளி என்பர். பொதுவாக ஒரு சூரு வளி உருவாவதற்கு 5 தொடக்கம் 7 நாட்கள் வரை தேவை. இலங்கைக்கு கிழக்கே இந்து சமுத்திரத்தில், வங்காள விரி குடா வில் தென் அந்தத்தில், நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நவம்பர் 16 ஆம் திகதி, குருவளி ஒன்றினைத் தோற்று விப்பதற்கான நிலைமைகள் உருவாகின. இலங்கையின் கிழக்கு எல்லையிலிருந்து ஏறத்தாழ 1600 மைல்களுக்கு அப்பால், இச்சூருவளியின் உற்பத்திக் களம் அமைந்தது.
பொதுவாக அயன மண்டலச் சமுத்திரங்களில் சூரு வளிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இலங்கை யையும் இந்தியாவையும் தாக்குகின்ற சூருவளிகள் அதிக அளவில் வங்காள விரிகுடாவில் உற்பத்தியாகின்றன. நவம்பர் மாதச் சூரு வளியின் பிறப்பிடம் 92° கி ழ க்கு நெடுங் கோட்டிற்கும், 4° வடக்கு அகலக் கோட்டிற்கும் இடைப்பட்ட நிக்கோபார் பிரதேசமாக அமைந்தது. 1 இலங்கையின் தென் எல்லை 6° வட அகலக்கோடாகும்; ஏறத்தாழ 1600 மைல்கள் கிழக்கே இலங்கையின் தென் எல்லையிலிருந்து 2° தெற்கே நவம்பர்ச் குரு வளி தோற்றம் பெற்றது.
சூருவளி மாதங்கள்
இலங்கை மத்திய கோட்டை அடுத்து அமைந்திருப்ப தால், அயன மண்டலச் சூருவளிகள் வானிலையில் அதிக செல்வாக்கினை வகித்து வருகின்றன. ஒக்டோபர், நவம் பர், டிசம்பர் ஜனவரி ஆகிய மாதங்களில் இலங்கை வளி

iš மணி நேரம் s
மண்டலத்தில் சூரு வளிகள் உருவாகின்றன. இச் சூரு வளி களின் தோற்றப்பாடுகள் வங்காள விரிகுடாவிலிருந்து அல் லது மலாக்காத் தொடு கடலிற்குக் கிழக்கில் இரு ந் து உற்பத்தியாகி இலங்கைக்கு மேலாக வீசுகின்றன. 1845 ஆம் ஆண்டிற்கும் 1967 ஆம் ஆண்டிற்கும் இ  ைட யி ல் 108 அயனமண்டலச் சூரு வளிகள் ஏற்பட்டுள்ளன. அவற் றில் 34 சூருவளிகள் நவம்பர் மாதத்திலேயே ஏற்பட் டுள்ளன. 88 குரு வளிகள் ஒக்டோபர் - பெப்ரவரி மாதங் களில் ஏற்பட்டுள்ளன.? 4X
கிழக்கு மாகாணத்தைத் தாக்கித் தரைமட்டமாக்கிய குருவளி அரக்கனும் நவம்பர் மாதத்தில்தான் தோற் றம் பெற்றன். ኣ அமைதி வலயம்
கிழக்கு மாகாணத்தைத் தரைமட்டமாக்கிய சூரு வளி யின் ஆரம்பம், பயங்கர அமைதியுடன் தொடங்கியது நிக்கோபார் தீ விற்கு மேற்கே, இந்து சமுத்திரத்தில் நவம்பர் மாதம் 15 - 26 ஆம் திகதிகளில் என்றுமில்லாத அமைதி நிலவியது, விபரிக்க முடியாத அமைதி. பொங்கி வானளாவி அலையெழுப்பிய இந்து சமுத்திரம் திடீரென சாதுவான பிள்ளைபோல அடங்கி, மெல்லிய தளும்பலு லுடன் காட்சி தந்தது, மென் காற்றுக்கூட அப்பிரதே சத்தில் வீசவில்லை. வானில் பறந்த பறவைகள் பறப்பதற் குச் சிரமப்பட்டன.
பயங்கர அமைதிப் பிரதேசம் ஒன்று வடக்குத் தெற் காக ஏறத்தாழ 300 மைல்கள் அகலத்தில் உருவாகி விரி வடையத் தொடங்கியது. அந்தி அமைதி வலயத்தின் வட எல்லையில் வடகீழ் வியாபாரக் காற்று வந்து முட்டியது. தென் அந்தத்தில் தென் கீழ் வியாபாரக் காற்று, தென் மேல்காற்ருக வந்து மோதியது பூமியின் மத்தியகோட்டை (s-LDGuat) 5, பூமத்தியரேகை) தேன் கீழ் வியாபாரக் காற் றுக் கடக்க நேரிட்டதால், அது தென்மேல் காற்ருக வட அரைக்கோளத்தில் திசை திரும்பி வீசியது. பூமியின் மேற் பரப்பில் அசையும் எப்பொருளும் மத் தி ய கோட்டைக்

Page 7
16 12 மணி நேரம்
கடக்க நேர்ந்தால், வட அரைக்கோளத்தில் அதன் வலது பக்கத்திற்குத் திசை திரும்பும் என்பது விதி. இவ் விரு காற்றுக்களையும் ஒன்றினேடு ஒன்று கலக்காமல் இடையில் உருவாகிய அமைதி வலயம் பிரித்து வைத்திருந்தது. இக் காற்றுத் தொகுதிகளைப் பிரித்து வைத்திருக்கும் இவ்வல யத்தை அயனப் பிரதேசத்திற்குரிய ஒருங்கல் வலயம் என்பர்,
நிக்கோபார் தீவுகளின் மேற்குப் பிரதேசச் சமுத்தி திரப் பரப்பில் உருவாகிய இந்த அமைதி வலயத் தி ன் பின்னல் கொந்தளிப்புகள், புயல்கள், இடிமின்னற் புயல் கள் என்பன தோன்ற இருக்கின்றன என்பதனை கிழக்கு மாகாண மக்கள் அறிந்திருக்கவில்லை,
பண்டைநாளில் பாய்மரக் கப்பலில் கடற் பிரயாணம் செய்த வியாபாரிகளும், மாலுமிகளும் இரண்டு விடயங் *ளுக்குத்தான் பயந்திருந்தார்கள். ஒன்று திடீரென சமுத் திரத்தில் உருவாகும் இத்தகைய அமைதிக்கும், இரண்டு அந்தப் பயங்கர அமைதியைத் தொடர்ந்து உருவாகும் சண்டமாருதச் சூரு வளிக்கும் ஆகும், இரண்டும் மிக மிகப்
ListLDT G07 að06
பாய்மரக் கப்பல்கள் திடீரெனச் சமுத்திரத்தில் நின்று விடும் பொங்கி விம்மி இருந்த கப்பல்களின் பாய்கள் அப் படியே தொங்கிச் சரிந்துவிடும். அலையெறிந்த சமுத்திரத் தில் குளத்து நீராகச் சமுத்திரம் அடங்கிவிடும். வீசிய காற்று திடீரென மறைந்து, குழ ல் அமைதி அடைந்து விடும். பாய்க்கப்பல்கள் நின்ற இடத்தில் தரித்து நின்று விடும். அதி வெப்பம் அப்பிரதேசத்தில் நிலவும். வியர்வை ஆருகப் பெருகும். வானம் வெறிச்சோடிக் கிடக்கும்.
தரித்து நிலைத்துவிட்ட பாய்மரக் கப்பல்கள் ஒருநாள் . இரண்டு நாள். மூன்று நாள். அப்படியே காற்றையும் வரப்போ கின்ற பயங்கரத்தையும் எதிர்பார்த்து நிற்கும், அப்படியே அவை ஒரு வாரம் வரையில்கூட நின்றுவிடுவ துண்டு

12 மணி நேரம்
காற்றின் உந்தலை நம்பாத இன்றைய நவீன கப்பல் களின் பருமனும் வேகமும் இந்த அமைதி வலையத்தின லும் குருவளியிஞலும் ஸ்தம்பித்து நின்றுவிடுவதில்லை. நிக்கோபார் தீவுகளே அடுத் து உருவாகிக்கொண்டிருக் கும் குரு வளியினை மு ன் சு ட் டி யே அறிந்துகொண்ட இலங்கை வளிமண்டலவியற் பகுதியினர் அதுகுறித்து முன்னரே எச்சரிக்கை செய்திருந்தனர். அதனுல் குழு வளியின் பாதையில் வந்துகொண்டிருந்த கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூரிலிருந்து, மலாக்காத் தொடுகடலூடாக வங்காள விரிகுடாவில் பிரவேசித்து, திருகோணமலையை நோக்கி வந்துகொண்டிருந்த "சிதம்பரம்’ என்ற வர்த்த கக் கப்பலிற்கு 22 ஆம் திகதி எச்சரிக்கை வழங்கப்பட் டது. குழுவளி இலங்கையை நோக்கி நகர்த் தொடங்கி விட்டது என்ற எச்சரிக்கை கிடைத்ததும், சிதம்பரம் கப் பல் தனது வேகத்தை முடுக்கிவிட்டது. சமுத்திர நீரைக் கிழித்துக்கொண்டு பயங்கர வேகத்தில், பேய் ஒன்றினல் துரத்தப்படும் எண்ணத்துடன் திருகோணமலைத் துறை முகத்தை வந்தடைந்தது. வேகத்தை அதிகரித்து விரை வில் வந்து சேருமாறு அவசர வானுெலிச் செய்தி சிதம் பரத்துக்குக் கிடைத்திருக்காவிடில், சூரு வளியின் பயங் கரத்தினை அக்கப்பலும் அதிலிருந்தவர்களும் அனுப வித் திருப்பார்கள்.
சிதைந்தது அமைதி
அமைதி வலயத்தின் வெப்பநிலை சுற்றுப்புறச் சமுத் திரப்பிரதேசங்களிலும் பார்க்க அதிகமானதாக விளங்கி யது. பொதுவாகச் சூரு வளிகள் 80° பரன் கயிற் (27° சென் ரிகிரேட்) வெப்பநிலைக்கு மேலிருந்தால்தான் உருவாகின் றன நிக் கோ பார் சமுத்திரப் பரப்பில் உரு வா கிய அமைதி வலயத்தின் வெப்பநிலை அதிகமாக இருந் தது. வளிமண்டலத்தில் சூரிய கதிர்களைத் தடுத்து வெப் பத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய முகில் தொகுதிகள் அவ் வேளையில் காணப்படவில்லை, அழித்துத் துடைத்த கண்

Page 8
12 12 மணி நேரம்
னடிபோல வானம் விளங்கியது. அத ஞ ல் கதிரவனின் முழு வெப்பமும் தங்கு தடையின்றி அப்பிரதேசத்தில் இறங்கியது.
வெப்ப அதிகரிப்பால் அப்பிரதேசத்திலிருந்த வளி சூடாகத் தொடங்கியது. வளிசூடாகியதும், காற்றுாதப் பட்ட பலூன் மாதிரி விரிவடையத் தொடங்கியது. விரி வடைய விரிவடைய அதனது பரு ம ன் கூடிப் பாரம் குறைந்தது. அதன் விளைவு-? அமைதி வலயத்தில் இருந்த காற்று முழுவதும் மிக்க வேகமாக குத்தாக மேலெழத் தொடங்கின. ஆரம்பத்தில் குத்தான இந்த மேலெழுச்சி மெதுவாக இருந்தது. படிப்படியாக இம்மேலெழுச்சி அதி கரிக்கத் தொடங்கியது. (படம்-1,2)
இவ்வேளையில் அமைதி சிதைந்தது; வடகீழ் வியாபா ரக் காற்றையும் தென்மேல் காற்றையும் பிரித்து வைத் திருந்த வலயம் சிதைந்தது. இர ண் டு காற்றுக்களையும் பிரித்திருந்த அணை உடைந்தது. அதி வெப்பத்தினுல் அமை திப் பிரதேசக் காற்றுக்கள் விரிவடைந்து மேலெழ, அவ் விடத்தில் தாழ் அமுக்கம் உருவாகியது. வழமையாக உரு வாகக்கூடிய தாழமுக்கமல்ல; அதீதமான தாழமுக்கம். ஒரு பிரதேசத்தை அமுக்கிக் கொண்டிருந்த காற்றுக்கள், வெப்பமாகி விரிவடைந்து மேலெழுவதால், அவ்விடத்தில் ஏற்படும் காற்று வெற்றிடத்தைத்தான் தாழ மு க் கம் என்பர்
ஒரு குரு வளியின் மத்திய அமுக்க அளவு பெரும்பா லும் 960 மில்லிபாராக இருக்கும் (28") . 1932 ஆம் ஆண்டு கரீபியன் கடலில் உருவாகிய சூரு வளியின் மத்திய அமுக்க அளவு 914 மில்லிபாராக இருந்திருக்கின்றது, மட்டக்களப்பைத் தாக்கிய குரு வளி அரக்கனின் மத்திய அமுக்க அளவு 953 மில்லிபாராக இருந்ததென மட்டக் களப்பு அவதான நிலையம் பதிந்திருக்கின்றது. நவம்பர் மாதத்தில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் நிலவும் அமுக்க அளவு 1014 மில்லிபாராகும். 8 N : "r

12 மணி நேரம் 13
காற்றுச் சுருள்கள்.
வடகீழ் வியாபாரக் காற்றையும் தென்மேல் காற்றை யும் பிரித்திருந்த அணை உடைந்தது; அதேவேளை அமைதி வலயத்தில் காற்று வெற்றிடமும் ஏ ற் பட்ட து, நீர் நிறைந்த ஒரு குளத்தின் மத்தியில் தி டீ ரெ ன கணப் பொழுதில் பெரும் பகுதி நீர் எடுக்கப்பட்டால், எவ்வாறு சுற்றிவர இருக்கும் நீர் அ ந் த நீர்ப்பள்ளத்தை நா டி விரையுமோ அவ்வாறு ஒரு நிகழ்ச்சி உருவாகியது. பள் ளத்தை நாடி நீர் விரைவது போல, தாழமுக்க மையத்தை நாடி சுற்றிவர இருந்த காற்றுக்கள் மிக்க வேகத்துடன் விரைந்தன. குத்தான பள்ளம், காற்று வெற்றிடப் பள் ளம், அப்பள்ளத்தில் வடகீழ் வியாபாரக் காற்றும் தென் மேல் காற்றும் மிக்க வெறியுடன் மோதின. ஒன்றுடன் ஒன்றுமோதி, மோதிய வேகத்தில் அப்பள்ளத்தில் சுழலத் தொடங்கின. காற்றுச் சுழிகள் உருவாகின. மோதல் அல் லது ஒருங்கல் தொடர்ந்து நிகழ தாழமுக்க மையச் சுழற்சியும் அதிகரிக்கத் தொடங்கியது. (படம் - 1). நேரம் செல்லச் செல்ல அச் சுழற் சிப் பரப்பு அதிகரிக்கத் தொடங்கியது. பத் து மைல்களிலிருந்து படிப்படியாக அதிகரித்து 300 மைல்கள் வரையில்கூட சுழற்சிப்பரப்பு விரிவடைவதுண்டு. தாழமுக்கப் பள்ளத்தில் சுழற்சியுற்ற காற்றுக்கள், பின்னல் வரும் காற்றுக்களின் உந்தலால் வேகமாக மேலெழுந்தன. தாழமுக்கப் பள்ளத்தில் வேக ம்ாக வந்து சேரும் காற்றுக்கள் வெப்பமானவையாக இருந்தன. அதனல் ஆவியாகுதல் நிகழ்ச்சியும் அதிக அள வில் நிகழத் தொடங்கியது. நிர்மலமாக இருந்த வானத் தில் ஆவியாகுதல் காரணமாக நீராவி நிறைந்து முகில் களைத் தோற்றுவிக்கத் தொடங்கியது.
சூருவளி பிறந்துவிட்டது! அயனச் சூருவளி பிறந்து விட்டது! அமைதியாக இரு ந் த இந்து சமுத்திரத்தின் நிக்கோபார் கரையில் கீழ்மாகாணத்தை நோக்கிப் படை யெடுப்பதற்கான அரக்கக் குழந்தை பிறந்தது!

Page 9
4. 12 மணி நேரம்
இச் சூரு வளி அரக்கனின் சுழற்சி இடது பக்கமான சுழற்சி. மணிக்கூட்டின் முள்கள் சுழலும் திசைக்கு எதிர்த் திசையின் சுழற்சி. சுழற்சியுடன் மேலெழுந்த இக் காற்று 30,000 அடி வ  ைர டயங்கர வேகத்துடன் எழுந்தது. குத்தாக உயர்ந்தது. அதன் பின்னர் உயர்மட்டத்தில் நாலாபக்கமும் விரியத் தொடங்கியது. அதனல் ஒரிடத் தில் நிலைத்து நின்று சுழன்ற அக்காற்று, ஒ ரு புறமாக அசையத் தொடங்கியது.
சுழற்சியும் அ  ைச வும் குழு வளியின் இயக்கங்கள். அவையே அழிவின் ஆரம்பங்கள். வேகமான சுழற்சி, விரைவான அசைவு. மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 1600 மைல்களுக்கு அப்பால் தங்கள் மாவட்டத்தை அழிக் கக் கருதி ஒரு அரக்கன் உருவாகிவிட்டான் என்பதனை உண ராத அம்மாவட்டம் தன் வழமையான வேலைகளில் மகிழ் வுடன் ஈடுபட்டிருந்தது.
கிழக்கு மாகாணமோ, அல்லது வேறெந்த வானெலி நிலையங்களோ அறியாத இந்த அரக்கனின் பிறப்பை ஒரு ஜடப்பொருள் முதன்முதலில் கண்டது. அதுதான் -
‘ரிறேஸ் என் செய்மதி
அயன மண்டலச் சூரு வளிகளை முன்னறிவித்தல் செய் வது கடினமாகவுள்ளது. ஏனெனில் தொடங்குகின்ற குே வளிகள் முதிர்ச்சியடைவது மிகக்குறைவு. இந்து சமுத் திரத்தில் தோற்றம் பெற்ற சூழு வளிகள் பல, வங்காள விரிகுடாவின் தென்பகுதியை அடையும்போது மறைந்து போய்விட்டன. சில இலங்கையின் கிழக்குக் கரையோரத் திற்குச் சில மைல்கள் வரை வந்துவிட்டு, வடக்காக அல் லது வடமேற்காக இந்தியக் கரையை நோக்கித் திரும்பிச் சென்றுள்ளன. இவற்றில் சில வலியிழந்தனவாக இலங் கையை அடைந்து, இருபத்திநான்கு மணிக்குள் சூரு வளி களாகச் செறிவடைந்து, செல்லும் திசையில் வெள்ளப் பெருக்கு கடுங்காற்று என்பனவற்ருல் அழிவை ஏற்படுத்தி 4ள்ளன. மாறுமியல்புள்ள இத் த  ைகய அயனமண்டலச் குரு வளிகள், கரையை அடைந்து தர்க்கப்போகும் செய்

12 மணி நேரம் 5
தியை முன்னறிவித்தல் கடினம்ே. இலங்கையைப் போன்ற சிறியதொரு தீவில் வங்காளவிரிகுடாவில் இலங்கைக்குக் கிழக்கே அவதான நிலையங்கள் இன்மையால் குருவளிகள் குறித்த புள்ளி விபரங்கள் இல்லை. 1845 ஆம் ஆண்டிற்கும் 1967 ஆம் ஆண்டிற்கும் இடையில் 108 குழு வளிகள் நிகழ்ந் துள்ளன. 4
இவற்றில் 1937, 1944, 1947, 1957, 1964 ஆகிய ஆண்டு களில் குழு வளிகள் இலங்கையில் ஒரு கலக்குக் கலக்கியுள் ளன. 14 ஆண்டுகளுக்கு முன்னர் 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சூரு வளியொன்று பயங்கரமாகத் தாக்கியது. இந்தச் சூரு வளியை லீ சா? எனப் பெயரிட்டனர். இச்சூரு வளியின் சீற்றத்தினல் 2000 பேர் மாண்டார்கள். 1,00,000 பேர் வீடிழந்தனர். 50 கோடி ரூபாவிற்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ம தி ப் பீடு செய்யப்பட்டது. மயிலிட்டியில் கடலுக்குச் சென்ற மீனவர் கள் வீடுதிரும்பவில்லை. மன்னர் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலொன்று இச் சூரு வளியால் கரைக்கு அள்ளப்பட்டு' நிலத்துள் புதையுண்டது. கடலில் அலைகள் பதினைந்து அடி உயரத்திற்கு மே ல் எழுந்தன. உள்நாட்டிற்குள் மேவிப் பாய்ந்தன. 5
இயற்கையன்னையின் சீற்றத்தை எவராலும் த டு த் து நிறுத்திவிட முடியாது. ஆயினும் குழு வளியின் வருகையை அறிந்து கொண்டு, முன்னேற்பாடுகள் செய்து கொள்ள நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவுகின் றன. 1964 ஆம் ஆண்டில் டிசம்பர் 22 ஆம் திகதி குருவளி தாக்கப்போவதாக ஒரு நாள் முன் கூட்டியே அகில இந்திய வானெலி எச்சரித்தது. கொழும்பு வளிமண்டல அவதான நிலையத்தினர் 22 ஆம் திகதி காலைதான் மீ ன வ ரு க் கு அபாய அறிவித்தல் கொடுத்தனர். இது காலம் தாழ்த்திய அறிவித்தல். அதனல், கடலிற்குச் சென்ற மீ ன வ ர் க ள் எவரும் வீடு திரும்பவில்லை.6
பதினன்கு ஆண்டுகளுக்குப் பின் னர் வளிமண்டல வியல் துறையில் சிறந்த முன்னேற்றம் காணப்பட்டிருக்

Page 10
6 12 மணி நேரம்
கின்றது. செய்மதிகள் வானத்தில் உலாவ விடப்பட்டுத் தகவல்கள் சேகரித்தல் வளிமண்டலக் குழப்பங்களை முன் கூட்டியே அறிவிக்கத்தக்க வாய்ப்பினை அளித்துள்ளன. **ரிருேஸ் என்' என்ற அமெரிக்கச் செய்மதி, தினசரி அதி காலை 3 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இலங்கைக்கு மேலாக உலகை வலம் வ ந் து கொண்டிருக்கின்றது. இச் செய்மதி இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்கே சூரூவளியொன்று தோற்றம்பெற்று வருவதை நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கொழும்பு வளி மண்டலவியல் அவதான நிலையத்திற்கு அதன் ஒளிப்படங் கள் மூலம் தெரியப்படுத்தியது. சூரு வளி இலங்கையைத் தாக்கலாம் எ ன் ப த ந் கு ரிய முதலாவது செய்தியை த ந் த து" ரிருேஸ் என்' செய்மதி தான். இக் செ ய் மதி வழங்கும் ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள் வதற்கான நுட்பமான கருவியை அமெரிக்க அரசாங்கம், இலங்கை வளிமண்டலவியல் நிலையத்தினருக்கு அன்பளிப் புச் செய்திருந்தது. இக் கருவி "ரிருேஸ் என்" வழங்கிய ஒளிப்படத்தை அவதான நிலையத்தினருக்குத் தந்தது, இக் கருவி சூருவளியின் தோற்றம், அது நகர்ந்து வரும் பாதை, தாக்கவிருக்கும் நேரம், அது இலங்கை மண்ணை விட்டுப் பிரியும் நேரம் என்பனவற்றை வானிலைய வதா னிகள் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவியது. 7
உண்மையில் நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கே குரு வளியின் பிறப்பு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. சூரு வளியின் உண்மைச் சொரூபம் 18 ஆம் திகதி வெளிப்பட்டது. சுழற்சியும் அ  ைச வும் கொண்டதாக அது வளர்ச்சியுற்று மேற்குத் திசையில் நகரத் தொடங்கிய, இரண்டாம் நாள் தான் இலங்கையை நாடி பயங்கர அரக்கன் ஒருவன் வருவதை, அமெரிக் கச் செய்மதி கண்டு கொண்டது. சுழலும் பம்பரமானது தன்னிடத்தைவிட்டு விலகிச் சென்றியங்குவதைப் போல, இச் சூரு வளியும் கிழக்குக் கரையோரத்தை நோக்கி நக ரத் தொடங்கியது.

12 ம்ணி நேரம் 17 பல பெயர் அரக்கன்
வெப்பவலயத்தில் பொதுவாகச் சூழு வளிகள் ஏற்படு கின்றன. இச் சூரு வளிகள் பொதுவாக அயனமண்டலச் சூரு வளிகள் எனப் பொதுப் பெயரால் வழங்கப்படகின் றன எனினும் இச் சூறவளிகள் இடத்திற்கிடம் சில சிறப் புப் பெயர்களையும் கொண்டழைக்கப்பட்டு வருகின்றன. கரீபியன் கடற் பகுதிகளில், மேற்கிந்தியத் தீவுகளில் @* சூரு வளிகளை ஹரிக்கேன் என வழங்குவர். அத ன ல் தான் 'அரிக்கன் லாம்பு" என நாம் gerialı grt grut600TLDr கப் பயன்படுத்தும் கண்ணுடி விளக்கிற்குப் பெயர் வந் தது. தென் கிழக்காசியாவிலும் தென் ஒனக்கடலிலும் இச் குருவளிகள் தைபூன் என வழங்கப்படுகின்றன. அவுஸ்தி ரேலியாவில் வில்லிவில்லீஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கின் றன. வங்காள விரிகுடாவில் உற்பத்தியாகி இந்தியாவை யும் இலங்கையையும் தாக்குகின்ற குருவளிகளுக்கு இது வரை எதுவிதமான பெயரும் வழங்கப்படவில்லை. ஹரிக் கேன் குருவளிகள் 400 மைல்கள் விட்டமுடையன. மணித் தியாலத்திற்கு 75 மைல்களிலிருந்து 125 மைல்கள் வை யில் இவற்றின் வேகம் இருக்கும். மணிக்கு 188 மைல்கள் வேகத்தில் விரைந்த சூரு வளிகளும் பதிவு செய்யப்பட் டிருக்கின்றன. சில சூரு வளிகள் 200 மணி மைல் வேகத் தில் விரையக் கூடியன என வு ம் கணக்கிடப்பட்டிருக் கின்றது.
மட்டக்களப்பில் அசுர வெறியாட்டம் ஆ டி ய குரு வளி மணிக்கு 125 மைல்கள் வேகமுடையது எனக் கணக் கிடப்பட்டிருக்கின்றது. இலங்கை வளிமண்டலவியல் அவ தான நிலையங்களில் காற்றின் வேகத்தை 100 மைல் மணிகளுக்கு மேல் பதிவு செய்யக்கூடிய கருவிகள் இல்லை. 1964 ஆம் ஆண்டு திருகோணமலையில் வீசிய குரு வளி யின் வேகம் மணிக்கு 100 மைல்களாகும். அச் சூரு வளி மன்னரில் மணிக்கு 96 மைல்கள் வேகத்தில் வீசியிருக்கின் றது. இதனேடு ஒப்பிடும்போது நவம்பர் மாத ச் குழு

Page 11
18 12 மணி நேரம்
வளியின வேகம் அதிகமாகும். மணிக்கு 125 மைல் வேகத் தில் வீசுகின்ற குருவளியின் முன் பொதுவாக எ ந் த க் கல்கட்டிடமும் எதிர்த்து நிற்க முடியாது. அதனல்தான் இம்முறை கிழக்கு மாகாணத்தில் பெரும் கட்டிடங்கள் கூட கல க லத் து நிலத்தில் தரைமட்டமாகச் சரிந்து போயின. அவற்றின் இடிபாடுகளுள் அகப்பட்டுப் பல உயிர்கள் துடித்துத் துடித்து மரணத்தைத் தழுவின.
காத்தான்குடி ஆஸ்பத்திரி மரணங்கள்
மணிக்கு 125 மைல் வேகத்தில் சுழன்று வீசிய சூரு வளியின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் கிழக்குமாகா ணத்தின் பழம் பெரும் கட்டிடங்கள் யாவும் இ டி ந் து விழுந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரத்திற்குத் தெற்கே 5 மைல்கள் தூரத் தி ல் அமைந் திருக்கும் கடற்கரைக் கிராமம் காத்தான் குடியாகும். நவம்பர் 23 ஆம் தி க தி ச் சூரு வளியின் தாக்கத்திற்கு இக்கிராமம் தப்ப முடியவில்லை. அக்கிராமத்தின் மருத் துவக் கட்டிடம் கல்கட்டிடம், ஒரு அடி தடிப்பான செங் கற்களின் பின்னலில் கட்டப்பட்ட திடமான கட்டிடம். அக்கிராம வைத்தியசாலையில் காத்தான்குடி மக்கள் பலர் சிகிச்சை பெற்றுத் தங்கியிருந்தனர். பதினேழு நோயா ளர்கள் வரையில் அவ்வைத்தியசாலையில் குரு வளி வீசிய இரவு இருந்தனர். டாக்டர் மகேந்திரலிங்கம் அங்கு டாக்ட ராக இருந்து சேவை செய்தார்,
அன்று பிற்பகல் வரை அ ங் கி ரு ந் த எந்தவொரு நோயாளியும் அப்படியொரு துர்மரணம் தங்கள் எல்லா ருக்கும் ஒரே நேரத்தில் ஏற்படவிருப்பதைக் கற்பனையில் கூட எண்ணியிருக்க மாட்டார்கள். அன்று மாலை 8-20 மணிக்கு வீசிய முதல் குழு வளித் தாக்கத்தின் விளைவாக அக்கட்டிடத்தின் ஒடுகள் யாவும் இலைச்சருகுகளாக விண் ணில் பறந்தன, வைத்தியசாலைக்கு அருகில் நின்றிருந்த பெரிய மரமொன்று சரிந்து விழுந்தது.

12 மணி நேரம் 19
கூ. சு.என்ற இரைச்சலுடன் குரு வளி வீசியது. காத்தான்குடி வைத்தியசாலையின் கூரையை அப்படியே ஒரு கணம் மேலே தூக்கிப் பொத்தென இருந்தவிடத் தில் வைத்தது. நோயாளிகள் யாவரும் பயத்தில் கூச் ச லிட்டனர். இர வு 8 மணியளவில் அந்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கூரை ஒடுகள் யாவும் காற்றின் தாக்கத்திற் குட்பட்டு காய்ந்த சருகுகளாகப் பற ந் து சென்றுவிட் டன. இருள் எங்கும் சூழ்ந்து கொண்டது. வெளியில் ஒட வழியற்ற அவ்வைத்தியசாலை நோயாளிகள், மழைத்துளி களிலிருந்தும் விழும் உடைந்த ஓடுகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்டில்களின் கீழும் மேசையின் கீழும் தம்மை மறைத்துக் கொண்டனர். ஆண் ட வ னை க் கு ர ல் விட்டு அழைப்பதைத் தவிர வேறெவ் வித வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை, சூரு வளியின் கொடிய சத்தத்திற்கு இடையில் அவர்களின் வேண்டுதல் ஆண்டவருக்குக் கேட்டதோ இல்லையோ?
பச்சைக் குழந்தையொன்று பயத்தில் தாயைக் கட் டிக் கொண்டது. வீட்டில் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு நோய் தீர்க்க வைத்தியசாலையில் படுத்திருந்த ஒரு வ ர், வீட்டில் தன் குடும்பம் எப்படியோ என்று எண்ணிக் கண் ணிர் லிட்டார். எங்கும் கண்ணிர். பயம்,
ஏழு வயதுப் பேரக்குழந்தையொன்று தனக்குத் துணை யாக இருந்த பாட்டியைத் க ட் டி அணைத்துக்கொண் டான். ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. ஒருவர் கதறியது மற்றவருக்குக் கேட்கவில்லை. வெளியில் ஊளை யிட்டபடி புயல் அரக்கன் தாண்டவமாடினன்.
கூரைவிட்டம் தகர்ந்தது. அப்படியே சற்று உயரே தூக்கிய குரு வளி, பொத்தென அக்கூரையைக் கீழே தள்ளிவிட்டது. பாலைமரக் குவியல் சிதறியது. வீம்கள், பக்க மரங்கள் யாவும் அப்படியே கீழே விழுந்தன. அவற் றின் உதைப்பால் வைத்தியசாலையின் பக்கச் சுவர்களும் பொலபொலவெனச் சரிந்தன. கட்டில்கள், மேசைகள் யாவும் சிதறி நொருங்கின.

Page 12
20 12 மணி நேரம்
மரண ஒலம் எங்கும் நிறைந்தது. இருளுக்குள் அவர் கள் யாவரும் நசுங்குண்டு மரண ஒலம் எழுப்பினர். விமா னத்திலிருந்து குண்டு ஒன்று விழுந்தது போல காத்தான் குடி வைத்தியசாலை சிதறியது. சுவர்களுள் "அகப்பட் டோர். பாலைமரங்கள் விழுந்து மண்டை சிதறியோர். கால் முறிந்தும் நெஞ்சில் கற்சுவர் விழுந்தும் . மரணம். மரணம். பயங்கரமான மரணம். மரணதேவன் அங்கு கெக்கலி கொட்டிச் சிரித்தான்.
அந்த வைத்தியசாலையிலிருந்த அத்தனைபேரும் இறந்து போளுர்கள். அவர்களுடன் அவ் வைத்தியசாலை அற்றன் டன் ஒருவரும் மரணமானர். மறுநாள் அவ் வைத்தியசாலை யில் இடிபாடுகளுக்கிடையில் இருந்து இறந்த பிணங்களை வெளியில் எடுத்தனர். கண்களில் நீரைச் சொரிய வைக் கும் பயங்கர அனுபவம். கற் சுவர்களுக்கிடையில் அகப் பட்டு அவஸ்தைப்பட்டு மரணமானவர்கள். தன் பேரனைக் காப்பாற்றுவதற்காக அவன்மீது படுத் துக் காப்பாற்ற முயன்று, முடியாமல் இருவரும் நசியுண்டு பலியான பாட்டி, இரத்தக்காடு.
அவர்கள் எத்தனை கற்பனைகள் கட்டியிருப்பார்கள்? எவ்வளவு ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்பார்கள்? அவ்வளவும் 125 மைல் வேகத்தில் சுழன்றடித்த சூருவளி அரக்கனின் முன் தவிடுபொடியாகிப் போயின. முதல் நாள் கம்பீரமாக உயர்ந்து நின்ற காத்தான்குடி வைத் தியசாலை மறுநாள் செத்த உடல்களுடன் தரைமட்டமா கக் காணப்பட்டது. பாலைமர வீம்கள் குறுக்கும் நெடுக்கு மாகக் கிடந்தன. செங்கற்கள் சிதறிக்கிடந்தன. காகங்கள் அவற்றிடையே எதையோ பொறுக்கிக் கொண்டிருந்தன.
சூறவளி அழிவுகள்
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூருவளி அழிவுகள்
உலகின் வேறு சிலவிடங்களில் நிகழ்ந்த அழிவுகளுடன்
ஒப்பிடும்போது குறைவானவையாகவே தெரியும்.

12 மணி நேரம் 2.
1932ஆம் ஆண்டு கியூபர்வில் சான்த குருஸ் டெல் சூர்" என்ற பிரதேசத்தில் பயங்கரமான குருவளி ஒன்று தாக்கியது. சூரு வளியின் தாக்கத்தினுல் கடலலைகள் 15 அடி உயரத்திற்கு மேலெழுந்து கரை மேவிப் பாய்ந்தன. அதனல் அப்பிரதேசத்தில் 25,000 மக்கள் உயிரிழந்தனர். அக்கிராமமே கடலலையால் கழுவிச் செல்லப்பட்டது.
1737 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் கூக்லிநதி முகத் தினை ஒரு சூருவளி அரக்கன் தாக்கினன். அதனல் ஏற் பட்ட உயிர் மரணம் நூறு இருநூறு அல்ல. மூன்று இலட் சம் மக்கள் இறந்துபோனர்கள்.
அதே பிரதேசத்தை 1864ஆம் ஆண்டு மீண்டும் ஒரு குழுவளி தாக்கியது. அதனுல் வானளாவிப் பொங்கிய கடலலைகளுக்கு ஏறத்தாழ 50,000 மக்கள் பலியாகினர்,
1876ஆம் ஆண்டில் சிற்ருகொங் பிரதேசத்தினை குரு வளி தாக்கியது. அதனுல் 600° சதுரம்ைல் பிரதேசம் கடலி னுள் மூழ்கியது. அத்துடன் ஏறத்தாழ ஒரு லட்சம் மக் கள் வரையில் பலியாகினர்.
1957 ஆம் ஆண்டு லூசியாளுவில் ஏற்பட்ட சூரு வளி யின் தாக்குதலிற்கு ஏறத்தாழ 500 உயிர்கள் பலியாகின.
1944 ஆம் ஆண்டு கிழக்குச் சீனக் கடலில் தோன்றிய குருவளி, ஐக்கிய அமெரிக்காவின் மூன்று போர்க்கப்பல் களை மூழ்கடித்தது. அத்துடன் 164 விமானங்களை நாசப் படுத்தியத்துடன், 790 உயிர் களை யும் பலியெடுத்துக் கொண்டது. 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கரீபியன் கடலில் உற்பத்தியாகிய பயங்கரச் சூ ரு வளி யொன்று. டெக்சாஸ் மாகாணத்தைத் தாக்கியது. அது 4000 கோடி தொன் நீ  ைர முன்னுல் தள்ளிக்கொண்டு வேகமாக வந்தது. இதனுல் 30,000 மக்கள் உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான கோடி டாலர் பெறுமதியான பொருள்கள் நாசமாகின.

Page 13
22 12 மணி நேரம்
1977 ஆம் ஆண்டு இந்திய ஆந்திரப் பிரதேசத்தை வங்காளவிரிகுடாவில் பிறந்த குரு வளி அரக்கன் தாக்கி ஞன். அவனல் ஏறத்தாழ 20,000 மக்கள் உயிரிழந்தனர்;
கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய நவம்பர் 23 ஆம் திகதிச் சூரு வளியால் ஏறத்தாழ 600 பேர் வரை யில் உயிரிழந்தனர்.
மியாமி நகரச் சூருவளி
1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி புளோறிடாவின் கரையோரத்தைக் கோரமாகத் தாக்கிய, சூரு வளியொன்று மியாமி ந க  ைர ப் பாழ்படுத்தியது. அப்பயங்கர நிகழ்ச்சியை 'தி டைம்ஸ்" என்ற அமெரிக் கச் செய்தித்தாள் வர்ணித்திருக்கின்றது. அவ்வருணனை அண்மையில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த சூரு வளிக்கும் பொருந்துவதாக விளங்குகின்றது.
**. குழுவளியின் மையம் மியாமி நகரை நோக்கி
நகர்ந்து வருவது நடுப்பகலில் உணரப்பட்டது. மா லை நேரத்தில் வேகம் மிகுந்த புயல் ஒன்று வீசி யது. நடு இரவிற்குள் அது கடுங்காற்ருக வளர்ச்சியடைந்தது. அந் நேரத்திலிருந்து சூரியன் ஒளி தோன்றும்வரை, அக்கடுங் காற்று மிகவும் பயங்கரமான காற்ருக மாறித் தனது நேர் வேகத்தில் வெகுவாக அதிகரித்திருந்தது. முதன் முதலில் அப்புயல் வடக்கிலும் வடகிழக்கிலும் இரு ந் து வீசத் தொடங்கியது. அதன் வே கம் மணிக்கு 110 மைலி லிருந்து 120 மைல்கள் வரையென மதிப்பிடப்பட்டிருக்
கின்றது. இப் பயங்கரச் சூரு வளியுடன் இணை ந் த சில்
வானிலை அம்சங்களின் பலமான தாக்குதலால் மக்களின்'
உடலுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் மனத்துயரத்தையும் சித்திரிக்கப் புள்ளி விபரங்கள் மட்டும் போ தா. வீறு கொண்ட காற்று, பலத்த மழை, பேரலை எழுச்சி, பேரிடி ஆகியனவெல்லாம் ஏற்பட, பனையின மரங்களும் ரீப் மரங் களும் நொறுங்கின. தொலைபேசிக் கம்பங்கள் தெறிக்கப்

i. மணி நேரம் 23
பட்டன. மிக விறைப்புக் கொ ண் ட கம்பிகளிலிருந்து திடீரெனப் பளிச்சென்ற ஒளி ஏற்பட்டது. அடையாளப் பலகைகளும், கூரைகளின் மேலிருந்த ஒடுகளும் காற்றில் பறந்தன. வீட்டுக் கூரைகளெல்லாம் கிழிக்கப்பட்டன. மேலும் மரத்தாலாகிய வீடுகள் நசுங்கி அடியோடு வீழ்ந் தன. இந்த ஆரவாரங்களுக்கிடையே திடீரென மர ண அமைதி ஏற்பட்டது புயலின் மையம் கடற்கரையைத் தாண்டியவுடன் அந்நிலைமை ஏற்பட்டது. பெண்மணிக ளும் குழந்தைகளும் பத்திரமான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமுற்றேர் சில ர் மருத்துவசாலை களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவற்றிற்கிடையே தான் இச் சூரு வளியின் மற்ருெரு கட்டம் ஏற் பட இருக்கின்றது என்பதனை உணராத பலர், தற்காலிகமாக நிலவிய இந்த அமைதிக்காலத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, வீதிகளில் ஏற்பட்டிருந்த சேதங்களைப் பார்த் து க் கொண் டி ரு ந் த வண்ண மாகவே, கவனக்குறைவோடு இருந்தனர். கா லை யில் சுமார் 8 மணியளவில் திரும்பவும் காற்று வீசியது. அப் போது அதன் வெறி முன்னர் இருந்ததிலும் பன்மடங்கு அதிகமாக இருந்தது. .
சி. தெற்கிலும் தென்கிழக்கிலும் இருந்து வீசிய அக்காற்று சமவிராப்பகல் நாளதன் முழுமதியின் பெருக்கு நீரை உயர்ந்த மலைபோலக் குவித்தது. அத்துடன் தீவுக ளுக்குப் பின்புறமாக அமைந்து கிடந்த விரிகுடாவில் வந் தடைந்த வெள்ள நீரை, வடக்காக அடித்துக்கொண்டு சென்றது. இதன் விளைவாக இல் விரிகுடாக்களில் குவிக் கப்பெற்ற வெள்ள நீர், அக்கடற்கரை மீதிருந்த நகரத்தி ணுள்ளும், அதன் நகர்ப்புறத்தினுள்ளும் புகுந்து,வீடுகள் மரங்கள் ஆகியவற்றின் அடித்தளங்களையே ஆட்டி வைத் துத் தளர்த்தியது. கோரப் புயலின் தன்மையேற்ற இக் காற்ருலும், இதனல் பொழிவிக்கப்பட்ட பேய்மழையா லும் உயிரிழந்தோரில் அரைப்பங்கினர் நீரில் மூழ்கி ச் செக்தனர். எஞ்சியோர் வீடுகள் இடிந்து வீழ்ந்தபோதோ,
3-шо. Gд5.

Page 14
24 12 மணி நேரம்
தாக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து புகலிடம் தேடி மருண்டு ஒடியபோதோ காற்ருேடு பறந்து வந்த பொருட்களினல் தாக்கப்பட்டோ அதிற் சிக்கியோ செத்தனர். ** 8
கிழக்கு மாகாணத்தில் சூரு வளி வீசியபோதும் பின்ன ரும் காணப்பட்ட காட்சி மியாமி நகரச் சூரு வளிக் காட் சியை ஒத்ததுதான்.
கிழக்குக் கரையை நோக்கி.
நிக்கோபார்த் தீவுகளுக்கு மேற்கே, இந்துசமுத்திரத் தில் தோற்றம் பெற்ற சூ ரு வளி மேற்குப் பக்கமாகக் கிழக்குக்கரையை, நோக்கி நகர்கின்றது என்ற செய்தியை இலங்கை வளிமண்டலவியல் அவதான நிலையத்தினருக்கு 20 ஆம் திகதி, அமெரிக்கச் செய்மதியான "ரிருே ஸ் என்" ஒளிப்படம் மூலம் தெரிவித்தது. அச் சூரு வளி மேற்குத் திசையில் கிழக்குக்கரையை நோக்கி வந்துகொண்டிருக் கின்ற போதிலும், சிலவேளைகளில் கிழக்குக் க ையைத் தாக்காமல் திசை திரும்பிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறு களும் இருப்பதை அவதான நிலையத்தினர் அறிவர். அப் படி எத்தனையோ தடவைகள் நிகழ்ந்திருக்கின்றது. எனி னும் வானிலை அவதான நிலை ய த் தி ன ர் சூரு வளியின் பாதையை அவதானித்தனர்.
செய்மதி செய்தி தந்த 20 ஆம் திகதி, குரு வளி சற்று வடமேற்கான போக்கினைக் கொண்டிருந்தது. ஆனல் 2 lub திகதி அதன் போக்கு திடீரென மேற்குத் திசை நோக்கித் திரும்பியது. பின்னர் 22 ஆம் திகதி அச்சூருவளிப் பிசாசு இலங்கையின் கிழக்குக் கரையைச் சீராக நோக்கி நகரத் தொடங்கியது.
வளிமண்டலவியல் அவதான நிலையத்தினர் சமூக சேவைப் பகுதியினருக்கு எச்சரிக்கை செய்தனர். சமூக சேவைப்பகுதி இலங்கை எங்ங்ணுமுள்ள அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு வந்துகொண்டிருக்கும் குருவளி அபாயம் குறித்து எச்சரிக்கை செய்தது. அரசாங்க அதிபர்கள் பாது காப்புப் படையினர் யாவரும் உசார்ப்படுத்தப்பட்டனர்.

12 மணி நேரம் 25
முக்கியமாகக் கிழக்கு மாகாண அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். திருகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதி பர்கள் மூன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்தனர். அம்மாவட்ட மக்கள் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கப்பட்டனர். மட்டக்களப்பு அர சாங் க அதிபர் திரு. டிக்சன் நிலவீர மட்டக்களப்பு மாவட்டத் தின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க முப்படைகளை யும் அழைத்தார். மட்டக்களப்பு பொலிஸ் அதிபர் திரு. அம்பிகாபதி தனது மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் தயார் நிலையில் இருக்குமாறு பணித்தார்.
இயற்கையின் சீற்றத்தின் முன்னர் முப்படைகளும் எச்சரிக்கைகளும் எம்மாத்திரம்?
சூருவளி வீசியபோது, அதன் ஆயிரங்கரங்கள் படர்ந்த போது, ஏழை பணக்காரன், பெரியவன் சிறியவன், உயர் பதவிக்காரன், பொலிஸ்காரன், இராணுவத்தினன் என்ற பாகுபாடு காட்டியா தாக்கியது? இல்லை. எல்லாரது வீடு களும் இடிந்தன. கச்சேரியின் கூரை காற்றில் பறந்தது பொலிஸ் நிலையங்களின் கூரைகள் பறந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
புயலில் சிக்கிய விமானம்
இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கிச் சூருவளி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், இலங்கையை நோக்கி யுள்ள சூரு வளி அபாயம் குறித்துக் கட்டுநாயக்க சர்வ தேச விமான நிலையம் அதன் ஊடாகச் செல்லும் விமா னங்கள் யாவற்றிற்கும் அறிவித்தது. ஒரு நாட்டில் இருந்து இன்னெரு நாட்டிற்கு விமானம் செல்வதென்ரு ல் இரு நாடுகளுக்குமிடையிலுள்ள வானிலை நிலைமைபற்றி, அ வ் விமான நிலையங்கள் செய்தி பரிமாறிக்கொள்ளும். கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இ த ந் கென வானிலை அவதான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின் றது. விமானம், விமான நிலையத்தில் இறங்கும் திசைக்கு

Page 15
26 12 மணி நேரம்
எதிர்த்திசையில் அல்லது பின்திசையில் காற்று அதிகரித் தால் கவனிக்கப்படமாட்டாது. ஆனல் விமானம் இறங் கும்போது காற்றின் வேகம் 30 மைல் மணி வேகத்தில் வீசினுல், அவ்விமானம் அங்கு இற ங் க அனுமதிக்கப் படாது, அண்மையிலுள்ள அ டு த்த விமான நிலையத்தில் இறக்கப்படும். இதனுல் ஒரு விமானம் இறங்கும் விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள 5 விமான நிலையங்கள் குறித்து இலங்கை சர்வதேசவிமான நிலை யம் வானிலை அவதான அறிக்கை தயாரித்திருக்கும்.
20 ஆம் திகதி இரவு வங்காள விரிகுடாவிற்கு மேலா கப் பறக்க முயன்ற வெளிநாட்டு விமானம் ஒன்று குரு வளிக் காற்றுக்குள் சிக்கித் தத்தளித்தது. கட்டுநாயக்க விமான நிலைய எச்சரிக்கையை மீறி இவ் விமானம் பறக்க முயன்றது. அவ்வாறு சிக்கித்த த்தளித்துக் கொண்டிருந்த வேளையில், விமான நிலையக் கட்டுப்பாட்டாளரின் ஆலோ சனையின் பேரில் திசை திருப்பப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்காவை நோ க் கி, 35,000 அடி உ ய ர த் தில் வந்து கொண்டிருந்த சுவிஸ் எயர் டி. சி. 10 என்ற விமானமே இவ்வாறு குருவளியில் சிக்கித் தத்தளித்தது. அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்ட விமானம், சூ ரு வளி யின் தாக்கம், குறைந்த உச்சத்திற்குப் பறந்து ஒருவித மாக அவ்வபாயத்திலிருந்து மீண்டது.
சூறவளியின் அமைப்பு
நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து 500 மைல்களுக்கு அப்பால் கிழக்குக் கடலில் நகர்ந்திருந்த சூரு வளி, பூரண வளர்ச்சி பெற்றிருந்தது. இச்சூரு வளியின் தோற்றுவாய் நிக்கோடார் தீவிற்கு அருகில் அமைந்தது. அங்கு உருவான தாழமுக்க மையத்தின் விளைவாக உரு வானது. சதுர மைலிற்கு 20,00,000 தொன் காற்று இத் தாழமுக்க மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அதா வது விரிவடைந்து பாரம் குறைந்து மேலெழுந்தது. எத் தனையோ தாழமுக்க மையங்கள் குரு வளிகளைப் பிறப்பிக்

12 மணி நேரம் 27
கீாமலே தேய்ந்தழிந்திருக்கின்றன. ஆனல் இத்தர்ழமுக்க மையம் அவ்வாறு அழியவில்லை. சூரு வளியைத் தோற்று வித்து இலங்கையின் கிழக்கு மாகாணத்தையே அழித்தது. சூரு வளி வளர்ச்சியடையாமலே முன்னிருந்த நிலையில் நீண்ட தூரம் பயணம் செய்வதுண்டு. எனினும் இவ்வித சூரு வளிகள் எந்த நேரத்திலும் வலுப்பெற்று, பெ ரு ம் சூரு வளியாக மாறிவிடக்கூடும். பூரண வளர்ச்சி அல்லது முதிர்ச்சிபெற்ற குழு வளி மூன்று பகுதிக்ளைக் கொண்ட சுழ லும் காற்றுத் தொகுதியாகக் காணப்படும். அவை 1. புய 65 air sair (Eye of the storm (2) J.A. L. Jay Li b (Vortex), (3) வெளி வளையம் (0uter king) எனப்படுகின்றன. மட் டக்களப்பிலிருந்து 500 மைல்களுக்கு அப்பால் கிழக்குக் கடலில் 22 ஆம் திகதி நகர்ந்திருந்த குழு வளியும் இத் தகைய மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. (படம்-5)
ஒற்றைக்கண் அரக்கன்
சூரு வளியின் மையப்பகுதி புயலின் கண் எனப்படும். இதனையே உள்ளீடு அல்லது உட்கருப் பகுதி எனவும் வழங்கு வர். சூருவளி பெரும்பாலும் ஒற்றைக்கண் அரக்கனே. சில சூருவளிகள் இரண்டு கண்களையும் அரிதாகக் கொண்டிருப்ப துண்டு. பொதுவாக இப்புயலின் கண் வட்டமாகக் காணப் படும் சிலவேளைகளில் நீள்வட்டமாகக் காணப்படும், இக்கண்ணின் விட்டம் ஏறத்தாழ 10 மைல்களிலிருந்து 20 மைல்கள் வரையிலான விட்டத்தைக் கொண்டிருக்கும். இக் கண் பிரதேசத்தில் காற்றின் வேகம் மிக வும் குறைந்து, மணிக்கு 5 மைல் வேகத்தில் இயங்கும். சிலநேரங்களில் இம் மையம் காற்றசைவின்றியும் காணப்படும். அவ்வேளைகளில் வானத்தில் பகலாயின் சூரியனும் இரவாயின் நட்சத்திரங் களும் மிகத் தெளிவாகத் தெரியும். புயலின் கண் எனப்படும் இப்பகுதி, ஒரு பிரதேசத்தைத் தாண் டி ச் செல்வதற்கு அரைமணித்தியாலத்தியாலத்திலிருந்து இரண்டு மணித்தி யாலம் வரையில் எடுக்கும். குருவளியொன்றின் முற் பகுதி "ஒரு பிரதேசத் தி ல் பிரவேசிக்கும் போது கடும் காற்றும் அழிவும் நேரும். பின்னர் புயலின் கண்பகுதி அப்

Page 16
28 12 மணி நேரம்
பிரதேசத்தில் பிரவேசிக்கும்போது, திடீரென அமைதி நில வும். அதே வேகத்தில் அந்த அமைதி குலைந்து போகும். புய லின் கண்பகுதி அப்பிரதேசத்தை விட்டு நீங்கியதும், அச்சூரு வளியின் பின்பகுதி அப்பிரதேசத்தினுள் பெருங்காற்றுச் சுழல்களுடன் பிரவேசிக்கின்றது. மீண்டும் அப்பிரதேசம் அழிவிற்கு உட்படுகின்றது. கிழக்குக் கரையிலும் இத்தகைய நிகழ்ச்சிதான் நிகழ்ந்தது. அங்குள்ள மக்கள், தாம் இரண்டு சூருவளிகளினுல் தாக்கப்பட்டதாகச் சொல்கின்ருர்கள், அப்படியல்ல. புயலின் கண்பகுதி மட்டக்களப்பு மாவட்டத் தில் பிரவேசித்தபோது ஏற்பட்ட அமைதியைத் தொடர்ந்து ஏற்பட்ட சுழற்சி, இன்னெரு குருவளியின் தாக்கமல்ல. ஒரு குருவளியின் பயணத்தின் விதிமுறைத் தாக்கமேயாகும். 23 ஆம் திகதி மாலை சரியாக 6-20 மணியளவில் கிழக் குக் கரையோரத்தில் குருவளி பிரவேசித்தது. மணிக்கு 85 மைல் வேகத்தில் அது மிக்க ஆக்ரோசத்துடன் வீசியதை மட்டக்களப்பு அவதான நிலையம் பதிவு செய்தது. பயங்கர இரைச்சலுடன் யமகிங்கரனுக கிழக்குக் கரையில் பிரவே சித்த சூழு வளியின் முதல் பகுதி, இரவு 10 மணி வரை கிழக்கு மாகாணத்தை தன் கொடிய கரங்களுள் சி க் க வைத்துச் சீரழித்தது. அதன் பின்னர் குரு வளியின் புயற் கண் பகுதி பிரவேசித்தது. தன் ஒற்றைக் கண்ணினல் தன் முன் கரங்கள் விளைத்திருக்கும் சேதங்களையும் ஒலங்களே யும் அவ்வரக்கன் பார்த்தான். இரண்டு மணி நேர ம் அமைதியாகப் பார்த்தான், ஏற்பட்ட அழிவில் அவ ன் மனம் நிறையவில்லை. இர வு 12 மணியளவில் மீண்டும் குருவளியின் பிற்பகுதி கிழக்குக் கரையில் பிரவேசித்தது அதிகாலை 4 மணி வரை மிக்க உக்கிரத்துடன் அக்காற் றரக்கன் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அதன் சுற்ரு டலையும் சீரழித்தான். அதன் பின்னர் தான் ஒய்ந்தான் சுழிப்பு வலயம்
குரு வளியின் இரண்டாவது முக்கிய பகுதி, புயற் கண்
ணேச் சுற்றியமைந்துள்ள சுழிப்பு வலயமாகும்; இல்வல யம் புயள் கண் பகுதியிலிருந்து 50 மைல்களிலிருந்து 100

12 மணி நேரம் 29
மைல்கள் வரையிலான அகலத்தைக் கொண்டிருக்கும் இந்த இரண்டாம் பகுதியில் வீசுகின்ற காற்றுக்கள்தாம் உண்மையில் குரு வளியின் முழுவெறியைக் கொண்டிருப் பனவாகும். புயல் கண்ணைச்சுற்றி வட்டவடிவில் வீசுகின்ற இக்காற்றின் வேகம் மணிக்கு 150 மைல்களையுந் தாண்டு வதுண்டு. பொதுவாக இவ்வலயத்தில் சூழு வளியின் வேகம் மணிக்கு 40 மைல்களிலிருந்து 100 மைல்கள் வரை யில் காணப்படும். குழு வளி கோரத்தாண்டவம் ஆடுவதற்கு இந்தப்பகுதி காரணமாகின்றது. கட்டிடங்களையும் தாவ ரங்களையும் சிதைத்துத் துரக்கியெறிகின்ற சக்தி, சூரு வளி யின் இந்த சுழிப்பு வலயத்திற்கே இருக்கின்றது. கடலலை களை வானளாவ உயர வைப்பதும் இச் சுழிப்பு வலயந் தான். குழு வளி அரக்கனில் மிகக்கொடூரமான கழிப்புப் பற்கள் இவ்வலயத்தில்தான் இருக்கின்றன. (படம் 5 )
23 ஆம் திகதி நவம்பர் மாதம் வீசிய குரு வளியின் பரவல், தெற்கே அறுகம் குடாவிலிருந்து, வடக்கே திரு கோணமலை வரை இருந்தது. இந் நாளில் இவ்வளவு வடக் குத் தெற்கு அகல விட்டமுடைய குழு வளி, கிழக்குக் கரை வானில் பம்பரமாகச் சுழன்றபடி, மே ற் கே நகர்ந்தது இக் குரு வளியின் சுழிப்பு வலயத்தினுள், தெற்கே திருக் கோயிலிருந்து வடக்கே பணிச்சன்கேணி வரையிலான பிர தேசம் உட்பட்டது. சுரு வளியின் சுழிப்பு வலயத்திற்குள் உட்பட்ட இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பிரதே சங்கள் கூடுதலான அழிவிற்கு ஆட்பட்டன. அக்கரைப் ப்ற்று நிந்தாவூர், கல்முனை, பட்டிருப்பு, செட்டிப்பாளை யம், தாழன் குடா, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏரு வூர், கல்குடா மு த லா ன பிரதேசங்களில் கூடுதலான சேதங்கள் நிகழ்ந்தமைக்குக் காரணம், இப் பிரதேசங்கள் சூரு வளியின் சுழிப்பு வலயத்தினுள் அடங்கியமையாகும்.
பொத்துவிலுக்குத் தெற்கேயுள்ள அம்பாறை மாவட் டத்திலும், கதிரவெளிக்கு வடக்கேயுள்ள திருகோணமலை மாவட்டத்திலும் குறைவான சேதங்கள் ஏற்பட்டமைக் குக் காரணம் இப்பிரதேசங்கள், குரு வழியின் சுழிப்பு வல

Page 17
80 12 மணி நேரம்
யத்திற்கு வெளியில், வெளி வளையப்பகுதியினுள் அமைந் தமையாகும். (படம் 6)
வெளி வளையம்
சூரு வளியின் மூன்ரு வது சுற்றுப்பகுதியை வெளி வல யம் என்பர். அது சூரு வளியின் மையத்திலிருந்து, 100 மைல்கள் முதற்கொண்டு, 400 மைல்கள் வரையிலான ஆரமுடைய ஒரு வளையமாக அமைந்திருக்கும். இவ்வெளி வளையத்தில் வானிலை நிலை  ைம விரைவாகச் சீரழியும் காற்றின் வேகம், சுழிப்பு வலயத்திலும் பார்க் 1 க் குறை வாக இருக்கும். மணிக்கு 100 மைல் வேகத்தை அடைந்த வளர்ச்சியடைந்த குரு வளியாக இருந்தால், இந்த வெளி வளையத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 மைல்களாக இருக்கும். இக்காற்று கடலில் பெருங்குழப்பங்கஃா ஏற் படுத்தும். வானில் அடர்த்தியாக மேகங்கள் செறியும் திரண்மழைமுகில் உருவாகிக் கனத்த மழை இவ்வெளி வளையத்தில் பொழியும், சூறவெளியின் முதல் துரதன்.
ஒரு பிரதேசத்தை இரக்கமின்றித் கா க் கி ச் சேதப் ப்டுத்துவதற்காகச் குரு வளி அரக்கன் வந்து கொண்டிருக் கும்போது, அல்ன் முதன் முதல் அனுப்புகின்ற தூதன் பொங்கும் கடல் அ%லகள்தான். கடல் எழுச்சியுற்றுப் பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கும். இலங்கையில் கிழக் குக் கரையைத் தர்க்கிய நவம்பர் 23 ஆம் திகதிச் சூரு வளியும், தன் வழமையான தூதனை முன்கூட்டியே அனுப் பத் தவறவில்லை.
கிழக்குக்கரையிலிருந்து ஏறத்தாழ 400 மைல்களுக்கு அப்பால் குழு வளி அர க் கன், வந்து கொண்டிருக்கும் போதே கிழக்கு மாகாணக் கடல் கொந்தளிக்கத் பிதாடங்கிவிட்டது இக்கொடிய குருவளி வீசுவதற்கு ஒரு நாள் முன்னரே கடலலை சிறிதளவு கொ ந் த விக்கத்

12 மணி நேரம் 31
தொடங்கியது. புதன்கிழமை மாலை தொடக்கம், மட்டக் களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனத்த மழை பொழியத் தொடங்கியது. அத்துடன் வழமையான காற் றிலும் பார்க்க வேகமாக கடுங்காற்றும் வீசத் தொடங் யது. குரு வளியொன்று கிழக்கு மாகாணத்தைத் தாக்கப் போகின்றது என்பதற்கான பூர்வாங்க அறிகுறி க ள் மட்டக்களப்பு மா வட்டத் தி ல் முதல்நாளே தெரியத் தொடங்கின, do
மட்டக்களப்பு மாவட்டத்தின் அமுக்கம் பாரமானி யில் 24 மணித்தியாலத்திற்குள் 3 மில்லி பார்களுக்குக் குறைவாகத் தாழ்ந்தது. வடகிழக்கிவிருந்து வீசிய காற் றும் திசைமாறித் தத்தளித்தது. கடுங்காற்று இல்லாம லேயே புதன் காலையில் கடலலைகள் பொங் கி விழ த் தொடங்கின.
வெண்பறவையின் சிறகுகளாக வானின் உயர் பகுதி யில் சஞ்சரித்த கீற்றுமுகில்கள், வேகமாக மேற்குத்திசை நோக்கி நகரத் தொடங்கின. அக் கீற்று முகில்களுக்குக் கீழ், திட்டுத்திட்டாகக் கருஞ்சாம்பல் நிறங்கொண்ட திரண்முகில்கள் உருவாகத் தொடங்கின. அவை கிழக்கு வானிலிருந்து மேற்கு வானை நோக்கி வேகமாக ஊர்ந்து செல்லத் தலைப்பட்டன. புதன் மாலை மே ற் கு வானில் சூரியன் சாய்ந்தபோது வானத்தில் எப்போதும் ம்ட்டக் களப்பு மக்கள் காணுதவிதத்தில், அவர்களைத் திகைக்க வைக்கும் தன்மையில், செந்நிறம் பரவியது. மஞ்சள், பசுமை, கரும்நீலம் கொண்டA மேகங்கள் குவி ந் த ன. அவற்றிடையே சூரியன் படுவான்கரையில் வீழ்ந்தான்.
சரிந்த முதல் மரம்
வியாழன் காலை பிறந்தது. வழமையான காலைகளிலும் வித்தியாசமான காலை. எழுவான் கரையில் சூரியன் உதய மானபோது, அவன் ஒளிவட்டத்தைச் சுற்றி பரிவட்டம் ஒன்று படர்ந்து காணப்பட்டது. குஞ்சம் போன்ற கீற்று முகில்கள் ஓசையின்றி கிழக்குவானில் இருந்து, மேற்கு

Page 18
82 12 மணி நேரம்
வானில் நழுவிச் சென்றன. கிழக்கு அடிவானில் கருமை பூத்த திரண்முகில்கள் படரத் தொடங்கியிருந்தன. பறவை கள் கூட்டங் கூட்டமாக அம்மாவட்டத்தைவிட்டே வெளி யேறி விடுவனபோல தென்மேற்குப் புறமாகப் பறந்து சென்றன. அவை எதையோ எதிர்பார்த்து அந்த அபா யத்திலிருந்து தப்பிவிட வேண்டும் என்ற ஆவலில் பறந்து சென்றன.
மரங்களில் அம்ர்ந்திருந்த குரங்குகள்கூட நிம்மதியின் றித் தவிப்பனபோல அவஸ்தைப்பட்டதைப் பலர் கண்ட னர். அவை வானத்தை அண்ணுந்து ஏக்கத்துடன் பார்ப் பதும் பின்னர் சோகத்துடன் கிளைதாவி மறைவதையும் அவர்கள் கண்டனர்.
காலை 8 மணியளவில் சற்றுப்பலமான காற்றென்று புதிதாக வீசத்தொடங்கியது. மரங்களில் இருந்த இலைகள், அவற்றின் சிறு கிளைகள் என்பன மெதுவாக அவ்வேளை அசைந்தன. மட்டக்களப்பு வாவியில் உள்ள தண்ணிர் சிறிய அலை எறிந்தது. காலை 8-30 மணியளவில் காற் றின் வேகம் மணிக்கு 21 மைல்கள் வரையில் அதிகரித் தது. பெருங்கிளைகள் அசையத் தொடங்கின. சிறியமரங் கள் ஊசலாடவும் தொடங்கின. மட்டக்களப்பு வாவியின் அலையெறிவு சற்று அதிகரித்தது. புதுக் காற் று வீசத் தொடங்கியது. க ர் லை 9 மணியளவில் அப்புதுக்காற்று கடுங்காற்ருக மாறியது காற்றின் வேகம் ம ணிக் கு 28 மைல்களாக இருந்தது. சிறிய கிளைகள் ஒடிந்து விழ த் தொடங்கின.
மரங்களில் காய்ந்து கலகலத்திருந்த சருகுகள் கடுங் காற்றின் அசைப்பில் வாரி எடுத்துச் செவ்லப்பட்டன. காற்றின் திசையில் வளமாக இருந்த சிறிய கிளைச்சுள்ளி கள் பிடிப்புடைந்து முறிந்து விழுந்தன. கிழக்கு மாகா ணத்தின் முதல் வீழ்ச்சி அப்போதுதான் தொடங்கியது. சிறிய கொப்புகள் ஒடிந்து விழத்தொடங்கிய அதேவேளை யில் மழையும் பொழியத் தொடங்கியது.
சற்றுக்கடுங்காற்றுடன் கூடிய பருவமழை என கிழக்கு மாகாண மக்கள் எண்ணிக்கொண்டனர்,

12 மணி நேரம் 83
*-திடீரெனப் பலத்த காற்று வீ சத் தொடங்கியது. கூடவே மழையும் பொழிந்தது, வளவில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் ஒவ்வொன்ரு க முறிந்து வீழ்ந்தன. தென்னை மரங்களிலிருந்து தேங்காய்க்குலைகள் ஒவ்வொன் ருக விழத்தொடங்கின. 10
மழையும் காற்றும் கிழக்கு மா காண க் கரையில் பொழிந் கன. மட்டக்களப்பு நகரத்தில், திருகோணமலை வீதியில், செளக்கிய சேவைப்பகுதி அலுவலகத்துக்கு முன் நின்றிருந்த பெரிய வாகைமரம் ஒன்று கடுங்காற்றின் தாக்கத்தைத் தாளாம்ல் ஆடியது. பலமாக வேரோடாத மரம். மழை இளக்கிய மண்ணில், கடுங்காற்றின் அசை விற்கு, அது ஈடு கொடுக்க முடியாது ஆடியதோடு, சரி சரியாக 9-25 மணிக்கு அப்படியே, வீதிக்குக் குறுக்கே சரிந்தது. வீதியின் கரையில் மின்கம்பங்கள் காணப்பட் டன. அவற்றில் மின்கம்பிகள் மின்சாரத்தைக் கொண் டிருந்தன. வீதியில் சரிந்த மரம் அப்படியே மின் கம்பிக ளையும் அறுத்துச் சிதைத் தபடி விழுந்தது. அது சரிந்த சத்தத்தைக் கேட்ட வீதியில் நின்றிருந்த ம க் கள் ஒரு கணம் கிலிபிடித்து நின்றனர். மறுகணம் மின்கம்பி அறுந்து பறந்ததையும், கண்ணேப் பறிப்பதுபோல ஒளி கிளம்பியதையும் கண்டனர். அ வ் விட த்  ைத விட்டு விரைந்து ஒடத்தொடங்கினர். திருமலை வீதியில் சரிந்த வாகைமரம், ஒதுக்காக நின்றிருந்த ஒருவரை தன் உச்சா ரக் கொப்புகளால் அடித்தது. அடித்த வேகத்தில் அவர் ஐந்தடி தள்ளி விழுந்து எழுந்தோடினர்.
முதன் முதலில் சரிந்த மரம் அதுதான். அதுவும் உண் மையான சூரு வளியால் சரியவில்லை. அதன் வருகையை முன்கூட்டியே அறிவிக்க வந்த தூதனல் வீழ்த்தப்பட்டது. மரம் சரிந்தபோது அவ் வீதியில் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பஸ்கள், லொறிகள், கார்கள் என்பன விரைந்தன. மக்கள் நடந்தும் சைக்கிள்களிலும் சென்று கொண்டிருந்தனர், தீமையிலும் நன்மைபோல, அம்மரம் எவர்மீதும் சரிந்து அமுக்கிவிடவில்லை

Page 19
34 12 மணி நேரம்
ம்ரம் வீதியில் மின்கம்பிகளை அறுத்தபடி வீழ்ந்ததைச் செளக்கிய சேவைக் கந்தோரில் இருந்தவர்கள் கண்டனர் அங்கிருந்தவர்களில் ஒருவர் உடனடியாக கல்லடியிலிருந்த மின்சாரப் பகுதியினருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்,
பாராட்டுப் பெருத தியாகராசா
செளக்கியசேவை அலுவலகத்திலிருந்து வந்த தொலை பேசியை,மின்சாரப் பொறியியலாளர் திரு.கோதியாகராசா தான் எடுத்தார். திருமலை வீதியில் மின்கம்பிகளைத் துண் டித்தபடி மரம் ஒன்று விழுந்துவிட்ட செய்தியை அறிந் தார். இளமையும் துடிப்புமுள்ள ஒரு எஞ்சினியர் தியாக ராசா. அவர் உடனே எலெக்ரிக்கல் போமன் திரு. எஸ். ரங்கநாதனையும், லை யின் ஸ் ம ன் திரு. விஜயபாலாவையும் அழைத்துக்கொண்டு, கல்லடி உப மின்நிலையத்திற்குச் சென்ருர், அவ்வேளையில் மழை கடுமையாகப் பொழிந்து கொண்டிருந்தது. காற்றும் வேகமாக வீசிக்கொண்டிருந் தது. அவர்கள் அங்கு 11 கிலோவார்ட் ருெப் அவுட் பியூசை எடுத்துவிட்டார்கள். அ த ஞ ல் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள்ளும் அதன் சுற்ருடலிலுமுள்ள மின்சா ரத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்கள் அதன் பின் னர் மரம் விழுந்திருந்த திருகோணமலை வீதிக்குச் சென் றனர்.
அங்கு மட்டக்களப்பு இன்ஸ்பெக்டர் திரு.நிமால் குணத் திலக வேறு சிலருடன் நின்றிருந்தார். மரத்தை வெட்டி நீக்கி வீதிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தத் தயாராக நின்றிருந்தார். மின்கம்பிகள் அறுந்திருந்ததால் அவர்கள் எவரும் மரத்தை நெருங்கவில்லை. எஞ்சினியர் தியாகராசா மின்சார விநியோகம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்ட தென்று அறிவித்ததன் பின்னர், வீதிக்குக் குறுக்கே கிடந்த மரம் தறித்து நீக்கப்பட்டது. அவ்வேளையில் மட்டக்களப்பு மாநகரசபை மின்சார எஞ்சினியர் திரு. சிவகுருநாதனும் அவ்விடத்திற்கு வந்தார். மட்டக்களப்பு வீதியில் சரிந்த முதல் மரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சாரத்

12 மணி நேரம் 始
தைத் துண்டித்து ஆயிரக் கணக்கான மக்களின் உயிர்க ளைக் காப்பாற்றிய பெருமையைத் தியாகராசாவிற்குப் பெற்றுக்கொடுக்கவில்லை. அந்தப் பெயரை எப்படியோ இன்ஸ்பெக்டர் நிமால் குணத்திலக தட்டிக்கொண்டார்; பிரதான மின் இணைப்பு லையின்களில் ஏதாவது மரம் விழுந்தால், அவை 34 கெவி லையின்களாதலால், மின் இணைப்பு தானகவே நின்றுவிடும். எனவே மட்டக்களப்பு மாநகரத்தினதும் சுற்ருடலினதும் மின் விநியோகத்தை முதன்முதலில் நிற்பாட்டியதால் அப்பிரதேச உயிர்ச்சேதங் களைத் தடுத்தவர் தியாகராசாதான். அவரும் தன் கடமை யையே செய்தார்.
இலங்கையின் தினசரிப் பத்திரிகைகள் சில ஆசிரியத் தலையங்கங்களுடன், இன்ஸ்பெக்டர் நிமால் குணத்திலக விற்குப் பாராட்டுத் தெரிவித்தன. பிரதமர் திரு. ஆர். பிரேமதாச அந்த இன் ஸ்பெக்ரருக்குப் புகழ்மாலை சூட்டி யிருக்கின்றர்.
*" தேசப்பற்றுள்ள அந்தப் பொலிஸ் இன்ஸ்பெக்ட ரின் சமயோசிதச் செயலினல் ஆயிரக்கணக்கான மக்க ளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மின் விநியோகத்தை நிறுத்தியிருக்காவிடில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மின் சாரம் தாக்கிச் செத்திருக்கலாம். நாடு முழுவதும் அந் தப் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். குருவளி வீசுவதற்கான அறிகுறி தென்பட்ட தும் இன்ஸ்பெக்டர் நிமால் குணத்திலக உடனடியாக மின்விநியோக நிலையத்திற்கு ஒடிச்சென்று, மின்விநியோ கத்தைத் துண்டிக்குமாறு நிலையப் பொறுப்பதிகாரியிடம்: கேட்டுக்கொண்டார். மேலதிகாரிகளின் உத்தரவின்றி அப்படிச் செய்யமுடியாதென அவர் கூறியதும், உடனடி யாகப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் அரசாங்க அதிபரிடமும், பொலிஸ் சுப்பிரிண்டனிடமும் சென்று முறையிட்டார் அவர்கள் உடனடியாக மின் விநியோகத்தைத் துண்டிக்கு மாறு கூறிஞர்கள். அவரின் இச்சமயோசித நடவடிக்கை யினல் ஆயிரக் கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நாட்டுப்பற்றுக்கு இது ஒரு நல்ல உதாரணம் ' 1 என பிரதமர் பாராட்டியுள்ளார்

Page 20
3d 12 மணி நேரம்
உண்மையில் பாராட்டுப் பெறவேண்டியவர்கள் இரு வர்: ஒருவர் திருவாளர் சூரு வளி. தனது தூதுவன முத லனுப்பி ஒரு மரத்தைச் சரிக்கச் செய்து எச்சரித்தவர். மற்றவர் திரு தியாகராசா
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதைதான்
மழையும் காற்றும் அதிகரித்திருந்தமையால் மாவட்
டத்திலுள்ள பாடசாலைகள் யாவும், கூடிய சிறிது நேரத்தி லேயே மூடப்பட்டன, கடற் கொந்தளிப்பு
நவம்பர் 23 அதிகாலை, கிழக்குக் கரையோரத்தி லிருந்து ஏறத்தாழ 200 மைல்களுக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில், மணிக்கு ஏறத்தாழ 100 மைல்கள் வேகத் தில் சுழன்றபடி, கிழக்குக்கரையை நோக்கிச் சூருவளி அரக்கன் நகர்ந்துகொண்டிருந்தான். இவ்விடத்தில் வாச கர்களுக்கு இயல்பான ஒரு சந்தேகம் ஏற்படலாம். வியா ழன் அதிகாலை கிழக்குக்கரையிலிருந்து 200 மைல்களில் நின்றுகொண்டிருந்த சூரு வளி மணிக்கு 100 மைல் வேகத் தைக் கொண்டிருந்தால், கிழக்குக் கரையை அடைவதற்கு ஏன் மாலை 6மணியாகியது? உண்மையில் மணிக்கு 100மைல் வேகம் எள்நு சொல்லும்போது அது குரு வழியின் சுழற்சி வேகத்தையே குறிக்கும். சூரு வளிக்கு சுழற்சியும் உண்டு. அசைவும் உண்டு. சூரு வளி தன்னுள் சுழல்கின்ற வேகம் தான் மணிக்கு 100 மைல் என்பது. அது ஒரிடத்திலிருந்து இன்னெரு இடத்திற்கு அசைகின்றவேகம் மிக மெதுவா னது சுழல்கின்ற ஒரு பம்பரம் மிகவேகமாகச் சுழலும், ஆனல் அது அதே வேகத்தில் நகர்வதில்லை. நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கிழக்குக் கரையிலிருந்து ஏறத்தாழ 1500 மைலுக்கு அப்பால் நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கே இந்து சமுத்திரத்தில் தோற்றம் பெற்ற சூரு வளி, கிழக்குக் கரையை அடைய ஐந்து நாட்கள் எடுத்திருக்கின்றது. அதே வேளை அது இலங்கையை விட்டு வெளியேற ஒரு நாள் எடுத்திருக்கின்றது. இச்சூரு வளி மன்னுரை நவம்பர் 24 ஆம் திகதி காலை 10 மணிக்குத்தான் கடந்து, தென்

னிந்தியாவிற்குச் சென்றது. மட்டக்களப்பிலிருந்து மன் ஞர் வரையிலான 170 மைல்களைக் கடப்பதற்கு இச்சூரு வளிக்கு 16 மணித்தியாலங்கள் எடுத்திருக்கின்றது,
சூருவளி நகர்ந்திருந்த இடத்தில் கடலலைகள் 30 அடிகளுக்கு மேல் பொங்கி எழுந்தன, பொங்கிய கடலலை கள் கிழக்குக் கரையை நோக்கி விரைந்தன. குழுவளி மையம் நிலைபெற்ற 200 மை ல் எல்லையில்தான் இத் தகைய பொங்கும் அலைகள் தோன் றி, கடற்கரையை நோக்கி விரைந்தன. அதிகாலையிலிருந்து மெதுவாகப் பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கிய கிழக்குக் கடல், மத் தியானத்திற்குப் பின்னர் கட்டுமீறியது, பிற்பகல் 2 மணி யளவில் எழுச்சி உச்சத்தை அடைந்தது. குருவளியில் குவிக்கப்பெற்றுள்ள காற்றுச்சக்தியின் விளைவாகத் தோன் றும் கடல் எழுச்சி, சூழு வளியின் முன்னேற்றப் பாதை யில் பெரு எழுச்சியாகக் காணப்படும்.
வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கிழக்குக்கரைக் கடல் கொந்தளித்தது. சூரு வளியின் விரைவுத் திசை, பெருநோக்கில், மேற்காக இருந்தபோதிலும், நுணுக்க மாகப் பார்க்கும்போது சற்று வடமேற்காகும். அதனல் குருவளியின் முன்னேற்றப் பாதையின் இலக்கு, கல்லடி நாவலடிப் பகுதியாக அமைந்தது. அ ப் பகு தி க் கடல் பொங்கி அலையெறியத் தொடங்கியதைக் கண்ட கரை யோரப் பிரதேசத்தில் வீடுகள் அமைத்து வாழ்ந்துகொண் டிருந்த மக்கள் பயந்தனர்.
மட்டக்சளப்பிலிருந்து தென்பிரதேசங்களுக்குச் செல் கின்ற வீதி, கல்லடிப்பாலத்தின் ஊடாகத்தான், மட்டக் களப்பு கடல் நீரேரியை (வாவி)க் கடக்கின்றது. கல்லடிப் பாலத்தில் இருந்து பார்க்கும்போது பரந்த கிழக்குச் சமுத் திரமும், அடங்கி அலையெறியாது கிடக்கும் மட்டக்களப் புக் கடல் நீரேரியும் நன்கு தெரியும்.
".கிழக்கே பரந்துகிடந்த கடல் கொந்தளிக்கும் ஒலி, செவிகளை அதிர வைத்தது. கடல் அலைகள் மிக்க

Page 21
aš 12 மணி நேரம்
தூரத்தில் தென்னம்ர உயரத்திற்கு எழுந்து வீசின. அவ் வாறு கல்லடிக்கடல் கொந்தளிப்பது அதுதான் முதல் தடவை. கடல் இரைச்சல் காதுகளைப் பிய்த்தது, பலத்த மழையால் அந்த இரண்டுமணிப் பகற்பொழுதில் இருள் கப்பியிருந்தது. கிழக்குக் கடல் பொங்கி மட்டக்களப்பு வாவியை நோக்கிக் கடல்நீர் பெருக்கெடுக்கத் தொடங் கியது. கல்லடிப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு வாவிக் கும் கல்லடிக் கடலிற்கும் இடையில் அமைந்திருக்கும் நாவலடி, புது முகத்துவாரம் வட்டாரங்களுக்குக் கடல் ஆபத்து ஏற்பட்டது. ’’*
கடல்நீர் படிப்படியாகக் கரைமேவிப்பாயத் தொடங் கியது. வழமையாகக் கடல் நிற்கின்ற இடத்திலிருந்து ஏறத்தாழ 400 யார்களுக்குக் கடல் கிராமத்துள் புகுந்தது. கடற்கரையோரத்திலிருந்த வறிய மக்களின் அறுபது வீடு களுள் கடல் வேகமாகப் புகுந்தது. அக்குடிசைகளுள் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் கத்திக்கொண்டு மேட் டுப் பக்கமாக ஒடத்தொடங்கினர். பெரியவர்கள் சிறிய வர்கள், குழந்தைகள் யாவரும் அலறியடித்தபடி ஓடினர். அவர்கள் ஓடுவதைக் கண்டு கிழக்குக் கடல் தன் அலைக் கரங்சுளை உயரே தூக்கிக் கொக்கலி கொட்டிச் சிரித்தது. * . . கடற்கரையோர வீடுகளிலிருந்து வெளியேறிய வர்கள் புனித செபஸ்தியான் பாடசாலையில் தஞ்சம் புகுந் தனர். கடற் கொந்தளிப்பைத் தொடர்ந்து ஏனைய பகுதி களில் கடற்கரையோரமாகக் குடிசைகளிலும் வீடுகளிலும் வாழ்வோர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லு மாறு கேட்கப்பட்டனர், கோட்டைமுன வித்தியாலயத்தி லும் கடற்கரை ஓரங்களிலிருந்து வெளியேறியவர்கள் தஞ் சம் புகுந்தனர். கடற் கொந்தளிப்பினுல் அக தி கள r னுேரை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு டிக்சன் நீலவீர, மேலதிக அரசாங்க அதிபர் திரு அந்தோணிமுத்து மண்முனை வடக்கு உதவி அரசாங்க அதிபர் திரு சாம்பசிவ ஐயர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். "13

12 மணி நேரம் 39
கடில் எழுச்சி
**.இவ்விதம் ஏற்படும் கடல் எழுச்சி, தினத்திற்கு சுமார் 1000 ம்ைல்கள் பிரயாணம் செய்கின்றது. இவ்வே கம் குருவளியின் மையம் ந க ரு ம் வேகத்தைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்குகள் அதி க ம |ா ன தா கும். அதனுல்தான் குருவளி வருவதற்கு முன்னரே கடல் எழுச்சிகள் உருவாகின்றன. சூருவளியின் வலதுபுறத்தில் அமைந்த எழுச்சி முக்கியமானதாகும். இவ்வித கடல் எழுச்சிகள் அதிக தூரத்திற்குப் பிரயாணம் செய்கின்றன. குழுவளியின் மையத்திலிருந்து 1000 மைல்கள் வரையில் முன்னேறிக் காணப்படுகின்றன, எனவே இவை குழு வளி யின் முன்னறிவிப்பாகப் பயன்படுகின்றன. எழுச்சி முன் னேறும் திசையிலிருந்து குரு வளி எங்குள்ளது என்று அறி தல் எளிது. கடற்கரைவாசிகளுக்கு இவ்விதமான கடல் எழுச்சி ஒரளவு முன்னெச்சரிக்கையாக அமைகின்றது. குருவளி கடலைக் கடைவதால் கடல் எழுச்சி உருவாகின்
14 * * * مهم لكي D
கிழக்கிலிருந்து வீசிய கடுங்காற்ருேட்டத்தால் ஏற் பட்ட நீரோட்டங்கள், கல்லடிக் கடற்கரையில் நீரை க் குவித்தன. மட்டக்களப்பு வாவிக்குள் இக்கடல் நீர் அதிக அளவில் சேர்ந்து, வாவியின் மட்டம் உயரத்தொடங்கியது. வாவிக்குள் தேங்கிய நீர் வெளியேற காற்ருேட்டம் விட வில்லை. செங்கலடியிலிருந்து தெற்கே கல்லாறு வரையில் வடக்குத் தெற்காக அமைந்திருக்கும் மட்டக்களப்புக் கடல்நீரேரிக்குள் நீர்மட்டம் பிற்பகல் இர ண் டு மணியி லிருந்து உயரத்தொடங்கியது. கிழக்குக் கரையிலிருந்து 200 மைல்களுக்கு அப்பால் நிலை பெற்றிருந்த குரு வளி அரக்கன், கிழக்குக்கரையை நோக்கி நகர நகர இம்மட் டம் உயரத் தொடங்கியது.
மட்டக்களப்பு நகரப்புறத்தில் பல்வேறிடங்களில் மரங்
கள் பல சரிந்து விழுந்தன: கிளைகள் முறிந்து சரிந்தன.
பிற்பகல் 3 மணியளவில் பொழிந்த மழை தூறலாக மாறி
4-LD. நே.

Page 22
40 12 மணி நேரம்
யது. ஏறத்தாழ 1 மணிநேரம் மழைப்பொழிவு குறைந் திருந்தது. காற்றின் வேகமும் தாழ்ந்திருந்தது. பிற்பகல் 4-20 மணியளவில் வானத்தில் மீண்டும் வேகமாகத் திரண் முகில் செறிந்தன. மீண்டும் பேய்மழை பொழியத் தொடங் கியது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் த ங் கள் வீடுக ளுள்ளும் குடிசைகளுள்ளும் பதுங்கிக் கொண்டனர். வெளி யில் வெளிக்கிட முடியாதளவிற்கு மழை பொழிந்து கொட்டியது. ஒவ்வொரு மழைத்துளியும் தடிப்பானவை யாயும் ஊசிகள் போலத் தாக்கக் கூடியனவாயும் இருந் தன. வானம் பிய்த்துக் கொண் டது போல மழை பொழிந்தது.
மாலை 4-30 மணி என்றுமில்லாத விதமாக கிழக்கு மாகாணத்தை இருள் படரத் தொடங்கியது. படுவான் திசையில் சூரியன் சரிவதற்கு முன்னரே, வானில் திரண்ட முகில்கள் அவன் ஒளிக்கதிர்களைப் பூமியில் தழுவ முடியா மல் குறுக்கிட்டுத் துண்டித்தன. இருள், கனத்த இரு ஸ் கவிந்தது.
அதே வேளை, கிழக்கு வானில் வெகு தூரத்தில் பயங் கரமான கருமையுடன் முகில் திரள் ஒன்று கிளம்பியது; உருண்டு திரண்ட அம்முகில் வடக்குத் தெற்காக வெகு தூரம் பரவிப் படர்ந்தது, கரிக் கருமை. கணவாயின் மை கரைவது போல கீழை வானில் மிக்க வேகத்துடன் அம் முகில் கரைந்து பரவியது. மெல் லிய ஒரு இரைச்சல், "ஊ. ஊ" என்ற ஒரு முனகலுடன் கூடிய ஒரு உறுமல்ஒலி எழத்தொடங்கியது. சோவெனப்பெய்த மழையின் முழக் கத்தையும் மீறி அந்த உறுமல் ஒலி எழத்தொடங்கியது. அந்த உறுமல் ஒலி படிப்படியாக வளரத் தொடங் கியது. காதுக்குள் கூரிய ஊ சி களை துழைப்பதுபோல அந்த இரைச்சல் புகத்தொடங்கியது.
வந்தான் அரக்கன்
கிழக்கு வானில் பரந்த இருட்திரள், மிக்க வேகத் துடன் கிழக்குக்கரையை நோக்கி நகரத் தொடங்கியது.

i: மணி நேரம் 41
பயங்கர அரக்கன் ஒருவன் தன் அகன்ற வாயைத் திறந்து கொண்டு, கிழக்கு மாகாணத்தையே விழுங்க வ ரு வ து போல, சூறைக்காற்று பிரசண்டமாருதமாய், சுழன்றபடி வந்தது. அதன் இரைச்சல் படிப்படியாக அதிகரித்து உச் சத்தைப் பெற்றது. ஊ.ஊ என்ற பேரிரைச்சல் கிழக்கு மாகாணத்துக் கிழக்குக்கரையில் புகுந்தது. சரியாக நவம்பர் 23, மாலை 6-20. கடல் மிக்க ஆக்ரோசத்துடன் பொங்கியது. ஏறத் தாழ பதினைந்தடி உயரத்திற்குக் கடலலைகள் வீ ங் கி ன. கடலின் எழுச்சியுடன் பேய்மழையும் சேர்ந்து கொண்டது. குருவளியின் வெளி வளையம், கிழக்கு மாகாணத்தினைப் பற் றிப் படர்ந்தது. செங்கலடியிலிருந்து கல்லாறு வரையில் தான் குரு வளியின் வெளிவளையம் முதலில் பிரவேசித்தது. பின்னர் அதன் பரப்பு கதிரவெளியிலிருந்து பொத்துவில் வரை விரிந்தது. கிழக்குக் கரையில் நுழைந்த குழு வளியின் விட்டம் ஏறத்தாழ 170 மைல்களாக அமைந்திருந்தது
அச்சூறையின் வே கம், அதாவது வெளிவளையத்தில் காற்றின் வேகம் மணிக்கு 85 மைல்களாக இருந்ததை மட்டக்களப்பு அவதான நிலை யம் கடைசியாகப் பதிந் திதி
ஆயிரம் லொறிகள் ஒரே நேரத் தி ல் ஓரிடத்தில் இரைந்தபடி நிற்பதுபோன்ற சத்தம். மரங்கள் தலைவிரித் தாடத்தொடங்கின. கிழக்கு மாகாணத்தின் கரையோரம் முழுவதும் பசுஞ்சோலையாக வளர்ந்திருந்த தென்னை மரங் கள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடி யா ம ல் மேற்குக் கிழக்காக முதலில் ஆடினே. நிலத்தைத் தொட்டு நிமிர்வதுபோன்ற ஆட்டம்.
தென்னை மரங்களில் காய்ந்து கிடந்த தென்னம் ஒலை கள் சூறையினல் பிய்த்துக்கொண்டு ச ரு கு க ள் போல வானத்தில் பறந்தன. தென்னங்குலைகளில் இருந்து தேங் காய்களும் இளங்காய்களும் பொத் பொத்தென அவற்றின் நேர்கீழ் விழாமல் வெகுதூரத்திற்குக் க?ற்றினல் காவிச் செல்லப்பட்டு வீசப்பட்டன.

Page 23
42 12 மணி நேரம்
அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இ லை கள் ஒவ் வொன்ருகப் பிய்த்து எடுக்கப்பட்டன. காற்றின் வீசலில் மரங்களில் இருந்த இலைகள் உருவி எடுக்கப்பட்டு அள்ளிச் செல்லப்பட்டன.
தென்னை மரங்களின் ஒலைகளும், மரங்களின் கிளைகளும் மேற்குப்புறமாக வாரித் தள்ளப்பட்டன. மட்டக்களப் புக் கரையில் தாண்டவமாடத் தொடங்கிய குரு வளி முத லில் செய்த வேலை, ஓலைகளையும் இலைகளையும் பிய்த்துச் செல்லத் தொடங்கியமைதான்.
படிப்படியாகச் சூருவளியின் வே கம் அதிகரித்தது. ஒராயிரம் நரிகள் ஊளையிடுவது போன்ற பயங்கரச் சத்தம் பரவியது. மக்கள் பயத்துடன் வீடுகளுள் ஒதுங்கிக்கொண் டனர். ஒலையினல் வேய்ந்திருந்த குடிசைகளின் கூரைகளைச் குறை கிளப்பிப் பார்த்தது; கிளம்பிய ஒலை வெளிகளின் ' ஊடாகப் பேய்மழை தன் கரங்களைப் புகுத்தியது.
கிழக்கு மாகாணக் கரையெங்கும் இருளும் பயமும் பற்றிப்படர்ந்திருந்தன.
காற்றின் வேகமும் அதிகரித்தது
குரங்குகள் பறந்தன.
கரடியனுற்றின் உயர் மரம் ஒன்றில் மழைக்கும் காற். றுக்கும் பயந்து, நூற்றுக்கணக்கான குரங்குகள் ஒதுங்கிப் பதுங்கியிருந்தன. பேய்மழையின் சாரல்கள் அவற்றின் உடலில் ஊசிகளாகத் தைத்தன. குட்டிகள் தாய்க் குரங்கு களின் அடிவயிற்றைக் கட்டிக்கொண்டு நடுங்கின. அவை கவலையுடன் அமர்ந்திருந்தன. காற்றின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அப்பெரிய வாகை மரம் பயங்கர மாக ஆடியது.
அம்மரத்தின் இலைகள் குறையின் வேகத்தில் உருவி எடுக்கப்பட்டன. இலைக்கும்பல் ஒன்று வானத்தில் பரவி யது. கிளைகள் சில பட்பட்டென்று ஒடிந்தன. இலைச்சரு குகளிடை சருகுகளாக அம்மரத்திலிருந்த குரங்குகளும்

12 மணி நேரம் 43
உருவி எடுக்கப்பட்டு, வானத்தில் கொண்டு செல்லப்பட் டன. குரங்குகளின் பயங்கர ஒலம் காற்றின் இ  ைர ச் ச லுக்குள் அடங்கியது அவை எல்லாம் அப்படியே வெகு தூரம் காற்றில் பறத்தி வீசப்பட்டன. மூச்சடங்கிச் செத்த வையும். மரங்களுடன் மோதிச் செத்தவையும்.நீரில் மூழ் கிச் செத்தவையும் . அக்குரங்குகளில் எதுவும் உயிருடன் தப்பியிருக்க முடியாது
மரங்கள் சரிந்தன
குருவளியின் சுழிப்பு வலயம் கிழக்குக்கரையில் பிர வேசித்தது. அழிவின் உச்சம் தொடங்கியது. தென் னை மரங்கள் சரியத் தொடங்கின: நிலத்தைத் தொட் டு முத்தமிட வளைந்த சில தென்னை மரங்கள் நடுவில் தெறித் துச் சரிந்தன. கிழக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 19000 ஏக்கர்த் தென்னந்தோட்டம் இருக்கின்றது,
அவ்வளவு ஏ க் கர் களை யும் இலட்சக்கணக்கான தென்னை மரங்களையும் தரைமட்டமாக்கிவிடும் செயலில் குறை அரக்கன் மும்மரமாகத் தொழிற்பட்டான். கரும்பு பிழிந்து சாறு எடுப்பதுபோல, நூற் று க் கண் க் கா ன தென்னை மரங்கள் திருகிப் பிழியப்பட்டன. ஆயிரக்கணக் கான தென்னைகளின் வட்டுக்கள் முறிக்கப்பட்டன. அடி யோடு வீழ்த்தப்பட்டவை . . அடியோடு தூக்கி பல யார் களுக்கு அப்பால் எறியப்பட்டவை. ச ரி ந் த  ைவ. கிழக்குமாகாணத்து மக்களால் மிகவும் போற்றப்படுகின்ற தென்னை மரங்கள் எதுவுமே அக்காற்றின் முன் நிற் க முடியவில்லை, தரை மட்டம்ாக அவை யாவும் சரிந்தன.
நூற்றுக்கணக்கான வருடங்கள் நிலைத்திருந்து நிழல் பரப்பிய பெரிய மரங்கள் கூடச் குழு வளியின் முன் நிற்க முடியவில்லை. அவை அப்படியே பாறி விழுந்தன. பெரிய பெரிய கிளைகள் எல்லாம் முறிந்து சிறு சுள்ளிகள் போலச் சரிந்தன. இராட்சத மரங்கள், குரு வளியின் அரக்கக்கரங் களில் அகப்பட்டு அப்படியே சரிக்கப்பட்டன:

Page 24
44 12 மணி நேரம்
சரிந்த மரங்கள் வீதிகளின் குறுக்கேயும், குடிசைக ளின் மேலும் பெரிய சிறிய வீடுகளின் மேலும் சரிந்தன. அவற்றிற்கிடையில் அக ப் பட் ட மக்கள் மரண ஒலி எழுப்பினர்.
கிழக்கு மாகாணத்தின் ஆயிரக்கணக்கான ஏழை மக் களின் குடிசைகள் எல்லாம் காற்றில் அப்படியே பிடுங்கி வீசப்பட்டன. சிறிய குடிசைகளுள் மழைக்கும் காற்றுக் கும் ஒடுங்கிக் கிடந்த மக்கள் மழையில் தோய்ந்தனர். அவர்களால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. வயல் வெளி களில், பள்ளக்காணிகளில், குடிசைகள் கட்டி வாழ்ந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். ஒரே ஒலம். ஒரே இருள். ஒருவரையொருவர் கட்டி க் கொண்டு அவர்கள் கதறினர். வெள்ளம்வேறு நிலத்தில் பரவத் தொடங்கியது. நிலத்தில் நிமிர்ந்து நிற்பதற்கும் காற்று விடவில்லை. அவர்களை அப்படியே வாரித் தூக்கிச் சென்று விடுவதுபோலப் பயங்கர வேகத்துடன் சு ழ ன் றடித்தது. குடிசைகளை இழ ந் த அம்மக்கள் அப்படியே வெள்ளத்துள் படுத்துக்கொண்டனர்.
கல்வீடுகளின் ஒடுகள் காற்றில் பறந்தன. சருகுகள் பறப்பதுபோல அவை காற்றில் வாரிச் செல்லப்பட்டன. அவ்வீடுகளில் ஒது ங் கி ப் பதுங்கியிருந்தவர்களின் மீது ஒடுகள் பொல பொல என்று கொட்டின. சிலரின் மண் டைகள் உடைந்து இரத்தம் வடிந்தது. அவர்கள் மேசை களின் கீழும் குசினிசிம்னிகளின் கீழும் பதுங்கினர்.
அஸ்பெட்டஸ் கூரைகளைச் சூழுவளி தூக்கி வீசியது. ஊ. ஊ என்று சத்தமிட்டபடி அக்கூரைகளை அப்படியே தூக்கி, பொத்தென போட்டுச் சிலநேரம் அது விளையாடி யது, கூரை காற்றில் எழும்பிப்பின்னர் பொத்தெனக் கட் டிடத்தின்மீது விழுவதைப் பயத்துடன் வீட்டிற்குள் இருந் தோர் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நேரம்தான். குரு வளி அச் சீற்றுக்களை அப்படியே பிய்த்து எடுத்து தூர வீசியது. தகரங்கள் காற்றில் பிடுங்குண்டு வானில் பறக்குந் தட்டுகளாக இரைந்தபடி பறந்தன.

12 மணி நேரம் 45
எங்கும் இருள். எங்கும் பயம் எங்கும் ம ர ண ம் நெருங்கிவிட்டது என்ற உணர்வு.
சரிந்த தென்னை மரங்கள் குடிசைகள்மீது விழுந்தன. கட்டிடங்கள்மீது விழுந்தன. கட்டிடங்கள் தரைமட்டம்ா கின. சுவர்கள் பாறிச் சரிந்தன.
"ஆண்டவனே." என்ற பிரார்த்தனை ஒலம்.
சூருவளி பயங்கர நடனம் ஆடியது: மாலையிலிருந்து இரவு 10 மணி வரை அது பேய்க்கூத்து ஆடியது.
ஒரு பயங்கர அனுபவம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கும் மூன்று இலட்சம் அனுபவங்கள் இருக்கின்றன, அவர்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத அனுபவங்களை இச்சூருவளி வழங்கிவிட்டது; இன்னமும் நூறு வருடங்களுக்கு இச் சூரு வளியின் தாக் -கம் ஏற்படுத்திய விளைவுகள் மட்டக்களப்பு மாவட்டத் தில் இருக்கும். அவ்வளவு கால மும் இச்சூறு வளியின் பேச்சும் அங்கு மங்கி மறைந்துவிடப் போவதில்லை.
குருவளியினல் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கதை கதையாகத் தங்க ள் அனுபவங்களை விபரிக்கத்தான் போகின்றர்கள். மட்டக்களப்பு வீரகேசரி நிருபர் திரு. வீ. சு. கதிர்காமத்தம்பியின் அனுபவம் மட்டக்களப்பு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவம்.
". ஊழிக்கூத்து களை கட்டத்தொடங்கிவிட்டது. வீட்டைவிட்டு முற்றத்தில்தானும் இறங்க முடியவில்லை; திரும்பிய திசையெல்லாம் இருள் மயம். மழையின் கூச்சல். புயலின் இடியோசை. கடலின் குமுறல். கடவுளே, ஒரு ւնաtäծՄւն.
"அப்போது வீட்டில் எனது குடும்பத்துடன் எனது மாமி, மைத்துனர், பக்கத்திலுள்ள ஓலைவீட்டில் வாழ்ந்த குடும்பத்தினர், மழைக்கு ஒதுங்கவந்த சிலர் எல்லாமாக பதினைந்தோ பதினறு சீவன்கள் கிடந்து தத்தளித்துக்

Page 25
46 12 மணி நேரமி
கொண்டிருந்தோம் எ ல் லாரும் பாதுகாப்பான ஒரு அறைக்குள் அடைபட்டுக் கிடந்தோம். அப்போது வீட் டில் அல்ல, ஒரு மயானக்கரையில் நிற் கி ன் ற உணர்வு ஏற்பட்டது; வெளியே தென்னை மரங்கள் தடார் தடார் என்று பயங்கரமாக விழும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்
955.
'திடீரென என் வீட்டுக் கூரையில் ஒருவித உறுமல் சத்தம் கே ட் டது. அண்ணுந்து பார்த்தபோது, கூரை அசைவது தெரிந்தது. கடவுளே என்ன நடக்கிறது? பெண் கள் கூக்குரல் இட்டனர். பிள்ளைகள் அலறினர், நாம் திகைத்தோம். எல்லாரும் கதவைத் திறந்துகொண்டு முன் மண்டபத்திற்கு வந்தோம். கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை
"எங்கள் வீடு ஆஸ்பெட்டக்ஸ் தகட்டுக் கூரையுடையது. பக்கத்து வீடு ஒட்டுக்கூரை. அங்கு ஓடித் தப்புவோம் என நினைத்தோம். வெளியில் அதே பயங்கரக் காற்று. அதே மழை. குட்மிருட்டு. திசையே விளங்குவதாகவில்லை. எங் கள் வீட்டுக் கூரையின் அஸ்பெட்டஸ் சீற்றுகள் காற்றின் வேகத்தில் பிடுங்கப்பட்டு, வானில் கிளம்பின. ஓவென அலறினுேம்.
"உடனே எனது மைத்துனரும் ம்ற்ருெரு இளைஞரும் பக்கத்துவீட்டுக் கம்பி வேலியால் எப்படியோ பாய்ந்து அங்கு இருந்து ஒரு டோர்ச் லையிற்றை அடித்து, ஒளி பாய்ச்சினர். பிள்ளையை அந்த வேலிக்கு மேலால் தூக் கித் தரும்படி சப்தமிட்டனர்"
**ஆனல் அந்த வேலியை நெருங்க முடியாதபடி அந் தப்பக்கத்து வீட்டில் நின்றிருந்த தென்னங்கன்று ஒன்று சாய்ந்து தலைசுற்றி ஆடி யது. எப்படியோ நான் கம்பி வேலியை அணுகினேன். படார் படார் என கம்பி வேலி யின் இரண்டொரு கம்பிகளைப் பிடித்திழுத்து, நுழைவ தற்கு வழியெடுத்தேன், அதற்குள்ளால் எல்லாரையும் அவசர அவசரமாக பக்கத்து வீட்டிற்குள் அனுப்பிவிட்டு, நானும் ஓடினேன்,

12 மணி நேரம் 47
"அப்போது அந்த வீட்டின் மீது ஒரு வேப்ப மரம் விழுந்தது. ஒடுகள் சிதறின. அந்த வீட்டுக்காரர்களும், அதே வளலில் இருக்கும் மற்ருெரு வீட்டிலுள்ள (அந்த வீடும் எங்கள் வீடுபோல அஸ்பெஸ்டஸ் கூ  ைர கொண் டது) அவர்களது உறவினரும் ஓடுகள் தலைகளில் விழாத படி மூலைக்கு மூலை ஒதுங்கி நின்றனர்; நாங்களும் அவ் வாறே அவ்வீட்டிற்குன் ஒது ங் கி க் கொண்டோம். ஓர் இடத்தில் நின்ருேம் என்றில்லை; ஒடுகள் விழ விழ மாறி மாறி நின்ருேம் அப்படி இருக்கும் ஒரு கட்டத்தில் ஒடு கள் விழும் வேகம் அதிகரித்தது."15
இவ்வேளையில் குருவளியின் கண் பகுதி மட்டக்களப்பி னுள் பிரவேசித்தது.
காற்றில் கிளம்பிய குழந்தை
செங்கலடியில் குருவளியினல் ஏற்பட்ட சேதாரங்க ளும் பயங்கர அனுபவங்களும் அதிகம். செங்கலடியில் வட்டிக்கடை நடாத்திவரும் திரு. வை. விஜயரத்தினம், யாழ்ப்பாணம் உரும்பராயைச் சேர்ந்தவர். அவர் தன் குடும்பத்தினருடன் செங்கலடியில் தங்கியிருந்தார். கொங் கிறீற் பிளாட் போட்ட கடை. அல்பெஸ்டஸ் கூரை வீடு இரண்டும் ஒருங்கே இணைக்கப்பட்டிருந்தன.
மாலை 5 மணி போல அவர் செங்கலடிக் காளிகோயி விற்குச் சென்றிருந்தார். காளி கோயிலைச் சுற்றி, 100 அடி களுக்கு மேல் உயரமான 20 அடிகளுக்கு மேல் சுற்றுள்ள பெரிய இராட்சதக் காட்டு மர்மரங்கள் வளர்ந்திருந்தன, கோயிலின் முன்னும் வீதியிலும் அவை வளர்ந்திருந்தன. கோயிலின் வீதியெங்கும் பிற்பகல் 2 மணியிலிருந்து வீசிய கடுங்காற்ருல் உ ரு வி வீசப்பட்ட இலைகள் நிறைந்திருந் தன. சிறிதளவு வெள்ளமும் காணப்பட்டது;
காற்று ஓய்ந்திருந்த இடை நேரம். கோயிலில் கும் பிட்டுக் கொண்டிருக்கும்போது காற்று பலமாக வீசத் தொடங்கியது. அவர் அவசரம் அவசரமாகக் கும்பிட்டு ஜிட்டுத் தன் வீட்டிற்கு விரையத் திரும்பியபோது, கோழி

Page 26
-48 12 மணி நேரம்
லின் முன் நின்றிருந்த பிரம்ாண்டமான காட்டும்ாமரங்கள் பயங்கரமாக ஆடின, ஆடியதோடு நில்லாமல் ஒரு காட்டு மாமரம் கோயில் பக்கமாகச் ச ரி ய வும் தொடங்கியது
அதேவேளை பெரியதொரு கிளை படீரென முறிந்து விழுந் தது. அவர் வேகமர்கத் தன்வீட்டிற்கு ஒடத்தொடங்கி ஞர் கோயிலின் முன்பக்கத்தில் காட்டுமாமரம் பயங்கரச் சத்தத்துடன் சரிந்து விழுந்த ஒலி கேட்டது. அவர் நிற்க வில்லை. காற்று வீசத்தொடங்கியது காளி கோயில் வீதியி னுாடாக அவர் பாய்ந்தோடினர். காற்றின் அலைப்பினல் உருவப்பட்ட தென்னம் ஒலைகள் சிறிக்கொண்டு வானத் தில் பறந்தன, அவரையே காற்று அள்ளிச் சென்றுவிடும் போல இருந்தது. பிரதான வீதி யி ல் ஏறியபோது, மின்
கம்பிகள் பயங்கரமாக வயலின் வாசித்தன. பயங்கரமான
சத்தம். அரூபம் ஒன்று மின் கம்பிகளில் வீணை மீட்டியது. ஓடி வந்து கடைக்குள் புகுந்து கொண்டார்.
அதே வேளை காற்று உக்கிரமாக வீ சத் தொடங்கி யது. அதிர்ஷ்டம் அவர்பக்கம்.
அவரும் அவர் குடும்பத்தினரும் வீட்டிற்குள் முடங் கிக்கொண்டனர். பக்கத்து வீட்டுத் தகரக் கூர்ையைக் காற் றுப் பிய்ப்பது கேட்டது. அதேவேளை பிய்த்துப் பிடுங்கப் பட்ட தகரங்கள் அவர் வீட்டுக்கூரையின் மீது விழுந்து, பின்னர் காற்றினல் அள்ளிச் செல்லப்பட்டன:
குருவளி உக்கிரமாக வீசியது. மிகப் பயங்கரமான இரைச்சல். பழைய லொறிகள் நூறு, ச ரி வில் கியரை மாற்றி மாற்றி ஏறுவது போன்ற சத்தம். மண் ண ப் போட்டு இராட்சத உருளையொன்று அரைப்பதுபோன்ற சத்தம்.
அவர்தன் வாழ்நாளில் அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்டதில்லை. அந்த இரைச்சல் உறுமலை என்றும் அவ ரால் மறக்கவும் முடியாது. வெளியில் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை.
அவர் கடைக்கு முன், வீதிக்கு அ ப் பா ல் இருந்த சாரதா தியேட்டரைக் காற்றுப் பிடுங்குவது தெரிந்தது.

12 மணி நேரம் 49
பார்த்துக்கொண்டிருக்கும்போதே அத்தியேட்டரின் கூரை அப்படியே சரிய, கட்டிடம் மாவாக உடைந்து சரிந்தது. முன்பக்கத்தைத் தவிர யாவும் தரைமட்டமாகப் பயங்கர ஒலியுடன் சரிந்தது. கூரையிலிருந்து பிடுங்கப்பட்ட தகரங் கள் காற்றில் காகிதமாகப் பறந்தன.
அவர் வீட்டின் அஸ்பெஸ்டஸ் சீற்றினுள் காற்று தன் கரங்களை நுழைத்தது. அது கூரையை மெதுவாகத் தூக்கிப் பொத்தென வைத்தது. அவர் வீட்டுச் சுவரைக் காற்று விருண்டியது. அவர் தன் குடும்பத்துடன் கொங் கிறீற் பிளாற் போட்ட கடைக்குள் ஒடினர். அதேவேளை, அவர் வீட்டுக் கூரையில் மரங்களை எஞ்சவிட்டு, அஸ்பெஸ் டஸ் சீற்றுகள் காற்றில் கிளம்பின, அஸ்பெஸ்டஸ் சீற்று களை மரத்துடன் இணைத்திருந்த 'L' ஆணிகள் அவர் கண்முன்னல் நேராக நிமிர்ந்தன. படீரென சீற்றுகள் வானத்திவில் கிளம்பின அவர் மனைவி பயத்தால் வீரிட் L'il
ஆணிகளை நேராக்கி சீற்றுகளை அள்ளிச் செல்கின்ற இப்படிப்பட்ட ஒரு சக்தியை அவர் வாழ்நாளில் சந்தித் தவரல்லர். கொட்டிய மழை வீட்டிற்குள் சோனவாரியாக இறங்கியது. அவர்கள் கடைக்குள் புகுந்துகொண்டனர் பயங்கரமான சத்தங்கள் ஒலித்தன.
யாரோ கடைக் கதவை அறைவதுபோலக் கேட்டது யாராவது உதவிக்கு தட்டுகின்ருர்களோ? அவரின் தம்பி மெதுவாகச் சென்று கடையின் ஒரு கதவைத் திறக்க முயன்றன். முடியவில்லை. யாரோ கதவை இழுத்துப் பிடிப் பது போல இருந்தது. பலமாகத் தள்ளித் திறக்க முயன் முர். அமுக்கி வைத்திருந்த கதவை யாரோ பட்டென்று விட்டதுபோல கதவு பட்டெனத் திறந்துகொள்ள, திறந் தவர் பின்னல் சரிந்தார். ஊ. என்ற இரைச்சலுடன் குரு வளியின் ஒரு கரம் கதவினூடாகப் புகுந்தது. விஜய ரத்தினத்தின் அருகில் நின்றிருந்த ஐந்துவயதான அவ ரின் குழந்தையை, உள்ளே இரைச்சலுடன் நுழைந்த காற்று அப்படியே அலாக்காகத் தூக்கியது. குழந்தை

Page 27
50 12 மணி நேரம்
வீரிட்டுக் கத்தியது. பொத்தென குழந்தையை நிலத்தில் காற்று சரித்துவிட்டு, மீண்டும் தூக்க முயன்றது. அதற் குள் அவர் குழந்தையைப் பற்றிக்கொண்டார். கடைக் கதவு தன்பாட்டுக்குத் தானுகவே அடித்து மூடிக்கொண் டது. பயங்கரப்பேய் ஒன்று ஒரு கணம் உள்ளே நுழைந்து விட்டுச் சென்றதுபோல இருந்தது. அவர்கள் யாவரும் பயத்துடன் அறை மூலையில் முடங்கிக்கொண்டனர்.
வெளியில் ஓயாத சத்தங்கள் எழுந்துகொண்டிருந்தன. அவர்களின் கடைக் கொங்கிறீற் பிளாற்றின்மேல் 4லர், ஏறிக் கூத்தாடுவதுபோல இருந்தது.
கண்முன்னே குழந்தைகள் இறந்தன!
போரதீவைச் சேர்ந்த திரு. வி. தங்கராசா என்பவ ரின் வாழ்வில், குழுவளி ஏற்படுத்தியிருக்கும் இழப்பு மிக மிகப் பயங்கரம்ானது. வேறெவருக்கும் இன்னுெருதடவை இப்படியொரு மனத்துயர் ஏற்பட்டுவிடக்கூடாது. சூரு வளி தன் ஆயிரங் கரங்களைச் சுழற்றி வீசி, தாண்டவம் ஆடியபோது, அவர் வீட்டிற்குள் அவரும் அவர் மனைவியும் ஆறு குழந்தைகளும் பயத்துடன் முடங்கிக் கொண்டனர்: அப்போதுதான் அந்த நெஞ்சத்தை உருக்கும் சம்பவம் நிகழ்ந்தது,
குருவளியின் தாக்கத்தால் வீட்டின் கூரை பிய்த்துக் கொண்டு பறந்தது. அவர்கள் பயத்துடன் சுவருடன் ஒண் டிக்கொண்டனர். சுவர் சரிந்தது. கூரையும் சரிந்தது. இடி பாடுகளுக்கிடையில் அக்குடும்பம் அகப்பட்டுக்கொண்டது திங்கராஜாவும் இடிபாடுகளுக்கிடையில் அ கப் பட் டு க் கொண்டார். அவர் கண்களின் முன்னல் அவர் குடும்பம் இடிபாடுகளுக்கிடையில் தத்தளித்தது. அப்பா. அப்பா. அம்மா என அவர் குழந்தைகள் ஓலமிட்டன. க்ாப்பாற்ற வழியில்லாமல் அவர் தவித்தார்.அவர்மீது பாரம் ஒன்று அழுத்தியது:
"...இரண்டுவயதும் நான்கு வயதும்ான எனது இரண்டு பிள்ளைகள் மூச்சுத் திணறிச் செத்துப்போனர்கள். அவர்

12 மணி நேரம் s
கள் அப்பா. அம்ம்ா." என்று அலறிக்கொண்டு, சிறு கச் சிறுகச் செத்துக்கொண்டிருந்தனர். என் இரண்டு செல் வங்களும் அழுது கதறியவண்ணம் ?என் கண்களின் முன்கு லேயே சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருந்தனர். இந் தப் பயங்கரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் மனைவி மயக்கமுற்றர். என்னல் எந்த உதவியும் செய்யமுடியவில்லை ஆண்டவனே. ஏன் இப்படி ஒரு பயங்கரத்தைத் தந் gтuи?..."* 16
திரு. தங்கராசாவின் கையிலும் காலிலும் பலத்த முறிவு ஏற்பட்டது. மறுநாள் காலையில்தான் அவரையும் ஏனைய குழந்தைகளையும் இடிபாடுகளுக்கிடையே இருந்து காப்பாற்ற முடிந்தது. குழந்தைகள் நான்கும் குளி ரி ல் விறைத்துப்போயிருந்தன அவருடைய மனைவி ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார் அவர் கொழும்பு பெரியாஸ் பத்திரிக்கு ஒரு வாரத்தின் பின்னர் அனுப்பப்பட்டார்.
**. என் இறந்த குழந்தைகளைக்கூட அடக்கம் செய்ய முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.' 17
கரையோரப் பகுதிகளில் வெள்ளம்.
குருவளியின் வருகையுடன் காலையிலிருந்து பொங்கி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கிழக்குக் கடல், தன் அலைக் கரங்களை தென்னைமர உயரத்திற்கு எறிந்தபடி, கடற்கரை யில் தாவியது. குருவளியின் அபரிதமான சக்தியால், கிழக் குக் கடல் கடையப்பட்டு, கரையை நோ க் கி ப் பெருந் தொகை நீரைத் தள்ளியது வாகரை, பணிச்சன்கேணி, மான்கேணி, கல்குடா, கல்லடி, நாவலடி, காத்தான்குடி, தாழன்குடா, செட்டிப்பாளையம், கல்லாறு, பாலமுனை முத லான கரையோரப்பிரதேசங்களில் கடல் வெள்ளம் புகுந் தது. அக்கடற்கரையோரங்களில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த மக்கள் குடிசைகளுள் வெள்ளம் புகுந்ததும் பயத்துடன் ஓடினர்.

Page 28
·*
52 12 மணி நேரம்
கடலின் ஆரவார நுழைவுடன், கடுங்காற்று அந்த ஏழை மக்களின் எஞ்சியிருந்த குடிசைகளையும் பறித் து பறித்து வானில் எறிந்தது. சரிந்த குடிசைகளை கடல் அள் ளிக்கொண்டு சென்றது. அவர்களின் கண்களின் முன்னுல் கடல் பொங்கி எழுந்தது. சுழன்றடித்த குரு வளி, கரை யோரமணலை அப்படியே வாரிக்கொட்டியது.
குடிசைகளை இழந்து, வெள்ளத்துள் அமிழ்ந்து, எப் படியோ மேட்டுப்பாகங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களை குருவளி அள்ளி வீசிய மணல் மூடிவிட முயன்றது.
"ஐயோ கடவுளே." என்று கதறியபடி கரையோர மக்கள் கொட்டும் மழையில், சூறைக்காற்றின் ஊடே, பொங்கிய கடல் துரத்த ஒடிஞர்கள். காலிடறி விழுந்தவர் களை குறைக்காற்று அள்ளி வந்த மணல் கணப்பொழுதில் மூடியது. மணல் மூடிய சிறுவர்களைக் கதறியபடி தாய்மார் கள் கிளறிக் காப்பாற்ற முயன்றனர். பெரியவர்களுடன் ஒடிய சிறுவர்களைக் காற்று அப்படியே தூக்கிச் சென்று, பற்றைகளுக்குள்ளும், ம ரங் களுடனும் மோதவிட்டது. அவர்கள் கதறிய மரண ஒலம் காற்றின் உறுமலில் எவருக் கும் கேட்கவில்லை
பொங்கிய கடல் பலரை அப்படியே தன்னுடன் அள் ளிச் சென்றது.
மரணபயம். மரணஒலம் கொடூரம். இயற்கையின் பயங்கரக் கொலை,
கடலோடு அள்ளுண்டு .
வாகரையிலிருந்து திருக்கோயில் வரை கிழக்கு மாக ணத்தின் கிழக்குக் கரையோரத்தில் கடலோடு அள்ளுண்டு போனவர்கள் நூற்றுக்கணக்கானவர்களாவர். குரு வளி யின் மையப்பகுதி கரையை நெருங்க நெருங்க கடல் 20 அடியிலிருந்து 40 அடிகள் வரையில் பொங்கும். கல்குடா கடலில் அத்தகைய பொங்குதல் ஏற்பட்டது.
காற்று வீசத்தொடங்கவே கல்குடாவில் அக்குடும்பம் தங்கள் சிறிய வீட்டிற்குள் ஒடுங்கிவிட்டது. கரையோரத்தி

12 மணி நேரம் 53.
லிருந்து 400 யார்களுக்கு அப்பால் அவர்களின் வீடு இருந் தது. ஒலைக்கூரை பலமான மண் சுவர் வீடு. நான்கு பிள்ளை களும் கணவன் மனைவியும் அவ்வீட்டில் வாழ்ந்தனர். சுழன் றடித்த குறை அவர்களின் வீட்டுக் கூரையை முதலில் காவிச் சென்றது. சற்றுத்தூரத்தில் கடல் பொங்கி ஆரவா ரிப்பது தெரிந்தது. கும்மென்ற இருள். விளக்கு களைக் கொளுத்துவதற்குக் காற்று விடுமா?
அக்குடும்பத் தலைவனையும் தாயையும் நான்கு குழந் தைகளும் பயத்துடன் கட்டிக் கொண்டு கதறின. கூரை இழந்த வீடு. சோளுவாரியாக மழை கொட்டியது. காற் றில் காவிச் செல்லப்பட்ட மரக்கிளையொன்று கூரை யிழந்த வீட்டிற்குள் வேகமாக வந்து விழுந்தது. மண் சுவர்கள் மழையில் கரைந்து காற்றின் வேகத்தில் ஆடத் தொடங்கின. அத்துடன் ஒருபக்கச் சுவர் சரிந்தும் விழுந் தது. வீட்டிற்குள் இருப்பது பாதுகாப்பில்லை என்பதனை உணர்ந்த அவர்கள் வெளியில் ஒடத் தொடங்கினர்.
காற்றின் கொடிய வேகம் அவர்களை அப்படியே அள் ளிக்கொண்டு போய்விடும் போல இருந்தது. குழந்தைக ளின் கரங்களை அவ்விருளில் பலமாகப் பற்றுயபடி அவர் கள் மேட்டுப்பக்கமாக ஓடினர். தென்னை மரம் ஒன்று அவர் கள் முன் சரிந்து விழுந்தது. அதேவேளை கல்குடாக் கடல் தன் பொங்கிய அலைகளுடன் அவர்களை நோக்கி விரைந்து வருவது தெரிந்தது
குழந்தைகளை இழுத்தபடி அவர்கள் ஓடினர். மணலில் ஓடமுடியவில்லை. பயங்கர வேதத்துடன் கடல் துரத்தி வந்தது. "ஓ" என்று அலறியபடி தாய், அருகில் இருந்த பனை மரம் ஒன்றினை இறுகக் கட்டிக்கொண்டாள். அவள் பின்னுல் இழுபட்டு வந்த சிறுவர்கள், கணவன் ஆகிய ஐவ ரும் தென்னை மர உயரத்திற்கு பொங்கி வந்து சரிந்த கட லலைக்குள் மாட்டிக்கொண்டனர். கடலலை சம்மாட்டியாக அவர்கள்மேல் மோதியது பனைமரத்தை இறுகக் கட்டிக் கொண்ட அப்பெண்ணின் கரங்களைப் பிய்த் து எடுத்து விடுவதுபோலத் தாக்கியது.

Page 29
S; 12 மணி நேரம்
"ஆ" என்ற மரண ஒலம். வேகமாக வந்த கடல் திரும்பி யது. கூடவே ஐந்து உயிர்களையும் உடலோடு உருட்டி அள்ளிக்கொண்டு திரும்பியது, அப்பெண் மட்டுந்தான் அக்குடும்பத்தில் தப்பமுடிந்தது
*?.நானேன் வாழவேண்டும்.? நானேன் வாழவேண் டும்?. என்னை மட்டும் இந்தக் கடல் ஏன் வி ட் டு ட் டு ப் போச்சுது?."
இப்படிப் பல துயரச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத் தின் கடற்கரையோரப் பகுதிகளில் நிகழ்ந்தன. தப்பி ஒட முயன்றவர்களில் பலரைக் கடல் அள்ளிக்கொண்டு சென்றது, வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தவர்களை அப் படியே குடிசைகளுடன் அள்ளிக்கொண்டு கடல் சென்றிருக் கின்றது. காற்றின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டவர்க ளைக் கடலலைகள் வாரி எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஆறக்கூடிய மனத்துயரா, இது?
என் காலே வெட்டிக்.
உள்ளத்தைப் பதைக்க வைக்கும் இன்னெரு சம்பவம் கல்லடி உப்போடையில் நடந்தது. எக்சைஸ் காட் ஒரு வர் கடலினல்அள்ளிச் செல்லப்பட்ட துயர நிகழ்ச்சி அது. ஒரு சிறிய கல்வீட்டில் அவரும் வேறு நான்கு ந்ண்பர்க ளும் ஒன்ருக இருந்தனர். காற்றுப் பலமாக வீசியது. அவர் வீட்டு ஓடுகள் இலைச் சருகுகளாகக் காற்றில் பறந்து சென்றன. அவர்கள் தம்மீது கூரையிலிருந்து ஒடுக ள் விழாத மாதிரி இடம் மாறி மாறி நின்றுகொண்டனர்; கதவு நிலையின் கீழ் நின்று தம்மைப் பாதுகாக்க முயன்ற னர். மழை நீர் திறந்த சுரையூடாகப் பொழிந்தது.
காற்று. சுழல் காற்று கூரை விட்டத்தைத் தூக்கித் தூக்கி வைத்தபடி சுழன்றடித்தது. பேய்மழை பொழிந் தது. இவை போதாதென்று 600 யார்களுக்கு அப்பால் இவ்வளவு காலமும் மிக மிக அ  ைம தி யாக இரு ந் த

iż mbieraħ நேரம் 55
கடல் பொங்கிப் பிரவாகித்து அவல ஒலி எழுப்பிய சத்தம் மிகப் பயங்கரமாக காற்றின் ஊதலை மீறிக்கேட்டது:
அவர்கள் வெளியில் பார்த்தபோது பயங்கர கும்மிருட் டின் இடையேயும், நுரைத்து மேலெழும் கடலின் அலைக் கரங்கள் தெரிந்தன. இவ்வளவு உயரத் தி ற் கு கடலலை பொங்கி எழுந்ததை அவர்கள் எப்போதும் கண்டதில்லை: தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தை அவர் கள் உணர் ந் து கொண்டார்கள். எப்படியாவது அவ்வீட்டைவிட்டு வெளி யேறி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தபோது, துடன், அவர்கள் நின்றிருந்த பெரிய சுவர் படீரெனச் சரிந்தது. காற்றின் உந்தல் அமுக்கத்தால் அச்சுவர் சரிந் தது. நால்வர் விலகி ஓடிவிட, எக்சைஸ் காட் மட்டும் சுவ ரின் இடிபாட்டிற்குள் அகப்பட்டுக்கொண்டார். முழுமை யாக அகப்பட்டிருந்தால் மரணபயம் இருந்திருக்காது அவரின் வலதுகால் மட்டும் முழங்காலிற்குக்கீழ் சுவரின் பெரும் பர்ரத்தினுள் அகப்பட்டுக்கொண்டது
நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒடி வந்தார்கள்: மின்னல் வெட்டியது.
தூரத்தில் அலையெறிந்த கடல் அவர் களை நோக்கி நெருங்கி வருவது தெரிந்தது.
"காப்பாற்றுங்கள். எ ன் னைக் காப்பாற்றுங்கள். ஓ மை கோட் என்னைக் காப்பாற்றுங்கள்." -சுவரின் இடிபாட்டிற்குள் அகப்பட்டவர் மரண பயத்தில் கதறி ஞர்.
"என்னைக் காப்பாற்றுங்கள். என் காலை வெட்டியா வது என்னைக் காப்பாற்றுங்கள் . என் குழந்தைகளுக் காக என்னைக் காப்பாற்றுங்கள்.'"
மற்றவர்கள் அங்கு நிற்கமுடியாத அளவிற்கு கடல் பொங்கியபடி நெருங்கி வந்தது. அவர்கள் மேற்குப்பக்க மாகப் பாய்ந்தோடினர்கள். கடல்தன் பொங்கிய அலை கரங்களை இரக்கமின்றி அவ்வீட்டின்மீது படியவிட்டது.
5-ம. நே.

Page 30
56 12 மணி நேரம்
நண்பர்கள் திரும்பி வந்தபோது அந்த வீடுமில்லை. காலை வெட்டியாவது காப்பாற்றும்படி வேண்டிய நண் பரும் இல்லை. அவரை இரக்கமின்றி விழுங்கி ஏப்பம்விட்ட கடல் அரக்கன், மீண்டும் குமுறி ஆர்ப்பரித்தபடி அவர்களை நோக்கி வந்தான். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற மரணபயத்துடன் ஓடினர்.
**. எங்கள் வீடுகளுக்குக் கடற்கரைப் பக்கமாக இருக் கும் குடியேற்றப் பகுதி மக்கள் சாரி சாரியாக தட்டுத்தடு மாறி ஓடிவந்துகொண்டிருந்தனர். சங்கதி என்னவென்று கேட்டோம். கடல் பொங்கி வருவதாக அவர்கள் நடை யிலேயே தகவல் தந்து ஓடினர். கடவுளே இது என்ன சோதனை? காற்றும் மழையும் பதம் பார்த்தது காணுது என்று கடலும் ருசிபார்க்கப் போகிறதா?
நாமும் மேட்டுப்பக்கமாக ஓடினுேம், வீதியின் குறுக்கே மரங்கள் முறிந்து கிடந்தன. முறிந்து கிடந்த மரங்களின் கிளைகளினூடாக வழி எடுத்து நுழைந்து குனிந்து நிமிர்ந்து பிரதான வீதிக்கு வந்தோம்;
மக்களில் ஒரு கூட்டம் கல்லடிப் பாலத்தைக் கடந்து பட்டினத்துக்கும், இன்னெரு கூட்டம் கல்முனைத் திசை யிலும் விரைந்து கொண்டிருந்தது. நாம் ஒரு கூட்டத் துடன் கல்லடிப் பிள்ளையார் கோயிலில் சென்று தஞ்சம் புகுந்தோம். அக்கோயிலின் முன் மண்டபங்கள் இரண்டி லும் கண்ணுடித் துண்டுகளும். ஒடுகளும் சிதறிக் கிடந்தன; மழைநீராலும் அவை தோய்ந்து இருந்தன கூரை சிதை யாத பக்கங்களைப் பார்த்து மக்கள் ஒதுங்கி நின்றுகொண் டிருந்தனர். அப்போது பார்த்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.18
தற்காலிக அமைதி
நவம்பர் 23 ஆம் திகதி, சரியாக மாலை 6, 20 மணிக்
குக் கிழக்குக் கரையில் பிரவேசித்த குரு வளி, இரவு 10
மணி வரை வெறியாட்டம் நிகழ்த்தியது; அதன் மு ன்

12 மணி நேரம் 57 பக்க வெளிவளையமும் சுழிப்பு வலயமும் முதற் கட்ட சேதாரங்களையும் உயிர்ப்பலிகளையும் எடுத்து ஓய்ந்தன: முதற் கட்டத்தில் வீசிய சூரு வளி, தென்மேற்கு நோக்கி வீசியது. இரண்டாம் கட்டத்தில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலைவரைவீசிய குருவளி வடகிழக்கு நோக்கி வீசியது. இது ஏன் என்பது படம். 7ஐ அவதானித்தால் புரியும் குரு வளி, வலம் இடமாக, கடிகார முள்ளின் எதிர்திசை யில் சுழலும்போது முதல் கட்டத்தில் ஒரு தி சையும், இரண்டாம் கட்டத்தில் மறுதிசையும் நிலவும். • " . கொஞ்சநேரத்தில் அதே பேய்க்காற்று அடிக்கத் தொடங்கியது. முன்பு தெற்கு நோக்கி வீசிய காற்று, இப்போது வடக்கு நோக்கி வீசத்தொடங்கியது." 19
இரவு 10 மணியிலிருத்து நள்ளிரவு 12 மணி வரை கிழக்கு மாகாணத்தில் பயங்கர அமைதி நிலவியது. மூர்க் கத்தனமாக வீசிய காற்று எங்கு சென்றது என்று தெரி யாத விதத்தில் அப்படியொரு அ  ைம் தி. குரு வளியின் மையப்பகுதியான கண் பகுதி கிழக்கு மாகாணத்தில் பிர வேசித்ததாலேயே இத்தகைய அமைதி நிலவியது.
முதல் தாக்குதலில் தான் ஏற்படுத்திவிட்ட கொடு ரத்தை அந்த ஒற்றைக்கண் அரக்கன், பெருமிதத்துடன் பார்த்தான். சிறிய அளவிலாவது தன் காற்றுக்கரங்களை அசைக்காமல் பார்த்தான். விழுந்து கிடந்த மரங்கள், முறிந்து கிடந்த தென்னைகள், கூரையற்ற கல்வீடுகள், இருந்த சுவடே தெரியாமல் அள்ளுண்டு போன குடிசை கள், திக்குக்கு ஒன்ருக வீசியெறியப்பட்ட தகரங்களும் அஸ்பெஸ்டஸ் சீற்றுகளும், வீதிகள் எங்கும் சிதறிக் கிடந்த கூரை ஒடுகள், மரங்களில் ஒரு பசுமையும் எஞ்சவிடாமல் உருவிவிடப்பட்ட வெற்றுக் கிளைகள், சமுத்திரங்களாக மாறிவிட்ட வயல் வெளிகள், எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளை இழ ந் து, கணவனை இழந்து, மனைவியை இழந்து கதறித்துடிக்கும் ம க் கள். தம் சொத்துக்களை இழந்து பரத விக்கும் மக்கள்.ஒதுங்க இடமின்றி வெள் ளத்தில் வானத்தைப் பார்த்தபடி நிற்கும் மக்கள் .

Page 31
58 12 uossoft நேரம்
எல்லாவற்றையும் அந்த ஒற்றைக்கண் அரக் கன் பார்த்தான். முதல் தாக்குதலில் அழிவுருத கட்டிடங்களை யும், சரிக்கப்படாத மரங்களையும் பார்த்தான். மனம் திருப் திப்படவில்லை. அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாக இரண்டு மணிநேரம் இளைப்பாறத் தொடங்கினன்.
பயங்கரமான, மூர்க்கமான அமைதி. **. மக்கள் சிாது தயங்கியபடியே வீடுகளை விட்டு வெளியே வந்து, வீதிகளில் விழுந்து கிடந்த தத்தமது வீட் டுக்கூரைத் தகடுகளையும், உடையாத ஒடுகளையும் சேகரிக் கத் தலைப்பட்டனர். நகரம் இருளில் மூழ்கிக்கிடந்தமை யால் டோர்ச் லைட்டுகளுடன் மக்கள் வீதிகளில் சிறிது நட மாடத் தொடங்கினர். அதேவேளை கைக்குழந்தைகளுட னும், பிள்ளைகளுடனும் கூக்குரலிட்டபடி மக்கள் குடும்பம் குடும்பமாக ஆலயங்களையும் பாடசாலைக் கட்டிடங்களையும் நோக்கி, கதறியவண்ணம் ஒடிக்கொண்டிருந்தனர். வீடுக ளின் உள்ளே இருந்தவர்கள் மழைநீரில் நனைந்துபோன பொருட்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். அநேகமாக இரவு 10 மணிக்கிடையில் ஒவ்வொரு வீட்டி லும் மழை நீர் புகுந்து விட்டது." 20
கடுங்காற்றிற்கும் மழைக்கும் பின்னர் நிலவிய அமைதி கிழக்குமாகாண மக்களை துயரத்திடையேயும் சிறிதளவு நிம்மதிகொள்ள வைத்தது, "பயங்கரச் சூழுவளி முடிந்து விட்டது. கூரை ஒடுகளையும், குடிசைகளையும் தகர்த்த துடன், மரங்கள் பலவற்றை விழுத்திச் சரித்ததுடன் வெறி கொண்ட சூரு வளியின் அழிவு முடிந்துவிட்டது" என மக் கள் எண்ணினர். இந்த அளவிலாவது தப்பினேமே என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறந்தது.
குடிசைகளை இழந்து வெள்ளநீரில் அமிழ்ந்திக் கிடந்த மக்கள், புகலிடம் தேடி கல்கட்டிடங்களை நாடி வந்துசேர்ந் தனர். வெளியேறி அடைக்கலம் புக வசதியற்றவர்கள் அக்குளிரில் விறைத்தபடி வானத்தைப் பார்த்தபடி நின் றிருந்தனர். பொதுவாகப் பாடசாலைகள், கோயில்கள், அரசாங்கக் கந்தோர்கள் என்பனவற்றில் எதெது அருகில் இருந்ததோ அங்கெல்லாம் பலர் ஒதுங்கிக் கிடந்தனர்.

12 மணி நேரம் 59
வீதிகளிலும் வெளிகளிலும் காற்றினல் எடுத்துச் சித றிச் சிந்தப்பட்ட தகரங்களைப் பொறுக்குவதில் பலர் ஈடு பட்டிருந்தனர். தங்களுக்குச் சொந்தமில்லாத பொருட் கள் என்று தெரிந்தும் பலர் அவற்றைப் பொறுக்கிச் சென்றனர். செங்கலடியில், காரைதீவில், கல்முனையில், கழுவாஞ்சிக்குடியில் அரிசி மில்களின் கூரைத் தகரங்களும், தியேட்டர்களின் கூரைத் தகரங்களும் வீதியெங்கும், வெளி யெங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பொறுக்கிச் செல் வதில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
பறந்து சென்ற தகரங்கள் அஸ்பெஸ்டஸ் சீற்றுகள் என்பன உயரமான மரக்கொப்புகளிலும் தொங்கிக்கொண் டிருந்தன. வயல்கள், பனைவட்டுக்கள், தென்னம் வட்டுக் கள் உயர்ந்த மரங்கள் என்பனவற்றின் கிள்ைகளில் சூரு வளியின் வேகத்தில் அள்ளுண்ட தகரங்கள் தொங்கிக் கிடந்தன:
'இனிச் சூரு வளி வராது என்று நம்பிய புன%ன மக் கள் பலர், தங்குவதற்கு அருகில் கட்டிடங்கள் இல்லா மையின்ல், வெளியில் நெருப்பு மூட்டி அதனை ச் சுற்றி இருந்துகொண்டார்கள்.
சில கல்வீடுகளில் ஒரு சில ஒடுகளே காற்றினுல் அள் ளிச் செல்லப்பட்டிருந்தன. அதனுல் சில துணிச்சல்காரர் கள் கூரையில் ஏறி, விலகிய ஒடுகளை அவ்விரவில் போட்டு மழையிலிருந்து தப்ப விரும்பிக் காரியங்களில் இறங்கி யிருந்தனர்.
மட்டக்களப்பு கச்சேரியில் எழுது வினைஞராக வேலை செய்யும் திரு. சி. சத்தியானந்தராசா குழு வளியின் முதல் கட்டத் தாக்குதலின்போது, விலகிய கூரை ஒ டு களை, அமைதியின்போது ஒருவிதமாக ஏறிச் செப்பமாக்கினர். மழையும் காற்றும் சுழன்றடித்தபோது அவரும் இன்னும் சிலரும் வீட்டில் இருந்தனர். கா ற் றி ன் தாக்கத்தால் அவர் வீட்டுக் கூரையின் ஒடு ஒன்று விலகிவிட்டது. அத ஒல் நிலத்தில் ஒழுகிய நீரை வாளியொன்றினை வைத்து

Page 32
60 12 மணி நேரம்
ஏந்தினர்கள் ஒன்று இரண்டு மூன்றெனப் பல ஒடுகள் வில கின. உள்ளே கொட்டிய மழையை ஏந்த ஏ க ன ங் கள் இருக்கவில்லை. ஊ. ஊ. என்று அலறியபடி வீசிய காற்று, அவர் வீட்டின் ஒருபக்கக் கூரை ஒடுகளை அப்படியே சருகு களாகக் கிளப்பிக்கொண்டு சென்றது. அவர் கள் கீழே சொரிந்த மழை நீருக்கு அஞ்சி, ஒடுசள் பறக்காத மறுபக் கத்திற்கு ஓடினர்கள். அங்கும் சில ஓடுகள் பறந்திருந் தன. முன்பக்க ஓடுகள் விழுந்ததனலும் சில ஒடுகள் உடைந்திருந்தன.
நான்கு மணித்தியாலப் பேயாட்டத்தின் பின்னர் சூரு வளி ஒய்ந்தது. அந்த இடைக்கால அமைதியில், அவர் கள் விலகிய ஒடுகளைச் செப்பமாக்கிக்கொண்டனர். அவர் களின் செயலைப் பார்த்து ஒற்றைக் கண்ணன் கெக்கலி கொட்டிச் சிரித்தான். மறுதடவை உக்கிரமாக வீ சி ய போது, முழுக்கூரையையும் அப்படியே கர்விச் சென்று விட்டான்.
இரண்டு மணி நேரம் நிலவிய அமைதி கு லை யத் தொடங்கியது.
பயந்து திகைத்திருந்த குழந்தைகள் அடைக்கலம் புகுந்த கட்டிடங்களின் நனையாத மூலைகளிலும் நனைந்த மூலைகளிலும் தம்மை மறந்து துர நீ க த் தொடங்கின. நான்கு மணிநேரம் பேயின் அலைக்கழிப்பால் ப ய ந் து வெருண்டிருந்த மக்களும் கு விரி ரி லும் வெள்ளத்திலும் தம்மை அறியாமல் கண்ணயரத் தொடங்கினர்.
கடலும் வெள்ளமும் காற்றும் கொள்ளை கொண்டது காணுது என்று, இப்போது உடல்களில் குளிரும் ஏறத் தொடங்கியது. பற்கள் கிடுகிடுக்கப் பலர் முடங்கிக் கிடந் தனர். குளிரில் உடல் நடுங்கியது.
குளிரில் விறைத்து இறந்தவர்கள் ஐம்பதுக்கும் மேலி ருக்கும்,

12 மணி நேரம் 61
உக்கிரமான தாக்குதல்
"...நள்ளிரவு குரு வளியின் இரண்டாவது தாக்கு தல் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குழு வளி சுமார் 125 ம்ைல்கள் வேகத்தில் வீசத் தொடங்கியது. மழையும் சூருவளியும் கோரத் தாண் டவமாடின. மரங்கள் சரிந்து விழுந்தன; வீடுகளின் மேலும் வீதிகளுக்குக் குறுக்கேயும் தடார் தடார் என விழுந்தன. மின்சாரக் கம்பங்கள் சரிந்து விழுந்தன. வீடுகளின் கூரை களும் தகரங்களும் ஒடுகளும் கடதாசிகள் பறப்பதுபோல பறந்து சென்றன. சிறிய வீடுகள் முற்ருக இடிந்து விழுந் தன. மேல்மாடி வீட்டுக் கட்டிடங்களின் கூரைகள் தூக்கி அப்படியே அப்பால் வீசப்பட்டன. வார்த்தைகளினல் வர் ணிக்க முடியாத பேரழிவும் பெருஞ் சே த மும் ஏற்பட் LGOT...”, ”” 2 1
இரண்டாம் தடவை வீசிய குரு வளி கிழக்கு மாகா ணத்தில் மிகப்பயங்கரம்ான தாக்கங்களை ஏற்படுத்தியது. சூருவளியின் பின்பாதிச் சுழிப்பு வலயம் கிழக்கு மாகா ணத்திற்குள் பிரவேசித்ததும் சே த ங் கள் மலைபோலே நிகழ்ந்தன. முதலில் ஒரு திசையில் வீசி மரங்களையும் கட் டிடங்களையும் நிலைகுலையவும் தளரவும் வைத்திருந்த குரு வளி, இரண்டாம் கட்டத்தில் எதிர்த்திசையில் வீசியதால், கட்டிடங்களும் மரங்களும் படபடவெனச் சரிந்தன.
இரண்டாம் கட்டத்தில்தான் கட்டிடங்கள் தகர்ந்து விழத் தொடங்கின. பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் சுவர் இடிந்து விழுந்தன. பாடசாலைக் கட்டிடங்கள், காற் றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அப்படியே நிலத்துடன் அமுக்கப்பட்டு தரைமட்டமாகிப் போயின. தியேட்டர்கள் முதலில் கூரை இழந்திருந்தவை, ஒருபக்க மாகச் சரிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான அரிசி ஆலை கள் அப்படியே சரிந்து விழுந்தன. புதிதாகக் கட்டிய அரிசி ஆலைகள் கூட ஒரு பக்கச் சுவர் தானும் எஞ்சாத விதமா கத் தகர்ந்துபோயின, கோயில்களின் மண்டபங்கள் யாவும்

Page 33
62 12 மணி நேரம்
விழுந்து நொருங்கின. இவ்வாறு கட்டிட இடிபாடுகளுக் குள் அகப்பட்டு ஏராளமானேர் துடித்துத் துடித்து செத் தனர்.
'. வீட்டுக்கூரைகளை இழந்த மக்கள் கொங்கிறீற் கூரைகள் போடப்பட்ட குளியல் அறைகளிலும் மலசல கூடங்களிலும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறு பயங்கர இரவைக் கழித்தனர்."22
செங்கலடியைச் சேர்ந்த வர்த்தகர் திரு. க. மகேந் திரன் சூரு வளியின்போது தன் மனைவியுடனும் இரு குழந் தைகளுடனும் தங்கள் அடுப்புப் புகட்டிற்குக் கீழ் பதுங்கி யிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நேர்ந்தது. சூருவளியின் தாக்குதலிற்கு அவருடைய வீட்டு அஸ்பெஸ் டஸ் சீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சீற்றுகளைப் படபடவெனக் கழற்றியும் பிய்த்தும் வீசிய குரு வளி, அவர் வீட்டுக்கூரையின் குறுக்கு மரங்களையும் அசைத்து விழுத்திவிட்டது. அதனுல் மழைக்கும் கீழே விழும் பொருட் களிலிருந்தும் தப்புவதற்காக அவர்கள், சிம் னி க் குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள் ள நேர்ந்தது. விடியும் மட்டும் அவர்கள் அதற்குள் ஒதுங்கிக் கிடந்திருக் கின்ருர்கள்.
இப்படி எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்கள், கொங்கிறீற் போட்ட பிளாற்றுகளின் கீழ் ஒழித்திருந்து தங் களைக் காப்பாற்றிக் கொண்டன.
அமைச்சரின் வீட்டுக்கூரையும் தப்பவில்லை
நீதி அமைச்சர் திரு. கே. டபிள்யு. தேவநாயகம் அவர் களின் வீடும் சூரு வளி அரக்கனின் கண்ணிலிருந்து தப்ப வில்லை. சுழன்றடித்த குழு வளியின் கரங்கள். திரு. தேவ நாயகம் அவர்களின் வீட்டுக்கூரை ஒடுகளைச் சருகுகளா கத் தூக்கி, சுற்ருடலில் வீசிவிட்டன. அவர் வீட்டுச் சுற் ருடலில் நின்றிருந்த மரங்களும் முறிந்து விழுந்தன. வீட் டின் முன்னிருந்த அழகான பூந்தோட்டம் கணப்பொழு தில் நாசமாகியது; அவர் வீடு செங்கலடி வீதியில் இரு க்

i 2 up60offi (prið 63
கின்றது. வீதிக்கு அருகில் கட்டப்பட்டிருந்த ம தி ல், காற் றின் வேகத்தில் அப்படியே பாறிச் சரிந்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் குருவளி யின் கோரத்தாண்டவம் படிப்படியாகக் குறை ந் த து. அதற்குள் அது ஏற்படுத்திவிட்ட சேதங்கள் எத் த னை? பலிகொண்ட உயிர்கள் எத்தனை?
புயல் ஓய்ந்தது. ஆன ல் அது ஏற்படுத்திவிட்ட துயர் இன்னமும் 100 ஆண்டுகளுக்கு ஒயப்போவதில்லை.
யுத்தகளம்
யுத்தம் ஒய்ந்துவிட்டது. இயற்கை அ ன் னை வெறி பிடித்து ஆடிய ஊழிக்கூத்து முடிந்துவிட்டது. ஆனல் . யுத்தகளத்தின் காட்சி? நெஞ்சத்தை நடுங்க வைக்கும் காட்சிகள்!
".வீதிகள் எல்லாம் மரங்களினல் மூடப்பட்டிருந் தன அடுத்த வீதியில் இரு ந் த பஸ் தரிப்புக் கட்டிடம் முற்ருக இடிந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஒருவர் முழுமையாகச் சிக்குண்டு, அவரது கைமட்டும் வெளியில் துடித்துக் கொண்டிருந்தது. மக்க ள் அவரை வெளியில் எடுக்கப்போராடிக் கொண்டிருந்தனர். மட்டுநகரில் பஜார் வீதி, மெயின் வீதி, பஸ்நிலைய வீதி எங்கும் காணப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் இடிந்தும் தகர்ந்தும் காணப்பட் டன. வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் யாவும் வீதிகளில் நிறைய வீசுண்டு கிடந்தன, கோட்டை முனைப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தினல் சேதமடைந்திருந் தது. பொலிஸ் நிலையக் கட்டிடத்தின் மீது, ஒரு பெரிய ம்ரம் விழுந்து கட்டிடம் நொருங்கிக் கிடந்தது. புளியந் தீவு, அந்தோனியார் ஆலயத்தில் ஒரு குழந்தை குளிரினல் விறைத்து இறந்துவிட்டதினுல், குழந்தையின் தாய்அவலக் குரலில் அழுது கொண்டிருந்தாள். பாதிக்கப்பட்ட மக்கள் முற்றும் நனைந்தவர்களாக, கையில் அகப்பட்ட பொருட்க ளுடன், ஏராளமானேர் காயங்களுடன் இரத்தம் சொட் டிச் சொட்டி. வீதிகள் வழியாக மரங்களையும் மின்சாரக்

Page 34
64 12 மணி நேரம்
கம்பங்களையும் கடந்து அழுது கொண்டே கூட்டங் கூட்ட ம்ாக வந்து கொண்டிருந்தார்கள், மனதை உருக்கும் காட் சியாக அது அமைந்திருந்தது. மட்டக்களப்பு நகரம் ஒரு யுத்தத்தில் சிக்கி விமானக்குண்டு வீச்சிற்கு இலக்காகிய நகரம்போல இடிபாடுகளுடன் காணப்பட்டது. ந க ரி ல் ஒரு கட்டிடமாவது உருப்படியாகக் காணப்படவில்லை ஒரு வீதியிலாவது மக்கள் நடந்து செல்ல முடியவில்லை, ஒருவ ரைத் தேடி ஒருவரும், ஒரு உறவினரைத் தேடி மற்றெரு வரும் கண்ணிரும் கம்பலையுமாக அங்குமிங்கும் கதறி அழுத வண்ணம் ஒடிக்கொண்டிருந்தனர்." 29
குழந்தைகளைத் தேடி .
காத்தான்குடிக்கும் களுவாஞ் சிக் குடிக்குமிடையில் கடற்கரையோரமாக அமைந்த ஒரு கிராமம் தாழங்குடா. மட்டக்களப்புநகரிலிருந்துஏறத்தாழ 10மைல்கள் தெற்கே இக்கிராமம் அமைந்திருக்கிறது. சூ ற வளி அரக்கனின் கொடுரமான பார்வைக்கு இக்கிராமம் உட்பட்டது. ஏறக் குறைய 500 குடும்பங்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் இன்று எந்த ஒரு வீடாவது மிச்சமில்லை. வீசிய சுழ ல் காற்றிற் கும், பொங் கி க் கரைமேவிப்பாய்ந்த கடலலைக்கும் அக் கிராம் வீடுகள் யாவும் பலியாகிவிட்டன, காற்று வீடுகளை முறித்து எறிய, பொங்கிய கடல் தன்னுள் விழுங்கி ஏப் பம் விட்டது:
தென்னந்தோட்டங்கள் அழகு செய்ய எழிலோடு விளங்கிய அக்கிராமத்தில் இன்று ஒரு மரங்கூட இல்லை. தென்னைகள் யாவும் அடியோடு முறிந்து தரையில் கிடக் கின்றன. தி ரு கி முறுக்க ப் பட்ட தென்னைகள்.வட்டு முறிந்த தென்னைகள்.நடுவால் தெறித்த தென்னகள். அப்படியே தூக்கி டல அடிகள் முன்னுல் வீசப்பட்ட தென் னைகள். மரங்கள் யாவும் அழிந்து பாலைவனமாகத் தாழங் குடா காட்சி தருகின்றது.
"இக்கிராமத்தில் சூறவளிக்கு 18 பேர் பலியாகினர்

12 மணி நேரம் 65
"இங்கு அம்ைதியாக வாழ்ந்து வந்த திரு. கருணு மூர்த்தி என்பவரின் வாழ்வில் நிகழ்ந்த சோகச் சம்பவம் மறக்கக்கூடியதல்ல. ஒரேநேரத்தில் அத்தொழிலாளி தன் குடும்பத்தில் மூவரைச் சூரு வளிக்குப் பலிகொடுத்துவிட் டுப் பரதவித்து நிற்கிருர், சூரு வளி வீசிய இரவு, சுழன்ற டித்த காற்றும், பேய்மழையும் அவர் கள் குடிசையைத் தாக்கியது. வெளியில் கும்மிருட்டு. அவர்கள் பயத்துடன் குடிசைக்குள் பதுங்கிக் கொண்டனர் அ வரும் அவர் மனைவியும் எட்டுக்குழந்தைகளும் பயத்தால் நடுங்கினர். அவருடைய மூத்த ம க ள் புவனேஸ்வரி தன் தம்பிமா ரைக் கட்டிக்கொண்டாள். 19 வயது அக்காவின் அணைப் பில் குழந்தைகள் பயத்தால் கதறின.
"தடிவரிந்து மண் அப்பிய குடிசைச் சுவர் மழையில் கரைந்தது. கூரை காற்றுக்கு ஈ டு கொடுக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு சென்றது. அதேவேளை கடல் பொங்கி வருவது தெரிந்தது பனைமர உயரத்திற்குத் தன் அரக்கக் கரங்களை ஆவேசமாக உயர்த்தியபடி கடல் வந்தது. அதே வேளை அருகில் நின்ற தென்னை மரம் ஒன்று அவர்களின் வீட்டின் மீது பயங்கரமாகச் சரிந்தது. அக்குடும்பத்திலி ருந்த பத்துப்பேரும் என்ன நடக்கின்றது, என்ன செய்கி ருேம் என்ற உணர்வில்லாமல் திக்குக்கு ஒருவராக அலறி யபடி அக்கொடிய இருளில் வெளியில் பாய்ந்து ஓடினர் கள் காற்று அவர்களில் இருவரைத் தூக்கி வீசிவிட்டது. வெள்ளத்துள் அவர்கள் திக்குக்கு ஒருவராகப் பயத்துடன் கதறியபடி ஓடினர் சுழன்றடித்த கரற்று அவர்கள் கட்டி யிருந்த உடைகளையும் பிய்த்து எடுத்தது. தும்பு தும்பாக ஆடைகளை அது வெறியுடன் கிழித்தது. பயம். ஏக்கம். வெருட்சி, அவர்கள் ஒடி எங்கெங்கோ ஒதுங்கிக் கொண் டார்கள்.
'மூத்த மகள் புவனேஸ்வரி கிலிபிடித்து ஓடினள். பெரியதொரு ம்ரம் அவள் பாதையில் சரிந்தது. அவள் தடுக்கி விழுந்தாள். அவளை மேவி வெள்ளம் பாய்ந்தது. சுாற்றினல் 8 வயதுக் குழந்தையொன்றும் 4 வயதுக் குழந் தையொன்றும் காவிச் செல்லப்பட்டு மர ங் க ளு - ன்

Page 35
66 12 மணி நேரம்
மோதப்பட்டன. மூத்தமகன் ஒருவனின் சாரத்துண்டைக் காற்று பறித்துக்கொண்டு சென்றுவிட்டு கெக் கலி கொட் டிச் சிரித்து உறுமியது.
'நெல்லிக்காய்களாக அக்குடும்பம் சிதறியது. புயல் ஒய்ந்ததன் பின்னர் கருணுமூர்த்திக்குப் பேரிடிகள் காத் திருந்தன.
"புவனேஸ்வரியின் உயிரற்ற உடலை, காற்றுக்குச் சரிந்த பெரியதொரு மரத்தின் இராட்சத வேர்களுக் கிடையில் கண்டனர், வெகுதூரம் தேடிய பின்னர் மற்ற இரு குழந்தைகளின் உயிரற்ற உடல் கள் அகப்பட் L6GT. ''24
கடிலின் பசி
தாழங்குடாவில் இன்னெரு துயரச் சம்பவமும் நிகழ்ந் தது. சூரு வளியும் கடலும் விண்ணிற்கும் ம ன் னி ற் கு மிடையில் ஒன்ருக இணைந்து கரைமேவியபோது திரு வேலாயுதம் என்பவரின் குடிசை சரிந்தது. அவரும் அவர் மனைவியும் நான்கு குழந்தைகளும் பயத்துடன் வெளியில் ஒடித் தப்ப முயன்ருர்கள். படார் படார் எனச் சரிந்து விழுந்துகொண்டிருந்த மரங்களுக்குத் த ப் பி அவர்கள் ஒடியபோது, பெற்றேரின் கரங்களிலிருந்து மூன்று சிறுவர் கள் பறிக்கப்பட்டனர், சுழல்காற்றினல், தாயின் அணைப் பிலிருந்து இரண் டு வயது இராஜேஸ்வரியும் காற்றினல் பறிக்கப்பட்டது. கணப்பொழுதுதான். பொங்கிய கடலுள் அலைக்கரங்களுக்குள் அவர்கள் மூ வரும் அகப்பட்டனர். கடல் அப்படியே அவர்களை அக் கும்மிருட்டில் வாரி எடுத் துக் கொண்டு சென்றுவிட்டது!
கடலின் பொங்கும் அலைகளும், காற்றின் சுழற்சியும் மழை வெள்ளமும் சேர்ந்ததால் தாழங்குடா சீரழிந்து போனது. கடலுக்கும் வெள்ளத்துக்கும் மரங்களின் ந சி வுக்கும் பதினெட்டு உயிர்கள் அங்கு பலியாகின,

12 மணி நேரம்
எமது பயணம்.
யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட பஸ், பொலநறுவாவை, மறுநாள் காலை 5 மணியளவில் சென்றடைந்தது அங்கிருந்தோர் மன்னம்பிட்டியில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாகவும் அதனைக் கடந்து பஸ் மட்டக்களப்பிற்குச் செல்லாது எனவும் தெரிவித்த னர்
கிழக்கு மாகாணத்தில் சுழன்றடித்த குருவளி 12 மணி நேரத்தில் அங்கு விளைவித்திருக்கும் அனர்த்தங்களை நேரில் காண்பதற்கும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதற் கும் சென்றுகொண்டிரு ந்தோம். என்னுடன் கூட வந்த நண்பர் "செம்பியன் செல்வன்" எ ன் னை க் கவலையுடன் பார்த்தார் *
நான் “வரத"ரை எண்ணிக்கொண்டேன்.
என்னை இருநாட்களுக்கு முன் தேடிவந்து, மட்டக் களப்பிற்குச் சென்று வரும்படி கேட்டார். காரணம் கேட் டேன் 12மணி நேரம் கிழக்கு மாகாணத்தில் என்ன நடந் தது என்பது குறித்து சரியான ஒரு விளக்கம், அது அறிவு பூர்வமானதாகவும் இருக்கவேண்டும். உங்களால்தான் முடியும்" என்ருர், புதுமைகள் செய்ய விருப்பம்கொண்ட "வரதரின் எண்ணத்திற்கு நான் உருக்கொடுக்க முன்வந் தேன்.
நண்பர் "செம்பியன் செல்வனுடன் பயணப்பட் டேன்; மன்னம்பிட்டி பெருக்கெடுத்து விட்டது எப்படி யாவது சென்றே ஆகவேண்டும்.
ஈழத்தில் ஒரு எழுத்தாளனுக்குப் பயணப்படப் பண மும் கொடுத்து, எழுதிய ஆக்கத்திற்குப் பணமும்கொடுக்க ஒரு "வரதர் வெளியீட்டாலும், ஒரு "வீரகேசரி வெளியீ^ ட்டாலும் தான் முடியும்.
எப்படியாவது மட்டக்களப்பை அடைந்தே ஆகவேண்
டும்.

Page 36
68 12 மணி நேர்ம்
பஸ் டிரைவர் எங்களுடன், யாழ்ப்பாணத்திற்குத் திரும்பும் எண்ணத்தில் காணப்பட்டார்.
"மன்னம்பிட்டி வரை சென்று பார்ப்போம் . சில வேளைகளில் அதனைக் கடந்து செல்ல முடியும். வெள்ளம் கெதியில் வடிந்துவிடலாம்."
இறுதியில் பஸ் டிரைவர் இணங்கினர். மன்னம்பிட்டி வரை சென்ருேம். 'கல்லல என்ற இடத்திற்கு அப்பால் செல்ல முடியவில்லை. வெள்ளம் வீதியை மேவிப்பாய்ந்து கொண்டிருந்தது. கல்லலவில் பொலநறுவா பால் தொழிற் சாலைக்கு முன் பஸ்ஸை நிறுத்திவிட்டு, டிறைவர் சீற்றில் படுத்துவிட்டார். விடிந்துகொண்டிருந்தது. குளிர் காற்று வீசியது வீதியில் வெள்ளம் ஏறியிருந்த இடத்தில் அரு கில் நின்றிருந்தோம்.
இப்படித்தான்
காடுவழியே -
குரு வளி வீசி ஓய்ந்த மறு நாள். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மன்னம்பிட்டியில் வீதியைக் கடக்க முடி யாமல் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வந்திருந்த பஸ்கள் நின்றிருந்தன. அதில் வந்திருந்த பிரயாணிகள் தவித்துக் கொண்டிருந்தனர். ኦ
அவர்கள் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள். அவர் களின் குடும்பத்தினர் மட்டக்களப்பில் இருந்தார்கள் இரவு வீசிய குருவளியால் அவர்களுக்கு என்ன நடந் ததோ? அவர்களில் பலர் அழுதார்கள். கண்ணிர் விட் டார்கள்,
குழந்தைகள். மனைவிமார். கடவுளே!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய குருவளி பொல நறுவாவை விட்டுவைக்கவில்லை. அங்கு பெரும் அழிவு
களைச் செய்திருந்தது. அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு முன்னுள்ள கட்டிப்பால் தொழிற்சாலையின் தகரங்களைச்

12 மணி நேரம் 69
குறைக்காற்று அப்படியே தூக்கி வீசியிருந்தது கட்டிப் பால் தொழிற்சாலையின் களஞ்சிய அறைகள் மு ற் ரு க ச் சேதமாகின. பல ஆயிரம் ரூபாக்கள் மதிப்பான பண்டங் கள் அழிந்துபோயின. களஞ்சியச் சாலையின் முன் நின் றிருந்த பெரிய மரம் ஒன்று அடியுடன் பாறி விழுந்திருந் திது;
மட்டக்களப்பில் எப்படியோ? பஸ்களில் வந்தவர்கள் தவித்தார்கள். அதே வேளை பொலநறுவாவில் தொழில் செய்து வந்த மட்டக்களப்பு இளைஞர்கள் சிலர் ஒரு காரில் அவ்விடத்திற்கு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தி பேரிடியாக இருந்தது. மட்டக்களப்பு சூரு வளி யால் தரைமட்டமாகி விட்டதாம். ஆயிரக்கணக்கானவர் கள் இறந்துவிட்டார்களாம்.
அங்கிருந்தவர்கள் யாவரும் பே ய றை ந் த வர் கள் போலாயினர், ஒவ்வொருவரின் மனக்கண்ணிலும் அவர்க ளின் அன்பிற்குரிய குடும்பம் தெரிந்தது.
எப்படியாவது மட்டக்களப்பை அடைய வேண்டும் என்ற அவசரம் வீதியால் செல்ல முடியாது ம் ன் ன ம் பிட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஆறடிக்குமேல் மேவிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு வழிதான் இருக்கின் றது. மன்னம்பிட்டிப் புகையிரதப்பாதை வீதி யிலும் பார்க்க பத்தடி உயரமான பாலத்தின் ஊடாக அமைக் கப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த அவர்கள் ஏறத்தாழ பதி னைந்துபேர் வரையில் இருப்பரி. அவர்கள் யாவரும் துணிந்து புகையிரதப் பாலத்தின்மீது ஏ றி மன்னம்பிட்டி யைக் கடந்தனர். பாலத்தின்கீழ் மகாவலிகங்கை பொங் கிப்பிரவகித்தபடி பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மண் கரைசல் நீர், புகையிரத வீதியில் பெரிய மரங்களின் கிளை கள் முறிந்து கிடந்தன. தந்திக்கம்பிகள் அறுந்தும் கம்பங் கள் முறிந்தும் திருகியும் சரிந்தும் கிடந்தன. அவர்கள் அவற்றின் ஊடாக கெநழும் ஏதிரிழ்த்பந்துகள்ன்ற னர். வீதியை அடைந்தனர். வீதி எதுவென்றே தெரிய

Page 37
70 12 மணி நேரம்
வில்லை. வீதியெங்கும் மரங்கள். மரங்கள்.சரிந்துகிடந்த மரங்களும், கிளைகளும் குப்பைகளும் தாம் எங்கு பார்த் தாலும் ஒரே வெள்ளக்காடு.
மட்டக்களப்பில் அவர்களின் குடும்பத்தாரின் நிலைய றியவேண்டும் என்ற பாசப்பிணைப்பில் அவர்கள் மட்ட்க் களப்பு நோக்கி நடந்தார்கள். சரியான பாதை தெரிய வில்லை. காடுகளின் ஊடாகவும் நடந்தனர். ம  ைழ யும் பெய்யத் தொடங்கியது.
நான்காம்நாள் அவர்கள் மட்டக்களப்பை அடைந் தனர். கல்முனையைச் சேர்ந்தவர்கள் ஐந்தாம் நாளே கல் முனையை அடைந்தனர்; அவர்கள் கண்ட காட்சி அவர் களின் இரத்தத்தையே உறைய வைத்தது.
அவர்கள் வந்திருப்பது அவர்கள் முன்பு பிற ந் து வளர்ந்த இடத்திற்குத்தான?
அவர்களின் பிறந்த மண்ணிற்கா இப்படியொரு பயங் கர விளைவு ஏன் ஏற்பட்டது?
அவர்களின் வீடுகள் எங்கே? வீதிகள் எங்கே? அவர் கள் கல்வி கற்ற பாடசாலைகள் எங்கே? அவர்களின் பசுந் தென்னந்தோட்டங்கள் எங்கே? வயல்கள் எங்கே?
ஆண்டவனே, ஏன் இப்படியொரு சோதனை யைத் தந்தாய்?
தேங்காய்களையும் தண்ணிரையும் அருந்தி யானைகளுக் கும் பாம்புகளுக்கும் ஊடாக அவர்கள் ஓடி வந்தது இப் படியொரு காட்சியைக் காண்பதற்குத்தான?
'. விதி விதியே மீன்பாடும் தேனுட்டை ஏன் இப் படிச் சீரழித்து சின்னபின்னமாக்கிவிட்டாய்? சின்னபின்ன மாக்கிக் கோரத்தாண்டவம் ஓடிவிட்டாயே?" 25

ك
is that நேரம் ገI
பாதையில் விரிந்த அழிவுகள்
மன்னம்பிட்டியில் கரைபுரண்டோடும் வெள்ளத்திற்கு முன் நின்றிருந்தோம், வெள்ளம் வற்றுவதற்குப் பதிலாக ஏறிக்கொண்டிருந்தது. இன்னும் தாமதித்தால், மன்னம் பிட்டிப் புகையிரதப் பாதையையும் மூடி அவ்வெள்ளம் பாயலாம். அதற்குள் எப்படியாவது பாலத்தின் மூ ல ம் இவ்வெள்ளத்தைக் கடந்துவிட வேண்டும். அப் பால் சென்றுவிட்டால் மட்டக்களப்பிற்குச் செல்வதற்கு ஏதா வது வழி தெரியாமலா போகின்றது?
"விசப்பரீட்சை' என்ருர் செம்பியன் செல்வன், 'ஒரு விசயத்தை நினைக்கக்கூடாது. . நினைத் தா ல் அதைச்செய்து முடிக்கும் வரை எனக்குத் தூக்கம்வராது." என்றேன் நான்.
எங்களுடன் வேறு சிலரும் சேர்ந்துகொண்டனர். நாங் கள் புகையிரதப் பாதையில் ஏறி, மன்னம்பிட்டிப் பாலத் தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
குருவளியின் சேதாரங்கள் தெரியத் தொடங்கின. புகையிரத வீதியின் இருமருங்கும் பெரிய மரங்களின் கிளை கள் எல்லாம் உச்சியில் கிள்ளி முறிக்கப்பட்டிருந்தன. முறிந்த கிளைகள் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்தன. மழையும் மெல்லியதாகத் தூறத்தொடங்கியது.
புகையிரதப் பாதையின் மருங்கில் எந்த ஒரு தந்திக் கம்பமும் நேராகவில்லை. அவை வில்வளைவர்க நெளிந்து கிடந்தன. முறிந்து கிடந்தன. சரிந்து கிடந்தன. முறுகிக் கிடந்தன. தந்திக்கம்பிகள் தெறித்து அறு ந் து பரவிக் கிடந்தன.
வெள்ளம் இருமருங்கும் தேங்கிக் கிடந்தது. புகையிரதப் பாதையால் நடந்து செல்லும்போது வலது பக்கம். பொலநறுவா மட்டக் களப்பு வீதி தெரிந் தது. வீதி தெரியவில்லை. வீதியை மூடி வெள்ளம் பாய்ந்து
6-ԼՐ» Gp.

Page 38
72 12 மணி நேரம்
கொண்டிருந்தது. அது வீதிதான் என்பது, வீதியின் ஒரு புறமாகச் சரிந்து கிடந்த லொறி ஒன்றிலிருந்து தெரிந் தது. சற்று நேரம் தரித்து நின்று அதனைப் பார்த்தோம்.
அன்று அதிகாலைவேளையில் உரம் ஏற்றிய லொறி ஒன்று மன்னம்பிட்டி வெள்ளத்தின் ஆழம் தெரியாமல் வீதியைக் கடக்க முயன்றிருக்கின்றது. இருநூறு யார்கள் வந்ததும் அப்பால் செல்லமுடியவில்லை. திரும்பியும் செல்ல முடிய வில்லை. வெள்ளம் படிப்படியாக ஏறத் தொடங்கியது. லொறி கிளினர் பொத்தெனக் குதித்து வீதியில் இறங்கி னர். ஒருவிதமாக நீந்திச் சென்ருர், டிரைவருக்கும் த. இக்கட்டுப் புரிந்தது. குதித்து ஒருவிதமாக வந்த வழியே தட்டுத்தடுமாறிச் சென்ருர், அவர் திரும் பிப் பார்த்த போது, அவர் வந்த லொறி வெள்ளத்தின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்படியே ஒருபக்கமாகச் சரிந்து விழுவது தெரிந்தது. உரம் வெள்ளத்தில் கரைந்து சென் Diglo
நாங்கள் மன்னம்பிட்டிப் பாலத்திலிருந்து பார்த்த போது, லொறியின் ஒரு பக்கம் நீருக்கு மேல் தெரிந்தது. அதற்கு இருபது யார் அப்பால் ஒரு றக்ரர் நீரில் மூழ்கிக் கிடப்பதும் தெரிந்தது.
மனச்சுமையுடன் நடந்தோம்.
மன்னம்பிட்டிப் பாலத்தின் கீழ், அதலபாதாளத்தில் மகாவலிகங்கை வடக்குப் பக்கமாக விரைந்துகொண்டிருந் தது. புகையிரதப் பாலத்தில் நடக்கும்போது எங்கள் தலை சுற்றியது. பொங்கிப் பிரவாகித்துப் பாயும் வெள்ள நீர் நிரம்பி, மகாவலி விசையுடன் பாய்ந்துகொண்டிருந்தது. கால்கள் இடறி விடுவன போலத் தயங்கின. குளிர்காற்று வேகமாக வீசியது.
செம்பியன் செல்வனும் நானும் ஒருவிதமாகப் பாலத் தைக் கடந்து, அப்பக்கம் சென்ருேம். மன்னம்பிட்டி வெள்ளத்தைக் கடக்க வழியற்று வீதியில் பத்துப் பன்னி ரண்டு வாகனங்கள் நின்றிருந்தன.

12 மணி நேரம் 79
மன்னம்பிட்டிப் புகையிரத நிலையத்தை அடைந்தோம். ஒரு குட்ஸ்வண்டி மட்டக்களப்பிற்குப் புறப்பட ஆயத்த மாக நின்றிருந்தது. எங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்தபடி றெயிலில் ஏறி அமர்ந்தோம்.
கிழக்கு மாகாணத்தில் சுத்தாடிய குருவளியின் பயங் கரம்? எத்தனை உயிர்கள்.எத்தனை உயிர்கள்!
துர் மரணங்கள்
கிழக்கு மாகாணத்தில் குரு வளி அனர்த்தங்களினல் ஏறத்தாழ 5000 பேர் கடுங்காயம் அடைந்திருக்கின்ற னர். மண்டை பிழந்தோர், கை கால்கள் முறிந்தோர், இடுப்பு உடைந்தோர், கீறல் காயங்கள், தண்டல் காயங் கள். இப்படி எத்தனையோ?
தாண்டவன் வெளி என்ற கிராமத்தில், சூரு வளியின் கோரத் தாக்குதலிற்குக் கட்டிடங்கள் எ தி ர் நிற் க முடி யாது சிதைந்து விழுந்தன. சுவர்கள் அப்படியே பாளம் பாளமாகக் கழன்று சரிந்தன. கனத்த இருளில் என் ன நடக்கின்றது என்று தெரியாத கணப்பொழுதில் சுவர் சரிந்து ஒரு கணவனும் ம ன வி யும் அவ்விடத்திலேயே நசிந்து இறந்தார்கள்.
ஏருவூரில் பெரியதொரு மண்வீடு தகர்ந்து ச ரி ந் த போது அதற்குள் அக்குடும்பத்தைச் சேர்ந்த மொத்த ஏழு பேரும் அகப்பட்டுக் கொண்டார்கள். ஒரு அடிக்கு மேல் தடிப்பான களிமண் சுவர்கள் உட்புறமாகச் சரிந்து. அக்குடும்பம் முழுவதையும் அமுக்கியது. ஒரு குடும்பமே அதில் பலியானது. இடிபாடுகளிடையே சிக்குண்டு அவர் கள் செத்துக்கிடந்த கா ட் சி, பார்ப்போரைக் கலக்கி விட்டது5
வெள்ளம் பாய்ந்து வந்தபோது தன் இருகுழந்தைகளை யும் காப்பாற்றுவதற்காக ஒடிய ஒரு தாய், அவ்வெள்ளத் திற்கு தன் இரு குழந்தைகளையும் பலி கொடுத்த சம்பவம் இருதயபுரப்பகுதியில் நிகழ்ந்தது.

Page 39
74 12 மணி நேரம்
வெளியில் சூருவளியின் அசுர ஆட்டம், வீட்டிற்குள் பயத்துடன் முடங்கிக் கி ட ந் த ஒரு தாய், அழுத தன் கைக்குழந்தைக்குப் பா ல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, சுவர் இடிந்து விழுந்து தாயும் குழந்தையும் அப் படியே சமாதியான துயரச் சம் ப வம், பழுகாமத்தில் நடந்தது.
பழுகாமத்தில் இன்னெரு துயர நிகழ்ச்சியும் நிகழ்ந்து முடிந்தது. ஒரு குடும்பம் அப்படியே வீடு தரைமட்டமா கியதால் பலியானது. வீ ட் டி ன் மீது சரிந்து விழுந் த தென்னை மரங்கள் அவ்வீட்டையும் அதற்குள் வாழ்ந்த ஏழு பேரையும் ஒரே நேரத்தில் பரலோகம் சேர்த்தன. அவர் களின் ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் யாவும் அக் கணத்திலேயே அழிந்து ஒழிந்தன இரக்கமற்ற சூரு வளி அரக்கன் அவ்வுயிர்களைத் தன் அகன்ற வாய்க்குள் அடக்கி விழுங்கித் தொலைத்தான்.
ஒரு குடிசையில் இரண்டு குழந்தைகள் அண்ணனும் தங்கையும். ஒன்றி ற் கு வயது பத்து. மற்றதற்கு வயது எட்டு, தாயும் தகப்பனும் பகலில் கூலி வே லை க் கு ச் சென்றுவிட்டாாகள். மாலையாகியும் திரும்பி வரவில்லை. கடும் மழைக்கு எங்காவது ஒதுங்கி நின்ருர்களோ? பேய்க் காற்றும், மழையும் உக்கிரமாகச் செயல் பட்டன. அக் குழந்தைகள் இருந்த குடி  ைச காற்றில் அள்ளுப்பட்டு வானில் கிளம்பியது. குழந்தைகள் இரண்டும் பயத்தால் கத்தின. சூரு வளியின் உறுமலில் அக்குழந்தைகளின் அல றல் எவருக்கும் கேட்கவில்லை. ம  ைழ சோனுவாரியாகக் கொட்டியது. அவர்கள் நனைந்து தோய்ந்தார்கள். அரு கில் நின்றிருந்த மரங்கள் வேறு சடார் படார் எ ன் று சரிந்து விழுந்தன. பயம் அக்குழந்தைகளைப் பற்றிக் கொண் டது. அண்ணன் தங்கையின் கரத்தைப் பற்றியபடி வெளி யில் ஒடி வந்தான். அவர்கள் தடுக்கி விழுந்து எழுந்து ஒழு ங் கை யில் ஏறி ன ர். வேகமாக ஓடி ன ர். யமன் தென்னைமர ரூபத்தில் வந் தா ன் படார் எனச் சரிந்த

12 மணி நேரம் 75
தென்னை உயிரைக்காப்பாற்ற ஒடிக்கொண்டிருந்தது. அக் குழந்தைகளை நிலத்துடன் அரைத்தபடி விழுந்தது. அக் குழந்தைகள் இரண்டும்  ைக கோத் த ப டி யே மரண மடைந்தன.
தேக்கமரக்காடு
மன்னம்பிட்டிப் புகையிரத நிலையத்திலிருந்த குட் ஸ் வண்டி புறப்பட்டது. புனனை வரை குரு வளியின் கோரத் தாண்டவத்தைக் காணமுடிந்தது எங்கள் கண்களில் பட்ட எந்த ஒரு மரமும் நிமிர்ந்தில்லை. தென்னைகள் ச ரி ந் து கிடந்தன. வீடுகளின் மீது அவை விழுந்து அ மு க் கி க் கொண்டிருந்தன. வட்டு முறிந்து சரிந்த தென்னைகள் வழிநெடுகிலும் ஏராளம், ஏராளம். உயர் கொப்புகள் முறிந்த இலவமரங்களும் காட்டுமரங்களும் அதி க அள வில் காணப்பட்டன. இத்தகைய மரங்கள் மட்டக்களப் பிலும் கல்முனையிலும் அடியோடு புரட்டி விழுத்தப்பட்ட காட்சிகளைக் கண்டோம்.
வெளிகந்தவிற்கும் புனுனைக்கும் இ டை யி ல் வளர்ந் திருந்த தேக்கங்காடு சீரழிந்து கிடந்தது. சதுப்பு நிலத் தில் புற்கள் த லை நீட் டி க் கொண்டிருப்பதுபோல, தலை கொய்யப்பட்டு நடுவால் முறிந்த தேக்கமரங்கள் காட்சி தந்தன. கி ழ க்கு மாகாணத்தில் எந்தவொரு தேக்கங் காடுகளும் தப்பவிலலை. கரடியனுறு என்றவிடத்திலிருந்து பதியத்தலாவ வரையிலும் காணப்பட்ட தேக்கங்காடு களும் தரைமட்டமாகக் காட்சி தந்தன.
புனனை புகையிரத நிலையத்தை றெயில் வண் டி அடைந்தது.
உண்மையான அழிவின் ஆரம்பம் புனனையிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. புனனைப் புகையிரத நிலையத் தின், ஒரு பக் க ப் பிளாற்போம் கூரை குருவளியினல் அள்ளி ச் செல்லப்பட்டிருந்தது. பு  ைகயிரத நிலையத் தின் ஒரு பக்கத்தில் ஏராளமான மக்கள், தங்கள் வீடு களை இழந்து அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தனர்.

Page 40
76 12 மணி நேரம்
அவர்கள் இருந்த கோலம் மிக வும் பரிதாபமாக இருந்தது. மாற்றுடையின்றி அழுக்குடன் காணப்பட்ட னர் பு  ைகயிரத பிளாற்போமிலேயே அடுப்பு மூட்டி ருெட்டி ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஆக்கப்படுகின்ற ஒரு ருெட்டியைச் சுற்றி பத்துப் பன்னிரண்டு குழந்தை கள் அமர்ந்திருந்தன.
றெயில், நிலையத்தில் சற்றுத் தரித்து நின்றபோது, அந்நிலையத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் எங்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
தொங்கிய உடல்
புகையிரத நிலையத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் இம் மக்கள், இங்கிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால் இருக் கும் ஒரு சேனைக்குடியிருப்பில், வாழ்பவர்கள். அன்றிரவு குருவளி வீசியபோது, அவர்கள் யாவரினதும் குடிசை கள் அள்ளிச் செல்லப்பட்டன புனனையைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் என்பவரின் குடிசையும் கா ற் றி ல் அள்ளிச் செல்லப்பட்டது. வெளியில் பெய்த மழைக்கும், பயங்கர ஒலத்துடன் சுழன்றடித்த காற்றுக்கும் ப ய ந் து குடிசையின் கப்பு ஒன்றைப் பயத்துடன் அவரின் மகள் கட்டிப்பிடித்துக் கொண்டாள். மற்றவர்கள் மூ லை களி ல் பயத்துடன் ஒதுங்கிக் கிடந்தனர். சுழன்றடித்த காற்று அப்படியே குடிசையைத் தூக்கிச் சென்றது. குடிசைக்குள் இருந்த அவர்கள் திடீரென வெட்டவெளியில் இரு ப் ப தைக் கண்டனர். குடிசையுடன் குடிசைக் கப்பினைப் பயத் துடன் இறுகப்பற்றியிருந்த அவரின் மகளும் காற்றினல் அள்ளிச் செல்லப்பட்டதை அப்போதுதான் கண்டனர் அக்குடும்பமே விரீட்டுக்கத்தியது.
காற்றின் கடுமைக்கு முன்னல் அவர்களால் நிற்கவும் முடியவில்லை. அப்படியே கண்ணிர் விட்டுக் கலங்கியபடி, அவ்வெள்ளத் தரையில் குப்புறப் படுத்துவிட்டனர்.

12 மணி நேரம் 77
அக்குடும்பம் மட்டுமல்ல. அந்த சேனைக்குடியிருப்பில் வசித்து வந்த நாற்பது குடும்பங்களும் இந்த நிலையில்தான் இருந்தன. தப்பி ஒதுங்குவதற்கு பெரியதொரு கல்கட் டிடமும் அருகில் இருக்கவில்லை. வெளியில் இருண்டு கிடந் தது. எங்கு செல்வது. எப்படிச் செல்வது? n
மரங்கள் சரிந்து விழுந்து நொருங்குகின்ற ச த் தம் காதுச் சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு செல்வதுபோல குரு வளி இரைந்தது. சொக்கலிங்கத்தின் காதுகளில் இன் னமும் குழுவளியின் இரைச்சல் ஒலி அடங்கவில்லை.
மறுநாள் விடிந்தது. குடிசைக் கப்புடன் எடுத்துச் சென்ற சிறுமி, ஒரு மரக்கிளையில் பிணமாக மாட்டப் பட்டிருப்பது தெரிந்தது. அதனைவிட இரண்டு சிறுவர் கள் குளிரில் விறைத்து அப்படியே இறந்துவிட்டார்கள்.
சூருவளியின் அமைதிக்காலத்தில் குளிரில் குப்புறக் கிடந்த மக்கள், எங்காவது ஒதுங்க இடம் பார்த்தார்கள் ஒரு ம்ைலுக்கு அப்பாலிருந்த ஒரு கல்கட்டிடத்தில் ஒதுங் கிக் கொண்டனர். வழிநெடுக சரிந்த மரங்கள் மரங்களுக் கிடையில் நசியுண்டு இறந்த மாடுகள். இறந்துகொண் டிருந்த கால்நடைகள். அவர்கள் ஒருவிதமாக அக்கல் கட் டிடட்த்தில் தஞ்சம் புகு ந் த ன ர். விறைத்தவர்களுக்கு நெருப்பு மூட்டி சூடு கொடுத்தனர். பற்களைக் கிடுகிடுக்க வைக்கும் குளிர். மயிர்கண்களூடாக உள்நுழையும் பனிக் குளிர்.
அவர்கள் அக்கல்கட்டிடத்தில் இருந்தபோது, மீண் டும் இரண்டாம் கட்டச் சூழு வளி உ க் கி ர மாக வீசத் தொடங்கியது. மிகத் தூரத்திலிருந்து கண்ணிரும் கம்பலையு மாக எல்லாவற்றையும் இழந்து அக்கட்டிடத்தை நோக்கி வந்த பலர், கட்டிடத்தை நெருங்க முடியாமல் அப்படியே தாங்கள் வந்த வந்த இடங்களிலேயே குப்புறப்படுத்துக் கொண்டனர்,

Page 41
7S 12 மணி நேரம்
அக்கட்டிடத்தில் முப்பதுபேர் வரையில் தஞ்சம் புகுந் திருந்தனர். முதற் சூழு வளியிலும் பார்க்க இரண்டாம் கட்டச் சூருவளி மிகவும் பயங்கரமானதாக இருந்தது அக் கட்டிடத்தின் கூரையை அது தூக்கித் தூக்கிப் போட் டது. அதிலிருந்த ஒடுகள் பொலபொலவெனக் கட்டிடத் தின் உள்ளே கொட்டின. இரண்டு மூன்று பேரின் மண்டை கள் உடைந்தன. காற்றில் ஏராளமான ஒடுகள் அள்ளிச் செல்லப்பட்டன.
அவர்கள் மீண்டும் இருண்ட வானத்தைப் பார்த்தபடி Hயத்துடன் கதறினர். அக்கட்டிடத்திற்கு அருகில் பெரிய தொரு பலாமரம் வளர்ந்திருந்தது. மிகப்பெரிய மரம். அதன் இலைகள் யாவும் குறையினல் உருவிச் செல்லப் பட்டன. கட்டிடத்தின்மேல் படர்ந்திருந்த பெரியதொரு கிளை பயங்கரமாக ஆடியது. கிறீச் கிறிச்சென அக் கிளை மரண ஒலி எழுப்பியது. அவ்வளவு பேரும் அக்கட்டிடத் திற்குள் சமாதியாகப்போகின்ருர்களா?. கிளை படார் என முறிந்தது.
நல்லவேளை முறிந்த கிளையைச் சூருவளி ஒருசுள்ளி யாகத் தூக்கிச் சென்று கட்டிடத்திற்கு அப்பால் வெகு ஆாரத்தில் வீசிவிட்டுச் சென்றது. குரு வளி அரக்கனுக்கும் சில மனித தர்மங்கள் தெரிந்திருந்தன.
பசி, களைப்பு இவற்றுடன் மறுநாள் அவர்கள் புளு னைப் புகையிரதநிலையத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.
வாழைச்சேனைக் கடதாசி ஆலை
றெயிலில் இருந்து பார்த்தபோது வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலை சேதமடைந்திருப்பது தெரிந்தது. கூரைத் தகடுகள், சிற்றுகள் எதுவு மிருக்கவில்லை. பேப்பர் ரோல்கள் வெளியில் மழையில் நனைந்தபடி கிட ப் ப El தெரிந்தது. மறுநாள் காகிதத் தொழிற்சாலையைப் பார் வையிட்டோம். தொழிற்சாலையின் பிரதான கட்டிடங்கள் யாவும் கூரையின்றியும், சரிந்தும் காணப்பட்டன, இரும்

12 மணி நேரம் 79
புக் கேடர்கள் குறையின் அசுரக் கரங்களால் திருகி வளைக் கப்பட்டிருந்தன.
யந்திரங்கள் மழையில் குளித்திருந்தன. கட்டிடத்தின் விட்டங்களும் அந்த யந்திரங்களின் மேல் சரிந்து கிடந் தன. தொழிற்சாலைக்குச் சொந்தமான களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்த பலகோடி ரூபாக்கள் பெறுமதி யான உற்பத்திக் காகிதங்கள் சேதமடைந்தன. அத்து டன் இத்தொழிற்சாலையைச் சேர்ந்த் குவாட்டஸ்களும் காற்றினல் சேதமுற்றன. அவை கூரையின்றி காணப்பீடு கின்றன. தொழிற்சாலையின் சுற்ருடலில் வெள்ளம் தேங் கிக் கிடந்தது.
சித்தாண்டி.
சித்தாண்டிப் புகையிரத நிலையம் எலும்புக்கூடாகக்
காணப்பட்டது. பிளாற்போம் தகரங்கள் எதுவுமில்லை காற்றில் பறந்து எங்கோ சென்றிருந்த சித் தாண் டி புகையிரத நிலைய போட்பலகையைத் தேடி எடுத்துச் சுவ ருடன் சரித்து வைத்திருந்தார்கள். சிக்னல் மரங்களில் பலகைகள் இல்லை. காணப்பட்ட பலகைகளும் உடைந்து சிதறிக் காணப்பட்டன.
வாழைச்சேனையிலிருந்து சித்தாண்டி வரும் வரையில் எந்தவொரு சேதமுருத வீடுகளையும் மரங்களையும் காண முடியவில்லை. இரும்புக் கேடர்களினல் பின்னி எழுப்பப் பட்டிருந்த மின்சாரக் கோபுரங்கள் பல அப்படியே சரிந்து கிடந்தன. நாற்பது சதுர அடிப்பரப்பிலிருந்து 60 அடி உயரத்திற்குக் கம்பீரமாகவும் பலமாகவும் அமைக்கப்பட் டிருந்த மின் கோபுரங்கள் மின் கம்பிக%ள அறுத் து க் கொண்டு சரிந்துகிடந்தன. குழுவளியின் அசுரப்பலத்தினை அதிலிருந்து உணர முடிந்தது. மனிதர்கள் எம்மாத்திரம்? தூசுகள். துகள்கள்தாம்!
'. சூழு வளியினல் சித்தாண்டி முறக்கொட்டாஞ் சேனை, வந்தாறுமூலை, சந்திவெளி போன்ற பகுதிகள் முற் முகச் சேதமடைந்துள்ளன. இங்குள்ள ynTL5. Ffrêbap 55 sir.

Page 42
80 2 மணி நேரம்
யாவும் தரைமட்டமாகி கிடந்தன. முறக்கொட்டாஞ் சேனையில் நான்குபேர் உயிரிழந்தார்கள். சித்தாண்டியில் இதுவரை 13 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்திவெளியில் இருவரது சடலங்களும் கோரகல்லி மடுவில் மூவரது சடலங்களும் கட்டிடங்களின் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்பட்டது. களுவன்கேணியில் மூவரது சட லங்கள் மணல்மூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: முறக்கொட்டாஞ்சேனை -வாழைச்சேனை வீதியிலிருந்த ராட் சத ஆலம்ரம் ஒன்று வீடொன்றின் மீது விழுந்து நசுக்கி யது. அதனுல் அவ்வீட்டிலிருந்த கூட்டுறவுச் சங்கக்கடை யொன்று சேதமடைந்தது. முறக்கொட்டாஞ்சேனை பாட சாலை தரைமட்டமாக இடிந்து விழுந்ததனல், அதற்குள் பாதுகாப்பிற்காக ஒடி நின்றிருந்த கேதாரம் என்ற 24 வயது வாலிபர் ஒருவர் நசுங்கி மரணம் அடைந்தார். 26
ஏறலுர் அழிவு
செங்கலடி வீதியில் காணப்பட்ட மின்கம்பங்கள் எல் லாம் சரிந்தும் தூக்கி எறியப்பட்டும் கிடந்தன. தேக்க மரக்கம்பங்கள், அப்படியே திருகித் தூக்கப்பட்டு அருகில் இருந்த வீடுகள்மீது சரிக்கப்பட்டுக் கிடந்தன. அவ்வீதி யில் காணப்பட்ட மூன்று தியேட்டர்களும் ச்ேதப்பட்டுக் கிடந்தன. ஒரு தியேட்டர் மாத்திரம் கூரைத்தகரங்களை இழந்து நின்றது. மற்றைய இரு தியேட்டர்களும் சரிந்து கிடந்தன.
செங்கலடியிலிருந்து புகையிரத நிலையத்திற்குச் செல் கின்ற வீதியில் புதியதொரு மில் அப்படியே தரைமட்ட மாகிக்கிடந்தது, யந்திரங்கள், தராசுகள் என்பன அப்ப டியே இடிபாடுகள் இடையே கிடந்தன. தென்னைமரம் ஒன்று அவற்றின்மீது சரிந்து கிடந்தது. அவ்வீதியிலிருந்த சிங்களப்பாடசாலையொன்று, நிலத்தில் கற்குவியலாகக் கிடந்தது. சிதறிய ஒடுகள், மரங்கள், செங்கட்டிகள், பாடசாலையின் கதிரை, மேசை, வாங்குகள் எ ல் லாம் கூரை விழுந்ததினலும், சுவர்கள் விழுந்ததினலும் நொருங் கிக்கிடந்தன.

12 மணி நேரம் 81
உடைந்து கிடந்த மரச்சட்டங்களைச் சிலர் விறகுக் காகப் பொறுக்கிச் சென்றனர்.
தோகை சரிக்கப்பட்ட தென்னைமரங்கள் ஒன் ற ன் மீதொன்ரு கச் சரிந்தும் விழுந்தும் கிடந்தன. காளிகோ யில் வீதியில் எ ந் த ஒரு வீடும் தப்பவில்லை. வீடுகளுக்கு மேல் தென்னைமரங்கள் சரிந்து கிடந்தன. ஒவ்வொருவீடும் காடுகளுக்குள் இருக்கும் குடிசைகளாகத் தெரிந்தன. முற் றம் வளவு எல்லாம், முறிந்த மரங்களும் சிதறிய மரங்க ளும் காட்சி தந்தன. சோகம் கப்பிய முகங்களுடன் மக் கள் நடைப்பிணமாகக் காணப்பட்டனர்.
செங்கலடிக் கர்ளிகோயிலில் பல நூறு ஆண்டுகளாக நின்றிருந்த காட்டுமாமரங்கள் அடியோடு சரிந்து கிடந் தன. அவற்றின் சுற்றுத்தடிப்பும் உயரமும், இப்படியும் இராட்சத மரங்கள் உண்டா என்ற பிரமிப்பைத் தந்தன. பெரியதொரு, நூற்றுக்கணக்கான வயதினைக் கொண்ட பலாமரம் ஒன்றும் நிலத்தில் சரிந்து கிடந்தது.
காளிகோயிலின் மு ன் பக்க மண்டபத்தின்மீது ஒரு காட்டுமாமரம் சரிந்து அதை உடைத்திருந்தது. ஆல்ை கோயில் ஆதிமூலக்கட்டிடத்துடன் நின்றிருந்த பெரிய காட்டுமாமரம் சரியவில்லை. இ லைகளை மட்டுமே உருவிச் செல்ல விட்டிருந்தது: ஆதிமூலக் கட்டிடத்தின் கோபுரக் கலசம்கூட காற்றில் அள்ளிச் செல்லப்படாமல் அப்படியே காட்சி தந்தது.
காளிகோயிலில் மட்டுமல்ல; கிழக்கு மாகாணத்தின் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் இப்படியொரு அதிசயம் நடந்திருந்தது. கோயில் சொரூபங்கள் ம்ரங்களின் தாக் குதலுக்கோ கட்டிட இடிபாடுகளுக்கோ உட் படா து தங்கியிருந்தன. சூரு வளி அரக்கனுக்குக் கோயில்களின் நம்பிக்கை விக்கிரகங்களை அழிக்கத்துணிவு வரவில்லையோ? செங்கலடிக் காளிகோயிலின்முன் சரிந்து கிடந்த மரங் களைத் தறித்து நீக்குவதில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஒரு மரத்தைத் துண்டாடுவதுகூட இலகுவாகவில்லை பாலை

Page 43
82 12 LD6oofi Gpsprúb
மரம் போல வைரம் பாரித்த கிழட்டு மரங்க்ள். முப்ப தடிச்சுற்று. வெட்டுவாய் வைத்து ஒரு துண்டாடுவதற்குக் குறைந்தது ஒருநாளாவது தேவை
செங்கலடி நெசவாலை தரைமட்டமாகக் காணப்பட் டது. அதன் தறிகள் யாவும் இடிபாடுகளுங்கிடையில் சிக் கிக் கிடந்தன. செங்கட்டித் தூண்கள் நிலத்தில் சரிந்து கிடந்தன:
ஏழுவூர் அரசினர் பாடசாலை நிலத்தில் விழுந் து கிடந்தது. நெல்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியக் கட்டிடத்தின் கூரைத் தகரங்களும் காற்றில் அள்ளுப்பட் டுச் சென்றிருந்தன. இரும்புக் கேடர்களும் மரச்சட்டங் களும் இலைகளிழந்த கொம்பர்க்ளாகக் காட்சி தந்தன. ஏருவூர் அரசினர் வைத்தியசாலை தரைமட்டமாகக் கிடந்த காட்சியைப் பார்த்தோம். ஒரு கட்டிடம் முற்முக நிலத் தில் பாறிக் கிடந்தது. ஒரு கட்டிடம் கூரையின்றி வெறு மனே காட்சி தந்தது. ஏழுவூர் ச ந்  ைத க் கட்டிடங்கள் இருந்த இடத்தில் எதுவுமில்லை. சந்தைக்குள் நின்றிருந்த வாகைமரங்கள் சரிந்து கிடந்தன. அலிகார் மகா வித்தி யாலயம் சேதமுற்றுக் காணப்பட்டது. விவசாயப் பெருக் கக் குழுவின் கட்டிடம் கூரையற்றும் முன்பக்கச் சுவர் இடிந்தும் கிடந்தது. V−
எங்கும் அழிவு எங்கும் இயற்கையின் யுத்தகளக் காட்சி.
சூரு வளியின்போது ஏழுவூர் பகுதியில் கடல் பொங்கி அரைமைல்வரை உள்ளே வந்திருந்தது. அதனுல் கரையோ ரக் குடிசைகள் முற்ருக அள்ளுப்பட்டுப் போயின. எந்த வொரு இடத்திலும் பசுமையில்லை.
கல்கட்டிடங்களில் இருந்தவர்கள் காற்றினல் கூரை அள்ளுப்பட்டுப்போக, மேசைகளின் கீழ் நெருங்கியம்ர்ந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டார்கள். ஏருவூர் அலிகார் மகாவித்தியாலய ஆசிரியர் கனகசுந்தரமும் அவர் குடும் பத்தினரும் விடிய விடிய ஒரு சிறு மேசைக்குக்கீழ் முடங் கிக் கிடந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்

1 மணி நேரம் 83
டாக்டர் விவேகானந்தன் மாலை வெளியில் சென்றுவிட்டுத் தன் இரு குழந்தைகளுடன் திரும்பி வந்தார். காரைக் கராச்சில் விட்டு விட்டுக் கீழே இறங்கியவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. தி க்கு க் கு ஒருவராகக் காற்றினல் அள்ளி வீசப்பட்டுக் கிடந்தனர்.
ஏருவூர் மக்கள் வங்கியில் கடமையாற்றும் ஜனப் அபூ பக்கர் அனுபவித்த பயங்கரம் சொல்லுந்தரமன்று. குரு வளி வீசிய அன்று மாலை மட்டக்களப்பிலிருந்து ஏருவூருக் குப் பஸ்ஸில் அவர் திரும் பி வந்துகொண்டிருந்தார். தன்னுமுனையில் பஸ்ஸின் முன் பெரியதொரு மரம் சரிந் தது. நல்லவேளை, பஸ் தப்பிவிட்டது. திரும்பவும் முடி யாமல் முன்னேறவும் முடியாமல் பஸ் அகப்பட்டுக்கொண் டது. காற்றுச் சுழன்றடித்தது. தன்னுமுனைவரை மட்டக் களப்புக் கடல் நீரேரியின் வட அந்தம் வருகின்றது. அத ஞல் மட்டக்களப்புக் கடலேரியில் நீர் கொந்தளித்தது: அத்துடன் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வீதியிலும் ஏறியது. பஸ்ஸில் அவரும் இன்னும் சிலரும் இருந்தனர் நிற்கமுடியவில்லை. சுழன்றடித்த காற்று அப்படியே அவர் களை வாரி எடுத்துச் சென்று வாவிக்குள் வீசிவிடுவதுபோல அள்ளியது. அவர்கள் வெள்ளத்துள் படுத்துக்கொண்ட னர். நான்கு மணிநேரம் அப்படியே கிடந்தனர். குழு வளி யின் தாக்கம் நின்று அமைதி நில வி ய, அவ்வேளையில் எழுந்து ஒடி ஏருவூருக்கு வந்தனர், வழியெல்லாம் மரங் கள். ஏறியும் நுழைந்தும் விழுந்தும் சறுக்கியும் ஏருவூர் வந்தனர். இடம் வலம் தெரியவில்லை. இருள் மரங்கள். கிளைகள்.
வழியில் நின்றிருந்த ஒரு தேங்காய் லொறிக்குள் ஏறிப் பதுங்கிக்கொண்டனர்.
விடியும்வரை அபூபக்கரும் வேறுசிலரும் அப்படியே இருந்தனர்"
ஆகாயத்தில் சூருவளியுடன் நெருப்புப் பந்தங்கள் பந்துகளாகச் சுழன்று சென்றதை அவர்கள் கண்டனர்; தீப் பந்தங்கள் வானில் கிளம்பின; சுவா லை விட்டபடி விண்ணில் பறந்தன.

Page 44
84 12 மணி நேரம்
விண்ணில் தெரிந்த தீக்கோளங்கள்
குருவளி வீசிய இரவு, கடுங்காற்று மழையுடன் தீக் கோளங்களும் வானில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன கிழக்கு மாகாணத்திற்கு அழிவு கா லம் தொடங்கிவிட் டதோ என மக்கள் பயந்து நடுங்கினர். கும் மென்ற சாவிருட்டில், திடீரென விண்ணில் கிழக்கிலிருந்து மேற் காயும் மேற்கிலிருந்து தெற்காயும் பறந்து கலக்கிய தீக் கோளங்கள் எவை எனப்புரியாது மக்கள் பரதவித்தனர்.
அத்தீக்கோளங்கள் பந்துமாதிரி உருண்டு வா னி ல் சென்றன. திடீரென அவற்றில் சில இடைநடுவில் மங்கி அழிந்தன. சில மரங்களின் மீது விழுந்து கவிந்தன. காற்று, வெள்ளம, கடல் எழுச்சி, இவற்றுடள் தீ யும் தன் சாக் கரங்களைப் படரவிட்டதோ?
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குக் கரையோரப் பிரதேசம், கிழக்கே ப ர ந் த சமுத் தி ரத்  ைத யு ம், மேற் கே கடல்நீரேரிக்கடலையும் கொண்டிருக்கின்றது. வடக்கே செங்கலடியிலிருந்து தெற்கே கல்முனைவரை இக் குடாக்கடல் பரந்துள்ளது. இரு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட அமைப்பில், ஏருவூரிலிருந்து கோட்டைமுனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, தாழங்குடா, செட்டிப்பா ளையம், பட்டிருப்பு, கல்லாறு உட்பட க ல் மு ன வ  ைர அமைந்திருக்கின்றன. இந்த வடக்குத் தெற்கான கடல் நீரேரியில் சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன. இச் சதுப்பு நிலங்களிலிருந்து ஒருவகையான எரிவாயு (மெதன்) வெளிவரும் அந்த எரிவாயு திடீரெனத் தீப் பற்றி க் கொள்ளக்கூடியது; சதுப்பு நிலங்களில் இவ்வாறு இயற்கை வாயு எரிவதைத்தான் நம் முன்னுேர் கொள்ளிவாய்ப் பிசாசு" எனப் பெயரிட்டனர்.
அப்படியான ஒரு செயல்தான் குருவளி இரவிலும் நிகழ்ந்தது; சதுப்பு நிலங்களிலிருந்து வெளிவந்த எரிவாயு, சுழன்றடித்த காற்றினுல், மின் ன ற் பொழுதில் வானத் துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மிக்க உயரத்திற்கு எடுத்

1à மணி நேரம் 85
துச் செல்லப்பட்ட அந்த வாயு, விண்ணில் தீப் பற்றி எரிந்தது; சூருவளியின் வேகத்தில் எரிந்த நிலையில் அப் டடியே சுழல்கோளங்களாக வெகுதூரம் காவிச் செல்லப் ill-l-gil
இத்தகைய எரிவாயுக்கள்தான் வானில் காற்றுடன் கலந்து வந்த தீக்கோளங்களாகச் சஞ்சரித்தன.
தளவாய் என்ற இடத்தில் வானில் காற்றுடன் கிளம்பிய தீக்கோளங்களைக்கண்டு பயந்தபடி ஒரு தாயும் 6 வயதுக் குழந்தையும் ஓடினர். அவர்களின் குடி  ைச தரைமட்டமாகிவிட்டது. வெள்ளம் வேறு ஏறிக்கொண்டு வந்தது. அவர்கள் தங்கள் உயின்ரக் காப்பாற்ற ஓடினர். தன் குழந்தையை வலக்கரத்தில் இறுகப்பற்றியபடி அத் தாய் ஓடினள், இரக்கமற்ற காற்று தாயின் பிடியிலிருந்து குழந்தையைக் கதறக்கதறப் பறித்து மே லே தூக்கிச் சென்றது. துர க் கி ச் சென்று, தென்னைமரம் ஒன்றுடன் மோதிக் கீழே பிணமாக எறிந்தது.
மரத்தடியில் மணலால் மூடப்பட்ட நிலையில் தன் அரு மைக் குழந்தையை அத்தாய் மறுநாள் கண்டாள்.
கதிரவெளியில்.
மட்டக்களப்பு நகரத்திலிருந்து ஏறத்தாழ 45 மைல் கள் வடக்கே கடற்கரையோரமாக கதிரவெளி, வாகரை, பனிச்சங்கேணி ஆகிய கிராமங்கள் அமைந்திருக்கின்றன. ஒருபுறம் கிழக்காகக் கடலையும், மேற்கு உப்பாறு கடல் நீரேரியையும் இக்கிராமங்கள் கொண்டிருக்கின்றன. சூரு வளியின் வெளி வளையத்தினுள் இக்கிராமங்கள் அடங்கிய போதிலும், இக்கிராமங்களிலும் கணிசமான அழிவு ஏற் பட்டிருந்தது. கதிரவெளியில் மாத்திரம் ஏறக்குறைய 200 வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. கடற்கரையோரமாகக் கட்டியிருந்த மீன் வாடிகள் யாவும் காற்றினுலும் கடலி ஞலும் அள் ஸ்ரி ச் செல்லப்பட்டுவிட்டன. மீனவர்களின் படகுகள் எல்லாம் பொங்கிய கடல் நீருக்குள் அமுங்கி அள்ளுப்பட்டுப்போயின,

Page 45
86 12 மணி நேரம்
வாகரையில் வீடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தன். எந்தவொரு வீடும் சூரு வளியின் தாக்கத்திலிருந்து தப்பி விடவில்லை. வாகரைத் தேவாலயம், தபால் நிலையம், கன் னியர்மடம் முதலிய கட்டிடங்கள் கூரைகளையும் இழந்து சுவர்களின் பகுதிகளையும் இழந்தன. பணிச்சங்கேணியி லிருந்த முந்திரிகை மரத்தோட்டம் (கசுத்தோட்டம்) குரு வளியினல் முற்ருகச் சேதமுற்றது. மரங்கள், மணல் நிலத் தில் வேரூன்றி நிற்கமுடியாது சரிந்தன. சில முந்திரிகை மரங்களைக் காற்று தலைகீழாக நட்டிருந்தது. நிலத் தில் புதையுண்டிருந்த வேர்கள் மேலாயும் கிளைகள், தரையில் படிந்தும் காட்சி தந்தன.
ஒட்டமாவடி அழிவுகள்.
".வேலிகள், குடிசைகள் வீட்டுக்கூரைகள், எல்லாம் பயங்கரச் சூரு வளியினுல் அள்ளுண்டு சென்றன. பெரும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தென்னை மரங்கள் துண்டு துண்டாக முறிந்து வீசப்பட்டன. வீட்டுச் சுவர்கள் தட தடவென விழுந்தன. வீடுகளின் மீது மரங்கள் ச ரி ந் து' அமுக்கின. இவற்றைக்கண்ட மக்கள் பாதுகாப்புத்தேடி வேறு இடங்களுக்கு ஒடத்தொடங்கினர். மரங்கள் விழுந்து நசுங்குண்டும், கூரையிலிருந்து பறந்துவந்த த கடுக ள் வெட்டியும் சிலர் வீதிகளில் விழுந்தும் உயிரிழந்தனர்.
கல்குடாக்கடல் ஒரத்தில் உள்ள குடிசையில் வசித்த ஒருவர் பாதுகாப்புத் தேடி தமது நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காற்றின் ஊடே வெளியில் ஓடி ஞர். கோரச் சூருவளி இரண்டு குழந்தைகளைப் பிடுங்கிக் கடலுக்கு இரையாக்கி விட்டது. வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் பெண் காற்றின் சுழற்சியால் உயிருடன் மணலில் புதையுண்டு மாண்டார். இப்பதட்ட நிலையில் வாழைச் சேனை மகாவித்தியாலயத்தை நோக்கி ஓடியவர்களில் இரு கர்ப்பிரித் தாய்மார்கள் வழியில் குழந்தைகளைப் பிரச வித்தனர்.


Page 46
சத்துருக்கொண்டானில் ஒரு ட. நோ.கூ. ச. லொறி
மட்டக்களப்பு ஆசிரிய கலாசா ಹಿ!
 

எதிர்க் கட்சித் தஃவங் நீதி அமைச்சர் ... "
-

Page 47
மட்டக்களப்பு உயர்நீதிமன்றம் கீழ் மட்டக்கனப்பு தபாற் கத்தோர்
கல்லடி முருகன் கோயில்
 
 
 

Ι κ ΙΙ'
திரு. இராசதுரை பா.உ. திரு. கனேசஓளிங்கம் ffff". To , அரசாங்க அமைச்சர் பேட்டிஸ் பெரேரா அதிபர் திரு. டிக்சன் நிலவீர
- S SSS CC SS SS qSqSqT L C C -- - - - - - - SAS SSL L L LSLLL LLLL LLSLSLL T T TTS -
ஜி கணேசா மில், காரைதீவு கல்லடிப் பாலம்
— 5 15. - ; * - !, T-51

Page 48
தன்னுவே "தேவாலயம் | = ، * فان
". = + "=
- S S S S S L L ST SLSLS LSLSLS -
தியேட்டர்
亭丁。 1 ܒܪ . . " ܠܐ
、
 
 

R ti.
: Ꭼ8ᏕᏯ88-8
88:

Page 49

12 மணி நேரம் 95
வாழைச்சேனை, ஒட்டமாவாடி, மிராவோடைக் கிரா மங்களுக்கு அருகாகச் செல்லும் மதுரு ஒயா ஆற்றில், கடல் நீர் பிரவேசிக்கத் தொடங்கியது. அதனல், கிழக்கிலங் கையை வெளியிடங்களுடன் இணைக்கும் முக்கியமான ஒரு பாலமான ஓட்டமாவடிப் பாலத்தின் ஒரு பகுதி, கடல் நீரால் குடையப்பட்டுவிட்டது. கல்முனைப் பகுதியி லிருத்து காற்றினல் இழுத்துவரப்பட்ட மீன்பிடிப் படகு கள், இந்த ஆற்றில் வந்து இக்கிராமங்களில் ஒதுங்கின. கல்முனை இங்கிருந்து ஏறத்தாழ 50 மைல்களுக்கு அப்பால் இருக்கின்றது. அங்கிருந்து வண்டலூஸ் குடா விற் கு இழுத்து வரப்பட்ட கல்முனை மீன்பிடிக் கலங்களில் சில, மதுரு ஒயாவின் ஊடாகப் பொங்கிய கடலினல் ஏறத் தாள 10 மைல்கள் கடலிலிருந்து உள்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. A
கடல் கொந்தளித்து உள்நாட்டிற்குள் மேவி வருகின் றது என்ற ஒரு வதந்தியும் இக்கிராமங்களில் பரவியது. அதனல் வெருட்சியுற்ற மக்கள் வீதியெங்கும் விழுந்தடித் துக்கொண்டு மேட்டு நிலங்களை நாடி ஓடினர்கள். கடல் கொந்தளித்து, மதுரு ஒயா மூலம், மிராவோடைக்குச்
கடித்துக்கொண்டு வருவதாக ஒரு வ த ந் தி காட்டுத்தீ போலப் பரவியதால், மக்கள் கிலிகொண்டு ஓடினர். பின் ணரே அது வதந்தி என்து தெரிந்தது .'29
சீரழிந்த நகரம் M
மட்டக்களப்பு நகரம் பேய் ஒன்றின் வெறிக்குப் பலி யாகியதுபோலச் சீரழிந்து கிடந்தது. ஏருவூரிலிருந்து நக ரத்திற்குச் செல்லும்போது, வீதியின் இருமருங்கும் சூரு வளியின்போது கடல்நீரேரி மேவிப் பாய்ந்திருப்பது தெரிந் தது. வயல்கள் எல்லாம் கடல் நீர் பாய்ந்து கடற்சாதாளை முதலான தாவரங்களும் மணலும் படி ந் தி ரு ந் த ன. செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் எல்லாம் கடற்படி
8-LD. Gp.

Page 50
6 12 மணி நேரம்
வால் தரையோடு மூடப்பட்டு விட்டன. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தரையோடு நெடுஞ்சாண் கிடையா கக் கிடந்தன. தென்னைகள் எல்லாம் திருகிக்கிடந்தன.
பனைமரங்கள்தான் ஓரளவு சேதத்திற்குள்ளாகாமல் தலைநிமிர்ந்து நிற்பதைக் காணமுடிந்தது. கிழக்கு மாகா ணத்தின் பல பகுதிகளிலும் சூரு வளி அரக்கனின் தாக்கு தலுக்குக் கடைசிவரை ஈடுகொடுத்திருப்பன பனைமரங் கள்தாம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி, அம்பாறை மாவட்டத்திலும் சரி பனைமரங்கள் சூறைக்கு இரையா காமல் தப்பி இருக்கின்றன. கிழக்குமாகாணத்தில் பொது வாகப் பனை மரங்கள் மிகக்குறைவு. அவ்வாறிருந்தும் 75 சதவீதமானவை தப்பி நிற்கின்றன. சூரு வளிக்குச் சரிந்தவையும், வேறு மரங்களினல் தாக்கப்பட்டுச் சரிந் தவையுமாகச் சில பனைமரங்கள் காணப்பட்டன
மட்டக்களப்பு நகரம் இன்று முற்ருகப் பாழடைந்து விட்டது. எந்தவொரு மரங்களுமில்லை. ஏராளமான வீடு களுக்குக் கூரைகளுமில்லை. நாட்டு ஒடுகள் எனப்படும் கொழுக்கி ஓடுகள் போட்ட பழைய ப தி ந் த வீடுகள் இம்மாவட்டத்தில் அதிகஅளவு சேதாரத்துக்குட்படாமல் தப்பியிருக்கின்றன. வீதிகள் எங்கும் உடைந்த ஒடுகளும் அஸ்பெஸ்டஸ் சீற்றுகளும் குவியல் குவியலாகக் கிடக்கின் றன. மட்டக்களப்பு வா விக்குக் குறுக்காகப் போடப்பட் டிருக்கும் அழகிய பாலத்தின் பக்கங்கள் அரிக்கப்பட் டிருந்தன. கல்லடிப் பாலம் சூரு வளியின்போது முற்ரு கத் துண்டிக்கப்பட்டது. மட்டக்களப்புக் கடல் நீ ரே ரி யின் நுழைவாயில் அதுதான். கல்லடிப்பாலத்தினூடாகத்தான் கிழக்குக் கடல் மட்டக்களப்பு வா விக்குள் புகுகின்றது; மட்டக்களப்பு நகரத்திற்குத் தெற்கேயுள்ள சகல கிரா மங்களையும் இணைப்பது அப்பாலத்தின் ஊடாகச் செல் லூம் வீதிதான். அப்பா லம் இரும்புப்பாலம். அ த ன ல் காற்றுக்கும், கடல் கொந்தளிப்புக்கும் தாக்குப்பிடித்திருக் கின்றது. ஆனல், பாலத்தையும் இருநிலப் பக்கங்களையும் இணைத்திருந்த மண்ணணை வீதி கடல்பொங்கியபோது அப்

12 மணி நேரம் 97
படியே அரித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதனல் மட்டக் களப்பின் தென்பிராந்தியக் கிராமங்கள் துண்டிக்கப்பட் டன. இன்று மண் சாக்குகளையும் மண் நிரப்பிய தார்ப்பீப் பாக்களையும் இட்டு ஒருவிதமாக கல்லடிப்பாலத்தில் அள்
மட்டக்களப்பு நகரின் பிரதான கட்டிடங்கள் யாவும் சேதமுற்றிருக்கின்றன. சேதமுருத கட்டிடம் எது வும் மட்டக்களப்பு நகரத்தில் இல்லை, மட்டக்களப்பிற்கு நான் பதினெட்டு ஆண்டுகளுக்கு மு ன் னர் சென்றிருந்தேன்:
இருந்தது. ஒரு விதமான விருத்தியும் எனக்குத் தெரிய வில்லை. அதே நீர் தேங்கிய பஸ் நிலையம், அதே தாழ்ந்த கட்டிடங்கள். அதே ஒடுங்கிய வீதிகள். அதே மக்கள் இன்று சூருவளியினல் பாதிக்கப்பட்டதால் அந்நகரம் களை யிழந்து காணப்பட்ட போதிலும், நகர அமைப்பில் எது விதமர்ன முன்னேற்றமும் அங்கு நிகழ்ந்திருக்கவில்லை.
புதிதாக இரண்டொரு அரசாங்கக் கட்டிடங்கள் உரு வாகி, அவையும் சூருவளிக்கு இன்று இரையாகியுள்ளன: பொலீஸ் பிளாற் இரண்டு வானளாவி அமைந்திருக்கின் றது. நகரத்திற்கு அழகு தந்த மக்கள் வங்கிக் கட்டிடம், தபாற்கந்தோர் என்பனவும் சேதமுற்றிருக்கின்றன.
ஏன் மட்டக்களப்பு நகரம் விருத்தியுறவில்லை?
A
முதல் வருடம் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒருவர்,
மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்து கொள் வர். திரு. அல்பிரட் துரையப்பா இருந்ததும், ஒரு விசேஷ ஆணையா ளர் திரு. சிவஞானம் இருப்பதும்தான் யாழ்ப்பாண நகரத் தின் முன்னேற்றத்திற்குக் காரணமாயின், மட்டக்களப்பு எத்தனை அரசாங்கசார்பு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருந்தது?

Page 51
98 12 மணி நேரம் சேதமுற்ற கட்டிடங்கள்
மட்டக்களப்புக் க ச் சே ரி டச்சுக் கோட்டைக்குள் அமைந்திருக்கின்றது. எத் தனை யோ நூற்ருண்டுகளாக அதே கோட்டைதான் நிர்வாக மையம். மண்முனை மேற்கு உதவி அரசாங்க அதிபர் திரு. சொர்ணவடிவேல் அவர்க ளுடன் ஜீ ப் பி ல் கச்சேரிக்குச் சென்ருேம். கச்சேரியின் ஒடுங்கிய வாசலின் ஊடாக ஜீப்பைச் செலுத்துவதற்கு மிக்க திறமை வேண்டும். டிறைவர் திரு. திருச்செல்வம் திறமைசாலி. சிறைச்சாலை ஒன்றிற்குச் செல்கின்ற உணர்வு ஏற்பட்டது.
சிறைச்சாலைக்குக் கூட ப் பொருத்தமான இடமாக கச்சேரி தெரியவில்லை.
கச்சேரிக் கட்டிடங்களின் கூரை ஓடுகளும் அஸ்பெஸ் டஸ் சீற்றுகளும் காற்றினல் அள்ளிச் செல்லப்பட்டிருந் தன. கோட்டைக்குள் இருந்ததால், கோட்டையின் பல மான சுவர்கள் க ச் சே ரி க் கட்டிடங்களின் சுவர்களைச் சரிக்க விடவில்லை. அதனல் காற்று மதிலுக்குமேல் உயர்ந் திருந்த கூரைகளை வாரிச் சிதறிவிட்டது.
மட்டக்களப்பு உயர்நீதிமன்றக் கட்டிடத்தின் கூரை ஒடுகள் சூறையினல் அள்ளிச் செல்லப்பட்டிருந்தன. ஒரு பக்கக் கூரையும் தகர்ந்திருந்தது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் கூரை ஒ டு களும் பறந்திருந் தன, விட்ட மரங்களும் சரிந்து உள்ளே விழுந்திருந்தன. இந்த இரு நீதிமன்றங்களின் கூரைகளும் காற்றில் அள் ளுண்டு சென்றதால், கொட்டிய மழையில் ஏராளமான பெறுமதிமிக்க பத்திரங்களும் கோவைகளும் அழிந்துவிட் டன. கச்சேரியிலும் ஏராளமான பைல் கோவைகள் குரு வளியினலும் மழையினலும் சேதமுற்றிருக்கின்றன. காணி கள் சம்பந்தமான பத்திரங்கள் அதிக அளவில் சேதமுற் றிருக்கின்றன?

12 மணி நேரம் 99
நூற்றண்டுகளுக்கு மேல் பழைமை வரிய்ந்தி கோட் டை முனை மெதடிஸ்த தேவாலயத்திற்கும் பெரும் சேதம் நிகழ்ந்தது, கூரை ஓடுகள் யாவும் சருகுகளாக அள்ளிச் செல்லப்பட்டன. முன் நின்றிருந்த மரங்களின் இலைகள் உருவிச் செல்லப்பட்டதோடு, வெள்ளமும் முன்பக்கத்தில் தேங்கியுள்ளது. மக்கள் வங்கிக் கட்டிடமும் சேதமுற்றது. கோட்டைமுனையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும், இக்கட் டிடத்தின் அஸ்பெஸ்டஸ் சீற்றுகள் ய்ாவும் சுழல் காற்றி ணுல் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன. அருகில் நின்றிருந்த பெரிய மரம் ஒன்று இக் கட்டிடத்தின்மீது சரிந்து விழுந்து கட்டிடத்தின் ஒரு பக்கத்தைச் சேதமாக்கியுள்ளது அர சடி பிரதான வீதியிலுள்ள மக்கள் வங்கிக்கிளைக் கட்டிடத் தின் கூரையும் பறந்து சென்றது:
மட்டக்களப்பு சென். மேரிஸ் தேவர் லயம், புளியந் தீவு அங்கிளிக்கன் தேவாலயம், அமிர்தகளி பூரீமாமாங்கப் பிள்ளையார் கோயில், "பெரியதுறை முருகன் கோயில், கல் லடி பூரீ வேலாயுதசுவாமி கோயில், புளியங்குடா புனித செபஸ்தியார் தேவாலயம், கோட்டைமுனை முஸ்லீம் அவ் லியா தர்ஹா கட்டிடம், மதிரதஸ்துல் பிரிதவ்ஸ் பள்ளி வாசல், மட்டக்களப்பு நகர மங்களருமாய பெளத்த ஆல யம் முதலான சகல இந்து, கிறிஸ் த வ, இஸ்லாமிய, பெளத்த வழிபாட்டுத் தலங்களும் குரு வளியின் தாக்கு தலுக்கு உள்ளாகியிருந்தன. இக்கட்டிடங்களின் கூரைக ளும் அள்ளிச் செல்லப்பட்டு, சுவர்களும் த கர் த் த ன பூரீ மாமாங்கப்பிள்ளையார் கோயிலின் வீதிகளில் நிழல் பரப்பிக் கொண்டிருந்த எல்லாப் பெரிய மரங்க ளு ம் சரிந்து விழுந்தன. வேரோடு பிடுங்கி வீசப்பட்டிருக்கின் றன. ஆனைப்பந்தி விக்கினேஸ்வரர் கோயிலின் முன்மண்ட பம் இடிந்து விழுந்து விட்டது. கல்லடி முருகன் ஆ ல ய மும் தகர்ந்தது.
மட்டக் களப்பு மாநகரக் கட்டிடம், இந்து மாமன்றக் கட்டிடம்,இராமகிருஷ்ண மிசன் விபுலானந்தர் நினைவு மண் டபம் என்பனவும் சேதமுற்றன. மின் உருவிலான முகப்புத் 95тдђдрšфіц—6ўї. புகழ்பெற்று விளங்கிய கல்லடி புனித

Page 52
100 12 மணி நேரம்
செபஸ்திய7ர் ஆலயம் சேதமுற்று, கூரைகள் தகர்ந்து பொலிவிழந்து விளங்குகின்றது. மட்டக்களப்பு நி  ைற வேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் கூரை ஒடுகளைச் குரு வளிக்கு வழங்கிவிட்டுப் பரிதாபமாகக் காட்சிதந்தது. வயோதிபர் மடம் குருவளிக்குத் தனது கூரைகளை இழந் தது. அதிலிருந்த வயோதிபர்கள் அன்றிரவு அல்லோ ல கல்லோலப்பட்டனர். மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத் தின் கூரையும் காற்றினல் அள்ளுண்டது. பொலிஸ் விடுதி மாடிகளின் அஸ்பெஸ்டஸ் கூரைகள் முற்ருகக் காற்றில் அள்ளப்பட்டுச் சென்றன. பொலிஸ் நிலையக் கட்டிடத்தின் ஒரு பகுதி புயலினுல் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மட் டக்களப்பு ஆஸ்பத்திரிக் கட்டிடங்கனின் கூ  ைர க ளு ம் காற்றில் அள்ளுண்டு சென்றன: ஒரு பகுதிக்கட்டிடமும் இடிந்து விழுந்தது. அதனல் பலர் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில்
மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட சேதாரங்கள் அதிகமாகும், கூரைகள் சுவர்கள் தகர்ந்ததுடன், யன்னல் களும் நொருங்குண்டு போயின. பரிசோதனைக்கூடம், அறு வைச் சிகிச்சைக்கூடம், நோயாளிகள் த ங் கும் வார்ட்டு கள், விசேஷ சிகிச்சைப்பகுதிகள், முதலான யாவும் சேத முற்றன. ஏராளமான மருந்து வகைகளும் வெள்ளத்தில் பழுதடைந்தன. மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு ஏற்பட்ட சேதம், அம்மாவட்ட மக்கள் எல்லாரையும் ப யங் க ர மாகப் பாதித்திருக்கின்றது.
'எனினும் சேதமடைந்த வைத்தியசாலைபில் வைத்தே டாக்டர்கள், ஏறத்தாழ 4000-க்கு மேற்பட மக்களுக்கு கிசிச்சையளித்துள்ளனர். ஆபத்தான காயங்களிலிருந்து சாதாரண காயங்கள் வரையில் இ தி ல ட ங் கும். மிக மோசமான காயக்காரரைக் கொழும்பு பெரியாஸ்பத்தி ரிக்கும், வதுளை ஆஸ்பத்திரிக்கும் விமானமூலம் அனுப்பி யும் வைத்துள்ளனர். ஒரு கைக்குழந்தை மூளை வெளிப் பாட்டினல் இறந்து விட்டது. 12 மைல்களுக்கு அ ப் பா

12 மணி நேரம் 101
தடையால் சிகிச்சைபெற வருவதற்கு 48 மணி நேர ம் தாமதம் ஏற்பட்டதால் அகால மர ண ம  ைடய நேர்ந் தது." 27
இதே வைத்தியசாலை வளவில்தான் எட்டுச் சடலங் கள் தகனம் செய்யப்பட்டன. சடலங்களைப் பாதுகாக்க வும் முடியாத நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கவும் முடியாத நிலையில் அச்சடலங்கள் ஆஸ்பத்திரி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டன:
கல்விக் கூடங்கள்.
மட்டக்களப்பில் குரு வளியின் கோபமான தாக்கத் திற்கு உட்படாது தப்பிய எந்தவொரு கல்விக்கூடமுமில்லை. ஒரு நூற்ருண்டுக்குமேல் மட்டக்களப்பில் க ல் விப் பணி யாற்றி வந்த பிரசித்திபெற்ற கல்விக்கட்டிடங்கள் எல் லாம் சுழல்காற்றினல் கூரை அள்ளப்பட்டும், இடிந்தும் காணப்படுகின்றன. மட்டக்களப்பிலுள்ள புனித மைக் கேல் கல்லூரி, புனித சிசிலியாஸ் ; கல்லூரி, சிவானந்த வித்தியாலயம், மெதடிஸ்ட் மத்திய கல்லூரி, முதலான பல பாடசாலைகளும் பாதிப்படைந்துள்ளன.
தூண்களில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் முற் ருகத் தரைமட்டமாகிவிட்டன. வகுப்பறைகள் த னித் தனி அமையாது ஒரே மண்டபமாக அமைந்த இக்கட்டி டங்கள், கூரை தகர்த்து சரிந்தபோது, நிற்கமுடியாது உதிர்ந்து விழுந்திருக்கின்றன. செங்கட்டித் துர ண் கள் அவ்வளவு தூ ரம் பலமற்றனவாகக் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடுகள், அவை கல்கட் டிடங்களாயின் அவ்வளவு தூரம் இடிந்து விழுந்து நொருங் கவில்லை. ஆனல், பாடசாலைகள் யாவும் இடிந்து விழுந் திருக்கின்றன. மாடிக்கட்டிடங்கள் கொண் ட கல்லூரி களைத் தவிர, மற்றைய பாடசாலைகள் சுவர் சரிந்து நிலத் தில் கற்குவியலாகக் காட்சி தருகின்றன. இக்கட்டிடங்கள் தக்க முறையில் நிர்ணயிக்கப்படாமையும் இதற்கு ஒரு

Page 53
102, > 12 மணி நேரம்
காரணமெனலாம். கொன்ருக்ரர்கள் மலிவாகவும் இலா பம் கருதியும் செய்திருந்த போலி வேலைகளால் இ ன் று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விக்கூடங்கள் இயங்க முடியாமல் போய்விட்டன.
இரவில் வீசிய குரு வளி பகலில் வீசியிருந்தால், பாட சாலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகளைப் பார் க் கும் போது, நெஞ்சம் கற்பனைசெய்ய முடியாமல் தவிக்கின்றது. ஆயிரக்கணக்கான எதுவுமறியாச் சிறுவர்கள் சூரு வளியின் தாக்குதலுக்குப் பலியாகி இருப்பார்கள். கடந்த ஆண்டு ஆந்திராவில் குரு வளி வீசியபோது, இறந்தவர்களில் 1000-க்கு மேல் பள்ளிச்சிருர்கள் என்பது குறிப்பிடத்தக் கது; காற்றின் தாக்குதலினல் சரிந்த கட்டிடங்களுக்குள் அகப்பட்டே அவர்கள் பலியாகினர். அத் த  ைக ய ஒரு நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழாது போன மைக்காக, இயற்கை அன்னைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்,
புயலில் பிறந்த குழந்தை
மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காகப் பல தாய்மர்ர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சூரு வளி வீசிய அன்றிரவு, ஆஸ்பத்திரிக் கூரைகள் காற்றில் அள்ளுண்டு பறந்ததும், மழைநீர் வார்ட்டுகளில் கொட்டியது. ஒடுகள் உடைந்து பொலபொலவெனக் கொட்டின. அதனுல் கிலி கொண்ட நோயாளிகள் திக்குக்கு ஒருவராகப் ப ய ந் து ஓடினர், பலர் காயமுற்றனர்,
அவ்வேளையில் ஒரு பெண்மணிக்கு வயிற் று நோக் கண்டது.
பேய் மழை க் கும் குறைக்காற்றுக்குமிடையில் அப் பெண்மணி குழந்தையைப் பெற்றெடுத்தாள். பராமரிக்க யாருமற்ற நிர்க்கதியான வேளை, விடியும் வரையில் ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டாள்.
புயலின்போது கிழக்கு மாகாணத்தில் பிறந்த குழந் தைகள் சிலவுள்னன,

12 ம்ணி நேரம் 103
அம்பாறையில் பு ய லி டையே ஒரு பெண்மணிக்குக் குழந்தை பிறந்தது. வீடு, வாசல் பொருள் எல்லாவற் றையும் இழந்த அத்தம்பதிகளுக்குப் புயலின் பின்னர் எஞ்சியது குழந்தையொன்றுதான்.
பேய்ச்சூரு வளிக்கும் பெருவெள்ளத்திற்கும் இ  ைட யில், கல்குடா வாடிவீட்டில் தங்கி இருந்த ஒரு பிரித்தா னிய உல்லாசப்பிரயாணித் தம்பதிக்கும் ஒரு குழ ந் தை பிறந்தது. வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கால்நடை யாகச் சென்ற இத்தம்பதி, பிரசவ வசதி, மருந்து வசதி எதுவுமற்ற நிலையில் அங்கு தம் குழந்தையைப் பெற்றெ டுத்தனர், நான்கு நாட்களின் பி ன் ன ர் பெற்றேரும் குழந்தையும் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
புகையிரத நிலையம்
மடைந்தது. பிளாற்போம் தகரங்களும், கட்டிடக் கூரைத் தகரங்களும் காற்றில் பறித்துச் செல்லப்பட்டன. இரும் புக்கேடர்கள் குரு வளியின் கோரப்பிடியில் அகப்பட்டு, அப்படியே திருகி முறுகிச் சரிந்து கிடந்தன. இரும்புக் கேடர்கள் சரிந்ததால் சுவர்கள் இடிந்து கற்கும்பலாகின.
புகையிரத நிலையத்திற்கு முன், நிறுத்தி வைக்கப்பட் டிருந்த லொறி ஒன்று குரு வளியினல் அப்படியே தூக்கி ஒருபுறமாகச் சரித்துவிடப்பட்டது இங்கு மட்டுமல்ல; மட் டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலுப் வாகனங் கள் புயலுக்கு நிற்க முடியாது சரிந்துவிட்டன. சத்துருக் கொண்டான் என்ற இடத்தில் 22 பூரீ 5399 இலக்க பல நோக்குக் கூட்டுறவுச் சங்க லொறி ஒன்று, குருவளி வீசிய போது, ஒட முடியாது வழிநடுவில் நிறுத்தப்பட்டது. அந்த லொறியைக் காற்று அப்படியே சரித்துப் புரட்டிவிட்டி ருந்தது.
டிறைவர் இல்லாமலேயே நிறுத்திவிட்டிருந்த லொறி களில் குழு வளி ஹோன் அடித்துப் பார்த்திருக்கின்றது.

Page 54
104. 12 மணி நேரம்
வீரகேசரி செங்கலடி நிருபர் குழு வளிக்குள் சிக்கிக் கொண்டார். காது செவிடுபடும்படியாக உறுமல் சத்தத் துடன் வீசிய குரு வளி, ‘ஊயிங் ஊயிங்.." என்ற கூச் சலுடன், அவரும் இன்னும் சிலரும் குரு வளிக்கும் பெரு மழைக்கும் பயந்து ஒதுங்கியிருந்த கட்டிடத்தைத் தாக்கி யது. அக்கட்டிடத்தின் கூரைமீது, தடார் தடார் என்று ஏதோ விழுந்து நொருங்கும் சத்தம். அண்ணுந்து பார்த் தபோது அக்கட்டிடத்தின் கூரை அசைவது தெரிந்தது. ஆபத்தை உணர்வதற்கு முன்னரே அக்கூரை காற்றில் அள்ளுண்டு வானில் கிளம்பியது. அவர்கள் பயத்துடன் வெளியில் ஒடிஞர்கள்.
வெளியே தலைகாட்ட முடியாதவாறு, வீட்டுக்கூரை களின் தகரங்களும் அஸ்பெஸ்டஸ் சீற்றுகளும் காற்று டன் கணவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. அவற்றி டையே அகப்பட்டால் அவை கத்திபே* ல உடலைச் சீவி விடக்கூடியன. கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. அருகில் இருந்த இன்னெரு கட்டிடத்திற்குள் அவர்கள் ஓடினர்கள். ஒரே வெள்ளம். காற்று அவர்க ளைக் காவிச் சென்று அக்கட்டிடத்தின் முன் தள்ளியது. வெள்ளத்தில் தாவி ஓடியபோது நீரினுள் மூழ்கிக்கிடந்த தகடுகள் கால்களில் வெட்டின. உடலில் பட்ட மழைத் துளிகள் ஒவ்வொன்றும் துப்பாக்கிச் சன்னங்கள் போல இருந்தன.
அவர்கள் அவ்வாறு ஒடிச்சென்றபோது, வாழைச் சேனைக் காகிதத் தொழிற்சாலைக்கு முன்னர் நிறுத்தியி ருந்த லொறிகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒரே சுருதி யில் ஹோன் அடித்தன. லொறிகளுள் எவருமிருக்கவில்லை. காற்றின் அமுக்கத்தால் லொறிகள் சத்தமிட்டன. தாமாகவே ஹோன் அடித்தன. 8
கைதிகள் தப்பினர்
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தண்டன அனுப
வித்துக் கொண்டிருந்த கைதிகளுக்கும் சூரு வளி விடுதலே


Page 55
106 12 மணி நேரம்
பட்டனர். இன்னும் சிலர் குடும்பத்தாரைப் பர்ர்த்து விட்டு வந்து சேர்வார்கள் என நம்பப்படுகின்றது. கல் முனையில் ஒரு கைதி, ஒரு சிறுவனிடமிருந்து பணத்தைப் பறிக்கும்போது கல்முனைப் பொலிசாரினல் கைது செய் யப்பட்டான்.
குட்ஸ் வண்டி மோதி மரணம்
மட்டக்களப்பிலிருந்து குழுவளி வீசிய அன்று மாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்ட மெயில் வண்டி, ஏரு இருக்கு அப்பால் செல்லமுடியாமல், ஏருவூர் புகையிர நிலையத்திலேயே தரித்து நிற்க நேர்ந்தது. மெயில் வண்டி ஏருவூரை அடையும் முன்னரே, கடுங்காற்று கிளம்பி விட்டது. ஏருவூர் புகையிர நிலையத்தை அடைய காற் றின் உக்கிரமும் கூடியது. அதனல் மெயில் வண்டி அந்த நிலையத்திலேயே தரித்து நின்று விட்டது.
மெயிலில் பிரயாணம் செய்த பிரயாணிகள் வெளியில் இறங்கவும் முடியாமல், இருக்கவும் முடியாமல், தத்தளித் அதுத் தவித்தனர். கடுங்காற்றும் பேய்மழையும் உக்கிரமாக இரைச்சலிட்டன. மரங்கள் முறிந்து சரிகின்ற சத்தம் வேறு அவர்களுக்குக் கிலியைக் கொடுத்தது. த கரங்கள் வானில் மின்னியபடி சருகுகளாகப் பறப்பது தெரிந்தது. ஏருவூர் நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்திலிருந்து குரு வளி பிடுங்கிவந்த தகரங்கள், மெயில் வண்டியில் மோதின.
அவர்கள் யாவரும் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டு முடங்கிக் கிடந்தனர்.
கடும் கொடிய இருள் வெளியில் ஆட்சி செலுத்தியது, வெளியில் நடப்பதும் தெரியவில்லை. பயங்கரமான வர் ணிக்க முடியாத சத்தங்கள்தான் காதுகளில் நுழைந்தன. அவ்வேளையில் புகையிரத நிலையத்திற்கு அரு கில் இருந்த வீடுகள் யாவும் சேதமுற்றன. வீடு காற்றினல் அள்ளிச் செல்லப்பட்டதால் பாதுகாப்பான இடம் தேடி ஐவர் புகையிரதப் பாதையால், தட்டுத்தடுமாறி நிலை யத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர், மேற்குப்பக்சு

12 மணி நேரம் 10 ges மிருந்து அவர்கள் விழுந்தும் எழுந்தும் கனத்த இருளில் தடுமாறி வந்துகொண்டிருந்தனர். க ரி ற் றும் கடலும் வெள்ளமும் மரங்களை அழித்தது போதாதென்று, ஏருவூர் புகையிரத நிலையத்தில் ஒருபக்கமாக, பிறே க் அடித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்ஸ் கொம்பார்ட்மென்ட் ஒன்றும் யமனுக விரும்பியது.
சுழன்று மிக்க விசையோடு அடித்த கடுங்காற்றின் தாக்க அமுக்கத்தால் அக்குட்ஸ் பெட்டியின் பிறேக் வலு விழந்து கழன்றது. காற்றின் தள்ளலால், புகையிரதப் பாதையில் கடகடவென உருண்டுகொண்டு அக்குட்ஸ் பெட்டி வேகமாக மேற்குப்பக்கமாக விரைந்தோடியது. தங்கள் முன் காரிருளில் கடும் வேகத்தில் யமனக குட்ஸ் பெட்டி ஓடிவருவதைக் காணுத, ஐவரும் தடுமாறி வந்து கொண்டிருந்தனர். இரைச்சலிடையே இருள்ல் அவர்க ளுக்கு எதுவும் தெரியவில்லை.
"ஒ . ஐயோ. . அம்மா" என்ற அலறல் காற்றி டையே மெல்லிதாக ஒலித்தது.
ஐவரையும் அப்படியே மோதிய குட்ஸ் வண்டி அவரி களில் மூவரை புகையிரதப் பாதையில் அரைத்து இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியபடி, தன்பாட்டுக்கு ஒடிக்கொண் டிருந்தது. மற்றுமிருவர் புகையிரதப்பாதைச்கு அருகில் தூக்கி எறியப்பட்டுக் கடுங்காயங்களுடன் பேச்சு மூச்சின் றிக் கிடந்தனர். அடுத்த நாள் காலைதான் அவர்களின் உடல்களை மக்கள் கண்டனர். இரு வர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
நிலையத்தில் நின்றிருந்த மெயில் வண்டியில் ஏறிப் பதுங் கித் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டனர். இம் மெயிலில் பயணம் செய்த கல்முனை வாசிகள் சிலர், கால் நடையாக ஏருவூரிலிருந்து நடந்து, இரண்டாம் நாள் கல்முனையை வந்தடைந்தனர். அவர்களுக்கு அங்கு காத் திருந்தவை அழிவுகள்தாம்!

Page 56
08 12 மணி நேரம் காத்தான்குடியில்
மட்டக்களப்பு நகரத்திலிருந்து 5 மைல்கள் தெற்கே கடற்கரையோரமாக இருக்கும் கிராமம் காத்தான்குடி யாகும். அழகும் அமைதியும் நி ைற ந் த கிராமம் அது. அக்கிராமம் குழு வளியால் சின்னபின்னமாகியது. காத் தான்குடி வைத்தியசாலைக் கட்டிடம் இ டி ந் து விழுந்த தால்தான் பதினேழுபேர், அநியாயமாகச் சாகடிக்கப்பட் டனர். மட்டக்களப்பில் நிகழ் ந் த கோர மரணங்களில் இச்சம்பவம் மிக்க துயரமானது,
காத்தான்குடிக் கிராமத்தின் மின்சாரக் கம்பங்கள் யாவும் உடைந்து சிதறிக்கிடந்தன. தென்னைமரங்கள் எது வும் கண்ணுக்குத் தெரியவில்லை, வீடுகள் யாவும் கூரை களை இழந்தும், முறிந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. குடிசைகள் எதுவும் தப்பவில்லை. காத்தான் குடியில் 3000 மேற்பட்ட கைத்தறிகள் சேதமுற்றிருக்கின்றன.
'.சூருவளி வீசிய அன்று ஒன்பது வ ய து ச் சிறுமி யொருத்தி, கை கால் வீங்கிய நிலை யில் காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தாள். அவளை அவளுடைய தாய் வைத்தியசாலையில் நி ன் று கவனித்து வந்தார். அன்றிரவு புயல் வீசியது. காத்தான்குடி வைத் தியசாலைச் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. தாங்கள் தங்கி யிருந்த வார்ட்டும் இடிந்து விழுந்துபட்டு விடலாமெ னப்பயந்த அச்சிறுமி, வார்ட்டைவிட்டு வெளியில் ஒ டி வந்தாள். கனத்த இருள். பேய் மழை. அம்மா. அம்மா என்று அலறியபடி ஓடிவந்தாள். திக்குத்திசை தெ ரிய வில்லை. சுழன்றடித்த காற்று அம்படியே அச்கிறுமியை அலாக்காகத் தூக்கிச்சென்று, கா ல் மைலுக்கு அப்பால் வீசிவிட்டது. கீழே விழுந்த அச்சிறுமி எழுந்தோடி, பள்ளி வாசல் ஒன்றுக்குள் புகுந்து கொண்டாள். அதே நேரம் காத்தான் குடி வைத்தியசாலை தரைமட்டமாகக் கீழே தகர்ந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு இறந்தவர்களில் அச்சிறுமியின் தாயும் ஒருத்தி '. 80

12 மணி நேரம் 109
படுவான்கரை
வடக்குத் தெற்காக அமைந்திருக்கும் மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே பல கிராமங்கள் அமைந்திருக்கின்றன. அக்கிராமங்களைப் படுவான்கரை எ ன் பர். கரடியனறு, ஆயித்தியமலை, உன்னிச்வச, பாவற்குளசேனை, வெல்லா வெளி, மண்டுர் முதலான பகுதிகள் படுவான்கரையில் அமைகின்றன.
இக்கிராமங்கள் பி ர தா ன வீதிப்போக்குவரத்தின் பாதையில் அமைந்திருக்கவில்லை, கிழக்குக்கரைக் கிராமங் களிலிருந்து இக்கிராமங்களை அ  ைடய வேண்டுமாயின் படகுசேவை மூலமே செல்ல முடியும். வீதிப்போக்குவரத் தில் செல்ல வேண்டுமாயின், செங்கலடி - பதியத்தலாவ வீதியிலிருந்து செல்லலாம். அல்லது காரைதீவு, பட்டிருப் புக் கிராமங்களிலிருந்தும் வீதிகள் மூலம் சென்றடைய லாம், குருவளியின் கொடுமைக்கு இக்கிராமங்கள் இரை யாகாமல் தப்ப முடியவில்லை. வேரோடு சரிந்த இராட்சத விருட்சங்கள் படுவான்கரைக் கிராமங்கள் எங்கும் காணப் பட்டன. தென்னைமரங்கள் ஒன்றுக்கும் பயனற்ற முறை யில் சரிந்து அழிந்தன. ம க் க ள் வாழிடங்கள் குடிசைக ளாயின் முற்ருக அழிந்தன. கட்டிடங்களாயின் சுவர்களை எஞ்சவிட்டு ஏனையவற்றை வாரி எடுத்துச் சென்று வீசி விட்டிருந்தது புயல்.
அதிர்ச்சிகொண்ட மக்கள், பீ தி யும் விரக்தியும் கொண்ட மக்கள், மனம் தளர்ந்து தவிக்கின்ற மக்கள், உற்ருரையும் குழந்தைகளையும் குருவளி அரக்கனுக்குப் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கின்ற மக்கள், மனமுடைந்து ஒரளவு புத்தி தடுமாறிய மக்கள் கூட்டத்தை இக்கிராமங் களில் நாங்கள் காணநேர்ந்தது;
கரடியனுறு நெற்களஞ்சியம் தகரங்களினல் ஆக்கப் பட்டது. இரும்புக் கேடர்கள் மா த் தி ர 1ம் எஞ்சியிருக்க சுரைத் தகரங்களும் சுவர்த் தகரங்களும் காற்றில் அள் சரிச் செல்லப்பட்டு விட்டன. இன்று அது எலும்புக்கூடா

Page 57
110 12 மணி நேரம்
கக் காணப்படுகின்றது. இக் களஞ்சியத்தில் காணப்படும் ஏராளமான நெல்மூடைகள், மழையில் நனை ந் து கிடந் தன. ஒவ்வொரு மூடையிலும் சாக் கு க ளை த் துளைத்துக் கொண்டு நெல்முளைகள் பசுமையாகப் படர்ந்திருந்தன. "மக்களுக்கு இவற்றை வழங்கியிருக்கலாம். அல்லது அவர்களாகவே எடுத்துச் செல்லவிட்டிருக்கலாம்.' என் ருர் செம்பியன் செல்வன்,
வ வுண தீவு நெற் களஞ்சியமும் தரைமட்டமாகக் காட்சி தந்தது. சுவர்கள் செங்கட்டிகளாலும், கூரை தக ரத்தாலும் அமைந்த களஞ்சியம் இது. அப்படியே கட் டிடம் குழு வளிக்கு நிற்கமுடியாமல் ச ரி ந் து நொருங்கி விழுந்து கிடந்தது ஒரேயொரு பக்கச் சுவரைத் த வி ர ஏனையவை நிலத்தில் கற்குவியலாகக் கிடந்தன. வவுண தீவு உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் தரைமட்டமா கிக் கிடக்கிறது. அப்படியே தகர்ந்து அக்கட்டிடம் விழுந்த போது, அதற்குள் இருந்த அத்தனை பொருட்களும் சேத முற்றன. இக் கந்தோரின் இரும்புப் பெட்டியும் ஒரு சில ரால் உடைத்துக் களவாடப்பட்டதாம்!
வவுணதீவில் குடிசைகள் தரைமட்டமாகியதும் ம்க்கள் பலர் வவுணதீவு நீதிமன்றக் கட்டிடத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
". படார். பட் பட் , பட. படார். இப் படி யொரு பயங்கரப் பேரொலி. கட்டிடத்தின் கூரையோடு கள் கழன்று தலைகளில் விழத்தொடங்கின. அங்கிருந்த இரண்டு மேசைகளின் கீழ் 26 பேர் முடங்கிக்கொண்டனர். சிலர் விழுந்துகிடந்த ஒடுகளைத் தலையில் பிடித்தபடி நின் றனர். அக் கட்டிடம் புயலுக்குத் தரைமட்டமாகியது. உயிர்கள் தப்பியது அதிர்ஷ்டம், தாய்மார் குழந்தைகளைக் கட்டி அணைத்தபடி கதறினர். அந்த வளவில் நின்றிருந்த இரு பஃ0 களும் கட்டிடத்தில் சரிந்து விழுந்தன, அருகில் நின்றிருந்த மாமரம் முறிந்து விழுந்தது. அவர்கள் யாவ ரும் அருகில் இருந்த கூரையிழந்த பாடசாலைக்கு ஒடித் தஞ்சம் புகுந்தனர். வெள்ளத்தினுள்ளும், மழையினுள் ளும் அவர்கள் தவித்தனர்.' 31

12 மணி நேரம் 111
நெல் ஆலை சரிந்தது
உன்னிச்சைக் கிராமம் குருவளியினல் அள்ளிச் செல் லப்பட்டது. குடிசையைக் காற்றுக்குக் காவுகொடுத்த, திரு. செபமாலை தன் குழந்தையுடனும் மனைவியுடனும் பக் கத்தில் இருந்த நெல் ஆலையை நோக்கி ஓடினர். பேய்க் காற்றுத் துரத்த, மழைத் துளிகள் ஊசிகளாகத் தைக்க அவர்கள் அந்த நெல் ஆலையைச் சென்றடைந்தனர். நெல்
நின்றுகொண்டனர்.
ஊய். என்ற உறுமலுடன் சுழன்றடித்த சூரு வளி, நெல் ஆலை ஒடுகளை அப்படியே சருகுகளாகத் தூக்கி ச் சென்றது. கூரை மரங்கள் தகர்ந்து சரிந்தன. யும் மனைவியும் குழந்தையும் ஒதுங்கி நின்றிருந்த சுவர் பெரும் சத்தத்துடன் சரித்தது. செபமாலை தவரின் இடி பாடுகளுக்கிடையில் நன்கு அகப்பட்டு அமுக்கப்பட்டார் அவருடைய மனைவி திருமதி மேரியின் முது கில் சுவர் விழுந்து அமுக்கியது. குழந்தைமட்டும் தெய்வாதீனமாகச் சற்றுத் தூரத்தில் வீசப்பட்டது.
சுவரினுள் அகப்பட்ட கணவனும் ம னை வி யும் அப் படியே மயங்கி விட்டனர். மறுநாள் காலைதான் அயலவர் கள் கண்டனர். அவ்விடத்திலேயே இடிபாடுகளுக்கிடையில் திரு. செபமாலை நசிந்து செத்துவிட்டார்! மேரியை இரண்டு நாட்களின் பின்னர் உதவிஅரசாங்க அதிபர் திரு. சொர்ண வடிவேல், மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அது gFifu u f'ras இருக்கவில்லை. பின்னர் மேரி கொழும்பு பெரியாஸ்டத்தி ரிக்கு அனுப்பப்பட்டார். அவரின் முதுகெலும்பு பா தி க் கப்பட்டுவிட்டது.
சுவர் இடிபாடுகளுக்கிடையில் அகப்பட்டு இறந்தோர், பெருங்காயமடைந்தோர், பலராவர். வாழைச்சேனையைச் சேர்ந்த ஜன ப் மீரா மொ ஹி தீன் என்பவர், மருத முனையில் சுவர் இடிபாடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்
9-մ. G|5.

Page 58
iI2 12 மணி நேரம்
டார். ஒரு கடையில் காற்றுககும் மழைக்கும் பயந்து ஒதுங் கிக் கொண்டிருக்கும்போது, கடைச்சுவர் விழுந்தது. அதில் மொஹிதீனின் கா ல் க ள் சுவர் இ டி பா டு களு க் குள் அகப்பட்டுக் கொண்டன. மரணவேதனையுடன் வி டி யும் வரை அவ்வெள்ளத்தில் விறைத்தபடி அவர் கிடந்தார். அடுத்த நாள்தான் காப்பாற்றப்பட்டார்.
வெல்லா வெளி உதவி அரசாங்க அதிபர் அலுவலகம். ஏனைய கட்டிடங்களைப்போலத் தகர்ந்து கிடந்தது. வெள் ளம் கட்டிடத்தைச் சுற்றித் தேங்கிக் கிடந்தது. மரங்கள் சரிந்து கிடந்தன. வெல்லாவெளியிலிருந்து பட்டிருப்பை நோக்கிச் சென்ருேம். வழியெல்லாம் அழிவின் சின்னங் கள், வயல்களெல்லாம் க எண் மூ டி யும் வெள்ளத்தினுள் அமிழ்ந்தும் கிடந்தன. பழுகாமத்தில் திரு. அருளானந்தம் என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் வீட்டின் கூரை கள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டிருந்தன. அடுக்களை யின் மீது தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்திருந்தது. அங்குதான் கரங்களைக் கோர்த்தபடி அண்ணனும் தங் கையும் வீதியில் மரங்களுக்கிடையில் சிக்கி மரணமானுர் கள், இக்கிராமத்தில்தான் சுவர் சரிந்து ஒரு குடும்பமே சமாதியான பயங்கரம் நடந்தது. குழந்தைக்குப் பால் கொடுத்த நிலையில் தாயும் சேயும் சுவரினுள் பலியாகிய தும் இக்கிராமத்தில்தான்.
பழுகாமத்திலிருந்து பட்டிருப்புக்குச் செல்கின்ற வீதி கடல் நீரால் அரிக்கப்பட்டிருந்தது. சிறிய பாலம் ஒன்று அப்படியே வெள்ளத்தால் தூக்கிச் செல்லப்பட்டிருந்தது; மிகத்தூரத்தில் சரிந்து விழுந்த சிறிய மரங்கள் வேருடன் இவ்வீதியின் மருங்குகளில் ஒதுங்கிக் கிடந்தன.
பட்டிருப்பு மகாவித்தியாலயம் சரிந்துகிடந்தது. கூரை கள் த கர்ந்து சுவர்கள் இடிந்து கிடந்தன. அப்பாடசாலை யின் முன்னர் மார்பளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபுலானந்தர் சிலை மாத்திரம் எதுவிதமான தாக்குதலிற் கும் உள்ளாகாமல் காணப்பட்டது. களுவாஞ்சிக்குடிவீதி

12 மணி நேரம் 13
யில் ஏறினுேம், வீதியின் மருங்குகளில் காணப்பட்ட கட் டிடங்களின் கூரைகள் சிறியளவில் சிதைந்திருந்தன மரங் கள் சரிந்து விழுந்திருந்தன.
எங்களுடன் வந்த திரு.அருளானந்தம், கன்னன் குடா வில் நிகழ்ந்த ஒரு சோகச் சம்பவத்தைச் சொன்னர்.
சுவரின் இடிபாட்டிற்குள்.
கன்னன் குடாக் கிராமத்தில், சூரு விளி வீசிய இரவு ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் பயத்துடன் வீட்டிற் குள் இருந்தது. தகப்பன், தாய், மூன்று குழந்தைகள் பலமாகக் காற்று சண்டமாருதமாக வீசிச் சுழன்றடித்தது. மரங்கள் முறிந்து சரியும் ஒலி கேட்டது. அதேவேளை அக் குடும்பத்தினர் வீட்டுக் கூரை காற்றில் ஒரு தடவை மேலே தூக்கப்பட்டு பொத்தென வைக்கப்பட்டது. அந்த வேகத் தில் சுவர்கள் தகர்ந்து சரிந்தன. அதேவேளை, படார் என்ற சத்தத்துடன் பெரியதொரு தென்னை மரமும் அவ் வீட்டின்மீது சரிந்தது.
சுவரின் இடிபாடுகளுள் அக்குடும்பம் சிக்கிக்கொண் டது. கூரை மரங்கள் அவர்களின் மீது விழுந்து அமுக்கின. மூத்தமகன் சந்திரசேகரனும் கடைசி மகள் காமினியும் மரண பயத்தில் அலறித் தவித்தனர். பெற்ருர் ஒருபக்கம் சுவர் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு வெளியேற முடியாது தவித்தனர். கரும் இருளில் எதுவும் தெரியவில்லை. ஒருமகன் விமலநாதனின் இடுப்பிற்குக் கீழ் சுவர் விழுந்திருந்தது.
ஒரே அலறல், பீதியும் பயங்தரமுமான கதறல் எழுந் 点、 யார் யாரைக் காப்பாற்றுவது? பேய் காற்றிற்கும், பெருமழைக்கும் இடையில் இரு குழந்தைகளும் சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருந்தன.
மறுநாள்தான் அந்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து அக்குடும்பம் மீட்கப்பட்டது. இரு குழந்தைகள் இறந்து விட்டன. ஒரு குழந்தை பாரதூரமாகப் பாதிக்கப்பட்டது. தாயும் தகப்பனும் காயம் அடைந்தனர்.

Page 59
12 (besai நேரம்
அக்குடும்பத்தின் செல்வங்கள் அழிந்தன: உயிர்ச்செல் வங்கள் பறிபோயின.
கரையாக்கந்தீவைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என்பவ ரும் வீட்டுச் சுவரின் இடிபாடுகளுக்குள் அக ப் பட் டு க் கொண்டார். சூரு வளி இரவில் அவர்களின் வீட்டுக்கூரை காற்றுடன் சென்றுவிட்டது. அவருடைய நான்கு குழந் தைகளும் பயங்கரச் சூழுவளியில் அள்ளுண்டு போய்விட லாம் என்ற பயத்தில் அவர் குழந்தைகளையும் மனைவியை யும் பாதுகாப்பான ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டுத்திரும் பும்போது, வீட்டுச் சுவர் அப்படியே பாறி அவர்மீது விழுந் தது. அவரின் வயிற்றுக்குக் கீழ், சுவர் இடிபாடுகளுக்குள் அகப்பட்டுக்கொண்டது. மனைவியும் குழந்தைகளும் அவரை நோக்கிஓடிவரப்பார்த்தார்கள்.
*வரவேண்டாம். வரவேண்டாம். குழந்தைகளை இங்கே விடாதே?" என்று அந்த அன்புத் தந்தை கத றியபடி மயக்கமடைந்தார். மறுநாள்தான் அவர் காப்பாற் றப்பட்டார். முதுகும் கால்களும் சேதமடைந்தன. அவர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் முதலில் சேர்க்கப்பட்டுப் பின்னர் விமானமூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்;
தலையில் மோதிய கல்
மட்டக்களப்பு திருகோணமலை வீ தி யில் ஒரு ஆசிரி யைக்கு நேர் ந் த அவலம், நெஞ்சை உருக்கக்கூடியது. கோட்டைமுனை மகா வித்தியாலயத்தில் க ல் வி கற்பிக் கும் பட்டதாரி ஆசிரியை திருமதி மங்கையற்கரசி மகேந் திரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஒன்பது ஆண் டு களுக்கு மேலாக மட்டக்களப்பில் ஆசிரியையாகக் கடமை யாற்றி வருகின் ருர்,
குருவளி தாண்டவமாடிய அன்று இரவு, அவர் வீட் டில் தன் மூன்று குழந்தைகளுடன் இருந்தார். அவரு டைய கணவர் மாற்றலாகிக் கொழும்புக்குச் சென் று விட்டதால், அவ்வீட்டில் தனியே இரு க் க நேர்ந்தது. அவருக்குத் துணையாக அவருடைய தந்தை திரு. சண்முகம்


Page 60
16 12 மணி நேரம்
விதம்ாக எழுந்து உள்ளே வந்தார். பயம் பற்றிக் கொண் டது. காற்றின் தாக்கத்தால் கூரை எழுந்து எழுந்து பதிந் தது. எந்நேரத்திலும் கூரை சரியலாம்.
அவர்கள் வீட்டிற்கு அருகில் மட்டக்களப்பு எஸ். பி. திரு. அம்பிகாபதியின் வீ டு இருந்தது. எஸ். பி., அந்த மாதம் முதலாம் திகதிதான் மட்டக்களப்பிற்கு மாற்ற லாகி வந்திருந்தார். அவ்வீட்டிற்குச் சென்றுவிடலாம் என திருமதி மங்கையற்கரசி எண்ணிச் செயலாக்க விளைந்தார். "நாங்கள் வேறெங்காவது போய்விடுவோம், ஐயா. இங்கிருக்கப் பயமாக இருக்கிறது.’’ என்று த ந் தை யிடம் கேட்டார். தந்தைக்கும் அது சரியாகவே பட்டது வெளியில் கோரத் தாண்டவமாடிய காற்றி ன் நடுவே, இரண்டு குழந்தைகளை இறுகப் பற்றியபடி, எஸ். பி யின் வீட்டுக்கு ஒடிச் சென்ருர். இவ்விரு வீடுகளையும் பிரித்த மதிற் சுவர் ஏற்கனவே காற்றினல் சரிக்கப்பட்டிருந்தது. இரு குழந்தைகளையும் அவ்வீட்டில் விட்டுவிட்டு, மற்றக் குழந்தையை எடுத்துச் செல்வதற்காக ஒடிவந்தார். அவி வேளை அவர் வீட்டுக்கூரை அஸ்பெஸ்டஸ் சீ ற் று க ள் வானில் கிளம்பிச் சென்றன.
ஆசிரியை விழுந்து எழுந்து வீட்டிற்கு ஓடி வந்தார். குழந்தையைத் தூக்கிக்கொண்டார். "நீங்களும் வாருங்கள், ஐயா...' 'நீ கவனமாகப் போ பிள்ளை நான் பின்ன லை வாறன் பூட்டிக்கொண்டு."
ஆசிரியை குழந்தையைத் தூக்கிக்கொண்டு, திரு. அம் பிகாபதியின் வீட்டிற்கு ஓடிவந்தார்.
தந்தை வருவார் வருவார் என அவர் விடிய விடியக் காத்திருந்தார். தந்தை வரவில்லை. அவருடைய வீடு காற்றினல் தகர்ந்து விழுந்ததோ, ஒரு சுவர் கூட எஞ்சா மல் தரைமட்டமாகியதோ அவருக்குத் தெரியவில்லை. கும் மென்ற பேய் இருட்டில் எது தெரிந்தது? காற்றின் ஊளைச் சத்தத்தில் எதுதான் கேட்கும்?

12 b60nfi Grib 17
திரு. சண்முகம் மகளின் பின்னல் ஓடிவரத்தான் முயன் ருர். அவர் வீட்டைவிட்டு வெளியில் காலடி வைக்க, அந்த வீடு அப்படியே தரைமட்டமாகச் சரிந்து விழுந்தது. அவர் பயத்துடன் ஓடினர், என்ன நடந்தது என்று புரியவில்லை. விழுந்த சுவரிலிருந்து விடுபட்ட பெரியதொரு கல், குரு வளி அரக்கனல் காவி வரப்பட்டு, அவர் பிடரியில் பலமாக மோதியது. அப்படியே முகம் குப்புற அவர் சரிந்தார். அவர் அதன்பின் எழுந்திருக்கவேயில்லை!
இரவு 10 மணி போல அமைதி நிலவியது. ஆசிரியை யின் குடும்ப நண்பர், உயர் நீதி மன்றத்தில் வேலை பார்க் கும் திரு. பூரீஸ்கந்தராசா இக்குடும்பத்தினர் எப்படி இருக் கின்றனர் எனப் பார்ப்பதற்காக வந்தார். ஆசிரியையின் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமாகி இருப்பகைக் கண் டார். இதயம் ஒருகணம் திக்கிட்டது. ஆண்டவனே. அக்குடும்பமே சரி,.
எஸ். பி. வீட்டில் வெளிச்சம் தெரிந்தது; அங்கு ஒடிச் சென்ருர் ஆசிரியையும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு மன நிம்மதி பிறந்தது. திரு. அம்பிகா பதியின் வீட்டுக்கூரை ஒடுகளும் காற்றில் அள்ளுப்பட்டுச் சென்றிருந்தன. -
திரு. பூரீஸ் கந்தராசா அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்ருர்.
"ஐயா..??? "பார்த்து நான் கூட்டிவருறன் . நீங்கள் வாருங்கோ "
அவரின் வீட்டில் விடியவிடிய அவர்கள் இருந்தனர்" அவ்வீட்டிலிருந்தோரும் பலர். மீண்டும் குழு வளி உக்கிர மாக வீசியபோது பூரீஸ்கந்தராசாவின் வீட்டுக்கூரை அள் ளுண்டு சென்றுவிட்டது. மழை கொட்டியது. ஒரு டைனிங் ரேபிளின் கீழ் பதி%னந்து பேர்வரையில் முடங்கிக் கிடந் தனர்:
தந்தை காலமான செய்தி விடிந்ததும்தான் ஆசிரி யைக்குத் தெரிந்தது,

Page 61
18 12 மணி நேரம்
தரைமட்டமாகிய வீடு. மூன்று குழந்தைகள். தந்தை யின் மரணம். இவ்வளவும் அவரைக் கலக்கி விட்டன. வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தந் தையின் சடலத்துடன் தாயும் மூ ன் று குழந்தைகளும் காத்திருந்தனர் செய்தி அறிந்து ஞாயிற்றுக்கிழமை பிற் பகல்தான் கொழும்பிலிருந்து ஆசிரியையின் கண வரும் சகோதரர் திரு. அருளுசலமும் வர முடிந்தது. மட்டக் களப்பிலேயே சவ அடக்கத்தினைச் செய்தனர்.
*.என் வாழ்வில் இப்படியொரு அவலத்தை, பீதியை நான் அனுபவித்ததில்லை. காற்றுக்கும் மழைக்கும் இடை யில் நாங்கள் பட்ட தவிப்புக் கொஞ்சநஞ்சமல்ல. இப் போது மழை பெய்தால்கூட என் மகன் "ஏன் இன்னமும் சுவர் விழவில்லை" என்று கேட்கிருன். என் குழந்தைகளின் கால்கள் அன்றிரவு குளிரில் விறைத்து விட்டன. பயங்க ரம். என் தந்தை இறந்தபோது என் சகோதரர்களுக்குச் செய்தி அறிவிக்க அதிகாரிகள் பலரின் உதவியை நாடி னேன். எவராலும் உதவ முடியவில்லை. சனிக்கிழமைதான் எஸ். பி. அம்பிகாபதி அவர் கள் செய்தியை அறிவித் தார்கள்.""
திருமதி மங்கையர்க்கரசியின் வீட்டுத் தளபாடங்கள் யாவும் சேதமடைந்துவிட்டன. எதுவும் மிஞ்சவில்லை.
தந்தையை இழந்த அக்குடும்பம் இன்று சோகத்தில் தவிக்கின்றது;
கல்முனை அழிவின் உச்சம்
களுவாஞ்சிக்குடியிலிருந்து கல்முனைக்குச் சென்ருேம். வழியெல்லம் ஊழிக்கூத்தின் அடையாளங்கள் தெரிந்தன. வீதி கடல் நீரால் அரிக்கப்பட்டு குண் டு ங் குழியுமாகக் காட்சி தந்தது. மட்டக்களப்பு நகரத்திலிருந்து ஏறத்தாழ 30 மைல்களுக்கு அப்பால் கல்முனைச் சிறிய நகரம் அமைந் திருக்கின்றது. கல்லாற்றைக்கடந்து சென்ருேம். கல்லாற் றில் வெள்ளம் மேவி நின்றது என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் தெரிந்தன.

12 மணி நேரம் 19
கல்முனை இன்று அம்பாறை மாவட்டத்தின் நிர்வா கத்திற்குள் அடங்குகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அதிக சேதம் எனப் பத்திரி கைகளும், வானெலியும் அடிக்கடி எழுதியதும் அலறியதும் கல்முனையை 18 னதில் கொண்டுதான். ஆஞ ல், நிவாரண உதவிகள் வழங்கும்போது கல்முனை அம்பாறைக்குள் அடங் கியதாகக் கொள்ளப்படாமல், அம்பாறை நகரம் மாத்திரம் கருத்திற் கொள்ளப்பட்டதோ?
கிழக்கு மாகாணத்திலேயே அதிக அளவில் சேதம டைந்த பிரதேசம் கல்முனைத் தொகுதிதான். தி ன பதி கல்முனே நிருபர் ஐ ஞ ப், யூ. ச ம் சு தீனு ட ன் கல்முனை யைச் சுற்றிப் பார்வையிட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட கருத்து இதுதான். தாவரங்கள் எதுவுமே இல்லாமல் கல் முனை அடியோடு அழிந்து பாலைநிலமாகக் காட்சி தந்தது. சிறிய நகரத்தைப் பார்த்துவிட்டு இந்த முடிவிற்கு வர முடியாது. கல்முனைத் தொகுதியில் பசுமை அழிந்திருந்தது. மட்டக்களப்புத் தொகுதியில் கட்டிடங்கள் கூ டு த லா க அழிந்திருந்தன.
கல்முனைத் தொகுதியில் 45000 மக்களுக்குமேல் குரு வளியினுல் பாதிப்புற்றனர். 10000 வீடுகளுக்கு மேல் சேத மடைந்தன. கூரை இழந்த வீடுகள். மரங்கள் விழுந்த தால் சேதமுற்ற வீடுகள். வீதியோரத்தில் நின்றிருந்த பெரிய மின்கம்பங்கள் அப்படியே தூக்கி வீசப்பட்டதா லும், சரிந்ததாலும் நொருங்கிய கட்டிடங்கள் காற்றேடு அள்ளுப்பட்டுச் சென்ற குடிசைகள்.
500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பெரிய இராட்சத ஆலமரங்கள் ஏழு அல்லது எட்டு கல்முனை நகரத் தில் சரிந்து கிடப்பதைக் கண்டோம். அவற்றின் சுற்றளவு ஐம்பது அடிகளுக்கு மேல் இருக்கும். கிளை பரப்பி விழுது விட்ட அம்மரங்களே காற்றிற்கு ஈடு கொடுக்கமுடியாமல் தள்ளாடிச் சரிந்திருக்கும்போது தென்னகள் எம்மாத்தி
ரம்?

Page 62

12 மணி நேரம் 12
விட்டன. மாடிக் கட்டிடங்கள் கொண்ட கல்லூரிகள் தகர்ந்து விழாது தப்பின. நெற்களஞ்சியங்கள் கூரைகளை யும் சுவர்களையும் இழந்து காணப்படுகின்றன.
கல்லூரி விடுதி சரிந்தது
கல்முனைத் தொகுதியில் ஏறத்தாழ 40 பேர் வரையில் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அவற் றிற்பலர் கட்டிடங்களுக்குள் அகப்பட்டு இறந்தவர்களா ளாவர். கல்முனைப் பாத்திமா கல்லூரி விடுதி, குரு வளிக்கு எதிர்த்து நிற்கமுடியாமல் விழுந்து சிதைந்தது. அதில் அகப்பட்டு யோகராசா என்ற மாணவன் மரணமானர். இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய மாணவனைக் காப்பாற்ற எவ்வளவு முயன்றும் முடியவில்லை. A. w
*. நான் ஒரு ஏழை வர்த்தகன். எனக்கு நான்கு பிள் ளைகள். மூத்த மகன் யோகராசா படித்து உத்தியோகம் பெற்று எமது குடும்பத்தைக் காப்பாற்றுவான் எ ன் ற எண்ணத்தில் கல்லூரி வி டு தி யி ல் சேர்த்துவிட்டேன். எனது மகன் விடுதியில் சேர்ந்த மூன்ரு வது நாள் யமனுக வந்த சூரு வளி அவனது உயிரைக் கொ ண் டு சென்று விட்டது." என்று கலங்கி நிற்கிருர், காலஞ்சென்ற யோகராசாவின் தந்தை, திரு. நாகலிங்கம். 32
ஆறு பேர் சமாதி
கல்முனைத் தொகுதியில், நீலாவணைக் கிராமத்தில் உள் ளத்தை உலுக்கும் துர் மரணங்களைச் சூரு வளி ஏற்படுத் திச் சென்றது. நீலாவணையில் பெரிய அரிசி ஆலை அதுதான். ஒப்பந்தத்துக்கு நெல்லைக்குற்றி அரிசியாக்கி நெ ல் சந் தைப்படுத்தும் சபைக்கு வழங்கிவரும் ஆலை அது. அன்றும் லொறியில் அரிசி மூடைகளை ஏற்றி, நெல்சந்தைப்படுத் தும் சபைக்கு அனுப்பும்நாள். அதனல் அந் த மில்லின் இரு முதலாளிகளும், தொழிலாளர்கள் பலரும் ஆலையில் நின்றிருந்தனர். எல்லாமாக 13 பேர் அங்கு நின்றி ருந்தனர்.

Page 63
122 12 மணி நேரம்
மாலையில் காற்றுப் பல மாக வீசத்தொடங்கியதும் அவர்களால் ஆலையைவிட்டு வெளியேறிச் செல்ல முடிய வில்லை. அவர்கள் யாவரும் அங்கேயே இரவு 8 மணி வரை தரித்து நின்றனர். காற்று பலமடைந்தது. கூரை ஆடியது. தகரங்கள் காற்றில் அள்ளுண்டு போயின. காற்று வீசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு நின்றிருந்தவர்க ளில் 7 பேர் தங்கள் வீடுகளின் நிலைக்குப் பயந்து வெளி யில் ஓடிவிட்டார்கள். காற்றுக்கு ஒதுங்கி நின்றவர்கள் அறுவர்தான்,
வேகமாகச் சுழன்றடித்த புயல் அப்படியே ஆலையைச் சரித்துத் தகர்ந்தெறிந்தது. அதற்குள் நின்றிருந்த அறுவ ரும் அப்படியே அதற்குள் நசியுண்டு பலியாகினர். அதில் மரணமான ஒரு முதலாளிக்கு இன்னமும் இரு கிழமைக ளில் விவாகம் நடக்க இருந்தது. அதற்குள் சூ ரு வ விரி அரக்கி முந்திக் கொண்டாள்!
தன் வீட்டின் மீது மரம் ஒன்று விழுந்து நொருங்கியதால், அவ்வீட்டைவிட்டு அவர் வெளியில் ஒடிஞர். வழி யி ல் மரம் தடுக்கி அப்படியே குப்புற விழுந்தார். கடற்கரை யோரம், அவரை அப்படியே மண் மூடிவிட்டது. இறந்த வர் திரு. ஜனுப் சத்தார் என்பவராவார்.
குரு வளிக்காற்றினல் கரையோரக் குடிசைகள் யாவும் கடற்கரைவாழ் மக்கள் தவித்தனர். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி கொட்டும் ம  ைழ யி ல் நின்றபோது காற்று, மணலால் அவர்களை இடுப்புவரை மூடியது. குழந் தைகள் மணலால் மூடப்படுவதைக்கண்ட பெற்ருர் கதறிய வண்ணம், மணலைக் கைகளால் தள்ளிவிட்டுக் கொண்டி ருந்தனர்.
சம்மாந்துறையில் புயல் தாக்கி நான்கு பேர் மரண மடைத்தனர்,

12 மணி நேரம் 23
காரைதீவு கணேசன் மில்
சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, சொரிகல்முனை முதலான கிராமங்கள் எல்லாம் கூரு வளியின் அனர்த்தங் களைக் கொண்டிருக்கின்றன. சரிந்து கிடக்கும் தென்னை களும் கூரைகளற்ற வீடுகளும் எங்கும் பொதுக் காட்சி, ஒவ்வொரு வீடும் வளவும் சூரு வளியின் அசுரத்தனமான தாக்குதலுக்குள்ளாகி வெறிச்சோடிக்கிடக்கின்றன. மக் கள் எல்லாவற்றையும் இழந்தவர்களாகச் சோகத்துடன் காணப்பட்டனர். சிலரின் முகங்களில் விரக்தி அ ப் பி க் கிடந்தது. இனி என்ன கிடக்கிறது?
காரைதீவு வயல்கள் எ ல் லா ம் வெள்ளக்காடாகக் கிடந்தன. வயல்வெளிகள் வாவிபோலத் தெரிந்த ன: நனையாவருட்டிக்கொடி படர்ந்து கிடந்தது. காரைதீவில் சிலசில இடங்களில் ரிபன் வடிவில் தென்னைமரங்கள் எஞ்சி யிருந்தன. காரைதீவுக் கணேசன்மில்லை, அடுத்துக் காணப் படும் முருகன் கோயில் தென் னை ம ரங் கள் உயர்ந்து நின்றிருந்தன.
பூரீ கணேசன் மில் லின் கூரைத்தகரங்கள் காற்றினல் அள்ளிச் செல்லப்பட்டுவிட்டன. அந்த அ ரி சி ஆலையின் கூரை விட்டங்கள் எலும்புக்கூடாகக் கர்ட்சி தந்தன. அந்த வளவில் நின்றிருந்த தென்னைமரங்கள் யாவும் ச ரி ந் து கிடந்தன.
நெற்சந்தைப்படுத்தும் சபைக்குரிய ஏறத்தாழ 800 மூடை அரிசி, அப்படியே வெள்ளத்துள் நனைந்துபோனது. கூரை அள்ளுப்பட்டதும் மில்லின் அறையொன்றிற்குள் குவித்திருந்த அரிசி முழுவதும் அ ப் படி யே மழைநீரில் a.apiGuntusor.
பூgரீ கணேசன் மில்லின் உரிமையாளர் திரு. பி. சிதம்பர நாதனும், மில்லின் மனேச்சர் திரு. சிவானந்தமும் எங்க ளுக்கு மிகவும் உதவியாக இருந்தனர். திரு சிதம்பரநாதன் எங்களைத் தன் காரில் அழைத்துச் சென்று, சூரு வளியின் கோரத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கிராமங்களைக்

Page 64
12: li 2 Deroof) நேரம்
காட்டினர். சூடுகாடாகச் சீரழிந்து கிடக்கும் இடங்களை யும்; விரக்தியின் எல்லைக்கே தள்ளப்பட்டிருக்கும் மக்களை யும் காட்டினர்
கல்முனை தாஜ்மகால் தியேட்டர் இ டி ந் து விழுந்த போது, அதற்குள் அகப்பட்டு நான்குபேர் பரிதாபமாக நசியுண்டு செத்த நிகழ்ச்சியையும் கவலையுடன் தெரிவித் தார். இலட்சக்கணக்கான ரூபா செலவில் கட்டிமுடிக்கப் பட்ட அரிசி ஆலைகள் தரைமட்டமாகிக் கிடப்பதையும் காட்டினர். கற்குவியல்களும், மரங்களுமாக அக்கிராமங் கள் காட்சி தந்தன.
சூருவளி ஓய்ந்த அடுத்தநாள் காரைதீவு மக்களுக்கு, மி ல் லி லி ரு ந் த அ ரி சி முழுவதையும் நிவாரணமாக திரு. சிதம்பரநாதன் அள்ளி வழங்கிய பெருந்தன்மையைக் காரைதீவு மக்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.
நிந்தாவூரில்
குரு வளியினல் நிந்தாவூர் நகரமே நிர்மூலமானது,
" . காற்று சீறத்தொடங்கியது. பல்லாண்டு காலம் வேரூன்றிப் பலம் பெற்றிருந்த மரங்கள் எல்லாம் மரண அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்க, நிந்தாவூர்க்கடைகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து பல நூறு யார் தொலை யில் விழத்தொடங்கின. நிந்தாவூர் பஜாரின் பல கடைக ளின் கூரைகள் படபடவென விழத்தொடங்க, அக்கடை களில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் நாலா திக்குகளிலும் சிதறி ஓடத்தலைப்பட்டனர். காற்றின் உறும்ஸ் ஏதோ யந் திரம் ஒன்றின் இயக்க ஒலி போலக் கேட்டது. திடீர்திடீ ரென மரங்களும் வீடுகளும் மதில்களும் விழும் சத்தங்கள் அருகில் கேட்டவண்ணமிருந்தன".38
ஆயிரக்கணக்கான வீடுகள், அரசாங்கக் கட்டிடங்கள், தனியார்கட்டிடங்கள் என்பன நிந்தாவூரில் சூரு வளியால் அழிக்கப்பட்டன.

12 மணி நேரம் 125
நிந்தாவூர் அரசாங்க வைத்தியசாலை இடிந்து விழுந் தது. நல்லவேளையாக குழுவளி வீசத்தொடங்கியதும் அங் கிருந் நோயாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்.
நிந்தாவூரிலிருந்து அக்கரைப்பற்று மட்டும் குருவளிச் சேதங்கள் காணப்பட்டன. மட்டக்களப்பிலிருந்து நோக் கும்போது, கல்முனையைத் தாண்டியதும் சூ ரு வளி யின் சேதங்கள் ஒப்பளவில் குறையத் தொடங்குகின்றன. அக் கரைப்பற்று அவ்வளவு தூரம் சூரு வளியினல் பாதிப்புற வில்லை. இப்பிரதேசம் சூருவளியின் வெளிவளையத்திற்குள் அடங்கியதால்தான் இப்பகுதிகளில் சேதாரம் ஏனைய பிர தேசங்களிலும் மிகக்குறைவு.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோயில் பொத்துவில், அம்பாறை, இங்கினியக்கல, இறக்காமம் முத லான கிராமங்களுக்கும் சென்று பார்த்தோம். இக்கிரா மங்களில் குருவளியின் தாக்கங்கள் தெரிந்தன. வெள்ளப் பெருக்கும் தெரிந்தது. கல்முனைக்கு வடக்கே வாகரைவரை தெரிந்த பயங்கரச் சேதாரங்கள் தெரியவில்லை. மரங்கள் சரிந்திருக்கின்றன. குடிசைகள் தரைமட்டமாகியிருக்கின் றன. அம்பாறையில் பொலிசாரின் விடுதிகள் சேதமுற் றிருக்கின்றன. கூரைகள் அடித்துச் செல்லப்புட்டிருக்கின் றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனைக்கு அடுத்த தர் கப் பெரும் சேதத்திற்குள்ளாகியது சேனைக்குடியிருப்பு எனப்படும் கிராமமாகும். 470 குடும்பங்களைக்கொண்ட சேனைக்குடியிருப்பு எனுங் கிராமம் முற்ருக அழிந்துவிட் டது. குடிசைகள், மரங்கள் யாவும் சூறையின் கோரப் பசிக்கு இரையாகிவிட்டன.
நாங்கள் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பும் போதும் மன்னம்பிட்டி வெள்ளப்பெருக்கிற்குட்பட்டதால் அந்தப்பாதை வாகனப் போக்குவரத்திற்கு உகந்ததாக தக்கவில்லை. அதனல் கண்டிக்குவந்து யாழ்ப்பாணம் வர நேர்ந்தது. அவ்வேளை அம் பா  ைற மாவட்டத்திற்குள் அடங்கும் அம்மாவட்டத்தின் வடகிராமங்களூடாக வர

Page 65
126 12 மணி நேரம்
நேர்ந்தது. மகாஜியா, பதியத்தலாவ பகுதிகளில் சூரு வளி யின் தாக்கங்கள் தெரிந்தன. தேக்கமரக்காடுகள் முறிந் தும் விழுந்தும் சீரழிந்திருந்தன. குடிசைகள் விழுந்து தரை மட்டமாகியிருந்தன.ஒரு குடும்பம் ஒரு பக்கம் சரிந்த குடி சைக்குள் பரிதாபமாக வாழ்வதையும் கண்டோம்.
வழிநெடுகிலும் காணப்பட்ட அரசாங்கக் கட்டிடங் கள் கூரைகளின் நிக் காணப்பட்டன.
கால்நடைகள் அழிந்தன
கிழக்கு மாகாணத்தில் இரு ந் த லட்சக்கணக்கான கால்நடைகள் குருவளியினலும், வெள்ளப்பெருக்கினலும் அழிந்துவிட்டன. எல்லாக் கிராமங்களிலும் கால்நடை கள் இறந்து புதைக்கப்படாது கிடந்தன. மட்டக்களப்பு வாவியில் ஏராளமானவை மிதந்து கிடந்த” துர்நாற் றம் கிழக்கு மாகாணத்தின் எல்லாக் கிராமங்களிலும் பரவி யது. காகங்கள் இறந்த மாடுகளையும் ஆடுகளையும் எருமை களையும் கொத்தித் தின்கின்ற காட்சி பொதுக்காட்சியாகத் தெரிந்தது.
இச்சூரு வளியினல் கிழக்கு) மாகாணத்திலுள்ள பறவை யினங்கள் முற்ருக அழிந்துள்ளன என தேசிய வனவிலங் குப் பாதுகாப்புத் தலைவர் திரு. ரி. டபிள்யூ ஹொப்மன் தெரிவித்திருக்கிறர். கிழக்கு மாகாணத்தில் வீசிய கடுங் காற்ருல் பறவைகள் அள்ளுண்டு சென்றுவிட்டன. கோழி ஆள் ஏராளமாக மடிந்துவிட்டன மட்டக்களப்பு வாவியில் கோழிகள் திரள் திரளாகச் செத்து மிதந்தன
பட்டிலிருப்பிலிருந்து பெரியபோரதீவிற்கு நாங்கள் பய ணம் செய்தபோது, காகங்கள். கிளிகள் முதலிய பறவை கள் தங்குவதற்குப் பெரிய மரங்களும் நிழலும் இல்லா மையினல் சிறிய கடலேறிப்பற்றைகளும் மிகத் தாழ்வாகி அமர்ந்து இருப்பதைக்கண்டோம்.

12 மணி நேரம் 127
மட்டக்களப்புக் காடுகளில் வெள்ளத்திற்குள் சிக்கிக் கொண்ட 150 மேற்பட்ட காட்டு யானைகள், வெளியேற முடியாமல் தத்தளிப்பதாக மட்டக்களப்பு எஸ். பி. திரு. அம்பிகாபதி தெரிவித்தார். அத்துடன் குரு வளிக்குப் பின் னர் கிழக்கில் அநேக இடங்களில் யானைகளின் தொல்லை களும் காணப்பட்டன. மருதமுனை, ஒத்தாச்சிமடம் ஆகிய கிராமங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள் ளன. "வீக் என்ட்" பத்திரிகை நிருபர் விமான மூலம் குழு வளி அழிவுகளைப் பார்வையிட்டபோது, வாழச்சேனைக்கு அருகில் யானையொன்று சேற்றிற்குள் அகப்பட்டுத் தவித் ததைக் கண் டார். குருவளியினலும் வெள்ளத்தினுலும் பாதிக்கப்பட்ட புகையிரதப்பாதையைப் பரிசீலனை செய் வதற்காகச் சென்ற றெயில்வேப் பொறியியலாளர் ஒரு வர் கல்லோ யாச் சந்திக்கும் திருகோணமலைக்கும் இடை யில் யானைகளால் தாக்கப்பட்டார்.
பொலநறுவை மா வட் ட அரசாங்கக் கால்நடைப் பண்ணையில் 650 க ற  ைவ ப் பசுக்களும், எருமைகளும் அழிந்துபோயின. காண்டாக்காடு, வெலிகந்த அரசாங்கப் பண்ணைகளிலும் ஏராளமான கால்நடைகள் அழிந்தொழிந் தன. கட்டுவன் வில, அலிஞ்சிப்பத்தாளை, பிம்புரத்தேவ. சொறிவில் ஆகிய கிராமங்களில் காணப்பட்ட கால்நடை கள் அனைத்தும் மகாவலிகங்கைப் பெருக்கெடுப்பினுல் கங் கையில் அள்ளிச் செல்லப்பட்டன,
சூறவளிக் கொள்ளைகள்
கிழக்கு மாகாணத்தில் சூரு வளி வீசி ஓய்ந்ததன் பின் னர் நிகழ்ந்த அனர்த்தங்களில் ஒன்று, கொள்ளைகளா கும். இரண்டு கார ணங்களுக்காக இப்பிரதேசத்தில், நெல் சந்தைப் படுத்தும் களஞ்சியங்களும் பல நோக்குக் கூட்டு றவுச் சங்கக்கடைகளும் கொள்ளையிட Att's 6- 6th Us Øဓါးခ27?l:J#;ခိ###က္ကိုန်းနှီစိမ့် ဓါခီ၏အ## உடைந்
10-LD. Cops.

Page 66
128 i 2 u Grafi நேரம்
திருந்த கனஞ்சியங்களிலிருந்தும் சங்கக்கடைகளிலிருந்தும் உணவுப்பொருட்களைத் திருடினர்கள். மற்ற து உண்மை யில் கொள்ளையிடும் நோக்கத்துடன், ஏராளமாக நிகழ்ந்த களவுகள்,
வீடு வாசல் சொத்துச்சுகம் எல்லாவற்றையும் இரவோ டிரவாக இழந்து நிர்க்கதியாகத் தவித்த மக்கள் பசியால் பரதவித்தனர். குழந்தைகள் அலறின. பசி கொடுரமாகத் தாக்கியது. சூரு வளி தாக்கியது பே) தாதென்று வயிற்றுப் பசி மக்களை வதைக்கத் தொடங்கிய வேளையில்தான் மக் கள் உடைந்திருந்த களஞ்சியங்களிலிருந்து உணவுப்பொ ருட்களை எடுத்துச் செல்லத்தலைப்பட்டனர்.
சமூகவிரோதிகள் இக்களஞ்சியங்களிலிருந்து றக்ரர்கள் மூலம் நெல்மூடைகளையும் பொருட்களையும் கடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடிந்து நொருங்கிக்கிடந்த வீடுகளிலிருந்து பெறுமதி மிக்க பொருட்கள் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட் டன. நகைகள், றேடியோக்கள் என்பன களவாடப்பட் டன. மட்டக்களப்புச் சாராயக்குதம் கொள்ளையடிக்கப் பட்டது. ஏராளமான சாராயப் போத்தல்கள் சாராயத் துடன் கொள்ளையடிக்கப்பட்டன. உணவுக்காகத்தான் மக் கள் பரதவித்தார்கள். சிலர் சாராயத்துக்காகவும் பரத வித்திருக்கிருர்கள்!
நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குழு வளி அழிவுகளைப் பார்த்துக்கொண்டு வருமபோது கல்முனையில், ஒரு மைல் நீளத்திற்கு ஒரு கியூ நின்றிருந்தது. நிவாரணப் பொருட் களைப் பெறுவதற்காக மக்கள் வெயிலில் நிற்கிருர்கள் என்று எண்ணினுேம், நெருங் கி விசாரித்தபோதுதான் தெரிந்தது, அது நிவாரணக்கியூ அல்ல; சாராயத் தவறண யில் சாராயம் வாங்குவதற்காக நிற்கின்ற கியூ என்று. வீட்டில் பசியால் வயிறெரியக் குடும்பம் தவிக்க, இங்கு சாராயத்தை ஊற்றி வயிற்றை எரிக்க நின்றிருந்தார்கள் இவ்விடயத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்றப் பிரதி நிதி திரு. செ. இராசதுரை எடுத்த தீர்க்கமான ஒரு முடி

12 மணி நேரம் 29
வைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ம்ட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சாராயத் தவறணைகளை மூடி விடுட்படி அவர் வற்புறுத்தியதன் பேரில், மூன்று மாதங் களுக்கு எல்லாச் சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன: வதுளையிலிருந்து சாராயப் போத்தல்களை பஸ் ஸி ல் கடத்தி வந்து வியாபாரம் செய்யப்பார்த்த ஒரு பஸ் கொண்டக்டர், பரிசோதகர்களால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு வேலை இழந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக் م التي 35ك
செங்கலடியில் இருந்த பலநோக்கக்கூட்டுறவுச் சங்கக் கிளை, பட்டப்பகலில், வெள்ளிக்கிழமை உடைத்து மக்க ளால் கொள்ளையடிக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடியிலுள்ள பலநோக்கக் கூட்டுறவுச் சங்க மாதிரிக்கட்ையும், ஒந்தாச்சி மடத்திலுள்ள நெற்களஞ்சியமும் கொள்ளையடிக்கப்பட் டன, ஏருவூர் நெற்களஞ்சியமும் கொள்ளையரால் சூறை tuit Llull-gil.
கல்முனைத் தொகுதியிலுள்ள கிராமிய வங்கியொன் றும், நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியமொன் றும் கொள்ளையடிக்கப்பட்டன. மட்டக்களப்புப் பகுதி யில் தங்கள் கூட்டுறவுக் கடைகளைத் தாமே கொள்ளை யிட்ட அச்சங்கக் கடைகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். கொள் ளையர்மேல் பழிபோட இவர்கள் எடுத்த முயற்சிகள் தடை பட்டன.
சூரு வளி இவர்களுக்கு உதவியது போதாதா? எத்தனை பலநோக்கக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்களுக்கு இச் சூருவளி உதவியிருக்கின்றது? எத்தனை நெல்சந்தைப்படுத் தும் சபை ஸ்ரோர் கீப்பர்களுக்கு இந்தச் சூழு வளி உதவி யிருக்கின்றது? அவர்களுக்கிருந்த "சோட்டேஜ்" பிரச்சினை களையெல்லாம் இச்சூரு வளி சரிக்கட்டிவிட்டது போதாதா? வவுணதீவு உதவி அரசாங்க அதி பர் அலுவலகம் குரு வளியினல் அப்படியே விழுந்து தரைமட்டமாகியது. அன்றிரவு அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்துக்

Page 67
130 12 மணி நேரம்
கொள்ளையர் அதிலிருந்து 1000 ரூபாவுக்குமேல் களவாடி விட்டனர்; அங்கிருந்த ஒரு துப்பாக்கியும் அவர்களால் களவாடி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வவுணதீவு நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான களஞ்சியம் தகர்ந்ததால், ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகள் மக்களினல் தூக்கிச் செல்லப்பட்டதுடன், ஒரு சிலரால் கொள்ளையடிக்கவும்பட்டன. மண்டபத்தடிக் களஞ்சியத்திலிருந்த 15000 நெல் மூடைகள் சூறையாடப் ... --- 658
கன்னன்குடா பலந்ோக்கக்கூட்டுறவுச் சங்கம் கொள் ளேயரால் உடைக்கப்பட்டு, அங்கிருந்த உணவுப் பொருட் களும் விவசாயப் பாவனைப் பொருட்களும் கொள்ளைய ரால் எடுத்துச் செல்லப்பட்டன.
கரடியனுறு நெற்களஞ்சியத்திலிருந்து பலநூறு நெல் மூடைகள் திருடப்பட்டன. வந்தாறுமூலைப் பாடசாலையில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகளும் திருடர்களால் எடுத் துச் செல்லப்பட்டன.
சாதாரண மக்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனர் என்று சொல்வது தவறு. உடைந்து கிடந்த களஞ்சியங் களிலிருந்தும், கூட்டுறவுக் கடைகளிலிருந்தும் தமது உண வுத்தேவைக்காக அவர்கள் சில பொருட்களைத் தூக்கிச் சென்றனர். ஆனல், சில பெரும் புள்ளிகள் தங்கள் றக்ரர் களைக் களஞ்சியங்களுக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்தி, மூடை மூடைகளாக நெல்லைக் கொள்ளையிட்டிருக்கிறனர். அப்படிக் கொள்ளையடிக்கப்பட்ட நெல் மூடைகள் றக்ரரு டன் பொலிசாரினல் பிடிக்கப்பட்டிருக்கின்றன. நெ ல் மூடைகள் ஏற்றப்பட்ட மூன்று றக்ரர்கள் பிடிக்கப்பட்டு மட்டக்களப்புப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குருவளியின் போது கொள்ளைச்சம்பவங்கள் அதிக அள வில் நிகழ்ந்தமைக்கு இரு காரணங்கள் சாதகமாக இருந் திருக்கின்றன. ஒன்று குழுவளியினுல் கூரைகளும் சுவர்க ளும் இழந்த களஞ்சியங்களும், கூட்டுறவுக் கடைகளும் மக் களைக் கவர்ந்திழுத்தன. பசி வேறு தூண்டியது. முதலில் தேவைக்கு எடுத்துப் பின் னர் பதுக்கவும் எடுத்தனர்.

12 மணி நேரம் 131
கொள்ளைகள் அதிக அளவில் நடந்தமைக்கு இன்னுெரு காரணம்: வீதிகள் எல்லாம் மரங்களினுல் மூடப்பட்டுப் போக்குவரத்துக்கு உகந்தனவாக இருக்கவில்லை. அதனல் பொலிசார் கொள்ளை நடந்த இடங்களுக்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை.
குருவளிக் கொள்ளையின் போதும் பின்னரும் பொலி சாரினல் 50 பேர் வரையில் கை து செய்யப்பட்டிருக்கின் றனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. ஆர். சுந்தர லிங்கம் தெரிவித்துள்ளார். 11 இலட்சம் ரூபா பெறுமதி யான களவுப்பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிருர் கொள்ளைபோன பொருட்கள் பல கோடி ரூபாக்களாக இருக்கும்3
மட்டக்களப்பிலுள்ள ஒரு பாடசாலையின் த லை  ைம ஆசிரியர், கொள்ளைபோன பொருட்களை வைத் தி ரு ந் த மைக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின் ருர், களவு போன அஸ்பெஸ்டஸ் சீற்றுகளை அவர் வைத்திருந்தார். என்பதற் காக அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆசை அளவுக்கு மீறிக் கொள்ளைகள் ந ட ந் த ன. ஆசைக்கு அடிமையாகிய ஒரு போடியார், குருவளி தாக் கிய இரவன்று, தனிவீட்டில் தன் பதின்மூன்று வயதுஆசை நாயகியுடன் இரவைக் கழித்தார். ஏழு பிள்ளைகளுக்குத் தந்தை இவர். சுழன்றடித்த குரு வளி வீட்டின் சுவரைச் சரித்து இவ்விரு வரையும் அப்படியே பலிகொண்டது
சூருவளியின் பயணம் .
மட்டக்களப்பு, அம் பா  ைற மாவட்டங்களில் பசு
மையே இல்லாமல் அழித்துவிட்டு, மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த வதிவிடங்களை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு, விரக்தியும் பீதியும் நிறைந்த அவலநிலைக்கு மக் களைத் தள்ளிவிட்டுச் சூரு வளி அரக்கன், மன்னரை நோக் கிப் பயணமானன். இலங்கையின் மத்திய மலைநாட்டின் கிழக்குத் தடைத்தாக்கம், மேற்கு நோக்கி வந்த குரு வளியை, வடமேற்காகத் திருப்பிவிட்டது,

Page 68
32 12 மணி நேரம்
அத்திசையில் குறுக்கிட்ட பிரதேசங்களில் அவ ன் ஊழிக்கூத்து ஆரம்பமானது.
குழு வளியின் வட பக்க வெளி வளையம், திருகோண மலைப்பிரதேசத்திலும் தன் பயங்கரச் சேதத்தை நிலைநாட் டியது. திருகோணமலை நகரில் பலத்த சேதம் ஏற்பட்டது கச்சேரி, பொலிஸ் நிலையம் என்பனவும் 30க்கு அதிகமான கட்டிடங்களும் சேதமடைந்தன பல குடிசைகள் சரிந்தன. சிரிபுர, தேனுகடலூர், பதக்கை ஆகிய பகுதிகளில் இருந்த மீன் வாடிகள் யாவும் கடலால் அள்ளிச் செல்லப்பட்டன. குச்சவெளியில் பொலிசாரின் வீடுகள் சேதமடைந்தன. குச்சவெளிப்பகுதியில் சுமார் 900 குடும்பங்கள் சூரு வளி யால் வீடிழந்து பாதிப்புற்றன. இப்பிரதேசத்தில் அன் றையதினம் கடலலை 20 அடிகளுக்கு மேல் உயர்ந்துபொங் கியது. மூதூரிலும் குருவளியால் ஆயிரம் வீடுகளுக்குமேல் சேதமடைந்தன. கிண்ணியாப் பகுதியிலும் பலநூறு குடும் பங்கள் வீடுகளை இழந்தன.
பொலநறுவையில் .
பொலநறுவை மாவட்டத்தில் மாணிக்க்ம்பிட்டி, கட் டுவன் வல, மன்னம்பிட்டி, பிம்புரத்தேவ, கதருவெல முதலான பிரதேசங்கள் சூரு வளியின் அனர்த்தங்களுக்குட் பட்டன. இப்பிரதேசங்களிலிருந்த வீடுகள் தரைமட்ட மாகிவிட்டன. மரங்கள் பலவும் அடியோடு சரிந்து விழுந் தின கல்லல, மாணிக்கம்பிட்டி, ஒனுகம பகுதி க რf) *G வெள்ளப் பெருக்கும் குருவளியின்போது ஏற்பட்டது. இப் பகுதி மக்கள் தம் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங் களில் குடியேறினர். பலுகஸ்தமன மகாவித்தியாலயம், பொலநறுவை முஸ்லீம் மகாவித்தியாலயம், முதலான பல பாடசாலைக் கட்டிடங்கள் இப்பிரதேசத்திலும் விழுந்து உ  ை- ந் து தரைமட்டமாகியிருக்கின்றன. தம் பாளை யில் பெரியதொரு பாலைமரம் வீடு ஒன்றின் மீது சரிந்தது. அதல்ை இடிந்து விழுந்த வீட்டிற்குள் அகப்பட்டு, ஒருவர் மரணமானர்

12 மணி நேரம் 13
** மகாவலிகங்கைப் பிரதேசத்தில் அடர்காட்டுப் பகுதியில் அமைதியான ஒரு கிராமம் தீவுச்சேனை ஆகும். இக்கிராமம் குரு வளியால் விழுந்த மரங்களால் முற்ருக மூடப்பட்டது. கிராம வீடுகள் யாவும் தரைமட்டமாகின. எட்டுத் தினங்களாக வெளியில் எங்குமே செல்லமுடியாத நிலையில் தீவுச்சேனை மக்கள் பரிதவித்தனர்."84
".புயல் வீசி முடிந்தகாலை, வீதியெங்கும் வரிசையாக மரங்கள் விழுந்து கிடந்தன. அந்தப்பகுதியிலுள்ள எல்லா வீடுகளும் முழுமையாக அல்லது பகுதியாக கூரை இழந்து
களும் முற்ற கச் சரிந்திருந்தன. ஆட்கள் நனைந்த கோலத் தில் பொருட்களை மீட்டுக்கொண்டிருந்தனர். பெண்களும் குழந்தைகளும் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த காட்சி பரிதாபமாக இருந்தது. பராக்கிரமசமுத்திரம் உடைப் பெடுத்துப் பெருகத் தயாராக இருந்தது. தாழ்ந்த பகுதி யில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் நடந்தன. பொலநறுவையில் மட்டும் பத்துப்பேருக்கு மேல் மரணமாயினர். 35
சிலாபத்தில்
பொலநறுவையிலிருந்து விரைந்த குரு வளி மாத்தளை யிலும் தாக்கியது. கடுங்காற்றினலும் மழையாலும் பல இடங்களும் பாதிப்புற்றன. கழுதாவளையில் சுழன்றடித்த குரு வளி, குடிசைகளை அப்படியே வானில் தூக்கிச் சென்
காற்று அப்படியே தூக்கிச் சென்றது. குடிசைகளின் வளை யில் கட்டியிருந்த ஏணையில் துங்கிக்கொண்டிருந்த குழந்  ைத  ைய யும் குரு வ வி அ ப் படி யே தூக்கிச்சென் றது. தூக்கிச் சென்று அப்படியே வீசிவிட்டது. தெய்வா தீனமாகக் குழந்தை எதுவிதகாயமும் இன்றித் தப்பியது. புத்தளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 45 யந்திரப் படகுகள், சூருவளியினல் அப்படியே கடலுடன் அள்ளிச் செல்லப்பட்டன,

Page 69
134 12 மணி நேரம்
குழு வளியின் போது முன்னேஸ்வரம் குளம் உடைப் பெடுத்துக் கொண்டது. டொலிசார் படகுகளில் சென்று வெள்ளத்தில் மூழ்கிய மக்களைக் காப்பாற்ற நேர்ந்தது. கெக்கிராவையில் சூருவளி சேதங்களை ஏற்படுத்தியுள்ளது? இப்பிரதேசத்தில் கொரசகல்ல் என்ற கி ரா ம த் தி ல்" வீடொன்றின் சுவர் சரிந்ததால் விளையாடிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகளில் இர ண் டு அவ்விடத்திலேயே கொல்லப்பட்டன. மற்ற இரு குழந்தைகளும், அக்குழந் தைகளைக் காப்பாற்ற முயன்று சு வ ரு ஸ் அகப்பட்ட திரு எம். அபயரத்னவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிலாபத்தில் வெள்ளப்பெருக்கின்போது பலகுடும்பங் கள் மரங்களில் ஏறி இருந்து தங்களைக்காப்பாற்றிக் கொண் டன. அவர்களின் வீடு, சொத்து அத் த னை  ைய யும் வெள்ளம் வாரி எடுத்துச் சென்றுவிட்டது.
மன்னுரில்
நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட் டத்தில் வீசிய குருவளி, 24 ஆம் திகதி காலை 10 மணி யளவில் மன்னரைக் கடந்தது. அதற்குள் சே த ங் களை மன்னரில் உருவாக்கிவிட்டு சமுத்திரத்தில் பிரவேசித்து தென்னிந்தியாவை நோக்கிச் செ ன் றது. தலைமன்னர், சிலாபத்துறை, அரிப்பு, உயிலங்குளம், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் இச்சூரு வளியால் பெரும் சேதத்திற்குள்ளா கின. மன்னர் நகரத்தில் பொலிஸ் நிலையம், கூட்டுறவுப் பண்டகசாலை, புகையிரத நிலையம் என்பனவற்றின் கரை கள் காற்றினுல் அள்ளிச்செல்லப்பட்டன. வாழை, தென்னை மரங்களுடன், மின்கம் பங்களும் தொலைபேசிக் கம்பங்க ளும் சரிந்தும் முறிந்தும் கிடக்கின்றன. மன்னர் ஆஸ்பந் திரியில் சில கட்டிடங்கள் சேதமுற்றன
மன்னுர் பிரதேசத்தில் குருவளியினல் மூ ன் று பேர் மரணமானர்கள்.

12 dsfl Gförið 135
தென்னிந்தியாவுள் புகுந்தது
மன்னரில் சேதங்களை நடாத்திய சூரு வளி, அதேநாள் பாக்குத்தொடுகடலைக் கடந்து தென்னிந்தியாவில் பிரவே சித்தது .அதனல் தமிழ் நாட்டில் 45 கிராமங்கள் வெள் ளத்துள் மூழ்கின.முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. ஆணு ல், பாம்பனுக்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆயிரக்கணக்காஞேர் வீடிழந் தார்கள். கரையோரப்பகுதிகளில் 10 அடிகள் வரை கட லலை பொங்கி எழுந்தது. அதனல், அறந்தாங்கியில் மூவர் உயிரிழந்தனர். இச் சூருவளி அப்படியே வடமேற்காகப் பயணப்பட்டு, பம்பாய்க்கு வடக்கே சென்று கட்ச் குடா வில் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அழிந்துபோனது.
ஆம், குரு வளி அரக்கன் அழிந்தான்! நவம்பர் மாதம் 18 ஆம் திகதி, நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கே தோற் றும் பெற்று, நவம்பர் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத் தைத் தரை மட்டமாக்கிய கொடிய அரக்கன், 30 ஆம் திகதி, பன்னிரண்டு நாட்களின் பின்னர் அராபிக்கடலில் அழிவுற்ருன். அவன் ஏற்படுத்திவிட்ட அழிவுகள் இ ன் ன மும் 50 வருடங்களுக்கும் கி ழ க்கு மாகாணத்திலிருந்து மறையப்போவதில்லை.
கிழக்கு மாகாணத்தில் வீடிழத்த மக்கள் சொத்துக் களை இழந்த மக்கள்.உற்ருர் பிள்ளைகள் ம ன வி ஆகி யோரைப் பலி கொடுத்த மக்கள் பசிக்கும் நோய்க்கும் தங்குமிட வசதியின்றியும் பரதவித்து வா டு ம் மக்கள்.
இவர்களுக்குப் பழைய வர்ழ்வு என்று கிட்டப்போ கின்றது?
அழிவின் மதிப்பு
பிரதமர் திருஆர். பிரேமதாசாவினல் நியமிக்கப்பட்ட குருவளி சேத மதிப்பீட்டுக்குழு த னது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இக் குழுவின் அறிக்கையை உள்ளூராட்சி, வீடமைப்பு நிர்ணமானத்துறை அமைச்சின் ழே லதி கச்

Page 70
136 12 மணி நேரம்
செ ய ல |ா ளர் திரு. கே. ஜே. எச். பியதாச பிரதமரிடம் சமர்ப்பித்தார்;
சூருவளியினல் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட் டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை மாவட் டங்களாகும் மட்டக்களப்பு மாவட்டமே குரு வளியினல் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட் டத்தில் ஏறத்தாழ 50,000 வீடுகள் முற்ரு கச் சேதமடைந் தன. 10,000 வீடுகளுக்குக் கரைகளில்லை. 17 நெற்களஞ் சியங்களும், 20 மருத்துவ மனைகளும், 182 கூட்டுறவுக் கடைகளும், சில சினிமாத் தியேட்டர்களும் குருவளியினுல் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரிசி ஆலைகள் தகர்ந்துள்ளன: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 239 பாடசாலைகள் யாவும் சூரு வளியினல் சேதமடைந்துள்ளன. அவற்றில், 130 பாடசாலைகள் பெரும்சேதத்திற் குள்ளாகிவிட்டன; சில தரைமட்டமாகிவிட்டன, 52,000 மாணவர்கள் இத ஞல் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள பாடசாலைகளுக்கு ஏற்பட்ட ந ட் டம் ஏறத்தாழ
கல்வி அதி கா ரி திரு. எஸ் சற்குணராஜா தெரிவித் துள்ளார்.
பட), வீடுகள் அழிவில் 5 கோடி ரூபாய்களும், மருத்துவ மனைகள் சேதமடைந்ததில் 9 இலட்சம் ரூபாய்களும், அர
களும் ந ட் டம் ஏற்பட்டிருக்கின்றன. உரக் களஞ்சியங்க ளுக்கு 5 இலட்சமூபாய்களும், பாடசாலைகளுக்கு 20 இலட்ச ரூபாய்களும், ஏனைய கட்டிடங்களுக்கு 32 இலட்சரூபாய்க ளும் நட்டமேற்பட்டிருக்கின்றன.
பொலநறுவை மாவட்டத்தில் 10,000 வீடுகள் முழு மையாகயும், 25,000 வீ டு கள் சிறிதளவிலும் குரு வளி யினுல் சேதமடைந்திருக்கின்றன. இம்மாவட்டத்தில் 80 அரிசி ஆலைகள், 56 அரசாங்கக்கட்டிடங்கள், 112 பாட சாலைகள், 40 நெல்-உரக்களஞ்சியங்கள் எ ன் பன சேத முடைந்திருக்கின்றன.

Í2 'nssafl (ðsöfríð 137
உடனடித் தேவைகள்
வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் குருவளி அரக் கன், கிழக்கு மாகாணத்திலிருந்து விடைபெற்றன். அவன் 60,000 குடும்பங்களை அகதிகளாக்கிவிட்டு சென்றுவிட் டான். அவர்கள் அகதிகளாகி, மற்றவர்களிடம் கையேந் தும் அவல நிலைக்கு உள்ளாக்கிவிட்டான். அவர்கள் பர தவித்தனர். அவர்களுக்கு உடனடித் தேவையாக- உணவு, உடை, வதிவிடம், மருத்துவ வசதி என்பனவே தேவைப் பட்டன. வீடு, வாசல், சொத்துச் சுகம் யாவற்றையும் இழந்த மக்கள் ஒரு வேளை உணவுக்காகவும், ஒதுங்க ஒரு உறைவிடத்துக்காகவும் தவிக்கவேண்டிய நிலைக்குத் தள் ளப்பட்டனர்.
* ஆடைகளற்ற அலங்கோல நிலையில் வெட்கம் என் பதை மறந்தவர்களாகப் பெண்களும் பிள் ளை க ளு ம் **சாப்பாடு சாப்பர்டு" எனக் கூக்குரலிட்ட வண்ணம் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். உடுதுணி எதுவுமற்று இருக்குமவர்கள் அதைப்பற்றி உணர்ந்துகொள்ளக்கூட முடியாதபடி வயிற்றுப்பசி வா ட் டி வதைக்கின்றது." என ம்ட்டக்களப்பு இரண்டாவது நாடாளுமன்ற உறுப் பினர் ஜனுப் பரீத் மீரா லெப்பை அவர்கள் தெரிவித் திருக்கிருர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென் று நிலைமைகளை முதன்முதல் கண்டறிந்தவர்களில் பரீத் மீரா லெப்பை அவர்கள் முதன் மையானவர். மக்களின் உடனடிக் கஷ்டங்களைத் தீர்ப்ப தற்குச் செயல்வடிவம் தருவதில் அயராது பாடுபட்டவர்.
குரு வளி அழிவினைப் பூரணிமாகச் செய்து விட் டு மறைந்து போனதன் பின் ன ர் வெள்ளிக்கிழமை காலை பாதிப்புற்ற மக்களுக்கு எதுவித உணவும் கிடைக்கவில்லை. உணவுக்காகக் குழந்தைகள் அழுதன. அவற்றைக்கண்டு அழுவதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாமல் பெற் ருேர் தவித்தனர். அன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின் னர்தான் பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்குவதற் 65птрат நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Page 71
138 12 மணி நேரம்
இரண்டுகொத்து அரிசியும் ஒரு ருத்தல் மாவும் உட னடியாக விநியோகிக்கப்பட்டன, வாகனங்கள் அடைய முடியாத கிராமங்கள் ஐந்து நாட்களின் பின்னர்தான் உணவுப் பொருட்களைப் பெற்றிருக்கின்றன. இளநீரையும் தேங்காய்களையும் உண்டு அக்கிராம மக்கள் தங்கள் உயிர் களைப் பிடித்திருந்தனர்.
அடையமுடியாத கிராமங்களுக்கும் வெள்ளத்தால் குழப்பட்ட கிராமங்களுக்கும் ஹெலிகொப்டர்கள்மூலம் உணவு விநியோகிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை *ளை எடுத்தது. ஹெலிக்கொப்டர்களைக் கண்டதும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு உண விற் கா க ஓடினர். கீழே போடப்படும் உணவுப்பார்சல்களை அவர்கள் போட்டியிட் டுப்பாய்ந்து பறித்தெடுத்தனர்.
இந்தியக் ஹெலிக்கொப்டர்கள் உணவு விநியோகத் தில் இராப்பகலாக ஈடுபட்டன. சமூக சேவைத் திணைக் களம் இலட்சக்கணக்கான உணவுப் பார்சல்களைக் கிழக்கு மாகாணத்தில் விநியோகித்திருக்கின்றது;
கொழும்பிலிருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் உணவுப் பொருட்கள் லொறிகள்மூலம் கொண்டு வரப்பட்டன. விமானங்கள் உணவுப் பொரு ட் களை க் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. வெளிநா டுகள் பல தங்கள் விமானங்களை நிவாரணப் பணிகளுக்கு அனுப்பியிருந்தன.
வெளியிடங்களிலிருந்து முக்கியமாக யாழ்ப்பாணத்தி லிருந்தும் வவுனியாவிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மட்டக்களப்பு மா வட்டத்தில் பாதிப்புற்ற ப்க்களுக்கு விநியோகிக்கப்பட் டன. எவ்வாருயினும், போக்குவரத்து வசதிகொண்ட வீதி களின் அருகில் அமைந்த கிராமங்கள் பெற்றளவு நிவார ணத்தை, உள்ளூர்க் கிராமங்கள் பெறவில்லை.
ஜனதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தணு அ வர் க ள் : கிழக்கு மாகாணத்தில் குறவளியால் பாதிக்கப்பட்ட 守ö

ல்ருக்கும் இலவச பங்கீட்டுப் பொருட்களை மூன்று மாதங் களுக்கு வழங்குமாறு உடன் பணித்திருந்தார். மூ வின் று மாதங்கள் கால அளவு பின் ன ர் குறைக்கப்பட்டு, மீண் டும் இலவசப் பங்கீட்டுக் காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது.
உணவு, உடை, வதிவிடவசதி, மருத்துவ வசதி என்ப வற்றை அளிப்பதில் அரசாங்கமும், கி ழ க்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க உத்தியோகத் தர்களும் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுழைக்கின்றனர். ஆனல், விநியோகம் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப் பட்டு நடைபெறவில்லை. சமூக, பொதுநல இயக்கங்கள் தனிப்பட்ட பரோபகாரிகள் கிழக்கு மாகாணத்தின் அழிவு களை க் கேள்விப்பட்டு அள்ளி வழங்க முன்வந்தனர். வழங்கினர். சரியான ஒரு திட்டம் இல்லாமையிஞ்ல் தாம் விரும்பிய இடத்தில் தாம் விரும்பிய கிராமங்களுக்கு அது வும் போக்கு வரத்து வசதியுள்ள கிராமங்களுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினர். பல கிராமங்கள் பசியாலும் உடை யின்றியும் தவித்தன.
உலகநாடுகள் பலவும் பணமாகவும் பொருள்களாக வும் வாரி வழங்கியிருக்கின்றன. வீடுகளை இழந்த மக்க ளுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கென கூடாரங்களை யும், கூரைத்தறப்பாள்களையும், த டி த் த பொலித்தீன் கூரைப் படங்குகளையும் வழங்கின. அவை சரியான முறை யில் விநியோகிக்கப்படவில்லை என்ற குரல் கிழக்கு மாகா ணம் எங்கணும் ஒலித்தது. கூடாரங்கள் அதிகம் பாதிப் புருத வீடுகளின் முற்றங்களில் சம்மர்"ஹவுஸ்களாக இடப் பட்டிருப்பதைக் கண்டோம். பொலிஸ் நிலையங்களிலும் கிராமசேவகர் வீடுகளிலும் அவை அழகுக்காக முற்றங் களில் இடப்பட்டிருந்தன.
நிவாரணப் பொருட்களை விநியோகிக்காது பதுக்கிய குற்றத்துக்காக இரண்டு கிராமசேவகர்களும் வேறு சில p த்தியோகத்தர்களும் கைதாகியிருக்கின்றர்கள் எ ன் பு தும் குறிப்பிடத்தக்கது.

Page 72
140 12 மணி நேரம்
சூருவளி நிவாரணம்
கிழக்கு மாகாணத்தில் குருவளியால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பல நல்ல முடிவு களை அமைச்சரவை எடுத்தது. அவை:-
1. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரு வாரங்களுக்கான உணவுப் பங்கீட்டுப் பொருள்கள் வழங்குதல். விதிவிலக் காகத் தேவைப்படும் குடும்பங்களுக்கு பின்னரும் பங்கீட் டுப் பொருள்களை வழங்குதல். ஒரு தனி நபருக்கு வாரம் ஒன்றுக்கு ரூ. 10-க்கு மேற்படாமலும் ஒரு குடும்பத்திற்கு ரூ.60-க்கு மேற்படாமலும் வழங்குதல்.
இந்த முடிவு கிழக்கு மாகாணத்தில் நன்கு செயற் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அரசியல் புறக்கணிப்புகள் நிகழ்ந்தபோதிலும், பின்னர் அவை சீர்திருந்தின.
2. குருவளியின்போது சேதமடைந்த வீட்டையும் திருத்தி தேவையான தளபாடங்களை வாங்குவதற்காகவும் ரூபா 500-க்குக் குறை ந் த வருமானமுடையவர்களுக்கு ரூபா 750 நிவாரணப்பணமாக வழங்கல். 5000 ரூபாவுக்கு மேற்படாத வங்கிக்கடன் வழங்கல்:
இத்திட்டம் குருவளி நிகழ்ந்து 89 நாட்களாகியும் செயற்படுத்தப்படவில்லை.
கிழக்கு மாகாணம் குருவளியால் பெரும் சேதமுற்றது. மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் உயிர்களையும் இழந் தனர். நிர்க்கதியான நிலைக்கு கிழக்கு மாகாணத்தில் 75 சதவீத மக்கள் தள்ளுப்பட்டுள்ளனர். 25 சதவீத மக்களே ஒரு விதமாகத் தங்களைப் பிறர் உதவியின்றிக் காப்பாற் றிக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர். எங்கும் பசி யும் பட்டினியும் விரக்தியும் தலை விரித்தாடின. அப்படி வேளையில் உலகநாடுகளும் இலங்கையின் ஏனைய மாவட் டங்களும் அரசாங்கமும் நிவாரணப்பணிகளுக்கென உதவ முன் வந்தும், அவை சரியான முறையில் ஏன் விநியோ கிக்கப்படவில்லை? காரணம்: பல வாதங்கள்தாம்!

12 மணி நேரம் 41
1 இன வாதம்
உடனடியாக நிவாரணத்தை அம்பாறை மாவட்ட மும் பொலனறுவை மாவட்டமும் பெற்றுக்கொண்டதைப் போல, மட்டக்களப்பு மா வட் டம் பெற்றுக்கொள்ள் வில்லை. உண்மையில் அதிக அளவில் குரு வளியால் பாதிக் கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு ஆகும். அதனை ஜனதி பதியே ஏற்றுக்கொண்டிருக்கின்றர். இப்படியிருந்தும் சிங் கள மக்களுக்கு உதவிகள் விரைந்து சென்ற அளவிற்கு, தமிழ் பேசும் மக்களுக்கு உதவிகள் விரைந்து செல்லவில்லை. அம்பாரை மாவட்டத்தில் அ தி கம் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம் கல்முனையாகும். அப்படியிருந்தும் அம்பாறை நகரப் பிரதேசங்களில்தான் அதிக நிவாரணப்புொருள்கள் உடனடியாக விநியோகிக்கப்பட்டன.
இவ்விடத்தில் கல்முனை எம்.பி.ஜனப் மன்சூர் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இரவு பகல் அயராது பாடு பட்டு, கல்முனைத் தொகுதிக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அரசாங்க உத வியைத் துரிதமாகக் கிடைக்கச் செய்ய, அவர் அயராது முயன்றிருக்கிருர் என்பதை கல்முனைத் தொகுதி மக்கள் பலர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த உணவு லொறிகள் பலவும் அம்பாறையில் வைத்தும் பொலநறு வையில், வைத்தும் மறிக்கப்பட்டு ஆரம்பத்தில் அம்மாவட் டங்களிலேயே விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறிருந்தும் மட்ட க் க ள ப் பு மாவட்டத்துக்கு நிவாரண உதவி கிடைத்தது என்ருல் அதற்குக் காரணம் ருவர். ஒருவர் கல்குடா எம். பியும், நீதியமைச்சருமான த. கே. டபிள்யூ தேவநாயகம் ஆவர்.மற்றவர் மாவட்ட அமைச்சர் திரு. சி. கனகரத்தினம் ஆவர். மட்டக்களப்பு 1ாவட்டம் இவ்வளவு அழிவுக்கு இடையிலும் மனந்தள ராது பழைய நிலையிலும் பார்க்க முன்னேற்றமான நிலைக்கு உயர்ந்துவிட வேண்டும் என்று திடசங்கற்பத்துடன் நிற்பது

Page 73
142 12 மணி நேரம்
எவரால் என்ரு ல், அவர் அமைச்சர் திரு. தேவநாயகம் அவர்களால்தான் எ ன் பது மறுக்க முடியாது. அவரது அயராத உழைப்பும் முயற்சியும் இ ன் று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருக் கின்றன.
அமைச்சரின் பெருந்தன்மையை ஒரு விடயத்தில் நாங் கள் அறிய முடிந்தது. அமைச்சரின் வீடும் குரு வளியால் பாதிக்கப்பட்டது. கூரை இழந்தோருக்கு விநியோகிப்ப தற்காகப் பல நாடுகள் கூரைப்படங்குகளை அன்பளிப்புச் செய்திருந்தன. அமைச்சரின் வீட்டுக்கூரைக்கு முதன்முத லில் கூரைப்படங்குகளை விரித்துச் செப்பனிட நிவாரணக் குழு முயன்றபோது, அமைச்சர் திரு. தேவநாயகம் அவர் கள் மறுத்துவிட்டார். "எவ்வளவோ மக்கள் இருக்க இட மின்றித் தவிக்க, என் வீட்டிற்குக் கூரையா? பழுதடையா மல் எஞ்சியிருக்கும் வீடே எங்களுக்குப் போதும்" என்று கூறிவிட்டார். "உங்களிடம் தங்கள் குறைகளைச் சொல்லி உதவி கேட்க வரும் மக்களுக்காகவாவது முன்பக்கத்தைச் சீர்ப்படுத்துவோம்" என்று பலர் வற்புறுத்தியதன் பேரில் தான், அமைச்சர் ஒத்துக்கொண்டார்.
அம்பாறை மர்வட்டத்தில் புனருத்தாரண வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆனல் மட்ட க் களப்பு மாவட்டத்தில் முப்பது நாட்களாகியும் நிவாரணப் பணம்கூட விநியோகிக்க முடியவில்லை.
2. அரசியல்வாதம்
சமூக சேவைக்கு அரசியல் தலையீடு ஒருபோதும் இருக் கக்கூடாது. கிழக்கு மாகாணத்தின் முக்கியமாக மட்டக் களப்பு மாவட்டத்தின் நிவாரணப் பொருட்கள் பங்கீட் டில் ஆரம்பத்தில், அரசியல் வாதம் கூடுதலாக இருந்தது. இன்று குறைந்துவிட்டது. அரசாங்கச் சார்புக் கட்சியின ரும், எதிர்க்கட்சியினரும் இம்மாவட்டத்தில் இருக்கின்ற னர். ஆரம்பத்தில் உணவு விநியோகத்தில், ஐக்கியதேசி யக்கட்சி ஆதரவாளர்கள் கூடுதலான உதவிகளைப் பெற் றனர். கூரை விரிப்புகள், உ  ைடக ள் என்பன அவர்க

12 மணி நேரம் 43.
ளுக்கே கூடுதலாக வழங்கப்ப்ட்டன; கூட்டணியினரின் கிராமம் என்பதற்காகப் பராமுகமாக ஒது க் கப் பட்ட கிராமங்களும் இருக்கின்றன.
ஆரம்பத்தில் ஐக்கியதேசியக் கட்சியினருக்கும் கூட் டணியினருக்கும் இடையில் நிவாரண உதவி வழங்குவ தில் அதிக பாரபட்சம் காட்டப்பட்டது. பின்னர், கூட் டணி மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் , அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து கொண்டனர். குழுவளி இங்கு செய்த நன்மைகளில் இதுவு மொன்று. அழிவில் ஏற்பட்ட இறுக்கம் இது. அமைச்சர்
டக்களப்பு முதல் எம். பி. இராசதுரை, பட்டிருப்பு எம். பி பூ. கணேசலிங்கம் ஆகியோர் தம் கருத்து வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு வதில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஆஞல், கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத் திற்கு வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபிடுவதை அர சாங்க சார்பு உறுப்பினர்கள் விரும்புவதாக வில்லை. தமிழ் மக்களின் பெருந்தலைவர், எதிர்க் கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யோகேஸ்வரன், வவுனியா தொகுதிநாடா ளுமன்ற உறுப்பினர் திரு. சிவசிதம்பரம், திருகோணமலை தொகு தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன். மன்னர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சூசை தாசன் முதலானுேர், குரு வ வியா ல் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க முன்வந்தவர்கள். அவர்கள் பல தடவைகள் நிவாரணப் பொருட்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சென்றனர். மக்களுடன் பேசி அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர். அவர்களின் வருகை அம் மாவட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவ்வளவு தூரம் விரும்பப்படவில்லை.

Page 74
144 iá (Das (šptrd
ஒரு கட்டத்தில் நீதி அமைச்சர் திரு. தேவநாயகம் பின்வருமாறு குறிப்பிட்டார்:
**. மட்டுநகர் மாவட்டக்தின் புனர் நிர்மாணத்துக் கான தனது திட்டத்தை ஜனதிபதியும். பிரதமரும் அங் கீகரித்துவிட்டனர்.இந்நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணி யி ன ர், மட்டுநகர் மக்களின் கண் ணி ரி ல் சொந் த அரசியல் இலாபம் பெற முற்பட்டு வருவது வேதனைக்குரிய தாகும் மக்களுக்கு நாம் செய்யவிருக்கும் நற்காரியங்க ளுக்குத் தடையாக இருக்காதீர்கள். உங்கள் அர சி ய ல் இலாபத்தை வேறு இடத்தில் வேறு விதமாகத் தேடுங்கள். ஆனல் மக்களின் கண்ணிரை அதற்கு ச் சாதகமாக்கிக் கொள்ளாதீர்கள். 36
எதிர்க்கட்சித் தலைவர் திரு, அ. அமிர்தலிங்கம் ஒரு கட்டத்தில் "எம் உடன் பிறப்புக்களான கிழக்குமா கான மக்கள் சூரு வளியாலும் வெள்ளத்தாலும் இன்று பாதிக் கப்பட்டு, சொல்லொணுத் துன்பத்தை அனுபவித்து வரும் வேளை இது. எனவே இரத்த பாசத்துடன் அவர்களுக்கு உதவி புரிய வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமை யாகும். எனவே இந்த நேரத்தில் பிரதேச, அரசியல், மத வேறுபாடுகளைக் காட்ட முற்படுவது பெரும்பாதகமான செயலாகும். "* 37 என்று தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்திப் பெரமுனையின் முக்கிய தலைவர்க ளில் ஒருவரான திரு. லயனல் போப்பகே. 'நீதியமைச் சர் மட்டுநகர் மாவட்டத்தத் தமது சொந்தச் சொத் தாகக் கணி க் க முடியாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது மனித உரிமைக்கு முரணுன த? குர். .' என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்;
இத்தகைய அரசியல் வாதத்தின் எதிரொலி மட்டக் களப்பு விமான நிலயத்தில் ஒரு சிறிய வார்த்தைச் சூரு வளியை நீதி அமைச்சர் திரு தேவநாயகத்துக்கும் எதிர்க் கட்சித் த லே வர் திரு. அமிர்தலிங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திவிட்டது.

12 மணி நேரம் 145
மட்டக்களப்புக் கச்சேரியில் ஜனதிபதி தலைமையில் குரு வளி நிவாரண மகாநாடு ஒன்று நடைபெறவிருந்தது. அம்மகாநாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் திரு. அமிர்த லிங்கம் நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திரு. மொண்டேகு ஜயவிக்கிரம, மட்டக்களப்பு மா வட் ட அமைச்சர் திரு. சி. கனகரத்தினம், பட்டிருப்பு நாடாளு மன்ற உறுப்பினர் திரு. பூ, கணேசலிங்கம், மட்டக்களப்பு நாடாளுமன்ற இரண்டாவது உறுப் பினர் ஜனப் பரீத் மீராலெப்பை ஆகியோர் வந்து காத்திருந்தனர். கடைசி நேரத்தில் அம்மகாநாடு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக் *ப்பட்டது. மட்டக்களப்பு விமான நிலையத்தில் ஜனதிபதி அவர்கள் ஒரு விசேட கூட்டம் நடாத்துவதாக கச்சேரிக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு காத்திருந்தவர்கள் அவசரம் அவசரமாக விமான நிலையத்திற்குச் சென்றனர். அதற் குள் ஜனதிபதி கூட்டத்தை முடித்துக்கொண்டு. அம்." றைக்குப் பயணப்பட்டுவிட்டார். அ வ் வேளை யி ல் நீதி அமைச்சர் திரு. தேவநாயகத்துக்கும் எதிர்க் கட்சித் த?ல வர் அமிர்தலிங்கத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற் பட்டது. s.
'நீங்கள் அரசியல் காரணங்களுக்காக இங்கு வந்திருக் கிறீர்கள். நிவாரண வேலைகள் உங்கள் நோக்கமல்ல." என்ருர் அமைச்சர்,
",நீங்கள் நிவாரண வேலைகளில் அக் க  ைற காட்ட வில்லை. ஜனதிபதியை அழைத்து கார்னிவல் காட்டுகிறீர் கள் ' என்ருர் எதிர்க்கட்சித் தலைவர்.
அவ்வேளை நீதியமைச்சரின் அருகில் நின்றிருந்த திரு மதி தேவநாயகம் அவர்கள், "இங்கு யாழ்ப்பாணத்து ஆட்கள் தேவையில்லை, நம்மை நாமே பார்த்துக்கொள் வோம்' என்ருர்,
"அப்படியானல், மடம் நீங்கள்தான் முதலில் உட னேடியாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லவேண்டும் ." என் ருர் திரு. அமிர்தலிங்கம். திருமதி தேவநாயகம் அவர் கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Page 75
46
பிரதமர் திரு. ஆர் பிரேமதாசா அவர்கள் குறுக்கிட்டு இவ்வார்த்தைச் குருவளியைத் தணிக்க நேர்ந்தது.38
2. பிரதேச வாதம்
மடடக்களப்பு மாவட்டம் சூரு எளியால் பாதிக்கப் பட்டுள்ளது என்ற செய்தி இலங்கை எங்கணும் பரவிய தும நிவாரணப் பொருட்களுடன், மட்டக்களப்பிற்கு விரைந்தவர்கள் திருகோணமலே, வவுனியா, யாழ்ப்பா னப் பிரதேச மக்களாலர். திருகோணமலையிலிருந்து யந் திர வள்ளங்கள் மூலம் முதன் முதல் நிவாரணப் பொருள் களுடனும் தொண்டர்களுடனும் மட்டக்களப்பிற்கு வந் தார்கள். திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் திரு. சம்பந்தன் அவர்கள் முயற்சியால் நா வலடி யில் 100 வீடுகள் அவர் தொகுதித் தொண்டர்களால் கட்டி ககொடுக்கப்படவுள்ளன. அங்கிருந்து வந்த தொண் டர்கள் மூன்று தினங்களில் 30 வீடுகளை அ  ைமத்து க் கொடுத்திருக்கின்றர்கள்.
வவுனியாத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் திரு. சிவசிதம்பரம் சூருவளியால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு எவ்வளவு விரைவாக நிவ ரணம் வழங்க முன்வந் தார் என்பது அங்குள்ள மக்கள் யாவராலும் விதந்துரைக் கப்படுகின்றது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு கிராமத்தைப் பொறுப்பேற்று நிவாாண உதவி களே வழங்கவேண்டும் என்ற திட்டத்தை வகுத்தவர் வவு னியாத் தொகுதி உறுப்பினர் திரு. சிவசிதம்பரம்தான். நிவாரண உ த விகள் யாவும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த கிராமங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்ட போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட் கிராமங்களுக் குத் தொண்டர்களுடன் சென் று உதவிகள் புரிவதில் அவர் முன்னின்றிருக்கிருர்,
யாழ்ப்பாண மாவட்டக் திலிருந்து குரு வளியால்பாதிப் Hற்றவர்களுக்கு உதவப் பல பொது ஸ்காபனங்களும் தனி யார்களும் முன்வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக


Page 76
148 12 மணி நேர்ம்
பொறுப்பான பதவியிலுள்ளவர்கள், பிரதேச மனப் பான்மை காட்டுவது கவலைக்குரியது.
கசப்பான ஒரு உண்மையை நாம் மறுக்கக்கூடாது.
“யாழ்ப்பாணி-மட்டக்களப்பான்' என்ற பிரதேச வாதம், கிழக்கிலங்கையில் பல ரி டம் காணப்படுகின்றது. யாழ்ப் பாணத்திலிருந்து அப்பிரதேசத்திற்குப் பிழைக்கச் சென்ற பலரும், அப்பிரதேச மக்களை மதிப்பதுமில்லை. அவர்களுக்கு என்ன தெரியும் என்ற அலட்சியம். அதேபோல அப்பிர தேச மக்கள் பல ரு ம் யாழ்ப்பாணத்தவர்களை இன உற வோடு நோக்குவதில்லை. கடந்த தேர்தல் முடிவில், செங் கலடியில் யாழ்ப்பாணத்து வர்த்தகர்களுக்கு நேர்ந்த கசப் பான அனுபவங்கள் தக்க உதாரணம்.
பிரதேச உணர்வு அவசியம்தான். அது வெறி யாக இருக்கக்கூடாது.
மட்டக்களப்புக்கு வடபகுதியில் இருந்து கொண்டுவ ரப்படும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும்போது ஒரு சாரார் அரசியல் பிரசாரம் செய்து வருவதாக மட் டக்களப்புத் தொகுதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. இராசதுரை, மட்டக்களப்பு மாவட்ட அமைச் சர் திரு. கனகரத்தினம் அவர்களிடமும், அரசாங்க அதிபர் திரு. டிக்சன் நிலவீரவிடமும் முறையிட்டிருந்தார். காசி ஆனந்தனின் பெயரால் அப்பொருட்கள் விநியோகிக்கப் படுவதாக அவர் குற்றம் சாட்டினுர்.
மட்டக்களப்புத் தொகுதி முதலாவது உறுப்பினர் திரு. செ. இராசதுரை, குருவளியிள் கொடுமைக்கு இலக் கான மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதில் அயராது உழைப்பவர். இரவும் பகலும் கி ராம ம் கிராமமாகச் சென்று மக்களின் குறைகேட்டுப் பரிகாரம் தேடியவர். நிவாரணப் பணத்தை மக்கள் குடித்துச் சீரழிக்கின்ருர்கள் என்பதற்காக மூன்று மாதங்களுக்குச் சாராயத் தவறனை களே மூட நடவடிக்கை எடுத்தவர். அவருடைய திறமை யில் சேவையில் அங்கு எவருக்கும் சந்தேகமில்லை.

12 மணி நேரம் 149
வடபகுதியில் இருந்து வந்துள்ள தொண்டர்கள் அரசி யல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் அதனல் வடபகுதியி லிருக்கும் வரும் பொருட்களை அரசாங்க அதி ரே பொறுப் பேற்க வேண்டுமெனவும் திரு. செ. இராசதுரை தெருவித்த கருத்துகளுக்கு, நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் விசனம் தெருவித்திருந்தார்.
மட்டக்களப்புத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இராசதுரை, சூரு வளி கிழக்கிலங்கையைப் பாதித்து ஊழிக்கூத்து ஆடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மட்டக்களப்பு நகரை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்ப தற்கு ஒரு திட்டமும் வகுத்திருந்தார். மட்டக்களப்பு நக ரத்தில் நவீன பஸ்நிலையம், நவீன சந்தை, அர சா ங் க அலுவலகக் கட்டிடம், தொங்குடாலம் முதலானவற்றை அமைத்து நகரை அழகுபடுத்துவதற்குத் திட்டம் வகுத் திருந்தார். பிரதமர் திரு. ஆர். பிரேமதாசா அவர்களும், நீதியமைச்சர் திரு. தேவநாயகம் அவர்களும் அவரின் இத் திட்டத்திற்குப் பூரண ஆதரவு தெரிவித்திருந்தனர். அதற் குள் குருவளி அரக்கன் தலையிட்டு, நகரைச் சீரழித்துவிட்
6.
மட்டக்களப்பு மாவட்ட நிவாரணக் குழுவின் தலை வரும், நீதிஅமைச்சருமழன திரு. கே. டபிள்யூ, தேவநாய கம் அவர்கள் பிரதேச ஊடுருவலைத் தடுத்தமுறை சிறப் பானது. பொலநறுவை - மட்டக்களப்பு வீதி, வதுளை - மட் டக்களப்பு வீதி, அம்பாறை - மட்டக்களப்பு வீதி ஆகிய மூன்று முனைகளிலும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு களை ஒழுங்கு செய்து, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வரும் நிவாரணப்பொருட்களே ஒருமுகப்படுத்தினர்.
'தொண்டு புரிகின்ருேம் என்ற போர்வையில் அரசி யல்வாதிகள் எமது பகுதிக்குள் புகுவதை நான் விரும்ப வில்லை. நிவாரண வேலைகளில் ஈடுபட விரும்பும் வெளியி டங்களைச் சேர்ந்தவர்கள் 1 னருத்தாரண சபை மூலமா கவே சகலதையும் மேற்கெ:ள்ளவேண்டும் வெளி உதவி யாளர்கள் எமக்குத் தேவையில்லை' என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 39

Page 77
150 i2 மணி நேரம்
"மட்டக்களப்பு மாவட்டத்தை திட்டமிட்ட முற்ை யில் புனர் நிர்மாணம் செய்ய வகைசெய்வதற்காக வெளி யார் தலையீட்டைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டு வரு வதுபற்றி ஆலோசிக்கப்படுகின்றது. வெளியார் தலையிட்டு இவற்றைக் குழப்பியடிப்பதை அனுமதிக்கமுடியாது. மட் டக் களப்பு மக்களிடம் சுயமரியாதை இருக்கவேண்டும். அழிவிலிருந்து மீட்சிபெறத் தன்னம்பிக்கையுடன் செயற் படவேண்டும்." என்று அமைச்சர் திரு. தேவநாயகம் அவர் கள் கருத்துத் தெரிவித்துள்ளார். 40
இன்னெரு சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சர் திரு. தேவ நாயகம் அவர்கள், சில மாமூடை சளையும், கிடுகுகளையும் கொண்டுவந்து இறக்கிவிட்டால் அதனுல் மட்டக்களப்பு மக்களின் துயர் நீங்கிவிடும் என்று சொல்ல முடியாது.' என்று தெரிவித்தார். 41
**இங்கு யாழ்ப்பாணத்து ஆட் க ள் தேவையில்லை. நம்மை நாமே பார்த்துக்கொள்ளுவோம்" என்ற திருமதி தேவநாயநம் அவர்களின் கருத்தும் சுயமரியாதையை மீறிய பிரதேசவாதத்தின் எதிரொலியாக இருப்பது கவ னிக்கத்தக்கது.
இத்தகைய வாதங்களின் வீதிரொலியாக, மட்டக் களப்பு அரசடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சூரு வளி நிவாரண வேலைகளில் ஈடுபட்டு வந்த 40 பேர் அடங்கிய வடபகுதி இளைஞர் குழுவுக்கு 24 மணி நேரத் திற்குள் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுமாறு அதி கார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மட்டுநகர் பொலிஸ் தலைமைக் காரியாலய இன்ஸ்பெக்டரும், மாவட்டக் கல்வி அதிகாரியும் இந்தக் கட்டளையை அறிவித்தனர்.
இவ்வெளியேற்ற உத்தரவு குறித்து ஆட்சேபம் தெரி விக்கு விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அமிர்தலிங் கம், மாவட்ட அமைச்சர் திரு. கனகரத்தினத்திடம் விசா ரித்தபோது, "நான் வே ளா ண் மை வெட்டவந்தவன். எல்லை பார்க்க வந்தவனல்ல" எனக்கூறிஞர்82

12 மணி நேரம் 151
அரசடி மகா வித்தியாலயத்தைவிட்டு வெளியேறிய தொண்டர்களுக்கு திரு. இராஜன் செல்வநாயகம் புகலிடம் அளித்தார். திரு செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டடத் தில் வடபகுதித் தொண்டர்கள் தங்கினர். திரு. இராஜன் செல்வநாயகத்தின் மாமனரும் மா மி யும் குரு வளியின் போது கட்டிடம் தகர்ந்து இறந்தவர்களில் இருவராவர். திரு. அலெக்சாண்டர் அவர்களும் திருமதி அலெக்சாண்டர் அவர்களும் அகால மரணமடைந்தனர்.
வடபகுதித் தொண்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத் திற்கு அவசியமா எ ன் பது கேள்விக்குரியதுதான். மட்டக் களப்பு மாவட்டத்தில் இரு வகையான மக்களை நாம் சந் தித்தோம். ஆருத்துயருடன் யாவற்றையும் இழந்து பரத விக்கும் மக்கள் ஒரு புறம். உள்ளூர்க் கிராம மக்கள் இத் தகையவர்கள். எதுவுமே நடவாதது போல மகிழ்வுடன் திரியும் மக்கள் ஒரு புறம். ஏருவூரில் வீட்டின் மீது தென்னை மரங்கள் சரிந்து கிடக்கின்றன. அவ் வீட்டில் இருப்பவர் கள் மா பிள் விளையாடிக்கொண்டிருக்கிருர்கள். வெளியிடங் களிலிருந்து வந்த தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, வீதிகளில் மதகுகளில் வீணே அமர்ந்து பொழுது போக்கிய மட்டக்களப்பு இளைஞர்களையும் கண்டோம். வீட்டின் மீது விழுந்து கிடக்கும் மரங்களைத் தறித்து நீக்கித் துப்புரவு செய்ய கூலியாட்கள் இன்றித் த வித் த வர் களை யும் கண்டோம்.
"நிவாரண உதவி முடியும்வரை ஒருத்தரையும் கூலிக் குப் பிடிக்க முடியாது. சும்மா கிடைத்தது தின்று முடிந்த தும் தண்டலுக்கு வருவார்கள்' எனப்பலர் கவலை தெரி வித்தனர்.
செங்கலடிப் பாலத்தின்மீது மாட்டுவண்டிச் சவாரி நடந்ததையும் கண்டோம். நான்கு மாட்டு வண்டில்கள் போட்டிக்கு போட்டி போட்டு சவாரி செய்து ஓடியதைக்
கண்டோம்

Page 78
52 12 மணி நேரிம்
"இப்படிக் காடாக பரங்கள் சரிந்து கிடக்கின்றனவே . துப்புரவு செய்யக்கூடாதா?." எ ன ச் சிலரிடம் கேட் டோம்.
"மந்திரி ஐயா, நிவாரணப்பணம் தரும் வ  ைரயில் திருத்த மாட்டோம். அவர்கள் வந்து சேதத்தைப் பார்த் துப் பண ம் தந்ததன் பின்னர்தான் திருத்துவோம் , ' என்ற திடமான உடல் கொண்டவர்களையும் கண்டோம்) ஒரு வித திருத்தமும் செய்யாது உதவிகளை எதிர்பார்த்துச் சோம்பிக்கிடக்கின்ற அவர்களுக்காக இரக்கப்படத்தான் முடிந்தது.
இத்தகைய நிலையில் வடபகுதித் தொண் டா கள் G5606 unr?
அதனுல்தான் நீதி அ  ைம ச் சர் திரு. தேவநாயகம் அவர்கள், 'மட்டக்களப்பு மக்க ளிடம் சுயமரியாதிை இருக்க வேண்டும். அழிவிலிருந்து மீட்சிபெறத் நன்னம்பிக் கையுடன் செயற்பட வேண்டும்.’’ என்று க ரு த் துத் தெரிவித்தாரோ?
3 மத வாதம்
கிழக்கு மாகர்ணத்தில் நாம் கண்ட இன்னெரு கசப் பான உ எண்  ைம, மதவாதம். சூரு வளியால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவுவதற்கெனக் கிழக்கு மாகாணத்திற்கு, வெளியிடங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள் குறித்த சில மத மக்களுக்கு வழங்கப்பட்டன. முக்கியமாக வேரு வலைப் பகுதியிலிருந்து முஸ்லீம் பிரமுகர்களால் மட் டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள். முஸ்லீம் மக்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சங்கங்கள் தமது மத மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கு எடுத்த அதே கவனத்தை, கிறி ஸ் த வ கத்தோலிக்க சங்கங்களும் எடுத்திருந்தன. ஆக கூடுதலாக ஒதுக்கப்பட்டவர்கள் வறிய தமிழ் இந்துக்கள்தான் என் பது கசப்பான உண்மையாகும். "யாதும் ஊரே, யாவரும் கேளிர். எம்மதமும் சம்மதம்' என்ற இந்துமதக் கருத் துக்கள், அவர்களுக்குச் சாப்பாடு போ ட உதவவில்லை.

14 மணி நேரம் 153
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிவநெறிச் செல்வர்களும் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் கையளித்தனரே தவிர, தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவில்லை.
பிரதேச, மத, வேறுபாடின்றி நிவாரணப் பொருட் களைச் சரியாகப் பங்கிட்டு வழங்கியவர்கள் யாழ். பல்க &லக் கழக மாணவர்கள்தாம். தங்கள் உடலுழைப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவிதமான வேறுபாடின்றி யும் வழங்கியவர்கள் தமிழ் இளைஞர் பேரவைத் தொண் டர்களாவர்.
4. அதிகாரவாதம்
சூருவளியின் பயங்கரத் தாக்கத்தின் விளைவாக அர் சாங்க நிர்வாகக் கட்டிடங்கள், அவற்றிலிருந்த பெறுமதி யான கோவைகள் என்பன சேதமுற்றன. அதனுல் ஆரம் பத்தில் சிலதினங்கள் அரசாங்க யந்திரம் இயங்கமுடிய வில்லை. கச்சேரியின் பெரும்பகுதி கூரை இழந்ததால் நிர் வாகம் சீரடையமுடியவில்லை. எ னினும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. டிக்சன் நிலவீர மிக்க வேகமாகச் செயல்பட்டார். கச்சேரியில் எஞ்சியிருந்த தேர்தல் காரியாலயத்தை முக்கிய நிர்வாகக் கட்டிடமாக்கி பாதிப்புற்ற மக்களுக்குத் துரித நிவாரணம் வழங்க நட வடிக்கைகள் எடுத்தார்.
அதேபோல சேதமடைந்திருந்த பொலிஸ் கட்டிடங் கள் ஒரளவு திருத்தப்பட்டன. மட்டக்களப்பு பொலிஸ் அதிபர் திரு. அமயிகாபதி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பாராட் டப்படக்கூடியன. கொள்ளையர்களின் தொல்லைகளிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாத்து, பாதிப்புற்ற மக்களுக்கு பொலிசா ரையும் தொண்டர்களாக வேலை செய்ய அனும தித்தார் அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இருக்கின்றன. அண்மையில் இன்னுெரு உதவி அரசாங்க அதிபர் பிரிவும் திறக்கப்பட்டிருக்கின்

Page 79
54 12 மணி நேரம்
றது. வவுணதீவு உதவி அரசாங்க அதிபர்(மண்முனை மேற்கு) திரு. சொர்ணவடிவேல் அவர்கள், குருவளி ஓய்ந்த மறு தினமே தன் பிரிவுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்து. மக்களின் துயரைக் கண்டறிந்தார். அவரின் வீடும் பாதிக் கப்பட்டது. அவர் அலுவலகம் அப்படியே தரைமட்டமா கச் சரிந்திருந்ததுடன், இரும்புப்பெட்டி உடைத்துக் கொள் ளையிடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் இரவு பகலாக அவர் தமது பிரிவு மக்களுக்குச் செய்த சேவைகளை அப் பிரிவு மக்கள் நன்றியுடன் சொன்னர்கள்
வெள்ளவெளி (பெரியபோரதீவு) உதவி அரசாங்க அதி பர் திரு. அம்பலவாணரின் அலுவலகமும் குருவளியால் உடைந்து சரிந்தது. மறுநாள் அவர் தன் அலுவலகத்துக் குச் சென்றர். வெள்ளத்தினுள் அவர் காரியாலயம் மூழ்கி யிருந்தது. தன்னுடன் கூட வந்தவரிடம் கூறிவிட்டு, ஒரு கயிற்றைப்பிடித்தபடி தன் காரியாலயத்தை அடைந்து, பெறுமதியான, பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டார். பெரிய போரதீவின் நிவாரணப் பணிகளில் திரு. அம்பலவாணர் அயராது பாடுபட்டு வருகின்றர்.
களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர் திரு. பத்ம நாதன், வாழைச்சேனை உதவி அரசாங்க அதிபர் திரு. சபாபதிப்பிள்ளை, வாகரை உதவி அரசாங்க அதிபர் திரு. மெளனகுரு, மண்முனை வடக்கு உதவி அரசாங்க அதிபர் திரு. சாம்பசிவஐயர் ஆகியோர் இரவு பகலாக ஓடி யர்டி பாதிக்கப்பட்ட மக் களு க் கா க உழைப்பதைக் காண முடிந்தது.
மட்டக்களப்பு மேலதிக அரசாங் க அதிபர் திரு. அந்தோணிமுத்துவும்,உதவி அரசாங்க அதிபர் திரு.செல்வ ரத்தினமும் நிவாரணப்பணிகளில் இடையருது உழைத்து வருகின்றனர். தேர் த ல் அதிகாரி திரு. யோகநாதன், மாவட்டக் காணி அதிபர் திரு. கே. பரமேஸ்வரன் ஆகி யோர் ச ளை க் கா து மக்களுக்குத் தேவையான கூரைப் பொருட்களைப் பெற்று வழங்குவதில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை அ தி பர் திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல், பாதிக்கப்பட்ட மக்க

Í e paaf op frá? 15
ளுக்குரிய நிலtாரணப்பணத்தை வழங்குவதில் அ ய ரா து ஈடுபட்டிருந்தார். அத்துடன் உதவி அரசாங்க அ தி டர் திரு. பரராசசிங்கமும், வேறு மாவட்டங்களிலிருந்து வந் திருந்த அதிகாரிகள் பலரும் மாவட்டத்தின் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உழைப்பதைக் கா ன முடிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சமூகசேவை அதிபர் திரு. கெங்காதரமும் மட்டக்களப்புக் கச்சேரியிலிருந்து நிவாரணப்பணிகளில் செயற்பட்டார்.
ஆக, இவ்வளவு அதிகாரிகள் இரவு பகல் அயராது உ  ைழ த் தும், ம ட் டக் கள ப்பு மா வட் டத் தி ன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய காலத்தில், உரிய வேளை யில் நிவாரணப்பணம் வழங்கப்படவில்லை. பிற நாடுகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கூடாரங்கள் உரிய காலத் தில் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிற நாடுகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போர்வைகள் உரிய காலத் தில் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. மக்கள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, குளிரில் விறைத்தனர்.
ஏன்? ஏன்? ஏன்? அங்குதான் அதிகாரவாதம் செயற்பட்டது. அதிகாரிகள் தம் எண்ணப்படி நிவாரணப்பணிகளைத் தங்கள் உத்தியோகத்தர்களின் உதவியுடன் செய்ய முடிய வில்லை.
கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டு கோள்கள் ஒரு பக்கம். M
மாவட்ட அமைச்சரின் பணிப்புரைகள் ஒரு பக்கம். அரசாங்க சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஒரு பக்கம்.
நீதியமைச்சரின் கட்டளைகள் இன்னெரு பக்கம் எல்லாரினதும் அதிகாரம் அங்கு கொடி க ட் டி ப் பறந்தது. அரிசி விநியோகத்திற்கு ஒரு குழு. புட  ைவ விநியோகத்திற்கு ஒரு குழு. போர்வை விநியோகத்திற்கு ஒரு குழு. கூரை விரிப்புகள் விநியோகத்திற்கு ஒரு குழு,

Page 80
156 12 மணி நேரம்
அதிகாரிகளுக்கு யாருடைய பணிப்புரைகளைக் கேட் பது என்று புரியாத நிலை. கண்ணீரில் அர சி ய ல் இலாபம் தேட முற்பட்டோர் ஒரு பக்கம். கண்ணிருடன் இவர்க ளால் வழங்கப்பட இரு க்கு ம் நிவாரணப் பொருட்களை எதிர்பார்த்து வாடுவோர் ஒரு பக்கம்.
6. பிரசார வாதம்
நவம்பர் 23-ஆம் திகதி கிழக்கு மாகாணத்தைச் சூரு வளி தாக்கியது. அதனல் ஏற்பட்ட சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கிழக்கு மாகானமே அழிந்து பாலைவனம்ாக மாறியது போன்று இன்று காட்சி தருகின்றது. நூற்றுக் கணக்கானவர்கள் இறந்தனர். கோடிக்கணக்க்ான சொத் துக்கள் அழிந்தன. கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக, மட்டக்களப்பு மாவட்டம் தன் வளர்ச்சியில் 50 ஆண்டு கள் பின்தள்ளப்பட்டுவிட்டது!
இவற்றில் சந்தேகமில்லை. இந்த அழிவின் ஆதாரத் தில் அரசாங்கம் தொட்டு தனிப்பட்டவர்கள் வரை பிர *ார வாதம் நடத்தியிருக்கின்ருர்கள். அரசாங்கம் வழங் கிய புள்ளிவிபரங்களிலிருந்து இச்சூரு வளியின் தாக்குத லால் 1500 பேர்வரை இறந்துள்ளார்கள் என ஐக்கியநா டுகள் அழிவு நிவாரணச்சபை அறிவித்திருக்கின்றது. குரு வளியாலும் வெள்ளப்பெருக்கினலும் இதுவரை 427:பேர் வரையில் உயிர் இழந்தார்கள் என்று பொலிஸ் தலைமை அலுவலகத் தகவல் பிரிவு அறிவித்திருக்கின்றது. ஒரு கட் டத்தில் நீதி அமைச்சர் திரு. தேவநாயகம், ஆயிரம் பேருக்குமேல் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்தார்:
ஏறத்தாழ 600 பேர்வரையில் இறந்திருக்க வாய்ப் புண்டு.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தா மாகவும் உலகநாடுகள் பல கிழக்குமாகாணத்திற்கு ஏற் பட்ட குரு வளி அழிவுக்கு உதவ முன்வந்தன, உ ல க உணவு விவசாய ஸ்தாபனம் ஒருகோடி ரூபா வரை யி லான உதவி வழங்க முன்வந்தது, தமிழகத்தின் முதல்வர்

14 Le confl (315Drth 157
திரு. எம். ஜி, இராமச்சந்திரன் பத்துலட்சம் ரூபாய்களுக் கும் அதிகமான பொருட்களை அன்பளிப்புச் செய்தார். நியூசிலாந்து அரசாங்கம் 2500 இருத்தல் பால்மாவை வழங்கியது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வெளி நாடுகளிலுள்ள இரு சகோதர தொழில் தாபனங்கள் குழு வளி நிவாரண நிதிக்கு 6000 அமெரிக்க டா ல ர் களை வழங்கின. தமிழக முன்னுள் முதல்வர் திரு. கருளுநிதி குழு வளி நிதிக்கு ரூபா 10000- அன்பளிப்புச் செய்தார். நோர்வே அரசாங்கம் ஏராளமான பொலித்தீன் கரை விரிப்புகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தது. மின்சக் தியை உற்பத்தியாக்கும் ஜெனரேட்டர்கள், நீர் இறைக் கும் யந்திரங்கள், மரம் அரியும் யந்திர வாள்கள், ஆயிரக் கணக்கான போர்வைகள், கூடாரங்கள் முதலியவற்றை சூரு வளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வெளிநாடுகள் வழங்கின.
இலங்கை வானெலி குரு வளியால் பாதிப்புற்ற மக்க ளுக்கு எந்த எந்த நாடுகள் அள்ளி வழங்கியிருக்கின்றன, அரசாங்கம் என்னவிதமாக அள்ளித் தரப்போகின்றது என்று ஒவ்வொருநாளும் பகலும் இரவும் பிரசாரம் செய் தது. அவற்றைக் கேட்ட மக் கள் ஏதோ அற்புதங்கள் நடக்கப்போகின்றது எனக் காத்திருந்தனர். பத்திரிகை கள் வேறு கொட்டை எழுத்துக்களில் எழுதித் தீர்த்தன. தினபதி, வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் குரு வ விரி நிவாரண நிதியும் சேகரித்தன. ஜனதிபதியும் குழுவளி நிதி சேகரித்தார்.
AV
ஆக நல்ல பணச்சடங்குகள் நடந்தன. சேர் ந் த பணத்தைக் கொடுப்பதற்கு நல்லவேளை வரவில்லைப் போ லும். அதற்குள் மழையிலும் 3ெ:பிலிலும் வானத்தைக் கூரையாகவும் பூமியைப் பாயாகவும் கொண்டு தவிக்கும் மக்களின் உடனடித் தேவைகள் முடிந்துவிடும். இருக்க இடமின்றித் தவிக்கும் குடிசைவாழ் ஏழைமக்களின் கண் ணிரை பொறுப்பானவர்கள் சரிவர உணரத் தவறிவிட்ட னர். பிரசாரம் செய்துகொள்வதில் இருந்த ஆர்வம், உத விக%ள வழங்குவதில் இருக்கவில்லை,

Page 81
158 Te zbierf? Gðsfrú
நாற்பது நாட்களாகியும் வீடு கட்டுவதற்காக வழங் கப்படுவதாக ஆரம்பத்திலிருந்து சொல்லி வந்த நிவார ணப்பணம் ரூபா 750 மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங் கப்படவில்லை. பணக்காரர்களும் வசதி படைத்தவர்களும் தங்களை குழுவளித் தாக்கத்திலிருந்து ஒரளவு காப்பாற்றிக் கொண்டார்கள். தற்காலிகக் கூரைகளையாவது போட்டுத் தங்களுக்கு ஒதுக்கிடம் தேடிக்கொண்டனர்.
ஏழைமக்களுக்கு தற்காலிகக் கூரையைப்போட, குடி சையும் இல்லையே? ஒரு தகரத்துண்டைப் பிடித்துக்கொண்டு ஒரு குடும்பம் மழையிலிருந்து த ப்பு வ தற்கு வெள்ளத் திடையே தவித்த கதைகள் நெஞ்சுருகச் சொல்லப்படு கின்றது. குழு வளி வீசிய மறுநாள் அல்ல; 35 நாட்களுக் குப் பின்னர்!
பத்திரிகைகளில் தொடர்ந்து அறிக்கைகளுக்கு மேல் அறிக்கையாக விடுவதிலேயே அரசியல் வாதிகள் கவன மாக இருக்கின்றனர். எப்படி வழங்குவது? யார் யாருக்கு வழங்குவது? எங்கு வழங்குவது? யாரைக்கொண்டு வழங் குவது? போன்ற விஞக்களுக்கு அவர்களால் இன்னமும் சரி யான விடை காணப்படவில்லை. அழிவின் எல்லைக்கு துர திர்ஷ்டவசமாகத் தள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட ஏழை மக்களும், கல்முனைத் தொகுதி ஏ  ைழ மக்களும் 6ரக்தியுடன் ஏமாற்றத்துடன் த விக்கின்றனர்.
டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி. மட்டக்களப்பு மாவட் டத்தில் குழு வளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் களுக்கான நிவாரணப்பணத்தை, ரூபா 750 உடனடியாக வழங்குமாறு நீதி அமைச்சர் திரு. தேவநாயகம், ச மூ க சேவைத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். ஆனல் என்ன நடந்தது? 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி அதே நீதி அமைச்சர் திரு. தேவநாயகம் இன்னுெரு அறிக் கையை வெளியிட்டிருக்கிருர், "வீடுகளை அமைப்பதற்காக வழங்கப்படவுள்ள நிவாரண உதவிப்பணம் ரூபா 650 பண மாக வழங்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக பாதிக்கப் பட்டவர்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடு

12 மணி நேரம் 159
கப்படும்" என. ஆகவே 1978 நவம்பர் 23 இலிருந்து, 1979 ஜனவரி 2 வரையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்னமும் நிவாரணப்பணத்தைக் கண்க ளா ல் காண வில்லை. தற்காலிக வீ டு களை அமைத்துக் கொடுப்பதில் 5000 தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவார்களாம்!
"நிவாரணப்பணத்தைக் கொடுக்காதீர்கள். குடித்துச் செலவிட்டு விடுவார்கள். அதற்காக மு த லில் சாராயக் கடைகளை மூடுங்கள்' என்ருர் மட்டக்களப்பு முதலாவது உறுப்பினர் திரு. செ. இராசதுரை,
'நிவாரணப்பணத்தைத் தரமாட்டோம் நாங்களே வீடுகளை அ  ைமத்து த் தருகின்றேம்" என்கிருர் நீதி அமைச்சர்.
இவற்றைப் பார்க்கும்போது மட்டக்களப்பு மாவட்டத் தில் குருவளியால் ஒரு அழிவும் ஏற்படவில்லைப் போலவும், 50000 குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றதாகச் சொல்கிருர்களே, அவையெல்லாம் பொய் போலவும்படும். இவ்வளவு நாளும், குடிசைகளை இழத்த மக்கள் எ ன் ன செய்கிறர்கள்? அவர்கள் மழைக்கும் வெயிலுக்கும் பனிக் கும் பாதிக்கப்படவில்லைப்போல இருக்கின்றது. அதனல் தான் அவர்கள் நிவாரணப்பணத்தைக் கொடுத்ததும், அதை எடுத்துக்கொண்டு சாராயக்கடைக்கும் வேறு சோக் குகளுக்கும் செலவழிக்க ஓடிவிடுவார்கள் எ ன மட்டக் களப்பு அரசியல் வாதிகள் கருதுகின்றர்களா?
**என்ன ஐயா, தருமம் இது? ஏன் இப்படி அநியாய மாக பாதிக்கப்பட்ட மக்களை வருத்துகின்றீர்கள்?" என்று கேட்கலாம் போல இருக்கின்றது. எங்க ள் கண்களால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழிவுகளைப் பார்த்தோம்: உணர்ந்தோம் محم۔۔۔۔۔۔۔۔۔
இருக்க இடமின்றி, நிற்க நிழலின்றி, உடுக்க உடை யின்றி பசியால் வாடிய மக்களைக் கண்டோம் அவர்களுக் குக் கிடைக்கவேண்டிய நிவாரணப் பணம் இன்னமும் கிடைக்கவில்லை;
12-LD, G3p5,

Page 82
i60 12 மணி நேரம்
பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களை அங் குள்ள அரசியல்வாதிகள் நம் ப வில் லை. கொடுக்கின்ற பணத்தை அவமாகச் செலவழித்துவிடுவார்கள் என்று நினைக்கின்றர்கள். பத்துப்பேர் பொறுப்பின்றிச் செலவழிக் கலாம். அதற்காக 90 பேர் அவலப்படவேண்டுமா?
சூரு வளியின்போது கல்வித்திணைக்கள ஊழியர் சேம நலநிதிக் கூட்டுறவுச் சங்கம் செய்த பிரசாரம் குறிப்பிடத் தக்கது. சூரு வளியால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூபா 3000- கடன் தரப் போவதாகப் பெரிதாகப் பேப் பர்களில் அறிவித்தார்கள். மட்டக்களப்பு வின்சன்ட் மக ளிர் கல்லூரியில் கடன் வழங்கப்பட இருக்கின்றது என வும் அறிவித்தனர். ஆசிரியர்கள் அடங்கா ஆவலுடன் வண்டிகளிலும் றக்ரர்களிலும் ஓடிவந்தனர். கண்டது? ஏமாற்றம்தான்!
'விண்ணப்பப்படிவம் முடிந்தது. கடன் இல்லை " இதுவும் ஒருவித பிரசாரம்தான். அம்பாறை மாவட்ட ஆசிரியர்களும் பொலநறுவை மாவட்ட ஆசிரியர்களும் கடன்பெற்றிருக்கின்றர்களாம்,
பிரசாரவாதம் தொடர்ந்து நடக்கின்றது. "மட்டக்களப்பு மாவட்டத்தைப் புதியதொரு மாவட் டமாக்கப் போகின்ருேம்"
"திட்டமிடப்பட்ட முறையில் நகரத்தினை உருவாக்கப் போகின்ருேம்.'
'திட்டங்கள் எல்லாம் தயார்.' ஒருபக்கம். பசி. வறுமை. இருக்க இடமின்றித் தவிப்பு நோய்கள்.
-புனருத்தாரணம் கட்டிடங்களுக்கு அல்ல, மக்களுக் குத்தான் என்பதை யார் உணர்வார்கள்?

12 uosof (sprd 16
முடிவுரை
கண்டி பஸ்சில் ஏறி அமர்ந்தோம். மன்னம்பிட்டியாடு யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு வெள் ளம் ஏறிவிட்டது. மழை வேறு பெரித7 கப் பெய்யத் தொடங்கியது. கிழக்கு மாகாண மக்களுக்கு சூரு வளியால் ஏற்பட்ட துயர வடு மறைவதற்கு முன்னரே, வெள்ளப் பெருக்கு அபாயமும் சூழ இருப்பதை அப்போது நாங்கள் உணரவில்லை;
கண்டிக்கு வந்து யாழ்ப்பாணம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். இயற்கை இப்படிக் கிழக்கு மாகாணத்தைச் சோதித் திருக்கக்கூடாது.
வாதங்களை எல்லாம் மறந்து கிழக்கு மாகாண மக்க ளின் நல்வாழ்வுக்காக எல்லாரும் உழைக்க வேண்டிய வேளையிது. பதியத்தலாவையில் வீரகேசரிப்பத்திரிகை ஒன்றை வாங்கினுேம், செம்பியன் செல்வன் பத்திரிகை யில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினர்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் கூறு கிருர்:
*" . எம் உடன் பிறப்புகளான கிழக்கு மாகாண மக் கள் சூரு வளியாலும் வெள்ளத்தாலும் இன்று பாதிக்கப் பட்டு, சொல்லொணுத் துன்பத்தை அனுபவித்து வ ரு ம் வேளை இது. எனவே இரத்த பாசத்துடன் அவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்: எனவே, பிரதேச, அரசியல், மத வேறுபாடுகளைக் கரிட்ட முற்படுவது பெரும் பாதகமான செ ய ல். ஆண்டவனின் சோதனைக்கு ஆளாகியுள்ள மக்களை அற்ப வேற்றுமைகளை மறந்து யாவரும் கை கொடுத்து உதவ வேண்டும்

Page 83
162 12 மணி நேரம்
மேற்கோள் விபரங்கள்
1. 3 Breeding ground for Cyclones -
W. Buvana Sunderam .
(Dept, of Meteorology) 2. அயனமண்டலச் குரு வளிகள் - பேராசிரியர் ஜோர்ஜ்
தம்பையா பிள்ளையின் கட்டுரை. 5, 6, 7. ஆனந்தி பாலசிங்கம், பீ. ஏ. - தினகரன் பத்திரி
கையில் எழுதிய கட்டுரை. 8. Climatology-by W. G. Kendrew. 9. வீரகேசரிக்கு வானிலை அவதான நிலையத்தின் உதவி
இயக்குநர் திரு. ஆர். மகாதேவா அளித்த பேட்டி" 10, 12, 15, 18, 19, 25,-வீரகேசரி மட்டக்களப்பு நிருபர் திரு. வி. சு. கதிர்காமத்தம்பியின் குரு வளி பற்றிய வர்ணனையும், அறிக்கைகளும். 11. தினகரன் செய்தி. 13. தினபதி நிருபர் திருமதி சுகுணம் யோசெப் அறிக்கை l4. An Introduction to Meteorology by Sverre Patterson, 16, 17 சிந்தாமணி நிருபர் தேவமனேகரிக்கு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சி கிச்  ைச பெற்ற மட்டக் களப்பு நோயாளர் வழங்கிய பேட்டி. 20, 21, 22, 23 -தினகரனில் அதன் நிருபர் திரு. ம. த
லோறன்ஸ் அவர்களின் வருணனை, 24. Weekend - insight (24-12-78) 26. வீரகேசரியில் சித்தாண்டி நிருபர் திரு. க. சண்முக
லிங்கம், ". . . 27. வீரகேசரியில் அதன் நிருபர்கள் திரு. டீ. பி. எஸ்
ஜெயராஜ், ஆர். திவ்வியராஜன் ஆகியோரின் அறிக்கை,

28.
29.
30 31
32。
34.
35. 36
37.
38.
37.
12 மணி நேரம் 63
வீரகேசரி செங்கலடி நிருபர் அறிக்கை சிந்தாமணி ஒட்டமாவடி நிருபர் ஜனப் எஸ். எல்.
எம். சாலிஹ். தினகரனில் காத்தான்குடி நிருபர்: ஈழநாடு நிருபர் திரு. இரத்தினசிங்கம். தினபதி கல்லா று நிருபருக்கு திரு. நாகலிங்கம்
அளித்த பேட்டி, aதினபதி நிந்தாவூர் நிருபர் ஜனப் ஏ எஸ். எம்:
சலீம் அறிக்கை. தினபதி பொலநறுவை நிருபர் ஜனுப் ஏ. ஆர். ஏ
ஹாபீஸ், ஈழநாட்டில் கோப்பாய் சிவம் அனுபவம் வீரகேசரி நிருபர் திரு. அன்டன் எட்வேர்ட்டிற்கு
நீதி அமைச்சர் அளித்த பேட்டி, வீரகேசரி நிருபர் திரு. அன்டன் எட்வேர்ட்டிற்கு
எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பேட்டி. வீரகேசரியில் (11-12-78) மட்டக்களப்பு நிருபர் வீரகேசரியில் (22-12-78) நீதி அமைச்சர் கருத்து,
40, 41. தினபதியில் நீதி அமைச்சரின் கருத்து.
42,
வீரகேசரி மட்டக்களப்பு நிருபர் திரு. வி. சு கதிர்
காமத்தம்பி அறிக்கை (15-12-78)

Page 84
醬
குருவளி அரக்கன்"
- - - - - -
في هي مقر " .
 
 


Page 85
1978 நவம்பர் 23-ம் திகதி இலங்கையின் கிழக்குக் கரை மட்டக்களப்புப் பகுதியில் -
ஊழிக் கூத்து நடத்திய ‘குரு
குருவளி அரக்கன் பிறந்த க - அவன் செய்த அக்கிரமங்க கவே நெஞ்சை ந்டருக்கும் கன்
ஒரு சமகால வரலாறு, சீர் சொல்லப்படுகிறது . .
silises -_
 

7 L. (BILJITITLh --------- 懸
வளி அரக்கன்" - தை-அவன் வளர்ந்த கதை ள் அணியாயங்கள்! நினேக்
ண்ணிர்க்.கதைகள் . . .
வையான க  ைத போலச்
5ܩܒܕܒܫܒܩܒܩܫܒܒ