கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இங்கிலாந்தின் வரலாறு 1

Page 1


Page 2


Page 3

இங்கிலாந்தின் வரலாறு
முதலாம் பாகம்
1940-1951 வரை திரித்துவக் கல்லூரி அதிபரும், கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில், தற்காலவரலாற்றுக்கு இரீசியசுப் பேராசிரியராக முன்பு இருந்தவருமான
யோ. ம. திரவெலியன் எழுதியது.
1964
உலோங்குமன்சு, கிரீன் கம்பெனியார், இலண்டன், நியூயோக்கு, தொரந்தோ.

Page 4
HISTORY OF ENGLAND
by
G. M. Trevelyan, O.M. Master of Trinity College, 1940-1951. Formerly Regius Professor of modern History in the University of Cambridge.
Translated and published by the Government of Ceylon
by arrangement with
Longmans, Green and Co., London-New York-Toronto.
இலண்டன், நியூயோக்கு, தொரந்தோ எனும்பதிகளிலுள்ள உலோங் குமன்சு, கிரீன் அன் கம்பெனியாரின் இசைவுபெற்று, இலங்கை அரசாங் கத்தாரால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே.

ஆவாட்டுப் பல்கலைக் கழகத்தலைவர் உலவ்ெல் அவர்களுக்கு.

Page 5

முன்னுரை
உயர்நிலை வரலாறு கற்கும் மாணவர் பயன்படுத்தும் பொருட்டு, இத் திணைக்களத்தார் மொழிபெயர்த்து வெளியிடும் வரலாற்று நூல்கள் பலவற்றுள் இது வொன்றகும். “ இங்கிலாந்தின் வரலாறு” எனப் பெயரிய இந்நூல் யோ. ம. திரவெலியனரால் ஆங்கிலத்தில் எழுதப் Litt-gl.
ஆங்கில முதனூலின் முதலாம் இரண்டாம் மூன்றம் நூல்களை உள்ளடக் கிய இப்பதிப்பு, ஈண்டு முதலாம் பாகமாக வெளியிடப்படுகிறது.
இந்நூலை மொழிபெயர்த்தற்கு உரிமை நல்கிய உலோங்குமன்சு, கிரீன் கம்பெனியார்க்கு இத்திணைக்களம் பெரிதுங் கடப்பாடுடையது.
இப்பதிப்பினை மேலுந் திருத்தமுறச் செய்தற்கு ஏற்ற குறிப்புரை தெரிப்புரைகள் வரவேற்கப்படும்.
நந்ததேவ விசயசேகரன்,
ஆணையாளர்.
அரசகரும மொழித்திணைக்களம், (வெளியீட்டுப்பிரிவு),
கொழும்பு 7,
நவம்பர், 1961.
2-R 6344-008 (1262)

Page 6
முகவுரை
ஆங்கில வரலாறெனும் அளப்பரும் பரவையை நீந்தி, அதனை எழுநூறு பக்கங்களில் அடக்கி, முதலிலிருந்து முடிவுவரை முழுமையுறக் கூறப்புகு மொரு நூலானது, ஒன்றில் ஒரு பாடநூலாகவோ, அன்றேல் ஒரு கட்டுரையாகவோ அமைந்துவிடற்பாலது. அஃது எவ்வாற்றணும் நிகழ்ச்சி களை முற்றமுடியக் கூறுவதொன்றகாது. இந்நூலானது நாட்டின் பொரு ளியல் நிலைமைகள், அரசியல் நிறுவகங்கள், கடல் கடந்த முயற்சிகள் என்னுமிவை தொடர்பான சமூக வளர்ச்சியை ஆராய முயலுமாற்ருன் ஒரு கட்டுரையாக வமைகின்றது. வரலாற்றுரை முறையைப் பேணி விவ ரங்களைச் சுருக்கமாக விளக்கித் தேதிகளைக் குறிப்பிட்டுத் தலையாய நிகழ்ச்சி களுக்கும் மக்களுக்கும் முதன்மையளிக்குமாற்ருன் இஃதொரு பாட நூலாக வமைகின்றது.
கொத்துலாந்து, அயலாந்து, கடல் கடந்த பேரரசு ஆகியவற்றின் வரலாறு, யாண்டும் ஆங்கிலக் கண்கொண்டே நோக்கப்பட்டிலதென்பது என் நம் பிக்கை. ஆயின், இந்நூலில், குறிப்பாக இதன் முற்பகுதிகளில், இருக் கும் ஒருமைப்பாடு இங்கிலாந்தை மையமாகக் கொண்டே பெறப்பட்டது. என்னல் நிறைவேற்றவியலா வேட்கைகளை எழுப்பாத வண்ணம் இந்நூலை இங்கிலாந்தின் வரலாறென்று மட்டுமே பெயரிட்டுள்ளேன்.
1924 ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில் மசாச்சூசெற்றிலுள்ள பொசு தன் பல்கலைக்கழகத்தில் யான் நிகழ்த்திய உலவெல் நினைவு விரிவுரை களே இந்நூல் உருவாவதற்குக் கருவாயமைந்தன. ஆதலின், ஆவாட்டுப் பல்கலைக்கழகத் தலைவரான உலவெல் அவர்களுக்கும் அஞ்ஞான்று என்னை விருந்தோம்பிய என அன்பர்களுக்கும் இந்நூலை இவ்வுருவில் உரித்தாக்கு கின்றேன்.
பழைய கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்து நண்பர் இருவர்க்கு-அரசர் கல்லூரியைச் சேர்ந்த கலைநிதி கிளப்பாம் அவர்கட்கும் இயேசு கல்லூரி யைச் சேர்ந்த திரு குளோட்டு எலியற்று அவர்கட்கும்-யான் பெரிதுங் கடமைப்பட்டுள்ளேன். என்னை? முன்னவர் இக்காலப் பிரித்தானியா வின் பொருளியல் வரலாறு என்னுந் தமது நூலின் முற்பகுதியை அச்சேற்றுவதற்கு முன்னரே எனக்குத் தந்து அதனை யான் நன்கு பயன்படுத்தவுரிமை வழங்கியமையானும், பின்னவர் என் நூலின் முற் பாதியைப் படித்து அரிய பல அறிவுரைகளை ஆங்காங்குக் கூறியுதவிய மையானுமென்க.
யோ. ம. திரவெலியன். பேக்காஞ்சுதெற்று, வப்பிரில், 1926,

நூல் 1 அத்தியாயம்
1. ஆதி மனிதன். ஐபீரியரும் கெலித்தியரும் 11. உரோமன் ஆட்சிக்குட்பட்ட பிரித்தானியா III. நோதிக்குப் படையெடுப்புக்களின் தொடக்கம் IV. கிறித்துவ மத மீட்சி e
V. நோதிக்குக்களின் இரண்டாம் படையெடுப்பு, தேனியர் VI. சட்சணிய இங்கிலாந்தில் வாழ்க்கைமுறை s s VI. எத்திஞ்சுப் போர்வரை நோமானியர் வெற்றி, 1042-1066 VI. நோமானியர் வெற்றி பூரணமாதல் ; நோமானிய நிறுவகங்கள்
அமைக்கப்படல் 1066-1135
நூல் II 1. சுதீபன் கீழ் ஆட்சியறவும் அரச அதிகாரம் மீளலும் . . II. 11 ஆம் என்றியும் சட்டமும் 8 o II. சிலுவைப் போர்கள். மகாபட்டயம் IV. மத்தியகாலத் தொகுப்புணர்ச்சி
V. கெலித்தியரும் சட்சணியரும்.தீவகப் பேரரசைப் பூரணமாக்க முயற்சி VI. நூற்றண்டுப் போர் up VII. கருங்கொள்ளை நோயும் அதற்குப் பின்னரும் VII, II ஆம் எட்டுவேட்டு காலம் முதல் VI ஆம் என்றியின் காலம்வை
பாராளுமன்ற வளர்ச்சி go as
Jg5Tsio III 1. VI ஆம் என்றியும் புதிய முடியாட்சியும் 11. மறுமலர்ச்சிக்காலத்து அறிஞர்கள். புதியன கண்டு பிடிக்கும் ஊழி . . II. VI ஆம் என்றியின் ஆட்சியில் அரசிலும் பாராளுமன்றத்திலும்
உண்டான மதச்சீர்திருத்தம் . . P. IV. புரட்டசுத்தாந்த, கத்தோலிக்க இடை நிகழ்ச்சிகள். VI ஆம் எட்
வேட்டும் 1 ஆம் மேரியும் 8 W. 1 ஆம் இலிசபெத்து O e s VI. ஆங்கிலேயர் கடலாட்சியின் ஆரம்பம் VI. இலிசபெத்து மகாவூழி to o
உள்ளுறை
பக்கம்
19
38
67
97
122
14
172
205
227
240
266
301 334
356
379
4.
4.32
446
468
48S
50
532

Page 7
kaLáb
I.
II.
III.
IV.
VII.
VIII.
VIII.
IX.
XI.
XI.
XIII.
XIV.
ΧΥ.
XVI,
XVI.
XVIII.
XIX.
ΧΧ.
ΧΧΙΙ.
XXI.
படங்கள்
கெலித்திய, உரோமானிய பிரித்தானியா r
ஐபீரியப் பிரித்தானியா a & 8
உரோமன் பேரரசு மத்தியகாலக் கிறித்துவ உலகு உரோமானியப் பிரித்தானியாவின் அழிவு எழுவராட்சிக்குட்பட்ட இங்கிலாந்து a இருண்ட ஊழியில் கொத்துலாந்தும் நோதம்பிரியாவும் வைக்கிங்கு வழிகள் வைக்கிங்குப் படையெடுப்புப்போது இங்கிலாந்து, கொத்துலாந்து, அய லாந்து எளகங்களாயமைந்த இங்கிலாந்து : நோமானியர் வெற்றிக்கு முந்து நாள்
ஆஞ்சுவின் பேரரசு h கெளதெற்று : பண்ணை முறைமைக்குட்பட்ட ஒர் ஆங்கிலக் 4jyມທີ່ສd 8rmloh மத்தியகால முடிவுகாலத்தில் அயலாந்து மத்தியகால உவேல்சு மத்தியகாலக் கொத்துலாந்தும் வட இங்கிலாந்தும் a பிரான்சு : நூருண்டுப் போரின் முதற்பாகம்
111 ஆம் எட்டுவேட்டின் அதிகார எல்லை A w பிரான்சு : நூருண்டுப் போரின் இரண்டாம் பகுதி W1 ஆம் என்றி யின் பேராதிக்கம் p ao பதினைந்தாம் நூற்றண்டில் இங்கிலாந்து 0 8 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட இங்கிலாந்தும் உவேல்சும். தியூடர்
பருவம் a VI ஆம் என்றி காலத்து ஐரோப்பாக் கண்டத்துப் பெரு முடியாட்சி களின் தோற்றம் e -
இலிசபெத்துக் கால உலகம் a ܝ ܀ es இலிசபெத்துக் காலத்து ஐரோப்பா இசுப்பானிய, ஒல்லாந்த நெதலாந்து a
viii
பக்கம்
முதற்பக்கத் துக்கு எதிரி லுள்ளது
30
sı
41
55
78
07
108
161 92
324
309
3.
322,
339
348
389
424
44
505
50
522

பாயிரம்
எங்கள் நாடடில நாகரிகமடைந்த மனிதனின் வரலாறு மிகப் பழைய காலத்ததாகும் ; அல்பிரெட்டு மன்னனின் ஆளுகைக்கு வெகு முன்னரே அது தொடங்குகிறது. ஆனல் உலக அலுவல்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் நாடாய்ப் பிரித்தானியா விளங்கியகாலத்து வரலாறே பிற்றை ஞான்றுக்குரியது ; இலிசபெத்தரசியின் ஆட்சியோடு அவ்வரலாறு தொடங் குகிறது. இதற்குக் காரணத்தை உலகப்படத்திலேயே காணலாம். பண்டைய அலெச்சாந்திரியாவிலோ, மத்திய காலத்துறவி மடங்களிலோ இருந்த நாட்டுப்பட அமைப்பாளர், எங்கள் தீவை யாவற்றுக்கும் வடமேற்காய் அமைத்துள்ள்னர். ஆனல், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், ஆபிரிக்காவிற்கும் கிழக்குநாடுகளுக்கும் கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், இப்புதிய கடல்சார்ந்த இயக்கத்தின் மையமாகப் பிரித்தானியா அமையலாயிற்று. இதன் புவியியற்றேற்றத்தில் எற்பட்ட இம்மாற்றத்தை அந்நாட்டவர் நன்னேக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்; இவர் கள், சுதுவாட்டுக்காலத்தில், கடல் கடந்த வர்த்தகத்துக்கும் அதனை வளர்த்த நிதிக்கும் கைத்தொழிலிற்கும் பிரித்தானியாவைத் தலையாய இருப்பிடமாக்கினர். அடுத்து, நியூற்றன் பிறந்த பூமியாகிய பிரித்தானியா புதுமையான விஞ்ஞானத்தின் துணைகொண்டு, பரும்படியாகப் பொருள் களே ஆக்குவதற்கு இயந்திரங்களை உபயோகித்து, உலகளாவிய கைத்தொ ழிற் புரட்சியைத் தோற்றுவிக்கலாயிற்று. இதற்கிடையில் பிரித்தானியா, வட அமெரிக்காவில் மக்களைக் குடியேற்றி அங்கு சட்டங்களையும் வழங்குவ தாயிற்று ; இப்பதின்மூன்று குடியேற்ற நாடுகளையும் இழந்தபின்னர், இவற்றிலும் மிகப்பரந்தும் விரவியும் கிடந்த இரண்டாவது பேரரசொன்றை
நிறுவலாயிற்று.
AV
பொருள்வளத்துக்கும் தலைமைக்குமுரிய இப்பிற்றை நூற்ருண்டுகள் புலத்துறை முற்றிய நலன்களைப் பெற்ற காலமுமாகும். பீட்டு, உரோசர் பேக்கன், சோசர், விக்கிளிப்பு ஆகியோர் தோன்றியிருந்தும், பிரித்தானியா மத்தியகால விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் அளித்துள்ள பங்கை, செகப்பிரியர் காலம் தொட்டுள்ள அதன் புலத்துறைப்படைப்பாகிய உலகு டன் ஒப்புநோக்குங்கால் முன்னையது அற்பமானதாகத் தோன்றுகிறது. திடீரென விரிவடைந்துள்ள பூகோளத்தின் கடல்சார்ந்த நிகழ்ச்சிகள் யாவற்றுககும் மையமாகத் தான் விளங்குவதை இலண்டன் மாநகரம் உணர்ந்து விழிப்புற்ற அவ்வூழியே மறுமலர்ச்சியினதும் சீர்திருத்தத்திகன தும் ஊழியுமாகும். புலத்துறைவளர்ச்சிக்கும் தனிப்பட்டவர் கன்ஞண் மைக்கும் உள்ள இவ்வியக்கம் வேற்றினத்தவரிலும் பார்க்கப் பிரித்தானி யருக்கே உகந்ததாய்க் காணப்பட்டதுடன் அந்நாட்டவரின் சீர்மையை வெளிப்படுத்துவதுமாயிற்று.

Page 8
அரசியற்றுறையில் பிரித்தானியா, பாராளுமன்றங்களுக்கெல்லாம்தாயாய் விளங்கியது. தன்னட்டு மக்களின் இயற்கையுணர்வுக்கும் குணவியல் புக்கும் ஏற்றதாய், பல நூற்றண்டுகாலப்போக்கில், ஒன்றுக்கொன்று முரண்பட்டவையெனப் பலகாலம் பிறநாடுகளுக்குத் தோன்றிய மூன்றுவிட யங்களை ஒருங்கே செயற்படுத்துமோர் முறைமையை மலர்வித்தது-அவை யாவையெனின், நிருவாகத்திறன், பொதுமக்கட் கட்டுப்பாடு, தனிமனிதச் சுதந்திரம் என்பன. உண்மையாகவே, பாராளுமன்றத்தின் தோற்றமும் ஆங்கில வழமைச்சட்டத்தின் தோற்றமும் மத்தியகாலத்துக்கேயுரியன. மன் னுறு அதிகாரத்தை ஈற்றில் பாராளுமன்றம் வெற்றிகொண்டதனல், இவ் வழமைச் சட்டம், ஆங்கிலமொழிபேசப்படும் நாடுகளிலெல்லாம், தனியாதிக் கம் பெற்ற தென்க. மத்தியகால அரசியலின் மதிப்புக்குரிய பண்புகள் யாவையோவெனின் உலகியற்றுறையில் தனிமுதன்மையாட்சிக்குக்காட்டிய வெறுப்பு, கூட்டுவாழ்க்கையில் விருப்பு, பிரதிநிதிகள் மூலம் பல்வகைப் பட்ட கூட்டமைப்புகளின் அறிவுரைகோடல் என்பனவாம். பாராளுமன்ற மானது மத்திய ஊழிக்கேயுரிய ஒரு சிறப்புவிளைவாயினும், தியூடர், சுது வாட்டு, அனேவரியர் காலங்களின் அதன் அதிகாரங்களின் விருத்தியும், அதன் சமகால ஐரோப்பாவில் வரவேற்கப்பட்ட உரோமானியச்சட்டத்தின் அரசியற்கொள்கைகளுக்கெதிர்ப்பும், அமெரிக்காவிலும் அதன் எதிரடி இடங்களிலும் பாராளுமன்றங்களை நிலைநாட்டியமையும் ஆகிய இப்பெரும் நிகழ்ச்சிகள் பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றை ஐரோப்பியக்கண்ட அரசியல் வாழ்க்கையினின்று வேறுபட்டதான ஒரு வட்டாரமாக உயர்த்து வதற்கு எதுக்களாயமைந்தன. பிரான்சும், இசுப்பெயினும் மத்திய பிரதி நிதித்துவ நிறுவனங்களையும், பாராளுமன்றங்களையும் பெற்றிருந்தவெனி னும், புதுமையான சூழ்நிலைமைகளுக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டன. நிலமானிய முறைமை பரம்பியதும் இலத்தின் மொழிபேசும் மக்கள் இப்புதிய ஊழியின் அரசியல் நற்செய்தியாக வல் லாண்மை முடியாட்சியைக் கொண்டனர். இப்புதிய நாட்டின் உணர்ச்சி பற்றிய மக்கியவெல்லியின் உயர்வான கருத்துக்கோடலுக்கு மறுதலையாய், பெரிய நாட்டின அரசுகளில் பிரித்தானியா மட்டுமே வெற்றிகரமாக நின்று, வல்லாண்மை வேகத்தைப் போக்கடித்து, தேர்த்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களைக் கொண்ட உரையாட்டுச்சபைகள்மூலம் ஒரு பேரரசைப் போர்க்காலத் திலும் அமைதிக்காலத்திலும் வெற்றிகரமாய் ஆளக்கூடிய ஒரு முறை மையை விரிவுபடுத்தி அமைத்தது.
1689 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்குமிடையில் வேற்றுநாட்டுப் போட்டியாளருடன் எற்பட்ட வர்த்தக, இராணுவ சம்பந்தமான போராட்டங்கள் நிகழ்ந்த போது நாட்டினவிருப்புக்குச் சத்தியளிக்கும் ஒரு வழிமுறையாகப் பாராளுமன்றச் சுதந்திரம் வல்லாண்மையைவிட மேலான தகுதிவாய்ந்த தென்பதை எங்கள் பொருள்களும், எங்கள் கப்பல்களும், எங்கள் சேனைக ளும் நிறுவின. அன்றியும், கைத்தொழிற் புரட்சியினல் மனிதவாழ்க்கை யில் புகுத்தப்பட்ட புதிய ஊழியிலும், இத்தீர்ப்பு மறுக்கப்படவில்லை.

ki
19 ஆம் நூற்றண்டில், இதே பாராளுமன்ற நிறுவகங்கள், குடியாட் சிக்கு நிகரான மாற்றங்களையடைந்து வருங்கால், கைத்தொழிற்புரட்சியின் பயனய்த் தோன்றியுள்ள புதிய வியத்தகு சமூகவாழ்க்கையின் நிலைமைக ளோடு ஒத்துமேவும் கடுஞ்சோதனைக்குட்படுத்தப்பட்டன. அதே சமயத்தில், வெண்ணிறத்தினரும், கபிலநிறத்தினரும் கருநிறத்தினருமான சமுதா யங்களைக் கொண்டதாய், மிகப் பரந்து என்றும் வளர்ச்சியுற்றுக் கொண் டிருந்த பேரரசானது மிகச் சிக்கலான பல்வகைப் பிரச்சினைகளே எழுப்பிக் கொண்டிருந்தது. இக்காலப் பொருளியல்நிலைமைகள், சமூக அரசியல் மாற்றங்களுக்கு அளிக்கும் அத்தகைய தூண்டுதல்களால், இப்பிரச்சினை கள் ஒவ்வொன்றும் சிற்சில வாண்டுகளில் புத்துயிர்பெற்றுப் புத்துருவில் மீண்டும் மீண்டும் தோன்றலாயின. வெண்ணிறவினத்தவருக்குப் பாராளு மன்ற ஆட்சியும், தன்னுட்சிக்கு இன்னும் பக்குவமெய்தாத சமூகங்களை நீதியாக ஆளுவதற்குரிய விருப்பும் இதுவரையில் இப்பல்வேறு இனமக்கள் கூட்டத்தைப் பேணிவந்துள்ளன. *
tz: இனி, கடந்த காலத்தில் எங்கள் பிரதான நாட்டம் எதுவாயிருப்பினும் -பொருள்வளவிருத்தியும் இனப்படர்ச்சியும், அரசியல், சமூக நிறுவகங்க ளின் வளர்ச்சியும் அல்லது அறிவாற்றல் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி யும் ஆகினும்- பிரித்தானிய வரலாற்றில் இறுதி நானூறு ஆண்டுகளே புகழ்வாய்ந்தனவாகும். எனினும் இந்நூலின் மூன்றிலொரு பகுதியை தியூடர் காலத்துக்கு முன்னுள்ள காலவவதியின் பரிசீலனைக்காக ஒதுக்க நான் தயங்கினேனல்லேன். மிக ஆதிகாலந்தொட்டு, 1066 ஆம் ஆண்டு வரை, படைபூண்ட பல இனக்கூட்டங்கள் பிரித்தானியாவிற் புகுந்து கொண்டிருந்தன. அவர்கள் தஞ்சம் புகுந்த இந்நாட்டில், நோமானிய, பிளாந்தாசெனற்று மன்னர்களின் காவலில், "அவர்கள் விருத்திசெய்த நாட்டினப் பண்பும் வழமையும் மட்டுமே இலிசபெத்தினல் ஆளப்பட்ட 50 இலட்சும் மக்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் அக்காலத்து அறிவி யல்சார்ந்த இயக்கங்களின் பயனக எழுந்த கடல்சார்ந்த கண்டுபிடிப்புக் களினல் வரவிருந்த வருங்கால வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்து வதற்குத் துணைபுரிந்தன. அப்பொழுது வற்ற சமயம் நெருங்கியதெனின், மக்களும் அதற்கு ஆயத்தமாயிருந்தனர்.
பிரித்தானியா எக்காலையும், கடலுக்கும் கடற்றுறைப் பொருள்களை உண்ணுடுகளுக்குக் கொண்டுசெல்ல ஆதிகாலந்தொட்டுத் துணையாயிருந்த ஆறுகளுக்கும் துறைமுகங்களுக்கும் தான் பெற்றுள்ள நற்பேறு சார்பாகக் கடமைப்பட்டுள்ளது. திரைகடலாதிக்கத்தை அவாவிய காலத்துக்கு வெகு முன்னர், அக்கடலின் ஆட்சிகருட்பட்டிருந்தது என்ன ? கடலுந்திக் கரை யேறிய படகோட்டிகளினல் அதன் கதி தொடர்பாக நிர்ணயித்துவரப்பட்டத னலென்க. ஐபீரியர் கெலித்தியர் தொடக்கம், சட்சனியர்”தேனியக்குடி

Page 9
xii
யேற்றக்காரர் ஈருக, வரலாற்றுக்கு முற்பட்டகாலமும், பினிசிய வர்த்தகர் காலந்தொடக்கம் உரோமானிய, நோமானிய ஆட்சியாளர் காலம்வரை, அடுத்தடுத்து அலையலையாகப் போந்த போர்ப்பிரியரான குடியேற்றமக்கள், ஊக்கம் மிகுந்த கடலோடிகள், ஐரோப்பிய கமக்காரரும் வர்த்தகர்களும், கடல்வழியாக பிரித்தானியாவிற் குடியேற அல்லது அங்குள்ள பழங்குடி களுக்குத் தம் அறிவையும் உயிர்ப்பையும் புகுத்த ஆங்கு வந்துள்ளனர். அதன் கீழ்க்கரை பாதுகாப்பற்றிருக்க, அங்கு தியூத்தோனியரும் கந்தி னேவியரும் குடியேறினர். பிரான்சு வழியாக மத்தியதரைப் பண்பாடு தென்கரையை வந்தடைந்தது. தியூத்தோனியர், கந்தினேவியரிடமிருந்தே பிரித்தானியா தன் குடிமக்களில் பெரும்பகுதியினரைப் பெற்றது. மேலும் அவர்களிடமிருந்தே நாட்டின் குணவியல்பையும், மொழியின் அடிச்சொற்களையும் பெற்றது. தென் நாடுகளிலிருந்து தன்மொழிக்குரிய பிற சொற்களையும், பண்பாட்டு முறைகளையும் நிருவாகத்திறனையும் பெற்றது.
கணியூற்றரசன் கந்தினேவியருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருக்க, அதனை நோமானிய வெற்றி துண்டித்துவிட்டது. பலநூற்றண்டுகளாகத் தீவில் வாழும் நோதிக்குமக்கள், பிரெஞ்சு மொழிபேசும் உயர்குடியின ராலும், இலத்தீன் மொழிபேசும் குருவாயத்தினலும் ஆளப்பட்டு வந்த னர். ஆனல் முன்னுக்குப் பின் முரணுன குறிப்பிடத்தக்க உண்மையா தெனில், இத்தகைய வேற்றுநாட்டு ஆட்சியிலேயே இத்தாலி பிரான்சு ஆகிய நாடுகளின் இயல்பினின்றும் வேறுபட்ட தீவிரமான நாட்டின உணர்ச்சியையும், தனக்கேயுரித்தான நிறுவகங்களையும் இங்கிலாந்து விருத்திசெய்யத் தொடங்கியமை யென்க. போடர் விளைவிக்கவல்ல நூற் றண்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலத்திற்ருனும், சோசர், உவிக்கிளிப்பு என்பவர்கள் காலத்து மக்களிடையே தனித்தன்மை வாய்ந்த ஆங்கில நாட்டி னம் உருவாகுவதை நாம் காண்கிருேம்; இவ்வினம் பழைய சட்சணிய இனத் திலும் செழிப்பு மிக்கது ; காலமென்னும் பேரலைகள் எங்கள் கரைகளுக் குக் கொணர்ந்த பல இனங்கள், இயல்புகள் பண்பாடுகள் யாவற்றையும் எங்கள் தீவின் காலநிலையானது பதப்படுத்தி இசைவுறக் கனிவித்த இனமே இதுவாகும். சீர்திருத்தத்தின்போது முதிர்ச்சியெய்தியிருந்த ஆங்கிலமக்கள் இலத்தீன் ஆசிரியர்களை விலக்கினர். கந்தினேவியர் தியூத்தோனியருடன் நெருங்கிய தொடர்புங் கொண்டிலர். தானே ஒரு தனியுலகாய்ப் பிரித்தா னியா அமைவதாயிற்று.
பண்பாடு, அரசியல், சார்ந்த வளர்ச்சியின் இத்தகைய நெருக்கடியான கட்டத்தில், இங்கிலாந்து ஐரோப்பியத் தொடர்புகளைப் பலங்குறையச் செய்த காலை, கொத்துலந்துடன் ஐக்கியப்படுமாறு ஏற்பட்டது; அதேகாலத்தில், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பூகோளத்தின் ஒவ்வொரு திக்குஞ் செ ன்று

xiii
வருவதற்கடி கடலும் வாய்ப்பளித்தது. ஆங்கிலேயரின் தீவுக்குணமானது எவ்வாறு குறிப்பிடத்தக்கவாறுள்ளதோ அவ்வாறேயுள்ள அவர்களின் பரந்த உலக அனுபவமும் நோக்கும் அவர்களின் கடலாட்சி காரணமாய் எழுந்தவையாகும். மேலும் கடந்த முன்நூருண்டுகளுக்கு மேலாக, இக் கடலாட்சி காரணமாய் அவர்கள் நாடு காண்பவராயும், வியாபாரிகளாயும் குடியேறிகளாயும் வடவரைக்கோள தென்னரைக்கோளக் கரைகள் எங்கும் சென்று வந்தனர்.
இவ்வாருக, பிரித்தானியாவுக்கும் கடலுக்குமுள்ள தொடர்பானது ஆதி காலத்தில் அமைதித் தன்மையையும் ஏற்குமியல்பையும் கொண்டதாகும்; இக்காலத்தில் அஃது ஆளுந்தன்மையையும் தேட்டநாட்டத்தையுங் கொண்ட தென்க.

Page 10
போது
بی
iki ši,
கலித்திய உரோமானிப"
பிரித்தன்
iklimi m= ΕΗ
حجیت چیت ==غsgمت
mis
is si His
heddilltir i Gynulliam Asiau Awyrlunya
L ii 唱 t ሤ'ኳ ಸ್ಧvಳಿuಸ್ತಿ 는
శ 懿 *
ug: 晶 E.
క్రి
"E
*දී. வெர்
ఫ్ట్ °్ళ
|تیم به دسیسه باب - خدا th--- - مم وسيع ميس- س-} {
கெலித்திய உரோமாவிய பிரித்தானியா
xy
 
 
 
 
 
 
 
 

நூல் 1
இனங்கள் கலத்தல் - ஆதிகாலம் முதல் நோமானிய வெற்றிவரை
முன்னுரை
பிரித்தானியர் கலப்பு இரத்தமுடைய ஓர் இனத்தவர் என்று கூறப்படு வது யாவருமறிந்ததே. இவ்வினக்கலப்பு எவ்வாறு, எக்காவே, ஏன் விற்பட்டதென்பதை இம்முதல் அதிகாரத்தில் ஒரு சிறிது குறிப்பிடலாமென நான் கருதுகிறேன்.
இத்தீவில் இன்று வாழும் இனங்களின் வருகையானது நோமானிய வெற்றிக் காலத்திலேயே பெரும்பாலாக முற்றுப்பெற்றிருந்த தென்பதைத் தொடக்கத்திலேயே கூறிக் கொள்வது ஏற்புடைத்தாகும். இனவிடயமான மாற்றத்திலும் சமுதாய, பண்பாட்டு மாற்றங்களேயே அதிக முண்டாக்கிய இந்நிகழ்ச்சியுடன், புலம்பெயர்வுப் படையெடுப்புக்களும் வாள் முஜனயில் வலுக்கட்டாயமாகச் செய்த நுழைவுகளும் முடிவெய்தின. வேற்று நாட்டுக் கம்மியரும் தொழிலாளரும்-பிளமிங்குகள், இயூசெனற்றுக்கள், ஐரிசுக் காரர், மற்றும் பலர்-எனவே அங்கு குடியேறியுள்ள மக்களின் சம்மதத் துடன் மெதுவாகவும் அமைதியுடனும் அங்கு நுழைந்துகொண்டிருந்தனர். எத்திஞ்சுப் போருக்குப் பின்னர் இத்தகைய நுழைவைக் காட்டிலும் பேரி டர் விளேக்கக்கூடிய நிகழ்ச்சி ஏதும் எற்பட்டதிஃேஜ எனலாம்.
நோமானிய வெற்றிக்கு முன்னர், பிரித்தானியா மீது படையெடுப்பது இலகுவாயிருந்தது; ஆயின் அவ்வெற்றிக்குப் பின்னரோ அது கடின மான தொன்றயிற்று. இதற்குக் காரணம் வெளிப்படையானதே. ஒன்று பட்ட மக்களே நாட்டிலும், வலிமைமிக்க கடற்படையைக் கடலிலும் கொண்டு திறம்படவமைந்த ஒர் அரசானது சிபானிய நாட்டுப் பிலிப்போ, 14 ஆம் உஜாயியோ, நெப்போலியனுே போன்றர் கால்வாய்க்கு அப்பால், எதிர்க் கரையிலே, திரட்டி நிறுத்தக்கூடிய படைப்பலத்தைத்தானும் எதிர்த்துக் கால்வாய்க்கு இப்பால் தன்னேப் பாதுகாக்க வல்லதாயிருந்தது. அண்மை நூற்றண்டுகளில் இத்தகைய நிலேமைகள் தோன்றி மேற்கூறியாங்கே முடிவுற்றுள்ளன. என்றி தியூடர் அல்லது ஒறேஞ்சு வமிச உலவில்லியம் போன்றவர்கள் வரவேற்கப்பட்டதுபோல், சிலவேளேகளில் சில படையெடுப் புக்கள் வரவேற்கப்பட்டிருப்பினும், அந்நாட்டுச் சமுதாயமனேந்துக்கும் எதிராக வெழுந்த எப்படையெடுப்பும் அரைகுறையான வெற்றிதானு மெய்தியதில்லே என்னேயோவெனின் பிரித்தானியா கடலே அரணுகக் கொண்டதனுலென்க. ஆணுல், நோமானிய வெற்றிக்கு முன்னர், பல காலமாகத் தீவின் அரசோ, கடற்படையோ வெல்லமுடியாததொன்று

Page 11
2 தீவாதற்கு முந்திய பிரித்தன்
யிருக்கவில்லை. அல்பிரெட்டு, அரல் ஆகியவர்களின் காலங்களிற்ருனும், அவர்களின் தேவைகட்கு அவை எற்றவாயமையவில்லை. அவர்களுக்கு முற்பட்ட காலங்களிலோ அரசோ, கடற்படையோ இருந்ததுமில்லை. உரோ மானியரது துடுப்புடைக் கலன்களாலும், காலாட்படைகளினலும் பெற்ற பாதுகாப்பைத் தவிர, எனைய காலங்களில் ஆதிப்பிரித்தானியாவோ புவி யியற் காரணங்களினலும், பிற காரணங்களினலும் பிறர் படையெடுப்பிற்கு உவந்த ஒரு தனியிடமாயமைந்திருந்தது.
பிரித்தானியாவிலே நோமானியர் வருகையோடு முடிவுற்ற இனக்கலப்புக் கதையானது மிக மங்கலாகத் தோன்றும் ஓராயிர வாண்டின் வரலாற்றை அடக்கியுளது; இதற்கு முன்னர் தொல்பொருளியல் ஆராய்ச்சியாளர்தந்த, அந்தியொளியே பல்லாயிரமாண்டுகளாக நிலவிவந்தது. கெலித்தியர், சட்சணியர், தேனியர் ஆகியோர் ஊழியானது பாழ்பட்ட தரிசு நிலத்தில் மகுபெது நிகழ்த்திய போரினைப் போன்றது. வருவது கூறும் நிமித்தரின் உரை சூழலிலே வட்டமிடுகின்றது. கொம்புகளின் ஒலி புகார்ப்படலத் தூடே கேட்கின்றது. அதனேடு அச்சம் விளைக்கும் அமளிதுமளியுங் கலந்து பேரிரைச்சலாயெழுகின்றது. அரக்கவுருவங்கள் ஆங்காங்குத் தோன்றிமறை கின்றன-ஆம், பெரும்பாலும் தம்முள் இகலிப் பொரும் போர் மறவரின் உருவங்களே அவை. ஆயின் பழமுது பாரினை உழுது பரம்படிக்கும் உழவரும் ஆண்டுத்தோற்றமளிக்கின்றனர் ; காட்டு மரங்கள் கோடரியினல் வீழ்த்தப்படும் ஒசையும் ஆங்குக் கேட்கின்றது. இவையெல்லாவற்றையும் சூழ்ந்து கரைபொரும் அலை முழக்கமும் கப்பல்களைக் கரைக்குக் கொண ரும் கடலோடுவாரின் உரப்பொலியுங் கேட்கின்றன.
அத்தியாயம் I ஆதி மனிதன். ஐபீரியரும் கெலித்தியரும்
பெரிய பிரித்தானியா தீவாயமைவதற்கு முன்புள்ள நிலையையும் அதன் பெரும் புவியியல் மாற்றங்களையும், எரிமலைகளையும், மலைகளின் எழுச்சி களையும் வீழ்ச்சிகளையும், நிலக்கரிக் காடுகள் வளர்ந்துள்ள அயனமண்டலச் சதுப்பு நிலங்களையும், அல்லது கடலின் கீழ்ப் பரந்து வளர்ந்த சோக்குக் குன்றுகளையும் பற்றிக் கூறுவது என்னுடைய நோக்கமன்று. அன்றியும், * பிலிற்றவுண் மனிதன்” தொடக்கம் பனிக்கட்டியாற்று இடைக்காலங் களில் நாட்டில் அலைந்து திரிந்த ஆதி வேட்டையாளரின் பல்வகை இனங்களைப் பற்றி வேறுபடுத்திக் கூறவும் நான் முயலவில்லை. பனிக்கட்டி
பிலிற்றவுண் என்னுமிடத்தில் 1912 ஆம் ஆண்டிற் கண்டெடுத்ததோர் மண்டையோட்டைக் கொண்டு ஏறக்குறைய 3,00,000 ஆண்டுகளுக்கு முன் ஒர்வகை மனிதன் இருந்தானென்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

தீவாதற்கு முந்திய பிரித்தன் 8
யாற்றுக் காலத்தின் பின், வடக்கைரோப்பாவின் சிறந்த வசந்த காலத் திலே, ஐயத்துக்கிடமின்றி மனிதன் எனக் கருதப்பட்ட “ அறிவுடைமனு ” முதன்முதலாகப் பிற்காலத்திற் பிரித்தானியா எனப்படவிருந்த அந்த மண்ணில் காலெடுத்து வைத்திருத்தல் வேண்டும். இவ்வகக் குடியேறிகள் நிலமார்க்கமாகவே, பனிக்கட்டியாறுகள் வடக்கை நோக்கிப் பின்வாங்கும் போது அவற்றுடன் தாமும் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவை அடைந் தனர். அவர்களுடன், அல்லது அவர்களுக்குச் சிறிது காலத்துக்கு முன் னர், சாதாரணக் காட்டு விலங்குகளும் பறவைகளும் மலர்களும் தாவரங் களும் பிரித்தானியாவை அடைந்தன. யானை, குதிரை, துருவமான் முத லிய மிருகங்களை வேட்டையாடும் இச்சாதியினர், நிச்சயமாக எங்கள் முன்னேரெனக் கருதப்பட்ட பிந்திய இனங்களுடன் ஒருவேளை கலந் திருப்பர். ஐரோப்பிய வேடர் பிரித்தானியாவிற் குடியேறியபோது, சோக்கு நிலங்களாகிய தோவரும் கலேயும் ஒரே தொடராக இன்னும் இருந்தன. மாண்புடன் பாயும் தேமிசு நதி, ஐரோப்பாவிலிருக்கும் இரையின் நதியின் கீழ்ப்பாகத்துட் பாய்ந்தது. இரையின் நதியும் இப்போது வட கடலால் அமிழ்த்தப்பட்டிருக்கும் சேற்றுச் சமவெளிகளுக்கூடாக ஆட்டிக்குச் சமுத் திரத்தை நோக்கி வளைந்து சென்றது. வட கடலின் “ தொகர்கரை ” என்று அழைக்கப்படும் மணற்கரையில் யானையினதும் துருவ மானினதும் எலும்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
பிரித்தானியாவிற்குரியதென நாம் கூறும் தாவரவினமும் விலங்கின மும், கடைசிப் பனிக்கட்டிக்கால மழைப்பனிக் கவிப்பினுல் முற்றக வெறி தாக்கப்பட்ட நாட்டினை நிறைவாக்க இக்காலத்தில் வடக்கு நோக்கி வந்தன. ஆகவே, இவைகள் பிரித்தானியத் தீவிற்கே சிறப்பாக உரிய செங்கவுதாரி யினைத் தவிர, வட ஐரோப்பிய தாவரங்களுடனும் விலங்குகளுடனும் வேற்றுமை யில்லாதனவாகும். கடலினல் தேவர் தொடுகடல் துளைபடு முன்பே, அயலந்து, இங்கிலாந்திலிருந்து வேருகப் பிரிந்திருந்தது. இக் காரணத்தினல், அங்கே முலையூட்டிகள், தாவரங்கள், ஊர்வன வாகி யவை குறைவாக இருந்தன.
பிரித்தானியாவானது, தீவாகிய பல நூற்றண்டுகளின் பின்னரும், காடடர்ந்ததாயிருந்தது. அத் தீவின் பாசி படர்ந்த ஈரத் தரையை, வானத் தின்கண்ணென விளங்குங்கதிரவனிலிருந்து எண்ணற்ற மர உச்சிகள் திரையிட்டு மூடிக்கொண்டிருந்தன. இம் மரக்கொப்புக்கள் வேனிற் காலத்திலே பொழுது புலர்ந்ததும் வீசுந் தென்றற் காற்றில் அசைந்தாடு வதுடன், இலட்சக்கணக்கான பறவைகளைத் துயிலெழுப்பிப் பண் பிசைக் கவும் செய்வித்தன. இவ்விசை விருந்து, கிளைக்குக்கிளை நீ:து : ,சிறு இடையீடுமின்றி, நூற்றுக்கணக்கான மைல்களிலேயுள்ள 1றுகளிலும் சமவெளிகளிலும் மலைகளிலும் நிகழ்வதாகும் ; நாடோடிகளாகத் தோலுடுத்து, கையிற் கற்கோடரி எந்தி, கீழேயுள்ள பூமியிற் பதுங்கித்திரி யும்வேடர் கூட்டம் ஒன்று, சிலவேளைகளில் இதனை அபூர்வமாகக் கவனித்

Page 12
பிரித்தானியத் தீவு
திருந்தாலொழியப் பிற மனிதன் எவனும் இவ்விசை விருந்தைக் கேட் டதில்லை. அக் கூட்டத்தார், தாங்கள் ஒரு தீவில் வசிக்கிறேம் என்பதையும், குளங்களும் சேறுகளும் நிறைந்து, ஈரக்கசிவாயும் பாசிபடர்ந்தும் மரம் மலிந்து மிருக்கும் அக் காட்டைத்தவிர, உலகத்தில் வேறு பகுதிகளு முண்டென்பதையும் அறியார். அன்றியும், அவர்கள் தாமும் அச்சங் கொண்டோராகி, வேட்டையாடு மிடங்களிலுள்ள நாற்கால் விலங்குகளுக்கும் வெருத்தருவோராகித் திரிந்தனர்.
பெளதிக தேசப்படத்தை நோக்குமிடத்து, ஐரோப்பாவை நோக்கியிருக் கும் பிரித்தானியக்கரை, தாழ்ந்ததாய், தொடரலைச் சமவெளியை யுடைய தாக இருப்பது தெரியும். இப் பகுதி, பல துறைமுகங்களாலும் கப்பலோட் டக்கூடிய ஆறுகளாலும் அடைதற்கெளிதாய் உளது. இத் தீவின் வடக் கிலும் மேற்கிலும் மாத்திரம் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தை நோக்கி, கரையோரத்தில் மலைத்தொடர்கள் இருந்தன. எனினும், எதிர்கால வரலாற்றினை ஆக்குதற்கு உதவிய செவேண், இடி, மேசி, கிளைடு ஆகிய ஆற்று முகங்களும் வேறும் சிறு நுழைகுடாக்களும் இருந்தன. ஆனல், ஆதிகாலந் தொடக்கம், சமவெளிகளையும் உயரமற்ற பாறைத் தொடர்களை புமுடைய தாழ் பூமியான தெற்கு கிழக்குக் கரையோரங்கள் கடற்படை யினுற் பாதுகாக்கப்படாதிருந்த வரையில், கண்டத்திற்குரிய கடற்கரைகளிற் சுற்றித்திரிந்த புலம் பெயரும் குலத்தோர், கடற்கொள்ளைக்காரர், கொள் ளையடிப்போர், வணிகர் ஆகியோரின் மனத்தை எப்பொழுதும் கவர்ந்தன.
உரோம் நகர் கட்டப்படுவதற்கு மிகப்பல காலத்திற்கு முன்பே மத் தியதரைக் கடலைச் சார்ந்த நாடுகளிலுள்ள சில வர்த்தகர்கள், இத் தீவிலுள்ள பொன், வெள்ளியம், முத்து ஆகியவற்றைப் பற்றி அறிந் திருந்தனர்; ஆனல், இவற்றைப் பெறும் நோக்கமாக மாத்திரம் இத் தீவின் மீது படையெடுப்புக்கள் நிகழவில்லை ; இங்குள்ள நிலம் வளம் மிக்கதாயும், காடுகளுக்கிடையே மரமற்ற வெளிகளும் சம வெளிகளும் என்றும் பச்சைப்பசேரென்று செழிப்புள்ளனவாயும், மூடுபனி, நீண்ட காலம் நிலைக்காது அகன்று விடுவதாயுமிருந்தபடியினலும், பிறர், படை யெடுக்கத் தூண்டப்பட்டனர். விரிகுடாநீரோட்டம் பற்றிய இரகசியத்தை மக்களறியமுன்னர், வடக்கிலே இத்துணைதொலைவிலுள்ள ஒரு பூமியில் மூடுபனி இவ்வாறு நீண்டகாலம் நிலைக்காமை விந்தையான ஒரு நிகழ்ச் சியாய் அக்காலத்திலே தோன்றியிருத்தல் வேண்டும்.
1 சீசரும் தசித்தசும் பிரித்தனிற் கடுங்குளிர் இல்லாதது பற்றிக் குறிப்பிட்டுள்ளனரெனி னும், தசித்தசு, ‘ ஆகாயம் தொடர்ந்த மழையினலும் முகிலாலும் மூடப்பட்டுள்ளது” என் பதையும் சேர்த்துள்ளார். பிரித்தானியாவில் வானிலை, வெப்பநிலை ஆகியவற்றின் விரைந்த மாற்றங்கள் எல்லா யுகத்திலும் அதன் மக்களைத் துன்புறுத்தி இன்புறுத்தும் எதுக்களாய் உள. இம் மாற்றங்கள் உடலுக்கும் உளத்துக்கு முரிய சத்திகளை ஊக்கி, எங்களே ஆங்கில மக்களெனும் தனியோரினமாக விளங்கவைக்கும் உண்மையில், இது நிலத்தின் உயர்வாகும். ஆனல், அது வரவிருக்கும் படையெடுப்பாளருக்குக் கவர்ச்சியூட்டுபவற்றுள் ஒன்ருகாது.

விரும்பத்தகுந் தீவு 5
பிரித்தானியக் காட்டில் வேட்டைக்குரிய விலங்குகள் நிறைந்திருந்தன, ஆதி மனிதரும் வேட்டையாடுவோரா யிருந்தனர். பிற்காலங்களில் வற்றிப் போய பகுதிகள், அப்போது புள்ளும் மீனும் ஈண்டிய ஆழமற்ற சிற் றேரிகளாக இருந்தன. இக்காலக் கேம்பிரிட்சுக்கும் இலிங்கனுக்கு மிடை யிலேயே மிகப்பெரிய சேற்று நிலங்கள் பரந்திருந்தன. கணக்கற்ற தலைமுறைகளாகக் காட்டுப் பறவைகளை வேட்டையாடுபவரும் மீன்பிடிகாரரும், தீக்கல்லினற் செய்யப்பட்ட தங் கருவிகளையும் ஆயுதங்களையும் சேற்று நிலங்களில், அன்றேல், அச்சேற்று நிலங்களைச் சுற்றியுள்ள மணற்றிடர் களில் விட்டுச்சென்றுளர். இவை தொல்பொருளியல் வல்லுநர்களின் ஆராய்ச்சிகளுக்குப் பெரும் ஆதாரமாக இருக்கின்றன. இடையர் காலத்தில் தெற்கிலிருந்த பெரும் சோக்குப்புல் வெளிகளே அவர்களுக்கு ஆக்கத்தை யும் ஆனந்தத்தையும் அளிக்க அவரிலுந்துணிவு மிக்க பனறி மேய்ப்போன், வேடரைத் தொடர்ந்து, தானும் தனது பன்றிகளுடன் பேரிருள் நிறைந்த காடுகளுட் புகுவானயினன்.
பல பிரதேசங்களில், தீக்கற்கள் தாராளமாய்ப் பரவிக்கிடப்பினும் அவற் றிற் சிறந்தவை சோக்கு வெளிகளின் கீழ்ப்புதைந்து கிடந்தன ; 30 அடி நீளமுள்ள நீண்ட சுரங்க வழிகள் தீவின் ஆதிச் சுரங்கமறுப்போரால் வெட்டப்பட்டன. சுரங்கங்களின் அடியில் கலைக் கொம்பினைக் குந்தாலியாக வும் தோட்பட்டை எலும்புகளைக் கோலிகளாகவும் பயன்படுத்தி, சோக் குப்படைகளினூடே சுரங்க வழிகளை வெட்டி, அக்காலத்தில் மனிதன் உலகினை அடக்கியாள்வதற்குக் காரணமாயிருந்த விலைமதிப்பற்ற தீக்கற்களைப் பொறுக்கிவந்தனர். அழுத்தமின்றிப் பொளியப்பட்ட தீக்கற்களின் காலமா கிய பலியோலிதிக்குக் காலமென அழைக்கப்படும் பழைய கற்காலமானது, மக்கள் தங்கள் கருவிகளையும் ஆயுதங்களையும் வியக்கத்தக்க அளவுக்கு மினுக்கக் கற்றுக்கொண்ட காலமாகிய “நியோலிதிக்கு ’க் காலமெனப் படும் “ புதிய கற்கால ” மாக, புலப்படாத வகையில் மாறிக்கொண்டிருந் A5g・
எறத்தாழ கிறித்துவுக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானியாவில் வெண்கலக் காலம் பிறந்தது. அதற்கு ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக் குப்பின்னர், இரும்புக்காலம் பிறந்தது. அப்பொழுது அங்கே இவ்வுலோகங் களும் இவற்றை உருக்குவதற்குரிய எரிமரங்களும் அதிகமிருந்தன. வீடுகட் டுவதற்கும் எரிப்பதற்கும் வேண்டிய மரங்கள் எங்கும் வளர்ந்தன. நன்னீர் பல விடங்களிற் பெறக்கூடியதாயிருந்தது. கிணறு வெட்டுங் காலத்திற்கு முன் இன்றைய தென்னிங்கிலாந்திலும் பார்க்க உயர்ந்த மட்டமான நிலங்களிலேயே நல்லநீர் அதிகமாக இருந்தது. டிபூதிகாலக் குடிசைகள் முதல், நிலவுடைமைப்பதிவேட்டிற் குறிப்பிடப்பட்டுள்ள சட்சன் நகரங்கள் வரை இருந்த கிராமப்புறமனையிடங்கள் எப்பொழுதும் உவர்ப் பற்ற நன்னீர்க் கண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

Page 13
6 விரும்பத்தகுந் தீவு
ஈற்றில், மனிதன், உழுது பயிரிடத் தொடங்கிய காலை, கிழக்குப் பிரதேசங்களிலும் தெற்குப் பிரதேசங்களிலும் உள்ள நிலங்கள் பன்மடங்கு விளைச்சலைக் கொடுக்கக் கூடியனவாகக் காணப்பட்டன. இக் காலத் தானி யச் சந்தையின் மிக வேறுபட்ட உலக நிலைமையிலும், இத் தீவின்கண், மிகுந்த சூரிய வெளிச்சத்தைப் பெறும் பிரதேசங்களாகிய இப் பகுதிகளில், இன்றும் கோதுமைப் பயிர்ச்செய்கை பொதுவாக இலாபந் தரக்கூடியதாகவே இருக்கின்றது. மனிதனின் ஆதி வாழ்க்கையில் விவசாயமே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுளது ; எனிெனில், அது மனிதனின் குடிப் பெருக்கத்திற்கும், அவனை வீட்டிலும் கமத்திலும் நிலைபெறுத்தற்கும், பெரியகிராம சமுதாயங்களில் அவனை ஒன்று சேர்த்தற்கும் வாய்ப்பளித்து, அதனுல் புதியன புனைதலையும் மாற்றங்கள் நிகழ்வதையும் இலகுவாக் கியமையால் என்க. விவசாயம், பிரித்தானியாவில் அதிவிரைவிற் பரவ வில்லை. சட்சன் காலவவதியின் பிற்பகுதியிலேயே எரின் முக்கியத்துவம் வெள்ளிடை மலையாயிற்று. அக்காலத்திலேயே, இக்காலக் கிராமங்கள் பல, காடழிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன. ஆனல், விவசாயமான து வரலாற்றிற்கு முந்திய காலத்திலேயே முதன் முதற் புகுத்தப்பட்டிருந் தபோதிலும், சதுப்பு நிலங்களும் அடர்ந்த காடுகளும் செடிகளும், அல்லது வெறுஞ் சமவெளிகளும் அல்லாது தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்சில இடங் களிலேயே நடைபெற்று வந்தது.
நாட்டத்திற்குரிய இந்த நாட்டின் கவர்ச்சிகள் இத்தகையன. நோவே தொடக்கம் அசந்து வரையும் ஈராயிரம் மைல்களுக்கு நீண்டிருக்கும் வட ஐரோப்பியக் கடற்கரையான அரை வட்டத்திற்குப் பிரித்தானியாவே, யாவ ருக்கும் வெளிப்படையாய், மையமாக அமைந்திருந்தது. வரலாற்றின் உத யத்துக்குப் பல ஆண்டுகளுக்கு, முற்பட்டகாலந் தொடக்கம் நோமானிய வெற் றிக்காலம் வரை, அப் பெருங்கரையில் நாடோடிகளாயோ, குடியேறுநராக வோ அலையலையாக வந்தடைந்த பல்வேறுபட்ட கடலோடுமாந்தர், பிரித்தா னியாவைத் தம் கொள்ளைக்கு இலக்கான ஓர் இடமாகக் கருதினர்.
உதாரணமாக, கேம்பிரிட்சயரில் தீக்கற்களை உபயோகிப்பவர்களது நாகரிகம் தொடர்ச்சி யாக இன்று மில்தன் கோல் அமைந்திருக்கின்ற மணலும் புதர்களும் நிறைந்த தரிசுநிலப் பூமியாகிய உயர்நிலத்தின் மருங்கில் இருந்து வந்துள்ளது. ஆனல், கற்காலத்தைத் தொடர்ந்து செம்பு, இரும்புக் காலங்கள் எற்பட்டபோது, விவசாயத்திற்குக் கொடுத்த அதிமுக்கியத்துவத் தின் காரணமாக, சனக்கூட்ட மிகுதியிருந்த பகுதி, கடைசியாக காம் பள்ளத்தாக்கின் மேலுள்ள பகுதிகள் நீர் சூழ்ந்தும் வனமடர்ந்தும் இல்லாதிருந்ததுடன் மில்தன்கோல் புதர்களைக் காட்டிலும் சிறந்த மண்வளத்தை உடையனவாயுமிருந்தன. எனவே, நீரோட்டத் திற்கு மேலே மக்கட் கூட்டம் காலக்கிரமத்தில் கமத்தொழிலைச் செய்து வரலாயிற்று. ஆனல், இப்புதிய நிலப்பரப்பு வித்தரிப்படைவதைக் காடுகள் நெருக்கித் தடுத்தனவெனினும், உரோ மானிய, சட்சணிய காலங்கள் வரை அக்காடுகளைத் திருத்துவதற்கான முயற்சியெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கனமாக, பிரித்தானியாவின் மேட்டுப்பாங்கான இடங் களின் பெரும்பகுதியில் இக்காடுகள் நிறைந்திருந்தன. எனினும், இப்பகு.பி மேள இன்று கடற்றனவாயும் விவசாய கேம்பிரிட்சயரின்சிறப்பு அமிசங்களையுடையனவாயு மிருக்கின்றன.

தீவும் படையெடுப்பாளரும் r
ஐரோப்பாவின் கிழக்குப் பாகங்களிலிருந்து மேற்குப் பகுதிகள்ை நோக்கி இம் மக்கள் நாடோடிகளாகச் சென்றுகொண்டிருந்தமையால், பிரித்தா னியாவே பிற இடங்களிலும் பார்க்க அவர்கள் கண்களுக்குப்புலப்பட, அதுவே மிகுந்த தாக்கலுக்குள்ளாகியது. இவ்வாருக, பல்லாயிரமாண்டுக ளாக, கடலோடும் வீர இனக் கூட்டங்களும், துணிவுள்ள பிற வீர இனத்தவராற் பின்னனிக்குத் தள்ளப்பட்ட இனக் கூட்டங்களும், ஒன்றன் பின் ஒன்ருகப் பிரித்தானியாவின் தென் கரையிலும் கீழ்க்கரையிலும் ஒதுக்கப்பட்டு வந்தன.
ஒவ்வொரு புதுவோர் கூட்டமும் தீவின் அரைப்பகுதியைக் கடந்து செல்லும் வரை, மிகவும் பரந்திருந்த காடுகளும் சதுப்புநிலங்களுமே அவர்களை எதிர்க்கும் மிகக்கடிய இயற்கைத் தடைகளாயிருந்தன. ஆனல், காடுகளிற் பாதைகள் இல்லாதிருந்தால், அல்லது பள்ளத்தாக்குக்களில் அதிக நீர் நிறைந்திருந்தால், அப்புதுவோர், ஆற்றிற் படகு ஒட்டியேனும் புன்னிலங்கள் தரிசு நிலங்கள் வழியாக நடந்தேனும் செல்லக் கூடியதா யிருந்தது. காடுகள் அழிக்கப்படுவதற்கு முன்னரும் பள்ளத்தாக்குக்கள் வற்றுவிக்கப்படுவதற்கு முன்னரும் மனிதர் வாழ்க்கையில், வெறிதான மேட்டு நிலங்களிலேயே அவர்கள் முக்கியமாகக் குடியேறினர் என்பதை, இப்பொழுது ஆடுகளும் ஆட்காட்டிக் குருவிகளும் கூடியிருக்கும் இடங் களான உயர்ந்த நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதிகாலமக்க ளின் கூடாரங்கள், தெருக்கள், பனியேரிகள் யாவும் ஞாபகப்படுத்து கின்றன.
இவ்வாறு நுழைபவர்களின் இரண்டாம் அல்லது மூன்றம் தலைமுறை யினர், இறுதியாக இத்தீவின் வடக்கை, அல்லது மேற்கை, அடைந்த பொழுதே, இடர்தரக்கூடிய புவியியற்றடைகள், முதன்முதலாகத் தோன் றலாயின-அவையாவன, உவேல்சு, வடமேற்கு இங்கிலாந்து, கொத்துலாந்து ஆகிய இடங்களில் உள்ள மலைத் தொடர்களே. இம் மலைத்தொடர்களுக் கிடையே, துரத்தப்படுவோர் மீண்டும் ஒன்றுகூடி எதிர்த்தால், அவர்களைத் துரந்து வருவோர் தம் செலவினை நிறுத்த வேண்டியதாயிருக்கும். இங்கிலாந்தில் இத்தகையமலைத் தொடர்கள் இல்லாது எங்கும் தாழ் நிலமே இருந்திருப்பின், ஒவ்வொரு படையெடுப்பும் முழுத் தீவையும் விரைவில் அடிப்படுத்தியிருக்கும். இங்ங்ணமாயின், உவேல்சும் கொத் துலாந்தின் உயர் நிலங்களும் அடங்கிய கெலித்திக்குப் பிரித்தானியாவை, சட்சன் மாவட்டங்களிலிருந்து பிரிக்கும் இன்றைய இனவேற்றுமையானது தோன்றியிருக்கமாட்டாது. ஏனெனில், ஆதிகாலச் சட்சணியர் 8 டியூம் நூற் ருண்டில், உவேல்சை முற்றக மேவிச் சென்று அயலாந்துட் புகுந்திருப்பர். ஆனல், உண்மையில் 12 ஆம் நூற்றண்டில் மட்டுமே ஆங்கிலேயர் அயலாந்தின் பெரிய சமவெளிகளை, திரோங்குபோவின் நிலமானியக் கொடி யின் கீழ் ஒன்று திரண்டு, சென்றடைந்தனர் ; சட்சன் அகக் குடியேறிகளின்

Page 14
8 வரலாறும் புவியியலின் ஆதிக்கமும்
முதல் வருகை, உவேல்சிலுள்ள மலைகளாலும் பெனையின் மலைகளாலும் தடைப்படுத்தப்பட்டது. பல காலங்களுக்கு முன்னர், பதிவு செய்யப்படாத பல கெலித்திய, ஐபீரிய படையெடுப்புக்களும் இவ்வாறே தடைப்பட்டிருத்தல் வேண்டும். புவியியலின் ஆட்சிக்கமைந்ததே வரலாறு ஆகும். குறித்த இம் மலைத்தொடர்கள் வடக்கிலும் மேற்கிலும் இல்லாது, இங்கிலாந்தின் தெற்கு, கிழக்குக் கரைகளில் இருந்திருப்பின், கண்டத்திலிருந்து இங்கு படையெடுத்து வந்த குலங்களின் நுழைவு மிகவும் கடினமானதொன் ருகவிருந்திருக்குமாதலால், பிரித்தானியா, உக்கிரமான பல மிலேச்ச இனங்களை ஆதியில் தன்னகத்தே கொண்ட ஒரு நாடாயுமிருந்திருக்க முடியாது. மனிதன், இயற்கையை அடக்கும் சத்திகளை இப்பொழுது பெற்றிருப்பதுபோல், பெருதிருந்த அக்காலங்களில், ஒரு நாட்டின் பெளதிக உறுப்புக்களே அந்நாட்டின் ஆதிக் குடியேற்ற வரலாற்றின் திறவுகோலா யமைகின்றன.
ஆகையினல் பிரித்தானியாவின் இந்தப் புவியியல் உறுப்புக்களினல், பல்வேறுகுலங்களின் படை யெடுப்புக்கள் மீண்டும் மீண்டும் ஒரே வகை அடிப்படையில் நிகழ்வவாயின. கற்காலம் தொடக்கம் தேனியப் படை யெடுப்பு வரை, பிரான்சு, ஒல்லாந்து, கந்தினேவியா, சேர்மனி என்று நாம் இப்பொழுது வழங்கும் நாடுகளிலிருந்து வீரப்பண்பு வாய்ந்த சில இனத்தவர், பிரித்தானியாவிலே தெற்கிலும் கிழக்கிலும் உள்ள வளம்பொருந்திய தாழ்நிலங்களிற் குடியேறி, அங்கிருந்த பழங்குடிகளுட் பலரைக் கொன்றும், அல்லது அடிமைப்படுத்தியும் வந்தனர்; என யோரை வடக்கிலும் மேற்கிலுமுள்ள மலைகளுக்கு, அல்லது வெறுநிலமா கிய தொலைவிலிருந்த கோண்வால் தீபகற்பத்திற்குத் துரத்தினர். மீண்டும் மீண்டும் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கள் எத்தனைமுறை நிகழ்ந்தன என்பது எமக்குத் தெரியாது. بہ
ஆதிகாலத்தில் பிரித்தானியாவில் ஒன்றுசேர்ந்த இனங்களின் பல்வகைப் பட்ட தன்மைக்கும் அவ்வினங்கள் குறித்த சில இடங்களிலே இன்று காணப்படுமாற்றுக்கும் இவ்வாறே நாம் காரணங் கூறல் வேண்டும். கோண் வால், உவேல்சு, கொத்துலாந்தின் உயர்நிலங்கள் ஆகிய இடங்களில் மிகப் பழைய குலத்தவரே வசிக்கின்றனர். இவர்களை இக்காலத்தில் நாம், கெலித்திய இனத்தவர் என அழைக்கிறேம். ஆனல், அவர்களுட், பெரும்பான்மையோர் அயலாந்து வாசிகளைப் போன்று கெலித்தியருக்கு முந்தியவராவர். காலத்தாற் பிந்தியே மேற்கு ஐரோப்பாவிற்கு வந்த கெலித்தியர் உயரமானவர்; வெண்மயிர், அல்லது செம்மயிருமுடையவர் ; யூலியசு சீசரின் வருகைக்குச் சில நூற்றண்டுகளுக்கு முன்னரே இவர்கள் பிரித்தானியாவிலும் அயலாந்திலும் புகுந்தனர். இப்போது “கெலித்தியர்' என்ற நாம் பிழையாக அழைக்கும் இனத்தவர் கருமயிருடையவர் ; அவர்களின் முன்னேர், செங்கெலித்திய இனத்தவரைப் பற்றி நாம் அறி தற்குப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே, இங்கிலாந்திலிருந்தவராவர்.

ஐபீரியர் 9.
அவர்களையே மத்தியூ ஆனல் தமது கவிதையொன்றில், “கரும் ஐபீரியர்* என்றும் கரையிலிருந்த பினிசிய வியாபாரிகளுடன் பண்டமாற்றுக்காக உண்ணுட்டிலிருந்துவரும் “நாணுடை வணிகர்’ என்றும் குறிப்பிடுகின்றர்.
கெலித்தியருக்கு முன்னிருந்தோர் பல்வேறுபட்ட இனத்தினரெனினும், அவர்களை நாம் " ஐபீரியர் ” எனத் தொகுத்துக் கூறலாம். இவ்வினத்தின ரெல்லோரும் கருமயிருடையரல்லர்." இக்கால ஆங்கிலேயன் ஒவ்வொரு வன் உதிரத்திலும் ஓரளவு ஐபீரிய உதிரம் கலந்துள்ளது. ஐபீரிய உதிரம் கொத்துலாந்து மக்களிடையே ஆங்கிலேயனிலும் பார்க்கக் கூட வும், உவெல்சு ஐரிசு மக்களிடையே அதனிலும் பார்க்கக் கூடவும் கலந்து ளது. ஐபீரியர் பண்பாடற்ற மிலேச்சரல்லர். அவர்கள், பிரித்தானியாவின் கற்காலம், வெண்கலக்காலம் ஆகிய நீண்ட காலங்களில் மிலேச்ச நிலையி லிருந்து நாகரிக வாழ்க்கையின் முதற் படிகளுக்குத் தாமாக உயர்ந்தனர். முதலில் அவர்கள் வேடராகவும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்துவோராக வும், பின் ஆடுமாடு மேய்ப்போராகவு மிருந்ததனல், நாய், ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றை மனிதன் எவ்வாறு பயன்படுத்தக் கூடும் என்பதனை அவர்கள் இயற்கையாகவே கற்றனர். அவர்கள் உலோகங்களைப் பயன்படுத்தி னர். அவர்களே வெண்கலக் காலத்து மனிதராகி, நெசவு, விவசாயம் உட்படப் பல்வகைத் தொழில்களிலே தேர்ச்சியுடையோராயினர். ஆதிகால்த் திலிருந்த மிகப் பெரிய அரசியற் கூருனது, ஒநாய்களுக்கும் கரடிகளுக்கும், தமக்கு மிக அணித்தாயுள்ள மனித சாதிக்கும் பயந்து வாழும் சில நூறு மக்களையுடைய குலத்தோரைக் கொண்டதாயிருக்க, ஐபீரியரோ நாட்டின் சில பாகங்களில் இத்தகைய அரசியற் கூறிலும் உயர்ந்த ஓர் அரசிய லமைப்பின் கீழ் வாழ்வராயினர் ; இவர்கள் விஞ்ஞான, இராணுவ திட்டத் துக்கமையத் தோசெற்றரின் அண்மையிலுள்ள “ கன்னிக்கோட்டை” போன்ற மிகப் பெரிய மண்கோட்டைகளை எழுப்பியும் “ கற்கோட்டத்தைக் ’
A. கட்டியும் வந்தனர். இக்கற்கோட்டமானது சிறந்த ஒர் எந்திரவியற் சாதனை யாகும். ஆதியில் அவர்கள் பரிசல் என்னும் ஒருவகை ஒடத்தில், அல்லது வள்ளத்தில் வந்தனரெனினும், அவர்கள் “நீண்ட கப்பல்” அல்லது தாழ்ந்த துடுப்புடைக் கலன்கள் கட்டவுங் கற்றுக்கொண்டனர்.
சிறப்பாக, விவசாயம், உலோகத்தொழில், நீண்ட கப்பல் கட்டல் ஆகிய வற்றைத் தூர தெற்கிலிருந்து வந்த வணிகர்பால், அல்லது அவ்வணிகரிட மிருந்து கற்றுக்கொண்ட கண்டத்தில் வசிக்கும் குலத்தினர்பால், இத் தீவினர் கற்றனர்போலும். இலெவாந்து, ஐரோப்பிய நாகரிகத்தின் பிறப் பிடமாகும். மெசப்பொத்தேமியா, எகித்து, கிறீற்று ஆகிய இடங்களில் வாழ்ந்தோர், அதென்சு, உரோம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்களுக்கு
கெலித்திய இனத்தவருக்கு முன்பிருந்தவர்களிற் சிலர், தொல் பொருளியல் வல்லுநர் குறிப்பிடும் * மத்தியதரைக் கடலினத்தைச் சார்ந்தவர் "; பிறர், "அல்பைன்" இனத்தவரைச் சேர்ந்தவராவர். *

Page 15
I ஐபீரியர்
முன்னரே, பயிர்ச் செய்கை, உலோகவேலே, கப்பல் கட்டல், வாழ்க்கைக்குத் தேவையான பிறகலேகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். இத்தகைய புரொமிதியன் இரகசியங்கள், தெற்கிலும் கிழக்கிலுமிருந்து தம் பிரயாணத் தைத் தொடங்கி, வியாபாரிகள் மூலமும் மிலேச்ச ஐரோப்பாவின் காடு கிளேக் கடந்து வடக்குந் தெற்குஞ் செல்லும் குலத்தினர் மூலமும், அல்லது எக்சியூலிசுத் தூண்களெனப்படும் விபுரோத்தரின் கிழக்கு மு:னயைச் சுற்றிச் செல்லும் வர்த்தகர்கள் வாயிலாகவும் வடகடலின் புகாருக்கும் வற்றுப் பெருக்குக்கும் மத்தியிலுள்ள " வெள்ளியத் தீவுகள் ? என்ப் படும் புராதனத் தீவுகளேச் சென்றடைந்தன.
இலெவாந்திற்கும் பிரித்தானியாவுக்கு மிடையே நடந்த வர்த்தகத் தொடர்பு கெலித்திய வெற்றிக்கு மிகவும் முந்தியது. சிபெயினிற் கண்டெ பிக்கப்பட்ட பிரித்தானியக் கருநிமிளே வி. மு. 2500 ஆண்டுக்குரிய தென வுேம், பிரித்தானியாவில் எடுக்கப்பட்ட எகித்திய மணிகள் இ. மு. 1300 ஆம் ஆண்டுக்குரியனவெனவும் நம்பப்படுகின்றது. இவ்வாருக ஆதியில், மத்திய தரைக் கடலில் வர்த்தகஞ் செய்வோர் பிரித்தானியத் தீவுகளே அவற்றின் செல்வங்களான முத்து, பொன் ஆகியவற்றுடனும் உலோகங்களுடனும் கண்டுபிடித்திருந்தனர். பொன்னும் முத்தும் இன்று செலவழிந்தொழிந் தன. ஆணுல் உலோகங்கள் இன்றும் ஒழியவில்லே. ஆனூல், இந்தக் கீழைத் தேச வாணிபருக்கே நாகரிகத்தைப் பிரித்தானியாவிற்குக் கொணர்ந்த கெளரவும் உரியது. எனினும் அவர்கள் கொணர்ந்த படிப்பினயைத் தமக்கேற்றவாறு தழுவிக் கோடற்கு வேண்டிய அறிவாற்றவே ஐபீரியக்
குவித்தவர் பெற்றிருந்தனர்.
இத் தீவிற் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வெண்கல ஆயுதங்கள், வியா பாரிகளாலோ, இத்தீவைக் கைப்பற்றிய இனத்தவர்களாலோ கடலுக்கப் பாலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டன. தீவின் பல பாகங்களில், முக்கிய மாகக் கோண்வாலில், செம்பும் வெள்ளீயமும் பூமியின் மேற்பரப்பி ாைண்மையிற் கானப்பட்டமையால், இங்குள்ளோ இவற்றை ஒருங்கே உருக்கி வெண்கலமாக்க விரைவிற் கற்றனர். அதன்பின், நெடுங்கற்காலத் தின் முடி ைதென்பட்டது. அதிவிரைவில் வெண்கலக் காலமும், பின் இரும்புக் காலமும் பிறந்தன. இத்தீவினர் சிலர் உலோகவே8லயில் நுட்பத்திறமையடைந்தனர். இப்பொழுது உலகத்திற் காணப்படும் மிகச் சிறந்த மிளிரிவேலேப்பாடமைந்த வெண்கலப் பொருட்கள் சிலவற்றை உண்டாக்கியவர் எங்கள் ஐபீரிய முன்னுேராவர். ஆணுல், இந்த ஆதிகால நாகரிகத்தின் மையங்கள்-உதாரணமாக, கற்கோட்டம் போன்றவை-விவ சாயத்துக்குகந்த நிலையங்களில் அமையவில்லே ; ஆஞல், இவ்விடங்கள், செவிவழிந்துபோன சிறந்த சக்சிமுக்கிக் கற்களுக்கு, அல்லது மேற்பரப்பி விருக்கும் பொன்னுக்கும் செம்புக்கும் அல்லது வெள்ளியத்திற்கும் ஒரு காலத்தில் முக்கியமானவையாக விளங்கின.
 

11
Hurt Hürk
եր ΓΕΙ:
ம0 படிகரு திேட்டி நீங்
ji IIHit, Lih H
ஆரிப்பு-நாட்டிற் பெரும்பாகத்த ம் புதங்களும் ஒடியிருந் பியா நந்ேதர் வேண்டும்= , sadržitekt TITI F. Bulli ந்ந ருகதுகளும் உங்களும் சேறுமாடிய ஆற்றுப்பங்க்கரும் ரோக்குத் தவுர்டிருமே,
LILLh III- ஐபீரியப் பிரித்தானியா

Page 16
2 அடிப்பாதைகளும் வர்த்தக வழிகளும்
பிரித்தானியாவிலேயே, தூர இடங்களில் ஆங்காங்கு பரம்பியிருந்த வியாபார வழிகளும் வியாபாரத் தொடர்புகளும் வளர்ச்சியடைந்தன. அயலாந்துடன் தங்க வியாபாரம் செய்வதற்காகவும் கண்டத்திற்கு வெள்ளி யம் எற்றுமதி செய்வதற்காகவும் பிரித்தானியாவிலே துறைமுகங்கள் இருந்தன. திறந்த புன்னிலங்கள், பாறைத் தொடர்கள் ஆகியவற்றி னுடே செல்கின்ற ஆதி கால அடிப்பாதைகள் நாகரிகம் வாய்ந்த நிலையங்களை இணைத்தன. இவைகளின்றேல் இந் நாகரிகம் வாய்ந்த நிலை யங்கள், அகன்ற உளை நிலங்களாலும் நீண்ட காட்டுத் தொடர்களாலும் பிரிக்கப்பட்டனவாயிருக்கும். காலடிப் பாதைகள் செல்லும் உயர் வெறு நிலத்திலேயே பெரும்பாலும் அரண்கள் அமைக்கப்பட்டன. இவை பீட பூமியின் உச்சிக்குக் கீழே, சமவெளியில் அடர்ந்திருந்த, சேறுடைக் காடு களுக்கு மேலாயுள்ள சோக்குச் சமவெளிகளின் கரையோரமாய்ச் சென் றன ; இப் பாதைகள், வட புன்னிலங்களின் கரையோரமாகக் கந்தபெரிக் குச் செல்லும் யாத்திரிகர் வழி” என வழங்கப்பட்டதும், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தவாறே இன்னும் சிற்சில விடத்து வழிப் போக்கருக்கு வாய்பாக இருப்பதுமான பாதையை ஒத்தவை.
இப்படியே, கெலித்தியரின் வருகைக்குப் பலகாலங்களுக்கு முன்னர் இக்குநீல் வழியானது சிற்றேன் பாறைத் தொடர்களின் கீழுள்ள சோக்குச் சமவெளியின் கரையோரமாகச் சென்று, தேமிசுக்குத் தெற்கேயிருந்த புன்னிலங்களை அடுத்திருந்த வழியுடன் சேர்ந்து மேற்கு நோக்கிச் சென் றது ; கிழக்கு அங்கிலியாவிலே தோன்றிய மருதநில நாகரிகத்தை, எபெரி, கற்கோட்டம் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள முல்லைநில நாகரிகத்துடன் இணைப்பதே இதன்நோக்கமாகும். இவ்விடங்களில் மனிதவாழ்க்கைக்கு இடையூருண காடுகளுஞ் சேற்று நிலங்களும் அருகிலே காணப்பட்டமை யால், ஆங்கு மக்கள் செறிந்து வாழ்ந்தனர். துணிவுள்ள வேட்டையாளர் சிலராலன்றி, வேறு எவராலும் உட்புக முடியாத காடு இக்குநீல் வழியின் இருமருங்கும் அடர்த்தியாக இருந்தது. ஒநாய்களின் ஊளேயையும் கரடி களின் உறுமலையும் விரோத மனப்பாங்குள்ள குலத்தவரின் பயங்கரக் குரலையும் வேறுபடுத்தியறிதற்காகக் காட்டொலிகளை அக்கறையுடன் உற்றுக் கேட்கும் வழிப்போக்கர், மனித வாழ்க்கைக்கு அதிமுக்கியமான கருத்துக் களையும் கலைகளையும், அப்பசும் புற்றரைகளின் மீதாக நடந்து சென்றே நாட்டிற் பரப்பினர்.
கி.மு. 7-ஆம் நூற்றண்டு தொடக்கம் 3-ஆம் நூற்றண்டு வரை, வடமேற்குச் சேர்மனியிலும் நெதலாந்திலுமிருந்த பழைய கெலித்திய குலத்தவர், ஐரோப்பாவிற்கூடாகப் பல்வேறுதிசை நோக்கிச் செல்வாரா யினர். கி.பி. முதலாம், இரண்டாம் நூற்றண்டுகளில் தியூத்தன் இனத்த வர், அதிகிழக்குப் பாகங்களிலிருந்து ஐரோப்பாவிற் சிதறியபொழுது, கெலித்திய இனத்தவர் முன்பு சென்ற வழிகளையே பின்பற்றி, கெலித்திய

கெலித்தியர் வருகை 13
இனத்தவர் பரவியிருந்த இடங்களையே. தாமும் அடைந்தனர். ஆனல் இவ்வீர் இனத்தவர்களும் அலைந்து திரிந்த காலங்களுக்கிடையில், உரோமர் அல்பிசுக்கு வடக்கே புகுந்த பெரு நிகழ்ச்சி குறுக்கிடுவதாயிற்று.
கெலித்தியர், தொடக்க காலத்தில், தமக்குப் பின் வந்த இனத்தவர் புலம்பெயர்தலில் எத்துணை ஆர்வங்கொண்டனராயிருந்தனரோ அத்துணை ஆர்வங் கொண்டவராய்த் தாமும் விளங்கினர். கெலித்திய இனத்த வரில் ஒரு பகுதியினர் பிரான்சிற் குடியேறி, அங்கிருந்த கோல் நாட்டி னத்தை உருவாக்கிய இனங்களுள் தாமும் ஒரு முதன்மையான இனத்தவ ராகினர். தென் பகுதியினர் போ நதிப் பள்ளத்தாக்கிற் குடியேறி, இத்தாலி யில் இதிரசிக்கன் ஆதிக்கத்தை நசுக்கி, கி.மு. 387 ஆம் ஆண்டளவில் உரோமைக் கொள்ளையடித்தனர்; அப்பொழுது, வாத்துக்கள் கப்பித் தோலைக் காப்பாற்றின எனக் கூறப்பட்டுள்ளது. இக் குடியேறிகளுட் சிலர் சிபெயினுள்ளும், சிலர் போல்கன் மலைப் பிரதேசத்துள்ளும் புகுந்தனர். இந் நூற்றண்டுகளிலேயே இப்பெரு வலசையின் வடபாற் கிளையொன்று எமது தீவுட் புகுந்து, இங்கிருந்தவரிடையே கெலித்திய ஆட்சியையும் மொழியையும் புகுத்திற்று. பிரித்தானியாவிற் புகுந்த கெலித்தியர், அலையலையாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தனர். ஆனல், இவர்கள் இரத்தத் தொடர்புடையராயிருந்தும், தம்முட் பகைபூண்டும் தத்தமக் கென ஒரு மொழி வகையையுடையராயு மிருந்தனர்; இன்று வழக்கி லிருக்கும் எசு, கெயிலிக்கு, உவெல்சு ஆகிய மொழிகள் கெலித்தியரும் ஐபீரியரும் உருவாக்கிய மொழிகளிலிருந்து ஓரளவுக்கு வேறுபாடடைந் தனவாகும். பிரித்தானியாவின் தென்பாலிலும் குணபாலிலுமுள்ள சம வெளிகளினூடாகப் பிரித்தானியாவிற்கு அடுத்தடுத்து வந்த கெலித்தியர், அங்கிருந்த ஐபீரியரை மட்டுமன்றி, தமக்குமுன் ஏலவே வந்த தம்மினத்தவரையும் கொன்று, அடிமைப்படுத்தி, அல்லது தீவுக்கப்பால் துரத்தி வந்தனர். பிரித்தானியாவில் எஞ்ஞான்றும் நிகழ்வதுபோல், துரத்தப்பட்ட பலர், வடபாலிலும் குடபாலிலுமுள்ள மலைகளைத் தம் புகலிடமாகக் கொண்டனர்.1
கெலித்திய வருகையில் இருபெரும் படையெடுப்புக்களை வேறுபடுத்திக்
கூறலாம் ; முதலாவதாக, அயலாந்திலும் கொத்துலாந்திலும் இன்றும் காணப்படும் கெயில், அல்லது கொயிடல் இனத்தவர்; இவர்களிற் சிலர் கி.மு. 600 ஆண்டளவில் வந்திருக்கலாம். இரண்டாவதாக, உவேல்சில்
1. பேராசிரியர் சட்விக்கு பெல்சியம், ஒல்லாந்து, வடமேற்குச் சேர்மனி ஆகிய இடங்களி லிருந்து பல்வேறு காலங்களில் பரவிய கெலித்திக்கு இனத்தவர் யாவரும் தங்களு, பின் வந்த ஆங்கிலேய-சட்சணியர் போல் ஒரேமொழி பேசும் ஒரே இனத்தவயெண்றும், கா.: .. லலில் அவர்கள் பிரிந்து வெவ்வேறு திசைகளிற் சிதறிப் பலவினத்தினருடன் பழகியத்ாற்ருன், அவர்களுள் வேறுபட்ட மொழிகளைப் பேசும் வெவ்வேறு இனத்தினர் தோன்றினர் என்றும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

Page 17
14 கெலித்தியர் வருகை
இன்றுங் காணப்படும் கிமிறி, பிறித்தன் இனத்தவர். பிறித்தன் மக்க ளிடையே பெல்கே இனத்தவரும் பிற இனத்தவரும் சேர்க்கப்பட்டிருந் தனர்; இவ்வினத்தவர் தென் இங்கிலாந்திற் பரவியிருப்பதைச் சீசர் கண் டார். இவர்கள் கால்வாய்க்கு அப்பாலுள்ள கோல் இனத்தவருடன் நெருங் கிய தொடர்புடையவரே. மசிடன் தேசத்து அலச்சாந்தர் காலத்தில் (ஏறக் குறைய கி.மு. 325 இல்) இங்கிலாந்தை அடைந்த பிதியசு என்ற கிரேக்கப் பிரயாணி தான் “ பிரித்தானியத் தீவு” க்குச் சென்றதாகக் கூறியதால், அக்காலத்திலேயே “ பிரித்தானியர் ” என்ற பெயருக்கு உரியவராகிய பிறித்தன் இனத்தவர் குறித்த தீவில் எலவே குடியிருந்தனரெனத் தெரிகின்றது. V−
கி.மு. கடைசி ஆறு நூற்றண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் பரவிய கெலித்திய இனத்தவர் நெடிய தோற்றமும் கருமையற்ற மயிரு முடைய போரேறுகளாவர். அப்பொழுது வெண்கலத்தின் இடத்தைப் பெற்ற இரும்பு வேலைகளிலும் இக்காலத் தொல்பொருளியல் வல்லுநராற் பெரிதும் புகழப்படும் கலை, கைத்தொழில் ஆகியவற்றிலும் திறமையுடை யோராயிருந்தனர். பிரித்தானியாவிற் பிந்திப் புகுந்த கெலித்தியரின் இயல்புகள் இத்தகையனவே. பிரித்தானியாவிலும் அயலாந்திலும் பரவிய, கருமையற்ற மயிருடைய கெலித்தியர் தாம் வெற்றிகொண்ட குலங்களி டைத் தம்மை உயர் குடிமக்களாக நிறுவிக் கொண்டனர். இறுதியில், எல்லா இனங்களும் கலந்தன. ஆனல், ஐபீரிய இரத்தத்துடன் கலந்த கெலித்திய உதிரம் இவ்வளவிற்றென்று கூற இயலாது. உவேல்சு, கோண்வால், அயலாந்து, கொத்துலாந்து உயர்நிலங்கள் ஆகிய இடங் களில் உள்ளோரின் தோற்றமும் நிறமும் பெரும்பான்மையும் அவர்கள் ஐபீரிய இனத்தைச் சேர்ந்தவர்களெனக் காட்டுகின்றன. உவெல்சு மலைப் பிரதேசத்திலிருக்கும் ஐபீரியர் சிறிய அளவு கெலித்திய இரத்தம் கலக்கப் பெற்றவர்களே. உரோமரினதும் சட்சனியரதும் படையெடுப்புக் காலங்களில் பிரித்தானியாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்தவர்கள் எந்த அளவுக்குக் கெலித்திய இரத்தம் கலக்கப்பெற்றவர்கள் என நிச்சயிப்ப தற்கு வழிவகையில்லை. அதேபோல, தாம் வெற்றிகொண்ட ஐபீரியரி டையே எத்தகைய பொருளாதார, சமுதாயத் தொடர்புகளை உண்டுபண்ணி னர் என்பதையறிவதும் முடியாததொன்ருயிருக்கின்றது. வெற்றிகொள் ளப்பட்டவர்க்கெனச் சில குக்கிராமங்கள் ஒதுக்கப்பட்டும், வெற்றிகொண்ட வர்க்கெனப் பிற கிராமங்கள் ஒதுக்கப்பட்டுமிருந்த ஒரு முறைமையின் சின்னங்கள் உவேல்சில் நெடுங்காலமாகக் காணப்பட்ட வெனத் தொல் பொருளியல் வல்லுநர் கருதுகின்றனர். வெற்றிகொள்ளப்பட்டோர் கூடிய திறையைச் செலுத்தினர். ஆனல், இத்தகைய ஒரு முறைமை, தீவு முழுதும் கையாளப்பட்டு வந்ததென ஒரு முடிபுக்கு வருதல் பொருத்த மற்றதாகும். அடிமை நிலை, அல்லது தொழும்புமுறை கிழக்கிலேயே பெரும்பாலுங் காணப்பட்டிருத்தல் கூடும்.

கெலித்திய நாகரிகம்
கெலித்தியர் தங்களுக்கு முந்திய ஐபீரியரைப் போலவே குலங்களாக அல்லது கோத்திரங்களாக விருந்தனர்; சமூகத்தின் ஒழுக்க அடிப்படை யாகத் தமது இரத்த உறவு பற்றிய இன உணர்ச்சியினலும், சட்டப் பிணைப் பினுலும் ஒன்றுபட்டவராய் வாழ்ந்தனர். அவர்களுக்குப் பின்வந்த சட்சன் இனத்தவரைப் போல் கெலித்தியர் ஆள்புலப் பிரிவுகளையும் மானியமுறை அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. இங்கிலாந்தைச் சட்சனியர் வெற்றிகொண்ட ஆயிரமாண்டுகளுக்குப் பின்னரும், குலமுறையான வாழ்க்கை விதிகள் வெவ்வேறு அளவில், அயலாந்து, கொத்துலாந்து உயர்நிலம் போன்ற இடங்களில் என்றும் நிலைத்திருந்தன. பிரித்தானிய தீவுகளில் கெலித்தி யர் தனி அதிகாரஞ் செலுத்திய காலத்தில், அரசர்கள், ஆள்புலமன்னர் களாகவோ, நிலமானிய முடியாட்சியாளராகவோ இராது, குலங்களின் தலைவர்களாகவே யிருந்திருப்பர் என்பது திண்ணம். குலமுறைப்படியே நீதி வழங்கப்பட்டது; இதன்படி ஒரு குலத்து உறுப்பினர் வேண்டியாங்கு தண்டிக்கப்பட்டோ, பாதுகாக்கப்பட்டோ வந்தனர்; பிறகுலத்தவர் தங் குலத்தவருக்கு இழைத்த குற்றத்திற்காக அக்குலத்தவர் மீது பழிவாங் கப்பட்டது; அல்லது அவர்கள் விளைத்த ஊறுகளுக்காக இளப்பீடு பெறப் பட்டது. உரோமர் பிரித்தானியாவிற் கால்வைத்தபோது, கெலித்திய குலங் கள் தமக்கிடையே இடைவிடாது போர்புரிந்து கொண்டிருந்தன. ஆனல் ஒவ்வோர் குலமும் வளர்ச்சியடைந்து, இக்காலத்தில் உள்ள பல மாகாணங் களுக்குச் சமமான நிலப்பரப்பிற் பரம்பியிருந்தது.
வெண்கலக் காலத்தில் ஐபீரியரின் கீழ்ப் பயிர்ச்செய்கை எவ்வாறு அபிவிருத்தியடைந்ததோ, அவ்வாறே இரும்புக் காலத்திலும் கெலித்தி யர் ஆட்சியிற் பயிர்ச் செய்கை தொடர்ந்து முன்னேறுவதாயிற்று. இன்று போல், தெற்குப் பகுதிகளிற் கோதுமையும் வடக்குப் பிரதேசங்களில் ஒற்சும் பயிர் செய்யப்பட்டன. தானியத்துடன் தேனைக் கலந்து புளிக்க வைத்துப் பெறும் மதுவகையை உண்டு களி கொள்ளவோ வெறியாடவோ விரும்பி னர் கெலித்தியர். ஆனல், விவசாயத்திற்குரிய நிலப்பரப்பு சிறிதாயிருந்தது. ஏனெனில், காடுகள் பல அழிக்கப்படாதிருந்தன ; அத்துடன் தேமிசு, திரெந்து போன்று அந்நதிப் பள்ளத்தாக்குக்கள் சேறுடையனவாகவும் குடித்தொகையிற் குறைந்தனவாகவும் இருந்தன.
ஒக்கு மரக்காடுகளில் ஆயிரக்கணக்கான பன்றிகள் மந்தை மந்தையாகத் திரிந்தமை, சட்சன், நோமன் காலங்களில் சாதாரணக் காட்சியாகும். கெலித்திய காலத்திலும் அதற்கு முன்னுள்ள காலத்திலும் பன்றிகள் மனிதரின் பொருளாதாரத்தில் ஒருமுக்கிய அமிசமாய் இருந்திருத்தல் வேண்டும். பலவகைப்பட்ட பன்றியிறைச்சி இன்றும் ஆங்கிலேயரால் விரும்பி யுண்ணப்பட்டு வருகின்றது. அதியில், பன்றியிறைச்சி օլuldծոյե969 மாத்திரமன்றிப் பிரித்தானியாவிலும் வாழ்வுக்கு வேண்டிய இன்றி யமையா உணவாய் இருந்தது. செம்மறியாடுகளும் எருதுகளும் செல்வப்
8-R 6344 (12,62)

Page 18
16 கெலித்தியச் சிற்றுரர்களும் விவசாயமும்
பெருக்கத்துக்கு வேண்டிய மூலப் பொருள்களாகவும் பண்டமாற்றுக்கு வேணாடிய முக்கிய சாதனமாகவும் இருந்தன. போரிற் கெலித்தியரின் தேர்களை இழுபபதற்குக் குதிரைகள் வளர்க்கப்பட்டன. ஆனல், உழுதற்கு எருதுகளே பயன்படுத்தப்பட்டன.
செலித்திக்குத் தீவு முழுவதையும் ஒருங்கு நோக்குமிடக்து, சட்சனிய காலத்திலும் மத்திய காலத்திலும் இருந்தது போல, விவசாயம் அவர் களின் முக்கிய தொழிலாக இருக்க வில்லை. காடுகளும் சேற்று நிலங்களும் நிறைந்திருந்த பூமியிற் சிதறுண்டிருந்த அம்மக்கள், வேட்டையாடல், மீன்பிடித்தல், மந்தை மேய்த்தல், நெசவு செய்தல், தேனி பேணல், போர் புரிதல், தச்சுவேலை, உலோக வேலை போன்ற பலவகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். கெலித்திய குடும்பங்களின் சிற்றூர்கள், வெட்டு மரங்கள், சிறு கொம்பர்கள் அல்லது மண் என்பவற்றல் ஆய கட்டடங்களை உடையனவாக இருந்தன. இக்கட்டடங்கள், குலங்களிடை நிகழும் போர்களில் இலகுவாக அடிக்கடி அழிக்கப்பட்டன. உவெல்சு மக்கள் மத்தியகாலத்தின் கடைசிவரை தொடர்ந்து செய்தது போலவே மேற்கிங்கிலாந்திலிருந்தவர்களும் புதிய புன்னிலங்களையும் வேட்டைத் தலங்களையும் தேடித் தங்கள் இருப்பிடங்களை மாற்றினர்.
* அங்கு காணப்பட்ட அருகிய விவசாயம், மக்களை ஒரிடத்தில் நிலையூன்றச் செய்ய வில்லை", என வினேகிறதெடவு கூறுகின்றர். இத் தீர்ப்பு கெலித்தியர் ஐதாகக் குடியிருந்த மேற்கு, மத்திய பாகங்களுக்குப் பொருந்துமாயினும், தெற்கிலும், கிழக்கிலும் கோதுமை விளையும் மாவட் டங்களுக்குப் பொருந்தாது. எனினும், பிற்கூறிய பிரதேசங்களிலும், கெலித்தியர் சமுதாய அடிப்படையிலமைந்த கிராமப் பயிர்ச்செய்கையையும் எல்லை வரையறுக்கப்படா வயல் முறைமையையும் பெரிய கூட்டுப் பட்டண முறையையும் கைக்கொண்டர் என்பது எவ்வாற்றணும் நிறுவப்பட்டிலது. இப்பயிர் விளையும் பகுதிகளைப் பின்னர் ஆங்கில சட்சனியா கைப்பற்றிய காலத்திலேயே இம்முறைகள் நிறுவப்பட்டன.
எவ்வாற்ருயினும், குறித்த தீவின் பல பகுதிகளிலும் சிறு குடும்பங் களாக நாட்டுப்புறத் தொகுதிகளிற் சிதறியிருத்தலே கெலித்தியரின் இயல் பாயிருந்தது. ஆயினும், இக் குடும்பங்கள் ஓயாது சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்து, தத்தம் குக்கிராமங்களுடன் அடைக்கப்பட்டுள்ள எல்லைக்கு மத்தியில் வாழ்ந்தன. இவ்வடைக்கப்பட்ட நிலங்களுக்கப்பால் தரிசு நிலங்களிருந்தன.
செலித்திய நாகரிகத்தின் மிக முன்னேற்றமான பிரதேசங்கள் பிரித் தானியாவின் தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளிலேயே இருந்தன. அப் பகுதிகளிலேயே மிகச் சிறந்த தானிய நிலங்களும் புன்னில மேய்ச்சல்
1 அதிகாரத்தினிறுதியிலுள்ள குறிப்பைப் பார்க்க. இதுமுதற்கொண்டு கெலித்திய உரோம பிரித்தனின் முகப்புத் தேசப்படத்தைப் பார்க்க.

கெலித்தியர் மதம் 17
நிலங்களும் சசெட்சு, உவீல் இரும்புச் சுரங்கங்களும் கொல்லுலேக்களங்க ளும் இருந்தன. இங்கு மத்தியதரைக் கடலில் வணிஞ் செய்பவருடனும், கடலுக்கப்பாலிருந்த செலித்திய உறவினருடனும் இலகுவாகத் தொடர்பு கொள்ளக்கூடிய கப்டற் போக்குவரத்தும் கால்வாய்த் துறைகளும் இருந்தன. முழுத் தீவிலும் முறையான பட்டின-வாழ்க்கை இல்லா விடினும், பெரிய கூட்டுக் குடிசைகள் சென் ஒல்பன்சு, கோல்சிற்றர் போன்ற இடங்களில் காணப்பட்டன. கி. மு. 150 ஆம் ஆண்டளவில் தெற்குப் பிரித்தானியர் தமக்கென ஒரு பொற்காசடித்துப் பயன்படுத்தினர். இவர்கள் மசிடன் தேசத்து அரசரின் பொற்காசு அடிக்கும் முறையைப் பினபற்றினர். கி. மு. கடைசி நூற்ருண்டில் தெற்குப் பிரித்தானியா விலிருந்த பெல்கே இனத்தவரும் வேறுசில இனத்தவரும் வடகோலில் இருந்த ஐரோப்பியருடன் அரசியற்றெடர்பு வைத்திருந்தனர் ; பிரித்தா னியருட் சிலர் ஐரோப்பிய பெல்கே இனத்தவரின் மன்னனையே தமக்கும் மேலாளனக எற்றுச் சில ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆகவே, உரோமர், வடகோல் இனத்தவரை அடிப்படுத்தற்குச் செல்கின்றனர் என்று அறிந்த பொழுது, பிரித்தானியர் கப்பல்களையும் மக்களையும் அனுப்பிச் சீசருக் கெதிராகக் கடலிலும் தரையிலும் போர் புரிந்தனர். சீசர், பிரித்தானியா மீது படையெடுத்தமைக்கு அச்செய்கையும் ஒரு காரணமாகும்.
கிறித்துவ சமயத்தொடக்க காலத்தில் வாழ்ந்த கெலித்தியரிடை வழங்கிய ஐதிகக் கதைகளைக் கொண்டு நாம் அறிபவற்றைத் தவிர, ஐபீரியரதும் செலித்தியரதும் சமயத்தைப் பற்றி எமக்கொன்றுந் தெரியாது. நீரூற்றுக்களிலும் குகைகளிலும் குன்றுகளிலும் காடுகளிலும் வேறு பல இற்கைப் பொருள்களிலும் ஊருக்குரிய தேவதைகள் குடி கொண்டிருந்தன. இத் தெய்வங்களே பிற்காலத்தில் மோகினித் தேவ தைகளாகவும் நீர்வாழ் தெய்வங்களாகவும் கருதப்பட்டன. கெலித்தியர் காலத்தவராகிய யூலியசு சீசரே பண்டைக் கெலித்திய மதம் பற்றிய விரிவான சில குறிப்புரைகளை எழுதியுள்ளார். துரூயிட்டுக்கள் எனப்பெயர் படைத்த குருமாரின் ஆதிக்கம் அவர் கற்பனையைத் தூண்டிற்று. இக் குருமார் கட்டுக்கோப்பான அமைப்பை உடையோராய்க் கோல் நாட்டிலும் பிரித்தனிலும் மிகுந்த ஆதிக்கம் பெற்று விளங்கினர் : கல்வி பயிற்றல் அவர் 8ை யில் இருந்தது; நீதிமன்றங்களிலே நீதி வழங்குவதும் அவர் கையதாயிற்று அவர் தம் விதிகளுக்குப் பணியாத பாமரபைத் தண் டித்தலும் அவர் உரிமையாயிற்று. “இவ்வாறு மதவிலக்கஞ் செய்யப் பட்டோர் பாவிகளாகவும் பத்தியற்றேராகவும் ஒதுக்கப்பட்டனர். மற்றை
பிரித்தானிய பொருட்காட்சி நிலையத்தின் நாணய அறையில் இதற்கு எடுத்துக்காட்டுக்கள் உள. இதே பொருட்காட்சி நிலையத்தை அடுத்துள்ள சாலையிலும் இரும்புக்கால பொருள் களுள்ள அறையிலும் காணப்படும் வெண்கலக் கவசங்கள், வெண்கல்) இருhபு ஆகியவற்ரு லாய ஆயுதங்கள், தங்க அணி 6ள ஆகியவற்றைக்கொண்டு பிரித்தானியாவிலுளள ஐபீரிய கெலித்திய நாகரிகங்களின் திறமையையும் செல்வத்தையும் பற்றி ஒரனவு அறியகட்ெக்கினறது.

Page 19
8 கெலித்தியர் மதம்
யோர் அவர்களைக் காணவோ அவர்களொடு கதைக்கவோ விரும்பார்.” துரூயிட்டுக் குருமாரின் ஆதிக்கம் உரோமானிய உயர்குடிமக்களுககு உவர்ப்பாய் இருந்தது. இதற்குக் காரணம், கிழக்குப் புலத்திலிருந்து வந்த குருமார் முறைமைக்கு உரோமாபுரி இன்னுந் தலைவனங்காதிருந்த மையே. “ கோல் மக்கள் யாவரும் மூட நம்பிக்கைகளில் ஊறியவரே ; ஆதலின், கடுநோய், போராபத்து முதலியன வந்தக்கால், நரபலி கொடுப்பர்; அன்றேல் அவ்வாறு செய்வோமென நேர்ந்து கொள்வர் ; இத்தகைய சடங்குகளிலே துரூயிட்டுக் குருமாரே புரோகிதராகக் கடமை யாற்றுவர்”, எனச் சீசர் குறிப்பிடுகின்றர். இன்னும், “ இவ்வழமை களிலே சேர்மானியர் கோல் மக்களினின்றும் பெரிதும் வேறுபட்டவர் : மதவிடயங்களை நிருவகித்தற்கு அவர்களிடைத் துரூயிட்டுக்கள் இல்லையா தலின் ”, என்றும் அவர் கூறுகின்றர். ஆங்கில சட்சனியரைப் பற்றியும் நோசுமக்களைப் பற்றியும் சீசர் அறிந்திருந்தாராகில், அவர்களைப் பற்றியும் சீசர் இவ்வாறே கூறியிருப்பர். பிரான்சிலும் பிரித்தனிலும் வாழ்ந்த கெலித்திய மக்களின் இயற்கை வழிபாட்டையும், அக்கெலித்திய மக்களைப் புறங்கண்டு இத்தீவினில் தம் ஆதிக்கத்தைப் பிற்காலத்தே நிறுவிய பிறமிலேச்சவினங்களின் மதத்தையும் ஒப்பு நோக்குமிடத்து, (முன்னைக்) கெலித்தியரின் மதம் அச்சத்தையும் குருமாரின் அதிகார பலத்தையும் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டிருந்ததென்பது தெளிவு.
குறிப்பு :-
அடைத்த வயல்களையும் சிறிய கிராமங்களையுமே கொண்ட ஒரு பிரதேசமாக இங்கிலாந்தின் மேற்குப்பாகம் அப்பழைய காலந் தொட்டு இருந்தமைக்கு ஒரு காரணம் கெலித்தியரின் வழமையேபோலும். எனினும் மண்ணின் தன்மையையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும். நோதிக்குப் படையெடுப்பாளர்தாமும், பெரும்படியாய் விவசாயஞ் செய் தற்கு ஒவ்வாத பகுதிகளிலே அதனை மையமாகக் கொண்டு வளர்கின்ற பட்டணங்களையும் நிறுவியதில்லை என்பதையும் இங்குக் கவனிக்க. உதா ரணமாக வடபுலத்துக் கரம்பைகளிலும், கெந்து மாவட்டப் பழத் தோட்டங்களிலும், மரக்காவாகப் பெரும்பான்மையும் நிலைத்துவிட்ட பிறவிடத்தும் திறந்த வயல்முறையினையோ பட்டணங்களையோ அவர்கள் தாபிக்கமுயன்றதில்லை. ஆயின் சட்சனியரோ கிழக்கிலும் மிதுலந்திலும் மேற்கூறிய வகையான பட்டணங்களையும் திறந்த வயல்முறையையும் நிறு வினர் என்பது உண்மை. எனினும், இங்கு ஒர் ஐயம் இயல்பாக எழுகின்றது. கிழக்குப் பிரதேசத்திலுள்ள தானிய நிலங்களிலே கெலித்திய மக்கள் பட்டணங்களையும் திறந்த வயல்முறையையும் நிறுவி யிருந்தனரா ? இவற்றையே சட்சனியர் பிற்பாடு தழுவிக் கொண்டனரா ? கெலித்திய மக்கள் அவற்றை நிறுவியிருந்தாரெனச் சிபோமும் நிறு வியதில்லையென வினகிராதோபும் கருதுவர். இங்கு யாதொன்றிற்கும்
உறுதியான ஆதாரமில்லை.

அத்தியாயம் II உரோமன் ஆட்சிக்குட்பட்ட பிரித்தானியா
கெலித்தியரின் வருகைக்கும் சட்சனியரின் வருகைக்கும் இடைப்பட்ட காலததிலேயே உரோமர் பிரித்தானியாவைக் கைப்பற்றினர். இதனல் சட்ச னியரின் வருகை ஒருகால், இருநூறு ஆண்டுகள் வரை தாமதப்பட்டி ருக்கலாம். பிரித்தானியரைக் கொனறு, அல்லது துரத்தி, அவர்களின் இருப்பிடங்களில் தாம் குடியேறும் நோக்கமாகவே கெலித்தியர், சட்சனியர், தேனியர் ஆகியோர் வந்தனர் ; ஆனல், உரோமரோ, தாம் உயர்ந்த நாகரிகத்தவர் எனும் உரிமையால் நாட்டைச் சுரண்டவும், மக்களை ஆளவுமே அங்கு வந்தனர். இவ்வகையில், அவர்கள், அமெரிக்காவிற் குடியேறிய யாத்திரைப் பிதாக்களைக் காட்டிலும், ஆபிரிக்காவிலுள்ள ஐரோப்பியரையே ஒத்திருந்தனர். ஆனல், ஆபிரிக்க மக்கள் ஐரோப்பிய முறைகளைத் தழுவுந் தகவு குறைந்தோராக, பிரித்தானிய மக்களோ, வெள்ளையர் என்ற முறையில், இலத்தீன் முறைகளை முற்ருகத் தழுவக் கூடியவரா யிருந்தனர். அன்றியும், உரோமானிய ஆட்சிக்குட்பட்டிருந்த கிரேக்க, கீழைப்பிரதேச மக்களைப் போல், கோல் இனத்தவரும் பிரித்தானியரும் தமக்கே உரித்தான ஒரு விரிந்த நாகரிகத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆகவே, உரோமர் தமது கொள்ளை வேட்கையைத் தணித்தவுடன், இலத்தீன் வாழ்க்கை முறைகளின் சகல அமிசங்களையும் தாம் கைப்பற்றிய மேலைத்தேய மக்கள் மீது திணிப்பதில் ஈடுபட்டனர். கோல் மக்கள் மீது அவர்களடைந்த வெற்றி நிலையானதொன்ருயிருந்தது ; அதுவே தற்கால ஐரோப்பிய வரலாற்றின் ஆரம்ப கட்டமாய் அமைந்தது. ஆனல், பிரித் தானியாவில், ஆரம்பத்தில், வெற்றிபெற்ற உரோமர், இறுதியில் முற்றகத் தோல்வியடைந்தனர். பிரித்தானியாவை உரேரீமர் கைப்பற்றிய காலத்தை ஆராய்ந்த தொல்பொருளியல் வல்லுநராகிய அவவில் என்டார், “ பிரித் தானியாவை ஒருகாலம் ஆண்ட உரோமானியரிடமிருந்து, பிரித்
தானியாராகிய நாம் ஒன்றையும் Ծւլ: ழிப் பெறவில்லை ” எனக் கூறி யுள்ளார்.
உரோமர் குறிப்பிடத்தக்க மூன்று /விளைவுகளை விட்டுச் சென்றனர்.
முதல் விளைவானது, சீசர், அக்கிரிக்கோலா, எதிரியன் ஆகியோருக்கு வேடிக்கையாக அல்லது திகைப்பாக இருந்திருக்கக்கூடியதான உ.வேல்சு நாட்டுக் கிறித்துவ மதம்; இரண்டாவது, உரோமானிய வீதிகள் ; மூன்ற வது விளைவு, இரண்டாவது விளைவிலிருந்து பெறப்பட்டது. அதுவே, விசேட மாக இலண்டன் போன்ற சில புது நகர்ப்புலங்கள் 111111ாைச் சிறப்புப் பெற்றமை. ஆனல், இந்நகரங்களில் நிலவிய இல:ன் முறையான வாழ்க்கை, கிராமவாசங்கள், கலைகள், மொழி, உரோமின் அரசியலமைப்பு ஆகிய யாவும் கனவு போல மறைந்தொழிந்தன. பிரித்தானியாவின்
19

Page 20
20 யூலியசு சீசர்
பழைய வரலாறு காட்டும் உண்மை யாதோவெனின், பிரான்சை நிலையாக இலத்தீன் மயமாக்கிய உரோமர், பிரித்தானியாவை இலத்தீன் மயமாக்க முடியாது போயினர் என்பதாகும்.
யூலியசு சீசரின் இரு செயற்கருஞ் செயல்கள் உலக வரலாற்றிலே அவருக்கு நிலையான இடத்தைக் கொடுத்தன. அவையாவன, உரோமப் பேரரசின் அரசியலமைப்பைப் புதிதாக்கியமையும், அப்பேரரசை வட ஐரோப்பாவிற் பரப்பியமையும் ஆகும். அல்பிசுவின் வடபுறத்தில் மத்திய தரை மக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, கோல் நாட்டை, எஞ்ஞான்றும் நிரந்தர இலத்தீன் நாடாக்கிய பெருமை சீசருக்குரியது. மேலும், சுயநலங் கருதும் உயர் குடிமக்களுக்கும் தாழ்வுற்ற பட்டினமாக்களுக்குமிடையே தவித்துக்கொண்டிருந்த, மாகாண மனப்பான்மையுடைய உரோமன் குடியரசை, நாகரிக உலகில் ஒழுக்கமும் உலகப் பொதுமனப்பான்மையும் பரந்த நோக்கமுமுள்ள பேரரசாக்கியதிலிருந்து, காலத்துக்குப் பொருந்தாத பண்டை உலகின் அரசியலமைப்பைப் புதிய தத்துவங்களுக்கியைய எவ்வாறு நிருமாணிக்க முடியுமென்பதை அவர் எடுத்துக் காட்டினர். அவ்வல்லாட் சிப் பேரரசு மக்களால் விரும்பப்பட்டது. சீசரின் வழிவந்தோர், சீசரின் நெறிகளுக்கேற்ப உரோம் அரசைப் புதிதாய் அமைத்தபோது, உரோமின் ஆதிக்கம் மேற்கே மேலும் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் சமீப கிழக்கே ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கும் புத்துயிர் பெற்றது. சீசர் கட்டிய பேரரசு பண்டை உலகத்தைப் புது உலகத்துடன் இணைத்தது. அப் பேரரசாற் காப்பாற்றப்பட்ட கிரேக்க, உரோமப் பண்பாட்டு முறைகள், பிற்கால ஐரோப்பாவை உருப்படுத்தும் இனங்களுக்கு ஒரு பொதுப் பண் பாட்டை அளித்து, அவ்வினங்களை ஒன்றுபடுத்தின. சீசரின் பேரரசு கிறித்து மதத்தின் வளர்ச்சிக்கு ஒர் அரங்கமாக விளங்கி, அம்மதத்தை உரோ மானியப் போர் வீரர் கட்டிப் பாதுகாத்த வீதிகள் மூலம் நாகரிகவுலகின் ஒவ்வொருகோடிக்கும் பரவச் செய்தது.
கால வொழுங்கின்படி நோக்கின், உரோமப் பேரரசை அமைப்பதற்குச் சீசர் செய்த முயற்சிகளுக்கு ஒரு முன்னிகழ்ச்சியாக, கோலில் அவர் செய்த வேலைகள் அமைந்தன. கோலை அடிப்படுத்தும் முயற்சியில் அரைப் பங்கு தானும் முடிவுறுமுன்னர், தோவர் தொடுகடலுக்கப்பால் அவர் ஒருநாள் நோக்குவாராயினர். நெப்போலியனைப்போல், அங்குள்ள வெண் குன்றுகளை அளவிட்டார்; எனினும், அவர் உள்ளத்திலே தோன்றிய எண்ணங்கள், நெப்போலியனின் எண்ணங்களிலிருந்தும் வேறுபட்டன. பிரித்தானியாவை அடைவதும் அபாயமின்றித் திரும்புவதும் சீசருக்கு எளிதான விடயங்களே ; ஆயின், சீசர் ஒரு விடயத்தில் மட்டுந் தடுமாறி ஞர். கையிற் பெரிய வேலையிருக்க பிரித்தானியாவிற்குப் பிரயாணஞ் செய்வது பயனுடைத்தாகுமோ என்றுதான் சீசர் ஆலோசித்தார்.

பிரித்தானியாவிற் சீசர் 2
உரோமன் பரிபாலன முறையை உடனடியாகப் பிரித்தானியாவில் அமைக்கும் எண்ணத்தோடு சீசர் பிரித்தானியா மீது படையெடுக்கத் தீர்மானிக்கவில்லை. அதற்கு வேண்டிய நேரமும் ஆட்டலமும் அவர் வசமிருக்கவில்லை. கோலில் அவரின் இராணுவ நிலைமையும் இத்தாலியில் அவருடைய அரசியல் வாய்ப்புக்களும் உறுதியற்ற முறையில் அமைந் திருந்தன. எனெனில், காதேசு நகரத்து மூதவையுறுப்பினர் அணிபல் என்பவன்பாற் காட்டிய அன்பு எத்துணை குறிதோ அத்துணை குறிதாகவே உரோமப் பேரரசுத் தேசாதிபதிகள் சீசரின் மீது காட்டிய அன்பும் இருந்தது. என்றலும், சீசர், உரோமில் எதிர்க்கட்சித் தலைவராய் இருந்ததால், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காகப் பகட்டான சில சாதனைகளைச் செய்யவேண்டி யிருந்தது. மேலும், தம் சார்பாளரைத் திருத்திப்படுத்தவும், போர்வீரருக்கு வேதனம் வழங்கவும் போர்களில் ஈடுபடுவதற்குப் பணந்திரட்டுவதற்குமாக அவருக்குத் திறையும் அடிமை களும் தேவையாயிருந்தன. ஆகவே, சீசர் பிரித்தானியாவைக் கைப்பற்றி, அத்தேவைகளைப் பூர்த்திசெய்ய எண்ணினர். கோலின் வடபாலிருந்த இனத்தவருக்கும் தென் பிரித்தானிய வாசிகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்தது ; அதனல், கோலானது, அயல் நாடான பிரித்தானியா அம்மாபெரும் உரோமாபுரிக்குப் பயந்து திறைசெலுத்துவதைக் காண்பின், எளிதில் அடிபணியும் எனச் சீசர் எண்ணினர். இனி, கோலின் வருங்கால ஆள்பதிகளுக்கு, முதலிற் பிரித்தானியாவின் அரசியல், புவியியல் துறை களைப் பற்றிய நேரடியான அறிவு வேண்டியிருந்தது.
சீசரின் முதற்படையெடுப்பு, ஒர் இராணுவ நடவடிக்கை என்ற முறை கி.மு.55, யில் தோல்வியாகவே முடிந்தது. சிறுபடை கொண்டு சென்ற சீசர் தோவர்க் கரையிலிருந்து பத்து மைல் தூரந்தானும் முன்னேறவில்லை. பெரு கி.மு. 54 மளவில் நிகழ்ந்த அடுத்தாண்டுப் படையெடுப்பில் சீசர், பல சமர்களில் வென்று, எதிரிகளின் முன்னிலையிலேயே தேமிசைக் கடந்து, கத்து வெலோனியரின் அரசகிைய கசிவெலோனசு என்பானின் ஆட்சிக்குட்பட்ட எற்போட்டுசயர்ப் பகுதி ளை அடைந்தார். கத்துவெலோனியரே தென் பிரித் தானியாவில் ஆதிக்கம் செலுத்தினர் ; அவ்வாதிக்கங்கண்டு அழுக்காறு கொண்டு அவ்வினத்துக்குப் போட்டியாயிருந்தவர்களும் சில குடிமக்களும் படையெடுத்துவந்த உரோமானியர்க்கு நேயர்களாயினர். யூலியசின் காலத் திலும் அதற்கு நூறு வருடங்களுக்குப் பின்னர் குளோடியசு வெற்றி கொண்ட காலத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது. கெந்து மக்களுட்படப் பல பிரித்தானியர், சீசரை எதிர்த்து முனைந்து பொருதனர். பிரித்தானி யக் காலாட்படை பயிற்சியற்றதாயிருந்ததால், ஒழுங்காகப் பயிற்றப்பட்ட உரோமக் காலாட்படைக்கு முன்னிற்கத் தகுதி பற்றிருந்தபோதிலும், உட லுறுதியுஞ் செம்மயிரும் படைத்த கெலித் திப உயர்குடிமக்கள், கொடு வாள் பூட்டிய தேர்களில் எறி, கடகட வென்ற ஒசையுடன் போர்க்களத்தை யடைந்து, ஓமர் தமது காவியங்களிற் படைத்த வீரரைப்போற் பொருதனர்.

Page 21
22 பிரித்தானியாவிற் சீசர்.
அவ்வீரப்போர், நன்கு பயிற்றப்பட்ட உரோமப் பத்தாம் படையைக்கூடத் திகைக்கச் செய்தது. ஆனல், அக்காலத்தில் தேர்மீது சென்று போர் செய்யும் முறை பயனற்றதெனக் கைவிடப்பட்டிருந்தது ; கெலித்திய கோலி லும் எலனியம் பரவிய கிழக்குப் புலத்திலும் தேரூர்ந்து போரிடும் முறை எலவே வழக்கற்றுவிட்டது. பிரித்தானியர், குதிரைப் படைகளைப் பயன்படுத்தும் முறையைக் கற்று, அம்முறையைக் கையாண்டிருந்தால், அவர்களின் எதிர்ப்பு உண்மையில் வலியதாய் இருந்திருக்கும். நோமா னிய வெற்றியானது மத்தியகால நைற்றுக்களை அந்நிய தேச இயல்புகளைத் தழுவிக் குதிரைப்படைகளை உபயோகிக்கக் கற்பிக்கும்வரை, குதிரைமீதேறிப் போர் செய்யும் உயர்குடிமக்களாற் காப்பாற்றப்படும் நற்பேற்றை இத்தீவு பெறவில்லை.
கி. மு. 54 ஆம் ஆண்டுப் படையெடுப்பானது முதற்படையெடுப்பைப் போன்று தோல்வியுறவிடினும் பெருவெற்றியெனக் கொள்ளுந்தகவிலது. சிசரோ தனது தோழருக்கு முறையிட்டதுபோல, பேர்போன பிரித்தானியத் தங்கம் சிறிய அளவில்மட்டுமே கிடைத்தது ; மேலும், உரோமர் பெற்ற அடிமைகள் அறிவிலிகளாயிருந்தபடியால், அவர்களை உயர்ந்த விலைக்கு விற்க முடியாமற்போயிற்று ; அன்றியும், சீசர் கோலிற் செய்ததுபோல், குழப்பஞ் செய்யும் குலங்களை மொத்தமாகப் பிடித்துச்சென்று எலவிற் பனையாளருக்கு விற்பதற்குவேண்டிய நேரமும் வழிவகைகளும் இருக்க வில்லை. இப்படையெடுப்பினல் நிலையான பெறுபேறுகளொன்றும் எற்பட வில்லை ; ஆங்கிலக் கால்வாயின் இரு கரைகளிலும் இருந்தவர்களின் போர் ஞாபகங்களே ஒரு நிலையான விளைவெனக் கருதலாம். சிறிது காலத்துட் பிரித்தானியா திறையிறுக்க மறுத்தது. கோலில் வெலிற்றியர் தலைவனன வெசிஞ்சித்தோரிசு, சீசரின் ஆட்சிக்கெதிராகக் கலகஞ் செய்த தால், அப்போர் ஒரு நெருக்கடியான கட்டத்தையடைய, பிரித்தானியா பற்றிய திட்டங்கள் (எவையேனுமிருப்பின்) சீசரினற் கைவிடப்பட்டன. பின்பு தொடங்கிய உண்ணுட்டுப் போர்களாலும் ஒகத்தசு, தைபீரியசு போன்றவர்கள் பேரரசைப் புதிதாக அமைப்பதில் ஈடுபட்டதாலும் தூரத்தி லிருந்த பிரித்தானியாவிற்கு நாறு ஆண்டுகட்கு ஆறுதல் கிடைத்தது.
யூலியசு சீசர், பிரித்தானியாமீது செய்த படையெடுப்பிலும் கோலைக் கைப்பற்றியமை காரணமாகவே, தென் பிரித்தானிய இனத்தவர் இலத் தீன் நாகரிக எல்லைக்குள் ஈர்த்துச் செல்லப்பட்டனர். இவர்களும் வட கோல் மக்களும் ஒரே இனத்தவரே ; ஒரே அரசியற்றெகுதிக்குச் சேர்ந்த வரே. அக்காலத்தே கோல் மக்கள் உரோமானியக் குடிமக்களாயினர் ; பலர் உரோமானியக் குடியுரிமையும் பெற்றனர். அமைதியான முறையிற் பிரித்தானியாவை வெற்றிகொள்ள முடிந்தது. உலக வரலாற்றிலேயே மிக முதன்மை வாய்ந்த அந்த நூறு வருட காலத்தில் பிரித்தானியா விலுஞ் சில மாற்றங்கள் உண்டாயின. இப்பால் யூலியசு சீசரின் கொலை

கெலித்திய இலண்டனும் உரோமானிய இலண்டனும் 23
யும் அதற்குப் பழிவாங்கியமையும் நிகழா நிற்க, அந்தணிக்கும் கிளியப் பற்றிராவுக்கும் எற்பட்ட காதல், கீழைத் தேசத்துக்கும் மேலைத் தேசத் துக்குமுள்ள தொடர்பு பற்றிய பிரச்சினையை உரோமானிய உலகில் எழுப்பா நிற்க, ஒகத்தசு தந்திரமாகப் பேரரசை அமையா நிற்க, கிறித்து போதியா நிற்க, போல் கொள்கை மாருநிற்க, அப்பால் அதிவடக்கே, இலத்தீன் மயமாக்கப்பட்ட கோல் மாகாணத்தைத் தம் நிலைக்களஞகக் கொண்டு உரோமானிய வியாபாரிகளும் குடியேறிகளும் பிரித்தானியாவின் உள்ளூர் களில் குடியேற்றங்களை அமைத்தும் குலத்தரசர்களின் அவையில் செல் வாக்கைப் பெற்றும் வருவராயினர்.
செகப்பிரியரின் படைப்பாகிய “ சிம்பலின்”, அவரின் “இலியர் ” போலக் கட்டுக்கதையன்று. சிம்பலின் என்ற அரசன் கத்துவெலோனி இனத்தை ஆண்டது மட்டுமல்லாமல், அவ்வினத்தின் ஆதிக்கத்தைத் தெற்கு இங்கி லாந்து வரை செலுத்தித் தனது வெள்ளிநாணயத்தில் தன்னைத்தானே “ பிரித்தானிய அரசன் ” என உரோமன் மொழியிற் குறித்துங் கொண் டான். உரோமன் மொழியை அவன் கையாண்டமை ஒகத்தசு தைபீரியசு ஆகிய பேரரசருடன் சிம்பலின் கொண்ட நட்பைக் காட்டுகின்றது. ஒப்புக் கொள்வோன் எட்டுவேட்டு என்பான், நோமன் நைற்றுக்களையும் நோமன் குருமாரையும் பிரித்தானியாவுட் புகுத்தி, அரண்மனையிலேயே பிரெஞ்சு மொழி பேசுவதை நல்வழக்கமாக்கி நோமன் வெற்றிக்கு அடிகோலியது போலவே, சிம்பலினும் உரோமன் வியாபாரிகளையும் தொழில் வல்லுநர் களையும் பிரித்தானிய நகரங்களிற் குடியேறச் செய்து, குலப் பெருமக்கள் பலர் இலத்தீன் மொழியையும் பண்பாட்டையும் பயிலுமாறு செய்தான். மேலும், சிம்பலின், சென் ஒல்பன்சுக்கு அண்மையிலுள்ள வெருலாமியம் என்ற நகரைத் தலைநகராக்கி, அங்கிருந்து உரோம நாணயங்களின் மாதிரி யான பொற்காசுகளை அடித்து வெளியிட்டான்.
இலண்டன் ஒரு நகரமாக உருவெடுத்தது, சிம்பலின் காலத்திலேயே போலும். ஆற்றிலே கண்டெடுக்கப்பட்ட சில தொல் பொருள்களைக் கொண்டு இலண்டன் பாலம் ஆதியில் மரத்தினற் கட்டப்பட்டிருந்ததெனக் கூறத் தக்கதாயிருக்கின்றது, உரோமானிய வெற்றிக்கு முன்னர், உரோமானியர் செல்வாக்கு பிரித் தானியாவிற் பரவியிருந்த காலத்தில் அப்பாலம் அமைக் கப்பட்டிருக்கலாம். தன்மை மாறுங் காலமாகிய இப்பருவத்தில், பாலத் தின் வட முனையில் இலண்டன் மாநகர் உற்பத்தியாயிற்று. குளோடிய சின் படையெடுப்பின் போது இலண்டன் என்று கூறப்படும் ஓரிடம் இருந்ததென்று நிச்சயமாகக் கூறலாம்.
வாசிப்பவருக்கு விளங்கும் பொருட்டுத் தற்காலப் பெயர்களை உபயோகிப்பதே என்னுடைவ வழக்கம். ஆனல், வெருலாமியம் என்ற இடத்தைச் சென் ரல்பன்சு என்று அழைக்க முடியாது. இவையிரண்டும் ஒரே நிலப்பரப்பைக் குறிக்காவாதலின்.

Page 22
24 கெலித்திய இலண்டனும் உரோமானிய இலண்டனும்
எனினும், முதலில் ஆங்கில வரலாற்றிலும், பின்னர் உலக வரலாற்றி லும் மிக முதன்மையான பங்கைப் பெறவிருந்த இலண்டன் மாநகர், உரோமர் ஆட்சியிலேயே தனது ஆதிச் சிறப்பைப் பெற்றது. இலண்டன் என்ற பெயர் கெலித்தியப் பெயராயிருந்தபோதிலும், ஐபீரிய நாகரிகத் துக்கோ, கெலித்திய நாகரிகத்துக்கோ அது மையமாக விளங்கவில்லை. சீசரின் காலத்திலும் அதற்குப் பின்னரும், மிதில்செட்சு காடாகவும், தற் போதைய இலண்டனிற் பெரும்பகுதி சேற்று நிலமாயுமிருந்தன. பாலத் தின் இரு முனைகளிலும் நிலங் கடினமாயிருந்ததால், கெந்திசுத் துறை முகங்களிலிருந்து வரும் பாதைகள் ஆற்றைக் கடந்து, வடக்கு, மேற்குத் திசைகளிற் பரந்துசெல்ல முடிந்தது. தேமிசு பொங்கு முகத்துக்கூடாக வந்த கண்டத்து வியாபாரப் பொருள்கள் பாலத்திற்குச் சமீபமாக இறக்கப்படடன. இலண்டன் பாலமும் துறையும் புவியியற் பொருத்தத்தால் ஒரே நிலையத்தில் அமைந்திருந்ததனுலேயே இலண்டன் மாநகர் சிறப்புற்று விளங்கியது.
உரோமர், பிரித்தானியாவைக் கைப்பற்றியதும் வடக்கிலுந் தெற்கிலு மிருந்து பெரும் பாதை ளை அமைத்தனர். இப்பாதைகளுள் வறக்குறைய நூற்றுக்கு ஐம்பது வீதமானவை இலண்டன் பாலத்துக்கூடாக அமைக்கப் பட்டன. ஐரோப்பாவுடன் மிகப் பரந்த வர்த்தகத்தை உண்டாக்கியதன் மூலம் இலண்டன் துறைமுகம் முக்கியத்துவமடைந்தது. நெடுங்காலமாகக் கவனிக்கப்படாதிருந்த தேமிசு நதிக்கூடாக்ச் சிறந்த முறையில் வியாபாரம் நடத்தலாமென்டதை ஐரோப்பியர் கண்டனர். ஐரோப்பியப் பொருள் கிளைப் பிரித்தானியாவின் உட்புறத்திற் கப்பல்சளிலிருந்து இறக்கிப் பெரும் பாதைகள் மூலம் பல பாகங்களுக்கும் அனுப்புவதற்கு இலண்டன் துறை முகமொன்றே வசதியளித்தது. பாதைகள் உண்ணுட்டு மக்களின் நன்மை யைக் கருதி மைக்கப்படவில்லை ; ஆட்சிக்காரரின் தேவையைப் பூர்த்திசெய் யவே அமைக்கப்பட்டன. உரோமர் காலத்திற் பிரித்தானியா, வெள்ளி யம், தே ல், அடிமைகள், முத்து, ஒரோவழி தானியம் ஆகியவற்றை எற்றுமதி செய்து, அவ்வழி பிறநாட்டுப் போகப் பொருள்களை வாங்கியது.
உரோமரின் ஆதிக்கத்தில் இலண்டன் ஒரு பெரிய செல்வம் நிறைந்த நகரமாயிற்று. உரோமருக்குப்பின் இலண்டன் அவ்வுன்னத நிலையை இழந்து, நோமன் காலமளவிலேயே திரும்பவும் பழைய நிலையையெய்தி யது. உரோமரால் இலண்டனைச் சுற்றியமைக்கப்பட்ட மதிலகளே மத்திய காலத்திலுஞ் சில திருத்தங்களுடன் நிலைபெற்றிருந்தன. இவ்வாறக, உரோமர் காலத் தி லும் மத்திய காலத் தி லும் இலண்டன் நகரம் எறக் குறைய ஒரேயளவான நிலபபரப்பை அடககி நின்றது. உரோமர் காலத்தி
பழைய சேற்றுநிலத்திலிருந்து ஐந்து தொடங்கி இருபது அடிவரை தற்கால இலண்டன் பாதைகள் உயர்ந்திருக்கின்றன. நகர மட்டம் உயர்ந்துகொண்டு போவதே வழக்கம். தற்கால இலண்டனின் பெரும்பகுதி ஒருபோது அடர்சேறுடையதாகவோ எரியாகவோ இருந்தது. இலண்டனின் உற்பத்திடற்றித் தி. தபிளியு. பேசு எழுதிய "இலண்டன்" என்ற நூலிலிருந்து அறியலாம்.

குளோடியசின் வெற்றி 25
லாயினும் மத்திய காலத்திலாயினும் இலண்டன் ஒரு வர்த்தக மையமாக இருந்ததே தவிர, அரசியல் மையமாக ஒருபோதும் இருக்கவில்லை. இலண் டன் நகரம், உத்தியோக பூர்வமாக பல சிறு நகரங்களிலுந் தாழ்வாக உரோமன் தலைவர்களாற் கருதப்பட்டது.
N
சீசரின் புது நிலந்தேடும் படையெடுப்புக்கள் முடிந்து ஒரு நூற்றண்டிற் குப் பின்னரே பிரித்தானியா குளோடியசுப் பேரரசனல் உண்மையாகக் கைப்பற்றப்பட்டது. ஒரேசு எழுதியதுபோல், பிரித்தானியாவைக் கைப்பற்று தற்குப் பல காலமாக உரோமர் உளங்கொண்டு, திட்டமிட்டுவந்தனர். முன்னேற்றமான பூட்கையையும் அப்பூட்கையைச் செயற்படுத்துதற்கு வேண் டிய அவகாசமுமுள்ள ஒரு பேரரசனைப் பெற்றகாலை, அவன் ஆங்கிலக் கால்வாய்க்கப்பாலிருந்த கெலித்தியப் பிரதேசத்தைக் கைப்பற்றி, அவ்வழி, கோலிய ஆள்புலங்களை முற்(றக அடிப்படுத்துவானென்பது திண்ணமா யிற்று. பிரித்தானியாவிற் குடியேறிய வியாபாரிகளும், அடிமைகள், காணி, பதவி ஆகியவற்றை மேலும் பெறுவதற்குப் பேரவாக் கொண்ட அரசவை யினர், போர்வீரர் ஆகியோரும உரோமப் பேரரசோடு பிரித்தானியாவை இணைக்க ஆர்வங் கொண்டனர். பிரித்தானியாவை இணைத்தல் கடினமான தொன்றன்று என அவர் கொண்டிருந்த அபிப்பிராயம் சரியானதே. உரோமன் பண்பாட்டிலூறியிருந்த தலைவர்கள் உரோமனதிகாரத்தை எதிர்க்க மாட்டார்களென்பது வெள்ளிடைமலையாயிற்று. மேலும், அவர்களுட் பலர் கதுவலோனியரின் ஆட்சியை எதிர்த்தது உரோமருக்கு இசைவாக அமைந்தது. தேமிசு நதியின் பொங்கு முகத்தை ஆட்சிப்படுத்தற்கு ஒ. பி. 49 உரோமர் நடத்திய சமரும், கொல்செசுத்தர் மீது படையெடுத்தமையும் தீவின் தென்கிழக்கிலிருந்த சிம்பலினின் பழைய இராச்சியத்தை உரோ மருக்கு அளித்தன. பின்பு, இரண்டோர் ஆண்டுகளாக நிகழ்ந்த போர் களின் பயனய், வில்திசு, சொமசெற்று ஆகியி இடங்களிலிருந்த பெல்கே இனத்தவரும் தோசற்றிலிருந்த தியூரோதிரிசு இனத்தவரும் உரோமர் ஆட்சிக்குள் அடங்கினர். இவ்வினத்தவர் பெருங் கோட்டைகளைக் கட்டியிருந் தனர். பிரித்தானியாவில் பக்குசு தொடக்கம் உவொரிக்குசயர் வரையிருந்த மிதுலந்து காட்டுப்பிரதேசமாக இருந்தமையால், அங்கே குடித்தொகை குறைந்திருந்தது. ஆகவே, உரோமருக்கு அப்பகுதி.ளைக் கைப்பற்றுவது கடினமாயிருக்கவில்லை. உவேல்சு மலைத்தொடர்களின் கரைப் பகுதியையும் வடபாலிலுள்ள சதுப்பு நிலங்களையும் சேனைகள் அடைந்தபொழுதே, பிரித் தானியாமீது படையெடுத்த ஒவ்வொருவருக்கும் எற்பட்டதுபோன்று, முதன் முதலாகப் பெரும் இடையூறுகள் ஏற்படலாயின. கி. பி. 60 ஆம் ஆண்டளவிற் கூட அவர்கள் உவேல்சுப் பகுதியை வெல்ல முடியாது தத்தளித்துக்கொண்டிருந்தனர். உரோமன் சேனை சினேடன்...மலைத் தொகுதிகளின் கரையை வளைந்து சென்று அங்கிளிசித் தீவிலிருந்த மதவெறியாளரான திரியூதர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், படைப் பின்னணியிற் பெரும் புரட்சி பிறந்ததெனத் தகவல் கிடைத்தது.

Page 23
26 போடிசியா
பிரித்தானியாவின் தெற்குக் கிழக்குப் பகுதிகளை உரோமர் இலகுவாகக் கைப்பற்றித் தமது ஆதிக்கத்தை அப்பகுதிகளிற் றடையின்றிச் செலுத்த லாம் என்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதிவிலக்காகப் போடிசியாப் புரட்சி அமைந்தது. அப்புரட்சிக்குக் காலாயிருந்தவர் உரோமரே. பிளாசிப் போருக்குப் பின்னர், ஆங்கிலேயருள் மிகக் கேவலமான சிலர், சிளைவும் எத்திஞ்சும் பிரித்தானியரின் அரசாங்கத்தை முறையாக அமைப்பதற்கு முன், வங்காளத்திற் செய்த இழிவான செயல்கள் போலவே, உரோமருட் சிலர், ஐகினி, திரினேவந்தே ஆகிய மக்களை வருத்திப் பல இழிவான செய்கைகளில் ஈடுபட்டனர். உரோமர் தாம் நினைந்தவாறு பறிமுதல்செய் தல், சூறையாடல் போன்ற கொடுஞ் செயல்களைப் புரிந்தமையால், ஐகினி மக்கள் மனங்கொதித்திருக்க, உரோமர் அவர்களின் அரசியாகிய போடி சியாவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் செய்த வலோற்காரமான மான பங்கம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினற்போலாயது. கெலித் திய இரத்தம் கொதித்தது ; உரோமரையும் உரோம மயமாக்கப்பட்ட பிரித்தானியரையும் வெறுத்தனர். கோல்சிசுற்றர், வெருலாமியம், இலண் டன் ஆகிய இடங்களிற் கூடியிருந்த உரோமரையும் அவர்களைச் சார்ந்த பிரித்தானியரையும் கொடிய முறையில் வருத்தியும் உறுப்புச் சிதைத்துங் கொன்றனர். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் உயிரிழந்தனர். விறக்குறைய எழுபதினயிரம் மக்கள் இறந்தனரென மரபுமுறையான மதிப் பீடு கூறுவதைப் புனைந்துரையாகக் கருதினலும் பெருந் தொகையினர் இறந்தனர் என்பது திண்ணம். பிரித்தானியாவை உரோமர் கைப்பற்றி யிருந்த குறுகிய காலமாகிய பதினேழு ஆண்டுகளுக்கு முன்னரே, மேற் குறிப்பிடப்பட்ட இடங்கள் இலத்தீன் மயமாக்கப்பட்டு வந்தன என்ற பிற சான்றை இறந்தவரின் பெருந் தொகை வலியுறுத்துகின்றது.
ஒழுங்குமுறையற்றதும் குறுகிய கால ஆர்வமுடையதுமான கெலித்தி யரின் அத்தாக்கலை, அங்கிலிசியிலிருந்து விரைந்து திரும்பிய உரோமன் போர் வீரர் பெரும்போரில் முறியடித்தனர். முன்பு நிகழ்ந்த வதத்திற் காக நோபக்குப் பகுதியிலிருந்த ஐகினி இனத்தவரை வஞ்சந் தீர்க்குமுக மாக நிர்மூலமாக்கினர். பாழாக்கப்பட்ட நோபக்குப் பிரதேசம் பல தலை முறைகளாகப் பழையநிலையை அடையவில்லை. போடிசியா நஞ்சுண்டிறந் தார். உரோமன் பரிபாலன முறைமை மீண்டும் தெற்கிலும் கிழக்கிலும் நிலைநாட்டப்பட்டது. ஆனல், அதிவிரைவில் அப் பகுதிகளில் வசித்தோருக்கு முன்னையிலும் மேலான நீதி வழங்கப்பட்டது. ஐசினி இனத்தவரால் நாச மாக்கப்பட்ட நகரங்கள் விரைவிற் செழித்தோங்கின; சிறப்பாக, இலண்டன்
இது முதலாக, கெலித்தியர் என்ற சொல், கெலித்திய இரத்தம் கலக்கப்பெற்ற பழைய ஐபீரியரையும் குறிக்கும். " பொன்னவிர் கூந்தலையுடைய போடிசியா கெலித்திய உயர்குடிமக்களைச் சேர்ந்தவர். அவரின் உண்மையான பெயர் “ பெளடிக்கா " என்ற போதிலும், கெளப்பர், தெனிசன் ஆகிய கவிஞர்கள் அவரை இன்னுேசை நிறைந்த போடிசியா எனற பெயரால் வழங்கினர். அப்பெயரே மக்களிடத்தும் புழங்குவதாயிற்று.

வடமேற்கு எல்லைப்புறம் 27
மாநகர், வட ஐரோப்பியப் புதுமுறை வர்த்தக நிலையமாக ஆண்டுதோறும் வளர்ச்சியுற்றது. புதிய தலைமுறையினருட் பிரபலம் வாய்ந்த பிரித்தானி யர், போர்வீரருக்குரிய பழக்கவழக்கங்களைத் துறந்து “தோகா” எனும் உரோம உடைதரிப்பதிற் பெருமையடைந்தனர்; உரோமன் ஒழுக்க முறை கள், மொழி, கலை ஆகியவற்றைக் கற்பதில் இன்பங்கண்டனர்.
வடமேற்கு எல்லைப்புறத்தை அடக்கும் பிரச்சனை இன்னும் இருந்தது. உவேல்சுக் குன்றுகளிலும் வடக்குக் கரம்பை நிலங்களிலும் திறமையுள்ள படையதிகாரத்தை நிலைநாட்டும் வரை, மிலேச்சவியல்பினரின் உறைவிடங்க ளாகிய அப்பகுதிகளிலிருந்து வெளிவரும் மறக்குலமக்கள், கீழே சமவெளி களிலுள்ள கிராம வாசங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்த படைபலமற்ற மக்களைச் சூறையாடுவது உறுதி.
இப்பிரச்சினையைத் தீர்க்க உரோமன் போர்வீரர் தலைமுறை தலைமுறை யாக எத்தனித்தனர். ஆனல், உரோமன் படைகள் கெலித்திய சட்சனிய தேனிசுப் படைக்குழாங்களிலும், நோமன் காலத்து நில மானியப் படை களிலும் வேறுபட்டிருந்தன. உரோமன்படை நன்ருகப் பழக்கப்பட்டு நீண்ட காலச் சேவைகண்ட வீரரைக் கொண்டது. ஆண்டுமுழுவதும் கண்டிப்பான ஒழுக்கமுறைக்குக் கட்டுப்பட்ட அச்சேனை, போர்புரியாத சமயங்களிற் பாதை கள், பாலங்கள், அரண்கள் போன்றவற்றை அமைப்பதில் ஈடுபட்டது. பிரித் தானியா மீது படையெடுத்த பிறரைப்போல், உரோமர் கண்டபடி கொலை யும் அழிவும் செய்தோ, கமக்காரர் கூட்டங்களைக் குடியேற்றியோ, தமக் கெனப் பெருங் கோட்டைகளைக் கட்டியோ நாட்டைக் கைப்பற்றவில்லை. அவர் கள் நாடுமுழுவதற்குமாக, திட்டமிடப்பட்ட முறையில், இராணுவப் பாதை களை முறையாகவமைத்தும் அப்பாதைகளில் அங்கங்கே படைவீரராற் பாதுகாக்கப்பட்ட அரண்களை அமைத்தும் தக்கமுறையில் நாட்டைக் கைப் பற்றினர். ஆகவே, சட்சன் இனத்தவர் செய்ய முடியாததும், கோட்டைகள் அமைக்கும் நோமானியப் பரன்கள் பல நூற்றண்டுகளின் பின்னரே செய்ததுமாகிய அரும்பெருஞ் செயலை உரோமர், முதலிற் சற்றே தடங்கின ராயினும், பின்னர் குறுகிய காலத்திற் செய்து முடித்தனர் : அச்செயல் உவேல்சுப் பிரதேச மலைவாசிகளை அடக்கியாண்டதாகும். கிழக்குத் தெற்குப் பகுதிகளை உரோமமயமாக்கியது போல், உவேல்சு மலைப் பிரதேசத்தை உரோம மயமாக்காவிடினும் சினேடன், பிளினிலிமன் ஆகிய மலை யடி வாரங்களிற் பெரும் நகரங்களைக் கட்டாவிடினும், பாதைகளினலும் அரண்களினலும் உவேல்சுப் பிரதேசத்தைப் பிரித்தானியாவிற் கால் வைத்து முப்பத்தைந்து ஆண்டுகளுட் செவ்வனே இராணுவ ஆட்சிக்குட் படுத்தினர்.
தனித்தனவும் சிறியனவுமாகிய தெவன், கோண்வால் பகுதிகளை அபாய மற்றவையென எண்ணி அலட்சியமாய் விட்டனர். எட்விற்றருக்கு அப்பால் உரோம வாட்சிச் சின்னங்களைக் காண்பதரிது. ஆனல், புதிய பிரித்தானியா

Page 24
28 உரோமன் மதில்
வின் அமைப்பிற் சொமசெற்று ஒரு தன்மையான பங்கைப்பெற்றது. குளோ டியசின் படையெடுப்பு முடிந்து ஆருண்டுகளிற் புதிய அரசாங்கம் மெந் திப்பு ஈயச்சுரங்கங்களிற் றெழில் தொடங்கிற்று. அக்குவேசொலிசு என் றழைக்கப்பட்ட வெந்நீரூற்றுக்கள் காரணமாக பாத்து என்ற நகரம் ஒரு நாகரிக நிலையமாகியது. உரோமன் பேரரசுச் சமுதாயத்தின் உல்லாசமான வாழ்க்கையை இங்குள்ள கருமேகத்தின் கீழும் நிலைநாட்ட அருமுயற்சி செய்த உரோம-பிரித்தானியச் சமுதாயமானது, வண்ணம், சுகபோகம், சாவகாசம் ஆகியவற்றையளித்த பாத்து நகரத்தைநாடியது.
வடக்கெல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாதே இருந்தது. தைன் நதிக்கும் அம்பர் பொங்குமுகத்துக்குமிடையே தரிசு நிலத்தையும் வெண்புல்லுப் பகுதி ளையுமுடைய கரம்பை நிலம் காட்சியளித்தது. அந்நிலத்தில் வெண் சந்தன மரங்களும் குறுகிய சிந்துார மரங்களும் காடாக வளர்ந்திருந்தன; பிற்காலங்களில், கம்பளி வியாபாரம் இங்கிலாந்தில் அபிவிருத்தியடைந்த காலை வளர்க்கப்பட்ட ஆடுகளாற் கடிக்கப்பட்டழிந்தன. அப்பாழடைந்த பகுதிகளிலிருந்த நாகரிகமற்ற பிரிகாந்திசு இனத்தவர், உரோமரின் வசி கரங்களாற் பாதிக்கப்படாது தங்கள் பிறப்பிற்குரிய பழக்கவழக்கங்களையும் போரவாவையும் போற்றி வந்தனர். அவர்களுக்கப்பால் தற்காலக் கொத்து லாந்துப் பகுதியில் கலிடோனியர் என்ற பிகுதிசு, கெலித்திய இனங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். \ அவர்களும் பிரிகாந்திசு இனத்தவரைப் போலவே அடிபணியாது உரோமரை எதிர்த்தபோதிலும், அவர்களின் எதிர்ப்பு அப்பகுதியின் பெளதிகவமைப்புக்கேற்ப மிகவும் கொடூரமாயிருந் தது.
குளோடியசின் வெற்றிக்கு நூற்றைம்பதாண்டுகளுக்குப் பின்னரே, செவ ரசு என்ற பேரரசன் சொல்வேக்கும் தைன் நதிமுகத்துக்குமிடையே அத் திரியனுற் கட்டப்பட்டிருந்த மதிலைப் (கி. பி. 123) புதிதாக்கி, (கி. பி. 210) , வடக்கெல்லையின் அமைப்பை நிச்சயித்தான். கொத்துலாந்தைக் கைப்பற்ற உரோமர் பல தடவைகள் முயன்றனர். ஒருமுறை தசித்தசின் மாமனும் பல வெற்றிகளை ஈட்டிய சிறந்த ஆள்பதியுமான அகிரிகோலாரின் தலைமை யில் கொத்துலாந்தைத் தாக்கினர் (கி. பி. 84) . அகிரிகோலா உயர்நிலத்தி னேரத்திலிருந்த “மொன்சுகுரோப்பியசு” என்ற இடத்தில் மட்டும் வெற்றி பெற்றன். பின்பு, அந்தோனினசு பயசு என்பானின் ஆட்சியிற் ருக்கினர் (கி. பி. 140) , திரும்பச் செவரசின் தலைமையிலும் தாக்கினர். எல்லா முயற்சிகளும் வீணுகி, பிளந்தேசெனற்று அரசர்க்கு நிகழ்ந்தது போல், உரோமரும் தோல்விக்குமேற் றேல்வி கண்டனர். உரோமரின் தோல்விக்கு இரு காரணங்களைக் காட்டலாம் ; முதலாவது காரணம், பிகு திசு இனத்தவர் நீர்தேங்கு பள்ளத்தாக்குக்களையும் அடைய முடியாக் குன்று ளையும் காடுகளையும் பயன்படுத்தி நேர் நின்று எதிர்த்தமையா கும்; இனத்தவர் பல்கால் விளைத்த கலகங்கள் உரோமரின் முன்னேற்

உரோமன் மதில் 29
றத்தைப் பாதித்தமையாகும். உரோமர் கலிடோனியாலை"க் கைவிடும்வரை, அவர்களுடைய போக்குவரத்துப்பாதை மிக நீண்டிருநததால், அம்பரி லிருந்து வடக்கே நெடுந்தூரம் அப்பாதை அபாயத்துக் கேதுவானதாக அமைந்தது.
உரோமன் சேனை கொத்துலாந்தில் விட்டுச் சென்றவை, அகழிசூழ்ந்த பாசறைகளும் போத்திலிருந்து கிளைது வரை அந்தோனினசு என்பவரால் அமைக்கப்பட்ட புற்கற்றை மதிலுமேயாகும். இவையன்றியும் உரோமன் பேரரசையும் அதன் சுவர்களையும் கட்டடங்களையும் எதிர்த்துப் பாழாக்கும் பொது நோக்கத்தால் உந்தப்பட்ட பிகு திசுக்குலத்தவரிடை டெரும் பிணை வுணர்ச்சியையும் விட்டுச் சென்றது. உரோமர் அயலாந்தைக் கைப்பற்றிச் சீசரின் ஆள்புலங்களோடு இணைக்க எத்தனிக்கவில்லை.
உரோமராற் கைப்பற்றப்பட்ட பிரித்தானியப் பகுதிகள் தற்கால இங்கி லாந்து உவேல்சுப் பகுதிகளே. இப்பகுதிகள் தாமும் மிக வேறுபட்ட இரு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவையாவன, இலத்தீன் மயமாக்கப்பட்ட தெற்கு கிழக்குப் பகுதிகளும், வடக்கு மேற்கு மிலேச்சப் பகுதிகளுமாகும். அம்பருக்கும் திரெந்துக்கும் வடக்கிலும், செலேனுக்கும் எகுசுக்கும் மேற்கிலும் பழைய கெலித்திய-ஐபீரியக் குலத்தவர் நாகரிக மற்ற நிலையில் இருந்தனர்.
பிரித்தானியாவின் அரைப் பரப்பாகிய இக்கரம்பை நிலப்பகுதியிலேயே பெரும்படை குடி கொண்டிருந்து, தனது நேரத்திற் பெரும்பாகத்தைச் செலவழித்த போதிலும், குறிப்பிடத்தக்க சம்பவங்களொன்றும் அங்கு நிகழவில்லை. இப்பகுதியில் உரோமன் பேரரசின் சேனைத்தியளிற் பத்தி லோரளவான வீரர், எனின் 40,000 வீரர், தங்கியிருந்து காவல்புரிந்தனர். யோக்கு, செசுத்தர், கேயலியன் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட கோட்டை களே படைத்தளங்களாய் அமைந்ததோடு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு படைப்பகுதியின் தலைமை நிலையமாகவும் இருந்தது. உவேல்சு, பெைைசு கம்பலாந்து, நொதம்பிரியா ஆகிய இடங்களில் மலைமேற்பாசறைகளுக் கிடையே பாதைகளையமைத்து, அப்பாதைகளில் அணிநடை போவதும் வரு
1. அததிரிபஞற கட்டப்பட்டு செவர4ாற் புதுப்பிக்கப்பட்ட மதில், செலியத்து மலைகளுக்கூடா கச் செல்லாது லகன் நதியின் வடக ை1யையடுத்து அமைக்கபபட்டது. மதில்லின வடபுறத்தி லுள்ள கரம்பை நிலத்தைப் பார்த்,கவர்கள் மதில் பாழ்நிலத்திற்கூடாக அாைக்கப்பட்டதென் பர். ஓரளவிற்கு அவ்வபிப்பிராயக்கைச் சரியென்று கொண்டாலும், மதிபலிக தெபுைறத் திலே தற்கால நாகரிகப் பகுதிகளின எல்லையாகிய தைன் நதி பள்ளத்தாக்கு இருக்கினறது. செவியத்து மலைகளுக்கூடாக, அல்லது வடஇங்கிலாந்தில் எபப(சதிக்கூடாக வாயினும் மதில் அமைக்கப்பட்டிருந்தால், நகரத்துக்கு வேண்டிய பொருட்களே ம.கவுவது கடினமாயிருந்திருக் கும். உரோமர் மதிலை எல்லையாகக் கொண்டபோதிலு:ம், மதிலுக்கு வடக்கிலும் செவியத்து மலைகளுக்குத் தெற்கிலும் சில கோட்டைகளே அமைத்திருந்தனை, இதனற்றன் தெறியத் மலைகள் வடக்கையும் தெற்கையும் பிரிக்கும் ஒரமெனக் சுவலில்டு கருதுகினருர்,

Page 25
y)
Ĵ寶》劑 Til i its - 疼|-(~~~~Ź.
ź ~~%^4 %%%%%%%%%溶 žģģ% 演《浴ģ
%
 

s རྩྭ་ཟ་

Page 26
32 இலத்தீன் மயமாதலும் அதன் எல்லையும்
வதுமாயிருந்த, இருப்புக் கவசந்தரித்த காலாட்படை, பல குடியற்ற பகுதிகளுக்கூடாகவும் மிலேச்ச மக்களைத் தாண்டியும் செல்லவேண்டி யிருந்தது. படையின் போக்கு சிலரால் எதிர்க்கப்பட்டும் சிலரால் அலட்சியம் பண்ணப்பட்டும் வந்தது. தெவன், கோண்வால் ஆகிய பகுதிகள் கெலித் திய குலத்தவரின் ஆட்சிக்குட்பட்ட தனியிருப்பிடங்களாய் விளங்கின. இலத் தீன் மயமாக்கப்பட்ட பிரித்தானியர் செழிப்புள்ள தென்கிழக்குப் பகுதியிற் குவிந்திருந்தனர்; அப்பகுதியில் ஒழுக்கமும் அமைதியும் நிலவின ; அணி நடை நடக்கும் ஒரு காலாட்படை வகுப்பை ஆங்குக் காண்பதரிதாயி ருந்தபோதிலும், உரோமன் நகரங்களும் கிராம வாசங்களும் அங்கு மலியவிருக்க, கவர்ச்சியுடைய உரோம நாகரிகம் உச்சநிலையிலிருந் திதி
இத்தீவின் புவியியலமைப்புக் காரணமாக, இரு கூருகப் பிரிக்கப்பட்ட இரு பிரிவிலுமுள்ள இப்பண்பாட்டு வேற்றுமையால், இலத்தீன் நகர கிராம வாச வாழ்க்கை முறைமைகளால் முற்றிலும் இலத்தீன் மயமாக்கப் பட்ட மாவட்டங்களே, சட்சனியரால் படையெடுத்தழிக்கப்படவிருந்தன. மறு புறமாக, சட்சனியரின வருகையாற் பாதிக்கப்படாது, தனிப்பட்ட கெலித் திக்கு வாழ்க்கை நிலைபெறவிருந்த பகுதிகளான உவேல்சு, கோண்வால், சிரத்துகிளைடு, இலங்காசயர் ஆகிய மாவட்டங்களே உரோமானியரின் ஆட்சி யாற் சிறிதளவேனும் மாறுபாடடையாதனவாகும். இது தீவில் ஒரு பகுதியி லேனும் உரோமானிய செல்வாக்கு நிலையாக ஊன்றதுபோனதற்கு இத் தற்செயலான நிகழ்ச்சியும் ஒரு காரணமாகும்.
கோலை இலத்தீன் மயமாக்கியதுபோற் பிரித்தானியாவை அவ்வாறு செய்யத் தவறியதற்கு ஒரு பொதுவகையான இரண்டாவது காரணமுண்டு. பிரித்தானியா, மத்தியதரையிலிருந்து வெகு தூரத்திலிருந்தது. தென் பிரான்சு தானும் ஒரு மத்தியதரை நாடாகும். ஆனல் இத்தாலிய நகர நாகரிகமும் சாலைமுற்றம், பொதுமக்கட்கூடம் போன்ற பண்பாட்டு முறை களும் வடக்கு முகமாக அதிக தூரத்தில் வேரூன்ற மறுத்தன. ஆதியுல கம், மத்தியதரை நாகரிகமாகவேயிருந்தது. மத்தியகால உலகந்தான் இலவாந்தையும் வட ஆபிரிக்காவையும் இழந்து, சேர்மனியைக் கிறித்துவ உலகுடன் சேர்த்ததால், ஐரோப்பிய நாகரிகத்தைத் தழுவிற்று. ஆதி உலக அமைப்பில் பிரித்தானியா, தூரமானதும் தனித்ததுமாகக் கருதப் பட்டது. ஆனல், மத்திய காலத்திற் பிரித்தானியா, கிறித்தவ நிலமானிய நாகரிக நிலையங்களுக்கு வெகு அணித்தாயிருந்தது. அகனலேயே இத் தீவில் நோமானியர் ஆற்றிய செயல்கள் நிலைபெற உரோம ஆதிக்கப் பெறுபேறுகள் அழிந்தொழிந்தன. கெலித்திய பிரித்தானியாவிற் பகுந்த இத்தாலிய, அல்லது மத்தியதரை மக்கட்கூட்டம் சிறிதாயிருந்தமையால், பிரித்தானிய நாகரிகத்தின் இயல்பை மேலிடாகவேயன்றி, ஆழமான முறையில் மாற்றமுடியாமற் போயிற்று. என்றலும், பிரித்தானியாவின்

உரோமன் நகரங்களும் கிராமவாசங்களும் 33
மிகச் செழிப்பான தெற்கு கிழக்கு விவசாயப் பகுதிகளில் உரோமர் ஈட்டிய வெற்றி ஆழமற்றதாயிருந்தபோதிலும் போற்றுதற்குரியது. அவ் வெற்றி நிலையற்றதாயிருந்ததனுலேயே, அதனை மேலும் போற்றுதல் வேண்டும்.
உரோமரைத் தனது படைபூண்ட தூதராகக் கொண்ட மத்தியதரை நாகரிகம் நகரவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த முறையில், மத்திய தரை நாகரிகம் தான் கைப்பற்றிய கெலித்திய நாகரிகத்திலும் தனக்குப் பின் வந்த சட்சன் நிலமானிய நாகரிகங்களிலும் வேறுபட்டிருந்தது. உரோமப் பேரரசு, நகரப்பொதுவரசிலிருந்தே வளர்ந் தது. வளரும்போது மத்தியதரைக்குரிய பல நகரவரசுகளைத் தன்னுடன் இணைத்ததுடன், கோல் இனத்தவரிடையே பல நகரங்களையும் நிறுவிற்று. மதில் சூழ்ந்த நூற்றுக்கணக்கான பட்டணங்களே உரோமப் பேரரசின் உயிர்நாடியாக இருந்தன. பரந்திருந்த நகரங்களைக் கண்காணித்தல் கடின மாதலால் அவற்றைப் பெரும் இராணுவ வீதிகளால் இணைத்தனர். ஒரு நகரத்தை மையமாக வைத்து அந்நகரத்தைச் சுற்றியிருந்த கிராமப் பகுதிகளை ஆள்வதிலும் மாற்றங்கள் செய்வதிலும் பேரரசு ஈடுபட்டது. ஆகவே, உரோமர் தென் பிரித்தானியாவைக் கைகப்பற்றியதும் முதலிற் பெரும் நகரங்களை நிறுவினர்.
இலண்டனையும், அதைப்போன்ற பெரும் நகராதிபத்தியங்களையுந் தவிர்த்து சிலுச்செத்தர் போன்ற சிறுநகரங்கள் பல உரோமரால் நிறுவப்பட்டன. அந்நகரங்கள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு, அவற்றுட் பல கன்மதில்க ளாற் பாதுகாக்கப்பட்டன. அந்நகரங்களில் வசித்த சாமானிய தொழிலாளர் கூட இலத்தீன் மொழியைக் கற்று, அம்மொழியிற் பேசவும் எழுதவும் வாசிக்கவும் வல்லுநராயிருந்தனர். அவர்கள் வேலை செய்யும்பொழுது, ஒடுகளிலும் கலவோடுகளிலும் விளையாட்டாக எழுதியவற்றைத் தற்கால தொல்பொருளியல் வல்லுநர் ஆராய்ந்து விளக்கியிருக்கிருர்கள். உரோம நாகரிகம் மிக உயர்ந்து விளங்கிற்று. இங்கிலாந்திற் பல நூற்றண்டுகளாக அதைப் போன்ற நாகரிகவளர்ச்சி இடம்பெறவில்லை. ஆனல், அந்நாகரி கம் ஆங்கில மண்ணில் உருப்பட்ட உண்ணுட்டு நாகரிகமாயிருக்கவில்லை.
பிரித்தானியாவிற் கடமையாற்றிய * உரோமன் ” வியாபாரிகள், போர்வீரர், அரசியல் விவகாரிகள் அனைவரும் மத்தியதரை நாடுகளிலிருந்து சென்றனர் என்று சொல்ல முடியாது. பிரித்தானியாவிற் புகுந்த உரோமரின் முத) சந்ததியின் பின்பு, உரோமச் சேனையிற் சேவை செய்தவர்களில் அனேகர் கெலித்திய, அல்லது தியூத்தோனிய, அல்லது வட இங்கிலாந்து இனத்தவர்களைச் சேர்ந்தவராவர். சமாதான காலங்களில், 1000 தொடக்கம் 1500 வரை பல போர்வீரர் சேவையிலிருந்து விலக்கப்பட்டனர். ஆணுல், விலக்கப்பட்டவர்களுட் பிரித்தானியா விற் றங்கியவர்களின் தொகை தெரியவில்லை. அரசியல் விவகாரிகள் தொகையாகட் பிரித்தானி ய்ாவிற் குடியேறியதாகத் தெரியவில்லை. அனேக வியாபாரிகள் குடியேறித் தமது மொழியை யும் நாகரிகத்தையும் பிரித்தானியருக்குக் கற்றுககொடுத்தனர் என்று திட்டவட்டமாகக் கூற லாம் பிறநாட்டுக் குடியேறிகள் பிரதானமாக நகரங்களிலேயே தங்கினர்.

Page 27
34 உரோமன் நகரங்களும் கிராமவாசங்களும்
கடலுக்கப்பாலிருந்த உலகப் பொதுவான உரோமப் பேரரசின் உன்னத வாழ்க்கை முறைதான் அந்நாகரிகம். பிரித்தானியாவிலிருந்த முற்போக்கு டைய மக்கள் ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே அந்நாகரிகத்தைத் தழுவி, அதனுடன் உறவு கொள்வதில் இன்பங்கண்டனர்.
உரோமர்நிறுவிய மாநகரங்களின் மதில்களுக்கப்பால், உரோம நாகரிக வாதிக்கம் படிப்படியாகக் முன்றியிருந்திது. நகரங்களையடுத்துக் கிராம வாசங்களூடாகப் பரவிய நாகரிம், கெலித்திய இனப் பகுதிகளிலும் இடம் பெற்றது, கிராமப் பகுதிகளில் இத்தாலிய முறையிற் கிராம வாசங்களைக் கல்லாற்கட்டிNஅவற்றைச் சித்திரதளம், சுவரோவியம், நீராடுமிடம் போன்ற பல அணிகளfல் அலங்கரித்தனர். ஒவ்வோரு கிராம சரவாத்தையுமடுத்து ஒவ்வொரு தாட்டம் ஒதுக்கப்பட்டிருந்தது. அத்தோட்டங்களில் வேலை பார்த்த அடிமைகள், மத்தியகால நிலமானிய அடிமைத் தொழிலாளி போலவே பல கொடூரமான சட்டங்களால் ஆளப்பட்டனர். சுதந்திரமற் றிருந்தபோதிலும் ஆங்கு அமைதி நிலவிற்று. படையொழிப்புச் செய்யப் பட்ட தென்கிழக்குப் பகுதிகளில் உண்மையான உரோமானிய அமைதி நிலவியது காரணமாக, அங்கு கட்டப்பட்ட கிராம வீடுகள், மத்தியகால மாளிகைகளையும் கிராமப் பண்ணை வீடுகளையும்போல், அரண்களினலாவது, அகழிகளாலாவது பாதுகாக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. நிலையான சேனைக்குரிய வீரரே போருக்கெனப் பயிற்றப்பட்டனர். உரோமன் மயமாக்கப் பட்ட பிரித்தானியாவின் வீழ்ச்சிக்கு இதுவுமொரு காரணமாகும் ; எனெ னில், சேனை பலவீனமுற்றவுடன் நாட்டைக்காப்பதற்கு ஒருவரும் இல்லாத தால், நாடு அன்னிய தாக்குதல்களுக்கு இரையாயிற்றென்க.
இங்கிலாந்திலே தெற்குப் புறமாயிருக்குந் தற்கால மாகாணங்களில் உரோமர் காலக் கிராமவாசங்கள் பல, அகழ்தலினல் அடிக்கடி கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன ; ஆனல், மற்றைப் பகுதிகளில் அவைகளைக் காண்பதரிது. உரோமன் காலத்திற்குரிய கெலித்தியக் குடிசைகளுங் கண்டு பிடிக்கப் படுகின்றன. குடிசைகளின் தளப்படமும் உருவமும் கெலித்திய முறைக்கேற்ப அமைந்தபோதிலும், அக்குடிசைகளில் வாழ்ந்தவர்கள் உரோமன்முறையிற் செய்யப்பட்ட பாண்டங்களையும் இயற்றுக்களையும் உப யோகித்தனர். ஐரோப்பியமாதிரிப் பொருள்கள் வந்ததும் ஆசிய ஆபிரிக்க நாடுகளிற் செய்யப்பட்ட கலைப் பொருள்கள் எப்படிக் கைவிடப்பட்டனவோ, அவ்வாறே கெலித்தியக் கலைக்கேற்பச் செய்யப்பட்ட பண்டங்கள் உரோமன் கலைக்கு முன்னிற்கமாட்டாது வழக்கொழிந்தன. இவ்வாறு நிகழும் மாற் றங்கள் உலகிற் கலைச்செல்வம் பெருகுதற்கு எப்பொழுதும் எதுவாக அமை வதில்லை. கிராமங்களில் வசித்த கெலித்தியர் எம்மொழியை, அல்லது மொழிகளைப் பேசினர் என்று ஆராய்வதற்கு ஆதாரமொன்றுமில்லை. அப்படியே அவர்களின் வாழ்க்கை முறைகளிலும் தொழில் முறைகளிலும் உரோமனதிக்கத்தாலேற்பட்ட மாற்றங்கள் எவையேனுமிருப்பின் அவை

உரோமானியரும் கெலித்தியரும் 35
எத்தகையனவென ஆராய ஆதாரங்களெவையுமில்லை. எவவில், வினே கிருடோவு போன்ற துறைபோயவர்களே அத்துறைகள் பற்றி மாறுபாடான கருத்துக்களைக் கொண்டுளர். எமக்கும் அவைகளை ஆராய்வது கடினமா கும்.
காடுகளையும் சேற்று நிலங்களையும் திருத்தியதன்வழி மீட்கப்பட்ட விளை நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் உரோமனுட்சிக் காலத்திற் சில மாவட்டங்களிற் பெருப்பிக்கப்பட்டன ; இதற்குக் கேம்பிரிட்சையர் ஒருதார ணமாகும். அம்மாவட்டங்களிற்றணும் பெருப்பித்தல் தொடங்கிற்றே தவிர வேறு முக்கிய மாற்றங்கள் ஒன்றுஞ் செய்யப்படவில்லை ; பக்குசு தொடக்கம் உவொறிக்குசயர்வரை பரந்திருந்த மிதுலந்துப்பகுதி அப்பொழுதுங் காடா கவே காட்சியளித்தது. தேமிசு, திரெந்து நதிகளின் பள்ளத்தாக்குக்கள் நீர் நிறையப் பெற்றிருந்ததாற் பிந்திய காலங்களிற்போல் பிரதான நகரங் களையும் கிராமங்களையும் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கவில்லை. காடழித் தல், சேற்று நிலங்களை வற்றச் செய்தல் போன்ற முக்கிய தொழில்களில் உரோமர் ஈடுபட்டபோதிலும், அத் தொழில்களை உண்மையிற் சீராகச் செய்து முடித்தவர்கள் ஆயிரமாண்டுகளாக சட்சன், தேனிசு நகரங்களி லிருந்து வியர்வைசிந்தி யுழைத்தவரேயாவர். எவ்வாறயினும், வயலாக் கப்பட்ட நிலங்களில் உரோமர்விளைத்த தானியம் ஐரோப்பாவிற்கு மிகுந்த அளவில் எற்றுமதி செய்யுமளவிற்குப் போதியதாயிருந்தது.
பிரித்தானியாவின் ஆட்சி, உறுதியான, ஒரே தன்மைத்தான பணிக் குழுவாட்சியாக அமையவில்லை. உரோமப் பேரரசானது, அடிமைகளைக் கொண்ட சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட படையாட்சியாக இருந்த போதிலும், சில வகைகளில் உதாரகுணமுள்ளதாயிருந்தது. பேரரசின் வழமைக்கிணங்கச் சில தெரிந்தெடுக்கப்பட்ட நகராதி பத்தியங்களுக்குச் சுய ஆட்சியுரிமை வழங்கப்பட்டதுமன்றி, இக்காலத்து ஒரு மாகாணத்தின் அளவுடைய கிராமப் புறங்களையும் அவை, தம் ஆட்சியெல்லைக்குட்படுத் தியிருந்தன. அத்தகைய ஆட்சி செலுத்திய ஐந்து நகரங்களிருந்தன : அவையாவன, வெருலாமியம், கொல்செசுத்தர், இலிங்கன், குளோத்தர், யோக்கு ஆகியவையாம். வணிக நிலையமாக விளங்கிய இலண்டன் மற்றை நகராதிபத்தியங்களிலும் பெரிதாகவிருந்தபோதிலும் அதன் உததியோக பூர்வமான நிலை தாழ்வாகவிருந்தது.
1 எங்களுக்குத் தெரிந்த உரோமப் பாதைத்தொடர்களைக் கொண்டு அவை குடியேற்றப்பட்ட அல்லது பயிர்செய்யப்பட்ட பகுதிகளின் தொடர்ைக் காட்டுவன என்று கொள்ள முடியாது. உரோமர், பிரித்தானியா முழுவதையும் ஒன்ருகக் கருதியதால் முழுவகையும் கொடுப்பதற் காக ஒரு மையத்தானத்திலிருந்து இன்னேர் மையத்தானத்துக்குச் செல்லும் பெரும்பாதை களை அமைத்தனர். ஆகவே, அப்பாதைகளை அமைக்கையில் அவற்றைக் கிராமங்கள், கிராம வாசங்கள், சிறுநகரங்கள் போன்றவைக்கூடாக அமைக்கவில்லை; அவற்றைத் தொடுக்கச் சிறு மட்பாதைகளை அமைத்தனர். அப்பாதைகள் உரோமப் பாதைகளென்று இப்பொழுது குறிப் பாகக் கருதப்படுவதில்லை.

Page 28
36 உரோமானிய பிரித்தனில் மதம்
நாகரிகமடைந்த மற்றைப் பகுதிகள் கெலித்திய இனப் பிரிவுக்கேற்ப கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவ்வினப் பெயர்களால் வழங்கப்பட்டன. கோட்டப் பரிபாலனம், நகராண்மை நிலையையடையாத உரோம நகரங் களை இயன்ற அளவு சார்ந்திருந்தது. உம்பலர் முறையை உடைத்தெறியாது, அதன் மூலமாக ஆட்சிசெய்து தமது கவர்ச்சியான நாகரிகத்தால் அதன் வேகத்தை நிலைகுலையச் செய்தமை நாம் கவனிக்கவேண்டியதோர் உரோம வாட்சிமுறையாகும். உரோமானிய உடை, மொழி ஆகியவற்றைத தழுவி மனப்பூர்வமாக உரோமராக மாறுவதற்குக் கெலித்தியத் தலைவர்களுக்குப் போதிய அளவு சந்தர்ப்பமும் தூண்டுதலும் அளிக்கப்பட்டன. உரோமனக மாறுங் கெலித்தியத் தலைவைெருவன் தனது உம்பலுக்குத் தலைவனுகக் கடமையாற்றி, உரோம அதிகாரியாகவும் கருதப்பட்டான். பணிக்குழுவாட் சியை விரும்பும் ஒருவனுக்கு அம்முறை, உம்பலருக்கு அளிக்கப்படும் ஓர் அபாயகரமான சலுகைபோற் காணப்பட்டாலும், உண்மையிற் கெலித் தியரை அவர்களின் பூரண விருப்பத்துடன் உரோம மயமாக்கியது அம்முறைதான். பிரித்தானியாவில் ஏற்படுத்தப்பட்ட கோட்டவாட்சியே கோலிலும் நிலைநாட்டப்பட்டது. ஆனல், கோலிற் கோட்டப் பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் பிராங்கியிரின் வெற்றிக்குப் பின்பும் நிலைபெற் றிருந்தன ; பிரித்தானியாவிலோ அழிவுநிறைந்த சட்சன் படையெடுப்புடன் அவை மறைந்தன.
சில நாட்டினப்பற்றுடைய இக்கால அரசுகளைப்போன்றிராது, கெலித் தி யப் பகுதிகளின் குல முறைகளை அணைத்தாண்ட உரோமர், சமயசம்பந்தமாக வும் அப்படியே இசைந்தொழுகினர். ஆனல், தமது அரசியலதிகாரத்தை யெதிர்த்தோரைக் கருணையின்றித் துன்புறுத்தினர். அவர்கள் சமயசம் பந்தமாகக்காட்டிய பெருந்தகைமை இருட்காலத்து, அல்லது மத்தியகாலத் துக் கிறித்து மதத்தவரின் செய்கைக்கு முழு மாருகவமைந்தது. வேறு சமயங்களேயாவது, தத்துவக் கருத்துக்களேயாவது எதிர்க்காது, தங்கள் அரசியலதிகாரத்திற்கு முட்டுக்கட்டையாயிருந்த திரியூத மதம், சிறித்தவ திருச்சபைபோன்ற அமைப்புக்களையே தாக்கினர். அவர்கள் எவ்வமைப்பைத் தாக்கியபோதும், சமயநோக்கங்களைக்கொண்டு தாக்காது, அரசியற் கார ணத்தைக் கொண்டே தாக்கினர். இதைக் கொண்டு அவர்கள் கிறித்தவரை வற்புறுத்தியது நியாயமென்று கொள்வதற்கில்லை. அவர்களின் நோக்கம் எப்படியிருந்தபோதிலும் அவர்களின் துன்புறுத்தல் அருவருப்பானதும் ஆபத்தானதுமாக விருந்தது. உரோமர் கிறித்தவத் திருச்சபையை இடை யிடையே இடர்ப்படுத்தி வந்ததால், திருச்சபை அதிகாரம் வகித்த காலத்தில் அதே முறையைக் கையாண்டது. ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகக்

உரோமானிய பிரித்தனில் மதம் 37
கிறித்தவர்கள் பிறருக்குச் செய்த துன்பங்களாற் கிறித்தவ நாடுகளுக்கே நஞ்சூட்டினர். பிரித்தானியாவிலிருந்த கிறித்தவசபை சிறிதாயிருந்ததால், ஒருவேளை உரோமா கிறித்தவர்களுக்கு அங்கே விளைத்த இடர்கள் குறைந் திருக்கலாம். ஆனல், சமயாபிமானத்திற்காகக் கொல்லப்பட்ட சென் அல்பான்சுவின் தியாகக் கதை உண்மையை உணர்த்தும் சின்னமா கும். .
தனதாட்சி எதிர்க்கப்படவில்லை என்று கண்ட சமயங்களில் உரோமப் பேரரசு, உண்ணுட்டில் இடம் பெற்றிருந்த பல்லிறை வழிபாட்டுமுறையை விருப்பொடு தழுவிற்று. அத்துடன், கெலித்தியரின் குலதெய்வங்களையும் இயற்கைத்தேவதைகளையும் கிரேக்க-உரோமத் தெய்வவணக்கத்துக்குரிய தெய்வங்களுடன் சமப்படுத்தினர். கிரேக்கராற் சீயசு என்றும் உரோமரால் யுப்பிற்றர் என்றும் வழங்கப்படுந் தெய்வம், “ பொருமையற்ற ஒரு தெய்வம் ”; பல படித்தாய பல்லிறை வழிபாட்டு முறையை ஒரே சமயமாகக் கருதலாம் என்றும் யூதமதம், கிறித்தமதம், முகம்மதிய மதம் ஆகியவை ஒன்றுக்கொன்று புறம்பானவை என்றும் கருதினர். திரியூத மதகுரவர் அரசியல் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாயுள்ளனர் எனவெண்ணி அடிக்கப்பட்டபோதும், பிரித்தானியர் தாம் விரும்பிய எத் தெய்வங்களே யாவது வழிபடும் சுதந்திரத்தைப் பெற்றனர். மதிலையடுத்திருந்த, பல மொழி டே சும் போர்வீரர் பரந்த பேரரசின் பல தெய்வங்களேயும் முக்கியமாக உரோமத் தெய்வங்களையும் வணங்கினர். அத்துடன் நிற்காது அன்னிய பாரசீகச் சமயக் கருத்தாகிய மித்திர மதத்தையும் அதைப் போன்ற வேறு மதங்களையுந் தழுவினர். இவ்வாருன சமயவழிபாடுகள் மேற்கு மத்தியதரைப் பகுதியில் வலுப்பெற்றிருந்தமையாலேயே கிழக்கி லிருந்து பரவிய பிறிதொரு மாயையான மதம், இடம்பெறுவதற்கு வழி கோலப்பட்டது.
உரோமப் படைகள் பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, கொன்சுதந்தைன், கிறித்தவ மதத்தை உரோமப் பேரரசின் அரசியல் மதமாக்கினர். அவ்வாருக்கியபோதிலும், அம் மதம் தூரத்திலிருந்த மாகாணங்களில் தீவிரமாகப் பாவியதாகத் தெரியவில்லை ; ஏனெனில், உரோம-பிரித்தானிய நிலையங்களிற் கண்டெடுக்கப்பட்ட சில கிறித்தவ சின்னங்களிலிருந்து அவ்வாறன தீர்ப்பையடையக்கூடியதாயி ருக்கின்றது. என்றலும், உரோம நிறுவனங்கள் யாவும் அழிந்தொழிந்த போதிலும், கிறித்துவமதம் உவேல்சு மக்களிடையே நிலைபெற்றிருந்தது ; உரோமச் சேனதிபதிகளும் அதிகாரிகளும் பிரித்தானியாவை விட்டுச் சென்றபோதும், எஞ்சிநின்று உரோம நாகரிகத் தூதராய் விளங்கிய கிறித்தமதப் பிரசாரக் குழுவினர் பிரித்தானியரை அவர்கள் அல்லற்பட்ட அமயத்திற் கைவிடாததே அதற்குக் காரணமாகும்.

Page 29
அத்தியாயம் II நோதிக்குப் படையெடுப்புக்களின் தொடக்கம் ஆங்கில - சட்சணிய வெற்றி
பிரித்தானியாவில் நோதிக்கு மக்களின் குடியேற்றம் பிரித்தானிய வர லாற்றில் அதிகரித்து நிற்கும் ஒரு நிகழ்ச்சியாகும். ஆங்கில-சட்சணிய மக்க ளூம் யூத்தேய மக்களும் ஒருபுறமாகவும் தேனிசு மக்களும் கந்தினேவியக் கடற்கொள்ளைக்காரரும் மற்றெரு புறமாகவும் செய்த ஆக்கிரமிப்புக்கள் அவ்வரலாற்றிலே தனியோர் அத்தியாயமாகும். கி. பி. 300 ஆம் ஆண் டுக்கு முன் சட்சன் கடற்கொளளேக் கூட்டத்தினர், உரோமராட்சிக்குட்பட்ட பிரித்தானியாவின் கரையோரங்களிற் செய்த உபத்திரவங்களே அவ்வத்தி யாயத்தின் முற்குறிப்பாகும். கணியூற்றரசன் கி. பி. 1020 ஆம் ஆண்டள வில், தம்மிடை இரத்தக் கலப்புள்ள இனத்தவர்களாகிய சட்சனியரையும் தேனிசு மக்களையும் சமப்பட இணக்குவித்து, அதனுற் பிரித்தானியாவை வெல்லுவதற்குக் கந்தினேவியர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முடிவுறச் செய்தமையே அத்தியாயத்தின் முடிவாகும். இவ்விரு காலங்களுக்குமிடையே பிரித்தானிய மக்களின் இனப்பண்பில் அடிப்படையான மாற்றங் கள் ஏற்பட்டன. அதற்குப் பின்னர் நோமன், பிளெமிசு, இயூசனற்று, ஈபுரு, ஐரிசு ஆகிய இனத்தவரும் பிறரும் வந்து குடியேறியமையாலும் பிரித்தானிய இனப்பண்பிற் சிறு மாற்றங்கள் எற்பட்டன. ஆனல் கணியூற் றரசன் காலத்திலேயே பிரித்தானியாவின் இன அடிப்படை உறுதியாக்கப் .lدنیئLLلL
நோதிக்குப் படையெடுப்பு உரோமராட்சியிலும் சிறப்புவாய்ந்தது. நோமன் வெற்றிதானும் அத்துணை சிறப்பிலது. பிரித்தானியாவிற் குடியேறிய உரோமரின் தொகை குறைவாயிருந்ததால், கெலித்திய நாகரிகத்தை இலத்தீன் மயமாக்கும் முயற்சியில் உரோமர் தோல்வி கண்டனர். நோமன் -பிரெஞ்சு உயர்குடி மக்களும் மதகுரவரும் இங்கிலாந்தைக் கோல்மய மாக்கச் செய்த முயற்சியானது, பல பெரும் விளைவுகளை ஏற்படுத்தியபோதி லும் சமீபத்தில் அயலாந்தை ஆங்கில மயமாக்கச் செய்த முயற்சிபோற் கைவிடப்பட்டது. இவ்விரு முயற்சிகளும் கைவிடப்படுவதற்குக் காரணம் யாதெ னில் வெளிப்படையான இனவேற்றுமையேயென்க. நோதிக்கு வெற்றிக ளாற் பிரித்தானியாவில் எற்பட்ட பெறுபேறுகள் வேறு எந்த வெற்றியின லேற்பட்ட பெறுபேறுகளிலும் பெரியனவும் நிரந்தரமானவையுமாகும். அச் சித்திக்குக் காரணமாயிருந்தது நோதிக்கு இனத்தவர் கையாண்ட முறையே: இத்தீவிலுள்ள மிகச் சிறந்த விவசாயப் பகுதிகளிற் கெலித்திய மக்களை நீக்கி நோதிக்கு மக்களைப் புகுத்தியதே அம்முறையாகும். இக்கால ஆங்கிலரின் தனிப்பண்பு உவேல்சினத்தின் பண்பிலே புடமிட்ட நோதிக்குப் பண்பேயாம்-நோதிக்கு இனத்தின் பண்பிலே புடமிட்ட உவேல்சினத்தின்
38

நோதிக்கு இனம் 39
பண்பன்று அது. இன அடிப்படையிற் பார்த்தாற் கொத்துலாந்திற் கெலித் தியச் சார்பு பலத்திருக்கின்றது. ஆனல் கொத்துலாந்திற்கூட நோதிக்கு மொழியும் பண்பும் மேம்பட்டுள்ளன.
பிற்காலங்களில் வரலாற்று நோக்கங்களுக்காக ஆக்கப்பட்ட சொற்களுக்கு எதிர்ப்பிருப்பதுபோன்று “ நோதிக்கு ’ என்ற சொல்லிற்கும் சிலர் மறுப் புக் கூறலாம். ஆனற் பிரித்தானிய வரலாறு பற்றி நேரிய கருத்தை அறி வுறுத்தற்குச் சில சமயங்களில், சேர்மன், ஆங்கில-சட்சன், கந்தினேவியன் இனங்களெல்லாவற்றையும் ஒருங்கே குறிக்க ஒரேசொல்லை வழங்கவேண்டி யிருக்கிறது. “தியூத்தன்” “ சேர்மன்’ என்று அழைப்பதாக ஒரு முழு வினத்துள் ஒரு பகுதியினருக்கே தகவிலாச்சிறப்பு அளிப்பதாக முடியும். இரைன் நதிக்கரையிலும் தென் ஐரோப்பாவிலும் உரோமர் கண்டு அஞ்சிய தியூத்தோனியர் அல்லது கேர்மன் இனத்தவரும், ஆங்கில-சட்சன் கந்தி னேவியன் இனத்தவரும் ஒரே வமிசத்துக்கும் ஒரே பண்பாட்டுக்குமுரியவர்க ளாதலால், மூன்று இனங்களையுங் குறிக்கும் பெயரொன்றைக் காண்பதவ சியம். “தியூத்தன்” அல்லது “ சேர்மன்’ என்ற சொற்கள் உரோமன் பேரரசைத் தெற்கு மேற்குத் திசைகளில் ஒதுக்கிவைத்த, தரைவழிப் படர்ந்த குலத்தினரைக் கருதுவதுபோலத் தோன்றும். இக்குலத்தினரோ கோலைக் கைப்பற்றித் தமது பெயரையே அந்நாட்டுக்கு வழங்கிய பிராங்கு மக்கள் ; சிபெயின், போல்கன் நாடுகள், ஆபிரிக்கா, இத்தாலி ஆகிய இடங் களில் நுழைந்த கோதியர், வந்தல்கள், உலம்பாடிகள், தம் சொந்த நாட்டிற்றங்கிவிட்ட சேர்மன் இனத்தவர் எனப் பல்திறப்படுவர். ஆனல் எங்கள் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஆங்கில சட்சன், கந்தினேவியன் இனத்தவர்களோ, தமக்கெனச் சில குணங்களை உடையராய் மேற்குறிப்பிட்ட குலத்தின் வடகிழக்குப் பகுதியினரும், கடலோடு மாந்தருமாவர். ஆகவே, பிரித்தானியா கைப்பற்றப்பட்டது பற்றி நாம் கூறுகையில், அவ்வமிசத்தி னர் அனைவரையும் தியூத்தன் அல்லது சேர்ம்ன் என்று வழங்குவது பிழையான அர்த்தத்துக்கு இடந்தருவதாகும்.
பல குலங்களாகச் சிதறுண்டு, அயலாந்திலிருந்து கொன்சுதாந்தினேப் பிள்வரையும், கிரீன்லாந்திலிருந்து சகாராப் பாலைநிலம்வரையும் பரவி, நாடு கைப்பற்றியும் குடியேறியும் வந்த கந்தினேவிய, ஆங்கில சட்சன் பிராங்கு தியூத்தோனியன் இனத்தவர்கள் யாவரையும் உள்ளடக்கி நிற்கும் “நோதிக்கு’ இனத்திற்குத் தனிச்சிறப்பான பண்புகள் பல உண்டு என்பது பெற்ரும்.
கிறித்துவுக்கு முந்திய கடைசி ஆயிரமாண்டுகளிற் பிராங்கு, கோது, வந்தல் இனத்தவர்களின் மூதாதையோர் மேற்கு தெற்குத்திசைகளில் அலைந்து திரிந்தபோதிலும், நோதிக்கு இனத்தவர்கள் யாவரும் போற்றிக் குக் கரைகளில்ருந்தே ஆதியிற் பரவினர். இவ்வினத்தவர் யாவர்க்கு மிடையே ஒற்றுமைகள் பல இருந்தன : அவையாவன, ஒன்றேடொன்று தொடர்புபட்ட மொழிகள் ; தோர், உவோடன் ஆகிய தெய்வங்களை வழி

Page 30
O ஆங்கிலர், சட்சணியர், யூத்தேயர்
படுதல் (இப்பெயர்களிலிருந்தே ஆங்கில நாட் பெயர்கள் பலவும் சேர்பன் நாட் பெயர்கள் சிலவுந் தோன்றின); எல்லா இனங்களுக்கும் பொதுவான வீரணாப் புகழ்ந்து பாடப்பட்ட காவியக் கதைகள்-உதாரணமாக, ஐசிலாந்தி லிருந்து பவேரியாவரை புகழ்பெற்றிருந்த சிகேடு அல்லது சீக்குபிரிட்டு என்ற வீரர்பற்றியும், தென்மாக்கிலும் கந்தினேவியாவிலும் அருஞ்செயல் புரிந்தவரும், அதனுல் ஆங்கிலக் கவிதையிற் புகழ்ந்தேத்தப்படுபவருமாகிய பியோவில்வு போன்ற வீரர் பற்றியும் எழுந்த காவியங்கள் ; கிரேக்க உரோ மக் கலேயிலிருந்து வேறுபடினும் கெவித்தியக் கலேயிலிருந்து அத்துஜன வேறுபடாத அழகான மாதிரி உருக்களால் ஆயுதங்களேயும் அணிளேயும் வேறு சாமானியப் பொருள்ளேயும் அலங்கரிக்கும் பொதுக்கலே கடைசி யாக, ஒவ்வோரிடத்தின் நிலேமைக்கும் தகுந்தவாறு அமைந்த பயிர்ச் செய்கை முறையும் போர் முறையும் ஆகும். ஆகவே சேர்மன், ஆங்கில சட்சன், கந்தினேவிய இனத்தவர்கள் பலவாருக இனக்கப்பட்டிருந்தனர். இரைன் நதியோரத்தில் வாழ்ந்த சேர்மன் குலத்தவரைப்பற்றிச் சீசரும் தசித்தஈவும் கூறியுள்ள வருணனேயொன்று, ஐந்தாம் நூற்றண்டில் வடக்டவிலும் போற்றிக்குக் கடலிலும் இருந்த எமது ஆங்கில சட்சன் முன் னுேணரக் குறிப்பதெனச் சில வரலாற்ருசிரியர்கள் சிலகாலம் வழுப்பட எண்ணியதுண்டு. சீசரும்தசித்தகம் வருணித்த சேர்மன் குலத்தவர் ஆங்கில சட்சின் முன்னுேருக்கு நானூறு, அல்லது ஐந்நூறு ஆண்டுளின் முன் னர் வசித்தவர்களே. இப்பொருத்தமற்ற இலக்கியச் சான்றைத் தோல் பொருளியல் வல்லுநரின் உதவியாற் கண்டிக்கக் கூடியதாய் இருக்கின்றது.
போதிலிருந்து கோண்வால் எஸ்லேவரை குடியேறிய ஆங்கில-சட்சன் இனத்தவர் பிரித்தானியாவின் பெரும்பாகத்தையும் தமதாக்கினர் ; பூக் தேய இனத்தவர், கெந்து, உணவற்றுத்தீவு ஆகிய இடங்களிற் குடியேறி னர். தற்கால அறிஞர்களிற் சிலர் ஆங்கில-சட்சன் இனத்தவர் ஒரே வமிசத் துக்குரியவர் என்றும், வேறு சிலர் பீதுவின் கருத்துக்கிணங்க அவர்கள் " ஆங்கினர் " "சட்சணியர்" என்ற இருவேறு இனத்தவர்கள் என்றும் சுரு துவதுண்டு. எங்ங்ணமாயினும் அவர்கள் பிரித்தானியாவிற்குக் குடி பெயர்ந்து சென்ற காலே அவர்கள் தற்காலத் தென்மாக்கின் கரையோரப் பகுதி. வில், சேர்மனியில் எல்பு நதியின் இரு கரைகளிலும் குடியிருந்த னர் : அப்பொழுது " ஆங்கிலர் " சட்சனியர் " பிரிவுகளுக்கிடையே மொழி, பழக்க வழக்கங்கள் போன்ற துறைகளில் அற்ப வேறுபாடுமட்டுமிருந்து. தொகையிற் சிறியோராகிய யூத்தேய குலத்தவர் ஆங்கில சட்சன் இனத்த விருடன் இரத்தத் தொடர்பு கொண்டிருந்த போதிலும் தனிப்பண்புவாய்ந் தனாக இருந்தனர். அவர்கள் ஒன்றில் தென்மாக்கிலுள்ள தமது பிறப்பிட மாகிய யததிலாந்திலிருந்து நேராகப் பிரித்தானியாவுட் புகுந்தனர்; அல்லது சிலர் எண்ணுவதுபோல் இரைன் ஆற்றின் கீழ்ப்பாகத்தில் பிரிசியா என்ற இடத்திற் குடியேறி அங்கிருந்து பிரித்தானியாவுட் புகுந்திருக்கலாம்."
இவ்வதிகார முடிவிலுள்ள முதலாங் குறிப்பைப் பார்க்க.
 

A*&#록 上官을ur日記事官學義定5m nm편吏學urnurgr여 rq「그 Am
hoțilsē rossosoïsự sı
Inųos LTI LÍÐ,
シ **劃配ar*月卸。 鸦
„****sĩ saornhữ
+++ s=fr !!!!! si “maesso Ffisso se rn++i* ********ļā, tā rāmiṣṇ sựrıE 司劑噴聞諷疆』豐*』爬*num「直劑增目 sae u l-Ghae !! !! ¿jo sąraeg sosirs, si Nors, Tississis sīļissossası n siis us !
■事易++naes+'Nobis, sus 碑)Tm)
£ + \ıs sırılır: Ŵis-sis soos orynaens sobilo sot
F====| ¡¡¡No s'I Ŵ|sii■
*** oross
S

Page 31
42 “எஞ்சல்” மன்னன் ஒபா
கற்காலக் கடைக்கூற்றிலிருந்தே வட-கிழக்கு ஐரோப்பாவிற் பயிர்ச் செய்கை இடம்பெற்றிருந்தது. பிரித்தானியாவுட் புகுந்த ஆங்கில-சட்சன் இனத்தவர்கள் கமக்காரராயிருந்ததால் வடஐரோப்பியக் கரையிலிருந்த மணற்குன்றுகள், தரிசுநிலங்கள், சேற்றுநிலங்கள், காட்டுப்பிரதேசங்களா கிய பயிர்ச்செய்கைக் குதவாப் பகுதிகளை விட்டு அவற்றினும் வளமிக்க நிலங்களை நாடினர். ஆனல் அவர்களுட் பலர் ஆழ்கடல் வலைஞராயும்,சீல், திமிங்கிலம் ஆகியவற்றைப் பிடிப்பதிற் றேர்ந்தவராயுமிருந்தது மல்லாமல் வட ஐரோப்பியக் கடலுக்குரிய புயல்களையும், பயங்கர மிருகங்களையும் கொள்ளைக்காரரையும் எதிர்ப்பதில் பயிற்சிபெற்றிருந்தமையால் தைரிய முடையவராயும் விளங்கினர். கடலிலும் தரையிலும் போர்செய்ய நேர்ந்த காலை தாமே கடற்கொள்ளைக்காரராகவும் சூறையாடுவோராகவும் மாறினர் ; ஆஞல் அவர்களின் காப்பியக் கவிதைகள் கூறுவதைக் கொண்டு அவர்கள் மிகவும் மேம்பாடுடையவர்களென்றும் தம்மினத்தவருடன் அன்புடன் பழகுவோரென்றும் அறியக்கிடக்கின்றது. நோவேக்கும் பிரிசியாவுக்கு மிடையே கரையோரப்பகுதிகளிற் கொள்ளைக்காக நடத்தப்பட்ட படையெடுப் புக்களில் அவர்கள் தமது தலைவரை மிக்க விசுவாசத்துடன் தொடர்ந்து, பயங்கரமான வீரராயும் நீங்காத நட்புள்ள சீடராயும் விளங்கினர்.
கிறித்துவுக்குப்பின், முதற் சில நூற்றண்டுகளாக நீரிலும் நிலத்திலும் அலைந்துதிரிந்த இம்மக்களின் பழக்கவழக்கங்கள் இத்தகையன. அவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதால் அவர்களை நாடோடிகள் என்று வழங்க முடியாது. சர்வாதிகார முடியாட்சியே ஆங்கில-சட்சன் அரசியலமைப்பாக இருந்தது. அரசர்கள் தெய்வங்களின் சந்ததியினரென்று கருதப்பட்டபோதிலும் அவர்களின் தனியாட்சியானது குலவழமைகளாலும், படைபூண்ட குலத்தினரின் குணவியல்பாலும், அரசனின் சொந்தவியல்பினலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆங்கிலசட்சன் வீரர் அடிமைகளாக இருக்கவில்லையென்றலும் பிரித்தானியாவிற் குடியேறிய எமது “ தியூத்தோணய ’ முன்னேர்கள் குடியாட்சியையுடைய வர்களென்று கொள்ளுவது தப்பாகும். அவர்களிடையே வகுப்பு, செல்வம், சுதந்திரம் ஆகியவற்றிற் பலதரப்பட்ட பிரிவினர் இருந்ததோடு அவர்கள் அரசர்களால் ஆளப்பட்டனர்.
ஆங்கில-சட்சன் முன்னேர்கள் பிரித்தானியாவிற் புகுமுன் அவர்களை ஆண்ட அரசர்களுட் தலைசிறந்து விளங்கியவர் “ எஞ்சல் ’ அரசராகிய ஒபா ஆகும். அவ்வரசரைப்பற்றிய பல கவிதைகளும் அதிசயமான பரம் பரைக் கதைகளும் இருந்தபோதிலும் தற்காலத்துச் சிறந்த ஆசிரியர்கள் அவ்வரசர் உண்மையாக வரலாற்றிலிடம் பெற்றவர் என்று கருதுகின்றனர். தற்போதைய சிலெசுவிக்குப் பகுதியிலிருக்கும் ஐதர் நதிக் கரையில், தெற்கிலிருந்த தியூத்தோனிய குலத்தவருடன் ஒபா போர்புரிந்தார். ஐதர்

“ஏஞ்சல்” மன்னன் ஒபா 43
நதிக்கரையே அப்பொழுது ஆங்கில இனத்தவரின் ஆள்புலங்களுக்குத் தெற்கெல்லையாக இருந்த ஒபாவின் போரே ஆங்கிலேயர் சேர்மன் மக்களுடன்
* முன் கண்டிராத இருள்நிறைந்த கோரமான நாள்வரை
மக்கள் மறக்கத்தகா மேன்மையான அற்புதவாண்டுவரும்வரை ’
நடத்திய கடைசிப் போரெனச் சிலர் கற்பனை செய்யலாம்.
பிரித்தானியாவுட் புகுந்த காலத்தில், ஆங்கில-சட்சன் மக்களிடையே முடியாட்சியும் உயர்குடிவகுப்பும் இடம்பெற்றிருந்தன. அவர்களின் ஆட்சி * கமக்காரர் குடியரசாக ’ இருக்கவில்லை. இரத்தத்தொடர்புடைய இனத்த வருக்கிடையே இறுகிய தொடர்பும், ஒரு பெரிய குலத்து மக்கள் தமக் கிடையே ஒருவருக்கொருவர் உதவியாற்றுவதாகிய பிணைப்புமே ஆதிகாலக் குடியாட்சியின் அடிப்படையாய் அமையக்கூடியவை. இத்தகைய பாது காப்பும் உதவியுமில்லாவிடின் கமக்காரன் கடனளியாகிக் காலச் செலவில் அடிமையாவது திண்ணம். ஆனல் ஆங்கில-சட்சணிய மக்கள் பிரித்தானி யாவுட் புகுமுன்பே அவர்களிடையே குலமுறைமை குன்றித் தனிப்பட்ட வருரிமை தலைகாட்டியது. இரத்தத் தொடர்புடைய இன உறவு கைவிடப் பட்டுத் தலைவனுக்கும் அவன் குலத்து வீரருக்குமிடையே தனிப்பட்ட முறையில் தொடர்பு வளர்வதாயிற்று. அதுவே உயர் குடி மக்களாட்சி யினதும் மானிய முறையினதும் அடிப்படையாக அமைந்தது. குலப் பிரிவுகள் பல தோன்றின. வெவ்வேறு குலங்கள் தத்தம் தலைவரின் கீழ்த் தமது பிறப்பிடமாகிய ஐரோப்பியக் கண்டத்தைவிட்டு வேறு நாடு களுக்குச் சென்றனர். சில தலைவர்கள் பல்வேறு குலத்துவீரரையும், சில தடவைகளில் அன்னிய இனத்தவரையுங்கூடச் சேவைக்கென நியமித் தனர். இங்கிலாந்துக்குரிய ஆங்கிலேயரின் தனிப்பட்ட இயல்பு என்ன வெனின் தம்முடன் தொடர்புள்ள உறவினரைப்பற்றி அவ்வளவு அக்கறைப் படாமையும், உறவினரையும் புறக்கணிப்பதுமாகும். கொத்துலாந்து மக்கள் ஆங்கிலேயரிலும் வேறுபட்டிருப்பதற்குக் காரணமென்னவென்றல் கொத்துலாந்து வாசிகளிடம் கூடிய அளவிற்குக் கெலித்திய இரத்தம் கலக்கப்பெற்றிருப்பதனலென்க.
ஊசு, திரெந்து, தேமிசு ஆகிய ஆற்று முகங்களை நோக்கிப் புலம் பெயர்ந்த ஆங்கில-சட்சன் வகுப்பினரின் கடற்படையமைப்பும், இராணுவ அமைப்பும் இரத்த உறவிற்றங்கியிருக்கவில்லை. கடற்படையின் கண்ணியமான ஒழுக்க முறையும் படையைத்திரட்டி நிருவகிக்குந் தலைவனிடம் வீரர்கொண்டிருந்த அபிமானமும் அன்புமே அம்முயற்சிக்குப் பலமளித்தன. படையெடுப்புச் சித்தியடைந்ததும் கமக்காரர் மனைவி மக்களுடன் தொடர்ந்து குடியேறு வர். ஆனல், படைத் தலைவனும் படைவீரருமே படையெடுப்பின் முன்னேடி களாக விளங்கினர். தலைவனே பன்றித்தலையுருவிற் செய்யப்பட்ட லைச் சீராவும் இரும்புவளையக் கவசமுந் தரித்து வேலந்து சிமிதினற் செய்யப்

Page 32
44 படையெடுப்பாளர்
பட்ட தனது முன்னேரின் சொத்தாகிய மணிப்பிடியுடையவாளை உபயோ கிப்பான். அவன் ஒவ்வொரு சிறு தலைவனுக்கும் ஒரு வாளைப் பரிசாக அளிப்பான். மற்றும் தனது படையிலுள்ள ஒவ்வொரு வீரனுக்கும் மரத்தாற் செய்யப்பட்ட ஒரு கேடயத்தையும் மரக்காம்பையுடையதும் இருப்புத்தலையையுடையதுமாகிய ஒரீட்டியையும் வழங்குவான். மேலும் மாரிக்காலங்களிலெல்லாம் போர்வீரருக்குப் போதிய அளவு இறைச்சி அளித்து அவர்களுக்கு வேண்டிய மதுவையும் அப்பத்தையும் குறை வின்றிக் கொடுப்பான். ஆனந்த மேலிட்டினல் வீரர் தலைவனைப் புகழ்வர்; டெயோவுல்வைப் போலப் போர்வீரரைக் குடிவெறியால் அவன் கொள்வ தில்லை. இத்தலைவனே அடுத்து வந்த வேனிற் காலத்தில், சிறந்த கொள்ளைப்பொருளையும் நிலங்களையும் தனதுவிரர் பெறுவதற்கு அவர் களுக்கு வழிகாட்டினன்.
யூத்தேய இனத்தைச் சேர்ந்த எங்கிசு என்ற வீரன் கெந்துவைக் கைப்பற்றியதாக மரடமுறையான கதை கூறும். அவ்வீரன் உண்மையான வரலாற்றுப் பாத்திரமோ, கற்பனைக் கதை யின் சிருட்டியோ என்று திட்ட வட்டமாகக் கூறமுடியாது. எப்படியிருந்த போதிலும் மனிதரால் மறக்கப் பட்டுள்ள ஆதிச் சரித்திர கருத்தாக்களை ஞாபகப்படுத்தி அவ்வீரரின் வெற்றிகளை எடுத்துக் காட்டும் சின்னமாக எங்கிசு விளங்குகிருன். “ உருசி யைக் கொடுக்கும் உண்பண்டங்களை உபயமாகப் பெறுவதற்கு உறுதியும் ஊக்கமுமுடையோராய் ஊதியமளிக்குங் கருமங்களில் உற்சாகத்துடன் உழைத்தனர் அவ்வீரர்.” அம்முயற்சிகளில் ஈடுபட்டோர் தாம் செய்வது ஈதென்றறியாதே இங்கிலாந்தையும் காலப்போக்கில் இங்கிலாந்திற் பிறந்த வற்றையும் உருவாக்கினர். உரோமரை வெளியேற்றிக் கெலித்தியரை மேற்குப் பிரதேசங்களுக்கு விரட்டிய கவசங்களும் ஈட்டிமுனைகளுமாகிய துருப்பிடித்த ஆயுதங்களும் ஆதி ஆங்கில-சட்சணிய இனத்தவரின் இடு காடுகளில் பெயர் தெரியாத இத்தலைவர்களில் எலும்புகள் கலந்து கிடக் கின்றன. சரித்திரத்தில் இடம்பெருத அப்பெயரற்ற பெரியோரைத்கற்கால வழக்கில் “ போராற்றல் ” வாய்ந்த “கருமவீரர் ” என்று வழங்கலாம். ஆனல் அவர்கள் கதை அவர்களுடன் மாண்டுபோயிற்று. தனியொரு வீரனின் வாழ்க்கை வலராற்றுக்காக அவனும் அவனது பரிவாங்களும் என் கடலைக் கடந்தனர், எங்கு கரையேறினர், எப்படிப் போர் புரிந்து பணியாற்றினர், எம்முறையிற் சிந்தித்தனர் என்றெல்லாம் அறிவதற்குப் பிற்கால வரலாற்றேடுகள் எத்தனையைக் கொடுத்தாலுந் தகும்.
1. பெயோவுல்வைப் பற்றிய கவிதையில் மதுபீடத்தைச் சுற்றியிருக்கும் போர் வீரருக்குத் தலைவன் ஈட்டி, வாள், பரிசை ஆகியவை மட்டுமன்றி, தலைச்சீரா, இரும்பினுற் பின்னப்பட்ட கவசம் போன்றவற்றையும் கொடுப்பதாகக் குடிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனல், பெயோவுல் வின் கவிதை பிரித்தானியா கைப்பற்றப் பட்டுப் பலகாலத்துக்குப்பின், போாக்கருவிகள் மலிந்து கிடந்த காலத்தில் எழுதப்பட்டது. ஒமர் என்ற கவியரசன் அக்கிலிசின் கேடயத்தையும் அலிசின சின் மண்டபத்தையும், புகழ்ந்து கூறியிருப்பதைப் போலவே பெயோவுல்வைப் பற்றிக் கவி

வரலாற்றில் வெற்றேடு 45
ஆனல் இறந்தகாலமோ இரங்க மறுக்கின்றது; மோனஞ் சாதிக் கின்றது. சட்சணியர் வெற்றியை எடுத்துரைக்க நிச்சயமான வரன்முறைக் குறிப்புக்கள் எதுவுமில்லை. உவேல்சுமலைகளிற் புகலிடம் பெற்ற பிரித்தா னியர் கெலித்திய மிலேச்சவியல்புகளை மீண்டும் தழுவினர். கிலிதாசு என்ற மதகுரவர் எரேமியாவின் புலம்பலை இலத்தீன் மொழியில் எழுதி அவர்களுக்களித்த போதிலும், அதுதானும் வரலாற்றின் வினக்களுக்கு விடைபகர மறுக்கின்றது. பதிதர்களான சட்சணிய குடியேறிகள் உறுணிக்கு எனும் நெடுங்கணக்கை உபயோசித்தனர் என்பது உண்மையே. ஆயின் அந்நெடுங்கணக்கு வாளிற்கு மந்திரம் ஒதவும், பாறையிற் பெயர் பொறிக்க வும் உச விற்றே தவிர அக்கால வரலாற்றைக் கிரமமாய்க் கூற உபயோகிக்கப் படவில்லை. பாணர் பலர் மண்டடங்களிற் பாடிக்களித்த மகாகாவியங்கள் தாமும் காலச் செலவில் மறைந்தொழிந்தன. அவற்றையாவது பெயர்த் தெழுத முயலவில்லை நம்முன்னேர். அவற்றுள் ஒன்றிரண்டாயினும், ஆழ்கடல் தாண்டிப் பிரித்தானியாவுட் புகுந்த ஒரு வீரனைப் பற்றியும் அவன் அருஞ்செயல் பற்றியும் கூறியிருக்க முடியும்.
வரலாற்ருசிரியனுக்கு வழிகாட்டும் ஒளிக்கதிர்கள் இரண்டு, இவ்விருளி லும் உண்டே. ஆயின், அவையும் மங்கியவையே. நாலாம் நூற்றண்டின் கடைசிப் பகுதியில் வீழ்ச்சியடையும் தறுவாயிலிருக்கும் ஓர் ஒழுங்கான உரோம-செலித்தியச் சமுதாயத்தைக் காண்கிருன் வரலாற்ருசிரியன். இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் தோன்றும் சரித்திரத்தின் அந்தி ஒளியில் சட்சனிய-கெலித்திய மிலேச்சச் சமுதாயம் உதயமாகின்றது; இவ்வந்தியில் ஓர் ஒலிவரலாற்றசிரியன் காதில் வீழ்சின்றது. அதுவே சென் ஒகத்தினும் அவரைச் சேர்ந்த மதகுரவரும் அணிநடையிற் படித்துச் செல்லும் கீதத்தின் ஒலி. அத்துறவிகள் இலத்தீன் நெடுங்கணக்கையும் எழுத்து மூலம் பதிவுசெய்யும் வழக்கையும் மீண்டும் கொணர்வாராயினர். இவ்விருநிகழ்ச்சிகளுக்கிடையே காரிருள் கரந்திருக்கின்றது. எமது நாட்டின வரலாற்றின் முக்கிய பகுதி வெறிதாயிருக்கின்றது. இவ்விருள் நிறைகாலத் துக்குரிய எங்கிசு, உவோத்திசேன், கேடிக்கு, ஆதர் ஆகியோர் உண்மை யாகவே வாழ்ந்தவர்களோ, கற்பனைப் படைப்புக்களோ என்று நிச்சயிக்க
பாடியவரும் அவரின் செல்வம், உதாரகுணம் ஆகியவற்றைப் புனைந்துரைத்திருக்கலாம். ஆங்கில -சட்டின் இனத்தவர் பிரித்தனியாவுட் புகுந்த காலத்துக்குரிய இடுகாடுகளில் இருப்பீட்டிகளின் முஜனகளும் வட்டவடிவமான மரப்பரிசைகளின் இருப்பு முகிழ்களும் கைபிடிகளும் நிறைந்து இடக்கின்றன. வாட்கள் குறைந்தே காணப்படுகின்றன. தலைச்சீராவையாவது, கவசங்களேயாடிது காணமுடியாது. ஆனல் ஆங்கில-சட்சன் இனத்தவரின் ஆதியிருப்பிடங்களிலுள்*ா புகையற் சுரங்கங்களில் த?லச்சீராக்களும் கவசங்களும் கண்டுபிடிக்கப்பட்டகைக் கொண்டு வில தலவர் கள் அவற்றைப் பயன்படுத்தின்சென்று கூறமுடியும். புதைப்பதற்கு அவைகள் விக்ாயுயர்ந்தன என்பதில் ஐயமில்லை. ஆங்கில-சட்சன் இனத்தவர் கைதேர்ந்த அநறுபவசாலிகமா அம் பத்தி மான்களாகவும் இருந்தனர். அவர்களின் கோடரிகள் கூடச் சிறியனவாயிருந்தன.

Page 33
46 * சட்சன் கரை”
முடியாது. வரலாறும் தொல்பொருளியலும் ஒன்றுபட்டாலும் உரோம ட்ைசியை உடைத்தெறிந்து பிரித்தானியாவை ஆங்கிலேயருக்களித்த போரின் காலத்தையாவது, தலைவரையாவது, போக்கையாவது காட்ட முடியாது. அவற்றல் போரின் பொது இயல்பையே எடுத்துரைக்க முடியும்.
மூன்றம் நூற்ருண்டின் கடைசியாண்டுகளிலே விசேடமாகக் கலிக்கு பிரித்தானியக் கரைகளைச் சட்சனிய கொள்ளைக்காரரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கென்றே ஒரு தனிப்பட்ட கப்பற்படையை உரோமர் நிறுவினர். உரோமன் பேரரசு அப்பொழுது போட்டியிடும் பேரரசரினதும் சேனைகளின தும் உண்ணுட்டுப் போர்களினற் பாதிக்கப்பட்டு வந்தது. பிரித்தானியாவிலே தங்கிய போர்வீரரும் தத்தம் தலைவரின் பொருட்டுப் போர்களில் ஈடுபட்டனர். பேரரசைக் கைப்பற்ற முயன்ற போலியுரித்தாளருள் ஒப்பில்லாது விளங் கியவன் கரோசியசு ஆவான். அவன் கி. பி. 286 ஆம் ஆண்டு தொடக்கம் 239 ஆம் ஆண்டுவரை பிரித்தானியாவைப் பேரரசிற்கு உட்படாத தனித்த எகாதிபத்தியமாக ஆண்டு, சட்சன் தாக்குதல்களிலிருந்து பிரித்தா னியாவைப் பாதுகாத்தான். பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கெனத் தனித்த கடற்படையொன்று இருந்தது. கரோசியசைப் “ பிரித்தானியாவின் முதற் கடல்மன்னன்’ என்று புகழ்ந்துரைப்பர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் தயோகிளிசியனும் கொன்சுதந்தைனும் உரோமன் பேரரசைச் சீர்தி ருத்தியமைத்த காலத்தில் பிரித்தானியா, பேரரசின் ஒரு மாகாணமாக மீண்டும் இணைக்கப்பட்டது. அக்காலமே பிரித்தானியாவின் கடைசிப் பொற்காலமாகும். “ சட்சன் கரைப் பிரபு” என்று வழங்கப்பட்ட ஒரதிகா ரியே பிரித்தானியக் கரையை உவோசிலிருந்து போட்சுமதுவரை பாதுகாத் தான். பாதுகாப்பிற்காகப் பத்துப் பேரரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்து விளங்கியது கெந்திலிருந்து இறிச்சுபரோ என்ற அரணுகும். இராணுவ தளங்களாகிய வட-மேற்குப் பகுதிகளி லிருந்து இப்புதிய அலுவலுக்காகப் பெருஞ்சேனை கொண்டுவரப்பட்டது.
. அடிப்படையான மிக முக்கிய கருத்துக்கள் விவாதத்துக்குரியனவாயிருக்கின்றன. சிறந்த ஆசிரியர்கூட எங்கீசு, உவோத்திசேன் ஆகியவரின் கதை உண்மையோ என்றதைப் பற்றி வாதமிடுகின்றனர். அப்படியே வெசெட்சு தென்கரையிலிருந்து குடியேற்றப்பட்டதோ அல்லது தேமிசின் வடபாகத்தினூடாக நிரப்பப்பட்டதோ என்பதிலும், 407 ஆம் ஆண்டில் உரோமர் வெளியேறியபின் பிரித்தானியாவில் உரோமன்படை குடிகொண்டிருந்ததோ என்பதிலும், இலண்டன் மாநகர் எபொழுது எப்படி வீழ்ந்தது என்பதிலும், இங்கிலாந்தின் வட பகுதியும் தென் இங்கிலாந்தில் படையெடுப்பு நேரிட்ட காலத்திற்றன் குடியேற்றப்பட்டது என்பதிலும் அபிப்பிராயபேதம் இருந்து வருகின்றது. பரிசயமான பல கதைகளை மறுக்காமலும் ஏற்காமலும் இருப்பதாக என்னைக் குற்றஞ்சாட்டுவோர் அவீல்டு எழுதிய " பிரித்தானியா வில் உரோமர் ” என்ற நூலின் கடைசி அதிகாரத்தைப் படிக்க. " சட்சன் இங்கிலாந்து ” என்ற நூலில் பேடினன்டு உலொட்டு எழுதிய கட்டுரையும் படிக்கவேண்டியதே. இவற்றைவிட * கடைசி உரோமப் பேரரசு ” என்ற நூலில் சேர் என்றி கோவேது ஆகியோர் எழுதியுள்ள வாதசம்பந்தமான பந்திகளைப் படிக்க.

“சட்சன் கரை” 4.
பத்துக்கோட்டைகளில், ஒவ்வொருகோட்டையின் ஆதிக்கத்திலும் ஒவ்வொரு துறைமுகமிருந்தது. அத்துறைமுகங்களிலிருந்து கடற்படை வெளிப்போந்து தாக்குவோருடன் கடற்போர் விளைக்கும். இம்முறையால் நாகரிகமுற்று விளங்கிய தாழ்ந்த பிரதேசங்கள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குச் சட்சனியப் படையெடுப்புக்களிலிருந்து பாதுகாக்கப்பட்டன. 300 ஆம் ஆண்டி லிருந்து 350 ஆம் ஆண்டுவரை முன் எக்காலத்திலும் கண்டிராத அளவிற்கு அனேக கிராமவாசங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற் பலர் வசிக்கத்தொடங்கினர். அதேகாலத்தில் இரைன் நதிப் பிரதேசங்களிற் பிரித்தானியத்தானியமும் இலவாந்திற் பிரித்தானிய துணிகளும் விற்கப் பட்டன. செல்வச்சிறப்பின் இவ்வறிகுறிகளைக் கொண்டு, உரோமன் பேர ரசின் மற்றைய மாகாணங்களிலும் பிரித்தானியச் சமுதாயத்தின் பொரு ளாதார நிலைமை சிறந்திருந்ததா அன்றவென நிச்சயமாகக் கூறுவதற்கு ஆதாரமெதுவுமில்லை.
நாலாம் நூற்றண்டின் கடைசிப் பாதியில் வீழ்ச்சியாரம்பமாயிற்று. பிரித்தானியாவின் தாழ்ந்த பிரதேசங்களில் வாழ்க்கையும் பொருள்களும் அக்காலத்திற் காப்பில்லாமற் போயின என்பதைத் தொல்பொருளியல் வல்லுநரின் ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. பிகுதிசு கூட்டத்தினரும் வடக்கிலிருந்து வந்த பிரிகாந்திசு இனத்தவரும் அனேக கிராம வாசங்களை எரித்தும் சிதைத்தும் சென்றனர்; “ கொத்திசு ’ என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட நாகரிகமற்ற ஐரிசு குலத்தவர் மேற்குப் பகுதிகளில் உரோம மயமாக்கப்படாத இடங்களினுடாகத் திரள்திரளாக வந்தும் கொள்ளையடித் தனர். இவ்வுள்ளூர் இடையூறுகளுக்கு ஒருபெரும் பொதுக் காரண மிருந்தது. உரோமன் பேரரசின் இதயதானமே, பேரரசுக்கு அண்மையி லிருந்துவந்த பல தாக்குதல்களாற் பலவீனமுறுவதாயிற்று. பிரித்தா னியாவிற் கடமையாற்றச் சில உரோம வீரரும் அரசாங்க விவகாரிகளுமே அனுப்பப்பட்டனர். அவர்களும் முந்தியவர்களிலுங் கீழ்மையானவர்களாய்க் காணப்பட்டனர். இதன் பயனகக் கெலித்தியர் புத்துயிர் பெற்றனர். அப்புத்துயிர்ப்பு ஆரம்பத்தில் துரிதமற்றிருந்தபோதிலும் வெகுவிரைவில் வெளிப்படையாக விளங்கிற்று. அதையடுத்துச் சட்சனியரின் இறுதிப் படையெடுப்பு பிரித்தானியாவிலுள்ள இலத்தீன் நிலையங்களை நிர்மூலமாக் கிற்று. மத்திய தரையுடன் பிரித்தானியா கொண்டிருந்த அரசியற் ருெடர்புகளும் படையுறவும் காலப்போக்கில் நலிவுற்றன. உவேல்சு, கலிடோனியா, அயலாந்து ஆகிய இடங்களிலிருந்த, உரோமன் மயமாக்கப் படாத கெலித்தியர் நாடு முழுவதிலும் பரவினர். சட்சனியரின் தாக் குதலால் சிலுச்செசுத்தரை உரோமர் கைவிடமுன் அந்நகரத்திலே “ஒகம்கல்’ என்ற ஆதிப் பிரித்தானிய நெடுங்கணக்குக் கல்லொன்று காட்சிப்பொருளாக வீதிகளில் வைக்கப்பட்டது. அக்கல்லில் கெலித்தியரின் மிலேச்சக் கல்வெட்டு வரையப்பட்டிருந்தது. சிலுச்செசுத்தர் ஒருகால் இருந்த நிலையை மறவாதவர்களுக்கு அக்கல்லு ஒரு துர்க்குறியாகக் காட்சியளித்தது.
4-R 6344 (12162)

Page 34
48 உரோமானிய பிரித்தனின் வீழ்ச்சி
ஐந்தாம் நூற்றண்டின் முதல் முப்பது, அல்லது நாற்பது வருட காலத் தில் உரோமன் பேரரசு, உரோமன்மயமாக்கப்பட்ட பிரித்தானியரைப் படிப் படியாகக் கைவிட்டது. இத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையின் போக்கை நிச்சயமாகக் கூறமுடியாதபோதிலும் (தன்னல் எத்துணை உதவியும் செய்ய முடியாது என்று ஒப்புக்கொண்ட பேரரசால்) பிரித்தானியர் தமது கருமங்களைத் தாமே நிருவகிக்குமாறு விடப்பட்டனர் என்பது திண்ணம். நாலாம் நூற்றண்டில் வடக்கிலும் மேற்கிலுமிருந்து மிலேச்சக் கெலித் தியர் தொடக்கிவைத்த அழிவுத் தொழிலைத் தொடர்ந்து ஆற்றுவதற்குச் சட்சனிய இனத்தவருக்கு இப்பொழுதுதான் சந்தர்ப்பம் வாய்த்தது. உரோமன் மயமாக்கப்பட்ட பிரித்தானியாவை அழிக்கும் பிரதான கருவியாக சட்சணிய இனத்தவர் மாறினர். 350 ஆம் ஆண்டுக்கும் 400 ஆம் ஆண்டுக் குமிடையில் சட்சனிய இனத்தவர் தமது தாக்குதல்களை மீண்டுந் தொடங் கினரோ என்பதையும் அவ்வாறு தொடங்கினும் எம்மட்டிற்குச் சித்தியடைந் தனர் என்பதையும் திட்டமாகக் கூறமுடியாது. ஆனல் ஐந்தாம் நூற் ருண்டின் ஆரம்பத்திலிருந்தே அவர்கள் பெருந்தொகையினராய்த் துணிந்து வந்தனர் என்பது தெளிவு. பிகுதிசு, கொத்திசு இனத்தவராற் சிரழிந்துவிட்ட பிரித்தானியாவின் நிலைமை, உரோமனட்சியின் வீழ்ச்சி, கிரமமான உரோமன் சேனதிபதிகளுக்குப் பதிலாக வீழ்ச்சியைத் தடுக்க முயன்ற சென். சேர்மனசு போன்ற சமயப் பிரசாரகரின் கைதேர்ந்த காவல்-இவையே கொள்ளையடிப்புக்காக எற்படுத்தப்பட்ட படையெடுப்புக்க ஸ்ல் வெற்றிமாலை சூடி வீடு திரும்பிய ஆங்கில-சட்சனியப் பிரபுக்கள் மரமண்டபங்களில் ஆர்வத்துடன் விவாதிக்கும் விடயங்களாக இருந்திருக் கும். கமக்காரராயும் கடற்கொள்ளைக்காரராயும் கடமையாற்றிய ஆங்கிலசட்சன் மக்கள் மதுபானம் அருந்தும்போது ஒருவரையொருவர் “ எதற்காக எம்மால் எடுத்துச்செல்லத்தக்க பொருட்களை மட்டும் கவரவேண்டும்?” என்று கேட்பதுண்டு. செல்வாக்கு மிகுந்த சூழ்நிலையிற் சிந்தனை தோன் றுவது இயல்பாகும். மிதமானசூடும் நல்ல நீரும் கொண்ட நிலங்களும் பச்சைப்பசேரென்ற தானிய வயல்களும் புற்றரைகளும் மானும் பன்றியும் மலிந்து கிடக்கும் சிந்துர மரக்காடுகளும் அவற்றைப் பார்த்தவர்களின் மனதில் ஒர் எண்ணத்தைக் கிளறின. எல்லோரும் குடியேறி அங்கிருக்கு மின்பங்களை நுகருவதே தகும் என்பதே அவ்வெண்ணமாகும்.
சான்றுகளின் ஆதரவின்மையால், எம்மால் ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியது யாதெனில், இருவகைப்பட்ட படையெடுப்புக்களால் சட்சனியர் வெற்றிபெற் றனர் என்பதாகும். ஒருபுறத்தில், பெரும் போர்களிலீடுபடவும் அழித் தலைச் செய்யவும் சிறந்த போர்வீரர் தேவைப்பட்டிருப்பர். ஆகவே பெண்களையும் குழந்தைகளையும் விலக்கிய தனிப்போர்ப்படைகள் புறப்பட் டிருக்கும். அப்படிப் பரவும் போர்வீரர் பாதைவழியாகவும் ஆறுவழியாகவும் உட்புகுந்து எதிர்ப்போருடன் பொருதும் மட்கூடாரங்களையும் கன்மதில் ம்ாநகரங்களையும் தகர்த்தெறிந்தும், பட்டினங்களையும் கிராமவாசங்களையும்

படையெடுப்பாளர் ஊடுருவுதல் 49
எரித்தும், உரோமன் மயமாக்கப்பட்ட பிரித்தானியரைக் கொன்றும் கலைத்தும், கலிடோனியா, அயலாந்து போன்ற இடங்களிலுள்ள எதிரிகளான மிலேச்சப் படைகளை மேற்குப் பகுதிகளுட் சிதறடித்தும் முன்னேறியிருப்பர். மறுபுறத்தில் படைவீரரின் மனைவிமாரும் மக்களும் கப்பல்களிற் சென் றிருப்பர். அவர்களுடன் போரிலீடுபடாத கமக்காரரும் சென்று புதிதாகத் திருத்தப்பட்ட நிலங்களிற் குடியேறியிருப்பர்,
அல்பிரெட்ட்ரசன் காலத்திற்குரிய தேனிசுக் குடியேற்றத்தைப்போலவே ஆங்கில-சட்சன் வெற்றியும் இரு தோற்றங்களையுடையது. இரண்டில், எதையும் கூறத்தவறின், நோதிக்குப் படையெடுப்பைப் பிழைபட விளங்கிக் கொள்வதாகும். பிந்திய காலங்களுக்குரிய தேனிசு இனத்தவர்போலவே ஆங்கில-சட்சன் இனத்தவரும் இரத்தஞ் சிந்தும் மனப்பான்மையுடைய கடற்கொள்ளைக்காரராயிருந்தனர். தமது நாகரிகத்தைவிடச் சிறந்து விளங் கும் எந்நாகரிகத்தையாவது அழிப்பதில் மகிழ்ச்சியுற்றனர். அதேசமயத் தில், குடியேறிய நிலங்களைத் தாமாகவே பண்படுத்தி, நேர்மையான முறையிற் பயிர்ச்செய்கையிலிடுபடும் யாத்திரைப் பிதாக்களாயும் அவர்கள் இருந்தனர். அவர்கள் மிலேச்சராயிருந்ததஞலேயே உரோமன் நாகரி கத்தை நாசஞ்செய்தனர். அவர்கள் அருள் யாத்திரிகராயிருந்ததன லேயே உரோமன் நாகரிகத்தை அழித்தபோதிலும், அதற்குப் பதிலாக அதைவிடச் சிறந்த நாகரிகத்தை நிலைநாட்ட அவர்களால் முடிந்தது.
இப்பொழுது இருப்பதைப் போலன்றி மிக ஆழமாகவும் போக்கு வரத்துக் குரியனவாகவும் இருந்த ஆறுகளே இங்கிலாந்துட் புகுந்த ஆங்கிலேயருக்கு பிரதான பாதைகளாக இருந்தன. ஆங்கிலேயர் பிரித்தா னியாவுட் புகுந்ததிலிருந்தே பிரித்தானியா “ இங்கிலாந்து ’ என்று வழங்கப்படுகிறது. ஆழமில்லா நீரிற் செல்லுதற்குரிய, மேற்றளமில்லாத துடுப்புடைக்கலன்களில் துணிவுடன் வடகடலைக் கடந்து வந்த ஆங்கிலேயரால் அதே கலன்களால் ஆறுகளின்மேற்பாகங்களைக் கடந்து உண்ணுட்டை அடைய முடிந்தது. அப்படிப் புகுந்தவர்கள் தமது வள்ளங்களைச் சிறுசேற்றுத் தீவுகளில் சிலரின் பாதுகாப்பில் விட்டும் அல்லது காட்டிலிருந்து வெட்டப் பட்ட குறுந்தறிகளால் துரிதமாக அமைக்கப்பட்ட தம்பவேலிகளின் பாதுகாப் பில் விட்டும் சென்றனர். பாதுகாப்பிற்காக விடப்பட்டவர்களைத் தவிர்ந்த ஏனையோர், வாளுந் தீயுங் கைக்கொண்டு பிரித்தானியாவை அடைந்து தமதாக்கினர். இம்முறையையே அல்பிரட்டரசன் காலத்தில் தேனிசுக் குடியேறிகள் கையாண்டனர் என்பது எமக்குத் தெரியும் ; இவ்வாறே அவர்களுக்கு முந்திய ஆங்கில-சட்சணிய இனத்தவரும் இம்முறையையே கையாண்டிருப்பர் என ஊகிக்கக் கிடக்கின்றது.
1. இக்கூற்றிற்குத் தொல்பொருளியல் ஆதரவளிக்கின்றது. பெரும்பாலான ஆங்கிை சட்சன் இடு காடுகளெல்லாம் ஆறுகளிலும் கிளையாறுகளிலும் நிலைகொண்டிருப்பதாகத் தொல்பொருளியல் வல்லுநர் விளக்கமாகத் தெரிவிக்கின்றனர்.

Page 35
50 படையெடுப்பாளர் ஊடுருவுதல்
உரோமன் படையமைப்பு வீழ்ச்சியுற்றதும் உரோமரால் அமைக்கப்பட்ட பாதைகள், வெற்றியையும் அழிவையும் துரிதமாக்கின. புதிதாகப் புகுந்த ஆங்கில-சட்சணிய இனத்தவர் முதலில் ஆறுகளை அடுத்தே குடியேறினர் : அன்றிப் பாதைகளை அடுத்தன்று. அவர்களின் அழிவுச் சின்னங்கள் அதை ஆதரிக்கின்றன. ஆனல் பாதைகள் பிரித்தானியா முழுவதையும் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருத்தல்வேண்டும். பாரமற்ற போர்க் கவ சங்களைத் தரித்த போர்வீரர் பாரமான கொள்ளைப் பொருள்களைச் சுமந்து கற்பாதைகளிற் செல்லும் காட்சி எம்மனக்கண்முன் தெரிகிறது. தமது நற்பேற்றைக்கண்டு ஆனந்தக்கடலில் மூழ்கியிருக்கும் அவ்வீரர் மரங்களுக் கிடையில் மறைந்துகிடக்கும் கிராம வாசங்களைக் கண்டு அவற்றைக் கொள் ளையடிப்பர். எரிக்கப்பட்ட கிராமவாசங்களில் நெருப்புச் சுவாலை ஓங்கவே, உரோமரால் கொண்டுவரப்பட்டுத் தம்மாடங்களை அலங்கரிப்பதற்காக அன்பு டன் வளர்க்கப்பட்ட வீசனப்பறவை, மிலேச்சரின் அட்டகாசங்களுக்கு அஞ்சி அருகாமையிலுள்ள காடுகளுள் விரைவாகக் கதறிச் செல்லும். அவ்வீட்டுப்ப றவை வேட்டைக்குரிய காட்டுப் பறவையாக மாறி, பலநூற்றண்டுகளாகப் பிரித்தானியாவின் சமுதாயவரலாற்றில் முதன்மைவாய்ந்து வருகின்றது.
வரலாற்றரங்கில் முதன்முறையாகக் காட்சிதரும் சட்சன் வீரரைப் பற்றி நாம் ஒன்று கூறமுடியும். அது என்னவென்றல் அவர்கள் தமது வழித்தோன்றல்களைப் போலவே “படைத்தொழிலை மேற்கொண்டவராக வன்றி, போர்விருப்புடையவர்களாய்” மட்டும் இருந்தனர் என்க. ஆளுக் கோர் ஈட்டியையும் மரக்கேடயத்தையும் இடையிடையே சில வாட்களையும் தலைச்சீராவையும் ஏறக்குறைய ஆயிரம் வீரருக்குப் பொதுவாக ஓர் இருப் புக் கவசத்தையும் உபயோகித்தே அவர்கள் பிரித்தானியாவைக் கைப்பற் றினர். அந்நிலையில் ஒழுங்காகப் பயிற்றப்பட்ட காலாட்படையையும் மெய்க் காப்புக்குரிய ஆயுதங்களையும் எறியாயுதங்களையும், பிற்கால உரோமன்போர் முறைக்குரிய குதிரை வீரரையும் உடைய உரோமன்பண்பாட்டைக் கொண் டிருந்த பிரித்தானியர் உட்புகுவோரை எதிர்த்திருக்கலாம். “ வடகடலற் றிரண்டு வந்த பதிதரை ’ அரைக் கற்பனைச் சிருட்டியான ஆதர் என்ற அரசனின் தலைமையிற் பொருத பிரித்தானியர், உரோமன் போர் முறையைக் கையாண்டனரோ புத்துயிர்ப்புப் பெற்ற கெலித்தியப் பாங்கிற் பொருத னரோ என்பது தெரியவில்லை. எவ்வாருயினும் பிரித்தானியர் சாமானிய காலாட்படைகளாலே தோற்கடிக்கப்பட்டனர். வெற்றிமாலை சூடிய வீரர் பாசறைப் பழக்கவழக்கமற்றவர். அவர்களிடம் கவசமாவது எறியாயு தமாவது இருக்கவில்லை. அதிசயமான ஆற்றலும் கருமத்தில் ஊக்கமுமே அவர்களுடைய அரிய ஆயுதங்களாயிருந்தன. இவர்களை எதிர்த்து நின்
1. பழைய இக்குவில் பாதை உசோமர் காலத்திலும் உபயோகிக்கப்பட்டு ஆங்கில-சட்சன் குடியேறிகளாலும் உவோசிலிருந்து தெமிசன் மேற்பாகத்தை அடைவதற்கு உபயோகிக்கப் பட்டதென்றும் அதனற்றன் வெசெட்சு வடகிழக்கிலிருந்து குடியேற்றப்பட்டதென்றும் தேளோ இலீட்சு கருதுகின்றர்.

வென்றடிப்படுத்திய முறை 5.
றவரிடம் பயங்கரமான பாசறைகளும் வேலி இடப்பட்ட செங்குத்தான கோட்டைகளும் மலிந்து கிடந்தன. இவைகளைத் தவிர கன்மதில்களாற் பாதுகாக்கப்பட்டிருந்த உரோமன் நகரங்களுமிருந்தன. ஆனல் சில ஆயுதங்களுடன் நீண்ட கப்பல்களிலிருந்து இறங்கிச் சென்ற மிலேச்சக் காலாட்படைகளுக்குமுன் எவ்விதத் தடைகளும் நிலைக்க முடியாது ஒன்றன் பின் ஒன்ருகத் தவிடுபொடியாயின.
உரோமனுட்சி உச்சநிலையிலிருந்தபொழுது சமாதானம் நிலவிய தெற் கிலும் கிழக்கிலும் தற்பாதுகாப்புக்கென எவ்வகுப்பினரும் பயிற்றப்பட வில்லை என்பதை இதற்கு முந்திய அத்தியாயத்தில் அவதானித்தோம். அம்முறை உரோமனட்சிக்கே உரிய இயல்பாகக் கருதப்பட்டது. கிராமவாசத் தலைவன் பிந்திய காலத்து மானியப் பிரபுவைப்போற் போருக்குரியவன யிருக்கவில்லை. அவனிடம் போருக்கெனப் பயிற்றப்பட்ட பரிசனமாவது அரண் இடப்பட்ட மாளிகையாவது இருக்கவில்லை. அநேக மாநகரங்கள் மகத் துவமான மதில்களால் காக்கப்பட்டபோதிலும் மத்தியகாலங்கட்குரிய மதில் சூழ்ந்த நகரத்தவர்போல் மாநகரவாசிகள் போர்ப்பயிற்சி பெற்றிருக்க வில்லை. உரோமனுட்சி மத்தியகால ஆட்சியிலும் எந்த அளவிற்குமேலான நாகரிகமுற்று விளங்கியதோ அதே அளவுக்கு உள்ளூர்த் தற்பாதுகாப் பின்றியிருந்தது. மத்திய அரசாங்கமாவது, கிரமமான சேனையாவது தாக் கப்பட்டகாலை அவற்றின் பாதுகாப்பிற்கென உள்ளூரிற் பெறக்கூடிய உதவி எதுவும் இருக்கவில்லை. உண்மையைக் கூறுங்கால், அச்சமுதாய அமைப் பிற் காணப்பட்ட முக்கிய குறைகளை நிவிர்த்திசெய்யும் பொருட்டே மிலேச்சப் படையெடுப்புக்களால் உண்டான குழப்பத்திலிருந்து மானியமுறை காலக் கிரமத்திற் ருேன்றிற்று. w
சட்சணிய வெற்றி பற்றிய மிகப்புதிய வரலாற்றுக்கொள்கை இப்பெரும் அழிவுவேலையை, வெவ்வேறு பகுதிகளிற் குடியேறிய வெவ்வேறு சிறிய குலத்தவர்செய்யாது, ஒன்றுபட்ட இராணுவத் தலைமையின்கீழ்ப் பல பிரிவினர் ஒன்று திரண்டு செய்தனர் என்பதாகும். அல்பிரெட்டு அரசன் காலத்துத் தேனிசுக் கொள்ளைக்காரர் வழக்கமாகத் தனியொரு தலைவனின் கீழ் ஒன்றுதிரண்ட கூட்டங்களாய் நாடுமுழுவதிலும் பரந்து சென்றனர் என்பது நாம் அறிந்ததே. இம்முறைமை ஆங்கில சட்சணிய வெற்றி முறைமையோடு ஒர் அளவிற்கு ஒப்புமையுடைத்தெனக் கருதப்பட்டாலும், ஆங்கில சட்சனியரின் தொகையையும் அக்குழுவினர் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த தொடர்பையும் நேராக நிரூபிப்பதெனக் கருதமுடியாது. ஆளுல்ை, ஆங்கில சட்சணிய அழிவுகளைப் பற்றிக் கிலிதாசு என்ற சரித்திர வாசிரியன் கி.பி. 540 ஆம் ஆண்டில் கண்ணிர் சொரிந்து, தெளிவற்ற முறையிற் கூறியுள்ளார். படையெடுப்பு ஆரம்பமாகி நூறு ஆண்டுகளுக் குப்பின் எழுதிய கிலிதாசு, இவ்வழிவு நாட்டின் மத்திக்கூடாக மேற்குக் கடல்வரை பரவிற்றென்றும் பின்பு படையெடுப்போர் மேற்கிலிருந்து சிறிது பின்வாங்கும்பொழுதும் வெறும் அழிவையே விட்டுச் சென்றனர் என்றும்

Page 36
52 வென்றடிப்படுத்திய முறை
கூறுகின்றர். இது உண்மையாக ஐந்தாம் நூற்றண்டின் மத்தியிலும்
கடைசிக்காலத்திலும் நடந்தேறிய சம்பவமாயின், ஆங்கிலேயர் மத்திய
பகுதியிலும் மத்திய-மேற்குப் பாகத்திலும் நிலையாகக் குடியேறுமுன்னரே அங்கிருந்த உரோமன் மாநகரங்களும் கிராம வாசங்களும் அழிந்திருந் ததற்குக் காரணம் கையிற் கிடக்கின்றது. “பாது’ என்ற நாகரிக நிலையம், சட்சனிய இனத்தவர் அதை அடைவதற்கு முன்னமே, பாழ்நிலை
யிற் கிடந்தது என்பதைப் புராதனகாலவாராய்ச்சி நிரூபித்திருக்கின்றது.
அங்கிருந்த பாங்கான சிறு குளங்களெல்லாம் சட்சனிய இனத்தவரின்
குடியேற்றத்திற்கு முன்னமே நீர்ப்பறவைகள் குடிகொண்டிருக்கும் காடு களாகக் காட்சியளித்தன. ஆங்கில-சட்சணிய வரன்முறைக்குறிப்பில் 577 ஆம் ஆண்டிற் பாது இறுதியாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள் ளது, ஐயத்துக்கிடங்கொடுப்பதாகும். எனெனில் 577 ஆம் ஆண்டிற்குப் பல காலங்களுக்கு முன்னமே பாது அழிவுற்றிருந்ததெனப் புராதன
ஆராய்ச்சியாளர் நிறுவியிருப்பதனலென்க. இதனல் இடைவிடாத வேகத்
துடன் நாடு முழுவதையும் அழித்துச் சென்ற பின்னர் பின்வாங்கிய ஒரு
* கூட்டம் ” இதற்குமுந்திய காலத்தில் இருந்திருப்பின், இவ்வாறு
நிகழ்ந்தமைக்குக் காரணத்தை இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். உரோமர்
காலத்தில் நெருக்கமின்றி, சிதறியிருந்த மக்கட்டொகையைக் கொண்
டிருந்த மத்தியபகுதிகள் அழிவின் பின்பு ஒருவராலும் விரும்பப்படாத
தனித்த பாழ்நிலையங்களாக இருந்தன. இலத்தீன் நாகரிகத்திற்குட்பட்
டிருந்த மத்திய பகுதிகள், இன்னும் சட்சணியரால் மீட்கப்படாதிருந்தன.
இக்கொள்கையின்படி அழித்துச் சென்ற ஆங்கிலேயர் “ கூட்டம் ” மேற்கை
யடைந்ததும், பின்வாங்கி, மத்திய பகுதிகளிற் சிதறிற்று. பின்பு இவர்
களில் ஒவ்வொரு பகுதியினரும் கிழக்கில் ஒர் ஆட்சியை நிறுவுதற்கெனப்
புறப்பட்டுக் குடியேறல், இல்வாழ்வு, பயிர்ச்செய்கை போன்ற தொழில்களில்
ஈடுபடலாயினர்.
தேனி.சுப் படையெடுப்புடன் உள்ள ஒப்புமையையும், கிலிதாசு என்பவரின் மன வெழுச்சியாற் பிறந்த கூற்றுக்களையும், பலகாலங்களுக்கு முந்தியே பிரித்தானியாவில் நிகழ்ந்த மிகப் பரந்த அழிவையும் அடிப்படையாகக் கொண்ட ஆங்கில “ கூட்டத்தின்” முன்னேற்றமும் பிறக்கீடும் பற்றிய கொள்கை இத்தகையதே. இக்கொள்கையை நிரூபிக்கப்பட்டதாகவோ நிராக ரிக்கப்பட்டதாகவோ கருதுவதற்கில்லை. கிரீன் என்னும் சரித்திர ஆசிரியர் ஆங்கில சட்சன் வரன்முறைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மரபு முறைகளைத் தழுவி வெளியிட்டுள்ள பழைய அபிப்பிராயத்திலும்
. அல்பிரட்டு அரசரின் ஆணையால் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில சட்சன் இதிகாசம் தேனிசுப்படை யெடுப்புக்களைப் பற்றியும் பிந்திய பல சம்பவங்களைப் பற்றியும் கூறுவதை ஆதாரமுடையதாக எற்றுக்கொள்ளலாம். இதிகாசவாசிரியர்கள் தாம் வாழ்ந்த காலங்களுக்குரிய நிகழ்ச்சிகளைக் கூறுவது அங்கீகரிக்கப்பட வேண்டியதே. ஆனல் நானூறு ஆண்டுகளுக்கு முந்திய அடிப்படுத் தலைப் பற்றி அவர்கள் கூறுவது உறுதியானதன்று.

படைஞர் "கூட்டம்” பற்றிய கொள்கை 53
இக்கொள்கையே இற்றைக்காலத்தில் மிகவும் ஆதரிக்கப்படுகின்றது. அழித் தலையும் ஆக்கலையும், ஆங்காங்கு சிதறுண்டிருந்த தனிப்பட்ட ஆங்கிலக் கும்பல்களே செய்துமுடித்தன என்று கிரீன் கருதுகின்றர். இவ்விரு கொள்கைகளிலும் சிற்சில உண்மைகள் இருத்தல்கூடும். இரு கருத்துக் களும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல. போதிலிருந்து கால்வாய் வரை இத்தீவகம் கைப்பற்றப்பட்டபொழுது பல சம்பவங்கள் நிகழ்வதற்கு வேண்டிய காலமும் இடமும் இருந்தன. எனினும், அவைபற்றி எமக் கொன்றும் திட்டமாகத் தெரியாது என்று ஒப்புக்கொள்வதே முறையா கும்.
பிரித்தானியாவுட்புகுந்த கும்பல்கள் சிறியனவாய் அல்லது பெரியனவாய் இருந்தாலும் அவை தனித்தனியாய் அன்றி ஒருமித்து இயங்கியிருந்தாலும், அவை செய்து முடித்த அழிவு பெரிதே. உவெல்சுக் கிறித்தவரில் எஞ் சியுள்ளவரின் மரபுக்கதையைப் போதகர் கிலிதாசு பின்வருமாறு சுருக்கிக் கூறியிருக்கின்றர் : ஒவ்வொரு குடியிருப்பும் தகர்ப்பொறியின் தாக் குதலால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றது. குடியேறிகளும் கோயில் காப் போரும் கொலையுண்டு கிடக்கின்றனர். எல்லாப் புறங்களிலும் வாட்கள் ஒளிகாலுகின்றன. நெருப்புச் சுவாலைகள் வெடிப்பொலியொடு வீசுகின்றன. வீதிகளிலே கோபுரக் கொடுமுடிகள் உயரமான பிணையல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுக் கிடக்கின்றன. உயர்ந்த மதில்களின் கற்கள் மலிந்து கிடக்கின்றன. அப்படியே பரிசுத்தமான பலிபீடங்களும் உடற்குறைகளும் தெருக்களிற் குவிந்து கிடக்கின்றன. யாவும் உறைந்த இரத்தத்திலே தோய்ந்து கிடக்கும் காட்சி கோரமானது. எல்லாப் பொருள்களும் பயங் கரமான திராட்சமது பிழியும் இயந்திரம் ஒன்றில் நசுக்கப்பட்டன போன் றது அக்காட்சி. அல்லற்பட்டோருள் எஞ்சியவர்கள் மலைகளிற் புகலிடம் பெற எண்ணி ஒடுகின்றனர்; அவர்களும் கைதுசெய்யப்பட்டுக் கொன்று குவிக்கப்படுகின்றனர். சிலர்பட்டினி பொறுக்கலாற்றது எதிரிகளிடம் சரணடைந்து சதாகால அடிமைகளாகின்றனர். மிகச் சிலர் புலம்பலுடன் கடல்கடந்து செல்லுகின்றனர்.
உரோமன் மாநகரங்களும் கிராமவாசங்களும் இருந்தவிடத்தெல்லாம் முற்ருக அழிக்கப்பட்டனவெனலாம். ஆதி ஆங்கில சட்சனியக் குடியேறிகள் நகரவாசிகளாய் இருக்கவில்லை. அடிமைகளைக் கடலுக்கப்பாலுள்ள நாடு களில் விற்பதைத் தவிர அவர்களிடம் வாணிபஞ் செய்யும் விருப்பு அரிதாயிருந்தது. பிரித்தானியாவின் உட்புறத்தில், பயிர்ச்செய்கைக்குச் சிறந்த நிலங்களைப் பெற்றவுடன் அவர்கள் தமது கடற்பழக்க வழக்கங்களைக் கைவிட்டனர். அவர்களின் விருப்பங்களுள் மிக முற்போக்குடையதாக விளங்கியது யாதெனில், நாட்டுப்பாங்கான பெரிய நகர்ப்புறங்களிற் குடியேறி, விவசாயத்துக்குரிய அடைப்பிலா வயல்முறைமைப்படி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதேயாகும். புதிய ஆங்கில நாகரிகத்திற்கு அதுவே சிறந்த அடிப்படையாக அமைவதாயிற்று. இவ்வியல்பூக்கந் தூண்ட அவர்

Page 37
நகரங்களும் கிராமவாசங்களும் அழிதல்
கள் பிரபுவிற்குரியதும் மாத்தாற் செய்யப்பட்டதுமான மண்டபத்தைச் சுற்றித் தமக்கென உடனும் மா இல்லங்களேக் கட்டி எழுப்பத்தொடங் சினர். காட்டுமரங்களேப்பினந்து அத்துண்டங்களேச் செங்குத்தாக அடுத் தடுத்து நாட்டிச் சுவாமைத்தனர். அவர்களுக்கு வேண்டிய மரத்துண் டங்கள் காட்டில் மலிந்து கிடந்தன. அத்துடன் அவர்களும் வேவேசெய்வதிற் கைதேர்ந்தவர்கள்". கடலுக்கப்பால் அவர்கள் வாழ்ந்த இல்லங்கள் இத் தகையவே. பல வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த கிராமவாசங்களிலும் பட்டன வீடுகளிலும் அவ்வீட்டுச் சொந்தக்காரரைக் கொன்று புதைத்த பின்பு நிம்மதியாக வாழ அவர்களுக்கு வாய்ப்பிருந்தபோதிலும் அவர்கள் அத்தகைய வாழ்க்கையை விரும்பவில்லை. சிந்துர மரத்தாற் செய்யப்பட்ட மனேகளில் வாழ்வதையே அவர்கள் விரும்பினர்.
"சட்சனிய இனத்தவர் உரோம வாசங்களில் வாழ்ந்தனரெனக் கூறும் ஒரு சான்றையாவது காணமுடியாது. காலப்போக்கிலே தொல்பொருளியல் ஆராய்ச்சிகள் ஓரிரு சான்றுகளேப் பெறுதல்கூடும் ; அவையும் எண்ணிக்கை யில் அதிகமாகவிராபோலத் தோன்றுகின்றது. கிராமவாசங்களே அவர்கள் வெறுத்ததுபோலவே நகரங்களேயும் வெறுத்தனர். அப்புதுவோர் கீல்லாற் கட்டப்பட்ட கட்டடங்களிலே தாமிருக்க விரும்பாததுபோலவே பிறர் இருப்பதையும் விரும்பவில்லே. சில குடிமனேகள் இயற்கையான வாய்ப்புக் களாலும், எஞ்ஞான்றுஞ் சீரழியா உரோமன் பாதைகள் சந்தித்தற்கு இடனுய் விளங்கியமையாலும் தனிச்சிறப்புப் பெற்றனவாதலின் அவற்றை நிலையாகக் கைவிடமுடியாதிருந்தது. காலப்போக்கில், செசுத்தர், பாது, கந்தபெரி ஆகிய இடங்களில் மீண்டுங் குடியேறினர். இலண்டன், இலிங்கன், யோக்கு ஆகியவை முற்றுகக் கைவிடப்பட்டனவோ அல்லவோ என்பது நிச்சயமாகத் தெரியாது; எனினும் சில தவே முறைகளாக அவை முக்கியமான நகரங்களாகக் கருதப்படவில்லே எனக் கானப்படுகிறது. பிந்திய காலங்களில் நாகரிகம் வளர்ச்சியுற்றதாற் போலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. உரோமன் பாதைகளும் ஆற்றுவழிகளும் சந்தித்தலால் இலண்டன், கேம்பிரிட்சு ஆகிய இடங்களும் வேறு சில நிலையங்களும் காலப்போக்கில் முதன்மை பெறலாயின. இவ்விடங்களில் மட்டுமே காலத் தின் கோலத்தாலேனும் மிலேச்ச வியல்பாலேனும் உரோமின் அருஞ் செயல்கள் நிலையாக அழிவுற முடியாமற் போயின.
ஆணுல் சில்செசுத்தர், உரொட்சீற்றர், வெருலாமியம் ஆகிய இடங் களும் வேறுபல நகரங்களும் குடியேற்றப்படாது அடியோடு கைவிடப்பட்டன. சென் ஒல்பன்சு, வெருலாமியமிருந்த நிலேயத்திலிருந்து அரைமைலுக்கப்
* மாத்துண்டங்கள் பெறுவது கடினமாயிருந்த காலத்திற்ருள் அவர்கள் " அரை-மா" வீடுகள் கட்டத்தொடங்கினர்-ஆதாரக் கட்டுமட்ரீம் மரத்தி ஒற் செய்யப்பட்டுb, ஈஞ்சிய அன் கங்கள் எளிதிற் பெறக்கூடிய பொருட்காைல் அமைக்கப்பட்டும் வந்தன.
" இவ்வதிகாாத்தின் முடிவிற் கிடக்கும் இரண்டாம் குறிப்பைக் காண்க
ጋ..\ bኳ Cy 8
 

ññ
"lk... + Lqnn=rfro
ሸቶ
:ජීඝ්‍ර grioritaifiliari
}... କମ୍ପ୍ ፵jዶ 2. ଦ୍ବିଶଃ 2.
呜 §. - u్య is:
ஆகிந}
బ్రి *
கம்பிரியா % ஐந்தாங்க
'r டி பப்படம்) Tuorri-Lappi
சிங்கை _Sউৎ
Tiga
rt ܨܲ”ܕ݁ܰܪ ܬܐ
படம் W. எழுவாாட்சிக்குட்பட்ட இங்கிலாந்து

Page 38
. 56 சீர்குலைவும் புத்தமைப்பும்
பால் ஆற்றின் மறுகரையிலிருந்தும், பழைய நிலையமாயிருந்ததாற்போலும் தவிர்க்கப்பட்டது. வயல்களாகவும் புற்றரைகளாகவும் கரம்பை நிலங்க ளாகவும் காட்சியளிக்கும் பகுதிகளிற் கிராமவாசங்களும் மாநகரங்களும் தொடர்ந்து தோண்டப்பட்டு வருகின்றன. உரோமரின் அழிவுச் சின்னங் களும் பாழ்நிலையங்களும், சுதுவட்டு மன்னர்கள் காலத்திலிருந்த முகடற்ற துறவோர் மடங்கள் போலவே, சட்சன் மக்கள் வழக்கமாய்க் காணுஞ் சாதாரண காட்சிகளாய் விளங்கியிருக்கும். அவற்றுட் சில பயன்மிக்க பார்க்குழிகளாய்ப் பகலிற் காட்சியளித்தும், இரவிற் பேயுறையும் பயங்கரப் பகுதிகளாய்க் கருதப்பட்டும் வந்திருக்கும். தனது முன்னேராற் கொல்லப் பட்ட இனத்தவரின் ஆவிகள் கோபித்துத் திரிவனபோற் கற்பனை பண்ணி யிருப்பான் சட்சணிய உழவன். இறந்த உரோமர் “தோகாவால் ’ உடல் போர்த்து உயிர்பெற்றெழுவரோ என்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண் டிருக்கும். பல பழைய குடியிருப்புக்களிற் சட்சணியர் குடியேறமைக்கு இவ்வச்சமும் ஒரு காரணம்போலும்.
முதற்படையெடுப்பு நிகழ்ந்த காலை அழிவெனுந் தீ பரவியதனல் இங் கிலாந்தின் மேற்கரைப் பாகம் எத்துணை கொடிய அழிவிற்கு உட்பட்டதோ யாமறியேம் ; எனினும், 16 ஆம் நூற்றண்டின்போது, அவ்வழிவுத் தீ அணைந்தபின்னர், அப்பிரதேசங் கெலித்தியர் வசமிருந்தஞான்று, பற்பல ஆங்கில சட்சன் இராச்சியங்கள் நோதம்பிரியப் பேணிசியா தொட்டு வெசிற்சுவரை வளரத்தொடங்கின : இவ்விராச்சியங்கள் ஒன்றுக்கொன்று அயலாய்த் தோன்றியவாயினும் ஒன்றையொன்று சாராத் தனி இராச் சியங்களே. ஒரு பன்னிற உருக்காட்டி எப்படித் தேவைக்குத் தகுந்த வண் ணம் இணக்கப்படுமோ அப்படியே ஆங்கில சட்சன் இராச்சியங்களின் எல்லை களும் பலநூற்றண்டுகளாக மாறிக்கொண்டிருந்தன. எனினும், தென் கிழக்கு இங்கிலாந்திலிருக்கும் எசெட்சு, சசட்சு, கெந்து போன்ற சயர்களின் எல்லைகளும் பெயர்களும் பழைய இராச்சியங்கள் பலவற்றை ஞாபகப் படுத்துகின்றன.
புதிதாகப் பிறந்த இவ்வாங்கில இராச்சியங்கள் காலத்துக்குக்காலம் ஒன்றேடொன்று போரிட்டவாறே இருந்தன. அத்துடன் பண்பில்லா வியல்புடைய உவேல்சு மக்களுடனும் காலத்துக்குக் காலம் பொருதிக் கொண்டே இருந்தன. உவேல்சு மக்களும் தம்மிடை ஒயாது பூசல் விளைத்தனர். கிலிதாசு கூறுவதை நம்புவோமாயின் ஆதரின் காலத் திற்குரிய உரோமானே-பிரித்தானியர் பலகாலும் பிரபுக்களின் நெறிகெட்ட நடத்தையாலும் கலகத்தாலும் வஞ்சிக்கப்பட்டனர் எனக் கொள்ளல் வேண்டும். உரோமன் ஆதிக்கம் நிலைகுலைந்து கெலித்திய இனவாட்சி
இது முதல், சட்சனிய இனத்தவர் தாங்கள் சிறத்துகிளேது. உவேல்சு தீவன் ஆகிய இடம் கட்குத் துரத்திய பழைய இனத்தவரை “வெல்சு" மக்கள் என்று வழங்கியதுபோலவே நானும் அப்பதத்தை வரைவின்றி வழங்குவேன்.

சீர்குலைவும் புத்தமைப்பும் 57
புதுப்பலமடைந்தபோது, தம்குலத்திடையே போர் விளைக்குங் கெலித்தியர் சுபாவமும் புத்துயிர் பெற்றது. அதுவே சட்சனிய வெற்றிக்கு ஆதரவு பெரிதும் அளித்ததாகப் பீட்டு கருதுகின்றர்.
சட்சணிய வெற்றியின் முதல்விளைவு யாதெனில் பழைய உரோம மாகாணமாகிய பிரித்தானியாவிலிருந்த அமைதியும் ஒற்றுமையும் அழிந்ததேயாம். ஐந்தாம் ஆறம் நூற்றண்டுகளில், பிரித்தானியா போரிடும் குலங்களினதும் இராச்சியங்களினதும் குழப்பத்தால் பயங்கரமாகக் காட்சியளித்திருக்கும். ஒவ்வோர் இனத்திலும் இராச்சியத்திலும் இருந்த குடும்பங்களுக்கிடையில், இரத்தப்பழியான குலப்பகை நிலைத்திருந்தது. அதனுற் பலர் இறக்க நேரிட்டது. கொலையைக் குறைப்பதற்காக நட்ட ஈடாக அபராதப் பணம் பெறும் முறைமை சட்டப்படி விதிக்கப்பட்டிருந்தது. (கொலை செய்தவரின் குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒரளவு பணமும், குலப் பிரபுவுக்கு ஒரு தொகை பணமும் அபராதமாகக் கொடுப்பது சட்சணிய முறையாயிருந்தது). சில சமயங்களில் கொலையைக் குறைப்பதற்காக, ஒரு குடும்பத்தினரை இந்த அபராதப்பணம் பெறுவதற்கு இசையச் செய்யவேண்டியிருக்கும். கொலைக்கீடாகக் கொடுக்கப்படும் பணம் பகிரங்க விசாரணையின் பின்பே வெளிப்படையாக விதிக்கப்படும். பொது மக்களிடையேயும், தனிப்பட்டவர்களிடையேயும் போர் நடத்தல் விதிவிலக் கின்றிப் பொதுவழக்காயிருந்தது. எனினும் இக்குழப்பத்துக்கிடையேயும் எதிர்காலத்துக்குவேண்டிய, ஆழமான அத்திவாரங்கள் அமைக்கப்பட்டன. தமது வெற்றியின் விரைவுக்கேற்ப ஆங்கில-சட்சணிய இனத்தவர் தமது மனைவியரையும் குழந்தைகளையும் பெருந்தொகையாகக் கொண்டுவந்தனர். * ஆங்கிலர் ” என்ற முழு இனத்தவரும் தாமிருந்த நிலத்தை வெறுமை யாக விட்டு பிரித்தானியாவுட் புகுந்தனரெனப் மீட்டு காலத்து மரபுவழக்கு கூறுகின்றது. முதலாம் ஒபாவை ஒப்பற்ற தலைவனுகக்கொண்ட அவர் களுடைய அரசகுடும்பத்தவர் சிலெசுவிக்கிலிருந்த தமது பழ்ைய எஞ்சல் இராச்சியத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் மேசியாவுக்கு அரசரா யினர். “ இங்கிலாந்திற் ’ குடியேறியவர் விட்டுச்சென்ற வெறுமையான பகுதிகளில், தற்காலச் சுவீடனகிய பெருநிலப்பகுதியிலிருந்து போந்த தேனிசு மக்கள் குடியேறினர். தேனிசு மக்கள் குடியிருந்த பகுதிகள் தற்காலத் தென்மாக்கின் பகுதிகளாகும். அக்காலத்து மிலேச்சக் குடியேற் றங்களுள், தெற்குத் தென்மாக்கிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களிற் சென்ற பல குடும்பங்களின் குடியேற்றமே ஒப்பில்லாததாகும் ; அவர்களே கடலில் அதிக தூரத்தைத் தாண்டிச் சென்றனர். அப்படிக் குடியே றியவர்கள் மேற்றளமிடப்படாத தட்டுவள்ளங்களிற் சென்றனர் என்பதை நினைக்கும்போதெல்லாம் அவ்வள்ளங்களிற்சென்ற வீரப் பெண்களின் மேன் மையை வியந்து புகழாதிருக்க முடியாது.

Page 39
58 பெருங்குடியேற்றம்
குடியேறுவதில் ஊக்கமும் அழிவுவேலையில் ஆர்வமுங் கொண்ட ஆங் கிலக் குடியேறிகள் இங்கிலாந்தின் நாகரிகத்தையும் இன அமைப்பையும் மாற்றியமைத்தனர். இக்குடியேறிகள் ஆக்கிய மாற்றத்திற்கு அக்காலத்து வேறெந்த நோதிக்குப்படையெடுப்பின் விளைவும் இணையாகாது. இத்தாலி யிற் குடியேறிய கோது, உலொம்பாடி இனத்தவரும் கோலிற் புகுந்த பிராங்கு மக்களும் அந்நாடுகளிலிருந்த நகரவாழ்க்கை, கிறித்து மதம், இலத்தீன் மயமாக்கப்பட்ட பேச்சுவழக்கு ஆகியவற்றை அழிக்கவில்லை. ஆனல் சட்சனியர் குடியேறிய இங்கிலாந்தில் மாநகர வாழ்க்கைமுறை, கிறித்துமதம், உரோம-கெலித்திய மொழியாவும் அழிந்தன. அன்றியும், நாட்டுக்குரிய குலத்தவரின் பிரதேச எல்லைகளும் உரோம பரிபாலன எல்லைகளும் மறைந்தொழிந்தன. நகர நிலைகளும் கிராமங்களும் பெரும் பாலும் மாற்றியமைக்கப்பட்டன; எறக்குறைய எல்லாவற்றிற்கும்-பத்தில் ஒன்பதற்காவது-சட்சன் பெயர்கள் இடப்பட்டன. இம் மாற்றங்கள் அனைத் தையும் உற்றுநோக்குங்கால், அவை இன அடிப்படையில் ஒரு பெரும் திரிபைக் குறிக்கின்றன; எனினும் பூரணமான இனமாற்றம் பற்றிச் சில வேளைகளில் மிகைபடக் கூறப்படுகின்றது.
இனி உரோம-பிரித்தானிய நாகரிகம் மீளா அழிவுற்றதெனின், அது மிகையாகாது. புதிதாகப் புகுந்த சட்சன் ஆதிக்கம், கெலித்தியப் புத்து யிர்ப்பு ஆகிய இரு மிலேச்ச இயக்கங்களுக்கிடையே அந்நாகரிகம் நசுக்கப் பட்டது. உரோம-பிரித்தானிய நாகரிகம் செழித்தோங்கிய தாழ்ந்த பிர தேசங்களே சட்சன் அழிவுகாரரின் தீப்பந்தத்திற்கு இரையாயின. மாநக ரங்களையும் காணிகளையும் இழந்து உவெல்சுமலைகளிலும் கோணிசுக்கரம்பை நிலங்களிலும் புகலிடம் பெற்ற நாகரிகமான அகதிகள் நாலாபுறங்களிலும் நாகரிகமற்ற கெலித்தியச் சகோதரரின் சமுதாயத்தாற் சூழப்பட்டிருந் தனர். ஒரு காலத்திற் சட்சணிய முரடர்களே இகழ்ந்து நோக்கிய இவர்கள் ஒரிரு தலைமுறைகளில் தம்மைச் சட்சன் மிலேச்சரிலிருந்து வேறுபடுத்திய கலைகளையும் மரபு முறைகளையும் மறந்தனர். உரோமின் கைத்திறனும், விஞ்ஞானமும் , கல்வியும் அழிவுற்றமையே சட்சணிய வெற்றியின் முதல் விளைவாகும். பிரித்தானியா முழுவதிலும் குடித்தொகை குன்றியது. பயிரிடப்பட்ட நிலங்களும் குறைந்துகொண்டே போயின. எஞ்சியிருந்த கெலித்தியரும் புதிதாய்ப் புகுந்த சட்சன் இனத்தவரும் மிலேச்சராகவே யிருந்தனர். எனினும் சட்சன்மக்கள் தாழ்ந்த பிரதேசங்களில் வாழ்ந்தன ராதலால், தமக்கென ஒரு தனிப்பண்பாட்டை விருத்தியாக்கினர். அவர்கள் வளர்த்த நாகரிகம் வெகுவிரைவில் உவெல்சு மலைவாசிகளின் நாகரிகத்தி லும் மேலானதாக மிளிர்ந்தது. புவியியலானது வரலாற்றின் போக்கைக் கவிழ்த்து, கெலித்தியரை மிலேச்சராயும் சட்சன் இனத்தவரை நாகரிக முடையவராயும் அமைத்தது.

மேற்கில் முன்னேற்றம் தடைப்படல் 59
பிரித்தானியாவிலே வளம்பொருந்திய பகுதிகளிலிருந்து உவெல்சு மக்கள் நீக்கப்பட்டதற்கு அவர்கள் குணமும் ஒரு காரணமாயிருந்தது. நாகரிகமுடைய உரோமரைத் தம்மிலும் மேலானவர்கள் எனக் கருதி அவர் களுக்குப் பணிந்த உவெல்சு மக்கள் மிலேச்சராகிய சட்சன் இனத்தவரைத் தம்மினும் மேலோராக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஒன்றில் மிலேச்ச ருடன் பொருது இறப்பது, அல்லது கடலுக்கப்பாற் சென்று கோல்நாட்டு ஆமொரிக்காவிலுள்ள புதிய பிரித்தனி என்ற பகுதியிற் புகலடைவது, அல்லது உவெல்சு மலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதே சிறந்தது என்று அம்மக்கள் எண்ணினர். உவெல்சு மக்கள் சட்சன் இனத்தவரைப் பெரிதும் வெறுத்ததால் அவர்களைக் கிறித்தவராக மாற்றவும் முயற்சிக்க வில்லை. பீட்டின் காலத்தில் வாழ்ந்த சட்சன் மக்கள் அக்குறையை உணர்ந்து உவெல்சு மக்களை வைதனர் என்று தெரிகிறது. அக்காலத்தில் அவர்களை யடைந்த கிறித்தாகமம் செவேணுக்கப்பாலிருந்து வராது உரோமிலிருந்தும் கொத்துலாந்திலிருந்துமே வந்து சேர்ந்தது. உவெல்சு மக்களிடம் ஒர் அளவிற்கு இடம் பெற்றிருந்த நாடோடிப் பழக்கமானது, தாம்வெறுத்த சட்சணிய வெற்றிவீரர்களுக்கு அப்பாற் சென்று புதிய இடங்களை அடையச் செய்தது. உவெல்சு மக்கள் தம் குலத்திடம் கொண்டிருந்த பற்று, நில மீது அவர்கொண்ட பற்றிலும் வலியதாயிருந்தது. அதனல் விரும்பிய இடங்களுக்கெல்லாம் குறித்த குலம் செல்லமுடிந்தது.
முதல் முரட்டுப் படையெடுப்புத் தடங்கியபின் உவெல்சு மக்களுக்கும் சட்சன் இனத்தவருக்குமிடையே எல்லைப் போர்கள் நடப்பது சாதாரண வாழ்க்கை நியதியாயிருந்தது என்று முன்பு கூறினேன். அந்நெடுங் காலப் போரில் இரண்டு முக்கியமான சம்பவங்களைக் காணலாம். முதலாவது வெசிட்சிலிருந்து ஆங்கிலேயர் செவேண் ஆற்றுமுகத்தினூடே வெளிப் போந்து பரவியமை. (இது மரபுப்படி கி. பி. 577 ஆம் ஆண்டு குளோத் தசயரில் தெயராமின் வெற்றிக்குப் பின் நடந்தது). இரண்டாவது, நொதம்பிரியாவிலிருந்த ஆங்கிலேயர் மேசி, இடீ ஆகிய ஆற்று முகங் களூடே வெளிப்போந்து பரவியமை. இது 613 ஆம் ஆண்டில், “பட்டாள நகரமாகிய ’ செசுத்தரின் பாழ்நிலையத்தில் ஆங்கிலேயரின் வெற்றிக்குப் பின் நிகழ்ந்தது. இவ்வாறு, ஐரிசுக்கால்வாயில் மேற் குறித்த இரு தலத்திலும் சட்சனியராதிக்கம் வந்தடைய, திரதுகிளேடு, உவேல்சு, தெவன் குடாநாடு ஆகிய பகுதிகளிற் பரவிய உவெல்சு மக்கள் தனித்தவர்களாயினர்; ஒவ்வொரு பகுதியினரும் தம்மினத்தவரிடமிருந்தும் சமவெளி வாழ்க்கை யிலிருந்துந் துண்டிக்கப்பட்டுச் சிறுச்சிறு கூட்டத்தினராய், கெலித்திய வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பேணிவாழ்வாராயினர்.
அப்படியே அடுத்தடுத்து அநேக நூற்ருண்டுகளாக முன்னேறிய சட்சன் இனத்தவரும் அவர்களுக்குப் பின்வந்த கந்தினேவியரும் செசயர், இலங்காசயர், கம்பலந்து, உவெத்துமோலந்து, செவேண்பள்ளத்தாக்கு

Page 40
60 மேற்கில் முன்னேற்றந்தடைப்படல்
சொமசெற்று ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் குடியேறினர். கடைசியாக, தெவன் கைப்பற்றப்பட்டு ஒன்பதாம், அல்லது பத்தாம் நூற்றண்டிற் 'குடியேற்றப்பட்டது. கைப்பற்றிக் குடியேறிய காலங்களிலெல்லாம் சட்சன் இனத்தவர் நாகரிகமடைந்து முன்னேறிச் சென்றனர் ; உவெல்சு ம்க்களும் அவர்களுடன் நெருங்கிப் பழகுவாராயினர். ஆங்கில முன் னேற்றம் முடிவுற வெகுமுன்னரே, இரு பக்கத்தவரும் கிறித்தவர் களாயினர். ஆகவே தொலை மேற்கையொட்டிய பகுதிகளிற் கெலித்திய இனமும் வழமையும் கூடிய வளவிற்கு நிலைத்தன. ஆனல், கோண்வா லிலும் கைப்பற்றப்படாத உவெல்சு மலைகளிலுமே மொழியும் பண்பாடும் கெலித்திய மயமாயிருந்தன. V
எந்த மாவட்டத்திலேனும் உவெல்சு உதிரத்துடன் கலந்த நோதிக்கு உதிரத்தின் அளவைத் திட்டமாக நிச்சயிக்க முடியாது. ஆனல் பிரித்தானி யாவின் வடக்கிற்கும் தெற்கிற்கும் கொள்ளக்கூடிய ஒரு பொது விதியைக் காணலாம் ; அது என்னவெனில், நாம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும்பொழுது, படிப்படியாக நோதிக்கு மக்களைத் தாண்டி உவெல்சு மக்களையடையலாம் என்பதே. இவ்விதிக்குப் புறநடைகளுமுள: கிழக்கிலிருந்த சில சேற்றுப்பிரதேசங்களிலும் எற்போட்டுசயர் பகுதிகளிலும் போன்று கிழக்கிலே தனிப்பட்ட உவெல்சுத் தொகுதிகளுமிருந்தன. பின்பு பெருங்கப்பல்களிற் சென்ற கந்தினேவியக் கடற்பிரயாணிகள் அல்லது நோசு மக்கள், தென் உவெல்சு, வட இலங்காசயர் ஆகிய பகுதிகளிற் செய்ததுபோல் மிக மேற்கையொட்டிய கரைகளிலும் குடியேறினர்; அங்கு வைக்கிங்குகள் தங்கள் நீண்டகப்பல்களில் வந்து கடலிலிருந்து உவெல்சு மக்களைப் பின்புறமாகத் தாக்கினர்.1
வட இங்கிலாந்திலுள்ள இலேக்குமாவட்டம் ஒர் உதாரணமாகும். அங்கிருக்கும் பெரும் பாலான இடங்களின் பெயர்கள் நோசுப் பெயர்களாகவேயிருக்கின்றன ; ஒன்றிரண்டு இடங்கள் கெலித்தியப் பெயரைப் பெற்றிருக்கின்றன. ஆதி ஆங்கில சட்சன் பெயர்களைக் காணவே முடி யாது. வைக்கிங்குகள் என்று வழங்கப்படும் கந்தினேவியக் கடற்கொள்ளைக்காரர் முக்கியமாக 900-1,000 ஆகிய காலப் பகுதி பில் சொல்வேக்கழிமுகத்தாலும் வெனசுப்பகுதி பிலிருந்த டொங்குமுகங்களினூடாகவும் உட்புகுந்தனர். அவர்கள் இலேக்குமாவட்டத்திலிருந்த அகன்ற பள்ளத்தாக்குக்களிற் குடியேறினர். முதன்முதலாகப் பள்ளத்தாக்குக்களின் அடியிடங்களை வற் றச்செய்து அவற்றைப் பண்படுத்திப் பயிர்செய்தவர்கள் அம்மக்களே. அவர்கள் விருத்தியாககிய விளைநிலங்கவே இன்றும் அப்பகுதிகளிற் பரந்திருக்கின்றன. பழைய கெலித்திய இனத்தினர் வெறுமையான மலைச்சாரல்களிலிருநத சமமான கரம்பை நிலங்களில் வாழ்ந்தனர். இன்றும் ஒருவரும் வசிக்கவிரும்பாத இடங்களிலேயே அவர்கள் விட்டுச்சென்ற அடையாளங்கள் காணப்படு கின்றன. அவர்கள் முற்றக அழிக்கப்படவில்லை; உண்மையைக் கூறுங்கால் சிறிது காலத்துக்கு முன்வரை வெற்புக்களிலிருந்த ஆடுகள் கெலித்திய எண்முறையாற்ருன் கணக்கிடப்பட்டு வந்தன. ஆதலால் நோசுக்கமக்காரர் கெலித்திய் மக்களை மந்தைமேய்க்கும் அடிமைகளாக வைத்திருந்தனர் என்று அனுமானிக்கலாம்.

கெலித்திய இனத்தின் அழிவும் ஆக்கமும் è星
கிழக்கையொட்டிய பழைய சட்சன் குடியிருப்புக்களிலும் பார்க்க வெசெட்சிலும் மேசியாவிலும், மொழிமாற்றமடைந்திருப்பினும், கூடிய தொகையான உவெல்சு மக்கள் உயிர்பிழைத்திருந்தனர். 693 ஆம் ஆண்டளவில் தோசெற்று, சொமசெற்று ஆகிய பகுதிகளும் வெசெட்சினுள் அடங்கியிருந்தன. அக்காலத்தில் சட்சன் அரசனன அயின் அதிகாரம் செலுத்தினன். அவ்வரசன் இட்டசட்டங்கள் உவெல்சு மக்கள் என்னும் புறம்பான ஒரு வகுப்பினரின் உரிமைகளை அங்கீகரித்திருந்தன. உவெல்சு இனத்தவருட் பலர், நிலங்களைப் பெற்றும் அரசனின் சேனையிற் சேவை செய்தும் வந்தனர். கெந்து, கிழக்கு அங்கிலியா ஆகிய இடங்களிலும் ஒரளவு உவெல்சு இரத்தம் உவெல்சுப் பெண்கள் வாயிலாகக் கலந்தி ருத்தல்வேண்டும். முதற் குடியேறிய யூத்தேய, ஆங்கில-சட்சன் இனத்த வர்கள் அனேகம் பெண்களைக் கூடவே கொண்டு வந்தனர் என்று கூற முடியாது. ஆகவே அவர்கள் உவெல்சு அடிமைப் பெண்களுடன் உறவாடி யிருப்பர்.
சட்சன் தாக்குதலிலே தப்பிய உவெல்சு மக்களின் தொகையை நிச்ச யிக்க முடியாது. சட்சனிய இங்கிலாந்திற் பேசப்பட்ட மொழியிற் கெலித்தியக் கலப்பு அருகியே காணப்பட்டது. ஐந்து, அல்லது ஆறு சொற்களே இடம் பெற்றுள. இவ்வாதாரத்தைக் கொண்டு உவெல்சு மக்கள் முற்றக நலிந்துபோயினர் என்றே ஊகிக்கத்தோன்றும். எனினும், இவ்வாதாரம்பற்றி அம்மக்கள் முற்றக அழிந்து போயினர் எனக் கொள்ளலும் அமையாது. ஏனெனில் கெலித்தியரின் இருப்பிடமாகிய அயலாந்திற் கூட ஆங்கிலமே பேசப்பட்டு வருகின்றதாதலின். அதற்குப் பாடசாலைகளும் அச்சியந்திரமும் காரணம் எனச் சிலர் கருதல்கூடும். அப்படியானல் அதிகப்படியான கெலித்திய இரத்தம் கலக்கப்பெற்ற தென் மேற்குக் கொத்துலாந்து வாசிகள் மத்திய காலங்களிலேயே ஆங்கிலத்தைத் தமது மொழியாக எற்றுக் கொண்டனர் என்ற உண்மையை நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். கொத்துலாந்தில் வாழ்ந்த மிலேச்சக் கெலித்தியர் ஆங்கிலத்தைப் பேசிய காலத்தில், கொத்து மக்கள் தானும் படிப்பறிவில்லா மக்களாயிருந்தனர். .
உவெல்சு மக்கள் பெருந்தொகையினராய்ப் பிழைத்து வாழவில்லை என்பதை நிறுவுதற்குப் பிறிதுமொரு நியாயமுண்டு. அது யாதெனில் ஆங்கில இடப்பெயர்கள் நோதிக்கு மரபினவாய் இருத்தலேயாம். சில இயற்கைத் தோற்றங்களின் பழைய பெயர்கள் சிறிய அளவிற்கு மட்டும் சட்சன் பெயர்களால் மாற்றமடைந்தன. உதாரணமாக, பள்ளத்தாக்கிற்கு * கூம் ” என்றும் சில குன்றுகளுக்கும் நீரோட்டங்களுக்கும் “பிதென்” * எவன் ’ என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. கெந்து,"இலிந்துசி” போன்ற ஆதி ஆங்கில-சட்சன் பகுதிப் பெயர்களும் பழைய கெலித்தியப் பெயர்களையே ஞாபகப்படுத்துகின்றன. ஆனல் வழக்கமான உவெல்கப்

Page 41
62 உரோமானியர் விட்டுச் சென்றவை
பகுதிகளுக்கு வெளியேயுள்ள கிராமங்களும் குடிமனைகளும் சட்சன் பெயர் களேயே அனேகமாகப் பெற்றிருக்கின்றன. நோதிக்கு வெற்றியாளரின் ஆட்சியில் நாடு முற்றக நிலைகுலைந்து புத்தமைப்புப் பெற்றமையை இவ்வுண்மை எடுத்துக்காட்டும். என்றலும் நாம் கவனமாகவே எம் முடிவுக்காயினும் வரல் வேண்டும். ஒராங்கில-சட்சன் விகுதிப் பெயர் ஒரு கெலித்தியப் பகுதிப் பெயரைத் தன்னகத்துக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, திரம்பிங்கிதன் என்ற பெயரில் “திரம்பு’ என்பதும் மாதிங்கிலி என்ற பெயரில் “மாது’ என்பதும் கெலித்திய அடிகளாகும். தூய சட்சன் பெயர்களாகிய உவொல்தன், உவோலிந்தன், உவோலுவேது ஆகியவையும் நோதிக்குப் பெயராகிய பேக்குபியும் உவெல்சு மக்களின் அல் லது பிரித்தானியரின் இருப்பிடங்களைக் குறிப்பனவாகக் கருதப்படுகின்றன.
சேர்மன் அல்லது கந்தினேவிய இனங்களைப் போலல்லாது ஆங்கில இனம் ஒரு கலப்பினமாகும் : கலப்பு வீதம் எவ்வாருயினும் பிரதானமாக நோதிக்குக் கலப்பேயதிகமாகும். ஆங்கிலேயர் என்று அழைக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள் யாவரும் கெலித்திய இரத்தமும் அதனிலும் பழைய ஐபீரிய இரத்தமும் கலக்கப் பெற்றவர்களாவர். இவ்வுதிரக் கலப்பே ஆங்கிலக் குணத்தை நிர்ணயித்துமிருக்கும். தற்கால ஆங்கிலேயருக்கும் சேர்மன் மக்களுக்குமிடையில், அல்லது ஆங்கிலேயருக்கும் கந்தினேவிய மக்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம் யாதெனில், தனித் தன்மை வாய்ந்த பிரித்தானியக் காலநிலையில் ஆங்கில மக்கள் பல நூற்றண்டுகளாக வாழ்ந்தமையாகும். அன்றியும் 1066 ஆம் ஆண்டி லிருந்து அன்னியர் தாக்குதல்களிலிருந்து நன்றகக் காப்பாற்றப்பட்டு வந்த பிரித்தானியா அளித்த சமுதாயக் காப்பும் அரசியற் பலமும் பிறிதொரு காரணமாகும். இன்றும் ஆங்கிலக் கவிதை மரபு கெலித் தியரின் கட்டுக்கமையாக் கற்பசைத்திக்குக் கடமைப்பட்டிருக்கின்றது ; கெலித்தியக் கற்பனையும் நோதிக்குக் கவிதையுணர்ச்சியும் நல்லறிவும் கலக்கப்பெற்றதே ஆங்கிலக் கவிதையின் மரபு என்று எண்ணுவதுண்டு. உவெல்சு மக்களும் சட்சன் இனத்தவரும் போர் விளைத்த செவேண் பள் ளத்தாக்கிற்கு அருகாமையிலுள்ள ஒரு சயரிலேயே செகப்பிரியர் பிறந்தார் என்ற உண்மையும் இங்குக் கருதற்பாலது. ஆனல் இத்தகைய எண்ணக் கருத்துக்களெல்லாம் கற்பனையின்றி வேறில்லை. இக் கற்பனைக்கும் உண் மைக்கும் இடையிலுள்ள தொடர்பு உறுதிசெய்ய முடியாததொன்றகும்.
கெலித்தியர் மங்கிய ஒளியுடன் நிலைத்திருக்க, உரோமரோ பிரித்தானி யாவின் வரலாற்றிலிருந்து மறைந்தொழிந்தனர். இவ்வாறு மறைந்த வர்கள் மூன்று பொருட்களை நிலையான சாதனங்களாக விட்டுச் சென்றனர் என்று முன்பு கண்டோம். அவையே பரம்பரையாக இலண்டன் மாநகரம் அமைந்துள்ள தானம், உரோமன் பாதைகள், உவெல்சுக் கிறித்துவ மதம் ஆகியன.

உரோமானியர் விட்டுச்சென்றவை 68
சட்சனியரின் படையெடுப்பு உக்கிரமான கட்டததை அடைந்தபோதும் இலண்டன் எப்பொழுதாவது முற்ருகக் கைவிடப்பட்டதோ அல்லவோ என்பது விவாதத்திற்குரிய விடயமாகும். இலண்டன் ஒருகாலத்தே கைவிடப் பட்டிருத்தலுங்கூடும். எவ்வாறயினும், எப்பொழுதாவது கைவிடப்பட்டி ருப்பினும் ஓரளவு சிறந்த சட்சன் நகரமாக அது வெகுவிரைவில் நிலை நாட்டப்பட்டது. எனெனில் பீட்டின் காலத்திலே (கி. பி. 700) நிலை பெற்றிருந்த வாணிகவமைப்பிலே இலண்டன் மீண்டும் ஒரு சிறந்த வர்த்தக நிலையமாக விதந்துரைக்கப்பட்டதாதலின். இலண்டன் மாநகரத் தை நிறுவியோர் உரோமரேயென்னல் அமையும். அவர்களால் அமைக்கப் பட்ட பாதைகள், கப்பலோட்டற்கு இசைவாயிருந்த தேமிசு நதியை நடுநிலைய மாகக் கொண்டிருந்தன. அதனுல் இலண்டனின் வர்த்தக அபிவிருத்தி நிச்சயமாயிற்று. ஏனென்றல் உரோமர் இங்கிலாந்தை விட்டுச் சென்ற காலை தம் பாதைகளை இங்கிலாந்திலிருந்து எடுத்துச் செல்லவில்லையாதலின் !
பாதைகளை அமைத்துதவிய உரோமர் சென்ற பின்னரும் அப்பாதைகள் முதன்மைவாய்ந்து விளங்கின. எவ்வாறெனில், 18 ஆம் நூற்றண்டில் ஆயக் கதவு முறையைத் தழுவிப் பாதைகள் அமைக்கப்படும்வரை உரோமர் விட்டுச் சென்ற பாதைகளே உறுதியானவையாய் விளங்கின வென்க. அக்காலம்வரை உறுதியான பாதையொன்றும் அமைக்கப்படா தது அவதானிக்கத்தக்கது. இருட் காலத்திலும் மத்திய காலத்தொடக்கத் திலும் ஒற்றுமையின்றிப் பற்பல மிலேச்சப் பகுதிகளாகச் சிதறிக் கிடந்த பிரிவுகளையெல்லாம் உரோமன் பாதைகளே ஒன்று சேர்த்தன. அததுடன் சட்சன், தேனிசு, நோமன் வெற்றிகளை உரோமன் பாதைகளே துரிதப் படுத்தின. மேலும், போர்க்காலங்களிலும் அமைதிக்காலங்களிலும் இங்கிலாந்தைத் தனியோர் அரசாக ஐக்கியப்படுத்தற்கும் ஆங்கில நாட்டினத்தை உருவாக்குதற்கும் சட்சன் நோமன் அரசர்க்கு உதவியவை அப்பாதைகளே. சுதுவட்டுக் காலத்திற் கிளைவீதிகள் அனேகமிருந்தன வெனினும் சட்சன் காலத்து எழிராச்சியங்களிலேயே சிறந்த பெருவீதிகள் மிக்கிருந்தன. அப்பாதைகள் உரோமர் விட்டுச்சென்ற அரும்பெறலுரிமையே. உரோமர் அமைத்த, கல்லாலாய நீரிடைப் பாதைகள் அனேகமாக நிலத்திலிருந்து சில அடிகளுக்கு உயர்த்தப்பட்டிருந்தன. அவை ஒரு கடலிலிருந்து மற்ருெரு கடல்வரை கட்டப்பட்டிருந்தன. பெரும்பான்மை யும் உயர் நிலமீதே சென்ற அப்பாதைகள் வேண்டிய விடத்துச் சதுப்பு நிலங்களையும் காடுகளையும் கம்பீரமாகத் தாண்டிச் சென்றன. கவனிப் பின்மையாற் பலத்த பாலங்கள் பாழடைந்தவிடங்களிலும் கற்பதித்த ஆற்றுத் திடர்வழிகள் எஞ்சியிருந்தன. சீசரை ஒரு கற்பிதப் புருடனுக மட்டும் கருதியிருந்த மிலேச்சக் குலத்தினர் அவனற் கட்டப்பட்ட பிரமாண்ட மான பாதைகளைப் பல நூற்றண்டுகளாகத் தடையின்றிப் பயன்படுத்தி அவற்றை உவதுலிங்குத் தெரு, எமின் கெரு, பெசுவழி போன்ற மனேகற்பிதப் பெயர்களால் வழங்கினர். காலப்போக்கிற் கற்கள் பூேழிறங்கத்

Page 42
64 உரோமன் வீதிகள்
தொடங்கின. கற்களை மீளவமைத்துப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு எண்ணவில்லை, அக்காலத்துச் சாவதானமற்ற அறிவிலிகள். அடுத்து, பாறைகளைக் கற்கள் பெறுவதற்கென அகழத்தொடங்கினர் ; மத்திய கால ஆங்கிலேயர் வீடமைப்பதற்கு மரமின்மையால் கல்லினல் வீடுகளையமைக்கத் தொடங்கினர். பாதைகளையே அவர்கள் கற்குழிகளாய்க் கருதினர். பெரும் பாதைகள் குதிரைகளின் காலடிப்பாதைகளாக ஒடுங்கி இறுதியில் கரம்பை நிலங்களாகவும் கமங்களாகவும் மாறின. இப்படி அழிந்தொழிந்த பாதை களிற் பல பிந்திய காலங்களிலே திருத்தப்பட்டும் புதுக்கப்பட்டும் வந்தன. உரோமன்சேனை சென்ற பாதையில் இன்று மோட்டர் வண்டி விரைந்து செல்கின்றது. இனி, பாதைகள் மறைந்துவிட்ட பிற சிலவிடங்களில், நடந்து செல்லும் சட்சணியர், அல்லது பிரித்தானியர் இன்றும் பயன் படுத்தும் ஒழுங்கைகள் தோன்றியுள. அவை பச்சைப் பசேரென்றிருக்கும் சந்து வழிகளாகவே இன்றும் இருக்கின்றன ; அவை எங்கே தொடங்கி எப்படி முடிகின்றன என்பது எவருக்கும் தெரியாது. பலமைல் தூரத் திற்கு ஒடுங்கி நீண்டிருக்கும் அவ்வழிகள் மோகனக் காட்சிதரும் பழைய ஆங்கிலக் கிராமங்களுக்கூடாக நுழைந்து செல்லும் காட்சி கண்டு களிப்பதற் குரியதாகும்.
உரோமர் விட்டுச்சென்ற அரும்பெறலுரிமைகளுள் மூன்றவதாகக் கருதத்தக்கது உவெல்சுக் கிறித்துவமதமாகும். அவர்கள் பிரித்தானியாவுட் கடைசியாகப் புகுத்தியது கிறித்துவமதமே ; எனினும் உரோமநாகரிகத் துக்கே சிறப்பியல்பான நிறுவகங்கள் பல இந்நாட்டுள் முந்திப் புகுந்த ப்ோதிலும், பிந்திப் புகுந்த கிறித்துவ மதமே நிலைபெற்று நின்றது. உரோமானே பிரித்தானியச் சமுதாயத்தைத் தொல்பொருளியல் வல்லுநர் வடித்தாராய்ந்தபோது கிறித்துமதச் சுவடுகள் சிலவற்றையே கண்டு பிடித்தனர். அதனலேயே கிறித்துமதம் மட்டும் தனியோர் உரோமவாட்சிச் சின்னமாக உவெல்சு மக்களிடம் வேரூன்றியிருந்தது அற்புதமானது. அதற்கு ஒரு காரணமுண்டு. உரோமரின் படையாட்சிமுறையும் அரசியல் அமைப்பும் பிரித்தானியாவை விட்டு நீங்கியபின்னர் மீண்டும் திரும்பிவர வில்லை ; ஆனல் கிறித்துமதத்தூதர் இலத்தீன் மயமான ஐரோப்பாக் கண்டத்திலிருந்து இடைவிடாது பிரித்தானியாவுட் சென்று இருளில் இன்னற்படும் உவெல்சு மக்களுக்கு ஆதரவளித்தனர்; நோதம்பிரியா மதில் உடைந்தபோதும், மிகுதிசு, கொத்திசு இனத்தவர்கள் வடக்கிலும் மேற்கிலும் இருந்து தாக்கியபோதும், சட்சன் மக்கள் தெற்கிலும் கிழக்கிலு மிருந்து விரட்டியபோதும் உவெல்சுமக்களுக்கு உற்சாகமளித்தவர்கள் இம் மத தூதரே. நாகரிகமுற்ற பிறநாடுகளெல்லாம் நடுத்தெருவில் விட்ட உவெல்சு மக்களைக் கிறித்தவர்கள் மறக்கவில்லை. மததுரதரிலே தலை சிறந்தவர் சென் சேர்மனசு ஆவர். அப்பெரியாரே 430 ஆம் ஆண்டில் பிகுதிசு, சட்சன் இனத்தவர்களின் ஒன்றுசேர்ந்த படைப்பலத்தை யெதிர்த்து “ அல்லேலூயா வெற்றி ’ ஈட்டிய பெரும்வீரராவர். ஒருகால்,

உவெல்சுக் கிறித்துவம் 65
கோலிற்சிறந்த உரோமவீரனுகக் கடமையாற்றிய சேர்மனசு பிரித்தானி யாவிற் பெலேசியன் புறநெறியாளரை அடக்குவதற்கென அனுப்பப்பட்டா ரெனவும், அவர் தமது பழைய தொழிலில் ஈடுபட்டு, டயந்திருந்த பிரித்தானியருக்குத் தலைமை தாங்கித் தாக்கும் புறச்சமயிகளைப் பொது வெற்றி கொண்டாரெனவுங் கதை கூறுகின்றது. எமக்குத் தெரியாத ஒரு சம்பவத்தைக் குருவாயத்தினர் மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம். எனினும் அக்காலப் போக்கினைச் சிறப்பாக எடுத்துக்காட்டுவது இச்சரிதை ; அக் காலப் போக்கினைப் பிரதிபலிக்குஞ் சின்னம் அது எனினும் மிகையாகாது. உரோமப்படை வீரரும் அதிகாரிகளும் பின்வாங்கியகாலத்தில் அறியாமையில் மூழ்கியிருந்தனர் பிரித்தானியர். அப்பிளவை நிரப்பிப் பிரித்தானியருக்கு வழிகாட்டியவர்கள் அறிவும் ஆற்றலும் மிக்க மததூதர்களாவர். உரோம வாட்சியின் கடைசிக்காலத்திலும் கிறித்துமதம் உவெல்சு மக்களின் உத்தி யோகமுறையான மதமாகவிருக்கவில்லை. ஆயின் உவெல்சு மக்கள் அல்லற்பட்ட சமயத்திலேயே கிறித்துமதம் அவர்களிடை வேரூன்றியது. இவ்வாறே, பதிதரான தேனிசுமக்களும் நோசுமக்களும் வந்து நெருக்க அல்லற்பட்ட சட்சணியரும் தாம்புதிதாய் எற்ற கிறித்துவமதத்தை ஊங்கிய பற்றேடு எவ்வாறு தழுவினரென்பதைப் பின்னர்க் காண்போம். தற்கால ஆங்கிலத் தேவாராதனை ஒழுங்கில் இருக்கும் ‘தேவரீரே அல்லாமல் எங்களுக்காக யுத்தஞ் செய்வார் ஒருவருமில்லை.” ஆதலால் “ ஆண்டவரே எங்கள் காலத்தில் அமைதியைக் கொடுத்தருள்வீராக’ என்ற பிரார்த்தனை ஒரு நூதனமான அடி நாதத்தையுடையது. கிறித்தவர்களின் கடவுளே உற்ற ஒருதுணை என்றே அப்பிரார்த்தனை கருதுமாபோற் காணப்படுகின்றது. ஆனல் பிழையான வழியிற் சென்றுகொண்டிருக்கும் உலகத்தில், அக் கடவுள்தானும் பூரணமான ஒரு காப்பாகக் கருதப்படவில்லைப்போலும். ஆனல், 5 ஆம் நூற்றண்டிற் சட்சன் இனத்தவரால் அபகரிக்கப்பட்ட உவெல்சு மக்களுக்கோ, 9 ஆம் நூற்றண்டில் தேனிசு மக்களால் அபகரிக்கப்பட்ட சட்சன் மக்களுக்கோ அப்பிரார்த்தனை அப்படியே பொருத்த மானதாய்த் தென்பட்டிருக்கும்.
அந்நிலையில் 5 ஆம் 6 ஆம் நூற்றண்டுகளில் வாழ்ந்த உவெல்சு மக்கள் கிறித்து மதத்தையே தமது சிறப்புச் சின்னமாகப் போற்றிப் பேணினர். மேலும் அவர்கள் பாணரின் இசையிலும் கவிதையிலும் பெருவிருப்புக் கொண்டிருந்தனர். ஆகவே தம்மைச் சமவெளிகளிலிருந்து துரததி * காட்டுஉவேல்சின்’ மலைகளிலும் கரம்பை நிலங்களிலும் ஒதுக்கிய சட்சன் மிலேச்சரிலும் தாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணினர். உவெல்சு மக்களோடு பழகிப் பயின்ற பழைய பாணனெருவனது பாடல் ஒருகால்
அப்பிரார்த்தனை எக்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது g5d fuloitats தெரியாது; என்றலும் 11 ஆம் நூற்றண்டிற்கு முந்தியதன்றெனக் கூறலாம்.

Page 43
66 உவெல்சுக் கிறித்துவம்
ஆதிப் பிரித்தானியாவை ஆண்ட இனத்தவரைப்பற்றித் தீர்க்கதரிசனங் கூறுவதுபோல் அமைந்துள்ளது :-
தம் ஈசனைப் போற்றும் சாதியினர், தம்மொழியைக் காக்கும் இனத்தவர், நாட்டை இழக்க நேர்ந்தாலும் காட்டு வேல்சைப் பேணும் பெற்றியர்.
தொலைவிலிருந்த மேற்கு உவேல்சு அல்லது கோண்வாற் குடாநாட்டி லும் இதேமுறையிலேயே கெலித்தியக் கிறித்து மதம் வளர்ச்சியுற்றது. ஆங்கு வெள்ளியம் விளையும் கரம்பை நிலங்களிலும் மலைக்குகைகளை நோக்கிப் பாயும் நதிகளை அண்டியும் மதகுரவர் கூட்டமொன்று, உலகத்தில் வேறெந்தக் கிறித்தவர்களும் அறியாவண்ணம் வாழ்ந்து கோண்வாற் கிராமங்களுக்குத் தன் பெயர்களை விட்டுச் சென்றது. அக் கூட்டத்தவரின் பெயர்களைக் கொண்டிருக்கும் கிராமங்கள் பிரித்தானியப் பண்பாட்டின் அழிவையும் பிரித்தானியக் கிறித்துமதம் மரணத்தின் மடி யில் மீண்டும் புத்துயிர் பெற்றுப் பலமடைந்த தன்மையையும் விளக்கும் ஞாபகச் சின்னங்களாகும். கோண்வாலின் வீரகால வரலாறு அழிந்து போனபோதிலும் அவ்வபலாறு பெரும்பாலும் கடலைச் சார்ந்ததாகவே இருந்திருக்கும். ஏனென்றல் கோண்வாலின் வரலாறும் கோண்வாலுக்கு எதிர்முகமாய்க் கோலிலிருந்த ஆமொரிக்காப் பகுதியின் வரலாறும் சமய மும் ஒன்றேடொன்று நெருங்கிய தொடர்புடையனவாயிருந்ததனலென்க. சட்சன் தாக்குதல்களுக்கு அஞ்சித் தீவைவிட்டோடிய பிரித்தானியர் ஆமொரிக்காவையே அடைந்தனர். உரோம மயமாக்கப்பட்ட கோலிற்குரிய ஆமொரிக்கா வெகு விரைவில் எற்பட்ட கெலித்தியப் புத்துயிர்ப்புக் காலத் தில் “ பிரித்தனி’யாக மாறிற்று. இலத்தீன் மயமாயிருந்த பிரான்சிய வாழ்க்கைதானும் பிரித்தனியைக் கவர முடியாமற் போயிற்று. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திற்கூட, அங்கிருந்த “ பிரெத்தனியர் ” பிரான்சின் பிற பகுதிகள் அங்கீகரித்த பல மாற்றங்களைப் பலமாக எதிர்த்தனர்.
மூன்றம் அத்தியாயத்து இறுதிக் குறிப்புக்கள்
அவவில்டு எழுதிய “ உரோமர் ஆட்சி. ’ சட்சனிய இனத்தவரில் ஒருவன வது உரோம வாசத்தில் இருந்ததாகத் தெரியவில்லை என்று அவவில்டு கூறுவதை மறுப்பதற்கில்லை. சிறில் பொட்சு “ கேம்பிரிச்சுப் பிரதேசம் ” என்ற நூலில் 282-3 ஆகிய பக்கங்களிற் பின்வருமாறு கூறுகின்ருர் - சட்சன் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமுண்டு. கேம்பிரிச்சைத் தவிர்த்து இலிதுலிங்டன், பாதுலோ, வைமொண்டிலி, இசுத்தான்சதெத்து ஆகிய இடங்களில் உள்ள உரோமவாசங்கள் ஆங்கிலசட்சன் குடியேற்றப் பகுதிகளின் குவிவிலும் அவற்றையண்டியும் நிலைத் திருக்கின்றன. இது தொடர்ச்சியை மட்டும் காட்டுவதாக எண்ணிவிட முடி யாது; பொருளாதார விதிகளின் போக்கு இதற்குக் காரணமாயிருக்கலாம்.

அத்தியாயம் IV மத்தியதரைப் பிரதேசச் செல்வாக்கு மீண்டுந் தோன்றல். கிறித்துவ மத மீட்சி
ஆதிகாலச் சமூகங்கள், அறிவையும் பொருளையும் கட்டுப்பாடான சுதந் திரத்தையும் எப்பொழுதாவது நாடிப்பெற முன்னேறவேண்டின், குடி யாட்சிக்குரிய சமத்துவம் எனும் பாதையில் முதலிற் செல்லாது, உயர் குடியாட்சி, கோன்மை, குருத்துவம் ஆகியவற்றின் வழியே செல்லக் கடமைப்பட்டுள்ளன. பதிதர் குலம் அல்லது கோத்திரம் ஒரளவிற்குச் சமத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்; அவ்வினத்தைச் சேர்ந்தவர்களி டையே காணப்படும் ஏழ்மை எறத்தாழ ஒரேயளவினதாக இருக்கலாம் ; ஆனல், உயரிய நாகரிகத்தையும் தனியாட் சுதந்திரத்தையும் நோக்கி ஒருபோதும் பொதுமக்கள் கூட்டாக முன்னேறிச்செல்ல முடியாது. மனிதர் மொத்தத்தில் மிக வறியவர்களாயிருக்கும் பொழுது, நாகரிக முன்னேற் றத்திற்காகப் பொருள் சேர்க்கப்பட வேண்டியிருந்தால், அவர்களில் ஒரு சிலரைப் பொருள் படைத்தவராக்குதல் அவசியமாகும். அவர்கள் மொத்தத் தில் மிக அறிவற்றவர்களாயிருக்கும் பொழுது, ஒரு சில அறிவாளிகளுக்கு ஆதரவளிப்பதாலேயே முன்னேற்றம் நிகழவியலும். இத்தகைய உலகில், தனிப்பட்டவர்கள் உயர்ச்சி பெறுவதின் மூலமாகவே சமூகவமைப்பென்பது தோன்ற முடியும் ; இத்தகைய வமைப்புச் சிறப்புரிமை பெறுவதன் மூல மாகவே நிலைத்திருக்க முடியும். பீட்டு தன் வரலாற்றுப் பொத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துக்காட்டுவது போல், ஆதிகாலங்களிற் கல்வியறிவும் ஆன்மீக சமயவொழுக்கமும் மூடக் கொள்கையுடனும் பாமரரினும் உயர்ந்தவர் மதகுரு எனும் கொள்கை யுடனும் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்திருந்தன. கடந்த காலத்து இத்தகைய நிலைமைகள், குடியாட்சி முறையும் ஒரளவு விஞ்ஞான வளர்ச்சியும் நிலவுகின்ற இன்றைய உலகிலுள்ள சிலருக்குப் புதுமையாகத் தோன்றினும், இந் நிலைமைகளே ஆங்கிலேய ஆதிவரலாற்று இரகசியத் தின் ஒரு பெரும்பகுதியாக அமைந்துள்ளன. அக்கால வரலாற்றை நன்காராய்ந்த வரலாற்றசிரியர் ஒருவர் வருமாறு கூறுவர் :
நாம் பல நூற்றண்டுகளை மானியமுறைக் காலம் எனக் கொள்வோ மாயின், நிலமானிய முறை எங்கள் வரலாற்றில் இயற்கையாயமைந்த கட்டமாகத் தோன்றுவதோடமையாது அவசியமான ஒரு கட்டமாயுந் தோன் றும். அதாவது, பதினரும் நூற்றண்டு இங்கிலாந்தானது எட்டாம் நூற்ருண்டு இங்கிலாந்திலிருந்து நிலமானிய முறைமைப் பருவத்தை எய்தாது உருவாகியதாயின், மனிதனுடைய இயல்பிலும் அவனது சூழ லிலும் மிகப் பெரிய, அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டுமென நாம் கொளல் வேண்டும். மானியமுறை என்னும்
67

Page 44
68 மன்னன், நிலப்பெருமகன், பிசப்பு
பதத்தை இந்த விரிவான கருத்தில் நாம் கொள்வோமாயின், (மிலேச்சரின் வெற்றிகள் மாற்ற முடியாத உண்மையேயாக இருப்ப) நாகரிகம், உழைப்பு வேறுபாடு, தொழிற் பகுப்பு, நாட்டைக் காக்கும் வாய்ப்பைப்பெறல், கலை, விஞ்ஞானம், இலக்கியம், அறிவு சார்ந்த ஒய்வு என்பவற்றுக்கான வாய்ப்புக்களேற்படல் ஆகிய எல்லாவற்றையும் அப்பதங் குறிக்கும். பரன் களுக்கான அரண் அமைக்கப்பட்டிருந்தது போன்று, கோவிலகமும் ஆச் சிரம எழுத்தகமும் நூல் நிலையமும் மானியமுறைக் காலத்தில் அமைக் கப்பட்டமையாகும். எனவே, பெருநிலக் கிழாரின் நீதிமுறைக்கு உழ வோரை உட்படுத்திய சத்திகள் பற்றியும் அச்சத்திகளினற் கட்டுப்பாடற்ற கிராமத்துக்குப் பதிலாக அடிமைத் தொழிலாளரும் பண்ணைகளுந் தோன் றியதைப் பற்றியும் நாங்கள் பேசவேண்டியிருப்பதால், அவ்வாறு பேசு மிடத்து, நாம் இயற்கைக்கொவ்வாச் சத்திகளையோ பிற்போக்கான நலமற்ற சத்திகளையோ பற்றிக் கூறுவோமல்லேம் ; பெரும்பாலும் இயற்கையான சிறந்த வளர்ச்சிக்குரிய சத்திகளைப் பற்றியே நாம் கூறுவோமாவோம். நாகரிகத்தின் போக்கு பல தடவைகளிற் கடுமையாக இருந்துள்ளதென் பதை மறுப்பதற்கான நன்னம்பிக்கைக் கோட்பாடு எங்களிடம் உண்மை யர்கவே இல்லை ; ஆனல், பதினேராம் நூற்றண்டு இங்கிலாந்து, எறக் குறைய அதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முந்திய எழாம் நூற்றண்டு இங்கிலாந்தைக் காட்டிலும், பத்தொன்பதாம் நூற்றண்டு இங்கிலாந்துடன் நெருங்கிய தொடர்புடையதாய்க் காணப்படுகிறது.
இங்ங்ணமாக, மெயிற்றிலந்து முப்பது வருடங்களுக்கு முன் எழுதினர். ஆங்கில-சட்சனியரினதும் நோமானியரினதும் காலங்கள் பற்றிக் குறிப்பிட முயலும் இந் நூலின் அத்தியாயங்கள் பெரும்பாலும் அவருடைய, * ஆழ்ந்த பேருரையின்’ விளக்கக் குறிப்பாகவே அமைதற்பாலன. கோன்மை, மானியமுறை, திருச்சபையதிகாரம் என்பவை ஒரு பொது இயக்கத்தின் இசைவான பகுதிகளாக ஒருங்கியைந்து வளர்ந்தன. அரசன், நிலப்பெருமகன், விசுப்பாண்டவர் ஆகியோரிடையே ஒரேவழிப் போட்டியிரு ந்த போதிலும், ஒருவர் மற்றவரின் அதிகாரத்தைப் பெரும்பாலும் வளர்த்து வந்தனர். சுயநலங்கருதிச் சமூகத்தைச் சுரண்டி வாழ்ந்த வர்களும் அவர்களே , இனி அச்சமூகத்தைக் காத்தளித்தவர்களும் அவர் களே-அவர்களின்றேல், அச்சமூகம் ஆதரவற்று நின்றிருக்கும். தேனியப் படையெடுப்புக்களுக்கு முன்னும் பின்னுமுள்ள காலம் நிலமானிய முறை யினதும் கோன்மையினதும் வளர்ச்சியை விளக்குதற்குத் தக்க நிலைக் களமாகும். இவற்றின் தோற்றங்களைச் சட்சணிய படையெடுப்புக்காலத்தில் நாம் எலவே கண்டுள்ளோம். அந்தப் படையெடுப்புக்கும் வைக்கிங்கு களுடைய வருகைக்கு மிடைப்பட்ட ஆண்டுகளை அடக்கியுள்ள இந்த அத்தி யாயத்தில், ஆங்கிலேய மக்களுடைய நாகரிக வாழ்க்கைப் பாதையின் முதல் முக்கிய படியாய் மதமாற்றம் அமைந்ததென்பதைப் பாராட்ட நாம் முயலல் வேண்டும்.

கிறித்துவமும் அஞ்ஞானமும் 69
இத்தீவிற் கிறித்துவம் பெற்ற வெற்றியானது மத்தியதரைப் பிரதேச நாகரிகம் ஒரு புதிய உருவிலும் புதியதொரு செய்தியுடனும் இங்கு மீண்டதைக் குறிக்கும். உரோமப் பேரரசின் காலாட்படைகள் வந்து சென்ற கெந்துத் துறைமுகங்கள் வழியாக உரோமானிய ஒகசுதீனும் தாசசு நாட்டுத் தியோடரும் வந்திறங்கினர். இவர்கள் மறைந்துபோன உரோமப் பேரரசின் பணித்துறை முறையைப் பின்பற்றி இங்கு பதவனியொன்றைத் தாபித்தனர்; இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, திருச்சபையின் இப் புதிய குடியியற் சேவையிலிருந்து ஆங்கிலேய மன்னர்கள் தம் இளநாட்டின் தேவைகளுக்கேற்ற அமைப்புக்களையும் பூட்கைகளையும் கடன்வாங்கிக் கொண் டனர். அன்றியும், கிறித்துவமானது, இத்தீவிற்குக் கல்வியறிவின் வருகை யையும் பயிலுவதற்கு இலகுவான இலத்தீன் நெடுங்கணக்கிலுள்ள எழு த்து, வாசிப்புக் கலைகளின் அடிப்படையிலமைந்த அரசியல், சட்டமுறை நாகரிகம் மிலேச்சரிடையே தொடங்குவதையும் குறிப்பதாகும்."
இவைமட்டுமன்றி, நோதிக்கு மக்களின் சிந்தனைக்கேயன்றி புராதன உரோமரின் சிந்தனைக்கும் பெரும்பாலும் அன்னியமான புதிய விடயங்கள் பற்றியும் கிறித்துவங் கூறியது. ஈகை, தாழ்மை, தன்னடக்கம், ஆன்மிக விடயங்கள் பற்றிய சிந்தனை, விழிப்புடையதும் பழிநாணுவதுமான மனச் சான்று, யாக்கையைப் பழிக்கும் முறையில் அதற்கும் ஆன்மாவுக்கு மிடையேயுள்ள வேற்றுமையை வற்புறுத்தல், மறுமைபற்றிய பேரச்சமும் பெருநம்பிக்கையும் இம்மைக்கண் மக்கள் வாழ்க்கையை நித்தலும் இய க்குதல், சமயகுரு பாமரன் ஆகிய இவ்விருவருள் முன்னவன் ஞானி என்பதை ஒரு காரணமாகவும் மூட பத்தியினலேற்பட்ட அச்சத்தை மற் ருெரு காரணமாகவும் கொண்டு சமய குருவுக்குச் சுதந்திர மனிதன் அடங்கியிருத்தல், தமது சித்தாந்தத்தை மிகவாக மதித்தல், அவ்வழி சகோதரத்துவ சன்மார்க்கப் போதனையின் விந்தை விளைவாக, ஒவ்வொரு புறச் சமயியையும் ஒவ்வொரு பதிதனையும் துன்புறுத்துவதாகிய நூதன மதக்கடமையொன்றை மேற்கொள்ளல் ஆகியவனைத்தையும் கிறித்துவம் போதித்தது. கோன்மையையும் மானியமுறையையும் போன்று மத்திய காலச் சமயமும் முற்றிலும் நன்மைபயப்பதாயமையவில்லை. ஆனல், கண் டிப்பற்ற இயல்பையுடைய பழங்கால நோதிக்கு இனத்தவரிடையே இத் தகைய சத்திகளினல் எற்பட்ட விளைவானது, ஆயிரமாண்டுகளுக்குப் பின்
1. சட்சணிய இராச்சியத்தில் கிறித்துவர் வருகையுடனேயே, எழுத்திலுள்ள சட்டங்களும், வரன்முறைக் குறிப்புக்களும் கவிதைகளும் எமக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எனினும் வரலாற்ருசிரியனுக்கு ஒரு மூல ஆதாரம்மட்டும் இடைக்கவில்லை, -பதிதர்ககான சட்சனியர், தம்மவரில் இறந்தவர்களுடன் வைத்துப் புதைப்பவையும், கிறித்துவர் தம் பழக்கத்தில் கைவிட்டவையுமான ஆயுதங்களும் ஆபரணங்களுமே அம்மூலவாதாரங்களாகும். பதிதர்கள் காலத்தில் அதிமுக்கியமாக விளங்கிய கல்லறைகள், கிறித்துவ காலவவதியில் மிகக் குறைந்த சேவை உடையனவாயிருக்கின்றன. நல்ல வாய்ப்பாக இவைகளுக்குப் பதிலாக எங்களுக்கு எழுத்து மூலச் சான்றுகள் உள.

Page 45
70 வடபுலத்துத் தொல் மதம்
னர் தியூடர் காலத்து ஆங்கிலேயரைத் தோற்றுவித்தது; மிக முந்திய காலத்திலிருந்த எம் முன்னேர்களை நிந்திக்காத முறையில் நாங்கள் ஒப்புக்கொள்ளத தக்கது ஒன்றுண்டு : அவர்கள் உவிட்சித்து எனும் பாணன் “தனது கவிதை மடையைத் திறக்கும் “ சட்சனியரின் மது வருந்தும் மன்றங்களிற் சிந்தித்த விடயங்களைக் காட்டிலும் மிகப் பல விடயங்கள் பற்றி மேமெயிற்று விடுதியிற் சிந்திததனர் என்பதாகும்.
ஆதிகால ஆங்கில-சட்சணியருக்குங் கந்தினேவியருக்கும் பொதுமதமாக விளங்கியது ஓடின், தோர் ஆகிய தெய்வங்களை வழிபடுதலேயாம். இம் மதம் முற்றிலும் பாமரர்க்கும் போர்வீரர்ச் குமுரிய மதமாய், தம் ஆன் மாவைப் பற்றி அதிக சிந்தனையோ, கவலையோ கொள்ளாத விவேகம் அதிகமிலாப் பெருந்தன்மையாளரது மதமாய் இருந்தது. அவ்வழிபாட் டின் அரிய புராண வரலாறனது, அவ்வினத்தவரின் நற்பண்புகளான ஆண்மை, வண்மை, சேவையிலும் நட்பிலுமுள்ள பற்றுறுதி, முரட்டுத் தனமான நேர்மை ஆகியவற்றை வற்புறுத்துவதாகவோ, பிரதிபலிப்ப தாகவோவிருந்தது. ஆங்கிலேய இனத்தவரின் குணவியல்பை ஓரளவிற்கு வெளிப்படுததும் இக்கால ஆங்கிலேயப் பள்ளிமாணவரின் சமூகவொழுக்கத் தரங்கள் அவர்களின் இயல்போடு ஒத்தவையாகும். “ கோழைச் செயல் கள் ” என்னும் பதத்தின் கீழடக்கி, இவற்றைச் சாதாரணச் சட்டமீறல் களுக்குப் புறம்பானவையாகக் கருதி, இச்செயல்களுக்குப் பொதுமக்கள் கடுந் தண்டனைகளையும் விதித்தனர். கொலைகாரணுயிருத்தலிலும் கோழை யாயிருத்தல் தீதெனக்கருதப்பட்டது. பொய் சொல்பவனும் மதிப்பையன்றி, அவமதிப்பையே பெற்றன். ஓமரின் காதைகளிலும் பெயோவுல்பு எனுஞ் சரிதையிலும் வருணிக்கப்பட்ட சமூகங்களிடையே பல ஒருமைப்பாடுகளிருந் தும் யாக்கோபு, அல்லது பெருஞ் சூழ்ச்சிக்காரணுகிய ஒடீசியசு போன்றவர் களைத் தம் வீரராக நோதிக்கு இனத்தவர் கருதியிருக்கமாட்டார். ஐசு லாந்துக்குக் கிறித்துவம் வருவதற்கு முன் ஆங்கிருந்த நிசால் போன்ற, வடபாலுள்ள வீரருலகத்தின் அன்புக்குரிய வீரர்கள், “ என்றுமே பொய் பேசாத " காரணத்தால், அவர்களுடைய அயலவராற் போற்றப்பட்டுவந்
தனா .
ஒடினை வழிபட்டவர்கள் கிறித்துவ மதத்துடன் முதலாவதாகத் தொடர்பு கொண்டபோது, ஆதி மதங்கள் அனைத்துக்கும் பொதுவாயிருந்ததான, அடிமைகளையும் சிறைப்பட்டவர்களையும் பலியிடும் வழக்கம் சட்சனிய இங்கி லாந்திலிருந்ததென்பதற்குச் சான்றில்லை யெனினும், கண்டத்திலிருந்து அது முற்றக ஒழிந்து விடவில்லை. ஆடு மாடுகளை, அல்லது குதிரைகளைப் பலியிடுவதும் அதனைத் தொடர்ந்து புனித விருந்துண்டு மதுவகைகளை அருந்துவதும் சாதாரணமாக விருந்தன. இவைகளே போப்பாண்டவர் கிரகோரியின் ஆலோசனைக் கிணங்கத் திருச்சபைக் கொணடாட்டங்களாகவும் * திருச்சபை மது விழாக்களாகவும் " மாற்றப்பட்டன.

வடபுலத்துத் தொல்மதம் 7葛
நோதிக்கு மக்களின் மதம், அச்சந்தரும் மதமாகவோ, பகமைச் சத்திகளைச் சாந்தப்படுத்துவதற்கான மந்திர சத்தியுள்ள ஆசார முறைகளை யுடைய மதமாகவோ இருந்ததில்லை. பாவிகள் அனுபவிக்கும் வேதனை களைச் சித்தரிக்குஞ் சுவரோவியங்களால் தன் கோயில்களை நிரப்புவதற்குப் பதிலாக அம் மதம், மரணத்தைப் பற்றிப் பயப்பட வேண்டாமென மக்களுக்குப் போதித்தது. ஒரு வீரனுக்கும் தேவர்களுக்குமுள்ள தோழமை, வெறும் கொண்டாட்டத்திலும் வெற்றியிலும் மட்டுமன்றி, ஆபத்திலும் தோல்வியிலும் உண்டென்பது அம்மார்க்கத்தின் இலட்சிய மாக இருந்தது. இம்மக்களிடையே நிலவிய ஐதிகமொன்று இவ்விலட் சியத்தை விளக்குவதாகும். விதிவலிக்குத் தேவரும் அடங்கியவரேயாத லின், அவ்விதிவலி காரணமாகத் தேவர்களுக்கு அந்தியகாலம் வந்தடுக்க, உலகமுழுதும் அதனல் அழியத்தலைப்பட, மூண்டெழும் நாசச்சத்திகளி லிருந்து இவ்வுலகை மீட்க முயன்ற வீரர் தீரத்துடனும் விசுவாசத்துடனும் இறுதிவரை போராடி உயிர்துறப்பரென அவ்வைதிகங் கூறும். அது பூரணமான மதமன்றெனினும், இழிவான மதமன்று. நோதிக்கு இன மக்கள் இக்கால நாகரிகத்துக்கும் கிறித்துவத்துக்கும் சிறப்பாக அளித்த இயல்புகளின் மூல தத்துவங்களை அம்மதம் கொண்டுள்ளது.
ஆனல், பழைய சட்சணிய தேனிய மதத்தினைப்பற்றி யாவுங் கூறிய பின்னர், அது முன்னேற்றமடைவதற்கு வேண்டிய மூல தத்துவமற்ற ஒரு மிலேச்ச மதமென்பதையும் அறிதல் வேண்டும். அம் மதத்தைத் தழுவி வந்தவர்கள் தாமாகவே கிறித்துவ மதத்திற்கு மாறியமை மேற் கூறிய உண்மைக்குச் சான்றகும். பழைய மதம், அவ்வினத்தவரின் சிறப்பியல்பை மரபு முறைப்படி வெளிப்படுத்தக்கூடியதொன்றக இருந்த தேயன்றி, அவ்வியல்பை இயக்கக்கூடிய வெளிச் ச்த்தியாக இருந்ததில்லை. கல்விக்கோ, கலைக்கோ அது நலன் யாதும் செய்யவில்லை. அது பணி வையோ, அன்புடைமையையோ, கடினமான எவ்வியல்பையுமோ போதிக்க வில்லை. அப்பழைய வழிபாடு எவ்வுருவிலும் மத அபிமானத்தை வளர்க்க வில்லை. அது பொறையுடையதாக விருந்தது. ஆங்கில-சட்சனியரை மத மாற்றுதற்குப் மதப் பிரசாரம் செய்பவர் எவரும் உயிர்த்தியாகஞ் செய்யுமாறு துன்புறுத்தப்பட்டாரென்பதற்குச் சான்றில்லை. கிறித்துவத்தின் தாக்குதலை, எதிர்க்குமுகமாக ஆங்கிலப் பதிதரிடம் சிறந்த பாதுகாப்போ, சிறப்பற்ற பாதுகாப்போ இருக்கவில்லை. சிதறுண்டிருந்த அம்மத குருமார் கூட்டு ணர்ச்சியுடையராகவோ சிறப்புரிமைகள் உடையராகவோ இருந்ததில்லை. போலைனசு என்பார் நோதம்பிரியாவைச் சேர்ந்த எட்டுவினுக்கு முதன் முதற் போதித்த காலை, யோக்குசயர் பகுதியிலுள்ள ஒடின் வழிபாட்டைச் சேர்ந்த உயர் குருவாகிய கொயிபீ என்பார் தம் தெய்வங்களுக்குத் தாம் செய்த சேவைகளுக்குக் கைமாறகத் தாம் யாதும் பெற்றதில்லையென்றும்,

Page 46
72 மதங்களிடைப் போட்டி
அரசவையிற்கூடத் தமக்கு முதலிடம் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்து தாம் காப்பாற்றி வந்த புனித ஆலயத்தைத் தகர்ப்பதற்காக மக்களுக்குத் தாமே தலைமை தாங்கி உடனடியாக விரைந்து சென்றர்.
கிறித்துவத்தைத் தழுவுவதற்குச் சாதகமாக அதே உவிற்றணில் எட்டுவின் அரசனின் நிலப்பெருமக்களிலொருவன் ஆற்றிய மற்றெரு சிறந்த சொற் பொழிவைப்பற்றி பீட்டு என்பார் குறிப்பிடுகிறர்.
அரசே ! உலக மக்களின் இவ்வாழ்வை, அறிய முடியாத அந்தக்காலத் தோடு ஒப்பிடுங்கால் , அது விரைவாகப் பறந்துசெல்லும் ஒர் ஊர்க்குருவியை ஒத்ததாகும். நீர் உம்முடைய எள்களுடனும் நிலப்பெருமக்களுடனும் மாரிக் காலத்தில் இராப் போசனத்திற்காக அமர்ந்திருக்கும்போது, உமது வீட்டி ஜடாக அக் குருவி பறந்து செல்கின்றது. அப்போது மாரிக்காலக்காற்றுடன் மழையோ, பனியோ வெளியில் இரைந்து கொட்டுகிறது. ஒரு கதவின் வழியாக நுழைந்து விரைவிலே மற்றெரு கதவின் வழியாக வெளியே பறக்கும் அக்குருவி வீட்டினுள் இருக்கையில் மாரிக்காற்றுக்குத் தப்பித்துக் கொள்கிறது. ஆனல், உவப்பான வானிலையைச் சிறிது பொழுது கண்ட பின்னர் அக்குருவி உடனே உன் பார்வையினின்றும் மறைந்துபோய் மீண்டும் மாரிமழைக்குட் சென்று விடுகின்றது. அதுபோல, மனிதனுடைய இவ்வாழ்வு சிறிது காலத்தினதாகவே தோன்றுகின்றது. ஆனல், இவ்வாழ்வைத் தொடர்ந்து வருவதையோ, இதற்குமுன் சென்றுபோன தையோ எதையும் நாமறிவதில்லை. எனவே, இப் புதிய கோட்பாடு நிச்சயமாக நடப்பவை சில பற்றி எமக்குச் சொல்லுமாகில் அது கடைப்பிடிக்கத்தக்க தேவையெனத் தோன்றுகின்றது.
உலகத்தோற்றம் பற்றிய தெளிவான கருத்துக்களையும் வீட்டை எங்ங்ணம் அடைவது, நரகத்தை எங்ங்ணம் தவிர்ப்பது என்பவை பற்றிய திடமான கோட்பாடுகளையுங் கிறித்துவமதங் கொண்டுள்ளமையால், அம்மத தூதர் அம் மதத்தைப் பரப்புவது எளிதாயிருந்தது. தெளிவான இத்தகைய சித்தாந்தங்களை அம்மதம் உடையதாயிருக்க, பழையமதமோ மறுவுலக வாழ்வைப் பற்றிய வழக்கமான மூடக் கொள்கைகளை மட்டுமே தெளிவற்ற கவிதை வடிவிற் கொடுத்தது. இத்தகைய கொள்கைகளுக்கு உதாரணமாக எரிந்த நிசால் என்னும் ஐசுலாந்துக் கதை அமைந்துள்ளது. அண்மையிற் கொல்லப்பட்ட வீரனகிய கன்னர் என்பான், அவன் சமாதியைச் சுற்றிக் கிடந்த கற்குவியலுக்குள்ளிருந்து, தான் செய்த இறுதிப் போராட்டம் பற்றிப் பாடியதை அவன் மகனகிய ஒக்கினி கேட்டுக் கொண்டிருந்தானென அக்கதை கூறுகிறது.
ஒருநாள் மாலை, சாப்பீடின், ஒக்கினி என்பார் இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்று கன்னர் என்பானின் சமாதியைச் சுற்றிக்கிடந்த கற்கு வியலுக்குத் தெற்கே நின்றனர். திங்களும் விண்மீன்களும் தெளிவுடன்

மதங்களிடைப் போட்டி 73
ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஆனல், அடிக்கடி முகில்கள் அவற்றை மறைத்துக்கொண்டிருந்தன. திடீரெனச் சமாதியின் கற்குவியல் திறக்க, அங்கு யாரோ எழுந்து நிற்பதாக அவர்களிருவரும் கண்டனர். அதோ ! கன்னர் அச் சமாதியின் கற்குவியலிற்றேன்றித் திங்களைப் பார்த்தான். அவ்விருவரும் அக் கற்குவியலில் நான்கு விளக்குக்கள் எரிந்துகொண்டி ருப்பதாகக் கண்டனர். அவைகளில் ஒன்றிலிருந்தாவது நிழல் பரவவில்லை. கன்னர் களிப்புடனும் மலர்ந்த முகத்துடனும் இருந்ததை அவர்கள் கண்டனர். அவ்விருவரும் இன்னும் மிகத் தூரத்திலிருந்திருப்பினும் கேட்கத்தக்க அளவிற்கு ஒரு பாட்டை உரத்துப் பாடினன்.
அவன் வரைவின்றிக் கொடுக்கும் கொடையாளி அகோர யுத்தம் வந்தக்கால் அடைமழை தானும் வந்ததுவே மலர்ந்த முகமும் அழுந்திய மார்புமே கொண்டு ஒக்கினி தந்தை விதியை இதமாய் வரவேற்றன் அவன்தன் தலையில் கவசம் அணிந்து கொண்டு யுத்தக் கேடயமும் தூக்கிச் சொல்வான் :
* யான் யுத்தத்தி லிறங்கி உயிர் நீப்பேன்
எதிரிக்கு அங்குலம் விடுவதை விடச் சீக்கிரம் மரிப்பேன் ஆம் ! எதிரிக்கு அங்குலம் விடுவதைவிட விரைவில் இறப்பேன்’
இதன்பின் அச் சமாதிக் கற்குவியல் மீண்டும் மூடிக்கொண்டது.
இப்பாடல், தொன்மையுஞ் சிறப்பும் வாய்ந்த அப் பதித சமுதாயத்தின் இறுதிப்பாடலாகக் கொள்ளத்தக்கது. இதற்குச் சில வருடங்களுக்குப்பின் கிறித்துவ போதகர் நோதிக்குக்களின் பதித இராச்சியத்திலிருந்த பலம் பொருந்திய இடங்களிலொன்றகிய ஐசுலாந்துக்கு வந்தபோது, உண்மை, யுரைப்போனகிய நிசால் உட்பட, அத்தீவிலிருந்த சிறந்த மனிதரனைவரும் அப்போதகருக்குத் துணைசெய்வதாக வாக்களித்தனர்.
ஆங்கில-சட்சணியரது பதித இராச்சியம் கந்தினேவியராட்சிக்கு நானூறு வருடங்களுக்கு முன்பே அழிந்து போயிற்று கிறித்துவ செல்வாக்கு தென் மாக்கு, நோவே, ஐசுலாந்து ஆகிய நாடுகளிற் பரவுவதற்கு அதிக காலத் திற்கு முன்னரே, புவியியற் காரணங்களால் இங்கிலாந்து அச் செல்வாக் குக்கு உட்படலாயிற்று. ஏழாவது நூற்றண்டில் வடக்கிலும் தெற்கிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதொரு தீவிர இயக்கத்தால் ஆங்கிலேய உவோடன் மதம் தாக்குண்டு வீழ்ச்சியுற்றது. அவ்வியக்கம், கொத்துலாந்தினின்று வந்த கொலம்பா, எய்தன் என்பவர்களது மதமும் உரோமினின்று வந்த கிரகோரி, ஒகத்தீன் ஆகியவர்களது மதமுஞ் சேர்ந்ததே ஆகும். மேற் கிலிருந்தே அத்தகைய தாக்குதல் நிகழும் என்பது அக்காலத்தில் எதிர்

Page 47
4 பற்றிக்கு அடிகளார்
பார்க்கக் கூடியதேயாயினும், உவெல்சுக் கிறித்தவர் சட்சன் ஆக்கிரமிப் பாளரை இன்னும் வெறுத்தனராதலின், அவர்களைக் காப்பாற்ற முயல
எனினும், உவேல்சு இனத்தவர் இங்கிலாந்தின் மதமாற்றத்திற்கு மறை முகமாக உதவியிருந்தனர். ஏனெனில், சென் பற்றிக்கு உரோமானியப் பண்பாட்டை மேற்கொண்ட பிரித்தானியராவர். அவர் செவேண் நதியின் கீழ்க்கரையிலேயே தம் இளம்பிராயத்தைக் கழித்தார்போலும். அங்கிருந்து, அயலாந்தைச் சேர்ந்த படையெடுப்பாளராகிய கொத்துலாந்தினர் ஐந்தாவது நூற்றண்டின் தொடக்கத்தில் அவரைச் சிறைப்பிடித்துக்கொண்டு சென்ற னர். அதனையடுத்து அவர் அயலாந்தை மதம் மாற்றினர் (432-461). அங்கு ஆரம்பிக்கப்பட்ட கிறித்துவம் நீண்ட தூரம் பரவிச்சென்று, வட இங்கிலாந்துக்கு மீண்டது. அம்மதத்தைக் கொலம்பா (563) அயலாந் திலிருந்து வட கொத்துலாந்துக்குக் கொண்டு சென்றர். கெந்தில் (597) ஒகத்தின் இறங்கிய ஒரு தலைமுறைக்குப் பின் எய்தன் என்பாரது தூதத் தின் விளைவாக கொத்துலாந்திலிருந்து சென்ற அம்மதம் நோதம்பிரி யாவை மதமாற்றக் காரணமாயிற்று.
கொலம்பா, எய்தன் என்பவர்களது ஐரிசுக் கிறித்துவம், கிரகோரி, ஒகத்தீன் ஆகியோரது உரோமன் கிறித்துவத்துக்கு எதிரிடையாக இருந்த போதிலும், உரோமுக்கு எதிரான திருச்சபையொன்றை நிறுவப் பற்றிக்கு கருதவில்லை. பேற்றிசியசு எனும் உரோமன் பெயரைப் பெற்றிருந்த அவர் பழைய பேரரசின் குடிமகனகவும் சென் பவுல் என்பவரைப் போன்று தாம் பெற்றிருந்த உரோமருக்குரிய உரிமைகளைப் பற்றிப் பெருமைப்பட்ட வராகவும் இருந்தார். அவர் கோல் எனுமிடத்திற் கல்விகற்று அங்கிருந்த திருச்சபையொன்றிற் குருப்பட்டமும் பெற்றிருந்தார். அத் திருச்சபை, உரோமிலிருந்த விசுப்பாண்டவரை எல்லாவற்றிற்கும் மேலான பிரபுவாகக் கருதாவிடினும், ஐயத்திற்குரிய மதப் பிரச்சினைகள் பற்றி விளக்கந்தரக் கூடிய முக்கிய ஆலோசகராக அவரை எலவே கருதி வந்தது. பற்றிக்கு ஒரு சிறந்த அறிஞராயில்லாவிடினும் அளப்பரிய ஒரு நன்கொடையாக இலத்தீன் மொழியை அயலாந்துக்கு வழங்கியவராவர். இம் மொழியையே கெலித்திய மக்கள் மிகத் திறமையாக, உலகியல் விடயங்களிலும் மதத்துக் குரிய விடயங்களிலும் பயன்படுத்தினர். சிலாவு இனத்தவருக்கு மதபோத கராயிருந்த சிரில் என்பவரைப் போன்று பற்றிக்கு, தம்மால் மதம் மாற்றப்பட்ட இனத்தவருக்கென வேறன கிறித்துவ நாகரிகத்தை எற் படுத்த முன்வரவில்லை. உரோமப் பேரரசு, மேற்கிலே தன் இறுதிக் காலத்தை எய்துவதற்குள்ளும் அப்பேரரசையும் கிறித்துவ மதத்தையும் முற்றிலும் ஒன்றகவே மக்கள் கருதிய ஞான்றும், அயலாந்தை உரோமக் கிறித்துவத்திலும் நாகரிகத்திலும் பங்குபெறச் செய்ய வேண்டுமெனப் பற்றிக்கு விரும்பினர். இங்கிலாந்திற் பிற்காலத்தில் நிகழ்ந்தவாங்கு, அயலாந்திற் கிறித்துவம் எற்றுக்கொள்ளப்பட்டதற்கு ஒரு காரணம்

பற்றிக்கு அடிகளார் 75
யாதெனில், அங்குள்ள மிலேச்சர் உரோமப்பேரரசு வீழ்ச்சியடைந்தபோதுங்கூட அதன் மீதும் அதனேடு தொடர்புடைய யாவற்றின்மீதுங் கொண்டிருந்த பெருமதிப்பாகுமென்க; ஆபிரிக்க இனத்தவர்கள் இன்று கிறித்துவ மதத்தை ஐரோப்பாவின் பிரதிநிதியென ஏற்றிருப்பதை இது ஒக்கும்.
எனினும், பற்றிக்கு என்பவரின் பணியால் அயலாந்தில் வெற்றியடைந் திருந்த திருச்சபை, அவரிறந்தபின் உரோம திருச்சபையினின்றும் வேறு பட்ட வழியில் அபிவிருத்தியடைந்தது. மேற்கில் உரோமன் பேரரசு வீழ்ச்சி யடைந்ததாலும், அயலிலிருந்த பிரித்தானியத் தீவில் இலத்தீன் நிறுவ கங்கள் அழிந்துபோனதாலும், பிரான்சிலும் இத்தாலியிலும் நிகழ்ந்த மிலேச்சரின் படையெடுப்புக்களாலும் மத்தியதரைப் பிரதேசச் செல்வாக் குச் சிறிதுகாலமாக அயலாந்துட்புகாதிருந்தது. அத்துடன், இக்காரணங் களால் ஒரு சுதேச கெலித்திய திருச்சபையும் நாகரிகமும் தோன்றுவதற் கான வாய்ப்புக்களும் ஏற்பட்டன. ஒன்பதாவது நூற்றண்டில் வைக்கிங்கு களின் வருகை வரை மிலேச்சர் அயலாந்துக்குட் புகவில்லையாதலால், ஆதி ஐரிசுக் கிறித்துவர்களுடைய வாழ்க்கையில் ஒவியக்கலை, கற்பனை, கல்வி ஆதியன மலர்ச்சியடைவதற்குக் காலம் கிடைத்தது.
ஆனல், ஐரிசுக் கிறித்துவம், ஐரிசுச் சமூகத்திடையே செழித்தோங்கிய தென்பது உண்மையே. எனினும் ஆங்கில-சட்சணிய கிறித்துவமானது ஆங்கில-சட்சணிய சமூகத்தை மாற்றியமைத்ததுபோன்று, ஐரிசுக்கிறித்துவம் ஐரிசுச்சமூகத்தை மாற்றியமைக்கவில்லை. அயலாந்தின் சமுதாய அமைப்பு, உரோமரின் கிறித்துவ முறையைத் தழுவிய பதவனியையோ, கோவிற்பற்று முறைமையையோ நிறுவுவதற்கு இடந்தரவில்லை. வைக்கிங்குகளின் வரவு வரை அங்கு நகரமேதுமிருந்ததில்லை. சிரோங்குபோ பிரபுவின் வருகைக்கு முன் அங்கு நிலமானிய முறையே இல்லை. ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடும் பல குலங்களே ஐரிசு இனத்தவரிடை காணப்பட்டன. ஒவ்வொரு குலமும் இரத்த உறவால் ஒன்றக இணைக்கப்பட்டு, அதனதன் தலைவனெருவனல் ஆளப்பட்டு வந்தது. இத் தலைவர்களனைவருக்கும் மேலாகத் தாரா வெனுமிடத்திற் பேரரசன் ஒருவன் இருந்தான். அவன் மேலாண்மையாளனக இருந்தானேயன்றி முறையாக ஆட்சி செய்யும் இறையாக இருக்கவில்லை. ஐரிசுக்கிறித்துவம் தேவையை முன்னிட்டுக் குலச். சார்புடையதாகவே இருந்தது. அம் மதத்தில், பெரும்பாலுந் தமக்கெனக் குருபீடங்களில்லாத, முதன்மையற்ற பல விசுப்பாண்டவர்களிருந்தாரெனி னும், அம்மதம் தலப்பற்றுடையதாகவோ, உரோமரின் முறைப்படி குருத்து வமுறையைத் தழுவியதாகவோ இருந்ததில்லை. ஆச்சிரமத்துக்குரியதாகவே அம்மதம் உண்மையில் விளங்கிற்று. சாதாரண ஐரிசு ஆச்சிரமம் ஒரு தனித்த குலத்துடன் தொடர்புடையதாக இருந்ததேயன்றி, தன் மடாதி பதியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் வாய்ந்த திருச்சபையதிகாரி யொரு வரையும் எற்கவில்லை.

Page 48
76 - கெலித்தியத்துறவறம்
கெலித்திய துறவறம் சென் பெனடிற்றின் துறவற இலட்சியங்களைக் கொண்டிருக்கவில்லை. தொலைவான ஒர் இடத்திலுள்ள பாறைகள் சூழ்ந்த மலையிலோ, தீவிலோ கூடிய துறவிகளின் கூட்டமாகவே கெலித்திய துறவறமிருந்தது. ஒவ்வொரு துறவியும் தமக்கென இருந்த, தேனடை போன்ற வேயப்பட்ட குடிசையிலோ, களிமண், அல்லது புற்கற்றையாலான குடிசையிலோ வசித்தனர். ஆனல், அக் குடிசைகள், ஒன்றேடொன்று தொடர்புகொள்வதற்காகவும் பாதுகாப்புக்காகவும், ஒரு மடாதிபதியின் தலைமையின்கீழ், நன்கு அரண்செய்யப்பட்ட கிராமமாகவோ சிற்றுாராகவோ ஒன்றுசேர்க்கப் பட்டிருந்தன. துறவிகளிடையே சந்நியாசிகள், அறிஞர்கள், கலைஞர், வீரர், போதகர் ஆகியோரிருந்தனராதலால், அவர்களுடைய முயற்சி களும் பலதிறப்பட்டனவாக இருந்தன. தனிப்பட்ட துறவி, சிலவேளைகளில் போதிக்கவோ குலங்களிடை மூளும் பகைமைகளைத் தீர்க்கவோ, குலங்களிடை நிகழும் போர்களுக்குத் தலைமை தாங்கவோ வெளி உலகிற் சென்றதுண்டு. சில வேளைகளில் ஆச்சிரமத்திலுள்ள கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்து அவற்றைத் தெளிவுபடுத்துவதுமுண்டு. சிலவேளைகளில் முற்றன தனிமை யைத் தேடி அத்துறவிகள் சென் கதுபெற்று செய்தவாங்கு மற்றைய துறவிகளைப் பிரிந்து செல்வதுமுண்டு. சென் கதுபெற்று தொலைவிலிருந்த இலிண்டிசுபான் என்னுமிடத்திலுள்ள தமது குழுவைச் சேர்ந்த துறவி களைப் பிரிந்து, இன்னும் மிக்க தனிமை நாடிப் பான் தீவுகளுக்குச் சென்றரென்பர்.1
ஐரிசுத் துறவறம், தான் பிறந்த நாட்டிலும் தன் போதனைகள் பரவிய கொத்துலாந்து, நோதம்பிரியா ஆகியவிடங்களிலும் பல சிறந்த திருத் தொண்டர்களைத் தோற்றுவித்தது. பீட்டினுற் பாதுகாக்கப்பட்டுள்ள, அவர் களுடைய வாழ்க்கை வரலாறுகள் தனிக் கவர்ச்சிவாய்ந்தவை. எய்தன், கதுபெற்று ஆகியோரின் ஐதிகங்களிற் காலையிளம் பரிதியின் புதுமையும் ஒளியும் மிளிர்தல் காணலாம். இத்தகைய துறவற முறையின் பயனக எங்களுக்குக் கெல்சு நூல் மட்டுமன்றி, இலிண்டிசுபானிலுள்ள கையெ ழுத்துப் பிரதிக் கலையும் கிடைத்துளது. பின்னதிலே, தெற்கு நாடுகளின் கிறித்தவ மரபுகளோடு கெலித்தியரதும் சட்சனியரதும் சுதேச அலங்காரக் கலையும் சிறந்த முறையிற் பொருத்தமாகக் கலந்துள்ளது. ஐரிசுத் துறவி கள் மேற்கைரோப்பாவினின்று மறைந்துபோன உயர்தனிச் செம்மைசேர் உலகியல் இலக்கிய அறிவையும் புதுப்பித்தார்கள். போப்பாண்டவர் மகா கிரகோரி என்பார் கலிக்கு விசுப்பாண்டவரொருவரை, அவர் இலத்தீன் இலக் கணமும் கவிதையும் படித்தற்காகக் கடிந்து கொள்ள, போப்பின் கண்ட
*. சென் கதுபெற்று 664 ஆம் ஆண்டில் உரோமன்மதத்திற்குக் கட்டுப்பட்டார். ஆனல், கொத்திசு-ஐரிசுக் கிறித்துவத்தின் மரபுகள் அவருடைய வாழ்க்கையில் வலுப்பெற்றிருந்தன. அமமரபுகள் பீட்டு என்பவரது வாழ்க்கையிலும் நன்கு காணப்பட்டன. எனவேதான் அவர் * ஆங்கிலேய மக்களுடைய திருச்சபைக்குரிய வரலாறு” எழுதுவதற்குச் சிறப்பான தகுதி பெற்றிருந்தார். −

கொலம்பா 77
னம் செல்ல வொண்ணுத தொலைவிடங்களிலெல்லாம் ஐரிசுக் கிறித்தவர் இலத்தீன் மொழியை உலக நன்மையின் பொருட்டுப் பாதுகாப்பதில் முனைந்திருந்தனர். அங்கிருந்து அவர்கள் அதனைப் பெனடிற்று, பிசுகோப்பு, பீட்டு ஆகியவர் காலத்து இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றனர்.
இங்கிலாந்தில் இலத்தீன் மொழி மிகவும் வளம்படுத்தப்பட்டது. இறுதி யாக, சாளிமேன் காலத்தில், எழுத்தறிவற்றேர் நிறைந்த கண்டத்தை மீண்டும் வெல்வதற்காக அல்குவின் என்பவரால் அம்மொழி கடல்வழி யாகக் கொண்டு செல்லப்பட்டது.
கொத்துலாந்து, இங்கிலாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளின் மக்கள் ஐரிசுத் திருச்சபையினருக்குப் பெரிதுங் கடமைப்பட்டுள்ளனர். என்ருலும், பின்னர் தம் சொந்தத்தீவிலுள்ள மக்களை நாகரிகப்படுத்துவதற்கு யாதே னுஞ் செய்திலர் ; பல்வேறு குலங்களாய்ப் பரந்திருந்த அவர்களைச் சிறந்த முறையில் ஒழுங்காக அமைக்கவும் யாதுஞ் செய்திலர். கெலித்திய திருச் சபையின் நிறைகளுங் குறைகளுந் தம்மிடை நெருங்கிய தொடர்புடையன வாயிருந்தன. விரிந்த சுதந்திரமும் மக்கள் தம் இச்சைவழியொழுகும் வாய்ப்பும் அத்திருச்சபையின் இயல்புகளாய் இருந்தமையால், உறுதியான கட்டுக்கோப்பு அதற்கு இருந்ததில்லை. எனவே, முதற்கிளர்ந்த ஆக்கச் சத்தி சமைந்ததும், அதன் வலியுங் குன்றிற்று.
இத்தகைய கிறித்துவமே அலுசுற்றரிலிருந்து பதித கொத்துலாந்திற் பரவுவதாயிற்று. இவ்வாருண மதத் தூதுக்களில் 563 இல் சென் கொலம் பாவின் தலைமையிற் சென்ற தூதமே தலைசிறந்த பயனைக் கொடுத்தது. அவர் ஒரு வீரராகவும் அரசறிஞராகவும் துறவியாகவும் இருந்ததுமன்றி, ஐரிசுத்துறவு இலட்சியத்தின் மிகச் சிறந்த மாதிரியான மடாதிபதியாக வும் விளங்கினர். கொத்துலாந்தின் மேற்குக் கரைக்கு அப்பாலுள்ள அயோன எனும் சிறிய தீவில் அவர் தேனடை போன்ற தங்குடிசைகளைக் கூட்டமாக ஏற்படுத்தியிருந்தார். அங்கிருந்து மதப் பிரசாரத் துறவிகள் வட பிரித்தானியாவில் திரளாகப் பரவினர். இங்கிருந்து அவர்கள் இளைப்பாறு வதற்காகவும் கூட்டாலோசனைக்காகவும் தனிமையான ஆன்ம சிந்தனைக் காகவும் அயோனவுக்குக் காலத்துக்குக் காலம் மீண்டனர்.
கொலம்பா வாழ்ந்த காலத்திலேயே எதிர்கால கொத்துலாந்து, சட்சனி யருக்கும் கெலித்திய இனத்தவருக்குமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சட்சனி யன் தாழ்நிலத்தின் தென்கிழக்கு ஒரத்தில் தன் ஆதிக்கத்தை நிறுவிக்
. இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்கு மேற்பட்ட பிரிவு பற்றி உரோமரின் காலங்களிலே ஓரளவு காட்டப்பட்டிருந்தாலும் இருண்ட ஊழியின்போது அப்பிரிவு செயற்படுத்தப்படாதிருந் தது. செவியற்று எல்லையைக் கிழக்குமுகமாகச் சட்சணிய நோதம்பிரியாவும் மேற்குமுகமாகக் கெலித்தியசிரத்து கிளைட்டும் கடந்து அமைந்திருந்தன. உள்நாட்டு ஐக்கியம் இங்கிலாந்தைக் காட்டிலும் கொத்துலாந்தில் குறைவாகவே காணப்பட்டது.

Page 49
ஆங்ாே விமர்
卤 Գե 8
طالية R
ர்
5 ॐ * .?ጎ କୁଁ է:
* O
பி கு து லி ந் து
" பிரு நிசு கேபிரீடரு ஆகத்தியது
KLA
Tii தேய நதி
கதி தி
I li'li Yunust Idhun
t ଗଷ୍ଟ PA, s ఒకదాశికిచే تنبیہونیت தங்ககு விசயரோகேட்க "سمي
ت=
3Ի- وية هي ثنية" த ஜோ வே ఫీల్డ్
பிருநீ
படம் WI இருண்ட ஊழியில் கொத்துலாந்தும் நோதம்பிசியாவும்,
 
 
 
 

கொத்துலாந்தில் மதமாற்றம் T
கொனடான். உலோதியன் என்று பிற்காலே வழங்கப்பட்ட இவ்வளம் பொருந்திய பெரும்பகுதி முன்பு நோதம்பிரிய இராச்சியத்தின் வடபகுதி யாக விருந்தது. அது மேலோங்கி இருந்த காலத்தில் அம்பரிலிருந்து போத்து நதி முகம் வரை பரந்திருந்தது. நோதம்பிரியாவைச் சேர்ந்த எட்டுவின் மன்னன் பிரசித்திபெற்றதொரு பாறையிலுள்ள தனது " எட் டுவின் நகரத்தை " அரண்செய்து கொண்டிருந்தான். அதனேத் தன் தீவிலேயே சட்சனிய இராச்சியத்தின் வடகோடியிலுள்ள அரணுக ஆக்கிக் கொண்டிருந்தான். எதிர்காலக் கொத்துலாந்தின் வடக்கு, மேற்கு, பாகங்கனனேத்திலும் மத்திய பாகத்தின் பெரும் பகுதியிலும் இன்னும் கெவித்தியரே இருந்தனர். அப்படியிருந்தும் நாளடைவிற் கொத்துலாந்து, ஒருகாஸ், பெரிய இனமாற்றம் எதுவுமின்றி சட்சணியாது மொழியையும் நாகரிகத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. கொத்துலாந்தின் வாலாறு பெரும்பாலும் கெவித்தியரை ஆங்கிலேய மயமாக்கிய முறை பற்றிய வரவிருகவே இருக்கிறது. தென்கிழக்கிலுள்ள தாழ்நிலத்தின் ஆங்கில-சட்சணியர் ஆதியிற் குடியேறியிருந்திராவிடில், கொத்துலாந்து, கெவித்திக்கு இனத்தவருக்குரிய நாடாக நிலைத்திருக்கும். அன்றியும், அதன் எதிர்கால வாாறும் இங்கிலாந்துடன் அதற்குள்ள தொடர்பும் அயனிாந்தின் வரலாற்றையோ, த வேல்சின் வரலாற்றையோ அதிகமாக ஒத்திருக்கும்.
எட்வின் மன்னன் காலத்தில், நோதம்பிரியாவைச் சேர்ந்த சட்சனி யர் கொத்துலாந்தில் உரிமையின்றிப் பிரவேசித்த எதிரிகளாகவே இருந் தனர். இவர்கள் துலீட்டின் மேற்பகுதியிலும் அதற்கு அதி வடக்கிலும் கெவித்தியருடன் இடையருது போரிட்டு வந்தனர். கெவித்தியரும் தம் பிரதேசங்களிலே தமக்குள்ளே இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்தனர். எண்ணற்ற குலப் பிரிவினேகளும் பகைமைகளுர் ஒருபுறமிருக்க, செவித்தி யர் மூன்று பெரும் இனத்தவராகவிருந்தனர். பெரும்பாலும் கொயி டவிக்குக் கெவித்தியரைச் சேர்ந்தவராய் வடகொத்துலாந்திலும் கலோ வேயிலுமிருந்த பிட்சுகள் சிரத்துகிளேட்டிலுள்ள பிரித்தானியக் கெவித் தியர் கடைசியாக வந்து இன்றைய ஆகைல்சயராகிய தலுறியடா எனு மிடத்திற் குடியேறிய அயலாந்துக்கொத்துக்கள் ஆகிய மூவகையினர் கடல் கடந்துவந்த கொத்துக்கள் தங்கள் பெயரை மட்டும் தாம் குடியேறிய நாட்டுக்குக் கொடுத்தனரேயன்றித்தம் நாகரிகத்தை நாடு முழுவதுக்கும் வழங்கவில்லே. முதலாவது சேமிசின் ஆட்சியில் புரட்டசுத்தாந்தியரை அலுசுற்றரிற் குடியேற்றியதும் சமீப காலங்களில் ஐரிசு மக்கள் கிளேட்டு சைட்டிற் குடிபுகுந்ததும் நினேவுறுத்துவதுபோன்றே முற்கூறிய ஆதி கால வரலாறும் மேற்குக் கொத்துலாந்துக்கும் வட கிழக்கு அயலாந்துக் குமுள்ள தொடர்பானது வரலாற்றில் ஒரு மாருத காரணி என்பதை
எங்களுக்கு நினேவுறுத்துகின்றது. கொந் மிம்ச்சங்
B-1 (344 (1232) ழுமபுதமிழ ங்கம்

Page 50
80 கொத்துலாந்தில் மதமாற்றம்
ஐரிசுக் கொத்து இனத்தவராகிய கொலம்பா என்பார் தலுறியடாவைச் சேர்ந்த தன் கூட்டத்தவராகிய கொத்து இனத்தவர்மீதும் வடக்கிலுள்ள பிட்சுகள் மீதும் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தர்ர். சிரத்துகிளேட்டிலுள்ள பிரித்தானியர் நாளடைவிற் கொலம்பாவின் புதிய சமயச் செல்வாக்குக் குட்படுத்தப்பட்டனர். எழாவது ஆாற்றண்டின் தொடக்கத்தில், அயோன விற் பரவியிருந்த கிறித்துவமானது கெலித்திய கொத்துலாந்தின் குலங் களிடையும் அவர்களின் தலைவர்களிடையும் உறுதியாக நிலைபெற்றிருந்தது. ஆனல், நோதம்பிரியாவைச் சேர்ந்த சட்சணியர், தமக்குப் போரிற் கிடைக் கும் வெற்றிதோல்விகளுக்கிணங்க, அல்லது தங்களுடைய அரசர்களின் மதநம்பிக்கைகளுக்கிணங்க, உவோடன் வழிபாட்டு முறைக்கும் ஒகத்தீனின் ஆதரவாளர்களிலொருவரான போலைனசு என்பவராற் போதிக்கப்பட்ட உரோமக் கிறித்துவ முறைக்குமிடையே இன்னும் ஊசலாடிக் கொண் டிருந்தனர். நோதம்பிரியாவிலிருந்தோரைக் கொத்து ஐரிசுக் கிறித்துவத் துக்கு மாற்றியது பற்றி விளக்குமுன், கிறித்துவம் புகுத்தப்பட்ட மற் ருெரு பகுதியாகிய தென்னிங்கிலாந்தில் ஒகத்தீன் என்பாரின் தூதுபற்றி நாங்கள் கவனம் செலுத்தல் வேண்டும்.
சிறந்த போப்பாண்டவர்களில் முதலானவராகிய மகா கிரகோரியே இடைக்காலப் போப்பிாட்சியை உண்மையில் நிறுவியவராவர். அவர் 590 ஆம் ஆண்டில், வீழ்ச்சியுற்ற உலகின் மத்தியில், வெற்றிக்கொடியுடன் மிலேச்சர் சூழ்ந்திருந்த உரோம விசுப்பாண்டவருக்குரிய பகுதியின் பொறுப்பை ஏற்றர். இப்பகுதியோ பாதுகாப்பற்று வறுமையுற்றிருந்தது. அதை, மறைந்துபோன மேற்குப் பேரரசுக்குச் சமமானதாய் உலகத்தவர் கருதும்படி பன்னிராண்டினுள் மேம்படுத்தினர்.
ஐரோப்பியத் தலைமைப்பீடம் பாமரரிடமிருந்து மதகுருக்குள் கைக்கு மாறியதைக் கிரகோரியின் சொந்த வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டுவ தாயுள்ளது. தம்முடைய வாழ்க்கை நெறியை ஒர் உரோமன் உயர்குடிச் செல்வந்தராகத் தொடங்கிய கிரகோரி சில காலம் நகராதிபதியாகவிருந்து தம் சிறந்த பாலனத் திறமைகளைப் பயன்படுத்தினர். பின் அவர் சீலியன் குன்றில் ஒர் எளிய துறவியாக வாழ்தற்பொருட்டுத் திடீரெனத் தம் சமுதாயச் சிறப்புரிமைகளையும் அரசியற் கடமைகளையுங் கைவிட்டனர். அதிலிருந்து உரோம விசுப்பாண்டவராக அவர் உயர்பதவி பெற்றர். அவர் சீசருக்கொப்பான பேராற்றலொடும் ஒகத்தசுக் கொப்பான நிருவா கத் திறனுடனும் திருச்சபைக்காக முயற்சி செய்தார். வட ஐரோப்பாவி லிருந்த திருச்சபைகளுக்கு, அக்காலச் சமயம், அரசியல், சமூகஞ் சம்பந்த மான விடயங்கள் பற்றி அவரனுப்பிய அறிவுரைகள் சட்ட அதிகாரமுடைய வையாக மட்டுமன்றி, ஒப்பற்ற ஒழுக்க நெறிப் பிரமாணங்களாகவும் எற்றுக்கொள்ளப்பட்டன. ஒபுசு கூறியதுபோன்று, போப்பாட்சியானது * இறந்துபோன உரோமப் பேரரசின் ஆவி எழுந்து முடிசூடிக்கொண்டு

கிரகோரியும் ஒகத்தீனும் 81
கல்லறையின் மீது இருத்தலேயாகுமன்றி, வேறன்று ” எனின், அந்த ஆவி உயிருள்ளதாகத்தானிருந்ததே தவிரப் பொய்த்தோற்றமாக இருந்த தில்லை எனலாம். ஆட்சி செலுத்தி வந்ததொரு பேரரசு மேற்கில் அழிந்து போனதால், தூரவிடங்களிலிருந்த அரசர்களும் விசுப்பாண்டவர்களும் துற விகளும் பொதுமக்களும் குழப்பமான, கொடுமை நிறைந்திருந்த உலகில் முன்னேற்றமும் ஒற்றுமையும் நேர்மையும் நடுநிலை தவருத் தன்மையும் நிலவுவதற்குச் சிறிது நம்பிக்கையளித்ததோர் ஆவியுருவான அதிகாரத்தை வரவேற்றனர். இங்கிலாந்திலிருந்த ஆங்கிலேய-சட்சனியரிடையே முன்னைய உரோமைப் பற்றி இப்புதிய எண்ணக்கருத்து நிலைகொள்ளும் தறுவாயி லிருந்தது.
ஒகத்தீன், மகாகிரகோரியின் முக்கியமான கருவியாகவே யிருந்தார். ஆங்கிலேயரையும் மதமாற்றம் செய்விக்க வேண்டுமென்ற உற்சாகத்திற்குக் கிரகோரியே காரணராயிருந்தார். ஒகத்தீனும் அவருடைய வேதபோதகர் களும் ஆபத்தான பிரயாணத்திலிருந்து எமாற்றத்தொடு திரும்பின பொழுது, கிரகோரி, அவர்களை அறிவுறுத்தியும் ஊக்குவித்தும் மீண்டும் அனுப்பி வைத்தார்.
ஒகத்தீன் தனெற்றில் இறங்கியபொழுது கெந்து இராச்சிய மக்கள் 597. கிறித்துவ மதத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தராயிருந்தனர் என்பது வெளிப் படை. ஆங்கிலேய அரசுகளிலெல்லாம் தலைசிறந்த நாகரிகத்தை அவ்வரசு கொண்டிருந்ததுமன்றி, பிரெஞ்சுக் கிறித்தவருடன் மிக நெருங்கிய தொடர் பும் வைத்திருந்தது. கெந்து அரச்னன எதல்பேட்டு என்பானின் மனைவி யும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவொரு பிராங்கு ஆவாள். பதிதமதத் தில் அதிகப் பற்றற்று இருத்தல் அக்காலத்து நோதிக்கு இனத்தவருடைய குணவியல்பு என்பதை நாம் முன்பு கண்டுள்ளோம். இதன் காரணமாக, ஊங்கிய நாகரிகம் படைத்த மனித இனத்தினருடைய மதத்தைத் தழுவும் படி அரசர்களை அவர்தம் கிறித்துவ மனைவியர் அடிக்கடி தூண்டி வந்த னர். அவர்களின் குடிகளும் அத்தகைய மத மாற்றத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. .
ஒகத்தீன், இங்கிலாந்தை மத மாற்றஞ் செய்யவில்லை. அவர் கெந்தை மத மாற்றியதுடன், கந்தபெரியில் மதகுரு பீடத்தை ஏற்படுத்தி அதனைத் தொடர்ந்து தீவெங்கணும் உரோமன் கிறித்துவம் பரவுவதற்காய உறுதி யான தளமாகவும் அதனையமைத்தார். கெந்துக்கு வெளியே அம்மதம் முதலில் மெதுவாகவே பரவிற்று. ஒகத்தீன் தாம் உரோமிலிருந்து ஆணை பெற்றவர் என்ற காரணத்தால், பிரித்தானியாவிலுள்ள கிறித்துவரனைவ ருக்கும் தாமே முதல்வர் என உரிமை பாராட்ட, செவேண் ஆற்று முகத்திற் கூடிய மாநாட்டிலிருந்த உவேல்சு மத போதகர் அதனை கற்க மறுக்க, அம் மாநாட்டில் இரு சாராரும் கோபங்கொண்டனர். அதனை யடுத்து, கெந்திலேயே மதபோதகர் சிலவாண்டுகளுக்குப்பின் இலண்டனி

Page 51
82 பெண்டாவும் ஒசுவலும்
லிருந்து வெளியேற்றப்பட்டனர். இலண்டன் குடிகள் சிறிய சட்சனிய இராச்சியங்களிலிருந்து ஒரளவு சுயேச்சை பெற்றவர்களாய்த் தேமிசு நதியின் கீழ்ப் பகுதியின் இரு மருங்கிலும் இப்போது மீண்டும் காணப்படுவதை வரலாற்று எடுகள் குறிக்கும். கந்தபெரியை விடுத்து, இலண்டனைச் சமய குருவின் தலைமைப்பீடமாய் அமைப்பதற்கு கிரகோரி வகுத்த திட்டம் நிறைவேறது போனதற்குரிய தலையாய காரணம் இலண்டனிற் பதிதம் தொடர்ந்து இருந்தமையென்க.
கெந்துக்கு வெளியே உரோமன் கிறித்துவம் முதலிற் பெற்றமகத்தான வெற்றி யாதெனில், போலைனசு என்பார் நோதம்பிரியாவின் மாமன்ன னகிய எட்டுவினை அவனுடைய கிறித்துவ மனைவியின் மூலம் மதம் மாறச் செய்ததாகும். எட்டுவின், அம்பரிலிருந்து போத்து வரை ஆட்சி செலுத் தியமையாலும் தீவின் எனைப் பகுதிகளிலும் அவனுட்சிக்குட்பட்ட சிற்றரசர் பலர் இருந்தமையாலும் இங்கிலாந்தில் ஒரு பாதி எலவே கிறித்துவ மயமாகி விட்டதுபோலத் தோன்றிற்று. எனினும் அரண்மனைக்கு வெளியே இவ் வேத போதகரின் செல்வாக்கு இன்னமும் வலியற்றே யிருந்தது. அன்றி யும், ஒரு தலைமுறையாகக் கிறித்துவத்துக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் போர்களின் போக்கினைப் பொறுத்தும் தம்மிடை மாறுபட்டு நின்ற மன்ன ரின் மனமாற்றங்களைப் பொறுத்தும் அவர்கள் மரணத்தைப் பொறுத்தும் மாறுதலடைந்தன. இக்கட்டு நிறைந்த முப்பது ஆண்டுகளாக நோதம்பிரி யாவானது இத்தீவிலே தனது ஆதிக்கத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் வலிமையைப் பெருக்கிவந்த மேசியாவுடன் போராடிக்கொண்டிருந்தது. இவ்வரசியற் போர்கள் கிறித்துவ வழிபாட்டுக்கும் உவோடன் வழிபாட்டுக்கு மிடையே எழுந்த பிரச்சினைகளைப் பாதித்தன. சிலுவை வழிபாட்டை நோதம்பிரிய மன்னர்களாகிய எட்டுவின், ஒசுவல் என்பவர் ஆதரிக்க உவோடன் வழிபாட்டை மேசிய அரசனகிய பெண்டா என்பவன் ஆதரித் தான். எட்டுவினும் ஒசுவலும் பெண்டாவுடன் செய்த போரில் உயிரிழந்தனர். எனினும், மேசியாவின் இறுதி வெற்றி கிறித்துவம் வெற்றி பெறுவதைத் தடுக்கவில்லை. இம்மன்னர்க்கிடையே நிகழ்ந்த
. 633 ஈத்துபீல் : பெண்டா எட்டுவினைத் தோற்கடிப்பதும் கொல்வதும். 634 எவன்பீல் : ஒசுவல் பெண்டாவின் நட்பாளனுகிய உவெல்சு நாட்டுக் கடுவலனைத் தோற்கடிப்பதும் கொல்வதும்.
642 மாசர்பீல் : பெண்டா ஒசுவலைத் தோற்கடிப்பதும் கொல்வதும். 655 ஒசுவலின் ஐயனுகிய ஒசுவி, பெண்டாவைத் தோற்கடிப்பதும் கொல்வதும். 659 மேசியாவின் உவுல்கியர், நோதம்பிரியாவின் தளையை நீக்குதல். ஆனல், மேசியாவைக்
கிறித்துவ மயமாக்குதல். நோதம்பிரியாவைச் சேர்ந்த பீட்டு எழுதிய வரலாற்றிலும் உவெசெட்சு அரசனகிய அல்பிரெட்டு தொடங்கிய ஆங்கிலேய-சட்சன் வரன்முறைக் குறிப்பிலும் மேசியாவின் "முக்கியத்துவத்துக்கும் அதிகாரத்துக்கும் உரிய இடம் கொடுக்கப்படவில்லையென்பதை ஞாபகத்திற் கொள்ளல் வேண்டும்.

மேசியாவின் வெற்றி 83
இப்போராட்டம் மதப்போரின்பாற்படாது. பெண்டா கிறித்துவரை உடற்றவு மில்லை ; கிறித்துவர் உவோடன் வழிபாட்டுக்கு மாருகப் பிற்காலத்தே சட்டம் பிறப்பித்தது போன்று கிறித்துவ வழிபாட்டுக்கு எதிரான சட்டங்களை அவன் பிறப்பிக்கவுமில்லை. தன் குடிகளாகிய மேசியரிடையே கிறித்துவின் போதனைகளைக் கேட்பதற்கு எவராவது விருப்புற்றிருப்பின் மன்னன் அப் போதனையைத் தடுக்கவில்லை. ஆனல், அதற்குப் பதிலாகக் கிறித்துவ மறையைத் தழுவியவர், பின்னர் அம்மதத்தில் நம்பிக்கையற்றவராகக் காணப்பட்டால், தாம் பின்பற்றிய கடவுளைக் கைவிடுபவர் வெறுக்கத் தக்கவரென, அத்தகையவரை அவன் வெறுத்தும் நிந்தித்தும் வந் தான், எனப் பீட்டு எழுதுகின்றர்.
நோதம்பிரியாவுக்கு விரோதமாகவிருந்த பெண்டாவின் நட்பாளர் கடுவலன் மன்னனின் கீழிருந்த உவெல்சுக் கிறித்தவராவர். நாகரிகமற்ற மலைவாழ்நராகிய இவர்கள் நோதம்பிரியக் கிறித்துவர் தம் இனத்தவருக்குச் செய்த தவறுகளுக்குப் பழிவாங்கும் முகமாக மேசிய நாட்டுப் பதிதர்கள் தம்சசோதர சட்சணியருக்குச் செய்த கொடுமையைவிட அதிகக் கொடு மையை அவர்களுக்கு இழைத்தனர். எனினும், பெண்டா மன்னன் உவேல்சு மக்களின் நட்பை நாடியதிலிருந்து பெறப்படும் உண்மை யாதெனில், இவ்வீர் இனத்தவருக்குமிடையிலிருந்த தடையானது நீக்கக்கூடியதொன்ற யிற்று என்பதாம். இந்த அமயத்திலேயே மேசியநாடு, மெகாசித்தாசுப் பிரதேசம்வரை சட்சணியருடைய ஆளுகையையும் அவர்களது குடியேற்றத் தையும் வித்தரித்தது. செவேண் நதிக்கு அப்பாலிருந்த இப்பிரதேசம் பிற்காலத்தில் ஒபா மன்னன் கட்டிய அணைக்கட்டை மேற்கு எல்லையாகக் கொண்டிருந்தது.
நோதம்பிரியாவின் வீழ்ச்சியும் மேசியாவின் எழுச்சியுமே இப்போர் களின் அரசியல் விளைவாகும். எழாம் நூற்றண்டில், மேசியா மிகச் சிறிய சட்சணிய இராச்சியங்களான இவீசி, இலின்சே, மத்திய அங்கிலியா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதுமன்றி, கிழக்கு அங் கிலியா, எசெட்சு என்பவற்றின் மீது ஆதிக்க உரிமையும் பாராட்டியது. அத்துடன் அது வெசெட்சிடமிருந்து சிற்றேண் மாவட்டத்தைப் பிடுங்கு வதற்கு முயன்று, வெசெட்சு மக்களைத் தேமிசு நதிக்குத் தெற்காக விரட்டிற்று. இவ்வாறக இச்சிறிய சட்சனிய இராச்சியங்களை மேசியா விழுங் கிக் கொண்டிருந்ததால், அவைகளை முந்திய நிலைக்குக் கொண்டு வரு வதற்கான போராட்டம் வெசெட்சுக்கும் மேசியாவுக்குமுடையதாயிருந்தது. ஒரு தனியான இராச்சியமாக நோதம்பிரியா தனது சுதந்திரத்தை வைக் கிங்குகள் வரும்வரை காப்பாற்றி வந்தபோதிலும், அஃது அரசியலாதிக்கம் பெறுவதற்கான போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டது. ஆனல், கது பெட்டு, பீட்டு ஆகியோர் காலம் முழுவதும் அது கலையிலும் கல்வியிலும் மதத்திலும் தொடர்ந்து முதனிலை வகித்து வந்தது. இலிண்டிசுபானின்

Page 52
84 மேசியாவின் வெற்றி
நல்லுபதேசங்கள் மட்டுமன்றி, பியூகாசிலிருந்த சிலுவையும் பிரித் தானிய பொருட்காட்சிச் சாலையிலிருந்த “பிராங்குச் சிமிழும் ” நோதம் பிரியக் கலையின் அழியாத் திறனுக்குச் சான்று பகர்கின்றன. நோதம் பிரியக் கலை உச்சநிலையிலிருந்த போதே மனித உருவம் அமைக்கும் தெற்கைரோப்பியக் கலைமுறைமையானது கெலித்தியரினதும் சட்சனியரதும் சுதேசக் கலையாகிய கவின்பெறு சுருளலங்காரத்தையும் வடிவமெழுதுங் கலையையும் வளம்படுத்திற்று.
எழாம் நூற்றண்டின் நடுப்பாகம்வரை சட்சனிய இங்கிலாந்தின் அதி காரம் வடக்கிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தானிய விளைநிலங்களினும் பார்க்க நிலக்கரிக்கும் இரும்புக்குங் கூடிய மதிப்புக் கிடைத்த கைத்தொழிற் புரட்சிக் காலம் வரை அப்பகுதி மீண்டும் ஒரு போதும் தலைமைப் பதவியைப் பெற்றதில்லை. ஆங்கில-சட்சனியர் தெற்கில் விவசாயச் செல்வத்தை அயராது, பையவே விருத்திசெய்து கொண்டிருந்தனரென்று தொல்பொருளியல் ஆராய்ச்சிகள் காட்டு கின்றன ; அவர்கள் அவ்வாறு செய்யும் வரையிலும் வடக்கிலிருந்த கரம்பை நிலங்களைச் சேர்ந்த வீரர் உறுதியற்ற ஒர் ஆதிக்கத்தை நிறுவு வது எப்பொழுதும் நிகழக்கூடிய வொன்றயிருந்தது. இலண்டன் தானும் தனக்கண்மையிலிருந்த இராச்சியங்களோடு இணைக்கப்படாது ஓரளவு சுதந்திரமுடைத்தாயிருந்ததெனினும், மாண்புடைய நகராக அந்நாளில் விளங்கவில்லை. தேனியரின் வருகைக்குப் பின்பே இலண்டன் மாநகர் இங்கிலாந்தின் தலைமைத் தானத்தைப் பெறலாயிற்று. அவர்கள், வந்தபின்னரே அந்நகர், வேந்தர்வாழும் பதியாக விளங்காவிடினும் செல்வத்துக்கும் செல்வாக்குக்குமுரிய முக்கிய தானமாயிருந்தது.
பெண்டாவுக்கு எதிராக நிகழ்ந்த போர்களால் விளைந்த மதத் தொடர் பான பயன் யாதெனின், போலைனசு போதித்த உரோமன் கிறித்துவம் நோதம்பிரியாவிலிருந்து மறைய, அதற்குப் பதிலாக ஆங்கே 635 ஆம் ஆண்டில் ஒசுவல் மன்னன் விடுத்த அழைப்பின் பேரில் அயோனவிலி ருந்து வந்த எய்தனின் மதப்பிரசாரம் நிகழ்ந்ததாகும். மெலுறேசு எனு மிடத்தில் எய்தன் ஒர் ஆச்சிரமத்தை நிறுவி உரோதியரை மதம் மாற்றிஞர். இலிண்டிசுபானில் எய்தன் என்பவரே மடாதிபதியாகவும் விசுப்பாண்ட வராகவுமிருந்தார். நாள் முழுதும் சம்புப்புதர்கள் வழியாக நடந்து, மாலைப் பொழுதில் அருவிக்கரையில் மக்களுக்குப் போதிப்பதற்காகக் கரம்பை நிலத்திலிருந்து வந்த இவ்வேத போதகர்கள் உற்சாகமும் அன்புமுடையராய், உலகப் பற்றற்றவராய் விளங்கினர் ; உலக இன்பங் களைத் துறந்தவராயினும், மனநிறைவுள்ள இவர்களது வாழ்க்கை வடக்கி லிருந்த மக்களின் இருதயங்களைக் கொள்ளை கொண்டது. உண்மையில், ஆதிகாலந் தொடக்கம் கிறித்துவம் அக்காலத்துப்போன்று கவர்ச்சியான வெளித் தோற்றத்துடன் வேறெக்காலத்துந் தோன்றியதில்லை.

உவிற்பித் திருக்கூட்டம் 85
ஏறக்குறைய எழாம் நூற்றண்டின் பிற்பகுதிவரை அயோன திருச் சபையைச் சேர்ந்த துறவிகள் ஆங்கிலேய இனத்தை மதம் மாற்றுவதற்கு, கந்தபெரி திருச்சபையைச் சேர்ந்த மதபோதகர் எவ்வளவு பணி செய்தார் களோ, அவ்வளவு வேதபோதகப் பணியைச் செய்திருந்தனர். அவர்கள் கிறித்துவத்தினின்றும் பிரிந்துபோயிருந்த நோதம்பிரியா, எசெட்சு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை மீண்டும் மதமாற்றியதுமன்றி, மேசியாவை யும் மதம் மாற்றினர். சில ஐரிசுத் துறவிகள் தம் குடிசைகளைப் பதித சசெட்சுப் பிரதேசம் வரையிலுங்கூட நிறுவியிருந்தனர். இவர்களின் பின் வந்தோரின் மத ஆர்வம் குன்றியகாலை, தகுந்த அமைப்பின்மையி னல், இவர்கள் ஆற்றியதொண்டு நிலைபெறுமோவென்பது ஐயத்துக் குரியதாயிற்று. நோதம்பிரியாவில் மத விடயமாக ஊக்கம் எவ்வளவு குறைந்திருந்ததென்பதையும் ஆச்சிரம வாழ்க்கை எவ்வளவு கண்டிப் பற்றிருந்ததென்பதையும் எய்தனதும் அவரின் சீடர்களதும் காலத்தி லிருந்ததை விட அப்போது குருக்களுக்கு எவ்வளவு குறைவான மதிப் பிருந்த தென்பதையும் பீட்டின் காலத்திலேயே வராலற்றசிரியர் குறிப்பிட் டுள்ளார். ஆனல், அவர் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே இங்கிலாந்து முழுவதையும் உரோமிலிருந்த அமைப்புமுறை வெற்றிகொண்டுவிட்டது. சிறந்த அமைப்பானது காலா காலத்தில் எழும் ஊக்கக் குறைவை மேற் கொள்ளக் கூடியதாகும்.
அயோன தூதம் இங்கிலாந்திற் பெற்ற வெற்றியானது கெலித்திய திருச்சபைக்கும் உரோமன் திருச்சபைக்குமிடையே யிருந்த பிணக்குக்களைப் புதுப்பித்தது. இப்பிணக்குக்களைச் செவேண் நதிக்கரையோரத்திற் கூட்டிய மாநாட்டில் ஒகத்தீனும் உவேல்சு மக்களும் வரையறுத்தனரே யன்றி அவற்றைத் தீர்ப்பதற்கு வழிவகைகள் வகுக்கவில்லை. கெலித்திய ஆள்புலத்தில் கெலித்திய திருச்சபையிருக்கும், வரை அது தொலைவி அலுள்ளமையால் அதை உரோமாபுரி கவனிக்கத்தவறலாம். ஆனல், சட்சனிய இங்கிலாந்தைத் தமதாக்குவது பற்றி அவ்விரு சாராருக்குமிடையே போட்டி யெழுந்தபோது இப் பிரச்சினையானது தவிர்க்க முடியாததொன்றயிற்று. அயோன மக்கள் உவெல்சுகளைப் போன்று உரோமர் குறித்திருந்ததினின் றும் வேறுபட்ட தினத்திற் கிறித்துவின் உத்தான நாளைக் கொண்டாடினர். அவர்களுடைய மதகுருத்துறவிகள் தலையிற் சுற்றுவட்டமாக சிகையைச். சிரைத்துக் கொள்வதற்குப் பதிலாக திரியுத மதத்தை நினைவூட்டுமுகமாகத் தலையின் முற்பகுதியில் ஒரு செவியிலிருந்து மறு செவிவரை சிரைத்துக் கொண்டனர். இச்சிறிய விடயங்களே எதிர்ப்பையும் பகையையும் விளைத்த போலிக் காரணங்களாயிருந்தன. ஆணுல், இவைகளுக்கடியிற் சமய ஆர் வம், அமைப்பு ஆகியவை சம்பந்தமான பல ஆழ்ந்த வேறுபாடுகளிருந்தன. அக் காலவவதியில், உரோமுக்குப் பணியும் பிரச்சினையோடு இவைகளும் தொடர்புற்றிருந்தன.

Page 53
86 உவிற்பித் திருக்கூட்டம்
இவைகளுக்கெல்லாம் முடிவுகாணும் நிகழ்ச்சி இங்கும் ஒரு பெண்ணுலேயே எற்படலாயிற்று. நோதம்பிரிய மன்னனன ஒசுவி, அவன் சகோதர னகிய ஒசுவல் இறந்தபின் அயோன திருச்சபையைப் போற்றிப் பேணி அதன் கொள்கைகளில் திடநம்பிக்கை வைத்திருந்ததை அவன் மனைவி வஞ்சனை யாற் கெடுத்தாள். ஒசுவி 664 ஆம் ஆண்டில் உலிற்பி எனுமிடத்தில் திருக்கூட்டமொன்றைக் கூட்டுவித்து, எசுநாதர் பீற்றருக்கு வழங்கிய அதி காரத்தை வகிக்கும் உரிமை உரோமுக்கே உரியதாகுமென தீர்ப்பளித் தான். தங்கள் நண்பர்களான நோதம்பிரியரின் இருப்பிடத்திலேயே புறக்கணிக்கப்பட்ட அயோன மக்கள் இங்கிலாந்தில் இதற்குமேல் தொடர்ந்து போராட முடியவில்லை. சென் கதுபெற்று போன்ற சிலர் புது முறைமையை எற்றுக் கொண்டனர். ஏனையோர் கெலித்திய மதத்திற்கு வறிதே மீண் டனர். பல தலைமுறைகளில் கொத்துலாந்து, உவேல்சு, அயலாந்து ஆகிய நாடுகள் எனைய மேற்கைரோப்பிய நாடுகள் சென்ற வழிக்குப் படிப்படி யாக வந்துசேர்ந்தன.
உவிற்பி கூட்டத்திற் செய்யப்பட்ட முடிவு பின்னல் உரோமில் வரவிருக் கும் பல ஊழிகளில எற்படவிருந்த தொல்லைகளனைத்துக்கும் காரணமா யிருந்ததென்பதை மறுக்க முடியது. ஆனல், மக்களோ, தம்மைக் சேர்ந்த காலவவதிக்குக் கட்டுப்பட்டு அக்காலவவதிக்காகவே வாழ வேண்டி யவர். ஆங்கிலேய இராச்சியங்களனைத்தும் உரோம மத முறையைத் தொடக்கத்திலேயே கைக்கொண்டதனல், இன ஒற்றுமை, அரசனதும் மானியப் பிரபுக்களதும் அதிகாரம், முறையான பாலனம், சட்ட வாக்கம், வரிவிதிப்பு, குலமுறை அரசியலினின்றும் வேறு பட்ட ஆள்புல அரசியல் ஆகியவற்றை வலுப்படுத்திய இயக்கமானது ஆக்கமும் ஊக்கமும் பெற்றது. ஆங்கிலேயர் நாம் கண்டு கொண்டவாறு, தம் குலமுறை வாழ்க்கையிலிரு ந்து கெலித்தியரினும் விரைவாக எலவே வெளியேறிக் கொண்டிருந்தனர். கெலித்தியரது குலமுறைமையினின்றும் விலகிக்கொள்ள வேண்டுமென்ற ஆவலே ஆங்கிலேயர் உவிற்பியில் நிறைவேற்றிய முடிவுக்கு ஓரளவு காரணமாயிருக்கலாம். அன்றியும், மிலேச்ச படையெடுப்பாளரால் உரோ மன் நகராண்மை முறைமை அழிக்கப்படாதிருந்த பிராங்குகளின் இராச்சி யத்தின் தலைசிறந்த அமைப்பைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆவலும் அம்முடிவுக்குக் காரணமாயிருக்கலாம். உரோமரின் புதியவான பதவணி, உரோமன் பணிக்குழுவாட்சிக்கும் நகராண்மை வாழ்க்கைக்கும் பதிலான ஒரு முறையாய் அமையக்கூடியதாகும். அவ் வாழ்க்கையைத் தங்களுடைய குழப்பமான வாழ்நாட்களில் அழித்துவிட்ட ஆங்கிலேய சட்சனியர் அதற்காக வருந்தத் தொடங்கினர். -
உவிற்பி என்ற பெயர் "பி" என்று முடியும் மற்ற இடப்பெயர்களைப் போன்று தேனியரது மொழிக்குரியது; எனவே அது பிற்காலத்தது. ஆனல் சட்சணிய சிறீனுசாலிசு ஆச்சிரமத் தாற் கூட்டப்பட்ட திருக்கூட்டம் அதிகப் பழக்கமான அவ்விடத்துத் தேனியப் பெயரினலேய்ே எப்பொழுதும் அழைக்கப்படுகின்றது.

உரோமன் தாபன முறை மீளல் 87
ஆங்கிலேய இராச்சியங்களெங்கணும் திருச்சபைக்குரிய அலுவல்களிற் காணப்பட்ட பெருமளவான ஒருமுகப்பாடும், அவைகளின் முறைமை, நோக்கம் ஆகியவை சம்பந்தமான ஒருமைப்பாடும், ஒரு தனி அரசனின் கீழ் அரசியல் ஐக்கியம் உண்டாக வழி செய்தன. திருச்சபைப் பாலனம் நாட்டுப் பாலனத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று. யூத திருமறை எழுத்தாளருடைய ஒழுக்கம், முறைமை, தொழில் ஆகியவற்றின் அடிப் படையிலெழுந்த உளப்பான்மையும் பழக்கவழக்கங்களும் திருச்சபையின் வாழ்வில் விருத்தியெய்தியதுடன் அங்கிருந்து திருச்சபைத் தொடர்பற்று உலகத்துக்கும் பரவலாயின. மேலும், திருச்சபையாளரே கற்றறிந்தவர்க ளாக இருந்தனராதலால், முடிக்கும் அதன் முதற் செயலகத்திற்கும் முக்கிய ஆலோசகராக விருந்தனர். இதனல் புது உரோமன் கருத்துக்கள் மிக இலகுவாகத் திருச்சபை வட்டாரத்திலிருந்து அரசாங்க வட்டாரத்திற் குச் சென்றன. அரசபதம், முன்பு உடலுறுதியும் வாள்வல்லமையுமுடயை நிலப்பெருமக்களைப் பெற்றிருந்தவாங்கு, இப்போது நுண்ணறிவாலும் எழுத்தாற்றலாலும் சேவை செய்யக்கூடிய புதிய நண்பர்களைப் பெற்றது. திருச்சபையாலும் உரோமச் சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட இறைமை பற்றியதிருச்சபைக் கொள்கைகளாலும் தூய்மையாக்கப்பட்ட அரசபதம் ஒரு புதிய புனிதத்தன்மையையும் தன் குடிமக்களின் பற்றுறுதியைக் கோரும் உரிமையையும் பெற்றது. நோமானிய வெற்றிக்கும் இல்தபிராண்டு காலத் துக்கும் பின்பே திருச்சபையும் அரசனும் எதிரிகளாகவும் நேயர்களாகவும் மாறிமாறி இருந்துவந்தனர்.
புதிய கிறித்துவத் தலைவர்கள் அரசறிஞராகவும் தலைமைக் குருமாராகவும் இருந்து இங்கிலாந்திற் பெரும் பணியாற்றினர். ஆனல், இவ்வாறு அவர்க ளிடையே ஏற்பட்ட மாற்றம், அவர்களே முகங்கடுத்த அதிகாரிகளாகவும், அனைத்துக்கும் மேலாகத் திருச்சபைக்காக நிலமும் அதிகாரமும் பெறும் பேராசையுடைய ஆள்புலக்காரராகவும் செய்தது. அயோன துரதத்தின் பழைய இயல்புகளாகிய தாழ்மை, எளிமை, நிறைந்த சோதரவாஞ்சை ஆகியவனைத்தும் உலிற்பி முடிவுகளைப் பின்னர் எற்றுக்கொண்ட இலிண்டிசு பானைச் சேர்ந்த கதுபெற்று என்பாரிடம் மட்டுமே ஒருருவெடுத்தாற் போன்று காணப்பட்டன.
689 ஆம் ஆண்டிலிருந்து 890 ஆம் ஆண்டு வரை நாட்டுச் சமய முதல்வராயிருந்த தாசசைச் சேர்ந்த தியோடர் என்பார் புதிய பதவணியை அமைத்ததுமன்றி, இங்கிலாந்திலிருந்த எல்லா ஆச்சிரமங்களையும் சமய வட்டங்களையும் கந்தபெரி ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தார். ஒகத்தீ னுக்குப்பின் வந்தவர்களுள் முதலில் குறிப்பிடத்தகுந்தவரான இவர், ஆங்கிலேய வரலாற்றிலேயே திருச்சபையின் மிகச் சிறந்த முதல்வராக விளங்குகிறர். மத்தியதரைப் பிரதேச நாகரிகம் கொடுக்காத சிறப்பை யெல்லாம் வடக்குத் தீவுக்கு அளிக்கக் காரணமாக இருந்த அக்காலத்துப்

Page 54
88 பீட்டும் நோதம்பிரியாவும்
போப்பாட்சியுடன் இங்கிலாந்து கொண்டிருந்த நெருங்கிய தொடர்பின் மேன்மைக்குத் தியோடரது வாழ்க்கை நெறி ஒரு முதன்மையான எடுத்துக் காட்டாக இருக்கின்றது. பிரான்சும் சேர்மனியும் பாழும் அறியாமையி லிருந்த காலத்தில், சின்னசியாவிலுள்ள தாசசு நாட்டுக் கிரேக்கராகிய தியோடரைப் போப்பாண்டவர் எங்களுக்கு அனுப்பினர். அவர் தமக்குத் துணையாக ஆபிரிக்க திரியன் என்பாரைத் தன்னுடன் அழைத்து வந்தார். அவ்விருவரும் இத்தாலியையும் இலெவாந்தையும் சேர்ந்த சிறந்த கிரேக்க, இலத்தீன் கலைகளில் வல்லோராயிருந்தனர். பெனடிற்று பிசுகோப்பு என்னும் ஆங்கிலேயரது உதவியால் மத்தியதரைக் கடற்பிரதேசத்திலிருந்து இன்றியமையாத, கிடைப்பதற்கு மிக அரிய சிறந்த நூற் களஞ்சியத்தை இவர்கள் இங்கிலாந்துக்குக் கொணர்ந்தனர். இலத்தீன் கல்விக்கு மட்டுமன் றிக் கிரேக்க கல்விக்கும் சிறந்தவொரு கலைக்கூடமாகக் கந்தபெரி விளங் கிற்று. தெற்கு நாடுகளிலிருந்து வந்த புதிய செல்வாக்குக்களும் வட இங்கி லாந்திலிருந்த கெலித்தியக் கலையறிவைச் சேர்ந்த முற்போக்கான மரபு களும் சேர்ந்து யரோவிற் பீட்டு கற்ற பாடசாலையையும் யோக்கில் அல்குயின் படித்த நூல்நிலையத்தையும் தோற்றுவித்தன. இங்கிருந்தே சமயமும் உலகியற் சார்பான கல்வியறிவும் கண்டத்தில் மீண்டும் புகுந்து, சாளிமேன் பேரரசில் இலத்தீன் இலக்கியத்தைக் கற்பித்தது ; இக்காலங்களில் தேனியப் படையெடுப்புக்களின் விளைவாக நோதம்பிரியாவிலிருந்த ஆச்சிர மங்களிலும் நூல் நிலையங்களிலும் கல்விச்சுடர் ஒரு சிறிது காலமாக அணைந்திருந்தது.
பீட்டின் அறிவியல் வாழ்க்கையிலிருந்து, இருண்ட யுகங்களிற் கல்வி யறிவு எவ்வளவு இருந்ததென்பது தெளிவாகும் (673-735). ஆனல், இக்காலத்தவராகிய நாங்கள் “ஆங்கிலேய வரலாற்றுத் தந்தை ” என்றே அவருக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறேம். எங்கள் தீவின் மத்தியகால வரன்முறைக் குறிப்பெழுதுவோரின் நீண்ட வரிசையில் அவர் முதல்வராவர். இங்கிலாந்திலிருந்து அயோன திருச்சபையையும் அதற்குப் போட்டியாக விருந்த கந்த பெரி திருச்சபையையும் பற்றிய கதையைக் கூறி இன்னும் அவற்றினை நினைவுமறையாதிருந்த இடத்திலும் காலத்திலும் அக்கதையை முதலில் எழுதியவரும் அவரே. எய்தனும் அவர் சீடர்களும் வைதிக மற்றவர்களாக இருந்ததற்காகப் பீட்டு அதிக வருத்த முற்றிருந்தும் அவர்களைப் பற்றி அவர் மறக்கவில்லை. எனெனில், அவர் தாமே நோதம்பிரிய வாசியாக இருந்ததுடன், எவ்வாறு யாரால் தம் சொந்த நாட்டு மக்கள் மதம் மாற்றப்பட்டனரென்பதை நன்கறிந்தவராயு மிருந்தார். உவேல்சு நாட்டுச் சமயப் பிரிவினைக்காரர் மீது அவர் அத்துணை பாசமுடையவராயிருக்கவில்லை.
இதுவரை கெந்து பிரதேசத்திலிருந்து வந்த திருச்சபைச் சங்கீதம், கந்தபெரியிலிருந்து தீவெங்கணும் பரவிய உரோமரது செல்வாக்குக் காரண

பீட்டும் நோதம்பிரியாவும் 89
மாகத் தீவு முழுவதும் பரவிற்று. சட்சனியர் அதை விருப்புடன் எற்றுக் கொண்டனர். அதனல் அம்மக்களிடையே கிறித்துவம் பெரிதும் வலுப் பெற்றது. அன்றியும், உரோமின் வெற்றி, திருச்சபைக்குரிய சிற்பக் கலையின் வளர்ச்சிக்குங் காரணமாயிற்று. எய்தனுக்குப் பின்வந்த கொத்து லாந்தர் இலிண்டிசுபானிலிருந்த தமது பெருங்கோயிலைத்தானும் மரத் தாலும் நாணலாலுஞ் சமைப்பதோடு திருத்தியடைந்தனர். ஆனல், உவிற்பிக் கூட்டத்தின் பின் புதிய முறையில் ஆலயங்களைக் கட்டியோர், உரோமச் சிற்பக்கலையின் பேரழகும் அழியாத் தன்மையும் அவற்றில் விளங்குமாறு அமைக்க முயன்றனர். உரோம நகரங்களிலும் கிராம வாசங்களிலுமிருந்த கூரையற்ற சுவர்க் கட்டடங்கள் அக்காலத்தில் இங்கி லாந்தில் நெருக்கமாகப் பரவிக் கிடந்தன. இக்கட்டடங்கள் சதுரக்கற் கிடைக்கும் கற்குழிகளாகப் பயன்பட்டன. இத்தாலிக்கு, அல்லது மெருே விங்கியன்கோலுக்கு யாத்திரை செய்தபோது தாம் பார்த்த பிணம் புதைக் கும் நிலவறைகள், நீண்ட சதுரவடிவமான கோயில்கள் ஆகியவைகளை நினைவில் கொண்டிருந்த ஏழாவது, எட்டாவது நூற்றண்டுகளைச் சேர்ந்த கோயிற்கட்டடத்தார் அக்கட்டடவமைப்புக்களையும் மாதிரிகளாகப் பயன்படுத் தினர். சாளிமேனின் ஊழிக்குப்பின் உரோமானிய இறெனிசு சிற்பக்கலையி னதும் சேர்மானிய சிற்பக் கலையினதும் செல்வாக்கு,தேனியப் படையெடுப்புக் களிலிருந்து மீண்ட இங்கிலாந்தில் அதிகமாகக் காணப்பட்டது. மிகப்பெரிய கோயில்களுட்பட சட்சனியரின் கோயில்களிற் பெரும்பாலானவை பின் வந்த நோமானிய, அல்லது பிளாந்தேசெனற்று இனத்தவருக்கேற்றதாக அமையும்படி இறுதியில் இடிக்கப்பட்டன. எனினும், பொதுமக்கள் தம் மண்டபங்களையும் குடிசைகளையும் மரத்தால் கட்டிக்கொண்டிருந்தசமயத் தில், சட்சனிய இங்கிலாந்தில் கற்கோயில்கள் அதிகமாகக் கட்டப்பட்டு வந்தன எனும் உண்மையை நாம் மறந்து விடலாகாது.
M
ஆங்கிலேய திருச்சபையின் அமைப்பு 669 ஆம் ஆண்டில் 68 வயதின ரான தாசசு நாட்டுத் தியோடரால் நிறுவப்பட்டு இருபது வருடங்களாக அவ் வயோதிபராற் சிறப்பாக நிருவகிக்கப்பட்டது. அவரது நிருவாகத்திற்
பற்றிலிருந்த கோவில்களிற் சில எலவே கற்களாலானவை யாயினும் பெரும் பாலானவை நோமானிய படையெடுப்புக் காலத்தில் மரத்தாலாக்கப் பெற்றவையாகவே இருந் தன. பக்கு எனுமிடத்திலுள்ள இருபக்கங்களையுடைய கோயில் சட்சணிய காலங்களில் பெரிய அளவில் கற்களாற் கட்டப்பட்ட நாட்டுப்புறத்திற்குரிய கோயில்களுக்கோர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. அக்கோயிலிலிருக்கும் பிணம் புதைக்கும் நிலவறை இத்தாலிய அல்லது பிராங்கு மாதிரிகளைப் பின் பற்றிக் கட்டப்பட்டுள்ள தென்பது தெளிவு. எத்திரியன் சுவருக் கண்மை யிலிருந்து அழிந்துபோன உரோம நகரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கற்களால், ஏழாவது நூற்றண்டில், உவில்பிரெட்டு என்பவனல் கட்டப்பட்ட எகசாம் எனுமிடத்தில் இருந்த பெரிய முனிவராச்சிரமுமத்தகையது. அதிலிருக்கும் பிணம் புதைக்கும் நிலவறை இன்னும் பழுதுபடாதிருக்கின்றது. நோத்தாமிடன் சயரிலுள்ள பிறிச்சுவொது எனுமிடத்தின் அருகி லிருந்த உரோமன் காலச் செங்கற்களே ஆங்கிலேய-சட்சணியக் கட்டடக்காார் பயன்படுத்தி புள்ளனர்.

Page 55
90 தாசசுநாட்டுத் தியோடர்
குப் பல எதிர்ப்புக்களிருந்தும் அவற்றையெல்லாம் அவர் அடக்கினர். அவரது சீர்திருத்தத்தின் சாரம் யாதெனில், பல விசப்புமாரையும் அவர் களின் ஆட்சிக்குட்பட்ட சமயவட்டாரங்களையும் ஏற்படுத்தியதேயாம். இவர்கள் கெலித்திய திருச்சபையைச் சார்ந்த, ஊர்சுற்றும் போதகர்களைப் போலி ராது, யாவரும் கந்தபெரிக்குக் கீழ்ப்பட்டவராயும் திட்டமாக வரையறுக்கப் பட்ட வட்டாரங்களைத் தமக்கெனத் தனித்தனி உடையராயும் இருந் தனர். ஆச்சிரமங்களுங்கூட திருச்சபைக்குரிய பொது முறைமைக்கு உட்பட்டிருந்தன ; அவைகள் எண்ணிக்கையிலும் செல்வத்திலும் வளர்ச்சி யடைந்து கொண்டிருந்தன வென்பது உண்மையே. ஆனல், அவைகள் கெலித்தியக் கிறித்துவத்திற் பெரும்பாலும் இருந்துவந்தது போன்று, சுயேச்சையுடையனவாகவும் திருச்சபையின் தனிச்செயலாண்மை நிலையங்க ளாகவும் இருக்கவில்லை.
தியோடர் வாழ்நாட்களுக்குப்பின், அவர் பின்பற்றிய குருவாய முறை களின் பயனுகக் கோவிற்பற்று முறைமை வளர்ந்து ஒன்றன்பின்னென்ருக ஒவ்வொரு பட்டணத்திலும் மெதுவாகப் பரவத் தொடங்கியது. நோமானிய படையெடுப்பிற்கு முன்னரே தீவின் பல பகுதிகளிலும் கோயிற்பற்றுக் கோயில்களும் கோயிற்பற்றுக் குருமாருந் தோன்றிவிட்டனர். இக்கோயிற் பற்றுக் குருமார் துறவிகளல்லர். இவர்கள் சட்சணிய காலங்களில் பெரும் பாலும் திருமணஞ் செய்தவர்களாயிருந்தனர்.
உலகியல் துறையில் ஆங்கிலேய-சட்சனியரதும் தேனியரதும் பெரும் பணி யாதெனில் காடுகளை வெட்டித் திருத்தப்பட்ட விடங்களில் பல பட்டணங்களை அமைத்ததாகும். அதேபோல, சமயத் துறையில், நோமானியருக்கு முற்பட்ட அதே காலத்தில் மானியமளிக்கப்பட்ட ஒரு போதகரையும் வழிபாட்டுக்கென ஓரிடத்தையும் கொண்ட பல கோவிற்பற்றுக்களாக இங்கிலாந்து பிரிக்கப் பட்டது. இவ்வீர் இயக்கங்களும் சேர்ந்து எமக்குத் தெரிந்த நாட்டுப்புற இங்கிலாந்திற்கு அடிகோலின. பட்டணங்களே பெரும் தொகுதிகளாயிருக்க கோவிற்பற்றுக்களும் பெரும்பாலும் பட்டணங்களைப்போன்ற அதே பரப் பளவைக் கொண்டிருந்தன. ஆனல், வட இங்கிலாந்திலும் மேற்கு இங்கி லாந்திலும் ஒரே கோவிற்பற்றிற் பல பட்டிணங்களிருந்ததை நாம் காண் கிருேம். ஏனெனில், பட்டணஞ் சார்ந்த ஊர்கள் சாதாரண கிராமங்க ளாகவோ தனித்தனிக் கமங்களாகவோ இருந்ததனலென்க.
கோவிற்பற்று முறைமையின் தோற்றத்துக்குக் காரணராயிருந்தவர்கள் விசுப்பாண்டவரும் நிலப் பெருமக்களுமாவர். விசுப்பாண்டவர் தம் நோக்கில், வெறும் ஆச்சிரமவாசிகளைப் போன்றுமட்டுமிராது, சமயத் தலை மையதிகாரத்துக்கு ஆச்சிரமவாசிகளைப் பார்க்கினும் அதிகம் கட்டுப்பட்ட வர்களாயிருந்த உலகியல்சார்ந்த-அதாவது ஆச்சிரம வாசிகளல்லாதமதகுருக்கள் விருத்தியடைவதில் ஊக்கங்கொண்டிருந்தனர். அன்றியும், பொதுமக்களுடன் நேரடியான தொடர்புடையவராயும் இவர்களிருந்தனர்.

கோவிற்பற்றுமுறையின் தோற்றம் 9i
நிலப் பெருமகன் அல்லது உள்ளூர்த் தலைமக்கள் நிலமோ நன்கொடையோ வழங்கினன். தொடக்கத்தில், குருவானவர், நிலப் பெருமகனின் மண்டபத்தில் அவனது குடும்பப் புரோகிதராகவே இருந்தார். ஆனல், நாளடைவில் அவரின் வழிவந்தோர் கோயிற்பற்றுக்குரிய பாதிரிமாராக விளங்கலாயினர். முதலில், நன்கொடையளித்தவரின் உரித்தாளரே அப் பாதிரியை நியமனஞ் செய்யும் அதிகாரத்தைக் கோரினர். ஆனல், விசுப்பாண்டவரே அப்பாதிரியைத் திறமையாக வழிநடத்தும் கட்டளையதிகாரி யாயிருந்தார்.
இங்கிலாந்தின் நாட்டுப்புறக் கோவிற்பற்றுக்களைச் சேர்ந்த கோயில்கள் கட்டப்பட்ட விடங்கள் பெரும்பாலும் சட்சணியர் காலத்தினவாகும். எனினும், சட்சனியரின் அக்கட்டடங்களிற் பல, பிந்திய தலைமுறைகளில் மதசம்பந்த மாய் எற்பட்ட தீவிர எழுச்சிகளின் பயனுய் அழிந்துபோயின. சட்சனிய இங்கிலாந்திற் பெரும்பாலான மக்கள் கிராம வாழ்க்கையையே மேற் கொண்டிருந்தனர். மேலும், கோயிற்பற்றைச் சேர்ந்த கோயிலும் அதனை அடுத்திருந்த மயானமுமே அக்கிராமத்தின் பிரதான நிலையங்களாக விளங் கின. இங்கேயே உலகியல் சார்ந்த விடயங்களும் ஆன்மிகு விடயங்களும் அக்கிராம வாசிகளினற் கவனிக்கப்பட்டன. உவோடன், தோர் ஆகிய தெய்வங்களை வழிபடல் படி முறையாக மறைந்தபின்னர் அல்லது வெற்றி வீரரான குருவாயத்தினரின் சகிப்புத்தன்மையற்ற சட்டங்களால் பேய்வழி பாடு என்று அவை ஒடுக்கப்பட்ட பின்னர், கோவிற்பற்றுக்குரிய கோயி லுடன் தம் வாழ்வும் மரணமும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந் ததை மக்களனைவரும் கண்டனர்.
திருச்சபையின் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் ஏற்பட்ட வளர்ச்சி யானது ஒருபுறம் சமயச் சார்பினதாய் முற்பீோக்குடையதாய் இருந்தது ; மறுபுறம் மானியமுறைக்கும் உயர்குடியாட்சிக்கும் வலுவூட்டுவதாய் இருந் தது. ஆனல், இவ்வீர் அமிசங்களும் வெவ்வேருணவையென்று இக்காலத் தவரே கருதுவர். இவ்விரண்டும் பேதமின்றி ஒரே இயக்கத்தனவென அக்காலத்திருந்தவர் கருதினர். கடுந்தண்ட வரியாகவும் விளைவிற் பத்தி லொரு பங்கு வரியாகவும் திருச்சபை பெற்ற வருவாய்கள் மத்திய கால திருச்சபையின் அருங்கலை, சிற்பக்கலை, ஒய்வு, கல்வி, நாகரிகம் என்ப வற்றை வளர்ப்பதற்கு அவசியமாயிருந்தன. எனினும், அவை கமக்கார னுக்கு ஒரு சுமையாயிருந்ததுமன்றி, பல பண்ணையாட்களை வறியவ ராக்கியதுடன் அடிமைகளாக்குவதற்கும் காலாயிருந்தது.
முதலில் மேசியா, உவெசெட்சு ஆகியவிடங்களிலும் பின்பு இங்கிலாந்து எங்கணுமிருந்த ஆங்கில-சட்சணிய மன்னர், தங்களின் மதிப்பிற்குரிய தலைமைக் குருக்களின் தூண்டுதலினலும் தங்கள் ஆன்மஈடேற்றத்தின் பொருட்டும் விசுப்பாண்டவர் வட்டாரங்களுக்கும் துறவி மடங்களுக்கும்

Page 56
92 திருச்சபையின் சட்டமும் அரசின் சட்டமும்
தம் நிலங்களிற் பெரும் பகுதிகளை வழங்கினர். உலகியல், திருச்சபை சார்ந்த நிலமானியத் தலைமக்களின் நன்மைக்காக, நிலங்களையும் அரசர்க்குரிய ஆளெல்லையையும் எழுத்துப் பட்டங்கள் மூலம் எவ்வாறு பராதீனப் படுத்தலாமென அரசர்களுக்கு முதலில் கற்பித்தவர் மதகுருக்களாவர். ஆங்கில-சட்சனிய சொத்துரிமைக்காரருக்கு இறுதி. முறிகள் எப்படி எழுதுவதென்றும் மதகுருக்களே கற்றுக்கொடுத்தனர். இவ்விறுதி முறிகள் மூலம் திருச்சபை பல தடவைகளில் நிறைந்த செல் வத்தைப் பெற்றது. அன்றன்றைய வாழ்க்கையிலே எழுகின்ற சட்டப் பிரச்சினைகளையும் அறிவுத்துறைப் பிரச்சினைகளையும் விளக்குவதன் வாயிலாக, நிலவுரிமை, வகுப்பு வேற்றுமை, மக்களின் சுதந்திரத்தி லும் செல்வத்திலும் அதிகரித்து வந்த எற்றத்தாழ்வு எனுமிவற்றை அடிப்படையாகக் கொண்ட நிலமானிய முறையின் வளர்ச்சிக்குத் திருச்சபை ஆதரவளித்தது. * நிறைந்த செல்வங்களைக் கொடையாக கோயில்கள் பெற்றிருப்பின் அஃது உழவோர் அடிமைப்பட்டுள்ளனர் என்பதற்கு அறிகுறியாகும் ” என மெயிற்றுலாந்து எழுதுகிறர். தூம் சுதே என்னும் நிலக்கணிப்பேட்டுக் காலத்தின் பிற்பகுதியில் “ உசுற்றர் ஈவுசம், பெசோர், உவெசுமினித்தர் ஆகிய இடங்களிலிருந்த நான்கு சமயக் குருக்களும் உசுற்றர்சயரின் பன்னிரண்டில் எழு பாகத்துக்குப் பிரபுக்களாக இருந்தனர்.
ஆங்கில-சட்சணியர் காலத்தில், தேனியரது படையெடுப்புக்கு முன்னும் பின்னும், திருச்சபையையும் அரசையுந் தெளிவாக வேறு படுத்திக் காட்டுவதென்பது முடியாததொன்றகும். மத்திய காலம் முழுவதிலும் இருந்தது போன்று விசுப்பாண்டவர்களும் குருமாரும் குடியியற் சேவை யில் முக்கிய பங்குபற்றியிருந்தனர். ஆனல், நோமானிய படையெடுப்பிற்கு முன்பு தனியான திருச்சபை நீதி மன்றுள் இருந்ததில்லை. சயர் நீதி மன்றத்தில் ஒல்தமன், அல்லது செரிபு எனும் மாநகர் மணியகாரரும் விசுப்பாண்டவரும் ஒருங்கிருந்து, ஆங்கு ஆன்மீக, உலகியற் சட்டங்கள் வேற்றுமையின்றிப் பாலனஞ் செய்துவந்தனர். மக்கள் வாய்மொழி மரபி லிருந்து முதன்முதலிற் குருமாரால் எழுதப்பட்டிருந்த ஆங்கில-சட்சனி யரின் அச்சட்டங்கள் அக்கால நிலைமைக்கு எடுத்துக்காட்டாக அமையும். அவை ஆங்கில-சட்சணிய மொழியில் எழுதப்பட்டிருந்தன ; ஆனல், குரு வாயத்திற்குரிய எழுத்தாளரினல் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த அச்சட்டங்கள் இரு தன்மைகளை உடையன. அச்சட்டங்களின் ஒரு பகுதி, அவ்வாதிகால மக்களிடையே அடிக்கடி நிகழ்ந்த முரட்டுச் சண்டைகளில் உயிருக்கும் உடலுக்கும் ஊறு செய்தவர்களுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய குல வழமைகளின் பட்டோலையாகும். “ஒருவன் மற் றவனைக் கொன்ருல் கொன்றவனுக்கு 100 சிலினும், எலும்பொன்று தெரியக் காயம் விளைவித்தால் 3 சிலினும், அறுக்கப்பட்டால் 12 சிலினுந் தண்டம்” என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனல், இவற்றேடு திருச்சபை

திருச்சபையின் சட்டமும் அரசின் சட்டமும் 93
யின் மேலான சிறப்புரிமைகளையும் பாபம் செய்தோர்மீது திருச்சபையானது அக்காலத்துப் பெற்ற அதிகாரத்தையும் அச் சட்டங்கள் தொகுத்துக்கூறின. மேற்கூறப்பட்டவை யனைத்தும், உலகியல் விடயங்களுக்கும் திருச்சபைக்கும் பொதுவாய் அமைந்த முறைமன்றமாகிய சயர் நீதி மன்றல் நிருவகிக்கப் பட்டன.
திருச்சபையின் அரசியற் செல்வாக்கு அரசர்களும் மக்களும் கொண் டிருந்த மத பத்தியினின்றும் பிரிக்க முடியாதவாறு அதனுடன் பின்னிப் பிணைந்திருந்தது. மேசியா, உவெசெட்சு ஆகிய பிரதேசங்களிற் செல் வாக்குடனிருந்து வந்த அரசர்கள் தம் சிங்காசனங்களைத் துறந்து துறவி களாகவோ, உரோமுக்குச் செல்லும் யாத்திரிகராகவோ தம் இறுதி
*அற்றன்பசோவின் * ஆதிகால ஆங்கிலேய மன்னர்களின் சட்டங்கள்” (1922) எனும் நூலைக்காண்க. உவெசெட்சு அயினிலுள்ள சட்டங்களிலிருந்து எடுத்தாளப்படும் சில மேற் கோள்கள் பல குறிப்புக்களையும் விளக்கிக் காட்டும்.
* ஒரு குழந்தை 30 நாட்களுக்குள் ஞானதீக்கை பெறும். இவ்வாறு செய்யாவிடின் பெற் ருேர் 30 சிலின் நட்ட ஈடு கொடுத்தல் வேண்டும். குழந்தை ஞானதீக்கை பெருது இறந்து விடின் பெற்றேர் தம் உடமை முழுவதையும் நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.
* ஒர் அடிமை தன் பிரபுவின் கட்டளேக்கமைந்து ஞாயிற்றுக்கிழமையன்று தொழில் செய்வா னயின் அவன் விடுவிக்கப்படுவான். ஆனல், ஒரு பண்ணையாள் தன் பிரபுவின் கட்டளையாலன்றி அக் கிழமையில் வேலை செய்வானகில் அவன் அடிமையாக்கப்படுவான். இச்சட்டமும் எ?னய சட்டங்களும் திருச்சபையானது அடிமை முறையை இன்னும் எதிர்க்கவில்லை யென்பதைக் காட்டுகின்றன. " திருச்சபைக்குச் சேரவேண்டியவை திருத்தொண்டர் மாட்டின் திருவிழா வின் போது கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியவன் 60 சிலின் கொடுப்ப துடன் தான் கொடுக்கவேண்டிய திருச்சபை வரிகளைப் போன்று 12 மடங்கு அதிகமும் கொடுக்க வேண்டும்.”
*ஒருவன் தன் மனைவிக்கும் மக்களுக்கும் தெரியாது திருடுவானயின் அவன் 60 சிலின் தண்டம் செலுத்தல் வேண்டும். ஆனல், அவன் தன் வீட்டாருக்குத் தெரிந்து திருடுவானமின் அவ்வீட்டாரனைவரும் அடிமைகளாக்கப்படுவர். “ஒரு திருடன் திருடுகின்றபோது பிடிக்கப் படுவான யின் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படும்; அல்லது அவன் தண்டம் செலுத்தித் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.”
* ஒருவன் உவெசெட்சைச் சேராத ஒர் அன்னியனைக் கொன்ருல் கொன்றவன் இறுக்குந் தண்டத்திலிருந்து மூன்றில் இரண்டுபங்கு அரசனையும் சேரும். ” “உவேல்சு நாட்டில், வரிகொடுப்பவர் 120 சிலின் தண்டம் இறுக்க வேண்டும்.” மரணம், அடிமைத்தனம், கசையடி, தண்டம் ஆகியவையே சாதாரணத் தண்டனைகளாக இருந்தனவேயன்றி, சிறைத்தண்டனை யிருந்ததில்லை. ஒரு கோயிலுள்ளே அடைக்கலம் புகுதற்கும் பல விரிவான கட்டளைகள் விதிக் கப்பட்டிருந்தன.
“முறைகேடான மணவுறவில் வாழும் ஆடவர் தம் பாவங்களுக்காக மனம் நொந்து நேர்மை யான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இன்றேல் அவர்கள் திருச்சபையின் தொடர்புறவு என்பதினின்றும் விலக்கப்படுவர் “-இவ்வாறு கெந்து அரசனுகிய உவீதெரடு காலத்துச் சட்டன் களில் காணப்படுகின்றது.
எங்களுக்குக் கிடைத்துள்ள ஆங்கில-சட்சணிய சட்டத்தின் எழுதப்பட்ட பகுதிகள் அக்காலத்து நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு “ வழமைகளின் " மிகச்சிறிய கூருகும்.

Page 57
94 மத்தியதரைச்சார்பும் நோதிக்குச்சார்பும்
நாட்களைக் கழித்தது பற்றி ஆங்கில-சட்சணிய வரன்முறைக் குறிப்பில் நாம் படிக்கும்போது, ஆச்சிரமங்களுக்கு உடைமையாக்கப்பட்டிருந்த பரந்த நிலங்களைப் பற்றியும், அல்லது மேசிய ஒபாவின் மன்றிலும் உவெசெட்சு எக்குபெற்றின் மன்றிலும் மேன்மை பெற்றிருந்த, எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே ஒரு வகுப்பினரைப் பற்றியும் நாம் ஆச்சரியப்பட முடியாது. அவ்வொரு வகுப்பினரே எழுதப் படிக்கத் தெரிந்தவராயும் அவர்களே கடல் கடந்த சிறந்த பிராங்கு முடியாட்சியின் பாலன முறைகளை அறிந்த வராயுமிருந்தனர். அன்றியும், அவர்களே அரசனுக்கும் அவனுடைய நிலப் பெருமக்களுக்கும் முடிவிலா நரக வேதனையை விலக்குவதற்கும் முடிவிலாப் பேரானந்தத்தைப் பெறுவதற்கும் அவசியமான முறைகளைப் பற்றி அறிவுறுத்தும் ஆற்றலுடையவராயுமிருந்தனர்.
எனினும், ஆங்கில-சட்சணிய உலகம், மத்தியதரைப் பிரதேசக் கிறித்துவ மதத்தின் பண்பாட்டுக்கும் ஒழுக்கமுறைகளுக்குமுரிய கருத்துக்களை முற்றக எற்றுக்கொள்ளவில்லை. வீரகாவியத்திலும் ஐதிகக் கதையிலும் பழக்கப் பட்டிருந்தவரும் வடபகுதியைச் சேர்ந்தவரும் புதிய மதத்தைத் தழுவிய வரும் வீரருமான நிலப்பெருமக்களின் மனப்பான்மையினலும் புதுச்சம யம் ஒரளவு பாதிக்கப்பட்டது. எட்டாவது நூற்றண்டைச் சேர்ந்த நோதம் பிரியவாசி எனக் கருதப்படும் ஒரு கிறித்துவக் கவிஞர், “ சிலுவையின் கனவு’ என்ற கவிதையில் பின்வருமாறு இவ்வீரியல்புகளையும் கலந் துள்ளார் :-
ஆடை உரியப்பட்ட இளம் வீரர் அவரே சருவ வல்லமையுள்ள கடவுள் உறுதியும் அஞ்சாமையும் கொண்டு உயரிய சிலுவையில் ஏறிக்கொண்டார் பலரும் பார்த்து வியக்கும் படி மனித குலம் மீட்க விரும்பியக்கால் அவ்வீரர் எனைத் தழுவவும் நான் நடுங்கினேன் நானே பூமிக்குத் தலை குனிந்திலேன்.
பெருந்தன்மை வாய்ந்த நோதிக்கு வீரருட் பெரும்பாலானேர் பொது வாகக் குருவாயத்தை மதித்து வந்த போதிலும் தங்கள் முன்னேரை மறக்கவில்லை. அவர்கள் தாம் முன்பு கொண்டிருந்த ஒழுக்க இலட்சியங் களில் இன்னும் ஈடுபாடுடையராய் இருந்தனர். மத்திய காலத்தையும் இக்காலத்தையும் சேர்ந்த அனேக கவிதைகள் போன்று ஆங்கிலேய-சட் சனிய கவிதையும் மதம் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடும்போது உண்மையாக

பேராண்மைக் காலம் 95
கிறித்துவ அமைப்பைக் கொண்டிருக்கின்றது. ஆனல், மரபில் பதிதத் தன்மையையும் உணர்ச்சியில் முற்றிலும் மனிதப் பண்பையுங் கொண் டிருக்கின்றது. அற்புதமான சட்சணிய காவியங்களில் ஒரு சில பகுதிகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்துள்ளன. இவைகளே மிகச் சிறப்புள்ளன வெனக் கொள்வதற்கு நியாயமில்லை. இவைகளில் மிக நீண்டதான * பெயோவுல்பு ” எனுங் கவிதையானது, அல்சினேபசு மண்டபத்தில் ஒடீசியசு சொல்லிய கதைகளைப் போன்று விவேகமற்ற பொருளையுடைய தாயினும் ஒமருடைய உணர்ச்சியினதும் நடையினதும் மாண்பினை அதில் ஒரளவு காணலாம். VA
சட்சணிய காவியங்களிற் புகழ்ந்தேத்தப்படும் நற்பண்புகளாவன வீர ைெருவன் தன் பிரபுவிற்குக் காட்டும் பற்றுறுதி, போரிற் சாவை எற் பதற்கு மக்கள் சித்தமாயிருத்தல், பிரபு ஒருவனுக்கு இருக்கவேண்டிய துணிவு, மரியாதை, பெருந்தன்மை என்பனவாம். ஏனெனில், அரசன், நிலப் பெருமக்கள் ஆகியோர் முன்னிலையில், அரசவையிற் பாடப்பட்ட பாடல் கள் இவையாதலால் என்க. இத்தகைய பாடல்களிற் சிறப்பாக அமைந் துள்ள கதாநாயகன் குல வழமைக்கோ, மத விதிக்கோ கட்டுப்படாத வனயும் அருஞ்செயல் விருப்பையே தன் வாழ்வின் உயிர்நாடியாகவுடைய வனயும் பெருந்தகைமையும் மனவெழுச்சியுமுடையவனயும் இருப்பன். அவன் அக்கிலீசு, அல்லது எற்றர் போன்றவனேயன்றி, ஒடீசியசு போன்ற வனகான். பல வகைகளில் அவனது வாழ்க்கை, ஒமர் காலத்து வாழ்க் கையை ஒத்திருக்கின்றது. இவையிரண்டும் வீரத்தலைவன் சுதந்திரமாகக் கருமமாற்றக்கூடிய பேராண்மைக் காலங்களாகத் திகழ்ந்தன. கிறித்துவ மதமும் பிரதேசவாரியான நிலமானிய முறையும் தனிப்பட்டவர்மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிய காலத்தும், ஆங்கில-சட்சணிய சமு தாயத்தில் ஒழுங்கின்மையும் தறுகண்மையும் துன்பமும் இவற்றிடையே பெருந்தகைமையும் ஒருங்கு காணப்பட்டன. இதற்குச் சான்றக ஆங்கிலேய -சட்சணிய வரன்முறைக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ள சிறு பகுதி யொன்று கீழே தரப்படுகிறது. ஒபா மிட்டுலந்தை ஆண்டுவந்த காலத்தில் தென் இங்கிலாந்தின் நிலைமையை இது நன்கு எடுத்துக்காட்டுவதாகும்.
இவ்வாண்டில், மேற்குச் சட்சணிய உவிற்றன்மன்றின் உதவியோடு, கினியுல்பு மன்னன் தன் உறவினனன சிட்சுபெற்று செய்த அநீதிகளுக் காக அமிசயர் தவிர்ந்த எனைய அவனது இராச்சியத்தைப் பறித்துக் கொண்டான். ஆட்சி பெற்று தன்னேடு நெடுங்காலம் வாழ்ந்த ஒல்தமன் ஒருவனைக் கொலை செய்யும்வரை, அமிசயரைத் தன் ஆட்சியில் வைத் திருந்தான். பின்னர் சிட்சுபெற்றைக் கினியுல்பு அந்திரெட்டுக்கு விரட்டி னன் அங்கு வாழ்ந்து வருங்கால் பிறிவெட்சு வெள்ளத்தில், பன்றி மேய்ப்பவனெருவனல் அவன் குத்தப்பட்டுப் பழிவாங்கப்பட்டான்.

Page 58
96 பேராண்மைக் காலம்
தெவனைச் சேர்ந்த சொமசெற்று எல்லையிற் கினியுல்பு மன்னன் உவெல்சு களுக்கு எதிராகப் பல போர்கள் புரிந்தான். ஏறக்குறைய 31 ஆண்டு களாக இராச்சியத்தை ஆண்டபின் தேற்றவுரிமையாளனுகிய கைனட்டு என்பானை வெளியேற்ற எண்ணினன். இவன் சிட்சுபெற்றின் சகோதரன வான். அப்போது மன்னன் சிறிய பரிவாரத்துடன் சறேயைச் சேர்ந்த மேட்டனில் ஒரு பெண்ணைக் காணச் சென்றிருந்ததைக் கைனட்டு அறிந் தான். அரசனுடனிருந்த பரிவாரம் தன்னைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே குறித்த தேற்றவுரிமையாளன் அரசனிருந்த அறையை நாற்புறமும் சுற்றிச் சூழ்ந்து கொண்டான். இதனை உணர்ந்த மன்னன் வாயிலருகிற் சென்று தன்னைத் தைரியமாகப் பாதுகாத்துக் கொண்டான். பின்பு அறையினின் றும் வெளிப்பட்டு கைனட்டின்மீது பாய்ந்து அவனைக் கடுமையாகக் காயப் படுத்தினன். கைனட்டுடன் சென்றிருந்தவர்கள் அரசன் கொலை செய்யப் படும்வரை அவனை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அப்பெண்ணின் குரலைக் கேட்டுக் கோரச்சண்டை நடந்ததையறிந்த அரச னுடைய நிலப் பெருமக்கள் எலவே ஆயத்தராயிருந்தனராதலாற் சண்டை நடந்தவிடத்துக்கு விரைந்து சென்றனர். குறித்த தேற்றவுரிமையாளன் அப் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் பணமும் உயிரும் காணிக்கையாகக் கொடுக்க முன்வந்தபோதும் அவர்களிலெவரும் அவற்றை ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனல், அவர்களில் மிகக் கொடுமையாகக் காயப்படுத்தப்பட் டிருந்த பிரித்தானியப் பிணையொருவனைத் தவிர ஏனையோர் இறக்கும் வரை தொடர்ந்து போர் புரிந்தனர்.
மறுநாள் அரசன் கொல்லப்பட்ட செய்தி நாட்டிலிருந்த, அரசனுடைய நிலப் பெருமக்களுக்கு எட்டவே அவர்கள் போர் நடந்த இடத்துக்கு விரைந்தனர். கொல்லப்பட்ட அரசனிருந்த பட்டணத்தின் வாயில்களே, குறித்த தேற்றவுரிமையாளனும் அவனுடைய ஆட்களும் அடைத்துவிட்ட தைக் கண்டனர். ஆயினும், விரைந்து சென்ற பெருமக்கள் முன்னேறிச் சென்றனர். தனக்கு அப்பெருமக்கள் இராச்சியத்தைக் கொடுப்பராயின் அவர்கள் விருப்பத்துக்குகந்த நிலமும் பொருளும் கொடுப்பதாகக் குறித்த தேற்றவுரிமையாளன் கூறினன். அன்றியும், தன்னை விட்டகலாத அவர் களின் உறவினர் தன்னுடனேயே இருந்ததையும் அவன் அவர்களுக்கு எடுத்துக் காட்டினன். இதனைக் கேட்ட அவர்கள் தம் பிரபுவைவிடத் தமக்கு மிகவும் அருமையான உறவினர் இலரென்றும் அவனின் கொலை ஞனைத் தாம் ஒருபோதும் பின்பற்றேமென்றும் கூறினர். மேலும், அவர்கள் தம் உறவினரை குறித்த தேற்றவுரிமையாளனிடமிருந்து அபாய மின்றி வெளியேறும்படி வேண்டினர். ஆனல், இதற்கு அவ்வுறவினர், முன்பு அரசனுடனிருந்தவர்களுக்கு இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கப் பட்டிருந்ததென்றும் தாங்கள் இப்போது அப்படியான வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கப் போவதில்லையென்றும் கூறினர்.

ஆங்கில-சட்சனியரின் குறைபாடுகள் 97
இதைத் தொடர்ந்து எழுந்த போரில் குறித்த தேற்றவுரிமையாளனும் அவனுடனிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். போருக்கு முந்தியநாளில் அரசனுடைய ஆட்கள் நடந்ததை விடப் பெருந்தன்மைக் குறைவாய் நடப்பதைக் காட்டிலும் சாதலே சிறந்ததெனக் கருதியபடியால், கைனட்டுட னிருந்த அனைவரும் கொல்லப்பட்டனரென்க. ஆங்கில-சட்சனியரது வீர காவியங்களிற் கூறப்பட்டுள்ள ஒழுக்கமுறை அன்ருட வாழ்க்கையில் வழு வாது எவ்வாறு அனுட்டிக்கப்படக்கூடுமென்பதை இந்த நிகழ்ச்சி எமக்குக் காட்டுகின்றது.
அத்தியாயம் V
நோதிக்குக்களின் இரண்டாம் படையெடுப்பு. வைக்கிங்குகளின் குடியேற்றமும் செல்வாக்கும்
பிரித்தானியாவில் முதலாவதாகக் குடியேறிய நோதிக்கு மக்கள், இவ் வாறு நாகரிகப் பாதையிலும் நாட்டின ஐக்கியத்திலும் முன்னேறிச் செல் கையில், நோதிக்குக்களின் இரண்டாவது படையெடுப்பு அடுத்து ஏற்பட்டது. பதிதர்களான தேனியரும் நோசுமக்களும் தீவின் ஆச்சிரமங்களில் விளங் கிய சிறந்த நாகரிகத்தைச் சிறிதுகாலம் அழித்தனர். அன்றியும், சட்சனிய ரும் கெலித்தியரும் ஆண்டுவந்த பகுதிகளிலே தேனியச் சட்டங்களை அவர் கள் விதித்ததின் காரணமாகச் சிறிதுகாலம் ஒற்றுமையின்மையையும் வளர்த்தனர். இருந்தும் ஒரு நூற்றண்டு கழிவதற்குள், கந்தினேவிய ருடைய படையெடுப்புக்கள், முன்னேற்றத்துக்குக் காரணமாயுள்ள சத்தி களைப் பெரிதும் பலப்படுத்தினவென்பது தெளிவாயிற்று. ஏனெனில், வைக்கிங்குகள் சட்சனியரோடு தொடர்புடைய ஓரின மக்களாக விளங்கிய தோடு அவர்களினுங் கூடிய வலிமையும் துணிவும் சுதந்திர இயல்புமுடைய வராயிருந்ததுமன்றி, கவிதையிலும் கல்வியறிவிலும் ஒத்த ஆர்வமுடைய வராயுமிருந்தனர். மலைநாட்டுப் பண்ணைகளிற் சிலகாலமிருந்ததன் பய னகச் சட்சணியர் இழந்துவிட்ட கடலோடிகளுக்குரிய பழக்கங்களை வைக்கிங்கு கள் பிரித்தானியாவில் மீண்டும் புகுத்தினர். மேலும், உரோமானியர் சென்றபின்னர் முதன்முறையாக இங்கிலாந்தில் உற்சாகம் நிறைந்த பட்டண வாழ்க்கை மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றதற்கும் வைக்கிங்குகளே காரணமா யிருந்தனர். ஒன்பதாம் நூற்றண்டில் நிகழ்ந்த பேரிடையூறுகள் காரண மாகக் கந்தினேவியரது குருதி எங்கள் இனத்திலே கலந்திருக்காவிடின், கடலோடி வாணிபஞ் செய்யும் புகழ் பிற்காலத்திற் பிரித்தானியர்க்கு வாய்த் திருக்கமாட்டாது.

Page 59
98 சீர்குலைந்த தீவகம்
இவ்வாறு புத்துயிரளிக்கப்படுமுன்னர் ஆங்கில-சட்சனியரிற் காணப்பட்ட குறைபாடுகள் உண்மையில் மிகப்பலவாம். அவர்களோ தமது கடற் ருெழிலை முற்றக மறந்திருந்ததனல் அல்பிரெட்டு கடற்படையொன்றை நிறுவ முற்பட்டபோது பிரீசியன் கூலிப்படைகளின் உதவியை நாடவேண்டி யிருந்தது. இலண்டன் தவிர்ந்த எனையிடங்களில் அவர்கள் பட்டன வாழ்க்கையை ஒரு சிறிதும் அபிவிருத்திசெய்ததில்லை. அவர்கள் பிரித் தானியாவுக்குச் செய்த பெரும் பொருளாதாரப் பணி யாதெனின் கமத் தொழில், மரவேலை ஆகியவற்றில் முன்னேடிகளாயிருந்தமையே. இவர் கள் பெருங்கிராமங்களிலும் அல்லது காடழித்து வெட்டையாக்கி அவ் வெட்டைகளில் அமைந்த முகாங்கள் என்னும் தனிக் குடிசைகளிலும் வாழ்ந்துவந்தனர். ஆனல், இப்பெருங் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தம் உறைவிடங்களைச் சூழ்ந்திருந்த வெறு நிலங்களுக்கப்பால் நடப்பவை பற்றி அதிகக் கவனம் செலுத்தாதிருந்ததுடன், அந்நிலங்களுக்கப்பா லிருந்த “ அன்னியர் ” எவர்மீதும் ஐயுறவு கொண்டனர். “தொலை விடத்தில்வாழும் ஒருவன், அல்லது அன்னியனெருவன் பெருவழியைக் கடந்து காட்டு வழியாகச் செல்லும்போது உரக்கக் கத்தாமலோ, கொம்பை ஊதாமலோ செல்வானுயின் அவன் ஒரு திருடனகக் கணிக்கப்பட்டுக் கொல்லப்படுவான், அல்லது விடுதலைப் பணம் பெறுவதற்காகச் சிறைப் படுத்தப்படுவான்’ என்று கெந்து, உவெசெட்சு ஆகிய பிரதேசங்களின் கணிப்பேடுகள் கூறுகின்றன.
அரசர்களும் விசுப்பாண்டவரும் நாட்டுப்பற்றை-அல்லாவிடின் மாகாணப் பற்றையாவது-உருவாக்குவதற்கு மிக முயன்றும் அதில் அவர்கள் அதிக வெற்றி பெருது போயினர். வெளித் தொடர்பற்றும் நலிவுற்றும் கலகங் களுக்குட்பட்டுமிருந்த நோதம்பிரியா, தேனியருக்கு இலகுவான இரையா யிற்று. இரண்டாம் ஒபா (757-796) என்பவனின் புகழாட்சியில் மேசியா தலைமைத்தானம் வகித்தது (757-796). நான்கு நூற்றண்டுகளுக்கு முன் செல்சுவிக்கிலிருந்த பழைய இனப்பிரதேசமாகிய எஞ்சலை ஆட்சி புரிந்த வனும் பல கதைகளிலும் பாடல்களிலும் வீரன் எனப் புகழ்ந்தேத்தப்பட்ட வனுமாகிய முதலாம் ஒபா என்பவனுக்குப் பன்னிரண்டு தலைமுறைகளுக் குப்பின் வந்த சந்ததியைச் சேர்ந்தவனே இரண்டாம் ஒபா ஆவான். ஆனல், உவெசெட்சு நாட்டு எகுபேட்டு என்பான் எலண்டூன் (825) என்னுமிடத்தில் மேசியாவின் வலி சிதைத்து அதற்குப் பதில் தன் சொந்த இராச்சியத்தின் ஆதிக்கத்தை நிறுவினன். எனினும், அவ னுக்கு முன்னிருந்த ஒபாவைப் போலவே எகுபேட்டும் ஆங்கிலேய இன மக்களனைவருக்கும் அரசனக இருந்ததில்லை. தேனியராட்சிக்கு முன் பிருந்த எழுவராட்சியைச் சேர்ந்த “ பிரித்தானிய மன்னர் ” எனப்படு வோர்-நோதம்பிரியா மன்னன் எட்வினும், மேசியா மன்னர் பெண்டா வும் ஒபாவும் உவெசெட்சு மன்னன் எகுபேட்டும்-அடுத்தடுத்துப் பிரித்

சீர்குலைந்த தீவகம் 99
தானியாவில் நிறுவிய ஆதிக்கமெல்லாம் பேரரசின் சாயையாக மட்டுமே இருந்தது. அவர்களுடைய ஆதிக்கமெல்லாம் ஒரு பொருகளத்தில் அவர் கள் புகழ் ஆக்கமடைவதையோ அழிவடைவதையோ பொறுத்திருந்தது. தொலைவிலிருந்த மாகாணங்களை நிரந்தரமாக அடிப்படுத்தி வைத்திருக்கக் கூடிய சாதனம் அவர்களிடத்து இருந்ததில்லை. அன்றியும், அவர்கள் வெற்றிபெற்றகாலை, அடிப்படுத்திய இராச்சியங்களிற் படைக்காவல் செய்யப் பட்ட கோட்டைகளையோ நிலையான சேனைகளையோ வைத்திருந்ததில்லை. அரசனைப் பின்பற்றிய நிலப்பெரு மக்கள் அவனுக்கு எத்துணை விசுவா முடையவர்களாயிருந்தபோதினும் அவர்கள் தொகை சிறிதாய் இருந்தது. காலாட்படையை ஒரு சில வாரங்களுட்குத் தான் அரசன் தன் படைச் சேவைக்கு அழைக்கக் கூடியதாயிருந்தது. சட்சணிய கமக்காரர், எட்சு, செவேண் ஆகிய நதிகளுக்கு அப்பாலிருந்த உவெல்சுப் பிரதேசங்களைச் சேர்ந்த புது விடங்களுக்குப் படையெடுத்துச் சென்று அங்கு குடியேறுவதில் இன்னும் ஆர்வங் கொண்டிருந்தபோதிலும், ஏனைய சட்சனிய இராச்சியங் களை வெற்றிகொண்டு ஆங்கு குடியேறுவதற்கு ஆசை கொண்டிலர்."
அன்னியரின் கொடிய படையெடுப்பின்போது ஆங்கிலேய இராச்சியங் கள் தம்மிடையிருந்த பகைமைசளை மறந்துவிட்டு, வைக்கிங்குகளுக்கு எதி ராக ஒன்றுக்கொன்று உதவின ; எவ்வாறெனினும், அயலாந்திலிருந்த பல்வேறு குலங்கள் இவ்வாறன அமயத்தில் நடந்துகொண்டதைக் காட்டி லும் இவ்வாங்கிலேய இராச்சியங்கள் ஒன்றுக்கொன்று பெரிதும் உதவியா யிருந்தன. எனினும் நாட்டுப் பாதுகாப்புக்கான திட்டமெதையும் உருவாக் காமையினல் அவ்விராச்சியங்கள் ஒன்றன்பின்னென்றக வீழ்ச்சியுற்றன. அவை தனியோர் அரசாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்ற விருப்பானது, வெள்ளமெனப் பெருகிவந்த பதிதர் படைதளினல் நோதம்பிரியாவும் மேசியாவும் அழிந்தபின்னர், தேனியர் படையெடுப்பின் கடைவிளைவாகத் தோன்றியதே. இப்போர்களின் விளைவாகவே புதிய நிலமானிய நிறுவ கங்களும் குடியியல் நிறுவகங்களும் எழுந்தன. இந்நிறுவகங்களாலேயே எகுபேட்டு அரசனுடைய சந்ததியார் அக்குலமுதல்வனன எகுபேட்டு மன்னன் எக்காலத்திலாவது அவாவியிருந்ததைக் காட்டிலும் இங்கிலாந் தின் உண்மையான மன்னர்களாயிருந்தனர்.
4. உவை, செவேண் மேற்பகுதி என்பவற்றின் பள்ளத்தாக்குக்களில் பின்பிருந்த ஆங்கி லேயர் குடியேற்றங்களைச் சேர்ந்த மகேசேற்று, விரிசன் சேற்று (விரிக்கனையடுத்து வசித்தவர்) ஆகியவற்றிலிருந்தவர்கள் உவெல்சுமக்களுடன் இடைவிடாது சண்டையிட்டுக் கொண்டிருந் தனர். 784 ஆம் ஆண்டு வரையில் அவர்களது ஆள்புலம் ஒபாவின் அணைக்கட்டினல் வரை யறுக்கப்பட்டிருந்தது.
W ஆம் தேசப்படத்தைப் பார்க்க. அவர்களைப் போன்று உவெசெட்சிலிருந்த நிலப்பெருமக்கள் தேவோனியன் கரையிலிருந்த உவெல்சுமக்களுடன் இடைவிடாது பொருதினர். சட்சணியர், இவ்வெல்லை தற்காலக் கோண்வாலின் எல்லையை யடையும்வரை அதனை ஓயாது பின்தள்ளினர்.

Page 60
100 வைக்கிங்குகளின் வாய்ப்பு
உவெசெட்சு அரசவமிசத்திலே மகா அல்பிரெட்டு உட்பட பல சிறந்த வீரரையும் அரசறிஞரையும் கொண்டதொரு நீண்ட பரம்பரை தோன்றி யிருக்காவிடின் இந்நாட்டின் வரலாற்றுப்போக்குப் பெரிதும் மாறியிருக் கும். ஆதிகாலச் சமூகத்திற் சிறந்த நிறுவகங்கள் இல்லாதிருந்த கார ணத்தால், அச் சமூகத்தின் அலுவல்கள் அதன் அரசர்களுடைய சொந்தத் தகைமையையே பொறுத்திருந்தன. நோதம்பிரிய மன்னன் எட்டு வினையோ, மேசிய மன்னன் பெண்டாவையோ, உவெசெட்சு மன்னன் அல்பிரெட்டையோ, போன்ற திறமைவாய்ந்த அரசரெவரையும் பெற்ற தின்மையால், பழைய விவசாய இங்கிலாந்திற் செல்வமுங் குடித்தொகையும் மிக்க பகுதியான கிழக்கு அங்கிலியாவானது தலைமைத் தானத்தைப் பெறத் தவறிற்று. பாதுகாப்பற்றிருந்த கிழக்கு அங்கிலி யாக்கரைகளில் இறங்குவது எத்துணை எளிதென்பதையும் அங்கிருந்து தாழ்வுற்றிருந்த நோதம்பிரியா வையும் வீழ்ச்சியடைந்துகொண்டிருந்த மேசியாவையும் அடிப்படுத்துவது எத்துணை எளிதென்பதையும் வெகுவிரைவிலே தேனியர் கண்டனர். இவற்றுக்கும் அப்பாலிருந்த உவெசெட்சுநாடு, படையெடுப்பாளர் இறங் குந்துறைகளினின்றுந் தொலைவிலிருந்தது மன்றி, நற்பேருக அல்பிரெட் டையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றிருந்ததால் மற்றெல்லா இராச்சியங்களையும் விட எத் தாக்கல்களையும் எதிர்க்குஞ் சத்தியைப் பெற்றிருந்தது. வைக்கிங்குகள் இங்கிலாந்தைப் பூரணமாக வெற்றிகொள்ள முடியாது போனதற்கு எதிர்பாராத இவ் வரலாற்றுப் புவியியல் காரண மாயிருந்தது போலும்.
பதினேராம் நூற்றண்டிற் கணியூற்றின் தலைமையிலே செய்தவாங்கு, ஒன்பதாம் நூற்ருண்டிலேயே கோண்வால்-உவேல்சு எல்லைவரை கந்தி னேவியர்தம் ஆதிக்கத்தைப் பரப்பியிருப்பாராயின் நாட்டு நிலைமை இறுதியில் முற்றக மாறியிருக்குமா ? அன்றி, மிக மோசமாயிருக்குமா ? தேனியர் இங்கிலாந்திலே தம்மாதிக்கத்தை நிறுவிக்கொண்ட பின்னர், நோமண்டியை வெற்றிகொண்டவர்களைப் போன்று எப்படியாவது உவோடன் வழிபாட்டைக் கைவிட்டு கிறித்துவ வழிபாட்டை விரைவிற் கைக்கொண்டிருப் பார்கள் என்று நாம்கொள்வோமாகில், இக்கேள்விக்கு விடையிறுப்பது எளிதாகாது. ஆயின், வரலாற்றிலே நிகழ்ந்திருக்கக்கூடியவையென நாம் கருதுபவையெல்லாம், உண்மையான இறுதியில் நடந்தேறிய நிகழ்ச்சிக்குப் பின்னிற்குஞ் சாயைகளேயாம். தேனியரின் படையெடுப்புக்களுக்குப் பின் நாகரிகத்தைச் சீராக்குவதும் இங்கிலாந்தில் நோதிக்கு இனத்தவரின் இருகிளைகளையும் இணக்குவதுமான செயல்களை முதன்முறையாக மகா அல்பிரெட்டும் அவரின் சந்ததியாரும் ஆற்றவேண்டுமென அந்நிகழ்ச்சி விதித்தது.

வைக்கிங்குகளின் வாய்ப்பு O
* வைக்கிங்கு ” என்பது " ஒதுக்கக் குடாமனிதனை ” யன்றி “ வீரனையே குறிப்பதென்றலும், வைக்கிங்குகள் ஒதுக்கக்குடாவைச் சேர்ந்தவராகவே இருந்தனர். தென்மாக்குப் பிரதேசம் சுற்றிவளைந்து கடலுக்குச் செல் லும் வாய்க்கால்களைக் கொண்ட சமமான மணற்பரப்பையுடையவொரு பூமியாயிருந்தது. நோவே செங்குத்தான மலைகளுக்கிடைப்பட்ட நுழை கழிகளுடையதொரு பூமியாகும். மலைசார்ந்த மேட்டுநிலத்திற் செங்குத் தாய் இறங்கி, அம்மலைகளிடைக் கடல்பெருகி நெடுந்துரம்-சிலவிடத்து நூறுமைல் தூரத்துக்கும்-செல்லுதற்கு இடனயுள்ள இடுக்குக்களே இந்நுழைகளிகளாகும். செங்குத்தான மலைகளுக்கும் பொங்குமுகத் திற்குமிடையே அங்குமிங்குமிருந்த செழிப்பான தரையில், தானிய வயல் களும் மரக் குடிசைகளின் கூட்டமுங் காணப்பட்டன. இவற்றையடுத்திருந்த செங்குத்தான சரிவில் அடர்த்தியான காடு நுழைகடலின் ஒரம்வரை பரவி யிருந்தது. அது மரமரிவோனையும் மரக்கலங் கட்டுவோனையும் அழைப்பது போன்றிருந்தது. அதற்கு மேலே, மலைமருங்கின்மேடைகளில் ஒதையொடு பாயும் ஓடைகளுக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் மத்தியிலே வேனிற் காலப் புற்றரையிற் கால்நடைகள் மேய்ந்துகொண்டிருந்தன. அனைத்துக்கும் மேலே நோசுமக்களிடை வழங்கும் ஐதிகங்களும் கவிதைகளும் தோன்றி வளர்ந்த வறிதான மலைத் தொடர்கள் பனிப்படலத்தையும் பனிக்கட்டி யாற்றினையும் உச்சியிற்கொண்டு ஓங்கி நின்று, நுழைகளியையடுத்த குடியிருப்புக்களைப் பல்வேறு சிறுச்சிறு இராச்சியங்களாகக் கூறுபடுத்தி, அவ்வழி நோவேயின் அரசியல் ஐக்கியத்தைப் பல நூற்றண்டுகளாகத் தாமதப்படுத்தியதுடன், அங்கு வாழ்ந்த வன்புடை மக்கள் உணவும் பொருளுந் தேடிக் கடலோடுதற்குங் காரணமாயிருந்தன.
விலங்குரோமம் விற்போராயும் திமிங்கிலம் பிடிப்போராயும் மீன்பிடிகார ராயும் வியாபாரிகளாயும் கடற்கொள்ளைக்காரராயும் இருந்த கந்தினேவியர் அயராதுழைக்கும் உழவோராகவும் எக்காலத்தும் விளங்கினர். ஆதலின் அவர்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பெற்றியர். அவர்கள் எப் பொழுதும் வாழ்ந்ததாயகத்தில், கற்காலத்தைச் சேர்ந்த வரையறுத் துக்கூற இயலாத காலத்தில் வந்து குடியேறிய காலந்தொட்டு, ஒரு குடியிருப்பிலிருந்து பிறிதொன்றுக்குச் செல்லுதற்கும் வெளியுலகத் தொடர்புகொள்ளுதற்குங் கடலே அவர்க்கு வழியாயிற்று. ஆனல், எட் டாம் நூற்றண்டின் இறுதிவரை, இவர்கள் போற்றிக்குக் கரைகளிலேயே பெரும்பாலும் கடற்கொள்ளையடிப்பதோடு நின்றுவிட்டனர். இவர்கள் தம் மினத்தவரையுந் தமக்கு மிக அண்மையிலிருந்தவர்களையுங் கொள்ளை
4. தென்மாக்கு என்றழைப்பதின் காரணம், ஆங்கிலிய நாட்டினர் இங்கிலாந்துக்குள் நுழைந்தபோது விட்டுச்சென்ற மண்டலங்களில் கந்தினேவிய தேனியர் சென்று குடியேறி யிருந்ததனுல் என்க.

Page 61
02 தாயகத்தில் வைக்கிங்குகள்
யடிப்பதுடன் திருத்தி கொண்டனர். சாளிமேன் காலத்திலேயே இவர்கள் கடல் கடந்து செல்லவும் மேற்கிலே கிறித்தவருக்குச் சொந்தமாயிருந்த பிரதேசங்களைத் தாக்கவும் தொடங்கினர்.1
பெருந்தொகையினராய்க் கடல்கடந்து தொலைதுாரந் திடீரெனச் செல்லு தற்குக் கந்தினேவியரைத தூண்டிய காரணம் யாதோ ? இக் கேள்வி பல்காலுங் கேட்கப்பட்டுவந்தது. இக்கேள்விக்குக் கூறப்பட்ட விடைகள் பல: அவை யொவ்வொன்றிலும் ஒரளவு உண்மை உண்டே. உவப்பற்ற அக் காலநிலைகளில் அறுவடை நன்கு தேருமையாற் பஞ்சம் உண்டாக, மக்கள் பெருந் தொகையினராய்க் குடியெழும்பிப் பிறதேசஞ் செல்ல வேண்டியதாயிற்று. கந்தினேவியரிடையே அடிமைக்குடிகள், பொதுக்குடி கள், உயர்குடிகள் என மூன்று வகுப்பினரிருந்தனர். உயர்குடி வகுப் பினரிடையே பெரும்பாலும் நிகழ்ந்த பலதார முறையால் நிலமற்றுத் தவித்த இளைஞர் அளவெஞ்சிப் பெருகினர். இவர்கள் பட்டினியால் வாடவோ, பிறரை நம்பி வாழவோ விரும்பவில்லை. போரிலும் வீரச் செயல்கள் புரிவதிலும் இவர்கள் வேட்கையுடையர் ; ஆயின், வாணிகஞ் செய்யும் வாய்ப்பு வந்தக்கால் அதனைத் தள்ளி விடுபவருமல்லர். வைக்கிங் குகள் ஆடம்பரமாய் உடுப்பவரேயன்றிப் பாங்கற்று உடுப்பவரல்லாராதலின், இவர்கள் தங்களுடைய வாட்கள், போர்ச்சட்டைகள், செந்நிற அங்கிகள், பொன்னணிகள், நீண்ட மஞ்சணிறக் கேசம் ஆகியவை பற்றிப் பெருமைப் பட்டனர். வைக்கிங்கு ஒருவன் தான் ஒரு நோவேசிய வீரன் போன்று பாங்கற்று உடுப்பதை வெறுத்து அதற்காகச் சினங்கொண்டதுண்டு. இத் தகைய குணவியல்புகளே வைக்கிங்குகளின் புலம்பெயர்விற் காணப்பட்டன. மேலும், எட்டாம் நூற்றண்டின் கடைசி முப்பது ஆண்டுகளில் சாளி மேனும் அவனுடைய இரும்புக் கவசமணிந்த பிராங்கு நாட்டுக் குதிரைப்
. இவர்கள் நீரிலும் நிலத்திலும் ஒக்கவே பயிலுந்தம் பழக்கங்களைத் தாங்கள் கடல் கடந்து நிறுவிய குடியேற்றங்களுக்கும் எடுத்துச் சென்றனர். ஐசுலாந்து பற்றிய எரிந்த நிசாலிலும் ஒக்கினியிலிருந்த நோவேசிய வீரர்பற்றிய கதையிலும் சுவேயின் என்பவன் பற்றி நாம் அறிகிறவற்றைக் காண்க : “ ஒக்கினிப் பிரதேசம் அனைத்திலும் அவனுடைய மதுமண்டபம் போன்றதோர் இடம் இருந்ததில்லை. அவன் வசந்த காலத்திற் கடினமாக வேலைசெய்து நிலத்தைத் திருத்தி, பல வித்துக்களை ஊன்றி, தானே அவற்றின் வளர்ச்சியைக் கண் காணித்தான். ஆயின், அக்கடின வேலை முடிந்ததும் வைக்கிங்கு நாட்டுக்கு வசந்தகாலப் பிரயாணத்தை மேற்கொண்டு தெற்குத் தீவுகளிலும் ஐசுலாந்திலும் கொள்ளையிட்டு மத்திய கோடை காலத்தின் பின் நாடு திரும்பினன். இதனை அவன் வசந்தகால வைக்கிங்குப் பிரயாணம் என அழைத்தான். இதன் பின் பயிரை அறுவடை செய்துவிட்டு மற்ருெரு கார்கால-வைக்கிங்குப் பிரயாணத்தை மேற்கொண்டு அவ்வாண்டை அத்துடன் முடித்தான். விடாமுயற்சியும் பல்வேறுபட்ட கருமங்களும் நிறைந்த அவன் வாழ்வு இருந்தவாறு என்னே!
இக்கால ஆங்கிலக் கற்பனைக் கதைகளில் வைக்கிங்கு அதிகவிடம் பெற்றுள்ளான். கிப்பிளிங்கு எழுதியுள்ள "பூக்குமலைப் பூதத்தின் மகிழ்வூட்டும் துணிகரச் செயல் ” என்பதில் வைக்கிங்கின் புராதனப்பண்பாடு மிக அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. யோன் பட்சன் எழுதியுள்ள * அரசனின் வழி” என்னும் நூலின் முதற்கதை சிறந்தவொரு வரலாற்றுக் கற்பனையாகும்.

ஆரம்ப应用 தாக்குதல்கள் 103
படையினரும் தென்மாக்கின் தென்கரைக்குப் படையெடுத்துச் சென்று கடுமையாகச் சிலுவைப்போர் செய்தனர். அதன் விளைவாகச் சேர்மானிய சட்சணியர் ஞானதீக்கை பெறுதல், அல்லது மரணமடைதல் ஆகிய இரண்டி லொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டியவராயினர். தேனியர், தாயகப் பற்றுடைய சட்சனியருக்கு அடைக்கலம் அளித்ததுடன் தங்களுக்கு அண்மை யிற் சாளிமேன் படையெடுத்து வருவது கண்டு இயல்பாகவே அச்சமுங் கொண்டனர். கிறித்துவ உலகத்தைச் சேர்ந்த ஆயுதந் தாங்சிய வீரர் களுடைய படையெடுப்பின் காரணமாக உவோடன் வழிபாட்டையுடைய தேனியர் பிரித்தானியத் தீவிலிருந்த ஆச்சிரமங்களைக் கொள்ளையடித்தனர் என்று சிலர் கருதியதுண்டு. ஆனல், தொடக்கத்தில் படையெடுத்தவர்கள் தென்மாக்கிலிருந்தன்றி நோவேயிலிருந்தே வந்தனர். கந்தினேவியர் ஒரு நாட்டினர் என்ற முறையில் அரசியல் ஐக்கிய உணர்ச்சியற்றிருந்தனர். அன்றியும், அவர்கள் மதவெறியர்களுமல்லர். உலகம் முழுவதும் அநா கரிகமாகவிருந்த காலத்திலே இவர்களும் கொள்ளையடிக்கும் அநாகரிகராக விருந்தனர். எனினும், மற்றவர்களிடம் இல்லாததோர் இயல்பு இவர் களிடமிருந்தது : அதுவே கடலில் அஞ்சாமற் செல்வதிலும் கடலாராய்ச்சி செய்வதிலும் இவர்களுக்கிருந்த பெருமகிழ்ச்சியாகும். அமைதியை விரும் பிய கந்தினேவிய வர்த்தகர், வைக்கிங்குகளின் தாக்கல்களுக்கு முந்திய காலத்தில் இங்கிலாந்துக்குச் சென்றிருத்தல் கூடுமெனினும், இதுபற்றிப் போதிய அளவு சான்றுகள் இல்லாமையால் முக்கியமான எதையும் நிறுவ இயலாமலிருக்கின்றது.
வைக்கிங்குகளின் படையெடுப்புக்களுக்குப் பல தெளிவான காரணங் களிருந்திருக்கலாம். ஆனல், காற்றுத் தனக்கு விருப்பமானவிடத்தே வீசுதல்போன்று பெரும் இயக்கங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தற் செயலான நிகழ்ச்சிகளும் காரணமாயிருக்கின்றன. குடாக்களில் ஒதுங்கி வாழ்ந்தவர்கள் கொன்சுதாந்திநோபிள், கிரீன்லாந்து ஆகியவற்றுக்குச் செல்ல நேரிட்டதற்கும், நோமன்டியும் இங்கிலாந்தின் தேனியக் குடி யிருப்புக்களும் ஐரிசுப் பட்டணங்களும் தோன்றியதற்கும் காரணம் யாதெ னில், ஒரு சில அஞ்சா நெஞ்சினர் தற்செயலாகப் பெற்ற வெற்றிகளினல் எழுந்த திரண்ட ஒப்பற்ற சத்திப்பெருக்காகும் என்க.
எங்ங்னமாயினும், எட்டாம் நூற்றண்டின் கடைசி ஆண்டுகளில், மேசிய நாட்டு ஒபா உயிருடனிருந்தபோதே மேற்கைரோப்பாவில் வைக்கிங்குகளால் நடாத்தப்பட்டதும் வரலாற்றிற் பொறிக்கப்பெற்றதுமான முதல் தாக்குதல் நிகழ்ந்தது. மூன்று பெரும் கப்பல்களுடன் சென்ற எறக்குறைய இரு நூறு போக்கிரிகள் அமைதியான உவெசெட்சுக் கடலோரத்தில் இறங்கி, தாம் வந்த காரணத்தை அறிவதற்காகச் சென்ற அரச தூதுவனைக் கொன்றுவிட்டு, தாம் பிடிபடுவதற்குமுன்னர் கடலிற் சென்றுவிட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வைக்கிங்குகள் எவருமே

Page 62
104 ஆரம்பத் தாக்குதல்கள்
காணப்படவில்லை. ஆனல் அதுபோன்ற பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நோதம்பிரியா, கொத்துலாந்து, அயலாந்து, உவேல்சு ஆகியவிடங்களில் நடைபெற்றன. கெலித்தியத் திருச்சபை அமைப்பைப் பின்பற்றித் தீவு களிலும் அவற்றின் முனைகளிலும் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்ட துறவி மடங்களைக் கடற்கொள்ளைக்காரர் சூறையாடினர். இவை கடல்களிலிருந்து எளிதிலே தாக்கக்கூடிய தனிமையான இடங்களிலிருந்தன. இலின்திசு வான், அயோன, மற்றும் அவ்வளவு பிரபலியமடைந்திராத புனிதத் தலங்கள் ஆகிய யாவற்றிலுமிருந்த செல்வங்கள் களவாடப்பட்டன. துறவி கள் வதஞ் செய்யப்பட்டனர் ; அல்லது பண்டமாற்று வியாபாரத்தில், அடிமைகளாகக் கண்டத்திலே விற்பதற்குக் கொண்டு செல்லப்பட்டனர். சாளிமேன் சட்சணியருடன் செய்த அறப்போரால் ஆத்திரமடைந்து அக்கடற் கொள்ளைக்காரர் கிறித்துவத்துக்கெதிராக மதவெறி கொண்டு புனித தலங் களிலிருந்து செல்வத்தைக் கொள்ளையிட்டனரென்று இந்நடவடிக்கைகளி லிருந்து நாம் முடிவுக்கு வரலாகாது. புனித தலங்களின் பாதுகாப்பற்ற செல்வமே இத்தகைய நடவடிக்கைகளுக்குக் காரணமாயிருந்தது இன்னும் இத்தகையதாக்கல்களின் கொடூரமான தன்மை எனையவற்றின் கொடு மைக்கு விலக்கானதுமன்று. இத்தாக்கல்கள் நடக்குங் காலையும் ஆங்கிலசட்சணியர் இதேபோன்ற கொடூர முறைகளைத் தம்மவர்க்கிடையேயும் கையாண்டனர். “இவ்வாண்டு மேசியரின் அரசனகிய கேனுல்பு என்பவன் சதுப்புநிலம் வரை கெந்தைப் பாழ்படுத்தி அந்நாட்டு அரசனகிய பிரென் என்பானைச்சிறைப்படுத்தி, மேசியாவிற்குக் கொண்டு சென்று, அங்கு அவனுடைய கண்களைப் பிடுங்கிக் கரங்களை வெட்டுவித்தான் ” என்று 796 ஆம் ஆண்டு வரன்முறைக் குறிப்புக் கூறுகின்றது.
பிரித்தானியக் கரைப்பகுதியிலிருந்த துறவிமடங்கள் மீது செய்யப்பட்ட இத்தகைய தாக்குதல்களே வைக்கிங்கு இயக்கத்தின் தொடக்கம் போலும். அடுத்து நாம் நோவே, தென்மாக்கு ஆகிய நாடுகளை மனக்கண்ணுல் நோக்குவோமாயின், அடுத்த கட்டத்தை நாம் ஓரளவிற்குக் கற்பனையாற் காணலாம். வெற்றிபெற்ற கொள்ளைக்காரர் தங்கத்தையும் இரத்தினங் களையும் வாரிக்கொண்டு திரும்பினர். மேற்கிலிருந்த கோயில்கள் தங்கம் பதிக்கப்பெற்றவை என்றும், மேற்குக் கடல்களில் போர்க்கப்பல்கள் கிடையா என்றும், சிறிது துணிவுடன் முயன்றல் விரைவில் பெரும் பொருள் தேடுவதற்கான புதுவழி இருக்கிறதென்றும் பல வதந்திகள் நுழை கழியையும் பொங்குமுகத்தையும் அடுத்த ஒவ்வோரிட த்திலும் பரவின. மேற்குப் பக்கத்திற்கப்பாலிருந்த விளைநிலங்களிற் சில சிதவங்கரினுஞ் செழிப்புமிக்கவை எனவும் சொல்லப்பட்டது. பொருள் தேவையான உயர் குடி மக்கள் இத்தகைய வளம் பற்றிய செய்திகளை மதுக் கூடத்திற் கூடிப் பேசியதுடன், அச்செல்வங்களைக் கொண்டு வருவதற்குத் தலைமை தாங்கக் கூடியவர்களையும் அத்தலைவர்களைப் பின்பற்றிச் செல்லக் கூடியவர் களையும் தேடலாயினர்.

வைக்கிங்குப் படையெழுச்சியின் தன்மை 105
வைக்கிங்கு இயக்கம் உச்சநிலையடைவதற்கு முந்திய ஐம்பது, அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், நோவே, தென்மாக்கு ஆகிய நாடுகளனைத் தும் பிரித்தானிய தீவுகளையோ புகழ்பெற்ற கரோலிங்கியன் பேரரசையோ பாதுகாப்பதற்குக் கடற்படை யெதுவுமில்லை என்பதை மெதுவாக உணர்ந்து கொண்டன. அன்றியும், ஆங்கில-சட்சணியரும் பிராங்குகளும் நிலம்விட் டகலாச் சோம்பேறிகளென்பதையும் ஐரிசுக்காரர் தங்களுடைய போக்கு வரத்துக்கும் குடியேற்றத்துக்கும் சாதாரண பரிசல்களையும் சிற்றேடங்களை யுமே பயன்படுத்தினரென்பதையும் அந்நாடுகள் அறிந்தன. உலகமே வைக்கிங்குகளின் கடல்வலி மீச்செல்லுதற்கு எற்ற இடமாகவும் அவர்கள் பேராசைக்கு இரைகொடுக்குமிடமாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் விரும்பிய வீரச் செயல்களுக்கான விளையாட்டுக் களமாகவும் இருந்தது. மற்றைய வைக்கிங்கு வீரரைப்போற் கடலிற் சென்றிராத வாலிபனெருவன் மதுக் கூடத்தில் நையாண்டிக்கும் கன்னிப்பெண்களின் அவமதிப்புக்குமாளா னன். அக்கன்னிகளிற் சிலர் தம் ஆடவர் குழாத்துடன் கடல் கடந்து, சென்று போர்க்களத்தில் ஆயுதம் தாங்கிப் போரிட்டவராவர். மொரா நான்சி ஆகியவற்றை இலகுவில் வெற்றிபெற்றபின் சுவிசு உழவோ, எங்ங்னம் நடந்துகொண்டார்களோ, அதேபோன்று போரையும் சூை யாடலையும் முக்கிய தேசியத் தொழிலாகக் கொண்டனர். இத்தொழி? எதிர்காலச் சந்ததியினரின் சிறந்த சத்தியை ஈர்த்தது. வைக்கிங்குகள் கொள்ளையடித்துச் சூறையாடுதலை விலக்கி, கடலுக்கப்பாற் சென்று காணி களில் நிலையாகக் குடியேறிய பொழுதே அவர் தம் இயக்கத்தின் கடைசி யானதும் அதிமுக்கியமானதுமான கட்டத்தை அடைந்தனர்.
கந்தினேவியர் எப்பொழுதுமே வர்த்தகராயும் தம் நாட்டுக் கடலில் ஒருவரையொருவர் கொள்ளையடிப்பவராயும் இருந்து வந்தனர். இப்பொழுது அவர்கள் வெளிநாடுகளோடு பெற்றுள்ள மிக விரிந்த தொடர்புகளிலும் அவ்வாறே இருந்தனர். இவர்கள் வர்த்தகனுக்குரிய பெருமையையும் அதனினின்றும் மிகவும் வேறுபட்டதான போர்வீரனுக்குரிய பெருமையை யும் ஒருசிலரைப்போல் ஒருங்கே பெற்றிருந்தனர். எப்பிரிடிசு என்னுமிடத்தி லிருந்த கல்லறையொன்றில், ஒரு வைக்கிங்குத் தலைவனின் சமாதியில் அவனது வாளுக்கும் போர்க் கோடரிக்கும் பக்கத்தில் ஒரு சோடித் தராசும் புதைக்கப்பட்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், அல் லது அயலாந்தில் ஒரு குடியேற்றத்தை அவர்கள் நிறுவியபோது அங்கே அரண்செய்யப்பட்ட பட்டணங்களைக் கட்டவும் சந்தைகளைத் திறக்கவும் வேண் டுமென்பதே அவர்களது முதல் நோக்கமாக இருந்தது. தரைவழியாகவோ, கடல்வழியாகவோ புதிதாய் வந்த வர்த்தகனிடம் அப்போதுள்ள சூழ் நிலைக்கேற்ப, அல்லது மனப்போக்கிற்கேற்ப அவனுடன் வியாபாரம் செய்ய, அல்லது அவனின் கழுத்தை வெட்ட அவர் தயாராயிருந்தனர். இத்தகைய பழக்கமே உண்மையில் பல நூற்றண்டுகளாக மத்திய ஐரோப் பாவின் ஒவ்வொரு துறைமுகக் கப்பலோட்டிகளிடமுமே இருந்துவந்தது.

Page 63
O வைக்கிங்குப் பாதைகள்
இப் பழக்கத்திற்குச் சோசருடைய கப்பலாட்களும் இலிசபெது காலத்தைச் சேர்ந்த வீரர் சிலரும் விவிக்கானவர்களல்லர். ஆனுஸ், வைக்கிங்குகள் கடற்கொள்ளேயடிப்பதிலும் வர்த்தகஞ் செய்வதிலும் தமக்கே உரியதான சத்தியைப் பயன்படுத்தியதனுஸ், தரையிலும் சாதாரணமாகக் கனாவாசி களுக்குக் கிடைக்காத சிறந்த இராணுவ இயல்புகளேயும் பெற்றிருந்
தனர்.
ஒன்பதாம் நூற்றண்டு கழிந்து போகையில் கந்தினேவியரிற் பெரும்பானா
ணுே வைக்கிங்குகளேப் போன்று உயிர்கத்தின் பல பாகங்களுக்கும் சென்று
வந்திருந்தனர். இப்பொழுது வெனிசு நகரின் தொழிற்சாலைக்கு முன் காவலாக வைக்கப்பட்டிருக்கும் பெரியசுக் கற்சிங்கத்தின்மீது அவர்களின் உரூன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தபிளின் நகரில் தங்களிடையே எற்பட்டிருந்த குடும்பப் பகைமைகளுக்கு அவர்கள் கொன்சுதாந்திதோபின் நகர வீதிகளிற் பழிவாங்கினர் என அறியக்கிடக்கின்றது. அவர்கள் தொவே விடங்களுக்குப் பிரயானஞ் செய்ததாற் பெரும் பொருளேயும் நாகரிகத் தையும் பெற்றதுமன்றி, பல நகரங்களேயும் மக்களேயும் பற்றி அறிந்திருந்த னர். வெளியிலிருந்து வந்த மிலேச்சராக இவர்களேக் கருதிய சட்சனிய உழவோனே இவர்களுடன் ஒப்புநோக்குமிடத்து, அவன் அறிவிற் குறைந் தவனுயும் தான் வாழ்ந்த மாகானத்தைத் தவிர வேறெங்கும் சென்றிராத வணுபுமிருந்தான் எனலாம். இவர்களுடைய ஐசுலாந்துக் கவிதைகளேப் போல இவற்றுக்குப்பின் வந்த இவர்களது உரைநடையிலுள்ள ஐசுலாந்து வீரக்கதையிலும் உரைநடையிலாக்கப்பட்ட வரலாற்று நவீனங்களிலும் இவர்களது வீரவாழ்க்கையின் சிறப்பு அற்புதமான முறையில் உண்மை யியல்புடன் குறிக்கப்பட்டுள்ளன.
வைக்கிங்குகளது ஊழியிர் கந்தினேவியர் தங்கள் செயல்களுக்கு மூன்று வழிகளே உபயோகித்தனர். சிலாவு ஆள்புலங்கனினுடாக நோவு கொடு, வுே ஆகிய இருவிடங்கள் வரை நுழைந்த சுவீடியப் பின்பற்றிய கிழக்கு வழியே முதலாவதாகும். கீவிற் கந்தினேவியர் ஆதி இரசிய அரசை அமைத்தனர். அங்கிருந்து அவர்கள் தனிப்பர் வழியாகக் கடற்பிரயானஞ் செய்து, கருங்கடலேக் கடந்து கொன்சுதாந்திநோபிளேத் தாக்கச் சென்றனர்.
மற்றிரு பாதைகளும் மேற்கிலமைந்திருந்தன. நோவே நாட்டவர் முக்கிய மாகப் பின்பற்றிச் சென்ற பாதையொன்றிருந்தது. அதனே நாம் வெளிப் பாதை என அழைக்கலாம். அதிகமாக வீரம் நிறைந்த கடற் பிரயாணங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கும் ஐசுலாந்திலும் கிரீன்லாந்திலுங் குடியிருப்புக்கள் எற்பட்டதற்கும் வட அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதற்கும் இப்பாதையே காரணமாயிருந்தது. கொத்துலாந்தின் மலேநாட்டிலும் தென்மேற்குப் பூமியிலும் நோதிக்குக்களின் வாழ்க்கைமுறை புகுத்தப் படுத்தற்குக் காான மான கந்தினேவியரின் பெரிய குடியேற்றங்கள், ஒக்கினி, கெயித்துனசு, உருேவி, கலோவே, தம்பிரீசு ஆகியவிடங்களில் அமைக்கப்படுதற்கு இப்
 

வைக்கிங்குப் பாதைகள் 107
பாதையே காரணமாயிற்று, மத்தியதரைக் கடலில் மோற்றவசிக்கும் நிலேபோல், புதிய கடலாதிக்கம் பெற்ற ஐரிசுத் கடலில் மனுத் தீவும் அந்நிலையை வகித்தது; ஐரிசுக்கடல் இப்பொழுது ஒரு கக்தினேவிய எரியாய் மாறியிருந்தது. இவ்வெளிப்பாதையின் வழியாக நோனீசியர் தம் முக்கிய குடியேற்றங்களேக் கம்பாந்து, உவெத்துமோலந்து, இலங்கசயர், செசயர் ஆகியவிடங்களிலும் தெற்கு உவேல்சின் கரைப்பகுதிகளிலும் நிறு வினா. அயந்து விறிது காலத்தில் விரிவடைந்தது. தபிளின் கோக்கு, இலிமெரிக்கு உவிக்குலோ, உவாட்டர்போட்டு ஆகிய பட்டணங்கள் தேனிய சால் நிறுவப்பட்டன. அத்துடன், ஐரிசு நகர வாழ்வு தொடங்கிற்று.
്പ ప్రతి བོ, }
"శ్వి
+tyvkar a. Left at , list ــــــــــ۔۔۔ـــــــــــــــــــــــــقـفـــــــــــــــــــــــــــــــــــــــــــلــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
படம் WI-வைக்ங்ேகுப் பாதைகள்,
முக்கியமாகத் தென்மாக்கிலிருந்த தேனியராற் பின்பற்றப்பட்ட உள்வழி மூன்ருவது பாதையாகும். இப்பாதை வழியாகவே ஐரோப்பாவின் வட கரையோரமும் இங்கிலாந்தின் கிழக்கு, தெற்குக் கரையோரங்களும், தாக் கப்பட்டன. இவ்வழியாகவே உவெசெட்சு நாட்டு அல்பிரெட்டு காலத்திற்

Page 64
O8
இங்கிலாந்து அபுலாந்
கொத்துலாந்து எங்ங்குப்பாடயெடுப்புடிசம்
ஆங்ப் பார்
di Ri: liga :ಸಿ್
நோகங்களும் தோறும் துடியேயந்திகள் கோப'பூநகர், Egli a Ligur -us Li Lir, faint mai i'r wici
ர்ேகிரசித்ரு மேற்கே " நேங்நோங்
Ih III.
வைக்கிங்குப்படையேடுப்புப்போது இங்கிலாந்து கொத்துராந்து அயலாந்து,
 
 

தேனியக் குடியேற்றம் 109
கமத்தொழிலுக்கும் ஆட்சி செய்வதற்குமாகப் பரந்த நிலப்பரப்புக்களேத் தேடி வைக்கிங்கு குடியேறிகள் பெருந் திரளாகச் சென்றனர். இவர்கள.னே வரும் அந்தந்தப் பருவத்தில் உண்டான போர் நடவடிக்கை முடியும் வரை பல நேயபான்மையான சிற்றரசர்களின் கீழ்க் கும்பல்களாகச் சேர்ந்து போர்த் தஃலவன் ஒருவனுக்கே அடங்கியிருக்க வேண்டுமென்பதைக் கற்றுக் கொண்டனர். ஆங்கிலேயக் கால்வாயில் ஒருமருங்கில் எதிர்ப்புப் பலமாகவோ, ஆன்றி மறுமருங்கில் அது குறைவாகவோ இருந்ததற்கேற்ப, உள் நுழைந்த இக் "கூட்டங்கள்" இலகுவாகப் பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் இங் கிலாந்திலிருந்து பிரான்சுக்கும் போய்வந்தன. இப்படைகளின் பலம்வாய் ந்த, நீண்ட நாட்களுக்கு நடைபெற்ற தாக்குதல்களின் விளேவாக வச லாற்றில், முதன்மைபெற்ற இரு தேனியக் குடியேற்றங்கள் எழுந்தன. இவற்றுள் சிறியது பிராங்குகள் இராச்சியத்திலிருந்து அமைக்கப்பட்டதாகும். அதற்கு நோமண்டி எனப் பெயரிட்டனர். தேமிசு, தைன் ஆகிய நதிகளுக் கிடையிலிருந்த தெற்கு இங்கிலாந்து முழுவதும் பெரிய தேனியக் குடி யேற்றமாகும். இறுதியாக இலங்கசIரிலும் கம்பலாந்திலுமிருந்த நோவேக் குடியேறிகள் யோக்குசயரிலிருந்த தேனியக் குடியேறிகளுடன் இங்கிலாந் துக்கப்பால் ஒன்றுபட்டனர். இவ்வமயத்தில் கந்தினேவிய இனத்தார் ஒரு கடலிலிருந்து மற்றக் கடல் வரையும் மிகுந்த ஆதிக்கமுடையவராயிருந் தனர்.
வெளிப்பாதையிலும் உட்பாதையிலும் வைக்கிங்குகளேப் பின்பற்றி வந்த வர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்ததுண்டு. தேனியரும் நோவேசி பரும் நோமண்டி, தென் அயலாந்து, வட இங்கிலாந்து ஆகியவிடங்களில் ஒன்றுசேர்ந்து காணப்பட்டதுமன்றி, இவ்வீரினத்தவரும் வேறுபாடின்றி இசுப்பெயின், மத்தியதரைக்கடற் பிரதேசம், இலவாந்து ஆகியவிடங் களில் நுழைந்தனர். கொடுமுனேயினதும் எபிதிடீசினதும் புலே நாள் தோறும் எதிர்த்துச் சென்று, வியத்தக்கு பிரதேச வாராய்ச்சி பெய்த இவர்கள் கொல்ம்பசுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்கக் கரையை யடைந்தனர். இப்பிரதேச வாராய்ச்சியாளர் சுயேச்சையான போர் வீரரால் தண்டுவலிக்கப்பட்டுச் செலுத்தப்பட்டதும் விலேயுயர்ந்த துணியில் வண்ணக் கோடிட்டு அமைக்கப்பட்ட தனித்த கப்பற் பாயினுதவியினுல் காற் றடிக்கும்போது ஒட்டப்பட்டதுமான திறந்த பெரிய மரக்கலங்களில் சென்றனர். வண்ணச் சித்திரந் தீட்டப்பட்ட மரக்கலத்தின் கீழ்ப்பகுதியில் மஞ்சளும் கறுப்புமுடைய வட்டக் கேடயங்கள் மாறிமாறித் தொங்கவிடப்பட்டும் யாளி வடிவம் போன்று கப்பலின் மேற்பகுதியிலிருந்த கப்பல் முகம் முன்பக்க மாகத் திரைகளேக் கிழித்துக்கொண்டும் வந்துகொண்டிருந்தபான்மை கிறித்தவருக்குப் பயங்கசத்தைக் கொடுப்பதாயிருந்தது. இத்தகைய மரக் கலங்களில் இவ்வாறன கடற்பயணங்களே மேற்கொண்ட கப்பலோட்டி களுக்கிருந்த அஞ்சாமையும் கடற்றெழில் வன்மையும் கடல்சார்ந்த வர லாற்றில் என்றுமே காணப்பட்டதில்லே. இவர்கள் தம் அஞ்சாமையின்

Page 65
,877。
86681.
110 வைக்கிங்குகளின் போர் முறைகள்
பொருட்டு அனேகமாக உயிர்ப்பலியும் கொடுத்தனர். சுவானேசு ஓங்கல் களில் புயலொன்று 120 தேனியத் தட்டு வள்ளங்களை ஒருங்கு சேர ஒதுக்கிய பொழுது, இக்கூட்டங்கள் கடலில் மூழ்கியதால் அல்பிரெட்டின் உவெசெட்சு நாடு ஒருமுறை காப்பாற்றப்பட்டது. ܝ
கடற்பக்கமாகவிருந்த துறவிகளாச்சிரமங்களைச் சூறையாட வந்த முதற் கொள்ளைக் கூட்டத்தினர் தங்களிடம் அதிகப் போர்க்கருவிகள் வைத்திருக்க வில்லை. பிடிப்பதற்குப் பகைவர் திரளாகக் கூடுமுன் தாம் கடலிற் சென்று விடுவதே அவர்கள் சுளுகாகும். வைக்கிங்குகள் எண்ணிக்கையில் பெருகி யதும், அவர்கள் ஐரோப்பாவிலிருந்த அதிக நாகரிகம் வாய்ந்த நாடுகளனை த்திலும் பிரயாணம் செய்தும் வர்த்தகம் புரிந்தும் போரிட்டும் வந்திருந்த தின் விளைவாக, அவர்களுக்குப் படைத் தளபாடங்களும் அவைபற்றிய அறிவும் பெருகின. அவர்களது கப்பற்படை மூன்றிலிருந்து நாற்பதாகவும், பின் அநுாருகவும், அதன்பின் நூற்றைம்பதாகவும் கூடிற்று. ஒவ்வொரு கப்பலும் ஏறக்குறைய நூறு பேரைக் கொண்டு செல்லும். இப்பெரிய கூட்டங்கள் யாவும் உடம்புக்குக் கவசமணிதல், விதியாயிருந்ததன்றி, விலக்காகாது. இரும்புக் கவசத்தை உடையாக அணிந்திருந்த வைக்கிங்கு கள் தங்கள் வில்லாயுதத்தை எப்படித் திறமையுடன் உபயோகித்தார்களோ, அதே திறமையுடன் நீண்ட கைப்பிடிகளுள்ள போர்க் கோடரிகளை வீசிய தாலும் போர்க்களத்தில் ஒழுங்கான பிரிவமைத்துப் போர் தொடுக்கும் முறையைப் பயிற்றப்பட்ட கப்பல் மாலுமிகளறிந் திருந்ததாலும் அவர்கள் அசைக்க முடியாத பலம்பெற்றிருந்தனர். மேலும், இவர்கள் கல்வீசும் இயந்திரமும் துளையிடும் இயந்திரமும் கொண்டு முற்றுகையிடும் தொழிலிற் கைதேர்ந்தவராயிருந்தனர். இதற்கிடையில், கம்பளிச் சட்டையணிந்திருந்த சட்சணிய கமக்காரர், கேடயமும் ஈட்டியும் தவிர வேறு ஆயுதமெதையும் கொண்டிருந்ததில்லை.
படைகள் சென்றுவருவதிலிருந்து இடையூறுகள் சிறியனவல்ல. அல் பிரெட்டு ஒரு கப்பற்படையை ஆயத்தம்பண்ணும்வரை தேனியர் தாம் விரும்பியவாறு ஆற்றிலும் கடலிலும் சென்றுவர முடியும். தரையிலோ வெனில், அவர்கள் தம் தட்டுவள்ளங்களைப் பாதுகாப்பிடப்பட்ட அரண் ஒன்றுக்குப் பின்னல் நிறுத்தியபின், கிழக்கு அங்கிலியாவின் செழிப்பான புற்றரைகளிலிருந்து குதிரைகளைக்கொண்டு சவாரி செய்யவும் விரைவிற் கற்றனர் அங்கிருந்து அதற்கடுத்த ஐந்து பயங்கர ஆண்டுகளுக்கிடையில் அத் தேனியர் இங்கிலாந்தெங்கணும் பரவி, முதலில் நோதம்பிரியாவை யும், பின் மேசியாவையும், இறுதியில் உவெசெட்சையும் தாக்கினர்.
அல்பிரெட்டு, தேனியரைத் தாக்கி முறியடிக்கும்வரை, அவர்கள் தூர விடங்களிலும் எதிர்பார்த்திராத விடங்களிலும் திடீர்த் தாக்குதல்களைச் செய்வதையே தம் உபாயமாகக் கொண்டிருந்தனர். போர்ப் பழக்கமற்ற

அல்பிரெட்டு மன்னன் 11
ஆங்கிலக் கமக்காரரைக் கொண்ட “ காலாட்படை ”க்கு பாய்ந்தோடு: தேனிய வீரரைப் பிடிக்க, அல்லது எப்பொழுதாவது அவ்வீரருக்கு அண்மையிலிருந்தால் ஆயுதபாணிகளான அவர்களுடன் பொருத, முடிய்ா திருந்தது. அல்பிரெட்டின் காலத்தில் இப்படியான பழந்தன்மையுள்ள் “காலாட்படை’ எத்தனைமுறை போருக்கு அழைக்கப்பட்டதோ என்பதும் ஐயத்திற்குரியது. தேனியர் முதன்முதல் குதிரைமீதிவர்ந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவர்களைத் தேடி அல்பிரெட்டு தன் படைகளுடன் * சவாரிசெய்து ” போயினன் என நாமறிகிருேம். படையெடுப்பாளரைப் போர்செய்து வீழ்த்துதற்கு அல்பிரெட்டு மென்மேலும் குதிரை மீதிவர்ந்த் இருப்புக் கவசமணிந்த தன்னுடைய நிலப் பெருமக்களையும் போர் புரிவ தில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்த அவர்களுடைய அடிமைகளையுமே நம்பி யிருக்க வேண்டியவனனன். போர், இடர் நிறைந்ததாகும் பொழுது, போர்ப் பயிற்சி பெறுதல் அவசியமானதொரு தொழிலாக மாறுகிறது. அதனுல் அதற்கு முழுச் சமுதாய முறைமையையும் பாதிக்கும் மாற்றங்கள் தேவைப்படும். இங்கிலாந்து நிலமானிய முறைமைப் பாதையை நோக்கிச் செல்லுங்காலை, தேனியப் போர்கள் அதை இன்னுமொருபடி முன்னேறச் செய்தன.
இங்ங்னமாகத் தேனியப் படையினரும் அல்பிரெட்டின் படையினரும்
ஆயுதந் தாங்கிய காலாட்படையினராக மாறினர். ஆனல், இன்னும் அவர் கள் குதிரைப் படையினராகவில்லை. தேனியரும் சட்சணியரும் போர்க்களத்
துக்குச் சவாரிசெய்து போனதுடன் குதிரைச் சவாரிசெய்தபடியே விரட்டப்
பட்டோ, பின்தொடரப்பட்டோ இருந்திருந்தாலும், குதிரைமீதிவர்ந்து போரி டும் முறையில் அவர்களுக்குப் பழக்கமில்லாதிருந்தது. ஆனல், நோமண் டியில் அதிகாரஞ் செலுத்தும் வகுப்பினரான வைக்கிங்குகள் சீன் நதிக் கரையில் தங்களை எதிர்த்த பிராங்கு நைற்றுக்களிடமிருந்து குதிரையி லிருந்தவாறே “அதிர்ச்சித்தாக்குதல்’ செய்யும் முறைகளின் சிறப்பைக் கற்றனர். தகுந்த காலம் வந்தபோது, உவில்லியத்தின் தலைமையில் பிராங்கோ-வைக்கிங்குகளது குதிரைப்படை திரும்பிவந்து ஏசிங்கில் ஆங்கி லேய-தேனியரது காலாட்படையை வெற்றிகொண்டது. .
மகா அல்பிரெட்டு இயல்பாகவே சாளிமேனுடன் ஒப்பிடத்தக்கவனவான். சாளிமேனைப் பின்பற்றி அல்பிரெட்டு அனேக செயல்களைச் செய்திருக்க
லாம். இருவரும் பதிதத்துக்கு விரோதமாகக் கிறித்துவத்துக்கும், குலைவு நிலைக்கு எதிராகப் புதிய நிலமானிய அரசபதத்திற்கும் துணையாயிருந்த னர். இவ்விருவரும் வீரராகவும் நிருவாகிகளாகவும் அறிவுடையோராகவும்"
பலதரத்தவான ஆற்றல்களைப் பெற்றிருந்ததால், தொழிற்றுறை யறிந்தவ்ர் கள் இல்லாதிருந்த காலவவதிக்கு ஏற்றவராயினர். அக்காலவவதியில் அரசனே அமைதியிலும் போரிலும் தன் குடிமக்களைப் படிப்பிக்கவும் ஆட்சி
புரியவும் வழிநடத்தவும் ஆற்றலுடையவனுயிருக்க வேண்டியவனனன்.
-R. 6344 (12162)
8ሽጝ.8

Page 66
87.
88.
12 அல்பிரெட்டு மன்னன்
சாளிமேனுடைய கருமங்கள் நடைபெற்ற மிகப் பரந்த புவியியல் எல்லையை விடக் குறைந்த எல்லைக்குள் அல்பிரெட்டின் கருமங்கள் நடைபெற்றன வாயினும் அவன் செய்தவை நீண்டகாலமாக நிலைத்திருக்கின்றன. அவ ணும் அவனுடைய புத்திரரும் இங்கிலாந்தை ஐக்கியப்படுத்தினர். சேர்மனி யையும் பிரான்சையும் ஐக்கியப்படுத்தியவனுகச் சாளிமேனை நினைவுகூர (ԼՈւԳԱյոՖl.
இயல்பிற் புலமை சான்றவனும், ஆனல் உடல்நலம் குன்றியவனுமான அல்பிரெட்டு மிக இளமையிலேயே அப் பொல்லாத காலவவதியின் பயங் கரப் போருக்குத் தலைமை வகித்துச் செல்லும்படியான கட்டாயத்திற்குள்
ளானன். ஆனல், பெருந்தன்மையான குணங்களுக்கு ஊறு ஏற்படாது
நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் கடுமையான அனுபவத்தின் மூலம் படித்திருந்தான். தனது இருபத்திரெண்டாவது வயதில் ஆசுடவுன் எனு மிடத்தில் நடைபெற்ற போரிலும் மற்றும் எட்டுச் சிறு போர்களிலும் அவன் உதவித் தளபதியாக இருந்தான். இப்போரின் போது தேமிசு நதிக்குக் கிழக்கே சோக்குப் பாறைத் தொடர்களுக்கு அப்பால் தேனியப் படை யெடுப்பாளரை விரட்டுவதற்காக உவெசெட்சு நாட்டினர் அஞ்சாது முயன்று கொண்டிருந்தனர். இங்கிலாந்தில் தேமிசு நதிக்கு வடக்கிலுள்ள பகுதி யைத் தேனியர் எலவே பணியவைத்து விட்டனர். இளைஞனன அல்பிரெட்டு உடனே படைவீரரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனுயிருந்ததுடன், அந்த
யுத்தம் நடைபெற்ற ஆண்டின் மத்தியில் அவனுடைய மூத்த சகோதர
னிறக்க, அவனே உவிற்றன் குழுவினரால் அரசனகத் தெரிவு செய்யவும் பட்டான். ஒர் அரசனது முதற்கருமம் தன் நாட்டவருக்குத் தலைமை தாங்
கிப் போருக்குச்செல்லலே யாகுமென்றிருந்த காலத்தில் குற்றகவையர்
அரசராதல் இத்தகைய வழமைக்கும் தேவைக்கும் ஒவ்வாததாயிருந்த படியால், அல்பிரெட்டின் இறந்துபோன தமையனின் மக்கள் அரசபதவிக் குத் தெரியப்படவில்லை.
வழு ஆண்டுகள் கழித்து, அல்பிரெட்டின் வாழ்க்கையில் நெருக்கடி உண் டாகியது. வட பகுதி, மத்திய பகுதி, கீழ்ப் பகுதி ஆகியவற்றைத் தமதாக் கிக் கொண்ட தேனியர், இறுதியாக மாரிக்காலத்தின் மத்தியில் எதிர் பாராது படையெடுத்து உவெசெட்சையும் தாக்கிக் கைப்பற்றினர். அல்பி ரெட்டின் குடிமக்கள் கடல் கடந்து ஒடத் தொடங்கினர். அல்பிரெட்டும் சோமசெற்று வீரரடங்கிய ஒருசிறு படையுடன் பரெற்றுச் சதுப்பு நிலத்தி லிருந்த தீவின் அரண்களில் அடைக்கலம் புகுந்தான். இதற்கு ஐம்பது மைல்களுக்கு அப்பால் அக்காலத்து கோண்வால் மாவட்டம் இருந்தது. அங்கே உவெசெட்சின் எதிரிகளான உவெல்சுகள் தேனியருக்கு உடந்தை யாயிருந்தனர். இங்கிலாந்து விடுதலை பெறுவதென்பது இவ்வாறு ஒரு மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனல், தெவனில் அண்மை யிற் குடியேறியிருந்த சட்சணிய பெருமக்கள் அல்பிரெட்டுக்காக உறுதியாக

அல்பிரெட்டும் குதுருமும் 113
நின்றதுடன் அவனுக்குப் பின்புறத்தில் நுழைந்த தேனியப் படையொன் றையும் முறியடித்தனர். அவனற் கைப்பற்றப்பட்ட உவிற்க, அம்சயர் ஆகிய இடங்களிலிருந்த நிலப் பெருமக்கள் அவனுக்கு ஆபத்தான நேரத் தில் அவனது அழைப்பையேற்று அவன் கொடிக்கீழ், மீண்டுமொருகால் ஒன்றுசேர விரைந்ததிலிருந்து அவன் தலைமையில் அவர்கள் கொண் டிருந்த நம்பிக்கை தெளிவாகின்றது. எதண்டூன் எனுமிடத்தில் நடை பெற்ற போரானது நிலைமையை முற்றக மாற்றியது. தேனியரது தலைவ ஞன குத்துரும் என்பான் உவெட்டுமோர் பொருத்தனையின் நிபந்தனைகளை எற்றுக்கொண்டான். அதன்படி அவனும் அவனைப் பின்பற்றியவர்களும் ஞானதீக்கை பெற்றதுடன், உவெசெட்சை விட்டு நீங்கி தேனியக் குடியேற் றத்துக்குச் செல்லவும் உடன்பட்டனர்.
தென்னிங்கிலாந்தில் தாங்கள் எதிர்பர்ர்த்ததைக் காட்டிலும் தங்களுக்கு எதிர்ப்புக் கடுமையாயிருந்ததைக் கண்ட தேனியரிற் பலர் பிரான்சின் மீது படையெடுப்பதில் தம் கவனத்தைச் செலுத்தினர். சில ஆண்டு களுக்குப்பின், தேனியக் குடியேற்றத்தின் தெற்குப் பாகத்தை வரை யறுத்துக்கூறுதற்கு, இதனினும் வாய்ப்பான பொருத்தனையொன்றை அல் பிரெட்டு, குத்துரும் என்பவனிடமிருந்து வலிந்து பெற்றுக் கொண்டான். இதன்படி தேனியக் குடியேற்றத்தின் தென்பகுதி எல்லை, உவற்றிலிங்கு வீதிக்கருகேயும் இலீ நதியின் மூலம் தொடக்கமாய அந்நதிக்கருகேயும் குறிக்கப்பட்டதோடு ஆங்கிலேய அரசனுக்கு இலண்டன் சேரும்படியாகவும் வரையறுக்கப்பட்டது.
அல்பிரெட்டு அரசனின் ஆட்சியின் எஞ்சிய காலத்து அரசியற் புவியியல் இத்தகையதே. தேனியர் கிறித்தவராக மாறும் வேளையில் வடகிழக்கு இங்கிலாந்தின் முதல்வராக எற்றுக்கொள்ளப்பட்டு, அங்கு குடியேறினர்; அவர்களுக்குத் தெற்கிலிருந்த சட்சனிய ஆள்புலமனைத்தும் அல்பிரெட்டின் கீழ் ஒன்றக்கப்பட்டன. மேசியா, கிழக்கு அங்கிலியா, நோதம்பிரியா ஆகியவை இறைமைவாய்ந்த அரசுகள் எனும் நிலையை ஏலவே இழந்து விட்டமையால் அவனுடைய வழித்தோன்றலர் தேனியக் குடியேற்றங்களை வெற்றிபெறின், அவர்களே இங்கிலாந்தை முதலாண்ட மன்னராவர்.
தைனுக்கு அப்பாலிருந்த பழைய நோதம்பிரியாவின் சிதைவாகிய பேணிசியா மட்டுமே வைக்கிங்குகளால் வெற்றிகொள்ளப்படாதிருந்தது. தைனுக்கும் செவியற்றுக்குமிடையேயுள்ள இச்சட்சணிய மாவட்டமே நோதம் பலாந்து எனும் பெயரைப் பெற்று, பல நூற்றண்டுகளாக இங்கிலாந்துக் கும் கொத்துலாந்துக்குமிடையே நிலையற்ற தன்மையில் இழுபட்டுக் கிடந் தது. ஆனல், உலோதியன் என அன்று தொட்டு அழைக்கப்பட்ட, செவியற்று குன்றுகளுக்கும் போத்து நதிக்குமிடைப்பட்ட சட்சணிய இராச்சிய மானது, கொத்துலாந்து வரலாற்றேடு அதிகம் தொடர்புறுவதாயிற்று.
88900.

Page 67
878
900.
4 அமைதிக்காலத்தில் அல்பிரெட்டு
ஏனெனில், தெற்கிலிருந்த சட்சனிய வரலாற்றேடு தொடர்புறவிடாது தேனியக் குடியேற்றம் அதைத் தடுத்ததனல் என்க. அதே நேரத்தில் மேற்குக் கடலைச்சார்ந்த படையெடுப்பாளராகிய நோவீசியர், அயலாந்தின் கொத்துலாந்துக் கொத்துக்களுக்குமிடையேயிருந்த தொடர்புகளைத் துண்
டித்தனர். இவ்வாருக வைக்கிங்குகளின் படையெடுப்புக்களால், கொத்து லாந்து தன் பிரதேச எல்லைக்குள் அடங்கியதுடன், போர் புரியும் தன்மை யுள்ள அந்நாட்டு உம்பல்களும் ஒரளவுக்கு ஐக்கியப்படுத்தப்பட்டன. வைக்
இங்குகளது காலத்திலேயே ஐக்கியப்பட்ட பிகுதுக்களதும் கொத்துக்களதும் அரசனக, கெனத்து மாக்கு அலுபைன் என்பான் விளங்கினன். கடலுக்
கப்பால், அயலாந்தைப் பின்னேக்கிக் கொண்டிருக்கும் அயோனவை மையமாகக் கொண்டிருந்த கொத்திய மதத்தை, ஐக்கியப்படுத்தப்பட்ட தனது இராச்சியத்தின் மத்தியிலுள்ள தங்கெலை மையமாகக் கொள்ளு
மாறு செய்ததோடு சென் கொலம்பாவின் சின்னங்களையும் அங்கு கொண்டு
வந்தான்.
குதுரும் என்பானைக் கிறித்துவின் பெயரால் தூய்மையாக்கிய பின்ன ரும் தேனியக் குடியேற்றத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னரும் அல்பிரெட்டின் வாழ்க்கை புதியதான அதிக மகிழ்ச்சிக்குரிய திருப்ப மொன்றை அடைந்ததுமன்றி, அந்நிலை அவன் மரணம் வரை நீடித் திருந்தது. தென்னிங்கிலாந்தில் அவன் நிலைமை முன்னிலும் அதிகப் பாதுகாப்புடையதாயிற்று. இப்பொழுது நடந்தேறிய நிகழ்ச்சிகள் அவனுக் குச் சாதகமாகவிருந்தன. தேனியக் குடியேற்றத்திலும் அதற்கு வெளி யேயுமுள்ள சட்சனியரனைவராலும் அவன் அவர்களின் தனி ஆதரவாள னக மதிக்கப்பட்டான். எண்ணிக்கையில் இடைவிடாது பெருகிவந்த கிறித்து வராக்கப்பட்ட தேனியர்தானும் இவ்வாங்கிலேய சாளிமேனைப் போற்றுவா ராயினர். கடல் கடந்துவந்த வைக்கிங்குகளின் படையெடுப்புக்கள் இன்னும் அதிகமாகவேயிருந்தன. ஆனல், தேனியக் குடியேற்றத்திலிருந்த தேனி யர் புதிதாக வந்த மக்களை முழுமனதுடனே ஆதரிக்கவில்லை. ஏனெனில்,
அவர்கள் இப்பொழுது விளைநிலங்களுடனும் மனைவியருடனும் நிலையான
குடிவாழ்வை மேற்கொண்டிருந்ததாலும் தமக்குச் சொந்தமான நிலங்கள் தாக்கப்படுவதன் மூலம் சேதம் ஏற்படலாமென்னும் அச்சத்தினலுமென்க. தேனியரின் முறைகளைப் பின்பற்றி இலண்டனை அரணும் பாதுகாப்புப் படையுமுடையவொரு பட்டணமாக அல்பிரெட்டு மீண்டும் அமைத்தான். அன்றியும், அங்கு வாழ்ந்த ஆங்கிலேய நகரமக்கள் அதைப் பிற தாக்கல் களிலிருந்து பாதுகாக்கும் கடமைக்குட்பட்டுமிருந்தனர்; இங்கிலாந்தின் முக் கிய வாயில் தேனியர் உட்புகாவண்ணம் பூட்டப்பட்டிருந்தது. 1
இத்தகைய பிற்காலத்துக் குரூரங்குறைந்த போர்களுக்கு இடைப்பட்ட
காலங்களில் வாய்த்த ஓய்வுகாலம் முழுவதையும் அல்பிரெட்டு தன்
மனதுக்குகந்த செயல்களில் கழிப்பானயினன், பீட்டு, இலத்தீனில் எழுதி

அமைதிக்காலத்தில் அல்பிரெட்டு 115
யதை ஆங்கிலேய-சட்சன் மொழியில் மொழிபெயர்த்ததன் மூலமும் தன் குடிமக்கள் கற்றுப் பயனடைய சமய சித்தாந்தம், வலராறு, புவியியற் கைநூல்களை மொழி பெயர்த்துத் தொகுத்ததின் மூலமும் அவன் ஆங்கில உரைநடை இலக்கியத்தைத் தோற்றுவித்தான். அன்றியும், ஆங்கிலத்தில் முதன் முதல் இயற்றப்பட்ட வரலாற்றுப் பதிவாகிய ஆங்கில-சட்சனிய வரன்முறைக்குறிப்பு எழுதும் வழமையையும் தொடக்கிவைத்தான். வேற்று நாட்டிலிருந்து அறிவுடையோரை வரவழைத்து மேசியாவிலிருந்தும் நோதம் பிரியாவிலிருந்தும் அகதிகளாக வந்த அறிஞரையும் வரவேற்றன். ஏனெ னில், தேனியக் கொள்ளையடிப்புக்களால் பாழாக்கப்பட்டவைகளை உவெ செட்சிலாவது திருப்பியமைக்க வேண்டுமெனும் நம்பிக்கையினல் என்க ; இப்படையெடுப்புக்களின் விளைவாக நூல்நிலையங்களும் முன்னைய இங்கி லாந்தின் அறிஞரும் அழிந்தொழிந்துபோக, தாம் செய்யும் திவ்விய பூசையிற் சொல்லும் இலத்தீன் மொழியின் கருத்துக்களை அறியாத குருவாயத்தினரே எஞ்சியிருந்தனர். மேலும், விழுமியோரின் புத்திர ருக்குக் கல்வி புகட்டுவதற்கான முதல் “ உயர்நிலைப் பள்ளி ’களை அல்பி ரெட்டு நிறுவினன். இவ்வாருகப் புதிய பரிபாலன முயற்சிகளுக்கெல்லாம் தம்மைத் தகுதியுடையவராக்கிக் கொள்வதற்காகப் பொதுமக்களில் உயர் குடியினர் சிலருக்கு முதன்முறையாகக் கல்விக் கொடையை வழங்கினவன of Tool
முயற்சியுள்ள அரசனுெருவனல் அறிவற்ற குருக்குழாத்தினருக்கும் மக்களுக்கும் நன்கொடையாகக் கொடுக்கப்பெற்ற கல்வியினதும் மதத்தி னதும் புத்துயிர்ப்பானது மெதுவாகவும் செயற்கைவகையானும் வளர்வ தாயிற்று. கந்துபேட்டு, பீட்டு, அல்குயின் ஆகியவர்களின் நாட்களிலிருந்தது போன்று மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரக்கூடிய காலமாய் இக் காலம் இருக்கவில்லை. நோதம்பிரியாவிலும் மேசியாவிலும் இருந்த துறவி மடங்கள் அழிக்கப்பட்டதுடன், கல்விக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருந் தது. ஆனல், அல்பிரெட்டு ஒருவனதல் அதற்குப் புத்துயிரளித்தான். அன்றியும், தேனியர் காரணமாகப் புதிதாக உருவாகி வளர்ந்த நகர வாழ்க்கையானது, ஆச்சிரம வாழ்க்கை சிறப்புற்றிருக்குங்காலை அளிக்கக் கூடியனவற்றிலும் மேலானவற்றை உயரிய நாகரிகத்துக்கு ஈற்றில் அளிக் கக்கூடியதாகும்.
அல்பிரெட்டு தனது ஆட்சியின் கடைசி இருபது ஆண்டுகளில், உவ்ெ செட்சிலிருந்த நிறுவகங்களை அமைதிக்காலத்திலும் போர்க்காலத்திலும் பலப்படுத்திவந்தான். கப்பற்படையொன்றை நிறுவினன். தரைப்படை அமைப்பொன்றை நிறுவியதுடன் தேனிய முறையையொட்டி மண்ணுற் கட்டியெழுப்பப்பட்ட கோட்டைகளில் நிலையான பாதுகாப்புப் படைகளையும் இருத்தினன். கோட்டங்கள் மூலமாகவும் அவற்றின் அலுவலர்கள் மூல மாகவும் இயங்கக்கூடிய திடமான பாலனமுறையொன்றை அமைத்தான்.

Page 68
மூத்த отц".6) வேட்டு 900924.
அதெ அலுத் தான் 924940.
Grassmrti? 959995.
6 தேனியக் குடியேற்றம் தோல்வியுறல்
இவை யாவும் ஆதிகாலத் தன்மை வாய்ந்தவையாயினும் இங்கிலாந்தில் இதற்கு முன்பிருந்தவை எவற்றிலும் சிறந்தனவாயிருந்தன. இவ்வாறன அமைப்புக்களைப் பெற்றிருந்த மகனகிய மூத்த எட்டுவேட்டு என்பவனும் அவனுடைய மகளாகிய மேசியநாட்டு எதெல்பிலெடாச் சீமாட்டியும் தம் தந்தை இறந்தபின்னர் தேனியக் குடியேற்றத்தை மீண்டும் வெற்றி கொள்ள முற்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து அவ்வெற்றியை நிறை வாக்கியவன் எட்டுவேட்டுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகனுகிய அதெலுத்தான் என்பவனவான். தேனியக் குடியேற்றத்தைச் சேர்ந்த தேனியர், தரையில் நிலையான குடிவாழ்வைத் தொடங்கியதும் அரசியல் ஐக்கியத்தில் குறைவுடையவர்களாயிருந்தனர் என்பதைக் காட்டியுள்ளனர். தாம் விரும்பியபடி அரசன், அல்லது வேள் என்று பெயரிட்டழைத்த ஒருவனின் கீழ் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட பல குடியேற்றங்கள், திருத்தியமைக்கப்பட்ட உவெசெட்சு இராச்சியத்திலிருந்த ஆங்கிலேயக் குடி யேற்றங்களைவிடக் குறைந்த அளவிலே தம்முள் ஒன்றுபட்டிருந்தன. தற். காலிகப்போர்த் தலைவர்களின் கீழ் போர்த் தொழிலுக்காக ஒன்றுபடும் உளச்சார்புடையோராய் வைக்கிங்குகள் இருந்தனர். ஆனல், இங்கிலாந்தை அழித்து அத்ம்பண்ணிய ‘கூட்டங்களில் காணப்பட்ட ஒற்றுமை தேனியக் குடியேற்றக் காரருடைய அரசியல் ஒழுங்குகளில் பிரதிபலிக்கவில்லையாத லால், இக்குடியேற்றம் மீண்டும் படையெடுத்து வந்த சட்சனியரை எதிர்க்க முடியாது வீழ்ச்சியுற்றது.
மூத்த எட்டுவேட்டையும் அதெலுத்தானையும் மாத்திரமே இங்கிலாந்தின் முதல் அரசர்களாக நாம் உண்மையிற் கூறலாம். செழிப்பும் அமைதியும் தன் ஆட்சியிலே நிலவச் செய்த எட்டுவேட்டின் பேரனகிய எட்காரும் உண்மையில் அவ்வாறே கருதப்பட்டான். தேனியக் குடியேற்றமானது எனைய ஆங்கிலேய இராச்சியங்களைத் தனதாக்கிக் கொள்ள, உவெசெட்சு நாட்டினர், அத்தேனியக் குடியேற்றத்தைத் தமதாக்கிக் கொண்டனர். கெலித்திய உவேல்சும் கெலித்திய கொத்துலாந்துமே இன்னும் சுதந்திர முடையனவாயிருந்தனவெனினும், அவற்றின் அரசர்களும் இளவரசர்க ளும் அதெலுத்தான், எட்கார் ஆகியவர்களை ஒருவிதத்தில் தம்பால் ஆதிக்க முடையவராக எற்றுக்கொண்டிருந்தனர். இவ்வீர் அரசர்களுமோ தம்மைப் "பிரித்தானியப் பேரரசர்” எனக் கருதினர்.
தேனிய வெற்றிகளினலேற்பட்ட பிளவாலும் ஒற்றுமைச் சிதைவாலும் புதியதொரு ஐக்கியம் உருவாயிற்று. வைக்கிங்குகளின் போர்க்கோடரிக ளால் துறவிகளின் தலையோடுகள் பிளக்கப்பட்டும் ஆங்கிலேயரால், அவர் களின் விரோதிகளான தேனியரின் தோல் உரிக்கப்பட்டு கோயிற் கதவு களில் அறையப்பட்டும் வருங்கால், ஆங்கிலேய-சட்சணியருக்கும் கந்தினேவி

ஆங்கில-தேனியச்சட்டம் 17
யருக்குமிடையே இருந்த பகைமை ஆழமாயிருந்தது. ஆனல், அது நிலை யாகவிருக்கவில்லை. அச்சகம் ஏற்படுவதற்கு முன்னுள்ள காலத்தில் பல இனங்களுக்கிடையில் நேர்ந்த கலகங்களையும் அட்டூழியங்களையும் பற்றிய நினைவு செயற்கை முறைகளால் வளர்க்கப்பட்டதில்லை. பள்ளி ஆசானும் வரலாற்றசிரியனும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில் இல்லாக்காலை, இளம் உள்ளங்களில் மறதியேற்படல் இயற்கையே. இந்த இரு நோதிக்கு இனத்தவரும் அனேக பொதுவான இயல்புணர்ச்சிகளையும் வழமைகளையும் உடைய ஓரினத்தைச் சேர்ந்தவராவர். தேனியர் சிறந்த விளைநிலங்களைத் தேடி வந்தனரேயன்றி, கந்தினேவியப் பேரரசொன்றை நிறுவ வரவில்லை. ஆதலால், தேனியர் ஞானதீக்கை பெற்றபின் அவர்களை ஆங்கிலேயருடன் உவெசெட்சுப் பேரரசின் ஆளுகையில் ஒன்ருக இணைப்பது இலகுவாயிற்று. அவர்கள் தம் அயலவரை அடிமைப்படுத்தாதிருந்தவரை தேனியக் குடியேற்றத்தில் உவெசெட்சில் இருந்ததற்கு மாறக, அனேக கட்டுப் பாடற்ற பண்ணையாட்கள் இருந்தார்களேயன்றி, அடிமைகளெவரும் இருந்ததில்லை. அன்றியும், அவர்கள் தேனியச் சட்டங்களையும் தேனிய வேள்களையும் சட்டம் வழங்குவோரையும் பெற்றுப் புதிய இருப்பிடங்க ளில் செழிப்புள்ளவராய்க் குடியேறியிருந்ததால் ஆங்கிலேய அரசர்க ளின் எளிதான ஆளுகையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிந் திதி.
இப்பொழுது அரசன் ஒருவனேயிருந்தான் ; ஆனல், பல தலைமுறைக ளாக நாட்டிற் பல சிறந்த வழமைகளும் “சட்டங்களும் ” ஏற்படலாயின. இங்கிலாந்து முழுவதற்கும் பொதுவான வழமைச் சட்டம் பிளாந்தே செனற்றுக் காலத்தில் அரசவையிலிருந்த சட்டவாணர்களாற் பிறப்பிக்கப் பட்டது. ஆனல், ஆங்கிலேய-சட்சணிய காலத்தில் நாடு முழுவதற்குமுரிய அப்படியான சட்டவாணரும் சட்டத்தொகுப்பும் இருந்ததில்லை. சில வேளை களில் எல்லா நீதிமன்றுகளுக்கும் உதவியாயிருக்கும்பொருட்டு அரசன் தன் விசுப்பாண்டவர் துணையுடன், எழுதப்பட்ட சில சட்டங்களைப் பிறப்பித் தான். ஆனல், ஒவ்வொரு கோட்டத்து அல்லது அண்டிரெட்டு நீதிமன்றும் தனிப்பட்ட ஆட்சியெல்லைக்குட்பட்டிருந்த ஒவ்வொரு நீதிமன்றும் தத்தம் பகுதியிலிருந்து வந்த வழமையையொட்டிய உள்ளூர்ச் சட்டங்களையும் கொண்டிருந்தன. தேனியர் தம் சட்ட முறைமைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனராதலால், அவர்கள் வாழ்ந்த பிரதேசம் “தேனியச் சட்டம்’ எனும் பொருளுடைய பெயர் பெற்றது.
1. தேனியரது தோல் உரிக்கப்பட்டதுபற்றி எவ்வித ஐயமுமில்லை. "வைக்கிங்குக் குழாத்தின் வீரகாவியநூல்" என்பதில் எச்சு. சென் யோட்சுகிரே எழுதிய கட்டுரையைக் காண்க. பாகம் 5 ஆண்டு 1906-7. அவ்வூழியில் பதிதரிடையும் கிறித்துவரிடையுமிருந்த மிலேச்சத் தன்மையை நினைவூட்டும் பலவற்றுள் இதுவுமொன்ருகும்.

Page 69
118 ஆங்கில-தேனியச் சட்டம்
எத்தனையோ நல்ல விடங்கள் போன்று, சட்டமும் தேனியர் வருகையின் விளைவாக ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் “உலோ” என வழங்கப் படுவதாகிய சொல் தேனிய மொழியாகும். உலோ என்னும் தேனியச் சொல், தனக்குப் போட்டியாக எழுந்த ஆங்கிலேய சட்சணியாது "உடும்” எனும் சொல்லும் இலத்தீனில் “இலெ $கிசு ’ எனும் சொல்லும் அழிந் தொழிய, தான் அழியாது நிலைத்துள்ளது. கந்தினேவியர் வைக்கிங்குகளின் போர்ப்பாதைகளிற் செல்லாக் காலங்களில், வழக்காடும் மக்களாயிருந்த னர் ; ஆகவே நீதிமன்றங்களில் சட்ட வாதங்களைக் கேட்பான்வேண்டி அங்கு கூட விரும்பினர். அவர்களிடையே சட்டவாணர் இலரெனினும், உண்மை, விளம்பி நிசால் போன்ற கமக்கார வீரர் மக்களின் வழமையிலும் அதில டங்கிய நுண்ணிய சட்டத் தொடர்பான இயன்முறையிலும் தேர்ந்தவரா ழிருந்தனர். அனேகமாக இங்கிலாந்திலிருந்த ஒரு தேனியப் பட்டணத்தில் பரம்பரையாக வந்த பன்னிரண்டு “ சட்டமறிந்தோரே* முதன்மையான அலுவலராயிருந்தனர். தேனியர், நீதிமன்றத்திலிருந்த கட்டுப்பாடற்ற பண் ணையாட்களிலிருந்து குழுக்களை அமைக்கும் பழக்கத்தைப் புகுத்தினர். இப் பழக்கத்திலிருந்தே, பிற்காலத்தில் நோமானியராற் புகுத்தப்பட்ட பிராங்கு க்ளின் வழமையொன்றிலிருந்து உருவாகியதான நடுவர் முறைமை இங்கி லாந்தில் ஒருகால் எதிர்காலத்தில் வளர்ச்சியுறுவதற்குரிய சாதகமான நிலைமையை ஏற்படுத்தியது எனலாம். ஆயத்தமற்ற எதெலிரடு என்பா னின் சட்டங்களிலிருந்து நாம் அறிகிறதாவது : “ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விசாரணை மன்றம் நடைபெறும் ; முதிர்வுற்ற பன்னிரண்டு நிலப் பெருமக்கள் தங்கள் பரிசாரகருடன் அம்மன்றங்களுக்குச் செல்வர். தங்கள் கையிற் கொடுக்கப்பட்ட பரிசுத்த பொருளின் மீது ஆணையாகத் தாம் குற்றமற்றவனைக் குற்றப்படுத்தவோ, குற்றவாளியொருவனை மறைக்கவோ மாட்டோமென்று அவர்கள் கூறுவர். இம்முறை தேனியருக்குரியதாகும். இது மத்திய காலத்திலிருந்த நடுவர் முறைமையை ஒத்திருப்பினும், இம் முறைமையிலிருந்து மத்தியகால நடுவர் முறைமை நேரடியாகத் தோன்ற வில்லை. a
ஆங்கிலேய தேனிய காலத்தின் நீதியைப் பற்றிய அவர்களின் கருத்து மூன்று வேறன மூலங்களிலிருந்து தோன்றியதாகத் தெரிகின்றது. முதலாவதாக, சட்சனியருக்கும் கந்தினேவியருக்கும் பொதுவாகவிருந்த பழங்கருத்தாகும் : அதாவது, தீங்கு செய்யப்பட்டவனுக்கோ, அவனுடைய உறவினனுக்கோ தீங்கு விளைவித்தவன் தன் தவற்றுக்காகப் பணத்தை நட்டவீடாகக் கொடுப்பதின் மூலம் இவ்விரு சாராருக்குமிடையேயிருந்த பகைமையைத் தவிர்ப்பதாகும். இத்தகைய கருத்து ஒரு காலத்தில் ஏறக் குறைய நீதித்துறை முழுவதற்கும் பொருத்தமாகக் காணப்பட்டது. ஆனல், நீதிமன்றங்களின் அதிகாரம் உறுதியடைந்தபோதும் குலங்கள் பற்றிய உணர்ச்சி குன்றியபோதும் இக்கொள்கை மறையலாயிற்று. நாளடைவில் பிந்திய சட்சனிய காலம் முழுவதிலும் “கொலை செய்தல்’ என்பது

ஆங்கில-தேனிய நகரவாழ்க்கை 119
குடும்பங்களுக்கிடையேயிருந்த பகைமையின் இயல்பை அதிகமாகக் குறிக்காது பெரும்பான்மையும் சமுதாயத்திற்கும் கொலையாளிக்கு மிடையே நடைபெற்றதோர் அலுவலைக் குறிப்பதாயிற்று. இரண்டாவது, திருச்சபையின் புதிய கோட்பாடாகும். இதன்படி தவறிழைத்தல் பாவ மென, அல்லது ஒழுக்கமற்ற நடத்தையெனக் கருதப்படுவதால், அதனைப் போக்குவதற்கு நோன்பினுற் கழுவாய் செய்யவேண்டுமென்பதாம். ஆங்கி லேய தேனியச் சட்டங்களில் காணப்படுவதாகிய கந்தினேவியருக்குரிய கருத்தே மூன்றவதாகும். ஒருவன் தன் பிரபுவை விட்டுக் கோழைத் தனமாக ஓடுதல், அல்லது பின்வாங்குதல் போன்ற “ கோழைச் செயல் ”, சுதந்திர வீரனுக்கடுக்காத செயலென்பதால் அச் செயலிழைத்தோன் அக்காரணத்திற்காகத் தண்டிக்கப்படல்வேண்டுமென்பதே இக்கருத்தாகும். அல்பிரெட்டு காலந்தொட்டு, தன் அரசனுக்கு, அல்லது பிரபுக்கு எதிராகச் செய்யும் துரோகமென்னும் பாதகத்திற்கு, விசேட தண்டனைகளும் விசேட குற்றச்சாட்டுக்களும் விதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிகிறேம். துரோகமும், சிறுபான்மையான துரோகச் செயல்களும் பற்றிய சட்டம் வளர்ந்ததற்குக் காரணம், ஒரளவு முடியினதும் நிலமானியப் பிரபுவினதும் அதிகரித்து வந்த அதிகாரமும், ஒரளவு குருக்குழாத்தினல் கொண்டுவரப்பட்ட உரோம சட்டத்தின் செல்வாக்குமாகும். இவை மட்டுமன்றி, ஆங்கிலேய-சட்சனிச் யரதும் கந்தினேவியரதும் இலக்கியத்தில் ஒரேமுகமாகக் கூறப்பட்டுள்ள வாறு தன் தலைவனைக் காட்டிக்கொடுக்கும், அல்லது கைவிடும் ஒருவனின் அருவருப்பான நிலை பற்றி நோதிக்கு இனங்களனைத்தும் கொண்டிருந்த உறுதியான நல்லொழுக்கவுணர்ச்சியும் அதற்கு ஒரளவு காரணமாகும்.
தேனியக் குடியேற்றமானது கந்தினேவிய சமுதாயங்களின் ஒரு நாட்டுக் கூட்டிணைப்பாகச் சுதந்திரத்துடனிருந்த குறுகிய தூலத்தில் அது பட்டண வாழ்க்கையையொட்டி அமைக்கப்பட்டது. செசுற்றரிலிருந்த உரோமன் சுவர்களை வைக்கிங்குகளின் தலைவன் ஒருவன் முதன்முதற் பழுதுபார்த் தான். செசுற்றரிலும் யோக்கிலும் கந்தினேவியரது ஊக்கத்தினல் வர்த்தக வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டது. வீதிகள் குறைவாகவிருந்தன; ஆனல், ஆறுகள் ஆழமுடையனவாயிருந்தன. வர்த்தகப் பொருள்கள் தெப்பங்
1. தீங்கிழைத்தவருடன் தீங்கிழைக்கப்பட்டவர் வலுக்கட்டாயமாகக் கை கலக்காது முன்னவரை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தத்தின் மூலம் அவ்விரு சாராருக்குமிடையே குடும்பப் பகைமை எற்படுவது சட்டத்தால் எங்ங்ணம் நாளடைவில் தவிர்க்கப்பட்டதென்பதை அல்பிரெட் டின் சட்டங்கள் எங்களுக்கு நினைவூட்டுகின்றன. உ-ம்: " ஒருவன் தன் எதிரி ஊரிலிருக்கின்றன் என்பதை அறியாதவனுய் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது, அவன் தன்னிடமிருந்த ஆயுதங்க ளைப் பயன்படுத்தாதிருப்பானுயின் அவன் 30 நாட்களுக்குச் சிறைப்படுத்தப்படுவதுடன் அது பற்றி அவடைய உறவினருக்கும் அறிவிக்கப்படும். ஆனல்,அவன் தன்னிடமிருந்த ஆயுதங் களைப் பயன்படுத்துவானுயின் அவன் தாக்கப்படுவான்”, “ஒருவனுடைய பிரபு தாக்கப்பட்டால் அவன் தன் குடும்பப் பகைமைக்கு ஆளாகாத முறையில் தன் பிரபுக்காகச் சண்டை செய்ய லாம்." எடுமண்டினதும் கணியூற்றினதும் சட்டமுறை அவர்களது காலத்தில் குடும்பப்பகைமை வழக்கத்தில் இருந்துவந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

Page 70
120 ஆங்கில-தேனிய நகரவாழ்க்கை
களின் வாயிலாக உள்நாட்டுப் பட்டணங்களிலிருந்த துறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. பிரசித்தியடைந்த தேனியரின் “ஐந்து பரோக் களான ’ இலிங்கன், தாம்போட்டு, இலெசுற்றர், இடாபி, நொற்றிங்ங்ற் ஆகியவை இராணுவத் தளங்களாகவும் வர்த்தக நிலையங்களாகவும் பயன் பட்டன. ஒவ்வொரு நகரமும் கம்பிவேலியிடப்பட்ட திடலாலும் பள்ளத் தாலும் பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் அதற்குரிய “ சட்டம் வழங் குவோரும் ’ தரைப்படையினரும் “யாள் ” அல்லது எள் எனப்பட்ட இறையும் இருந்தனர். புரத்திலிருந்துகொண்டு, அப்புரத்தைச் சுற்றி யிருந்த விரிந்த மாவட்டத்தை எளும் அவனது படையும் ஆட்சி செய்தனர். தேனியப் பட்டணத்தின் அரசியல் முக்கியத்துவம் முற்றிலும் கந்தினேவியரது அமைப்பையொட்டியதாயிருந்திருப்பினும் ஒருவகையில் அஃது உரோமச் செயல்முறையுடன் ஒரளவு ஒப்புமையுடையதாயுமிருந்தது.
மூத்த எட்டுவேட்டும் மேசிய அரசியான அவன் சகோதரி எதெல் பிலெடாவும் தேனியக் குடியேற்றத்தை வெற்றிகொள்ளத் தொடங்கிய போது அவர்கள் தேனியரது பரோவமைப்பு முறையைக் கண்டு அதனைப் பின்பற்றி அம்முறையைக் கையாண்டனர். அம்முறையை, அல்பிரெட்டு, இலண்டனிலும் உவெசெட்சின் ஒரு பகுதியிலும் கையாண்டிருந்தான். அவனுடைய மகனும் மகளும் செவேண் நதியின் பள்ளத்தாக்கிலும் மிதுலாந்திலும் அரண்செய்யப்பட்ட ஆங்கிலேய நகரங்களைத் தொடர்ச்சியாக எற்படுத்தினர். இவர்களிருவரும் பாழடைந்துபோன உரோமன் நகரங் களின் கற்சுவர்களைப் பழுதுபார்த்தனர். இதற்குமுன்னர் அரண்செய்யப் படாத விரகு நிலையங்களில் புதிய மண்கோட்டைகளையும் கட்டியெழுப்பினர். ஒவ்வொரு கோட்டையிலும் பாதுகாப்பின் பொருட்டு ஆங்கிலேயப் படைகளை நிலையாக வைத்தனர். இப்படைகள் நகரத்தைச் சேர்ந்த நிலங்களை மானிய மாகப் பெற்றிருந்ததோடு அவ்விடங்களைப் பாதுகாக்கும் கடமையையும் உடையனவாயிருந்தன. அவ்வரசர்கள், தேனியக் குடியேற்றத்தை எத் துணை விரைவாக வெற்றி கொண்டார்களோ அத்துணை விரைவாக அதனை, சட்சனிய உவெசெட்சிலிருந்த கோட்டங்களைப் போன்று பிரித்த மைத்தனர். ஆனல், ஒவ்வொரு புதிய கோட்டமும் ஏதாவதொரு தேனிய பரோவின் பாலன நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தது. புதிய கோட்டத்தின் எல்லை பெரும்பாலும் அப் பரோவுடன் இணைக்கப்பட்ட தேனிய இராணுவ மாவட்டத்துக்குரிய எல்லையாகவே இருந்தது. மத்திய பகுதியின் கிழக்குப் பகுதிகளாகிய இலிங்கன், இடாபி, நொற்றிங்நும், இலெசுற்றர், நோதாந்தன், அந்திந்தன், கேம்பிரிட்சு, பெட்போட்டு ஆகிய கோட்டங்களின் தோற்றம் இத்தகையதே. அரசனினதும் குடிமக்களினதும் பிரதிநிதியாக ஓர் எளும், அவனுக்குப் பக்கத்தில் ஒரு கோட்ட மணிய காரனும் உவெசெட்சைச் சேர்ந்த ஒன்று, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பழைய கோட்டங்கள் சம்பந்தமாய் அல்லது மேசியாவிலிருந்து மீட்கப்பட்ட புதிய கோட்டங்கள் சம்பந்தமாய் அரசனுக்குப் பொறுப்புள்ளவராயிருந்

காடழிப்பும் முன்னேற்றமும் 12.
தனர். ஆனல், தேனிய எளொருவனே இணைக்கப்பட்ட தேனியக் குடியேற்றத்தின் ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஆங்கிலேய அரசனுக்குப் பொறுப்புள்ளவனயிருந்தான்.
இங்ங்னமாகப் புதிய ஆங்கிலேய இராச்சியம் பாதுகாப்புப் படை முறை யொன்றையும் ஒபா, எகுபெட்டு ஆகிய மன்னர்களின் நிலையற்ற பேரர சுகளில் காணப்பட்டனவாகிய பாலன உறுப்புக்களையும் உடையதாயிருந்தது. எனவே, ஆங்கிலேய-தேனியப் போர்களாலேற்பட்ட குழப்ப மேகங்கள் விலகியும் மேலேகியும் போவதை நாங்கள் உற்றுநோக்குங்காலை, இக்கால இங்கிலாந்தென நாம் அறிந்துள்ள உருவம் பிரசித்தி பெற்ற கோட்டங் களுடனும் பட்டணங்களுடனும் நிரைநிரையாக எங்கள் கண்முன் தோற்ற மளிக்கின்றது. தொலைவிலிருந்து நோக்கினும் நாங்கள் இவையனைத்தை யும் பார்க்க முடியும். எனினும், நாங்கள் பத்தாம் நூற்றண்டின் தேசப்படத்தை அண்மையிலிருந்து உற்றுநோக்குவோமாயின், ஒன்றுக் குப்பின் ஒன்றன நாட்டுப்புறங்கள் புதிதாக நீர்வற்றச் செய்துள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குக்களிலும், மறைந்துகொண்டிருக்கும் காடடர்ந்த பகுதியிலும் மெல்ல வளர்ந்து வந்துகொண்டிருப்பதும் தோன்றுவதாகும்.
தேனியப் போர்களிலீடுபட்ட இரு சாராருடைய இராணுவம், பாலனம் ஆகியவற்றின் தேவைகளுக்காக முதன்முதற் பரோக்கள் நிறுவப்பட்டன. எனினும், விரைவில் அவை வர்த்தகச் சார்புடையனவாய் அமையலாயின. தேனியர் கடல்கடந்து சென்றுவந்த சோர்வில்லாத வணிகராவர். கடல் கடந்து சென்ற வர்த்தகர் என்ற பெருமை மிக்க இயல்பினல், தாம் அவ்வாறுசென்று திரும்பியதும் “நிலப்பெருமக்களுக்குரிய மதிப்பை ’ அவர்கள் தமக்குக் கோரினர். அதிலும் தாங்கள் கொண்டுவந்த பொருள் களிற் சில பேரம்பேசிப் பெறப்பட்டிருந்ததைவிடத் தட்டிப் பறிக்கப்பட்டன வாயிருக்குமாயின் அவ்வணிகர் அதுபற்றிய பெருமை கொண்டனர். இவர் களிடமிருந்து வர்த்தகத் தொடர்பான சில கருத்துக்களையும் வழக்கங் களையும் சட்சணியர் கற்றுக்கொண்டனர். அரசனளித்த விசேட அமைதி யானது பரோவுக்கும் அதிலடங்கிய அனைத்துக்கும் பாதுகாப்பளித்தது. மூத்த எட்டுவேட்டு, சந்தைப் பட்டணமொன்றில் வாங்கலும் விற்றலும் அப்பட்டணத்து மணியம் ஒருவர் முன்னிலையில் நடைபெறுவதவசியம் என ஒரு சட்டம் பிறப்பித்த ஞான்று, அவன் புதிய பரோக்களில் வர்த்தகம் செறிவடைவதற்கு உதவியளித்தான். அப்பரோக்களிலிருந்த குடிகள் ஒருங்கே போர் வீரராயும் வர்த்தகராயும் பக்கத்திலிருந்த நிலங்களிற் பயிர்செய்து வந்த கமக்காரராயு மிருந்தனர். வருங்காலத்தில், ஆயுதந் தாங்கிய குதிரை மீதிவர்ந்த நோமன் நைற்று, போர் செய்யும் இவர்கள் தொழிலை ஏற்று, பட்டணத்தைப் பார்த்திருப்பனவும் கற்களாலாயவையு மான பாதுகாப்பு அறைக்குப் பெருமையுடன் இளைப்பாறப் போகும்பொழுது, இவர்களுடைய அமைதிவாய்ந்த பிற்சந்ததியார் வர்த்தகராயும் கமக்

Page 71
122 ஆங்கில நகரங்களின் தோற்றம்
காரராயும் இருப்பதுடன் திருத்தியடையலாம். இதற்குப் பல நூற்றண்டுக் குப்பின் ஒரு தொழிலிலே தனிப்பயிற்சி பெறும் முறைமை ஒருபடி முன்னேறியதும், குடிகள் நிலத்தைப் பண்படுத்துவதை விடுத்து கைத் தொழில்களும் வர்த்தகமும் செய்வதில் மட்டுமே முனைந்திருப்பவராவர்.
ஆங்கிலேய பட்டணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒருவகையில் இத்தகையதே. ஆனல், ஆங்கிலேய பட்டணங்களின் வரலாறு வேறெந்தப் பட்டணத்தின் வரலாற்றேடும் ஒப்புமையுடைத்தன்று. கற்சுவர்களையுடைய மிகப் பெரிய நகரங்களிற் சில, சிறப்பாக இலண்டன், உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து வந்த மானிய முறைக்கு எப்போதாவது முற்றிலும் அடிபணிந்ததில்லை. ஆனல், அந் நகரங்கள் தம் பாதுகாப்புக்குப் போது மான இராணுவக் கட்டுப்பாட்டை எக்காலத்திலும் பேணி வந்துள்ளன.
அத்தியாயம் VI பிற்கால சட்சனிய இங்கிலாந்தில் வாழ்க்கை முறை.
நிலமானிய முறைமை புகுதல். கணியூற்றும், நோதிக்குக்களின் கடல்சார்ந்த பேரரசும்.
சட்சனிய இங்கிலாந்திற் போர், படையெடுப்பு, இரத்தஞ் சிந்தல் என்பன வாழ்க்கையின் சாதாரண நிலைமைகளாக இருந்தன. அன்றியும் பலம் பொருந்திய நோமானிய அரசர்களும் அவர்களைப் பின்பற்றியோரும் எங்கள் தீவில் நிலையூன்றுவதற்கு முன்னர், எங்கள் நாட்டின் தீவான நிலையினல் ஏற்படும் நல்வாய்ப்புக்கள் புலகைத் தொடங்கவில்லை. கடலானது படையெடுப்பாளர் ஒவ்வொருவருக்கும் பெருந்தெருவாக அமைந்து உதவிபுரியும் வரை, “ வெற்றிசேர் ஆழிசூழ் இங்கிலாந்து ” அவர்களுக்கு ஒர் ஆதரவற்ற பலியாகவிருக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளா யிற்று. அன்றியும் தென் ஐரோப்பாவிலிருந்த வீர இனத்தவருக்கு இத்தாலியின் பாதுகாக்கப்படாத செல்வங்கள் எவ்வாறு நன்கு தெரிந் திருந்தனவோ, அவ்வாறே வட ஐரோப்பாவிலிருந்த வீர இனத்தவருக்கும் இங்கிலாந்தின் பாதுகாப்பற்ற செல்வங்கள் நன்கு தெரிந்திருந்தன.
எனினும் கொலைகாரரும் கொள்ளைக்காரரும் தீவெங்கணும் ஒரே காலத்தில் இருக்கமுடியாது. சதுப்பு நிலமும் காடும் சூழப் பெற்றிருந்த மனிதருடைய குடியிருப்புக்கள் இக்காலத்திலும் பார்க்க அக்காலத்தில் அதிக ஒதுக்கமாக இருந்தன. அவர்களிருப்பிடத்தை வெளிப்படுத்தக்கூடிய தேசப்படங்கள் எதுவுமிருக்கவில்லை. கொள்ளைக்காரனைக் கொள்ளையிடுமிடத் திற்கு வழிப்படுத்தக் கூடிய தெருக்களும் மிகச்சிலவே இருந்தன,

ஆங்கில-தேனிய நாகரிகம் 123
கொத்துலாந்துப் படையினர் மரமடர்ந்த கொக்குவேப் பள்ளத்தாக்குக் களின் நடுவே முதன்மை பெற்றிருந்த பிறிங்குபேண் பிறயறி என்னு மிடத்தை நாள்முழுவதும் தேடிக் காணமுடியாது போயினர். கடைசித் தருணத்தில் அவ்விடத்திலிருந்து காற்றில் மிதந்து வந்த மாலைக்கால மணியோசையைக் கேட்டு அப்படையினர் அவ்விடத்தைக் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது எனத் தேனியர் படையெடுப்புக் காலத்திலும் பிந்திய காலத்துக் கதை ஒன்று கூறுகின்றது. தேனியர் “ கூட்டம் ’ நாட்டுப் புறத்தே குதிரையிற் சென்றபோது, அமைதியான கோயிற்பற்றுக்களைச் சேர்ந்த மக்கள் தம் மணிகளை அடிப்பதற்குத் தயங்கியிருப்பர் என்பது ஓரளவு பொருத்தமானதே.
ஓர் ஆங்கிலேய-சட்சனியனனவன், பற்றுக்குரிய தன் கவிதைகளில் பெரும்பாலான மக்களின் இறுதி இதுவே எனக் கூறப்பட்டுள்ளதாகிய * தொழிற்சாலையிலே தீட்டப்பட்ட வாள்கொண்டு ஓங்கி வெட்டப்படுங் ” கதி அவனுக்கு வற்படாவரை பிறர் பொருமைப்படத்தக்க வாழ்க்கையை நடத்தினன். அவனது வாழ்க்கை எப்படிப்பட்டதென நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதற்குக் காரணம் யாதெனில் மத்திய ஊழிகளின் பிற் காலத்து வாழ்க்கையும் பண்டைய உரோமர் காலத்து வாழ்க்கைதானும், எங்கள் புறக்கண்ணுக்கும் அகக்கண்ணுக்கும் அவ்வக் காலத்துக் கட்டட வேலை மூலமாய்த் தோற்றமளிக்க, சட்சனியர் காலச் சின்னங்கள் நிலத் தோற்றத்தினின்றும் மறைந்தொழிந்தமையிஞல் என்க. வெற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்த திருக்கோவில்களிற் பெரும்பாலானவை மீண்டும் கட்டப்பட்டுள்ளன ; பழைய ஆங்கிலேயருடைய களஞ்சியங்களின் கட்டடக் கலையில் ஒரு வேளை அச்சின்னங்களும் மரபுமுறைகளும் இருந்தாலொழிய சட்சணியர் வாழ்ந்த குடிசைகளிலும் மண்டபங்களிலும் அத்தகைய அடை யாளங்களைக் காண்பதரிது. எனினும் அக்கானித்தில் அம்மண்டபங்கள் சிறப்பு மிக்க இடங்களாயிருந்தன. மரங்களைத் தறிக்கும் வேலை தவிர, வேறெத்தொல்லையுமின்றிச் சொந்த இடத்திலேயே வேண்டியாங்கு பெறக் கூடிய மரங்களைக் கொண்டு, அவ்விடத்தில் வழங்கிவந்த சிற்பமுறை மரபுப் படி நிருமாணிக்கப்படும் மரக்கட்டடம், எவ்வளவு சிறந்ததாயும் விசால மானதாயுமிருக்க முடியுமென்பதைச் சுவிற்சலாந்துத் தாழ்பூமி இன்னும் எடுத்துக் காட்டக் கூடியதாயிருக்கின்றது. சட்சனிய நிலப் பெருமகனதும் தேனிய வேள்களினதும் மரமண்டபங்கள், உள்ளும் புறமும் சிற்ப வேலை களினலும், வண்ண வேலைகளினலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆங்கு பளபளப்பாக்கப்பட்ட கவசங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆயினும் மண்டபத்தின் முகட்டிலிருந்த துவாரத்தை நோக்கிக் கைமரங்களின் கீழ்ப் புறமாகச் சுழித்துச் சென்ற புகை அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறக விருந்தது. அந்நிலப்பெருமகனும் அவனது குடும்பத்தினரும் பன்னிற மேலாடையணிந்து திகழ்ந்தனர். அன்றட உபயோகத்துக்கான பொருள்கள் உள்நாட்டுக் கம்மியரால் கற்பனைக்கேற்ற முறையில் செதுக்கப்

Page 72
24 ஆங்கில-தேனிய நாகரிகம்
பட்டிருந்தன. இன்னும் காணப்படுவனவாய “ அல்பிரெட்டு நகை” என்பதும் பிறவும் நிரூபிப்பது போன்று, ஆங்கிலேயரிடம் காணப்பட்ட செய்யும் கலை மிகச் சிறப்புடையதாயிருந்தது.
அல்பிரெட்டு அரசன்மாட்டு அபிமானம்மிக்க அரசவையாளனயிருந்தா லன்றி ஒரு நிலப்பெருமகனிடமோ அவனைப் பின்பற்றுபவரிடமோ நூல்க ளெதுவும் இருந்ததில்லை. ஆனல் ஒவ்வொரு மாலையும் பாணர் தம் வீரகாவியங்களை, சிறப்பும் ஒசைநயமுமுடைய மொழிதனில், தமது இன்றைய வழித்தோன்றல்களிலும் பார்க்க அதிகமாக விரும்பிக் கேட்கும் அவையினருக்கு மண்டபத்திற் படரும் புகையினூடாகப் பண்ணிசைத்தனர். அறிவாற்றலுள்ள எமது இக்கால உலகிலும் பார்க்க, சாதாரண வாழ்க்கை நிலவிய அக்காலத்தில் மக்கள் அனுபவித்த இன்பங்களுட் பெரும் பாலானவை, கடல்புலப் பொருள்களின் அமைப்பு, நிறம் என்பவற்றலும், சிறந்த சொற்களின் ஒசையினலும் உண்டான இன்பங்களே என்க.
சட்சணியரும் தேனியரும் மது அருந்தும் இனத்தவரின் வழி வந்த வராதலால், பல ஏக்கர் நிலத்தில் விளைந்த வாற்கோதுமை அவர்களின் மதுக்குழாய்களை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்விரு இனத்த வருக்குமுரிய மிகப் பழைய மரபுகட்குப் பொதுவாக விருந்த, நத்தார்ப் பண்டிகையானது (“கிறித்துவின் திவ்விய பூசை” எனத் திருச்சபையால் பின்னர் மாற்றப்பட்டது) நிலப்பெருமக்களுக்குப் பின் வந்த நோமானியர் எவ்வாறு தம் பாதுகாப்புள்ள கன்மண்டபங்களிற் கொண்டாடினரோ, அவ்வாறே நிலப்பெருமக்களும் தம் மரமண்டபங்களிலும் களிப்புடன் கொண்டாடினர்.
செல்வர்களும், வறியவர்களும் தம் வாழ்க்கையை மனப்புறத்தே கழிக்க வேண்டியவராயிருந்தனர் ; வென்றடக்கா இயற்கையை எதிர்த்து வலிமைமிக்க மக்கள் இடைவிடாது தோளொடு தோள் நின்று செய்த போராட்டமாகவே இவ்வாழ்க்கை பெரும்பாலும் அமைந்தது. பகிரங்கப் போரினலோ தனிப்பட்டவரின் இரத்தஞ் சிந்தும் பகைமையாலோ மாவட்டம் குழம்பாதிருந்த, அமைதி நிலவிய இடைவேளைகளில், நிலப் பெருமகனும் அவனுடைய சொந்த உரிமை எவலாளரும் பயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் உணவுச் சேம இறைச்சி குறையா திருக்கும் பொருட்டும் ஒநாய்களையும், நரிகளையும், முயல்களையும் காட்டுக்கோழிகளையும் ஈட்டியாற் குத்தி வலையிலகப்படுத்துவதில் ஈடுபட்டுழைத்தனர். வேட்டை யாடுதல் என்றுமே இன்பந்தருவதாயினும் அது அன்று ஒரு விளையாட் டாகக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு தொழிலும், அவரவருக்குரிய தெனப் பாகுபடுத்தப்பட்டகாலை வேட்டையாடுதலும், கடுமையானபோர்க் கடமை போன்று நிலப்பெரு மகனதும் அவனுடைய பண்ணையாட்களின தும் கடமையாயிருந்தது. ஆனல் ஒவ்வொரு சுதந்திரப் பண்ணையாளும் தன் சொந்த நிலத்தில் இன்னும் வேட்டையாடக் கூடியதாயிருந்தது.

காடும் குடியிருப்பும் 125
அநேக அடிமைப் பண்ணையாட்களும் அடிமைகளும், பரந்துகிடந்த காட்டு நிலத்தில் வேட்டை விலங்குகளைக் கொன்றதற்காகக் கண்டிக்கப்படவில்லை எனவும் கூறலாம். சிலர் வேட்டைத் தொழிலுக்கன்றி வேறெதற்காகவும் வேலைக்கமர்த்தப்படவில்லை. மனிதன் கூட்டாகச் சேர்ந்து காட்டையும் அதில் வசித்த மிருகங்களையும் எதிர்த்து முன்னேறுதல் கடும் போராட்ட மாகவே யிருந்தது. இங்கிலாந்து அரசன் “உயர்ந்த கலைமான்களுக்குத் தந்தை போன்றிருந்து ’ அவைகளை இன்னும் நேசித்ததுமில்லை. அன்றியும் நோமண்டியிலிருந்து வேந்துறு காடு பற்றிய விதிகள் அடங்கிய கடினமான சட்டக் கோவை இன்னும் அங்கு கொண்டு வரப்படவுமில்லை. வேட்டை விலங்குகள் தம்மைத் தாமே மிக நன்ருகப் பாதுகாக்கக் கூடியன வாதலால் நிலக்கிழார் அவற்றின் பாதுகாப்பின் பொருட்டுத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முயலவில்லை. இன்னும் பல ஊழிகளுக்கு மக்கள் பல திறப்பட்ட காட்டு விலங்குகளையும், காட்டிலுள்ள பன்றி வகைகளையுமே தம் உணவின் பெரும் பகுதியாகக் கொண்டிருந்தனர். பத்தாம் நூற்றண்டில் வாழ்ந்த ஆங்கிலேயர், பத்தொன்பதாம் நூற் றண்டில் வாழ்ந்த எண்ணிக்கையிற் கூடிய தம் வழித்தோன்றல்கள் சிறிது காலம் கட்டாயப்படுத்தப்பட்டது போன்று தீவில் வளர்க்கக் கூடிய தானியத்தை முக்கிய உணவாகக் கொண்டு வாழும்படி கட்டாயப்படுத்தப் பட்டிருந்தால், அவ்வாதிகால விவசாயிகளுக்கு வாழ்க்கை நடத்துவதே மிகவும் கடினமாயிருந்திருக்கும்.
உழவோர், காடுகளை வெட்டித் திருத்தி, அவற்றின் எல்லையை மீறிச் சென்று குடியிருப்புகளை அமைத்தபோதிலும் கடவுள் அபரிமிதமாகக் கொடுத்த நானவிதப் பறவைகளையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டும், புகலிட மளித்தும் மரங்களும் பூக்களுமாகிய பெருஞ் செல்வத்தில் திளைத்தும் இருந்ததாகிய இங்கிலாந்தெங்சனும் விளங்கிய இந்த இளமரக்காட்டு நிலமானது எத்தகைய சிறந்த இடமாக இருந்தி ருத்தல்வேண்டும். இன்றுங்கூட பழைய இங்கிலாந்தின் பாழ்பட்ட பகுதி களிற் காணப்படும் இச்செல்வங்கள், மக்கள் நெருக்கம் குறைந்த இத் தீவின் பகுதிகளை ஒரளவிற்குச் சொர்க்கமாகச் செய்கின்றனவாயினும், இக்கால மனிதன் அவற்றைத் தனது மிகச் சிறந்த சொத்தெனப் போற்றது அவற்றை அழித்தற்கான புதிய கருவிகளையும் முறைகளையும் எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகக் கண்டுபிடித்து அச்செல்வங்களை அழித்தொழித்தும் அழித்துக் கொண்டும் இருக்கிருன் உரொபினுட்டின் “சேவுட்டு’ வனம் அல்லது செகப்பிரி யரின் ஆடென் வனம் பற்றி நாம் பேசும்போது, நாங்கள் இழந்த காட்டு நிலத்தை ஒருவாறு மனக்கண்முன் தோன்றச் செய்கின்றேம் ; ஆனல் அது உரொபினுட்டுக்கு முற்பட்ட காலத்திலுள்ளது ; அன்றியும் ஆடெனை விடப் பெரியதுமாகும். அந்நிலம் சட்டப்பிரட்டம் செய்யப்பட்டவனுக்கும் கவிஞனுக்கும் மட்டுமே உரியதாயிராது, ஆங்கிலேய-தேனிய மக்களனை

Page 73
26 காடும் குடியிருப்பும்
வருக்கும் உரியதாயிருந்தது. தங்கள் நாளாந்த வேலைகளே எவ்வளவு அழகினிடையே தாம் ஆற்றினேமென அவருட் சிலராவது கண்கொண்டு பார்த்தனரா ? சோசரும் மத்திய காலப் பிற்பகுதியிலிருந்த பாவலரும் அவ்வினத்தாருக்காக இறுதியில் ஒரு மொழியைக் கண்டு பிடித்தபோது, பறவைகள், மலர்கள், மரங்கள், புற்றரைகள் ஆகியவற்றிலே தங்களுக் கிருந்த மகிழ்ச்சியை எழுத்து வடிவில் பொறிப்பதற்காக முதன் முதலில் அதைப் பயன்படுத்தினர். தியூடர் காலத்துப் பிரசித்தி பெற்ற பாடல் களிலிருந்து அக்கால மக்களனைவரும் மே மாதத்துக்குரிய விழாக்களில் ஈடுபாடுடையராய்க் காணப்படுகின்றனர். சட்சன் முன்னேடிகள் உயர்ந்த மரங்களை வெட்டிக் காட்டைத்திருத்திய பின், அங்கு தோற்றிய புல் வெளியினின்றும் பிறிம்புருேசு என்னும் மலரோ புளூபெல் என்னும் மலரோ முளைத்திருந்தபோது இயற்கையழகை அனுபவிக்கக் கூடிய ஒருவித உணர்ச்சி அவர்கள் மனதில் சிறிதளவுதானும் எழாது இருந்தி ருக்குமா ?
சட்சனிய இங்கிலாந்தின் கோட்டங்களிலும் தேனியக் குடியேற்றத்திலும் நிலவிய தொடக்கத்திலிருந்த வாழ்க்கை நிலைமைகள் சில அமிசங்களில் வட அமெரிக்காவிலும் அவுத்திரேலியாவிலும் பத்தொன்பதாம் நூற்றண்டில் காணப்பட்டவை போன்றிருந்தன. கோடரியுடனிருந்த மரம் வெட்டுவோன், திருத்தப்பட்ட பகுதியிலிருந்த மரக் கொட்டில்கள், பாரமிழுக்கும் எருது, பயிரிடப்படாத காட்டைக் கடந்து ஐந்து கல் தொலைவுக்கப்பாலிருந்த கமத் துக்குச் சவாரி போவதற்கான குதிரைகள், கோடரி கலப்பை ஆகியவற் றுடன் எப்பொழுதும் கைக்கெட்டக்கூடியதாக வைத்திருந்த ஆயுதங்கள், கடுஞ்சொல் பேசும்வழக்கம், உடனுக்குடன் அடிகொடுக்கச் சித்தமாயிருக் குஞ் சுபாவம், எல்லைப்புற மக்களின் நல்ல தோழமை ஆகிய இவையாவும் இரு சாராருக்கும் பொதுவாக அமைந்திருந்தன. பிற்கால அமெரிக்காவி லிருந்தது போலச் சட்சணிய இங்கிலாந்திலும் பெரிய, பழைமை வாய்ந்த, வரையறை செய்யப்பட்ட பட்டணப் புறங்களிருந்தன. முன்பு காடடர்ந்த நிலப்பரப்பிலிருந்த “ மரக் குடிசை” களில் வாழ்வை முதலில் தொடங் கிய முன்னேடிகளும் இப்பட்டண வாழ்க்கையில் சேர்ந்து கொண்டனர். கிராமப்புற இங்கிலாந்தில் காணப்பட்ட, அமைதியும் ஒய்வும் நிறைந்த பூந்தோட்டம் போன்றிருந்த கிராமம் ஒவ்வொன்றும் ஒரு காலத் தில் முன்மாதிரியான ஒரு குடியேற்றமாகவும் இயற்கையின் ஆதியான மண்டிலத்தில் போராடி நிறுவப்பட்ட தொரு புற அரணுகவுமிருந் தது.
எங்கள் கிராமப் பெயர்களின் இறுதியிற் சாதாரணமாகக் காணப்படுவதாகிய தென்' எனும் பதம் பெரும்பாலும் பன்றி மேய்ப்பவருக்குரிய எதாவதொரு காட்டுநிலக் குடியேற்றத் தைக் குறிப்பதாயிற்று. இவர்களின் தாய்க் கிராமம் நன்கு வெட்டித் திருத்தப்பட்டதொரு விடத்தில் நியாயமான தொலையிற் காணப்பட்டது. “தென்” என்பது மரக்குடிசையெனப் பொருள்படும்.

மானிய முறை 127
பிற்காலச் சட்சணிய இங்கிலாந்திற் குடியேற்றமமைப்பதும் காடழிப்பது மான வேலைகள் நிலமானியத் தலைவர்களின் கீழ் நடைபெற்றன. * மனிதர் மரங்களைத் தறித்து அவற்றை எடுத்துச் சென்று கட்டடங்களமைக் கும் தொழிலைச் செய்தார்களென்பதையிட்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை ; எனெனில் ஒருவன் தன் பிரபுவின் காணியில் அப்பிரபுவின் உதவி பெற்று ஒரு குடிசையைக் கட்டிவிட்டால், அப்பிரபுவின் அருளால் ஒரு காலத்தில், பட்டயத்தாற் பெறப்படும் உரிமையாக அந்நிலத்தையும், அதன் நிலையான மரபுரிமையையும் தான் பெறும்வரை ஆங்கு சிறிது தங்கியிருந் தும், வேட்டையாடியும், கோழிவளர்த்தும், மீன் பிடித்தும் அக்காணியைத் தான் விரும்பியவாறு பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என நம்பியிருப் பான்’ என்று அல்பிரெட்டு அரசன் எழுதினன். ஆங்கில-சட்சணிய முன் னேடிகளுக்கும், நிலமானியப் பிரபுவுக்குமிடையேயிருந்த தொடர்பு எத்த கையதெனின், அமெரிக்கா, அவுத்திரேலியா ஆகிய நாடுகளிற் குடியேறிய ஆங்கிலேய சட்சனியரின் வழித்தோன்றல்களுக்கும் அவர்களுடைய அரசுக் குமிடையேயிருந்த தொடர்பு போன்றதென்க. “ அரசு’ என்று இக்காலத் திற் கருதப்படுவதொன்று ஆதிகாலத்தில் இருந்ததில்லை. ஒருவன் தன் பிரபுவினிடமிருந்து பாதுகாப்பு, நீதி அல்லது இதனினும் மேலானதாய் நீதிமன்றத்தில் கிடைக்கக்கூடிய தொன்று, என்பவற்றை மட்டுமன்றிப் பொருளுதவியையும் அடிக்கடி எதிர் பார்த்தான். இவற்றிற்குப் பதிலாக அப்பிரபு அவனுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், அவனது தொழிலால் வந்த இலாபத்திற் பெரும்பங்கை, அல்லது, அத்தொழிலின் பெரும்பகுதியைத் தனக்கு உரிமையாகக் கோரினன்.
ஆங்கிலேய-தேனிய காலப்பகுதியில் அரசனுக்குக் கீழ்ப்பட்ட நிலப் பெரு மகன் உழவோரின் பிரபுவாயிருந்ததுடன், இரும்புத் தலைச்சீராவும். இடுப்புக்குக்கீழே தொங்குவதாகிய சங்கிலி போன்றிணைக்கப்பட்ட அங்கியும் தரித்து, ஆயுதந்தாங்கிய தலைமையான போர்வீரனுகவும் இருந்தான். மேலும் அப்பெருமகனே படையெடுப்பின்போது அரசனது நம்பிக்கைக் குரியவனுய், கவசமணிந்து குதிரைமீதிவர்ந்த காலாட் படையினனுகவுஞ் சேவைசெய்வன். மேலும் அப் பெருமகன் தன் வாழ்க்கையை வேட்டை யாடுவதிலும் போர் புரிவதிலும் கழிப்பதோடு, தனக்கு அதிபதியான அரசனுக்கோ பிசப்பாண்டவருக்கோ மடாதிபதிக்கோ தன்னிலும் மேற்பட்ட ஒரு நிலப்பெருமகனுக்கோ சேவை செய்வதிலும் கழிப்பான். கருத்தியல் பான தாயகப் பற்றிலும் பார்க்கக் குறித்த ஒருவர்மீது கொண்ட பற்றுறுதியே அவனுடைய சேவையைத் தூண்டுகிறது. அரசனுக்கென மட்டுமே எப்பொழுதும் அப்பற்றுறுதி மனதில் அவனல் உணரப்படவோ அரசனுக்கெனத் தனியாகச் செலுத்தப்படவோ இல்லை. சட்சணிய நிலப் பெருமகனுக்குப் பின் வந்த நோமானிய நைற்று, முன்னவனைவிட முற்ருக ஆயுதந் தாங்கிக் குதிரையிலிருந்து போர் செய்யப் பயிற்றப் பட்டவனதலால், போரிற் சிறப்பான பயிற்சி பெற்றவன் என்ற முறையில்

Page 74
128 நிலப்பெருமகனும் அடிமையும்
தன்னயலவர்களிலும் பார்க்க ஒரு படி உயர்ந்தவனுயிருப்பான். ஆகவே நிலமானிய முறைமையானது, சமூக முறைமை என்ற வகையில் நோமா னியரது படையெடுப்பிற்குப் பின்பே உச்சநிலையையடையும். அம்முறைமை யானது, நீண்ட வில்லும் துப்பாக்கி மருந்தும் வழக்கிற்கு வந்தபின்னர் நலிவுறுவதாகும். ஏனெனில் நிலமானிய முறைமையானது சட்டமும், நிலவுடைமையும் சம்பந்தமான வொரு முறைமையாக இருந்தபோதிலும் உண்மையில் அதன் வளர்ச்சியானது ஆயுதம் தாங்கிய உயர்குடியின் இராணுவ மேம்பாட்டைப் பொறுத்ததாகவேயிருந்ததனுல் என்க.
குலம், கோத்திரம் எனும் சமூக அமைப்புக்கள் குலைந்த பின்னரும் அரசின் எழுச்சிக்கு முன்னரும் உள்ள இடைப்பட்டகாலத்தில் உதவியற்ற குடித்தொகையைப் பாதுகாப்பதற்கும் திறமையாக போர் நடத்துவதற்கும் குடியேற்றத்தை அதிகரிப்பதற்கும் கூடிய இலாபத்துடன் விவசாயத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கும் நிலமானிய முறைமை ஒன்று மட்டுமே ஏற்றதாக இருந்தது. அது ஒரு போர்வீரனது தொழிலையும் விவசாயியினது தொழிலையும் பேதப்படுத்தும் ஒரு முறையாகவுமிருந்தது. ஆங்கிலேயசட்சணிய உழவன் திறமையற்ற போர்வீரனுக மட்டுமன்றி விருப்பமற்ற போர் வீரனகவுமிருந்தான். சிற்சில திங்களுக்கொருமுறை போருக்கழைக் கப்படுவதை அவன் விரும்பவில்லை. அவன் தான் நன்கு நிலைகொண் டிருந்த நிலத்தைப் பண்படுத்துவதற்காகக் கெளதெற்றில், அல்லது நெற்றில்தனில் இருப்பதையே விரும்பினன். அண்மையிலிருந்த உரோ மானியக் கிராமவாசங்களை அழிப்பதற்கு உதவியாயிருந்த அவனுடைய முன்னேரின் போர் வாஞ்சையை அவன் மறந்து போயிருந்தான். எனவே பட்டணத்து உயர்மாளிகையிலிருந்த, அவனுடைய பிரபுவாகிய நிலப் பெருமகன் உள்ளூரில் ஏற்படும் தொல்லைகளினின்றும் அவனைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. இனி, நாட்டுக்கு ஆபத்து நேர்ந்தக்கால், அரசனும் அவன் உழையோரும் அவ்வேளாண்மகனுக்குக் காப்பளித்தல் வேண்டும். நிலப்பெருமகன் கலப்பையைப் பயன்படுத்துவதை விட்டொழித்துப் போரி லும் போரைப் பற்றிப் பேசுவதிலும், வேட்டையிலும் வேட்டையாடு வதைப் பற்றிப் பேசுவதிலும் மரபுச் சட்டப்படியும் வழமைப்படியும் தனக்கண்மையிலிருப்பவர்களிடையே செம்மையற்ற ஒருவகை நீதி வழங்கு வதிலும் தனது நேரத்தைக் கழித்துவந்தான். வருங்காலத்தில் ஊர்ப் பெருந்தனக்காரன், சமாதான நீதிபதி என்போர் தோற்றுவதற்குக் கருவாக இந்நிலப்பெருமகனிருந்தான். ஆனல், பெருந்தனக்காரன் ஒருவனுக்கு ஒப்பாயிருந்த ஆங்கிலேய-சட்சன், முதன்மையான ஒரு படைவீரனயிருந் தான் என்பது மட்டுமே அவ்விருவருக்குமிடையேயுள்ள வேற்றுமையாகும்.
இவ்வாருக, உழவோன் சிறுகச் சிறுகத் தன் போர்த்தொழில் துறந் தான். போர்வீரனும் உழவுத்தொழில் விடுத்துப் போரையேதன் தொழி லாகக் கொண்டான். இவ்வாறு தொழிற்பாகுபாடு தோன்றியமையால்,

நிகப்பெருமகனும் அடிமையும் 29
மக்களிடையே நிலவிய சமத்துவத்தொடு சுதந்திரமும் நலிவுற்றது. ஆனல் அது ஒரு ஒழுங்கான அமைப்பையும் நாகரிகத்தையும் சேல்வத்தையும் பெற்றுக் கொடுத்ததுடன், ஈற்றில் அநாகரிகக் குலத்தைச் சேர்ந்த சுதந்திர முடையோன் அனுபவிக்கக்கூடியதிலும் மிகக் கூடிய சுதந்திரத்தைக் காலப்போக்கிலே தனிப்பட்டவரும் பெறுவதற்கு வழிவகுத்தது.
இதனிடையில், உழவர், அடிமைகள், ஊழியர் ஆகிய தாழ்ந்தவகுப் பாரது வாழ்க்கை நிலைமையோ மிகக் கடினமானதாயிருந்தது. நிலப்பெரு மக்களும் குருவாயத்தினரும் தத்தம் விசேட தொழில்களை ஆற்றுவதற்கு இவர்களுடைய உழைப்பை நாடிநின்றனர். ஏறக்குறைய ஆயிரமாண்டில் நடைபெற்றதோர் உரையாட்டு, உருக்கமான உண்மைப்பாங்குடன், நாட் டினவரங்கில் நிகழ்ந்த காட்சிகளை நாம் கணநேரத்தில் அறியக்கூடிய வகையில் எடுத்துக்காட்டுகின்றது :-
* உழவனே ! நீ யாது சொல்கின்ருய் ? உன்தொழிலை எப்படிச் செய் கின்ருய் ? ”
* ஒ” என் பிரபுவே, நான் கடினமாக வேலை செய்கின்றேன். நான் விடியற்காலை எருதுகளை வயலுக்கு ஒட்டிச் சென்று அவற்றை எரிற் பூட்டுவேன். கொடூரமான மாரிக்காலமாயினும் என் பிரபுவிடம் நான் கொண்டுள்ள பயத்தினல் வீட்டில் நிற்கத் துணிவதில்லை. ஆனல் எரு தைக் கலப்பையிற் பூட்டி, அக்கலப்பையிற் கொழுவையும் மாட்டித் தினமும் ஒரு முழு “ எக்கராவது ' அதற்கதிகமாவது நான் உழுதல் வேண்டும்.”
* உனக்குத் தோழன் யாருமுளணுே ?”
* இரும்புத்தாற்றுக்கோலினல் எருதுகளை மேய்க்கும் பையனெருவனு ளன். குளிராலும் உரத்துப்பேசுதலாலும் அவன் தொண்டையடைத்து விடுகிறது.” * பகற் பொழுதில் வேறு என்ன செய்வாய் ?”
" உண்மையாகவே இன்னும் அதிகமான வேலை செய்வேன். எரு துக்காக வைக்கப்பட்டிருக்கும் தொட்டியை வைக்கோலால் நிரப்பி, எரு துக்குத் தண்ணிர் கொடுத்துப் பின் சாணத்தை அப்பாற்படுத்துவேன். அப்பப்பா ! அது மிகக்கடினமான வேலை ; எனக்கு ஒய்வே கிடையாதாத லால் அது கடினமான வேலை.
ஆட்டிடையன் அடுத்தாற்போல விடை பகர்கிறன் :
* முதலாவதாக எனது மந்தைகளைப் புற்றரைக்கு மேய்ச்சலுக்காக ஒட்டிச் சென்று, அவற்றை ஒநாய்கள் விழுங்கிவிடாமல், வெப்பத்திலும் குளிரிலும், எனது நாய்களுடன் அவற்றிற்குக் காவலாக நிற்பேன். பின் அவற்றைப் பட்டிகளுக்குக் கொண்டு சென்று ஒரு நாளைக்கு இருமுறை பால்கறப்பேன்.

Page 75
30 தொழிலாளியின் அடிமைநிலை
அதன்பின் அப்பட்டிகளுக்கு நான் மீண்டு சென்று பாலாடைக்கட்டி, வெண்ணெய் என்பன செய்வேன். நான் என் பிரபுவிடம் நேர்மையாக நடந்து கொள்கின்றேன்.”
மாட்டிடையன் சொல்கிருன் :
* உழவன் கலப்பையினின்றும் எருதுகளை அவிழ்த்ததும் நான் அவற்றை மேய்ச்சல் நிலத்துக்குக் கொண்டு சென்று இரவு முழுவதும் கண்விழித்திருந்து, அவற்றைக் கள்வரினின்றும் பாதுகாப்பேன். ’
கால் நடைகளைக் களவெடுப்பது அக்கால வாழ்க்கையின் மிகப் பெரிய தோர் அமிசமாக இருந்தது. பிற்காலத்திலிருந்தது போன்று அது கொத்து லாந்து, உவேல்சு எனும் இடங்களின் எல்லைப்புறங்களில் மட்டுமன்றி தீவின் அமைதியற்ற பகுதிகள் முழுவதும் நடைபெற்று வந்தது.
இப்பேச்சில் வரும் உழவோர் தங்கள் பிரபுவின் வீட்டுக் கமத்தில் அல்லது அவனது ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், எறக்குறைய அடிமை நிலையிலே தம் வழமையான சேவையைச் செய்தார்களென்பது வெளிப் படை. பத்தாவது, பதினேராவது நூற்றண்டுகளில் அவ்வவ்விடங்களுக் குரிய சூழ்நிலைகளுக்கேற்பவும் தேனியர், உவெல்சு இனத்தவர் அல்லது சட்சணியர் வழமைக்கேற்பவும் வேறுபாடுடைய பலதிறப்பட்ட அடிமைச் சேவைகள் அந்நாளிற் காணப்பட்டன. “இனிற்று”, “கொற்றர்”, “கெபூர்” இடையர், தேனிவளர்ப்பாளர் (தேனே வெல்லமாகப் பயன்படுத்தப்பட்டது), பன்றி மேய்ப்போர் ஆகியோரும் இன்னும் பலரும் அங்கிருந்தனர். இவர்களில் ஒவ்வொருவரும் தத்தம் பிரபுக்குக் குறித்த குறித்த காரணங் களுக்காக இத்தனை நாள் வேலை செய்ய வேண்டியவராய் அல்லது அவர்களுக்குரிய வாடகையைப் பொருளாகக் கொடுக்கக் கடமைப்பட்ட வராயிருந்தனர். தேனியக் குடியேற்றத்திலே கட்டுப்பாடற்ற சிறிய ஆட்சி காணிகளையுடையவர் மிக அதிகமாகவும், உண்மையான அடிமைகளா யிருந்தவர் மிகக் குறைவாகவும் காணப்பட, மேற்கிலிருந்த கோட்டங் களிலும் கெலித்திய கோட்டங்களிலும் இதற்கு மாறன நிலைமை காணப் பட்டது. தேனியர், தாம் குடியேறிய பகுதிகளில், குருக்குழாத்தினரதும் பொதுமக்களதும் மானிய முறைமையைப் புகவொட்டாது எதிர்த்துச் சுதந்திரத்தை நாடுபவராயிருந்தனர். ஆனல் இங்கிலந்தின் எனைய பகுதிகளில் அவர்களுடைய தாக்குதல்களும் அடிமை மீட்சிக்காக அவர்கள்
1. செம்மறியாடுகளையும் எருதுகளையும் ஒரிடையனே காவற்காரனே இல்லாது மேய விடும் வழமை இங்கிலாந்திற் பிற்காலத்திலிருந்து வந்தது. இவ்வழமை, இங்கிலாந்தின் தனிப்பட்ட வொரு வழமையென்று தியூடர் ஆட்சிக்காலத்தில் வந்த அந்நியர்கள் குறிப்பிட்டுள்ளனர். திருடர்களிலிருந்தும் ஓநாய்களிலிருந்தும் கால் நடைகளுக்கு எவ்விதத் தொல்லையுமிருந்த தில்லை யென்பதற்கு இது சான்றகும். எனினும் இவ்வழக்கம் படிப்படியாகவே பெறப்பட்டது.

“ஒவ்வொருவனுக்கும் ஓர் பிரபு” 13
பெற்ற விடுதலைப் பணமும் உழவோரை விரைவில் இழிநிலைக்குக் கொண்டு வந்தன. உழவன் தனது உணவுக்காக அல்லது பாதுகாப்பிற் காக நிலப் பெருமகனுக்கோ மடாதிபதிக்கோ தலை வணங்கினன். அன்றேல் வைக்கிங்குகளால் அவனது பண்ணையானது நாசமாக்கப்பட்டதால், அல்லது “ தேன் கெல்டு ’ எனப்பட்டவரியின் பளுவைத்தாங்க முடியாததால், வறுமையில் ஆழ்ந்து விற்கவும் பட்டான். இவ்வாறக நோமானியன் வந்த போது, தெற்கையும் மேற்கையும் காட்டிலும் வடக்கும் கிழக்கும் அதிக சுதந்திரமுடையனவாயிருந்ததைக் கண்டான்.
நாடு முழுவதையும் ஒருங்கே நோக்குங்கால், இடத்துக்கிடம் அதிகமான வேறுபாடுகளிருந்த போதிலும், இந்தச் சட்சணிய நூற்றண்டுகளின் பிற் பகுதியில், அடிமைகள் அல்லது ஊழியர் அரைகுறைவிடுதலை பெற்ற உழவோராக மாறி, அவ்வகுப்பு அல்லது வகுப்புக்கள் வளர்ச்சியுற, கட்டுப்பாடற்றவர் வீழ்ச்சியடைந்தனர். இருமடியான இவ்வியக்கம் செயற் படுவதை நோமானியரது வெற்றிக்குப் பின்னர் மிகத் தெளிவாகக் காணலாம்; அக்காலை, பிரெஞ்சு நாட்டுச் சட்டவாணர் இவ்வரைகுறை அடிமை வகுப்பினர் யாவரையும் “ பண்ணையடிமையாளர் ” என்னும் பெயரின் கீழ் உட்படுத்தி வரையறுப்பாராயினர்.
ஆங்கிலேய-தேனியக் காலங்களில் “ ஒவ்வொருவனும் தன்தன் தவறன செயல்களுக்குப் பொறுப்பேற்கக் கூடிய ஒரு பிரபுவையுடையவன யிருத்தல் வேண்டும்,” என்பது ஒரு சட்ட ஒழுங்காகவும் பொதுக் கட்டளை யாகவும் விதிக்கப்பட்டிருந்தது. பல்லாண்டுகளுக்கு முன்னரே நலிவுற்ற பழைய குலங்களும், அவர்கள் உறவினரும், நீதி, பாதுகாப்பு ஆகிய வற்றை மக்களுக்கு அளிக்க முற்றகத் தவறிவிட்டதால், இவ்வாருகவே ஐக்கிய ஆங்கிலேய இராச்சியத்தில் அமைதியைய் பேணக் கூடுமாயிருந்தது. ஒருவனுடைய செயல்களுக்கு அவன் உறவினர் இனிமேற் பொறுப்பேற்க மாட்டாராதலால், அவர்களுக்குப் பதிலாக அவனுடைய பிரபுவே அத்தகைய பொறுப்பையேற்க வேண்டியிருந்தது.
ஆதிகாலச் சமுதாயங்களிற் குலங்களால் ஆற்றப் பட்டவையும், இக்கால உலகில் அரசினல் ஆற்றப்படுபவையுமான நீதிமுறை, படையாண்மை, பொருளியல் ஆகியவை தொடர்பான தொழிற்பாடுகள் பலவற்றை நிலப் பெருமகனகவோ அன்றித் தலைமைக் குருவாகவோவிருந்த பிரபுவே ஒவ்வொரு பகுதியிலும் ஆற்றி வந்தார். நாட்டுப் பாதுகாப்புக்காகவும், மற்றும் சிறிய காரணங்களுக்காகவும், இங்கிலாந்தெங்கணுமிருந்த புதிய அரசர்கள் நிலப்பெருமக்களின் மீது ஒருவகையான ஒழுங்கற்ற நேரடியான கட்டுப்பாட்டை மாத்திரம் செலுத்தக் கூடியவராயிருந்தனர். ஆனல், தலவாட்சி சம்பந்தமான நீதி, பாலனம் பற்றிய உரிமைகளை அவ்வவ் விடங்களிற் செல்வாக்குப் பெற்றிருந்த (குருமாராகவோ பாமரராகவோ

Page 76
32 * ஒவ்வொருவனுக்கும் ஓர் பிரபு ”
இருந்த) பெருமக்களிடங் கொடுத்துவிட விருப்புடையவராயிருந்தனர். எனெனில், மத்திய அரசாங்கம் இவற்றைப் பரிபாலிப்பதற்கேற்ற சாதனங் களைப் பெற்றிராமையினலென்க. நோமானியரின் வெற்றிக்குப் பின்னரே, மிகப் பரந்த ஒரு நாகரிகம் வளர்வுற்ற காலை பிளந்தாசெனற்று அரசர்கள், குறித்த தலங்களின் ஆட்சி, நீதிமுறை ஆகியவற்றைப் படிப்படியாகத் தமது அதிகாரத்துக் குட்படுத்தினர். அன்றியும், நாட்டினம் பற்றிய இக்காலக் கருத்தையும் தற்கால அரசுக்கு வேண்டிய நிருவாக சாதனத் தையும் உருவாக்கினர்.
சட்சனியர் ஆட்சியில் மானியமுறைமை வளர்ச்சியுறுவதாயிற்று ; அன்றியும் கோன்மை அம்முறைக்குப் போட்டியாயமையாது, நேசபான்மை யுடன் வளர்வதாயிற்று. முடிக்கும் மானிய முறைமையின் பரந்து செல்லும் தன்மைகளுக்குமிடையே ஏற்பட்ட போராட்டமானது நோமானிய வெற்றிக்குப் பின்னரே நிகழ்வதாயிற்று. உவெசெட்சு அரசர்கள் இங்கிலாந்து முழுவதற்கும் அரசர்களான காலத்தில் முடியினதிகாரம் மிகவும் அதிகரிக்க, அதனல் அவர்களின் மண்டில எல்லையும் விரிவதா யிற்று. அதனல் ஒவ்வொரு தலத்திலுமுள்ள பெருமகனுக்குக் கூடிய அதிகாரத்தை அளிக்க நேர்ந்ததுடன், ஆட்சியும் பன்முகப்படுத்தப்பட்டது. கோட்ட நிருவாக சாதனமே அரசனுடைய முக்கிய பாலனக் கருவியா யமைந்தது. இலகுவில் நிருவகிக்கக் கூடிய பழைய உவெசெட்சு மட்டுமே அரசனின் ஆட்சி மண்டிலமாயிருக்கும் வரை, ஒரு கோட்டத்துக்கு ஒரு பெருமகனே பொறுப்புள்ளவனக விருந்தான். ஆனல் விரிவாக்கப்பட்ட புதிய இராச்சியம் அமைக்கப்பட்டதும், இந்த நிருவாகச் சாதன முறை யானது புதிய நிலைமைகளுக்கு எற்புடைத்தாய் மாற்றப்பட்டது. கணியூற்று உட்பட மூத்த எட்டுவேட்டும், அவன் புத்திரரும் அதிகாரம் படைத்திருந்த குடிமக்களை இரண்டு, மூன்று கோட்டங்களுக்கும், கடைசியில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கோட்டங்களுக்கும் எள்களாக அனுமதிக்க விரும்பினர்.1
2. ஒரு கூட்டமான கோட்டங்களை ஆட்சி செய்த எளின் தலைமையில் ஒவ்வொரு தனியான கோட்டமும் கீழ்ப்பட்ட அலுவலணுெருவணுல் பாலனஞ் செய்யப்பட்டது. கோட்டத்து அலுவலன் பின் கோட்டமணியகாரணுக விளங்கினன். இவன் முதற் கடமையாக அரசனின் கருமங்கள் ஆற்றும் பிரதிநிதியாகவும், பின் சில கருமங்களை முன்னிட்டு எளின் அலுவலனகவும் முகவ ஞகவுமிருந்து இரட்டைக் கடமையாற்றினன். (மொரிசு 1916). நோமானிய படையெடுப்பிற்குப் பின் எள் (சிலகோட்டங்களைத் தவிர ஏனையவற்றில்) இல்லை. விசுப்பாண்டவர் புதிய திருச்சபை நீதிமன்றங்களில் ஆன்மிக வழக்குக்களை விசாரிக்குமளவில் ஒதுங்கிவிட்டார். ஆகவே, கோட்ட மணியகாரன் அரசனுக்குப் பதிலாகக் கோட்டத்துக்குப் பொறுப்பான ஆட்சியாளனுகவும் அரசன் கட்டளைகளைமட்டுமே செய்விக்கும் முகவணுகவும் ஆனன். தேனியக் குடியேற்றத்தில் “ வாப் பென்தேக்கு’ என்று வழங்கப்பட்ட “ அண்டிரற்று” என்பது கோட்டத்தைச் சேர்ந்ததோர் ஆள்புலப் பிரிவாக விருந்தது.

எளகங்கள் 33
ஐக்கியப்பட்ட இங்கிலாந்து, அது ஐக்கியப்பட்டிருந்த காரணத்தால் “ எளின் ஆட்சிப் பகுதிகள் ” என்றழைக்கப்படும் நான்கு, ஆறு அல்லது எட்டுப் பெரும் பிரிவுகளாக்கப்பட்டுப் பாலனஞ் செய்யப்படலா யிற்று. தீவின் பழைய அரசியற் பிரிவுகளான உவெசெட்சு, நோதம் பிரியா, மேசியா, கிழக்கு அங்கிலியா என்பவற்றிலிருந்த மறைந்துபோன வாழ்க்கை முறையையே ஓரளவிற்கு இவ்வேளின் ஆட்சிப் பகுதிகளும் பின்பற்றின, அதனலே தேனியர் அதிகமாக வாழ்ந்த பிரிவுகள் உவெசெட்சின் நேரடியான ஆட்சிக்கு உட்படுத்தப்படவில்லை. எளின் ஆட்சிப் பகுதிகளிற் காணப்பட்ட அரசாங்கமானது, அமைப்பில் மானிய முறைமையைப் போன்றதாயினும் ஒரே பாலனத்தின் கீழ் உட்படுத்துவதற்கு மிகப் பெரிதாயுள்ளதும் ஒரே இனத்தைக் கொண்டிராததுமான இக் காலப் பேரரசின் உண்ணுட்டாட்சியுடன் ஒப்புமையுடைத்தாயிருந்தது. பல நூற்றண்டுகள் வரை நிலைத்திருந்து, மத்தியகாலச் சேர்மனியையும் பிரான்சையும் பெரிய மானிய முறை மாகாணங்களாகப் பிரித்தற்குக் காரணமாயிருந்த மானியமுறைமையின் இத்தகைய பன்முகப் போக்கிற்கு இங்கிலாந்திற் சாவு மணி அடித்தவன் வெற்றிவீரன் உவில்லியம் ஆவான்.
புதிதாக நிறுவப்பட்ட ஆங்கிலேய-தேனிய இராச்சியத்தில் அரசியல் சார்ந்த மானிய முறைமையின் வெற்றி இத்தகையதே. இனவாரியான நீதிமன்றுகள் அல்லது பொது நீதிமன்றுகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நீதித்துறையிலும் இதே மாதிரியான மானியமுறைப் போக்குக் காணப்பட்டது.
கோட்டத்திலும் “அண்டிரற்று ’ப் பிரிவிலுமிருந்த இனவாரியான நீதிமன்றுகளில் அந்தந்த மாவட்டத்துக்குரிய சட்டத்தை-அது தேனியச் சட்டமாயினும், உவெசெட்சுச் சட்டமாயினும் அன்றி மிகப் பழைமை வாய்ந்த மாகாண வழமையாயினுமாகுக.-சுதந்திர வாசிகளான மன். றத்து மனுச் செய்பவர்கள் நீதிபதிகளாய் இருந்து பாலனஞ் செய் தனர். அந்நீதி மன்றங்களில் எள், கோட்டத்து மணியகாரர் அல்லது “அண்டிரற்று ’, மணியகாரர் அரசனுக்குப் பதிலாகத் தலைமை வகித்தார். எனினும் இங்கிலாந்து முழுவதற்கும் பொதுவான “ வழமைச் சட்டம் ” இன்னும் இருந்ததில்லை ; அரசனுடைய நீதிபதிகளைக் கொண்ட கோத்தவிசு மன்றுகளோ, இயர் அல்லது அசைசு எனப்படும் பருவ மன்றுகளுக்குரிய நீதிபதிகளோ ஆண்டு இல்லை. அரசனுக்கும் நாடு முழுவதற்குமான மன்றுகள் எவையேனும் இருந்தனவெனச் சொல்ல முடியுமானல், அவைதாம் அவ்வவ்விடங்களிற் காணப்பட்ட இனவாரியான நீதிமன்றுகளாக விளங்கிய அரச மன்றுகளாகும். −
ஆனல் அதே பருவத்தில், மானிய முறைக்குரிய நீதியானது இன வாரி நீதிமன்றங்களிலும் நுழைந்து கொண்டிருந்தது. எட்கார் அரசன்
. படம் IX பார்க்க.

Page 77
34 மானிய நீதிமுறைபுகுதல்
காலந் தொட்டுள்ள அரசர், முடியின் உரிமைகளையும் குறிப்பாக “அண்டி சற்றுப்” பிரிவு நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் ஆளெல்லையையும் ஆச்சிரமங்களுக்கும் மானிய முறைத் தலைமைகளுக்கும் இடைவிடாது பராதீனப்படுத்துவதை நாம் காண்கிருேம். மாவட்டங்கள் யாவும் துறவி களதும் அல்லது விசுப்பாண்டவரதும், எள்களதும் அல்லது மானியப் பிரபுக்களதும் நியாயக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின. இவர்களுக்கு நீதி மன்றங்களை நடத்தும் உரிமையும், ஒருவருக்குரிய காணியிற் பிடிக்கப்பட்ட கள்வனை விசாரணை செய்யும் உரிமையும், திருடல் சம்பந்தமான வழக்கு களே விளங்கும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தன. அரசனிடமிருந்து, நீதி வழங்கும் அதிகாரங்களுடன் நீதிமுறைகள் சம்பந்தமான வருமானங்களும் -இவை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் கட்டணங்களும் தண்டப்பணமும் -அரசனிடமிருந்து தனிப்பட்ட நிலச்சொந்தக்காரரைச் சென்றடைந்தன. இந்நிலச்சொந்தக்காரருக்கு அரசன் அதிகம் அஞ்சினன் அல்லது அவர் களுக்கு ஆதரவளிப்பவனனன்.
தனிப்பட்டோர் வழங்கிய நீதியானது பொது நீதி முறைமையின் எல்லையை மீறுவதாயிற்று. இது பிற்போக்காகுமா அன்றி முற்போக் காகுமா ? பொது நீதிமன்றுகள் மூலமாக அரசன் பொது நீதியை வற்புறுத்த வலிமையற்றவனகவிருந்தது வருந்தத்தக்கதொன்றகும். ஆனல் அவன் உண்மையிற் போதிப வலிமையற்றவனுகவிருப்பின், களவு, ஆட்கொலை, கால்நடைத் திருட்டு என்பன தண்டிக்கப்படாதுபோவதிலும் எப்படியாவது எவரொருவராலாவது விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுதல் சிறப்புடையதாகும். மக்கள் தமக்குச் சேய்மையிலிருந்த அரசனிட மிருந்தோ பலமற்றிருந்த “அண்டிரற்று ’ நீதி மன்றின் மணியகாரரிட மிருந்தோ பெறும் நீதியை விடச் சிறந்த நீதியைத் தம் உறுதிவாய்ந்த அயலராகிய பிரபுவிடமிருந்து அல்லது மடாதிபதியிடமிருந்து விரைவிற் பெறக்கூடியதாக இருந்திருப்பின், அத்தகைய மாற்றம் அது நிகழ்ந்த காலத்திற் பெரும்பாலும் விரும்பத்தக்க தொன்றயிருத்தல் சாத்தியமே. ஆனல் வழக்கு மன்றம் நடத்துவதற்கு உரிமை பெற்றிருந்தவர்களான பாமரரும் குருக்குழாத்தினரும் அம்மன்றத்தை நடத்த உண்மையிலே தகுதி வாய்ந்திருந்தனரா, அன்றி இவர்களே பொருமைக்குரிய அச்சிறப் புரிமையைக் கைப்பற்றுவதற்கு வேண்டிய வலிமையையும் தந்திரத்தையு முடையராயிருந்தனரா என்பதை இத்தனை காலத்துக்குப் பின்னல் வாழும் நாங்கள் கூற முடியாது. எவ்வாறயினும் ஆங்கிலேய-தேனியர் பராதீனப் படுத்திய அரச உரிமைகளைப் பழைய நிலைமைக்குப் படிப்படியாக முடி யானது மீட்டுக் கொடுக்கவும் பொது நீதியைப் பொதுமக்களிடம் மீட்டுக் கொடுக்கவும் கூடிய நிருவாக சாதனத்தை ஏற்படுத்திய பெருமை நோமானிய, பிளந்தாசெனற்று அரசர்களைச் சாரும். இங்கிலாந்தில் அரசன் பெயரும் பதவியும் பெரிதும் விரும்பப்படுவதற்குரிய முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்ருகும்.

மானிய நீதிமுறைபுகுதல் 135
முதலாம் இரண்டாம் தேனியப் போர்களுக்கிடைப்பட்ட பத்தாம் நூற் ருண்டின் பிற்பகுதியில், மத வரலாற்றில் ஒரு முக்கிய நெருக்கடி ஏற்பட்டது. கிறித்துவ ஆர்வத்துக்கும் கல்விக்கும் மையங்களாக விளங் கிய ஆச்சிரமங்களுக்கு அழிவையுண்டாக்கும் வகையில் அல்பிரெட்டு காலத்தில் ஏற்பட்ட தேனியப் படையெடுப்புக்கள், கன்னியர், குருக்குழாத் தினர் ஆகியோரது வாழ்க்கை பூரணமாகத தளர்ச்சியடைவதற்குக் காரண மாயிருந்தன. துறவிகளின் வாழ்க்கையில் எற்பட்ட இத்தகைய நலிவைப் பீட்டு என்பார் தன் காலத்திற்றனே உணர்ந்திருந்தார். நோதம் பிரிய ஆச்சிரமங்களையும் சதுப்பு நில ஆச்சிரமங்களையும் எரித்தமை, தேமிசு நதிக்கு வடபாலிருந்த கிறித்துவ சமயத்தை நிலைகுலைத்துவிட்டது. அநேக மாவட்டங்கள் பதிதர்களான நோவீசியருக்கும் தேனிய “ கூட்டங் களுக்கும் ” கீழ்ப்பட்டன. உவெசெட்சிலேதானும் கல்வியையும் மதத்தை யும் ஊக்குவிக்க அல்பிரெட்டு செய்த முயற்சிகள் காரணமாகக் குருமா ரிடையே ஒரு பரந்த இயக்கம் தோன்றுவதற்கும் நீண்ட காலம் சென்றது. தேனியக் குடியேற்றத்தை மீண்டும் வெற்றி கொண்டதற்கும், தேனியரை ஒரளவு மதமாற்றம் செய்ததற்கும் காரணமாயிருந்தவர்கள் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பாமரரும் ஊக்கம் நிறைந்த உவெசெட்சு வமிச அரசர்களும், அவர்களுடைய நிலப்பெருமக்களும் ஆவர். அல்பிரெட்டும் எட்டுவேட்டும் அதெலுசுற்றனும், அவர்கள் காலத்துக்கு முன்பும் பின்பு மிருந்த அரசர்கள் குருக்குழாத்து ஆலோசகருக்குக் கடமைப்பட்டிருந்த அளவுக்கு அவர்களும் கடமைப்பட்டிருந்தனர் என்பதற்குச் சான்று கிடை
LITTE.
துறவறம் எனும் அருநெறிக்கு ஆற்றது மனிதவியற்கை அவ்வருநெறி யினின்றும் வழுவித் தாழ்வுற்றுத் தன்னையே தடிந்து கொள்ளல், தரணி யிலே மீண்டும் மீண்டும் நிகழ்வதோர் அவலழ் ; அத்தகையவோர் அவல நிலையிற் பத்தாம் நூற்றண்டின் நடுக்கூறுவரை ஆச்சிரமங்கள் அழுந்திக் கிடந்தன. ஆச்சிரமத் தருமசாதனச் சொத்துக்களை மணமான கோயி லதிகாரிகள் அனுபவித்து வந்தனர். இவர்களில் அநேகர் பெரிய குடும்பங் களுடன் மிக வசதியான சூழலில் தமக்கே சொந்தமான இல்லங்களில் வாழ்ந்தனர். துறவு வாழ்க்கை என்பது உண்மைக் கருத்தின்படி பெரும் பாலும் அற்றுப்போயிற்று. நிச்சயமாக அது தீவில் தன் செல்வாக்கைச் செலுத்தத் தவறிவிட்டது. ஆச்சிரமப் புத்துயிர்ப்பு ஏற்பட்டிராவிடின் கோயிற்பற்றுக்குரிய கோயில்களும் குருக்களும் எற்படுவதற்கான இயக்கம் மத்திய கால இங்கிலாந்தில் வளர்ந்து வெற்றி பெற்றிருக்குமோ என்பது சிந்தனைக்கும் விவாதத்துக்குமுரிய சுவையான பொருளேயன்றி, வரலாறு விடையிறுக்கக் கூடிய தொன்றன்று.
துறவறவாழ்க்கை புத்துயிர் பெற்றது என்பது மட்டும் உண்மை. குளூனி, புளூறி என்னும் இடங்களிளிருந்த பிரான்சிய ஆச்சிரமங்களிலிருந்து ஒரு புத்துயிர்ப்பு எழுந்தது. இந்தக் “குளூனிய’ இயக்கமானது, பெருமை

Page 78
乱073一 084.
924988.
36 • குளூனிப் புத்துயிர்ப்பு
யான பெனடிற்று ஒழுங்குமுறையின் பல கிளைகளுள் ஒன்றகும். இவ் வியக்கத்தினலே தூண்டப்பட்ட சில சீர்திருத்தக்காரராகிய மடாதிபதி களும் விசுப்பாண்டவரும் இங்கிலாந்திலிருந்த அநேக கன்னியர் மடங் களிலே கன்னியருக்குரிய ஒழுங்கையும் துறவின் இலட்சியத்தையும் மீண் டும் நிலைநாட்டினர். அப்போது தடியடி, குழப்பம் ஆகியன ஏற்படாம லிருக்கவில்லை. இவர்களிலொருவரான இடன்சுதன் என்பார் மிக ஆற்ற லுடையவராயிருந்தார். ஆனலும் அவர் பொறையுடையவராயுமிருந்தார். அதே காலத்தில் எட்கார் அரசனும் (959-975) அவன் பின் வந்த அரசரும் ஈலி, பீற்றர்பரோ போன்ற சதுப்புநில ஆச்சிரமங்களை மறுபடியும் கட்டுவித்து அவற்றுக்குச் சொத்துக்களை மீண்டும் வழங்கும்படியும், புதிய இயக்கத்தைச் சேர்ந்த துறவிகளுக்கு அவர்கள் அயலார்மீது விரி வான ஆள்புலவதிகாரமும் நீதிசெலுத்தும் அதிகாரமும் நாடெங்கணும் வழங்கிச் சிறப்பிக்கும்படியும் தூண்டப்பட்டனர்.
இல்டபிராண்டு எனப்படும் ஏழாம் கிரெகோரிப் போப்பாண்டவர் காலத்தில் இப்புதிய தூண்டுதலினல் உந்தப்பட்ட ஆங்கிலேய மதமானது திருச்சபை யின் பரந்த உரிமைக் கோரிக்கைகளை நோக்கி முன்னேறிற்று. அப் போப்பாண்டவரது இலட்சியங்கள் இங்கிலாந்தில் நோமானிய வெற்றி யாளராற் பெரிதும் புகுத்தப்பட்டன. ஈற்றில் அவ்வியக்கம் கோயிற்பற்றுக் குரிய போதகர்கள் மணமாகாது இருக்க வேண்டுமென விதித்தது ; போப்பாண்டவரின் தலைமையிலே திருச்சபையின் சருவதேச இயல்பை அதிகரிக்கச் செய்ததுடன் பரிசுத்தமாக்கப்பட்ட அப்பமும் உவைனும் இயேசு வின் தசையும் குருதியுமாக முறையே மாற்றமடைகின்றன என்னும் கோட்பாடு வளர்ச்சியுறக் காரணமுமாயிருந்தது ; கன்னி மரியாளின் வழி பாட்டின் அதிமுக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது ; இன்னும் மத்திய ஊழியின் பிற்பகுதியில் எற்பட்ட சிறப்பான அனேக சமய இயக்கங்களுக் கும் அவ்வியக்கம் வழிகாட்டியது. உண்மையில் பின்வந்த நூற்றண்டு களிலே சமய சிந்தனையையும் வழிபாட்டையும் வளர்க்கக் கூடிய முக்கிய இடங்களாகவும், நிலமானிய இங்கிலாந்தின் பொருளாதார, சமுதாய வாழ்க்கையில், ஒர் உயரிய தானத்தை வகிக்கும் இடங்களாகவும் ஆச் சிரமங்கள் விளங்கவேண்டியனவாயிருந்தன.
இடன்சுதன் சிறுவனயிருந்தபோது, துறவறத்தின் இத்தகைய எதிர் காலத்தை யார்தாம் முன்னறிந்து கூறியிருப்பர். அவர் கிளாத்தன்பெரி என்னுமிடத்து, மடத்தின் இளம் அதிபதி என்ற முறையில், அதன்
சதுப்புநில ஆச்சிரமங்கள், சதுப்பு நிலப் பிரதேசத்தை வற்றுவித்து ஆங்கு குடியேற்றம் நிறு வப் பெரிதும் உதவின. நீதி மன்றத்தை நடத்துவதற்கு அளிக்கப்பட்ட உரிமை வெளிப்படை யாகச் சட்டவாதிக்கத் தொடர்பானதாயினும் ஆள்புலத்திற்குரிய நிலமானிய முறையின் மற்றெரு அமிசத்துடனும் தொடர்புபட்டிருந்தது. அது யாதெனில் நிலமானியப் பிரபுக்களான பொது மக்களுக்கும் குருக்குழாத்திற்கும் தரிசு நிலத்தைச் சீர்ப்படுத்தவும் அங்கு குடியேற்றஞ் செய்யவும் அது உதவியளித்தமையாகும்.

குளூனிப் புத்துயிர்ப்பு 18ሽ፤
புனருத்தாரணத்திற் சிறந்த பணியாற்றினர். அவர் மாகாணத்தின் தலை மைக் குருவானபோது அவ்வியக்கத்தில் அதிகம் பங்குபற்றிச் செயலாற்றது போயினும் அதில் அனுதாபங்கொண்ட ஒரு நண்பராக விருந்தார். இவ்விடயத்திலும் வேறு விடயங்களிலும் அவர் குருக்குழாத்திடம் காட்டிய பொறையின்மை பற்றிய கதைகள் உண்மையானவையல்ல. இக்கதை முன்னெரு காலத்தில் இவரை வலாற்றில் ஒரு முதன்மையான பாத்திர மாக்கின. சொமசெற்று என்னும் மானியப் பிரபுவின் மகனன இடன்சு தனிடம் இலகுவில் உணர்ச்சி வசப்படக்கூடிய கெலித்தியரிடையே காணப்படும் சமய அபிமானமும் ஒர் அரசறிஞனுக்குரிய சாந்த குணத் துடன் நிதான குணமும் குறிப்பிடத்தக்க வகையில் இணைந்திருந்தன. முடிக்குரிய ஆலோசனையாளருள் அதி செல்வாக்குள்ளவராக அவர் அநேக ஆண்டுகள் விளங்கினர். அரசவையில் அவருக்கிருந்த அதிகாரம் திருச் சபை புத்துயிர் பெறுவதற்கான அறிகுறியாய் விளங்கிற்று. அன்றியும் அவர் அவ்வதிகாரத்தைப் பயன்படுத்திய முறையிலிருந்து அவர் அதைப் பெறுதற்குத் தகுதியுடையரென்பதை எண்பித்தார். ஆலோசனை யற்ற எதெலிரெட்டு என்பான் இடன்சுதன்பால் அறிவுரை பெருது ஒழிந்த போது இராச்சியத்திற் கொடுந்துன்பங்கள் மீண்டும் தோன்றலாயின.
புதிய நிலமானிய முறைமையானது குருக்குழாத்திற்கும் பொதுமக்க ளுக்குமிடையில் அதிக வேற்றுமை பாராட்டவில்லை. நிலப்பெருமக்களும் மாகாணத் தலைமைக்குருக்களும் பிரபுக்களைப் போன்று அரசனிடமிருந்து நிலம் பெற்றவராயும் போரிலும் அமைதிக் காலத்திலும் அவனுக்குப் பணிசெய்யக் கடமைப்பட்டவராயுமிருந்தனர். உலகப் பற்றற்ற மதத்தின் புத்துயிர்ப்பானது இவ்வாறு உலகைத் துறந்த மதிப்புக்குரிய துறவி களுக்கு நிலம், அதிகாரம், தனம் ஆகியவற்றைப் பரிசாகவளித்தல் ஒரு நற்செய்கையென்னுங் கொள்கையையும், அத்துறவிகள் மீது பற்றையும் உண்டாக்கியது. நோமானிய படையெடுப்பு ஏற்படுவதற்குள் உசுற்றர், உவிற்று, தோசெற்று போன்ற கோட்டங்களைப் பரன்களும் நைற்றுக்களும் எவ்வாறு தமக்குச் சொந்தமாக்கி ஆட்சி செய்தனரோ அவ்வாறே திருச் சபையதிகாரிகளும் அவற்றைச் சொந்தமாக்கி ஆட்சி செய்தனர். துறவி கள் தாம் உரிமை கோரிய நிலங்களுக்குப் பொய்ப் பட்டயங்களை எழுதுவா ராயினர்-பரன் ஒருவன் தன் வாளே உருவுதற் கொப்பாகக் குரு மார் “ நிலச் சொத்துகளைக் கைப்பற்றிய ’ முறை இவ்வாறிருந்தது gigs.
அக்காலத்தில் எதிர்க்கப்படாத திருச்சபையதிகாரிகளுடைய குடியியலதி காரமும் உலகியலதிகாரமும், வருங்காலத்தில் மிகப் பெருமளவிலே தீமை கள் விளைதற்கான வித்துக்களை இப்போது விதைக்கலாயின. ஆனல் ஆச்சிரமங்களுக்கு வழங்கப்பட்ட தாராளமான அறக்கொடைகள் மத்திய ஊழியின் பிற்பகுதியிற் சிற்ப வேலை பெருமையடைவதற்கும் வழிவகுத்தன.

Page 79
97806.
●88.
38 வைக்கிங்குகளின் இரண்டாம் வருகை
இதற்கிடையில், கோயிற் பற்றுக்குரிய கோயில்கள் கிராமங் கிரமாமமாக வளர்ந்தோங்கலாயின. மேலும், கிறித்துவ சமயக் கருத்துக்கள் நோதிக்கு மக்களிடையே பிறர் அறியாவகையிற் பரவிக்கொண்டிருந்தன. திருச்சபை யானது தனது இலட்சியங்களுக்கு இழுக்குண்டாவதற்குக் காரணமாயிருந்த அந்த நிலமானிய அதிகாரத்தைத் தானே மேற்கொண்டிராதிருப்பின், ஒழுங்கற்ற நிலமானிய முறைமை நிலவிவந்த நூற்றண்டுகளுக்கு அப்பா லும் தப்பி அது நிலைத்திருக்குமோ என்ற ஆசங்கை எழலாம்.
பத்தாம் நூற்றண்டின் பெரும் பகுதியும் வைக்கிங்குகளின் புலம் பெயர்வு தடைப்பட்டிருந்த காலமாகும். போற்றிக்கு நாடுகளிலிருந்து புறக்குடியேற்றம் தடைப்பட்டது. கந்தினேவிய்க் குடியேறிகள் தங்கள் மூதாதையர் அமர்க் கோடரி கொண்டு வெற்றி பெற்ற நாடுகளெங்கும் பட்டினங்கள், தோட்டங்கள், நிறுவகங்கள் முதலியவற்றை அமைப்பதிலே தம் காலத்தைக் கழித்தனர். படையெடுப்பாகிய அலைமோதல் அடங்கியிருந் தது காரணமாய், அல்பிரெட்டின் புத்திரர், தேனியக் குடியேற்றத்தை அதன் கந்தினேவியப்பண்பு பாதிக்கப்படாவகையில், பெயரளவில் மீண்டும் வெற்றிகொள்ள முடிந்தது. எட்கார், இடன்சுதன் என்பவர்களது ஆட்சி காலம் அமைதியும் செழிப்புமுள்ளதொரு குறுகிய காலப்பகுதியாகத் தொடர்ந்து வந்தது. இதன்பின் தகுதியற்றவனகவிருந்த ஆலோசனை யற்ற எதெலிரெட்டின் ஆட்சியின் போது மீண்டும் புயல் வீசலா யிற்று. м
வைக்கிங்குகள் மீண்டும் போரிலீடுபட்டனர். இம்முறை அவர்கள் தென் மாக்கரசனன சுவெயின் போக்குபியட்டின் தலைமையில் குறிப்பாகத் தென் னிங்கிலாந்தைத் தங்கள் தாக்குதலுக்கு இலக்காக்கினர். நோமண்டியும் ஆங்கிலேயரது தேனியக் குடியேற்றமும் கந்தினேவியரது ஆளுகைக்குட் பட்டிருந்ததால், அவற்றைத் தாக்காது விட்டனர். அது போன்று யோக்கு சயர், கிழக்கு அங்கிலியா ஆகிய இடங்களிலிருந்த அவர்களுடைய உறவின ரும் வைக்கிங்குகளைத் தடுக்கவுமில்லை, நலிவுற்றிருந்த சட்சணிய மன்னன் உவெசெட்சைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியை அவனுக்கு அளிக்கவுமில்லை. தீவில், சட்சனியனதும் தேனியனதும் ஐக்கியம் இன்னும் முற்றுப்பெருதிருந்தது; புதிய இங்கிலாந்து இராச்சியத்தின் பலமற்ற தன்மை வெளிப்படையாகப் புலனகிற்று. தேனியக் குடியேற்றம் “பழைய ஆங்கிலேய நாட்டினம் மோதி உடைதற்குக் காரணமாயிருந்த கற்பாறை ” என வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் எதெலிரெட்டு என்பான் பலமற்ற வனயும் அறிவிலியாயுமிருந்தான். அவனது ஆட்சி நெடுந் துன்பம் நிறைந்ததொன்றயிருந்தது. ஆனல், தேனியப் படையெடுப்புக்கள் மீண் டும் எற்படுமுன் இங்கிலாந்து வீழ்ச்சியடைந்ததற்குத் தனிப்பட்ட காரணங் களையும் தற்செயலான காரணங்களையும் தவிர வேறு காரணங்களு மிருந்தன.

* தேன்கெல்டு” 139
கணியூற்று சிம்மாசனத்தை வெற்றி கொள்ளுவதற்கு முன்னர், நெடிது நிகழ்ந்த போர்களில் ஈரியல்புகள் சிறப்பாகக் கவனிக்கற்பாலன ; அவை “தேன்கெல்டு” என்ற வரியும், இலண்டன் மாநகர் ஆற்றிய பங்குமா கும். -
அல்பிரெட்டின் காலத்தில், “தேன்கெல்டு” எனும் வரி அறவிடப்பட்டும் கொடுக்கப்பட்டும் வந்தது. ஆயினும் நாகரிகங் குறைந்த அக்காலங்களில், தாமே நேரில் இடங்களையும் ஆட்களையும் கொள்ளையடித்துப் பணந் திரட்டு வதையே தேனியர் பெரிதும் விரும்பினர். தேனியர், வைக்கிங்குகள் ஆகிய இருசாராரும் இப்போது முன்னரிலும்பார்க்க நாகரிகமடைந்திருந்தனர். முழு நாட்டையும் மீட்பதற்காகப் பொன் கொடுக்கும் முறைமையைப் பிற் கால வைக்கிங்குகள் வழைமையாகக் கொண்டனர். அன்றியும் அல்பிரெட் டின் காலத்திலிருந்தது போன்று தேனிய இனத்தவர் நிலச் சொத்துக் களையும் குடியேற்ற உரிமையையும் விரும்பிக் கோரினரோவென்பதுந் தெரிய வில்லை. வெற்றியாளர்களிற் பலர் “ தேன்கெல்டு ’ எனும் வரி மூலம் பணஞ் சேர்த்து, அவ்வாறு பெற்ற பணத்தைக் கொண்டு கந்தினேவியா வில் வீடுகளையும் நிலச் சொத்துக்களையும் வாங்குமளவிலே திருத்தி கொண் டிருந்தனர். இவர்களுக்குத் “தேன்கெல்டு ’ வரி மூலம் கொடுக்கப்பட்ட தொகையானது இதே வரியின் மூலம் பிற்காலத்தில் நோமானியரும் பிளந்தா செனற்று வமிசத்தவரும் பெற்ற தொகையைக் காட்டிலும் அதிக மானதாகவும், வரி விதிப்பிற்காக மதிப்பிடப்பட்ட நிலத்தின் பெறுமதிக்கு மேற்பட்டதாகவும் இருப்பது கண்டு சரித்திர ஆசிரியர்கள் ஆச்சிரியப்படு
988
O16
கின்றனர். பத்தாம் நூற்றண்டில் நிலவிய அமைதியானது ஆங்கிலேய
நிலப்பெருமக்கள், திருச் சபையினர் ஆகிய்ோர் பல்வகைத் திரவியங்களையும் பல்வகைச் சொத்துக்களையும் திரட்டிக் கொள்வதற்கு உறுதுணையாயிருந்த தென்பதில் ஐயமில்லை. இவற்றில் முக்கியமானவை ஆங்கிலேயத் தட்டார், கன்னர் ஆகியவரின் மிகச் சிறந்த வேலைப்பாடுகளாகும்; சாள்சு, குருெம் வெல் என்போர் செய்த போர்களின் கெலவுக்காக, மறுமலர்ச்சிக்கால இங்கிலாந்தின் பொற்றகடுகளும், நகைகளும் அவர்களுக்கு எவ்வாறு கொடுக்கப்பட்டனவோ அவ்வாறே இவ்விலையுயர் பொருள்களும் இப்போது தேனியரது உலைப்பாத்திரத்திற்குட் சென்றடைந்தன. மீட்புப் பொருளாகத் தேனியர் பெற்றவற்றுட் சில இங்கிலாந்திலேயே தாராளமனப்பான்மையும் இன்பநாட்டமுமுள்ள வைக்கிங்குகளாற் செலவழிக்கப்பட்டன. ஆனல், அவற் றுட் பெரும்பகுதி கடல்களுக்கப்பால் எடுத்துச் செல்லப்பட்டது.
உழவோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகைகள் அவ்வுழவோரின் அழி 'வுக்குக் காரணமாயிருந்தன. இதனல், கட்டுப்பாடற்ற நிலச் சொந்தக்காரர் அடிமைத் தன்மைக்கு இழிந்தனர். “ தேன்கெல்டு” எனும் வரி உண்மை யில் எங்கள் சமுதாயம், நிதி, பாலனம் ஆகியவற்றின் வரலாற்றில் ஓர் உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. நேரடியான வரியீடு இந்த இகழ்ச்சியான முறையிலே தொடங்கிற்று. வலிமையற்ற எதெலிரெட்டின் காலத்திற் பணத்

Page 80
விப்பிரில்
O6.
நவம்பர் 1016.
40 * தேன்கெல்டு”
தைச் செலுத்தித் தேனியரைத் திருத்தி செய்தல் சாதாரண முறையாக இருந்தது. வலிமையுடைய கணியூற்றின் காலத்தில் மண்டிலப் பாதுகாப் பிற்குரிய போர் வரியாக அது மாறியது. வெற்றிவீரன் உவில்லியத்தின் காலத்தில் அவ்வரி முக்கியமானதோர் அரசாங்க வருமானமாகக் கருதப் பட்டபடியினல், இவ்வரியை அறவிடும் நோக்கமாக நிலச் சொத்து பற்றிய முதற்பெரிய நியாய விசாரணை நடத்தப்பட்டது. தொடக்கத்தில், தேன்கெல்டு எனும் வரியை எவ்வாறு அறவிடலாம் என்பது பற்றி அரசாங்கத்துக்கு அறி வுறுத்தவே, முதலாம் உவில்லியங் காலத்து நிலவுடைமைக் கணிப்பேடு யாக்கப்பட்டது. நாட்டுக்கான இவ்வரியை அறவிடும் பொறுப்பு, தொடக்கத் திற் பட்டணப் புறத்து அதிகாரியிடம் விடப்பட்டிருந்தது ; பின் பண்ணைப் பிரபுவின் கைக்கு அது மாறியது. முதலிற் கணியூற்றும், அவனுக்குப் பின்னர் நோமானிய அரசர்களும், அவ்வவ் விடங்களிலிருந்த சமூகத் தவருடன், தொடர்பு வைத்துக் கொள்வதினும் பார்க்க, தனியொருவனை அதன் பொருட்டு நியமிக்க விரும்பினர். அதனல், அதிகமாக இப்போது ஒவ்வொரு கிராமத்தையும் அதன் பிரபுவுக்குக் கீழ்ப்படுத்தினர்; எனெ னில், அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை அறவிட்டவர் பிரபு என்பதினல் என்க. காணியின் பெயராற் கொடுக்க வேண்டிய பணத்துக்கு அரசாங்கத்திற்குப் பொறுப்பாயிருந்தவரே அரசாங்கத்தினல் அக்காணிச் சொந்தக்காரராகவும் அதில் வசித்தவரனைவருக்கும் தலைவராக வும் கருதப்படலாயினர்.
மீண்டுந் தொடங்கிய தேனியப் போர்களைப் பற்றி விதந்து குறிப்பிடத்தக்க பிறிதொன்று யாதெனில், இலண்டன் அதில் எடுத்துக் கொண்ட பங் கென்க. நூருண்டுகளுக்கு முன்னே, அல்பிரெட்டரசன் இங்கிலாந்தைத் தேனியரிலிருந்து பாதுகாக்கும் வாயில் காப்போனக இலண்டனை அரண் செய்வித்து, அதில் குடியேற்றிய போது, அவன் எவ்விதமான நம்பிக்கை களைக் கொண்டிருந்தானே அவற்றை அந்நகர் இப்போது மிகச் சிறப்பாக நிறைவேற்றுவதாயிற்று. எதெலிரெட்டின் ஆட்சியில், புத்தியற்றவனும் கோழைத்தனமுள்ளவனுமான அவ்வரசனிலும் அந்நாட்டு மக்களே, ஆங் கிலேய எதிர்ப்பின் உயிர் நாடியாக விளங்கினர். ஈற்றில் அவனுடைய தேனியப் பகைவனன சுவெயின் போக்குபியட்டு என்பவன் இறந்து இரு வருடங்களுக்குப் பின்னர் எதெலிரெட்டு இறந்தபோது, எதெலிரெட்டின் மகனகிய எடுமண்டு அயன்சயிட்டு என்பானுக்கும் சுகையின் மகனகிய கணியூற்று என்பானுக்கு மிடையில் இங்கிலாந்தின் அரியணை அடைவது காரணமாக ஒரு சிறிய போராட்டம் நடந்தது. எடுமண்டுக்கு இலண்டனே ஒருவலிமை வாய்ந்த நிலையமாயமைந்திருந்தது. எனினும் சில மாதங் களுக்குப்பின் அவன் இறந்தமையாற் போர் முடிவெய்தியது. இதனல் அப்போதைய நிலைமையில் வேறுவழியின்றிச் சட்சணிய உவிற்றன்குழுவினர், கணியூற்றை அரசனகத் தெரிந்தெடுத்தனர். தென்னிங்கிலாந்தில் அப் போராட்டம் நடைபெற்ற விடத்திற்கு அண்மையிலே தேனியக் குடியேற்றம்

தேர்வு முறை முடியாட்சி 14
அமைந்திருந்தபடியால், தேனிய அபேட்சகனைத் தெரிவு செய்வது இயற் கையே என்பதுடன் எடுமண்டின் இறப்புக்குப்பின் அது தவிர்க்க முடியாத தொன்றயிற்று. இளைஞனன கணியூற்றிடம் மறைந்து கிடந்த இயல்புகள் காரணமாக, அவன் தெரிவு எதிர்பார்த்ததற்கு மேலான நற்பேறகவும் முடிந்தது.
இவ்வூழிக்கு முன்னும் பின்னும் காணப்படாத வகையில், ஆங்கிலேய முடியாட்சியில் மன்னரைத் தேர்ந்தெடுப்பதாம் இயல்பானது இவ்வூழியில் நன்கு தெளிவாகத் தோற்றமளிக்கின்றது. கணியூற்று, அரொல், வெற் றிவீரன் உவில்லியம் ஆகியவர்கள் உலிற்றன் குழுவினரால், அல்லது மண்டிலத்திற்குரிய தனிப்பட்ட தலைமக்களின் அங்கீகாரத்தினல் தெரிந் தெடுக்கப்பட்டனரேயொழிய இவர்களில் ஒருவராகுதல் முடிக்குச் சட்டபூர் வமான உரிமையுடையரல்லர். ஆனல் அத்தகைய தேர்வு, வெற்றிகளின் விளைவுகளுக்கு அல்லது நாட்டவரின் விருப்பங்களுக்குச் சட்டவலிமையளிக்கப் போதுமாயிருந்தது. உவிற்றன் என்பது ஆங்கிலேய-நோமானிய நிறுவகங் களிலிருந்து வளர்ச்சியடைந்த பிற்கால ஆங்கிலேயப் பாராளுமன்றத்தின் தோற்றுவாயன்று ; அது மக்கணயக்கும் குழுவுமன்று ; மக்களின் பிரதி நிதியுமன்று. அது விசுப்பாண்டவர்கள், எள்கள், வேத்தியல் அலுவலர், பிற தலைமக்கள் ஆகியவர்களைக் கொண்டவொரு ஒழுங்கற்ற மன்றமாகும் ; இவர்கள் தம் பெயர்களுக்கேற்ப எப்போதும் “ அறிவுடையோர் ’ போன்று நடந்ததுமில்லை. ஒரு புதிய அரசன் சிம்மாசனம் எறியபொழுது அவனைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள்கொண்டிருந்த அதிகாரம் அவன் குண வியல்பையும் சூழலையும் பொறுத்திருந்ததேயன்றி, "யாப்பின் சட்டமெதை யும் ” பொறுத்திருக்கவில்லை ; ஏனெனில் அத்தகைய சட்டமெதுவும் இல்லாததனல் என்க. ஆனல், மன்னர் மரணத்தினற் சிம்மாசனம் வெறிதாயபோது வழமைப்படி அதனை நிரப்பும் உரிமையை அவர்கள் பெற்றிருந்தனர். அன்றியும், சட்சணிய ஊழியின் இறுதியில் அவ்வதிகாரம் குறிப்பிடத்தக்க சுதந்திரத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனல் வழிக் கொள்ளல் வரிசை மட்டுமன்றி வேத்தியற் குடும்பந்தானும் ஒன்றுக் குமேற்பட்ட வேளைகளில் மாற்றியமைக்கப்பட்டுளது. அரசுரிமையானது, எந்த மனித அதிகாரத்தினலும் மாற்றமுடியாத வகையிலே தனிப்பட்ட ஒருவரிடத்துள்ள தெய்வீக உரிமை என்னுங் கருத்து, ஆங்கிலேய வரலாற் றைப் பொறுத்தவளவில் முதலாம் சேமிசு மன்னனுற் புகுத்தப்பட்ட ஓர் அநாவசியமான புத்தாக்கமாகும்.
இலண்டன் நகரமானது பெரும்பாலும் சுதந்திரம் பெற்ற, படை வலிமையும் அரசியல் அதிகாரமுமுள்ள ஒரு நகராகப் பிற்காலத் தேனியப் போர்களில் ஆற்றிய செயலோ, விதந்து குறிப்பிடத்தக்கதொன்றகும் ; ஏனெனில், அதற்கிருந்த நகராண்மை உரிமைகள் பெயரளவில் நனிமிக அற்பமானவையாயிருந்ததனலென்க. அங்கே நகரப் பதியோ, அல்லது

Page 81
42 ஆங்கில-தேனிய இலண்டன்
நகர் மூப்பரோ இருக்கவில்லை ; துறைமுக மணியகாரர் அரச அலுவல ராயிருந்தார். பிற்கால இலண்டன் வரலாற்றிற் காணப்பட்ட, குடியாட்சிக் குரிய “நகரசபைப் பிரிவு” களுக்குப் பதிலாக, பாமரர் குருமாரிடையே தலைமக்களாக விளங்கியோர்க்கு அரசனல் வழங்கப்பட்ட “ சோக்குசு ’ எனும் ஆளெல்லைகளாக அந்நகரம் பிரிக்கப்பட்டிருந்ததை நாம் காண் கிருேம். நகரச் சுயவாட்சியென்பது பிற்காலத்தில் வாய்க்க வேண்டிய தொன்றக விருந்தது. சுதந்திர விருப்புடைய தேனியப் பட்டணங்கள் இன்னும் பரம்பரைச் “சட்ட நாதர்களால் ’ ஆளப்பட்டுவந்தன; நாட்டுப் புறக் கிராமங்களினின்றும் அரச கோட்டைகளினின்றும் இன்னும் வேறு படுத்த முடியாதவையாகிய ஆங்கிலச் சந்தைப் பட்டினங்களும் நகரங்களும் தனித்தனி அவ்வவற்றுக்குரிய பிரபுக்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தன. அத் தகைய பிரபு அரசனகவோ, நிலப் பெருமகனகவோ இருக்கலாம். அல்லது நிலப் பெருமக்கள் கூட்டாக ஆட்சி செய்யும் முறையுங் காணப் էJւ-ւ-Ցl.
ஆனல், ஆங்கிலேயப் பட்டினங்களுள், துறைப் பட்டினமான இலண்டன் ஒன்றே உண்மையான அதிகாரம், செல்வம், சுதந்திரம் என்பவற்ருல், தான் பெற்றிருந்த ஊராண்மைப் பதத்தையும் விஞ்சிய மேன்மையொடு விளங்கிற்று. இடம்விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்த முடியாட்சியின் உத்தியோகபூர்வமான தலைநகர் இலண்டனக இராது உவின்செத்தராக இருந்தமை, தேமிசு நதிக்கரையிலிருந்த அப்பெரிய துறைப் பட்டினம், ஒரளவு உண்மையான அரசியல் சுதந்திரத்தையும், வேத்தியல் அதிகாரத் தைப் புறத்தேயிருந்து கண்டிக்கும் போக்கையும் பெறுவதற்குக் காரண மாயிருந்தது. அவ்வுணர்ச்சியானது உண்மையான பற்றுறுதிக்கும் தாய கப் பற்றுக்கும் கட்டுண்டதாய், சுதுவட்டு ஊழியின் பெருஞ் செயல்கள் நிகழும்வரை, தொடர்ந்து பல நூற்ருண்டுகளாக இலண்டனை ஊக்குவித் துக் கொண்டிருந்தது. பிரெஞ்சு மன்னர்களின் வசிப்பிடமாகிய பாரிசு நகரின் வரலாருே இதனினும் மிக வேறுபட்டதாகும்.
கணியூற்று அரசன் அரியணை ஏறியதை இலண்டன் மக்கள் பலமாக மறுத்த போதிலும், அது அவர்களுக்கு ஒரு உருக்கரந்த திருவாக அமைந்தது எனலாம். வட கடலில் நிகழ்ந்துவந்த கடற் கொள்ளை ஒழிக்கப்பட்டு இருமருங்கிலுமிருந்த துறைமுகங்கள் தமக்கிடையே வியா பாரம் செய்வதன் பொருட்டுத் திறந்து விடப்பட்டபோது, கணியூற்றின் கீழிருந்த ஆங்கிலேய போற்றிக்கு இராச்சியங்களுக்கிடையே வர்த்தகம் மிகவும் அதிகரிக்கலாயிற்று. யோக்கிலும் தேனியக் குடியேற்றத்தைச்
*. சட்சணிய அரசர்களுக்கு இலண்டன் நகர எல்லைக்குள் மாளிகைகள் இருந்தன. அவற் றில் 'அவர்கள் சில காலங்களில் தங்கினர். ஒப்புக் கொள்வோணுகிய எட்டுவேட்டு அரசன் தன் மாளிகையை இலண்டன் எல்லைக்கு வெளிப்புறமாக உவெசுமினித்தரில் கட்டியமை இலண்டன தும் இங்கிலாந்தினதும் வரலாற்றில் எதிர்பாராத மிகப் பெரும் விளைவுகளை உண்டாக்கியது.

ஆங்கில-தேனிய இலண்டன் 143
சேர்ந்த பட்டினங்களிலும் நெடுங்காலமாகத் தேனிய வர்த்தகர்கள் இருந்த தனல, அவர்கள் இலண்டனில் தலையான நகரவாசிகளாயினர். பதி னேராம் நூற்றண்டில் இலண்டனிலிருந்த தேனிய “இலித்துசுமென்” (கடற்படையாளன்), “ புற்செக்காள்சு ’ என்பவர்கள் கடல் கடந்த வர்த்தகத் திலும் தீவின் கடற்படைப் பாதுகாப்பிலும், அரசுரிமை பற்றி எழுந்த தகராறுகளிலும் முக்கிய பங்கு பற்றி வந்தனர். தொடக்கத்தில் அவர் களில் அநேகர் பதிதர்களாயிருந்தனர். ஆனல் அவர்கள் மதமாற்றஞ் செய்யப்பட்டனர் எனும் உண்மையை, சென் கிளெமெந்து என்பவர், மனந்திருப்பிய தேனியரைக் கொண்டும், சென் ஒலாபு என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பட்டணத்திலிருந்த கோவில்களைக் கொண்டும் நாம் அறியலாம். கொலோனிலும் பிறவிடத்திலுமிருந்து வந்த “பேரரசரின் ஆட்கள்’ தம் சொந்த வர்த்தகத் தாபனங்களுடன் இலண்டனிற் குடி யிருந்தனர். இலண்டன், உரோமரின் கீழ் வட ஐரோப்பிய வர்த்தகத்துக்கு முதன்மையான பண்டகசாலையாக, தான் முதன் முதலிற் பெற்றிருந்த உன்னத நிலையை, மீண்டும் பெற்றுக் கொண்டது.
சுவெயின் போக்குபியட்டு எனும் பழைய வைக்கிங்குத் தலைவனின் மகன கிய கணியூற்று என்பான் சாளிமேனைப் பின்பற்றிய பேரரசனகவும் இணக் கம், புதுப்பித்தல் ஆகிய நெறியில் அல்பிரெட்டின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்லும் ஆங்கில மன்ன்னகவும் ஆனன். ஆங்கிலேயரை ஆயுதபலத்தினல் வென்று அரச பதத்தைப் பெற்றபின் அவர்களுக்குத் தேனியருடன் உண்மையான சமத்துவங் கொடுத்தான். அதனல் தனது குடிகள் அனைவராலும் ஒரே வகையாக விரும்பப்பட்டான். அவன் தந்தை ஒரு கிறித்தவனுயிருப்பதைவிட உண்மையான ஒரு பதிதஞகவே இருந்தான். அவன் மக்கள் உவோடன் வழிபாட்டுக்குரியவராகவே வளர்க் கப்பட்டு வந்தனர். எனினும் ஆச்சிரம வரன்முறைக்குறிப்பெழுதுவோரின் அன்புக்குரியவனகிய கணியூற்று தூய்மை எனும் ஒளிபரப்பி இறந்தான். ஏனெனில் அவன் ஆச்சிரமங்களுக்குக் கொடைகள் நல்கியிருந்தான். அவனுடைய சட்டங்கள் திருச்சபைக்குரிய பத்திலொரு பகுதி வரியும் பிறவரிகளும் கட்டாயமாகச் செலுத்தப்படல் வேண்டுமெனவும் ஞாயிற்றுக் கிழமை வழிபாடு அநுட்டிக்கப்படல் வேண்டுமெனவும், தேனியக் குடி யேற்றத்தின் சில பகுதிகளிலும், கடல் கடந்து அவன் அழைத்து வந்திருந்த புதிய தேனியரிடையேயும் நீடித்திருந்த பதிதத்தன்மை இறுதியாக அடக்கப் படல் வேண்டுமெனவும் வற்புறுத்தின. ஆங்கிலேயரின் பல சந்ததிகள் கணியூற்றைப் பற்றி உவப்பாக நினைப்பதற்குக் காரணமாயிருந்த மிகப் பழைய பாடலொன்று, அவன் வைக்கிங்கு இளைஞனக இருந்தபோது இழைத்தவற்றை மக்கள் எப்படி முற்றக மறந்துவிட்டனர் என்பதை எடுத்துக் காட்டும் :
7-R 6344 (12162)
1061036,

Page 82
144 கணியூற்றின் கடல் கடந்த பேரரசு
இன்புறப் பாடினர் ஈலியின் துறவிகள், கணியூற்றரசன் கடுகினன் வள்ளத்தில். தண்டை வலிமின் தரையை நோக்கியே அன்னவர் பாடலை அங்குயாம் கேட்போம்.
கணியூற்று சிறுவனகவிருந்தபோது அவன் தந்தையின் போர்வள்ளத்திற் சதுப்புநில வாய்க்கால் வழியாக வருவதை ஈலி எனுமிடத்திலிருந்த துறவிகள் கண்டிருப்பின் இவ்வளவு குதூகலமாய்ப் பாடியிருக்கமாட்டார் கள். ஆனல் வைக்கிங்குகளின் காலம் கடைசியாக முடிவுற்றது; தென் மாக்கு, நோவே, இங்கிலாந்து, எபிரிதீசு ஆகிய நாடுகளுக்கு அரசனுக விருந்த கணியூற்று, அந்நாடுகளின் உக்கிரமான சத்தி முழுவதையும் நோதிக்கு இனத்தவராகிய கடல் சார்ந்த மக்களின் நன்மைக்கான ஒரு பேரரசாக மாற்றியமைத்தான்.
அவன் கடற்கரையில் மதிகெட்ட தன் அரசவையாளரைக் கண்டித்தது பற்றிய புகழ் வாய்ந்த கட்டுக்கதையானது மிகப் பழைமைவாய்ந்ததாயினும், அரசவையாளரும் ஆண் தன்மையற்ற பேடிகளும் புடைசூழ வீற்றிருக்கும் கீழ்நாட்டு அறிவுடை அரசன் ஒருவனுக்கே அக்கதையானது பொருத்தமான தாக இருந்திருக்கலாம். கணியூற்றின் பாதுகாப்பாளரான, போரிற் கடிய தொழிலாளரும் சட்சணிய நிலப்பெருமக்களும், பேச்சு, சேவை என்பவை சம்பந்தமாகக் கீழைத்தேய நாடுகளின் மிகையுரை, அடிமைச் சேவை பற்றிய கருத்துக்களிலும் வேறுபாடான கருத்துக்களைக் கொண்டவராவர். உண்மையில், இக்கதைக்குப் பொருத்தமான சூழலைத் தேடுவதென்பது கடினமானதொன்றயிருந்திருக்கும் ; ஏனெனில் புகழ்ந்துரை கூறும் நாடு களில், வற்றுப்பெருக்கானது, இவ்வாறு விரைவாகவோ அதிக தூரத்திலோ நிகழ்வதில்லையாதலால் என்க.
1016 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த முதற் சில ஆண்டுகளிற் கணியூற்று, வாள் கொண்டு சிம்மாசனத்தைக் காக்கும் அந்நிய வெற்றியாளனுக இங்கிலாந்திற் கருதப்பட்டான். ஆனல் 1020 ஆம் ஆண்டில் தேனிய இராச்சியத்தின் அரசுரிமையைப் பெறுவதற்காக மகிழ்ச்சியுடன் கடல் கடந்து மீண்ட பிற்பாடு, இங்கிலாந்தில் ஈரினத்தவரையும் சமத்துவ அடிப் படையில் ஒற்றுமைப்படுத்தும் பூட்கையை அவன் பின்பற்றினன். அத்துடன் திருச்சபையுடன் தன் புகழ்பெற்ற நட்புறவையும் தொடங்கினன். அநேக இன்றியமையாத அமிசங்களில் அவன் கடைப்பிடித்த பூட்கை ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்தை வெற்றி கொண்ட நோமானியனின் பூட்கையிலும் வேறுபட்டிருந்தது. கணியூற்றுக்குச் சிம்மாசனத்தை வென்று கொடுத்த தேனிய “ கூட்டத்துக்கு ’ கணியூற்றினல் பறிமுதல் செய்யப்பட்ட நிலச் சொத்துக்களைக் கொடுப்பதற்குப் பதிலாக “தேன்கெல்டு ’ எனும் வரிப்பணம் கொடுக்கப்பட்டது. ஆங்கிலேய-சட்சணிய மொழியும் தேனிய

கணியூற்றின் கடல் கடந்த பேரரசு 45
மொழியும் உவின்செத்தரிலிருந்த அரசமாளிகையின் முன்றிலிற் சமத்துவ மாக ஆதரவு பெறலாயின. மேலும், கணியூற்று ஆங்கிலேய-சட்டினிய சட்டங்களின் தொகுப்பொன்றை வெளியிட்டான். கணியூற்றின் ஆட்சியில் முக்கியமாக ஆங்கிலேய-சட்சணிய திருச்சபையினரே திருச்சபையை ஆட்சி செய்தனர். இவர்களைக் கணியூற்று அரசாங்கச் சேவையாளராக் ஏற்றதுடன், பின்பு இவர்களே விசுப்பாண்டவர் ஆட்சிப் பகுதிகளுக்கும் உயர்த்தினன். அவன் ஆதரவிலே திருச்சபையினர் இங்கிலாந்திலிருந்து நோவே, தென் மாக்கு ஆகியவிடங்களுக்குச் சென்று அங்கே கிறித்தவருக்கும் பதிதருக்கு மிடையே நடந்த நீண்ட போராட்டத்தில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டனர். வெற்றி வீரன் உவில்லியம் சட்சனியக் குருககுழாத்தைவிடப் பிரான்சியக் குருக்குழாமே திறமையும் பயிற்சியும் உடையதென்பதைக் காணு நிற்க, சட்சனியக் குருக்குழாமானது கந்தினேவியக் குருக்குழாத் திலும் குறைந்த பயிற்சியுடையதன்று என்பதைக் கணியூற்று கண்டான் என்பதில் ஐயமில்லை. ஆனல் வெற்றி கொள்ளப்பட்ட ஆங்கிலேயத் தலைவர்களைப் பற்றி அவ்விரு வெற்றியாளரும் கொண்ட முழுக் கருத்தும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வேறுபட்டிருக்க முடியுமோ அவ்வளவுக்கு வேறுபட்டிருந்தது. சட்சணிய நிலப் பெருமக்கள் திருச்சபை அலுவல்களில் மட்டுமன்றி, அரசாங்கம், இராணுவம் ஆகியவற்றின் அலுவல்களிலும் கணியூற்றின் நம்பிக்கைக்குப் பாத்திரராகி, அவனுற் செவ்வனே பயன் படுத்தப்பட்டனர். சிறந்த ஆட்சிப் பகுதியாகிய உவெசெட்சை கணியூற்றுக்குப் பிரியமுள்ளவனன கோடுவின் என்பவன் ஆண்டான். இக்காலை இவன் புகழ் அடையப்பெற்றன்.
இங்கிலாந்து வெற்றி கொள்வதற்குத் துணையாயிருந்த தேனியருக்கும், கப்பற்படைக்கும் உரிய தொகையைக் கொடுத்து முடித்தபின் கணியூற்று தனக்கென நாற்பது கப்பல்களைக் கொண்டதொரு கடற்படையையும், “ வீட் டுத் தொழிலாளரைக் ” கொண்ட ஒரு சிறிய் நிலையான படையையும் வைத்திருந்தான். “வீட்டுத்தொழிலாளர்’ என்பார் கனத்த கவசந்தரித்த, குதிரை மீதிவர்ந்த காலாட்படையினராகிய மெய்காப்பாளராவர். இவர்கள் அரசனிடமிருந்து சம்பளம் பெற்றனர். அன்றியும் இவர்கள் கணியூற்றையும் உறுப்பினனுகக் கொண்டதோர் படைக் குழுமத்தில் ஒன்ருக இணைக்கப் பட்டிருந்தனர். இக்குழுமம், பணத்தொடர்புடைய சபையாகவும் கெளரவத் திற்கும் தனிப்பட்டவரது சேவைக்குமுரிய சகோதரத்துவ சங்கமாகவும் இருந்தது. மானியமுறைமையின் நிலவுடைமைக் கோட்பாடு இங்கு காணப் படவில்லை. இம்மெய்க்காப்பாளரிற் சிலர் இங்கிலாந்தில் நிலச் சொத்துக் களைப் பெற்றனராயினும், அவற்றைப் பெற்ற காரணத்தால் அவர்கள் சேவைசெய்யும் கடப்பாட்டுக்குட்பட்டிருக்கவில்லை. முதலில் இப்படையில் முற்றிலும் கந்தினேவியரேயிருந்தனர். விரைவில் அதிற் பல சட்சனியரும் சேர்ந்தனர். ஆதியில் வைக்கிங்குகளையே பெரும்பான்மையாகக் கொண் டிருந்த இப்படை, இறுதியில் வளர்ச்சியுற்று ஆங்கிலேய-தேனியப் படையா

Page 83
46 கணியூற்றின் மனைத் தொழிலாளர்
யிற்று. எத்திஞ்சுப் போரில் அரெல் என்பவனுட இன்ப்படையினரும் இறந் தொழிந்தனர். நோமானிய வெற்றியாளர் இப்படையைப் புதுப்பிக்கவில்லை. எனெனில் இவர்கள் பெரும்பாலும் கலப்பற்ற நிலமானிய முறைமையின் கீழ், நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்டு, படைகுடி சம்பந்த மான தாபனங்களை நிறுவினுராதலின்.
கணியூற்று இறந்து ஒரு தலைமுறைக்குள், அவன் ஆற்றியவை நோமானி யரது வெற்றியால் அழிக்கப்பட்டுவிட்டதால், அவற்றின் முக்கியத்தையோ 106. அவற்றின் மேம்பாட்டையோ மதிப்பிட முடியாதிருக்கின்றது. அவன் தனது நாற்பதாவது வயதில் இறக்காது, அறுபதாவது வயது வரை வாழ்ந்திருந்தால் உலக அலுவல்களில் இதனினும் நிலையான ஒர் அடையாளத்தைவிட்டுச் சென்றிருத்தல் கூடும். அவன் ஒரு சிறந்த அரச்ன். வட கடலுக்கப்பால் கந்தினேவியாவை ஒரு துணுகவும் இங்கி லாந்தை மற்றெரு தூணுகவுங்கொண்டு நோதிக்குப் பேரரசு ஒன்றை நிறுவுவதில் அவன் ஈடுபட்டிருந்தான். கடலாண்மை அப்பேரரசின் இணைப் புச் சத்தியாகவும் தலைசிறந்த உள்ளூராகவும் இருந்திருக்கும். இதில் அவன் சித்தியடைந்திருந்தால் உலக சரித்திரமே மாறியிருக்கும். ஆனல், தொலைவுகாரணமாக எற்பட்ட தொல்லைகள் அக்காலத்துச் செப்பமற்ற சாதனங்களால் மேற்கொள்ளப்பட முடியாதனவாயிருந்தன. பதினெட் டாம் நூற்றண்டில் அத்திலாந்திக்குச் சமுத்திரத்திற்கப்பால் ஒரு பேரரசை ஒன்ருயிணைத்து நிறுவுவது எத்துணை கடினமாகவிருந்ததோ, அவ்வாறே பதினேராம் நூற்றண்டில் வட கடலிற்கப்பால் ஒரு பேரரசை ஒன்ற யிணைத்து நிறுவுவதும் கடினமாகவிருந்தது. உண்மையில், தென்மாக்கு, நோவே, எபிரிதீசு, இங்கிலாந்து என்பவற்றுக்கிடையே நிலவிய தொடர்பு தனி ஒருவரின் தொடர்பாயிருந்தது. அவை ஒவ்வொன்றும் திறமை மிக்க ஒரே மன்னனல் ஆளப்பட்டபோதிலும், அங்கு பேரரசுக்கு வேண்டிய ஆட்சியமைப்பும் பொதுவான தாயகப் பற்றும் இருக்கவில்லை. இங்கிலாந் தைத்தானும் எளுரிமையான நான்கு பெரும் பகுதிகளாகப் பிரித்து ஆளவேண்டியிருந்தது. நோவே ஒரு உண்மையான அரசியற் கூருக இன்னும் உருவாகாதிருந்தது. -
கணியூற்றுக்குப் பின்வந்த திறமையற்ற தேனிய வழித்தோன்றல்கள் தளர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்த, நாடுகளின் கூட்டிணைப்பை விரைவிற் சிதறடித்தனர். சுதந்திரமுடைய இங்கிலாந்தில் மீண்டும் பதவிபெற்ற சட் 66. சனிய மன்னன், ஒத்துக் கொள்வோணுகிய எட்டுவேட்டு என்பான் கந்தி னேவியாவை நோக்குவதைவிடுத்து, பிரெஞ்சு நோமண்டியை நோக்கி யிருந்ததுடன், நோமானியரது படையெடுப்பிற்கும் வழிகோலினன். கந்தி னேவியாவும் இங்கிலாந்தும் பல நூற்றண்டுகளாகப் பகைமையிலும் நட்பி லும் தமக்கிடையே நெருங்கிய தொடர்புடையவாயிருந்தபின்னர் இங்கி லாந்து நோமானியராற் பிரான்சின் பாதைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது,

கணியூற்றின் பேரரசு மறைதல் 47
அத்தொடர்பு கைவிடப்பட்டது. கந்தினேவியாவுடன் தொடர்புடைய கடல் சார்ந்த நோதிக்கு அரசாகவும் ஐரோப்பாவின் முக்கிய பகுதியுடன் சிறி தளவு மட்டும் தொடர்புடைய ஒரு நாடாகவும் இருக்காது, இங்கிலாந்து பல தலைமுறைகளாகப் பிரான்சிய நிலமானிய நாகரிகத்தின் ஒரு பாகமாய் விளங்கிற்று. அது உண்ணுட்டுவிடயங்களில் அக்கறைகொண்ட தாயும் பிரெஞ்சு மொழி பேசிய தன் மன்னர்கள் ஐரோப்பாவிற்கொண்ட பேராசைகளில் ஈடுபட்டதாயுமிருந்துவந்தது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாததொன்றெனவும், அனைத்தையும் நோக்குமிடத்து, இம்மாற்றத் தால் இழந்ததைக்காட்டிலும் அடையப் பெற்றவையே அதிகமென்றும், பொதுவாக எற்றுக்கொள்ளப்படுகிறது. அஃது அவ்வாறகவும் இருக்கலாம். ஆனல், கணியூற்று இங்கிலாந்தை முற்றிலும் வேறனதொரு முறையில் அமைக்க முயன்றன் என்ற உண்மை ஆழ்ந்த கவனத்துக்குரியதொன்ற கும். அவன் நிறுவிய பேரரசு ஆங்கிலேய நாட்டிலே கந்தினேவியர் இனத்தையும் வர்த்தக இனத்தையும் வலிமை பெறச் செய்துள்ளதாத லால், அப்பேரரசு குலைந்து போன போதிலும் அதனுல் நிலையான விளைவு எற்படாமலில்லை. M
அத்தியாயம் VII
ஏத்திஞ்சுப் போர் வரை நோமனியர் வெற்றி. 1042-1066
அல்பிரெட்டு காலந்தொட்டுக் கணியூற்றின் காலம் வரை பிரித்தானியா
வுக்குப் புது உருக்கொடுத்த செல்வாக்குக்கள் கந்தினேவியாவிலிருந்தே வந்துள்ளன. அடுத்த நூற்றண்டுகளாக, ஒப்புக்கொள்வோனகிய o TLGB வேட்டு அரசெய்திய நாள் தொட்டு, அச் செல்வாக்குக்கள் நோமண்டியி லிருந்து வரலாயின. ஐரோப்பிய வரலாற்றிற்கும் இக்கூற்று இதனினும் சிறிது குறைந்த அளவிற் பொருந்துவதாகும்.
பிறப்பிற் கந்தினேவியரான நோமானிய உயர் குடியினர், குடியேற்றம், போர் ஆகியவற்றில் வைக்கிங்குகளது முழுச் சத்தியையும் உடையராயிருந்த போதும் இலத்தீன் பண்பாட்டையே எற்றுக்கொண்டிருந்தனர். இதனலோ, வேறு காரணங்களினலோ கந்தினேவியர் தம் தாய்நாட்டிலும் இங்கிலாந்தி லும் பெற்றிருக்காத ஒரு தனிப்பண்பை நோமானியர் சிறப்பியல்பாகக் கொண்டிருந்தனர். அப்பண்பே அரசியல் ஐக்கியத்தை எய்துவதற்கும் பாலனத்தை ஒன்றக இணைத்து உறுதிப்படுத்துவதற்கும் அவர்களிடம் காணப்பட்ட ஒர் இயல்புணர்ச்சியாகும். இவ்வியல்புணர்ச்சியே, வெற்றி வீரன் உவில்லியம் இங்கிலாந்துக்களித்த பல நன்கொடைகளில் விலைமதிப் பற்றதொன்றகும்.
1042.

Page 84
148 நோமானிய அரசு
கந்தினேவியரது செல்வாக்கை ஐரோப்பாவிலிருந்து பின்னிடச் செய்த வர்கள் நோமானியரே. வைக்கிங்குகளின் முன்னேராற் பிரான்சிலிருந்து x மற்றெரு ‘தேனியக் குடியேற்றமாக வகுத்தெடுக்கப்பட்ட மாகாணமானது, ார்க்க பிரெஞ்சு மானிய முறையமைப்பின் மொழி, போர்க் கருவிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஓர் அரணுக மாறியது. இங் கிருந்தே அம் மானியமுறை, உலகத்தையே, - குறிப்பாக நேப்பிள், சிசிலி, பிரித்தானியத் தீவுகள் ஆகியவற்றை-வெற்றிகொள்ளப் புறப்பட்டது. செகப்பிரியர் காலத்திலிருந்ததைப் போன்று “தானே தனித்து ஒருலக மாய்”, ஆவதற்கு இன்னும் தகுதியற்றிருந்த பிரித்தானியா, இருறுறு ஆண்டுகளாகக் கந்தினேவியாவுக்கும் கண்டத்திற்குரிய ஐரோப்பிய நாடு களுக்குமிடையே ஊசலாடிற்று. காலப்போக்கில் அதன் நிலைமை பிரெஞ்சு மொழிபேசும் நோமானியக் கோமகனல் முரட்டுத்தனமாய் தீர்மானிக்க படலாயிற்று. எத்திஞ்சுப் போரானது ஆங்கிலப் பெரு நிகழ்ச்சியாய் மட்டு மன்றி, ஐரோப்பியப் பெரு நிகழ்ச்சியுமாயிருந்தது. ஏனெனில், பிரித் தானியா, கந்தினேவியரால் அடையமுடியாதவாறு அடைக்கப்பட்டும் பிரான் சியருக்குத் திறக்கப்பட்டுமிருந்ததனல், வைக்கிங்குகள் தங்கள் நுழைகழிக ளில் அடைபட்டிருந்தனர். அத்துடன் கிறித்துவ உலகை இவர்கள் பயமு றுத்தவுமில்லை. அல்லது ஈர்க்கவுமில்லை. வைக்கிங்குகள், நிலப் பெருமக்கள் பற்றிய நினைவானது மறைந்து கொண்டிருந்த வட உலகத்தில், எத்திஞ்சுச் சமரிற் குதிரை மீதிவர்ந்து ஈட்டியினற் போர்செய்து வெற்றி பெற்ற வீரர், தங்களுடைய “ அருளாண்மை ’ இலட்சியங்களையும் மானிய முறைத் தொடர்புகளையும் புகுத்தினர். இதற்குப் பல நூற்றண்டுகளுக்குப் பின், பிரித்தானியா சிறப்பான புதிய துறைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பாவி னின்றும் விலகி, வடபுலமும் தென்புலமும் விட்ட குறையை நிவிர்த்தி செய்யும்வரை ஆங்கு இலத்தீன் பேச்சும் இலக்கியமும் மதமும் ஈடும் எடுப்புமற்று விளங்கின.
எனினும், நோமானிய நாகரிகமும் இலத்தீன் நாகரிகமும் ஒன்றே என நாம் கொள்ளலாகாது. நோமானியர் இங்கிலாந்திற் பரப்பியது உண் மையில் பிராங்கோ-இத்தாலியப் பண்பாடாகும். இதுதான் பிரெஞ்சு இசைவாணனகிய தெயிலிபர் என்பானதும் இத்தாலிய திருச்சபையைச் சேர்ந்தவரான இலான்பிராங்கு, அன்செலும் என்பவர்களதும் பண்பாடா கும். ஆனல், நோமானியர் புகுத்திய முடியாட்சி, பாரிசிலிருந்த வல் லமைவாய்ந்த பிரெஞ்சு மன்னரது ஆட்சியின்றி, அவர்தம் வல்லமைமிக்க கோமக்களது முடியாட்சியாகவிருந்தது. , ............۔۔۔۔۔بسےـــــــــــــــــــــــ"
நோமானிய அரசு ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்தது. அஃது ஆங்கி லேயருக்குரியனவற்றின் தோற்றுவாய்களைத் தேடுவோராற் சிறப்பாக ஆயப் பட வேண்டியது. தேனியராலும் நோவீசியராலும் முதன்முதல் நிறுவப் பட்ட அவ்வரசு, பிரித்தானியாவில் வைக்கிங்குகள் அவ்வாறே நிறுவிய

நோமானிய மானியமுறை 149
மாவட்டங்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது. அன்றியும், அது பிரான்சின் ஏனைய பகுதிகளினின்றும் வேறுபட்டுமிருந்தது. நோமண்டியில் வாழ்ந்தோரிற் பெரும்பான்மையோர் பிறப்பாலும் பண்பாலும் பிரெஞ்சு உழவோராவர். இவர்கள் கமத்தொழிலில் அனுபவம் பெற்று விளங்கிய வர்கள். ஆனல், சிறுபான்மையினரான கந்தினேவியரில், ஆற்றுக் கழி முகத்தின் கரையோரமாகவிருந்த மீன்பிடிகாரரும் வர்த்தகரும் அந்நாட் டைச் சேர்ந்த மானியமுறைக் கால உயர்குடி மக்களும் அடங்குவர், கடற்கழியிலிருந்த இவர்களின் சந்ததியார் பிரெஞ்சுப் பேச்சுமுறை, மதம், வழமைகள் ஆகியவற்றைப் பின்பற்றியபோதிலும், தம் முன்னேர் போன்று சூறையாடுவதிலும் துணிகரச் செயலில் ஈடுபடுவதிலும் தணியாத அவாக் கொண்டு கடலிற் சென்று வந்தனர்.
நோமானியவள், மானியமுறைப் பரனகியபோது, சீன் நதிக் கரையிலே தான் சந்தித்த பிரெஞ்சு எதிரியிடமிருந்தும் நட்பாளரிடமிருந்தும் புதிய ஐரோப்பியப் போர்முறைகளை அறிந்து கொண்டான். அவன் தரையில் நின்று போர்க் கோடரியுடன் சண்டையிட்ட தன் முன்னேரைப் போன் றிராது, குதிரைமீதிவர்ந்து ஈட்டியும் வாளும் கொண்டு போரிட்டான் ; மேலும் அவுன் உயர்ந்த வட்டவடிவமான திடலொன்றை எழுப்பி, அதன்மீது மரத்தாலாக்கப்பட்ட அரணைக் கட்டியதின் மூலம் நாட்டிலே தன் நிலைமையைப் பாதுகாத்தான். அவ்வரணிலிருந்து உழவோரை மிகுந்த காவலுடன் ஆளவும் எதிரிகளை எதிர்த்து நிற்கவும் அவனல் முடிந்தது. முழு வளர்ச்சியடைந்த மானியச் சமூகத்தில் உறுதியான ஆயுதந் தாங்கிய குதிரைப் படையினரையும் தனிப்பட்டவரின் கோட்டை வீடுகளையும் இப்போது காணக்கூடியதாயிருந்தது. ஆனல், ஆங்கிலக் கால்வாய்க்கு அப்பாலிருந்து இவைகளை நோமானியர் புகுத்துமுன் இவைகளில் ஒன்ருவது இங்கிலாந் தில் இருந்ததில்லை." A.
பிரெஞ்சு முறைமையைப் பின்பற்றி நோமானியரது மானியமுறைமை
யும் கண்டிப்பாக ஆள்புலத்திற்குரியதாக அமைந்திருந்தது. மாகாணத்தி லிருந்த பரன்கள், தாம் கோமகனிடமிருந்து பெற்றுள்ள நிலங்கள்
1. இங்கிலாந்திலே திடலிற் கட்டியெழுப்பப்பட்ட கோட்டை வீடுகள் நோமானியருடையன. (பால்வின் பிரவுண் 1, 106-110 பார்க்க). சட்சணியரும் தேனியரும் பட்டணங்களையும் அரச கோட்டைகளையும் பாதுகாப்பதற்கு மண் வேலைகளான அடைப்புக்களை அமைத்திருந்தனரேயன்றி, நோமானியப் பரன்களைப்போன்று உயர்ந்த திடல்களை அமைக்கவில்லை. ஆங்கிலேய நிலப்பிரபு வின் அரண்மனை, வழக்கமாக அரண்செய்யப்பட்டிருக்கவில்லை. எனவேதான் நோமானியர் இங்கிலாந்துக்கு வந்தவுடன் உயர்ந்த திடல்களில் மரத்தாலாகிய அரண்களையும் பெருந்தொகை யாய்க் கட்டியெழுப்பியபோது அதற்கு எதிராக ஆங்கிலேய மக்கள் கூக்குரலிட்டனர். படிப்படி யாகவே நோமானியரின் கோட்டை வீடுகள் மரத்திற்குப் பதிலாகக் கற்களால் அமைக்கப்படலா யின. ஆணுல், முதலாம் உவில்லியத்தால் கட்டியெழுப்பப்பட்ட இலண்டன் கோபுரம் போன்ற ஒருசில சிறப்பான அரண்கள் தொடக்கத்திலேயே கற்களால் அமைக்கப்பட்டன என்க.

Page 85
150 நோமானிய மானிய முறை
காரணமாக, அவனுக்குப் படைச்சேவை செய்யக் கடமைப்பட்டிருந்தனரே யன்றி, இங்கிலாந்திலுள்ள பல நிலப் பெருமக்கள் போல, தமது சொந்தச் சார்பாக, அல்லது நாட்டுச்சார்பாகவுள்ள கடப்பாடு காரணமாக இன்னும் சேவை செய்யக் கடமைப்பட்டிலர். பரன்கள், கோமகனின் தலைமையில் ஆஞ்சு, மெயின், அல்லது பிரித்தனி ஆகியவற்றுக்கெதிராக, இடைவிடாது அவன் செய்துவந்த போர்களில் ஈடுபடக் கடமைப்பட்டிருந்தனர். பரன் ஒவ்வொருவனும் தன் கோட்டத்திலிருந்து தன் பங்குத் தொகையாக ஐந்து, அல்லது பத்து, அல்லது முப்பது நைற்றுக்களைத் தன் தலைமையில் அழைத்துச் சென்றன். பரனுடைய பங்கும், படையின் வசதிகளுக்கிணங்க, ஐவைந்து நைற்றைக்கொண்ட பகுதிகளாக எப்பொழுதும் கணிக்கப்பட் டிருந்தது. இம் முறைமையைப் பிற்காலத்தில் வெற்றிவீரன் உவி லியம் இங்கிலாந்தெங்கணும் ஒரேதன்மைத்தான முறையிற் புகுத்தி ஞன.
பரன்களிடமிருந்து நிலங்களைப் பெற்ற நைற்றுக்கள் தாமும் அவர் களுக்குப் படைச்சேவை செய்யவேண்டிய கடப்பாட்டுக்குட்பட்டிருந்தனர். நைற்றெருவன் “ நைற்றுக்குரிய கூலி” யாக நிலம் பெறுவதாயிருந் தால் அவன் தனக்கு நிலமளித்த பரனின் தலைமையில், அப்பரன் பின்பற்றிச் செல்லும் கோமகனது போர்க்களத்துக்கோ, அப்பரன் தன் பொருட்டுத் தொடங்கும் போருக்கோ செல்லவேண்டியவனவான் - நோமண்டியிலாவது இத்தகைய வழக்கமிருந்தது.
இப்படைச்சேவை பெயரளவில் ஒராண்டில் நாற்பது நாட்களாவது அளிக் கப்படல் வேண்டும். ஆனல், சிலவேளைகளில் தொடரிகலை முடிப்பதற் காக இச்சேவை இதனினும் நீண்டகாலத்துக்குப் பெறப்படுவதுமுண்டு. பரன்களுக்கிடையே நடைபெற்ற தனிப்போர்களுக்கோ, பிரித்தனியிலும் ஆஞ்சுவிலும் கோமகன் செய்த தொடரிகலுக்கோ ஒருசில வாரங்களுக்கு மட்டும் படைச்சேவை போதுமானதாயிருந்தது. ஆனல், இங்கிலாந்தைக் கைப்பற்றுவது போன்ற ஒரு நீடித்த முயற்சிக்கு மானியமுறைக் கடப் பாட்டினின்றும் வேறுபட்டதாய், நீண்டகாலச் சுயேச்சைச் சேவைக்கான உடன்படிக்கையொன்றும் சமயத்துக்கேற்றவாறு செய்யவேண்டியிருந்தது. மானிய முறைப்படி பெறும் படைச்சேவைக்காலம் தொலைவில் நடை பெற்ற போர்களுக்குச் சற்றேனும் போதுமானதன்று ; போக்குவரத்துக் களில் அபிவிருத்தி ஏற்பட்டகாலை மானியமுறை வீழ்ச்சியுற்றதற்குள்ள தலையாய காரணங்களில் இதுவும் ஒன்றகும். தேனியரதும் ஏனையோரதும் படையெடுப்புக்களின்போது நாட்டுப்புறத்தைப் பாதுகாப்பதற்கும் தனிப் பட்டவர் நிகழ்த்திய போர்கள் காரணமாகவும் தொடக்கத்தில் மானிய முறைமை ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய முறைமை பெரிய அரசுகளின் வளர்ச்சிக்கோ நீடித்த மிகப்பரந்த இராணுவ நடவடிக்கைகளுக்கோ எற்ற தாயமையவில்லை.

கோமகவாட்சியின் வலிமை 15.
சமூகத்தின் அடிமுதல் நுனிவரை பிரபுவிற்கும் பொதுமக்களுக்கும் உள்ள நிலமானிய உறவு நோமண்டியில் மாறறியமம் படைத்ததாயிருந்தது ; ஆள்புலத்தையொட்டிய்தாகவும் தந்தையிடமிருந்து தனயனுக்குச் افقیہہ [9> செல்லும் பரம்பரை வழக்கத்தையொட்டியதாகவும் இருந்தது. சமூகத் தின் மேற்படியில் கோமகனிருக்க, அவனுக்குக் கீழே பரன்களும் அவர்க ளொவ்வொருவருக்கும் கீழ் நைற்றுக்களும் அவர்கள் எல்லோருக்கும் கீழ் உழவோரும் இருந்தனர். உழவோன் ஒர் அடிமையாய், தனது நிலத் துடன் கட்டுண்டவயிைருந்தான்; அன்றியும், அந்நிலத்தின் சொந்தக் காரணுன பிரபுவுக்கும் அவன் அடிமையாகவிருந்தான். ஆங்கிலேயதேனியரது இங்கிலாந்தில், ஆள்புலவாரியாக அமைந்திருந்த மானிய முறை, கட்டுக்கோப்புத்தளர்ந்த ஒருமுறையாய் இருந்தது; எனவே, உழவனும் நைற்று எனும் வீரனும் ஒரு பெருமகன்பாற் செலுத்தி வந்த மானிய சேவையைத் தாம் விரும்பியவாறு இன்னெருவனுக்குச் செலுத் தல் இயல்வதாயிருந்தது. ஆயின், நோமண்டியில் இத்தகைய வசதி யிருக்கவில்லை. எனவே, நோமானிய சமூகம் கந்தினேவியர் ஆங்கிலேயசட்சனியர் ஆகியோரின் சமூகத்தைச் காட்டிலும் கூடிய கட்டுப்பாடுடையதா யிருந்தது. ஆனல், அச்சமூகம் உறுதியானதாயும் அமைதி, போர் ஆகிய காலங்களுக்கேற்ற மிகத் திறமையான அமைப்பையுடைத்தாயு மிருந்தது.
நோமண்டியிற் சமூகவமைப்பும் இராணுவமுறையும் இங்கிலாந்திற் போலன்றி மிகவும் கடுமையான மானியமுறைமையை யொட்டி அமைந்திருந் தபோதிலும், அங்கிருந்த அரசியல் முறை மானிய முறைமையை யொட்டி முற்றிலும் அமையவில்லை. ஏனெனில், அந்நாட்டுக் கோமகன், மானிய முறைமை கடுமையாக நிலவிய நாடுகளிலிருந்த அரசர்கள் பிரயோகிக்கக் கருதவும் ஒண்ணு அத்துணை அதிகாரத்தைத் தன்பரன்கள் மீது பிரயோகிக்கத் தொடங்கினனதலின். மானியமுறைமைக் காலத்துப் பிரெஞ்சு மன்னன் நோமானியக் கோமகன்மீது திட்டமற்ற, அரைகுறையான மேலாண்மை உரிமை பாராட்டினன் ; ஆனல், அக்கோமகனின் ஆள்புலங்களிலோ, பரிசு நகரசைச் சுற்றியிருந்த சிறிய அரசநிலப் பகுதி தவிர்ந்த எனைய பிரெஞ்சு மாகாணங்களிலோ பிரெஞ்சு மன்னன் எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாதிருந்தான். இதற்கு மாறக, நோமானியக் கோமகன் தனக்குரிய கோமகவுரிமையில் ஒரு மானியமுறைப் பிரபுவைக் காட்டிலும் கூடிய செல்வாக்குடையவனுயிருந்தான். நோமண்டியிலிருந்த உண்மையான முடியாட்சியின் தனித்தன்மைகள் கந்தினேவியப் பண் பையோ, பிரெஞ்சுப் பண்பையோ ஒட்டியனவல்ல அவை நோமானியருக் கேயுரிய தனிப்பண்புகளாகும். வெற்றிவீரன் உவில்லியமும் அவனுடைய புத்திரர்களும் தமது கோமகவுரிமையிலிருந்த முடியாட்சிக்குரிய தனிப்பண் புகளே ஆங்கிலத் தீவகத்திற்குக் கொண்டு சென்றனர். ஆங்கு இவர்கள் ஆங்கிலேய அரசபதத்தைவலியிறுத்தி, பிரான்சு, சேர்மனி, அல்லது

Page 86
52 கோமகவாட்சியின் வலிமை
இசுப்பெயின் ஆகிய நாடுகளின் முடியாட்சிகள் எவ்வகையிலும் ஈடாகாப் பெருமைவாய்ந்த மத்தியகால முடியாட்சியாக அது விருத்தி யடையுமாறு செய்தனர்.
முதலாவதாக, நோமானியரது ஆள்புலத்திற் பரன்களுக்குரிய பெரிய நிலப்பரப்புக்கள் எதுவும் இல்லாதிருந்ததுடன், கோமகனுக்குப் பணியாது அவனை எதிர்த்து நிற்கக்கூடிய பலம்பொருந்திய தனியான பரன் எவனும் இருந்ததில்லை. ஒத்துக்கொள்வோணுகிய எட்டுவேட்டு ஆண்ட இங்கிலாந் திலும் அவன் காலத்தைச் சேர்ந்த பிரான்சிலும் நிலவிய மாணிபமுறைக் குரிய பெரும் எள்களினல் நடாத்தப்பட்ட அரச்ாங்கம் போன்ற ஒன்று நோமண்டியில் இடம்பெறவில்லை. நோமானியக் கோமகன் தனக்கென உண்மையான பாலன அலுவலரை வைத்திருந்தான். இவ்வலுவலர், கோமகனுக்குரிய ஆணிலங்களில் அமீனுவின் கடமையினின்றும் வேறு பட்ட, முற்ருகப் பொதுமக்களுக்குரிய செயல்களை ஆற்றினர். இவ்வலு வலர் “ விக்கோந்து ’ என்றழைக்கப்பட்டனர். இவர்கள் கோமகனுக்குரிய வருமானங்களை அறவிட்டும் அவனுடைய படைகளைப் போருக்கிட்டுச் சென் றும் அவன் மன்றுகளே நடத்தியும் அமைதியை நிலைநாட்டியும் வந்த னர். பிரெஞ்சு மன்னனுக்கு இத்தகைய அலுவலரில்லை. பின்னர், நோமானிய விக்கோந்தும் பழங்கால ஆங்கிலேய மாநகர் மணியமும் ஒரே தொழிலைச் செய்தனராகக் கருதியகாலை, மாநகர் மணியத்தின் நிலை பெரிதும் வலுப்பெற்றது . அத்துடன், இம்மாநகர் மணியங்கள் மத்திய கால ஆங்கிலேய முடியாட்சியின் பிரதான தூண்களாகவும் அமைந்தனர். நோமானியரது நிதிநிலை ஐரோப்ாபவிலேயே மிகச் சிறந்ததாயிருந்தது. கோமகனும் அப்பொருள் நிலைக்கேற்ற அதிகாரத்தைப் பெற்ருந்தான். அவன் பணமாகத் தன் வருமானத்தை அறவிட்டான். ஆனல், மேலாண் மையுடைய பிரெஞ்சு மன்னன் தன் ஆட்சியிலிருந்த பண்ணைகளைத் தன் வாழ்விற்காக எதிர்பார்த்து, அப்பண்ணைகளின் விளைவையே குத்தகையாக அறவிட்டு வாழ்க்கை நடத்தினன். நோமண்டியிற் கோமகனைத் தவிர வேறெவரும் நாணயம் அச்சிடத் துணியமாட்டார். சொந்தக் கோட்டை வீடுகள் கோமகனது உத்தரவுச் சீட்டுடனேயே நிறுவப்படலாம். ஆனல், அவனுக்குத் தேவை ஏற்படும்பொழுது அக் கோட்டை வீடுகள் அவனுக்கு ஒப்புவிக்கப்பட்டல் வேண்டும். தனிப்பட்டோர் போர்தொடுத்தல், சட்டத் திற்கு முரணுனதன்றெனினும், கோமகனுக்குரிய அதிகாரத்தால் அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆகவே, இங்கிலாந்து மீது 1066 இற் படையெடுக்கப்பட்ட பொழுது, அஃதொரு தனியான போர்த் தளபதியின் தலைமையிலே தற்காலிகமாகப் படையிலமர்த்தப்பட்ட, அஞ்சாநெஞ்சினரைக்கொண்ட பல்லினக் குழுவின ரால் மட்டும் தாக்கப்படவில்லை, என்பது புலப்படும். ஆயினும், அப்படை யெடுப்பில் அத்தகையோரும் ஒரு கூருக அமைந்திருந்தார். இங்கிலாந்து,

நோமண்டியில் அரசும் திருச்சபையும் 53
மிகச் சிறந்த முறையிலமைக்கப்பட்டதான அந்நாளையிலிருந்த ஐரோப்பியக் கண்டத்து அரசொன்றிலுைம் தாக்கப்பட்டது; இந்த அரசானது தன்னல் வெற்றிகொள்ளப்பட்ட பரந்ததும் புதியதுமான ஆள்புலத்திலே தடை யின்றி விரைவில் அபிவிருத்தியடையக்கூடிய, தனித்தன்மைவாய்ந்த நிறு வகங்களைப் பெற்றிருந்தது. நோமானிய அரசுக்குரிய நிறுவகங்களைக் காட்டிலும் நோமானியக் கோமகனும் அவனுடைய குடிமக்களும் தம் முடன் கொணர்ந்த அறிவாற்றல், செயலாற்றல் சம்பந்தமான பழக்க வழக்கங்களே இங்கிலாந்துக்கு மிக மேலானவையாயிருந்தன. உவில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுப்பதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, நோமண்டியில் அவனுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த பரன்களுடன் போரிட்டு அவர்களை வெற்றிகொண்டிருந்தான். அவன் எட்டுவயதுச் சிறுவனக அரசுரிமைக்குச் சிறிதும் உரித்தில்லாத முறையில் அரசைப் பெற்றிருந்த போதே, மானியமுறை ஆட்சியறவை அதன் கோர வடிவிற் கண்டும், அதனை நசுக்கியும் மக்களைப் பணியச் செய்துமிருந்தான்.
கடைசியாக, ஆனல் முதன்மையிற்குறைவற்றதாய் அமைந்தது யாதெனில் நோமண்டியிலிருந்த திருச்சபையானது கோமகவதிகாரத்துடன் உறவுபூண் டிருந்தமையாகும். தேனிய உவோடன் வழிபாட்டிலிருந்து பிரெஞ்சுக்கிறித் துவ மதத்தை ஆவலுடன் தழுவியிருந்த பிற்காலக் கோமக்கள், பதித ரான தம் முன்னேர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருந்த ஆச்சிரமங்களையும் பிசப்பாண்டவர் ஆட்சிப் பகுதிகளையும் புதுப்பித்ததுமன்றி, அவைகளுக்கு மீண்டும் நிதி வழங்கியுமிருந்தனர். இவ்வுதவிக்குக் கைம்மாருக அக் கோமக்கள் பிசப்பாண்டவர் அனைவரையும் பெரும்பாலான மடாதிபதிகளே யும் தாமே நியமித்தனர். ஆகவே, திருச்சபைத் தலைவர்கள் கோமக்க ளின் பூட்கையை எற்கவேண்டியவராயினர். இத் தலைவர்களிற் சிலர் திருச்சபையதிகாரிகள் என்ற போர்வையில் அண்மையில் கோமனுக்காகப் போரிடும் வெறும் பரன்களாகவே இருந்தனர். வெற்றிவீரன் உவில்லி யத்தின் குடிமக்களில் மிகச் செல்வாக்குப் பெற்றிருந்தவன் முரட்டுத் தன்மையும் கீழ்ப்படியாமைக் குணமுமுடைய அவனுடைய சகோதரனன ஒடோ என்பவனவான். இவன் இளம் பிராயத்தினனுக இருந்தபோதே பயூ எனும் பகுதிக்குப் பிசப்பாக்கப்பட்டிருந்தான். இவன் தன்னைச்சேர்ந்த நூற்றிருபது நைற்றுக்களுக்குப் போரிலே தலைமைதாங்கிச் சென்றன். வாளினல் இரத்தஞ் சிந்தும் போரில் மதகுரவர் ஈடுபடுவதற்குத் திருச் சபை தடைவிதித்ததால், எத்திஞ்சுப்போரிலே தன் கணையத்தை வீசிப் போர் செய்தான்.
எனைய நோமானியத் தலைமைக் குருமார் உயர்ந்த வகையினராவர். பதினேராம் நூற்றண்டின் தொடக்கம் முதல் வலிமையான சீர்திருத்த இயக்கமொன்று பரவி வந்தது. குளுனிய துறவுமுறையின் புத்துயிர்ப் பிற்கு, கோமக்கள் ஆதரவாளராகவும் வழிகாட்டிகளாகவும் இருந்தனர்.

Page 87
154 நோமண்டியில் அரசும் திருச்சபையும்
இத்தாலியில் மதத்திற்கும் கல்விக்கும் மையமாக விளங்கிய விடங்களுக் குத் தொலைவாயிருந்த அந்நாட்டில், பதித, அல்லது கிறித்துவ உருவில் மிலேச்சத்தன்மையானது எவ்வித இடையூறுமின்றி நெடுங்காலமாக ஆட்சி செலுத்தியிருக்கக்கூடிய அந்நாட்டில், பெக்கு ஆச்சிரமங்களைப் போன்ற பல ஆச்சிரமங்கள் வளர்ச்சியுற்றதோடு, அவை அல்பிசுக்கப்பாலிருந்த மிகச்சிறந்த அறிவுடையோரை ஈர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தனவாயு மிருந்தன. பாவியா நாட்டு இலான்பிராங்கு என்பாரும் ஆவோசுற்ற றாட்டு அன்செலும் என்பாரும் ஒருவர்பின் ஒருவராக, பெக்கு மடத்துத் தலைவராகவும் கந்தபெரி மேற்றிராணியாராகவும் இருந்தனர். கல்வி, மதம் ஆகியவை மத்தியகாலத்தில் உலகப்பொதுவான தன்மைவாய்ந் திருந்தன என்பதை இவ்வுண்மையே தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும். இந் நிலையானது, பெரும்பாலான மனிதர், அடிமைகளென்ற சட்டமுறை யான நிலையினலோ, போக்குவரத்துககுரிய சாதனங்களின்மையினலோ தாம் பிறந்த கிராமங்களை எஞ்ஞான்றும் விட்டு நீங்கமுடியாதவராய், தனித்தொதுங்கித் தம் வாழ்க்கையைக் கழித்த முறையினின்றும் மிக மாறுபட்டதாகும். மனிதன் மற்றெரு மனிதனுடன் தொடர்பு கொள் வதற்கு இடையூறயிருந்த பெளதிக, சமூக தடைகள் தவிர்க்க முடியாதன வாயிருந்தன ; ஆனல், நாட்டினத் தடைகள் எவையுமே இருந்ததில்லை. தூர இத்தாலியிருலிந்து உரோமன் சட்டங்களையும் திருமுறைச் சட்டங்களை யும் அக்காலத்து மதவியல், தத்துவம் ஆதியன பற்றிய அறிவையும் இலான்பிராங்கு, அன்செலும் ஆகிய இருவரும் முதலில் நோமண்டிக்கும் அங்கிருந்து இங்கிலாந்துக்கும் கொண்டு சென்றனர். இவ்விருவரையும் * அந்நியர் ” எனக் குறைகூறியவர் மிகச்சிலரே. பல்கலைக்கழகங்கள் தோன்றுவதற்கு முந்திய ஊழியில், பெக்கிலிருந்தவை போன்ற ஆச்சிரமங் களே கல்வியறிவுக்குத் தலைசிறந்த நிலையங்களாக விளங்கின. இதற் கிடையில், நோமானியரது நாட்டிற் கட்டடக் கலையானது பொன்றச் சிறப் புடையதன் சின்னங்களைப் பொறித்துக்கொண்டிருந்தது. கல்லாலாய அரண் மனைகளுக்குப் பெயர்போன காலம் 12 ஆம் நூற்றண்டேயெனினும் நாம றிந்த நோமானிய மடங்களும் தலைமைக் கோயில்களும் முதலாம் உலில்லி யம் இங்கிலாந்துக்குக் கப்பலேறிச்சென்ற காலத்திலேயே தோன்றிவிட்டன.
நோமானியர் மிலேச்சத்தன்மையுடைய ஐரோப்பியரைக் காட்டிலும் சிற் சில துறைகளில் முன்னேறியிருந்தனரெனினும், அவர்கள் நாகரிக மக்கள் என்று நாம் கருதக்கூடிய அளவில் முன்னேறியிருக்கவில்லை. அவர்கள் அடைந்திருந்த முன்னேற்றமானது பிற்கால இங்கிலாந்தின் அபிவிருத்திக்கு மிகவும் வேண்டப்பட்டதாய்க் காணப்பட்டது. அவர்களிடையே கற்றறிந்த போதகர் சிலரிருந்தபோதிலும், உயர் வகுப்பினர் அனைவரும் எழுத்தறி
1. 1001 ஆம் ஆண்டிற்கூட நோமண்டியில் வாசிக்கக்கூடிய போதகர் எவரும் இருக்கவில்லை
என்று பேகண்டிய நாட்டுத் துறவியொருவர் கூறினர். அசுக்கின்சின் “ஐரோப்பிய வரலாற்றில் நோமானியர்” என்னும் நூலின் 164 ஆம் பக்கம் பார்க்க.

கட்டொழுங்குடைய மிலேச்சர் 55
வற்றவராயிருந்தனர். அங்கு வழக்கறிஞர் எவரும் இருந்ததில்லை ; அன்றியும், குருவாயத் தினரைத் தவிர, உயர்தொழில் பயின்றேர் தாமும் இருந்ததில்லை. மத்தியகாலத்தின் பிற்பகுதிக்குரிய கலை, வர்த்தகம், அருளாண்மை ஆகியவை அங்கு இன்னும் தோன்றவில்லை. இத்தகைய அமிசங்கள் எவையேனும் நாகரிகங் குறைந்த பரன்கள் வாழ்ந்த மரத் தாலாய கோட்டைகளிலும் ஆங்காங்கேயிருந்த கற்களலாான “பாதுகாப்பு அறை ’களிலும் காணப்பட்டதேயில்லை. நோமானியர், தம் காலத்து இங்கி லாந்திலிருந்த ஆங்கிலேய-சட்சனியர், அல்லது தேனியருக்கொப்பாய்த் தாமும் வன்கணளராயிருந்ததுடன், சுறுசுறுப்பும் முயற்சியுமுடையோரா யிருந்ததால், வெறுக்கத்தக்க கொடூரமான செயல்கள் பலவற்றையும் இழைத்தனர். சிறைப்பிடிக்கப்பட்டவர் கலகக்காரராகியோரின் கைகால்களை வெட்டல், கண்களைத் தோண்டல், பகைநாட்டுக் குடிமக்களை மொத்தமாக வதஞ்செய்தல், அந்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தையும் பாழாக்குதல் ஆகியவற்றை நோமானியர் தம் போர்முறைகளாகக் கொண்டிருந்தனர். இங்கிலாந்து இத்தகைய போர் முறைகளின் விளைவை விரைவில் அனுப விப்பதாயிற்று. நோமானியர் இப்பொழுது விசுவாசமுள்ள திருச்சபை பூழியராக மாறியிருந்தபடியால், மனிதத்தன்மையுடன் ஒமுகும் விடயத் தில் பதிதரான வைக்கிங்குகளைக் காட்டிலும் ஒரு சிறிதே முன்னேறி யிருந்தனர். ஆனல், அவர்கள் அறிவிலும் நிருவாகத்திறனிலும் நிச்சய மாக முன்னேறியிருந்தார்கள். திருச்சபையானது மிலேச்சாரன இவர்களுக் குச் சமூகத்தினை அமைக்கும் முறையைக் கற்பித்தது. திருச்சபையின் போதனையையும் சாதனையையும் காட்டிலும் இத்தகைய சிறந்த சமுதாய அமைப்பே இறுதியில் இவர்களே மனிதப்பண்பு, நியாயம் ஆகிய துறை களின் முதற்படிகளே அடைவதற்கு வழிகாட்டிற்று.
நோமண்டியிலிருந்த கோமகவதிகாரம் இங்கிலாந்திற்கு மாற்றப்படின், அங்கு முழு அமைதி நிலவுவதற்குத் துணை செய்திருக்குமெனினும், வெற்றிவீரன் உவில்லியம் ஆண்ட நோமண்டி அமைதியற்ற நாடாயிருந் தது. மத்திய காலங்களுக்கே உரித்தான மானியமுறைமாகாணங்களிற் போன்று, தனிப்பட்டவரின் போரினலும் பகிரங்கப் போரினலும் பிற வல்லந்தச் செயல்களினலும் நோமண்டியில் ஒயாது அமைதியின்மை நிலவிற்று. மத்திய காலத்திலிருந்த மக்கள் கருத்தளவிற் கிறித்துவ உலகின் ஐக்கியத்தைப் பற்றிய உணர்ச்சியுடையவராயிருந்ததால், அக்காலம் பாதுகாப்பையும் அமைதியையும் பெற்றிருந்ததெனக் கோடல் தவறகும். இக்காலத்து இனப்பகையிலிருந்தும் நாடளாவிய முறையிலமைந்த போரி லிருந்தும் மத்தியகாலம் தப்பியிருந்தது உண்மையே. ஏனெனில், சமு தாய் அமைப்பும் போக்குவரத்து வசதிகளும் செப்பமற்று இருந்தமையால், பிரான்சிலும் சேர்மனியிலும் இனவழித் தாயகப் பற்று உருவாதற்கு வாய்ப்பு இருந்ததில்லை ; அத்தகைய பற்று இன்மையால், அவை வெவ் வேறு நாடுகள் என்ற முறையில் *"ద போரிடவும் மிம்ச்3 వీటి காழுமபு த ழசச SID

Page 88
0421066.
56 ஒப்புக்கொள்வோன் எட்டுவேட்டு
வில்லை. ஆனல், இவ்விரண்டு நாடுகளிலுமிருந்த சிறிய மானியமுறைப் பிரதேசங்கள் இடையருது தம்முட் போர்செய்து வந்தன. இப்போர்கள் தனிப்பட்டோரின் விருப்பு வெறுப்புக்களாலேயே எற்பட்டனவெனினும், அவை மிகவும் பயங்கரமாக நடைபெற்றன. மானியமுறைமைக் காலத்தில், ஒன்றுக்கொன்று அயலாகவிருந்த பிரதேசங்கள் தம்மிடை ஓயாது செரு விளைத்தல் வழக்கமாயிருந்தது. அப்போர்களில் மரணம், அநீதி, பழி ஆகியவை நேருவது அன்ருட வழக்கமாயிருந்தது .ஆனல், நோமானியக் கோமக்கள் ஆண்ட காலத்தில், அவர்கள் தங்கள் பதவி பற்றிக் கொண் டிருந்த கருத்துக்களிலே சிறந்த வாழ்க்கை நிலைமைக்கான அமிசங்கள் தோன்றுதல் காணலாம் ; அக்கருத்துக்கள் தீவாகிய நாடொன்றுட் கைவரப் பெறின், சாதாரண மத்தியகால இராச்சியத்திற் காணப்படும் குலைவு நிலைக்குப் பதிலாகச் சிறந்த சமூகமொன்று சில தலைமுறைகளுக்குள்ளா கவே உருவாதற்கு இடமுண்டு.
இதனிடையில், தம் போக்கிலேயே விடப்பட்டிருந்த இங்கிலாந்து வாசிகள், அத்தீவை ஐக்கியப்படுத்துவதிலோ, அங்கோர் உறுதியான முடியாட்சியை அமைப்பதிலோ ஒரு சிறிய முன்னேற்றமாயினும், அல்லது எவ்வித முன்னேற்றமாயினும் அடையவில்லை. கணியூற்றின் புத்திரர்கள் தம்தந்தை நிறுவிய கடல்சார்ந்த நோதிக்குப் பேரரசை நிலைநாட்டவோ, இங்கிலாந்தை ஒரு தேனியக் குடியேற்றமாகக் கொண்டு ஆட்சிபுரியவோ தவறிவிட்டனர். இதன் பயனக அல்பிரெட்டு அரச வமிசம், எட்டுவேட்டு என்பவன்மூலம் மீண்டும் ஆட்சிப்பீடமேறிற்று. இவனே பல காலங்களுக்குப்பின் “ ஒத்துக் கொள்வோன்’ என்றழைக்கப்பட்டான். ஆலோசனையற்ற எதெலிரட்டு என் பானுக்கும் நோமண்டியின் முன்னட் கோமகனெருவனின் மகளாகிய எம்மா என்பாளுக்கும் இவன் பிறந்தவனுவன்.
சிங்காசனத்திற்கு ஆங்கிலேய வமிசம் மீண்டும் உரிமைபெற்ற காலை, கந்தினேவியரது ஆதிக்கம் முற்றுப்பெற்றதென்றலும், அஃது ஆங்கிலேய சட்சணிய நாட்டவரை மீண்டும் முன்னேற்றப் பாதையிற் செலுத்தத் தவறியது. அல்பிரெட்டு, அல்லது அரோல் போன்ற வேருெருவன், எதிர்ப்பேயில்லாத அந்த அரசுரிமையை அனுகூலமானதோர் வேளையிற் பெற்றிருந்தால், நோமானியரது தலையீடின்றி இங்கிலாந்தை ஐக்கியப் படுத்துவதற்கும் சீர்திருத்துவதற்கும் உருப்படியாக யாதும் செய்திருக் கலாம். ஆனல், “ ஒப்புக் கொள்வோன்’ என்பான், உள்ளத்தால் ஒரு பிரெஞ்சித் துறவியாக இருந்தானேயன்றி, உண்மையான ஆங்கிலேய மன்னனுகவிருக்கவில்லை. அவன் அரசியல் ஞானம் சிறிதும் இல்லாதவன யும் அரசியலிற் பேரவா அற்றவனயும் இருந்தான். நோமானிய குருவாயத் தினர் கடைப்பிடித்த மத வாழ்க்கையே அவனுடைய உற்சாகத்தைக் கிளறிற்று. இங்கிலாந்திலே தேனியர் ஆட்சிசெய்தபோது நாடுகடத்தப்பட்ட எட்டுவேட்டு தனது பிள்ளைப்பருவந்தொட்டு நடுத்தர வயது வரை நோமா னியத் துறவிகளிடையே தன் நீண்ட காலத்தைக் கழித்திருந்தான்.

நோமானியர் செல்வாக்குப் பரவுதல் 157
தன் தாய் வழியால் நோமானியனுக விருந்த எட்டுவேட்டு மீண்டும் அரசுரிமையை ஏற்றுக்கொண்டபோது, தோவரில் இரண்டாம் சாள்சு இறங் கியபோது எவ்வாறு ஆங்கிலப் பண்பு அற்றவனுய் இருந்தானே, அவ்வாறி ருந்தான் எனலாம். எட்டுவேட்டு பேசியது பிரெஞ்சு மொழியே , அவன் சிந்தித்ததும் அம் மொழியிலேயே ஆகலாம். தான் செய்த சிலவற்றலும் செய்யாதுவிட்ட பலவற்றலும் அவன் ஆங்கிலேய வரலாற்றில் எடுத்துக் கொண்ட பாகம், நோமானிய வெற்றிக்கு வழிகோலியமையேயாகும்.
திருச்சபையிலும் அரசிலுமுள்ள உயர்ந்த பதவிகளுக்கு நோமானியரை அமர்த்துவதே அவனுடைய ஊக்கம் மிகுந்த பூட்கையாயிருந்தது. அவ் வாறு அவன் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தலைப்பட்டது யாதுக்கோ வெனின் அவன் தன் வாழ்க்கையின் சிறந்த பகுதியிற் பெற்ற அனுப வத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட தன் சொந்த விருப்பங்களுக் காகவும் நட்புக்காகவும் மட்டுமன்றி, கோடுவின் எனும் வேளது அளவு கடந்த செல்வாக்கைத் தணிப்பதற்காக, ஆற்றலும் விசுவாசமுங் கொண்ட சார்பாளரைப் பெறுதற்பொருட்டும் என்க. கோடுவினே எட்டுவேட்டை அரசிருக்கையில் அமர்த்தியதனல், எனைய அரசமைப்பாளர் போன்று தானே அரண்மனைச் செயல் முதல்வனக இருக்க எண்ணினன். அரசன் நோமானியரின் உதவியின்றி, அதிகப் பலம் வாய்ந்திருந்த இப் பிரசையை எதிர்ப்பதற்கான அறிவையோ, மனுேபலத்தையோ பெற்றிருக்கவில்லை.
எட்டுவேட்டு, நோமானியர் பலரைப் பிசப்பாண்டவர்களாக நியமித்தது மன்றி, அவர்களிலொருவரான, சுமியெசைச் சேர்ந்த உறேடேட்டு என் பாரை இங்கிலாந்தின் தலைமைக் குருவாகவும் நியமித்தான். ஐரோப்பிய கண்டத்துக்கு வாயிலாக விளங்கிய சசெட்சுத்துறைகள் பல, நோமானி யரிடம் விடப்பட்டன. எரிபோட்சயரானது, இரல்பு எனும் நோமானிய வேளிடம் ஒப்புவிக்கப்பட்டது; உவெல்சு மாச்சுப் பகுதியின் தலைமையையே இப்பதவி குறித்தது; இதனல் தொலைவிலிருந்த அந்தக் காடடர்ந்த கோட்டத்தில் அவன் நோமானிய படைமுறைமையைப் புகுத்தல் எளி தாயிற்று. அத்துடன், ஆங்குச் சென்ற நோமானியர், நோமானியத் தறு கண்மை, பேராசை ஆகியன எத்தகையன என்பதை அப்பகுதியில் வாழ்ந்த வர்கள் ஓரளவு அறியுமாறு செய்தனர். இரால்பும் அவனுடைய நைற்றுக் களும் சொந்தக் கோட்டை வீடுகளை அமைத்தனர்; இந்நவீன கோட்டை களைத் தீமைக்கு அறிகுறியாகச் சுதந்திரமுடைய சட்சனியர் கருதலாயினர். உவெல்சு நாட்டுக் குலங்களோடு செய்த போர்களில், குதிரைமீதிருந்து சண்டை செய்யும் முறையை நிலப்பெருமக்களுக்கு இரால்பு பயிற்றுவிக்கச் செய்த முயற்சி பயன்தரவில்லை. குதிரைப் படைகொண்டு போரிடுவதான இன்றியமையாத கலையை இரால்பிடமோ, வேறெவரிடமோ இருந்து பயிலு வதற்கு ஆங்கிலேய வீரர் மறுத்தமையே எத்திஞ்சுப்போரில் அவர்களது தோல்வியை நிர்ணயிப்பதாயிற்று.

Page 89
58 நோமானியர் செல்வாக்குப் பரவுதல்
அரசவையில், “ ஒப்புக் கொள்வோனகிய ’ எட்டுவேட்டின் செயலாளரும் அவன் குடும்பக் குருக்களும் நோமானியராகவே இருந்தனர். இலண்ட் னுக்கு மத்தியில், உவால் புரூக்கு வாயிலில், உரூவானைச் சேர்ந்த உவைன் வியாபாரிகளுக்கெனச் சரக்கு எற்றியிறக்கும் துறையொன்றிருந்தது. ஆகவே வெற்றிவீரன் உவில்லியம் பெவன்சி எனுமிடத்தில் இறங்கியபோது, கால் நூற்றண்டளவாகத் தனது அரசியலில் நோமானிய கட்சியொன்றைக் கொண்டதாய், நோமானியரின் செயல்முறைகள், வழமைகளை அறிந்தும் அஞ்சியும் போற்றியும் வந்த ஒரு தீவிலேயே கால்வைத்தான்.
ஆனல், நோமானிய வெற்றிக்கு அடிகோலுகையில், அவன் ஆற்றிய செயலைவிட, ஆற்றது விட்டனவே அதி முதன்மை வாய்ந்தவை. முத லாவதாக, அவன் கோடுவின் எளின் மகளைப் பெயரளவில் மணமுடித் திருந்தும் துறவிகளுடைய கற்புநெறியாகிய இலட்சியத்தைப் பின்பற்றிய தனல், தனக்குப்பின்னர் அரசுரிமைக்குப் போட்டி ஏற்படுவதற்கான வழியை வேண்டுமென்றே விட்டுச் சென்றன். இரண்டாவதாக, இங்கிலாந்தைப் பரிபாலனத் துறையில் ஐக்கியப்படுத்தவோ, அதன் சட்டங்களையும் நிறுவ கங்களையும் அபிவிருத்தி செய்யவோ அவன் ஒருபோதும் முயன்றனில்லை. இவற்றைப் பூரணமாகச் செய்வதென்பது ஆயுதந்தாங்கிய வெற்றி வேந் தனைத் தவிர, ஒருகால் வேறெவராலும் ஆற்றமுடியாததொன்றய இருக் கலாம். ஆனல், எட்டுவேட்டு இதனைச் செய்வதற்கு எத்துணையும் முயன்ற னில்லை. 1
நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய தடையாக இருந்தது யாதெ னில், இங்கிலாந்தானது தனித்தனியாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் மன்னனின் அலுவலாளர் ஒருவரினல் ஆட்சி செய்யப்படு
1. “பரிசுத்தவானுய்”, வலுவிழந்தவனுயிருந்த எட்டுவேட்டு, தனக்கு உரித்தாக இருந் திருக்கக்கூடிய திருத்தொண்டுக் கான பரிவேடத்தை மட்டுமன்றி தனக்கு உரித்தல்லாத ஒரு சிறந்த சட்டமாக்கு வோனுக்குரிய புகழையும் பிற்காலத்தில் தேடிக்கொண்டான். அவன் பேணிவந்த மடத்தைச் சார்ந்த கோவிலில் ஒப்புக்கொள்வோணுகிய எட்டுவேட்டின் சட்டங்களே அனுட்டிப்பதாக அரசர் பின் அரசர் சத்தியஞ்செய்து கொண்டனர். எங்களுக்குத் தெரிந்த அளவில் அவன் ஒருபொழுதும் சட்டமாக்கவில்லை. அவன் தானே சட்டங்களையியற்றி இருந் தால், அல்லது எலவே இயற்றப்பட்டிருந்த சட்டங்களை அவன் நன்கு பயன்டுத்தியிருந்தாலுங்கூட, நோமானியர் இங்கிலாந்தை வெற்றிகொள்வதென்பது நடைபெற்றிருக்காது. ஆனல், நோமா னியர் இங்கிலாந்தை வெற்றிகொண்டிருக்காவிடின் எட்டுவேட்டு தான் பெற்ற போலிப் பெரு மைகளைப் பெற்றிருக்க முடியாது. அப்போதிருந்த நிலைமையில் பொய்யாணையிட்டு இங்கிலாந் தின் அரசுரிமை பெற்ற அரொல் என்பவன் கடைசி ஆங்கிலேய மன்னனுகக் கருதப்பட்டிருக்க முடியாது. ஆதலால், அக்காலத்தைவர் இங்கிலாந்தையாண்ட ஆங்கிலேய அரசர்களில் கடைசி அரசனக எட்டுவேட்டைக் கருதினர்கள். பிரெஞ்சு மன்னர்களால் புண்படுத்தப்பட்டிருந்த அக்கால இங்கிலாந்து மக்கள் பரிசுத்தவானுன எட்டுவேட்டின் சட்டங்களை மிகவும் விரும்பினர். அதற்குக் காரணம் எதிரிகளால் இன்னும் வெற்றி கொள்ளப்படாத இங்கிலாந்தில் நிலவிய சட்டமாக அவை கருதப்பட்டமையே என்க” என மெயிற்றுலந்து எழுதுகிறர். சமூக இங்கிலாந்து 1, பக்கம் 169.

கோடுவின் எள் 1.59
வதற்குப் பதிலாக, எள்களின் கீழ் ஆறு பெரும் ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு மானியப் பிரபுவினல் ஆளப்பட்டு வந்தமையேயாகும். எட்டுவேட்டு காலத்தில் இத்தகைய கேடு புதியதல்ல வென்பதும், உரோமர் விட்டுச்சென்ற பின்னர், உண்மையில் இங்கிலாந்து எக்காலமும் ஐக்கியப்பட்டதில்லையென்பதும், இவைபோன்ற அரசியற்பிரிவு முறைமைகள் இன்னும் மோசமான வகையிற் சேர்மனியிலும் பிரான்சி லும் இருந்தனவென்பதும் உண்மையே. எனினும், நோமண்டியாலோ, கந்தினேவியாவாலோ தாக்கப்படாது, “ஒப்புக் கொள்வோனின் ’ ஆளுகை
யில் இங்கிலாந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர் படையெடுப்
பின்றி, அமைதியையனுபவித்து வந்தது ; பலம் வாய்ந்த அரசனுெருவன் அக்காலத்தில் ஆட்சி செலுத்தியிருப்பானயின், அடுத்து நிச்சயமாக ஏற்படக் கூடிய அந்நியர் படையெடுப்புக்கு முன்னர் நாட்டின் ஐக்கியத்தை வளர்ப் பதற்காவது தனக்கு அசாதாரணமாகக் கிடைத்த இத்தகைய ஒய்வு காலத்தைப் பயன்படுத்த முயன்றிருப்பான். ஆனல், நோமானியரை அரச வையிற் புகுத்தியதேயன்றிப் பிற உறுதியான திட்டமெதையும் எட்டு வேட்டு கொண்டிருந்தான் எனக் கூறமுடியுமாயின், அத்தகைய திட்ட
மானது மாகாணவுணர்ச்சியை வளர்ப்பதற்கும், இங்கிலாந்தின் வடக்கைத்
தெற்கினின்றும் பிரிப்பதற்குமே துணைச் செய்தது எனலாம். ஏனெனில், அவன் கோடுவின் குலத்தவரின் ஆளுகைக்குட்பட்டிருந்த உவெசெட்சு, மற்றும் தெற்கிலிருந்த ஏனை எள்களின் ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றுகு எதிராக மேசியாவிலும் நோதம்பிரியாவிலுமிருந்த வடபகுதி எள்களு டைய அதிகாரத்தையும் பொருமையையும் ஏவி விடுவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானதலின்.
இத்தகைய வழிகளைக்கொண்டு, ஒருமுறை Gສn@&sup அவனது குடும்பத்தையும் மண்டிலத்திலிருந்து விரட்டியோட்டுவதில் “ ஒப்புக்கொள் வோன் ’ வெற்றி பெற்றன். ஆனல், அடுத்த ஆண்டில் எதிர்ப்புரட்சி ஒன்று நிகழ்ந்தது. கோடுவினும் அவனுடைய புத்திரன் அரோலும் தாம் நாடு கடத்தப்பட்டகாலை புகலிடமாகக் கொண்டிருந்த பிளாண்டேசு, அயலாந்து ஆகிய நாடுகளிலிருந்து திரும்பி வந்தனர். அவ்விருவரும் கால்வாயில் அங்குமிங்கும் கப்பற் பிரயாணஞ் செய்து அக்காலத்திலிருந்த போர்முறைகளின்படி கொள்ளையிடுவதற்காகப் பல முனைகளில் இறங்கு வாராயினர்; அவர்களுக்கு உதவியாகச் சண்டையிடுவதற்குத் தென் இங்கி லாந்து வாசிகள் சிறிதும் குறையாத ஆர்வத்துடன் கிளர்ந்தெழுந்தனர். கடற்பிரயாணத்தில் ஆர்வம் கொண்ட மாந்தர், கோமான்களது சிறு கப்பற்றெகுதியிற் சேர்வதற்காகக் கால்வாயின் துறைகளில் ஒன்று திரண் டனர். சசெட்சு, சரே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படைகள் அனைத்தும்
105

Page 90
153
160 எட்டுவேட்டின் இறுதிக் காலம்
கோடுவின் எளுடன் "வாழ்வது, அன்றேல் மாழ்வது” என்ற உறுதி பூண்டு இலண்டன்மீது படையெடுத்தன. இறுதியாக, கோடுலின் நேமிசு நதியையடைந்தபோது, இலண்டனிலிருந்தவர்கள் அவனுடைய கப்பல்களேத் தடுக்காது தம் பாணித்தின் கீழ்ப்போக விடுத்தனர். கோடுலின் அவ்விடத்தி லேயே அரசனுக்கு நிபந்தனேகளே விதித்தான். இவ்வரசன் சார்பாகப் போர் செய்வதற்கு எவரும் ஆர்வமுடையவராகத் தோன்றவில்லே. கோடுவி னுடைய முக்கியமான நோமானிய எதிரிகள் அவ்விடத்தைவிட்டு ஒட, அவனுடைய குலத்தினர், தம் சொந்த ஆதனங்கள், அரச பதவிகள் ஆகியவற்றுக்குரிய உரிமைகளே மீண்டும் பெற்றனர்.
இந்த இக்கட்டான ஆட்சிக் காலத்து அரசியற் போக்கின் அடிப்படை நோக்கங்கள் தெளிவற்றன. எங்களுக்குக் கிடைத்துள்ள சான்றுகள் வெகு சிலவே. தாம் அறியவேண்டியன யாவற்றையும் நன்கு அறிந்திருக்கக் கூடியவர்களான இக்கால வரலாற்றுசிரியர்களும் அக்காலத்துக் கதா பாத்திரங்களின் இயல்பு, பூட்கை ஆகியவை பற்றிய தம் மதிப்பீடுகளில் ஒருவருக் கொருவர் பெரிதும் மாறுபட்டுள்ளனர். வெகு இலகுவில் நாடுகடத்தப்பட்டு ஒராண்டு சென்றபின், பேரவாவினணுகிய கோடுவின் எளுக்கு அளித்த வரவேற்பிற்குக் காரணம், நோமானியர்மேல் ஏற்பட்ட வேறுப்பெனக் கொள்ளுதல் ஓரளவுக்குப் பொருத்தமுடைத்தாகும். ஆணுல், கோடுவினேயும் அவன் மகன் அேேவயும் " நாட்டின வீரர்” எனக் கூறுவது தவறன கருத்தாகும். ஏனெனில், நாம் அறிந்துள்ளவாறு, " நாட்டின* உனர்ச்சி என்பது அக்காலத்தில் இருக்கலின்போதலின். உவெசெட்சு செவேண் நதிப்பள்ளத்தாக்கு, தேனியக் குடியேற்றம் ஆகிய இடங்களிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் நோமானியரை வெறுத்திருந் திருக்கலாம் ; ஆணு,ே அவர்கள் தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் அறி ந்தவராயும் ஒரு பொதுவான பற்றுறுதியுடையவராயும் இருந்திலர். இங்கி இாந்து முழுவதையும் பாதுகாப்பதற்காக ஒன்றுசேரும்படி பதினுேராம் நூற்றண்டில் அவர்களுக்கு எவ்வித வேண்டுகோளும் விடுக்கப்படவிஸ்லே ; எனெனில், அவர்கள் அதன் கருத்தைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார் கள் ஆதவின். அவர்கள் அத்தகைய வேண்டுகோளின் கருத்தை அறிந் திருந்தாயின், படைபூண்ட ஒரு சில ஆயிரம் குதிரைப்படையினர் வத் திஞ்சுப் போரில் இங்கிலாந்தை வெற்றிகொள்ளவும், பின்னர் பகிர்ந்து கொள்ளவும் இயலாதவராயிருந்திருப்பர்.
வெற்றிகரமாய்த் திரும்பிவந்த ஒராண்டுக்குப் பின்னர் கோடுவின் இறந் தான்; அவள் தன் திறமை வாய்ந்த மகனுகிய அரோல் என்பானுக்கு, ஆட்சிப் பொறுப்பையும், உவெசெட்கக் கோமகவுரிமையையும் தேமிசு நதிக்குத் தெற்கிலிருந்த ஆங்கில மக்களின் அன்பையும் பல கோட்டங்களில்
 

- Luti. In Lai נף נH is+ ו 5 יליד 1.
H-----H
டேேமீநருப்பீன்,VI ஆம் வாரியரு
கேr கொதரிாடிபேதிப்பீநருப் பிரபு, மகாத்i
Hii i
*ஆகயே வேற்றிப்பட்டபேப்ேபிநஆப்பிய பத் தர
பத்கரா ராங்
in fitt's யேற்றிப்பாடயெடுப்பிறருப்பிள் மான் ப்ாழ
பாந்ாரர் ராப்i
أن i சுருருபெர் "LT 萤 i.
Co" Gio ta * விழக்கு
పో!!! "ல"ஐ'அங்கிலியா

Page 91
avaoTaif
1066
162 எட்டுவேட்டின் இறுதிக் காலம்
பரவிக்கிடந்த பரந்த ஆதனங்களையும் விடுத்துச் சென்றன். கடைசியாகக் கூறப்பட்ட இவ்வாதனங்கள் அறநெறிக்கு ஒவ்வாத முறையிலே தந்திர மாக ஒரே தலைமுறையிற் படிப்படியாகச் சேகரிக்கப்பட்டன. கோடுவின் பெற்ற பெருஞ் செல்வமெலாம் அவனல் திரட்டப்பட்டனவே. சசெட்சின் ஒரு சாதாரண நிலப்பெருமகனன அவன் எதையும் மரபுரிமையாகப் பெறவில்லை. ஆனல், ஒரு குடிமகன் என்ற முறையில் பரந்த செல்வத்தை யும் இணையற்ற அதிகாரத்தையும் அவன் தன் முயற்சியால் ஈட்டிக் கொண்டான். இவற்றையே தன் மகனுக்கு விட்டுச் சென்றன். அவன் தனிச்சிறப்புக்குரிய ஒருவனக இருந்திருத்தல் வேண்டும். ஆனல், அவனது குணவியல்பு, வாழ்க்கை நெறி ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு அவனைப் பற்றி நாம் சிறிதளவே அறிந்துள்ளோம்.
கோடுவின் மரணத்துக்குப்பின் வந்த பன்னிரண்டு வருடங்களாக அரோலை நேரில் எதிர்க்க எட்டுவேட்டு மன்னனல் முடியாதிருந்தது. மன்னனும் அரோலும் சம நிலையிலிருந்தமை, நாட்டின ஐக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கமொடு உண்மையான முயற்சியெதுவும் எடுப்பதற்குத் தடையாயிருந்தது. நோமானியர் யாவரும் மறைந்துபோகவுமில்லை. எட்டு வேட்டு இறந்தபொழுது எடுவின், மோகார் என்பவருக்குச் சொந்தமா யிருந்த மேசியா, நோதம்பிரியா ஆகிய இரு பெரும் எளகங்கள் அரோலின் அதிகாரத்தை வெளிப்படையாக எதிர்ப்பனவாயிருக்காவிடினும் அந்நிய உரிமைகளைப் பிரதிபலிப்பனவாய் இருந்தன. கிழக்கு அங்கிலியா எனும் எளகம் உண்மையில் எட்டுவேட்டின் சகோதரனுகிய கேத்து என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனல், அவனுடைய சகோதரர் களுட் சுவீன், தோசுத்திக்கு ஆகிய இருவர் பொது நம்பிக்கைக்கு அருகதையற்றவராய், ஒன்றுக்குமுதவாதவராயிருந்ததுடன், கோடுவின் குலத்தினரின் ஆதரவிலேயே தீவு முழுவதும் ஐக்கியப்படுவதற்குத் தடையா யுமிருந்தனர்.
உவெசுமினித்தரிலிருந்த தனது புதிய மாளிகையிலே சாந்தமான எட்டுவேட்டு மன்னன் இறந்தபோது இருந்த அரசியல் நிலைமை இத் தகையதே. சட்சனிய இங்கிலாந்து தனது நிலையைச் சீராக்குதற்குக் கிடைத்த கடைசி வாய்ப்பை இவ்வரசனின் ஆட்சியிற் பயன்படுத்தாது போயிற்று. இந்தக் காலத்தில் ஆங்கிலேய-சட்சணிய உரைநடை, கவிதை இலக்கியங்கள் ஆகியன தொடர்ந்து தளர்ச்சியுற்றதற்கு, அரசியலில் ஏற்பட்ட தோல்வியும் ஒரு காரணமாகும். நோமானியரது வெற்றி ஆங்கிலேய-சட் சனியரது இலக்கிய மறுமலர்ச்சியைத் தடைசெய்திருந்தாலும் அதன் வீழ்ச்சிக்கு அடிகோலவில்லை எனலாம். நோமானியரது வெற்றிக்கு முந்திய அரை நூற்றண்டில், தேனியர் பெற்ற வெற்றியே இந்த இலக்கிய வீழ்ச்சிக்குக் காரணமெனக் கூறலாம்.

உவெசுமினித்தரும் இலண்டனும் 63
மூன்றம், ஆரும் எனறிகளைப் போன்றும் எனைய ‘முடி பூண்ட தியாகத் தொண்டர்’ போன்றும், எட்டுவேட்டு தனது அரசியல் தோல்வி களுக்கு இடையேயும் பிற்சந்ததிகள் தன்னை நினைவுறும் வண்ணம் சிலவற்றை விடுத்துச் சென்றன். உவெசுமினித்தர் மடாலயம், சிற்பக்கலை சிறந்திருந்த பிற்காலத்தில் மீண்டும் கட்டப்பட்டபோதிலும், இங்கிலாந்தின் திருச்சபை வரலாற்றில் ஒர் உயர்ந்த இடத்தையும் அரசியல் அபிவிருத்தி யில் ஒர் ஒப்பற்ற நிலையையும் உவெசுமினித்தர் வகிப்பதற்கு எட்டுவேட்டு அளித்த அறக்கொடைகளும் கட்டடங்களுமே அடிகோலின. நகரவெல்லைக் குட்பட்டிருந்த அரச மனையை ஆற்றுமுகத்துக்கு இரு மைல்களுக்கப்பால், கிராமப் புறமான “முள்ளுத் தீவில் ” இருந்த புதிய மாளிகைக்கு எட்டு வேட்டு மாற்றினன். எனெனில், அங்கு அவன் கட்டியெழுப்பிய சென் பீற்றர் தேவாலயத்துக் கண்மையில் இருப்பதற்காக வென்க. அத்தேவால யத்தின்பால் அவன் முழு உள்ளமும் ஈடுபட்டிருந்தது. உவெசுமினித் தருக்குத் திடீரென அரசிருக்கை மாற்றப்பட்டதால் மிகப்பெரும் விளைவுகள் எற்பட்டன. நாளடைவில் அரசாங்கத்தின் மையம் உலின்செசுற்றரிலிருந்த பழைய உவெசெட்சுத் தலைநகரத்திலிருந்து இலண்டனைச் சார்ந்த பகுதிக்கு தவிர்க்கமுடியாதபடி ஈர்க்கப்பட்டது. பலம்வாய்ந்த நோமானிய அரசர்கள் தமக்கு முன்னிருந்த சட்சணிய அரசர்களைப்போன்று, இலண்டனை அடுத் திருக்க நேர்ந்தபோதெல்லாம் உண்மையாகவே இலண்டன் நகர எல்லைக் குள் வாழ்ந்திருந்தாராஞல், அந்நகரத்தின் அரசியற் சுதந்திரம் முளை யிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்கும். எனினும், இலண்டன் மக்கள் அனு பவித்த அரசியற் சுதந்திரமானது, யோன் அரசன் காலந்தொட்டு சுது வட்டு ஊழி ஈருக இங்கிலாந்துமக்கள் அனுபவிக்கவிருந்த சுதந்திரங் களுக்குப் பாதுகாப்பாக அமைந்தது எனலாம். ஆகவே, அரச மாளிகைச் சூழலில் வளர்ந்த பிளந்தாசெனற்றுப் பணிக்குழுவாட்சி, இலண்டன் நகரிலில்லாது உவெசுமினித்தரில் வேரூன்றியமை பிரித்தானிய சுதந் திரத்துக்கு நன்மைபயப்பதாயிற்று ; தற்செயலாகவும், ஒப்புக்கொள்வோ னன எட்டுவேட்டுக்குக் கடவுட்பற்று காரணமாய்த் திடீரெனத் தோன்றிய எண்ணத்தினலுமே இவ்வாறு அது இடம் மாற்றப்பட்டதே தவிர, தீர்க்க தரிசனத்தின்பாற்பட்ட அரசியற்றத்துவத்தால் உந்தப்பட்டு மாற்றப்பட்ட ქ56ზT_{I)]. - -
சட்சனிய காலத்தின் முடிவில், உரோமரது காலத்திற்குப்பின் முதன் முறையாக வட ஐரோப்பிய வர்த்தகத்தின் சிறந்த மையமாக மீண்டும் இலண்டன் தலைதூக்கலாயிற்று. ஏனைய ஆங்கிலேய பரோக்களோடு ஒப் பிடுகையில், சிறுமீன்களிடை ஒரு திமிங்கிலம் போல் அது விளங்கிற்று. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் திருத்தியமைக்கப்படாது பெரும்பாலும் வெறிதே கிடந்த உரோமானிய மதில் சூழ்ந்த வரைப்பிலே பிரதான

Page 92
164 உவெசு மினித்தரும் இலண்டனும்
போக்குவரத்துப் பாதைகளும் சிறு தெருக்களும்-இன்றுள்ள “நகரில் ” அமைந்து கிடக்கும் நிலையத்திலேயே-எலவே வகுக்கப்பட்டிருந்தன. வீடுகள் உண்மையில் மரத்தாலாக்கப் பெற்றவையாயிருந்தன. அவற்றுட் பல, வெறும் சந்தைச் சாவடிகளாக இருந்தன. கட்டிடங்களுக்குப் பின்புறமும் அவற்றைச் சுற்றியும் பெரிய திறந்த வெளியிருந்தது. ஆனல், சுறு சுறுப்பானதும் பல்லினமக்கள் புழங்குவதுமான அப்பெருந்துறையானது எதிர்காலத்தே “இலண்டன்’ எய்தப்போகும் சிறப்பை எடுத்துக் காட்டுவ தாயிருந்தது. கந்தினேவியர், பிளெமிங்குகள், சேர்மானியர், நோமானியர், ஆகிய பல்லினத்தோர் அந்நகரில் இடம்பெற்றனரெனினும், கிழக்கு ஆங்கி லேயரே முதலிடம் பெற்றிருந்தனர். நகர்ச் சுவர்களின் வெளிப்புறத்தை யடுத்து மூர்பிலுகளையும் சிமித்துபீலையும் சேர்ந்த விளைநிலங்களும் புற்றரை களும் குடிகளுக்கு உணவை விளைவிக்கும் ஏனைய “நிலங்களும் ” பரவி யிருந்தன. அன்றியும், தேமிசு நதியில் விழும் சிற்றேடைகளால் இயக்கப் படும் ஆலைகளில் எழும் இரைச்சலும் அங்கு பரவியது. வடக்குப் பகுதியில் காடடர்ந்த குன்றுகள் காணப்பட்டன. அங்கிருந்த சென் யோன் காட்டிலும் அமிதெட்டிலும் என்பீல் சேசிலும் அப்பாலிருந்த எற்போட்டு சயர்க் காடுகளிலும் இலண்டன் மேட்டுப் பகுதியைச் சேர்ந்த பிரபுக்களும் நகரத் தைச் சேர்ந்த வர்த்தக வீரரும் பருந்து போன்ற ஒரு பறவை கொண்டு வேட்டையாடியும் கலைமான், காட்டுப்பன்றி, காட்டெருது ஆகியவற்றை வேட்டையாடியும் வந்தனர்.
மாசற்ற எட்டுவேட்டின் மரணத்துக்குப்பின் அரசுரிமை பற்றிப் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது. அரசுக்கு நெருங்கிய உரித்தாளன் எட்கார் இளவரசனவான். ஆனல், அவன் சிறுவனுயிருந்தான். உண்மையில் இங்கிலாந்து அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டும் ஆங்கி லேயர் தம் நாட்டினம் பற்றிய உணர்ச்சியுடையவராயும் இருந்திருப்பின், அவர்கள் சிறுவனயிருந்த எட்காரை அரசனகப் பிரசித்தஞ் செய்து எதிர்ப்போர் அனைவருக்கும் மாறக ஒன்றுதிரண்டிருப்பர். ஆனல், அக்கால உலகப் போக்கில், எவ்வித பலம் வாய்ந்த உறவுகளும் தனக்கெனக் கட்சியெதுவும் கொண்டிராத பருவம் எய்தாத சிறுவன் அரசெய்து வதால், ஆட்சியறவு எற்படலாம் என்ற பெரும் பயமும் இருந்தது. எனவே, தேர்ந்த ஆற்றலும் நிலைபெற்ற அதிகாரமும் உடைய அரோல் என்பானுக்கு மக்கள் ஆதரவு காட்டியது வியப்பன்று. உண் மையில், அவன் அரச வழியுடன் தொடர்பற்றவனயினும் அவன் தாய் வழியினல் அவனுடைய உடலிற் கந்தினேவிய மன்னர்களது குருதி ஒடிக்கொண்டிருந்தது. அன்றியும், அவன் பெற்றிருந்த முழு அனுபவத்தினலும் தென்னிங்கிலாந்திலிருந்த அவன் குடும்பத்தவர்க

அரோல் அரசெய்தல் 165.
ளுடைய ஆதனங்களின் துணைகொண்டும், இடர்ப்பாடான இக்காலத்தே, எட்காரைவிடச் சிறப்பாக அவன் இங்கிலாந்தைப் பாதுகாக்கவும் ஆளவும் முடிந்தது*
அரோல், அரசுரிமைபெறும் பேரவாவிற்கு இடங்கொடாது எட்காருடைய முடியாட்சிக்குப் பாதுகாப்பாளனக இருந்திருப்பின், ஒருவேளை மேலான தொண்டாற்றியிருக்கலாம். ஆனல், அவன் முடியை எற்றுக்கொண்டமை ஒரு புத்தியற்ற செயலெனினும், அதற்காக அவன் உரிமையின்றி அதனைச் கைப்பற்றியதாகக் குறைகூறமுடியாது.
பரம்பரையான அரசுரிமையைப் பற்றி இங்கிலாந்தில் எவ்வித கண்டிப்பான விதியும் கவனிக்கப்படவில்லை ; மரபுரிமை சம்பந்தமாய்க் குற்றகவையின ரின் உரிமையை ஒதுக்கிவிடுதல் அவசியமன்றெனினும், அம்முறை சாதா ரணமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. ஒப்புக்கொள்வோயை எட்டுவேட்டு இறக்கும் வேளையில், அரோலைத் தன் உரித்தாளனுகக் குறிப்பிட்டுள்ளான். இவையனைத்துக்கும் மேலாக, உவிற்றன் மன்று அவனை அரசனகத் தெரிவு செய்தது. ஆனல், இங்கிலாந்தையாள்வதற்கு அவனுக்கிருந்த உரித்தானது வலிமை குன்றியிருந்தது காரணமாக, இங்கிலாந்து வெற்றி கொள்வதற்குக் கந்தினேவியாவும் நோமண்டியும் போட்டியிடலாயின. அரோலுக்குப் பதிலாக எட்கார் தெரியப்பட்டிருப்பினும், அவ்வாறே போட் யிட்டிருக்கும். ஆனல், ஒப்புக்கொள்வோணுகிய எட்டுவேட்டுக்கு ஒரு மக னிருந்திருப்பின், அவ்வாறு செய்திருக்கமாட்டா எனலாம். 1066 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் நோவே அரசனகிய அரல் ஆட்டுராடா என்பானும் நோமண்டிக் கோமகனகிய உவில்லியம் என்பானும்
முதலாம் இரிச்சாட்டு அரோல்புலுற்றுது ஒலாவு நோமண்டிக்கோமகன் தென்மாக்கு அரசன் சுவீடன் அரசன்
சுவீன் போக்குபியட்டு மகள் - திருபியோன்
- । இரண்டாம் இரிச்-_ (1) ஆலோசனையற்ற தோகிலுசு சாட்டு, அல்கீபுT எதெலிரெடு
= (2) எம்மா = கனியூட்டு
எள் - கித்தா முதலாம் எடுமண்டு கோடுவின் உருேபெட்டு அயன்சைட்டு
ஒத்துக்கொள்வோ- Yr o ணுகிய எட்டுவேட்டு = ஈட்சித்து அரோல் எட்டுவேட்டு வெற்றிவீரன் உவில்லியம் (முறைகேடாகப்பிறந்தவன்)
இளவரசன் எட்கார்

Page 93
166 உவில்லியமும் அரோலும்
ஏறக்குறைய ஒரே வேளையில் இங்கிலாந்தின்மேற் படையெடுத்தனர். இங்கி லாந்தை வெற்றிகொள்வதற்காக கந்தினேவியாவுக்கும் இலத்தீன் ஐரோப் பாவுக்கும் எற்பட்ட நீண்டகாலப் போட்டியின் உச்சக் கட்டத்தை இது குறிப்பதாயிருந்தது. அரோல் தனக்கெதிராகப் படையெடுத்துவந்தவரைத் தனித்தனியே எதிர்த்து முறியடித்திருப்பான் ; ஆனல், இரு தாக்குதல் களை எதிர்க்கவேண்டியிருந்ததால், அவன் தோற்கடிக்கப்பட்டான். நோமா னியரே, நற்பேற்றினலும் நல்லமைப்பினலும் வெற்றியாளராயினர்.
உவில்லியம் முறைகேடாகப் பிறந்தவன் என்னும் தலையாய உண்மையை நாம் ஒருபுறம் ஒதுக்கி, அவன் அரசுரிமை சம்பந்தமான உரித்தை நோக் குங்கால், வமிசவழிப்படி அரோலிலும் கூடிய உரித்துள்ளவனுகவும், எட் காரிலுங் குறைந்த உரித்துள்ளவனகவுமிருந்தான். ஆனல், அரோல் உவிற்றனல் அரசனகத் தெரிவுசெய்யப்பட்டவனவன். உவில்லியம் உவிற்ற ஞல் தெரிவுசெய்யப்படவில்லை. எனினும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள கிறித்துவ நாடுகளின் அனுதாபத்தைச் சில காரணங்களினல் உலில்லியம் பெற்றிருந்தான். அத்தகைய காரணங்கள் இக்கால அறிஞரால் எற்றுக் கொள்ளப் படமாட்டாதவையெனினும், பல நூற்றண்டுகளாக அவை அரோலை ஒரு பொய்க் கரிபோய பொய்யுரிமையாளனெனப் பழிசுமத் தற்கு எதுவாயின. ,مح
முதலாவதாக, எட்டுவேட்டு தனக்குப்பின்னர் உவில்லியமே தனது பதவிக்குரியவன் என ஒருகாலம் கூறியுள்ளதாக உலில்லியம் கூறினன். இக் கூற்று உண்மையாயிருந்திருக்கலாம். ஆனல், எட்டுவேட்டு தன் இறுதிக் காலத்தில் அரோலை அரச பதவிக்குத் தகுந்தவவென விதந் துரைத்தான் என்பதே கூடிய நிச்சயமானதாகும். அஃதெவ்வாறயினும், முடியைப்பற்றி முடிவு செய்வது உவிற்றனைப் பொறுத்ததேயன்றி, இறந்த அரசனைப் பொறுத்ததன்று. இரண்டாவதாக, எட்டுவேட்டு இறப்பதற்கு இரு வருடங்களுக்குமுன், தற்செயலாகத் தன்கையிற் சிக்கிய அரோலைத் தன் சார்பாக இருக்கும்படியும் ஆங்கில அரியணைக்குள்ள மரபுரிமையை மீட்பது பற்றிய தன் கோரிக்கைகளை ஆதரிக்கும்படியும் சில திவ்விய சின்னங்களின் மீது ஆணையிட்டுச் சொல்லும்படி அரோலை உவில்லியம் கட்டாயப்படுத்தியிருந்தான். இப் பெருமிதமான சத்தியமும் அது வெளிப் படையாக மீறப்பட்டமையும் அக்காலத்திலிருந்தவர்களின் மனத்தை உறுத் தின. அவர்களது அன்ருட வாழ்க்கையிலும் சட்ட நடவடிக்கைகளிலும் எங்கள் காலத்திலிருப்பதைக் காட்டிலும், சமயமுறைப்படி செய்யப்பட்ட சத்தியம் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. இக்காலத்தவரின் உள்ளத்தில்
உதாரணமாக, ஒருவனது குற்றமற்ற தன்மையோ, அன்றி அவனது குணவியல்போ பற்றி ஆணையிட்டு உறுதி கூறுபவர்கள், விசாரிக்கப்படும் வழக்குப் பற்றிய உண்மைகளை அறிந் திராவிட்டாலும், அவர்களுடைய சத்தியம் இன்றைய குற்ற வழக்குமன்றிற் சான்றுகளின் விசாரணைக்கு அளிக்கப்படும் முதன்மையான இடத்தை வகிக்கின்றது. அக்காலத்திற் சான்று களைக் காட்டிலும் சத்தியத்திற்கே அதிக மதிப்புக் கொடுக்கப்பட்டது.

உவில்லியமும் அரோலும் 67
உவில்லியத்தின் நடவடிக்கையிலிருந்த அடிப்படையான அநீதியே நன்கு பதிகின்றது. தன்னிடம் அரோல் அடைக்கலமடைந்த சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு, அவன் தனக்கும் இளவரசன் எட்காருக்குமிருந்த வழியுரிமை வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில்லையெனவும், அரசரைத் தேர்ந் தெடுக்க நாட்டிற்குரிய சுதந்திரத்தைக் கையளிப்பதாகவும் சத்தியம் செய் தால் மட்டும் அவன் தன் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவானென வற்புறுத்தப்பட்டான். மத்தியகால அறநெறி இக்கால அறநெறியோடு வேறுபடும் விடயங்களில் இதுவும் ஒன்றகும்.
இறுதியாக, இங்கிலாந்தின் சமயத் தலைமைக்குருவாக, கோடுவின் சார் பினரால் முறைதவறிப் பதவியிலமர்த்தப்பட்ட சிதிக்காண்டு என்பாரின் ஆதரவாளனுக அரோல் இருந்தான் என்ற தப்பெண்ணத்தை உலில்லி யம் வளர்த்தான். ஆனல், சிதிக்காண்டு என்பார் போப்பிற்குப் பகையான வருடன் புழங்கியதனல் சமயப் போதகன் ஒருவனைவிடச் சிறிதே மேம்பட்ட வராக ஐரோப்பாக் கண்டத்திற் போப்பாண்டவர் கட்சியினரால் கருதப் பட்டார். அக்கண்டத்தில் இல்டமிராண்டு என்பார் சிறப்புறுங்காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்பெரியார் இன்னும் போப்பாகாவிடினும் உரோமில் அவருக்கு எலவே பெருஞ் செல்வாக்கிருந்தது. அச் செல் வாக்கை இந் நெருக்கடியான கட்டத்தில், உவில்லியத்தின் சார்பாக அவர் பயன்படுத்தினர். திருச்சபையிலிருந்த சீர்திருத்த நோக்குடைய இல்ட பிராண்டுக் கட்சியினர், குருவாயத்தினர் மணமாகாதிருக்க வேண்டுமென் பதையும் கண்டிப்பில்லாத ஆங்கிலேயக் கிறித்தவரின் மீது போப்பாட்சியின் ஆதிக்கம் பிரயோகிக்கப்படல் வேண்டுமென்பதையும் வற்புறுத்துவதில் ஆவலாயிருந்தனர். இக்கட்சியினர் பரம்பரையாக, நோமண்டிக் கோமக்க ளுடன் நட்புக்கொண்டும் கோடுவின் அரச குலத்தவருடன் நெடுங்காலமாகப் பகைமைகொண்டும் இருந்தனர். போப்பரசரின் ஆதரவும் வாழ்த்தும் உவில்லியம் மேற்கொண்டிருந்த செயல்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந் திருந்தன. இன்றேல், அச்செயல் ஓர் அறப்போராகாது, படைபூண்ட திருட்டுச் செயலாகத் தோற்றமளித்திருக்கும்.
சிறிய மானியமுறை நாடுகள் இருந்த அக்காலத்தில் நோமண்டியானது, ஐரோப்பாவில் அதிகாரம் படைத்த ஒரு நாடாகக் கருதப்பட்டதுடன், அதன் அரசன் வேற்றுநாட்டு அரசியற் சிக்கல்களில் நன்கு தேர்ச்சிபெற்ற அரசறி ஞனகவுமிருந்தான். தனக்குப் பின் ஆறு நூற்றண்டுகள் கழித்துத் தன் பெயரையுடைய மற்றெருவன் செய்தது போன்று, உவில்லியம் தொலைவி லிருந்த பல நாடுகளிலே திறமையுடன் நடத்திய பிரசாரத்தின் மூலமும், சூழியல் மூலமும், தானில்லாக்காலை தன் நாடு காப்புடைத்தாயிருக்குமாறு தன் அயல் நாடுகளுடன் கண்ணியமாய்ச் செய்த உடன்படிக்கை மூலமும் இங்கிலாந்தின் மீது படையெடுப்பதற்கு வழிவகுப்பானயினன். அரோலுக் குள்ள அரசுரிமை பற்றி வெளிநாட்டவர் கேள்விப்பட்டதில்லையாதலால்,

Page 94
168 உவில்லியத்தின் படைவலி
அவனுரிமை தவறிற்று. பிரெஞ்சு மொழி பேசும் மானியமுறைமை நாட்டு மக்கள் கொள்ளைக்காரர் கூட்டத்தில் மிகுந்த ஆர்வங்கொண்ட வராய் அப்பெருந் தலைவனின்கீழ்ச் சேர்ந்தனர்.
பெவன்சி எனுமிடத்தில் வந்திறங்கிய போர்ப்படைகள் மானிய முறைப் படி திரட்டப்பட்டவையன்று; எனினும், படை உறுப்பினர் மானிய முறை மைக்கால உணர்ச்சியில் உறுதியாக உளங்கொண்ட வராயும், வெற்றி கொள்ளப்படும் நாடுகளிலே தம் சேவைக்குக் கைம்மாறகக் கட்டாயமாக மானியமுறைப்படி நிலங்களைப் பெறவேண்டியவராயுமிருந்தனர். நாற்பது நாட்களுக்கு மேற்பட்டு நடக்கும் போரொன்றில் தன்பண்ணையாட்களைப் பங்குபற்றுமாறு கட்டளையிடுவதற்கு மானியமுறைச் சட்டப்படி உலில்லியத் துக்கு அதிகாரமிருக்கவில்லை. ஆனல், நோமண்டியிலிருந்து பரன்களும் நைற்றுக்களுமன்றி, அவனுக்கு விசுவாசம் செலுத்தவேண்டியவராயிராத பிரித்தனி, பிளாண்டேசு ஆகியவிடங்களிலிருந்த பல பரன்களும் நைற்றுக் களும் உவில்லியத்தின் கொடிக்கீழ்க் தொண்டாற்றுமாறு கூடினர். இஃது ஆங்கிலேயருக்கான பிரதேசங்களைப் பங்கிட்டுக்கொள்வதற்காகச் செய்யப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. குரொம்வெல் காலத்தின் இதே தத்துவத்தின் அடிப்படையில் அயலாந்துமீது நடாத்தப்பட்ட போரானது (இதுவும் ஒரு மத சம்பந்தமான முயற்சியாக அக்காலத்தில் கருதப்பட்டது) படைச் சேவையின் துணைகொண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சேவையாள ருக்கு வெற்றிக்கொள்ளப்பட்டவரிடமிருந்து காணிகள் பெற்றுக்கொடுக்கப் பட்டதுடன், அவ் வெற்றியை வாய்ப்பான பிணையாக வைத்துத் திரட்டப் பட்ட கடன்களிலிருந்தும் அவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது. உவில்லி யமும் அவனுடைய நாட்டுக் கூட்டிணைப்பு உறுப்பினரும் 1066 ஆம் ஆண்டு இளவேனில், முதுவேனிற் காலங்களில் போக்குவரத்துக்காக, கப்பற்படையொன்றை நிருமாணித்துக் கொண்டிருந்தனர். ஏனேனில் போர்க்கவசமணிந்திருந்த படைவீரரை மட்டுமன்றி, பயிற்றப்பட்ட போர்க் குதிரைகளையும் போர்க்களத்துக்குக் கொண்டுசெல்வது அவசியமாயிருந்தது. அரோலின் பிரசித்திபெற்ற, குதிரை மீதிவர்ந்த காலாட்படையினரின் அணிவகுப்பைத் தகர்த்தெறிவதற்கு இக் குதிரைகளையே படையெடுத்து வந்தோர் முக்கியமாக நம்பியிருந்தனர்.
உவில்லியம் திரட்டிய படை ஒரு பெரும் படையாக விளங்கியது. அதன் பலம் அதன் எண்ணிக்கையளவிலே தங்கியிராது, அது பெற்றிருந்த பயிற்சியையும் கருவிகளையும் பொறுத்திருந்தது. அக்காலத்தில் அலுவலர் தாமும் பெரிய தொகையினரைச் சரியாக எண்ணிச் சொல்லத் தெரியா
அல்பிரெட்டு காலத்தில் படையெடுத்துவந்த தேனியர் இங்கிலாந்தில் குதிரைமீதேறி விரைந்தோடுவதை அறிந்திருந்தனர். எனெனில் அவர்கள் குதிரை மீதேறிக் கொண்டு காலாட்படையினர் போன்று களத்துக்குச் செல்ல விரும்பினர்களேயன்றி. நோமனியரைப் போன்று குதிரைப்படை கொண்டு போராட விரும்பவில்லை.

தாம்போட்டுப் பாலமும் பெவன்சியும் 169
திருந்தினர். ஆனல், இக்கால வரலாற்றசிரியர்கள் அப் போர்ப்படையில் ஆகக்கூடுதலாக 12,000 பேருக்கு மேற்படாத வீரரிருந்தனர் என்றும், அவர்களில் ஏறக்குறைய அரைப்பங்குக்குக் குறைந்தோர் குதிரைப் படை யினராக இருந்தனரென்றும் மதிப்பிடுகின்றனர். எத்திஞ்சுப் போரிற்குப் பின் வந்தவர்களில் வெற்றிபெற்ற பலர் தங்களிடையே இங்கிலாந்தைப்
பங்கிட்டுக்கொண்டபோது, மானியமுறை வழமையின்படி நிலம்பெற்ற நைற்றுக்களின் மொத்தத் தொகை 5,000 பேருக்கு மேற்படவில்லை.
யென்பது நிச்சயம். பதினைந்திலட்சம் மக்களையுடைய ஒருநாடு ஒருசிறிய கூட்டத்தினரால் அடிமைப்படுத்தப்பட்டும் கொள்ளையிடப்பட்டும் நிலையாக
அடக்கியாளப்பட்டுமிருந்தமை, நோமானிய முறையுடன் ஒப்புநோக்குமிடத்து
அரசியல், படைத்திறம் ஆகியவற்றில் ஆங்கிலேய முறைமை எவ்வளவு பிற்போக்கானதாய் இருந்ததென்பதை எடுத்துக்காட்டுவதாகும்.
உவில்லியம் எத்திஞ்சுப்போரில் அரிதே பெற்ற வெற்றிக்கு எதிர்பாரா நற்பேறும் ஒரளவிற்குக் காரணமாயிற்று. ஆறு வாரங்களாகக் கடும்புயல் அவனைத் துறைமுகத்திலே தடைப்படுத்திற்று. அந்த இடைப்பட்ட காலத்தில் நோவே அரசனன அரோல் ஆட்டுராடா என்பான் மற்றெரு கூட்டத்துடன் இங்கிலாந்தை வெற்றிகொள்வதற்காக வந்திறங்கி, எடுவின், மோகார் ஆகிய வேள்களையும் அவர்களாலே திரட்டப்பட்ட படையாட்களையும் யோக்கி லிருந்து இரண்டு மைல்களுக்கப்பால் முறியடித்தான். ஆங்கிலேயேனுன அரோல், நோமானியரது கப்பற்படையை எதிர்ப்பதற்காகத் தெற்குக் கடற் கரையில் நிறுத்தியிருந்தபோர்ப்படைகளை வேறு வழியின்றி அழைத்துக் கொண்டு, வட பகுதியைக் காப்பதற்காக விரைந்தான். அவனுடைய குதிரை மீதிவர்ந்த காலாட்படையினர் ஐரோப்பாவிலேயே தலைசிறந்தவராயிருந்த னர். இப்படையினர் யோக்கு நகர வாயிலுக்குத் தம் குதிரைகளை விரைவாக முடுக்கியோட்டுவதின்மூலம் பிரமிக்கத்தக்கதும் இரிங்கத்தக்கதுமான தமது இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினர். அன்றியும், இக்காலாட்படையினர் அணியணியாக நின்று தம்மை எதிர்த்துவந்த வைக்கிங்குப் படைகளுடன் சிதாம் போட்டுப்பாலத்தில் அது முற்றக அழிக்கப்படும் வரை சண்டை செய் தனர். இதற்கு மூன்று தினங்கள் கழித்து, பெவன்சியில் உலில்லியம் வந்திறங்கினன். t محم
நோமானியருக்குத் தடையாயிருந்த, வெல்லற்கரிய எதிரியை அரோல் இவ்வாறு அகற்றிவிட்டான். அதன் விளைவாக சிதாம்போட்டில் வீரம் வாய்ந்த படைவீரர் பலரை இழந்து தன் சொந்தப் படைப்பலத்தைக் குறைத்துக் கொண்டான். அவனுடைய நிலையானபடையின் உறுப்பினரும் நான்கு நாட்களில் இலண்டனுக்கு மீண்டு, ஒற்றேபர் ஆரும் திகதி
இரவுண்டு : “ மானியமுறை இங்கிலாந்து, பக்கங்கள், 265, 289-292. அசுகின்சு : * நோமானியரின் நிறுவகங்கள்” பக்கம் 78. ஒமான் : “ படையெடுப்புக்கு முந்திய இங்கி லாந்து ”, பக்கம் 641. சிதெந்தன் எழுதிய “ உவில்லியம்”, பக்கம் 196.
செத் தெம்பர் 28,1066

Page 95
ஒற் ருேபர் 14,2066
170 தாம்போட்டுப்பாலமும் பெவன்சியும்
அந்நகரையடைந்தனர். வட பகுதியிலிருந்து அடித்துத் தாக்கப்பட்ட காலாட் படையினரும் அவர்களைப் பின்தொடர்ந்து மெதுவாக நடந்து வந்தனர். தென்மேற்கிலிருந்த மானியப்படை இன்னும் வந்து சேராதிருந்தது. சரி யாகவோ, பிழையாகவோ அரோல் தன் எஞ்சிய உறுதிவாய்ந்த நிலையான படையின் உறுப்பினருடனும் தென்கிழக்கு மாநிலங்களை மட்டும் சேர்ந்த நிலப்பெருமக்கள், மானியப் படையினர் ஆகியவர்களையும் சேர்த்துக்கொண்டு சசெட்சில் உலில்லியத்துடன் நேராகப் போர்தொடுக்க உறுதி பூண்டான். காலாட்படையானது குதிரைப் படையை எதிர்த்து நிற்குங்கால், அது தற் காத்துக்கொள்ளலேமுக்கியமாதலின், அரோல் எத்திஞ்சுக்கு வடமேற்கில் ஆறு மைல்களுக்கப்பாலிருந்த தனித்த கிளை மலைத்தொடரில் வசதியான ஒரிடத்தைத் தெரிந்து, அங்கிருந்து உவில்லியத்தை எதிர்த்து நின்றன். இம் மலைத்தொடர் சட்சணிய சேனைக்கு இருப்பிடமாயிருந்த அந்திரட்சு வீவைச் சேர்ந்த பெருங்காட்டின் தென்கரையில் இருந்தது. இந்த மலை
* பின்னெருகால் கிராமமாக மாறியதுமன்றி, பற்றில் மடம் என்னுமொரு
மடம் அங்கு தோன்றியது. இதற்குமுன்னர் இது வாழ்தற்குத் தகுதியற்ற தாகவும் பெயரெதுவுமில்லாததாகவுமிருந்தது. இம் மலையுச்சியிலிருந்த ஒரு தனியான “முதிர்ந்த அப்பிள் மரம் ’ ஒன்றைக்கொண்டே இம் மலையைக் கண்டறியக்கூடியதாயிருந்தது.
படையெடுத்து வந்தவர்கள், தம் எதிரியைக் காட்டிலும் சிறந்த போர்க் கருவிகளையுடையராயும் சுளுகுகளையறிந்தவராயுமிருந்தபோதிலும், அவர்க ளுக்கு அம் மலையைத் தாக்குதல், ஏறக்குறைய அவர்கள் சத்திக்கு மீறிய ஒரு முழுநாள் வேலையாயிற்று. இவ்வாறு போர்மலைந்த இரு கூட்டத்தவரும் பழைய நோதிக்குப்போர்முறையின் வெவ்வேறன வளர்ச்சித் தரத்தைக் காட்டி நின்றனர். அத்தகைய வளர்ச்சிகள் வெவ்வேருன சமுதாய, அரசியல் விளைவே ஆகுமென்க. நோமானிய நைற்றுக்களும் குதிரைமீதி வர்ந்த நிலையான ஆங்கிலேய காலாட்படையினரும் உண்மையில் ஒரே வகையான போர்க்கவசத்தையே தற்காப்புக்காக அணிந்திருந்தனர். இவர் கள் தத்தம் இனங்களைச் சேர்ந்த முன்னேர் அணிந்து வந்திருந்த பழங்கால வளையப் போர்ச்சட்டைகளுக்குப் பதிலாக, அதே வளையக் கவசத்தை நீள மான மேலங்கியாகச் செய்வித்து, குதிரையில் வசதியாகச் செல்வதற்கேற்ற முறையில் அவ்வங்கியின் விளிம்பில் பிரிவொன்றையும் அமைத்துக் கொண் டனர். இரு சாரரும் அக்கால மாதிரிக்கேற்ப, கூம்பு வடிவமான தலைச்
9
*இங்கு நடைபெற்ற கைகலப்பு இடையூழியில் அமர், அல்லது “ பெல்லும் ’ என்றே எத்திஞ்சுச் சமர், அல்லது “பெல்லும் ” என்றே அழைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியில் பிரீமென் என்பாரும் அவரையொத்தவரும் சென்லக்கு என்று அதை அழைக்ககும் வரை, அவ்வாறு அதை எவரும் அழைத்ததில்லை. இரவுண்டு எழுதிய * மானியமுறை இங்கிலாந்து ” பக்கங்கள் 333-340. இந்நூலில் இவ்வமரின் நிகழ்ச்சிகள் பற்றிக் காண்க.ஆங்கிலேயர் தஞ்சார்பாக செயற்கைப்பாதுகாப்புககள் எதுவு மின்றியிருந்தன ரென்று இந் நூலாசிரியர் குறித்துள்ளார்.

எத்திஞ்சுப் போர் 17.
சீராவையும் மூக்கு மூடியையும் அணிந்திருந்தனர். மேலும், அவர்கள் முன்போல வட்டவடிவமான பரிசைகளைக் கொண்டிராது, பெரும்பான்மை யும் காற்றடி வடிவத்தில் நீண்டு குவிந்த பரிசைகளைக் கொண்டிருந்தனர். இத்தகைய பரிசைகள் குதிரைமீதிருந்த வீரரது தொடைக்குப் பாதுகாப்பளிப் பனவாயமைந்தன. இரு சாராருடைய படைகளிலும் போர்க்கவசமேயணிந் திராத, அல்லது அரைகுறையாகப் போர்க்கவசமணிந்த தரங்குறைந்த ஆயுதங்களையுடைய பலர் இருந்தனர். அயலிலிருந்த கோட்டங்களிலிருந்து திரண்டுவந்து சட்சனியருடன் சேர்ந்துகொண்ட “ மானியக் காலாட்படைகள்” இத்தன்மையின. ஆனல், போரிட்ட இரு பாலாருக்குமிடையிருந்த ஒப்புமை இவ்வளவில் நின்றது. ஆங்கிலேய-தேனியர் தம் குதிரைகளைப் பின்புறம் நிறுத்திவிட்டு, இன்னும் போர்க்களத்திலே தரையில் நின்று போரிட்டனர்; அன்றியும், அரோல் தன் கடைசிப் போராட்டத்திலே திறமையாகப் பயன் படுத்திய நீண்ட தேனிய அமர்க்கோடரியை இன்னும் பயன்படுத்தினர். நோமானியர் குதிரையிலிருந்து கொண்டே ஈட்டியை வீசியெறிந்தும் அதனற் குத்தியுஞ் சண்டையிட்டதுடன், வாளினல் எதிரிகளைத் தாக்கவுஞ் செய்தனர். ஆனல், நடுக்குறச் செய்யும் சுளுகுகளைக்கொண்ட அவர்களது சிறந்த குதிரைப்படைதானும் மலையுச்சியிலிருந்த கேடயவியூகத்தை, பிறி தொரு போர்க்கருவியின்றி, அழித்தல் அரிதாயிற்று. வீரர்கள் என்ற முறையில் நோமானியர் புதிய முறைகளை அறிந்திருந்ததுடன் பழைய முறைகளையும் ஞாபகத்திற் கொண்டிருந்தனர். அவர்கள் பிரெஞ்சு மக்க ளிடமிருந்து குதிரைப்படையின் சுளுகுகளைத் தெரிந்திருந்தனர். ஆனல், ஆங்கிலேய-தேனியர் புறக்கணித்துவிட்ட, கந்தினேவியரது பழைய முறை யான வில்வித்தையையும் பேணி வந்திருந்தனர். குதிரைப்படைஞரின் தாக்குதலோடு, வில்வீரர் செலுத்தும் அம்பு மாரியையும் அரோலின் காலாட்படைஞர் ஒருங்கே தாங்கவேண்டியவராயினர். இந்த அம்புகளைச் செலுத்திய விற்படையினர், பிற்காலத்திற் கிரெசிப் போரில் நெடுவில் தாங்கிய படையினரைக் காட்டிலும் தரத்தில் உண்மையாகவே குறைந்தவரா யினும், இங்கிலாந்தில் நடைபெற்ற அச்சண்டையின்போது அம்புவிடுத்த விற்படையினர் எவரையும் விஞ்சிய தரத்தவராகவேயிருந்தனர். அடித்துத் தாக்கும் ஆயுதங்களை மட்டுமே கொண்டுள்ள காலாட்படையானது, எறி படைகளைக் கொண்டுள்ள மாற்றனது குதிரைப்படையுடன் போரிடுவது எப்போதும் இடர் நிறைந்த கருமமாகும். உவாட்டலூப் போரில் இங்கிலாந் தின் சதுர அணிவகுப்பினர் பிரெஞ்சுக் குதிரைப் படையினருக்கு எதிராக எறிபடைகளைப் பயன்படுத்தினர். ஆனல், எத்திஞ்சில் இதற்கு எதிர்மாறன நிலையே காணப்பட்டது.
நீண்ட உறுதியான “ வில்லம்பு ” வகையைச் சேர்ந்த ஈட்டியானது மத்திய காலப் போர்களின் போது விருத்தியடைந்ததாகும்.

Page 96
172 ஆங்கிலர் பணிதல்
இராப்பொழுதானதும் அரோலும் அவனுடைய நிலையானகாலாம் படை யினரும், புளோடன் மலையில் கொத்துலாந்தர் தங்கள் அரசனைச் சுற்றி வீழ்ந்து கிடந்ததுபோன்று, மலையுச்சியில் இறந்து கிடந்தனர். போரில் வடுப்பட்டும் மனமுடைந்தும் போயிருந்த “ மானியக் காலாட்படையில் ” எஞ்சியிருந்த வீரர்கள், அந்திரெட்சுவீல் காட்டிலிருந்த இருண்ட பாதை களின் வழியே ஒவ்வொரு திக்கையும் நோக்கித் தொலைவிலிருந்த தத்தம் வீடுகளுக்கு நடந்துகொண்டிருந்தனர். -
அத்தியாயம் VIII
நோமானியர் வெற்றி பூரணமாதல் - நோமானியரது
அரசியல் நிறுவகங்கள் அமைக்கப்படல். 1066-1135. அரசர் : முதலாம் உவில்லியம் 1066-1087; இரண்டாம் உவில்லியம் 1087-1100; முதலாம் என்றி 1100-1135;
எத்திஞ்சு அமரில் ஆங்கிலேயர் அடைந்த அதிர்ச்சியானது, நன்கு அமைக்கப்பட்ட ஒரு நிலமானிய அரசின் சத்திகளையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மூலம் அந்நியரை எதிர்த்து நிற்கக் கூடிய நாட்டின உணர்ச்சியைத் தூண்டியிருக்கும். ஆனல் ஆங்கிலேய-தேனியரது இராச்சி யத்தில் அத்தகைய விளைவு எதுவும் வற்பட்டதில்லை. வேள்களும் மானியப் பெருமக்களும் பிசப்புமாரும் மாநகர் மணியகாரரும், நகரப்பிரமுகர் களும் தனிப்பட்ட முறையில் உலில்லியத்துடன் சமாதானம் செய்து கொள்வதிலேயே கருத்துன்றினர். அரோலின் கட்சியில் தலையாயவரும், போப்பாண்டவரின் நோமானிய நேயர்களின் வெறுப்புக்கிலக்கானவருமான சிதிக்காந்து தானும் உவில்லியத்துக்கு உடனே அடிபணிவதன்மூலம் தம்முடைய கந்தர்பரிச் சிம்மாசனத்தை இழந்து விடாதிருக்க வறிதே முயன்ருர், உவில்லியம் உவாலிங்குபோட்டு எனுமிடத்தில் தேமிசு நதி யைக் கடந்து செல்கையில் அவர் இவ்வுபாயத்தைக் கையாண்டார். எட்டு வினும் மோகாரும் எத்திஞ்சுப் போரில் அரோலுக்கு உதவி புரிவதற்காக மிக மெதுவாகவே தெற்கு நோக்கி வந்துகொண்டிருந்தனர். இத்தகைய தாமதத்திற்கு அவர்களது துரோகச் சிந்தனையோ, கவனமின்மையோ தவிர்க்க முடியாத தாமதமோ காரணமென்று எவராலும் எக்காலமும் திட்டமாகக் கூறவியலாது. தென் இங்கிலாந்தை அதன் போக்கில் விடுத்து, அவர்கள் இப்பொழுது வடபால் மீண்டு பதுங்கிச் சென்றனர். உவெசெட் சிலும் தேமிசு நதியின் கரைகளிலும் முடிசூடியவர் யாராயிருப்பினும் தாங்கள் மேசியா, நோதம்பிரியா ஆகிய பகுதிகளின் எள்களாகத்

ஆங்கிலர் பணிதல் 173
தொடர்ந்து உண்மையான சுதந்திரத்தோடு உவந்திருக்கலாமென அவர் கள் ஒரு வேளை முடிவு செய்திருக்கலாம். ஆனல் உவில்லியமோ தான் பெற்ற அரச பதம் பற்றி வேறு கருத்துக் கொண்டிருந்தான்.
இஃதிவ்வாருக, தென்இங்கிலாந்து படையெடுப்பாளரை எதிர்த்து நிற்க வில்லை. உவெசெட்சின் பழைய தலை நகரான உவின்செசுற்றர் முதலில் அடிபணிந்தது. இலண்டனைப் பொறுத்த மட்டில், ஒரேயடியாக அந் நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றுவதற்குப் போதிய படைகள் உலில்லியத் திடம் இருக்கவில்லை. ஆகவே எட்டுவேட்டினல் ஒப்புக்கொள்ளப்பட்ட அர சுரிமையாளன் என்ற நல்லுறவான மாற்றுருவில் இலண்டனுக்குள் நுழைய உலில்லியம் விருப்புற்றன். இதனல் மேற்குப் புறமாகவும் வடக்குப் புறமாகவும் நகரத்தைச் சுற்றி வந்தான். அவ்வாறு சுற்றி வருங்காலை, ஆங்கிலேயரை அதி விரைவில் சரணுடையச் செய்ய வேண்டு மென்னும் நோக்கத்துடன், பக்கிங்காம்சயரிலும், எற்போட்டு சயரிலுமிருந்த கிராமங்களை அழிப்பானயினன். அவனுடைய பூட்கை வெற்றிகண்டது. சில வாரங்களாகத்தயங்கி, எட்காரை ஆங்கில மன்னனக வீணே பிரசித்தஞ் செய்த பின்னர், இலண்டன் மாநகர மக்கள் உலில்லியத்தைத் தங்கள் அரசனுக ஏற்றுக்கொள்வதற்கும், உவெசுற்றுமினித்தரில் அவனுக்கு முடிசூட்டுவதற்கும் அவனுக்கு அழைப்பு விடுத்தனர்.
அங்கே 1066-ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று “ ஒப்புக்கொள்வோன் ” எட்டுவேட்டுக்குப்பின், சட்ட முறையான அரசு உரித்தாளனக உலில்லியம் முடிசூட்டப்படாநிற்க, உவில்லியத்தைக் கொல்லுவதற்குச் சதி நடப்பதாக ஒரு தவறன எச்சரிக்கையின் பேரில், அவனுடைய நண்பர்கள் தேவாலயத்தின் வெளிப்புறத்திலிருந்த ஆங்கிலேயரின் வீடுகளுக்குத் தீ வைத்தனர். அந்தக் குழப்பத்திலும் வெறியிலும் உண்டான இரைச்சல் முடிசூட்டு விழாச் சடங்குகளைத் தடைப்படுத்திற்று. உவில்லியத்தையும் சடங்கை நிறைவேற்றுகின்ற குருக்களையும் தவிர ஏனையோர் அக்குழப்பத் திற் பங்குபற்ற விரைந்தனர். சட்டமுறையாகவும் இயற்கையாகவும் வழி வழி வந்த முடியுரிமை தன்னைச்சார்ந்ததெனும் உவில்லியத்தின் கொள் கைக்கு முற்றிலும் மாறுபட்ட பயங்கர நிகழ்ச்சிகள் இங்கு காணப்படு கின்றன. ஒப்புக் கொள்வோனின் உரித்தாளனகவும் அவனுடைய * நீதியான சட்டங்களின் ” காவலனகவும் இருக்க அவன் செய்த கோரிக்கை நாட்டை வெற்றிகொண்டபோது நேர்ந்த இழிவான உண்மைகளை முற்றிலும் மறைக்கமுடியாததொன்றயிருந்தது ; மேலும் அவ்வுரிமைக்கோரிக்கை பிரான்சியரின் கொள்ளையினின்றும் கொடுமையினின்றும் நாட்டைப் பாது காப்பதற்குப் பயன்படக்கூடியதாகவும் தோன்றவில்லை. என்றலும் உலில் லியத்தின் காலத்திலும் அவனுக்குப் பின் அவனுடைய புத்திரரின் காலத்திலும் பிரெஞ்சு-நோமானிய பரன்களைச் சேர்ந்த கலகக்கார உறுப் பினர்க்கு விரோதமாக நோமானிய அரசன் தன் சட்சணிய குடி மக்க

Page 97
74 எடுவினும் மோகாரும்
ளுடன் ஒரோவழி நட்புறவு செய்து கொண்டமையும், நாட்டுப் படைகளையும் கோட்டமன்றுகளையும் புதுப்பித்துப் பலப்படுத்தியமையும் உலில்லியத்தின் கொள்கைக்கு உறுதி அளித்தன. இங்கிலாந்து அரசபீடத்திற்கு உவில்லி யம் உரிமைகோருவதற்கு இக்கொள்கையே அடிப்படையாயமைந்தது.
எத்திஞ்சுப் போருக்குப் பின்னர், தொல்லைகள் நிறைந்த முதற்சில மாதங்களில், ஆங்கிலேயர் தாம் ஒன்று சேர்ந்து எதிரிகளை எதிர்த்து நிற்கும் வாய்ப்பை நழுவவிட்டனர். தென்மாக்கிலிருந்து வந்த கனி யூற்று மன்னனின் கீழும் அவனது ஆட்களின் கீழும் தங்கள் சொத்துக் களையும் உரிமைகளையும் இழந்து இடருற்ற ஆங்கிலேயரில் அநேகர், உவில்லி யத்துக்கு அடிபணிவதின் மூலம் இனிமோலவது அல்லலின்றி அமைதி யாக வாழலாம் என்று நம்பினர். இவர்கள் விரைவில் இத்தவருன எண்ணத்தைக் கைவிட வேண்டியவராயினர். சிம்மாசனத்தை அபகரித்த அரோலை எற்றுக் கொண்ட அனைவரும் தமது உடைமை முழுவதையும் இழந்துவிட்டனர் என்பதைக் காரணமாகக் கொண்டு அமருக்குப் பிறகு அந்நிய வெற்றியாளரின் நலனுக்காகச் சட்சணியரது நிலபுலங்களைப் பறி முதல் செய்தல் உடனடியாகத் தொடங்கப்பட்டது. கிளர்ச்சிகளையும் மற்றும் அற்பமான நிகழ்ச்சிகளையும் காரணமாகக் கொண்டு ஆண்டுதொறும் இச் செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நோமானிய அரசனேடு அல்லது நோமானிய பரனேடு கொண்டிருந்த பிணைப்பானது, கணியூற்று அரசனுடனும் அவனுடைய எள்களுடனும் கொண்டிருந்த இலகுவான பிணைப்புப்போன்றிலது. புதிய முடியாட்சியை யும் புதிய மானியமுறையையும் புதிய இராணுவமுறையானது நில வுடைமையோடு இறுக இணைத்தது. இலியூசு என்ற இடத்திலும் நாடெங்கு முள்ள நூற்றுக்கணக்கான பிற இடங்களிலும், இப்பொழுது காணப்படு கின்றவைகளைப் போன்று, மிகப்பெரிய வட்டவடிவமான மணற்றிடல்கள் நாடுமுழுவதும் எழுப்பப்பட்டன. சட்சணிய உழவோரின் கட்டாய சேவையி ஞலேயே இவ்வேலைகள் செய்யப்பட்டன.இவைகளின் உச்சியில், அரசருக்கோ தனிப்பட்டவருக்கோவுரிய கோட்டைகள் கட்டப்பட்டன. இக்கோட்டைகள் முதலில் மரத்தாலும் நாளாவட்டத்தில் கற்களாலும் கட்டப்படலாயின. மணற்றிடலுக்கு முன்புறத்தில் மண்ணுலாய அடைப்பினல் பாதுகாக்கப்
1. குறிப்பு. மணற்றிடல், “ மோற்று ’ எனவும் அத்திடலின்மீது மரத்தால் அல்லது கற்க ளாலான கோபுரம் “தீயூரிசு ’ அல்லது “ பாதுகாப்பான நிலவறை ” அல்லது “ அரணின் நடுவிடம்” எனவும் வழங்கப்பட்டது. பயூவிலிருந்த திரைச்சீலையானது மரத்தாலான கோட்டை யொன்றைத் தாங்குவதற்காக எத்திஞ்சில் எழுதப்பட்டிருந்த ஒரு மணற்றிடலைக் காட்டு கின்றது. அதே திரைச்சீலையில் வரையப்பட்ட தினந்துக் கோட்டை வீட்டு முற்றுகையினல் நோமானியரது மரத்தாலான கோட்டைகளின் இயல்பு அனேகமாக ஒரே மாதிரி விளக்கப் படுகின்றது. அம்முற்றுகையின் போது படையெடுப்பாளர் அத்திரைச் சீலைக்குத் தீயிட்டனர். இத்தகைய ஆபத்தே சுதீபன் காலத்தில் நோமானியரது " கற்காலத்தை ” விரைந்து தோன்றச் செய்தது என்பதற்கு ஐயமில்லை.

எடுவினும் மோகாரும் 175
பட்ட வெளிமுற்றம் ஒன்று இருந்தது. அது “ பெய்லி’ என்றழைக்கப் பட்டது. தாக்கி வெல்லமுடியாத இத்தகைய சேமஅரண்களிலிருந்து கவச மணிந்த குதிரை வீரர்கள் கிராமங்களில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும் வந்தனர் ; சில அமையங்களில் கொள்ளையடித்துக் குழப்பம் விளைவிக்கு முகமாகவும், வெளிப்போந்தனர். கிழக்குச் சுவர்களைத் தாண்டி உயர்ந்து கொண்டே சென்ற அரசனுடைய கோபுரத்தைக் கண்ட இலண்டன் நகர மக்கள் பயத்தால் அதிர்ச்சியடைந்தனர். நீண்டகாலமாகப் போற்றிப்பாது காக்கப்பட்டு வந்த தங்களுடைய சுதந்திரம் முற்றிலும் அழிக்கப்படா விட்டாலும் தடைப்படுத்தப்பட்டு வருவதை அவர்கள் உணர்ந்தனர்.
கோடுவின் வமிசத்தாரின் ஆதிக்கத்தையும் உடைமைகளையும் அழிப்ப தையே உலில்லியம் முக்கிய நோக்கமாகக் கொண்டு, தென்கிழக்குப் பகுதியில் படையெடுத்துச் சென்று அங்கு வெற்றியடைந்த பின்னர், 1068-ஆம் ஆண்டின் இறுதியில் தென் இங்கிலாந்து முழுவதற்கும் உண்மையான தலைவனனன் ; ஆனல் அவன் வடபகுதியில் பெயரளவிலே தான் அரசனக எற்கப்பட்டான். நாட்டின் நிலச் சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை கைமாறியிருந்தது. மேசியாவும் நோதம்பிரியா வும் வத்திஞ்சுப் போருக்குமுன்பு எந்நிலையிலிருந்தனவோ அந்நிலையிலே தான் இன்னும் இருந்தன. எடுவின், மோகார் ஆகிய இரு எள் களும் அரசனின் வழிப்பட்டோராயிருந்திருப்பின், வடபகுதியிலுள்ளநிகழ்வு நிலைமையானது அதிககாலம் நீடித்திருக்கும். ஆனல் அவர்களோ கலகம் விளைவித்ததால் ஒடுக்கப்பட்டு அதன்பின் மன்னிக்கப்பட்டனர். ஆனல் மீணடும் கலகம் விளைத்தனர். தென்மாக்கு மன்னனுடைய புத்திரர் தலைமைதாங்கிய வைக்கிங்குகளின் பிறிதொரு படையெடுப்பின் உதவியால் இவர்கள் விளைவித்த இரண்டாவது கலகம் வெல்லமுடியாததொன்ற யிருந்தது. மேசியாவில் இதே அமையத்தில் முரடர்களான உவேல்சு மக் கள் நோமானிய ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு உதவிசெய்யுமாறு ஒபா வின் அணைக்கட்டைக் கடந்து பெருந்தொகையினராக வந்துகொணடிருந் தனர்.
வடபால் உவில்லியம் போரை நடத்துவதற்கும், கொடூரமான முறையில் ஆங்கில மக்களைப் பழிவாங்குவதற்கும் காரணமாயிருந்த சூழ்நிலை இத் தகையதே. யோக்குக்கும் தறமுக்குமிடையே தன் குதிரைவீரருடைய கண் களிற் பட்ட வீடுகளையெல்லாம் தரைமட்டமாக்கிக் கண்ணில் தென்பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவிக்கச் செய்தான். நிலஉடமைக் கணிப் பேடு எண்பித்துள்ளவாங்கு இந்நிகழ்ச்சிக்குப் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்தானும் பல கிராமங்கள் மக்களேயின்றிப் பாழடைந்து கிடந்தன. யோக்குசயரைச் சேர்ந்த வட இரைடிங்கில் எறக்குறைய முழுப்பகுதியும் கீழ் இரைடிங்கிற் பெரும் பகுதியும் ஆங்கு நிகழ்ந்த படுகொலைகள் காரண மாய்க் குடிமக்களின்றிக்கிடந்தன. தறம் மாகாணத்தில், வீடுகளும் கால்
8--Ꭱ Ꮾ8ᏎᏎ (121Ꮾ2)
1069.

Page 98
76 வடபுலம்பட்ட அல்லல்
நடைகளும் அழிக்கப்பட்டன. ஆனல் எவ்விதத்தாலோ அங்கு வாழ்ந்த மக்கள் முன்னதாகவே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததால் தைன் நதிக்கப் பால் தப்பியோடி உயிர் பிழைத்தனர். அநேகர் தங்களையே அடிமைகளாக விற்றனர். இவ்வாருகக் கொத்துலாந்திலுள்ள உலோதியன் மாவட்டத்தில் அநேகர் கந்திநேவிய இரத்தக்கலப்புடையராதற்கு இது காரணமாய் அமைந் தது. செசயரிலும் இங்கிலாந்தின் மத்திய பகுதியைச் சேர்ந்தகோட்டங்களி லும் அழிவும், கொலையும் அடிக்கடி நிகழும் திடீர்ச் செயல்களாயிருந்தன. நாகரிக காலத்தில் அழிந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதை விட அக்காலத்தில் அண்மையிலிருந்த காடுகளிலிருந்து மரங்களைக் கொண்டு வந்து அழிந்துபோன மரக்குடிசைகளைத் திரும்பவும் கட்டிக்கொள்ளுதல் எளிதாயிருந்தது ; ஆனல் மக்களுக்கு எற்பட்ட உயிர்நட்டத்தையும் கால் நடைகள், விவசாயக் கருவிகள் ஆகியவற்றுக்கு வற்பட்ட நட்டத்தையும் ஈடுசெய்வது எளிதன்று. வடபகுதியில் நோமானியரின் அழிவுச் செயல் ஐரோப்பாவிலே துருக்கியர் செய்த கொடூரமான பழிவாங்கலைப் போன்றி ருந்தது ; ஆனல் இத்தகைய செயல் மத்திய கால ஐரோப்பாவிற் கொள் கை வெறிபிடித்த கிறித்துவப் போர்வீரர்களின் கருத்துக்களுக்கும் நடை முறைக்கும் முற்றிலும் அமைந்ததாய் இருந்தது.
இத்தீய செயல் வேண்டிய பயனை அளித்தது. இத்தகைய முற்றன அழிவிற்குப் பின்னர் எத்தகைய கலகமும் எற்பட முடியாது. உவில்லியமும் அவனுடைய சில ஆயிரக்கணக்கான கவசமணிந்த நைற்றுக்களும் இங் கிலாந்து முழுவதையும் வெற்றிகொண்டு, புதுமாதிரியான வாழ்க்கை முறைக்கு ஆங்கிலமக்களைக் கட்டாயப்படுத்த முடியுமா என்ற பிரச்சினைக்கு இச்செயல் முடிவு கண்டது. உவெசெட்சிலும் இலண்டனிலும் நிலைநாட்டப் பட்டிருந்த கோன்மைக்கு எதிராக வட இங்கிலாந்திலும் தேனியக் குடி யேற்றத்திலும் நீண்டகாலமாக நிலவிவந்த பிளவுக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் கந்திநேவிய சமூகம் நோமானிய மானிய முறைமைக்குக் காட்டி வந்த எதிர்ப்பையும் இது முறித்தது. நாமறிந்த தறம் மாளிகையும் தலைமைக்கோயிலும், முரடர்களான நோதிக்கு இனமக்கள் வாழ்ந்த இப் பகுதியில் அந்நியரான படைவீரர்களாலும் குருமாராலும் திணிக்கப்பட்ட புதிய இலத்தீன் நாகரீகத்தின் சின்னங்களாக விளங்கின. கற்பாறையுச் யிலே சிற்பத்திறனுடன் விளங்கும் இக்கட்டடங்கள் இங்கிலாந்தின் வடபாலை நோமானியப் படைகள் அழித்துத் தரைமட்டமாக்கிய ஒரு தலைமுறைக்குள் ளாகவே எழுப்பப்பட்டன. இப்படையெடுப்பாகிய பயங்கர அழிவுக்கு முன்பே ஒரளவு எழ்மையிலும் மிலேச்சத்தனத்திலும் அமிழ்ந்துகிடந்த ஒரு பகுதி யில் இத்தகைய சின்னங்கள் எழுப்பப்பட்டமை, உவில்லியம் இத்தூர பிரதேசங்களை மாற்றியமைத்து ஆளுவதற்காக அனுப்பிய ஒரு சில பிரெஞ்சு மொழி பேசிய ஆட்சியாளர், கட்டிடக்கலைஞர்கள், திருச்சபையினர் ஆகிய வர்களின் ஆற்றலுக்குச் சான்று பகர்வதாகும்.

வடபுலம்பட்ட அல்லல் 77
அம்பருக்கு வடபாலிலுள்ள இடங்கள் மட்டுமின்றி இங்கிலாந்திலேயே மிக வளம் பொருந்திய மாவட்டங்களான இலிங்கன்சயரும் கிழக்கு அங்கி லியாவும் புதிய நாகரிகத்தை எற்றுக்கொண்டன. மனித சுதந்திரமாகிய பெரு விலை கொடுத்தே அவைகள் இந்நாகரிகத்தைப் பெற்றன. தேனியர் குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் ஆங்கில-சட்சன் நிலமானிய அமைப் புக்களினின்றும் இதுவரை விலகியே இருந்தனர். அவர்களில் அநேகர் “ தங்கள் சொத்துக்களோடு” தாங்கள் விரும்பிய பிரபுவின் கீழ் அமர்ந்த னர். சில கிராமங்கள் பிரபுக்கள் இன்றியே இருந்தன. இங்கிலாந்தின் எனைய பகுதிகளிலுள்ள சுயாதீன விவசாயிகளின் வீதமானது தேனியர், நோவே நாட்டினர் ஆகியவர் குடியிருந்த மாவட்டங்களிலுள்ள சுயாதீன விவசாயிகளின் வீதத்திலும் கூடுதலாகவே இருந்தது. ஆனல் நோமானி யரோ பழைமை வாய்ந்த இத்தகைய சுதந்திரங்களுக்குச் சாவுமணி அடித் தனர். அத்துடன் கந்திநேவியர் குடியேறிய வடபாகத்திலும் கீழ்ப்பாகத் திலும் மட்டுமின்றி, சட்சணிய மக்கள் குடியிருந்த தென்பகுதியிலும் மேற் பகுதியிலும் பிரெஞ்சு முறைமைப்படி கண்டிப்பான பிரதேசவாரியாக அமைந்த நிலமானிய முறைமைகளையும் அவர்கள் புகுத்தினர். இவ்வாருக அநேக சந்தர்ப்பங்களில், சுயாதீனமான தேனியக் குடியானவர்கள் நில மானியப் பண்ணையைச் சேர்ந்த அடிமைகளது நிலைக்கிழிந்தனர். எனினும் வளம் பொருந்திய இலிங்கன்சயர் பகுதியில் வாழ்ந்த பண்ணை அடிமை களிற் சிலர் செல்வந்தராகவும், சட்டத்துக்குட்பட்ட சில அமிசங்களிலே சுயாதீனமான குடிமக்களாகவும் விளங்கினர்.
நோமானியர் இங்கிலாந்தின் வடபகுதியிற் செய்த அழிவுக் கருமங்களின் விளைவாக இங்கிலாந்திலும் குறிப்பாக யோக்குசயரிலும் வாழ்ந்து வந்த தேனிய மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவுற்றது. ஆனல் காலப் போக்கில் கம்பலந்தையும் இலங்காசயரையும் சேர்ந்த மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் மிக நெருக்கமாகக் குடியேறியிருந்த நோவே இனமக்கள், சனத்தொகை மிகவும் குறைந்த கிழக்குப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றதால், இங்கிலாந்திற் குடியேறியிருந்த கந்திநேவிய இனத்தவர் வாழ்ந்த நிலப்பரப்பின் அளவு இறுதியில் அதிகங்குறைந்து விடவில்லை யென்றே தோன்றுகிறது. ஆனல் கந்திநேவிய இலட்சியங்களும் நாகரிகமும் நோமானிய நாகரிகத்துக்கு வழிவிட வேண்டியனவாயிருந்தன. அமி ருவில், பேசி ஆகிய பிரபுக்களின் பெருங் குடும்பங்களையும் யோக்குசயர்
1. நோமானிய வெற்றிக்குப் பின்பே இலங்காசயர் ஒரு மாவட்டமாக அமைக்கப்பட்டது. இங்கிலாந்திலுள்ள மிகப்புதிய கோட்டங்களுள் அதுவும் ஒன்று. இறட்டுலந்து கோட்டாமானது ஒரு மாவட்டம் என்று அழைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்பட்டதும் இவ்வெற்றிக்குப் பினனரே. நோவே இனத்தவர் மேற்கு இங்கிலாந்திலிருந்து குடிகுறைந்த யோக்குசயர் மாவட்டத்துக்குப் பெயர்ந்தது பற்றிய விடயங்களுக்கு இடபிள்யூ. சி. கோலிங்வுட்டு எழுதிய “ கந்திநேவியர் காலத்துப் பிரித்தானியா’ என்னும் நூலின் 176-181 பக்கங்களைப் பார்க்க. −

Page 99
178 வடபுலம் மானியமுறைக்காளாதல்
ஆச்சிரமத்தையும் தறமிலுள்ள புகழ்பெற்ற ஆட்சி மன்றத்தையும் கொண் டிருந்த மத்திய காலத்து வட இங்கிலாந்து, முற்றிலும் நிலமானியத் திட் டத்திற்குட்பட்டதாய், நோமானியரால் ஆட்சி செய்யப்பட்டும் வந்தது.
கொத்துலாந்து நாட்டு அரசனன தாவீதின் ஆட்சிக்காலத்தில் நோமா னிய ஆட்சிக்குடும்பங்கள், அமைதியான முறையிலே கொத்துலாந்தின் எல்லையைக் கடந்து உள்நுழைந்து அந்நாட்டுச் சமுதாய வாழ்விலும் சமய
1924-வாழ்விலும் செல்வாக்குப் பெற்றமைக்கு இத்தகைய சூழ்நிலைகளே கார
153.
1070-I.
ணமாய் அமைந்தன. புரூசுகள், பலியல்கள், மெல்ருேசு, ஒலிறுட்டு ஆகி யோரை நோமானியர் வெற்றி கொண்டு அவர்களுக்குட்பட்ட பகுதியையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்தனர். மிக விரைவாக ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தினுல், தெற்கு இங்கிலாந்து வட இங்கிலாந் தைக்காட்டிலும் வேகமாகத் தியூடர் காலத்தில் நிலமானிய ஊழியைவிட்டு வெளியேறியது. எனினும் முற்றிலும் நிலமானிய முறைக்குட்பட்டு மானிய முறைச் சமூக அமைப்புக்களில் நீண்ட காலம் திளைத்திருந்த வட இங்கி லாந்து, அச்சமூக அமைப்பின் கீழ், நோதிக்கு இனத்தவரின் சுதந்திரமான இயல்புகளை எஞ்ஞான்றும் சாதித்து வந்தது. கொத்துலாந்திலும் வட இங்கிலாந்திலுமுள்ள உழவோர் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவராயும் தத்தம் பிரபுக்களிடம் அன்பினல் பிணைக்கப்பட்டவராயுமிருந்த போதிலும், நில மானிய அடிமைத்தனத்திற்குப் பலநூற்றண்டுகளாக உட்பட்டிருந்த தென் இங்கிலாந்தில் வாழ்ந்த சட்சணிய உழவோரிலும் கூடிய சுதந்திர உணர்ச்சி படைத்தவராய் இருந்தனர். Na
எரிவேட்டு என்பவனுற் பாதுகாக்கப்பட்ட ஈலி தீவிற்கெதிராக உலில்லியம் முற்றுகையிடுவதற்குச் செய்த நடவடிக்கைகளுடன் நோமானிய வெற்றி சம்பந்தமான இராணுவ நாடகம் முற்றுப்பெற்றது. எரிவேட்டு என்பவன் பென்லாந்து மாவட்டத்தைச் சேர்ந்தவன். போக்குவரத்துக்குக் கடினமான அப்பகுதியில் தரையிலும் நீரிலும் கெரில்லாப்போரைக் கையாள்வதில் வல்லவன். ஆனல் அவனுடைய எதிர்ப்பு, இங்கிலாந்தின் மற்றைப் பாகங் களையெல்லாம் அந்நியர் கைப்பற்றிய பின்பே தொடங்கிற்று. ஆகவே ஐயத் துக்கிடமின்றி அவ்வெதிர்ப்புத் தோல்வியே கண்டது. மிகக் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல பிரதேசக் கலவரங்களுள் மேன்மை வாய்ந்ததும் ஈற்றிலுள்ளதும் இவ்வெதிர்ப்பேயாகும். தாயகப் பற்றுடைய பொது இயக்கம் எதுவும் அங்கு இருந்ததில்லை ; உவலசு, யோன் ஒபு ஆக்கு போன்றவர்கள் அப்பொழுது அங்குத் தோன்றியதுமில்லை. இங்கிலாந்து இன்னும், பல்வேறு இனங்களையும் பிரதேசங்களையும் தனிப்பட்டோரது ஆட்சி எல்லைகளையும் கொண்ட ஒரு புவியியல் தொகுப்பாகவே இருந்து வந்தது. எனவே ஒரு நாடாக ஒன்று படுவதற்கு பல முயற்சிகளை இன்னும் நாடிநின்றது. அவற்றை ஆற்றும்பெற்றிவாய்ந்த முதல்வர்களை இப்பொழுது அது பெற்றிருந்தது.

எளகங்களின் மறைவு 179
இடையிடையே திடீரென ஏற்பட்ட உள்ளூர்க் கிளர்ச்சிகள் காரணமாய் இங்கிலாந்து தேசம் சிறிது சிறிதாகக் கைப்பற்றப்பட்டமை, ஆங்கில நிலக் கிழார்களிடமிருந்து அவர்களுடைய நிலத்தை உலில்லியம் கவர்ந்து தன் வழிப்பட்டோர்க்கான பொது மக்களுக்கும் குருவாய்த்தினருக்கும் அவர் விரும்பிய அளவில் அந்நிலங்களைக் கொடுப்பதற்கு ஒரு தலைக்கீடாக அமைந் தது ; இப்படியாக ஒவ்வொரு கோட்டமும், முதலில் அரசனிடமிருந்து பிரெஞ்சு மொழி பேசும் பரன்களினலும் தலைமைக் குருமார்களினலும் பெறப்பட்டு, பகிர்ந்தளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் அனேக வருடங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த படை யெடுப்புக்களும் சொத்துப் பறித்தலும் படிப்படியாக நிகழ்ந்தமை, அந் நாட்டினது நிலமானிய முறைமையிற் காணப்பட்ட தனிப் பண்புக்கு ஒரு காரணமாக அமைந்தது. அத்தனிப்பண்பு யாதெனில், தனிப்பட்ட ஒவ் வொரு பரனுக்குமுரிய நிலங்கள் நாட்டின் பலபாகங்களிலும் சிதறிக் கிடந்தனவென்பதாகும் ; ஐரோப்பாவிற் பெரும்பாலும் இருந்தவாங்கு அப்பிரபுக்களின் சொத்துக்கள் ஒரே மாகாணத்தில் ஒன்று சேர்ந்து இருக்க வில்லை. இங்கிலாந்திலிருந்த நோமானியத் தலைமகனின் உடைமைகள் நாட் டில் எங்கணும் பரவலாகச் சிதறிக் கிடந்ததினல், மன்னனதிகாரமானது, ஒரு கோட்டத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு தனித் குடிமகனின் அதிகாரத்தைக் காட்டிலும் உறுதிவாய்ந்ததாக இருந்தது. ஆகவே அரசன் ஒரு மாநகர் மணியத்தின் மூலமாக அந்த உடைமைகளை ஆளக் கூடியவனுயிருந்தான் ; இம்மாநகர் மணியம் ஒரு பரனேயொத்த தரத்தவனுயிருந்தும், அரசன் விரும்பிய காலை விலக்கப்படும் ஒரு அரச அலுவலாளனுகமட்டுமிருந்தான். பழைய ஆங்கிலேயக் “ கோட்டமணியகாரர் ” இது முதற் கொண்டு நோமா னிய “ உவிக்கோந்தே ’ எனப்பட்டனர் ; பழைய ஆங்கிலேயக் கோட்ட மானது, மாகாணம் எனப் பொருள்படும் “ கவுண்டி ” என்ற அந்நியப் பெயரால் அழைக்கப்பட்டது. எனவே மாநகர் மணியங்களின் ஆதிக்கத்திற் குட்பட்ட மாவட்டங்கள், சட்சணிய இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சிக் காரருக்கும், பிரெஞ்சு மொழி பேசிய கிளர்ச்சிக்காரருக்கும் எதிராக நோமானிய மன்னர் தங்களுடைய அரசியலதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கேற்ற சிறந்த சாதன மாக அமைந்தன.
ஒவ்வொரு கோட்டத்திலும் நேரடியான ஆட்சிமுறை நிலவும் பொருட்டு, இங்கிலாந்திலுள்ள ஆறு பெரிய எள்களின் ஆட்சிப் பகுதிகளை உலில்லியம் வேண்டுமென்றே குலைத்தான். சட்சனியரின் ஆளுகையின் பிற்பகுதியில் இவ்வாருக இங்கிலாந்து எள்களின் ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதன்முதலாக உவெசெட்சு மறைந்தது ; அத்துடன் கோடுவின் பிரபுவின்
வமிசமும் அழிந்தது ; இதற்குப் பின்னர் ஆடி என்பாரின் நவீனங்களி
லன்றி வேறு எஞ்ஞான்றும் உவெசெட்சு ஒரு தனித்த கூருக இடம் பெற்றிலது. எட்டுவின் மோகார் ஆகியவர்கள் தம் இரண்டாவது கலகத்தின்
1069

Page 100
1075.
180 மன்னனும் பரன்மாரும் ஆங்கிலரும்
பின் வீழ்ச்சியுற்றகாலை, அவர்களுடைய உடைமையாக இருந்த மேசியாவும் நோதம்பிரியாவும் மறைந்தொழிந்தன. கிழக்கு அங்கிலியா மட்டும் ஒரு நோமானிய எளின் கீழ்ச் சிறிது காலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனல் அந்நோமானியவள், அரசனுக்கு விரோதமாகக் கலகம் செய்த பின்னர், அது முன்பிருந்தவாறு பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. உவில்லியம் உரூபசு இறந்த பொழுது, அரசனுடைய அலுவலரைத் தவிர்த்து வினை யோரால் ஆட்சி செய்யப்பட்டு வந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே எஞ்சி யிருந்தன. அவைகள் செசுற்றர், சுரூசுபரி எனப்பட்ட, பரம்பரையான எளின் ஆட்சிப் பகுதிகளும் தரம் மாகாணமுமாகும். தரம் மாகாணத்தை அதன் இளவரசர் எனக் கருதப்பட்ட விசுப்பாண்டவர் பரிபாலித்தார் அவரே எல்லைப்புறத்தில் உலகியல், ஆன்மீகத்துறைகளின் தலைவராவர். இங்கிலாந்தின் எல்லைப்புறங்களிலே வேல்சு மக்கள், கொத்துலாந்து மக்கள் ஆகியவர்களுக்கு எதிராக, நோமானிய அரசர்கள் பலமுள்ள இராணுவப் படைகளை இப்பகுதிகளில் வைத்திருக்கும் நோக்கமாக, இம்மாகாணங்களைத் தம் ஆட்சிக்குட்படுத்தாது இவ்வாறு விடுத்திருந்தனர்.
இம்மூன்று ஆள்புலங்களைவிடுத்து, இங்கிலாந்தில் உலில்லியம் இரட்டை யாட்சி முறையை நிறுவியிருந்தான் : எவ்வாறேவெனின் தன் னிடம் நிலங்களைப் பெற்றுக்கொண்ட நிலமானிய ஊழியர்கள் மூலம் மறைமுகமாகவும், மாநகர் மணியங்களும், உடைமைக் கணிப்புச் செய்தவர் களும் போன்ற விசேட ஆணையாளர் மூலம் நேர்முகமாகவும் என்க. நாடு முழுவதும் சென்று நீதி நிருவாகம் செய்துவந்த இந்த ஆணையாளர், சாளிமேன்பேரரசனின் ஆளுகையின்போது நிருவாகம் நடத்திவந்த மிசி என்பவர்களைப் போன்றிருந்ததுமின்றி, " அயர் ” “ அசைசு ’ ஆகிய நீதி மன்றங்களில் வரவிருந்த நீதிபதிகளுக்கு முன்னேடிகளாகவுமிருந்தனர். சட்சணிய இங்கிலாந்தில் அவர்களைப் போன்று யாருமே கருமமாற்றியதில்லை. ஏனெனில், கோடுவினது உவெசெட்சின் அல்லது எடுவினது மேசியாவின் அலுவல்களை மாநகர் மணியம் மூலமும் நகர்ப்புறச் சான்றேர் மூலமும் விசாரணை செய்யு முகமாகப் புறப்படு மொருவன் சட்சணிய மன்னனின் துணிவுடை ஊழியனதல் வேண்டு மாதலால் என்க.
பிரெஞ்சு மொழி பேசிய பரன்கள் ஐரோப்பாவிலே தங்கள் இனத்தவர் அனுபவித்து வந்த சிறப்புரிமைகளை இங்கிலாந்திலும் தாம் அனுபவிக்க லாம் என்று நம்பியிருந்தனர். ஆனல் இவர்களுடைய அதிகாரவரம்பின் மீது உவில்லியம் தடைகளை எற்படுத்தியதும் இவர்களில் சிலர் உவில்லியத் தின் மீது ஆத்திரங் கொண்டனர். ஆகவே அவன் தன்னுடைய ஆட்சியிற் கடைசிப்பன்னிரண்டு ஆண்டுகளை இவர்களுடைய குழப்பங்களை அடக் குவதிலேயே செலவிடவேண்டியதாயிற்று. இதற்கு அரசன் மீது பற்றுள்ள நோமானிய ஊழியர்களும் அவனற் கைப்பற்றப்பட்ட இங்கிலாந்திலுள்ள

மன்னனும் பரன்மாரும் ஆங்கிலரும் 181
மக்களும் துணையாயிருந்தனர். அந்நாட்களில் இன உணர்ச்சியானது விருத்தியடைந்திலது. மேலும் சட்சணியமக்கள் தங்களுடைய இனத்தைச் சேர்ந்த அரசர்களது ஆட்சியிலேதானும் வலிமைமிக்கவரால் இழைக்கப் பட்ட இன்னல்களுக்காளாகியிருந்தனர். ஆகவே பிரெஞ்சுக்காரர் தம் நாட்டைக் கைப்பற்றியதால் உண்டான தீமைகளை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டனர் ; மரபுரிமையை இழந்துவிட்ட ஆங்கிலமக்கள் உவில்லி யத்தை எற்றுக்கொள்ளுமளவுக்காதல் பிரெஞ்சுக்காரரைமன்னித் திருந்த னர். எனினும், அண்மைக்காலத்திலே, மன்னிக்க முடியாத இன்னல்களை ஐரிசு மக்களுக்கு இங்கிலாந்து செய்தவாங்கு, பெருந்தீமை கிளை மாமன்னன் உவில்லியம் இங்கிலாந்துக்கிழைத்தான்.
1075 ஆம் ஆண்டில் நடைபெற்ற பரன்சளின் கலகமும், அதை அரசன் அடக்கியமையும் இங்கிலாந்தில் நோமானியரது வெற்றி எலவே பூர ணமாக்கப்பட்டுவிட்டதென்பதையே காட்டும். திருடர்கள் தம் கொள்ளைப் பொருள்களைப் பகிருங்காலை தம்முட் கலகம் விளைத்துத் தம் கொள்ளைக் குப் பலியான மக்களின் உதவியை நாடுவதுண்டு. உவில்லியத்தின் புதல்வர் அரசுரிமையைப் பெறும் நோக்கமாகப் படை பூண்டு கடு கம் விளைத்ததனல், முதலாம் என்றி தன் குடிமக்களின் இனம்பதவிநோக்காது அவர்களின் ஆதரவைநாடிநிற்க வேண்டியவனயினன். பொதுவகை யானும் சிறப்புவகையானும் சுதந்திரப் பட்டயங்களை வழங்குவதின் மூலம் அரச பதம் பெறப்பட்டது; அரசுரிமை பற்றிய தகராறுகளின் முடிவைத் தீர்மானிக்கக் கூடிய முதன்மையான நிலையை இலண்டன் மாநகரம் பெற்றிருந்ததால், அந்நகரத்தின் சிறப்புரிமைசளிலே தலையிடுவதற்கு நோமானிய அரசர்கள் முன்வரக்கூடும் என்ற எண்ணமும் நீங்கியது.
நிலவுடமையைத் தழுவிய ஒரு கண்டிப்பான மானியமுறைமையை இங் கிலாந்தில் நடைமுறையிற் கொண்டுவந்த உவில்லியம், அப்பொழுது ஐரோப்பாவில் நிலவிவந்தவாங்கு, அரசியலோடு இணைந்த மானிய முறை யின் ஆட்சியறவை இங்கிலாந்து அடையாதவாறு தடுத்தான். மேலும் முடியாட்சியைத் தழுவிய ஒரு நிருவாகவமைப்பும் படிப்படியாக விருத்திய டைவதற்கு அவன் வழி வகுத்தான். எனினும் அவன் வாம்பிலாச் சர்வாதிகாரத்தை அனுபவித்ததில்லை. அவனுக்குப் பின் இங்கிலாந்தில் ஆட்சி செய்தவர்களும் அத்தகைய சர்வாதிகாரத்தை தங்கள் உரிமை யாகவே அனுபவித்ததுமில்லை. உவில்லியம் இரு வேறு சட்டமுறைகளாற் கட்டுண்டிருந்தான். அவைகளில் ஒன்று அவன் கைவிடாமல் பின்பற் றுவதாக வாக்களித்திருந்த பழங் காலத்துச்சட்சணியச் சட்டமுறை , மற்றை யது கடல் கடந்து அவனைப்பின்பற்றி வந்தோர் யாவரும் ஒரே முகமாகப் பற்றி நின்ற ஐரோப்பிய மானிய வழமை ஆகும். இவ்விருமுறைகளின் புணர்ப்பினலேயே இக்கால இங்கிலாந்தின் சட்டங்களும் உரிமைகளும் காலப் போக்கில் உருவாயின. சட்டங்களைத் “தன்னகத்தே கொண்ட” தனி

Page 101
182 மானிய அமைப்பு முறை
மனிதன் ஒருவனிடத்தில் அதிகாரம் குவிந்திருத்தல் (உலகியல் சார்ந்த விடயங்களிற்றணும்) மத்திய கால உளப்பாங்கிற்கு ஒவ்வாததொன்ருயிருந் தது. சகல வல்லமையும் வாய்ந்த தற்கால அரசும் “ அனைத்தும் நானே ” எனக்கூறும் எல்லாம் வல்ல அரசனும் மத்திய கால உள்ளத்தினல் ஏற்கக்கூடியவையல்ல. பராதீனப்படுத்தவொண்ணுத தனி உரிமைகளும், கூட்டுரிமைகளும் அடங்கிய ஒரு கதம்பமே பொதுச்சட்டமென்பது அம்மக்கள் கருத்தாகும். அரசனுக்கும் பரன்களுக்குமிடையே திருச்சபையிருந்தது; அத்திருச்சபை இவ்விரு உலகியற் சத்திகளுக்கிடையே சமநிலை எற்படுத்திக் கொண்டு தன்னுடைய நலத்தையும் தன்னுடைய ஒழுக்க வளர்ச்சியையும் பாதுகாத்து வந்தது. இலான்பிராங்கு காலந்தொட்டு இலாங்டன் காலம் கடந்து குருேசற்றே காலம் வரை மீண்டும் மீண்டும் திருச்சபையானது அரசியல் யாப்பைச் சமநிலைப் படுத்துவதைக் காணகிறேம். உலகியல் சார்ந்தோர் விளைக்கும் கொடுங்கோன்மையையும், ஆட்சியறவையும் திருச் சபை ஒக்கவே வெறுத்து வந்தது ; தனது சிறப்புரிமைகள் நேரடியாகப் பாதிக்கப்படாதவிடயங்கள் சம்பந்தமாக, வாய்திறக்கவியலாதிருந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் சார்பாகப் பேசும் வல்லமையைத் திருச்சபை பெற்றிருந்தது.
மத்திய கால அரசில் வல்லாட்சியைக் காட்டிலும் ஆட்சியறவே நேரக்கூடிய ஆபத்தாக இருந்தது. ஆனல் மத்தியகால திருச்சபையில் இதன்மறுதலை யே உண்மையாயிருந்தது. மத்தியகால அரசானது அரசன், பரன்கள், சமயத்தலைவர் எனும் முத்திறத்தோர் அடங்கிய ஒரு கலப்பு அரசாய் இருந்தது. பிரபுவிற்கும் ஊழியனுக்குமிடையேயுள்ள பி2னப்பே நிலமானிய அரசியலின் சாரமாகும் ; அப்பிணைப்பிற்கு அடிப்படை அவ்விரு பாலாரும் ஒருவர்க் கொருவர் ஆற்ற வேண்டிய சில கடப்பாடுகளேயாம். இருபுறத்திலும் இவ்வுடன்பாடு கைநெகிழப் படுமாயின் இரு சாராருமே தண்டனைக் குரியவர்களாவார்கள். அக்காலச் சட்டங்கள் நன்கு வரைய றுக்கப்படாதும், நன்கு பாலனஞ் செய்யப்படாதும் இருந்த LIL9-L1 ft 6), நிலமானிய உரிமையைத் தீர்மானிக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலே தொ டர்ந்து போர் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தெய்வீக உரிமை பெற்ற மன்னரின் அதிகாரத்தை மறுக்காமை மத்திய காலச்சிந்தனைப் போக்கிற்கும் வழமைக்கும் முரண்பட்டதாக இருந்தது. நிலமானிய முறை யின்படி, ஆண்டானும் அடிமையும் ஒருவருக்கொருவர் ஆற்றவேண்டிய கடப்பாட்டிலேயே, “ அரசனுக்கும் பொதுமக்களுக்குமிடையேயுள்ள ஆதி ஒப்பந்தத்திற்கு” வரலாற்றில் ஆத்ாரத்தைக்காணலாம் ; இவ்வொப்பந் தத்தையே மறுலமர்ச்சிக் காலத்தில் தோன்றிய வல்லாளர்க்கெதிராக உவிக்குக் கட்சியைச் சேர்ந்த தத்துவஞானிகள் பிற்காலத்திற் பிரகடனம் செய்தனர்.

மன்னனது கியூரியா 183
தன்னிடம் நேரடியாக நிலங்களைப் பெற்ற பிரதான வாரக்காரர்களைக் கலந்தாலோசித்தல், நிலமானிய மன்னனுடைய உரிமையாகவும் கடமை யாகவும் இருந்தது. அவ்வாறே தன்னுடைய எசமானனகிய அரசனுக்கு ஆயுரை வழங்குவது வாரக்காரரின் உரிமையாகவும் கடமையாகவும் இருந்தது. இதிலிருந்தே எல்லா நிலமானிய அரசுகளுக்கும் பொதுவாக விளங்கிய கொன்சிலியம் அல்லது “ கியூரியா ”, என்றழைக்கப்பட்ட “அரச ஆலோசனைச் சபைகள் ” தோன்றின. உவில்லியத்தின் ஆலோசனைச் சபையும் நீதிமன்றமும் இவ்வாறு தோன்றியவையாகும். உவிற்றன் என்றழைக்கப்பட்ட ஆலோசனைச் சபையானது முற்றிலும் நிலமானிய அமைப்புக்குட்பட்டதான சபையாக இருக்காவிட்டாலும் சில அமிசங்களில் அத்தகையதாகவே இருந்தது. ஆனல் வலிமையும் மூர்க்கத்தனமுங் கொண்டிருந்த நோமானிய அரசர், உவிற்றன் சபையிலுள்ள வலிமைசால் பிரபுக்களின் கட்டுக்குட்பட்டுச் சட்சணிய அரசர்கள் ஆட்சி செய்தது போல, ஆலோசனைக் கழகத்திலுள்ள தங்கள் ஊழியர்களுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி புரியவில்லை.
நோமானிய அரசர்கள் காலத்தில், கொன்சிலியம், கியூரியா, ஆகிய இருசொற்களும் அரச ஆலோசகர்களைக் கொண்ட ஒரு பொது அவையைக் குறிப்பதற்கு வரையறையின்றிப் பொதுவாய் உபயோகிக்கப்பட்டன. அவ் வவையானது பாலனம், நீதிச்சேவை, சட்ட வாக்கம் ஆகிய முத்தொழில் களுக்கான கோமறைக்கழகம், கோத்தவிசுமன்று, பாராளுமன்றம் என்ற தனித்தனி உறுப்புக்களாக இன்னும் பிரிக்கப்பட்டிலது. அஞ்ஞான்று பாலனம், நீதிச்சேவை, சட்டமியற்றல் சம்பந்தமான செயல்கள் பற்றிய வேறு பாடுகளே, நுணுக்கம் பார்க்கும் மதகுருமார் தாமும் உணர்ந்திருக்க விலலை. அவ்வவ்வேளை எழுந்த பிரச்சினைகளை, அவை எத்தன்மைய வாயினும், அவ்வக்காலை தன்னேடிருந்த நீதிமன்றத்து உறுப்பினர் களோடு, அல்லது அரச ஆலோசனைச் சபை அங்கத்தினர்களோடு அரசன் கலந்தாலோசித்து வந்தான். எத்தகைய விதிகளையும் பின்பற்றது அவ் வக்காலை எழும் பிரச்சினைகளைத் தீர்க்குமுகமாக ஆங்காங்கு அவன் குழுக்களை நியமித்தும் ஆணையாளர்களைக் கோட்டங்களுக்கு அனுப்பியும் வந்தான். குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கொண்டு, காலாகாலங்களில் விசேட நோக்கங்களுக்காக ஒன்று கூடும் உரிமையும் கடமையுமுடையதாயும், குறிப்பிட்ட மக்களைக் கொண்டதாயுமுள்ள மேன்மக்கள் சபை அல்லது பொதுமக்களின் நீதிமன்றம் போன்ற பொது அவைகள் இன்னும் தோன்றியதில்லை. இத்தகைய தெளிவற்ற நிலை, ஆற்றல் வாய்ந்த ஒர் அரசனுக்கு அளவற்ற அதிகாரத்தைக் கொடுக்க வல்லதாயிருந்தது ; ஆனல் ஆங்கிலேய-நோமானியரது அரசிலேற்பட்ட குலைவுநிலையிடையே ஓரளவிற்கேனும் ஒழுங்கை நிலைநாட்ட அரசனுக்கு அத்தகைய அதிகாரந் தேவைப்பட்டது. s

Page 102
184 மன்னனது கியூரியா
முதலாம் என்றியின் ஆட்சியிலேயே தொழிற்பாகுபாட்டுக்காகிய முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது ; அக்காலே “ கருவூலப் பரன்கள் ’ சிலர் தம் துறைக்கான ஒழுங்கு முறையையும் அதற்குரிய பதவியையும் பெரிய நீதிமன்றத்தின் அல்லது ஆலோசனைச் சபையின் ஒர் உட்பிரிவாக உருவாக் கினர். மாநகர் மணியங்களிடமிருந்தும், மானியக் குத்தகைக் காரரிட மிருந்தும், பட்டயமளிக்கப்பட்டிருந்த நகரங்களிலிருந்தும், அரசாங்கக் காணி களிலிருந்தும் வரவேண்டிய பணத் தொகைகளையும் பலதரப்பட்ட வருமானங்களையும் முறையாகப் பெறும் நோக்கமாகவே இத்துறையமைக்க LIL-L-ěj
சட்டமியற்றல், பாலனஞ் செய்தல், நீதிவழங்கல் என இப்போது நாம் வழங்கும் அரசியல் துறைகளைப் பற்றிய ஏனைய ஒழுங்கு முறைகள் அனைத்தும் வரையறுக்கப்படாது விடப்பட்டன. எத்தகைய சந்தர்ப்பத்திலும், கையாள வேண்டிய நடைமுறையானது அரசனுடைய இச்சைவழித் தீர்மானிக்கப்பட்டது. எனினும், வாட்பலத்தால் தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்த படைபூண்ட பரன்கள் பெரும் பான்மையாக வாழ்ந்த இந்நாட்டில், 9|Udgg)|G0) u அதிகாரம் அவ்வழி வரம்புடைத்தாயிருந்தது. எனினும் அரசன் தன் பிரதான குத்தகைக் காரர்களைக்கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கொள்கையளவில் இருந்து வந்த கடப்பாடானது, சட்டப்படி வரையறுக்கப்படாதிருந்த போதிலும், அல்லது நடைமுறையில் ஒழுங்கற்றுக் கையாளப்பட்டு வந்திருந்த போதிலும் ஒருபோதும் மறுக்கப்பட்டதில்லை; பிளந்தாசெனற்று அரசர் ஆட்சியில் ஏற்பட்ட அரசியலமைப்புப் பற்றிய போராட்டங்களின் போது, ஆங்கில மக்களின் சுதந்திரம் வளர்ந்தோங்குவதற்கு இதுவே வித்திட்டது.
அரசனுடைய அதிகார பலத்தால் நடாத்தப்பட்ட விசாரணைகளுள் மிகப் பெரியது 1086 ஆம் ஆண்டில் நடைபெற்ற நில உடைமைக் கணிப்பாகும். இக்கணிப்பேட்டின் வாயிலாக, கோண்வாலிலுள்ள காடடர்ந்த கடற் கழிகள் தொட்டு, எரிந்த யோக்குசயர்ப்பட்டணங்கள் பாழான பள்ளத் தாக்குக்கள் வரை பரந்தும் ஒதுங்கியும் வாழ்ந்த நோமானியர், சட்சணியர், கெலித்தியர் யாவரையும் எவ்வாறு அடிபணியச்செய்தான் மன்னன் உவில்லியம் என்பது தெளிவாகின்றது. மக்களின் ஆதரவு பெருத இவ் வாருன ஒரு விசாரணையின் போது மக்கள் இறுத்த ஒரே மாதிரியான பதில்களைப் போன்று ஐரோப்பாவில் எந்தப் பெரிய மாவட்டத்திலும் மக்கள் பதிலிறுத்ததில்லை ; அன்றியும் 2 ஆம் என்றியின் காலத்துப் பணித்தறைக் குழுவினர் ஆட்சி வரையில், இங்கிலாந்திலேதானும் இத்தகை விடைளைப் பெற்றிருத்தல் சாலாது. இக்கணக்கெடுப்பை எவ்வளவு முனைணிதாய்ச் செய்து முடிக்குமாறு அரசன் நிர்ப்பந்தித்தான் எனின், அக்கணக்கெடுப்பின்போது பெருங்கூருயுள்ள நிலமோ அல்லது காலேக்கர், தா ஒங் கொண்ட சிறு கூறுநிலமோ-அல்லது இதைக் கூறுவது வெட்கத்

நிலவுடைமைக் கணிப்பேடு 185
துக்குரியதெனினும், அரசன் இதைச் செய்வதற்கு வெட்கமடையவில்லைஎருது, பசு, பன்றி ஆகியவைகளில் ஒன்றைத்தானும் விடாது எழுது வித்தான் என்று சட்சணிய வரலாற்றுக் குறிப்பாளர் கூறுகிருர்,
நில உடைமைக் கணிப்பேடு என்பது குறிப்பாக ஒரு நாட்டின் வருமானத்தைப் பற்றிய குறிப்புக்களடங்கிய ஏடாகும். அதாவது தேனியர் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து நாட்டு வருமானம் கருதி அறவிடப்பட்ட வரிகள் சம்பந்தமான உண்மைகள் தொகுக்கப்பட்ட ஓர் வடாகும். ஆனல் அவ்வேட்டில் உள்ள வினக்களும் அவற்றிற்கு இறுக்கப்பட்டிருந்த விடை களும் வரி அறவிடுவதற்கு உதவிசெய்வனவாகத் தோன்றிய போதிலும், இந்நோக்கம் தவிர வேறு எந்நோக்கத்துக்காயினும் அவ்வேடு தயாரிக்கப் படவில்லை என்று சொல்வது பொருத்தமற்றதாகும். மிகப் பெரும் முயற்சியின் பயனகத் திருத்தியமைக்கப்பட்ட இந்நிலஉடமைக் கணிப் பேட்டின் முடிவான தோற்றம், தேனியர் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து வரி அறவிடுவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டி ருந்தது என்பதைக் தெளிவாக்குகிறது. இவ்வேடானது, ஒவ்வொரு கோட்டத்திலுமுள்ள மானியக் குத்தகைக் காரரினதும், அவர்களின் பண்ணையாட்களினதும் அதிகாரம், கைவளம் பற்றிய ஒரு திட்டமான கணிப்பை மானியமுறைமையின் பிரகாரம் அரசனே எல்லோருக்கும் மேலானதலைவன் என்ற முறையிலும், அவனிடமிருந்தே அவன் மண்டி லத்திலுள்ள ஒவ்வொரு எக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது என்ற முறையிலும் அவ்வரசனுக்குச் சமர்ப்பிப்பதாயிற்று. இராணுவம், வருமானம், நீதிபரிபாலனம், காவல்துறை முதலிய துறைகளை நிருவகிப் பதற்குப் புதிய நிலமானிய அமைப்புக்கள் ஏற்படுத்தியன் மூலம் சட்சனி யரது உள்ளூர்ப் பரிபாலனத்தை விரிவுறச் செய்வதற்கு அரசாங்கம் முயன்றது. ஆகவே ஒவ்வொரு நகரத்தையும் சேர்ந்த ஆறு பண்ணை வேலையாட்களையும், நகரமணியத்தையும், மதகுருவையும் கொண்டு அமைக் கப்பட்டிருந்த நடுவர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை யாளரி னலேயே நிலவுடைமைக் கணிப்பேட்டுக்கு வேண்டிய முதற் சான்றுகள் பெறப் பட்டனவெனினும், அவ்விவரத்திரட்டில் மாற்றியமைக்கப்பட்ட ஒழுங்குப்படி, ஒவ்வொரு நகரமும் அல்லது ஒவ்வொரு நகரின் பகுதியும் மானிய முறை மைக்குட்பட்ட ஒரு பண்ணை போன்றதான புது நிலையைப் பெற்றது.
சட்சனியரது வாழ்க்கையின் ஒர் அமிசமான (சயர்) “ கோட்டம்பற்றி” நில உடமைக் கணிப்பேட்டிலே தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. கோட்டம் அல்லது " மாகாணம்’ (கவுண்டி) என்ற தலைப்பின் கீழ் எல்லா விபரங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் கோட்டம் என்ற அமைப்பின் மூலமாகவே அரசன் அதிகாரத்தைச் செலுத்த வெண்ணியிருந்தானதலால் என்க. ஒவ்வொரு கோட்டப் பகுதியிலும் பிரதான வாரக்காரரின் ஆட்சிக் காணியைச் சார்ந்தே எல்லாத் தகவல்

Page 103
86 நிலவுடைமைக் கணிப்பேடு
களும் மாற்றியமைக்கப்பட்டன. இப்பிரதான வாரக்காரரின் ஆட்சிக் காணிகள் அந்நிலமானிய அமைப்பிற் பல்வேறு இடங்களில் பரவிக் கிடந்தன. எனினும் தலைமையான வாரக்காரனே முக்கியமானவனகக் கருதப்பட்டான். நில உடைமைக் கணிப்பேட்டில் மிகக் குறைந்த கூருக கணிக்கப்படும் கிராமமானது ஒரு நகரத்திற்குரியதாகக் கருதப்படாமல் நிலமானியப் பிரபுவுக்குட்பட்ட ஒரு பண்ணையாகக் கருதப்பட்டது. அப் பிரபு தலைமைவாரக்காரணுகவோ பண்ணை ஊழியஞகவோ இருந்தான். திருத்தியமைக்கப்பட்டு, ஈற்றில் வெளிவந்த கணிப்பேடர்னது, * பிரபு இன்றேல் நிலமும் இல்லை ’ என்ற மானிய முதுமொழியை முன் என்றும் அறிந்திராத ஒருசீரான முறையில் நிலைநாட்டியது.
தேனியர்மீது விதிக்கப்பட்ட வரியை அறவிடுவதில் நோமானிய அரசனும் அவனது ஆலோசனைக்கழகமும் ஒவ்வொரு கோட்டத்திற்கும் குறிப்பிட்ட ஒரு முழுத் தெகையை விதித்திருந்தது அத்தொகையானது மாகாணப் பிரிவுகளான அன்றெட்டுக்களிடையே பங்கிடப்பட்டது. கோட்டத்து அதிகாரி கள் அல்லது அன்றெட்டு அதிகாரிகள் நகரமக்களிடமிருந்தோ அல்லது விவசாயிகளிடமிருந்தோ இத்தொகையை அறவிடாமல், ஒவ்வொரு பண்ணைக்கும் பொறுப்பாக விருந்த பிரபுவிடமிருந்தே இதை அறவிட்டனர். இப்பிரபு வரி சம்பந்தமான விடயங்களில் தன் மேற்பார்வையிலிருக்கும் பண்ணைக்குப் பொறுப்பாளியாவதுடன், தன்னல் இயன்றவரை தன் கீழுள்ள விவசாயிகளிடமிருந்து இத்தொகையை அறவிடுவான். சட்டத்தின் பிரகாரம் ஒரு பெரும் பண்ணையின் சார்பாக எவன் பொறுப்பேற்றுக் கொள்ளுகிறனே அவனே அப்பண்ணைக்குச் சொந்தக்காரனகின்றன். இம் முறையானது மேன்மேலும் பரவிவர, பழைய கிராமஅமைப்பு முறை காலப்போக்கில் மறைந்துவிடுகிறது. இத்தகைய முறை சட்சனியரது காலத் திற்கு மிக முன்பே தொடங்கப்பட்டுள்ளது. இப்பொழுது இம்முறை கொள்கை சம்பந்தமாய்ப் பூரணப்படுத்தப்பட்டு, தேனியர் வாழும் பிரதேசத் தையும் உள்ளடக்கிய நாடு முழுவதிலும் ஒரேசீராய் நடைமுறைக்குக்
கொண்டுவரப்பட்டது.
ஒரு பிரபுவின் பண்ணையே இங்கிலாந்திலுள்ள மிகக் குறைந்த நில அளவைக் கூருகும். நகர்ப்புறமே இப்பண்ணையாக மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொரு பண்ணைக்கும் பண்ணை நீதிமன்றம் ஒன்று உண்டு.? ஆனல் நோமானிய இங்கிலாந்திலே தனிப்பட்டவரின் அதிகாரத்துக்குட்பட்ட நீதி மன்றங்களில் அப்பண்ணை நீதிமன்றம் ஒன்றுதான் இருந்தது என்றே
நிi உடை:ை)க் - னிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிப் பொழிப்பு ஒன்றை இவ் வகிகாரத்தின் இறுதியில் காண்க.
சி. பண்ணைக்குரிய விவசாய முறைகளும், சமுதாய அமைப்பும் முதல் அத்தியாயம் 1 இல் வருணிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

சயரும் காட்டாட்சிச் சட்டமும் 87
அல்லது அதுதான் மிக முக்கியமானதாக இருந்தது என்றே கொள்வதற் கில்லை. மானியவார முறையை நாடுமுழுவதும் அமைப்பதற்கு அப்பண்ணே நீதிமன்றங்களைத் தழுவி வேறு சில மேல் நீதிமன்றங்களும் வேண்டியாங்கு நிறுவப்பட்டன. வார முதல்வர் ஒருவர் தமது பண்ணே யாட்களோடு சட்டங்கள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு நீதிமன்றத்தைக் கூட்டுவிப்பர். இது மட்டுமன்றி, சட்சனியர் காலத்திலி ருந்து வரப்பெற்ற அருமையான பல உரிமைகள், பெரும் பிரபுக்களுக்கும் சமயத் தலைமைக் குருக்களுக்கும் கோட்டப்பிரிவு (அன்றெட்டு) நீதி மன்றத்திற்கிருந்த குற்றவியல் சார்ந்த அதிகாரங்களுக்கொப்பான அதி காரங்களை அளித்தன. நோமானியர் வெற்றிக்குப் பிற்பட்ட மூன்று நூற்றண்டுகளில், தனிப்பட்டவரின் நியாயாதிக்கத்துக்குப் பதிலாக அரச நீதிமன்றங்கள் படிப்படியாக நிறுவப்பட்டன. ஏனெனில் தனிப்பட்டவர் மன்றங்களில் வழங்கப்படும் நீதியைக் காட்டிலும் அரச நீதிமன்றங்களில் வழங்கப்படும் நீதி மிகச் சிறந்திருந்ததனலும் அதே நேரத்தில் இலகுவில் பெறக்கூடியதாக இருந்ததனலும் என்க. ஆனல் இத்தகைய அரச நீதியைப் பெறுவதற்கு இன்னும் எதிர்காலத்தை நோக்க வேண்டியதா யிருந்தது. நோமானியர் காலத்தில், கோட்டத்து நீதி மன்றங்களும், அன்றெட்டு நீதிமன்றங்களுமே பொது மக்களுக்குரிய மன்றங்களாக இருந்து வந்தன. ஆனல் நோமானியர் வெற்றிக்குப் பிறகு அன்றெட்டு நீதிமன்றங்கள் வெகு விரைவில் மறையலாயின. கோட்டத்து நீதிமன் றங்களில் அரசனுடைய மாநகர் மணியம் தலைமை வகித்தார். ஆனல் நீதிபதிகளோ மாகாணங்களிலுள்ள கட்டுப்பாடற்ற தலையாயகுடிகளாவர். இவர்கள் மாவட்டத்துக்குரிய மரபுமுறையான சட்டங்களையும், அக்கோட்டத் திலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டதும் அவர்களால் எற்றுக்கொள்ளப் பட்டதுமான, நாடுமுழுவதுக்கும் பொதுவான சட்டங்களையும் பரிபாலித்து வந்தனர். ஆனல் ஆங்கில வழமைச்சட்டமும் அரச நீதிமன்றங்களில் அச்சட்டத்தைச் செயற் படுத்தும் தகுதிவாய்ந்த சட்டத்தொழிலறிஞர் குழுவும், இன்னும் காலம் என்ற கருப்பையிலேதான் இருந்து கொண்டி ருந்தன.
காடுசார்ந்த நீதிமன்றம் என்ற ஒருவகையான அரச நீதிமன்றத்தை உவில்லியம் புதிதாக நடைமுறைக்குக் கொண்டு வந்தான். நோமா னியருக்கு மட்டுமின்றி சட்சனியருக்குமே, வேறு தனிப்பட்ட எந்த நீதி மன்றத்தையும் விட இந்நீதிமன்றம் அதிக வெறுப்பைக் கொடுத்து வந்தது. ஏனெனில் அரசனுடைய அதிகார வலிமையையும் அவனது சுயநலனையுமே இந்நீதிமன்றம் பிரதிபலிப்பதாயிருந்தது. நோமண்டியி லுள்ள காட்டுச் சட்டமும் அதற்குரிய நீதிமன்றங்களும் இங்கிலாந்திற் புகுத்தப்பட்டன. அவற்றின் விளைவாக மக்கள் அனுபவித்த துயரமும் அடிமைத்தனமும் சொல்லுந்தரத்தவன்று. அடுத்த நூற்றண்டில் அறுபத்தொன்பது காடுகள் அரசனுக்குச் சொந்தமாயின. நாட்டின்

Page 104
188 சயரும் காட்டாட்சிச்சட்டமும்
பரப்பளவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை இவை உள்ளடக்கி யிருந்தன. மிகப்பரந்த-ஆனல் சனத்தொகை குறைவான-அப்பகுதி களில் அரசன் உண்மையாகவே அமைதியை நிலைநாட்டினன். ஆனல், அமைதி பேண அவன் ஆங்குக் கையாண்ட முறைகள் கடவுளுக்கும் மனிதனுக்கும் எற்காதவையாகும். காடு சார்ந்த தனித்திறமை வாய்ந்த நீதிமன்றங்கள் தங்களுடைய அதிகார எல்லைக்குள் வசித்து வந்த மக்களின் சாதாரண உரிமைகளைத்தானும் பறிப்பனவா யிருந்தன. உவில்லியம் காலத்தில் உத்தரவின்றி மான் வேட்டையாடிவர்கள், அவயவங்கள் துண்டிக் கப்படுவதாகிய கடுந் தண்டனையைப் பெற்றனர். அவனுக்குப் பின்வந்த அரசர்கள் காலத்தில் அக்குற்றம் புரிவோருக்கு மரணதண்டனை விதிக்கப் Lill-gil.
நாட்டு நலங்களுக்கும் நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் ஊறுவிளை விக்கும் வண்ணம் ஏராளமான நிலங்களை மக்களிடமிருந்து மன்னன் பராதீனப்படுத்தியது நூற்றுக்கணக்கான வருடங்களாக அரசனுக்கும் அவனுடைய பிரசைகளுக்குமிடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது. படிப்படியாக மாவட்டவாரியாகக் காடுகள் அழிக் கப்பட்டு வந்ததின் மூலம் நாட்டின் பொருளாதாரத் துறையிலும் ஒழுக்கத் துறையிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வழியேற்பட்டது. சுதுவட்டு மன்னர்கள் காலத்தில் அரச அதிகாரம் பெருஞ் செல்வர் கைக்கு மாறிய பொழுது, வேட்டையாடுதல் சம்பந்தமான இக்காலச் சட்டங்கள் உருவாகி வளர்ந்தன. பிளாக்குசுற்றன் கூறியவாங்கு அச்சட்டங்கள், மடிந்துபோய்க் கொண்டிருந்த காட்டுச் சட்டங்களிலிருந்து தோன்றி வளர்ந்த புடை விளைவு எனக் கொள்ளத்தக்கவை; அச்சட்டங்களின் கடூரம் மிகக் குறைந் திருந்தாலும் அக்கால இங்கிலாந்தில் வளர்ந்து வந்த சுதந்திர உணர்ச்சி களுக்கு அவை முரணுகவே அமைந்திருந்தன.
காட்டாட்சிச் சட்டம் என்ற கொள்ளை நோயை எங்கள் தீவிற் கொண்டு வந்து புகுத்தியவன் வெற்றிவீரன் உவில்லியம் ஆவன். இது பற்றி ஆங்கிலேய-சட்சணிய வரன்முறைக்குறிப்பாளர் கூறுவதாவது :
மான்கள் வளருவதற்குப் பெரிய காடுகளை அரசன் உண்டாக்கினன். அவை சம்பந்தமான சட்டங்களை எற்படுத்தினன். அச்சட்டங்களின்படி, ஒர் ஆண்மானையோ பெண்மானையோ கொன்ற ஒருவன் குருடனுக்கப்பட்டான். மான்களை மட்டுமின்றி, காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதை யும் அரசன் தடை செய்தான். உயரமான கலைமான்களைத் தன் புத்திரர்போல் நேசித்தான். முயல்கள் எவ்விதத்தொந்தரவுமின்றி எங்கும் செல்லுவதற்கு மக்கள் பாதுகாப்பளிக்கவேண்டு மென்று கட்டளையிட்டான். செல்வந்தர் குறை கூறினர். எனழகள் முணுமுணுத்தனர். ஆனல் அவன் தன் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தமையால் எதையுமே காதிற் போட்டுக் கொள்ளவில்லை.
அரசில் ஏற்படுத்திய புரட்சி போலவே திருச்சபையிலும் உலில்லியம் பலமாறுதல்களைச் செய்தான். பிரெஞ்சுப் பெருநிலப் பரன்களும் நைற்றுக் களும், சட்சணிய எள்களினதும் மானியப் பெருமக்களினதும் பதவிகளை

குருமார் துறவு 89
எவ்வாறு கைப்பற்றிக் கொண்டனரோ, அவ்வாறே சமயவட்டத்துக்குரிய ஆலயங்களிலும் மடாலயங்களிலும் தேவாலயத்தின் உட்பிரிவுகளிலும் ஆங்கில நாட்டு மதகுருக்களுக்குரிய விடத்தில் அந்நியரான மதகுருக்கள் நுழைந்தனர். போப்பரசர் இல்டபிராண்டின் காலத்தே ஐரோப்பாவில் இருந்த மத சீர்திருத்தக் காரரின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்று இங்கிலாந்து வற்புறுத்தப்பட்டது. இவ்வித மாக ஏற்பட்ட மாறுதல்கள் சிலவற்றல், குறிப்பாக பதவணியில் அந்நியரை நியமித்ததால் எற்பட்டமாறுதல் காரணமாக, இங்கிலாந்துத் திருச்சபையானது திகத் திறமை வாய்ந்ததாயும், சமயக் கல்வி, மதப்பற்று என்பவற்றில் ஆர்வங்கொண்டதாயும் விளங்கியது. அத்துடன் நான்கு நூற்றண்டுகளாக மதம் சம்பந்தமான சிறந்த கட்டிடக்கலை வளர்ச்சியடைந்தது. இதைத் தொடக்கி வைத்த நோமானியக் கட்டிடக்கலை நிபுணர்கள், சட்சனியரது மிகப் பெரிய தேவாலயங்களைக் கண்ணைப் பறிக்கும் அழகு வாய்ந்த கட்டிடங்களாக மாற்றியமைத்தனர். ஆனல் அந்நியரான திருச்சபையின ரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மாறுதல்கள், சமய சம்பந்தமாக மேலும் இலத்தீன் பண்பாட்டின் ஆதிக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாயமைந்தன. அம்மாறுதல்களின்போது கையாளப்பட்ட வழிமுறைகள் நோதிக்கு இனத்த வரின் உணர்ச்சிக்கும் சீர்மைக்கும் ஒவ்வாதனவாயிருந்தன.
* எட்டுவேட்டு மன்னன் இறந்தன்று ” இங்கிலாந்திலுள்ள கோயிற் பற்றுக் குருக்களிற் பெரும்பாலோர் சட்டமுறையாகத் தங்கள் மனைவி மாரோடு வாழ்ந்து கொண்டிருந்தனர். உவில்லியம் காலத்திலும் அவனுடைய புத்திரர் காலத்திலும் நடைபெற்ற நீண்ட போராட்டங் களுக்குப்பின்பே குருக்களனைவரும் கட்டாயம் மணமாகாதவர்களாய் இருக்க வேண்டுமென்று ஒரு தலையாக வற்புறுத்தப்பட்டனர். இச்சட்டத் தின்படி, கோயிற்பற்றுக் குருமார் மட்டுமன்றி, அநேகமாக மததாபனத் தைச்சேர்ந்த அதிகாரிகளாகவும் மதபோதகராகவும் பணிசெய்து வந்த அனைவருமே சட்டமுறைப்படி குழந்தைகளைப் பெற முடியாதவராயினர். துறவறத்தின் இலட்சியமான தூய்மை, அக்காலத்தில் அதிக மத ஆர்வம் கொண்டிருந்த மதகுருக்களுக்கு ஏற்றதாக இருந்த போதிலும், சேவை செய்யக்கூடியவரான நகரவாசிகளுக்கும் பொதுசன ஊழியர்களுக்கும் அத்தகைய வாழ்க்கை எற்றதாகவிருக்கவில்லை. இத்தகைய ஆற்றல் வாய்ந்தோர் மதகுருக்களில் மிகச் சிலராகவே யிருந்தனர். கற்றவர்கள் எல்லோரும் மணஞ் செய்வதும் குழந்தைகளைப் பெறுவதும் தடை செய்யப் பட்டிருந்ததனுல் இனப்பெருக்கின் தராதரத்தை விருத்தி செய்ய முடியாது போயிற்று. அது மட்டுமன்றி மக்களின் ஒழுக்கநிலையில், வருந்தத்தக்க விளைவுகளும் இதனல் ஏற்படலாயின.
உவில்லியம் உருவாக்கிய மிகப் பெரிய மத சம்பந்தமான சீர்திருத்தம் யாதெனில் உலகியல் சார்ந்தனவும் ஆன்மீகத் துறை சார்ந்தனவுமான

Page 105
190 திருச்சபையும் பொது நீதிமன்றங்களும் வேருதல்
நீதிமன்றங்களை வெவ்வேருகப் பிரித்தமையேயாம். இது வரை பிசப்பும் மாநகர் மணியமும் சேர்ந்தே கோட்டத்து நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கினர். அந்நீதிமன்றத்தில் ஆன்மீகத்துறை சம்பந்தமான வழக்கு களும் உலகியல் சார்ந்த வழக்குகளும் ஒன்ருகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனல் இப்பொழுது உவில்லியம் பிறப்பித்த கட்டளைப் படி பிசப்புமார் ஒவ்வொருவரும் ஆன்மீகத்துறை சம்பந்தமான வழக்கு களை மட்டும் விசாரிப்பதற்கு அவரவருக்கான நீதிமன்றத்தை வைத்துக் கொள்ளும் படியாயிற்று. மக்களது வாழ்க்கையின் மிகப் பெரும் அமிசங்கள் பற்றித் திருச்சபையின் தனிப்பட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கக் கூடியனவாயிருந்தன. அவ்வமிசங்கள் பற்றிய விசாரணை தற்காலத்தில், குறித்த நாட்டுச்சட்டத்துக்கு அமைவாக அரசனுடைய நீதிமன்றங்களுக்கு உரியதாய் மாற்றப்பட்டுள்ளது. அத்தகைய விசாரணைகள் யாவையெனின் சபையைச் சேர்ந்த கொடுங்குற்றங்கள், விவாக சம்பந்தமான வழக்குகள், மரண சாசனங்கள், அவதூறு வழக்குகள் என்பவை. பாவங்களுக்குச் செய்ய வேண்டிய கழுவாய், சமயக் கோட்பாடுகளை மறுப்பவருக்குரிய தண்டனை ஆகியவை போன்ற, தற்காலத்தில் எந்த நீதிமன்றங்களிலும் எடுத்தாளப்படாத பற்பல விடயங்கள் பற்றிய விசாரணைகள் திருச்சபைக் குரிய நீதிமன்றங்களில் நடைபெற்றன.
உலகியல் சார்ந்தனவும் ஆன்மீகத் துறைசார்ந்தனவுமான நீதிமன்றங் களத் தொழில்பற்றி வெவ்வேருகப் பிரித்தமைத்தமை, சட்டம் சார்ந்த ஓர் உயரிய நாகரிகம் வளர்வதற்கு வழிவகுத்தது. அப்பாகுபாடு இன்றி மததாபனமோ அரசோ தன் சட்டங்களையும் தனக்கே உரித்தான தனி நிலையினையும் தாராளமாக விருத்தி செய்திருத்தல் இயலாது. ஆங்கிலச் சட்டத்தை உரோமானிய விதிப்படி பரிபாலிக்கும் திருச்சபைக்குரிய வழக்கறி ஞர்களையும் நீதிபதிகளையும் கொண்ட நீதிமன்றங்களிலிருந்து ஆங்கில வழமைச்சட்டம் ஒருபோதும் வன்புடன் வளர்ந்திருக்கவும் மாட்டாது. திருச்சபை தனிப்பட்ட நீதிமன்றங்களை ஏற்படுத்திக் கொண்டதால், அப்பொழுது ஐரோப்பாவில் தோன்றிக் கொண்டிருக்கும் சட்டம் சார்ந்த ஊழியில் உருவாகிக் கொண்டிருந்த திருமுறைச் சட்டத்தை விரைவில் கையாளவும் முடிந்தது. மத்திய ஊழியின் பிற்பகுதி முழுவதும் இங்கிலாந்திலிருந்த திருச்சபைக்குரிய நீதிமன்றங்களில் திருமுறைச்சட்டம் வலியுறுத்தப்பட்டது. திருச்சபையானது ஆன்மீகத்துறை சம்பந்தமான ஒரு தாபனம் என்ற முறை யில் போப்பரசரின் அதிகரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தது. ஆனல் அரசன் உலகியற்றுறையின் பிரதிநிதி என்ற முறையில் போப்பரசரின் அதிகாரத்தை மதித்தானுயினும் தனக்குப் போட்டியாயமைந்துள்ள ஓர் அதிகாரமாகக் கருதி நடந்துகொண்டான். ஆகவே போப்பரசரின்அதிதாரத்துக்கு எல்லைவகுக் கப்பட்டது. இவ்வதிகாரவரம்பை மத அதிகாரிகள் எற்படுத்தாமல் அரசனே தன்னுடைய அதிகாரத்தைக் காத்துக் கொள்ளுமுகமாக ஆங்கிலக் குருமார் பலரின் நல்லெண்ணத்தோடு அவ்வாறு ஏற்படுத்தினன்.

திருச்சபையும் பொதுநீதிமன்றங்களும் வேருதல் 9.
உவில்லியம் அரசபதம் பற்றிக் கொண்டிருந்த கருத்துப்படி அவன் இங்கிலாந்தின் பிசப்புக்களையும் மடாதிபதிகளையும் நடைமுறையில் நியமிக்கக் கூடியவனயிருத்தல் வேண்டும். இந்தச் சிறப்புரிமையின்றி அவன் பெயர ளவில் செங்கோலோச்சியிருக்கலாமே அன்றி இங்கிலாந்தில் உண்மையான ஆட்சி செய்வது முடியாததொன்றகும். தன்னுடைய இப் பெரிய அதிகாரத்தை, திருச்சபையில் மதச் சீர்திருத்தம் நாடிய கட்சியினரின் நன்மைக்காக உலில்லியம் பிரயோகித்தான். அத்துடன், முடியின் உலகியல் சார்ந்த நலன்களுக்காகவும் அவன் இவ்வதிகாரத்தைப் பயன் படுத்தினன். அவனுடைய செயலாளர்களும் நீதிபதிகளும் அவனுடைய குடி யியற்சேவையாளர் பலரும் திருச்சபையினராகவே இருந்தனர். ஏனெனில், பொதுமக்களிடையே கல்வியறிவுடையோர் இல்லாமையின லென்க. கல்வியறிவுபெற்றேர் யாவரும் அனேகமாக மத குருக்களாகவே மாறி னர். மதச் சீர்திருத்த இயக்கக் காலம்வரை அரசனும் அவன் வழி வந்தவர்களும் திருச்சபைக்குரிய செல்வத்தின் பெரும் பகுதியையும் அதன் செல்வாக்கையும் பயன்படுத்தி, அரசாங்கத்துக்குச் சேவை செய் தவர்களுக்கு அவற்றை வழங்கி வந்தனர். நீதிபதிகளுக்கும் அரசாங்க நிருவாக அதிகாரிகளுக்கும் மானியங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் பிசப்புமார்களாகவும் நியமிக்கப்பட்டனர். திருச்சபை பற்றிய தற்கால நோக்குடன் இச்செயலைச் சீர்தூக்கிப் பார்ப்பின் இம்முறை குறைபாடுள் ளதாகும் ; ஆனல் இம்முறை நாட்டுக்கு நன்கு பயன் தரத்தக்கதா யிருந்ததுடன் மத்தியகாலத் திருச்சபைக்குச் சொந்தமான பெருஞ் செல் வத்தால் மக்கள் பயன்பெறவும் அச்செல்வம் பற்றிப் பொருமைப் படாதிருக் கவும் காரணமாய் அமைந்தது. அவ்வாறிருந்திராவிடின் மக்கள்தியூடர் காலத்துக்கு முன்பே மததாபனச் சொத்துக்களை எதிர்த்துக்கிளர்ச்சி செய் திருப்பர். கடவுட் பற்று, மதம் என்பவைகளேப் பற்றிய தெளிவான கருத்துக்களை விளக்குவதில் மட்டுமின்றி எல்லாவகையான கல்வி, அறிவு ஆகியவைகளின் அபிவிருத்திக்கும் மத்திய காலத் திருச்சபை உதவிசெய் தது. கல்வியும் அறிவும் உலகியல் சார்ந்த வாழ்க்கையிற் பரவிய பொது தான் மதகுருக்களின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் திருச்சபையின் செல்வத்தைக் குறைப்பதற்கும் ஏற்ற ஒரு புதிய முறைமையைக்கையாள வேண்டியதாயிற்று.
திருச்சபைக்கு மட்டற்ற ஆதரவு செய்தவனும், அதே அமையத்தில் மன்னனுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்கும் வலிமையுள்ளவனுமாயிருந்த வெற்றி வீரன் உவில்லியம் தனது வலதுகரமாக விளங்கிய இலான் பிராங்கு என்பவரின் துணையுடன் நாட்டை ஆட்சி புரிந்தான். இடை யிடையே இவ்விருவருக்கும் கொள்கை வேறுபாடுகள் ஏற்படாமலில்லை. ஆனல் உலில்லியம் உரூபசு என்பான் அரசனுக்குரிய பண்புகள் அமையப் பெற்றவனுயிருந்தும் தான் நோயுற்றுப் படுக்கையிலிருந்த அமையத்தில் மட்டும் கடவுட்பற்றுடையவனக இருந்தானேயன்றி மற்ற ந்ேரங்களில்
1087
100.

Page 106
1089
093.
100
135.
92 அன்செலமும் உரூபசும்
முழுமுரடனகவேயிருந்தான். அவன்தன் நிலமானியக் குத்தகைக்காரர்மிது
தனக்கிருந்த உரிமைகளைத் துர்ப்பிரயோகஞ்செய்தது போலவே, திருச்
சபையின் வருமானம் சம்பந்தமாய்த் தந்தையிடமிருந்து தான்பெற்ற வருமான உரிமைகளையும் துர்ப் பிரயோகஞ் செய்தான். இலான்பிராங்கின் மரணத்துக்குப் பின்னர் மற்றெரு சமயத்தலைவரை அவன் நியமிக்காமற் போனதுமன்றி, ஐந்தாண்டுகாலமாக கந்தர்பரி சமயவட்டத்தின் வருமானங் களையும் தானே அனுபவித்து வந்தான். இறுதியில் அவன் நோய்வாய்ட் பட்டுத் தான் மரணமடையப் போவதாக நினைத்தபடியால், பதவியைச் சற்றும் விரும் பாதவராகிய அன்செலம் என்பவரைக் கந்தர்பரி வட்டாரத் துக்குத் தலைவராக நியமித்தான். அதன்பின் அவனுடைய குடிமக்கள் ஆச்ரியமும் துக்கமும் அடையும் படியாக உடல் நலமடைந்தான். மக்களின் ஒருமித்தவேண்டுகோளக்குமாருக, புனிதரான அன்செலம் மேற்றிராணி யார், அப்பதவியை ஏற்கப் பின்வாங்கியதன் காரணம் யாதெனில் அவன் அம்பேற்றிராணியாரின் வாழ்க்கையில் இழைத்த இன்னல்களே என்க. இவ்வாருக உரூபசு ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள், வேட்கை வாய்ப் பட்டவனும் மனச்சாட்சியற்றவனுமான ஓர் அரசனின் கைப்பட்ட உலகிய லதிகாரம் எவ்வாறு நாட்டின் ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூருயமைய முடியும் என்பதைக் காட்டுகின்றன. மத உரிமைகளை நிலை நிறுத்துவதில் வெற்றி வீரபாக விளங்கியவரும, தனக்குப் பின் வந்த போப்பர3ர்களுக்கும் அவை போன்ற அனேக உரிமைகளை மரபுரிமையா கொடுத்து விட்டுச் சென்றவருமான இல் டபிராண்டு என்னும் பெயரைக்கக் கொண்ட 7 ஆம்
கிரகோரி என்ற சிறந்த போப்பரசர், திருச்சபையின் “ சுதந்திரங்களைப்”
பாதுகாப்பதற்காக அளவு மீறிய உரிமைகளைக் கோரிய காரண்த்தை ஆராயும் போது, மேற்சொன்ன உண்மைகளையும் நாம் மனதிற் கொள்ளுதல் வேண்டும்.
முதலாம் என்றியின் காலத்தில், தவிர்க்க முடியாத அந்தப்போராட்டம் தொடங்கியது. கல்வியறிவுள்ளவனகிய என்றி, மிலேச்சத்தன்மை நிறைந்த தன் சகோதரனுகிய உவில்லியம் உரூபசினின்றும் வேறு பட்டவன். அரசனுக்குரிய உரிமைசளைத் துர்ப் பிரயோகம் செய்யாது நாளடைவில் அவன் அவைகளை உறுதிப்படுத்தினன். அதே அமையம், மதத்தின் புதிய உரிமைகளை நிலைநாட்டுவதில் ஆன்செலம் உறுதியுடையவராயிருந்தார். சமயத் தலைவருக்கு அதிகார மளிக்கும் பொறுப்பு யாருடையது ? அதாவது
1. மத்திய காலங்களில் அரசியல் துறையில் வெற்றி பெருத ஆங்கில அரசன் ஒவ் வொருவனும் குறிப்பிடத்தக்க சில நல்ல கற்கட்டிடங்களை ஆங்கில மக்களுக்கென விட்டுச் சென்றிருக்கிருன், வெசுற்றுமினித்தர் மாளிகை உரூபசு என்பவனல் கட்டப்பட்டது. ஆங்கிலப் பொதுச் சட்டத்தின் அகன்ற பிறப்பிடம் இதுவே. 2 ஆம் இரிச்சாட்டு மன்றத்துக் கூரையைத் தாங்கி நின்ற தூண்களையெல்லாம் அகற்றி அதற்கு இன்றுள்ள புதிய உருவத்தைக் கொடுத்தான். 3 ஆம் என்றி என்பான் எட்டுவேட்டின் மடாலயத்தை மறுபடியும் கட்டினன் 6 ஆம் என்றி, அரசர் கல்லூரியில் காணப்படும் கோயிலைக் கட்டினன்.

குரும்ார் நியமனம் பற்றி இணக்கம் 193
அவர் அரசனல் நியமிக்கப்படல் வேண்டுமா, போப்பரசரால் நியமிக்கப்படல் வேண்டுமா என்ற விடயம் முழு ஐரோப்பாவையும் நடுக்குறச் செய் வதாயிருந்தது. கடுமையானபோராட்டத்துக்குப் பின் ஒர் உடன்பாடு ஏற் பட்டது. புதியபிடிப்புமார்களுக்கு, அவர்தம் ஆன்மிக அதிகாரத்தைக் குறிக்கும் சின்னங்களான செங்கோலையும் மோதிரத்தையும் போப்பரசரே கொடுப்பதற்கு ஆங்கில அரசன் இணங்கினன் ; ஆனல் நிலமானிய முறை மைப்படி அச் சமயத்தலைவர்கள், பெருநிலப் பிரபுக்கள் என்ற மு ைரயில் தனக்குச் செலுத்தவேண்டிய மானிய முறை மரியாதையைப் பெறும உரிமையை அரசன் தன்னிடம் வைத்துக் கொண்டான். பிசப் புமாராக நியமிக்கப்படக் கூடியவரைத் தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்மையில் அரசனிடமே யிருந்தது. பிசப்புமாரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பெயர் குறிப்பது அரசனுடைய அதிகாரத்துக்குட்பட்டிருந்தது ; ஆயினும் இவ்வியடத்தில் அரசன் பூரண அதிகாரம் பெற்றிருக்க வில்லை. இத்தேர்வில் போப் பரசரின் அங்கீகாரம் பெற்ல் வேண்டும், அல்லது அதில் அவர் தலையிடலாம் என்றிருந்தது ; இவ்வடிப்படையிலேயே திருச்சபைக்கும் அரசுக்குமிடையே நட்புறவு நிலவி வந்தது. பொது மக்கள் அறியாமை மிகுந்தவராயும் ஐரோப்பிய அரசுகள் சிறியவாயும் வலியற்றவாயுமிருந்த நூற்றண்டுகளில் மத்திய காலத் திருச்சபையானது உணமையிலேயே “உலகப் பொது” வானதாக இருந்தது. அது போப்பரசரின் தலைமையில் மிகவும் உறுதியாக அமைக்கப்பட்டதாய், பொதுமதத்திலும் அறிவிலும் செல்வத்திலும் வலிமைமிகுந்ததாய், பிற்காலத்தில் அரசின் அல்லது தனிப்பட்ட மனிதனின் ஆதிக்கத்துக்கு விடப்பட்ட வாழ்க் ையின் அத்தகைய பல்வேறு துறைகளிலும் ஆதிக்க முடையதாய் இருந்தது. தற்காலத்தில் தன் லிருப்பத்தின்படி செயற்படுகின்ற மதப்பிரிவிற்குரிய எல்லாவித உரிமைக ளையும் அக்காலத்திலே திருச்சபையானது அனுபவித்து வந்திருக்குமானல் நமுதாயமனது மதகுருமாருக்கு முற்றிலும் அடிமைப் பட்டிருக்கும். மத்திய காலத்திலிருந்த மன்னர்கள் இந்நிலை எற்படுவதையேனும் தடுக்கக்கூடியவராயிருந்தனர்.
முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் சோசர் என்னும் கவிஞரால் கோயிற் பற்றுக்குரிய மதகுருக்களின் பரிதாப நிலை வருணிக்கப்பட்டுள்ளதைப்போல, நோமானியர் காலத்திலிருந்த குருக்களின் நிலை எவ்வாறிருந்ததென்பதை நாம் அறிய இயலாதிருக்கின்றது. அதில்வருணிக்கப்பட்டுள்ள குருவானவர் வெற்றி கொள்ளப்பட்டவர்களில் ஒருவராகவும் சட்சனிய இனத்தவராக வுமிருந்தார். திருச்சபையின் சொத்துக்கள் வெற்றி பெற்ற மக்களிடையே விநியோகிக்கப்பட்டிருந்ததால், அக் குருவானவருக்கு அதுபற்றிய கவலை ஒன்றுமில்லாதிருந்தது. பண்ணைசம்பந்தமாக அவருடைய நிலை பண்ணைக்

Page 107
94 ஆங்கில மொழி
குடியானவனது நிலைபோன்றது. இங்கிலாத்தில், கோயிற்பற்றுக் குருமார் எச்சமூக வகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டு வந்தனரோ அவ் வகுப்பு நோமானியரது வெற்றி தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றண்டு வரை வளர்ச்சி பெற்றே வந்தது. மத்திய ஊழியின் பிற்பகுதியில், பண்ணைக் குடியானவரின் எண்ணிக்கை மறுபடியும் அதிகரித்த பொழுது, இனி எவரும் அவ்வகுப்பிலிருந்து குருவானவராக நியமிக்கப்படலாகாது எனும் விதியை ஏற்படுத்தத் திருச்சபை முயன்றது ; ஆனல் இவ்விதி அவ்வளவு பயனளிக்கவில்லை. தியூடர் காலத்திலும் சுதுவாட்டுக் காலத்திலும், தன் னுரிமையுடைய வேளாண் வகுப்பினரிடையிருந்தும், அக்காலத்திலிருந்த பல திறப்பட்ட மத்திய வகுப்பாரிடையிருந்துமே பெரும்பாலும் கோயிற் பற்றுக் குரு தேர்ந்தெடுக்கப்பட்டார். உயர் குடி மக்களும் ஒரோவழி குருமாராகத் (தர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். கேன் ஒசுற்றின் ஊழியில் காலச் சக்கரம் மிக வேகமாகச் சுழன்றதின் விளைவாக மதகுருவானவர் சாதாரணமாக மேல் வகுப்பாரிடையிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் காணப்பட்டார் ; அநேகமாக ஒரு பிரபுவின் புத்திரர் அல்லது நண்பர் ஒருவரே மருகுருவாய்விளங்கினர்.
நோமானிய வெற்றியினலேற்பட்ட ஒரு முக்கிய பயன் ஆங்கில மொழி வளமடைந்ததேயாகும். எத்திஞ்சில் நடைபெற்ற போரின் விளைவாக, அல்பிரெட்டு, பீட்டு முதலியவர்கள் பேசிய ஆங்கிலேய-சட்சணிய மொழி யானது மண்டபங்களிலிருந்தும் மனைகளிலிருந்தும் அரசமன்றங்களிலிருந் தும் மடாலயங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, அறிவற்ற அடிமைகளும் கடை நிலைக்குடியானவர்களும் பேசுகின்ற புலைமொழியாக ஒதுக்கப்பட்டது. எழுத்து வடிவிலுள்ள ஒரு செம்மொழியெனும் நிலையை அது இழந் திருந்தது. அம்மொழியின் வடிவில் கற்றேரும் மொழி வல்லுநரும் கருத்துச் செலுத்தவில்லை. அதற்குக் காரணம் மத குருக்கள் இலத்தீன் மொழியையும், கனவான்கள் பிரெஞ்சு மொழியையும், பேசிவந்ததேயாம். ஒரு மொழி பெரும்பாலும் எழுதப் படாத நிலையிலிருக்கும் போதும், கற்ற வர்கள் அதில் கருத்தைச் செலுத்தாமலிருக்கும் போதும் அம்மொழியா னது சாதாரண மக்களது வாழ்க்கையின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் எற்றவாறு அவர்களால் பேசப்படும் தரங்குறைந்த அளவினதாய் விரை வில் மாறி விடுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இம்மாற்றம் நன்மை யாகவோ தீமையாகவோ முடியலாம். ஒரு மொழியின் இலக்கணம் ஒழுங்கற்றும் அழகு குறைந்தும் இருக்கும் போது, மறுப்புக் கூற
1. கோயிற் பற்றுக்குரிய குருவானவர் தனக்கென முழுப் பங்கு அல்லது அரைப் பங்கு (1 பங்கு-120 ஏக்கர்) நிலங்களை வைத்திருப்பதால் நகர்ப்புற நிலமானியத் திட்டத்தின் கீழ் நிலத்தைப் பெற்றிருக்கும் பண்ணை விவசாயிகளில் ஒருவராகத் தோன்றுகிறர். ஆயினும் அவருடைய தனிச் சிறப்பான கடமைகளின் காரணமாக அவர் பெற்றிருந்த நிலங்களுக்கு ஈடாகப் பண்ணைப்பிரபுக்குச் செய்ய வேண்டிய பொதுவான சேவைக்கட்டுப்பாட்டினின்று அவருக்கு விலக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது.

ஆங்கில மொழி 195
இலக்கண வல்லுநர் இல்லை யென்றல் அவ்விலக்கணத்தை மிக இலகுவில் மாற்றிவிடலாம். இங்கிலாந்தில் ஆங்கில இலக்கணம் சம்பந் தமாக இந்நிலையே எற்பட்டது. ஆங்கில மொழி குடியானவர்களாற் பேசப்பட்டு வந்த மூன்று நூற்றண்டுகளிடையே, தன்னுடைய விகாரமான இலக்கணச் சொல்மாறுபாடுகளையும், விரிவான பால் அமைதிகளையும் நீக்கி விட்டு, அழகு நயத்தையும் குழைவான தன்மையையும் சூழ்நிலைக் கேற்ப மாறுந் தன்மையையும் பெறலாயிற்று. இவைகளே ஆங்கில, மொழியின் முக்கியமான பண்புகளாகும். அதே அமையத்தில், அநேக பிரெஞ்சுச் சொற்களும் கருத்துக்களும் புகுந்து இம்மொழியை வளம்படுத் தின. போர், அரசியல், மதம், நீதி, வேட்டையாடல், சமைத்தல், ஒவியக்கலை ஆகியவை சம்பந்தமான, ஆங்கிலச் சொற்ருெகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சு மொழிச் சொற்களே. இவ்வாறு பண்படுத்தப்பட்ட ஆங்கில மொழியானது கற்றேரும் சான் ருேரும் அடங்கிய சமூகத்தினரால் மீண்டும் பேசப்பட்டுப் பரவலாயிற்று. சோசரது கதைகளிலும் விக்கிளிபின் விவிலிய நூலிலும் எடுத்தாளப்பட்ட ஆங்கில மொழி இம் முறையில் வளம் பெற்று, செகப்பிரியர், மிலிற்றன் ஆகிய கவிஞரால் கையாளப்பட்ட போது மேலும் சொல்வளம் பெற்ற மொழியாகத் திகழ்ந்தது. அம்மொழியானது வெளித்தோன்ற நிலையிலே வளர்ச்சியடைந்து, இத்தீவில் இழிவாகக் கருதப்பட்ட மக்களிடையே தானே உணராத விதத்தில் வளர்ச்சியும் பெற்று, திடீரென்று உலகத்திலுள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்து, உலகின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்பட்டு, பண்டைக் கிரேக்கரின் இலக்கியத்துக்கொப்பான வளமார் இலக் கியமும் பெற்று விளங்கியமை மனித வரலாற்றிலே தனிப்பெரும்புதுமை யாகும. எத்திஞ்சுப் போரின் பின் ஆங்கில சமுதாயத்தில் எற்பட்ட வளர்ச்சியைப் போன்றே ஆங்கில மொழியும், காலடிக்கீழ் நசுக்குண்டு வீழ்ச்சியடைந்தபின், சிறப்பாக எழுச்சி பெற்று நல்லுருவத்தைப் பெறு வதாயிற்று.
நில உடைமைக் கணிப்பேடு பற்றிய ஒரு குறிப்பு
இலத்தீனிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ள நிலஉடைமைக்கணிப்பேட் டிலிருந்து எடுக்கப்பட்டதான ஒரு பொழிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது சாதாரணமாகக் கணிக்கப்படுகின்ற விவசாயப்பண்ணைக்குரிய கணக்கு மட்டுமன்று ; அத்துடன் 52 நகர மூப்பரைக்கொண்ட ஒரு சிறு சந்தை நகரம் பற்றியும் அது குறிக்கிறது.
மோற்றெயின் பிரபுவின் காணி. திறிங்கு என்னுமிடத்தில் நூறு. பேக்கஞ் சுதெட்டு என்னுமிடம் மோற்றெயின் பிரபுவுக்கு உரியது. அது 13 பங்குகள் (1 பங்கு = 120 எக்கர்) கொண்டது. பயிரிடக் கூடிய நிலம் 26 காருகேட்டு (120 ஏக்கர்). பெருநிலப் பிரபுவின் கீழ் 6 பங்கு நிலங்களும்

Page 108
196 நிலவுடைமைக் கணிப்பேடுபற்றிக் குறிப்பு
உழுவதற்கு மூன்று சோடிக் காளைகளும் இருக்கின்றன. இன்னும் மூன்று சோடிகாளைகளுக்கு நிலமும் அங்கிருக்கிறது. இங்குள்ள ஒரு குருவானவ ரிடம் பண்ணை விவசாயிகளும், 15 ஊழியர்களும், விவசாயத்திற் கேற்ற 12 சோடிக் காளைகளும் உண்டு. இன்னும் எட்டுச் சோடிகாளைகளுக்கு நிலமும் அவரிடமிருக்கிறது. அவரின் கீழ் ஆறு அடிமைகள் இருக்கிருர் கள். வேலியமைப்பதற்காகக் குழிதோண்டும் ஒருவனுக்கு அரைப்பங்கு நிலமும் பிரபுவின் வேலைக்காரணுகிய இரால்பு என்பவனுக்கு ஒரு விர் கேற்று (30 ஏக்கர்) நிலமும் இருக்கின்றன
இந்நகரத்திலுள்ள 52 நகர மூப்பர் வருடந்தோறும் தலைக்கு 4 பவுண் வரி செலுத்துகிறர்கள். அவர்களுக்கு அரைப்பங்கு (60 எக்கர்) நிலமும், வருடத்திற்கு 20 சிலிங்குகள் வாடகையுள்ள இரண்டு அரைவை ஆலைகளும் உண்டு. மேலும் இரு கொடி முந்திரித் தோட்டங்களும் எட்டு காருகேட்டு அளவுள்ள புல்வெளியும், கால் நடைமேய்ச்சலுக்குரிய கிராமப் பொது நிலமும், ஆயிரம் பன்றிகள் மேய்வதற்குரிய காடுகளும் உண்டு. இவற்றுக்கு வருட வாடகை 5 சிலிங்குகள் ஆகும்.
மொத்தத்தில் இதன் மதிப்பு 16 பவுன்களாகும்; ஆனல் அப்பிரபுக்குக் கிடைப்பது 20 பவுன்களாகும், எட்டுவேட்டு அரசன் காலத்தில் அது 24 பவுன்களானது. வேள் அரோலின் பிரதானியாக விருந்த எட்டுமார் என்பவனுக்கு இது முன்பு சொந்தமாயிருந்தது. (அரோல் பிரபுவே பின்பு அரோல் மன்னனுன்ை-மோற்றெயின் பிரபுவுக்காக இது கைப் பற்றப்படுவதற்கு முன்பு எட்மரிடம் இருந்தது).
குழி தோன்டும் ஒருவன் என்று இங்கு குறிப்பிடப்படுபவன் பேக்கம் சுதெட்டு கோட்டையில் காணப்பட்ட மண்கட்டிடங்களையும் நோமானியரால் அங்கு நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டிருந்த புதிய மண்திடலையும் போருக் குத் தயாரான நிலையில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய பொறுப் புடையவனுயிருந்த அப்பகுதியைச் சேர்ந்த உவோபன் என்பவனக இருக் கலாம்.

நூல் 2
ஆங்கிலேய நாட்டினம் உருவாகுதல் நோமானிய வெற்றி தொடக்கம் மதச்சீர்திருத்த
இயக்கம் வரை
முன்னுரை
இருண்ட ஊழியினின்றும் வேருகிய மத்தியகாலமானது முதலாம் சிலுவைப் போர்க் காலத்திலிருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம் ; இதுவே, நிலமானிய முறைமையினல் மீளவமைக்கப்பட்ட புது ஐரோப்பா திடீரென வெளியுலகுக்குக் காட்சியளிக்கும் காலமாம். நிலமானிய முறைமையென்பது மத்திய காலத்திற்கே உரித்தான ஓர் அமைப்பாகும். மிலேச்ச ஆட்சியறவை ஒழித்து, ஒழுங்கான நாகரிகத்தை உருவாக்கும் பொருட்டுச் சமூகத்திலுள்ள சில வகுப்பினர் வேறு சில வகுப்பினருக்கு நிலையாகவும் சட்டபூர்வமாகவும் கீழ்ப்படவேண்டியவரெனக் கருதப்பட்டனர். மானியச் சமுதாய முறைமைப்படி பரன்கள், நைற்றுக்கள், பிசப்புமார், துறவிமடத்தலைவர் ஆகியோர் நிலத்தைப் பயிர் செய்த அடிமைப் பண்ணை யாட்களுக்கு விளைவில் ஒரு சிறு பகுதியை விடுத்து மேலதிகமான பகுதி யைத் தங்களுக்கே எடுத்துக்கொண்டனர். நிலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வருமானங்கள் சமத்துவமற்ற முறையில் நிலமானிய ஒழுங்குப்படி அமைந் திருந்ததின் விளைவாக, பெருமக்களும் மதத் தலைவர்களும் செல்வந்த ராயினர் ; அவர்கள் கையில் பணம் குவிய ஆரம்பித்தது ; அதனல் அவர்கள் பணக்காரர் தேடும் ஆடம்பரப் பொருள்களை விரும்பினர். இதன்
பொருட்டு வாணிகமும், வாணிகர் ஆதிக்கம் பெற்ற நகரங்களிற் பல
தொழில்களும் கலைகளும் வளர வாய்ப்பு உண்டாயிற்று. இவ்வாறக இருண்ட ஊழி என்பதாவது, மத்திய ஊழியாக முன்னேற்றமடைந்தது ; மிலேச்சம் நாகரிகமாகத் திரிபுற்று வளரலாயிற்று ; ஆனல், இவ்வளர்ச்சி சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் வழிகாட்டியதோவென்றல், அது தானில்லை.
நிலமானிய முறைமையின் மற்றேர் அமிசம் யாதெனில் அதன் இராணுவ, அரசியல், நீதிபரிபாலன அதிகாரத்தை ஒரு தல அடிப்படையில் அமைத்தமையென்க. உரோமானியர் காலத்திற் பேரரசோ, அல்லது தற் காலத்தில் நாட்டின வரசோ அதிகார பீடமாய் விளங்கியதுபோன்றிராது, நிலமானிய ஊழியில் ஒரு பரனின் மாகாணமோ, கிராமப் பண்ணையோ அதிகாரத்தின் இருப்பிடமாய் விளங்கியது. பேரரசு சிதைந்து விட்ட்தென்
197
حسن1095 1099

Page 109
198 மத்தியகாலம்
பதையும் நாட்டரசு மிகப் பலமிழந்திருந்ததென்பதையும் நிலமானிய முறைமை எடுத்துக்காட்டிற்று. நாடும் சமூகமும் எவ்வளவுக்கு ஒற்றுமை யிழந்து சீரழிந்து போயிருந்தன என்பதை நிலமானியப் பிரபுக்களும் நைற்றுக்களும் தத்தம் மாகாணம், அல்லது கிராமப் பண்ணை என்று தமக்குள்ளே கொண்டிருந்த குறுகிய மனப்பான்மையும் அவர்கள் காட்டிய எதேச்சாதிகாரமும் வலியுறுத்தின. இதற்கு மாறக ஒருமுகப்படுத்தப் பட்ட அதிகாரத்துடன் உரோம் மாநகரில் திருச்சபையெனும் அகில ஐரோப்பியத் தாபனம் காட்சியளித்தது. நாட்டின் சமுதாயம் பன்முகப் படுத்தப்பட்டு இருந்த காலை, திருச்சபையில் அதிகாரம் ஒருமுகப்படுத்தப் பட்டிருந்தது; இவ்வொரு காரணத்தினலேயே இது ஐரோப்பாவின் பெரும் அதிகாரியாய்த் தோன்றியது. அதுமட்டுமன்றி, கல்வியறிவானது ஏறக்குறைய மத குருக்களின் தனி உரிமையாயிருந்தபடியால், திருச் சபையானது நாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய ஊழியின் ஆரம்ப காலத்திற் பெரிதும் பெற்றிருந்தது.
நைற்றுக்கள், குருக்கள், பண்ணையாட்கள் ஆகியவர்களைக் கொண்ட மத்திய காலச் சமுதாயம் எவ்வாறு எற்பட்டது என்பதை அவதானிப்போ மாயின், கொள்ளைக் கூட்டத்தவரினின்றும் மிலேச்சர்களாகிய கொடியவரி னின்றும் வறுமையாற் பீடிக்கப்பட்ட நாகரீகமற்ற கிராமங்களைப் பாதுகாப் பதற்காகவும், இதற்குக் கைம்மாறக நைற்றுக்களுக்கும் மத குருக்களுக் கும் அக்கிராமங்களைத் தம் நலனுக்காகப் பயன்படுத்துவதற்கும் எற்பட்ட பருமட்டானதொரு நிலமானிய உடன்பாட்டின் அடிப்படையில் அச்சமுதா யம் அமைந்திருந்தது என்பது புலனுகும். இந்த ஏற்பாட்டில் வலோற் காரமும் சூதும் இல்லாமமில்லை, ஆனலும், மத உணர்ச்சியினல் உந்தப் பட்ட உன்னத இலட்சியத்தையும் தம் சமூகத்தைக் காக்கவேண்டும் என்ற வீரத்தனத்தையும் நாம் இங்கு காண்கின்றேம். ஆனல், நாளடைவில் நிலமானிய முறைமையின் இப்புராதன எற்பாடுகளிலிருந்தே மத்திய கால ஐரோப்பா உருவாயது. இவ்வைரோப்பாதான் தாந்தே, சோசர் ஆகிய மகாகவிகளைத் தந்தது ; அற்புதமான தேவாலயங்களையும் உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களையும் தந்தது , இங்கிலாந்தின் முடியாட்சி முறையையும் பாராளுமன்றத்தையும் தந்தது ; இன்னும், திருமுறைச் சட்டம், குடியியற் சட்டம், ஆங்கிலேயச் சட்டம் என்பவற்றையும் இவ் வைரோப்பாதான் உருவாக்கிற்று. இத்தாலி, பிளாண்டேசு நகரங்களைச் சேர்ந்த வணிக இனத்தவரையும் “நகரங்களிலெல்லாம் தலை சிறந்த ’ இலண்டன் மாநகரையும் மத்தியகால ஐரோப்பாவே தோற்றுவித்தது. இவ்வாறக ஒன்றுக்கொன்று மாறுபட்டுத் தோன்றும் பின்வரும் இரு வகைக் காட்சிகளுள் மத்தியகாலத்தின் சுய உருவத்தைக் காட்டுவதெது ? ஒருபக்கம் நிலமானிய குக்கிராமம் ; அங்கு சிறு குடிசை ; அதிற் புகை போக்கி கூட இல்லை. அக் குடிசையிலிருந்து வெளியேவரும் அடிமைப் பண்ணையாள், அவனுடைய கிழிந்த கந்தலான ஆடை, பசியால் மெலிந்த

மத்திய் காலம் 199
உடம்பு, அவனைப் போல மெலிந்திருக்கும் எருதுகளை அவன் வயலுக்கு ஒட்டிச்செல்லல், ஆயுதபாணிகளான குதிரை வீரரைக் கண்டு பண்ணையாள் பக்கத்துக் காட்டினுள் ஒடி ஒளிவது-இப்படியான காட்சியா ? அன்றித் தாந்தே தோன்றிய புளோரஞ்சு நகர், வான் ஆற்றிவெல்டி என்பாரின் பிளாண்டேசு நகர், குருேசெற்றே, விக்கிளிபு ஆகியவர்களின் ஒட்சுபோட்டு -இப்படியான காட்சியா? மிலேச்சமா அன்றி நாகரீகமா உண்மையான மத்திய ஊழி எனப்படுவது ? இரண்டுமே என நாம் விடையிறுக்கலாம். ஒன்றிலிருந்து மற்றென்று தோன்றி, இரண்டுமே ஒன்ருேடொன்று உறவாடி வாழ்ந்தன. நானூறு வருடகால நிகழ்ச்சிகள் காரணமாக இருண்ட காலம் ஒளிநிறைந்த மறுமலர்ச்சிக் காலமாக மாறிப் பரிணமித்த தெனினும், புதிய ஐரோப்பாவின் பல பகுதிகளில் வறுமையும் அறியா மையும் இன்னும் தாண்டவமாடினவென்பது உண்மையே.
மத்திய காலப் பேரறிஞர் மனிதனுக்கென நிரந்தரமான, மாற்றமுடியாத சமூக தாபனங்களையும் மறுக்கமுடியாத மதக்கோட்பாடுகளையும் எற்படுத்து வதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்; ஆனல், அவர்கள் உண்மையில் சாதித்தது இதுவன்று. முகம்மதிய மதம், பார்ப்பன மதம் ஆகியவற்றேடு ஒப்பிட்டுப் பார்க்கையில், மத்திய காலக் கிறித்துவ சமுதாயம் பல வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருந்த தன்மை தெளிவாகும். 1100 ஆம் ஆண்டு முதல் 1500 ஆம் ஆண்டு ஈருக ஐரோப்பிய சமுதாயம் புதிய கருமங்களை நாடி முன்னேற்றப் பாதையிற் சென்று கொண்டி ருந்தது-ஒரே தன்மைத்தான அமைப்பிலிருந்து பலதிறப்பட்ட அமைப்புக் களாக அது மாற்றமடைகின்றது ; உலகப் பொதுவான மானியமுறை. யமைப்பு மாறி, தனித்தனி நாட்டின உணர்ச்சி பெற்ற முடியாட்சியாகக் காட்சி தருகின்றது ; மத குருக்களின் ஆதிக்கம் மாறி, பாமரரது சுதந்திரம் தலையெடுக்கின்றது; நைற்றுக்களின் னிகயிலிருந்த ஆட்சியானது தொழில் வினைஞன், முதலாளி, கமக்காரன் என்போரது ஆட்சியாக மாறிவிடுகின்றது. மத்திய கால ஐரோப்பாவின் சமுதாய வாழ்க்கை ஆதியில் இருந்தபடியே இருந்து விடாது முன்னேற்றமான மாற்றங்களுக் குட்பட்டதாயிருந்தது. இக்காலத்தின் பெருமையும் சிறுமையும் யாவெனில் வரம்பிற்குள்ளடங்காத நிறைந்த உயிர்ப்பும் ஊக்கமும் என்க. இக் காலத்தின் தீமைகள் கிழட்டுப் பருவத்தின் சபலத்தால் எற்பட்டவையன்று ; வாலிபத்தின் இரத்தத் துடிப்பால், மூர்க்கத்தால் நேர்ந்தவையாகும். ஆகவே, மத்திய காலத்தை தெய்வ பத்தியும் பூரண அமைதியும் சகோதரத்துவ அன்பும் நிறைந்ததொரு பொற்காலமெனக் கருதல் எற் புடைத்தன்று. மற்று, பதினெட்டாம் நூற்றண்டைச் சேர்ந்தவர் செய்தது போன்று, மிலேச்சத் தனத்திலிருந்து நாகரிகத்துக்கு மக்களை மீட்டுக் காப்பாற்றிய இந்த ஊழியைப் புறக்கணித்து இகழ்வதும் தவறகும். இக்காலத்தை மாற்றமெதுவு மற்ற ஊழியாகக் கொள்ளாது, உயிருள்ள மாற்றங்களைக் கொண்டதொரு காலமாய் எண்ணுதல் வேண்டும். இக்கால

Page 110
II gth III gub நாட்டுப்
LLËT களைப்
Inities.
200 மத்திய காலம்
வாழ்க்கையை மொரிசுப் புலவர் சித்திரிப்பு ஆடையிலே தீட்டிச் சமைத்த சலனமற்றதொரு காட்சியாக நாம் கருதக் கூடாது ; அதனை ஒளியும் இருளும் மாறிமாறி வருகின்ற, அழகும் அச்சமும் நிறைந்ததான, சீவகளையும் மனவேட்கையும் ததும்புகின்ற காட்சியாகக் கொள்ளல் வேண்டும்.
மத்திய காலமுழுவதும் பிரித்தானியத் தீவுகள் பூமியின் வடமேற்குக் கோடியாக அமைந்திருந்தன. அவற்றுக்கு மேற்கே அத்திலாந்திக்குச் சமுத்திரத்துக்கு அப்பால், பெரும் கண்டமொன்றுண்டு என்று எவரும் கனவிலும் கண்டிலர். ஒருவேளை கிறித்து ஊழிக்கு ஆயிரம் ஆண்டு களுக்குப் பின், வட அமெரிக்காவில் ஏதோ ஒரு கரைக்குத் தம் பெரிய கப்பல்களுடன் சென்று வந்திருந்த வீரக் கடலாளிகளான வைக்கிங்குகளின் வழித் தோன்றல்கள் ஐசுலாந்து நோவே ஆகிய நாடுகளின் கரைகளிற் சொல்லி வந்த கடற் கதைகளிலேதான் தூர மேற்கில் ஒரு நிலமுண்டு என்று வழங்கப்பட்டது போலும்.
தோவர்க் குன்றுகளைச் சீசர் கண்ணுற்ற காலத்திலிருந்தது போன்றே, உவில்லியம் இங்கிலாந்திற் பெவன்சியிற் கால்வைத்த போதும் பிரித் தானியா பூமியின் மேற்குக் கடைசி எல்லையாகவே கருதப்பட்டது; ஆனல், உலகமானது தனது மையத்தை வடக்கே பிரித்தானிய தீவு களுக்குச் சமீபமாக மாற்றிவிட்டது. கிரேக்க-உரோமர் காலத்தில் மத்திய தரைக் கடலைச் சார்ந்திருந்த மேற்கத்திய நாகரிகம் இப்போது முற் ருய் ஐரோப்பிய நாகரிகமாக மாறியது. வட ஆபிரிக்கா, இலவந்து, இசுப்பெயினில் ஒரு பகுதி என்பன முகம்மதிய ஆட்சியால் ஆசியாவின் பாகங்களாகிவிட்டன. இதற்குப் பதிலாகச் சேர்மனியைப் பெற்றதோடு, இம்மாற்றங்கள் நிகழ்ந்த காலந்தொடக்கம் சேர்மனியும் அதற்கு வடக்கி லிருந்த பிரித்தானியா, கந்திநேவியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய அரசியலில் முக்கிய தானம் வகிக்கத் தொடங்கின. நாகரிகப் பண்பாட் டிற்கு இத்தாலியும் பிரான்சுமே கூட்டாகத் தலைமை தாங்கின. எனினும், இராணுவ அரசியல் விவகாரங்களில், அல்பிசு மலைகளுக்கு வடக்கேயிருந்த பிரான்சு, சேர்மனி ஆகிய நாடுகளில் வாழ்ந்த நிலமானியப் பிரபுக்களே தலைமை பெற்றனர். வாணிகம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் தென்னிங்கிலாந்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பிளாண்டேசு, நோமண்டி, பரிசு ஆகிய விடங்கள், மத்தியகால நாகரிக வளர்ச்சிக்கு இத்தாலி எத்தகைய அரும் பணியாற்றியதோ, அத்தகைய பணியைத் தாமும் ஆற்றலாயின. ஐரோப்பாவின் மத்தியதானமானது மத்தியதரைக் கடற் பிரதேசத்திலிருந்து வடக்கே மாறிப்போனதால், உரோமானியர் எங்கள் தீவினரின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்ததைக் காட்டிலும் மேலான நிலைபெற்ற விளைவுகளை நோமானியருடைய வெற்றி எம் தீவில் எற்படுத்தியது எனலாம்.

மத்திய காலம் 20.
பதினேராம் நூற்றண்டின் மத்திய பகுதி வரையில், பிரித்தானியாவும் கந்திநேவியாவும் ஐரோப்பிய நாகரிகத்துடன் ஓரளவிற்கு இணைந் திருந்தன. இருண்ட ஊழியின் மிகச் சிறந்த விளைவுகளெனக் கொள்ளக் கூடிய நோதிக்கு மரபுகளையும் இலக்கியங்களையும் அவைகள் பெற்றிருந் தன. ஆனல், நோமானியரின் வெற்றிக்குப்பின், வைக்கிங்குகள் வாழ்ந்த கந்திநேவியாவுடன் பிரித்தானியா கொண்டிருந்த தொடர்பு அறுந்துபோக, நிலமானிய வீரர்கள் மலிந்த பிரெஞ்சு நாட்டுடன் தொடர் புறுவதாய்ப் பிரித்தானியாவின் வாழ்வு அமையலாயிற்று.
எத்திஞ்சு யுத்தத்துக்குப் பின் நானூறு ஆண்டுகளாய் இங்கிலாந்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மத்திய கால ஐரோப்பாவானது சமூக சமய கலாசாரத் தாபனங்களின் அடிப்படையில் மட்டுமே ஒற்று மைப்பட்டிருப்பதாயிற்று. புராதன உரோமானிய உலகத்தைப் போன்று, தனியோர் அரசாக அது ஒருங்கிணைக்கப்படவில்லை. அரசியல் அமைப்பாகத் தோன்றி நின்றது எதுவென்றல், நிலமானிய முறை அமைப்பு என்ற பெயராற் சட்டபூர்வமாக்கப்பட்டு ஒழுங்கு பண்ணப்பட்டிருந்த ஆட்சியறவு நிலை என்க. ஐரோப்பா தனக்கு இட்டுக்கொண்ட ஒரே பெயர் “கிறித்துவ உலகம் ” என்பதுதான் ; அதன் ஒரே தலைமைப் பீடம் பாப்பரசரின் உரோமாபுரிகான். அரசியல் ஆட்சித் தலைநகராய் எதுவுமிருந்ததில்லை : * பேரரசு ’ என்று பெயரளவில் இருந்ததேயன்றி, பலம் பொருந்திய ஆட்சியாய் அது நிலவியதில்லை. உண்மையான ஒற்றுமையானது, நில மானிய வழமைகளையும் வீரப் பண்பையும் உரோமானிய கிறித்து மார்க்கத் தையுமே பொறுத்திருந்தது ; ஐக்கியத்திற்கு அடிப்படையாக இருந்த இப் பண்புகள் வடக்கே போத்து எனும் குறுகிய குடாவிலிருந்து தெற்கே தேகசு நதிவரையிலும், கிழக்கே காப்பேதியன் மலைகளிலிருந்து மேற்கே பிசுகே வளைகுடா வரையிலும் பொதுவாக விளங்கின. பிரபுக்களும் அடிமைப் பண்ணையாட்களும் சேர்ந்த நிலமானியக் கமப்பொருளாதாரத்தையும் நீதி பரிபாலன அதிகாரங்களையும் சமுதாயச் சிறப்புரிமைகளையும் பெற்றிருந்த பலதரப்பட்ட மதகுருக்களின் தாபனத்தையும் மானிய வழமையையும் திருமுறைச் சட்டத்தையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் ; ஐரோப்பிய வாழ்க்கையில் பல்வேறு வகையான நிலைகள் தோன்றுதற்குக் காரண மான மத்திய வகுப்பாரும் நாட்டின உணர்ச்சியுந் தோன்றியபின்னர் இவைக்கு ஒப்பான முதன்மை வாய்ந்த தாபனங்கள் எவையும் ஏற்றுக் கொண்டிருக்கப்பட மாட்டா. மத்திய காலத்தில், பிரெஞ்சு மொழி பேசிய ஆங்கிலேய வீரரும் இலத்தீன் மொழி பேசிய ஆங்கிலேய மதகுருவும் ஐரோப்பியாவின் எத்திக்கிலும்-ஒரு கோட்டையிலிருந்து மற்றெரு கோட்டைக்கும், ஒர் ஆச்சிரமத்திலிருந்து மற்றேர் ஆச்சிரமத்துக்கும்சென்றலும், தமக்கு அன்னியமான தெதையும் கண்டிரார் ; ஆனல்,

Page 111
202 மத்தியகாலத்து ஆங்கில அரசபதவி
சுதுவாட்டு, அன்றி அனேவீரியன் அரச வமிசத்தினர் காலத்து ஆங்கிலேயர் இதே இடங்களுக்குப் போயிருந்தால், அவர்கள் பெரும் வித்தியாசங்களைக் கண்டிருப்பர்.
நோமானிய வெற்றிக்குப் பின் சீர்திருத்தி யமைக்கப்பட்ட பிரித்தானியா கடல்களுக்குப் பின்னல் நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சத்தியுடன் விளங்கியது. முன்பெல்லாம் எதிரிகள் தம் விருப்பம் போல் வருவதற்குத் திறந்த வழியாக விருந்த கடல், இப்போது பிரித்தானி யாவைக் காக்கும் அகழியாகத் திகழ்ந்தது. அதன் பலம் பெருகப் பெருக அது அடிபடும் உலைக்களமாகவன்றி, அடிக்கும் சம்மட்டியாக மாறியது. முன்பு அது பிறராலே தாக்கப்படும் நாடாக விருந்தது ; இப்போது, அது பிரான்சு மீது படையெடுக்கும் நாடாக மாறியது. நோமானிய வெற்றியால் விளைந்த பிரான்சு நாட்டுச் செல்வாக்குக்கள் பிரித்தானியச் சூழ்நிலையோடு அழுந்த, நோமானிய அதிபதிகள் தமது அயலவரான ஆங்கிலேய மக்களின் வாழ்க்கையுடன் தம்மை ஐக்கியப்படுத்தி வாழ்ந் தனர் ; விசேடமாக யோன் அரசன் நோமண்டியை இழந்தபின்னர் இந்நிலைமையில் முன்னேற்ற மேற்பட்டது. எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் முன்னதாக, தனக்கே யுரித்தான இயல்புகள், சட்டங்கள், நிறுவகங் கள் என்பவற்றல் ஒரு தனி இனமாகப் பிரித்தானியா வளர்ச்சியடையத் தொடங்கியது. அது ஒரு தனியான தீவாக இருந்ததால், அதன் வாழ்க் கையும் தனிப்பட்ட முறையில் அமைவதாயிற்று. II ஆம் என்றி அரசன் காலத்திலேயே எத்திஞ்சு யுத்த காலத்தில் வாகை சூடியவர்களினதும் இங்கிலாந்துக்குரிய எதனையும் இழிவாகக் கருதியவர்களினதும் வழித் தோன்றல்களோ, வழிக்கொள்வோர்களோ ஆகிய நாட்டுப் பரன்கள் “ இங்கிலாந்தின் பழங்கால வழமைகள் எதையும் மாற்ற விட மாட்டோம் ” என்று கூறும் அளவிற்கு மாறிவிட்டனர்.
நோமானிய அரசர்கள் காலத்திலும் பிளந்தா செனற்று வமிசத்தைச் சேர்ந்த முந்திய அரசர்கள் காலத்திலும், ஆங்கிலேயர் முக்கியமான இரு முறைகளால் முன்னேற்றமடைந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த அருள் விறலும் குருத்துவமுறையுமே அவ்விரு முறைகளாம். சட்சணிய அடிமைப் பண்ணையாட்கள் வசித்து வந்த, மரத்தால் ஆக்கப்பெற்றவையும் கூரை வேயப்பெற்றவையுமான குடிசைகளுக்கு மேலாக நோமானியருடைய கற் கோட்டைகளும் கற்களாாலன பெரிய தேவாலயங்களும் உயர்ந்து விளங்
* குறிப்பு : கிறித்துவ உலகத்துடன் அதிகத் தொடர் பற்றிருந்த இசுலாமிய மதம் பரவுதற்கு முன்பு வீழ்ச்சியடைதிருந்ததும் கொன்சுதாந்திநோபிளைத் தலைமைப்பீடமாகக் கொண்டிருந் ததுமான பைசாந்தியம், அல்லது கிழக்கு உரோமைப் பேரரசு சம்பந்தமாக இக்குறிப்புக்கள் உண்மையானவையாகா. அங்கிருந்த ஆட்சிமுறை அரசாங்க அதிகாரிகளால் தனியதிகாரத்து துடன் நிருவகிக்கப்பட்டதாய், திருச்சபை அதிகாரத்துக்குட்படாததாய், கீழைத் திருச்சபையால் ஊக்குவிக்கப்பட்டதாய், கிரேக்கப் பண்பாட்டையுடையதாய், உரோமானிய அரசியற் பாரம்பரி யத்தைப் பின்பற்றியதாய் அமைந்திருந்தது.

மத்திய காலத்து ஆங்கில அரச பதவி 203
கின. இவை பிரமாண்டமான கட்டடங்கள் ; இவைகளைக் கட்டியெழுப்பி இவற்றில் வாழ்ந்தவர்கள் ஆயுத பலத்திலும் அறிவுத் திறத்திலும் மிக்கவர் ; எனினும், இங்கிலாந்தின் பெருஞ் சத்தியாய் விளங்கியவர்கள் இவ்வன்னியராற் பழிக்கப்பட்ட ஆங்கிலேயரே; அன்றி, ஆங்கிலேயருக்குப் பயிற்சியளித்த அவ்வன்னியரல்லர். தங்களை ஆண்ட அன்னியரால் ஒன்று படுத்தப்பட்டும், அவர்களிடமிருந்து கற்றும், கற்ற அறிவை வளம்படுத்தி யும் உலில்லியமும் இலான்பிராங்கும் ஆச்சரியப்படக் கூடியவாறு தம்மைத் தயாராக்கியவரும் ஆங்கிலேய மக்களேயாவர்.
இ! பெரும் மலர்ச்சிக் கருமத்துக்குத் தலைவர்களாய் விளங்கியவர்கள் ஆங்கிலேய-பிரெஞ்சு இன மன்னராவர். வரலாற்றுக்கு வழிகாட்டும் சந் தர்ப்பங்களில் ஒன்ருகக் கருதப்படுகின்ற நோமானியரது வெற்றியும், ஆஞ் சவின்வமிச அரசுரிமையும் ஐரோப்பாவில் எந் நாட்டிலும் காணுத வலிமை யுடைய அரச பரம்பரையை இங்கிலாந்திலே தோற்றுவித்தன. மற்றை நாடுகளில் நிலமானிய எற்பாடு அந்நாடுகளைச் சீர்குலைத்த போதிலும், அவ்வேற்பாட்டை இவ்வரச பரம்பரையினர் நாட்டின் ஒற்றுமையை வளர்ப்ப தற்காகப் பயன்படுத்தினர். அவர்கள், உறுதியானதும், தேவைக்கேற்ப எளிதில் வசையக் கூடியதும் ஒருமுகப்பட்ட அதிகாரங்களை உடையதாயிருந் தும் அவ்வவ்விடங்களிலுள்ள மக்களுடன் தொடர்புள்ளதுமான ஆட்சி யொன்றை நிறுவினர்கள். நீதிமன்றங்களில் ஆங்கிலேயச் சட்டமாகிய ஒரே சட்டமுறையை நாடு முழுவதற்குமாக இயற்றினர். மேலும், அடிப் படுத்தப்பட்ட ஆங்கிலேயக் குடிமக்களுக்குத் தம் கரங்களை நீட்டி அபய மளித்தும் மானியப் பிரபுக்களின் கொடுமைகளினின்றும் அம்மக்களைக் காத்தும்வந்தனர் ; இன்னும், அம் மக்களின் மன விருப்பங்களை வெளியிடுவதற்கு வாய்ப்பாக நகராட்சியையும் சட்ட மன்றங்களையும் பாராளு மன்றத்தையும் உருவாக்க உதவியளித்தனர் ; ஆங்கிலேய உழுதுண் மக்களின் நீண்ட வில்லின் வலிமையால் விெற்றியீட்டிய வெளிநாட்டு யுத்தங்களிலும் அக்குடிமக்கள் பங்குபெறுமாறு செய்தனர்.
இவ்வாறக அன்னியராட்சியும் செல்வாக்கும் நிலவியிருந்த அந்நூற் ருண்டுகளில் இங்கிலாந்து பெற்ற அரச தலைமையிலே, மனிதன் முன்பு கனவிலும் கண்டிராத பெரும் தாபனங்கள், பிரதிநிதித்துவ மகாசபை கள், பல்கலைக்கழகங்கள், நடுவர்கள், இன்றைய நாகரிகத்திற்கு அடிப் படையான பல்வேறு சாதனங்கள் போன்ற வனைத்தையும் இங்கிலாந்து அமைத்துக்கொண்டது. மத்திய ஊழியற் பொதுத் தாபனங்களும் மக்களின் கூட்டு வாழ்க்கையுமே தலைசிறந்து விளங்கி வளர்ந்தன வன்றி, தனி மனிதனுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கப்பட வில்லை. பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர் நிறுவனங்கள், நகர வாணிகக் குழுக்கள், கூட்டு வியாபாரக் குழுக்கள், பாராளுமன்றம் போன்ற தாபனங்களின் பிறப்பிடமோ இவை களுக்கு இணையானவையோ வேறிடங்களிலும் காணப்பட்டன. இவைகளெல் லாம் மத்தியகால கிறித்துவ உலகமனைத்துக்கு முரியபொதுவான விளைவுக

Page 112
204 மத்தியகால நிறுவனங்கள்
ளாகும். ஆனல், ஆங்கிலேயருக்குரிய வழமைச்சட்டம் எனப்படுவது இங்கி லாந்துக்கே தனியுரிமையுடைய தொன்றகும். இவ்வழமைச் சட்டத்தோடு சேர்ந்து பாராளுமன்றம் இறுதியில் இங்கிலாந்துக்கு மட்டும் சொந்தமான தோர் அரசியல் வாழ்வை அளித்தது; இது இலத்தீன் நாகரிகத்தின் பயணய் வந்த பிற்கால வளர்ச்சியினின்றும் மிகவும் வேறுபட்டதாகும்.
எனினும், பதினன்காம் பதினைந்தாம் நூற்றண்டுகளிலேதானும் இங்கி லாந்து மற்றை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறம்பான தனது தனி இயல் பையோ, தான் ஒரு தீவாக இருப்பதிலுள்ள பெரு மதிப்பையோ உணர்ந்து கொள்ள வில்லை. பிற்காலப் பிளந்தாசெனற்று அரசர் காலத்தில், அய லாந்தையும் கொத்துலாந்தையும் தன்னுடன் இணைத்துப் பிரித்தானியப் பேரரசை நிறுவுவதைக் கைவிட்டு, ஐரோப்பாக் கண்டத்திற் பழைய நோமானியரதும் ஆஞ் வின் வமிசத்தினரதும் பேரரசைத் திரும்பவும் நிறு வுவதற்கு இங்கிலாந்து முயன்றது. நூற்றண்டுப் போர் எனப்படும் இம் முயற்சியில் இங்கிலாந்து ஈடுபட்டிருந்ததின் காரணமாக, கொத்துலாந்து சுதந்திர மடைந்தது. அரைகுறையாய் கைப்பற்றப்பட்டிருந்த அயலாந்து நிரந் தரக் குழப்பத்தில் மூழ்கியது; பிரான்சிலும் இங்கிலாந்திலும் மத்தியகாலச் சமுதாயத்தவரின் வாழ்வு விரைவிற் பாழாகியது. இரு நாடுகளிலும் நாட்டி னவுணர்ச்சி கிளர்ந்தெழுந்தது. மற்றெரு விளைவும் உண்டு : அதுதான் அசின்கோட்டிற் பெற்ற வெற்றி சம்பந்தமான ஞாபகம். இருநூறு ஆண்டு களுக்குப் பின்னும் செகப்பியரியர் இவ் வெற்றியைத்தனது நாட்டின் புகழ் வாய்ந்த மரபுப் பண்பின் சின்னமாகப் பெருமையுடன் போற்றினர். இதே பெருமையை ஆமேடா வெற்றிதானும் முற்றிலும் பெறவில்லை.
இவ்வமயத்திற் சோசரும் விக்கிளிபும், இங்கிலாந்தில் உருவாக முயன்று கொண்டிருந்த ஒரு புதிய நாகரிகத்தின் முன்னுேடிகளாய் விளங்குகின்ற னர். இந் நாகரிகம் பியோவுல்பு என்ற இலக்கியம், பீட்டு, அல்பிரெட்டு ஆகியோரது போதனை முதலியவை தந்த சட்சனியப் பண்பாட்டைச் சேர்ந்ததன்று ; ஆனல், இது அதிலும் வளமும் வலிமையும் கொண்ட தொன்றகும். இந் நாகரிகத்துக்குக் காரணமானவர்களை உருவாக்கிய பிரெஞ்சு, இத்தாலிய ஆசிரியர்களை விரைவில் விரட்டியடிக்கத் தியூடர் கால இங்கிலாந்து காத்திருந்தது. பதினைந்தாம் நூற்றண்டிலே மத்திய காலச் சமுதாயத்துக்குரிய எல்லா நிலைமைகளும், வரப்போகும் புரட்சிக்கு முன்னறிகுறியாக, மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்ததை நாம் காண்கின்றேம். புதியதொரு பொருளாதார அமைப்பிலே அடிமைப் பணணையாள் சுதந்திரம் பெறுகின்றன் ; பழைய நிலமானிய அமைப் பின் கைவிடப்பட்ட இரு தூண்களான பிரபுவிற்கும் அடிமைப் பண்ணே யாளுக்கு மிடையே பட்டணங்களிலும் கிராமங் விலு மிருந்த புதிய மத்தியதர வகுப்பினர் தோன்றுகின்றனர். வர்த்தகமும் ஆக்கத் தொழி லும் துணி வாணிகத்தொடு வளர்ச்சியுறுவதுடன், மத்திய காலத்தி லிருந்த பரோக்களின் எல்லை, வணிகக் குழுமத்தின் கட்டுப்பாடு என்ப

சுதீபன் காலத்து ஆட்சியறவு 205
வற்றை மீறியும் முன்னேறுகின்றன. சாமானிய மக்கள் கல்விகற்றுத் தாங்களாகவே சிந்தனை செய்யலாயினர். காக்குகதனுடைய அச்சியந்திரம் பழைய சந்நியாசிகள் செய்த எழுத்து வேலைகளை ஏற்றுச் செய்வதாயிற்று. ஆங்கிலேய உழவரின் கையிலிருந்த நீண்ட வில்லானது முழுக் கவசம் தரித்த நிலமானிய வீரனைத்தடுக்கக் கூடியதாயிருக்கின்றது ; அரசனது பீரங்கி அவ் வீரனுடைய கோட்டைச்சுவரைத் தகர்க்கக் கூடியதாயிருக் கிறது. இத்தகைய ஆழ்ந்த மாற்றங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல-அனேக தலைமுறைகளாக மெதுவாக இயங்கி வந்த-அத்திலாந் திக்குச் சமுத்திரமானது, தான் எழுப்பிவந்த திரையைத் திடீரென விலக்கி அதற்கப்பாலிருக்கும் புதிய உலகை வெளிப்படுத்துகின்றது. இங்கி லாந்து உலகின் கடைசி எல்லையாயில்லாது, அதன் இருதயமாகவும் மைய மாகவும் இருக்கின்றதென்பது இப்போது புலனுகின்றது. இங்கிலாந்து நெடுங்காலமாய்எறக்குறைய ஐரோப்பாவைச் சார்ந்ததாயிருந்து வந்திருக் கின்றது ; இப்போதோ, அது பரந்த சமுத்திரத்தைச் சேர்ந்ததாகின்றது ; அன்றியும், அது அமெரிக்காவையும் சேர்ந்ததாகின்றது. எனினும், அது எப்போதும் ஆங்கிலேய நாடாகவே மிளிரும்.
அத்தியாயம் 1
ஆட்சியறவும் அரச அதிகார மீட்சியும். II ஆம் என்றிபண்ணைக்குரிய நைற்றுக்களும் அடிமைப் பண்ணையாட் களும். கிராமப் பொருளாதாரம்
அரசர்கள் : சுதீபன் 1135-1154; 11 ஆம் என்றி, 1154-1189.
நோமானிய அரசர்கள் தங்கள் வலிமை மிக்க பரன்களை அடக்கி வைத்திருந்ததுடன், கோட்டம் என்கிற தாபனங்களுக்குப் புத்துயிரளித்து அவற்றை மன்னுறு அரசாங்கத்தின் சாதனங்களாகவும் அமைத்திருந் தனர். அன்றியும், முடிக்குரிய பல்வேறு வருமானங்களைத் திறம்படச் சேகரிப்பதற்காக கருவூலம் ஒன்றையும் அவர்கள் நிறுவினர். எனினும், நாட்டில் அமைதி நிலவுவதென்பது அரசனின் தனிப்பட்ட கருமமாற்றுந் திறனையே பொறுத்திருந்தது. அறிவற்ற ஒருவன் மன்னணுக முடிசூட்டப் பட்டிருந்த விடத்தும், அரச கருமங்கள் தாமாகவே இயங்கி, தொடர்ந்து நடைபெறுவதற்கான நிருவாக சாதனம் இன்னும் உருவாகாதிருந்தது. முதலாம் என்றி, இரண்டாம் என்றி ஆகியவர்களின் ஆட்சிக் காலங்களுக் கிடையே-நோமானிய அரசர்கள், அஞ்சவின் அரசர்கள் என்பவர்களுக் கிடையே-சுதீபன் ஆட்சிக் காலம் என்று வழங்கப்படும் ஒர் ஆட்சியறவுக் காலம் குறுக்கிட்டது. உண்மையில், இது ஒர் ஆட்சிக் காலமாக விராது, அரசுரிமைக்கான போட்டிக்காலமாக விருந்தது; புளோய் நகரத்துச் சுதீபனுக்
135154.

Page 113
206 சுதீபன்காலத்து ஆட்சியறவு
கும் பேரரசரின் விதவையும் அஞ்சு நகரத்து சியோபிரி எனும் பிளந்தா செனற்றுப் பெருமகன் மனைவியுமான மற்றிடாவுக்குமிடையே இங்கிலாந்துச் சிம்மாசனத்தைப பெறுவதற்காக ஏற்பட்ட போட்டியாகுமிது.
இக்காலத்தில் மக்களடைந்த துன்பங்கள் காரணமாக நிருவாகவமைப்பு நீதிமுறை ஆகியவை பற்றி இரண்டாம் என்றி கொண்டு வந்த சீர்திருத் தங்களை எல்லோரும் எற்றுக் கொள்வதற்குத் தயாராயிருந்தனர். இதன் விளைவாக அரச நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பின்னர் இரண்டாம் என்றி விசாலித்ததோடு, ஆங்கிலேய வழமைச் சட்டம் தோன்றுவதற்காய அடிப்படையையும் நிலைநாட்டினன். இவை யாவும் உண்மையான நில மானிய அமைப்புக்கு மாறனவையே. ஆனல், உண்மையான நிலமானிய முறை அமைப்பில், மக்கள் சுதீபனின் ஆட்சியிற் பட்ட துன்பம் போது மென்றகிவிட்டது.
அரசுரிமைக்குப் போட்டியிட்ட ஒர் ஆணும் ஒரு பெண்ணுமாகிய இருவருமே அரியணைக்குத் தகுதியற்றவர்களாயிருந்தனர் ; எனினும், அரசுரிமை சம் பந்தமான இவ்விருவரின் சச்சரவின் விளைவாக, நிலமானிய ஆட்சியறவு தோன்றியது. சுதீபனும் மற்றிடாவும் தங்களை ஆதரித்த பரன்களுக்கு உதவி செய்ததன் மூலம் தனித்தனி சேனைகளைத் திரட்டியதுடன், நோமானிய அர சர்கள் முயன்று பெற்றுக் கண்ணுங் கருத்துமாகப் பேணிவந்த முடிக்குரியி உரிமைகளைத் தனிப்பட்டவர்கள் பெறவுஞ் செய்தனர். கடந்த இரு தலை
குறிப்பு :1
வெற்றிவீரன் உவில்லியம் 1 ஆட்சி 1066-1087
நோமண்டிக்கோமகன் உவில்வியம் உரூபசு என்றி 1 அடிலா-சுதீபன் உறேபட்டு, இறப்பு 1134 ஆட்சி 1087-1100 ஆட்சி 1100-1135 புளோய்நகரப் பெருமகள்
(1) பேரரசன் என்றி W=மோட்டு அல்லது சுதீபன் ஆட்சி
மற்றிடா=(2) சியோபிரி பிளந்தா 1135-1154
செனற்று, ஆஞ்சுப் பெருமகன்,
இறப்பு 1151 என்றி 11 ஆட்சி 1154-1189
சுதீபனை ஆதரித்த இலண்டன் நகரவாசிகள் யாரை அரசனகத் தெரியவேண்டுமென்பது பற்றிச் சொல்லத் தங்களுக்கு உரிமையுண்டு என்று கூறி, இதில் ஒரளவு வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரம்பரையாக ஆட்சி செலுத்துவதற்கான பரம்பரைத் தெய்வீக உரிமை அக்காலத்தில் பொருட்படுத்தப்படவில்லை என்பதற்கு இது ஒரு சான்றகும். இன்னும் அரசுரிமை பற்றிய இம்மாதிரியான பிணக்குக்களைத் தீர்த்துவைக்கப் பாராளுமன்றம் போன்ற தொரு தாபனம் நாட்டிலிருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டும்.

சியோபிரி மாண்டெவில் 207
முறைகளாக மாநகர் மணியமாக விருந்தவன் அரசனுக் கடங்கிய பணிவுள்ள
அதிகாரியாயிருந்ததுடன், அரசன் விருப்பப்படி விலக்கப்படத்தக்கவனயும்
குற்றச் சாட்டுக்காக அரச குழுவால் விசாரணைக்குட்படுத்தத்தக்கவனயும்
இருந்தான். அந்நிலை மாறி, இப் புதிய ஊழியின் எடுத்துககாட்டாக சியோ பிரி த மாண்டெவில் இருந்தான. இவனைச் சுதீபனும் மற்றிடாவும் ஒருவர்க்
குப்பின் ஒருவராய் எசெட்சு மாநிலத்திற்கு நகர் மணியமாகவும் நீதிபதி
யாகவும் நியமித்தனர். மேலும் நாட்டின் நீதிபரிபாலனத்துக்கும் நிருவாகத்
துக்கும் உரிமையளித்து இவனையும் இவன் சந்ததியாரையும் எக்காலத்திற்
கும் பொறுப்பாளிகளாகக்கினர். மாண்டெவில் என்பவன் இடைவிடாது தன்
கட்சியை மாற்றிக் கொண்டே யிருந்ததுடன், தான் அளித்த ஆதரவுக்குக்
கைம்மாருக அதிகமான உரிமைகளையும் ஓயாது பெற்றுக் கொண்டான்.
இறுதியாக, எசெட்சு மாநிலத்தில் மட்டுமன்றி, எற்பட்டுசயர், மிடில்செட்சு, இராச்சியத்தின் நடுநாயகமாக விளங்கிய இலண்டன் ஆகிய அனைத்திலும்
இவ் வாச உரிமைகளை அவன் சுதீபனிடமிருந்து பெற்றன். இவன்கீழ்த்தர
மான ஒரு முரடன்; அரசனுட்பட, இங்கிலாந்தின் கிழக்குப்பாகத்தைச் சேர்ந்த
அனைவருள்ளும் மிக்க அதிகாரம் வாய்ந்தவனுவான். ஆயின், அவன் அரச
உரிமைச் சாசனங்களைப் பெற்றிருந்தும் அவன் சந்ததியார் சதா காலமும்
அப்பிரதேசங்களை ஆண்டனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களல்லர்.
அவ்வத் தலங்களின் அரச அதிகாரம் இவ்வாருன, மனிதர் கையிற் சிக்கியபடியால், மாவட்டங்கள் எங்கணும் மக்கள் தொகை குறைந்தொழி வதிாயிற்று. தேமிசு நதியின் பள்ளத்தாக்கும் மிதுலந்தின் ஒரு பகுதியும், தென் மேற்கும் பெரும் கொடுமைக்குட்படுத்தப் பட்டன; ஆனல், சதுப்பு நிலப் பகுதியே இதனினும் அதிகக் கொடுமைக் குள்ளானது. இங்கே சியோபிரி த மாண்டவில் என்பான் ஒரு பெரிய சேனையைக் காவல் வைத்து நாட்டுப் புறத்தைச் சூறையாடிக் கொண்டிருந்தான். துர்ப்பாக்கியம் நிறைந்த இப்பகுதியின் நடுப்பாகத்திலிருந்த பீற்றர் பரிே துறவி மடத்தில் அல்பி ரெட்டுமன்னன் பேராதரவில் முதலில் தொகுக்கப்பட்ட ஆங்கிலேய சட்சனிய காலவரலாற்றின் துக்கம் நிறைந்த கடைசிப் பகுதி ஆங்கிலேயத் துறவி யொருவரால், இந் நிகழ்ச்சிகளின்போது, எழுதப்படுவதாயிற்று. இந்நூல், இப்பொழுது கைவிடப்பட்டும் கொடுமைப் படுத் தப்பட்டும் போன ஆங்கிலேய மக்களின் வரலாறகக் கொள்ளப்படுகின்றது. அன்னியரான அரசர்களாற் சில காலமாகக் கைவிடப்பட்டு, அன்னியரின் கொடுமைக்கு ஆளான பொது மக்கள் அவ்வன்னியரின் அருள் விறலுக்கு எதிராக எழுப்பிய பிரலாபக் குரலை அதில் நாம் கேட்கிறேம்.
துன்புறுத்தப்பட்ட மக்களை அவ்வரசர்கள் இன்னும் அதிகமாகக் கொடு மைப் படுத்திக் கோட்டைகளை நிர்மாணிப்பதில் அவர்களை ஈடுபடுத்தினர். இக்கோட்டைகள் கட்டி முடிந்ததும் அவைகளிற் பேய்களையும் துட்டரையும் கொண்டு வந்து நிறைத்தனர். இதன் பின், பொருள் வைத்திருந்தவர் எனச் சந்தேகப்பட்டவர்களை-ஆண் பெண் என்று வேற்றுமை பர்ராட்டாது
9—-R, 6344 (12/62)

Page 114
1153.
208 ஆட்சியறவின் முடிவு
--இரவு பகல் என்று பாராது சிறைப்பிடித்து அவர்களிடமிருந்த பொன், வெள்ளிகளைக் கொடுக்கும்படியாகக் கேட்டு, சொல்லொணுச் சித்திரவதைக்கு அவர்களை உட்படுத்தினர். உயிர்த்தியாகிகளெவரும் இவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்குட்பட்டிருக்க மாட்டார்கள்.
இதனையடுத்து, வரலாற்று நூல்களில் எடுத்துரைக்கப்படும் சித்திரவதை கள் பற்றிய ஆவலி காணக்கிடக்கின்றது. இச் சித்திரவதைகளுள் மிகக் குறைந்த தரமானவை, பட்டினி போடுதலும் விரியன்பாம்புகள், அரவங் கள், தேரைகள் ஆகியவை நிறைந்த சிறிய அறையில் அடைத்துப் போடு தலுமாம். இரு தலைமுறைக்குப் பின்னரும், யோன் அரசன் ஒரு மேன்குல மாதையும் அவள் மகனையும் பட்டினி போட்டுக் கொன்றதை நாம் நினைவுறுத்திக் கொண்டால், மேற்குறித்த பயங்கர வதைகளைக் குழப்பம் நிறைந்த காலத்தில் உதவியற்றவர்களும் எழைகளும் அனுபவித்தார்கள் என்பதை நாம் இலகுவில் நம்பலாம்.
நாட்டின் பல விடங்களிலும் எழுந்த கற்கோட்டைகளில் இவ்வாருன அட்டூழியங்கள் அன்றட நிகழ்ச்சிகளாயிருந்தன. ஆனல், அதே சமயத் தில் இக் கோட்டைகளை நிறுவிய நிலமானிய விழுமியோர் புது ஆச்சிரமங் களே நிறுவுவதிலும் அவற்றுக்கு அறக்கொடை வழங்குவதிலும் விசேட அக்கறை காட்டினர்கள். சுதீபன் ஆட்சிக் காலத்தில் நூறு புதிய ஆச்சிர மங்கள் கட்டப்பட்டன. ஆட்சியறவுக்குக் காரணமாயிருந்து, அதனைப் பயன்படுத்தியவர்களே இப் பருவத்தில் பிரான்சு நாட்டிலிருந்து முதல் முதலாக வந்த சிசுற்றேசியன் மதத்துறவிகளுக்கு மிக்க தாராளமாக நன்கொடைகளைக் கொடுத்தனர். இவ் விடயங்களில் உயரிய மத உணர்ச்சி யால் உந்தப்பட்டு இவர்கள் கரும மாற்றினர் என்று கூற முடியாது ; ஆனல், அம் மாதிரியான உணர்ச்சி எதுவுமே கிடையாதென்றும் கூறு வதற்கில்லை. பரஞன ஒருவன் கோவிற் சுவரில், கூரிய நகங்களுடைய ஒரு சைத்தான், கவசமணிந்திருந்த ஒரு வீரனை இழுத்துக் கொண்டு பறப்பது போன்றதொரு சித்திரத்தைப் பார்த்திருப்பான் ; இது அவன் மனத்தை உறுத்தியிருக்கும். கமக்காரரை வதைத்து, ஊரில் சனத் தொகையைக் குறைத்து, கொள்ளையிடும் தனக்கும் இத்தகைய விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளும் படியாக ஆச்சிரமங் களுக்கு நன்கொடை வழங்குதல் சிறந்த வழியாயிற்றே என்று அப் பரன் கிருதியிருத்தல் கூடும்.
இறுதியாக, தலைமைக் குரு தெபால்டு என்பவரின் முயற்சியாற் சுதீ பனும் மற்றிடாவும் ஓர் உடன்பாட்டுக்கு வாலாயினர். இசுதீபன் றக்கும் வரை அவனே அரசனுயிருததல் வேண்டும் ; அதன்பின் மற்றிடாவின் மகன், இரண்டாம் என்றி என்ற பெயருடன், அரசனுதல் வேண்டும். இதற்கிடையில், உத்தரவின்றிக் கட்டப்பட்ட கோட்டைகள்-அவை ஆயிரத் துக்கு மேற்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளன-இடிக்கப்படல் வேண்டும்.

ஆஞ்சுப் பெருமகன் என்றி 209
கட்டுப்பாடற்ற நிலமானிய முறையின் பெருந் தீங்குகளை மனத்திற்கொண்டே இரு சாராரும் இவ்வுடன்பாட்டுக்கு வந்தனர். எனினும், நாட்டின் சீர் கேட்டைத் தீர்க்கக் கூடிய திறமை சுதீபனுக்கு இருந்ததில்லை. எனவே, அடுத்த ஆண்டிற்ருனே அவனிறந்தமை இங்கிலாந்து தேயத்திற்கு உண் டான மாபெரும் நற் பேறுகளில் ஒன்றகக் கருதப்பட வேண்டியதாகும். அவன் வீரமுள்ள போர்வீரனே; அருள்விறல் என்னும் புதிய இலட்சியத்துக் குரிய வீரச்செயல்களை நாடுவோன் ஆவன் ; தனக்குப் பிரதிகூலம் ஏற்படும் என்றறிந்தும் மற்றிடாவைத் தனது ஆளுகைக்குள்ளிருந்த ஊரைக்கடந்து செல்ல அனுமதியளிக்கும் அளவுக்கு வீரப் பண்புகளில் ஈடு பாடுடையவன்; ஆனல், அவன் பொது மக்கள் நலத்தில் சிரத்தையற்றவனயும் அரசன யிருப்பதற்கு முற்றிலும் தகுதியற்றவனயும் இருந்தான்.
இத் தீவை அரசாண்ட மன்னர்களனைவருள்ளும் ஒரு சிலரே ஆஞ்சுப் பெருமகனகிய என்றி பிளந்தாசெனற்று செய்தது போல, சிறப்புடையவும் நிலைத்து நிற்கக் கூடியவுமான கருமங்களே ஆற்றியுள்ளனர். எறக்குறைய இருபது ஆண்டுகளாக நிகழ்ந்த ஆட்சியறவினல் இங்கிலாந்து வெகு வாகச் சோர்வுற்றிருந்ததென்பதையும், நாட்டு நிருவாகத்தை நடத்துவதற்குநோமானிய அரசர்களால் உருவாக்கப்பட்ட அரசுச் சாதனங்கள் சிதைந்து, அல்லது உபயோகிக்காமலிருந்தாதல் துருப்பிடித்துப் போயிருந்தனவென் பதையும், நிலமானிய முறைமையின் கொடும் ஆட்சியில் மக்கள் உண்மை யாகவே சலித்துப் போயிருந்தனரென்பதையும், ஆனல், அமைதியை நிலைநாட்ட ஏற்ற வழிவகைகளில்லாவிடின் அந் நிலையே பின்னும் ஏற்படக் கூடுமென்பதையும் அரசனகிய என்றி பிளந்தாசெனற்று கண் டான். இந்நிலையில் அவன் நீதி முறையையும் நிருவாக முறையொன்றை யும் அரசாங்கத்துக்குப் பணிந்து நடக்கவேண்டுமென்ற ஒரு வழக்கையும் இங்கிலாந்துக்கு அளித்தான். இதன் பயனக இரிச்சாட்டு அரசன் நீண்ட காலமாய் இங்கிலாந்திலில்லாமலிருந்தும், யோன் அரசன் அக்கிரமும் முட்டாட்டனமுமான கருமங்களைச் செய்திருந்தபோதும், இந்நாட்டில் ஆட்சி யறவு மீண்டும் தலையெடுக்காதிருந்தது. முதலாம் என்றி இறந்தபின், வலிமையற்ற அரசாட்சியால் ஆட்சியறவு ஏற்பட்டது. இரண்டாம் என்றி இறந்தபின் வலிமையற்ற அரசாட்சியின் பயனக் யாப்புச் சீர்திருத்தம் விளைந்தது. இந்த வேற்றுமையே ஆஞ்சவின் அரசனது திறமை மிக்க ஆட்சிக்குச் சான்றகும் என்க.
நோமானிய உவில்லியத்தையும் இடச்சு உவில்லியத்தையும் போலவே, 11 ஆம் என்றியும் ஆங்கிலேய அரசன் என்று சொல்வதற்கில்லை. அயல் நாட்டான் ஒருவனை அரசனகப் பெற்றிருப்பதில் அனுகூலங்களுமுண்டு; பிரதிகூலங்களுமுண்டு. நாட்டின் நிலைமையை அப்படிப்பட்ட ஒருவன் தெளிவாய் உணர முடியும். என்றி ஆஞ்சுவின், தீவிரமான சலியாத உழைப்பும் ஆதிக்க மனப்பான்மையும் கொண்டு இங்கிலாந்திலுள்ள பிரச்
சினைகளைத் தீர்க்க முயன்றதோடு, அக் காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய,
1154
1189.

Page 115
210 ஆஞ்சுப் பெருமகன் என்றி
கல்வியிலும், விசேடமாகச் சட்டத் துறையிலும் பயிற்சி பெற்றுச் சிறந்த அரச மனுேபாவத்தையும் அவன் பெற்றிருந்தான். இத்தாலியப் பல்கலைக் கழகங்களிலிருந்து இவ்வாருன சட்ட சம்பந்தமான புதுக் கல்வி இக் காலத்தில் வட நாடுகளிற் பரவிக் கொண்டிருந்தது. ஆகவே, இவன் ஒரு புதிய சட்டவியலை இங்கிலாந்தில் தோற்றுவிக்கக் கூடுமாயிருந்தது. இவன் ஆட்சிக் காலத்திலிருந்து தான் இங்கிலாந்துக்கென அதன் புகழ் பெற்ற நாட்டுச் சட்டமொன்று ஏற்பட்டது. அவன் தன் பேரரசிலிருந்த பல்வேறு மாகாணங்களுக்குமுரிய நிருவாகக் கலைகளிலும் அனுபவ ஞான முடையவன யிருந்தான். ஏனெனில், அவன் வெறுமனே நோமண்டியின் கோமகளுக மட்டுமன்றி, மேற்குப் பிரான்சு தேசமனைத்தையும் அரசாள் வோனகவு மிருந்தானதலின். விவாகம், அரசியற் சூழ்ச்சித்திறம், போர், என்பவற்றல் ஆஞ்சு அரச குடும்பம் எவ்வளவோ நாடுகளைத் தனதாக்கிக் கொண்டிருந்ததால், ஐரோப்பாவிலே பாரிசிலிருந்த முடியாட்சியும் பரிசுத்த உரோமப் பேரரசும் முக்கியமானவையாகக் கருதப்படவில்லை.
செவியற்று மலைகளிலிருந்து பிரனிசு மலை வரை என்றி ஆட்சி செய்த தால், ஆங்கிலப் பிரபுக்களைக் கட்டுப்படுத்தக் கூடியவனுயிருந்தான். ஏனெ னில், இவ்வாறு பல நாடுகளுக்குத் தலைவனுகவுள்ள ஒருவனை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை. 1173 ஆம் ஆண்டில் முற்கால மானிய முறைப் படியான பரன்களின் கலகம் கடைசி முறையாக நிகழ்ந்தது. ஆனல், அதை அவன் அடியோடு நசுக்கிவிட்டான். இவ்வாறக, ஒரு பலமுள்ள மன்னராட்சி இங்கிலாந்தில் அவசியமாயிருந்த போது, தொடக்கத்திலாண்ட ஆங்கிலேய மன்னர்களின் ஐரோப்பிய அதிகாரம் இங்கிலாந்தின் உண்ணுட்டு அபிவிருத்திக்கு மறைமுகமாகத் துணை புரிந்தது.
என்றியினது சதா இடம் பெயர்ந்து கொண்டிருந்த அரசவையில் மேற்கைரோப்பிய நாடுகள் யாவற்றையும் சேர்ந்த வியாபாரிகளும், கல்வி மான்களும், குறிப்பான வேலையெதுவுமின்றி உற்சாகமான வாழ்க்கையை விரும்புகின்றவர்களும் நிறைந்திருந்தனர். ஆங்கிலத் தாபனங்களிலே தன்
* குறிப்பு :-இரண்டாம் என்றியின் அவையில் இருப்பது வெறும் விளையாட்டல்ல. அவ்வ வையில் பங்கு பற்றிய புளோய் நகரத்துப் பீற்றர் அது பற்றிக் கூறுகிற தாவது : * அரசன் ஒருநாளை எங்காவது செலவழிக்க நினைத்தால், அதுவும் இவ்வெண்ணத்தைப் பறைசாற்றிவிட்டால், அவன் அதிகாலையிலேயே புறப்பட்டுப் போய்விடுவான். இத் திடீர் மாற் றத்தால் மற்றவர்கள் திட்டங்கள் ஒரே குழப்பமாய் ஆகிவிடும். மனிதர் அங்குமிங்கும் பைத் தியம் பிடித்தவர்கள்போல் ஓடுவார்கள். சாமான்கள் எற்றிய குதிரைகளை ஒட்டுகிறவர்களும் இரதம் ஒட்டுகிறவர்களும் ஒருவர் பாதையில் ஒருவர் நிற்க வக குழப்பமாயிருக்கும் . தன் அரசவையினர் இம்மாதிரித் துன்பப்படுவது அரசனுக்கு அதிக மகிழ்ச்சியை விளைவித்தது என்றே நான் சொல்லுவேன். வழிதெரியாத ஏதோ ஒரு காட்டில், அதுவும் அனேகமாக இருட்டில், மூன்று, அல்லது நான்கு மைல்கள் தூரம் அலைந்தபின், சந்தர்ப்பவசமாக பாழ டைந்து போன ஒரு குடிசை தென்பட்டால் அதுவே எமது செபங்களுக்கு நல்ல பலன் என்று எண்ணுவோம். அனேக சமயங்களில் பன்றிகளும் கூட விரும்பாத இக் குடில்களில் யார் தங்குவது என்று அரசவை வீரர் உருவிய தம் வாளுடன் கொடுஞ் சண்டை செய்வார்கள்.”

பல்லினமக்கள் வாழ்ந்த இங்கிலாந்து 21.
திறமையின் முத்திரையை ஆழமாகப் பதித்த இந்தப் பெரும் மன்ன னுக்கு இங்கிலாந்து, அவன் ஆண்ட பிரதேசங்களில் ஒரு பெரிய மாகாண மாக மட்டும் அவனுக்குத் தென்பட்டது.
அவன் ஆண்ட நாடுகள் நாட்டுணர்ச்சி காரணமாகக் பிரிந்து நிற்காது ஒரே பண்பாட்டு நாகரிகத்தின் உறுப்புக்களாக விளங்கின. இங்கிலாந்தில் மேல் வகுப்பார் இன்னும் பிரெஞ்சு மொழியைத்தான் சிறப்பாகப் பேசி னர்கள் ; 111 ஆம் எட்டுவேட்டு ஆட்சிகாலம் வரை அம் மொழியிலேயே தொடர்ந்து பேசினர். ஆங்கிலக் கிராமத்தில் நிலமானியப் பிரபுவுக்கும் அவனது அடிமைப் பண்ணையாட்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது. இது இன வேற்றுமையாலும் எத்திஞ்சுப் போரில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்ற எண்ணத் தாலும் ஏற்பட்டதல்ல ; ஆனல், எப்பொழுதுமே இருந்துவந்த வேறுபட்ட மொழிப் பிரச்சினையால் உண்டான தடையாகும். நிலமானிய முறைமை யினல் தோன்றும் சமூகப் பெரும் பிளவு, 12 ஆம் நூற்றண்டில், மத்திய வகுப்பினரைச் சேர்ந்த வேளாளராலோ, அல்லது வியாபாரி களாலோ அகற்றப்பட வில்லை. இது ஒருபுறம் நிலவ, மற்றெருபுறம் வழக்குமன்ற அமீனக்களும், போர்வீரர்களும், இன்னும் இவர்கள்போல நிலக் கிழார்களுக்கும் அவர்களின் கீழ் வேலைசெய்யும் அடிமைப் பண்ணை யாட்களுக்கும் இடையே தொடர்பேற்படுத்தும் பிற வகுப்பினரும், பிரெஞ்சு மொழியையும் ஆங்கிலத்தையுமே பேசி வந்தார்கள். இன்னும், மத போதகர்கள் மூன்றவது மொழியாகிய இலத்தீன் மொழியைப் பேசி வந்தனர். எனவே, அலுவலகப் பத்திரங்களுக்கான மொழியாக இலத் தீன் இருந்து வந்தது. மத்திய காலத்து இங்கிலாந்தில் மாகாணத்துக்கு மாகாணம் “பழைய ’ ஆங்கில மொழியும் " மத்திய காலத்து ’ ஆங்கில மொழியும், அல்லது உவேல்சிலும் கோண்வாலிலும் பேசப்பட்ட கெலித்திக்கு மொழியும் பேசப்பட்டன. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டாலும், மத்திய காலத்து இங்கிலாந்தின் சமூக அமைப்பை நோக்கும்போது அது பன் மொழி பேசி வந்த ஒரு சமூக அமைப்பாகவே இருந்தது என்றுதான் கூறல் வேண்டும்.
ஆங்கிலேயரின் செருக்கானது, பல ஊழிகளாக இடைவிடாது, மேல் வகுப்பினரின் பண்பாட்டைச் சாதாரண மக்களிடையே சிறிது சிறிதாகப் பரவச் செய்தது. 111 ஆம் எட்டுவேட்டு ஆட்சிக் காலத்திலிருந்த நிகழ்ச்சி எழுதுவோன் ஒருவன் கூறுகிறதாவது : “ கிராமத்தில் வாழ்ந்தோர், நகர த்தில் வாழ்ந்த பண்பாளர்போல் இருக்க விரும்பியதுடன், அதன் பொரு ட்டுப் பிரெஞ்சு மொழி பேசுவதற்குச் சிறந்த முயற்சியும் எடுத்துக் கொண் டனர், ’ என்பதாம். ஆஞ்சவின் அரசர்கள் காலத்தில் இந்த விருப்பம் அதிகமாக இருந்தது என்று நாம் நிச்சயமாகக் கூறலாம். எனவே, பன்னிரண்டாம் நூற்றண்டில் ஐரோப்பாக் கண்டத்திற் புகுந்த பிரெஞ்சுக் காவியங்களும் கதைகளும் இங்கிலாந்து தேச மக்களின் உள்ளங்களைக்

Page 116
ഗീ
=== Pyi Tu jy dilih பொத்தாராள் ஆளிங்கரிகா sulfatorri
*r கrள் நேராதாக்கத் நட்பட்ட ரேதேசம்
படம் X-ஆஞ்சுவின் பேரரசு
 
 
 
 
 
 
 
 
 

பல்லினமக்கள் வாழ்ந்த இங்கிலாந்து Ø1ጸ
கொள்ளேகொண்டு கவர்ந்தன வென்பது ஆச்சரியமன்று. பியோல்ைபு காலத்து மோனே நயம் வாய்ந்த கவிதைகள், இரு நூற்றண்டுகளுக்குப் பின்னுல் இலங்குவிந்து என்பவரது பியர்சு பிளவுமன் எனும் காவி யம் எழுந்த காலத்து சிறிது மலர்ச்சி பெற்றனவாதலால், அவைகள் புகழ் பெருது ஓரளவுக்கு மறைவாக இருந்து வந்தன. ஆனூல், 11 ஆம் என்றியின் ஆட்சியிலும் அவன் மைந்தர்கள் ஆட்சியிலும் வேடிக்கை விளேயாட்டைச் சதா விரும்புகின்ற மக்கள் என்று குறிப்பிடப்பட்ட இங் விலாந்து தேசத்து மக்கள் கேளிக்கைகளிலும் லிளேயாட்டுக்களிலும் அதிக கவனஞ் செலுத்தி வந்ததால், தாங்கள் பாடுவதற்கும் ஆடுவதிற்கும் வசதியாக இருந்த பிரெஞ்சு மொழிப் பாடல்கள், காலியங்கள், கதைகள் ஆகியவற்றல் கவரப்பட்டும் அவைகளேப் பின்பற்றி எழந்த ஆங்கில மொழிப் பாடல்களுக்கு வசப்பட்டும் இருந்தனர். பிற்காலத்திற் சிறப்பாக விளங்கிய ஆங்கிலப் பாடல்களிலுள்ள வகைகளின் மூலத்தை நாம் இங்கு நன்கு காணலாம்.
பிரெஞ்சு இலக்கியத்திலுள்ள உணர்ச்சிக் கதைகளுக்கும் மகிழ்ச்சிப் பாடல்களுக்கும் எந்த விதத்திலும் குறையாத ஒர் இலக்கியம் தொலேவி விருந்த ஐசுலாந்தில் வளர்ந்து, மக்களின் ஆதரவு இன்றி அழிந்து கொண்டிருந்தது. வசன நடையிலுள்ள சாகாசு எனப்பட்ட வீர காவியங்களே ஆங்கில மக்கள் படித்துச் சுவைத்திருந்தால், அவை ஆங்கில இலக்கிய வரலாற்றில் அனேக மாற்றங்களேச் செய்திருக்கும். ஆணுல், புயல் வீசும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறுபான்மையான மக்கள் மத்தியிலேயே அவை வளர்ந்து வந்தன ; அதே சமயம், சமயததால் ஒன்றுபடுத்தியது போன்று பண்பாட்டாலும் ஐரோப்பாவை ஒன்றுபடுத்திய இத்தாலிய, பிரெஞ்சு நாட்டு இலக்கியங்கள், இங்கிலாந்தையும் சேர்மனியையும் கவர்ந் தன. நோதிக்குக்களின் இலக்கிய நகைச்சுவையும் செய்யுள் நயமும் சோசர், செகப்பிரியர் ஆவியவர்களின் இலக்கியத்தில் எழுச்சி யூட்டப்பெற்ற பொழுது, அவைகளின் சத்திவாய்ந்த ஆற்றல் இலத்தீன் உருவத்தைப் பெற்று புது மெருகுடனும் வளத்துடனும் தோன்றிற்று.
கலேயும் கைத்தொழிலும் செல்வமும் நாகரிகமும் நற்பண்புகளும் மத்திய காலத்து இங்கிலாந்தில் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந் தது, அப்போது அங்கிருந்த அமைதியான நிலைமையேயாகும். இத்தகைய அமைதி நிவே மத்திய கால ஐரோப்பாவின் எனேய பகுதிகளில் இருக்க விஸ்லே. ஆங்கிலேய சட்சன் காலத்தில் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த யுத்தங்களேப் போன்று, பிரெஞ்சு மொழி பேசிய இங்கிலாந்து மன்னர்கள் யுத்தம் புரிய விரும்பவில்லே. மேலும், ஐரோப்பாக் கண்டத்தின் நில மானிய அமைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தனிப்பட்டோர் போர்களேச் சுதீபன் ஆட்சிக்குப் பின் வந்த மன்னர்கள் இங்கிலாந்தில்ே தடுத்து நிறுத்திலிட்டனர். இங்கிலாந்தில் ஒரு பான் மற்றெரு பரஜேடு போர்

Page 117
214 நாட்டுப்பெருமகன்
செய்ய உரிமையின்றி இருந்தான். மேலும், அரசனுக்குத் தான் ஆற்ற வேண்டிய சேவைகளுக்காக ஒரு பரனல் அமர்த்தப்பட்ட நைற்றுக்கள், அப் பரனுடைய தனிப்பட்ட சச்சரவுகளிலோ, அவன் அரசனுக்கு எதிராகச் செய்யும் போர்களிலோ சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட வில்லை.
உண்மையில், நைற்றுக்களின் நிலமானிய சேவைகள், அரசன் நடத்தும் போர்களில் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்பனவெல்லாம் இப்போது குறையத் தொடங்கின. ஆனல், இரண்டாவது என்றி போன்ற ஒரு பெரிய அன்னிய நாட்டு அரசன் அக்குவிற்றெயின் என்ற களத்திற்கோ, அதற்கு அப்பாலுள்ள இடத்திற்கோ சென்று போரிட, நிலமானியத் திட்டத் தில் விதிக்கப்பட்ட நாற்பது நாட்களுக்கு மேலும் போர் வீரர்களைத் தன்னிடம் வைத்துக்கொள்வதற்காகப் போர்ப்படைகளைத் திரட்ட வேண்டி யிருந்தது. எனவே, அவன் 1 ஆம் என்றி ஆரம்பித்ததிட்டத்தை வித் தரிக்க வேண்டியதாயிற்று. அதன் பிரகாரம் மதத் தலைவர்களும் பரன்களும் தங்களிடமிருந்து நிலங்களைப் பெற்று மானியச் சேவை செய்யும் தங்களின் நைற்றுக்களின் இராணுவச் சேவைக்குப்பதிலாக “ சுகுற்றேக ” அல்லது, “கேடயப் பணம்’ என்று வழங்கப்பட்ட வரிப்பணத்தை, அரசன் விரும்பினல், கருவூலத்திற்குச் செலுத்துதல் வேண்டும். இப்படிப்பெறப் பட்ட பணத்தின் உதவியால் அரசன் அன்னியப்படையையோ, ஆங்கிலப் படையையோ கூலி கொடுத்துத் திரட்ட முடிந்தது.
இதனல், 11 ஆம் என்றியின் ஆட்சியிலும் அவன் மைந்தர்கள் ஆட்சி யிலும் குதிரை மேலிருந்து ஈட்டிச் சண்டை செய்ய நன்றகப் பழகி யிருந்த ஒர் ஆங்கிலப் போர்வீரன் ஒரு முற்றுகையையோ, தாக்குதல் நடை பெற்ற இடத்தையோ ஒருபோதும் பார்த்திருக்க முடியாது. அமைதியான வாழ்க்கை நடத்துவதிலும் விவசாயத்தைப் பெருக்குவதிலுமே நாளுக்கு நாள் அவன் அதிக அக்கறை காட்டி வந்தான். தனது நிலத்தில் விவசாயத் தை எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சதா முயற்சி செய் தான் ; தன் அடிமைப் பண்ணையாட்கள் எவ்விதம் வேலை செய்கிறர்கள் என்று தனது நண்பனும் வேலைக்காரனுமான அமீனவோடு பண்ணையைச் சுற்றிச் சுற்றிப் பார்வையிட்டுக்கொண்டும், அவனை “நிலத்தின் முகப்பிற் செங்கோதுமை விதையெனக்” கட்டளையிட்டுக் கொண்டும் இருந்தான். இவ் விதமாக அவன் முதன்மையான ஒர் ஆங்கிலக்கனவானக அதாவது, நாட்டுப் பெருமகனக நாளடையில் மாறிக்கொண்டு வந்தான்.
இத்தகைய நிலைமையின் விளைவாக, சுதீபன் ஆட்சியிலுள்ள கற்கோட்டை களெல்லாம், பிளந்தாசெனற்று அரசர்கள் காலத்தில் இருந்தது போல், பண்ணைக் கூடங்களாக மாறின. II ஆம் என்றி தன்னிடம் அனுமதி பெருது எழுப்பப்பட்ட அரண்களை அழித்தான்; புதிய அரண்கள் எழுப்புவதற்கு உத் தரவு அளிக்கவும் அவன் விரும்பவில்லை. இதன் பயனகப் பழைய அரண்கள் விரைவில் மறையலாயின. ஆழமான அகழிகளாற் சூழப்பெற்ற பாதுகாப்பு

முன்றேன்றலுரிமை 25
அறையானது, ஆங்கிலேய-தேனிய நிலப்பெருமக்களின் உயர்ந்த மர மண் டபத்தின் வழி மரபை ஒட்டியதாய், ஒட்சுபோட்டு, கேம்பிரிச்சு பல்கலைக்கழகங் களில் உள்ள உணவுக் கூடம்போல் உயர்ந்த கூரையுடையதாய்க் கற்களாற் கட்டப்பட்டிருந்தது. அதன் முன்னல் ஒரு புறத்திற் கட்டடங்களாற் சூழப் பட்டு நாற்புறமும் மதில்களைக் கொண்ட முன்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. பண்ணைக் கூடத்திற்கு, முன்கூடத்தின் வாயில் வழியாகவே செல்லல் வேண்டும். அதைச் சுற்றி ஒர் அகழியும் வெட்டப்பட்டிருந்தது. கலகக்காரரிட மிருந்தும் குதிரைப்படை வீரர்களிடமிருந்தும் கூடத்தைப் பாதுகாக்கவே அந்த அகழி வெட்டப்பட்டிருந்தது. ஆணுல், ஒர் அரணைப் போன்று இத னற் பெரிய முற்றுகையைச் சமாளிக்க முடியாது. இவ்வாறக, பிளந்தா செனற்று அரசர்கள் காலத்திற் பண்ணைக் கூடங்களைக் கட்டிய மக்கள் அடிக்கடி போரிடும் இனத்தவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து வந்தனர். எனினும், போரிடும் நினைப்பு அம் மக்களிடம் இருந்ததில்லை ; அதற்குப் பதிலாக, எவ்விதம் தங்கள் நிலத்தில் நல்ல முறையிற் பயிரிட்டு, தம் கலைகளையும் தொழில்களையும் அபிவிருத்தி செய்து, அதன் பலன்களை அனுபவித்து அமைதியான வாழ்க்கையை நடத்தலாம் என்ற அவா ஒன்றே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
பெரிய பண்ணைக் கூடங்களுடன் பல வகைப்பட்ட, பல தரமான சிறிய பண்ணைக் கூடங்களும் பண்ணை வீடுகளும் கட்டப்பட்டு இருந்தன. அவைகளுட் பிரபுக்களின் மாளிகைகளைப் பற்றியே நான் இங்கு வருணித்துள்ளேன். ஆனல், மத்திய ஊழியைச் சேர்ந்த இம் மாளிகைகளுட் சில மிகச் சிறியன வாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றல், தியூடர் அரசர்கள் காலத்தில் உள்ள “ மாளிகைகளுட் ’ சில, இப்போது தானியக் களஞ்சியங்களாகவும், பல, பண்ணை வீடுகளாகவும் மட்டுமே உபயோகப்படுகின்றன.
சோசர் காலம்வரையிலும் அதற்குப்பின்னும் ஆங்கில வீரர்கள் தங்களுடைய அரசர்களுக்காகவோ, அன்றி அன்னிய அரசர்களுக்காகவோ கொத்து லாந்து, பிரான்சு முதலிய இடங்களுக்குச் சென்று போரிட்டு வந்தார்கள். அவர்கள் “ வெற்றி முழக்கமிட்ட அலிசாண்டுரா’ போன்ற தூரவிடங்களுக் குஞ் சென்று சண்டையிட்டனர். போர்க்களத்தில் மட்டுமே அவர்கள் வீரர்களாக இருப்பார்களேயன்றி, போர் முடிந்து வீடு திரும்பியதும் மீண்டும் அமைதியாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தினர். இவர்களைத் தவிர, மற்றவர்கள், கோட்ட மன்றத்துக்குத் தமது மாகாண விடயமாகச் செல்வதைத் தவிர மற்றப்படி தம் பண்ணையை விட்டு எங்கும் போவதே கிடையாது. ஆடம்பரத்தையும் வீர தீரச் செயல்களையும் விரும்பியவர்கள், விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலும் வீரச் செயல்களிலும் அதிக நாட்டம் செலுத்தினர். வீர யுத்தத்திற் கலந்து கொள்வதினும் பிரான்சு தேசத்தினின்று தங்கள் நாட்டிற் குடிபுகுந்த இப்புதிய வீரப் பண்புகளைக் கொண்டிருப்பதில் அவர்கள் அதிக அக்கறை காட்டினர்.

Page 118
216 முன்ருேன்றலுரிமை
இதுவே தெற்கிலும் மத்தியிலும் உள்ள பிரதேசங்களில் இருந்துவந்த நிலைமையாகும் ; ஆனல், வேல்சு, கொத்துலாந்து ஆகிய எல்லைப் பிரதே சங்களை நோக்கினல் அங்குள்ள சமூக நிலைமை இருளடைந்து காணப்பட்டது அவ் வெல்லைப் பிரதேசங்களில் வாழ்ந்த, போரிற் சிறந்த பிரபுக்கள் பெரிய கற்கோட்டை அரண்களிற் சுகமாக வாழ்ந்து வந்தார்கள் ; அவர் களுடைய சேனையாட்கள் கோட்டைக்குச் செல்லும் வழிமேல் விழிவைத்து எதிரிகள் யாரும் வந்து தாக்கி விடாதவாறு கோட்டையையும் பிரபுவையும் காவல் செய்து வந்தனர். பிளந்தாசெனெற்று வமிச அரசர்கள் காலத்தில் உண்டான அரசியற் குழப்பத்தின் போதும், உரோசா யுத்தங்கள் நடை பெற்ற போலி மானியமுறைமைக் காலத்தும் அதிகமான படை வீரர்களை அனுப்பி உதவியவர்கள் வேல்சு, கொத்துலாந்து எல்லைப் புறத்திலுள்ள இந்தப் பிரபுக்களே யாவர்.
ஆங்கில நகர்ப்புறத்து மேல் வகுப்பாரிடையே நிலமானிய வகுப்பாரும் போர் செய்யும் வகுப்பாரும் தோன்றியதினல், குறிப்பிடத்தக்க விளைவு ஒன்று எற்பட்டது. நோமானியப் படையெடுப்பிற்குப் பின்னர், மூத்தமகனே நிலத்துக்கு உரிமையுடையவன் என்னும் முன்றேன்றலுரிமை முறை நாளடையில் ஏற்பட்டது. ஆகையால், பண்ணை நிலத்தைத் தகப்பனுக்குப் பின் அவன் மக்களுக்கிடையே பகிர்ந்து கொடுக்கக் கூடாது என்ற நிலைமை இருந்து வந்தது. இதன் காரணமாக மூத்த மகனைத்தவிர மற்றப் பிள்ளைகள் தங்கள் பிரபுவுக்கு யுத்த காலத்தில் இராணுவச் சேவை செய்ய் முடியாதவர்களாயினர். சட்சணியர் காலத்தில் நிலமானது சாதாரண மாக ஆண்மக்கள் எல்லோருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனல், பிளந்தாசெனற்று அரசர்கள் காலத்தில் நிலம் மூத்த மகனுக்கே சொந்தமானது என்று பொதுவாகக் கருதப்பட்டது. ஆகையால், பண்ணை முறைப்படி வளர்க்கப்பட்ட இளைய ஆண்மக்கள் யாபேரும் தங்கள் வாழ்க்கை யைத் தேடிக்கொள்ள உலகின் பல இடங்களுக்கும் செல்லலாயினர். இதன் விளைவாக, புதிதாக உருவாகும் ஆங்கில இனத்தவரிடையே புதிய இடங் களைத் தேடிச் செல்லும் ஆர்வமும் பிற இனத்தவரோடு உறவாடும் ஆவலும் அதிகமாயின. சேர்மனியிலும் பிரான்சிலும் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளைய மக்கள் பிற வகுப்பினரோடு பழகாது இருந்து வந்தனர். ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பெருமக்கள் தங்கள் வகுப்பிற்குள்ளேயே மணவினை செய்து கொண்டதுமன்றி, வியாபாரமும், தொழிலும் செய்து வந்த வகுப் பினரை வெறுத்தும் வந்தனர். ஆனல், அங்கே காணப்பட்ட இந்த இனக் கட்டுப்பாடு ஆங்கில மேல்வகுப்பாரிடையே காணப்படவில்லை. ஆங்கிலவரலாறு வேறன வழியிற் சென்றிருப்பின், அதற்கு ஓரளவிற்குக் காரண மாயிருந் தது இந்த முன்றேன்றலுரிமை முறையாகும். இந்த நியதி, நிலமானியத் திட்டம் செவ்வனே நடைபெறுவதற்காக எற்பட்ட போதிலும், இப்பொழுது மானியமுறைமை யமைப்பிலிருந்து விரைவாக விடுபட்டுக் கொண்டிருந்த போதிலும், இங்கிலாந்து தேசத்துக் காணிச் சட்டத்தின் ஓர் உறுப்பாக அமைந்தது.

பண்ணைமனையில் ஆடம்பரம் 27
உயர்ந்த நாகரிக வளர்ச்சியில் ஒரு முன்னேற்றத்தை-அதாவது, சுக வாழ்வு” நடாத்தும் தனி இனமொன்றின் தோற்றத்தை-நாம் இப் பொழுது காண்கிருேம். இன்று நியூசிலாந்தில் உள்ளது போல், ஒரு காலம் இங்கிலாந்திலும் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இவர்களில், அனேகர் மிகவும் வழைகளாகவே இருந்தனர். இந் நிலைமை யில் அங்கு சுகபோக வாழ்க்கையுடையவர்கள் இருந்திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. நிலமானிய முறையானது, நிலத்தைப் பண்படுத் திப் பயிர் செய்வோரின் ஆதரவில் வாழும் ஒரு போர்ப் வீரர் வகுப்பைத் தோற்றுவித்தது. ஆனல், இப்போது முடியாட்சி போர் செய்வதை நிறுத்திய படியால், இந்தப் போர்ப்படை வகுப்பினருக்கு வேலையில்லாது போயிற்று. போரிடுவதிலும் அதற்கு ஆயத்தம் செய்வதிலும் செலவிட வேண்டியிருந்த காலம், பணம் ஆகிய அனைத்தையும் பொழுது போக்கிற் காக இப்பொழுது அவர்கள் செலவிட வேண்டியிருந்தது. பிளந்தா செனற்று அரசர் காலத்துப் பண்ணை வீடுகளில் இருந்த போர்வீரர்கள் அமைதியாகக் காலத்தைக் கழிக்கும் வகையறியாது வருந்தினர். எனவே, பொழுதுபோக்குவதற்காக ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம்போற் பற்பல வழிகளைக் கையாண்டனர். அவர்கள் குடிப்பதிலும் வேட்டையாடு வதிலும் ஆட்டப் பந்தய மாடுவதிலும், விவசாயக் சீர்திருத்தங்களிலும் உள்ளூர்ப் பரிபாலனத்திலும் அரசியலிலும் பங்கு பற்றுவதிலும், இசை, இலக்கியம், கலை ஆகியவற்றைக் கற்பதிலும் தம் காலத்தைக் கழித்தனர். புராதன சாட்சன் காலத்திற் காட்டில் வேட்டையாடுவதே போர் வீரனின் கடமையாக விருந்தது; ஆனல், இப்போது அது வேலையற்றிருந்த வீரனுக்கு ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. வேட்டையாடுதல் குறைந்துபோக, தரிசு நிலங்கள் அருகிப் போக, தமது காலத்தை எந்த வகையிலாவது செலவிட வேண்டும் என்ற நிலையிலிருந்த போர்வீரர்கள் ஒரு புறம் தமக்கு மேலுள்ள அரசரோடும் மறுபுறம் தமக்குக் கீழுள்ள குடியானவரோடும் தமது காலத்தைக் கழிப்பதற்காகப் போராடலாயினர். பண்ணைத்திட்ட விவசாயமும் அதிகரித்து வரும் சனத் தொகையையும் விளைச்சலுக்குக் கொண்டுவரப்பட்ட நிலங்களின் பெருக்கமும், முன்றேன்றலுரிமைச் சட்டத் தினுல் இளைய சகோதரரின் நில உரிமை நீக்கமும் சேர்ந்து இவ்வீர வகுப்பினர்க்கு அதிக வருமானத்தைத் தேடித் தந்தன. அவ்வீரன், தனது மேலதிக வருமானத்தைக்கொண்டு தனது பண்ணை வீட்டுக்கு வேண் டிய சகல சொகுசுகளையும் வாழ்க்கை வசதிகளேயும் செய்வித்தான் ; தன் மண்டபத்திற் கலையும் இசையும் வளர்வதற்குச் செலவிட்டான். இவ் வாருக, அநாகரிக காலத்திலே மனிதனெருவன். தன் வாழ்க்கையை வசதியாகவும் இன்பமாகவும் ஆக்கிக் கொள்ள நூற்றுக்கணக்கான வழிகள் உளவென்பதை அவன் காண்பித்தான். செல்வந்தரான மடாதிபதிகளும் பிசப்புமார்களும் இவ்வண்ணமே நடந்தார்கள். நிலமானிய வகுப்பாரிடம் அதிகமாகச் செல்வம் பெருக, அவர்கள் ஆடம்பரமான பெரு வாழ்வை விழைந்தனர். இதன் காரணமாகப் புதிய ஆங்கிலப் பட்டணங்கள் தோன்

Page 119
218 பிரபுவும் அடிமையும்
றின; புதிதாகத் தோன்றிய மத்திய தர வகுப்பினர் ஆடம்பரப் பொருள் களை உற்பத்தி செய்யவும் வியாபாரம் செய்யவும் கடல் கடந்து வாணிகம் செய்யவும் முனைந்தனர். நிலமானிய, பண்ணைத் திட்டங்களின் கீழ் வரு வாய் சமமாகப் பங்கிடப் படாததினலும், இத்தகைய கடுமையான சமூக ஒழுங்கு உறுதியாக அமைக்கப்பட்டிருந்ததாலும், நாடெங்கனும் அரசனல் அமைதி நிலைநாட்டப் பட்டதாலும் மத்திய கால இங்கிலாந்தில், நாகரீக வாழ்க்கையின் சிறந்த அமிசங்கள் புகலாயின.
நிலமானிய முறையின் கீழ், பண்ணை வாழ்க்கை எந்த வகையில் விவ சாயியைப் பாதித்தது என்பதை இனி நாம் ஆராய வேண்டும். மேல் வகுப்பைச் சேர்ந்த சமயச்சார்பற்ற பொதுமக்களையும் மத குருக்களையும் விசேடமாக ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட இம் முறையின் கீழ் மேல் வகுப்பினர் அனுபவித்த நன்மைகளினும் குறைவான நன்மைகளையே விவசாயிகள் அனுபவித்தார்கள்.
12 ஆம் நூற்றண்டில் இங்கிலாந்திலுள்ள பண்ணைகளிற் சொந்த நிலமுடைய விவசாயிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். அஞ்சுவின் மன்னர்களின் கீழ்த் தீவிரமாக நடைமுறையிலிருந்த பழைய பண்ணைத் திட்டமும் நிலமானியப் பொருளாதாரத் திட்டமும் அழிந்த போதே, சொந்த நிலமுடைய விவசாயிகள் தோன்றினர். தும்சுதே என்னும் நில உடைமைக் கணிப்பேட்டின் படி, சனத்தொகையில் ஒன்பது சத வீதமாயிருந்த அடிமைகள் இப்பொழுது தங்கள் எசமானரிடமிருந்து நிலங்களைப் பெற்று அடிமைப் பண்ணை விவசாயிகளாக மாறினர்; எனினும் கட்டுப்பாடற்ற கமக்காரர் குறிப்பிடத்தக்க அளவிற் பெருகவில்லை. பண் ணைப் பிரபுவும் அவனுடைய அடிமைப் பண்ணையாட்களும் பண்ணையைப் பங்கு பிரித்து அதன் விளைவைத் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டனர்.
பிறப்பாலும் உரிமை முறையாலும் அடிமைப் பண்ணையாளன் பண்ணை யைச் சார்ந்து வாழவேண்டியவன யிருந்தான் ; பண்ணை விற்கப்பட்டால் அவனும் அவனது குடும்பமும் அத்தோடு விற்கப்பட்டனர். தன் பண்ணை எசமானனின் உத்தரவு இன்றியும் ஒரு பெருந் தொகையைத் தண்டமாகக் கொடுக்காமலும் அவன் தன் மகாேக் கல்யாணம் செய்து கொடுக்க முடி யாது ; அவன் இறந்தபின் அவனிடமுள்ள சிறந்த பிராணியொன்றை, சில வேளையில் அவனுக்குரியதாயிருந்த ஒரேஒரு பசுவை, அவனிடமிருந்து * திறை * யாகப் பண்ணை எசமானன் எடுத்துக் கொள்வான். அவன்
1. செல்வந்தருக்கான ஆடம்பரப் பொருள்களை அளிப்பதில் மத்திய கால வாணிகம் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தது. எழைகளுக்கான உணவு, தளவாடங்கள், உடை ஆகியவை அவ்வவ் விடங்களிலுள்ள கிராமங்களிற்ருனே விளைவிக்கப்பட்டோ, உற்பத்தி பண்ணப் பட்டோ வந்தன. இக்காலத்தில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியின் விளைவாகவே பொது மக்களுக்குத் தேவையான பொருள்கள் பெருவாரியாகத் தயாரித்து வழங்குவதற்கான வழிவகைகள் எற்படலாயின.

பிரபுவும் அடிமையும் 29
வேறு இடத்துக்குக் குடிபெயரவோ, தன் விருப்பப்படி எசமானுக்கு வேலை செய்யாது இருக்கவோ முடியாது. அவன் வேலை நிறுத்தமும் செய்ய முடியாது. தன் எசமானனின் நிலத்தில் வருடத்திற் பல நாட்கள் வேதனம் இன்றியே தன் எருதுகள் அனைத்தையுமோ, அல்லது அவை களிற் சிலவற்றையோ கொண்டு வந்து கமஞ்செய்தல் வேண்டும். கூலி வேலைக்காரர்களாற் செய்யப்படாது, இந்த அடிமைப் பண்ணையாட்களாலேயே பிரபுவின் பண்ணையில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வோர் உழ விற்குப்பின்னரும் அரை மணி நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்ற பண்ணையாட்களை அமீன கண்காணித்து
வருவார்.
இவ்விதம் முழுச் சுதந்திரம் அடையாத பண்ணை அடிமை, தானும் தன் எருதுகளும் பண்ணை எசமானனுக்குத் தேவைப்படாத காலங்களிலேயே தனக்குரிய சொந்த நிலத்தில் வேளாண்மை செய்து வந்தான். கிரா மத்துப் புல் வெளிகளை உபயோகப் படுத்தி, அவற்றல் வரும் பலன் களையும் அனுபவித்தான்; தன்னுடைய பன்றிகளையும் வாத்துக்களையும் கிராமத்தின் காட்டு நிலங்களிலும் தரிசான இடங்களிலும் மேய விட்டு, அவ்வழி வரும் பயன்களையும் பெற்று அனுபவித்தான்.
பண்ணை அடிமையின் நிலைமை எவ்விதம் பாதுகாப்பானதாக இருந்தது? சட்டத்தின் முன்னிலையில் “ அனைவரும் சமம்’ என்ற நியதி அவனுக்குக் கிடையாது. யோன் அரசன் காலத்திலேயும் “சுதந்திரமுள்ள ஒரு மனித னுக்கு,” மாமினுகாற்ற என்ற மகா சாசனத்தினல் அளிக்கப்பட்ட பாது காப்பு எதுவும் அவ் வடிமைக்கு அளிக்கப்படவில்லை. அரசனுடைய நீதி மன்றத்தில் தன் எசமானனின் மேல் அவன் வழக்குத் தொடர முடியாது. ஆனல் அவனைப் பண்ணைப் பிரபுவும் பண்ணை அமீனுக்களும் துன்புறுத்தா மல் இருப்பதற்காக, அவனுக்கு இரு பாதுகாப்புக்கள் இருந்தன. முதலாவ தாக, பண்ணை அடிமை ஒருவன் மனமுவந்து வேலை செய்தலின்றி, மனமின்றி வேலை செய்தால், ஒரு வேளை அவன் பண்ணையை விட்டு ஒட எத்தனிப்பான். அதற்கு இடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பண்ணை நிருவாகத்தர் கருதினர். ஏனென்றல், பழைய உரோமன் அரசர்கள் ஆட்சி யிலும் உவில்பர் போசு காலத்துக்கு முன் கிழக்கிந்தியத் தீவுகளிலும் மட்டு மீறி உழைக்கும் அடிமைகளை இலகுவாக வாங்கவும் விற்கவும் முடிந்தது போன்று இங்கு செய்ய முடியாதிருந்தது. அல்லது, வேலை செய்ய மனமில்லாத அடிமையைச் சாட்டையால் அடித்துப் பணிய வைக்கவும் முடியாதிருந்தது. இரண்டாவதாக, கிராம மரபுப் பாதுகாப்பு அவனுக்கு இருந்தது ; பண்ணை வழக்கிற் சட்டப்படி கூறப்பட்டுள்ள இம் மரபு, பண்ணைப் பிரபுவின் மாளிகையிலும் சில அமையம் கிராமத்தின் மத்தியில் நின்ற பழமை வாய்ந்த ஒக்கு மரத்தின் அடியிலும் நடைபெறும் பண்ணை நீதி மன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Page 120
220 பண்ணே நீதிமன்றம்:
! எவ்வளவிற்குப் பண்ணை நீதிமன்றம் பண்ணை அடிமைக்குப் பாதுகாப் ப்ளித்தது ? உண்மையில், அது அவனுடைய பண்ணைப் பிரபுவின் நீதி மன்றமே யன்றி, அரசனின் நீதிமன்றமன்று. எனினும், அம் மன்றத்தில் எல்லோரும் பங்கு பற்றலாம் ; சுதந்திர மனிதரோடு அங்கு அமர்ந்து நியாயம் வழங்கவும் குற்றங்களை விசாரிக்கவும் பண்ணையடிமைக்கும் உரிமையிருந்தது என்று கொள்வதற்கு இடமுண்டு. ஆனல், பண்ணை எசமானனின், அல்லது அவனது அமீனவின் ஒருதலை முடிவான தீர்ப்பி னும் இவர்கள் வழங்கிய தீர்ப்பு நியாயமானதாக இருந்தது. கடுமையாக வேலை வாங்கும் கன்னெஞ்சரான பிரபுக்களுக்கெதிராகபண்ணை அடிமைக்கு இது ஒரு சிறந்த பாதுகாப்பாகாது. பல வேளைகளில், குறிப்பாக சுதீபன் ஆட்சிக் காலத்தில், பண்ணைப் பிரபுக்கள் கடுமையாக அடிமைகளை வருத்தி வந்துள்ளனர் என்பதிற் சந்தேகமில்லை. எனினும், யாக்கேரி என்னும் புரட்சி பிரான்சில் நிகழ்ந்த காலத்தே ஆங்குவாழ்ந்த குடியானவரின் அவலநிலைக்கு இங்கிலாந்திற் பிளந்தாசெனற்று அரசர் காலத்தில் இருந்த குடியானவர் எக்காலத்தும் தாழ்ந்துவிடவில்லை.
முற் காலத் திட்டம் எதனையும் தனியாகப் பிரித்தோ, அல்லது தற்கால நிலைமையுடன் ஒப்பிட்டோ பார்க்கக்கூடாது. பண்ணை முறைமையானது சீரற்ற உணர்ச்சிகளையும் பலவந்தமான பழக்கவழக்கங்களையுமுடைய மக்களை ஒர் ஒழுங்கின் கீழ் ஒன்றகக் கொண்டு வந்து, நிலையான வாழ்க் கையை அமைத்துக் கொடுத்து, அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டத் தையும் எற்படுத்திக் கொடுத்ததின் மூலம் அக்காலத்தில் மக்களுக்கு ஒரு மகத்தான நன்மை யாயிருந்தது. பொது மக்கள் கருத்துக்களையும் நாட்டின் மரபு முறைமையையும் மதித்து வந்ததும் பதின்மூன்றவது நூற்றண்டி விருந்து உண்மையாகவே எழுத்துப் பதிவுகளையெல்லாம் பாதுகாத்து வந்தது :மான நீதிமன்றமானது, இப்போது ஆங்கிலக் கிராமத்தவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக நிலைத்துவிட்டது. இப்பண்ணைமுறைமை நல்ல முறையில் நடந்து வந்தபோது பண்ணை எசமானனுக்கு எந்தெந்தச் சேவைகளைத் தான் செய்ய வேண்டுமென்பதையும் பண்ணை அமீனுக்கள் தன்னிடம் எவ்வெவ் வேலைகளை வாங்குவர் என்பதையும் இப்போது விவசாயி நன்றகத் தெரிந்து கொண்டிருந்தான். ஒரு விவசாயி வேலை நிறுத்தம் செய்யவோ, பண்ணை எசமானனின் அனுமதியின்றிச் சட்டப்படி வேறு பண்ணைக்குக் குடி பெயரவோ முடியாது என்பது உண்மையே; ஆயினும், எசமான் எக் காரணத்தாலும் குடியானவனைப் பண்ணையி லிருந்து வெளியேற்ற முடியாது. மேலும், குடியானவர்களிடமிருந்து, பண்ணை நீதிமன்றத்தின் முறைமைப்படி ஏலவே வரையறுக்கப்பட்ட அள விற்கு மேலாகக் குத்தகைப் பணத்தையோ, சேவையையோ பண்ணைப் பிரபுக்கள் பெற முடியாது.

பண்ணை நீதிமன்றம் 221
இம் முறைமை வளர்ந்தோங்கியிருந்த பல நூற்றண்டு காலத்தில் இங்கிலாந்தின் செல்வம் பெருகியது ; அதிகமான நிலங்களும் உழவுக்குக் கொண்டுவரப் பட்டன : கால்நடைகளை வருத்தும் நோய் அடிக்கடி ஏற்பட்ட போதும் ஆடுகளும் மாடுகளும் நிறையப் பெருகின. தூம்சுதே என்னும் நில உடைமைக் கணிப்பேட்டின் பிரகாரம் 1086 ஆம் ஆண்டிலிருந்த 12 இலட்சம், அல்லது 15 இலட்சம் சனத் தொகையானது, அடிக்கடி பஞ்சமும் தொற்று நோயும் ஏற்பட்டிருந்தும், 1349 ஆம் ஆண்டிலே தோன்றிய ’கறுப்புக் கொள்ளை நோயாற் சனத் தொகையின் நெருக்கம் தற்காலிகமாய்க்
குறைந்த காலத்தில் 35, அல்லது 40 இலட்சமாக அதிகரித்திருந்தது.
இவ்விதம் நாடு செழித்திருந்தாலும் பண்ணை ஆட்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கவில்லை. ஆங்கிலேய-சட்சணிய காலத்திலிருந்த மிலேச்ச மக்களின் கிராம வாழ்க்கையினும் இவர்களின் வாழ்க்கை அதிகம் முன் னேறவில்லை ; பிற்காலத்தில் உள்ள விவசாயிகளின் மகிழ்ச்சியான வாழ்க் கைபோல் இவர்களின் வாழ்க்கை அமையவில்லை. வறுமையும் எசமான னுக்கு அடங்கி நடக்கும் தன்மையும் அடிமையையும் தந்திரமுள்ளவனுகவும் பயந்தவனுகவும் அறிவிலியாகவும் ஆக்கியது ; பதித மதத்திலும் கிறித்துவ மதத்திலும் இருந்த மூட நம்பிக்கைகளை அவன் ஏற்றன் ; அதனல், மாய மந்திரம், நினைப்புக்கெட்டாத காலந்தொட்டு மக்கள் சொல்லி வந்த மாயசாலக் கதைகள் என்பவற்றில் மூடநம்பிக்கை வைத்தான் ; எமாற்று வித்தையைத் தெரிந்து கொண்டான்; சில அமையம் தன் எச மானை, அல்லது அவன்றன் அலுவலாளர்களைக் கொலையும் செய்யலானன், கிராமத்திற் பஞ்சமும் கொள்ளை நோயும் வந்த காலத்தும் நன்கு கவனிக்கப் படாத கால் நடைகள் நோயால் பீடிக்கப்பட்டபோதும் அவற்றைச் சமாளிக்கத் தகுதியற்றும் அவற்றுக்குப் பலியாகவும் போனன். நிலமானது நீர்வடி யாது இருந்ததுடன், நாம் நினைக்க முடியாத அளவுக்கு சதுப்பு நிலமாகவே இருந்தது. காடுகளும் பண்ணை நிலப் பக்கமாகப் பெருகின : களைகள் விளைநிலங்களில் அதிகமாக வளர்ந்தன என்று பண்ணை அமீனுக்கள் பண்ணை நிலங்கள் பற்றிமுறையிடும் அளவுக்கு நிலைமை இருந்தது. விஞ்ஞான முறைப்படியின்றி, திறந்த பொது நிலத் திட்டத்தின்படி விவ சாயம் செய்யப்பட்ட நிலமானது பல நூற்றண்டுகளாக உபயோகிக்கப்பட்ட பின் தன் செழிப்புக் குறைந்தது. அத்துடன் அந் நிலத்திலிருந்து எக்கர் ஒன்றுக்குக் கிடைத்துவந்த விளைச்சலின் அளவும் குறைந்தது.
இன்று இங்கிலாந்திலுள்ளது போன்றே அன்றும் நாட்டின் வானிலை மோசமாயிருந்தது ; ஆகவே, கோடை கால மழையினுற் பயிர்கள் அடிக்கடி சேதப்படும் போது கிராமங்களில் அதன் பயனுய் எற்படக் கூடிய பஞ்சத் தைத் தடுக்க வழி எதும் இல்லாமலிருந்தது. நோமானிய மன்னர் களுடைய பெருங் காடுகளும் நிலச்சொந்தக்காரர்களுடைய பிரத்தியேக மான சிறு காடுகளும் கடுமையான சட்டங்களாற் காப்பாற்றப்பட்டு வந்த

Page 121
222 தன்னிறைவு பெற்ற கிராமம்
தால், சட்சணிய காலங்களிற் கிடைத்ததுபோல் மாமிச உணவு அப்போதைய பஞ்சமான காலங்களில் எளிதாகக் கிடைக்கவில்லை. ஆளுல்ை, காட்டுப் பறவைகள், வீட்டில் வளர்க்கப்பட்ட புருக்கள், முயல்கள், இன்னும் நாட்டிலிருந்த ஏராளமாகன மற்றப் பிராணிகள் ஆகியவை யாவும் வயல் வெளிகளுக்கு வந்தபோது, குடியானவர்கள் அக் காலத்துச் சட்டத்தை யும் தண்டனையையும் பற்றிக் கருதாது களவில் அவற்றைப் பிடித்துச் சமைத்து உணவாகக் கொண்டனர். பண்ணை வீடுகளிற் பிரெஞ்சுப் பிரபுக்கள் மாட்டிறைச்சியையும் ஆட்டிறைச்சியையும் உண்டு களித்த விபரத் தை அவற்றுக்கான விலைப் பட்டியலிலிருந்து நாம் அறிகின்றே மென்ற லும், ஆடும் மாடும் குடியானவனுக்கு உணவுப் பொருள்களாகக் கிடைக்க வில்லை. பன்றியிறைச்சியே குடியானவர்களின் பொதுவான உணவாக விருந்தது. சதுப்பு நிலங்களில் வசித்த மீன்பிடி காரரும் பறவைப் பண்ணை வைத்திருப்போரும் குறைந்த விலையில் மீன்களையும் நீர்ப்பறவைகளையும் குடியானவர்களது உணவிற்காக விற்று வந்தார்கள்.
வாழ்நாள் முழுவதும் வேறு எங்கும் போகாது பண்ணை நிலத்தின் எல்லைக்குள்ளே வாழ்ந்து வந்த பண்ணையடிமைகளுடைய கிராமமானது, மத்திய காலத்தில் வெளி உலகத்தோடு கல்வி மூலமாகவோ, அல்லது வேறெந்த வகையாலோ தொடர்பு எதுவுமின்றித் தனித்தியங்கிய படியால், அத்தனிமையானது அவர்கள் வாழ்க்கையைச் சகலவிதத்திலும் பாதித்தது. இப்படித் தனியாகப் பிரிந்து நின்றதால், கிராமம் தனக்கு வேண்டிய வற்றைத் தானே உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. இதன் விளைவாக, பண்ணை அடிமைகளிடையே கைத்தொழில் வினைஞர் தோன்றினர். இவ் வினைஞருள் விவசாயம் செய்தவருமுண்டு. விவசாயம் செய்யாதவரும் இருந்தனர். கம்மியன், அல்லது தச்சன் குடிசைகளை ஒன்றகக் கட்டி அதற்கு வேண்டிய தளவாடங்களையும் பண்ணைத் தொழிலுக்கான சாதனங் களையும் மரத்தினல் செய்து கொடுத்தான் ; கூரை வேய்வோனும் கொல்ல :னும் தச்சனுக்கு உதவியாகவிருந்து வேலையை முடித்துக் கொடுத்தனர். பெண்களும் பிள்ளைகளும் துணி நெய்தலை மேற்கொண்டிருந்தனர். அக் காலத்திற் கிராமத்தில் நடைபெற்ற முரடான துணி நெய்தலை அடுத்து, முறையாக நேர்த்தியான ஆடை நெய்தல் என்பது இங்கிலாந்திற் பல நூற் ருண்டுகளுக்குப் பின் எற்பட்டது. இங்கிலாந்தில் நெசவுத் தொழிலின் தோற்றம் வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டது என்பது உண்மை. குடி யானவரின் ஆடைகள் பெரும்பாலும் நன்றகப் பதனிடப்படாத முரட்டுத் தோலினல் ஆனவையேயாகும். பக்கத்திலுள்ள விவசாயக் கிராமச் சந்தை குடியானவர்களுக்கு அவ்வப்போது அத்தியாவசியமான ஏனைய தேவைப் பொருள்களை அளித்துக்கொண்டிருந்தது. பண்ணை வீடுகளில் வசித்தவர் கள் மட்டுமே நகரத்திலிருந்த வியாபாரத்தையும் கடல் கடந்த வாணிகத் தையும் ஆதரிப்பதற்காகத் தங்களுக்கு வேண்டியதை வாங்கி வர வெளி யில் செல்ல வேண்டியவராயிருந்தனர்.

தன்னிறைவு பெற்ற கிராமம் 223
11 ஆம் என்றியின் காலத்தில், பிரபுக்களின் வசிப்பிடங்களாகிய மடால யங்கள், மாளிகைகள் அல்லது பண்ணை வீடுகள் ஆகியவையெல்லாம் கற்களாற் கட்டப்பட்டிருந்தன ; ஆனல், பண்ணை அடிமை வசிக்குமிடம் கதவைத் தவிர வேறு புகைபோக்கி, கண்ணுடிப் பலகணி, தலைவாயில் எதுவுமே இல்லாத திறந்த குடிலாகவே இருந்தது. சட்சணிய கால முறைப்படி அவர்கள் குடிசைகள், வெட்டப்பட்ட துண்டுக் கட்டைகளை பக்கம் பக்கமாக வைத்துக் கட்டப்பட்டோ, மரங்களின் பற்றக் குறையாற் சில சுவர்களின் ஒரு பகுதி மரத்தாலும், மற்றெரு பகுதி ஒக்குமரச்சட்டத் திற் பொருத்தப்பட்ட மண்ணுலும் கட்டப்பட்டடோ இருந்தன. செங்கற் களைச் சுட்டு வீடுகட்டும் வழக்கம் உரோமானியர் காலத்தோடே மறைந்து விட்டது; அதற்குப் பின் அந்தப் பழக்கம் புதுப்பிக்கப்பட வில்லை. வீட்டின் கூரை ஒலையாலோ, புற் கற்றையாலோ வேயப்பட்டிருந்தது. பண்ணை அடிமையின் குடிசை தெருவை நோக்கி இருந்தாலும், ஒரு சிறிய பழத் தோட்டமோ, அல்லது முன்முற்றமோ அக் குடிசையைச் சுற்றியிருந்தது.
தீவின் வடக்கு,மேற்குப் பாகங்களிலும் காட்டுப் பிரதேசமான மாவட்டங்களி லும் ஒன்றிரண்டு, அல்லது மூன்று பண்ணைகளையோ, ஆறு பண்ணைகளையோ கொண்ட குக்கிராமங்களிற் குடிசைகள் கட்டப்பட்டருந்தன. ஒவ்வொரு பண் ணையும் தன்னுள் இணைந்த நிலங்களைக் கொண்டிருந்தது. இவற்றுட் சில நிரந்தரமாக வேலியடைக்கப்பட்டு இருந்தன. ஆனல், கிழக்கிலும் மத்திய இங்கிலாந்திலும் இருந்த செழிப்பான விவசாய மாவட்டங்களில் இருநூறு முதல் ஐந்நூறு ஆட்கள் வரையுள்ள பண்ணைக் கிராமங்களிருந்தன; இவை யாவும் பொது விளை நிலத்தின் மத்தியிலுள்ள பற்றுக் கோயிலையும் பண்ணைவீட்டையும் சுற்றியே இருந்தன. சதுரங்க ஆட்டப் பலகையைப்போல் இன்று தோற்ற மளிக்கும் இங்கிலாந்தின் கிராமப் பக்கம்போன்று இந்தப் பொது நிலமானது வேலி அடைப்புக்களால் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட வில்லை. அப்போது, விளைநிலமானது ஒவ்வொன்றும் ஓர் ஏக்கர், அல்லது அரை ஏக்கர் அளவுடைய, பல நூற்றுக்கணக்கான பகுதிகளாகப் பிரிக்கப் பட்டும் புல் வேலியினலோ, நடை பாதையினலோ குறுக்கே பிரிக்கப்பட்டும் இருந்தது. நமக்கு இக்காலத்தில் அவை பிரித்துப் பங்கிடப் பட்ட தொகுதி யைப் போலத் தோற்றலாம். ஆனல், அவை மிகப் பெரிய அளவிலே தானியம் பயிரிடுவதற்காகப் பிரிக்கப்பட்டிருந்தன என்பதை நாம் மறப் பதற்கில்லை.
இப்படிப் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நிலமும் தனிப்பட்ட ஆட்சி நிலமாக இருந்தது; அதாவது, விவசாயம், செய்வதற்கும் சொந்த உரிமை பராட்டு வதற்குமுரிய கூறக அது விளங்கியது. ஒவ்வொரு குடியானவனின் நிலச் சொத்தும் தனித்தனியான இந் நிலத் துண்டுகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. கட்டுப்பாடற்ற தனி மனிதனும் அடிமைப் பண்ணையாளும் ஒன்றுக்கு மேற்பட்ட இப்படிப் பட்ட தனி நிலப் பகுதிகளை வைத்துக் கொள்ள

Page 122
படத்தக்கடி நாட்கம் ஒரு ங்பந்பிரித் மூன்று கடி#* தீங்ாற வியப்பட்டிருக்ரும் சுய துண்டுகள் சே ஆகாயம் பந்தய ஆங்காக வேகதாதரி. பிரபுவிங்
Friul i fill F.
வயல் 1
Eriun it. Gurgurimi)
நீரேந்திரப் ممبرقیہ^T
Čuřeny
புங்துயுரு பூட்ாேபூ
வயல் II ய்ேயா. ஐந்து
if گله. لقطيفي" டிங்"
ఓల్'*్కృశ్చి El قد"Hتي LFF I
# .4-4 سياق ية بعده
ர+ம் கார்தீன் கட்டாப்பு அழிக்பட்ட அறுபதி பேரக் போட்ாடி டிரீர் கேதவு படங்கிய நோயாளிபு பேர்
u:'ഛൂ', '(.+ ஆப்பிநிதிக் அாடப்பிட்ட பருதி
வயல் II
ய்ேவார் தரித பேய்சதுரு பங்பூர்
f بسته కి
ఆల్ప్స్ ఫి.
k
பிரபு ஜிங்க ராது புரி :
கோளி கேட்ாடியதுே "
'Jiri tuli Lunrti n.
படம் XI.--கெனநெற்று : பண்னே முறைமைக்குட்பட்ட ஒர் ஆங்கிலக் கற்ப&ரக் கிராமம்,
 
 
 
 

"திறந்த வயலிற் " காணித்துண்டுகள் 25
ஒாம் முப்பது சிறு பகுதிகள் கொண்டதுதான் பொதுவாக ஒரு குத்தகை நிலமாக இருந்தது. பிரபுவின் நிலமானது, கிராம நிலத்திற்குப் புறம்பாகத் தொடர்ச்சியாய் இனேந்திருந்தாலும் அவற்றுட் சில குடியான இவரின் நிலங்களோடு ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
தனிப்பட்ட நிலங்களேத் தன்னுட் கொண்ட பொது வினேநிலத்தின் சாகுபடி யைப் பொறுத்த வரையில், பிரபு, கட்டுப்பாற்ற மனிதன், அடிமை ஆகியவர்கள் எல்லோரும் கிராமத்திற்குரிய ஒரு பொதுவான முறையையே கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். உண்மையில், மூன்று விதத் தனிப்பட்ட நிலங்கள் இருந்தன; ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிலும் அதிக அளவிலோ, குறைந்த அளவிலோ பங்கு கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இம் மூன்று பெரும் நிலங்களில் ஒன்று ஆடுமாடுகள் மேய்வதற் கெனத் தரிசாக விடப்பட்டிருந்தது ; மற்றைய இரண்டில், ஒன்றிலே கோதுமை, அல்லது "இறை” என்ற தானியம் விதைக்கப்பட்டது; மற்றதில் " ஒட்சு", அல்லது "வாற்கோதுமை" விதைக்கப்பட்டது. சாகுபடி நடை பெறும் காலங்களிற் சாதாரணமாக நிலங்களேச் சுற்றி வேலி அடைக்கப் பட்டிருக்கும். இதனுஸ், விவசாயத்தில் புதிய முறைகளேக் கையாளவோ தனிப்பட்டவர்கள் தாம் விரும்பியவாறு முன்னேற்ற முறைகளேக் கையாள வோ இயலாமலிருந்தது. இருந்தாலும், இத்திட்டமானது இங்கிலாந்தில் விவசாயம் செழிப்பாக நடந்த சில பிரதேசங்களில் நோமானியர் பனட யெடுப்புக்கு மிக முந்திய காலத்தொட்டு, 18 ஆம் நூற்றண்டில் விவசாயப் புரட்சி தோன்றிய காலம் வரை நடைபெற்று வந்துள்ளது. வேலியிட்டு அடைப்பதற்கு வசதியாக, அல்லது பகுதி பகுதியாகக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு வசதியாக இருந்தவையுமான, அத்தகைய பிரபு வின் நிலWகளிலேயே முதன்மையான அபிவிருத்திகளெல்லாம் ஏற்பட லாயின.
'வயல்களுக்குப்" புறம்பாகக் காணப்பட்ட புல்வெளி, அனேகமாக ஓடை யின் பக்கமாய் அமைந்திருந்தது. இது அனேவருக்குமுரிய போடிக்கும் பொதுக் களமாகவும் மேய்ச்சல் நிலமாகவும் இருந்தது. ஆஞன், இதனே உபயோகிப்பது பற்றிய விளக்கமான சட்ட விதிகளும் வரையறைகளும், பண்ணே நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டிருந்தன. நீரோடைப் பக்கமாக விருந்த தானியம் அரைக்கும் ஆவே, பெரும்பாலும் பிரபுவுக்குச் சொந்தமானதாகவே இருந்தது. அதனுஸ், பண்ணே அடிமை களேத் தனது ஆலேக்கே தானியங்களேக் கொண்டுவரச் செய்து, தான் குறிப்பிட்ட விவேப்படி அரைத்துப் போகச் செய்தல் பிரபுவுக்கு இயல்வதா யிருந்தது. அரை கூலியானது சில அமயம் மிகவும் அதிகாமகவிருந்தால், தங்கள் தானியங்களே வீட்டிலே அரைப்பதற்குக் கையாற் சுற்றும் ஆ&லயை உபயோகிப்பதற்காகப் பண்ணேயடிமைகள் விசேட சலுகை பெற முயன்றனர். காற்றடியினுல் இயங்கும் ஆலேகள் மத்திய கால இங்கிலாந்தில் அதிகமாக

Page 123
226 கிராமத் “தரிசு”
இருக்கவில்லை. முதலாம் இரிச்சாட்டின் சிலுவைப் போருக்குப் பின்பே
முதன்முறையாகக் காற்றடியால் இயங்கும் ஆலை கிழக்கேயிருந்து இங்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இச் சமுதாயம் பொது உடைமைச் சமுதாயம் என்றே, முறைப்படியமைந்த கிராமியச் சமூகம் என்றே கொள்ளல் ஆகாது. ஆனல், மனிதனின் தனி யாண்மை அச்சமூகத்திலிருந்து களைந்தெறியப்பட்டிருந்தது. பிரபு உட்பட தனிப்பட்ட நிலக் குத்தகைக்காரர் பலர் சேர்ந்த கூட்டுத் தொகையே பண்ணையாகும். அவர்களுடைய செல்வத்தைப் பொறுத்த வரையிலும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன வென்பது உண்மையே ; ஆனல், தங்களுக்குள்ள உரிமைகள் காரணமாக வும் பண்டு தொட்டு இருந்துவரும் ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்காகவும் அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருந்தனர். பணத் தொடர்பு, ஒய்பந்த உரிமை, தொழில் நெகிழ்ச்சி ஆகியவை விதிக்கு விலக்காயிருந்தனவன்றி விதியாயிருக்கவில்லை.
* விளை நிலத்திற்கு ” அப்பால் “ தரிசு நிலம் ” இருந்தது. அவற்றுட் சில சதுப்பு நிலமாகவும் சில வெறு நிலமாகவும் சில காட்டு நிலமாகவும் இருந்தன. முன்பு, இவைதாம் தீவு முழுவதும் பரக்கக்காணப்பட்டன. இப்போதும் தீவின் அரைப் பாகத்திற்கு மேல் இவைகளாகத்தானிருக் கின்றன. சட்சணிய முன்னேடிகள் முதலில் இந்த இருண்ட பிரதேசங்க விற் புகுந்து, அங்கங்கே கிராமங்களையும் வீடுகளையும் அமைத்து, மற்றவர் குடியேற வழிகாட்டினர். புதிய புதிய கிராமங்களும் பண்ணைகளும் தோன் றவும் கிராம விளைநிலங்கள் விரிவாக்கப்பட்டு அதிகரிக்கவும் வேட்டையில் விருப்பங் கொண்ட மன்னர்கள் தங்கள் ஆதிக்கக்த்துக்குட்பட்டிருந்த காடு களை மக்களிடம் ஒவ்வொன்ருக விட்டு விடவும் நேர்ந்ததால், இந்தச் சதுப்பு நிலம், வெற்றுநிலம், காட்டுநிலம் ஆகியவை யனைத்தும் குறுகிக் குறுகி, ஆங்கிலேய வரலாற்றிற் காணப்படும் ஒவ்வொரு தலைமுறையிலும் மறைந்து கொண்டு வரத் தொடங்கின. கடைசியாக, அனேவர் வமிச அரசர் காலத் தில் ஒரு பண்ணையை மற்றெரு பண்ணையிலிருந்து பிரித்த இந்தத் தரிசு நிலம் இரண்டு கிராமங்களுக்குச் சொந்தமான பொது நிலமாக மாறியது. அனைத்துக்கும் இறுதியான 18 ஆம், 19 ஆம் நூற்றண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வயல்களுக்கு வேலியிடும் திட்டத்தால் இரண்டு கிராமங் களுக்கு இடையில் உள்ள பெரும்பாலான இப் பொது நிலங்கள் சதுரங்க ஆட்டப் பலகைகள் போல் வேலிகளால் பிரிக்கப்பட்டு இன்று விளை நிலமாக் கப் படுகின்றன. தரிசு நிலமும் காட்டு நிலமும் மறைவதற்கு நகர அமைப்புக்கள் காரணமாயின. ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மரங் களின் உச்சியை மதிப்பிட்டுக் கொண்டு வானத்தில் பறக்கும் ஒரு பறவை யால், இம்மாதிரியான ஒரு பெரிய மாறுதல் இங்கிலாந்தில் ஏற்படக்கூடு மென்று நம்புவது இயலாத தொன்றகும்.

227
அத்தியாயம் II 11 ஆம் என்றியினது ஆட்சியின் தொடர்ச்சி. வடக்கில் சிசுற்றேசியர். பெக்கெற்று. அரசநீதிமன்றங்கள். ஆங்கிலேய வழமைச் சட்டமும், நடுவர் முறைமையும்
அரசன் 11 ஆம் என்றி 1154-1189
அஞ்சுவமிசத்து என்றி காலத்திற்குப் பின்னரே, சென்ற அதிகாரத்தில் விவரிக்கப்பட்ட பண்ணை முறைமையின் சில அமிசங்கள் வளர்ச்சியடைந்தன. அவன் பேரனகிய 111ஆம் என்றியின் ஆட்சியின்போது, பண்ணைநீதி மன்றங்களிலே தீர்ப்புக்களை எழுத்திற் பதிவு செய்து கொள்ளும் வழக்கம் எற்பட்டது. அதே ஆட்சியில் விவசாயம், பண்ணை நிர்வாகம் ஆகியவை பற்றிய விஞ்ஞான முறைமையான ஆராய்ச்சிகள் பரவ ஆரம்பித்தன. அரச னுடைய நீதிபதிகள், மாநகர் மணியகாரர், கருவூலப் பரன்கள் ஆகியோர் பழக்கிவைத்த கணக்கு முறைகளையும் பதிவு முறைகளையும், தத்தம் ஊர்களிலேயே தங்கியிருந்த நைற்றுக்கள் தமது பண்ணைகளிற் பின்பற்ற ஆரம்பித்தனர். திருச்சபைப் பண்ணைகளின் முகாமையாளரின்-குறிப்பாக சிசுற்றேசியன் மடங்களின் நிர்வாகிகளின்-முறைகளையும் அவர்கள் கையாண்
L60TT.
சுதீபன், 11 ஆம் என்றி ஆகியோரின் ஆட்சிக்காலங்களிலே துறவி மடங்கள் உற்சாகத்தோடு நிறுவப்பட்டு மானியம் அளிக்கப்பட்டிருந்தும், தொடக்கத்திலிருந்த ஆங்கிலேய சிசுற்றேசியர் கடுமையான விரதங்களைப் பின்பற்றியவராயிருந்தும், இச்சபைத்துறவிகள் அடுத்த நூற்றண்டிற்றேன் றிய சந்நியாசிகள் போல், மக்களிடையே ஒரு பெரும் அறிவுச் சத்தியாகவும் அறநெறிச் சத்தியாகவும் நெடுங்காலம் திகழவில்லை. ஆனல் அவர்கள் பண்ணை நிர்வாகத்தில், சிறப்பாகப் பிளாண்டேசு தேசத் தறிகளுக்குச் சிறந்த கம்பளிமயிர் தயாரிப்பதில் முன்னேடிகளாக இருந்தனர். ஆட்டு உரோமம் எற்றுமதி செய்வதில், மத்தியகால அவுத்திரேலியா எனுஞ் சிறப்புப்பெய ரைப் பிளந்தாசெனற்று இங்கிலாந்து பெற்றிருந்ததாயின், அதற்குக்கார ணர் இத்துறவிகளே யாவர். யோக்குசயர் பள்ளத்தாக்குக்களின் செங்குத் தான, மரமடர்ந்த சரிவுகளில் அமைந்திருந்த புகழ்மிக்க துறவிமடங்களே, நான்கு அல்லது ஐந்து நூற்ருண்டுகளில், பெரும்பாலும் பயன்படாவெளி யாகவிருந்த வட இங்கிலாந்தையும் கொத்துலாந்தையும் ஆட்டுப் பண்ணே நிலமாக மாற்றிய இயக்கத்தை ஆரம்பித்தன. நினைவுக்கெட்டாத காலத் திலிருந்து, நீர்கட்டிக் கிடந்த வடபகுதிப் பாழ் நிலங்களில் சிறு ஒக்கு மரங்களும் இளம் மூங்கில்களும் வளர்ந்திருந்தன. இவற்றை ஆட்டு மந்தைகள் தின்று அழித்தன.

Page 124
228 சிசுற்றேசியரும் செம்மறி வளர்ப்பும்
அவதானிக்கவோ, எழுதி வைத்துக் கொள்ளவோ கூட முடியாதவகையில் இச்செயல் மிகவும் மந்தமாக நடைபெற்றபோதும், வெண்புல்லும் புதரும் நிறைந்த பிரேரிப்புன்னிலங்கள். வறட்சியான மேற்குக் காற்றின் அணைப் பில் வளர்ந்த காட்சியே அதன் விளைவு என்க. இங்கிலாந்திலிருந்த சிசுற் றேசியர் தங்கள் பண்ணை நிர்வாகத்தின் மூலம் பிற துறை எதிலும் செய்திருக்கக் கூடியதைப் போல, நல்ல சேவையையே செய்தார்கள். இச் சேவைகளின் நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்ப்பது கடினம் ; ஏனெனில் அதே காலத்தில் வாழ்ந்தவர்களால், இச்சபையினர் இவர்களின் பிரசித்தி பெற்ற பேராசையின் நிமித்தமாகத் தூற்றப்பட்டு வந்தனர். இப் பேராசை அவர்களேச் சூது, கள்ளக்கையொப்பம், அடக்குமுறை ஆகியவற்றைக் கையா ளத் தூண்டியவாறே, பண்ணைக் கணக்கு வைத்துக் கொள்ளவும், அநேக நிலப்பிரபுக்களைவிட, விரைவில் ஆட்டுப் பண்ணைகளை விருத்தி செய்யவும் தூண்டிற்று. உலகத்தையும் அதன் ஆடம்பரங்களையும் துறந்த துறவிகள் அறநெறியைக் கைக்கொள்ளாத மற்ற மக்களைப் போலவே செல்வத்தைச் சேகரிக்க உரிமை உள்ளவர்கள் என்று ஒப்புக் கொள்ளப்படுமானல், பதி னெட்டாம் நூற்றண்டிலும், தியூடர் காலத்திலும் திருந்திய நிலப்பிர புக்களுக்கு அளிக்கப்படும் புகழும் பழியும் முந்திய சிசுற்றேசியர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும்.
புதிய அமைப்புக்களிற் பல, ஆங்கிலேய பிசப்புமார்களின் ஆதிக்கத்தில் இருக்கவில்லை. போப்பரசரும், அந்தந்த மடத்தலைவர்களுமே ஆதிக்கம் செலுத்தினர். இந்தச் சுதந்திரம் எந்நேரத்திலும் திருச்சபைக்கு ஊறு செய்யக் கூடிய உரிமையேயாகும். இதுவே இங்கிலாந்திலுள்ள துறவி மடங்களின் அழிவைக் கடைசியிலே துரிதப்படுத்தியது. ஆனல், சில மடங் கள் பிசப்புமார்களின் உள்ளூராட்சிக்குட்பட்டு இருந்தன. ஆங்கிலேய மடங் களின் அக்கால நிலைமையின் பிரச்சனைகள்பற்றி ஒரு தீர்ப்புக்கு வரு வதற்கு, சமயவட்டத் தலைவர்கள் இம்மடங்குகளுக்குச் சமூகஞ் செய்து குறித்து வைத்துள்ள அறிக்கைகள் மிகச் சிறந்த சான்றுகளை அளிக் கின்றன.
இது சம்பந்தமாக, சிரல்டசு கம்பெரன்சிசு தம்முடைய வம்புத்தனமான “இசுப்பெக்குலம் எக்கிலிசியா” என்னும் நூலில் ஒரு கதை சொல்லு கிறர். ஒரு நாள் 11ஆம் என்றி வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டி ருந்தான். வின்செசுற்றரிலுள்ள சென். சுவித்தின் மடத்துக் குருக்களும், பிரதம குருவும் அவன் முன் மண்டியிட்டுத் தம்மை விசப்புமாரிடமிருந்து காப்பாற்றுமாறு கண்ணிர் மல்க வேண்டினர்கள். ஏனென்றல் அவர் களுடைய சாப்பாட்டிற்கு உரியனவற்றிற் பதின் மூன்று வகை உணவு களில் மூன்று வகைகளைக் குறைத்து விட்டாராம் ! “ ஐயோ! ஆண்டவரே, இந்தத் துறவிகளைப் பாரும் ! அவர்கள் போட்ட கூச்சலிலிருந்து அவர்க ளுடைய மடம் தீப்பற்றி எரிந்து விட்டதாக எண்ணினேன். ஆனல் நடந்த கதை இவ்வளவே. அவர்களுடைய உணவுவகைகளே-என் உணவைப்

ஆங்கில ஆச்சிரமமுறை 229
போல-மூன்று வகைகளாக மட்டும் குறைக்காமலிருந்தால் அந்த பிசப்பு நாசமாகப் போகட்டும் 1’ என்று அரசன் கூறினன். இந்தக்கதை உண் மையோ, இல்லையோ இது போன்ற அநேக கதைகள், கேலிகள், பழமொழி களெல்லாம், இம்மடங்களின் புனிதத் தன்மை பற்றி 11ஆம் என்றி காலத்திற் பொதுமக்கள் கொண்டிருந்த மதிப்பானது, சோசர் காலத்தி லிருந்த மதிப்பினும் உயர்ந்ததாக இல்லை என்பதைக் காட்டுவனவாகும். இம் மடாலயங்களானவை, ஆங்கிலேயப் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி யடைந்ததிற்கு முன்னர், கல்வி நிலையங்களுக்காகப் பெருஞ் சேவை செய்த தோடு, பாமரரான வரலாற்ருசிரியர்கள், எழுத்தாளர்கள், அச்சகத்தார் ஆகியோர் தோன்ற முன்னர், வரன் முறைக் குறிப்பாளர், படியெடுப்போர் ஆகியோரின் உறைவிடமாகவும் திகழ்ந்தன. காளையிலின் கதாநாயகரான மாண்புள்ள பிரதமகுரு சாம்சன் (சென் எட்டுமண்டுசுபரியைச் சேர்ந்தவர்) சென். சுவித்தின் மடத் துறவிகளைக் காட்டிலும் தமது மடத்துறவிகளைக் கடுமையான ஒழுங்குக்கு உட்படுத்தியிருந்தார். ஆனல் இரிச்சாட்டு, யோன் ஆகியோர் காலத்தில் ஈசம் வழக்கில் வெளிப்பட்ட அவதூறுகளால், மடத் தலைவர்கள் தமது தனியதிகாரத்தை துர்ப் பிரயோகம் செய்வது எப்படி எளிதாக இருந்தது என்பதும், அத்தகைய நம்பிக்கைக்கு அவர்களிற் சிலர் எவ்வாறு முற்றிலும் தகுதியற்றவராக இருந்தனர் என்பதும் தெளிவா கின்றன. ஒரு பண்ணைக்கும் மற்றெரு பண்ணைக்கும் இருந்த வேறு பாட்டைப் போலவே மடத்துக்கு மடம் வேறு பாடு இருந்தது. எந்த ஒரு பருவம் சம்பந்தமாகவும்-கடந்த காலமோ நிகழ்காலமோ ஆயினும்ஒரேயடியான புகழ்ச்சி அல்லது ஒரேயடியான கண்டனம் ஆபத்தானதே !
தனது நண்பரும் மண்டிலநாயகருமான தோமசு பெக்கெற்றைக் கந்தபெரி அதிமேற்றிராணியாராக நியமித்ததான மறக்கவொண்ணுத் தவற்றைச் செய் யாதிருந்தால், 11ஆம் என்றி ஒரு மடாலயச்சாப்பாட்டு மேசைமீது வைக்கத் தக்க உணவு வகைகளைப் பற்றியோ சட்டசம்பந்தமான மிகமுக்கிய விடயங் களைப் பற்றியோ தான் நியமித்திருந்த தனது பிசப்புமார்களோடு நன்றகப் பணியாற்றியிருப்பான். பெக்கெற்று எனும் இந்தப் புதியமடாதிபதி அரச னது சேவையிலிருந்து விடுதலைபெற்று, தன்னைத்திருச்சபைக்கும் பாப்பரச ருக்கு மட்டுமே உரிய பிரதிநிதியாகக் கருதிக் கொண்டார். அவருக்குப்
62.
போரிடும் இயல்பும், சட்ட சம்பந்தமான சிக்கல்களைப் பற்றிய ஞானமும்
இருந்ததனல், அவர் தன்னந்தனியாக அரசன், பரன்கள், பலதரப்பட்ட பெருந்தொகையினரான பிசப்புமார் ஆகியோரை எதிர்ப்பதில் மகிழ்ச்சி யடைந்தார்.
ஆங்கிலேயத்திருச்சபையினதும் நாட்டினதும் அனுதாபம் இருபாலாரிடத் துஞ் சென்றது. எனினும் பொதுவாக அது மன்னனுக்குச் சார்பாகவே இருந்தது. ஏனெனில், பெக்கெற்று தாம் வழக்கை நடத்திய முறையில் பலாற்கார முடையவராகவும் முரண்பாடுடையவராகவும் நடந்து கொண் டார். அவப்பேருக என்றியின் அடக்க முடியாத கோபம், ஆத்திரத்தாற்
1170.

Page 125
1538.
230 என்றியும் பெக்கெற்றும்
பொங்கிய சொற்களாக வெளிவந்தது. இச்சொற்களாலே தூண்டப்பட்ட நான்கு வீரர் அரண்மனையிலிருந்து களவிற் சென்று, கந்தபெரி தேவா லயத்தில் அவனது எதிரியைக் கொன்றனர். இக்குரூரமான செயலால் எழுந்த எதிர்ப்பு அலைகள் அரசின் அநேக உரிமைகளை அழித்து விட்டன. அவை மதச்சீர்திருத்த காலத்திலேயே திரும்பப் பெறப்பட்டன. தியா கியாம் சென். தோமசின் வழிபாடு இங்கிலாந்தில் முன்னூறு ஆண்டுகளாக மக்களிடையே நிலவி நின்றது. சோசருக்குப் பிறகு ஆயிரமாயிரம் மக்கள் கந்தபெரிக்கு “ புனித ஆனந்தத் தியாகியைத் தேடி” யாத்திரை சென்றர் கள். கந்தர் என்னும் சொல் இந்த யாத்திரீகர்கள் கந்தபெரியை நோக் கிச் சென்ற வேகத்தை-ஒரு கதைக்கும் மற்றெரு கதைக்குமுள்ள இடை நேரத்தை-குறிக்கும் சொல்லாக ஆங்கில மொழிச் சொற்களுடன் சேர்ந்து விட்டது. பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்த பிந்திய காலத்தில், திறமை மிக்க அரசனன இன்னேர் என்றி, சென். தோமசு கோவிலானது புனித சின்னங்களை வழிபடுதற்கான முக்கிய நிலையமாகவிருந்ததன்காரணமாக அதை மறு மலர்ச்சிச் சீர்திருத்தத் தொண்டர்கள் அழிக்க வேண்டுமென விரும்பியதனலும், அரசனுக்கும் அரசனது சட்டத்திற்கும் மேலாகக் குருமார் பெற்ற பிரசித்த வெற்றியின் நினைவுச் சின்னமாக விளங்கியதினுலும் அதைத் தரைமட்டமாக்கினன்.
இறந்துபோன தோமசு பெக்கெற்று I ஆம் என்றியை முறியடித்தற்குக் காரணமாயிருந்த குற்றவாளிகளான குருக்களின் விடயம் இதுவே. கிளா சண்டன் யாப்பில், பரன்களும் மதத்தலைவர்களும் அடங்கிய ஒரு மகாசபை திருச்சபை ஆட்சிக்கும் அரச ஆட்சிக்கும் உரிய எல்லைகளை வரையறுத் திருந்தது. ஆனல் அரசனே, கடுங் குற்றம் செய்த மதகுருக்கள், முதலில் மதசார்பற்ற பாமர வழக்கு மன்றங்களிற் குற்றம் சாட்டப்படவேண்டும் என்றும், பின்பு திருச்சபை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒப்படைக்கப் படவேண்டுமென்றும், அவர்களுடைய ஆன்மீக மேலதிகாரிகளாற் புனிதச் சபையினின்றும் நீக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டபின்னரும், மீண்டும் இறுதி யாக அரசனது வழக்கு மன்றத்திற்குத் தீர்ப்புக்காகவும் தண்டனைக்காகவும் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கோரினன். இது திருமுறைச் சட்டத் திற்கு முரண்பாடுடையதல்லவென்றும் புராதன வழக்கத்திற்கு இயைந்ததே யென்றும் அரசன் வாதாடினன். புனித சபையைச் சேர்ந்தவர்களைப் பொது மக்கள் மன்றங்களில் விசாரணை செய்ய முடியும் என்று அவன் கோர
குருவாயத்தினர் பலருக்கும் இது நியாயமான இணக்கமாகத் தென் பட்டது. ஆனல் பெக்கெற்று தற்காலிகமாக அதை ஒப்புக்கொண்டு, பின்னர் உதறிவிட்டார். அவர்செய்த உயிர்த்தியாகம் அவருடைய பிடிவாதம் சரி யென்றே காட்டிவிட்டது. அவரது மரணத்திற்குப்பின் கிடைத்த வெற்றியின் பயன் இதுவே , மடத் துறவிகள், கோயிற்பற்றுக் குரிய குருக்கள் மட்டு மன்றி, தொழிலில் ஈடுபட்டவர்களும் மத அமைப்புக்களில் வேலைபார்த்து

"குருவாய நன்மைகள்” 23.
வந்த ஏராளமான சிறிய அதிகாரிகளும் குற்றேவலாளர்களும், பிந்திய காலத்தில் படிக்கத் தெரியும் என்று காட்டித் கொண்டோர் அனைவரும்,
கொள்ளே, கொலை, கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்காகக் கடுந் தண்டனை கிடைக்
கும் என்ற பயம் அற்றுப் போயினர். குறிப்பாக அக்குற்றங்களுள் யாது
மொன்றை முதன்முறை செய்தார்க்கு அவ்விதப் பயம் சிறிதும் இல்லாமல்
போயிற்று. திருச்சபையிலே சிறிய பதவிகளை எற்பாடு செய்து பெறுவது
சுலபமாகவே இருந்தது. இந்தப் பாது காப்புக்களும் உரிமைகளும் இழி
மக்களுக்குப் பெருங் கவர்ச்சியாகவே இருந்தன. “ பிந்திய மத்திய காலத்
தின் மிகப் பெரிய தீமைகளில் ஒன்று, குருவாய நலவுரிமைகள் ” என
மெயிற்றுலாந்து எழுதினர்.
என்றியின் அவசரக் கூச்சலும், அவனுடைய நைற்றுக்களின் கொடிய செயலும், குற்றம் செய்த குருக்களைப் பத்துக் தலைமுறைக்கு மேலாகக் காப்பாற்றின. எனினும், பல விடயங்களில் என்றி வெற்றிகரமாக மத ஆதிக்கத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்தற்காக மதச் சார்பற்ற சாதாரண நீதி மன்றங்களைப் பலப்படுத்தினன். சுதீபன் காலத்தில் அரச அதிகாரம் குன் றிப் போயிருந்த பொழுது, இயற்கையாகவே திருச்சபை தன் உயர் நிலையை யும் பெருமையையும் வளர்த்துக் கொண்டது. வெளி நாடுகளிலிருந்து, போப்பரசருடைய உரிமைக் கோரிக்கைகளால் ஆதரிக்கப்பட்டு, திருச்சபை மன்றங்கள் தமக்குப் புறம்பான வேறு துறைகளையும் கைப்பற்ற ஆரம் பித்தன. இந்த ஆக்கிரமிப்பு அலையை என்றி தடுத்தான். நிர்ப்பந்தத்தால் அவனளித்த “குருவாய நன்மைகள் ” கடுங் குற்றங்களையே பாதித் தன. சிறிய குற்றங்களுக்கும்; ஒப்பந்தம், சட்டம், மீறுதல் ஆகியவற்றல் எற்பட்ட குடியியல் சார்ந்த வழக்குகளுக்கும், இங்கிலாந்தின் பொது நீதி மன்றங்களிலே மதகுருக்கள் எதிரிகளாகக் கட்டாயம் வரவேண்டியிருந் தது. இதனல், திருச்சபை மேலதிகாரிகள் அவதூறுக்குள்ளாக நேர்ந் திதி
எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்ட மானியங்களெல்லாம் தேச உடைமையாகப் பிரகடனஞ் செய்யப்பட்டன. கோவில் மானியங்கள் பற்றிய வழக்குக்கள் பாமர நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டியனவாயின. திருமுறைச் சட்டத்தின் மீது வழமைச் சட்டம் அடைந்த வெற்றியானது, ஆங்கிலத் திருச்சப்ை மீது போப்பாண்ட வருக்கிருந்த ஆதிக்கத்திற்கு வரம்பு கட்டியது. மதச்சார்பான நீதி மன்றங் களிலே தீர்மானிக்கப்பட்ட வழக்குக்களை உரோமாபுரிக்கு மேன் முறை யீட்டுக்காகக் கொண்டு செல்லலாம். தீர்வு காணு முன்னர் வழக்குக்களே நிறுத்தி விடுவதும், வழக்கில் ஈடுபட்டவர்களை உரோமாபுரிக்கு அழைப்பதும், இங்கிலாந்தில் தம்மால் நியமிக்கப்பட்ட நீதி ஆய்வுக்குழுக்களிடம் வழக்குக் களை அனுப்புவதும் போப்பாண்டவரின் வழக்கமாக இருந்தது. இந்த முறைமையை எதிர்க்கக் கூடிய நிலையிலே திருச்சபை இருக்கவில்லை.

Page 126
232 வழமைச் சட்டத்தின் தோற்றம்
எனெனில், இந்நடவடிக்கை சட்டவமைதியானதென்பதை அது ஒப்புக் கொண்டது. ஆன்மீகக் காரியங்களிலே திருச்சபை போப்பரசருக்குக் கட்டுப் பட்டிருந்தது. ஆகவே அவரிடமிருந்து திருச்சபையைக் காப்பாற்றும் ஒரே வழி, ஆன்மீக காரியங்களின் எல்லைகளைச் சுருக்கி, அரசனுடைய நீதி மன்றங்களில் நிலவிய பொதுமக்கள் அதிகாரத்திடம் பாதுகாப்புக் கோரு வதாகும்.
நன்மைக்கான மானியங்கள் அனைத்தும் நாட்டுக்குரிய உடைமையென்று 11ஆம் என்றி உறுதியாகக் கூறினன். இங்கிலாந்திலிருந்த இம்மானியங் களின் நிர்வாக நியமனங்கள், மத மன்றங்கள் வழியாக உரோமாபுரி மன்றத்துக்குச் சென்று விடாமல் அரசனது இவ்வுறுதியான நிலை தடுத் திதி
அப்படியிருந்தும், பெரிதும் இத்தாலிய நாட்டு மதகுருக்களின் நன்மைக்காக, “ புரோவைசர்கள்” என்னும் பாதுகாப்பு முறைமூலம் நியமனங்களைச் செய்யப் போப்பாண்டவர் அறிந்து கொண்டார். போப் பாண்டவருக்கும் ஆங்கிலத் தருமாதனங்களின் புரவலர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்றது. அரசன் சில சமயங்களில் ஆங்கிலேயப் புரவலர்களை ஆதரித்தான். சில சமயங்களில் அவர்களைக் காட்டியும் கொடுத்தான். பிந்திய பிளந்தா செனற்று அரசர் கள் காலத்திற் போப்பரசருக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கும் “பிரமுனிர்’ நியதிச் சட்டங்களுக்கும் இந்தப் போராட்டமே காரணமாயிருந்தது. இவையனைத்தும் பிந்திய காலத்தே தியூடர்கள் ஏற்படுத்திய முடிவை நோக்கியே சென்றன."
சட்டம் சம்பந்தமான சீர் திருத்தமே 11ஆம் என்றி இங்கிலாந்திற்குக் கொடுத்த பல நன்மைகளில் மிகச் சிறந்ததாகும். அவன் புகுத்திய புதிய நீதி முறை, ஆங்கிலேய சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் எதிர்காலத்தை உருவாக்கவல்லதாக இருந்தது. ஆங்கில மொழிபேசும் நாடுகளில் எல்லாம் “இன்னும் பிறக்காத நாடுகளிலும் தெரியாத உச்சரிப்புகளிலும் ” தனிப் பட்ட சிந்தனைப் பழக்கங்களை அது கொடுத்தது. அரசனுடைய மத்திய நீதிமன்றங்களுக்கும், கோட்டங்களிற் சுற்றிவந்து கொண்டிருந்த சிறு மன்றங்களுக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரமும், அதிகார எல்லையும் ஆங்கி லேய “ வழமைச் சட்டம் ” விரைவாக வளர்வதற்கு எதுவாயிருந்தனஅதாவது, கோட்ட மன்றம், அன்றெட்டு மன்றம் ஆகியவைகளிலும், எண்ணிக்கையிலடங்காத தனிப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிலும் பின் பற்றப்பட்ட பற்பல பிராந்திய வழமைகளுக்குப் பதிலாக நாடு முழுவதற்கும் “பொதுவான ’ தொரு தேசீயப் பொது முறையை என்றி கொண்டு வந்தான்.
குறிப்பு-மெயிற்றுலாந்து எழுதிய * ஆங்கிலேயத்திருச்சபையின் திருமுறைச்சட்டம்” என்பதில் முக்கியமாக பக்கங்கள் 57-75 ஐக் காண்க.

வழமைச் சட்டத்தின் தோற்றம் 233
பழைய ஆங்கிலேய-தேனிய வாழ்க்கையின் உறுப்புக்களான கோட்டம், அன்றெட்டு என்பவற்றின் இனவரி மன்றங்கள் வழமைச் சட்டத்தை மேம் பாட்டிற்குக் கொண்டுவருவதற்குரிய கருவிகளாய் ஒருபோதும் அமைந் திருக்கமுடியாது. அவை மத்திய வகுப்பினரின் வழக்குமன்றங்களாகும். பெரிய பிரபுக்களாலும், மடாதிபதிகளாகலும் நிர்வகிக்கப்பட்ட நிலமானிய மன்றங்களிலிருந்தும் அதிகாரத்தையும் ஆதிக்க உரிமையையும் பறித்துக் கொள்ளும் சக்தியை அவைபெற்றிருக்க முடியாது. மேலும் கோட்ட மன்ற நீதிபதிகள், நைற்றுக்களாகவும், கட்டில்லா நிலமுடையவர்களாகவும் இருந் தனர். அவர்கள் தத்தம் ஊர்களுக்குரிய வழமைகளில் மூழ்கியிருந்தனர். அவர்களது அறிவு பயிற்சி பெருததாயிருந்தது. அவர்களது பிராந்திய மனப்பான்மை அகில இங்கிலாந்துக்குமுரிய ஒரு நீதி முறையைத் தோற்று விப்பதற்குத் தகுதியற்றதாயிருந்தது. அம்மன்றங்களில் தலைமை வகித்த மாநகர்மணியகாரரும் அரசனுடைய நியாய துரந்தரர்களைப் போன்று ஒரே பெரிய மத்திய கல்விக் கூடத்திற் பயின்ற வழக்கறிஞர் அல்லர். நாடு முழுவதற்கும் ஒரு பொதுச் சட்டம் உருவாக்கப்படுமானல், அது ஒரு தனி மூலத்திலிருந்து தோன்றுவதாயிருக்க வேண்டும். அந்த மூலவிடமே, அரசனது நீதி மன்றம் ஆகும்.
தான் வெளிநாட்டிலிருந்து பெற்ற சட்ட அறிவாலும், ஆட்களைத் தேர்ந் தெடுக்கும் திறமையாலும் இரண்டாம் என்றி புகழ் மிக்க அரச நீதிபதிகளை நியமித்தான். சிலர் புனித சபைகளைச் சேர்ந்தவர்கள் ; கிளன்வில் என்ப வரைப் போன்ற மற்றவர்கள் நிலமானிய வீரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களும், பிந்திய ஆட்சிக்காலங்களில், இவர்களுடைய சட்ட மரபிலே தோன்றிய பிறரும் அரசனுடைய மத்திய மன்றங்களிற் கையாளப்படும் நடைமுறையிலிருந்து வழமைச் சட்டத்தை உருவாக்கினர்கள். இவர்களே. அயர், அல்லது “ அசைசு ’ மன்ற நீதிபதிகளாக நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றதுடன், எவ்வளவு விரைவாக வழமைச் சட்டமியற்றப் பட்டதோ அவ்வளவு விரைவாக அதை எடுத்துச் சென்றும் அதன் கோட் பாடுகளைப் போதித்தும், ஒவ்வொரு கோட்டத்திலுமுள்ள “ எல்லா மக்க ளிடையும் ’ அச்சட்டம் பற்றிய நடைமுறையைப் புகுத்தியும் வந்தனர்.
ஆங்கில மொழிபேசும் நாடுகளின் சிறந்த அருஞ் செல்வமாகிய குறித்த வழமைச் சட்டம், சிந்தனைப்பழக்கவழக்கங்களில் இந்நாடுகளே, இலத்தீன், உரோமானிய மரபுகளைத்தழுவும் நாடுகளிலிருந்து இக்காலத்திற் பெரு மளவு பிரித்துவிட்டது. எனினும் அது நோமானிய வெற்றியின் விளைவே. இரண்டாம் என்றியின் ஆட்சிக்கும், மூன்றம் எட்டுவேட்டின் ஆட்சிக்கு மிடையில் இச்சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்திப்பதற்கும் வாதாடுவதற் கும் பிரெஞ்சு மொழியையும் பத்திரங்களைத் தயாரிக்க இலத்தீன் மொழி யையும் பயன் படுத்திய வழக்கறிஞர் ஆவர். இதுபற்றி மெயிற்றுலாந்து
குறிப்பு-மெயிற்றுலாந்து : பக்கம் ; 124-125

Page 127
234 வழமைச்சட்டத்தின் தோற்றம்
கூறியுள்ளதாவது :-" கடன், ஒப்பந்தம், உரித்தாளி, அடாத்தாய்ப் புகுதல் வேதனம், பணம், நீதிமன்றம், நீதிபதி, நடுவர்குழு என்ற சொற்களை உய யோகிக்காமற் சட்டத்தைப்பற்றி ஒரேயொரு வாக்கியந்தானும் எப்படி எழுதமுடியும் ? இவற்றுக்கு ஆங்கிலத்தில் வழங்குஞ்சொற்கள் யாவும் பிரெஞ்சு மொழியிலிருந்து கிடைத்தவையே. ஆங்கிலச்சட்டம் நடைமுறை யில் உள்ள உலகத்து நாடுகள் எங்கணும் நோமண்டி உலில்லியத்துக்கும், ஆஞ்சு வமிச என்றிக்கும் தினந்தோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.”
ஆங்கிலேய-தேனியச் சட்டக் கோவைகளும் வழமைகளுமோ, சமுதாயத் தின் கடந்த கால நிலையைக் குறிக்கும் மிலேச்சநடவடிக்கைகளையும், பிர மாணவழக்கு விசாரணைகளையும், அபராத முறைகளையும் கொண்டவை. வழமைச் சட்டம் அவற்றுக்கு மிகச் சிறிதளவே கடமைப்பட்டுள்ளது. ஐரோப்பா எங்கணும் நிலவிய நிலமானிய வழமையிலிருந்து-குறிப்பாக நில உடைமை சம்பந்தமாக-இச்சட்டம் சிறிது எடுத்துக் கொண்டது. பழைய உரோமாபுரிப் பேரரசர்களின் குடியியற் சட்டமும் மிக விரிவான விளக்கத்திற்குள்ளாகியிருந்த திருமுறைச்சட்டமும் பன்னிரண்டாம் நூற் ருண்டிற் பெரிதும் விரும்பிக்கற்கப்பட்ட விடயங்களாகும். முற்றிலும் மாறன இங்கிலாந்து தேச வழமைச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவர்க ளுக்கு, இந்த இரு வகை உரோமாபுரிச்சட்டங்களும், சட்ட சாத்திரத்திலும் சட்ட முறையிலும் முன்மாதிரிகைகளாக விருந்தன. 1150 ஆம் ஆண்டி லிருந்து 1250 ஆம் ஆண்டு வரை போலோன பரிசு பல்கலைக்கழகங்களுக்கு நூற்றுக் கணக்காக ஆங்கில இளைஞரான மதப் பிரமுகர்கள், வழக் கறிஞர்கள், குருக்கள் ஆகியோர் கடலையும் அல்பிசையும் கடந்து வந்து சேர்ந்தனர். இந்த இடங்களிலேயே இவ்விரு சட்டங்களைப்பற்றிச் சிறப்பாகப் படிக்க முடியுமாயிருந்தது. ஆங்கிலேயர் குறை கூறியதுபோன்று, இவர்கள் தம்நாடுதிரும்பும் போது, வெளி நாட்டுத்தீய பழக்கங்கள் நிறைந்த “இத்தாலிய ஆங்கிலேயராகவும் ’ அதே சமயம் அதிசயமான சட்ட அறிவுள்ளவராகவும் இருந்தனர். ஒட்சுபோட்டு ஒரு பல்கலைக்கழகமான உடனேயே அங்கு குடியியற் சட்டம், திருமுறைச் சட்டம் பயிற்றுவிக்கும் சிறந்த பள்ளிகள் ஏற்படலாயின.
ஆனல் ஒரு கேள்வி எழுகின்றது-அதாவது, இங்கிலாந்தின் வழமைச் சட்ட வளர்ச்சியின் மிக நெருக்கடியான ஒரு நூற்றண்டில், இந்த வலிமை வாய்ந்த அன்னிய சத்திகள் ஒர் அறிவுக் கவர்ச்சியாக இருந்த போதும், எவ்வாறு சுதந்திரமாகவும், சுதேச முறையிலும் இங்கிலாந்தின் சட்டம் உருவாயிற்று ? என்பதே அக்கேள்வியாகும். சந்தேகத்திற்கிடமின்றி, நாட் டின் பரன்கள் ஒர் ஆங்கிலத் தேசீயக் குழுவாகவும் மாறுதல் விரும்பாத வர்களாகவும் எலவேயிருந்ததல்ை, அவர்கள் குடியியற் சட்டத்தை ஒர் அன்னியச் சட்டமாகவும், தணியதிகாரமன்னராட்சிக்கு ஆதரவு செய்யும் சட்டமாகவுங் கொண்டு, அதனை வெறுப்புடன் கருதினர்; பெக்கெற்று

அரசநீதி பரவுதல் 235
பற்றியெழுந்த பிணக்கின்போது திருச்சபை நீதிமன்றங்களிலே தமக்குப் பிரியம் இல்லை என்பதையும் அவர்கள் காட்டிக் கொண்டனர். நாட்டின் பிரமுகர்கள் இவ்வாறு கருதியதை அரசனது வழக்கறிஞர்கள் மதிக்க வேண்டியதாயிருந்தது ; அன்றியும் அவர்களும் ஓரளவில் அவ்வாறே கருதினர். ஆகவே குடியியல், திருமுறைச் சட்டங்களே, முறையிலும் தன்மையிலும் பாடநூற்களாகப் பயன் படுத்தியபோதிலும் ஒரு சில பெரும் உண்மைகளைத் தவிர மற்றவை அனைத்தையும்-அவற்றின் உள் ளடக்கத்தையெல்லாம்-அவர்கள் நிராகரித்தனர். ஆங்கில வழமைக் சட்டம் யசுத்தினியன் கோவையைத் தழுவிய ஒரு கோவையன்று; ஆனல் அது பல அரசரீதிமன்றங்களின் முன் னிகழ்ச்சிகள், வழக்குகள், தீர்ப்புக்கள் நிறைந்த ஒரு புதிரான நெறியாகும் ; சட்டத் தொழிலிற் காணப்படும் குறிப்புக்களால் மட்டும் தெளிவாகக் கூடிய ஒரு புதிர் நெறியாக அது அமைந்திருந்தது.
ஆரம்ப பிளந்தாசெனெற்று அரசர்கள் காலத்தில், அரசனது நீதி மன்றம், பல்வேறு சிறிய குழுக்களைக்கொண்டு தன் வேலையைத் தனிச் சிறப்பாக நடத்த ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவும் தனக்கெனச் சிறப் பான ஒரு வேலையையும், தனக்கேயுரிய ஒரு நடைமுறையையும் படிப்படி யாகப் பெற்றது. முதலாம் என்றி ஆட்சியில் நிதிக்கருவூலம் இவ்வாறே செயலாற்றியது. பொது வேண்டுகோள் நீதி மன்றம் என்று பிற்காலத் தில் அழைக்கப்பட்ட நீதிபதிக்குழுவொன்று யோன் காலத்தில், பொது மக்கள் வசதிக்காக உவெசுற்றுமினித்தரில் அமைக்கப்பட்டது. 'நிதிக்கரு வூலமும் அங்கேயே நிறுவப்பட்டிருந்ததால் “ இங்கிலாந்துக்கு ஒரு தலை நகரம் ’ எற்பட்டது. அன்றேல், அரசனது நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஈடுபட்ட கட்சிகள், அரசனது பிரயாணங்களின் போது அவசரப்பட்டு அவனை விரட்டிக் கொண்டுபோக வேண்டியதாயிற்று. அரசனுடைய நீதிமன்றங்கள் நீதித்துறைக் குழுக்களாக இருந்தனவே யன்றி, இக்காலக் கருத்துப்படி சட்டமன்றங்களாக அமையவில்லை. ஆனல் அந்நீதித்துறைக்குழுக்களும் கோட்டங்களைச் சேர்ந்த சுற்றும் நீதிபதிகளும், “ வழக்குச்சட்டம்’ என்பவற்றை ஏற்படுத்தப்போதுமான ஒழுங்குமுறை யைக் கொண்டிருந்தனர். இவ் “வழக்குச் சட்டம்’ என்னும் முன் நிகழ்ச்சி கள் இங்கிலாந்தின் வழமைச் சட்டத்தை உருவாக்கின.
I ஆம் என்றி, தனது கட்டளைகள் மூலம் எற்படுத்தியிருந்த முறையி னல், உள்ளூர் முறைமன்றங்களிலும், தனிப்பட்ட முறைமன்றங்களிலும் மக்கள் தமது வழக்குகளைக்கொண்டுவராது, அரசரீதிமன்றங்களிற் கொண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இக்காலத்தில் அரசன் எத்தயை கட்டளை களையும் பிறப்பிக்க அதிகாரம் பெற்றிருந்தான். ஆங்கிலச் சட்டத்தின் மூலாதாரமாக அவ்வுத்தரவுகள் இருந்தன. அரசியல் யாப்புக்கு அதிக மாகக் கட்டுப்பட்டிருந்த II ஆம் என்றி, த மொன் போட்டு ஆகியோரின் காலத்திலேயே அனுமதிக்கப்பட்ட அரச கட்டளைகளின் தன்மை விளக்க

Page 128
236 அரசநீதி பரவுதல்
மாகக் கூறப்பட்டதோடு, நூதனமான கட்டளைகளைப் பிறப்பிக்கும் அதிகார மும் மட்டுப்படுத்தப்பட்து. இக்காலத்திலேயே அரசனது அதிகார எல்லை யும் வரையறுக்கப்பட்டது. ஆனல் அக்காலத்திற்குள்ளாக, அரச நீதி மன்றங்கள், நாட்டின் சாதாரண நீதிமன்றங்களாக மாறிக்கொண்டிருந் தன.
கட்டளைகளைத் தாமே பிறப்பித்ததின் மூலமும், “அசைசுகள்” மூலமும் (முக்கியமானவர்களின் கூட்டத்தில் அல்லது, பருவமன்றங்களில் வெளி யிடப்படும் அரச ஆஞ்ஞைகள் “ அசைசுகள் ” எனப்பட்டன) இரண்டாம் என்றி தொடக்கம் மூன்றம் என்றிவரை ஆட்சிசெய்த அரசர்கள் புதுச் சட்ட பரிகாரங்களையும் வழக்காடுதற்குப் புதுமுறைகளையும் புது நடவடிக்கை களையும் உண்டாக்கும் அதிகாரத்தை அனுபவித்து வந்தார்கள். நில மானிய, திருச்சபைக்குரிய மன்றங்களுக்கு இது தீங்காக அமைந்தது. நாம் இன்று அறிந்திருக்கிறமுறையில், வேறு சட்ட வாக்க மென்பதொன்று அப்பொழுது இருந்ததில்லை. I ஆம் என்றி தனது “ அசைசு ’கள் மூலம், அரச நீதிமன்றங்களிலே விசேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய நடவடிக்கை முறைகளைத் தன் பிரசைகளுக்கு அளித்தான். இதன் விளைவாக நிலமானிய நீதிமன்றங்கள் நில உடைமை, நிலவுரிமை சம்பந்தமான விடயங்களிலே தம் ஆட்சியை இழந்தன. சிறிய நிலக்கிழாருடைய பண்ணைகளை அயலிலுள்ளநிலமானியப் பெரு நிலக் கிழார்கள் கவர்ந்து கொள்ளக் காத்திருப்பதைத் தடுத்து, தனது அரச நீதியென்னும் பாதுகாப்பை அச்சிறு நிலக்கிழார்களுக்கு அரசன் அளித் தான்.
அவ்வாறக அசைசு மூலம் சட்டமியற்றிய அதே சமயம், 11 ஆம் என்றி நடுவர் குழுவால் விசாரணை செய்யப்படும் புது நடை முறையையும் புகுத் தினன்.
மிலேச்சத்தனமான ஆங்கிலேய-சட்சணிய பிரமாண வழக்குமுறையின் படி, ஒரு மனிதன் தன் நண்பர்களையும் சுற்றத்தார்களையும் போதுமான எண்ணிக்கையாகக் கொண்டுவந்து, தனது சத்தியம் நம்பக் கூடியதென அவர்களைக்கொண்டு சத்தியம் செய்விக்கலாம் ; ஆதியிற் பதிதர்கள் வழக்க மாகவிருந்து பின்னர் கிறித்துவரது வழக்கமாக மாறிய மூட நம்பிக்கை யான, பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டு நிரூபணம் செய்யும் முறையுமிருந்தது. நோமானிய வீரர்கள் ஆங்கிலேயர் விரும்பாத “ போர் வழிவிளக்கத்தில் ’ மிகுந்த விருப்பங் கொண்டிருந்தனர். இதிற் கலந்து
குறிப்பு-நோவல் திசெயிசின் (1166) மோ தே அன்செசுற்றர் ஆகிய வழக்கு மன்றங்கள் நிலஉரிமையாளனும், அவனது வாரிசும் வெளியேற்றப்படுவதினின்றும் தடுத்தன. 1179 ஆம் ஆண்டு பெரிய வழக்குமன்றம் நில உடைமைக்காரியங்களை ஒழுங்கு படுத்தியது. நல்ல காரியங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்கள் பற்றிய தகராறுகளை இடாரின் வழக்கு மன்றம் ஒழுங்கு படுத்தியது. இவை அனைத்தும் அரசமன்றங்களின் அதிகாரத்தை அதிகப்படுத்தின.

நடுவர் முறைமையின் தோற்றம் 237
கொண்ட கட்சியினர் கொம்பாலும் மரத்தாலும் செய்யப்பட்ட பழமையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர். கடைசியில் இருவரில் ஒருவர் “ மன்றடுகிறேன்’ என்ற இறுதியான மரண ஒலத்தைக் கூவும் வரை சண்டை நடைபெறும். இம்முறைகளினற் பெரும்பாலும் தவறன
தீர்ப்புக்களே கிடைத்துவந்தன ; மரணதண்டனை, உறுப்புச்சிதைவு போன்ற
அநியாயத் தீர்ப்புக்கள் அடிக்கடி கிடைத்துவந்தன. மனிதவர்க்கத்தின் தியா கத்தைப் பின்னேக்கிப் பார்ப்போமானல், வழக்கு மன்றங்களில், அறிவு பூர்வமான வழிகளில் உண்மையை ஆராய்வது என்பது தற்கால நாகரிகம் நமக்குத் தந்த இன்பவாய்ப்பு என்பது புலப்படும். முற்கால மக்கள் இத்துறையில் சிறிதும் முயன்றதில்லை எனலாம். மத்தியகால இங்கிலாந் தில் இத்துறையில் முதல் நடவடிக்கை எடுத்த மன்னன் 11 ஆம் என்றியாவான். ஏனெனில் அவன் பழைமைப்பட்ட நடைமுறைகளைமாற்றி, நடுவர் குழுவால் விசாரணை செய்யும் முறையை நிறுவினன் என்க.
அவன் எற்படுத்திய நடுவர் முறைமை, இன்று நமக்குத் தெரிந்த நடுவர் முறைமைபோன்றதன்று. இன்றைய நடுவர் முறைமை, மற்றவர் களுடைய சாட்சியங்களைக் கேட்கவும் தன்முன் கொணரப்படும் விடயங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கவும் நியமிக்கப்பட்ட ஒரு குழுவாகும். என்றியின் நடுவர் குழுவினர் தாமே வழக்கிற்குச் சாட்சிகளாவர்; எனினும் இதுவும் ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும். இதற்கு முன்னலிருந்த நீதிமன்றங் கள், சாட்சிகள் இருக்க வேண்டுமென்று கேட்டதே அரிது. ஒரு மனிதனது காணிஉரிமைமீது வழக்கு ஏற்பட்டால் போர்வழி விளக்கத்துக்குப் பதிலாக, நடுவர் குழுமூலம்விசாரணையை அவன் கோருதற்கு என்றியின் மாபெரும் பருவமன்றம் வழிகோலியது. அவன் அவ்வாறு தெரிவு செய்தால் அவ னுக்கு அயலவராயுள்ள, விடயமறிந்த பன்னிருவர் அரசனுடைய நீதிபதி கள் முன்தோன்றி, எக்கட்சிக்கு நிலத்தின்மீது அதிக உரிமை உண்டு என்று கூறல்வேண்டும்.
கிளாரெண்டன், நோதாந்தன் பருவ மன்றங்கள் மூலம் இன்னெரு விதமான நடுவர் முறைமையும் ஏற்படுத்தப்பட்டது. அதுவே முன்னிலைப் படுத்தும், அல்லது குற்றஞ் சாட்டும் நடுவர் முறைமையாகும். அதன் பிரகாரம் ஒவ்வொரு அன்றெட்டிலுமிருந்தும் பிரமாணமெடுத்த பன்னி ரெண்டுபேர் தெரிவு செய்யப்படுவர் ; இவர்கள் தமது அக்கம்பக்கத்தாரிற் குற்றமிழைத்தவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரல்வேண்டும். மா பெரும் பருவமன்றங்களின் நடுவர்போல, ஒருவனை முன்னிலைப்படுத்தும் தீர்ப்புக்குழுவினர் வழக்குகளைத் தீர்மானிப்பவர்களல்லர் ; ஆனல் சாட்சி கள் ஆவர்-குற்றஞ்சாட்டப்பட்டவரின் கெளரவத்தைப் பற்றியாவது சாட்சி யம் கூறவேண்டியவர்களாயிருந்தனர்; அவர்கள் “முன்னிலை"ப்படுத்தினல், குற்றவாளி கடுஞ் சோதனைக்குள்ளாக வேண்டியதே. இச்சோதனையிற் கடவுளின் தீர்ப்பு எனக் கொள்ளப்படும் தீர்ப்புத்தானும் அவன் புக்கமாக இருந்து, மரணதண்டனையிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டாலும்,
எறத்தாழ 1179.
1166
16.

Page 129
238 நடுவர் முறைமையின் தோற்றம்
நாட்டைவிட்டு அவன் வெளியேறிவிடவேண்டியவனவன்; 1215 ஆம் ஆண் டில் இலாட்டரன் சபையானது, நீண்டகாலமாக வெறுக்கப்பட்டுவந்த இக் கடும் விளக்க முறையை ஒழித்தது, மதகுருக்கள் இனிமேல் குற்றவாளி யைக் காய்ச்சின இரும்பிலிடும் கடுஞ் சோதனை போன்றவைகளை நடத்தக் கூடாது எனத் தடுத்தது. இதன் மூலம் நடுவர் முறைமை இங்கிலாந்தில் மேலும் வளரவகை ஏற்பட்டது. மத்திய காலத்தின் பிற்பகுதியில், நடுவர் குழுவினர்தாம் சாட்சியங்கள் கொடுத்துவந்த நிலையிலிருந்து, படிப்படி யாக மற்றவர்களின் சாட்சியங்களை சீர்தூக்கிப் பார்ப்பவர்களாக மாறினர். எறத்தாழ இன்று நாம் கொண்டிப்பதுபோல, பதினைந்தாம் நூற்றண்டில் நடுவர் முறைமையானது ஆங்கிலேயர் பெருமைப்படுதற்குரிய விடயமாக இருந்தது. பிரதமரீதிபதி போட்டெக்சுகு என்பார் பெருமிதத்தோடு, இம் முறையை, சித்திரவதை தாராளமாக இடம்பெற்றிருந்த பிரெஞ்சு முறை யினின்றும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.1
என்றியின் புது நீதி முறை மக்களாதரவைப் பெற்றது; மக்கள் அதை ஆவலோடு நாடினர். கொடுமை, வலோற்காரம், அடக்குமுறை ஆகியவை, மிலேச்சத்தனத்திலிருந்து மெதுவாக விடுதலையடைந்து கொண் டிருந்த ஒரு சமுதாயத்திற் காணப்பட்ட அன்றட நடவடிக்கைகளாயிருந் தன. அரசகட்டளையானது, பாதுகாப்பற்று இருந்த மக்களுக்கு அவ்வப் போது உதவியையும் பரிகாரத்தையும் அளித்தது. அரசனது நீதி முறை யிற் கவர்ச்சிக் குறைவான அமிசமும் இருந்தது. அவனது வழக்கு மன்றங்கள் பணம் பிடுங்கும் சாதனங்களாக அமைந்தன. தொடர்ச்சி யாக வெறுமையாகவிருந்த அவனது கருவூலத்தை நிரப்ப நீதி மன்றங் கள் உதவின. தனது மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவேண் டும் என்ற ஆசைமட்டும் அரசமன்றங்களில் இலாபகரமான ஆதிக்கத்தை வித்தரிக்க அவனைத் தூண்டவில்லை. அவனைக் காட்டிலும் குறைவாகவே இரிச்சாட்டு, யோன், III ஆம் என்றி ஆகியோர் நீதி வழங்குவதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டனர். அவனைக் காட்டிலும் அதிகமாக அவர் கள் பொருளிட்டுவதிற் கவனம் செலுத்தினர். அவர்கள் அனைவரும் அரச னது அதிகாரத்தை கட்டிக் காப்பதிலேயே கவனம் செலுத்தினர். அமைதியை நிலைநாட்ட எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தார்களோ, அவ் வளவு சுறுசுறுப்பாக அரசனது வருமானத்தை அறவிடுவதிலும் நீதிபதி கள் ஈடுபட்டிருந்தார்கள். ஒரே கருமத்தின் இரு அமிசங்களாக அவர்கள் விளங்கினர் எனலாம்.
* குறிப்பு-நில உடைமைக்கணிப்பேடு (துரம்சுதே) வரலாற்றுக்காலத்திலும் மற்ற விசார ணைகளிலும் நகரத்தார் சாட்சியங்களை எற்பது நோமானிய அரசர்களது வழக்கமாகும். பிளாந்தா செனற்று அரசர்களாலும் நீதிபதிகளாலும் எற்படுத்தப்பட்ட தீர்ப்பு முறையா னது இவ்வழக்கத்தை யொட்டியது. ஆனல் எதெல்ரெட்டு காலத்தில் ஆங்கிலேய தேனிய வழக்கங்கள், ஆச்சரியமான முறையில், இரண்டாம் என்றிகாலத்திலிருந்த குற்றவாளியை முன்னிலைப்படுத்தும் நடுவர் முறைமையை ஒத்திருந்தன.

“ஆயுதச் சட்டம்" 239,
11 ஆம் என்றியின் காலத்திலிருந்து . " சுற்றும் நீதிபதிகளின்’ நட வடிக்கைகள் குறிப்பிடத்தக்க விதத்திற் பயங்கரமானவையாகவும் மக்க ளால் வெறுக்கப்பட்டனவாகவும் பணம் பறிப்பனவாகவும் இருந்தன. அரசனது ஆணையாளர் துன்பத்துக்குள்ளாகியிருக்குமொரு கோட்டத்துக்கு அனுப்பப்பட்டனர். எழு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாக, முந்திய சுற்றும் நீதிபதிகள் வருகை செய்ததற்குப் பின்னர், மணியகாரர்களாலும் சுதந்திர மக்களாலும் ஆற்றுவிக்கப்பட்ட நீதி, நிதி சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கும், கவனக் குறைவால் விடப்பட்ட அற்பவிடயம் ஒவ்வ்ொன்றிற்கும் கடுமையான அபராதங்கள் விதிடபதற்கும் இவ்வாணையாளர் அனுப்பப்பட்டனர். 1823-ஆம் ஆண்டில் கோண்வால் மக்கள் தம் குடும்பங்களோடு, இந்தப் பயங்கர வருகையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வெட்டவெளிகளுக்கும், காடுகளுக்கும் ஒடிவிட்டனர். III ஆம் எட்டுவேட்டு காலத்தில் சுற்றும் நீதிபதிகள் முறை, மக்களால் வெறுக்கப்பட்டதின் காரணமாக முடிவுற்றது. சுற்றும் நீதிபதிகள் அதன் பின் சிறு ஆணைகளை மட்டுமே நிறை வேற்றிவரலாயினர். முந்திய பிளந்தாசெனற்று அரசர்கள் காலத்தில், அரச நீதியே முன்னேற்றத்திற். கான முக்கிய முறையானலும், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பிற நிறுவகங் கள்போன்று அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மெச்சத்தக்கது.
11 ஆம் என்றி ஒரு தனியாட்சியாளன் ; ஆனல் தனது பெயர் கொண்டு விளங்கிய தியூடர் மன்னர்களைப்போல, மக்கள் வேறெதனைக் காட்டிலும் உறுதியான அரசாங்கத்தையே பெரிதும் விரும்பிய காலத்தில் அவன் வாழ்ந்தான். அவர்களைப் போலவே அவனும் சட்டத்தின் வழி ஆண்ட தனியாட்சியாளனக இருந்தான். தன் நாட்டு மக்களை நம்பினன். நிலை யான இராணுவப்படை அவனிடம் இல்லை ; ஆனல் தன் மக்கள்ஆயுத பாணிகளாக இருக்க வேண்டும் என உற்சாகபடுத்தினன். மக்களாதர வைப் பெருத கொடுங்கோலர்கள் இவ்வாறு செய்யத் துணியார். 1181 ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் மக்களின் ஒவ்வொரு பிரிவினரும்-மிகத் தாழ்வான மக்களும் தொழிலாளரும் கூட-அவசியமான காலத்தில் அரச ஊழியத்திற்காக என்னென்ன ஆயுதங்களையும் கவசங்களையும் தயா ராக வைத்திருக்க வேண்டுமென்று விரிவாகக் கூறியது. ஆயுதச் சட்ட மானது, நிலாமணிய முறைக்கு எதிர்ப்பானதும், பழைய சட்சனியரின் காலாட் படைமுறையைத் தழுவியதும், உருவாகிக் கொண்டிருந்த புதிய இங்கிலாந்தை எதிர் நோக்கியதுமான ஒரு நடவடிக்கையாகும்.
ஐரோப்பாக் கண்டத்து நிலமானியமுறை நாடுகளில் ஆட்சியறவு மிகவும் பிந்திய காலத்திலேயே நசுக்கப்பட்டது. ஆனல் அஞ்சுவமிச என்றியின் திறமையால் அத்தகைய ஆட்சியறவு நிலை நமது வரலாற்றின் ஆரம்ப தசையிலேயே நசுக்கப்பட்டுவிட்டது. அவனலேயே நாட்டின் அமை தியானது நாட்டுக்குரிய ஒரு வழமைச் சட்டத்தாற் காப்பாற்றப்பட்டது.
10-B 6344 (12162)

Page 130
240, மானிய முறைக்கு ஐரோப்பாவின் கடப்பாடு
இச்சட்டம், உரோமாபுரிப் பேரரசரின் குடியியற் சட்டத்திலிருந்து நேரடி யாகப் பெறப்பட்ட முறைமை போன்றிராது, ஒரு வழக்கிற் சட்டமே கட்டளைக்கல்லாக அமைவதேயொழிய, அரசனின் விருப்பமன்று என்பதை நிலைநாட்டியது.
அத்தியாயம் II
முதலாம் இரிச்சாட்டும் சிலுவைப்போரும் - இயூபெற்று உவாற்றரும் நடுவகுப்பினரும்-மானிய முறையினின்று யாப்புமுறை வளர்தல். யோன் அரசனும் மகாபட்டயமும் - மூன்ரும் என்றியும் சைமன்திமொன்போட்டும்
அரசர் :1ஆம் இரிச்சாட்டு 1189-1199; யோன் 1199-1216 I ஆம் என்றி 1216-1272.
கிறித்துவ உலகு, ஒன்பதாம், பத்தாம் நூற்றண்டுகளிற் கிழக்கிலிருந் தும் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் ஆக்கிரமித்த எதிரிகளாற் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. ஐரோப்பா பிற நாடுகளிலே தாக்குதல் நடத்த வில்லை ; ஆனல் அதுவே பிறநாடுகளால் தாக்கப்பட்டது. ஐரோப்பா பிற நாடுகளைத் தேடி ஆராய்ச்சி செய்யவில்லை; ஆனல், அதைத் தேடிப் பிறநாடுகள் ஆராய்ச்சி செய்யலாயின. சாளிமேன் காலத்துக்குப் பின்னர், ஐரோப்பாவின் எதிரிகள் அக்கண்டத்தின் வாழ்வைக் கெடுக்கத் தவறி னும், அதன் கடல் ஆதிக்கத்தைக் கெடுக்க முனைந்தனர்; அதற்குச் சொந்தமான கடற்கரை நாடுகளை அது உபயோகிப்பதினின்றும் தடுத்தனர்; ஐரோப்பிய மக்களின் வாழ்வோடு இணைந்திருந்ததான வாணிகத்துக்கும் உலகெங்கும் குடியேற்ற நாடுகளைக் காணும் அவர்களது முயற்சிக்கும் தடையாயிருந்தனர். வடக்கில் மிலேச்ச வைக்கிங்குகள் கடல், கரைப்பகுதி ஆகிய இரண்டையும் தம் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். இசுப்பெயின், சிசிலி ஆகியவற்றின் பெரும்பாகம் சராசன் ஆட்சியில் இருந்தது. முகம் மதியர் வைக்கிங்குகள் ஆகியோரின் கப்பல்கள் மத்தியதரைக் கடலில் வட்டமிட்டன. தானியூப்பின் கீழ்ப் பகுதியிலிருந்து மிலேச்ச மகியார்கள் சேர்மனிக்குட் புகுந்ததுடன் உலொம்பாடிச் சமவெளியையும் கடந்து வந் தனர். மேற்கு ஐரோப்பாவானது கடல் மார்க்கமாகவும் தரைமார்க்க மாகவும் தனக்கு வெளியிலிருந்த மற்ற நிலப்பரப்பினின்றும் பிரிக்கப்பட்டு வந்தது. கீழைப்புலக் கிறித்துவ மதத்திற்கும் கல்விக்கும் நிலைக்களஞய் இருந்த கொன்சுதாந்திநோபிளிலிருந்து தானும் அது பிரிக்கப்பட்டுப் போனது.

சிலுவைப் போர்கள் 24.
பதினேராம், பன்னிரண்டாம் நூற்றண்டுகளில் இந்நிலைமை மாறியது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மெதுவாக இசுப்பெயினைக் கைப்பற்றும் முயற்சி ஆரம்பமாயிற்று. சிசிலியைச் சராசர் ஆளுவதற்குப் பதிலாக நோமானியரே ஆண்டுவரலாயினர். வைக்கிங்குகள் ஒன்றில் வெறுத்துத் தள்ளப்பட்டார்கள், அல்லது மதமாற்றம் செய்யப்பட்டார்கள். நோமானிய வீரர்க்ள், அரசியல் வல்லுநர் ஆகியோரிடத்து புதுப்பிக்கப்பட்ட, அவர்
களுடைய அற்புதமான சத்திகள் கிறித்துவ அருளாண்மைக்கு முன்னணி
யாக விளங்கின. மகியார்களும் மனம் திரும்பலாயினர். அவர்களுடைய நாடாகிய அங்கேரியானது சிலுவை யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படைகள் போற்கன் பிரதேசங்களுக்கும் பைசாந்தியப் பேரரசிற்கும், அங்கிருந்து சின்ன ஆசியா, பலத்தீனம் ஆகிய பிரதேசங்களுக்கும் தரைமார்க்கமாகச் செல்வதற்கு வழிவிட்டது. இத்தாலிய கடலோரக் குடியரசுகளான செனேவா வெனிசு ஆகியவை கடல் ஆதிக்கம் பெற்றன. ஆகவே சிலுவையுத்த வீரர்களை இலெவாந்து பகுதிக்குக் கப்பல்களில் அனுப்ப அவைகளால் முடிந்தது.
ஐரோப்பாவில் எற்பட்ட இந்த அற்புதமான மாறுதல் முக்கியமாக நிலமானிய முறையின் வழி ஏற்பட்டதாகும். நிலமானிய முறைக் கிறித் துவம் குறைகள் பல உடையதாயிருந்தபோதிலும், தனது கொள்கைகளை வைக்கிங்குகள், மகியார் ஆகியோரிடை புகுத்தி, அவர்களது சொந்த சமுதாய முறையினும் தனது அமைப்புச் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டிற்று. அன்றியும் முகமதியரது முன்னேற்றத்தை அது தடுத்து விட்டது. நிலமானிய நைற்று ஒருவன் தனது கனத்த ஈட்டியைக் கொண்டு தாக்கும் கலையில் தேர்ச்சியுடையவனுயிருந்ததால், அவன் அவ்வாறு தாக்குதல் செய்த பொழுது யாரும் அவனைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை. ஆங்கிலேய வில் வீரர்களின் எழுச்சித்கு முன்னர் காலாட்படை தன் சிறப்பை இழந்தது. பன்னிரண்டாம், பதின் மூன்றம் நூற்றண்டு களில் நிலமானிய முறைமையின் இராணுவ வலியானது, கோட்டைகள் கட்டும் தொழினுட்பத்திற் பல முன்னேற்றங்களைச் செய்விப்பதற்குக் காரண மாக விருந்தது ; அதன்மூலம் அதன் வலி உச்சநிலை அடைந்தது. நோமண்டியில் முதலாம் இரிச்சாட்டு எழுப்பிய கெயிலாடு கோட்டை வீடும், கிழக்குப் புலத்திலே சிலுவை வீரர்கள் கட்டிய கோட்டைகளும், இங்கி லாந்தை முதலில் வெற்றி கொண்ட நோமானியர் அங்கு கட்டிய மணற் றட்டு வேலிக் கூடங்களினும் எவ்வளவோ உயர்ந்தவையாகும். சுதீபன் ஆட்சியின்போது ஆட்சியறவு நிலை ஏற்படுவதற்கு இடமாகவிருந்த சதுர வடிவமான பாதுகாப்பு அறைகளினும் அவை சிறந்தவை. புதிய இராணுவ சிற்பக்கலை முறைப்படி, பெரிய மறைப்புச்சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. பாதுகாப்பின் பொருட்டு அதனைச் சுற்றி இடைவிட்டுவிட்டு அரண்கள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அச்சுவருக்குள் ஒரே பெரிய முற்றம் இருந்தது. இப்படியான கோட்டை வீடுகள் கோன்வே, கானவொன்,
III gld நாட்டுப் Ulë தைப் ι μπή εξό.

Page 131
1015099.
19093.
242 சிலுவைப் போர்கள்
ஆலெக்கு ஆகிய இடங்களிற் கட்டப்பட்டிருந்தன. இங்கிலாந்தில், பிளந்தா செனற்று அரசர்கள் இவைகளினல் உவேல்சுநாட்டவரை அடக்கினர். சசெட் சிலுள்ள போடியம் கோட்டையும் இவ்வாறே கட்டப்பட்டிருந்தது.
இவ்வாறு மாறிவிட்ட சூழ்நிலையிலும், இத்தகைய திருந்திய யுத்த முறைகளோடும், நிலமானியக் கிறித்துவ உலகிற் புத்துணர்ச்சி பெற் றிருந்த தன்னம்பிக்கையானது உலகை நோக்கி விரிவடையவேண்டியது அவசியமாயிற்று. சிலுவை யுத்தம் புரிந்தோர் தங்களது கடவுட் பற்றை யும், போர், தேச ஆராய்ச்சி, கொள்ளை ஆகியவற்றில் தமக்கிருந்த மிகுந்த வேட்கையையும் ஒருங்கே பூர்த்திசெய்துகொண்டார்கள். இத்தகைய கொள்கை, தீரச் செயல் வேண்டிநிற்கும் ஒரு வீரனுக்கன்றி, ஒரு நாட்டின் அரசியல் வல்லுநருக்கு உரியதன்று. இத்தகைய வீரர், தனிப்பட்ட இவ்வியல்பை வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு பன்னிரண்டாம், பதின் மூன்றம் நூற்றண்டுகளில் வாழ்ந்தனர். அமைதியற்றும் சத்திவாய்ந்து மிருந்த புதிய ஐரோப்பிய இனத்தவர் வெளி உலகை நோக்கிச் செல்வதற் காகச் செய்த முயற்சியின் முதற் கட்டமே சிலுவை யுத்தமாகும். அவர்கள் அகில உலகத்தையும் வெல்லும்வரை இம்முயற்சியை நிறுத்தவில்லை. இவ்வுணர்ச்சியே வைக்கிங்குகளையும் ஊக்குவித்தது. ஆனல் அது ஐரோப் பாவின் வாழ்வைக் குலைக்க உபயோகப்படுத்தப்படாது ஐரோப்பாவுக்கு வெளியே ஆசியாக் கண்டத்து நாடுகளுக்கு எதிராகத் திருப்பப் பட்டிருந்தது.
ஆனல், என்றவது அத்திலாந்திக்கு பசிபிக்கு மகாசமுத்திரங்களைக் கடந்து செல்லவிருந்த இத்துணிகரச் சத்திகள், தென்கிழக்குப் பக்கம் நோக்கி, திரும்பவும் திறக்கப்பட்டிருந்த தானியூப்பு, மத்தியதரைக்கடல் ஆகியவற்றின் மார்க்கமாகத் திருப்பிவிடப்பட்டன. உலகின் வடமேற்கு மூலையில் இருந்த இங்கிலாந்து பின்னணியில் விடப்பட்டது. தனிப்பட்ட ஆங்கிலேய நைற்றுக்கள் சிலுவைப் போருக்குத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்களேயன்றி, பிரான்சில் இருந்து சென்றதுபோல அவ் வாறு போவது ஒரு நாட்டுப் பணியாகவும் மரபுமுறையாகவும் கருதப்பட வில்லை; அதன் காரணம் தெளிவானதே. பிரான்சுக்கு மத்தியதரைக் கடல் ஆதிக்கம் இருந்தது ; ஆனல் இங்கிலாந்துக்கு அவ்வாறன ஆதிக்கம் இருந்ததில்லை.
முதலில் நடைபெற்றதும் மிக வெற்றிகரமானதுமான சிலுவை யுத்தத் தில் இங்கிலாந்திற்கு எப்பங்கும் இருக்கவில்லை. அவ்வமயம், போலோனைச் சேர்ந்த கோட்பிரே என்பான் செருசலேமை விடுவித்துச் சிரியாவிற் பிராங்கு அரசுகளை நிறுவினன். மூன்றவது சிலுவை யுத்தத்தில் ஏலவே சலாடின் அரசனற் கைப்பற்றப்பட்டிருந்த இப்பிரதேசங்களை மீட்பதற்குச் சிங்கவிதய ஞன இரிச்சாட்டு அரசன் போரிட்டு, தீரச் செயல் புரியவல்ல வீரன் எனத் தனக்குப் பெருமை தேடிக் கொண்டான். அவன் துணிச்சலுள்ள பல ஆங்கிலேயரைத் தன்னுடன் அழைத்துச் சென்றன். எனினும், அவன்

சிலுவைப் போர்களின் விளைவுகள் 243
நாட்டில் இல்லாதபொழுது நாட்டை ஆளுவதறகு எராளமான பரன்கள் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டனர். ஆங்கிலப் பொதுமக்களைப் பொறுத்த மட்டில், மூன்றவது சிலுவை யுத்தத்தின்போது எற்பட்ட உணர்ச்சிகள் யூதர்களுக்கு அதிர்ச்சிதரக் கூடிய சில கிளர்ச்சிகளை அவர்கள் உண்டு பண்ணுதற்குப் போதுமானவையாயிருந்தன எனலாம்.
ஆனல், சிலுவை யுத்தங்களால் இங்கிலாந்திற்கு உண்டான மறைமுக மான விளைவுகள் மிகப் பெரியவை. அவை மத்தியகால கிறித்துவ உலகின் மனப்போக்கை வளம்படுத்திப் பண்புடையதாகச் செய்ய ஏதுவாக விருந்தன. இக்கிறித்துவ உலகின் ஒரு பகுதியாகவே அக்கால இங்கி லாந்தும் இருந்தது. இதன் பயனுக, அதிக வளர்ச்சியற்றிருந்த மேற் கத்திய சமுதாயத்திற் காணப்பட்ட திறமைமிக்கவர் பலர், கிழக்கத்திய நாடுகளின் அறிவு, விஞ்ஞானம், கலை, வாணிகம் ஆகியவற்றேடு தொடர் புற்றுப் பயனடைய முடிந்தது. ஐரோப்பாவின் எதிரிகளாகிய சராசரின் ஆட்சியிலிருந்தவர்களும், நண்பர்களாகிய பைசாந்தியப் பேரரசிலிருந்தவர் களும் ஐரோப்பா தேசத்தில் அக்காலத்திலிருந்த நாகரிகத்தினும் பழைமை யானதும் சிறந்ததுமான நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். அரண் கட்டும் முறைதானும் சிலுவைப் போர்வீரர் ஆசியாவிற் கண்ட கோட்டை அமைப்பு முறையை மாதிரியாகக் கொண்டிருந்தது. சிரியாவிற் பிராங்கு களால் நிறுவப்பட்ட குடியேற்றங்களும் கப்பற்றுறைகளும் இரு கண்டங் களுக்குமிடையே வாணிகம் வளர்வதற்குப் பெரும் தூண்டுதலாக இருந்தன. சிலுவை வீரர்கள் வெனிசு நகரத்தை முக்கிய வர்த்தகத் தளமாக ஆக்கியதுடன், அந்நகரம் செல்வத்திலும் புகழிலும் உச்ச நிலையடைவதற் கும் வழிவகுத்தனர். வெனிசு நாட்டைச் சேர்ந்த மாக்கோ போலோ, மற்றும் இத்தாலியைச் சேர்ந்த வர்த்தகர், சமயபோதகர் ஆகியோர் ஆசியாவைக் கடந்து சீனவரை சென்றர்கள் ;/சிலுவை வீரர்கள் கிழக் கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுகபோகப் பொருள்களாலும் அவற்றைப் பின்பற்றித் தாமே உற்பத்தி செய்துகொண்ட சுகபோகப் கொருள்களாலும் கைவேலைப் பொருள்களாலும் ஐரோப்பாவையும் இங்கிலாந்தையும் நிரப் பினர். பல்கலைக்கழகங்களிலும் சமய எதிர்ப்புக் கொள்கைகளிலும் வளர் ந்து வந்த மேளுட்டு ஆரம்பகால அறிவாராய்ச்சியானது, கீழ் நாட்டின் தத்துவ ஞானத்தாலும், விஞ்ஞான நூலறிவாலும் பெரிதும் பாதிக்கப் பட்டது. சிலுவை யுத்தத்திற்கு முன்னர் மிலேச்சராக அடைபட்டுக் கிடந்த தைப் போல, ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்தோர் அடைபட்டுக் கிடந் திருந்தால் சோசர், தாந்தே போன்ற அறிஞர் வாழ்ந்த மத்திய காலப் பிற்பகுதியில் விளங்கிய பல திறப்பட்ட சிறந்த வாழ்க்கை அமிசங்களை நாம் கண்டிருக்க முடியாது.
கிழக்கிலிருந்து ஐரோப்பா எடுத்துச் சென்ற பரிசுகள் இத்தகையன வாகும். ஐரோப்பிய மக்கள் தம் ஆர்வமிகுதியினல் அடைந்தகைம் மாறு, புனித சமாதியை நிரந்தரமாக மீட்டமையன்று ; கிறித்துவ

Page 132
1189199.
93
94.
244 முதலாம் இரிச்சாட்டும் இளங்க்ோ யோனும்
உலகுக்குரிய சகோதரத்துவ ஒற்றுமையைப் பெற்றதுமன்று, சிலுவை யுத்தங் களின் வரலாறு' இவ்வொற்றுமை மறுக்கப்பட்டிருப்பதை நன்கு எடுத்துக் காட்டும்; இசுலாமிற்கு எதிராக ஐரோப்பிய நாகரிகத்தின் பாதுகாப்பு அரணுக விளங்கிய பைசாந்தியப் பேரரசை நிரந்தரமாகப் பலப்படுத்தியதுமன்று; ஏனெனில் 1203 ஆம் ஆண்டில் சிலுவை யுத்தவீரர்கள் தங்கள் சொந்த நலனுக்காக அப்பேரரசைக் காட்டிக் கொடுக்கும் இழிசெயலையும் செய் வாராயினர் ; இரத்தத்தாலும் ஆர்வத்தாலும் சிலுவையுத்த வீரர் உண் மையாகவுே தமது பிற்சந்ததியாருக்குப் பெற்றுக் கொடுத்தவை யாவை யெனில், வர்த்தக வளர்ச்சி, கைத்தொழில் நுட்பம், உயர் இன்பத் தேவை, புலன்களுக்குரிய சிற்றின்பத்தேவை, அறிவுப் பெருமை, விஞ் ஞானத் தோற்றம் என்பனவையாம். இவ்வழி துறவியான பீற்றர் என் பாரும் அவரைப் போன்ற ஆர்வம் மிகுந்தவர்களும் மக்கள் எவற்றை வெறுக்க வேண்டுமென்று கபடமின்றிப் போதித்து வந்தனரோ அவை யனைத்தையும் சிலுவை யுத்த வீரர் தம் சந்ததியாருக்குப் பெற்றுக் கொடுத்தனர். . W,
இங்கிலாந்து அரசனன இரிச்சாட்டு நாட்டாட்சியைக் கவனிப்பவனல்லன் ; நாட்டை விட்டு அவன் அடிக்கடி வெளியே சென்று விடுவான். அவனை யொத்த தீரச் செயல்களை நாடி நிற்கும் வீரனுக்குரிய பண்பு அது. நீண்டகாலச் சிலுவை யுத்தத்தின் நிமித்தம் அவன் இங்கிலாந்தை விட்டுச் செல்ல வேண்டியிருந்ததால் ஆட்சிக்குரிய எற்பாடுகளைச் செய்து விட்டுச் செல்வதுண்டு. அவன் சகோதரன் யோன் என்பவனல் ஆட்சியிற் குழப்பங் கள் ஏற்பட்டன. எற்கனவே துரோகி என்றும் உதாவாக்கரை என்றும் பெயர்பெற்றிருந்த யோன் கையில் ஆறுமாநிலங்களை இரிச்சாட்டு ஒப் படைத்திருந்தான். இவைகளிலிருந்து இங்கிலாந்தின் கருவூலத்துக்கு வரு மானம் எதுவும் வந்தது கிடையாது. அரச நீதிபதிகள் இந்நாடுகளுக்கு நீதிவழங்கச் சென்றதும் இல்லை. 11 ஆம் என்றி காலத்தில் ஏற்பட்டிருந்த அரசனது நேர்முக ஆட்சிமுறைக்கு இது பேரிடியாக இருந்தது. ஆனல் அந்த முறையானது நன்றக வேர்விட்டு நிலைத்துப் போயிருந்தது. எப்படி யென்றல், நாட்டிலே தனது சகோதரன் இல்லாதபோது அவனுக்கு எதிராக யோன் நடத்திய ஒரு கலகந்தானும் நாட்டை அசைக்க முடியாது போனது. இரிச்சாட்டு அரசன் இயூபெற்று உவாற்றரை கந்தபெரியின் அதி மேற்றிராணியாகவும் முடியின் பிரதம நிருவாக அதிகாரியாகவும் நியமித் திருந்தான். இயூபெற்று இலண்டன் மாநகர முதல்வராலும் மக்களாலும் அரசாங்கப் பிரபுக்களாலும் ஆதரிக்கப்பட்டு, அரசனுக்கு எதிராக யோன் சூழ்ந்த சதிச்செயலை முறியடித்தார். இரிச்சாட்டு மன்னனேடு இருந்த சிலுவை வீரர்கள், அரசன் நாடு திரும்பும் வழியில் அவனை ஒசுத்திரியச் சிறையிலே தள்ளியிருந்ததை அறிந்த இயூபெற்று, இரிச்சாட்டின் விடுதலை கோரி அவனைப் பணம் கொடுத்து மீட்டார். இரிச்சாட்டு மன்னன் தன்மீது இங்கிலாந்து கொண்டிருந்த பற்றுறுதிக்குக் கைம்மாறக நாட்டின் பண

முதலாம் இரிச்சாட்டும் இளங்கோ யோனும் 245
த்தையெல்லாம் மற்றுமொரு முறை அவமே செலவிடலானன். அன்றி யும், அவன் தனது ஆஞ்சு நாட்டு மரபுரிமையைப் பேணப் போரிடச் சென்றன். அதன்பின் மீண்டும் இங்கிலாந்துக்கு அவன் திரும்பவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப்பின், ஒரு பிரபுவுடன் ஏற்பட்ட எதோ ஒரு சிறு தகராறில் எங்கோவிருந்த ஒரு சிறு அரணையடுத்த சுவர்களுக்கிடையிற் படுகாயமுற்று மாண்டான்.
உண்மையில் இரிச்சாட்டு மன்னன் நேரில் ஆட்சிசெய்வதினுந் திறமை
99.
யாக இயூபெற்று உவாற்றர் இங்கிலாந்தை ஆண்டார். இவர் நாட்டில்
அமைதியை நிலைநாட்டினர் ; நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மத் திய வகுப்பினரை நம்புவதான புதுக் கொள்கை யொன்றைத் தொடக்கி வைத்தார். இக்கொள்கையானது அடுத்த இரு ஆட்சிகளில் எற்படவிருந்த யாப்புச் சம்பந்தமான பெருமாற்றங்களுக்கு முன்னேற்பாடாக அமைந்தது.
பிரான்சிய, இத்தாலிய நாடுகளின் நகரங்கள் உரோமின் முனிசிபியா எனும் மாநகரத்தின் வழிவந்தவையே. ஆயின், இங்கிலாந்தில் உரோமருக்குரிய இடங்களில் விளங்கிய சில நகரங்கள்தாமும் இவ்வகையினவாயிருக்கவில்லை. அவையெல்லாம் பெரும்பாலும் கிராமங்களாகவோ கோட்டைகளாகவோ இருந்து, சட்சணியர் காலத்திற் சந்தைப்பட்டணங்களாக மாறின. ஆகவே, பன்னிரண்டாம் நூற்றண்டில் நகரங்கள் யாவும் பிரபுக்கள், மதகுருக்கள், அரசர் ஆகியோரது ஆட்சிக்குட்பட்டிருந்தன-அதாவது, எந்தெந்த நிலச் சொந்தக்காரரது காணியில் அவை கட்டப்பட்டனவோ, அவ்வச் சொந்தக் காரரது ஆட்சி அங்கு நிலவி வந்தது. அந்நகரங்கள் விடுதலை பெற
வேண்டிய ஊழி இப்போது ஆரம்பித்தது ; அதுவும் அரசனது ஆட்சிக்குட்
பட்டிருந்த நகரங்களிலேயே அவ்விடுதலைக் கிளர்ச்சி விரைவில் ஆரம்ப மாயிற்று.
நிலமானிய முறைத் தன்னட்சி உரிமை கொடுக்க 11 ஆம் என்றி எவ்வாறு விரும்பவில்லையோ, அவ்வாறே மாநகரத்தன்னட்சி உரிமை கொடுக்கவும் உண்மையில் அவனது கொள்கை இடந்தரவில்லை. அவ்விரு ஆட்சியுரிமைகளும் அரசனது நேரடியான அதிகாரத்தை ஆக்கிரமிப்பவை யாகும் என்று அவன் கருதினன். இயூபெற்று உவாற்றரின் மன்ப்போக்கை அவரது செய்கைகள் மூலம் நாம் ஊகிக்கக் கூடுமாயிருந்தால், கூரறிவுள்ள மதத்தலைவரும் அரசியல் ஞானியுமான அப்பெருந்தகை, நிலமானிய உரிமையால் அரசனது அதிகாரம் பலவீனமடையும் என்றும் மாநகரசபை அதிகார வளர்ச்சியால் அது அதிகரிக்கும் என்றும் உணர்ந்திருந்ததை அறியலாம்.
இயூபெற்று என்பார் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள் மூல்மாய் பல்வேறு
நகரங்களுக்குச் சுயஆட்சி உரிமை அளிப்பதற்கான சாசனங்களை வழங்கினர். பிரான்சிலிருந்து எடுத்தாளப்பட்ட “மேயர் ” என்ற சொல்லும், பழைய

Page 133
246 நகர முதல்வரும் அதிகாரிகளும்
ஆங்கிலச் சொல்லான “ஓல்டமென்” என்பதும், மத்தியகால ஆங்கில நகரங்களில் நிலவிய உரிமைகள் எங்ங்ணம் இரு முறைகளைத் தழுவியிருந் தன் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. தனக்கு முன்பிருந்த 11 ஆம் என்றியைப் போலவே இயூபெற்று என்பாரும் இலண்டன் பிரசைகள் தங்களுடைய செல்வம், தொகை, தம் நகரின் புவியியல் நிலை ஆகியவற்றற் பெற்றிருந்த தனித்தன்மையான சத்தியைக் கண்டு அஞ்சினர். எனினும், யோன் அரசனின் சூழ்ச்சிகளால் எற்பட்ட குழப்பத்தின்போது இலண்டன் மாநகரமக்கள் தங்களுடைய மாநகர முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நிலையாகப் பெற்றுவிட்டனர். இங்கிலாந்தில் முதன்முதலாக மாநகர அதிகாரி என்று அழைக்கப்பட்ட அதிகாரி இவரே. யோன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது, நகரங்களுக்கு நகராண்மை உரிமையை விற்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்ததுடன் அதனை விரிவுபடுத்தவும் செய்தான்.
மத்தியதர வகுப்பினரில் நம்பிக்கைகொண்டு அவர்களை ஆட்சியின் கருவிகளாக உபயோகிக்கும் இயூபெற்று உவாற்றரின் பூட்கையானது கோட்ட விவகாரங்களிலும் விரவிநின்றது. பண்ணை விவசாயம், பிற அமைதியான தொழில் முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த கிராமக் கனவான்களையும் நைற்றுக்களையும் இயூபெற்று என்ற அந்த அரச அதிகாரி மேலும்மேலும் கிராம ஆட்சிக் கருமங்களில் ஈடுபடுத்தினர். ஆங்கில அரசாங்கமுறைமைக்கே சிறப்பாகவுள்ள திட்டமான முதலறிகுறிகளை நாம் இங்குக் காண்கிருேம். இம் முறையின்படி அமைதியை நிலைநாட்டுவதற்காக அவ்வவ்விடத்திற் குரிய கனவான்களின் தேர்ச்சி பெருத சேவையை அரசன் நாடினன்ைறி கோட்டத்தலைவர், நீதிபதிகள் ஆகியோரில் முற்றிலும் தங்கியிருப்பதையோ பிந்தியகாலத்தில் ஐரோப்பாவில் இருந்ததுபோல ஒருமுகப்படுத்தப்பட்ட பணிக்குழுவில் தங்கியிருப்பதையோ அரசன் விரும்பவில்லை. இப்புதுப்பூட்கை பிற்காலத்தில் எற்பட்டதான அமைதிகாக்கும் நீதவான்கள் நியமனத்தால் முற்றிலும் அபிவிருத்தியடைந்தது. முதலாம் இரிச்சாட்டின் ஆட்சியில், கனவான்கள் தங்களுக்குரிய அரசியற் கருமங்களை இதுவரை அப்பெயரிற் செய்துவந்ததில்லை. ஆனல், அவர்கள் அரசனுடைய கோரிக்கைகளைப் பாதுகாக்கும் அரச அதிகாரிகளாக இருக்கும்படி எலவே கட்டாயப் படுத்தப் பட்டிருந்தனர். கோட்டங்களில் அரசனது நீதிபரிபாலன உரிமைகளையும் நிதி சம்பந்தமான உரிமைகளையும் காப்பது அவர்களது கருமமாயிருந்தது. அவர்கள் தம் சேவையை எப்போதும் தாமாகவே முன்வந்து செய்யவில்லை; உண்மையில் மத்தியகால அரசர்கள் கனவான்களைச் சுய ஆட்சி முறையைக் கைக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது வழக்கமாக இருந்தது. மாநகர் மணியகாரன் தனக்கிருந்த பெரும் அதிகாரங்களைத் தவருகப் பிரயோகம் செய்வதாக அரசனும் மக்களும் சந்தேகித்ததால், தவறன போக்கைத் தடைசெய்வதற்குக் கோட்டத்து நைற்றுக்கள் பயன்படுவரென அரசன் உணர்ந்தான்.

நகர முதல்வரும் அதிகாரிகளும் 247
இயூபெற்று உவாற்றர், அரசகோரிக்கைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு டைய அரச அதிகாரிகள் நியமனத்தில் தாம் தலையிடவுமில்லை; அதனை மாநகர் மணியகாரரிடமும் விட்டுவிடவில்லை. கோட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்போர்-அதாவது அவ்வத் தலத்திலிருந்த கனவான்கள் -தங்களிடையே நால்வரை இவ்வாறன அரச அதிகரிகளாகத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார். இத் தத்துவத்தை யே நடுவரைத் தெரிவு செய்வதிலும் அவர் பின்பற்றினர். இதுகாறும் மணியகாரரால் தெரிவுசெய்யப்பட்ட நடுவர் குழு, கோட்டநீதிமன்றத்திலே தெரிவு செய்யப்பட்ட நான்கு நைற்றுக்ககளடங்கிய குழுவினரால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார்.
இவ்வாருகக் கோட்டத்துக்குத் தன்னட்சிமுறை பெரும் பரன்கள் மூல மாக வன்றி, நாட்டுப்புறக் கனவான்கள் மூலமாகவே வழங்கப்பட்டது. இதிற் பிரதி நிதித்துவக் கொள்கை யடங்கியுள்ளதையும் நாம் காணலாம். பன்னிரண்டாம் நூற்றண்டின் முடிவில், சோசரின் “புருேலோக்கின்” பிராங் கிலினுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கிராமிய மத்திய வகுப்பு இங்கிலாந்தில் உருவாகிக்கொண்டிருந்தது ; அவ்வகுப்பினர் பொதுமக்கள் கருமங்களிலும் தம்பிரதிநிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பழக்கமுடைய வரா யிருந்தனர். அவ்வத்தலத்திற் சிறு கனவான்கள் மக்களது பொதுக் கருமங்களில் பங்குபற்றுவதும் பிரதிநிதி ஃளத் தெரிவு செய்வதுமான இவ்வழக்கம், விரிந்த அடிப்படையிற் செயற்பட்ட பொழுது, நாட்டுப் பாராளுமன்றம் ஒன்று ஏற்படுவதாயிற்று ; இதனல் இங்கிலாந்திற்கும் உலகிற்கும் மிகப்பெரும் விளைவும் எற்படலாயிற்று.
யோன் ஆட்சிசெய்த காலத்தில் அவனது அநியாயமான கோரிக்கைகளை எதிர்த்து வந்த நிலமானியப் பரன்களின் எதிர்ப்பானது நாளடைவில் அவனது அரசியல் யாப்பை எதிர்க்கும் இயக்கமாக மாறி, கட்டுப்பாடற்ற வேளாண் மரபினரடங்கிய எல்லா வகுப்பாரையும் அவ்வெதிர்ப்பில் சேர்த் துக் கொண்டது. அரசன் தனக்கிருந்த நிறைவதிகாரத்தின் மூலம், நாட்டிற்கு ஒரு வழமைச் சட்டம் இருக்கவேண்டும் என்ற கொள்கையை மக்களிடை பரவச் செய்தான். யோன் அரசன் காலத்திலும் அவனுக்குப் பின்வந்த II ஆம் என்றியின் ஆட்சியிலும் சட்டம் பற்றிய கருத்தை மக்கள் திட்டவட்டமாக முறைப்படுத்த ஆரம்பித்தனர். அதன் பிரகாரம் சட்டம் என்பது தனக்கேயுரிய உயிர்த்துடிப்புடையதாய், அரசனது அதிகாரத் திற்குப் புறம்பானதாயிருக்கும் ஓர் ஒழுங்கு முறைமையே என்றும், அர சனுக்கு மேற்பட்ட அம்முறைமையின் துணைகொண்டே அவன் ஆட்சி புரிதல் வேண்டும் என்றும் மக்கள் கருதத் தொடங்கினர்.
* அரசியல் யாப்புக் கருத்துக்கள் ” என்று நாம் இன்று கூறுபவை பதின்மூன்றம் நூற்ருண்டு முழுவதும் மெதுவாக இடையீடின்றி வளர்ந்து வந்தன. ஆங்கில யாப்பு எனப்படுவது, அந்நாட்டு வழைமச் சட்டத்துடன்
194
1198.
1199
216.

Page 134
248 மத்திய கால அரசியற் கருத்துக்கள்
இரண்டறக் கலந்த நிலமானிய முறையின் குழந்தையாகும். எனெனில் நிலமானிய முறைமை வல்லாட்சி முறைமைக்கு எதிரிடையானதாகும்; பல வேளைகளில் அது கொடுங்கோன்மையாகவும், சில சமயங்களில் ஆட்சியற வாகவும் அது மாறலாம் ; ஆனல் அது ஒருபோதும் வல்லாட்சியாக மாறு வதில்லை. ஏனெனில் அரசனுக்கும் அவனிடமிருந்து நிலம் பெற்றிருந்த பிரபுக்களுக்குமிடையே இருந்த உரிமைகள், கடமைகள் என்பனவற்றை சமநிலையாக இருசாராரும் பெற்றிருப்பதற்கான விரிந்த அடிப்படையாக அம்முறைமை இருந்தது. நிலமானியச் சட்டமும் வழமையும் பரன்களையும் நைற்றுக்களையும் அரசனிடமிருந்து பாதுகாத்தன. எப்போது அரசன் நில மானிய வழமைக்கு மேலான சேவை, உதவி அல்லது நிவாரணங் கோரி ஞனே அப்பொழுதெல்லாம் அவர்கள் மானிய முறைச் சட்டத்தின் துணை கொண்டு அவன் கோரிக்கையை மறுத்தனர். அதுவே யாப்புறு இயக்கம் பாராளுமன்ற வியக்கம் ஆகியவற்றின் தொடக்கமாகும். பிணக்கிற்கிடமான விடயத்தைத் தனித்தனியே பிரபுவுடன் பேசித்தீர்க்காது, அவர்களனை வரையும் கூட்டிப் பேரவை, அல்லது பாராளுமன்றம் என்பதின் மூலம் விரைவாகத் தீர்த்துவிடலாம் என அரசன் கண்டான்.
அன்றியும் மற்ருெரு விதத்திலும் ஆங்கிலேய அரசியல் யாப்பு நிலமானிய முறைமையிலிருந்து தோன்றியது எனலாம். நிலமானிய வகுப்பினர் பிற் காலப்பெருஞ்செல்வரைப் போன்றிராது ஓரளவுக்கு யுத்த வீர வகுப்பினரா யிருந்ததால், பதின்மூன்றம் நூற்றண்டில் அரசனது வல்லாட்சியை எதிர்ப்ப தில் அவர்கள் வெற்றி பெற்றனர் ; நாம் எலவே அறிந்துள்ளபடி, நிலமா னிய வகுப்பினர் யுத்தம் செய்வதில் பயிற்சியில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களனைவரும் இரும்புக் கவசங்களும் போர்க் குதிரைகளும் வைத்திருந் தனர்; அவர்களிற் சிலர் சிலுவையுத்தங்களுக்குச் சென்று மீண்டவர்கள் ; மற்றும் பலர் தம் அயலவரான, வேல்சு, இசுக்கொத்துலாந்து நாட்ட வருடன் ஒயாது சண்டையிட்டுக்கொண்டு வாழ்ந்தவர். அதனலேயே மகா பட்டயத்தைத் தயாரித்த பரன்களும் சைமன் தி மொன்போட்டைப் பின் பற்றியவர்களும் அரசனை எதிர்த்துப் போரிடக்கூடியவராயிருந்தனர். அதன. லேயே போகன், பிகோட்டு ஆகிய பெருமக்கள் முதலாம் எட்டுவேட்டின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சாது “ ஐயா, அரசரே ! கடவுள் ஆணையாக நாங்கள் செல்லவும் மாட்டோம் ; சாகவும் மாட்டோம்” என்று நெஞ்சு றுதியுடன் பதிலிறுத்தனர். இவ்வாறன துணிச்சலுடன் சேர் யோன் எலியற்று என்பார் முதலாம் சாள்சு மன்னனுக்குப் பதிலளித்திருக்க முடியாது. பிம், குருெம்வெல் ஆகியவர்கள், மத்திய ஊழிக்குரிய பாராளு மன்றத்திடமிருந்து அம்மன்றம் சாதாரண காலத்திலும் சட்டமுறைப் படியும் வைத்திருந்த இராணுவ ஆயுதபலத்தைப் பெறுவதற்குப் புரட்சி கரமான வழிகளை நாடவேண்டியிருந்தது.

நோமண்டியை இழத்தல் 249
சட்டத்துக்கமைவான மறுப்பியக்கம் நாட்டில் கிளர்ந்தெழுதற்குக் காரணமாகவிருந்தவன் யோன் அரசனவான். அவன் ஒரு கபடன் ; சுயநலவாதி ; கொடியவன் ; வெறுப்பதற்காகவே படைக்கப்பட்டவன். தனதுசூழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டுப் பிடிவாதத்துடனும் அரச தந்திரத் திறமையுடனும் நடந்துகொண்டான் ; எனினும் அவனிடம் பரந்த அரசியல் விரகோ அரசியல் சம்பந்தமான முன்னறிவோ காணப்பட்ட தில்லை. அவன் நிலமானிய முறைமைச் சட்டத்தைப் பழுதாக்கியதுடன் அரசாங்கமெனுஞ் சிறந்த சாதனத்தைப் பயன்படுத்துவதிலே தவருன போக்குடையவனயுமிருந்தான். அச்சாதனத்தைப் பயன்படுத்தி தனது பிர சைகளாகிய சமயச் சார்புள்ளவர், பொதுமக்கள், பணக்காரர், எழைகள், நாட்டுப்புறத் தலைவர், பரன்கள் ஆகிய எல்லா வகுப்பினரிடமிருந்தும் அநியாய வரிகளை அறவிட்டான். அவ்வாறு பெற்ற பணத்தையெல்லாம், செல்வாக்குப் பெற்று வந்த பிரெஞ்சு நாட்டு காப்பெற்று வமிச அரசர் களுக்கு விரோதமாக, தனக்குரிய அஞ்செவின் அரச மரபுரிமையைக் காப்பதற்குத் தான் செய்த முரட்டுத்தனமான, பயனற்ற போர்களிற் செலவிட்டான். அவன் 1204 ஆம் ஆண்டில், பிலிப்பு ஒகத்தசு என்பா னிடம் நோமண்டியை இழந்தான். பத்து ஆண்டுகளுக்குப்பின், யோன் அரசன் பிரான்சுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் கூட்டிணைப்பை நிறுவி, இழந்த நோமண்டியை மீண்டும் பெறுவதற்காகத் திட்டமிட்ட பொழுது, அவனுடைய நேயர்களான சேர்மானியர் பொவைன்சு என்னு மிடத்தில் அடைந்த தோல்வியால் அத்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிகளும், யோன் அரசனுக்கும் போப்பரசருக்குமிடையே நீண்டகால மாக எற்பட்டிருந்த பிணக்கின் விளைவாகத் திருச்சபையிலிருந்து இங்கி லாந்து வெளியேற்றப்பட்டமையும் மகா பட்டயத்துக்கு முன்னறி குறிகளாக விருந்தன. யோனது பெருமை இதனற் சீரழிந்ததுடன், முன்னிருந்த ஆங்கில மன்னர்களுக்குப் பிற நாட்டு உடைமைகளிலிருந்து கிடைத்துவந்த பலம் இப்போது பலவீனமாக மாறும் நிலையும் ஏற்பட்டது.
பொவைன்சிற் பிரெஞ்சு மன்னனுக்குக் கிடைத்த வெற்றியின் விளைவாக, இங்கிலாந்து அரசியல்யாப்பு முறைக்குட்பட்ட ஒரு நாடாகியதுடன், பிலிப்பு ஒகத்தசு முடியாட்சியின் கீழ்ப் பிரான்சு நாடும் ஐக்கியமடைந்தது. கவி தையை விரும்பிய பிரெஞ்சு நாட்டு அரசவை, பரிசு நகரத்திலிருந்த பல்கலைக்கழகம், சிற்பக்கலைக் கூடங்கள் ஆகிய யாவும் சிலுவைப் போரிட்ட அருளாண்மை மிகுந்த ஐரோப்பியரின் கலாசாரத்துக்கு மையங்களாக அமைந்தன. பொவைன்சு வெற்றிக்குப்பின், பிரெஞ்சு அரசவையானது அந்நாட்டு நிலமானிய முறைமையின் பாற்பட்ட மாகாணங்களின் அரசியற் கருமங்களுக்கான மையமாக விளங்கியது இயற்கையே. ஆனல் அவ் வரசவையானது, பிளந்தாசனெற்று வமிசத்தவர் ஆங்கில அரசபதவியை உறுதிவாய்ந்ததாகச் செய்வதற்காக நிறுவிய நிருவாக அமைப்புக் களைப் போன்றவற்றைப் பிரான்சில் நிறுவத் தவறிவிட்டது. அதன் பயனுக
1214.

Page 135
X to நாட்டுப் LIL 565 unitias.
250 நோமண்டியை இழத்தல்
கிரெசி, அசின்கோட்டு ஆகியவிடங்களிற் பிரெஞ்சு மன்னராதிக்கம் மீண்டும் அடிபணிய வேண்டியதாயிற்று. நாட்டுக்கு வெளியிலிருந்து ஆங்கிலேயர் செய்த தாக்குதலும் நாட்டுக்குள்ளிருந்து நிலமானியப் பெருமக்கள் செய்த துரோகச் செயலும் பிரெஞ்சு அரசராதிக்கத்தைப் பலவீனப் படுத்துவதா யிருந்தன.
இதனிடையில், யோன் அரசனதும் மூன்றம் எட்டுவேட்டினதும் ஆட்சிக் கிடைப்பட்ட காலத்தில், ஆங்கில மன்னர்கள் பிறநாடுகளிற் பெற்றிருந்த பிரதேசங்கள் சுருங்கி அளவான பருமனுடையவாயின. அவர்களது ஆதிக்கத்தில் இருந்த ஆஞ்செவின் பேரரசு மறைந்துவிட்டது. ஆனல் அவர் களிடம் கசுகனியும் போடோத் துறைமுகமும் இன்னும் இருந்து வந்தன. இத்துறைமுகம் கடல்கடந்த வாணிகத்திற்குத் தூண்டுகோலாயிருந்தது. அங்கிருந்து மலிவான, சுவைமிக்க உவைன் இங்கிலாந்திற்குக் கிடைக்கக் கூடியதாயிருந்ததால், ஆங்கில மத்திய வகுப்பினர் மட்டரகமான குடி வகைகளை அருந்துவதற்குப் பதிலாகச் சிறந்த உவைன் அருந்துவாரா யினர்; அன்றியும், வெயில் குறைந்த இங்கிலாந்தில், அக்காலத்து வாழ் ந்த மக்கள் கொடி முந்திரிகையை வளர்ப்பதற்குச் செய்த பரிதாபகரமான முயற்சிக்கும் இது முற்றுப்புள்ளி வைத்தது. ஆனல், கசுகனியுடன் ஆங்கில மன்னர்கள் இக்காலத்திற் கொண்டிருந்த தொடர்பானது முன்னர் அவர்கள் நோமண்டியுடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பு போன் றிருக்கவில்லை. முற்காலத்தில் எத்தனையோ பரன்கள் கால்வாயின் இரு மருங்கிலும் காணிகளையோ வேறு தொடர்புகளையோ உடையராயிருந்தனர். நோமண்டியை இழந்ததற்கும் நூறு வருடப் போரின் தொடக்கத்திற்கு மிடைப்பட்ட 125 ஆண்டுகளாக, ஆங்கிலேய அரசர்கள், விழுமியோர், நைற் றுக்கள் என்போர் பிரெஞ்சு மொழியை நகைப்பிற்கிடமான முறையில் இன்னும் பேசி வந்தனரேனும், இங்கிலாந்துக்குரிய விடயங்களில் இப் பொழுது அவர்கள் அதிக அக்கறை காட்டிவரலாயினர்-இங்கிலாந்துக்கும் வேல்சு, இசுக்கொத்துலாந்து ஆகிய நாடுகளுக்கு மிடையேயுள்ள உறவுகள், இங்கிலாந்திற் சட்டமும் பாராளுமன்றமும் வளர்ச்சியுறுதல், ஆகிய விடயங் களே அவையாகும் ; இவ்வாறு எற்பட்ட உள்நாடு சம்பந்தமான நோக்கு, பிரான்சுடன் மிக ஒருமைப்பாடுடையராக ஆவதினின்றும் ஆங்கிலேயரைக் காத்தது எனலாம். பதின்மூன்றம் நூற்றண்டில், இங்கிலாந்து பிரெஞ்சு மன்னர்களுக்கு எதிராக ஆஞ்செவின் பேரரசைக் காப்பதற்கான போரில் ஈடுபட்டிருக்குமேயானல், இங்கிலாந்தின் தலைவர்கள் தம் சத்தியையும் சிந்தனையையும் நாட்டுப் பிரச்சினைகளையும் உள்நாட்டு விவகாரங்களையும் ஆராய்வதில் செலவிட்டிருக்க முடியாது. கடைசியாக 1337 ஆம் ஆண்டில், மூன்றம் எட்டுவேட்டு மன்னன் பிரான்சைத் தாக்குவதில் மீண்டும் முனைந்தான். அவ்வமயத்தில், ஆங்கிலச் சட்டம் நன்கு நிர்ணயிக்கப்பட்ட தாய் விளங்கிற்று ; பாராளுமன்ற முறை நன்கு வரையறுக்கப்பட்டு, தன்

சுதீபன் இலாங்டன் 25
ஞட்டுக் கியைந்த அமைப்புமுறை பெற்று விரைவாக வளர்ந்து கொண் டிருந்தது ; ஆங்கில மக்கள் தமது தனித்தன்மையைச் செவ்வனே உணர்ந் தவர்களாயிருந்தனர்.
அரசியல் யாப்பு அமைப்புப் பாதையின் முதற்பெரும் கட்டமாய் மகா பட்டயம் அமைவதாயிற்று. அம்மகா பட்டயத்தை இரன்னிமீட்டு என்னு மிடத்தில், யோன் அரசனிடமிருந்து வலிந்து பெற்ற ஆயுதம் தாங்கிய பரன்கள் எவரும் நாமறிந்த வரையில் குறிப்பிடத்தக்க சிறப்புடையவர் களாயிருந்ததில்லை; ஆனல் அவர்களின் நேயரான அதிமேற்றிராணியார் சுதீபன் இலாங்டன் என்பார் ஒழுக்கநெறியிலும் நுண்ணறிவிலும் சிறந்த வராயிருந்தார். அரசியல் அமைப்பானது மூன்ரும் இனசென்று என்னும் பெரும் போப்பரசரின் விருப்பத்துக்கு மாறனதாக விருந்தபோதும், இலாங் டன் அதனை ஆதரித்ததால் அவர் உண்மையிலேயே சிறந்தவர் எனலாம். 1213 ஆம் ஆண்டில் யோன் அரசன் இப்போப்பரசரிடம் மரியாதையாக நடந்து அவருக்குப் பணிந்து போனதால், அவர் யோன் அரசனுக்கும் அவனது பிரசைகளுக்குமிடையே நடைபெற்ற போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசனை ஆதரித்ததுடன், மகா பட்டயம் வெற்றவெறிது எனவும் பிரகடனஞ் செய்தார். கந்தபரி சமயத்தலைமைக் குருவாகச் சுதீபன் இலாங்டன் போப்பரசரின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதை உன்னிப்பார்க்கையில், இங்கிலாந்தின் அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளில் இலாங்டன் கடைப்பிடித்த உறுதியான கொள்கை இரட்டிப் பான சிறப்புடையதாகும் என்பதைக் காணலாம்.
பிந்திய நூற்றண்டுகளில் ஆங்கிலேய வகுப்பினரும் கட்சியினரும் * இங் கிலாந்தின் மகிழ்ச்சியான அரசியல் யாப்பை” உருவாக்குவதற்குச் செய்த முயற்சியைப் போன்று-அதற்கு எள்ளளவுங் கூடாது குறையாது-சுய
நலமும் வகுப்புணர்ச்சியும் கொண்டே பரன்கள் இப்போது கருமமாற்றிக்
கொண்டிருந்தனர் ; பெருமக்கள் தம் உரிமைகளை முதலில் வற்புறுத்தி, பின் ஏற்பட்ட கருமசாத்தியமான இணக்கமுறையின் பேரிலேயே அரசியல் யாப்பு வளர்ந்தது. சுதுவாட்டு, அனுேவெரியன் வமிச அரசர்கள் காலத்தில் மகாபட்டயத்துக்குக் கொடுக்கப்பட்ட உயர்நோக்கங் கொண்ட தவறன் விளக்கங்களை யோன் அரசன் காலத்துப் பெருமக்கள் புரிந்து கொள்ளக் கூடியவர்களாயிருந்திருப்பார்களேயாயின், சந்தேகத்துக்கிடமின்றி அவர்கள் ஆணையிட்டு அதை மறுத்து முழக்கமிடடிருப்பார்கள். உதாரணமாக 39 ஆவது பிரிவின்படி மிகக் கீழான பண்ணையடிமைக்கும் நடுவர்மூலம் வழக்கு விசாரணை உண்டு என்றும், 12 ஆவது 14 ஆவது பிரிவுகளின்படி எல்லா வரிகளும் நாட்டுப் பாராளுமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டிருக்க வேண்டுமென்றும் பட்டயத்தில் இருந்ததாகத் தவரு ைவிளக்கம் பிற்பாடு கூறப்பட்டது. ஆனல் மகா பட்டயத்தில் அடங்கியிருந்த கோரிக்கைகள் வரையறுக்கப்பட்டனவாகவும் நடைமுறையிற் கொண்டு வரக்கூடியனவாக
2.

Page 136
S253) சுதீபன் இலாங்டன்
வும் இருந்தன. அக்காரணத்தினுற் பெருமக்கள் வெற்றிகரமானதொரு இயக்கத்தை ஆரம்பித்தனர் ; இவ்வியக்கமானது கனவிலுங் கருதி யிராத சுதந்திரங்களை அனைவருக்கும் இறுதியிற் பெற்றுக் கொடுப்பதா யிற்று.
அரசன் நிலமானிய உரிமைகளைத் தவறகப் பயன்படுத்தக்கூடாது என்பதற் காகவும் நிலமானிய வழமைக்கு அதிகமாகத் தங்கள் காணிகளிலிருந்து உதவியும் நிவாரணமும் பெறுவதைக் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் பரன்கள் ஒன்றுகூடினர். இது “ வாரக்காரர் உரிமை ” இயக்கம் என்ற ழைக்கப்பட்டது; ஒடுக்கப்பட்ட உயர்வகுப்பினர் தங்களுடைய நிலப்பிரபுவான அரசனுக்கு எதிராக நடத்திய இயக்கம் இதுவாகும் ; எனினும் அரசன் அநீதியாக அறவிட்டதிற் பெரும்பகுதியை, இப்பெருமக்கள் தங்களின் கீழ் ஊழியம் புரிந்து வந்த வகுப்பினரிடமிருந்து பறித்துக்கொள்ள வேண்டியி ருந்தது என்பதை நாம் ஞாபகத்தில் இருத்திக்கொள்ளல் வேண்டும். அன்றியும் அரசன் தங்களுடைய வழக்கு மன்றங்களிலிருந்து தனக்குரிய தான வழக்கு மன்றத்துக்கு அரச கட்டளைகள் மூலமாக வழக்குக்களை ஒவ்வொன்ருக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிறைவதிகாரத்திற்கு வரம்புகட்டவும் பரன்கள் விழைந்தனர். இவ்விரு விடயங்களுள்ளும் நாம் பின்னையதினும் முன்னையதற்கே கூடிய பரிவு காட்ட வேண்டியிருக் கிறது. நிலைமையை முழுதாக ஆராய்ந்து பார்க்கின், அரசனது நிறைவதி காரத்தைக் கட்டுப்படுத்தவோ நாட்டுக்குரியதாக்கவோ செய்ய வேண்டிய காலம் கிட்டிவிட்டது எனலாம். அன்றியும் பரன்களைத் தவிர வேறெ வரும் இவ்வாறனதோர், இயக்கத்தைப் பயன்தரக்கூடியதாகச் செய் திருக்க முடியாது.
சுதீபன் இலாங்டன் தமது நண்பர்களான பரன்களுக்கு ஒளியூட்டும் வழிகாட்டியாக இருந்தாரெனினும், அவர் துணையில்லாவிடத்தும், அவ் வூழியில் இங்கிலாந்திலிருந்த சூழ்நிலைமைகள் அப்பெருமக்களை உண்மை யான முன்னேற்றப் பாதையில் உந்தித்தள்ளுவனவாய் அமைந்திருந்தன. பிளந்தாசெனற்று வமிசத்தவரது உறுதி வாய்ந்த ஆட்சிச் சாதன மானது, கலப்பற்ற நிலமானிய முறைமைக்கும் பெருமக்களைத் திரும்ப வொட்டாது தடுத்தது. மேலும் பரன்களும் உண்மையில் மானியமுறைக் குத் திரும்பும் எண்ணமுள்ளவர்களாக விருக்கவில்லை. தங்கள் வாழ்வி லும் நாட்டின் வாழ்விலும் ஒன்றித்து விட்டதான, 11 ஆம் என்றி ஆற்றிய பணியினை அழிக்க அவர்கள் விரும்பவில்லை. அவ்வரசனின் சாதனை அழிக்க முடியாததென்பதை அறிந்து, அதனை ஒருவிதமான பொதுக்கட்டுப்பாட்டு முறைக்கு உட்படுத்தி, தனியொருமனிதனின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக அதனை இனியும் இருக்கவிடக்கூடாது எனக்கருதி அவர்கள் கருமமாற்றினர்.

மகா பட்டயம் 253
ஒரு நூற்றண்டுக்குமுன் இங்கிலாந்திலும், இக்காலத்தே இசுக்கொத்து லாந்திலும் மற்றும் ஐரோப்பாவிலும் ஒவ்வொரு பரனும் தனது சொந்த சுதந்திரத்தைக் காக்காவும் தனக்குச் சொந்தமான ஆதீனங்களில் அரச அதிகாரிகளின் தலையீடின்றியே தனது சிறப்பான “ உரிமைகளைப் ” பாது காக்கவும் வேண்டுமென்பதைத் தன்கொள்கையாகக் கொண்டிருந்தான், ஆனல் 11 ஆம் என்றிக்குப் பின் இங்கிலாந்தில் இத்தகைய கொள்கையைக் கடைப்பிடிப்பது கனவிலும் கருதமுடியாததாயிற்று. மகாபட்டயத்தில் பொறிக்கப்பட்டிருந்த (பரன்களின்) புதிய கொள்கையின் பிரகாரம், பொது உரிமைகளைப் பெறுவதும் அரசனது அதிகாரத்தைக் கட்டுவதும் வழமைச் சட்டம், பரன்களின் மன்றங்கள், எனைய வகுப்பினரோடு கூட்டுறவு கொள் ளல் என்பவற்றின் வாயிலாகச் சாதிக்க வேண்டியவையாயின. “அசா தாரணமான வரியோ உதவிக் கோரிக்கையோ எம் இராச்சியத்துப்பொதுச் சபையின் அனுமதியின்றி எமது இராச்சியத்திற் சுமத்தப்பட்டக்கூடாது ” என்றும் * அதுபோன்று இலண்டன் நகர் சம்பந்தப்பட்ட உதவிக்கோரிக்கை களும் பெறப்படும்.” என்றும் இன்னேரன்ன குறிப்பிடத்தக்க சலுகை களைப் பரன்கள் அரசனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். * பொதுச்சபை ” என்பதற்கு “ வாரக்காரமுதல்வரே அடங்கிய மானியமன்றம்’ என்று அவர்கள் வரைவிலக்கணம் கூறமுற்பட்டபோதிலும், பாராளுமன்றத் தத்து வங்களைப் பின்பற்றுவதற்கான வழியில் அவர்கள் முன்னேறிக் கொண்டி ருந்தார்கள் எனலாம். மேலும் “பிரதிநிதித்துவம் இன்றேல், வரி விதிப்பு இல்லை’ என்ற கொள்கைக்கும் அவர்கள் வழிவகுத்தனர். இவ் வாறு பெருமக்கள் செய்தது சிறுமுயற்சியேயெனினும், அது முதல் முயற் யாகும் ; முதல் முயற்சியே முதன்மை வாய்ந்தது என்க.
அன்றியும், யோன் அரசனற் கொடுமைப்படுத்தப்பட்டு பராதீனப்படுத்தப் பட்டிருந்த ஏனைய வகுப்பினரின் துணையைப் பெருது, அவனுக்கு எதி ராகக் கிளர்ந் தெழக்கூடிய பலமுடையவர்களாக இரன்னிமீட்டிற் கூடிய பரன்கள் இருக்கவில்லை. இலண்டன் நகரவாசிகள் பரன்கள் படை உட் செல்வதற்காகத் தம் நகரவாயில்களைத் திறந்துவிட்டதுடன், தாமே போர்க் கோலம் பூண்டு போர்க்களம் புகுந்தனர். குருவாயத்தினர் உள்ளத்தால் ஆதரவு அளித்ததோடு, அரசியலாதரவும் பெருமக்களுக்கு நல்கினர். ஒதுக்கப்பட்ட பண்ணை வகுப்பினருக்கு மேலாக உள்ள சகலவகுப்பினரும் முனைப்பின்றி ஆதரவு காட்டினர். 11 ஆம் என்றி பரன்கள் கலகத்தை ஒடுக்குவதற்குச் செய்ததுபோன்று, யோன் அரசன் ஆயுதச் சட்டத்தின்கீழ், கட்டுப்பாடற்ற பண்ணை வேலையாட்கள் எல்லோரையும் இப்பொழுது தனக் குதவிக்கு ஒன்றுதிரட்டல் பயனற்றதாயிருந்தது. முதன்முறையாக ஆங்கில மக்கள் அரசனுக்கெதிராய்ப் பரன்கள் பக்கமாகச் சேர்ந்து கொண்டார்கள். நிலமானிய முறைமையில் எற்படக் கூடிய ஆட்சியறவு, இனி எற்படும் என்ற பயமற்றுப்போனதால் அவர்கள் இவ்வாறு செய்தனர். '

Page 137
254 LsO5T i Luth
அரசனுக்கு விரோதமான இயக்கத்துக்கு உதவியாகவோ தூண்டுதலாக வோ இருந்த ஒவ்வொரு வகுப்பாரும், மகாபட்டயத்திற் காணப்பட்ட பிரிவுகளிற் சொல்லப்பட்டிருந்த நன்மைகளிற் பங்குகொண்டனர். இத் தன்மையில் இப்பட்டயத்தை நோக்குமிடத்து இதனை “நாட்டினத்துக்குரிய சாதனம்’ என்று நாம் கூறலாம் ; ஆனல் அது மக்கள் சார்பான, அல்லது நாட்டினம் சார்பான எக்கோரிக்கையையும் கொண்டதாகச் செய் யப்படவில்லை ; எனெனில் இத்தகைய கருத்தியல்கள் மக்கள் சிந்தனையில் இன்னும் கருக்கொள்ளத் தொடங்கவில்லை. “கட்டுப் பாடற்ற ’ வேளாண் தொழிலாளரனைவருக்கும் அரசனுடைய அதிகாரிசளிடமிருந்து பாதுகாப்பும், நியாயமான, சட்டமுறையான விசாரணை உரிமையும் வழங்கப்பட்டிருந்தன. “கட்டுப்பாடற்ற பண்ணையாட்கள்’ என்பதற்கு 1215 ஆம் ஆண்டில் கொள்ளப் பட்ட பொருள் குறுகிய எல்லையினதாகும்; ஆனல் அடுத்து வந்த மூன்று நூற்றண்டுகளில், பொருளாதாரம், சட்டமுறை என்பவற்றில் எற்பட்ட மலர்ச்சியின் காரணமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு பண்ணை அடிமையாளின் மரபினரைத் தழுவும் படியாக இப்பதம் பொருள்பட்டது; அப்பொழுது சட் டப்படி ஆங்கிலேயரனைவருமே “கட்டுப்பாடற்றவர்’ களாகக்கருதப்பட்டனர்.
மகாபட்டயத்திற் சொல்லப்பட்ட பல பிரிவுகள் தனிமனித சுதந்திரம் பற்றிய உணர்ச்சியை நன்கு எடுத்துக்காட்டுவனவாகும் ; இதன்பின்னர் அச்சுதந்திரம் பற்றிய அதே கருத்து இன்றுவரை இங்கிலாத்தில் நிலவு கிறது. பட்டயத்திற் கூறப்பட்ட வீரவார்த்தைகளைப் பிந்திய நூற்றண்டு களில் வாழ்ந்தமக்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறினர்கள். இவ் வாறு கூறியவர்கள், இவ்வார்த்தைகளை முதலில் எழுதியவர்கள் என்ன பொருளில் எழுதினர்கள் என்பதையே அறியாதவர்களாய்க் கூறிவந்த போதிலும், இவ்வாறு அடிக்கடி கூறியதானது நாட்டினப் பண்பை மக்க ளிடையே உருவாக்கப் பெருந்துணையாய் இருந்தது :-
* கட்டுப்பாடற்ற மனிதன் எவனும் அவனது பிரபுவின் சட்டமுறை யான தீர்ப்பு இன்றியோ நாட்டுச் சட்டத்தீர்ப்பு இன்றியோ இரண்டு மின்றியோ கைது செய்யப்படவோ சிறைப்படுத்தப்படவோ சிரச்சேதம் செய் யப்படவோ நாடு கடத்தப்படவோ அன்றி வேறு எம்முறையிலாவது அழிக்கப் படவோ கூடாது ; அன்றியும் நாங்கள் அவனைப் பற்றிய தவறன கருத்துக்களைக் கொள்ளவோ அவனைத் தவறன கருமங்களைச் செய்யச் சொல்லவோ மாட்டோம் ’.
அரசனுடைய காடுகளிலும் மற்ற விடங்களிலும் அவனுடைய அதிகாரி கள் பின்பற்றிய சட்டவிரோதமான கொடூரமான பழக்கங்களுக்கு, பட்ட யத்தின் பல பிரிவுகள் கடுமையான தடை விதித்தன. மக்கள் இக் கொடுமைகளைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருந்திருப்பார்களானல் அவைமுலம் ஐரோப்பாவிலிருந்தது போன்ற மிக மோசமான நிருவாகச் சட்டம் உருவாகியிருக்கும்.

indsft lu luluh 255
மகாபட்டயமானது தற்காலிகத் தீமைகளுக்குத் திட்டவட்டமான, கரும சாத்தியமான மாற்றுவழிகளைக் கொண்டிருந்ததால் அது முதன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. கருத்தியல்பான கொள்கை எதுவும் அதன் வாசகங்களில் அருகியே காணப்பட்டது ; பிந்திய தலைமுறைகளைச் சேர்ந்த வர்கள் நினைத்ததினுங் குறைந்த அளவிற்கே அது கருத்தியல்பான கொள்கைகளைக் கொண்டிருந்தது. எனினும் இரன்னிமீட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி பொதுப்பண்பும் கருத்தியற் பண்பும் வாய்ந்ததாக இருந்தமையினலேயே மகாபட்டயமானது வரலாற்றில் ஒரு முக்கிய செல் வாக்கும் பெறுவதாயிற் று. அரசஞெருவன் பிற்போக்குடைய நிலமானியக் காரர் கூட்டத்தினுலன்றி, பரன்களின் தலைமையிற் கூடிய நாட்டு மக்க ளால் ஒழுங்கான முறைக்குக் கொண்டு வரப்பட்டான்; இதுகாறும், சட்டங் களைத் தான் நினைத்தவாறு திரிக்கவும் பாலனஞ் செய்யவும் அரசனுக்குத் தனியுரிமை இருந்தது ; ஆயின், மகாபட்டயத்தின் பின், அக்கடுங்கோலன் அச்சட்டங்களுக்கே பணிந்து நடக்கவேண்டியவனஞன். முடியின் அதி காரத்தை நாட்டு மக்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு முறை ஆரம்பமாகி யிருந்தது.
இக்காரணத்தினலேயே மகாபட்டயம் நுட்பமான ஓர் ஆவணமாயிருந் தும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாய காலத்தே வரையப்பட்ட விடுதலைப் பிரகடனத்திற் காணப்படும் பொதுமைப்பாடுகள் பலவற்றைப் பெருதிருந்தும், மனித உரிமைகள் பற்றி எதுவுமே அதிற் சொல்லப்படா திருந்தும், இச்சாதனம் பிந்திய ஊழிகளில் மக்கள் சிந்தனையில் ஆழ்ந்த நிரந்தரமான செல்வாக்கை-உண்மையில் இப்பொருளின் எக்கருத்துப்படி பார்த்தாலும்-செலுத்தியது. பதின்மூன்றம் நூற்றண்டு முழுவதும் இப் பட்டயம் சம்பந்தமான போராட்டம் கட்சியினரிடையே நடைபெற்றுவந்தது. அப்பட்டயம் அடிக்கடி புதிய பதிப்பாக வெளியிடப்பட்டும், திருத்தப்பட்டும், மீறப்பட்டும், மீட்டும் உறுதியாக்கப்பட்டும் வந்ததால் இவ்வாறு போராட்டம் நடைபெறலாயிற்று. எனினும், இரு கட்சியினரும் பட்டயத்தின் 12ஆவது 14 து விதிகளிற் கூறப்பட்டிருந்த நிலமானியப் பொது அவையின் குறிக் கோளினின்றும் விலகி, நாட்டிற்குரிய பாராளுமன்றம் நிறுவுவதென்னும் பரந்தஉயர் நோக்கத்தை நாடிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனல், எட்டு வேட்டு காலத்தில் பாராளுமன்றங்கள் முற்ருக நிறுவப்படும்வரை, பட்ட யத்தின் கருத்துக்களே மக்கள் எண்ணத்தில் முதலிடம் பெற்றிருந்தன.
பட்டயத்தின் கருமம் நிறைவேறிவிட்டதால், அது 14ஆம் 15ஆம் நூற் ருண்டுகளில் பின்னணிக்குச் சென்றது. மக்கள் மனதிற் பட்டயம் வகித்து வந்த இடத்தைப் பாராளுமன்றம் ஆட்கொண்டது. பிற்காலத்திலிருந்த படியெடுப்போரும், முற்காலத்திலிருந்த அச்சிடுவோரும் மகாபட்டயத்தின் மலிவான ஆங்கிலப் பதிப்புக்களை வெளியிடவேண்டுமென்று கேட்கப்பட வில்லை. தியூடர் வமிசத்தினர் காலத்தில், அரசனுக்கும் மக்களுக்கு

Page 138
256 பிற்கால வரலாற்றில் மகா பட்டயம்
மிடையே நலவுரிமைகள் பற்றிய வித்தியாசம் வற்புறுத்தப்பட்டதாலும் அரசனும் மக்களும் பதினரும் நூற்றண்டு முழுவதும் தங்களுக்கிடையே யிருந்ததாகச் சொல்லப்பட்ட இவ்வேறுபாட்டை மறுப்பதில் ஒத்த ஆர்வம் காட்டியமையாலும், மகாபட்டயம் அக்காலப் போக்கிற்கு சிறிதும் ஒவ்வாத தாகப் போய்விட்டது; செகப்பிரியரின் “யோன் அரசன்’ நாடகம், அவ் வாசிரியர் மகாபட்டயத்தைப் பற்றி அறிந்திருக்கவும், அக்கறைப்படவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் ; எனினும் அந்நாடக ஆசிரியர் இரண் டாம் இரிச்சாட்டு அரசனின் பதவி இழப்பையும் மரணத்தையும் பற்றிய துன்பவியல் வரலாற்றை விரிவாகவும் வெளிப்படையாகவும் கூறிப்போந் துள்ளார்.
ஆனல் முதலாம் சேமிசு மன்னன் காலத்தில் மன்னனும் மக்களும் மாறுபட்டு நின்றபொழுது, மகாபட்டயம் முன்னெருபோதுமிலாமாட்சியுடன் மீண்டும் விரைந்து செயற்படலாயிற்று. கோக்கு, செல்டென் என்பவர்களது ஊழியில், இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை வற்புறுத்திய தொன் மை ஆராய்ச்சியாளரும் வழக்கறிஞரும் மகாபட்டயம் என்னும் பேருருவம் காலமென்னும் புகைப்படலத்தினூடே அந்நாட்டின் சுதந்திரத் தேவதை யாகக் காட்சியளிப்பதைக் கண்டனர். அவர்கள் சாசனத்தின் விதிகளுக்குக் கொடுத்த தப்பான விளக்கங்கள் விடுதலை பெறுவதற்கு அப்பொழுது எவ்வாறு உதவியாயிருந்தனவோ, அவ்வாறே இடைக்காலப் பழமைவாதி களுக்கு இப்பொழுது அவை திகைப்பூட்டுவனவாயிருந்தன. இரன்னிமீட் டிலே தொடங்கிய போராட்டம் பாராளுமன்றத்தையும் வழமைச் சட்டத்தை யும் இங்கிலாந்துக்குப் பெற்றுத்தரும் போராட்டமாகி, சுதுவாட்டு மன்னர் களுக்கு எதிராக வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தது.
மறுக்கவியலா உறுதியும், சட்டவமைதியும் பெற்ற சுதந்திரத்துக்கும் நிலையூன்றிய நலவுரிமைகளுக்கும் பெயர்போன 18 ஆம் நூற்றண்டில், அனைத்திலும் மிகச் சிறந்ததான இப்பட்டயம் பிளாக்குத்தன், பேக்கு, மற்றும் ஆங்கில நாட்டு மக்கள் ஆகியவர்களாற் போற்றப்படலாயிற்று. ஆங்கிலநாட்டு அரசியல் யாப்பின் எழுச்சிச் சின்னமாக அது விளங்கிற்று. ஆகையால், இதனினும் கடுமையான ஊழி தொடங்கி, இதுகாறும் நிலவி வந்த ஒழுங்கமைப்புக்கு மாருகக் குடியாட்சிமுறை தலைதூக்கிய பொழுது, போராட்டத்திற் சம்பந்தப்பட்ட கட்சியினர் தாங்கள் போற்றிவந்த மகாபட்ட யத்தைச் சாதகமான முறையிற் பயன்படுத்தலாயினர். பிற்று கட்சியினர் இரன்னிமீட்டிலிருக்கும் பாசறையிலிருந்து வெளியிடப்பட்ட கட்டுப்பாடற்ற தும் மிகச் சிறந்ததுமான அரசியல் யாப்பு பற்றிப் பெருமைப் பட்டனர்; ஆனல் அந்த யாப்பை யாக்கோபின் கட்சியினரும் அவர்சார்பினரும் இப்பொழுது தாக்கினர். வாய்ப்பூட்டுச் சட்டங்கள், தகவற்ற முறை யிலே நடுவரைத் தெரிவு செய்தல், வாக்குரிமை சம்பந்தமான கட்டுப் பாடுகள் ஆகியவற்றைப் பருமாற்றவாதிகள் எதிர்க்கும்போது, மகாபட்டய

மூன்றம் என்றியின் ஆட்சி 257
திற் கூறியிருப்பனவற்றையும் அதன் கருத்தையும் ஒருங்கே சுட்டிக்காட்டினர். மகாபட்டயத்தின் பெயரால் அமெரிக்கா புரட்சி செய்தது ; அதன் நினைவு கொண்டு அந்நாடு இங்கிலாந்துடன் ஆன்மீக நட்புறவை நாடுகின்றது. மகாபட்டயத்தை வரலாறு சம்பந்தமானதொரு பத்திரமாக ஆராய்வது மயக்கம் தீர்ந்த இக்காலமக்களாகிய எங்களின் கடமையாகிவிட்டது. அப் பட்டயத்தின் வரலாற்றுமகிமையானது 1215 ஆம் ஆண்டு மக்கள் எந்நோக் கங்களுடன் அதன் வாசகங்களை அமைத்தார்கள் என்பதை மட்டுமின்றி, அம்மக்களின் சந்ததியார் எண்ணத்தில் அது எத்தகைய விளைவை எற் படுத்தியுள்ளது என்பதையும் பொறுத்துள தென்பதை நாம் மறக்க லாகாது.
பாராளுமன்ற அமைப்புக்களைப் பற்றிச் சிறிதும் அறிந்திராத பரன்கள்,
சூழ்ச்சித்திறனுடையவனும், வல்லவனுமான தம் எதிரியின் தற்காலிகத்
தேவையின் காரண்மாக அவனிடமிருந்து பறித்துக்கொண்ட உடன்படிக் கையை செயல்முறைக்குக் கொண்டுவருவதற்காக மிகவும் குறைபாடுடைய அமைப்பு முறைகளையே கையாளலாயினர். பட்டயத்தின் இறுதியிற் காணப் பட்ட விதியொன்றின்படி யோன் அரசன் இருபத்தைந்து பரன்களடங்கிய புரட்சிக் குழுவொன்றினுக்கு ஒருரிமையை வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தான். அதன் பிரகாரம் மன்னன் அப்பட்டயத்தின் எந்த நிபந்தனை யையாவது மீறினல், சாத்தியமான எல்லா வழிகளிலும் அவன் சொத்தைப் பறிக்கவும் அவனைத் துன்புறுத்தவும் உரிமையளிக்கப்பட்டிருந்தது. அதா வது மன்னனின் கோட்டைகளையும், காணிகளையும் உடைமைகளையும் கைப் பற்றவும் வேறு எந்த வழியிலோ அவனுக்குத் தொல்லை கொடுக்கவும், அக்குழுவுக்கு உரிமை இருந்தது. இரன்னிமீட்டு நிகழ்ச்சியை உடனடுத்து நிலவிய நிலைமை நாட்டுக்கு மிகக் கேடுபயக்கக்கூடியதாயிருந்தது. பட்ட யத்தை நிராகரிக்கும்படி போப்பாண்டவரும் / அவர் தூதரும் யோன் அரசனைத் தூண்டினர் ; பரன்கள் பிரெஞ்சு அரசனது படை உதவியை நாடி நின்றனர். இவ்வாறக மிகக் கொடிய வல்லாட்சிக்கும் ஓர் அன்னிய அரசமரபினராட்சிக்குமிடையே ஆங்கிலேயர் உழன்று ஒருவாறு தப்பினர். * அளவெஞ்சியமீச்சுப்பழமும் புதிய சைடருமே ’ மக்களைக் காத்தன. யோன் அரசன் மரணமடைந்தபின், மகாபட்டயத்தின் தத்துவங்களின் அடிப்படையில் ஆங்கிலநாடு மீண்டும் ஒன்றுபடுவதற்கான இறுதிவாய்ப்பு உண்டானது.
உவில்லியம் மாசல், இயூபெற்று த பேக்கு போன்ற நாட்டுப்பற்றுடைய அரசியலறிஞர்களது ஆதரவைப் பெற்று, குழந்தைப் பருவத்தினனகிய III ஆம் என்றி நாட்டுமக்களைத் தனக்குச் சார்பாக்குவதில் வெற்றி பெற்றன் ; இருசாராருக்குமிடையே இலாங்டன் மத்தியத்தராக விளங் கினர். சில ஆண்டுகளுக்குள்ளாக நாட்டில் அமைதி எற்பட்டது. சிலமாற் றங்களுடன் பட்டயம் மீண்டும் வெளியிடப்பட்டது : ஒரு புறம் பிரெஞ்சுக்
1216.

Page 139
1216
1227.
258 மூன்றம் என்றியின் ஆட்சி
காரர் இங்கிலாந்திலிருந்து விரட்டப்பட்டனர்; மறுபுறம் ஆங்கில நாட்டு அரசியல் மீது பெருகிவந்த போப்பரசரின் செல்வாக்குத் தடுக்கப்பட்டது. நிலமானிய வகுப்பினர் தங்களுக்காகக் கட்டியிருந்த கோட்டைகளும், உள்நாட்டுக் கலகத்தின்போது அரசனிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்ட கோட்டைகளும் இடித்துத் தள்ளப்பட்டன. அல்லது பலவேளைகளில், கடுமை யான முற்றுகைகளுக்குப் பின் அவை அரசன் வசம் ஒப்புவிக்கப்பட்டன. குற்றகவையனன I ஆம் என்றியின் ஆட்சி தொடங்கியபோது, போர் நிகழ்ந்துகொண்டிருந்தது ; ஆட்சியறவு மீண்டுந் தலைதூக்குமோ என்ற அச்சமும் காணப்பட்டது. எனினும், அரசன் பெயரால் ஆட்சி செய்த அரசியலறிஞர்களின் நேர்மையும் திறமையும் அவனட்சியை நல்லாற்றுப் படுத்தின. ஆனல் இவ்வரசன் தனக்கிருந்த அதிகாரத்தைப் பிற்காலத்தில் எப்போதாவது நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வூழியில் அரசவை யின் அதிகாரம் வளர்ந்து வந்தது. மாசல், இயூபெற்று ஆகியோர் இங்கிலாந்திற் பதிலாட்சி நடத்தியபோது இவ்வவை மூலமே ஆட்சி நடத் தினர். அவ்வாறிருந்தும் இந்த அவையானது சிறிதும் வரையறுக்கப்படாத ஒரு குழுவாகவே இருந்தது.
III ஆம் என்றி, ஒத்துக்கொள்வோன் என்றழைக்கப்பட்டவனகிய எட்டு வேட்டு மன்னனைப் பலவழிகளில் ஒத்திருந்தான். எட்டுவேட்டிடம் கொண் டிருந்த பெருமதிப்பின் காரணமாக, அவ்வரசன் தன் வாழ்க்கைப் பணி யெனக் கருதிக் கட்டிய கோயிலை II ஆம் என்றி இடித்துவிட்டு, எட்டு வேட்டின் ஞாபகச் சின்னமாக அவன் உயரக் கட்டியிருந்த பலிபீடத்தைச் சுற்றி இன்று நாம் காணும் வெசுற்று மினித்தர் ஆலயத்தைக் கட்டு வித்தான்.
என்றியின் அரசியற் கருமம் அவனது கடவுட்பற்றுக்கு அமைவுடையதாக விருந்தது. இதனல், போப்பரசர் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் கொண் டிருந்த பேரவாக்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக என்றி அமைந்தான். மதகுருக்களைப் போப்பரசரிடமிருந்து காப்பாற்றுவதற்கு அரச னுக்கிருந்த அதிகாரத்தைத் தவிர வேறுவழி எதுவுமில்லாதிருந்ததால், என்றி அரசன் தன் கடமையினின்று தவறியபோது, போப்பரசரின் பேரா சையெனும் பெரும்புயலுக்கு மதகுருக்கள் இரையாக வேண்டியதாயிருந் தது. போப்பரசரின் “ ஏற்பாடுகளின் ” படி, எண்ணிறந்த பல கோவில் மானியங்களுக்குப் பொறுப்பாளிகளாகப் பல இத்தாலியரும் பிறநாட்டவர் பிறரும் அமர்த்தப்பட்டனர். இவர்களுட் பெரும்பாலோர் தீயநடத்தை உடையவர்; பொதுவாக தத்தங் கோவிற்பதிகளில் வாழாதவர்; ஆங்கில மக் களின் ஆன்மநோயைத் தீர்க்கப் பெரும்பாலுந் தகுதியற்றவர். ஒர் அமயம் இங்கிலாந்தில் எற்படவிருந்த முந்நூறு கோவில் மானியப் பதவிகளுக்குத் தம்மிடம் விசுவாசமுடையவராயிருந்த உரோமரை நியமிட்பதாகப் போப் பரசர் உறுதியளித்திருந்தார். அதனிடையில் இரண்டாம் பிரெடரிக்குப்

மூன்றம் என்றியின் ஆட்சிக்கேடு 259
பேரரசனையும் மற்றவர்களையும் எதிர்ப்பதற்கான போப்பரசரின் அரசியற் சூழ்ச்சித் திட்டங்களை ஆதரிப்பதற்காக ஆங்கில மதகுருக்கள் ஈவிரக்கமற்ற வரிவிதிப்புக்காளாயினர். இவ்வாறன அனுபவங்கள் போப்பரசருக்கு விரோதமான உணர்ச்சியை ஆங்கில நாட்டுமக்களிடை வளர்த்து நாளடைவில் அவ்வுணர்ச்சி அதிகரித்து ஈற்றில் மதசீர்திருத்தத்தை நிறைவேற்றியது. பழங்காலத்தில், நோமானியர் வெற்றிக்காலத்திலிருந்தாவது ஆங்கில மக் கள் போப்பரசரின்மீது உண்மைப் பற்றுக் கொண்ட சிறந்த பிரசைகளாகக் கருதப்பட்டுவந்தனர். போப்பரசருக்கு விரோதமாகப் புதிதாக முளைத்த அவர்களது பகைமை-அதில் பெரும்பாலான மதகுருமாரும் பங்குபெற்றி ருந்தார்களெனினும்-விக்கிளிபு காலம்வரை திருச்சபை சார்பான கொள் கைபற்றிய காரணகாரியத் தொடர்புடைய அடிப்படையில் அமைந்திருக்க வில்லை ; அரசாங்க நடவடிக்கைகளின் மூலம் இப்பகைமை ஒரோவழி வெளிப்பட்டது.
ஐரோப்பாவிலும் இத்தாலியிலும் போப்பரசருக்கிருந்த பேரவாக்களை நிறைவேற்றும் முகமாக, III ஆம் என்றி தன் இரண்டாவது புத்திரனன, இலங்காசுற்றர் எட்டுமண்டை தகராறுக்கிடமாயிருந்த சிசிலிநாட்டு அரசுரி மையை எற்றுக்கொள்ளும்படி அனுமதித்தான் ; மேலும் தன் சகோதர ஞகிய கோண்வால் இரிச்சாட்டைப் பேரரசுக்குரிய சிங்காசனத்துக்கு எற்பட்ட போட்டியில் ஒரு அபேட்சகனக நிறுத்தி வைத்தான். சிசிலிநாட்டில் உண்டான அரசுரிமைப் போருக்கும் பேரரசின் அரியணையைப் பெறுவதற் குக் கொடுக்க வேண்டிய இலஞ்சப் பணத்துக்கும் இங்கிலாந்து செலவிட வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆங்கிலேயருடைய நல உரிமை களுடன் சற்றேனுஞ் சம்பந்தப்படாத இத்தகைய கோரிக்கைகள் பரன் களுக்கும் நாட்டுமக்களுக்கும் கோபத்தை ஊட்டின.
8 AV
ஆகவே அரசனுக்கு ஆளும் வயது எற்பட்ட பின்வரும் ஒரு தலைமுறை யாகக் கொடுங்கோலாட்சி தொடர்ந்து நடைபெறலாயிற்று. மற்றெரு உள்நாட்டுக் கலகமும் யாப்பமைப்புக் காலமும் ஏற்படும்வரை, அப்போது நிலவிய அதிருப்தி வளர்ந்து வந்தது. இதனை “ மகாபட்டயம் பற்றிய போராட்டம்” என்றும், யோன் அரசனுட்சியில் எழுந்த பிரச்சினைகளின் தொடர்ச்சியே என்றும் கூறலாம். ஆனல் யோன் காலத்திற்கும் இப்போ தைய நிலைச்குமிடையே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசமிருந்தது. யோன் அரசன் காலத்தில் அரசன் ஒருபுறமும், மக்கள் ஆதரவைப் பெற்ற பரன்கள் மறுபுறமும் நின்று இருமுனைப்போராட்டம் நடத்தினர் ; ஆனல் 111 ஆம் என்றி காலத்தில் நடைபெற்றது மும்முனைப் போராட்டமாகும். அரச அதிகாரிகளாகவும் நடுவர் குழுவினராகவும் தத்தம் பகுதிகளில் கருமமாற்றி வந்தவரான நைற்றுக் ளையும் கனவான்களையும் சேர்ந்த வகுப்பினர்-அரசியலில் “ விடலைகள் ” போன்றிருந்தவர்கள்-நாட்டு அரசியல் விவகாரங்களில் தமக்கென ஒரு புதிய பாதையை இப்போது
255.
1257.
1258
1265.
1258

Page 140
1264
1265.
260 சைமன் மோன்போட்டு
வகுத்துக்கொண்டனர். ஒட்சுபோட்டு “ எற்பாடுகளில் ” பரன்களின் சுய நலம் வெளிப்பட்டது; இச் சுயநலங்கண்டு வெறுப்புக்கொண்ட இவ் வகுப்பினர், நாட்டின் தலை நிலக்கிழானன அரசனிடமிருந்து பரன்கள் தங்கள் நலனுக்காகப் பிடுங்கிக் கொண்ட உரிமைகளை, பண்ணையாட்கள், நிலவார உரிமை யுடையவர்கள் என்ற முறையிலே தங்களுக்குங் கொடுக்க வேண்டுமெனக் கோரி, கடைசியில் அவ்வுரிமைகளைப் பெற்றனர். அரச நீதி, பெருநிலக்கிழார் நீதி ஆகிய இரண்டில் இவ்வகுப்பினர் அரச நீதியையே விரும்பினர் என்க.
என்றி அரசனது கட்சியின் பலம், உண்மையில் அவனுடைய எதிரி களிடையே நிலவிய பிளவுகளிலேயே தங்கியிருந்தது; இப்பிளவுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் அவனது திறமை வாய்ந்த புத்திரன் எட்டுவேட்டு ஆவலாயிருந்தான். அரசனுக்கெதிரான முயற்சி பொதுமக்கள் இயக்கமாக மாறுவதைக் கண்ட பரன்களில் அநேகர் அரசன் பக்கமாகச் சேர்ந்து கொண்டனர். ஆனல் அரசியல் யாப்புநெறியை அல்லது சீர்திருத்தத்தை விரும்பிய சட்சணியர் சைமன் தி மோன்போட்டு என்பானைத் தொடர்ந்து ஆதரித்தனர். இக்கட்சி பரன்களின் கொள்கை களையும் குடியாட்சிக் கொள்கைகளையும் ஒருங்கே உடையதாக விளங்கியது. இவ்வாருக சுதுவாட்டு மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் போன்று, அப்போதைய போராட்டமும் வகுப்புப்போராட்டமாக விராது கருத்துப் போராட்டமாக மாறியது.
உலூயிசு என்னுமிடத்திற் சைமன் தி மோன் போட்டுக்கு வெற்றியும், அதற்கடுத்த வருடத்தில் ஈவுசம் எனுமிடத்தில் அவனுக்குத் தோல்வியும் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்த போரின் இறுதிக் கட்டத்தில், அவன் கட்சியிலிருந்தவர்கள் பல் வேறுபட்டவராவர். பரன்களிற் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்தோர்; அரசியலில் அதிக அக்கறை காட்டியவர்களான நைற்றுக்கள், கனவான்கள் ஆகியோர் ; போப்பரசருக்கும் அரசனுக்கு மிடையே இயற்கைக்கு முரணுக எற்பட்ட தொடர்பை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மதகுருக்களிற் சிறந்தவர்கள் ; ஒட்சுபோட்டுப் பல்கலைக்கழகத்து மாணவர்கள் ; குடியாட்சி ஆர்வத்தின் உச்சகாலத்தில், ஏழைகளிடையே தொண்டாற்ற வேண்டுமென்று போதித்த துறவிகளைப் பின்பற்ற முன் வந்தவர்கள்-இத்திறத்தார் அனைவரும் மோன்போட்டுக் கட்சியிலிருந்தார் கள். போப்பரசர் சைமனைத் திருச்சபையிலிருந்து மதவிலக்குச் செய்த போதிலும் வலிமைவாய்ந்த சமயச் சத்திகள் அவன் சார்பாக இருந்தன. இலண்டன் நகரப் பிரசைகள் சைமன் கட்சிக்கு ஆதரவளித்தனர்; முதுகிட் டோடும் அவர்கள் படையை உலூயிசுப் போரில், உரூபெட்டு என்பானைப் போன்று, எட்டுவேட்டு அரசன் ஒருபுறத்திற் பின்தொடர்ந்து செல்ல, மறு புறத்தில் ஒலிவர் என்பானைப்போன்று, சைமன் முக்கியமான அரச படையினை அழித்துக் கொண்டிருந்தான்.

சைமன் மோன்போட்டு 26.
சைமனது கடைசிக் காலத்திலிருந்த சீர்திருத்தக்கட்சியினர், “சட்டம் என்பது அரசனுக்கு மேற்பட்டதொன்று ”, எனுங் கருத்தைத் தெளிவாகக் கொண்டிருந்தனர் என்பதை அப்போதைய அரசியற் பாடல்களும் கட்டுரை களும் எடுத்துக்காட்டும்.
இலீசெசுற்றர் எளாகிய சைமன் தி மோன்போட்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவனகவும் அந்நாட்டில் கல்வி பயின்றவணுகவும் இருந்தான். ஆங்கில உயர்வகுப்பினர் தங்களுடைய அன்றன்றை வாழ்க்கையிற் பிரெஞ்சு மொழியைப் பேசிவந்த அவ்வூழியில், சைமன் உண்மையிலேயே இருதய பூர்வமாக ஓர் ஆங்கிலேயனக விருக்க முடிந்தது. குருெம்வெல், அல்லது சதம்போன்று பிறரை அடக்கியாளும் இயல்புகளைப் பெற்றவனகிய சைமன் இரண்டாந்தரமான நிவைகிக்கக்கூடியவனல்லன். அவனைப் பேராசைக் காரன் எனக் குற்றங்கூறுவது பொருத்தமற்றது. அடக்கியாளும் இயல் புடைய பிறரைப் போன்று, அவனும் பழிநாணுமியல்பு குறைந்தவனுய் இருந்தான். ஆனல், அவன் தன் நாட்டு நலத்துடனேயே தனது நலனும் ஒன்றித்துளதென்பதை உணர்ந்துகொண்டான் ; அவன் கருத்தை நாட்டினரும் உணர்ந்தறிந்திருந்தனர். இலிங்கன் விசுப்பாண்டவரான குறேசெற்று என்பவருடன் சைமன் கொண்டிருந்த நீண்டகால நட்பின் விளைவாக அவனிடம் நாட்டுப்பற்றுச் சம்பந்தமான பரந்த எண்ணம் எற்படிருந்தது ; குறேசெற்று என்பார் அச்சிறந்த நூற்றண்டில் வாழ்ந்த, பெருந்தன்மையும் கூரறிவும் கல்வி ஞானமும் படைத்த ஒரு சமயத்தலைவராவர். இங்கிலாந்தில் அரசனும் போப்பரசரும் நடத்திய கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் பல்லாண்டுகளாக அவர் பணியாற்றி யுள்ளார். குருெம்வெல் என்பவன் அமிடன் என்பாற்கு நண்பனகவும் பின்தோன்றலாகவுமிருந்தது போன்று சைமன் என்பவன் குருெசெற்று என்பாருக்கிருந்தான். ஆனல் குறேசெற்று உயிரோடிருந்தால் தனது பின் தோன்றலாகிய சைமன் செய்ததை யெல்லாம் ஒப்புக்கொண்டிருப்பார் என்று யாராற் சொல்லமுடியும் ?
தனது கடைசி இருவருடங்களிற் சைமன் தலைமைவகித்து நடத்திய கட்சியானது வியத்தகு முறையிற் பலத்திலும் பலவீனத்திலும் குறெம் வெல்லின் கட்சியை உண்மையாக ஒத்து இருந்தது. குடியாட்சி ஊழிக்கு முன்னரே அக்கட்சியினர் குடியாட்சி வாதிகளாகிவிட்டதால், அவர்கள் வதும் செய்வதற்கு இயலாத நிலையிலிருந்ததுடன், தாங்களாகவே ஒர் உடன்பாட்டுக்கு வரமுடியாதவராயுமிருந்தனர். ஆனல் அவர்கள் ஆற்றிய
உலூயிசு யுத்தம் நடைபெற்ற காலத்துக்குரிய அரசியல் பாடல் ஒன்றுக்கு உதாரணம் வருமாறு.-* மன்னன் தான் செய்யும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவனை மன்னன் சால் சட்டத்தை மீறியதால் அகற்றப்பட்டானே’. கட்சியினரிற் பெரும்பாலோர் தங்கள் தலைவஜனப் போன்று சீர்திருத்தம் செய்வது கடவுளின் விருப்பமாகும் என்ற ஒருவித சமய ஆர்வத் தால் உந்தப்பட்ட வர்களாயிருந்தனர்.
253 இல்.
இறந் தார்.

Page 141
262 சைமனும் ஒலிவரும்,
கருமம் எதோ எதிர்மறை முறையிலாவது எதிர்காலத்தை நிர்ணயிக் கக்கூடியதாயிருந்தது. நேசுபிப் போரிற் போன்று உலூயிசுப் போரிலும் வழிபாடு, பாசுரம், பாடல், வாள் ஆகியவற்றல் வெற்றி கிடைத்தது ; நேசுபிப் போரைப் போன்று இப்போரும் அழித்துவிட முடியாத உண்மையாகும். II ஆம் சாள்சு மன்னனின் மீட்சி எவ்ாவறு வல்லாட்சி யின் மீட்சியாக இருக்க வில்லையோ அவ்வாறே II ஆம் என்றியின் மீட்சியும் இருந்தது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் அரச ஆட்சியின் மீட்சி மூலமாகவே இணக்கமுறையான அரசாங்கம் நிறுவ வழியுண்டு எனக் கருதப்பட்டதால் அவ்வாறு அரச மீட்சியை நாடவேண்டியதாயிற்று.
ஆனல் இவ்விரு சந்தர்ப்பங்களுக்கிடையே வேற்றுமைகளும் உண்டே. குருெம்வெல் மதித்தும் போற்றியும் வந்த பலவிடயங்கள் அழிந்தொ ழிந்தன. ஆனல் தி மோன்போட்டு விடயத்தில் அப்படியாகவில்லை. சைமனிலுங் குறெம்வெல் இங்கிலாந்தை ஆட்சிபுரிவதில் வெற்றி பெற்றதே
தற்கு ஒரளவு காரணமாகும் எனக் கூறுவது முரண்பாடாகாது. எவ்வா றெனில், குருெம்வெல்லின் ஆட்சிவல் ந்தத்தினுற் பன்னிரண்டாண்டுகள் நீடித்திருந்ததால், இறுதியில் அவ்வாட்சியுடன் சம்பந்தப்பட்டிருந்த எல்லா விடயங்களுக்கும் மக்கள் எதிர்ப்புக் கடுமையானதாயிற்று. ஆனல் சைமனுடைய ஆட்சி ஓராண்டுக்கு மேலாக நிலைக்க வில்லை ; உண்மையில் வடக்கிலும் மேற்கிலும் அவனல் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை. ஈவுசம் போர்களத்தில் விடுதலைக்காக உயிர்துறந்த சைமன், நாட்டு மக்கள் எண்ணத்தில் அவர்களது அன்புக்குரிய தியாகியானன்; ஆனல் தியாகி யாவதற்கான பெருமையைக் குருெம்வெல் முதலாம் சாள்சு மன்னனிடம் விட்டுச் சென்ருன்.
சைமன் ஆற்றிய பணி அவன் மரணத்துக்குப் பின் பயன் கொடுத்ததற்கு மற்றெரு காரணமும் உண்டு. ஈவுசமிலே அவனை வெற்றி கொண்ட அவன் மாபெரும் எதிரியின் கூரறிவை அவன் வெற்றி கொண்டான். III ஆம் என்றியின் புத்திரனும் அவனுக்குப்பின் அரசுரிமையுடைய வனுமான எட்டுவேட்டு, “ புரட்சிகளினல் அறிவு பெறும்பாங்குடைய மனிதருள் ” ஒருவனுயிருந்தான். சட்டத்திற்கு அடங்கியும் சட்டத்தைக் கொண்டும் அரசன் ஆட்சிபுரிய வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் மூலமாக ஆட்சிபுரிவது, நாட்டு மக்களை எதிர்த்துச் செய்யும் ஆட்சியினும் பலம் வாய்ந்தது என்றும் எட்டுவேட்டு அறிந்துகொண்டான்.
அங்ங்னமாயின் பாராளுமன்றம் என்பது யாது ? “ பாளிமென்றம் ” என்ற சொல்லை “பயணிலபேசல் ” என்று காளயில் மொழிபெயர்த்தார். * சொல்லாடல் ”, “ கலந்துரையாடல்” என்று அதன் பொருளைக் கவினுறக் கூறலாம். இச்சொல் II ஆம் என்றியின் ஆட்சியின்போது உபயோகிக்கப்பட்டது. வாரக்காரர்-முதல்வரும் அரசமன்றைச் சேர்ந்த மற்ற அங்கத்தவர்களும் கூட்டாக அமர்ந்திருக்கப்பெற்றதும் முற்றிலும்

சைமனும் ஒலிவரும் 263
நிலமானிய முறைக்கே உரியதுமான மன்றத்துக்கே அப்பெயர் வழங்கப் பட்டது. “ பாராளுமன்றம்’ என்ற பெயர், தேர்தல் அல்லது பிரதி நிதித்துவம் என்ற கருத்தை அந்நாளில் உணர்த்துவதாயிருக்கவில்லை : சட்டமியற்றவோ வரிவிதிப்புக்கு வாக்களிக்கவோ அதிகாரமுடைய சபை என்ற கருத்தையும் அச்சொல் உணர்த்தவில்லை. அது சாதாரண அரசவை அல்லது அரசமன்றமாக, அடிக்கடி மாறும் இயல்புள்ளதாக, பெருமையானதும் மாட்சியுடையதுமான அமைப்புக்களையுடையதாக அமைந் திருந்தது. அம்மன்றத்திற் பெருமக்களும் அரசனது ஊழியர்களும் கூடிப் பேசினர். அயல்நாடு உள்நாடு சம்பந்தமான பெரும் அரசியற் பிரச்சினை களைப் பற்றி விவாதித்தனர்; மக்கள் விண்ணப்பங்களையும் அவர்கள் குறைகளுக்கான காரணங்களையும், நாட்டு வருமானத்துக்கான வழிவகை களையும் அரசாங்க விசாரணைகளையும் புதிதாகப் பிறப்பிக்கப்பட வேண்டிய கட்டளைகளையும் பற்றிக் கலந்துரையாடினர். அது சட்டமியற்றும் கருமங் களைக்காட்டிலும் நிருவாகக் கருமங்களிலேயும், நிதி பற்றிய விவகாரங் களைக் காட்டிலும் நீதிபரிபாலன விவகாரங்களிலேயும் அதிக அக்கறை கொண்டிருந்தது. இவ்விடயங்கள் அனைத்தும்பற்றிப் “ பேசி" முடித்த பின் அம்மன்றம் அவை பற்றிக் கருமமாற்றியது; ஏனெனில், அரசாங் கத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் அடக்கியதாய் அம்மன்றம் அமைந் திருந்தது. எனினும் அம்மன்றத்துக்குரிய உறுப்பினர்களைத் தெரிவுசெய் யும் முறை இன்னும் வரையறுக்கப்படாதிருந்தது.
III ஆம் என்றியின் ஆட்சிக்காலத்தில், எப்போதுமல்லாது ஒரோவழி மட்டும் ஒவ்வொரு கோட்டமன்றத்திலிருந்தும் இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட நைற்றுக்களைத் தெரிவு செய்து இழ்மாமன்றத்திற்கு நாட்டின் பிரதிநிதிகளாக அனுப்புவது வழக்கமாயிருந்தது. இச்செயலின் நோக்கம் புதியவொரு மன்றத்தைப் படைப்பதென்றே, “ பாராளுமன்றத்தைத் தோற்றுவிப்பதென்றே ’ கொள்ளலாகாது. பழைய அரசமன்றின் நிறை வைகலுக்குச் சிலபுதிய உறுப்பினரை அழைப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. அரசனையோ அவன் எதிரிகளையோ சேர்ந்த கட்சியினரின் கருமமாகவும் இதனைக் கொள்ளக் கூடாது. இருசாராரும், “அரசியல் விடலைகள் ” யாது கருதுகிறர்கள் என்பதை அறிந்துகொள்வது நலம் என்று எண்ணினர். அது இயற்கையான ஒரு மலர்ச்சியின் பாற்பட்டதால், பிறர் கவனத்தைக் கவராத முறையில் நடைபெற்று வந்தது. கடந்த இருதலைமுறைகளாகக் கோட்டமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நைற்றுக்கள், அரசனுடைய நீதிபதிகளோடும் அதிகாரிகளோடும் அமர்ந்து அவ்வத் தலத்துக் கருமங்களைக் கவனித்து வந்திருந்தனர். அவர்களை ஒரு மத்திய இடத்தில் ஒன்றகக் கூட்டுவித்து, அரசனை அவனுடைய நீதிபதிகளோடும் அதிகாரிகளோடும் ஒருங்கே சந்தித்துக் கருமமாற்றக்

Page 142
264 பாராளுமன்றப் பிரதிநிதிகள்
கூடியதாகச் செய்தமை ஒருபடி முன்னேற்றமான செயல் என்று சொல்ல லாம். இதுதவிர, தனித்தனி கோட்டங்களிலிருந்தும் பரோக்களிலிருந்தும் வந்த பிரதிநிதிகள் தங்களுடைய சமூகத்தினருக்குரிய கருமங்களைக் கவனிப்பதற்காக அரசமன்றுக்குச் சென்று வருவது நெடுங்கால வழக்கமாக இருந்து வந்தது. பின் நடந்ததையெல்லாம் அறிந்திருக்கின்ற எங்களுக்கு இப்பிரதிநிதிகளைக் கூட்டாகவும் உத்தியோகபூர்வமாகவும் கூட்டுவித்தல் மிகப் பெரிய கருமமாகத் தோன்றக்கூடும். ஆனல் மத்தியகால உலகில், சமுதாயப் பிரதிநிதித்துவத்தின் மூலமாகக் கருமமாற்றுவது சாதாரண மானதே. இம்முறையைப் பின்பற்றி, ஒரு மண்டிலத்தின் மத்திய மன்றத் துக்குப் பிரதிநிதிகளை அழைப்பது இயற்கையானதேயன்றிக் குறிப்பிடத்தக்க விடயமாகாது. மரவிதை காற்றின் மூலம் நிலத்தில் தூவப்படும்பொழுது காட்டுமரங்களுக்குப் பொறுப்பானவன் அதுபற்றி அதிக அக்கறைப்படா திருப்பது இயற்கைதானே.
அப்பொழுதும் அதனையடுத்துவந்த பல காலமாகவும் பாராளுமன்றத் துக்கு அழைப்பு வரும்போது அது பெரும்பாலும் ஒரு சுமையாகவும், பொதுநன்மைக்காக விருப்பமில்லாமலே செய்ய வேண்டியதொன்ருகவும் கருதப்படலாயிற்று ; நடுவர் குழுவிற் பணியாற்ற வேண்டியவர்கள் இன்று எவ்வாறு நினைக்கிருர்களோ, அவ்வாறே அக்காலத்திற் பாராளுமன்றத் திலே கருமமாற்றுவது சம்பந்தமாகவும் கருதப்பட்டது. பல சமூகத்தினர், குறிப்பாகப் பரோக்களிலிருந்தோர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கப் பல்காலுந் தவறினர் ; கோட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி களும் சில அமயங்களிற் பணியாற்ற விரும்பாது தலைமறைவாயிருந்தனர். கோட்டமன்றத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட புது உறுப்பினரை அம் மன்றத்திலே பாராட்டி, அவருக்குக் கிடைத்துள்ள, செலவுக்கிடமானதும் ஆபத்துண்டாகக் கூடியதுமான பெருமையை வஞ்சப் புகழ்ச்சியுடன் குறிப் பிட்டு நீங்கள் பேசும் பொழுது, அவர் மெதுவாக அவ்விடத்தைவிட்டு நழுவி, தமது குதிரைமீதிவர்ந்து ஏதேனுமொரு புகலிடஞ் சென்றி ருப்பார்; தமக்குப் பதிலாக உங்களை அம்மன்றம் தெரிவுசெய்யப்படும்படி விட்டுச் சென்ற அவர் செயல் உங்களுக்குக் கசப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை. “ தேர்ந்தெடுப்பதற்கான உரிமை” என்பது ஒரு சிறப்புரிமை யாகவோ “ மனித உரிமையாக’ அன்று கருதப்படவில்லை.
III ஆம் எட்டுவேட்டு ஆட்சிக்காலத்தில், தெவனிலே தொலைவிலிருந்த தொறிங்டன் பரோவானது பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதிக%, அனுப் பாதிருக்கும் “ உரிமையை’ விண்ணப்பம் மூலம் பெற்றிருந்தது. எனெனில், அங்கத்தவர்களுக்குரிய செலவினங்களைப் பொறுப்பது அவர்களை அனுப்பிவைத்த சமூகங்களின் கடமையைாயிருந்தது.

பாராளுமன்றத்தில் நகரத்தார் 265
இவ்வாறிருந்தும், கோட்டத்தைச் சேர்ந்த நைற்றுக்கள் பாராளுமன்றத் தில் வந்திருந்தமையாற் பிரமுகர்களடங்கிய அம்மன்றத்தின் அதிகாரம் பலப்பட்டதொடு, அங்கு செய்யப்பட்ட அறிவுரைகளுக்குத் துணையாயிருக்க வும் எதுவாயமைந்தது. தனது ஆளுகைக்குட்பட்ட “ சமூகத்தினரையோ’ அன்றி “ பொதுமக்களையோ’ அவ்வவரின் பிரதிநிதிகள் வாயிலாகப் பாராளுமன்றத்திற்கு “ வருகை தரவேண்டுமென்று ” கட்டாயப் படுத்து வது தனக்கு வசதியாகவும் அனுகூலமாகவும் இருப்பதை அரசாங்கம் உணர்ந்தது. ஆகவே உலூயிசுப் போருக்குப் பின் எற்பட்ட புரட்சியின் போது, சைமன் தி மோன்போட்டு என்பான் கோட்டத்து நைற்றுக்களை மட்டுமன்றி, பட்டயம் பெற்ற பரோக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதன் முறையாக இரு பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அழைத்தான். நகரப் பிரதிநிதிகள் தன் கட்சிக்குச் சார்பாக இருப்பர் என சைமன் கருதி யிருக்கலாம் ; கட்சி அரசாங்கத்தின் பொது நிலைமையை சமூகத்தினர் யாவரின் பிரதிநிதிகளையும் ஒன்ருகக் கலந்து பேசுவதாற் பலப்படுத்த முடியும் என்ற உண்மையை ஆங்கில ஆட்சியாளருள் முதன்முதலில் உணர்ந்தவன் இவனேயாவன். நிதிவிவகாரம் மட்டும் அன்றி நீதிவிவகாரம் சம்பந்தமாகவும் பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டதுடன், அவற்றுக்கு மேலாக “ கொள்கைப் பிரசாரத்துக்காகவும் ” ஒருவாறு அது பயன் படுத்தப்பட்டது. அம்மன்றத்துக்கு நகரப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டன ரென அரசகட்டளை வாயிலாக நாம் அறிகிருேம் ; ஆனல் அவ்வாறு எத்தனைபேர் அழைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், அவர்கள் அங்கு எதாவது கருமமாற்றியிருந்தால் அது எவ்விதமான கருமமென்றும் எமக்குத் தெரியாது. அக்குறிப்பிட்ட பாராளுமன்றம் ஒரு புரட்சிகரமான மன்றமாக விளங்கியது ; அதற்குச் சைமன் கட்சியைச் சேர்ந்த பரன்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் ; ஆனல் முதலாம் எட்டுவேட்டு காலத் தில் முறையாகக் கூட்டுவிக்கப்பட்ட பாராளுமன்றங்களுக்கு நகரப் பிரதி நிதிகளை அழைக்கும் முறை பின்பற்றப்பட்டதற்கு இப்பாராளுமன்றம் ஒரு வழிகாட்டியாக விருந்தது.
ஆங்கிலப் பாராளுமன்றம் எந்த ஒரு தனிமனிதனலும் தோற்றுவிக்கப் படவில்லை ; அதனைத் தோற்றுவித்தவன் சைமனுமல்லன் ; எட்டுவேட்டு மல்லன். எந்த மனிதனுலும் தோற்றுவிக்கப்படாது அது தானக வளர லாயிற்று. ஆங்கில மக்கள் வழக்கமாக வல்லாட்சியாளர் ஆட்சியைக் காட்டிலும் குழுக்களது ஆட்சியையும், தெருச்சண்டைக்குப் பதிலாக தேர்ந் தெடுக்கும் முறைகளையும், புரட்சிகரமான முறைமன்றங்களைக் காட்டிலும் * பேச்சுக்கடைகள் ” எனப்படும் கலந்துரையாடும் மன்றங்களையுமே விரும்பி வந்திருக்கின்றனர்; எனவே, பாராளுமன்றம் என்பது பல நூற்றண்டு களாக வளர்ச்சியடைந்து வந்துள்ள ஆங்கில மக்களுடைய பகுத்தறிவு, நல்லியல்பு ஆகியவற்றின் இயற்கை விளைவாகும்.
265

Page 143
அத்தியாயம் IV
மத்தியகாலத்திலிருந்த தொகுப்புணர்ச்சி-பல்கலைக் கழகங்கள்-பண்டாரங்கள்-யூதர்கள்-வழமைச் சட்டமும் வழக்கறிஞர்களும். எட்டுவேட்டு மன்னர்காலப் பாராளுமன்றம். பொதுமக்கள்சபை - சமாதான நீதவான்கள். அரசர் : 1 ஆம் எட்வேட்டு, 1272-1307; 11 ஆம் எட்வேட்டு, 1307-1327.
மத்திய ஊழியில் மக்கள் கூட்டாகச் சிந்தித்தும் செயலாற்றியும் வந்த னர். ஒவ்வொருவனுடைய மதிப்புநிலையும் அவனவனுக்குரிய பண்ணை, பரோ, குழுமம், அறிவுத்துறை சார்ந்த பல்கலைக்கழகம், அல்லது துறவி மடம் போன்ற பல சமுதாயநிறுவனங்களில் அவன் வகிக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பண்ணை எசமானனுடனும் ஆச்சிர மத் தலைவருடனும் முறையே பண்ணை அடிமையும் துறவியும் தொடர் புடையவராயிருந்ததனல், தத்தம் எசமானர் மூலம் அன்றிச் சட்டப்படி தனிப்பட்டவர்களாக அவர்கள் கருதப்படவில்லை. மனிதப் பிறவி என்றே ஓர் ஆங்கிலக் குடிமகன் என்றே ஒருவன் தொழில் பெறுவதற்கும் வாக்குரிமை பெறுவதற்கும் உரிமையுடையவனயிருக்கவில்லை; அற்ப சொற்பமான கிறித்துவ அறக்கொடைக்கேயன்றி, அதற்குமேல் வேறு எதற்காவது அவன் உரிமையுடையவனயிருக்கவில்லை. மத்தியகாலச் சமு தாயத்தின் அடிப்படையானது மக்கள் அனைவரையும் தன்னுள்டக்கிய ஒரு நாட்டுச்சமுதாயமாகவோ தனிப்பட்டவர்களாலான சமுதாயமாகவோ இராது, இவையிரண்டிற்கும் இடைப்பட்டதாய், தத்தம்நலன்களை முன் னேற்றுவிக்கும் பல தொகுப்பகங்களைக் கொண்டதொரு சமுதாய அமைப் பாயிருந்தது. -
இவ்வாருக, சமுதாயத்திலிருந்த ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சேர்ந்த சமுதாயத்தவருடன் கொண்டிருந்த தொடர்பு தொகுதிமுறைமைப்படி சிறிதும் பிறழாமல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததால், இருண்ட ஊழியாகிய அநாகரிக காலத்தினின்றும் நாகரிகம் வெளிப்பட்டு, சிறிது சிறிதாக மத்திய ஊழியின் மங்கலொளியைக் கண்ணுற்றது. பண்ணையடிமை விடு தலைபெற்றதனுல் மானிய முறை உலகின் அடிப்படையான பொருளாதார அமைப்புச் சிதறடிக்கப்பட்ட பின்னரே, மறுமலர்ச்சி மதச்சீர்திருத்த ஊழி யின் பிற்பகுதியில், தனி மனிதனின் சுதந்திரத்தைப் பெறுவதற்கான பாதையில் ஒரு படிமுன்னேறக்கூடியதாயிருந்தது. அப்பொழுது எல்லாம் வல்ல அரசாங்கம் ஒருபுறம் உருவாக, மறுபுறம் தத்தம் உரிமைகளை உறுதிப்படுத்தும் தனிப்பட்டவர் தோன்ற, மத்திய காலத்துக்குரிய பல தொகுப்பகங்கள் உண்மையில் மறையலாயின. இங்கிலாந்திலிருந்த துறவி
266

மத்தியகாலத் தொகுப்பகங்கள் 267
மடங்களுடன் அங்கிருந்த பல்வேறு துறவிச்சபைகளும் மறைந்தன. நகரத் தொகுப்பகங்களும் குழுமங்களும் தாம் ஆற்றிவந்த தொழில்களை அரசும் தனிப்பட்டோரும் பகிர்ந்துகொண்டமையைக் கண்டன. எனினும் மத்திய ஊழிக்குரிய சில தாபனங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது இயங்கி வரலாயின. மதகுருக்கள், வழக்கறிஞர், பல்கலைக்கழகத்தோர் ஆகியவர், புதிதாக்த் தோன்றிய நாட்டினத்துக்குப் பணிசெய்வதற்கான முறையில் தங்களை இசைவாக்கிக்கொண்டனர்; நாட்டுக்குரிய * பொது மக்கள் ” அல்லது “ சமுதாயத்தினர் ” என்பவர்களின் பிரதிநிதிகளைக் கொண் டிருந்த * பொதுமக்கள்சபை'யானது நாட்டினவாழ்க்கையின் முக்கிய உறுப்பாக விளங்கியது. இத்தகைய விலைமதிக்க முடியாத மரபுரிமை யான உடைமையை, தொகுப்பாகச் செயலாற்றும் மத்தியாகலத் தனித் திறமையிலிருந்து இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.
இவ்வதிகாரத்திலே இங்கிலாந்திலிருந்த பல்கலைக்கழகங்கள், துறவிகளது சபைகள், சட்டக்கலைக்கழகங்களில் உறுப்பினராயிருந்த வழக்கறிஞர் குழு, பாராளுமன்றம், விசேடமாக பொதுமக்கள்சபை ஆகிய நான்கு பெருந் தாபனங்களின் எழுச்சி பற்றி நாம் ஆராய்தல் வேண்டும். இவற்றுள் மூன்று இன்னுமிருந்துவருகின்றன ; ஒன்றுமட்டும் மறைந்துவிட்டது. இருண்ட ஊழியிலிருந்த மிலேச்ச நிலைமைக்கு எதிரான போராட்டத்தின் போதே ஆச்சிரம முறைமையும் நிலமானிய முறைமையும் தோன்றின; ஆனல் இப்புதிய நிறுவனங்களோ மத்தியகாலச் சமுதாயத்தின் முற்றுப் பெற்ற பழுத்த அனுபவத்தின் விளைவேயாகும்.
பாராளுமன்றங்களைப்போன்று பல்கலைக்கழகங்களும் புராதன காலத்த வரின் அறிவுக்கு எட்டாத, மத்திய ஊழியிற் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட தாபனங்களாகும். சோக்கிரதீசு என்பார், தமது மாணக்கருக்குத் தகுதித் தேர்வுப்பத்திரமோ வரிசைப்பட்டமோ வழங்கியதில்லை. அப்படி எந்த மாணவராவது அவரை வழங்கும்படி கேட்டிருந்தால், அவர் அம் மாணவரது உண்மையான அறிவின் தன்மையை அறிந்து கொள்வான் வேண்டி மன உலைவு தரும்படியான கேள்விகளை ஒன்றின்பின் ஒன்ருகக் கேட்டு அவரைத்திணற அடித்திருப்பார். சோக்கிரதீசு காலத்துக் கிரேக்க நாட்டில் மெய்யறிவியலும் விஞ்ஞான அறிவும் மத்திய காலத்திலிருந் திராத அளவுக்கு ஒர் உயர்நிலையை எய்தியிருந்தன. ஆனல் பண்டைக் காலக் கல்வியறிவும் மெய்ஞ்ஞான விளக்கமும் ஒருபோதும் பல்கலைக்கழகங்
1. தொடக்கத்தில் “பொதுமக்கள்”சபையானது இன்று தனிப்பட்டவர்களது வாக்குரிமை களை அவ்வத்தொகுதியில் அதிகமாகப் பெற்றுள்ளவர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டிருப் பதுபோன்றிராது, இலண்டன் நகர், யோக்குக்கோட்டம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த சிலகுறிப்பான சமூகத்தவரின் பிரதிநிதிகளை மட்டும் கொண்டிருந்தது. இப்படியானமுறை அமெரிக்க ஐக்கிய அரசுகளின் மேற்சபை தனித்தனியான அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டிருப்பது போலாகும்.

Page 144
268 மத்தியகாலப் பல்கலைக் கழகங்கள்
களிலிருந்து உருவாகவில்லை. இக்காரணத்தினல், ஒரளவுக்குப் பண்டைக் கால அறிவுத்துறை சீர்கேடுற்றது ; அன்றியும் கிறித்துமத குருமாரின் தாக்குதலுக்கு ஆற்றதும் அவ்வறிவுத்துறை வீழ்ச்சியுற்றது.
இதன்பின், தேவையான கல்வியறிவைப் பெறுவது மிகச் சாதாரண மானதொரு விடயம் என்ற திருச்சபையின் கருத்து பல நூற்றண்டு காலம் நிலவிற்று ; அக்காலத்தே உலகமக்களும் அக்கருத்தை ஏற்றுக் கொண்டனர். அந்நிலையில் துறவிகளுக்கான ஆச்சிரமங்களையும் சமயத் தலைமை ஆலயங்களையும் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கல்வி புகட்டுவதற் காகச் செய்த முயற்சிகளுக்கு அப்பால், வேறு யாதுங் கல்வித்தாபனம் இருக்கவேண்டுமென்ற அவசியம் உணரப்படவில்லை. ஆனல், சிலுவைப் போர்களினல் எற்பட்ட தொடர்புகளினலும், செழுமையும் அமைதியும் நிறைந்த ஐரோப்பாவில் அறிவாராய்ச்சிகள் தாமாகவே வளர்ச்சியுற்றதி னலும் பன்னிரண்டாம் நூற்றண்டில் அறிவுத்துறையில் ஒருமறுமலர்ச்சி உருவாயிற்று. குடியியல், சமயம் என்பவை சார்ந்த சட்டம், உயர்தர பண்டைக்கால இலத்தீன் இலக்கியம், அரித்தோத்தலர் போதித்த மெய்ஞ் ஞான விளக்கம் ஆகியவற்றையும் அரேபியாவின் எண்ணலளவைகளை யும் வாகடங்களையும் முறையே பின்பற்றி எழுந்த கணிதம், மருத்துவம் முதலிய கலைகள் ஆகியவற்றையும் படிப்பதற்காக அவ்வத்துறைக்குரிய தொகுப்பகங்கள் தேவைப்பட்டன.
சிலுவைப் போர்கள் நடைபெற்ற காலத்தில் அவற்றுக்காக மக்கள் காட்டிய ஆர்வம் எவ்வாறிருந்ததோ, அவ்வாறன ஆர்வம் அறிவுத்துறை சம்பந்தமாகக் காணப்பட்டது. இவ்வார்வத்திற்கான காரணங்கள் பல திறப்பட்டவையாகும். அறிவுவளர்ச்சிக்காகப் பயில்வது, தொழில் துறை முன்னேற்றத்துக்கான பேரார்வத்துடன் பயில்வது, தமக்கென நலன் களைத் தேடுவதற்கான பேராசையாற் பயில்வது, ஆராய்ச்சிக்காகப் பயில் வது, வீரச்செயல்களின்மீதும் பிரயாணம் செய்வதின் மீதும் கொண்ட ஆசையினற் பயில்வது போன்ற பலதிறப்பட்ட நோக்கங்கள் கற்குமார் வத்திற்கு ஊக்கமளித்தன. சிலுவைப் போர்களின்போது காணப்பட்டது போன்று இவ்வார்வம் எல்லாநாட்டினரிடையும் பொதுவாகக்காணப்பட் டது; அறிவார்வத்தால் உந்தப்பட்ட மக்கள் தம்நாட்டை விட்டு நீங்கி, அல்பிசு மலைகளையும் கடல்களையுங்கடந்து சென்றனர். ஐரோப்பாவிற் காணப்பட்ட இத்தகைய அறிவுத்துறை சார்ந்த ஆர்வத்தின் வின், வாகப் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே திடீரெனத் தோன்றலாயின. அவை முதல் முதலில் இத்தாலியிலும், பின் கிறித்துவமதம் பரவி யிருந்த எல்லா நாடுகளிலும் தோன்றின. இவ்வாறக மக்களின் சிந்தனை யில் எழுந்த எண்ணங்களுக்கு ஒரு தொகுப்பான வாழ்க்கையை மத்திய காலமக்களின் திறமை அளித்தது. ஒவ்வொரு நாடும் தனக்கெனப் பல்ககைகழகங்களை நிறுவிக்கொண்டதாலும் அறிவுத்துறைக்கான சிறந்த கழகங்களில், தம்நாட்டு மாணவருடன் பிறநாடுகளிலிருந்து வந்த மாண

மத்தியகாலப் பல்கலைக் கழகங்கள் 269
வரும் கல்விபெறுவதற்கான முறையைப் பலநாடுகள் வகுத்துக் கொண் டன. இவ்விதமாக, கற்றவர் அனைவரும் இலத்தீன் மொழியையே பேசி யும் எழுதியும் வருந்துணையும், உலகப்பொதுவான நோக்குடையதாக அறிவுத்துறை திகழ்ந்த்து.
மத்திய ஊழியிலிருந்த பல்கலைக்கழகம் இக்காலப் பல்கலைக்கழகத்தைப் போன்று கல்லாலும் காரையாலும் கட்டப்பட்ட கல்லூரிகளையும் ஆய்வுக் கூடங்களையும் நூல் நிலையங்களையும் உடையதாய், முதலாளிகளிடமிருந்து நன்கொடைகளையும் அரசாங்கத்திடமிருந்து மானியத்தையும் பெற்றதாய் இருக்கவில்லை ; ஆனல் அது கல்வியில் ஆர்வமிக்க மக்களை, அடிப்படை யாகக்கொண்டு “ யாக்கப்பட்டிருந்தது”. அன்றியும் அதில் அளவுக்கதிக மான பரீட்சைத் திட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. அதிற் சமயமுரண்பாடான கருத்துக்கள் புகுந்துவிடாமலிருப்பதற்காக திருச்சபை யானது ஆழ்ந்தகன்ற அறிவுபடைத்தவர்களின் திறமைகளை வளரவிடாதபடி தன் போக்கின்படி குறுகிய பாதையில் இட்டுச் சென்றது. இவ்வாறு திருச்சபைமட்டும் பல்கலைக்கழகம் சம்பந்தமாகத் தலையிட்டுக் கட்டுப்பாடு செய்யாதிருந்தால், அதுவே மற்றைச் சமூக அமைப்புக்களைக் காட்டிலும் முழுச் சுதந்திரம் கொண்ட ஒரு தாபனமாக விளங்கியிருக்கும்.
மத்தியகாலப் பல்கலைக்கழகங்கள் அறக் கொடைகளிலோ கட்டிடங்க ளிலோ தங்கியிருக்காதபடியால், அவை செல்வந்தரின் பேராதரவை நோக்காது தங்களுக்குரிய தாபன அமைப்புக்களை எவரும் ஆச்சரியப்படத் தக்க அளவில் மிக விரைவாக 12 ஆம், 13 ஆம் நூற்றண்டுகளில் ஐரோப்பா எங்கணும் நிறுவிக்கொள்ளலாயின. இதன் காரணமாகப் பாரிசு நகரப் பல்கலைக்கழகத்திற் பயின்ற ஆங்கில மாணவர்கள், இரண்டாம் என்றிக்கும் பிரெஞ்சு மன்னருக்குமிடையே \ பிணக்கு எற்பட்டபோது, தங்கள் சொந்த நாட்டுக்குச் சென்று ஒட்சுபோட்டு நகரிற் பல்கலைக்கழக மொன்றை நிறுவினர். தென்னிங்கிலாந்திலிருந்தும் மேற்கு இங்கிலாந்தி லிருந்தும் வந்த மாணவர்கள் எளிதிற் சென்று பயில்வதற்கு வசதியான இடமாக அது அமைந்தது ; அப்பகுதியில் அறையொன்றிற்கு ஆறு மாண வர்கள் வீதம் தங்கியிருப்பதற்கான வீடுகள் காணப்பட்டன : அம்மாணவர் கள் குடித்தும், விவாதித்தும், ஆடிப்பாடியும், சச்சரவிட்டும் இருப்பதற்கான மதுச்சாலைகள் இருந்தன ; பல்கலைக்கழகம் சம்பந்தமான கொண்டாட்டங் களை நடத்துவதற்கு, கோயில்களில் இடவசதி கேட்டுப் பெற வாய்ப்பு இருந்தது ; இன்றும் பேராசிரியர்கள் விரிவுரை கூறுவதற்கேற்ற பெரும் அறைகளிருந்தன ; இவ்வறைகளில், பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தம் முன் அரியகலைநூல் ஒன்றைத் திறந்து வைத்துக்கொண்டு விரிவுரை நிகழ்த்த, அவ்வுரை கேட்கும் மாணவர்கள் தரையில் உட்கார்ந்து குறிப்புக் களை எடுத்துக்கொண்டு, தம் பேராசிரியர் கற்பிக்கும் முறையைப் பாராட்டிக் கைகொட்டவும், அன்றேல், நாடகக் கொட்டகையில் வீணர்கள் செய்வது போல் ஊளையிட்டு அவரை அவமதிக்கவும் கூடியதாயிருந்தது.

Page 145
209,
20 ஒட்சுபோட்டும் கேம்பிறிச்சும்
பிரான்சிலிருந்து மாணவர்கள் நிர்ப்பந்தத்தினல் வெளியேறவேண்டி யிருந்ததால், இங்கிலாந்தில் ஒட்சுபோட்டில் பல்கலைக்கழகமொன்று ஏற்பட்ட போதிலும், கெடுதி விளைக்கக்கூடிய அளவிற்கு ஒரு நகரத்திற்கும் மற்றெரு நகரத்திற்குமிடையே போட்டிமனப்பான்மை வளர்ந்திருந்த காரணத்தால் ஒட்சுபோட்டுக்குப் போட்டியாகக் கேம்பிறிச்சு என்னும் நகரில் ஒரு பல்கலைக் கழகம் தோன்றலாயிற்று. கேம்பிறிச்சு நகரம், வட இங்கிலாந்திலிருந்தும் கிழக்கு இங்கிலாந்திலிருந்தும் மாணவர்கள் வந்து போவதற்கு வசதியாக நீர்ப் பாதைகளும் உரோமன் வீதிகளும் ஒன்று சேர்கின்ற ஓரிடத்தில் அமைந்திருந்தது. ஒட்சுபோட்டும் கேம்பிறிச்சும் இலண்டனிலிருந்து எறக் குறைய ஐம்பது மைல்கள் தூரத்திலேயிருந்தன ; இலண்டன் நகர் 19 ஆம் நூற்றண்டுவரை தனக்கென ஒரு பல்கலைக் கழகத்தைக் கொண்டிருக்க வில்லை. வேல்சுநாட்டு மாணவர் ஒட்சுபோட்டுக்குச் சென்று வந்தனர்; இசுக்கொத்துலாந்து மாணவர், 15 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில், தமக்கென ஒரு பல்கலைக் கழகத்தைச் சென் அண்டுருசு என்ற இடத்தில் நிறுவும்வரை பாரிசு, பதுவா ஆகிய விடங்களுக்குச் சென்று பயின்றனர்.
அறக்கொடைகளாலோ “நாட்டின் தலைசிறந்த இளைஞர்கள்” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டவர்களின் நுழைவாலோ முற்காலத்துப் பல் கலைக் கழகங்கள் ஆதரிக்கப்படவுமில்லை; இழிவு எய்தவுமில்லை. மத்திய ஊழியிலிருந்த ஒட்சுபோட்டும் கேம்பிறிச்சும் மேல் வகுப்பினரை மிகக் குறைந்த அளவிலேயே கொண்டிருந்தனவாதலால், அவை ஏழை வகுப் பினரின் கல்வி நிலையங்களாக விருந்தன. நைற்றுக்களும் பரன்களும் பல்கலைக்கழகம் தரக்கூடிய அறிவைக்காட்டிலும் தங்களிடம் அதிக அறி விருப்பதாக எண்ணினர். ஆனல், பண்ணையடிமைகள் தங்கள் பண்ணை நிலத்துடன் கட்டுப்பட்டுக் கிடந்த காரணத்தால், பல்கலைக்கழகப் படிப்பு அவர்களுக்கு எட்டாப் பொருளாயிற்று. எனவே பெரும்பாலும் பல்கலைக் கழகப் படிப்புக்குச் சென்றவர்கள் உண்மையில் வேளாளர், தொழிலாளர், சாதாரண குடிமக்கள் என்போரின் திறமையுள்ள பிள்ளைகளாவர். இவர் கள் தத்தம் தந்தையரின் பண்ணையையும் தொழிலையும் கைவிட்டுக் கற்கத் தொடங்கியபின் மதசம்பந்தமான சிறு பதவிகளில் அமர்ந்தனர்; கல்விப் பிச்சை எடுப்பதற்காக முழு உரிமை பெற்றிருந்த அவர்கள் * எளிய மதகுருக்களாகவும் ” உதவி பெறும் “எளிய கலைமாணவராக வும் ” உண்மையில் மாறினர்.
இப்படிப்பட்டவர்களுக்குப் பல்கலைக்கழகமானது, அவர்கள் தொழில் துறையில் மதிப்படைவதற்கேதுவான வழியாயிருந்தது. விழுமியோர் குடும்பத்தைச் சேராததோர் திருச்சபையிற் பதவி உயர்வடைய வேண்டு மெனில், அதற்குப் பெரும்பாலும் இதுவொன்றே வழியாயமைந்தது. தம்
அறிவுத்திறமையால் குடியியற் சேவையாளராகவோ, பெரிய மனிதரின்
செயலாளராகவோ, மருத்துவராகவோ, சிற்பிகளாகவோ, அன்றி திருச்சபைக் குரிய வழக்கறிஞராகவோ ஒருவர் வர விரும்பினல் அவர் புனிதச்பைக்குரிய

ஒட்சுபோட்டும் கேம்பிறிச்சும் 27】
வராகி, பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பயிலவேண்டியது அவசியமாக விருந் தது. முதன்முதலாக 13 ஆம் நூற்றண்டிலேயே ஆங்கில வழமைச் சட்டம் சார்ந்த வழக்கறிஞர் கழகத்திலும் நீதிமன்றங்களிலுந் தொழில் புரிவதற் குச் சாதாரண மக்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் இத்தொழில் புரியத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் பெரும்பாலாக ஒட்சுபோட்டு, கேம் பிறிச்சு ஆகிய பல்கலைக்கழகங்களிற் கல்வி பயின்றவர்களாயிருந்தனர்; இவர்கள் மதகுருக்கள் என்று சொல்லப்படக்கூடிய அளவுக்கு மத குருக்களுக்குரிய நிலையான பண்பியல்புகளைக் கொண்டிராவிட்டாலும் சிற் சிறு சமயச் சபைகளைச் சேர்ந்தவராயிருந்தனர்.
ஆகவே தொடக்கத்திற் பட்டம் பெறுவதற்குப் பயின்ற பல்கலைக்கழக மாணவராகிய ஆங்கிலேயர், ஒருவகையான மதகுருக்களாகப் பெரும்பாலும் இருந்தனர் என நாம் கொள்ளல் வேண்டும் ; அவர்கள் அரசமன்றங்களி லிருந்தும் கொலைப் பணியாளரிடமிருந்தும் பெக்கெற்று என்பவரின் துணை யால் பாதுகாப்பளிக்கப்பட்டிருந்தனர்; ஆனல் “ மதகுருக்கள் ” என்று இக்காலத்தில் நாம் கருதுபவர்களிடம் காணப்படும் தனித்தன்மைகள் அக்காலத்திலிருந்த அம் * மதகுருக்களிடம் ” காணப்பட்டதேயில்லை. பதி னைந்தாம் நூற்றண்டுவரை ஒட்சுபோட்டில், அன்றி கேம்பிறிச்சிற் கல்வி பயின்று வந்த ஒருவன் மத்திய வகுப்பின் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த திறமை வாய்ந்த வழை மாணவனக விருந்தான். அவன் தனது பதினன்காவது வயதிற் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து, இருபத்தோராண்டு வரை, அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுவரை அங்கு கல்வி கற்பான் ; அப்பருவத்திற் பள்ளிக்கூடங்களுக்கோ கல்லூரிகளுக்கோ உரியதான ஒழுக் கக் கட்டுப்பாட்டுக்குச் சிறிது உட்படுத்தப்படுவான். மில்லர்கதை, இரீவின்கதை ஆகியவற்றின் நூலாசிரியர்களும் அவர்களைக் காட்டிலுங் குறைந்த மதிப் புடைய ஆசிரியர் பலரும் இம்மாணவர்களின்/ ஒழுக்கத் தன்மைகளைப் பற்றி விவரித்துள்ளனர் ; ஆயினும், சோசர் என்பார் தமது “ புரலோக்கு ” (பாயிரம்) எனும் நூலில், மாணவருட் சிறந்த வகையினரை எடுத்துக் கூறியிருக்கின்றர். ஐரோப்பாவிலிருந்த டல்கலைக் கழகங்களனைத்துக்கும் பொதுவாய், மாணவருக்குரிய பாடல்களாயிருந்த இத்தீன் மொழிச் செய்யுள்கள்-இவை “ கோலியாதிக்கு ’ செய்யுள்கள் என வழங்கப்பட் டன-அம்மாணவர் தெருவிலும் நகரிலும் அலைந்து திரியும் சோம்பேறி வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பம் அடைந்ததையும் “பொதியில் ஒன்றில் தங்கி உயிர் விடுவதில் ’ உறுதி பூண்டிருந்ததையும் செம்மாந்து கூறு கின்றன. அம் மாணவர்களிடம் மத சம்பந்தமான அறிவு சிறிதளவே இருந்தது ; ஆனல் பாக்கசு, வீனசு ஆகியவர்களின் " மதங்களைப் ” பற்றி யும் ஒவிட்டு என்பவராற் குறிப்பிடப்பட்டிருந்த பதித மதச் தெய்வங்கள் பற்றியும் அவர்கள் அறிந்திருந்தனர். எனினும் அவர்களிற் பலர் மதப் பற்றுடையவர்களாயிருந்ததுடன், எல்லோருமே கொள்கையளவிலாவது, கல்வியறிவு பெறுவதில் அக்கறையுள்ளவர்களாயிருந்தனர். 11-R, 6344 (12162)

Page 146
272 கல்லூரிகள் தோன்றல்
அக்காலத்திலிருந்த சூழ்நிலையானது பிற்காலத்திலிருந்த ஒட்சுபோட்டு, கேம்பிறிச்சு பல்கலைக்கழகங்களிலிருந்தது போன்றில்லாது, குவாற்றியர் இலத்தீன் பண்பாட்டுக்குரியதாய், உயர்குடிமையும் உயர்மதிப்பும் அதிகம் பெற்றிலதாயிருந்தது. மத்தியகாலப் பல்கலைக்கழக மாணவன் இவற்றுள் எச்சிறப்பையும் பெற்றிருக்கவில்லை. சைமன் தி மோன்போட்டு என் பான் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளம்பியபொழுது, ஒட்சுபோட்டிலிருந்த பட்டம் பெருக்கல்லூரி மாணவர்கள் சுதந்திரம் பொருட்டுப் போராடுதற் காகச் சைமனத் தொடர்ந்து நிரைநிரையாகச் சென்றனர். அவர்களிடம் காணப்பட்ட உணர்ச்சியானது பிரான்சு, இத்தாலி, சேர்மனி ஆகிய நாடு களுக்குரிய பல்கலைக்கழகங்களிற் படித்த, கட்டுப்பாடற்ற மாணவர்கள் 1848 ஆம் ஆண்டுப் புரட்சிப் பூசல்களிற் போரிட்ட பான்மையை ஒத்திருந் தது. சைமன் காலத்தில் இளைஞர் கல்வி, தனி உரிமை இயக்கம், விடுதலை இயக்கம், சமயத்துறை என்பனவற்றில் உறுப்பினராய் ஒரே காலத்தில் இருந்துவரலாம் ; அவ்வாறிருப்பது முரண்பாடுடையதாகக் கரு தப்படவில்லை.
மத்தியகாலத்திலிருந்த பல்கலைக்கழகங்களில், கல்வியறிவைப் பெறு வதற்காகக் கொடிய வறுமை நிலையைச் சமாளிக்க வேண்டியிருந்த “வறிய மாணக்கரொடு ’ நிறைவும் பெருந்தன்மையுமுடைய இக்காலத்தவர் தம் மைப் பாதகமாக ஒப்புநோக்குகின்றனர். ஆனல் அக்கால மாணவரைச் சார்ந்த சூழ்நிலையின் மற்றெரு புறத்தையும் நாம் காணல் வேண்டும். கல்வி கற்கச் சென்றவர்கள் பதினன்காம் பருவத்தையடைந்தவர்களாய் பணம் எதுவுமற்றவர்களாய், அறிவுரையும் ஆதரவும் பெருதவர்களாய் இருந்தனர். அன்றியும் அவர்கள் கலவரம், தகாநடத்தை, கொலை ஆகிய தீமைகளின் மத்தியில் வாழவேண்டியவராயினர்; இத்தகைய தீமைகளிைச் செய்வதில் கைதேர்ந்தவர்கள் “மடைத்தனமான மாணவர்களை ’ எமாற் றித்தம் வாழ்க்கையை நடாத்தி வந்தனர் ; கல்லூரி வாழ்க்கையில் அம் மாணவர்கள் எவ்வளவு நன்மை பெற்றர்களோ அவ்வளவு கெடுதியை யும் பெறக்கூடிய சூழ்நிலை பல்கலைக் கழகங்களில் நிலவியது.
பதின்மூன்றம் நூற்றண்டின் இறுதியில் முதன் முதலாவதாகக் கல்லூரிகள் நிறுவப்பட்டபொழுது கல்லூரியிலுள்ள மாணவருக்கு உணவும் காப்பும் அளிப்பதன் பொருட்டு அற நிதியும் நிறுவப்பட்டது. ஆனல் அம்மாணவருக்கு அளிக்கப்பட்ட பொருள் உதவியைப் போன்றே, அவர்
பேலியல், ஒட்சுபோட்டு 1281-8; மேற்றன் ஒட்சுபோட்டு 1268 ; பீற்றர் கவுசு கேம்பிறிச்சு 1284. மத்தியகாலத்தில் ஒட்சுபோட்டிஆருந்த மாணவர் எண்ணிக்கை அநேகமாக 3000 இற்குக் குறைவாகவேயிருந்தது; கேம்பிறிச்சில் இதைவிட இன்னும் குறைவாக இருந்தது. மத்திய ஊழியில் மற்றவிடயங்கள் சம்பந்தமான எண்ணிக்கை மிகப்படுத்திக் கூறப்படுவது போன்று இக்கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும் அடிக்கடி மிகைப்படுத்திக் கூறப் பட்டு வந்தது.

கல்லூரிகள் தோன்றல் 273
களைப் பாதுகாப்பதும் கட்டுப்பாடு செய்வதுமே மிக முக்கியமானவை என்று
விரைவில் உணரப்பட்டது. பொறுப்புள்ள ஆங்கிலப் பெற்றேர் தம் பிள்ளை
களை இப்படியானதொரு பாதுகாப்பான கல்லூரியொன்றுக்கு அனுப்பி
வைப்பதில் மேலும் மேலும் அக்கறை காட்டலாயினர். “உதவிப்பணம்” பெருத பல மாணவர்களும் இக்கல்லூரியிற் பயிலவிரும்பி இடங்கோரினர்;
இவர்கள் தொகை பெருகலாயிற்று ; வசதியும் பாதுகாப்புமுள்ள ఓ)
யான “ வீட்டுவாழ்க்கை ”யை விரும்புவது ஆங்கில மக்களின் சிறப்பியல்பு ; அவ்விருப்பாகிய தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இத்தகைய தாபனங்களின் எண்ணிக்கை, செல்வம், சிறப்பு ஆகியவை சந்ததி சந்ததி
யாகப் பெருகலாயின. பதினைந்தாம் நூற்றண்டு முதல், கல்லூரிகளுக்கான
அறக்கொடைகள் வழங்கப்பட்டதற்கு மற்றெரு நோக்கமும் இருந்தது. உலொல்லாட்டுக் கொள்கை, போப்புநெறி, பியூரித்தன் மதம், ஆமீனிய னிசம், இன்னும் இவை போன்று ஒவ்வொரு ஊழியிலும் தோன்றிய கேடுகளினின்று இளைஞரைப் பாதுகாப்பதே அந்நோக்கமாகும். மந்தை களோடு இடையர் காணப்படுமிடத்தில் ஒநாய் எளிதில் இரைதேட முடியாது.
ஒட்சுபோட்டிலும் கேம்பிறிச்சிலும் மட்டுமே கல்லூரிகளிருந்தன என எண்ணுவது தவருகும். இத்தாலியப் பல்கலைக்கழகங்களிலும் அநேக கல்லூரிகள் அல்லது மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான, அறக்கொடை பெற்றுள்ள இல்லங்கள் இருந்தன ; ஆனல் இவற்றுட் சிலவற்றைத் தவிர மற்றவை இப்போது மறைந்துவிட்டன. பாரிசுப் பல்கலைக்கழகத்தில் 1180 ஆம் ஆண்டுக்கும் 1500 ஆம் ஆண்டுக்குமிடையில் ஐம்பதுக்கு மேற்பட்ட கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆனல் அவை அதே காலத்தில் இங்கிலாந்திலே தோன்றி வளர்ந்த நிறுவகங்களைப் போன்று அளவிலும் செல்வத்திலும் சிறப்பிலும் நாளடைவில் வளர்ந்தோங்கவில்லை. எனவே அவை காலகதியில் வளர்ச்சி குன்றி தங்களுக்குரிய ஆதனங்களைக் காப் பாற்றத் தவறிவிட்டன; அவைகளிடம் எஞ்சியிருந்த பொருள்வளம்தானும் பிரெஞ்சுப்புரட்சிக் காலத்தில் மறைந்தொழிந்தது. ஆங்கிலக் கல்லூரிகளோ செல்வ வளத்திலும் மாணவர் தொகையிலும் பெருகியதுடன், சுதுவாட்டு மன்னர் ஊழியில் தங்கள் தாய்த் தாபனமாகிய பல்கலைக்கழகத்தையும் விஞ்சிவிடுவனவாயிருந்தன.
மத்தியகாலப் பல்கலைக்கழகங்களில் முக்கியமாகக் கற்கவேண்டியிருந்தது புதிதானதொரு வகைத் தருக்கசாத்திரமாகும் , அரித்தோத்தலர் கொள் கைகளையும் மறுக்கமுடியாத் திருச்சபைக் கோட்பாடுகளையும் ஒன்றுக்கொன்று இசைவாக்குதற்கு இத்தருக்கவியல் அவசியமாயிற்று. பொதுவில் அனை வரும் திருத்தி அடையும்வகையில் இக்கருமத்தில் வெற்றிகணடவர் திருத்
தொண்டர் தோமசு அக்குவினசு ஆவர். பன்னிரண்டாம் நூற்ருண்டில், உயர்தனிச் செம்மொழியாகிய இலத்தீன் மொழி யிலக்கியம் பல்கலைக்

Page 147
274. பல்கலைக்கழகக் கல்வி
கழகங்களில் ஓரளவு வேரூன்றத் தொடங்கியும் நன்றக வேரூன்ருத காரணத்தால் வளர்ச்சி குன்றிப் போனது. கிரேக்க உரோம நாடுகளின் பேச்சாளர், கவிஞர், வரலாற்றசிரியர் என்போர் இன்னும் தோன்ருத காலம் அது. பண்டைய உலகின் உண்மைக் காட்சி-சிறப்பாகக் கிரேக்க நாட்டின் உண்மைக் காட்சி-பதினைந்தாம் நூற்றணடில் ஏற்பட்ட இரண் டாவது மறுமலர்ச்சி இயக்கத்தின்போது புலப்பட்டது. அக்காட்சி புலப்பட் பொழுது மத்தியகால அமைப்புக்களின் இயல்புக்குச் சாவுமனி அடிக்கப் பட்டது; எவ்வாறெனில் மக்கள் தாங்கள் அனுபவத்திற் கண்ட உலகத் தைக் காட்டிலும் அறிவிலும், பெருந்தன்மையிலும், கட்டுப் பாடற்ற தன்மையிலும், சிறந்து விளங்கிய ஒரு காலத்தைக் கண்டனர்; அல்லது தாங்கள் கண்டதாகக் கருதினர். ஆனல் மத்திய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களும் மாணவர்களும் தொந்தரவு தரக்கூடிய இத்தகைய காட்சி யாற் பாதிக்கப்படவில்லை.
சமயசித்தாந்தமெனும் போர்வையுட் கட்டுண்டிருந்த பெளதிகவிஞ்ஞான மானது வளர முடியவில்லை. ஒட்சுபோட்டிற் பயின்ற அறிஞரான உரோசர் பேக்கன் என்னும் துறவி அறியாமை இருளிடையே ஓர் அறிவுச் சுடராகத் திகழ்ந்தார் ; எனினும் பதின்மூன்றம் நூற்றண்டில் நியூற்றன் எவ்வாறிருந்திருப்பாரோ அவ்வாறே பேக்கனும் தம் கொள்கையை எண் பிக்க விஞ்ஞானத்துறை ஆயுதங்களைத் தவிர வேறெவ்விதமான நூலியல் ஆதாரங்களையும் கொண்டிருக்க வில்லையாதலால், அவ்வூழியில் நிலவி யிருந்த தப்பெண்ணங்களை அகற்றுவதற்குத் திறனற்றும் செல்வாக்கற் றும் இருந்தார். ஆனல், சமயசித்தாந்த விவாதத்திறமையிற் புலமை மிக்கவராயிருந்த விக்கிளிபு என்பார் ஒரு நூற்றண்டுக்குப் பின் மக்கள் சிந்தனையிற் செல்வாக்குப் பெறுவதில் இணையற்று விளங்கினர்.
ஐரோப்பிய மக்களின் செப்பமற்ற அறிவைப் பயிற்றி அதனைக் கூராக்கு வதே மத்திய காலத்துக்குரிய தருக்க இயலினதும், புலமையினதும் பெருங் கருமமாயிருந்தது. மத்திய ஊழியில் அறிவுத்துறை சம்பந்தமாக உண்டான முன்னேற்றத்தை மக்களின் மூலசிந்தனையின் பயனக ஏற்பட்ட விளைவு களைக் கொண்டு அளவிடக்கூடாது ; அச்சிந்தனைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந் தது, அல்லது குறுகிய எல்லைக்குள்ளாகவாவது அது கட்டுப்படுத்தப்பட்டிருந் தது எனலாம் ; ஆனல் மக்கள் எத்தகைய திறமையுடன் தத்துவநூற் பொருள்களைக் கையாண்டனர் என்பதைக் கொண்டே மத்தியகால அறிவு முன்னேற்றத்தை அளவிட வேண்டும். அக்கால மக்கள் “ஊசிமுனையில் எத்தனை தேவதூதர்கள் நிற்க முடியும்" என்பதுபோன்ற அவசியமற்ற அற்ப விடயங்களைப் பற்றிப் பெரிதும் விவாதித்துத் தங்களிடையே தகராறு உண்டுபண்ணிக் கொண்டார்களெனினும், தருக்கவியல் சம்பந்தமானவற்

பண்டாரங்களின் வருகை 275
றில் அதிக ஈடுபாடுடையவராயிருந்த இப்பண்டைக்கால மக்களுக்கு நாம் அளவிடமுடியாத அளவிற்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.1
இங்கிலாந்திலே பதின்மூன்றம் நூற்றண்டில் எற்பட்ட பல்கலைக் கழகங் களின் வளர்ச்சி தவிர, சமுதாய வாழ்வில் உண்டான மற்றெரு பெரும் மாற்றம் பண்டாரங்களின் வருகையாகும். சென். தொமினிக்கு, சென். பிரான்சிசு ஆகியவர்களது சபையினர் தள்ளாடிக்கொண்டிருந்த திருச் சபையை ஐரோப்பாவிற் காப்பாற்றினர் என்று அமைவுறக் கூறுவது போன்று, உண்மையாகவே இங்கிலாந்தைப் பொறுத்தவரை திருச்சபை விடயமாக அவ்வாறு கூற இயலாது. II ஆம் என்றி காலத்தில் இங்கிலாந் திலே திருச்சபையானது ஒருதாபனம் என்ற முறையில் எவ்வித இடையூறு மின்றி இருந்தது. அங்கே மதசம்பந்தமான அறியாமையும் அலட்சிய மனப்பான்மையும் புறச்சமயக்கிரியை வழமையும் காணப்பட்டனவெனினும், புறநெறிக் கொள்கையும் மதகுருக்களுக்கு எதிரான உணர்ச்சியும் இருக்க வில்லை. மேலும் அல்பிசென்சியன், வோல்டன்சியம் என்பவை போன்ற, ஐரோப்பாக்கண்டத்தில் காணப்பட்ட இயக்கங்களுக்குச் சமமானபுறச் சமய இயக்கங்கள் இங்கிலாந்திற் காணப்படவில்லை ; இப்புறச்சமய இயக்கங்கள் சொல்ல முடியாத அளவு கடுமை வாய்ந்த மத்தியகால மதவிசாரணை மன்றங்களால் முற்ருக நசுக்கப்பட்டன; அதற்குப் பெரும்பாலும் தூண்டுத லாக விருந்தவர்கள் சென். தொமினிக்கைச் சேர்ந்த பண்டாரங்களாவர். இங்கிலாந்திலே தொமினிக்கு சபைக் துறவிகள் சிறந்து விளங்கினரெனி னும் “ கடவுளின் வேட்டை நாய்கள் ” வேட்டையாடுவதற்கான புறநெறி யாளர் எவரும் அங்கிருக்கவில்லை. தண்ணளிவாய்ந்த பிரான்சிசுக்கன் சபையாரும் அவர்களைச் சேர்ந்த அம்பிரியன் மதபோதகர்களும் 1224 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காலெடுத்துவைத்த பின்னர் அந்நாட்டு மக்களின் உள்ளங்களை முற்ருகவும் விரைவாகவும் கொள்ளைகொண்டனர்.
1 பியசால் சுமித்து என்பார் “ஆங்கிலமொழி” எனும் தமது சிறந்த நூலில் குறிப்பிடு வதாவது : பண்டைக்கால அல்லது மத்தியகாலத் தத்துவ ஞானஞ் சம்பந்தமான அரிய விடயங்களின் வரலாற்றை நாம் படிப்டோமானல் உயரிய கருத்தியலான தத்துவங்கள் பொது மக்கள் உணரக்கூடிய அளவுக்குப் பரவியதினுல் உண்டான விளைவுகளை நாம் அவதானிக்கக் கூடியவர்களாவோம் ; நாம் பொதுவாகக் கொண்டுள்ள கருத்துக்களில் பலவும் நமக்கு எளிதில் விளங்கக்கூடியனவாகவுள்ள வேறுபாடுகள் பலவும் நாம் இப்பொழுது நினைப்பது போல் அவ்வளவு தெளிவாகவும் தாமே விளங்கக் கூடியனவாகவும் அப்போது இருக்கவில்லை என்பதை நாம் காணக்கூடியவர்களாவோம். பலநூற்றண்டுகளாக மனிதர் பெரிதும் முயன்று நடாத்திய அறிவுப் போராட்டங்களின் பயனே அதுவாகும் என்பதை அறிய வரு வோம். சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் சொற்களிற் சில புராதன காலத்திற்ருனே தத்துவநூல் அறிஞராலும், சமய விற்பன்னராலும் வழக்கறிஞராலும் உருவாக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரது சிந்தனையாகிய உரைகல்லில் தீட்டப்பட்டனவாகும்,

Page 148
276 பண்டாரங்களின் வருகை
பண்டாரங்கள் இங்கிலாந்திற் போப்பரசரின் அதிகாரக்தைப் பாதுகாத்தனர் என்று சொல்வதற்கில்லை. இப்பண்டாரங்கள் ஆங்கில மக்களின்மீது தம் ஆதிக்கத்தை வலுப்படுத்தி வந்த 111ஆம் என்றியின் ஆட்சிக் காலத் திற்றன், போப்பரசருக்கு எதிரான உணர்ச்சி இங்கிலாந்தில் முதன்முறை யாகத் தீவிரமாக வளந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவையல்ல. இவ்விரு இயக்கங்களிலும் குருே செற்றே முக்கிய பங்கெடுத்துக்கொண்டார். போப்பரசரிடமிருந்து பண்டாரங் கள் இங்கிலாந்தில் மதம்பரப்புதலுக்கான ஆணை பெற்றிருந்தனரெனினும், குடியாட்சிக் கொள்கைக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டவும் அவர்கள் பின் வாங்கவில்லை. சமயத்தோடும் வைதீகக் கொள்கையோடும் தொடர்புற்றிருந் தும், உரோமொடு வெளிப்படையாகப் பிணக்குற்றிருந்த சைமன் தி மொன் போட்டின் கட்சியைச்சேர்ந்துமிருந்தனர்.
ஆனல் இங்கிலாந்திற் பண்டாரங்கள் போப்பரசரின் அல்லது திருச்சபை யின் ஆதிக்கத்தைக் காப்பாற்றவில்லையென்றலும், இவர்கள் மதத்தைப் பரப்புவதில் ஒரு புது உற்சாகத்தைப் புகுத்தி, புது முறைகளை வகுத்துக் கொடுத்தனர். உயர்குடியிலிருந்து மதமாற்றஞ் செய்யப்பட்ட வகுப்பிற்குரிய பிரான்சிசுக்கன் சபையில் ஆதியிலிருந்த பண்டாரங்கள் எழைமக்களிடையே மதசம்பந்தமானதொரு பெரிய மறு மலர்ச்சியை உருவாக்கினர். பியூரித் தன், வெசிலியன், இரட்சணியசேனை ஆகிய மத இயக்கங்களுடன் ஒன்றுக்கு மேற்ப்ட முறைகளில் ஒப்பிடக்கூடியதாய்ப் பிரான்சிசுக்கன் சபையினர் எற்படுத்திய சமய மறுமலர்ச்சி விளங்கியது. இச்சபையை நிறுவியவர் கருத்துக்கிணங்க, இப்பண்டாரங்கள் முக்கியமாக பெரிய நகரங்களிலிருந்த சேரிகளிலும், கோயிற்பற்று முறையில் வேண்டியாங்கு கவனிக்கப்படாம லிருந்த பகுதிகளிலும் இருந்த பரம எழைகளையும் அனதைகளையும், நோயாளிகளையும் பராமரித்தனர். C
சாதாரண மக்கள் எளிதிற் புரிந்து உண்மையை உணர்ந்துகொள்ளும் வண்ணம் இலகுவான சொற்களிற் போதனை செய்வதே பண்டாரங்கள் கைக்கொண்ட முறை என்க. அக்காலத்தில் கோயிற் பற்றுப் போதகர்கள் போதனை செய்வதற்குக் தகுதியற்றவர்களாயிருந்தனர்; உயர் பதவிவகித்த மதகுருக்கள் திருச்சபை சம்பந்தமாகவும் அரசாங்கம் சம்பந்தமாகவு முள்ள விடயங்களில் அதிக அக்கறை செலுத்தினர் ; துறவிகளோ, ஒன்றில் தம் ஆச்சிரமங்களில் அடைபட்டுக் கிடந்தனர்; அல்லது இம்மைக்குரிய கருமங்களையும் சிற்றின்பங்களையும் நாடி அலைந்தனர். பண்டாரங்கள் வரு கைக்கு முன் மதமானது தான் ஆற்றிவந்த சமய வினைகளைப்பற்றியே அதிகம் கவனம் செலுத்திவந்தது; அவ்வினைகளின் பயன்களைப் பெற விரும்பியவர்களுக்கு அது எட்டாத தூரத்திலேயே இருந்துவந்தது. ஆனல்

பண்டாரங்களும் துறவிகளும் 277
பண்டாரங்களின் வருகைக்குப்பின் மக்களுக்குச் சமய வினைகளின் வரப் பிரசாதங்கள் அதிகமாகக் கிடைக்கும்படி அவர்கள் வழி செய்ததுடன், ஒழுக்க அறிவுரை கூறுதலையும் சமய போதனை செய்தலையும் மக்கணயக்கத் தக்க ஒரு முறைக்குக் கொண்டுவந்தனர். இம்முறையையே பிற்காலத்தில் உலொல்லாடுகளும் புரட்டசுத்தாந்தரும் உறுதியாகக் கடைப்பிடித்தனர். சமயச்சார்பாக மேடை உரையாற்றுவதின் முதன்மையை அதிகரித்ததின் மூலம் பண்டாரங்கள் தங்களை அகற்றி அழித்து விடுவதற்குக் காரண மாயிருந்தவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்தனர் எனலாம் ; எவ்வாறெ னின், பண்டாரங்களோ சமயத்தைப் பொது மக்கள் தெளிவாக உணரவும் அவர்களது வாழ்க்கையில் அது செல்வாக்கடையவும் செய்து அம்மக்க ளுக்கு உரியதாக மதபோதனை செய்தனர்.
நான்காம் நூற்றண்டு தொடக்கம் பன்னிரண்டாம் நூற்றண்டுவரை யிருந்த துறவியக்கமானது அஞ்ஞானமும் மிலேச்சமும் நிலவியிருந்த ஊழிகளில், தங்களுடைய ஆன்மாவுக்கு மீட்புத்தேடவும் உலகம் என்னும் பாலைநிலத்தினூடே கடவுளுக்கென ஒரு பூங்காவை அமைக்கவும் எதுவாக விருந்த கடவுட் பற்றுடைய மனிதர்களின் முயற்சியினல் எற்பட்ட விளை வாகும். அப்பூங்காவனம் பாலைநிலத்தைத் திருத்தி எவ்வாறு பயிரிடலாம் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது; எனினும் அவ்விரண்டிற்கு மிடையே பிரிசுவர் எப்பொழுதுமே நிலைத்துநின்றது. பிற்காலத்திலே தோன்றிய பல்வேறு துறவிச் சபைகள் இருந்த உலக நிலைமை வேருனது; ஆனல் இப்போது மதம்பரம்புதலுக்கான நம்பிக்கையும் சிறந்த ஒழுங் கமைதியும் உலகிற் காணப்பட்டன. எனவே பண்டாரங்கள் இப்போதைய உலகத்தைக் கடவுளின் பூங்காவனமாகக் கருதினர். ஆண்களும் பெண் களும் கூடும் பொதுவிடங்களுக்கும், வாழும் சேரிகளுக்கும் இப்பண்டாரங் கள் சென்று ஆன்மாக்களை மீட்க முயன்றனர். கொள்கையளவிலே துறவி கள் தம் மடங்களிற்றனே அடங்கிக்கிடந்தனர்; ஆனல் அவர்கள் மடங்களை விட்டு வெளியுலகிலே திரிந்தபோது-அவர்கள் அடிக்கடி அங்ங்ணம் வெளிக் கிளம்பினர்-உண்மையில் தங்கள் இயல்புக்குச் சிறிதும் பொருந்தாத ஆச்சிரம வாழ்க்கையிலிருக்கும் சலிப்பை உடைத்தெறிந்து ஆச்சிரமங்களுக் குரிய பிரமாணங்களை மீறி நடந்து வந்தனர். ஆனல், பண்டாரங்களோ பட்டணந்தோறும் நடந்து சென்று நோயாளிகளைப் கவனித்துப் பேணியும், மதபோதனை செய்யதும், பாவமன்னிப்பளித்தும் தம் கடமையாற்றினர். ஆச்சிரமத்தைச் சேர்ந்த துறவிகளுக்கு நிலத்திலிருந்தும் கால்நடைப் பண்ணைகளிலிருந்தும் வருமானம் கிடைத்து வந்தது; ஆனல் பண்டாரங் களோ வீட்டுக்கு வீடு சென்று இரந்து இவ்வாறு கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடாத்தினர்.

Page 149
278 பண்டாரங்களும் துறவிகளும்
கொள்கையின்படி உண்மையிற் பண்டாரங்கள் சொத்து வைத்திருக்கக் கூடாது. ஆனல் சென். பிரான்சிசு என்பாரின் மூலக் கருத்துக்களுக்கு மாருக அவரைச் சேர்ந்த சீடர்கள் தமக்கென மடங்களை வைத்துக்கொண்டது மன்றி, நூலகங்களையும் பெரிய கோயில்களையும் தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். இப்பண்டாரங்களின் செல்வாக்குப் பெருகவே, இவர் களது சபையை நிறுவியவரின் உயரிய கொள்கைகளை இவர்கள் மறந் தனர் அல்லது மத்தியகால வாழ்வுக்கேற்ப அவைகளை இவர்கள் மிகத் தந்திரமாகத் திரித்துக்கூறினர். சபைத்தாபகரது சமய சம்பந்தமான ஏழ்மை விரதக் கோட்பாடுகளை இன்னும் பின்பற்றியவர்கள் தம் சபைத் துறவிகளாலேயே துன்புறுத்தப்பட்டனர். கல்வி கற்பதென்பது ஆன்ம மீட்புப் பணியின் தூய்மையை அழிக்கும் ஒரு பொறி என்று அச்சபைத் தாபகர் கருதி அதனை எதிர்த்து வந்திருந்தார் ; ஆனல் விசுப்பாண்டவர் குருேசெற்று என்பாரது பேராதரவிலும் அறிவுத் தலைமையிலும் ஒட்சு போட்டு பல்கலைக்கழகத்திற் சேர்ந்து படித்த, சாம்பர்நிற உடையணிந்த பண்டாரங்கள் கல்வியிற் சிறந்த முறையில் முன்னேறினர். குருேசெற்று என்பாரின் நண்பராகிய ஆதம் தி மார்சு என்பாரும் உரோசர் பேகன் என்பாரும் ஒட்சுபோட்டில் முன்பு பயின்ற ஒட்சுபோட்டுப் பிரான்சிசுக்கன் சபையினரைச் சேர்ந்தவராவர்; அச்சபையினரிற் பிந்திய தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் ஆங்குக் கல்வி பயின்ற பிறர் இடன்சு சுகோற்றசு என் பாரும் ஒக்காம் நாட்டு உவில்லியம் என்பாரும் ஆவர். தத்துவஞானம், பெளதிகவிஞ்ஞானம், மருத்துவம் ஆகியவை சென். பிரான்சிசைப் பின் பற்றிய ஆங்கிலத் துறவிகளாற் பெரிதும் வளர்ச்சியடைந்தன.
எனைய இயக்கங்களுக்கு நேர்ந்தது போன்று பண்டாரங்களின் இயக்கத் திற் கொளுந்து விட்டெரிந்த உண்மையான திருத்தொண்டுணர்ச்சி, நாளடைவிற் சுவாலை குறையத் தொடங்கிற்று ; ஆனல் அவ்வியக்கத்துக் குரிய அமைப்புக்கள் மறையவில்லை. பதினன்காம் நூற்றண்டிற் பிரான் சிசுக்கன் சபையையும் தொமினிக்கன் சபையையும் சேர்ந்த ஆங்கிலத் துறவிகள் சத்திவாய்ந்த ஒரமைப்புடைய இரு தாபனங்களைச் சேர்ந்தவர் களாயிருந்தாலும், அவர்களுக்கு எதிரான பல விரோதிகளும் இங்கிலாந் தில் இருக்கவே செய்தனர். உலகியல் சார்ந்த மதகுருமார், தங் களுக்குக் கீழிருந்த கோயிற் பற்றுக்களில் உத்தரவின்றிப் புகுந்து, மதகுருக்களுக்குட்பட்ட ஆடுமாட்டுத் தொகுதியையும் அவர்களின் வரு மானத்தையும் கவர்ந்த இப்பண்டாரங்களை, விக்கிளிபு இயக்கத்தினர் தமக்குப் பரமவைரிகளாக இருந்த பிரான்சிசுக்கன் தொமினிக்கன் பண் டாரங்களை எவ்வாறு வெறுத்தனரோ அவ்வாறே வெறுத்தனர். சமய சம்பந்தமாகப் பூண்ட எழ்மை விரதத்தின் பிரமாணங்களின்படி ஒழுகு

பண்டாரங்களும் அவரைக் கண்டித்தோரும் 279
வதாகப் பாவனை செய்து, பொதுமக்களின் மூட நம்பிக்கைகளைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு தம் நலன்களைப் பெற்றனுபவித்து வந்த “ஐயர் ’ களின் எமாற்று வித்தைகளைக் கண்டு சோசர் போன்ற உலக மேதாவிகள் எள்ளி நகையாடினர். சமயப் பற்றும் வைதிகக் கொள்கையுமுடையவரான கோவர் தாமும் இப்பண்டாரங்களைப் பற்றி பின்வருமாறு எழுதும்படி யாகிவிட்டது : “ பெரிய கோயில்களையும், கோபுரங்களையும், மடங்களையும் எழுப்பியவர்கள் தகாப்புணர்ச்சி, கபடவேடம் எனும் பல தீமைகளைக் கொண்ட இயல்பினராவர் ”.
எனினும் பதினன்காம் நூற்றண்டின் இறுதியிற்கூட இப்பண்டாரங் களைப் பின்பற்றிய மக்கள் பலராவர் ; ஒரு பண்டாரமாக மரிப்பதை விண் ணுலகடைவதற்கான அனுமதிச் சீட்டாக இன்னும் மக்களிற் பலர் கருதி யிருந்தனர். பதினைந்தாம் நூற்றண்டில் இப்பண்டாரங்களின் எதிரிகளான உலொல்லாடுகள் நசுக்கப்பட்டிருந்தனரெனினும் இவர்களின் செல்வாக்குக் குறைந்து வந்தது. மதசீர்திருத்த இயக்கம் எனும் புயல் வீசியபோது இப்பண்டாரங்களை ஆதரிப்பார் எவருமிருந்திலர். உலகியல் சார்ந்த மத குருமார் இவர்களைத் தங்கள் விடயங்களிற் காரணமின்றித் தலையிடுபவர் களாகவும் எதிரிகளாகவும் எப்போதும் கருதிவந்தனர். அன்றியும் போப் பரசரின் ஆதிக்கத்தை WI ஆம் என்றி அழிக்க முனைந்தபோது இப் பண்டாரங்களைக் கலைத்து விடுவது அவனது கொள்கையின் ஒரு முக்கிய கூருகவிருந்தது; ஏனெனில் இப்பண்டாரங்களே போப்பரசரின் தனிப்பட்ட ஆதரவு பெற்றேராயும் அவருக்குத் தாசராயும் இருந்தனராதலின்.
நோமானியரது படையெடுப்பிற்குப்பின் இங்கிலாந்தில் நுழைந்து அந் நாட்டவரை ஆட்கொண்ட அந்நிய நாட்டுச் செல்வாக்குக்களிற் கடைசியானது பண்டாரங்களின் வருகையாகும். அதன்பின் வெளிநாட்டுச் செல்வாக் கெனும் வெள்ளம் பின்னிடைந்தது என்ருலும்,அச்செல்வாக்கு வெள்ளத் தின் வளமான வண்டல் நிலத்திற் படிந்திருந்தது; இப்போது உள் நாட்டிலிருந்து வெளிவந்த தென்றல் அவ்வண்டலை இடம் பெயர்த்து வீசலாயிற்று. எட்டுவேட்டு ஊழியிலும், பின்வந்த பிளந்தாசெனற்றுக் காலத்திலும் இங்கிலாந்து முன்போல வெளியிலிருந்து ஓயாது செல்வாக் கைப் பெற்றுக் கொள்வதை விடுத்துத் தனது செல்வாக்கை எராளமாகப் பிறருக்கு வழங்குவதாயிற்று. அந்நாடு தனக்கேயுரித்தான பல படைப்புக் களை உருவாக்குவதிலே தலைசிறந்து நின்றது. முதலாம் எட்டுவேட்டின் கீழ் இங்கிலாந்துக்கெனச் சட்டமும் பாராளுமன்றமும் எற்பட்டன; மூன்றம் எட்டுவேட்டின் கீழ் அந்நாட்டின் மொழியும் இலக்கியமும் உதயமாயின இலக்கிய மேதை சோசரும் அவரையடுத்து விக்கிளிபும் தோன்றினர்; சமயத்துறையில் இங்கிலாந்து ஆற்றிய தனிப்பெருந் தொண்டும் ஒருங்கே உருவாயது. இதனிடையில் ஆங்கில வேளாண் மரபினர் தம் தீவுக்குரிய ஆயுதத்தின் துணைகொண்டு பிரெஞ்சுக்காரரை வெற்றி கொண்டனர்

Page 150
280 பண்டாரங்களும் அவரைக் கண்டித்தோரும்
வேட்டையாடுவதிலும் கேளிக்கை செய்வதிலும் விருப்பங் கொண்ட, நல் லியல்பு படைத்த காட்டு மக்களின் மனதை அந்நாட்டு விற்போர் வீரன் கவர்ந்தான்; அவன் தான் சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எதிர்த்து, அதனுற் அச்சமூகத்தினின்று விலக்கப்பட்டிருந்தவனும் உல்லாச வாழ்க்கையுடையவனுமான உருெபின்உட்டு எனும் ஆங்கிலேயனவான்.
எட்டுவேட்டு, பிளந்தாசெனற்று ஆகிய அரச பரம்பரையினர் ஆண்ட காலத்தே, இங்கிலாந்தில் எற்பட்ட அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் அவற் றுக்குத் துணைபுரியவும் ஏற்பட்டவை ஆங்கில நாட்டில் உருவான சுதந்திர வளர்ச்சியும் செல்வ வளர்ச்சியும் ஆகும். அடிமைப் பண்ணையாட்களை விடுவித்ததால் அந்நாட்டில் விடுதலையுணர்ச்சி வளர்ந்தது ; கம்பளிமயிர் எற்றுமதிக்குப் பதிலாகத் துணி உற்பத்தித் தொழில் நிறுவப்பட்டமையால் அந்நாட்டின் செல்வம் பெருகியது. அதே வேளையில் 14 ஆம் 15 ஆம் நூற்றண்டுகளில் ஆங்கிலேயரே தம் நாட்டில் தொழிலுக்கான முதலீடு அளிப்பதையும் பணம் கடன் கொடுத்தலையும் மேற்கொள்ளலாயினர். முதலாம் எட்டுவேட்டு மன்னன் யூதரை நாட்டிலிருந்து விரட்டுவதின் மூலம் இதற்கு வழி அமைத்துக் கொடுத்தான்.
யூதர்கள் எனைய பிற நாட்டவரைப் போன்று நோமானியர் படையெடுப் பின்போது இங்கிலாந்திற் குடிபுகுந்தனர். சட்சனியர்கால இங்கிலாந்து மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்ததால், பணம் வட்டிக்குக் கொடுப்போர் ஆண்டுப் பெரும்பாலும் தேவைப்பட்டிலர். ஆனல் நோமானிய, அஞ் செவின் வமிசங்களைச் சேர்ந்த அரசர்கள், ஐரோப்பாக் கண்டத்திலிருந்த மற்ற அரசர்களைப் போன்று, தங்களுக்கு வரவிருந்த வருமானத்தை எதிர்பார்த்து உரொக்கப் பணம் கொடுக்கும் யூதர்களிடமிருந்து கடன்
* உருெபின்உட்டு முற்காலத்தில் நாட்டில் வாழ்ந்து திரிந்த ஒரு காட்டுமிராண்டி யாவான் ; ஆனல் மத்திய ஊழியின் இறுதியில் அவனுடைய செல்வாக்கு ஓங்கியிருந்தபோது அவன் ஒரு சிறந்த வேளாளனுக விருந்தான். பதினன்காம் நூற்றண்டின் இறுதியில் கன்றிங்டன் பிரபு என்று மாறுவேடம்பூண்டு முரட்டுக்குண முடைய ஒருவனஞன். நாம் அறிந்துள்ளபடி அவனது வரலாற்றுக்காலம் பிளந்தா செனற்று ஊழியின் பிற்பகுதியிலிருந்து தியூடர் ஊழியின் முற்பகுதி வரையுள்ளதாக இருக்கிறது. முற்கால நாட்டுப்பாடல்கள் அவனை ஓர் அரசனு டன் தொடர்புபடுத்திக் குறிப்பிடுகின்றன ; அவ்வரசன் முதலாம் இரிச்சாட்டு அல்ல ; அநே கமாக முதலாம் எட்டுவேட்டு அரசனுகவிருக்கலாம். உருெபின் தனது நீண்ட வில்லினல் பல வீரச்செயல்களே ஆற்றியதும், பணம் படைத்த மத குருக்களைப் பகைத்துவந்ததும் அவன் பதின்மூன்றம் நூற்றண்டுக்குப் பின் வாழ்ந்த ஒருவன் என எடுத்துக் காட்டுகின்றன : அன்றியும் அவனுடைய “பண்டாரமான” தக்கு என்பார் அவன் வசித்த தீவின் இயற்குழ் நிலைக்கு ஏற்றவணுக அவனை ஆக்கவேண்டியிருந்தது. மேரியன் என்ற பெண்மணியின் சுயவரலாற்றிலிருந்து அவள் இவனுக்கு முன் வாழ்ந்ததாகத் தெரிகிறது. 1500 ஆம் ஆண்டுக்கு முன் அவள் உருெபின் கூட்டத்தாரோடு சேர்ந்திருக்கவில்லை. ஆனல் அவளைப்பற்றிய முழுக் கருத்துக்களும், புராதனக்கதையின் எந்தப் பகுதியிலும் காணப்படுவது போன்று ஆங்கிலேயருக்குரிய தனித்த இயல்புகளையுடையவாய் இருக்கின்றன. அவளைப்பற்றிய விபரம் ஒருவேளை பத்தொன்பதாம் நூற்றண்டைச் சேர்ந்த பீகொக்கு என்பவரால் பெரிதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம்.

யூதர் 281
உதவிபெற்று வந்தனர். வட்டிக்குக் கடன் கொடுப்பதைத் திருச்சபை கண்டித்தது ; ஆனல், கிறித்துவ வியாபாரிகள் தங்களிடம் கடன்கொடுக்கப் பணமில்லாததால், அரைமனதுடன் அத்தொழிலை புறச்சமயிகளான யூதர் கையில் விட்டனர். ஆகவே யூதர்கள் வட்டித் தொழில் செய்து திளைத்து வந்தனர். இவ்யூதர்கள் கடற்பஞ்சுபோல அரசனுக்கிருந்தனர். எவ்வா றெனின் இவர்கள் அரசனுடைய குடிமக்களுக்குத் தங்களுடைய பணத்தை கடனுகக் கொட்டி, அம்மக்களிடமிருந்து கடும் வட்டி வாங்கிக் கொள்ளைப் பணம் சம்பாதித்தனரென்க. கடன் பட்டவர்கள் இவர்கள்மீது ஆத்திர மடையும்போது இவர்களைக் காப்பாற்றுவதற்கு அரசன் பக்க பலமாக விருந்தான் ; இவ்வுதவிக்குப் பதிலாக அரசன் யூதர்களிடம் வந்து குவிந்த ஏராளமான செல்வத்திலிருந்து தனக்கு வேண்டிய அளவைப் பெற்றுக் கொண்டான். நிலப்பிரபுவுக்குப் பண்ணையடிமை எவ்வாறு உதவியாக இருந் தானே அவ்வாறே அரசனுக்கு யூதரிருந்தனர் ; கொள்கையளவில் யூதர் கள் வைத்திருந்ததெல்லாம் அரசனுக்குரியதேயாகும். அரசனுடைய “ யூதர் கருவூலம் ” யூதர்களுக்குரிய கடனை அறவிடுவதில் அவர்களுக்குத் துணையா யிருந்தது. பகையான ஒரு நாட்டில் அரசன் ஒருவனே யூதர்களுக்கு நண்பனக விருந்தான்; அவர்கள் அவனுடைய தயவையே முழுவதும் நாடி வாழவேண்டியிருந்தது. கடன் கொடுக்க எவருமில்லாதிருந்தநேரத் தில் முறையற்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் மூலவட்டித் தொழி லாளராக யூதர் இருந்ததும், மற்றவர்கள் சமய நம்பிக்கையுடையவர்களா யிருக்க இவர்கள் மட்டும் புறச்சமயிகளாக விருந்ததும் இவர்களை மக்கள் வெறுப்பதற்கான இரு எதுக்களாயிருந்தன.
யூதர்கள் இங்கிலாந்திற் பொருள் கொடுத்துதவல் சம்பந்தமாக அரச னெடு தொடர்புகொண்டிருந்ததுடன், பரன்களுக்கும் போர்வீரர்வகுப்பின ருக்கும் வட்டிக்குக் கொடுப்பதைப் பெரும்பாலும்,தம் கருமமாகக் கொண்டு மிருந்தனர். யுத்தஞ் செய்வதற்கும் அரசாங்க நிர்வாகஞ் செய்வதற்கும் வலிமை தரும் சாதனமாக யூதர்கள் விளங்கினர்களேயன்றி வாணிபமும் கைத்தொழிலும் சிறந்தோங்குவதற்கான சாதனமாக அவர்கள் இன்னும் பயன்பட்டிலர். எனெனில் வர்த்தக முதலாண்மைக்காலம் இன்னும் உதய மாக வில்லையாதலின்.
I ஆம் என்றி காலத்தில், பணச்செல்வாக்கின் காரணமாகத் தனக் கெனத் தனியான கருவூலமொன்றை வைத்துக்கொள்ளும் பெருமை பெற்றவனன இலிங்கன் நாட்டு ஆரோன் என்பானைப் போன்று சில ஆங்கில யூதர் பெருஞ்செல்வராயிருந்தனர். செல்வ வளமிக்க தெற்கு அங்கிலியாவைச் சேர்ந்த பட்டணங்களில் மண்ணுலும் மரத்தாலும் கட்டப் பட்டிருந்த, எளிய கிறித்துவர்களின் வீடுகளையடுத்துக் கற்களாற் கட்டி எழுப்பப்பட்டிருந்த கோட்டைகளுக்கும் கோயில்களுக்கும் போட்டியாக, இலகுவில் தகர்க்க முடியாதபடி கட்டப்பட்டிருந்த யூதர்களுக்குரிய கல்வீடுகள்

Page 151
282 முதலாம் எட்டுவேட்டு யூதரை வெளியேற்றல்
தோற்றமளித்தன. ஆனல் அரசன் யூதர்களுக்கு அளித்துவந்த தனது பாதுகாபபினின்று பின் வாங்கிய போதெல்லாம், யூதருக்கு எதிராக எழுந்த பயங்கரமான புரட்சிக்காரர் அவர்களைத் தாக்கி அவர்களிடமிருந்த கடன்பத்திரங்களை அழித்ததுமுண்டு.
முதலாம் எட்டுவேட்டு மன்னன் ஆட்சியின்போது தகவில்லா இம்முறைமை ஒரு கோர முடிவை எய்தியது. அக்கால நிலைமையை நன்கு கருத்திற் கொண்டே எட்டுவேட்டு மன்னன் யூதர்களை இங்கிலாந்திலிருந்து துரத்தினன் எனக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு அவன் செய்தது தன்னலத்தைக் கருதாது ஆற்றிய ஒரு கருமம் எனக் கொண்டு மக்கள் அவனைப் பாராட்டினர் ; உண்மையிலே இது மக்களனைவரும் போற்றத்தக்கதொரு செயலேயாம். எட்டுவேட்டு இத்தகைய கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமாகவுமிருந்தது; எவ்வாறெனில் அரசனும் அவன் விழுமியோரும் மற்றெரு சாராரிடமிருந்து, அதாவது “ கடும் வட்டித்தொழில் ’ புரியும் கிறித்துவர்களிடமிருந்து, இப்போது கடன் வாங்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தனர். முதன் முதலில் இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டித் தொழில் பெரும்பாலும் பிளமிங்குகளதும் இத்தாலியரதும் கையிலிருந் தது. பாடி, பெருசி போன்ற புளோரந்தைன் வர்த்தக நிலையங்களிலிருந்தே I ஆம் எட்டுவேட்டு மன்னன் கடன் வாங்கிவந்தான். அதன் பின் ஆங்கில நாட்டு முதலாளிகள் தோன்றி நாளடைவில் முக்கியத்துவம் பெறலாயினர். ஒர் ஆங்கில விழுமியோர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் வர்த்தகத் துறையில் முதன் முறையாக அக்குடும்பத்தின் பெருமையை நிலைநாட்டியவரும் அல் எனும் பகுதியைச் சேர்ந்தவருமான உவில்லியம் தி லா போல் என்பவரையும், இலண்டன் நகர முதல்வரும் வீரருமான இரிச்சாட்டு விற்றிங்டன் என்பவரையும் போன்ற வியாபாரிகள் நூறுவருட யுததத்துக்கும் உரோசா யுத்தங்களுக்கும் வேண்டிய பொருளை அரசனுக்கும் பெருமக்களுக்கும் கடன் கொடுத்து வந்தனர். IV ஆம் எட்டுவேட்டு மன்னன் இலண்டன் மாநகரவாசிகளிடம் மிக நெருங்கிப் பழகியதற்குக் காரணம் அவன் அவர்தம் மனைவியரைக் காமுற்றதனல் மட்டுமன்றி அவர்களிடமிருந்து பணம் கடனுகப் பெற்றதாலும் என்க. இவ்வாருகத் தியூடர் மன்னர்களின் ஆட்சியில் வர்த்தக முதலாண்மைக்காலம் சிறிது சிறிதாகத் தோன்றியபோது அத்தகைய மூலதனம் ஆங்கில நாட்டு மக்கள் கையிலேயேயிருந்தது.
சுதுவாட்டு, அனேவீரியர் ஊழியில் இங்கிலாந்திற்கு யூதர்கள் மீண்டும் வந்தபோது அந்நாட்டு மக்கள் நாணயச் சந்தையையும் பிறஅறிவுத் துறைத் தொழில்களையும் தாமே கட்டுப்படுத்தக்கூடியவர்களாயிருந்ததை யூதர்கள் கண்டனர். இதனிடையில், விவிலிய நூலைப் புதிதாகப் படித்து ஆங்கிலேயர் பண்பாடுற்றிருந்தமையால், “தெரிந்து கொள்ளப்பட்ட மக்க ளாகிய ’ யூத இனத்தவரின் மீது சமயம் காரண்மாக அவர்கள் கொண்

*ஆங்கில யசுற்றினியன்” 283
டிருந்த பகைமை பெரிதுங் குறைந்திருந்தது. இக்காரணங்களால் மகிழ்ச்சி யான சூழ்நிலையில் யூதர்களுக்கும் ஆங்கிலேயர்க்கும் இடையேயிருந்த உறவு புதுப்பிக்கப்பட்டது. இவ்வுறவானது தங்கள் சொந்தக் கருமங்களை நிருவகித்துக் கொள்ளும் பழக்கத்தைத் தம் அறிவுக்குறைவினலோ சந் தர்ப்பக் குறைவினலோ பெற்றிராத சுதேச மக்கள் வாழும் இடங்களில் அம்மக்களுக்கும் யூதருக்குமிடையே இன்று நிலவும் உறவைவிட அதிக நெருங்கியதாகும்.
முதலாம் எட்டுவேட்டு “ஆங்கில யசுற்றினியன்’ என அழைக்கப்பட்டுள் ளான். இதற்குக் காரணம் உரோமன் பேரரசு வலிமை குன்றிவந்த காலத்திற் யசுற்றினியன் பழைய உரோமன் சட்டத்தைத் தொகுத்தது போன்று எட்டுவேட்டும் கரும மாற்றினன் என்க. எட்டுவேட்டு தொகுத்த ஆங்கிலச் சட்டத்தை யசுற்றினியன் தொகுத்த உரோமன் சட்டத்துடன் ஒப் பிடுவது குழந்தைப் பருவத்தை வயோதிகப் பருவத்துடன் ஒப்பிடுவதை யொக்கும் என்பர். ஆனல் சட்டம் சம்பந்தமான விடயங்களை வரை யறுக்கும் அரசபதவியாளன் என்ற முறையிலவாது எட்டுவேட்டு மன்னன் தன் முன்மாதிரியான யசுற்றினியனை ஒத்திருந்தான். குழந்தைப் பருவத்தி லிருந்த நாட்டிற்கும் வளைந்துகொடுக்குந் தன்மையையுடைய சிறந்த ஆங்கி லச் சட்டத்திற்கும் பொருந்தாத எச்சட்டக் கோவையையும் எட்டுவேட்டு திட்டவட்டமாக உருவாக்கியதில்லை. எனினும் அவன் ஆங்கில நாட்டுக் குரிய காணிச்சட்டம், பொதுச்சட்டம், பாராளுமன்றம் ஆகியவற்றை ஓரளவு வரையறுத்துக்கூறினன் எனலாம். அவ்வரசனின் கீழ், இதுவரை உறுதி யற்றனவாயிருந்த மத்தியகால அரசதாபனங்கள் நிலையான உருப் பெறலாயின. இந்நிலை ஏற்பட்டதிலிருந்து, பாராளுமன்றத்துக்கும் ஆலோ சனைக் கழகத்துக்குமிடையே கருமமாற்றுவது சம்பந்தமாக இருந்து வந் வேறுபாடு தெளிவாக்கப்பட்டது. A.
1 ஆம் எட்டுவேட்டு ஆண்ட முதற் பதினெட்டு வருடங்களும் ஆங்கில நாட்டு நியதிச்சட்டமுறை தோன்றியகாலமாகும். உள்நாட்டையும் வெளி நாட்டையும் சேர்ந்த சிறந்த வழக்கறிஞர் நடுவண் எட்டுவேட்டு அமர்ந்து தனது சிறந்த வளர்ச்சிப் பருவத்திலே, தனக்குரிய சட்டநுணுக்க அறிவைப் பயன்படுத்தி மிகுந்த சட்ட ஆர்வத்துடன் தன் நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒன்றின் பின் ஒன்ருகச் சட்டங்களைப் பிறப்பித்தான். மெயிற்றுலாந்து கருத்தின்படி, எட்டுவேட்டு சட்டம் பிறப்பிப்பதிற் காட்டிய ஆர்வமானது சீர்திருத்த முறிக்குப் பின்வந்த முதற்சில வருடங்களில் உவிக்குக் கட்சி யினர் சட்டமியற்றுவதிற் காட்டிய ஆர்வத்துடன் மட்டுமே ஒப்புநோக்கக் கூடிய சிறப்புடையதாகும்.
இந்நியதிச் சட்டங்கள் யாவும் சட்டமுடையின் சாரத்தையே மாற்றி
யமைக்கக்கூடியனவாய் இருந்தமையால், அவற்றின் தோற்றம் ஒரு குறிப் பிடத்தக்க நிகழ்ச்சியேயாகும். இதுவரை “ சட்டம்” என்று கொள்ளப்
1272一 3.07.
52565.

Page 152
284 “ஆங்கில யசுற்றினியன்”
பட்டது ஆங்கில-தேனிய வழமைகளை மூலமாகக் கொண்டதாக இருந்து வந்தது ; அது மரபுமுறைக்குரியதாயும் வழமையின் பாற்பட்டதாகவும் எழுதப்படாததாகவும் இருந்து; அன்றியும் அது பெரும்பாலும் அவ் வத்தலத்திற்குரிய இயல்புகளையுடையதாகவும், அநேகமாக வழக்கிறந்த தாகவுமிருந்தது. வழமையின் பாற்பட்டதாக நிலமானியச் சட்டம் என்ப தொன்றுமிருந்து வந்தது. மிக்க அண்மைக் காலத்தில் “ வழக்குச் சட்டம் ” என்பதொன்றும் எற்பட்டது , இச்சட்டம் புகழ்பெற்ற அரச நீதி பதிகள் தாம் செய்த வழக்கு விசாரணையின்போது செய்த தீர்ப்புக்களை யும், அத்தீர்ப்புக்களைப் பற்றிக் கிளான்வில், பிறற்றன் போன்ற சட்ட நிபுணர்கள் எழுதிய விமரிசனக் கட்டுரைகளையும் கொண்டதாகும். இவை தவிர கிளரண்டன் யாப்பு, மகாபட்டயம் போன்ற பொதுச் சட்டமுறை களும் இருந்தன ; இவைகள் சட்டம் என்பதின் அவசியத்தைத் திரும்ப வும் கூறி அதனை நடைமுறையிற் கொண்டுவருவதைத் தம் நோக்க மாகக் கொண்ட போதிலும் உண்மையில் இவை சட்டத்தை விவரமாகக் கூறுவனவாயமைந்தன. இன்றும் சட்ட நடைமுறையை மாற்றியமைப்ப தான, வேத்தியல் அசைசுகள் அல்லது கட்டளைச் சட்டங்கள் இருந்தன : உதாரணமாக சண்டைமூலம் விளங்குவதற்குப் பதிலாக நடுவர் குழுமூலம் விளக்கம் செய்வதுபோன்றன. ஆனல் இப்போது 1ஆம் எட்டுவேட்டு காலத் திலேயே முதன் முதலாவதாகச் சந்தேகத்துக்கிடமின்றி “ சட்டம் ” என் பதையே மாற்றியமைக்கத் தகுதிவாய்ந்த “சட்டங்கள்’ எற்பட்டிருந்ததை நாம் காண்கிறேம் ; “ அடிப்படைச்சட்டம்’ என்பதின் வரையறுக்கப்படாத எஞ்சியுள்ள பாகம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது ; எனெனில் அரசனே பாராளுமன்றமோ இன்னும் “அனைத்தையும் ஆற்றக்கூடிய தகுதி ” பெற்றிருக்கவில்லை."
இவ்வாருக முதலாம் எட்டுவேட்டின் ஆட்சியிற் பிறப்பிக்கப்பட்ட முதல் நியதிச் சட்டங்களில், குறிப்பாக “தி தோனிசு கொண்டிசனலிபசு” எனும் சட்டத்திலும், குய்யா எமுருேரசு’ எனும் சட்டத்திலும், நிலமானியச்
முதலாம் எட்டுவேட்டின் “சத்திவாய்ந்த சட்டவாக்க மானது பிறப்பிக்கப்படாத சட்டங்களின் வளர்ச்சியைத் தடுத்ததின் மூலம் முக்கிய விளைவொன்றைத் தோற்றுவித்தது.” மெயிற்றுலாந்து அரசியலமைப்பு வரலாறு ப : 21. இதுவரை நியதிச் சட்டம் எதுவும் இல்லா ததால் நீதிமன்றங்கள் தங்கள் விருப்பம்போல் தாங்கள் இதன்பின் செய்யக்கூடுமாயிருந்ததை விட மிகுந்த உரிமையுடன் சட்டங்களை உருவாக்கின (உ-ம் இச்சட்டமொன்றின்படி கொலை செய்தவரையும் பாதகச் செயல் புரிந்தவரையும் குருடராக்குவது அல்லது முடவராக்குவது அல்லது தூக்கிலிடுவது போன்ற தண்டனையை நிர்ணயிருக்கும் பொறுப்பு பதினென்றம் நூற்ருண்டிலிருந்து பதின்மூன்ரும் நூற்றண்டுவரை அரசனிடமும் அவனது நீதிபதிகளி டமும் இருந்தது. முதலாம் உலில்லியம் பெருங்குற்றவாளிகளை முடவராக்குவதற்காகத் தீர்ப் பளித்துவந்தான். ஆனல் பதின்மூன்ரும் நூற்ருண்டைச்சேர்ந்த நீதிபதிகள் பெருங்குற்ற வாளிகளுக்கு மரணதண்டனையளித்து வந்தனர். ஆனல் பிற்காலத்தில் மரணதண்டனை யளிக்கக்கூடிய குற்றங்களின் விவரப்பட்டியல் பாராளுமன்ற நியதிச் சட்டத்தின்படி தீர்மானிக் கப்பட்டது; மரணதண்டனையை வழங்கும் நீதிபதி தம் தலையில் கறுப்பு முடியிடவேண்டு ைென்றும் சட்டம் விதித்தது.

குய்யா எமுருேரசின் விளைவுகள் 285 .
சட்டம் சிலமாற்றங்களுடன் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. அச்சட்டத்தின்
அடிப்படையில் இக்காலக் காணிச் சட்டம் தோன்றுவதற்கு ஏற்றவாறு
அம்மாற்றங்கள் செய்யப்பட்டன. உண்மையில், சொத்துரிமை பற்றிய ஆங் கிலச் சட்டத்தின் அடிப்படையாக முதலாம் எட்டுவேட்டின் இரு பெரிய நியதிச் சட்டங்களும் நெடுங்காலமிருந்து வந்ததனல், இன்றும் அச்சட்டங் களைப் பற்றிய அறிவு ஆங்கில வழக்கறிஞர்களுக்கு அத்தியாவசியமாயிருந்து வருகிறது. கிராமப்புற இங்கிலாந்திற் பல நூற்றண்டுகளாக நாடெங்கும் குழப்பம் விளைவிக்கக் காரணமாயிருந்த சொத்துக்களைக் கட்டுப்படுத்தப்பட்ட உடைமையாக்கும் வழக்கை எற்படுத்துவதற்கு தி தோனிசு சட்டம் ஏதுவா யிருந்தது. குத்தகை நிலங்களை மேன் மேலும் சிறுசிறு துண்டுகளாகக் குத்தகைக்கு விடாதவாறு தடுத்து, தங்களுக்குச் சேரவேண்டிய நிலமானி யக் கடன்களின் முழுமதிப்பையும் தமக்கு உரித்தாக்குவதற்காக முதலாம் எட்டுவேட்டும் அவனுடைய வாரமுதல்வரும் குய்யா எமுறேரசு எனும் சட்டத்தைப் பிறப்பித்தனர். ஆனல் உண்மையாகவே இச்சட்டம் நிலமானிய முறைமையை விரைவில் அழித்து விடுவதற்கு எதுவாயிருந்தது. எவ்வா றெனில், வார முதல்வர் தம்நிலங்களை விற்றுவிட விரும்பியபோது அந் நிலங்களை வாங்குவோரைத் தங்களைப் போன்று வார முதல்வராக ஆக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு எற்பட்டது. இதன் விளைவாகப் பல நூற்றுக்கணக்கானேர் அரசனிடமிருந்து நேரடியாக நிலங்களைப் பெற்றவரா யினர் ; இவ்வழி, பல்வேறு வகுப்பினரிடையிருந்த எற்றத்தாழ்வுகள் ஒரேமட்டமாக்கப்பட்டதிலிருந்து நிலமானிய உணர்ச்சி இன்னும் குலைந்து போனது. இதன்பின் மிக விரைவில் ஒருவன் பல நூற்றுக்கணக்கான வார முதல்வருள் ஒருவனக இருப்பதிலும் பார்க்கப் பாராளுமன்றத்துக்கு அழை கப்படுவதிற் பெரிதும் பெருமைப்பட்டான். அன்றியும், அரசன் நாட்டிலுள்ள நிலமனைத்துக்கும் சொந்தக்காரய்ை இருப்பதைக் காட்டிலும், நாட்டின் நிருவாகத் தலைவனக விருப்பதிலும் பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவனக விருப்பதிலும் அதிக பெருமையடைந்தான். நிலமானிய முறைக்குட்பட்ட சமூகமாகவிருந்த ஆங்கிலேயர் இப்போது பாராளுமன்ற முறைக்குட்பட்ட ஒரு சமூகத்தினராகிக் கொண்டிருந்தனர்.
எட்டுவேட்டு, காணிச் சட்டத்தை நன்கு வரையறுத்திருந்தான் ; சட்ட மன்றங்களை வரையறுக்கும் கருமம் எப்போதும் முன்னேறிக் கொண்டிருந் தது போல, எட்டுவேட்டு ஆட்சியிலும் நடைபெற்று வந்தது. 13ஆம், 14 ஆம்
1. “குய்யா எமுருேரசு" சட்டத்தின்படி நீலத்தை வைத்திருப்பவன் அந்நிலத்தை விற் பதற்குத் தாராளமாக அனுமதிக்கப்பட்டான் ; ஆனல் நிலம் வாங்குவோன் நிலம் விற் பவனுக்குப் பண்ணையாளாக இருக்க முடியாது; அதற்குப் பதில் நிலம் விற்பவன் எந்த அரசனிட்மிருந்து அல்லது பிரபுவிடமிருந்து நிலத்தைப் பெற்றிருந்தானே அவ்வரசனுக்கு அல்லது பிரபுவுக்கு நிலம் வாங்குவோன் பண்ணையாளாக இருக்கவேண்டும். இசுக்கொத் துலாந்து நாட்டுச் சட்டம் குத்தகை நிலத்தைச் சிறுதுண்டுக்காணிகளாக்கிப் பிரித்துக் கொடுப்ப
தைவிட இசுக்கொத்துலாந்து நிலமானியத்திட்டதின்கீழ் நீண்டகால மிருந்ததற்கு, இது ஒரு
காரணமாகும்.
275.

Page 153
286 குய்யா எமுருேரசின் விளைவுகள்
நூற்றண்டுகளில் கருவூலம் சம்பந்தமான மன்றம், வழக்காடும் மன்றம், அரச நீதிமன்றம் என்பவை ஒன்றின்பின் ஒன்ருக எற்பட்டுத் தனித்தனி யான மன்றங்களாகக் கருமமாற்றின. ஒவ்வொன்றும் தனக்குரிய பதி வேடுகளையும் சட்டநடைமுறைகளையும், நிரந்தரமான அலுவலாளர், நீதி பதிகள் ஆகியோரையும் கொண்டிருந்தது. உயர்முறை நீதிமன்றப் பகுதி பிற்காலத்தே தோன்றியது; அது தனியான இயல்புகளையுடையது.
1 ஆம் எட்டுவேட்டு காலந்தொட்டு, வழமைச் சட்ட நீதிமன்றங்கள் உயர் முறை நீதிமன்றத்தினின்றும் திருச்சபைக்குரிய நீதிமன்றங்களின்றும் வேறுபட்டனவாய், புனித சபைக்குட்படாதவர்களால் நிருவகிக்கப்பட்டு வர லாயின. உலகியல் சார்ந்த சட்ட மன்றங்களிற் குருமார் பணியாற்று வதையும் அச்சட்டம் பற்றிப் போதிப்பதையும் போப்பரசர் கடந்த சில காலமாக ஆட்சேபித்து வந்தார். அரச நீதிபதிகள், பிறற்றன் போன்று திருச்சபைக்குரியவராகவோ கிளான்வில் போன்று வீரமரபினரான அரசிய லறிஞராகவோ அப்போது இருக்கவில்லை. இங்கிலாந்திற் சட்டத்துறை சம்பந் தமான உயர்பதவியென்பது வெளியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை ; வழக்கறிஞர் கழகத்தினின்றே வழக்கு மன்ற நீதி பதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர்; ஆனல் ஐரோப்பாவிலுள்ள பல நாடு களில் இன்றும் நீதிபதியும் வழக்குரைப்போனும் வெவ்வேருன, தனிப் பட்ட இரு தொழிற்றுறைகளைச் சேர்ந்தவராக இருந்து வருகின்றனர், ஆங்கிலச் சட்டம் இடைவிடாது பயிலப்படும் உவெசுற்றுமினித்தர் மாளிகை யிலுள்ள அரசமன்றங்களின் சட்டத்தொழிற்றுறை சம்பந்தமான சூழ் நிலையில் மத்திய ஊழிக்குரிய தொகுப்பு உணர்ச்சியானது வழக்குரைப் போரையும் நீதிபதிகளையும் தன்னுணர்வுள்ள ஒரே சமூகமாக மாற்றி யமைத்து வந்தது. இவர்கள் அயல் நாட்டு உயர்பதவியாளர் மீது பொரு மைப்பட்டவர்களாய், திருச்சபைக்குரிய வழக்கறிஞர்களுடன் போட்டியிடக் கூடியவர்களாய், “ உயர்தொழிலைச் சேர்ந்த சகோதரர் போல்’ தங்களுக் கிடையே நட்புணர்ச்சியுடையவர்களாய், அறிவும் ஒழுக்க நெறியும் சார்ந்த சிறந்த மரபை உருவாக்கி அதனைப் பாதுகாப்பவராய், அதே அமயத்தில் செல்வாக்கும் சிறந்த அமைப்பு முடையதுமான தொழிற்றுறையில் நேரிடக் கூடிய தவற்றுக்கும் மக்கள் அதிருத்திக்கும் உட்பட்டவர்களாய் இருந்தன ரெனினும் “ விழுமியோர் சமூகத்தினருடன் ” வைத்தெண்ணப்படக்கூடிய வர்களாயிருக்கவில்லை ; ஆனல் ஆற்றலும் உழைப்புமுள்ள எந்த ஆங்கி லேயனும், திருச்சபையின் கவர்ச்சிக்குக் காரணமாயிருந்த அத்தகைய செல்வத்தையும் பெருமையையும் தானும் பெறக்கூடிய வாய்ப்பை இப் போது அடைவதற்கான முன்னேற்ற வழியைக்கண்டான்.
சாதாரண வழக்கறிஞர்களை ஒரு வகுப்பினர் என்ற முறையில் நோக்கில், அவர்களே முதலாவதாகக் கற்றறிந்திருந்த பொது மக்களாவர்; அதன் காரணமாக அவர்கள் நாட்டு முன்னேற்றத்தில் முக்கிய பங்கெடுத்துக்

ஆண்டுக் குறிப்பேடுகள் 287
கொண்டனர். ஆங்கில வரலாற்றில் அவர்கள் வகிக்கும் இடம் பாராளுமன்ற உறுப்பினர் வகிக்கும் சிறப்பிடத்துக்கு அடுத்ததாகும். வழக்கறிஞரின்றி மறுமலர்ச்சி இயக்கமோ சுதுவாட்டு மன்னர்களை எதிர்த்துப் பாராளு மன்றம் பெற்ற வெற்றியோ ஒருபோதும் கைகூடியிராது. எனினும் வழக்கறிஞர் மரபும் சமூகமும் மத்திய ஊழிக்குரிய குறிப்பிடத்தக்கதொரு சிறந்த பேருய், எறத்தாழப் பல்கலைக்கழகங்களொடு ஒப்பிடக்கூடியனவாக அமைந்துள்ளன.
ஆங்கிலப் பல்கலைக்கழகங்களாற் கல்லூரிகள் நிறுவப்பட்டது போன்று, ஆங்கில வழக்கறிஞர்கள் தங்களுக்குரிய மன்றங்களில் வழக்கறிஞரை அனுமதிப்பதற்கான சட்டக்கழகங்ளை நிறுவினர். முதல் மூன்று எட்டு வேட்டுகள் காலத்திலே தெம்பிளர்கள ற் கைவிடப்பட்டுப்போன தோட்டங் களைச் சுற்றியும், அவற்றினுள்ளும் இவ்வழக்கறிஞர் தம் கல்விக்கூடங் களையும் நூலகங்களையும் தங்குமிடங்களையும் தொகுதிகளாக அமைந்தனர். இவர்களுடைய பொது விவகாரங்கள் நடைபெற்ற இ.மானது மேற்கில் இருமைல்களுக்கப்பால், அரண்மனையையடுத்து, உவெசுற்றுமினித்தர் மண்ட பத்தில் அமைந்திருந்தது , அங்கு இவர்கள் அரசமரியாதையுடன் நடத்தப் பட்டனர். ஒப்புக்கொள்வோனகிய எட்டுவேட்டின் மாளிகையை வித்தரிக்கும் முகமாக உலில்லியம் உரூபசு என்பவனல் சிறப்பாக நிர்மாணிக்கப்பெற்ற உவெசுற்று மினித்தர் மாளிகையானது உவெசுற்றுமினித்தர் மடாலயத்திற் குப் போட்டியாக எழுப்பப்பட்டது போற் காட்சி தந்தது. ஆனல் வழக்கறிஞர் கள்தாம் சட்டம் பயின்று வந்த சட்டக் கழகக் கட்டடங்களிற்றனே உண்டு உறங்கி, கல்வி பயினறு வந்தனர். இக்கழகக் கட்டடங்கள் வர்த்தகத் தலைமைப் பீடமாகிய இலண்டனுக்கும் அரசியல் தலைமைப் பீடமாகிய உவெசுற்றுமினித்தருக்குமிடையே நிறுவப்பட்டிருந்தன. இவ்வாறு அவர் கள் வாழ்ந்த இடத்தின் புவியியல் நிலையானது, அரசனுக்கும் மக்களுக்கு மிடையே ஒரு வழக்கறிஞன் நடுவணுக விருந்து தான் ஆற்றவேண்டிய அரசியற்பணியை நன்கு உணர்வதற்கு உதவியாயிருந்தது.
1 ஆம் எட்டுவேட்டு ஆட்சியின்போது, பெயர்பெற்ற ஆண்டுக்குறிப்பேடு கள் எழுதும் வழக்கம் ஆம்ரபமாயிற்று. இவைகள் சட்ட நடவடிககை பற்றி உத்தியோகப் பற்றற்ற முறையில், சொற்பாட்டறிக்கை வடிவில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டன. பிரெஞ்சு மொழி அக்காலத்தில் உயர் வகுப்பினராற் பேசப்பட்டு வந்ததால், வழக்குரைப்போரும் அம் மொழியையே உபயோகித்தனர். இவ்வேடுகள் போன்று, எந்நாட்டிலும் அல்லது இங்கிலாந்திலேயே, வேறெந்தத்துறையிலும் அரசியலிலோ திருச் சபை பற்றிய துறையிலோ, பலநூற்றண்டுகள் வரை முழு விபரங்களை
விற்றேறியா இராணியார் ஆட்சியின் பிற்பகுதியில் நீதிமன்றங்கள் உவெசுற்று மினித்த ரிலிருந்து அகற்றப்பட்டு, அண்மையிலிருந்த தெம்பிள் நீதிமன்றத்திலிருந்த சட்டக்கழகக் கட்டடங்களில் நிறுவப்படலாயின.

Page 154
1278一 1279.
1455
1485.
288 ஆண்டுக் குறிப்பேடுகள்
யும் கொண்ட குறிப்பேடுகள் இருக்கவில்லை. தொழிற்றுறை சம்பந்த மான அனைத்தும், மனிதருக்குச் சுவையளிக்கக கூடிய பல நிகழ்ச்சி களும், காரணத்தை மாற்றும் வாதம், எதிர்வாதம், குத்தலான வாதம், அர்த்தமற்ற வாதம் யாவும் சொல்லுக்குச் சொல்லாக, அவை கூறப்பட்ட வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமுறை தலைமுறையாக இவ்வாறு பதிவு செய்யப்பட்டு வந்த எடுகளானவை யசுற்றினியன் சட்டக்கோவை போன்றும் “ இடிக்கிரீற்றல்’ எனும் சமயவிதிப்புக்களைப் போன்றும் இருந்தன. இவ்வேடுகளைப் பிரமாணமாகவும் தூண்டுகோலாகவும்கொண்டு சட்டம் பயின்றுவந்த ஆங்கில மாணவர் பல ஊழிகளிலே தொடர்பாக முயன்றதின் விளைவாக ஆங்கிலச் சட்டத்தை உருவாக்கினர்.
1 ஆம் எட்டுவேட்டு தன் நீதிமன்றங்களின் பெமையால் உந்தப்பட்டு, சாதாரணப்பண்ணை நீதிமன்றங்களை வைத்திருப்பதற்கும் மேலான உரிமை களைப் பரன்கள் உடையராயிருப்பதைக் கண்டு பொருமை கொண்டு குவோ வாரண்டோ எனப்படும் பொது விசாரணையொன்றை நிறுவினன். இதன் நோக்கம் பெருமக்களினுடைய தனிப்பட்ட உயர்முறை நீதிமன்றங் கள் எவ்வாறு தோன்றின என்றும் இவற்றுக்குரிய உரிமைச் சாசனம் எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அறிவதேயாம். இவ்வாருன தனிப் பட்ட மன்றங்கள் இருந்ததற்குத் தொன்றுதொட்டு மரபுரிமையாக வந்த வழக்கத்தின்பாற்பட்ட ஆட்சியுரிமையே அநேகமாகக் காரணமாகவிருந்த தென அரசன் கருதி அச்சாசனத்தைக் கோரினன். கண்ணுக்குப் புலப் படாத முறையிற் காலத்தால் இடுக்கணின்றி ஆற்றப்படவேண்டியதொரு கருமத்தை அரசியல் அதிகாரத்தின் பலத்த துணைகொண்டு ஆற்ற நினைப் பது பருவ முதிராத தொரு முயற்சி என்பதிற் சந்தேகமில்லை. வாரென் எனும் பெருமகன் பொது விசாரணையின்போது நீதிபதிகள் கேட்ட கேள் விகளுக்குப் பதிலிறுக்கும் முகமாகத் தனது பழைய துருப்பிடித்த வாளை உருவி, அந்தச்சாசனத்தின்மூலமே தன்கீழுள்ள பிரதேசமும் உரிமை களும் தனக்குண்டு என்று கூறியதாக, நிச்சயமாகவே உண்மையாக நடந்தது என்று சொல்லக்கூடாத வகைத்தான, ஒரு கதை உண்டு. எட்டுவேட்டு மன்னன் தான் நடத்துவித்த பொது விசாரணையின் நோக் கத்தை அடைவதை வற்புறுத்தவில்லை ; ஏனெனில் அவன் தன் இள மைப் பருவத்திற்றனே பரன்கள் நடத்திய போர்களின் தன்மையை நன்கு உணர்ந்திருந்தான். ஆனல் “ குவோ வாரண்டோ’ எனும் பொது விசாரணையின் விளைவாக அண்மையில் அல்லது சேய்மையில் அரச நீதிமன்றங்களின் அதிகாரத்திற் பரன்கள் தலையிடுவது தடுக்கப் பட்டது. அன்றியும், வழக்கிற் சம்பந்தப்பட்டவர்கள் அரசநீதியை அதிக மாக விரும்பியதால் நாளடைவிலே தனிப்பட்டவரின் நீதிமன்றங்கள் மறை வனவாயின. உரோசாப்பூ யுத்தங்கள் நடைபெற்ற காலத்தில், கடைசி முறையாக ஆட்சியறவு தலைதூக்கியபோது, யுத்தங்களில் ஈடுபட்ட பெரும் பிரபுக்கள் தங்களுக்கான பற்பல ஆதிக்க உரிமைகளைக் கோரினரல்லர் ;

யாதுரிமை விசாரணை 289
ஆனல், தங்கள் உரிமை ஏவலாளரைக் கொண்டு அரச நீதிமன்றங்களி லிருந்த நீதிபதியையும் நடுவர் குழுவினரையும் அச்சுறுத்துவதுடன் திருத்தி கொண்டனர்.
இங்கிலாந்தின் தனிச் சிறப்புத் தாபனமாகிய பாராளுமன்றமானது ஒர் அதிகார பீடத்தை வீழ்த்தி மற்றேர் அதிகார பீடத்தை உயர்த்துவ தான புரட்சி முறையை நீடித்திருக்கச் செய்தற்குத் திடீரென உருவாக்கப் பட்ட தாபனமன்று. ஒருவர்பால் ஒருவர் மதிப்புக் கொண்டிருந்த வகுப் பினரான அரசன், திருச்சபையதிகாரிகள், பரன்கள், நகரவாசிகளும் நைற்றுக்களும் அடங்கிய பொதுமக்களிற் சில வகுப்பினர், ஆகியவரிடையே காணப்பட்ட வேறுபாடுகளைச் சமப்படுத்தி, பொதுவான கருமங்களில் இவர் களை ஒன்றுபடுத்துவதற்கு வாய்ப்பாகவிருந்து நாளடைவில் வளர்ச்சி பெற்ற தாபனமே பாராளுமன்றமாகும். எவருமே அடிமைப் பண்ணையாட்களை மதிக்கவில்லை ; அவர்கள் பாராளுமன்றத்தில் இடமும் பெற்றிருக்கவில்லை. தங்களைப் பாராளுமன்றம் புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்த * தொழிலாளர் ” தன்னுணர்ச்சி கொள்ளத் தொடங்கியதும் 1381ஆம் ஆண்டில் நடத்திய கலகம் போன்ற “ நேரிடை நடவடிக்கை ”யில் ஈடுபட விழைந்தனர். எனினும் அடிமைப் பண்ணையாட்களைத் தவிர்த்து நோக் கின் பாராளுமன்றமானது எல்லார்க்கும் ஏற்பான அதிகாரச் சமநிலையைப் பிரதிபலிப்பதாய் இருந்தது. பலர் ஒருங்கிருந்து விவாதித்து உடன்பாடு, அல்லது இணக்கமான முடிவு ஒன்றைக் காண்பதான “ குழு உணர்ச்சி’ ஆங்கில மக்களிடம் எப்போதும் காணப்பட்ட ஒரு விசேட பண்பாகும். ஆங்கிலப் பாராளுமன்றம் உருவானதற்கு உண்மையான காரணம் அந்நாட்டு மக்களுக்குரிய இத்தகைய தனித்தன்மையான பண்பே
என்க.
முதல் மூன்று எட்டுவேட்டுக்களின் ஆட்சியின்போதே பாராளுமன்றம் படிப்படியாக இன்றிருக்கும் அமைப்பு முறையைப் பெற்றது. தி மோன் போட்டு காலத்திலே தனக்குண்டான அனுபவங்களுக்குப் பின்பே முதலாம் எட்டுவேட்டு மன்னன் அரசாங்கமெனும் எந்திரம் செவ்வனே இயங்கு தற்கு நாட்டுமன்றங்களை அடிக்கடி கூட்டுவதே சிறந்த வழியெனக் கண் டான். அரச அதிகாரத்தைச் குறைத்துச் கொள்வதோ நாட்டுமக்களின் கருத்துக்கு அதனை உட்படுத்துவதோ அவன் நோக்கமன்று. தன் ஆளு கையிலிருந்த மக்களுடைய வாழ்க்கையுடன் அரசன் அடிக்கடி தொடர்பு கொள்ளுவதின்மூலம் அரச அதிகாரத்தை அதிகத் திறமையுடையதாகச் செய்வதே அவன் நோக்கமாகும். VI ஆம் என்றியைப் போன்று, ஆங்கில நாட்டு வரலாற்றில், பாராளுமன்றத்தின் பெருமையை அதிகரிக்க அரும் பாடுபட்டவன் இவன் ஒருவனே-என்றிபோன்று இவனும் கோட்டத்திலும் பட்டணத்திலுமிருந்த மத்திய தர வகுப்பினரின் ஆதரவின் பெரும்பயனை நன்கறிந்திருந்தான்.

Page 155
290 பொதுமக்கள் சபையைக் கூட்டியமைக்குக் காரணம்
தனது தந்தையின் கொந்தளிப்பான ஆட்சியில் அடிக்கடி நடைபெற்று வந்ததான வழக்கமொன்றை முதலாம் எட்டுவேட்டு தொடர்ந்து அனுட் டிக்கவும் மக்களிடையே பரவச் செய்யவும் தீர்மானித்தான் ; அதாவது தன் ஆட்சியில் நடைபெற்ற பெரும் பிரபுக்களின் மாநாட்டுக் கூட்டங் களுக்குக் கோட்டங்களிலிருந்தும் நகர்ப்புறங்களிலிருந்தும் பிரதிநிதி களை அழைப்பதாகும். சில வரிகளை இலகுவான முறையில் அறவிடவும் அரசன் விரும்பினன். கடினமான மதிப்பீடுகளை அவ்வத்தலத்திற்குரிய நைற்றுக்களதும் நகர்ப்புறப் பிரதிநிதிகளதும் ஒத்துழைப்பும் விசேட அறிவுமின்றி நன்றகச் செய்ய இயலாதிருந்தது. பெரும் பிரபுக்களின் கூட்டங்கள் முடிவுற்றபின் தம் பிரதேசங்களுக்குத் திரும்பிச் சென்ற பிரதிநிதிகள் அரசனதும் பிரபுக்களதும் மதிப்பைப் பெற்றவர்களெனத் தற்பெருமை கொண்டவர்களாய், நாட்டுணர்ச்சியாலும் நாட்டுப் பொது நலசேவையாலும் உந்தப்பட்டவர்களாய், தத்தம் சமூகத்தினரிடையே திரும் புவர். இந்நிலையிலிருந்த பிரதிநிதிகள் தம்பகுதியிலுள்ள வரியளவை மதிப்பிடுவதிலும், வரியை இலகுவில் அறவிடுவதிலும் துணையாயிருப்பர். அன்றியும், அரசனது கொள்கையை வேறெவ்வித முறையிலும் தெரிந்து கொள்ள முடியாத நிலைமையில் வாழ்ந்த தம் அயலவர்க்கு இவர்கள் அதனை விளக்கிக் கூறவும் முடியும்.
புதினத் தாள்கள் இல்லாத காலத்தில், தபாற் போக்குவரத்து அதிகம் நடைபெறத காலத்தில், பிரயாணம் செய்வது இடுக்கணும் ஆபத்தும் விளைவித்து வந்த காலத்தில், நைற்றுக்களும் நகர்ப்புறத்தவரும் நிரை நிரையாக உவெசுற்று மினித்தருக்கும் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு மிடையே இடைவிடாது வந்துபோய் இருக்கவேண்டுமென்பதை அரசன் பெரிதும் வற்புறுத்தினன். இவ்வாறு அரசன் செய்ததின் பயனக ஆங்கி லேயர் தொடர்ந்து அரசியல் சம்பந்தமான அறிவு பெறுவது சாத்திய மாயிற்று. மேலும், சோசர் காவியங்களோ நூறு வருடப் போரோ செய்திராத அளவிற்கு நாட்டின் ஒற்றுமையை உருவாக்கவும் இது ஏதுவா யமைந்தது. இங்ங்னமாக இலகுவாக வரியை அறவிடக்கூடிய முறை எற் பட்டிராவிட்டால், எட்டுவேட்டு காலத்தில் இசுக்கொத்துலாந்துடனும் பிரான் சுடனும் ஏற்பட்ட போர்களை நடத்தியிருக்கமுடியாது. இங்கிலாந்து தனது பாராளுமன்றத்தை உருவாக்கவில்லை ; பாராளுமன்றமே இங்கிலாந்தை உருவாக்கியது என்று கூறப்படுகிறது. இப்பொருள் செறிந்த வாக்கியத் தில் ஒரளவு உண்மை உண்டே.
பட்டணங்களிலிருந்தும் கோட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை இவ்வாறு கூட்டத்திற்கு வரும்படி அரசன் அழைப்பு விடுத்தமைக்கு அவனது பணத் தேவை மட்டும் காரணமன்று : பணத்தேவைக்காகவன்றி, சில சமயங் களில் உண்மையாகவே 1 ஆம் எட்டுவெட்டு வேறுகாரணத்திற்காகவும் அவர்களைக் கூட்டத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்திருந்தான். இன்னு

பொதுமக்கள் சபையைக் கூட்டியமைக்குக் காரணம் 29
மொரு நோககமும் அவனிடமிருந்து ; தன் குடிமக்களின் மனுக்களை யும் முறையீடுகளையும் ஒன்றகச் சேகரித்து, அவ்வப்பிரதேசங்களுக்கு அவசியமான தேவைகளையறிந்து அவைக்கேற்ப ஆட்சி நடாத்தவும், அப் பிரதேசங்களிலிருந்த தல அதிகாரிகளின் ஒழுங்கற்ற கருமங்களைக் கட் டுப்படுத்தவும் அரசன் கருதியிருந்தான். இவ்வாருகத் தொடக்கத்தில் நடைபெற்று வந்த பாராளுமன்றங்களின் பெருங்கருமம், குறை நிவர்த்தி செய்வான் வேண்டி ஒருதொகையான விண்ணப்பங்களைப் பெறுவதாகவே இருந்தது ; இவ்விண்ணப்பங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவர்களி டமிருந்தோ தனியான சமூகத்தினரிடமிருந்தோ பெறப்பட்டன; ஆனல் 14 ஆம் நூற்ருண்டிலிருந்து இத்தகைய விண்ணப்பங்கள் பொதுமக்கள் சபையிடமிருந்தே பெரும்பாலும் பெறப்பட்டன. 1 ஆம் எட்டுவேட்டின் ஆட்சியில் இவ்விண்ணப்பங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படாது, அர சனுக்கோ அரசவைக்கோ அனுப்பப்பட்டன. இவைகள் அரசனலோ, அவன் அமைச்சர்களாலோ அன்றி “திரையர்கள்’ எனவழங்கப்பட்ட அரச ஆலோசனையாளர்களும் நீதிபதிகளும் பரன்களும் அடங்கிய நிருவாக சபைகளாலோ பாராளுமன்றத்திற் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அக்காலத்தில் மனுச்செய்பவருக்குப் நிவர்த்தி அளிக்கப்பட்ட முறை இக்காலத்தில் நீதித்துறை, சட்டத்துறை, நிருவாகத்துறை ஆகிய ஒன்றின் பாற்பட்டதாகக் கருதப்படும். இத்துறைகளுக்கிடையுள்ள வித்தி யாசம் அப்போது பாராட்டப்படவில்லை. ஆனல் நாட்செல்லச் செல்ல, தனிப் பட்டோர் மனுக்களிற் பல உயர்வழக்கு முறை மன்றத்திற்கோ ஏனைய மன்றங்களுக்கோ முறைப்படி நியாயம் வழங்கப்படும் படியாக அனுப்பப் பட்டன; ஆனல் அவற்றுள் மிக முக்கியமான மனுக்கள் என்றியின் ஆட்சியிற் பொதுமக்கள் சபைக்குக் கொண்டுவரப்பட்டன; இவைகளே “முறி” உருவத்தில் அமைக்கப்பட்டுப் பாராளுமன்றத்தாற் சட்டமாக நிறை வேற்றப்படவேண்டியனவாய் இருந்தன. இவ்வியாருகப் பொதுமக்கள் சபை க்குச் சட்டமியற்றும் உரிமை வழங்கப்படலாயிற்று.
ஆனல் 1 ஆம் எட்டுவேட்டு ஆட்சிலேயே பாராளுமன்றச் “ சபைகள் ” இருந்துளவெனக் கூற முடியாது. அக்காலத்தில் ஒரேயொரு சபையே இருந்தது. சிம்மானசத்தில் வீற்றிருந்த அரசனே, கம்பளத்தவிசில் அமர் ந்திருந்த பிரபு நாயகனே தலைமை வகித்தான். அங்கு வருகை தந் திருந்த எனைய அரச அதிகாரிகள் பதவிவழி ஆங்கு இடம்பெறுவோரே ; இவர்களுடன் தனிப்பட்ட கட்டளையின்மூலம் அழைக்கப்பட்டிருந்த சமயச் சார்புள்ளவர்களும் சார்பற்றவர்களுமான பரன்கள் இருந்தனர். இந்த அவையின் பின்னணியில் ஒவ்வொரு கோட்டத்துக்குமுரிய மணியகாரரின் மூலம் அழைக்கப்பட்டிருந்த நைற்றுக்களும் நகர்ப்புறத்தவரும் பிரதிநிதி களாய் அமைதியாக வந்து அமர்ந்திருந்தனர் ; இவர்கள் தங்கள் பிரச் சினைகளைப் பற்றி விவாதிக்கப்படும்போதே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட டனர். இவ்வாறு அமைந்ததே பாராளுமன்றத்தின் உயர் நீதிமன்ற

Page 156
292 இருசபைகளும் பிரிதல்
மாகும். இதுவே இன்றைய பிரபுக்கள் சபையிற் காணப்படும் அரியணை யும் கம்பளத்தவிசும் உடைய மன்றமாகும். அரசனுடைய அமைச்சர் களுட் பிரபுநாயகன் மட்டுமே, பிரபுவாக இல்லாவிடினும், பதவிவழி யால் அம்மன்றத்திற் பங்குபற்றுவான் ; மேலும் பாராளுமன்றம் கூட்டப் படும்பொழுதோ மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படும் பொழுதோ மட்டுமே அங்கிருக்கும் அரியணையில் அரசன் அமர்ந்திருப்பான். அரசனுடைய வாய் மொழி கேட்கப் பொதுமக்கள் குழுமும்போது, ஆதியிலுள்ள பிளந்தா செனற்றுப் பாராளுமன்றத்தை நாம் மனக்கண்ணுற் காணலாகும்.
1 ஆம் எட்டுவேட்டின் ஆட்சியில் மக்களின் பிரதிநிதிகள் ஒரு தனித்த சபையாகக் கூடவில்லை. இப்பிரதிநிதிகள் ஒன்ருகவும் பிரிக்கப்படாமலும் பாராளுமன்றக்கூட்டங்களில் அடிக்கடி சமுகந்தந்திருந்தாலும் அவர்கள் அங்கு வந்திருக்க வேண்டுமென்பது அவசியமாக விருக்கவில்லை ; ஏனெ னில், பாராளுமன்றத்தில் முக்கிய கருமங்கள் பெருநிலப் பிரபுக்களா லேயே நடத்துவிக்கப்பட்டன. சட்டமியற்றுதற்கு அவர்கள் சம்மதம் எப் போதும் தேவைபடவில்லை. “ குய்யா எமிருேரசு’ போன்ற புகழ்பெற்ற நியதிச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவதற்கு எதுவாக விருந்த எட்டுவேட்டின் ஆட்சிக்காலப் பாராளுமன்றத்திற் பொது மக்களின் பிரதிநிதிகள் எவரு மின்றியே இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. வெளிநாட்டு, உள் நாட்டுக் கொள்கைகள் சம்பந்தமான முக்கிய விடயங்கள் பாராளுமன்றத் தில் அமைச்சர்களாலும், பரன்களாலும், மதத்தலைவர்களாலும் விவா தத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நைற்றுக்களும் நகர்ப்புறத்தவர் களும், எப்போதாவது அங்கு சமுக மளித்திருப்பார்களேயானல், வேறும் பொம்மைப் பார்வையாளராகவே இருந்திருப்பர் என்பது நிச்சயம்.
நைற்றுக்களும் நகரத்தவர்களும் உத்தியோக பூர்வமாகக் கூடாது இரக சியமாக ஒன்றுகூடி, மேலதிகாரிகள் கடாவும் முக்கிய பிரச்சினை அல்லது கோரிக்கை பற்றிக் கூட்டாக விடையளிப்பதற்காக ஆர்வத்துடன் விவாதம் நடத்தத் தொடங்கியபோது, பொதுமக்கள் சபை ஒரு தனிப்பட்ட சபை யாக இயங்குவதாயிற்று. இவ்வாறு இவர்கள் விவாதம் நடத்தியது சம்பந்தமான நடவடிக்கைகளைப் பற்றி எவ்விதமான அறிக்கைக்களையும் இவர்கள் விட்டுச் செல்லாததால், தொடக்கத்திலிருந்த பொதுமக்கள் சபையில் எவ்வாறு அபிவிருத்தி ஏற்பட்டது என்பது பற்றி நாம் அறிய முடியவில்லை. சபாநாயகர் எவ்வாறு எப்பொழுது பாராளுமன்றத்தலை வரானர் என்பதைத்தானும் நாம் அறிய முடியவில்லை. எனெனில், பாராளுமன்றத்தில் நைற்றுக்களும் நகர்ப்புறத்தவரும் தங்களைவிடச் சிறநீ தவரை பேசவிட்டுத் தாங்கள் மெளனமாக இருந்தபோது, பொதுமக் களின் சார்பாகப் “ பேசுபவராகவே ” சபாநாயகர் தொடக்கத்தில் நிய மிக்கப்பட்டிருந்தார். ஆனல் சுதுவாட்டு ஊழிவரை சபாநாயகர் பாரா ளுமன்றத்தின் பணியாளராகவிராது அரசனின் பணியாளராகவே கரும

அப்பிரிவின் தன்மை − 293
மாற்றி வந்தார். II ஆம் எட்டுவேட்டின் காலந்தொட்டே, அரசனது அரண் மனை அதிகாரிகளிற் சிலர் கோட்டத்து நைற்றுக்களாக வீற்றிருந்து அர சனது நலவுரிமையைக் கருதிப் பொதுமக்கள் சபையில் நடைபெறும் விவா தங்களையும் முடிபுகளையும் பெரும்பாலும் ஆற்றுப்படுத்தி வந்தனரென நாம் அறிகிறேம். இவ்வாறு இவர்கள் செய்தது தியூடர் காலத்தில் கோமறைக்கழகத்தவர் மிகுந்த திறமையுடன் கருமமாற்றியது போன்ற தாகும். II ஆம் எட்டுவேட்டின் காலத்திற்றன் உவெசுற்று மினித்தரிலி ருந்த துறவிகள் மடமானது பொதுமக்கள் சபை வழமையாகக் கூடு மிடமாகக் கருதப்படலாயிற்று.
ஆங்கில நாட்டுத் தாபனங்களினது ஆதிவரலாற்றிற் காணும் முக்கிய உண்மையாதெனில், இங்கிலாந்துப் பாராளுமன்றம், ஐரோப்பாவில் அதே காலத்திலிருந்த மன்றங்களைப் போலக் குருமார், பரன்கள் நடுத்தர வகுப்பினர் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டதாயிராது, பிரபுக்கள் சபை, பொதுமக்கள்சபை என இரு பிரிவாகப் பிளந்தாசெனற்று அரசர் களது ஆட்சியின் பிற்காலத்தில் விளங்கியதென்க. இங்கிலாந்து யாப்பு முறை சமூகவளர்ச்சி ஆகியவை சம்பந்தமான வரலாற்றிற் பெரும்பகுதி ஒருவகையில் இத்தனிப்பட்ட சிறந்த ஒழுங்கின் காரணமோ விளைவோ ஆகும்.
மூன்று வகுப்பினரைக் கொண்டதாய் ஐரோப்பாக் கண்டத்திற் காணப் பட்ட முறைமையில், விழுமியோர் பிரிவில், “ கனவான்கள் ” என்று நாம் அழைக்கின்றவர்களனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டி ருந்தது. ஆனல் விழுமியோர் வகுப்பினர், கண்டத்தில் அப்பதத்திற்கு வழங்கிய விரிந்த பொருளின் படி பார்ப்போமேயானல், ஆங்கிலப் பாரா ளுமன்றத்திலே இரு வகுப்பினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அரசனது கட்டளை மூலமாகத் தனித்தனி பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டி ருந்த “ மூத்த பரன்கள் ” மேற் சபையில் அமர்ந்தனர்; இளையபரன்கள் முக்கிய வாரமுதல்வராக இருந்தபோதிலும் நைற்றுக்கள், கனவான்கள், கீழ்க்குடிப்பிறந்த நில உடைமையாளர் ஆகியவர்களுடன் அமர்ந்திருந் துடன், அவர்களைப் போன்று க்ோட்டத்து நைற்றுக்களாகத் தெரிந்தெடுக் கப்படக் கூடிய பொறுப்புடையவர்களாயுமிருந்தனர். இவ்வாறக ஆங் கிலப் பாராளுமன்ற அமைப்புக்கள் மானியமுறையில் நிலவிய வேறு பாடுகளை ஒழித்துவிட்டன. இவ்வழி, வாரமுதல்வனும் நகர்ப்புறப் பெரு மனிதருடன் அமர்ந்து கருமமாற்றக் கூடியவனனன்.
14 ஆம் நூற்றண்டில் ஆங்கிலப் பாராளுமன்ற வரலாற்றில் ஏற்பட்ட புதுமையானதும் குறிப்பிடத்தக்கதுமான அமைப்புமுறை, நாம் எலவே அறிந்துள்ளபடி, தொடக்கத்திலுண்டான அபிவிருத்திகளினலேயே சாத் தியமாயிற்று. கோட்டம் சம்பந்தமான கருமங்களில் சிறிய கனவான்

Page 157
294 அப்பிரிவின் தன்மை
கள் பெரும்பங்கு கொண்டதின் மூலம் அவர்கள் நகர்ப்புறத்தவரோடும் கிராமப்புறத்திலிருந்த சாதாரண நிலச் சொந்தக்காரரோடும் அடிக்கடி தொடர்பு கொள்ளலாயினர்.
ஆங்கிலநாட்டு வழக்கமான முன்ருேன்றல் உரிமைச் சட்டப்படி, விழுமி யோர் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மக்கள் மாளிகைவிட்டு வெளியேறிச் சென்று பிழைப்புத்தேட வேண்டியிருந்ததால், கோட்டை வீட்டிலும் பண்ணை வீட்டிலும் வாழ்ந்த அம்மக்கள் வர்த்தகத்திலும் வாணிபத்தி லும் அதிகஅக்கறை காட்டினர். மற்ற எந்நாட்டைக் காட்டிலும் இங் கிலாந்திற் பல வகுப்பினரிடையே கலப்பு மணம் நிகழ்வதும், உயர் வகுப்பினரும் மத்திய வகுப்பினரும் தம்முள் ஒன்றுகலந்து அடிக்கடி உறவாடுவதும் மிக முனைப்பாகக் காணப்பட்டன. பனக்குபேண் அல்லது கிரெசி எனுமிடத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு மிக முந்திய காலத்திற் ருனே பொதுமக்கள் சபை ஆங்கிலேயருக்குரிய இத்தகைய சிறப்பியல் புகளைப் பிரதிபலிப்பதாயிருந்தது. ஓரளவிற்கு மானிய வகுப்பினர் எனக் கருதத் தக்க கோட்டத்து நைற்றுக்கள் கிராமப்புறத்துச் சிறுவேளா ளர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக ஏலவே கருமமாற்றி வந்ததுடன், குடியுரிமையுடைய பரோ மக்களோடு அமர்ந்து அன்புடன் பழகியும் வரலாயினர். இதனற்றன் நகரப்புறத்தவரும் சிறு வேளாள ரும் நைற்றுக்களுடன் ஒத்துழைத்தாலன்றி அரசியலில் அதிகச் செல் வாக்குப் பெற்றிராதபோது, பொதுமக்கள்சபை தொடக்கத்திற்றனே தனது முக்கியத்தை நிலைநிறுத்தக்கூடுமாயிருந்தது ; இதனலேயே சுதுவாட்டு ஊழியில் நடைபெற்ற ஆங்கில உள்நாட்டுப்போர் இனவகுப்பின் அடிப்படை யில் அமைந்ததாக இருக்கவில்லை ; இன்னும், இதனலேயே பேக்குக்கா லத்திலிருந்த ஆங்கிலேயர் பிரெஞ்சுப் புரட்சியின் நோக்கம் என்னவென் யதைப் புரிந்துகொள்ளாதிருந்தனர்.
குருவாயத்தினரை உறுப்பினராகக் கொண்ட பிரிவோ சபையோ ஆங் கிலப் பாராளுமன்றத்தின் ஒருபகுதியாக அமையவில்லை. குருமார் தாங் கள் ஒரு தனியான பிரிவாகப் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு விரும் பாது விலகியிருந்ததுமன்றி, பொதுமக்கள் சபையில் தங்களுக்கிருந்த எல்லாத் தானங்களையும் பிரபுக்கள் சபையில் தங்களுக்கிருந்த தானங்கள் பலவற்றையும் அவர்கள் தாங்களாகவே கைவிட்டனர்.
பாராளுமன்றக் கீழ்ச்சபை உறுப்பினர், நகரவாசிகளும் உட்பட, தனிப்பட்ட சாசனங்களின் மூலம் தனித்தனிப் பட்டணங்களிலிருந்து சபைக்கு அழைக்கப்படாது நகர்மணியத்தின் வாயிலாக அழைக்கப்பட்டனர். இது நகரவாசிக்கும் நைற்றுக்குமிடையே தொடர்பை ஏற் படுத்துவதாயிற்று. இவர்களுளிருவருமே ஒருவிதத்தில் முறையே கிராமப்புறத்தையும் நகர்ப்புறத்தையும் பிரதிபலிக்கும் கோட்டத்துப் பிரதிநிதிகளாய் இருந்தனர். நகரமணியமும் அவனுக்குரிய கோட்டமும் அரசாங்க நிருவாகத்தில் பெரும் பங்குபற்றியதினுல் இவ்வித ஒழுங்குமுறை இயற்கையானதாக அனைவருக்கும் தோன்றியது.

குருமாரும் பாராளுமன்றமும் 295
மேற்சபையில் பிசப்புமார்களும் சில பெரிய மடாதிபதிகளும் உலகியல் சார்ந்த தமது பதவிமுறையில் மானியமுறைக்கால அவையில், பரன்களி ருந்தது போன்று, தொடர்ந்து இருந்து வரலாயினர். அன்றியும் பிசப் புமார்களிற் சிலர் அரசனுடைய அமைச்சர்களாகவும் குடியியற் சேவையாள ராகவும் பணிசெய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருச்சபைக்குரி யோராய் விளங்கிய மதத்தலைவர்கள் பாரளுமன்றத்திற் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பங்கு பற்றவில்லை. பெரும்பாலான மடாதிபதிகளும் மடத் தலைவர்களும் தத்தம் மடங்கள் சம்பந்தமான நலன்களைக் கவனிப்பதில் அதிக ஈடுபாடுடையவராக இருந்ததாலும், நெடுந்துரப் பயணம் செய் வதிலுள்ள சிரமத்தையும் செலவையும் விரும்பாததாலும் அரசனைக்காட்டி லும் போப்பரசருக்குத் தாம் அதிகம் கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்த தாலும் பாராளுமன்றத்துக்கு வருவதில் அக்கறை கொள்ளவில்லை. ஆகையால் இவர்கள் நாட்டுப் பாராளுமன்ற வாழ்விலிருந்து விலகி, அம்மன்றத்திலே தங்களுக்கிருந்ததானங்களையும் கைவிட்டனர். இதன் விளைவு எட்டாம் என்றியின் பாராளுமன்ற நியதிச்சட்ட நூலில் தெளி வாகியது என்க."
இதுபோன்று குருவாயத்தினரின் கீழ்ப்பிரிவைச் சேர்ந்தவர்களின் பிர திநிதிகளும் பொதுமக்கள் சபையின் நிரந்தர உறுப்பினர்களாயிராது, நாளடைவிற் பாராளுமன்றத்துக்கு வருகை தருவதை முற்ருக நிறுத்திக் கொண்டனர். மதகுருக்களின் ஆதனத்திலிருந்து “ பாகம் அல்லது பாகம்” கொடுப்பது சம்பந்தமான விடயத்தை தீர்மானிப்பதற்காக இவர்கள் கந்தபரி, யோக்கு ஆகிய விடங்களில் மதகுருமார் கூட்டத்தைக் கூட்டுவித்து அங்கு அதுபற்றி வாக்களித்து வந்தனர். அவ்விடங்களில் நடைபெற்ற கூட்டங்கள் திருச்சபைக்குரியனவேயன்றி அரசியல் சம்பந்த மானவையாக அன்ருயினும் இன்றயினும் இருந்ததில்லை. 1789 ஆம் ஆண்டிற் கூடிய பிரெஞ்சு நாட்டுக் குடித்திணை மன்றத்தில் அந்நாட்டுக் குருமார் ஒருதனி வகுப்பினராக அங்கம் வகித்தது போன்று, இங்கிலாந் திலிருந்த மதகுருமார் தனிப்பிரிவாகப் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. சீசருக்கு உரியது சீசருக்கும் கடவுளுக்கு உரியது கடவுளுக்கும் கொடுக்கப்படவேண்டும் எனும் கோட்பாடுடையவர்களாயி ருந்த ஆங்கில மதகுருமார், மத்திய ஊழியின் பிற்பகுதியில் வேண்டு மென்றே அரசியல் வாழ்வினின்றும் நாட்டு வளர்ச்சி சம்பந்தமான விட யங்களினின்றும் விலகி இருந்தனர். மாறுதல்கள் ஏற்பட்டு வந்த உல கில் மதகுருமார் தங்களுக்கெனப் பெருஞ் செல்வத்தையும் பண்டைக்கா லத்துக்கேற்ற பல தனியுரிமைகளையும் பெற்று அனுபவித்து வந்ததை
பாராளுமன்றத்திலிருந்த மடாதிபதிகளதும் மடத்தலைவர்களதும் எண்ணிக்கையா னது முதலாம் எட்டுவேட்டின் ஆட்சியில் 70 ஆக இருந்து I ஆம் எட்டுவேட்டினதும் அவனுக்குப் பின்வந்த அரசர்களதும் ஆட்சியில் 27 ஆகக் குறைந்தது.

Page 158
296 பொதுமக்கள் சபையின் சிறப்பு நிலை
இப்போது மக்கள் பழித்துரைக்கலாயினர் இவ்வாறு இவர்கள் தனிப் பட்ட முறையில் வாழ்ந்ததால் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானபொழுது இவர்கள் குறிப்பிடத்தக்க அளவிலே தாக்குதலுக்காளாயினர்.
முதலாம் எட்டுவேட்டின் ஆட்சியிற் சாதாரணமுறையில் இயங்கிவந்த பொதுமக்கள் சபையானது அடுத்துவந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அரசியல் யாப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறலாயிற்று. எல்லாவித மான சட்டங்களை இயற்றவும் மேலதிக வரிகளை அறவிடவும் அதன் உறுப்பினரின் அனுமதிபெறுவது அவசியமாயிற்று ; இச்சபையிலிருந்து இவர்களனுப்பும் மனுக்கள்யாவும் பெரும்பாலும் அரசனுடைய அங்கீ காரத்தைப் பெற்றன. அரசர்களைப் பதவிநீக்கம் செய்தல் அரசர்களைப் பதவிக்குத் தெரிவுசெய்தல் போன்ற மிகப் பெரிய நாட்டுக்கருமங்களும் பொதுமக்கள் சபையினரை அந்நிகழ்ச்சிகளுக்கு ஒரு கட்சியினராக இருக் கும்படி செய்தே ஆற்றுவிக்கப்பட்டன. உரோசாப்பூ யுத்தங்கள் நடை பெற்றபோது இவர்களது யாப்புறுஅதிகாரம் பெயரளவிலேயே செயற்படு வதாயிருந்தது; ஏனெனில் அப்போது அரசியலில் ஆதிக்கம் பெற்றி ருந்தவர்கள் அரசன், பரன்கள், திருச்சபை அதிகாரிகள் ஆகியோரே யன்றிப்பொதுமக்கட் சபையினரல்லர். ஆனல் நாட்டின் பொதுச்சட்டத் தில் நிலவரப்படுத்தப் பட்டிருந்த இவர்தம் அதிகார நிலையானது, திருச் சபையதிகாரிகள் பரன்கள் ஆகியோரின் அதிகாரங்களைத் தீயூடர்மன்னர் குறைத்தற்குப் பின், பாராளுமன்றக் கீழ்ச்சபை தனது உண்மையான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வழிவகைகளை எற் படுத்திக் கொடுத்தது.
பிளந்தாசெனற்று அரசர்கள் ஆட்சியின் பிற்பகுதியிற் பொதுமக்கட் சபையினரது உண்மையான அதிகாரம் பெருமளவிலும், பெயரளவின தான அதிகார்ம் முன்னையை விடக் கூடுதலாகவும் அதிகரித்திருந்ததற்குக் காரணமில்லாமலில்லை. இவர்கள் மற்றிரு சாராரையுஞ் சமநிலைப்படுத்தும் மூன்றம் கட்சியினராக விளங்கினர்; அன்றியும் நாடுசம்பந்தப்பட்ட போ ராட்டத்தில் இவர்களது உதவியை அவ்விருசாராரும் நாடினர். எட்டு வேட்டு மன்னர்மூவர் காலத்தில் அரசருக்கும் பரன்களுக்குமிடையே இடை விடாது நிகழ்ந்த போராட்டத்திலும், அதேபோன்று இலங்காசுற்றர் வமி சத்தினர் காலத்தில் அரசுரிமைக்காகப் பெருங் குடும்பத்தினரிடையே ஓயாது நடைபெற்று வந்த போராட்டத்திலும் பொதுமக்கள் சபையினரே நடுவராகத் தீர்ப்புக்கூறவேண்டியிருந்தது. இதனைச் சாதகமாகத் தங்களுக் குப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுமக்கள் சபையினர் தகுதியுடையரா யிருந்தனர்; எனெனில் இவர்கள் நலவுரிமைகள் அரசனுடனே அன் றிப் பெருமக்களுடனே பெருமளவுக்குச் சம்பந்தப்பட்டிருக்கவில்லை யாத லின்.

பொதுமக்கள் சபையின் சிறப்பு நிலை 297
1 ஆம் எட்டுவேட்டு பரன்களுக்கு விரோதமாகப் பொதுமக்கள் சபை யினரின் ஆதரவை அநேகமாக எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனல், பட்டனவாசிகளோ தங்களுக்கிருந்த இன்னல்கள் காரணமாக அரசனிடம் அதிருத்தி கொண்டிருந்தனர். கசுகனிக்கோ இசுக்கொத்துலாந்திற்கோ உடனடியாகக் கம்பளி வழங்க வேண்டியிருந்தபோதெல்லாம் : “ சுங்கத்
தினல் ” அனுமதிக்கப்பட்ட கம்பளி எற்றுமதியிலும் கூடிய பகுதியை
அரசன் கைப்பற்றி விடுவது வழக்கமாயிருந்தது. அரசன் ஆராயாது விடுத்த கோரிக்கைகள் சம்பந்தமாகப் பரன்களும் மதகுருக்களும் பல துன் பங்களுக்குள்ளாகி வருந்தினர்; இவ்விரு பிரிவினது எதிர்ப்புடன் பட்டண வாசிகளும் சேர்ந்துகொண்டு ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத் தி “ அரசன் அக்கிரமாகக் கம்பளியைக் கைப்பற்றுதல்’ சட்ட விரோதமான தென்று பிரகடனஞ் செய்தனர்.
1 ஆம் எட்டுவேட்டு இறக்கும்பொழுது எப்படியோ அவன் தன்னை இங்கிலாந்திற்கும் இசுக்கொத்துலாந்திற்கும் முழுவுரிமை பெற்ற அரச ஞக்கிக்கொள்ளும் நிலையிலிருந்தான். வாலசு என்பவனுல் மூட்டி விடப் பட்டு, புரூசு என்பவனல் கிளறிவிடப்பட்டிருந்த பரன்கள் எதிர்ப்பு என் னும் பெருந்தீயை உள்நாட்டில் அணைத்து விடுதற்கு எட்டுவேட்டு தனது வாழ்வின் இறுதி வருடங்களில் முனைந்திருந்தான். அவனுக்குப்பின் அரசுரிமை பெற்றவன் திறமைசாலியாக விருந்திருந்தால், இங்கிலாந் தில் அரசியல்யாப்பியற் சுதந்திரத்தையும், இசுக்கொத்துலாந்தில் நாட் டினச் சுதந்திரத்தையும் அழித்திருக்கலாம். பாராளுமன்றமானது சாந் திப்படுத்த வேண்டிய ஓர் எதிர்க்கட்சியாகவோ கண்டனத்தாபனமாகவோ அன்றி, அரசாட்சியெனும் பொறி இயங்குதற்குப் பயன்படுந் துணைக் கருவியாக வளர்ச்சியுற்றிருக்கும். எட்டுவேட்டும் பாராளுமன்றம் இவ்வாறே இயங்கவேண்டுமென்று கருதியிருந்தானென்பதுதிற் சந்தேகமில்லை. ஆனல் சோம்பேறியும் திறமையற்றவனும், தீங்கற்ற மனதுடையவனுமான அவன் மகன் எட்டுவேட்டின் ஆட்சி, இந்நிலைமை ஏற்படாதவாறு காத்தது. 11 ஆம் என்றி, 1 ஆம் எட்டுவேட்டு அல்லது தியூடர் வமிச மன்னர்கள் போன்ற பெருமைமிக்க அரசபரம்பரை தொடர்ந்து ஆட்சிசெய்வது நன்மை பயக்காது என்றே கொள்ளல்வேண்டும். பிரித் தானியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் யோன், இரண்டாம் எட்டு வேட்டு, சுதுவாட்டு வமிசமன்னர்கள் ஆகியோருக்கும் சிறப்பான பங்கு உண்டு,
கண்டிப்பற்ற தன்மையும் கலையில் நாட்டமும் கொண்ட இளம்பரு வத்தினனன இரண்டாம் எட்டுவேட்டும், அவன் நண்பனன பியசு கேவு சுற்றன் என்பானும் நாட்டை முறையாக ஆட்சி செய்யாததாற் பரன் களின் கிளர்ச்சிக்கு மற்றெரு வாய்ப்பையளித்தனர். இங்கிலாந்தின் விவ காரங்களில் முதன்மை நிலைவகித்த கேவுசுற்றன் புதிதாக உயர்வுற்ற வனுமல்லன். அன்றி அவ்வாறு உயர்வுற்றவர்களிற் கீழ்த்தரமானவனு
1297.
307.
301327.

Page 159
32.
மல்லன் ; அல்லது வெறுக்கத்தக்க
298 இரண்டாம் எட்டுவேட்டும் பரன்மாரும்
“அந்நிய நாட்டினனுமல்லன். ஆனல் அவன் மதியுள்ளவனுய் இருக்கவில்லை ; ஏனெனில் செல்வாக்குப் பெற் றிருந்த பரன்களுக்கெல்லாம் அவன் சாட்டுப்பெயரிட்டிருந்தான். இதன் விளைவாக அவர்களிற் சிலர் இவன் உயிரை வஞ்சகத்தாற் கவர்ந்தனர். 1 ஆம் சாள்சு, பக்கிங்காம் எனும் இருவரையும் போன்று 11 ஆம் எட்டுவேட் டும் கேவுசுற்றனும் இங்கிலாந்தைப் பரிபாலிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்றே சொல்லலாம். ஆனல் பரன்கள் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியவர் கள் முக்கியமாக இலங்காசுற்றரைச் சேர்ந்த தோமசு கோமான் போன்றேர் மூடர்களாயும் சுயநலவாதிகளாயும், மூர்க்க குணமுடையோராயும், உயர் குடிப்பிறப்பால் தகாப் பெருமை கொன்டோராயுமிருந்தனர். அரசன் அபிமா னத்தை அடுத்ததாகப் பெற்றிருந்த தெசுப் பென்சர் என்பான் கேவுசுற்ற னைப் போன்று ‘புதிதாக உயர்வுற்றவனல்லன்”; ஆனல் இவன் காலப்போக் கில் ஒரு கொடுங்கோலனக மாறினன். இவ்வாறிருந்தும், பயனற்றவர்களான இத்தகைய எதிரிகளிடையே நடைபெற்ற போராட்டத்தால் நாட்டுக்கு நன்மை யே ஏற்பட்டது. நாட்டுப்பரிபாலனம் சீர்ப்பட்டது. பரன்களது செப்பமற்ற கட்டுப் பாட்டின் வழி இது எற்படாது, நிருவாகத்திற் செய்யப்படசில சீர்திருத் தங்க ளினலேயே உண்டாயது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டன; எவ்வாறெனில் இரண்டாம் எட்டுவேட்டு ஒருபுறமும், எதிர்க்கட்சியினரான பரன்கள் மறுபுறமும் மாறிமாறித் தாம் பெற்ற வெற்றிகளை வாக்கெடுப்பின் மூலமாகவும் சட்டங்களின் மூலமாகவும் முறைப்படி ஒழுங்கு படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தைப் பலமுக்கிய சந்தர்ப்பங்களிற் கூட்டுவிக்க வேண்டியிருந்தது. இவ்வாருகப் பராாளுமன் றம் புதிதாக அடைந்த தனிச் சிறப்பிற் பொதுமக்கள் சபைக்கும் பங்கிருந்தது.
அதிட்டவீனனன இவ்வரசனது ஆட்சியிற் பரன்கள் விளைத்த குழப்பங். களின் -இக்குழப்பங்களைப் பரன்கள் நடாத்திய யுத்தம் 6, னல் பொருந் தாது - இறுதி விளைவு அரசனுடைய ஆதிக்கமோ பரன்களுடைய ஆதிக் கமோ வளர முடியாதுபோனதேயாம். அரசனது ஆட்சிக் கருமங்களைப் பற்றி நன்ருகத் தெரிந்து வைத்திருந்தனர் என்ற காரணத்திற்காக, பயிற்சி பெற்றிருந்த குருக்களதும் குடியியற் சேவையாளரதும் ஆலோ சனையை அரசன் கேட்பதற்குப் பதிலாக, நிலமானியக் கோட்பாடுகளின், பிரகாரம் அவன் எப்பொழுதும் தங்களுடைய சிறந்த ஆலோசனையைப் பெறவேண்டுமென்று பரன்கள் கூறிவந்தபோதும், அரசன் வகுக்குந் திட்டத்திலே தங்கள் ஆலோசனைகள் முக்கிய இடம்பெறவேண்டு மென்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருந்தும் அவர்கள் அதில் தோல்வியே கண்டனர். தாங்களே நாட்டுப் பரிபாலனம் செய்யவேண்டு மென்று பரன்கள் கோரினலும் அவர்களால் அவ்வாறு செய்ய முடிய வில்லை ; எனெனில் அரசாங்க நிருவாகத்திற்கு வேண்டிய உறுதியான சிரத்தையை எப்பரணிடமும் காண்பது அரிதாக விருந்தது. பரன் ஒருவ னது கோட்டை வீடுகள், வேடையாடுதல் போன்ற கேளிக்கைகள், ஆதனங்

சமாதான நீதவான்கள் 299;
கள், ஏவலாளர்கள், அன்ருடப்பழக்க வழக்கங்கள், இங்கிலாந்தில் பாதி யளவுக்குப் பல பகுதிகளில் பரவிக்கிடந்த பண்ணைகள்-இவைகள் சம்பந்த மாகக் கவனம் செலுத்துவதிலேயே அவனது நேரம் கழிந்தது. அவன் இவ்வாறகப் பல கருமங்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததால், அரசனுக்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சனக விருப்பதோ, முறைப்படி நடைபெறும் அரசவைக் கூட்டங்களில் சமுகம் தருவதோ அவனுக்கு இயலாததாயிருந்தது.
புரட்சி ஏற்படும் காலங்களைத் தவிர ஏனைய காலங்களிற் பரன்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த முடியாததற்கு மற்றெரு காரணமும் இருந்தது. அரசமன்றமும் அரச குடும்பமும் மிகப் பெரியவாய்ச் சிக்கல் நிறைந்தவாயிருந்த படியால், அவற்றைக் கட்டுப்படுத்துவதென்பது பரன் களுக்கு இலகுவான கருமாயிருக்கவில்லை. அரசாங்கப் பகுதியொன்றைஉதாரணமாகச் சான்செரியெனும் உயர்முறை மன்றப் பகுதியைப்-பரன்கள் கைப்பற்றிவிட்டால், அரசன் “வாட்டுருேப்பு’ எனப்பெயரிய ஆடையா பரணப் பகுதி மூலம் நாட்டை ஆளல் கூடும். அரசமன்றம் புதிய சூழ் நிலைக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கக்கூடியதாக அமைந்திருந்தது; எனி னும் அரசாங்கத்தை முறையாக நடாத்திச் செல்லக்கூடிய பயிற்சியும், திறமையும், சிறப்புத் தேர்ச்சியுடைமுடைய குடியியற் சேவையாளர் அம்மன்றத்தில் நிறைந்திருந்தனர்; இவர்களுக்கு மேலாக ஆட்சிப்பீடத்தி லிருந்த கேவுசுற்றன், இலங்காசுற்றரைச் சேர்ந்த தோமசு தெசுப்பென்சர், மோற்றிமெர் போன்ற முட்டாள்கள், அல்லது போக்கிரிகள் ஒருவரை யொருவர் பகைத்துப் பழிவாங்கிக் கொண்டிருந்தனர்; இப்படிப்பட்டவர்கள் எதிர்காலச் சந்ததியின் நன்மை கருதியும் இலிசபெத்து ஊழியிலிருந்த நாடகாசிரியருக்கு இலக்காக விருக்கவுமே பழிவாங்கப்பட்டிருந்தனர் என்று சொல்லவேண்டும். இவ்வாறன நிலைமையில் அரசன் தனது அமைதி யான ஆட்சியை எதிர்ப்புக்களுகிடையே நிகி நிறுத்தி வந்தபடியால் நாட்டின் நானபக்கங்களிலும் அமைதியான முறையில் பண்ணைகளுக்குரிய கல்வீடுகள் கட்டப்படவும், கம்பளி ஏற்றுமதி அதிகரிக்கவும், சனத்தொகை பெருகவும், எல்லா வகுப்பினரும் எழ்மையினின்றும் பசிக் கொடுமையி னின்றும் சிறுகச் சிறுக விடுதலை பெறவும் எதுண்டானது.
I1 ஆம் எட்டுவேட்டின் ஆட்சியில் மிக முதன்மை வாய்ந்த பகுதி யொன்று அரசாங்க நிருவாகத்திற் புதிதாக இடம்பெற்றது. சமாதானப் பாதுகாப்பாளர் அல்லது நீதவான்கள் எனப்படுவோர் நாட்டு நிருவாகத்தில் மத்திய அரசாங்கத்திற்குத் துணை புரிவதற்காக ஒவ்வொரு கிராமத் திலும் நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு முன்பிருந்த அரச அதிகாரிகள் போன்று இவர்கள் பணித்துறை சார்ந்த அதிகாரிகளாயிராது சுதந்திரமான கிராமப்புறக் கனவான்களாக விளங்கினர். புதிதாக முதன்மை பெற்று வரும் நைற்றுக்கள், சிறுதரமான கனவான்கள் ஆகியோரைப் போன் றிருந்த சமாதான நீதவான்கள், தங்களுக்கு முன்பிருந்த வட்டத்தலே.

Page 160
300 சமாதான நீதவான்கள்
வர் என்ற மணியகாரனே அன்றி சுற்றுப்பயணம் செய்து நியாயம் வழங்கி வந்த நீதிபதிகளோ ஆற்றிவந்த தொழில்களிற் பெரும்பாலானவற்றை இப்போது செய்துவரலாயினர். சமாதான நீதவான்களைக் கொண்ட தாப னம் ஒவ்வொரு கோட்டத்திலும் நன்கு வேரூன்றியதுடன் நாட்டுப் பண்புக் குரிய தாபனமாக வளர்ந்தும் வந்தது. இந்நீதவான்கள் தங்களுக்கண் மையில் வாழ்ந்த மக்களாலும் அரசமன்றத்தினராலும் விரும்பப்பட்டு வந்ததுடன், அவ்விரு சாராருக்குமிடையே நீதிவழங்குதல் சம்பந்தமாக விளங்கிப் பொருள் கூறுபவராகவுமிருந்தனர். நானூறு வருடங்களாக இவர்கள் தாங்கள் ஆற்றி வரவேண்டிய கருமங்கள் சம்பந்தமாகவும் தங்களுக்குரிய செல்வாக்கு வரையறை சம்பந்தமாகவும் அதிக அதிகாரங் களைப் பெற்றுவந்தனர் ; 18 ஆம் நூற்றண்டில் இவர்கள் மத்திய அரசாங்கத்தைவிட ஒருவகையில் அதிகச் செல்வாக்குடையவர்களாக இருந் தனர். இவர்கள் பலகாலமாக ஆங்கில மக்களுடைய தேவைகளுக்கும் பண்பு களுக்கும் ஏற்றவாறு நடந்து வந்திருக்காவிட்டால் இத்தகைய செல்வாக் கைப் பெற்றிருக்க முடியாது. மெயிற்றுலாந்து கூற்றுப்படி, ஆங்கிலமக்கள் இன்று சட்டத்துக்கு இவ்வளவு மதிப்புக்கொடுப்பதற்கு, “நீதிவழங்கும் கலையைப் பயின்று கொண்டிருந்த ’ இச்சமாதான நீதவான்களது தாபன முறையே காரணமாகும். சாதாரண மக்களுக்காகச் சாதாரண வழக்கு களில் சட்டத்தைத் தெளிவாக்கி, அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்த நீதவான், சட்டம் பற்றி அதிகம் அறிந்திராதவராயிருக்கலாம் ; ஆனல் அவர் தனக்கண்மையிலிருந்த மக்களை அறிந்திருந்தார்; அதுபோன்ற அம்மக்களும் அந்நீதவானை அறிந்தருந்தனர்.
உயர்முறை நீதிமன்றப் பகுதி பற்றிய குறிப்பு
1 ஆம் எட்டுவேட்டின் நண்பன் உருேபேட்டு பேணல் காலத்திருந்து பிரபுநாயகறே அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியாக விருந்தார். ஏனெ னில் அரச நீதியைப் பொறிக்கும் பொறுப்புடையவராக அவரிருந்த தால், இக்காலத் திறைச்சேரி இருப்பது போன்று, அவர் அரசாங்கத்தின் சகலதுறைகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். சீர்திருத்த இயக்க ஊழிவரை அந்நாயகறே அநேகமாக திருச்சபைக்குரிய அதிகாரியாகவும் வழக்கறிஞராகவுமிருந்தார். 14 ஆம் 15 ஆம் நூற்றண்டுகளில் உயர் முறை மன்றப்பகுதியானது ஆங்கிலப் பொதுச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் வழக்கு மன்றங்களில் எதிர்பாராது ஏற்படக்கூடிய தவறுகளை நீக்கி நெறிமுறையான பரிகார மளிப்பதற்கான மன்றமாக மாறியது. இவ்வுயர் மன்றமானது அரச மன்றத்தின் சார்பாக, தீங்குற்ற மக்களின் விண்ணப்பங்களைச் சட்ட முறையாகக் கேட்டுத் தீர்ப்பளித்தது. அதிகார உரிமையற்ற உத்தரவுகளால் அரசன் மக்களது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை இப்போது பாராளுமன்றம் தடுத்து

பிரித்தானியத் தீவுகள் 30
விட்டதாலும், வழக்கத்திலிருந்து வந்த ஆங்கில வழமைச் சட்டமானது இப்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டதாலும், இச்சட்டம் அரசனுடைய துணிபாற்றலின் கட்டினின்றும் விடுவிக்கப்பட்ட உறுதியான அமைப்பு முறையானதாலும், நீதித்தலைவரது நேர்மையானதும் தவறற்றதுமான நீதிபரிபாலனமானது சாதாரண வழக்கறிஞகளையும் பாராளுமன்ற உறுப் பினரையும் அரசன் எதிர்த்துத் தாக்குவதற்கான விலை மதிக்க முடியாத அமைப்பு முறையாக இருந்தது. மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் இந்நீதிபரிபாலன முறை அடிக்கடி போதுமான இடருதவியளிப்பதாயிருந்த தால் இதற்குக் கடும் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. தியூடர் மன்னர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உயர்முறை மன்றப்பகுதி அரசியலமைப் பில் அங்கீகரிக்கப்பட்ட தொன்ருகிவிட்டது; மேலும் உடு நீதிமன்றம் போன்ற மன்றங்களை எற்படுத்துவதின் மூலம் ஆங்கிலப் பொதுமக்கள் சட்டத்தை நடத்துவதற்காகப் பிற்காலத்தில் அரசர்கள் வழிதுறைகளை எற்படுத்தியபோது அவற்றைக்கடந்து நிற்கும் வாய்ப்பையும் இவ்வுயர் மன்றப் பகுதி பெற்றிருந்தது.
15 ஆம் நூற்றண்டில் ஏனைய வழக்குமன்றங்களைச் சேர்ந்த சட்ட சம்பந்தமான நுணுக்கங்களைப்பற்றித் தீர்ப்புக் கூறுவதற்காக உயர்முறை மன்றப்பகுதிக்கு மக்கள் விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது. இதற்கு நான்கு நூற்றண்டுகளுக்குப்பின், எல்டன் சாள்சு இடிக்கன்சு ஆகியவர்கள் காலத்தில் சட்ட சம்பந்தமான நுணுக்கங்களை ஆராய்வதையே இது தன் அடிமைக்குணமாகப் பெற்றது ; இது மக்கள் குறைகளைத் தீர்க்கத்தவறி விட்டதால், பாராளுமன்றத்தில் அடிக்கடி சட்டம் பிறப்பிப்பதின்மூலம் மக்கள் தம் குறைதீர்க்கும் இக்கால வழக்கம் ஏற்படுவதாயிற்று.
அத்தியாயம் V
கெலித்தியரும் சட்சணியரும் -பிரித்தானியத் தீவுகள் முழுவதையும் அடக்கிய பேரரசை உருவாக்க முயற்சி-மத்திய ஊழியில், தோல்விக்குக் காரணங்கள் - அயலாந்து, வேல்சு, கொத்துலாந்து.
மத்திய ஊழியின் பிற்பகுதியில், இங்கிலாந்து தேசமானது ஐரோப்பா விலுள்ள பெரிய அரசுகளில் மிகுந்த கட்டுக்கேரிப்பு வாய்ந்த ஒர் அரசாக விளங்கியது. கெலித்திய இனத்தவர் மிகுதியாக வாழ்ந்து வந்த வேல்சு,
1 கெலித்தியர் என்னும் பெயர் பழைய " ஐபீரிய இனத்தவர்களும் கெலித்தியர்களும் அடங்கிய கலப்பு இனத்தையே இங்கு குறிக்கின்றது.

Page 161
302 . பிரித்தானியத் தீவுகள்
அயலாந்து நாடுகளுக்கு அயலாகவும் கொத்துலாந்து தேசத்தின் எல்லையை ஒட்டியும் இங்கிலாந்து தேசம் அமைந்திருந்தது. கொத்துலாந்து இராச்சியத்திற் சனத்தொகை குறைவாகவும், வறுமை மிகுதியாகவுமிருந் தது. இன அடிப்படையிற் கெலித்தியர்கள், சட்சணியர் ஆகிய ஈரினங்க ளாகப் பிரிந்திருந்த போதிலும் மொழி, தாபனங்கள் என்பவற்றைப் பொறுத்தவரை அதுஆங்கிலேய நோமானியரைப் பின்பற்றியதாக இருந்தது. இத்தகையசூழ்நிலைகளிலே தன் படைப்பலத்தைக் கொண்டு பக்கத்திலுள்ள சிறுநாடுகளையெல்லாம் தன் கீழ் ஒரே அரசாக ஆக்குவதற்கான முயற்சி களைச் செய்ய வேண்டிய இன்றியமையாத நிலை இங்கிலாந்துக்கு எற்பட்டது.
இத்தகைய புவியியற் பிரச்சினையே பிரித்தானியாவிலிருந்த உரோமா னியரைவந்தெதிர்ந்தது. அயலாந்து சம்பந்தப்பட்ட மட்டில் எந்த நடவடிக் கையுமின்றி அதைத் தனியே விட்டமைக்குக் காரணம் உரோமானிய ருடைய மதிநுட்பம் என்றே கூறல்வேண்டும். கொத்துலாந்தைக் கைப் பற்ற அவர்கள் பல தடவை முயன்றும், அம்முயற்சியெலாம் வீணுயின. ஆனல், தம் இராணுவப் படைகளின்உதவியாற் சாலைகளையும் கோட்டைக *ளயும் அமைத்து வெகு சீக்கிரத்தில் வேல்சை மட்டும் அவர்களால் அடிப்படுத்த முடிந்தது. அதே காலத்தில் இங்கிலாந்திற் பரவியிருந்த இலத்தீன் மயமான நாகரிகத்தை எற்கும்படி மலைவாசிகளான வேல்சு நாட்டினரை அவர்கள் தூண்டவில்லை. உரோமானியருக்கு ஏற்பட்ட இத் துணை வெற்றியே மத்திய ஊழியில் இங்கிலாந்துக்கும் கிடைத்தது எனலாம். உரோமானியர் தங்கள் படை பலத்தின் உதவியாற் பையவே வேல்சை வெற்றிகொண்டனர். ஆனல், மத்திய ஊழியில், இங்கிலாந்து நிலமானிய அமைப்பு முறையைப் பின்பற்றிப் பல கோட்டை கொத்தளங்களை நாடு முழுவதும் அமைத்து, உரோமானியரைக் காட்டிலும் மிக மெதுவான முறையிலே வேல்சைக்கைப்பற்ற முடிந்தது. எனினும், தியூடர், அனேவர் வமிச அரசர்களின் ஆட்சிக்காலங்களிலேயே வேல்சு மக்கள் முற்றிலும் சட்சணிய நாகரிகத்தைக் கைக்கொள்ளும் நிலை எற்பட்டது. கொத்து லாந்தைக் கைப்பற்ற இங்கிலாந்து எடுத்துக் கொண்ட முயற்சி படு தோல் வியே யடைந்தது. இனி, சென் யோட்சுக் கால்வாய்க்கு அப்பால், மத்திய கால அயலாந்தைக் கைப்பற்றவிட்டாலும் அந்நாட்டிலே தான் கைப்பற்றிய இடங்களை விடாப்பிடியாக மானைத்தொடையிற்கல்விய வேட்டை நாயைப் போற் கைவிடாது வைத்திருந்தது.
இவ்வாறு கொத்துலாந்து தேசத்தையும் அயலாந்து தேசத்தையும் கைப்பற்றுவதில் இங்கிலாந்து தோல்வியடைந்ததற்கும் வேல்சு நாட்டை ஒர் ஒழுங்கான அமைப்பின் கீழ்க் கொண்டு வரத் தவறியதற்கும் முக்கியமான காரணம், அத் தேசம் ஐரோப்பியப் பிரச்சினைகளிற் சிக்குண் டிருந்ததே யாம். யோன் அரசன் ஆட்சியில் நோமண்டியை இழக்கும் வரை, இங்கிலாந்தை அரசாண்ட நோமானிய, அஞ் செவின்வமிச அரசர்கள்

அயலாந்துக் குலங்கள் 303
பிரான்சு தேசத்திலுள்ள மாகாணங்களைத்திரும்பக் கைப்பற்றுவதிலே யோ, அவைகளைப் பாதுகாப்பதிலேயோ தங்களுடைய முழு வலிமையையும் செலவழிக்கலாயினர். நூருண்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னும் நோமண்டியை முற்றிலும் இழந்த காலத்திற்குப் பின்னு முள்ள நூருண்டுகாலத்திலேயே, பிளந்தாசெனற்றுவமிச அரசர்கள் தங்கள் முழுக் கவனத்தையும் மூலபலத்தையும் முற்றிலும் பிரித்தானிய நாட்டுப் பிரச் சினைகளிற் பயன்படுத்தினர். அந் நூற்றண்டில் ஆட்சி புரிந்த ஒரேயொரு பெரிய அரசன் முதலாம் எட்டுவேட்டு ஆவன். அவனுடைய ஆட்சிக் காலத்தில், நாம் எதிர்பார்ப்பது போலவே, வேல்சு, அயலாந்து, கொத்துலாந்து தேசங்களில் மத்திய கால இங்கிலாந்தின் செல்வாக்கு உச்ச நிலை அடைந்திருந்தது. அவனுடைய மரணத்திற்குப் பிறகு இரண் டாம் எட்டுவேட்டின் திறமைக்குறைவாலும், தியூடர் மன்னர்களுக்கு முந்திய காலம் வரை தோன்றிய அரசர்கள் பிரான்சைக் கைப்பற்ற எடுத்துக் கொண்ட அழிப்பான முயற்சியினலும், அதன் விளைவாக நாட்டிலே எற்பட்ட குழப்பங்களாலும், ஆங்கில ஆட்சியானது கொத்துலாந்து முழுவதிலும் மட்டுமன்றி, ஏறக்குறைய அயலாந்தின் எல்லாப்பகுதிகளிலும் அழிந்து போனதுடன், வேல்சு நாட்டிலும் வலிமைகுன்றியது.
அயலாந்து தேசத்தை நாம் கடைசியாக உற்று நோக்கியது இருண்ட யுகத்தின் நள்ளிரவு எனத்தக்க காலத்திலேயாம். அக் காலத்தில் உலகத்தின் ஒரு கோடியாகிய அப் பகுதியிலே தோன்றிய அறிவொளியா னது அறியாமைமிகுந்த இசுக்கொத்துலாந்து, இங்கிலாந்து, சேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளிலும் வீசியது. அக்காலத்தில் அயலாந்திலுள்ள மடாலயங்களிற் பணியாற்றி வந்த துறவிகள் தங்கள் தனிப்பட்ட திறமை யினுற் புனிதர்களாகவும் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் விளங் கியதோடு, ஒழுங்கான ஓர் அமைப்பிற்குக் கட்டுப்பூடாது நின்றனர். நிறுவக முறைமை தோன்றுவதற்குக் காரணமாயிருந்த குல முறைமை எவ்விதம் இந்நிறுவகங்களை எல்லாம் முற்றிலும் வெறுத்தொதுக்கியதோ, அவ்விதமே அயலாந்துத் திருச்சபையும் அக்காலத்தில் அவற்றையெல்லாம் வெறுத் தொதுக்கிற்று. சட்சணிய இனத்தைச் சேர்ந்த மதகுருமார் தங்களுடைய இனத்தை ஒரே திருச்சபைக்கும் ஒரே அரசியலமைப்புக்கும் உட்பட்டதாக ஒற்றுமைப் படுத்தியவாங்கு, அயலாந்து தேச மத குருமார் தங்களினத்,
l214一
337.
துக்கு உதவவில்லை. பண்டைக்காலத் திருச்சபைத் திருத்தொண்டர்கள்
இறந்ததும், அவர்களோடு அவர்கள் ஆர்வமும் தெய்வீக ஊக்கமும் மறைந்தன. அவர்களைப் பற்றிய நினைவுகளே எஞ்சி நின்றன. எனவே,
அயலாந்து பெரும்பான்மையும் முன்பிருந்தவாறே இருள்நிறை தேயமாய்க்
கலங்கிநின்றது.
தரா என்ற இடத்தில் ஆட்சி புரிந்த " மாமன்னர் ” பிற தலைவர்கள் மீது செலுத்தி வந்த மேலாண்மையும் பதினேராம் நூற்றண்டிற் பெயரளவின தாயிற்று. வைக்கிங்குப் படையெடுப்பாளர்களுக்கு வைரித்த
12-R—8844 (1282)
s

Page 162
1014.
3.04. அயலாந்துக் குலங்கள்
எதிரியும் இனப்பற்றுடைய வீரனும் மன்சுற்றரிலுள்ள கேசல் என்ற பகுதிக்கு அரசனுமாகிய பிறையன் போரு என்பானின் ஆட்சிதானும் கெலித்திய இனத்தவரை ஒற்றுமைப்படுத்தவோ, “ மாமன்னராட்சிக்கு ” நிரந்தரமான வலிமையைக் கொடுக்கவோ இயலாதுபோயிற்று. குளோண் டாப்பு என்பான் போர்க்களத்திற் கொல்லப்பட்ட போதிலும், ஆங்கு அவன் பெற்ற வெற்றியானது நோசுமக்களிடமிருந்து அயலாந்தைக் காப்பாற்றியதுமன்றி, தேனியர்களை அவர்கள் நிறுவிய தபிளின், உவாட்டர் போட்டு, இலிமெரிக்கு ஆகிய நகரங்களுக்கப்பாற் பரவவொட்டாத படியும் தடுத்து நிறுத்தியது. அந்நாட்டிற் பிறந்த மக்களுக்கு நகர வாழ்க்கையிலும் வணிகத்துறையிலும் போதிய ஆர்வம் இருக்கவில்லை. உலகமெங்கும் பரவியிருந்த பல்வேறு குலங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தத்தம் பண்டைப் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு வந்ததைப்போல், கால்நடைகள் மேய்த்தலிலும் அவற்றைத் திருடுவதிலும் குலப் போராட்டங்காலும் குடும்பச் சண்டைகளிலும் ஆடல் பாடல்களிலும் ஒரு சிறிது வேளாண்தொழிலிலும் கெலித்தியக் குலத்தினர் தங் காலத் தைக் கழித்து வந்தனர். புதிய ஐரோப்பாவிலே தோன்றிய சிலுவை யுத்தங்களிலும், இல்தபிரந்து என்பாரின் மத இயக்கங்களிலும், கற் கோட்டைகளிலும், தலைக்கோயில்களிலும், நிலமானிய அமைப்புக்களிலும், அதன் பட்டயங்களிலும், வியாபார மார்க்கங்களிலும், இன்னும் தற்காலத் துக்குரிய எல்லா விடயங்களிலும் ஈடுபாடுடையவராயிருந்த மக்களைக் காட்டி லும் மேலான முறையிலே அயலாந்து தேசத்து எளிய மக்கள் ஈடுபாடுடை யவராயிருந்தார்களா இல்லையா என்பது ஒருவரது உளப்பான்மையைப் பொறுத்ததாகும். எந்த ஐரோப்பிய இனமும் அதன் தொன்மையான நிலையிலேயே பணிவச்சமின்றி இருக்கும் நிலை இப்பொழுது அகன்று விட்டது. அது நன்மைக்கோ, தீமைக்கோ எனக் கூற முடியாது. நமது காலத்தில் இயந்திரத் துப்பாக்கிகளையும் தொழிற் புரட்சியின் விளைவுகளை யும் புறக்கணிப்பது எவ்வாறு ஆபத்தானதோ, அவ்வாறே இசுற்றங்போ என்னும் பிரபுவின் காலத்திலே தற்காப்புக்கான ஆயுதங்களையும் கோட்டை களையும் நிலமானிய அமைப்புக்களையும் கைவிடுதல் ஆபத்தாயிருந்தது.
போர்ப்பரசரின் செல்வாக்கு ஓங்கியிருந்த கிறித்துவ உலகின் எல்லைக்கு அப்பாலுள்ள அயலாந்து தேச மக்கள் காட்டுமிராண்டிகளாகவே கருதப் பட்டு வந்தனர். 12 ஆம் நூற்றண்டின் முற் பகுதியிற் சென் மெலக்கி என்பாரும் வேறு சில அயலாந்து வாசிகளும் திருச்சபைச் சீர்திருத்தத் திற்காக ஒர் இயக்கத்தை ஆரம்பித்தது உணமையே. திருச்சபையின் அதிகாரத்தை அதிகரிப்பதற்காகப் பெருந்தொகையினராக விருந்த ஐரிசுப் பிசப்புக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பொதுமக்களிடை மத ஆர்வத்தைத் தூண்டவும் மத தாபனங்களுக்குச் செலுத்த வேண்டிய தசம பாகவரியைக் கட்டாயப்படுத்தி அறவிடவும் உரோமன் திருச்சபையின் முறைக்கொப்ப அயலாந்துத் திருச்சபையின் நிருவாகத்தைச் சிறிது மாற்

அயலாந்தில் இசுற்றங்போ 305
றியமைக்கவும் ஒரு துணிகரமான முயற்சி செய்யப்பட்டது. ஆனல், இங்
சிலாந்து தேசத்திலேயிருந்து படை பூண்டவர்களாக அயலாந்தின் மீது படையெடுத்தவர்களே, அயலாந்து தேசம் உரோமாபுரியுடன் பிரிக்கப்பட முடியாத விதமாய் இணைவதற்கு எதுவாயிருந்த நிலமைக்கு வலிமை கொடுத்தவர்களாவர். உறுதியான நாட்டுணர்ச்சியின்மையால், அயலாந்து தேசத்துத் திருச்சபைச் சீர்திருத்த வாதிகள், இசுற்றங்போ என்பாரையும்
பிற ஆங்கிலேயரையும் வரவேற்று அவர்களுக்கு உதபுரியவும் விரும்பினர்.
வரலாற்றிற் குறிக்கப்படும் ஒரே ஆங்கிலப் போப்பரசரான 4 ஆம் அத்திரியன் என்பார் அப்போது ஆங்கில மன்னனுக விருந்த 11 ஆம் என்றி விரும்பினல் அயலாந்து தேசத்தைக் கைப்பற்றலாமென உத்தரவுகொடுத் தார். உரோமன் திருச்சபை ஆதிக்கத்தின் கீழ் அயலாந்தைக்கொண்டு வருவதற்கு இது ஒரு வழியென அவர் கருதினர்.
11 ஆம் என்றி, ஐரோப்பாக்கண்ட அலுவல்களில் ஈடுபட்டிருந்ததால், அயலாந்து விவகாரத்தை அவனல் நேரில் கவனிக்க முடியாதிருந்தது. அவனுடைய ஆட்சிக்காலத்திலேயே இசுற்றங்போ என்ற சாட்டுப்பெயரா லழைக்கப்பட்ட பெம்புருேக்கு எளாகிய இரிச்சாட்டு தி கிளேயரின் தலை
மையில் வேல்சு நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் அந் நாட்டைக்,
கைப்பற்ற முயற்சிசெய்தனர். நோமானியரின் படையெடுப்புக்களுட் கடைசி யான இப்படையெடுப்பில் அவனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கலப்பற்ற நோமானியரோ, அன்றி ஆங்கிலேய நோமானியரோ அல்லர். அவர்க ளில் அநேகர் புகழ்வாய்ந்த பிற்செரால்டு பிரபுக்களைப் போல வேல்சு நாட்டுத் தாய்மாரின் வயிற்றில் உதித்தவர்களே. இப்பிரபுக்கள் எல்லைப் புறத்தே தோன்றிய தனிப்பட்ட வகுப்பினராவர். இவர்கள் மாச்சு நாட்டுப் பிரபுக்கள்; அவர்களுடைய போர்வீரர்களிற் பெரும்பாலோர் பிளாண்டேசு நாட்டவராகவோ, வேல்சு நாட்டவராகவோ இருந்தனர். அயலாந்தை முதன முதற் கைப்பற்றிய ஆங்கில வீரர்களின் அனுபவமும் அவர்களுடைய உடம்பில் ஒடிய கெலித்திய இரத்த உணர்ச்சியுமே ஒருவேளை அவர்களு டைய சந்ததியினர் அயலாந்து தேசத்தவருடன் எளிதிற் கலந்து அவர் களுடைய நிலமானிய அமைப்புக்களை தபிளின் நகர எல்லைக்கு அப் பாலுள்ள கெலித்தியர்களின் குல அமைப்புக்களுக்கேற்ப மாற்றியமைப்ப தற்குக் காரணமாக விருந்தன எனலாம். கலப்பற்ற நோமானியரோ, அல்லது ஆங்கிலேய-நோமானியரோ தாங்கள் மற்ற விடங்களிற் செய்தது போன்று தங்களுடைய தனிப்பட்ட குண இயல்புகளையும் தாபன அமைப் புக்களையும் அயலாந்திலே நிறுவியிருக்கவும் கூடும்.
ஆனல், இங்கிலாந்து, சிசிலி, இசுக்கொத்துலாந்து ஆகிய நாடுகளின் மீது படையெடுத்த நோமானியர், இசுற்றங்போவின் ஆட்களைக் காட்டிலும் போர்த் திறமையிற் சிறந்தவர்களாக என்றுமே இருந்ததில்லை. இசுற் ருங்போவின் சங்கிலிக் கவசமணிந்த போர் வீரர்களுக்குத் துணை நின்ற
1169.
17.

Page 163
306 அயலாந்தில் இசுற்றங்போ
விற்போர் வீரர்களின் திறமை இங்கிலாந்துக்கு உரியதன்று ; அது வேல்சு நாட்டுக்குரிய தனிச்சிறப்பாகும். தேனியப் போர்க் கோடரிகளையும் எறி யீட்டிகளையும் விரைந்து செல்லும் கற்களையும் உபயோகித்துப் போரிட்ட, ஐரிசுக் குலங்களைச் சேர்ந்த, கவசமணியாக் காலட் படையினர், ஐரோப்பா விலேயே சிறந்ததோரெனக் கருதத்தக்க குதிரைப் படை வீரர்களையும் சிறந்த விற்போர் வீரர்களையும் எதிர்த்து நிற்க முடியாதவராயினர். பண் படுத்தப்படாத அத் தீவின் பாதைகளற்ற மலைகளும் காடுகளும் சதுப்பு நிலங்களுமே அந்நாட்டவருக்குப் புகலிடமாக அமைந்தன. மறைந்து நின்று தாக்கும் கெரில்லாப் போர் முறைகளை அவர்கள் நன்கு அறிந் திருந்தனர். காட்டின் வழியாகவும் சதுப்பு நிலங்களின் வழியாகவும் செல்லும் ஒடுக்கமான பாதைகளை வெட்டப்பட்ட மரங்களாலும் மண்மேடு களாலும் நிரப்பினர். படையெடுப்பாளருக்கு விரோதமாக உண்மையான தேசிய அடிப்படையில் எதிர்ப்பு ஏற்படவில்லை. மததிருச்சபையினரும், அயலாந்தின் பூாவீகக் குடிகளும், படையெடுப்பாளருக்கு ஆதரவு அளித் தனர். இசுற்றங்போ என்பவரைப் படையெடுத்து வரும்படி அழைத்த தெர்மோட்டு என்பவர் பிற்காலத்திலே மக்களால் கருதப்பட்டதுபோல, அவருடைய வாழ்நாளிலே நாட்டுத் துரோகியாகக் கருதப்பட்டு மக்களால் புறக்கணிக்கப்படவில்லை.
பிரித்தானியத் தீவுகளிற் போன்றே, ஐரிசுத் தீவுகளிலும் கோட்டைகளை அமைத்து ஆங்கிலேய-நோமானியர் தம் ஆட்சியைப் பலப்படுத்தினர். இங் கேயும், கெலித்தியர்களுக்கு எவ்வித அனுகூலமும் எற்படவில்லை. ஏனெ னில், தேனியரின் துறைமுகப் பட்டினங்களில் மட்டுமே படையெடுப்பாள ருக்கு எதிர்ப்புத் தோன்றியது. குளோண்டாப்பு யுத்தத்திற்குப் பிறகு, அயலாந்திலேயுள்ள தேனியர், வைக்கிங்குகள் போன்று வீரம் மிகுந்த கடற்கொள்ளைக் காரராகாது, அமைதியை விரும்பும் வர்த்தகர்களாக மாறி விட்டனர். அன்றியும், அவர்கள் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவர் களே. எனவே, அவர்களுடைய நகரங்கள் எளிதிற் கைப்பற்றப்பட்டு, ஒரே யடியாகச் சுகாந்திநேவிய நாகரிகத்திலிருந்து ஆங்கில நாகரிகம்படைத்த நகரங்களாக மாற்றப்பட்டன. பிறிற்றல் நகரசவாசிகள் தபிளின் நகரத் தில் வசிக்கும் உரிமை பெற்றனர். வைக்கிங்குகளால் முதன்முதலில் எழுப்பப்பட்ட தபிளின் கோட்டை 12 ஆம் நூற்றண்டு முதல் 20 ஆம் நூற்ருண்டுவரை அயலாந்திலே சட்சணியரது ஆட்சிப்பீடமாக விளங்கியது.
படையெடுப்பின் போது தேனியரிற் பெரும்பாலோர் படுகொலை செய்யப் பட்டனர். எஞ்சியிருந்தவர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். இத் தீவுக்கு உட்செல்லும் வாயிலாக அமைந்திருந்த துறைமுக நகரங்கள் வெற்றி கொண்டவர்களாற் கைப்பற்றப்பட்டு அவர்களின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. அயலாந்திலுள்ள கெலித்தியர்கள் இதுவரை தமக்கென நகரங்களை நிறுவி அவற்றில் வாழும் வாழ்க்கையை அறிந்தவர்

ஆங்கில-ஐரிசுப் பரன்மார் 307
களாயிருக்கவில்லை. மேற்குக் கோடியிலுள்ள கல்வே போன்ற நகரங் களுங்கூட, ஆங்கிலேய-நோமானியரால் நிறுவப்பட்டவையே. மத்திய காலத் தின் கடைசிப் பகுதியில் தபிளின் நகர எல்லைக்கு அப்பாலுள்ள பிற நகரங்களில் வாழ்ந்த ஆங்கிலேயர் தம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் பண்டமாற்றுச் செய்தும் அவர்களுடைய மொழியை நாளடைவில் கைக் கொண்டும் கலப்பு மணம் முதலியனசெய்தும் ஆங்கிலேயரென்று சொல்ல முடியாதபடி அயலாந்தினராகவே மாறிவிட்டனர்.
இசுற்றங்போ அயலாந்தைக் கைப்பற்றிய காலத்திலும் அதற்கு மிகப் பின்னுள்ள காலத்திலும் அயலாந்து மக்களிடைய நாட்டுணர்ச்சி நிலவ வேயில்லை. ஆகவே, அன்னியரது ஆட்சியை அதன் மேன்மை கண்டு அவர்கள் எற்றுக் கொண்டிருப்பர். அங்குள்ள பல்வேறு இனங்களை நட் புணர்ச்சியின் அடிப்படையிற் பிணைப்பதற்குப் பலமும் நீதியும் வாய்ந்த அரசாங்கமே அவசியமாகவிருந்தது. ஆனல், மத்திய காலம் முழுவதும் நீதியும் பலமும் பொருந்திய அரசாங்கம் எற்படவேயில்லை. கலகப் பிரி யர்களான புத்திரரைப் பெற்றிருந்தவனும் மேலைக் கிறித்துவ உலகில் ஏறக்குறையப் பாதியைப் பல தொல்லைகளுக் கிடையே பரிபாலனம் செய்து வந்தவனுமான I ஆம் என்றி, இசுற்றங்போவினல் ஏற்பட்ட பல பொறுப்புக்களை இயன்றவரை குறைத்துக் கொள்ள வேண்டியவனயினன். அத் தீவிற் பெயரளவிலன்றி, உண்மையிலேயே தன் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு வேண்டிய நேரமும் பொருளும் ஆள் உதவியும் இல்லா திருந்தமையே காரணமாகும். எனினும், திறமையுள்ள மன்னராட்சியை நிலைநாட்டிக் காப்பதற்கு அவளுல்ை முடியாமற் போன போதிலும், இசுற் ருங்போ, அல்லது வேறு நிலமானியத் தலைவர்கள் பதிலரையராக நாட்டில் அதிகாரம் செலுத்துவதை அனுமதிப்பதற்கும் அவன் துணியவில்லை. எனவே, ஆக்கிரமிப்பாளர் அந்நாட்டுக் குடிகளைத் தொடர்ந்து கொள்ளை. யடித்து வரலாயினர். இவர்கள் தங்கள் ஆளுகைக்காகப் பெரு நிலப் பிரிவுகளை எற்படுத்துவதில் ஆங்கில அரசனுடைய ஆதரவோ, கட்டுப்பாடோ இன்றித் தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நூற்றண் டுக்கு அதிகமாக இவ்வாக்கிரமிப்பு மேற்கு நோக்கித் தன் எல்லைகளை மெது வாக விரிவாக்கிக் கொண்டு வந்தது. நாட்டு மக்களிடமிருந்து அதற்குக் கட்டுப்பாடான எதிர்ப்பு எதுவும் எற்படவில்லை. ஆனல், அவ்வாக்கிரமிப்பின் குறிக்கோள் நிலையற்றதாகவும் பிளவு பட்டும் காணப்பட்டது. அதன் விளைவால் நிலையான நீதியோ, வலிய கொடுங்கோன்மையோ ஏற்பட வில்லை.
இச்சூழ் நிலையிலே இத் தீவில் மூன்று பெரும் பிரிவுகள் தோன்றின. மத்திய காலம் முழுவதும் அப்பிரிவுகள், ஒயாது எல்லை மாறினும், நிலைத்து நின்றன. தபிளின் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் ஆங்கிலச் சட்டமானது இங்கிலாந்துக் கோட்டத்திற் போன்று நடைமுறையிலிருந்து வந்தது. தொலை விலுள்ள மேற்குப் பகுதியில், படையெடுப்பின் காரணமாகப் பாதிக்கப்படா

Page 164
lli
3.
3O8 ஆங்கில-ஐரிசுப் பரன்மார்
விட்டாலும் பயமுறுத்தப்பட்டவர்களாக இருந்த கலப்பற்ற கெவித்தியக் குலத்தலேவர்களும் கெவித்தியக் குலத்தவரும் வாழ்ந்து வந்தனர். அய லாத்தின் இவ்விரு பிரிவுகளுக்குமிடையே, அவையிரண்டுடனும் ஒன்று கலந்து கலப்பு ஆட்சியின் கீழிருந்து வந்த பகுதிகளும் இருந்தன. அங் குள்ள கோட்டைகளிலிருந்தே துணிகர ஆக்கிரமிப்பாளரின் வழிவந்த பெருநிலப் பிரபுக்கள் தத்தம் பகுதியிலடங்கிய சுதேச மக்களின் மீது ஆதிக்கஞ் செலுத்தினர். அவர்களுடைய நோமானிய-வேல்சு நாட்டு நிலமானிய முறை கெலித்தியக் குலமுறையை ஒழிப்பதற்குப் பதிலாக நாளடைவில் மறுதலடைந்து எறக்குறையக் கெவித்தியர்களின் அமைப் பைப் போன்றதாயிற்று. நீண்ட காலத்திற்குப் பின், பல்வேறு மத வேறு பாடுகள் இருந்தும், குருெம்வெல்லின் வீரர்களின் வழிவந்தவர்களில் அனேகர் தங்களேச் சுற்றியிருந்த கெலித்தியச் சூழ்நிலையில் ஆழ்ந்து விட்டார்கள் என்றல், அதே மாறுபாடு ஆங்கிலேய-ஐரிசு நிலப் பிரபுத் களிடமும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லே. அயலாந்தின் பெரும் பகுதியில் இவ்வாறு எற்பட்ட ஆங்கில ஆட்சியானது அங்குள்ள சதுப்பு நிலத்தை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கட்டடத்தைப் போன்று பலமற்ற தாக இருந்தது.
முதலாம் எட்டுவேட்டின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டு விவகாரங்கனி எளிலே அதிக கவனம் செலுத்தப்பட்டமையால், சிறிது காலத்திற்கு யே லாந்து முழுவதும், சிறப்பாக ஆங்கிலேயர் மிக்க அக்கறை கொண்டிருந்த இலென்சுற்றர், மீத்து முதலிய இடங்களும் செழிப்புற்றன. புதிய கிராமங் கள தோன்றின கோட்டைகளில் வாழ்ந்த பெருமக்களது பாதுகாப்பில் விவசாயம் விருத்தியடைந்தது. தபிளின், உவாட்டர்போட்டு, கோக்கு போன்ற வாணிகத்துறைகள் கடல்கடந்த வர்த்தகம் செய்யலாயின.
அயலாந்து நாட்டு வலாற்றிலே வழக்கமாக எற்படுகின்ற தீங்கு விளே விக்கும் திருப்பங்களிலொன்று அக்கால் நிகழ்ந்தது. முதலாவது எட்டு வேட்டு இசுக்கொத்துலாந்தைக் கைப்பற்றச் செய்த முயற்சி, பலவீனணுன அவன் புத்திரனின் காலத்தில் அந்நாட்டு மக்கள் பழிவாங்கும் நிலைக்கு வழிகோவியது. பனக்குபேண் போர் முடிந்தவுடனோ, புரூசு சகோ தரர்களின் த லேமையில் இசுக்கொத்துலாந்து மக்கள் தங்களுடன் நீண்ட காலமாக உறுதியான தொடர்பு கொண்டிருந்த அல்சுற்றர் பகுதியின் வழியாக அயலாந்தினுள் நுழைந்தனர். அத்தீவில் அப்பொழுது தோன்றி யிருந்த செழிப்பான நீலேமை ஆக்கிரமிப்பாளரின் நெருப்பாலும் Šú WITüጅIIII ஆம் பாழ்படுத்தப்பட்டது. இரு நூற்றுண்டுகளாக ஆங்கிலேயரது செஸ் வாக்கு அவ்வதிர்ச்சியினின்று திலேதூக்கவேயில்லே. புரூசு சகோதரர் களின் படையெடுப்பு அயலிாந்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதிலும் அவ்வீழ்ச்சிக்கான சந்தர்ப்பம் என்று சொல்வதே பொருத்தமாகும்.ஆனூல், அடிப்படைக் காரணத்தை நோக்கின், ஆங்கிலேய-ஐரிசுப் பரன்கள் கெலித்
 

ஆங்கில எல்லேப்புறம் BO9.
தியத் த&லவர்களினின்றும் எவ்வகையிலும் வேற்றுமைப் படாதிருந்த தும் அவர்கள் உண்மையான ஆங்கிலக் குடியேற்றத்தைத் தொலேத்துத் தங்களுடைய ஆட்சியின் எல்லேயை எப்பொழுதும் அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருந்ததுமே அவ்வீழ்ச்சிக்குக் காரணங்களாம் என்பது புவிஜகும்.
பருமனிலும் வளர்ச்சியிலும் அயலாந்தில் ஆங்கில எல்லே சுருங்கிக் கொண்டே வந்தது. அங்கே வாழ்ந்த ஆங்கிலக் குடியேறிகளும் அலுவ லாளரும் ஓர் அன்னிய நாட்டிலே நெருக்கி ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு காவற்படையைச் சேர்ந்தவர்களாத் தம்மைக் கருதினர். எனவே, அவர் கன் தங்கள் வாழ்க்கையிலட்சியங்களுக்கும் சுற்றத்துக்குங் கட்டுப்பட்டோ ராகி ஒதுங்கி வாழ்ந்தனர். தங்களுடைய எல்லேக்கு அப்பாற்பட்ட எவ் விடயமும் ஆங்கிலேயருக்கு உரியதன்று என்றும் அயலாந்தையே சார்ந்தது
ஆங்ரே ரசீது FILLI kir
பருமாழி நாங்ாே நடித்தடி முநர்கள் :
ஃப்ளோடிமீர் கே?
;[ l
ழிப்பு. நேகமாாேய்' ޝަޝީ
ኻ: ދިދޫގަޑީ;%/ "آئندہ శస్థ
படம் XI மத்தியகால முடிவுகாஸ்திநிஜ் அ4:0ாந்து
என்றும் கருதினர். இத்தகைய வேறுபாடு பல நூற்றண்டுகளுக்குத் தீங்கை விளேவிக்கக் கூடிய ஒரு கொள்கையைத் தோற்றுவித்தது. நியூடர் மன்னர்களுக்கு முந்திய காலங்களிலே தங்களுடைய ஆட்சி பரவியிருந்த

Page 165
30 ஆங்கில எல்லேப்புறம்
எல்லைவரை அயலாநது மக்களின் சட்டங்களையும் மொழியையும் பழக்க வழக்கங்களையும் ஆங்கிலக் குடியேற்றக்காரர் தடை செய்திருந்ததுடன், ஈரினத்தவர்க்கு மிடையே உள்ள பிளவை மேலும் அதிகப்படுத்தினர்.
பிரான்சுடன் தொடரப்பட்ட நூருண்டுப் போரினல் ஆங்கில நாடு உண்மை யிலேயே தன் கடல் கடந்த குடியேற்ற நாடுகளில் மீது செலுத்த வேண் டிய கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டது. அந்நீண்ட போரின் இரு பகுதிகளுக்கிடைப்பட்ட காலத்திலே I ஆம் இரிச்சாட்டு அயலாந்துக்கு ஒரு படையுடன் சென்றன். அவனுடைய தோல்விக்குப் பிறகு, ஒரேஞ்சு நாட்டு உவில்லியத்தின் காலம் வரை அயலாந்தில் எந்த ஆங்கில அரசனும் கால் வைக்கவில்லை. ஒருவர்க்கொருவர் எதிரிகளான இலங்காசுற்றர், யோக்கு வமிசத்தினர் அயலாந்தை முற்றிலும் புறக்கணித்ததினல், ஆங் கிலக்குடியேற்ற எல்லைக்கு வெளியே கெல்திக்குக் குலமுறை வாழ்க்கைக்கு ஐரிசு மக்கள் மறுபடியும் இழுத்துச் செல்லப்பட்டனர். மேலும், குடி யேறினவர்களில் ஒரு பகுதியினர் எவ்வளவோ பெருமுயற்சிகள் எடுத்த போதிலும் குடியேற்ற எல்லைக்குட்பட்ட ஆங்கிலேயரிடையே ஐரிசு மொழி யும் வழிமைகளும் பரவலாயின. நாட்டு மக்களது நாகரிகமானது,வெற்றி கொண்ட மக்களது நாகரிகக்கலப்பினுற் பெரு நன்மையடைந்தது. நகர வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டது : தேனியராலும் ஆங்கிலேயராலும் நிறுவப் பட்ட நகரங்களிற் சில பகுதிகளிலேனும் ஐரிசு மொழி பேசப்பட்டு வரலா யிற்று. அதே சமயத்தில் ஆங்கிலேய-ஐரிசு விழுமியோர், தனக்கே உரித் தான ஒழுங்கற்ற சமுதாய வளப்பத்தின் அறிகுறிகளை 15ஆம் நூற் ருண்டிற் காண்பித்த ஒரு புதிய நாட்டினச் சமூகத்திற்குத் தலைமை தாங்குவராராயினர்.
ஆயின், ஆங்கிலராட்சி அயலாந்தில் ஏற்பட்டமை காரணமாக, அந்நாட்டு மக்கள் தம் நாட்டின் ஒற்றுமை கருதி யாதும் முயற்சி செய்தற்கு வழியில்லாது போயிற்று. தபிளினிலும் அதையடுத்த பகுதிகளிலும் ஆங்கிலேயர் அற்ப ஆதிக்கம் செலுத்தியமையாலும், ஆங்கில அரசர்கள் அயலாந்து மீது மேலாண்மை பெற்றிருந்தமையாலும், ஆங்கிலேய-ஐரிசுப் பரன் ஒருவரின் தலைமையிலாவது நாடு ஒற்றுமைப்படுவதுந் தடைப் பட்டது. 15ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆங்கில அரசனின் பெய ரால், இத்தீவில் ஒரு அரசாங்கம் நிறுவதற்கு பெரிய ஆங்கிலேய-ஐரிசுக் குடும்பங்களில் ஒன்றிலிருந்து, சிறப்பாகக் கில்தேயர் வேள்களாகிய பிற் , செரல்துக்கும்பத்திலிருந்து பிரதியாளரைத் தெரிவுசெய்ய வேண்டுமென்ற இயக்கம் இருந்தது உண்மையே. ஆனல் 7-ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களானவை அயலாந்தின் உள்நாட்டு நிலைமை இவ்வேற்பாட்டின் விளைவால் எவ்வாறு பாதிக்கப்படினும், ஆங்கில அரச னின் பாதுகாப்புக்கு அது ஏற்றதன்று என்பதை வெளிப்படுத்தின. ஆங்கில மன்னனின் வமிச விரோதிகள், பிற்செரல்து பிரபுக்களையும் பேதைமை

‘போயினிங்குச் சட்டம்” 31.
மிக்க அயலாந்து மக்களையும், யோக்கு வமிசத்தவரின் வஞ்சகச் செயல்களுக் கும், இலாம்பெட்டு சிம்னல் போன்ற போலி உரிமையாளரின் சார்பாக இங்கிலாந்தின் மீது படையெடுப்பதற்கும் பயன்படுத்தினர். சுதந்திரமுள்ள அயலாந்து தேசம் தன்னுயை அண்டை நாடான இங்கிலாந்தை எதிர்த்துத் தாக்கி, அதன் அமைதியைக் குலைப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்டதினல், அயலாந்தில் நிலவிய “ உயர்குடி மக்கள் உண்ணுட்டு ஆட்சி' தோல்வி யடைந்தது. “ போயினிங்குசட்டமானது ’ ஐரிசுப் பாராளுமன்றம் ஆங்கில நாட்டு நிர்வாகத்தை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டுமென்று விதித்து, மேற்கூறிய பரிசோதனைக்கு ஒரு கால வரம்பையுங் குறிப்பிட்டது. பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்காகச் செய்யப்பட்ட இம்முயற்சியும் தோல்வி யடைந்தது. எனினும், அடுத்த நூற்றண்டுவரை அயலாந்து தேசத்தைக் கைப்பற்ற ஆங்கிலேயரால் எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை.
இங்கிலாது தேசம் அயலாந்தைக் கைப்பற்றுவதற்கோ, ஆளுவதற்கோ இயலாதவாறு வலுவற்றிருந்த போதிலும், ஐரிசு மக்கள் தம்மைத் தாமே ஆளப்பயில்வதைத் தடைசெய்வதற்கு வேண்டிய பலம் பெற் றிருந்தது. ஒரு காலத்தில் ஐரோப்பாவின் அறியாமையெனும் இருளிற்கு அறிவுவிளக்காக விளங்கிய அயலாந்து, மத்தியகால முடிவில் ஐரோப்பிய நாடுகளிடையே பல்கலைக்கழகமொன்றேனுமற்ற ஒரே தனித்த நாடாக இருந்தது ஆச்சரியமே. மத்திய கால ஆங்கிலேயர் சீர்திருத்த கால ஆங்கிலேயருக்குக் கையளித்த கடல் கடந்த மரபுரிமை இத்தகைய சிறுமை யதே. முற்போக்கான தீவிரக் கொள்கையால் அயலாந்தை இந்நிலையி னின்றும் காப்பாற்றுவதற்குப் பதிலாக, பல நூற்றண்டுகளாக ஆங்கி லேயர் அந்நாட்டைப் புறக்கணித்து வந்தனர். தியூடர் மன்னர்கள் அய லாந்தைக் கைப்பற்றுங் கொள்கையை நடைமுறையிற் கொண்டுவந்த பொழுது, அக்காலம் ஏற்றதாக அமையவில்ல்ை ; காலத்தாற் பிந்தி விட்டனர். மதப்பிளவும் வியாபாரப் போட்டியும் நாட்டினவுணர்ச்சியும் வன்பொடு தலைதுாக்கிநின்ற காலமே அத்தியூடர்காலம்.
அயலாந்திலிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலநாட்டிலே கெலித்தியர் தங் கள் அயலாருடன் கொண்டிருந்த உறவு உவப்பாக இருந்தது. அதன் காரணத்தை அறிவதற்கு நாம் மறுபடியும் மத்தியகால வரலாற்றையே புரட்டுதல்வேண்டும்.
ஆங்கிலேய-சட்சன் வமிசத்தினர் வெற்றி பெற்ற காலத்தின் பிற்பகுதி யில், சிம்றி அல்லது வேல்சு நாட்டில் எஞ்சியிருந்த இடங்கள், ஆங்கி லேயர் முன்னேறிச் சென்ற காரணத்தால் மூன்று தனிப்பட்ட பகுதி களாகப் பிரியலாயின. அவை முறையே வடக்கிற் சுராற்கிளைட்டு, மத்தி யில் வேல்சு, தெற்கில் தெவொனியன்-கோனிசு தீபகற்பம் என்பவையே யாம். இயற்கையாகவே இவை தனிப்பட்ட பிரிவுகளாய் அமைந்திருந்த தினல், ஒன்று சேர்ந்து இன அடிப்படையில் எதிர்க்குஞ் சத்தியை
148.
1494.
V 25b. நாட்டுப் படத்தை பார்க்க

Page 166
312 வேல்சிலே கெலித்தியரும் சட்சணியரும்
அவை பெரிதும் இழந்திருந்தன ; வைக்கிங்குகளின் நடவடிக்கைகளுக்கு மையமாக விளங்கிய சிறிய மான்தீவிலும், செசுற்றர், பிற்றித்தல் என்னும் பெரிய துறைமுகப் பட்டினங்களிலும அப்பிரிவுகளின் விரோதிகளே கடல் ஆதிக்கம் பெற்றிருந்தமையாலும் அவை இன அடிப்படையில் ஒன்று பட்டு எதிர்க்கும் சத்தி மேலும் தடைப்பட்டது. நோமானியரது வெற்றிக்கு முன்பு கந்திநேண்யாவிலிருந்து குடியேறியவர்கள் வட இலங்காசயர், இலேக்கு மாவட்டம் ஆதியவற்றில் நோதிக்கு நாகரிகத்தைப்பரப்பியிருந் தனர். இனி, தெவன் பகுதியில், வெசெட்சிலுள்ள சட்சனியர்குடியேறி யிருந்தபடியால், அது ஆங்கில வாழ்க்கைப் பண்பாடுடையதாகவும், இங்கி லாந்துடன் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அன்று தொட்டுக் கருதப்பட் டுள்ளது. கெலித்திக்கு இனமும் கெலித்திக்கு மொழியும் ஆதிக்கம் பெற்ற ஓரிடமாகக் கோண் வால் இருந்தபோதிலும், அவ்வாற்றல் அது எத்த கையதொந்தரவையும் விளைவிப்பதற்கு இயலாத சிறிய தனித்த ஒரு பகுதியாய் இருந்தது. அப்பகுதி ஆங்கிலேய சட்சணியர் காலத்திற் கைப் பற்றப்பட்டு, ஆங்கில மன்னர் ஆட்சியில் மிக நெருக்கமாக இணைக்கப்பட்ட பகுதியாக இருந்து, பின்பு நிலவுடைமைக் கணிப்பேட்டில் (துரமுகதே நூலில்) சொல்லப்பட்டபடி நோமானிய நிலமானிய முறைமைக்கு உட் படுத்தப்பட்டு, அதன்பிறகு மத்தியகால ஆங்கிலச் சட்டத்திற்கும் உட் படுத்தப்பட்டதாகவிருந்தது. சுதுவாட்டு அரசர்கள் காலம்வரை தனக்கே உரித்தான கெலித்திக்கு மொழியொன்றை அப்பகுதி மக்கள் பேசிவந்தது மன்றி, இன்றும் அவர்கள் அந்நிலப்பகுதிக்கே உரிய கெலித்திக்குப் பண் பாட்டைப் பாதுகாத்தும் வந்துள்ளனர்.
வேல்சு நாடுபற்றிய பெரும் பிரச்சினை தீர்க்கப்படாமலேயிருந்தது. அதனு டைய அகன்ற மலைப்பிரதேசம் சட்சணியரது படையெடுப்பை ஒபா அணைக்கட் டுக்கு மேற் செல்லவிடாது தடுத்துவிட்டது. ஆங்கிலேயர் முன்னேறிச் செல் வதைத் தடுத்து நிறுத்திய அம்மலைகள், வேல்சுநாட்டு மக்கள் ஒன்று படுவதற்கும் தடையாகவிருந்தன. ஒப்புக் கொள்வோணுகிய எட்டுவேட்டின் ஆட்சியில் அரல்டு என்பவன் மேற்கு நோக்கி முன்னேறி, தம்மிடை ஓயாது சண்டையிட்டுக் கொண்டிருந்த கெலித்திக்கு வம்சத்தவர் சிலரின் நட்பைப் பெற்று, நோமானியரின் காலத்தில் மேற்கொண்டு முன்னேறிச் செல்வ தற்கு இவ்வாறு ஒரு வழியையும் வகுத்தான்.
வெற்றி வீரன் உவில்லியத்தின் ஆட்சிக் காலந்தொட்டு முதலாம் எட்டு வேட்டின் ஆட்சிக் காலம்வரை வேல்சைக் கைப்பற்றுவதற்கு மிகவும் வெற்றிகரமான முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனல் அவை ஆங்கில அரசர் களாற் செய்யப்படாது, பிற்செரல்து பிரபுக்கள், இசுற்றங்போ பிரபு போன்ற மாச்சுநாட்டுப் பிரபுக்களாலும் அவர்களுடைய படைகளாலுமே செய்யப்பட்டன. அவர்கள் நோமானியர், ஆங்கிலேயர், வேல்சு நாட்டினர் ஆகியவரது இனக்கலப்புடையவர்களாய், நிலமானிய ஆட்சியின் பிரதிநிதி

ஆங்கில-நோமன் படையெடுப்பு 33
களாயும் ஆங்கிலப்பொருளாதார நுழைவின் பிரதிநிதிகளாயுமிருந்தனரே தவிர, ஆங்கில முடியாட்சியின் பிரதிநிதிகளாய் விளங்கவில்லை. ஓர் அமயத் தில் நூற்று நாற்பத்துமூன்று மாச்சுநாட்டுப் பிரபுக்கள் இருந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பிரபுக்கள் வாளின் துணைகொண்டு தமக்கென ஆதீனம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டபோதெல்லாம் ஒரு கோட்டையையும் எழுப்பி, அங்கு வாழும் மக்களிடமிருந்து நிலமானிய முறைப்படி பெற வேண்டியவரிகளையும் அறவிட்டு, தமது சொந்த நீதி மன்றத்திலே நில மானியச் சட்டத்தையோ, ஆங்கிலச் சட்டத்தையோ, வேல்சு இனத்தவரின் வழமையையோ நடைமுறையிற் கொண்டுவந்தனர். அவர்களுடைய பாது காப்பின் கீழிருந்த ஆங்கில மொழி பேசும் குடியேற்ற வாசிகள்-அவர்கள் போர்வீரர்களாயினும் விவசாயிகளாயினும் அல்லது வியாபாரிகளாயினும்அப்பிரபுக்களால் ஆளப்பட்ட நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அப்பிரபுக்கள் புதிதாகப் புகுந்த ஒர் இனத்தின் பிரதிநிதிகளாயும் விரிந்த ஒரு நாகரிகத் தின் பிரதிநிதிகளாயும் விளங்கினர் ; அவர்கள் உண்மையிற் சிற்றரசர் போன்றே ஆட்சி செய்தனர்.
ஆங்கிலேய-நோமானியரது படையெடுப்பு தாழ் நிலங்களைக் கைப்பற்று வதில் வெற்றிகண்டு, பள்ளத்தாக்குக்களினூடாக நுழைந்தது. ஏனென் ருல் பள்ளத்தாக்குக்களே, பாதைகளில்லாத மலைகளுக்குச் செல்லுகின்ற வாயில்களாகும். அன்றியும் அங்குதான் உழவுக்குத் தகுந்த நிலங்களும் இருந்தன - ஆனல், பள்ளத்தாக்குக்கள், காடுகளாலும் சதுப்பு நிலங்க ளாலும் நிறைந்திருந்தமையால், ஆங்குச் செல்லல் மிகத் தாமதமாயிற்று. ஆங்கிலேயர் முன்னேடிகளான விவசாயிகளாகவும் எப்பொழுதுமே விழிப் பாயிருக்க வேண்டிய போர் வீரர்களாகவும் இருக்கவேண்டியவராயினர்.
ஆங்கிலேய-நோமானியரின் வருகைக்கு முன் வேல்சு இனத்தவர் விவசாயிகளாயிருந்தனர் என்று சொல்வதினும் இடையராயிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமானது. நகரங்களையோ, கிராமங்களையோ, வீடுகளையோ அமைத்து அவற்றில் வாழும் நிலை அவர்களுக்கு இன்னும் ஏற்படாதிருந்தது. சில மாதங்கள் மட்டும் தங்குவதற்காக மரக்கிளைகளைக் கொண்டமைத்த குடிசைகளிலே தற்காலிகமாக வசித்தார்கள். அவர்கள் தங்கள் மந்தைகளை மேய்த்துக் கொண்டு சென்று மாரிகாலம் முடிந்த தும், கோடைகாலத்திற் கேற்ற மலைச்சாரல்களுக்குச் செல்வர். எளிய இக் குடிகள் தங்களுடைய பள்ளத்தாக்கிலே மரத்தாலோ கல்லாலோ கட்டப் பட்ட நோமானியரின் கோட்டையையும், அத்துடன் நிலமானிய முறைப்படி யமைந்த நீதிமன்றத்தையும், ஆங்கில மொழி பேசும் விவசாயிகள் வாழும் கிராமத்தையும் காணநேரின், அவர்களில் ஒரு பகுதியினர் விடுதலை தேடிப் பக்கத்திலுள்ள குன்றுகளுக்குப் பயந்து ஒடுவர். மற்றவர்கள் புதிய பிரபுவி வின் கீழ் அடிமைகளாக அமருவர் ; ஆனல் அண்மையிலிருக்கும் மலைக ளுக்குத் துரத்தப்பட்ட தங்கள் குலத்தலைவனிடத்து அவர்கள் மனப்பூர்வ

Page 167
34 ஆங்கில-நோமன் படையெடுப்பு
மான பற்றுள்ளவர்கனாக இருப்பர். அத்தலேனின் அங்கேயிருந்து பன்னத் தாக்கின்மீது படையெடுத்து ஓயாது அழிவை புண்டாக்கிக் கொண்டே யிருந்தான்.
வெவ்வேருண ஐம்பது பள்ளத்தாக்குக்களில் இத்தகைய சூழ்நிவே நிலவி இருந்ததை உணர்வோமாயின், 12-ஆம் நூற்றுண்டில் வேல்சு நாட்டின் குழப்பமான நிவேமையைப்பற்றி ஒரளவுக்குப் புரிந்து கொள்ளலாம். பண் படாக் குல முறையும், நிலமானிய முறையும் நாட்டிற் கால் கொள்ளுதற்கு ஒன்றுக்கொன்று போட்டியிடலாயின. இவ்விரு முறைகளும் அரசியல்
நாட்டுப்படம் XIII, மததியகால உவேல்சு
அதிகாரத்தைக் கூறுபடுத்துந்தன்மையின் மாவட்டங்களே ஒன்றேடொன்று இேேந்திருக்க முடியாதபடி தகுந்த மலேகன் இத்தன்மிையை வலுப்படுத் தின. குன்றுகளிலே ஒரு குலம் இன்னுெரு குலத்தோடு போரிட்டது : ஒவ்வொரு பரனின் ஆட்சியிலிருந்த பன்னத்தாக்கும் அயவிேகுலங்கள் வாழ்ந்து வந்த குன்றுகளும் தம்மிடையே போர்விளேத்தன.
 
 

மாச்சு நாட்டுப் பிரபுக்கள் 315
இவ்வாறிருந்தும் நாகரிகம் மெதுவாகவும் குருதிதோய்ந்த நிஐலயிலும் வளர்ந்து கொண்டுதான் வந்தது. படையெடுப்பாளருக்கு அநுகூலமாகவே சந்தர்ப்பமும் அமைந்திருந்தது. அவர்கள்தம் தளங்களுக்கு அருகேயிருந்து கொண்டு கடல்வழியாகவும் தரைவழியாகவும் இடைவிடாது ஆட்சேர்த்துக் கொண்டே தங்கள் நிவேயை பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அயலாந்து தேசத்தின் சதுப்பு நிலங்களுக்கிடையே அகப்பட்டுத்தவித்த ஆங்கிலேயநோமானிய நாகரிகத்தின் கதியிலும் அவர்கள் நிவே நம்பிக்கையூட்டுவதா மிருந்தது. பிறித்தல் செசுற்றர் போன்ற பெரிய துறைமுகங்களிலிருந்து விருங்கப்பல்கள் வேல்சு நாட்டில், கடலுக்குட் செல்லும் பள்ளத்தாக்வில் அவிந்த முகத்துவாரங்களின் மீது ஆதிக்கஞ் செலுத்தின. உள்நாட்டிலே, ரெவேண் நதிப் பள்ளத்தாக்கின் மேற்பாகமானது படையெடுப்பாளர் சுரு சபரி என்ற இடத்திலிருந்து நாட்டின் மத்திய பகுதிவரை செல்லுவதற்கு எளிதான பாதையாக அமைந்ததோடு, பே'யிசு என்ற இடத்தைக் கைப் பற்றுவதற்கு வழியாகி, வடக்கிலுள்ள குவினெட்டைத் தெற்கிலுள்ள தன்பாரிலிருந்து துண்டித்தற்குக் காரணமாகவுமிருந்தது. விடாமுயற்சி யுள்ள பல ஆங்கிலேயரும் பிளாண்டேசு வாசிகளும் கடலோடிவந்து குடி யேறிய பெம்புருேக்குப் பகுதி, கெவித்திக்கு மொழி பேகம் வழக்கத்தை கைவிட்டதுமன்றி "வேல்சுக்கு அப்பாலுள்ள சிறு இங்கிலாந்து" என அழைக்கப்பட்டும் வந்தது. மாச்சுதாட்டு எல்லேப்புறப் பிரபுக்கள் தங்களு டைய வலிமை உச்சநிவேயில் இருந்த காலத்திலுங் கூட, நுழைய முடியாத படி சினுேடன் அரண்களாற் சூழப்பெற்ற குவினெட்டு மாவட்டத்தைக் ஃேப்பற்றமுடியவில்லே,
மாச்சு நாட்டுப் பிரபுக்கள் ஆங்கில அரசாங்கத்திலும் மிகப் பிற்போக்கான தும் வேல்சு நாட்டு மக்களின் ஆட்சியினும், முற்போக்குடையதுமான ஒருவகை ஆட்சியைக் கையாண்டனர். பூன், ம்ோட்டிமெர் குடும்பங்களும் பிற மாச்சுப் பிரபுக்களின் குடும்பத்தினரும் ஆங்கினி ஆட்சிமுறையிலே தொன்ஃல விளேவிப்பவராகவேயிருந்தனர். வனேனில் அவர்கள் போர் புரிவதிலும், நிலமானிய அமைப்பின்படி நிர்வாகத்தை நடத்துவதிலும் மிகவும் பழக்கப்பட்ருந்தனர். ஆணுல் அதே அமயத்தில் இங்கிலாந்தின் விழுமியோரும், கனவான்களும் அமைதியான வாழ்க்கையிலும் வவி மைவாய்ந்த மத்திய அரசாங்கத்திலும் விருப்பமுடையவராவிருந்தனர். எனினும் கெவித்திக்குக் குலத்தினரோ மாச்சுப் பிரபுக்களாலே திணிக்கப் பட்ட நாகரிகத்தை முன்னேற்ற மென்றே கொண்டனர். மத்திய காலம் முழுவதும் வேல்சுநாட்டுக் குடிகள் தங்களுடைய ஆங்கிலப் பிரபுக்களேயும் அயலவர்களேயும் பின் பற்றியவர்களாய், மெதுவாக விவசாயத்தைக் கைக்கொண்டு, நிவேயான வீடுகளேயும் கட்டி, ஆங்கில மொழி பேசும் மக்களால் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்த வியாபார நகரங்களில் வர்த்தகம் செய்து வந்ததுடன் இரத்தக்களரியான குலப்போர் விளேப் பதினின்றும் ஒதுங்கி நின்று ஆங்கிலச் சட்டத்தைப் படிப்படியாக ஏற்றுக்

Page 168
36 வேல்சுப் போர்முறைகள்
கொள்ளவும் கற்றுவந்தனர். தங்களுடைய சொந்தமொழியைப் பேணிப் பாதுகாத்ததுமன்றி, தீர்ப்புநாளிலே அம்மொழியிலேயே பதிலிறுக்க வேண்டுமென்ற பெருமிதங்கொண்டவர்களாயுமிருந்தனர். இக்காலத்து உலகப் பொதுவான கொச்சை வழமை" எனும் சேற்றில் அழிந்து விடுவதி லிருந்து வேல்சு நாட்டவரின் அறிவையும் இலட்சியத்தையும் இந்நாள் வரை பாதுகாத்துவந்த தங்களுடைய நாடோடிப்பாடல்களையும் இசைப்பண் களையும் தொடர்ந்து விருத்தி செய்தும் வந்தனர்.
எட்டுவேட்டு மன்னரின் வெற்றிக்கு முன்னும் பின்னும் பல நூற் ருண்டுகளாக நடைபெற்ற போர் நாகரிக முள்ள படையினருக்கும் மலை வாழ்நருக்குமிடையே நடைபெற்ற போரை ஒத்திருந்தது. கிரால்தசு என்ற வேல்சு நாட்டவரின் கூற்றுபடி, அவருடைய தேசத்தவரான அரை குறை உடையணிந்த காலாட்படையினர், பயங்கரச் சத்தமிட்டுக் கொண்டும் நீண்ட கொம்புகளை ஊதிக் கொண்டும் ஆய்ந்தோய்ந்து பாரா வீர தீரத் துடன் இரும்புக் கவசமணிந்த குதிரை வீரர்களின் முன் வேகமாய் பாய்ந்து செல்வர். அவர்கள் வெற்றியடையவில்லையென்ருல் தைரியங்குன்றிக் குழப்பமடைந்து அவமானத்துக்குரிய விதமாய் ஒடிப்போவர். ஆனல் வெகு விரைவிலே சமாளித்துக் கொண்டு, நீடித்த, கடுமையான கெரிலாப் போர் முறையைக் கையாண்டு, காடுகள் மலிந்த தம் மலைகளின் உதவியாலும் தங்களுக்கே உரித்தான திண்ணிய காட்டுமிராண்டித் தனத்தாலும் தம்பகைவரால் எளிதிலே தாக்கப்படமுடியாத வர்களாய், விவசாயத்திலும் வாழ்க்கைக்கலைகளிலும் அக்கறை காட்டாதவர்களாய் வாழ்ந்து வந்தனர். நோமானியரின் படையெடுப்பின் போது ஆங்கிலேயர் இவ்வாறு எதிர்த்து நின்றதேயில்லை. வேல்சு நாட்டின் மீது படையெடுத்தவர்கள் சமநிலத்தில் நின்று தாக்கும் போது உண்மையிலேயே அவர்களை வெல்வது முடியாத தொன்ருயிருந்தது. ஆனல், அந்நாட்டில் மிகச் சிறு பகுதியே சமநில மாகக் காணப்பட்டது; அதுவும் பெரும்பாலும் சதுப்பு நிலமாக இருந்தது. அடர்ந்த காடுகள் நிறைந்த செங்குத்தான அந்நாட்டுக் குன்றுகளிற் குதிரைகளும் கவசமணிந்த போர்வீரர்களும் செல்லல் கடினமாயிருந்தது. எனவே, ஆங்கிலேய-நோமானிய வீரர் தாம் வெறுத்தொதுக்கிய விரோதி களிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் வேண்டியதாயிற்று.
1. குறிப்பு:-கி. பி. 1200-ஆம் ஆண்டில் கிரால்தசு என்ற வேல்சு நாட்டவர் தன் நாட் டவரைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் இன்றும் உண்மையானவையாகவே காணப்படுகின் றன. பிற நாட்டவரைப் போல தங்களுடைய இசையரங்கில் அவர்கள் ஒன்று சேர்ந்து பாடு வதில்லை. அவர்கள் பல பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியைப் பாடுவர். ஆதலால், பல பாடகர்சேர்ந்து நிகழ்த்தும் இசையரங்கிலே எத்தனை பாடகர் உண்டோ அத்தனை வகை வெவ்வேறன பகுதிகளும், ஓசைகளும் காணப்படுவதை வேல்சு நாட்டில் நாம் சாதாரண மாகக் காணக்கூடியதாயிருந்தது. や

வேல்சுப் போர்முறைகள் 317
அனைத்திற்கும் மேலாக, நீண்ட வில்லின் உபயோகத்தை வேல்சு நாட்ட
வரிடமிருந்து ஆங்கிலேயர் தெரிந்து கொண்டனர். வேல்சு நாட்டின் தென்கிழக்கு மூலையில், பிறித்தல் கால்வாய்க்கும் உவை நதியின் மேற்பகுதிக்குமிடையே இவ்விற் போர்க்கருவி அப்பகுதியின் புகழ் பெற்ற ஆயுதமாக விளங்கியது. II ஆம் என்றியின் ஆட்சிக் காலத்திலேயே கவச மணிந்த வீரனின் தொடையைச் சேணத்தினூடாகக் குதிரையின் விலாவோடு சேர்த்துக்குத்துவதற்கும் இவ்வகைவில்லை வேல்சு வீரர் உபயோகித்தனர் எனவுந் தெரிகிறது. எண்பது ஆண்டுகள் கழிந்தபின் இலீசு என்ற இடத் தில், திமொன் போட்டு என்பவருடன் வேல்சு நாட்டு வில் வீரர்களுமிருந் தனர். எனினும் அவ்வமையம் அவர்கள் இங்கிலாந்தின் குறுவில் வீரர் களைக்காட்டிலும் முதன்மைவாய்ந்தவர்களாக கருதப்பட்டிலர். ஆனல் முத லாம் எட்டுவேட்டு வேல்சு நாட்டின்மீது செய்த படையெடுப்புக்களின் போது பெற்ற அனுபவமே அவன் இசுக்கொத்துலாந்து தேசத்துடன் புரிந்த போர்களிலே தன் காலாட்படையினர் நீண்டவில்லை ஒரு முக்கிய மான ஆயுதமாக உபயோகப்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கும் படி செய்தது. ITI ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில், போராயுத மன்றத்திலே, சுயாதீனமான ஆங்கிலப் பிரசைகளில் ஒரு சில பிரிவினர் முதன் முதலாக ஒரு வகையான விற்களைவைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். நீண்டவில்லின் உண்மையான உபயோகத் தை முதலாவது எட்டுவேட்டு அரசனுக்கும் அவன் குடிகளுக்கும் கற்றுக் கொடுத்தவர்கள் வேல்சு நாட்டவரேயாவர். 14 ஆம் நூற்றண்டு வரை, அதாவது கிறெசி, பொயிற்றியெசு ஆகிய போர்க் களங்களில் ஐரோப்பிய நிலமானியப் பிரபுக்களின் வீரத்தை அடக்க வில் வீரர்கள் கடல் கடந்து சென்ற அமயம்வரை, வில்லாயுதம் ஆங்கில நாட்டுக்குரிய ஆயுதமாகக் கருதப்படவில்லை.
A.
13 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் வேல்சு நாடெங்கணும் ஒரு புத்துணர்ச்சியேற்பட்டது. அவ்வுணர்ச்சி நாடோடிக் கவிஞர்களின் பாடல் களிலே வெளிப்பட்டதுமன்றி, இலெவலின் இளவரசர்களின் தலைமையில் வேல்சு நாட்டுக் குலங்களை யெல்லாம் இணைக்கும் ஓர் இயக்கமாகவும் அமைந் தது. இலெவலின் இளவரசர்கள் சினுேடன் எனும் நெருங்கிய அரண்களா லும் தானியங்கள் மிகுதியாக விளைகின்ற அங்கிள்சி எனும் தீவினலும் பாதுகாக்கப்பட்ட, உயர்ந்த எல்லைகளுக்குப் பின்னலிருந்த குவினெட்டுப் பகுதியை ஆண்டு வந்தனர். வேல்சு நாட்டின் வடபகுதியிலிருந்தவர்கள் அந்நாடு முழுவதும் ஒன்றுபட்டுச் சுதந்திரமாக வாழவேண்டுமென்று நாட்டுமக்களனைவரையும் கேட்டுக்கொண்டனர். மகா இலெவலின் என்பார்
எல்லைப்புறப் பிரபுக்களிடமிருந்து போயிசு பிரதேசத்தின் பெரும் பகுதியை
மறுபடியும் கைப்பற்றினர். அவர் சிறந்த வீரரும் சாதுரியமிக்க சூழ் வல்லோருமாவர். கவிஞராற் போற்றப்படும் அந்நாட்டின் இளவரசர் தாமே என்று கூறித் தம் நாட்டு மக்கள் யாவரும் தமது தலைமையில் ஒன்று
194
240,

Page 169
1246
1283.
1277。
1282
】284。
318 இலெவலினும் முதலாம் எட்டுவேட்டும்
படவேண்டுமென்று அவர் கூறிய அமயத்திலேயும், தாம் அரசன்மீது பற்றுடைய ஒரு மானியப்பிரபு என்பதையும் அவர் ஒருபோதும் மறந்த தில்லை. இதன் காரணமாக ஆங்கில அரசவமிசத்தினரிடையே ஏற்படும் பிணக்குக்களைப் பயன்படுததித் தமது சொந்த நாடாகிய வேல்சிற்கு நன்மையைச் செய்ய அவருக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. அவர் தமது ஆய்வறிவுடைய கொள்கையினுல் இங்கிலாந்திற் பரன்கள் கட்சின்யச் சேர் ந்து, யோன் மன்னனது மகாபட்டயத்திற் காணப்பட்ட மூன்றுநிபந்தனை களை வேல்சு நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அவர் பெற்றுக் கொடுத்தார்.
அவருடைய பேரனுகிய இலெவலின் ஒவு கிரிப்பித்து என்பவரும் தம் பாட்டனைப் போன்று இரு விதக் கொள்கைகளைப் பின்பற்றியதுடன் சைமன் திமொன்போட்டு என்பவருடன் சேர்ந்தும் கொண்டார். மாச்சுப் பிரபுக் களிடையே ஏற்பட்ட பிளவுகளையும் சண்டைகளையும் பயன்படுத்தி அநேகரைத் தமக்குக் கீழடக்கமாக விருக்கும்படி கட்டாயப் படுத்தினர். தமது ஆட்சியின் கீழுருந்த வேல்சு நாட்டின் எல்லையை மேலும் விரிவு படுத்தினர். இறுதியில் இங்கிலாந்தினின்று எல்லாத் தொடர்புகளையும் அகற்றிக் கொண்டு பிரிந்து விடவும் எண்ணினர். முதலாம் எட்டுவேட்டை வேண்டு மென்றே எதிர்க்கவும் துணிந்தார். அவ்வரசனே தனக்கு விடுக்கபட்ட அறைகூவலை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாகவிருந்தான். அதுவே வேல்சு நாட்டுச் சுதந்திரத்தின் முடிவுக்கு ஆரம்பம் எனலாம்.
எட்டுவேட்டு மன்னன் தன்னுடைய எண்ணிக்கையற்ற வேல்சுப் படை யெடுப்புக்களுள் மிகப் பெரிதான படையெடுப்பு ஒன்றின் மூலம், நெருங்கு தற்கரிய சினேடன் என்ற அரண் செய்யப்பட்ட இடத்தைக் கடல் வழியாக வும் தரைவழியாகவும் வளைந்து, இலெவலினையும் அவருடைய மலை நாட்ட வரையும் பட்டினிபோட்டுச் சரணடையும்படி செய்தான். கெலித்திக்குச் சட்டங் களுக்கும் மரபுகளுக்கும் அவன் எவ்வித மதிப்பும் கொடுக்காமற் கடுமை யான அடக்குமுறை ஆட்சியைக் கையாண்டான். அதனல் மக்கள் கிளர்ந்தெ ழுந்து புரட்சி செய்தனர். அப்புரட்சியை யடக்க அவன் தொடுத்த யுத்தத் தின் விளைவாக அவனுக்கு மற்றெரு வெற்றி கிடைத்ததுமன்றி, நல்லதோர் இணக்கத்துக்கும் வழி ஏற்பட்டது. கோன்வே, கனவன், போமொரிசு, ஆலெக்கு முதலிய கோட்டைகள், வேல்சு நாட்டின் மத்திய பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் நிலமானிய அதிகாரம் உறுதியாக நிலைபெற்றிருந் ததுபோன்று அந்நாட்டின் வடக்குப் பகுதியில் மன்னருடையை அதி காரத்தை உறுதியாக நிலை நாட்டுவதற்காகக் கட்டி எழுப்பப்பட்டன. எட்டு வேட்டு மன்னன் இலெவலினுடைய ஆதிக்கத்தின் கீழுருந்த வேல்சு நாட்டின் பகுதியை, ஆங்கில நாட்டு முறைமையைப் பின்பற்றிப் பல கோட்டங்களாகப் பிரித்தான். அவை முறையே களுவன், அங்கில்சி, மெரியோனெத்து, பிளிந்து, காடிகன், கமாத்தன் எனப்படும். கோட்டங் கள் பிரிக்கப்பட்டதையடுத்து, கனவனிற் பிறந்திருந்த குழந்தைப்

ஒவன் கிளண்டோவர் 319
பருவத்தினனன தன் மகனுக்கு “வேல்சு இளவரசன் ” என்ற பட்டத்தை யும் எட்டுவேட்டு சூட்டினன். ஆனல் இந்த “ சிற்றறரசு ’ இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இன்னும் அமையாதிருந்தது. மேலும் வேல்சின் மற்றப் பகுதிகள் எல்லாம் மாச்சுப் பிரபுக்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தன. M
எட்டுவேட்டு மன்னன் மாச்சுப் பிரபுக்களைத் தன்முன் நிறுத்தி, அவர் களுடைய அதிகார உரிமைகள் பற்றிக் கண்டிப்பான முறையில் விசாரணை நடத்தி, நிலமானிய முறைப்படி அவர்கள் அனுபவித்த சுதந்திரத்தை ஒழிக்க விரும்பியிருக்கலாம். ஆனல் அதற்கு வேண்டிய வலிமை அவ னிடம் இருக்கவில்லை. மேலும் அவர்களுடைய ஒத்துழைப்பு அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது. ஏனெனில் இலெவலின் வமிசத்தினரின் மேன் மையைப் புகழ்ந்து எப்பொழுதும் பாட்டிசைத்து வந்த நாட்டுக் கவிஞர் களால் வேல்சு நாட்டு மக்கள் தூண்டிவிடப்பட்டு, வீறு கொண்டெழா வண்ணம் தடுப்பதற்கு அப்பிரபுக்களுடைய ஒத்துழைப்பு அரசனுக்கு அவ சியமாயிற்றென்க. தியூடர் காலச் சீர்திருத்தங்கள் ஏற்படும்வரை வேல்சு நாடானது ஒருபுறம் மாச்சுப் பிரபுக்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நில மானியப் பகுதியாகவும் மறுபுறம் கெலித்திக்கு வழமைகளைப் பாதிக்காத வகையில் ஆங்கிலச் சட்டத்தினல் ஆளப்பட்ட கெலித்திக்கு சிற்றரசாகவும் பிரிந்தேயிருந்தது. இவ்விரு பகுதிகளிலும் ஆங்கிலேயரும் வேல்சு நாட்ட வரும் நாளடைவில் ஒருவரோடொருவர் கலந்துறவாடவும் ஒத்துழைக்கவும் தொடங்கினர். நகரங்களும் வர்த்தகமும் விவசாயமும் வளரவளர நாகரிக மும் தலையெடுத்து முன்னேறிச் செல்லலாயிற்று.
இவ்வாறிருந்த போதிலும், ஆங்கிலேயரோடு ஒப்பிடப்பட்டு பார்க்ககையில் 14 ஆம், 15 ஆம் நூற்றண்டுகளில் வேல்சு நாடானது, குலப்பகை, பரன்களின் வல்லந்தம், அதிகாரிகளின் கொடுங்கோன்மை, அவர்களது கடுமையான வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு இருப்பிடமாகக் காட்சியளித்தது. அமைதியின்மை நிலவிய IV ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில் மகா இலெவலினுடைய கொள்கையைப் புதுப்பிக்கும் முகமாய் ஒவன் கிளண்டோவர் என்பார், ஆங்கிலக் கட்சிகளுக்கிடையே யிருந்த போட்டிகளைப் பயன்படுத்திக் கொண்டும், அதே நேரத்தில் தம் இனத்தவரின் அவாக் களையும், அவர்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அவர்களுக்கு நினைவூட்டி அவ்வினத்தவர்கள் ஆதரவைத் தேடிக் கொண்டும் இருந்தார். இழி தகைமையும் சுய நலமும் மலிந்த அக்கால அரசியலில், பிறரைத் தம் வயப்படுத்தும் தன்மையும் இணையற்ற திறமையும் மிகுந்த இந்த அதிசய மான மனிதர் தம் நாட்டின் பெரும் பகுதியானது சில ஆண்டுகளுக்
குறிப்பு :- இப்பொழுது வேல்சு முழுதும் * சிற்றரசாகவே கருதப்பட்டு, அவ்வாறே அழைக்கப்படுகிறது. ஆனல் எட்டுவேட்டு காலத்தில் சிற்றரசு என்பது இந்த ஆறு ஆட்சிப் பகுதிகளையே கொண்டிருந்தது.
1400
415.

Page 170
320 ஒவன் கிளண்டோவர்
காவது உண்மையான சுதந்திரம் பெறுமாறு செய்தார். இதை நிலை நாட்டுவதற்கு அவர் நடத்திய யுத்தங்கள், வேல்சு நாட்டின் இரு பகுதி
களாகிய எல்லைப்புறங்களிலும் ஏனைய சிற்றரசுகளிலும் மக்களின் பொரு
ளாதார நிலையை முற்றிலும் உருக்குலைத்து விட்டன. ஒரே மாநிலத்தில்
அந்நாட்டின் நிலமானிய முறைப்படி எற்பட்ட ஒரே விவசாயப் பண்ணையில்
வேல்சுக்குரிய மாவட்டங்களும், இங்கிலாந்துக்குரிய மாவட்டங்களும் அக்
காலத்தில் அடுத்தடுத்துக் காணப்பட்டன. அவ்விரு பகுதி இனத்தவர்களும்
மீண்டும் ஒருவரோடொருவர் போரிடுமாறு எவிவிடப்பட்டபடியால், அவர்கள்
இணைந்து தற்கால வேல்சு நாட்டின் மக்களாக உருவாவதற்கு அவசிய
மான சூழ்நிலை மேலும் தாமதப்பட்டது. கிளண்டோவரின் மரணத்துக்குப்
பின்னும், ஆங்கில ஆட்சி மறுபடியும் நிலைநாட்டப்பட்டதிற்குப் பின்னுங்
கூட நாட்டிலே அமைதி முற்றக நிலைநாட்டப்படவில்லை. கெலித்தி
க்கு இனத்தவரதும் நிலமானியப் பிரபுக்களதும் ஆட்சியறவுநிலைமைகளுக்
கிடையே அகப்பட்ட வேல்சு, கொள்ளையடிப்போர்க்கும் கொலைஞர்க்கும் சுவர்க்கம் போன்று விளங்கியது. பிரான்சு நாட்டிலே தீரச் செயல்கள்
புரிவதிலும், இங்கிலாந்தில் அரசவமிசத்தாரிடையே தோன்றிய போராட்
டங்களிற் பங்கு கொள்வதிலும் ஆங்கில அரசர்கள் ஈடுபட்டிருந்த காலம்
வரை, வேல்சு நாடு இந்த நிலையிலேயே இருந்து வந்தது.
அவ்வளவு காலம்வரை மாச்சுநாட்டுப் புறங்களிலும் எனைய சிற்றரசு களிலும் நிலவிய குழப்பங்கள் வேல்சு மக்களின் போர்ப்பழக்க வழக்கங் களை மங்காதபடி பாதுகாத்து வந்தன. ஆதலின் தியூடர் மன்னர்கள் காலத்தில் சமாதான ஆட்சிக்குப் பின்னுங்கூட கவிஞர்கள் அம்மக்களைப் * போர்க் கருவிகளை உடையராயிருப்பதிற் பெருமை கொள்ளும் ஆணவம் படைத்த பழம் நாட்டினத்தவர் ” என்று கருதிப் பாடியுள்ளனர். அம் மக்கள் தங்கள் நாட்டில் மட்டுமன்றி, பிரான்சு, இசுக்கொத்துலாந்து ஆகிய நாடுகளிலிருந்த தம் அரசர் படைகளிற் பணிபுரிந்த காலத்திலும் இராணுவ வாழ்க்கையையே நடத்தி வந்தனர். II ஆம் என்றி தொடக் கம் முதலாம் சாள்சு வரை இங்கிலாந்தில் நடைபெற்ற ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திலும், வேல்சு நாட்டு வறிய மக்களிடையே காலாட் படைக்குப் போர் வீரர்களைச் சேர்ப்பது, அமைதியுடன் ஓரிடத்தில் நிலையாக வாழும் ஆங்கில மக்களிடையே வீரர்களைச் சேர்ப்பதைவிட எளிதாயிருந்தது. உரோசாப்பூப் போர்கள் பெரும்பாலும் மாச்சுப் பிரபுக்களிடையே நடை பெற்ற சண்டையாகும். மாச்சுப் பிரபுக்கள் இங்கிலாந்து அரசுரிமைக்கு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். அன்றியும் அவர்கள் இங்கிலாந்திலும் வேல்சு நாட்டின் எல்லைப்புறங்களிலும் ஏராளமான ஆதனங்களை வைத்திருந்ததுமன்றி, அரசியலின் நயநட்டங்களிற் சிரத்தை யுடையவர்களாயும் இருந்தனர். எரிபோட்டு, இலங்காசுற்றர் ஆகிய அரச வமிசங்களைச் செர்ந்த அரி போலிங்புருேக்கு என்பார் தம் எதிரிகளான மோட்டிமர்களைப் போன்று வேல்சு நாட்டில் எராளமான நிலச் சொத்துக்

வேல்சும் இங்கிலாந்தும் 32.
களையுடையவர்களாயிருந்தார். யோக்கு வமிசத்தவரும் அரசராக்குவோன கிய வாவிக்கு பிரபுவும், III ஆம் இரிச்சாட்டின் பக்கிங்காம் கோமகனும் எதாவது ஒரு விதத்தில் வேல்சு நாட்டோடும் அதன் எல்லைப்புறங்களோடும் தொடர்பு கொண்டேயிருந்தனர். இத்தகையவர்கள் ஆங்கில அரசியலமைப் புச் சம்பந்தமான போராட்டங்களிலும் வமிசப்பிணக்குகளிலும் மாறுபட்டு நின்று மோதும் மனப்பான்மையை உண்டாக்கினர்கள். மத்திய காலத்தில் வேல்சு நாட்டைக் கைப்பற்றி அதனை நாகரிகப் படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளில் இங்கிலாந்து அரைகுறை வெற்றியையே கண்டது. வேல்சு நாட்டின் குல உணர்ச்சியும் நிலமானிய அமைப்பும், பாராளுமன்ற ஆட்சி முறையைச் சீர் கெடுத்ததுமன்றி, கடமையைப் புறக்கணித்து வரும் மேலாட்சியாளரின் ஒருமுனைப் படுத்திய ஆட்சி முறைக்கு இடையூருகவும் இருந்து வந்தன. ஆனல் இறுதியில் வேல்சு நாட்டுப் படையொன்று போசுவெத்து பீல்டு என்ற போர்க்களத்தில் தான் அடைந்த வெற்றியின் மூலம் வேல்சு நாட்டுத் தியூடர் இளவரசனெருவனை இங்கிலாந்தின் அரச பீடத்தில் அமர்த்தியது. இவ்வாருக ஆங்கில அரசியலில் தானே உண் டாக்கிய குழப்பங்பளைக் குணப்படுத்துதற்குரிய வழிவகைகளை வேல்சு நாடே இங்கிலாந்துக்கு வழங்கியது எனலாம்.
சட்சனியர், கெலித்திக்கு இனத்தவருடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பை வேறெரு வகையாகக் கொத்துலாந்து நாட்டின் வரலாறு எடுத் துக் காட்டுகிறது. வேல்சும் அயலாந்தும் கொத்துலாந்து நாட்டைவிட நீண்ட காலத்திற்கு ஆங்கில ஆட்சிக்கு முற்றக உட்படுத்தப்பட்டிருந்தன. இருந்த போதிலும் அவையிரண்டும் இன்றளவும் தங்களுடைய இயல்புகளில் கெலித்திக்கு இனச் சிறப்பியல்புகளையே மிகுதியும் கொண்டுள்ளன. இம் முரண்பாடான பிரச்சினையை நாம் விளங்கிக் கொள்வதற்கு, கொத்துலாந்து தேசத்திற் கெலித்தியர் வாழ்ந்து வந்த செல்வம் நிறைந்த மிக முதன்மை வாய்ந்த மாவட்டங்கள் ஆங்கிலேய-நோமானியரது மொழியை யும் அவர்களின் தாபனங்களையும் முதலாம் எட்டுவேட்டின் காலத்தில் ஆரம்பித்த நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு முன்பே எற்றுக் கொண் டனவென்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும். ஆகவே மத்திய காலத்து அயலாந்து, வேல்சு ஆகிய நாடுகளிற் போன்று கெலித் திக்கு மொழி சம்பந்தமாகவும் குலப் பரம்பரைப் பழக்கங்கள் சம்பந்தமாக வும் இங்கிலாந்துடன் எதிர்ப்புக் கொள்ளவில்லை. உவலசு, புரூசு என்பவர் களுக்கு எதிராக எட்டுவேட்டுகள் நடத்திய யுத்தங்கள், நிலமானிய முடி யாட்சியின் அடிப்படையில் அமைந்த இரு நெருங்கிய நாட்டினங்களுக்கு இடையே எழுந்ததொரு போராட்டமாகும். கல்லோடன் யுத்தத்தின்பின் மேட்டு நிலக் குலத்தவர்மீது ஆங்கிலேயர் கொண்ட வெற்றியானது மத்திய காலத்து அயலாந்து அல்லது வேல்சு நாட்டு வரல்ாற்றுடன் ஒப்புமையுடையதாயிருக்கிறது.

Page 171
üri mrd.
o 3 or "*" i "ŵy" yn a 鸟 L-L-L-H
சி
グ */R、
oa:
XIW படம், மத்தியகாலக் கொத்துலாந்தும் வட இங்கிலாந்தும்
 
 

உலோதியன் சட்சனியர் 8፰8
இருண்ட ஊழிகளில், கொத்துலாந்து தேசம், கிழக்குக் கடற்கரை யோரமான சமவெளிப் பக்கமாக உள்ள சட்சணிய எல்லேயையொட்டிய ஒரு கெவித்திக்கு அரசாக உருவாகவேண்டிய நிலேமையை உண்மையாகவே அடையும் போலத் தோன்றியது. கொத்துலாந்து வாசியாகிய கெனத்து WI ஆம் மெக்கால்பைன் என்பவரின் கீழ் பிற்காக&ளயும், கொத்துலாந்தரையும் நாட்டுப் இணைத்தமை, கெவித்திக்கு தவேநகராகிய சுகோனிலிருந்து அந்த நாட்டிலே "ஃப் ஒர் அரசவமிசத்தையும் அதற்குரிய ஒரு அரச மரபினேயும் அவர்கள் Ti. வைத்துக்கொள்வதற்கு உதவியாயிருந்தது. துவிட்டு, செவியத்து ஆகிய இடங்களுக்கு வடக்கே அமைந்திருந்த விட்சணிய நோதம்பிரியாவின் ஒரு பகுதியான உலோதியன் பிரதேசம் அதனுடைய தெற்கத்திய தொடர்பு களிலிருந்து துண்டிக்கப்பட்டு கொத்துலாந்து தேசத்தின் மிக முதன்மை வாய்ந்த பகுதியாக மாற்றியமைக்கப்பட்ட பொழுது சரித்திரத்தின் போக்கே மாறிற்று நோதம்பிரிய அரசு வைக்கிங்குகளின் படையெடுப்புக்களின் பயணுகி அழிந்ததனுஸ் ஏற்பட்ட இயற்கை விளேவு இம்மாறுதலாகும். கொத்துலாந்து தேசத்தின் நடுப்பகுதியில் கொத்தியர்களுக்கும் சட்ானிய ருக்குமிடையே அனேக தஃ முறைகளாக நடைபெற்ற போர்களுக்குப் பிறகு, களியூட்டு மன்னன் காலத்தில் உலோதியன் பகுதி கொத்துலாந்து மன்னனின் உளடEIII ஒப்புக்கொள்ளப்பட்டது.
HL
III E3
விவசாயத்துக்கேற்ற மண் வளம் மிகுத்ததும், எடின்பருே கோட்டை வியைத் தன்னி த்தே கொண்டுள்ளதும், புதிதாகக் கைப்பந்தப்பட்டதுமான, ஆங்கில மொழி பேசப்பட்டு வந்த உலோதியன் பிரதேசத்திலேயே, ஆதியில் வடமேற்குப் பகுதியில் தோன்றியதாய், கெவித்திக்குக் குலத்தைச் சார்திருந்த கொத்துலாந்திய அரசபதமானது தென்கிழக்குப் பகுதிக் குரியதாகவும் நிர்மானித் திட்டத்திற்கமைந்ததாகவும், ஆங்கிலேய-நோமா னிய இனத்தவரினதாகவும் மாறியது. பெரும்பான்மையான பக்தன் கெனித்திக்கு இனத்தவராக இருந்தபோதிலும், சுராத்துகிளேட்டு, சுலேவே பகுதிகள் முடியாட்சியால் தூண்டப்பட்டு அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டு ஆங்கில மொழியையும் நிவிமானிய அளப்புக்னேயும் ஈற்றிற் கைக்கொண் LT இம்மலர்ச்சியின் நீடித்த, சிக்கல்கள் நிறைந்த, தெளிவற்ற போக்கில் மிக முக்கியமான சில கட்டங்களே மட்டுமே நாம் கானக்கூடியதா யிருக்கிறது.
முதாலவதாக ஆங்கிலேய-நோமானிய செல்வாக்கு ஏற்படுவதற்கு முன்ன தாகவே 11-ஆம் நூற்றுண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயரின் செல்வாக்கு முற்றிலும் அப்பகுதிகளில் நிலவியிருந்தது. 11-ஆம் மல்கெம் எனும் அரசன், மக்குபத்தை சிம்மாசனத்திவிருந்து வீழ்த்துவதற்கு முன்னர்
| ՍիT-11H։ என ஆட்சி செலுத்தி
நாடு கடத்தப்பட்டவனுய் இளமைப் பருவத்தை, " ஒத்துக் கொள்வோன்" ஒன், என்றழைக்கப்பட்ட எட்டுவேட்டு மன்னன் காலத்து இங்கிலாந்திற் கழித் திருந்தான். அவனுடைய கல்விப் பயிற்சியினுல் ஏற்பட்ட ஆங்கிலச் சார்பு

Page 172
1124
153.
138.
324 உலோதியன் சட்சணியர்
கள், எட்கார் அதெலிங்கு என்பவனின் உடன்பிறந்தாளும் புனிதத் தன்மையும் மனேதிடமும் கொண்டவளுமாகிய மாகரெட்டு என்பவளை இரண்டாந்தரமாக அவன் திருமணம் செய்து கொண்டதின் மூலம், இன்னும் அதிகரித்தன. கொத்துலாந்தின் அரசி என்ற முறையில், கெலித்திக்கு மரபுகளுக்கு மாறக, ஆங்கில மொழியையும் உரோமானிய திருச்சபைக்குரிய முறைமையும் நிலை நிறுத்துவதற்கு அவள் அரும் பாடு பட்டாள். அவளுடைய இடைவிடா முயற்சிகள் கொத்துலாந்து தேசத் திலுள்ள கெலித்திக்கு இனத்தவரிடமும் சமய குருக்களிடமும் செல்வாக் குப் பெறவில்லையானலும், எத்திஞ்சுப் போருக்குப் பின் இங்கிலாந்தில் அவளுடைய இனத்தவரும் வழிமரபினரும் அடைந்த பேரிழிவால் உரம் பெறலாயின. நோமானியரின் வெற்றியினல் தெற்கே ஏற்பட்ட முதல் விளைவுயாதெனில் எல்லைப்புறத்திலிருந்தவர்களும் நாடு கடத்தப் பட்டவர் களுமான எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த சட்சனிய, கந்திநேவிய போர்வீரர்களை மாகரெட்டிடமிருந்தும், யோக்குசயர், இடேகாம் ஆகிய பகுதி களுக்கு அப்பால் வில்லியத்தின் கடுங் கோபத்திலிருந்தும், வட திசையில் அவன் ஆற்றிய அழிவுக் கருமங்களிருந்தும் தப்பியோடிப் போகும்படி செய்ததேயாகும். கொத்துலாந்தில் ஊறியிருந்த நோவே நாட்டினரின் பண்பாடு, உலோதியன் பகுதியிலிருந்து சட்சனியரைச் சார்ந்திருந்த
தோடு, தப்பியோடிவந்த இவ்வகதிகளின் வருகையால் வலிமையும் பெற லாயிற்று.
கொத்துலாந்தில் ஆங்கிலச் செல்வாக்குப் பரவியதனல் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேய-நோமானியர் அங்கு நுழைவது எளிதாயிற்று. மல்கம், மாகரெட்டு ஆகியவர்களின் மகனன முதலாம் தாவீது என் பான் சுதீபன் காலத்தில் இங்கிலாந்துக்கு ஏற்பட்டிருந்த சக்தியற்ற தன் மையைப் பயன்படுத்திக்கொண்டு, நோமானிய நிலமானிய முறைப்படி யமைந்த ஒரு முடியாட்சியை கொத்துலாந்திலே நிறுவியதுமன்றி, கம்ப லாந்து நோதம்பலாந்து, இடேகாம் ஆகிய பிரதேசங்களில் தகராற்றுக் குட்பட்டிருந்த பகுதிகளையும் கூடியளவு தனதாக்கிக் கொண்டான். துவீட்டு, செவியத்து ஆகிய பிரதேசங்களுக்கு அப்பால் அவன் பெற்ற வெற்றிகள் நிலைபெறவில்லை. பிளந்தாசெனற்று அரசர்களின் கீழ் இங்கிலாந்து மறுபடியும் வலின்மயடைந்தபோது இவ்விரு அரசுகளுக்கும் இடையே யுள்ள எல்லையானது இப்பொழுதுள்ள எல்லையளவை அடைந்தது. ஆனல் சுதீபன் மன்னனின் கீழ் ஆட்சியறவு எற்பட்டிருந்த காலத்தில், தாவீது, என்பான் வட இங்கிலாந்தில் செய்த படையெடுப்புக்கள், ஒழுங்கற்றவர் களும் முரடர்களுமான கொத்துலாந்துப் பழங் குடிகளானேர், இரும்புக் கவசம் அணிந்த இங்கிலாந்தின் அல்லது கொத்துலாந்தின் நிலமானியப் படைவீரர்களைத் தங்களுடைய இருபுறமும் கூர்மையான அகன்ற வாள் களால் தாக்கும் துணிவு எவ்வளவு பயனற்றது என்பதைத் தெளி வாக்கின. நோதலட்டன் அருகே பதாகைப் போர்க் களத்தில் இத்

முதலாம் தாவீது மானியமுறையைப் புகுத்தல் 325
தகைய தாக்குதல்களின் பயனற்ற தன்மை தெளிவாக்கப்பட்டது. கெலித் திக்கு சமுதாய அமைப்புக்களையும் பண்படாக் குல முறைமைகளையும் கட்டாயம் ஒழித்துவிடுவதை நோக்கமாகக் கொண்டு கொத்துலாந்து அரசர் கள், தம் பூட்கைகளை மாற்றியமைத்தது ஆச்சரியமன்று.
நோமானிய அல்லது ஆங்கில இனத்தைச் சேர்ந்த புரூசுகள், பெலி யல்கள் போன்ற வீரர்களைத் தாவீது அரசன் எல்லைப்பகுதிக்கு அழைத்து, கொத்துலாந்து தேசத்தில் நிலமானிய சேவை முறைப்படியான பெரும் நிலப்பண்ணைகளை அவர்களுக்கு வழங்கினன். எத்திஞ்சு யுத்தத்திற்குப் பின்னர் இங்கிலாந்தில் எற்பட்டது போல, இங்கு நிலவுரிமைக்காரர் பெரும் அளவில் புலம் பெயர்ந்து செல்லவில்லை. எனெனில், கொத்து லாந்து விடயமாகப் பார்க்கின் நோமானியர் அந்நாட்டைப் பிடித்தார்கள் என்று சொல்வதைவிட நாட்டினுள் நுழைந்தார்கள் என்று கூறுவதே பொருத்தமாகும். முழுமையாகப் பறிமுதல் எதுவும் செய்யாமல், தனக்குச் சொந்தமான ஏராளமான பெரும் நிலப் பண்ணைகளையும் தரிசு நிலங் களையும் புதிதாக வந்தவர்களுக்குத் தாவீது அரசன் வழங்கினன். ஆனல் அங்கே தங்கிய கெலித்திக்கு இனத்தைச் சேர்ந்தவர்களும், புதிதாகக் கைப்பற்றிய தரிசு நிலங்களிற் குடியேறியவர்களும் தாங்கள் தங்களுடைய ஆங்கிலேய-நோமானிய எசமானர்களுடன் அவர்களுடைய நிலமானிய உறவு முறையால் இறுகப் பிணைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார்கள். இவ்வாங்கி லேய-நோமானிய எசமானர்கள் புதிதாகத் தங்களுக்கு ஏற்பட்ட உரிமை களைப் பிறர் மதிக்கும் படியாகச் செய்யக் கூடிய வழிவகைகளை நன்கு அறிந்திருந்தனர். அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்ததைப் போலவே, எல்லா இடங்களிலும் கல்லாலும் மரத்தாலுமாகிய கோபுரங்களையுடைய வட்ட வடிவமான கோட்டைகளைக் கட்டி எழுப்பி அங்கு வாழும் ஆயுதந் தாங்கிய குதிரை வீரர்கள் நாட்டுப்புறம் முழுவதையும் ஆட்சி புரிந்தும் தீர்ப்புக்கூறியும் வரலாயினர்.
ஆங்கில முறைப்படி, ஆங்கிலேய-நோமானியரின் மேற்பார்வையின் கீழ் நாடானது பல கோயிற் பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கோட்டை களின் - அருகே பற்றுக்குரிய கோயில்கள் எழுப்பப்பட்டிருந்தன. அக் கோயிற்பற்றுக்கள் பெரும்பாலும் புதிய பிரபுக்களின் மானியப் பிரதேச எல்லையுடன் ஒட்டியே அமைக்கப்பட்டிருந்தன. மதம், அரசாங்கம் என்பவை அவ்வப்பிரதேசத்திற்கே உரியவையாயிருந்தன. அங்கிருந்த சென் கொலம் பாவின் ஆலயம், அவ் வாலயத்தாற் பயனடைந்த மலைவாசிகளைப் போல நினை வெச்சமாகவும் நினைவுச் சின்னமாகவும் இப்போது விளங்கியது.தாவீது மன்னனும் அவனுடைய விழுமியோரும் நிலமானிய முறைப்படி மானியங் களையும் அறக் கொடைகளையும் மத தாபனங்களுக்குக் கொடுப்பதிற் போட்டி யிட்டனர். 12 ஆம் 13ஆம் நூற்றண்டுகள் கொத்துலாந்து நாட்டு வரலாற் றில் மத சம்பந்தமான கட்டிடக்கலை வளர்ச்சியடைந்த காலமாகும். கொத்து

Page 173
326 கொத்துலாந்து உருவாதல்
லாந்து நாட்டு மதச் சீர்திருத்தக் காரரால், அல்லது எல்லைப்புற ஆங்கில நாட்டுக் கொள்ளைக் காரரால் பிற்காலத்தில் அழிக்கப்படவிருந்த வீருர்ந்த சமயத்தலைமைக் கோயில்கள் பலவும், மடாலயங்களும் தோன்றலாயின.
தொடக்கத்திலிருந்தே தாவீது மன்னன் காலத்தில் அன்னிய மத குரு
11241286.
மாரின் நன்மைக்கெனத் தங்களிடமிருந்து அறவிடப்பட்டதசமபாகவரியையும் இன்னும்பிறவரிப் பளுவையும் மக்கள் வெறுத்தே வந்தனர். தங்களுடைய குடும்பங்களின் நன்மைக்காக திருச்சபைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறக்கொடைகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற பரன்களின் நோக்கம் மிகச் சிறிது காலத்திற்றனே வெளியாயிற்று. இவ்விருப்பத்தை, வீரர் களான விழுமியோர் மதத் தலைவர்களாக மாற்றுருவம் தாங்கி நடிப்பது போன்ற பல நூதன முறைகளால் நிறை வேற்ற முற்பட்டனர். இதே நிலைதான் சீர்திருத்த இயக்கம் நேரடியான வழி முறைகளைப் புகுத்தும் வரை நீடித்திருந்தது.
தாவீதும் அவனுக்குப்பின் அரியணை ஏறிய சிங்கம் என்று அழைக்கப் பட்ட உவில்லியம் என்பவனும் ஆங்கில அரசின் பல சிறப்பியல்புகளைக் கொத்துலாந்து தேசத்திற் புகுத்தி அதில் மகத்தான வெற்றியுங் கண்ட னர். கோட்டப் பரிபாலன முறையும் அரச நீதி பரிபாலன முறையும், பரன்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளாற் பெரும்பாலும் வரையறுக்கப் பட்டிருந்த போதிலும், சிறுகச் சிறுக நடைமுறையிற் புகுத்தப்படலாயின. கொத்துலாந்து “நகரங்கள், ’ செல்வமும் சனத் தொகையும் மிகுந்த ஆங்கில பரோக்களைக்காட்டிலும் அதிக சுதந்திரத்துடன் தங்களுடைய நீதிபதிகளைத் தாங்களே தேர்ந்தெடுப்பதற்கான உரிமையளிக்கும் அர்ச பட்டயங்களைப் பெறலாயின.
இங்கிலாந்துடன் நீண்டகாலமாக இணங்கி ஒழுகினமையாற் புதிய கொத் துலாந்து தேசம் உருவாகி உறுதி பெற வல்லதாயிற்று. சுதந்திரப் போர் களுக்கு முந்திய ஒன்றரை நூற்றண்டுகளில், கொத்துலாந்து தேசத்தின் பிரபுக்கள் தாங்கள் இதற்குப்பின் ஒரு பொழுதும் செய்யாதவிதமாக அரசனுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யலாயினர். அவர்களும் அவர்களுக் குக் கீழ்ப்பட்ட ஊழியர்களும், ஆங்கில மொழியையும், பெயர்களையும், பல்வேறுபட்ட ஆங்கிலத் தாபனங்களையும் கொத்துலாந்து மக்களிடை எவ் வளவு வெற்றிகரமாகப் பரப்பினரெனில் வலசு, புரூசு என்பவர்களின் கீழ் அந்நாட்டு மக்கள் இவ்வமைப்புக்களைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையுந் தியாகம் செய்யத் தயாராயிருந்தனர் என்க. நாம் எதிர்பார்ப்பதினுங் குறைந்த அளவு ஆயுதந்தாங்கிய எதிர்ப்பையே வெளிக்காட்டிக் கெலித் திக்கு மரபுக் குழுவினர் மேற்கத்திய தாழ்ந்த பிரதேசங்களிலிருந்து மறைந் தொழிந்தனர். ஆயினும் கலோவே என்ற உக்கிரமான பிராந்தியத்தில் மட்டும் கெலித்திக்கு இனத்துக்குரிய பண்புகள் எளிதில் அழிவுருது நீண்ட நாள் நிலை பெற்றிருந்தன. நிலமானிய அமைப்புப்படி தனக்குக் கீழ்ப்பட்ட பிரபுக்களாக இருக்கமறுத்த கெலித்திக்குக் குலத்தலைவர்களை நிலமானிய

கொத்துலாந்து உருவாதல் 327
முறைமைப்படியமைந்த தன்னுடைய் கவசமணிந்த குதிரைப் படையினரின் வலிமைமிக்க துணைகொண்டு அரசன் புறக்கணித்தான். வடக்கிலிருந்த மேட்டு நிலங்களிலுள்ள மலைப் பகுதிகளுக்குரியதாகவே பழைய அமைப் பானது நாளடைவிற் சுருங்கியது. 1746 ஆம் ஆண்டுவரை கொத்துலாந்தின் நாகரிகமற்ற குலங்கள் சிதைந்துபோகாது அப்பகுதிகளில் நிலைத்திருந்தன. மேட்டு நிலப்பிரதேசத்தின் எல்லைக்குக் கிழக்கேயும் தெற்கேயும் இருந்த வர்கள் புதிதாக உருவாகிய கொத்துலாந்தின் மொழியையும், அங்குள்ள பெயர்களையும், பழக்க வழக்கங்களையும் சிறிது சிறிதாக ஏற்றுக் கொண்
60Tii. WA
இத்தகைய பெரும் மாறுதல்கள் கொத்துலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அரசனும் நிலமானியப் பரன்களும் ஒருவருக்கொரு வர் உதவி செய்து கொள்வது அவசியமானதாயிருந்ததுமன்றி, இளம் பருவத்திலேயிருந்த நாட்டின் மேலான நலன்களைக் கவனிப்பதற்கு அவ்விரு பகுதியினரும் தேவைப்பட்டவராகவுமிருந்தனர். முதலாம் எட்டு வேட்டுக்கு விரோதமாக நடந்தேறிய சுதந்திரயுத்தம் புதிதாகத் தோன்றிய இந்நாட்டைப் பலவித சோதனைகளுக்கு உட்படுத்திய பொழுது, நாட்டுப்பற்று என்னும் புதிய கோட்பாட்டுக்குச் சாதாரணமக்களைவிடப் பரன்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஆதரவு அளித்தனர். ஏனெனில் உலகநாடுகளுக் குரியதாக நிலமானிய முறைமை இருந்ததோடு, அப்பரன்கள் இங்கிலாந் தின் பெரும் நிலப் பண்ணைகளை நிர்வகித்து வந்தமையால் இங்கிலாந்து அரசனுக்கும் தம் தாய் நாட்டுக்குமாக இருமையான பற்றுதலுடையவராக இருக்க வேண்டியவர்களானர்கள். மேலும் கொத்துலாந்தில் முடியாட்சி யானது மக்களின் உள்ளங்களிலும் பழக்கவழக்கங்களிலும் நிலைத்து நின்ற பிறகுதான் பரன்கள் மன்னராட்சிக்கு எப்பொழுதும் அபாயம் விளைவிக்கக்
கூடிய விரோதிகளாக மாறினர். A.
செங்குத்தான கடற்பாறையொன்றின் மீது தன் குதிரையால் இழுத்துச் செல்லப்பட்டதின் விளைவாக 11 ஆம் அலெச்சாந்தர் இறக்க, அவன் மறைவுடன் மத்திய காலக்கொத்துலாந்து நாட்டின் பொற்காலம் முடி வடைந்தது. “ நோவே நங்கை’ எனப்படும் அவனுடைய பேத்தி மாக ரெட்டு என்பவளே அவனுக்குப்பின் அரசுரிமையுடையவளாயிருந்தாள். அவள் தன்னுடைய சொற்பகால ஆட்சி முழுவதும் கந்திநேவியாவிலேயே தங்கியிருந்தாள். பிரிகாம் உடன்படிக்கையின்படி வேல்சு நாட்டின் முதல் ஆங்கிலேய இளவரனுகவிருந்து, பிற்ற்காலத்தில் இங்கிலாந்தின் மன்னனகச் சிம்மாசனம் எறிய 11 ஆம் எட்டுவேட்டை அவள் மணம்செய்து கொள்ள வேண்டுமென்று ஒழுங்கு செய்யப்பட்டது. எனவே அத்தீவுமுழுவதும் விரைவில் அமைதியாக இணைந்துவிடும் என்று தோன்றிற்று. கொத்து லாந்து, இங்கிலாந்து ஆகிய தேசங்களில், பிற்காலத்தில் VI ஆம் சேமிசு என்னும் கொத்துலாந்து மன்னன் முதலாம் சேமிசு என்ற பெயருடன் இங்கிலாந்திற்கு அரசனன பொழுது நிகழ்ந்ததுபோல், மணிமகுடம் ஒரே
1286.
290.

Page 174
1296.
297.
328 வில்லியம் வலசு
அரசனல் தரிக்கப்பட்டிருந்த போதிலும் அவ்விரு தேசங்களும் தனித்தனி யாகவே ஆட்சி செய்யப்பட்டன. ஆனல் வரலாற்றின் போக்கை இவ்வாறு நாம் சுருக்கிவிடக் கூடாது. கொத்துலாந்து நாட்டவர், கடல் கடந்து தங்களுடைய நாடடைந்த இளம் அரசிகளினல் நற்பேற்றை அடைந்ததில்லை. தான் அரியணை ஏறிய அதே இலையுதிர் காலத்திற்றனே, நோவே நங்கை தன் நாடு செல்லுவதற்காகச் செய்த கடற்பிரயாணத்தின் போது ஒகுனிசு என்ற இடத்திற் காலமானஸ்.
எனவே இவ்விரு நாடுகளையும் அமைதியான முறையில் இணைப் பதற்காகக் கிடைத்த வாய்ப்பு அவள் மரணத்துடன் மறைந்தது. முதலாம் எட்டுவேட்டு, வழி வழியாகக் கொத்துலாந்து தேசத்திற்கு ஆங்கில மன்னனே எசமானனவான் என்ற உரிமையை அழுத்திக் கூறி, அந்நாட்டின் சிம்மா சனத்திற்கு உரிமை பாராட்டியவர்களுக்கிடையே நடுத்தீர்ப்புச் செய்வதற்குத் தனக்கு உரிமை உண்டென்று சாதித்தான். கொத்துலாந்து அரசுக்கு உரிமை பாராட்டியவர்களுள் யோன் பேலியல், உருேபேட்டு புரூசு என்பவர் கள் முக்கியமானவராவர். நீதியெனத் தோன்றியவாறு பேலியலுக்குச் சாதகமாக முதலாம் எட்டுவேட்டு முடிவு செய்தான். ஆனல் அத்துடன் திருத்தியடையாமல் பேலியலைத்தன் கைப்பாவையாகவும் கொத்துலாந் தைத் தன் ஆட்சிக்குட்பட்ட நாடாகவும் அவன் நடத்தினன். முற்றிலும் நம்பிக்கை இழந்த பேலியல் தன்னை நசுக்கிக் கொண்டிருந்த எசமானன் மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் கைவிட்டான். ஆனல் பொருமையும் ஒற்றுமையின்மையும் நிறைந்த பரன்கள் அவனுக்கு ஆதரவு அளிக்க வில்லை. இதனுல் பேலியல் பதவியை இலகுவில் இழந்தான். எவ்வா றெனில் முதலாம் எட்டுவேட்டு வெற்றிகரமாகப் பேலியல் என்பவனது நாட்டு எல்லைக்குள் நுழைந்து, முடிசூட்டும்பொழுது அமரும் கல்லாசனத் தை சுகோனிலிருந்து வெசுற்று மினித்தருக்குக் கொண்டுசென்று, கொத் துலாந்துக்குத்தானே அரசனனன். இரக்குமென் இடாப்பில், முதலாம் எட்டுவேட்டைத் தங்கள் அரசனுக எற்றுக் கொண்டு மரியாதை செலுத் திய கொத்துலாந்து விழுமியோர்கள் பலரின் பெயர்கள் காணப்படுகின்றன.
இணைப்பு பூர்த்தியடைந்ததுபோலத் தோன்றினலும் உண்மையில் அது அப்பொழுதுதான் ஆரம்பமாயிற்று. தங்கள் விழுமியோரினல் கைவிடப்பட்ட கொத்துலாந்து மக்கள் தங்கள் நாட்டின் உண்மை நிலையை உணரலா யினர். முதலாம் எட்டுவேட்டுக்குப்பின் கொத்துலாந்தில் ஆட்சி செய்த ஆள்பதிகள் திறமையற்றவர்களாகவும் கொடியவர்களாகவும் இருந்தனர். அன்னியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டிலே தங்கியிருந்தது கொத்துலாந்து மக்களுக்கு அவர்களின் அடிமை வாழ்வை உணர்த்திற்று. அதற்குப் பின் வந்த மே மாதத்தில் இரும்பின் உரம்பெற்ற நெடிய மனிதனும், வரலாற்று எடுகளிலே திடீரென்று தோன்றியவனும், மிக அறிவு நுட்பம் வாய்ந்தவனும், கெரிலாப் போர் முறைத் தலைவனுமான ஒருவன் தேளிங் குப்பாலத்தின் கடைசி முனையில் (யாதுரிமைச் சட்டம் ஆக்கிப்) புகழ் பெற்ற

வில்லியம் வலசு 329
வனும், தவறு செய்வதில் பின் வாங்காத நிலமானியப் படைத்தலைவனு மான எள் வாறன் என்பான் கீழிருந்த படையைத் தோற்கடித்தான். அங்கிருந்து நோதம்பலாந்து, கம்பலாந்து ஆகிய பகுதிகளுக்குள்ளே நாச வேலை செய்து கொண்டு வில்லியம் வலசின் படைகள் நுழைந்தன. தன் பெயரைத் தவிர வேறு எப்பெருமையினலும் வரலாற்றில் இடம் பெறத் தக்க சிறப்பு இல்லாத இவ்வீரன், பின்னல் எதனலும் அணைக்க முடியாத ஒரு பெரும் நெருப்பை நாட்டிலே மூட்டினன். சுவிற்சலாந்து தேசத்திலே இதே காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளினல் ஏற்பட்ட விளைவைப் போன்று, கொத்துலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பயனய், வியக்கத்தக்க ஆற்றல்வாய்ந்த ஒரு புதிய குறிக்கோளும் மரபுமுறையும் உலகத்துக்குப் புதிதாகக் கிடைக்கலாயின. அப்பொழுது எந்தப் பெயரின லும் அது அழைக்கப்படாவிடினும் இப்பொழுது நாம் அதை குடியாட்சிக் குரிய நாட்டுப்பற்று என்று அழைப்பது பொருந்தும். எக்கொள்கையின் விளைவாகவும் அப்பற்று எற்பட்டதன்று. தாங்கள் செய்வது இன்னதென்று உணராத தன்மையையுடைய மக்களது திடீர்க் கோபத்தின் வேகத்தில் உயிர் பெற்றெழுந்ததுதான் அந்நாட்டுப்பற்று என்க. நாட்டினக் கொள்கை களும் குடியாட்சிக் கொள்கையும் அதைச் சரியென்று காட்டவோ அல்லது விளக்கவோ அதன் பின் ஏற்படலாம். இதற்கிடையில் அப்பற்று ஒரு நிலைத்த உண்மையாயிற்று என்பது கவனிக்கற்பாலது.
தன் காலத்திலிருந்த நிலமானிய அமைப்பு மூலம் கொத்துலாந்து தேசத்தை இங்கிலாந்து தேசத்தின் நுகத்தடியிற் பூட்டிவிடலாம் என்று முதலாம் எட்டுவெட்டு நினைத்தான். இப்பிழையானது இயல்பாக ஏற்படக் கூடியதே. இக்காலத்தில் எற்றுக்கொள்ளப்பட்டிருந்த வரையளவின்படி பார்த்தால், கொத்துலாந்தைக் காப்பாற்றும்படி அந்நாட்டு மக்களின் குடியாட்சி உணர்ச்சிக்கு உவலசு விடுத்த வேண்டுகோளைக் காட்டிலும் எட்டுவேட்டின் நடவடிக்கைகள் ஒருசிறிதே இயற்கைக்கு ஒவ்வாதனவாகும். இக்காலத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் நாட்டின உணர்ச்சி யும் குடியாட்சி எண்ணங்களும் காணப்படுவதை இயல்பான விடயங்களாக நாம்கருதுகிறேம். ஆனல் மத்திய காலத்தில் விடயங்கள் வேறுவிதமாக இருந்தன. சமுதாயம் தனித்தனி நாட்டினங்களாகப் பிரிந்திராமல் நில மானிய அமைப்பையொட்டி ஒன்றையொன்று சார்ந்த பிரிவுகளாகவே யிருந்தது. கொத்துலாந்து தேசத்தின் நிலமானியப் பெருமக்களை முதலாம் எட்டுவேட்டு பெரும்பாலும் தன்பக்கமே வைத்திருந்தான். இங்கி லாந்திலும் கொத்துலாந்திலும் பெருநிலப் L6127aడిf வைத்திருந்த ஆங்கிலேய-நோமானியர் மன்னிக்கக்கூடிய ஒரளவுக்கு கொத்துலாந்தின் மீது அரைகுறையான நாட்டுப் பற்றுடையவர்களாயும் இங்கிலாந்தின் அரசனை விரோதிப்பதற்கு மனமில்லாதவர்களாயுமிருந்தனர். இங்கிலாந்து அரசனிடமிருந்து நிலங்களை அவர்கள்பெற்றிருந்ததே இதற்குக் காரண 10ாகும.

Page 175
298.
330 உருேபேட்டு புரூசு
ஆனல் கொத்துலாந்தில் இதுவரைக்கும் உணரப்படாததும் அநுபவத் தில் கொள்ளப்படாததுமான நாட்டுணர்ச்சியும் குடியாட்சி அவாவும் அந் நாட்டவரிடை தோன்றலாயின. அவர்களிடத்திற் காணப்பட்ட இவ்வுணர்ச் சிகளை உவலசு செயற் படுத்தினன். நகரவாசிகளும் கிராமக்குடியானவர் களும் கொத்துலாந்துநாட்டு நிலக்கிழார் அல்லது சிறு நிலப்பிரபுக்களினல் தூண்டப்பட்டனர். அந்நிலக்கிழாரில் ஒருவனகிய உவலசின் ஒத்துழைப் போடு அம்மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்தனர். மேலும் அவசியமானபோது கொத்துலாந்திலுள்ள தங்களுடைய சொந்த விழுமியோரின் அதிகாரத்திற்கே பணியவும் மறுத்தனர். “ சிலுத்திரன் கள் ” என்று அழைக்கப்பட்ட கீழ்த்தரமான முரட்டு ஈட்டி வீரர்கள் ஆங்கி லப்படையினரைத் தோளோடு தோள் நின்று அனேக போர்க்களங்களிலே தாக்கியதுடன் வேல்சிலும் அயலாந்திலும் கெலித்திக்குப் படையினரை இல குவில் முறியடித்த கவசமணிந்த ஆங்கிலப் போர்வீரர்களையும் அவர்களுடைய குதிரைகளையும் தாக்கி, முன்னேறதபடியும் தடுத்தனர். இங்கு அசையாத மனவெழுச்சியையும், உறுதியான நாகரிகப் பண்போடு கூடிய ஒழுங்கு முறையையும் அவர்களிடத்துக் காண்கிறேம். ஆனல் வேறு சில சமயங் களில் நிலமானியகாலத்து அருளாண்மையும் நெடுவில் கையாள்வதிலே தேர்ச்சியும் ஒருங்கே படைத்த உவேல்சு வீரரும் ஆங்கில வீரரும் அம்பு மாரி பொழிந்து, சிலுத்திரன் படையணிகளைப் பிளந்து, தம் குதிரைவீரர் ஊடறுத்துச் செல்ல வழிசெய்து வெற்றிகண்டனர். பயனுள்ள பகுதிக்கு முற்றுப்புள்ளி வைத்த போல்கேக்கு எனுமிடத்தில் கிடைத்த வெற்றி யானது இத்தகைய உபாயங்களால் ஆங்கிலேயரடைந்த பல வெற்றிகளுள் முதலாவதாகும்.
கொத்துலாந்துப் படையை அடிக்கடி தோற்கடிப்பதின் மூலம் அந்நாட்டை வென்று கைக்கொள்வது முடியாததாயிற்று. அங்குள்ள பொதுமக்கள் போர்க்காலநிலைமை எவ்வாறு இருக்குமென்பதிற் பழக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு குடியானவனும் ஒரு வீரனக இருந்தான். இவ்வகையில், கொத்துலாந்து தேசம் அமைதியை விரும்பும் ஆங்கில நாட்டைவிட, முரட்டுத் தன்மையுடைய வேல்சு நாட்டையொத்திருந்தது. படையெடுப்போருக்கு விட் டுக் கொடுப்பதற்குப் பதிலாக கொத்துலாந்து மக்கள் படையெடுப்பாளருக்கு முன்னதாகவே தங்கள் குடிசைகளை நெருப்பிடவும் நாட்டைப் பாழாக்கி விடவும் தயாராயிருந்தனர். உறுதிமிக்க இக்கருமத்தை அவர்கள் அடிக்கடி ஆற்ற நேர்ந்தது. நீண்டகாலமாக முடிவு பெருதிருந்த இப்பிரச்சினையை இருவிடயங்கள் கொத்துலாந்து மக்களின் விடுதலைக்குச் சாதகமாக முடிவு செய்தன. அவை கொத்துலாந்து நாட்டின் அரசனன உறேபேட்டு புரூசின் செல்வாக்கும், அவனுடைய மரணத்திற்குப் பின் II ஆம் எட்டுவேட்டின் கவனம் பிரான்சுடன் தொடுக்கப்பட்ட நூறு வருடப் போரின் மீது திரும்பி யதுமாகும்.

உருேபேட்டு புரூசு 331
1920-ஆம் ஆண்டில் கொத்துலாந்தின் அரசுக்கு உரிமை பாராட்டிய வனின் பேரனகிய உருேபேட்டு புரூசு என்பவன் வழிவழிவந்த உயர்ந்த
கொள்கைகளையுடைய தன்னுட்டுப் பற்றுச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவ
னல்லன். அவனும் அவன் தந்தையும் அரசியல் சம்பந்தகாக விழுமி யோர்களிடையே பொதுவாகக் காணப்பட்டதுண்டுபடுத்தும் கொள்கையையே பின்பற்றி வந்திருந்தனர். உவலசு காலத்தில் உருேபேட்டு புரூசு ஒரு தடவைக்குமேற் கட்சி மாறியிருக்கின்றன். அவனுடைய கோபக் குணமே அவன் வீரத்துடன் செயலாற்றவேண்டிய சூழ்நிலைக்கு அவனை வழிப் படுத்தியது. ஒரு சமயம், இரெட்டு கோமின் என்பவர் கோவிலிலிருக்கும் போது அவரது கழுத்தை வெட்டிக் கொன்றதற்காக, அவன் சட்டப்பிரட்டம் செய்யப்பட்டான். கொத்துலாந்து மக்களில் தேசப்பற்றுடையவர்களுடன் அவன் சேருவதைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அத்துடன் உவலசு செய்ததுபோல அவனும் செயலாற்றலானன். அதிலே அவன் தனக்கும் தன் நாட்டினருக்கும் விடுதலை கண்டான். உவலசின் குடியாட்சி மரபுகளோடு, புரூசு, சேர். சேமிசு தக்கிளசு ஆகியவர்கள்புகுத்தியிருந்த நிலமானிய அமைப்பின் அமிசமும், வேறெவரிடமும் காணப்படாது புரூசு என்பவனிடம் மட்டுமே காணப்பட்ட உண்மையான அரச பதமும் சேர்க்கப்
ill-607.
தலாம் எட்டுவேட்டின் மரணத்தால் 11-ஆம் எட்டுவேட்டு அரசனுடன் கொத்துலாந்து நாட்டினர் போரிடும்படியான நிலை எற்பட்டது. அவ்வமயம் விடுதலையடைவதற்காக அவர்கள் நடத்திய போராட்டத்திற்கான நிலைமை முன்னையைவிட இடர் நிறைந்ததாகவிருந்தது. தக்கிளசு, புரூசு ஆகிய ஆண்மைமிக்க யுத்தவீரர்கள் தம் நாட்டில் ஆங்கிலேயர் கட்டி எழுப்பி யிருந்த கோட்டைகளை ஒவ்வொன்ருகக் கைப்பற்றி அழித்தனர். பனக் குபேண் போர்க்களத்திற் கொத்துலாந்து வீரர்கள் அடைந்த தலையாய வெற்றியின்போது ஆங்கிலேயர்கள் தங்கள் குதிரைப் படைகளை ஒழுங்கான முறையில் உபயோகப் படுத்தவோ வில்வீரர்களைப் பயன்படுத்தவோ தவறி விட்டனர். எனவே கொத்துலாந்துச் சிலுத்திரன்கள் ஈட்டி முனையில் ஆங்கி லப்பரன்களையும் நைற்றுக்களையும் சதுப்பு நிலங்களுள் தள்ளி வீழ்த்தினர். ஆங்கில அருள் விறலுக்கு அத்தகைய அழிவு அதற்கு முன்னே பின்னே என்றுமே எற்பட்டதில்லை. அதன்பின் ஆங்கிலேயர் தங்களுடைய வில் வீரர்களிலும் காலாட் படை வீரர்களிலும் பெரும் பகுதியினரைக் கடலுக் கப்பால், இத்தகைய எதிர்ப்பு ஆர்வமே இல்ல்ாதிருந்த குடியானவர்கள் நிறைந்த தென்பகுதிக்குக் கொண்டு சென்றனர். w
பனக்குபேண் வெற்றியையடுத்து வந்த நூற்றண்டுகளில் கொத்துலாந் துக்கும் இங்கிலாந்துக்குமிடையே எழுந்த எல்லைப்புறச் சண்டைகளின்போது
கொத்துலாந்து நாட்டவர் கெரிலாப் போர் முறைகளைக் கையாண்டபோதெல்
லாம் அவர்களுக்கு வெற்றியே கிடைத்தது. பனக்குபேண் யுத்தத்திற்
306.
130.
314"

Page 176
332 சுதந்திரத்திற்காகச் செய்ததியாகம்
கொத்துலாந்து மக்கள் வெற்றியடைந்தபோதிலும் திறந்த வெளியுத் தத்தை அவர்கள் கூடுமான மட்டும் தவிர்க்கவேண்டுமென்றும், படையெடுப் பாளரை வெற்றி கொள்வதில் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளை யும் மீண்டும் மீண்டும் தியாகம் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டு மென்றும் புரூசு தன் நாட்டு மக்களுக்குக் கூறியதாகக்கருதப்படும் புத்தி மதிகள் அடங்கிய * நல்வேந்தன் உருேபேட்டின் நற் செய்திகள் ” என்ற ஒழுங்கற்ற ஒரு வித நாடோடிக் கவிதை மக்களிடை பரவியது. கொத்து லாந்து மக்களின் அப்போதைய நிலைமை உண்மையில் அவர்களுடைய எதிரிகளின் நிலைமை போன்றதன்று. அவர்கள் மிகுந்த பொறுமையைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில் ஆங்கிலக் கொள்ளைக் கூட்டத் தினரும் படையினரும் செவியற்று எல்லைபுபுறத்திலிருந்து இரண்டு நாள் குதிரை ஏற்றத் தொலைவுக்குட்பட்ட கொத்துலாந்து தேசத்தின் மிகச் செழுமை வாய்ந்த பகுதிகளை மீண்டும் மீண்டும் நாசமாக்கிய அமயத்தில், ஒன்றுமே விளையாத கரம்பை நிலங்களான நோதம்பலாந்து, கம்பலாந்து, தறம் முதலிய பகுதிகளில் மட்டுமே கொத்துலாந்துப் படையினர் வேலை செய்ய முடிந்தது.
பெறற்கரிய விடயங்களைப் பெறுங்கால் எற்படுவது போலவே, கொத்து லாந்தின் விடுதலையும் அளவிடற்கரிய தியாகத்தின் மீதே பெறப்பட்டது. பனக்குபேண் வெற்றியின்பின் இரண்டரை நூற்றண்டுகளாக கொத்து லாந்தில் சகிக்க முடியாதவறுமையும், மிலேச்சத்தன்மையும், இரத்தக்கறை படிந்த நிலமானிய காலத்திற்கேற்ற ஆட்சியறவும், படுகொலைகளும், தனிப் பட்டோரது போர்களும், அரசுக்கெதிரான சதிகளும் மலிந்திருந்தன. மேலும் இங்கிலாந்துக்கு எதிராகக் கொத்துலாந்து எல்லைப்புறங்களில் ஓயாது நடைபெற்றுவந்த போராட்டங்களும், ஊழல்மலிந்த திருச் சபையும் இத் தீமைகளுடன் காணப்பட்டன. அத்துடன் செழிப்பான பட்டனங்களின்றியும், பாராளுமன்றம் என்று சொல்லுவதற்குத்தகுதிவாய்ந்த தொரு மன்றம் இன்றியும், எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை விளைவிக்கும் எத்தகைய தாபனங்களின்றியும் கொத்துலாந்து தேசம் அப்போதிருந்தது. அந்நாட்டு மக்களின் குடியாட்சி உணர்ச்சிகள் அவர்களது நாடு இங்கிலாந்துடன் இணைவதற்கும் அதன்மூலம் செல்வத்தையும் நாகரிகத்தையும் அடை வதற்கும் இடந்தரவில்லை. அப்படியிருந்தும் அத்தகைய உணர்ச்சிகள் அரசியல் சம்பந்தமாக எவ்வித விளைவையும் உண்டாக்கவில்லை ; நில மானியப் பிரபுக்களை ஒழுங்கான முறையில் நடத்துதற்கு அவை வழி செய்யவில்லை; பிரதிநிதித்துவ ஆட்சிமுறைக்குச் சாதகமாக நாட்டுணர்ச்சியை அவை கிளறி விடவில்லை. பிரான்சுடன் கொத்துலாந்து கொண்டிருந்த தொடர்பானது இங்கிலாந்துக்கு எதிராக இராணுவ சம்பந்தமாய்ப் பயன் தரக்கூடியதாயினும் அது தனது பண்பாட்டின் அமைவுக்கு முரணுன தாயும் தன்னுடைய அண்டை நாட்டுடன் தான் கொண்டுள்ள முறிவுபட்ட உறவுக்கு உண்மையிலே எவ்விதத்திலும் ஈடாகாததாயும் இருந்தது.

சுதந்திரத்திற்காகச் செய்த தியாகம் 333
இங்கிலாந்தை எதிர்த்ததினல் கொத்துலாந்து தேசம் அடைந்த பயன்தான் என்ன ? தன் உயிரையும் அதைக் காப்பாற்றுவதினுல் தனக்கு முடிவில் எற்படவிருந்த விளைவுகளையும் தவிர கொத்துலாந்து வேறெவ்விதப் பயனையும் பெறவில்லை.
குறிப்பு-புரூசின் “ நற்செய்திகளிலிருந்து * சில வரிகள் பின்வருமாறு:
“என்னருமைத் தாய் நாட்டீர் ஒரு சொற்கேளிர் 1 வன்னெஞ்சர் வளைத்துவிட்டார் வளமார் நாட்டை வகையறியாது வழியறியாதுதவிக்க வேண்டாம். வளமுடை நம் நதிக்கரைகள் அழித்தே வாரீர். தரைநின்று போர் செய்வோம் ; சலித்து ஒடோம். மலைகளொடு சதுப்பு நில அடவி சேர்ந்து அவைகளையே தற்காப்புப் படையாய்க் கொண்டால், அணுகுவரோ எளிதில் நம்மை ? அஞ்சிப் போவர். அழித்திடுவீர் பயிர் நிலங்கள் அத்தனையும் அவர் செலும் பாதை தன்னில் அழிவே காண்பர். யுக்தியினல் வழிமறித்து இரவு வேளை வதைத்திடுவீர் ; வஞ்சகரால் எதுவும் நேரா தென்கூச்சல் மலைமீது கேட்டால் போதும் விழுந்தடித்து மலைநோக்கி ஓடிவாரீர் 1 வாட்கொண்டு விரட்டுமவர் வீணே செல்வர் இவை தாமென் யோசனையும் விருப்புமாகும். இதுவே நல்வேந்தன் உருேபேட்டின் நற்செய்தி '.
இப்பாடலில் * தரையில் நின்று போர் செய்வோம்” என்ற வார்த்தைகள் காணப்பட்டபோதிலும் கொத்துலாந்து வீரர்கள் இங்கிலாந்திற் கொள்ளை யடித்த அமயங்களில் குதிரை மீதிவர்ந்தே சென்றனர். போர் செய்யும் பொழுது தான் கீழே இறங்கிப் போரிட்டனர். II ஆம் எட்டுவேட்டு காலத்தில் அவர்கள் இங்கிலாந்தினுட் புகுத்து அழிவு வேலை செய்ததைப் பற்றி புருேயிசாட்டு பின்வருமாறு கூறுகிறர்.
* கொத்துலாந்தின் உறுதிவாய்ந்த வீரர்கள் குதிரைகள் மீதேறி முன் செல்ல அவர்களைத் தொடர்ந்து பின் சென்றவர்கள் நடந்து சென்றனர். வீரர்களும் பிரபுக்களும் நல்ல குதிரைகளின் மீது ஏறிச் செல்ல சாதாரணப் போர் வீரர்களும் எனையோரும் சிறு குதிரைகளின் மீது சென்றனர். நோதம்பலாந்து பகுதியிலுள்ள பல்வேறு விதமான மலைப்பிரதேசங்களைக் கடப்பதற்கென அவர்கள் இரதங்களையோ அன்றி வண்டிகளையோ கொண்டு செல்லவில்லை. மேலும் ஒவ்வொரு குதிரைவீரனும் ஒரு சிறு மூட்டை நிறைய ஒட்சுத் தானிய மாவையும் அதை முறுக்காகவோ அல்லது மாப்பண்டமாகவோ செய்வதற்குத் தேவையான உலோகத்தாலான சுடு

Page 177
334 மத்திய காலப் போர்கள்
கல்லையும் சுமந்து சென்றன். தாங்களே தயார் செய்த உணவை அவர்கள் விலாப்புடைக்கத்திருத்தியுடன் உண்டனர். மேலும் வழியில் தாங்கள் கைப்பற்றிய கால்நடைகளின் மாமிசத்தையும் மதுவில் ஊற வைத்து உண்டனர் ”.
புருேயிசாட்டு மேலும் கூறுவதாவது : “11 ஆம் இரிச்சாட்டின் ஆட்சிக் காலத்தில் ஒர் அமயம் ஆங்கிலப் படையெடுப்பால் அதிகமாய் அழிந்து போன தாழ்ந்த நிலங்களைப் பிரெஞ்சு வீரர்கள் பார்த்தபோது அங்குள்ள மக்கள் அப்படையெடுப்பைச் சாதாரண நிகழ்ச்சியாகக் கருதினர் என்றும், ஆறு அல்லது எட்டு மரமுளைகள் இருந்தால் தங்களுக்கென புதுவீடுகள் கட்டிக் கொள்ள முடியுமெனவும், காடுகளிலே பாதுகாப்புக்காக விடப் பட்டிருந்த கால் நடைகளிலிருந்து தங்கள் ஆகாரத்திற்குப் போதுமான உணவுப் பொருள்கள் கிடைக்குமென்றும் பேசிக் கொண்டார்கள்”. மேலே கூறப்பட்டவை “நல்வேந்தன் உருெபேட்டின் நற்செய்தியில் ’ அடங்கிய கொள்கை செயற்படுவதை எடுத்துக் காட்டுவனவாகும். வட பிரித்தானியா வில் சுதுவாட்டு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட எராள மானகாடுகள் முற்காலத்தில் இருந்தன என்பதை இந்நற் செய்தியிலி ருந்து நாம் அறியலாம்.
அத்தியாயம் VI
நூருண்டுப்போர்.-அதன் காரணங்களும் விளைவுகளும். நாட்டினவுணர்ச்சியின் தோற்றம். விற்படை வீரர் களும் வீர வேளாண்படை வீரர்களும் - ஆங்கில மொழியும் நாட்டுப் பற்றும்
அரசர்கள் :-III ஆம் எட்டுவேட்டு, 1327-1377 ; 11 ஆம் இரிச்சாட்டு 1377-1399 ; IV ஆம் என்றி, 1399-1413 , V ஆம் என்றி, 1413-1422 V1 ஆம் என்றி, 1422-1461.
16 ஆம் நூற்ருண்டுக்கும் 20 ஆம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவைப் பாழ்படுத்திய போர்களைப் போன்றபோர்கள் மத்திய காலத்திலேற்படாததற்குக் காரணம் அக்காலக் கிறித்துவ உலகத் தின் ஒற்றுமையே என்று சில வேளைகளிற் சொல்லப்படுகிறது. ஆனல் உண்மையில் மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுவதில் அதிக விருப்பங் கொண்டிருந்தனர்; நம் வாழ்நாட்களில் இருப்பதைவிட அக்காலத்தில் யுத்தங்கள் மிகக் கொடுமைவாய்ந்தவையாகவேயிருந்தன. ஒருவனைக் கொலை செய்வதற்கு ஏற்படும் விருப்பம், மனச் சான்று அல்லது வழமை

மத்திய காலப் போர்கள் 335
காரணமாக அதிகம் தடைப்படவில்லை. ஆனல், கொலை செய்வதற்குரிய வழிவகைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கிறித்துவ உலகத்தின் ஒற் றுமை காரணமாக அமையாது, இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலின் குறைவும், போக்கு வரவு வசதிகளின் தாழ்ந்த நிலையும், நெடுந்துரப் படையெடுப்புகளின் போது ஏராளமான மனிதர்களைக் கொண்டு சென்று பராமரிப்பதற்கு ஏற்ற அரசியல், நிர்வாகம், பொருளாதாரம் ஆதியன சம்பந்தமான சாதனங்களின்மையுமே பெரும் போர்களை நிகழவொட்டாது தடுத்தன எனலாம். இன்னும் மிக்க எழ்மை நிலையிலும் விரிவான கடன் பெறுந் திட்டம் ஏதுமின்றியும் இருந்து வந்த ஐரோப்பா எராள மான இளைஞர்களை விவசாயத் தொழிலிலிருந்து இழுத்து நாசவேலையை ஒரு கைதேர்ந்த தொழிலாகப் பயிற்றுவதற்கான பொருள் வசதியைப் பெற்றிருக்கவில்லை. நிலமானியப் பரன்களிடம் இருந்த சிறிய போர்ப் படையினரும், யுத்த வீரர்களும் அதிகாரம் பெற்றவர்களாகவிருந்தனர். எனெனில் அவர்களும் அவர்களிடம் வேதனம் பெறும் ஊழியர்களும் போர்க் கருவிகளை உபயோகப்படுத்தும் கலையைத் தமக்கே முழு உரிமை உடையராகப் பாராட்டினர். 11 ஆம் நூற்றண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றண்டுவரை ஐரோப்பாவில் நடைபெற்ற போர்கள் மிகப்பல. அவை அந்தந்த நாட்டின் எல்லேகளுக்குள்ளளேதான் நடைபெற்றன. இக் காலத்து மிகப்பெரிதான போர்கள் போன்று அக்காலத்தில் இருக்க வில்லே. உரோமானியரது பாேர்த் தெய்வமான மார்சு என்பாரின் கைகள் குறுகியனவையாக இருந்த போதிலும் அவை தொடர்பாகச் செயலாற்றி வந்தன. எனவே உழுதுண் மக்கள் இக்காலத்தில் அனுபவிப்பதைவிட, யுத்தகாலங்களில் ஒயாது துன்பப்பட்டார்கள்.
பிரான்சு நாட்டின் மீது இங்கிலாந்து, தொடர்ந்த நூருண்டுப் போரே, நாடு முழுமைக்குரிய போர் என்று அழைக்கத்தக்க முதல் ஐரோப்பியப் போராகும். பிரான்சு நாட்டைக் கொள்ளையடிக்கவுேம் சகல அழிவுக் கரு மங்களைச் செய்விக்கவுமாக ஆண்டுதோறும் இங்கிலாந்து தேசம் அனுப்பி வந்த படைகள் உண்மையிலேயே மிகக் குறைந்தவை. ஆனல் அப்படைகளின் திறமை ஒரு விதத்தில் நாட்டுக்குரிய ஒழுங்கமைப்பினலும் நாட்டினவுணர்ச்சியினுலும் தோன்றியதே. இங்கிலாந்து நாடானது கொ விலுள்ள ஒரு தீவாக அமைந்திருந்ததினுலும், பலமிக்க அரசர் களைப் பெற்றிருந்ததினுலும் நோமானியர் அந்நாட்டைக் கைப்பற்றிய நாள் தொடக்கம் உள்நாட்டில் ஒரளவுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுவதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மேம்பட்டிருந்ததுமன்றி, நிலமானிய முறையிலிருந்து நாட்டினத்தன்மைக்கு மாறிச் சென்று கொண்டும் இருந் தது. மன்னரும் பாராளுமன்றமும், நிர்வாக சாதனத்தையும் நாட்டினம் சார்பான தன்னுணர்வையும் நாட்டில் எற்படுத்தியவுடனே பிரெஞ்சு நில மானிய அரசு எனப்படும் அருவருப்பான அரக்கனை ஒழிப்பதில் இப்புதிய செல்வாக்குக்கள் உபயோகப்படுத்தப் பட்டன. சிறிது காலத்திற்கு ஐரோப்
13-R 6344 (12/62)
1337
453.

Page 178
336 நூருண்டுப் போர்
பாவிலே தன் அண்டை நாடுகளைக் கொள்ளையடித்துத் துன் பப்படுத்தும் நிலை இங்கிலாந்துக்கு எற்பட்டது. அதற்குக் காரணம் இங்கிலாந்துக்கு மனச் சான்று என்னும் நீதிப் பண்பு மற்றைய அண்டை நாடுகளைவிடக் குறை வாக இருந்தது அன்று ; ஆனல் அதனிடமிருந்த அதிகாரமே இதற்குக் காரணமென்க. தியூடர் காலத்தில் ஐக்கிய பிரான்சு நாடும், ஐக்கிய இசுப்பெயின் நாடும் தனித்தனியே இங்கிலாந்தை விட அதிக சத்தி வாய்ந்ததினுல் இங்கிலாந்தினது சத்திவாய்ந்த இந்நிலை எதிரிடையாக மாறியது. ஆனல் அதுவொரு தீவாக இருந்தமையால், பழிவாங்கும் தீய செயலிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டதுமன்றி, சமுத்திரங்களுக் கப்பால் வாணிகம் செய்வதிலும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும் நாட்டின் சத்திகள் மிக்க நயமான வகையிற் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு வாய்ப்பையும் பெற்றது.
ஆகவே நூறண்டுப் போரானது அரசியல் இயக்க ஆற்றல் சார்ந்த தொரு பிரச்சினையாகும். அதைச் சிறந்ததொரு நோக்கு ையதாகக்கொள் வது பயனற்றது. 111 ஆம் எட்டுவேட்டு, V ஆம் என்றி ஆகியவர்கள் பிரெஞ்சுச் சிம்மாசனத்திற்குக் குலமுறையாகப் பாராட்டிய உரிமைகளைக் கொண்டு நான்கு த ைமுறைகளாகக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஆங்கிலேயர் நடத்திய படையெடுப்புக்கள் நீதியானவை என்று கொள்ளப் பட்டதிலிருந்து, இந்நிலைமை, பதினெட்டாம் நூற்றண்டில் இத்தகைய சூழ்நிலை பில் மகா பிரடெரிக்கு சைலிசியா மீது பாராட்டிய மரபுரிமை களின் நேர்மையை விடச் சிறந்ததல்லவென்றும், மத்திய காலங்களில் பிறருரிமைக்கு மதிப்புக் கொடுத்தல் என்பது நடைமுறையில் இல்லை என்பதும் தெளிவு. புருேயிசாட்டு என்பார் ஆங்கிலேயரின் நடவடிக்கை களைப் புகழ்ந்து எழுதுவதையே தன் வாழ்நாளின் முக்கிய நோக்க மாகக் கொண்டிருந்த போதிலும் அவர் இத்தகைய மயக்கத்துக்கு உட் படவில்லை.
அந்நூலாசிரியர் கூறுவதாவது : “ தங்களுடைய அரசன் அண்டை நாட்டவருடன் போர் செய்வதிற் பிரிய முள்ளவனுகவும் ஆயுதங்கள் உபயோகிப்பதில் விருப்பமுள்ளவனுகவும் வெற்றிவீரனுகவும் இருந்தாலொ ழிய, சிறப்பாகத் தன்னை விடச் செல்வமிகுந்தவர்cளையும் மேம்பாடுள்ளவர் களையும் எதிர்த்து வெற்றி பெற்றலொழி, ஆங்கில மக்கள் அவனை நேசிக்கவோ அவனுக்கு மரியாதை செய்யவோ மாட்டார்கள். சமாதான காலத்தைவிடப் போர் செய்யும் காலத்திற்றன் அவர்களது நாடு செல்வத் தாலும் எல்லாவகைப் பொருள்களாலும் அதிகமாக நிரப்பப்படுகின்றது. போர்புரிவதிலும், கொலைகள் செய்வதிலுமே அவர்கள் மகிழ்ச்சியும் மன வெழுச்சியுமடைகின்றனர். பிறரின் செல்வத்தை இச்சிப்பதிலும் அவர்கள் மேற் பொருமைப் படுவதிலும் அவர்கள் அளவு கடந்தவர்களாவர். இங்கிலாந்தின் மன்னன் தன் குடிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மட்டு மின்றி அவர்கள் விரும்பியவற்றையும் நிறைவேற்றுதல் வேண்டும் ”.

நூருண்டுப் போர் 337
நான்கு தலைமுறைகளாகக் கடல் கடந்து போர்புரியுமாறு, விருப்ப மில்லாதிருந்த மக்களைக் கட்டாயப் படுத்த உண்மையில் எந்த அரசனலும் முடிந்திருக்காது. நூறு வருடப் போர், அரசவமிசங்களின் பேரவா காரண மாக ஏற்பட்ட விளைவு அன்று. ஆனல் அது நாட்டு மக்களின் தாபனங்கள் மக்கள் ஆதரவுபெற்ற பாராளுமன்றத் தாபனங்கள் எனுமிவற்றின்விளைவே யாகும். தொடக்சத்தில் இலாபத்தைக் கொடுக்கக்கூடியதும் இறுதியில் ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான இராணுவபலத்தின் மூலம் ஆட்சி யைப் பரப்பும் பருவத்தினுடாகப் புதிய இங்கிலாந்து சென்று கொண் டிருந்தது.
III ஆம் எட்டுவேட்டினது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஆங்கி லேயரின் பேரவாக்கள் கொத்துலாந்திலிருந்து நீங்கிப் பிரான்சின் மீது சென்றன. விரோத மனப்பான்மையுள்ள கொத்துலாந்தின் நாட்டுச் சின்னமாகிய முள்ளிச்செடியைப் பறிப்பதை விடப் பிரான்சு நாட்டின் சின்ன மான கீர்த்தி வாய்ந்த இலில்லி மலரைப் பறிப்பது அதிக இலாபகரமான தும் எளிதானதும் மரியாதைக்குரிய செயற்கரிய செயலாகவுமிருந்தது ; ஆங்கிலவிழுமியோரும் அவர்களின் இளைய மைந்தர்களும் வேளாளரும் சமுத்திரங்களுக்கப்பாலிருந்து தங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்தபொழுது ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளைக் கொண்டு வந்தனர். அவை ஒருவேளை மடாலயங்களிலுள்ள விலையுயர்ந்த பொற் பாத்திரங்களாகவோ, வியாபாரி வின் இல்லங்களிலுள்ள சித்திரப்பூவேலைப் பாடுகள் நிறைந்த திரைச் சிலை ளாகவோ விடுதலைப் பொருளாகச் செல் வர்களாகிய பிரெஞ்சு வீரர்களிடமிருந்து கைப்பற்றிய பொன்னபரணங் களாகவோ இருந்திருக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கேட் போரைத் தம் வசப்படுத்தக் கூடிய கதைகள் எராளமாக இருந்தன. இன்று நூல்களும் புதினத்தாள்களும் மக்கள் வாழ்க்கையில் எத்தகைய இடத்தை வகித்து வருகின்றனவோ அத்தகைய இடத்தை அக்காலத்திற் சசை கள் வகித்துவந்தன. தீரச் செயல் ளையும், போர்களையும், ஐரோப்பா வின் கீர்த்தி பெற்ற நகரங்களிலும் அவற்றிலுள்ள மிகச் சிறந்த கொடி முந்திரித் தோட்டங்களிலும் பெற்ற இலவச விடுதிகளையும், வரைமுறை யற்ற காதற் சளியாட்டங்களையும் அக்கதைகள் சுவையுடன் வருணித்தன. இவ்விரமாக ஒருவன் தன்னை மதிப்பாகக் கருதிக் கொண்டதுமன்றி, தன் அயலாரின் பார்வையிலும் சிறந்தவனக மதிக்கப்படவிரும்பினன. இத்தகையவன, மும் முறை தாக்சப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட கொத்து லாந்து நாட்டின் சதுப்பு நிலங்ளிலே காணப்பட்ட சில வெறுமையான குடிசை48ளயும் அங்கு குவிக்கப்பட்டிருந்த சில ஒற்று, வா, கோதுமைக் கதிர்களையும் நெருப்பிட்டு அழித்து, அதன்பின் காட்டிற்குள்ளேயிருக்கும் தன்னுடைய மறைவிடத்துக்குச் செல்ல முடியாத நொண்டிப் பசுவின்

Page 179
ཟ
838 போர்க்குரிய காரணங்கள்
தோலேயன்றி வேறென்றையும் காணுது தன் நாடு திரும்பிய போது அடைந்த பெருமையை விட இப்போது அதிகப் பெருமையையடைந் தான்."
கொள்கையிலும் செயலிலும் நாட்டினப் பற்றுக் காரணமாக வளர்ந்த இக்கால மனப்பாங்கானது, ஆங்கிலேயர் பிரான்சைத் தங்கள் நாட்டுடன் இ2ணத்துக் கொள்ள முடியுமென்று எக்காலத்திலாவது எண்ணியது குறித்துத் திகைப்படைகின்றது. ஆங்கில மொழி பேசிய கொத்துலாந்து மக்களேவிட ஊக்கமும் ஃவிமையும் குறைந்தவர்களாகவே பிரெஞ்சு மக்கள் பல ஆண்டுகளாக ஆங்கிலேயரை எதிர்த்தனர். ஏனெனில், கொத்துலாந்து ஒரு நாட்டினம் என்ற அளவுக்கு ஏற்கனவே உருவாகியிருந்தது. ஆணுல், பிரான்சு தேரோ நிலமானிய அமைப்பின் கீழமைந்த தளர்ச்சியான மக்கட் கூட்டமாகவே இருந்தது. மேலும் 1337 ஆம் ஆண்டில் நூறு வருடப் போர் ஆரம்பித்தபோது III ஆம் எட்டுவேட்டும் அவனது பிரபுக்க ளூம் பிரெஞ்சுமொழி பேசி வந்ததுமன்றிக் கொத்துலாந்தில் இருப்பதை விட காகெனியிலே மனநிறைவோடு வாழ்ந்தும் வந்தனர்.
11 ஆம் எட்டுவேட்டு பிரெஞ்சுச் சிம்மாசனத்தின் மீது பாராட்டிய உரிமை கஃாலிட இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையே உண்டான பினவுக்கு ஆழ்ந்த காரணங்கள் உண்டு. பழைய அஞ்செலின் பேரரசின் சிதைவிற் கடைசித் துண்டாகிய அவன் வசமிருந்த கசுகெனி, பிரெஞ்சு மன்னணுல் இச்சிக்கப்பட்டது. பிரெஞ்சு மன்னன் கொத்துலாந்து மகளுக்கு உதவி யளித்து அவர்களே ஆங்கிலேயருக்கு விரோதமாகக் கிளப்பிவிட்டான். அத் துடன் பிளாண்டேசு நாட்டிலே வான் ஆட்டிவெண்டே என்பாருடைய நகரக் குடியாட்சியை எதிர்க்கத் திட்டங்கள் வகுத்திருந்தான். அப்பகுதிகளின்
குறிப்பு-பிரான்சிலும் கொத்துலாந்திலும் ஆங்கிலப் படைவீரர் நடந்து கொண்ட போங்களேப் பற்றிப் புறுேவிசாட்டு கூறும் விளக்கங்கள் அதைத் தெளிவு பறித்துகின் ந3, 1:1 -ஆம் ஆண்டுப் படையெடுப்பின் போது, வினோ மிகுந்த தன் நாடாே நோமண்டி ஆகிலேயாால் அழிக்கப்பட்டபோது அங்குள்ளோர் நாடுகடத்தப்பட்டும் கொள்ளே ஆடிக்கப்பட்டும் பல இன்னல்களுக்குள்ளாயினர் என்பதே அவர் விளக்காக Wடறுகிறர். போர் வீரர்கன் தங்களுக்குக் கிடைத்த போன், வேன்னி ஆகிய செல்வங்களேப் பற்றி அரச ஒக்கோ, அரசனுடைய உத்தியோகத்தருக்கோ வெளிப்படுத்தி:, அதுபற்றிய விபரங்களே அவர்கள் தமக்குள்ளே வைத்துக் கொண்டனர். இன்று துருக்கியப் பனடகள் கொள்ளே படித்து நேருப்பு மூட்டியும் படுகோவே செய்தும் வருவது போவிப் பதிஜன்காம் நாத முண்டில் ஆங்கிEப் படைகளும் நடந்துவந்தன என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இதுங் கின்றனர். அப்படி இருந்த போதிலும் ஆங்கிலேயர் மிகவும் மனிதத தன்மை யற்றவர்கி ாாக இருந்தனர் என்று சொ:பதற்கிஸ்.ே மத்தியகாரப் போர்முறைகளின் மனிதப் பண்பும் மரியாதையும் " கிறித்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள்" மீது கூட காண்பிக்கப்பட விஜ்ஃபூ, ஆருல் இம்ப்ரியாதை எப்போதும் காட்டப்படாவிடினும், சேல்வத்திரள் நிமித்தமும், பதவியின் நிமித்தமும், சோ வகுப்பச் சேர்ந்த ஆண்பேண் ஆகிய இருபாலாருக்கும் துறவிகளாா குருக்கன் குருமாட்டிகள் ஆகியவர்களுக்கும் போர்க் கீாங்கனிற் செலுத்தப் பட்டே ஐந்துள்ாேது.
 

போர்க்குரிய காரணங்கள் SS
ஆங்கிலேயர் வியாபாரத்தொடர்பு கொண்டிருந்த காரணத்தினுஸ், பிரெஞ் ஈக்காரர் செல்வாக்குப் பெறுவதை ஆங்கிலேயர்கள் சகிக்க முடியவில்லே. ஆங்கிலேயரின் முக்கிய வற்றுமதியாகிய ஆங்கிலக் கம்பளிமயிரானது கென்று, புரூசு, ஈப்பிசசு ஆகிய நகரங்களிலுள்ள தறிகளுக்கு விற்கப்பட்டது. ஏனெ எளில் இங்கிலாந்தில் நெசவு உற்பத்தி இன்னும் குழந்தைப் பருவத்திலேயே
பிதேநறிகப் போருத்தாப்புடி ஆடிங் ஆாமீகம் 140 2:
aTTTTTLL aTSLLTTTLLLL LL LLLLLLLL LLLLLL LLL 0LL
தேசப் படம் xy, பிரான்சு : துருண்ப்ே போரின் முதற்பாகம். IT ஆய் எட்டுவேட்டிங் அதிகார எல்லே. இருந்தது. ஆங்கிலேய, பிரெஞ்சு வியாபாரிகள் கடவில் ஒருவர்க்கொருவர் கேடாகப் போட்டியிட்டு ஆங்கிலக் கால்வாய் வழியாகவும் அதற்கப்பாலுள்ள மிகக்கே விரிகுடாவின் வழியாகவும் கசுகெனியிலிருந்து முந்திரித் தேற இலக் கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருந்தனர். ஆங்கில வர்த்தகக் கடற்படை, சுலூயி எனுமிடத்திற் பெற்ற வெற்றி இப்போரின் முதற்

Page 180
34U) போரும் மக்களாதரவும்
பெரும் போர்க் கருமமாகும். அதன் பிறகு I ஆம் எட்டுவேட்டு ஆங்கிலக் கடலின் எசமானனகத் தன்னை உரிமைபாராட்டினன். அவன் வெளியிட்ட பொற்காசுகளில் அவன் ஆயுதபாணியாக மணிமுடிபுனைந்து ஒரு கப்பலில் நிற்பதுபோற் குறிக்கப்பட்டுள்ளது. “ எம் நாட்டின் நாணயம் நான்கு முக்கிய விடயங்களின் சின்னமாக விளங்குகின்றது. அவை முறையே அரசன், கப்பல், வாள் கடலாதிக்கம் என்பவையாம் ” என்று “ ஆங்கில அரசியற் பூட்கையின் அவகேடு” என்ற தலைப்புள்ள நூலை வெளியிட்ட ஆசிரியர் கூறுகிறர். நூறு வருடப் போரின் பிந்திய பகுதியில் இங்கிலாந் துக்குக் கடற்படையிருப்பதின் அவசியத்தைப் பற்றிக் காரண காரியங்களோடு கூடிய முதல் விளக்கத்தை இவரே தந்துள்ளார். கடல்வலிமை பெறுவது யுத்தத்தின் குறிக்கோள்களில் ஒன்றக இருந்ததே தவிர, அவப்பேருக, அதன் முக்கிய நோக்கமாக இருந்ததில்லை.
நிலமானிய முறைமை காரணமாகவோ குலமுறை சம்பந்தமாகவோ அன்றி, அதற்கும் மேலான காரணங்களைக் கெரண்டிருந்தமையால் இந்தப் போராட்டம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இடையிட்டு நடைபெற்று வந்தது. யோன் அரசனல் தன்னுடைய நோமானிய உடைமைகளுக்காகவும் அஞ்செ வின் உடைமைகளுக்காகவும் ஆங்கிலேயரைப் போர் செய்யும்படி வற்புறுத் துவதற்கு முடியவில்லை. I ஆம் என்றிவரை, ஒவ்வொரு பாராளுமன்ற மும் யுத்தத்திற்கு வேண்டிய தொகையை அனுமதித்து வந்தது மன்றி யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தத் தவறிய நாட்டமைச்சர்களை அதுபற்றி விளக்கம் கூறும்படியும் கேட்டுவந்தது. “ பிரெஞ்சுக்காரரின் தற்புகழ்ச்சிக ளெல்லாம் ஒரு புறமிருக்க” ஆங்கில விற்போர் வீரர் தங்கள் வெற்றிகளில் பெருமிதம் கொண்டு,
* நோமண்டி போகிருர் நம்மரசர்
நயமும் அருளாண்மைப் பண்பும் உடன் கொண்டு '
என்று ஆர்ப்பரித்து, ஐரோப்பாவின் இளவரசர் ளையும் விழுமியோர் ளையும் தங்கள் மன்னன் சிறைப்டடுத்தி இலண்டன் தெருக்களிலே ஊர்வலமாகக் கொண்டு வருங் காட்சி நாட்டிலுள்ள எல்லாவகுப்பினரையும் இணைக்கும் நாட்டுப் பற்றை அதிகரிக்கச் செய்தது. பிரெஞ்சுக்காரர் மீது பொது மக்கள் கொண்ட வெறுப்பு, நாட்டில் இருமொழி பேசிய மேல்வகுப்பினரிடை காணப்பட்ட வெறுப்பை விட அதிகமாகவேயிருந்தது. ஆகவே இக்கடுந் துன்பந்தரும் தீரச் செயலில் நெடுங் காலம் இங்கிலாந்து நிலைத்திருந்தது. நன்கு அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயருடைய மத்திய காலச் சமுதாயம் பாழ்படும்வரையும், பிரெஞ்சுக்காரர் துர குசுகிளின் என்பவனின் கீழ் ஒருமுறையும், அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு துனய், யோன் ஒவு ஆக்கு ஆகியவர்களின் தலைமையில் மறுமுறையும், நாட்டின உணர்வு பெற்று நிலமானியச் சுளுகுளேயும் டடைவீரர்சளின் மனநிலை யையும் மாற் றும் பொருட்டு ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரரை இரு தடவை தூண்டும்

பிரான்சும் நிலமானிய முறையும் 34.
வரையும் இங்கிலாந்து இந்த யுத்தத்தில் நிலைத்திருந்தது. நிலமானிய அமைப்பிலிருந்து நாட்டினம் சார்ந்த அமைப்புக்கும் மத்திய ஊழியி லிருந்து மறுமலர்ச்சிக் காலத்துக்கும் மாறும் பருவத்தின் சூழியல், இராணுவ நிலை ஆகியன பற்றியதே நூறண்டுப் போராகும்.
போர்க்காலங்களில் அடிக்கடி நிகழ்வது போல இரு தரப்பினர் படை களும் அவை கையாண்ட சுளுகுகளும் அடிப்படையான சமுதாய உண்மை களைப் பிரதிபலித்ததுமன்றி இராணுவ முக்கியத்துவத்தை விட மேலான முதன்மைவாய்ந்த மாற்றங்களையும் புலப்படுத்தின.
அரசு என்ற முறையில் இங்கிலாந்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது பிரான்சு நாட்டரசாகும். பிரான்சின் கோட்டங்களில் அரச நீதிபதிகளும், மாநகர் மணிய காரரும் அரசரீதிமன்றங்களிலிருந்த அதிகாரிகளும் ஆட்சி புரியவில்லை. மாகாணங்களிலும் பெருநிலப் பிரிவுகளிலும், நிலமானிய மன்னர்களும், பிரபுக்களும் அவரவர் எல்லைக்குள்ளே ஆட்சி செய்து வந்தனர். விவசாய அடிமைகள் பிரபுக்களால் மிகவும் இழிவாக நடத்தப் பட்டு வந்தனர். முதன்மை வாய்ந்த நடுத்தர வகுப்பினர் அங்கு தோன்ற வில்லை ; நிலங்களைச் சொந்தமாகக்கொண்ட விவசாயிகளும் கிடையாது ; தங்களுடைய நிலைக்கு மேற்பட்ட வகுப்பினருடனும், கீழ்ப்பட்ட வகுப்பின ருடனும் பொது அலுவல்களை ஆற்றவும், அரசனுக்குச் சேவை செய்யவும்
சிறிய கனவான்கள் இருக்கவில்லை. பிரான்சிற் செல்வம் நிறைந்த நகரங்
கள் இருந்தன என்பது உண்மையே. ஆனல் நகர வாசிகள் தங்களைச் சுற்றியுள்ள நிலமானிய அமைப்பின் கீழ் எற்பட்டிருந்த சமுதாயத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் உறுதியற்றிருந்தன. இங்கிலாந்திலுள்ள கோட்டங்களுக்கும், ஆங்கிலப் பொதுமக்கள் சபைக்குமிடையே இருந்ததைப் போலப் பிரான்சில் நகரப் பெருந்தனக் காரநக்கும் சிறு பிரபுக்களுக் குமிடையே ஒத்துழைப்பு என்பதும் நிலவில்லை.
பிரெசி, பொயிற்றியெசு, அசின்கோட்டு ஆகிய போர்க்களங்களிற் பிரெஞ்சுப் படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி விலிருந்து சமுதாயம் சம்பந் தமான இவ்வுண்மைகள் நன்கு வெளியாயின். இப்படைகள் நிலமா னியப் பிரபுக்களின் கீழ் அம் முறைப்படி போருக்கு அழைக்கப்பட்ட வையாகும். எனவே நிலமானிய முறைமைக்கே உரித்தான அகந் தையும் அரசியல் இராணுவம் சம்பந்தமான ஒழுங்கீனமும் அவைகளிடம் 11 நிகருந்தன. மோந்துரோசு அல்லது சாளி. இளவரசன் போன்ற 61. புளி, கொத்துலாந்துப் படைத்தலைவர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் எவ்வளவு பூன்பங்களை அநுபவித்தார்களோ, அவ்வாறே பிரான்சு நாட்டு அாச6லும் அவனது தளபதிகளும் தங்களின் கீழுள்ள படையினரைத் தாக்குதலைத் தவிர வேறு எந்தப் போர்ச் சுளுகுகளும் இந்நிலமானிய அமைபமினபடி எற்பட்டிருந்த படையினருக்குத் தெரிந்திருக்கவில்லை. கடந்த பல நூற்றண்டுகளிற் குதிரைப்படைத் தாக்குதலின் அதிர்ச்சியே
1346.

Page 181
1356.
1358.
342 * நெடு வில் ”
போரில் வெற்றி தோல்வியை நிர்ணயித்து வந்தது. ஆனல், கிரெசி எனும் போர்க்களத்தில் ஆங்கில விற்போர் வீரர்கள் பிரெஞ்சுக் குதிரைப் படையினரின் வன்மைக்கு ஒரு முடிவு கட்டினர்.
இத்தாலிய நாட்டிலிருந்து வந்த கூலிப் படையினரே பிரெஞ்சுக்காரரின் சிறந்த எறிபடை வீரர்களாவர்-இவர்கள் செனேவாவிலிருந்து வந்த குறு வில்லைப் உபயோகிக்கும் வீரர்கள். அமைதிக்காலத்திற் புறக்கணிக்கப்பட்ட பிரெஞ்சுக் குடியானவன் போர்க் காலத்திலும் புறக்கணிக்கப்பட்டான். தன்னுடைய எசமானன் ஓர் ஆங்கிலப் பண்ணை வீட்டிற்கு சிறைப்படுத்திக் கொண்டு போகப்படின், மீட்புப் பணம் வரும்வரை சிறைப்படுத்தியவரின் குடும்பத்தினரோடு வேட்டைப்பருந்து கொண்டு வேட்டையாடுவதும், காதல் நாடகமாடுவதும், தன் எசமானனுடைய பண்ணையிலிருந்து மீட்புத் தொகை யைச் செலுத்துவதும், பண்ணை வேளாளனுடைய வேலையாயிருந்து வந் தன. போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே இவ்விதமாக மீட்புப் பணத்தைப் பெறும் முறைகளும், விசேடமாகப் பொயிற்றியெச் போர்க் களத்தில் அகப்படுத்திய எராளமான மேன்குல யுத்தக் கைதிகளுக்காகப் பெறப்பட்ட மீட்புத் தொகைகளும், போர்வீரர்கள் செய்த கொள்ளைகளும் பட்டினி கிடந்த பிரெஞ்சுக் குடியானவர்களை நம்பிக்கையிழக்கச் செய்து, யாக்குவரி என்றும் புரட்சியை உருவாக்கச் செய்தன.
பிரான்சுமீது படையெடுத்த சேனைகளின் அமைப்பிலும் சுளுகுகளிலும் ஆங்கிலச் சமுதாய அமைப்பு நன்கு பிரதிபலித்தது. எட்டுவேட்டு மன்னர் கள் காலத்து இங்கிலாந்தில், ஆங்கிலக் கால்வாய்க்கு அப்பாலுள்ள யாக்கு வசு பொன்கோமைவிட மேலான நிலைமையில் பியெசு பிளவுமன் இருந் தான். செல்வமுடையவர்களாகவும் நன்கு உண்ணும் வசதியுடையவர்க ளாகவும் நிலமானிய அடிமைகள் கூட வாழ்ந்தனர். அவர்களின் நிலை மையைவிட உயர்வாகவிருந்த சுதந்திரமுள்ள வேளாண் மக்களின் தொகை யும் அதிகரித்துக் கொண்டே வந்தது. உண்மையாகவே நூருண்டுப் போரின் பெரும் பகுதி இங்கிலாந்திலுள்ள அடிமைகளின் விடுதலையைக் குறிக்கின்ற தொன்றகும். அக்காலத்திற் பிளந்தாசெனற்று அரசர்கள் சுதந்திரக் குடியானவர் அனைவரையும் இராணுவப் பயிற்சிபெற வற்புறுத்தி இராணுவத்திற் சேர்த்தனர். ஆனல் இது நிலமானிய முறைமைப்படி இராது “ அசைசு ஒபு ஆமிசு ’ எனப்பட்ட யுத்தத் தளவாடச் சட்ட மன்றத் தின் படி அமைந்த சட்சணியரது காலாட் படை அமைப்பின் முறையிலே அமைந்திருந்தது. ஒவ்வொருவனும் ஓராயுதத்தை வைத்துக்கொள்ளல் வேண்டுமென அரசனல் நிர்ப்பந்திக்கப்பட்டான். அத்தகைய ஆயுதங்களை உபயோகிக்கும் முறை பற்றி நாட்டிலுள்ள ஒரு பெரிய மக்கட் படைக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. பெரும் பாலான சாதாரண மக்களும் இவ்வித ஆயுதங்களை உபயோகிக்கக் கற்று, அவற்றைத் தங்கள் குடிசைகளிலே வைத்திருந்தமையும் இங்கிலாந்து, அரசியல், சமுதாயம் சம்பந்தமான சில சுதந்திரங்களைப் பெற்றிருந்தற்கு முக்கிய காரணம் எனலாம்.

* நெடு வில் ” 343
பதினன்காம் நூற்றண்டில் நீண்ட வில்லாயுதமானது இங்கிலாந்து தேசத்தில் அதிகமாகப் பழக்கத்துக்கு வந்த ஆயுதமாகும். கோவில்களுக் குப் பின்னல் அமைந்திருந்த மேடுகளிற் குறிபார்த்து எய்யும் விளையாட் டுக்களில் பயிற்சி பெறுவதே கிராம வாழ்க்கையின் உல்லாசப் பொழுது போக்காக விருந்தது. இப்படிப்பட்ட விற்பயிற்சிகளில் மக்களைப் பங்கெடுக்க வொட்டாமற் செய்வதற்குக் காரணமாயிருந்த கைப்பந்தாட்டம், காற்பந் தாட்டம், கோற்பந்தாட்டம், ஒட்டங்கள், சேவற் சண்டைகள், இன்னும் இவை போன்ற வீண் விளையாட்டுக்களை 11 ஆம் எட்டுவேட்டு சட்டங்கள் மூலம் தடுத்து, மீறியவர்களைச் சிறையிலிட்டுத் தண்டித்து, விற்பயிற்சி விளையாட் டுக்களை ஆதரித்தான். பிற்காலத்தில் இயூ இலாற்றிமெர் என்பார் வேளாள ரான தன்னுடைய தகப்பனரைப் பற்றிய கதைகளைக் கோயில் மேடையில் தான் செய்யும் சொற்பொழிவுகளின் போது பின்வருமாறு சொல்வது வழக்கம் :-“ வில் நாணை எப்படி இழுப்பது, ஏனைய நாடுகளில் உள்ளவர் களைப் போன்று கைகளின் பலத்தால் வில்லை எவ்வாறு இழுக்காமல் இருப் பது, உடற் ,பலத்தைக் கொண்டே அதை எப்படி வளைப்பது என்பவற்றை யெல்லாம் என்தந்தை எனக்குக் கற்பித்தார். என்னுடைய வயதுக்கும் பலத்துக்கும் ஏற்ற விதத்திலே விற்கள் வாங்கி வைத்திருந்தேன். வயதிலும் பலத்திலும் நான் பெருகப்பெருக என்னுடைய விற்களும் பெரியவைக ளாகவே செய்யப்பட்டிருந்தன. ஏனென்றல் மனிதர் இவ்விதப் பயிற்சி களில் பழக்கப்பட்டிராவிட்டால் நன்ருக வில் எய்யமுடியாது’.
முன்னுள் இலாற்றிமெரைப் போன்ற கவனமிக்க தந்தையராலேயே கிரெசி, அசின்கோட்டு ஆகிய இடங்களில் நடந்த போர்களில் நாம் வெற்றி பெறமுடிந்தது என்பதிற் சந்தேகமில்லை. எனெனில் நீண்டவில்லை உப யோகிக்கும் கலை அந்நியருக்கு மிகவும் துன்பந்தரத்தக்கது. ஆகவே கவசங் களின் தகடுகளை துளைத்துச் செல்லும் வண்ணம், அம்புகளை எய்யும் திறனைப் பிறநாட்டார் கற்றுக் கொள்ளவில்.ே ஒரு நூற்றண்டுக் காலத்திற்கு மேலாக ஐரோப்பிய யுத்தங்களில் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய ஆயுதமாக நீண்டவில் இருந்த போதிலும், அது ஆங்கிலேயரின் தனியுரிமையுடைய போர்க் கருவியாக இருந்த நிலையினின்றும் மறைந்துவிடவில்லை. அரசாங் கச்சட்டங்களையும் அறிக்கைகளையும் மீறிக் காற்பந்தாடுவதிலும், இன்னும் இலாற்றிமெர் நினைத்ததைப் போன்று பந்தெறிதல், மதுவருந்தல், விப சாரம் செய்தல் முதலிய விலக்கப்பட்ட விடயங்களிலும் ஈடுபட்டதின் மூலம் கிராம வாசிகள் விற்பயிற்சியைக் கைநெகிழ்த்ததனல் இங்கிலாந்திலுங் கூட விற்பயிற்சி செய்தல் சிறுகச் சிறுகக குறைந்து கொண்டே வர, தியூடர் காலத்தில் விற்களை விடத் திறன் குறைந்த கைத்துப்பாக்கிகள் அவைகளி னிடத்தை ஆக்கிரமிப்புச் செய்யலாயின.
III ஆம் எட்டுவேட்டின் காலத்தில் வெல்லுவதற்கரிய இம் மக்கள் படையானது திறமையின் உச்சிநிலையை அடைந்ததுடன் சில வேளைகளிற் போருக்கும் அழைக்கப்பட்டது. கிரெசி யுத்தத்தின் போது இங்கிலாந்து
1396

Page 182
344 ஆங்கிலக் " கம்பெனிகள் ”
அரசனும் அவனுடைய விழுமியோரும் பிரான்சு தேசத்தில் இருந்ததினல் அவர்களுடைய நாட்டை மிக எளிதிற் கைப்பற்றி விடலாமொன்று கொத்துலாந்து நாட்டினர் நினைத்து இங்கிலாந்தின் மீது படையெடுத்த போது, ஆங்கிலக் கோட்டங்களிற் குடியாட்சி முறையிலே திரட்டப்பட்ட மக்கள் படையானது முன்னெருகால் கொத்துலாந்து நாட்டினர் நோத்தா லற்றன் என்னுமிடத்தில் ஆங்கிலேயரால் படிப்பிக்கப்பட்ட பாடத்தையும் மீண்டு மொருமுறை புளோடென் என்னுமிடத்திற் படிக்கவிருந்த அதே பாடத்தையும் படையெடுப்பாளருக்கு இடேகாமுக்கு அண்மையிலுள்ள நெவில் குருேசு என்னுமிடத்திற் கற்பித்தது. அஃதாவது இங்கிலாந்து தன் கடைமையை நினைப்பூட்டும் படியாக எவ்விதமான நாட்டுக்குரிய நெறிக்கோளின்றியிருந்த போதிலும் கொத்துலாந்தைப் போன்றே தானும் * அச்சமின்றி யாராலும் சினமுறுத்தப்படமாட்டாது ’ என்பதே.
ஒவ்வொரு கோட்டத்துக்கும் “அணிவகுப்பு விசாரணைக் குழு’ வினரை அனுப்பி, பூரணமாகவும் அரைகுறையாகவும் ஆயுதந்தரித்த இந்த வேளாண் மக்களின் பெருந் தொகுதியிலிருந்து ஒரு படையை கடல்கடந்து போர் செய்வதற்காக II ஆம் எட்டுவேட்டு திரட்டினன். இதன் பொருடடு முதலிற் கட்டாய இராணுவச் சேவையை வற்புறுத்திய அவன், பிறகு தாமாகவே வலிந்து வந்த வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டி ஒருவகையாகச் சமாளித்தான். ஆனல் பிரெஞ்சுப் போர் தொடர்ந்து நடைபெற்றதால் விளம்பரப்படுத்தலின் மூலமும் கட்டாயத்தின் மூலமும் ஆள் சேர்க்கும் முறைவிடப்பட்டு அதற்குப் பதிலாக போர் புரிவதையே தொழிலாகக் கொண்ட போர்வீரர்களின் தனிப்பட்ட கம்பனிகளைக் கூலிக் கமர்த்திக் கொள்ளும் முறை கையாளப்பட்டது.
இக்கம்பனிகளே பிரான்சு தேசத்தில் நடைபெற்ற நீண்டகால ஆங்கில யுத்தத்தின் முதுகெலும்பாக விளங்கின. இப்படைப்பிரிவினர் நிலமானி யப் படையினரோ, கட்டாய இராணுவ சேவைக்குட்படுத்தப்பட்டவரோ அல்லர். ஆனல் அரசியலிலும் யுத்தத்திலும் தங்களுடைய நலன்களைப் பெருக்கத் தீர்மானித்திருந்த சில விழுமியோராலும் சில நைற்றுக்களாலும் வேகனத்திற்கமர்த்தப்பட்ட நீண்ட நாள் அனுபவமுள்ள போர்த் தொழி லாளரே ஆவர். அரசன் அவர்களுடைய தலைவர்களோடு குறைந்த வேதன ஒப்பந்தம் செய்து கொள்ளமுடிந்தது. ஏனெனில் அவர்கள் கொள்ளையடிப்பதின் மூலமும், மீட்புத் தொகைகள் பெறுவதின் மூலமும் இலவசக் குடியிருப்பு விடுதிகளைப் பெறுவதின் மூலமும் தங்கள் செல்வ நிலையை விருத்தி செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படைப் பிரிவில் சேர்ந்திருந்தனர். சில சமயங்களில், குறிப்பாகப் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையே எற்பட்ட உடன் படிக்கைகளுக்கு இடைப்பட்ட காலங்களில், புகழ்பெற்ற ஒக்குவுட்டும் அவனுடைய ஆங்கிலக் கம்பனியும் இத்தாலியிற் செய்தது போல, இவர்கள் தங்களுக்காகவும் தங்களுடன் சேர்ந்தவர்களுக்காகவும் ஐரோப்பாவில் நாசவேலையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆங்கிலேயரின் புதியபோர்ச்சுளுகு 345
V1 ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்திற்குத் திருப்பி விரட்டப்பட்ட இப்படைப் பிரிவினர் அந்நாட்டில் ஏற்பட்ட சமுதாய, அரசியற் குழப்பத்திற்குக் காரணமாய் அமைந்தனர். அதன் விளைவாக உரோசாப்பூப் போர்களின் போது “ உரிமை எவலாளர் ” என்னும் புதிய தொழிலில் அமர்த்தப்பட்டனர்.
ஆங்கிலேயரது போர்ச் சுளுகுகளின் பிரகாரம் அவர்கள் சாதாரணக் குடியானவனைப் போர்வீரனுகக் கொண்டிருப்பதிலும், நீண்ட வில்லை ஆயுத மாகக் கொள்வதிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். முதலாவதாக வந்த இரு எட்டுவேட்டுகள் காலத்தில் ஏற்பட்ட கொத்துலாந்துப் படையெடுப் புக்களின் போது, ஆங்கிலேயர் இப்பாடங்களைக் கற்றனர். ஐரோபபாவிலி ருந்த நிலமானிய யுத்தவீரர் எவ்விதக் குறிக்கோளுமின்றி நடைபெற்ற மிலேச்சத் தன்மை நிறைந்த யுத்தங்களில் அக்கறை சிறிதும் காட்டவில்லை. கிரெசி போர்க்களத்தில், தங்களால் வெறுக்கப்பட்ட இங்கிலாந்துப் படைவீரர் கள் போர்க்கலையில் ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திய பொழுது ஐரோப்பிய யுத்த வீரர் வியப்பில் மூழ்கினர்.
கொத்துலாந்து யுத்தங்களில் இங்கிலாந்து கற்றுக் கொண்ட பாடங்கள் இருவகைப் பயனுள்ளவையாகும். தேளிங்கு பிரிச்சிலும், பனக்குபேணிலும் கொத்துலாந்திய ஈட்டிவீரரைக்கொண்ட “ சிலுத்திரன்படை,” சாதகமான சூழ்நிலை ஏற்படின், சுயமரியாதையுள்ள காாலட்படையானது நிலமா னிய நைற்றுக்களுடன் நேருக்குநேர் பொருது அதனைத் தோற்கடிக்க முடியுமென்று நிரூபித்தது ; போல்கேக்கு போன்ற இடங்களில் ஆங்கி லேயருக்குக் கிடைத்த வெற்றிகள் நீண்ட வில்லின் உபயோகத்தைக் கற்பித்தன. கொத்துலாந்து யுத்தத்திற் கற்றுக் கொண்ட இந்த இரண்டு பாடங்களிலிருந்து III ஆம் எட்டுவேட்டின் பனிடத்தளபதிகள் ஒரு புதிய போர்முறையைத் தோற்றுவித்தனர். அதாவது எறிபடைகளையும் வாட் களையும் உபயோகிக்கின்ற விற்போர் வீரரையும் நிலமானிய நைற்றுக்களை யும் போர்க்களத்தில் ஒரே தனிப்பட்ட படையின் கீழ் இணைப்பதின் மூலம் எதிரிகளால் எளிதிலே தோற்க முடியாததொரு வலிமைமிக்க புதுப் படையை உருவாக்க முடியும் என்பதாம். பிரெஞ்சுக் குதிரைப் படையின் பலத்தை எதிர்ப்பதற்குத் தம்மிடம் போதிய படைவீரர் இல்லாமையை யுணர்ந்த ஆங்கில அருளாண்மை வீரர்கள் குதிரையைவிட்டிறங்கித் தங்க ளுடைய முழுப் போர்க் கவசத்துடனே போரிடுவதற்கு இணங்கினர். காலாட்படையினராகிய விற்போர் வீரர் இருமுழ நீளமுள்ள அம்புகளே இடைவிடாது வேகமாகச் செலுத்துவதின் மூலம் வெற்றிபெறும் தன்மை
குறிப்பு-கனன் உடொயில் எழுதிய “வெள்ளேக்கம்பனி" என்ற நூலில் இப்படைப்பிரிவு ஒன்றைப் ற்றி, உணர்ச்சிமிக்கதும் சரியான தகவலுள்ளதும் ஆனல் ஒரளவுக்குச் சிறப்பிக்கப் பட்டதுமான விளக்கம் தரப்படுகிறது. சுதீவன்சன் எழுதிய “கார் அம்பு’ என்னும் நூல் சேர் தானியல் பிருக்கிலியும் அவருடைய உரிமை ஏவலாளரும் இங்கிலாந்தில் நடத்திய போர்களைப் பற்றி சரித்திர உண்மையோடு எடுத்துக் காட்டுகின்றது.

Page 183
346 ஆங்கிலேயரின் புதியபோர்ச்சுளுகு
யுடையவராயிருந்தனர். அரைக்கவசமணிந்த அவ்வில் வீரர்களைப் பலப் படுத்துவதே ஆங்கில நைற்றுக்களின் நோக்கமாகும். அம்புமாரி பெய்த வீரர்களினூடே துன்பத்தில் உழன்றுகொண்டு உயிருடன் தப்பிய பிரெஞ்சு நைற்றுக்கள் ஆங்கில வீரர்களோடு கைகலந்து போரிடலாயினர். அப் பொழுது விற்போர்வீரர் தங்கள் வாட்களை உருவிக்கொண்டு சில அமயங் களில் புதர்களுக்குப் பின்னல் அல்லது தூக்கிச் செல்லக் கூடிய கழுமரங் களுக்குப் பின்னல்" கவசமணிந்த நைற்றுக்களுடனும், விழுமியோருடனும் தோளோடு தோள் நின்று பொருதனர்.
கிரெசி போர்க்களத்தில் ஆங்கில வீரர்களுடைய இவ்வித சுளுகுகளாற் பிரெஞ்சுக்காரர் மீட்சியிலாவகை தோல்வியடைந்தனர். எனவே தாங்களும் வெற்றியடைந்த ஆங்கில வீரர்களைப் போலத் தரைமீது நின்று போர் புரியத் தீர்மானித்தனர். ஆனல் பொயிற்றியெசு யுத்தம் நிரூபித்தது போல அச்சுளுகில் வேறு இரகசியமும் இருந்தது. அம்புகள் உட்பு காதவாறு தங்களுடைய கவசங்களின் தடிப்பை அதிகரித்ததோடு உடல் முழுவதும் சங்கிலிக் கவசங்களுக்குப் பதிலாகத் தகடுகளை ஆங்கிலேய வீரர் அணிந்திருந்ததுதான் வெற்றிக்கு மற்றெரு எதுவாகவிருந்தது. ஆனல் அவர்கள் எவ்வளவிற்குப் பாதுகாப்பைச் செய்து கொண்டனரோ அவ்வளவிக்கு எளிதில் இயங்கும் தன்மையை இழந்தனர். 15 ஆம் நூற்றண்டு நைற்று ஒருவன் தான் சுமக்கக் கூடிய பார்த்திற்கு மேற்பட்ட இரும்பு உறைகளை அணிந்திருந்தமையினல் நகைப்பிற்கிடமான பரிதாப நிலை எய்தியதுடன், தன் அருளாண்மைப்பண்பு விரைவில் அழிந்து போவதற்கும் காரணமாக விருந்தான்.
பிரெஞ்சுக் காரரை ஆங்கிலேயர் பக்கவாடடிலே தாக்குவதற்காக நன்கு பாதுகாக்கப்பட்ட வசதியான அணிவகுப்பை வற்படுத்திக் கொண்டபோது, ஆங்கிலக் காலாட் படையினரை வெற்றிகரமாகத் தாக்குவதற்குப் பிரெஞ் சுப் படையினர் வழி காணவில்லை. ஆனல் கருங்கவச இளவரசனல் விரிவாக்கப்பட்ட ஆங்கிலப் போர் முறையில் ஒரு பெருங் குறையும் இருந்தது. வெலிந்தனுடைய “ எண்ணிக்கை குறைந்த செவ்வுடை தரித்த படை வரிசையைப் ’ போன்று யுத்தகளத்தில் எளிதில் இயங்கும் தன்மையினதாக இப்படை இருக்கவில்லை. இப்படைஞர் தம் அணிவகுப் பின் இருமருங்கையும் பகைவர் தாக்காது பாதுகாத்துக்கொண்டு, பரியேறிய நைற்றுக்களை முன்னேறித் தாக்க முடியாதவராயினர். அவர்கள் குறிப் பிட்ட நிலைகளிலிருக்கும் போது மூடத்தனமாய்ப் பிரெஞ்சுக் காரர் தாக்கினல் மட்டுமே வெற்றியடையக் கூடுமாயிருந்தனர்.
*குறிப்பு-போர்க்களத்தில் விற்போர் வீரனின் உபயோகமானது நன்கு அறியப்பட்ட பின்பு அவனுக்குத் தற்காப்புக் கருவிகளும் ஒரு குதிரையும் கொடுக்கப்பட்டன. எனவே இக்காலாட் படையினர் குதிரைகள் மீது சென்று பிரான்சு எங்கணும் தாக்குவர். ஆணுல், சமயத்துக்கு எற்றபடி அரசன் முதல் சமையற் காரன் வரை குதிரைகளை விட்டிறங்கித் தரையில் நின்றும் போர் செய்தனர்.

ஐந்தாம் என்றியின் போராட்டம் 34
இவ்வுண்மைகளின் முழுத்தத்துவங்களை நன்கறிந்தவரான தூகசுகிளின் என்பவரால் பிரான்சுக்கு முதல் விடிவு கிடைத்தது. II ஆம் எட்டுவேட்டு தன் இறுதிக் காலத்தில், தென்மேற்குப் பிரான்சை 1360 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குக் கொடுக்கக் காரணமாகவிருந்த பிரிட்டிக்கினி ஒப்பந்தத்தைப் புறக்கணித்து விட்டான். துகசுகிளின் என்பவர் நன்கு பயிற்சி பெருத நில மானியப்படையினரின் உதவியை நம்புவதற்குப் பதிலாக, பயிற்சி பெற்ற *கட்டுப்பாடற்ற கம்பனிகளின்’ சேவையைக் கூலிக்குப் பெற்றர். ஆங்கிலே யரைத் திடீரென்று தாக்கித் திகைக்கச் செய்யும் அமயந்தவிர, அல்லது அவர்களுக்குப் பாதகமான விசேட சூழ்நிலையை ஏற்படுத்தும் அமயந் தவிர, மற்ற வேலைகளில் அவர் போரிடுவதைத் தடுத்தார். ஆங்கிலேயர் தங்கியிருந்து ஆட்சிசெய்த கோட்டைகளே முற்றுகையிடுவது அவருடைய முக்கியமான தொழிலாயிருந்தது. இது விடயத்திற் பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயருக்கு இணையானவர்களாகவே இருந்தனர். எனெனில், பீரங் கியை முற்காலமிருந்தே உபயோகிப்பதிற் பிரெஞ்சுப்படையினர் மேம் பட்டிருந்தனர். போர்க்களத்திலே திறமையாக இன்னும் உபயோகப்படுத் தப்படாதிருந்த வெடி மருந்து, முற்றுகை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஒரு புரட்சியையுண்டாக்கியது. அது பிரான்சின் விடுதலைக்கு உதவிசெய் தது ; ஆனல் நிலமானிய அமைப்புக்களின் சத்தியை உறிஞ்சுவதாக விருந்தது. எவ்வாறெனில் பீரங்கிப் படை வீரர்களுக்குத் தகுந்த வேதனம் கொடுப்பதற்கு வல்லணுயிருந்த அரசன், பரன் ஒருவனுக்குரிய கோட்டைச் சுவரிலே பீரங்கியால் ஒரு துளையை உண்டாக்கிவிடுவானனல், அப்பரனை இறுதியில் நசுக்கி விடவும் அவனல் முடியும்.
அப்படியிருந்தும் பிரான்சு நாட்டிலிருந்து நிலமானிய முறைமை எளி தில் மறைந்தொழியவில்லை. கிரெசி, பொயிற்றியெசு ஆகிய போர்க்களங் களிலே பயன்தராமற்போன நிலமானிய முற்ைச் சுளுகுகளுக்குப் பதிலாக மாற்று முறைகளைக் கண்டு பிடித்து துரகாசுகிளின் என்பவர் தன் நாட் டவரை விடுவித்த பிறகு, நிலமானிய முறையிருந்த விடத்திலே ஒரு பிரெஞ்சு நாட்டின முடியரசு வளருமென்று எதிர்பார்த்தல் இயல்பே. இக்காலத்தில் எற்பட்ட நிலையற்ற சமாதான உடன்படிக்கைகளும் இடை யிடையே தோன்றும் சண்டைகளும் நூருண்டுப் போரின் காலவளவை இரு பாதியாகப் பிரித்தன எனலாம். எனினும் அத்தகைய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. V ஆம் என்றி அரசனனவுடன், “மயக்கமுற் றிருந்த சிந்தனைகளுக்குப் பிறநாட்டுப் போர்களால் உட்ற்சாக மூட்டுமாறு ” 11 ஆம் எட்டுவேட்டு பிரெஞ்சு முடி சம்பந்தமாகக் காட்டிய போலி உரி மைகளெல்லாம் தனக்கும் உண்டென அவ்வுரிமைகளைப் புதுப்பித்தான். கருங்கவச இளவரசனின் போர்ச் சுருளுகளேயெல்லாம் நன்கு பயின்ற ஆங்கிலேயர் பிரான்சின் மீது படையெடுத்தபோது துகாசுகிளின் என் பாரின் வெற்றிகரமான போர் எதிர்ப்பு முறைகள் பிரெஞ்சுக் காரரிடம் காணப்படவில்லை. அதற்குப் பதில் கிரெசி, பொயிற்றியெசு என்ற போர்க்
1369
1377.
XW ஆம்
தேசப் படத்தைப் ι. Πή εξέ5.
1413.
1415.

Page 184
38 போரின் இறுதிக் கட்டம்
களங்களிற் கையாளப்பட்ட மூடத்தனமான நிலமானிய அணி வகுப்புக்
141. கனே அவர்களிடம் காணப்பட்டன. இதன் இயற்கைவிளேவே அசின்கோட்டு
எனுமிடத்தில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றியாகும்.
நூறு வருடப் போரின் பிற்பாதிக்கும் முற்பாதிக்குமிடையே, இரு
சாராரும் கையாண்ட இராணுவ முறைகள் சம்பநதமாக விருந்த ஒரு
மைப்பாடு தனிச்சிறப்புவாய்ந்தாகும். நெடுங்காலமாகப் பிரெஞ்சுக்காரர்
്
||
|| #C"
தேசப்படம் XWT. பிரான்சு நூறுண்டுப் போரின் இரண்டாம் பகுதி. WT ஆம் என்றியின் பேராநிக்கம்,
எதையும் சற்றுக் கொள்ளவோ நினேவிலிருத்தவோ மறுத்தனர். " தற் காலத்துக்குரிய முதல் தளபதி " என்றழைக்கப்படும் V ஆம் என்றி ஒருபெரும் போர்வீரனுயிருந்ததால், நோமண்டியை ஆங்கிலேயர் கைப்
 
 
 
 
 

போரின் இறுதிக்கட்டம் 4.
பற்றிய ஒரு நாடாகக் கொண்டு அங்கிருந்து அவன் இலுவார் நதிக் கரை வரை தன் ஆட்சியைப் பரப்பினுன். நிலமானிய அமைப்பைச் சேர்ந்த பெரும் வமிசங்களாகிய ஒலியன்சும், பேகண்டியும் தம்மிடை பிணக்குற்ற தால், பிரான்சு பிளவுபட்டதோடு, பேசண்டி, பிளாண்டேசு எனும் பகுதி கள் இங்கிலாந்துடன் நட்புறவுகொள்ளும் படியும் நேர்ந்தது. ஆங்கிலக் கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள கம்பளி வியாபாரிகளுக்கு இது மகிழ்ச் சியைக் கொடுத்தது. 1420 ஆம் ஆண்டில், W ஆம் என்றி துரோயிச உடன் படிக்கையின்படி பிரெஞ்சு முடிக்கு உரிமையுடையவனுக ஒப்புக் கொள்ளப்பட்டான். தவருன வழிகளிலே தான் பெற்ற அரசுரிமை யை ஒரு சிறு குழந்தைக்கு விடுத்து ஈராண்டுகளுக்குப்பின்னர் அவன் மர னமடைந்தான். வட பிரான்சு இக்குழந்தையை ஏற்றுக் கொண்டது.
W1 ஆம் என்றி சிறு பருவத்தினனுக இருந்தபோது பிரெஞ்சுக்காரர் துர கசுவிளின் என்பவர் கையாண்ட போர் முறைகளேப் பின்பற்றி இரண் டாம் முறையாகப் புத்துணர்ச்சி பெற்றனர். துர கசுகிளினுக்குப் பின் வந்த துணுய் தமக்கு முன்பிருந்தவருக்கு ஒப்பானவரல்லர். ஆணுல் அவர் ஆற்ற வேண்டிய வேலே அதிகக் கடினமாயிருந்தது. ஆயினும் எதிரி பாராத விதமாக ஓர் அசாதாரணமான நண்பரை அவர் பெற்றர். ஓராண்டு உயர் புகழுக்கும், ஒராண்டு உயிர்த்தியாகத்திற்கும் காரணமான யோன் ஒவ் ஆக்கு எனும் அல்லீர நங்கை தன் தாய் நாட்டில், நாட்டு மரபுப் பண்பையும் நாட்டுக்குரிய உயர்மன உணர்ச்சியையும் எழுப்பினுள். இதன் பின் பிரான்சு என்றுமே பின் நோக்கியதில்லை. ஆன்மிகத்துறையில் அவள் பிரான்சு நாட்டின் உரி/பிசு ஆணுள். அவள் இறந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னரே துணுய் காலத்துக்குரிய முற்றுகை முறைகளேயும் பேபியசு கையாண்ட போர்ச் சுளுகுமுறை ளேதும் பிரெஞ்சுகாரர் பின் பற்றி ஆங்கிலேயரது அதிகாரத்தை முற்றிலும் ஒழித்தனர். கரீகனியில் நடந்த இறுதியுத்தத்தில் ஆங்கிலேயரான தஸ்பொது என்பானும் அவன் மகனும் மாய்ந்ததுடன் நூருண்டுப் போரும் முடிவுற்றது. அதன் வழி விளேந்த உரோசாப்பூப் போர்கள் சென் அல்பான்சு என்ற இடத்திலே இரண்டு ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தன. ஆகவே 15-ஆம் நூற்ருண் டில் நன்கு பரிபாலிக்கப்படாத இங்கிலாந்தில் அமைதி சிறிது காலத்துக்கு மட்டும் நிலவியது எனலாம்.
ஐரோப்பாவிலே ஒர் ஆங்கிலப் பேராசை நிறுவ நெடுங்காலமாக மேற் கொள்ளப்பட்ட இடைவிடா முயற்சியின் பயன்யாது ? மத்தியகாலச் சமுதா பத்தின் சீர் குலேவையும், ஆட்சியறவுக் காலத்தையும் ஒழுக்கச் சீர்கேட்டை பும் நாம் பெற்றுேம். அது மிகவும் நீதியானதே. ஆங்கிலேயர் கொத்து லாந்திலே தம் முன்னேய ஆட்சியின் அறிகுறியாகத் துவீட்டு நதிக் கரையிலுள்ள பேலிக்கு என்ற இடத்தைப் பெற்றதுபோலப் பிரான்சு நாட்டிலே அவர்கள் தம் முற்கால ஆட்சியின் தனிச்சின்னமாக கலே
142B1431.
14իEl

Page 185
350 அசின்கோட்டின் விளைவுகள்
என்ற துறைமுகத்தைப் பெற்று அதனை மேலும் நூறு வருடங்கள். தமக்குரியதாக வைத்திருந்தனர். கலே நகரம் ஆங்கிலேயருடைய பதனி டப்படாத கம்பளி மயிர் வியாபாரத்திற்குரிய இடமாக ஐரோப்பாவிலே அமைந்திருந்தது. அங்கே கம்பளி மயிர் சேகரிக்கப்பட்டு விற்கப்படுவதற்கு முன், அதற்கு வரியும் அறவிடப்பட்டது. இக் கம்பளிப் பொருளைத் தரப்படுத்தி விற்பதற்கான சந்தையும் ஆங்கில அரசனல் அங்கு நிறுவப் பட்டது. ஆனல் துணி உற்பத்தியும் கடல்கடந்த வாணிகமும் இங்கிலாந்திற் பெருகியதும் இவ்விற்பனைச் சந்தையின் உபயோகம் வரவரக் குறைந்தது. இதற்கிடையிற் பிரான்சு தேசத்தில், ஆங்கிலேயரின் உறுதியான கைப்பிடி யிலிருந்ததும் அந்நாட்டிற்குக் குறுக்குவழியாக அமைந்திருந்ததுமான கலே நகரமானது, கூர் மதி படைத்த யோக்கு வமிச அரசர்களையும் தியூடர் வமிச அரசர்களையும் எஞ்ஞான்றுங் கவர்ந்திழுத்தது : எவ்வாறெனின், பிரான்சில் அவர்கள் கைநெகிழ்த்த உரிமைகளைத் திரும்பவும் அடைவதற் கான தூண்டுதலாகவென்க. மேரி அரசியின் காலத்தில் கலே துறை முகத்தை இழந்ததினுல் இங்கிலாந்துக்கு இலாபமே ஏற்பட்டது. ஏனெ னில் அந்த நட்டம் எலிசபெத்து அரசி காலத்து ஆங்கிலேயர் மேற்குத் திசையிற் புதிய நாடுகளைக் கண்டு பிடிப்பதற்கு மறைமுகமாக உதவியா யிருந்தது.
அங்ஙனமாயின் நூறண்டுப்போர் இங்கிலாந்திற்குத் தீமையைத் தவிர நன்மை எதனையும் செய்ததில்லையா ? தீமைக்கு ஈடாக அது நன்மை செய்திருந்தால் அது தெளிவாகப் புலப்படாத அறிவுத்துறை சம்பந்தப் பட்ட நன்மையேயாம். அந்நன்மை பலதிறப்பட்டது : நிலமானிய முறை மையிலிருந்ததைக் காட்டிலும் மேலான குடியாட்சி முறையிலமைந்த நாடு பற்றிய உறுதி வாய்ந்ததொரு தன் முனைப்பு ; எளிதில் மறக்க முடியாத அரிய ஞாபகங்களும் மரபுப் பண்புகளும் ; ஆங்கிலத்தீவுப்பண்பில் உள்ள நம்பிக்கை என்பனவாம் ; பிரான்சு, இசுப்பெயின் ஆகிய நாடுகளில் நில விய முடியாட்சி எனும் பிறையால் மறைக்கப்பட்டு, இருளிலிருந்த நூற் றண்டில், இங்கிலாந்து தேசம் தலை நிமிர்ந்து நிற்றற்குக் காரணமாக இவையிருந்தன. இலிசபெது அரசியின் காலத்திலேற்பட்ட நன்கமைந்த நாட்டுப் புத்துணர்ச்சிக்கு அசின்கோட்டுயுத்த ஞாபகங்கள் எவ்விதம் தூண் டுதலாக அமைந்தன என்பதைச் செகப்பிரியர் இயற்றிய நாடகங்களில் நாம் காணலாம். “ பெசு” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட அந்த நல்ல அரசியின் நாட்களில் போர் என்பது எப்படியிருந்தது என் பதையே ஆங்கிலேயர் அனைவரும் மறந்தே போயினர். சோசருடைய கற்பனையிலே தீட்டப்பட்ட நூறண்டுப்போரின் கசப்பான உண்மைகளைப் பற்றிய நினைவுகள் அவர்களிடம் தோன்றவேயில்லை :-
“கழுத்தறுத்த முண்டங்கள் புதரிடையே பல்லாயிரம், கொலையுண்டே கிடந்தன. கொடும் நோயால் அன்றிக் கொடுங் கோலன் பயமுறுத்தி

ஆங்கில நாட்டினவுணர்ச்சி 35
எதிரிக்கு இரையாக்கிவிட்டரன். இடுகாடாய்த் தோன்றினவே மாநகர்கள் எல்லாம் ”. ஆனல் செகப்பிரியரின் காலத்தவர்கள் ஆங்கில நாட்டு வேளாண் படை வீரர்களைப் பற்றிப் பின் வருமாறு பெருமை பாராட்டி ώOTή :-
* கடந்த காலத்தில் எம் வேளாண் படைவீரர்களைக் கண்டு பிரான்சு தேசம் முழுவதுமே அஞ்சியது. அவர்கள் கனவான்கள் அழைக்கப் படுவதைப்போல “ எசமானன்” என்றே, நைற்றுக்கள் அழைக்கப் படுவதைப் போல “ ஐயா ’ என்றே அழைக்கப்பட்டிலர் ”. எனினும் அவர்கள் நல்ல சேவை செய்தவர்களாகவே காணப்படுகின்றனர். பிரெஞ்சு அரசர்கள் எப்பொழுதும் போர்க்களங்களில் தங்கள் குதிரைப்படையின் மத்தியிலேயேயிருந்து வந்ததுபோல், ஆங்கில அரசர்கள் தங்கள் காலாட் படையினராகிய இவர்களின் மத்தியிலேயே போர்க் காலத்திலிருந்தனர். இதிலிருந்து தங்களுடைய முக்கிய பலம் எங்கிருந்ததென்பதை அவ்வர சர்கள் காட்டினர்.
நூருண்டுப் போர்க்காலம் தொடங்கிக் கைத்தொழிற்புரட்சிக் காலம் வரையும் ஆங்கில நாட்டு வீர வேளாண் படையினரின் தனிச் சிறப்பியல் புகள் வீரியமுள்ள சத்தியாக, உயிர் கொடுக்கும் சத்தியாக ஆங்கில மக்களின் எண்ணங்களிலும் இலக்கியங்களிலும் அரசியல் வாழ்விலும் ஆழமாகப் பதிந்திதுள்ளன.
மத்திய காலத் தொடக்கத்தில் அயலிலிருந்த நகரம், கோட்டம், கிரா மம் ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு எதிராகவே பகைமை உணர்ச்சி இங் கிலாந்திற் சாதாரணமாகக் காணப்பட்டது. அயலாருடன் இணக்கமற்றி ருந்த ஆங்கிலேயரின் இப்பண்பு குறுகிய நாட்டுப் பற்றக மாறிப் பிரெஞ்சுக் காரரை அல்லது இசுப்பெயின் நாட்டவரை உண்மையான “ அந்நியராக ’க் 'கருதச் செய்தது. சமீபத்தில் இங்கிலாந்திற்கும் சேர்மனிக்குமிடையே நடை பெற்ற போரைவிட இருபத்தைந்து மடங்கு நீடித்ததாகவும் ஆனல் அது போன்று தீவிரமற்றதுமான நூருண்டுப் போர் நடந்த வெறுக்கப்பட்ட காலப்பகுதியில் மக்களிடையே பர்விய எண்ணங்களினதும் உணர்ச் சிகளினதும் மனப்பாங்கு பிரெஞ்சு மக்கள் மேல் வெறுப்புக் கொள்ளு முகமாக எழுந்த நாட்டின உணர்ச்சியை வரையறுத்தது. துர கசு கிளின் என்பவர் காலத்திலே தெற்குக் கடற்கரையில் அழிவுகளை உண் டாக்கிய பகைவர்களின் தாக்குதல்களும் ஆங்கிலக் கப்பல்கள் மீது அவர்கள் நடத்திய வெற்றிகரமான தாக்குதல்களும் இவ்வுணர்ச்சியை அவர்களி டையே அதிகப்படுத்தின. பிரெஞ்சுக் காரருக்கு எதிராக எற்பட்ட இவ் வுணர்ச்சியானது யுத்தத்திற்குப் பின்னரும் நீடித்திருந்ததுமன்றி நோ மானியரது வெற்றியால் இங்கிலாந்தில் நிலைநாட்டப் பெற்ற பிரெஞ்சுப் பண் பாட்டிற்கு ஆங்கிலேயர் அடிபுணிந்து நின்றமைக்கு ஒரு முடிவு காணவும் உதவியது. இவ்வமயத்திலிருந்து தங்கள் தீவிற்கே உரியதானதும் வெடு வெடுப்பானதுமான, ஆங்கிலேயப் பொது மக்களின் தனித்து நிற்கும்

Page 186
352 ஆங்கில நாட்டினவுணர்ச்சி
பண்புபற்றி அந்நிய நாட்டினர் குறைகூறி வந்தனர். vIII ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில் வெனிசிய அரசியற்றுதர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார் :-
“ தங்களைத் தவிர வேறு மனிதர் இல்லையென்றும் இங்கிலாந்தைத்தவிர வேறு உலகம் கிடையாதென்றும் அவர்கள் எண்ணுகிறர்கள். அழகிய அந்நியன் ஒருவனை அவர்கள் காணுங்கால் “ அவன் ஒர் ஆங்கிலேயனைப் போல் தோற்றமளிக்கின்றன்” என்றே கூறுகின்றனர். “அவன் ஓர் ஆங்கிலேயனக இராமற் போனது வருந்தத்தக்கது’ என்றும் சொல்லு கின்றனர். ஒர் அந்நியனேடு அவர்கள் எதாவது அருஞ்சுவைப் பொருளை உண்ணும் பொழுது அப்பொருளை அவனுடைய நாட்டிலும் பெறக்கூடுமா ? என்றும் கேட்கின்றனர்”.
தியூடர் பருவத்தின் மத்திய பகுதியில் இங்கிலாந்துக்கு வந்த ஒரு பிரெஞ்சுயாதிகர் பின்வருமாறு எழுதுகின்றர் :-"இந்நாட்டு மக்கள் பிரெ ஞ்சுக் காரரைத் தங்களுடைய பழம் விரோதிகளாகக் கருதி அவர்களை வெறுக்கிருர்கள். அவர்கள் எப்பொழுதும் எம்மைப்பிரெஞ்சுப் போக்கிரி கள் என்றும் பிரெஞ்சு நாய்கள் என்றும் அழைக்கின்றனர்.”
இலிசபெத்து அரசியின் ஆட்சிக் காலத்தில் இவ்வுணர்ச்சிகள் இசுப்பெ யின் நாட்டவருக்கு எதிராகச் சிறிது காலமாகத் திருப்பப்பட்டன. எனினும் ஆங்கில நாட்டுணர்ச்சியிற் சிறிதளவு நல்லியல்பும் காணப்பட்டது. இலிச பெத்து அரசி இசுப்பெயினுடன் நடத்திய போராட்டம் உச்சிநிலையிலிருந் தபோது, செகப்பிரியர் தம் “ இழந்த காதல் முயற்சி” என்னும் நாடகத்தில் தொன் ஆமெடோ எனும் “போலி இசுப்பானியன்” பற்றிய நல்லகேலிச் சித்திரமானது, யுத்த காலத்தில் ஆங்கில மக்களின் மனப் பான்மையைப் சிறப்பிக்கின்றது.
ஆங்கிலக் கால்வாய்க்கு அப்பாலிருந்து தாங்கள் பெற்றிருந்த ஒவ் வொன்றையும் கைவிடவேண்டுமென்று ஆங்கிலப்பொது மக்கள் கொண்டி ருந்த உணர்ச்சியை மேல் வகுப்பினர் மிக மெதுவாகவே பின்பற்றலாயி னர். மேனட்டுக் கனவானுக்குரிய பண்புகள் உருவாகிக் கொண்டு வந்தனவேயன்றி இன்னும் முற்றிலும் உருவாகவில்2ல. நோமண்டி அஞ்செவின் பேரரசுகளை இங்கிலாந்து இழந்ததிலிருந்து, பிரெஞ்சு மொழி பேசும் மேல் வகுப்பினர் கடலுக்கப்பாலுள்ள தொடர்புகளினின்றும் நில வுடைமைகளினின்றும் துண்டிக்கப் பட்டுவிட்டனர். பிரான்சில் நிஜலயூன் றியிருந்த அவர்களது பண்பாடு இப்போது அயல் நாட்டுக்குரியதாக மாறி யது தெளிவாயிற்று. சோசர் என்பவர் “ பிறையோரெசு” என்னும் காவியத்தைத் தோற்றுவிப்பதற்கு ரூாறு ஆண்டுகளுக்கு முன்னல், ஆங் கிலக் கனவான்களின் வாயிலிருந்து வெளிவந்த கலப்புச் சொற்க?ளக் கேட்டுப் பரிசு நகரிலுள்ள பிரெஞ்சுக்காரர் நகைப்பது வழக்கமாயிருந்

ஆங்கில மொழியின் மீட்சி 353
தது. எனினும் 111 ஆம் எட்டுவேட்டின் ஆட்சிவரை ஆங்கிலக் கனவான் களின் அன்றட மொழியாக இக்கலப்பு மொழியே இருந்து வந்தது. அன்றியும் இனப்பகையின்வழி வளர்ந்த போரின் இயல்பு பிரெஞ்சு மொழியை விரோதியின் மொழியாகக் கருதுமாறு கட்டாயப்படுத்திய காலம் வரை, பிரெஞ்சு மொழிபேசுவது ஒரு கனவானுக்குரிய கிறப்பிலக் கணமாகக் கருதப்பட்டது.
பொயிற்றியசு யுத்தத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப்பின்னர் பிரெஞ்சு மொழி “இம் மண்டிலத்தில் அதிகம் வழங்கப்படாத' மொழியாசையால், நீதிமன்றங்களில் எல்லாவழக்கு விவாதங்களும் தீர்ப்புக்களும் ஆங்கிலத் திலே நடத்தப்பட்டு இலத்தீன் மொழியில் எழுதப்படவேண்டுமென இக் காலம் தொடக்கம் பாராளுமன்றத்தில் ஒரு நியதிச்சட்டம் நிறைவேற் றப்பட்டது. “வழக்கறிஞர் தங்கள் தாய் மொழியிலேயே வழக்கை வாதா டல் வேண்டும் ’ என்று அச்சட்டத்தில் சொல்லப்டட்டிருந்தது. “ அவர்களு டைய தாய்மொழி’-இதிலேயே ஒரு முக்கியமான புதிய கருத்துப்போக்கு உருவாயிற்று. தொடக்கத்தில் இச்சட்டத்திற்கு மக்கள் பூரணமாகக் கீழ்ப் படியாவிட்டாலும் விரைவிற் கீழ்ப்படியலாயினர். எனினும் பழைமைப் பற்றளரான வழக்கறிஞர் தங்கள்முன்னேர் நீதிமன்றத்தில் வழக்குரைத்த சட்ட மொழியாகிய பிரெஞ்சு மொழியிலேயே தங்கள் ஆவணங்களையும் நெடுங்காலமாக எழுதினர்.
பள்ளிகளில் வழங்கப்பட்ட போதன மொழிபற்றி இதனினும் முக் கியமான அடிப்படையில் ஒரு புரட்சிகிளம்பியது. எத்திஞ்சு வெற்ற்க் குப் பின்னர் ஒரு போதும் இருந்திருக்காத முறையில் கற்றவர்களும் மேல் வகுப்பினர்களும் பேசும் மொழியாக மறுபடியும் ஆங்கில மொழி அமைந்தது :- A.
1385 ஆம் ஆண்டில், திறிவிசா நாட்டு யோன் பின்வருமாறு எழுது கின்றர் நோமானியர் இங்கிலாந்துக்கு வந்தது முதல் மற்ற எல்லா நாடு வின் பழக்க வழக்கங்களுக்கும் மாருகப பள்ளிகளில் உள்ள மாண வர்கள் தம்சொந்த மொழியைக் கைவிடும்படியும் பிரெஞ்சு மொழியிலே தம் பாடங்களையும் தொழில்களையும் நடத்திக் கொள்ள வேண்டுமென்றும் கட்டாயப் படுத்தப்பட்டு அவ்விதமே நடைபெற்றது. கனவான்களின் குழந் தைகள் தொட்டிலில் துங்கும் பருவத்திலேயே பிரெஞ்சு மொழி பேசு வதற்குக் கற்பிக்கப்பட்டனர். 1349-ஆம் ஆண்டில் எற்பட்ட கருங் கொள்ளை நோய்க்கு முன் இவ்வழக்கம் அதிகமாக இருந்தது. ஆனல் பிறகு இவ்வழக்கம் சிறிது மாறுதலடைந்தது. யோன்கோண்வேல் என்ற இலக் கண ஆசிரியர், பிரெஞ்சு மொழியின் அமைப்பையும் இலக்கண விதிகளை யும் ஆங்கிலத்தில் அமைத்தார். அவரிடமிருந்து அப்போதன முறையை இரிச்சாட்டு பென்கிரிச்சு என்பவர் கற்றுக் கொண்டார். பென்கிரிச்சு என்பவ ரிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொண்டனர். ஆதலால் கி. பி. 1385.

Page 187
354 ஆங்கிலமொழியின் மீட்சி
ஆம் ஆண்டில் 2-ஆம் இரிச்சாட்டு மன்னன் காலத்தில் நைன் எனுமிடத் திற் கிடைத்த வெற்றிக்குப் பின்னர் இங்கிலாந்திலுள்ள எல்லா இலக்க ணப் பள்ளிகளிலும் குழந்தைகள் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு ஆங்கிலத்திலே பேசவும் எழுதவும் தெரிந்து கொண்டார்கள். இதனல் இலக்கணம் படிப்பதற்கு வழக்கமாகச் செலவிடப்படும் காலத்தைவிடக் குறை ந்த காலத்திற் படிக்கக்கூடியதாயிருந்தது. இதல்ை ஏற்பட்டக் பிரதிகூலம் என்னவென்றல் இலக்கணப் பள்ளிகள் பிரெஞ்சுமொழி கற்பிப்பதை அறவே ஒழித்துவிட்டன. ஆதலால் அம்மாணவர்கள் கடல் கடந்து அந் நிய நாடுகளுக்கும் மற்றும் பலவிடங்களுக்கும், போக நேரிட்டபொழுது மிகவும் துன்பப்பட்டனர். அன்றியும் கனவான்கள் தங்கள் குழந்தை களுக்குப் பிரெஞ்சு கற்றுக் கொடுப்பதைப் பெரிதும் நிறுத்திவிட்ட ଭୌ0 tit.' Y
இவ்விதமாக யோன்கோண்வேல், இரிச்சாட்டு பென்கிரிச்சு ஆகிய ஆசிரி யர்கள் தங்களுடைய நூற்றண்டிலிருந்த சோசர், விக்கிளிபு ஆகிய வர்களுக்கும், பிற்காலத்தில் தோன்றிய செகப்பிரியர், மிலிற்றன் ஆகியவர் களுக்கும், இங்கிலாந்தில் ஏற்பட்ட மதச் சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகிய இயக்கங்களுக்கும், பிரெஞ்சுப் பண்பாட்டின் ஒரு வடபாற்கிளையென அமையாது அதனினும் மாறுபட்டதான ஆங்கில நாட்டினவாழ்க்கை, இலக்கியம் ஆகியவற்றின் முழுவளர்ச்சிக்கும் வழிவகுத்துவைத்தனர். நிகழ்ச்சி எழுதுவோனுல் தற்செயலாகக் குறிக்கப்பட்ட இந்நற் செய்திகள் மகாபட்டயத்தையோ சுதந்திரப் பிரகடனத்தையோ விட மிகவும் முக்கிய மானவை என்று சிலர் கருதுகிறர்கள்.
ஆங்கில மொழி உருவாகிய காலமாகிய நோமானியரது வெற்றிக்குப் பிற்பட்ட நூற்றண்டுகளில், அம்மொழியானது படித்தவர்களினலும் கன வான்களினலும் புறக்கணிக்கப்பட்டு, சட்சணிய மயிர்க்கொட்டிக்கும் சோ சரது வண்ணுத்திப்பூச்சிக்குமிடைப்பட்ட கூட்டுப்புழுப் பருவத்திலிருந்த காலத்தில் அம்மொழி பேச்சு வழக்கிற் பல திசை மொழிகளாகப் பிரிந் திருந்தது. அவற்றுள் வெசெட்சு, நோதம்பிரியா, கிழக்கு மேற்கு மிதுலந்துத் திசைமொழிகள் முக்கியமானவையாகும். அல்பிரட்டு மன்னன்
* குறிப்பு :-ஏறக்குறைய 1875-ஆம் ஆண்டிலிருந்த மொழி சம்பந்தமான நிலையை வில்லி யம் நாசிங்தன் என்பவர் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிருர் :-
* நீதி மன்றங்களில் தொழில் புரிபவரும் அதனல் வாழ்க்கையை நடத்துகின்றவர்களு மாகிய சிலர் பிரெஞ்சு மொழி பேசுகிருர்கள். ஆனல் அவர்களுக்கு இலத்தீன் மொழி தெரியாது. சிலர் இலத்தீன் மொழியைச் சிறிது பேசுகிருர்கள் ; சிலர் பிரெஞ்சு மொழியை முற்றிலும்-ஆனல் பேச்சுவழக்கில் உள்ளதைப் போன்று-பேசுகிருர்கள். இலத்தீனும் பிரெஞ்சும் தெரியாத சிலர் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளுகிறர்கள். ஆனல் கற்றேரும் கல்லாதவரும், வயோதிபரும், வாலிபரும் ஆகிய எல்லோருமே ஆங்கில மொழியைப் புரிந்து கொள்கிறர்கள்.

ஆங்கில மொழி 355
காலத்தில் வெசெட்சிற் பேசப்பட்ட ஆங்கிலத்திசைமொழியே அரசாங்க மொழியாக இருந்தது. ஆனல் நோமானியர் வெற்றியானது அம்மொழி யைக் குடிசை வாழ் மக்களுக்கும் கமத்தொழில் செய்வோருக்கும் என்று மே உரியதாக ஒதுக்கிவிட்டது. இன்றைய ஆங்கில மொழியின் முன்னேடி யாக இங்கிலாந்திற் கீழ்மிதுலந்தில் பேசப்பட்ட மொழியே ஏனைய மொழிப் பிரிவுகளை எல்லாம் வெற்றி கொண்டது. அதற்கொரு காரணம் அம்மொழி இலண்டன், ஒட்சுபோட்டு, கேம்பிரிச்சு ஆகிய இடங்களிற் பேசப்பட்டு வந்ததாகும். பிற காரணம் சோசர் பல பிரெஞ்சுப் பதங்களைச் சேர்த்து அம்மொழிப் பிரிவை வளப்படுத்தியதும், விக்கிளிபு இலத்தீன் விவிலிய நூலிலிருந்து பல சொற்களைச் சேர்த்து அதனை வளப்படுத்தியதுமாகும். இவ்விருவரும் இம்மொழிப் பிரிவையே அதி கமாக உபயோகித்துத் தம்மைப் பின்பற்றக் கூடிய அறிஞ்ர்கள் தோன்று வதற்குக் காரணமாயிருந்தனர். அவர்களுடைய எழுத்தோவியங்களும் மொழி பெயர்ப்புக்களும் சொற்ப காலத்திற்குக் கையெழுத்துப் பிரதி களாகவே மக்களிடை வழங்கப்பட்டு வந்தன. 15-ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் யோக்கு வமிச அரசர்களின் பேராதரவில் காசுற்றணின் அச் சியந்திரம் ஏற்பட்டது. இதல்ை சோசரது நூல்கள் மக்களிடையே பர்வி யதுமன்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அதேவகையான பல்வேறு நூல்களும் நாட்டிலே பரவலாயின.
வாசிக்கத் தெரிந்தவர்களான ஆண் பெண் அனைவருக்கும், திரெந்து, அவொன் நதிகளுக்கு அப்பால் கற்றறிந்தோரெனக் கருதப்படுமாறு விரும்பியவர்களுக்குங் கூட ஏற்றதான ஒரு புதிய நிலை ஆங்கில மொ ழிக்கு ஏற்பட்டது. எற்கனவே “அரசமொழி’ என்று கருதப்படுமளவுக்கு அமைந்த ஆங்கில மொழிப்பிரிவில் தியூடர்கள் காலத்தில் எழுதப்பட்ட விவிலியநூலும், வழிபாட்டு நூலும் இதற்கு முன் எக்காலத்திலும் எந்நூலும் பரவியிராத அளவுக்கு நாடெங்கும் பரவியதுடன், அவை தனிச்செல்வாக்குப் பெற்று அம்மொழிப்பிரிவின் தரத்தைத் திட்டமாக நிலை நாட்டவும் செய்தன. சோசர் முதல் இலிசபெத்து வரையுள்ள இரு நூற்றண்டுகளில் இங்கு கூறப்பட்ட இம் மொழிப்பிரிவானது மக்களாற் பேசப்பட்டும் எழுதப்பட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாகச் சொல்லாற்றலும் எழுத்தழகும் பெற்று மறுமலர்ச்சி யுகத்தின் மகிழ்ச் சியையும் அறிவுப் பொலிவையும் வெளிப்படுத்துகின்ற இலத்தீன் மொ ழிச் சொற்களால் வளம் பெற்று, செகப்பிரியரின் வளமார்ந்த கைகளால் நிறைவாக்கப் பெற்றும் வந்தது. அவருடைய காலத்திலிருந்து அம் மொழி, விஞ்ஞான உண்மைகளைக் கூறும் ஆற்றலதிகரித்தும், கவி, இலக்கிய பண்புகளிற் குறைந்தும், மக்களின் மனவெழுச்சிக்கும் வாழ் க்கை முறைக்கும் ஏற்றபடி அமைந்துள்ளது.

Page 188
அத்தியாயம் VII
கருங்கொள்ளை நோய்-பண்ணைத் தொழிலாளரின்விடுதலை. தொழிலின் உறுதியின்மை. 1381 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி-திருச்சபையும் பொது மக்களும் - விக்கிளிபு என்பவரும் உலொல்லாடியமும்.
மச்திய காலத்து ஆங்கிலக் கிராமமக்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி முன்பு ஒர் அதிகாரத்திற் படித்தோம். தொழில் விடயமாய் அவர் கள் தன்னிறைவு உள்ளவர்களாயிருந்தார்கள் என்றும் அவர்கள் வறு மையால் வாடினர் என்றும், அடிக்கடி அவர்கள் பஞ்சத்தால் தவித் தார்கள் என்றும், அதற்கு வேலையின்மை காரணமல்ல என்றும் பார்த் தோம். கிராமத்தின் காட்டு எல்லைகளுக்கப்பால் அவர்களுக்கும் வெளி உலகுக்கும் எவ்வாறு தொடர்பு இல்லாமலிருந்தது என்றும், அவர்களு டைய நிலப்பிரபுவே வெளி உலகுடன் அவர்களது சொந்த அலுவல் களுக்காகவும் தேவைகளின் பொருட்டும் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் பார்த்தோம். கிராமங்கள் தம்முடைய சாதாரணத் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து வந்தன. கிராம வாழ்க்கைக்கு அவசியமான மாவ ரைப்போர், கொல்லர், நூல் நூற்போர் யாவரும் கிராமத்திலேயே வாழ்ந் தனர். மரபு முறைமையை அனுசரிக் தே கிராமமக்கள் தங்களுக்குச் சொந் தமான சிறுச்சிறு துண்டு நிலங்களை உழுது பயிரிட்டு வாழ்ந்ததோடு மேய்ச்சல் நிலங்கள் தரிசுநிலங்கள் ஆகியவற்றின் பொதுவான உரிமை களிற் பங்குபற்றியும் வந்தனர் என்று அறிந்தோம். ஒரு கிராமமானது ஒரு பண்ணையாகவே கருதப்பட்டு வந்தது ; அப்பண்ணையின் பிரபு அக் கிராமத்திலோ வேறு ஊரிலோ வாழ்கின்றவராகவோ ஆன்மீகச் சார்பு உள்ளவராகவோ, அற்றவராகவோ இருந்தனர். பண்ணைப் பிரபுவிற்கும் கிராமத்தின் பெரும்பான்மையினரான பண்ணைத் தொழிலாளர்க்கு மிடையே எவ்விதத் தொடர்பு நிலவி வந்தது என்றும் கண்டோம். பண்ணைத் தொழிலாளிகள் கட்டாயமாகப் பண்ணை முதலாளியின் நிலங் களில் வேலை செய்யயுமாறு வற்புறுத்தப்பட்டு வந்தனரென்றும், பண்ணை முதலாளியின் நிலங்கள்யாவும் பண்ணை அமீனுக்களின் மேற்பார்வையில் பயிரிடப்பட்டு வந்தன என்றும் கண்டோம்.
சில சில மாறுதல்களோடு நிலமானிய ஐரோப்பா முழுவதும் நிலவி வந்த இம் முறைமை, கிறித்துவ ஐரோப்பாவின் ஒற்றுமைக்கு ஒரேவித சமய அனுட்டானங்கள் எவ்வாறு சேவை செய்தனவோ, அவ்வாறே சேவை செய்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டான், அடிமை என்ற இரு "தூண்களின்’ மேலே சமுதாயம் என்னும் கட்டுக் கோப்பு ஊன்றி
356

பிரபுவும் அடிமையும் 357
நின்றது. அவ்விரு சாராரின் வாழ்க்கையும் மனப்பாங்கும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகவே இருந்துவந்தன. மத்தியகால இறுதி யிலே இந்நிலைமையில் மாறுதல்களும் வேறுபாடுகளும் எற்பட்டன. இதற்குக் காரணம் அக்காலத்தில், வேளாளர்களும், கட்டுப்பாடற்ற தொ ழிலாளிகளும், வினைத்திறனும் புத்திசாலித்தனமும் படைத்த எராளமான மத்திய தரவகுப்பினரும் தோன்றியமையாம். பரிசு நகர மக்களுக்கும் இலண்டன் நகர மக்களுக்கும் வாழ்க்கையிற் பாரதூரமான வேற்றுமை காணப்பட்டது. தியூடர் கால இங்கிலாந்தின் வேளாளர்களுக்கும் வலோய் வமிசத்தவரின் ஆட்சிக்காலப் பிரெஞ்சு நாட்டு உழவருக்குமிடையே அதிக வித்தியாசம் நிலவியது. எனவே நிலமானியமுறைமையால் ஏற்பட்டிருந்த பழையஐரோப்பாவின் ஒருமைப்பாடானது கடைசியில், தனிப்பட்ட பண்பு களைக் கொண்ட பல நாடுகளாகப்பிரிபட்டது.
பண்ணை முறைமையானது இங்கிலாந்தை இருண்ட ஊழியினின்றும் வெளியே இட்டுச் சென்றது. பயங்கரமான காடுகளை மக்கள் தம் வயப் படுத்தவும் பூமியைத் தம் ஆணைக்குட்படுத்தவும் அங்கே குடியேற்றம் நிறுவவும் இம்முறைமை மிகவும் உதவியது. மிருக பலம் ஓங்கியிருந்த அக்காலத்தில் வழக்கம் என்ற கேடயத்தின் பின் வலிமையற்றிருந்த கிராம மக்களை இம் முறைமை பாதியடிமை என்ற நிலையில் வைத்திருந் தாலுங்கூட, ஒரு விதத்தில் அவர்களைப் பாதுகாத்தே வந்தது. இம்முறை மையானது நிலைபேருன சமாதான வாழ்வை மக்களுக்கு அளித்தது எனினும், முன்னேற்றத்தைத் தடை செய்ததுடன் சுதந்திரத்தையும் மறுத் தது. ஆங்கில வரலாற்றில் இப்பண்ணை முறைமை அதிகபங்கு கொண் டிருந்தது. எனினும், கடைசியில் அதன் செல்வாக்கு முடிவுற்றுப் போனது.
பதின் மூன்றம் நூற்றண்டின் இறுதிக்கு முன்னரே பின் வரவிருக் கும் மாறுதல்களுக்கான முன்னறிவிப்புக்கள் தோன்றலாயின. பிரபுக் களும் அவர்களின் அமீனுக்களும், பண்ணையாட்களை வற்புறுத்திக்கட்டாய வேலை பெறுவதற்குப் பதிலாக ஒரு பென்னியோ அரைப்பென்னியோ குத் தகைவரியாக வாங்கிக் கொள்வது அதிக வசதியானது என்று கண்டனர். ஆனல் இவ்வித மாறுதலுக்குட்பட்ட பண்ணைத் தொழிலாளி சட்டப்பிரகாரம் சுதந்திர மனிதனுகக் கருதப்படவில்லை. அவன் அனேக சந்தர்ப்பங்களில் நிலத்தோடு இறுகப் பிணைக்கப்பட்டேயிருந்தான் எனலாம். மேலும் இம் மாறுதல் நிலப்பிரபு விரும்பினல் மாற்றத் தக்கதாகவே அமைந் திருந்தது. பதினன்காம் நூற்றண்டின் முற்பகுதியில் கட்டாய வேலை யிலிருந்து கூலிக்கு வேலை என்னும் மாற்றம், அமைதியான முறையில் சில இடங்களில் தொடர்ந்து, எற்படலாயிற்று. ஆனல், பழைய முறைமை எங்கும் பரவலாக இல்லையெனினும், சில இடங்களிலாவது நிலவியே வந்தது. இவ்வமயத்தில் 1348-ஆம் ஆண்டு முதல் 1349-ஆம் ஆண்டு வரை மிகப் பயங்கரமான ஒரு பேரழிவு இந்நாட்டில் எற்பட்டது.

Page 189
358 கருங்கொள்ளை நோய்
மக்களால் இன்னும் நன்றகக் கண்டுணரப்படாமலிருந்த கீழ்த்திசை நாடுகளிலே தோன்றிய இக்கருங் கொள்ளை நோயானது முதன்முறை யாக ஐரோப்பாக் கண்டத்தினுள் நுழைந்த காலை பொக்காசியோ, புருே யிசாட்டு, சோசர் முதலிய அறிஞர்களின் சகாக்களில் மூன்றில் ஒரு பகுதியினரை-என் இரண்டிலொரு பகுதியினரை-கொள்ளை கொண் டுவிட்டது. அதன் முதல் வருகையே எங்கும் பரவக் கூடிய விதமாய் மிகக் கடூரமாய் இருந்தது. தேசத்தின் மூலை முடுக்குக்களில் ஒதுங்கிக் கிடந்த குக்கிராமங்களிலும் இதன் பயங்கர ஆட்சி நிலவியது என்பதை அக்கிராமக் கோயில்களின் குருமாரின் ஆவலியில் இருவரின் பெயர் மட்டுமே அவ்வாண்டிற் காணப்பட்டதிலிருந்து நாம் அறிகிருேம். சில கிராமங்களும் குக் கிராமங்களும் தரை மட்டமாயின ; அங்குள்ள மக்கள் அனைவருமே மாண்டொழிந்தனர். 1349-ஆம் ஆண்டிற் குளிர் காலத்தில் இந்நோய் ஒருவகையாய்ப் பரவவொட்டாதபடி தடுத்து நிறுத்தப்பட்ட தென்னும், இங்கிலாந்திலே இந்நோய் நிலைத்து நின்று, சுகாதார வசதி யற்ற நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றகப் பின்னுந் தோன்றியது. பிற்காலத்தில் II ஆம் சாள்சு மன்னன் ஆட்சியிற் பரவிய “இலண்டன் கொள்ளை நோயும்’, இலங்காத்திரியன், தியூடர், சுதுவாட்டு மன்னர்கள் காலத்துத் தலைநகரமான இலண்டன் மாநகரத்தையே மயானத்தோற்ற மடையச் செய்த வேறு சில கொள்ளை நோய்களும் இக்கருங்கொள்ளை நோயின் சிற்றத்திற்குப் பிற்பட்டவையேயாம். அந்நோய்களைச் சிறப்பித்துக் கூறுவதற்கு இடிவோ போன்ற ஒருவர் இருந்ததில்லை. ஆங்கில மக்களின் மூதாதையர்களுடைய குறுகிய வாழ்க்கையிலும் சுகாதார வசதியின்றி அழுக்கடைந்த வீதிகளிலும் கொள்ளைநோய் என்ற கருமேகம் எப்பொழுது மே சூழ்ந்திருந்தது. அறுவடைக்குறைவினல் உண்டான பஞ்சத்தைத் தொ டர்ந்து அடிக்கடி இத்தகைய கொள்ளைநோய் வந்து கொண்டேயிருந்தது.
இக்கொள்ளை நோயின் கொடிய விளைவின் பயனுய் II ஆம் எட்டுவேட்டு மன்னன் காலத்தில் மக்கள் தொகை பதினறு மாதங்களில் நாற்பது இலட்சத்திலிருந்து இருபத்தைந்து இலட்சமாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து வகுப்புக் கலவரங்கள் தோன்றலாயின; பண்ணைத் தொழி லாளரின் விடுதலைக் கிளர்ச்சியும் வலுவடைய ஆரம்பித்தது. வாழ்க்கைத் தரத்தில் மெதுவான மாறுதல்களையே வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில், தொழிலின் சந்தைப் பெறுமதி ஒரேயடியாய் இரு மடங் காகத் திடீரென்று உயர்ந்துவிட்டது. இதனுல் இருவித விளைவுகள் நேர்ந்தன. எலவே கட்டுப்பாடற்றுத் தொழில் செய்துவந்த தொழிலாளி அதிக வேதனம் கோரி வேலை நிறுத்தம் செய்தான். அதே அமயத்தில், கட்டாய சேவைக்குட்படுத்தப்பட்ட சுதந்திரமற்ற பண்ணைத் தொழிலாளி, அமீனுக்கள் சட்டப்படி கோரிய வழமைச் சேவைகளை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தான் இச்சேவை இரு கட்சியினருக்கும் இப்பொழுது அதிகப் பெறுமதியுள்ளதாயிருந்தது. அதுவுமன்றி, தனக்குப் பூரண சுதந்திரம்

மாறும் உலகம் 359
வேண்டுமென்றும், தான் விரும்பிய இடத்தில் வேலை செய்ய உரிமை வேண்டுமென்றும், அரசனுடைய நீதிமன்றத்திலே தன்னுடைய பண்ணை முதலாளியைக் கூட எதிர்த்து வழக்காடும் உரிமை வேண்டுமென்றும், அவர் தன்னிடமிருந்து பெறும் நிலமானியக் கடன்களிலிருந்து விடுவிக்கப் பட வேண்டுமென்றும் நாளடைவிற் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தான்.
மேற் கூறிய காரணங்களால், பிரபுக்கள், அவர்களுடைய அமீனுக்கள் ஆகியவர்களின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பினது போலாகிவிட்டது. அவர்கள் ஆட்சிக்குட்பட்ட நிலங்களிற் பாதியும், குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களிற் பாதியும் கமம் செய்யப்படாமற் கிடந்தன. நிலங்களிற் புல்லும் புதர்களும் வளர்ந்தும், உழவர் இறந்து கிடக்க, வெறுமனே கிடந்த குடிசைகளின் கூரைகள் விழுந்துமிருந்தன. எஞ்சியுள்ளவர்கள் சட்டத்தையும் வழமையையும் எதிர்த்து வெளிப்படையாகவே குழப்பம் செய்யத் தொடங்கினர். உலகமே முடியப் போகிறது போலத் தோன்றியது. இந்நிலையிலுங் கூடக் கொள்ளைக்கும் இலாபத்திற்கும் ஆதாரமாகக் கருதப் பட்ட பிரெஞ்சுயுத்தம், ஆட்சியாளரால் நிறுத்தப் படவில்லை. உலக சனத் தொகையில் பாதி கூடக் குறையவில்லையே என்ற எண்ணத்தினற் போலும், கிரெசி யுத்தத்தின் பின்னும் பொயிற்றியேசிலும் யுத்தம் தொடர்ந்து நடந்தது.
விவசாய நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றி நிலப்பிரபுக்கள் தங்கள் இக்கட்டுக்களை ஒருவாறு புத்திசாலித்தனமாகச் சமாளித்துக்கொண்ட னர். அதற்குப்பின் நூறு ஆண்டுகள் வரைக்கும், அதாவது கருங் கொள்ளைநோயினுற் சனத் தொகையில் ஏற்பட்ட குறைவுபாடு நிரம் பும்வரைக்கும், செம்மறி மேய்ப்பவர்களுக்கு இடங்கொடுப்பதற்காக விவசாயி களை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்த வேண்டிய நிலைமை நிலப்பிரபுக் களுக்கு ஏற்பட்டது. 1850 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இறப்பு, விவசாயிகளே அப்புறப்படுத்திவிட்டபடியால், “ கைவிடப்பட்ட கிராமங்களை ” மேய்ச்சல் நிலங்களாக மாற்ற வசதியாயிருந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆட்டுப் பண்ணைகளை விருத்தி செய்வது துன்பத்தில் உழலும் சமுதாயத் திற்கு இலாபகரமாயமைந்தது. பிளாண்டேசிலுள்ள தறிகளுக்கு வேண் டிய கம்பளி மயிரை ஏற்றுமதி செய்து வந்ததினலும், அதே அமயத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட துணி நெசவு வளர்ச்சியினலும், இத்தொழில்களில் உயர்ந்த பயிற்சி அளிப்பதற்காக மூன்றம் எட்டுவேட்டு மன்னரால் பிளாண்டேசிலிருந்து நெசவாளர் வரவழைக்கப்பட்டதினுலும், இங்கிலாந்தி லுள்ள ஆடுகளிடமிருந்துகிடைக்கக் கூடிய கம்பளி மயிர் முழுவதும் தேவைப் பட்டது. இவ்வாறக, நாட்டில் எற்பட்ட ஒரு நாட்டினப் பூட்கையும், தூரத்து நாடுகளிலுள்ள வணிகச் சந்தைகளும், பழைய காலக் கிராமப் பண்ணைகளின் குறுகிய பொருளாதார நிலைமையில் மாற்றத்தைப் புகுத்தி, அதை அபிவிருத்தி செய்ததுடன், விடுதலை பெற்ற அல்லது பண்ணையிலி ருந்து ஓடிவிட்ட பண்ணையாட்களுக்கு மாற்று வேலையும் அளித்தன.

Page 190
360 மாறும் உலகம்
துயருற்ற நிலப்பிரபுக்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இயற்கையாக இருந்தாலும், அக்கால நிலைமையின் போக்குடன் ஒத்துப் போகவில்லை. எனவே சட்டத்தின் மூலம் விலைவாசிகளையும், கூலிகளையும் நிர்ணயம் செய்யவும், அதிக வேதனம் கிடைக்கும் வேலைகளை நாடித தொழிலாளிகள் செல்வதைத் தடுக்கவும், பண்ணையாட்களுக்கு மென்மேலும் சுதந்திரம் அளிப்பதைத் தடை செய்யவும் முயற்சி யெடுக்கப்பட்டது. ஆனலும் இந்தச் சமூக பொருளாதார மாறுதல்களை நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுப்பதிலும், குறித்த நிலைமை நாடு முழுவதற்கும் பொதுவாக இருந்த வாற்றை நிலக்கிழார்கள் கருத்திற் கொண்டிருந்தனர்; எனெனில் பாராளுமன்றத்தினூடாக அவர்கள் சட்டங்களை இயற்றினர். கமத்தொழி லாளர் அலட்சியப்படுத்திய பழைய பண்ணைநிதிமன்றங்களிலிருந்து இவர்கள் சச்சரவுகள் இப்பொழுது பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப் பட்டன : மாநகர சபை அதிகாரிகளிடமிருந்தும், பண்ணை அதிகாரி வி டமிருந்தும் பொருளாதாரக் கட்டுப்பாட்டு அதிகாரங்களைப் பாராளுமன்றம் எலவே தன்னிடம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது-நாட்டை உருவாக்கும் இம்முறைமை இலிசபெத்து இராணி காலத்தில் முற்றுப் பெற்றது. அவப் பேருக, பாராளுமன்றத்தில் நிலச் சொத்துடைய பெருமக்களும் நகர்ப்புறத் தொழில் அதிபர்களுமே தனியாக அங்கம் வகித்தனர். இரண்டு வருடங் களுக்கு முன் வழங்கப்பட்ட அரச கட்டளைச் சட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் ஏற்படுத்திய தொழிலாளர் நியதிச் சட்டங்கள் நியாயமாகவே தோன்றின. கூலியையும் உணவுப் பொருள் ளின் விலைகளையும் பழைய நிலைமைப்படி நிர்ணயிப்பதற்கு அச்சட்டங்கள் முயன்றன. ஆனல் எந்தச் சட்டமும் ஒரு தொழிலாளிக்குப் பதிலாக இரு தொழிலாளரையோ, ஓர் அப்பத்துண்டுக்குப் பதில் இரண்டு அப்பத்துண்டுகளையோ உண்டாக்க முடியாது. பாராளுமன்றத்தின் எந்தச் சட்டத்தாலும் கருங் கொள்ளை நோயால் தோன்றிய தீமைகளை இல்லாமற் செய்யவோ அந்த யுகத்தில் எற்பட்ட உணர்ச்சியை அழிக்கவோ முடியாது. கூலியைச் சட்ட மூலம் கட்டுப்படுத்தினமையும், அடிமைத் தொழிலாளருக்குப் பூரண விடுதலை கொடுப்பதற்கிருந்த எதிர்ப்பும் ஒன்றுசேர்ந்து ஒரு பயங்கரப் போராட்டத்தை எழுப்பின. இப்போராட்டம் அந்நூற்றண்டின் முடிவுவரை நீடித்துக் குடியானவர்களின் புரட்சியில் கொண்டு வந்துவிட்டது.
பதினன்காம் நூற்றண்டில், கீழ்வகுப்பாரின் உணர்ச்சியிலும் மனே பாவத்திலும் எற்பட்ட மாறுதல்கள் மிகவும் முக்கியமானவையாகும். பேராசிரியர் இடேவிசு என்பவர் 111 ஆம் என்றியின் ஆட்சி முறையை கீழ்வருமாறு சுருக்கமாகக் கூறியுள்ளார். “மத்தியகால மக்களின் வாழ்க் கையில் ஏற்பட்ட முக்கிய வேறுபாடுகளில் மேல் வகுப்பாரிடத்திலே
1பேதா புட்னம் எழுதிய " தொழிற் சட்டங்களை நிறைவேற்றல் ” 1349-59 (கொலம்பியா பல்கலைக்கழகம், வரலாற்று ஆராய்ச்சிகள், 1908)

தொழிலாளர் இயக்கம் 36.
தோன்றிய அறிவு வளர்ச்சியும் அவர்களைவிடக் கீழான நிலையிலுள்ள மக்களின் குணபுல அமைதிப்பண்பும் போன்றவை மிகவும் குறிப் பிடத்தக்கனவாகும்”. ஆனல் II ஆம் எட்டுவேட்டின் ஆட்சிக் காலத்தில் இருந்த குடியானவர்களைக் “ குணபுல அமைதிப்பண்பு” உடையார் என்று சொல்லமுடியாதிருந்தது. அவர் விடம் காணப்பட்ட அறிவுத் துடிப்பு, தற்காலத்துத் தொழிலாளர் இயக்கசிதை நமக்கு ஞாபகமூட்டுகிறது. கிராமச் தொழிலாளர் சங்கங்கள் கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்கின்றன ; ஏக்கருக்கு நான்கு பென்சு குத்ததை கொடுத்தால் அதற்குப் பதில் தங்களுக்குச் சுதந்திரம் அளிக வேண்டுமென்றுபண்ணை யாட்கள் கேட்கினறனர் ; ஒவ்வொரு துறையிலுமுள்ள மக்கள் ஒருவரை யொருவர் ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் பின்வருமாறு வினவலாயினர் :
* ஆதாம் கமஞ் செய்ய எவாள்நுால் நூற்க
அப்போதிருந்த கனவான் யார் ?”
செயல் முறையிலும் வார்த்தையிலும் மேற் சொன்ன போராட்டம் கிறித்தவ அடிப்படையில் அமைந்திருந்த போதிலும், அரசாங்க அமைச்சர் களாகவோ, துறவி மட அதிபர்களாகவோ இருந்த திருச்சபை அதிகாரி களுக்கு எதிராக இப்போராட்டம் காணப்பட்டது. ஆகவே, ஆதிகால கிறித்தவ மதத்தின் சமத்துவக் கொள்கை அடிப்படையினல் தூண்டப் பட்ட இக்கிளர்ச்சி மத்தியகாலத்துத் திருச்சபையினதும் அரசினதும் முறை மையில் நம்பிக்கையிழந்தது. சில வறிய கோயிற் பற்றுக்குருக்களும், சில பண்டாரங்களும், வி.கிளியின் கொள்கை ளேப் பின்பற்றிய சில போதகர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தனர். ஆனல் விக்கிளிபு மட்டும் இரு கட்சிகளையும் ஆதரவோடு கண்டித்து ஒரு நடுநிலை நோக்கை மேற்கொண்டனர். இதே முறையில் சேர்மனியில் எற்பட்ட குடியானவர்களின் புரட்சியில், குடியானவர் வின் கட்சியில் மும்முரமாக உழைத்த உலூதரின் ஒருதலைச்சார்பான நடத்தையோடு ஒப்பிடுகையில், இவரின் கொள்கை சிறந்ததாய்த் தோன்றுகிறது.
இப்புதிய எண்ணங்களால் உந்தப்பட்டுக் குடியானவர்கள் தங்கள் விடுதலைக்கான புரட்சியைத் தொடர்ந்து நடத்தினர். கட்டுப்பாடற்ற தொழி லாளர் தங்களுக்கு வேதனத்தை நிர்ணயித்த சட்டங்களைக் கவனியாது
சாதாரண நிலப் பிரபுக்கள் செய்ததைவிட மிக விரைவில் பண்ணை அடிமைகளுக்கு சுதந்திரம் அளிக்கவேண்டுமென்ற விருப்பம் சந்நியாசமட அதிபர்களுக்கோ மற்ற மததாபன நிலப்பிரபுக்களுக்கோ எற்படவில்லை. வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களைப் போன்ற தன்மை யில் சுதந்திரம் விலைக்கு வாங்கப்பட்ட காலத்தில் தவிர முந்திய காலங்களில் பண்ணை யடி மைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதானது மததாபனத்தின் சொத்துக்களைக் கவர்ந்து கொள் ளும் குற்றமாகக் கருதப்பட்டது. தனிப்பட்ட பிரபுக்களைவிட சந்நியாச மடங்களைப் போன்ற கூட்டுத்தாபனங்கள் பண்ணையடிமைகளை மிகக் கொடுமையாக நடத்தாவிட்டாலும் பழமை யான கொள்கைகளையே கைக்கொண்டுவந்தன.

Page 191
362 1881 இற் கிளர்ச்சி
அடிக்கடி வேலைநிறுத்தங்கள் செய்தனர். இவ்வேலை நிறுத்தங்களால் எப்பொழுதும் அவர்கள் வெற்றி பெறவில்லை யெனினும், பெரும்பாலும் வெற்றி பெற்றனர். சொந்த நிலமில்லாதவர்கள் தங்கள் நியாயமற்ற கோரிக்கைகளை எற்கக் கூடிய பட்டணங்களுக்கும் பண்ணைகளுக்கும் அடிக்கடி குடிபெயர்ந்து சென்றனர். நல்லகாலங்களில் அவர்கள் செழிப்பு * பியேசு புளோமென்’ எனும் கவிதை நூலில் பின்வருமாறு வருணிக்கப்படுகிறது.
“ சரீர உழைப்பாலன்றிக் காணி உடைமையிலிருந்து தம் சீவனுேபா யத்தைக் கழிக்க இயலாத தொழிலாளர் இரவிற் சமைத்த கைப்புப் பூண்டை இன்று உண்ண மனங் கொண்டிலர், சிறு துட்டுக் கொடுத்து வாங்கிய குடிவகையோ பன்றி இறைச்சித் துண்டு ஒன்றே அவர்களுக்குத் திருத்தியளிக்கவில்லை.
புதிய மாமிசமோ, மச்சமோ பொரித்து அல்லது வேகவைத்துக் கொடுத்தால் அவர்களுக்குத் திருத்தியளிக்கும் ; இன்னேரன்னவற்றை மேலும் மேலும் உண்டு அவர்கள் தம் இரைப்பையை நிறைத்துச் சூடேற்றுவர். ஆகவே அதிகப்படியான வேதனத்துக்கு ஒரு தொழிலாளி அமர்த்தப்படல் வேண்டும்; இன்றேல் அவன் தன் பண்ணை எசமானனைக் கடிந்து கொள்வான்’.
தொழிலாளர் வருந்தும் படியான கடுமையான சட்டங்களைப் பிறப்பித்தால் அத்தொழிலாளி அரசனையும், அவ்வரசனுடைய அமைச்சர்களையும் சபிப் பான்; ஆனல் தொழிலாளர் நியதிச்சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகள், பொதுச் சந்தையில் அத்தொழி லாளரின் கூலி எவ்வளவுக்கு உயருமோ அவ்வளவுக்கு உயரவொட்டாது தடுப்பதில் அதிகமாக வெற்றிபெற்றனர்.
இதற்கிடையில், இன்னும் கமத்தொழிலிற் பிணைக்கப்பட்டிருந்த பண்ணை யாட்கள், தங்கள் பண்ணை முதலாளியின் நிலத்தில் ஊதியமின்றி வேலை செய்யத் தமக்குள்ள கடமையை மறுத்தோ வேலையில் தளர்ச்சி காட்டியோ வந்தனர். அவர்களிற் சிலர் காடுகளுக்குத் தப்பி ஓடி, பணக்காரத் திருச்சபையினரின் எதிரியும், ஏழைக் குடியானவர்களின் நண்பனுமாய் முன்னெருகாற் காடுகளில் திரிந்த “ உருேபின் ஊட்டு’ என்பவனின் அடிச்சுவட்டிலே, அவனுடைய கொள்ளைச் செயல்களைத் தொடர்ந்து நடத்துவதற்குக் காடுகளிலே தங்கிவிட்டனர். மற்றப் பண்ணையாட்களோ தூரத்திலுள்ள பண்ணைகளுக்குத் தப்பிச் செல்ல, அங்கே வேலை செய் வதற்குப் போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால் வர வேற்கப்பட்டு, கட்டுப்பாடற்ற தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர். ஆனல் அவர்க ளுடைய பழைய எசமானர் அவர்களைத் திரும்பவும் அடிமை வேலைக்கு இழுக்க முயற்சிசெய்ததுமன்றி, எங்கும் போகாமல் தங்கியிருந்த குடியான வர் களிடமிருந்து பழைய குத்தகைப் பாக்கிகளைச் சட்டத்தின் பலத்தால்

1881 இல் கிளர்ச்சி 363
வற்புறுத்தி அறவிடவும் தொடங்கினர். நிலப்பிரபுக்களுக்குச் சாதகமா யிருந்த வழக்கறிஞர், நடுவர் ஆகியோரின் செயல்கள், இப்புலமைசார்ந்த சட்டத் தொழின் மேலும், அத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட துணையாளர் கள் மேலும் மக்களை வெறுப்புக் கொள்ளச்செய்தன. எனவே 1381-ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற குடியானவர் கலகத்தில் அனேக நீதிபதிகளும் நடுவர்களும் அதன் பயனை அநுபவிக்கத் தவறவில்லை.
1881-ஆம் ஆண்டில் 11 ஆம் இரிச்சாட்டு என்ற அரசன் பிரெஞ்சு யுத்தத்தின் பொருட்டுத் தலைவரி என்ற ஒரு வரியை விதித்தான். இதனல் வழை மக்கள் மிகவும் பாதிக்கப்படடனர். மேலும் அந்த யுத்தம் வெற்றியைத் தரவும் இல்லை. எனவே அந்த யுத்தத்திற்குப் பொது மக்களின் ஆதரவும் இருக்கவில்லை. இவ்வரியினுற் கலகம் துரிதப்படுத்தப்பட்ட போதிலும் 1381-ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியான வர்களின் கலகத்திற்குக் காரணங்கள் சமூக சம்பந்தமானவையேயன்றி அரசியல் சம்பந்தமானவை,அல்ல எனலாம். II ஆம் இரிச்சாட்டின் தகுதி யற்ற அரசாங்கமும் மக்களால் வெறுக்கப்பட்டு இகழப்பட்டது. ஆனல் கிழக்கு அங்கிலியாவிலிருந்தும் மற்றும் நாட்டுப் புறங்களிலிருந்தும் இலண்டனை நோக்கிவந்த குடியானவர் படையினர், தங்களுடைய சொந்தக் குறைகளை நீக்கிக் கொள்ளுவதற்கும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்று வதற்குமாகவே கலகத்தில் ஈடுபட்டனர் எனலாம. கனவான்கள், வழக்கறி ஞர், பணக்காரத் திருச்சபையினர் ஆகியவர்களுடைய கொடுமையை எதிர்த்துப் போராடிய இக்கிளர்ச்சியை தூண்டிவிடடவர்கள், யோன்போல் என்பவரும் அவருடைய முகவர்களுமேயாவுர். கலகக்காரர் மிக முக்கிய மாகக் கோரியது என்னவென்றல், தாங்கள் நிலப்பிரபுக்களுக்குக் கட்டாய மாகச் செலுத்த வேண்டியிருந்த அடிமைத்தனமான கடமைகளைக் குறைத்து முழுவதும் எக்கருக்கு நான்கு பென்சு வீதம் குத்தகையைப் பெறல் வேண்டுமென்பதேயாம். அவர்களில் / அனேகர் திருச்சபைக்குச் சொந்தமாயிருந்த சொத்துக்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், காடுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி உபயோகிக் கும் அனுமதி எல்லோருக்கும் அளிக்கப்படல் வேண்டுமென்றும், வேட்டை யாடுவதற்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்கவேண்டுமென்றும், சட்டப்பிரட் டத்தை ஒழித்தல் வேண்டுமெனவும் கோரினர். சுருங்கக் கூறின், கல கத்தின் முன்னணியில் முக்கிய பங்குபற்றி நின்றவர்கள் அண்மைக் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை போன்ற ஒரு “ உருெபின் ஊட்டுத் ’ திட்டமாகும் அது.
இக்கலகம் மேல் வகுப்பினரைத் திடுக்கிடச் செய்தது. சில நாட்களாக மத்திய ஆட்சியிலிருந்தோ, தல ஆட்சியிலிருந்தோ எவ்வித எதிர்ப்பும் அதற்கு நேரவில்லை. கலகக்காரர் இலண்டன் நகருக்குள் நுழைந்தனர். பொது மக்களும், குடியாட்சி எண்ணமுள்ள சில நகர மூப்பர்களும் ஆதரவு அளித்தனர் ; பின் அவர்கள் தலை நகரைக் கைப்பற்றினர் ;
1381 யூன் மாதம் 13 ஆந் தேதி

Page 192
67 மாதம் 14 ஆம் தேதி
364 விடுதலை இயக்கம்
ஆட்சியே அவர்கள் கைக்கு வந்துவிட்டது. அப்போது அரசன் நகர்க்
கோட்டையில் வீற்றிருந்தான். அவனுடைய குடிமக்கள் அதனையும் முற்று கையிடச் சென்றனர். கடைசியில் நிலைமை ஒரு வழியாக-ஆனல் மிகவும் கீழ்த்தரமான வழியில்-சமாளிக்கப்பட்டது. மைல் எண்டு என்னும் இடத்தில் II ஆம் இரிச்சாட்டு மன்னனும் கலகக்காரரும் கூடிப் பேசினர். கலகக்காரரை மன்னிப்பதாகவும், அவர்களை அடிமை வாழ்வினின்று அகற்றுவதாகவும் அரசன் வாக்குறுதியளித்தான். ஆனல் அரசனுடைய ஆலோசகருக்கு அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமென்ற எண்ணமே இருக்கவில்லை. அரசசபை, பாராளுமன்றம், வழக்கறிஞர், திருச்சபை, நைற்றுக்கள் ஆகியவர்களிலிருந்து அரசன் வேறுபட்டவன் என நம்பிய மிதவாதிகளான ஒரு பகுதிக் கலகக்காரரை இலகுவில் எமாற்ற முடிந்தது. எனினும் உண்மையில் ஆங்கில அரசர்களின் எண்ண மும் செயலும் அவர்களின் எண்ணங்களோடும் செயல்களோடும் ஒருமைப் பட்டனவாகும்.
அரசனுடைய எழுத்தாளர்களால் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட மன் னிப்புப் பத்திரமும் விடுதலைப் பிரகடனமும் கிடைக்கப்பெற்ற பின், கலகக் காரரில் அனேகர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறியாமலே மகிழ்ச்சியுடன் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனல் இதற்கிடையில் மற்றவர்கள் நகர்க் கோட்டைக் கதவுகளை உடைத்து உட்சென்று கந்த பெரித் தலைமைக்குருவாகிய சட்பரி என்பவரைக் கோட்டைக் குன்றின்மேற் கொலை செய்தனர். ஏராளமான சனத்திரள் இக்கொடூரச் செயலை நேர் முகமாகக் கண்டு வெற்றி முழக்கமிட்டு ஆரவாரம் செய்தது. அரசனுடைய நிதி அமைச்சரும் பிரதம அமைச்சருமாக அவர் இருந்தமையே மக்களின் ஆவேசத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனல் தலைமைக்குரு என்ற அவருடைய புனிதத்தன்மை அவர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. இவ்வாறக, புனித உயிர்த்தியாகியான தோமசு பெக்கற்று என்னும் கந்தபெரித் தலைமைக்குருவின் கல்லறையின் முன் மண்டியிட்டுப் பிரார்த் தனை புரிந்த மூதாதையர்களின் வழிவந்த இந்த ஆங்கில மக்களுக்கும் திருச்சபைக்கு மிடையேயுள்ள தொடர்பு இவ்விதமான ஆழ்ந்த மாறுதலை அடைந்தது.
இலண்டனிலும் நாட்டுப்புறங்களிலும் இக்கலகத்தின்போது மேலும் பல கொலைகள் நடந்தேறின. ஆனல் இருபது வருடங்கட்கு முன்னற் பிரான்சு நாட்டில் எங்கணும் நடந்த படுகொலைகளைப் போன்று மேல் வகுப்பாரைக் கலகக்காரர் கொலை செய்யவில்லை. பிரான்சு தேசத்திற் கொடிய அவநம்பிக்கையின் அறிகுறியாகவே அக்கொலைகள் நடைபெற் றன. ஆனல் இங்கிலாந்தில் நடந்த இக்கலகமானது நம்பிக்கை, முன் னேற்றம் என்பவற்றிலிருந்து தோன்றியதாகவும் எலவே நாடிவந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தை துரிதப்படுத்துவதாகவும் அமைந்ததாகும்.
எனினும் புதிய இங்கிலாந்து பிறப்பதற்குரிய ஒரு நோவாகும் அது.

விடுதலை இயக்கம் 365
ஒழுங்கை நிலைநாட்டும் சத்திகள் ஒன்றன்பின் ஒன்ருகக் கையாளப் பட்டன. அரசனுடைய தலைமையில் மற்றெரு மகாநாடு சிமிதுமீல்டு என்னு மிடத்தில் நடைபெற்றது. குடியானவர்களுக்கு இதன் பயனய் மேலும் சலுகை எதுவும் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக இலண்டன் மாநகர முதல்வரால் வாற்று தைலர் என்ற கலகக் காரத் தலைவர்களி லொருவன் கொல்லப்பட்டான். உடனே கலகக் காரர் நானுபக்கமும் சிதறி ஓடினர். சற்று நேரம் அங்கு அடக்குமுறை தாண்டவமாடியது. ஆனலும் கலகம் பரவிக்கொண்டே தெற்கு யோக்குசயரிலிருந்து தென் மேற்குப் பகுதியிலுள்ள நாட்டுப்புறங்கள் வரைக்கும் சென்றது. எப்பொழுது கலகக் காரர் இலண்டனை விட்டுச் சென்றனரோ, அப்பொழுதே அவர்களின் அழிவும் நிச்சயமாயிற்று.
1881-ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்கலவரம் குடியானவர்களுக்குப் பூரண சுதந்திரம் அளிப்பதைத் துரிதப்படுத்தியதா தடைசெய்ததா என் பதைத் தெளிவாகக் கூறுவது கடினம். கலவரத்தின் உடனடியான பயனகப் பயங்கரமான கொடிய எதிர்த்தாக்க முறைகள் எடுக்கப்பட்டன. அவசியமான அமயத்திற் குடியானவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி களெல்லாம் காற்றிலே பறந்தன. கலகக்காரருக்கு அரசனுல் அளிக்கப்பட்ட மன்னிப்பு ஒரு கொடூர நீதிமன்றத்த ல் வெறுங்கேலிக் கூத்தாக்கப் பட்டது. ஆனல் ஆட்சியாளருக்கு இப்படிப்பட்ட பயத்தைக் கொடுக்கக்கூடிய மக்களை ஒரேயடியாக நசுக்கிவிட முடியாது. இக்கலவரத்துடன் 1830-ஆம் வருடத்தில் நடைபெற்ற குடியானவர்களின் புரட்சியையும் அதே காலத்தில் பீட்டர்லூ என்னுமிடத்தில் நடந்த தீக்கொள்ளையையும் ஒப்பிடும்பெழுது 1881-ஆம் ஆண்டுக் கலகம் வெல்லமுடியாத தொன்றகும். புரட்சித் தலைவனன திசில் உட்டு நகர்க் கோட்டையைக் கைப்பற்றப் போவதாகக் கூறினன்; ஆனல் யோன் போல் என்ற புரட்சித் தலைவன் அதைக் கைப்பற்றினன். எனெனில் பதினன்காம் நூற்றண்டிலிருந்த குடியான வன் ஆயுதங்களை உபயோகிக்கவோ அம்புகளை எய்யவோ அறியாதவ னல்லன். மேலும் குத்தகைக் காரராகிய விவசாயிகள் அவனுக்கு எதிராக விராது அவனை ஆதரித்தனர். அத்துடன் நகர்ப்புறங்களில் நடைபெற்ற கொந்தளிப்பான குடியாட்சியோடு அவனுக்கு நெருங்கிய தொடர்பும் இருந் தது. உள்நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக நடந்த போரில், நூற் ருண்டுப் போர்க்காலத்து நிலமானிய வகுப்பினர், கரிசில்றீ, வெலிந்தன் ஆகியவர்கள் காலத்து உயர்குடிமக்கள் பெற்றிருந்ததுபோன்ற அததகைய நேயர்களையும் அமைப்பு முறைகளையும் பெற்றிருக்கவில்லை.
1881-ஆம் ஆண்டில் நடந்த கலகம் தோல்வியுற்றமையால் அடிமை வேலைக்கு எதிராகத் தோன்றிய வேலை நிறுத்தங்களோ தொழிலாளர் குழப்பங்களே கலகங்களோ நிறுத்தப்படவில்லை. திருத்தியற்ற அக்குடி யனவரிடமிருந்து தங்கள் நிலங்களுக்குப் போதிய உழைபபைக் பெறுவ தற்கு நிலப்பிரபுக்களால் முடியவில்லை. இக்காரணமாகவும், அக்காலத்தி
யூன்
மாதம்
15 ஆந் தேதி.

Page 193
366 விடுதலை இயக்கம்
லேற்பட்ட பொதுப் படையான பொருளாதார நோக்குக் காரணமாகவும் நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களிற் பண்ணை வேலையாட்களைக் கட்டாய வேலை செய்யும்படி நிர்ப்பந்திப்பதை நாளடைவில் நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகச் சந்தை விற்பனைக்காக விவசாயம் செய்கின்ற கமஞ்செய்பவர் களுக்குக் குத்தகைக்கு விட்டு, அதன்மூலம், கட்டுப்பாடற்ற தொழிலாளரை வேலைக்கமர்த்துவதற்குப் பணம் பெற்றனர். நாட்டின் செல்வமும் குடி யானவர்களின் வருவாயும் உயர்ந்து வந்ததால், பல பண்ணைத் தொழி லாளர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து எளிதாகத் தங்கள் சுதந்திரக்தை அடைய வாய்ப்பு ஏற்பட்டது. அக்காலத்திலேற்பட்ட நாணயப் பெருக்கும் இந்நிலைமைக்கு வாய்ப்பளித்தது. இவ்வழியான சுதந்திரம் முக்கியமாகப் பதினைந்தாம் நூற்றண்டில் ஆரம்பித்துத் தியூடர்கள் காலத்தில் முற்றுப் பெற்றது. அரசனுடைய சட்டமன்றங்களில் ஏற்பட்ட மாறுதல்களும், அம் மன்றங்கள் காட்டிய ஆச்சரியமான தாராள மனப்போக்கும் கீழ்வ குப்பு மக்களுக்குச் சாதகமாகச் சட்டம் தளர்த்தப்பட்டதும் அச்சுதந்திரப் பேற்றைத் துரிதப்படுத்தின.
சுதந்திரம் பெற்ற பண்ணைக் குடியானவன் புதிய சமுதாயத்திற் பல பதவிகளைப் பொறுப்பேற்றன். அவன் சிறு நிலச் சொந்தக்காரணுகவோ, குத்தகைக்கோ வாரத்திற்கோ இலவசமாகவோ பிறர் நிலங்களைப் பயிரிடு வோனகவோ விளங்கினன் ; அல்லது அவன் கூலிக்கு அமர்த்தப்பட்டு வேலை செய்தோ, நகரங்களிலும் கிராமங்களிலுமுள்ள தொழிற்சாலைகளில் உழைத்தோ, யுத்த சேவைகளில் ஈடுபட்டோ, கடற்றெழில் செய்தோ சீவனுேபாயந்தேடலானன். அதே நேரத்தில் அவனைக் கிராமத்திலே தங் கும்படி செய்வதற்காக, கிராமப்புற வயல்களிலும் தரிசு நிலங்களிலும் அவனுக்குள்ள விலைமதிப்பற்ற உரிமைகளும் இருந்தே வந்தன. ஆனல் அவன் விரும்பினல் எங்கு செல்வதற்கும் அவனுக்கு உரிமை இருந்தது. “ உலகமே அவன் முன் திறந்து கிடந்ததால் எந்தவித வாழ்க்கையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியுமாயிருந்தது”. இக்கால ஆங்கிலேயர் இவ் வுலகிலும் ஆன்மீக உலகிலும் துணிவு வாழ்வை நாடுபவர்களாகக் காணப் பட்டனர். w
தொழிலாளர் வேண்டியாங்கு தம் தொழிலை மாற்றிக்கொள்ளற்கு எதுவாயமைந்த இவ்வாய்ப்பானது சமுதாயத்தின் பொருளாதார அடிப் படை அனைத்தையுமே மாற்றியது. அடிமைக் குடியானவர்களுக்கு அளிக்கப் பட்டு நிலையாக வரையறுக்கப்பட்ட உரிமைகள் கடமைகளிலிருந்து, போட்டி யும் நிச்சயமற்ற தன்மையுமுடைய வாணிகச் சந்தைக்கு மாறுதல் எற் பட்டும், தொழிலாளி முற்றிலும் நன்மையே அடைந்தானல்லன். கருங் கொள்ளை நோய்க்குப்பின்னுள்ள நூறு வருட காலங்களில் ஏற்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைவினல், அக்காலங்களில் தொழி லாளி உயர்ந்த விலைமதிப்புடையவனுயிருந்தான். ஆனல் 15 ஆம் நூற் ருண்டின் பிற்பகுதியிற் சனத்தொகை பழைய நிலைக்கு உயர்ந்ததும்

விடுதலையின் விளைவுகள் 367,
கூலி குறைந்தது. எனவே அக்கால ஆட்சியிற் பஞ்சம் மிக அரிதாகத் தோன்றியபோதிலும், மக்களின் சராசரி வாழ்க்கை நிலை உயர்ந்தபோதி லும், வேலையின்மையால் ஏற்படும் பயங்கரம் வெளிப்படையாகியது. தியூடர் களின் காலத்தில் “ வலிமையுள்ள பிச்சைக்காரர்’ தங்கள் விடுதலை யின்பத்தை அனுபவிக்கவில்லை. ஆங்கிலேய இனம் அடிமை நிலைமையை விட மேலான நிலைமையை அடையவேண்டுமேயானல், சனத் தொகையிற் பெருக வேண்டுமேயானல், செல்வத்திலும் அறிவிலும் ஓங்க வேண்டுமே யானல், கைத்தொழில்களிலும் கடற்றெழில்களிலும் முன்னேற வேண்டு மேயானல், சமுத்திரங்களுக்கப்பாலுள்ள நாடுகளில் அவர் தம் மக்களைக் குடியேற்ற வேண்டுமேயானல் பெரிய மாறுதல் எற்பட்டேயாகவேண்டி யிருந்தது. இக்கால இங்கிலாந்து, அமெரிக்கா, அவுத்திரேலியா ஆகிய நாடுகளில் விளங்கும் ஆதிக்கம், சுதந்திரம், முன்னேற்றம் முதலியவை, அடிமைக் குடியானவர்களை விடுதலை செய்வதாகிய ஒரு முன்னிபந் தனையைப் பொறுத்தே இருந்தன. தியூடர்கள், சுதுவாட்டுக்கள் காலத் திற் காணப்பட்ட இங்கிலாந்தின் அறிவு வளர்ச்சிக்கும், அரசியல் முன் னேற்றத்திற்கும், வியாபார வளர்ச்சிக்கும், பொருள் உற்பத்திக்கும் குடி யேற்ற அமைப்பிற்கும் இன்றியமையாத முன்னிகழ்ச்சியாக அக்காலத்தி லேற்பட்ட குடியானவர்களின் விடுதலையும் அதன் விளைவாகிய தொழிற் சுதந்திரமும் அமைந்திருந்தன.
I ஆம் யோட்சு அரசனின் ஆட்சிக் காலம்வரைக்கும் பழைய கிராமப் பொருளாதாரத்தின் ஓர் அமிசமே ஆங்கில மாவட்டங்களிலும் தொடர்ந்து நீடித்தது. இங்கிலாந்தின் மத்தியிலும் கிழக்கிலுமிருந்த கோதுமை விளை யும் பகுதிகளில், கிராமவயல் வெளிகளாக உள்ள ஒடுங்கிய நிலங்களில், பழைய ஆங்கிலேய-சட்சன் கால முறையைக் கட்டாயமாகப் பின்பற்றியே இன்னும் கமம் நடந்து வந்தது. பரவலாகக் காணப்பட்ட இம்முறை கண்டு ஆதர் இயங்கு என்பாரும் அவரைப் பின்பற்றிய “ முற்போக்குள்ள. நிலப்பிரபுக்களும்’ திடுக்கிட்டிருப்பர்.
குடியானவர்களின் விடுதலையும், ஆங்கில மொழி, இலக்கியம், நாட்டின உணர்ச்சி ஆகியவற்றின் தோற்றமும் 14 ஆம், 15 ஆம் நூற்றண்டுகளில் ஏற்பட்டன என்றல், அதே காலத்திலேயே இப்பெரும் இயக்கங்களுடன் கூடிய புதிய நாட்டின் தவிர்க்கமுடியாத தேவைகளை மத்திய காலத்தி லிருந்த உலகப் பொதுவான திருச்சபை பூர்த்தி செய்யத் தவறிய நிலை யும் எற்பட்டது.
அக்காலத்தில் ஒழுக்கம், அறிவு சம்பந்தப்பட்ட விடயங்களில் மனித சமுதாயத்திற்குத் தலைமைவகிக்கத் திருச்சபை தவறியதற்கு, முன்னை நாளிலுங் கூடிய அளவிற்கு அத்தாபனத்திலே தோன்றிய ஊழல்களும், திறமையின்மையும் எந்த அளவிற்குக் காரணமாகும் என்ற கேள்வி எழலாம். மதகுருக்கள் கீழான நிலைக்குத் தாழ்ந்ததிலும் பார்க்கப்
14-R 6344 (1262) •

Page 194
368 திருச்சபையும் மக்களும்
பொதுமக்கள் உயர் நிலையை அடைந்தனரென்பதே பொருத்தமாகும். நோமானியர் காலத்திலும், பிளந்தாசெனற்று வமிசத்தினர் காலத்தின் முற்பகுதியிலும் திருச்சபையானது மக்கள் உள்ளங்களில் மேலான ஆட்சி செலுத்திய அமயத்தில், மத குருக்கள் எல்லோருமே, தற்காலத்து ஆங்கிலேய புரட்டசுத்தாந்து, அல்லது கத்தோலிக்க குருமார்களோடு ஒப் பிட்டு நோக்கின், மிக்க அறிவீனர்களாகவும், வாழ்க்கையிற் பெரும்பாலும் ஒழுங்கற்றவர்களாகவுமே இருந்தனர் என்று சொல்லலாம். விருப்பமில் லாத ஆங்கில குருக்களின் மீது, இல்டர்பிராண்டு என்னும் போப்பரசரின் காலத்தில் எற்பட்டிருந்த மணமாகாத் துறவு வாழ்க்கையை வற்புறுத்து வதற்குத் திருச்சபை போதிய பலமற்றதாக இருந்தது. ஆனல் அந்த நாட்களிற் பொதுமக்கள் மதகுருக்களைவிட மிக்க அறிவீனர்களாகவும் கூடிய முரட்டுத்தன்மையுடையவர்களாகவும் இருந்ததுடன் அவர்களைவிட அதிக ஒழுக்கக் கேடுள்ளவர்களாகவும் இருந்தனர் எனலாம். எனவே நாகரிகமற்ற திருச்சபை, தன்னைவிட இன்னும் அதிக அநாகரிகமுள்ள பொது மக்களுக்குத் தலைமை தாங்குவது எளிதாக இருந்தது. ஆனல் காலம் மாறியது. சோசர் காலத்தில் இல்லற வாசிகளும், துறவற வாசிகளும் மதிப்பான வாழ்க்கை நடத்தாவிட்டாலுங்கூட, நாகரிக நடத்தையும் அதிகக் கல்வி மேம்பாடும் பரந்த அறிவுப் பெருக்கும் அக்காலத்திற் பரக்கக் காணப்பட்டன. கீழான நிலைக்கு மதவாதிகள் சென்று கொண்டிருந்தனர் என்பதை விட, பொதுவாகக் காணப்பட்ட முன்னேற்றத்துக்கே இது ஒர் அடையாளமாகும். ஆகவேதான் புதிய தலைமுறையைச் சேர்ந்த சீர்திருத்த மனப்போக்குடைய பொதுமக்கள், திருச்சபையில் எலவே இருந்துவந்த தவறுகளை வெறுக்கலாயினர். பழைமை மீருத கோவர், இலாங்குலந்து, மனிதாபிமானி சோசர் போன்றவர்கள், திருச்சபையினரைக் கடூரமாய்த் தாக்குவதில் புறநெறியாளரான விக்கிளிபு போன்றவரைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்களாயிருந்ததில்லை.
முந்திய காலங்களில், சாதாரண நிலையிலுள்ள குருக்கள் எப்படிப்பட்ட வர்களாக இருந்த போதிலும், இலான்பிராங்கு, ஆன்சலம் தொடக்கம் இலாந்தன், குறேசெற்றே வரை அறிவுத்திறனும், ஒழுக்க நலனும் படைத்த தலைவர்களைத் திருச்சபை நாட்டுக்களித்து வந்தது. ஆனல், மனப்போக்கு மலர்ச்சியடைந்த அக்காலத்தில் இந்நிலைமை அறவே நின் றது. தேசத்தின் கல்வி வளர்ச்சிக்குத் திருச்சபை எவ்வளவு சிறந்த தொண்டாற்றி வந்தது என்றல், அத்தாபனத்தாற் கல்வியறிவு பெற்றவன் தனக்குள்ளே இப்பொழுது சிந்திக்கத் தொடங்கினன். இதனல், திருச் சபையின் புகழுக்கு இழுக்கு நேர்ந்தது என்பதாகாது. இலாங்குலந்தைத் தவிர, புதிய ஊழியின் மிகச் செல்வாக்குப் படைத்த கல்விமான்களாகிய சோசர், கோவர் முதலியவர்கள் குருவாயத்தினர் அல்லர். ஆனல் விக் கிளிபும், அவரைப் பின்பற்றிய ஒட்சுபோட்டுச் சிந்தனையாளர்களும் மதக் குருக்களாக இருந்தபோதிலும், திருச்சபையினற் புறநெறியாளராகவே

திருச்சபையும் மக்களும் 369
கருதப்பட்டனர். வழக்கறிஞர்களும், கனவான்களும், நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் தோன்றிய மத்தியதர வகுப்பினரும், தங்கள் மூதாதை யரைப் போன்றிராது “ என், எதற்கு” என்ற கேள்விகளைக் கேட்கும் மனம் படைத்தவராயினர். அவர்கள் தமக்குள்ளே சிந்தனை செய்யவும் தொடங்கினர். பக்திமானன இலாங்குலந்து கூறுவதாவது :-
“உயர் குலமக்கள் உணவுப் பந்தியிற் கிறித்து நாதரையும் அவரது வலியையும் பற்றிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். எங்களைப் படைத்த ஈசன் மீது அவர்கள் பல குற்றங்களைச் சுமத்துவர்; குருமார் விளக்கமற்றுக் கூறும் முரண்பாடான வார்த்தைகளை அவர்கள் எதிர்த்தும் பேசுவர் ’- இதன் தாற்பரியம் நம் ஆதித்தந்தையான ஆதாம் என்பவரின் குற்றத்துக் காக நாம் பழிக்கப்படக் கூடாது என்பதாம். “ அவர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தும் போதும் இசையின்றி அமைதியாக இருக்கும் போதும் மும்மூர்த்தங்களைப் பற்றிய கதை ஒன்றே இரண்டோ சொல்வர். அது சமயம் சாரமற்ற காரணம் ஒன்றை விளக்குமுகமாக பெனட்டு என்பாரைச் சாட்சியாகக் கூறுவர். அதன்பின் ஒரு கருத்தைச் சமர்ப்பித்து அது உண்மை யென நிரூபிப்பர் ”.
சமூக, அரசியல் மாறுதல்களுக்குக் காலம் எவ்வாறு தகுதியாயிருந்ததே அதுபோன்றே திருச்சபைக்குரிய சீர்திருத்தமும் அதன்பயனக மதவளர்ச்சி யும் ஏற்படுவதற்குரிய காலமும் சமீபித்தது. ஆனல், பாராளுமன்ற நிறுவகங்களும் நில அடிமைகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலை இயக்கமும் அதிவிரைவாக முன்னேறிக் கொண்டு வந்தும் மதச்சீர்திருத்தம் என்பது முடியாத காரியமாகிவிட்டது. இங்கிலாந்திலுள்ள திருச்சபைக்குத் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளக்கூட அதிகாரம் இருக்கவில்லை; ஏனெனில் அதற்குத் தன்னண்மை இல்லாதிருந்தது. மிகுந்த மதிப்பும் அதிகச் செல்வாக்கும் பெற்று, ஆங்கிலேய மக்களின் தேவையை அறியாததும், மாற்றத்தை எதிர்ப்பதும், வெளிநாட்டில் தலைமைப் பீடத்தைக் கொண்ட உலகப் பொதுவான ஒரு பொதுத் தாபனத்தின் ஒருபகுதியாகவுமே அது இருந்து வந்தது. இங்கிலாந்திலுள்ள திருச்சபையானது பொது மக்களிடம் எழுந்த சுதந்திர எழுச்சியின் முன்னே சிறிது சிறிதாகத் தன்னிலையி னின்றும் பின் வாங்கிக் கொண்டிருந்தால், தியூடர் காலத்தில் எற்பட்ட தீவிரமான மாற்றங்களெல்லாம் நேர்ந்திரா. தடைப்பட்ட வெள்ளம் வேகத் தில்மிகும் அன்றே ? 13-ஆம் 14-ஆம் நூற்றண்டுகளில் திருச்சபை மக்களுக்கிருந்த எல்லாச் சலுகைகளையும் மறுத்து விட்டதுமன்றி, சீர் திருத்தம் எதனையும் செய்யவுமில்லை; புறநெறியை ஒழிப்பதற்குமட்டும் மிருக பலத்தை உபயோகித்தது. இதற்கு எதிரிடையான முறை பின் பற்றப்பட்டிருந்தால், பலிபீடத்தைச் சார்ந்த உரிமைகளும் குருவாய நல உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், திருச்சபைக்குரிய சொத்துக்கள் நியாயமானமுறையில் ஏழைக் கிராமப் பாதிரிமாருக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டிருந்தால், ஆங்கிலேய-சட்சன் காலத்தில் நிகழ்ந்தவாறு மதபோத

Page 195
370 சமய உடற்றல்
கர்கள் தங்கள் மனைவிமாரை விவாகம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால், போப்பரசர் திருச்சபையின் உயரிய பதவிகளை யெல்லாம் தமக்கு மிகவும் வேண்டிய அயல் நாட்டினருக்குக் கொடுப்பதை நிறுத்தியிருந்தால், வைதீ கர்களும், புறநெறியாளர்களும் அடங்கிய பொதுமக்கள் புரட்சி செய்வதற்கு காரணமாக அமைந்திருந்த பாவமன்னிப்பு விற்றல், பரிசுத்த பண்டங்களை விற்றல் முதலியவற்றையும், இன்னும் ஏனைய மூட நம்பிக்கையுள்ள அனுட்டானங்களையும் திருச்சபைக்குரிய அதிகாரிகள் நீக்கியிருந்தால், திருச் சபை நீதிமன்றங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பொது மக்களிடமிருந்து குற்றப் பணம் பெறுவதற்காக அவர்களுடைய வாழ்க்கையை இரகசியமாக வேவுபார்க்கும் தொழிலை நிறுத்தியிருந்தால், அனைத்துக்கும் மேலாக உலொல்லாடியம் என்பது சமயத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைதான் என்று கருதப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தால் சீர்திருத்த இயக்கும் என்று நாம் சாதாரணமாக வழங்கும் மதப்புரட்சிக்குப் பதிலாகப் பல நூற்றண்டு களாக மத மலர்ச்சியே உருவாகியிருக்கும்.
ஆனல் மத்திய கால கிறித்துவ வரலாற்றில், உடற்றற் கோட்பாடு மிக முக்கிய அங்கமாக இருந்துவந்துள்ளது. நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப் படியாததால் நாடு கடத்தப்பட்டு, நாட்டுக்கு வெளியே வாழும் வாழ்க்கையை மத்திய ஊழியிலிருந்த மக்கள் எவ்வாறு உணர மாட்டார்களோ, அதே போன்று திருச்சபையின் கோட்பாடுகளுக்குக் கீழ்ப்படியாமல் மதத்திற்குப் புறம்பாக்கப்படுதலையும் அவர்கள் அறிய மாட்டார்கள். எனவே நாட்டின் அமைதியைக் காக்கும் பொருட்டுப் பொலிசுமுறை எற்பட்டுள்ளது போன்று சமய உடற்றலும் சமயசம்பந்தமான ஒரு நடைமுறை நிகழ்ச்சியாகவே இருந் தது. இது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு மரபு முறையாகும். இத்தகைய நீண்ட கால கசப்பான அனுபவங்களே கிறித்தவரது மனப் பான்மையினின்று சமய உடற்றல் எனும் கோட்பாட்டை அறவே நீக்க உதவியுள்ளன. உலொல்லாடியக் கொள்கை தோன்றிய காலத்திலும் அதை நசுக்கிய காலத்திலும் இங்கிலாந்தில் ஏற்பட்ட மதப் போராட்டங் களில் அக்காலமக் ஸ் எவ்விதப் பங்கெடுத்தனர் என்று அறிந்து கொள்ளு வதற்கு முன், மேற்கூறியவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். விக்கிளியின் கொள்கைகள் திருச்சபையினல் அங்கீ கரிக்கப்படாவிடில் அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பற்றிய பிரச்சினையே எழவில்லை. “ யோன் ஒவு ஆக்கிற்கு ’ நீதி மன்றத்தினர் மரணதண்டனை அளித்தற்காக அவர்களில் எவ்வாறு பழிசுமத்த முடியாதோ அவ்வாறே உலொல்லாடிகளை ஆர்வமிக்க அரசர்களும், பிசப்புமாரும் துன்புறுத்திய தற்காகப் பழி கூறமுடியாது. ஆனல் அதே நேரத்தில், புறநெறியாளரை உடற்றுவதென்பது மிகப் பழைமை வாய்ந்ததும் உயரிய தரமானதும் உலகெங்கும் வியாபித்திருந்ததுமான செயல் என்பதைக் காரணமாகக் காட்டி, அது சரியானது என்று ஒத்துக் கொள்ளுவதற்கும் எந்த வித நியாயமும் இருக்கவில்லை. இத்தகைய செயல்கள் மிகத் தவறனவை

திருச்சபை சீர்திருத்தப்படாமை 371
என்பது மட்டுமன்றி, பின்னுள்ள அனேக நூற்றண்டுகள் வரை அளப் பரிய தீமையைச் செய்தும் வந்தன என்று கூறுவது மிகையாகாது. ஆனலும் இவ்வாறக ஆழப்பதிந்து விட்டதும், போலித் தோற்றமுடையது மான ஒரு பெருந்தவற்றை நாம் அறவே ஒழித்ததானது, ஐரோப்பாகண்ட மனித முன்னேற்றத்தில் ஒரு மாபெருங் கைங்கரியம் என்பதிற் சந்தேக மில்லை.
திருச்சபை வரலாற்றிலிருந்து நாம் உய்த்துணரக்கூடிய தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டு நோக்குங்கால், மதகுருக்களுக்கு அளித்த சலுகை களை மற்றப் பொதுமக்களுக்கு அளிக்கத் திருச்சபை என் மறுத்துவந்தது என்பதையும், தியூடர் காலத்தில் அரசாங்கமானது அவர்தம் சொத்துக்களின் மேல் கையை வைக்கும் வரை மடாதிபதிகளும் எராளமான சொத்துக்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த மதகுருக்களும், கடைநிலையிலுள்ளகோயிற் பற்றுக் குருக்களின் நன்மைக்காக தங்களுடைய சொத்துக்களையும் பொது மக்களிடமிருந்து தாங்கள் பெற்று வந்த தசமபாக வரிப்பணத்தையும் பிரித் துக் கொடுக்க என் மறுத்தனர் என்பதையும் நாம் ஒருவாறு உணர்ந்து கொள்ளக்கூடும். கடந்த கால நிகழ்ச்சிகளை மனிதர் மிக எளிதில் மறக்க முடியாது. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னுண்டான இருண்ட ஊழி களில் மிலேச்சத்தனத்தையும் சட்ட ஒழுங்கை மீறிய பலாத்காரத்தையும் எதிர்த்துத் தன் வாழ்வுக்குப் போராடிக் கொண்டிருந்த திருச்சபையானது, மதவிலக்கத்தை எவ்விதம் சாதிப்பது, மதருகுக்களின் ஒவ்வொரு உரிமை யையும் பாதுகாப்பதற்கு ஐக்கிய கிறித்துவ திருச்சபையின் முழுச் சக்தியை யுமே எவ்வாறு பயன்படுத்துவது, மததாபனங்களுக்குச் சொந்தமான ஒவ் வொரு சொத்தையும் எவ்வாறு தனது ஆதிக்கத்திலே நிலையாக வைத் துக் கொள்வது என்பன போன்றவற்றைத் திறம்பட நடத்த நன்கு கற்றுக் கொண்டது. மேற் சொன்னவைகளைப் பாதுகாப்பதிலேயே கிறித்துவ மதத் தின் அத்திவாரமே ஊன்றி நின்றது என்பதாகத் திருச்சபை கருதியது. தன்னுடைய இயற்கைத் தன்மையின் ஒரு பகுதியாக அமைந்த இத்தகைய வழமைகளில் திருச்சபையானது ஊன்றியிருந்தமை காலத்திற்கு ஏற்ற செயலன்று. தனது கொள்கைகளைத் தளர்த்தி, அரிசாட்சியோடு ஒத்துப் போவதற்கான தன்மை அதற்கு இன்னும் எற்படவில்லை. அன்றி தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளவும் அது முயலவில்லை. ஆகவே தகுந்த வளவு மாறுதல் எற்படுத்த வேண்டுமேயானல் திருச்சபையின் மீது அர சாங்கம் பூரண வெற்றி கொள்ள வேண்டியது அவசியமாயிற்று.
உண்மையாகவே, ஆங்கிலத் திருச்சபை தான் விரும்பினலுந் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கான நிலையிலிருக்கவில்லை. ஏனெனில் அது தனிச் சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. அன்றியும் கூட்டான ஒரமைப் பாகவும் இருக்கவில்லை. இங்கிலாந்திலுள்ள எல்லாப் பண்டாரங்களும், துறவிகளில் அனேகரும் ஆங்கிலப் பிசப்பு மார்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக

Page 196
372 திருச்சபை சீர்திருத்தப்படாமை
இருக்காது, உரோமிலுள்ள போப்பரசருக்கே நேரடியாகக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தார்கள் ; அவர்கள் தங்களுடைய பத்தியையும் கீழ்ப்படிதலையும் இங்கிலாந்திலுள்ள திருச்சபைக்கன்றி போப்பரசருக்கு மட்டுமே காண் பித்தனர். உரோமானியத் திருமுறைச் சட்டமே இங்கிலாந்திலுள்ள திருச் சபைக்குரிய சட்டமும் ஆகும். அச்சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு இங்கி லாந்துத்திருச் சபை போதியதகுதி பெற்றிருக்கவில்லை. திருச்சபையிலுள்ள சச்சரவுகள் சம்பந்தமாக மேல்வழக்குத் தொடர வேண்டுமேயானல் உரோமி லுள்ள போப்பரசரின் நீதி மன்றங்களுக்குத்தான் செல்லவேண்டியிருந்தது. எனவே இங்கிலாந்திலுள்ள தங்கள் மததாபனத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஆங்கிலேய பிசப்புமார் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.
அன்றியும், திருச்சபைக்குரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அப் பதவிக்கு முற்றிலும் தகுந்தவர்களுமல்லர், பிசப்புமார்களில் அனேகரை ஆங்கில மன்னரும் போப்பரசரும் இரகசியமாகக் கூடி ஆலோசித்து நிய மித்து வந்தனர். அவர்களில் அனேகர் அரசருடைய அதிகாரத்துக்கு அமைந்த குடியியற் சேவையாளராகவே இருந்தார்கள். இங்கிலாந்திற் பல கல்லூரிகளை நிறுவிய விக்கம் நகர் வில்லியம் என்பவர் போன்றவர் களும் 1381 ஆம் ஆண்டில் கலகக்காரர்களுக்குப் பலியானவரும் கருவூல நாயகருமான அதிமேற்றிராணி சட்பெரியும் இத்தகையவர்களே. உண்மையி லேயே அவர்கள் காலத்து எனைய அறிஞர் கூறியதுபோல, அவர்கள் கிறித் துவை விட சீசருக்குத்தான்-அதாவது மததாபனத்தைவிட அரசாங்கித் துக்குத்தான்-பணியாற்றினர். ஆகவே அடிக்கடி திருச்சபைக்குரிய தங்கள் பொறுப்புக்களைத் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் அவர்கள் ஒப்படைத்து வரலாயினர். இதனல், நாட்டின் சமயச்சார்பான வாழ்க்கையை இவர்கள் சீர்திருத்தம் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாது.
போட்பரசரால் நியமிக்கப்பட்டவர்களும் தங்கள் பதவிக்கு மிகவும் தகுதி யற்றவர்களாகவே இருந்தனர். தாசசு நகர் தியோதோர், சுதீபன் இலாந் தன் போன்ற திறமையுள்ளவர்களை இங்கிலாந்து திருச்சபையை நிருவகிப் பதற்குப் போப்பரசர் அனுமதிக்கவில்லை. அப்பொழுதெல்லாம் அவர் உயர்குருவா' த்தினருக்கு அடுத்த படியிலுள்ள தமக்கு வேண்டிய குரு மார்களையே நியமித்து இங்கிலாந்துக்கு அனுப்பினர். அவர்களில் அனேகர் அயல் நாட்டினராதலால், தத்தம் நாடுகளிலே தங்கியிருந்ததுடன், அவர் கள் இங்கிலாந்தைத் தங்கள் வருமானத்துக்கான ஓர் இடமாகவே கருதியும் வந்தனர்.
உயர்குருவாயத்தினர் சொந்த நாட்டினரானலும் அல்லது அயல் நாட்டி னரானலும் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல பதவிகளை வகிப்பதும் கோவில்களிலுள்ள புனிதப் பொருள்களே விற்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தன. அதே அமயத்தில், சீர்திருத்த இயக்கத்துக்கு இரு நூற்றண்டுகளுக்கு முந்திய காலத்தில் இங்கிலாந்திலுள்ள கோவிற்பற்றுக்

« பாவநகரமான அவிஞான்” 373
குரிய வறிய பாதிரிமார்களே திருச்சபையில் மிகச் சிறந்தவர்களாகத் தென்பட்டனர். அவர்களில் அனேகர் கொடும் பட்டினி கிடந்து தங்களுக்கு மேலேயுள்ள குருமார் துறவிகள் ஆகியவர்களுடைய நல்வாழ்வுக்காக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தசம பாக வரியை ஒதுக்கி வைத்தனர். அவர்களிற் பெரும்பாலோர் போதிய கல்வியறிவற்றவர்களாக இருந்ததுடன் தங்கள் மேற்பார்வையிலுள்ள மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டும் இருந்தனர். எனவே அவர்களிற் பலர் சந்தேகமின்றி, சோசரால் அவர்தம் காவியத்தில் உதாரணமாகக் காட்டப்பட்ட “ எழைப்பாதிரியை’ ஒத்திருந் தனர். அவர்களுடைய வரலாற்றை நாம் பெற்றிருப்போமாயின் !
போப்பரசருக்கும் பிற்கால பிளந்தாசெனற்று அரசர்களுக்குமிடையே எற்பட்ட இரகசியக் கூட்டு உடன்படிக்கையானது திருச்சபைக்குத் தீமையான தாகவே இருந்தது. திருச்சபையின் தொடர்பை அரசர் கைவிட்டால், அதற்குப் பாதுகாப்பே இல்லாமல் இருந்தது. இந்த இரகசிய உடன் பாட்டைப் பாராளுமன்றம் விரும்பவில்லை. எனினும், VI ஆம் என்றியின் காலத்தில் இது விடயமாய் மாறுதல் எற்படும் வரைக்கும் அவ்வுடன்பாடு நீடித்தது. திருச்சபையைச் சீர்திருத்தம் செய்வதற்குத் தனி அதிகாரம் பெற்றிருந்த போப்பரசர், அக்காலத்தில் வைதிகர்களும் புறநெறியாளரும் அடங்கிய ஆங்கிலேயர் அதிகமாக்க் குறைகூறிய, திருச்சபையில் நிலவிய விலை கொடுத்து வாங்கும் முறைகளையும், ஊழல்களையும் களைவதில் மிகவும் சிரத்தை கொண்டார். 14 ஆம் நூற்றண்டில் பிரெஞ்சு தேசத்தின் எல்லையி லூள்ள ஆவிஞான் என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த போப்பரசரின் நீதி மன்றமே புனிதப் பொருள்களை விற்கும் வியாபாரத்தின் நிலைக் களஞ யிருந்தது. அங்கே நூற்றண்டுப் போரின் முதற் பகுதியில் ஆங்கில நாட்( எதிரியான பிரெஞ்சு அரசருக்கும் போப்பரசருக்கும் எற்பட்ட தொடர்பு ஆங்கிலேயரிடத்திற் போப்பரசர்க்கு எதிராகவும் அவர் செயல்களுக்கு எதி ராகவும் உணர்ச்சியைத் துண்டுவதற்குக் காரணமாக அமைந்தது. மேலும் எதிராளிகளான இரு போப்பரசர்களுக்கிடையே எற்பட்ட கட்சிப் பிளவு, திருச் சபையின்மீது மக்களுக்கு இருந்த மதிப்பை அதிகரிக்கச் செய்யவில்லை.
, ஆனல், திருச்சபைக்கும் அரசாங்கத்துக்குமிடையே இருந்த தொடர்பு சம்பந்தமாய் மத்திய காலத்தில் நிலவிய கொள்கைகள் நீடித்து இருந்த வரையில் இங்கிலாந்து மாற்றமறியாதிருந்தது. அது எவ்வளவுதான் முறு முறுத்தாலும் உரோமோ ஆவிஞானே கவலை கெர்ள்ளவில்லை. * ஆங்கிலக் கழுதைகள் கனைக்கட்டும் ; ஆனல் சுமைகளை அவைதான் சுமக்கவேண்டும் ” என்ற கொள்கைதான் நீடித்தது. அரச உரிமைகளுக்கு எதிரிடையான போப்பரசரின் அதிகாரத்தை வரம்புக்குட்படுத்தும் வண்ணம் பாராளுமன்றம் “ புருேவிசர்கள், பிரிமுனிர்” ஆகிய சட்டங்களைப் பிறப்பிக் கலாம். ஆனல் இந்தச் சட்டங்கள் செயற்படவில்லை. அதிகமாகப் போனல், போப்பரசரோடு என்றும் பேரம் பேசி சலுகைகள் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே இவை அரசருக்குப் பயன்பட்டன. எப்படியிருப்பினும்

Page 197
374, * பாவநகரமான அவிஞான்"
பொதுமக்களிடத்தில் உண்டான கருத்துக் கிளர்ச்சியை எடுத்துக்காட்டுஞ் சிறந்த சின்னமாக அவை காணப்பட்டன. அதுவுமன்றி நாளாவட்டத்திற் பாராளுமன்றத்திலே அரசன் எடுக்கவிருந்த பலமான நடவடிக்கைக்கு அவை ஒர் அறிகுறியாகவும் அமைந்தன.
இவ்வமயத்தில். யோக்குசயரிற் பிறந்தவரும் ஒட்சுபோட்டு பல்கலைக்கழ கத்தின் பேராசிரியருமான யோன் விக்கிளிபு என்பவர் இங்கிலாந்தின் கவலைகளைப் போக்குவதற்கு ஒரு வழியைக் காட்டினர். இதுவரைக்கும் கையாளப்படாத-அதாவது போப்பரசரின் அதிகாரத்தை மறுக்கின்றஒரு கொள்கையை வகுத்தார். அவர் கண்டுபிடித்த “ஆட்சிக் கொள் கையானது ” தீயவர் செலுத்தும் அதிகாரம் கடவுளிடம் இருந்து வந்த தன்று ; போப்பரசனின் அதிகாரம் உரோம் பேரரசர்களாகிய சீசர்களிட மிருந்து வந்ததே தவிர, கிறித்துவினிடமிருந்தோ பீற்றரிடமிருந்தோ வர வில்லை என்பதைக் கற்பித்தது. மத்திய காலப் பிற்பகுதித் தத்துவ இயலின் சிக்கலான நுணுக்கங்களை ஆராய்வதற்கான சிந்தனையும் கருத்தும் கொண்ட கல்விமானகிய விக்கிளிபு, அவருடைய காலத்துக்குப் பிறகு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கிடையில் இங்கிலாந்து பின் பற்றவிருந்த அனேக முன்னேற்ற வழிகளைப் பிழையின்றி முன் கூட்டியே அறிந்த அறிவாளியாவர். விக்கிளிபின் போதனையில் அங்கி லிக்கன் கொள்கை, பொதுமக்களின்? கொள்கை, புரட்சுத்தாந்தாரின் கொள்கை ஆகிய மூன்றும் முக்கிய இடம் பெற்றன. இவ்வெவ்வேறன மூன்று முறைகளையும் தழுவியே பிற்காலத்தில் திருச்சபையினதும் அரசின தும் அலுவல் இங்கிலாந்தில் மற்றெரு வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.
1351-ஆம் ஆண்டுப் புருேவிசர் நியதிச்சட்டம் ஆங்கில மானியங்களைப் பற்றிப் போப்பரசர் பிறப்பித்திருந்த உத்தரவுகளை எதிர்த்து ஆங்கிலப் புரலவரின் உரிமைகளைப் பாதுகாத்தது. * பிரீமுனிர் நியதிச்சட்டங்கள் ” (1353, 1865, 1393) பிந்திய காலங்களிற் கருதப்பட்டது போலின்றி அதன் எல்லை வரையறுக்கப்பட்டிருந்தது. அவை நடைமுறையில் இருந்தவரை இங்கிலாந்தில் அரசருடைய உரிமைகளில் போப்பரசரின் தலையீட்டைத் தடுக்கும் சாதனங் களாக இயங்கிவந்தன.
* மதம் அரசாங்கத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற கொள்கையையுடைய தாகச் சொல்ல முடியாது. “சாதாரண விசுவாசிகளுக்கும் துறவற வாசிகளுக்குமிடையே தெளி வான வித்தியாசம் காணப்படவேண்டும் ; பொது விசுவாசிகளும் மதகுருக்களாக இருக்கலாம் ; மததாபனத்தின் ஒரு பகுதி மற்றப்பகுதியை அதன் ஒழுக்கக் கேட்டினின்றும் சீர்படுத்த வேண்டும் என்ற கொள்கைகளை விக்கிளிபு வலியுறுத்துவதால் அவரை எராசுற்றசைப் பின்பற்றுகிறவர் என்று கூற முடியாது” என்று பேராசிரியர் இராசுடால் எழுதுகிருர். ஆனல் தியூடர்கள் காலத்தில் நடந்ததைப் போலவே, விக்கிளிபும் சாதாரண விசுவாசிகளை மத தாபனத்தைச் சீர்திருத்த அழைக்கத்தான் செய்தார். இதனல் அவருடையகொள்கை எாாசுற்ற சினுடையதே என்று மக்கள் கருதலாயினர். விக்கிளியின் விருப்பம் அரசரை மததாப னத்தின் தலைவராக்குவதே எனினும் அதை அவர் திட்டமாகக் கூறவில்லை. ஆனல் தனிப் பட்டோரது மனச்சான்று பற்றியோ அன்றி ஒவ்வொரு சாதாரண விசுவாசியும் மத குரு ஆவது பற்றியோ வற்புறுத்திய அவருக்கு, இவ்விடயத்தில் தியூடர் காலத்தில் செய்யப்பட்ட முடி வுதிருப்தியைக் கொடுக்கக்கூடியதாகவில்லை.

யோன் விக்கிளிபு 375
111 ஆம் எட்டுவேட்டின் கடைசிக் காலத்தில், விக்கிளிபு ஒரு சீர்திருத்த வாதியாகத் திகழ்ந்த தம் வாழ்க்கையின் முக்கியமான முதற் கட்டத்தின் போது, பல அரசியல் வாதிகளோடு தொடர்பு கொண்டார். போப்பரசரின்
ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டின் நிலைமையை எடுத்துக்கூற விக்கிளிபு
அமர்த்தப்பட்டார். அதிகச் “செல்வ பலம்’ படைத்தவரும் “சீசர்வழிவந்த வருமான ’ குருமார் மீது அவர் தொடுத்த தாக்குதல்நாடெங்கும்-சிறப் பாக இலண்டனில்-அவருக்கு அதிக செல்வாக்கைக் கொண்டுவந்ததோடு, கோண்டு நாட்டு யோன், நோதம்பலாந்திலுள்ள பேசி போன்ற அதிகார முள்ள-ஆனல் பொதுமக்கள் ஆதரவற்ற-நேயர்களையும், எற்கனவே திருச்சபையின் சொத்துக்களில் கண்ணுயிருந்த பிரபுக்கள், நைற்றுக்கள் ஆகியவர்களின் ஆதரவையும் அளித்தது. இந்நிலையில் அவருடைய கொள் கையை ஆதரித்த பலர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் இவருடைய மிகக் கொடிய எதிரிகளாயினர். பண்டாரங்கள், ஆங்கிலத் திருச்சபையில் உயர் நிலையிலுள்ள மற்றவர்களோடு எப்பொழுதுமே ஒத்துப்போகவில்லை. கொள்கையளவில் அவர்கள் எழ்மையை ஆதரித்த தினல் மததாபனத்தினர் சொத்துக்களைப்பறிமுதல் கெய்வதற்கு ஆதரவு காட்டினர். இவ்வாறன நிலையில் நிலம்படைத்த துறவிகள் மீதும் பிசப்பு மார்கள் மீதும் எதிர்ப்பைத் தொடங்கிய விக்கிளியை இவர்களிற் சிலர் நண்பனுகவும் கொண்டனர். படிப்படியாகத் தங்கள் புரவலரான போப் பரசரின் அதிகாரத்தையும், அப்பம் உவைன் என்பவற்றின் குணங்கள் கிறித்துவினுடைய சரீரமாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்ற திருமாறுபாட்டுக் கோட்பாட்டின் கொள்கையையும் விக்கிளிபு மறுத்த ஞான்று, அதற்கு மேல் தாங்க முடியாத நிலையில் அவ் விரவலர் சபையினர், தாங்கள் கொடுத்துவந்த ஆதரவை நிறுத்திக் கொண்டனர்.
1881 ஆம் ஆண்டில் எழுந்த குடியாரைவர் கலகத்தில் விக்கிளிபு எக்கட்சியிலும் சேராததால் நேரடியாக அவர் நிலை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. ஆனல் விக்கிளிடைத் துன்புறுத்துவதற்குச் சிறிதும் எண்ணமில்லாத கந்தபெரி அதிமேற்றிராணியாகிய சட்பரி உலகத்திலிருந்து நீக்கப்பட்டது அவரைப் பாதித்தது. புதிய மதத்தலைவராகிய கோற்றினி என் பவர் விக்கிளிபிற்குமாருன சத்திவாய்ந்த கொடிய எதிரியாக அமைந்தார். ஆகையால் தீவிர அடக்குமுறை அண்மித்துவிட்டது என்டது நிச்சயமாயிற்று.
அதே நேரத்தில் திருமாறுபாட்டுக் கொள்கையை எதிர்த்து வாதித்ததின்
பயணுக கோண்டு நாட்டு யோன், மற்ற அரசியல்வாதிகள், பண்டாரங்கள்
ஆகியவர்களுடன் மாறுபட்டுப் பிரிய வேண்டியநிலை விக்கிளிபுக்கு எற்பட்
டது. தேவதிரவிய அநுமானமாகிய நற்கருணையின் தன்மைபற்றி அவ ருடைய கருத்துக்கள் மிகுந்த புரட்சிகரமானவையாக இல்லாவிடிலும், அக்காலத்தில் அவை மிகத்துணிகரமாக வெளியிடப்பட்டவையே. ஆனல் அடுத்த தலை முறையில் அவரைப் பின்பற்றியவர்கள் நற்கருணையின் இயல்புபற்றி மிகத் தீவிரமான கொள்கையுடையவராயிருந்தனர்.
1377

Page 198
13821384.
376 யோன் விக்கிளிபு
விக்கிளிபு தமது வாழ்க்கையின் கடைசி வருடங்களில் அரசியலி லிருந்தும் அதனினும் அதிகமாகக் கல்வித்துறையிலிருந்தும் விலகினர்.
ஒட்சு போட்டுப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒய்வு எடுத்துத் தம் கடைசிக்
கால உறைவிடம் சேர்ந்தார். இலிசுற்றர்சயரில் உலுற்றர்வோத்து என்னு மிடத்திலுள்ள தமக்குச் சொந்தமான மடத்திற்குச் சென்றர். அங்கி ருந்து கொண்டே தமக்குப் பழக்கமான வேண்டுகோள்முறைப்படி தாமும் தம்துணைவரும் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் மூலம் தம்முடைய கொள்கைகளைப் பரப்பி வந்தார். தாம் தாக்கியது போலவே தம்முடைய சீடர்களும் போப்பரசர், துறவிகள், பண்டாரங்கள் சீசரின் வழிவந்த குருவாயத்தோர் ஆகியவர்களையும், விக்கிரகங்கள் திருப்பண்டங்கள் ஆகிய வற்றை ஆராதித்தல், இறந்தவரின் ஆன்ம சாந்திக்குப் பூசை செய் வித்தல், பாவ மன்னிப்புச் சீட்டு வழங்கல் முதலிய பல்வேறு மத அனுட்டானங்களையும் எதிர்க்கவேண்டுமென்று அவர் கற்பித்து வந்தார். ஒருவன் இரட்சிக்கப்படுவதற்கும் சபிக்கப்படுவதற்கும் அவனுடைய நல் வினைதீவினைகளே காரணமாய் அமைவதால், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் எவ்விதத்தூதர்களுமின்றிக் கடவுளுடன் மனிதன் நேரடியா கவே தொடர்பு கொள்ளலாம் என்று அவர் போதித்து வந்தார்.
இங்கிலாந்திலுள்ள கோவில்களில் வழிபாட்டு முறை ஆங்கில மொழியில் இருக்கவேண்டுமென்றும் அவர் கோரினர். ஆகவே தம்முடைய ஒட்சு போட்டுச் சீடரும் செயலாளருமான புர்வே என்பவரின் முக்கிய துணை கொண்டு விவிலிய நூலை முற்றிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இம்மொழி பெயர்ப்பானது மிகப் போற்றத்தக்கதும் புலமை நிறைந்தது மான தொன்றகும். ஆங்கில மொழி வரலாற்றிலும் மதவரலாற்றிலும் இது ஒர் அரும் பெரும் நிகழ்ச்சியாகும். பிற்காலத்திய சில புரட் டசுத்தாந்தர் கருதியதுபோன்று தமது மதக் கோட்பாட்டுக்கும் ஆகமச் சட்டத்துக்கும் ஒரே ஆதாரம் விவிலியநூல் மட்டுந்தான் என்று விக்கிளிபு கருதவில்லை. அவருடைய கோட்பாடுகள், நவீன ஆங்கில மொழியிற் சமய நூல்கள் நாலாபக்கங்களிலும் பரவ வேண்டிய அவசியத்தை அவர்க்கு உணர்த்தின. மேலும் அவருடைய கூட்டத்தினர் ஆங்கில விவிலியநூலை வாசிக்கும் தனிப்பழக்கத்தைக் கொண்டிருந்தனர். பணக் காரர்களுக்கும் குருமாட்டிகளுக்கும் தாய்மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களை உபயோகிக்கும் விசேட அனுமதியை அளித்திருந்த திருச்சபை யானது 15 ஆம் நூற்ருண்டிலும் கூட பொதுவாகப் பொதுமக்களுக்கு அவ்வுரிமையை அளிக்க மறுத்துவந்தது. உலொல்லாடிகள் ஆங்கில மொழியில் வேதநூல்கள் யாத்துப் பயன்படுத்துவதைத் திருச்சபை வன்மை யாகக் கண்டித்தது.
தலைமைக்குரு காசுகுவெற்று வெளியிட்ட பழைய ஆங்கில விவிலிய நூலுக்குப் பதில்கூறு முகமாக தீன்சிலி வெளியிட்ட உலொல்லாடு விவிலிய நூலைக்காண்க.

இலற்றர் வேது 377
ஒட்சு போட்டு இயக்கமாக முதலில் தோன்றிய விக்கிளியின் கொள்கை களுக்கு இதற்கிடையில் ஒரு பெரிய இடையூறு தோன்றியது. பல்கலைக் கழகமும் அதிலுள்ள உத்தியோகத்தர்களும் விக்கிளியினுடைய அனேக மான கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில் ஏறக்குறைய அவருடைய கட்சி யாளாராகவே இருந்தனர். ஒட்சு போட்டிலுள்ள துறவிகளும் பண்டா ரங்களும் முற்றிலும் அவரை எதிர்த்தார்கள். ஆனல் உலகியற்குருமாரும் பட்டதாரிகளாக வரவிருந்தோரும் பெரும் பான்மையாக அவரை ஆதரித்தனர். அதிமேற்றிராணியார் கோற்றினி இச்சச்சரவிலே தலையிட்டு, அரசருடைய உதவியினற் பல்கலைக் கழகத்துக்களிக்கப்பட்ட சலுகைகளைப் பறிமுதல் செய்ததுடன், விக்கிளிபின் ஆதரவாளர்களது எதிர்ப்பை அடக்கினர் ; அல்லது அவர்களை வெளியேற்றினர். IV ஆம் என்றியின் காலத்தில் மறுமுறையும் தோன்றிய, மத எதிரிகளை ஒழிக்கும் முறை யானது சிறந்த பண்பாட்டில் ஊன்றியிருந்த உலொல்லாட்டு இயக்கத்தின் அத்திவாரத்தைத் தகர்த்தது. ஆனல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் எழைகள் மத்தியில் மறைவாக மதம் பரப்பச் செய்யக்கூடிய ஒரு வேதபோதகக் கூட்டமாக அவ்வியக்கத்தினரை மாற்றியது. கல்விக்கழகச் சிந்தனைச் சுதந்திரத்திற்குக் கோற்றினி இட்ட தடையானது பல்கலைக்கழகத் தினுடைய வளர்ச்சியைத் தடைப்படுத்தி நூறு ஆண்டுகளாக நாட்டில் அறிவுத் தேக்கம் எற்படச் செய்துவிட்டது. பல்கலைக்கழகத் தோற்றத் தின் முதல் இரு நூற்றண்டுக் கால வாழ்வில், அங்கு நிலவிய அறிவு வளர்ச்சியையும், சுதந்திர உணர்ச்சியையும் இப்போதைய நிலையுடன் ஒப்பு
நோக்கின் விந்தையான வேற்றுமை புலனுகும். 15 ஆம் நூற்றண்டில்
ஆங்கிலேய மக்கள் அறிவுத்துறையிலும், ஆன்மீக வாழ்விலும் எவ்வித வளர்ச்சியும் பெருது போனதற்கு இதிலும் முக்கியமான காரணம் பிறிதில்லையெனலாம்.
ஒட்சுபோட்டு, கேம்பிரிட்சு முதலிய பல்கல்ைக்கழகங்களிலே தோன்றிய அறிவுக் கிளர்ச்சியை மதவைராக்கியர் அடக்கி ஒடுக்கினதால் ஒருவிதத்தில் நன்மையும் எற்பட்டது. அதன்பயணுக மாணவர்கள் புறநெறித் தொற்று நோய்க்கிரையாகாதபடி தடுக்கப்பட்டு, ஒழுங்கான கல்வியைப் பெறுவதற்குப் பல கல்லூரிகள் தாபிக்கவும் அவற்றிக்கான பொருள் வசதியளிக்கப்படவும் வாய்ப்பு ஏற்பட்டது. விக்கம் நாட்டு வில்லியம், உல்சி ஆகிய இருவருகி கும் இடைப்பட்ட காலத்திற் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரி கள் ஆங்கில நாட்டுக்கே உரித்தான முறையிலே துரிதமாக வளர்ந்தன. ஆருவது என்றியால் நிறுவப்பட்ட அரச கல்லூரியும் அதைச்சார்ந்த மகத்தான தேவாலயமும், கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தைச் சிரேட்ட பல்கலைக்கழ கத்துக்குத் தகுந்த போட்டியாக அமையும்படி செய்யும் எதுக்களாயின. சீர்திருத்த இயக்கத்தின்போது, புகழ் பெற்ற இப் போட்டியானது குறிப்பிடத்தக்க அளவு நாள்தோறும் வளர்ந்து வருவ தாயிற்று.
1382.

Page 199
401
378 - உலொல்லாடியம்
ஒட்சுபோட்டுப் பல்கலைக்கழகத்தின் அதிகார வகுப்பினரின் கைகளால் விக்கிளிபு இயக்கத்தின் அறிவு வேர்கள் துண்டிக்கப்பட்டபோதிலும், விக்கிளியின் செல்வாக்கு நாடுமுழுவதும் எவ்வளவில் அதிகரித்து வந்த தென்றல், நாட்டிலுள்ள மக்களில் இரண்டிலொரு பகுதியினர் உலொல் லாடிகளாகவே காணப்பட்டனர் என மிகைப்படுத்திக் கூறுமளவிற்கென்க. விக்கிளியின் கோட்பாடுகளிற் சிலவற்றை ஆதரித்த பல மக்கள், அவருடைய பிறகொள்கைகளை எதிர்த்துமுள்ளனர். ஆகவே IV ஆம் என்றியின் ஆட்சியிற் பொதுமக்கள் சபையிலே கோட்டத்து நைற்றுக்கள். WI ஆம் என்றி பிற்காலத்தில் கடைப்பிடித்த கொள்கைப்படி-அரசர், திருச்சபையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, வரிவிதிப்பைத் தளர்த்தி எழைகளுக்கு விடுதலையளிக்கவேண்டுமென்றும், புதிய பிரபுக்களையும் நைற்றுக்களையும் நியமித்து உடைமைப் பத்திரம் வழங்கவேண்டுமென்றும் கோரினர். ஆனல் அவர்கள் தெ கெரெற்றிக்கோ கொம்புரெண்டோ என்னும் நியதிச் சட்டத்தை எதிர்த்ததாகத் தெரியவில்லை. திருச்சபையின் பெருத்த ஆதரவில் கேள்விக்கிடமான தங்கள் அரச உரிமைகளுக்குப் பாதுகாப்புத் தேடிய IV ஆம்-V ஆம் என்றி அரசர்களின் காலத்தில், உலொல்லாடு இயக்கம் துன்பப்படுத்தப்பட்டதின் மூலம் அறவே நசுக்கப் பட்டது. உலொல்லாடிகளிற் சிலர் உயிரோடு எரிக்கப்பட்டனர் ; மற்றும் பலர் தாம் எரிக்கப்படுவோம் என்ற பயத்தினலே தங்கள் கொள்கைகளைக் கைவிட்டனர். 15 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் உலொல்லாடு இயக்கம் இரகசியமாக இயங்கிவந்தது. VI ஆம், VI ஆம் என்றி அரசர்களின் ஆட்சிக் காலத்திலே திரும்பவும் தோன்றிய, நாட்டுக்குரிய புறநெறி என்னும் வியாதி, மதப்பற்றுடையவர்களுக்குப் பீதியை விளைவித்ததுமன்றி, அனேகர் மிகக் கடுமையான துன்பங்களுக்கு இலக்காகித் தம்மதக் கொள்கைக் காக இறப்பதற்கும் காரணமாய் அமைந்தது. கடைசியாக, சேர்மனியிலிரு ந்து உலூதருடைய புரட்டசுத்தாந்த மதக் கொள்கைகள் இங்கிலாந்துக்குப் பரவியதும் உலொல்லாடு இயக்கம் அதனேடு ஐக்கியப்பட்டுவிட்டது. ஆனல் இங்கிலாந்திற் காணப்பட்ட சீர்திருத்தத்தின் ஒவ்வொரு முக்கிய அமிசமும் உள்நாட்டிலே தோன்றியதேயாம். அவையனைத்தும் விக்கிளிபின் காலத் திலிருந்தும் அவற்றுட்சில அதற்கு முந்திய காலங்களிலிருந்தும் தோன்றி வந்துள்ளன.

Sjögu u Tuulo VIII,
Iஆம் எட்டுவேட்டு காலம் முதல் W1 ஆம் என்றியின்
காலம் வரை பாராளுமன்ற வளர்ச்சி. உயர்குடி ஆட்சியில் ஆட்சியறவு-மத்திய காலப் பிற்பகுதியில் ஆங்கில மக்களது வாழ்க்கையின் சில அமிசங்கள். உரோசாப் போர்கள். யோக்கு வமிச அரசாகள.
அரசர்கள் : II ஆம் எட்டுவேட்டு, 1327-1377; 11 ஆம் இரிச்சாட்டு, 1377-1399 ; TV ஆம் என்றி (இலங்காசுற்றர்), 1899-1413; V ஆம் என்றி, 1413-1422 ; W1 ஆம் என்றி, 1422-1461; IV ஆம் எட்டுவேட்டு (யோக்கு), 1461-1483 ; V ஆம் எட்டுவேட்டு, 1483 ; 111 ஆம் இரிச்சாட்டு, 1483-1485.
III ஆம் எட்டுவேட்டு அரியணை ஏறியதற்கும் VI ஆம் என்றி ஆட்சி யினின்று விலக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்துப் பாராளு மன்றம் இரு சபைகளைக் கொண்ட தன் ஆட்சிமுறையில் நிலை பெற்றது மன்றி, தற்காலத்தில் உள்ளதைப் போன்று இயங்கும் அமைப்பு முறையின் ஆரம்ப தசையையும் அடையப் பெற்றது. அதே அமயத்தில், பொது மக்கள் சபையானது நிதி சம்பந்தமாகவும் சட்டவாக்கம் சம்பந்தமாகவும் தனக்குள்ள அதிகாரத்தை அபிவிருத்தி செய்து கொண்டதோடு, பிரபுக்கள் மன்றத்தில் மந்திரிகளைக் குற்றஞ் சாட்டுவதின் மூலமும் மன்னர்களுக்கு மானியம் வழங்குவதற்கு முன்னர், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென வற்புறுத்துவதன் மூலமும் அரசியல் நிர்வாகத்தின் மீதும் தன்னுடைய அதிகாரத்தைச் சில வேளைகளிற் செலுத்தி வந்தது. இவ் விதமாக பிற் காலச் சுதுவாட்டுப் பாராளுமன்றங்களில் எடுத்தாளத் தக்கமுற்கோள்கள், அரசர் சார்பான நியாயவாதிகளும் எடுத்தாளக் கூடிய எதிரிடையான முற்கோள்களோடு ஒத்த சட்டவமைதியுடையன வாய்த் தோன்றலாயின.
ஆனல் மத்திய கால இறுதியில், பொதுமக்கள் சபையானது முதலாம் சாள்சு காலத்தில் இருந்ததைப் போன்று, நாட்டின் பிரதான அரசியற் சத்திகளைப் பிரதிபலிக்கும் அதிகாரம் படைத்த சுதந்திர தாபனமாக இயங்கவில்லை. மத்திய காலவிழுமியோரும் மதகுருக்களும் அரசருக்கும் பொதுமக்கள் சபையினருக்கும் இடையிலே குறுக்கிட்டு அவ்விருபாலா ரினதும் அதிகார அளவைக் குறைத்து வந்தனர். உண்மையிற் பொது மக்கள் சபையானது நாட்டில் மிகுந்த செல்வாக்கு உடையதாயிருந்தது;
379
3271461.

Page 200
1$ሽ7-- 1399.
380 மன்னன், பிரபுககள், பொதுமக்கள்
எனினும், முடியைக் கட்டுப் படுத்துவதற்காக, அல்லது கைப்பற்றுவதற் காக ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த விழுமியோர்க் கிடையே ஏதாவதொரு கட்சியைச் சார்ந்து போட்டியை வளர்க்குங் கருவியாக அமைந்திருந்ததன் காரணமாகவே அச்செல்வாக்கை மக்கள் சபை பெற்றிருந்தது. 11 ஆம் எட்டுவேட்டு ஆட்சிக் கால இறுதியில், 1876 ஆம் ஆண்டிற்கூடிய “நல்ல பாராளுமன்றமானது” கருங் கவச இளவரசன், மாச்சுஎள் ஆகியவர் வெற்றியடைவதற்கு உதவி செய்தது மன்றி அவர்களுடைய எதிரிகளைப் பழிமாட்டறையவும் செய்தது. ஆனல் மறுவருடத்துப் பாராளுமன்றத்தில், கோண்டுநகர் யோன் என்பவர்க்குச் சார்பான எதிர்க்கட்சியினர் பலர் இருந்தனர். இவ்வாறே 11 ஆம் இரிச்சாட்டு ஆட்சியிலும் பொதுமக்கள் சபை தனக்கென நிலையான கொள்கை எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆனல் மேலதிகாரிகளிடையே எற்பட்ட பயங்கரச் சச்சரவுகளின் பயனப், நாடெங்கும் நடுக்குறும் படியான பல குழப்பங்கள் எற்படுவதற்குப் பொதுமக்கள் சபை கருவியாக் கப்பட்டது. அதற்கடுத்த நூற்றண்டில், அரசியல் நிர்வாகத்தைக் கட்டுப் படுத்துவதிற் பாராளுமன்றம் கையாண்ட, பருவமெய்தாத பல பரிசோதனை கள் உயர்குடி ஆட்சியறவில் முடிந்தன. அவை தாம் உரோசாப்பூப் போர்கள் என்பவையாகும்.
அரசனிடமிருந்து அதிகாரத்தைப் பொதுமக்கள் சபை எடுத்துக்கொள் வதற்கு முன்னர், அரசின் கட்டுக் கோப்பைப் பலப்படுத்தி விழுமியோர் களையும் மதகுருக்களையும் மற்றைக் குடிமக்களின் நிலைக்குத் தாழ்த்து வதற்குத் தியூடர் மன்னர்களின் கீழ் முடியின் அதிகாரங்களை அதிகரிக் கச்செய்யும் ஓர் இடைக்காலம் அவசியமாயிருந்தது. ஆனல், “ கலப்புள்ள ” ஆங்கில யாப்பு முறையிலோ, அதன் தன்மையிலோ முற்ருன இடையுறவு எப்போதாவது எற்பட்டதே கிடையாது. திருச்சபையிலும் அரசிலும் ஒரு புரட்சியை உருவாக்குவதற்கு, தியூடர் மன்னர்களில் அறிவுத்திறன் படைத்தவர்கள், பாராளுமன்றத்தை ஒரு கருவியாக உபயோகித்தனர் “பாராளுமன்ற ஆட்சி” என்று சொல்லப்பட்ட இலங்கா சுற்றர் வமிச ஆட்சியில் இத்தகைய புரட்சியை உண்டு பண்ணுதல் அதன் வல்லமைக்கப்பாற்பட்டதெனக் கருதப்பட்டிருக்கும். ஆங்கில அரசாட்சியின் சிக்கலான அமைப்புக்களும் சுதந்திர உணர்ச்சியும் நூற்றண்டுக்கு நூற் ருண்டு மாறுதலடைந்தபோதும், தொடர்ச்சியறது என்றும் நிலைத்து வந்திருக்கின்றன.
வேல்சிலும் கொத்துலாந்திலும் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து எற்பட்ட நூறண்டுப்போர் காரணமாக “ அரசன் தன் மனம் போனபடி வாழ்வது” இயலாததாயிற்று. யுத்த அமயங்களில், அரசருடைய சொத் துக்களிலிருந்து வரும் வருமானங்களையும், நீதி மன்றங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களையும், நிலமானிய முறையின் கீழ்வரும் குத்த

பாராளுமன்றமும் போரும் 38.
கைப்பணத்தையும் பிற வழக்கமான வரிகளின் மூலம் பெறுகின்ற தொகைகளையும் கொண்டு அரசாங்கச் செலவினங்களை நடாத்த முடியாதிருந் தது. விசேட வரி விதிப்பை அரசன் கைக்கொள்வது அவசியமென எல்லாக் கட்சியினரும் கருதினர்; ஆனல், தனிப்பட்ட வியாபாரிகளிடமிருந்தோ, நகரங்களிலிருந்தோ, மாகாணங்களிலிருந்தோ இத் தொகையைப் பெறு வது உசிதமல்லவென்றும், தேசிய பாராளுமன்றத்தில் இவைகளின் பிரதி நிதிகளோடு நேரிற் கலந்து உரையாட வேண்டுமென்றும் கருதினர். கம்பளிமயிர் வியாபாரத்தின் மீது வரிவிதிக்கும்படி வாக்குச் செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் எராளமான தொகையை எளிதிற் பெற முடியும் என்று அவர்கள் கருதினர். அரச விவகாரங்களிலே தலையிட விருப்பமின்றி, கூடுமானுற் பாராளுமன்றக் கூட்டங்களுக்கு ஒரு போதும் போகாமலிருக்கவே விரும்பிய அக்கால நகரப்பிரதிநிதிகளுக்கு,
இத்தகைய வரிவிதிப்பானது ஓரளவு முதன்மையை அளித்தது. அடக்க முள்ள நகர வாசிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி சம்பந்தமான முதன்மை.
யானது, கோட்டத்து நைற்றுக்களின் பொருளாதார, அரசியல் முதன் மையை அதிகப்படுத்தியது. அவர்கள் பக்கத்திலேயே நகரப்பிரதிநிதிகள் வெசுற்று மினித்தரிலிருந்த மண்டபத்தில் வீற்றிருந்தனர்.
இலா கோக்கு, பிளணிம், உவாட்டலூப் போர்கள் நடந்த காலத்திற் போலவே, சுலூயிசு, கிரெசி, அசின்கோட்டுப் போர்கள் நடந்த காலத் திலும், பிரான்சுக்கு எதிராக மன்னர் தொடுத்த போர்களிலே வெற்றி காண்டலும் வரிவிதிப்புக்குக் காரணமாயிருந்த பொதுமக்கள் சபையின் அதிகாரமும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன. ஆனல், தங்கள் அரசர் பிரான்சின் அரசராகப் பதவியேற்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டதைக் கண்ட போதே பொதுமக்கள் சபையினருக்குத் திடீரென அதிர்ச்சியேற்பட்டது. பரிசிலிருந்து கொண்டு மேற்கு ஐரோப்பாவைத் தங்கள் அரசர் ஆளுவ தாயின் இங்கிலாந்தின் சுதந்திரத்தின் கதி என்னவாகும்? ஆனல் V ஆம் என்றியின் திடீர் மரணமும், யோன் ஒவு ஆக்கு என்னும் கன்னிகையின் தீரச் செயலும் பிரித்தானிய யாப்பைக் காப்பாற்றின.
மத்திய கால ஆங்கிலப் பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதும் வரி விதிப்பதுமான செயல்களை மட்டுமே ஆற்றும் மன்றமாக இருக்கவில்லை, முறைச் சேவைகளை ஆற்றும் பாராளுமன்ற உயர் நீதி மன்றமாகவும்
1420-ஆம் ஆண்டில் பெரஞ்சுக் காரர் 5 ஆம் என்றியைத் தங்கள் நாட்டுககு அரசுரிமை யுடையவனுக எற்றுக் கொண்டவுடன், ஆங்கிலப் பொது மக்கள் சபை, மன்னர் பிரான் சிலிருந்து திரும்பி வரும்வரைக்கும் அவனுக்குப் பொருள் உதவியளிப்பதை நிறுத்தி வைத் திருந்ததுடன், 1340 ஆம் ஆண்டில் பிரகடனப் படுத்தப்பட்ட ஒரு சட்டத்தைத் திரும்பவும் வெளியிட்டது. அதன்டி பிரெஞ்சு அரசராக முடிசூட்டிக் கொள்ள விருக்கின்ற ஆங்கில அரசருக்கு, பிரெஞ்சு மன்னர் என்ற முறையில், ஆங்கில மக்கள் கீழ்ப்பட்டவர்களாகார் என்று கருதப்பட்டது. இது விடயமாக 1840 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆபத்தை விட 1420-ஆம் ஆண்டில் எற்பட்ட ஆபத்து மிகப் பெரிதாகும். N
1420
422429,

Page 201
S82 பாராளுமன்றமும் சட்டவறிஞரும்
அது செயற்பட்டது. ஆனல் அக்கால நீதி முறைச் சேவைகள் யாவும் பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களினின்றும் வேறுபட்டன வாக இருக்கவில்லை. வெசுற்றுமினித்தர் மண்டபத்திலே தொழில் செய்து வந்த வழக்கறிஞர்கள், தமக்கு அயலே அடிக்கடி கூடிய நாட்டு மன்றத்தை, எல்லா நீதிமன்றங்களிலும் மேலான நீதிமன்றமாகக் கருதி யதுமன்றி, அதே காரணத்திற்காக அதனுடைய அபிவிருத்திக்கு உதவி செய்யவுந் தயாராகவிருந்தனர். பிளந்தாசெனற்று அரசர்களின் காலத்தி லிருந்தே சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பாராளுமன்ற அங்கத்தவர் களுக்குமிடையே உறவு நிலவிவந்தது எனலாம்.
முற்கோள்கள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கு வழக்கறிஞர் எத்தகைய உயரிய மதிப்புக் கொடுப்பரோ, அத்தகைய உயர்மதிப்பைப் பாராளுமன்ற மும் அவற்றுக்குக் கொடுத்து வ்ந்தது-இதனல் அதன் வலிதொடக் கத்திலிருந்தே பெருகிற்று. வெறுமனே "தர்க்கமிடும் அவையாக * அது தன் வாழ்வைத் தொடங்கவில்லை ; ஆனல், தகுந்த நடை முறையும் நீதிமன்றத்துக்குரிய சிறப்பு உரிமைகளும் கொண்டதாய், அரசரது பாராளுமன்ற * உயர் நீதிமன்றத்தின்” ஒரு பகுதியாக அது தோன்றியது. அதற்கு உள்ளும் புறமும் இருந்த சட்ட அறிஞர்களின் உதவியால், கோட்டத்து நைற்றுக்கள் இன்றியமையாத பல கலைகளைக் கற்றுக் கொண்ட னர். இவைகளில் மிகவும் முக்கியமானது யாதெனில், குறைகளுக்குப் பரிகாரத்தை வேண்டி நிற்கும் வெறும் மனுக்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக, நியதிச் சட்ட மாவதற்குத் தகுதியான “ சட்ட முறிகளை ’ நன்கு தயாரிக்கும் முறையை அவர்கள் கற்றுக் கொண்டதேயாம். W1 ஆம் என்றியின் ஆட்சிக்கால இறுதியிலே தொடங்கிய இந்த மாறுதல் பொது மக்கள் சபையின் சம்மதத்துக்காக விடப்பட்ட விதிகள் மீது அவர்களுக்கு மிகுந்த அதிகாரத்தையளித்ததுடன், தாமாகவே சட்ட முறிகளைப் பிறப்பிப்ப தற்கான சில அதிகாரங்கள்ையும் அவர்களுக்குக் கொடுத்தது. பல ஊழி களாகத் தொடர்ந்து கிடைக்கப் பெற்றுவந்த, தேசத்தின் சிறந்த சட்ட அறிஞர்களின் உதவியின்றேல், பொதுமக்கள் சபையானது சட்டங்களை இயற்றும் அதி முக்கிய சாதனமாக விளங்கியிருக்க முடியாதென்பதோடு, கோக்கு, செல்டன், சோமெசு போன்றவர்கள் வாழ்ந்த அந்த நூற் ருண்டில், முடிக்குரிய சட்ட அறிஞர்களுக்கும் அரசருடைய நீதிபதிக ளுக்கும் எதிராக நடந்த யாப்பு முறை வழக்குகளையும் அது வாதித் திருக்க முடியாது.
* இன்சு ஒவு கோட்டு” என்ற சட்ட மன்றவிடுதிகள் தொடக்கத் திலிருந்தே பொதுமக்கள் சபையோடு நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்த காரணத்தால், ஆங்கில வழமைச் சட்டத்தைக் கற்கின்ற மாணவர் களிடத்துக் காணப்படுவதுபோன்று, அரசரை, ஆங்கிலச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவராகக் கருதும் மனப்பான்மை வளர்ந்தது; உரோமன் சட்டக் கோவையும் அதனைப் பயில்வோரும் அரசனைத் தனிமுதல் வேந்தாகக்

பாராளுமன்றமும் சட்டவறிஞரும் 383
கொள்ளும் மனப்பான்மைக்கு இது மாருயிருத்தல் காண்க. ஆகவே 11 ஆம் இரிச்சாட்டின் பதவி நீக்கத்தின்போது, அவன் சட்டங்களெல்லாம் * தன் உள்ளத்தினின்றே ’ பிறக்கின்றன வென்றும், சட்டங்களை இயற்ற வும் மாற்றவும் தானே தகுதியுள்ளவனென்றும் கூறியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. 11 ஆம் சேமிசைச் சிம்மாசனத்திலிருந்து இறக்குவதற் குக் காரணமான புரட்சி எற்படும்வரை இந்தத் தகராறு முற்றக முடிவு செய்யப்படவில்லை. ஆனல், பிளந்தாசெனற்று வமிச இரிச்சாட்டுக்கு இது போன்ற கதி ஏற்பட்டபொழுதே இத்தகராறு பற்றிய ஒரு ஆரம்பத்தீர்ப்பு
வழங்கப்பட்டது.
எறக்குறைய மூன்று நூற்றண்டு காலத்தாற் பிரிக்கப்பட்டுள்ள இவ்விரு 1399புரட்சிகளும், தத்தம் யாப்பு முறையிலும், ஓரளவில் அவைகளின் 1688. சொந்தச் சூழ்நிலையிலும், தற்செயலாக நிகழ்ந்த சூழ்நிலையிலும் விசேட ஒருமைப் பாட்டைக் கொண்டுள்ளன. ஆனல் அதே அமயத்தில் ஆங்கில வரலாற்றிலும் ஐரோப்பிய வரலாற்றிலும் 1688-ஆம் ஆண்டை ஒர் புதிய ஊழியாக்கும் சமயப்பிரச்சினைகளும், சர்வதேசப் பிரச்சினைகளும் இரிச்சாட்டுக்கும் அவனுடைய குடிகளுக்குமிடையில் தோன்றிய பிணக்கிற் காணப்படவில்லை. இந்நிகழ்ச்சிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னல் இப் படிப்பட்ட ஒரு புரட்சி எற்படுமென்று விடயங்களை நன்கு உன்னிக் கவனிப் பவர்தாமும், அரசருடைய குணவியல்பை அறியும் உள்ளுணர்வின்றி, தீர்க்க தரிசமானக் கூறியிருக்கமுடியாது. 1685-ஆம் ஆண்டிற் சேமிசுக்கு இருந்ததைப் போலவே 1896-ஆம் ஆண்டில் இரிச்சாட்டுக்கும் பொது மக்களின் போதிய ஆதரவும், பலம் வாய்ந்த கட்சியினரின் பக்க பலமும், சாதகமான பொதுசன அபிமானமும் இருந்தன. இவ்விரு அரசர்களுக் கும் பலமான எதிரிகள் இருந்தபோதிலும், அவர்கள் எல்லோரும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இரிச்சாட்டின் முதல் மனைவியாகிய, பொகிமிய நாட்டு இளவரசி ஆன் மீது அவன் கொண்டிருந்த அன்பானது அவனுடைய மூர்க்கத்தனமான இச்சைகளிலிருந்து அவனைக் கட்டுப்படுத்திய வரை, ஆறு ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தினன்.
ஆனல் அவளுடைய மரணத்திற்குப் பிறகு, அவனது மனுேபாவத்தில் வதோ மாற்றம் ஏற்பட்டு, அவனுடைய உடற் பலத்தையும் நியாயம் வழங்கும் அறிவுப் பலத்தையும் அழித்தது ; அதேபோல ஆண்டு முதிர்ச்சி யும், திடீர் அதிகாரமும் மத வெறியும் சேமிசை ஒரு கொடிய மனிதனுக மாற்றின.
பொகிமிய இளவரசி ஆன் இங்கிலாந்துக்கு வரும்பொழுது அவளுடன் சில பொதி மிய வாசிகளும் வந்ததாகவும், அவர்கள் விக்கிளியினுடைய நூல்களின் பிரதிகளைத் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும், அதன் பயனகத்தான் 15 ஆம் நூற்றண்டில் அங்கு * அசு” என்பவரால் மிகப்பெரிய மதப்புரட்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் கரு தப்படுகிறது.

Page 202
384 இரண்டாம் இரிச்சாட்டும் இரண்டாம் சேமிசும்
இவ்விரு அரசர்களுக்கும் எதிராகத் தனித்தனியே அவரவர்களுடைய பழைய நண்பர்களையும் பழைய விரோதிகளையும் ஒன்று சேர்ப்பதற்குப் பாராளுமன்றத்துக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. எனென்றல் திடீ ரென்று இவ்விருவரும் வெளிப்படையாகக் கொடுங் கோன்மையில் இறங் கினர். இவ்விருவரும் பாராளுமன்றத்தைக் தமது ஆட்களால் நிரப்பியும் பயன் எற்படாததால், அஃதின்றியே நாட்டை ஆள முயற்சி செய்தனர். ஒவ்வொருவரும் சட்டத்தைச் சட்டத்தின் துணைகொண்டே தாக்கி, நில முடையவர்களுக்குச் சொத்துக்களின் மீதுள்ள உரிமைகளே மறுத்து, அவற் றைப் பறிமுதல் செய்து, அச் சொத்துக்களின் மேல் அவர்கள் உரிமை பாராட்டுவதற்குச் சிறிதேனும் இடமில்லாமற் செய்வதின் மூலம் மக்கள் மனத்தில் பீதியை உண்டாக்கினர். யோசனையற்றவனன இரிச்சாட்டு முந்திய வருடங்களிலே தன்னலேயே அடக்கி ஒடுக்கப்பட்டவர்களான, ஆட்சியில் முதன்மைசெலுத்த முயன்ற சில விழுமியோர்களைக் காட்டிலும் இரத்ததாக முடையவனல்லன். தனக்கு இதுவரை எந்தவிதத்திலும் நெடுநாளைய விரோதிகள் என்றநிலையில் இல்லாதிருந்த இலங்காசுற்றர் வமிசத்தின ரின் சொத்துக்களையெல்லாம் இரிச்சாட்டு பறிமுதல் செய்தான். விவேக மற்ற இச்செயலானது, பிற்காலத்தில் மோட்லின்கல்லூரிக் கூட்டர்களை வெளியேற்றிய கொடூரத்தையும் மீறிவிட்டது எனலாம். செகப்பிரியரின் இசை நயமுடைய ஈரடிச் செய்யுளில், கவலையற்று இழைக்கப்பட்ட இம் மடமைச் செயல் கூறப்படுகிறது :-
நீ எது நினைத்தாலுஞ் சரியே : நாம் பறிப்போம்
அவன் உணவு, அவன் பொருள், அவன் பணம், அவன் காணி அனைத்தையுமே.
இலங்காசுற்றர் என்றி தன்னுடைய தகப்பன் வழிச் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடி வெளி நாட்டிலிருந்து இங்கிலாந்து வந்து சேர்ந்ததும், பிற்காலத்தில் ஒரேஞ்சு நாட்டு வில்லியத்தை மக்கள் எவ்வாறு மகிழ்ச்சி யுடன் வரவேற்ருர்களோ, அவ்வாறே நாடு முழுவதும் என்றிக்கு ஆதரவு காட்டித் திரண்டு நின்றது. சேமிசைப் போலவே இரிச்சாட்டும் அந்த நெருக் கடியின் போது செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் செய்தான். அவனுக் காகப் போரிட எவருமே கிடைக்கவில்லை. மேலும் இராச்சியத்தின் அடிப் படைச் சட்டங்களையெல்லாம் தகர்த்தெறிந்ததாகப் பாராளுமன்றத்தாற் குற்றஞ் சாட்டப்பட்டுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். பிற் காலத்தில் வில்லியம் எவ்வாறு அரசபதவிக்கு அழைக்கப்பட்டானே அதே போல IV ஆம் என்றியும் அழைக்கப்பட்டான். ஒரேஞ்சு வில்லியமோ, V ஆம் என்றியோ பட்டத்துக்குரிய நெருங்கிய உரிமையாளர் அல்லர். எனினும் என்றி அரசனக அமர்ந்ததற்கு உண்மையிற் பரம்பரை உரிமை ஒரு காரணமாக விருந்தாலும், அதைவிடப் பாராளுமன்றம் அவனுக்களித்த உரிமையே முக்கியமானதாகும்.

பிரதமரீதிபதி போட்டசுக்கியூ 385
1399 ஆம் ஆண்டில் எற்பட்ட புரட்சியின் பயனகப் பாராளுமன்றத்துச் சபைகள் இரண்டினதும் அதிகாரம் முன்னைவிட மேன்மையும் உறுதியு மடைந்தது. TIஆம் எட்வேட்டு தன்னுடைய பதவியைத்தன் மகனுக்குக் கொடுப்பதற்கு வற்புறுத்தப்பட்ட அமயத்தில் நடந்ததைப் போன்று, பாராளு மன்றம் இப்பொழுது ஒர் அரசனைப் பதவிநீக்கம் செய்துவிட்டதுமன்றி, சிம்மாசனத்துக்குரிய அடுத்த அரசனையும் அது தேர்ந்தெடுத்துவிட்டது. அனேவர் வமிச அரசர்களைப் போலவே இலங்காசுற்றர் அரசர்களும் பாராளு மன்றம் அளித்த உரிமைகாரணமாகவே நாட்டை ஆண்டனராதலால், அவர்களாட்சியில் இருசபைகளின் அதிகாரமும் சிறப்புரிமைகளும் மதிக்கப் பட்டுவந்தன.
15 ஆம் 18 ஆம் நூற்றண்டுகளில் நிலவிய அரசியற் கொள்கைகள், முடியின் அதிகாரத்தைச் சட்ட பூர்வமாகக் குறைப்பதைப் பெரிதும் வற் புறுத்துவதும், பிரெஞ்சு மக்களின் அடிமை வாழ்வோடு ஆங்கில மக்களின் சுதந்திர வாழ்க்கையைப் பெருமையுடன் ஒப்பிடுவதும் ஆச்சரியப்
படத்தக்கதன்று. ஒகாத்து, பிளாக்குசுதன், பேக்கு முதலிய அறிஞர்க
ளின் காலத்தில் வாழ்ந்தோர்களின் கருத்துக்களும் இத்தகையனவே. இதற்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னதாக, அதாவது 15ஆம் நூற் ருண்டில் வாழ்ந்தவரும் சிறந்த நாட்டுப் பற்றுடையவரும், தமது நாடே விடுதலையின் இருப்பிடம் என்று இங்கிலாந்தை நேசித்தவருமான போட்ட சுக்கியூ என்ற பிரதம நீதியரசர் இதே கொள்கையைத்தான் பெருமை யுடன் கொண்டிருந்தார். தெளத்தன் போருக்குப் பிறகு இலங்காசுற்றர் கட்சியினருடன் இவரும் நாடுகடத்தப்பட்ட போதிலும் ஆங்கில யாப்பைப் பற்றிப் பெருமையாக வெளிநாட்டிலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். * இங்கிலாந்து அரசர் தம் விருப்பப்படி ஆட்சியிலுள்ள சட்டங்களை நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது. எனெனில் அவர் தமது அரச அதிகாரத் தால் மட்டுமன்றி மக்களால் அளிக்கப்பட்ட சட்டத்துக் கமைவான அதிகாரத் தைக் கொண்டும் தம் பிரசைகளை ஆளுகிறர் ” என்று அவர் எழுதினர்.
மற்றைய நாடுகளிற் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் குடியியற் சட்டப் படியும் உரோமானியச் சட்டப்படியும் “ அரசனின் விருப்பே சடடமாகும். ” இந்தக் கொள்கையை ஆங்கில வழமை சட்ட இயல்பு முற்றிலும் வெறுக் கிறது, என்றும் அவர் கூறுகிறர். மேலும் பிரெஞ்சு நாட்டுப் பொது மக்கள் அரசனுடைய படைவீரர்களாலும் ஊழியர்களாலும் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டும் அவமானப் படுத்தப்பட்டும் துன்பத்தில் உழன்றனர் என்றும், அதற்கு முற்றிலும் மாறக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆட்சியில் ஒரு மனிதன் இன்னெருவனுடைய வீட்டிற்குள் அவனது விருப்பமும் அனுமதியுமின்றி பிரவேசித்தது இல்லையென்றும், இதனை வேறுவார்த் தைகளில் கூறப்புகின் ஒவ்வொரு ஆங்கிலேயனுக்கும் அவனுடைய வீடு ஒரு கோட்டையாக அமைந்திருந்ததென்றும் தான் நேரில்கண்ட அனுபவத்தி லிருந்து அவர் கூறுகிறர்.
1461.

Page 203
386 ஆலோசனைச்சபை பற்றி இருகருத்துக்கள்
அவர் தம்முடைய காலத்தில் ஆங்கில சமுதாயத்திலுள்ள குறைபாடு களை மனமார நன்கு அறிந்திருந்தும், உரோசாப்பூ யுத்தங்கள் தீவிர மாக நடந்து கொண்டிருந்த அமயத்தில் இத்தகைய வார்த்தைகளை (அவர்) உபயோகித்தது குறிப்பிடத்தக்கது. “அரசாங்கமற்ற குழப்பநிலைக்குக்” காரணம் என்னவென்பதை ஆராய்ந்து, மிகப்பலம் வாய்ந்த குடிமக்களிட மிருந்தே அரசனுக்குத் துன்பமுண்டாவதாகக் கண்டார். இந்நிலைமையை மாற்ற மிக்க செல்வமும் பலமும் பொருந்திய முடியாட்சியும், செல்வத்தி லும் அதிகாரத்திலும் குறைந்த விழுமியோரும் இருக்கவேண்டியது அவ சியம் என்று கோரினர். VI ஆம் என்றி நடைமுறையிற் கையாளவிருந்த பூட்கையையே சற்று விரிவான முறையில் முன்னதாகவே இவர் கண்டறிந் தார் எனலாம்.
சட்டங்களை மீறிக் கலவரம், விளைத்துக் கொண்டு 15 ஆம் நூற்ருண்டில் இங்கிலாந்தின் அமைதியைக் கெடுத்து வந்த பெரும் விழுமியோரும் அவர் களின் சேர்க்கையாளரான கனவான்களும், நாடு ஐக்கியப்பட்டிருக்கவேண்டு மென்னும் உண்மையையாவது எற்றுக் கொண்டனர். தன் நாட்டிற் படையெடுத்து நுழைந்த ஆங்கிலேயர் முற்றிலும் வெளியேறினபிறகு X1 ஆம் உலூயி மன்னன் பிரான்சு நாட்டிலுள்ள விழுமியோர்களை ஒடுக்கு வதையே கடமையாகக் கொண்டிருந்தான். பிரெஞ்சு நாட்டு விழுமி யோரைப்போல மாகாணங்களனைத்தையும் நிலமானிய முறைப்படியோ சிற் றரசர்கள் ஆண்டதைப் போலவோ தாம் ஆள வேண்டுமென்ற விருப்பம் ஆங்கிலப் பிரபுக்களுக்கு இருக்கவில்லை. இங்கிலாந்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட்ட “ அரசராக்குவோர்’ அரச ஆதிக்கத்தை ஒழிக்கவோ அல்லது பிரிக்கவோ முயலாது, அதன் மீது தம் ஆதிக்கத்தைச் செலுத்தித் தாம் இலாபமடையவே விரும்பினர். முதலாம் எட்டுவேட்டுடைய “யாதுரிமை” விசாரணையை எதிர்த்து தி-வாறன் என்பவர் மிக ஊக்கமுடன் நிறுவிய தனிப்பட்ட நீதி மன்றங்களையோ அக்கால வழக்கில் இல்லாதிருந்த வாக் குரிமைகளையோ மீண்டும் நிலை நாட்டவும் அவர்கள் முயலவில்லை. பிற்கால விழுமியோர் அரசருடைய நீதி மன்றத்திலே தாங்கள் விரும்பி யதை எந்த விதத்தில் அடைவது என்பதை நன்கறிந்தவராய், மாகாண நடுவர்களையும் அரசருடைய நீதிபதிகளையும், சமாதான நீதவான்களையும் இலஞ்சத்தாலும் பயமுறுத்தலாலும் வசப்படுத்தித் தாங்கள் விரும்பியதைப் பெற்று வந்தனர். உண்மையாகவே கோட்டங்களிலுள்ள அரச ஆணைக் குழுவில் இத்தகைய சட்ட மீறுவோரே அனேகமாக உறுப்பினராயிருந்தனர். அக்காலத்து அரசாங்கப் பதிவுகளிற் சில வமயங்களில் மிக விநோதமான விடயங்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, குறிப்பிட்ட கிராமப் புறத்தைச் சாந்த கனவான்களில் ஒரு பகுதியினர் ஒர் அமயம் அரசருடைய பெயராற் சமாதானத்தையும் தொழிலாளர் நியதிச் சட்டங்களையும் நடை முறையிற் கொண்டு வருவோராகவும், மற்றேர் அமயத்திலே திருட்டு, கடற் கொள்ளை, கொலை முதலியன செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டோராகவும்,

ஆலோசனைச்சபை பற்றி இருகருத்துக்கள் 387.
இன்னேர் அமயம் நீதிமன்றத்தில் நீதி வழங்குவோராகவும், பிறிதோர் அமயத்தில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோராகவும் இருந்தனர்.
கீழ் நிலைக் கனவான்களில் அனேகர் கிராமப் புறங்களில் இந்தவிதமாக நடந்துகொண்டுவருங்காலத்தில், அவர்களுடைய புரவலர்களும் உபகாரி களுமான பெரும் விழுமியோர், அதிகாரத்துக்கும் புகழுக்கும் செல்வத்துக் கும் ஊற்றகக் கருதப்பட்ட மத்திய அரசாங்கத்தைத் தங்கள் ஆதிக் கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்குத் தங்களுக்குட் சச்சரவிட்டுக் கொண்டே யிருந்தனர். நிர்வாக அதிகாரம் தாங்கியிருந்த அரசுருடைய ஆலோசனைச் சபையே அவர்களுடைய யுத்த களமாயிருந்தது. குறித்த விழுமியோர் அவ்வாலோசனைச் சபையை நாட்டிலுள்ள பல தரப்பட்ட சத்திகளின் பிரதி நிதிகளைக் கொண்ட கூட்டமாகவோ, வலிமைமிக்க உயர்குடிகளைக் கொண்ட தாய் நிலையாக வைகும் ஒருவிதமான பாராளுமன்றமாகவோ கருதினர். அக்கால், பெரும் பிரபுக்கள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய போது அங்கு அமரும் உரிமையுள்ளவராயிருந்தனர். இதற்கு முற்றிலும் மாருக, இவ்வித ஆலோசனைச் சபை தனக்கே உரித்தானதென்றும் அதிலுள்ள அங்கத்தினர் விழுமியோர்களாக இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை என்றும் தான் விரும்பிய ஆட்களைக் கொண்டே அதை நிரப்பலாம் என்றும் அரசன் கருதினன். மூட மதிபடைத்த மன்னனின் கீழ் இத் தகைய ஆலோசனைச் சபை இயங்கும்போது, அதுஅரசனின் தனிப்பற்றுக் குரியவரது ஆட்சி யாகும் : ஞானம் படைத்த அரசனின் கீழ், பயிற்சி பெற்ற தொழில் நுணுக்கமறிந்த நிபுணர்களின் ஆட்சியாய் அது அமையும்.
ஆலோசனைச் சபை எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்பது பற்றி அரச ருடைய அபிப்பிராயத்திற்கும் விழுமியோரின் அபிப்பிராயத்துக்குமிடையே எற்பட்ட சச்சரவு அடிக்கடி, குறிப்பாக II ஆம் இரிச்சாட்டு ஆட்சிக்காலத்தில், குழப்பத்திற்கு அடிகோலியது. இன்னுங் கூறப்புகின், ஒருவிதத்தில், பேசி பிரபுக்கள், மோற்றிமெர், சுகுரோப்பு ஆகியவர்கள் மீது I ஆம் என்றி தொடர்ந்த போர்கள் மேற்சொன்ன பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்தனவாகும். இவற்றேடு வேல்சும், வடபகுதி சம்பந்தப்பட்ட எல்லைப் பிரச்சினைகளும், ஒருபோதும் முடிவுக்கு வராத வமிச அரசுரிமைப் பிரச்சினை யும் கலந்திருந்தன. ஆனல் ஆலோசனைச் சபையானது எவ்வாறு அமைய வேண்டுமென்பது சம்பந்தமாய் அரசருக்கும் உயர் குடிமக்களுக்குமிடையே உள்ள கொள்கைகளில் ஒன்று மற்றென்றை ஒழித்துவிட முடியவில்லை. எனெனில் அவ்வூழியின் முக்கிய தேவைகளையும் சத்திகளையும் அவ்விரு கொள்கைகளும் தத்தம் அடிப்படையாய்க் கொண்டிருந்தன. VI ஆம் என்றி தகுந்தவயதடைவதற்கு முன்னுள்ள நீண்ட இடைக்காலத்தில் மட்டுமே இந்த ஆலோசனைச் சபையானது பெரும் விழுமியோர்களின் பிடியில் இருக்கவேண்டிய நிலையை எய்தியது. மேலும் என்றி உரிய வயதையடைந்ததும், முன்னெருகால் இத்தகைய சந்தர்ப்பங்களில் Iஆம் இரிச்சாட்டு செய்ததைப்போல, தனக்குரிய அதிகாரத்தைத் தானே செலுத்
1402
40S.
1422
1437.

Page 204
Iվի
38B உயர்குடிக் குழப்பம்
திக் கொள்வதற்கு வேண்டிய திறனேயோ, பண்பையோ அவன் பெற்றி ருக்கவில்லே, ஆலோசனைச் சபைகளிலும் இரகசிய மன்றங்களிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தப் பெரும் விழுமியோர்களுக்கிடையே எற்பட்ட சச்சரவானது, முன்போலவே தொடர்ந்து நடைபெற்றதுடன், கடைசியில் உரோசாப்பூப் போர்கள் என்ற கொடிய இரத்தக் களரிக்கு நாட்டைக் கொண்டு சேர்த்தது.
ஆலோசனேச் சபை சம்பந்தமான குரோதப் பிரிவினேகளுக்கிடையிற் சிக்கிய புனித குணம் படைத்த என்றியின் பலவீனம் காரணமாக, பெரும் குடும்பங்களிலிருந்து சிறப்புரிமை பெற்ற ஊழியர்கள் கிராமப் புறங்களிற் சட்டவிரோதமான கொடுஞ் செயல்களில் இறங்கினர். பாராளு மன்றம் இதற்குத் தகுந்த பரிகாரத்தைச் செய்து விழுமியோரை அடக்கு வதற்கு அரசருடைய அதிகாரத்தைப் பலப்படுத்தியிருத்தல் வேண்டும். ஆணுல் அதைச் செய்வதற்குப் பாராளுமன்றம் முயலவில்லே. W1 ஆம் என்றியின் ஆட்சிக் காலத்தில் மத்திய காலத்துப் பொதுமக்கன் சபை யாப்புறு சிறப்புரிமைகளேயடைவதில் உச்சநிலேயையடைந்திருந்தும், நாட் டினது தன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. பாராளுமன் தத்துக்கும் ஆலோசனேச் சபைக்கும் எந்தவித மோதல்களும் ஏற்படவில்லே. ஏனெனில் அவை இரண்டுமே அதிகார வெறி கொண்ட உயர்குடி மக்கள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தன. ஆணுல் அவ்வுயர் குடி மக்களோ ஒருவர்க்கொருவர் போட்டியிடுவதில் இறங்கியிருந்தனர்.
1430 ஆம் ஆண்டிற் பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற விதி, கோட்ட நீதிமன்றத்தில் வழக்காடும் சொத்துரிமையுடைய அனேவருக்கும் பொது வாகக் கொடுக்கப்பட்டிருந்த வாக்குரிமையை அவர்களிடமிருந்து பறித்து, நாற்பது சிலிங்கு குத்தகைவரி கொடுக்கும் சொத்துரிமையுடையவர்களு க்கே அவ்வுரிமை உண்டு என்று வரையறுத்தது. இச்சட்டமானது 1832-ஆம் ஆண்டிற் பாராளுமன்றச் சீர்திருத்தச்சட்டம் எற்படும்வரை நடைமுறையி விருந்தது. ஆணுல் இலங்காசுற்றர் அரசர்களின் காலத்தில், வருடத்துக்கு நாற்பது சிலிங்கு குத்தகை கொடுப்பாருக்கு வாக்குரிமை உண்டு என் றிருந்த நிலைமையானது, பணத்தின்மதிப்பு இறங்கிய பிறகு ஏற்பட்ட தராதரத்தை விட மிக உயர்ந்த தராதரமாயிருந்தது. ஆகவே சில தலைமுறைகளாக வாக்குரிமையைப் பறித்த 1430 ஆம் வருடத்துச் சட்ட மானது, கீழ்நிலைக் கனவான்களின் தாத்துக்கும் கீழ்ப்பட்ட நிலையிலுள்ள எல்லோருக்கும் வாக்குரிமை மறுத்தது. மாகாணத் தேரகம் சுருங்கியதன் பயணுக, பாராளுமன்றத்தின் மீது பெரும் பிரபுக்களுக்கிருந்த அதிகாரம் அதிகரித்தது. காலத்துக்கு ஒவ்வாமுறையிலே பாராளுமன்ற ஆட்சிக் கொள்கையை அளவு கடந்து கடைப்பிடித்த பொதுமக்கள் சபை, பிரபுக் களின் எண்ணத்தின்படி ஆட்டுவிக்கப்பட்டதால், பொதுமக்களுடன் அதற் கிருந்த தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. விழுமியோர் பொதுமக்கள் சபையைத் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக் கூடுமாயிருந்த

38.9
Eru mei II 霹
Williu) ཚོ་་ ་་་་་་་་་་་་་ لايخلط
மாங்பத்தினோசர்கடிசுட்ப நiயூக்ளின் ஆடி நடிப்புடாநீடிக் கருங்ார தாப்ாளே பேசி
la isu
57 ܕܚܕ. EnT L-Egħrifer
.I *سمہ سہہ سیسہ d (இலங்கர்சுற்றர்) *று
o: يتم 1. it, it (ஆர்கு) හීබෘ
ld 3 མལ་བ་ལ་ཀྱི་( "معمحفہ تسمP8
~$ $.
1. O Eti. தி .s.-- 1IT ="" O
ሣሡò) ఛాశీ 581 *y-RE O ಡಿ? 과 ಟ್ಲಿ" 曹 /}; చల్ప్స్ F
ஆம் நார்ரி நத்ரீக்: *A* 5 క్యో قیقیiFائ*
ଗର୍ହ LLP :
(போவோடு) ديوه
ಇgrಳಿ: శ 10 سی انجی لهه
படம் WேTL பதினேந்தாம் நூற்றுண்டில் இங்கிலாந்து,

Page 205
390 உயர்குடிக் குழப்பம்
தால், அதன் வளர்ச்சி பற்றி அவர்கள் பொருமை கொள்ளவில்லை. 15 ஆம் நூற்றண்டுக்கும் 18 ஆம் நூற்றண்டுக்கும் சில அமிசங்களில் மறுபடியும் ஒற்றுமையிருப்பதை இங்கே காண்கிறேம். இங்கு கூறப்பட்டது போலவே, 18 ஆம் நூற்றண்டிலும் பொதுமக்கள் சபையின் அதிகாரமும் செல்வாக்கும் ஓங்கியிருந்தகாலை, அவ்வமயம் எற்பட்ட வாக்குரிமையின் அடிப்படையினுற் பொதுமக்கள் சபையானது உயர்குடிமக்களின் சபையாக மாற, மக்களின் பேராதரவை அது அடைவதற்குப் பதில் அவ்வாதரவை இழந்தது.
1453 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரில் ஒருவன்தானும் எஞ்சாமல் எல் லோருமே பிரான்சிலிருந்து விரட்டப்பட்டனர் என்பதும், அதற்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் சென் ஆல்பன்சு வீதிகளில் உரோசாப்பூப் போர்கள் ஆரம்பித்தன என்பதும் குறிப்பிடத்தக்கன. கடல் கடந்த நாடுகளிலிருந்து காவற் படைகளும் எனைய சேனைகளும் நாடு திரும்பிய தால், போரிடுவதிலும், சட்ட வரம்பை மீறுவதிலும், கொள்ளையடிப்ப திலும், இன்னும் எத்தகைய தீய செயலைச் செய்வதிலும் பழக்கப்பட்ட போர்வீரர்கள் இங்கிலாந்து தேசம் முழுவதும் நிறைந்தனர். வேலையற்றும் பட்டினிகிடந்துமிருந்த போர் வீரர் போதிய அபாயத்தை விளைவிக்கக் கூடியவர்களே ; ஆனல் இவர்களை விட, பிரெஞ்சு யுத்தம் முடிவடைந்த பின் தமது அரசியற் பேராவாக்களைப் பூர்த்தி செய்யவோ, தமது அய லாரின் சொத்துக்களை அபகரிக்க வேண்டுமென்ற ஆசையினலோ தூண்டப் பட்ட தனிப்பட்ட எசமானர்களிடம் சம்பளத்துக்கமர்ந்திருந்த படைவீரர்கள் அதிக அபாயம் விளைவிக்கக்கூடியவர்கள் என்க.
நூருண்டுப் போர், முடிவடைந்த அமயத்தில் மட்டுந்தான் ஆங்கில சமூகத்திற்குத் தீமை விளைவித்ததென்று கொள்ளலாகாது. அது நடை பெற்ற காலம் முழுவதுமே நாட்டில் ஒழுங்கின்மை, பலாற்காரம் முதலிய தீய பழக்கங்களைத் தோற்றுவித்து வந்தது. 111 ஆம் எட்டுவேட்டின் காலத்துப் பாராளுமன்றங்கள், ஒருவர் நிலத்தை மற்றெருவர் வல்லந்த மாய்ப் பிடுங்கிக் கொள்வதும், சொத்துக்கு உரிமையுடைய மாதர்களைத் தூக்கிக் கொண்டு போய் விடுவதும், கனவான்களும் அவர்களுடைய உரிமை ஏவலாளர்களும் நாட்டில் அமைதியைக் குலைத்து வருவதுமாகிய இழிசெயல்கள் நாட்டிற் புதிதாக வளர்ந்து வரும் தீங்காகும் என்று முறையிட்டுள்ளன. வெளிநாட்டுப் படையெழுச்சிகளால் எற்பட்ட தீய விளைவு கள் ஒரு புறமாக, வேல்சு, கொத்துலாந்து ஆகியவற்றின் எல்லைப்புறங் களில் முன்பிருந்தே நிலையாகக் குடிகொண்டிருந்த நிலைமானியச் சத்தி கள் இன்னெரு பக்கம் மக்களைத் துயரத்தில் ஆழ்த்தின. அவ்விடங்களில் விக்குமோரிலுள்ள மோற்றிமெர், ஆன் விக்கிலுள்ள பேசிபோன்ற எல்லைப் புறப் பிரபுக்கள் எப்பொழுதும் படை பூண்டவர்களாகவும், அதிக நாகரிகம் வாய்ந்த தெற்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து மறைந்து போன பழைய நிலமானிய வழமைகளையும் உணர்ச்சிகளையும் பாதுகாத்துக் கொண்டும்

சட்டமன்றங்களை அச்சுறுத்தல் 391
தங்கள் கோட்டை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இவைகளுக்கிடையிலிருந்த வேல்சும் வட இங்கிலாந்தும் IV ஆம் என்றிக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குக் காரணங்களாக விருந்தன. உரோசாப்பூ யுத்தங்கள், மேன்குல ஆங்கிலப் பிரபுக்களாகவும் ஆங்கில சிம்மாசனத்திற்கு மிகவும் நெருங்கியவர்களாகவு மிருந்த வேல்சு நாட்டின் மாச்சுப் பிரபுக்களிடையே நிலவிய சச்சரவுக ளாகவே பெரும்பாலும் இருந்தன.
நாகரிகமடைந்த ஒரு சமுதாயத்தில் இத்தகைய ஆட்சியறவு புத்துயிர் பெறுவதற்குக் காரணம், இராணுவ பலாற்காரமும் சட்டத்தை ஆதார மாகக் கொண்ட உருட்டுப்புரட்டும் ஒன்றேடொன்று இணைந்திருப்பதே என்பது குறிப்பிடத்தக்கதாகும். வீடுகளை உடைப்பதும் வழக்காடுவதுமே அக்காலத்தின் போக்காயிருந்தது. சுதீபனிடைய ஆட்சிக்காலத்திலே, சட்ட மறிந்தவர்களாயிருக்கவேண்டிய அவசியம் மிலேச்சத்தன்மை படைத்த பரன்களுக்கு ஏற்படவில்லை. ஆனல் VI ஆம் என்றியின் காலத்தில், பேராசை கொண்ட ஒவ்வொரு விழுமியோனும் ஒவ்வொரு கிராமக்கன வானும் தன் குடும்பத்தின் செல்வநிலையைப் பெருக்குவதில் ஆர்வங் கொண்டு சட்ட நுணுக்கங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததுடன், அகழி களால் பாதுகாக்கப்பட்ட பண்ணை வீடுகளில் வல்லந்தமாய்ப் புகுந்து முற்றுகையிடுங் கலையிலுந் தேர்ந்தவர்களாயிருந்தனர். இப்படிப்பட்ட ஒரு வன் வில்லாளிகளை மட்டுமன்றி, வழக்கறிஞர்களையும் நடுவர்களையும் தன் பாற் சம்பளம் பெறும் ஊழியராக அமர்த்தியிருந்தான். பாசுற்றன் குடும்பத்தினரின் கடிதப் போக்குவரத்தைக் கவனிக்குங்கால், உண்மை யாகவே இத்தகைய நிலை சாதாரணமாக இருந்தது என்பதை அது எடுத்துக் காட்டும். தீவன்சன் எழுதிய “ சேர். தானியல் பிராக்கிலி’ என்ற கற்பனைக் கதையும் இதையே கூறுகிறது. பெரும்பாலும் சமாதான நீத வான்களே சட்டத்தை மீறி வந்தனர். அரசருடைய நீதிபதிகள் சிலரும் உயர்ந்த பதவியிலுள்ள விழுமியோர் சிலரும் இரகசியமாகச் சொந்தப் படைகளும் வைத்திருந்தனர். இவர்களுக்கிடையில் எற்பட்ட தனிப்பட்ட போர்கள், சில அமயங்களில் அரசமரபினருக்கிடையில் நடைபெற்ற போர்களுடன் ஒப்பிடக் கூடியனவாயிருந்தன. 1469 ஆம் ஆண்டில் சேர். யோன் பசுற்றேல்பு என்பவரின் மரண சாதனத்தை முன்னிட்டு ஒரு சச்சரவு எழுந்தது. அவ்வமயம் நோபோக்கு கோமகன் தன்னுடைய மூவாயிரம் ஆட்களைக் கொண்டு, கேயிசுற்றர் கோட்டையை ஐந்து வாரங் களாக முற்றுகையிட்டார். கடைசியிற் பீரங்கிகளைக் கொண்டு அவர் படை வீரர் சுவர்களைத் தகர்த்து உட்புகுந்தனர். இங்கிலாந்திலேயே மிகச் செல்வ வளம் நிறைந்ததும் மிக்க அமைதி நிறைந்த பகுதி என்று கருதப்பட்டது மான கிழக்கு அங்கிலியாவில் இச்சம்பவம் நடைபெற்றது என்க.
19 ஆம் நூற்றண்டில் அயர்லாந்தில் நிகழ்ந்ததைப் போலவே 15 ஆம் நூற்றண்டில் இங்கிலாந்தில் நடுவர் எப்பொழுதும் பயமுறுத்தப்பட்டனர்.

Page 206
392 அருள்விறற் காலம்
தன் பாதுகாப்பின் கீழ் வாழும் ஒருவன் சட்டமுரண்பாடான நடவடிக்கை களாற் பாதிக்கப்படாதபடி நீதிமன்றங்களிலிருந்து அவனை மீட்டுக் " காப் பாற்றுவது” பெரிய மனிதனுடைய, ஒப்புக் கொள்ளப்பட்ட கடமையாய் இருந்தது. மேலும் ஆங்கில நீதிமன்றங்கள், பன்னிரண்டு நடுவருடைய ஒருளப்பாடான தீர்ப்பின் பேரில்தான் வழக்குகள் தீர்மானிக்கப்படும் என்ற கொள்கையை ஏற்கனவே வலியுறுத்தி வந்தபடியால், செல்வாக்குள்ள ஒரு மனிதனின் நண்பனுக்கு விரோதமாகத் தீர்ப்பளிக்கப்படுவது என்பது ஒருபோதும் முடியாததொன்றக இருந்தது. இப்பருவத்தில் குற்றஞ் செய்தவர்களைத் தண்டிக்காமல் தவறுதலாக விடுதலை செய்ததினல் எற்பட்ட அநீதியே குற்றஞ் செய்யாதவர்களைத் தண்டிப்பதனல் எற்படும் அநீதியிலும் மிகச்கேடானது என்று மெயிற்றுலாந்து என்பவர் அபிப் பிராயப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தியூடர் காலத்தில், அரசருடைய ஆலோசனைச் சபையின்முன், நடுவர் தாங்கள் வழங்கிய தீர்ப்புக்களின் விவரத்தைக் கூறவேண்டுமென்ற நியதியானது, குடிமக்களுடைய பூரண சுதந்திரத்துக்கு மாறுபட்டதாகவிருந்தபோதிலும் அவசியமான சீர்திருத்த மாகவே கருதப்பட்டது. உரோசாப்பூ யுத்தங்கள் தொடங்கியதும் சமா தானப் பிரியர்களான மக்களுக்குண்டான குறைபாடுகளைப் பின்வரும் கரடுமுரடான செய்யுள் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன -
1. ஒவ்வொரு கோட்டத்திலும் கவசமும் சீராவும் அணிந்தோர் குழப்பத்தை விளைவிப்பர் : அயலவருடன் போர் தொடுப்பர்; அடிக்கடி நிகழ்வது போற் பலமற்றவர் பின் வாங்குவர் ; பலம் மிக்கவர் போரிடுவதை விரும்பி முன் எகுவர்.
2. கலகக்காரர் எம்மை எப்பொழுதும் ஒவ்வொருவராய்க் கொல்வர் எவராவது மறுப்புக் கூறின் அவர் சந்தேகமின்றி உதைபடுவர் எம் ஆட்சியில் சமாதான நீதவான் எவருமே இலர் ஒரு வேளை அந்நீதவான் எதுங் கூறின் அவரும் துன்புறுவர்.
3. சட்டம் வேல்சு நாட்டானது உட் காற்சட்டை போன்றதே
மனிதனின் கால்களுக்கேற்ப அச்சட்டை வளையும் பலமுள்ளவர் சட்டத்தைக் கவிழ்த்து மதியாதிருப்பர் அதனைத் தம்பலத்தால் மிதித்துக் காலடியில் வைப்பர்.
நிலமானியக் காலத்து மிலேச்சத் தனத்திலிருந்து வெளியேறி, மக்களின் அன்ருட வாழ்க்கை சம்பந்தப்பட்ட கலைகளிலும் தொழில் களிலும் தலைதூக்கி நின்ற இச் சமுதாயத்திலே மிக உயர்ந்த நிலைமை யிலிருந்த மக்களிடத்திற் காணப்பட்ட இக்கொடிய தீமைகளை நாம் என்னென்று நினைப்பது ? ஆனல் வேறுபாடே சமுதாய வரலாற்றின்,

அருள்விறற் காலம் 393
முக்கியமாக மத்தியகால சமூக வரலாற்றின், சாரமாகும். 15 ஆம் நூற்
ருண்டை அருள்விறல் ஊழியென்று நாம் நினைக்கிறேம். இந்தக் காலத்
திலேயே, உலோகத்தினற் செய்த கவசம் பூண்ட சுத்த வீரர்கள் செயற் கரிய செயல்களைச் செய்தனர்; இவர்களை வைத்தே தற்காலக் கலைஞர், பள்ளிச் சிறுவனின் களங்கமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் முகத்தை யுடைய சேர். கலகெட்டு என்பாரின் வீரச் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்; சேர். தோமசு மலோரி என்பார் வெளியிட்ட “ ஆதரின் சாவு’ என்ற காவியமும் இந்நூற்றண்டில் அல்லவா எற்பட்டது ; ஆனல், தற்காலக் கருத்துப்படி, மலோரியின் காலத்திலிருந்தவர்கள் அருள்விறல் உணர்ச்சியில் மிகவும் குறைந்தவர்கள் என்றே எங்களுக்குத் தோன்றும். இங்கிலாந்தில் மட்டுந்தான் “ அருள்விறல்” என்பது நகர வாசிகளையும் கிராமக்குடியானவர்களையும் வெறுத்து நோக்கிற்று என்பது பொருளன்று. சேசுற்றலெயின் என்பார் குறிப்பிட்டுள்ளபடி " அருள் விறற் ” பண்பு மிகுதியாக உள்ள பிரெஞ்சு சமுதாயத்திலும் பிளாண்டேசு சமுதாயத்திலும் இந்நிலையே இருந்தது. குடியானவர்களின் விடுதலை யும் நகரவாசிகளின் செல்வநிலையும் செல்வந்தர் வகுப்பினரிடையே அமை வாக நிகழ்ந்த கேண்மையும் கலப்பு மணமும் சேர்ந்து பிறநாடுகளிற் செல்வந்தருக்கும் பொதுமக்களுக்கு மிடையேயிருந்த ஆழ்ந்தகன்ற பிளவு, இங்கிலாந்தில் நிலவாதபடி செய்வதற்கு ஏதுவாயின. ஆனல் “அருள் விறல் ” என்பதானது பிற இடங்களிற் போன்று இங்கிலாந்திலும் கொடிய பலாற்காரமும் பொருளாசையும் விரவியதாய் பெண்களை இழிவாக நடத் தும் பெற்றியதாயிருந்தது.
மனைவியை அடிப்பது ஆணின் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகக் கருதப்பட்டு, வெட்கமின்றி உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய அனைவராலும் அனுட்டிக்கப் பட்டு வந்தது. பெண்ணின் தற்காப்பு அவளுடைய நாவேயாம் ; சில அமயங் களில் அது அவளுக்குக் குடும்பக் கருமங்களில் ஆட்சியைக் கொடுத்து
வந்தது. ஆனல் பெரும்பாலும் அது கைகலப்புக்குக் காரணமாகவே
அமைந்தது. 15 ஆம் நூற்றண்டில் இலா தூர் இலாந்திரி என்ற நைற்று ஒருவரின் வாழ்க்கை பற்றிய கைந்நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பில், ஒரு பகுதி ஒயாது திட்டுகின்ற ஒரு மனைவி எத்தகைய விதமாக நடத்தப் பட்டாள் என்பதை வருணிக்கிறது :-
கணவன் மனைவியைக் கைமுட்டியால் அடித்துத் தரையின் மீது தள்ளி னன். பிறகு தன்னுடைய காலால் அவளுடைய முகத்தில் மிதித்து மூக்கை உடைத்தான். வாழ்க்கை முழுவதும் அவள் வளைந்த மூக்குடன் அவதிப்பட்டாள். மேலும், அவளுடைய முகம் எவ்வளவு கறைபட்டு இருந்தது என்றல் தன் முகத்தை வெளியிற் காட்டவே அவள் வெட்கப் படுமளவிற்கு என்க. ஆகவே மனைவி துன்பப்பட வேண்டும் ; அவளுடைய கணவன் அவளுக்கு உத்தரவிடும் எசமானனய் இருக்க வேண்டும்.
1470.

Page 207
394. திருமண வழமைகள். பாடசாலைகள்
இவ்வாறே, பெற்றேர்கள் தேர்ந்தெடுத்த கணவனை மணக்க மறுக்கும் மகளே-பொதுமக்கள் அதிர்ச்சியடைவரே என்ற அச்சமின்றி-அறையிற் பூட்டிவைத்தலும், அடித்தலும், தூக்கி வீசலும் வழக்கமாயிருந்தன. திருமணமானது பொதுப் படையாக-குறிப்பாக, அருள்விறல் நிறைந்த மேன் குலத்தாரிடையே-மணமக்களின் விருப்பத்தைப் பொறுத்திராது, குடும்பத்தின் பொருளாசையைப் பொறுத்ததாகவே இருந்து வந்தது. * என்னுடைய தேவையின் பொருட்டு, என்னுடைய முழு விருப்பத்திற்கு மாருக என் சிறிய மகளை விற்கும் படியான நிர்ப்பந்தம் எனக்கு எற்பட்டது” என்று சுகுரோப்பு என்னும் விழுமியோர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். மணமக்கள் இருவரில் ஒருவ ரேனும் இருவருமேனும் தொட்டிலிலே தவழும் குழந்தைப் பருவத்திற் ருனே கலியாணம் நிச்சயிக்கப்பட்டு, செவிலித் தாயின் பொறுப்பிலிருந்து அவர்கள் நீங்கியவுடனே விவாகமும் நடைபெற்றது. திருமணச் சடங்கின் போது இச் சிருரில் ஒருவரை விளையாட்டுப் பொம்மைகளைத் தேடிச் செல்வதினின்று தடுத்து, திருமணச் சடங்குக்குரிய தேவையான சொற் களைச் சொல்லச் செய்வது சில அமயங்களிற் சங்கடமாக இருந்தது.
அக்காலத்திற் பிரெஞ்சு நாட்டுக் காதற் காவியங்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில நாட்டிலும் விரிவான காதற் காவியங்கள் புனையப் பட்டன. அக்காதற் பூங்காவிற் பூத்த புதுமலரே சோசராற் புனையப்பட்ட * துரோயிலசம் கிரசிடாவும் ” என்னும் நேர்த்தியான காதற் காவிய மாகும். அக்கால விவாக நீதி மன்றங்கள், “ கலியாணமான தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் உண்மையான காதல் கொள்ள முடியாது’ என்ற அக்கால நியதியைப் பல விதிவிலக்குகளைக் காட்டி மறுத்திருந்த போதி லும், அக்காதற் காவியங்கள் திருமணத்தை வாழ்க்கையிலே தொந்தரவு தரும் ஓர் அமிசமாகவே எடுத்துக் காட்டின. மேலும் இலக்கியமெனுங் கறைபடிந்த கண்ணுடியின் மூலமாக மட்டுமன்றி, அனுபவக் கண் கொண் டும் மனித இயற்கையை ஊடுருவிப் பார்த்த சோசர், தாமெழுதிய * பிராங்கிளின் கதையில் ” காதலிப்பதையே தொழிலாகக் கொண்ட கயவர் கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிக் கூறும்பொழுது, கூடவே மண மான தம்பதிகள் திட நம்பிக்கையிலும் காதலிலும் பூரித்து வாழ்க்கையை நடத்திய விபரங்களையும் அழகான முறையிற் படம்பிடித்துக் காட்டுகிறர். பாலிய விவாகமும் வலுக்கட்டாயமான மணமும் வெறுக்கத்தக்க பழக் கவழக்கங்களாக அக்காலத்தில் இருந்தபோதிலும், காதல் மணத்தை
விருப்பமற்ற மணத்திற்கு இணங்கும்படி செய்ய நிர்ப்பந்தமாக மகளை அறையில் போட் டுப் பூட்டிவைக்கும் கொடிய வழக்கம், 18-ஆம் நூற்றண்டின் மத்திய பகுதி வரைக்கும் பிரபுக்களின் குடும்பங்களில் இருந்து வந்தது என்பதற்கு, வெசுற்றன் பிரபு மிகவும் அபி மானம் வைத்திருந்த மகள் மீது எடுத்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஆதாரமாகக் காட்டப் படுகின்றன. 15-ஆம் நூற்றண்டில் வாழ்ந்த ஒருபிரபுவோ மகள் சோபியாவை அவள் விரும் பா மணத்திற்கு இணங்கும்படி செய்ய நிர்ப்பந்தப் படுத்தி இம்சித்திருப்பர்.

திருமண வழமைகள். பாடசாலைகள் 395.
அறவே வெறுத்த பாசுற்றன் சமூகத்திலும் வாலிப ஆண்களும் பெண் களும் தத்தம் முதியவர்களின் இரக்கமற்ற விவாகத் திட்டங்களுக்குப் பணியாமல், வெற்றிகரமாக இரகசியத் திருமணங்கள் செய்து கொண்ட சில நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. மத்தியகால வாழ்க்கையின் உலோகா யதக் கொள்கைக்கும் வல்லந்தச் செயலுக்குமிடையே ஆங்கிலேய மக்களிடத்திற் பரம்பரையாகக் காணப்பட்ட நல்லியல்பும் நேர்மைக் குண மும் பெரும்பாலும் இன்னும் சிறந்தே விளங்கின என்று சொல்லலாம்.
நாகரிகமும் அறிவும் எக்காலமும் அறியாமை இருளை அகற்றிக்கொண்டே வந்தன. ஏனென்றல், புதுக்கல்வி மலருவதற்கு முன், 15-ஆம் நூற் ருண்டில், அறிவுத்துறை வளர்ச்சியில் ஒட்சுபோட்டு பல்கலைக்கழகஞ் சிதை ந்து கொண்டிருந்த போதிலும், விக்கம் வில்லியம் ஏற்படுத்திய விஞ் செசுற்றர் கல்லூரியையும் 5-ஆம் என்றி தாபித்த ஈற்றன் கல்லூரியையும் தவிர வேறு பல கல்விச்சாலைகளும் மத்திய கால இறுதியில் நிறுவப பட்டன. குழுமங்களும் தனிப்பட்டவர்களும் ஆத்துமாக்களுக்கு பூசைகள் செய்விக்கக் குருக்களுக்கு மானியங்கள் வழங்கி வந்தனர். இந்நிதியைக் கொண்டே பள்ளிக்கூடங்களும் நடத்தப்பட்டு வந்தன. வேறு பள்ளிகள் தனிப்பட்டவர்களால் நிறுவப்பட்டு, சில அமயங்களில் இல்லற வாசிகளைத் தலைமையாசிரியர்களாகக் கொண்டு நிருவகிக்கப்பட்டும் வந்தன. இவைக ளெல்லாம் நெடுங்காலமாக உயர்தரக் கல்வி புகட்டிவரும் தலைமைக் கோயிலையும் பற்றுக்குரிய கோயிலையும் சேர்ந்த பள்ளிகளிலிருந்தும் புறம்பாக நிறுவப்பட்டவையாகும்.
ஆகவே வாசிப்பதும் எழுதுவதும் மதக்குருக்களின் தனி உரிமை என்றிருந்த நிலை, யோக்கு, இலங்காசுற்றர் வமிசஅரசர் காலங்களில் முற்றிலும் மறைந்தது. வியாபாரிகள் மட்டுமன்றிப் பண்ணை அமீனுக்களுங் கூட நல்ல முறையிற் கணக்கு விபரங்கள் வைத்திருந்ததோடு, அடிக்கடி தங்களுடைய தொழில் சம்பந்தமான பத்திரங்களைப் புரியுமளவு இலத்தீன் மொழியில் எழுதியும் வந்தனர். பாசுற்றன் பிரபுக்களைப் போன்று நிறை ந்த நிலச் சொத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொதுவாகச் சட்டம் அல்லது வேறு கருமங்கள் சம்பந்தமாகவும், அரசியல் செய்திகளைத் தெரிவித்துக் கொள்ளவும் தங்கள் கைப்படவே ஒருவருக் கொருவர் கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தனர்.
1400 ஆம் ஆண்டிற் சோசர் மரணமடைந்து அனேக தலைமுறைகள் கழிந்த பின்னரும், அவருடைய ஆதிக்கத்தின் கீழ்த்தான் ஆங்கில இலக் கியம் இயங்கி வந்தது. முக்கியமான கவிஞர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றியவர்களேயாவர். அந்நூற்றண்டின் பிற்பகுதியிற் சோசரைப் பற்றிய வரலாற்றுக் கைப்பிரதிகள் பொதுமக்களுக்குப் போதுமான அளவு கிடைக்கப்பெருமையால், காசுதன் என்பவர் அவருடைய நூல்கள்ை விரை வாக அச்சிட்டு வெளியிடலானர்.

Page 208
396 சோசருக்குப் பிற்பட்ட இங்கிலாந்து
சோசரும் அவரைப் பின்பற்றிய எண்ணிறந்த நூலாசிரியர்களும் இயற்றிய நூல்கள் கொடிய கானகங்களிலும், இன்கனிச் சோலைகளிலும், செயற் கைப் பூங்கா வனங்களிலும் அக்கால மக்கட் சமுதாயம் அனுபவித்து வந்த இயற்கைக் காட்சிகள், ஓசைகள் ஆகியவற்றின் அழகிய நுண்மை யான உணர்ச்சிகளைச் சிறப்பிக்கும் வண்ணம் எடுத்துக் கூறின. இன்று நம் தோட்டங்களையும் பூங்காவனங்களையும் கானகத்தைப் போற் காட்சிய ளிக்கும்படி செய்ய நாம் விரும்புகிருேம். ஏனெனில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வெளியேயுள்ள நிலங்களை அறவே நமக்குச் சாதக மாக வசப்படுத்தி விட்டோம். ஆனல் 15 ஆம் நூற்றண்டிலிருந்து 18 ஆம் நூற்றண்டின் முற்பகுதிவரை வாழ்ந்த மக்கள் செயற்கைத் தோட்டங் களையே விரும்பினர் ; ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் இருப்பிடங் களுக்கு வெளியே போதுமான அளவு இயற்கையான காட்டுக்காட்சிகள் மலிந்திருந்தன. அவ்வியற்கைக் காட்சிகளிலே செயற்கைத் தோப்புக் களிற் காணும் இன்பத்துக்கு எத்துணையுங் குறையாத இன்பத்தை அவர் கள் அனுபவித்தனர். பறவைகளின் இன்னிசையும், காட்டாற்றின் சலசலப் பும், மலர்ந்து விரிந்த பூக்களின் மாட்சியும், புதுத்துளிர் தாங்கிப் பூத்துக் குலுங்கிய காடுகளும் கிராமவாசிகளுக்கு உள்ளம் நிரம்பிய உற்சாகத்தை அளித்துவந்தன. காதலன் தன் காதல் நோயினின்றும் ஒய்வு பெற இயற்கையின் அரவணைப்பையே நாடுகிறன் :-
நதிக்கரையின் ஒரமதில் நானமரும் வேளையிலே புனலோடும் இரைச்சலிலே புள்ளினத்தின் இசைதவழ அன்ருடம் அது கேட்டு அளவில்லா மகிழ்வடைவேன் அவ்வின்னிசை தான் என் உள்ளம் அலைபாயக் காணிரோ
என்று காதலன் உருகுவதும் : நிறைவேறத காதலால் ஏற்பட்ட மனப்புண்ணை ஆற்றும் மருந்தாக * புதுமழை பொழிந்து பூத்துக் குலுங்கும் பூங்காவைப் பார்த்து வா” என்று கூறியதும், அன்றியும்,
பச்சை இளம் இலைகளிடை பாய்ந்து வரும் காற்ருேசை சிறிதெனினும் சிறிதாமோ ! என்செவிக்கு அருமையாக இச்சைதரும் மெல்லோசை கேட்குங்கால் வான் வெளியில் சிறகடித்தே பறந்தோடும் தீங்குயிலின் இசைகேட்பேன்.
என்று கவி இறும்பூதெய்தியதும் இயற்கையின் எழிலை எவ்வளவு இனி மையாகச் சித்தரிக்கின்றன !

உரோசாப்போர்கள்: சமூகச் சார்பு 397
புதுவகைச் செங்கற்களாலும், கற்களாலும் நிறைவு பெற்றுப் பொலிந்த பண்ணை வீடுகளின் அழகிய கட்டிடத்திறனும், மக்கள் உடைகளிலும் அவர்கள் வாழ்ந்த பண்ணைகளிலும் வீடுகளிலும் சாதாரணமாக உப யோகத்திலிருந்த மரச் சாமான்களிலும் பிற பொருள்களிலும் காணப் பட்ட சிறந்த கைவண்ணத்திறனும், அவற்றை உருவாக்கிய கைவினைஞ னின் வாழ்க்கையிலும் அவனது படைப்புக்களின் பயனை அனுபவித்த அவற்றின் சொந்தக்காரரின் வாழ்க்கையிலும் அதுகாறும் மறைந்திருந்த ஆனந்தத்தை அள்ளிப் பொழிந்தன என்று கூறுவது மிகையாகாது. அனைத்தையும் சேர்த்து அவதானிப்பின் மத்திய காலத்தின் இறுதியில் நாம் இப்பொழுது இழந்துள்ள எல்லாவற்றையும் நிறையப் பெற்றிருந்தும், இப்பொழுது நம்மிடம் உள்ளவற்றில் எதையுமே பெற்றிராததுமான ஓர் அதிசயபுரியாக அன்றைய இங்கிலாந்து காட்சியளித்தது எனலாம். இருந்த போதிலும் அவையாவும் சோசரும், பாசுற்றன் பிரபுக்களும் எழுதியும் உணர்த்தியுமுள்ளபடி, ஆங்கிலப் பண்பாட்டுக்குரியனவாகவும் ஆங்கிலேய இனமரபுக்குரியனவாகவுமே என்றும் இருந்தன.
உரோசாப்பூப் போர்கள், இறுதியாக போர் என்ற உருவையடைந்த சமயத்தில் இலங்காசுற்றர் பிரபுக்களுக்கும் யோக்கு பிரபுக்களுக்குமிடையே உண்டான சச்சரவில், தத்துவப் பிரச்சினையோ வகுப்பு நலனே தலை காட்டவில்லை. அதிகாரத்திற்கும் செல்வத்திற்குமாகப் போட்டியிட்டுக் கடைசி யாக நாட்டின் மணிமுடியைக் கவரவேண்டுமென்று ஆர்வங்கொண்டிருந்த அரசவமிசத்தைச் சேர்ந்த குடும்பத்தினரிடையே தோன்றிய உட்பகையே அப்போராகும். ஒவ்வொரு கட்சிக்கும் பெரும் விழுமியோரின் கூட்டம் ஒன்று துணை நின்றது. ஒவ்வொரு விழுமியோனுக்கும் அவனுக்குக் கீழுள்ள நைற்றுக்களும் தானைத் தலைவர்களும் வழக்கறிஞர்களும் குருமாரும் துணை நின்றனர். அவர்களிற் சிலர் Aஅப்பிரபுவோடு தனிப்பட்ட தொடர்பு கொண்டவராயும் வேறு சிலர் தூரவிடங்களிலுள்ள பண்ணை களில் வசித்து வந்தவராயுமிருந்தனர்; ஆனல் அவர்கள் எல்லோருமே தங்கள் “நல்ல பிரபுவின் ” வெற்றி தோல்வியிலேயே தங்கள் நற்பேறு தங்கியிருந்ததை உணர்ந்திருந்தனர். மற்ற யுத்தங்களில் நிகழ்ந்ததைக் காட்டிலும் கட்சிவிட்டுக் கட்சி மாறுவதென்பது இவ்வுண்ணுட்டுச் சண்டை யில் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. அதற்குக் காரணம் எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கட்சியை விட்டு நீங்குவது என்ற தன்மை அவர்களிடம் இல்லாததேயாகும். மக்களில் மிகப் பெரும்பாலோர் இப்போரில் அக்கறை கொள்ளவில்லை. கூடுமான மட்டும் போரின் பயங்கர விளைவுகளிலிருந்து தங்களைத் தப்புவிக்கும் நோக்குடன் நகர வாசிகளும் கிராமவாசிகளும் பேரம் பேசித் திரிந்தனர். இங்கிலாந்தையே நடுக்குறச் செய்த இந்த உள்நாட்டுப் போரில் இலண்டன் மாநகரந்தானும் சிறிது காலம் நடு நிலைமை வகித்து வந்தது. பிரான்சிலுள்ள படைகளைக்காட்டிலும் இங்கி லாந்திலுள்ள படைகள் அழிவு வேலைகளில் மிகக் குறைந்தே ஈடுபட்டன.
455.

Page 209
398 உரோசாப்போர்கள்: சமூகச்சார்பு
ஏனெனில் நடு நிலைமையாளர் துன்புறுத்தப்படின் அவர்கள் தம்மிட முள்ள ஒரு தலைச் சார்பான சில ஆயிரம் போர் வீரர்களைப் பயன்படுத்த நேரிடும் ; அப்படையினர் இலங்காசுற்றர் கட்சியினருக்கும் யோக்கு கட்சியினருக்கும் குறுகிய கால வெற்றி அல்லது தோல்வியைமாறி மாறி அளித்துக் கொண்டே, மிகவிரைவில் பிளிமது முதற் செவியற்று அடிவாரம் வரையுள்ள நாடுமுழுவதையும் தம் கைவசப்படுத்த முடியும் என்று படைத்தலைவர்கள் நன்கறிந்திருந்தனர். விட்டுவிட்டு நடைபெறுவதையே இயல்பாகக் கொண்டு இப்போர்கள் நடைபெற்ற போதிலும், நடு நிலைமை வகித்தவரிற் பெரும்பான்மையினர் துன்பப் படவேயில்லை. ஆறுகள் வழி யாகவும், குதிரைகள் செல்லக்கூடிய பாதை வழியாகவும் வழக்கமான வழிபறிக்கொள்ளைக்காரர், நீர்த்திருடர்கள் ஆகியவர்களின் தொந்தரவு களைத் தவிர வேறு எவ்விதத் தொந்தரவுகளுமின்றி வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்று வந்தது.
ஆனல் நேரடியாகப் போரிட்டவர்கள் மிகக் கடுமையாக இன்னற் பட்டனர். போரிடும் விழுமியோர் ஒருவரை யொருவர் நடத்தும் விதத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டனர். யுத்தத்தின் போக்கில் அதிட்டச் சக்கரம் மாறிக்கொண்டு வந்தது. ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் அடைந்த வெற்றியின்போது, எதிரிகளின் பெரிய நிலச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததுமன்றி, போர்க்களத்திற் கொல்லப்பட்ட எண்ணற்ற படைத்தலைவர்களுடன் பல பிரபுக்களின் தலைகளையும் கொய்து குவித்த னர். இவ்வாறு செய்த பறிமுதல்களால் அரசரின் செல்வம் உயர்ந்தது ; ஆனல் விழுமியோர் எழ்மைநிலையெய்தினர். அத்துடன் அவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்தது. அளவெஞ்சிய பலம் பொருந்திய குடிமக்களைக் கடிவாளமிட்டு அடக்கியாளவிருந்த தியூடர்களின் கொள் கைக்கு இவ்வாருக வழிவகுக்கப்பட்டது. அக்காலப் பிரபுக்கள் தங்கள் மீது தாங்களாகவே விளைவித்துக் கொண்ட ஒர் ஊருக உரோசாப்பூ போர்கள் அமைந்தன. ஆனல் நாட்டிற்கு ஒரு விதத்தில் இது மறை முகமாக எற்பட்ட நன்மையாகவே முடிந்தது.
மத்திய காலங்களில் தெருக்கள் குறுகிய நடைபாதைகளாகவேயிருந்தன. ஆனல் நதி கள் ஆழமாகவும் இக்காலத்தைவிடப் போக்கு வரவுக்கு அதிக வசதியாகவும் இருந்தன. யோக்கு, இலிங்கன், தொன்காசுற்றர் முதலிய உள்நாட்டைச் சேர்ந்த நகரங்கள் தங்கள் வியா பாரத்திற்கு இந் நதி மார்க்கங்களையே நம்பியிருந்தன. 14 ஆம் நூற்றண்டு முதல் இலண் டனில் நிலக்கரியே அடுப்பெரிக்கும் விறகாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில் நிலக்கரி தைன்சைட்டு என்னுமிடத்திலிருந்து இலண்டனுக்குக் கடல்மார்க்கமாகக்கிடைத்து வந்தது. ஆங்கில நகரவியாபாரிகள் நதிகளின் மீதுள்ள பாலங்களையும் அணைகளையும் அகற்றிவிட்டுப் படகுப் போக்கு வரவுக்குத் தடை ஏற்படாதபடி நதிகளைக் கண்காணித்து வந்தனர். பாலங்கள் கட்டுவதற்குப் போதிய பணம் இருந்தாலும் அவைகளுக்குப் பதிலாகப் படகுத்துறைகள் அமைப்பதையே அவர்கள் விரும்பினர். பாலங்கள் கட்டுவதற்கு அவர்கள் முயலவேயில்லை. மத்திய காலங்களில் தரைப் பிரயாணம் செய்வதென்பது நடந்து செல்வதும் குதிர்ைச் சவாரி செய்வதுமேயாம். ஆழமற்ற விடங்களில் படகுகளிற்சென்றே நீரோடைகளையோ ஆறுகளையோ கடந்து வந்தனர்.

உரோசாப் போர்கள் 399
தெளற்றன், பாணெற்று, தியூக்கிசுபரி யுத்தங்களில் எதிரெதிராகப் போரிட்டவர்களில் ஒரு பகுதியினர் கூலிக்காகப் போர்த் தொழிலை மேற் கொண்டவர்களாகவும், மற்றவர்கள் அவசரகால சேவைக்கழைக்கப்பட்ட குத்தகைக்காரர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தனர். அவர்கள் தனிப் பட்ட முதலாளிகளின் கீழ் ஊழியஞ் செய்து கொண்டிருந்தவர்களாத லால், தங்கள் எசமானரின் ஆணைப்படி யோக்கு அல்லது இலங்காசுற்றர் பிரபுக்களின் கொடியின் கீழ் அணிவகுத்துச் சென்றனர். சமீப காலத்துப் பிரெஞ்சு யுத்தத்தில் அதே தலைவர்களாற் கையாளப்பட்ட சுளுகுகளே இங்கும் கையாளப்பட்டன. குதிரைப் படையினர் அவ்வளவு அதிகமாக இருக்கவில்லை; ஆனல், சாதாரண வீரர் குதிரை மீதிவரும் காலாட் படை யினராக விருந்தனர். பீரங்கிகளும் புதிதாக வந்த கைத்துப்பாக்கிகளும் சில சமயங்களில் யுத்த களத்தில் உபயோகிக்கப்பட்டன. ஆனல் இன்னும் நீண்ட வில்லே போர்க்கருவிகளிற் சிறந்ததாக விருந்தது. குறுநில வீரர் களுக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக நின்று வில்லாளர் போர் புரிந்தனர். ஆனலும் அந்த யுத்தங்கள் கிரெசி, அசின்கோட்டு போன்ற யுத்த களங்களின் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஏனென்றல் இங்கி லாந்தில் இரு கட்சியினரிடையேயும் நடைபெற்ற விற்போரில் எவருக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லுவதற்கான நிலை இல்லாதிருந்தது. மேலும் அம்புமாரிகளின் கீழ் நீண்ட நேரம் அவர்கள் காத்திராாமல், கூடுமான மட்டும் அதி விரைவாக ஒருவருக்கொருவர் நெருங்கி வாள் களாலும், கோடரிகளாலும் போரிட்டு யுத்தத்திற்கு முடிவு கண்டனர்.
உரோசாப்பூப் போர்களின் கோரக் கைகலப்பினின்றும் வெற்றியோடு எழுந்தவன் யோக்கு வமிச உரிமையாளனும், அல்லலுந் தொல்லையும் நிறைந்த அக்காலப் போர்களினல் உருவாக்கப்பட்ட சிறந்த போர் வீரனு
மான TV ஆம் எட்டுவேட்டேயாவான். போர் வீரர்களை ஒருவரை ஒருவர்.
பார்க்க வொட்டாது செய்த யோக்குசயர்ப் பனிப்புயலுக்கிடையே நடைபெற்ற தெளற்றன் யுத்தம் அவனை ஆட்சின் பீடத்தில் அமர்த்தியது. மக்கிய வெல்லியின் காவியப் படைப்புக்கு ஒரு மாதிரியாக அமையக் கூடாவண்ணம் 1V ஆம் எட்டுவேட்டு மிகச் சோம்பேறியாகவும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபாடுள்ளவனகவும் இருந்தபோதிலும், பிரான்சு நாட்டுப் X1 ஆம் உலூயிபோலவும், இங்கிலாந்திலிருந்த தியூடர் மன்னர்களாகிய என்றிகள் போலவும் மறுமலர்ச்சி ஊழிக்குரிய இயல்பு பெற்ற முதல் ஆங்கில மன்ன ஞக அவன் திகழ்ந்தான் எனலாம்.
இக் குறைபாடுகள் ஒரு சமயம் எட்டுவேட்டுக்கு மிகுந்த இன்னல்களை விளைவித்தன. மாபெரும் நெவில் வமிசத்தவரும் அரசராக்குவோராக விளங்கியவரும் இங்கிலாந்தின் அழிவுக்குக் காரணகர்த்தராக விருந்த விழுமி யோரை ஒத்திருந்தவருமான வாவிக்கு பிரபு, தகுதியற்ற இலங்காசுற்றிரிய புனிதரின் ஆட்சிப் பீடத்தில் எட்டுவெட்டை அமர்த்துவதற்கு அரும்பாடு
15-R 6344 (1282)
س-1461 1463.
1461。

Page 210
4.
400 நாலாம் எட்டுவேட்டின் பூட்கை
பட்டார். இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பேசி பிரபுக்கள் TW ஆம் என்றிக்கு விரோதமாக எவ்வாறு பொருமை கொண்டார்களோ, அது போன்று தன்னுடைய சேவைகளுக்குத் தகுந்த ஈடு செய்யப்படாததால் உண் டான பொருமையால் உந்தப்பட்ட வாவிக்கு பிரபு, நகர்க் கோட்டையினின் அறும் VI ஆம் என்றியை இழுத்து வந்து மறுபடியும் அவனை அரசராக்கினர். ஆனல் பாணெற்று தியூக்கிசுபரி படையெழுச்சிகளின்போது, வெகுண்டெ ழுந்த எட்டுவேட்டு தன் போர்த்திறனை மீண்டுஞ் செயலிற்காட்டினன். இப்போர்களின் விளைவாக வாவிக்கு பிரபுவும் VI ஆம் என்றியும் அவனுடைய மைந்தரும் மடிந்தனர் ; இதல்ை யோக்கு வமிச பரம்பரை யினர் ஆட்சிப்பீடத்தில் நிலையாக அமர்வதற்கு வழி ஏற்பட்டது. அப் பீடத்திலிருந்து அவர்களை அகற்றுவதற்கு, அவர்களிடையே எற்பட்ட கருவறுக்கும் உட்பகையும் சதிச் செயல்களுமேயன்றி வேறு எச்சத்தியும் இல்லாதுபோயிற்று.
WI ஆம் என்றி பிற்காலத்திற் கடைப்பிடித்து வந்த கொள்கையையே IV ஆம் எட்டுவேட்டு பின்பற்ற முயன்றும், அக்கொள்கையை முற்றிலும் பின்பற்றததுமன்றி அதனைச் செயற்படுத்துவதிற் பல தவறுகளையும் அவன் இழைத்தான். எனவே, என்றியின் கொள்கையைக் கடைப்பிடித்தல் என்பது வெறும் ஒத்திகையாகவே அமைந்தது. தன் அரசாட்சியில், “ விஞ்சிய செல்வாக்குடைய குடிமக்கள் ” இருப்பதை எட்டுவேட்டு விரும்ப வில்லை. அதிலும் சிங்காசனத்துக்கு உரிமைபாராட்டியவர்களே அவன் சிறி தும் விரும்பவில்லை. துரோகியும், சந்தர்ப்பவாதியும், பொய்ச் சாட்சிக் காரனும், எட்டுவேட்டின் சொந்தச் சகோதரனுமாகிய கிளாரன்சு என்பவன் ஆங்கிலப் பிரபுக்களும் அரச குடும்பத்தினர் சிலரும் படைகளைத் திரட்டிக் கொண்டிருந்த திற்க என்னும் இடத்திற்கு அதி விரைவாக வாவிக்கு பிரபுவைப் பின் தொடர்ந்து சென்றன். பாராளுமன்ற உரிமை இன்றித் தன்னுடைய சொந்த வெற்றியின் பலத்தினல் அரசுரிமையை எட்டுவேட்டு நிலைநாட்டியிருந்ததால், இலங்காசுற்றர் வமிச அரசர்கள் பார்ாளுமன்றத் துக்குக் கொடுத்த அளவு மதிப்பு அவன் கொடுக்கவில்லை. இக்காரணத் தால் அவனுடைய ஆட்சியை மக்கள் சிறப்பாகக் கருதவில்லை என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. பாராளுமன்றத் தாபனங்களுக்கு அப் பொழுது உண்மையாகவே ஒர் ஆபத்தான கட்டம் எற்பட்டிருந்தது என்று தான் கூறவேண்டும். பாராளுமன்றச் சபைகளை எட்டுவேட்டு பெரும்பாலும் கூட்டுவித்ததேயில்லை. பொதுமக்கள் சபையினர் அனுமதித்த வரித் தொகை களை அவன் அதிகம் எதிர்பார்த்தும் இருக்கவில்லை. மிகக் கவனமாகவும் ஒழுங்காகவும் நிர்ணயிக்கப்பட்ட “ அறக்கொடைகளை ” அல்லது தனிப்பட்ட குடிமக்களிடமிருந்து வல்லந்தமாக அறவிடப்பட்ட நன்கொடைகளையே அவன் அதிகமாக நம்பியிருந்தான்.
V1 ஆம் என்றியின் ஆட்சியில், அரச ஆலோசனைச் சபையே பிரபு களின் சத்திக்கு ஒரு முக்கிய கருவியாக அமைந்திருந்தது. ஆகவே

ஆறம் எட்டுவேட்டின் பூட்கை 40
IV ஆம் எட்டுவேட்டு அச்சபைக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவனுடைய ஆட்சியின் பிற்பகுதியில், அரசனது ஆட்சிக்கு உதவிபுரியும் சாதனமாக அதை மாற்றியமைக்க வேண்டிய காரணங்களை அவன் உணர்ந்தான். அவனுக்குப் பின் தியூடர் வமிச அரசர்கள் இக்கொள்கையை இன்னும் தீவிரமாகக் கைக் கொண்டனர்.
பெரும் விழுமியோரடங்கிய சமூகத்தின் மேல் எட்டுவேட்டுக்கு அவ்வள வாகப் பற்று இருக்கவில்லை. வளர்ந்து கொண்டு வந்த வியாபாரப் பெருமக்களின் சமுதாயத்தின் மீதே அவனுக்கு அதிகப் பற்று இருந்தது. அந்நாளில் உலக மக்களின் பெரு மதிப்பில் “நகரங்களுள் நறுமலர்” என்று போற்றப்படுதற்கு உரியதாய், இலண்டன் மாநகரம் செல்வத்திலும், புற அழகிலும் அக அறிவுக் கூர்மையிலும் வளர்ந்து கொண்டுவர, விழுமியோர் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்குங் கைங்கரியத்தில் ஈடுபட்டனர். திருச்சபையானது ஒழுக்க நெறியிலும் அறிவுத் துறையிலும் வகித்து வந்த தன்முதன்மையை இழந்து கொண்டு வந்தது. துறவி மடங்களிலுள்ள புலவர் குழுவினல் தேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. உண்மையாகவே துறவி மடங்களில் வைத்திருந்த வரன்முறைக் குறிப்பேடுகள் முன்பு இருந்ததை விட மிகக் குறைந்த அளவிலேயே பிரதி பண்ணப்பட்டு வந்தன. சோசரும் அவரைப் பின் பற்றிய பிற புலவர்களும் இயற்றிய காவியங்களையும், மற்றும் நாட் குறிப்பு விவரங்கள், வரலாறுகள், பிற நூல்கள் ஆகிய உரைநடை நூல் களையும் பொதுமக்கள் விரும்பியதால், வளர்ந்து வரும் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வான் வேண்டி பத்திரமெழுதுவோர் அல்லது எழுதுவதற்கான பொருள்கள் விற்போர் என்று சொல்லப்பட்ட ஒரு புதிய வகுப்பினர் மேற் சொன்ன நூல்களையெல்லாம் பிரதி பண்ண முயன்றனர். இச்சந்தர்ப்பத்தில் VI ஆம் ட்ைடுவேட்டின் ஆதரவால் காசுற்றன் என்பவர் வெசுற்று மினித்தரில் நிறுவிய அச்சுக் கூடம் அந்நூற்றண்டின் ஆங்கில வரலாற்றிலே ஒர் அரிய நிகழ்ச்சியாகும். பெருஞ் செல்வம் திரட்டுவதையும், அறிவுத்திறன் படைத்த ஆண்கள், அழகிய பெண்கள் ஆகியவர்களின் தோழமையையும் விரும்பிய எட்டு வேட்டு மன்னன், தன் கொள்கையையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பொருட்டு இலண்டன் நகரத்திலுள்ள பெருங் குடிமக்களோடும், அவர் களின் மனைவியரோடும் பெரும் பாலும் வாழ்ந்து வந்தான்.
ஆனல் தற்கால நியதிக்கு ஏற்ற இவ்வளவு அரச தந்திரங்களையும் கொண்டிருந்தும் IV ஆம் எட்டுவேட்டு கிராமப் புறங்களில் அரசனுடைய சமாதானத்தை நிலைநிறுத்தவும் பெரும் விழுமியோரையும் கனவான் களையும் அடக்கியாளவும் தவறிவிட்டான். அப்பெரும் வேலை VI ஆம் என்றியுடைய உடுமன்றமென்ற புதிய நீதி மன்றத்திடம் விடப்பட்டது. சமாதானத்தை நிலைநாட்டுவான் பொருட்டு நிர்வாகத்தைப் பலப் படுத்து

Page 211
1483.
1483.
402 மூன்றம் எட்டுவேட்டு
வதற்கு யோக்கு வமிசத்தினரால் எவ்வித நிலையான திட்டமும் தயாரிக்கப் படவில்லை. VI ஆம் என்றி அரச பீடத்தில் அமர்ந்திருந்த வமயத்தில் இருந்து வந்ததைக் காட்டிலும் தெளற்றன், தியூற்சுபரி யுத்தங்கள் நடந்த காலத்திற்குப் பிறகு சிறிது குறைவாகவே தனிப்பட்டோர் போர்கள் நடைபெறுதல், சட்ட பூர்வமான காரணமின்றி நீதிமன்றங்களில் வழக் காடுவோருக்கு உதவி புரிதல், பிறர் நிலங்களை அபகரித்தல் ஆகியவைகள் நடைபெற்று வந்தன. மேலும், ஆட்சி நிர்வாகக் கலையைத் தொழி
லாகக் கொண்ட குருவாயத்தினர், வழக்கறிஞர்கள், நடுத்தரப் பிரபுக்கள்,
கனவான்கள் ஆகியவர்களின் மூலம் ஆட்சிபுரிவதில் திருத்தியடைவதற்குப் பதிலாக VI ஆம் எட்டுவேட்டு தன் மனைவியின் உறவினராகிய உட்வில்சு, கிரேசு ஆகியோரைத் திடீரென்று விழுமியோரின் நிலைக்கு உயர்த்திய தனற் பெரும் தவறு செய்தான். '
எட்டுவேட்டு இறந்ததும் திடீரென்று பதவிக்கு உயர்த்தப்பட்ட உட்வில், கிரே ஆகிய புதிய விழுமியோர்களுக்கு விரோதமாகப் பழைய பெரும் விழுமியோர்களில் எஞ்சியிருந்தவர் கொண்ட பொருமை யுணர்ச்சியானது குளோத்தர் கோமகனும் எட்டுவேட்டின் சகோதரனுமான இரிச்சாட்டு என்ப வன் சிம்மாசனத்தை அபகரிப்பதற்குத் துணைசெய்தது. அப்பொழுது V ஆம் எட்டுவேட்டு குழந்தைப் பருவத்தினனுக விருந்தான். அவனு டைய தாயாரும் அவளுடைய உறவினரும் பெரும் விழுமியோர்களை வெறுத்ததுமன்றி நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றவராகவு மிருந்திலர். உள்ளுற எற்பட்ட இச்சச்சரவு யோக்கு வமிச அழிவுக்குக் காரணமாயிருந்தது. இரிச்சாட்டு அரக்க குணம் படைத்தவனல்லன். V1 ஆம் என்றி, கிளாரன்சு ஆகியவர்களின் மரணத்திற்கு யோக்குக் கட்சியினரில் எஞ்சியிருந்தவர்களைக் காட்டிலும் இவனே அதிகப் பொறுப் புள்ளவனுயிருந்தான் என்பதற்குத் தெளிவான சான்று எதும் கிடையாது. மேலும் அவன் இங்கிலாந்துச் சிம்மாசனத்தை அபகரிப்பதற்கு முன், தனது சகோதரனுகிய கிளாரன்சைப் போன்று துரோகச் செயல் புரிபவனுக இருந்தானென்றே, கிளாரன்சின் சகோதரனுகிய எட்டுவேட்டைப் போன்று இரத்த வெறியனக இருந்தானென்றே கூறுவதற்கு எத்தகைய ஆதார மும் இருந்ததில்லை. ஆனல், மணி முடி என்னும் பிரகாசிக்கும் தூண் டிலில் அவனுடைய ஆன்மா வீழ்ந்தது. அவன் தனது அடைக்கலத் திலிருந்த தனது சகோதரனின் இருமைந்தர்களையும் கொலைசெய்தான். அவன் வல்லந்தமாகச் சிம்மாசனத்தை அபகரித்ததைத் தொடர்ந்து நகரக் கோட்டையிற் சிறைவைக்கப்பட்டிருந்த இளவரசர்கள் மறைந்ததும், மக்கள் அவன் மீது கொண்டிருந்த விசுவாசத்தைத் துறந்தனர். போரி னலும், ஆளும் வர்க்கத்தினரைக் கொலை புரிந்ததினுலும் ஆங்கில மக்கள் முற்றிலும் இழிநிலையை அடைந்துவிடவில்லை ; இரிச்சாட்டுக்கு விரோதமாகத் தோன்றிய திடீர் மனமாற்றமானது சிறந்த கருமங்கள் பல நிகழ்வதற்குத் தொடக்கமாக அமைந்தது.

மூன்ரும் எட்டுவேட்டு 403
ஆங்கிலச் சிம்மாசனத்துக்கு உரிமை பாராட்டிய யோக்கு, இலங்காசுற்றர் வமிச அரசுரிமையினர், இருபத்தைந்து வருட காலமாக நடைபெற்ற யுத்தங்களுக்கும் கொலைகளுக்கும் பின், மிக விரைவாக மறைந்தொழிந் தனர். எனவே W ஆம் எட்டுவேட்டு மரணமடைந்ததும், இரிச்சுமண்டுக் கோமானகிய வேல்சு நாட்டு என்றி தியூடர் என்பவன் இலங்காசுற்றர் வமிசத்தின் சார்பில் மிகக் கண்ணியமான முறையில் அரசுரிமை கோரு வதற்கு இயலுமாயிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அக்கால நியதி யாயிருந்த வழக்கத்தை யொட்டி, முதலில் பிரித்தனியிலும், பின் பிரான்சிலும் அவன் அடைக்கலம் புகுந்திருந்தான். அதன்பின் சிசுக் கொலைகாரனன 111 ஆம் இரிச்சாட்டுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை என்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நம்பிக்கைக்குப் பாத்திர மில்லாத ஒரு சிறிய படையுடன் தனது தாயகமாகிய வேல்சு நாட்டின் கரையிலுள்ள மில்போட்டு எவனில் வந்திறங்கினன். காட்வல்லாடரின் சிவத்த யாளிக்கொடியின்கீழ் மிகச் சாமர்த்தியமாக என்றி அணிவகுத்து வந்ததினுல், தங்களுடைய புராதன பிரித்தானிய அரச பரம்பரையில் வந்த வழித் தோன்றலைக் கண்ட வேல்சு மக்களின் இன வபிமானந் தலைதுாக்கி நிற்க, பாடல்கள் பாடிக்கொண்டும், வரவிருக்கும் நிகழ்ச்சி களைப் பற்றி ஆரவாரமிட்டுக் கொண்டும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந் தனர். அதன் பயனய், குறுகிய ஒரு வார காலத்திற்குள், எப்பொழுதும் யுத்தப்பிரியராகவிருந்த மக்களைக் கொண்ட அந்நாட்டில் தனக்கு ஆதர வாயிருக்கும் ஒரு சிறிய படையைத் திரட்ட என்றியால் முடிந்தது. ஒரு சில பிரெஞ்சு, ஆங்கிலேய வீரர்களின் உதவியாற் பொசுவோத்து வீல்டு என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் அரசனை எதிர்த்து அப்படை யினர் வெற்றியடைந்தனர். இப்போரில் அரசன் பக்கமாகப் போரிடுவதற்கு அவனுடைய ஆங்கிலக் குடிமக்கள் அனைவரும் வெட்கப்பட்டனர். உண்மை யாகவே இவ்விடத்தில் நற்பேற்றின் விநோத விளையாட்டைக் காணமுடிந் தது. மரங்களும் செடி கொடிகளுமின்றித் தரிசு நிலமாகக் காட்சியளித்த இலீசுற்றர்சயர் மேட்டு நிலத்திற் சில ஆயிரம் போர்வீரர்கள் நெருங்கி நின்று போர் செய்தனர். வேறு சில ஆயிரம் மக்கள் அப்போரின் முடிவைக் காணும் ஆர்வத்தோடு தொலைவில் நின்றனர். யோக்கு வமிசத் தினருக்கும் இலங்காசுற்றர் வமிசத்தினருக்குமிடையே முன் நிகழ்ந்த போர்களில் வில்லாலும் ஈட்டியாலும் போரிட்ட எந்தப் போர் வீரனும
1485-ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 22-ஆம் தேதி
கனவிலுங் கண்டிராத ஒரு மாபெரும் விளைவு அப்போரின் வழித்தோன்றி
யது. நாட்டின் கதியைத் தீர்மானிக்கக் கூடியதும் முற்றிலும் புதியதும், முதன்மை நிறைந்ததுமான முறையில் ஒரு நூற்றண்டுகால மாறுதல் களினூடே நாட்டை நல்வழியில் நடத்திச் செல்ல ஆங்கில அரச வம்சம்
எதிலுமே அதுவரை தோன்றியிராத ஒரு மாமன்னனை இந்த யுத்தம்
இங்கிலாந்துக்கு அளித்தது. ஆம் ! VI ஆம் என்றியை அரசமீடத்தில் அமர்த்துவதற்கு இச்சிறு யுத்தம் போதியதாய் அமைந்தது.

Page 212
gTsu II
தியூடர் ஆட்சி மறுமலர்ச்சியும் சமய சீர்திருத்தமும் கடலாதிக்கமும் முன்னுரை
இன்றைய ஐரோப்பா, தத்தம் ஆள்புலங்களில் இறைமை படைத்த பல்வேறு தனி அரசுகளாகப் பிரிககப்பட்டிருக்கின்றது. மேலும், ஒவ்வோர் அரசும், ஒரு சாதியின் அல்லது நாட்டினத்தின் பண்பைப் பிரதி பலிப்பதாயு மிருக்கின்றது. ஆனல், மத்திய ஊழியில், ஐரோப்பா வானது, மதகுருமார், பிரபுக்கள், பண்ணை வேலையாட்கள், நகர மாந்தர் என்போரடங்கிய குடித்திணைகளையும் கூட்டுத்தாபனங்களையும் கொண்டிருந் தது. அவர்கள் எல்லோரும் முறையே தத்தம் மடங்களிலும், கோட்டை களிலும், பண்ணை மனைகளிலும், அரணமைந்த நகரங்களிலும் அவ்வத் தலங்களுக்குரிய உள்ளூர்ச் சட்டங்களால் ஆளப்பட்டனர். இத்தகைய அமைப் பின் பாதுகாவலில் மிலேச்சநாட்டினரின் படையெடுப்பினற் றக்குண்ட நாகரிகப் பண்புகள் மீண்டும் வேரூன்றிப் புதிய தோற்றத்துடன் தழைத் தன. ஆனல், நிலமானியமுறைமையைத் தழுவிய சிற்றுர்களிலே தனிப்பட்டவருக்குரிய சுதந்திரம் மிகக் குறைந்திருந்தது. துறவோர் பள்ளி களில் அச்சுதந்திரம் இன்னும் குறைவாகவே இருந்தது. அக்காலத்தில் உரிமைப்பட்டயம் பெற்ற நகரத்திலும் குழுமங்களிலுங்கூட மாந்தர்கொண்ட ஊக்கப்பாடு தடைப்பட்டது; அதுவுமன்றி, உரிமையற்ற அன்னியர், அவை களில் இடம்பெருது விலக்கப்பட்டனர். இவ்வன்மையுடைய கூட்டுத் தாபனங்கள் தம்முரிமைகளுட் சிலவற்றை இழக்குந்துணையும், மத்திய காலத் திருச்சபையானது மக்களனைவரது வாழ்விலும் சிந்தனையிலும் ஆட்சி வலிமைகுன்றுந் துணையும், நாட்டின் படர்ச்சியும், வளர்ச்சியும் தனித் தன்மையும் தடைப்படலாயின.
இத்துணை பரந்ததும் வலிமை மிக்கதுமான சமுதாயப் புரட்சியைத் தோற்றுவிக்கக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே சத்தி யாதெனில், நாட்டின வரசின் அதிகாரமென்க. நாடடினவரசில் வல்லாட்சி, உண்மையில் மக்க ளின் சுதந்திரத்துக்குப் பல தடைகளை விளைவித்ததெனினும், மத்திய காலவாட்சியிலே தனிப்பட்ட ஒருவர் அனுபவித்திருந்த சுதந்திரத்திலும் இப்பொழுது சிறிது கூடிய சுதந்திரம் கிடைப்பதாயிற்று. திரேக்கு, இராலி, செகப்பிரியர், பேக்கன் என்போருடன் தொடர்புள்ள தற்ருளாண்மைச் சகாத்தமும் ஆள்புலப்படர்ச்சித்திறனும், இருநூறண்டாக நிலவிவந்த சமுதாயக் குலைவும் புத்துயிர்ப்புந் தந்த பேறேயாகும் ; அன்றியும் மறு மலர்ச்சியும், மதச் சீர்திருத்தமும் ஒருவரின் உள்ளத்தையும் உள்ளச்
404

இங்கிலாந்து ஐரோப்பாவினின்றும் வேறுபடல் 405
சான்றையும் கவர்ந்தோடும் முடியிலும் பாராளுமன்றத்திலும் அமைந் திருந்த நாட்டு மக்களின் கருத்துக்குத் தொகுதி அதிகாரம் கட்டுப்பட்ட தின் விளைவுமாகும்.
மத்திய கால முறைமை, தற்செயலாகவோ, அன்றி மணவுறவு நீக்கங் கருதிப் பொறுமையற்றிருந்த அரசன் மனத்தில் எழுந்த அவாவினலோ கழிந்ததன்று. மற்று எதனுலெனின், ஆங்கிலேயரின் பழக்கங்களி லுண்டான ஆழ்ந்த மாற்றங்களினல் நேர்ந்ததென்க. 14 ஆம், 15 ஆம் நூற்றண்டுகளில் இம்மாற்றங்களிற் பல செயற்படுவதை நாங்கள் எலவே கண்டுள்ளோம். பண்ணை வேலையாட்களின் விடுதலை ; இலண்டன் மாநகரத் தின் வளர்ச்சி ; கல்வியறிவும் சிந்தனு சத்தியுமுடைய நடுத்தர வகுப் பினரின் எழுச்சி ; பட்டயம்பெற்ற நகரங்கிளின் அயற்புறங்களில் ஆடை நெய்தலும் பிற வர்த்தக முயற்சிகளும் பெருகியமை, ஆங்கில வழமைச் சட்டம், அரச பரிபாலனம், நாட்டுப் பாராளுமன்றம் எனுமிவற்றல் எற்பட்ட ஒற்றுமையுணர்ச்சி ; நூற்றண்டுப் போரால் விளைந்த நாட்டினச் செருக்கு; ஆங்கிலேயராகிய வில்வீரர், குதிரை வீரர்களாகிய உயர்குடிமக்களைப் புறங் கண்டதாலுண்டாய பெருமிதம் ; கற்றறி வகுப்பினர் ஆங்கிலத்தைத் தம் மொழியாக்கியமை ; பிரபுக்களின் அரண்களைத் தகர்க்கவல்ல பீரங்கி களையும், திருச்சபையின் தனியுரிமையாகவிருந்த கல்வியாட்சியை வலிகுன்றச் செய்த அச்சகத்தையும் புதிதாய்க் கண்டமை ; மறுமலர்ச்சியிற் ருேன்றிய கல்வியறிவு ஒரு புறத்திற் கிறித்துவ வேத நூற்றெகுதி களைத் துருவி ஆராய்தற்குத் தூண்டி நிற்ப, மறுபுறத்தில், இடைக்காலக் கிறித்துவவுலகம் காணுத குறிக்கோள்களைப் பழைய கிரேக்க, உரோமை நாடு களில் வெளியிட்டமை ; முன்னைக்கால மக்களின் வணிகமுயற்சிகளிலோ அறிவியற்றுறையிலோ இடம் பெற்றிருக்காத கடல் வாணிப வழிகளையும் புதியவுலகத்தையும் கண்டமை-ஆகிய இம்மாற்றங்கள் அனைத்தும் இங்கி லாந்தில் மத்திய காலச் சமுதாயவமைப்பை அழித்தற்கு உறுதுணையா யிருந்தன.
அககாலத்திலேயே மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் (பிரான்சு, இசுப்பெயின், போத்துக்கல்) நாட்டின அரசுகளாக இணைந்துகொள்ளத் தொடங்கின. அக்கால அரசுகள் ஒவ்வொன்றிலும் அதிகாரம் மேன் மேலும் அரசனிடத்திலேயே ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆளுல்ை, பிரான்சிலும் இசுப்பெயினிலும் புதிய முடியரசு பழைய திருச்சபையுடன் இணைந்திருப்ப, இங்கிலாந்தில் அது பழைய பாராளுமன்றத்துடன் இணைந் திருப்பதாயிற்று. பிரான்சிலும் இசுப்பெயினிலும் மத்திய காலப் பாராளு மன்றங்கள் நிலைகுலைந்து, அரசனது தனியதிகாரத்தின் அடிப்படையாக உரோமப் பேராசாட்சிச் சட்டம் எற்கப்படா நிற்க, மத்திய காலச்சமய நெறியே பாதுகாக்கப்படலாயிற்று. இங்கில்ாந்தில், மத்திய காலப் பாராளு மன்றங்களையும் ஆங்கில நாட்டவர்க்கே உரிய வழமைச் சட்டத்தையும் யாப்புக்கியைந்த அரசமுறைமையையும் நாம் பேணிநிற்ப, மத்தியகாலத்தில்

Page 213
406 இங்கிலாந்து ஐரோப்பாவினின்றும் வேறுபடல்
நிலவிய சமயநெறி மாற்ற மடைந்தது. இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய கண்டப்பகுதிக்கும்-சிறப்பாக நோமன் வெற்றியினல் மறைவுற்றிருந்த இலத்தீன் ஐரோப்பாவுக்கும்-இடையேயுள்ள வேற்றுமை, ஆங்கிலக் கால் வாயின் இருமருங்கிலும் ஏற்பட்ட இவ்வெதிர் மறையான விருத்திகளினல் மீண்டும் வன்மை பெற்றது. ஒரு காலத்தில் எளிதில் வேற்றுமை காணமுடியாத ஆங்கில, பிரான்சிய நாகரிகங்கள், இப்பொழுது தனித்தனி பிரிந்ததுமன்றி ஒன்றுக்கொன்று மாறு பட்டும் இருந்தன.
தியூடர் காலத்து இங்கிலாந்து, தன் சமுதாயவமைப்பிலே பெரும் புரட்சியை வருவித்ததாயினும், தன் பழைய மரபை நெகிழவிடாது சிறப்பாகப் பேணிக்கொண்டது. மத்திய கால வாழ்க்கையின் முதன்மைத் துறைகளாயமைந்திருந்த துறவிக் குழுக்கள், கூட்டுத் தாபனங்கள், நிறு வகங்கள் முதலியன பெரும்பாலும் மாற்ற மடையாதிருந்தன. அவை யெல்லாம் அரசின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டடொழுகவேண்டிய வையா யின. பல்கலைக் கழகத்தார், பிரபுக்கள், சட்டக்கலைஞர், பிசப்புமார், மதகுருமார், நகரசங்கத்தார், ஆகிய எல்லோரும் பழைய முறையைச் சாலத் தழுவி நிலைத்திருந்தனர். துறவிகள் சந்நியாசிகள் என்போரின் குழுக்களைப் போன்ற, உலகப்பொதுவான நிறுவகங்கள் சில, புதிய தேசியத் திட்டத்தில் இடம்பெற முடியாதிருந்தன. ஆதலினல், அவற்றை அரசு அருளின்றி அழித்தது. திருக்கோயிலுரிமை, குருமார் நலவுரிமை முதலிய வுரிமைகள், நாட்டுச் சட்டத்தை நடைமுறையிற் கொண்டுவருவதை மட்டுப் படுத்தியவாதலின், அவை குறைக்கப்பட்டோ நீக்கப்பட்டோ வந்தன. பிரபுக் களும் பொதுமக்களும் குருமாரும் பாமரரும் நாட்டுச் சட்டத்தின் முன்னர் சமமானவராக்கப்பட்டனர். இவ்வாறய நன்மைகளைப் பெறுவதினின்றும் நீக்கப்பட்ட பண்ணை வேலையாள் வகுப்பினர் நாளடைவில் மறையலாயினர்; அரசமன்றங்களைப் பெருமகனெருவன் தனது உரிமை எவலாளரால் வலுக் கட்டாயம் பண்ணுவதும் மறைந்துபோயிற்று. போப்பாண்டவருக்கு இந்நாள் காறும் இருந்த ஆதிக்கம் இப்போது அரசனுக்குரியதானமையால், திருச்சபை மன்றங்கள் பொதுமக்கள் மீது செலுத்திய அதிகாரம் குறை வுற்றது. பன்னட்டவர்க்குமுரிய மானியமுறைமையும், பன்னுட்டவருக்குரிய திருச்சபையும், புதிதாக உருவான நாட்டு அரசும் அதனேடிணைந்த நாட்டுத் திருச்சபையும் என்ற கருத்திற்கு முன்னிற்க முடியாதடிபணிந்தன. தனிப் பட்டவரிடையேயும், கூட்டுத்தாபனங்களிடையேயும் இறைமையின் ஒருசில அதிகாரங்களைக் கொண்டிருந்த இடைக்கால மதகுருக்கள், உயர் குடிமக்கள் என்பவரது “ சுதந்திரங்கள் ” அரச ஆதிக்க நிழலில் வாழும் சாதாரண ஆங்கிலக் குடிமக்களின் சார்பாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. "
இவ்வாறே, வியாபார ஒழுங்கும், பட்டயம் பெற்ற நகரங்களின் அல்லது குழுமங்களின் பொறுப்பிற் பண்டுதொட்டிருந்த வாறு இராது, இப் போது தேசிய அதிகாரிகளின் அலுவலாக மாறியது. பிளந்தாசனற்றுப் பாராளுமன்றங்கள், தொழிலாளர் நியதிச்சட்டங்களைக் கொண்டு கூலியை

நாட்டின அரசின் வெற்றி 407
யும் விலையையும் ஒழுங்குபடுத்தி, சமாதான நீதிபதிகளால் நடை முறைக்கு அவற்றைக் கொண்டுவர வேண்டுமென்று முயன்றதை நாங்கள் முன்னர் அறிந்தோம். தியூடர் காலத்தில் இத்தேசீயப் பொருளாதாரக் கட்டுப்பாடு மேலும் வன்மை அடைவதாயிற்று. தொழிற் பயிற்சிக் காலத் துக்குரிய சட்டம், அவ்வவ்விடங்களுக்குரிய குழுமங்களினல் இனிமேல் ஒழுங்குபடுத்தப்படாது, (அஃது) இலிசபெத்தரசியின் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் நியதிச் சட்டத்தினல் ஒழுங்குபடுத்தப் பட்டது. வறியோர்க்குரிய எற்பாடுகளைத் துறவிமடங்களும், குழுமங்களும் தனிப்பட்ட அறநிலையங்களும் முன்னர் நடாத்திவந்தன. பின்னர், அவற் றைச் சமுதாயம் தன் கடனுக நடாத்திவருதல் வேண்டுமென்றும், அதனையே அரசும் வற்புறுத்த வேண்டுமென்றும் ஒழுங்கு செய்யப்பட்டது. நாட்டின் பொருளியல் வாழ்க்கையை-அரசியல் வாழ்க்கையையும் நீதி முறையையும் போன்று-இவ்வாறு நியதிச்சட்ட முடையாகக் கட்டுப்படுத்தும் பிரதான செயலாளர்கள் அரசனல் நியமிக்கப்பட்ட வேதனம் பெருச்சமாதான நீதி பதிகளே ஆவர். அவர்களே மத்திய அரசாங்க அதிகாரிகளின் கொள் கைகளையும் அவ்வவ்விடங்களுக்குரிய தல பரிபாலனம் பற்றிய உண்மை நிகழ்ச்சிகளையும் இணைப்பவராவர். மானியப் பெருமகன் தன் சொந்த உரிமையாற் செய்து முடித்த பல்வேறு கருமங்களை இவர்கள் அரசின் பணியாளராகச் செய்துமுடித்தனர்.
திருச்சபைக்கும் சமயத்துக்குமுரிய கருமங்கள்பற்றிப் பல புரட்சிகரமான மாற்றங்களை அரசன் பாராளுமன்றத்திற் கொணர்ந்தபோது, அரசாங்கம் எல்லையில்லா இறையதிகாரத்தைப் பெற்றுள்ளதென்பது ஐயப்பாடின்றித் தெளிவாக்கப்பட்டது. அடிப்படையையே முற்றக மாற்றக்கூடிய இச்சட்டங்கள் இங்கிலாந்திலுள்ள எந்தச் சத்தியின் சட்டவியற் றிறமைக்கும் அப்பாற்பட்ட வையென மத்திய காலத்தில் கருதப்பட்டிருக்கும். ஆனல், தியூடர் காலத்தில் நாடு தன் புதிய பலத்தை நிலைநாட்டிற்று ; அன்றியும் அயலார் ஆதிக்கத்தை அறவே நீக்கியும் அவ்வவ்விடங்களுக்குரிய சுதந்திரங்களை அடக்கியும் தனக்குரிய எல்லைப் புறங்களுட்டான் நினைத்தவற்றைச் செய்யும் உரிமை உண்டென்றும் சாதித்தது. நாட்டின் பூரண சுதந்திரத்தைநாட்டும் இப்புதிய உரிமைகளும் அரசின் பல துறைத் திறமைகளும் அரசன் உருவில் வெளிப்படுவவாயின. இதுவே 16 ஆம் நூற்றண்டில் நிலவிய அரச வணக்கத்துக்குரிய பொதுக் காரணமாம்.
புதிய அரசின் நிறைந்த அதிகாரம், அக்காலத்தில் அரசனல் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாயிருந்தது. ஒருபுறம், விவாதமேடையாகவும், மறுபுறம் சட்டமன்றமாகவும் அமைந்த பாராளுமன்றத்துக்கு அத்தகைய செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றலாதல், அவாவாதல் இருந்ததில்லை. உண்மையாகவே, தியூடர் காலத்தரசர்களினதும் அவர் தம் கோமறைக் கழ கங்களினதும் முதன்மையான தொழில் யாதெனின், வெசுற்றுமினித்தரி லுள்ள பாராளுமன்ற உறுப்பினர்க்கும் நாட்டுப்புறங்களிலுள்ள சமாதான

Page 214
4.08 ஆங்கில மதச் சீர்திருத்தம்
நீதிபதிகளுக்கும் உண்மை ஆட்சிக்கருமத்தைக் கற்பிப்பதேயாம். இக்கருமம் முன்னை நூற்றண்டிற் பெரிதுங் கைவிடப்பட்டிருந்தது. தொழில் பயில் வோன் குறித்த காலம் வரையும் தொழிலைப் பயின்று, பின்னர் தொழி லிற் பங்கும் உரிமையும் உடையனய் வருதல் போலப் பாராளுமன்றமும் அரசக் கோட்பாட்டுக்குரிய மாணவனும் பணியாளனுமாயிருப்பதற்கு உறுதி பூண்டது.
அஃதேபோல், அக்கால மாற்றத்தினற் போந்த தனித்தன்மையான சமயச் சூழ்நிலை, இங்கிலாந்தில், அரசனின் ஆதிக்க வளர்ச்சிக்கு வாய்ப்பா யிருந்தது. திருச்சபையின் மத்திய அதிகாரத்தையும் உரிகைளையும் அழித்த புரட்சிக் குழுவினர்க்கு VIII ஆம் என்றி அரசன் தலைமை தாங்கி யதன் மூலம் அவன் அவ்வதிகாரதுக்கு உரிமையுடையவனனதோடு, புதிய முடியாடசியை எதிர்கால ஊழிக்குரிய வலிமை மிகுந்த சத்திகளோடு இணைக்கவும் செய்தான். அவ்வலிமை மிகுந்த சத்திகளான இலண்டன் மாநகரத்தார், நடுத்தர வகுப்பினர், கடலோடு மக்கள், புரட்டசுத்தாந்தப் போதகர், கைக்கூலியாலும் ஆதீன நிலங்களாலும் வளமுற்ற பெருந் தனக்காரர் ஆகிய இவர்கள் ஒன்றுபட்டு, பழைய உலகச் சத்திகளான துற விகள், சந்நியாசிகள், வட பாலிலுள்ள மானியப் பிரபுக்களிலும் உயர்குடி மக்களிலும் எஞ்சினேர், இலண்டனுகு மிகச் சேய்மையிலுள்ள இடங்களில் வைகிய மிகுந்த கததோலிக்க பத்தியுடையோர் ஆகியோருக்கு இணையின்றி, மேம்பட்டு விளங்கினர். இம்மைக்குரிய திருச்சபைக் குருமார் முதற்கண் நொதுமலராயிருக்க உடன்பட்டனர், ஆனல், இலிசபெத்தரசியாரின் நீண்ட ஆட்சியில், கோயிற்பற்றுக்குரிய திருச்சபைக் குருமாரும் பள்ளி ஆசிரியரும் புரட்டசுந்தாந்தப் பிரசாரத்துக்கும் போதனைக்கும் உறுதுணையாயிருந்' தனா.
என்றியரசன் மத்திய காலத் திருச்சபையைத் தாக்கியபோது, இங்கிலாந்தி லிருந்த உரோமன் கத்தோலிக்கரின் பேரூக்கம் மிகத் தளர்ச்சியடைந் திருந்தது. இருந்தும், என்றியின் மகள் மேரியரசி பழைய கத்தோலிக்க சமயத்துக்கு மீட்டும் வாய்ப்பளித்தபோதும், அது புத்துயிர்பெற்றிலது. இலிசபெத்தரசியின் ஆட்சியில் இயேசு சபையார் சமய மறுப்பை எதிர்த்துச் செயலாற்றிய பொழுதே, மீட்டும் திருச்சபை வலிமையடைந்தது. ஆயினும், அப்புத்துயிர்ப்பு ஒரு சந்ததி கழிந்த பின்னரே தோன்றியதால் பயன்தர வில்லை. மேலும், ஆங்கிலேயரிடம் எழுந்த நாட்டுப் பற்றுக்கு வெறியூட்டும் முகமாக ஐரோப்பாக் கண்டப் பகுதிகளிலிருந்து அப் புத்துயிர்ப்புத் தோன்று வதாயிற்று. நாகரிகமற்ற பொதுமக்கள் கத்தோலிக்கரையும் இயேசு சபையாரையும் ஒக்கவே மதித்தனர். அவ்வாறே இயேசு சபையாரையும் இசுப்பானியரையும் ஒக்கவே மதித்தனர். போப்பாண்ட வர் தமது கட்டளைமூலம் போத்துக்சலுக்கும் இசுப்பெயினுக்கும் உரிய தாக்கிய கட்டுப்பாடற்ற சமுத்திர உபயோகத்தையும், அதற்கு அப்பாலுள்ள உலகையும் எங்கள் கடலோடிகள் பெறுவதற்குச் செய்த முயற்சிகளோடு,

“இராசுத்திய மன்னன்’ 409
இப்பிரச்சினையும் சிக்குண்டது. தியூடர் காலத்தரச கடற்படையிலும், திரேக்கு என்பாரிலும் அவர் தம் கப்பற் படைத்தலைவர்களிலும் இலண்டனிலுள்ள வியாபாரக் கொம்பனிகளிலும் குடியேற்ற நாடுகளைக் கொண்ட பேரரசைக் குறித்து இராலி கண்ட தீர்க்க தரிசனத்திலும் பொதிந்திருந்த இங்கிலாந் தின் புதிய வாணிப கடலாதிக்க ஆர்வமானது, பழைய கத்தோலிக்க சமயத்துக்குப் பெரிதும் மாறுபட்டு அணிவகுத்து நின்று புதிய முடியாட்சி யின் கொடியின்கீழ்ச் செயற்படவும் கிளம்பியது.
தியூடர் காலம் முழுமையிலும் கத்தோலிக்கரின் பேரூக்கம் முதுமை யாற்றளர்ந்தது ; புரட்டசுத்தாந்தரின் பேரார்வம் முதிரா நிலையாற்றளர்ந் தது. கத்தோலிக்கரும் புரட்டசுத்தாந்தரும் இந்நாளில் பிரான்சிலும் இசுக்கொத்துலாந்திலும் முடியை எதிர்த்தது போலவும், பியூரித்தானி யர் அதனைப் பிற்றை நாளில் இங்கிலாந்தில் எதிர்த்தது போலவும், இவ்விரு சாராரில் எவராதல் முடியை இந்நாளில் எதிர்க்கத் துணிந்திலர். ஆகவே, தியூடர் வழிவந்த ஒவ்வொரு புதிய அரசன்காலத்திலும் சமய சம்பந்தமாக உண்டான குழப்பந்தரும் மாற்றங்கள் யாவற்றையும், இப்போது அமைச்சரவையில் எற்படும் மாற்றங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன வோ, அவ்வாறே திருச்சபையும் பொதுமக்களும் அங்கீகரித்தனர். தங்குடி களின் சமய நெறியைத் தீர்மானிக்கத் தியூடருக்கிருந்த உரிமையை அனுகூலமா யெதிர்த்ததொன்றுளதேல், அதுவே மேரியரசியின் ஆட்சியில் எரிக்கப்பட்ட முந்நூறு புரட்டசுத்தாந்த தியாகிகளின் சாத்துவிக எதிர்ப்பாகும். அவ்வெதிர்ப்பு சாத்துவிக எதிர்ப்பாகையினலேயே அநு கூலமடைந்தது. கத்தோலிக்க அருள் யாத்திரையும் எள்களின் எழுச்சி யும் படுதோல்வியடைந்தது போல, வயத்தென்பாரின் புரட்டசுத்தாந்த கலக மும் தோல்வியடைந்தது. பெக்கற்று, குரம்வெல் என்போர் ஊழிகளில் இருந்தது போன்று, சமயப் பேரார்வ ஊழியாக அக்காலம் இங்கிலாந்தில் இருந்திராவிடினும், சமயப்பிரச்சினைகள் எல்லாவற்றினும் மிகப் பெரிய தொன்று பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. ஆகவே, போப் பாண்டவரின் அதிகாரம் கழிந்துவிட, அவ்வதிகாரத்தைக் கையேற்ற இராகத்திய அரசிளங்குமரன் ஒரு தனிப்பெரும் முடிவுக்கு வரவேண்டிய அமயமாயிருந்தது ; பாராளுமன்றத்தின் உதவியுடன் தன்குடிகளனைவர தும் சமய நம்பிக்கையை வரையறுக்கப் பெரிதும் அவன் ஆயத்தன யிருந்தான். அவன் அங்கனம் செய்யவேண்டும் என்பது அம்மக்களின் பெரும்பான்மையினரது மனப்பூர்வமான விருப்பமுமாயிற்று. ஒரு சமயத்தை மட்டுங் கடைப்பிடிக்கவேண்டும் என்னும் மத்திய காலத்தின் தவருண எண்ணத்தில் மக்கள் நிலைத்து நிற்குந் துணையும், இராசுத்திய அரசொன்றே குருமாரின்கீழமைந்த சமூகவாட்சிக்கு மாற்றுவழியாக விளங் கியது. இராசுத்தியவரசுக்கும் மிகுந்த ஊக்கமுடைய பல்வேறு சமயப் பிரிவுகளுக்குமிடையே நேர்ந்த போராட்டங்களில் உளச்சான்றுச் சுதந்திரம் பையவே வளர்ச்சி அடைவதாயிற்று.

Page 215
410 “இராசுத்திய மன்னன்’
இலிசபெத்தரசியாரின் ஆட்சி முடிவிற்றன், பொதுமக்கள் சபை சமய வதிகாரத்தைக் குறித்து அரசனுடன் பிணங்குதற்குவேண்டிய அரசிய லாற்றலையும் சமய ஒர்ப்பையும் ஒருகாலத்திற் பெறும் என்பதற்கு அறிகுறி கள் காணப்பட்டன. இசசூழ்நிலையில் உண்டான குழப்பம் மாந்தர் உளச் சான்றைத் தானே மலர்ச்சியடையச் செய்தது. பழைய திருச்சபையின் உடற்றல் அதிகாரம் எல்லாம் அரசினற் கொள்ளப்பட்டமை, நாம் இப்போது அறிந்தபடி, ஒருசில காலத்துக்கே நிலைக்கக் கூடியதாயிருந்தது. அக்கையேற்பை மறுப்பார் அப்பொழுதில் இலராயினும், பொதுமக்கள் உளச்சான்று விடாப்பிடியாய் எதிர்த்து நிற்பின், அஃது உறுதியாயழிந் தொழியும்.
ஆங்கில மக்கள் வெளி நாடுகளில் ஆதிக்கம் பெறுதற்குச் செய்த பெரு முயற்சிகளுக்குத் தியூடர் ஒருபுதியவழியைக் காட்டினர். பிரான் சைக் கைப்பற்றுதற்கு எடுத்த முயற்சியைத் தொடர்ந்து செய்திலர். நாற்பது, அல்லது ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடாகிய இங்கிலாந்து புதிய பிரான்சிய, இசுப்பானிய முடியாட்சிகளின் ஆற்றலுக்கு முன்னிற்க முடியாமற்றன்னைத்தானே ஐரோப்பாவில் காக்க வேண்டிய நிலையில் இருந்தது. மேலும், இங்கிலாந்தில் ஊல்சி காலம் முதல் செசில் வரையும் வளர்ந்து வந்த சூழியற் கொள்கை அப்பொழுது ஐரோப்பாவிற் புதிதாய் எழுந்த அரசுகளிலிருந்தும் இங்கிலாந்து தன்னைக் காத்தற்குரிய ஒரேயொரு வழியாகிய “ அரசுவலுச் சமநிலையைப் ” பின் பற்றியது. பெரும் பாலும் இப்பேரச்சங் காரணமாக் VI ஆம் என்றி எங்கள் வரலாற்றில் முதன்முதலாக ஒரு சிறந்த அரச கடற்படையை நிறுவினன். கெலித்திய சாதியார் வாழ்ந்த வேல்சும் ஆட்சியறவுற்ற வேல்சுத்தாவடியும் ஒழுங்குபடுத்தப்பட்டு இங்கிலாந்தோடு சமத்துவ நாடு களாக இணைக்கப்பட்டன. இதுவே இக்காலத்துக்குரிய ஆங்கிலப் பேரசுக் கொள்கை வழியமைந்த வெற்றிகரமான முதற் செயலாகும். இச்செய லுக்கு, வேல்சு மக்களையும் அவர்களின் இயல்புகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றலை மரபு வழியாகப் பெற்ற VI ஆம் என்றியே காரணமாவான். இசுக்கொத்துலாந்தைக் குறித்து அவன் தப்பெண்ணங்கொண்டிருந்தா னெனினும், இலிசபெத்தரசியாரின் காலத்தில் அவ்விரண்டு அரசுகளின் வருங்கால ஒருமைப்பாடு நிறுவப்பட்டது. அப்போது இசுக்கொத்துலாந்து தன் பிரான்சிய தொடர்பை விட்டு, புரட்டசுத்தாந்தப் பொது நலனை அடியிடாகக் கொண்டு இங்கிலாந்துடன் கெழுமை பூண்டது. ஐரோப்பாக் கண்டத்தின் வல்லாட்சிகளுக்குப் பக்கத்திலுள்ள பரநெறியரசும் கடல் வல்லரசுமான பெரிய பிரித்தானியாவின் எதிர்காலம் தெளிவாய் அறியக் கூடியதாயிருந்தது. அதேசமயத்தில் அயலாந்தை வெற்றிகொள்வதை 400 ஆண்டுகளாகப் புறக்கணித்த இங்கிலாந்து, அதனில் அக்கறை கொளள இறு தியிற்றெடங்கியது. ஆயினும், அத்தொடக்கம் மிகப் பிந்தியது ஆதலால், ஒரு பகுதியினர்க்காயினும் இன்பம் பயக்கக்கூடிய தாக இருக்கவில்லை.

*திரை கடலோடல்” 411.
இங்கிலாந்து அடைந்த சமுதாய பொருளாதாரப்புரட்சி எல்லா வகுப் பிலுமுள்ள தனிப்பட்டோரைச் சேட்புலஞ் சென்று பொருளிட்டச் செய்ய லாயிற்று. அக்காலத்திலேயே வீரமுள்ளோர்க்கும் பொருளாசை கொண் டோர்க்கும் துணிவுள்ளோர்க்கும் புதிதாக ஏற்பட்ட கடற்பாதைகள் புதிய வாய்ப்பினை அளித்தன. அக் கடலிலேயே அமைதியற்ற மனவெழுச்சி யைக் கொண்ட ஆங்கில இனத்தவர், பிரான்சியரை மீட்டும் அசின் கோட்டுப் போரிலும், ஆங்கிலேயரை மீட்டும் தெளத்தன், பாணற்றுப் போர்களிலும் வருத்துதலிலும் மேலான தொழிலைப் புரியும் வாய்ப்பைப் பெறக் கூடியதாயிருந்தது. மேலும், வில்லாளர், உரிமை எவலாளர் என்பாரின் சந்ததியார் இசுப்பானியக் கடல் நோக்கிச் சென்ற தனிப்பட் டவரின் போர்க்கலங்களிற் சென்றனர். இன்னும் மசுக்கோவிக்கும் இலவாந்து தேசங்களுக்கும், தொலைவிலுள்ள கீழைத் தேசங்களுக்கும் சென்ற வாணிபக் கலங்களையும் செலுத்திச் சென்றனர். இங்கிலாந்து உலக விளிம்பிலுள்ளதென்ற பேச்சு அற்றுப்போக, அஃது உலகப் படம் ஆண்டுதோறும் விரிய விரிய ஒவ்வோர் ஆண்டும் தலைமைத் தானத்துக்கு மிக நெருங்கிச் செல்வதாயிற்று. ஆமடா போர்க்கப்பற் கூட்டம் கற்பாரில் மோதுண்டு சின்னபின்னமாக, ஆங்கிலேயர் கடற் பேராதிக்க நிலையை எய்துவாரயினர். அதனுடன் அவரின் பயிற்சியில்லாமனத்திலெழுந்த வீர அருஞ் செயலைப் பற்றிய எண்ணமுங் கொள்கையும் புதுச் சந்ததி யாரைப் பெரிதும் தூண்டின. அவர் தனிப்பட்ட முறையிற் புதிய நாடு களையுங் கடல்களையுங் காண்பதற்கும் அறிவையுங் கற்பனையையும் பெறு வதற்கும் ஊக்கமுடன் சென்றனர். அத்தகைய மங்கலச் செவ்வியில் ஆங்கில மொழி, மக்கள் நாவில் நடம் புரிந்து, பூரண ஆற்றலும் அழகும் நிரம்பப் பெற்றுச் செழிப்புறலாயிற்று. அச் செவ்வியிலேயே செகப்பிரி யரும் அம்மொழி வளத்தைப் பயன்படுத்தத் தோன்றியருளினர்.
அத்தியாயம் 1 VI ஆம் என்றி. தியூடர் அரசாங்க அமைப்பு; பொருளியல், சமூகவியல் மாற்றங்கள். ஆடைவணிகமும் வறிஞர் சகாயச் சட்டமும் கமத்தொழிலும்.
அரசர் : WT1 ஆம் என்றி, 1485-1509 ; VII ஆம் என்றி, 1509-1547. செகப்பிரியர் தாம் இயற்றிய வரலாற்று நாடக வரிசையில் VI ஆம்
என்றியின் ஆட்சியைக் குறிக்காது விட்டமை ஒரு புத்தியான செயலாகும். கட்டுக்கதையில் வரும் இளவரசனின் கபடமற்ற எழுச்சியோடு, தன்நண்பர்

Page 216
412 எழாம் என்றியின் இயல்பு
களுக்கு அன்புகாட்டி அவர்களோடு களியாட்டஞ் செய்து தன் வாழ்நாளைக் கழித்துவந்தவனும் பொசுவேத்துப் போர்க்களத்து வெற்றி வீரனும் கபடமற்ற நெஞ்சனுமாகிய இரிச்சுமண்டு என்பவனைச் செகப்பிரியர் சொல் லோவியத்தில் ஒருமுறை உருவாக்கியதும், அதன்பின்னர் அத்தகைய பாத்திரத்தை X1 ஆம் உலூயிக்கு ஒப்பான ஆங்கில அரசனுகத் தன்னைப் பிற்சந்ததியாரின் உள்ளத்தில் பதித்த என்றி என்னும் கதாப்பாத்திரத் தோடு எவ்வாறு ஒருமைப்படுத்தியிருக்கலாம் ? என்றியோவெனின், விழிப்பும் பிழைக்கஞ்சுதலும் பிறர் காணமுடியாத நுண்ணிய பார்வை யோடு அமைதியாக நடக்கும் தன்மையும் ஆணுயினும் பெண்ணுயினும் அளந்தறிய முடியாத நெஞ்சும் உடையவனவன். இவ்விரு சொல்லோ வியங்களிலும் சிற்சில உண்மையிருக்கலாம் ; ஏனெனில் வாழ்வே நீண் டது; அன்றியும் சிறப்பாகச் சூழ்நிலையின் மாற்றங்களை உணரக்கூடிய வல்லமையுடையவனகில், ஒருவன் தன் வாழ்நாளிற் பலவாறு நடிப்பவ ஞவன். பொசுவேத்துப் போருக்குப்பின்னர் பளபளப்பான போர்க்கவசம் பூண்டு செய்யும் வீரச்செயல்களை விரும்பாது, அமைதியையும், செலவுச் சுருக்கத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுங்கு நிலைநாட்டப்படுவ தையுமே இங்கிலாந்து நாடியது. இத்தகைய சாதாரண குறிக்கோள்களை ஒரு புதிய தாபன அடிப்படையில், வருஞ் சகாத்தத்தில் தன் அரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தக்கூடிய நிலையில், இங்கிலாந்தை என்றியரசன் வைத்திருந்தான்.
தியூடர் முடியாட்சி, தொடக்கத்தில் மந்தகதியிற் சென்றது. பின் னர், அஃது இலிசபெத்தரசியார் ஆட்சியில் அதிக ஒளிவீசி விளங்கிற்று. ஆனல், அரசி, தாமீட்டிய புகழ் முழுவதும், சாதுரியமும் பொறுமையு முள்ள தமது பாட்டனரின் அடியிடான பெருமுயற்சியால் வந்ததென்பதை ஒருபோதும் மறுத்திருக்கமாட்டாள். இரண்டகம், விழிப்புடைமை, சிக்க னம் ஆகிய இயல்புகளைத் தன்வழிவகைகளிற் கையாண்டவனும், இலக்கை எய்துவதற்குத் தெளிந்த உறுதியான நோக்முடையவனுமான அவளுடைய பாட்டனின் குணவியல்போடு அரசியின் குணவியல்பு நிரம்பிய ஒற்றுமை கொண்டிருந்தது. இருவரும் அரசுகட்டில் எறுதற்கு மிக முன்னர், உலகத்திலுள்ள வஞ்சகப் பொல்லாங்குகளிற் பயின்ற நெடுங்கால அனுப வத்தினல் தம்மைத்தாமே அடக்குவதில் மிகக்கொடிய முறையில் பயிற்சி பெற்றவர் அன்றே ? இலிசபெத்து அரசியின் மறுபெயர்களாகிய * புகழரசி” “நல்லரசிபெசு ” போன்றவை அவளது நல்லியல்பை எடுத்துக் காட்டுமாயின், இரிச்சுமண்டும் வீரம் மிகுந்த பொசுவேத்துப் போர்க்களத்தில் தன் சாதியின் போராண்மையைக் காட்டிப் பொது மக்களின் அன்பைப் பெறவுமறிந்திருந்தான்.
VI ஆம் என்றியரசன் தன் பேர்த்தியாரைப் போலவே, உண்ணுட்டி விருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எற்பட்ட இடர்களுக்கும் எதிர்ப்பு களுக்குமிடையே அரசுகட்டில் எறினன். ஆனல், இலிசபெத்து அரசி

எழாம் என்றியின் இயல்பு 413
யாருக்கு நேர்ந்த பொல்லாங்குகளெல்லாம் பெரும்பாலும் அவர்தம் குடிகளின் சமய வேற்றுமையினல் உண்டாக, என்றியரசனுக்கு ஏற்பட்ட பொல்லாங்குகள் நாட்டின் சமுதாய நிலைமையினல் எழுந்தன எனலாம். பொதுவாக, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் இரு சாரா ரிடத்தும் ஒழுங்கின்மைசார்ந்த பழக்கங்கள் நிலவின. கப்பாசியோ காலத்து வெனிசு நகரத்தூதுவர் ஒருவருக்கு ஆங்கில மக்கள்-சிறப்பாக மதகுருமாரும் வணிகர்களும்-ஐரோப்பாவிலுள்ள எந்த மக்களிலும் பார்க்கச் செல்வந்தராகவும், உலகிலேயே மிக அழகுவாய்ந்த ஆடை அணிகலன்களை அணிகின்றவராகவும் காணப்பட்டார்களெனினும், அத் தூதுவர் தம் தலைவர்க்கு, அவர்களைப்பற்றி எழுதும்போது “ இங்கிலாந் திற் போல அத்துணைப் பெருந்தொகையான கள்வரையும் கொள்ளைக் காரரையும் உடைய நாடு யாண்டும் இல்லை. ஆகவே, அந்நாட்டில் நண்பகலில் அன்றி வேறு நேரங்களிற் போகத்துணிபவர் சிலரேயாவர் ; அன்றியும், இராக்காலங்களில் பட்டினங்களிற் செல்பவர் மிகச் சிலரே யாவர். இவற்றிலும் இலண்டனிற் செல்வோர் இவரினும் சிலரே” என எழுதியுள்ளார். உரோபின் ஊட்டைப் போன்றரும் அவர் கூட்டத்தாரும் முக மூடியிட்ட, அல்லது கரிபூசப்பட்ட முகத்தையுடையராய், அரசர்க்குரிய காடுகளிலும் பிறர்க்குரிய சோலைகளிலும் புகுந்து அங்குள்ள மான்களே அழிப்பராயினர். அதனைத் தடுப்பார் யாருமிருந்திலர். பல மனைகளிலும் அரண்களிலும் அமைந்த நீள்மண்டபப் பீடங்களின் மருங்கே உரிமை ஏவலாளர்கள் நின்று, தம் பிரபு மேடைமீதுள்ள விருந்தினருடன் அரச பரம்பரையிற் புதிய குழப்பங்கள் நிகழக்கூடிய தன்மையைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதை உற்றுக் கேட்பாராயினர். இதற்கிடையில், இடையிடையே அயலிலுள்ள பெருஞ் செல்வனெருவனின் பணியாளரைத் தாக்கி, அவனது களஞ்சியங்களைக் கொள்ளையடித்தலிலும், அல்லது வீட்டு விலங்குகளைக் கவர்தலிலும் மடத்து ஏவலாளரோடு பிணக் குற்றதால் அம்மடத்துக் கதவினை எரித்தலிலும் திருத்தியடைந்திருந்தனர். மத குருமார் நலன்களும் திருக்கோயில் உரிமையும் ஒவ்வொரு கோட்டத்திலும் நீதியை வழங்கவிடாது பெரிதும் தடுத்தன. நடுவர் இன்னும் அச்சு அறுத்தப்பட்டும் அல்லது கைக்கூலி அளிக்கப்படடும், நீதிவழங்குவதிலிருந்து தடைசெய்யப்பட்டு வந்தனர்.
இவ்வாறய ஒழுங்கின்மைகளோடு நெருங்கி இணைந்துள்ள அரசவமிசப் பிரச்சினை இதுகாறுந் தீர்ந்திலது. பொசுவேத்துப் போர் “ உரோசாப் போருக்கு’ முடிபு கண்டதென்று துணிதற்கு முன், எறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன. யோக்கு வமிச அரசுரிமைக்குப் பாத்திரமாயிருந்த
*ஆதித் தியூடர் காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த செல்வர் நிலையை ஐரோப்பியருடன் ஒப்பு நோக்கின், அவரினும் மேலான ஊனுண்ணும் ஆங்கில நாட்டுப்புற மக்களின் செழிப்புற்ற நிலையைக் குறித்துப் பொலிதோர் வேர்சில் என்னும் பிறிதோர் இத்தாலியப் பேட்டியாளர் இக்கருத்தையே கொண்டனர்.

Page 217
487.
1497.
414 ஒழுங்கீனப் பழக்கங்கள்
அரசியை மணந்ததால் என்றியரசன் சிங்காசனத்துக்குத் தன்உரிமையை ஓரளவில் நிலைபெறச் செய்தனன் எனினும், உரோசாப்போரில் ஈடுபட்டுள் ளோரை ஒன்றுபடுத்தி, அதனற் சமாதானத்தையும் இணக்கத்தையும் பெறக்கூடியவாய்ப்பை நாட்டுக்களித்ததனலேயே அத்தகைய நிலமையை யடைந்தானன்றி, தனக்கென மறுப்பில்லாப் பரம்பரையுரிமையைப் பெற்ற தனலன்று. ஏனெனில், உண்மையாக, அன்றும் உயிருடன் இருந்த பலர் மரபுவழியால் தமக்குள்ள சிறந்த உரிமையை எடுத்துக்காட்டக் கூடிய வர்களாயிருந்தனர். தியூடரின் அரசுரிமை பொதுமக்கள் விருப்பத்திலும் அவ்வரச மரபினர் உண்மையாகவே ஆட்சிப்பீடத்தில் அமர்ந்ததிலும் அமைந்தது. அதுவன்றிப் பிற்றை ஞான்று சுதுவாட்டு மரபினரும் அவர் தம் கட்சியினரும் பாராட்டிய பரம்பரைத் தெய்வீக உரிமையினலன்று.
யோக்குமரபினர் மீட்டும் அரசுரிமை எய்துவரென்று மனப்பால் குடித்த பிரபுக்களும் பெருமக்களும் என்றியரசனின் திருமணத்தினுல் திருத்திய டைந்திலர் ; அவர்கள் வடபாலில் பின்னுளிலிருந்த யக்கோபயிற்றுக் கட்சியினரைப் போல நம்பிக்கையும் துணிவும் உடையவராயிருந்தனர். அயலாந்தில் சிலகாலமாக அவர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஆள் மாருட்டஞ் செய்த இலாம்பேட்டுச் சிமினெல், பேக்கின் உவாபெக்குப் போன்றவர்களோடு தம் வருங்கால நிலைமையைத் தொடர்புபடுத்த இரு முறை இவர்கள் நினைத்தமை, ஒருபோது என்றியரசனுக்கு வாய்ப்பாய் இருந்திருக்கக்கூடும். ஆனல், இவ்விழிந்த கயவர் பல்லாண்டுகளாக இழைத்த தொல்லை, தியூடர் ஆட்சித் தொடக்கத்தில் அரசபற்று எவ்வாறு தளர்ந்திருந்த தென்றும், அரசவன்மை எவ்வாறு குன்றியிருந்ததென் றும் எமக்கு நினைவூட்டுகின்றது.
* மாடுதின்போராய’ மெய்காப்பாளரன்றி, நிலையானபடை எதுவும் இருக்கவில்லை. பெருமக்கள், நிலக்கிழார், நகரமாந்தர் என்போர் அரச னைப் பெரிதும் போற்றி நின்றதனலேயே, வடபாலில் இலாம்பேட்டுச் சிமினெலை V1 ஆம் எட்டுவேட்டாக ஊர்வலம் கொண்டுசென்ற அயலாந் தவரின் துணிவுடைச்சேனையையும், சேர்மானியக் கூலிப் போர்வீரரையும் தோக்குக்களத்தில் வெல்லக்கூடியதாயிருந்தது. அதனுடன் வரிவிதிப்பை எதிர்க்கு முகமாக இலண்டனுக்குத் தடையின்றிப் படையெடுத்துச் சென்ற கோனிசியரை பிளாக்கீதுப் போர்க்களத்தில் அவனல் அழிக்கவும் முடிந்தது. இசுக்கொத்திலாந்திலோ, வேறு இடத்திலோ போர் புரிய
1இலாத்திமர், நெடுங்காலத்திற்குப்பின் போதபிடத்தினின்று உண்மையான VI ஆம் எட்டுவெட்டுக்குப் பின்வருமாறு கூறினர் -" என் தந்தை ஒரு நிலக்கிழார் , நூறு ஆடுகளே வைத்திருக்கக்கூடிய நிலம் அவர்க்குண்டு. என் தாய் முப்பது கறவைப் பசுக்களை வைத்திருந்தார். அரசன் நல்கும் வேதனத்தைப் பெறுதற்கு அரண்மனை வந்தபோது, அவர் அரசனுக்குத் தன்னையும் உரிமைப்படுத்திப் போர்க்கவசமொன்றையும் குதிரையொன்றையும் கொடுத்தார். அவர் பிளாக்கீதுப் போர்க்களம் புகுந்தபோது நான் அவருடைய போர்க்கவச த்தை அவருக்கு அணிவித்தமை என் நினைவில் உண்டு”.

தியூடர் பூட்கை : ஆலோசனைக் கழகம் 415
அயற்கூலிப்படைவீரரைக் கொண்ட சிறு குழுவினரை வேளாலேளேகளில் அரசன் கூலிக்கு அமர்த்தியதுண்டு. ஆனல், அவர்களை வேதனங்கொ டுத்து நிலையானபடையாய் வைத்திருக்கப் பணம் இல்லாதிருந்தது.
VI ஆம் என்றியரசன் ஆதல், அவனுக்குப் பின் தியூடர் வழிவந்த எவராதல் ஒரு நிலையான படையை நிறுவியதும் இல்லை; நாட்டுப் புறத்தை ஆட்சி செய்ய ஒருமுகப்படுத்திய பணிக்குழுவினர்க்குப் பொருள் நல்கியதுமில்லை. தியூடர் ஆட்சிக் கொள்கை ஐரோப்பாவில் அக் காலத் திலிருந்த வல்லாட்சியாளரின் கொள்கையிலும் வேருயிருந்தது. அரச சபை, பாராளுமன்றம், வழமைச்சட்டம், சமாதான நீதிபதிகள் குழு, நடுவர் குழு ஆகியவையடங்கிய பழைய மத்திய காலத் தாபனங்களை என்றியரசனும் அவன் வழிவந்தாரும் பெரிதும் பேணியதோடு, அத் தாபனங்களுக்குப் புத்துயிர் அளித்து அவை இனிமேல் ஒருபோதும் ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்குத் தடையாயமையாது அரச வதிகாரத் தின் சாதனமாக அமைய வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இவ்வகை யாக, ஆங்கிலேயர் தம் பழைய உரிமைகளை இழந்துவிடாமலும், தம் தேசீய வாழ்க்கைத் தொடர்பை நீக்கிக் கொள்ளாமலும் அக்கால நாக ரிகத்துக்கு அவசியமான சட்டத்திற்கு அடங்கி நடக்கும் பண்பாட்டிற் பயில் வாராயினர். குறித்த வெனிசியத் தூதுவர் பின்வருமாறு குறித்துள்ளார். * பழைய ஆட்சியில் உள்ள சட்டமொன்றை மாற்ற அரசன் ஆலோசித்தால் அஃது ஆங்கிலேயன் ஒவ்வொருவனுக்கும் உயிர்நீங்குவது போலாகும்.” அன்றியும், வல்லாட்சியினலேயே சட்டத்துக்கு மக்களைக் கீழ்ப்படியச் செய்ய முடியும் என்ற கொள்கையுடைய, இலத்தின் மொழியிற்பயிற்சி பெற்ற அத்துர்துவர் VI ஆம் என்றியரசன் அதனை எவ்வாறு செய்ய வல்லான் என வியந்துகொண்டனர். என்றலும், பிறிதொரு வழியைத் தியூடர் அரசர் அறிந்திருந்தனர். அதுவே மன்னர்கள் தங்குடிகளை நன்கறிந்திருத்தலாம்.
பழைய முறைமைப்படி இயங்கிய இப்புதிய யாப்புக்கு அரச ஆலோசனைக் கழகமே அச்சாணியாகத் திகழ்ந்தது. இலங்காசுற்றர் மரபினர் ஆட்சியில் அக்கழகம், பாராளுமன்றத்திலும் மேலாகக் குறிப்பிடத்தக்கவாறு, உயர் குடிமக்கட் கட்சிகளுக்குரிய போர்க்களமாக மாறிற்று. பெரும் பிரபுக் கள் ஆலோசனைக் கழகத்தில் இருந்தபடியால், அரசு தமக்கு ஒரு வகையிடரும் விளைக்கக் கூடாதென்ற உறுதியைப் பெற்றுக் கொண்டனர். ஆனல், ஏழாம், எட்டாம் என்றியரசர் இருவரும் யோக்குமரபில் வந்த மன்னர் தொடக்கிய முறையைத் தழுவி, அரசனற் றேர்ந்தெடுக்கப்பட்டோ ரையும் அவனுக்குப் பணிவுள்ளோரையும் தவிர, மற்றைப் பிரபுக்களைக் கோமறைக் கழகத்தினின்றும் விலக்கினர்.
VII ஆம் என்றிய்ரசன் ஆட்சியில் கோமறைக்கழகம் என்ற சொற்றெடர் பேரவையுள்ளே அமைந்த ஒரு நம்பிக்கையான அரசியற் கட்சியையே பொதுவாகக் குறிக்கும்.

Page 218
416 தியூடர் பூட்கை : ஆலோசனைக் கழகம்
இவ்ாவறு இப்பிரபுக்கள் விலக்கப்பட்டமை தியூடர் அரசுபாயத்தின் முதல் தத்துவமாய் விளங்கிற்று. VI ஆம் என்றியரசனின் மரணசாதனத்தில், தன் மகனுக்காக ஆட்சிபுரியக் குறித்திருந்த பதினறு பதிலாளிகளிற் பன்னிராண்டு அனுபவம் வாய்ந்த பிரபு எவராதல் நியமிக்கப்படவில்லை. V1 ஆம் என்றியரசனின் இளமைக் காலம் முடியும்வரையும்இருந்த ஆலோசனைக் கழகத்தின் அமைப்பு மிக வேறுபட்ட தன்மையுடையதா யிருந்தது. அவ்வேறுபாட்டுக்குக் காரணம் ஒரளவிற் பெருமக்களின் குற்ற மேயாகும். ஏனெனில், இலிசபெத்தரசியார் காலத்து முதற்பாராளுமன் றத்திற் “ பெருமக்களின் கட்டுக்கடங்காத வளர்ப்பும் அவர்தம் அறி யாமையுமே பணிவுள்ள புதியோரை உயர்த்துமாறு இளவரசனைக் கட்டாயப் படுத்தின” எனக் கூறப்பட்டது. மேலும், W1ஆம் எட்டுவேட்டின் ஆட்சியில் இலாத்திமர், “ பெருமக்கள் கல்வியறிவு பெருதிருப்பதே அவர்தம் பிரபுக் கள், கழக முதல்வராக்கப்படாமைக்கு ஒரேயொரு காரணமாகும் ” எனக் கூறியுள்ளார்.
முதலாம் தியூடர் ஆட்சியிற் கோமறைக்கழகம், மோட்டன், பொட்சு போன்ற குடியியற் சேவையாரளாகிய நடுத்தர வகுப்பினரை சேர்ந்த குருமாரையும் அன்றேல், எம்பிசன், தட்டிலி போன்ற வழக்கறிஞரையும் பிரதானமாகக் கொண்டிருந்தது. இவர்கள் VI ஆம் என்றியரசனுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருந்தனர் , அன்றியும் எத்திறத்தான சுரண்டற் கொள்கை முறையாலும் தன் கருவூலத்தை நிரப்புதற்குரிய அவர்களின் திறமையை அவ்வரசன் பெரிதும் போற்றினன். சமயச்சீர்திருத்தத்தின் பின்னர், வழக்கறிஞர், ஆலோ னைக் கழகத்தில் நிலைத்திருக்க, இக் கழகத்திலும், குடியியற்சேவையிலும் குருமாருக்கிருந்த மதிப்புக் குன்றி யது. புதிய கோமறைக் கழகத்தினர் தோன்றினர். அவர்கள் செசில், வால் சிங்கம், பேக்கன் முதலியோர் ஆவர். அவர்கள் வணிக வகுப்பினரோடு தொடர்புடையவராயிருந்தும் தாம் நாட்டுப் பெருமக்களுடன் ஒருவராய் வைத்தெண்ணப்படவேண்டுமென்று அவாவினர். அவர்கள் பல்கலைக்கழ கங்களிற் பயின்ற பின்னர், சூழியல், அரசியல் அலுவல்களுக்கு வேண்டிய
பேக்கன் தாம் எழுதிய “VI ஆம் என்றி” என்னும் நூலிற் கூறியது வருமாறு :- " மோட்டன் என்னும் விசுப்பாண்டவர் அரச நன்கொடை வீதத்தை உயர்த்தும் வழக்க முடையவர் ” என்ற எக்காலத்தும் முடிபுகாணு நிலையைப் பற்றிய ஐதிகம் ஒன்று உண்டு. அதனைச் சிலர் அவரின் “ கவர்முள் ” என்றனர். வேறு சிலர் அவரின் " கொக்கி ’ என்றனர். எனெனில், இறைப்பண ஆணையாளர்க்குத் தாம் அனுப்பிய கட்டளையை உடைய வாசக மொன்றில் மறைமுகமாக இவ்வாறு வரைந்துள்ளார் -" அவர்கள் எவரேனும் சிக்கனம் உடையவர்களாகக் கண்டால் பணத்தை அவர்கள் சேமித்து வைக்கும் உலோபிகளாய் இருத்த லினல் அவர்களிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும். அன்றியும், அவர்கள் செலவு செய்பவர்களானல் அவர்கள் வாழ்க்கை நடத்தும் முறையாலும் தன்மையாலும் அதிகம் இருக்க வேண்டும் என்பது. எம்பிசன், தட்டிலி என்போர் அறிவியல் துறையில் வழக்குரைப் போராகவும் அதிகாரமுள்ள கோமறைக்கழகத்தினராயும் இருப்பதால் அவர் சட்டத்தையும் நீதியையும் கசப்பான கொள்ளைக்கு அனுகூலமாக்கினர்.

பராளுமன்றம் ஆட்சி பயிலல் - 417
பயிற்சியைப் பிறநாட்டுப் பிரயாணததாலும், சட்ட நூலறிவாலும் பெற்றுத் தம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு அரசமன்றங்களில் தம் வாய்ப்புக்களைப் பெருக்கினர். இலிசபெத்தரசியார் ஆட்சியிற் கிடைத்த வெற்றிகள் யாவும் இத்தகை மக்களாற் பெற்றவையாகும். VI ஆம் என்றியரசனின் ஆலோ சனைக் கழகத்தினரிலும் இவர்கள் சிறந்த கல்வியறியும் தன்னுக்கமும் உடையவராவர் ; அன்றியும் அரசபற்றிலோ குறைந்த வருமல்லர். ስ
தியூடர் வழிவந்த முடிமன்னர் பணித்த அரசியற் கொள்கையை நிறை வேற்றுமுகமாக, குறித்த கழகம் சட்டவாக்கக் கருமத்திற் பேருக்கங் காட்டிற்று. எவ்வாறெனின், இதுகாறும் பாராளுமன்றத்தால் மறுக்கப் படாத அதிகாரமும் நோக்கமும் உடைய கட்டளைச் சட்டங்களையும் பிரசித்தங் களையும், பாராளுமன்றத்திலேயே ஆலோசனைக் கழகத்தினரால் நிறை வேற்றப்பட்ட முறிகளையும் இயற்றியதனல் என்று அறிந்து கொள்க. மேலும், சிறப்பாக VT11 ஆம் என்றியரசன் ஊல்சியுடன் மாறுபட்டுப் பிரிந்து சமயச்சீர்திருத்தப் பூட்கையைக் கைக்கொண்டதன்பின்னர், பாராளுமன் றம் தியூடரின் ஆட்சிமுறைமையில் ஓர் இன்றியமையாக் கூருக விளங் கிற்று, WIஆம் என்றியரசனின் ஆட்சியும் அவன்தன் மைந்தனின் ஆட்சித் தொடக்கமும் பாராளுமன்றமுறைமை சிறப்படையாத காலமாகும். பாராளு மன்றத்துச் சபைகள் சிலவேளைகளிலேயே கூட்டப்பட்டன. ஆனல், பொது மக்கள் பாராளுமன்றத்திற் சிறிதும் அக்கறை கொண்டிலர். தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளுக்குத் தானகக் கூட்டப்படாவிட்டாலும் அவர்கள் அதை எதிர்த்திலர் ; பாராளுமன்றத்தைக் கூட்டிய காலங்களிலும், உறுப்பினர் தெரிவில் அவர்கள் போடடியிட்டிலர் ; சட்டப்படி உரிமையற்று, செல்வரிட மிருந்து VIIஆம் என்றியரசன் இறை “நன்கொடை’ நெருக்கிப் பெற்றதை யாப்புமுறைப்படி எவரும் எதிர்த்திலர். பிற்காலத் தியூடர் ஆட்சியில் பாராளுமன்றம் மிகச் சிறப்படைந்து வந்ததனல், இவ்வசிரத்தை மறைவதா யிற்று. மேலும், சமயத்தில் உண்டான இடையரு மாற்றங்களுக்கெல்லாம் கருவியாக அது அமைக்கப்பட்டது. கோமறைக்கழகத்தினர் கீழ்ச்சபையில் இருந்துகொண்டு, அமைச்சர் குழு எறத்தாழ இப்பொழுது செய்து வருவது போல; அதன் நடவடிக்கைகளை வழிநடத்துவாராயினர். ஆனல், அவர்களின் அதிகாரம் பொதுமக்கள் சபையிற் றங்கியிராது, அரசனைச் சார்ந்திருந்தது ; அம்முடியின் விருப்பத்தையே அவர்கள் மற்றைய சபை உறுப்பினர்க்கு விளக்கினர். இவர்கள் தலைமை தாங்கிக் செயலாற்றியமை கல்வியைப் பரப்பும் முறையாக அமைந்தது ; ஏனெனில், இவர்களின் தலைமையில் பொதுமக்கள் சபை சிக்கல்களை எதிர்ப்பதிலும் அரசின்முக்கிய அலுவலக ளிற் பங்கு பற்றுவதிலும் பயிற்சிபெற்றது. இவ்வாறு ஒருவர் பாதுகாப்பி லிருந்து பெறும் இடைக்காலப் பயிற்சி இல்லாமையாலேயே எமது பாராளு மன்றத்தைத் தவிர்ந்த அயல் நாடுகளிலுள்ள சில பாராளுமன்றங்கள், திடுமென ஆதிக்கம் ஒப்படைக்கப்பட்ட காலை, அரசியற் கருமங்களைச் செய் தற்கு அவசியமான நடைமுறைப் பண்புகளை அறியாது மயங்கின.

Page 219
48 உடுமன்றத்தின் பணி
தியூடர் ஆட்சியில் ஆலோசனைக் கழகம், நேராகக் கட்டளைச் சட்டங்களி ஞலும், மறைமுகமாகப் பாராளுமன்ற நியதிச் சட்டங்களினலும் தான் பெற்றிருந்த மிகுதியான சட்டமியற்றும் முயற்சிகளோடு தன் பழைய நீதி முறை அதிகாரம் மென்மேலும் வலியுறுத்தப்பட்டுச் செயற்படும்வகையில் அவ்வதிகாரத்தைப் புதுக்கியமைத்தது. நோமானிய மன்னரின் “ கியூறியா இறெகிசு ’ எனப்பட்ட அரசமன்று காலத்திலுள்ள அத்தகைய பழமை வாய்ந்த சபை போன்று, தனக்குரிய நீதிமுறை அதிகாரத்தைச் செலுத்து தற்குத் தன் உறுப்பினரிற் சிலரைக் கொண்ட துணைச்சபையொன்றை நியமித்தது. கோமறைக் கழகப் பேரறிஞர் சிலரை உறுப்பினராகக் கொண்ட இப்புதிய “இசுற்றர் சேம்பர் ’ எனப்பட்ட உடுமன்றம், குடிமக் கள் எவரும் அச்சுறுத்த நினைக்கவும் முடியாத நீதிமன்றமாய் விளங் கிற்று. மெலியாரை வலியாரினின்றும் பாதுகாத்து வந்தமையால் பொது மக்கள் இதனைப் பெரிதும் விரும்பினர். மேலும், சட்ட முரணன கலகம், உரிமை ஏவலாளர், காப்புச்செலவு, என்பவற்றை ஒழிக்கச் சிறந்த கருவி யாய், WI ஆம் என்றிக்கு அமைந்ததும் இதுவேயாகும். செகப்பிரியர் இயற்றிய “ உவகைப் பெண்டிர் ” என்னும் நாடகத்தைப்படித்துள்ளார் அறிந்ததுபோல், இவ் வுடுமன்றம் அவர்காலத்திலும் பயனற்றுப் போக வில்லை :-
சாலோ:-* அதனை யான் “ உடுமன்ற ”த்திற் றீர்த்துக்கொள்வேன்; அவன் இருபது சேர் யோன் போல்சிராவுக்கொப்பாயிருந்தாலும் உயர் திருவாளர் உருேபெட்டு சாலோவை நிந்திக்க முடியாது . . . . . அச்சபை அதனை விசாரிக்கும்; இஃது ஒரு கலகம் . . . . போர் வீரனே : என்னுடைய ஆட்களை நீ அடித்துவிட்டனை ; என்னுடைய மான்களைக் கொன்றுவிட்டனை ; மேலும், என் குடிசையுள் நுழைந்து விட்டனை.
போல்சிராவு : “ இருந்தும் உன் பணியாளனின் மகளை முத்தமிட்டி லேன் அல்லவா ?”
சாலோ : சீச்சி, பொறு ; அந்தச் சபை இதனை விசாரித்துத் தீர்ப் பளிக்கும். V−
* உடுமன்றம்” மக்கள் மனத்திற் பதித்த நன்மை பயக்கும் அச்சத்தி னலேயே, பெரும்பாலும் சிறிய சட்டமன்றுகள் தம் முதன்மையான சுதந்தி ரத்தை மீட்டும் பெற்றன. அதனுடன் அவை அவ்வவ்வூருக்குரிய கெட்ட நாட்டாண்மையால் அப்பால் அச்சுறுத்தப்பட்டதும் இல்லை. ஆற்றல் மிகுந்த அயலார்க்கு மாறகத் தங்கள் தீர்ப்பினைக் கூறுதற்கு நடுவர். கொண்ட அச்சம் குறைய, வழக்கின் உண்மைகளுக்கும் அரசரின் விருப்பங்களுக்கும் ஏற்பத் தீர்ப்பளிக்காவிடத்துத் தாம் உடுமன்றத்திற் சென்று காரணங் கூறவேண்டுமே என்ற அச்சம் மிகுவதுமாயிற்று.

உயர் வரி விதிக்க முடியாமை 49
ஆலோசனைக் கழகத்துக்குரிய நீதிமுறை அதிகாரம் உடுமன்றங்களுக்கு வழங்கப்பட்டதுபோல் வேல்சிலும் வடபாலிலுமுள்ள ஆலோசனைக் கழகத் துக்குரிய தற்கிழமை நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டது. இப்பகுதி களின் எல்லைப்புறத்திலுள்ள மானியமுறைப்படியும் இராணுவமுறைப்படியு மான மரபுகள், வழமைச் சட்ட நீதிமன்றங்களைப் பெரிதும் இகழ்ந்தி ருக்கக்கூடும்.
VII ஆம் என்றியின் ஆட்சியில், தற்கிழமை நீதிமன்றங்களினதும் அரச ரின் சாதாரண நீதிமன்றங்களினதும் அதிகாரம் அரச நிழலில் ஒருங்கே இணக்கமாய் வளர்ந்தது. ஆனல், தியூடர் ஆட்சி முடிவில் வழமைச் சட்டத்தால் நீதி வழங்கிய மன்றங்களுக்கும் ஆலோசனைக் கழகத்திலிருந்து தோன்றிய தற்கிழமை நீதிமன்றங்களுக்கும் பெரிய முரண்பாடு தோன் றிற்று. ஏனெனில், பிற்கூறிய மன்றங்கள் மறுமலர்ச்சிக் காலத்துக்குரிய சட்டவல்லுநர் படித்த உரோமன் குடியியற் சட்டத்தைப் புகுத்த முயன்ற வாதலின். தியூடர் ஆட்சி முடிவில் தற்கிழமை நீதிமன்றங்கள் பலவாயும் ஊக்கமுடையனவாயும் இருந்தன. அவையாவன: உடுமன்றம், விண்ணப்ப மன்று, கடற்படைத் தலைமைமன்று, வேல்சு வடபால்களுக்குரிய நீதிக் கழகங்கள், அரச சீர்திருத்தத்தால் பிறந்த உயர் ஆணைத் திருச்சபை மன்று என்பனவாம். பிரான்சில் பாலனச் சட்டம் என்று வழங்கிய ஐரோப்பாக் கண்டச்சட்டப்படி குடிகளுக்கு எதிராக அரசபணியாளர்க்கு இந்நீதிமன்றங்கள் மிகுந்த ஆதரவு அளித்தன. தற்கிழைமை நீதிமன்றங் களிற் சில, பதவிவழிச் சத்தியத்தை நடைமுற்ையிற் கொண்டன. இச் சத்தியப்படி சிறைப்பட்டோர் தமக்குத் தாமே மாறகச் சான்று பகரும் படி வற்புறுத்தப்பட்டனர். சித்திரவதை ஆங்கில வழமைச் சட்டத்திற்கு மாறயிருந்தபோதும் கோமறைக் கழகம் சிலசமயங்களில் கோபுரத்தி லிருந்த கருவியால் சித்திரவதை செய்துவந்தது. 1 ஆம் சேமிசு ஆட்சியில் முதன்முதலாகக் கோக்கென்பார் பிறசட்டங்களுக் கெதிராக வழமைச் சட்டத்தை ஆதரித்து நடாத்திய போராட்டமே பிற்காலத்தில் சுதுவாட்டு அரசர்க்கும் அவர்தம் பாராளுமன்றக்களுக்கும் உணடாய பிணக்கின் பிர தான காரணங்களில் ஒன்றகும். 1641 ஆம் ஆண்டில் வழமைச் சட்டத் தின் வெற்றிமுடிவாக்கப்பட்டு, 1688 ஆம் ஆண்டில் உறுதி பெற்றது. ஆங்கிலச் சட்டம் வருங்காலத்தில் தற்கிழமை நீதிமன்றங்களில் தங்கி யிராது குடிமக்கள் சுதந்திரத்திற்கு நன்மைபயக்கக்கூடிய தாயிருந்தது. ஆனல், அம்மன்றங்கள் தியூடர் ஆட்சியில் ஆற்றிய பணி உலகுவந்ததும் பெரிதும் வேண்டப்பட்டதுமாகும்.
ஆங்கிலேயர், பாராளுமன்றம் அனுமதிக்காத வரியை 17 ஆம் நூற்றண் டில் எத்துணை விரைந்து எதிர்த்தனரோ, அத்துணை விரைந்து மேலதிக வரியை 16 ஆம் நூற்றண்டில் எதிர்த்தனர். இதன் பயனக முடியின் அதிகா ரம் மட்டுப்படுத்தப்படுவதாயிற்று. மக்கள் போருக்கு ஆயத்தராயிருக்க அதனை

Page 220
420 உயர் வரி விதிக்க முடியாமை
எதிர்க்கும் ஆற்றலில்லாதிருந்த தியூடமன்னர் சிக்கனமாயிருக்கவேண்டி நேர்ந்தது. கோண்வால் மட்டும் 1497ஆம் ஆண்டில் வரியைக் கொடாது மறுத்தபோது அரசு மிகக் கலக்கமடைந்தது. ஆகவே, ஓரளவில் செலவைக் குறைக்கும் முகமாக VI ஆம் என்றியரசனும் அவன் வழிவந்தோரும் நாட்டுப்புறத்தில் வேதனம்பெறும் பணிக்குழுவாட்சியை அமைத்தற்குப் பதிலாக வேதனம் பெருமையினல் சுயாதீனங்கொண்டவரும் சமாதான நீதிபதிகளாய் அரசவாணை பெற்றவருமாகிய நாட்டுயர்குடிமக்களிடம் கடமைகளை மேலும் மேலும் சுமத்தினர். தியூடர் காலத்து இங்கிலாந்தை கோமறைக் கழகம் சமாதான நீதிபதிகளின் துணைகொண்டு ஆண்டு வந்தது. இவ்வாட்சி அரசனுக்கும் உயர்குடி மக்களுக்கும் ஒரளவில் உடன் பாட்டை உண்டாக்கியிருந்தமையால், திருச்சபைக்கும் அரசுக்கும் திட்டங்களை வகுத்தபோது மேற்படி உடன்பாட்டையும் கருத்திற் ரொாள்ளுதல் முடியின் கடமையாகவிருந்தது.
ஒவ்வொரு புதிய ஆட்சியிலும் சமாதான நீதிபதிகளின் கடமைகள் பெருகின. இலிசபெத்தரசியார் இறந்தபோது, அந்நீதிபதிகளின் ஆதிக் கத்திற்கு அப்பாற்பட்ட கருமம் எதுவும் நாட்டுப்புறத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஊர்மன்றங்களில் சிறிய குற்றங்களை விசாரித்து நீதி வழங்கினர். வீதிகள், பாலங்கள், சிறைக்கூடங்கள் என்பவற்றை உள்ளவாறே பாது காத்துவந்தனர். மதுச்சாலைகளுக்கு உத்தரவுச்சீட்டு வழங்கினர் : பாத கரைக்கைதுசெய்தனர். பழைய கூட்டுத்தாபனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கைப்பற்றிய கூலிகள் விலைவாசிகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தல், தொழில் முதல்வருக்கும் தொழில் பயில்வோருக்குமிடையேயுள்ள தொடர்பை முறைப்படுத்தல் போன்ற மிகப்பெரியதும் சிக்கலுடையதுமான பொருளாதார ஆட்சியின் முகவர்களாக விளங்கினர். புதிய வறிஞர் சகாயச் சட்டத்தைச் செயன்முறைக்குக் கொணர்ந்தனர். இயேசு சபை யாரையும் கோட்பாட்டுக்கிணங்காதோரையும் நிலையான சமயத்தை மறுப் போரையும் அகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இலிசபெத்தரசியாரின் சமயக்கொள்கைதானும் அச்சமாதான நீதிபதிகளின் நன்முயற்சியையும் நல்லிணக்கத்தைதும் பெரிதும் பொறுத்திருந்தது.
இத்தகைய பலவகையான கடமைகளையும் அவ்வூர் நீதிபதிகளே திற மையுடன் செய்தலைக் கோமறைக்கழகம் கண்டது. இலிசபெத்தரசியாரின் ஆட்சியில் இக்கடமைகளெல்லாம் அவர் காலத்துக்குமுன்பும் அவருக்குப் பல சந்ததி காலத்துக்குப் பின்பும் காணப்படாத மிகுந்த திறமை யுடன் ஆற்றப்பட்டு வந்தன. தியூடர் காலத்துக் கோமறைக் கழகம், பாராளுமன்றத்தை மட்டும் சட்டமியற்றக் கற்பித்ததுமன்றி சமாதான நீதிபதிகளை ஆட்சிசெய்யவும் நீதிபதிகளையும் நடுவர் குழுவினரையும் நீதி வழங்கவும் பயிற்சியளித்தது. இப்பெரிய பயிற்சிமுறை VI ஆம் என்றி யரசனல் தொடங்கப்பட்டு, அவன் மகனலும் பேரப்பிள்ளைகளினலும் தீவிரமாகக் கையாளப்பட்டு வந்தது.

சமாதான நீதிபதிகள் 42
கோமறைக் கழகத்திலும் நாட்டுப்புறத்திலும் தமதிடத்தில் பிறர் அமரப் பிரபுக்கள் எவ்வாறு உடனபட்டனர் என்று நாம் வினவலாம். பிரபுக் களின் தொகையைத் தற்காலிகமாக உரோசாப் போர்கள் குறைத்து விட்டனவென்று எடுத்துக் கூறுதல் மட்டும் பூரண விடையாகாது. அவ் யுத்தங்களில் உண்டான செலவும் அவற்றின் முடிவில் வந்த பறிமுதல்க ளும் பிரபக்கள் மாளிகைகளை வறுமைப்படுத்த, அப்பறிமுதல்கள் VI ஆம் என்றியின் கருத்தான ஆளுகையினல், வேதனம் பெருத சமாதான நீதிபதிகளின் உதவிகொண்டு நயமான முறையில் தனது திறமான ஆட்சிமுறையை நடாத்துதற்கான வழிவகைகளைப் பெறும் அளவுக்கு, முடியை வளம் படுத்தின. இந்நிகழ்ச்சிகள் முன்கூறிய காரணத்திலும் நிலையான முதன்மை வாய்ந்தவையாகும். மேலும், நாடு நகரங்களிலுள்ள நடுத்தரவகுப்பினர் பிரபுக்களில் வெறுப்புக்கொண்டு அரசனை மகிழ்ச்சி யுடன் ஆதரித்தனர். பெருஞ்செல்வர், வணிகர், நிலக்கிழார் ஆகியோர் தம்முட் கலப்புமணஞ்செய்து, பெருஞ்செல்வம் ஈட்டியும் பண்பட்ட நுண் ணறிவும் பெறலாயினர். ஆதலினல், அவர்களை எவ்வகையிலும் தேசிய வாழ்வில் தாழ்ந்த நிலையினராய் இனிமேல் ஒதுக்க முடியாமற் யோயிற்று. இவ்வகுப்பினருக்கு ஒரு புதிய தன்மையைத் தந்துகொண்டிருந்த கைத் தொழில், கமத்தொழில்களினல் உண்டாய மாற்றங்களை இனி ஆராய் வோம்.
மத்தியகாலம் opதல் இக்காலம் வரையும் இங்கிலாந்தில் உண்டான மாற்றங்களின் வரலாற்றை, ஆங்கில ஆடை வணிகத்தின் சமுதாய வர லாருக வரையலாம்.
வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே இங்கிலாந்திற் பருக்கன் ஆடை நெய்யப்பட்டிருந்தது. இன்னும் பண்ணை முறைமையில் மத்திய காலத் திருந்த கிராமத்தார் நூல்நூற்றலோடமையரீது தமக்கு வேண்டப்பட்ட எளிய ஆடைகளைத் தாமே நெய்தும்வந்தனர். ஆனல், அக்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தற்கோ, உள்நாட்டுச் சந்தையில் விற் பனவு செய்தற்கோ உகந்த ஆடைகள் நெய்யப்படவில்லை. ஆகவே, செல் வம் மிகுந்த வகுப்பினர், இங்கிலாந்தின் ஆட்டு மயிர் பிளாந்தேசுக்கு அனுப்பப்பட்டு அங்கே ஆடையாய் நெய்யப்பட்டபின் அதனையே மீட்டும் வாங்கவேண்டியவராயினர். பதப்படுத்தாத ஆட்டுமயிரைப் பிளாந்தேசி லும் இத்தாலியிலும் இருந்த நெசவுத்தறிகளுக்கு ஏற்றுமதி செய்தத
"உரோசாப்பூ யுத்தம் தொடங்குமுன் 1454 ஆம் ஆண்டில் இறுதியாயிருந்த பாராளு மன்றத்திற்கு அழைக்கப்பட்ட கோமான்கள் பெருமக்களின் தொகை 53 ஆகும். நான்காம் எட்டுவேட்டின் கடைசிப் பாராளுமன்றத்திற்குச் சென்ருேர் தொகை 45 ஆகும். VT1 ஆம் என்றியின் முதல் மன்றத்திற்குச் சென்றேர் தொகை 29 ஆகும். இவ்வாறு தொகை குறைந்ததற்கு வயதிற் குறைந்தோர் பலர் அங்கு இருந்தமையே காரணமாகும். வயதிற் குறைந்தோர் பருவமடைந்தபோதும் புதிதாய்ச் சிலரைப் பெருமகராக்கிக் கொண்டபோதும் தியூடர் ஆட்சியில் சாதாரண பெருமகாரின் சராசரித் தொகை ஏறத்தாழ 50 ஆயிற்று.

Page 221
422 ஆடை வாணிபம்
னல், பிளாந்தாசனற்று இங்கிலாந்து வணிகச்செல்வத்தை ஓரளவிற் பெற்றது. அதனுடன் போப்பாண்டவர் தன்முகவர்களிடமிருந்து கைப் பற்றும் பணத்தை அம்முகவர்க்குக் கொடுக்கவும் அது உதவிற்று. ஆனல், ஈற்றில் ஆங்கிலேயர் அயல்நாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத் தகுந்த மென்மையான ஆடைகளைத் தாமே நெய்யப் பயின்றுகொண்ட காலை, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சிந்தனையிலும் முன் காத்திராத பல மாற்றங்கள் விளைந்தன.
எட்டுவேட்டின் ஆதரவில் பிளாந்தேசு நாட்டுப்பெருந்தொகையான காருகர் (நெய்வோர்) தம் செயற்றிறனை இத்தீவுக்குக் கொண்டுவந்தபோ தே இம்மாற்றம் எழத் தொடங்கிற்று. அவர்களிற் பலர் அடைக்கலம் புகுந்தோராயும் நூற்ருண்டுப் போரில் ஆங்கிலேயரின் நேயர்களாகவு மிருந்தனர். எனெனில், பிரான்சிலிருந்த மானியமுறைப் பிரபுக்கள் கெந்திலும் அதன் அண்மையில் வான் ஆத்தி வெல்துக்களின் தலை மையிலுள்ள நகரங்களிளும் உள்ள குடியாட்சியினரின் உரிமைகளைப் பறித்தலில் ஓயாது ஈடுபட்டிருந்தனர். பிளாந்தேசிலிருந்து குடிவந்த வர்கள் இங்கு சிறிதும் விரும்பப்படாமையால், 1381 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலகத்தில் இலண்டனில் இருந்த கும்பலால் நூற்றுக்கணக்கா னேர் கொலையுண்டனர். ஆனல், அதிற் பிழைத்தோர், அரசனின் கூர் மதிப்பூட்கையாற் பாதுகாக்கப்பட்டு, ஈற்றில், கலப்பு மணத்தினல் அவர் களுடைய வழித்தோன்றல்கள் மற்றைய ஆங்கிலேயருடன் வேறுபாடின்றிக் காணப்பட்டனர். பிற்காலத்தில் ஆயிரமடங்காய் வளர்தற்குரிய அவர்தம் கைவினைத்திறன் சிறந்த தேசியச் செல்வமாய் அமைந்தது. இலிசபெத்தர சியினதும் சுதுவாட்டரசர்களினதும் ஆட்சியில் வந்து திரண்டபிரான்சிய பிளாந்தேசிய இயூசனற்றுகள் புரட்டசுத்தாந்த சமயத்தைத் தழுவிநின்று துன்பப்பட்டவர் ஆதலினல், யாவராலும் ஆதரிக்கப்பட்டனர். அன்றியும் ஆங்கிலேயரது நெசவுத் தொழிலின் புதிய துறைகளை எப்பொழுதும் வளர்ப்பதில் தமது மத்திய காலத்திய முன்னேடிகளைக் காட்டிலும் எவ்வி தத்திலும் இவர்கள் குறைந்தவரல்லர்.
15 ஆம் 16 ஆம் நூற்றண்டுகளில் நோவிச்சைத் தலைநகராய்க்கொண்ட கீழ் அங்கிலியா ஆடை வணிகத்தாற் பெருஞ் செல்வமடைந்து விளங்கிற்று. இவ்வுண்மைக்கு ஆங்குள்ள பல கவின்பெறு கோயில்கள் சான்றுபகரும். தோண்டன், மேலைக் கொத்துவாத்துக்கள் என்பனவும், கெண்டல், யோக் குசயர் என்பவற்றின் பள்ளத்தரைகளும், கான்சு, பேக்குசயர், சசெட்சு என்பவற்றின் வாய்ப்பான இடங்களும் கிழக்கு அங்கிலியாவின் ஆடை வணிக முறையைத் தழுவி நின்றன, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய எல்லாத் திசைகளிலும் பழைய மதில் சூழ்ந்த பட்டினங்களில் மாத்திரமன்றிப் பெயின்சுவிக்கு, சிப்பிங்காம்பிடன் முதலிய சிற்றுர்களி லும் காருக மாந்தர் தொகையாய்க் குடியேறினர். அக்காலந் தொட்

ஆடை வாணிபம் 423
டுப் புது வருவாயும் புதுச் சிந்தனைகளும் நிலக்கிழார், பெருஞ் ெேசல்வர் ஆகியவர்களிடம் தோன்றி நாட்டுப்புறம் முழுவதையும் நெசவுத்தொழில் நிலையமாக மாற்றிவிட்டன. அத்தகைய மாவட்டங்களில், தறியோடத்தின் வேகம் என்பதை * உழுபடை வேகம் ’ போல மக்கள் நயந்தனர். அன்றியும், கமக்காரன் கருத்தில் ஆட்டு மயிருக்கு ஒரு புதிய விலைமதிப்பு உண்டாயிற்று. தியூடர் காலத்து அழகிய சிற்பத்திறனமைந்த கற்கட்டி டங்களையுடையனவும் அக்கட்டிடங்களேப்போலப் பெருந்தொகைப் பொருள் கொண்டு கட்டப்பட்ட தியூடர் காலத்துப் பண்ணை நிலங்களினல் பலமைல் தூரம் சூழப்பட்டனவும் ஆகிய கிராமங்கள் கொத்துவாத்திற் செல்லும் பிரயாணிக்கு நெசவுத்தறியின் பண்டைச் செழுமையை எடுத்துக்காட்டும். மேலும், கெண்டலில் நடந்த ஆடை வணிகத்தின் வரலாற்றை உவத்து மோலாந்தின் தடித்த கற்சுவர்களிலும் ஒக்கு மரத்தாற்செய்த தள வாடங்களிலும் கம்பிரிய ஆட்டுப் பண்ணைகளிலும் படித்தறியலாம்.
நெசவுத்தொழில், குடிசைத்தொழிலாய் நடைபெற்று வந்தது. அஃ தாவது, காருகரும் அவர்தம் குடும்பத்தாரும் தங் குடிசைகளிலிருந்து தறிகளில் நெசவு செய்தனர். இத்தொழிலுக்குரிய ச்ெய்முதற்பொருளை வணிகத் தரகர் கொடுத்துப் பின்னர் நெய்யப்பட்ட ஆடைகளைத் தாமே விற்றுங் கொடுத்தனர். தம் முதுகுகளில் ஆட்டுமயிர்ப்பொதிகளையோ அன் றிப் புடைவைச் சிப்பங்களையோ தாங்கிச் சென்ற பொதிசுமக்கும் குதிரை வரிசைகள், ஆங்கில வாழ்க்கையான பாவிழை ஊடிழைகளில், சேய் மைப் பிரதேசங்களையும், எல்லாவகுப்பு மக்களையும் ஒன்றுசேர்த்து ஒரு உறுதியான நாட்டின ஆடையை இழைக்குமாறு குறுக்கும் நெடுக்கும் ஒடும் தறிகளாயிருந்தன.
யோக்குசயரிலுள்ள நெசவுத்தறிகளுக்கு வேண்டப்பட்ட மென்மையான் ஆட்டுமயிரை இலிங்கன்சயரிலுள்ள பண்ணைக்காரர் விருத்திசெய்து வந் தனர். அல்லிலும் இலண்டனிலுமுள்ள வணிகரும் கடலோடிகளும் இல வாந்து, போற்றிக்கு ஆகிய பிரதேசங்களிலும் கிழக்கு, மேற்கு இந்தியத் தீவுகளிலும், ஈற்றிலே வேர்சினியாவிலும் மசாச்சுசற்சிலும் அவ்வாட்டு மயிரை விற்பதற்கு உகந்த புதிய சந்தைகளைக் காண்பதில் ஊக்கங் கொண்டனர். கொத்துவாத்திலுள்ள ஆயருக்கும் காருகருக்கும் கடல் வழியாற் றம் ஆடைகளைக்கொண்டு சென்று வாணிகஞ் செய்தற்குத் தாழ்ந்த சமவெளியிலுள்ள குளோத்தரும் பிறித்தலும் அண்மையில் இருந்தன.
பிறநாட்டலுவல்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உரிய தேசீயப் பூட்கையை அமைத்த கோமறைக்கழக அரசறிஞர் மேற்கண்டவாறு நாட்டு மக்கள் பரந்த பேரூக்கம் காட்டியதை நன்கு கருத்திற் கொண்டனர். இவ்வாறன பலவகைப்பட்ட தனிப்பட்டோர் ஊக்கமானது செசிலும் இலிச பெத்தரசியாரும் சாதுரியமாய் வழிப்படுத்திவர வேற்றுமையின்றி வளர் ந்தது. நகராட்சிக்கூட்டுத் தாபனங்களும் உள்ளூர்க்குழுமங்களும் அரசைப்

Page 222
--PN 3 Lio
நெயன்
பிட்யதி
ாநிங் யூ நேய
ஆங்ாே நாமங்
I
-i is is
All Trust, liai
uLiu XVIII. மாகாணங்களாகப் பிபிக்கப்பட்ட இங்கிலாந்தும் உவேல்சும். நியூடர் பருவம்.
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டின வுணர்ச்சி தோன்றல் 蜴5
போல அத்துணேப்பரந்த தேசீய நோக்குடன் அரச கருமங்களே நடாத்த முடியவில்லே. இப்புதிய இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகரசபைகள் உண்மையில் பாதுஞ்செய்தில. எனெனில் ஆடை நெசவு நாட்டுப்புறங் களில் வழக்கம்போல் நடைபெறதிருந்தபொழுதும், நகர எல்லேக்குள் நடந்த வணிகத்தைத் தடைசெய்த இழிமுறையான சட்டங்களே விலக்கு தற்குப்பரோக்களின் எஸ்லேக்கு அப்பாலுள்ள ' சுதந்திரப் பதிகளில் ” நடைபெற்று வந்தது. பொருளாதார ஒழுங்குகள் சம்பந்தப்பட்டவரையில், தியூடர் ஆட்சிக்காலம் முழுவதும் குழுமங்களிலும் பரோக்களிலும் நிவிேய மத்திய காலக் கூட்டமைப்புவாழ்க்கை கீழ்நிலேயடைந்து வந்தது. மறு புறம், இலண்டனிலும் எனேய பட்டினங்கள்லும், சிறப்பாகத துறைமுகங் களிலும் செல்வமும் அரசியலாதிக்கமும் அதிகரித்து வந்தன. அதற் குக் காரணம் ஆடைவணிகமும் கடவிலே புது வழிகாண்டலும் ஒருங்கு சேர்ந்து ஆங்கிலக் கடல்வணிகத்தில் ஒரு புது ஊழியைத் தோற்றுவித தமையேயாகுமென்க.
ஆடை வணிகத்தின் செல்வாக்கு முழுவதும் தனிப்பட்டவர்பாற்பட்டதே யன்றி உலகப்பொதுவானதோ அன்றிக் கட்டமைப்புக்கே உரியதன்று. உரோசாப்பூ யுத்தங்கள் நடந்தகாலம் முழுவதும் என்றியரசனின் சமயச்சீர்திருத்தததினுலும் மேரியரசியின் எதிர் மதமர்ச்சி இயக் கத்தினுலும் ஏற்பட்ட மாற்றங்களும் வல்லடிச் செயல்களும் நிகழ்ந்த காலத்திலும், இலிசபெத்தாசியாரின் பொற்காலத்திலும், அரசுக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே நேர்ந்த உள்நாட்டுப் போர்க்காலத்திலும், ஊக்கமுடைய ஆடை வணிகர், காருகர், ஆப் ஆகியோர் தம் தனிப்பட்ட முயற்சியால் அரச பாதுகாப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் மாத்திாம் அமைவாய், உயர்ந்தோர், தாழ்ந்தோர் அஃனவரிடத்தும் பெருஞ்செல்வம் ஈட்டியும் அவர்களிடை பெருக்கியும் வருவாராயினர். அலுர்கன் மத்தியகாலத் திருச் சபையினர், விழுமியோர் போன்றிராது தனித்தன்மையும் தேசீயத்தன்மை யும் உடையவராயிருந்தனர். ஏனெனில், பத்திய காலத்திருந்த பிசப் பாண்டவர், துறவி, பெருமகன், நகரத்தான் என்போரைப் போலத் தாங்கள் ஒரு உலகப்பொதுவான அமைப்புக்கு உரியர் எனற தொகுப்பக உணர்வு அவர்களுக்கு இருந்ததில்ஃ. அன்றியும் ஆகிலேயரின் தலைவர் களாய் மத்தியகாலத்திருச்சபையினரும் விழுமியோரும் வகித்த பதவியைப் படிப்படியாகத் தாமே கைப்பற்றிவந்தனர். ஆகையால், பொது மக்கள் சபை அவர்களிடத்து நாட்டின அடிப்படையில் குடியாட்சிமுறை ஒத்து ழைப்புப் பற்றியதொரு புத்துணர்வைப் பிறப்பிக்குந் துனேயும் அவர்கள் நியூடாது முடியாட்சியிற் சிறிதும் அழுக்காறு கொண்டிலர்.
புரட்டசுத்தாத்தமானது உளச்சான்றுக்கும், மறை நூலோதுதற்கும் எற்ற பொதுமன்றத்தைக் குடும்பத்தவிர்க்கும் தனியார்க்கும் அமைந்துக் கொடுத்ததனுஸ், இம்மக்களுக்கும், அவர்களின் இயல்புக்கும் பொருத்த மாயிருந்தது. பதினேந்தம் நூற்றண்டில் தம் ஆன்ம ஈடேற்றத்திற்கும்

Page 223
426 புதிய மத்திய வகுப்பார்
தம் புகழை நிலைபெறச் செய்வதற்கும் குருமார் மானியங்களை நிறுவினேர், தியூடர் ஆட்சித் தொடக்கத்தில் குருமாரின் எதிர்ப்புக்கு மிகுந்த சார்புடைய ராய், பதினரும் நூற்றண்டு அடுத்ததும் அவர்கள் பெரும்பாலும் மறை நூலோதுவோராயும் சமயச்சீர்திருத்ததிலிடுபட்டோராயும் விளங்கினர். அவர் களுட்செல்வமுடையோர் நிலம்வாங்கியும் பெருஞ்செல்வர் குடும்பங்களிற் கலப்புமணஞ் செய்தும் புதிய “ மாநிலக் குடும்பங்களே ’ நிறுவி வந்தனர். துறவோர் மடங்கள் குலைக்கப்பட்டபின்னர் எற்பட்ட தீவிர நிலச்சங்கேதத்தில் சேர்ந்து, அதற்கு வேண்டப்பட்ட உரொக்கப் பொருளைக் கொண்டு அத்துற வோர் மடங்களுக்குரிய நிலபுலங்களை வாங்குவதில் அவர்களிற் பலர் ஊக்கங்கொண்டனர். பாராளுமன்றங்களிலும் சட்டமன்றக் கல்லூரிகளிலும் அவர்தம் புதல்வர் அரசாங்க சேவை புரிவதற்குப் பயின்று வந்தனர். புதிய நிதி படைத்த மக்கள் முதலில் இலிசபெத்தரசியாருக்கும் அவருக்கடுத்த ஊழியில் பாராளுமன்றக்குறிக்கோளுக்கும் இன்றியமையாத ஆதாரங்களாயிருந்தனர். அவர் தம் உதவியால் தியூடர், சுதுவாட்டு அரசர்களுக்குரிய கடற்படைகள் கடலாட்சி செய்யத் தொடங்கின. ஆகவே, புதுவுலகத்தைத் தன்னலத்தின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்வதற்கு இசுப்பெயினிலும் இங்கிலாந்துக்கு இருந்த பெரும் வாய்ப்பு யாதெனில், தான் நெய்த ஆடைகளை அப்புதுவுலகத்தாரின் பொருள்களுக்குப் பதிலாக விற்கக்கூடியதாயிருந்ததே, ஆனல், இசுப்பானியரோ, போர் வீரர், குருமார் குடியேறுநர் ஆகியயோரையன்றி, வேறெவற்றையும் அனுப்பக் கூடியவர் களாயிருக்கவில்லை.
ஆடை வணிகத்தால் ஊர்க்குரியவளர்ச்சியில் எற்பட்ட விளைவு முற்றிலும் நன்மைபயக்கக்கூடியதாயிருக்கவில்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என் போர்க்கு அவ்வணிகத்தால் வந்த தொழில் வளர்ச்சியும், செல்வமும், அதனல் நேர்ந்த அழிவிலும் மிகப் பெரிது. ஆனல், எனைய பொருளாதார மாற்ற முறைகளைப்போல, அதுவும் பெருந்தொகை மக்களைப் பாதித்து வெந்துயரையும் உண்டாக்கியது. பதவி, வழமை என்பவை பணத்தொடர்பு, கட்டுப்பாடற்ற தொழில் என்பவற்றுக்காகக் கைவிடப்பட்டமையால், புதிதாக விடுதலைபெற்ற பண்ணை வேலையாளருக்கு அது நல்ல வாய்ப்புக்களை யளித்ததுமன்றி, இடர்களையும் விளைவித்தது. மேலும், முதலுடைய கமக் காரர்க்கும் நிலக்கிழார்க்கும் பிறரை ஒதுக்கித் தாம் விரைவிற் செல்வமீட்ட வேண்டுமென்னும் அவாவையூட்டியது. சில மாவட்டங்களில் கிராம வயல் வெளிகளை மேய்ச்சல் நிலங்களாக அடைத்திருந்தார்கள். இது குறிப்பது யாதெனில், ஒருசில ஆயர்க்கு மேய்ச்சல் நிலங்கள் கொடுக்கவேண்டி உழவர் பலர் கமஞ்செய்யாது தடுக்கப்பட்டனர் என்பதாகும். தியூடர் கோமறைக்கழகம் குடித்தொகைக் குறைவிற்குக் காரணமான மேய்ச்சல் நில அடைப்பைத் தடுத்தலில் அடிக்கடி தலையிட்டதாயினும், அம்முயற்சி உறுதியாகவோ எப்பொழுதும் சித்திகரமாகவோ அமையவில்லை. இவ் வின்னலுக்கு இலக்காய் விளங்கிய இடங்கள் இலத்தர்சயரும் நொதாம்

* தறுகணிரவலர்’ 427
பிடன்சயருமாம். இவற்றின் கிழக்கிலும் தெற்கிலுமுள்ள மாநிலங்கள் சிறிது குறைந்த இன்னலுக்கு ஆளாயின. அங்கிருந்து நீக்கப்பட்ட உழவர் பலர், தியூடர் கால இலக்கியத்திலும் நியதிச்சட்டச் சுவடியிலும் பெரிதும் விரவியுள்ள “தறுகணிரவலர் ” “தடியடிகாரர்” “ கதியில் கள்வர் ” ஆகியோரின் தரத்துக்குரியராய் அலைந்து திரிந்தனர்.
15ஆம் நூற்றண்டின் உரிமை எவலாளரைப் போல அதற்குப் பிந்திய நூற்றண்டின் பொல்லாப்பாளராய், “ இரவலர் ” இருந்தனர். இவர்களேச் சமுதாயத்தில் அலைந்து திரியவிட்டு தம் வயல் நிலங்களையடைத்துள்ள நிலக்கிழாரை * மொரே ”, “ இலாத்திமர்” முதலிய அறவோர், உரிமை ஏவலாளரையுடைய பிரபுக்களைப் போட்டசிக்குவும் அவர்தம் காலத்தாரும் எவ்வாறு கண்டித்தனரோ அவ்வாறே கண்டித்தனர். “தறுகணிரவல ரிற் ’ பலர் முற்கால உரிமை எவலாளராயும், கள்வராயும், நாடுகடத்தப் பட்டோராயுமிருந்தனர். இவர்கள் 15 ஆம் நூற்றண்டுச் சமுதாயத்திற்குரிய சட்டமறுப்பு வழக்கங்களைக் கைவிட்டிலர். வலிமையுடைய ஆட்சியில் இவர்கள் குறைந்த அளவில் பிறர்க்கு இடர் விளைத்தும் கூடிய அளவில் பிறராற் றுன்பத்துக்கு ஆளாகியும் வந்தனர். பசிய சோலைகளில் உல்லாசமாய் உலாப்போதற்கும் தஞ்சீமானின் சேவகர் உடையணிந்து கொள்ளையடிக்கும் உத்தரவுக்கும் பதிலாகக் கால்விலங்கும் கசையடியும், கூளப் படுக்கையுமே இவர்க்குக் கதியாயின. ஆடை வணிகத்திலும் இக்காலத்தன்மையுடைய தொழில்களிலும் பருவகால வேலையின்மையாற் றுன்பமடைந்த குற்றமற்ற தொழிலாளரும், மத்தியநிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உழவரும் இவர்களைச் சேர்ந்துகொண்டனர். ஆனல், 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த நாடோடிகள், அதற்குப்பின் வாழ்ந்தவரிலும் மிகுந்த வேறுபாடுடையரா யிருந்தாலன்றிப் பெரிதுந் துன்புற்ற அவ்வகுப்பினர்க்கு நேர்ந்த அநீ தியைக் குறித்து எல்லாரும் பேசிக்கொண்டிருந்த ஊழியிலே, பயனில் மாந்தர் பலர் நிலவுரிமை இழந்திருந்த உழவரைப்போல நடித்துப் பொதுமக்களின் கருணையைப் பெற்றிருத்தலும் வேண்டும்.
துறவி மடங்களில் வழங்கிய வேறுபாடில்லாத தரும உதவி பிச்சை எற்போர் தொகையை வளர்த்ததுமன்றி, அவர்கள் துன்பத்தையும் தீர்த்தது. மேலும், வறிஞர் சகாயச் சட்டம் பூரண விருத்தியடைந்து, மடங்களுக்குப் பதிலாக இடருதவியளிக்கும் கருவியாய் அமைவதற்கு முன்பு அம்மடங்களைத் திடீரென ஒழித்தமை வறியார் துன்பத்தைப் பெரிதும் வளர்த்தது. எவ்வா றெனில், மடத்தில் வழங்கிவந்த தானத்தை நிறுத்தியமையால், பெருந்
சோமசெற்று, தீவன், கோண்வால், சபோக்கு, எசக்குசு, கென்று என்பன தியூடருக்கு முற்பட்ட காலத்தில் உழவராலேயே அடைக்கப்பட்ட மாநிலங்களாகும்; இதற்குக் காரணமாய் விளங்கினவை, காட்டுநிலங்கள், இயற்கைத் தன்மைகள், பழச்செய்கை, அல்லது இப்போது மறந்துபட்டுப்போன அவ்வந் நிலச் சூழ்நிலை என்பனவும், மேற்கில் அங்கு ஓரளவிற்கு நிலவிய பழைய “ கெலித்திக்கு ’ ஆசாரமும் ஆகும்.

Page 224
428 *தறுகணிரவலர்”
தொகையினரான மடப்பணியாளரைக் கதியற்ற நிலையில் விட்டமைபோலா கும். இத் தானம், வழக்கமாகக் கிடைத்துவந்த மடத்து வருவாயின் மிகச் சிறிய பங்காய்ப் பிற்காலத்தில் இருந்தது. “இரப்போர்’ அச்சத்துக்கும் இரக்கத்திற்கும் இலக்காயினர். (தியூடர் காலத்து எங்கள் மூதாதையர் ஒரு * பட்டின ’ மென்று பொதுவாக வழங்கிவந்த) ஒரூரில் அப்பிச்சைக்காரரின் நுழைவு பின்வரும் நாட்டுப்பாடலில் என்றும் நிலைக்கக்கூடியதாகக் கூறப் பட்டுள்ளது :-
* கேளிர் கேளிர் நாய்கள் குரைப்புக் கேளிரால் ” வழைப் பிச்சைக் காரரெழிலூர் வருகின்றர் ; கூழென் றவருக் கப்பங் கொடுத்தார் சிலர் ; சிலரே வாழி ; சவுக்கால் மீள வடித்து வரைந்தனரே ,
(வரைந்தனர்-நீக்கினர்)
தர்மத்துக்கும் தற்பாதுகாப்புக்கும் முறையே அறிகுறியாகவிளங்கிய உணவும் கசையடியும் தியூடரின் வறியார் சட்டங்களால் கட்டாயமான சமுதாயக் கடமைகள் என்று குறிக்கப்பட்டன. அச்சட்டங்கள் இலிசபெத்தரசி யாரின் வறிஞர் சகாயச் சட்டத்திலும் வறிஞர் சகாய வரியிலும் முடி வடைந்தன. தொழில் புரிய விருப்பமற்ற உடல்வன்மை பெற்றேர்க்கும் தொழில்புரிய உடல் வன்மை இல்லாதோர்க்கும் தொழில்தேட முடியா தோர்க்கும் உள்ள வேறுபாடு படிப்படியாகத் தியூடர் காலச் சமுதாயத்திற் குப் புலயிைற்று. அன்றியும், வறிஞர் சகாயச் சட்டத்திலும் அவ்வேறுபாடு இடம்பெற்றது. மடத்தில் வழங்கிய தானத்தை நிறுத்தியமை இங்கிலாந்து அப்பிரச்சினையைத் தேசீயக் கண்கொண்டு பார்ப்பதற்கும், அவ்வறியார்க்கு உதவிபுரிவதைச் சட்டத்தால் வற்புறுத்தக்கூடிய சமுதாயக் கடமையாகக் கொள்வதற்கும் வாய்ப்பளித்தது. இலிசபெத்தரசியாரின் வறிஞர் சகாயச் சட்டம் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதும், சமுதாய அமைப்பின் ஒருபடி வளர்ச்சியைக் குறித்தது. மேலும், அரசியாரின் ஆட்சிமுடிவில், பிறநாட்டார் தாம் மற்ற நாடுகளில் பிச்சைக்காரரைக் கண்டிருக்க, இங்கிலாந்தில் அவர்கள் இல்லாததைக் கண்டு வியப்படைந்தனர்.1
நிலையான சுவர்களையும் புதர் வேலிகளையும் கொண்டுள்ள வெளி நில அடைப்பு எப்பொழுதும், அல்லது பெரும்பாலும் தீமை பயப்பதென்று கருதுதல், பிரித்தானிய கமத்தொழிலின் வரலாறு முழுவதையும் பிழை பட விளங்குவதாகும். முதலாவதாக, 15 ஆம் நூற்றண்டிற்ருனும் எல்லா அடைப்புக்களும் விளை நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றவில்லை. அவற்றுட் பெரும்பகுதி தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலமாக்குதற்கு,
உண்மையில் வறிஞர் சகாயச் சட்டங்கள் பல, துறவி மடங்கள் குலைதற்குமுன், நியதிச் சட்டச் சுவடியில் இடம்பெறலாயின. " மடங்களின் குலைவு வறிஞர் சட்டத்தை இன்றியமையாத தாக்கிற்று ; ஆனல், அவ்விரு கருமங்கள் தம்முட் காரண காரிய முறையில் அமைந்தில, தானர்-சாதனம், 470 ஆம் பக்கம்.

அடைப்பியக்கம் ! நன்மையும் தீமையும் 429
அல்லது உழுது பயிரிடும் முறையைத் திருத்துதற்குப் பெரிதும் பயன் பட்டது. இந்நடைமுறைகள் இங்கிலாந்தின் செல்வம், வணிகம், குடித் தொகை என்பனவற்றைப் பெருக்குதற்கு மிக வேண்டப்பட்டன. இரண் டாவதாக, தியூடர்கால அடைப்புக்கள் பல சுரண்டிவாழும் நிலக்கிழாரி னலோ, “முதலாண்மைக் கமக்காரராலோ ’ உண்டாக்கப்படாது, சிறு நிலக்கிழாராலேயே தோற்றுவிக்கப்பட்டன. அடக்கமான பண்ணைப் பகுதி களையோ, வெளியான ஊர்ப்புற வயல்களையோ செறிவுள்ள கமங்களாகவும் புதர் வேலிகளையுடைய வயல்களாகவும் அடைத்தமையால் அச்சிறு நிலக் கிழார் எளியோரின் செல்வத்தையும் தொழில் வாய்ப்புக்களையும் பெருகிக் னர். சிறந்த கமக்காரன் பொதுவயல்களில் தனக்குத் தடையாயுள்ள, ஊக்கமும் நேர்மையும் திறனுமற்ற அயலானின்றும் விடுதலை பெற்றன். சிதறிக் கிடந்த துண்டுக்காணிகளின் வரம்புகளையும் எல்லைகளையும் நீக்கு வதனல் விளையும் இடையருச் சண்டைகளும் வழக்காட்டுக்களும் முடிவெய் தின. நிலமுடைய உழவனுக்கு அடைப்பினுற் கிடைத்த தடையற்ற தனி யூக்கம் அவனுக்கும் மற்றையோர்க்கும் பயன்தருவதாயிற்று. மத்திய நிலங்களிலுள்ள பெரும் பகுதியான சிறந்த விளைநிலம், 18 ஆம் 19ஆம் நூற்றண்டுகளில் அடைக்கப்படும் வரையும் வெளிநிலமாகவே விடப்பட்டமை இரங்கத்தக்கதாம். இவ்விரு நூற்றண்டுகளிலும் பொருளாதார, சமுதாய நிலைமைகளினல் இவைகள் அடைக்கப்பட்டன. இவ்வாறு அடைக்கப்பட் டமை தியூடர்காலத்திருந்த சிறு உழவர்களைக்காட்டிலும் இக்காலத்திருந்த உழவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை.1
இயூ இலாத்திமர், சுரண்டிவாழும் முதலாளிகளான நிலக்கிழாரின் சார்பாக நேரும் நிலவெளியேற்றத்துக்கும் அடைப்புக்கும் எதிராகப் போத பீடத்தினின்று அச்சமின்றிச் சொற்பொழிவாற்றினர். ஆனல், உண்மை யான ஒரு வேளாளனுக்குரிய தன்மைவாய்ந்தவுரென்று அவராற் கருதப் பட்ட அவரது தந்தையார் “ அடைப்பு ’க் கமம் உடையவராயிருந்தாரென்று நம்புதற்கு இடமுண்டு. அத் தந்தையாருடைய குத்தகைக் கமம் 200 எக்கர் விளைநிலத்தையும் உழவுக்குரிய எருதுகள் மட்டுமன்றி 100 ஆடுகளும் 30 கறவைகளும் மேய்தற்கான நிலத்தையும் கொண்டது.
இலிசபெத்தரசியார் காலத்திருந்த தசர் என்னும் உழவுப்புலவர் வெளிநிலத்திலும் பார்க்க அடைப்பு நிலத்தால் விளையும் பெரும் பயன்களைப் பின்வரும் பாடலிற் கூறினர் :-
அடைப்புடைய மேய்புலத்தி லமைநலன்கள் பலவாம் ; அடைப்புடைய வோரேக்கர் அஃதல்லா வெளிசேர் இடைப்புலத்தில் மூன்றுக்கே இணையாகும் ; மற்றவ் வடைப்புலத்தார் தம்முரின்ம யாலுவகை கூர்வர்.
தியூடர் காலத்திருந்த அடைப்பு நிலத்தின் பரப்பு இவ்வாறு பெரும்பாலும் புனைந்துரைக்கப் பட்டது. இலித்தர், நோதாம்பிடன் என்னும் கோட்டங்களிலுள்ள பெரும்பான்மையான அடைப்புக்கள் பதினெட்டாம் நூற்றண்டில் எழுந்த அடைப்பியக்கக் காலத்திற் றனும் பெரும்பாலும் வெளிநிலமாய் விளங்கின.

Page 225
430 அடைப்பியக்கம் : நன்மையும் தீமையும்
மேலும், பணியாட்டிகளை விட 6 ஆடவரை வேலையில் அமர்த்திக் கொள்ள வும் தன் பெண்மக்கள் ஒவ்வொருவருக்கும் 50 பொன் கொடுக்கவும் உதவியதுடன், தன் மகன் இயூவைப் பள்ளிக்கும், பின் கல்லூரிக்கும் அனுப்பிக் கற்பிக்கவும், ஈற்றில் அவன் பிசப்பாண்டவராகிப் பின் கழு வேறி உயிர்த்தியாகியாவதற்கும் உதவியது அக்குத்தகைக் கமமே என்பது நாமறிந்த உண்மையாம். இப்புதிய இங்கிலாந்தை, மத்தியகாலப் பிரபுக்கள் பண்ணையாட்கள் ஆகியோர் வாழ்ந்த இங்கிலாந்திலும் மிகச் சிறந்ததாக்கிய வர் இவ்வாருண வேளாளரே. சிறிய, நடுத்தரமான, இறையிலாக் கமங்களை யுடைய இவ்வேளாளர், பெருந்தோட்டங்களையுடைய சுரண்டி வாழும் பிரபுக்கள் புதிய ஊர்ப்பொருளாதாரத்துக்கு எவ்வாறு முதன்மையளித் தனரோ, அவ்வாறே முதன்மையான சிறப்புறுப்பாக விளங்கினர். சுது வாட்டு மன்னர் காலத்துப் போர்களிலும் அரசியலிலும் வேளாளரும் முக்கியமாய் இறையிலாரும் பெற்றிருந்த முதன்மையானது 15 ஆம் 16ஆம் நூற்றண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்களினல் ஏற் பட்டதாகும்.
அடைப்பியக்கத்தை அதன் உடனடியான சமுதாய விளைவால் மட்டும் நாம் கணிக்கக்கூடாது. அது வேளாண்மையையும் பொருளாதாரத்தையும் காரணமாகக் கொண்டுள்ளது. பிரித்தானியாவின் தானியச்செய்கை நிலங் கள், சிறப்பாகப் பரந்த வெளியிலுள்ள கமங்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டுவந்ததால், அந்நிலத்தின் வளத்தை மீட்டும் பெறும் பொருட்டு நீண்ட நாளுக்கு அவ்விளைநிலத்தில் செய்கையின்றிப் புல்வளரவிடவேண்டியது இன்றியமையாததென்று பிரித்தானிய கமச் செய்கை வரலாற்றளர் குறித்துள்ளார். மேலும், அடைப்பு நிலங்கள் தானியவிளைவுக் குகந்தனவாயிருந்தன. தியூடர் ஆட்சிக்காலத்தில் பரந்த வெளிக்கமங்கள் அடைக்கப்பட்டால் உணவுப் பொருள் விளைவு குறையு மென்று மக்கள் ஒருபுறமஞ்சாநிற்ப, அனேவிரியரோ அமிதமாகக் குடித் தொகை பெருகியுள்ள தந்தீவு பட்டினியிலிருந்து காக்கப்படவேண்டுமாயின் மென்மேலும் காணிகள் அடைக்கப்படவேண்டுமென அனுபவவாயிலாக அறிந்திருந்தனர்.
தியூடர் காலத்தில் சிறு வேளாளரின் நெருக்கமான கமங்கள் அவற் றைக் கைப்பற்றினேருக்காகப் பிரிக்கப்பட்டன. அதனுடன் பெருநிலங் களடங்கிய பெருந்தோட்டங்களும் சொந்தக்காரராலமைக்கப்பட்டன. இதற்கு இலிசபெத்தரசியாரின் செல்வம் மிகுந்த குடிகள் வாழ்ந்த நாட்டுமாளி கைகள் சிறந்த சான்று பகரும். மக்களிற் சிலரை மண்பெற்று மாண்
* வேளாளன் என்னும் சொல் 18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதிக்கு முன்னர், நிலம் இறையிலாததோ, குத்தகையுடையதோ என்னும் வேறுபாடின்றிப் பொதுவாக இறையிலாக் கமக்காரனேயே குறித்தது. பண்ணை வேலையாள் வேளாளன் ஆகவோ, அன்றி, நிலமற்ற கூலிக்காரனுகவோ இருந்ததில்லை.

விவசாய அபிவிருத்திகள் 43
படைந்தோர் ஆக்கிய இவ்வியக்கம், இறையில்லாச் சிறிய நிலங்களுக்குப் பெருந்தீமை விளைத்து, 18 ஆம் 19 ஆம் நூற்றண்டுகளில் உச்சநிலை யடைந்தது. ஆனல், தியூடர், சுதுவாட்டுக்கள் காலங்களில் இங்கிலாந்தில் சிறிய காணிகளும் பெரிய சொத்துக்களும், அருகருகில் செழித்து வருவன வாயின. காணிகளை உரிமையாக்குவதில் ஏற்பட்ட ஊக்கம் ஆங்கிலேயரின் * முன்றேன்றலுரிமைச்சட்ட ” வழக்கத்தால் வளர்ச்சியடைந்தது. இவ் வழக்கம் சட்டத்தினின்று நீங்கிய பின்னரும் நெடுங்காலமாய்ச் சமூகப் பழக்கமாய் விளங்கியது. நாட்டுப் புரபுக்கள் தங்கள் மூத்த ஆண் பிள்ளையைத் தவிர்ந்த மற்றை ஆண்பிள்ளைகளை வணிகம் அல்லது கைத்தொழில், சுதந்திர வாழ்க்கைத்தொழில்கள், அல்லது கடல் கடந்த நாடுகளில் அருஞ்செயல்கள் பயின்று தஞ்செல்வத்தை ஈட்டு மாறு தம் பண்ணை வீடுகளினின்றும் அனுப்பிவிடுவர். மேலும், தங்கள் குடியில் மூத்தோனுக்கே நிலமுரியதென மரண சாதனத்திலெழுதி வைப்பர். ஐரோப்பாக்கண்டப் பிரபுக்களின் வழக்கத்திலும் வேறுபாடு டைய இவ்வழக்கம், வகுப்புத் தடைகளையெல்லாம் அறுத்தெறிந்து, ஆங்கில வணிகத்தையும் பேரரசையும் படைக்கப் பெரிதும் துணை செய்தது. அதனுடன் அது பெருநிலத் தோட்டங்களையும் ஆக்கி வரு
தாயிற்று.
ஆட்டுப்பண்ணையும் அடைப்பு நிலமுந் தாமே இங்கிலாந்தின் நாட்டுப் புறத்தில் உண்டாய புத்துணர்ச்சியின் அறிகுறிகளல்ல. முற்காலத்தில் * உணவுக்காய வேண்டிய வேளாண்மையின் ” நோக்கம் கிராமங்கள் ஒவ்வொன்றும் தனக்குத் தேவையான உணவையுண்டாக்கல் என்பதாகும். ஆனல், தானியம், ஆட்டுமயிர், கால்நடைகள், குதிரைகள், கோழி, பண்ணைப்பொருள்கள் முதலிய வற்றுக்கும் இன்னும் நூற்றுக்கணக்கான எனைய பொருள்களுக்குமான தேவை தேசிய்ச் சந்தையில் என்றும் அதிகரித்து வருவதைப் பலர் கருத்திற் கொண்டு தம்மூலப் பணத்தைக் கணியிற் செலவிடுவாராயினர். தியூடர், சுதுவாட்டுக்கள் என்போரின் ஆட்சிக்காலம் முழுவதும் பழைய உணவுக்கான வேளாண்மையும் புதிய முதலாண்மை வேளாண்மையும் அருகருகே செழிப்புற்று விளங்கின. எனினும், அவ்விரண்டிற் பிற்கூறப்பட்டது நிலைபெற்று வரலாயிற்று. அதன் டி.வி வெற்றிகளில் ஒன்று யாதெனில், பிளாந்தேசிலிருந்து “ ஒப்பிசு ” 61. :றும் கொடித்தாவரத்தை இங்கிலாந்திற் புகுத்தியதேயாகும். இப் பூண்டு தியூடர் காலத்தில் ஆங்கிலேயரின் குடிவகையை மாற்றியதுமன்றி, கெந்தின் தோற்றத்தையும் மாற்றியது. மாரியில் ஆடுமாடுகளை உணவூட்டி வளர்ப்பதை மிக வூக்கத்தோடு ஆங்கிலேயர் கருதத்தொடங்கினர். செகப் பிரியர் தமது நூலில் குறிப்பிடக்கூடியதாய் முள்ளங்கிக்கிழங்கு அம் மக்களுக்குத் தெரிந்திருந்தது. சுதுவாட்டுக்கள் காலத்தில் செயற்கைப் புற்களும், வேறு முறைகளும் விஞ்ஞான முறைப்படி கமிஞ்செய்த
10-R 6344 (2/62)

Page 226
1382.
45.
432 மதச் சீர்திருத்தத்துக்கு முன்
ஒல்லாந்துக் கமக்காரரைப் பின்பற்றி மெல்ல மெல்லப் புகுத்தப் பட்டன. கலப்பையில் எருத்துமாடுகளுக்குப் பதிலாகக் குதிரைகள் காணப்பட்டன.
அத்தியாயம் II
உலோலாடர் புத்துயிர்ப்பு. மறுமலர்ச்சிக் கலைஞர். ஊல்சியும் அரசுவலுச் சமநிலையும்.
புதுநிலங்கண்டவூழி. கபொத்தர்; VI ஆம் என்றியரசன் அரச கடற்படையை நிறுவுதல்.
g)|TFiff : VT1 ஆம் என்றி, 1485-1509 ;
VII ஆம் என்றி 1509-1547
15 ஆம் நூற்றண்டின் இறுதியிருபதாண்டுகளையும் கழித்துவிட்டால், மிகுதிக்காலம், நோமானியர் வெற்றிமுதல் உள்ள நம் வரலாற்றின் வேறெக்காலத்தையும் விட அறிவுத்துறையில் மிக வறுமையுற்றிருந்தது. ஒட்சுபோட்டில் சிந்தனைச் சுதந்திரம் தீவிரமாக அடக்கப்பட்டமையும், அதன் பின்னர் ஊக்கிளிப்பின் கொள்கையுடையோரைத் துன்புறுத்தியதால் நாடெங்கணும் நிகழ்ந்த அடக்குமுறைமையும், மிகுந்த வைதிகத்தன்மை வாய்ந்த அறத்துறை அல்லது அறிவுத்துறை சார்ந்த புத்துயிர்ப்பு எதன லும் ஈடுசெய்யப்படவில்லை. இரு நூற்றண்டுகளுக்கு முன் நிகழ்ந்த “ துறவிகள் வருகை ’ க்கு ஒப்பாக எதுவும் நிகழ்ந்ததில்லை. பெக்கொக் கென்னும் மாசற்ற பிசப்பண்டாவர் உலோலாடாருக் கெதிராக வாதித்த போது, திருச்சபையின் அதிகாரத்துக்கு முற்றிலும் முறையிடுதற்குப் பதி லாக ஓரளவிற்கு மக்கள் தம் பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டுமென முறையிட்டதனல் அவர் விசாரணை செய்யப்பட்டுச் சிறை செய்யப்பட்டமை வெறுமையான சீர்திருத்த எதிர்ப்பின் வெற்றிக்குச் சான்ருகும். அதே காலத்தில் மக்களிடத்தில் அவர்கள் விரும்பிய சில நாட்டுப் பாடல் களை யன்றிப் பிற வளம் மிகுந்த இலக்கியந் தோன்றிற்றிலது. சோசரின் இலக்கியத்தைப் பயின்றனர் ; புதுப்பித்தனர்; தாமும் அதனைப்போல
1 கொப்பு சாமது கொண்டிடு வல்லியுஞ்
செப்பு புத்தமைப் போடுநற் சேலையும் ஒப்பில் தேறலு மோராண்டிற் போந்தன இப்பு விக்குய ரிங்கிலாந் தில்லரோ. இத்தகைய நாட்டுப்பாடல்களில் எவ்வளவு உண்மையை எதிர்பார்க்க்லாமோ அத்தகைய உண்மை இதிலுள்ளது.

மதச் சீர்திருத்தத்துக்கு முன் 433
இலக்கியஞ் செய்யத் தலைப்பட்டனர்; ஆனல், அவருக்கிணையாக யாரும் பிறந்திலர். அக்கால அச்சகம் அப்பொழுதுதான் புதிதாகத் தோன்றிற்று. அதுவன்றியும் நடுத்தரவகுப்பார்க்குத் தேவையான புதிய பள்ளிகளும் போதியளவு தோன்றலாயின. மக்களுக்கூட்டிய கல்வியின் தன்மை சிறப் பற்றதாயிருந்தபோதிலும், இங்கிலாந்திற் கல்வியுடையோர்தம் உள்ளங்கள் நல்லதும் அல்லதுமான எவ்வகைக் கல்வியையும் வற்றற்கு வேண்டிய பண்பாட்டைப் பெற்றிருந்தன. அன்றியும், VI ஆம் என்றியின் ஆட்சி இவ்வாறய விதைப்புக்குரிய பருவமாயிருந்தது.
சமாதானமும் ஒழுங்கும் மீட்டும் அமைந்த நிலைமை அறிவுப் புத்து யிர்ப்புக்கு வாய்ப்புடையதாயிற்று. உலூதரின் வாத எதிர்வாதங்கள் தொடங் குதற்கு முன், தியூடர் காலத்தின் முற்கூற்றில் இரண்டு பெரும்புதுமைகள் நிகழ்ந்ததையறிகின்றேம். அவற்றுள் முதலாவது, உலோலாடர் புத்து யிர்ப்பும் வறியவர் வேதம் படித்தலுமாம் ; இரண்டாவது, வேற்று நாடுகளினின்றும் போந்த மறுமலர்ச்சிக்கல்வியாகும். இவ்விருவகையியக் கங்களோடு, இவ்விரண்டுக்கும் உதவியாயிருந்த பிறிதொரு சார்பினை நாம் சேர்க்க வேண்டும். அதுதான் மக்கள் பெரும்பகுதியினரிடையே தோன்றிய புரோகித எதிர்ப்பாகும். ஏபல் என்பவர் குருவாயிருந்திருந்தால் கேயின் என்பவர் இலண்டன் மாநகர மாந்தரைக் கொண்ட நடுவரினல் விடுதலை செய்யப்பட்டிருப்பரென்று சொல்லப்பட்டதுண்டு. பெருஞ் செல்வ ருள்ளும் விழுமியோருள்ளும் எவரேனும் உலோலாடராக இல்லாதிருந்த போதும், அவர்கள் திருச்சபையைச் சிறிதும் கருத்திற்கொள்ளாது, சூறை யாடுதல் தமக்குப் பயன் படுமாயின், திருச்சபையைச் குறையாடும் பூட் கையை ஆதரிக்கத் தயாராயிருந்தனர். இங்கிலாந்திற் பிறதுறைகளிலெல் லாம் மாற்றமேற்பட, திருச்சபைக்குரிய சிறப்புரிமைகள் மாத்திரம் பல நூற்றண்டுகளாக மாற்றமுருதிருந்தமை, சரிதாரண ஆங்கில மக்களி டையே குருவாயத்துக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பியது. இத்தகைய எதிர்ப்புணர்ச்சி அவர்களைப் புதிய வகைக்கோட்பாடுகளுக்குச் செவிசாய்க்கச் செய்தது. திருச்சபை தன் சிறப்புரிமைகள், செல்வம், உடற்றும் அதி காரம் ஆகியவற்றைக் கைவிடாது வைத்துக்கொண்டு, அறத்துறையிலும் அறிவுத்துறையிலும் தான் வகித்த தலைமையை இழந்தது. தன்னைச் சீர்திருத்திக் கொள்ளாது அடக்குமுறைமையினல் விக்கிளிப்பின் இயக் கத்துக் கெதிராகத் தன்னைப் பாதுகாப்பதெனத் திருச்சபை செய்த தீர் மானம், ஓரளவில் வெற்றியளிக்கக்கூடியதாயிருந்ததெனினும், இடர்நிறைந் ததாயிருந்தது.
உலூதர் திடீரெனக் கீர்த்தியடைதற்கு ஒரு தலைமுறைக்கு முன்னர், நீண்டகாலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த உலோலாடர் இயக்கம் மீட்டும் தலையெடுப்பதாயிற்று. இஃது இங்கிலாந்து நாட்டுக்கே உரியதானது. அது யோன்பனியனின் ஆன்மிக மூதாதையரால் குடிசைகளிலும் தொழிற்

Page 227
434 உலோலாடர் புத்துயிர்ப்பு
சாலைகளிலும் வறியார் மரபுரிமையாகப் பேணப்பட்டுள்ளது. சிற்றேன் களிலும், ஊர்மாநிலங்களிலும் எனைய பாகங்களிலுமுள்ள உழவரும், இலண்டனிலும் பிறித்தலிலும் பிற பட்டினங்களிலுமுள்ள தாழ்மையான மக்களும், எங்கேயாவதுள்ள ஒருகுருவோடும், பணம் படைத்தோனேடும், ஆங்கிலத்திலும் விக்கிளிப்பின் “ சபித்தற்குரிய நூல்களிலும் ’ உள்ள திருமுகங்களையும் சுவிசேடங்களையும் படித்தற்கும், நாமிப்போது புரட்டசுத் தாந்தக் கோட்பாடு என்னும் கோட்பாட்டில் ஒவ்வொருவருக்குமுள்ள நம்பிக்கையை வலியுறுத்துவதற்கும் மறைவில் ஒன்று சேர்ந்தனர். 1490 ஆம் ஆண்டுக்கும் 1521 ஆம் ஆண்டுக்கும் இடையில் உலோலாடரிற் பலர் கழுவேறினர். அன்றியும், அவரினும் மேலான தொகையினர் தம்முயிரைக் காத்தல் வேண்டித் தங்கோட்பாட்டை மாற்றிக்கொண் டனர். முன்னையிலும் மிகுந்தகொடிய முறையில் உடற்றல் நடைபெற்ற தெனினும், தன் நோக்கத்தை எய்தாது இம்முறை தோல்வியுற்றது.
இவ்வாண்டுகளிலேயே, பிறிதோர் இயக்கமொன்று பல்கலைக் கழகங்களைப் புதிய வாழ்வுக்குத் தூண்டியது. இத்தாலி, மறுமலர்ச்சி தோன்றிய நாடாகும். ஆங்கிருந்து பதினைந்தாம் நூற்றண்டின் கடைசி இருபது ஆண்டு களுக்குள் புதிய கலைகள் ஒட்சுபோட்டுக்கு வந்தன. குறேசின், இலிலி, இலினக்கர் ஆகியோர் கிரேக்க இலக்கியத்திலும் இலத்தீன் இலக்கணத்தி லும் விஞ்ஞான மருத்துவ முறையிலும் ஒரு புதிய ஆர்வத்தை இத்தாலியி லிருந்து இங்கிலாந்திற் புகுத்தினர். நெடுநாள் மறைந்து போயிருந்த எலனியநாகரிகவுலகம், மத்திய காலத்துச் சுவர்க்க, நரகங்களின் எல்லைக் குட்படாத கற்பனையுலகம் ஒன்று-ஆர்வமிகுந்த மனத்தினர் சிலர்க்கு இருண்ட படிகத்திற் றேன்றுவதுபோல, வடிவம் பெறலாயிற்று. இஃது எவ்வாறு நிகழ்ந்ததெனின், கொலம்பசும் கபெற்றுஞ் செய்த கடற்பிரயாணங்கள் ஒவ்வொன்றினலும் பூவுலகமானது இடைக்கால அண்ட கோச விளக்க வெல்லைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு விரிந்து சென்றது போலாகுமென்க. அதே நேரத்தில், மத்தியகாலத்துள்ள பய னுடையதும் ஆனல் அழகற்றதுமான இலத்தீன் மொழியைப் புறக்கணித்து விட்டு, சிசரோ காலத்திலிருந்த இலத்தீன் மொழியிற் பயின்ற கல்வி யானது “ பழைய உரோமைக் ’ கலைமுறைக்குரிய இலட்சியங்களைத் தழுவும் கருத்துக்களைத் தோற்றுவித்தது. இச்செல்வாக்கு அரண்மனையிலும் கல்லூரி யிலும் இருந்து சிதாபோட்டிலும் பிற இடங்களிலுமுள்ள பொதுப்பள்ளி களுக்கு ஒருமுறை பரவுமானல், காலமென்னும் மேட்டிலும் மடுவிலு முள்ள வாழ்வுதானும் அருளுஞ் சிறப்புமிக்கதோரருஞ் செயலாக மாறி விடும்.
TV1 ஆம் என்றியரசனின் ஆட்சித் தொடக்கத்தில் அரசமரபோடு தொடர்புடைய ஆங்கில வரசறிஞராகிய கம்பிரி எனப்படும் கோமகன் புதிய மறுமலர்ச்சிக்கலைகளில் வல்ல இத்தாலிய புலவரைப் பெரிதும் ஆதரித்தனர். “ கம்பிரிக் கோமகனின் நூற்கூடம் ” என்னும் பெயரோடு ஒட்சுபோட்டுக்கு அவரளித்த நன்கொடை போதிலியன் நூற்கூடத்திற்கு அடியிடு செய்தது.

கொலற்றின் விரிவுரைகள் 435
இக்கால இங்கிலாந்தை உருவாக்கிய பிறிதொரு தனிக்கருமம், இலண் டன் மாநகர வணிகன் ஒருவனின் மகனகிய கொலற்றென்னும் இளை ஞனல் அங்கு புகுத்தப்பட்டது. இத்தாலிய கலைச்சோலைகளிலிருந்து அவன் திரும்பி வந்ததும், தான் பவுலடிகளின் திருமுகங்களைப் பற்றிச் சொற் பொழிவாற்றுவேனென்று கூறி ஒட்சுபோட்டிலுள்ளாரைத் திகைப்புறச் செய்தான். தன்னிணையில்லாத திறமையினல், ஊக்கமுள்ள பட்டம்பெருத பல்கலைக்கழக மாணவரை மட்டுமன்றி, எதையும் வற்றுக்கொள்ள மறுக்கும் இயல்புடைய துறவிமடத் தலைவரையும் வேதசாத்திரக்கலா நிதிகளையும் இதுகாறுங் குருப்பட்ட மேனும் பெருத இளைஞனுகிய தன்னைச் செவி சாய்த்துக் கேட்குமாறு கட்டாயப்படுத்தினன். அதனுடன் புலமைமிக் கோர் நிறுவிய முடிவுகள் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு, பவுலடி களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் போதனைகளையும் மூலநூ லிலிருந்து நேரடியாக எடுத்து மெய்யியல்புடனும் மனிதப்பண்புடனும் விளக்குவானயினன். திருமுகங்களை எழுதியவரும் அவற்றைக் கேட்போரும் தம் மனத்திற் கொண்டதைத் தேடியறிய முயன்றனேயன்றி, கடந்த முந்நூருண்டுகளாக வாழ்ந்த தருக்க நூல் வல்லார் அவற்றை எவ் வாறு விளங்கினர் என்பதை அறியச் சிறிதும் முயன்றிலன். மத்திய காலக்கலைகளும் கல்வியும் பதங்கெட்ட பிணம்போலழிவனவாயின. இடன்சு கோத்தசு என்பார் முன்னெருகால் அறிவு வளர்ச்சியின் முன் னணியில் நின்றர். ஆனல், நுண்ணறிவுடைய இக்கலாநிதியிடத்து அப்போது நம்பிக்கைவைத்தோரை இப்போது (இடன்சுகள்) “ மூடரென ” ஒட்சுபோட்டிலும் கேம்பிரிட்சிலும் தோன்றிய சந்ததியாரும், நாட்டிலுள்ள அன்றையகல்விக் கழகத்தாரும் எள்ளி நகையாடினர்.
ஒல்லாந்து நாட்டவரான இராசுமசு என்பவுரின் கீர்த்தி அச்சகத்தின் உதவியினல் எக்காலத்தும் இணையற்றதாய் ஐரோப்பாக் கண்டமெங்கும் மேலோங்கியது. இங்கிலாந்தில் அவர் சிறப்பொடு திகழ்ந்தனர். அவரும், சேர் தோமசு மூரும், கொலற்றின் நண்பரும் நேயமாயிருந்தனர். இவர்கள் ஒருங்கு சேர்ந்து மறுமலர்ச்சிக் கலைகளுக்குப் புதிய இயல்பை அளித் தனர். எவ்வாறெனின் அக்கலைகள் இத்தாலியில் அழகைச்சார்ந்தும் மதத்தைச் சாராமலும் வளர்ந்துவர வட ஐரோப்பாவில் அறப்பண்புஞ் சமயச்சார்புமுடையதாய் அவற்றை ஆக்கினர். இத்தாலியக் கலைஞர்களும், அவரையாதரித்த அரசிளங்குமாரர்களும் கருதினல்களும் இம்மறு மலர்ச் சியானது, பழைய புலவரையும், தத்துவ ஞானிகளையும் சலவைக் கல்லிற் செதுக்கிய தெய்வ வடிவங்களையும் “ கபில நிறமுள்ள கிரேக்க கையெழுத் துச் சுவடிகளையும்’ குறிப்பதொன்ருகக் கருதினர். கொலற்றுக்கும், இராசும சுக்கும் அவர்தம் வாயிலாகப் பொதுவில் ஆங்கிலேயர்க்கும், மறுமலர்ச்சி, உண்மையில் இவற்றையே குறித்தது. எனினும், அத்துடன் அது கிரேக்க மொழியிற் புதிய ஏற்பாட்டையும் இறுதியில் எபிரேய மொழியில் பழைய எற்பாட்டையும் குறித்துள்ளது. இவ்விரண்டிற்குமுள்ள வேற்றுமை ஆழ
1497.

Page 228
1505.
436 கொலற்றின் விரிவுரைகள்
மாயிருந்தது. அன்றியும், இவ்வேற்றுமை இங்கிலாந்துக்கும் அதனை ஆதியி லிருந்து வளர்த்து வந்த பிரான்சிய இத்தாலி நாகரிகத்துக்குமிடையே பிறிதொரு பிளவையும் உண்டாக்கியது. எனெனில், இத்தாலிய மறுமலர்ச் சிக்காலத்துக்குரிய மக்கள் திருச்சபைக்குரிய விடயங்களை பிறர் உதவியின்றித் தாமே நிருவகிக்குந் துறவிகளினதும் குருவாயத்தினதும் பொறுப்பில் விடுத்துத் தாம் சமயச் சார்பற்ற ஒவியம், இலக்கியம், விஞ்ஞானம் ஆகி யவை சேர்ந்த கலையுலகமொன்றில் வாழ்ந்தனர். அக்காலந் தொட்டுப் பிரான்சிலும் இத்தாலியிலும் இக்கலைமரபின் வழிவந்தோர் அவ்வாறே வாழ்வாராயினர். ஆனல், இங்கிலாந்தில் மறுமலர்ச்சிக் காலத்தவர் கொலற்று வகுத்தநெறியினைத் தழுவி இலத்தீன், கிரேக்க மொழிகளாற் பெற்ற புலமையால் பள்ளிகளை மட்டுமன்றித் திருச்சபையினையும் சீர் திருத்தி வருவாராயினர். அதனுடன் அவர்கள் குருமாரையும் பொது மக்களையும் இவ்வேலையில் ஒருங்கு சேர்ந்து ஈடுபடுமாறு கூவியழைத்த
60Tit.
அறிவும், அறனும் ஒருங்கமைந்ததும் உயர்தரமும் கிறித்துவச் சார்புடைய துமான இவ்வியக்கமானது மக்கள் சிற்சில சமயங்களிற் கூறுவதுபோல, இங்கிலாந்தின் சமயச் சீர்திருத்தச் சூறவழியில் அகப்பட்டு அழிந்திலது. அதற்குமாருக, முந்தைய போராட்டத்தாலெழுந்த குழப்பமான கொடுமை யிலிருந்து பிற்காலத்துத் தியூடர் ஆட்சியில் வெளிவந்த இங்கிலாந்தின் புத்தமைப்புப் பெற்ற பள்ளிகளினதும் ஆங்கில திருச்சபையினதும் கல்விப் பூட்கையிலும் சமயப் பூட்கையிலும் அதன் தன்மைகள் அமைந்துள்ளன. கொலற்றென்பவர் இலிசபெத்தரசியார் காலத்துப் பொதுப் பள்ளி ஒன் றைக் கண்டிருப்பாராயின் அவர் பெரிதும் மகிழ்ந்திருப்பார். என்றி, எட்டு வேட்டு ஆகியவரசராட்சியிற் பறிமுதல் செய்யப்பட்ட தருமசாதனங்களையும் இலிசபெத்தரசியார் காலத்துத் தருமசாதனங்களையும் சீர்தூக்கிப் பார்க்கு மிடத்து, தியூடர் ஆட்சியில் கல்வி விருத்திக்கான எற்பாடுகள் மிகுதியாக அதிகரிப்கப்படவில்லை. ஆனல், கல்வியின் தன்மை பெரிதும் மேம்பாட டைந்திருந்தது.
ஒட்சுபோட்டுச் சீர்திருத்தவாதிகளென அழைக்கப்பட்ட கொலற்றும் இராசு மசும், புலமை, சமயம், ஒழுக்கம் ஆகியவற்றின் பேரால் துறவிகள் சீர்திருத்தத்தை எதிர்ப்பவரெனக் கொண்டு கடுமையாய் எதிர்க்கத் தொடங்கினர். அவ்வாறே கடவுள் வடிவங்கள், அடையாளப்பொருள் ஆகிய வற்றை வணங்குதலையும் திருச்சபை மன்றுகளின் கைப்பற்றுஞ்செயலையும் குருமார் உலகவாழ்விற் கொண்ட பெருவிருப்பத்தையும் கொடுமையாகத் தொடர்ந்தெதிர்த்தனர். அவர்கள் உலோலாடராயில்லாதிருந்தும் இவ்விட யங்களில் வேறெந்த உலோலாடர் தானும் உபயோகித்திருக்கமுடியாத அத்த
கைய கொடுமொழிகளைக் கைக்கொண்டனர். அவர்தஞ் செல்வாக்கு ஒட்சு
போட்டிலிருந்து இலண்டனுக்கும், அரண்மனைக்கும் அதனைத் தொடர்ந்து

மதமும் மறுமலர்ச்சியும் 437
கேம்பிரிச்சுக்கும் பரவியது. கொலற்றென்பார் பவுலடிகளாரின் கலைக் கோயிலுக்குத் துணைக்குருவாயமைந்ததுடன், நூருண்டுகளுக்கு முன் விக்கி ளியின் குருமாரை வாயடங்கச் செய்தகாலந் தொட்டுப் போதபிடத்தி னின்று ஒருபோதும் வெளிப்பட்டிராத முறையில் திருச்சபையின் தீய வழக்கங்களையும் கருமங்களையும் தம் சமயச் சொற்பொழிவுகளிற் கண்டித் தமையால், இலண்டன் மாநகரத்துள்ள குடிகள் மகிழ்வும் குருமார் மிகுந்த திகைப்பு மெய்தினர். கொலற்றென்பவர் பவுலடிகளார் பெயரில் தலைக் கோவிலுக் கணித்தாய் ஒரு பள்ளியை நிறுவினர். ஆங்கு இலிலி என்பார் முதற் றலைமையாசிரியராய் அமர்ந்தார். பவுலடிகளார் பள்ளி, சிசரோ காலத்து இலத்தீன்மொழியையும் கிரேக்க மொழியையும் கற்பிக்கவும், சீர்திருத்தமுள்ள உயர்தரப் பொதுப் பள்ளிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவதற்கும்நிறுவப்பட்டது.
புதுக் கல்வியைப் பற்றிப் புதிய முடியாட்சி கொண்ட கருத்து யாதா யிருக்கும்? இதிலேயே அவ்வாட்சி மிகுதியுந் தங்கியிருந்தது; எனெனின், இங்கிலாந்து அடைந்திருந்த அக்கால நிலையில் மக்கள் அரசின் விருப்பத் துக்கு மாறயும் அரசு மக்களின் விருப்பத்துக்கு மாறயும் யாதுஞ் செய்ய முடியாதிருந்தது ; ஆனல், இருதிறத்தாரும் ஒருங்கு சேர்ந்து தாம் விரும்பியவாறு எதனையுஞ் செய்ய முடியும் ; சமயக் கோட்பாட்டையும் திருச்சபைக்குரிய சிறப்புரிமையையும் மாற்றுமளவிற்குத்தானும் அன்றிப் போற்று மளவிற்குத்தானும் முடியும் ஆதலின்.
VII ஆம் என்றியரசன் இங்கிலாந்தின் பாடிகாவலரைப் போன்று தன் தொழிலில் அதிகம் ஊக்கமெடுத்தமையால் புதிய கல்வியில் அக்கறை கொண்டிலன். அவனுக்குக் குருவாயத்தினர் பயனுள்ள குடியியற் சேவை யாளராயினர். போப்பாண்டவர் அவ்வரசனுத்குச் சூழியற் சதுரங்கப் பலகையில் ஆடும் ஒரு காயானர். ஏனையோர்க்கு அவர் ஒரு வைதிகரா ஞர். அவர் ஒருமுறை ஒர் உலோலாடரை கழுமுனையில் வைத்து அவன் மதக் கொள்கையை மாற்றச் செய்தார். அவன் தன் கொள்கையை மறுத லித்தபின்னும் அவனை எரிக்கிரையாக்கினர். இச் செயல்தான் அக்காலத் துக் கிறித்துவ அறச்சிந்தையின் அளவு கோலாயிற்று.
ஆனல், ஏழாம் என்றியின் மைந்தனகிய இளைய என்றியைப் பற்றி என்ன கூறலாம் ? 1509 ஆம் ஆண்டில் அவன் அரியணை ஏறினன். பின் அவன்றன் தமையனன ஆதர் என்பான் அரகன் நாட்டின் அரசியாகிய கதரீன் என்பாளை மனம் முடித்து மண்டிலத்தை அனுபவிக்க வேண்டிய வன், அகால மரணமெய்தியதால், தானே அவளை மணமுடித்தான். பதி னெட்டகவையுடைய இளைஞனகிய இவ்வரசன் தன் குடிகளை அறிவிலும் ஆற்றலிலும் மிஞ்சியுள்ளான். இவன் இளவரசளுள் மிகச்சிறந்தவன். உண்மையான ஆங்கில விளையாட்டு வீரர்க்கும் புதுக் கல்வியாளர்க்கும் ஒருங்க மைந்த ஓர் ஆதரவாளன். அவன் தன் தந்தையார் வருந்தியீட்டிய

Page 229
1521.
58.
4.38 மதமும் மறுமலர்ச்சியும்
சமாதானம், செல்வம், ஆதிக்கம் ஆகியவற்றுக்குத் தடையிலாவுரிமை பெற் ருன். பின்னர் தன் குடிகளிடத்தே கொண்ட பேரன்பிற் கறிகுறியாக எம் பிசன், தட்டிலி என்போர் தலைகளைத் துணித்து, அதனல் ஆதிமுதல்தங் குடிகளின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டான். “உழவன் யோட்சை’ப் போல அவனும் ஒர் உண்மையான ஆங்கிலேயன்தான். ஆனல், அவன் யோட்சிலும் மிகச் சிறந்தவனய் அறிவுக்கோர் எடுத்துக்காட்டாய் விளங்கினன்.
தன் மண்டிலத்திலுள்ள மிகச் சிறந்த வேடனுக்கு வில்லாண்மையிற் சமானனயினன். பிரான்சிய துரதமைச்சரொருவர் அவன்தன் வில்லாண்மை யைப் புகழ்ந்தபோது, “அது ஒரு பிரன்சியனுக்குத் திறமையாகவே காணப் படும்’ என்றன். இலண்டன் மாநகரச் கோபுரத்தில் இன்றுமுள்ள அவன் தன் பெருங்கவசம் அவன் எவ்வாறு இலான்சிலத்தைப் போலக் கதுமென அரங்கிற் றேன்றித் தன் பகைவரை வீழ்த்திப் பின்னும் அறைகூவின னென்பதை நினைவூட்டுகின்றது. அவன் வரிப்பந்தாடலில் வெற்றி வீரன கவும் மாபெரும் வேட்டைக்காரனகவும் விளங்கினன். தன் தந்தையைப் போல வைதிகப் பண்புடையவனுயிருந்ததால், உலோலாடரை எரிப்பதை இடையருது ஊக்கி வந்தனன். உலூதருக்கு மாறய் ஒரு நூல் யாத்தனன். அதனல், போட்பாண்டவரால் விசுவாசக் காவலன் என்னும் பெயரையும் வழங்கப்பெற்றன். அவன், கொலற்று, மூர் என்போரின் சிறந்த நண்பனுயிருந்ததுடன், மூரைத் தீங்குதரும் அரசதொண்டு என்னும் தொழிலை யேற்குமாறும் கட்டாயப்படுத்தினன். சீர்திருத்தத்தை யெதிர்க் குங் குருமாருக்கு மாறகக் கொலற்றென்னுந் துணைத்தலைமைக் குருவை ஆதரித்தான். இவ்வச்சமற்ற குரு பிரான்சுக் கெதிராகத் அவன் தொடுத்த போரைக் கிறித்துவப் பண்பற்றதென்று கண்டித்த போதும், “ஒவ்வொரு வரும் தமக்குரிய வைத்தியனை வைத்துக் கொள்க : இவர் எனக்குரியர் ’ என்று இளைய என்றி உறுதி கூறினன். ஏனெனில், அவனிடம் “ பிறனை நேசிக்கும் பண்புண்டு ”. மேலும், அவன் ‘நல்லாரிணக்கமும் உல்லாசப் பொழுதுபோக்கும் ” மிக்குடையன் ; இவ்வுண்மையை அவனியற்றிப் பண் ணமைத்ததாகக் கூறப்படும் பாட்டில் நாம் காணலாம். அவனுக்கிருந்த ஏனைய திறமைகளுடன் இவ்வியத்தகு “கிறிச்சுத்தன்’ ஓர் இசைக்கலைஞனு மாவான். அன்றியும், அக்காலத்துள்ள எல்லா இசைக்கருவிகளையும் மீட்கும் வல்லமையுடையவனயுமிருந்தான். ஆங்கில உணர்ச்சிப் பாடலும் இசையும் மீண்டும் வளம்பட்டு இலிசபெத்தரசியாரின் ஆட்சியில் மலர்ச்சியடையத் தொடங்கியபோது, என்றியரசனின் அரண்மனையில் கவிதையும் இசையும் செழிப்புற்றிருந்தன.
என்றி யரசனின் அரண்மனையில், எந்தப் பல்கலைக்கழகத்திலுமிருந்த அறிஞர்களிலும் கூடிய தொகையினரான கலைஞர் குழுமியிருந்தனரென்று கூறப்பட்டிருக்கின்றது. அவனது இளமைக்காலத்து நண்பர், துறவிகளிலும் திருவுருவ வணக்கம், திரு அடையாளப் பொருள் வணக்கம் என்பவற்றிலும்

ஊல்சியும் அரசுவலுச் சமநிலையும் 439
வெறுப்புணர்ச்சியை உண்டாக்கியிருந்தனர். எனினும், விவிலிய வேதபாடங் கற்பதில் நல்லார்வத்தை அவனிடம் உண்டாக்கினர். இந்நிகழ்ச்சிகள் நற் கருணை விருந்தைக் குறித்து அக்காலமிருந்த வைதிகக் கோட்பாட்டுக்குப் பூர ணப் பொருத்தமுடையனவாகும். பிற்றை ஞான்று அவன் தன் குடிகள் காண நேர்ந்ததுபோல், அழகுமிக்க இளைய வீரனும் சிறந்தனவற்றில் விருப் முடையோனுமாகிய இவன், முப்பதாண்டுகளாத் தான் செலுத்திய அதி காரத்தாலும் பிறர் தனக்குக் காட்டிய வழிபாட்டு முறையாலும் மிகக் கொடிய தன்னலவாதியாயினன். அன்றியும், போப்பாண்டவருக்குரிய அதிகாரத்தை அரசுக்குரியதாக மாற்றியும் இடைநிகர்த்ததான தெளிந்த சமயப் பூட்கையைத் தழுவியும் தன்பழைய நண்பரும் புதிய பகைவருமானே ரிடம் கொடுமையான முறையில் ஈவிரக்கமின்றி நடந்து கொள்வானயின். அவன் பிற்காலத்திற் கடைப்பிடித்த பூட்கையின் பல்வேறு கூறுக ளெல்லாம் இளமையில் அவன் மனத்திற் கொண்ட கருத்துக்களி னதும் நாட்டிலெழுந்த அவ்வூழிக்குரிய இயக்கத்தினதும் விளைவேயாகும். அந்நாடு பற்றி, என்றியரசன் தனது பயங்கரமான கொடுங் கோன்மைக் காலத்திலும் இலிசபெத்தரசியாராற்றணும் ஒருபோதும் வெல்ல முடியாத அத்தகைய தன்னியல்பூக்கத்தினுல் உணர்ந்துகொண்டான்.
என்றியின் கொடுங்கோன்மை உச்சநிலையடைதற்குப் பல்லாண்டுகள் கழிய வேண்டியிருந்தன. இப்போதும் சமயக் கருதினலே ஆட்சி செய்வாரா யினர். இவர்தாம் இங்கிலாந்தில் இறுதியிலிருந்த சமயக் கருதினலும் பெரும் பாலும் கடைசியாக அந்நாட்டையாண்ட திருச்சபைக் குருவுமாவர். எம் அரசராகிய அரி, “காலைதோறும்’ வேட்டையாடச் சென்றும், இரவு தோறும் “முகமூடியிட்டு இசை முழங்கவாடுங் கூத்தும் பழைய கால வேடிக்கையுமுடைய விழாக்கொண்டாட்டத்திற் றிரிந்தும்’ காலங்கழிக்க, ஊல்சியென்பார் உள்நாடு, வெளி நாடுகளுக்கானே பூட்கையின் விவரங்களை ஆராய்வதில் பெரிதும் முயல்வாராயினர். இப்பெருமுயற்சியைப் பின்னர் செயலூக்கமுள்ள என்றியரசன் தானே மேற்கொண்டு ஆற்றுவானயினன். இளைஞர்க்கு உதவி செய்வதே எல்லார்க்கும் பொதுக் கடனும் அவரிலும் என்றியாகிய இளைஞனுக்கு அவ்வாருய உதவி சிறப்பாகச் செய்தல் வேண் டும். அதனைச் சமயக் கருதினலாகிய ஊல்சியே செய்யவேண்டியதாயிற்று.
தியூடவரசரின் மாபெரும் பணியாளர் எல்லோரையும் போல, ஊல்சி எளிமையான பிறப்புடையவர். அவர் தந்தை கிழக்கு அங்கிலியாவைச் சேர்ந்தவராய், ஆடுமாடு வளர்த்து வாணிபஞ் செய்தவராகவோ ஆட்டு மயிர் வாணிபஞ் செய்தவராகவோ இருந்திருத்தல் வேண்டும். ஆனல், அவர் ஒர் உயர்குடியரசனிடம் காணப்பட முடியாத அளவுக்கு அகந்தையும் ஆடம்பர முமுடையராயிருந்தார். “தலைமைக்குரு எவரினும் இவரே அகந்தை மிகுந்தவர் ” எனப் பிறநாட்டு நோக்காளர் ஒருவர் கூறினர். அதுவே பலர் கருத்துமாகும். அவரிடம் சூழ்வல்லோனுக்குரிய சிறந்த பண்புகள்

Page 230
L币盟币。
44) *ளப்சியும் அரசுவலுச் சமநிளேயும்
பலவிருந்தவிடத்தும், கடுஞ்சினம் ஒன்றே அவரிடமிருந்த பெருங் குறை யாயிருந்தது. ஒரு நாள் அவர் போப்பாண்டவரின் தூதரைக் கடிது தாக்கினர். அன்றியும், பிராரன்சு தேசத்தோடு அத்துரதர் செய்துகொண்ட சில செயல்களேக் குறித்து அவரைக் கோபுரத்திலுள்ள சித்திரவதைக் கருவியிலிட்டுத் துன்புறுத்துவதாகவும் அச்சுறுத்தினர். அமிற்றன் மன்றுக்குரிய காட்சியால் இண்டபத்திலும், ஊர்வனித்திலும் ஜாஸ்சி காட்டிய ஆடம்பர அழகுக் கோணம் அவர் தந் தலேவரைக் சிறிதுகாலம் வரை மகிழச்செய்ததுமன்றி, அவர் நாட்டினனாயும் திகைக்கச் செய்தது. ஆஐஸ், ஈற்றில் அக்கோவிந்தானே அவர்கள் எல்விேப்ாரையும் அவர்க்குப் பகைவராக்கியது. அன்றியும், " அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும் " என்னும் நீதியை அவரது வீழ்ச்சி புifக் கு3ைர்த்தியது.
ஐரோப்பாவின் அரசுவலுச் சமநிஃயே இங்கிலாந்தின் பிறநாட்டு அரசியற் பூட்கையெiன முதன்முதல் அவற் றேrவாக வரையறுக்கப்பட்டது. அது பிரான்சு, இசுப்பெயின் ஆகிய தேசங்களின் முடியாட்சிகளால் விதிக்கப்பட்டது. இந்நாட்டாசர்களில் ஒருவர் மற்றவரை வெண்ாைராயின், அவ்வெற்றி பெற்றவரே ஐரோப்பாவின் மேலான முதன்மைப்பட்டுக்குரிய வாயிருப்பர். மேலும், சிறிய நாடாகிய இங்கிலாந்தின் நிரே இழிந்ததும் பாதுகாப்பற்றதுமாகியிருக்கும். பல்லாண்டுகளாக ஊஸ்சி பேராற்றலுடனும், ஆங்கிலேயர்க்குப் போரின் நேரும் கொலேயினதும் செலவினதும் அளவை அதிகமாகக் குறைத்தும் இச் சமநிலேயை ஆதரித்து வந்தார். 1513 ஆம் ஆண்டில் தம் மீது பண்டடுெத்துவந்த கொத்துலாந்தரைப் புளோடன் போரிலும், பிரான்சியரை நெதப்ோந்தின் எல்லேப் புறத்திலுள்ள கினிக்கேற்றுக் கண்மையில் நடைபெற்ற சுப்பேகப் போரிலும் கொண்ட இ&ணவெற்றிகள் இங்கிரத்தைச் சாநிலக்குரிய நாடென்ற உறுதிநிரேக்கு உயர்த்தின. ஆணுல், 1621 ஆம் ஆண்டின்பின் ஊrசியின் செயற்றிறலும் முன்னறிவுத் திறனும் பயன் கொடாதொழித்தன. பிரான்சின் தளர்ச்சியை ஆதரிக்க வேண்டிய நேரத்திவே அவர் அவ்வாறு செய்யாது, இசுப்பெயின் நெதலாந்து நாடுகளின் அரசனும் சேர்மனியின் பேரரசனுமாகிய W ஆம் சான்சை ஆதரித்தார். பாலியாவில் நிகழ்ந்த போரில் முதலாம் பிரான்சிசின் சேனேயையழித்து அவனேச் சிறைப்படுத்தியமை அன்றுதொட்டு 180 ஆண்டு கrாக இத்தாலியை இசுப்பெயினிடம் சாண்புகுந்து வாழச்செய்தது; அன்றியும், அது பிரான்சையும் இங்கிலாந்தையும் சிலகாலம் வரை வணிமையற்ற நிலேயில் வைத்ததுடன், பிலிப்பு II, இலிசபெத்தரசியார் என்போர் காலத்தில் இங்கிலாந்தின் அழிவுக்கு ஏறத்தாழக் காரணமாக விருந்த அபிசு பேக்கு ஆதிக்கத்தை ஐரோப்பாவின் நிறுவுதற்கும் எதுவா யிற்று; அத்துடன், ஊஸ்சி புறக்கணித்த, அல்லது எதிர்த்த சத்திகளின் வளர்ச்சி, கடல் சார்ந்தவும் சமயம் சார்ந்தவுமான சத்திகளின் வளர்ச்சி அக்காஃ) ஏற்பட்டிருந்திராவிடின், இங்கிலாந்து முழுவதையும் அத்தகைய ஆதிக்கம் அழித்துமிருக்கும்.
 

புதிய கடற் பாதைகள் 441
இசுப்பெயினின் ஆதிக்கம் பழைய வுலகத்துள் மட்டும் அடங்கியதன்று. ஆசியா, எகித்து ஆகியவற்றினூடாகச் சென்ற பழைய வர்த்தக வழிகளுக்கு மாருகக் கடலேக் கண்டறிதற்கும் வணிகத்துக்குமுரிய ஊழி தொடங்கியது. இந்த இரண்டு பிரசதேசங்களில் ஐரோப்பிய வெல்லேப்புறம் செனுேவா வெனிசு ஆகியவற்றின் ஆதிக்கத்திலுள்ளது.இகரங்களித்தானிய நலிருந்தும் துடுப்புடைக் கலங்களேக் கொண்டதும் தரை சூழ்ந்ததுமான மத்தியதரைக்
ya 1-an dahazik:Feabhall-"" titi - X2:
ஆடிாதEr ஆங்க்ரிபிள் ilkesi = 1....... S chara i... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . T
படம் XIX, காட்டாம் என்றி காலத்து ஐரோப்பா. ஐரோப்பாக்கண்டப் பெரு முடியாட்சிகளின் தோற்றம்.
கடலிலிருந்தும் அதிகாரமுஞ் செல்வமும் மேலே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்தன. இந்நாடுகள், ஆசியாவிலுள்ள சந்தைகளேக் கடல் வழியாக அடைதற்கும் அவ்வழிசெல்கையில் ஆபிரிக்காவையும் அமெரிக்காவையும் கண்டறிதற்கும் வன்மையுள்ள கடலோடிகளேயும் புதிய வகைக் கலங்களேயும் தூரக் கடல்களுக்கு அனுப்பின.

Page 231
442 என்றி கடற்படை நிறுவுதல்
இம்மாற்றத்தினல் இங்கிலாந்தே சிறந்த நன்மை பெறும் முக்கிய நாடாகுமெனத் தொடக்கத்திற் றேன்றவில்லை. 15 ஆம் நூற் ருண்டிலே போர்த்துக்கேயக் கடலோடிகள், கடலோடி என்றியெனும் இளவரசன் தலைமையில் ஆபிரிக்காவின் கரையோரத்துக்கும் நன்னம் பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவுக்குஞ் சென்று, இற்றைஞான்றும் நிலவுதற்குரிய போத்துக்கேயவரசை ஆபிரிக்கக் கரைப்பகுதியில் நிறுவுதலில் முந்திக்கொண்டனர். இசுப்பெயின், பலகாலமாக ஒற்றுமையில்லாமல் சோனக மக்களுடன் போராடிக்கொண்டிந்தது. ஆனல், அஃது அரகன் நாட்டுப் பேடினந்துக்கும் கசுத்தீல் நாட்டு இசபெலாவுக்கும் நடந்த திருமணத்தால் ஒரேநாடாக இணைக்கப்பட்டது. அப்பொழுது அது தன் பக்கத்துள்ள சிபுரோத்தர் நீரிணையிலுள்ள சோனகரை விரைந்து ஒழித் தது; கொலம்பசை எவல்கொண்டு, கொன்குயிற்றதோரை வெளியே விடுத்தது. இவர்கள் மெச்சிக்கோ, பேரு ஆகியவற்றின் சுரங்கப் பொருளை யும் இசுப்பானிய பரவைப் பொருளையும் இசுப்பெயினுக்குப் பரிசாக வழங் கினர்.
போப்பிாண்டவர் வாய்ப்பான வேளையிற் கைகொடுக்க முன்வந்தார். அவர் வட துருவத்தினின்று தென் துருவம் வரையும் அசோசுக்கு மேற்கே முந்நூறு கல் தூரத்தில் ஒரு கோடிட்டு, அதற்கு மேற்கேயுள்ள பாகம் முழுவதையும் இசுப்பெயினுக்கும் கிழக்கேயுள்ளதைப் போத்துக்கலுக்கும் உரிமையாக்கினர். இவ்வாறுண்டான போட்டி, இரு ஐபீரிய மன்னரிடமும் வேதனம் பெற்றுவந்த பெருங் கடலோடிகளைத் தூண்டிற்று. மகலனைப் புவியைச் சுற்றவும் பசிபிக்குக் கடலிற் செல்லவும் அனுப்பியது. அன்றியும், அமெரிக்கோ வெசுப்புக்கியை அவர் பெயரைத் தாங்கியுள்ள கண்டத்தின் தென்கரையைக் கண்டறிதற்கும் தூண்டியது. போப்பாண்ட வரின் பங்கீட்டின் வாய்ப்பைக் குறித்துக் குறைசொல்ல இதுகாறும் யாரும் வெளிவந்திலர். போத்துக்கலும் இசுப்பெயயினும் கடலிலோ, தொலைவி லுள்ள நாடுகளிலோ பகையின்றியிருந்தன; கடற்றெடர்புடைய இத்தாலிய நாடுகள், கொலம்பசு, வெசுப்புக்கி, கபோத்து ஆகிய தேர்ச்சிமிக்க மாலு மிகளை அளித்தன. ஆனல், வெனிசாதல், செனுேவா வாதல் இப்புதுக் கடல் வணிகத்திற் றனகப் புகுந்து கொள்ளத் துணிந்திலது. தான் தலைவியாயிருந்த பழைய ஆசியா சார்ந்த வர்த்தக வழிகள் தளர்ச்சி யுற்றதினுல், இத்தாலியின் உள்ளமே உடைந்தது போலாயிற்று. வெனிசு சமுதாயமோ, செனேவா சமுதாயமோ புதுவகையான பெருங்கடற் கலங் களைச் செய்தற்கும் பெருங்கடலிற் செல்லும் புதுவகை மாலுமிகளைப் பயிற்றுதற்கும் வேண்டிய வன்மையற்றிருந்தது. தம் தளர்ச்சியுறும் ஆற்றலைக்கொண்டு பழைய இலவாந்தின் சிதைந்த வணிகத்தை நடாத் தியும், துருக்கிய போர்க்கப்பற் படையோடு தந் துடுப்புடைக் கலங்களிற் சென்று போர் செய்தும் வருதல் இவ்விரு சமுதாயங்களுக்கும் போது மானதாயிருந்தது.

. என்றி கடற்படை நிறுவுதல் 443
ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும், அமெரிக்காவிலும் இசுப்பெயினுக்கும் பாத்துக்கலுக்கும் வணிகம், குடியேற்றநாடு ஆகியவை சம்பந்தமாக ருந்த முழு உரிமையை எதிர்த்து நிற்க, பிரான்சோ இங்கிலாந்தோ துவரையும் ஆயத்தமில்லாதிருந்தது. VI ஆம் என்றியரசனின் ட்சியில் யோன்கபோத்தும் அவர்தம் மைந்தனய செபத்தியனும் பிறித் லிலுள்ள 18 வீரரோடு ஒரு வள்ளத்திற் சென்று, இலபிரதோர், யூபண்ணிலாந்து, நோவாகோசியா ஆகிய நாடுகளிலுள்ள இடங்களைச் சன்று பார்த்தனர். அவர்கள் கட்டுக் கதைகளில் படித்துள்ள, வாசனைப் பாருள்களையும் பொற்சுரங்கத்தையும் உடைய கத்தேயையும் கிழக்கி லுள்ள எழு நகரங்களையுங் காண்டற்கு மேற்கு நோக்கிச் சென்றிருந்தனர். அவ்வாறு செல்லும்போது, மூடுபனியுள்ள “ கொட்டெனும் ’ மீன் களமும், துளிசொட்டுந் தேவதாரு மரங்கள் அடர்ந்த வடஅமெரிக்கக் காடுகளும் தம் வழியைத் தடுத்ததையறிந்தனர். இவற்றை ஆங்கிலேயர் அறிந்திருந்தால் அவை அவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த செல்வமாயிருந் திருக்கும். ஆனல், இங்கிலாந்து இச்செல்வத்திற் கைவைத்து, இசுப் பெயினின் கோபத்திற்காளாக இன்னுந் துணிந்திலது. அதற்குரிய காலம் இன்னும் வந்திலது. VI ஆம் என்றியரசன் கடல்வாழ்நர் ஆற்றும் அருஞ் செயலை ஊக்கப்படுத்தினன். ஆனல், ஊல்சி அதனைத் தடுத்து வந்தனர். கபோத்தர்களும் பிறித்தலில் வாழ்வாரும் வடஅமெரிக்கா வுக்குச் செய்த பிரயாணங்கள், புதிய நூற்றண்டின் நடுப்பகுதிக்கு முன் நியூபண்ணிலாந்தின் மீன்பிடித்துறைகள் எமது கடல்வாழ்நருக்கு ஒரு சிறந்த மீன்பண்ணையா யமைந்திருந்த போதிலும், உள்நாடுகளைக் காண் பதும் அவற்றிற் குடியேறுவதும் சம்பந்தமாகப் பல தலைமுறைகளாக இயங்காது கிடந்த உரிமையைமட்டுங் குறித்து நின்றன.
VIஆம் என்றியரசனை இவ்வாறன நிலைமைழே காத்திருந்தது. அவன் கைக்கொண்ட பூட்கை, கூரறிவுள்ளதும் உறுதியுடையதுமாகும். மேம் பாடுள்ள இசுப்பானிய அதிகாரத்தை எதிர்த்துக் கடலுக்கப்பால் நடத்தும் அருஞ் செயலே அவனுக்கப்படுத்தாமல், அரசுக்குரிய கடற்படையை நிறுவு தலாகிய ஒரே வழிமூலம் தன்னுட்டுப் பலத்தை யெல்லாம் வருங்காலத் திற்செலுத்த வழிவகுத்தான். ஆாருண்டுப் போர் நடக்குங் காலத்து வாணிகக் கடற்படைக்குரிய சண்டையில் ஆர்வமுள்ள கடல் வாழ்நர் * ஒடுக்கமான கடல் ’களை ஒல்லும் வகை தமதாக்கிக் கொண்டனர். சில வேளைகளிற் றணித்த கடற்கொள்ளையாளராகவும் மற்றை வேளைகளில் சிலுயிசில் நடந்ததுபோல, அரசவாணையின் கீழ் இணைக்கப்பட்டவராகவும் போர்புரிவாரயினர். V ஆம் என்றியரசன் தனக்கான கப்பற்படையொன்றை அமைக்கத் தொடங்கினன் ; ஆனல் அவ்வேலை அதிகம் நடைபெறவில்லை. ஈற்றில், அது புறக்கணிக்கவும் படாலயிற்று. VI ஆம் என்றியரசன் வணி கக் கடற்படையாகக்கத்தை ஊக்கினன் ; ஆனல், அவன்போர் செய்தற்கு மட்டுமுரிய கப்பற்படையை யமைத்திலன். VI ஆம் என்றியரசன்ே ஊல்

Page 232
444 என்றியும் ஊல்சியும் பாராளுமன்றமும்
விச்சிலும் தெற்போட்டிலும் அரசனுக்கான கப்பல் கட்டுந் துறைகளுட கூடிய உறுதி வாய்ந்த போர்க் கப்பற் படையொன்றை அமைத்தவனவன் அவன் திரிநிற்றி இல்லம் என்னும் வணிகத்தொகுப்பகத்தையும் நி வினன்.
என்றியின் கடல்சார்ந்த பூட்கை இரண்டு சிறப்புக்களையுடையதாயிரு தது. சிறந்த கடலோடிகளாற் செலுத்தப்பட்டு அரசசேவைக்காக மட்டு போர் புரிதற்கு அதிகாரம் பெற்றனவாகிய கலங்களைச் செய்வித்தது ம டுமன்றி, அவன்றன் கலங்கட்டுவோர் பல அரச கலங்களையும் திருத்த் மான முறையிற் செய்தனர். அவை பாய்க்கப்பல்களாகும். அவை பெரு ங்கடலிற் செல்லுதலில் மத்தியதரைக் கடல் நாடுகளின் துடுப்புடைக் கலங்களிலும் மிகுந்ததிறைமை வாய்ந்தன. அன்றியும், அவை ஆங்கில வணிகர் கடற்பயணஞ் செய்தற்கும் இசுப்பானியர் அத்திலாந்திக்குப் பெருங் கடலைக் கடத்தற்கும் உதவிய இடைக்காலத்துச் சிறிதுந் திறனிலா வட்டக் கலங்களைக் காட்டிலும் சூழ்ச்சித் திறனுடன் போரிற் செயலாற்றக்கூடிய மிகுந்த தகுதியுடையனவுமாகும். புதுவகை ஆங்கிலப் போர்க்கலம் நீளத்தில் அதன் பாய்மரத்திலும் மும்மடங்கு, அல்லது அதனிலுங் கூடியதாயிருந் தது. ஆனல், வழக்கமான வட்டக்கலம் அதன் பாய்மரத்திலும் இரு மடங்குதான் நீளமுடையது. இதுகாறும் நடந்தபோர்கள் பழைய கிரேக்க உரோம கடற்படைகள் செய்த போர்களைப்போல, பகைவர் கலங்களைத் தாக்கித் தகர்த்தலிலும் பலாற்காரமாய் எறி அவற்றைப் பிடித்தலிலும் வில்லாண்மையிலும் தங்கியிருந்தன. ஆனல், ஒரு புதிய ஊழி அண் மையிற் பிறந்தது. VI ஆம் என்றியரசனின் கப்பற்படைக் கலங்களின் இருமருங்கினும் அமைந்த துளைகளில் நிரையாக வைக்கப்பட்டிருந்த பெரும் பீரங்கிகளின் இருப்பு வாய்கள் சுட்டுத் தகர்க்க ஆயத்தமாய் துருத்திக்கொண்டிருந்தன. வேறெவ்விதப்போர்முறையிலும் இவ்வித முறைக்கே கடல்சார்ந்ததும் குடியேற்றம் சார்ந்ததுமான பிரித்தானிய வாதிக்கம் மிகுந்த கடமைப் பட்டுள்ளது. கடற்படைக்குரிய கலங்கட்டு வோர் போர்க் கலங்களில் பெரிய பீரங்கிகளை எற்றிச் செல்ல வேண்டு மென்று வற்புறுத்தியவன் VI ஆம் என்றியரசனேயாவன். அவர்கள் பீரங்கிகளை வைக்குமிடத்திலேயே துளைகளையுண்டாக்கி அவற்றின் வழி சுடு தற்குரிய முறையைக் கைக்கொண்டனர்.
1545 ஆம் ஆண்டில், அதாவது, என்றியரசனின் ஆட்சி முடிவில், பிரான்சிய போர்க்கலக் கூட்டமொன்று இங்கிலாந்தின்மேற் படையெடுக்க முயன்றது. ஆனல், அஃது அரசகடற்படையால் முறியடிக்கப்பட்டது. இப் படையெடுப்பினின்றும் இங்கிலாந்து பிழைத்தது. அவ்வாண்டிலேயே தவித்தோக்குக்கு அணித்தாயுள்ள ஒரு பண்ணையில் பிரான்சிசு திரே க்கு என்னும் பெயருடைய குழந்தையொன்று பிறந்தது.

என்றியும் ஊல்சியும் பாராளுமன்றமும் 445.
அரச கடற்படை என்றியரசனல் உருவாக்கப்பட்டதாகும். அவனும் அவன் பின் ஆட்சி செய்த அவன் மகளும் இங்கிலாந்துக்குரியதொரு பூட்கைமை எற்றுக்கொண்டு ஐரோப்பாவிற் கத்தோலிக்க அதிகாரத்தை எதிர்த்து நின்றபோது, அவ்விருவரையும் இக்கடற்படை காத்தது. இங்கிலாந்துக் குக் கடலாதிக்கம் எத்துணை முதன்மையானதென்ற எண்ணம் ஊல் சிக்குச் சிறிதும் எழவில்லை. அவர் மத்தியகாலத்திருந்த ஒரு சிறந்த திருச்சபையினர்; பழங்காலத்துக்கேற்றதொரு குடியியற் சேவையாளர். கலைகளில் மறுமலர்ச்சிக் காலத்துக்குரிய சூழ்வல்லோர். ஆனல், நாட் டிலுங் கடலிலும் இங்கிலாந்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவை ஊல்சி காணும் ஆற்றல் பெற்றிலர். ஆயினும், தியூடர்க்குரிய பெருமை யின் இரகசியம் ஆங்கிலக் குடிகளுடன் ஒன்று பட்டிருக்கும் புதுமையான இயற்கை அறிவாகும். என்றி அரசுபாயம் பயிலுங்காலத்தில் ஊல்சியிடங் காணப்பட்ட முதிர்ந்த நிருவாகத்திறமையை வேண்டியாங்கு பயன்படுத் தினன். பின்னர், அவன் எந்தக் கருதினல் ஆவது அடியொற்றிச் செல்வார் என எதிர்பார்க்க முடியாத, தனக்கே சிறப்பாயுரியதொரு வழியில் ஊல்சியையும் மிஞ்சிச் செல்வானுயினன்.
ஊல்சி ஒரு சிறந்த மனிதர். ஆனல், இக்கால இங்கிலாந்தைப் படைத் தவர் அவரல்லர். கடற்படையில் அவர்க்கு அக்கறையோ, பாராளுமன் றத்தில் உறுதியான நம்பிக்கையோ இருந்ததில்லை. உண்மையில், அவர் பாராளுமன்றத்தில் அவநம்பிக்கை கொண்டிருந்தார். ஏனெனில், நாட் டில் வளர்ந்து கொண்டிருந்த சமயப்பகையான இயக்கம், குரும்ார் நலவுரிமை, பிணப்பேழைக் கூலி, இங்கிலாந்திற் போப்பாண்டவரது ஆஞ் ஞைகளுக்கிருந்த நம்பிக்கை ஆகியவற்றைத் தாக்குவதின் மூலம் 1515 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தெளிவாக்கப்பட்டது. இந்கிலாந்தில் போப்பாண்டவரது ஆதிக்கத்தை ஆதரிப்பவர்க்குக் கிடைக்கும் தண்டனை பற்றிய பிறிமோனியர் எனும் நியதிச் சட்டத்தைக் குருமார் கூட்டம் மீறியதால் பெறப்பட்ட தண்டத்தொகைகள் பற்றி நீதிபதிகள் அப்போது புதுமை யாகப் பேசலாயினர். நீதிபதிகளும் பாராளுமன்றத்தினரும் குருமார் சிறப் புரிமையை எதிர்த்துப் பொதுமக்கள் பிரதிநிதிகளாக, அரச அதிகாரத்தை தாங்கி நிற்பாராயினர். ஊல்சியோ, அவர்தந் தலைவனே இவற்றைக் கருத்திற் கொள்ளாதிருந்தா ரல்லர். அப்பொழுது, உண்மையில், ஊல்சி ஆட்சி செய்ய, என்றி அதனைக்கண்காணித்து வந்தான். ஆகவே, பாரா ளுமன்றம் மீண்டும் எட்டு ஆண்டுகளாகக் கூட்டப்பட்டிலது. ஆனல், என் றியரசன் ஊல்சியின் போக்கை விரும்பாது, திருச்சபையைக் கொள்ளை யிடவோ, திருத்தவோ, அன்றி, போப்பாண்டவரை எதிர்க்கவோ விரும் புவனயின் எத்தாபனத்தின் உதவியை நாடக வேண்டுமென்பது அவனுக்கு நன்கு விளங்கியேயிருந்தது.

Page 233
446
அத்தியாயம் II VII ஆம் என்றிய ரசன் ஆட்சியில் அரசிலும் பாராளுமன்றத்திலும் உண்டான மதச்சீர்திருத்தம்
தியூடர் காலத்து இங்கிலாந்திற் கத்தோலிக்கர், புரட்டசுத்தாந்தர் என்போர் தம்மிடையே பிரிவுணர்ச்சியுடையோராகவும் தெளிவாய் வரையறுக்கப்பட்ட கொள்கையுடையோராகவும் பிரிந்துகொண்டார்கள் என்று கருதிக் கொள்வோர், இலிசபெத்தரசியாரின் ஆட்சியின் இறுதிக் காலத்துக்கு முன் சீர்திருத்தம் எவ்வாறு இயங்குவதாயிற்றென்று ஒரு பொழுதும் விளங்கிக்கொள்ளமாட்டார். மக்கள் பலவாறு எண்ணிக் கொண்டு வந்தாரேயல்லது, ஒரு முடிபுக்கு யாரும் வந்திலர். நேர்மையுடையோரும் தருணங் கண்டு நடப்போரும் தங் கருத்துக்களை இடைவிடாது மாற்றிக் கொண்டே வந்தனர். பிற்றை ஞான்றிருந்த கத்தோலிக்க, அல்லது புரட்டசுத்தாந்தக் கட்சியினரைத் திருத்திசெய்திருக்கக் கூடிய வகையில் உறுதியான கோட்பாட்டையுடையவராய் ஒரு சிலரே காணப்பட்டனர். சமயத் துறவிக் குழுக்களையும், அவைவளர்த்து வந்த வழக்கமான மூட நம்பிக்கை களையும் தம் வன்மொழிகளாற் றக்கிக் குற்றங் காண்பவராகிய சேர் தோமசு மூர் என்பவர், போப்பின் ஆதிக்கத்தினல் உயிர்த்தியாகியா யினர். எனினும், பிசப்புமாராகிய காடினரும் பொன்னரும் மேரியரசி யார் ஆட்சியிற் போப்பாண்டவருக்குரியராய்ப் புகழ் படைத்திருந்த போதும், என்றியரசனுக்கும் உரோமுக்குமிடையே தொடக்கத்திலிருந்து வந்த பிளவில், அரசனை ஆதரித்து வரலாயினர். இலிசபெத்தரசியார்தாமும் குருமார் மணமாகாதிருப்பதையே விரும்பியிருந்திருப்பார். அரசரின் சமயப் பூட்கையைக் குறித்துத் தொல்லைகளைத் தோற்றுவித்தலிலும் அவ ராட்சியிற் சமாதானத்தைப் பாதுகாப்பதிலேயே பொதுமக்கள் கூடிய அக்கறை கொள்வராயினர்.
வடக்கிலுந் தென்மேற்கெல்லையினிறுதியிலும் போப்பின் அதிகாரத்துக்கு ஆதரவு காட்டுவதற்குப் பதில், துறவிகள் மடங்களையும் பழைய சமய நிலைகளையும் ஆதரிக்கும் பேரூக்கம் எழுந்தது. இலண்டனிலும் அதன் அயலிலும் சமயத்தில் மாற்றத்தை வேண்டி நின்ற கட்சி ஆதிக்கம் அடை வதாயிற்று. குருவாயத்தையும் மத்தியகாலத் திருச்சபையின் கோட்பாடுகளை யுங் குறித்துத் தியூடர் காலத்து இலண்டன் மாநகர மாந்தர்க்கும் வலோய் காலத்துப் பரிசுமா நகரமாந்தர்க்கும் வேறுபாடான நோக்கங்களி ருந்தன. இவ் வேறுபாடு, இங்கிலாந்திலும் பிரான்சிலும், சீர்திருத்தத்தினல் எழுந்தவேறுபட்ட விளைவுகளை விளக்குதற்குப் பெரிதும் உதவுகின்றது.
பேராசிரியர் பொலாட்டு என்பார் எழுதியது வருமாறு :-தியூடரின் வல்லாட்சி, இலண்டன் மாநகரம் பெற்றிருந்த ஆதிக்கத்திலேயே பெரும்பாலும் அமைந்திருந்தது.-இக்கூற் றுடன் செல்வி தேவிசும் பின்வரும் குறிப்பையும் சேர்த்துள்ளார் :-" ஆங்கில நாட்

இலண்டனும் பொது மக்கள் கிளர்ச்சியும் 447
ஆனல், மாற்றம் விரும்பிய கட்சியினர் இலண்டனிலும் வேறெங்கணும்
சட்டசுத்தாந்தத்தினலோ, கொலற்று என்னும் துணைத் தலைமைக் குருவினதும் அவர்தம் நண்பரினதும் புதுக் கல்வியினலோ முழுதும் தூண்டப்பட்டிலர். அக்கட்சியினர் புரோகித வெதிர்ப்பென்று பொதுவாகக் கூறக்கூடியதொரு மன வெழுச்சியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். புரோகிதவெதிர்ப்பின் காரணம் தங் குடும்பங்களின் நண்மைக்காகத் திருச் சபையைக் கொள்ளையடித்தற்கு மக்கள் சிலரிடமெழுந்த பேராசையேயாகும். எனையோரிடத்து, குருமார் அனுபவித்த அதிகாரங்களையும், சிறப்புரிமை களையும் எதிர்க்கும் நியாயமானதும் நேர்மையானதுமான ஒரு வெறுப் பாகும். ஏனெனில், குருமாருக்கு எண்ணிலா வழிகளில் பணம் பறிக்கும் நியாயமானவுரிமை இன்னும் இருந்தது ; அன்றியும், மக்கள் தாமாகவே நினைக்கவும் செயலாற்றவும் நன்கு அறிந்துள்ள ஊழியிலே குருமார் தங்கள் ஆன்மிகமன்றுகளிலே எல்லா மக்களுக்குமுரிய கோட்பாடு, அறவொழுக்கங்கள் என்பன பற்றித் தீர்ப்பளிக்கும் உரிமையுடையராயு மிருந்ததினலென்க, மத்தியகாலம் முதல் இக்காலம் வரையுமுள்ள சமூகத்தில் எழுந்த சமயமாற்றம், குருமார் ஆதிக்கத்தைக் குறைத்தலிலும் பொதுமக்களை உயர்த்தலிலும் பெரும்பாலும் அமைந்துள்ளது இந் நிகழ்ச்சி முதலாவது, ஒருமித்த அரசசெயலினலும், அதன்பின்னர் மனச் சான்றின்பாற்பட்ட தனித்த சுதந்திரத்தினுலும் எற்பட்டதாகும். இவ் விடயங்களில் முதலாவதியக்கமே தியூடர் ஆட்சியில் நிகழ்ந்தது ; அது திருச்சபையை அரசவதிகாரத்துக் குட்படுத்தியது. மேலும் அது புரோ கீதவெதிர்ப்பு இயக்கமாக இருந்தவாறே புரட்டசுத்தாந்த இயக்கமுமா யிற்று.
VI ஆம் என்றியரசன் புரோகித எதிர்ப்புப் புரட்சியை விரும்பாத கத்தோலிக்கரைத் தூக்கிலிட்டும் சிரச்சேதஞ் செய்தும் புரட்டசுத் தாந்தரைத் தீக்கிரையாக்கியும் வந்தனன். இப்பூட்கை இந்நாளில் மிகப் புதுமையாகத் தோன்றினும், அந்நாளில் இங்கிலாந்துப் பொது மக்கள் உடன்பாட்டைப் பெரிதும் பெற்றுக்கொண்டது. அவன் ஆட்சிக்
ச்ே சமயப் புத்தமைப்பின் வரலாற்றை முற்கூறிய நோக்கில் திருப்பியெழுதலாம். ஏறத்தாழ அதன் எல்லா மாற்றங்களையும் இலண்டனிலேயே உருவாகினர். ஊல்சி, குருேம்வெல், சோமசெற்று, மேரி என்போர் அந்நோக்கிற் பிழைத்தாராக, எட்டாம் என்றியரசன், இலிசபெத்தரசியார், பேக்கிளி என்போர் வெற்றியடைந்தனர். ஏனெனில், இலண்டன் மாநகரை இகழாததினலும், அதன் விசுவாசத்தைத் தாமொரு போதும் இழக்காததினலும் என்க. " பெருநிதி, படைக்கலம், சேனையாகியவெல்லாம் தன் அரண் மனைக்கு இரண்டு கல் தூரத்தில் இருந்தவாற்றை நிலையானபடையில்லாத ஒர் அரசன் தன் அரசியலையிட்டு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாயிற்று. அன்றியும், 16 ஆம் நூற்றண் டிலும் 17 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலும் அச்சகத்தின் பயன் விளைவிக்கத்தக்க முழு உரிமை ஒட்சுபோட்டையும் கேம்பிரிச்சையும் விட, இலண்டனுக்கே அமைவதாயிற்று. இலிசபெத்தரசியார் இலண்டனுக்கும் அவ்விரண்டு பல்கலைக் கழகங்களுக்குமே அச்சுப் பதிவை உரிமையாக்கியிருந்தார். −

Page 234
159.
448 இலண்டனும் பொது மக்கள் கிளர்ச்சியும்
காலத்திற் கேட்கப்பட்ட குழப்பநிலையான பேச்சுக்களில், நாட்டினவாதிகளும் கத்தோலிக்கரும் சம்பந்தப்பட்ட புரோகித எதிர்ப்புப் பூசலே மிகப் பெரி தாகும். என்றியரசன் இறந்தபின்னரே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உண்டான புதிய நிலைமை, புரோகித எதிர்ப்பாளரான ஆங்கிலேயரையும், நாட்டினவாதிகளையும், புரட்டசுத்தாந்தரோடு நட்புப் பூண்டு கத்தோ லிக்கப் பிற்போக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ளத் தூண்டிற்று. இப்புரட் டசுத்தாந்தரின் கோட்பாடுகளினல் அவ்வாங்கிலேயர் இலிசபெத்தரசியாரின் ஆட்சியில் தஞ்சமயக் கொள்கையை எளிதாக மாற்றி அக்கோட்பாட்டை ஆதரிப்பாராயினர்.
புரோகித வெதிர்ப்பு வோல்தேயர் காலந்தொட்டுப் பிரான்சிலும் இத்தாலி யிலும் இருந்ததுபோல், இங்கிலாந்தில் உண்மையில் ஒரு நிலையான கட்சி யினரின் மூடக்கொள்கையாக அமைந்திலது. குருமாரது அதிகாரத்தில் வெறுப்பு, சமயத்திற் பெருமதிப்பு ஆகிய இவ்விரண்டும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பார்க்க இங்கிலாந்திலேயே கூடிய ஆதரவு பெற்றுள்ளன. மேலும், சீர்திருத்தத்துக்குப் பின்தோறிய திருச்சபையினலும், சமயப் பிரிவுகளினலும் இவ்விருநோக்கங்களும் திருத்தியடைந்தன. குருமாரா திக்கத்திற்கு முரணுயெழுந்த எதிர்ப்பானது, மக்கள் வாழ்க்கையை ஆள் வதற்கமைந்த உரோமைக் கிறித்துவம், பியூரித்தன்மதம் ஆகியவற்றின் உரிமைகளுக்கு மாறக, அங்கிலிக்கன் திருச்சபையைச் சிலவேலைகளில் ஆதரித்து வந்தது ; சிலவேளைகளில் அரசுக்குருவாயத்தின் வஞ்சத்துக்கு மாருய், இணங்காதோர் மதத்தொடு இணைந்து கொண்டது. ஆனல், போப்பாண்டவரினதும் மத்தியகாலத் திருச்சபையினதும் ஆதிக்கம் எட்டாம் என்றியரசனல் அடக்கப்பட்டுவர, புரோகிதவெதிர்ப்பானது கத்தோலிக்கம், புரட்டசுதாந்தம் ஆகிய இரண்டினின்றும் வேறன ஒரு தனிச்சத்தியாய் விளங்கிற்று. மேலும், சிலவாண்டுகள் வரையும் இவ்வெதிர்ப்பே அம்மூன்றிலும் மிகுந்த வலிமை கொண்டிருந்தது.
போப்பாண்டவர்க்கும் என்றியரசனுக்கும் உண்டான பிளவின் மும் னிகழ்ச்சியாக, உலூதரின் கீழ் நிகழ்ந்த சேர்மானியச் சீர்திருத்தன் அமைந்தது. இது சிலவாண்டுகளாக சமய அதிகாரத்தின் மையமாகிய உரோமின் செல்வாக்கைப் பெரும்பாலும் அழித்துவந்தது. 1527 ஆம் ஆண்டில் சேர்மனியின் பேரரசனும் இசுப்பெயின் மன்னனுமான V ஆம் சாள்சின் படைகள் பரிசுத்த நகரமாய உரோமை அழித்தன. சேர்மனியில் இருந்த மதப்புரட்டரும் இசுப்பெயினிலிருந்த கத்தோலிக்கரும் கோயிற் கொள்ளையிலும் துறவுக் கன்னியரைக் கற்பழித்தலிலும் சென் எஞ்ச லோக்கோட்டையிலிருந்த போப்பாண்டவரையும் சமயக் கருதினல்களையும் முற்றுகையிடுதலிலும் ஒருவரோடொருவர் இகல் கொள்வாராயினர். அப் பொழுதிருந்த கத்தோலிக்கர் ஒருவர் V ஆம் சாள்சுக்கு எழுதியது வருமாறு :-

கேம்பிரிச்சும் கிருன்மெரும் 449
இந்நிகழ்ச்சிகள் யாவும் கடவுளின் அறத்தீர்ப்பினல் வந்தனவென்று யாவரும் எண்ணுகின்றனர்; ஏனெனில், உரோமின் சமய மன்றில் தீர்ப்பு நன்முறையில் வழங்கப்பட்டிலது. பிரான்சிய அரசன் தன் இராச் சியத்தில் தன்னைக் குலத் தலைவனக்காதவாறும், அவன் போப்பாண்டவர் பீடத்துக்குக் கீழ்ப்படிதலை மறுக்காதவாறும், இவ்வாறே ஆங்கிலவரசனும் எனையவரசரும் ஒழுகாமல் இருப்பதற்காகவும் உரோமாபுரியில் அருட்பீடம் இருக்கக் கூடாதென்று சிலர் கருதுகின்றனர்.
போப்பாண்டவரின் அதிகாரத்தை இங்கிலாந்து மீறுதற்கு வாய்ப்பான தென்று கருதத்தக்க செவ்வியொன்று எப்போதாயினும் இருந் திருப்பின், அதுவே உலூதரின் புரட்சிக்கும் உரோமின் தலைமைப் பதவி நீக்கத்திற்கும் பிற்பட்ட காலப்பகுதியாகும்.
உலூதரின் கோட்பாடுகள் உவித்தன்பேக்கில் வெளிப்படுத்தப்பட்ட மட்டிலே திருச்சபையாலும் அரசாலும் தடுக்கப்பட்டிருந்தபோதும் இங்கிலாந்திற் போராற்றல் உடையனவாய் விளங்கின. அவை உலோ லாடரை புரட்டசுத்தாந்த இயக்கத்தில் உடனே சேரச்செய்தன. அவை களால் புதுக்கல்வியைப் பெற்ற மக்களின்டயுண்டான விளைவு இரு திறப்படும் : சிலர், சிறப்பாக இளையோர், சிறிதும் விட்டுக்கொடாத இயக் கத்தை ஆவலுடன் தழுவினர்; மற்றுஞ்சிலர், சிறப்பாக இங்கிலாந்தில் மறுமலர்ச்சியை நிறுவிய முதியோர், பின்னிட்டு, வைதிகத்தை ஆதரிக்கத் தலைப்பட்டனர். இராசுமசு புரட்டசுத்தாந்தத்துக்கு அஞ்சினர். மூர் அதனை எதிர்த்து மறுப்பெழுதினர். பண்டைக்காலத்தில் முன்னேற் றத்துக்காகப் பெருந் தொண்டாற்றிய ஒட்சுபோட்டு ஐயங்கொண்டு அக் கிறித்துவத்தைத் தழுவாது நின்றது. ஆனல், கேம்பிரிச்சு முதன்முத லாக நாட்டினவியக்கத்தில் ஈடுபட்டது. 1521 ஆம் ஆண்டு தொடங்கி உலூதரின் கூற்றுக்களைப் பேசித் தெளிந்து கொள்ளுதற்கு அந்நகரத்தி லுள்ள உவையிற்றுகோசு என்னும் மதுக்கடையில் மாணவர் ஒருங்கு சேர்ந்தனர். அம் மதுக்கடை “ சேர்மனி ’ என்னும் வசைப்பெயர் பெற்றது. அம் மதுக்கடைக்குச் செல்லும் கலைஞரும் “ சேர்மனியர்* எனப்பட்டனர். ஆயினும், திண்டேலும் கவர்தேலும் தியூடர்கால ஆங்கில மொழியில் வேதத்தை எழுதிக்கொடுத்தனர் ; கிருன்மெர் பிரார்த்தனை நூலைக் கொடுத்தனர். இலாத்திமர் மக்களியக்கத்துக்கு உயிர்ப்பளித்தனர்; பிற்றைக் காலத்திலிருந்த பலர் கிறித்துவின் வீரத் திருத்தொண்டராயும் உயிர்தியாகியருமாயினர்-மதுக்கடை சென்ற இவர்களனைவரும் புதிய
இங்கிலாந்தை உருவாக்கினேர் ஆவர்.
அக்காலத்தில் மதுக்கடை புகுதல் இழிவானதென்று எவரும் கருதவில்லை. இக்காலத்தில் இருக்கும் மதுக்கடையிலும் அதுவேறுபட்டது. உயர்குடிப் பிறந்த ஆண்கள் தங்கள் நண்பரை வழக்கமாகக் காண்டற்குரிய இடம் மதுக்கடையென்று கருதி அங்கு தம் மனைவிய ரோடு மாலைப்பொழுதைப் போக்கச் செல்வர். மதுக்கடைக்காரனை அக்காலச் சமூகம் பெரிதும் மதித்தது. " மகிழ்ச்சிமிக்க மனைவியர் ” என்ற நாடகத்தில் இதற்குச் சான்றுண்டு.

Page 235
52
450 கேம்பிரிச்சும் கிருன்மெரும்
இலாத்திமர், கிருன்மெர் என்போர், சீர்திருத்தம் பெற்ற எதிர்கால ஆங்கிலத் திருச்சபையின் இரு கூறுகளான ஒழுக்கத்துக்கும சிந்தனைக் கும் பிரதிநிதிகளாய் விளங்கினர். சமயக் கொள்கையை விளக்கு வதில் இலாத்திமர் உலூதரைப் போலத் துணிவுடையவர். ஆனல், சமூக விசாரத்தையும் இம்மைக்குரிய அதிகாரத்தையும் குறித்துப் பேசு வதில் அவர் உலூதரிலும் குறைந்த கோழைத்தனமுடையவர். சாந்தம், விழிப்புணர்ச்சி ஆகிய பண்புகளையுடையவரும் அறிவு விவாதத்தில் எந்த வொரு பக்கத்தையும் விரைந்து சாராத பண்புடையவரும் ஆகிய கிருன் மெர் அறவியல் பற்றி ஓயாத ஐயமுடையராயும் தமது கருத்துக்களை அடிக்கடி திருத்திக் கொள்பவராயும் விளங்கினர். ஆனல், தன் பிள் ளைகளைக் காத்தற் பொருட்டு ஒருவரையும் கிட்டவரவொட்டாது தடுக்கும் அச்சமுள்ள ஒரு பெண்ணின் துணிவுபோல, அவர் தாம் முயன்று அறிந்த கருத்துக்களைக் காப்பதற்காக அடிக்கடி தம் துணிவுடைமையைக் காட்டுவர். இருவரும் என்றியரசனற் பெரிதும் மதிக்கப்பட்டனர். இலாத் திமரின் கொள்கை அரசரின் கொள்கையோடு நெடுங்காலமாக இணக் கமுற்றிருக்காது முரண்பட்டிருந்த தெனினும் அரசனின் அன்பிலும், பூட்கையிலும் கடுமையாக மாற்றங்கள் ஏற்பட்டபொழுதெல்லாம் அவனுக்கு கிருன்மெரின் ஆதரவு கிடைப்பதாயிற்று. இவ்வரச பூட்கைக்கு ஊல்சி, மூர், குருேம்வெல் ஆகியோரும் ஆடவரும் மகளிரும் உட்படப்பலர் பலியாயி னர். கிருன்மெர் மாத்திரம் என்றியரசனல் ஆதரிக்கப்பட்ட கடைசித் தனி நண்பராய் விளங்கினர். கொடுமையும் பிடிவாத குணமுடைய அவ்வரசன், அங்கிலிக்கன் கிறித்துவத்தை நிலைநாட்டிய சாந்தமும் மலைப்புமுடைய தாபகரின் கைமேற் றன்கையை நம்பிக்கையோடுவைத்தபடி, தன்னிட முள்ள கடவுள்விசுவாசத்தை முணுமுணுத்தவனய் இறக்கநேர்ந்தது. அக்காட்சியின் உட்பொருளை ஒருவர் செம்மையாய் விளக்கிக்கூற வல்லவரா யின், மக்கள் இயற்கையின் விந்தையை அவர் நன் கறிந்தவராவர்.
என்றியரசன் தான் துஞ்சுதற்கு முன்பு எத்தனையோ கருமங்களைச் செய்யவேண்டியிருந்தது. உரோமாபுரி அடிப்படுத்தப்பட்டபோது அவனுக்கு வயது முப்பதாறு. அவ்வமயந்தான் மந்தகதியிற் சென்ற அவன்றன் அறிவுத்திறன் முதிர்ச்சி அடையலாயிற்று. அவன்தன் அளவுகடந்த ஊக் கத்திற்குப் போக்கிடமாயமைந்த வேட்டம்புகுதலும் பந்தயவிளையாடல்களும்
இனியொருபோதும் அரசியற் றுறைக்கும் ஆட்சிக்கருமத்திற்கும் ஈடாய்
அமையமாட்டா. பாலனம் செய்வதாய பெரும்பொறுப்பை ஊல்சியிடமி ருந்து எடுத்துக்கொள்ள ஈற்றில் அவன் ஆயத்தமானன். அன்றியும், ஊல்சி வெளிநாட்டுக் கருமங்களிற் றவறிவிட்டார் ; உண்ணுட்டிலும் அரசனுக்கு ஊறு விளையும்படியான குற்றஞ் செய்தார் ; ஆகையினற்றன் குடிகளைப்போல என்றியரசன் தானும் ஊல்சியை வெறுத்தனன். அரச னுடைய திருமணமுறிவுப் பிரச்சினை நேர்ந்திராவிடினும் ஊல்சியின் வீழ்ச்சி இனிச் சிறிதும் தடுத்துவைக்க முடியாத தொன்ருயிருந்தது.

திருமணமுறிவுப் பிரச்சினை 45.
உரோமாபுரியுடன் பிளவுண்டாக்க வேண்டுமென்று நூற்றண்டுகளாக இங்கிலாந்தில் ஆயத்தமுண்டாயிற்று. “திருமணமுறிவே ” அதற்கு உடன் காரணமாய் இருந்தபோதிலும், உண்மையை நோக்கின், அப்பிளவுக்கு அது காரணமாகாது. பின் யாதெனின், என்றியரசனின் தமையனன ஆதர், அரகன் நாட்டாளாய கதரீனை முன்னர் மணம் முடித்துவிட்டதால், அவளையே பின் என்றியரசன் முறைப்படி மணந்துகொண்டான, இல்லையா என்னும் வினவேயாகும். முந்தைய போப்பாண்டவர் ஒருவர் கதரீன் என்றியரசனை மணம் முடித்தற்கு அனுமதி கொடுத்திருந்தார் ; ஆனல், VI ஆம் கிளமெந்தென்பார் அம்மணம் சட்டப்படி செல்லுபடியாதாதென் றும் என்றியரசன் இன்னும் மணமாகா எழுச்சி மிக்க ஆடவனென்றும் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஏனெனில், அரசன் ஆன்பொ லீனை மணமுடிக்க விரும்பினன். அக்காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் பல ஊழிகளில் வாழ்ந்த பெரும்பான்மை யரசரைப்போல, என்றியும்-இங்கிலாந்துக்கு மறுப்பற்ற அரசவுரிமையையும், ஆண் சந் ததியையும் தன்னிறப்பின் பின்னர் வலிமை மிக்க ஆட்சியையும் தோற்றுவித்தற்காகச் சட்டமுறைப்படியான ஆண் சந்ததியை விரும்பி யிருந்திராவிட்டால்-அவ%ளத் தன் வைப்பாட்டியாக்கியிருப்பான்; அவளும் விரைவில் அவ்வாறே ஆயினள், அவனுக்குக் கதரீனிடத்துப் பிறந்த ஒரேயொரு பிள்ளை இளவரசி மேரி மாத்திரமே. கதரீனிடமிருந்து அதற் குப் பின்னர் பிள்ளைப்பேறு கிடைக்குமென்று காத்திருக்க முடியவில்லை. இங்கிலாந்தில் பெண்ணுெருத்தி எப்பொழுதாவது ஆட்சி செய்ததேகிடை யாது. மேலும், ஒரு பெண்ணரசி ஆள்வாள், அல்லது பிறநாட்டு இளவரச ணுெருவன் அவளை மணம் முடித்து ஆட்சித்துணைவனுவான் என்ற பழக்கத்திலில்லாத எண்ணம் நாட்டில் உண்ணுட்டுக் கலகத்துக்கு அடி
கோலும்போலத் தோன்றிற்று.
A.
என்றியரசனுக்கு மணமுறிவு அனுமதிக்கப் போப்பாண்டவர் கொண்ட மறுப்பு யாதேனும் பழிக்கு அஞ்சுதற்பாற்பட்டதொன்றன்று. அவன் மண முறிவுக்குரியவற்றினும் தகுதி குறைந்த காரணங்களுக்காக கொத்துலாந் தின் அரசியும் என்றியின் உடன்பிறந்தாளுமாகிய மாகறற்றின் திருமண முறிவுக்கு போப்பு அண்மையிற்றன் உடன்பட்டார். அவர்க்கு முன்னிருந் தோர் பிரான்சின் அரசனகிய XI ஆம் உலூயியும் அவனைப்போன்ற ஏனைய அரசரும் நாட்டு நலனுக்காக மட்டுமேயன்றிப் பிறிதொரு காரணத்தையும் கருதாது திருமண முறிவை விரும்பியபோது அவர்களுக்கு அனுமதி வழங்கினர். ஆனல், என்றிக்கு அவர் அனுமதி வழங்க முடியாது போயிற்று. ஏனெனில், உரோமாபுரி அடிப்படுத்தப்பட்டபின்னர், அவர் ஆவல் மிகுந்த புரவலனும் கதரீனின் மருகனுமாய V ஆம் சாள்சின் ஆணையிற் கட்டுண்டு கிடந்ததால் என்க. போப்பாண்டவரின் இம்மைக்குரிய ஆதிக்கம் அவர்க்குச் சுதந்திரம் அளிக்காது, எனைய ஊழிகளில்

Page 236
530.
1532.
452 போப்பாண்டவருக்கு மாருன, புரட்சி
இருந்ததுபோல, அப்போதும் இவ்வுலகியலான எண்ணங்களுக்கு அவரை அடிமையாக்கியது. அவர் இத்தாலிய அரசிளங்குமரராய் இருந்தபடியால், உண்மைப்படி இத்தாலிய நாட்டுத் தலைவனுயிருந்த சாள்சை அதிருத்திப் பட்டுத்த விரும்பவில்லை.
இங்கிலாந்தின் நலன், போப்பாண்டவர் வாயிலாகப் பேரரசரின் இச் சைக்கு உட்படுத்தப்பட்டதேயென்பது என்றிக்குப் பொறுக்கமுடியாச் செயலாகப் புலப்பட்டது. போப்பாண்டவரால் தனக்கேற்பட்ட துயர்கண்டு சினங்கொண்டு, ஆங்கில மக்கள் தாமோர் இனமாக இருக்க வேண்டின், அவர்கள் தம் நாட்டு எதிரிகளாலும் பகைவர்களாலும் சூழ்ச்சித் திறத் தாற் கையாளப்பட்ட ஆன்மிக ஆதிக்கத்தை மறுதலிக்க வேண்டு மென்று ஆங்கிலேயர் பலர் மிக முன்னர் அறிந்திருந்ததுபோல, அவ னும் உணர்வானுயினன். பூரண வளர்ச்சியுற்று, பிளாந்தாசெனற்றுக் காலந்தொட்டு வளர்ந்துவந்த நாட்டினப் பற்று மிக்க ஆங்கிலேயர் திருமணம், சமயம் ஆகியனபற்றிய தஞ்சட்டங்களின் எப்பகுதியையேனும் ஆக்குதற்குத் தாம் என் வேற்றுநாட்டாரிடம் செல்லல் வேண்டும் எனத் தம்மைத் தாமே வினவிக் கொண்டனர். எமது நாட்டுத் திருச்சபை யினருடன் கலந்தாலோசித்தாலென்ன ? அன்றியும், எங்கள் பாராளு மன்றத்தின் வழியாக என் செயலாற்ற முடியாது ? என்று வினவிக் கொண்டனர்.
ஊல்சி உரோமாபுரியிலிருந்து “திருமணமுறிவு” பெற்றுக் கொடுக்கத் தவறியமை அவர்தம் முடிவிற்குக் காரணமாயிற்று. அவர் மானக் கேட்டுடன் இறந்தமையால், அப்பொழுது நண்பகலிலேயே ஆட்சி செய்த பேரச்சத்துக்குப் பலியாகித் தூக்குமேடைக்குச் சென்ற பல உயர்பதவி யினருக்கு முன்னரே தூக்குமேடைக்குச் செல்ல வேண்டிய ஊழ் அவருக்கு இல்லையாயிற்று. கிருன்மெர், “ திருமணமுறிவு” காரணமாகவும் அதனைத் தீர்த்தற்கு இங்கிலாந்திற்குள்ள திறமை காரணமாகவும் ஆழ்ந்த அறிவோடு வழக்குரைத்தமையால், அரசனதரவைப் பெற்றதுடன், கந்த பெரிக்குத் தலைமைக் குருவுமானர். ஆனல், அவரினும் முரட்டுக்குணங் கூடியவரும் பழியச்சங் குறைந்தவருமாகிய பணியாளர் ஒருவரே என்றிக்குத் தேவைப்பட்டார். அப்பண்பு உடையராகத் தோமசு குருேம்வெல் அரசற்குவாய்த்தார். போப்பாண்டவருக்கெதிராகவும், குருமாருக்கெதி ராகவும், அங்கிலிக்கன் கிறித்துவருக்காகவும், இராத்தியத்துக்காகவும் எழுந்த புரட்சி ஒரு வெள்ளப்பெருக்குப் போலப் பரவியது. அப்புரட்சி வெள்ளத்தில் எப்பெரிய சமூகப்புரட்சியோடும் தொடர்ந்து வருகின்ற கொடுமை அநீதிகளும் ஒன்று சேர்ந்துசென்றன ; இவற்றிற்கு நிமித்த காரணர் தனிமனிதராகவோ, அல்லது ஒரு கும்பலைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம்.

போப்பாண்டவருக்கு மாறன புரட்சி 453
இப்பிரச்சினையைப் பற்றி ஆங்கிலேயர் யாது கருதினர்? சாதாரண மான ஆங்கிலேயன் இங்கிலாந்தில் போப்பாண்டவரின் தலையீட்டை எதிர்த்து வந்த தம் முன்னேரின் உணர்ச்சியையே உடையவனய் இருந்தான். ஆனல், புதிய சூழலை வைத்து நோக்கும் வழி அவ்வுணர்ச்சி அவனிடம் எக்காலத்திலும் மிகக் கூடுதலாய்க் காணப்பட்டது. மேலும், அவன் அப் பிரச்சினையை இறுதியாகத் தீர்க்கவேண்டுமென்று உறுதி செய்த என்றியை ஆதரித்தான். இங்கிலாந்தின் நாட்டுப்பற்றுப் பூரண வளர்ச்சி யெய்தியிருந்தது ; ஆங்கிலேயர்க்குரிய பிரச்சினைகளைத் தீர்த்தற்குக் கடல் மலைகளுக்கப்பால் ஆயிரம் மைல் தூரததிலுள்ள சமயவதிகாரத்துக்குஇத்தாலிய, இசுப்பானிய பேரரசுகளுக்குரியனவும், சிலவேலைகளிற் பிரான் சுக்குரியனவும், எக்காலத்தும் இங்கிலாந்திற்குரியதல்லாதனவுமாகிய படித் தரங்களையும் நலவுரிமைகளையுங்கருதிய சமயவதிகாரத்துக்கு-சாதாரண ஆங்கில மகன் இனியொருபோதும் அடிபணியான். மறுபுறமாக, இலண்டன் மாநகரததுப் பொதுமக்கள் குற்றமற்றவளும் துயர்கொண்டவளுமாகிய கதரீ னுக்கும் அவள் மகளாகிய மேரிக்கும் அனுதாபங்காட்டினர். ஆன்பொ லீன் கீர்த்தியிழந்தவளாயினள். வேறெருத்திக் கிடர் விளைத்துத் தானே மனைவியென்ற நிலையை வருவித்த வைப்பாட்டியொருத்தி மதிப்புப் பெற முடியாது. மேலும், ஆன் என்பாள் சிறுமையுடைய பெண். மதிப்பற்ற அவளுக்கு மக்கள் கொடுத்த இயல்பான தீர்ப்பை அடியோடு மாற்றுதற்கு அவளிடம் சிறப்புரிமையாதும் இருந்தது கிடையாது.
ஆனல், அரசியல், திருச்சபை எனுமிவை சம்பந்தமான பிரச்சினைகள் என்றியின் சொந்த விடயங்களை மறைத்து விட்டன. மேலும், இம் மாற்றம் நிகழும்போது அவனுக்கும் குடிகளுக்கும் இருந்த தொடர்பு மிகுந்த உறுதியடைந்தது. ஒரு பெரிய புரட்சியால் உரோமாபுரியின் தளைகளினின்று அவன் ஆங்கிலத் திருச்சபைனியயும் அரசையும் மீட்டான். பழமையான பன்னட்டவர்க்குமுரியராயிருந்த துறவிகள் சந்நியாசிகளின் குழுக்களை அடக்கினன். குருமார்தம் ஆதிக்கத்தையும் சிறப்புரிமைகளை யும் குறைத்து வந்தான்; இப்புரட்சியில் இலண்டன் மாநகரத்தாரதும் அதன் தென்பாலுள்ளவரதும் ஆதரவைப் பெரிதும் பெற்றன். பல ராலும் வெறுக்கப்பட்ட அவனது திருமணமுறிவு எல்லாராலும் விரும்பப் பட்டதான, உரோமாபுரியுடன் உண்டாய பிளவுடன் இணைந்து கொண்டது, அப்பிளவு நாட்டிலுண்டான குருமாரெதிர்ப்புப் புரட்சியோடும் இணைந்து கொண்டது. இப்புரட்சி தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு நாட்டின் வலிமை மிகுந்த சத்திகளின் ஆதரவைப் பெறலாயிற்று. ஆனல், இம்மாற்றங்கள் புரட்டசுத்தாந்தத்துக்கு ஆதரவு செய்யும் இயல்புக்கே இறுதியில் வழிகாட்டும் என்பதை என்றியாதல், குடிகளாதல் இன்னும் உணர்ந்திலர். கத்தோலிக்கக் குருமாரைத் துன்புறுத்தும் அக்காலப் போக்கு, என்றியைப் போல வியப்பும் கொடுமையும் உடையதாயிருந்தது. ஆனல், சிலகாலம்வரை அது நியாயமும் இரக்கமுமுடைய வேறெவ்வகைக்
15381517.

Page 237
454 குருமாரின் மனப்பான்மை
கொள்கையிலும் மேலான ஆதரவைப் பெற்றுக்கொண்டது. போப்பாண்ட வரின் அதிகாரத்தை யொழிக்க மறுத்ததற்காகப் பெருந்தன்மைவாய்ந்த சேர் தோமசு மூரை என்றி தூக்கிலிட்டான். ஆதரவற்ற புரட்டசுத் தாந்தர், அப்பமும் செந்தேறலும் இயேசுவின் தசையுங் குருதியுமாகிவிடு மெனும் பொருள்மாற்றக் கோட்பாட்டை மறுத்ததற்காக அரசனற் கழுவேற்றப்பட்டனர். இச்செயல்கள் சமயப்பொறையை இக்காலச்சமூகத் தின் அடிப்படைக் கருத்தென்று பலகாற் கொண்டொழுகியவரின் பெரு வெறுப்பைப் பெறல்கூடும். ஆனல், இத்துன்ப நிகழ்ச்சிகள் அக்காலத் தில் வாழ்ந்தவரின் சிந்தனைகளை வேறுவகையிற் பாதித்தன. எவ்வாறெனில் ஒருபுறம் அவர்கள் கொலையுண்டார்க்கு உண்மையில் இரக்கங் காட்டினர்; ஆயினும், மறுபுறம் இதுகாறும் ஒருபோதும் மறுத்துரைக்கப்படாததும், பழைய கிறித்துவ வழக்கத்திற் கண்டதுமாய துன்புறுத்தும் படித்தரங் களுக்கிணங்கத் திருச்சபையிலும் நாட்டிலும் ஒழுங்கை நிறுவிய அரசாங் கத்தை நன்கு மதிக்கவுஞ் செய்தனர்.
தியூடர் ஆட்சியில் அரசனின் விருப்பமே குடிகளின் பாதுகாப்பாகும் என்ற கொள்கையை எற்றுக்கொண்ட அக்காலத்தில் அரசவணக்கம் உச்சநிலையடைந்திருந்தது. அது, என்றியின் இயல்புக்கு அழிவுதருவதா யிற்று ; அவன் அகந்தை அவனுக்குப் பிணியாயிற்று. ஆனல், அப்பிணி அவன் அறிவைப் பாதிக்காது துயரத்தை மட்டுமே பெருக்கியது. வலிமையுடைய அரசன் ஒருவனது ஆட்சியில் அரசவணக்கத்தாற் போந்த ஒரு பயன் யாதெனில், நாட்டில் ஒழுங்கை நிறுவுதற்கு என்றியிடஞ் சேனையில்லாதிருந்தபோதும், இங்கிலாந்து உண்ணுட்டுப் போரின்றித் தனது நிறுவகங்களிற் பெருமாற்றங்களையுண்டாக்கிக் கொண்டதேயாகும். இங்கி லாந்தில் வீரரின் இரத்தஞ் சிந்தியதெனினும், சமயப்போர் நிகழ்ந்த காலங்களிற் பிரான்சு, ஒல்லாந்து, சேர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்ந்தமை போல, ஆறக அவ்விரத்தம் பாய்ந்திலது.
அரச சீர்திருத்தத்தை நிறுவுதற்கு என்றி தேர்ந்தெடுத்த கருவி பாராளு மன்றமேயாகும். அக்கருவி திருச்சபைக் குருமார் கூட்டமாயிருக்கமுடியாது. பொதுமக்கட் பிரதிநிதிகளில்லாது, கந்தபெரியிலும் யோக்கிலும் கூடிய திருச்சபை மன்றங்களைப் புரோகித வெதிர்ப்புப் புரட்சியிற் செயற்றி றன் வாய்ந்த கருவிகளாக்க முடியாதிருந்தது. மத்தியகாலத் திருச் சபை கலப்பற்ற குருமார் சங்கமாகவே யமைந்திருந்தது. ஆகவே, பொது மக்கள், திருச்சபைக் குருமார் கூட்டத்திலன்றிப் பாராளுமன்றத்திலேயே தம்முரிமையை வற்புறுத்தவேண்டியவராயினர்.
கந்தபெரி, யோக்கு ஆகிய இரு பகுதிகளிலும் “பிறிமோனியர்’ என்ற சட்டத்தினல் வருந் தண்டனைகளுக்கு அஞ்சியே திருச்சபைக் குருமார் கூட்டம் உடன்பட்டது. ஆயினும், இம்மைக்குரிய குருமார் எல்லோரும் தாமேற்கும்படி வற்புறுத்தப்பட்ட எல்லா மாற்றங்களுக்கும் மாறக இருந்

குருமாரின் மனப்பான்மை 455
தனர் என்று நாம் எண்ணக்கூடாது. துறவிகள், சந்நியாசிகள் என்பவர் களிடத்தில் அவர்க்கு அன்பில்லை. போப்பாண்டவர் தங்களிடமிருந்து முதல் ஆண்டு வருவாயையும் பிற பெருந்தொகை வரிப்பணங்களையும் பெறுவதை அவர்கள் மிக வெறுத்தனர். திருச்சபைக் குருமார் கூட்டத்திலுள்ள பலர், குருமார் நலவுரிமை, கோயில் திருப்பீட உரிமை, சமய மன்றுகளில் நடக்கும் தீய பழக்கங்கள் ஆகிய யாவும் திருத்தி அமைக்கப்பட வேண்டு மென்று ஒப்புக் கொண்டனர். கிருன்மெர், இலாத்திமர் முதலிய சிறந்த சீர்திருத்தக்காரரைக் கொண்ட, படிப்படியாக வளர்ச்சியுறுவதாகிய கட்சியுமொன்று அங்கிருந்தது. அக்கட்சியிலிருந்தே என்றி பல பிசப்பு மாரைத் தேர்ந்தெடுத்தான்.
ஆங்கிலக் குருமாரின் போக்கு, பிடிவாதமான இணக்கமற்ற தன்மை யிலும், காலத்திற்குப் பொருந்தாத சிறப்புரிமைகளின் பாதுகாப்பிற் காக உண்ணுட்டுப் போரைப் பற்றிப் போதித்தலிலும் செல்லாது மேலான நாட்டுப் பற்றுடையதாயும், மேலான பயன்தரக்கூடியதாயும், ஒழுக்கத்தில் நிறைவுடையதாயிருந்தது. குருமார் விரும்புவார்களென்று எதிர்பார்க்க முடியாத பலவற்றை அவர்கள் விரும்பியேற்றுக் கொண்டமை யால், இங்கிலாந்தைச் சமயப்போரிற் புகாது தடுத்தனர். மேலும் இக்காலத்துக்கேற்ற புதிய ஆட்சிமுறையில் அவர்கள் நெடுங்காலமாயிழந் திருந்த மக்களன்பை மீட்டும் விரைந்து பெற்றனர்.
போப்பாண்டவரின் ஆணையினின்றும் விலகியமை நன்மை பயப்பது ஆகலாம்; அரசவாணைக்குட்பட்டமை, அதிலும் குறைந்த நன்மை பயப்டது போலுமென்க. ஆனல், குருமாருக்கு இவ்விரு வழிகளையும் விட நன்மைதரக்கூடிய மூன்றவது வழியிருக்கவில்லை. ஆங்கிலத் திருச்சபைக்கு என்றியே தனிப்பெருந் தலைவனெனத் திருச்சபைக் குருமார் கூட்டம் மனக்குறையுடன் எற்றுக்கொண்டது. ஆனல், அவ்வாறு எற்கும் வழி * கிறித்துவின் சட்டம் இடங்கொடுக்குமளவுக்கு ’ என்ற எளிதில் மாற்றக் கூடிய வாசகத்தையும் சேர்த்துக்கொண்டது. இவ்வாசகம், அடுத்த சில வாண்டுகளில் பலமுகமாகக் கருத்துக் கொள்ளப்பட்டது. குருமார் போப் பாண்டவரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துவிட்டனர். அவ்வாதிக்கத் திற்குப்பதில் ஆங்கில அரசினது ஆதிக்கத்தின் கீழ் அமைந்தனர். ஆனல், பின்னிகழ்ந்த பாமர மக்கட் புரட்சிக்குப் பயன்படத்தக்க கரு வியை என்றி திருச்சபைக் குருமார் கூட்டத்திலன்றிப் பிறிதோரிடத்திற் றேட வேண்டியவனனன். அதனைப் பாராளுமன்றத்திற் றேடிக்கொண்
LIT6öf.
* 1534 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் அனுமதித்த ஆதிக்கச் சட்டத்தில் இக்கட்டுப்பாடு
நீக்கப்பட்டது. மேலும், “ அங்கிளிக்கான எக்கிளிசியா என்று வழங்கிய இங்கிலாந்து திருச்சபைக்கு உலகிற் றனிப்பெருந் தலைவன் என்றி ஒருவனே " எனும் பெயரையும் அரசன் பெற்ருன்.
53.

Page 238
15291588.
456 பாராளுமன்றமும் மதச்சீர்திருத்தமும்
பாராளுமன்றத்தின் பெருமையை இரு மடங்காக்கும் ஆற்றல் உடைய தாய்ச் சீர்திருத்தம் அமைந்தது. இதுகாறும் பாராளுமன்றம் சட்டசபை யாயும் நீதிமன்றயும் இருந்தது. மேலும், ஏழாம் என்றி, ஊல்சி என்போர் ஆட்சியில் அதன் சிறப்புக் குன்றிவரலாயிற்று. ஆங்கில வரலாறு தனித்துச் செல்லாது, ஐரோப்பிய வரலாற்றின் ஒரு பகுதியாய்ச் சென்றிரு க்குமாயின், ஆங்கிலப் பாராளுமன்ற வீழ்ச்சி நீடித்து, மத்தியகாலத்துப் பிரான்சிய இசுப்பானிய நாடாளுமன்றங்களின் கதியையே, அப்பாராளு மன்றமும் தழுவியிருந்திருக்கும். ஆனல், VI ஆம் என்றி இதற்கு மாருக நடந்து கொண்டான்.
சீர்திருத்தப் பாராளுமன்றம் அரசர்க்கு வேண்டியவரால் நிரப்பப்பட் டிலது. அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமுமிருக்கவில்லை. உரோமாபுரி யுடன் நேர்ந்த பிளவைப் பூர்த்தி செய்ததும் துறவிகள் மடங்களை அழித்ததும் இங்கிலாந்திற் றிருச்சபைக்கு மேலாக அரச முதன்மையை நிறுவியதுமாய சட்டவாக்கம், கோமறைக் கழகத்தாரால் ஒழுங்குபடுத்தப் பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னர் நிறை வேற்றப்பட்டதே. சீர்திருத்தப் பாராளுமன்றம் முன்னைநாள் மன்றங்கள் போலல்லாது ஏழாண்டுகளாக வைகிற்று. அக்கால அளவில் எட்டுமுறை கூடிற்று ; அப்போதெல்லாம் அதன் உறுப்பினர் தனியனுபவங்களைத் தொடர்ந்து பெற்றனர். இவ்வனுபவம் அரசாங்கத்தின் பெருஞ்சாதனமாக இக்கால் விளங்கும் பொதுமக்கள் சபைக்குரிய மரபு முறையை யாக்குதற்கு உதவியது. என்றியின் பாராளுமன்றக் கூட்டங்களில் விவாதம் பெரும் பாலும் கட்டுப்பாடின்றி நடந்து வந்தது. இரு சபைகளும் அரசன் விரும் பிய விடயங்களை விவாதிப்பதிலாவது கட்டுப்பாடின்றி நடக்கலாயின. எப் பொழுதும் தன்னெண்ணத்தைப் பெரும்பாலும் சபையினர் நிறைவேற்று வாரானல், உண்மையான அறிவுரைகளினதும் கண்டனத்தினதும் அருமை அவனுக்கு நன்கு புலப்பட்டேயிருந்தது. ஆயினும், என்றியின் ஆட்சியில் அரசாங்கம் விரும்பிய பல திட்டங்கள் பாராளு மன்றத்தால் மறுக்கப்பட்டன; சிலவற்றைப் பொதுமக்கள் சபை திருத்தங் களுடன் அனுமதித்தது.
14 ஆம் உலூயி “நானே அரசு’ என்று சொன்னதாகப் பெரும் பாலும் நம்பப்படுகின்றது. அவன் செயலும் அவ்வாறே எண்ணினனென் பதைக் காட்டிற்று. என்றியின் அதிகாரம், அவனே தானுய் ஒப்புக் கொண்டது போல, வேறுபட்ட பண்புடையது. 1543 ஆம் ஆண்டில் அவன் பொதுமக்கள் சபையினரைச் சிறைசெய்வதினின்று விலக்களிக்கும் சிறப்புரிமையை உறுதிப்படுத்தும்போது கூறியது வருமாறு :-"நாம் தலை யாகவும் நீங்கள் ஏனைய உறுப்புக்களாகவும் இணைந்த அரசாகிய உடம்பின் சிறப்பை நோக்கின், பாராளுமன்றக் காலத்திலிருப்பதுபோல, வேறெக் காலத்திலும் நாம் அரச பதவியிற் சிறப்புற்று விளங்குகின்றிலேமென்று எம் நீதிபதிகள் அறிவிக்கக் கடவர் ”.

அரசனும் பாராளுமன்றமும் 45
அரசுக்குரிய பாராளுமன்ற நியதிச் சட்டங்கள் அரசு, திருச்சபை ஆகிய வற்றின் அடிப்படைச் சட்டத்தை உண்மையில் மாற்றியமைத்தன. இவ் வடிப்படைச் சட்டம் மிகப் பழைய காலந்தொட்டு அரசனலாதல், பாராளு மன்றத்தாலாதல் மாற்றமுடியாத அதியுன்னத நிலையிலிருந்தது.
இந் நிலை மாற்றப்பட்டபொழுது, உண்மையில், அரசன் தன்னதி காரத்தைப் பாராளுமன்றத்தில் மிகப் பெருக்கமடையச் செய்தான். அவ் வரசன் தான் முன்னெருபோதும் இருந்திராத முறையில் தானே இங்கி லாந்தின் ஆட்சிப் பகுதியில் எச்சட்டத்தையும் ஆக்கும் “ பூரண அதிகார முடையவனுய் ” விளங்கினன்.
ஆணல், பாராளுமன்றமும் சிறப்பாகப் பொதுமக்கள் சபையும் நாட்டி லொரு புதிய நிலை பெற்று வரும்போதும், அரசுக்கமைந்த நிலையிலிருந் தன. சீர்திருத்தப் பாராளுமன்றமும் அதனை அடுத்து வந்த “ இணக் கப் பாராளுமன்றமும் ” இங்கிலாந்தின் புதிய போப்பாண்டவராம் அரச னின் தெய்வீக உரிமையினற் பெரிதும் திகைப்படைந்தனவாகத் தோன்றுகின்றன. 1534 ஆம் ஆண்டின் அரச நிந்தை நியதிச்சட்டம் அரசனுக்கு மாருகக் குடிகள் எவ்வாற்ருனும் ஒழுகாவாறு காத்து வந்தது. மேலும், WI ஆம் என்றியும் தோமசு குருெம்வெலும் அந் நியதிச் சட்டத்தைப் பெரிதும் வழக்காற்றிற் கொணர்ந்தனர். அஃது V1 ஆம் எட்டுவேட்டின் ஆட்சித் தொடக்கத்தில், சோமசெற்றென்னும் விரிந்த நோக்குடைய ஆட்சிப் காப்பாளர் காலத்தில் நீக்கப்பட்டது. மேலும், அரசுக்கும் பாராளுமன்றத்துக்குமிருந்த தொடர்பு மீட்டும் தியூடர் காலத்து நிலவிய வழக்க நிலையை யடைந்தது.
துறவிகள், சந்நியாசிகள் குழுவினரை அடக்கியமையும் அவர்தம் நில புலங்களை உலகியலுக்குரியனவாக்கியமையும் அரசபாராளுமன்றச் சீர்திருத் தத்தை நிலையூன்றிய பற்றுக்களின் அடிப்படையில் அமைத்தற்குப் பெரிதுந் துணைபுரிந்தன. VI ஆம் என்றி, பறிமுதல் செய்யப்பட்ட துறவி மடங் களுக்குரிய காணிகளிற் பெரும்பகுதியைப் பெருமகார்க்கும், அரசவையத் தார்க்கும், அரசப் பணியாளர்க்கும், வணிகர்க்கும் விற்றுவிட்டான். அவர்கள் அக்காணிகளுட் பெரும் பாகத்தைத் தம்மினுஞ் சிறியார்க்கு உடனே திருப்பி விற்றனர். வணிக வகுப்பைச் சேர்ந்த தரகுக் குழுவினர் இலாப நட்டத்தைப் பொருட்படுத்தாது வணிகஞ் செய்தற்குக் காணிகளை வாங்கினர். மேரியின் ஆட்சியில் போப்பாண்டவரை ஆதரிக்கும் இயக்கம் தொடங்கிய
1 என்றியை எதிர்த்ததினுல் பேரச்சகாலத்திற் கொலையுண்ட சிலரைவிடத் துறவிமடங்களில் நெடுங்காலமாக வாழ்ந்த மக்கள், அவைகள் அழிந்தபோது சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டனர். அம்மடங்களுக்குத் தலைமை தாங்கிய பலர் சமயக் கங்காணியாராகவும் சமயத் துணைத் தலைவராகவும் அமைந்தனர். அன்றியும், துறவிகள் ஒய்வுகால வேதனம் பெற்றனர். அவர்களிற் பெரும்பாலார் உழைப்பில் ஈடுபட்டதுடன் ஒய்வுகால வேதனமும் பெறுவாராயினர்.
15361539.

Page 239
458 துறவிமடங்களின் மறைவு
போது, பெருஞ் செல்வருக்கிடையே தோன்றிய இவ்வணிக வகுப்பினர் ஆழ்ந்த சமுசயங் கொள்வாராயினர். பல துறவி மடங்கள் பண்ணை வீடுகளாக்கப்பட்டன; சிலவற்றை இடித்தழித்து அங்குள்ள கற்களைப் பண்ணை வீடுகள் கட்டப் பயன்படுத்தனர். அன்றியும், பெருஞ் செல்வர் அவற்றை மீட்டுந் துறவி மடங்களாகக் காணவும் விழைந்திலர். இவ் வாருய மக்கள் உயிர்த்தியாகஞசெய்ய முற்படாவிடினும், அவர்கள் புரட்டசுத்தாந்தப் போதகரை ஊக்கப்படுத்துந் தந்திரத்தை யறிந்திருந்த னர். அப்போதகர் பொருள்வருவாய் கருதாது கடவுளுக்குப் பணி செய்யும் விருப்புடையராயிருந்தனர்.
அக்காலத்திற் காணியென்றல் அதிற் குடியிருந்தோர் மேல் அக்காணிக் காரருக்கு நேரதிகாரமுண்டென்பதைக் குறித்தது. துறவிமடங்களுக்குரிய பண்ணைகளிற் கமஞ் செய்த நிலவராக் குடிகளிடையே சமயச் சீர்திருத்தம் எவ்வாற்ருனும் பரவித் தழைக்க வகையிருந்திலது. ஆனல, போப்பாண் டவர் ஆணையிலும் பழைய சமயத்திலும் பற்றுடைய கூட்டுத்தாபனங்களின் பிடியினின்று விடுவிக்கப்பட்ட, கோட்டங்கள் தோறுமுள்ள காணிகள் பொது மக்கள் வயமாயின. இம்மக்கள் மதவிரோதமான கொள்ளையினுற் பறிமுத லாக்கப்பட்ட நிலங்களுக்குரியராய் இருந்தது காரணமாகவே, புதிய முறை களுக்குக் கட்டுப்பட்டவர் ஆயினர். இந்நிலையிற்பெருந்தொகை நிலவாரக் குடிகளின் மீது செலுத்தப்பட்டு வந்த செல்வாக்கு முழுவதும் நேர்மாருய் மாற்றப்பட்டது. இலண்டன் மாநகரிலும் மற்றைய நகரங்களிலும் சமய இல்லங்களுக்குரியனவான பெறுமதியுள்ள முக்கியமான தலங்களும், அவற்றுக்குரிய பலவீடுகளும் பொதுமக்கள் வசமாயின. இந்நிகழ்ச்சி இடை விடாது வளர்ச்சியடைந்துவந்த புரட்டசுத்தாந்தத்துக்கும் புரோகித வெதிர்ப் புக்கும், வணிகத்திற்கும் இருந்த கடைசித் தடையை நீக்கியது. ஒட்சு போட்டிலும் கேம்பிரிச்சிலும் பெருந்தொகைத் துறவிகளும் சந்நியாசிகளும் இருந்தனர். அவர்கள் புதுக்கல்வியை எதிர்ப்பதற்கு ஆதரவு அளித்தவ TIT6) jfŤ. அவர்கள் மறைவினல் நேர்ந்த முதல்விளைவு யாதெனில், பல் கலைக் கழகங்களிற் பயின்றேர் தொகை குறைந்தமையேயாகும். இஃது இலாத்திமரைத் திகைப்படையச் செய்தது. ஆனல், அப்பல்கலைக் கழகங் களிற் பெருமக்களின் புதல்வர் தொகை கூடியதனல் மாணவர் தொகை கூடுவதாயிற்று. இப்புதிய வகுப்புக்குரிய சமயச்சார்பு இல்லாத பல்கலைக் கழக மாணவர் தங் கழகங்களை அரசவாதரவுக்குரியனவாக்கியது மன்றி, பொதுச் சேவையாளரைப் பயிற்றித் தருதற்கேற்ற கருவியுமாக்கினர். செசில், பேக்கன் முதலியோர் தம் பல்கலைக்கழகக் கல்வியினல் இலிச பெத்தரசியாரின் ஆட்சியில் நாட்டுப் பாலனத்தை நடாத்துவதற்கும் அறிவு
1545 ஆம் ஆண்டில் பிறந்த பிரான்சிசு திரேக்கின் கிறித்துவக் குடும்பத்திற்கு தாவிதோக் குத் துறவிகள் மடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காணி தேவன்சயரில் இருந்தது. இறசல் என்பார், குழந்தையாகிய பிரான்சிசுக்கு ஞானத்தந்தையாயிருந்து அக்கிறித்துவப் பெயரை இட்டார். அப்பெயர்உலகமெங்கணும் அப்பிள்ளையாற் புகழ்பெறுவதாயிற்று.

துறவி மடங்களின் மறைவு 459
வளம் மிக்க புதியதொரு சமுகத்தை வளர்ப்பதற்கும் தம்மைத் தகுதி யுடையோராக்கினர். உலகியற் குருமாரால் மட்டும் மேற்பர்வையிடப்பட்ட துறவிகளின் நிருவாகத்தில் ஒட்சுபோட்டும் கேம்பிரிச்சும் அமைந்திருக்கு மாயின், இத்தகைய சமூகம் ஒருபோதும் வேரூன்றித் தழைத்திராது.
ஆயினும், துறவிமடங்களுக்குரிய நிலங்களைப் பங்கிட்டமுறை கல்விக்கு மாருய் நேர்ந்ததொரு பாதகச் செயலாகும். துறவிமடங்களினதும்-அவற் றுக்குப் பின் என்றியின் இறுதிச் காலத்திலும் VI ஆம் எட்டுவேட்டின் ஆட்சித் தொடக்க காலத்திலும் சூறையாடப்பட்ட-திருக்கோவில்களினதும் செல்வம், சில மடங்களோடும், பல திருக்கோவில்களோடும் முன்பு இணைக்கப்பட்டிருந்த பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டுதற்கும் அவற்றைப் பெருப்பித்தற்குஞ் செலவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டான செயல் எலவேநிகழ்ந்துவிட்டது. எவ்வாறெனின், ஊல்சி, பின்னளிற் “ கிறித்து திருச்சபைக் கல்லூரி ’ யென வழங்கிய தமது “ காடினல் கல்லூரி' யின் நன்மைக்காகத் தாம் ஒடுக்கிய சமயப் பதிகளின் செல்வத்தைப் பயன் படுத்தினர். கேம்பிரிச்சில் ஒழுக்கக்கேடு காரணமாகத் தடுத்து வைக்கப்பட்ட கன்னிமடமொன்று 1496 ஆம் ஆண்டிலேயே இயேசு கல்லூரி என மாற்றியமைக்கப்பட்டது. VI ஆம் என்றி கேம்பிரிச்சிலுள்ள “திரினிற்றிக்கல்லூரி' யைப் பெரும்பாலும் துறவிமட நில வருவாயைக் கொண்டு கட்டத்தொடங்கினன். எஞ்சியிருந்த மடங்களின் கொள்ளைப் பொருளைக் கொண்டு யாது செய்திருக்கலாம் என்று நாம் உணர வேண்டின் இச்செயலை ஒரு போதும் மறக்கக்கூடாது. இங்கி லாந்து கைத்தொழிற் புரட்சிக்கு முன்பே கல்வியறிவிற் சிறந்த குடியாட்சி நாடாய் மாறியிருந்திருக்கலாம். அப்படியானல், அப்புரட்சியை விழுமிய மக்கட்பண்பு நிறைந்த வழிகளில் இங்கிலாந்து இட்டுச் சென்றிருக்கலாம். ஆனல், ஊழல்நிறைந்த இந்த உலகப்போக்கில், மடங்களினதும் திருக் கோவில்களினதும் நிலத்தைப் பொது மக்கள் நலனுக்காக முழுவதும் வழங்கும் இவ்வொழுங்கு, இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் “ஆசைக் கற்பனையாக ” மட்டும் இருந்தது. கருவூலம் வெறுமையுற்றது ; அரச வையத்தார் பொருள் பெருமையாற் பேராசை கொண்டனர் ; இவற்றல் மடங்களுக்குரிய நிலங்களைத் தனிப்பட்டவர்க்கு விரைந்து விற்க நேர்ந்தது.
துறவிகள் தம் நிலங்களைக் கண்காணிப்பதிலேதிறமையற்றவராயிருந்தனர். ஏனெனில், அவர்கள் பெருந்தொகை கடன்பட்டோராயிருந்தமையாலென்க. அவர்களை அவர்தம் நிலவாரக் குடிகளோடொப்பிடும்பொழுது, பெரும் பாலும், பொதுமக்களிலும் மிகவுயர்ந்தோராயோ, தாழ்ந்தோராயோ காணப்பட்டிலர். கூட்டுத்தாபனங்களின் போக்குப் போல அவர்கள் பெரும் பாலும் பழைய முறைகளையே கைக் கொண்டனர். அதாவது, திறமையிலும் கண்டிப்பிலும் குறைந்தவராயினர். ஆயினும், அவர்களுடைய இம்முறை மைக்குட்படாத பல விதிவிலக்குக்களுமிருந்தன. மடங்களுக்குரிய பல

Page 240
460 துறவி மடங்களின் மறைவு
நிலங்களிலிருந்து மக்கள் அகற்றப்பட்டு, அவைகள் அடைக்கப்பட்டன. பிசப் பாண்டவராகிய இலாங்கிலாந்தென்பார், 1526 ஆம் ஆண்டில் சில துறவி மடங்களைப் பற்றிக் கூறும்பொழுது, சமயச் சார்பில்லாத பொது மக்களிலும் மேலாகத் துறவிகள் சிலர் தம் நிலவாரக் குடிகளைக் கொள்ளையடித்தனரென்று குறிப்பிட்டுள்ளனர். துறவிமடங்கள் அழிந்ததும் பல நிலவாரக் குடிகள் வாடகைக் குத்தகையேற்றத்தால் வருந்தியமை உண்மையேயாகும். இக்குத்தகையேற்றம், நிலம்பற்றி இலாப நட்டங் கருதாது வணிகஞ் செய்யப்பட்டமையாலும், பறிமுதலாக்கிய நிலங்களைப் பெறுதற்கு போட்டியிட்டு முன்வந்த பொதுமக்கட்கு அவற்றை அடிக்கடி விற்றமையாலும் உண்டானதாகும். ஆனல், இதுவும் எப்போதும் நிகழ்ந்த தொன்றன்று. துறவிகள் தமது நிலங்களை மேற்பார்வை செய்வதைப் பெரும்பாலும் முழுதுங் கைவிட்டு, அந் நிலங்களை நீண்டகாலக் குத்தகைக் குக் கொடுத்தனர் ; ஆனல், நிலங்கள் கைமாறியபோதும் குத்தகை மாறதிருந்தது.
துறவிகளும், துறவிப் பெண்டிரும், ஒய்வுகால வேதனத்திலும் தரும சாதன வருவாயிலும் வாழ்ந்துவந்த பொதுமக்களும் தம் பிறப்பாலும் உறவாலும் உயர்குடியைச் சேர்ந்தவராகவும் செல்வமுடையவராகவுமிருந்த னர். துறவிமடங்கள் அக்காலத்திலே குடியாட்சிமுறையைத்தழுவியதுமில்லை; அறிவுவளர்ச்சியை ஊக்கியதுமில்லை. அவற்றின் வருவாயிலிருந்து வறியார் பிச்சைக் கென விடப்பட்ட பாகங் குறைவதாயிற்று. ஆங்கிலத் துறவி மடத்தைப் பண்டை நாளிற் றிகழச் செய்து வந்திருந்ததான காலக்கிரம வரலாற்றை எழுதும் வழக்கம், ஒழிந்தது. அதற்குப் பதிலாக அறிவியன் முயற்சியெதுவும் வேறெவ்வகையிலும் தோன்றவில்லை. கொலற்று, மூர், இராசுமசு என்போருக்குத் தங்களது சீர்திருத்தக் கொள்கையை எதிர்ப்ப வராகத் துறவிகள் காணப்பட்டனர். மேலும், மடச் சந்நியாசிகளோ வழக்க மான மிகவிழிந்த மூடநம்பிக்கையைத் தத்தம் நலத்துக்காகப் பயன் படுத்துபவராக அவருக்குத் தென்பட்டனர். மறுமலர்ச்சி காரணமாய்ப் புத்துயிர்பெற்ற பழைய இலக்கிய அறிவும் சிறித்துவ வேத அறிவுத்திறனு முடையோரை மடத்திற்காண்டல் அரிதாயிற்று. துறவிகள் உடலுழைப்பைக் கைநெகிழ விட்டனர். தம்மைப் புகழ்ந்து வந்த உலகில், முன்னர் மிகுந்த செல்வாக்களித்த அவர்தந் துறவற வாழ்க்கை இப்பொழுது புகழப்படாதும் பயிலப்படாதும் இருந்தது. துறவிமடங்களிலும் கன்னியர் மடங்களிலும் இடையிடையே பல அவதூறுகள் உண்டாயின. ஆயினும், மடங்களின் அழிவுக்கு முன் “ சமயப் பற்றுடையோர்’ பெரும் அவதூறுகளுக் குட்படா மலும் தம்மையடுத்துள்ளோருக்குக் குறிக்கத் தக்க பயனின்றியும் ஆறுத லாய் வீண்காலங் கழிப்பாராயினர். பல தலைமுறைகளாகப் பத்தியுடையோ ரின் தருமசாதனங்கள் மடங்களுக்கு அளிக்கப்படாது, திருக்கோவில்களுக்
இவ்வதிகாரத்தின் இறுதியிலுள்ள குறிப்பைக் காண்க.

துறவி மடங்களின் மறைவு 461
கும் பிறவுக்குமளிக்கப்பட்டு வந்தன. முந்நூருண்டுகளுக்கு முன் துறவிகள் தொகை 25 வீதம் விழுக்காடுற்றது. மடங்கள் குலைவுற்றபொழுது, அத் தொகை எழாயிரம் ஆயிற்று. உரோமாபுரியுடன் நேர்ந்த பிளவுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே மடங்களை ஒடுக்குதற்கான இயக்கம் வைதிக பிசப்புமாராலும் சமயக் கருதினல்மாராலும் ஊக்கப்பட்டுவந்தது.
புது ஊழிக்கு மிக ஏற்புடையவான பிற பொதுக் கருமங்களுக்கு அவர்களின் தரும சாதனங்களைச் செலவு செய்தற்கு உண்மையில் உறுதி யான வாய்ப்புக் கிடைத்தது. அன்றியும், போப்பாண்டவரோடு நேர்ந்த பிளவு நிலைக்க வேண்டுமாயின், அவருக்குரிய பரிவாரம் நீக்கப்படுதல் வேண்டும். ஆனல், ஒருசில சான்றுகளை மட்டுந் துணைக்கொண்டு இழிவான
குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதையிட்டும் கிளாத்தன்பரி மடத்தலைவரையும்
“சமயப்பற்றுடையோர்’ பலரையும் சட்டமூலமாய்க்கொலை செய்ததையிட்டும் யாதுங் கூறுதற்கில்லை. எனினும், இச் செயல்கள் எல்லாம் நிகழ்ந்தமை அவர்கள் நிலபுலங்களை விரைவில் அபகரித்தற்கும் அவைகளைத் தனி மக்க ளுக்குச் சேரச் செய்து அம்முகத்தாற் சிறிது காலம் கருவூலத்துக்கு உதவியளித்தற்குமேயாகும்.
இலிங்கன்சயர் யோக்குசயர்களிலும், நிலமானியத்துக்கும் இடைக்கால்த் துக்குமுரிய சமூகம் அன்றுந் தழைத்தோங்கிய வடவெல்லை மாநிலங்களி லும் துறவிகள் மீது இன்னும் மக்கள் பத்தி செலுத்தி வந்தனர் ; அது போலவே, பழைய சமயத்தையும் மதித்தனர். அருட்டிரு யாத்திரையென் னும் பெயர் பூண்ட எழுச்சியே அதன் பேருகும். தற்காப்புக்குரிய வீரவே ளாண் படையினர் சிலரன்றி என்றியிடம் பிறிது படையிருக்கவில்லை. வீரவேளாண் படையினர் அல்லாதார் எதிர்த்தெழுந்திருந்தால், அல்லது அரசனை ஆதரிக்க மறுத்திருந்தால், அவன், வீழ்ச்சியடைந்திருப்பான் ; அன்றேல், தனது பூட்கையை முழுவதும் மாற்றியிருப்பான். ஆஞல், இலண்டனும் அதன் தென்பாகமும் நடுநாடுகளும் அவனை ஆதரித்து யாத்திரிகரின் கிளர்ச்சியைத் தடைப்படுத்தின. குடிமக்களின் இச்செயல் வியப்புக்குரியதன்று ; அரசனும் மேன்மக்களும் மடங்களை எதிர்த்தெழுந்த தற்கு மிக முன்னராகவே சென் அல்பான்சிலும் பெரிசென் எட்டுமண்டி லும் பிறவிடங்களிலும் நாட்டவரும் நகர மாந்தரும் 1881 ஆம் ஆண்டிற் கிளர்ச்சி செய்திருந்தனர்.
எஞ்சிய திருச்சபையினரும் “ சமயப்பற்றுடையோரின் ” சண்டையை ஆதரிக்குமார்வம் அற்றவராக இருந்தனர். இம்மைக்குரிய குருமார்
* மடங்களின் நிலைமையைக் குறித்துச் சான்று பெறுதற்கு எட்டாம் என்றியின் ஆணை யாளரின் அறிக்கைகளை வரலாற்றசிரியன் எவனும் கருதுவதில்லை. ஆனல், தலைமைக் குருமாரின் ஆணைக்குட்பட்டிருந்த மடங்களை அவர் பார்வையிட்டு வந்தமை சம்பந்தமான செய்திகளிலிருந்து சிறந்த சான்றுகளைப் பெறலாம்.
1536.

Page 241
462 மூடநம்பிக்கையை ஒழிக்கும் போராட்டம்
பல நூற்றண்டுகளாகத் துறவிகளையும் சந்நியாசிகளையும் தம் பகை வராய் மதித்தனர். இத்துறவிகள் அவர்களிடமிருந்து பத்திலொருபங்கு வரியும் ஊதியமும் பெற்றனர் ; அவர்களின் சமயத் தொண்டினுக்குப் போட்டியாகத் தொண்டாற்றினர் ; அன்றியும், அவர்களின் தலைவர்களா கிய பிசப்புமாரின் அதிகாரத்தையும் புறக்கணித்தனர். இங்கிலாந்தில் கத் தோலிக்கத் திருச்சடையிலுள்ள இவ்விரு திறத்தார்க்கும் உண்டான இவ் வெதிர்ப்பு முற்காலத்தில் எத்துணை வலிமையடைந்திருந்ததோ, அத்துணை வலிமையுடையதாய்ச் சீர்திருத்தத்துக்குச் சிறிது முன்னரும் இருந்தது. இவ்வுளப்பாங்கே பின்னிகழ்ந்தனவற்றுக்குப் பெரிதுங் காரணமாயிற்று. குருவாயத்திலிருந்தும், முன்னேற்றக் கருத்து மிகுந்த பொது மக்களி லிருந்தும் பிரிந்துள்ளவரும், தம் பாதுகாப்புக்கு உரோமாபுரியை எதிர்பார்த் திருந்தவருமாகிய துறவிகள், பேருக்கங் கொண்ட நாட்டுப்பற்றுடையோர் ஆங்கிலத் திருச்சபை நிறுவுதலை மிகுந்த ஆவலோடு மேற்கொண்டபோது, தப்பிப் பிழைக்கவியலாது தனிப்படுத்தப்பட்டனர்.
அத்திருச்சபையில் பிசப்புமார் வேதக் கட்டளையையும் ஒழுங்கையுஞ் சிறி தும் மாற்றது தங் கடமையைச் செய்து வந்தனர். போப்பாண்டவருக்குப் பதிலாக அரசனைத் தந்தலைவராய் எற்பது அவர்க்கு இலகுவாயிற்று. ஏனெனில், போப்பாண்டவர்க்குரிய பணியாளராய்க் கடமையாற்றுவதிலும் அரச பணியாளராய்க் கருமமாற்றுவதை அவர் பல்லாண்டு தோறும் பழகி வந்தமையாலென்க. இடைக்கால ஆங்கிலப்பிசப்புமார்க்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கவர், வைக்காமிலிருந்த உவில்லியமேயன்றிப் பெக்கற்று அல்லர். பிசப்புமார், குடியிற் சேவையாளராய்ப்பெற்ற அனுபவமும், பாராளுமன்றத்திலும் கோமறைக் கழகத்திலும் அவர் காட்டிய திற மையும், திருச்சபையும் அரசனும் இட்ட உரிமைப் போட்டிகளுக்கிடையே நின்று அவர்களே உடன்படுத்தும் வழக்கமும், சமயப் பெருமாற்றத் திற்கமைவாக அன்னர் இணைந்தொழுகுவதற்குப் பெரிதும் துணையாயின. ஆனல், துறவிமடத் தலைவரிற் பலர் நாட்டின வாழ்க்கையைக் கைவிட்ட னர் ; அவருள் பாராளுமன்றத்திற் பணியாற்றினேர் மிகச்சிலராவர் ; மடத்துக்குரிய கருமங்கள் அல்லாத புறக் கருமங்களிற் கலந்து கொண் டார் அவர்களுள் யாரும் இலர். ஆகையால், இக்கால இங்கிலாந்தில் பிசப்புமார் பேரிடம் வகித்தமையும் துறவிமடத்தலைவர் சிற்றிடமேனும் வகியாமையும் இயல்பே. பிரபுக்கள் சபையில் பிசப்புமார்க்குச் சமமாக வீற்றிருந்த அத் துறவிமடத் தலைவர்களின் மறைவினல் அச்சபைக்குரிய ஆன்மீக ஆதிக்கம் பெரும்பான்மையோரிடங் காணப்படாது சிறுபான்மை யோரிடமே காணப்பட்டது. இம்மாற்றம் பெரிதுங் குறிப்பிடத்தக்கது.
என்றி, திருச்சபையின் முதன்மையான தலைவனுயமைந்து தன் குடி களின் சமயத்தைச் சீர்ப்படுத்தும் முறைகளே மேற்கொண்டான். அன்றியும், அதன் மூலம் உரோமாபுரியுடன் நேர்ந்த பிளவையும் முற்ருக உறுதிப்

மூடநம்பிக்கையை ஒழிக்கும் போராட்டம் 463
படுத்தினன். போப்பாண்டவரின் ஆணையிலிருந்த ஐரோப்பாவை அறிவுத் துறை மூலம் தொடர்புபடுத்திவந்த திருமுறைச் சட்டப்படிப்பு நிறுத்தப் பட்டது. அப்போது, முழுதும் சமய பற்றுக்குரிய தன்மை வாய்ந்த மாற்றங் களுமுண்டாயின. கவலையும் சினப்புங் கதித்து வந்த தன் முதுமையில், என்றி தனது ஆர்வம் வாய்ந்த இளமைப் பருவத்தில் ஒட்சுபோட்டுச் சீர் திருத்தக் காரரிடமிருந்து கற்றுக்கொண்ட் சிறந்த இலட்சியங்களை மிக விரைந்து செயற்படுத்தினன். இச்செயல், மக்கள்மீது துறவிகளுக்கும் சந்நி யாசிகளுக்கும் போப்பாண்டவருக்கடங்கிய குரவர்க்குமுள்ள செல்வாக்கைக் குறைத்தது. கொலற்றினலும் இராசுமசினலும் நிராகரிக்கப்பட்டவையும் மக்களிடத்தில் மட்டற்றுக் காணபபட்டவையுமாகிய மூட நம்பிக்கை, படிற் ருெழுக்கம் என்பவற்றை வளர்த்துவந்த நினைவூட்டுச்சின்னம், திருவுருவம் என்பவற்றின் வழிபாட்டையும் மன்னிப்புமுறை வணக்கத்தையும் அரசன் கடுமை மிகுந்த தன் அதிகாரத்தால் நீக்கினன். நாடெங்கணும் நினைவூட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன , அற்புதஞ் செய்யும் திருவுருவங்கள் அகற்றப் பட்டன : எளிதில் நம்பும் மக்களியல்பை எமாற்றிய அத்திருவுருவங் களின் பொய்ம்மை மக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது. “இதோ பாருங்கள்; எங்கணும் சமய வேதாளம் தகர்க்கப்படுகின்றது. பபிலோனிய இந்திரசாலஞ் செய்யும் மணி துண்டுதுண்டாக உடைத்தெறியப்படுகின்றது” என்றனர் சீர்திருத்தக்காரர். ஆங்கிலேய யாத்திரிகருக்கு நெடுங்காலமாய்ச் சிறந்த தலமாயமைந்த, தோமசு பெக்கற்றின் சமாதியும் அதனை வழிபடும் மரபும் முற்றக அழிக்கப்பட்டன. நன்மை தருஞ் சட்டங்களை யொழித் தற்குத் தம்மிராச்சியத்திலிருந்து உரோமாபுரிப் போப்பாண்டவரிடத் தும் பிரான்சுக்கும் தப்பியோடிய புரட்சிக் காரனென்று, “ துய மகிழ்ச்சியுள்ள உயிர்த்தியாகியாகிய ’ அவர் இப்புதிய ஊழியிற் கூறப்
L. IL TITI,
இவ்வாறிருக்கையில், கிருன்மெரது தலைமையில், மக்களின் சமய இயல் பூக்கங்களுக்கு ஒரு புதுவகைக் கிளர்ச்சியூட்டுதற்கு முயற்சிசெய்யப்பட்டது. அதிமேற்றிராணியார் வழிபாட்டு முறைகளைத் தாமே ஆங்கிலத்தில் அமைக்க லானர். இவை, அடுத்தவாட்சியில் வெளியான வழிபாட்டு நூலில் இடம் பெறலாயின. ஆனல், இதற்கிடையில், என்றியரசன் குருமார் தஞ்சபை யார்க்கும், தந்தையர் தம் பிள்ளைகட்கும் கருத்தர் செபத்தையும் பத் துக் கற்பனைகளையும் விசுவாசப் பிரமாணங்களையும் ஆங்கிலத்தில் ஒதவும் கற்பிக்கவும் முறையே ஆணை பிறப்பித்தான். இவற்றுக்கு மேலாகக் கிருன் மெரின் தூண்டுதலால் ஆங்கில விவிலிய நூல் கட்டுப்பாடின்றி எங்கும்
சமயப்புத்தமைப்பின் மறைமுக விளைவு யாதெனின், திருச்சபை மன்றுகளின் சுதந்திரத்தை
மட்டுமன்றி, வாழ்க்கைக்குரிய பொதுவான விடயங்களின்மீது அவற்றுக்கிருந்த அதிகார வெல்லையையும் குறைத்ததாகும். உதாரணமாக, மானக்கேடு, அவதூறு சம்பந்தமான வழக்குக்களை விசாரித்தல் படிப்படியாகத் தியூடர், சுதுவாட்டர் காலத்திற் பொது நீதிமன்று களுக்குரியதாயிற்று.
17-R 6344 (12162)

Page 242
50.
539.
S42.
犁64 ஆங்கில விவிலிய நூல்
பரவிவர அனுமதிக்கப்பட்டதோடமையாது, ஒவ்வொரு கோயிற் பற்றிலும்
வைக்கப்பட வேண்டுமென்றும் ஆணை பிறந்தது. சிறந்த அறிஞரும் பிராணத்தியாகியுமான திண்டேலின் விவிலிய மொழி பெயர்ப்பையும் அவரினும் சிறிது புல்மை குறைந்தவரும் அவர்க்குப் பின் வந்தவருமாய மைல்சு கவடேலின் மொழி பெயர்ப்பையும், திண்டேல் விரும்பியபடி கம்மியரும் “ கலப்பையால் வாழும் ” கமக்காரரும் அறிவாராயினர். திருச் சபை ஊதியத்தைப் பாராளுமன்றத்திற் றக்கத் தொடங்கி, பின் மடாலய நிலங்களை அரசனட்சிக்குட்படுத்துவதாய் நடைபெற்றுவந்த ஆங்கிலநாட்டுச் சீர்திருத்தம், ஈற்றில் விக்கிளிபு விரும்பியவாறு, வேதநூல்களில் மக்கள் கொண்ட புலமையைச் சமய அடிப்படையாகக் கொண்டதாயிற்று. இவ்வா ருக, அச்சீர்திருத்தம் மேரியின் சமயத் துன்புறுத்தலை எதிர்க்கவேண்டிய வலிமையை யடைவதாயிற்று. அப்போது செம்மான்களும் ஆடைவணிகரும் வறிய பெண்டிரும் தாம் ஈற்றில் அறிந்துகொண்ட இலட்சியத்திற்குத் தம்மை விருப்பத்தோடு தியாகஞ் செய்தனர்.
என்றி இங்கினமாகச் சீர்திருத்தத்துக்கு வழிதிறந்துவிட்டதன் விளை வாகப் பெருகிய புரட்சி வெள்ளத்திற்கு எல்லைகட்டி நிறுத்தும்படி ஆஞ்ஞையிடவும் நேர்ந்தது. போப்பாண்டவர்க்கு மாருண சேர்மனியிலி ருந்து குருெம்வெல் கொணர்ந்த கிளிவிசு நாட்டு ஆன் என்னும் அவ னது பிற்காலத்து மனைவியருளொருத்தியின் வேண்டா வருகையும்,ஐரோப் பிய அரசியற் பூட்கைக்குரிய துயரார்ந்த எண்ணங்களும் சேர்ந்து கருமங்கள் அளவுகடந்தும் மிக விரைந்தும் நடைபெறுகின்றன என்பதை அவனுக்கு நினைவூட்டச் செய்தன. குருெம்வெலின் தலை துணிக்கப்பட்டது. ஆறு உறுப்புக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி “பொருள் மாற்றக் கோட்பாட்டை’ மறுத்தால், அல்லது செவிவாயிலாகப் பாவ மன்னிப்புப் பெறுதற்கு வேண்டிய அவசியத்தையும், குருமாருக்குரிய பிரமசரியத்தையும் மறுத்தால் அவற்றுக்குத் தண்டனை மரணமேயாகும் என்று விதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையில் ஊனுண்டமைக்காக இலண்டனில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். புரட்டசுத்தாந்தரைத் தீக்கிரை யாக்குதல் அமைதியாகவும், அவசரப்படுதலின்றி ஆறுதலாகவும் நடை பெற்றது. இலாத்திமெர் அரச வாழ்க்கையை விட்டுத் தனி வாழ்க்கை நடத்த நேர்ந்தது. ஆனல், கிருன்மெர் அதிமேற்றிராணியாராகவே விளங்கினர். இஃது ஒருவகையில் ஊசலாட்டமேயன்றிப்பெரும் பூட்கை மாற்றமன்று. ஐந்தாம் மனைவியாகிய கதரீன் ஒவாட்டு, ஆன் பொலினது இயல்பைப் பெற்ற ஒரு கத்தோலிக்கப் பெண்ணுவள். ஆன் பொலினிடங் காணப்பட்ட குற்றங்கள் இவளிடத்துங் காணப்பட்டன. புரட்டசுத்தாந்தி
யான அவளுக்கு நேர்ந்த கதியே கத்தோலிக்க கதரீனுக்குங் கிடைத்
தது. தப்பிப் பிழைத்த கதரீன் பார் என்பவள் சீர்திருத்தக்காரருடன் விழிப்பாகச் சார்ந்து நின்று சமயப் பூட்கையைச் சமரச மனப்பான்மையுடன் செயற்படுத்துவாளாயினள்.

எட்டாம் என்றியின் மரணம் 465
என்றி, உண்மையில் மீட்டும் எற்படவிருந்த மாற்றத்தைத் தடுக்கவும் சமய வாதிகளை அச்சுறுத்தவும் முயன்றன். அவற்றில் அரசன் தன் கருத்தைச் சிலகாலத்துக்காயினும் வற்புறுத்த விரும்பினன். இவ்வேளை யில் விவிலிய நூலைத் தாமே படிக்கவும் தாம் விரும்பியபடி அமைதி யாகச் சிந்திக்கவும் மக்களுக்கு உரிமையிருந்தது. ஆறு உறுப்புக்கள் சட்டத்தையும் பொதுமக்கள் விரும்பிக்கொண்டனர். ஏனெனில், அவ்வ மயத்தில் பெரும்பான்மையோர் போப்பாண்டவரைச் சார்ந்த கத்தோலிக்க ராகவோ புரட்டசுத்தாந்தராகவோ இருந்திலர். அவர்கள் சமயப் பொறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. அச்சட்டம் கண்டிப்பாகவோ, ஒழுங்காகவோ நடைமுறையிற் கொண்டுவரப்படவில்லை. என்றி தன் குடி களிற் பெரும்பான்மையோரின் விருப்பத்தைத் தழுவிக்கொண்டான். தன்னட்சியின் கடைசி ஆண்டுகளில் வேற்றுநாட்டாரின் பகைமையை எதிர்க்கக் குடிகளின் உண்மையான ஆதரவு அவனுக்கு இருந்தது. ஆனல் காலம் மாறவேண்டியிருந்தது ; அந்நேரத்தில் இங்கிலாந்தின் அரசன் ஒருவனைக் கட்டளையிடுதற்குத் தகுந்த ஒரேயோர் ஆன்மிக அதி காரிபால் என்றி அழைக்கப்பட்டபோது, இன்னெரு செயலில் முன்னேறிச் செல்வதையிட்டுச் சிந்தனை செய்துகொண்டிருந்தானென்பதற்கு அறிகுறி d!50MI disf607UULL 60T.
460 ஆம் பக்கத்துக்குரிய குறிப்பு.
பெருநிலக்கிழாராயிருந்த துறவிகள்:-1517 ஆம் ஆண்டில் ஊல்சி எழுதிய “நிலவடைப்புத் தீர்ப்புநாள் ” என்னும் நூலைத் திரு இலிதம் என்பவர் புள்ளிவிவரங்களைக் கொண்டாராய்ந்த முடிவு வருமாறு :-ல் " வெளியேற்றஞ் செய்தது பெருநிலக்கிழாரின் தொழிலோ, நிலவாரக் குடிகளின் தொழிலோ என்ற விசாரத்தை மறந்துவிடவேண்டும். பிற் சந்ததியார் கருதியபடி கோயில் நிலங்களிலிருந்த உழவர்க்குப் பாதுகாப்பு யாதும் இருந்ததில்லை. துறவிமடங்கள் நிலவியபோதே அவற்றுக்குரிய பெரு நிலக்கிழார் பிற்காலத்திற் பெற்றுக்கொண்ட புகழைப்போல, அக் காலத்திலும் நல்லவர் என்று புகழப்பட்டிலர் என்பது வியப்புக்குரிய தன்று ”. சேர் தோமசு மூர் எழுதிய “ கற்பனை உலகம்’ (யூற்றேப்பியா) என்னும் நுலிற் கூறியது வருமாறு :-" மேன் மக்களும் உயர்குடிமக் களும் துறவி மடத்தலைவர் சிலரும் பத்தியுள்ள மக்கள் சிலரும் தம் மூதா தையரும் முன்லுள்ளோரும் வருடந்தோறும் பெற்றுவந்த நிலவரு வாயும் ஊதியமும் தமக்குக் கிடைக்கப்பெருமையால், பயிர்ச்செய் கைக்கு நிலம் விடுகின்றிலர். எல்லா நிலங்களையும் மேய்ச்சல் நிலமாக அடைக்கின்றனர். கிராமங்களையும் வீடுகளையும் அழிக்கின்றனர். கோயிலை மட்டும் ஆட்டுத்தொழுவம் ஆக்குதற்கு விடுத்து எனையவற்றை அழிக்கின்ற
9
67 IT.

Page 243
466
அத்தியாயம் IV
புரட்டசுத்தாந்த, கத்தோலிக்க இடை நிகழ்ச்சிகள். VI ஆம் எட்டுவேட்டும் (1547-1553) 1 ஆம் மேரியும் (1553 - 1558)
V1ஆம் என்றி தன் பொறுமையான தந்திரத்தாலும், VI ஆம் என்றி அகம்பாவத்துடன் கூடிய தன் ஆற்றலாலும் இக்கால இங்கிலாந் துக்கு அத்திவாரமிட்டனர். அப்பொழுது நாட்டில் ஒழுங்கு மீண்டும் நில வியது. விழுமியோரும் அவர்தம் உரிமை எவலாளரும் அடக்கப்பட்டனர். இங்கிலாந்தின் எல்லா மூலை முடுக்குகளிலும், உவேல்சிலும்கூட, அரச ஆலோசனைக் கழகத்தாலும் பாராளுமன்றத்தாலும் வேத்தியல் ஆட்சி உண்மையில் நிலவியது. அரச கடற்படை நிறுவப்பட்டது. உலகியலும் ஆன்மிகமும் சார்ந்த அந்நாட்டின் சுதந்திரம் ஐரோப்பாவின் முன்னிலை யில் நிலைநாட்டப்பட்டது; திருச்சபையையும் அரசையும் பற்றியெழுந்த மக்கட்புரட்சி நிறைவெய்தியது. ஆனல், இவையாவும் நிறைவெய்தியவிடத் தும் பாதுகாக்கப்பட்டில. VI ஆம் என்றி இறந்தபோது, அரசு கடனில் மூழ்கியிருந்தது. நாணயத்தின் மதிப்புக் குறைக்கப்பட்டிருந்தது. அவன் பலாற்காரத்தினல் அடக்கியனவாகத் தோற்றிய சமயப்பூசல்கள் மீட்டும் கட் டாயமாய் வீறுகொண்டு எழவேண்டியனவாயிருந்தன. உடனடியாகப் பயன்தரத்தக்கதும் நயமுடையதுமான முறையில் நாடு ஆளப்படாவிடினும், ஆட்சியறவு நிலையையோ எதிர்புரட்சியையோ விளைக்கும் உண்ணுட்டுக் கல கத்தைக் தடுக்கக்கூடியதும் புதிய அரச திருச்சபை ஏற்கக்கூடியதுமான சமயமொன்றை உண்டாக்காவிடினும், தியூட அரசர்களின் சாதனை இன்னும் அழிதல் கூடும். அறிவுள்ளவரும் எவற்றிலும் ஐயப்பாடு உடையவருமான இலிசபெத்தரசியார் இப்பிரச்சினைகளை ஈற்றிற்றீர்த்து வைத்தார். தம் தந்தை யார் இறப்புக்கும் தாம் அரசுகட்டில் எறியதற்கும் இடைப்பட்ட பன்னி ராண்டு வரையும் அரசானது, பேதையர், துணிவுச் செயலினர், வேற்று நாட்டார், மதவெறியினர் என்போர் பொறுப்பில் இருந்தது. அவர்கள் தியூடவரசர் முயற்சியைப் பெரும்பாலும் அழித்தனர்; அன்றியும், அவர்கள் சமயப்பூசலாற் றக்கப்பட்ட இங்கிலாந்தைத் தரையிலும் கடலிலும் இசுப் பெயினின் ஆட்சிக்குட்பட்ட ஒரு கடையாய நாடென்னும்படி செய்தனர்.
அவ்வாறிருந்தும், இப்புகழற்ற காலம் சிறிதும் பயனில்லாத தொன் றன்று. சமயக் கட்சிகளும், அவைகளின் குறிக்கோள்களும் மிகத் தெளி வாய் வரம்பு செய்யப்பட்டன. அரைவழி தூரத்தில் என்றியினல் நிறுவப் பட்ட கூடாரத்தில் மக்கள் நிலையாக வாழ முடியாதென்றும், ஆனல், நாடு உரோமாபுரியுடன் மீட்டும் ஒன்றுபடுதல், புரட்டசுத்தாந்த நெறியிலே தொடர்ந்து மேலும் செல்லுதல் ஆகிய இவ்விரண்டினுள் ஒன்றை மேற்

ஆறம் எட்டுவேட்டு 4.67
கொள்ளல் வேண்டுமென்றும் தெளிவாகக் காட்டப்பட்டது. அந்நேரத்தி லேயே போப்பாண்டவர்க்குமாருக உண்டாய நாட்டினவெதிர்ப்பை மக்கள் தம் மனதிற் பிறிதொரு பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாக மதித்தனர் ; அதுவே இசுப்பானிய ஆட்சிக்கு அடிபணியாமை. எட்டுவேட்டின் காலத்து வழிபாட்டு நூலும், மேரியின் காலத்துப் புரட்டசுத்தாந்த உயிர்த்தியாகமர பும் ஆங்கிலச் சீர்திருத்தத்தின் அறிவுநிலையையும் அறவொழுக்க நிலையை யும் ஒரு புதியமேன்மையான நிலைக்கு உயர்த்தின. அன்றியும், 1559 ஆம் ஆண்டிற் பிணக்கற்ற சமய நிலையை நிரந்தரமாக உண்டாக்க இலிசபெத் தரசியார்க்கு அவை நல்வாய்ப்பளித்தன. நாட்டின் புகழை இன்னும் மறைத்து ஊசலாட்டஞ் செய்து கொண்டிருந்த இத்தெளிவற்ற கொள்கை கள் நிலவியநாளில் இத்த கைய அருஞ்செயலைப் பன்னிரண்டாண்டுகளுக்கு முன்னர் எந்த மனிதனும் தன் அறிவு கொண்டு சாதித்திருக்க முடி uLIFTg5I.
VII ஆம் என்றிக்கும் சேன் சேய்மூருக்கும் மகனுகிய W1ஆம் எட்டுவேட்டு அரசு கட்டில் எறிய ஞான்று, அவனுக்கு வயது ஒன்பது ஆகும். அவன் உடல் நலக் குறைவுடையன். ஆண்டில் இளைஞனயினும் அறிவில் முதிய வன்; ஆர்வம் மிக்குடையன்; திட்ப குணமுடையவன்; தன் தந்தையினும் நேர்மை வாய்ந்தவன் ; ஆனல், தந்தையிலும் இரக்க குணத்திற் குறைந்த வன். பதினருட்டைப் பருவத்துக்கு முன் இறந்த அவனைப் பற்றி ஆராய்ந்து பார்க்கின், அவன் நெடுங்காலம் வாழ்ந்திருப்பின், அவன் றன் மாற்ருந் தாயின் மகளாகிய மேரி கத்தோலிக்க சமயத்தின் வீழ்ச்சிக்குக் காரண மாயிருந்ததுபோல, அவனும் தன் பேரூக்கத்தினல் சீர்திருத்தத்தைப் பாழாக்கியிருந்திருப்பான். அவன் உயிருடன் இருந்த காலம்வரையும் அவன் பொருட்டு இருவர், ஒருவர்பின் ஒருவராய் நாட்டாட்சியை நடத்தி வந்தனர். முன்னவர், ஆத்திரமிக்க இலட்சியவரீதியும் சோமசெற்று என் னும் காப்பாளருமாகிய அவன்தன் மாமன் சேய்மூராவர். பின்னவர், தன் னலங்கொண்டவரும் பேராசையுடையவரும் பிறிதொரு கோட்பாடுமில்லாத வருமான வாவிக்கு வேளும் நொதம்பலாந்துக்கோமகனுமாகிய யோன் இடட்டிலியாவார்.
ஆனல், எட்டுவேட்டின் ஆட்சி, அக்காலச் சமயவாழ்க்கையில் அதிகாரம் படைத்த இருவரால் பயனின்றிப் போகாவாறு காக்கப்பட்டது. இவர்களில் முதலாயுள்ளவர் அதிமேற்றிராணியாராகிய கிறன்மெர் ஆவர். பிற்காலத்து இலத்தீனிலிருந்து, தியூடர் காலத்துக் கலப்பற்ற ஆங்கிலத்திற் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்ட அவர்தம் வழிபாட்டுநூல், புதியதையும் பழையதை யும் இணைத்தது. அன்றியும், பெரும்பாலான மக்களின் மனப்போக்குக்கும் அவர்களின் உயர்ந்த உணர்ச்சிக்கும் எற்புடைத்தாய் அமைந்தது. இத்தகைய கவர்ச்சி இன்றேல் மக்கள் தம்முட் பகைமைபூண்டு கட்சிகளாயப் பிரிந்திருப் பர். இது முதற்கொண்டு இங்கிலாந்துத் திருச்சபை, வேத்தியற் புரட்சி,
1547--
1553.

Page 244
468 கிருன்மெரும் இலாத்திமரும்
புரோகித எதிர்ப்புப் புரட்சி ஆகியவற்றின் முடிவில் எஞ்சியவற்றிலும் சிறிது கூடிய சிறப்புள்ளதாய் அமைந்தது : தனக்கு மிகக் கண்டிப்பாய்த் தேவைப் பட்ட தனக்காய ஒரு சமயச் சூழ்நிலையைப் பெற்றது. ஆனல், எட்டு வேட்டின் ஆட்சியில் மக்கள் எண்ணமெனும் கொந்தளிப்பு மிகுந்த கடலில், வழிபாட்டு நூலாகிய அக்கலம் தன் முதற்பயணத்தைச் செய்தது. அந்நூல் இறுதி வெற்றிபெற இலிசபெத்தரசியார் ஆட்சி எற்படும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆலோசனைக் கழகத்தில் அவைக்கஞ்சுங் குண முடையவரும் அமயங்கண்டு நடப்போருமாகிய கிருன்மெர் தம் படிப்பறையில் இருந்துகொண்டு எழுதுகோலைக் கையில் எடுத்ததும் தெய்வ அருள் பெற்றர் ஒருவரைப் போலானர்.
இவர்தம் நண்பரான இயூ இலாத்திமர் இவரினும் மிக வேறுபாடுடைய வர். இவர் என்றியின் ஆட்சியில் தம் புரட்டசுத்தாந்தக் கொள்கை காரணமாகக் கைவிட்ட சமயத் தலைமைப் பதவியை மீட்டும் ஏற்றிலர். ஆனல், பிரபுக்கள் கழகத்தில் பேராசையைத் தாக்கிப்பேசிடுமளவிற்கு அவர் எட்டுவேட்டின் ஆட்சியில் சுதந்திரம்பெற்றுச் சமயசீர்திருத்தத்தை பாது காப்ப வராயிருந்தார். இலாத்திமர் அருட்பவுலின் குருசடியிலே மக்களுக் கும், அரசர்க்குரிய பூஞ்சோலையில் அரச அவையத்தார்க்கும் அறிவுரை நிகழ்த்தி வருவாராயினர். திட்பமுடையனவும் தெளிவுடையனவுமான அவர்தம் அறிவுரைகள் ஆங்கிலப் போதபிடச் சொல்வன்மைக்கு ஒர் உரைகல் லாய் அமைந்தன. விவிலிய நூலுடனும் வழிபாட்டு நூலுடனும் சேர்ந்து இச்சொல்வன்மை அடுத்து வந்த நூற்றண்டுக் காலத்தில் மக்களைப் புரட்ட சுத்தாந்தத்திற்கு மாற்றியது.
அவ்வமயத்தில், வேத்தியற் சீர்திருத்தத்தின் கொடுமைகளே, அவற் றைக் கடிந்த தம் நேர்மையால் ஈடுசெய்ய முயன்றர். குழுமங்களையும் திருக்கோவில் ளையும் கொள்ளையடித்தலாகிய என்றியின் திட்டத்தைப் பூர்த்தி செய்வதுடன் எட்டுவேட்டின் ஆட்சி தொடங்கியது; மூடநம்பிக்கை யையும் கூலியின் பொருட்டு இறந்தோர்க்குச் செய்யும் வணக்கத்தையும் ஒழிப்பதற்காகவே யென்னும் காரணத்தைப் சாட்டாகக்கொண்டு அத் திட்டம் அமைக்கப்பட்டது. ஆனல், அஃது அவ்வெல்லையைக் கடந்து அரச வையத்தார்க்கு மிகுந்த கொள்ளைப் பொருளே நல்கிற்று. ஒடுக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களோடு இணைந்துள்ள பள்ளிகள் முதலில் அழிக்கப்பட்டன. பின்னர், அவற்றுட்சில எட்டுவேட்டு அரசனின் உயர்தரப்பொதுப்பள்ளிக் கென மீட்டும் நிறுவப்பட்டன. இலாத்திமெர்க்கும் அவர் காலத்தவர்க்கும் கல்வியென்பது சமயத்தின் ஒரு கூறய் விளங்கியது. அன்றியும், அவர் கல்வியின்றி புரட்டசுத்தாந்தம் ஒருகாலும் வேரூன்ற முடியாதென உணர்ந் தார். கல்வித் துறையில் ஆங்கிலத் திருச்சபைக்குப் பிற்காலத்தில் பெரும் புகழனித்த சுவல், கூக்கர் என்போர் முதல் வெசுக்கொற்று, கோட்டுமுதலி யோர் வரையிருந்த அருளாளரும், கலைஞரும் வருங்காலத்திற்றேன்ற

கோவிற் சொத்துப் பறிமுதலாதல் 469
வேண்டியவராயிருந்தனர். ஆயினும், நிகழ்காலத்தில் திருக்கோவில்களுக் குரிய நிலங்களைப் பகிர்ந்தோர் மிகுந்த செல்வராயினர். அவ்வாறு செல்வ ராதற்குக் கைக்கொண்ட முறையைச் சிறிதும் அவர்கள் கருத்திற் கொண் ις 6υή.
* கல்விக் கழகங்கள் ஆதரிக்கப்படுகின்றில ; கலைஞர் புகழ் பரப்பப் படுகின்றிலது ; போதனை நிலையங்கள் அழிகின்றன; மக்கள் தம்பிள்ளை களுக்கு நிலங்களும் செல்வமும் அளிக்கின்றனர். ஆனல் மிக வேண்டப் படும் இக் கடமையைப் பெரிதும் புறக்கணிக்கின்றனர். சிறிதளவு ஆங்கிலச் சமயவறிவை விட நாம் வேறென்றும் இல்லாதவராக வரவேண்டிய காலம் உண்டாகும். அப்பொழுது நாட்டில் அநாகரிகம் நிலவ, கல்வியறிவு அழிந்துவிடும். உரோமாபுரிப் பிசப்பின் ஆதிக்கம் விலக்கப்படல் வேண்டு மென்பதல்ல என்விருப்பம். அறிவுமிக்க கலைஞரையும் வறியோர் புதல் வரையும் ஆதரிப்பதற்கும் ஆன்ம ஈடேற்றத்தையும் கலைஞர்க்குக் கொடுக் கும் உதவியையும் பெறுதற்கும் வேண்டிய பொருளை அளிக்கவேண்டு மென்று உங்களை நான் இரக்கின்றேன். திருயாத்திரைக்கும் வழிபாட்டுக்கும் பாவமன்னிப்புக்கும் பாவநீக்கத்துக்கும் நீங்கள் உதவிசெய்வதுபோல அவற் றுக்கும் உதவ வேண்டும் என்பதே என் வேண்டுகோள் ” என்று இலாத்தி மர் கூக்குரல் இட்டனர்.
பத்தி, நற்கிரியைகள் என்பவற்றைப் பற்றிய இப்புதிய கருத்தை நடுத்தர வகுப்பினர் பலர் கற்றதனலேயே அரசவையத்தாரின் கொடுங்கொள்ளை காலகதியில் ஈடுசெய்யப்பட்டது. நாடு நாகரிகக் குறைவிலிருந்தும் உரோமா புரிப் பிசப்பாண்டவரிலிருந்தும் காக்கப்பட்டது. ஆயினும், பறிமுதல் செய்யப் பட்ட நிலங்களினல் வந்த வருவாயை கல்வி விருத்திக்காகச் சேமிக்கும் பெருந்தருணம் தவறிப் போயிற்று ; எனெனில், இங்கிலாந்து, அப்போது குடியாட்சிக்குரிய நாடாகவோ, கல்வியிற் பெருவிருப்புடைய நாடாகவோ அமைந்திராததினலென்க.
ஆட்சிக் காப்பாளர் சோமசெற்று, கிரான்மரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாது, பெரும்பாலும் தனிப்பட்டவரின் நலனுக்காகக் குழுமங்களை யும் திருக்கோவில்களையும் கொள்ளையிடுப்படுவதை இன்னும் தூண்டுவா ராயினர். அக்கொள்ளையிற் றமக்கும் ஒரு பங்கைப் பெற்றுக்கொண் டார். அதனைக்கொண்டு தேமிசு ஆற்றங்கரையில் அரண்மனை போன்ற * சோமசெற்று இல்லத்தைக் ’ கவின் பெறக் கட்டியெழுப்பினர். அரசறி ஞராகிய அவர் தம் பேதமையால் அதிகாரத்தைத் தந்தனியுரிமையாக்கிக் கொள்ளக் கருதினர். அவர் தம்மை யொத்த ஆலோசனைக் கழகத்தாரின் கிளர்ச்சிக்கு மாறய்த் தம்மை ஆதரிக்கத் தக்க வயதுடையவரும் அதிகார முடையவருமான அரசனது துணையின்றி யிருந்தார். அப்படியிருந்தும் செருக்கு, தாழ்மை, தன்னலம், பொதுநலவிருப்பு ஆகிய மாறுபட்ட குணங்களைத் தம்மிடத்தே கொண்டிருந்தார். அக்காலத்திருந்த ஏனைய அர

Page 245
1547.
549.
479 கெற்றின் கலகம்
சியலாரிலும் அவர் மிகுந்த நேர்மை, இரக்கம், ஒத்துணர்ச்சி ஆகிய குணங்கள் நிறைந்தவராவர். திருச்சபை, அரசு என்ற இரண்டிலும் பொறையுடை மையை அவர் விரும்பினர். என்றியின் ஆட்சிமுடிவிலிருந்த கொடிய சட்டங்களையும், அரச துரோக நியதிச் சட்டங்களையும், ஆறு உறுப்புக்கள் சட் டத்தையும் விலக்கும்படி பாராளுமன்றத்தை வேண்டினர். அவரின் செல் வாக்காலேயே குருமாரின் திருமணத்தைப் பாராளுமன்றம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் சட்ட வமைதியுடையதாக்கிற்று. மேலும், அது கிருன்மெரின் வழிபாட்டு நூலின் முதற்பதிப்பையும் வெளியிட்டது. தியூடர் காலத்துப் பாராளுமன்றம் எக்காலத்திலும் வெளியிட்டிராத, மிக அமைதி யான ஒருமைப்பாட்டு விதி என்னும் ஒரு விதி இப்பதிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியது.
சோமசெற்று கத்தோலிக்கரையாதல், புரட்டசுத்தாந்தரையாதல் அவர் களின் கொள்கை காரணமாகத் துன்புறுத்தவில்லை. அன்றியும், சமய வேற்றுமைகளையிட்டு உரிமையுடன் விவாதிக்கவும் இடங்கொடுத்தார். அதன் விளைவு முற்றிலும் விரும்பக்கூடியதாக இருக்கவில்லை. கடுமையான அரச வாணை நீக்கப்பட்டவுடன் எல்லாச் சமயக்கட்சியாளரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். “தீவிர குரவர்” “ ஒடுக்கப்பட்டுக் ’ கிடந்த துறவி களையும் சந்நியாசிகளையும் எதிர்க்க, அதனல் ஒருவருக்கொருவர் பகைமை யான இரு கட்சிசளைத் தோற்றுவித்தனர். உருவவழிபாட்டை நீக்கியமையை அல்லது நீக்காமையைக் குறித்தும், கத்தோலிக்க இயல்நூலை அல்லது வழிபாட்டு நூலை வாசித்தலைக் குறித்தும், புரட்டசுத்தாந்தப் போதனை அல்லது கத்தோலிக்க ஊர்வலங்கள் காரணமாகவும் கோவிலிலும் தெரு விலும் நடந்த சண்டைகள் உண்ணுட்டுப் போருக்கு ஒரு முன்னறிகுறி போலத் தோன்றின.
ஒட்சுபோட்டுச்சயரிலும் இன்னல் தருங் குழப்பங்கள் உண்டாயின. குரு மாரைத் தூக்கிலிட்டு அக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. வடபாலில் அமைதி நிலவிற்று. ஏனெனில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அருள் யாத் திரைக்குப் பின்னிகழ்ந்த அடக்குமுறைக் கொடுமையிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர் தலையெடுக்காமையாற் போலும் என்க. ஆனல், தென் மேற்கின் கோடியிலேயே சமயக் கலகமென்று சொல்லக்கூடியதொன்று உருவாகியது. கோண்வால் மக்கள் தம் பழைய கெலித்திக்கு மொழியையே
மக்கட் பண்பிலும் பெருந்தன்மையிலும் சென்றகாலத்திலுள்ள மிகக் குறைந்த ஒழுக்க நியதியைப் பெரும்பாலும் தர்க்க வாதிகள் மறந்துவிடுகின்றனர். அவர்கள் அதை இக்கால நிலைக்கேற்ப நல்லொழுக்கமுடைய இந்நாட் கட்சிகளுக்குரிய ஒரு போராட்டம்போல மதிக் கின்றனர். VI ஆம் என்றி ஆட்சியின் கடையாண்டில் பிரபு நாயகன் இறையோதிசிலியும் சட்டவறிஞர் நாயகம் இறிச்சுவும் ஆன் அசுக்கிவி என்னும் புரட்டசுத்தாந்தப் பெண்ணின் குற்றங்களை வெளியிடச் செய்யும் நோக்கத்துடன் அவளைச் சித்திரவதை செய்யும்போது கோபுரத்திலுள்ள சித்திரவதைக் கருவியின் முறுக்காணிகளைத் தாமே திருப்பி விட்டார். அவளின் நொறுங்கியவுடலைப் பின் சிமிதுமீல்திலுள்ள கழுவிற் கட்டித் தீக்கிரையாக்கினர்.

கெற்றின் கலகம் 471
அன்றும் பேசினர். மேலும், தமக்குத் தெரியாத இரு மொழிகளில் நடந்த வழிபாட்டில் அவர்கள் ஆங்கிலத்திற் “கிறிசுமசுப்பிளே ’ என்று கூறப்பட்ட மொழி யொலியை விடத் தமக்குத் தெரிந்த இலத்தீன் மொழி ஒலியையே பெரிதும் விரும்பினர். தெவனிலும் குருமாரின் கீழிருந்த உழவர் கூட்டம் கிளர்ந்தெழுந்தது. ஆனல், அவர்கள் கையிலிருந்து சேர் உவாட்டர் இராலேயின் தந்தையை மீகாமர் மீட்டனர். அன்றியும், எட் சீற்றரிலுள்ளார் புரட்டசுத்தாந்த சமயத்துக்காக ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடந்த முற்றுகையைப் பொறுமையுடன் எதிர்த்தனர். இலிச பெத்து ஆட்சியில் பெருஞ் செல்வரும் குருமாரும், கட்லோடிகள், நகர மாந்தர் என்போரின் நோக்கத்தை அங்குள்ள உழவர் எற்கும்படி செய்த லில் அனுகூலமடைந்தனர். அச்சிற்றுார் வேறு எதனைக்காட்டிலும் கத்தோ லிக்க சமயத்தைப் பெருங்கடல்களில் எதிர்த்துநிற்க வேண்டியிருந்தது.
வேறு இடங்களிலே சோமசெற்றின் காவலாட்சியைக் குழப்பிய பல உள்ளூர்க் கிளர்ச்சிகள், விவசாயம் பற்றி எழுந்தனவேயன்றிச் சமயம் பற்றி எழுந்தவையன்று. கெட்ட காலந் தோன்றிற்று. WI ஆம் என்றி நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டதால் நேர்ந்த விலையேற்றமும், விலைகளின் நிலையற்ற தன்மையும் பெருந்துன்பம் விளைத்தன. மிகப் பெரிய கலகமொன்று நோபோக்கில் உண்டாயிற்று. ஆங்குச் சீர்திருத்தம் பெரும்பாலும் ஆதரவுபெற்றிருந்தது. ஆனல், பொதுநிலங்களில் நிலக் கிழார் ஆட்டு வளர்ப்பை அளவு கடந்து பெருக்கியிருந்தமை அங்கு திருத்தி யின்மையை விளைத்திருந்தது. படைபூண்டிருந்த மக்கள், கெற்றின் தலைமையில் நொறிச்சைக் கைப்பற்றினர்; அன்றியும், ஆங்கில நாட்டியற் கைத் தோற்றத்தில் மிகப் புகழ் படைத்த இடமாகிய மொசோத்து ஈதுவின் வாயிற்புறத்தே பாசறையமைத்து இருந்தனர். அங்கே அவர்களுக்கு இடர் விளைத்து நின்ற 20,000 ஆடுகளைக் கொன்றி தின்றனர் 1381 ஆம் ஆண்டில் யோன்போலின் ஆட்களினதும் அல்லது உலூதர் காலத்திற் கிளர்ச்சி கொண்டெழுந்த சேர்மனிய உழவரினதும் கருத்தைப்போல, அவர்களின் கருத்தும் குடியாட்சிச் சார்பு உடையதாயிருந்தது. இன்னும் அடிமைப்பண்ணைக் குடிகளாய் இருப்போர் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டு மென்பது அவர்களின் முறைபாடுகளுள் ஒன்றகும். இம்முறைப் பாடு இலிசபெத்து ஆட்சியில் நிறைவேறியது. அரசி, தம் அரசநிலங்களிற் கண்ட எல்லா பண்ணைக் குடிகளையும் தங்கள் சுதந்திரத்தை மிக விரைவிற் பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினர்.
உதவியற்ற உழவரின் எல்லா எழுச்சிகளையும்போல, 1549 ஆம் ஆண்டில் உண்டான எழுச்சியும், கட்டுக்கோப்புடைய பிற வகுப்பினரால் அடக்கப் பட்டது. அதன் முதன்மையான விளைவு யாவெனில், “ உறுதிவாய்ந்த அரசாங்கம்” வேண்டுமென்று மக்கள் கிளர்ந்ததும், மக்களின் முறையீடு களுக்காக இரங்கியவரான நல்ல மனவியல்பு உடைய சோமசெற்றின்
1544。

Page 246
1549.
472 சோமசெற்றின் வீழ்ச்சி
வீழ்ச்சியும் என்க. இலாத்திமரதும், “பொதுநலவாயத்தார்’ எனப்பட்ட சமூக திருத்தக் கட்சியினரதும் செல்வாக்குக்குட்பட்ட ஆட்சிக் காப்பாளராகிய சோமசெற்று, நிலவடைப்பை நீக்க உறுதியான நியதிச்சட்டங்களைப் பாராளு மன்றம் அமைத்தல் வேண்டுமென்று பெரிதும் முயன்ருர். ஆனல், கட்டுப்படுத்தப்பட்ட அக்கால வாக்குரிமைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களும் இவ்வடைக்கும் தொழிலில் தாமும் மிகுந்த பங்குபற்றியிருந்தனர். அவ்வாறே அரச கழகத்திற் சோமசெற்றின் சக பாடிகள் பலரும் இதில் அமிழ்ந்திருந்தனர். கெற்றின் எழுச்சியாலும் அதனைப்போல வேறிடங்களில் நிகழ்ந்த குழப்பங்களாலும் உண்டாய கேட்டினைக் காப்பாளர்மேற் சுமத்தல் அவர்க்கு இப்பொழுது எளிதாயிற்று. மேலும், இலண்டன் மாநகரத்தில் இருந்த மக்கட்கும்பலால் அவர் விரும் பப்பட்டவராயிருந்தும் நகரப் பெருமக்களுக்கு அவர் வேண்டாதவராக விருந்தனர். அதிகாரம் பெறுதற்கான போராட்டத்தில் உழவரின் அன்பு அவர்க்கு அதிகங் கிடைத்திலது. “ பெருமக்களை ’ எதிர்த்துத் தமக்காக மக்களைக் கிளருமாறு அவர் முறையிட்டனர். பின்னர், அரச கழகத்தில் கத்தோலிக்கரையும் புரட்டசுத்தாந்தரையுங் கொண்ட கட்சியினர் அவர் வீழ்ச்சிக்குக் காரணமாயினர் என்க.
கத்தோலிக்கக் கட்சியினர், தம்முதவியால் உண்டான மாற்றத்தால் தமக்கு நன்மையுண்டாகுமென்று கருதியிருந்தனர். ஆனல், அவர்கள் ஏமாற்றமடைய நேர்ந்தது. முன்னர் வாவிக்கிலும், பின்னர் நோதம்பலாந் திலும் கோமகனயிருந்தவரும் சோமசெற்றை நீக்கிவிட்டுத் தாமே அப் பதவியை எற்றுக்கொண்டவருமாகிய இடட்டிலி என்பார்க்கு நேர்மையுடைய சமயக் கொள்கை யாதுமில்லை ; ஆனல், அவர் புரட்டசுத்தாந்தருடன் ஒத்துழைக்க விரும்பினர் ; சீர்திருத்தம் முன்னரிலும் மிகுந்த ஊக்கத் தோடும் கட்டுப்பாட்டுக்குட்பட்டும் இயங்குவதாயிற்று. திருச்சபையிலும் அரசி லும் பொறையுடைமையைக் கடைப்பிடிக்கவும் சமூகப் பிரச்சினைகளில் மக்களுக்குள்ள அனுதாபத்தை வளர்க்கவும் சோமசெற்று முயன்று, அம்முயற்சி தோல்வியில் முடிந்தவாற்றைக் கண்டார். பாராளுமன்றத்தின் ஆதரவினல் ஊக்கமடைந்த இடட்லி என்பார் VI ஆம் என்றியின் கண்டிப்புமிக்க சில முறைகளைப் புதுப்பித்தார். ஆனல், இப்பொழுது அவர், மிக முற்போக்கான புரட்டசுத்தாந்தக் கோட்பாடு சம்பந்தமாக இவ்வாறு செய்யத்துணிந்தனர். கிறித்துவின் மனிதயியல்பை மறுத்த யோவான் போச்சரையும் கிறீத்துவின் தெய்வீகத்தை மறுத்த ஒல்லாந்தைெருவனை யும் தவிரப் பிறனெவனும் உண்மையில் சமயத்துக்காகக் கொலைசெய்யப் பட்டிலன். ஆனல், கத்தோலிக்கரிற் சிலர், அவர்களின் பொருள்கவரப்பட்ட பின்னர், சிறையிலடைக்கப்பட்டனர்.
வழிபாட்டு நூல், புரட்டசுத்தாந்தருடைய திருத்தங்களோடு, எறத்தாழ இப்பொழுதுள்ள (1925) அதன் வடிவத்தில் மீட்டும் வெளியிடப்பட்டது. உலூதர் சமயம் சேர்மனியவரசரின் மடியிற் றுஞ்சியது; திராசு

இடட்டிலியும் யேன்கிறே பெருமாட்டியும் 473
பேக்கும், சுவிற்சலாந்தும் புரட்டசுத்தாந்தம் என்னும் தீவளரும் கள மாயின; அத்துடன் ஆங்கில சமயத்தினின்று விலக்கப்பட்ட மக்கள் கூடுமிடங்களுமாயின. அங்கிருந்து பலர் இப்பொழுது தம் நாட்டில் முயற்சி செய்ய விரைந்து திரும்பினர். அல்பிசு மலையை அடுத்த நாடுகளில் இருந்து எழுந்த கொள்கை இங்கிலாந்திலும் பரவிற்று. எனினும், அச் செல்வாக்கு சூரிச்சுக்குரிய சாந்தம் மிக்க சுவிங்கிளியிலிருந்து தோன்றியதேயன்றிச் செனிவா நகரக் கல்வினிலிருந்து தோன்றியதன்று. ஆனல், இவ்விரு சீர்திருத்தக்காரரும் குடியாட்சி வாதிகள் ஆவர். சுவிசுமக்களுதவியை நாடுவோர் வேறெவ்வாறுதானும் இருக்க முடியாது. சேர்மனிய புரட்ட சுத்தாந்தம் அரசகருமத்துக்குரியதாயும் அரசர்க்குரியதாயும் விளங்கிற்று. ஆனல், சுவிசு மக்களின் புரட்டசுத்தாந்தம் ஒல்லாந்திலோ, கொத்து லாந்திலோ இங்கிலாந்திலோ மக்களிடம் சமயப்பற்றை உண்டாக்குதற்கு எப்பொழுதும் முயன்று வந்தது. இச்செயலால் அஃது ஆங்கிலச் சீர் திருத்தத்துக்கு பயன்றரும் ஒர் அமிசத்தை அளித்தது. அச்சீர்திருத்தம் தன்வழிச் செல்வுழி பழையனவும் புதியனவுமான “பல மரங்களின் கனிகளைப் பறித்துச்’ சேர்த்துக்கொண்டது. ஆனல், தனக்குரிய தீவுக்கு , வெளியே உள்ள எவர்க்கும் முற்றிலும் மகிழ்ச்சியை அது உண்டாக்க
1551 ஆம் ஆண்டில் நோதம்பலாந்தின் கோமகனகிய இடட்டிலியின் ஆதிக்க நிலையை மக்கள் விரும்பாதது ஆச்சரியமன்று. அந்நிலை, நாட்டைத் தம் ஆதிக்கத்திற் கொண்டுள்ளவரும் தம்மையடக்கத் தகுதியான அரச னில்லாதவருமான அரசவையத்தாரின் ஊழலாலும் பேராசையாலும் எழுந்ததாகும். தன்னலங் கருதும் நோதம்பலாந்தென்பவர், இறக்கும் தறுவாயில் இருந்த சிறுவன் ஒருவனிடத்தில் தமக்கிருந்த செல்வாக்கைக் கொண்டு தம் பேராசையை நிறைவுபடுத்தும் திட்டங்களை அமைத்தார். அச்சிறுவன் அவரை ஓர் உண்மையான புரட்டசுத்தாந்தரென்று நம்பி ஞன். ஆனல், அரசன் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அறைக்கு வெளியே இடட்டிலி அக்கால அரசாங்கம் வெளியிட்ட கள்ள நாணயத்தைப்போலப் பொய்யானவரென்பதை எல்லாச் சமயத்தாரும் விரைவில் உணர்ந்து கொண்டனர். இலண்டன் மாநகரத்திலும் கிழக்கு அங்கிலியாவிலுமுள்ள புரட்டசுத்தாந்தர், வடக்கிலும் மேற்கிலுமுள்ள கத்தோலிக்கரைப் போல அவரைச் சிறிதும் விரும்பவில்லை. போர் செய்யும் முறைமையிலும் அரசி யற் கபடத்திலும் அவர்க்குத் திறமையுந் துணிவுமுண்டு. ஆனல், யாவரா லும் வெறுக்கப்பட்டவரும், அரசறிவு இல்லாதவருமான ஒருவரைக் காத் தற்கு அவை சிறிதும் பயன்பட்டில. தம்மைத் தழுவுவோர் சிலரின் அபிமானத்தை ஈர்க்க வல்லதும் அரசியலில் வீரர் பலரை மேம்படுத்துவது மான தந்திரந் தானும் அவர்மாட்டில்லை. ஆகவே, நெருக்கடியான காலத்தில் நோதம்பலாந்து தாம் எல்லாராலும் கைவிடப்பட்டதை அறிந்தார்.

Page 247
553 பூலை மாதம்.
553.
1558.
474 இடட்டிலியும் யேன்கிறே பெருமாட்டியும்
A
V1 ஆம் எட்டுவேட்டு இறந்ததும், VI ஆம் என்றியின் புதல்வியாகிய மேரி, இலிசபெத்து என்போரை அரச பதவியினின்றும் விலக்கித் தம் மருகியான, தூர அரசுரிமையுடைய பெருமாட்டி யேன் கிறேயை அரசு கட்டில் ஏற்றுதற்குத் தாம் நினைத்த துணிச்சலான சூழ்ச்சியை விரைந்து வெளியிட்டார். மேரியின் தலைமையில் கத்தோலிக்கர் மீண்டும் அதிகாரம் பெறக் கூடுமென அச்சமூட்டி, மரணப்படுக்கையிலிருந்த எட்டு வேட்டை, யேன் கிரே சீமாட்டிக்கு அரசுரிமையை அளிக்கும் இறுதிமுறி ஒன்றிற்குக் கைச்சாத்திடும்படி தூண்டினர். மேலும், ஆலோசனைக் கழகத் தினரும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அச்சுறுத்தப்பட்டனர். சூழ்ச்சி நன்கு திட்டமிடப்பட்டது. ஆயினும், இலண்டன் மாநகரமும் இங்கிலாந்தும் அதனை வெறுத்து விலக்கிவிட்டன. நோதம்பலாந்து தாமும் மேரியரசிக்காகத் தம் ஆதரவைஅளித்து ஆரவாரித்து தம் மகிழ்ச்சியைக் காட்டினர்.
தாம் ஆதியிற் சார்ந்திருந்த கொள்கையில் எவ்வாறு நேர்மையற்றிருந் தனரோ, அதே முறையில் புரட்டசுத்தாந்தத்தை வெளிப்படையாக மறுத்த பின்னர், தாஞ் செய்துவந்த சூழ்ச்சிகள் யாவும் எவ்வாறு பயனற்றவை யாகினவோ அவ்வாறே அம்மறுப்பினல் விரும்பிய பயனை அடையாத வராகிக் கோபுரத்துச் சித்திரவதைக் கருவியாற் கொலையுண்டிறத்தலி னின்று நோதம்பலாந்து தப்பவியலாதுபோயிற்று. அவர் தூக்கு மேடை யில் முழந்தாளிட்டுக்கொண்டு தாங் கொள்கை மாறியமையால் கொலைத் தீர்ப்பை நீக்கிவிடுதற்கு யாவருளரென்று எங்கணும் நோக்கி நின்றர். கடைசியில் தாங் கைவிடப்பட்ட நிலையை உணர்ந்து தம்மையும் வெறுத்துப் படிமிசை வீழ்ந்தார். இந் நிகழ்ச்சி அடக்கமான குணமும் கல்வியிலே கருத்துமுடையவளும் பதினருட்டைப் பருவத்தினளும் அவரால் வஞ்சித் துத் தவருன வழியிற் செலுத்தப்பட்டவளுமாகிய பெருமாட்டி யேன்கிறே, அமைதியாகத் தன் இறுதியை எற்றவாற்றெடு ஒப்புநோக்கத்தக்கது. இவ் விருவரும் வெவ்வேறு தன்மையினராயிருந்தனர். ஆறு மாதத்துக்குப் பின்னர் யேன்கிறே பெருமாட்டி கொல்லப்பட்டபோது, அவருடைய மாமனின் மரணத்தால் ஆங்கிலேயர் மனத்திலுதித்த உணர்ச்சிக்கு முழுவதும் மாருன உருக்கவுணர்ச்சியே உண்டாகியது. இச்சாந்தமுடைய கிரீசியப் பெரு மாட்டி தியூடவரசர்களைப் போலக்கற்றறிந்தவள். மேலும், அவர்களின் மிகச் சிறந்தோரிலும் மேம்பாடான குணமுடையவள். ஆனல், இலிசபெத் தரசியைப் போல, சிறப்பாகப் பூபாரந் தாங்கியிருப்பாளோ வென்பது ஐயத்துக்குரியதேயாம்.
மேரியரசி தம் பகைவரின் பிழைகளினலும் கொடுமையினலும் மக்கள் ஆதரவோடும் பேரூக்கத்தோடுந் தம்மாட்சியைப் தொடங்கினர். இவ்வூக் கத்தை, 11 ஆம் சேமிசு மதவெறியினல் தனக்கிருந்த அனுகூலத்தைத் தொடக்கத்தில் இழந்ததுபோல, மேரியும் எறத்தாழ அவ்வளவு விரைவில் வீணுக்கினர். ஆனல், குணப்பண்பில் மேரி சேமிசிலும் மேலானவர்.

முதலாம் மேரியின் குணவியல்பு - 475
இடுக்கண் வருங்காலத்தில் தியூடர்க்குரிய அஞ்சாமையை அவர் காட்டினர். மேலும், அவரிடம் பழிவாங்குங்குணம் இல்லை. சமயத்தில் நம்பிக்கையற்ற வராகவோ மட்டான நம்பிக்கையுடையவராயோ இருந்திருப்பின், பிற் காலத் தில் அவரை மக்கள் இரக்கமுள்ள மேரியென்று நினைவு கூர்ந்திருப்பர். ஆனல், அரகன் நாட்டுக் கதரீனுடைய மகளின் சிற்றறிவு, ஒரு கைவிடப் பட்ட பிள்ளையாய்த் தனிமையிலிருந்து தந்தாயின் அவலங்களையும் அவ ரின் சமயத்தையும் பற்றி ஆழ்ந்து சிந்தித்ததால், வளர்ச்சியடைந்தது. மேலும் தாய் இசுப்பெயினுக்குரியவராயிருந்ததனல், அழிவுக்கேதுவா கிய விசுவாசத்தோடு அவர் மனம் தென்னைரோப்பான வ நாடியது. எனவே, அவர் தாமாண்டுவந்த நாட்டின் பெருமையைச் சிறிதும் மதித்திலர். ஆங்கிலேயரின் ஆன்மிக வாழ்வை மட்டுங் கருத்திற் கொண் டார். அன்றியும், அவ்வான்மிக வாழ்வு இத்தாலியரினலும் இசுப்பானி யரினலும் நன்கு பாதுகாக்கப்படுமென்று நம்பினர். அவர் சகோதரன் நோய்வாய்ப்பட்டிருக்கையில் உண்மையான இங்கிலாந்தைக் குறித்து அவ னுக்கு விளக்கஞ் சிறிதும் இருந்ததில்லை. அதைப்போலவே இவரும் தாந் தொழும் கோவிலிடத்திருந்து உண்மை இங்கிலாந்தின் நிலை எதனையுந் தாமாகக் கண்டிலர். சமயக் கல்வியில் அல்லது சமயப் பெரு மகிழ்ச்சியில் அமிழ்ந்திக் கிடந்ததால், சகோதரனதல், சகோதரியாதல் தியூடரின் அரசி யற்கொள்கையின் பரந்த நோக்கையும், இங்கிலாந்தின் விளைநிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும், மக்கள் நிரம்பிய சந்தைச் சாவடிகள், பண்ணை வீடுகள் ஆகியவற்றிலும், சேய்மைக் கடல்களில் அலைமோதிச் செல்லும் ஆங்கிலக்கலங்களிலும் அடங்கியிருந்த வருங்காலவாய்ப்புக்களைப்பற்றிச் சிறி துங் கருத்திற் கொண்டிலர் : முயற்சியுடையரும் கேய்மையிற் செறிந் திருப்பவருமாகிய தங் குடிகள் யாபேரும் நாடோறும் என்ன எண்ணிக் கொண்டு என்ன வேண்டிநிற்கின்றனரென்றும் அவர் தம்மியல்பூக்கத்தாற் சிறிதுமுணர்ந்திலர். ஆனல், அந்த, அகக்காட்சியும் இயல்பூக்கமும் தியூட வரசர் அனைவரினதும் வெற்றியான ஆட்சியின் இரகசியமாகும். அந்தரங்க ஆலோசனைக் கழகங்களின் மத்தியிலும், தமது பற்றுக்களிலும், மதவியற் படிப்பிலும், முகப்புகழ்ச்சியாய் பிறநாட்டுத்துதுவர் தம்முடன் பேட்டிகள் நடாத்தியகாலையும், தம்மை மணக்க வருவோரின் அன்புக்குரிய முன்னிலை யிலும், இலிசபெத்தரசியார் தமக்குரிய அகக்காட்சி, இயல்பூக்கங்களைச் சிறிதும் மறந்திலர்.
போப்பாண்டவரோடும் இசுப்பெயினேடும் எவ்வகையிலும் ஒற்றுமை கொண்டிருப்பது, கத்தோலிக்க சமயத்தைச் சிறப்பிப்பதாகத் தோன்றிய நல்வாய்ப்பை விரைவிற் கெடுத்துநிற்க, இலண்டன் மாநகரத் தொழி லாளர் மேரியைத் தம்மரசியாய் வரவேற்றனர். அன்றைய தினம் கொடுமை யும் அமைதியின்மையும் நிறைந்ததாய்ப் புரட்டசுத்தாந்தம் கருதப்பட்டது.

Page 248
预554。
555.
555
558,
476 முதலாம் மேரியின் குணவியல்பு
குழுமங்களிலும், சிறு கோவில்களிலும் நிகழ்ந்த கொள்ளை, எட்டுவேட்டின் ஆட்சியில் நிகழ்ந்த இடையருத் தொல்லைகள், அனைத்துக்கும் மேலாக அரச துரோகத்தில் முடிந்ததும் கொள்கை மாற்றத்தால் அவகிர்த்தி பெற்றதுமான நோதம்பலாந்தின் முறைகேடான வாழ்க்கை ஆகிய இவை கள் யாவும், சிலகாலம் வரையும், புதுச் சமயத்தை இன்னும் மதம்பற்றிய ஒரு முடிவுக்கு வாரா நிலையிலுள்ள பெரும்பான்மையான மக்களால் வெறுக்கவும் மறுக்கவும் செய்தன. தம் தந்தையின் சமய சமரசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுதலும் உரோமன் கத்தோலிக்க வழிபாட்டை இலத்தீன் மொழியிற் செய்தலை மீட்டும் அமைத்தலும், ஆண்டுதோறும் பத்துப் பன்னிரண்டு புரட்டசுத்தாந்தரை ஒரோவழி தீக்கிரையாக்குத லும் மேரிக்குப் பாதுகாப்பையும் புகழையும் அளிக்கக்கூடியனவாயிருந் திருக்கும். இங்கிலாந்திற்கு இவ்வளவான செயல்கள் போதுமானவை யென மேரி திருத்தியடைந்திருப்பின், இலிசபெத்தரசியார் ஆட்சியின் முதலாண்டில் உண்மையில் நிகழ்ந்ததுபோலப் புறநெறிபற்றி அத்தகைய வெறுப்பு ஒருகாலும் நிகழ்ந்திராது. ஆனல், தங்குடிகளின் விருப்பத்திற் குப் பெரிதும் மாறய் இசுப்பெயின் நாட்டுப் பிலிப்பை மேரி மணஞ் செய்யத் துணிந்துகொண்டபோது அவர் இசுப்பானியப் பெருங் கலத்தின் பின்புறத்திற் கட்டிய சிறு கலமாய் இங்கிலாந்தை ஆக்கவும் துணிந்தனர்; காடினரும் பொன்னருமே நாட்டில் போப்பாண்டவருக்குரிய ஆதிக்க வெல்லையை அழிக்க என்றிக்குத் துணைபுரிந்திருக்க, மேரி அந்நாட்டின் மேல் அவ்வாணையைப் புதுப்பிக்குமாறு மீட்டுந் துணிந்து நின்றர் ; அவ்வாறு செய்யத் துணிந்தமையால் தந் தந்தையும் உடன்பிறந்தாளும் ஒருகாலுந் துணிந்திராத முறையில் நாட்டினப் பெருமைக்கு அவர் இரு முறை மாறகநின்றர் என்க. மேலும், தங்கருமத்துக்கு முத்தாய்ப் பிடுமுகத்தான் 300 புரட்டசுத்தாந்தரை 4 ஆண்டுகளிற் றீக்கிரையாக்கிய போது பழைய சமயத்தை, நாட்டுப் பற்றற்றதும் அமைதியற்றதும் கொடு மையுள்ளதுமான ஒரு புறச்சமயக் கோட்பாடென ஆங்கிலேயர்க்குத் தோன்று மாறு செய்தனர்; இவ்வாறு மனதிற் பதியும் எண்ணத்தை இலகுவில் உண்டு பண்ணலாம் ; ஆனல் அதை வேருடன் அழித்துவிடுதல் கடின மானதே.
* தியூடரின் வல்லாட்சி ’ யைக் குறித்துப் பேசுவது பொதுவான வழக் கம். ஆனல், XIV ஆம் உலூயியின் செயல்களுளைப் பிரான்சியர் மூங்கை யராய்ப்பார்த்திருந்ததுபோல, ஆங்கிலேயர் தம்மரசர்களது செயல்களை அவ்வாறு ஒருபோதும் வற்றிலர். VI ஆம் என்றியின் அரசியற் பூட்கை பொதுவகையில் மக்கள் எண்ணத்தோடும், சிறப்புவகையில் பாராளுமன் றத்திற்குப் பிரதிநிதிகளையனுப்பிய மக்களின் எண்ணங்களோடும் தொடர் புடையதாயிருந்தது. எட்டுவேட்டின் ஆட்சியில் பாராளுமன்றம் மக்கள்

வயத்தின் கலகம் 47
விரும்பிய முறையில் இயங்காவிடினும் சுதந்திரமாக நடந்து கொண்டது. ஏனெனில், சோமசெற்றின் அரசாங்கம், குடியாட்சிக்குரியதும் விவசாயம் பற்றியதுமான சட்டத்தைப் பாராளுமன்றச் சபைகள் மூலம் நிறைவேற்றச் செய்த முயற்சியில் தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது மக்க்ளின் எதிர்ப் பானது, WI ஆம் எட்டுவேட்டின் இறுதிமுறியையும் அரச கழகத்தாரின் செயலையும் நிராகரித்து, தியூடரின் குலமுறைக்குப் பதிலாக இடட்டிலியின் குலமுறையைத்தழுவுவதையும் தடை செய்தது. இனி யாது நிகழும் ? உரோமாபுரிக்கும் இசுப்பெயினுக்கும் அடங்கி நடப்பதாகிய மேரியின் பூட்கை, பாராளுமன்றத்தினதும் மக்களினதும் விருப்பத்திற்கு மாற யிருந்தது.
அரசி தாம் விரும்பியவரை மணஞ் செய்தலைத் தடுத்தற்குப் பாராளு மன்றத்துக்கு யாப்பியல் முறையான அதிகாரம் இல்லை. ஆகையினல், இசுப்பானிய மணத்துக்கு மாருகப் பொதுமக்கள் சபையிட்ட முறைப்பாடு பயனற்றதாயிற்று. வயத்தின் தலைமையில் கென்றில் எழுந்த கலகம் இசுப்பானிய அரசனுக்கு மாறன நாட்டின உணர்ச்சியைக் காட்டுவதாயிருந் தது. ஆனல், வயத்து, மக்களின் விருப்பத்தைப் பெற்றவிடத்தும் அவர் தம் அனுமதியைப் பெற்றிலர். ஏனெனில், மக்கள் புரட்சியைச் சூனியத் தால் விளையும் பாவமென்று கருதினர். முடிக்கெதிராய்ப் படைகொண்டெழு வதிற் பேரச்சம், வெறிகொண்ட வடபால் குடபால்களில் உள்ளோரிடத் திருந்ததிலும் இலண்டன் மாநகரத்திலும் அதன் தெற்கிலுமுள்ளாரிடத்து மிகுதியாயிருந்தது. நோதம்பலாந்தின் கொடுமை தமக்குத் தந்த தனி மதிப்பை மேரி இன்னும் இழந்திலர். புரட்டசுத்தாந்தத்தைக் கடைப்பிடித்த இலண்டன் மாநகரத்தார் இலட்டுக்கேற்றுக்கு, பிளிற்று வீதி வழியே வயத்தின் படைகள் சென்றகாலை, அவைகளுடன் சேர்ந்துகொள்ள மறுத் தனர். அன்றியும், அவர்கள் வயத்தைப் பிடித்து அடக்கியதுடன் அவன் தலையையுந் துணித்தனர்.
வயத்து, இலிசபெத்தை அவர்தம் உடன்பிறந்தாளின் அரசுகட்டிலில் எற்றக் கருதியிருந்தார். ஆனல், இந்த இளவரசி, தம்மிளமையிற் பெற்ற கடுமையான அனுபவங்களினல் எதிலும் விழிப்பாயிருத்தல் வேண்டு மென்பதைக் கற்றுக்கொண்டார். அவ்வனுபவங்கள் அவர்க்கு உலகம் சூது நிறைந்ததென்பதைப் புலப்படுத்தின. வயத்தின் கலகம் சம்பந்தமாய் அவ்விளவரசிக் கெதிராய் யாதும் உறுதிப்படுத்த முடியாது போயிற்று. ஏனெனில், அவர் வஞ்சகமில்லாத மனத்தினராயிருந்தமையாலென்க. அவர்தம் உடன்பிறந்தாள் கொடியள் அல்லள். நாட்டினர் எல்லாரும் அவளைத் தழுவிநின்றனர். சில காலமாகக் கோட்டையில் அவர் மனக் கவலையுடன் இருந்தார். அக்காலத்தில் இசுப்பானிய துரதமைச்சர் இறெனடு என்பார் அவரைக் கொல்லவேண்டுமென்று கூக்குரலிட்டார். எனினும், கடைசியில் அவர் விடுதலை பெற்றர். பிற்காலத்திற் சிலர் இச்செயலை
554

Page 249
i555558,
478 உரோமாபுரியேரடு மீண்டும் ஐக்கியம்
A
நினைந்து நெடுங்காலம் வருந்தினர். கத்தோலிக்கத் தலைமைக் குருவும் அரசியல் அறிஞருமான காடினர் என்பார் அரசியாரின் இசுப்பானிய திரு மணத்தை எதிர்த்தபோதும் இலிசபெத்தை ஆட்சிப்பீடமேற விடாது தடுத் திருப்பார். வனெனில், இலிசபெத்து, கத்தோலிக்கப் பூசை நேரத்தில் முழந்தாளில் நின்று வழிபடும்போது அவர்தம் வழிபாட்டு உண்மையிற் காடினர் ஐயங்கொண்டமையாலென்க. ஆனல், பாராளுமன்றம் இலிச பெத்தின் ஆட்சியுரிமையைப் பாதுகாத்தது. அவரை அரசியாக்குதற்கு அப் பாராளுமன்றத்தின் சட்ட உரிமையை எவராலும் மறுக்கமுடியாததாயிற்று. மேலும், அதன் முடிவே வெற்றிகொண்டது. இசுப்பானிய துரதமைச்சரை யும் கத்தோலிக்க பிசப்பாகிய காடினரையும் எதிர்த்துக் குடிகளும் பாராளு மன்றமும் இலிசபெத்தை ஆதரித்து நின்றனர். தம் வலிமை எதிற்றங்கி யுள்ளதென்பதை இலிசபெத்து அமைதியுடன் அவதானித்துக் கொண்
காதலன்பு மிகுந்த அரசிக்கு இசுப்பெயின் நாட்டுப் பிலிப்பு கணவன யமைந்தமையால் இங்கிலாந்து மூன்றண்டுகளாய் இசுப்பானிய முடியர சுக்கு அடிமையாயிருந்தது.? மேரி காதல் பூண்டு வாழும் வரை, இசுப் பெயினுக்கு மாறய் எங்காயினும் உள்ள வேற்றுநரிடுகளுடன் தொடர்பு கொள்ளும் பிறநாட்டுப் பூட்கையையும், பிலிப்பு இங்கிலாந்தில் வாழும் தன் குடிகளுக்கு முற்ருய் மறுத்த அமெரிக்க வணிகத்தின் மேற்கொண் டிருந்த நம்பிக்கையையும், குடியேற்றம், கடலாட்சி ஆகியவை பற்றிய கனவுகளையும் ஒதுக்கிவிடவேண்டியிருந்தது. அரச திருமணத்தின் நியதிகள் இங்கிலாந்திற்குக் கெடுதி விளைப்பனவாம். மேலும், மேரி இசுப்பானியரைத் தம் அரசுக்குத் தலைவராக்குவதிலன்றிப் பிறிதொன்றிலும் கருத்துக் கொண்டிலர் என்று வெனிசிய தூதுவர் கூறினர். புரட்சி, அல்லது அரசி யின் இறப்பு ஒன்றே இங்கிலாந்தின் கடற் சுதந்திரத்துக்கும் பெருமைக்கும் உரிய வழியை உண்டாக்கக் கூடியதாயிருந்தது.
இலிசபெத்தாட்சியின் முதற் பாராளுமன்றத்தில், மேரியாட்சியில் இருந்தவரும் கொள்கை வேறுபாட்டினற் பிறரைப் பெரிதும் துன்புறுத்தியவருமான யோன் இத்தோரி, பாராளுமன்றத்திலே பொது வழிபாட்டு நூலை மீட்டும் கொடுத்தற்காகக் கொண்டுவரப்பட்ட முறியை எதிர்த்துப் பேசியது வருமாறு :- மேரி காலத்திற் சமயக் கண்காணிமார் ஒரு மரத்தின் கிளைகளை வெட்டுவதில் பேரூக்கங் கொண்டாசென்றும், ஆணுல், அதற்கு மாருய் நான் அதன் வேரையே தறிக்கவிரும்பினேனென்றும் பன்முறை உருவகப் படுத்திக் கூறினேன். இதனை அவர்கள் செய்திருந்தால், இந்த இயக்குங் கருவி இப்போது ஒரு விசாரமாயிராது ”. இதனல் எமது அரிய இலிசபெத்தின் அழிவை நன்றியற்ற முறையிற் கருதினன். இத்தகைய சபையிலே பேருணர்ச்சியுடன் பேசிய பேச்சை நேர்மையும் உண்மையும் உடைய எவராதல் கேட்டிலர். ஆனல் அனைவரும் அவனை மிகவும் வெறுத்தனர்.
1556 ஆம் ஆண்டில் 5 ஆம் சாள்சாகிய தன் தந்தைக்குப் பின் பிலிப்பு இசுப்பானிய அரசுரிமையைப் பெற்றன்.

உரோமாபுரியோடு மீண்டும் ஐக்கியம் 479
உரோமாபுரியுடன் மீட்டும் ஒன்றுசேர்தலே அடுத்த செயலாயிருந்தது. கத்தோலிக்க கோட்பாடு அரசவாதிக்கத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் இருக்க முடியாதென்று, எட்டுவேட்டின் ஆட்சியிற் பெற்ற அனுபவம் பிசப் புக்களாகிய காடினர்க்கும் பொன்னருக்கும் அறிவுறுத்தியது. அன்றியும், மேரியும் தம் தாயைப்போல எப்பொழுதும் கத்தோலிக்கச் சமயப்பற்று உடையவராகவே இருந்தனர். புதியதொரு பாராளுமன்றம் அரசினதும் கோமறைக் கழகத்தினதும் நெருக்கத்துக்கும் விருப்பத்துக்கும் இணங்குவ தாயிற்று. அப்பொழுதே வெறுப்பும் கோபமும் ஊட்டும் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் அப் பாராளுமன்றம் பத்தியுடைய அரசிமேற் சுமத்தியது. உண்மையில், அஃது ஒர் இழிவான இணக்கமாகும். சமய நம்பிக்கைக்கும் ஆன்மீக ஆணைக்குமுரிய கருமங்களைச் செய்யும் உரிமைகள் உரோமாபுரி யிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. ஆனல், பொதுமக்களின் புரட்சியால் உண்டான உலகியல் உரிமைகள் முழுவதும் பாதுகாக்கப்பட்டன. மடநிலங் களின் தாயுறுதிகள், பத்திலொரு பாக வரிகள், மனமகிழ்ச்சியுடைய பெரு மக்களின் நிதிப் பேழைகளை நிறைவித்த கோயில்களுக்குரிய நிலபுலங்கள் ஆகியவெல்லாம் தீண்டப்படாது கிடக்குமாறுசெய்யப்பட்டன. அப்பொழுதே அரசி போப்பாண்டவரின் ஆதிக்கத்தைக் குறித்துத் தம்மெண்ணப்படி நடந்து கொண்டார். அன்றியும், புதுப்பிக்கப்பட்ட புறநெறிச் சட்டங்கள், ஆன்மீக மன்றுகளும் கோமறைக் கழகமும் தாம் விரும்பியபடி பற்று மிகுந்த புரட்டசுத்தாந்தரைத் தீக்கிரையாக்குதற்கு அனுமதி வழங்கின. தோலின்துன்னரும் (சக்கிலியர்) குருமாரும் தஞ் சமய நம்பிக்கைக்காக மரணதண்டனை பெற, உயர்குடிப்பிறந்த பொதுமக்களுள் எவரேனும் மேரியின் ஆட்சியில் துன்பம் அடைந்திலர். பெரிய கொள்ளையால் உதவி பெற்ற பெருமக்கள் தம் உயிரையும் நிலங்களையும் காத்தற்காகக் கத் தோலிக்க வழிபாட்டுக்கிணங்கி ஒழுகினர். ஆனல், முழுவதும் மாற்றி யமைக்கப்படுமோர் அமைப்பிலேயே, இவ்விரண்டையும் பாதுகாக்க முடியு மென்று இவர்கள் உணரத் தொடங்கினர். “இலிசபெத்தரசி யாரைக் கடவுள் காக்கக் கடவர் ” என்பது நிகழவிருப்பனவற்றைப் பற்றிக் கனக் கண்டு கொண்டிருக்கும் பெருஞ் செல்வர் பலரின் வேண்டுகோளாயிற்று. வெனிசியத் தூதுவர் தம் நாட்டுக்கு எழுதியது வருமாறு : “35 அகவையிற் குறையாதவரும் மிகச் சிறந்த பத்தியுடையவருமான கத்தோலிக்கர் சிலரே தவிர, சமய மாற்றத்தை வெளிப்படுத்துகின்ற எனையோர், தம் பழைய கத்தோலிக்க சமயத்தை மீட்டும் உறுதியுடன் ஏற்கின்றிலர் ”. மேரியரசியின் அரசாற் பழைய சமயத்துக்கு வந்த நல்வாய்ப்பு, எதிர்கால மக்களிடத்தே புத்துணர்ச்சியை வளர்க்கும் ஒரு புத்துயிர்ப்பைப் பெருமையினுற் பயன் தந்திலது.
மேரியின் பாராளுமன்றம் புறநெறிச் சட்டங்களைப் புதுப்பித்த போது, அஃது ஆங்கிலேயரது உயிர்களைத் தன் பாதுகாப்பிலிருந்து விடுத்து மேரி தேர்ந்தெடுத்த ஆன்மீக மன்றுகளிடமும் கோமறைக் கழகத்தினிடமும்
1555.

Page 250
15551558.
480 உரோமாபுரியோடு மீண்டும் ஐக்கியம்
ஒப்படைத்தது. அச் செயலால், என்றியின் ஆட்சியில் நாடு எற்றுக்கொண் டதுபோலக் குறைந்த அளவிற்றன் மதத்துக்காகத் துன்புறுத்தப்படுதல் இருக்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் எண்ணினர் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. எட்டுவேட்டினது ஆட்சி குறைபாடுடையதாயிருந்த போதிலும், பஞ்சும் நெருப்புமொத்த செயல் ஒன்றையும் கண்டிலது. அன்றியும், நான்கு ஆண்டுகளுக்குள் 300 ஆண்களும் பெண்களும் தீக்கிரையாக்கப் பட்டபொழுது உண்டான திகைப்பு மிகப் பெரிதாக இருந்தது. துன்புறுத்து வோர் நேர்மையுடைய மதவெறியினர் செய்வது போலப் பொதுமக்களின் எண்ணப்போக்கை ஆராய்வின்றித் தவருக முடிவுசெய்தனர். மேரியும் அவருக்குச் சமய அறிவுரை கூறுநராகிய போல், பொன்னர் ஆகியோரும் அழிவுக்கேதுவாயிருந்த இப்பூட்கைக்குப் பொறுப்புடையராயினர். மேலும், அப்பூட்கை எழுந்த காலத்தில் இறந்துவிட்ட காடினரும் ஒரளவுக்குப் பொறுப்புடையவரே. சாதுரியமும் தந்திரமுமுடைய இசுப்பானியர், இங்கி லாந்தில் தம்முரிமையை நிலைபெறச் செய்ய விரும்பி, மக்களைத் தீக்கிரை யாக்குதல் மேரியின் புகழை அழிக்குஞ் செயலாகுமென்று அவரை வீன யெச்சரிக்கை செய்தனர். இசுப்பானியர் தாமே நெதலாந்தில், இங்கிலாந்தில் நடந்ததினும் பத்துமடங்கு விரைவாக மக்களைத் தீக்கிரையாக்கியும் கடவுள் மறுப்புக் கொள்கையோரைக் கொலை செய்தும் வருவாராயினர். ஆனல், இங்கிலாந்தில் இதுகாறும் இசுப்பானியப் படைகள் இருந்தில; அதன் காரண மாக மேரி விழிப்பாயிருந்திருக்கலாம். இகைக் குறித்துத் தம் கணவன் சொல்லுக்கும் அவள் செவிசாய்த்திலள். ஏனெனில், எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் தேவவாக்கைப் பெற்றிருந்தாள் அல்லவோ ?
இந்த அழிவு தரும் பூட்கையைக் கைக்கொள்ள மேரியை ஊக்கப் படுத்தி வந்த தலைமைக் குருமார் ஆங்கிலத் தொல்மரபுக்குரியவராவர். இவர்கள், அரசின் காலங்கடத்தும் கொள்கையை விட, கத்தோலிக்க மதம் பற்றிய அபிமானம் இனியொருபோதும் மக்களிடையே ஏற்படுவதற் கில்லை யென்பதை அறியாதிருந்தனர். அன்றியும், அவர்கள் பொதுமக்க களிடையே மறைந்துகிடந்த புரட்டசுத்தாந்தப் பேரூக்கத்தைத் தானும் உணர்ந்திலர். அப்பேரூக்கத்தைச் சமயத் துன்புறுத்துதலாகிய இச்செய் கை வெளிப் படுத்தியதுடன், திருச்சபையினதும் அரசினதும் வருங் காலத்தை முடிவு செய்தற்குரியதோர் அரசியற் சத்தியாகவும் மாற்றியது. சீர்திருத்தக் கட்சி-மேரியும் அவர்க்கு அறிவுரை கூறுநரும் அரசவையில் தம் வாழ்நாள் முழுவதும் அக்கட்சியின் தன்மையை அறிந்திருந்தமை போல-தன்னலமுடையதாயும் அமயங்கண்டு நடப்பதாயும், நம்பிக்கை மிகுந்த இராத்தியர்க்குரியதாயும் அரசிளங்குமரனின் சமயத்தைத் தழு விக்கோடற்கு விருப்புடையதாயுமிருந்தது. கத்தோலிக்கரை இப்போது எதிர்த்துநின்ற, மக்களின் எதிர்ப்புணர்ச்சியானது கடலுள் மறைந்து

* உயிர்த்தியாகிகள் ” 48
கிடந்த ஒரு கற்பாறை போன்றிருந்தது. இதில் அவர்தம் குறிக்கோ ளென்னும் கலம் மீட்சியின்றி மோதுண்டு மூழ்கியது.
ஆங்கிலேயரிடத்தே மெதுவாக வளர்ச்சியுறும் அன்புணர்ச்சியை அவர்கள் தவருகக் கருதியிருந்தனர். விருப்பத்துடனே அனுபவித்ததும் வேண்டு மென்று விளக்கப்பட்டது மாகிய மரணவேதனை நீடித்து அடிக்கடி நடை பெற்றமை, மத்திய ஊழியைச் சார்ந்த மக்களைக் குறைந்தவளவில் திகைப் படையச் செய்திருக்கலாம். மேரியின் ஆட்சியில் அத்தகைய காட்சி, இன்று அதனைக் காண்பவருக்கு எத்தகைய இரக்கமும் கோபமும் ஏற்படுமோ, அதிற் சிறிதளவாயினும் எழுப்பியது என்க. இவ்வாறு தோன்றும் முதி ராத பேரிரக்கம் மக்களின் பொறையுடைமைக்கு முதற்படியிடுவதாயிற்று. அது மக்களின் சமயக் கொள்கைகளுக்காக அவர்களைக்கொலை செய்வதை
எதிர்க்குமுகமாக இங்கிலாந்தில்முதன்முதலாக ஒரு மேலிடான மன உணர்ச்சி
யை உண்டாக்கியது. இச்சமயக்கொள்கைகள் அரசியற்செயல்க ளிலிருph தும் வேறுபடுத்தப்பட்டன. இவ்வுணர்ச்சி பிற்காலத்திதல் எழுந்த அர சாங்கங்களின் எல்லா வழக்கங்களையும் பெரிதும் பாதித்தது. "
யோன் பொக்கிசு போன்ற கொள்கை பரப்புநர், உயிர்த்தியாகிகளைப் பற்றிய தம் பேச்சினல் உரோமாபுரித் திருச்சபைமீது ஒரு வெறுப்பை உண்டாக்கினர். இவ்வெறுப்பு எதிர்காலத்தே அரசியல் சமயம் என்பன சார்ந்த பிளவுகள் தோன்றிய நூற்றண்டுகளில் ஆங்கிலேயர் உள்ளத்
தில் நிலையானதோர் மனப்பான்மையை ஏற்ப்படுத்தியது. அடுத்த இரு
நூருண்டுகளுக்கும் அதற்கு மேலும் பொக்கிசுவின் உயிர்த்தியாகிகள் நூல் கோயிற் பற்றுக்களிலுள்ள கோயில்களில் விலிலிய நூலுடன் பலகாலும் வைக்கப்பட்டு வந்தது ; அன்றியும், அதனை அங்கிலிக்கன் சபைக் கிறித்துவரும் பியூசித்தன் சமயத்தாருடி பண்ணை வீடுகளிலும் குடிசைகளிலும் படித்து வருவாராயினர். இது படித்தற்குப் பிறிதொன் றும் இல்லாதிருந்ததும், சமயத்தில் மக்கள் மிக ஆழ்ந்த ஆர்வமுடை யராயும், இவ்வார்வம் எங்கும் பரந்திருந்ததாயுமிருந்த காலத்தில் நிகழ் ந்தது.
பலியிடப்பட்டோரில் பெரும்பாலோர் இலண்டன் மாநகரத்தாராகவோ, மாகாணங்களிலுள்ளவராகவோ இருந்தனர். மேலும், அவர்கள் தாழ் மையுடையருமாவர். ஆனல், இலாத்திமர் சிக்கலானதும் ஐயப்பாடுடை யதுமான பிறர்கொள்கையைத் தம் உறுதியான நம்பிக்கையால் விளக்கிக்
புரட்டசுத்தாந்தத்தின் வளர்ச்சியும் வேகமும் 8,000 மானியம் பெற்ற குருமாருள் 2,000 பேர் தம் மானியத்தை இழக்க நேர்ந்ததால் அறியப்படும். இலிசபெத்து இங்கிலாந்து திருச்சபையை புரட்டசுத்தாந்தத்துக்கு மீட்டும் மாற்றியபொழுது பிடிவாதம் மிகுந்த கத்தோலிக்க குருமாசென்று எண்ணப்ப வர்களான மானியமிழந்த குருமார் தொகை மிகச் சிறிதாகும்.
1555.

Page 251
556.
1558— சனவரி மாதம்.
1558
நவம்பர் மாதம் 7 ஆந் தேதி.
482 " உயிர்த்தியாகிகள்”
கொண்டு தாம் விரும்பியவாறு இறந்தார். மாறுப்பட்ட தந்திரங்களும் விளக்கமற்ற அறிவுரைகளும் இணக்கங்களுமுள்ளதோர் ஊழியில், புதிய காலத்துக்குரிய ஆங்கிலேயர் உணர்ந்து பின்பற்றிக்கொள்ளக் கூடிய தானதொரு முற்போக்கை அவர் கைக்கொண்டிருந்தார். கிருன்மெரின் செயன்முறை ஒத்தவலிமையுடையது; ஆனல், வேறுபாடுமுடையது. ஏனெ னில், அவர் ஐயமுடையோரில் ஒருவராகிக்கடைசியில் ஒரு வழியைத் தழுவியவராய் இருந்ததாலென்க. இங்கிலாந்திற் சமயத்தைக் குறித்து முடியே ஒரு முடிவு செய்யவேண்டுமென்ற நேர்மையான கருத்துடையர் அவர். அங்ங்னமாயின், அவர் மேரிக்கு அடங்கி நடக்கவேண்டுமா? அல்லது தம்முறுதியான கொள்கையை ஆதரிப்பதா ? திடநம்பிக்கைகொண்ட புரட் டசுத்தாந்தராய் மாறிய இராத்தியர் இருதலைக்கொள்ளியிலுள்ள எறும் பொத்தனர். போப்பாண்டவர் புறநெறியாளராய் மாறினல் உரோமன் கத்தோலிக்கர் இவ்வாருன தொல்லைக்கே உள்ளாவர். கிருன்மெரின் கோழைத்தன்மை, கொடிய சாவின் முன்னிலையில் தடுமாறியதும் பின் வாங்கியதும் ஒரு வியப்பன்று. ஆனல், ஈற்றில் தாம் நடந்துகொள்ளும் விதத்தைத் தெளிவாயறிந்து கொண்டாரென்பதே மிகுந்த வியப்பாகும். மேலும், கொள்கைமாற்றச் சுவடியில் ஒப்பமிட்ட தமது கையை அஃது எரிந்து சாம்பராகும் வரை நெருப்பிற் பிடித்துக் கொண்டார். அக்கால மக்கள் எம்மிலும் வலிமையுடைய நரம்புக்கோப்புடையராயிருந்தனரா ? அன்றேல், ஒர் அறிஞனின் மனவன்மை உடற்றுன்பத்தைத் தாங்கக் கூடிய அத்துணை யாற்றலுடையதாயிருந்ததா ? இத்தகைய மிகச்சிறந்த முன் மாதிரிச் செயலாலேயே இங்கிலாந்துத்திருச்சபை புத்துயிர் பெறுவதா யிற்று. -
இசுப்பெயினை மகிழ்விக்க இங்கிலாந்து பிரான்சுடன் சிறிதும் நியாய மின்Uச் செய்த போரில் கலே நகரத்தைப் பிரான்சியர் கைப்பற்றியமை மேரியின் அவகிர்த்தியை மிகுவித்தது. ஆயினும், நாட்டினப் பெருமைக்கு இழிவுண்டாகும்வகையிற் பிரான்சிலுள்ள இந்தச் சிறந்த பாலமுனையை இங்கிலாந்து இழந்தமை, அதற்குத் தீமைபோற் றேன்றி நன்மை பயந் தது. எனெனில், அதன் புகழ்மிக்க வருங்காலம் ஐரோப்பாக் கண்டத்தில் தங்கியிருக்கவில்லை.
ஈற்றில், பிள்ளையின்றியும், தங்குடிகளால் வெறுக்கப்பட்டும், தமக்குப் பின் உயிருடன் வாழ்ந்து தம் அரசுரிமையைப் பெறவேண்டிய உடன் பிறந்தாளிடத்தே அன்பினைச் செலுத்திக்கொண்டிருந்த தங் கண வஞற் புறக்கணிக்கப்பட்டும் தாம் கடவுளுக்கு ஆற்றிய தொண்டை இலிசபெத்தரசி விரைந்தழித்து விடுவாரென்று அஞ்சி இருந்தவரும் தியூடருள் மிகுந்த நேர்மையுடையரும் தீங்குபயக்கும் அறிவுரை பெற்ற வருமான மேரியரசியார் சாகுங்காலத்தை அடுப்பாராயினர். பல நூற் ருண்டுகளாக இங்கிலாந்து இவ்வாறன தாழ்வுநிலையை இதற்கு முன் னெருபோதும் அடைந்திலது. சமாதான காலத்திலும் போர்க்காலத்திலும்

மேரியின் தோல்வியும் மரணமும் 483
போர்க்கருவிகளும் தலைவர்களுமின்றி, ஒற்றுமையும் ஊக்கமுமின்றி நாடு ஆட்சிக்கேடுற்றும் இழிவுற்றும் இருந்ததுமன்றி, அஃது எல்லாப்படியா லும் இசுப்பானியப் பேரரசின் ஆதீனத்துக்குட்பட்டுமிருப்பதாயிற்று. என் றியின் பிள்ளைகளில் இருவர் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யத் தவறினர்; அவனது பின்மரபுக்குரிய மூன்றவதும் கடைசியுமான மகளா கிய ஓர் இளம்பெண்தம்மைக் காப்பாளென மக்கள் நம்பிக்கையி ழந்த நிலையிற்பேராவலுடன் எதிர்பார்த்திருந்தனர். வரலாற்றில் நிகழ்ந்த மிக வியப்பானதொரு மாற்றத்தின் விளைவால், பரந்த ஐரோப்பா முழு வதிலும் எந்த முதிய அரசியற் கலைஞனே, அல்லது புகழ்பெற்ற தளபதி யோ ஆங்கிலேயரை மீட்டும் சமாதானம், நல்வாழ்வு, புகழ்படைத்த புதுத் துறைகள் ஆகியவற்றில் அத்துணைச் சிறப்பாக வழிகாட்டி நடாத்தியிருக் முடியாத முறையில் அவ்விளம்பெண் கருமமாற்றினுள் என்க.
அத்தியாயம் V இலிசபெத்தரசியின் குணவியல்பும் பூட்கையும். இலிசபெத்துத் திருச்சபை இணக்கம். இசுப்பெயினும் பிரான்சும். கொத்துலாந்துச் சீர் திருத்தமும் பெரிய பிரித்தானியாவின் எதிர்காலமும். 'ஏள்களின் எழுச்சியும்? இங்கிலாந்தின் நிலமானிய முறைமையின் முடிவும்.
கத்தோலிக்க திருச்சபையும் மானியக்கடப்பாடும் நெடுங்காலமாக மக்கள் மனத்திற் பதியவைத்த, உலகப் பொதுநோக்குடைய சங்கங்களுக்கும் கூட் டுத்தாபனங்களுக்கும் கீழ்ப்படிதல் என்னும் கொள்கைக்குப் பதிலாக, சமுதாயத்துக்கே ஒருவன் கடப்பாடுடையவன் என்னும் நாடுசார்ந்த அல்லது நாட்டுப்பற்றுச்சார்ந்த கொள்கையைப் பற்றுமாறு கடந்த சில நாற்ருண்டு களாகப் பல்வேறுபட்ட சத்திகள் ஆங்கில மக்களை ஈர்த்து வழிப்படுத்தின. ஒருநாட்டவர் என்றவுணர்ச்சியை யுண்டாக்கிய சத்திகளுட் சில : ஆங்கில வழமைச் சட்டம், அரச அமைதியும் அரச மன்றுகளும் ; கோட்டங் களினதும் பரோக்களினதும் பிரதிநிதிகள் பாராளுமன்றமெனும் நாட்டுச் சபையில் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டமை ; நகராண்மை நிரு வாகமைப்பிலும்மேலாக நாட்டின் நிருவாகவமைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய ஆடைக் கைத்தொழில், இங்கிலாந்து முழுவதற்கும் பொதுவான புத்திலக்கியமும் புதுமொழியும் ஆகிய இவைகளேயாகும். ஈற்றில்தனியொருவனுக்கும் கடவுளுக்கும் இடைநின்ற எல்லாவற்றையும் அகற்றுவதைப் புரட்டசுத்தாந்தம் தன் நோக்கமாகக் கொண்டதுபோல

Page 252
484 புரட்டசுத்தாந்தமும் நாட்டினவுணர்ச்சியும் புத்துயிர் பெறல்
தனியொருவனுக்கும் அரசுக்கும் இடைநின்ற எல்லாத்தொடர்புகளையும் தியூடவரசர்களின் செயல்கள் அழித்துள்ளன அல்லது புறக்கணித்துள்ளன. இலிசபெத்தரசியின் காலம் நாட்டின உணர்ச்சியிலும் தனியாண்மை யிலும் மேம்பட்டது.
உலகப்பொதுவான திருச்சபையின் ஆட்சியை மீட்டும் நிறுவுதலை மேரி உண்மையில் மேற்கொண்டார். இத்திருச்சபை தன் வழிபாடுகளைப் பிற மொழியில் நடாத்தியது ; தனக்கு வேண்டும் விதிகளை அல்பிசு மலைக் கப்பாலுள்ள நாட்டிற்றேடியது. பழைய உரோமானியர்க்கும் சீசருக்கு முரிய ஆட்சித் தத்துவங்களுக்கிசைய அது அமைக்கப்பட்டிருந்து. இவ் வாட்சி ஆங்கிலப் பொதுமக்கள் உலகியல் சார்ந்த தம் அலுவல்களை நடாத்துவதில் விருத்தி செய்துவந்த, நாட்டுக்கும் பாராளுமன்றத்தார்க்கு முரிய அரசுமுறையினின்றும் வேறுபட்டதாகும். குருவாயத்துப் பெரும் பகுதியினரும், ஒரளவு மானியமுறையைத் தழுவும் வட இங்கிலாந்திலுள்ள வரும் மேரியினலே சமய ஆட்சி மீண்டும் நிறுவப்படுதலை விருப்பத்துடன் எற்றுக்கொண்டனர். ஆனல், இஃது இலண்டன் மாநகரத்தாராலும் கட லோடுபவராலும், புதிதாகத் தோன்றும் மத்திய வகுப்பினருடன் மிக்க தொடர்புகொண்டிருந்த பெருஞ் செல்வருள் முயற்சிமிக்குடையோராலும் விரும்பப்பட்டிலது. இம்மக்கள் தஞ்சமயக்கோட்பாடுகள் பற்றிக் குருமார் கட்டளையிடுவதையும் தம் வாழ்க்கை அவர்களாற் மேற்பார்வை செய்யப்படு வதையும் விரும்பவில்லை. அதிலும் அவர்கள் கடலுக்கப்பாலுள்ள நாடு களிலிருந்து வரும் கட்டளைகளை எட்டுணையும் விரும்பவில்லை.
பொதுமக்கள் சபையிற் பிரதிநிதிகளாயிருந்த இத்தகைய நோக்கமுடை யவர்களின் உதவி கொண்டு, இலிசபெத்தரசி தம்மாட்சியின் முதலாண் டில் நேர்மையான நிபந்தனைகளின் பேரில் தமக்குப் பணிவாயமைந்த தேசீயத்திருச்சபையோடு நாட்டினப் பொதுமக்களின் அரசவாதிக்கத்தை மீட்டும் நிறுவினர். அவரின் நீண்ட வாழ்க்கையின் மிகுதிப்பாகம் மக்கள் எல்லார்தம் பழக்க வழக்கங்களையும் கருத்தாய் இப்புதிய இணக்கவொழுங் குடன் இசையச்செய்வதிலும், அதை உண்ணுட்டில் மனக்குறையுடையவரி னின்றும், போர் தொடுக்கும் பிறநாட்டாரினின்றும் காப்பதிலும் கழிவதா யிற்று. விவிலிய நூல், வழிபாட்டுநூல், அரசபற்று ஆகியவற்றினல் ஒரு புதிய சந்ததி வளர்ச்சியுறும்வரை, வெற்றிபெறும் வாய்ப்புக்களைக் காட் டிலும் அதிக தீங்குகளே விளையக்கூடுமெனப் பல்லாண்டுகளாகத் தோன் றிற்று. ஐரோப்பாவிற் கத்தோலிக்க சமயமீட்சிக்குத் தலைமைதாங்கியதும், புதியவுலகத்துக்குச் செல்லும் கடல்வழிகளின் முழுவுரிமைபெற்றதுமான இசுப்பெயினுக்கு எதிரான கடலாதிக்கப் போராக அப்போட்டி ஈற்றில் மாறியது. அப்போர் ஆவேசத்தில் ஆங்கில நாகரிகம் அதன் இக்காலவடிவில் ஒன்றுபட்டுப் பொருந்தியது. நீர் சூழ்ந்ததும் கடலுக்குரியதுமாயமைந்த இந்நாகரிகம் முன்னெருகால், நோமானியரது ஆளுகையினல் தானும் ஒரு பகுதியாயிருந்த ஐரோப்பிய நாகரிகத்தினின்றும் தனிப்பட்டதாகியது.

புரட்டசுத்தாந்தமும் நாட்டினவுணர்ச்சியும் புத்துயிர் பெறல் 485
இக்கால இங்கிலாந்து உருவாக்கப்பட்டதுமட்டுமன்றிப் பெரிய பிரித்தா னியாவின் வருங்காலவெல்லை வரையறுக்கப்படலுமாயிற்று. ஐரோப்பாக் கண்டத்துக் கத்தோலிக்க வல்லரசுகளுக்கு மாறய் இங்கிலாந்தின் சுதந் திரத்துக்காக வெழுந்த போரின் உடனடியான விளைவாக, இசுக்கொத்து லாந்து மக்களுக்கும் ஆங்கிலேயர்க்குமிடையே நெடுங்காலமாயிருந்த பகை மைக்கு ஒரு முடிவுகாணப்பட்டது. கத்தோலிக்க அயலாந்தை வெற்றி கொண்ட மிகக் கொடிய, அழிவுக்கேதுவாயிருந்த போருக்கும் அதே குறிக்கோள் காரணமாயிருந்தது.
இலிசபெத்தரசியின் காலத்திருந்த ஆங்கிலேயரிடையே, கடலிலும் தரை யிலும், தனியாண்மை, நாட்டின உணர்ச்சி என்பன சமநிலை பெற்றும் கட்டுப்பாடற்றும் இணங்குவவாயின. பிற்காலப் பிரான்சையும் பிரசியா வையும் போல ஒருவனை நாட்டரசின் விருப்பப்படி நடக்கச் செய்வதற்காகச் சேனைக்கும் பணிக்குழுவுக்கும் பொருள் செலவிட முடியாதநிலையில் ஆங் கில அரசு இருந்தது. இலிசபெத்தரசி காலத்தில் நிலவிய நாட்டின் வறுமையே. அவ்வாட்சியின் மிகவிழிந்த குறைபாடுகளுக்கும் கண்ணிய மற்ற சூழ்ச்சித்திறங்களுக்கும், மற்று அதிகமான அதன் நற்பண் புகளுக்கும், மேன்மைமிகுந்த நோக்கங்களுக்கும் காரணமாயிருந்தது. போர்க்காலத்தில் ஓராண்டிற்கு ஐந்துலட்சம் பவுணை இறையாகப் பெற முடியாத வரசி உலோபகுணமுடையவராயிருத்தல் இயல்பே. ஆனல், அவர்க்கு வேண்டியவற்றைப் பெறுதற்கு அவர் தங் குடிகளிடம் வரி யறவிடாமையால் தம் போர்களில் உதவிபுரியுமாறும் தம்மிடத்தே கொண்ட அன்பின் நிமித்தம் தஞ்சேவைக்காக உழைக்குமாறும் அவர்களின் கட்டுப் பாடற்ற அரசபற்றுக்கு மகிழ்ச்சியுடன் முறையிட்டார். அவர்கள் வரிப் பணத்தைக் கொடுப்பதிலும் மிகுந்த ஊக்கத்துடன், தம்மன்பையும் தம் முயிரையும் கொடுத்தனர்; இவைகள் தவிர்ந்த எனைய காலத்தில், அரசி தாமே எழுதிய அரசியல் சம்பந்தமான ஒருகவியில் விளக்கியது போல், அயல்நாடுகள் சமயப்போர்ச்சுவாலையில் இன்னும் மூழ்கியிருக்க, தம் நாட்டில் அமைதியையும் நல்வாழ்வையும் அளித்த இராணியின் உயிரை அருஞ்செல்வமாய் மக்கள் பாதுகாக்கும்வரை “ சாந்தமான அமைதியை வளர்க்கும் முறையைக் கற்பிப்டதையே ’ நோக்கமாகக் கொண்டிருந்தார். அவர் திருச்சபையோடு ஒத்துமேவிய பான்மை, புரட்டசுத்தாந்தச்சார்பு மிக்கு டையதென்றும் புரட்டசுத்தாந்தச் சார்பு குன்றியதென்றும் கருதி அவ் வொத்துமேவலை வெறுத்த பலர், அமைதியான அரசாங்கத்துக்கு வேண்டிய நிபந்தனையதுவென அதை ஏற்றனர். இஃது, மதவெறிப் போட்டிகள் நிறைந்த ஒர் ஊழியில் அரசுபாயத்திருவிளையாடல்போலத் தோன்றியது.
*சொல்லின் போர்க்கொரு துரமொழி மேரியாள்
அல்லல் வேற்றுமை ஆங்குப் பரப்பினுள் நல்ல முன்னர சாட்சியில் நாட்டிலே புல்லு சாந்தமும் புல்லாது போகவே.

Page 253
1558, நவம்பர் மாதம்.
486 பிரான்சுக்கும் இசுப்பெயினுக்குமிடையில்
இலிசபெத்து இருபத்தைந்து வயதில் அரசுகட்டிலேறியபோது, படையெடுக் கும் பிறநாட்டானெருவனை எதிர்க்கும் நிலையில் நாடு இருந்திலது. அக் காலத்துள்ள பிரான்சை அயலான் அடிப்படுத்தியது போன்று இங் கிலாந்திலும் கொடுமையான சமயப் பிணக்குகளினல் நாடு பிரிந்தது மன்றி, பல்லாண்டுகளாக அஃது இசுப்பெயினின் ஆட்சிக்குட்பட்டதாயும் அமைந்தது. நிதிச் செல்வாக்கு, போர்ப்படைச்சாலைகள் இராணுவம் ஆதிய இவைகள் மிகத் தாழ்ந்த நிலையிலிருந்தன. அன்றியும் அமைதிக்காலத்தி லோ போர்க்காலத்திலோ இங்கிலாந்தைத் தலைமைதாங்கி நடாத்தவல்ல மனிதர் எவரேனும் இருந்தால், அவர்களேக் கண்டறியும் பொறுப்பு இவ்விளம் பெண்ணுக்குரியதாகவேயிருந்தது. அங்குப் பொறுப்பேற்க வர வேண்டியவர் சேர் உவில்லியம் செசிலாவர் என்று இசுப்பானிய தூத ராலயத்தில் பொதுவாகப் பேசுவாராயினர். உயர்குடிப்பிறந்தவரெனி னும், மிக்கசெல்வம் படைக்காத நடுத்தர வகுப்புக்குரியதோர் அரசிய லறிஞர் அவர். அன்றியும் அவர் வைதிகக் கொள்கையை முழுவதும் மனத்துள் மறுப்பவராயிருந்தனர். ஆனல், மிகுந்த ஆபத்தானவர். ஏனெனில், அவர் கொள்கை வெறிபிடித்தவர் அல்லர் ; ஆனல், இலிச பெத்தரசியைப் போலவே, அவரும், கத்தோலிக்கப் பூசைவழிபாட்டை எற்றல், வாழ்வில் வெற்றிகாண்டற்குவேண்டுமென்னுங் கருத்துக் கொண்ட GluUITG)JFT.
ஆயினும், இசுப்பானியவரசர் பிலிப்பு என்பார், புதியவரசியின் ஆட்சி யைப் பாதுகாத்து வந்தார் : மேலும், அவர் சமயத்தைக் குறித்துத் தமக் கிருந்த பேரச்சத்தை அரசி நிறைவேற்றியபின்னரும் பல்லாண்டுகளாகத் தம் பாதுகாப்பைத் தொடர்ந்தளித்து வந்தார். எனெனில், ஆங்கில வரசுக்கு அடுத்தவுரிமையுடையர் இசுக்கொத்துலாந்து நாட்டவரான மேரி யென்பார் ஆதலின். மேரி, உண்மையில் ஒரு பத்தியுடைய கத்தோலிக் கர்; ஆனல், பிரான்சிய இளவரசரைத் திருமணஞ் செய்திருந்தார். இலிசபெத்தரசியாட்சி முழுவதிலும் பிரான்சும் இசுப்பெயினுமாகிய பேராற்றல் வாய்ந்த இரு கத்தோலிக்க நாடுகளுக்கிடையே உண்டான போட்டியே, பரநெறிக் கொள்கையுடைய இங்கிலாந்து பிறராற் கைப்பற்ற முடியாத வலிமையடையும்வரை, அதனைக் காத்து வந்தது. இவ்விரு பகை நாடுகளுள் ஒன்று இங்கிலாந்தைக் கைப்பற்றுவதை மற்றையது தடுத்து வந்தது. இசுப்பெயினுக்கு மாறன நெதலாந்துக்கலகமும், பிரான்சி லுண்டான சமயப் போர்களும், இங்கிலாந்துக்கு மேலதிகப் பாதுகாப்புக் களாயிருந்தன. அவற்றுடன், இலிசபெத்தரசி இவ்விரண்டு இயக்கங்களும் நீடித்து நிலைபெறுமாறு பொருட்பலத்தையும் ஆட்பலத்தையும் அடிக்கடி யனுப்பிக்கொண்டிருந்தார். ஆனல், அவர் ஆட்சியின் முற்பகுதியில் நெதலாந்து வெளிப்படையாகக் கலகஞ் செய்ய முற்பட்டிலதாதலால், பிலிப்பை இன்னும் நேரிற் புகழ்ந்து ஏமாற்றுவதே இலிசபெத்தின் பங்காக விருந்தது. எவ்வாறு அவர் பிலிப்பை எமாற்றிவந்தாரெனின், தாம்

இலிசபெத்தின் குணவியல்பும் பூட்கையும் 48
பிலிப்பை அல்லது அவர் குறித்தவொருவரை மணம் முடிப்பதான நம்பிக் கையை அவருக்கு ஊட்டியதாலென்க. எனினும் தாமே தம் கழுத்துக்குச் சுருக்கிடும் நோக்கம் யாதும் அவரிடமிருந்ததில்லை.
என்ருலும் இசுப்பானியருடன் நட்பு பூண்டிருக்க இலிசபெத்தரசியார் மிக விரும்பினலும், தம் வாழ்க்கை, சுதந்திரம், அரசு என்பவற்றையிட்டு மேரியின் பிற்காலத்திற் பிலிப்பு காட்டிய நல்லெண்:ைத்துக்குத் தாம் எவ்வாற்ருனும் கடமைப்பாடுடையரென்று இசுப்பானிய தூதமைச்சர் கூற வொருபோதும் அவ்வரசியார் இடமளிக்கவில்லை ; ஆங்கில மக்களுக்கே தாம் பெரிதுங் கடமைப்பட்டவரென்று கூறினர். இக்கூற்றுப் பூரணமான உண்மையன்றெனினும், இக்கூற்றிற் காணுஞ் சிறிதளவான உண்மை மிக முக்கியமானதாகும். தற்பெருமையுடையனவும், விஞ்சகமுடையனவு மான சொற்கள் என்ற கரும் முகிலினிடையே சடுதியிற் றேன்றிய நேர்மை என்ற மின்னலொளிபோன்றது இக்கூற்று. இத்தகைய தற் பெருமையுடைய சொற்களால் இலிசபெத்து தம்முண்மையான கருத்தை யும் நோக்கத்தையும் மறைக்க விரும்புவர். சிற்சில வேளைகளில் அவர் உண்மையாகவே ஏமாற்ற வேண்டுமென்ற கருத்தின்றிப் பொழுது போக்குக்காகப் பொய் சொல்லியிருக்கிறர். உதாரணமாக, அவர் தாமொரு துறவிப் பெண்டிராயிருந்து கொண்டு, காலை முதல் மாலை வரையும் தம் உருத்திராக்க மணிகளை யெண்ணிக் கொண்டு ஒரு சிற்றறையில் வாழ விரும்புவதாக இசுப்பானிய தூதருக்குக் கூறினர். இதற்கு அத்தூதர் “இப்பெண் நூருயிரம் பிசாசுகளாற் பீடிக்கப்பட்டுள்ளாள் " என்று குறிப் பிட்டார்.
அரசுகட்டிலேறியபோது தாம் "ஆங்கிலப் பண்பு மட்டுமுடைய பெண் * என்று இலிசபெத்து தங்குடிகளிடம் பெருமை பேசினர். அவர் தாய் வேற்றுநாட்டிளவரசியல்லள் ; ஆனல், ஒர் ஆங்கிலச் சாசக்காரியாவள். இங்கிலாந்தின் கடற்படையையும் சமயசுதந்திரத்தையும் நிறுவிய அவர் தந்தையார், பகுத்தறிவு கொண்ட வொருவராவர் ; அதனைக் கொண்டு ஆங்கில மக்களை நன்கறிந்திருந்தார். இவ்விருவரிடத்திருந்த பண்புகளையும் இலிசபெத்து பெற்றிருந்தார் ; ஆனல் பெரும்பாகமான பண்புகளைத் தந்தையிடமிருந்து பெற்று அவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதே யவர் தம் பேராவலாகும். தம் தாயின் இறுமாப்பையும் காதல் காட்டி மருட்டும் பண்பையும் உரிமையாகப் பெற்றிருப்பினும், இலிசபெத்து, தமது விதியின் ஆணையையும் கருத்திற் கொண்டிருந்தார். சிறுமியாயிருந்த காலத்தில் தாம் வெறுப்புடன் அனுபவித்த மானக்கேடு, சிறைவாசம் ஆகியவற்றினல், மகா பிரெடரிக்கு தமது இளம்பருவத்தில் அத்தகைய அனுபவங்களாற் பயின்றிருந்தவாங்கு, தாமும் பயின்று, அதன் பயஞய் தனியொருவரின் அன்பும் காமமும் அரசர்க்குரியனவன்று என்றுணர்ந்தார். துன்பந்தரக்

Page 254
488 இலிசபெத்தின் குணவியல்பும் பூட்கையும்
கூடியனயாவற்றையும் முழுதும் உணர்ந்து கொண்டார். மேலும், காதலுக்காக உலகத்தையிழக்குஞ் செயலைத் தம் போட்டியாளரிடம் au' (BGS). Tii".
ஒரளவு உறுதியும் கரடுமுரடுமான தோரியல்பும் அவரிடத்திற் காணப் பட்டன; அவை வாழ்க்கையில் அவர் தம் பயங்கரமான முயற்சிக்கு இன்றியமையாது தேவைப்பட்டன போலும். தனிப்பட்ட முறையில் அவர் அன்புக்குரியவருமல்லர். ஒருவேளை போற்றத்தகுந்தவராயுமிருந்திலர். ஆனல், பட்டத்தரசியாய்த் தனியேயிருந்து கொண்டு தம்மை அரசவை யத்தாருங் குடிகளும் அன்புடன் போற்றுதற்கு வேண்டிய எல்லாவித்தை களையும் அவர் நன்கறிந்திருந்தார். பெண்ணுக்குரிய பண்புகள் யாவும் பெற்று, வாழ்வை முற்றிலும் அனுபவிக்க விரும்பினராயினும் எல் லாவற்றையும் அரசபணிக்கு அடிமைப்படுத்தினர். அவருடைய கல்வி அவ ரைப் பல்கலைகழகங்களின் அன்புக்கு ஆளாக்கியது. அவருடைய காதல் மருட்டு, பிரபுக்களையும் அரசவையத்தாரையும் அவரிடத்தில் ஈர்த்துவைக் கும் கருவியாயமைந்தது. மேலும், நாட்டுப் பணியில் அவர்களது பற்றுறு தியைச் சிறிதுதானும் தவறவிடாது அவர்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து செவ்வனே பெறுதற்குமுதவியது. அரசி தம்கையால் இலசித்தர் கன்னத் திற்றட்டி அவரை மகிழ்வித்திருப்பர் ; ஆனல், அவர்க்குப் போட்டியாளரான செசிலே அரசியல்விடங்களில் நம்பப்பட்டார். பயனற்றவரும் சதிசெய்யுமியல் புடையவருமான இலசித்தரை அரசி மணமுடிக்க நேருமென்ற சிறிய அச்சத் தாற் செசிலும் சிறந்த பணியாற்றியிருத்தல்கூடும். பியூரித்தன் கட்சியின் ஆதரவாளராகச் சில வேளைகளில் நடித்துக் கொண்ட இலசித்தர், இலிசபெத்தரசியைத் தாம் திருமணம் செய்ய இசுப்பெயின் உதவி புரியுமானல், இங்கிலாந்தில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை மீண்டும் நிறுவ ஆயத்தமாயிருப்பதாகப் பிலிப்புக்கு அறிவித்தார். வேட்டை யாடுதல், நடனமாடுதல், முகமூடிதரித்தாடுங் கூத்து (பொருநர்க்கூத்து) வேடிக்கை, ஆடம்பரம் என்பவற்றில் அரசிக்கிருந்த பெருவிருப்பு, அவர்க்கு இறுதியான ஆதாரமாயுள்ள மக்களாதரவை உறுதிப்படுத்தப் பயன்பட்டது. அரசியார் மக்கள் முன் காட்சியளிப்பதிலும் நாடெங்கணும் பவனிசெல்வதி லும் மிகமகிழ்ச்சியடைவர் ; ஆனல் இவை ஊக்கமற்ற நியமக் கடமை களாக மட்டும் அமையாது, தன் முழுமணமும் படிந்துள்ள நாடகத்தில் நடிக்கும் ஒரு பெருநடிகனின் கலைத்திறனைக் காட்டுஞ்செயல்களாயுமிருந் தன. மேலும் இவை ஓர் அரசிக்கும் அவரின் அன்புக்குரிய குடிகளுக்கும் இடையே நிகழ்ந்த ஆன்மவுறவுமாம்.
இலிசபெத்தரசி, தாம் மக்கட் பேற்றுக்குத் தகுதியற்றவர் என்றறிந்திருந்தாரென்பது நிச்சயமில்லாவிடினும் சாத்தியமானதாகும். மேலும் திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணமோ அல்லது காதல் காட்டி மருட்டுதலைத் தவிர வேறெதனிலும் விருப்பமோ அவரிடம் உண்மையில் இருந்ததில்லை. இந்த விலைமதிப்பற்ற அரசியல் இரகசியத்தைச் செசில் என்பாருக்குங் கூடத் தெரியாது காப்பாற்றுதல் அவர் தம் குணத்தை விளக்கு வதாயிருந்திருக்கும்.

இலிசபெத்தின் குணவியல்பும் பூட்கையும் 489
ப்ாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய விரிவுரைகள் இக்கால யாப்பமைப் புக்கமைந்த அரியணைப் பேச்சினின்றும் வேறுபட்டவையாகும். இரு சபை களின் பிரதியாளர் குழுவொன்று அவர்பின் ஆட்சியுரிமை குறித்து நடவடிக்கையெடுக்குமாறு தூண்டுதற்கு வந்தபோது, அக்குழுவிடம் அவர் கூறியது வருமாறு : “நான் ஒரு பெண்ணுயிருந்தும் என் தந்தையாருக்கு இருந்தது போல எனக்கும் என்னிலைமைக்கு எற்றதான துணிவுண்டு. நான் முடிசூட்டப்பட்டு உங்கள் அரசியாக்கப்பட்டவள். கொடுமையான செயல் களைச் செய்யுமாறு என்னை வலோற்காரமாய் ஒருக்காலும் வற்புறுத்த முடியாது. நாட்டில்பிருந்து எனது உள்ளாடையுடன் நான் துரத்தப்பட் டாலும் கிறித்துவ நாடுகளில் எங்காயினும் வாழ்வதற்கேற்ற பண்புகள் உடையேன்; அதற்காக நான் கடவுளுக்கு வணக்கஞ் செய்கிறேன்!”
சில வாண்டுகளில், அன்றேல், சில மாதங்களிற்றணும் ஆடவர் தம் முயர்பதவியில் அலுப்படைந்து போகின்றனர் என்று கூறப்படுவதுண்டு. வீரமுடைய இப்பெண்ணே நாற்பத்தைந்தாண்டுகளாகப் போர்க்காலத்திலும் போரில்லா வமைதிக்காலத்திலும் தாமே தமக்கு முதலமைச்சராயிருந்தார். அவ்வாண்டுகளிற் பெரும்பகுதி, அரசுக்கும் அவர் உயிர்க்கும் இன்னல் நிறைந்த தொன்றகும். தம் வாழ்நாள் முழுதும் உடற்றளர்ச்சியுடைய வராயிருந்தார். தம்மை நடுங்கச் செய்த மனப்போக்குகளுக்கும் நிலைகளுக் கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாகிப் பெரிதும் பாதிக்கப்பட்டபோதும், இவை யாவும் அவரைத்தம் அரசியல் நிலையினின்றும் எக்காலத்தாயினும் அசைத்தில. அவர் மனம் உணர்ச்சியற்ற தென்பது உண்மையாயினும், அது மிக வன்மையுடையதாயிருந்தது.
s
“ தாம் ஆங்கிலப் பண்பு மட்டுமுடையவள்)’ என்று அவர் தம்மைச் சொல்லிக்கொண்டபோதும் அவர் பயின்ற கல்வி முற்கால பிற்காலங்களில் ஐரோப்பா அளிக்கக்கூடிய கல்வியினும் மிகப் பரந்த நோக்குடையதாயிருந் தது. ஒட்சுபோட்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகங்களில் கிரேக்க இலத்தீன் மொழிகளில் அவர் விரிவுரை செய்தார். மேலும் மக்கியவல்லியின் நாட்டு மக்களுக்கு இத்தாலிய மொழியிலே சொல்லொழுக்குடன் பேசினர். தம் நீண்ட கால வாழ்க்கையில் இங்கிலாந்தை விட்டுப் பிறிதிடஞ் சென்றறி யாத போதும் அவர் அவளின் எதிரிகள், “இத்தாலியிற் பிறந்த ஆங்கிலப் பெண் ” என்று வழங்கினர். கொள்கைவெறிக்காளாகாத தத்துவஞானிகளாகிய வேமிக்கிளி, ஒசினே முதலிய இத்தாலி நாட்டுப் பரநெறியாளரின் செல்வாக்குக்கு அவர் உட்பட்டிருந்தார். மறுமலர்ச்சி, சீர்திருத்தம் ஆகிய இவ்விருவகை இயக்கங்களுக்குமுரிய வேறுபாட்டைக் கணிக்க முடியுமானலும், அவர் மறுமலர்ச்சிக் குழந்தையேயன்றி மதச் சீர்திருத்தத்துக்குரியவரல்லர். கொலத்து, இராசுமசு ஆகியோரின் இக்கால மனச் சார்புக்கிணங்க அவர் தஞ் சமயத்தைக் குறித்துச் சிந்திக்கலானர்.

Page 255
490 இலிசபெத்தின் குணவியல்பும் பூட்கையும்
இரண்டு தலைமுறைகளுக்குப்பின் அவ்விருவரின் சார்புமுடைய ஒருவர்க்கு இயேசு சபையாரின் உரோமாபுரி, ஒவ்வாததாயிருந்தது; “பொருள் மாற் றத்’ திருக்கோட்பாடு நம்ப முடியாததாயிருந்தது. அரசுக்குரிய மாவட்டத் தையும் அதன் குடியரசமைப்பையும் பறிமுதல் செய்த செனிவாத் திருச் சடை அவர் மனதைச் சிறிதுங் கவர்ந்திலது. அவரின் வழித்தோன்றல் * பிசப்பின்றேல் அரசனும் இன்று ”, என்று கூறவேண்டியிருந்திருந் தால், அதற்கு மிக முன்பே இலிசபெத்தரசி அதனைத் தம் எண்ணத்தி ஆலுஞ் செயலிலும் காட்டியிருந்தார்.
மதவெறி வளர்ச்சியுற்றதொரு காலத்தில், சமயப் பற்றற்றவரும் பொறை யுடையவரும், கருத்தில் ஆங்கிலேயரும், கல்வியில் ஐரோப்பியருமான அவர் அங்கிலிக்கன் திருச்சபையை மீண்டும் நிறுவப் பிறந்து வளர்ந்தவ ரானர். அன்றியும், அரசையுங் குடிகளையும் அவர்தம் நாட்டிலேயே ஆட்சியாளராய் வாழவிடுதற்காகக் கத்தோலிக்கருக்கும் புரட்டசுத்தாந்த ருக்குமிடையே, தாம் கூர்ந்து கற்றுணர்ந்த இணக்கமுறையினல், சமயப் போர் நிகழாவண்ணம் விலக்கியும் வந்தார். தஞ் செயல் தம் தந்தையார் பூட்கையைப் புதுப்பித்ததென்று மதித்தார் ; ஆனல், கால மாற்றத்தால் புரட்டசுத்தாந்தம் மேலும் புகுத்தப்படவேண்டியதாயிற்று ; எனெனில், போப்பாண்டவர் கிறித்துவுக்கு மாறனவரென்றும், கத்தோலிக்க வழிபாடு வெறுப்புக்குரிய தென்றும், மதிப்போரின் உதவியின்றி, இயேசுசபைப் பிரசாரகரும், இசுப்பெயினின் வேல்வீரரும் மாலுமிகளும் தோற்கடிக்கப் படமாட்டாராதலின் என்க. கிருன்மர் புதுப்பித்த வழிபாட்டு நூல் ஒப்பற்ற இடைநிலையாக விளங்கியது.
உருவ வழிபாட்டாருடன் நடத்திய போருக்குமுன்னரும் பின்னரும், திரேக் கின் கலன்களிலிருந்தவருக்கு அது பெரிதும் பயன்பட்டது. அன்றியும் பேணுட்டு கில்பினும், ஊக்கமுடைய எனைய புரட்டசுத்தாந்தக் குருமாரும் கோயில்களில், புதியசமயத்தை யறிவற்ற மக்களிடம் புகுத்த அரும்பாடு பட்டபோதும் அது பயன்பட்டது. பன்னிரண்டணத் தண்டப் பணத்தை விலக்க ஐயப்பாட்டுடன் கோயிலுக்குச் சென்றும் ஒளித்தும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கர் திகைப்புக்கு மேலாக அச்சம் கொண்டனர். மேலும், அவ்வழிபாடுகள் ஆங்கிலத்திலெழுதப்பட்டிருந்தாலும் அவை பழைய வழி பாடுகளேயென்று அவர்கள் கண்டனர். பல்வேறு வகைப்பட்ட மக் களுக்கு வேறுவேறன கருத்துக்களைப் பயந்தமையால், அந்நூல் பச் சோந்திக்கொப்பான ஒரு நூலாயிருந்தது.-அறிவுள்ள இவ்விளம் பெண் ணரசியின் போக்குக்கு இதுவும் வாய்ப்புடையதாயிருந்தது. ஏனெனில் ஆடைப்பேழையில் பலவித ஆடைகளை வைத்துக்கொண்டு, அவைகளைக் காட்சியளிப்பதற்கு எவ்வாறு விரும்பினரோ அதுபோலத் தம் பூட்கை சம்பந்தமாய் வெவ்வேருன விளக்கங்களையுடையவராய் அவைகளை ஒன்றன் பின்னென்றய வெளிப்படுத்த அவர் விரும்பினர். w

சமய இணக்கம் 49
1559 ஆம் ஆண்டிற் பாராளுமன்றம் ஆதிக்கவிதியை நிறைவேற்றியத ஞல் அங்கிலிக்கக்கிறீத்தவ முறையில் சீர்திருத்தத்தை மீண்டும் நிலை நாட்டியது. அவ்வாதிக்கச் சட்டம் போப்பாண்டவர் அதிகாரத்தை ஒழித்தது. வழிபாட்டு நூலொன்றைச் சட்டப்படி வழிபாட்டுக்குரியதெனக் கொண்ட ஒருமைப்பாட்டு விதியும் நிறைவேற்றப்பட்டது. அரசினதும் பொதுமக்கள் சபையினதும் விருப்பினை இந்நியதிச்சட்டங்கள் எடுத்துக் காட்டின. திருச்சபை யின் தலைமை ஆள்பதியின் பெயரையும் கடமையையும் எற்றுக்கொண்ட போதும் அதன் மேன்மை மிகுந்த அதிபர் என்னும் பட்டத்தை முழுதும் தாம்தாங்க மறுத்தமைபோல, அவர் தந்நம்பிக்கைக்குரிய பொதுமக்கள் சபையாரின் பேரூக்கத்தை அடக்கி வருவாராயினர். பிரபுக்கள் சபை, சமயத் சடங்கு விதிகளிலும் கோட்பாடுகளிலும் விரிவான மாற்றங்களை எற்றுக்கொள்ளுமாறு பெரிதும் முயன்று வேண்டப்பட்டது. சமயப்பிரச் சினைகளிற் பிளவுபட்டிருந்தவரும் ஆவலற்றவருமான சமயத்தொடர்பற்ற பிரபுக்கள், கத்தோலிக்கக் கொள்கைக்குச் சார்பான பெருந்திருத்தங்களை யேற்குமாறு பொதுமக்கள் சபையைத் தூண்டுதற்கு வீணே முயன்றனர். ஆனல் வெற்றி கீழ்ச்சபையிலும், அதன் பிரதிநிதிகளுக்குரிய வகுப்பினரிலும் தங்கியிருந்தது. இவ்வகுப்பார் நாட்டில் விழுமியோருக்கு மேலான முதன் மையை அரசிற் பெற்றவராயினர். மேலும், அவர்கள் இவ்விடயத்தில், அரசி யோடும் அவர் தம் ஆலோசனைக் கழகத்தினரோடும் இணங்கிநடந்தனர்.
மேற்சபையிலுள்ள பிசப்புமார் மாற்றங்கள் எவற்றையும் விரும்பா திருந்தனர்; ஆனல், வாக்குரிமைக் குறைவால் அவர்கள் தோல்வியுற்றனர்; எனெனில், பெருந்தொகையான குருபீடங்கள் நிரப்பப்படாது வெறுமை யடைந்திருந்தமையாலென்க. பாராளுமன்றத்தின் வெளியே, கந்தபரி மாவட்டக் குருவாயக் கூட்டம் போப்பாண்டவரின் தலைமையையும் " பொருள் மாற்றத் ” திருக் கோட்பாட்டினையும் மீட்டும் உறுதிப்படுத்தியது. ஆனல், பாராளுமன்றம் அவர்களின் விருப்பைக் புறக்கணித்தது ; அவர்தம் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை.
சுருங்கக்கூறின், மதச் சீர்திருத்தமென்பது திருச்சபையதிகாரிகளின் விருப் புக்கு மாறய், அரசாலும் பாராளுமன்றத்தாலும்-திட்டமாகக் கூ றின் அரசா லும் பொதுமக்கள் சபையாலும்-நடாத்தப்பட்ட பொதுமக்கள் புரட்சியாகும். ஆகையினல், அது திருச்சபைப் பேரவைகளிற் பிரதிநிதித்துவம் பெருத சமயப் பற்றுள்ள பொது மக்களின் விருப்பத்துக்கு மாறனதன்று. மானியம் பெற்ற எண்ணுயிரம் குருமாரில் எழாயிரவர் புரட்சிச் செயலுக்கு உடன்பட்டனர். அவர்களுட் சிலர் விருப்புடையராயும், சில வேண்டா வெறுப்புடையராயும், சிலர் ஒருபோதும் நிகழாத விளைவை நம்பியும்
இப்பொதுமக்கள் சபையில் உறுப்பினர் ஒருதலைச்சார்புடையவராயிருக்கவில்லை. இலிசபெத் தரசியின் தந்தை, உடன்பிறந்தான், உடன்பிறந்தாளாகிய மேரி ஆகியோரின் காலத்துப் பாராளு மன்றத் தேர்தல் போல, இலிசபெத்து காலத்துப் பாராளுமன்றத் தேர்தல்களும் கட்டுப்பாடற்ற முறையில் நடந்தனவென்பதற்குச் சான்றுண்டு.

Page 256
492 சமய இணக்கம்
வாளா எற்றனர். என்ருலும், மேரியின் ஆட்சியில் பிடிவாதமாயிருந்த 2,000 புரட்டசுத்தாந்தக் குருமார் தம் மானியங்களை இழந்தனர். ஆனல், ஒருவரைத் தவிர, எனைய பிசப்புமார் யாவரும் இலிசபெத் தரசியின் இணக்க உடன்படிக்கைக்கு இசைய மறுத்து, அதனல் அவர்கள் தங்கள் மானியங்களை இழக்க நேர்ந்தது. VIII ஆம் என்றியினதும் V1 ஆம் எட்டுவேட்டினதும் ஆட்சிக்காலங்கள்ல் பிசப்புமாரும் குருவாயத் தினரும், மாற்றங்களை யொப்புக் கொண்டனர். இலிசபெத்தரசியின் முதலாண்டாட்சியில் குருமாரின் அதிகார பூர்வமான எதிர்ப்பு மேன் மேலும் பிடிவாதமுள்ளதாயிருந்ததற்கு இரு காரணங்கள் கூறலாம் : இயேசு சபை இயக்கத்தாரது காலத்திலும் திரந்துச்சபைக் காலத்திலும், சீர்திருத்தக்காரரதும் கத்தோலிக்கரதும் கட்சிகள், ஒத்துமேவலைக் கையா ளும் தொலைவிலுள்ள தீவிற்ருனும், தனிப்பட்டனவாயும் ஒன்றுக்கொன்று ஒதுங்கியனவாயும் இருந்து வந்தன. மேலும், மேரியரசி திருச்சபை ஆட்சிக்குழுவினின்றும் புரட்டசுத்தாந்தரை நீக்கிவிட்டார். 1559 ஆம் ஆண்டுக் குருவாயக்கூட்டம், புரோகிதருள் பெரிதும் ஊக்கமுடைய புரட் டசுத்தாந்தக் குழுவுக்கு நியாயமான அளவு பிரதிநிதித்துவம் அளிக்க வில்லை. அவ்வாண்டின் பாராளுமன்ற நடவடிக்கைகள் VI ஆம் என்றியின் ஆட்சியில் நடைபெற்றவற்றிற்கும் மேலாக, பொதுமக்களின் கருத்தெழுச்சியால் உந்தப்பட்ட குருமாருடைய ஊக்கத்தால் நடைபெற்றன போலத் தோற்றமளித்தன.
ஆனல், இங்கிலாந்தில், பொதுமக்கள், அக்காலத்திருந்த இசுக்கொத்து லாந்துச் சீர்திருத்தக்காரரைப் போல, திருச்சபைக்குரிய பேரவைகளில் பொதுமக்களின் பிரதிநிதிகளை நியமிக்கவோ, அன்றி, ஒவ்வொரு கோயிற் பற்றிலுமுள்ள சமயகுருவைப் பொதுமக்களின் “முதியோர் ’ சபையுடன் சம்பந்தப்படுத்தவோ முயன்றிலர். ஆங்கிலத் திருச்சபையின் உள்ளலுவல் கள் யாவும் மத்தியகால முறைப்படி குருமாரின் பொறுப்பில் விடப் பட்டிருந்தன. இக்காரணம் பற்றியே திருச்சபையின் வெளியலுவல்கள் யாவற்றிற்கும் முடியினதும் பாராளுமன்றத்தினதும் கட்டுப்பாடு மிக இன்றியமையாத தென்றுணரப்பட்டது. குருமாரிற் பெரும்பகுதியானேர், தமக்கு இன்னும் விடப்பட்டுள்ள அதிகமான உரிமைகளுக்கு ஈடான அவசிய நிபந்தனையாக வெளியிலிருந்து வரும் அக்கட்டுப்பாட்டைப் பத்தியுடன் எற்றனர். அவர்களுக்கிருந்த உரிமைகள் பலவற்றுள் அரசும் பாராளு மன்றமும், வருங்காலத்தில் இணங்காதார், உரோமானியர், அல்லது தூய் மையினேர் ஆகக்கூடியவர் எவருக்கும் மாறக அன்னர்க்குப் பெற்றுக் கொடுத்த எல்லாச் சமயச் சடங்குகளின் முழுவுரிமைகளும் அடங்கும். வெவ்வேறு சமயங்களை அனுமதிக்க எவரும் கனவிலும் நினைத்திலர். ஆகையினல் மக்களுக்கானதொரு சமயம் யாதாயிருத்தல் வேண்டுமென்று பாராளுமன்றத்தில் தீர்மானிக்கும் உரிமையை எவரும் முறைப்படி மறுக்க முடியாது போயிற்று.

திருச்சபையிற் பொதுமக்களின் ஆதிக்கம் 493
திருச்சபைக்கோட்பாடுகளையும் சடங்குகளையும் வரையறுக்குமுகமாய் பாராளு மன்றம் பிறப்பித்த சட்டங்கள் மூலம் பொதுமக்கள் திருச்சபையை வெளியிலிருந்து கட்டுப்படுத்துவாராயினர். மேலும், அரசி நியமித்த ஆணையாளர்களும் பிசப்புமாரும் அவரின் கட்டளைகளுக்கிணங்கத் திருச் சபையைப் பரிசோதித்தும், பரிபாலித்தும் வந்தனர். அரசியின் ஆட்சி முடிவு பெறும் அமயத்திலும், இன்னும் மேலாக, அவளை அடுத்துவந்த இருவரின் ஆட்சியிலும் திருச்சபையிலுள்ள பியூரித்தன் கட்சி பாராளு மன்றத்தையும், அங்கிலிக்கன் கட்சி முடியையும், உதவியளிக்கும்படி வேண் டின. இவ்விருதிறத்தாரில் எத்திறத்தாரேனும் இசுக்கொத்துலாந்துத் திருச்சபையின் உயரிய சமய நிலைமையை எற்றுக் கொள்ள முயன்றிலர். இத்திருச்சபை தான் முழுதும் தன்னண்மையுள்ளதென்று வழக்குரைத் தது. அன்றியும், இது வலிமையற்ற கொத்துலாந்துப் பாராளு மன்றத்துக்கும், “ கடவுளின் அறிவற்ற பணியாளான ’ அரசர்க்கும் பூட்கை பற்றிக் கட்டளையிடத்தானுமுரிமை கொண்டாடியது.
உரோமாபுரியினரும் செனிவாநகரத்தாரும், உலோயலாவும் நொக்கிசும், திருச்சபைக்குச் சுதந்திரமும் அரசினும் மேலான தலைமையும் உண் டென்று கோரினர். அவர்களின் எண்ணப்படி, உரோமாபுரியின் கோரிக் கைகள் புரோகித வதிகாரத்திலும், செனிவானின் உரிமைகள் சமயக் குடியாட்சியிலுந் தங்கியிருந்தன. ஆங்கிலத் திருச்சபை அத்தகைய வுரிமை களைக் கேட்கவில்லை. ஏனெனில், இங்கிலாந்தில் புரோகிதவதிகாரம் ஒழியுங் காலம் அருகிலிருந்ததாலும் அந்நாட்டில் மக்கள் தாமே கருமங்களைக் குறித்து நினைக்குமாற்றல் படைத்தவராயிருந்ததாலும், குடியாட்சி உணர்ச்சி தன்னை வெளிப்படுத்தும் முறையையும் கருவியையும் பொதுமக்கள் சபை யிற் கண்டறிந்ததேயன்றித் திருச்சபைக்குரிய சபையெதிலும் காணுத தினலுமென்க. இந்த வொழுங்கு தியூடர்காலத்தாங்கிலேயர்க்கு மிகப் பொருத்தமுடையதாயிருந்தது; ஏனெனில், அவீர்கள் சமயத்தைவிட வேறு பல கருமங்களிலுங் கருத்துக் கொண்டிருந்தனர். பின் வந்த நூற்றண்டு களில் குடியாட்சிக் கொள்கையானது சமயத்தின் மூலம் தன்னை வெளிப் படுத்த நேர்ந்தபோது, அதற்குரிய ஆதரவை இணங்காதார் கட்சியாரிடத்தே பெற்றுக் கொண்டது. இலிசபெத்தரசியின் சமய சம்பந்தமான இணக்கம், பின்றேன்றிய பொறையுடைமைக் கோட்பாடுகளாற் செப்பமடைந்து, நாட்டுக் குரிய நிறுவனங்களிலும், அவற்றிலும் மேலாக இக்காலவிங்கிலாந்தின் பண்பிலும் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுக்கொண்டது.
1559 ஆம் ஆண்டை இக்கால இங்கிலாந்தின் முதலாண்டாகக் கொண் டால், அதனை இக்காலக் கொத்துலாந்து பிறந்த ஆண்டாக ஐயமின்றிக் கொள்ளலாம். இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் ஒரே காலத்தில் நிகழ்ந்ததான உரோமாபுரியுடனுண்டான கடைசிப் பிளவு, சிறிதும் எதிர் பார்க்கப்படாததாயினும் பெரிதும் பயன் விளக்கக் கூடியதாயிற்று. இந்த இரட்டை நிகழ்ச்சி இரு நாடுகளிலும் சீர்திருத்தத்தின் இடையருத

Page 257
494 இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் மதச்சீர்திருத்தம்
நிலைபேற்றைப் பெற்றுத் தந்தது. அன்றியும் இதுவரையும் ஒருவரோ டொருவர் கொள்ளும் பகைமையிலேயே வளர்ந்துவந்த ஆங்கிலேயரதும் கொத்துலாந்தரதும் நாட்டுப்பற்று, இப்போது ஒருவரையொருவர் பாதுகாக் கும் நட்புறவாயமைந்தது. இரு நாடுகளிலும் மதச் சீர்திருத்தம் என்பது அந்நாடுகள் ஐரோப்பாவின் ஆதிக்கத்திலிருந்து நீங்கி ஆன்மீகத்துறை யிலும் அவ்வாறே அரசியல் வாழ்விலும் விடுதலை பெற்றமையைக் குறிப் பதாகும். 1558 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இங்கிலாந்து செயல் முறையில் இசுப்பெயினின் அதிகாரத்துக்குட்பட்டதான உரோமன் கத்தோ லிக்க நாடாயிருந்தது. கொத்துலாந்து செயல்முறையில் பிரான்சின் அதி காரத்துக்குட்பட்டதான உரோமன் கத்தோலிக்க நாட்ாயிருந்தது. இரண் டாண்டுகளுக்குப் பின்னர் அவை புரட்டசுத்தாந்த நாடுகளாகின. பிறநாட்டுப் படையையும் ஆள்வோரையும் தம் நாட்டிலிருந்து வெளியேற்றின. தாம் புதிதாகத் தேர்ந்து கொண்ட சமயமும் தேசீய சுதந்திரமும் ஒன்றேயெனக் கருதின. இந்நாடுகளிலுண்டான இரு புரட்சிகளும், வெற்றியடைந்தன; எவ்வாறெனின், இசுப்பெயினும் பிரான்சும் பகைமை பூண்டிருக்க, அதே அமயத்தில் இங்கிலாந்தும் கொத்துலாந்தும் முதலாம் எட்டு வேட்டின் ஆட்சி யின் பின்னர் முதன்முதலாக நட்பு கொண்டமையால் என்க. இவ்வாறய இருமடியான இடர்ப்பாட்டின் நெருக்கடியில் உவில்லியம் செசிலும்,யோன் நொக்கிசும் பெரிய பிரித்தானியா உருவாதற்கு அடிகோலினர்.
இங்கிலாந்து, மறுமலர்ச்சியினுற் சீர்திருத்தத்தைப் பெற்றது. இசுக் கொத்துலாந்து, மதச் சீர்திருத்தத்தினல் மறுமலர்ச்சியைப் பெற்றது. கத்தோலிக்க சமயத்தை கொத்துலாந்தர் குறைவாகக் கருதினர். ஆங்குத் திருச்சபை ஒர் ஆன்மீகச்சத்தி என்ற அளவில், இங்கிலாந்திலே இருந் ததைவிட மிகுந்த ஊழல் நிறைந்ததாயும், தகுதியற்றதாயுமிருந்தது. 1513 ஆம் ஆண்டில் புளோடன்களத்தில் தலையாய பிரபுக்கள் பலர் கொலையுண்டிறந்தபின்னர் துறவிமடங்களையும் திருச்சபை மானியங்களையும் பெறுவதற்காக வாளும், துவக்குந் தாங்கி ஒருவரையொருவர் தாக்கியும், பொதுமக்கள்போல வாழ்ந்தும் வந்த தலைமைக் குருமாரும் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளையோரும் கொத்துலாந்தில் உலகியல் சார்ந்த அதிகாரத்தை எக்காலத்தையும்விட மேலாகச் செலுத்தி வந்தனர். சேர் தாவீது இலின்சேய் என்பாரின் தாய் மொழியிலுள்ள பாக்களும், ஏனையோ ரின் பத்திக்குரிய கீதங்களும் குருமாரின் வாழ்க்கையையும் அவர்தம் வஞ்சகங்களையும் பொதுமக்கள் நிந்தனைக் காளாக்கி, அவ்வழியாகச் சீர் திருத்தத்துக்கும் வழி வகுத்தன.
கொத்துலாந்திலுள்ள பொதுமக்களின் அறிவிலும் அறப்பற்றிலும், நொக் கிசின் தலைமையில், புரட்டசுத்தாந்தம் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந் தது வியப்பன்று. இதுபோலவே அடுத்த நூற்றண்டின் நடுப்பகுதியில் அது இங்கிலாந்திலும் நாளடைவில் செல்வாக்குப் பெறுவதாயிற்று. இங்கிலாந் தில் சீர்திருத்தம் அரசராலும் அவரைச் சார்ந்தோராலும் உயர் நிலையடை

இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் மதச்சீர்திருத்தம் 495
வதாயிற்று. அதே அமயத்தில் பழைய மானியப் பிரபுக்கள் ஆர்வம் அற்றவராய் அன்றேல் பகைமை பூண்டவராயிருந்தனர். ஆனல், கொத்து லாந்தில் அந்நிலைமை முழுதும் மாறயிருந்தது. எனினும், இருநாடுகளி
லும் சமய இயக்கத்திற்கு உண்மையான ஆதரவு நகரப்பெரியோர், நிலக்
கிழார், கம்மியர் ஆகியோரிலும், சிறு நில உடைமையாளரிலும் தங்கி யிருந்தது.
1559 ஆம் ஆண்டுக்குச் சற்று முற்பட்ட காலத்திலேயே கொத்து லாந்தில் புரட்டசுத்தாந்தக் கட்சியினர் நாட்டுப்பற்றுடையோரென முன் வருதற்கான வாய்ப்பைப் பெற்றனர். 1540 ஆம் ஆண்டுக்கும் 1550 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தன் நாட்டில் ஆங்கிலேயரின் தலையீட்டுக்குமாருகத் தேசீயவெதிர்ப்பை வழிநடத்தியது, கத்தோலிக்கக் கட்சியேயாகும். VI ஆம் என்றி, கொத்துலாந்தின் அரசியான மேரி சுதுவாட்டு என்னும் சிறுமிக்குத் தன் மகன் எட்டுவேட்டை மணஞ் செய்வித்து அதனல் முழுத்தீவையும் ஒன்ருயிணைக்க விரும்பி, கொத்து லாந்தில் தனது முட்டாட்டனமான பூட்கையை வாள்கொண்டு நிலை நாட்டத் துணிந்தனன். துவீட்டுப் பள்ளத்தாக்கிலும் உலோதியர்வாழ் பகுதியிலும் நடந்த அழிவுத்தாக்கங்களினல், கொடியவனும் பரநெறி யாளனுமெனக் கருதப்பட்ட ஆங்கில மன்னன் மேற் பழிகறினர் ; அன்றி யும், தம் மத்தியிலுள்ள அவனுடைய ஆதரிப்பாளரையும் வெறுத்தனர். என்றி இறந்தபோது, பாதுகாவலாளராகிய சோமசெற்று, பிங்கிப் போரில் பேரிழப்புக்குரிய அதே பூட்கையைத் தொடர்ந்து பின்பற்றினர். இது கொத்துலாந்துக்கு அழிவுக்குரிய தோல்வியையுண்டாக்கிற்று. ஆனல், பெரிய பிரித்தானியா “ கடலை மதிலாகவும் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள அன்பைக் காவற்படையாகவும் ” கொண்டு ஐக்கியப்பட்டு வாழ வேண்டும் என்ற சோமசெற்றின் பகற்கனவுக்கு இது இன்னும் பெருநட்டம் விளைத்தது. சுதுவாட்டு மேரியை VI ஆம் எட்டுவேட்டுக்கு விடாப்பிடியாக மணமுடித்து வைக்க வேண்டுமென்ற முயற்சிக்குமாருக, கொத்துலாந்தர் எதனையும் எளிதில் மனத்திற் கொள்ளும் நிலையிலிருந்த அச்சிறுமியைப் பிரான்சிலுள்ள வலோயின் அரசவைக்கு அனுப்பிவிட்டனர்.
ஆனல், பிரான்சிய நட்பு ஒப்பந்தத்தின் பயனக வந்தடைந்த பிரான்சிய படையெடுப்புச் சேனையின் இறுமாப்பு கொத்துலாந்தரின் பொறுமைக்கு நெடுநாட்பொருத்த முடையதாயமைந்திலது. இசுப்பானிய ஆதிக்கம் இங்கி லாந்தில் எவ்வாறு தாங்கமுடியாத தொன்றயிருந்ததோ அது போல அதே காலத்தில் பிரான்சிய ஆதிக்கமும் கொத்துலாந்திற் ருங்கமுடி யாத தொன்றயிற்று. கொத்துலாந்து அரசியான மேரி பதினருட்டைப் பிராயத்திற் பிரான்சிய இளவரசனை மணமுடித்தாள். அதனல் அவ்வரசி, மரபுரிமையுடையோரின்றித் தாமிறந்தால் தம் நாடு பிரான்சிய வரச னுக்குக் கட்டுப்பாடற்ற கொடையாக வேண்டுமென்ற இரகசிய உடன்படிக் கைக்குத் தாமும் ஒப்புக் கொண்டிருந்தாள். அரசியின் பதிலாளியாகத்
18----Β 6344 (12162)
XIV ஆம் தேசப் படத் தைப்
Intrass
1547
548.
558.

Page 258
1557.
496 * கருத்தர் கூட்டம் ”
திறமையுடன் கொத்துலாந்தை ஆண்ட கைசுக்குரிய மேரி என்பார் பிரான் சியப் படைகளை நம்பியிருந்தார். பிரான்சிற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில், ஒரு புரப்பகமாய்ப் புரூசின் நாடு ஆளப்படவேண்டும் என்று எண்ணினர். இத்தகைய சூழ்நிலையில் புரட்டசுத்தாந்தர், நாட்டு விடுதலை வேண்டிநின்ற வீரராய் ஆயினர். ஆனல் கத்தோலிக்கக் கட்சியினர் பிரான்சி யரின் ஆதரவாளராகி அவர்களின் கைப்பாவைகளாகி மக்கள் வெறுப்புக் களாயினர். கைசுக்குரிய மேரியினதும் தியூடர் வழிவந்த மேரியினதும் ஆட்சிகளில் பிரித்தானியாவின் வட தென் பகுதிகள் “ பெண்களின் மிகக்கொடிய ஆட்சிக்” குட்பட்டிருந்தன. இவ்வாட்சியையிட்டு நொக்கிசு, இலிசபெத்தரசியாருடன் தாம் கொள்ள வேண்டியிருந்த எதிர் காலத் தொடர்பைப் பற்றிய முன்ணெண்ணமில்லாது, புலம்பியழுதாார்.
இஃதிவ்வாறக, நில மானியக் குழப்பம்மிக்க அந்நாட்டில் அரசைப் பலவந்தப்படுத்தற்குப் படைகளே உண்டாக்க நன்கு பயின்றிருந்த கொத்து லாந்துப் பிரபுக்களில் ஒரு பகுதியார் புதுச்சமயத்தைப் பாதுகாக்க அத் தகைய ஒரு “படையை" அமைத்தனர். கொத்துலாந்தர் கடவுளுடன் செய்து கொண்ட பல எற்பாடுகளில் முதலாகவுள்ள எற்பாட்டின்படி கூட்டிணைப் பாளர் எல்லோரும் ஒருவரோடொருவர் கட்டுண்டவராவர். “ கருத்தர் கூட்டம்” என்று பெயர் புனைந்து கொண்ட இக்குழு, குடித்திணைகளின் அரசியற் றெடர்புள்ள சபையாகக் கருதப்பட்டது. இக்குழுவினரில் புரட்டசுத் தாந்தராயிருந்த ஒவ்வொரு சிறப்புடையவரும் சமயகுரவராய் அல்லது விழுமியோராய் அல்லது நகரத்தவராய் அமருவராயினர். அச்சபை கொத்து லாந்துப் பாராளுமன்றத்தைக் காட்டிலும் மிகுந்த அளவில் நாட்டிலுள்ள அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாயிருந்தது. கொத்து லாந்துப் பாராளுமன்றம் நிலமானியவமைப்புடையதாய், ஒரு பதிவு செய் யும் மன்றிலும் சிறிது கூடிய வளவிற் சேவைசெய்வதாயிருந்தது. * கருத்தர் கூட்டம் ” என்பது சேனை, திருச்சபை, அரசியற் குழு ஆகிய அமிசமெல்லாம் ஒருங்கே யமைந்த தொன்றகும். அது புரட்சி செய்யும் பிர புக்களைக் கொண்ட கொத்துலாந்தின் கடந்த க்ாலத்து மானியப் போர்வீரர்க்கும் அதன் திருச்சபையைக் கொண்ட குடியாட்சிக்குரிய சமயச் சார்பினரின் வருங்காலத்துக்கும் இடைப்பட்ட நிலைமாற்றத்தை உருவாக்கியது. கருத்தர் கூட்டத்தின் “முதல்வர் ” என்று வழங்கப்பட்ட விழுமியோரே அதன்தலை வராயினர்; ஆனல், மக்கள் உரிமைகளும், சமயம் சார்ந்த உரிமைகளும் அச்சபையிலே விசேடமாக யோன் நொக்கிசு மூலமாக இடம்பெற்றன.
கொத்துலாந்தின் மோசேசு எனப்பட்ட யோன் நொக்கிசு என்பார் உண்மையான தீர்க்கதரிசியும் ஆற்றல்மிக்க அரசியலறிஞருமாவர். சிறி தும் அச்சமற்றவர்களும் “ சமயவெறி கொண்டவர்களும் ” தாம் நினைத்த கருமங்களைச் செய்ய வியலாதிருக்க, மனிதனுக்கொருபோதும் அஞ்சாத இவர், வாய்ப்பறிந்து செயல்புரியவும் வழிவகைகளைச் சிந்திக்கவும் வேண்டிய

யோன் நொக்கிசு. இங்கிலாந்து தலையிடல் 497
ஆற்றல் படைத்தவராயிருந்தார். பிரான்சிய துடுப்புடைக்கலத்திற் செய்த கடுமையான தொண்டினலும் தியானத்தினலும் வலிமை பெற்றிருந்தார். அக்காலந் தொட்டு தென் கொத்துலாந்தெங்கணும் திருச்சபைத்திருக்கூட் டங்களை நிறுவலாயினர். மக்களை அவர் நன்கறிந்திருந்தார். மேலும், தாக்குதலுக்கான நேரம் அணுகிவிட்டதையும் அவர் அறிந்து கொண்டார்.
1559 ஆம் ஆண்டில், நொக்கிசு என்பாரால் போதிக்கப்பட்டதும், வழி பாட்டுக்குரிய திருவுருவத்தை உடைப்பதோடு கூடியதுமான குடியாட்சியின் பாற்பட்ட சமயப் புரட்சி யொன்று பேதுவிற்றெடங்கி கொத்துலாந்தி லிருந்த நகரங்களினூடாக விரைந்து பரவியது. நெதலாந்திலும் பிரான் சிய மொழிபேசும் நாடுகளிலும் கல்வின் மதப் புரட்சிகள் இவ்வாரு கவே தொடங்கின. ஆனல், அவைகள் பெரும்பாலும் கொடிய முறையில் அடக்கப்பட்டில. எப்படியாயினும் கொத்துலாந்தில் “ கருத்தர் கூட்டத் தினர் ” பிரான்சிய படைகளினின்றும் கைசுக்குரிய மேரியினின்றும் கிளர்ச் சிக் காரரைக் காத்தற்குத் தங்கள் கைகளில் ஆயுதந் தாங்கி யெழுந்தனர். இதனைத் தொடர்ந்து விட்டுவிட்டு நடைபெற்றதும், நன்முறையில் நடத்தப்
பெருததுமானதொரு போர் நிகழ்ந்தது. அதிற் சிந்தப்பட்ட இரத்தம்
மிகச்சிறிதளவேயாகும். இங்கிலாந்து குறுக்கிட்டுக் கொத்துலாந்தின் புரட்ட சுத்தாந்தர் சார்பாகப் போரிடும் வரை அது அவர்களுக்கு நன்மை பயவாததாயிற்று. இலிசபெத்தரசியை அவர் தம் ஆளுகையில் தொடங் கப்பட்ட சில பெருமுயற்சியில் ஒன்றைத் தொடங்குமாறு செசில் தூண்டி ஞர். போதுநதிமுகத்தில் தோன்றிய ஆங்கிலக் கடற்படையும், கொத்து லாந்தின் புரட்டசுத்தாந்தரை இலித்து எனுமிடத்திற் சேர்ந்துகொண்ட ஆங்கிலச் சேனையும் சீர்திருத்தமெனுங் குறிக்கோளைக் காப்பற்றின. இந் “நினையா விளேவு ’ம் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த கைசு மேரியின் மரணமும் எடின்பருே உடன்படிக்கையின் பிரகிாரம் பிரான்சியப் படைகளே களைக் கொத்துலாந்தைவிட்டு நீங்கச் செய்தன.
கொத்துலாந்தின் மதச்சீர்திருத்தம், இரு கட்சியாரினலும் பலாற் காரத்துக் கேதுவானமொழி பிரயோகிக்கப்பட்டும் சிறப்பாக இரத்தஞ் சிந்தாததொன்ருக விளங்கியது. தீக்கிரையாக்கப்பட்ட புரட்டசுத்தாந்தர் மிகச் சிலரேயாவர் ; ஒரு கத்தோலிக்கனயினும் தன் சமயத்துக்காகக் கொலை செய்யப்பட்டிலன். இதற்குமாருக ஐரோப்பாக் கண்டமும், மேரி தியூடரின் ஆட்சியில் இங்கிலாந்துதானும், சமயவெறியினலுண்டான இரத்தக் களரிக் காட்சியாய் விளங்கின.
பிறிதொரு கத்தோலிக்கப்படை பிரான்சிலிருந்து விரைவில் வந்திறங்கியது. கொத்துலாந்தின் அரசியான மேரியும், போகங்களை விரும்பும் பெண்கள் கூட்டத்தினரும் நண்பரும், பழைய மானிய வாதிகாரத்தையும், புகழ்பெற்ற புதிய மதவியலையும் கொண்ட வலிய நாட்டோடு தம் தம் கொள்கை களையிட்டு போராட வந்தனர். அறிவாற்றல், உற்சாகம், கவர்ச்சி என்பன
1559.
1560 யூலை மாதம்.
1561.

Page 259
498 கொத்துலாந்தும் வட இங்கிலாந்தும்
வுள்ள கைம் பெண்ணுகிய மேரி சுதுவாட்டர், நொக்கிசுக்கும் திருக்கூட்டத் தலைவர்க்கும் கீழ்ப்படிந்து நடப்பாரென்பது சிறிதும் நிகழக் கூடியதொன் றன்று. அக்கூட்டத்தவருக்குத் தனிப்பட்ட முறையிலும் அரசியல், மதம் என்பவை சம்பந்தமாகவுமுண்டான பகைவர் பலரிருந்தனர். இப்பகை வர் இளம்பிராயமுடைய அரசியின் விருதுக்கொடியின் கீழ் ஒன்று கூடுவர். அன்றியும், அரசியின் கண்கள், சிறிய கொத்துலாந்தின் கரைகளுக் கப்பாலுள்ள தேசங்களையும் ஆவலுடன் நோக்கின. ஐரோப்பிய கத்தோ லிக்கர், பிரித்தானியாவைத் தஞ்சமயத்தில் மீட்டும் பற்றுக்கொள்ளச் செய்வதற்குத் தாந் தேர்ந்தெடுத்த வீரமணி இவர் என்று மேரியை மதித்தனர். பிரான்சும் உரோமும் அரசியை ஆதரித்தன. இங்கிலாந்தில் ஒரு பெருங் கட்சியினர் VI ஆம் என்றியின் சோரப்புதல்வியை அரசு கட்டிலிலிருந்து நீக்கிக் கொத்துலாந்தரின் அரசியும், முறையான உரிமையாளருமான மேரியின் தலையில் ஆங்கில முடியைச் சூட்டுதற்கான எதிர்ப்புரட்சி யொன்றினற் பிரித்தானியாவை ஐக்கியப்படுத்த எண்ணிச் சதி செய்தனர். −
1. எழாம் என்றி
ஆதர் : அரகன் நாட்டுக் மாகறெற்று கொத்துலாந்தின் VII ஆம் என்றி
கதரின் IV ஆம் சேமிசு இறப்பு : 1502 (1513 இல் புளோடன் போர்க் களத்தில்
கொலையுண்டவர்)
அரகன் நாட்டு ஆன்பொலீனுக்கு யேன்சேய்மூருக்கு கதரினுக்கு மகள் trasoit மகன் VI ஆம் எட்டுவேட்டு w மேரி தியூடர் இலிசபெத்து W ஆம் சேமிசு இறப்பு : 1542
1. பிரான்சு நாட்டு
11 ஆம் பிரான்சிசு = மேரிசுதுவாட்டர் (இறப்பு: 1559) (கொத்துலாந்தரசி)
பிறப்பு : 1542 2. தானிலி அரசபதவி நீங்கியமை 1567 3. பொத்துவெல் கொலையுண்டமை 1587
எள்
தாணிலிக்கு
கொத்துலாந்து VI ஆம் சேமிசு, 1867 இங்கிலாந்தின் முதலாம் சேமிசு 1603.

கொத்துலாந்தும் வட இங்கிலாந்தும் 499
ஆகையினல், கொத்துலாந்தின் புரட்டசுத்தாந்தக் கட்சியினர் இலிச பெத்தோடும், இலிசபெத்து அக்கட்சியினரோடும் மாADJ Jil - (upot 9-u drTo திருந்தது. மானியப் பிரபுக்களும் கல்வினைப்பின்பற்றிய உழவரும், தங்கள் சட்டமுறையான அரசியை எதிர்த்தபோது இலிசபெத்து அவர்களைத் தூண்டாதிருந்தாள். அவ்வரசியே, இலிசபெத்து வீற்றிருந்த அரியணைக்குப் போட்டியிடும் வெளிப்படையான எதிரியாயிருந்தாள். நிலைமை மிக அபாய முடையதாயிருந்ததற்குக் காரணம் இங்கிலாந்தில் கத்தோலிக்கரும் மானிய மக்களும் வாழ்ந்த வடபகுதி கொத்துலாந்தின் எல்லைப் புறத்துக்கு மிக வணித்தாயுள்ள புல்வெளி நிலங்களில் இருந்ததனலென்க. அம்பர் ஆற்றுக்கு வடக்கே கத்தோலிக்க சமயமும் மானியவமைப்பும் மிக வலிமை பெற்றிருந்ததால் இலிசபெத்தரசி தம்மாட்சித் தொடக்கத்தில் அப்பகுதிக் குரிய கத்தோலிக்கப் பெருமக்களைத் தம் தலைமையதிகாரிகளாக வேலை யிலமர்த்த விரும்பினர். அவ்வதிகாரமுறையிலிருந்துகொண்டு பேசியர், தக்கிரீசர், நெவிலியர், என்னும் பிரபுக்கள் மரபினர், தம் பழைய மானியச் செல்வாக்கினைப் பயன்படுத்தித் தாம் பணியாற்றிய அரசாங்கத்தின் பூட்கைக்கு இடையூறு செய்தும் வருவாராயினர். “ நோதம்பலாந்தெங் கணும் பேசியைவிட வேறு அரசரை மக்களறியார்” என்றுசொல்லப்பட்டு வந்தது. அமைதியுடைய ஆங்கிலக் கிறித்தவரான, யோன் நொக்கிசை யொத்த பேணுட்டு கில்பின் என்பார் வடஇங்கிலாந்திற் புரட்டசுத்தாந் தத்தை நிலைநாட்டப் புதிய பிசப்புமாருக்கு ஊக்கத்தோடு உதவியளித்த னர். மானியமுறையையும், கத்தோலிக்கரையும் ஆதரிக்கும் இயக்கமொன் றினல், அம்பராற்றுக்கு வடக்கேயுள்ள பிரித்தானிய நாடுகள் முழுவதை யும் ஒரே இராச்சியமாய் மேரி சுதுவாட்டின் ஆட்சிக்குக் கீழ் இணைப்ப தாகிய மிகப்பெரிய ஆபத்து பல்லாண்டுகளாய் இருந்து வந்தது. கொத் துலாந்திற்போல வடஇங்கிலாந்திலும் துணிவுடிையவரும் நீதியற்றுச் சண் டைபுரிவோரும், எல்லைப் புறத்திற் போரிடப்பிறந்தோரும், தொலைவிலுள்ள சேனையற்ற அரசாங்கத்தினல் அமைதியாக ஆளப்பட முடியாதவரு மான ஓரினத்தார் குடியிருந்தனர். ஆனல் கொத்துலாந்திற் போல வட இங்கிலாந்திலும் மக்கள் வறுமையுடையராயும் குடிநெருக்கமில்லாத
வராயுமிருந்தனர் ; இலிசபெத்துக்கு இஃது ஒரு நல்வாய்ப்பாயமைந்தது.
கைத்தொழிற் புரட்சிக் காலம்வரையும் செல்வமும் குடித்தொகையும் தென்பகுதியில் மிக்கிருந்தன ; அத்தென்பாலுள்ளும், இலண்டனிலும் அதனையடுத்த எனையவிடங்களிலுமே மிகுதியாயிருந்தன.
மேரியின் ஆட்சிச் செல்வாக்கு அதிகரிப்பதை முன்னிட்டு இலிசபெத்து அஞ்சியபோதும், கொத்துலாந்தரின் அரசியலில் ஆழ்ந்து ஈடுபடுதலையிட்டு மிகவும் விழிப்பாயிருந்தார் ; அதற்கு அரச வருமானக் குறைவும் ஒரு காரணமாயிருந்தது. உயர்ந்த வீரவலாறு நிறைந்த அவ்வாண்டுகளில் மேரிக் கும், நொக்கிசு, பிரபுக்கள் ஆகியோருக்குமிடையே அதிகாரம் பற்றி யெழுந்த போராட்டம் இங்கிலாந்தின் தலையீடின்றி நடைபெறலாயிற்று.
156 -6.

Page 260
500 கொத்துலாந்திற் சமயக் குடியாட்சி
கத்தோலிக்க அரசிக்குமாருக யாப்பினடிப்படையில் எவ்வகையெதிர்ப்பு மில்லை. ஏனெனில், கொத்துலாந்துப் பாராளுமன்றம் 1560 ஆம் ஆண்டில் சீர்திருத்தத்துக்குச் சட்டமுறைப்படியான உருக்கொடுத்த பின் னர், ஒரு பதிவு மன்றமாய் மதிப்புக்குறைந்த ஒரு நிலைக்கு இழிந்தது. இதனல், யோன்நொக்கிசும் அவர்தங் கட்சியும், நாட்டின வாழ்க்கைக் குரிய பிற அமிசங்களையுருவாக்கியும், பழைய மானியமுறை அதிகாரத் தோடு போட்டியிடுதற்கான ஒரு புதிய உணர்சியைக் கல்வியறிவுபடைத்தி ருந்த மத்தியவகுப்பினரிடையே புகுத்தியும் இராவிடின், துறவி மடங் களுக்குரிய நிலங்களைக் கைவிடாது இறுகப்பற்றியிருந்தும் சமயப் பிரச்சி னையிற் பிளவுபட்டிருந்த மானிய முறை உயர்குடிமக்களை மேரி வெற்றி கொண்டிருப்பார். கோயிற்பற்றுக்கள் தோறும் பொதுமக்கள் குடி யாட்சியுண்டானது ; அவர்கள் தமது சமயக் குருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன் கோயிற்பற்றுக்குரிய திருச்சபையின் அமர்வுக் காலங்களில் தங்கருத்துக்களை வெளியிடக்கூடிய உரிமையையும் பெற்றுக்கொண்டனர். நாடுமுழுவதையும் உள்ளடக்கிய பெருந்தாபன மொன்றும் விரைவில் நிறுவப் பட்டது. திருச்சபைப் பொதுமன்றத்தில், குருமாரும் நிலவுரிமையாளரும் ஒருங்கேயமர்ந்திருந்தனர்; அவர்கள் பண்டைக்காலத்தில் பல நூற்ருண்டு களாகக் கொத்துலாந்தை ஆண்ட உயர்குடிப்பிறந்த கோயிலதிகா ரிகளிலும் விழுமியோரிலும் வேறுபட்ட குருமார், பொதுமக்கள் என் போரடங்கிய புதிய சமூகத்தின் பிரதிநிதிகளாய் வீற்றிருந்தனர். ஆங்கிலேயர் வாழ்க்கைக்கு அவர்தம் பாராளுமன்றம் ஓர் மையமாய் விளங்கியதுபோல, எறத்தாழக் கொத்துலாந்தர் வாழ்க்கைக்கும் திருச்சபைப் பொது மன்றம் மையமாய் விளங்கிற்று. அன்றியும், அரசை யெதிர்ப்பதில் திருச் சபையே மூலாதாரமாய்விளங்கிற்று.
கொத்துலாந்துக்குச் சுதந்திர வாழ்வும் அடிமைவாழ்வும் ஒரேகாலத்தில் திருச்சபையால் கிடைத்தன. புரோகிதச்சார்பற்றதும், குடியாட்சியின் பாற்பட்ட கடுங்கோன்மைக்குரியதுமான புதிய இயக்கமொன்று புதிய சமயசித்தாந்தத்தையும், ஒழுகலாறுகளையும் நாட்டின் அரசாங்கத்துக்கும், குடிசையில் வாழும் பொதுமக்களுக்கும் மண்டபத்தில் வாழும்நில வுரிமையாளர்க்கும் வற்புறுத்த முயன்றது. மிகுந்த அபிமானமுடையதும் இணக்கமற்றதுமான இவ்வியக்கத்தைப் பலர் பொறுக்க முடியாது வெறுத்தனர். இது பிற்காலத்தில் நூறண்டுகள் வரையும் இசுக்கொத்து லாந்தில் நிகழ்ந்த சிறு கலகங்களுக்கும் போர்களுக்கும் முக்கியமான காரணமாயிற்று. இறுதியில் திருச்சபையின் அதிகாரம் அரசவதிகாரத் திலுங் குறைந்ததாக ஆக்கப்பட்டது; ஆனல், திருச்சபையினுற் சிறப்பான தொரு மாற்றம் உண்டாக்கப்பட்ட பின்னரே அவ்வாறு நிகழ்ந்தது. அது வாளையும் ஏரையும் தவிரப் பிறிதொன்றையும் அறியாதவ ரும், கொடியமானியக் குடிகளுமான பள்ளத்தாக்குவாழ் கொத்து லாந்தரை, ஐரோப்பாவிற் சிறந்த கற்றறிந்த உழவராகமாற்றியது. அவர்

மேரியும் இலிசபெத்தும் 501
பெரும்பாலும் தனித்திருந்து சிந்தித்துத் தருக்கம், சமயம் முதலியவற்றில்
சொற்போர் செய்தற்கு எழுவாராயினர்; அவர்கள் கற்றுணர்ந்த அக் கலைகளை, விளங்கும் அறிவாற்றலும் பயிற்சியும்பெற்ற ஆங்கிலேயர் அப்போது மிகச் சிலரேயிருந்தனர். காலப்போக்கும் திருச்சபையும் மாற்றமடைந் துள்ளன; அக்கடினமான கல்விமுறையிற் கொத்துலாந்தர் பெற்றுக் கொண்ட அறிவும் அறமும் சார்ந்த பண்பட்ட நிலைமை இன்னும் மாற்றமடைந்திலது.
ஆனல், இக்காலக் கொத்துலாந்தின் ஆக்கம், மேரி, ஒலிறுட்டில் ஆண்ட க்ாலத்திலேயே தொடங்கியது. மேலும், அவர்தம் அரசியற் பூட் கைக்குப் பணிந்து தமக்குரிய தனிப்பட்ட ஆசைகளை இலிசபெத்தைப் போலடக்கக் கூடியவராயிருந்திருந்தால், நொக்கிசுடன் தாம் செய்த போரில் வென்று, ஒருகால் அவ்வாக்கத்தைத் தொடக்கத்திலேயே தடுத்திருக்க வுங் கூடும், தானிலியை அவர் மணம் முடித்ததும், “ கேக்கொவ்வீது” என்னும் இடத்தில் தாணிலியைப் பொத்துவெல் கொன்றதும், பின் அக்கொலையாளியை அவர் மிக விரைந்து மணந்ததுமாகிய இவற்றினல், மேரி அச்செயலை முன்னறிந்தாரென்று குடிகள் நினைக்க நேர்ந்தது. கொலைசெய்தல் அக்காலத்தும் அந்நாட்டு வழக்கமாயிருந்ததென்பது உண் மையே. கருதினல் பீற்றன் கொலைசெய்யப்பட்டதை நொக்கிசு கண் டித்திலர். அன்றியும், இரிசியோவின் படுகொலையைத் தானிலிதாமே செய்தனர். ஆனல், பெண்கள் தங் கணவரைக் கொல்லுதலை மக்கள் வெறுத்தேவந்தனர். குற்றமுடையராயோ குற்றமிலராயோ மேரி இருந்தா லும் தாம் பொத்துவெலை மணந்து கொண்டதால் தமது புகழை இழந்ததுடன் , தம் இராச்சியத்தையும் பகைவர்க்குரியதாக்கினர். சில காலம் நடந்த காரணங்காணக் கலகங்களுக்கும், வீரம் நிறைந்தன வும் நற்பேறு இல்லாதனவுமாகிய சில அருஞ்செயல்களுக்கும் பின்னர், கொத்துலாந்திலிருந்து அவர் தப்பியோட நேர்ந்தது. முன்பின் எண் ணுமையினலேயோ, அவசியத்தின் நிமித்தமோ தாமெதிர்த்து நின்று தொல்லைக்குட் படுத்திய இலிசபெத்தரசியிடமே மேரி சரண் புகுந்துகொண் டார். அவர் எதனை எதிர்பார்த்திருந்தார் ? வியத்தகு தாராண்மையை அவர் எதிர்பார்த்திருந்தால் அவர் பிழையான இடத்துக்கே வந்தடைந்தார் எனல்வேண்டும். அன்றேல், தம்மெதிரியைத் தம் நுண்மதியினல் ஏமாற்றலாமென்று நம்பினரா ?
மேரி இலிசபெத்தின் அடிமையாகிய காலம் முதல் இங்கிலாந் தினதும், உண்மையில் ஐரோப்பாவினதும் அரசியல் நிலையில் உண் டான பல மாற்றங்களுக்கு அம்மேரியின் சிறையீடே காரணமாயிற்று. அவர்தம் உரிமையையும், ஆக்கவினைத் திறனையும் கைவிட்டமையால், பிலிப்பு அவரைப் பிரான்சின் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இசுப்பெயினின் கருமங்களுக்குப் பயன்படுத்தலாமென்று கரு
568.

Page 261
1569
1570.
502 மேரியும் இலிசபெத்தும்
துவாராயினர். போப்பாண்டவராலும், இசுப்பானியராலும் இயேசு சபை யினராலும் தூண்டப்பட்ட தீவிர ஆங்கிலக் கத்தோலிக்கர், கொலை செய் வதினலும், கலகம் விளைவிப்பதினனும் பிறநாட்டுப்படையெடுப்பினுலும் மேரியை இலிசபெத்தின் அரியணையிலேற்றுதற்கு இடைவிடாது சூழ்ச்சி செய்தனர். . முதலெழுந்த பெரிய நெருக்கடி, நோதம்பலாந்தையும் வெற்றுமோலாந்தையும் சேர்ந்த “வள்களின் எழுச்சி' யினலும் அதன் பின்னேர்ந்த தாக்கிரி என்பவரின் கலகத்தினலும் உண்டாயிற்று. பேசி யர், நெவிலியர், தாக்கிரியர் ஆகிய மரபினராகிய வட இங்கிலாந்தின் கத்தோலிக்க மானியத்தலைவர், மேரிக்கும் கத்தோலிக்க சமயத்துக்கு மாகப் படைதாங்கியெழுந்தனர். அன்றியும், கொத்துலாந்தின் கத்தோ லிக்க விழுமியோரை எல்லைப் புறத்தைக் கடந்து வந்து தம் படையைச் சேருமாறும் கூவியழைத்தனர். அந்தச் சிலுவைப்போர் வீரர் கிறித் துவின் ஐம்பெருங் காயங்கள் பொறித்த கொடியை யுயர்த்தி அணிவகுத் துச் சென்று தேர்காம் தலைமைக்கோயிலிலிருந்த விவிலிய நூலையும் வழி பாட்டு நூலையும் கிழித்தெறிந்தனர். ஆனல், கொத்துலாந்தின் அர சாங்கம் அந்நாட்டுக்கத்தோலிக்கரை எல்லைப்புறத்தைக் கடக்கவிடாது தடுப் பதாயிற்று. மேலும், தென்னிங்கிலாந்து மக்கள் இலிசபெத்தைக் காத் தற்கு ஆர்வங்கொண்டெழுந்தனர். நிலமானிய முறையைத் தழுவியமக் கள், தேசீய முறையைத் தழுவிய மக்களைப் போர்க்களத்தில் எறெடுத்துப் பார்க்கத்தானும் வலிமையற்றிருந்தனர். எல்லைப்புறத்து மக்கள் தம் முந்தையோர் ஒற்சுப்பர் என்பவரைப் பின்பற்றியதுபோல, அரசுக்கு எதிராக இக்காலத்துக்குரிய பேசி என்பவரை பின்பற்றத் தயங்கினர். மானிய முறைமையாளரையும் கத்தோலிக்கரையுங் கொண்ட சேனைகளைத் துரத்துதற்கு ஒரு சண்டையே போதுமானதாயிருந்தது.
குடிகளின் மனத்தில் பதிந்திருந்த அரசவிசுவாசத்தின் உறுதிப்பாட்டை உலகம் அறிதற்குக் காரணமாய வெற்றிக்கு நன்றிபாராட்டுதற்குப் பதி லாக இலிசபெத்து, மானியமுறை வாரக்காரர் மேல் பழிக்குப்பழி வாங்கினர். அவர்களில் எண்ணுாற்றுவர் கொலையுண்டனர். ஆனல், அவர் பின்னர் அமைத்துக்கொண்ட திட்டங்களில் கூரறிவுடனிருந்து கொண்டார். வடவிங்கிலாந்தைப் பற்றிய பிரச்சினை இறுதியில் தீர்க்கப் பட்டது. வடக்கிலுள்ள ஆலோசனைக் கழகமும், எல்லைப்புறத்து ஆட்சி யதிகாரமும் அரசபற்றுடைய அதிகாரிகளால் இப்பொழுது முற்றும் நிரு வசிக்கப்படக் கூடியனவாயிருந்தன. மனத்தில் புரட்சி இயல்புடைய, பெரிய நிலப்பரப்புக்களையுடைய பிரபுக்களுக்கு இனியொருபோதும் இணங்க வேண் டிய அவசியமிருக்க வில்லை. கொத்துலாந்தோடு எல்லைப்புறத்தவர்கள் செய்தபோர் நிறுத்தப்பட்டமையால், வடபாலிலுள்ளவர் தம் மரபுமுறை யான இராணுவவழக்கங்களையும், மானிய முறைமைகளையும் கைவிடக் கூடிய புதிய வாழ்க்கைநிலைமைகள் தோன்றலாயின. எல்லைப்புறத்துச் சிந்துப் பாடல்களில் காட்சியளிப்பவரும், குருதிப்போரில் முனைந்துள்ளவரு

ஆங்கிலமானிய முறையின் மறைவு 503
மான நிறைந்த இச்சமூகத்தினர், சட்டத்துக்கு அடங்குபவரும் விவிலிய நூலைப் படிப்பவருமான இடையர்களாக மாறினர். இவ்விடையர் தோமசு பெவிக்கு, உவாற்றர் இசுக்கொத்து என்போர் காலத்தில் பசும் புற்றரை களில் குடியேறியிருந்தனர்.
புதிய இங்கிலாந்தின் உள்நாட்டு ஒற்றுமை, வடநாட்டுக் கலகத்தின் தோல்வியால் விளக்கிக் காட்டப்பட்டது. மேலும், ஆங்கிலேயர் பிறநாட் டார் விளைக்கும் தீங்குகளை இப்பொழுது துணிவுடன் எதிர்க்கக் கூடிய வராயிருந்தனர். அவைகள் பலவாகவும் விரைவாகவும் வந்தன. 1570ஆம் ஆண்டில் ஐந்தாம் பயசு என்னும் போப்பாண்டவர் இலிசபெத்தைச் சமயத்தினின்றும் விலக்கிவிட்டார். அன்றியும், இயேசு சபையாரின் தொண்டு இங்கிலாந்திலும் ஆரம்பமாகியது. 1572 ஆம் ஆண்டில் நோ போக்குக் கோமகன் என்பார் பிலிப்பு, அல்வா, போப்பாண்டவர் ஆகியோரது முகவருடன் சேர்ந்து மேரியை அரியணையில் அமர்த்துவதற்குச் சதி செய் ததால் கழுவேற்றப்பட்டார் ; இவ்வமயம் அவர் பிரான்சின் ஆளா கவன்றி, இசுப்பெயினின் கைப்பொம்மையாகக் கருதப்பட்டார். நோபோக் குப் பிரபுவை மேரி மணம்முடிக்க வேண்டுமென்றும் அவர் பொத்து வேலை மணநீக்கஞ் செய்து கொள்ளும் பொறுப்பைப் போப்பாண்டவர்
எற்கவேண்டுமென்றும் இருந்தது. இது முதற்கொண்டு, ஐரோப்பிய சம
யத்தலைவர்களுக்கும் உலகியற் றலைவர்களுக்குமிடையே நிகழ்ந்த இந்த உரையாடல்களில், இலிசபெத்தின் படுகொலை பற்றி உரையாடுதலும் ஒரு வழக்காயிற்று. அத்தலைவர்கள் பரநெறியாளரைக் கொலை செய்தலை ஒரு புனிதச் செயலாகக் கருதினர்.
நாட்டின் மாபெரும் விழுமியோனன நோபோக்குவைக் கொன்றமை வட நாட்டு எள்களின் வீழ்ச்சியை யடுத்து நடைபெற்றதாகும். இக் கொலை, இங்கிலாந்தில் பழைய மானியமுறையின் மேல் புதிய வரசு முறை கொண்ட இறுதிவெற்றியைக் குறித்தது. அக்காலத்தில் நாடு உண்மையிற் பெரிதும் மாற்றமடைந்து வந்தது. அதே ஆண்டில் செ யின்று பாதலோமியூவின் வதம் பிரான்சில் இயூசனற்றரின் குறிக் கோளை வலிகுன்றச் செய்ததேயன்றி அழித்திலது. மேலும், அக்கொலை யை, இசுப்பானிய பிலிப்புவின் கொடுமைகளுக்கு மாறய் ஒல்லாந்தின் கடலோடிகளும், நகரத்தாரும் வெற்றிகரமாய் செய்த கலகம் ஈடுபடுத் திற்று. சீற்றமும் அச்சமும் நிறைந்த இங்கிலாந்தின் பொதுமக்கள் கொத்துலாந்தின் அரசியான மேரி எண்ணெயிட்டுப் புனிதமாக்கப்படாதவ ரென்று பொய்க்காரணங்காட்டி அவரைக் கொலை செய்ய வேண்டுமென்று
மனுச்செய்வாராயினர். பதினைந்தாண்டுகளாக இலிசபெத்து தமது சாந்
தமான வேத்தியல் இயல்புணர்ச்சிக்குப் பணிந்து மேரியின் வாழ்வுக்காக, அவரைத் தங்குடிகள் கொலைசெய்யவிடாது தடுத்து வந்தார். அரசியரைக் கொல்வதை அவர் விரும்பிற்றிலர். மேலும், அச்செயல் இசுப்பெயினேடு
152.

Page 262
504 இங்கிலாந்தின் வாய்ப்பு
முறைப்படிபோர் தொடுத்தலாகும். தமக்குப்பின் மேரி அரசியாகுமுரி மையிருக்கும் வரையும், தம்மையும் தங்கடலோடிகளேயும் இன்னும் சிலகாலம் வரை பிலிப்பு சரித்துக் கொள்வாரென்று இலிசபெத்து நம்பக்கூடிதாயிருந்தது. ஆணுல், மேரி மறைந்துவிட்டால், பிவிப்பு இங் கிலாந்தைத் தனக்கு உரிமையாக்கக் கருதி நந்நாட்டின் மேற் படை யெடுக்கவும் கூடும். கென்றின் கடற்கரைகளுக்கும் நெலாந்துகளிலுள்ள அல்லாவின் இன்னும் அடக்கப்படாத வீரர்க்கும் இடையில் அறுபது மைல் தூரமேயிருந்தது. அத்தனே மை: துமுேம் நல்ாேய்ப்பாக உலர் நீரைக் கொண்டிருந்தது. மேலும், கலங்கலான உவர்நீர், கடந்த கால நிலமானிய முறையையும் அருளாண்மை முறையையும் மதிப்புக் குறை விாக்கி கருதிய இப்புதிய ஊழியில், வளர்ச்சியுறுஞ் சிறப்பினேற் கொண்ட இன்றியமையாச் சத்தியாகும்.
அத்தியாயம் WI
ஆங்கிலேயர் கடலாட்சியின் ஆரம்பம்
மாட்விமைதங்கிய மகாராவியாருக்கு முன்னர், கசுப்பியன்கடலிலே தம் பதாகை எக்கா மாவது பறக்கக் கண்ட இந்நாட்டு மன்னர் யாராவது உளரோ ? எங்கள் மகாராளியார் செய்ததுபோங், பாரசீகப் பேரரசனுடன் தோடர்பு கொண்டு, தமது வாணிகர்க்ரு நிறைந்தவும் சிறந்தவுமான தனியுரிமைகளேப் பெற்றுக்கொடுத்தவர் எவரேனுமுனரோ : கொன்சுதாந்தி
நோப்பிளின் பேரண்ணலார் பெருமளவாயிலில், ஆங்கிலத்தூதுவர் ஒருவரை மகாரானியார் ஆட்சிக்கு முன்னர் யார் கண்டுள்ளார் 7 சீரியாவிலுள்ள திரிப்பொலியிலும், அலப்போவிலும் பபிலோனிலும் பல்ராராவிலும் ஆங்கிலக் காவற்றுதரையும் முகவர்களேயும் இதற்ரு முன்னர் யார் கண்டுள்ளார் ? மேலும், இதற்கு முன்பு ஆங்கிலேயர் கோவாவில் உள்ளனர் என்பது யாராவது கேள்விப்பட்டதுமுண்டோ ? பிளாற்றே என்னும் பேராற்றில் இதற்கு முன்பு எந்த
ஆங்கில மரங்கவாவது நங்கூரமிட்டதுண்டோர் கடத்தற்களிய " மகலன்" நீபிஃEாயிற் போக் கும் வரவுஞ் செய்து, வில்லி, பெரு என்பவற்றின் கரைப்புறங்களிலும் புதிய இசுப்பாளியாவின் பிற்புறங்களிலும் எந்தக் கிறித்தவர்தானும் சென்றிராத தூரம்வரையில் கடலோடிய வேறு ஆங்கிலக்கப்பல்களுமுண்டோ : அக்கிலியெற்று.
பண்டைக்காலத்திலும் மத்தியகாலத்திலும் பிரித்தானியர் உமிகப்படத் தின் விளிம்பிலேயே ஒதுக்கப்படுவாராயினர். அவ்விளிம்புக்கப்பால் யாதும் இல்லித்தினுல், பிரித்தானியருடைய தனியூக்கமும் தங்கள் நாட்டை அகல் வித்தற்குரிய முயற்சியும் ஐரோப்பாவை நோக்கியே எழவேண்டியிருந்தன. இருந்தும் நூறண்டுப் போரின் பயனற்ற முடிபு மிகத் தெளிவு படுத்திய படி, புதிய பிரித்தானியரின் பெரு முயற்சியினுல் அவர்தம் மொழியும் பழிக்கவழக்கங்களும் வேரூன்றி நிலப்பதற்குப் பழைய ஐரோப்பாக் கண் டம் சிறிதும் இடங்கொடுக்கவில்லே. அக்கண்டத்தில் எழுந்த புதிய முடி பாட்சிகள் ஆண்டுச் சென்ற பிரித்தானியரைப் பெரிதும் தடுத்தும் நிறுத்தி யும் வரலாயின. அதனுல், பிரித்தானியர் எஞ்ஞான்றும் தனித்த தீவாந்
LSLLLLLL

g世%교 34原 崔成國民)18%영s國 : x.x grm그
¡¡¡¡i-sī£5Eu outsoi *Nos ar:5 ±īNonne, stihno—
+++ haesi Hoi!*m러나m*불成都軍년
Nosis risaeo sựierī£[헌] +++ haerisHs*******빼
『議書事書』년 -』書「月星高等學-학력『텔■■ 역國事實軍國事國神』 『電월 5월村 明石國司월真屬轉* * * * 豐圖圖『』『*『鬥軍』譚
『확事司書』 『-------*學書長**『
græs-a soğası o șosno osos
*.Q、---- *玖
... ( s 』* W 逻THITM!'ኾùF ;“4~5. Į jį įs. ? ァf* *。{ェ *:)*?■ Y yoYシ} ァう*문: む ?„”.nso *)') ;户-.----F
} }

Page 263
506 புதிய சமுத்திர வழிகள
தர வாழ்க்கைக்கே உரியராய்த் தம் நாட்டிற்ருனே அடங்கி வாழ நேர்ந் தது. ஆதலினல், அவர்கள் தம் பண்ணை மனைகளில் இருந்துகொண்டு புரோயிசாட்டென்பவர் அடைவுபடுத்திக்கூறிய தம் பண்டைப் பெருமை களையும் ஐந்தாம் என்றியின் நீண்ட கால ஆட்சிச் சிறப்பையும் நினைந்து நினைந்து நெட்டுயிர்த்து வருந்தினர்.
எனினும், எட்டுணையும் எதிர்பார்த்திராததொன்று நிகழ்ந்தது. தம் நாடு ஒரு தொலைவிலுள்ள நாடென்னும் நிலைமையிலிருந்து, வர்த்தக, குடியேற்றப் பாதைகளை ஆதிக்கம் செய்யும் வாய்ப்புடைய ஒரு மையமான இடமாய் மாறுவதைத் தியூடர் ஆட்சிக்காலத்தில் இத்தீவினர் படிப்படியாய் உணர்வாராயினர். அத்துடன் மிக நீண்ட கடற்பயணங்களின் முடிவிலுள்ள தொலை விடங்களிலேயே ஆங்கிலேயருக்கு அதிகாரம், செல்வம், துணி வுடைச் செயல்கள் முதலியன காத்திருப்பதையும் அவர்கள் அறிந்தனர். அவர் தம் கடற்செல்வு, மக்களை உண்குநர் வாழ்கின்ற ஆபிரிக்க விலே பொன்கொழிக்கும் ஆறுகள் வரையும், ஆசியாவிலே பொற்கலன்கள் நிறைந்த அங்காடிகள்வரையும் சென்றது. அதுவுமன்றி மக்கட் செறிவு குறைந்ததும் ஆண்டுதோறும் மக்கள் வியப்பைப் பெற்று ஒன்றுபட்டதும் உலகப் பரப்பைப் பற்றிய அக்கால அறிவையும் வர்த்தகத் துறை வழக்கங்களையும் மாற்றியமைத்ததுமாகிய அமெரிக்காக் கண்டம் வரையுஞ் சென்றது.
பண்டைக்காலத்தில் இருந்தமைபோல, மத்தியகாலத்திலும் சிறந்த உலக வர்த்தகமும் கடலாதிக்கமும் மத்தியதரைக் கடலிலே தங்கியிருந்தன. ஐரோப்பியக் கலங்களிற் கடல்கடந்து நடைபெறும் ஐரோப்பாக் கண்டத்தின் இக்கால வெளிநாட்டு வாணிபம், முற்காலத்தில் ஆசியாவின் ஊடே தரை வழியாகக் " கரவன் ’ எனப்படும் வாணிகச் சாத்துக்கள் மூலம் நடை பெற்றது ; அல்லது அவ்வாணிபம், பாரசீகக் குடா, செங்கடல் என்னு: இரண்டின் வழியாகக் கீழை நாட்டுக் கலங்கள் மூலமும் நடைபெற்றுவர லாயிற்று.
சீனம், இந்தியா, வாசனைத்தீவுகள் என்பவற்றிற் பெற்ற அரும் பண்டங் கள் ஒட்டகங்கள் மூலம் இலவாந்துத் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை அங்கிருந்து வெனிசு-செனேவா முதலிய இடங்களுக்கு இத் தாலியக் கலங்கள் கொண்டு சென்றன ; பின்னர், அவைகள் அங்கிருந்து எனக் கிறித்துவ நாடுகளுக்கு வழங்கப்பட்டன.
வெனிசிய வர்த்தகர்க்கோ, அவர்க்கு முன்னிருந்த உரோம பினிசிய வர்த்தகர்க்கோ, சமுத்திரத்தை எம்முனையிலிருந்தாயினுங் கடந்து செல் லுங் கடப்பாடு இருந்திலது. மத்தியதரைக் கடலைக் கடந்து இசுப்பெயின், பிரான்சுக் கரையோரமாக இங்கிலாந்து, பிளாந்தேசு, வட சேர்மனி என்பவற்றிலிருந்த துறைமுகங்களுக்குச் செல்வதற்கு மட்டும் கப்பல்கள்

புதிய சமுத்திர வழிகள் 50
தேவைபபடடன. போருக்காயினும் வர்த்தகத்துக்காயினும் அமைந்த கடற்படைகள் பெரும்பாலும் தட்டு வள்ளங்களாகவேயிருந்தன. வர லாற்றுக்கு முற்பட்ட காலந்தொடங்கிக் கி.பி. 15 ஆம் நூற்றண்டின் பிற்பகுதி வரையும் இத்தகைய நிலைமையே நிலைபெறுவதாயிற்று. பின் னர், நன்னம்பிக்கை முனையால் இந்தியாவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்தமையும், அமெரிக்காவைக் கண்டறிந்ததும் ஆகிய நிகழ்ச்சி கள் இத்தாலிய நகரங்களுக்கிருந்த வர்த்தக, கடலாதிக்க நிலையை முற்றக அழித்தன. அக்காலம் முதலாக ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பண்டங்களை வாங்குதற்கு ஐரோப்பியர் பெருஞ் சமுத்திர வழியாகச் சென்றனர். இத்தகைய கடற்பிரயாணங்களுக்குத் தட்டு வள்ளங் கள் பயன்படாவாயின. இப்புதிய அமைப்பில், வர்த்தகமும் கடலாதிக்கமும் பற்றிய போட்டிகள் இசுப்பெயின், பிரான்சு, இங்கிலாந்து என்னும் மூன்றுக்குமிடையே தான் நிச்சயமாக எற்படும். சடுதியாக உலகத்தின் முதன்மையான வர்த்தக வழியாயமைந்த மேலைச் சமுத்திரத்தையே அவை ஒவ்வொன்றும் நோக்கியிருந்தன. அவை தனித்தனி சத்திவாய்ந்த தொரு முடியாட்சியின் கீழ்ப் பகைமையுள்ளமும் இனப்பற்றும் உடையன வாய்ப் புதிய இராச்சியமாயுருவாகும் நிலையில் இருந்தன.
இசுப்பானியரும் அவருக்கு அயலிலிருந்தவராகிய போர்த்துக்கேயருமே இப்புதிய நிலையைச் சாலப் பயன்படுத்துவதில் முதன்மையுடையராயிருந் தனர். அவர்கள் ஆபிரிக்கா, அமெரிக்காக் கண்டங்களின் கரைப்புறங்களி லுள்ள நாடுகளைப் பிறர் கண்டறிதற்கு வழிகாட்டினேராயும் ஆயினர். அவர்கள், அமெரிக்காவின் மத்திய பாகத்திலும் தென்பாகத்திலும் தம் மின மக்களைக் குடியேற்றினர். இச்செயல் ஓரளவிற்கு ஆங்கிலேய-சட்சனி
*மத்தியகாலத்து வர்த்தக வழிகளை நாகரிகமற்ற ಅಡ್ಡಹ@ut தடுத்தமையால் போத்துக் கேயரும் இசுப்பானியரும் புதுவழிகளைக் காணலாயினர்" என்று முன்னேர் உரைத்தபடி துணிதல் முடியாது. இக்கருத்துப் பற்றி, 1915 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரித்தானிய வரலாற்றறிக்கையில் திரு இலிபியர் என்பார் எழுதியதை நோக்குக. மாக்கோபோலோ காலத்திலிருந்த மத்திய ஆசிய வழியை முழுதும் அடக்கியாண்டுவந்த தாட்டர்களிலும் பார்க்கத் துருக்கியர் குறைந்த நல்லெண்ணம் உடையராயிருந்த போதிலும், கி. பி. 15 ஆம் நூற்றண்டில் நடைபெற்ற ஐரோப்பிய வாணிபம் முழுவதையும் நிறுத்திற்றிலர். எகித்து வழியாக நடந்த வர்த்தகம், நன்னம்பிக்கை முனை வழியாற் கவரப்படும் வரையும் செழிப்படைவ தாயிற்று. நன்னம்பிக்கை முனை வழியாற் சென்ற பெருங் கடற்கலங்கள், மத்தியகாலத்துக் கடல்வழிகளாற் கொண்டு சென்றதிலும் பார்க்கப் பரும் பண்டங்களைப் பெருந்தொகையாய் எற்றிச் செல்லக்கூடியனவாயிருந்தன. மத்தியகால ஐரோப்பியர் ஆசியாவிலுள்ள வாசனைப் பொருள்களை வாங்குதற்குப் பொன்னும் வெள்ளியுங் கொடுக்கவேண்டியிருந்தமையாலும், தமது பரும் பொருள்களே ஒட்டகங்களில் எற்றிச்செல்ல முடியாதிருந்தமையாலும் அவர்களின் விலையுயர்ந்த உலோக வர்த்தகம் படிப்படியாகக் குறையலுற்றது. இந்த இடர்ப்பாட்டைப் போக்குதற்கு அண்மையில் ஒர் உதவி கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து சுரங்கங்களில் பெருந்திரளான பொன்னும் வெள்ளியும் கிடைத்தன. அக்காலத்திற்றனே பெருங் கடல் வழியாகக் கீழைநாட்டு அங்காடிகளுக்கு ஐரோப்பியர் தமது பரும்பண்டங்களைப் பாய்க்கப்பல் களில் அனுப்பக்கூடியதாயுமிருந்தது. இதுவே அவ்வுதவியாம். V

Page 264
508 பிரான்சையும் இங்கிலாந்தையும் ஒப்பிடுதல்
யரின் குடியேற்றத்தைத் தடுப்பதாயிற்று. ஆகவே, ஆங்கிலேயர் தாங்கள் குடியேறுதற்கு வாய்ப்புக் கிடைத்தபொழுது குளிர் மிகுந்ததும் கவர்ச்சி யற்றதுமாகிய வடபாகத்தையே ஏற்று அங்கு வாழ வேண்டியவராயினர். அவ்வடபாலில் அவர்கள் தம் வாழ்க்கைக்குத் தாமே நிலத்தையுழுது பண்படுத்த நேர்ந்ததேயன்றிப் பொன் பெறுதற்கான வாய்ப்பைப் பெற்றி லர்.
பிரான்சியர் கடலிலும் அமெரிக்காவிலும் ஆதிக்கம் பெறுவதற்காகப்
போட்டியிடுதற்கு இசுப்பானியரைப் பின்பற்றிச் செல்ல முழு விருப்பமும் இல்லாதிருந்தனர். ஆனல் எலவே கொலம்பசின் காலத்திலேயே தமக் குரிய இரைன் நதிப்புறங்களிலும், அல்பிசு மலைக்கப்பாலும் நடைபெற்ற ஐரோப்பியப் போர்களில் கருத்தூன்றியிருந்தமையால், பிரான்சு இம் முயற்சிகளிற் கவனஞ் செலுத்தாதிருந்தது. ஆனல், பிரித்தானியரோ நூருண்டுப் போரிலே தாம் ஈட்டிய கீர்த்திக்குத் தண்டனையாக நீண்ட காலம் ஆட்சியறவையும் ஆண்மை குன்றிய நிலையையும் அடையலாயினர். ஆகவே ஐரோப்பாவில் ஆங்கிலேயர் தமக்குள்ள பேராசையினல் உந்தப் பட்டு, அப்பாழுங் குழியில் மீட்டும் வீழ்தற்குச் சிறிதும் விரும்பவில்லை. தியூடர் காலந்தொட்டுப் பிரித்தானியர், வேற்றுநாட்டார் தம்மேற் படை யெடாது பாதுகாப்பதற்கும் சமுத்திரத்துக் கப்பால் தம் ஆதிக்கத் திட்டத் தைச் செலுத்துதற்குமே ஐரோப்பிய அரசியற் கருமங்கள் உரியன வென்று மதித்து வந்தனர். அவர்களுடைய தீவாந்தரநிலை செப்பமாகப் பயன்படுத்தப்பட்டதனல், இசுப்பானியரோடும் பிரான்சியரோடும் நிகழ்ந்த கடலாதிக்க, குடியேற்றப்போட்டிகளில், இவ்விரு நாடுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த வாய்ப்பினை ஆங்கிலேயருக்கு அது அளித்தது.
பிரான்சியரைப் புதிய உலகமாகிய அமெரிக்காவுக்குச் செல்லும் போட்டி யிற் புகவிடாது தடுத்த பிறிதொரு நிகழ்ச்சி சமயப்போரேயாகும். இப்போர் அவர்களது பொன்போன்ற காலத்தைக் கவர்ந்தது ; அதே காலத்தில் இலிசபெத்தரசியார் இங்கிலாந்தை மேற்குறித்த சமயப் போராகிய கொடும் பிணியினின்றும் பெரிதும் காப்பாற்றிவந்தனர். பிரான்சிய இயூசனர் ஒல்லாந்திலும் இங்கிலாந்திலும் வாழ்ந்த புரட்டசுத்தாந்தர் போன்று வர்த்தகராயும் கடலோடிகளாயும் இருந்தனர். இவர்கள் வெற்றியடைந்தி ருப்பாராயின், பிரான்சு தேசத்தைக் கடலரசியாக்கியிருப்பர். ஆனல், கொலிக்கினி என்னும் கடற்படைத் தலைவரும் அவர் படையினரும் சென்று பாதுலோமியூசின் திருநாளில் வதம் செய்யப்பட, பிரான்சிசு திரேக்கும் அவர் தலைமையிற் சென்ற புரட்டசுத்தாந்தரான கப்பலோட்டி களும் ஆங்கிலவரசின் பணியாளராயும் ஆங்கில மக்களின் வீரராயும் ஆயினர். அன்றியும், அவர்கள் பிரித்தானியரின் முதன்மையான நோக் கத்தையும் ஊக்கத்தையும் கடல்பாற்றிருப்புவாராயினர்.

பிரான்சையும் இங்கிலாந்தையும் ஒப்பிடுதல் 509
சமதரையையும் பிரிக்கவியலாத நாட்டுப்புறவியல்பையும் நீண்ட தரை
முகப்புக்களையும் கொண்ட பிரான்சு பழைய நிலமானியமுறையைத் தன் நிலையான சமுதாய அடியீடாகக் கொண்டிருந்தது. அன்றியும் புதிய தேசிய முடியரசின் ஆள்புல முயற்சிகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாகவும் விளங்கிற்று. ஆனல், ஒடுங்கியதும் ஒழுங்கற்றதுமான புறவடிவத்தையுடைய தும் ஓரங்களில் வெட்டுடைய கடற்கரையினுற் பெரும்பாலும் சூழப்பட்ட தும் நட்புறவு பூண்ட கொத்துலாந்தை அயலிலுடையதும் கலவரும் மீன வரும் நிறைந்திருந்த சிறியனவும் பெரியனவுமாய பல துறைமுகங்கிளை யுடையதுமாகிய இங்கிலாந்தில், அரசானது வர்த்தகத் துறைக்கும் கடலோடு மக்களின் கொள்கைக்கும் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தது. அம்மக்கள் தெவனைப் போன்ற கடற்கரைப் பிரதேசங்களிலிருந்த தலைசிறந்த மாநிலக் குடும்பங்களோடு சேர்ந்த ஒரே சமுதாய மக்களாவர். நம்முன்னேர் இக் கருத்தைக் குறிக்கும் ஒரு பழம் பாடல் வழங்கி வருகின்றனர். அது வருமாறு :-
அரசைத் தூற்றுநின் ஞள்படை வீரரைப்
பரசு வோரிலர் ; பாய்திரை மேலெழீஇ
முரசி ஞர்க்கு முந்நீர்க்கல வீரரைப்
பரசு வோமவர் பாலனஞ் செய்வரால்.
உண்மையில், பிரித்தானியர் இசுப்பானியரோடு போர்புரிந்து “ ஆமடா ” கப்பற்படையைத் தோல்வியுறச் செய்ததனலாய வெற்றியானது குன்றிப் போனதற்குக் காரணம், துறைபோய வீரர்கள் விளைத்த பேற்றினைப் பயன்படுத்துதற்கு இராணுவ அமைப்பும் பாரம்பரியமும் இல்லாமையினலே யேயன்றி, கடலதிகாரம் இல்லாமையினலன்று.
به گھر
இங்கிலாந்தின் கடற்கரையிலிருந்து யாதொரு முனையேனும் எழுபது மைல் தூரத்துக்கப்பால் இல்லாமையினல், அங்குள்ள மக்களிற் பெரும் பாலானேர் கடலோடு சிறிதளவாயினும் தொடர்புடையரயோ, கடல் வாழ் நருடனவது தொடர்புடையராயோ உள்ளனர். மேலும், இலண்டன்மா நகரந்தானும் கடல் விளிம்பில் உள்ளது. ஆனல், பரிசு நகரம் உள்நாட்டில் உள்ளது. மதிரித்தும் கடற்கரையிலிருந்து எத்துணைச் சேய்மையில் இருக்க முடியுமோ, அத்துணை உள்நாட்டில் இருந்தது. இலண்டன் மாநகரத்தார் புரட்டசுத்தாந்தராயிருக்கப் பரிசு மாநகரத்தார் பற்று நிறைந்த உரோமன் கத்தோலிக்கராயிருந்தனர். முழுத் தேசத்தோடும் ஒப்பிடும்போது, இலண் டன், குடித்தொகையிலும் செல்வத்திலும் சிறப்புற்றிருந்ததால், இங்கி லாந்து முழுமைக்கும் வழிகாட்டியாய் விளங்கிற்று. இயூசநற்றுக்களின் கடற்றுறையாகிய இலா உரோசலைப் பிரான்சின் உட்புறத்திலுள்ள டன்னி ரண்டு நகரங்களோடு தனித்தனி ஒப்பிடின், அது மிகச் சிறுமையானதாகக் காணப்பட்டது. இக்காரணங்களாலும் பிறவாற்றணும் பிரான்சு 16 ஆம்

Page 265
七nnpn圓函國劑日用F母照n心也*溜鬥國國arn
rț și urus no sō
(高等學的可****) Isis. No
■■■■■见泷 ::=?+++;*1_已또 _ " Áo歴*归_!
slPT.
+r+'*'+r++ +-+++..++i+
****** mae), 1高月T를 불門: . soisso, al II
suos, so si ini,
|------ - - - ==
 
 
 
 
 
 
 
 

இசுப்பெயினேயும் இங்கிலாந்தையும் ஒப்பிடுதல்
நூற்றண்டிற் கடலாட்சியில் முதன்மை பெறுதற்கு ஊக்கத்தோடு போட்டி பிடத்தவறியது. பிரித்தானியரோடும் ஒல்லாந்தரோடும் கொண்டிருந்த சமய, அரசியல் நட்புறவோடு, கேடிசுக்கும் நெதலாந்துக்கும் இடையிற் சென்ற இசுப்பானிய மரக்கலங்களேப் பிரான்சின் சிறந்த கடற்படை சூறை பாடியது.
இங்கிலாந்திலும் பார்க்க பிரான்சு கூடிய நிலமானியமுறை வாழ்க்கை புடையதாயிருந்ததென்றல், இசுப்பெயின், பிரான்சிலும் மிகக் கூடிய நிலமானிய முறை வாழ்க்கையை உடையதாயிருந்தது. இப்பானியர் போத்துக்கலேக் கைப்பற்றியபின், இங்கிலாந்து கடலாய் குழப்பட்டிருந்த அளவுக்கு இசுப்பெயினும் ஏறத்தாழச் சூழப்பட்டிருந்தது. மேலும், அது கடற்படை மரபுடன் கூடிய கப்பற் படையொன்றைக் கொண்டுமிருந்தது. ஆணும், அப்படை அடிமை மாலுமிகளேக் கொண்டவையும் மத்தியதரைக் கடலிற் செல்லும் முனறகளேயே அறிந்தவையுமான துடுப்புடைக் கலங் ளேக் கொண்டிருந்தது. இலெப்பாந்தோவில் துருக்கியன வெற்றிகொண்ட அக்கப்பற்படை திசேக்கு என்பாருடைய பெருங் கலங்களே எதிர்ப்பதற்குப் பயன்படாதெனலாம். அன்றியும், அப்படை, அத்திலாந்திக்கு டவேக் கடக்க முடியாததாயிற்று. மேலும், பிசுக்கே குடாக் கடவிலும் ஆங்கிலக் கால்வாயிலும் சிறிதளவுக்கே பயன்படக் கூடியதாயிருந்தது. அமெரிக்கா வின் பசுபிக்குக் கடற்கரைப் புறமாகப் போக்குவரவு செய்யத்தக்கனவும் கேடிகக்கும் இசுப்பானியக் கடலுக்கும் இடையேயுள்ள அதிதிாநிதிக் கடலேக் கடக்கத் தக்கனவுமாகிய பெருங்கலங்களே, உண்மையிப், இசுப் பெயின் கொண்டிருந்தது. அவை, புறக்குடியேறுநனா வெளியே கொண்டு சென்று திரும்புகையில், போன்னும் வெள்ளியும் எறி வருதற்குப் பயன்பட்டன. ஆணும், அண்ை போர்க்கவிங்கன் அஸ்வினவாதபின் ஆங்கி லேய கடற்கொள்ளேக்காரர் கையில் எளிதிற் சிக்கிக் கொண்டன. இசுப் பெயின், உண்மையில், இங்கிலாந்தோடு போர்புரிதகுதி தகுந்த கிங் &E&effù Ö IWrሰ தொடங்கியதற்கு மிக அண்மையிருள் செய்யத் தொடங் கீற்று. இசுப்பெயினின் கப்பற்படைத் தொகுதியில் ஆடவே முதன் முதலாகச் செய்யப்பட்டதாகும். ஆஞல், ஆங்கிலேயரின் குடித்தொன, பிரான்சியர், இசுப்பானியர் ஆகியோரின் குடித்தொகையிதும் சிறியதா யிருந்தபோதிலும், அவர்களுக்குக் கடலோடிகளேக் கொண்ட ஒரு பெருஞ் சமுதாயம் இருந்தது. அம்மக்கள் பல நூற்ருண்டுகளாக வடபாலின் உள்ள கொந்தளிப்பான கடலிற் செல்லும் பழக்க முடையனாாயிருந்தனர், மேலும், WI11 ஆம் என்றியின் ஆட்சி தொடக்கம், இக்காலப் போர் முறைக்கினங்கச் செய்யப்பட்டதும் போர்க்கருவிகளே உடையதுமான அரச கடற்படையொன்று ஆங்கிலேயரிடமிருந்தது. அப்படை, தனிப்பட்டவணிகர், கடற்கொள்ளக்காரர் ஆகியவர்களுடைய போர்த்தன்மையான முயற்சிகளுக்கு இடையூறு விளேத்து வந்தது. பிலிப்பாசன் மேரியை மனந்தபின்னர், ஆங்கிலப் போர்க் கடற்படையின் உதவியை நாடும் பூட்கையுடையவனு
I.
1.

Page 266
512 ஆங்கிலரின் கடற்போர் விரகு
யிருந்தான். ஏனெனில், ஆங்கிலக் கடற்படைக்கு நிகரான தொன்றை அவன் இசுப்பெயினிலிருந்து பெற முடியாதிருந்ததினல் என்க.
இசுப்பானியர், சமுத்திரத்திற் செல்லக்கூடிய போர்க்கப்பற்படையொன்றை மிக்க ஊக்கமொடு ஆக்க நேர்ந்தபொழுதும் தடை செய்யப்பட்டனர். எவற்றலெனின், அவர்தம் சமுதாய வாழ்க்கையிலமைந்திருந்த மானிய, இராணுவ இலட்சியங்களினலும், இலெப்பாந்தோவிற் புதிதாக வெற்றி யீட்டிய புகழைக் கொண்டிருந்த அவர்களின் கடற்படையின் மத்திய தரைக்கடல் முறைமைகளினலும் என்க. தட்டு வள்ளங்களிலாயினும் பாய்க்கப்பலிலாயினும் கடலிற் போகும்போது, தம் பகைவரை நாடிச் சென்று அவர்களுக்கு அணித்தாய் நெருங்கித் தாக்கி அவர்தம் கலங் களிற் புகுவதே இசுப்பானியரின் போர்முறையாயிருந்தது. சுருங்கக்கூறி ஞல், இசுப்பானியர் தமக்கு முன்னிருந்த கிரேக்கர், உரோமர், வெனி சியர் என்பாரைப் போலவே, ஐம்பெரும் பூதங்களும் உறுதுணையாயிருக்கும் வரை கடற்போரைத் தரைப்போர் போலாக்க விரும்பினர். அவர்கள் போர்வீரர்களைத் தம் கலங்களில் நிறைத்தனர். அவ்வீரர் கலவரை மரக்கல அடிமைகள் என்றெண்ணி வெறுத்தும் பழித்தும் வந்தனர். இதனை யறிந்த ஒருவர் கூறியதாவது :-“கலவர்கள் ஏனையோர்க் கடிமைகளே ; அவர்கள் அல்லும் பகலும் வருந்தியுழைக்க வேண்டியவர்கள் ; ஒரு சிலரைத் தவிர ஏனையோர் கலங்களின் அடித்தளங்களில் தஞ்சம் பெற வும் துயில் கொள்ளவும் விடப்படாதோராவர்”.
கப்பலின் பக்கப் புழைகள் வழியாகப் பீரங்கிக் குண்டுகளை விடுந்திறத்தி ணுல் ஒரு புதிய கடற்போர் முறைமையை வகுத்தாள்வதில் உலகத்துக்கு வழிகாட்டிகளாக விளங்கியவர் ஆங்கிலேயரே ஆவர். நெல்சனுடைய மூன்ற டுக்குக் கலங்களில் இருந்த துவக்குக்களிலும் திரேக்கின் துவக்குக்கள் தொகையிற் குறைந்தனவாயினும், உருவத்தில் மிகச் சிறியனவாயிருக்க வில்லை. அவைகளை உபயோகித்தற்கு மீகாமன் போர்வீரனிலும் மிக முக்கிய மானவனக இருந்தான். எனெனில், தன் போர்க்கலத்தை வாய்ப்புற நிறுத்தினலொழியப் பகைவரைத் தாக்கும் போர்வீரன் தன் பீரங்கி
இலிசபெத்தரசியார் காலக் கடற்படை பற்றிச் சிறப்பாகக் கூறவல்ல சேர் உவில்லியம் மொன்சன் பின்வருமாறு கூறுவர் :-" உண்மையை உரைக்கும் வழி, இசுப்பானிய அரசன் எம்முடன் போர்புரிந்த காலத்தன்றி, அதற்குமுன் கடற்போர் என்ன நிறம் உடையதென்பதைத்தானும் அறியான். ஆனல், துருக்கியரோடு நீரிணைகளிலும் பிரான்சிய ரோடு தெசரசுத்தீவுகளிலும் பெருங் கலங்களிற் செய்த போர்களை மட்டும் அவன் அறிவான். அப்பெருங் கலங்கள் தாமும்,அவன் புதிதாகப் பெற்றுக் கொண்ட போத்துக்கேய அரசுக் குரியனவாம். 1591 ஆம் ஆண்டில் “ இறிவெஞ்” சென்னும் போர்க்கலத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியபோதுதான் முதன் முதலாக பிலிப்பரசன் கடற்போரில் தான் வன்மையுடைய ரெனக் காட்டினன். 1580 ஆம் ஆண்டில் பிலிப்பு போத்துக்கலையும் அதன் கட்ற்படையையும் கடலுக்கப்பாற்பட்ட நாடுகளையும் தன்னட்சிக்குட்படுத்தினன். அந்நாடு (போத்துக்கல்) 1640 ஆம் ஆண்டுவரையும் இசுப்பெயின் அரசின்கீழ் இருந்தது. அதன்பின்னர் இங்கிலாந்துடன் கொண்ட நட்புறவால் போத்துக்கல் தான் மீட்டும்பெற்ற சுயவாட்சியை நிலைநாட்டிற்று.

* மாலுமிகளும் கனவான்மாரும் ” 513
களை அனுகூலமாக உபயோகிக்க முடியாது. மேலும், இரு கலங்களின் நிலைகளை மட்டிடுதற்குரிய மீகாமனின் இயல்பூக்கத்தின் உதவிகொண்டே போர்வீரன் இலக்குப் பார்க்க முடியும். சேர் பிரான்சிசு திரேக்கு போர்க் கப்பலை ஒர் இயங்கும் பீரங்கிப்படையென்று மதித்தார். மெடின சிதோனி யாக கோமகன் அதனை வாள் வீரருந் துவக்கு வீரருங் கலந்து போரிடுங் களமாக மதித்தார். திரேக்கும் ஒக்கின்சும் பகைவர் போர்க்கலங்களிற் புகுந்தது முதல், சென். வின்சென்றில் நெல்சனும், வாட்படை வீரன் புரோக்கும் புகுந்தது வரை கூறும் பல தீரச் செயல்களை ஆங்கிலக் கடற் படை வரலாறு பெரிதும் விளக்குகின்றது. ஆயின், இங்கிலாந்தைக் கடலரசி யாக்கியது கலம்புகுவோன் அல்லன் ; அக்கலமேயாகுமென்க.
இசுப்பானியர் தங்கள் மானிய முறைக்குரிய ஒருதலைச் சார்புகளோடும் மத்திய தரைக் கடலுக்குரிய கடற்போர் முறைகளோடும், கடலிற் கப்ப லோட்டிச் செல்லுங் காலத்திற்றனும் மாலுமி, போர் வீரனுக்குத் தாழ்ந்த வனெனக் கருதியபோதே, திரேக்கு என்பார் போர் வீரர்க்கும் கலத்தி லுள்ள கடல் வாழ்நர்க்குமிடையே நிலவ வேண்டிய முறையான தொடர்பை நிர்ணயித்தார். உலகத்தைச் சுற்றிச் செய்த பயணத்தில் அவர் அருஞ் செயலாற்றும் கனவான்களுள் கீழ்ப்படியாத கூட்டத்தாரை அடக்கியபோது, கனவான்களுக்கும் மாலுமிகளுக்குமிடையே ஏற்படும் சண்டையைத் தடுப் பது சம்பந்தமாய் விதித்த மிக உயர்ந்த கட்டளை வருமாறு :- " கன வான்கள் மாலுமிகளோடு சேர்ந்து எல்லா வேலைளையுஞ் செய்ய வேண்டு மென்பது என் ஆணை’. அப்புதுவழியிற்றங்கருமங்களைச் செய்யத் தொடங் கிய “ கனவான்கள் ’, படிப்படியாய் ஆங்கிலப் போர்க்கலங்களிற் றமக்குரிய தொழில் எதுவென்பதை அறிந்தனர். மேலும், இவ்வாறு நெடுங்காலஞ் சென்றபின், தாமும் “மாலுமிகளாயினர் ; நெல்சன் பிறந்த காலந் தொட்டு அரசரின் கடற்றலைவர் ஒவ்வொருவரும் ‘மாலுமி”, “ கனவான்” ஆகிய இருதிறத்தாரின் பண்புகளும் அமையப் பீெற்றவரானர். அதடைன், கலமோட்டலும் போர் செய்தலும் ஒன்று பட்டுப் பிரிக்க முடியாத சேவை களாயின.
மாபெரும் போர் வீரரும், தலைசிறந்த அரச கடற்பk) த் தலைவருமான திரேக்கு, அரச கடற் படையினருக்கும், இசுப்பெ. குறடு உத்தியோக பூர்வமற்ற போர் நடாத்திய அருஞ் செயலாற்றும் வணிகர்க்குமிடையே முன் வேறெவரும் செய்திருக்க முடியாத இணக்கத்தை நிறுவினர். இசுப்பானியருக்கு அவர் தம் துடுப்புடைக் கலங்களைச் செலுத்துதற்கு அடிமைகளும், தம் கலங்களினின்று போர் செய்ய மிகச் சிறந்த வீரரு மிருந்தனர். ஆனல், மிக இன்றியமையாது வேண்டப்படுபவரான மாலுமி களைப் பெறுதற்குரிய, ஊக்கமுள்ள தனிப்பட்ட வணிகரையும், கடலோடி களையும் கொண்ட வகுப்பார், இசுப்பானியருக்கு இருந்திலர். இவ்வகுப் பினரே இங்கிலாந்தின் செல்வத்திற்கும் பெருமைக்குங் காரணமாயிருந் தனர்.
1578.

Page 267
514 * மாலுமிகளும் கனவான்மாரும் ”
இசுப்பானிய கலத்தினதும் ஆங்கில கலத்தினதும் அலுவலாளர்க்கும், சுளுகுக்குமுள்ள வேறுபாடுகள், உண்மையில், மிகவும் ஆழ்ந்த பொரு ளைக் குறித்தன. அதுவே இசுப்பெயினுக்கும் புதிய இங்கிலாந்துக்குமிடை யிருந்த சமூகப்பண்பின் வேறுபாடாகும். தனிப்பட்ட முயற்சி, தனியாருக் குரிய முனைப்பு, வகுப்புக்களுக்கிடைநிலவிய மகிழ்ச்சிகரமான சமநிலை ஆகியன, மறுமலர்ச்சி மதச்சீர்திருத்தக் காலங்களில், நிலமானிய வமைப் பிழந்த இங்கிலாந்தில் வளர்ச்சியுறுவனவாயின. மேலும், அத்தகைய பண்புகள் வணிகரிடத்தும், கடலருகில் வாழும் குடிமக்களிடத்தும் பெரி தும் வலிமையுற்றிருந்தன. உயர் குடிப்பிறந்தோரில் மாபெருந்திறனும் ஆற்றலும் கொண்டோரும், இடை, கன்டச்சமுதாய வகுப்பினரும், போரும், வணிகமுஞ் செய்தற்குத் தோழமை பூண்டு கடலிற் செல்வாராயினர். இசுப்பெயினில், சமூகக் கருத்துக்களும் ஒழுக்கங்களும், அரசியலில் அரசன் தனிமுதன்மையுடையவனுய் வந்தபின்னரும், இன்னும் நிலமானிய முறை மையைத் தழுவியனவாயிருந்தன. திரேக்கு நன்கறிந்தவாறு, கலத்தில் வேண்டப்பட்டது ஒழுக்காறேயன்றி, நிலமானிய முறைமையும் வகுப்புச் செருக்குமன்று. கடலுக்குரிய பதவணி நாட்டுக்குரிய பதவணிவயைப்போன்ற தனநு.
இசுப்பானியர், தம் ஆதிக்கம் உச்சநிலையிலிருந்தபோது, பெரும் போர் வீரராயும், குடியேறிகளாயுமிருந்தனர். ஆஞ்றல், பெரு மாலுமிகள் என்ற நிலையிற் குறைந்தவராயும், முயற்சித் துணிவற்றவணிகராயும், கொடிய அரசியலாளர்களாயும், கொடுங்கோன்மை யுடையவர்களாயுமிருந்தனர். அவர்களின் கத்தோலிக்கச் சார்பான உற்சாகம், அவர்கள் பெறக்கூடிய தாயிருந்த புதிய வணிக நல்வாய்ப்புக்களைக் கைப்பற்றுவதற்கு உதவி செய் திருக்கக் கூடிய அந்த வகுப்பினரையும், இனத்தவரையும், தங்கள் தீபகற்பத்திலிருந்து வெளியே துரத்தவோ, கொல்லவோ அவர்களைத் தூண்டியது. அமெரிக்கச் சுரங்கங்களிலிருந்து பொன்னும் வெள்ளியும் இறக்குமதி செய்தலின் மூலம், ஆங்கிலேயர் கப்பற் சரக்குகளை வழிப்பறி செய்திராவிட்டாலும், எந்நாடாயினும் எப்பொழுதும் செழிப்புறமுடியாது. மேலும், இசுப்பானியர் சமயத்திற்றம் கொண்ட ஆர்வத்தால் புதிய ஊழியில் இங்கிலாந்தின் எதிரிகளாயிருந்திருக்கக்கூடிய பிளாந்தேசுவி லிருந்த பெரு நகரங்களின் வளத்தைப் பாழாக்கினர். பிளாந்தேசின் வணிகர் இழந்த வணிகத்தை தம்முரிமையாகப் பெற்ற ஒல்லாந்து மாலு மிகள் இசுப்பானியரின் கொடுமையால் இங்கிலாந்தின் நட்பாளராய் ஆகு மாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சமூகமும் அறிவும் பற்றிய சுதந்திரம், தனக்கு மாறயுள்ள வொன்றை எப்பொழுதாயினும் வெற்றிகொண் டிருப்பின் அதுவே இங்கிலாந்தும் ஒல்லாந்தும் இசுப்பெயின் மீதுகொண்ட கடல்சம்பந்தமான வெற்றியாகும். எலிசபெத்தின் ஆட்சியில் கடற் போர்பற்றியதும், சுதுவாட்டரசர் ஆட்சியில் குடியேற்றம் பற்றியதுமான வெற்றி ஆங்கில வணிக வளர்ச்சியிற்றங்கியிருந்தது. இசுப்பானிய கடலாதிக்

புதிய ஆங்கில வணிகம் 515
கம், தன்னை வளர்த்தற்குரிய வணிகமின்றியிருந்ததால், பிலிப்பின் அரசியல்வலியும் படைவலியும் இருந்தும், உலகில் அரைப்பாகமெங் கணும் பரவிக் கிடந்த மக்களையுடைய அவனது பேரரசிருந்தும் ஒருதீவின தும் ஒல்லாந்தின் மணற்குன்றுகளுக்கும் மண்மாடிகளுக்கும் மத்தியி லுள்ள சில புரட்சிகரப் பட்டினங்களினதும் தாக்குதலுக்குத் தலைதாழ்த்தி யது ; இசுப்பானியரைப் போலல்லாது, ஆங்கிலேயரும் ஒல்லாந்தரும் உல கத்திற் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களோடு எவ்வாறு வணிகஞ் செய்யலாமென்று அறிந்திருந்தனர்.
புதிய ஆடைவிற்பனவின் பொருட்டு இங்கிலாந்தின் வணிகவீரர் பதினைந் தாம் நூற்ருண்டு தொடங்கி ஐரோப்பாவிற் புதிய சந்தைகளை மிகுந்த ஊக்கத்தோடு தேடுவாராயினர். இத்தால் கடலிலும் தரையிலும் அடிக்கடி குருதி சிந்தவேண்டியதாயிற்று ; ஏனெனில், அக்காலத்திற் கடற்கொள்ளை வழக்கமானதென்றும், இழிவானதொன்றன்று என்றும் கருதப்பட்டதா லும், வணிக உரிமைகள் அடிக்கடி மறுக்கப்பட்டபோது, அவற்றைச் சண்டை செய்து பெறவேண்டியிருந்ததாலுமென்க. இலிசபெத்தின் ஆட்சியில் ஆபி ரிக்காவிலும், ஆசியாவிலும், அமெரிக்காவிலும் புதிய சந்தைகளைக் காண் டற்கு ஆங்கில வணிகர் மேன்மேலும் தொலைவிற் சென்றனர்.
அக்கிலியத்து என்பார் சிறப்புடைய ஒவ்வொரு கடற்பிரயாணத்திலும் தப்பிப்பிழைத்தவர்கள் சொன்ன கதைகளைப் பொறுதியோடு குறித்து வைத்ததின் மூலம், ஆங்கில நாட்டின் எதிர்காலம் திரைகடலோடுவதிற் றங்கியுளது எனும் உணர்வைத் தூண்டிவிடுவதற்குப் பெருமுயற்சிசெய் தார். இசுப்பானியரைக் கொள்ளையடித்தும், பீரங்கிச் சண்டைசெய்தும் அவர் தங் குடியேற்ற நாடுகளோடு வணிகஞ்செய்யச் திரேக்கு என்பார் போர் தொடுத்து வழிவகுத்த அக்காலத்திற்றனே, ழசுக்கோவிலும், ஆபிரிக்கா விலும், இலவாந்து நாடுகளிலும் மிகுந்த அமைதியான முறையில் பெரும் வணிகம் நடந்தது என்பதை நமக்கு நினைவூட்ட அக்கிலியத்தின் நூல் உதவுகின்றது. ஒக்கின்சு என்பாரும், அடிமைவணிகத்திலீடுபட்ட பிறருந் தவிர எனைய ஆங்கில வணிகர், காப்பிரிகளைப் போத்துக்கேயர் நடத்திய முறையிலும் மேலாகத் தாம் நடாத்தியும், கறுத்தவராயினும் வெள்ளை யராயினுஞ்சரி, எவருடனும் அவசியமற்ற சண்டையைத் தடுக்க முயன்றும், கினி நாட்டோடு தாம் செய்துவந்த வணிகத்தை விருத்திசெய்ய விரும்
பினர்.
ஆயினும், அமைதியான வணிகருக்கும் போர்க்குணமுள்ள வணிகருக்கு மிடையே தெளிவான வேறு பாடு காண்டல் முடியாததாகும். ஏனெனில், போர்த்துக்கேயர் ஆபிரிக்கா, இந்தியாவாகிய வற்றின் கரைகளை அணுகி வந்தோர் எவரையும் தாக்கினராதலின். போர்த்துக்கேயர் தமக்கு என்று முரியனவாகப் போப்பாண்டவர் ஒதுக்கிவிட்ட நிலங்களிலும் கடல்களிலு

Page 268
516 புதிய ஆங்கில வணிகம்
மிருந்து அந்நியர் எல்லோரையும்-சிறப்பாகப் பரநெறியாளரை அகற்று தற்கு அமெரிக்காவிலிருந்த இசுப்பானியரைப் போலத்தாமும் உறுதி செய்தனர். ஆங்கிலக் கள்ள வணிகருக்கும் முழுவுரிமை பெற்றிருந்த போர்த்துக்கேயருக்குமிடையே நேர்ந்த சமர்களின் ஆரவாரம் ஆபிரிக்காவி லுள்ள கோல்கோசில் அடிக்கடி எதிரொலித்தது. மேலும், இலிசபெத்தின் ஆட்சிமுடிவில் அதே ஆரவாரம் இந்தியக் கடல்களினதும் மலாயாத்தீவுக் கூட்டத்தினதும் அமைதியை அழிப்பதாயிற்று. கடற்கொள்ளைக் காரனேடு அல்லது பிறநாட்டுப் பகைவனேடு செய்யும் கடற்சண்டை, அமைதிக்காலத்தி லோ, போர்க்காலத்திலோ, மிக நேர்மையான வணிகனின் வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாததொரு நிகழ்ச்சியாயிருந்தது. இலண்டன் மாநகரில், போருக்குரிய நடவடிக்கைகளினலேற்படும் சேதங்களையும் செலவையும் தாங் குவதற்காகக் கொம்பனிகள் கூட்டப்பட்டன. அவற்றிற்கு அரசி உரிமைப் பட்டயங்கள் வழங்கினள். இவற்றல் உலகத்தின் மறுபக்கத்திலுள்ளார் மேலும் சூழியலும் இராணுவமுஞ் சார்ந்த அதிகாரம் செலுத்தும் உரிமை களை அக்கொம்பனிகள் பெற்றன. அம்மறுபக்கலுக்கு அரச கலங்களோ அரசதுரதமைச்சரோ ஒரு பொழுதும் வந்திலர். தனிப்பட்ட ஆங்கில வணிகர் தமக்குரிமையான அமயங்களிற் பயணஞ் செய்தபொழுது மொசுக்கோவில் இரசியப் பேரரசனின் அவையிலும், ஆக்கிராவில் முகமதியப் பேரரசனின வையிலும் தம் நாட்டின் முதற் பிரதிநிதிகளாகவிருந்தனர்.
பிரதேசவாராய்ச்சியும் போராடலும் வணிகத்தையே தம் பெரு நோக்க மாகக் கொண்டிருந்தன. மேலும், இம்மூன்றும் அத்தலைமுறைக் குரிய அரும்பெருஞ் செயல்கள் சிலவற்றில் இணைந்திருந்தன. வீரக்கதையும், பணமீட்டலும், அஞ்சாத்துணிவும், கொள்ளைப் பொருட் பங்கீடும் மக்கள் மனதிற் பெரிதும் குடிகொண்டிருந்தன. வயிற்றுப் பிழைப்புக்குரிய வாழ்க்கைக்கும், கவிதை கற்பனையாகியவற்றிற்குரிய வாழ்க் கைக்குமிடையே வேறுபாடு எதுமில்லாதிருந்தது. காசுச் சந்தையிற் கருமங் கள் நடத்தலும், அடக்கமான அரசறிஞரின் போர்த்திட்டங்களும் தீரச் செயல்களடங்கிய பயணங்கள் பாற் சென்றன. அச்செயல்கள் புகழொன்றை யேயன்றி வேறென்றையுங் கருதாது நங்காலத்தில் நடக்கும் எவரெற்று தென்துருவம் ஆகியவற்றைக் காண்டலாகிய செயலை ஒத்திருந்தன. ஓரள விற்கு அக்காரணத்தினலேயே இலிசபெத்தின் ஊழியில் ஆங்கிலேயருடைய ஒப்பில்லாத்திறமையின் அனுபவ சாத்தியமான இலட்சியவாதம் அதி உன்னதறிலையடைவதாயிற்று. திரேக்கும், சிட்டினியும், இசுப்பென்சரும், இராலியும், செகப்பிரியர் தாமும், சாதல் பிழைத்தலுக்குரியதும் உணர்ச்சி
*பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்காவின் உட்பகுதியை வளர்த்தற்கு பட்டயம் பெற்ற வணிகக் கம்பனிகளை நிறுவியமை, இலிசபெத்தின் ஆட்சியில் மசுக்கோவி, இலவாந்துநாடுகள், கிழக்கிந்தியாவாகியவற்றிலிருந்த வணிகக் கொம்பனிகளின் அதிகாரத்தை சிறிது ஒத்தநிலைமையில் புதுப்பித்தமையாகும்.

இலிசபெத்துக்காலக் கடல்வீரர் 517
தூண்டுமியல்புள்ளதுமான அருஞ் செயலென வணிகத்தைக் கருதிய மக்கள் மத்தியில் வாழ்க்கையைக் கழிக்கலாயினர்.--
குமுறி எழுந்திடுங் கோரக் கடலையும் ஈட்டி முனையினல் ஊன்றித் தாண்டவும் பயங்கர மெதிலும் மயங்கா நிற்கவும் மனவுரங் கொண்டார் வணிகத் தைவளர்க்கவே.
இலண்டன் மாநகரத்திலும் தெவனிலுமிருந்த மக்களுக்கு, அத்திலாந்திக் கடலுக்கப்பாலுள்ளதும் தேசப் படத்தில் வரையப் படாததுமான உலகம், கற்பனைத் தீவுகளின் கூட்டமாகவும், முன்பு அறிந்திராத வியப்புக்களை மறைத்து வைத்திருப்பதாயும், தொலைவிற் சென்று சாதற்கு, அன்றேல் செல்வனயத் திரும்பிவந்து தன் கதையை மதுக்கடையிற் சொல்லுதற்கு உறுதி பூண்ட அருஞ் செயல் வீரனெருவன் கண்டுபிடித்தற்குரியதாயும் தோன்றிற்று.
இவ்வாருண தலைமுறையில் வாழ்ந்த மக்களுக்கு வட கடல்களினுடாக ஒரு பாதையைக் காண்டல் எளிதாகத் தோன்றியது. அதனல் போத்துக் கேயரும் துருக்கியரும் அறியாவண்ணம் இந்தியாவின் அங்காடிகளேத் தாம் அடைதலும் எளிதென எண்ணினர். செபத்தியன் கபற்று தம் முதுமை யில், WI ஆம் எட்டுவேட்டின் ஆட்சியில் ஆங்கிலர் மனதிலுண்டான இவ் வெண்ணத்தை மீட்டும் தூண்டினர். 1553 ஆம் ஆண்டில் இரிச்சாட்டு சான்சலர் வெண்கடல் வழியாக வடகீழ்ப்பாதையைத் தேடிச் சென்று அதைக் காண்டற்குப்பதிலாக இரசியப் பேரரசன், மொசுக்கோவில், மென்மயிராடையணிந்த இனத்தினர் வாழ்ந்த நாட்டை ஆள்வதைக் கண் டார். மீட்டு வந்து இரசியாவோடு பெரும் வணிதஞ் செய்தற்குரிய வழிகளைத் தம் நாட்டவருக்கு அவர் வெளியிட்டார். மூன்று ஆண்டுகளின் பின்னர் அவர் தாம் செய்த இரண்டாம் பயணத்தின்போது மாண்டார். ஆகவே, இலிசபெத்தின் காலத்தில் ஆங்கில மசுக்கோவி வணிகக்கொம்பனியாரே இரசியாவின் உள்நாட்டோடு உருவாக்கிய வணிகத்தை அடுத்த நூற்றண் டின் முற்பகுதியில் ஒல்லாந்தர் கைப்பற்றியதால் சில காலம் வரை இழந்த போதிலும், அவரே அதனை அமைத்த முதல் மேனட்டாராவார். வடமேற்கு வழியாக இந்தியாவையடைய புருேபிசரும், தேவிசும் செய்த முயற்சிக ளால், சுதுவாட்டர் காலத்தில் அட்சன் குடாவோடு விலங்குரோம வணிகம் நிறுவநேர்ந்தது. இது பிரித்தானியருக்கும் கனடா நாட்டவருக்கும் உரிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்ச்சியாகும்.
இலிசபெத்தின் காலத்து வணிகர், இசுப்பெயினேடு போர் நடந்தபோதும், மத்தியதரைக் கடலைக்கடந்து செல்லத்தயங்கினரல்லர். இலவாந்துக் கம்பனி வெனிசு நாட்டோடும் கிரேக்க தீவுகளோடும், தொலைவிலிருந்த முகம்மதிய நாட்டோடும் வணிகஞ் செய்தது. துருக்கியரின் கடற்பகைவர் வெனிசியரும்
1576
ه 8--
1585
-

Page 269
58 இலவாந்தும் இந்தியாவும்
இசுப்பானியருமாயிருந்ததால், துருக்கியவரசனை சுலுத்தான் பரநெறியாள ரான ஆங்கிலேயரைக் கொன்சுதாந்தி நோப்பிளில் வரவேற்றன். ஆனல், அங்கு செல்லும்போது, அவர்கள் சிபுரோத்தர் தொடுவாய்க்கு அண்மையில் இசுப்பானிய துடுப்புடைக்கலகங்களையும், அல்சீரியக் கரைக்கப்பால் “ பாபரி யென்னும் இடத்துக்குரிய கடற் கொள்ளைக் காரரையும்’ எதிர்த்துத் தம் மைக் காக்கவேண்டியவராயினர். ஆங்கிலக் கடல் ஆதிக்கம் மத்தியதரைக் கடலில் இவ்வாருகத் தொடங்கலாயிற்று. ஆயினும், சுதுவாட்டர் காலத்தி லேயே வணிகர் கூட்டம் ஏலவே பல சண்டைகள் விளைத்தவிட்த்திற்கு ஆங்கிலக் கடற்படை செல்வதாயிற்று.
ஆமடா போர்க்கப்பற்கூட்டம் இங்கிலாந்தைத் தாக்கியபோது, துருக்கிய வணிகரிலொருவரான இரால்பு விச்சு என்பார் அலப்போவிலிருந்து புறப் பட்டு இந்தியாவுக்குத் தரை வழியாகப் போதற்காகத் தூரகிழக்கு நாடுகளிற் சென்றுகொண்டிருந்தார். எட்டாண்டுகளாக ஊரூராக அலைந்து திரிந்த பின்னர் அவர் பாரசீகக் குடா, இந்துத்தானம், மலாக்கா ஆகிய நாடுகளைப் பற்றிய செய்தியோடு தம்நாடு திரும்பினர். இச்செய்தி கிழக்கிந்தியக் கம் பனியை ஆதரித்தோர்க்குப் பேரூக்கமளித்தது. அவர்கள் 1600 ஆம் ஆண்டில் இலிசபெத்திடமிருந்து உரிமைப்பட்டயம் பெற்றர்கள். பின்னர், போத்துக்கேயரை எதிர்த்துத் தம்மைக் காத்தற்குரிய போர்க் கருவிகள் தாங்கியும், தம் நெடிய கலங்களிற் பொருள்களை ஏற்றிக் கொண்டும் நன் னம்பிக்கை முனைவழியாக இந்தியக் கடல்களில் வணிகஞ் செய்தற்குப் புறப்பட்டனர். முதன்முதல் நம் நாட்டவரை அவர் தம் பிற்சந்ததியார் ஆட்சி செய்வதற்காக விருந்த பெருந்தீபகற்பத்துக்கு ஈர்த்தது, வியாபார விற்பனையேயன்றி, நாடாளும் மோகமன்றென்க. அக்கிலியத்து என்பார் இன்னும் தொலைவிலிருந்த நாடுகளில் தம் நாட்டுப் பற்றின் காரணமாய் எலவே கண் வைத்திருந்தார். அவர் எழுதியது வருமாறு :- “ எம் நாட்டின் இயல்பான வணிகப் பொருளான கம்பளியாடையைப் பெரிதும் விற்பனை செய்யக் காண்பதே எம்முக்கிய விருப்ப்மாதலால் அதற்குரியதாய் நான் வாசித்தறிந்த எல்லாவற்றிலும், கவனித்த எல்லாவற்றிலும் மிகத் தகுந்த இடங்களாயிருப்பன யப்பானின் பற்பல தீவுகளும், சீனவின் வட பாகங்களும் அவற்றிற்கணித்தாயுள்ள தாத்தாரிய பகுதிகளுமாகும். ’
இலிசபெத்தின் காலத்திருந்த அஞ்சா நெஞ்சம் படைத்த வணிகர் திட்டமிட்ட வர்த்தக வழிகளும் தொலையிலிருந்த சந்தைகளுமான இவை யெல்லாம் சுதுவாட்டர் காலத்தில் பொதுவாகப் பெருமளவான வர்த்தகத் தையும் சிறப்பாக ஆடையேற்றுமதியையும் நடத்துதற்கேதுவாயமைந்தன. அரசியும் அவர் தம் அமைச்சரும் வணிக சமூகத்தினரையறிந்து அவர்க்கு உதவி செய்தனர். இலிசபெத்து, தம் சகோதரனையும் சகோதரியையும் போலல்லாது, இலண்டன் மாநகரமக்களின் விருப்பு வெறுப்போடு நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தார். இது தியூடர் காலத்து இங்கிலாந்தின்

நிதிநிலையும் அரசியற் பூட்கையும் 59
வெற்றிகரமான ஆட்சிக்கு இன்றியமையாததாயிருந்தது. அரசியும், செசி லும், வேத்தியல் நாணயச் செலாவணித்திட்டத்தை நிறுவிய சேர் தோமசு கிரெசாம் என்பாரின் தனிப்பட்ட நண்பராவர். அரசியார் நாட்டிலும் வெளி யிலும் அரசுக்காகக் கடன் திரட்டுதற்காக அவரைப் பயன் படுத்தினர் ; அன்றியும், நிதி விவகாரங்களைக் குறித்து அவர் சொன்னபடியுஞ் செய் தார். இவற்றில் முதன்மையானது நாணயத்தை மாற்றி அச்சிடுதலான கடினமான பிரச்சினையாகும். இதனை அரசி தம் ஆட்சித் தொடக்கத்தில் செய்து முடித்தார். இச் செயலால், தம் தந்தையார் பொறுப்பற்ற முறை யில் நாணய மதிப்பைக் குறைத்ததால் மக்களின் அன்ருட வாழ்க்கை யிலேற்பட்டபேரிடரினை நீக்கினள்.
நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து குறைந்ததால், இலிசபெத்தின் நிதித் தொல்லைகள் அதிகரித்தன. தியூடர் காலம் முழுதும், சிறப்பாய் எனறி நாணயச் செலாவணியிற்றலையிட்ட பின்னர், பொருள்களின் விலை எறிக்கொண்டே போனது. மேலும், என்றியின் மகளார் அதனைத் தடுத் தற்கு ஒரு வழிகண்ட அந்நேரத்திற்ருனே, இசுப்பானியரதும் அமெரிக்கர தும் சுரங்கங்களிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த பொன்னும் வெள்ளியும் மறுபடியும் விலையேற்றத்துக்குக் காரணமாயின. வணிகர்க்கு இது தீமை. யற்றதாய் இருந்திருக்கலாம் ; ஆனல், கூலித்தொழிலாளருக்கும், அரசிக் கும் தீமை விளைத்ததாகும். ஏனெனில், அரசியின் வருமானத்திற் பல கூறுகள் நிலைப்படுத்தப்பட்டனவாயிருந்ததாலென்க. போர்க்காலத்திலுங் கூட, அரச வருவாயில் காற் பங்கு மட்டும், பாராளுமன்றத்தினல் விதிக்கப் பட்ட மேலதிக வரிமுறையிலிருந்து பெறப்பட்டது. பாராளுமன்றமளித்த “ உதவிப்பணம்’ நாட்டின் வளர்ச்சியுறுஞ் செல்வத்தினும் குறைந்த அளவுள்ளதாயிருக்குமாறு தணிக்கப்பட்டது. பாராளுமன்றம், முதலாம் சாள்சுக்கு எதிரான தன் போருக்கு வேண்டிய வலிமைக்காகிய சாதனங் களைத் தேடும்வரையும் குடிமக்களிடமிருந்து இறை அறவிடும் முறையை உண்மையில், பயன்படுத்தவில்லை.
வரலாற்றளர் சிலர், பேரரசுக்குரிய அல்லது புரட்டசுத்தாந்தத்துக்குரிய உற்சாகத்தினுல், அரசியை அவர் கையாண்ட சிக்கனத்துக்காகக் குறைகூறி யுளர். மேலும், கூடிய தொகையினைக் கொண்ட மக்களை நெதலாந்துக்கும், பிரான்சுக்கும், அயலாந்துக்கும் அரசி என் அனுப்பவில்லையென்றும், தம தாட்சியின் முற்பகுதியில் போர் தொடங்குதற்குப் பிலிப்பினை அறை கூவு தற்குப் பதிலாக என் நெடுங்காலமாகப் பொய் சொல்லியும் மழுப்பிப் பேசியும் வந்தாரென்றும், ஆமடா எனும் போர்க் கப்பற் கூட்டத்தை வெற்றி கொண்டபின் என் இசுப்பானியக் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றி இசுப்பானிய ஆதிக்கத்தைத் தடுக்கவில்லையென்றும் அவ்வரலாற்ருளர் வியப்படைந்துமுளர். அரசுக்குரிய கணக்குக்கள் இதற்குப் போதுமான விடையளிக்கின்றன. போர்க் கப்பற் கூட்டத்தை வென்ற அடுத்தவாண்டில் அரசியின் வருமானம் முழுதும் 4,00,000 பவுண்களிலும் குறைந்ததாகும்.

Page 270
520 பிலிப்பும் இலிசபெத்தும்
அதில் 88,362 பவுண் பாராளுமன்றம் விதித்த வரிப்பணத்தால் வந்த தாகும். போரினதும் தம்மாட்சியினதும் கடைசி ஐந்தாண்டுகளில் அரசிக்கு ஆண்டுதோறும் கிடைத்த சராசரி வருமானம் ஐந்து இலட்சத்துக்கும் குறை வாகவேயிருந்தது. பாராளுமன்றமளித்த “ உதவிப்பணமும் ’ முழுத் தொகையிலும் இவ்வாருன சிறிய பகுதியைக் கொண்டதாகவேயிருந்தது. இலிசபெத்தின் சிக்கனத்தைக் குறித்து வரலாற்று மன்றத்தில் எவரேனும் யாதுங் கூறவேண்டின் அதற்குப் பாராளுமன்ற உறுப்பினரும், வரியிறுப் போரும் அரசியாரையும் அவர்தம் அமைச்சரையும் போன்று பொறுப் புடையவராயிருந்தாரென்றே கூறல்வேண்டும். அவர் தமது குடிகள் அளித்த எச்சிறிய தொகைப் பணத்தினையும் அவர்களின் பாதுகாப்புக்கும் நன்மைக்குமாகப் புத்தியாய்ச் செலவு செய்தார். வெளிநாடுகளோடு புரட் டசுத்தாந்தத்துக்காக விரைந்து போர் செய்ய மறுத்ததால், சீர்திருத்தத் தைக் காக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலநாட்டின் தரைசம் பந்தமான விசாலிப்பை விரும்பாத “சிறிய ஆங்கில நாட்டவராய்” இருந்த தனலும், கருமங்கள் சிறிதளவில் நடைபெற்றுவந்த காலத்தில் ஒரு பொருளியலறிஞராயுமிருந்தாலும், தமக்குப் பின் ஆட்சி செய்தவர் கட்டி யெழுப்பக்கூடியதாயிருந்த ஆங்கிலப் பேரரசின் கடலாதிக்கமென்னும் கட் டத்துக்கு அவர் அடியிட முடிந்தது.
ஆமடாப் போர்க்கப்பற் கூட்டம் இங்கிலாந்தில் படையெடுக்கப் பயணஞ் செய்யும்வரை, இங்கிலாந்தும் இசுப்பெயினும் தொடங்கியமுறையான போர் தள்ளி வைக்கப்பட்டது. ஏனெனில், பிலிப்பு இலிசபெத்து ஆகிய இருவரும் இயல்பாகவே விழிப்பும் அமைதியுடையவரானமையாலென்க. ஆயினும், இருவரும் போரிலேயே ஈற்றில் முடிவுறும் பூட்கையுடையவராயிருந்தனர். போப்பாண்டவர் இசுப்பெயினுக்கும் போத்துக்கலுக்கும் பங்கிட்டுக்கொடுத்த ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்காக் கண்டங்களில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட கரைகளை அந்நியர் எவரும் அணுகாமற் றடுப்பதைப் பிலிப்பு தனதுரி மையாக்கிக் கொண்டான். தனதாட்சிக்குட்பட்ட நாடுகளிலிருந்த ஆங்கில வணிகரையும் மாலுமிகளையும் மதவிசாரணை மன்றத்திற்கு ஒப்படைப்பதை யும் தனதுரிமையாக்கிக்கொண்டான். இலிசபெத்து அரசியின் இறப்பை எதிர்பார்த்து நெடுங்காலங் காத்திருக்கவும் அந்நிகழ்ச்சியைப் பாசாங்கான முறையில் விரைவுபடுத்தவும் ஆயத்தமாயிருந்தும், உரோமிலிருந்து இங்கி லாந்து நிலையாய்ப் பிரிந்திருப்பதை அவஞற் பொறுக்கமுடியவில்லை. இலிச பெத்தரசி அரியணையேறிய பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் பிலிப்பு அவர்தம் கொலையைக் குறித்தும் அவருக்கு மாறய்ப் படையெடுத்தலைத் குறித்தும் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான். அக்காலம் முதல் பதவியிலிருந்து அரசியை நீக்குதற்குரிய கட்டளையை போப்பாண்டவர் பிறப் பிக்க, அதனை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஆயினும், பிலிப்புக்கு இயற்கையாக அமைந்திருந்த மனக்குழப்பம் அவனைப் போர் தொடுக்கவிடாது நீண்டகாலமாகத் தடுத்தது. அன்றியும் ஒக்கின்சு, திரேக்கு

பிலிப்பும் இலிசபெத்தும் 521
அரசியாகியோர் விளைத்த நிந்தனை, குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக் கொள்ளவும் அது அவனை வற்புறுத்தியது. மெளனியான உவில்லியத்தின் ஆட்சியில் ஒல்லாந்தரின் எதிர்ப்பு ஒடுங்கிவிடுமென்றும், அப்பொழுது இலிச பெத்தரசி அடங்கிவிடுவாரென்றும், அன்றேல் இங்கிலாந்தை எளிதாகக் கைப்பற்றலாமென்றும், பிலிப்பு ஒருவேளை ஆண்டுதோறும் எதிர்பார் திருந்தான் எனலாம். AF
இக்கால தாமதம் தமக்கு வாய்ப்பானதென்பதை அரசி யுணர்ந்தார் ; எனெனில், ஆண்டுதோறும் இங்கிலாந்து மென்மேலும் மிகுந்த உறுதியை யும் ஒற்றுமையையும் பெறுவதாயிற்று. ஆனல், பிலிப்பு போர் செய்ய விருப்பமில்லாததையறிந்து அத்தருணத்தை அவர் சிறிது துணிவோடு பயன்படுத்திக் கொண்டார். ஒர் அமயத்தில், நெதலாந்திலிருந்த இசுப் பானியப் படைகளுக்கு வேதனங் கொண்டு சென்ற கலங்கள் ஆங்கிலத்துறை முகங்களிற்றங்கியபோது அவர் அவ்வேதனத்தைக் கைப்பற்றினர். மூன் ருண்டுகளுக்குப்பின் ஒல்லாந்தக் குடியரசை நிறுவிய “கடலில் இரப்போர்” பிறிலைக் கைப்பற்றிய போது அவர் அதைக் கண்டும் காணதவர் போலிருந் தார். மேலும், புரட்சிக்காரர்க்கு உதவிபுரியுமாறு ஆங்கிலக் கடலோடிக ளுக்கு அனுமதியுங் கொடுத்தார். அக்காலத்தில் ஒல்லாந்தரின் உண்மை யான எதிர்ப்பு பரந்த நிலத்தில் நிகழ்ந்ததன்று; அது கடலிலும், ஆளம், இலைடின் போன்ற மதில் சூழ்ந்த பட்டினங்களை வீரத்தோடு காத்தலிலும் வெளிப்பட்டது.
அனைத்துக்கும் மேலாக இசுப்பானிய கலங்களிலும் குடியேற்ற நாடுகளி
லும் ஒக்கின்சும் திரேக்கும் நடாத்திய கொள்ளைகளை இலிசபெத்தரசி ஊக்கப்படுத்தினர். இதன்மூலம் வெளிப்படையான சமாதானமும் தனிப் பட்ட போரும் நிகழ்ந்த வாண்டுகளில் இங்கிலாந்தின் போர்த்திறன் பயிற்சி பெறுவதாயிற்று. ஒழுங்கற்ற இப்போர்க்குரிய செயல்களுக்கு முக்கிய அரங்க மாகவிருந்தது இசுப்பானிய அமெரிக்காவாகும். அதன் துறைமுகங்கள் பிற நாட்டாரது வணிகத்துக்கிடங் கொடாது மூடப்பட்டன; ஆனல், அங்கு வாழ் மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்பதற்கு இசுப்பானிய வணிகர் சிறிதும் ஊக்கமில்லாதிருந்த காரணத்தால், அவற்றைப் பிறநாட் டாரிடம் கட்டாயம் வாங்கவேண்டுமென்று போலிக் காரணங்காட்டி அவை களை வாங்குதற்கு அம்மக்கள் விருப்பங்கொண்டிருந்தனர். குற்றமற்ற வணிகம் நடைபெற்றதுடன், ஒக்கின்சு தாம் ஆபிரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு சென்ற காப்பிரிகளை அவர்களுக்கு விற்பாராயினர். ஐரோப்பாவில் நடைபெற்று வந்த அடிமை வணிகத்தை, அதற்கு இலக்கான அடிமை கள் சார்பாக நோக்கின் பழித்துரைக்கும் எவரையும் காண்டலருமையா யிருக்கும். இருநூறு ஆண்டுகளாக ஊக்கம் நிறைந்த கடல் வாழ்
ஆங்கிலேயர்க்குப் பெரும்பாலும் நேர்மையற்றவராகவிருந்த மொற்றிலியென்பார் பிறிலி லுண்டான நிகழ்ச்சியில் எலிசபெத்தரசி பங்குபற்றியதைத் தவருக உணர்ந்து கொண்டார்.
1569.
1572.
1573
1547.

Page 271
522 ஒக்கின்சும் நிரேக்கும்
இனத்தினராயிருந்த ஆங்கிலேயர், இரு கண்டங்களுக்குமுரிய இப்பழி கேட்டை ஈற்றில் எவ்வளவு முதன்மையோடு நீக்கினரோ அவ்வளவு முதன் மையோடு அதனே வளர்ச்சியுறவுஞ் செய்திருந்தனர்.
திரேக்குக்கு அடிமை விண்ணிகத்தில் அவ்வளவு விருப்பமிருக்கவில்வே ஆணுல், அவர் அமெரிக்காவின் கரையோரத்திலிருந்த இசுப்பானிய கலங் களேயும், பட்டினங்களேயும், செல்வம் நிறைந்த வணிகச் சாத்தினரையும்
5. Kli, ilki 14
சாரிய ந்ெதகதக2 Վjր
|
‛ “፳ 则
| 。
覽
படம் XXII இசுப்பானிய இடச்சு நேதராந்து.
தாக்கிக் கொள்ளேயடித்தனர். சர்வதேசச் சட்டம் வளர்ச்சியுறுதற்கு முந்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளெல்லாவற்றிலுமிருந்த கடலோடிகளுக்கிருந்த வழக்கத்தின்படியே அவரின் செயல்முறையும் இருந்தது. ஆணுல், இலிச பெத்துக்கு அறிவுரை கூறினூேர் சிலர் அறமும் அறிவுஞ் சார்ந்த நோக்கங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செசிலும் உவால்சிங்கமும் [ዃ፰8
குறித்து அதஜனக் கண்டித்தனர். அவருள் செசில் என்பார் தாமே ஆங்கி லக் கால்வாயில் இசுப்பானிய செல்வத்தைக் கைப்பற்றியபோதிலும் அா சிக்கு அறிவுரை கூறியவருள் முக்கியமானவராவர்.
ஒருவகையில் இங்கிலாந்தே வலுவில் தாக்குதலேத் தொடங்கியதென் லாம். ஆஒவ், இங்கிலாந்து வவியத் தலேயிட்டிராவிடின் ஐரோப்பா நீங்கலாக மற்றைய ஒவ்வொரு கண்டத்துடன் வணிகஞ் செய்வதிலிருந்தும் நீக்கப்படுதலே ஏற்கவும், கடலாதிக்கம், குடியேற்றங்கள் என்பன பற்றிய பேரவாலினேக் கைவிடவும், ஒல்லாந்தின் எதிர்ப்பு ஒடுங்கியவுடன் இசுப் பெயினும் உரோமும் தன்னே மறுபடியும் கைப்பற்றுதற்குத் தபேணியவும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும். இசுப்பானிய நாடுகளில் அமைதியான ஆங் இன மக்கள் சிறைப்படுதற்கோ, கொலேப்படுதற்கோ எதுவாயுள்ள முற்றிலும் கொடுமை நிறைந்த அக்கான உலகில், கத்தோலிக்கக் கோட்பாட்டில் வழுவிய வரைக் குற்றவிசாானே செய்யும் உயர் பழக்கு மன்றத்தைக் கொண்டதும் சென்-டதோலோமீயூவின் கோஃக்குக் காரணமானதும் உலகில், நெத லாந்தில் அல்வாவின் கொடுஞ்செயல்களேக்கண்ட உலகில்-கததோவிக்க ஐரோப்பா நிறைவேற்றுவதற்காக ஆயத்தமாயிருந்த இபிசபெத்தின் பதவி நீக்கத்தைப் போப்பாண்டவர் நடத்துவிக்க இருந்த அவ்வுலகிலே, சர்வ தேசத்துக்குரிய சிறந்த நல்லொழுக்கத்துக்குச் சிறிதளவேனுமிடமிருக்க லிஸ்லேயென்சு,
திரேக்கும் அவர்தம் தோழரும் ஆற்றிவந்த நியாயமற்ற செயல்களே அரசி அளக்கப்படுத்துவதனும் மட்டுமே, மெதுவாக மூடிக்கொண்டுவரும் இசுப்பானியர் ஜையினின்றும் அரசு காக்கப்படுமென்று அரசியை வற்புறுதி தியவர் சேர் பிரான்சிசு உவால்சிங்கமாவர். போதுமான அளவு வருமான மில்லாதிருந்த அரசி கொள்ளேக்காரரின் கொள்gளயில் ஒரு பங்கைப் பெறiா மென்னும் எண்னமும் அத்தகைய செயலுக்குச் சாதகமா:tந்தது. உவர்சிங்கத்தின் செல்வாக்கு அரசனயில் வளர்ச்சியுறுவதாயிற்று. அது செசிலின் செல்வாக்கிற்குப் பகையாகவும் போட்டியாயுமிருந்த இவிசித் தரின் செல்வாக்கைப் போன்றதன்று ; ஆனுஸ், அது மூத்தோனுெருவனே ஆதரிக்கும் இளேயானுெருவனின் செய்வாக்காகும். ஆயினும், மூக்கோ ஞெருவன் காணுத சிலவற்றைக் காணும் இளேயானின் செல்வாக்கு அது. உவால்சிங்நும் பெரு மதிப்புடையவராயிருந்தார். அவர் நிறுவிய ஒற்றர் கட்டம் பிலிப்பும் இயேசு சபையாரும் தூண்டிலிட்ட கொலேகாபரிலிருந்து அரசியின் உயிரைப் பலமுறை காப்பாற்றியது. இவ்வாறன பாதுகாப் பில்லாததினுலேயே மெளனியான உவில்லியத்தை இயேசு சபையார் கொன்றனர். ஐரோப்பாவில் அப்பொழுது கொந்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்கத்துக்கு ஆதரவான இயக்கத்தை எதிர்த்து நின்ற பியூரித்தன்
டிவில்லியம் சேசில் 1871-ஆம் ஆண்டில் பேணிப்பிரபுவாஜா ஆஜஸ், தெளிவு பற்றி நான் அவரைச் செநிவேன்றே இனலும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
58.

Page 272
1577.
520.
158579.
524 செசிலும் உவாசிங்ங்மும்
கொள்கையோரின் சமயப்பேரார்வத்தினல் தூண்டப்பட்ட உவால்சிங்ங்ற், பெரிதும் விழிப்புடனிருந்த புரட்டசுத்தாந்தத் தேசீயவாதியான செசிலுட னும் “ஆங்கிலப்பண்பு மாத்திரம்” உடைய அரசியோடும் மாறுபட்டுப் பொறுமையில்லாதவராயிருந்தார். எவ்வளவு செலவு வந்தாலும், எவ்வித இடர் வந்தாலும், ஒன்றையுங் கவனியாது அவர் செயலில் இறங்குவதையே வேண்டிநின்றர். உவால்சிங்கமின் ஆலோசனையை முற்றக இலிசபெத்து எற்று நடந்திருந்தால், அவ்வரசியார் வீழ்ச்சியுற்றிருப்பார். அவ்வறிவுரை களை முற்றக ஒதுக்கியிருந்தாலும் அதே மாதிரியே வீழ்ச்சியுற்றுமிருப்பர். பொதுப்படக் கூறின், அரசி தம் அமைச்சர் இருவரினதும் ஆலோசனை களில் எது சிறந்ததோ அதைக் கைக்கொண்டார் எனலாம்.
திரேக்கின் உலகப்பயணத்தின்போது, இக்கொள்கை வேற்றுமை காரண மாக நெருக்கடி ஏற்பட்டது. செசில் அப்பயணத்தை மறுத்தனர்; ஆனல், வரலாற்றில் மிகப் பெரிதான அக்கடற்கொள்ளைப் பயணத்தில் பங்குபெறு மாறு இலிசபெத்தை இரகசியமாக உவால்சிங்ங்ற் தூண்டினர். “திரேக்க வர்களே ! நானடைந்த பலவகைப் பட்ட துன்பங்களுக்கும் இசுப்பானிய அரசன்மேல் விருப்பொடு பழிவாங்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்திருக் கிறதே!” என்று அரசி கழறினர். அவ்வாறு திரேக்கிடம் உரைத்ததின் மூல்ம் சரியான ஆளுக்கே அரசி முறையிட்டாரென்க.
மகலன் அமெரிக்காவின் தெற்கெல்லையைச் சுற்றி ஒருவழியைக் கண்ட பின், அக்காலத்திருந்த சிறு கலங்களுக்கு அவ்வழி கொந்தளிப்பானது, அபாயமானதென்று பெரும்பாலும் விலக்கப்பட்டது. பசிபிக்குக் கரையி லிருந்த இசுப்பானியக் கலங்கள் அவற்றிற்குத் தகுந்தவிடத்திற் செய்யப் பட்டன. மேலும், அத்திலாந்திக்கு நாடுகளோடு செய்த போக்குவரவு தரை மார்க்கமாகப் பனமாப்பூசந்தி வழியாக நடைபெற்றது. ஆகவே, திரேக்கு தெற்கிலிருந்து சில்லிக் கரையில் தோன்றியபோது, அவரின் வருகை, உலக கப்பற் போக்குவரவுக்கு மூடப்பட்ட உள்நாட்டு எரியெனப் பசிபிக்குக் கடலைக் கருதிப் பழகியவரும், பாதுகாப்புடையவரும் சிறு போர்க்கருவிகளு டையவருமான இசுப்பானியருக்குத் தெய்விகத்தண்டனை போன்றிருந் தது. “ கோலிடின் ஐந்து ’ என்ற திரேக்கின் கலகத்தில் நூற்றுக்குக் குறைந்த தொகையினையுடைய வீரரேயிருந்தனர். புயலிலடிபட்ட திரேக் கின் போர்க்கலங்களில் இக்கலமொன்றே ஒணையும் மகலன் நீரிணைப்பையும் நேரே தாண்டிச் சென்றதாகும். இவ்வாறன நிலையிலும், நீண்ட கரை யோரத்தில் காணப்பட்ட அளவுகடந்த செல்வத்தைக் கொள்ளையடித்துத் தங்கலத்துக்கு அடிப்பாரமாக அவ்விலையுயர்ந்த உலோகங்களை இட்டுச் செல்லல் திரேக்குக்கு மிக இலகுவான செயலாயிற்று. பின்னர் அவர் பசிபிக்குக் கடலைக் கடந்து நன்னம்பிக்கை முனைவழியாகத் தம்நாடு நோக்கித் திரும்பினர். இச்செயல்களுக்கு இசுப்பெயினிலும் இங்கிலாந்தி லும் அத்துணை முதன்மை கொடுக்கப்பட்டமையாலும், இசுப்பானிய துரத

திரேக்கின் பயணம் 525
மைச்சர் எழுப்பிய கூக்குரல் அத்துணை உரப்பாயிருந்தமையாலும், திரேக்கு இடையூறின்றிச் செல்வத்தோடு வீடு திரும்பத் தவறியிருந்திருந்தால், செசிலின் வெருவந்த பூட்கையே அரசவையில் வெற்றியடைந்திருக்கும் ; அன்றியும் உலகப் போட்டியில் இசுப்பெயினுக்கும் உரோமுக்குமே வெற்றி கிடைத்திருக்கும். அவர்கள் துணிந்து ஏற்ற அச்செயலில் தவறுவார்களே யானல் அதைப்போன்ற தொன்று ஒருபொழுதும் மேற்கொள்ளப்படமாட்டா தென்று திரேக்கு தந்தோழர்க்குக் கூறியிருந்தார். “கோலிடின் ஐந்து” எனும் கலம், கண்டுபிடிக்கப்படாத மொலூக்காக் கடலின் மணற்றிடரில் அடிநிலந் தட்டிப்பின்னர் இருபது மணித்தியாலம்வரை அழிந்துபோகும் நிலையிலிருந்து, ஈற்றில் ஆழ்ந்த நீரில் இடையூறின்றி நகர்ந்து சென்றது. அவ்வாங்கிலக்கலமானது அயனமண்டலமணற்றிடரோடும், ஒரு சிறு ஊதை யினேடும் கொண்ட தொடர்பில் இங்கிலாந்தின் எதிர்காலப் புகழ் தங்கி யிருந்ததெனலாம்.
எறத்தாழ மூன்ருண்டுவரை ஐரோப்பாவிலில்லாதிருந்த திரேக்கு பின்
பிளிமது நீரிணைக்குள் நுழைந்தபோது, அரசி சுகமாயிருக்கின்றராவென்
பதே அவர் அவ்வழியாகச் சென்ற மீனவர் சிலரைக் கேட்ட முதற்கேள்வி யாகும். ஆம், அரசிக்குப் பகைவர் அனேகரிருந்தும் அவர் இன்னும் உயிருடனிருந்தார்; அன்றியும், அடுத்தவாண்டில் இடற்றுபோட்டிலிருந்த கலத்துக்குத் தாமே வந்து, அக்கலத்தில் திரேக்குக்கு வீரப்பட்டமளித்தற்கு வேண்டிய சுகத்தோடுமிருந்தார். ஆங்கிலவரசரால் எப்போதாயினும் அளிக் கப்பட்ட வீரப்பட்டங்களுள் அது மிக முதன்மையுடையதாய்க் கருதப்பட்டது. எனெனில் அது இசுப்பெயினை நேரே அறைகூவி அழைத்ததுடன், ஆங்கி லேயர் தம் வலிமைக்குக் கடலை எதிர்பார்க்கவேண்டுமென்று அவர்களுக்கு முறையீடு செய்ததனுலும் மென்க. அரசியாரின் நம்பிக்கைக்குரிய செசில் எற்றுக்கொள்ள மறுத்த இச்செயலை நோக்குமிடத்து, இலிசபெத்து எதை யும் துணிவோடு ஒருபொழுதும் செய்யமாட்டாரேன்று யார்தான் சொல்ல முடியும் ? அவர்தம் தீர்மானங்கள் சிலவே ; அவற்றையெண்ணியும் விட லாம். ஆனல், அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய காலவூழியைத் தொடக் கியனவாகும்.
பிரான்சிசு திரேக்குக்கு வீரப்பட்டம் அளிக்கப்பட்டபின், மந்தகுணத்தின ஞன பிலிப்பின் போக்கையொத்து வெளிப்படையான போரை நோக்கிய நிகழ்ச்சிகள் எழலாயின.
கொத்துலாந்து அரசியான மேரியைக் கொலைசெய்த செயல் மக்கள் துணிபாற்றலால் எழுந்ததேயன்றி அரசவிருப்பினல் எழுந்ததன்று. இலிச பெத்து நீண்ட காலமாக மக்களின் அக்கூக்குரலைத் தடுத்துவந்தார். ஆனல், இலிசபெத்தரசியைக் கொலை செய்வதற்காகப் பாபிங்குதன் செய்த சூழ்ச்சியை உவால்சிங்கம் கண்டுபிடித்தபோது, மேரி அத்திட்டத்தை யறிந்திருந்தாரென்று வெளிப்படுத்தப்பட்டதனல், மக்கள் மேரியைக்கொல்ல வேண்டுமென்று அரசியைக் கட்டாயப் படுத்தினர். மேரி இன்னும் உயிருட
1580.

Page 273
526 மேரி சிரச்சேதம் செய்யப்படல். ஆமடா வருதல்
னிருப்பது, உடற்காய்ச்சலைப்போல் மக்களுக்கு மனக் கொதிப்பையுண்டாக் கியது. இலிசபெத்துக்குப் பின் மேரி உயிரோடிருந்தால் அவர் அரசியாக, சீர்திருத்தங்காரணமாய் எழுந்த முயற்சிகள் யாவும் பாழாக்கப்படும் ; அல்லது தேசீய உணர்ச்சியுடைய மக்களுக்கும், இசுப்பெயினின் முழு ஆதரவைப் பெற்றவளும் சட்டப்படியாக உரிமை பெற்றவளுமாகிய மேரிக்கு மிடையே உள்நாட்டுச் சண்டைகளுள் இதுகாறும் எற்படாத மிகப்பயங்கர மான ஒரு சண்டை ஏற்படக்கூடும். இவ்வாறு எதிர்ப்பார்த்த நிகழ்ச்சி மிக அண்மையிலுள்ளதாயும், பயங்கரமுடையதாயுமிருந்ததனல் துக்கம் நிறைந்த இப்பெண்ணுக்கு இரக்கங் காட்டுதற்கு மனிதர்க்கு வாய்ப்புக் கொடுக்க இயலாதிருந்தது. கடைசியாக, பாராளுமன்றத்தாரும், மக்களும், அமைச்சரும் மேரியின் மரணதண்டனைக்கு உத்தரவு அளிக்கும்படி இலிச பெத்தை வற்புறுத்தினர். அரசி திரேக்குக்கு வீரப்பட்டமளித்தமை எவ் வாறு மேதக்கதொன்ருயிருந்ததோ அவ்வாறே அவர் தம் செயலாளரான இடேவிசனைத் தண்டிப்பதின் மூலம் மேரியின் மரணத்துக்கு அதிகாரச் சீட்டளிக்கும் பொறுப்பைத் தவிர்க்க முயன்றமை இழிதக்கதொன்ற யிருந்தது.
மேரியைச் சிரச்சேதஞ் செய்தமையால், இசுப்பெயின் இங்கிலாந்தைத் தாக்குமென்பது உறுதியாயிற்று ; ஆனல், அது அத்தாக்குதலை எதிர்க்க இங்கிலாந்தை ஒன்று சேர்த்தது. சட்டப்படியான அரசி மேரியே என மதித்து அவர்க்காக வாள் எந்தியிருக்கக் கூடிய மிதவாதிகளான கத்தோ லிக்கர், இசுப்பானியநாட்டு பிலிப்பு ஆங்கிலவரசு தனக்கென்று உரிமை கொண்டாடியபோது, அவனை எதிர்த்து இலிசபெத்தைச் சார்ந்து நின்றனர். இலிசபெத்தும் அம்மிதவாதிகளான கத்தோலிக்கரை நம்பிக்கையிழந்த நிலைக்கு விரட்டினரில்லை. கோவிலுக்குப் போகாத குற்றத்திற்காக விதித்த தண்டப்பணத்தை ஒழுங்கீனமாக அறவிட்டதைத்தவிர கத்தோ லிக்கப் பொதுமக்களை அவர் தம் கொள்கைக்காக அரசியார் துன்புறுத்திய தில்லை.1 அவரின் பாராளுமன்றத்தினர், புரட்டசுத்தாந்தத்திற்கு மிக அப்பாற்பட்ட வழிபாட்டு நூல் வேண்டுமென்றே, போப்பாண்டவர்க்கு இணங்காதோரை மிகக் கொடிய முறையில் துன்புறுத்தவேண்டுமென்றே கோரியதுபோல் நடந்திருந்தால் இசுப்பானிய தாக்குதல் வந்த காலத்து, உள் நாட்டுக் கலகமுண்டாயிருக்கும். இந்நிலையால், ஒன்ருகச் சேர்ந்த மக்கள் “ ஆமடா ’ போர்க்கப்பற் கூட்டத்தை எதிர்த்தனர். பியூரித்தானி யருக்குத் திருச்சபையிலும் அரசிலும் இலிசபெத்து என்ன இடர் விளைத்த போதிலும், அவர்கள் அரசியின் தலைசிறந்தவருளேதாமும் ஒருவராக நின்று அவருக்காகப் போர் புரிந்திருப்பர்.
கோவிலுக்குப் போகாததற்கு 1559 ஆம் ஆண்டில் பன்னிரண்டு பணத்தண்டம் பெரும்
பாலும் அறவிடப்பட்டது; ஆனல், 1581 ஆம் ஆண்டின் பின் எற்பட்ட நியதிச் சட்டங்களின்படி
மாதமொன்றுக்கு 20 பவுண்கள் எனத் தண்டப்பணம் அறவிடப்பட்டமை பொருளிலா உரை போலாயிற்று.

ஆமடாக் கப்பற் படை 527
வெல்ல முடியாத ஆமடாப் போர்க்கப்பற் கூட்டத்தைச் செலுத்திவந்த மாலுமிகள் மத்தியதரைக் கடலில் வாழ்கின்ற கடலோடும் மக்களி லிருந்து எடுக்கப்பட்டவராவர். அவர்களிற் பலர் அத்திலாந்திக்குக் கடலிற்கலங்களை யோட்டுவதையறியாதிருந்தனர். மேலும், இசுப்பெயினி விருந்து இங்கிலாந்துக்குக் கடற்பயணஞ் செய்த போர் வீரரின் கையாள்க ளாகவே இருந்தனர். ஆனல் ஆமடாக் கப்பற் கூட்டத்தை எதிர்த்த கப்பற் படையோ மிக வேறுபட்டதாயிருந்தது.அக்காலத்தில் அதி உன்னத கடற்படைத்தலைவன் ஒரு பெரும் விழுமியோனுயிருத்தல் வேண்டும். ஆனல், எவிங்காமின் பிரபுவான ஒளவட்டு என்பார், நோபோக்குப் பிரபுவுக்கு உறவினராயிருந்தும் புரட்டசுத்தாந்தராகவிருந்தவராவர். அவர் தம் தந்தையைப் போலச் சிறந்தவொரு மாலுமியாவர். அன்றியும் தாம் நம்பியிருக்க வேண்டிய பெருங் கடலோடிகளின் தொழிலின் அருமை அவர் நன்கு அறிவர். ஒக்கின்சையும் புருேபிசரையும் போல் அவர் திரேக்குவை உலகத்தில் மிகத் தலைசிறந்த கடற்படைவீரனுகப் பொருமையின்றி மதித்தார். இத்திரேக்குவே ஓராண்டின்முன் “ இசுப் பானிய அரசனின் தாடியைப் ” பொசுக்கினவராவர். அவரே கேடிசுத் துறையிலேயே போருக்குரிய மிகச்சிறந்த துடுப்புடைக் கலங்களைத்தங் கலத்தின் பீரங்கிகளினுற் சுட்டழித்தனர்.
ஒளவட்டினதும் சிடோனியாவினதும் தலைமையிலே போட்டியிட்ட கப்பற் கூட்டங்கள் சமனண்ணிக்கையுடையனவாகும். ஆங்கிலேயர் தம் அரச கடற்படையையும் போர்க்கருவிகள் தாங்கியிருந்த வணிக கடற்படையை யும் ஒன்று சேர்த்துக் கொண்டனர். அதனல், அவர்கள் பீரங்கித் தொகை யில் மிக்குடையராயும், கப்பலோட்டுந் தொழிலிலும் துப்பாக்கிப்பிரயோகத் திலும் முழுத் திறமையுடையராயுமிருந்தனர். இசுப்பானியர் தஞ்சிறுகலங் களின் பாரஅளவிலும், போர் வீரர் எண்ணிக்னிக அளவிலும் மாத்திரமே ஆங்கிலேயரினும் உயர்ந்த தகுதியுடையராயிருந்தனர். கலத்தின் மேற் றட்டில் துப்பாக்கி வீரர் முன்னும், ஈட்டிக்காரர் பின்னுமாக, அவ்வீரர் அணிவகுத்து வீணே காத்து நின்றனர். ஏனெனில் பண்டைய கடற் போர் முறைப்படி ஆங்கிலேயர் தம்மை நெருங்கி வருவார்களென்று இசுப் பானியர் எண்ணியிருந்தனரென்க. ஆனல், பீரங்கிப் படை காலாட் படை ஆகிய இருபடைகளுக்குமிடையே பீரங்கிப்படை தேர்ந்தெடுத்த பந்தயத்திடலில் சண்டை நடக்கவேண்டுமென்று ஆங்கிலேயர் பெரிதும் விரும்பியிருந்தனர். அதனுல் இசுப்பானியர் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியபொழுது கொடூரமான தண்டனையடைந்ததில் ஆச்சரியஞ் சிறிது மில்லை. கலேயின் வீதிகளையடைந்தபொழுதே, மனமுடைந்திருந்த இசுப் பானியர், திரேக்கினது தீக்கலங்களின் எதிர்ப்பின் முன் தங்கலங்களைத் தவருகச் செலுத்தினர் ; மேலும், நெதலாந்திற் காத்து நின்ற பாமாவின் சேனையைத் தம் கப்பலில் ஏற்றச் சிறிதும் முயன்றிலர். கிரேவிலையின்சுக்கு அப்பாலேற்பட்ட சண்டையில் அடைந்த தோல்விக்குப் பின், காற்றின்
19--Ꭱ Ꮾ84Ꮞ Ꭴ121Ꮾ2)
XXI gíð தேசப் படத்தைப் பார்க்க.

Page 274
528 ஆமடாக் கப்பற் படை
மாற்றத்தால் ஒல்லாந்தின் மணற் குன்றுகளில் மோதுண்டு முழுதும் அழியாது தப்பியதற்கு நன்றி கூறினர் , அன்றியும் புயலால் அடிபட முன்னர் உணவுப்பொருள்களும், நீருமின்றி, கலங்களைப் பழுதுபார்த்தற்கு
1588 வசதியுமின்றி, கொத்துலாந்து, அயலாந்துக்களின் கற்பாறைகளைக் கொண்ட யூன் கரைகளைச் சுற்றிச் செல்வராயினர். ஆங்கிலக் கால்வாயில் பீரங்கியாலுண்
29 ஆம்
தேதி.
டான அழிவுகளை, வடமேற்கிலுள்ள காற்றுக்கள், அலைகள், கற்பார்கள் ஆகியன பூரணப்படுத்திவிட்டன. உயரமான அக்கலங்கள் யாவும் ஒரு முறைக்கு இரண்டிரண்டாகவும், ஆருருகவும் நீண்ட காற்றுக்கெதிர்க் கரையில் குவிந்து நின்றன. அங்கே எந்த நாகரிக மக்கள் செய்த சண்டை யினல், உடைந்த கப்பல்களைக் கொள்ளையடிப்பவர் மிகவிரும்பும் பொருள் கள் யாவும் தம்கரையில் வீசப்பட்டுள்ளனவென்பதை அறியாதவரும், எள்ளளவும் அறியவிரும்பாதவருமான கெலித்தியப் பழங்குடிமக்கள், ஐரோப்பாவின் அரியபோர் வீரரும் மிகப்பெருமை வாய்ந்த விழுமியோர் களும் ஆயிரக் கணக்கானேரை, அவர்தம் உடைகளைக் களைந்து கொலை செய்தனர். ஆாற்றுமுப்பது பெருங்கலங்களில் அரைப்பங்குதானும் தாய் நாடு சென்றிலது. s
கடலோடிகள் மாத்திரமே நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த இவ் விடுதலையினல் உணர்ச்சிவசப்பட்ட ஆங்கிலேயர், “அவன் வீச அவர்கள் கலைந்தனர்.” என்பதைத் தம்முறுதிமொழியாகக் கொண்டனர். இவ்விளைவு விழிப்பாயுள்ள ஆண்டவன் அருளினலும் அவர் தம் காணமுடியாத கையாளர்களினலும் உண்டானதெனக்கூறினர். ஆனல், அது அவர்களின் செயற்றிறனுக்கும் அவர்கள் கடலிற் காட்டியதுணிவுக்கும் ஓரளவில் உரிய தென இறுமாப்பின்றிக் கூறிவிடலாம்.
இசுப்பெயின் இங்கிலாந்தைக் கைப்பற்ற முதன் முதற் செய்த பொறுப் பான முயற்சியே அதன் கடைசி முயற்சியுமாகும். தங்கள் தவத்தின் பயனகவும் ஆசைக்குரியதாகவும் வந்த குழந்தையாகிய ஆமடாப் போர்க் கப்பற் கூட்டத்தைத் திரட்டுதற்குத் தாம் எடுத்த மாபெரும் முயற்சியை மறுபடியும் பயனளிக்கக் கூடிய முறையிற் செய்ய முடியாதென இசுப் பானியர் கண்டனர். ஆயினும், இதுமுதற்கொண்டு இசுப்பானிய கடலுக்குத் திரேக்கு முதற் சென்ற காலத்திருந்ததிலும் பார்க்க மிகப் பெரிய கடற் படையை இசுப்பெயின் அத்திலாந்திக்குக் கடலில் நிறுவி ஆதரித்து வந்தது. ஆனல், போரின் முடிவு அதன் ஆரம்பத்திலேயே தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியினல் தீர்க்கப்பட்டது. அந்நிகழ்ச்சியை வரலாற்றிலேற்பட்ட ஒரு திருப்பமென ஐரோப்பா முழுதும் ஒப்புக்கொண்டது. வெள்ளைக்காரர் மீதும் அவர் தம் புதிய நாடுகள் மீதும் முழு ஆதிக்கத்தைச் செலுத்துந் தறுவாயிலிருந்த மாபெரும் ஆற்றலுடைய இசுப்பானியர், தம்பலம் முழு தையும் செலுத்தித் தோல்வியுற்றனர். கருதினல் அலன் என்னும் கூர்ந்த நோக்காளர், ஆமடாப் போரினிலே, தம் வாழ்க்கைப் பணி முழுவ
தற்கும் அழிவு எற்படவிருந்ததை விரைவில் அறிந்தனர். அவர்

ஒழுங்கான போரும் அதன் முறைகளும் 529
இங்கிலாந்தின் மேற்படையெடுத்தலைத் தூண்டியதன் மூலம், பொதுவான நாட்டுப் பற்றையுந் தியாகஞ் செய்தார். சில்லாண்டுகளிற் பின் பயின்சு மொறி சன் என்னும் யாத்திரிகன் மாறுவேடந்தாங்கி உரோமுக்கு அதன் பண்டைய பொருள்களைப் பார்க்கச் சென்றபொழுது, அந்நகரைப் பார்க்கச் செல்லுந் தந்நாட்டவரான புரட்டசுத்தாந்தரைத் துன்புறுத்தலை அக்கருதினல் நிறுத் திவிட்டாரெனக் கண்டான். “ 1588 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இசுப் பானிய கடற்படையைத் தோற்கடித்து விட்டதனலும், அதன்பின் இங்கி லாந்தைப் போப்பாண்டவரின் ஆணைக்குட்படுத்துதலில் சிறிதும் நம்பிக்கை யில்லையென்ற காரணத்தினலும் ” இது சம்பந்தமாகத் தம் நடத்தையை அக்கருதினல் மாற்றிக்கொண்டனர்.
ஆமடாப் போர்க்கப்பற் கூட்டம் பெற்ற தோல்வி, ஒல்லாந்தரின் குடி யாட்சி தப்பிப்பிழைத்திருப்பதையும், இசுப்பானியப் போர்ப்படைகளிலிருந் தும் பூட்கைகளிலிருந்தும் IV ஆம் என்றியின் ஆட்சியின் கீழ் பிரான்சு விடுதலை பெறுதலையும் நிச்சயமாக்கிற்று. மேலும் அத்தோல்வி புரட்டசுத் தாந்த சேர்மனியை ஓரளவில் நேரடியாகவுங் காத்தது. அங்கிருந்த உலூதர் சமயம் சார்ந்த அரசிளங்குமரன், ஒழுங்காக அமைக்கப்பட்டனவும் மிகுந்த உற்சாகமுடையனவுமான சீர்திருத்த எதிர்ப்புப் படைகள் விளைத்த கடுந்தாக்கங்களைக் கொண்ட இந்த நெருக்கடியான நிலைமையில் நாட்டுக் குரிய பொதுவான நோக்கமொன்றுக்கு உதவிபுரியாது கல்வினின்கொள்கை சார்ந்த குடிகளைத் துன்புறுத்தலில் கூடிய விருப்பமுடையனெனத் தன்னைக் காண்பித்தனன்.
ஆமடாப் போர்க்கப்பற் கூட்டத்தின் முடிவானது, மத்திய தரைக் கடல்: மக்களிலிருந்து வட பாலிருந்த மக்களுக்குக் கடலாதிக்கஞ் சென்று விட்டதென்பதை முழுவுலகத்துக்கும் எடுத்துக் காட்டிற்று. இதனல் முற்’ றிலும் ஒர் முடிவுக்கு வரஇயலாத அளவுக்கு வட ஐரோப்பாவில் சீர் திருத்தம் தொடர்ந்து நிலை பெறுவதுடன், புதிய சமுத்திர ஊழியில் வடதிசையாளர் உலகத்தலைமையையடைவர் என்பதும் பெறப்பட்டது.
இங்கிலாந்துக்கும் இசுப்பெயினுக்குமிடையே நேர்ந்த முறையான போர், இலிசபெத்து 1603 ஆம் ஆண்டில் இறக்கும் வரை தொடர்ந்து நடை பெற்றது. பிலிப்பை எதிர்த்துப் பிரான்சியர், ஒல்லாந்தர் ஆகியவர்களின், சுதந்திரத்தைக் காப்பாற்றுதல், அற்பமான தம் போர்ச் செலவின் முதற் பொறுப்பென அரசியார் கருதினர். இதனை ஓர் அளவிற்கு ஆங்கிலேயரின் உதவியினலும் கடலாதிக்கத்திலுைம், ஒரளவுக்கு இசுப்பானிய அதிகாரத் துக்கு இணக்கமில்லாத கத்தோலிக்க அரசியல் வாதிகளுக்கும் கல்வின் கொள்கையாளர்களுக்குமிடையே உண்டான உறவினலும் பெற்றர். இதன் பேருக, அக்காலத்து ஐரோப்பாவில் மிக அரிதாகக் காணப்பட்டபரந்த நோக்கும் பொறையுடைமையும், இலிசபெத்தின் நற்பண்புகளுக்குரிய மனே நிலைக்கு ஒத்தமுறையில் பிரான்சிலும் ஒல்லாந்திலும் தலைகாட்டின.

Page 275
530 ஒழுங்கான போரும் அதன் எல்லைகளும்
ஒல்லாந்தரிடஞ் சம்பளம் பெற்றிருந்த ஆங்கிலச் சேனைகள், “ சண்டை யிடும் வீரேசு “வின் தலைமையின் கீழ், அதுகாறும் போர்க்களத்தில் வெல்ல முடியாத இசுப்பானிய காலாட்படையை தேண்கெளற்றிலும், நியூப் போட்டிலும் நடந்த சண்டைகளில் தோற்கடிக்க உதவி புரிந்தன. மெளனி உவில்லியத்தின் மகனும் நாசோநாட்டு இளவரசனுமான மொறிசு இளவர சனின் கீழ் ஒல்லாந்த சேனை ஐரோப்பா முழுதுக்கும் விஞ்ஞான முறையில் போர் கற்பிக்குமிடமாய் அமைவதாயிற்று. மேலும், அவ்வந்நிய நாட்டுப் பணியில் அமர்ந்திருந்த இந்த ஆங்கில மக்கள், தம் நாட்டின் இக்கால இராணுவ மரபுமுறைமைகளை நிலைநாட்டியவராவர்.1
இலிசபெத்து அளிக்கக்கூடிய போர்ப்படையிற் பெரும் பகுதி சேபோனிய சதுப்பு நிலத்தில் அமிழ்ந்தியழிந்தது. இது அயலாந்தில் நிகழ்ந்த துயரச் செயலாகும். இது காரணமாக, நாங்கள் கடற்படையாதிக்கம் பெற்றிருந்தும், இசுப்பானிய பேரரசைத் தனித்தனி பிரிக்கவோ, பிலிப் பின் பிடியிலிருந்து போத்துக்கலை விடுவிக்கவோ முடியாது போயிற்று. “ இரிவெஞ்சு ’ என்னும் போர்க்கலம் அசோசுக்கப்பால் நிகழ்த்திய, பாடல் பெற்ற கடைசிப் போர், இசுப்பெயின் நாட்டுப் போர்த்தளமான கேடிசு எனுமிடத்தைத் தாக்கியமை போன்ற பல சிறந்த நிகழ்ச்சிகள் ஆண்டு நடைபெற்றன. ஆனல், பிற்காலத்தில் மாள்பரோ, சதாம் ஆகியோரின் தலைமையில் நடாத்திய போர்களிலும் நெப்போலியனேடு செய்த போரி லும் இங்கிலாந்தின் ஐக்கிய சேவைகள் பெற்ற நிரந்தரமான வெற்றிகளைப் போன்று இங்கிலாந்து நிலையான வெற்றிகளைப் பெறவில்லை. திரேக்கின் தலைமையில் இயங்கிய போர்க்கட்சியினர் இங்கிலாந்தைக் காப்பாற்றினர் ; அதனுடன் வேறு சிலவற்றையுங் காப்பாற்றினர் ; ஆஞல், அவர்தம் வெற்றிக்களியாட்டம் தோற்றத்தளவில் மாத்திரமேயிருந்தது. உண்மை யில் அவர்கள் தம்மைக் கீர்த்தியிழந்தவராகக் கண்டனர். அவர்கள் எதிர்பார்த்திருந்ததும் நெடுங்காலம் பங்குபற்றி வந்ததுமாகிய முறையான போர் முடிந்தபோது, அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.
இங்கிலாந்து தனது புதிய கடலாதிக்கத்தை வளர்க்கப் போதுமான நிதி முறையையும் படையமைப்பையும் இன்னும் நிறுவவேண்டியிருந்தது. மேலும், இலிசபெத்தின் ஆட்சி முடிவில், ஐம்பதி லட்சத்துக்குக் குறைந்த குடிமக்களைக் கொண்டிருந்த இங்கிலாந்து, இசுப்பானிய குடியேற்ற நாடு
1 பேசியின், “ இறலிக்கிசு ", என்ற நூலோடு அச்சிடப்பட்ட * வில்லெளபி வீரப்பிரபு”, * கேடிசை வெற்றிகொண்டமை ”, “ இசுப்பானிய பெருமாட்டியின் காதல் ” ஆகிய மூன்று பழைய சிறந்த நாட்டுப்பாடல்கள், இப்போரிலுண்டான தேசீய ஆர்வத்தையும், ஆங்கிலப் போர் வீரரின் ஒழுக்கக் குறிக்கோளையும் பற்றிய கருத்தினை வாசிப்போர்க்கு அளிப்பனவாகும். வீரேசுவின் விரிவுரைகள், ஒல்லாந்தர்க்குப் பணியாற்றுவதில் ஆங்கிலச் சேனை கொண்ட ஆர்வத்தை விளக்குவனவாகும். பவுசு எனும் இனத்தவர், நியூப் போட்டும், வீரேசுவின் போர்க்களமும் தம்சேனைக்குரிய பாரம்பரியங்களின் உற்பத்தியிடங்களெனக் கருதுகின்றனர்.

ஒழுங்கான போரும் அதன் எல்லைகளும் 53
களைக் கைப்பற்ற, அல்லது தனக்கென ஒரு குடியேற்றப் பேரரசை நிறுவப் போதிய செல்வமும் மக்கட் பலமும் அற்ற நாடாயிற்று. வேர்சினியாவில் இராலி நிறுவிய குடியேற்றந்தானும் 1587 ஆம் ஆண்டில் குடியேற்றத் துக்குத் தகுதியற்ற நிலையிலிருந்தது. சுதுவாட்டர் காலத்தில் இங்கி லாந்து தேடிய திரவியமும் அங்கிருந்த மேலதிகக் குடித்தொகையும், இசுப் பெயினேடு அது அமைதி பூண்டிருந்த நேரத்தில், குடியேற்றத் தொழிலை மீட்டுந் தொடங்குதற்கு உதவி புரிந்தன. அப்பொழுது பியூரித்தன் குடி யேறிகளும் மற்றையோரும் இசுப்பானியர் எவரையுங் காணமுடியாத அமெரிக்காவின் வடகரைகளுக்கே செல்வாராயினர். இலிசபெத்தின் காலத் தவர், போரினுற் பெற்ற வாய்ப்பைப் பயன்படுத்துமுகமாகப் போத்துக்கலி னதும் இசுப்பெயினினதும் அயனமண்டலக் குடியேற்றங்களைக் கைப்பற்றி, ஊக்கக் குறைவையுண்டாக்கும் வானிவையுடைய அக்குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலப் புறக்குடியேறுநரை அனுப்பியிருப்பதைவிட, அவ்வாறய் ஏற்பட்ட ஆங்கிலேய சட்சணிய குடியேற்றத்தை ஒரு சிறப்பான வருங்காலம் எதிர்நோக்கியிருந்தது. இங்கு இலிசபெத்திடம் காணப்பட்ட “சிறிய இங்கி லாந்து மட்டுமே ’ ஆங்கிலேயருக்குப் போதுமானது என்னும் கொள்கை, பேரரசின் வருங்காலத்துக்குப் பெரிதும் நன்மை விளைத்தது: திரேக்குக்கும், இராலிக்குஞ் சினமூட்டியவையான போர்பற்றி விதிக்கப்பட்ட வரையறைகள் அவ்வாட்சியில் நேர்ந்த நன்மைகளுள் ஒன்றென வெண்ணலாம். அக்கட்டுப் பாடுகளைத் தங்கள் வரலாற்றிலேயே மிக நற்பேறு வாய்ந்தனவும், மிக வியப்புக்குரியனவுமென்று ஆங்கிலேயர் மதித்தற்குக் காரணங்கள் உண்டு.
இலிசபெத்தின் வரவும் செலவும்
1588 ஆம் ஆண்டு மிக்கேல் மகாவின் திருவிழாத்தினமாகிய ւյUւ՛ւ ո5) மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் 1589 ஆம் ஆண்டு அம்மாதம் அத்தேதி வரைக்கும், குற்றப்பணம், வணிகப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி, கப்பம் ஆகியவைகள் உட்பட அரசியின் பொதுவான முழுப்பற்றும் 2,94,819 பவுண் ஆகும். இத்தொகை நாட்டு வணிகம் வளரச் சிறிது வளர்ந்தது. இறை நன்கொடைகளால் வந்த 4410 பவுணும் வெகு மதிகளுக்கு வேண்டிய 4878 பவுணும் மட்டுமன்றி பாராளுமன்றம் விதித்த சிறந்த வரிமூலம் கிடைத்த உதவிப்பணமாகிய 88,362 பவுணும் இதனேடு சேர்க்கப் பட்டன. ஆட்சிக்கும் போருக்குமுரிய கடைசி ஐந்தாண்டுகளில் ஆண்டுதோ றும் பெற்ற சராசரி வருமானம் வருமாறு :-
சாதாரண வருமானம் o R- 360,519 பவுண் உதவிப்பணமும் பத்திலொருபாக வரிப்பணமும் . .. 125,000 பவுண்
மொத்தம் . . 485,519 பவுண்

Page 276
532 கடலெனும் அரண்
ஆட்சி முழுதுக்குரிய, வழக்கமீறிய போர்களால் எற்பட்ட செலவு பற்றித் தலைமையதிகாரிகளால் 1603 ஆம் ஆண்டு வரையப்பட்ட அட்டவணை வருமாறு:-
பவுண் கொத்துலாந்திலுள்ள இலீது; 1559-60 , , 178,820 நியூகேவன ; 1562 . . 246,380 வடக்கிற் கலகம் ; 1569 - 92,932 சேன் ஒனேயிலின் கலகம் ; 1573 ... 230,440 தெசுமண்டின் கலகம் : 1579 . . ... 254,961 தைருேனின் கலகம் முதலியன ... 1,924,000 நெதலாந்து; 1585-1603 − 0- ... 1,419,596 பிரான்சிய அரசரின் உதவி ; 1591 இலும் பின்னும் ... 297,480 இசுப்பானிய போர்க்கப்பற் கூட்டம், தில்பெரிபாசறை ... 161,185 கேடிசுக்கும் தீவுகளுக்கும் செய்த கடற்பிரயாணங்கள் ... 172,260
இப்பணத்தொகைகளைவிட மீண்டு மீண்டு வரும் பொதுவான செலவு களுக்கு, கப்பற் படைப்பரிபாலன முட்பட, நிலையான அரச வருமானங் களிலிருந்து பணம் அளிக்க வேண்டியதாயிற்று. ஆட்சி முழுதும் பாராளு மன்றம் குறித்த குறித்த சந்தர்ப்பங்களில் விதித்த வரிகளாலும் பதி னைந்தினெரு பங்கு வரிகளாலும் அரசாங்கம் பெற்ற முழுத்தொகையும் எறத்தாழ முப்பத்தைந்திலட்சமாகும். இத்தொகை நாற்பதாண்டுகளுக் கும் மேற்பட்ட காலவளவில் பெறப்பட்டதாகும். மேலும், இதுவே மேற் குறித்த வழக்குமீறிய போர்களால் ஏற்பட்ட செலவுகளுக்குப் பயன்பட்டது.
அத்தியாயம் VI
இலிசபெத்து மகா ஊழி. வேல்சு. அயலாந்து. சமயம். இலிசபெத்தின் சுதந்திர எல்லை. விவிலிய நூல், கவிதை, இசை. தொழில்பயிலுங்காலமும் கைத் தொழிலுக்கு வேண்டிய சில நிபந்தனைகளும். மேன்மக்களும் பாராளுமன்றமும்,
இலிசபெத்தின் காலந் தொட்டு, படையாண்மையுடைய பேரரசு எதனுட வைது எதிர்த்துப் போர் நடத்தவேண்டுமென்பது பிரித்தானிய வரலாற் றில் மீண்டும் மீண்டும் தோன்றுமொரு சிறப்பியல்பாகும். ஆனல், அவ் வாருண போர், கடலும் அரச கடற்படையும் காவலாகவிருக்க நடத்தப்பட்ட மையினலே, இங்கிலாந்து அந்நிய நாட்டுப் படையெடுப்புக் கரங்கமாய் என்றும் அமைந்திலது. மேலும், 1914-18 ஆம் ஆண்டுப் போர்க்காலத்

போர்க்காலத்திலே சிரும் சிறப்பும் 533
தில் புதிய சூழ்நிலைமைகள் எற்படும்வரை, நாடடின் ஆண்மக்களின் பெரும் பகுதியினரைப் பிறநாட்டிலே தியாகஞ் செய்யவோ அல்லது நாட்டின் அன்ருடத் தொழில்களையும் களிமகிழ்வையுந் தடைசெய்யவோ வேண்டிய அவசியம் எப்போதாயினும் பிரித்தானியருக்கு எற்பட்டிலது.
அவ்வாறகிய தொடர்ந்த பாதுகாப்பு, மிகவும் தாழ்மையுள்ள அல்லது
தொலைவிலுள்ள நாடுகளுக்கே உரிய சிறப்புரிமையாகும். ஆனல், பேராதிக் கம் படைத்த இங்கிலாந்து உலக நடவடிக்கைகளின் மத்தியிலே அவ்வா ருண பாதுகாப்பை அனுபவித்ததெனின், பிரித்தானிய பண்பிலும் நிறு வனங்களிலுமே அதன் இரகசியத்தைக் காணலாகும். அதனல் வேறெந் தப் பெரிய நாட்டுக்கும் முன்னதாக பாராளுமன்ற அரசாங்கத்தையும் குடிமக்களின் சுதந்திரத்தையும் தோற்றுவிக்கவும், எம்மிடத்தேயுள்ள பலவகைப்பட்ட கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றி நாம் தற் பெருமைகொள்ளவும், எமக்கு வாய்ப்புக்கிடைத்தது. அவ்வழி எமக்குக் கிடைத்த நிறைவான முதல் விளைவு, இலிசபெத்தின் ஆட்சியில் நிகழ்ந்
மறுமலர்ச்சியாற் பெற்றவையாகும்.
* அகழியால் மனையை அரண்செய்தலினலாம்” பயனைச் செகப்பிரியர் காலத்தவர் நன்கறிந்திருந்தனர். பிலிப்போடு வெளிப்படையாகச் செய்த போரில், பதினைந்தாண்டுகள் வரை, அனுபவம் வாய்ந்த இசுப்பானிய காலாட்படை அந்துவேப்பிலிருந்து இலண்டனுக்குச் செல்லமுடியாதிருந் தது ; மேலும், இலிசபெத்தின் ஆட்சியிலிருந்து முப்பதாண்டுகள் வரை நிலவிய, குழப்பமும் இடரும் நிறைந்த அமைதியில் இருந்ததிலும் பார்க்க மேலான பாதுகாப்பை, இக்காலம் வெளிநாட்டுத் திறை செலுத்தல், உண்ணுட்டு வன்மம் ஆகியவையின்றி இங்கிலாந்து அனுபவித்தது. போர் நிலைமையானது, வரிப்பணத்தை உயர்த்தும் முகமாக அல்லது பொரு ளாதார உலைவையுண்டாக்கும் முகமாக எதையும் வருவித்திலது. நெப் போலியனேடு செய்த போர்க் காலத்திருந்த நிலைமையை இக்காலத்துடன் ஒப்பிடலாம் : பிந்தின காலப்பகுதி, இங்கிலாந்திலே இயற்கைக் கவின் பெறு ஒவியம், செய்யுள், நவீனம் எழுதல், குத்துச்சண்டை, வேட்டை யாடுதல், ஆகியவை வளர்ந்த உண்மையான ஒரு பொற்காலமாகும். எனினும், போரினல் உண்டான பொருளாதாரத் தாக்கத்தின் காரண மாகப் பொதுமக்களுக்கு அது ஒரு துன்பமான காலமாகும் ; அப்பொழுதே எதிர்காலச் சமுதாயப் பிளவுக்கு வித்திடப்பட்டது. என்றலும், இலிச பெத்தின் போர்க் காலத்தில் தியூடர் ஆட்சியில் நிலவியிருந்த சமுதாய, பொருளாதாரப் பிரச்சினைகளின் நெருக்கடியான நிலைமை குறைந்து வருவதாயிற்று. குடிசனத்தொகையின் அதிகரிப்புக்கேற்ப உழைப்பும் அதி கரித்ததனல், பாராளுமன்றத்தினரும், கோமறைக் கழகத்தினரும், சமா தான நீதிபதிகளும் வறியோர்க்கு வேண்டிய பொருள் அளிக்கும் பிரச்சினை யைச் சமாளிக்கக்கூடியவராயிருந்தனர். ஐரோப்பியக் கண்ட நாடுகளைத் துன்புறுத்தியதும், தியூடராட்சியின் முற்பகுதிகளில் இங்கிலாந்தைப் பெரி
58603.

Page 277
534 போர்க்காலத்திலே சீரும் சிறப்பும்
தும் கலக்கியதுமான மிடிமை என்னும் கொள்ளைநோய் இல்லாமையைப் பற்றிப் போரின் கடைசியாண்டில் பிறநாட்டு யாத்திரிகரொருவர் வியப் பொடு குறித்துள்ளார். !
இலிசபெத்தின் ஆட்சியிலிருந்த பாதுகாப்புக்கும் சுகவாழ்வுக்கும் கார மணம், ஒன்றுபட்ட பெரிய பிரித்தானியா திட்டமாக உருவெடுத்ததேயா கும். கொத்துலாந்தின் எல்லையில் நிலையான அமைதியும் அதற் கப்பாலுள்ள நாட்டில் நட்பும், முதலாம் எட்டுவேட்டுக்காலந் தொட்டு ஒருபோதும் அவ்வாறிருந்திராத முறையில், நிலவின. மேலும், தியூட வரசர்கள் வேல்சுப் பிரச்சினையைத் தீர்த்திருந்தனர் ; அயலாந்துப் பிரச் சினை எத்துணை தடுமாற்றத்தை விளைத்ததோ, அத்துணை தடுமாற்றத்தை வேல்சுப் பிரச்சினையும் விளைத்தது எனலாம்.
வேல்சு சம்பந்தமான நடவடிக்கைகளில் VI ஆம் என்றி இருபெரும் வாய்ப்புக்களோடு தொடங்கினன். முதலாவதாக அவன் தன் முந்தை யோரிலும் வலிமிக்க எல்லைப்புறத்தலைவனவன். யோக்கு, இலங்காசுத்த ராகிய குடும்பங்களின் எல்லைப்புறத்தலைவரான ஐம்பது டே ரைத் தன் னேடு சேர்த்துக் கொண்டான். இரண்டாவதாக, அவன் வேல்சிற் கல்வி கற்ற வேல்சு நாட்டவனவன். மேலும், தன் வாழ்நாள் முழுதும் வேல்சுக்கவியிலும், மரபுமுறைகளிலும் பெருவிருப்புக் கொண்டிருந்த ன். பொசுவேத்துக்களத்தில், இங்கிலாந்தின் அரசு கட்டிலில் தங்களின் இளவரசனுெருவனை எற்றியதனுல் தங்கள் சுதந்திரத்தை மீட்டும் அடைந்து விட்டதாக அந்நாட்ட வர் எண்ணினர். அன்றியும், ஒரு நூற்றண்டின் பின் கொததுலாந்தர் ஆறம் சேமிசின் அரசவையில் திரண்டு கூடி யது போல VI ஆம் என்றியின் அவையிலும் வேல்சு நாட்டவர் குழுமி னர். இவ்வாய்ப்புக்களோடு, கூர்ந்த அறிவுள்ள இத்தியூட வரசன் இரத்தக் கறைபடிந்து ஆட்சியறவுற்றிருந்த வேல்சில் ஒழுங்கினைச் சிறிது நிறுவுவான) யினன். அப்பணியினைப் பின்னர் அவன் மகன் முடிவுறச் செய்தனன்.
(அரச நாணயச் செலாவணி நிலையம்) எங்கணும் உலாவித்திரிதல் இன்பம் பயப்பதாகும் ; ஏனெனில், அங்கு ஒருவரை இரப்போர் அணுகவோ அவர்க்குத் தொல்லை கொடுக்கவோ மாட்டாரென்பதனலென்க. வேற்று நாடுகளில் அவ்வித இடங்களில் இரப்போரை அடிக்கடி காணலாம். வாயிற்புறத்தே நிற்கும் இரப்போர் மிகச் சிலரை விட இங்கிலாந்தில் எங்காயினும் அவர் இரப்பதற்கு இடங்கொடுக்கமாட்டார். ஒவ்வொரு கோயிற்பற்றிலுள்ளாரும் தம் வறியாரைப் பாதுகாக்கின்றனர். வேற்று நாட்டார் நோய்வாய்ப்படின் அவர் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுவர். ஆனல், அரசுக்குரியோரை அல்லது தொலைவி லிருந்து வந்தோரைக் கோவிற்பற்றுக்களுக்கு மாறி மாறி அனுப்புவர். கடைசியாக அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லும்வரை அவர்களுக்கு வேண்டியவற்றைக் கவனித்துவருவர்.
இலிசபெத்தின் வறியார் சட்டத்திலும், கட்டாயமான வறியார் வரியிலும் இங்கிலாந்து எனைய நாடுகளிலும் முதன்மையுடையதாகவிருந்தது. அவை எவ்வாறு நடைமுறையி வியங்கினவென்று நாம் பிறவாயிலாக அறிகின்றவற்றேடு இம்மேற்கோள் பொருந்தாவிடில் அதனுற் பயனில்லை.

எட்டாம் என்றி வேல்சைச் சாந்திப்படுத்தல் 535
கொத்துலாந்திலும் அயலாந்திலும் தவறன ஆட்சி நடத்திய VI ஆம் என்றி வேல்சை நன்கறிந்து, குழப்பத்தை அடக்குதற்கும், கெலித்திய மக்களுக்கு நீதி வழங்குவதற்குமுரிய தொரு பூட்கையைக் கையாண்டு அந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தான். இலிச்சுவீல்டின் பிசப்பும் எல்லைப்புறக் கழகத்தின் ஊக்கம் மிகுந்த தலைவருமான உருேலந்து இலீ என்பார் கள்வரையும் கொலைஞரையும் இரக்கமின்றித் தூக்கிலிட்டார். மேலும், பெரியோரும், சிறியோரும், சட்சனியரும், கெலித்தியரும் என்றி அரசனுணைக்கு அஞ்சும்படி செய்தார். அவர் கையாண்ட முறைமை இன்று நம்மைத் திடுக்கிடச் செய்யலாம் ; ஆனல், அமைதியென்பதை முன் என்று மறியாததொரு நாட்டுக்கு அவ்வமைதியையளித்தார். செவ்வனே பாலனம் புரிந்த பலரைப் போல, தாம் அச்சுறுத்தி அடக்கிவைத்த முரட்டுத் தனமான மக்களின் எதிர்காலத்தில் அவர்க்கு நம்பிக்கையிருக்கவில்லை. அவரது ஆலோசனைக்கு மாறகவே WI ஆம் என்றி வேல்சை இங்கி லாந்தோடு சம உரிமைகொண்ட நாடாகச் சேர்த்துக் கொண்டான். துணி வான இத்திட்டம் பிரித்தானிய வரலாற்றில் முதலாவதானதும் வ்ெற்றி யில் சிறிதும் குறைவற்றதுமான ஐக்கியப்படுத்தும், செயலாம். சிற்றரசு களையும் எல்லைப்புற வுரிமைகளையும் என்றி ஒழித்தான் ; நாடு முழுதை யும் பன்னிரண்டு மாநிலங்களாகப் பிரித்தான். அவை ஆங்கில மாநிலங் களைப் போல அரச கழகத்தின் விதிகளுக்கும், பாராளுமன்றம் அமைக்குஞ் சட்டங்களுக்கும் உட்பட்டு, சமாதான நீதிபதிகள் மூலமாக ஆளப்பட வேண்டுமென்று நியமித்தான். வேல்சின் கோட்டங்களும் பரோக்களும் ஆங்கிலப் பொதுமக்கள் சபையில் இது முதற்கொண்டு பிரதிநிதித்துவம் பெற்றன. குழப்பம் நிறைந்த அம்மாநிலங்களுக்கு அவசியம் வேண்டிய அரச கழகத்தினனை, அதன் கிளையான வேல்சு எல்லைப்புறங்களின் கழகத் தின் வழியாகச் செலுத்தப்பட்டது. இக்கிளைக் கழகமோ வடக்கிலிருந்த கழகத்தை யொத்ததொன்றயிருந்தது. A.
மத்திய அரசாங்கத்தினல் இவ்வாறு ஆதரிக்கப்பட்ட சமாதான நீதி பதிகள், நூற்றண்டுகளாகப் பழங்குடிமக்களும் மானிய மக்களும் கட்டின்றிக் கலம்பகம் செய்திருந்த பொல்லா மலைப்பகுதிகளை ஆட்சி செய்யக் கூடியவராயிருந்தனர். இந்த நீதிபதிகள், WI ஆம் என்றி தொடக்கி வைத்த முறைமைப்படி சொந்த ஊர்ப்பிறந்தோரை அடக்கிவைக்க இங்கி லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஆங்கிலேயரல்லர் ; ஆனல், இவர்கள் வேல்சு மக்களின் தலைவராகிய வேல்சுப் பிரபுக்களேயாவர். ஆங்கில அரசாங்கத்தினர் அயலாந்தில் மேற்றர வகுப்பினரை அழித்ததுபோலல் லாது, வேல்சில் அவர்கள் அவ்வாறன வகுப்பினரோடு நட்புப் பூண்டி ருந்தனர்.
தியூடர் மரபினர் இங்கிலாந்தில் அரசு வீற்றிருந்த் காட்சி, தற்பெருமை யுடைய கெலித்திய மக்களைஇவ்வாருன நிபந்தனைகளுக்கமைய ஐக்கியத்தை எற்றுக்கொள்ளச் செய்ததோடு, அபாயமானதும் குழப்பம் நிறைந்ததுமான
1509
54.
1535.
ஆம் தேசப் படத்தைப் பார்க்க.

Page 278
536 எட்டாம் என்றி வேல்சைச் சாந்திப்படுத்தல்
தியூடர் காலம் முழுதும் வேல்சு நாட்ட வரை அரச பத்தி கொண்டிருக்கச் செய்தது. தளபதி புளுவலன், கதாநாயகனகிய V ஆம் என்றியின் வேல்சுப் பிறப்பைப் பாராட்டுவதாகச் செகப்பிரியர் எடுத்துக்காட்டும்போது, இலிசபெத்தரசியின் இனப்பிறப்பை அதேமாதிரி வேல்சு மகனெருவன் பாராட்டியதை அவர் தற்செயலாகக் கேட்டிருக்க வேண்டுமென்று நாம் ஐயப்படுகிறேம். தியூடர் மரபினருக்கு இவ்வாறன நல்லெண்ணத்தைக் கெலித்திய மக்கள் காட்டியமை நன்மைக்கேயாகும் ; ஏனெனில், இங்கி லாந்தில் எற்பட்ட சமயச்சீர்திருத்தம் அவர்கள் அரசபத்திக்குத் துன்பம் விளைத்தது. மெதடிசுக் கொள்கையினரின் சமயப் புத்தார்வத்தின் பின்னர் பிரித்தானியாவிற் புரட்டசுத்தாந்தம் மிகப் பரவி இருந்த நாடு வேல்சு வென்பது உண்மையே ; ஆயினும் பதினரும் நூற்றண்டில் அது இந் நிலையினின்றும் பெரிதும் மாறியிருந்தது. தியூடர் ஆட்சியில் புரட்டசுத் தாந்தமானது, உரோமன் கத்தோலிக்கரின் திருப்பீட வழிபாடு அவர் களுக்கு விளங்காத இலத்தீன் மொழியிலிருந்துதது போல, வேல்சு மக்கள் அநேகருக்கு விளங்காத ஒரு மொழியிலுள்ள வழிபாட்டு நூலுட னும், விவிலிய நூலுடனும் அங்கிலிக்கன் கிறித்துவமெனும் அதிகாரத் தோற்றத்தில் முதன் முதல் வேல்சுட்புகுந்தது. புதிய இச்சமயத்தை, முத லில், அதிகாரம் பெற்ற அந்நிய குருமார் போதித்தனர். அவர்களிற் பலர் தத்தம் தலங்களில் வுதியாதவராயும் உழைப்பின்றி ஊழியம் பெறுபவருமாயிருந்தனர். வேல்சிலே கெல்திக்கு மக்களது உள்ளத்தை யும் உணர்ச்சி வேகத்தையும் கவர்தற்கு உரோமுக்கு மிகப்பெரிய வாய்ப்புக் கிடைத்தது ; அதற்கு அயலாந்திலும் அதேமாதிரியான சமயச் சூழ்நிலையில் மிக அநுகூலமான வாய்ப்புக்கிடைத்தமை ஈண்டுக் கவனிக்கற் பாலது. ஆனல், இயேசுசபைத் தூதர்கள் இலிசபெத்தின் ஆட்சியில் வேல்சைப் புறக்கணித்தனர். அவ்வாறு நேர்ந்ததற்கு ஐரோப்பியக் கல் லூரிகளிலிருந்த வேல்சுமக்களுக்கும் ஆங்கிலேயருக்குமிடையே உண்டான கொடூரமான சண்டை ஒரளவுக்குக் காரணமாயிற்று.
ஆகவே, உவேல்சு மக்கள் தம் விருப்பப்படி விடப்பட்டவராயிருந்தமை யால் சமயச் சீர்திருத்தத்தினலேற்பட்ட மாற்றங்களை அக்கறையின்றிநோக்கி னர். கல்வி கற்றவரும் நிலக்கிழாருமான வகுப்பினர் தம் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் ஆங்கிலேயராகமாற, திருச்சபையிலும் அரசாங்கத்தி லும் அவர் மொழி தடைசெய்யப்பட, அறிவு சம்பந்தமான மந்தத் தன்மை தீவிர புத்தியுள்ள மலை நாட்டாரிடத்தே சிறிது காலம் நிலைப்பதாயிற்று. ஆனல், கெலித்திக்கு மொழி கல்விக்குரிய சாதனமன்று எனப் புறக்கணிக் கப்பட்ட போதிலும், அது வேல்சு நாட்டவரிடத்தே, அயலாந்து நாட்டவரி டத்திருந்ததிலும் மேலாகத் தொடர்ந்து வாழ்ந்திருந்தது. ஈற்றில், பதி னெட்டாம் பத்தொன்பதாம் நூற்றண்டுகளில், பியூரித்தன் சமயம், கல்வி, இசை, கெலித்திக்குச் செய்யுள் ஆகியவை சம்பந்தப்பட்டவளவில் தேசிய வுணர்ச்சியும் கலாசாரமும் மறித்தும் மலர்ந்தன. வேல்சு மக்கள் வர

வெல்சு மதமும் பண்பாடும் 537
லாற்றில் குலமுறையானது அழிந்துவிட்டதெனினும், பாணர் இன்றும் அதிகாரம் வகிக்கின்றனர். நற்பேருகப் பிந்தியேற்பட்ட இக்கெலித்திக்கு மறுமலர்ச்சி, அயலாந்தில் அதே காலத்தில் நிகழ்ந்த மறுமலர்ச்சி இயக்கத்தைப் போல, இங்கிலாந்துக்குமாருன போக்கைப் பெற்றிலது. VII ஆம் என்றியின் ஐக்கிய விதி, இருநாட்டவரிடையும் மனவொற்று மையை உண்டாக்கியதால் நியாயமானதென்று கொள்ளப்பட்டது.
அயலாந்தில் தியூடர் கையாண்ட பூட்கையால் ஏற்பட்ட விளைவு இதனினும் மிகவும் வேறுபட்டதாகும். அப்பூட்கை, நெதலாந்திற் பிலிப்பு கைக் கொண்ட முறைகளுக்கு ஒப்பாய், உள்ளூர் நிலைமைகளை அறியாது கையாளப் பட்டதாகும். பதினைந்தாம் நூற்றண்டில் ஆங்கில ஐரிசுக் குடும்பங்கள் மூலமாக “ உயர்குடியினரின் உண்ணுட்டாட்சி ’ என்பதை அடிப்படையா கக் கொண்டு அயலாந்து ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. அக்குடும்டங்களுள் கில்தாரென்னும் இடத்திலிருந்த பிற்சொல்களைச் சிறப்பாகக் கூறலாம். ஆனல், அம்முறைமை WI ஆம் என்றியின் ஆட்சியில் குலையத்தொடங் கியது ; அது கில்தார்ப் பிரபுவையும் அவர்தம் ஐந்து மாமன்மாரையும் தைபேணில் VI ஆம் என்றி தூக்கிலிட்டதுடன், திடீரென முடிவடைந்தது. வேறெவ்வித ஆட்சிமுறையும் அதற்குப் பதிலாக உடனடியாக எற்படுத்தப் படவில்லை. ஆங்கிலேயர் அந்நாட்டைக் கைப்பற்றி ஆங்கு குடியேறுதல் இன்றியமையாததெனச் சறேப் பிரபு என்றிக்கு அறிக்கை செய்திருந்தும், அத்தகைய அஞ்சத்தக்க மாற்றுகொள்கையானது எலிசபெத்தரசியின் கடையாண்டுகளுக்குமுன்னர் கருத்தொடு கையாளப்படவில்லை,
WI ஆம் என்றி பிற்செரல்களைத் தூக்கிலிட்டதைவிட, அயலாந்தில் நிகழ்ந்த துயர்தரும் சம்பவங்களுக்குப் பிறவகையாலும் உதவியளித்த னன். இங்கிலாந்திலுண்டான நிலைமைக்குப் பொருந்துமாறு அவன் திட்டஞ்செய்த சமயப்புரட்சிக்கு அயலாந்தையும் அவன் உட்படுத்தினன். முதலில், உண்மையாகப் போப்பாண்டவரின் ஆதிக்க ஒழிப்பு பற்றி கெலித்திய மக்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை; ஏனெனில் அவர்கள் சம்பந்தப்பட்ட மட்டில், சாதாரணப் பொதுமக்களிலும் பார்க்க ஆங்கிலேய ஐரிசுப் பிரபுக்களுக்கு மிக நெருங்கி ஒன்றித்த அந்நிய
ஆதிக்கமாகவே உரோமின் ஆதிக்கம் எப்பொழுதுமிருந்து வந்தது. துறவி
மடங்களையும் ஒரே சமயத்தில் இருநாடுகளிலும் ஒழித்தமை, தியூடர் காலத்து இங்கிலாந்தைவிட தியூடர் கால அயல்ாந்துக்கு மிகவும் அருமையாக விருந்த கலாசார நிறுவனங்களை அழிப்பதாயிற்று. அயலாந்திலிருந்த துறவிகள் பலர் பிசப்புமாரையும் கோயிற்பற்றுக்குரிய குருமாரையும் போல உலகப்பற்றுடையராயும் பயனற்றவராயுமிருந்த போதிலும், உண் மையாக அவர்கள் மிக இழிந்தவர்களல்லர். மேலும், அத்தீவில் நிலவிய சிறிதளவு கல்விதானும் துறவிமடங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்ட தாகும். பொது மக்களுக்குரிய சமயம், ஊரூராகச் சுற்றித்திரிந்த துறவிக ளால் சிறப்பாக ஆதரிக்கப்பட்டுவந்தது. அவர்களும் என்றியின் தடை
1537.

Page 279
1580.
538 அயலாந்தில் மதச் சீர்திருத்தம்
யுத்தரவால் வீழ்ச்சியுற்றனர். ஆங்கிலேயர் தாம் அழித்ததற்குப் பதிலாக பயன்தரக்கூடிய வேறெதையும் அயலாந்துக்குக் கொணர்ந்திலர். துறவி மடங்களுக்குப் பதிலாக அவர்கள் பல்கலைக்கழகத்தையோ, பள்ளிகளையோ நிறுவினரல்லர்.1 என்றியின் ஆங்கில விவிலிய நூலும் எட்டுவேட்டின் ஆங்கில வழிபாட்டு நூலும் கெலித்திக்கு மக்கள் அப்பொழுது அறிந்திராத மொழியில் எழுதப்பட்டிருந்தன. அல்லாமலும், அம்மக்கள் ஐரோப்பிய மறுமலர்ச்சி, புதுக்கல்வி ஆகியவற்றின் செல்வாக்குக்குட்படாது வெளியே நின்றனர். ஆனல் அவர்களது பழைய சமயமும் நலிவு நிலை எய்திற்று. அலைந்து திரிந்த துறவிகளுக்கு இயேசு சபை இயக்கத்தார் வெளிநாட்டி லிருந்து வந்து உதவி அளிக்கும்வரை, சமயச்சீர்திருத்தத்தின் அதிகார பூர்வமான செயல்களுக்கு ஊக்கமுள்ள எதிர்ப்புச் சிறிதுமில்லாதிருந்தது. அத்துறவிகளை அரசாங்கம் சட்டவிரோதிகளாக்கியிருக்கலாமேயன்றி அவர்
களை அடக்கி ஒடுக்கமுடியாதிருந்தது.
அயலாந்தில் உலகியலும் ஆன்மவியலும் பற்றிய ஆங்கில ஆட்சிக் குறைவை முழுதும் பயன்படுத்திக் கொண்ட இயேசு சபை இயக்கத்தாரின் பேரூக்கங் காரணமாக எழுந்த நிலைமை இலிசபெத்துக்குப் பெரிதும் அபாயம்விளைப்பதாயிற்று. “அயலாந்தில் மிக நல்ல வெட்டுமரங்களும் இசை வான துறைமுகங்களும் உள. ஆதலினல், இசுப்பானியர் அவற்றிற்குத் தலைவர்களானல், அவர்கள் எமது மிக முதன்மையான சத்தியாகிய கடலுக்குச் சிறிது காலத்துளே தலைவராவர்” எனக்குறிப்பிடப் பட்டுள்ளது. போப்பாண்டவர் போர்க்கருவிகள் தாங்கிய படையெடுப்பாளரை அயலாந் துக்குத் தம்மாணையுடன் செல்லுமாறு தாமே அனுப்பி வைத்தார். அவர்களில் அறுநூறு பேரை ஆங்கிலேயர் சிமவிக்கிற் பிடித்துக்கொலை செய்தனர். இலிசபெத்தின் ஆணிலங்களில் அயலாந்து அபாயத்துக்கு நிலைக்களஞயிற்று. அங்கே பகைவர் அவரைத் தாக்கியபோது, அதைக் கைப்பற்றும் வேலையைச் சிறிதும் மனமில்லாது மேற்கொள்ள வேண்டிய வரானர். நிதி சம்பந்தமானவருவாயும், இராணுவமும் அவ்வேலைக்குப் போதாமையினல், அவரின் பதிலதிகாரிகள் மக்களை வாளாலும் பஞ்சத் தாலும் அழித்தற்கும், தமக்கு உரிமையாக்கிக் கொள்வதற்கு அதிகார மில்லாத மாவட்டங்களை வனந்தரமாக்குதற்கும் பெருங் கொடிய முறை களைக் கையாண்டனர்.
அதேசமயத்தில், ஆண்டுதோறும் அதிகமதிகமாகப் பகைமைமிக்குற் றிருந்த நாட்டுமக்களை நிலையாக அடக்கிவைத்தற்குரிய ஒரேயொரு வழி, ஆங்கிலரைக் குடியேற்றுவதேயென்று கருதி அரசாங்கம் அதனை ஆதரித் தது. இது இங்கிலாந்திலுள்ள பட்டினங்களிலும் பண்ணை வீடுகளிலும் வாழும் பிரபுக்களான வீரர், வாலிபர் ஆகியவர்களைக் கொண்ட பெருங்
தபிளினுக்குரிய திரினிற்றிக் கல்லூரி இலிசபெத்தாட்சியின் பிற்பகுதி வரையிலும் நிறுவப்பட்டிலது, -

இலிசபெத்துக்கால் மக்களும் அயலாந்தும் 鹭39
கூட்டத்தினர்க்கு வழி திறப்பதாயிற்று. இலிசபெத்துக்கால வல்லூறுகள் அயலாந்திற் பாய்ந்து இறங்க, அக்காலக் கழுகுகள் இசுப்பானிய கடலுக்குப் பறந்தனவென்று கூறப்பட்டுள்ளது ; ஆனல், அவைகள் பெரும்பாலும் ஒரே பறவையாயிருந்தன. அம்பிரி கில்பேட்டு, உவாட்டர் இராலி, இறிவெஞ்சு என்னும் கலத்துக்கிரன்வில், “ பெயறிகுயீன் ’ என்னும் நூலின் ஆசிரி யர் ஆகியோர் அயலாந்தைக் கைப்பற்றியவருள்ளும் அதைததம் நயத்துக் குப் பயன்படுத்தியவருள்ளும் சிலராவர். அமெரிக்காவிலும் அயலாந்திலும் சிறப்பும் கவர்ச்சியும் ஒக்கவிருந்த இருபுதிய களங்களைக் கண்டனர். அங்கே தனிப்பட்டவர் பெருஞ் செல்வமீட்டியும், தம் அரசியிடம் அரசாங்க சேவை புரிந்தும் போப்பாண்டவரையும் இசுப்பானியரையும் எதிர்த்து மெய்ச் சமயத்தை நிலைநாட்டக்கூடுமென்றும் எண்ணினர். இராலியும் இசுப்பென்ச ரும் தம் முன்னிலையிலிருந்த அயலாந்தின் சாதி சமயப் பிரச்சினைகளின் உண்மைகளைக் காணுதிருக்க, அனேக நூற்றண்டுகளாவதற்குமுன்னர் சாதாரண ஆங்கில மக்கள் தம் நாட்டில் அவற்றை விளங்கிக் கொள்வர் எனபது நடைபெறத் தக்கதன்று.
ஆகவே, இலிசபெத்தின் ஆட்சியில் கடைசி முப்பதாண்டுகளில் அய லாந்தின் வரலாறு முன்பு நெகிழ்ச்சியுடையதாயிருந்து பின் முந்நூறு ஆண்டுகளுக்கு இறுக்கமுறும்படி உருவாக்கப்பட்டது. நாட்டு மக்கள் கத் தோலிக்கச் சமயத்தில் புதியதோர் உற்சாகங் காட்டினர். அவ்வூக்கத்தை ஆங்கிலேயரிடத்தே கொண்ட உணர்ச்சிமிக்க வெறுப்பின் அறிகுறியாகக் கொண்டனர். மறுபுறமாக, பழைய ஆங்கிலேய ஐரிசுப் பிரபுக்களிலும் வேருண புதிய வந்தேறு குடியினர் புரட்டசுத்தாந்தத்தைத் தமது இனத்தின் உயர்வொடு ஒன்றுபடுத்தி அதனைக் காப்பாற்றுதலை இங்கிலாந்துக்கும் கடவுளுக்கும் ஆற்றும் பயபத்தியான கடமையென மதித்தனர். அன்று தொட்டு அயலாந்து பிரித்தானிய தீவுகளிலேயே சமய பத்திமிக்க பகுதி யாய் விளங்கிற்று.
இவ்வாருகிய நிலையில் அயலாந்திலிருந்த குலத்தினர் ஈற்றில் அயலாந்து நாட்டு மக்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்துக்கு மாறன வெறுப்பினல் எற்பட்ட ஐக்கியமும், சமயக் கிரியைகள், மதவுற்சாகம் என்பவற்றினலேற்பட்ட ஐக்கியமும் தொன்று தொட்டு இருந்து வந்த பழங்காலத்துக் குலப்பிரிவுகளை ஈற்றில் அழித்தற்கு போதிய வலிமை யுடையனவாயின; அவற்றை ஆங்கிலேயரும் புறத்தே நின்று அழித்தலில் ஈடுபடலாயினர். ஆங்கிலேயரான நிலச்சொந்தக்காரருக்கு வழிவிடுத்தற்காக நாட்டுக்குரிய மேல் வகுப்பினரை ஒழிக்கும் செயல் தியூடராட்சியில் தொடங் கப்பட்டு, குறம்வெலினல் முற்றுவிக்கப்பட்டதாகும். அச்செயல் உழவரா கிய அயலாந்துமக்களைச் சமயகுரவரைவிட வேறு தலைவரில்லாதவராகவும், இங்கிலாந்தின் பகைவரைவிடத் தமக்காக இரங்குவோரில்லாதவராகவுஞ் செய்தது.

Page 280
540 இங்கிலாந்தில் இயேசு சபையார்
இங்கிலாந்து புரட்டசுத்தாந்த நாடாக மாற விக்கிளியின் காலத்தி லேயே தொடங்கி இலிசபெத்தின் நீண்டவாட்சிக் காலத்தில் அம்மதத் தைப் பெரிதும் தழுவிற்று. அவர் அரசுகட்டிலேறியபோது, மக்களிற் பெரும்பகுதியானேர் பல கொள்கைகளினல் மலைவுற்றிருந்தனர். மேலும், கத்தோலிக்கருக்கு எதிரான கட்சி புரட்டசுத்தாந்தரைக் கொண்டுள்ள அளவுக்குப் புரோகித மறுப்புடையோரையும் இன்னுங் கொண்டிருந்தது. அரசி இறந்தபோது, ஆங்கிலேயருட் பெரும்பான்மையோர் தம்மை ஆர்வம் மிகுந்த புரட்டசுத்தாந்தரெனக் கருதினர். அன்றியும், பெருந்தொகை யினர் விவிலிய நூலையும் வழிபாட்டு நூலையும் ஆதாரமாகக் கொண்டு சமய வாழ்க்கையும் நடத்தினர்.
இலிசபெத்தின் ஆட்சியில் உண்ணுட்டுப் பூட்கை சம்பந்தமாய் இரு கட்டங்களிருந்தன. முதற் பன்னிரண்டு ஆண்டுகள் வரையும் வழிபாட்டு நூலொன்றே சட்டவதிகாரம் பெற்ற சடங்குகள் பற்றிக் கூறும் நூலா யிருந்தபோதும், உரோமன் கத்தோலிக்கரிடமிருந்து ஒரோவழி குற்றப் பணம் அறவிடப்பட்டபோதும் அவர்கள் வேறு வழியிற்றுன்புறுத்தப்பட்டி லர். அக்காலத்தில் சமயத்திற்காக எவருங் கொல்லப்பட்டிலர். மேலும், தனிப்பட்ட உரோமன் கத்தோலிக்க வழிபாட்டைப் பெரும்பாலும் உயர்ந்த அரசகரும அதிகாரிகளும் "கண்சாடையாய் விட்டனர். ஆனல், 1570-ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அரசியை மதவிலக்கம் செய்து, அவரின் குடிகளையும் அரசபத்திகாட்டுவதினின்று விடுதலை செய்தபோது, இரண்டாங் காலப்பகுதி தொடங்கிற்றெனலாம். அத்தொடு காலப் போக்கும் கடிது மாறிற்று. இயேசு சபை இயக்கத்தார் மாறுவேடந்தாங்கி இங்கிலாந்தினூடா கக் கூடம் விட்டுக் கூடம் செல்வாராயினர். சுவர்ப்பலகையின் பின்புறத்தே புரோகிதரின் வசிப்பிடங்களில் ஒளித்து, அமைதியான பழைய ஆங்கிலக் கத்தோலிக்கருக்கு ஐரோப்பிய சமயச் சீர்திருத்த எதிர்ப்பு இயக்கத்தின் புதிய உற்சாகத்தைப் புகட்டுவாராயினர். அவர்கள் கத்தோலிக்கப்பெருஞ் செல்வர் படிப்படியாகப் பழக்கப்பட்டுவந்த ஆங்கிலச் சடங்கு விதிகளின் அமைதியான போக்கைத் தடுத்தனர். இயேசு சபை இயக்கத்தாது தூதுப் பணி சமயம் பற்றியதாகும் ; ஆனல், அது வெற்றிபெறுமேயானல், அத்துதுப்பணியினல் எற்படும் அரசியல் விளைவு யாதெனில் அரசி பதவி யினின்று விலக்கப்படுதலோடு, புதிய இங்கிலாந்து உண்ணுட்டிலும் கட லுக்கப்பாலும் மனம் விரும்பி ஆற்றவிருந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி யிடுவதுமாகும். இயேசு சபை இயக்கத்தார், இலிசபெத்தோடு போராடிய வரும், தம் போர்ப்படைகளைக் கொண்டு அயலாந்தைத் தாக்கியவருமான போப்பாண்டவராகிய அரசர்க்கு ஆன்மீகம் சம்பந்தமானவற்றில் பணிய வேண்டுமென்று போதித்தனர். அரசும் நாடும் தூதுப்பணியாற்றிய இயேசு சபையினரைக் கொடுமையாகத் தாக்கின. ஆங்கிலவரசுக்குத் துரோகிக ளென அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆனல், அவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர்த் தியாகிகளெனத் தம்முடனெத்த சமயத்தவரால்

ஆங்கிலாந்தில் இயேசு சபையார் 54.
மதிக்கப்பட்டனர். இங்கிலாந்திலிருந்த இயேசு சபை இயக்கத்தாரில் மிகப் புகழ் பெற்ற இருதலைவருள் ஒருவராயிருந்து அரசியலினுஞ் சமயத்திலே கூடிய அக்கறைகாட்டிய காம்பியன் என்பவர் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டார். அதேசமயத்தில் ஐயமற்ற துரோகியான பாசன்சு என்னும் மற்றெரு தலைவர் ஒர் இசுப்பானிய படையெடுப்பைத் தூண்ட வெளியே தப்பி
யோடிவிட்டார்.1
இலிசபெத்தின் ஆட்சியில் ஒவ்வோராண்டுக்கும் சராசரி நான்கு கத் தோலிக்கர் துன்பப்பட்டனர். இதற்கு மாறக மேரியின் ஆட்சியில் ஒவ்வோராண்டுக்கும் ஐம்பத்தாறு புரட்டசுத்தாந்தர் துன்பப்பட்டனர். மேலும், அரசத்துரோகமே குற்றச்சாட்டாக விருந்ததன்றி, புறநெறியாள ராயிருப்பது குற்றமாகக் கருதப்படவில்லை. இது ஒரு துன்பமயமான நிகழ்ச்சியாகவிருந்தது. அரச பத்தியும் நாட்டுப் பற்றுமுடையராய் மகிழ்ச்சி யுடனிருக்கக் கூடிய ஆங்கிலக் கத்தோலிக்கர் பலர் தம் சமயத்துக்குத் தொண்டாற்ற ஆசைப்பட்டனர். அவர்கள் தம் ஆன்மீகத் தலைவரான போப்பாண்டவர்க்கும் இம்மைத்தலைவரான அரசிக்குமிடையே அகப்பட்டு நெரிபட்டனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இருபத்திகளும் ஒன்றினுக் கொன்று முரண்பாடானவையென்று இருதிறத்தினருங் கூறிவிட்டனர். மாறுபாடான பத்தி பற்றியெழுந்த மிகப் பெரிய இந்தத் தகராறில் குற்றமற்ற பலர் பலியாயினர். அந்நேரத்தில் எவ்வித இணக்கத்திற்கும் வரமுடியாதிருந்தது. இலிசபெத்துடைய ஆட்சியின் நடுப்பகுதியில் இங்கி லாந்து முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்தது. அன்றியும், முற்றுகையிடப் பட்ட ஒரு பட்டினத்தின் ஒழுங்குமுறைமையை ஓரளவிற்கு ஏற்றுங் கொண் டது. குற்ற விசாரணை, செயின்று பாதோலமியூவின் கொலை, அரசரைப் பதவியினின்று விலக்கிக் கொன்றமை ஆகியவற்றில் கையாண்டுவந்த
58.
முறைகளைப் பயன்படுத்தலை உரோமன் திருச்சபை உலகமெங்கணும் நிறுத்
தும்வரை, அதன் பயங்கரமான தடைக்குளமைந்திருந்த நாடுகள் அதன்
தூதுப் பணி இயக்கத்தினர்க்குப் பொறுமை காட்டத் துணிந்தில. அவ்வாறு செய்திருப்பின், ஆயுதந் தாங்கிய இரக்கமற்ற வீரனெருவன் முன்னே வெறுங்கையனெருவனைச் சண்டைசெய்ய விட்டு, அதனுல் தோல்வியை வரவழைப்பது போலாகும்.
இவ்வாருன நிலைமையில், இங்கிலாந்தில் புரட்டசுத்தாந்தத்தின் பிரசாரம் விரைவாகப் பரம்புவதாயிற்று. அச்சங் கொண்டிருந்த அதிகாரி
பாசன்சு என்பார் இங்கிலாந்தை வென்று அவ்வெற்றியை எவ்வாறு பயன்படுத்தலா மென்று விவாதிக்கும்போது, வினவுவது வருமாறு :-“ எவ்வகையான, அல்லது எம்முறை யில் குற்றவிசாரணை நடத்த வேண்டும் ? இசுப்பெயினில் நடக்கும் முறையா ? (அங்கு அதன் கண்டிப்பைச் சிலர் வெறுக்கின்றனர்) அல்லது இத்தாலியின் பல பாகங்களிலும் நடக்கும் முறையா? (அங்கு அதன் பற்றின்மையைப் பலர் கண்டிக்கின்றனர்) *. கத்தோலிக்கத் தலைமைக் குருமார் பொதுமக்கள் சபைக்கு நடைபெறும் தேர்தலை மறுக்க அல்லது உறுதிப்படுத்த அதிகாரம் பெற்றிருக்க வேண்டுமென்கிருர், w

Page 281
1583.
542 இங்கிலாந்து புரட்டசுத்தாந்தத்தை எற்றல்
கள் அதற்கு ஆதரவளித்தனர். நாட்டுப் பற்று, இசுப்பெயினுக்குப் பணி யாமை, கடலாதிக்கம், திரேக்கின் அருஞ்செயல்கள், கொலைஞரிடமிருந்து அரசியைக் காத்தலாகியவற்றையெல்லாம் புரட்டசுத்தாந்தப் பிரசாரத் துடன் இணைந்தவையென ஆங்கிலேயர் மதித்தனர். மாற்றியமைக்கப்பட்ட கல்விக் கழகங்களோ, இராசுமசினதும் கொலற்றினதும் மனேநிலைக்குப் பொருந்தக் கற்பித்த உயர்தரவிலக்கியம், விவிலிய நூல், விஞவிடை நூலாகியவற்றில் இளைஞரை நெருங்கிப் பயிலச் செய்தன. அதனல், புதிய ஆங்கில இலக்கிய மறுமலர்ச்சிக்குரியவரும், புரட்டசுத்தாந்த அங்கிலிக்க சமயத்து வீரருமான மக்கள் தோன்றினர். உரோமோடு நடந்த பெரும் போராட்டத்திடையே ஆங்கிலக் கத்தோலிக்கச் சமயம் வளரமுடியாது போயிற்று. மேலும், புதிய சந்ததியாரான குருமாரும் கலைஞரும் ஆர்வம்மிகுந்தபுரட்டசுத்தாந்தராயிருந்தனர். பியூரித்தானி யரிற் பலர் திருச்சபையிற்றனே இருந்தனர். மக்களைப் புரட்டசுத்தாந்தத் துக்கு மாற்ற அத்திருச்சபையைப் பயன்படுத்தினர். மேலும், திருச்சபையின் சடங்குமுறைகளையும் ஆட்சியையும் தம்நோக்கத்தோடு பெரிதும் பொருந்தும் படி காலந்தாழ்த்தாது மாற்றுவதற்கும் அவர்கள் விரும்பினர். இலிச பெத்து திறமையுள்ள விற்றுகித்துவைக் கந்தபெரிக்குத் தலைமைச் சமயக் குருவாக்கும்வரை, தம் இயல்பூக்கத்திற்கும் பூட்கைக்கும் தக்கவாறு கத்தோலிக்கத்தை மிகக் கண்டிப்பாக எதிர்த்து நிற்காத பிசப்புமாரைப் பெறுதல் அவருக்கு உண்மையில் கடினமாயிருந்தது. மேலும், அத் தலைமைக்குருவின் உதவியைக் கொண்டு, திருச்சபை பியூரித்தன் மய மாதலைக் கடுமையாக அரசி எதிர்த்து நின்ருர், விற்றுகித்து உண்மையில் கல்வின் கொள்கைகள் பலவற்றைப் பின்பற்றியவராவர் ; ஆனல், அவர் திருச்சபை ஆட்சியைக் குடியாட்சிப் படுத்த மறுத்தார். மேலும், பாராளு மன்றத்துக்கும், பொதுமக்களுக்கும், பிரசுபித்தீரியன் குருமாருக்கும் மாருய், அரசுக்கும் குரு வாட்சிக்குமுரிய அதிகாரத்துக்காக அவர் உறுதி யோடு நின்றர்.
இலிசபெத்தின் ஆட்சி ஆரம்பத்திலிருந்த ஆங்கிலக் கோவிற்பற்றுத்திருச்சபைகளின் கீழ்க்காணும் வரலாறு அரிசன் என்பார் எழுதியதாகும் :- கோயிற் பாடகருக்கும் கோயிற் சபையினருக்குமிடையே பெரும் பிரிவு வழக்கமாக விருந்ததென்றலும், இப்பொழுது அது மிகச் சிறியதாகும் ; அல்லது சிறிதுமில்லையெனலாம். மேலும், உண்மையைக் கூறவேண்டிய அவசியம் சிறிதுமில்லை ; எனெனில், போதகர் மககளைப் பார்த்துக் கொண்டு கோவில் நடுப்பீடத்தில் பரவுபலகைகளால் அதற்கென அமைக்கப்பட்ட சிறிய கூடாரத்தில் நின்று தேவாராதனையை வழக்கமாக நடத்துவதனலென்க. இதனல், பாமரர் பலவகையான கீதங்களையும் வழக்கமான செபங்களையும் மனப்பாடம் பண்ணுகிறது மாத்திரமன்றி, வாசிக்கக் கூடியவர்கள் அவரோடு சேர்ந்து வேண்டுதலுஞ் செய்கின்றனர். ஆகவே, முழுச்சபையாரும் ஒரே நேரத்தில் தம்மன்குட்டுக்களை ஆவலும் ஆர்வமும் மிகுந்த முறையில் தங்களுடைய திருச்சபையின் முழு நன்மைக்காக சீவனுள்ள கடவுளுக்குச் செலுத்துகின்றனர்”. இதுதான் கோவில்கள் பலவற்றிலும் பின்பற்றப்படுதற்கு வேண்டிய இலட்சியமாகும். இவ்வழக்கம் இலிசபெத்து அரசாட்சியில் வளர்ந்து செல்வதாயிற்று.

இலிசபெத்துக் காலத்திற் சுதந்திரத்தின் எல்லே 543
திரும்பி வருங் கத்தோலிக்கத்தையும் உரிமையின்றிப் புகும் பியூரித் தன் சமயத்தையும் தடுக்க இலிசபெத்து பழைய திருச்சபைமன்றங் களினதும் அதிகாரிகளினதும் அதிகாரத்தைப் பயன்படுத்தினர் ; இச் செயலுக்கு உதவியளித்தனர் உயர்ஆணைக்குழுவினர். இக்குழுவானது சமயம்பற்றிய ஒருவகை “ உடு நீதிமன்றமாகும் ”. இதனுல் அரசு திருச் சபைமீது கொண்ட புதிய அதிகாரம் மிக உறுதியாய் நாட்டப்பட்டது. உயர் ஆணைக்குழுவானது கோமறைக் கழகத்தின் ஒரு கிளையாயிருந்தபோதி லும், அது பெரும்பான்மையான கழக உறுப்பினரிலும் மேலாக அரசியின் பிரதிநிதியாயிருந்தது. உண்மையாக அவர்களிற் பலர், செசிலைப் போன்று, சத்தியஞ் செய்துள்ள குற்றவாளியைக் குறுக்குவிசாரணைக் குட்படுத்திய அதன்முறை உரோமுக்குரிய விசாரணைச் சபையை நினைப் பூட்டுவதாகக் கருதி அதனை வெறுத்தனர். மேலும், ஆர்வமிக்குடைய புரட்டசுத்தாந்தரைப் துன்புறுத்தலாகிய அதன் போக்கு, அரசுக்கு அபா யம் விளைக்குமென எண்ணினர். ஆயினும், அரசி தம் கழக உறுப்பினரின் அறிவுரையையும் நம்பிக்கைக்குரிய பொதுமக்கள் சபை ஆமோதித்த கருத்தையும் அறிந்துங்கூட, தம் எண்ணத்தை நிறைவேற்றுவாராயினர். அதனுல் திருச்சபையின் அங்கிலிக்கன் பண்பைக் காப்பாற்றுவாராயினர் ; அக்காலத்தில் ஐரோப்பாவினதும் கொத்துலாந்தினதும் சீர்திருத்தத்தோடு அதனைச் சேர்த்துக்கொள்ள அல்லது புதுப் பிரிவுகளினல் அதனை ஒரு வேளை குலைக்கப் பொதுமக்கள் சத்திகள் தோன்றலாயின.
இலிசபெத்தின் அரசதிருச்சபையில் புரட்டசுத்தாந்த கத்தோலிக்க உயிர்த்தியாகிகளிருந்தனர். “ மாப்பிறிலேற்று” என்னும் மதக்கட்டுரை களின் ஆசிரியரான பென்றி முதலிய தூய்மைச் சமயவாதிகள், தமக்கு ஆபத்து நேருமென்றும் பாராது பிசப்புமாரைக் கொடுமையாகத் தாக்கினர். உயர் குருவாட்சியைத் தாக்குதல் அரசியற் சட்டவிரோதச் செயலென்பது அரசியின் கருத்தாகும் ; ஏனெனில், அது அரசிலும் திருச்சபையிலும் அரசியார் நிறுவிய சமநிலையைப் பாதிக்குமென்பதனலென்க. தோமசு காட்டிறைற்றின் ஒழுக்கமிக்க பிரெசுப்பித்தீரிய பிரசாரந்தானும் கோப மூட்டி அரசியைத் திகிலடையைச் செய்தது. காட்டிறைற்று சிறையிலிடப் பட்டார் ; பென்றியும், பாரோவும், கிறீன்வூட்டும் அரசதுரோகக் குற்றக் காரரென்று தூக்கிலிடப்பட்டனர்.
தம்மனச்சாட்சிக்காகப் பிராணத்தியாகஞ் செய்த மக்களும் உளர். அவர்களின் கதிக்கிரகங்கவோ, பொறுமையைப் புகழவோ உண்ணுட்டில் அல்லது வெளிநாட்டில் பெருங் கட்சியொன்று அவர்க்கிருந்திலது. ஆனல், இயேசு சபை இயக்கத்தாரிலும் பியூரித்தானியரிலும் பார்க்க அவர் கள் அரசுக்குமாருன குற்றம் எதுவுஞ்செய்திலரென்பது மிகத் தெளி வாயிற்று. கீழ் அங்கிலியாவில் “ பலவகைப்பட்ட வெறுப்பான பரநெறிக் கொள்கைகளுக்காகப் ” பலர் எரிக்கப்பட்டனர்; ஏனெனில், அவர்கள் திரி யேகத்துவத்தின் வைதிகக் கொள்கையையிட்டு ஐயங்கொண்டதஞ்றலென்க.
1590593.

Page 282
1579.
544 இலிசபெத்துக் காலத்திற் சுதந்திரத்தின் எல்லை
அத்தகைய மக்களிடத்து கத்தோலிக்கரோ, கல்வினின் கொள்கையுடைய யரோ, அங்கிலிக்கன் கிறித்தவரோ அக்காலத்திற் சிறிதும் இரக்கங்கொண் டிலர். அவர்கள் அரசு காரணமாகப் பலியாக்கப்படவில்லை; ஆனல், பொறையின்றிய சமய விரோதமும் மத்திய காலத்திருந்த பரநெறிக் கொள்கையினரை வேட்டையாடும் வழக்கம் இன்னும் நிலைத்திருந்ததுமே அதற்குக் காரணமாகும். -
தியூடவரசாங்கம் தன் விருப்பத்துக்குத் திருச்சபையை வயப்படுத்திய பின்னர், தன் எல்லைகட்குட்பட எல்லாவற்றிலும் ஆதிக்கஞ் செலுத்தவல்ல இக்காலவரசு போல், பாராளுமன்றத்தில் திகிலுண்டாக்கக்கூடியவாறு முடி மன்னன் அதிகாரஞ் செலுத்துவானுயினன். அவ்வாறனவதிகாரம் இசுப் பானிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஒருவேளை தேவைப் பட்டிருக்கலாம் ; ஆனல், அது தனிப்பட்டவர் சுதந்திரத்தின் உறுதி யான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. மத்திய காலமுறைமைகளின் மறை வால், பொருளியல், அறிவியற் சுதந்திரம் விரிவடைவதாயிற்று. ஆனல், சமயத்திலும் அரசியலிலும் ஏலவே அழிக்கப்பட்டுள்ளவற்றைப் போல் தொல்லைகொடுக்கும் விதிகளை மீண்டும் சிறிது காலத்திற்கு விதித்தது. கத்தோலிக்கரும் பியூரித்தானியரும் தத்தம் மனச்சாட்சியின்படி கட வுளை வணங்குதற்கு உரிமை அளிக்கப்பட்டிலர். மேலும், அரசியலில் எதிர்க்கட்சிக்கு இடமளிக்கப்படவில்லை ; அரசாங்கத்தை எவரும் கண்டிக்க முடியாது. அரச பத்தியுள்ள யோன் தப்பிசு என்பாருங்கூட, பிரான்சிய இளவரசனன அலங்கனை அரசி மணஞ் செய்யக்கூடாதென்ற அறிவுரை கொண்ட சிறு துண்டுப்பிரசுரத்தை எழுதியதற்காகக் கொலைப்பணியாளனல் வலதுகை வெட்டப்பட்டார். வெட்டப்பட்ட குருதிதோய்ந்த அக்கைத்துண் டைச் சுழற்றிக்கொண்டு தூக்குமேடையினின்று, “ அரசி நீடூழி வாழ்க’ வென்று அவர் கதறினர். அந்தத் தந்திரமும் விந்தைப் போக்குமுள்ள பெண்ணரசிக்கும் அவர் தம் கள்ளங்கபடில்லாத குடிகளுக்குமிடையிருந்த தொடர்பு அத்தகையது. அலங்கனை மணஞ்செய்ய எப்போதாயினும் அவ ருக்கு எட்டுணைக் கருத்துமிருந்ததில்லை. ஆனல், ஒரு பெண்ணுக்குரிய உயர்ந்த அரசியற் றந்திரத்தின் இரகசியங்களிற்றலையிட பியூரித்தானியப் பெருஞ் செல்வரெவரும் அனுமதிக்கப்படவில்லை.
அரசியலோ சமயமோபற்றிய சுதந்திரத்தைத் தனிப்பட்டவர் இன்னும் பெருதிருந்ததால், முடிக்கும் பாராளுமன்றத்துக்குமிடையே பிளவு ஏற்படின், அவ்விருவகைச் சுதந்திரமும் உருவாகலாம். எனெனில், இங்கிலாந்து வல்லாண்மையுடைய ஒரு நாடன்றதலினலென்க. முடியி னதிகாரம் மக்களின் ஆதரவிலே தங்கியிருந்ததேயன்றி அரசவலிமையி லன்று. பொதுநன்மைக்காகப் பலவந்தவன்மையை அரசு LJU 16ö7 படுத்தவேண்டுமென்று மக்கள் இன்னும் விரும்பினர். ஆனல், பாராளு மன்றத்தினர் 1559 ஆம் ஆண்டில் தாமேதிருப்பிப் பெற்றுக்கொடுத்த

செகப்பிரியரும் மறுமலர்ச்சியும் 545
அரசியின் திருச்சபையதிகாரத்தை மறுக்காதிருந்தும், பியூரித்தானியர்க்கு மாருய் அரசி அதனைப் பயன்படுத்தியதைக் கண்டித்தனரென்பது குறிப் பிடத் தக்கதாகும். தனிப்பட்டவர் தீர்ப்புடனும் கட்டுப்பாடற்ற சிந்தனைச் சத்திகளோடும் இணக்கமுற்றிருந்ததனலேயே ஆங்கில வரசு மத்தியகாலத் திருச்சபையிலிருந்து சமயவாதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. அது, தான் புதிதாகப் பெற்ற அதிகாரத்தின் ஒழுக்கம் சார்ந்த பிறப்பிடத்தை நிலையாக மறுக்கமுடியாதிருந்தது. பியூரித்தானியரும் கத்தோலிக்கரும் அரசறிஞர்க்கு சிறிது காலத்துக்கு அபாயமுடையராயும் நெடுங்காலத் துக்குத் தொல்லை கொடுப்போராயுமிருக்கலாம். ஆனல், மனச்சாட்சியின் உயர்ந்த அறக்கோட்பாட்டின் பெயரில், அரசு, பாராளுமன்றம் என்பவை பிறப்பித்த சமயக்கட்டளைகளை எதிர்த்து நிற்கும் அவர்களின் உரிமைக் கோரிக்கை ஈற்றில் செல்வாக்குப் பெறுதல் வேண்டும். தனிப்பட்டவர் தீர்ப்புக்கு முறையிடுதல் மத்திய காலங்களிலிருந்த ஐரோப்பிய திருச்சபை யின் மிகப் பெரிய அமைப்புக்கும் மிகத் தொன்மையான பெருமிதத்துக் கும் மேலாக இங்கிலாந்தில் வெற்றிபெற்றிருந்தால், அது, சமயசம்பந்த மான விடயங்களில், இத்தீவாகிய அரசின் உலகியல் அதிகாரிகளிலும் எத் துணை வலிமை மிக்கதென்பதை நிச்சயமாய் உறுதிப்படுத்தியிருத்தல் வேண் டும். ஆகவே, இன்னுமொரு நூறண்டிற்கு கலகம், துன்புறுத்தல், கொலையாகியவை நடைபெற்ற பின்னர், அரச திருச்சபையுள் ஆங்கிலேய ரெல்லோரையும் அடக்கிவைக்கும் முயற்சி கைவிடப்படுவதுமன்றி, பென் றியோ, பாசன்சோ அன்றேல் விற்றுகித்துவோ, செசிலோ கனவிலும் நினைத்திராத மிகப்பரந்த சுதந்திரமொன்று மலர்ச்சியுறுவதுமாகும்.
ஆனல், அரசியற் சமயச் சூழ்நிலைகளுக்குப் புறம்பே அறிவும் கவிதையுஞ் சம்பந்தமான சுதந்திரம் இலிசபெத்தின் ஆட்சி முடிவில் பூரணவிரிவடைந் திருந்தது. ஆய்வுப்பண்புடனும், கிரேக்க உரோமானியச் சிந்தனைகளின் பழைய சுதந்திரக் காட்சியுடனும் செறிந்த மறுமலர்ச்சி, இத்தாலியிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு இங்கிலாந்தில் நாட்டப்பட்டதாகும். இத்தாலியில் அது இசுப்பானியர், இயேசு சபை இயக்கத்தார் ஆகியவர்களின் ஆதிக்கத்தால் விரைவாக உலர்ந்து கொண்டிருந்தது. அதனைப் புலவர் ஒம்பிக்காத்து, ஆடன் காட்டிலிருந்த ஆங்கில மரங்களில் ஒட்டிவிட, அது இங்கிலாந்தில் மறுபடியும் மலர்ந்து வளர்வதாயிற்று. அங்கு மனத்தின் கற்பனை ஆற்றல் கட்கு அது உண்மையில் கட்டுப்பாடற்றதாயிருந்தது. எமது காலத்தில் அது மிகுந்த அறிவுப் பாரத்திலகப்பட்டும், எந்திரயுகத்துக்கடுமையான மெய்யியல் பினல் தடைப்பட்டு இருப்பதிலும் அப்போது மிகுந்த கட்டுப்பாடற்றதா யிருந்தது. செகப்பிரியரும் அவர்தம் நண்பரும் சமய, அரசியல் இகலாட்டு கள் நிறைந்த அபாயமான உலகத்துக்கப்பாலிருந்துகொண்டு, ஒருவேளை மீட்டும் பெறமுடியாத சுதந்திரமனவெழுச்சியைத் தத்தம் பரந்த கற்பனை யுலகில் அனுபவித்துக் கொண்டிருந்தனர். . . . . .

Page 283
546 ஆங்கில விவிலியநூல்
ஆனல் செகப்பிரியரை இன்று நாம் மேன்மைமிகப்படைத்தவராகக் கொள்ளினும், தங்காலத்தில் அவர் மிகுந்த செல்வாக்குடையராயிருந் திலர். இலிசபெத்தின் ஆட்சி முடிவில் நூல்களிலெல்லாம் சிறந்ததாயிருந் தது விவிலிய நூலேயாகும். ஆயினும் இன்று வழங்கும் விவிலிய நூலின் அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பானது முதலாம் சேமிசின் பிசப்புமாரா லேயே, அரசியின் இறப்பைத் தொடர்ந்த ஆண்டுகளில் முறைப்படவெழுதப் பட்டது. சிட்டினியின் அல்லது இசுப்பென்சரின் நூல்களைக் கற்ற அல்லது குளோப்பு என்னும் அரங்கத்தில் செகப்பிரியரின் நாடகங்களை நடிக்கக் கண்ட ஒவ்வோராங்கில மகனுககும் கடவுள் வாக்கென மிகுந்த கவனத் தோடு விவிலிய நூலைக் கற்றவர் அல்லது கேட்டவர் நூற்றுக்கணக்காக விருந்தனர். வீட்டில் அந்நூலே ஒயாது கற்றதனல் எறத்தாழ மூன்று நூற்றண்டுகளாகத் தேசியப் பண்பிலும், கற்பனையிலும், அறிவிலும் உண்டான விளைவு, எம்வரலாற்றில் உள்ள எந்த இலக்கியசம்பந்தமான இயக்கத்தினுலும், அல்லது செயின் ஒகத்தீனின் வருகைதொட்டு உண்டான சமய இயக்கத்தினலும் நிகழ்ந்த விளைவிலும் மிகப் பெரியதாகும். கற்றற்கு வேருென்றுமில்லாதிருந்த மக்கட்கு வரலாற்றுப்புத்துலகும், கவியுலகும் அந்நூலின் கண்ணே தோன்றின. உண்மையில், சமுதாய வகுப்புக்களி டையே, எதனையும் வாசித்துச் சிந்திக்கும் வழக்கத்தை அது உண்டாக்கியது. மேலும், அது தகரவேலை செய்பவனெருவனை ஆங்கில மொழியிற் பெரும் வல்லவனுக்கியது. கீழ் மத்திய தரைக்குரிய நாடுகளில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்களின் செயல்களும், சிந்தனைகளும், எம் மொழி சிறிது காலவளவில் பூரண நிலை எய்தியிருந்த பொழுது, விவிலிய நூல் வாயிலாக ஆங்கிலத்தில் புகுத்தப்பட்டு, அவற்ருல் பிரித்தானியரின் பேச்சும் சிந்தனையும், எமது காலத்தில் பொதுச் செய்திகள் நிறைந்த செய்தித்தாள்கள் எம் பேச்சையும் சிந்தனையையும் எவ்வாறு பாதிக்கின்ற னவோ அவ்வாறே பாதிக்கப்பட்டன. ஆங்கில வரலாற்றில் விவிலிய நூலா னது எபிரேய இலக்கியத்தின் மறுமலர்ச்சியெனக் கருதப்படலாம். அது உயர்தர இலக்கிய மறுமலர்ச்சியினும் மிகப் பரந்ததும் வலிமைமிக்கது மாகும். இவ்வுயர்தர இலக்கிய மறுமலர்ச்சியே, சீர்திருந்திய உயர்தரப் பள்ளிகளின் உதவியால் திறம்படக் கற்றேர் தோன்றுவதற்குப் பின்னணி யாய் விளங்கிற்று. விவிலிய நூலும் உயர்தர இலக்கியங்களும் ஒன்று சேர்ந்து, பிரித்தானியரின் கடற்பிரயாணங்கள் அவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தை விரிவாக்கி உற்சாகமூட்டியதுபோல, அவர்தம் பண்பாட்டினை யும் சிறக்கச் செய்தன.
ஆமடாப் படையெழுச்சிக்கும் உள்நாட்டுப் போருக்கும் இடைப்பட்ட காலத்திலிருந்த அருட்புலமைக்கும் நாகரிகத்திற்கும் எதுக்களாயிருந்தவை இசையும் இசைக்கவிகளுமாகும். அவை ஒருங்கே முன்னேற்றமடைந்தன. செகப்பிரியரின் நாடகங்களிற் காணும் பாட்டுக்களைப் போல மிகச் சிறந்த அனேக பாக்கள் இசையொடு பாடுவதற்கென எழுதப்பட்டன. இலிசபெத்

ஆங்கில இசையும் பாட்டும் 547
தின் காலத்து இங்கிலாந்தை இசைக்கு ஈடும் எடுப்புமில்லா நாடென ஐரோப்பா ஒப்புக்கொண்டது. செருமானிய யாத்திரிகர் தாம்"கேட்ட இனி மைமிக்க கானத்தைப் பற்றி வியப்பொடு குறித்துள்ளனர். ஏனெனில், இங்கிலாந்து முழுதிலும் இசையாளர் சிறிய கிராமங்களிற்ருனும் அற்ப மான பணம் பெற்று இசைபாடக் காத்திருக்கும் வழக்கமிருந்ததன லென்க. தியூடர் காலம் முழுவதும் கத்தோலிக்க வழிபாட்டுக்காக அல்லது அங்கிலிக்கன் சமய வழிபாட்டுக்காக இங்கிலாந்திலே திருச்சபைக்குரிய சிறந்த இசை வேறுபாடின்றி ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி இயக்கம் சமயத்தொடர்பற்ற இசையை புதியதோர் உற்சாகத்தோடு வளர்த்து அது இலிசபெத்தின் ஆட்சியில் உச்சநிலை எய்தும்படி செய்தது. பேட்டு என்பார் தம் திறமையினல் சமயத்துக்கும் இம்மைக்குமுரிய சூழ்நிலையை கண்னேட்டமின்றி அலங்கரிப்பாராயினர். மேலும், ஆயரது காதற் பாடலுக் குரிய அக்காலத்திலே திறமையுள்ள இசையாளர் குழுக்கள் செழிப்புற்றி ருந்தன. தியூடர், சுதுவாட்டர் காலங்களில் இசைக்குரிய இடமாயிருந்தது இசையரங்கமன்று ; வீட்டிலுள்ள அடுப்பண்டையேயாகும். செய்தித்தாள் களில்லாமலும், நூல்கள் குறைவாகவும் சிந்தனைக்கரியனவாகவுமிருந்த அக்காலத்திலே, வளர்ச்சியுறும் நடுத்தரவகுப்பினர், பியூரித் னியச் சமயக் குடும்பத்தினரும் உட்பட, தம் வீடுகளில் வாயால் பண்ணிசைப்பதை யும் கருவிகளில் இசை மீட்பதையும் ஊக்கமுடன் பயில்வாராயினர். அச் சகம் இசையை வெளியிட்டமை அப்பழக்கத்தைப் பரவச் செய்வதற்கு உதவியளித்தது. மேலும், இலிசபெத்துக்கு இசைக் கருவிகளிலிருந்த திற மையினல் அவர் தம் குடிகளுக்கு முன்மாதிரியாயிருந்தனர்.
பாட்டும் இசையும் மக்கள் எல்லோரினதும் ஆக்கமும் உரிமையுமாயிருந் தது. கம்மியன் வேலைசெய்யும்போது பாடுவான் ; பொருள்களைக் கொண்டு திரிந்து விற்பவன் வழியிற் பாடுவான் ; இடைச்சி செடிவேலி மறைவில் இன்பமயமாகப் பாடுவதையும் அல்லது வடநாட்டில் எல்லைப்புறத்தில் நடை பெற்ற சண்டையையும் கொள்ளையிடுதலையுங் குறித்து துன்பமயமான சிந் துக்களைத் தாழ்ந்த குரலில் பாடுவதையும் கேட்கலாம். பொதுவான நாடகம் செய்யுள் வடிவத்தில் அமைந்திருந்தது. மேலும், அக்காலத்தில் அது மக்களால் விரும்பவும் பட்டது. ஏனெனில், அது மக்களின் கற்பனைத் திறனைக் கவர்ந்ததனலாகுமென்க. கவிதையானது அறிவுபடைத்த குழுவி னர்க்கு மாத்திரமுரியதொன்ருயிருந்திலது. அவ்வாறே இசையும் அதனை இயற்றிய அந்நியரோடு அதுகாறும் முக்கிய தொடர்பு கொண்டுள்ளதாயு மிருந்திலது. செகப்பிரியரும் மிலிற்றணும் தாம் தோன்றவேண்டிய காலத் திற்றேன்றியமை தற்செயலாய் நிகழ்ந்ததன்று. உள்ளத்தின் சிறந்த உவகைகளிலீடுபட்டு அவற்றில் மகிழ்தற்குப் பயின்ற கண்காதுகளோடு இயற்கையின் மத்தியில் இடையருது வாழும் மக்களிடத்தே செகப்பிரியரின் செய்யுட்டிறனின் பூரண விரிவு சமூகத்தில் இயல்பாகவளர்ந்த விளைவின் ஓர் அமிசமாக விளங்கியது. இன்றையவுலகில் பத்திரிகாசிரியகிைய ஒருவன்
தோ. 1538,
623.

Page 284
563.
548 ஆங்கில இசையும் பாட்டும்
சிறந்த ஒரு கதாசிரியனவதை இது ஒக்கும். இலிசபெத்தரசி இறந்து ஐந்தாண்டுகளுக்குப்பின் பிறந்த யோன் மிலிற்றணின் வாழ்க்கையிலிருந்து, அக்கால ஆங்கிலப்பண்பாட்டின் முக்கிய மூலப்பொருள்களான இசை, உயர் தர இலக்கியங்கள், விவிலிய நூல் என்னும் மூன்றும் “ இங்கிலாந்தில் கடவுள் அளித்த இசைக்கருவி ஒலியைத் ’ தூண்டி விடுதற்கு எவ்வாறு ஒருங்கு சேர்ந்தனவென்பதைத் தெளிவாய் அறியலாம்.
இலிசபெத்தின் ஆட்சி தொடங்கி மூன்றம் சோச்சின் ஆட்சியில் நிகழ்ந்த கைத்தொழில் மாற்றங்கள் வரையும், சமூகத்தின் பொருளாதார அமைப்பு சில வகைகளில் மிகுந்த நல்வாய்ப்புடையதாயிற்று. ஆங்கிலேயர் இன்னும் கிராமிக மக்களாகவேயிருந்தனர். அவர்கள் இன்னும் இயற்கையோடியைந்த வாழ்வுடையராயிருந்தனர். ஆனல் அவர்கள் மத்திய காலத்தில் வாழ்ந்த நாட்டுப்புறத்தாருக்குரிய கொடிய வறுமையிலும் அறியாமையிலுமிருந்து ஓரளவிற்கு விடுதலை பெற்றிருந்தனர்.
கைத்தொழிலும் கமத்தொழிலும் நடைபெற்று வந்த நாட்டுப்புறப் பட்டி னங்களிலும் கிராமங்களிலுமிருந்த பெரும்பான்மையான குடிமக்கள் பயிற்சி பெற்ற கம்மியராயிருந்தனர். பழைய தேசிய வாழ்க்கைக்கு ஏறத்தாழக் குடிவாரமுறை திறவுகோலாயிருந்த அளவுக்கு, புதிய தேசீய வாழ்க் கைக்குத் தொழில் பயில்முறை திறவுகோலாயிருந்தது. தொழில் பயிலும் முறை அவ்வவ்வூரில் நடத்தும் விதத்துக்கும் நகரசபையின் வற்புறுத்த லுக்கும் விடப்பட்டிலது ; ஆனல், அது நாட்டிலும் நகரத்திலும் ஒரே தேசிய தன்மைத்தாயிருக்குமாறு இலிசபெத்தின் கம்மியர் நியதிச் சட்டத் தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சட்டம் இருநூறண்டுகளுக்குமேல் பெரிதான மாற்றமெதுவுமின்றி நடைமுறையிலிருந்தது. தொழிற் பயிற்சிக் காலமான எழாண்டுகளையும் கழித்தபின்னரே எவரும் முதலாளியாக அல்லது தொழிலாளியாகத் தம்மை நியமித்துக் கொள்ள முடியும். அவ் வாருக, நாட்டின் இளைஞர், தொழினுட்பக் கல்வியையும் சமூக நன்னடத் தையையும் பெற்றனர். இவ்விரண்டும் தேசமனைத்துக்குமுரிய பள்ளிக்
கல்விமுறையொன்றில்லாத குறையை ஈடு செய்தன. இளைஞர் முதலாளி
யின் கட்டுப்பாட்டிலிருந்தனர். சில இளைஞரைப் பொறுத்தவளவில் இரு பத்து நான்கு வயதுவரையும் அவர்கள் அவ்வாறிருக்கவேண்டியதாயிற்று.
உழைப்பாளர் வீட்டிலேயே கைத்தொழில் நடைபெற்றது. அவரும் ஒரே கம்மாலையில் வேலை செய்வர். அவர் சாதாரணமாகத் தமது கூலிபெறும் கைதேர்ந்த வேலைக் காரரோடும் கட்டுப்பட்ட தொழில் பயில்வோரோடும் ஒரே விடுதியில் சாப்பிடுவர். பொருள்களே உற்பத்திசெய்யும் குடும்பத்தினரின் மகிழ்ச்சி, அக்குடும்பத்தில் வாழ்வோரின் குணத்தையும் பண்பையும் பொறுத்ததேயன்றி, தொழிற் சாலைச் சட்டங்களையும், தொழிற் சங்கப் பிர மானங்களையும் பொறுத்ததன்று. இன்று சகித்துக் கொள்ளக்கூடிய அத் தகைய செயல்களுக்கு அக்காலத்திய கடுமையான நடவடிக்கை மேற்கொள்

தொழில் பயில்வோரும் கைப்பணியும் 549
ளப்பட்டது; ஏனெனில், மனச் சாட்சியோடியைந்ததும் ஒழுங்கு படுத்தப்பட் டதுமான ஒப்புரவாண்மை கைத்தொழிற் புரட்சிக்குமுன் இருந்ததில்லை யாதலினலென்க. பழைய ஒழுங்கின்படி மக்கள் கைமரங்களின் கீழோ போசன பாத்திர அறைகளிலோ துயின்றனர். அவர்கள் எங்கு துயின்றன ரென்று கடவுளே அறிவர். தொழிலாளர் தொழில் பயில்வோரை அடிக் கக் காத்திருப்பர். மேலும், கைதேர்ந்த வேலைக்காரரைச் சினந்து பெரும் பாலும் அவர்கள் மேற் கைவைக்கவுஞ் செய்வர். ஆனல், கண்டிப்பினு:ம் அப்போது ஆதரவு மிகுதியாகவிருந்தது ; எனெனில், உழைப்பாளருக் கும் முதலாளிகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்ததனலென்க. மேலும் எவரும் தம் வீட்டில் மனக்குறைக்கு இடமிருத்தலை விரும் பாததினலுமென்க. முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையேயிருந்த வேறு பாடு பதவிபற்றியதே யன்றி வகுப்புப் பற்றியதன்று. உண்மையாக, பழைய நாடகங்கள் நினைவூட்டுவதுபோல இலண்டனில் தொழில் பயில்வோனுெரு வன் பெருஞ் செல்வரொருவரின் குடும்பத்தைச் சேர்ந்த இளையமகனுக விருக்க நேர்ந்தால், அவன் தான் உழைப்பாளரிலும் சிறப்புமிக்குடைய ‘துரைமக னெனத்’ தன்னைப் ப்ெரும்பாலும் புகழ்ந்து கொள்வதுண்டு.
கைதேர்ந்த கம்மியனின் வேலை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டுவதாயிருந்தது. அன்றியும், இக்காலக் கைத்தொழிலின் விசேட தொழில்களிலும் மேலாக உழைப்பாளனிடத்தே மறைபொருளாயிருக்கும் கலைத்திறமையை வெளிப் படுத்துவதாயிருந்தது. இக்காலக் கைத்தொழில் திறமையோவெனின், அது முழுதும் இயந்திரங்களால் ஒட்டப்படுகிற சில செய்முறைகளைக் கவனிப்பதிலேயே பெரும்பாலுந் தங்கியுள்ளது. உழைப்பாளின் கலைத் திறமை காரணமாக, வழக்கமாக உபயோகத்திலிருக்கும் பொருள்களான கப்பல், வண்டி, வீடு, நாற்காலி முதலியனவும், வீட்டிலும் வெளியிலும் - - A.
1 “எம் ஒழுங்கையிலிருக்கும் சாலி” என்ற கேரி இயற்றிய பாவானது, தொழில் பயிலுங் காலவாழ்க்கையின் உண்மைகள் சிலவற்றை வருணித்துக் காட்டுகின்றது. அவைகள் ஆன் அரசியின் ஆட்சியில் இருந்தன போலவே இலிசபெத்தரசியின் ஆட்சியிலுமிருந்தன -
1. சாலி யென்கண் மணியனையாள் சார்ந்து தொழிலைச் செய்திடுங்கால்
வேலைப் பழித்த கண்ணுேடு விரும்பி யென்பால் வந்திடுவாள் மாலே கொண்டு தொழின்மறப்பேன் மற்றச் செய்கை தனக்கண்டு சாலப் புடைப்பா னென்தலைவன் தைய லன்பிற் றங்கிடுவேன். 2. என்னைத் தலைவன் கோயிலுக்கே யிட்டுச் செல்லா னினிதேதி மன்னி யிருப்பேன் மறையோதி மாசில் குரவன் முடித்தற்கு முன்னே யெழுந்து சென்றிடுவேன் முனிவா னென்னைப் பலகாலும் (அன்ன மனையாள் காதற்கு மலரே கூறிப் பழித்திடுவான்) அன்னுள் அயலார் அனைவருமே எம்மன்பை மிகவே பரிகசிப்பர். 3. அன்ன மனையா வில்லாக்கா லடிமை யாகிப் படகோட்டிப்
பன்னும் வயிறு வளர்த்திடுவேன் பாவங் காதல் தடுத்திடுமால் 1 இன்னும் எழே யாண்டின் பின் இன்ன ரமுதை மணம்முடித்துப் பொன்னந் தோளிற் றுயின்றிடுவேன் பொல்லா வொழுங்கை மறந்தன்றே.

Page 285
550 இறப்பும் நிகழ்வும்
தேவைப்பட்ட பல்வகைப் பண்டங்கள் ஆகியனவும் அழகையும் தனிப்பட்ட வேலைத்திறனையும் எடுத்துக் காட்டுவனவாயின. இச்சிறப்புக்கள் இயந்திரங்க ளாற் செய்யப்படும் இன்றைய பொருள்களிற் காணப்படமாட்டா. தொழில் செய்வதென்பது இப்பொழுதிருப்பதிலும் மிகுந்த புகழுடையதாக அப் போதிருந்தது; ஏனெனில், தொழில்களிற் பெரும்பகுதி ஒரளவுக்கு மனிதீ னின் சிறந்த திறமையை வளர்ப்பதற்கு உதவியாயிருந்ததனலென்க.
ஆனல், இயந்திர ஊழிக்கு முற்பட்ட காலத்தின் வாழ்க்கையில் இன்னு மொரு பகுதியையும் காணவேண்டும். அதனைப் பகுத்தறியும் திறனின்றிக் கடந்தகாலத்தைப் புகழ்வோர் பெரும்பாலும் மறந்துவிடுகின்றனர். கை தேர்ந்த தொழிலைவிட, உடல் வலிமையிற்றங்கிய கடினவேலைகளிருந்தன. அவ்வேலைச் சிரமத்தை இக்கால இயந்திரம் பெரிதும் தீர்த்துள்ளது. வாட் குழியிலும், கலப்பைக் கைபிடியிலும், கல்லகழ்ந்தெடுக்கும் பொழுதும், பாரமான பொருளே நகர்த்தும் பொழுதும் இயற்கையை வெற்றிகொள்ள மனிதன் தன் உடம்பை மிகவருத்திப் பாடுபட்டான். வறுமைமிக்க வேளா ளரின் காப்பற்ற நிலைமையும், கடின வேலையும் பயங்கரமானவையாயிருந் தன. அபாயத்துக்குரிய தொழில்களின் விகிதம் பெரிதாயிருந்தது. குடி சைக்கைத்தொழில்களிற் பெற்றர் தம் சிறரை மிக நீண்ட நேரத்துக்குப் பெரும்பாலும் வேலை செய்யவிட்டனர். பதினெட்டாம் நூற்றண்டில், தொழில் பயில்வோரும் சிறரும் அடைந்த அநேக கொடுமைகளாலும், அவர் கள் தம் முதலாளிகள் கையிற் சிக்குண்டு ஈற்றில் இறக்க நேர்ந்ததாலும், மக்கள் மனச்சாட்சி பெரிதுங் கலங்கத் தொடங்கியது; இதற்கு முந்தைய சந்ததியார் இதனினும் பார்க்கப் பெருந் தன்மையுடையராயிருந்திலர்.
ஆனல், இலிசபெத்தின் காலத்திருந்த சிறுவர்கள் கைத்தொழிலிலீடு படாதிருந்த போதெல்லாம் வயல்களிலும் காடுகளிலும் உலாவும் சுதந்திர முடையவராயிருந்தனர். இச்சூழ்நிலை நமது கால நாகரிகத்திலில்லை. அக்காலத்தில் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு விருப்பின்றி அசைந்து சென்ற னர் என்பதில் வியப்பொன்றுமில்லை ; ஏனெனில், பள்ளிக்கூடத்துக்கு வெளியே சுதந்திரமும் களிப்புமுள்ள உலகம் பரந்துகிடந்ததலினலென்க. மேலும், பள்ளிக்கூடத்தில் கொடூரமாகக் கசையடிபெறுவது கல்வியின் முக்கியமான பாகமாயிருக்கவேண்டுமென்று, தெளிந்த அறிவுடைய ஆசிரி யர் சிலரையும் பெற்றர் சிலரையும் தவிர, மற்றையோர் அனைவரும் அப்போது எண்ணினர்.
குளிர்காயுமிடம், ஊண், உடையாகிய வசதிகள் மத்திய காலப்பண்ணைவீடு களிற் பெறக்கூடியனவாயிருந்ததிலும் பார்க்க இலிசபெத்தின் காலத்துக் கிராமங்களில் மிக எளிதில் கிடைக்கக்கூடியனவாயிருந்த போதிலும், அவை எமது காலத்திற் பெறக்கூடியவற்றிற் பெரும்பாலும் மிகக் குறைவாயிருந் தன. வேளாண்மை சிறிது பிழைத்தால் உணவுக்குறைபாடு வற்பட்ட துண்டு. துணிகளைச் சலவை செய்தலும், நீராடலும் முக்கியமாய் மாரியில்

இறப்பும் நிகழ்வும் 55
பெரிதுங் கைவிடப்பட்டன. இன்றியமையாத் தேவைகளென்று நாம் எண் ணும் வசதிகள் அப்போது இருந்தில. உயர்தர வகுப்புக்குரிய குடும்பங் களிற்ருனும் இறப்பு வீதம் மிகுதியாகவிருந்தது. வறியோர் தம் சந்ததி யின் பெரும்பகுதியில் அற்பமான பகுதிதான் தப்பிப் பிழைக்குமென எண்ணினர். மருத்துவம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்தது. வயோதி பர், பிணியாளர், கடன்காரர், சட்டத்தை மீறிச் சண்டையிடுவோராகிய எவரும் உயிர்த்தியாகஞ் செய்தனர். இதனை மக்கள் தீவினை, நல்வினை யாகியவற்றின் தவிர்க்கமுடியாத விளைவென மதித்தனர். வாழ்க்கை அழகு மிக்குடையதாய் விளங்கியதென்றல், அது இன்றிருப்பதைவிட நம்பிக்கை யும் நலனும் குறைந்ததாயிருந்தது. இலிசபெத்தின் காலத்தில் இங்கி லாந்தில் உயிரோடிருந்த மக்களின் தொகை ஏறத்தாழ இப்போதைய குடித்தொகையின் எழிலொருபங்காகும்.
பொறுக்கமுடியாதனவென்று இப்பொழுது மதிக்கப்படும் நிலைமைகளிற் பல அப்பொழுது துன்பமுடையனவாகத் தோன்றவில்லை ; ஏனெனில், அக்காலப் பொது நிலைமையே இன்றிருப்பதினும் மிக மோசமானதாக விருந்தது. இலிசபெத்தின் காலத்திருந்த நூலாசிரியர் சாளரங்களில் கொம்புக்குப் பதிலாகப் பளிங்கு பதித்தல், வறியோர் குடிசைகளில் புகையை வெளிவாங்கப் புகைபோக்கிகள் வைத்தல், சாதாரண மக்களில் சிலருக்காயினும் உரியனவாக வைக்கோல் மெத்தைகளுக்குப் பதிலாக உரோமத்தாலான மெத்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றைப் புதுமைக ளாகக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் முதன்மையான வகுப்புக்குரியராயிருந்தவர் நிலபுலங் களுடைய உயர் குடிப்பிறந்தோர் அல்லது பெருஞ் செல்வராவர். அவர்கள் இப்பொழுது நிலமானியம்பற்றிய அல்லது போர்பற்றிய வகுப்புக்குரியரல் லர். மேலும், 1642-ஆம் ஆண்டில் உள்நாட்டுப்போர் தொடங்கியபோது அவர்களுக்கு ஆதியிலிருந்து போர்க் கலைத்திறமையைக் கற்பிக்கவேண்டி யிருந்தது. புது இங்கிலாந்தில் “உயர்குலம்’ “எளியகுலம்’ என்ற இரு சொற்களுக்கிருந்த முக்கியமானதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான வேறு பாட்டை வரையறுக்கக்கூடுமானல், “ உயர்குலமகன்’ தன் குலவிருதைக் காட்டக்கூடிய நிலக்கிழானவான். அன்றியும், தான் விரும்பியபொழுது கட்டாரி தாங்கி, கோமகன் முதல் கீழான வேறெந்தக் “ குலமகனை ’யும் சண்டைக்கழைக்க அவனுக்கு உரித்துமிருந்தது. ஆனல், வேளாளரும் வணிகரும் இவ்வகுப்பினரோடு மணவினை முடித்தும் காணிகளை வாங்கியும் அடிக்கடி கலப்பாராயினர். மேலும், பண்ணைவீட்டு இளைய மக்கள் தம் பண்ணை விடுத்து, வணிகம், கைத்தொழில், கலைத்துறை, திருச்சபைச் சேவை அல்லது பிறநாட்டிற் படைச் சேவை ஆகியவற்றில் சேர்வாராயினர் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தம் உயர்குடி உரிமை கொண்டாடியும் சில வேளைகளில் அவற்றை வெளிப்படுத்தாது கைவிட்டும் வந்தனர்.

Page 286
552 இலிசபெத்துக் காலக் கனவான்கள்
வினேதமான இந்த உயர்தர வகுப்பில் செல்வத்துக்கும் தரத்துக்கும் எற்றவாறு எல்லையற்ற பிரிவுகளிருந்தன. பிரபுக்கள் சபையில் அங்கம் வகித்த முதல் வரிசையிலமர்ந்திருந்தார் பெரும் விழுமியோர் ; அவர் பிளாந்தா செனற்றுக் காலத்திற் கற்கோட்டையில் அல்லது தியூடர் காலத் திற் செங்கல் மாளிகையில் அரசனுக்குரிய ஆடம்பரத்தொடு தங்கியிருந்தனர். இவ்விடமானது, அரண்மனைக்கான தொழில்கள் பயின்ற இளம் விழுமி யோராகிய குற்றேவலர் நாகரிகமான பழக்கங்களை அடைதற்குரிய பள்ளியாய் அமைந்திருந்தது. அவர்களிடம் எஞ்சிய உணவு அரண்மனைப் பெரு வாயிலில் வறியோர்க்கு ஒவ்வொரு நாளும் பங்கிடப்பட்டது. மண்டபத்தின் மேடையில் பிரபு தம் பெருமாட்டியோடும் தலைமையான விருந்தின ரோடும் வீற்றிருப்பர். அதே நேரத்தில் அவரைச் சார்ந்தவரும் முதன்மை யான தளபதிகளுமான பசியுடைய ஐம்பது ஆட்கள் தாழ்வான மேசை களிலிருந்து கொண்டு வெள்ளிப்பாத்திரங்களிலும் வெனிசியக் கிண்ணங் களிலும் விருந்தருந்துவர். மேலும், உணவு பரிமாறுங் கூட்டத்தினரும், வேட்டை வனத்தைக் காப்போரும் அடுக்களையின் அகன்ற இடங்களி லிருந்து கொண்டு கல்லீயப் பாத்திரங்களில் அளவுமீறிக் குடிப்பர். பிரபுக் களின் கீழ் வரிசையிலிருந்தோர் சிறு நிலக்கிழாராவர். அவர் தம் தந்தை வழிவந்த சிறிய கமத்தைச் செய்பவராவர். தம் அயலாரான சிறுவேளாள ருடன் தம் குழுவுக்குரிய மொழியிற் பேசிக் கொண்டு அங்காடிக்கு ஒருங்கே செல்வர். மேலும், தம் உழைப்புமிக்க மனைவியினதும் கிராமத்து ஆசிரி யரினதும் உதவியோடு பத்துப் பன்னிரண்டு உடலுரமுள்ள கந்தை யணிந்த சிறுவர் சிறுமியரை வளர்த்தும் வருவர். அச்சிறுவர்கள், பின்மர பினர் அனேகமாகப் பண்டசாலையாக மாற்றி வந்திருந்த நிலக்கிழாரது அடக்கமான பண்ணைவீட்டைச் சூழ்ந்திருந்த பழத்தோட்டத்தில் மேல் கீழாக ஒருங்கே உருண்டு திரிவாராயினர்.
இந்த இரண்டு வகுப்பாரது எல்லைகளுக்குமிடையே, தியூடர் சுதுவாட்டர் களின் காலத்தில் எழுப்பப்பட்ட வெவ்வேறன ஒவ்வொரு பண்ணை வீடும், கல், புதிய நாகரிகத்துக்குரிய செங்கல் அல்லது பழைய நாகரிகத் துக்குரிய சுவரிற் பதிக்கும் பலகை முதலிய நாட்டுப்புறத்தில் பெறக்கூடிய மூலப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். இந்தப் பண்ணை வீடுகளும் அங்கு வாழ் மக்களும் கிராமக கைத்தொழில்களோடு நாட்டுப்புறத்தவரை, புதிய உலகம் வாழ் மக்களின் முக்கியமான வாழ்க்கையோடும் கருத் தோடும் தொடர்பு கொள்ளச் செய்தனர். செகப்பிரியர் காலத்து இங்கி லாந்து பிற்போக்கானதாய் அல்லது நாகரிகமற்றதாயிராது நாட்டுப் புறத்துக் குரியதொன்றயிருந்தது. மேலும், இலண்டன் உண்டாக்கினது எதுவோ அதனைக் கிராமப் பகுதிகள் காலகதியில் ஏற்றுக்கொள்ளலாயின.
தியூடர் காலம் வீடமைக்குஞ் சிற்பத்தொழிலுக்குச் சிறந்ததொன்றகும்.
இத்தொழில் மறுமலர்ச்சிக் காலத்துக்கும் மத்திய காலத்துக்கும் பொது வானதாய், பிற்றைக் காலத்திலிருந்து வேறுபட்டதாகும். பணத்தைப்

கட்டிடக்கலை : பல்கலைக்கழகங்கள் 553
பெருக்கும் நோக்கத்தோடு மாத்திரம் அத்தொழிலில் முதலீடு செய்தல், முன்னரிலும் சாத்தியமானதாயிருந்த போதிலும், அது பின் நிகழ்ந்தது போல, அவ்வளவு மரபு வழக்கானதும், இலகுவானதும் பாதுகாப்பானது மாயிருக்கவில்லை. மேலும், செல்வர் தம் பணத்தைச் சேர்த்துச்சேர்த்து ஆடையணிகலன்களைக் கொண்ட ஆடம்பர வாழ்க்கையிலும், அவற்றிற்கு மேலாக அழகிய கட்டிடங்களுக்குச் சிற்பம் அமைப்பதிலும் செலவிட்டனர். அதனல் அவர் தம் வாழ்க்கையில் பெருமையையும் ஆடம்பரத்தையும் கூட்டிக் கொண்டனர். ஆனல், மத்தியகாலத்தில் மக்கள் சாதாரணமான வீடுகளைக் கட்டுவதைக் கைவிட்டு, கோட்டை கோவில்களைக் கட்ட, தியூடர் காலத்தில் மாளிகைகள் பூரணவலங்காரத்தோடு கட்டப்பட்டன. மத்திய காலத்திருந்த வாரக்குடிகளின் சிறு குடில்களிலும் மிக வேறுபட்டனவாய் முக்கோண முகடுடைய பண்ணை வீடுகள் இங்கிலாந்தின் நிலத்தோற்றங்கள் யாவையும் மறைக்குமளவுக்குத் தோன்றலாயின. இங்கிலாந்தின் வேறுபட்ட பல பாகங்க்ளிலும் நாம் மெச்சும்படியாக அமைந்துள்ள பழைய சிறந்த பண்ணைகள் இக்காலத்துக்குரிய மாற்றத்தாலும், திருத்தத்தாலும், ஆடை வணிகத்தாலும், நில அடைப்பு இயக்கத்தாலும் உண்டான பேறேயாகும்.
தியூடராட்சியில் பெருஞ் செல்வர் அல்லது நாட்டுச் சிறிய பிரபுக்கள் ஒரு புதிய முதன்மையடைந்தனர். இது அவர்களிற் பலர் மடத்துக்குரிய நிலங்களை எளிய விலைக்கு வாங்கியதால் மாத்திரங் கிடைத்ததொன்றன்று. அவர்கள் சமூக அமைப்பில் ஒரு புதிய இடம் பெறலாயினர்; ஏனெனில், அவர்கள் மீது நெடுங்காலமாக ஆதிக்கங் கொண்டிருந்த பரன்களும் மடத் தலைவர்களும் இப்போது தாழ்த்தப்பட்டனராதலினலென்க. அவர்கள் தாமே அரசமைச்சர்களாயோ அவ்வவ்வூருக்குரிய சமாதான நீதிபதிக ளாயோ இருந்து கொண்டு அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆதாரமான வராகவும், பொதுமக்கள் சபையின் தலைவர்களாகவும், நாட்டுப்புறத்தில் ஆட்சிபுரியும் உண்மை அதிகாரிகளாகவும் விளிங்கினர். சுதுவாட்டர் காலத் தில் கவலியர் கட்சியையும் உருளைத் தலையர் கட்சியையும் வழி நடத்திச் சென்றவர் பெருஞ் செல்வரேயாவர்.
தியூடராட்சியில் அவர்கள் தமக்குரிய புதிய கடமையைச் செய்தற்கு ஆர்வத்தோடு ஆயத்தஞ் செய்தனர். பிரபுக்கள் சிலர் தம்மக்களை வேற்று நாடுகளிற் பிரயாணஞ் செய்ய, அல்லது சட்டக் கல்லூரிகளிற் சட்டம் பயில அனுப்பினர். அதன் நோக்கம் என்னவெனின் அப்பிள்ளைகள் பாராளுமன்றத்தில் தலைவராக அல்லது தம் சிற்றுர்களில் நீதிபதிகளாக வரவேண்டும் என்பதேயாகும். உயர்தர இலக்கிய மறுமலர்ச்சியின் பாற்பட்ட புதுக்கல்வி அவர்களுக்கு மிக உகந்ததாயிருந்தது. மத்திய காலங்களில் குருமாராய் வரக்கருதிய வறிய மாணவரே கல்வியைத் தேட, மேல் வகுப்பைச் சார்ந்த பொதுமக்கள் கல்வியை இகழ்ந்தனர். ஆனல், இலிச பெத்தின் ஆட்சியில் நாட்டுப் பிரபுக்களின் மக்கள் பள்ளிக்கூடங்களில் மாத்திரமன்றி பல்கலைக்கழகங்களிலும் ஒரு முக்கியமான இடம் வகித்தனர்.

Page 287
569572.
554 பொதுமக்கள் சபை
அங்கே துறவிகளும் சந்நியாசிகளும் விட்டுச் சென்ற வெற்றிடங்களை அவர் கள் பெருந்தொகையினராய்ப் பிடித்துக்கொண்டனர். எளியவர்க்கென்று முன் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த கல்விக்குரிய தருமசாதனங்களைச் செல்வர் ஆக்கிரமித்தனரென்ற முறைப்பாடு உண்டானமை உண்மையில் நியாய மானதே. இவ்வியக்கம் ஒருபுறம் நிந்தையுடையதாயிருந்தாலும் ஒரு நாட்டை ஆளவிருக்கும் தலைவர்கள் அந்நாடு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கல்வியைப் பெறவேண்டுமென்பது பொருத்தமானதேயாகும். மத்தியகாலங் களிலிருந்த உயர்குடியினர் தம் செயலாளர் ஒட்சுபோட்டிலும் கேம் பிரிச்சிலுமிருந்து வந்தவர்களேயானற் போதுமென்று எண்ணியிருந்தனர். அதே சமயத்தில் அவர்கள் தாமே கோட்டையிலும் சிலம்பம் பயிலிடத் திலும் கற்றுவருவாராயினர்.
அரசியலில் அக்கறை செலுத்திய, அல்லது மக்களின் ஆலோசனை அவைகளில் தம் எண்ணங்களும் அறியப்பட வேண்டுமென்று விருப்பங் காட்டிய வகுப்பினரின் கருத்தை நியாயமான முறையில் பிரதிபலிப்ப தாகப் பாராளுமன்றம் விளங்கியது.
பழைய மானியப் பரன்களின் இனத்தில் எஞ்சியிருந்த சிறு பகுதி யினர்க்கும், அண்மையில் நியமிக்கப்பட்ட அரசாங்க சேவையாளரான பேக்கிலி, இலசித்தர், பெற்போட்டுப் பிரபுவான இறசல் முதலிய பிரபுக் களுக்கும் பிரபுக்கள் சபையில் இடங்கள் வழங்கப்பட்டன. அரசால் நியமிக்கப்பட்டவரான பிசப்புமார் மேற்சபையில் அரசுக்காகத் தம் வாக் குரிமையை யளித்து அரசபலத்தை அதிகப்படுத்தினர். வட பாலிருந்த எள்களையும் நோபோக்குக் கோமகனையும் இலிசபெத்து வெற்றிகொண்ட பின்னர், மடத்தலைவர்களதிகாரம் அடங்கியது ; அன்றியும் பெரும் விழுமி யோரின் மானியவதிகாரமும் ஒழிந்தது. அரசியின் ஆட்சிப் பிற்பகுதியில் பிரபுக்கள் சபை எவ்வளவு உன்னதமானதாயிருந்தபோதிலும், அரசியற் றுறையில் முன்பின்னன எக்காலத்தில் இருந்ததிலும் குறைந்த சிறப் புடையதாயிருந்தது. தியூடர் குடியாட்சிக் கொள்கையுடையரல்லர்; ஆனல் நடுத்தர வகுப்பினர் அதிகாரத்துக்கு அடிகோலியிருந்தனர்; எனெனில், தாம் விரும்பி அமைத்த அரசில், முடிக்கும் மக்களுக்குமிடையே தனிப்பட்ட அதிகாரம் எதுவுமிருக்காததினலென்க.
நிலபுலங்களிருந்த பிரபுக்களின் வளர்ச்சியுறும் வலிமை, வணிகரதும், வேளாளரதும் ஆதரவு பெற்று, பொதுமக்கள் சபையில் வெளிப்பட்டு விளங்குவதாயிற்று. தேர்தல்கள் நடைபெற்றமை, தலவாட்சிச் சங்கங்கள் மேல் அரசு சுமத்திய சுமையெனக் கருதப்படாது நாட்டுப் பூட்கையிற் செல்வாக்குப் பெறுதற்குரிய வழிவகையெனக் கொள்ளப்பட்டது. அவ்வவ் விடங்கட்குரிய பிரபுக்கள் தம்மை அல்லது தம் நண்பரைக் கோட்டங்களுக் குப் போலவே பரோக்களுக்கும் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து கொள்ள ஒருவரோடொருவர் போட்டியிட்டனர் ; ஏனெனில்,

பொதுமக்கள் சபை 555
இங்கிலாந்தில் நாட்டுக்கும் நகரத்துக்குமிடையே பகைமையுணர்ச்சியில்லா திருந்ததினலென்க. கோண்வாலின் கணக்கற்ற பரோக்கள் தியூடவரசரால் வாக்குரிமை அளிக்கப்பெற்று, பியூரித்தானியத் தனக்காரரான எதிர்க்கட்சி யினர் கையில் சிக்கின. மேலும், இலிசபெத்தின் ஆட்சியில் பவுல், மீற்றர் வென்றுபோத்து போன்ற, அரசைக் குறை கூறுவோரை அவைகள் பிரதிநிதிகளாகவும் அனுப்பின. இன்னும், பின் நடைபெற்ற ஆட்சிகளில் சேர் யோன் எலியற்றையும், அம்பிடனையும், அக்கட்சிக்குரிய வேறு பல ரையும் அவ்வாறே அனுப்பியும் வந்தன.
அரசாங்கத்தை ஆதரிப்போராகவும் கண்டிப்போராகவும் இருந்துகொண்டு பொதுமக்கள் சபையினர் தாமாகக் காரியங்களைச் செய்யத் தொடங்கினர். இசுப்பானியருக்கும் போப்பாண்டவருக்கும், அவர்கள் இலிசபெத்தின் ஆட் சியை அரசி காட்டியதிலும் மேலாக எடுத்துக் காட்டுபவர்போலத் தோன்றி னர். அவர்கள் இடைவிடாத அரச பத்தியுடையராய்த் தாமிருந்துகொண்டு தற்காப்புக்காகத் தீவிரமான வழிவகைகளைக் கையாளுமாறு அரசியைத் துண்டினர். அவையாவன, அரசி மணமுடித்தல், அவர் தமது அர சுரிமையாளரை நியமித்தல், கொத்துலாந்தின் அரசியைத் தூக்கிடுதல், கத்தோலிக்கரைக் கூடுதலாகவும், பியூரித்தானியரைக் குறைவாகவும் துன்புறுத்தல் என்பனவாம். சுருங்கக் கூறின், அரசியும் அங்கத்தினர்களும் அபாயத்துக்குரியனவென்றறிந்திருந்த வரிவிதிப்புக்களைக் கூட்டுதலைத் தவிர மற்றெல்லாவற்றையும் கையாளுமாறு தூண்டினர். பொதுமக்கள் சபையினர் அளவுகடந்த உற்சாகமும் ஊக்கமுங் காட்டினரென்று அரசி யெண்ணினர். தியூடராட்சித் தொடக்க காலத்தில், தேர்தல் வேளையில் பாராளுமன்றத்தை அரசன் விரும்பிய அங்கத்தினரால் நிரப்பாது, சமய சம்பந்தமான விடயங்களிற்கூட, அரசரினதும் கேமறைக்கழகத்தாரின தும் வழிகாட்டலைப் பின்பற்றுதற்கு மக்களும், அவர் தம் பிரதிநிதிகளும் கொண்ட விருப்பத்தில் முடியானது நம்பிக்கை கொண்டிருந்தது. இலிச பெத்தின் ஆட்சியில் பெருஞ் செல்வரிடையே வளர்ச்சியுற்ற பியூரித்தானிய சமயக் கொள்கை புதியதொரு நிலையை ஏற்படுத்தியது. பீற்றர் வென்று வோது போன்ற பாராளுமன்ற அங்கத்தினரின் மனதில் கடவுளைக் குறித்து எழுந்த அச்சமும் அன்பும் அரசியைக் குறித்தெழுந்த அச்சத் தோடும் அன்போடும் போராடத் தொடங்கின. முதலாம் சுதுவாட்டர் கொந்தளித்துக் கொண்டிருந்த நீரை மேன்மேலும் கலக்க வந்ததற்கு முன்னரேயே, புரட்டசுத்தாந்தமும் பாராளுமன்றச் சிறப்புரிமையும் நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தன.
கோண்வாலுக்குரிய பரோக்களின் பிரதிநிதிகளே நியமித்தமை பாராளுமன்றத்தில் அரசவதி காரத்தைக் கூட்டவா அன்ற என்பதையிட்டு சிறந்த வரலாற்ருசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. அரசவதிகாரத்தைக் கூட்டுவது நோக்கமாயிருந்திருந்தால் அது தவறிவிட்டது என்க.

Page 288
556 இலிசபெத்தும் பாராளுமன்றமும்
ஆனல், பொதுமக்கள் சபை முதலாம் சேமிசு காலத்தில் இயங்கியது போல, இதுவரையும் முக்கியமான ஓர் எதிர்க்கட்சியாயமைந்திலது. மிகத் திறமை வாய்ந்த கோமறைக் கழகத்தார் சிலர்க்கு மன்றத்தில் இடமிருந்தவரையும், சபை கூடும் ஒவ்வொரு வேளையிலும் ஆக்கப்படும் முக்கிய சட்டத்துக்கு அவர்கள் பொறுப்பாளிகளாயிருந்தவரையும், நிரு வாகத் துறைக்கும் சட்டவாக்கத் துறைக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அதனை இலிசபெத்தின்பின் ஆட்சி செய்தோர் தம் பொறுப்பின்மையால் நலியவிட்டனர்.
அரசி உயிரோடிருந்த வரையும் தம் தனிப்பட்ட சிறப்பினலே அடக்கி வைக்க முடியாத அப்பிணக்கை தவிர்த்துவைத்தார். பொது மக்கள் சபையில் நடைபெற்றனவும் பேசப்பட்டனவும் பலவற்றைக் குறித்து அவர் கோபங்கொண்டபோதும், அச்சபையின் சிறப்புரிமைகளை நன்கு மதித் தனர். தம் வலிமை அச்சபையிலிருந்த இறுமாப்புள்ள பெருஞ் செல்வரைப் பொறுத்ததேயன்றி, ‘தெய்வீக உரிமை” யைப் பொறுத் ததன்று என்று சுதுவாட்டர் ஒரு பொழுதும் அறிந்திராத உண் மையை அவர் அறிந்திருந்தார். அதனுடன் தரையிலும் கடலிலும் தொழிலில் மூழ்கிப் பரந்து கிடந்த தாம் கண்டறியாத கோடிக்கணக்கான மக்களோடு இப்பெருஞ் செல்வர்கள் தம்மிலும் தம் அரசவையாரிலும் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளார்களென்ற உண்மையையும் அறிந்திருந் தார். ஆண் பாலாரை, என், பாராளுமன்றத்தினரைத்தாமும், நடத்தும் உபாயத்தில் அவர் கடைசிவரையும் தலைமைமிக்குடையராயிருந்தார். அவர் சாதற்கு ஈராண்டுகட்குமுன் புகழற்ற வர்த்தக “ முழு உரிமைகளை ” ச் சிறந்த முறையில் நீக்கியமை அவர்கள் அன்பைத் திடீரென அவர் திரும்பப் பெறச் செய்தது. கண்ணியமான அங்கத்தினர் ஆனந்தக் கண்ணிர் விட்டனர். அவ்வாறக அங்கத்தவர் உருகிய நிலையில் அவர்களது தாயும் தலைவியுமானவர் அவர்களை உவயிற்றேல் எனும் மன்றத்துக்கு வரவழைத் தனர். அங்கு அரசியார் விரைவில் முடிவுறும் தம் நீண்ட ஆட்சியின் உண்மையான இரகசியம் என்னவெனக் கூறியது வருமாறு :-" கடவுள் என்னை மேலான பதவிக்கு உயர்த்தியபோதும் உங்கள் அன்போடு நான் அரசோச்சியதையே என் ஆட்சியின் மேன்மையென மதிக்கின்றேன்”.


Page 289