கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இங்கிலாந்தின் வரலாறு 2

Page 1


Page 2


Page 3
2-ஆர் 5931-1010 (2/62)

இங்கிலாந்தின் வரலாறு
கொழும்பு தமிழ்ச் சங்கம்
நூலகம்
இரண்டாம் பாகம்
1940-1951 வரை திரித்துவக் கல்லூரி அதிபரும், கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில், தற்காலவரலாற்றுக்கு இரீசியசுப் பேராசிரியராக முன்பு இருந்தவருமான
A யோ. ம. திரவெலியன்
எழுதியது.
9 - BOS
1964
உலோங்மன்சு, கிரீன் கம்பெனியார், இலண்டன், நியூயோக்கு, தொரந்தோ,

Page 4
HISTORY OF ENGLAND
by
G. M. Trevelyan, O.M.
Master of Trinity College, 1940-1951 Formerly Regius Professor of Modern History in the University of Combridge.
Translated and published by the Government of Ceylon
by arrangement with
ongmans, Green & Co., London-New York-Toronto.
இலண்டன், நியூயோக்கு, தொரந்தோ ஆகிய இடங்களிலுள்ள உலோங்மன்சு, கிரீன் அன் கம்பெனியாரின் இசைவுபெற்று, இலங்கை அரசாங்கத்தாரால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே.

ஆவாட்டுப் பல்கலைக் கழகத்தலைவர்
உலவெல் அவர்களுக்கு.

Page 5

முன்னுரை
உயர்நிலை வரலாறு கற்கும் மாணவர் பயன்படுத்தும் பொருட்டு, இத்திணைக் களத்தார் மொழிபெயர்த்து வெளியிடும் வரலாற்று நூல்கள் பலவற்றுள் இது வொன்ருகும். இங்கிலாந்தின் வரலாறு' எனப் பெயரிய இந்நூல் யோ. ம. திர வெலியனரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.
ஆறு நூல்களைக் கொண்ட ஆங்கில முதனூலின் நான்காம் ஐந்தாம் ஆரும் நூல்கள் அடங்கிய இப்பதிப்பு, ஈண்டு இரண்டாம் பாகமாக வெளியிடப்படு கின்றது. முதல் மூன்று நூல்களும் அடங்கிய பதிப்பு முதலாம் பாகமாக வெளி யிடப்படுகின்றது.
இந்நூலை மொழிபெயர்த்தற்கு உரிமை நல்கிய உலோங்மன்சு, கிரீன் கம்பெனி யார்க்கு இத்திணைக்களம் பெரிதுங் கடப்பாடுடையது.
இப்பதிப்பினை மேலுந் திருத்தமுறச் செய்தற்கு ஏற்ற குறிப்புரை தெரிப்புரை
கள் வரவேற்கப்படும்.
நந்ததேவ விசயசேகரா,
ஆணையாளர்.
அரசகரும மொழித்திணைக்களம் (வெளியிட்டுப்பிரிவு) கொழும்பு 7.

Page 6
முகவுரை
ஆங்கில வரலாறெனும் அளப்பரும் பாவையை நீந்தி, அதனை எழுநூறு பக்கங் களில் அடக்கி, முதலிலிருந்து முடிவுவரை முழுமையுறக் கூறப்புகுமொரு நூலானது, ஒன்றில் ஒரு பாடநூலாகவோ, அன்றேல் ஒரு கட்டுரையாகவோ அமைந்துவிடற்பாலது. அஃது எவ்வாற்ருனும் நிகழ்ச்சிகளை முற்றமுடியக் கூறுவதொன்ருகாது. இந்நூலானது நாட்டின் பொருளியல் நிலைமைகள், அரசி யல் நிறுவகங்கள், கடல் கடந்த முயற்சிகள் என்னுமிவை தொடர்பான சமூக வளர்ச்சியை ஆராய முயலுமாற்ருன் ஒரு கட்டுரையாக வமைகின்றது. வரலாற் றுரை முறையைப் பேணி விவரங்களைச் சுருக்கமாக விளக்கித் தேதிகளைக் குறிப்பிட்டுத் தலையாய நிகழ்ச்சிகளுக்கும் மக்களுக்கும் முதன்மையளிக்கு மாற்முன் இஃதொரு பாடநூலாக வமைகின்றது.
கொத்துலாந்து, அயலாந்து, கடல் கடந்த பேரரசு ஆகியவற்றின் வரலாறு யாண்டும் ஆங்கிலக் கண்கொண்டே நோக்கப்பட்டிலதென்பது என் நம்பிக்கை. ஆயின், இந்நூலில், குறிப்பாக இதன் முற்பகுதிகளில், இருக்கும் ஒருமைப்பாடு இங்கிலாந்தை மையமாகக் கொண்டே பெறப்பட்டது. என்னல் நிறைவேற்ற வியலா வேட்கைகளை எழுப்பாத வண்ணம் இந்நூலுக்கு இங்கிலாந்தின் வரலா றென்று மட்டுமே பெயரிட்டுள்ளேன்.
1924 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் மசசூசெற்றிலுள்ள பொசுதன் பல்கலைக்கழகத்தில் யான் நிகழ்த்திய உலொவல் நினைவு விரிவுரைகளே இந்நூல் உருவாவதற்குக் கருவாயமைந்தன. ஆதலின், ஆவாட்டுப் பல்கலைக்கழகத் தலைவ சான உலொவல் அவர்களுக்கும் அஞ்ஞான்று என்னை அன்புடன் உபசரித்த ஏனை அன்பர்களுக்கும் இந்நூலை இவ்வுருவில் உரித்தாக்குகின்றேன்.
பழைய கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்து நண்பர் இருவர்க்கு-அரசர் கல்லூரி யைச் சேர்ந்த கலைநிதி கிளப்பாம் அவர்கட்கும் இயேசு கல்லூரியைச் சேர்ந்த திரு. குளோட்டு எலியற்று அவர்கட்கும் யான் பெரிதுங் கடமைப்பட்டுள்ளேன். முன்னவர் இக்காலப் பிரித்தானியாவின் பொருளியல் வரலாறு என்னுந் தமது நூலின் முற்பகுதியை அச்சேற்றுவதற்கு முன்னரே எனக்குத் தந்து அதனை யான் நன்கு பயன்படுத்த உரிமை வழங்கினர். பின்னவர் என் நூலின் முற்பாதி யைப் படித்து அரிய பல அறிவுரைகளை ஆங்காங்குக் கூறியுதவினர்.
யோ. ம. திரவெலியன்.
பேக்காஞ்சுதெற்று, ஏப்பிரில், 1926.

உள்ளுறை
அத்தியாயம் நூல் 1
III
IV
V
VI
VIII
VII.
IX
I
IV
V
VTI
TI
IV
"VII
VI
"VIE
பாராளுமன்றங்களும் தூய்மையாளரும் இணங்காதோரும் இங்கிலாந்தும் கொத்துலாந்தும்
உள்நாட்டுப் பெரும் போர், 1642–1646
புரட்சியான அரசாங்கங்கள் ஆங்கிலேய கிராம பட்டின வாழ்க்கையும் அதன் கடல் கடந்த படர்ச்சியும் மீட்சியும் இரண்டாம் சாள்சின் ஆட்சியும் இரண்டாம் சேமிகம் ஆங்கிலேயப் புரட்சியும்
மீட்சிக் காலத்திலிருந்து ஆன் அரசி காலம் வரையும் கொத்துலாந்தும்
அயலாந்தும்
உவிலியம் மாள்பரோ ஆகியோரின் ப்ோர்கள்
நூல் 1 அனேவர் வமிசத்து ஆட்சிமுதற் பகுதியில் இங்கிலாந்து . . முதலாம் யோச்சும் இரண்டாம் யோச்சும். உவிக்குச் சில்லோராட்சி மூன்ரும் யோச்சின் அரசாங்கம் தோரிச் சில்லோராட்சியும் குடியாட்சி இயக்கத்தின் தொடக்கமும் பிரான்சியப் புரட்சிப் போர்களும் நெப்போலியப் போர்களும் மூன்ரும் யோச்சின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்த பேரரசு மூன்ரும் யோச்சின் ஆட்சியும் அதன் பொருளாதார வியல்பும்
TGüv III
அடக்கு முறையும் சீர்திருத்தமும், 1815-1835
உவிக்குகளின் நிதி நெருக்கடி . . . s & மிகப் பிந்திய ஊழியில் வெளிநாட்டு அபிவிருத்தி : இரண்டாம் பிரித்தானியப்
பேரரசின் வளர்ச்சி W IX
புதிய சீர்திருத்த ஊழி, 1868-1901 பல்வூரின் அமைச்சு, 1902-1905 கடைசித் தாராளர் அரசாங்கம். திசெம்பர் 1905 இலிருந்து மே 1915 வரை . . தனித்தியங்கு நிலைமை முடிவடைதல் முதலாம் உலகயுத்தம், 1914-1918
பின்னுரை » XA a 1918 இற்குப் பின் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள்
அமைச்சுக்கள் விவரம், 1770-1957
பக்கம்
50
66
93
13
i45
162
177
212
245
269
290
30
334
352
38
410
438
467
49
503
515
527
544
55 1
554

Page 7
II
VI
V
VIII
ΙΧ
ΧΙ
XE
X
XIV
படங்கள்
அணிவகுத்த படை உள்நாட்டுப் பெரும் போர் 1843-1644 குளிர்காலத்தில் இங்கிலாந்தும் உவேல்சும் 17 ஆம் நூற்றண்டில் அயலாந்து 17 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய அமெரிக்க குடியிருப்புக்கள்
உத்திரெத்துப் பொருத்தனைக்குப் பின்னர் ஐரோப்பா, 1713
யக்கோபினருடைய காலத்தில் கொத்துலாந்தும் வட இங்கிலாந்தும் பிரான்சிய ஆங்கிலேயக் குடியேற்றங்கள், 1775 (உட்படம் குவிபெக்கு, 1759). . 1810 இல் ஐரோப்பா ! நெப்போலியனது ஆதிக்கம் உச்சநிலை அடைந்திருந்த
காலம் и и « O - இரு கனடாக்களும் கரையோர மாகாணங்களும், 1791 19 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் இந்தியா 1906 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆள்புலத்தினதும் ஆதிக்கத்தினதும்
வளர்ச்சியைக் காட்டும் இந்தியா
கிரைமியா 19 ஆம் நூற்றண்டில் மேற்குக் கனடா எல்லையும் ஐக்கிய அமெரிக்க எல்லை
Այւն - - - தென் ஆபிரிக்கா, 1899
மரபு முறைகள்
முதலாம் சேமிசின் மரபினர் : அனேவர் அரசுரிமைகள் ..
முதலாம் சாள்சின் மரபினர் : ஒறேஞ்சு யக்கோபினர் அரசுரிமைகள்
Luisa
56
58A
76
100 A.
189
246A
262A
32
340
344
345.
429
445
454
22
32

பாயிரம்
எங்கள் நாட்டில் நாகரிகமடைந்த மனிதனின் வரலாறு மிகப் பழைய காலத்த தாகும்; அல்பிசெட்டு மன்னனின் ஆளுகைக்கு வெகுமுன்னரே அது தொடங்கு கிறது. ஆனல் உலக அலுவல்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் நாடாய்ப் பிரித்தா னியா விளங்கிய காலத்து வரலாறே பிற்காலத்துக்குரியது ; இலிசபெத்தரசி யின் ஆட்சியோடு அவ்வரலாறு தொடங்குகிறது. இதற்குக் காரணத்தை உலகப் படத்திலேயே காணலாம். பண்டைய அலெச்சாந்திரியாவிலோ, மத்தியகாலத் துறவி மடங்களிலோ விருந்த நாட்டுப்பட அமைப்பாளர், எங்கள் தீவை யாவற் றுக்கும் வடமேற்காய் அமைத்துள்ளனர். ஆனல், அமெரிக்கா கண்டுபிடிக்கப் பட்ட பின்னரும், ஆபிரிக்காவிற்கும் கிழக்கு நாடுகளுக்கும் கடல் வழிகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும், இப்புதிய கடல்சார்ந்த இயக்கத்தின் மைய மாகப் பிரித்தானியா அமையலாயிற்று. இதன் புவியியற்றேற்றத்தில் ஏற்பட்ட இம்மாற்றத்தை அந்நாட்டவர் நன்னேக்கங்களுக்களாகப் பயன்படுத்திக் கொண்டனர்; இவர்கள், சுதுவட்டுக் காலத்தில், கடல் கடந்த வர்த்தகத்துக்கும் அதனை வளர்த்த நிதிக்கும் கைத்தொழிலிற்கும் பிரித்தானியாவைத் தலையாய இருப்பிடமாக்கினர். அடுத்து, நியூற்றன் பிறந்த பூமியாகிய பிரித்தானியா புதுமையான விஞ்ஞானத்தின் துணைகொண்டு, பரும்படியாகப் பொருள்களே ஆக்குவதற்கு இயந்திரங்களை உபயோகித்து, உலகளாவிய கைத்தொழிற் புரட்சி யைத் தோற்றுவிக்கலாயிற்று. இதற்கிடையில் பிரித்தானியா, வட அமெரிக்கா " வில் மக்களைக் குடியேற்றி அங்கு சட்டங்களையும் வழங்குவதாயிற்று, பதின் மூன்று குடியேற்ற நாடுகளையும் இழந்தபின்னர், இவற்றிலும் மிகப்பரந்தும் விரவியும் கிடந்த இரண்டாவது பேரரசொன்றை நிறுவலாயிற்று.
பொருள்வளத்துக்கும் தலைமைக்குமுரிய இப்பிற்றை நூற்முண்டுகள் புலத் துறை முற்றிய நலன்களைப் பெற்ற காலமுமாகும். பீட்டு, உரோசர் பேக்கன், சோசர், விக்கிளிவு ஆகியோர் தோன்றியிருந்தும், பிரித்தானியா மத்தியகால விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் அளித்துள்ள பங்கை, செகப்பிரியர் காலம் தொட்டுள்ள அதன் புலத்துறைப் படைப்புக்களோடு ஒப்புநோக்குங்கால் முன்னையது அற்பமானதாகத் தோன்றுகிறது. திடீரென விரிவடைந்துள்ள பூகோ ளத்தின் கடல்சார்ந்த நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் மையமாகத் தான் விளங்கு வதை இலண்டன் மாநகரம் உணர்ந்து விழிப்புற்ற அவ்வூழியே மறுமலர்ச்சியின தும் சீர்திருத்தத்தினதும் ஊழியுமாகும். புலத்துறை வளர்ச்சிக்கும் தனிப்பட்ட வர் தன்னுண்மைக்கும் உள்ள இவ்வீரியக்கம் வேற்றினத்தவரிலும் பார்க்கப் பிரித்தானியருக்கே உகந்தனவாய்க் காணப்பட்டதுடன் அந்நாட்டவரின் சீர்மையை வெளிப்படுத்துவதுமாயிற்று.
அரசியற்றுறையில் பிரித்தானியா, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயாய் விளங்கியது. தன்னுட்டு மக்களின் இயற்கையுணர்வுக்கும் குணவியல்புக்கும் ஏற் றதாய், பல நூற்றண்டுக் காலப்போக்கில், ஒன்றுக்கொன்று முரண்பட்டவையெ
ix

Page 8
ΣΚ.
னப் பலகால் பிறநாடுகளுக்குத் தோன்றிய மூன்று விடயங்களை ஒருங்கே செயற் படுத்துமோர் முறையை மலர்வித்தது - அவை யாவையோவெனின், நிருவாகத் திறன், பொதுமக்கட் கட்டுப்பாடு, தனிமனிதச் சுதந்திரம் என்பன. உண்மை யாகவ்ே, பாராளுமன்றத்தின் தோற்றமும் ஆங்கில வழமைச் சட்டத்தின் தோற் றமும் மத்திய காலத்துக்கே யுரியன. மன்னுறு அதிகாரத்தை ஈற்றில் பாராளு மன்றம் வெற்றிகொண்டதனல், இவ்வழமைச் சட்டம், ஆங்கிலமொழி பேசப்படும் நாடுகளிலெல்லாம், தனியாதிக்கம் பெற்றது. மத்தியகால அரசியலின் மதிப் புக்குரிய பண்புகள் யாவையோவெனின் உலகியற்றுறையில் தனிமுதன்மையாட் சிக்குக் காட்டிய வெறுப்பு, கூட்டுவாழ்க்கையில் விருப்பு, பிரதிநிதிகள் மூலம் பல் வகைப்பட்ட கூட்டமைப்புகளின் அறிவுரைகோடல் என இவை. பாராளுமன்ற மானது மத்திய ஊழிக்கேயுரிய ஒரு சிறப்பு விளைவாயினும், தியூடர், சுதுவட்டு, அனேவரியர் காலங்களில் அதன் அதிகாரங்களின் விருத்தியும், அதன் சமகால ஐரோப்பாவில் வரவேற்கப்பட்ட உரோமானிய சட்டத்தின் அரசியற் கொள்கை களுக் கெதிர்ப்பும், அமெரிக்காவிலும் அதன் எதிரடியிடங்களிலும் பாராளுமன் றங்களை நிலைநாட்டியமையும் ஆகிய இப்பெரும் நிகழ்ச்சிகள் பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றை ஐரோப்பியக் கண்ட அரசியல் வாழ்க்கையினின்று வேறு பட்டதான ஒரு வட்டாரமாக உயர்த்துவதற்கு ஏதுக்களாயமைந்தன. பிரான்சும், இசுப்பெயினும் மத்திய பிரதிநிதித்துவ நிறுவனங்களையும், பாராளுமன்றங்களே Այւb பற்றிருந்தவெனினும், புதுமையான குழ்நிலைமைகளுக்கேற்ப அவற் றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டன. நிலமானிய முறைமை ஒழிந்ததும் இலத்தீன் மொழி பேசும் மக்கள் இப்புதிய ஊழியின் அரசியல் முறையாக வல்லாண்மை முடியாட்சியைக் கொண்டனர். இப்புதிய நாட்டின உணர்ச்சி பற்றிய மக்கியவெல்லியின் உயர்வான கருத்துக்கோடலுக்கு மறுதலை யாய், பெரிய நாட்டின அரசுகளில் பிரித்தானியா மட்டுமே வெற்றிகரமாக நின்று, வல்லாண்மை வேகத்தைப் போக்கடித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களைக் கொண்ட உரையாட்டுச் சபைகள் மூலம் ஒரு பேரரசைப் போர்க் காலத்தி லும் அமைதிக் காலத்திலும் வெற்றிகரமாய் ஆளக்கூடிய ஒரு முறைமையை விரிவுபடுத்தி அமைத்தது. 1689 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்குமிடை யில் வேற்றுநாட்டுப் போட்டியாளருடன் ஏற்பட்ட வர்த்தக, இராணுவ சம்பந்த மான போாாட்டங்கள் நிகழ்ந்தபோது, நாட்டின விருப்புக்குச் சக்தியளிக்கும் ஒரு வழிமுறையாகப் பாராளுமன்றச் சுதந்திரம் வல்லாண்மையைவிட மேலான தகுதிவாய்ந்த தென்பதை எங்கள் பொருள்களும், எங்கள் கப்பல்களும், எங்கள் சேனைகளும் நிரூபித்தன. அன்றியும், கைத்தொழிற் புரட்சியினல் மனித வாழ்க் கையில் புகுத்தப்பட்ட புதிய ஊழியிலும், இத்தீர்ப்பு மறுக்கப்படவில்லை.
* 18 ஆம் நூற்முண்டில், இதே பாராளுமன்ற நிறுவகங்கள், குடியாட்சிக்கு நிகரான மாற்றங்களையடைந்து வருங்கால், கைத்தொழிற் புரட்சியின் பயனுய்த் தோன்றியுள்ள புதிய வியத்தகு சமூக வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஈடு கொடுக்கும் கடுஞ் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அதே சமயத்தில், வெண்ணி

xi
றத்தினரும்,கபில நிறத்தினரும், கருநிறத்தினருமான சமுதாயங்களைக்கொண்ட தாய், மிகப்பாந்து என்றும் வளர்ச்சியுற்றுக் கொண்டிருந்த பேராசானது மிகச் சிக்கலான பல்வகைப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தது. இக்காலப் பொருளியல் நிலைமைகள், சமூக அரசியல் மாற்றங்களுக்கு அளிக்கும் அத்த கைய தூண்டுதல்களால், இப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் சிற்சில வாண்டுகளில் புத்துயிர் பெற்றுப் புத்துருவில் மீண்டும் மீண்டும் தோன்றலாயின. வெண்ணிற வினத்தவருக்குப் பாராளுமன்ற ஆட்சியும், தன்னுட்சிக்கு இன்னும் பக்குவமெய் தாத சமூகங்களை நீதியாக ஆளுவதற்குரிய விருப்பும் இதுவரையில் இப்பல் வேறு இ7 ள் கூட்டத்தைப் பேணி வந்துள்ளன.
இனி, காலத்தில் எங்கள் பிரதான நாட்டம் எதுவாயிருப்பினும்பொருள்வள விருத்தி, இனப்படர்ச்சி, அரசியல் சமூக நிறுவகங்கள் ஆகிய வற்றின் வளர்ச்சி எனினும் அல்லது அறிவாற்றல், இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி எனினும்-பிரித்தானிய வரலாற்றில் இறுதி நானூஅறு ஆண்டுகளே புகழ்வாய்ந்தனவாகும். எனினும் இந்நூலின் மூன்றிலொரு பகுதியைத் தியூடர் காலத்துக்கு முன்னுள்ள காலவவதியின் பரிசீலனைக்காக ஒதுக்க நான் தயங் கினேனல்லேன். மிக ஆதிகாலந்தொட்டு, 1066 ஆம் ஆண்டுவரை, படைபூண்ட பல இனத்தினர் பிரித்தானியாவிற் புகுந்துகொண்டிருந்தனர். அவர்கள் தஞ் சம்புகுந்த இந்நாட்டில், நோமானிய, பிளாத்தேசெளற்று மன்னர்களின் காவ லில், அவர்கள் விருத்திசெய்த நாட்டினப் பண்பும் வழமையும் மட்டுமே இலிச பெத்தினுல் ஆளப்பட்ட 50 இலட்சம் மக்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் அக்காலத்து அறிவியல் சார்ந்த இயக்கங்களின் பயணுக எழுந்த கடல்சார்ந்த கண்டுபிடிப்புக்களினுல் வரவிருந்த வருங்கால வாய்ப்புக்களை யெல்லாம் பயன் படுத்துவதற்குத் துணைபுரிந்தன. அப்பொழுது ஏற்ற சமயம் நெருங்கிய தெனின், மக்களும் அதற்கு ஆயத்தமாயிருந்தனர்.
பிரித்தானியா எக்காலமும், கடலுக்கும் கடற்றுறைப் பொருள்களை உண்ணுடு களுக்குக் கொண்டு செல்ல ஆதிகாலந்தொட்டுத் துணையாயிருந்த ஆறுகளுக்கும் துறைமுகங்களுக்கும் தான் பெற்றுள்ள நற்பேறு சார்பாகக் கடமைப்பட்டுள் ளது. திரைகடலாதிக்கத்தை அவாவிய காலத்துக்கு வெகு முன்னர், அக்கடலின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்ன? கடலுந்திக் கரையேறிய படகோட்டிகளினல் அதன் கதி தொடர்பாக நிர்ணயித்துவரப்பட்டதனுலென்க. ஐபீரியர் கெலித்தி யர் தொடக்கம், சக்சனியர் தேனியக் குடியேற்றக்காரர் ஈருக, வரலாற்றுக்கு முற்பட்ட காலமும், பினீசிய வர்த்தகர் காலந்தொடக்கம் உரோமானிய, நோமா னிய ஆட்சியாளர் காலம்வரை, அடுத்தடுத்து அலையலையாகப் போந்த போர்ப் பிரியரான குடியேற்ற மக்கள், ஊக்கம் மிகுந்த கடலோடிகள், ஐரோப்பிய கமக் காரரும் வர்த்தகர்களும், கடல்வழியாகப் பிரித்தானியாவிற் குடியேற அல்லது அங்குள்ள பழங்குடிகளுக்குத் தம் அறிவையும் ஆர்வத்தையும் ஊட்ட ஆங்கு வந்துள்ள்னர், அதன் கீழ்க்கரை பாதுகாப்பற்றிருக்க, அங்கு தியூத்தோனியரும் கந்தினேவியரும் குடியேறினர்; பிரான்சு வழியாக மத்தியதரைப் பண்பாடு

Page 9
xii
தென்கரையை வந்தடைந்தது. தியூத்தோனியர், கந்தினேவியர் ஆகியோரிட மிருந்தே பிரித்தானியா தன் குடிமக்களில் பெரும்பகுதியினரைப் பெற்றது; மேலும் அவர்களிடமிருந்தே நாட்டின் குணவியல்பையும், மொழியின் அடிச் சொற்களையும் பெற்றது. தென் நாடுகளிலிருந்து தன்மொழிக்குரிய பிற சொற் களையும், பண்பாட்டு முறைகளையும் நிருவாகத் திறனையும் பெற்றது.
கணியூற்றாசன் கந்தினேவியருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருக்க, அதனை நோமானிய வெற்றி துண்டித்துவிட்டது. பல நூற்முண்டுகளாகத் தீவில் வாழும் நோதிக்கு மக்கள், பிரெஞ்சு மொழி பேசும் உயர் குடியினராலும், இலத் தீன் மொழி பேசும் குருவாயத்தினுலும் ஆளப்பட்டு வந்தனர். ஆனல் முன்னுக் குப் பின் முரணன குறிப்பிடத்தக்க உண்மை யாதெனில், இத்தகைய வேற்று நாட்டு ஆட்சியிலேயே இத்தாலி பிரான்சு ஆகிய நாடுகளின் இயல்பினின்றும் வேறுபட்ட தீவிரமான நாட்டின உணர்ச்சியையும், தனக்கே யுரித்தான நிறு வகங்களையும் இங்கிலாந்து விருத்தி செய்யத் தொடங்கியமை யென்க. பேரிடர் விளைவிக்கவல்ல நூற்ருண்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலத்திற்ருனும், சோசர், விக்கிளிவு என்பவர்கள் காலத்து மக்களிடையே தனித்தன்மைவாய்ந்த ஆங்கில நாட்டினரும் உருவாவதை நாம் காண்கிமுேம் ; இவ்வினம் பழைய சட்சனிய இனத்திலும் ஆற்றல் மிக்கது ; காலமென்னும் பேரலைகள் எங்கள் கரைகளுக் குக் கொணர்ந்த பல இனங்கள், இயல்புகள், பண்பாடுகள் யாவற்றையும் எங்கள் தீவின் காலநிலையானது பதப்படுத்தி இசைவுற இணைத்த இனமே இது வாகும். சீர்திருத்தத்தின்போது, முதிர்ச்சியெய்தியிருந்த ஆங்கில மக்கள் இலத் தீன் ஆசிரியர்களை விலக்கினர். கந்தினேவியர் தியூத்தோனியருடன் நெருங்கிய தொடர்புங் கொண்டிலர். தானே ஒரு தனியுலகாய்ப் பிரித்தானியா அமைவதா, யிற்று. -
பண்பாடு, அரசியல் சார்ந்த வளர்ச்சியின் இத்தகைய நெருக்கடியான கட்டத்தில், இங்கிலாந்து ஐரோப்பியத் தொடர்புகளைப் பலங் குறையச் செய்த காலே, கொத்துலாந்துடன் ஐக்கியப்படுமாறு ஏற்பட்ட து; அதே காலத்தில், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பூகோளத்தின் ஒவ்வொரு கிக்குஞ் சென்று வரு வதற்கும் கடலும் வாய்ப்பளித்தது. ஆங்கிலேயரின் தீவுக்குணமானது எவ்வாறு குறிப்பிடத்தக்கவாறுள்ளதோ அவ்வாறேயுள்ள அவர்களின் பரந்த உலக அனு பவமும் நோக்கும் அவர்களின் கடலாட்சி காரணமாய் எழுந்தவையாகும். மேலும் கடந்த முன்னூருண்டுகளுக்கு மேலாக, இக்கடலாட்சி காரணமாய் அவர்கள் நாடு காண்பவராயும், வியாபாரிகளாயும் குடியேறிகளாயும் வட வரைக் கோள தென்னரைக் கோளக் கரைகள் எங்கும் சென்று வந்தனர்.
இவ்வாருக, பிரித்தானியாவுக்கும் கடலுக்குமுள்ள தொடர்பானது ஆதிகாலத் தில் அமைதித் தன்மையையும் ஏற்குமியல்பையும் கொண்டதாகும்; இக்காலத் தில் அஃது ஆளுந் தன்மையையும் தேட்ட நாட்டத்தையுங் கொண்டதென்க. இரு காலத்திலும் அத்தொடர்பே இங்கிலாந்தின் வரலாற்றை விளங்கவைக்கும் கருவியாகும்.

நூல்
சுதுவட்டர் காலம்
பாராளுமன்றச் சுதந்திரமும் கடல்கடந்த நாடுகளின் பெருக்கமும்
தோற்றுவாய் தியூடர் காலம் ஆங்கிலேயரின் நோக்கத்திலும் பழக்க வழக்கங் களிலும் அதற்குப் பிற்பட்ட சுதுவட்டர் காலத்திலும் பார்க்க அதிக மான மாற்றங்களை விளைத்ததென்பது நம்பத்தக்கதேயாகும். ஆல்ை, மறுமலர்ச்சியும், சீர்திருத்தமும், கடல்கடந்த அருஞ்செயல் வளர்ச்சி யும் தியூடர் கால ஆங்கிலேயருடைய வாழ்க்கையில் பல மாற்றங் களை ஏற்படுத்தியதோடு உலக இயக்கங்களாகவும் அமைந்தன. அவற்றில் ஏனைய நாடுகளும் ஊக்கங்கொண்டிருந்தன. சுதுவட்டர் காலத்தில் ஆங்கிலேயர், அந்நியர் உதவியோ முன்மாதிரியோவின்றி, பாசாளுமன்ற அரசாங்க முறையையும், உள்ளூர் ஆட்சியையும், பேச்சுச் சுதந்திரத்தையும், மக்கட் சுதந்திரத்தையும் வளர்ப்பாரா யினர்; இவை ஐரோப்பாக் கண்டத்திலிருந்து வந்த வழக்கங்களுக்கு முழுதும் மாறுபட்டனவாகும். கண்டமோவெனில் அரசனுக்குரிய தனி முதன்மையையும் ஒருமுகப்படுத்திய பணிக்குழுவாட்சியையும், தனிப்பட்டவரை அரசுக்குக் கீழ்ப்படுத்தலையும் வளர்ப்பதில் விரைந்து செல்வதாயிற்று. பிரான்சின் குடித்திணை மன்றங்களும் அரகன், காசித்தீல் ஆகியவற்றின் சட்டசபைகளும் தம் மத்திய காலக் கடமைகளையே கைவிடும்போதும், சேர்மனியின் அரசியல் வாழ்க்கை சேர்மானியப் பேரரசின் பகுதிகளாகிய சிறிய அரசு களாகப் பிரிந்து நலிவடையும்போதும் பொதுமக்கட் சபையானது பெருஞ்செல்வரின் தலைமையில் வணிகரையும் பொதுமக்களின் வழக் கறிஞரையும் சேர்த்துக்கொண்டு தானே இக்கால நாட்டினை ஆளுங் கருவியாக விளங்கிற்று. அப்பொதுமக்கட்சபை தன்னகத்தே பல ஆலோசனைச் சபைகளை அமைத்து அவற்றின் விரிவான செயல் முறைகளை விருத்தி செய்ததன் மூலமும், தொடர்ந்து செய்த கலகங் களினுல் அரச ஆதிக்கத்தை வீழ்த்தியதன் மூலமுமே இப்பேற்றை அடைந்தது. இக்கலகங்களின் முக்கிய நோக்கம் சமயம் பற்றியது; முக்கிய பேறு அரசியல் பற்றியது.

Page 10
புதிய இங்கிலாந்து
ஆங்கிலச் சுதந்திரம், ஒரு தீவுக்குரிய சிறப்புக்களை அடிப்படை யாகக் கொண்டதாகையால் அது பூரண வளர்ச்சி எய்தவேண்டுமா யின் ஐசோப்பிய செல்வாக்கிலிருந்தும் ஐரோப்பாவால் ஏற்படக் கூடிய அபாயத்திலிருந்தும் விலகிச் சில காலமாவது தனியாயிருத் தல் அவசியம். இலிசபெத்தும் திரேக்கும் அத்தகைய தனிமை யுண்டாதற்கு உதவியளித்தனர். வேற்றுநாட்டு நிகழ்ச்சிகளுள் முப்பதாண்டுப்போர் முக்கியமானதாகும். அந்நிகழ்ச்சிகளால் இங்கி லாந்து, அயல் நாடுகளின் தலையீடுண்டாகும் எனும் அச்சம் சிறிதும் இன்றி தன் கடற்படையைத் தனக்குக் காவலாகக் கொண்டு தன்னுடைய உண்ணுட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பைப் பெற்றது.
உள்நாட்டு மலர்ச்சிக்காலம் 1688-9 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உடன் படிக்கையோடு முடிவுற்றது. அப்போதே சமய, அரசியல்களின் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சிக் குட்பட்ட புதிய இங்கிலாந்து, மூன்ரும் உவிலியம், மாள்பரோ ஆகியோரின் ஆட்சியில் எவரும் போற்றிய பிரான்சின் மாமுடி மன்னஞன பதினன்காம் உலூயியில் உருவகிக்கப்பட்ட ஐரோப்பாக் கண்டத்தின் புதுமாதிரியான தனியாட்சியோடு போட்டியிட்டது. அப்போட்டி ஐரோப்பாவைப் பிரான்சிய அதிகாரத்திலிருந்து விடுதலை செய்து ஆங்கிலக் கப்பற்படையை முதன்முதலாக உலகிலுள்ள எல்லாக் கடல்களிலும் நிகரற்ற ஆதிக்கமுடைய தாக்கியது. உலூயிக்கு மாமுகச் செய்த போர்கள் ஒரு வல்லாசைக் காட்டிலும் முழுச் சுதந்திரமுடைய சமுதாயமொன்று ஆற்றல்மிக்க தென்பதை விளக்கிக் காட்டிய கடுஞ்சோதனையெனக் கருதலாம்.
இவ்விளைவு, அக்காலம் வரையும் ஆகிக்கத்தைப்பற்றி உலகினர் கொண்டிருந்த கொள்கைப்படி எதிர்பார்த்திருக்க முடியாத வொன் முதலால் அவரிடை பெருவியப்பை ஏற்படுத்தியது. வல்லாட்சியே வினைத்திறனுக்குக் காரணமென மக்கள் எண்ணியிருந்தனர்; அர சியற் சுதந்திரம், சுவிற்சலாந்தின் மாகாணங்களையும் ஒல்லாந்தின் ஏழு மாகாணங்களையும் போன்ற சிறிய சமுதாயத்தினருக்கே புரிய தொன்று எனவும் எண்ணினர். ஒல்லாந்தின் ஆதிக்கம் சிறிது காலமே மேலோங்கியிருந்தது. பின் அவ்வாதிக்கம் பிரான் சிய அரசனது வளர்ச்சியுறும் வன்மைக்கு எதிரில் நிலைபெறவிய லாது குறைவதாயிற்று. வல்லரசான பிரான்சின்மீது பாராளு மன்ற ஆட்சிக்கமைந்த இங்கிலாந்து கொண்ட வெற்றி முதற்றர மான ஒரு புது நிகழ்ச்சியாகும், அவ்வெற்றியே பதினெட்டாம் நூற்முண்டில் மொன்தேகு காலந் தொடங்கித் திருச்சபையிலும் அரசிலும் நிலவிய வல்லாட்சிக்கு மாமுய்ப் பிறநாட்டில் உண்டா கிய நுண்ணறிவியக்கத்துக்கும் முதற்காரணமாகும். ஆங்கில தத்

ஐரோப்பாவிற் செல்வாக்கு
அதுவஞானக் கருத்துக்கள் தமது சொந்தச் சிறப்பால் ஐரோப்பா வில் முன் ஒருபோதும் வழங்காத அளவுக்கு, உலொக்கினது கருத் துக்களும் பிற ஆங்கில தத்துவப் பேரறிஞர் கருத்துக்களும் வழங் கின. இதற்குப் பிரித்தானிய கடற்படையினரும் மாள்பரோவும், இலகோக்கிலும், பிளன்கீமிலும் ஈட்டிய வெற்றிகளே காரணம். இன்னமும் ஆங்கில நிறுவனங்கள் முற்முகத் தெவிவாகாமலும் ஒரளவுக்கே அறிந்துகொள்ளப் பட்டனவாயுமிருந்தபோதிலும், இப்போது அவை முதன்முதலாக உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட் டாக விளங்கத் தொடங்கின.
உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளில் நிகழ்ந்த பிரித்தானி யாவின் வெற்றிகள் மக்களை மிக வியப்புறச் செய்தன; ஏனெனில், 1688 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு முன்னர், பாராளுமன்றத்தினர்க்கும் தீர்மானங்களை நிறைவேற்றும் அரசவதிகாரிகளுக்கு மிடையி லிருந்த போட்டியானது, ஐரோப்பிய அரசின் அங்கத்தவரென்ற முறையில் ஆங்கிலேயரின் பலவீனத்துக்குக் காரணமாயிருந்ததே யன்றி, அவர்தம் வினைத்திறனுக்குக் காரணமாயிருக்கவில்லை. சேமிசு முதலாம் சாள்சு என்போரின் ஆட்சியிலும், சாள்சு, இரண்டாம் சேமிசு என்போரின் ஆட்சியிலும் அரசுக்கும் பாராளுமன்றத்துக்கு முள்ள சமநிலை இங்கிலாந்துக்குப் பிறநாட்டில் சிறுமதிப்பையேனு மளித்திலது. s
தூய்மையாளர் பொதுநலவாயத்தின் கீழ் நிலவிய வினைத்திற அணுக்குரிய காலம் விதிவிலக்காகும். அப்போது பாராளுமன்றத்துக் குரிய கட்சி, அல்லது மொட்டைத்தலையர் கட்சியே உண்மையில் தலைமை பெற்றிருந்தது. சட்டத்துறையினரும் நிருவாக சபையின ரும் ஒன்முகச் சேர்ந்து கொண்டனர்; ஆகவே வரி விதித்தல், தரைப்படை கடற்படை சம்பந்தமான செயல்கள் ஆகியவற்றில் முன் சுதுவட்டரசர் எவரும் அனுபவித்திராத அதிகாரங்களைக் குமுெம்வெலின் தனிப்பட்ட ஆட்சியிலும் அதற்கு முன்னரும் பொதுநலவாய அரசாங்கம் செலுத்திவந்தது. அதுவே உண்மையில் பிறநாடுகள் இங்கிலாந்தின் குரலுக்குச் செவிசாய்த்தும் அஞ்சியு மிருந்தகாலம். ஆனல், மொட்டைத்தலையர் கட்சியினிடத்தே அதி காரஞ் சேர்ந்திருந்தமை ஒரு தற்காலிக நிகழ்ச்சியேயாகும் ; ஏனெ னில், அது மனவொற்றுமையால் ஏற்பட்டதன்று ; நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டது.
1660 ஆம் ஆண்டில் அரசுக்கும் பாராளுமன்றத்துக்குமிடை யிலும் நிருவாக சபைக்கும் சட்டத்துறைக்குமிடையிலும் சமநிலை யதிகாரத்தை மக்கள் மீண்டும் ஏற்படுத்தினர். இத்தோடு நமது கலப்பு' அரசியலமைப்பு பூரணத்துவம் பெற்றுவிட்டது

Page 11
புரட்சி உடன்படிக்கை
எனக் கிளாறெண்டன் மகிழ்ச்சியடைந்தான். மேலும், இச்சமநிலை யதிகாரத்தோடு நமது போர்களுக்குச் செலவிட நிதியில்லா நிலை மையும் கொள்கை வேறுபாடுகளும் ஏற்பட்டன. அதேசமயம் நாடு படைக்கலங்களைத் துறந்தது. அவற்ருல் நாம் எம் பகைவ ரின் பழிப்புக்கும் நண்பரின் நம்பிக்கையின்மைக்கும் ஆளாயி னுேம், அரசியலமைப்பின் இச்சம நிலையே, இரண்டாம் சாள்சின் கொடுமையிலும் பொறுப்பின்மையிலும் மேலாக அவர்தம் ஆட்சி யில் நேர்ந்த பேரிடர்களுக்கு அடிப்படைக் காரணமாயிற்று. எந் நாடேனும் அதிகாரக் குறைபாட்டுக்குரிய தண்டனையை அனுப வியாது, பாதி முடியாட்சிக்குட்பட்டதாயும் பாதி பாராளுமன்ற வாட்சிக்குட்பட்டதாயு மிருக்க முடியாது.
பெரிய பிரித்தானியாவுக்குச் சுதந்திரத்தையும் வினைத்திறனையும் ஒருங்கேயளித்தது 1688 ஆம் ஆண்டுப் புரட்சியேயாகும்; ஏனெ னில், அது சமநிலை அதிகாரத்தைச் சிறிதளவு ஒருபாற்கோடுமாறு செய்து, பாராளுமன்றத்துக்கு நிலையான அதிகாரத்தைக் கொடுத் தது. இச்செயல் நாற்பதாண்டுகளுக்கு முன்போல, நாட்டின் ஒரு கட்சி மற்றக் கட்சியோடு போரிட்டுப் பெற்ற வெற்றியினுலன்றி, இரண்டாம் சேமிசுவின் மூடத்தனம் காரணமாக ஒன்றுபட்ட உவிக்குக்கட்சியாரும் தோரிக்கட்சியாரும் தம்மிடையே செய்து கொண்ட உடன்படிக்கையினல் நிகழ்ந்தது.
அக்காலமுதல் நிருவாக சபைக்கும் சட்டத்துறைக்குமிடையி அலும், அரசுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையிலும், முன் தியூடர் ஆட்சியில் இருந்ததுபோல, பொதுவான பூட்கை சம்பந்தமாய் மன வொற்றுமையிருந்து வந்தது; ஆனல், இத்தடவை பாராளுமன்றம் வழி காட்ட, அரசன் அதனைப் பின்பற்றி நடக்கவேண்டியவனனன். அப்போதுதான் நாட்டின் வரி விதித்தலையும் நம்பிக்கையையும் புதிய நிலையில் மாற்றியமைத்தற்கும், சிறிய காலாட்படையொன்றினையும் பெரிய கப்பற்படையொன்றினையும் நிலையாக வைத்திருத்தற்கும், சித் திராபோத்துவும் குமுெம்வெலும் செய்த அதே மாதிரியான முயற்சிகளைப் பாழாக்கிய பொருமைகள் எழுதற்கு இடங்கொடா மல் பேரரசொன்றுக்குத் தேவையான இயக்கத்தை வளர்த்தற்கும் சாத்தியமாகவிருந்தது. அப்போதுதான் ஆங்கிலேயரோடு சேர்ந்து சட்ட மியற்றுதற்குரிய ஒற்றுமையொன்றைக் கொத்துலாந்தர் மன தார ஏற்கும்படி தாண்டுதற்கும் சாத்தியமாகவிருந்தது. அத் தகைய ஒற்றுமையை அவர்களைக் குருெம்வெல் வாள்முனையில் அச்சுறுத்தி ஏற்கச்செய்துள்ளான். அதே சமயத்தில், ஆங்கிலேயர் எல்லோரையும் நெருக்கி ஒரே அரச திருச்சபையிலே சேர்க்க

பெரிய பிரித்தானியா: புதிய உலகு
முயன்றமை கடந்த பல தலைமுறைகளாக நிகழ்ந்த கட்சிப் பிளவுக் கும் கொலைக்கும் காரணமாயிற்று. அம்முயற்சி செய்யமுடியாத தொன்றென ஈற்றில் 1689 ஆம் ஆண்டின் சகிப்புச் சட்டத்தால் கைவிடப்பட்டது. பரந்த மனப்பான்மைக்கும் சமய சமாதானத் அக்குமுரிய இப்புகியீ ஊழி பிரித்தானியாவின் வணிகம், போர், குடியேற்றமாகியவற்றைப் பெரிதும் பலப்படுத்தியது. பிரான்சின் நிலைமையோ இதற்கு மாமுனதொன்முகும். பிரான்சு அப்பொழுது கைத்தொழிலில் தலைசிறந்த தன் குடிமக்களான இயூகனற்றுக் களை நாட்டிலிருந்து அகற்றுவதில் ஈடுபட்டிருக்க, இவர்கள் இங்கி லாந்து, ஒல்லாந்து, பிரசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு வளர்ச்சியுறும் ஆக்க வேலைகளுக்குப் பெரும் உதவியளிப்பாரா யினர். -
சு துவட்டர் காலத்திலேயே ஆங்கில வரலாருன அரங்கத்தினின் அறும் நாம் வெளியேறி, பிரித்தானிய வரலாமுன மிகப் பரந்த வெளி யிற் பிரவேசிக்கின்முேம், கொத்துலாந்தோடும் அயலாந்தோடும் முறையே இங்கிலாந்து கொண்டுள்ள இக்காலத் தொடர்புக்கு இலிச பெத்தின் ஆட்சியிலேயே அடிகோலப்பட்டது. சுதுவட்டசாட்சியில் ஒன்றன்பின்னென்முக ஏற்பட்ட பல திடீர் நிகழ்ச்சிகளினுற் பிற் சந்ததியினரின் மனதில் அத்தொடர்பு ஆழமாகப் பதிந்துவிட் டது. மூன்ரும் உவிலியத்தினதும் ஆணினதும் ஆட்சிகளில், பல மாற்றங்களின் பின், இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்குமிடை யில் வரையறுக்கப்பட்டதும் நிலையானதுமானதொரு தொடர்பை ஏற்படுத்தினேம். அஃது இன்றும் திருத்தியளித்து வருகின்றது. அவ்வாறே பிரித்தனுக்கும் அயலாந்துக்கும் ஒரு தொடர்பை ஏற் படுத்தினுேம். அது பின்னர் நிகழ்ந்த துரதிட்ட்ங்கள் அனைத்துக் கும் வழி வகுத்தது.
சுதுவட்டரின் அதே காலத்திலேயே இங்கிலாந்தானது குடிவன முள்ளவரும் சுயவாட்சியுடையவருமான சமூகத்தினரை வட அமெ ரிக்காவிற் குடியேற்றியது. ஆங்கிலேயர் உலகின் மறுபுறத்தில் வாழத் தொடங்கினர்; ஆயினும், அவர்கள் அவ்வாறு செய்தது ஆங்கிலக் கொடியின் கீழும் சுதந்திரமுள்ள ஆங்கில நிறுவனங் களின் கீழுமேயாகும். பதினேழாம் நூற்முண்டு முடிவடைதற்குமுன் நியூயோக்கிலும் பிறவிடத்திலும் ஒல்லாந்தரும் என அயல்நாட்டா ரும் கூட ஆங்கிலக் கொடியின்கீழ் வாழ்தலில் திருத்தி கொள்ளத் தக்க விதத்தில் இந்த நிறுவனங்கள் அமைந்து விட்டன. சுதந்திரப் பேரரசொன்றும் A G) சாதிகளையும் சமயங்களையுங் கொண்ட பரந்த பொதுநலவாயமொன்றும் தோன்றுதற்குரிய அறிகுறிகளை இங்கு காண்கின்றுேம். இவைகளே அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இன்றைய பிரித்தானிய பேரரசும் வேறுபட்ட இரண்டு வழிகளால், ஆணுல் உற

Page 12
குடியேற்றம் : பாழ்புரங்கள்
வான மனேநிலையினல் அடைந்த இலட்சியமாகும். பதினேழாம் நூற்ருண்டின் முடிவில் பிற தேசங்களிலே குடியேறிய ஏனைய ஐரோப்பிய நாடுகள் வேறுபட்ட வழிகளில் வளர்ச்சியுறுவனவர யின. சமயமோ அரசியலோபற்றிய சுதந்திரம் பிரான்சிய கனடாவி லும், இசுப்பானிய அமெரிக்காவிலும் இருக்கவில்லை. ஆபிரிக்காவில் ஒல்லாந்தர் குடியேறிய புதிய நாடுகளுக்கு அரசியற் சுதந்திர மில்லை; அமெரிக்காவில் அவர்கள் குடியேறிய நாடுகளில் அது குறைவாகவேயிருந்தது. முதன்முதல் சுதந்திரக் கொடியைக் கட லுக்கப்பால் நாட்டிய நாடு இங்கிலாந்தேயாகும்.
வெவ்வேருன சமயங்களைச் சகிக்கும் பண்பானது 1689 ஆம் ஆண்டு வரையும் இங்கிலாந்தினுள் காணப்படாதிருந்தபோதும், அதனை இக்காலப் பகுதி முழுவதிலும் குடியேற்ற நாட்டிற்குரிய செயல்களில் சுதுவட்டரசரும் அவர் தம் பாராளுமன்றப் பகைவ ரும் தாராளமாகக் கடைப்பிடித்தனர். ஆங்கிலக் கிறித்துவரோ, தூய்மையினேரோ, உரோமன் கத்தோலிக்கரோ தம் பழைய நாட் டில் தமது கதியையிட்டு மன நிறைவற்றவராயிருப்பின், அவர் கள் அரசாங்கத்தின் நல்லிணக்கத்தோடு அமெரிக்காவுக்குச் சென்று தாம் விரும்பியபடி வணங்கலாம் ; ஆனல், அப்போதும் அவர்கள் தம் பழைய கொடியின் கீழ் இருத்தல்வேண்டும். சொந்த நாட்டில் தொல்லை கொடுப்பவர்களென்று கருதப்பட்டோர், அத்தி லாந்திக்குக் கடலின் மறுபக்கத்தில் வாழ்ந்துகொண்டு இங்கிலாந் துக்கு மேன்மையும் வலிமையும் அளிப்பர். விரிந்த இம் மனப் பான்மை குடியேற்ற நாடுகளுக்கிடையே முதன்மையான இடத்தை இங்கிலாந்து பெறுவதற்கு அனுகூலமாயிற்று.
சுதுவட்டர் காலத்தாசர்கள் தம்மரசியற் பகைவர்தாமும் குடி யேறுதலை ஆதரித்தமைக்குப் பிறிதொரு காரணம் யாதெனில், நாட்டில் நிலவிய ஆங்கில வாட்சி முறையில் வணிகம், கைத்தொழில் ஆகியவை சார்பான கருத்துக்கள் அதிகமாக விருத்தியடைந்தமை யேயாகும். மசச்சூசெற்று, நியூயோக்கு, வேசீனியா, மேற்கிந்திய தீவுகள் ஆகியன ஆங்கிலேயரின் ஆக்கப்பொருள்களுக்குச் சிறந்த அங்காடிகளெனக் கருதப்பட்டன. அக்காலத்திலேயே உள்நாட்டு, வெளிநாட்டு அரசியற் பூட்கையில் வணிகம் முதன்மையான மதிப்புக்குரியதென்றெண்ணிப் பாராளுமன்றத்தினர் தம் ஆட்சி யில் அதனை மேன்மேலும் வளர்ப்பாாாயினர்.
1688 ஆம் ஆண்டுப் புரட்சி பொதுமக்கட் சபையின் ஆகிக்கத்தை நிலைநாட்டியது; ஆனல் அவ்வாதிக்கம் ‘பாழ்புரங்களின் முறை யினலே தடைப்பட்டது. அப்புரங்கள் காலகதியில் மேன்மேலும் பிரதிநிதிகளின்றியிருக்க வேண்டியனவாயின. மக்களின் புடை

மத்திய அரசும் உள்ளூராட்சியும்
பெயர்ச்சிக்கிசையப் பாராளுமன்றப் பதவியை மாற்றிப் பங்கீடு செய்ய வேண்டுமென்ற எண்ணம் குருெம்வெல்லோடு முடிவெய்தி யது. அதன்பின்னர், பொதுமக்கட் சபையும் அஃதடக்கியாண்ட அரசாங்கமும் நிலக்கிழார் வகுப்புடன் பெரிதும் ஒன்றுபட்டிருந்தன. அந்நிலக்கிழார் பாழ்புரங்களை அடக்கியாளும் ஆற்றலுடையோரா யிருந்தனர். உள்நாட்டுப் பொதுக்குழப்பத்தின்போது பாராளு மன்றத்தை ஆதரித்த மொட்டைத்தலையர் கட்சியினர் ஏனைய மக்க ளோடு இணங்கி நடக்கக் கூடியவராயிருந்திருந்தால், ஆங்கில நாட்டில் குடியாட்சியை அதிகமான அளவுக்குப் புகுத்தியிருத்தல் கூடும். ஆனல், 1660 ஆம் ஆண்டின் பின் குடியாட்சிக்குரிய உற்சா கம், அடுத்த நூற்முண்டுக் கைத்தொழில் மாற்றங்கள் அதனையொரு புதியவகையில் அமைக்கும் வரையில், மறைந்திருந்தது. 1668 ஆம் ஆண்டுப் புரட்சி பாராளுமன்றத்துக்குரியதாயும் விரிந்த நோக் குடையதாயுமிருந்தபோதிலும், குடியாட்சிக்குரியதாய் அமைந் திலது. ஓரளவு இக்காரணத்தினுல் அத்திலாந்திக்குக் கடலுக் கப்பால் தோன்றிய குடியாட்சிகள் இங்கிலாந்தின் பிரபுக்களுக்குரிய பாராளுமன்றத்தோடு தொடர்புகொள்வது வரவாக் குறைவதா யிற்று. இத்தொடர்புக் குறைவு பழைய இங்கிலாந்துக்கும் புதிய இங்கிலாந்துக்கும் சமயச் சடங்குகளிலே நிலவிய வேறுபாடுகளால் மேலும் அதிகரித்தது.
பெருஞ் செல்வர் வகுப்பையும் உரிமை பெற்ற கூட்டுத்தாபனங்
களையும் அடக்குதற்குச் செய்த முயற்சிகளின் விளைவால் முதலில் சாள்சு அரசரினதும், தூய்மையாளர் பொதுநலவாயத்தினதும், ஈற்றில் இரண்டாம் சேமிசினதும் வீழ்ச்சி நேர்ந்தது. அதனுல் நாட்டுப்புறத்து உள்ளூராட்சியைப் பொறுத்தவரையில் அரசு, இலிச பெத்தின் ஆட்சியிலிருந்ததிலும் அதிக பலவீனம் அடைவதாயிற்று. சமாதான நீதிபதிகளின் பொருளாதாரமும் பிறவும் பற்றிய செயல் கண்மேற் செசிலும் உவால்சிங்கும் கொண்ட அதிகாரம், சுதுவட்டர் காலமுழுதும் குறைந்துகொண்டு வந்தது. அது அனேவேரிய ஆட்சி யின் முதற்பகுதியில் அறவே இல்லாது போயிற்று. அரசுக்கு மாறு கப் பாராளுமன்றம் நிகழ்த்திய போராட்டம் ஆதியில் மத்திய அரசாங்கத்துக்கு மாருக உள்ளூர்ச் சுதந்திரம் பெறுதற்கு நடந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அன்றியும், அது நீதிமன்றத்துக்கும் கோமறைக் கழகத்துக்கும் மாமுன பெருஞ் செல்வரின் கலகமுமாகும். அப்போட்டியில் நிலக்கிழாரும் நகரவாசி களும் பெருஞ் செல்வரையும், அவருள்ளும் முக்கியமாக அரசுக்குப் பெரிதும் மாமுன பகுதியினரையும் ஆதரித்தனர். பாராளுமன்றத் தின் வெற்றி, இங்கிலாந்தைப் பெரிதும் ஒற்றுமைப்படுத்திப் பிற நாட்டுவிவகாரங்களில் அதிக திறமையுடையதாகச் செய்தபோதும்

Page 13
தனியார் உரிமைகள்
உள்நாட்டுக் காரியங்கள் சம்பந்தமாக மத்தியவதிகாரத்தை அவ்வவ் வூரின் கருத்துக்கு அடங்கி நடக்கச் செய்தது. மேலும் தூய்மையா ளர் புரட்சியின் தோல்வி காரணமாக 1660 ஆம் ஆண்டு தொட்டு அவ்வவ்வூரின் கருத்து அவ்வவ்வூர்ப் பெருஞ் செல்வரின் கருத்தா கவேயிருந்தது. சு.துவட்டு வமிசத்தினர்மீது அரசியல் வெற்றி பெறல், ஈற்றில் உவிக்குக் கட்சியினரில் தங்கியிருந்தது. அக்கட்சி யினர் இலண்டன் மாநகரத்தாரோடும் வணிக சமூகத்தாரோடும் தேசியக் கொள்கைபற்றி உறவு பூண்ட பெருஞ் செல்வரின் பகுதி யினராவர். ஆனல் சமூகவதிகாரம் சமாதான நீதிபதிகளிடத்தி லேயே யிருந்தது. மேலும் பெருஞ் செல்வர் எல்லோரும், தொகுதி யாய் உளிக்குக் கொள்கையைவிடத் தோரிக் கொள்கையையே
பெரிதும் ஆதரித்தனர்.
நாடும் சமயமும் பற்றிய அரச கொடுங்கோன்மை நன்கு அடக்கப் பட்டது. அரச திருச்சபை மக்களோடு சமயநிலையதிகாரமுடைய தென்ற பாசாங்கு கைவிடப்பட்டது. அரசினை வெற்றிகொண்ட பாராளுமன்றமும் தனியுரிமையுடைய நீதிமன்றங்களை வெற்றி கொண்ட பொதுமக்கள் வழக்கறிஞர்களும் தனிநபர் சுதந்திரக் தையும் பேச்சுரிமையையும் நிலைநாட்டினர். இது முதற்கொண்டு, அரசாங்கத்தைப் பொறுத்தவளவில், ஐரோப்பாவில் எங்குமில்லாத விதத்திலும், இங்கிலாந்தில் முன்னெருபோதுமில்லாத விதத்திலும், எவருந் தம் ' உள்ளக்கிடக்கையை ” வெளியிடக்கூடும். எனினும் சமூகக் கட்டுப்பாடுகளை யொழித்தல் மிகவுங் கடினமாயிருந்தது. ஆனல், கைத்தொழிற் புரட்சி தோன்றும் வரையும், பெருஞ் செல் வர்களிடமிருந்து விடுதலையைப் பெறுதலின் தேவையைப்பற்றி எவருங் கருத்தூன்றி நினைத்திலர். முதலிரு யோச்சரசர் ஆட்சியி லும் ஆங்கிலேயர் மனித சுதந்திரத்தைத் தாம் பூரணமாக்கிய வொரு கலையெனக் கருதினர். அரசர், புரோகிதர், பிரபுக்களாகி யோர் இன்னும் அதிகாரஞ் செலுத்திக் கொண்டிருந்த ஒரு கண் டத்தை மனதிற்கொண்டதால் ஏற்பட்ட தேசீயச் செருக்கினல் ஓரளவுக்குத் தூண்டப்பட்ட இக்கருத்துத் தவருனதாகும். எனி லும், மாதன், சலாமிசு ஆகிய இடங்களில் வெற்றிபெற்ற விசர்க் குப் பின், சுதுவுட்டர் காலத்துப் பாராளுமன்றங்களிலிருந்த மொட்டைத்தலையரையும் கவலியர்களையும் போலவும் உவிக்கு, தோரிக்கட்சியினரைப்போலவும் மனித சுதந்திரத்தைச் செயல் முறையில் நிறுவு வேறு எந்த மக்கட் குழுவினராயினும் முயன் றனரோவென்பது ஐயத்துக்கிடமானதாகும்.

அத்தியாயம் 1
முதற் சேமிசு. பாராளுமன்றங்களும் தூய்மையாளரும் இணங்காதோரும். ஆங்கிலேயரின் கடலாதிக்கத் தளர்ச்சி. இசுப்பானிய திருமணம். பக்கிங்கா மும் முப்பதாண்டுப் போரும். முதற் சாள்சு. அரசரும் பாராளுமன்றமும் வழமைச் சட்டமும், கோக்கும் இலியத்தும். உலோட்டுவும் சித்திராபோத்தும்.
அரசர் : முதற் சேமிசு, 1603-1625 (கொத்துலாந்தின் ஆரும் சேமிசு, 1567) ; முதற் சாள்சு, 1625-1649.
தியூடாாட்சியின் அடிப்படை இயல்பு இறைவணக்கமேயன்றி வல்லாட்சியன்று. மத்திய அரசுக்கு வலுவளிக்கக்கூடிய படைப் பலம், நாட்டில் அரசனது காரியங்களைக் கவனிக்கும் பொருட்டு அவனிடமிருந்து ஊதியம் பெறும் பணிக்குழு ஆகிய இவற்றுள் ஒன்றேனும் இல்லாத அரசர்கள் வல்லாளராயிருந்திருக்க முடியாது. ஏனெனில் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி தமது குடிகளை இவர் கள் ஒருபோதும் பலவந்தப்படுத்தியிருக்க முடியாது. கீழ்ப்படியாத விழுமியோர் ஒருவரையோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட மந்திரி யொருவரையோ வயிற்முேலிலிருந்து இலண்டன் கோட்டையின் கிறெயிற்றர் கேற்றுக்குக் கொண்டு செல்லும் படகைக் காத்தல் அரண்மனையிலுள்ள மாட்டூனுண்ணிகளுக்குச் சாத்தியமான காரிய மாகப்பட்டிருந்தால் அது இலண்டனிலுள்ள 'தொழில் பயில்வோர்’ இக்கைதிகளை மீட்க ஒருபோதும் முயலாமையினுலென்க. ஐம்பது இலட்சம் மக்களைக் கட்டாயப்படுத்துதலென்பது இவ்வாச காவலர் களின் ஆற்றலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாயிருந்திருக்கும். இம்மக்களுட் பலர் வாள்கள், விற்கள் முதலிய ஆயுதங்களை யுடை யோராயிருந்தனர். இவர்களது குடிசைகளின் இறப்புகளில் கண்ட கோடரிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
சுருங்கக் கூறின், தியூடரின் ஆதிக்கம் ஆன்மீக பலத்தினலேற் பட்டதேயன்றிப் படைப்பலத்தினலேற்பட்டதன்று. அவர்கள் தங் குடிகள் தம்மிடம் எப்போதும் பணிவுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தனர். பல சமயங்களில் அவர்களது அன்பையும் நாடினர். சேர் தொமசு மூவாரோடு தொடங்கிச் செகப்பிரியரோடு முடிவடையும் நூற்முண்டில், ' கடவு ளால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கதிரவன் ஒளியொடும் கம்பீரத்தொடும் உல்லாசமாய் உலாவித் திரிகின்றனன். உயர் மதிப்பு, ஒப்பில்லாத் திறமை, சமயப்பற்று ஆகியவற்றையுடைய எவரும் அவன்முன் தம் செருக்கை ஒழிக்கின்றனர். அரசனின்

Page 14
O
தியூடரும் சுதுவட்டரும்
கோபத்துக்காளாய்த் தம்மைப் பலியிட நேரின் அதனைச் செய்தற்கு
ஆயத்தாாயிருக்கின்றனர். அடுத்த நூற்றண்டில் இவருள் எவரும்
அத்துணைப் பணிவுடையாாதற்குச் சித்தமாயிருக்கவில்லையெனக்
காண்போம்.
ஆங்கில அரச வணக்கத்துக்கு ஒரு குடும்பத்தின் திறமையும் ஒரு காலவூழியின் இயல்புமே காரணங்களாகும். அவ்வரச வணக்கத் துக்கு இரு என்றி அரசர்கள், இலிசபெத்து ஆகியோரின் அரசியற் றிறமை முக்கிய காரணமாயிற்று. அத்துடன் மத்தியகால இங்கி லாந்து நவ இங்கிலாந்தாக மலர்ச்சியடைகையில் திறமையான வோர் தலைமையின்கீழ் நாடு முன்னேறுதல் அவசியமாயிற்று. இது வும் அரச வணக்கத்தின் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. கடைசி யான தியூடவாசன் இறந்த பின்னர், முதலாம் சேமிசு தன் கல்விச் செருக்கினுல் ஆங்கில அரச வணக்கத்தைத் தெய்வீக பரம்பரை யுரிமையென்னும் அரசியற் சித்தாந்தமாக்க முயன்றபோது, அதன் அடிப்படையையே அவன் அழித்து விட்டான்.
இங்கிலாந்து தன் இயல்புக்கும் கொள்கைக்குமேற்ற போதிய பிரதிநிதிகளைத் தியூடவாசர்களிற் கண்டுள்ளது. ஆனல், சுது வட்டாசரோ, ஆங்கிலச் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் அப்பாற் பட்ட இடத்திலிருந்து கூடியவதிகாரத்தைப் பெறுதற்கு உரிமை கோரினர். மேலும், ஆங்கில சமூகத்தில் வலிமை மிக்குடையோரின் விருப்பத்துக்கு மாறுபட்ட கொள்கைகளை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கையாண்டனர். அரசர்கள் தெய்வீகமான பாரம்பரிய உரிமைகள் கோருதலும், தனியாட்சி அதிகாரம் கோருதலும், எவ் வாறு நாட்டின் அரசமைப்புக்குப் புதியனவாயிருந்தனவோ அதே அளவுக்குப் புதியனவாயிருந்த பொதுமக்கட்சபையின் சார்பான கோரிக்கைகள் சில இச்சந்தர்ப்பத்தில் முக்கியத்துவம் பெற ஆரம் பித்தன.
சமயச்சார்புடைய இக்காலப்பகுதியில் இயல்பாகவே தோன்றிய சமயவாதச் சிக்கல்களாலும் சமயசம்பந்தமான ஆர்வத்தினுலு மன்றி நாம் மேலே குறிப்பிட்டுள்ள முரண்பாடுகளினல் மட்டுமே, சண்டையுண்டாகியிருக்கக் கூடுமோ என்பது ஐயத்திற்கிடமானது. உண்மையில், கீழ்ச்சபை சார்பான புதிய உரிமைகள், கோக்கு, செல்டன் முதலிய புகழ்பெற்ற அரசியற் சட்டவறிஞரினதும் எவி யத்து, அமிடன், பிம் முதலிய புகழுடைய பாராளுமன்ற வாதி களினதும்-இஃதொரு புதிய தொழில்-ஆரம்ப உழைப்பின்றி ஒரு போதும் கோரப்பட்டிருக்க மாட்டா, கிடைத்திருக்கவும் மாட்டா.
சேமிசு, முதலாம் சாள்சு ஆகியோரின் ஆட்சிகளில் இங்கிலாந்தின்

பொதுமக்கட்சபைத் தலைவர்கள்
பண்ணை வீடுகள் பாராளுமன்றத்துக்குத் தகுந்த புகழ்பெற்ற மக்களைத் தோற்றிவித்தன. தொல்லியற் கலைஞரும் சட்டம், வழக்கம், மேற்கேர்ளாகியவற்றில் ஆர்வமுள்ளவருமாகிய அவர்கள் தாம் பழைய சிறப்புரிமைகளை மாத்திரமே வேண்டி நிற்கின்றனரென்றும் மகாபட்டயத்தில் கூறப்பட்டவைகளையே சொல்லளவில் மட்டு மன்றிக் கருத்தளவிலும் நிறைவேற்றுகின்றனரென்றும் தாமும் நம்பினர்; தந்நாட்டினரையும் நம்பச்செய்தனர் வரலாற்றுக்கலை இன்னும் தொடக்க நிலையிலிருந்தது. ஏனெனில், உண்மையில் அவர் கள் இங்கிலாந்துக்கும் உலகத்துக்குமே புதியதான ஒராசியல் முறையைத் தாம் தேடுகின்றனரென்றறியாது புதியன புகுத்து வோராயிருந்தனராதலினலென்க. இம் மக்கள் துணிவுடைச்செயல் ஆற்றுநராயோ, தந்நலங்கருதுவராயோ விருந்திலர். அன்றியும், அவர்கள் தம் பரந்த நிலப் பரப்புக்களையும் தனிப்பட்ட தோட்டங் களையும் கைவிட்டதனுல் பெற்ற பலனை விட அடைந்த நட்டமே அதிகம். ஏனெனில், பாராளுமன்றம் அப்போது ஒருவரைச் சிறைக் குச் செலுத்துங் கருவியாயிருந்ததேயன்றி, அவருக்கு ஆதிக்க மளிப்ப தொன்முயமைந்தில தாதலினுலென்க. ஆழ்ந்த மனித தத்துவ அடிப்படையில் அமைந்த புரட்டெசுத்தீர்ந்த சமயவுணர்ச் சியையுடையவர்களாய இவர்கள், ஆங்கில நாட்டின் மறுமலர்ச் சிக் காலத்துப் பெருமக்களுக்கேற்ற பண்பட்ட ஒழுக்கத்தையும் குணத்தையும் உடையவர்களாயிருந்தனர். நீடித்த பாராளுமன் றம் இரண்டாம் முறை கூடியபோது அம்மன்றக் கட்சியில் ஏற்பட்ட பிளவினலேயே இவ்விரு பகுதிகளும் பிரியத் தொடங் கின. அவ்வாறு பிரிந்து அவை மொட்டைத்தலையர் கட்சியாகவும் யாப்புக்கமைந்த அரச கட்சியாகவும் அமைந்தன.
கொத்துலாந்தின் அரசியாய மேரியும் தாணிவியும் பரிதாபத்துக் குரிய முறையில் மணமுடித்துப் பெற்ற நகைப்புக்கிடமான குழந்தையும், பின்னர் கொத்துலாந்தின் அரசனுமான 6 ஆம் சேமிசு, இலிசபெத்துக்குப்பின் முதல் சேமிசாக அரசுகட்டிலேறி ன்ை. அவன் எடின்பமுேவிலிருந்து இலண்டனுக்கு வந்துகொண்டி ருக்கும்பொழுது, ஆங்கிலேயர் தம் புதியவரசனைக் கணப்பொழு தாவது பார்த்தற்குச் சேய்மையிலிருந்தும் அண்மையிலிருந்தும் வந்தனர். தம் உயர்நிலையினல் அரசனுக்கு மிக அண்மையிற் செல்ல உரிமைபெற்ற மக்கள் மிதுலாந்தின் ஆவணங்களிலுள்ள மக்கட்டிரளினூடாகச் சென்று, சாதுவானவனும், தற்பெருமை4 டையவனும் ஓயாது பேசிக்கொண்டிருப்பவனுமாகிய தம்மாசனைக்
* இந்நூல் முதலாம் பாகம் பக்கம், 256
164-1642.
1603.

Page 15
12
உதவவில்லை என்றே கூறவேண்டும்.
முதலாம் சேமிசும் அவனது பூட்கையும்
கண்டனர். அரசனேவெனில், நூலறிவு மிகுந்தவன்; ஆனல், மக்களை மதிப்பிடுவதற்கியலாதவன். மேலும், அவன் இங்கிலாந்தைப் பற்றி யும் அதன் சட்டங்களைப் பற்றியும் ஒன்றுந் தெரியாதவனுயிருந் தான். அதல்ை நியூவாக்கில் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்ட ஒரு முடிச்சு மாறியை நீதிவிசாரணையின்றித் தூக்கிலிடும்படி தன் வாய்ச் சொல்லொன்றினுற் கட்டளையிட்டான். கொத்துலாந்தை அவன் அறிவான். ஆனல் தெற்கே இருந்த தனது இராச்சியத்தின் அரசியல் நிலையை அறிந்துகொள்வதற்கு இவ்வறிவு அவனுக்குச் சற்றேனும்
ஆயினும் அவனுடைய புதிய குடிகள் கண்டிக்கும் மனே நிலையில் இருக்கவில்லை. நாற்பதாண்டுகளாகவும், அதற்கு மேலும் 'அரசி இறந்தபின் நமக்கு என்ன நேரிடும்' என்ற அச்சத்தோடும் ஐயத் தோடும் வாழ்ந்தனர். இலிசபெத்து ஓரளவு அரசியற் காரணங் களாலும் ஓரளவு தற்பெருமை காரணமாகவும் இவ்விடயத்தை வெறுப்பவள் போலக் காட்டிய மனுேபாவனை மக்கள் மனக்கவலையை மிகைப்படுத்தி நீடிக்கச் செய்தது. மேலும், அவளால் ஒப்புக் கொள்ளப்பட்ட உரித்தாளன் வேண்டும் என அவர்கள் கோரிக்கை செய்தமையும் அரசிக்குக் கோபமூட்டியது. அதுவும் அவர்களு டைய கவலைக்கொரு காரணமாகும். அரசி தனதாட்சி முடிவ தற்குமுன் தனது பிரசைகளின் அரசபத்தியை அவ்வுரித்தாளன் கெடுத்துவிடக் கூடுமென அஞ்சினுள். ஆனல் புகழ்பெற்ற தந்தை யின், சாதுரியமிக்க மகஞன உருெபேட்டு செசில் என்பான் சேமி சோடு பேசி எதிர்ப்பு எதுவுமின்றி அவன் அரசெய்துவதற்கு வழி வகுத்தான். இலிசபெத்து இறந்த பின்னர் நாட்டில் அமைதி யாகவே கருமங்கள் யாவும் தொடர்ந்து நடந்தன. இதனுல் மக் களுக்கு ஏற்பட்ட மன ஆறுதல் விவிலிய நூலின் அதிகாரபூர்வ மான மொழிபெயர்ப்பின் பாயிரத்தில் உயர்வு நவிற்சியாகக் கூறப் பட்டுள்ளது. -
குழந்தைப் பருவந்தொட்டுச் சேமிசு தன் தாயின் இடத்தைக் கவர்ந்துகொண்டு கொத்துலாந்தை ஆட்சி செய்தான். அவன் எவ் வகையிலாயினும் தாயின் பொருட்டுப் பழிவாங்கியவனல்லன் ; தாயின் அரசியற் பூட்கையைப் பின்பற்றுபவனுமல்லன். தான் இலிசபெத்தின் பரிபாலனத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டு மென்ற ஏற்பாட்டோடு இங்கிலாந்துக்கு வந்தான். ஆகவே, அப் பரிபாலனத்தின் உண்மையான இயல்பைத் தன் ஆற்றலுக்கேற்ற, அளவில் அறிந்துகொண்டு அதனை நடத்தி வந்தான். உருெபேட்டு செசில் என்பான் முதல் மந்திரியாய் அமைந்து சலிசுபெரி வேளா ஞன். திருச்சபைக்கும் அரசுக்குமுரிய அலுவல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சகிப்புத்தன்மை பற்றிப் பிரான்சிசு பேக்கன் கூறிய

கொத்துலாந்தோடு ஐக்கியம்
புத்திமதி பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டபோதிலும், அவனும் சேமிசுவின் ஆலோசகன் ஒருவனுகவே நடந்து கொண்டான். இலிச பெத்தின் போர் நாட்டமுள்ளோர்’ மாத்திரம் விலக்கப்பட்டனர். மேலும், இரலே கோட்டையில் அடைக்கப்பட்டான். அதன் மேற்றளத்தில் உலாவும்போது, கீழே தேமிசு நதியிலுள்ள பாய் மரங்களைக் கைப்பிடிச் சுவர்களுக்கு மேலாக உற்றுப் பார்த்துக் கொண்டும், மாலுமிகள் வேலைசெய்யும்போது எழுப்பும் ஒலிகளை யும் பாடும் பாட்டுக்களையும் பழைய நினைவிலுைண்டான மனச் சலிப்போடு உற்றுக் கேட்டுக்கொண்டும் இருப்பதற்கு விடப் பட்டான்.
புதியவாசனல் ஒரு நன்மை விளைந்தது-அதுவே கொத்துலாந் தோடு கொண்ட ஐக்கியமாகும். இப்பொழுது இருமுடிகளும் ஒரு தலையிற் குட்டப்பட்டமையால் எல்லையையொட்டிய நீண்ட விசித் திரக் கதை முடிவெய்திற்று. அங்குள்ள கொள்ளைக்காரரின் தொழி அலும் ஒழிந்தது. அவர் தாம் நடமாடிய புல்வெளிகளை ஆயர்க்கு விட்டு விட்டனர். செவித்துமலை உச்சிக்கும் தெபித்தாபி நிலமையத்துக்கும் அவ்வாயர் இப்பொழுது அச்சமின்றித் தம் மந்தைகளைச் சாய்த்துச் செல்லக்கூடியதாயிருந்தது. ஆனல், இராச்சியங்கள் இரண்டுக்கும் பாராளுமன்றங்கள், திருச்சபைகள், சட்டங்களாகியவற்றில் ஐக் கியம் இல்லாதிருந்தது. மேலும், இங்கிலாந்துப் பிரசைகள் கொத்து லாந்தரைச் செருக்குடையரென்றும் அரசவாதாவைப் பெறுதற்குத் தம்முடன் போட்டியிடும் பிச்சைக்காரசென்றும் கருதி வெறுத்தனர். அத்தகைய ஐக்கியத்தால் வாக்கூடிய வலிமை முழுவதையும் பெறப் பதினெட்டாம் நூற்முண்டு வரையிலும் பேரரசு தொடங்கிற்றிலது. ஆனல், ஆங்கிலேயர், கொத்துலாந்தர்மீதும் கொத்துலாந்தர் ஆங்கிலேயர்மீதுங் கொண்ட பகைமை உணர்ச்சிகளே பெருமள விற்கு சுதுவட்டர் ஆட்சியில் அரசியலிலும் சமயத்திலும் நேர்ந்த சிக்கலானதும் கொடியதுமான குழப்பத்தின் காரணங்களா யமைநதன.
இப்பொழுது மாபெருந் தலைவனுய் விளங்கிய அரசன் எடின்பருே விலிருந்து நானூறு மைல் தூரத்தில் இருந்தமையால் அவனுடைய சமுகத்தை யிழந்திருந்த கொத்துலாந்து, தான் முன்னெருபோதும் இருந்திராத முறையில், அரசவதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வயிற்முேலிலிருந்து கொண்டே 6 ஆம் சேமிசு கொத்துலாந்தின் பிரபுக்களைப் பணிவுடனும் அச்சத்துடனும் நடத்தக் கூடியவனுயும் அதே சமயத்தில் கொத்துலாந்தின் திருச்சபை அரசின் மேல் அதிகாரஞ் செலுத்துதலைத் தடுக்கக் கூடியவனயுமிருந்தான். இரண் டாவதான இலக்கினை அடைவதற்குத் திருச்சபைக்குரிய அமையங் கள் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டிருந்த சிறுநில
1603.
3

Page 16
14
சேமிசும் பாராளுமன்றமும்
வுரிமையாளர்க்கும் சமய குருமாருக்கும் மாமுக, விழுமியோர்களின் பொருமையைத் தூண்டிவிட்டு அதில் வெற்றியும் கொண்டான். பணிவானவரும் குறைந்த சம்பளம் பெறுபவருமான விசுப்புமார் சிலரை அரசன் ஏற்படுத்தி, குடியரசுச் சபைகளுக்கும் சமய மன்றங்களுக்கும் தாழ்வு ஏற்படும் வகையில் இவ்விசுப்புமார் களுடைய கடமைகளைப் படிப்படியாகப் பெருகச் செய்தான். அவ் வாறு செய்துவந்ததால் கொத்துலாந்தின் சமய வாழ்க்கையில் மிதமானவரும் பரந்த மனப்பான்மையுடையருமான மக்களைக் காப்பாற்றியும், குருமாரின் கொடுமையைத் தடுத்தும் வருவான யினன். ஆனல் கொத்துலாந்தர் அப்பொழுது தங் கருத்துக் களே வெளிப்படுத்த உதவிய ஒரேயொரு முறையையும் அத ஞல் பங்கப்படுத்துவானுயினன். எவ்வாறயினும், அவன் கோயிற் பற்றுக்களிலுள்ள பிரெசு பித்தீரிய அமையங்களை அழிக்கவோ, கொத்துலாந்தின் சமயச் சபைகள்மீது ஆங்கில வழிபாட்டு நூலைத் திணிக்கவோ முயன்றிலன். கொத்துலாந்தில் “ சமய மென்பதே இல்லை” யெனும் பொய்க் கூற்றை நம்பி உலோட்டு வீழ்ச்சியடைந்ததுபோல, அவன் ஒருபோதும் ஏமாந்திருக்கமாட் டான். சேமிசு விரும்பிய அளவுக்கு மேலான சமயம் அங்குண்டு; அதனை அதற்குரியவிடத்தில் விட்டு வைப்பதே அவனுடைய ஒரே யொரு விருப்பமாகும். அவன் இங்கிலாந்தை எவ்வளவுக்கெவ்வளவு அறியாதிருந்தானுே, கொத்துலாந்தை அவ்வளவுக்கவ்வளவு நன் கறிந்திருந்தான்; அவன் மகனன சாள்சு அவ்விரு நாடுகளில் ஒன்றையேனும் அறிந்திலன்.
சேமிசுக்கு இங்கிலாந்து முற்றிலும் புதிய நாடாய் இருந்தது; அன்றியும், அவன் தனது அறியாமையையும் உணர்ந்திலன். வயிற் முேலிலிருந்து ஆட்சி செய்ய அவன் முதல் வந்தபோதே அவன் தன் மனதிலே திட்டவட்டமான கருத்துக்களையுடையவனுயிருந்தான். மேலும், அவன் அங்கு பெற்ற முகத்துதி தன் நுண்ணறிவைக் குறித்து அவன் கொண்டுள்ள பெருமதிப்பை உறுதிப்படுத்தியது. அரசியல் என்பது அவன் முற்றும் கற்றுணர்ந்த ஒரு கலையல்லவா? தன் குடிகளின் நன்மைக்காகத் தன்னாசறிவு முழுவதையும் இடை யமுது வெளிப்படுத்திவந்தான். ஆகவே, அவனுக்கு நேரில் விடை யளிக்கத் துணிந்தவர் எவருமில்லாததால், தான் எவரையும் நியா யத்தில் வென்றுவிட்டதாக வெண்ணினன். கொத்துலாந்தில் ஆங்கிலப் பொதுமக்கட் சபையைப் போன்ற ஏதேனுமொன்றின் அனுபவமும் அவனுக்கில்லாதிருந்தது. கொத்துலாந்தின் “பாராளு மன்றம்" உண்மையில் ஒரு பதிவுமன்றமாகும். அதனிலும் மிக மேலானதும் அதே பேருடையதுமான இங்கிலாந்தின் சபையை அவன் உயர்வாக மதிக்க இயலாதிருந்தான். கொத்துலாந்தில் காணி

சேமிசும் தூய்மையாளரும்
க்ளையுடைய நிலமானியப் பான்களும் போதனபீடங்களினின்று பிரெசுபித்தீரியப் போதகருமே அவனை எதிர்த்தனர். அங்கினமா யின், பொதுமக்கட் சபையில் சிறப்புரிமை', 'மேற்கோள்கள்', ‘அரசுக்குரிய அடிப்படையான சட்டங்களாகியவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு இங்கிலாந்தில் அவனை எதிர்க்கும் இப்பெருஞ் செல் வரும் வழக்கறிஞரும் யாவர்? தமது நிபந்தனைக்குட்பட்டன்றி வேறு வழியால் சேமிசு அரசன் குடிகளிடத்திருந்து பணம் சேகரிப் பதை விடாது கடுக்குமிவர் யாவர்? அன்றியும், திருச்சபைக்கும் வெளிநாட்டுக்குமுரியதான பூட்கைமுறை பற்றிய மிக முக்கியமான அலுவல்களைக் குறித்து அவனுக்குக் கட்டளையிடும் இவர்கள் யாவர்? இவர்களின் பேதமையை அரசன் முதலிற் தயவான முறையில் எடுத் துக் காட்டினன்; அவர்கள் தன் கண்டனங்களை அவமதித்தபோது, கடுங் கோபங்கொண்டு அதனைத் தன் சொல்லிலும் செயலிலுங் காட்டினன்.
சுதுவட்டர் குடும்பத்துக்கும் இங்கிலாந்திலேற்பட்ட தூய்மை யாளரியக்கத்துக்குமுள்ள தொடர்பு புதிய ஆட்சியின் அரசியற் சட்டங்களுள் ஒன்றினல் நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்தின் திருச்சபை அப்பொழுது தூய்மையாளர் முயற்சிக்கு முக்கிய அரங்கமாயமைந்திருந்தது. மேலும், தாபித்த திருச்சபையின் தலைமைக் குருமார் சிலர் அமிடன் மன்றத்தில் நடந்த பெருங் கூட் டத்துக்கு வந்தனர். ஆங்கு அவர்கள் அந்நாட்டு எல்லைக்குட்பட்ட தூய்மையாளர் கொள்கையுடைய மக்கள் சிலரைத் தாபித்த திருச் சபையின் அங்கத்தவராகச் சட்டமுறைப்படி சேர்ந்துக்கொள்ள வேண்டுமென்று வேண்டினர். அவர்கள் தாழ்மையான மனப்போக் குடையாாய்க் காணப்பட்டனர். காட்டிறைற்று, பென்றி ஆகியோ ரின் காலத்தில் நடந்ததுபோல, குருபரிபாலன அரசைப் புரட் டவோ, வழிபாட்டு நூலில் பெரும் மாற்றத்தையுண்டாக்கவோ இப்பொழுது அதிகாரத்தோடு கேட்டிலர். அரசனின் விருப் புக்கு மாமுகத் திருச்சபையைக் கைப்பற்றுதல் முடியாத தொன் றென்று அவர்கள் அறிந்தனர். ஆகையினல், தங்கள் கிரியைகளிலும் கோவிற்பற்றுத் தொழிலிலும், தங்கள் நிலையை ஒழுங்குபடுத்து வதன்பொருட்டு அனுமதிக்கத்தக்க சில மாற்றங்களை வேண்டினர்.
அவ்வாருய தருணத்தில் அவர்களைச் சட்டமுறைப்படி சேர்ப் பதை அடிப்படையாகக் கொண்டு ஓர் உடன்படிக்கை செய்திருக் கலாம். மேலும், சிறப்பாக, திருச்சபைக்குப் புறத்தே சகிப்புக் குணம் அனுமதிக்கக்கூடியதொன்முக அப்பொழுது கருதப்படாத படியால், எளிதில் விரிவாக்கக் கூடியதாயமைந்த அரச திருச்சபை யின் எல்லையை விரிவாக்கியும் அவர்களைச் சேர்த்திருக்கலாம். பொது மக்களிடத்தும் சிறப்பாய்ப் பாராளுமன்றத்திலும் அப்பொழுது
1604
5

Page 17
16
அரசனது கெடுபிடி
மிகுந்த செல்வாக்குடைய அவ்வியக்கங் காரணமாய்த் தாபித்த திருச்சபைக்குள்ளேயோ, வெளியேயோ சட்டமுறைப்படி நடந்த முயற்சிக்கு இடங்கொடாது மறுத்தமை, உள்நாட்டுப் போருக்கு வித்திட்டதாகும். அமிடன் மன்றத்தில் சேமிசு செய்த செயல் அதுவே, ‘விசுப்பிலாேல் அரசனிலன்' என்று அவன் கூச்சலிட்ட பொழுது தன் உரிமையுடனேயே அவ்வாறு செய்தனன்; ஆனல், குருபரிபாலனம் அப்பொழுது விவாதத்துக்குரிய பிரச்சினையா யிருக்கவில்லை. ‘நான் அவர்களைப் பணியச்செய்வேன், அன்றேல் அவர்களை நாட்டினின்று துரத்திவிடுவேன்' என்று அவன் கடுஞ் சினங்கொண்டு கூறியபோது, மூன்று தலைமுறையாகக் கண்ணீர் சிந்தவும் உயிர்ச்சேதம் விளையவுஞ் செய்ததாகிய ஒரு நீண்டகாலப் பகைடிையை உண்டாக்கினன். அன்றியும், அதிகாரம் அரசரிலிருந்து பாராளுமன்றத்துக்கு மாறவும் வழி செய்துவிட்டான்.
தாபித்த திருச்சபைக்குள்ளே, அல்லது வெளியே சகிப்புத் தன்மையைக் காட்டச் சேமிசு மறுத்தமை, அவன் தன் மகனுண சாள்சைப்போல மேற்றிருச்சபைச் சமயத்தோடு அவன் கொண்ட தொடர்பினல் வந்த விளைவன்று. இன்னும், அவன் கல்வினின் கோட் பாடுடையணுயிருந்தான்; ஆனல், கொத்துலாந்தில் தான் விரும்பிய திலும் மிகவதிகமாகக் கண்ட குடியாட்சிக்குரியதும் ஆர்வம் நிறைந் ததுமான சமயத்தினரோடு அரசியற்ருெடர்புகொள்ள அவன் அஞ்சினன். கொத்துலாந்தின் பிரெசு பித்தீரிய குருசங்கம் அர சோடு ஒருமனப்படுதல் கடவுள் பேயோடு இணங்குவதையொக் கும், எனவும் ‘இனி யாவரும் என்னையும் எனது அவையையும் நிந்திப்பர்' எனவும் அவன் கூறினன். பயனில்லாத அக்கூட் டத்தின் பின்னர், ஆங்கிலேயரான முந்நூறு தூய்மையாளக் குருமார் தம் மானியங்களிலிருந்து விலக்கப்பட்டனர். அப் பொழுதே, 'இணங்காமை' பெரிய அளவில் தொடங்கிவிட் டது. ஆயினும், அதன் பின்னும் எண்பத்துநான்காண்டுகளுக்கு 'இணங்காமை வழிபாடு சட்டவிரோதமானதாயும் தண்டனைக் குரியதாயுமிருந்தது. இதல்ை அரச திருச்சபையின் அதிகாரத் தைக் கைப்பற்றுதற்கான போராட்டத்தில் எல்லாக் கட்சியி னரும் ஆவலோடும் கோபாவேசத்தோடும் பங்கு பற்றினர். ஏனெ னில், அத்திருச்சபைக்குப் புறத்தே, எவ்வகையிலாயினும் மக் கள் கடவுளை வழிபடுதற்கு அனுமதிக்கப்பட்டிலாாதலினலென்க.
போருக்கும் கலகத்துக்கும் காரணராயுள்ள மக்கள் பலர் தம்மைப் பற்றி எண்ணுவதுபோல, சேமிசும் பொதுமக்களின் கோபாவேசத்துக்கு அப்பாற்பட்ட உயர்ந்த அறிவு நிலையிலே இருந்து சமாதானத்தை ஏற்படுத்துபவனகத் தன்னக் கருதிச் செருக்கடைந்தான். அவன் தனது சமாதான ஆற்றலை உரோமன்

வெடிமருந்துச் சதி
கத்தோலிக்கக் குடிகளிடத்தே பயன்படுத்தினன். அவர்களிடம் பொறுமை காட்டுவதாக வாக்களித்தான். ஆயினும், அதனை நிறை வேற்ற அவனல் முடியாது போயிற்று; ஏனெனில், தூய்மையாள ரைத் துன்புறுத்துங் கருத்தினை அவன் கொண்டமையினுலா மென்க, தண்டனைச் சட்டங்களின் கடுமை சிறிது தணிக்கப்பட்ட போது காந்திருந்த கத்தோலிக்கர் தொகை தெரியவந்தது. இது மக்களிடத்தே பெருந் திகிலையுமுண்டாக்கியது. உண்மையில், இது ஒன்றையொன்று பற்றுஞ் செயலாயிருந்தது. அப்போதுள்ள அரசு முறையைப் புரட்டவும் இங்கிலாந்தில் புரட்டெசுத்தாந் தத்தை அடியோடு அழிக்கவும் கருத்துக்கொண்ட இயேசு இயக் கம், இலிசபெத்தின் ஆட்சியில் வழக்கமாக இருந்த அளவு துன் புறுத்தல் இப்போதும் அவசியம் என அறிஞரும் மக்களும் கருதும் படி செய்தது. அத்துன்புறுத்தலால் உரோமன் கத்தோலிக்கர் பல ரின் கருத்திலே இயேசு இயக்கம் நியாயமானதென்று மெய்ப்பிக்
கப்பட்ட்து.
உதவி கொடுக்கப்படுமென்று அரசன் வாக்குக் கொடுத்தபின்ன ரும், சட்டத்துக்கு இணங்காமைக்காக ’க் குற்றப் பணம் அற விடலை மறுபடியும் கட்டயப்படுத்தியமையால், இயேசு இயக்கக் கட்சிக்குரிய கத்தோலிக்க பிரபுக் குழுவினர் கோபங்கொண்டு, அர சனையும் பாராளுமன்றத்தின் இரண்டு சபையினரையும் ஒருங்கே யழிக்க வெடிமருந்துச் சதி செய்தனர். தியூடர்கால ஆரம்பத்தில் அரசனைக் கொலை செய்வதனுல் அரசினை ஆற்றலறச் செய்யக்கூடும் ; அன்றேல், அழிக்கக் கூடும்; இப்பொழுது பாராளுமன்றத்தினரை யும் கொலை செய்யவேண்டியது அவசியமெனக் கருதப்பட்டது. அதற்கு வேண்டிய முக்கியமான முன்னேற்பாடுகள் யாவற்றையும் நெதலாந்துக்களில் இசுப்பானிய சேனையில் அதிகரிகளாகத் தொழி லாற்றிய மக்கள் செய்து முடித்தனர். அந்நேரத்திலே இளகிய மனத்தையுடைய ஒருவன் சதியினை வெளிப்படுத்தினன். எமக்குத் திகைப்பை ஏற்படுத்துவது இவர்கள் இச்செயலைச் செய்ய முயன் முர்கள் என்பதே யொழிய இச்செயலன்று; மேரி தியூடரினதும் சேமிசினதும் ஆட்சிகளுக்கிடையில் உரோமன் கத்தோலிக்கர் மான மிழப்பதற்குக் காரணமான மிகப்பெரிய சம்பவம் அதுவேயாகும். இயேசு இயக்கப் போதனையின் பலனைப் பற்றிக் கூறப்பட்ட யாவும் உண்மையெனவே கபடமற்ற ஆங்கிலேயருக்குத் தோன்றிற்று. மேலும், கைபோக்கிசுவின் நினைவு விழாவுக்குரிய நவெம்பர்த் திங் களில் வரும் ஐந்தாம் நாளைப் புரட்டெசுத்தாந்தர் இவ்வாண்டு தம் திருச்சபை வழிபாட்டில் ஒழுக்கத்தோடு கொண்டாடினர்; அதே நாளில் அத்துணை சமயப் பற்றற்றவரும் மனமாரக் கலந்து
கொள்ளக்கூடிய முறையில் சந்திகளில் அமைந்த கேளிக்கையான
8-R 5931 (11162)
1605。
17

Page 18
18
1604.
சமாதானவாதி சேமிசு
கிரியைகளில் மக்கள் ஈடுபட்டனர். இக்காலமுதற்கொண்டு இங்கி லாந்தில் உரோமன் கத்தோலிக்கருக்கு மாமுய் எழுந்த அடங்காக் கோபம் சுதுவட்டர் வமிசத்தின் நீண்டதும் சிக்கலானதுமான வரலாற்றின் நிகழ்ச்சிகளை நிர்ணயிப்பதாக அமைந்தது*
தரையிலாயினும், கடலிலாயினும், போர் எனின் சேமிசு வெறுத் தான். தளர்ச்சியுறும் பிற்காலத்தில் சேமிசு, எதையும் புதிதாகத் தொடங்கும் பொறுப்பை எளிதில் மாறுகிறவனும் பேராவலுள்ள வனுமான பக்கிங்காமிடத்தே ஒப்படைத்தான். அங்ங்னம் ஒப்ப டைக்கும் வரையும் இங்கிலாந்தில் ஆட்சி செய்த எவரிலும் அவன் மிகச் சிறந்த சமாதான வாதியாவன். செங்கோலும் எழுதுகோலும் பிடிக்கும் கையினன் அவன். அவையிரண்டும் வாளிலும் வலிமை மிக்கவையென்பது அவன் கருத்தாகும். உருக்குக் கருவியைக் கண்டாலே அவன் பேரச்சங் கொள்வன்; ஏனெனில், இரவில் நடந்த அவன் தன் தாயாரின் விருந்துக் கொண்டாட்டத்தில் ஆயுதந்தாங் கிய மக்கள் சிலர் திடீரெனத் தோன்றித் தாயின் முன்னிலையில்
இருசியோவென்பானைக் குத்திக் கொன்ற அக்கொடிய நாளிலிருந்து
மூன்று திங்களுக்குப் பின் அவன் பிறந்தமை ஒருவேளை அவ்வச்சத் துக்குக் காரணமாயிருந்திருக்கலாமென்க. தன்னைப் பொறுத்த மட்டில் சேமிசு சிறிதும் போர்க்குணமற்றவனுயிருந்தான். அன்றி யும், அக்காலக் கொத்துலாந்தணுயிருந்தமையால், கடலாதிக்கத்தின் பெருமையை நன்கு உணர்ந்திலன். இங்கிலாந்தின் சுதுவட்டரசர் களுள் கடற்படையை அறவே புறக்கணித்தவன் அவன் ஒருவனே l.JfT660T.
கடற்படையைப் புறக்கணித்தமை இசுப்பெயினேடு அவன் கொண்ட சமாதானத்தினுல் வந்த பேறுகள் சிலவற்றை இழக்கச் செய்தது. இலிசபெத்தின் போரினை முடித்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் இசுப்பெயினேடும் ஐரோப்பாவில் அதற்குரிய நாடு களோடும் கட்டுப்பாடற்ற வணிகஞ் செய்தற்கு ஆங்கில வர்த்தகர் க்கு வாய்ப்பினையளித்தன. மேலும், அந்நிபந்தனைகளை இசுப்பானிய துறைமுகங்களில் அவர்களுள்ளபோது மத வழக்கு மன்றம் அவர்
*வெடிமருந்துச் சதிக்கும் இயேசு இயக்கச் சிலேடைக் கொள்கைக்கும் * மகபெது ” என்ற நாடக நூலில் நேரான குறிப்புண்டு. அச்சிலேடைக் கொள்கை இயேசு இயக்க உறுப்பினரான காணற்று என்பவரின் நீதி விசாரணையில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. “ சிலேடைப் பேச்சுடையன் ஒருவன் இங்குள்ளான். அவன் இரு பக்கத்திலும் நின்று ஒவ்வொரு பக்கத்துக்கும் மாருக ஆணையிடுவான். அவன் கடவுளின் பொருட்டு நம்பிக்கைத் துரோகஞ் செய்தான் ; ஆனல், சுவர்க்கத்தில் அவனது சிலேடைப் பேச்சுப் பலிக்காது போயிற்று”. அந்நாடகத்தில் வரும் சிறிய உரையாடல்களில் இதேமாதிரியான குறிப்புக்கள் பல செறிந்து கிடக்கின்றன.

இசுப்பானிய உடன்படிக்கை
கள்மேற் செலுத்தக்கூடிய அதிகாரத்தைச் சிறிது கட்டுப்படுத்தின. ஆனல், இசுப்பானிய அமெரிக்காவோடும், ஆபிரிக்காவிலும், ஆசியா விலும், போத்துக்கல் தனியுரிமை பெற்ற நாடுகளோடும் வணிகஞ் செய்தற்கு இலிசபெத்தின் காலத்துக் கடல்வாழ்நர்க்கிருந்த வணிக உரிமைகள் அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டில. மேலும், இவ்வுரிமைகளைக் கட்டாயப்படுத்தலை ஆங்கிலவரசு ஒருபோதும் ஆதரித்திலது. அவ்வரசு தானே அரச கடற்படையை அழிய விட்டது; அதே சமயத்தில் தன்னலான மட்டும் கடற்கொள்ளையை அடக்கிவைத்தது.
இவ்வாருகிய நிலையில், இசுப்பானியரோடும் போத்துக்கேய ரோடும் அரசருடைய ஆதரவின்றித் தனிப்பட்ட முறையில் போர் இடைவிடாமல் நடந்தது. இசுப்பானியருக்கு மாருய் இங்கிலாந்தின் நலனையும் மதிப்பையும் ‘கடற் கொள்ளைக்காரர்', சட்டவிரோதமாக வேனும் காப்பாற்றி வந்தவரையிலும் அவர்களுக்கு அமெரிக்க இந்திய தீவுகளில் நண்பர் கிடைத்தனர்; அன்றியும்; மேற்கிந்திய தீவுகளிலும் வடபாலுள்ள பெருநிலப்பகுதியிலமைந்த புதிய ஆங்கிலக் குடியேற்ற நாடுகளிலும் இராணுவத் தளங்களைப் பெற் றனர். ஆனல், அவர்தம் பெருங் கடற்கொள்ளை எப்பொழுதும் இசுப்பானியரை மாத்திரம் எதிர்த்து நடத்தப்பட்டதன்று. மேலும், சுதுவட்டர்காலம் முடிவதற்கு முன், ஆங்கிலக் கடலோடிகள், திரேக்குவும் இரலேயும் நடந்துகொண்ட முறைக்கு மாமுன மிகச் சீர்கெட்ட முறையில் நடந்து கொண்டனர். கொடியோனுன கிரேக்குவும் மற்றுங் கருங்கொடிக் கடற்கொள்ளைக்காரர்களும் இக்காலத்திற் முேன்றியவர்களே. அதேவேளையில், தென்னமெரிக்கா வோடு நடந்த வணிகம் நடைமுறையில் இல்லாவிடினும், சட்டப் படியாவது இசுப்பானியரல்லாத ஏனையோர்க்கு மறுக்கப்பட்டிருந் தது; ஆனல், கிரேக்குவுடைய வெற்றிகளின் பேருக, ஆங்கிலேயர், பிரான்சியர், ஒல்லாந்தர் ஆகியோரின் குடியிருப்புக்கள் செயன் முறையில் வட அமெரிக்காவோடு வணிகம் நடத்திவந்தன.
இசுப்பானிய அரசனின் குடிமக்களாக அப்போதிருந்த போக் துக்கேயர் ஆபிரிக்கா, கிழக்கிந்திய தீவுகளாகியவற்றின் கரை யோரங்களிலிருந்த மக்களோடு முதலாம் சேமிசுவினுடைய குடி மக்களை, சமாதான காலத்திற்ருனும் வணிகஞ் செய்யாது தடுக்க முயன்றனர். ஆனல், ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனியார் தங் கப்பல்களைப் போருக்குத் தயார் செய்தனர். தளபதிகளாய தொமசு பெசிற்றுவும் நிக்கலசு இடவுன்றனும் போத்துக்கேய ரோடு குருற்றுவுக்கப்பாற் செய்த முடிவான போரினல் அவர்களைக் கடலினின்று துரத்திவிட்டனர். அதனல் இசுப்பானியரின் அமெரிக்க குடியேற்ற நாடுகளின் காவல் செய்யப்பட்ட கடலோரங்
19
1611.
1614-15.
முதலாம் ufTa5líb XX ஆம் தேசப் படத்தைப் பார்க்க.

Page 19
20
ஒல்லாந்தர் வணிக வளர்ச்சி
களில் வசிப்பவரோடு இதுவரையுஞ் செய்யக்கூடியதாயிருந்த வணி கத்திலும் மிக நிலையானதொன்றை ஆசிய மக்களோடு நிறுவினர். கீழ்த்திசை நாடுகளிலுள்ள போத்துக்கேயரோடு ஆங்கிலேயர் ஆற்றிய போர்க்குரிய செயல்களில் ஒல்லாந்தர் அவர்களுக்குக் துணைசெய்தனர். ஆனல், ஏனைவிடயங்களைப் பொறுத்த வரையில் இவ்விரு புரட்டெசுத்தாந்தத் தேச மக்களின் வணிக சமூகங்களுக் கும் இடையே பகைமையிருந்தது. அது போத்துக்கேயருக்கு இந் திய கடல்களில் ஆதிக்கம் இல்லாதிருந்தபோது வளர்ச்சியுறுவதா யிற்று. சேமிசினதும் முதலாம் பாண்சினதும் ஆட்சிகளில் ஒல்லாந் தரின் கிழக்கிந்தியக் கம்பனியிலுள்ள வர்த்தகர் ஆங்கிலேய கிழக் கிந்திய வர்த்தகரிலும் மிகுந்த மூலவளம் பெற்றிருந்தனர். இசுப் பெயினல் ஏற்படக் கூடிய இடையூறுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிரான்சிடமிருந்தும் அவ்வித பயமுறுத்தல்களும் இல்லாது, சிறிய நாடாகிய ஒல்லாந்து இக்காலத்தில் வியப்புறத்தக்க வளத்துடனும் ஆற்றலுடனும் விளங்கியது. கலைத்திறன், விஞ்ஞான அறிவு ஆகிய வற்றில் உலகத்துக்கு வழிகாட்டியாயும் கடலாசியாயுமிருந்ததும் அந்நாடேயாகும். ஒல்லாந்தர் மனித சமூகத்திற்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்பவராய் விளங்கினர். அதனுல் ஆங்கிலக் கப்பற்ருெகுதிக்குப் பெருநட்டம் விளைத்தனர். இலிசபெத்தின் கால முதற்கொண்டு ஆங்கிலேயர் வசமிருந்த இரசிய வணிகத்தை அவர் கள் கைப்பற்றினர். அவர் தாம் விரும்பிய இடங்களில் மீன்பிடித் தனர்; அன்றியும், ஆங்கிலப் பரதவரை அவர் தமக்குரிய மீன்பிடி துறைகளிலிருந்து அடிக்கடி துரத்தியும் வந்தனர். போத்துக் கேயரை இலங்கையிலிருந்தும் மொலூக்காக் கடலிலுள்ள பைசுத் தீவுகளிலிருந்தும் துரத்தினர்; அன்றியும், அங்கே அம்பியோன என்ற இடத்தில் 1623 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரைப் படுகொலை செய்தனர். சேமிசு வால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. மேலும், மக்கள் நினைவில் நீண்டகாலமாகவிருந்த இந்த அநியாயத்துக்காக ஒருதலை முறைக்குப் பின்னர் வந்த குருெம்வெல்லால்தான் ஒல்லாந் தரிடமிருந்து நட்டஈடு பெற முடிந்தது.
ஆனல், ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனியார் பைசுத் தீவு களிலிருந்து துரத்தப்பட்டதும் இந்தியப் பெருநிலப் பகுதியிற்றம் வணிகத்தை நடத்துவாராயினர். முதலாம் சேமிசின் ஆட்சியில் அவர்கள் குரத்தில் வாய்ப்பான வன்னரிக நிலையமொன்றை நிறுவினர் கள் ; முதலாம் சாள்சின் ஆட்சியில் சென் யோச்சுக் கோட்டை யைச் சென்னையிற் கட்டினர் ; வங்காளத்தில் வேறு வணிக நிலையங் களையும் நிறுவினர். இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியிலுண்டான வணிகம் மிக அடக்கத்தோடு முதன் முதல் தொட்ங்கிய விதம் இதுவே. ஆனல், ஆதியிலிருந்து இக் கிழக்கிந்திய வணிகர் எழுது

ஆங்கிலர் கடற்படை வலியிழந்தமை
வினைஞராய்' மாத்திரம் இருந்தாால்லர். அவ்வந் நாட்டு அரச வைகளில் தம் தந்திரத்தினுலும் கடலில் தங்கள் கலங்களிலுள்ள பீரங்கிகளினலும் போத்துக்கேயரின் தனியுரிமையை அழித்தனர். அப்படியிருக்க, சேமிசு அரச கடற்படையின் உரிமைகளை ஒவ்வொன்முகக் கைவிட்டனன். ஆங்கிலக் கடல்களில் ஆங்கில விருதுக்கொடிக்குப் பிறநாட்டவர் மரியாதை செய்தல் வேண்டு மென்னும் கட்டுப்பாடு கைவிடப்பட்டது. வட ஆபிரிக்காவின் * பாபரிக் கரையோரத்திலிருந்து வந்த கடற்கொள்ளைக்காரர் ஆங்கிலக் கால்வாயில் அச்சமின்றிக் கொள்ளையடித்தனர். ஒல்லாந் தரும் இசுப்பானியரும் சேமிசின் குடிமக்களை நடத்திய விதத்தை யிட்டுச் சேமிசு செய்த குழியல் முறையான கண்டனம் எள்ளி நகையாடப்பட்டது. இசுப்பானிய அாதசைத் திருத்திப்படுத்த இாலே சிாச்சேதஞ்செய்யப்பட்டான். நாம் கடல்சார்ந்த ஒரு சமூக மாகவே இன்னும் இருந்தோம் ; ஆயினும், முப்பது ஆண்டுகளாக நாம் கடலாதிக்கத்தை இழந்துவிட்டோம்.
இதனுல் வந்த விளைவுகளுள் ஒன்று சுதுவட்டர் வமிசத்துக்கு மாமுக மாலுமிகளும் வணிகருங் கொண்ட நிலையான கடுங் கோபமே யாகும். கடலிற் கலங்களிற் சென்ற உறுதியான புரட்டெசுத்தாந்த உணர்ச்சியுடையோர் அதை வளர்த்தனர். இலிசபெத்தின் காலத் திலுள்ள கடற்படைப் பாரம்பரியத்தையும் இசுப்பெயினேடு இருந்துவந்த தொடர்புகளையும் புதியவரசு கைவிட்டது. இம் மன மாற்றத்தால் உண்டான வெறுப்பு முதலாம் சாள்சு தன் தந்தை அழியவிட்ட அரச கடற்படையை மீண்டும் அமைப்பதற்கு, சட்ட விரோதமான கப்பல் வரியைப் பயன்படுத்த முற்பட்டபோது தானும் அகன்றிலது. சாள்சு அமைத்த கலங்கள் அவனுக்குத்
தேவையான நேரத்தில் அவன்தன் பகைவர் பக்கம் சேர்ந்தன.
மேலும், இங்கிலாந்தின் துறைமுகங்கள் முதல் உள்நாட்டுப் போரில் இலண்டனும் பொதுமக்கட் சபையும் காட்டிய வழியைப் பின்பற் றின. அதனல் முக்கியமான விளைவுகள் பல பிற்காலத்தில் ஏற் பட்டன. இாலேயின் ஆவி சுதுவட்டர் குடும்பத்தைத் தூக்கு மேடைக்குத் துரத்திச் சென்றது.*
1618 ஆம் ஆண்டில் உவெசுத்துமினித்தரிலுள்ள பலசுயாட்டில் இரலேயின் மரணதண்டனை நிகழ்ந்த இடம் முப்பதாண்டுகளுக்குப்பின் சாள்சு கொல்லப்பட்ட இடமாகிய வயிற்றேலுக்கு முன்னுள்ள இடத்திலிருந்து கால் மைல் தூரத்தில்தான் உள்ளது.
சேமிசு ஆட்சிக்குரிய கடற்படை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இசுப்பெயினுடன் செய்யப்பட்ட அமைதி எற்ப்ாட்டுக்குமாகப் பின்வருவனவற்றை ஒப்புநோக்குக ! Gardiner, I. Lud. 209-14, to Corbett, Successors of Drake, ag. VII.,
England in the Mediterranean, G.5 Tg5S I., Callender, Naval Side.
of Br. Hist., 9Igë. VI.
2.
1618.
1634-1640.

Page 20
22 முப்பதாண்டுப் போர் ஆரம்பம்
1618-1648. சேமிசின் சமாதானமான அரசியற் பூட்கை முப்பதாண்டுப் போர் திடீரெனத் தோன்றியதால் ஒரு கடுமையான சோதனைக் குள்ளா னது. அந் நெருக்கடியான வேளையில் போர் செய்யுங் கப்பற் படை யினை அவன் புறக்கணித்தமை, அவன்தன் நற்கருத்துள்ளதும் அமைதியானதுமான அரசியற்றந்திரம் தோல்வியுறுவதை முன் கூட்டியே உறுதிப்படுத்துவதாயிற்று. இசுப்பெயின் அல்லது ஒசுற்றியா, பிரான்சு அல்லது ஒல்லாந்து, இங்கிலாந்தின் தேசீயப் போர்க்கருவியைக் கறைபிடிக்க விட்டவனும், இசுப்பானிய படை யினை நெதலாந்துக்களுக்கு ஆங்கிலக் கால்வாய் வழியாகச் செல் வதை ஒருபோதும் தடுக்க முடியாதவனுமான ஒருவனுக்கு என் செவி சாய்த்தல் வேண்டும்.
முப்பதாண்டுப்போர் அதன் ஆரம்பத்தில் கத்தோலிக்கப் பிற் போக்கு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீட்டுந் தொடக் கிற்று. அத்தாக்கத்தை இரண்டாம் பிலிப்பின் காலத்தில் இங்கி லாந்தும் ஒல்லாந்தும் கட்டுப்படுத்தின. அதற்கு இசுப்பெயினின் உதவியோடு புதிதாகத் தலைமைதாங்கிய நாடு ஒசுற்றியாவாகும். பொகீமியா ஒசுற்றியராலும், இறைன் பலாத்தினேற்று நெதலாந் துக்களிலுள்ள இசுப்பானியராலும் பாழாக்கப்பட்டன. மேலும், அடிப்படுத்தப்பட்ட இரு நாடுகளிலும் புரட்டெசுத்தாந்தம் கொடு மையான துன்புறுத்தலால் அடக்கப்பட்டது. இவ்விரு நாடுகளிலு மிருந்து துரத்தப்பட்ட இளவரசன் முதலாம் சேமிசின் மகளின் கணவனேயன்றி வேறெவருமல்லன். அவனுடைய மனைவியாய இலிச பெத்தும் அவர்களின் குழந்தைகளாகிய இளவரசர்கள் உரூபேட் ம்ெ மோறிசுவும் உரிமை இழந்து அலைந்து திரிய வேண்டிய தம் நெடுங்கால வாழ்க்கையை அப்பொழுதிருந்தே தொடங்கிவிட்டனர். எனினும் அவ்வாழ்க்கை தாயினதோ, பிள்ளைகளினதோ ஆற்றலையும் நற்பண்புகளையும் பாதித்திலது. சேமிசு, பகைவர் ஆதரவை அதிக
1 ஆம் 30-O484ఆ ஆன். இற. 1625.
என்றி 1 ஆம் சாள்சு = பிரான்சு, 4 ஆம் பிரட், இலெக்டர் = இலிசபெத்து இற. 1812, இற. 1649. என்றியின் மகள் பலாத்தின் இற. 1662.
என்றியற்ற மறையா. இற. 1632.
2 ஆம் 2 ஆம் = ஆ ைமேரி = ஒறேஞ்சு 2 இள. இள. சோபியா = அனேவர்
சாள்சு சேமிசு அயிட்டு, ஆம் உலி உரூபேட்டு மோறிச இற.
இற. இற. லியம் இற. இற. 1882, இற. 1852, 1714. இலெக்டர்.
1685. 1701. 1650.
2 ஆம் மேரியும் - 3 ܣܬ V 1 ஆம் இற. 1694 உவிலியம் யோச்சு (அரசி ஆனும் இற. 1702. இற. 1727.
இற. 1714).

சேமிசு, சாள்சு, பக்கிங்காம்
மாக நாடியும், ஆங்கிலவரசியற் கொள்கையை இசுப்பானிய தாத ாாகிய கொண்டோமாருக்கு எப்போதையினுங் கூடுதலாகக் கீழ்ப் படுத்தியும், ஈற்றில் தப்பிப் பிழைத்திருக்குந் தன் மகனுய சாள்சை இசுப்பானிய இளவரசிக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய் தும் தன் மகளும் குடும்பமும் இழந்த உரிமைகளை மீண்டும் பெறும் படி செய்யலாமென விணக எண்ணினன்.
இசுப்பானிய திருமணம், ஆங்கில மக்கள் அறிந்தவாறு கத்தோ விக்கவரசரும் இசுப்பானிய அரசவுரிமையாளரும் தோன்றுதற்கு வழியாக அமைந்திருக்கும்; அவர்கள் இலிசபெத்து செய்த வேலையை அழிக்க முயன்றிருப்பர். ஆனல், சேமிசும் சாள்சும், தந்தை தன் முதுமையிலும், மகன் தன்னிளமையிலும் யோச்சு விலியேசுவிடத் திற் கொண்ட அன்பால் மயங்கியிருந்தனர்; அவனைப் பக்கிங்காம் கோமகனுக்கினர். மேலும், பக்கிங்காமின் உறுதியற்ற மனம், இசுப் பானிய திருமண மூலமாக ஐரோப்பா அமைதிபெறுமென்ற கருத் தினுல் தடுமாற்ற மடைந்தது. இளைஞனன சாள்சும் போன் புக்குரிய பக்கிங்காமும் மற்றிதுக்குப் போய்த் திரும்பியபின் ஆபத்து நிறைந்த அத்திட்டம் பிழைப்பட்டது. எனினும், திருமண மொன்று நிறைவேறிற்று. அஃது முன்பு கருதியதில் சிறிதளவே ஆபத்திற் குறைந்தது. சாள்சு பிரான்சு நாட்டவளான தீவிர உரோ மன் கத்தோலிக்கப் பெண்ணுன என்றியற்ற மறையாவை மணந் தான். அப்பெண்ணே இங்கிலாந்துக்கும், அதிகமாகச் சுதுவட்டர் வமிசத்துக்கும் நேர்ந்த பல தொல்லைகளுக்குக் காரணமானன்.”
முதல் சேமிசு 1625 ஆம் ஆண்டில் இறந்தான்; ஆனல் அவனின் இறப்பால் சிறிதளவு வேறுபாடுதானும் ஏற்பட்டிலது ; ஏனெனில், சாள்சு அரசனிடத்தே பக்கிங்காமுக்கிருந்த செல்வாக்கு எவ்விதத் நிலாவது குறைந்ததன்முதலினலென்க. இசுப்பானிய திருமணத் தின் தோல்வியின் பின் பக்கிங்காம் ஆலோசனையின்றி மேற் கொண்ட படையெடுப்புக்கள் சில காலம்வரை நிகழ்ந்தன. அவன் இப்பொழுது பிறதேசங்களில் புரட்டெசுத்தாந்த வீரனுக நடிக்க
1612 ஆம் ஆண்டில் இறந்த உவேல்சுவின் இளவரசனுன என்றிக்கு அவனது தந்தை ஒரு பிரான்சிய இளவரசியைத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய் தான். அப்போது, இளவரசன் தன்கட்டிலில் வெவ்வேறு சமயத்துக்குரிய இரு வர் உறங்கமுடியாதெனத் தான் உறுதிசெய்துகொண்டதாகத் தந்தைக்குக் கூறி னன். அவன் உயிரோடிருந்திருந்தால் முப்பதாண்டுப் போர் ஐரோப்பாவில் நடந்தகாலம் புரட்டெசுத்தாந்தனன ஐந்தாம் என்றியாய் ஒருவேளை மாறி யிருந்திருப்பான் ; மேலும், பாராளுமன்றத்துக்கு வாய்ப்பான கொள்கைகளை எற்று அதனல் அது தானகவே அவற்றைத் தன் அரசுக்குக் கீழ்ப்பட்டொழுகச் செய்து இங்கிலாந்தில் அரசியல் வளர்ச்சியின் போக்கை முற்றக மாற்றி யிருந்திருப்பான்.
23
1623.
1625-1628.

Page 21
628.
முடியும் பாராளுமன்றமும்
வேடம்போட்டுக்கொண்டான். ஆனல், தரைப்படைகளையும் கடற் படைகளையும் சமயத்துக்கேற்றபடி படைக்க முடியாது. ஆகவே, எம் படைவலிமைக்கு இழுக்கை ஏற்படுத்திய பேரிடர்கள் நேர்ந்த மையே கிடைத்த பலனுகும். இப்பயனற்ற படையெடுப்புக்கள் சில இறிச்செலியுவின் பிரான்சுக்கு மாருக இலா உருேச்சலைச் சேர்ந்த இயூக்கனருக்கு உதவியளிக்கும் நோக்கமாக நடத்தப் பட்டனவாகும். இந்நிலையில் சாதுரியமான நடவடிக்கையின் மூலம் பிரான்சின் ஆபிசுபேக்குப் பகைவர்களின் தலைமையில் செயற்பட்ட கத்தோலிக்க பிற்போக்குவாதிகள் இசைனுக்கு அப்பால் முன்னேறு வதைத் தடைசெய்யும்படி கருதினுல் இறிச்செலியுவைத் அாண்டி யிருக்கலாம். இசுப்பெயினுக்கு மாருக நடத்தப்பட்ட ஏனைய ஆங் கில படையெடுப்புக்கள் இதேபோன்று பயனிலவாயின.
பேதமையும் பேரிடரும் நிறைந்த இச்சம்பவங்கள் இங்கிலாந்தில் முடியரசின் மதிப்பைக் குறைத்துவிட்டன; மேலும், முடிக்கும் பொதுமக்கட்சபைக்குமிடையே கடும் விரோதத்தை விளைத்தது. மதியற்ற இப்போர்கள் பாராளுமன்றத்தினரால் அங்கீகரிக்கப் படாத வரி, படைகளுக்கு வீடு, தக்க காரணமில்லாது சிறைசெய் தல், குடிமக்கள் மேல் இராணுவ ஆட்சி ஆகியவற்றிற்கு வழிகாட் டின; இவை யாவும் ஐந்து உதவிக் கொடைகளுக்குப் பாராளு மன்றம் சம்மதங்கொடுத்தற்காகச் சாள்சு அனுமதித்த பிரசித்தி பெற்ற உரிமை விண்ணப்பத்தில் சட்டவிரோதமானவையென விவரிக்கப்பட்டன. ஆயினும், உரிமை விண்ணப்பம், மகாபட்ட யத்தைப்போல, அவ்விண்ணப்பத்திலே தெளிவாக எடுத்துக்கூறப் பட்ட கொள்கைகளுக்கான போராட்டத்தின் தொடக்கமேயன்றி முடிவன்று.
பொதுமக்கட்சபை வெளிநாட்டுப் பூட்கை பற்றி அரசுக்குக் கட்டளையிடத்தக்க வலிமையை இன்னும் அடைந்திலது. அரசனது போர்வலியைத் தக்க சமயத்தில் மட்டுப்படுத்தும் ஆற்றல் அதற்கி ருந்தது. வரிவிதிக்கும் அதிகாரத்தின்மீது தனக்கிருந்த பிடியை இச்சபை விட்டுக்கொடாது காக்க வேண்டியதாயிருந்தது. அன்றி யும், தன் அதிகாரத்துக்கு உட்படாத சேனையிடத்து அச்சமுங் கொண்டுளது. பிரான்சு, இசுப்பெயின் ஆகிய நாடுகளின் அரச ரைப்போல, குடிமக்கள்மீது தான் விரும்பியபடி வரிவிதிக்கும் S_f} மையை அரசு ஒருமுறை நிறுவிவிட்டால், பின்னர் வெளிநாட்டில் ஒருவேளை வெற்றி தொடங்கலாம் ; ஆணுல், உள்நாட்டில் பாராளு மன்றவாட்சி நிச்சயமாக முடிவெய்தும்.
கீழ்ச்சபைக்குரியரான பெருஞ்செல்வர், இலிசபெத்தின் ஆட்சியிற் போல, தம் மத்தியிலுள்ள அரசவாலோசனை அவயத்தாரால் ஊக மாக ஒருபோதும் நடத்தப்பட்டிலர். மேலும், அவர்கள் அரசாங்கத்

பாராளுமன்றத்தில் எதிர்ப்பு
தின் உறுப்பினராயிராமல் அதன் எதிர்க்கட்சியினராக மாறியும் வருவாராயினர். அவர்தம் நாட்டுப் பாங்கான ஊகம் அரச ஊழிய ரினும் மேலாகத் தம் நாட்டு நலனையறிதற்கு அவர்க்கு வாய்ப்பளித் தது; ஆனல், ஐரோப்பாவைப்பற்றி அவர் யாதும் அறிந்திலர். மேலும், வெளிநாடுகளில் புரட்டெசுத்தாந்தம் எவ்வாறு ஆதரிக்கப் படவேண்டுமென்று அவர் கூறிய அறிவுரையில் ஞானம் சிறிது மில்லை. அரச பரிபாலகரும் வரியளிக்கும் பாராளுமன்றத்தினரும் கலகம் விளைத்துக்கொண்டிருக்க, இரு பகுதியினரும் வெளிநாட்
டலுவல்களைச் சிறிதளவேனும் அறியாதிருக்க, சேனையின்றியும்
மிகவுஞ் சிறிய அரச கடற்படையோடுமிருந்த இங்கிலாந்து, இக் நெருக்கடியான வேளையில், ஐரோப்பிய அரசியற் கருமங்களில் மதிப்புச் சிறிதுமில்லாத நாடாயிற்று.
பக்கிங்காம், உருேச்சலுக்கு உதவியளித்தற்குப் போருக்குரிய படையெடுப்புக்களை ஆயத்தஞ் செய்துகொண்டிருக்கும்பொழுது, பொதுமக்கள் சற்றேனும் வெட்கமின்றிக் களிப்புற, மதவெறி கொண்ட தூய்மையாளனுெருவனுற் கொலை செய்யப்பட்டான். சாள்சு தன் நண்பன் கொலையுண்டமையால் மக்களை வெறுத்தான்; தோல்வி நிச்சயம் என முன்கூட்டியே தெரிந்த போர்த்திட்டங்களை விரைவிற் கைவிட்டனன். அவற்றிற்குப் பதிலாகத் தான் வெறுத்த பாராளுமன்றங்களின்றி உறுதியான சிக்கனத்தோடு நாட்டை ஆளத் திட்டமிட்டனன். 1629 ஆம் ஆண்டில் பொதுமக்கட் சபை யினரோடு உண்டான கடுமையான கலகத்தில் இத்திட்டத்தை அவன் நிறைவேற்றினன். மன்றத்தினர் சிலர் அவைத் தலைவரை நாற்காலியோடு சேர்த்து இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்ள, ஏை யோர் கத்தோலிக்க சமயம், ஆமீனியசுவின் கொள்கை, மது வினதும் ஏற்றுமதிச் சரக்கினதும் சுங்கமாகியவற்றிற்கு மாருகப் புகழ்பெற்ற தீர்மானங்களை விதியாக்கினர். இவைகளை அக்காலச் குழ்நிலை காரணமாய் மக்கள் தம் மனத்தில் ஒன்ருேடொன்று தொடர்புள்ளனவாகவே கருதுவாராயினர். பதினுேசாண்டுகளாகப் பாராளுமன்றம் மறுபடி கூடியதேயில்லை.
இலிசபெத்தாசி நன்கு மதித்த பாராளுமன்றத்தின் சிறப்புரிமை களுக்கு மாமுக, சேர் யோன் இலியத்தும் அவன்தன் நண்பரான வலன்றயினும் சிரோத்தும் பொதுமக்கட் பிரதிநிதி மன்றத்தில் அவர்கள் செய்த செயலுக்காகச் சிறையிடப்பட்டனர். இலியத்து, சட்டவிரோதமாக அவையில் நிறைவேறியவற்றிற்குத் தன் உடன் பாட்டைத் தெரிவிப்பதன் மூலம் விடுதலை பெற மறுத்துக்கொண்டி
ருந்து கோட்டையில் இறந்தான். அதனுல் அவன் ஆங்கிலச் சட்டத்
ஆக்கும் சுதந்திரத்துக்கும் ஓர் உயிர்த்தியாகியானுன். அவனின் இரு
628.
1632.
25

Page 22
26
ஆங்கில வழமைச் சட்டம்
நண்பரும் பதினுேராண்டுகள் வரையும் தம் விடுதலையை மீண்டும் பெற்றிலர். இலியத்தைச் சாள்சு கொடூரமாக நடத்தியதும், அவன் உடலைக் கோண்வாலிலுள்ள அவனது வீட்டுக்கு அடக்கஞ் செய்ய எடுத்துச்செல்லத்தானும் விடாது தடுத்ததும் பக்கிங்காம் கொலை யுண்டதனுல் சாள்சுக்கு நேர்ந்த துக்கத்தின் விளைவாகுமென்று மிகப் பரந்த மனப்பான்மை கொண்டு மதித்துக்கொள்ளலாம் ; ஏனெனில், பொதுமக்கட் சபைத் தலைவனுன அவன் சாள்சின் போன்புக்குரியரைத் தன் வாக்குவன்மையால் தீவிரமாகத் தாக்கு தலிற் சிறிதேனும் தளர்ச்சியடைந்தவனல்லன். ஆனல், சாள்சு தன் குடிமக்களின்பால் காட்டிய இக்குணம், சாதாரணமாக மன்னிக்கத் தக்கதேயாயினும் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகளுக்குத் தன் கருத்தின்படியும் விருப்பின்படியும் நாட்டை ஆளவேண்டியிருந்த ஒரரசனிடத்திற் காணப்பட்டது மிகுந்த கேட்டுக்குரியவொன்றே.
பாராளுமன்றங்களைக் கைவிட்டதனுலும், தன்பாற் கோடாது சட்டப்படி நேர்மையாகத் தீர்ப்புக் கூறத் துணிந்த நீதிபதிகள் யாவரையும் விலக்கியதனுலும் சாள்சு தன் செயல்களுக்கு மாமுன யாப்புக்கமைந்த தடை எல்லாவற்றையும் நீக்கியுள்ளான். ஆயி லும், ஆங்கில வழமைச் சட்டத்தின் சீர்மை தனி அரசவாதிக் கத்துக்குப் பகையாகவே இன்னுமிருந்தது. அது சேர் எட்டுவேட்டு கோக்குவின் உழைப்பினுல் பாராளுமன்றத்தோடு நன்கு சேர்ந்து கொண்டது. பாராளுமன்றம் எப்போதாயினும் மறுபடியும் வலிமை பெற்று வல்லாட்சியைத் தோற்கடித்தால், அதனுடன் வழமைச் சட்டமும் மறுபடி வலிமைபெற்று உடு மன்றம், திருச்சபை மன் றம், விண்ணப்ப மன்றம், உவேல்சுவினதும் வட இங்கிலாந்தினதும் சபைகள் ஆகியவற்றின் தனியுரிமை மன்றங்கள் எவற்றையும் தோற்கடிக்கும். ஆங்கிலப் பொதுச்சட்டம் பரிபாலிக்கப்பட்ட மன் றங்களில் வழக்கறிஞர்களிடத்தே தொழில் பற்றிய பொருமையிருந் தது. வெவ்வேறு சட்டத்துக்கு வெவ்வேருரன நடைமுறைப் பிரமா ணங்களை வழங்கும் இத்தனியுரிமை மன்றங்களுக்கு மாருயிருந்தது அப் பொருமை. ஓர்மமும் இறுமாப்புமுடையவனுன கோக்கு என் பானின் தலைமையில் இப் பொருமை மிக ஊக்கமாகத் தூண்டப்பட் டது. மேலும், இவ்வியக்கத்திற்கும் பொதுமக்கட் சபையின் பாரா ளுமன்றக் கட்சிக்கும் கோக்கினல் நெருங்கிய தொடர்பேற்படுத் தப்பட்டது. அவன்தன் உழைப்பால் மிகுதியாய் உருவானதும் அவன் கோட்பாட்டை வெளிப்படுத்தியதுமான உரிமை விண்ணப் பம், நியாயமற்ற அதிகாரத்திலிருந்து நாட்டுக் குடிமக்களைக் காத் தற்கு வேண்டிய வழமைச் சட்ட இயல்பும் பாராளுமன்றத்தின் விழிப்பும் ஒருங்கு சேர்ந்திருத்தலைக் காட்டியது.

இலியத்தும் கோக்கும்
பாராளுமன்றம் முடியை எதிர்த்தற்கு வேண்டிய அடிப்படையை இதெற்கு ஒன்முக முயன்ற இருவரும் தம்முட் பெரிதும் வேறுபட்ட இயல்புகளையுடையவராவர். இலியத்து செல்வமுள்ள நாட்டுப்பிரபுக் கள் இனத்தில் மிகச் சிறப்புடையவனுவன். தனக்கென எதையுந் தேடாது நாட்டு நலன் ஒன்றிலேயே ஆர்வம் மிகுந்தவன். அதற் காகவே. சொல்வன்மையோடு பேசுவான். கோக்கு, போவாக் கொண்டவனும் முன்னேறுந் திறமையுள்ளவனுமான ஒரு வழக்கறி ஞன். அன்றியும், அவன் எளியவரைக் கொடுமைப்படுத்தும் வஞ்சக லும் தனது ஆரம்ப காலத்தில் ஒரு புகழ்பாடியுமாவன். 1603ஆம் ஆண்டில், சேமிசு அரசனுக்குச் சட்டத்துறை நாயகமாக இருந்து கொண்டு சிறையிலிருந்த இரலேயை யெபிறீசுவினத்துக்குச் சம மான தைரியத்தோடு தாக்கினன். ஆயுட்கால முழுதும் இசுப்பெயி னேடு பகைமை கொண்ட இாலேயை நோக்கி, "உனக்கு இசுப்பா னியர்மீதே நேசம் , அன்றியும் நீயோர் கொடிய பாம்பு’, என்று கூக்குரலிட்டான். கோக்கு தனது முன்னேற்றத்திலும் அதிகாரத் திலும் அதிகமாக விரும்பிய பொருள் ஒன்றே; அதுவே பொதுச் சட்டமாகும். அதற்காகத் தன் பதவியையும் அரசனது ஆதரவை யும் இழந்தான். நீதிபதி மன்றத்திலிருந்து இறங்கி வந்து கீழ்ச் சபையின் தரையில் நின்று தூய்மையாளரைச் சேர்ந்த செல்வரோடு உறவுபூண்டான்; அவ்வுறவினுல் எழுந்தனவே இங்கிலாந்தின் சுதந்திர உரிமைகள்.
பிணக்குக்குக் காரணம் பின்வருமாறு: சேமிசும் சாள்சும் உரோம சட்டமாணவரோடு சேர்ந்து, “அரசனின் கருத்தே சட்டத் தின் பிறப்பிடமாகும் ; நீதிபதிகள் அவன் கட்டளயிட்டபடி பேசு தற்குக் கட்டுப்பட்ட அரசவதிகாரத்தின் கீழுள்ள சிங்கங்கள்' என்று மதித்தனர். மறுபுறமாக, கோக்கு ஆங்கிலப் பொதுச் சட்டவியல்பின்படி, சட்டம் சுதந்திரமானதென்றும் அரசனுக்கும் அவன்தன் குடிகளுக்கும் மேற்பட்ட தென்றும் அது இரு திறத்தாருக்கும் நடுநின்று தீர்ப்புக் கூறக் கட்டுப்பட்டதென்றும் எண்ணினன். சட்டங்கள் பாராளுமன்றத்தின் உயர்தர நீதி மன்றத்தால் மாத்திரம் மாற்றப்படலாம். உரோமர் சட்டத்தைச் சேர்த்துக் கொண்டனவும், கட்டுப்பாடற்ற செயன்முறைகளையுடை யனவுமான தனியுரிமை மன்றங்கள் பிறநாட்டவரின் நாகரிகத்துக் குரியனவென்று அவன் எண்ணினன்.
சட்டமுறைகளை யொட்டி எழுந்த இப்பிணக்கைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதவசியமாயிற்று. ஏனெனில், இங்கிலாந்து தியூ
27
1616-1628, இறப்பு 1634.
டர் ஆட்சியிற்போல, இருமுறைகளாலும் ஒரேகாலத்தில் ஆளப்பட
இனியொருபோதும் முடியாதிருந்ததனுலென்க. சாள்சே முதலாகச்

Page 23
28
1637-8.
வழமைச் சட்டம் : யோன் அமிடன்
சண்டையைத் தொடங்கினன். அவன் மன்றத்திற்குத் தனக்கு விரும்பிய நீதிபதிகளையே நியமித்ததால், பொதுச் சட்ட மன்றங் களையே தனியுரிமைக் கருத்துக்களுக்குக் கீழ்ப்படுத்தியவனகத் தோன்றினன். ஆயினும், கடைசிக் தீர்ப்பு நீடித்த பாராளுமன்றத் துக்கே உரியதாயிற்று.
ஆங்கில வழமைச்சட்டம் மத்தியகாலத்திலிருந்து வந்த ஒன் முகும். ஆயினும், தனியுரிமை மன்றங்களும் உரோமர் சட்டத்துக் குரிய உயர்ந்த பெருமதிப்பும் தியூடர் காலத்தின் மற்மலர்ச்சியா அலுண்டான விளைவுகளாகும். ஆகையினுல், கோக்குவும் அவனு டைய கொள்கைகளிற் பயிற்சிபெற்ற பாராளுமன்றத்தினரும் ஐரோப்பாவில் நிலவிய புதிய கோட்பாடுகளுக்கு மாமுகப் பழை மையிற் பற்றுள்ளவராயும் தேசீய நோக்கமுடையவராயும் விளங்கி னர். அவர்கள் கடந்தகால நிகழ்ச்சிகளை மேற்கோள்களாகக் காட்டி முறையிட்டனர். அந்நிகழ்ச்சிகள் இங்கிலாந்துக்குரியனவே யன்றி உரோமர் பேரரசுக்குரியனவல்ல. இதனலேயே அவர்களு டைய விவாதங்கள் பழமையையும் வரலாற்றையும் பற்றிநிற்க முயன்றன. ஆனல், அவர்கள் ஆதாரமாகக்கொண்ட வரலாறும் எப்பொழுதும் விவரமான நல்ல வரலாறன்று ; ஆனல் உண்மை யான ஆங்கில மரபு முறையோடு ஒற்றுமையுடையதாகும். இலித்தி வித்தனின் சட்ட நூல்களுக்குக் கோக்கு எழுதிய விரிவுரைகளும் அவன் தானே எழுதிய சட்ட நூல்களும் பேயினின் “மனித வுரிமை'களிலும், அல்லது உறுரசோவின் கொள்கைகளிலும் பரந்த நோக்கிலும் தரிசனத்திலும் மிகக் குறைந்தனவே. ஆயினும் பொதுத்தன்மையும் முற்போக்குமுடைய இக்கொள்கைகள் உலகின் இருபெரும் பகுதிகளில் முன்னேற்றமும் சுதந்திரமும் வாய்ந்த மகத்தான இயக்கங்களைக் கீழ் நின்று தாங்குதற்குப் பயன்பட்
607. அாசர்க்கும் அவர்தம் பகைவர்க்குமுள்ள சட்டத்தை யொட்டிய பிரச்சினை, பணத்தை அல்லது சமயத்தையொட்டிய பிரச்சினை யிலும் சிறியதன்று. மேலும், வழக்காடுமியல்புடைய அக்காலத்தில் அதனை ஆங்கில மக்கள் நன்கறிந்திருந்தனர். யோன் அமிடன் கப்பல்வரி கொடுக்க மறுத்ததால் உண்டான வழக்கு நீதிமன்றத் தில் முழுவதும் விவாதிக்கப்பட்டது. அதனை, சட்டசம்பந்த மான கருமங்களை அரசனே அவன்தன் மந்திரிகளோ அறிந் திருந்ததிலும் மேலாக அறிந்துள்ள மக்கள் ஆர்வம் மிகுந்த கிளர்ச்சியோடு விவரமாகக் கவனித்தனர். பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அமிடனுக்கு மாமுக, கப்பல் வரி விதித்தலைப் பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரித்துத் தீர்ப்பளித்ததை
* இந்நூல் முதலாம் பாகம், பக்கங்கள் 418, 419

உலோட்டு
மக்கள் பொதுவாகக் கண்டித்தனர். ஆனல், அத்தீர்ப்பு இன்னும் சிலகாலம் வரை வரி வாங்குதற்கும், சண்டையிடும் கடற் படையைத் திருப்பியமைத்தற்கும் அரசர்க்கு வாய்ப்பளித்தது. நோக்கம் தகுதியுடையதாகும்; ஆனல், தன் குடிகளின் விசுவாசத்தை இழந்த அரசனுெருவன் ஆங்கிலக் கடலாதிக்கத்தை அவ்வாருன உபாயங்களினல் மறுபடியும் அமைத்து நிலைநாட்டக் கூடியவனல்லன். வெளிநாட்டுக்குரிய சிக்கல்களில் தலையிடுவதைத் தவிர்த்தலும், கடற்படையால் வெறுமனே பயமுறுத்துவதாலேயே முக்கிய விளைவுகளை உண்டாக்கியிருக்கக்கூடிய வேளைகளிற்ருனும், இங்கிலாந்து பார்த்துக்கொண்டிருக்க முப்பதாண்டுப் போர் ஒரு நெருக்கடியான நிலையிலிருந்து பிறிதோர் நெருக்கடியான நிலையை அடையவிடுதலும் புதிய அரசமுறையின் இன்றியமையாத கொள் கையாயிருந்தது. கடல்வாழ்நரும் அரச கடற்படையினரும் இப் போராட்டத்தில் பாராளுமன்றத்திற்குச் சார்புடையாாய் இருந் தமை சட்ட விரோதமான வரியைக் கொடுக்க மறுத்த அமிடனின் நாட்டுப் பற்றுக்குச் சான்ருகும்.
சாள்சின் கொடுங்கோன்மையோடு இணைந்த உலோட்டு, உவெந்து ஒ.
போத்து ஆகிய இருவரும் ஒழுக்கத்திலும் அறிவிலும் பக்கிங்கா மிலும் மிக வேறுபட்ட தரத்தினராவர்.
அதிமேற்றிராணியாரான உலோட்டுவென்பார் ஒரு பெரிய வைதிக சாவர். திருச்சபைக்கும் அரசுக்கும் அக்காலை நிலவிய தொடர் பினல் அரசறிஞனகவும் கடமையாற்றவேண்டியவரானர். அதற்கு அவர் மனநிலையிலும் அறிவிலும் பொருத்தமற்றவராயிருந்தார். அவர் இங்கிலாந்துத் திருச்சபையின் வரலாற்றில் மேற் றிருச்சபைக் கட்சியை நிலைநாட்டியவரெனப் பர்ராட்டப்படுகின் முர். ஆனல், வரலாற்ருளன், திருச்சபைக்குரிய கொள்கையின் அரசியல் விளைவுகளோடு முக்கியமாகச் சம்பந்தப்பட்டவனுவான். அக்கொள்கை, சட்டப்படி அப்போது நாட்டோடு சமநிலையுடைய திருச்சபையில் மிகவதிக அளவில் அபாயமும் முதன்மையுமுடைய தாயிருக்கத் தவருது. உண்மையில், அஃதே உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணமாகும்; ஏனெனில், உலோட்டுவின் மரணத்திற் கேதுவான கடும் தாக்குதலை தூய்மையினுேர் மேற்கொள்ளும்படி அது அாண்டிற்குதலினலென்க.
முதற் சேமிசு ஒரு கொத்துலாந்தனய் வளர்ந்த காரணத்தால் இங்கிலாந்தின் அரசனுக இருப்பதில் இடருற்முனைல், உலோட்டு வென்பான் கல்லூரிப் பேராசிரியனுக வளர்ந்த காரணத்தால் அதி மேற்றிராணியாராக இருப்பதில் இடருற்றன். அவன் ஒக்சு போட்டை நடத்தியதுபோலவே இடமகன்ற இங்கிலாந்தையும் நடத்தினன். ஆனல், முதிர்ச்சியடைந்த மக்களைக் கொண்ட ஒரு
1640.
29

Page 24
30
தூய்மையாளர் அமெரிக்கா செலல்
நாட்டைச் சீர்ப்படுத்துவதிலும் ஒரு பல்கலைக் கழகத்தைத் தனது இலட்சியத்துக்கமையச் சீர்ப்படுத்துதல் மிக இலகுவாகும். கோயிற் பற்றுக்குரிய கோயில்களில் வழிபாட்டுக்கான சடங்குவிதிகள் குருபரிபாலன கட்டளைகள் மேற்குரு பார்வையிட வருதல் ஆகிய வற்றல் அதிகரிப்பனவாயின. அதேசமயம் கோயிலுக்குள் கிறித் துவ ஆகமப் பயிற்சி, சமயச் சொற்பொழிவாற்றுதல், அறி வுரை கூறல் ஆகியன அடியோடு விலக்கப்பட்டன. அதே சம யத்தில் கோயிலுக்குப் புறத்தே இணங்காமை - வழிபாடு மிகக் கடுமையாகத் தடைசெய்யப்பட்டது. இவ்வாண்டுகளில் தூய்மை யாளர் அமெரிக்காவிற் குடிபுகுந்தமை உலோட்டுவென்பான் இங்கி லாந்தில் அவர்களின் வாழ்க்கையை எவ்வளவுக்குப் பொறுக்க முடியாத தொன்முக்கினுனென்பதைக் காட்டிற்று." குருெம்வெல், மிலிற்றன், அமிடன், பிம் முதலிய நற்பண்புடைய மக்களை ஆங்கிலத்தூய்மையாளர் சமயந் தோற்றுவித்த அக்காலத்திற் முனே உலோட்டுவின் முயற்சியால் தூய்மையாளர் தம் சொந்த நாட்டில் வாழவும் முழுவுரிமையோடு கடவுளே வழிபடவும் முடியாது போயிற்று. உயர்தர ஆங்கிலக் கிறித்துவம் கற்ருே சையும் புலவரையும் அப்போதே பெற்றுள்ளது ; ஆயினும் பெருஞ் செல்வருள்ளும் இன்னுங் குறைவாகப் பொதுமக்களுள்ளும் பெரும் பகுதியினரின் உள்ளத்தை இதுவரையும் கவர்ந்திலது. வழி பாட்டு நூலைக் காத்தற்குத் தேவையான வேளையிற் போராட ஆயத்தமுடையரென்று தம்மை வெளிப்படுத்திய சேர் எட்மண்டு வேணி, போக்குலாந்து, கயிட்டு முதலிய மக்கள்தாமும் உலோட்டு வோடும் அவர்தம் வீண் முயற்சியுடைய விசுப்புமாரோடும் பகைமை கொண்டிருந்தனர்.
அதிமேற்றிராணியாரின் பெருமுயற்சி அவர்க்கும் அரசனுக்கும் மாமுய் அத்தலைமுறையில் உள்ளாரின் சமயவுணர்ச்சியைத் தூண்டி யது மாத்திரமன்றி, இங்கிலாந்தில் என்றும் வெறுக்கப்பட்ட, சம யப்பற்றுடையோர் தம் அயலாரின் கருமங்களில் தலையிடும் பழக் கத்திற் கெதிரான உள்ளக் கிளர்ச்சியையும் அவ்வாறே தூண்டிற்று.
தாம் நற்செயலெனக் கருதியதை நிறைவேற்றுவதில் சோர்வு
டையாாயோ, கவனமுள்ளவராயோ ஒருபோதுமிருக்க முடியாத உலோட்டுவென்பார் சமய மன்றங்களை மீட்டும் செயற்படச் செய் தார். மேலும், செல்வாக்குள்ள பொது மக்களையும் தம் குற்றங் களுக்குச் சமாதானம் கூறுவதற்குப் புரோகிதர் முன்னிலைக்கு வருமாறு கட்டளையிட்டார். உண்மையில், நற்சுபாவமுடையவை யும் இவ்விடயங்களைப் பற்றி அதிக அக்கறையில்லாதனவுமான திருச்சபை மன்றங்கள், புரோகிதக் கட்டுப்பாட்டிலிருந்து தம்
இந்நூல் இரண்டாம் பாகம், பக்கம் 101

சாள்சின் மனைவி
மைப் புத்தமைப்பு மீட்டுவிட்டதென்று நம்பியிருந்த தூய்மை வாத நியமமுடையோர், ஒழுக்கமற்முேர், பொதுமக்கள் ஆகி யோரின் வெறுப்பைத் தேடிக்கொண்டன. அரசர்களின் நம் பிக்கைக்குரிய ஆலோசகராக விருந்த பிரபுக்களுக்கும், பொது மக்கள் சிலருக்கும் பதிலாக, இக்காலத்தே விசுப்புமார்களே அந்தப் பதவியையும் பெறலாயினர். பலகோவிற் பற்றுக்களில் உலோட்டுவின் புதிய குருமார் குழுவினர் பெரும் செல்வருக் குப் போட்டியான அதிகாரமுடையோராகத் தம்மைப் பிரகட னஞ் செய்துகொள்வதன் மூலம் அச்செல்வருக்குக் கோபமூட் டுவராயினர். அப்பொழுது குருவாட்சியிலிருந்த அச்சகத் தணிக் கையை உலோட்டு தன் கருத்துக்கு மாமுனவரின் வாயை அடக் குவதற்கு விரைந்து பயன்படுத்தினன். ஆங்கிலேயர் ஒரு குறிப் பிட்ட குருமார் குழுவினரை எல்லாவற்றிலும் பின்பற்ற வேண் டியவராயினர். சுருங்கக்கூறின், குருமாருக்கும் பொதுமக்களுக்கு மிடையேயிருந்த மத்தியகாலத் தொடர்பினை மீட்டும் அமைத் தற்கு ஒரு முயற்சி தொடங்கியதாகத் தோன்றிற்று. அவ்வாறன இயக்கம் கவலியர்க்கும் மொட்டைத்தலேயர்க்கும் எதிர்காலத்தில் ஒரேவிதமான கொடிய தொல்லையை விளைத்தது. ‘அடியாராட்சிக்கு மாற்ருக மீட்டமைக்கப்பட்ட ஆங்கிலத் திருச்சபையின் செல் வாக்கை 1661 ஆம் ஆண்டில் விரிவடையச் செய்த புரோகித வெதிர்ப்பு 1640 ஆம் ஆண்டில் உலோட்டுவின் கொடுங்கோன்மைக்கு மாமுக எழுந்த அாய்மையாளர் கலகத்தின் ஆற்றலை அதிக மாக்கிற்று.
அதிமேற்றிராணியார் தூய்மையாளரை மிகக் கடுமையாகத் துன் புறுத்தியபோது, சாள்சின் மனைவியான பிரான்சிய அரசியின் வளர்ச்சியுறுஞ் செல்வாக்கு உரோமன் கத்தோலிக்கரைத் துன் புறுத்தலை நிறுத்தியது. அதன் விளைவாகக் கத்தோலிக்கர் எங்குந் தலைகாட்டினர். சமயமாற்றங்கள் முக்கியமாய்ச் சமூகத்தின் மேல் வகுப்புக்களில் நடந்தன. என்றியற்ரு மறையாவின் சமயம் அரச வையில் நாகரிகமுள்ளதாக விளங்கிற்று. அதே வேளையில் உரோமன் திருச்சபையின் பகைவர்களில் உறுதிமிக்கோர் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்காக அமெரிக்காவுக்குத் தம் நாட்டைவிட்டுச் செல்ல லாயினர். இவ்வாருக எல்லையற்றுத் தொடர்ச்சியாகக் கருமங்கள் நிகழ்வது இங்கிலாந்தைப் போப்பாண்டவர்தம் திருச்சபையுள் மறுபடி புகுத்துமென்று மக்கள் எண்ணினர். உலோட்டு அதை விரும்பினனல்லன் ; ஆனல், அதனைத் தடுத்தற்குரிய வழியெதை யும் மேற்கொண்டிலன்; இதன் விளைவாக மக்கள் அவனிடம் கொண்டிருந்த மதிப்பை அவன் பெரிதும் இழந்தான்.
இவ்வாருகிய நிலைமையில் நாட்டின் முக்கிய சத்திகளை அடக்க
முயன்ற சிறுபான்மையோரான மேற்றிருச்சபைக் கட்சியாரின்
3.

Page 25
32
1637.
அரசனது சிறப்புரிமைகள்
நல்வாய்ப்பும், ஒருவருக்கேயுரிய வல்லாட்சியும், பாராளுமன்றத்தை விலக்க அரசு செய்த முயற்சியும் ஒன்றெனக் கருதப்பட்டன. உலோட்டுவின் குருமார் தெய்வீக உரிமையைப் பற்றியும் சிறப் புரிமையதிகாரத்தைப் பற்றியும் போதித்தனர். உலோட்டுவின் பகைவரை யழிக்க உடுமன்றத்தின்மூலமும் திருச்சபைக்குரிய உயர் விசாரணைச் சபைமூலமும் பொதுவாக மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும் அரசவதிகாரங்கள் பலவற்றின் உதவியை அடிக் கடி நாடவேண்டியிருந்தது. தியூடர் ஆட்சியில் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய உடுமன்றம், பிறயினையும் இவில்பேணையும் கொரேமாகத் தண்டித்ததன்மூலம் இலண்டன் மாநகர மக்களின் கடுஞ்சினத்திற்கும் வெறுப்புக்கும் இலக்காகியது. அதேசமயம், அாய்மையாளர் எப்போதிலும் மேலாகப் பாராளுமன்றத்துக் குரியவராயினர். அவர்கள் இரு சபைகளையும் கூட்டுதற்குச் சாள் சைக் கட்டாயப்படுத்துங் காலத்தை எதிர்பார்த்திருந்தனர். அவர் களின் நம்பிக்கை யெல்லாம் தங்கியுள்ள கருத்து வருமாறு: இருகை எந்திரம் வாயின் மருங்கே ஒருகாற் முக்கி ஒழித்திட நிற்கும்.
அரசனுேடும் பாராளுமன்றத்தோடும் இருசமயக் கட்சிகளும் முறையே கொண்ட அரசியற் ருெடர்பு, குழ்நிலையின் நெருக்கிடை யால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தூண்டப்பட்டபோதும் அவ்வப் போது இயல்பாகவே ஏற்பட்ட தொடர்பாகும். உலோட்டு புதுக்கி முதன்மையளித்த சமயவதிகாரத்துக்கும் தனி முடியரசுக்கும் ஒற்றுமையிருந்தது. மேலும், அரசினிடத்துப் பாராளுமன்றம் கொண்ட அதிகாரம் பிரெசு பித்தீரியர் கூட்டத்துக்கோ, அடியார் கூட்டத்துக்கோ உரிய திருச்சபையிற் பொதுமக்கள் ஆட்சியைப் பெறுதற்கு வழிவகுப்பதுபோல் அமைந்தது. திருச்சபையிலும் அரசிலுமுள்ள இவ்விரு கட்சிகளுக்குமிடையே தெளிவற்ற மித மான கருத்துக்கள் தொகையாய்ப் பரந்து கிடந்தன. அவை வருங் காலத்தில் சமநிலை ஆதிக்கத்தை அடிக்கடி நிர்ணயிக்க வேண்டி யிருந்தது.
சித்திராபோத்து வேளாய்ப் பின்பு இருந்த தொமசு உவெந்து போத்து என்பான் பக்கிங்காமுக்கு மாமுய்ப் பொதுமக்கட் சபை யில் ஒர் ஊக்கமிக்க உறுப்பினனுயிருந்தான் ; பக்கிங்காமின் வலிமை யற்றதும் தீங்குள்ளதுமான ஆட்சியை அவன் வெறுத்தான். ஆனல், அரச வாசப்பாட்டின் தீமைகளை அவன் கூர்ந்து உணர்ந்த அந்த நேரத்திலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 மனிதரைக் கொண்ட அவையொன்று ஒரு பேரரசை ஆளக்கூடுமென்று அவன் மனதார நம்பவேயில்லை. அல்லாமலும், அவன் உயர்பதவியைக் கோரினன்; பாராளுமன்றத்திலும் பக்கிங்காமிலும் மேலான ஆளுந்தகுதியைத்

சித்திராபோத்து 33
தான் உடையனென்று எண்ணினன். உரிமை விண்ணப்பத்தை ஆதரித்த அவன் அதன் தத்துவங்களை அழிக்கும் முயற்சியில் தன் மீதிக்காலத்தைக் கழிப்பானுயினன். இறிச்செலியு என்பான் அப் பொழுது பிரான்சுக்கு அளித்துக்கொண்டிருந்ததையும் பிசுமாக்கு சேர்மனிக்கு நீண்டகாலத்திற்குப் பின் அளித்ததையும் போன்ற தோர் அரசாட்சியைப் பிரித்தனுக்கு அளிக்க ஏற்பாடு செய்தான். உலோட்டு என்பான் சாள் சின் முதன்மையான சமயகுருவாயிருந்த ஆண்டுகளில் அவனின் முதல்மந்திரியாய் இப்பெரியோன் இருந் திருந்தால், இவன் அரசுக்குக் கீழ்ப்பட்ட ஒரு சேனையையும் பணிக் குழுவாட்சியையும் அமைக்க வழிவகையைக் கண்டிருப்பன். அவ் விரண்டுமில்லாததால் பலமான எதிர்ப்பு ஏற்பட்ட மாத்திசத் திலேயே வல்லாட்சி குலைந்து வீழ்ந்தது. பெரிய பிரித்தனின் உரிமை களுக்கிருந்த நற்காலத்தாற்போலும் கொத்துலாந்தர் வெற்றிகா மாய்ப் புரட்சி செய்ததன் பின்னரும் ஆங்கில மக்கள் தமது ஒன் செத்தெம்பர், றித்த அதிருப்தியை நன்முக உணரத் தொடங்கிய பின்னருமே, 1999 உவெந்துபோத்து சாள்சின் கையாளாய் அமைந்தான். அப் பொழுது அது காலங்கடந்த செயலாயிற்று.
முந்திய பத்தாண்டுகள் வரையும் உவெந்துபோத்தை முதலில் கொத்துலாந்தின் சபைத்தலைவனகவும் பின்னர் அயலாந்தின் ஆட்சி யாளனுகவும் அரசன் பயன்படுத்தினன். அந்நிய நாட்டுப் பிரதிநிதிக் குரிய தொழில்களில் அவன் சிறந்த நிர்வாகத்திறமை, எதிர்ப்புக் களை முறியடிக்கும் திறன், வீண் அபிப்பிராயங்களைச் சற்றேனும் மதியாது தனது கருமத்தைக் கவனிக்கும் ஆற்றல் என்பனவற்றைக் கொண்டு விளங்கினன். இம்முறைக்கு அவன் ‘சம்பூசணம்’ என்னும் பெயரிட்டான்; என்ருலும், ஏனையோர் அதைக் கொடுமை யென்று வழங்கினர். அயலாந்தில் வேண்டுமானல், மக்களைத் துணிந்து அவமதிக்கும் இத்தன்மை, தெளிந்த ஒரு கொள்கைக்குரிய சாதனமாய்ப் பயன்பட்டிருக்கக்கூடும். ஆனல், அவனுடைய பூட்கை, பொருளாதாரம் பற்றிய அளவிலேயே தெளிவுடையதாகும். மற்ற வகைகளில் அவனுடைய அநீதி கத்தோலிக்கருக்கும் புரட்டெசுத் தாந்தருக்கும் ஒருங்கே வெறுப்பையே ஊட்டியது.
அயலாந்தை ஆட்சிசெய்ய அவன் முதல் வந்தபோது அந்நாட் 1632. டவரின் சமயம் விலக்கப்பட்டமையாலும், அவர்தம் நிலத்தை மென் மேலும் பிரித்தானிய நிலக்காரருக்குக் கொடுத்த தொடர்பான அரசாங்கங்களின் நிலவொழுங்கினுலும் அந்நாட்டவர் மிகுந்த மனக்கசப்புக் கொண்டவராயிருந்தனர். சேமிசுவின் ஆட்சியில் அலுசித்தர் என்னும் நாட்டிற் குடியேறியவ்ரான மக்கள் - எமது காலம் வரை எஞ்சி நிலவும் ஆங்கில காவற்சேன் முறைமையின்

Page 26
34
16081610.
அயலாந்துக் கொள்கை
ஒரேயொரு பகுதியினர் இவரே-இலண்டன் மாநகர மக்களைத் தேரி யென்னுஞ் சிறந்த பட்டினத்திற் குடியேற்றினர் அன்றியும் அயலாந் தர் வெளியேற்றப்பட்ட நிலங்களிற் சில ஆயிரக்கணக்கான ஊக்க மாக உழைக்கும் பிரெசு பித்தீரிய கொத்துலாந்தரையும் அவ்வாறே குடியேற்றினர். ஒடுங்கிய கடல்களுக்கப்பாலுள்ள கொத்துலாந்தர்அவருட் சிலரின் முந்தையோர் நீண்ட காலத்திற்கு முன் வட அய லாந்தில் வாழ்ந்தவர்-ஆங்கே குடியேறிய பிரித்தானிய மக்களுள் மிகுந்த நிலையான பகுதியினராய் அமைந்தனர்; ஏனெனில், அவர் கள் தாமே நிலத்திற் பயிர்செய்ய ஆயத்தராயிருந்தனராதலின லென்க. அன்றியும், அவர்கள் உழவரைத் தம் நிலத்திற்காகப் பயன் படுத்திக்கொள்ளவும் அவர்களிடமிருந்து அதிக குத்தகைப் பணம் வாங்கவும் மாத்திரம் இருந்தாருமல்லர்.
உவெந்துபோத்து அலுசித்தரிலுள்ள புரட்டெசுத்தாந்தர் பிரித் தானிய தூய்மையாளருக்கு இாக்கங்காட்டியதற்காக, அவர்களே அலைத்துத் துன்புறுத்தினன்; ஆனல், அயலாந்துக் கத்தோலிக்க ரைச் சாந்தப்படுத்தத் தொடங்கினனல்லன். மாமுக, முந்தைய அர சுகள் நாட்டவர்க்கென விட்டுச்சென்ற நிலங்களை அவர்கள் இழக்கு மாறு செய்தற்கு கொனேற்றுவில் மக்களைப் புதிதாகக் குடியேற்ற எற்பாடு செய்தனன். பெரிய பிரித்தானியாவை அடக்க ஓர் அய லாந்துக் கத்தோலிக்கச் சேனையை ஈற்றில் திரட்டினுனென்றல், அயலாந்தின் பிரச்சினையைத் தீர்த்தற்கு அந் நூற்முண்டிலிருந்த வேறெந்த அரசியல் ஞானியிலும் மேலாக அவன் முயன்முன் என்பதன்று அதன் கருத்து. 1641 ஆம் ஆண்டில் சுதேசி களான கத்தோலிக்கரின் கலகம் தன்னளவில் ஒரு பயங்கரமான நிகழ்ச்சியாகும். அன்றியும், அது விளைவுகளிலும் நினைப்பிலும் இன்னும் மிகுந்த பயங்கரமானதும் அயலாந்தில் உவெந்துபோத்து அடைந்த தோல்விக்கு ஒர் அளவுகோலுமாகும்.
உலோட்டுவும் உவெந்துபோத்துவும் நெருங்கிய நண்பரும் தோழருமாவர்; பாராளுமன்றத்துக்கும் வழமைச் சட்டத்துக்கும் மேலாகச் சிறப்புரிமையையும் அதன் மன்றங்களையும் அமைக்க இரு வரும் ஒருங்கே அரும்பாடுபட்டனர். உலோட்டுவென்பான் கந்த பெரிக்கு மாற்றப்பட்டபோது, வழமைச்சட்டமுறைகளால் திருச் சபை அளவுக்கதிகமாகக் கட்டுப்பட்டதென்று உவெந்துபோத்து வுக்கு எழுதினன். அதற்கு அவனின் நண்பர் கூறிய பதில் வரு
மாறு:
"என் தலைவரின் அதிகாரத்தையும் மேன்மையையும் காவலுக்கும், அதனுடன் சேர் எட்டுவேட்டு கோக்குவினதும் அவர்தம் "ஆண்டுச்
இந்நூல் முதலாம் பாகம், பக்கம் 79

* சம்பூரணம் சம்பூரணம் ”
சட்ட விளக்கக் குறிப்புக்களினதும் விளக்கவுரைக்கும் அப்பாற் படுத்தும் வரையும் என்னை நான் பாதுகாப்பது போலவே, என் அறி வுரைகளையும் அவ்வாறன குறுகிய நோக்கமற்றனவாக்குவேன். மேலும், அதே மனவுறுதியையே தாங்களும் கொண்டுள்ளீர்களென நான் நிச்சயமாக உணர்ந்துள்ளேன். ஆதலால், கடவுளின் பெயரில் நாம் உற்சாகமுடையராகவும் திடமுடையராகவும் நடப்போமாக. அப்போது நீரும் என்னைப்போலச் ‘சம்பூசணம்’ ‘சம்பூரணம்'
என்று கூறக்கூடியவராவிர்.”
அத்தியாயம் II
இங்கிலாந்தும் கொத்துலாந்தும். கொத்துலாந்தரின் புரட்சி. நீடித்த பாராளுமன்றம். முதல் வைகல் : சிறப்புரிமை முறை அழிவும் சித்திரா போத்துவின் கொலைத் தண்டனையும். இரண்டாம் வைகல் திருச்சபைப் பிரச் சினையும் கட்சிகளின் பிரிவுகளும்.
இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் சீர்திருத்தத்தை யொட்டி யெழுந்த வேறுபாடுடைய கருத்துக்கள் அடுத்த ஊழியின் அரசியல் முறையினைப் பெரிதும் சிக்கலாக்கின; இவ்வூழியில் இரு நாடுகளை யும் ஒரு அரசனே ஆட்சி செய்தமை உண்மையில், என்றும் பெற முடியாத சமயவொற்றுமையை அடிக்கடி காட்டிற்று.
எல்லைப்புறத்தின் இரு மருங்கிலுமுள்ள பொதுமக்கள் சீர்திருத் தத்தைப்பற்றிய விடயங்களில் மக்கிய காலக் குருமாருக்கு மாருய்த் தம் கருத்தினைச் சாதித்தனர்; ஆனல், மிக வேறுபட்ட இரு முறைகளிலேயே அவ்வாறு செய்தனர். இங்கிலாந்தில் இருந்த திருச்சபை தன் பழைய அமைப்பின் அடிப்படையை உடையதா யிருந்தது. மேலும், அதன் அமைப்பு சமயச் சார்புடையதாய் இருந்தது. இதனல் பொதுமக்கள், தங்கள் வழிபாடு முறையிலும் சமயக் கோட்பாடு ஆகியவற்றின்மீது தங்களுக்கிருந்த அதிகாரத் தைத் தாங்களே செலுத்தாது முடியின் மூலமும் பாராளுமன்றத் தின் மூலமுமே செலுத்தவேண்டியவராயினர். மறுபுறமாக, கொத்து லாந்தில் பொதுமக்கள், திருச்சபை யமைப்பிலும் ஆட்சி முறை யிலும் பெரும்பங்கு பற்றினர். அவ்வாருகத்தான் பொது மக்கள் சமயவதிகாரஞ் செய்யக்கூடியதாயிருந்தது; ஏனெனில், அவர்களுக்காகப் பேசுதற்கு உண்மையான பாராளுமன்றம் இல்லை. அத்துடன், அக்காலத்து ஆங்கிலேயர் இலிசபெத்தை நம்பியது போல மேரி, சுதுவட்டு என்பவருடைய காலத்தில் வாழ்ந்த ஆங்கி லேயர் முடியை நம்ப முடியாதிருந்தனர். கொத்துலாந்தின் விழுமி யோர் பழைய சமயத்தைக் கவிழ்க்க, உதவியளித்தனர்; ஆனல்,
35

Page 27
36
16371640.
இங்கிலாந்தும் கொத்துலாந்தும்
புதுச் சமயம் முடியினலோ, பிரபுக்களினலோ திருச்சபைக்கு வெளியிலிருந்து உருவாக்கப்பட்டிலது ; குருமாசையும் பொது மக்களையுங் கொண்ட குடியாட்சியால் திருச்சபைக்குள்ளிருந்தே உருவாகியதென்க.
எனவே, ஆங்கிலேயர், அரச கட்சியாளராகவோ, பாராளுமன்றிற் குரியராகவோ, அன்றேல் ஆங்கிலக் கிறித்துவத்துவராயோ, தாய்மையாளராயோ இருந்தபோதிலும் திருச்சபைமீது அரசாங் கம் அதிகாரஞ் செலுத்தவேண்டுமென்று அவர்கள் விரும்பினர். இவ்வகையில் அவர்கள் இராசித்தசுவின் கொள்கையினராய் இருந்ததியல்பே. கொத்துலாந்தின் பிரெசுபித்திரியர் திருச்சபை யானது அரசின்மீது அதிகாரஞ் செலுத்தவேண்டுமென்று விரும் பினர். இவ்வாறன நிலையில் சுதுவட்டாசரோ அவர்தம் பகை வரோ தீவு முழுவதிலும் ஒரேவகையான சமய ஒழுங்கைத் திணிப் பதில் ஒருபோதும் வெற்றிபெற்றிலர்.
பிரதிநிதித்துவக் கருத்தும் அதன் பிரயோகமும் அபிவிருத்தி யடையும் நிலையில் இருந்த அந்த நாட்களில் ஆங்கிலேயருடைய பழைய பாராளுமன்றம் அவர்தம் பிரதிநிதியாய் இருந்தது. அதே போல், கொத்துலாந்தருக்கு அவர்தம் புதிய திருச்சபையிருந்தது. ஆனல், இங்கிலாந்தின் ஈர் அந்தங்களிலுமுள்ள அந்நிலையின் வேறு பாட்டை அந்நாட்டின் அரசர் உணர்ந்திலர். முதற் சேமிசு, கொத்து லாந்தில் வளர்க்கப்பட்டவனதலின், அங்குள்ள பாராளுமன்றத் தைப் போலவே, ஆங்கிலப் பாராளுமன்றமும் கோமறைக் கழகத் துக்கு அடங்கி நடப்பதாகுமென எண்ணினன். அவனுடைய மக ணுன சாள்சு இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டவணுதலின், ஆங்கிலத் திருச்சபையைப்போலவே, கொத்துலாந்துத் திருச்சபையையும் அரசவாணையால் உருவாக்க முடியுமென்று தவருக எண்ணினன். அண்மையில் இங்கிலாந்தின் தனியாட்சியாளனுகத் தான் ஏற்றுக் கொண்ட அதிகாரத்தில் நம்பிக்கையுடையனயும், எடின்பருேப் பாராளுமன்றம் எவ்வித மதிப்புக்குமுரியதொன்றன்று என்று அறிந்துகொண்டும் சமயத்தையொட்டிய விடயங்களில் தான் கொத்துலாந்தின் முடியாட்சியாளனுக இருக்கலாமென்றெண்ணி அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டனன். ஆங்கிலப் பாராளுமன்றத்தை நீக்க அவன் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது உலோட்டுவின் ஆங்கில வழிபாட்டு நூலைக் கொத்துலாந் துத் திருச்சபைமேற் றிணிப்பதற்கு அவன் செய்த முயற்சி இரு சாதியினர்க்கும் உடனே கடுஞ்சினம் விளைத்தது. எவ்விடயங்களில் அவர்கள் வலிமையும் உணர்ச்சியும் மிக்குடையாாய் இருந்தனரோ
அவ்விடயங்களையிட்டு அவர்களுக்கு அது சினத்தை விளைத்தது

இங்கிலாந்தும் கொத்துலாந்தும்
மன்றி ஈராசாங்கங்களிலும் அரசனுடைய அதிகாசம் குறைதற்குக் காரணமுமாயிற்று.
அவித்து ஆற்றுக்கு வடக்கே சாள்சுக்கும் உலோட்டுக்கும் மாருய் மூண்ட கலகம் ஒரு சமய ஏற்பாடாகவும் திருச்சபை மன்றத்துச் செயலாகவும் உருவாகிற்று. சமயத்தை அடிப்படை யாகக் கொண்டு நாட்டு மக்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது ; ஏனெனில், கொத்துலாந்தில் அரசியல் வாழ்க்கைக்குரிய அம்சங் கள் குறைவாய் இருந்தன. திருச்சபையானது நாட்டைப் புறத்தளை யினின்றும் விடுதலை செய்தபின் இருந்த நிலைமை நடைமுறையில் அரசின்மேல் அதிகாரஞ் செலுத்த உரிமை கேட்டற்கும், மிகவும் வெறுக்கத்தக்க முறையில் ஆட்சி அலுவல்களில் தலையிடுதற்கும், சிறிதேனும் சகிப்புத்தன்மையின்றி நடந்துகொள்ளவும் அத்திருச் சபையைத் தூண்டியது. இது, மொந்துருேசு, கிளேவர்கவுசு ஆகியோரது காலத்தில் சமயக் கொடுமையை எதிர்த்தற்காகக் கொத்துலாந்து கவலியர்க் கட்சியை மீட்டும் ஒன்றுபடுத்தற்கு முதற் சாள்சுக்கும் அவனுக்குப் பின் இரண்டாம் சாள்சுக்கும் வாய்ப்பளித்தது. திருச்சபைக்கு மாருக, மீட்சிக்கால கவலியர் கோமறைக் கழகமெனும் கொடியவமைப்பை உருவாக்கியவரா வர். 1689 ஆம் ஆண்டின் புரட்சியுடன்படிக்கை பிரெசுபித்தீரியத் தைத் தேசீய சமயமாக நிறுவியது; ஆனல், இவ்வுடன்படிக்கைப் படி அச்சமயம் அரசிற்குக் கீழ்ப்பட்டவொன்முகியது. அதுவரை யும் கொத்துலாந்தருடைய கன்னைகளின் பயங்கரமான இனப் பகைமை பல மாறுபாடுகளுடையதாயிருந்தது.
சுதுவட்டர் காலத்து இங்கிலாந்தில், திருச்சபையானது அர சின் அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெற ஒருபோதும் விரும்ப வில்லை. அந்நாட்டில் சமயச் சண்டை முடிக்கும் பாராளுமன் றத்துக்குமே இருந்தது. ஆராதனைகளில் திருச்சபை கலப் பற்ற புரட்டெசுத்தாந்தத்திற்குரியதாக இருக்கவேண்டுமென் அறும் அதன் உள்ளமைப்பில் பொதுமக்களுடைய பிரதிநிதிகள் பலர் இருக்கவேண்டுமென்றும் ஆங்கிலேயருள் ஒரு பகுதியி னர் பாராளுமன்றம் மூலமாகக் கேட்டனர். முடியானது, வழி பாட்டுநூலில் ஆர்வமுடைய பிறிதொரு பகுதியினருடைய ஆத ரவுடன் இக்கோரிக்கையை எதிர்த்தது. எனினும் வழிபாட்டு நூலில் ஆர்வமுடைய இவர்கள் உலோட்டது அரசியற்றிருச் சபை முறைமை முழுவதையும் விரும்பினர் எனக் கொள்வதற் கில்லை. இந்நிலைமை காரணமாக இலிசபெத்தின் ஆட்சியில் மக்களிற் பெரும்பாலோர் பின் வருமாறு சிந்திக்கலாயினர் : அரசும் பாராளு மன்றமும் உடன்படாவிடின் ஆங்கிலத் திருச்சபையை மாற்றி யமைக்கும் உரிமை எதற்குளது? ஆங்கில உள்நாட்டுப் போர் இப்
37

Page 28
38
கொத்துலாந்தர் புரட்சி
பிரச்சினைக்கொரு முடிவு கண்டது. மற்றையது கலப்பற்ற அரசியற் பிரச்சினையாகும்-அதாவது நிர்வாக சபையினரை நியமிப்பதும் போர்ப் படையினை நடத்துவதும் முடியா? பாராளுமன்றமா? என்ப தாகும். நடைமுறையில் இவ்விரு பிரச்சினைகளும் பிரிக்க முடியாதன வாகும்; ஒன்றை ஆதரித்தல் அதற்கு நேரான மற்றதனையும் ஆதரித்தலாகும்.
1638 முதல் 1640 ஆம் ஆண்டு வரையும் நடந்த கொத்துலாந்தின் கலகம் பிரித்தானியப் புரட்சியைத் தொடக்கிற்று. கொத்துலாந்தர் தம் எல்லைப்புறத்தில் போர்க்கோலம் பூண்டு சாள்சை வெற்றிகரமாக எதிர்த்து நின்ற காலம்வரையும் இங்கிலாந்தில் மனக்குறைக்குரிய அறிகுறிகள் பலவிருந்தபோதிலும், எதிர்ப்புக்குரிய அறிகுறிகள் எதுவுமில்லை; ஏனெனில், நிறுத்தப்பட்ட நிலையிலிருந்த பாராளு மன்றத்தை விட சுதுவட்டர் காலத்து இங்கிலாந்தில் எதிர்ப்புக் குரிய மத்தியவிடம் எதுவுமில்லை ஆதலால் என்க. ஆங்கில நில மானிய முறைமை அழிந்து போயிற்று. அரி பேசி போர் செய்வதில் ஆர்வமில்லாதிருந்தான். பெருஞ் செல்வர் அமைதியுடையரும் சட் டங்களுக்குக் கீழ்ப்படிகிறவருமாவர். அவர்கள் உழவராயும் வேட் டையாடுபவராயுமிருந்தனர். சிலர் வழக்கறிஞராயிருந்தனர்; மிக அறிதாகவே போர் வீரராயிருந்தனர். அரசன் தன்னுடைய விருப் பினை வினைப்படுத்துதற்கு வேண்டிய படை இல்லையென்பது உண் மையே, ஆனல், முடிக்குக் கீழ்ப்படியும் பழக்கமானது தியூடர் காலந்தொட்டு மக்களது பொதுவான இயல்பாக இருந்துவந் தது. மாவட்டங்களுடனே அரசாங்கத்துடனே மனக்குறையுடைய மக்கள் போருக்கெழுதல் மத்திய காலத்து இங்கிலாந்தில் வழக்க மாயிருந்தது; ஆனல் இலிசபெத்தின் ஆட்சியுடன் அவ்வழக்கம் அற்றுப்போயிற்று. ஆகையினல், இக்காலத்துக்குரிய ஆங்கிலேயர் பாராளுமன்றத்தையிழந்து விட்டால், அவர்கள் தம் முந்தையோர் முன்னெருபோதுமிருந்திராத முறையில் தனியாட்சிக்கு அடிமை களாயிருப்பர்.
இங்கிலாந்தில் ஏலவே அற்றுப்போன இயல்புகளைக் கொண்ட மக்களைக் கொத்துலாந்து அதற்களித்தது. இம்மக்கள் முரடரும் தைரியமுள்ளவருமாவர். அத்துடன் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயு தம் பூணும் துணிவுடையராவர். இரு நாட்டினரும் ஒருவர் குறையை மற்றவர் நிறைசெய்தனர். கொத்துலாந்தர் சுதந்திரமான அரசியல் நிறுவகங்களையோ அல்லது நல்ல சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் பழக்கம் எதனையும் பெற்றிலர் ; பாராளுமன்றம், வழமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஆங்கிலேயர் நீண்டகாலமாக அமைதி பெற்றிருந்தனர். ஆதலால் அவர்கள் போர் செய்து தம் சிறப்புரி மைகளைக் காப்பாற்ற விரைவாக முன்வந்திலர். இங்கிலாந்து நில

கொத்துலாந்தர் மறத்தன்மை
மானியத்திற்கோ, குடியாட்சிக்கோ வுரியதொரு நாடன்று கொத் துலாந்திலோ, மக்கள் இவ்விரு பண்புகளும் விரவிய மறத்தன்மை உடையோராயிருந்தனர்.
கொத்துலாந்திலுள்ள ஒவ்வொரு நகரவாசியும் உழவோனும் சமயச்சண்டையிலோ தனிப்பட்ட குழப்பத்திலோ தான் பயன்படுத் திய போர்க்கருவிகளை மிகச் சமீபகாலம்வரையும் வைத்திருந்தனன். மேலும், மலைப்பிரதேச எல்லை நீளத்திற்கு இப்பழக்கங்கள் வழக்கத் தில் இருந்தன. "உருேசாப் போரின் பொழுது இங்கிலாந்திலிருந்த விழுமியோரையும் முக்கியமாக உயர்குடிப் பிறந்தோரையும்போல் கொத்துலாந்திலுள்ள விழுமியோரும் உயர்குடியின்ரும் போரில் தம்மைப் பின்பற்றும் பழக்கமுடையாாயிருந்த ஏவலாளரையும் வாசக்காரரையும் பெற்றுள்ளனர். 1638 ஆம் ஆண்டில் இந்நிலமானி
யத் தலைவர், முடியினை யெதிர்த்துக் கொத்துலாந்துத் திருச்சபை
யைச் சார்ந்து நின்றனர். உலோட்டு அவர்களது பகையைச் சம்
பாதித்துக் கொண்டான். அவனுடைய செல்வாக்கால் கொத்து லாந்தின் கோமறைக் கழகத்தில் பிரபுக்கள் வகித்த பதவிகளில் விசுப்பாண்டவர்கள் அமர்ந்தனர். மேலும், முந்திய திருச்சபை நிலங்களுக்குரிய பொதுமக்கள் அந்நிலங்கள் அவர்களிடமிருந்து திருப்பிப் பெறப்படுமென்று அச்சுறுத்தப்பட்டனர். அல்லா மலும், விழுமியோர் உண்மையான கொத்துலாந்தர் ஆவர். மேலும், ஆங்கிலேயர்பால் பாரபட்சமுடையன்போற் முேன்றிய அரசனுக் கும் அவனுடைய நூலுக்கும் மாமுய் எழுந்த எதிர்ப்புப் படை யில் இளையனுன மொந்துமுேசுகானும் முதன்மையான பங்குபற்றி குன்.
பாராளுமன்றம் கூடியிராதபோது ஆங்கிலேய்ர் மேய்ப்பானில் லாத மந்தைபோன்றவராயினர்; ஆனல், கொத்துலாந்தில் திருச் சபையே, ஒவ்வொரு கோவிற்பற்றிலும் அரசியல் முயற்சிக்குக் தகுதியான நிறுவகமாயிருந்தது. முன்னரும் மக்கள் தமது வல்ல மையினலேயே சீர்திருத்தத்தை ஏற்படுத்தினர். ஆகையால் அவ் வாறே அதனை இப்பொழுது காத்தலும் அவர்தம் நாட்டின மர பாகும். கொத்துலாந்தின் புரட்டெசுத்தாந்தர் செய்துகொண்ட தெய்வீக ஏற்பாடு 1638 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அது உயர்பதவியிலிருப்போர் முதல் கீழ் பதவியிலுள்ளோர் வரையு முள்ள எல்லோரையும் ஏற்றுக்கொண்டது. ஒவ்வொரு கோயிற் பற்றிலும் தேம்புவோரும் தம் வலக் கைகளைக் கடவுளை நோக்கி உயர்த்தினேருமான பெருந் தொகையான மக்கள் அகிற் கையொப்பமிட்டனர். கொத்துலாந்தர் தம் உணர்ச்சியை வெளிப்
படுத்தினரெனின், அவர்கள் உண்மையில் மனக்கிளர்ச்சியுடையரா
யிருப்பர். வலேசு, புமுேசு ஆகியோரின் காலத்திற்குப் பின்னர்
39

Page 29
40
1638.
639.
ஆக்கயிலும் அலச்சாந்தரும்
மக்கள் இதுவரை ஒருபோதும் இத்துணை உணர்ச்சி வசப்பட்டி ருக்கவில்லை.
பொதுமக்கள் படைபூண்டோராகக் கிளாசுக்கோவிலுள்ள திருச் சபை மன்றத்திலிருந்தனர். நான்காண்டுகளுக்குப்பின் இங்கிலாந் கில் நீடித்த பாராளுமன்றமானது அரசனை எதிர்த்து நின்றது போல, அம்மன்றத்தார் அவனை இப்பொழுது எதிர்த்தனர். அம் மன்றத்தை அவன் குலைத்தபோது அதன் உறுப்பினர் கலையாது கூடியிருந்தனர். குருபரிபாலனம் ஒழிந்ததென்று பிரகடனஞ் செய்து திருச்சபையின் முழுமையான பிரெசு பித்தீரிய ஆட்சியினை மீட்டும் அமைத்தனர். மலைப்பிரதேசங்களில் உள்ள மிகுந்த ஆற்றல் வாய்ந்த சண்டையிடுங் காம்பெலிசுக் குலத்தினர்க்குத் தலைவனுன ஆக்கயில் வேள் என்பவன் கிளாசுக்கோ மன்றத்தின் செயலினை ஆதரித்தான். தாழ்நிலங்களில் பொதுவாக மக்களால் ஏற்கப் பட்ட பிரெசுபித்தீரிய கொள்கைக்கும் அவனது குடும்பத்துக்கு மிடையே ஒரு தொடர்பு அன்றே தொடங்கியது. அத்தொடர்பு கொத்துலாந்தர் வரலாற்றில் நிலையானதும் பெரும்பாலும் ஏனை நிகழ்ச்சிகளே நிர்ணயிக்க வல்லதுமான ஓர் காரணியுமாக ஒரு நூற்றண்டுக்கு மேல் நிலவிற்று. இதனுல் அக்காலமுதல் கலோடன் காலம் வரையும் காம்பெலிசுக் குலத்தினேடு பகைகொண்டிருந்த குலங்கள் யாவும் அந் நியாயம்பற்றிச் சுதுவட்டரசர் கட்சிபால்
ஈர்க்கப்பட்டன.
சாள்சின் வீழ்ச்சிக்குரிய காரணங்களுள் பின்வருவது மிக முக் கியமானதாகும். கொத்துலாந்து நிலவளமற்றதாயும் மத்திய கால வேளாண்மை முறைகளையே யுடையதாயுமிருந்தது; அன்றியும், கொத்துலாந்திற்கு இங்கிலாந்தோடோ, கடல் கடந்த நாடுக ளோடோ அதிக தொடர்பில்லை. அந்நாட்டின் மிக வீரமுள்ள மக் கள் அக்காலத்தில் பிறநாடுகளில் தொழிலாற்ற அனுப்பப்பட்ட னர். பாந்திருந்த பிரித்தானிய பேரரசு முழுவதும் அவர்கள் காசா ளராயும் மேற்பார்வையாளராயும் அனுப்பப்படவில்லை; ஆனல், ஐரோப்பாக் கண்டத்தில் கசுக்தாவுசு அடோல்பசுவினதும் ஏனைய புரட்டெசுத்தாந்த வெற்றி வீரர்களினதும் சேனைகளில் தளபதிக ளாயும் உப பதிற்றளபதிகளாயுமே அனுப்பப்பட்டனர். இம்மக்கள் ஆங்கிலேயரின் அக்கிரமத்திலிருந்து தங்கள் நாட்டினைக் காப்பாற்று தற்குத் தங்கள் தொழிற்றிறனைப் பயன்படுத்தும் ஆவலுடையவ ராகத் 'திரண்டு நாடு திரும்பினர். “பழைய போக்கிரியும்” போர் வீரனுமான அலச்சாந்தர் அவர்கள் தலைவனுவான். அவனும் அவர்க ளும் ஏற்கெனவே உற்சாகம் மிக்கவராயிருந்த கொத்துலாந்தருக் கியன்றளவு விரைவாகப் பயிற்சி அளித்து இடன்சு உலோவில் அவர்

குறும் பாராளுமன்றம்
களை, பாசறையில் நிறுத்தித் துவித்து வழியைச் சாள்சு பயன்படுத் தாதவாறு தடைசெய்ய ஆயத்தாாயிருந்தனர்.
அமைதியான சேமிசுவினதும் அவனுடைய மகனினதும் காலத் துள்ள இங்கிலாந்தில் ‘போர் நாட்டமுள்ள மக்கள் மிகச் சிலரே தோன்றினர்; ஆங்கிலேயர் வளமிக்க நிலப்பகுதியில் விடுகட்டி அங்கேயே தங்கியிருந்தனர்; அல்லது கடல்கடந்து சென்று வணி கம் செய்தனர்; அன்றேல், அமெரிக்காவில் குடியேறினர். நிலை யான சேனையில்லை; மேலும் தெய்விக ஏற்பாடு செய்துள்ளோரு டைய படைக்கு நிகரான படையொன்றினை, போதிய பணமின்றி, தம்மீது வெறுப்புற்றவரும், போரில் விருப்பற்றவருமான மக்களி டையேயிருந்து உடனடியாகத் திரட்டுவதற்குச் சாள்சும் சித்திசா போத்தும் காலம் தாமதித்துச் செய்த முயற்சிகள் யாவும் பயனில வாயின.
ஈற்றில், சித்திராபோத்து வேளாக்கப்பட்ட உவெந்துபோத்தென் பான் இவ்வாறன நெருக்கடியின்பொழுது தன் தலைவனுடைய கையாளாக விருத்தற்கு இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டான். எனி னும், அவன் அயலாந்தின் அதிகாரியாகவும் இருந்தான். அங்கே சட்டத்தில் இல்லாத, எதிர்ப்பற்ற கீழ்ப்படிவுக்குரிய ‘அநியாய ஆணையை அலுசித்தரிலுள்ள கொத்துலாந்தர்மேற் செலுத்த அவர்களை இடைவிடாது துன்புறுத்தித் தொந்தரை செய்தான். அதே சமயத்தில் இரு தீவுகளிலும் அரசரின் அடங்காத குடிகளே அடக்குவதற்குக் கெலித்திய அயலாந்தரைக் கொண்ட படையினை அவன் திரட்டினன். தொடர்ச்சியாக உருவான உரோமன் கத் தோலிக்கச் சேனைகளில் இதுவே முதலாவதாகும். கடலுக்கப்பா லூள்ள அச்சேனை அச்சுறுத்துஞ் சாயை பிரித்தானியாவில் சுது வட்டர் வமிசத்தை ஒருபோதும் பயங்கரமாகத் தாக்காவிடினும் அதன் ஆக்கத்துக்குப் பலகாலுந் தீமை செய்தது. --
இங்கிலாந்து தன் உளப்பாங்கினை வெளிப்படுத்தற்குரிய வழியை இன்னும் கண்டிலது. சித்திராபோத்தும் அதனைச் சரியாக விளங் கிக் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தைக் கூட்டும்படி சாள்சுக்கு அவன் ஆலோசனை கூறினன். அதனல் கொத்துலாந்தை அடக்கப் பணம் பெறப்படுமென்பது அவனுடைய நம்பிக்கையாகும். எப் படியாயினும் ' குறும் பாராளுமன்றம்' ஒருளப்பாட்டுடன் ஆங்கி லேயரின் மனக்குறையை வெளிப்படுத்தியது; மேலும், அது தாமதமின்றிக் குலைக்கப்பட்டது. ஆனல், பிம் என்பவன் அம்மன் றத்திற் பேசியதன் பின்னரே இது நிகழ்ந்தது. அவனுடைய மறக்கமுடியாச் சொற்கள் வருமாறு: 'மனிதனுக்கு ஞானேந்திரி
எப். 13. மே 5, 1640.
4.

Page 30
42
ஒக. 1640.
நவெம்பர்
1640.
நீடித்த பாராளுமன்றம்
யங்கள் எவ்வளவு பிரதானமோ அவ்வளவிற்கு மக்கட்டொகுதிக் குப் பாராளுமன்றத்தின் அதிகாரம் பிரதானமானதாகும்.'
சித்திராபோத்து, கடும்பிணியால் வருந்தியபோதும் சில மாதங் களாக மீண்டும் தனியாட்சி முறையினை இயக்கத் தனியே முயற் சித்தான். ஆனல், அதன் சில்லுகள் புதிய தடைகள் காரணமாக இனிச் சுழலாவாயின. பாராளுமன்றம், ஒரு கணப்பொழுதிற் முேன்றிக் குலைந்தபோதிலும், அது முதற்கொண்டு மக்கள் தம் ஒருமித்த கருத்தையும் வலிமையையும் அறிந்துள்ளனர். சித்திரா போத்து நம்பத்தக்க சேனையொன்றைத் தன்னுடைய யோக்சய ரில் தன்னைச் சுற்றிச் சேர்த்துக்கொள்ளச்செய்த முயற்சிகளைத் துவித்துவாற்றைத் தாண்டி-மொந்துமுேசு ஆங்கிலக் கடற்கரை யில் தலைசிறந்த குதிரை வீரராவர்-நொதம்பலந்தையும் தேர்கா மையும் கைப்பற்றிய ஏற்பாட்டுச் சேனையானது எதிர்த்தது. அங்கே கொத்துலாந்தர் தந்திரமாய் இருந்துகொண்டு அவ் விடத்தைவிட்டு நீங்குவதற்குத் தம் நிபந்தனைகள் நிறைவேற்றப் படுவது மாத்திரமன்றிப் பணம் தரப்பட வேண்டுமெனவுங் கோரி னர்; ஏனெனில், அவர்களறிந்த அளவில் புதிய ஆங்கிலப் பாராளு மன்றமொன்றுக்குச் சாள்சு அடங்கினற்ருன் அவன் பணம் பெறலா மாதவினென்க; இம் மன்றம் இதற்கு முன்னர் இருந்த பாராளு மன்றத்திலும் பார்க்க மிகுந்த கோபமுடையதாயும் பயங்கரமான தாயுமிருந்தது.
கொத்துலாந்தரோடு போர் செய்தற்கு வரியேற்படுத்துதற்காகக் குறும் பாராளுமன்றம் கூட்டப்பட்டது. அவர்களைப் பணங் கொடுத்து நாட்டிலிருந்து துரத்துவதற்காக நீடித்த பாராளுமன் றம் கூட்டப்பட்டது. ஆனல் பொருள்களைக் கொடுக்கு முன்னர் மனக்குறைகளை நிவிர்த்திசெய்ய வேண்டும். மேலும் 1640 ஆம் ஆண்டின் கார் காலத்தில் மனக்குறைகளைச் சீர்ப்படுத்தல் திருச் சபையிலும் அரசிலும் வரையறுக்கப்படாத நோக்கத்தைக் கொண்ட புரட்சியைக் கருதிற்று.
நீடித்த பாராளுமன்றமானது அதன் உறுப்பினருள் அரைவாசிப் பேர் எண்ணியதுபோல, தியூடர் காலத்த சீர்திருத்தத்திற்கு நிக ாான மாற்றமொன்றை ஆங்கிலச் சமயத்தில் உறுதிப்படுத்தும் நியதியுடையதாகவில்லை; எனினும் அப்பாராளுமன்றமானது ஆங் கிலச் சமய வரலாற்றில் பெரியதொரு நிகழ்ச்சிக்கு வழி வகுத்தது. பிற்காலங்களில் சுதந்திரத் திருச்சபைகளுக்குப் பிறப்பிடமான தூய்மையாளர் புரட்சியே அந்நிகழ்ச்சியாகும். மறுபுறமாக, நீடித்த பாராளுமன்றம் ஆங்கிலமொழி பேசுமினங்களின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட உண்மையான மாறுதலாகும். அது ஆங்கில முடியாட்சியை அப்பொழுது ஐரோப்பாவில் பொதுவாக நிகழ்ந்த

செயற்குழு முறை
வாறு ஒரு தனிமுதன்மையாக விடாது தடுத்தது. அத்துடன் அது நாட்டையும் பேரரசையும் பொதுமக்கட் பிரதிநிதி மன்றம் நேரே ஆட்சிசெய்வதைப் பரிசோதனை செய்தது. அச்சோதனை நடந்த காலத்தில் அரசர்க்கு மாமுய் நாலாண்டுகள் வரை நிகழ்ந்த போரில் நீடித்த பாராளுமன்றமானது ஆங்கிலேயர் முன்னுெரு போதும் நடத்தியிராதளவு மிகப் பெரிய போர் ஒன்றை வெற்றிகர மாக நடத்திற்று. வெற்றியின் பின்னர் அப்பாராளுமன்றமானது நாட்டில் நிலையான ஒரு உடன்படிக்கைய்ைச் செய்யத் தவறியது ; ஆனல் பிறநாடுகள் இங்கிலாந்திற்கு அஞ்சவும், அதற்கு மரியாதை அளிக்கவும் செய்தது. எளிதில் மறக்க முடியாத அவ்வாண்டுக ளெல்லாவற்றிற்கும் பின் சுதுவட்டர் வமிசம் மறுபடியும் அமைக் கப்பட்டிருக்கும்; ஆனல், ஆட்சி செய்வதில் பொதுமக்கட் சபை பங்குபற்றதுவிடின் இவ்வமிசத்தினுல் ஒருபோதும் நாட்டை மீண் ம்ெ ஆட்சிசெய்ய முடியாது.
நீடித்த பாராளுமன்றத்தின் செயல்களெல்லாவற்றிலும் பொது மக்கட் சபையினரே வழிகாட்டியவரும், பிரபுக்களே பெருந் தயக் கத்துடன் வழிப்பட்டவருமாவர். தியூடர் ஆட்சியில் கோமறைக் கழகத்தினர் உருவாக்கிய சட்ட முறிகளை நிறைவேற்றியதும், இலிச பெத்து இறந்தபின்னர் ஓர் எதிர்க்கட்சியாய் மட்டும் நடந்து கொண்டதும், உறுப்பினர் பலரைக் கொண்டதும், பொதுமக்களுக் குரியதும், அனுபவமற்றதுமான அப்பேர்ப்பட்ட வாதமிடும் மன்ற மொன்று அரசாட்சியைப் பெற்று ஆங்கில வரலாற்றில் மிகப் பயங் காமான தொல்லைகளை எங்ங்னம் வெற்றியுடன் சமாளிக்க முடியு மென்பதே எம் மனத்திலெழுங் கேள்வியாகும். /
பொதுமக்கட் சபையானது நாட்டின் அரசாங்கமாய் அமைய முடிந்தமைக்குரிய காரணங்களிலொன்று சமீபகாலம்வரை அதன் முதன்மைக்கேற்றவாறு ஆராயப்பட்டிலது. தியூடர் காலத்தின் பிற் பகுதிக்கும் சுதுவட்டர் காலத்தின் முற்பகுதிக்குமுரிய பாராளு மன்றங்கள் முக்கியமாய்ச் செயற்குழு முறைமையினை வளர்த்தன வாதலால் நடைமுறை ஒழுங்கில் பெரிதும் முன்னேற்றம் அடைந் தன. 1640 ஆம் ஆண்டில் கீழ்ச்சபையானது வாதிக்கும் மன்ற மாகமட்டும் செயற்பட்டிலது ; மத்திய காலத்துப் பொதுமக் கள் சபை எதுவும் செய்திருக்க முடியாத அலுவல்களை நடாத்தும் திறமையுள்ள இக்காலத்துக்குரிய நன்கமைக்கப்பட்டதோர் அலு வலகமாய் இருந்தது. கோமறைக் கழகத்தினர் தமது வேலையைத் தமக்காக ஆயத்தஞ் செய்வதைப்பற்றி, சென்ற நாற்பது ஆண்டு
43

Page 31
44
இலண்டனின் ஆதரவு
களாகப் பாராளுமன்றங்கள் திருத்தியடையவில்லை; தமக்குரிய விடயங்களைத் தாமே செயற்குழுவில் தீா ஆராய்ந்து பார்த்தன. ஆகவே, அவை பயன் விளைக்கத்தக்க முறிகளையும் தமது சொந்தப் பூட்கைகளையும் உண்டாக்க அறிந்துகொண்டன."
இரண்டாவதாக, உலகத்தில் ஏலவே முதலான நகரமும் செல்வத் திலும் மக்கட்டொகையிலும் மனவூக்கத்திலும் வேறெந்த ஆங்கில நகரத்தையும் விடப் பன்மடங்கு கூடியதுமான இலண்டன் நீடித்த பாராளுமன்றத்துக்கு உதவியளிப்பதாய் அதனருகே அமைந் துள்ளது. இம்முக்கியமான காலத்துள்ள இலண்டன் மாநகரத் திற்முன் இலண்டன் மக்களுள் சிறந்தவனை மிலிற்றன் என்பான் பிறந்தான். அவன் காலத்தில் 'இறகையுதிர்த்து ஆற்றலுடைய தன் இளமையை வளர்க்கும் ஒரு கழுகினைப் போலவும் சடையைச் சிலுப்பித் துயில் நீத்தெழும் வலியான் ஒருவனைப் போலவும் தன் னைத் தூண்டியெழுப்பி, வலிமையும் கம்பீரமுமுடையதாய் நிற்கும் ஒரு சமூகமாய் இங்கிலாந்து அவனுடைய அகக்கண்ணுக்குக்காட்சி யளித்தது. அக்காலத்தில் நாட்டில் தோன்றும் இயக்கங்கள் எப் பகுதியில் முதற்முேன்றியிருந்தாலும் அவை இலண்டன் மாநகரி லேயே பேணப்பட்டன; மேலும், இலண்டனேடு கொண்ட ஒரு மைப்பாடே மொட்டைத்தலையர் கட்சி உள்நாட்டுப் போர்க்காலத் தில் இங்கிலாந்தின் பெருந்தொகையான புரங்களை ஆட்சிசெய்ததற் குக் காரணமாகக் கூறப்பட்டது. இலண்டன் மக்களின் மதினுட்பத் தினதும் பேரார்வத்தினதும் எழுச்சி பாராளுமன்றத்தை விந்தை யானதும் ஆட்சேபனைக்குரியதுமான பாதையில் ஈர்த்துச் செலுத் தியதென்றுஞ் சிலர் எண்ணலாம்; ஆனல், அது திறமையாகவும் இரு சபைகளுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் பாதுகாப்பு அளித்த தென்பதை ஒருவரும் மறுக்க முடியாது.
இவ்விடயத்தை நன்கு ஆராய்ந்த புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்ற சிரியர் நோதசித்தன் கூறுவன வருமாறு : (சேர் எஸ். தி. இவிசு என்பவரின் சஞ்சிகை, 1923, முன்னுரை) " இலிசபெத்தின் காலத்துக்கு முன்னர் இருந்த பொதுமக்கட்சபை ஓரளவிற்கு ஆரம்ப சபையாயிருந்த தென்றும் நீடித்த பாராளுமன்றம் பல வழிகளிலும் இக்காலத்துக்குரிய சிக்கலானவோர் இயக்க மென்றும் அடிக்கடி கூற முடியாது. 1558 ஆம் ஆண்டில் சிற்றுார்ச் சீமான் ஒருவன் இடைக்காலத்திற்குரிய மக்கள் சபைக்குச் சென்ருல் அங்கு வசதியாக விருந்திருப்பான். ஆனல், 1640 ஆம் ஆண்டில் பொதுமக்களுள் ஒருவன் அவ்வாறிருந்திருக்க மாட்டான். அவன் உவெசுத்துமினித்தரில் இன்று கூச்சமின்றித் தாராளமாக இருப்பான். அதற்கிடைப்பட்ட ஆண்டுகளிலேயே அவ்வாறன மிகப் பெரிய வளர்ச்சி யேற்பட்டது. செயற்குழுக்களினதும் அவற்றின் வேலையினதும் விரைவான பெருக்கமும் முழுச்சபையிலும் செயற் குழுவொன்றைத் திடீரெனக் கண்டுபிடித்து அந்த அற்புதமான உபாயத்தைப் பயன்படுத்தியமையும் அப்போதே எற்பட்டனவாகும்.” பிறவும் அவ்வாறே.

முதல் வைகல்
கடைசியாக, 1640 ஆம் ஆண்டில் பழைய அனுபவம் வாய்ந்த அங்கத்தினர் நீதிமன்றங்களிலிருந்தனர். அவர்கள் செயற்குழு விலும் விவாதத்திலும் எலியத்துவோடும் கோக்குவோடும் கூடி யிருந்தனர். அவர்களிற் சிலர் மிகுந்த திறனும் நல்லொழுக்கமும் துணிவுமுடையாாய் இருக்க நேர்ந்தது. வரலாறு கண்ட பாராளு மன்றத் தலைவருள் வலிமைமிக்கவனன பிம் என்பவனும் இங்கிலாந் திலுள்ள சிறப்புடையரைக் கொண்ட அச்சபையில் மிகுந்த அன் பிற்குரியவனன அமிடன் என்பவனும் துருேட்டு, குருெம்வெல் ஆகியோசைப் போன்ற குணமுடைய உறுப்பினரின் ஆதரவுடன் அரசவதிகாரத்தைக் கைப்பற்றிப் பாலனஞ் செய்தற்குத் துணியா தவரல்லர். கண்டனத்துக்கு உரிய காலம் கடந்து விட்டது; மேலும், நியதிச் சட்டங்களுக்குச் சாள்சு கையொப்பமிடாதமை உறுதிப் படுத்தப்பட்டது. அதிகாரம் பெறுதற்கே போராட்டம் நடந்தது. ஆதலினுல் இவர்கள் கடந்த காலத்திலிருந்த சுதுவட்டருடைய ஒவ்வொரு பாராளுமன்றத்தின் வேலையையும் அழித்த அரசுப் பிற் போக்கிலிருந்து தம் செயலைக் காத்தற்குக் கலகக் கூட்டத்தினரின் பேரார்வத்தையும் போர்ப்படையையும் தூண்டுதற்குப் பின்னிட் ւգ-6ծն.
நீடித்த பாராளுமன்றத்தின் முதல் வைகலின்பொழுது பிம் என் பானும் அமிடன் என்பானும் திறமையிலும் குணத்திலும் நியதியி அலும் தம்மைப் போன்றவரான அயிட்டுடனும் பாக்கிலாந்துடனும் நட்புறவு செய்து தொழில் நடத்துவாராயினர். இக்கால பிரித்தானி யாவின் மலர்ச்சியில் எந்தச் சோடி நண்பர் ஈற்றில் மிகுந்த செல் வாக்குடைய சாயிருந்தனரென்று கூறுவது கடினமாகும். 1640 ஆம் ஆண்டில் சித்திராபோத்தின் வீழ்ச்சியை விளைத்தற்கும் உடு மன் றம், உயர் விசாரணைச் சபை, சிறப்புரிமை அதிகாரம் ஆகியவற்றை ஒழித்தற்கும் எதிர்கால மொட்டைத்தலையர் எங்ஙனம் தீர்மானித் திருந்தனரோ அதேபோல 1642 ஆம் ஆண்டில் ‘யாப்புக்கமைவான கவலியர் தாமும் முடிவு செய்துள்ளனர். உலோட்டுவை எல்லோ ரும் எதிர்த்தனர்; அவர், கீழ்ச்சபையாரின் ஒருளப்பாடான வாக் கின்படி அரச துரோகக் குற்றச்சாட்டின் பின்னர் இலண்டன் கோட்டையில் சிறையிடப்பட்டார். ஆனல், உறுப்பினர் சமயம் பற் றித் தங்களிடத்துள்ள மாறுபாடுகளை முன்னரே தெரிந்துள்ளனர். ஆகையினுல், அரசானது முதலிற் பாதுகாப்பான நிலையடையும் வரையும் திருச்சபை பற்றிய தீர்மானத்தை ஒத்திவைப்பதை அவர்கள் விரும்பினர்.
இக் கீழ்ச்சபையானது வைகலிலிருந்தபொழுது செய்த வேலை, அது நீடித்தவளவில், கற்பாறையிற் கட்டிய வீடுபோல மிகுந்த வுறுதியுடையதாகும். அது ஒருபோதும் அழிக்கப்பட்டிலது, ஏனெ
45
நவெம்பர்,
1640
ஒகத்து 64.

Page 32
46
வல்லாட்சியின் வீழ்ச்சி
னில், அது வாய்மையாளரும் மிதமான குரு பரிபாலனத்துக்குரிய ரும், மொட்டைத்தலையரோடும் யாப்போடமைந்த கவலியரோடுஞ் சேர்ந்து செய்த வேலையாகுமாதலினென்க. அது சித்திராபோத்தை யும், சிறப்புரிமை மன்றுகளையும் சேர் எட்டுவேட்டு கோக்கும் அவர் தம் 'ஆண்டுச் சட்ட நூல்களும், மாற்றமுடியாவகையில் வென் றமையைப் பதிவு செய்தது. உடு மன்றம், உயர் விசாரணைச் சபை, உவேல்சினதும் வட இங்கிலாந்தினதும் கழகங்களினம் சிறப்புரிமை அதிகாரம் ஆகியவையெல்லாம் நியதிச் சட்டத்தால் அழிக்கப்பட் டன. பாராளுமன்ற அனுமதியில்லாத கப்பல் வரி, மதுவரி, ஏற்று மதிச் சரக்கின் வரி ஆகியன சட்டவிரோதமானவை யென்று எவ் வித மறுப்புமின்றிக் கூறப்பட்டன. இவ்வாருக, முடியானது சித் திராபோத்துக் கூறியதுபோல வழமைச் சட்டத்தின் ' பாதுகாப் பில்' மீட்டும் வைக்கப்பட்டது; மேலும், அது பாராளுமன்றத்துக் குக் கீழ்ப்பட்டதெனக் கொள்ளாவிடினும் பாராளுமன்றத்தின் ஆத ாவை எதிர்பார்க்கவேண்டிய நிலையிலேயேயிருந்தது. முதல் வைகல் அரசாங்க அமைப்பிலே சரியான சமநிலையை ஆரம்பித்தது. அத னேயே பொது வழக்கறிஞணுகிய அயிட்டுவென்பான் 1660 ஆம் ஆண் டில் மீட்டும் அமைத்தான். முடிக்கும் பாராளுமன்றத்துக்கும் சரி யான சமநிலையிருக்கவேண்டுமென்பது அவன் நம்பிக்கையாகும். மறுபுறமாக, பிம் என்பான் முக்கியமான அதிகாரம் பாராளுமன் மத்தினதாக வேண்டுமென்றும் அன்றேல் குழப்பமே பரவுமென் அறும் நம்பினுன்.
முதல் வைகலின் மற்றவேலை யென்னவெனில், சித்திராபோத்தின் நீதி விசாரணையும் உரிமை பறிக்கும் தீர்ப்பும் மரணதண்டனையுமாகு மென்க. இத்தகைய துன்ப நிகழ்ச்சி மனித வரலாற்றில் வேறு எக் காலத்திலும் எந்நாட்டிலும் இடம்பெற்றிருப்பதரிது. துயர்தரும் இந்நிகழ்ச்சியில் பாக்கிலாந்தும் எதிர்காலக் கவலியருட் பலரும் அமிடனேடும் பிம்மோடும் ஐக்கியப் பட்டுச் செயலாற்றினர். அவர் கள், ஒருவன் தன் ஆண்மையினலும் ஒப்பிலாத் திறமையினலும் முடியின் வலிமையான அதிகாரத்தை மீட்டும் அமைக்கக்கூடு மானுல், அவன் இறக்க வேண்டியது இன்றியமையாததாகும் எனக் கொண்டனர். சித்திராபோத்தைக் காப்பாற்றுவதற்கும் பாராளு மன்றத்தைக் குலைப்பதற்கும் போர்ப்படையின் சதித்திட்டத்தில் ஏலவே அரசன் ஈடுபட்டிருந்தான். சித்திராபோத்து உயிரோடிருந் தால் பாராளுமன்றம் கூடியதும் சாள்சு அவனைச் சிறையினின்றும் நீக்கி மீட்டும் உத்தியோகத்தில் அமர்த்துவான் என முதலில் எதிர் பார்க்கலாம். எசட்சுவேள் அவ்வாறு காரணங்காட்டி வாதாடினன்; மேற்சபை உறுப்பினர் பலர் அவனைப் போலவே இருந்தனர்; நாட் டின் விழுமியோர்மேல் சித்திராபோத்து கொண்டுள்ள தனிப்பட்ட

இரண்டாம் வைகல் : இரு கட்சிகள்
தும் இறுமாப்புடையதுமான தலைமையை மீட்டற்கும் இவ்வுறுப் பினர் பயப்படமாட்டார்கள்; ஆனல் அவன் தொலைந்தால் எத் தொல்லையும் நீங்குமென்பது வேளின் முடிவாகும். இது நாலாண்டு களுக்குப் பின் உலோட்டைக் தூக்குமேடைக்கனுப்பியது போன்ற இழிவாகப் பழிவாங்கும் பூட்கையன்று. சித்திராபோத்தின் பகை வர் ஆவல் மிக்குடையாாயிருந்தனர்; ஏனெனில், அவன் உயிரோ டிருக்கும் வரை அவர்கள் ஆபத்திலிருந்தார்களாதலினலும் அவர் கள் போராடிப் பெற்றன யாவும் அவ்வாறே யிருந்தனவாதலினலும் என்க. அவர்கள் உயிரிழப்பு விதிகளுக்குச் சாள்சின் கையெழுத்தை வலிந்து பெற்றுக் கொள்ளக் கலகக் கூட்டத்தார் செய்யும் கொடு மைக்கு ஈற்றில் இடங் கொடுக்கத்தானும் அஞ்சினால்லர். அவ் விதியினல் அரசனுடைய பெரும் பணியாளர் மாண்டான்.
சித்திராபோத்துக்கு மாமுன உரிமையிழப்பு விதியோடு அரசன் இன்னுமொரு முறியை நிறைவேற்றினன். அது அப்போதிருந்த பாராளுமன்றத்தை அதன் அனுமதியின்றிக் குலைப்பதைத் தடை செய்தது. இவ்விரு நடவடிக்கைகளுள் முதலாவது சாள் சின் வாழ்க்கையில் பெரும் அவமானத்தை விளைத்ததாகும். மேலும், அவையிரண்டும் பாராளுமன்றத்தைப் பாதுகாப்பனவாகக் காணப் பட்டன. சமய வேற்றுமையில்லாதிருந்திருந்தால் அது அவ்வா றிருந்திருக்கும். அவ்வேற்றுமையினல் இரண்டாம் வைகலின் பொழுது இதுவரையும் உறுதியாயிருந்த யாப்போடமைவோர் பகை யான இரு கட்சிகளாகப் பிரிந்தனர். குருபரிபாலனத்தை ஒழித்தற் கான வேரோடு களையும் முறியையும் பெரும் கண்டனத்தையும் ஆதரிக்கும் பகுதியினரை பொதுமக்கட் சபையில் அாய்மையாளர் சிற்றளவான பெரும்பான்மையோரின் வாக்குகிகளால் வெற்றி கொண்டனர். பெருங் கண்டமானது, அரசனுடைய ஆயுரையாள ரைப் பாராளுமன்றம் நம்பக்கூடியதா யிருக்கவேண்டுமென்றும் திருச்சபையின் பாராளுமன்றப் புத்தமைப்பு இராத்திய-பிரெசு பித்தீரிய கூட்டத்துக்குரியதென்று கூறக்கூடியதான தத்துவங்களை யுடையதாக இருக்கவேண்டுமென்றுங் கோரிற்று. இச்சந்தர்ப்பத் கிலே சமய இணக்கம் உண்டாவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் அப்போது ஏற்பட்டுவிட்டதென்பதை இப்போது நாம் உணர்வது இலகுவான தாகும். மேலும், இரு கட்சிகளும் அமைக்கக்கூடிய கண்டிப்பான வைதிகம் எதையும் இங்கிலாந்து மீறிச் செல்லும் இயல்புடையதா யிற்று. அவப்பேருக அது அப்போது வெளிப்படையாய் இருந் திலது. மேலும், திருச்சபையின் எல்லைகட்குள்ளே தம் எதிரிகளைச் சேர்த்துக் கொள்வதற்கோ புறத்தே சமயப்பொறுமை காட்டு தற்கோ தூய்மையாளரோ, ஆங்கிலக் கிறித்துவரோ கடும் முயற்சி
47
மே 1841,
நவெம்பர்,
64,

Page 33
48
ஒற்ருேபர், 641.
சனவரி 4, 642
* ஐந்து உறுப்பினர் ”
யெதுவுஞ் செய்தில்ர். போக்கிலாந்தையும் அயிட்டுவையும் போல வழிபாட்டு நூலிற் பற்றுள்ளவராய மிதமான குருபரிபாலனத்துக் குரியார், அமிடனையும் பிம்மையும் முழுதும் எதிர்த்து நிற்பதை விடத் தம் சமயத்தைக் காப்பாற்றுவதற்கு வழி எதுவும் கண் டிலர்.
அரசாங்கத்தின் போர்ப்படையினை நடத்துதலைக் குறித்துப் பலருங் கொண்ட கருத்தினைச் சமயவாதம், முடிவு செய்ததுஇரண்டாங் கூட்டத்தின் மற்றப் பெரும் பிரச்சினை அதுவேயாகும். நகரங்களிலும் சிற்றூர்களிலுமுள்ள குடிமக்கள் படையினையும் அயலாந்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்குதற்கு உடனடியாகத் திரட்டவேண்டிய நிலையான படையினையும் அரசனு அன்றேல் பாராளுமன்றமா நடாத்துவது ? அயலாந்துக் கத்தோலிக்கர் தம் நிலங்களை மீட்டும் பெறுதற்கு எழுந்துள்ளார்; அலுசித்தரில் குடி யேறிய மக்களினதும் ஆங்கிலேயர் எல்லோரினதும் நலன் அபாய மான நிலையிலிருந்தது; மேலும், சில ஆயிரக்கணக்கான புரட் டெசுத்தாந்தர் இறந்துவிட்டனர். சட்டத்தின்படியும் வழக்கத்தின் படியும் போர்ப்படையினை நடாத்தும் உரிமை அரசனுடையதாகும். ஆனல், பாராளுமன்றத்திற்குப் படைமேல் அதிகாரமில்லாது சாள் சுக்கு அவ்வதிகாரமிருப்பின் தான் சமீபத்தில் அளித்த சலுகைகளை அவன் மேலும் எவ்வளவு காலத்துக்கு மதிப்பான்? பொதுமக்கட் சபையில் பிம், அமிடன், ஆசிறித்து, ஓலேசு, சுதுருேட்டு ஆகியோ ரைச் சிறை செய்வதாய யோசனையற்றதும் சட்டவிரோதமானது மான முயற்சியினல் அவன் அவ்வினவுக்குத் தானே விடையிறுத் தான். அந்த ஐந்து உறுப்பினரும் அபாய எச்சரிக்கை பெருதும்
இலண்டன் மாநகரத்துக்கும் அதன் படைத் தொகுதிக்குமுரிய
பாதுகாப்பான புகலிடத்துக்குப் பாராளுமன்றத்தின் படிக்கட்டி லிருந்து படகிற் கொண்டுபோகப்படாது மிருந்திருந்தால் அவர் களை வெளியே இழுத்தெறியச் சாள்சு தன்னேடு கொணர்ந்த அக் கொலைப்பாதகரால் அம்மன்றம் அன்று குருதியால் கறையாக்கப் டட்டிருக்கும்.
சாள்சு இலண்டன் மாநகரத்தையும் உவெசுத்துமினித்தரையும் தம் பகைவரின் ஆற்றலுக்கும் அதிகாரத்துக்கும் மைய இடமாக விட்டு வட இங்கிலாந்துக்குத் தப்பியோடி விட்டான். உள்நாட்டுப் போர் நிச்சயமானதொன்முயிற்று; மேலும், மக்கள் தாம் சேர விரும்பிய பக்கலை ஆயத் தொடங்கினர்; சிலர் மிகுந்த உற்சாகத் தோடும் பலர் பெருமூச்சோடும் தம் மனத்தையே அறியாதோராய் அவ்வாறு செய்வாராயினர். அதே சமயத்தில் பெரும்பான்மையோர் தம்மாற் கூடுமானல் நொதுமலராயிருக்க உறுதியான விருப்பத்தைக் காட்டினர்.

உள்நாட்டுப் போர்
வழிபாட்டு நூலில் விருப்பமுடையவர் பெரும்பாலும் நொது மலாாயிருந்தனர்; அன்றேல், அரசனுக்காகப் போர்புரிந்தனர். முன் கூறப்பட்ட ஐந்துறுப்பினரையும் கைதுசெய்வதில் அடைந்த தோல் விக்குப் பின்னர், சாள்சு சண்டை தொடங்குதற்கு முன் ஆறு மாதம் வரையும் ஊகமுள்ளவனும் யாப்புச் சட்டத்தை நன்கறிந்த வனுமான. வழக்கறிஞஞன அயிட்டுவிடம் தன் வழக்கை யொப் படைத்தான். அயிட்டு மிதமும் நியாயமுமுடைய கொள்கை யறிக்கைகளை வெளியிட்டான். இதுவும் போருக்குரிய முன்னேற் பாட்டில் பிம் காட்டிய அதிகாரமும் சிறிது காலத்திற்கு முன் அச சனுக்குப் பகைவராய் இருந்தவர்களுட் பலரை அவனுக்கு நண்ப ராக்கின. ஆனல், மற்றையோர் சாள்சின் சொல்லுக்கு மதிப்பில்லை யென்றும் வாள் எடுத்த மாத்திரத்தே அது போருக்கறிகுறியாகு மென்றும் ஊகித்தனர். இப்போரினல் சாள்சின் கட்சிக்குரிய அதி காரம் அயிட்டு, வழக்கறிஞராகியோரிடமிருந்து வாள்வீரருக்கும் வலிமையான அதிகாரமுடையோருக்கும், போக்கிலாந்து, மிதமான குருபரிபாலனத்தாராகியோரிடமிருந்து வழிபாட்டு நூலையும் உரோ மன் கத்தோலிக்க மதத்தையும் வழிபட்ட பத்தர்களுக்கும் செல்லு மென்றுணர்ந்தனர். போக்கிலாந்து அரசனுக்காகப் போரில் இறக்க விரும்பினுன் ; ஏனெனில், அவன் அரசனின் வெற்றியையோ, தோல்வியையோ கண்டு சகிக்க முடியாதிருந்தானதலினலென்க. மொட்டைத்தலையருள்ளும் தம் நோக்கத்தின் வெற்றியையிட்டு வருத்தப்படுதற்குப் பலர் இருந்தனர். மிதவாதிகள் போர்களைத் தொடங்குதற்கு விருப்பமற்றவராயிருக்கலாம் ; ஏனெனில், தீவிர வாதிகளே அவைகளையென்றும் முடிப்பவராவராதலினுலென்க.
ஆணுல் இத்தகைய நாட்டுப்பிளவு ஏற்படாமலும், பலப்பிரயோக மின்றியும் பாராளுமன்ற ஆதிக்கம் இங்கிலாந்தில் வேரூன்றுதல் முடியாத காரியமாயிற்மு ? ஏனெனில் இவை காரணமாக இருப தாண்டுகளுக்குள்-இடையே பெருமைதரும் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும்-இங்கிலாந்து மனிதப்பண்பில் தாழ்ந்ததும் சிறப்புக் குறைந்ததுமான ஒரு நாடாயிற்று. மேற்போந்த வினவுக்கு எவ்வித ஆழ்ந்த ஆராய்ச்சியோ, சிந்தனையோ விடையளிக்க முடி யாது. மக்கள், தம்மியல்பின்படியே நடப்பர்; அவ்வாறே நடந் தனர். பிற்காலத்தில், பிறர், முந்திய நிகழ்ச்சிகளின் உண்மையியல் பைச் செம்மையாய் உணர்ந்துகொள்வர் ; இவ்வறிவு, நிகழ்ச்சிகள் நிகழும் காலத்துப் பயன்படாது. மிகச்சிறந்த செயல்முறை யெது வாயினும் அது ஒரேவகையான முடிவை விளைத்திருக்க முடி
4-R 5931 (11162)
{49
சன.ஒக.
642.

Page 34
உள்நாட்டுப் போர்
யுமோ, முடியாதோ தெரியவில்லை. ஆயினும், பாராளுமன்றம் ஆங் கில யாப்பில் ஆதிக்கமுடைய ஒரு சத்தியாகவிருத்தற்கு வேண் டிய உரிமையை உண்மையில் போரினற்முன் பெற்றுள்ளதாகும்."
அத்தியாயம் II
உள்நாட்டுப் பெரும்போர், 1642-1646
அரசரின் படைகளுள் போதுமான குடிகாாரும், வீம்பரும், பாராளுமன்றத்தின் படைகளுள் போதுமான வேடதாரிகளும் மூட அபிமானிகளும், இருபாசறைகளிலும் கலப்படமற்ற சுயநலமிகளும் இருந்தனர். அவ்வாறிருந்தும், மொத்தத்தில் தன்னலமற்ற அரசபத் தியும் தம் பாதுகாப்பைச் சட்டை செய்யாத வீரமுமுடைய கவலி யரும், பொதுக் காரியத்தில் தளராத உற்சாகமும் கட்டுப்பாடு முடைய மொட்டைத்தலையருமாகியோர் பிரான்சியப் புரட்சிக்குரிய புறக்குடியேறுநராகிய விழுமியோருடனும் யக்கோபினருடனும் ஒப்பிடுகையில் மேலானவர்களாகக் காணப்பட்டனர். ஏனென்ருரல், ஆங்கில உள்நாட்டுப் போரானது வகுப்புப் பகைமையாலும் பேராசையாலுமுண்டான குழப்பத்திலுள்ள நெடுநாட்பட்ட சமூ கத்தின் வீழ்ச்சியன்றி, உறுதியான சமூக அமைப்பையும், வளம் மிக்க பொருளியல் நிலையையும் உடைத்தான ஒருநாட்டில் ஒவ் வொரு வகுப்பையும் பிரித்துள்ள அரசியலுக்கும் சமயத்துக்கு முரிய குறிக்கோள்களுக்கான போட்டியாகுமாதலால் என்க.
போரின் காரணங்கள் பொருளியல் பற்றியனவன்று; மறைமுக மாக மாத்திரம் சமூகம் பற்றியனவாகும். அவ்வாறிருந்தும், பழைய உயர்குடியினர் உறவு அரசரை ஆதரிக்கும் சார்புடைத்தாயிருந் தது ; அதே சமயத்தில், சீர்திருத்தத்துக்குப் பின் பொதுவாக மக்கள் மனப்பாங்கு பாராளுமன்றத்தை ஆதரிப்பதாயிருந்தது. புதியவுலகம் இலண்டனை மையமாகக் கொண்டிருந்தது ; அதேசம யத்தில் பழைய உலகமானது தலைநகரின் எல்லைக்கு மிகத் தூரத்தே யுள்ள வடக்கிலும் மேற்கிலும் வலிமை மிக்குடையதாய் இருந்தது.
போரைக் கையாளுவது பற்றிய இறுதி வாக்கெடுப்பில் பொதுமக்கட் சபையில் மொட்டைத்தலையரின் பெரும்பான்மை பெரும் எதிர்ப்புக் கிருந்ததிலும் பார்க்க மிகக் கூடியதாயிருந்தது. முப்பது பெருமகார் மாத்திரம் பாராளுமன்றத்தையும் எண்பது பேர் மாத்திரம் அரசனையும் ஆதரித்து நின்றபோதும், போரில் கீழ்ச்சபையினரில் 300 பேர் பாராளுமன்றத்துக்கும் 175 பேர் அரசனுக்கும் உதவி செய்தனரென்று பேராசிரியனுன பேது வென் பான் கணக்கிடுகின்றன். சிற்றூர்களுக்குரிய உறுப்பினரில் அதிக பெரும்பான் மையோர் அரசனுக்கு மாறய்ப் பாராளுமன்றத்துக்கு ஆதரவளித்தனர்.

நிலக்கிழாரும் வணிகரும்
ஒவ்வொரு கோட்டத்திலும் போர் தொடங்கியபோது, நிலக் கிழாரே இருபக்கங்களிலும் தலைவராய் விளங்கினர். விழுமியோருள் பெரும்பான்மையோர் அரசர்க்காகப் பொருதினர்; ஆனல், ஒரு கூட்டத்தினர் தாம் பிரபுக்கட்சபை அங்கத்தவரென்று உரிமை கொண்டாடிக்கொண்டு பிம்முடைய பாராளுமன்றத்தை நிறைவு பெறச் செய்தற்கு உவெசுத்துமினித்தரில் இன்னுமிருந்தனர். மேலும், எசெட்சு, மான்செத்தர் முதலிய இடங்களுக்குரிய வேள் களும், புறாக்குப் பிரபுவும் முன்னைய மொட்டைத்தலையர் சேனைக் குத் தலைமைதாங்கினர். அரச கட்சியின் மிகுந்த வலிமை, பழைய பாம்பரையைச் சேர்ந்த நாட்டுப்புறத்துக்குரிய பெருஞ் செல்வரில் தங்கியுள்ளது. அவர்களுக்கும் வணிக கூட்டத்தார்க்கும் எவ்வித தொடர்புமேயில்லை ; அதே சமயத்தில், பாராளுமன்றம் வர்த்தக உலகத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய பெருஞ் செல்வரின் ஆதரவை வழக்கமாகப் பெற்றது. அவர்களிற் சிலர் சமீபத்தில் நிலக்கிழார் வகுப்பையடைந்திருந்ததனல், பொதுமக்களுக்குரிய தம் பிறப்பிடத்தை நிந்திப்பாராயினர். நகரங்களும்-சிறப்பாகக் கடலோடு அல்லது வணிகத்தோடு முதன்மையாகத் தொடர்புடை யவை-பெருமளவிற்கு மொட்டைத்தலைக் கட்சியைச் சேர்ந்துள் ளன. பெருந்தொகையான கோவில் நகரங்களும், சில அங்காடி நகரங் களும் கவலியர்க் கட்சியைச் சேர்ந்துள்ளன. வாரக் குடிகளான உழவர் தமது நிலக்கிழாரைப் பின்பற்றி அவர்தம் கட்சியைச் சேர்ந் தனர். உழவுத்தொழிலுக்குரிய கூலியாளரும், தொழிலாளிகளும் செயல் முறையிலுள்ள எக்காரியத்திலும் தனித்து நின்றனர். ஆயினும், அவர்கள் நெருக்கப்பட்டுக் கூலிக்குக் கவர்த்தடிகளை இழுத் துச் செல்லவோ, ஏழ்மையான காலாட்படையில் கைத்துப்பாக்கி களைத் தூக்கிச் செல்லவோ வேண்டியிருந்தால், அவ்வாறே செய்த னர். இரு கட்சிகளின் அணிவகுப்பிலும் முக்கியமாய்க் குருெம் வெலின் கிழக்கு ஐங்கிலியக் குதிரைப்படைவகுப்பில், மிகச் சிறந்ததும் உற்சாகமிக்குடையதுமான படையினைக் கட்டுப்பாடற்ற வேளாளர் அளித்தனர்.
தூய்மையாளர்க்குரிய ஆடை நெய்யும் மாவட்டங்களேயும் துறை முகங்களையும் விட, வடக்கும் மேற்கும் அரசனது சார்பில் மிகுந்த உறுதிப்பாட்டோடிருந்தன. உவெசிலியின் காலத்துக்கு முன்னர் 'கெலித்தியக் கரையோரம் தாய்மையாளரின் குறிக்கோள்களினல் பாதிக்கப்பட்டிலது. ஆகவே, சாள்சு கோண்வாலிலுள்ள அரசபத்தி யுடைய தொண்டர்களைக்கொண்டு தன் சிறப்புமிக்க காலாட்படை யினை அமைத்தனன். மேலும், தன் மற்றைய காலாட்படை வகுப்புக் கள் பலவற்றிலும் உவேல்சு மலைகளில் வதியும் பலமுள்ள வறியோ
ரைப் பெருந்தொகையாகச் சேர்ந்து நிரப்பினன். உள்நாட்டு '
5.

Page 35
每笼
அரசனுக்கு ஆதரவு
மாகாணங்களில் இலண்டனுக்குரிய படைப்பலம், கேம்பிரிட்சை நடுவிடமாகக் கொண்ட கீழ்த்திசைச் சங்கத்தில் ஒலிவர் குருெம் வெல் செய்த முயற்சி ஆகிய காரணங்களினல் தெற்கும் கிழக் கும் பாராளுமன்றத்திற்காதாவாக அசையாது உறுதியாய் நின் றன. ஆனல், நாட்டின் ஒவ்வொரு கோட்டத்திலும் நகரிலும் இரு கட்சிகள் இருந்தன; இக்கட்சிகளுக்கிடையே மத்திய போர்க் காரியங்களோடு எவ்வித தொடர்புமில்லாத உள்ளூர்ச்சண்டை களும் பல நடந்தன. பெரும்பாலும் ஊக்கமுள்ள தனிப்பட்ட ஒருவனே தனது மாவட்டம் எப்பக்கம் சேர்வது என்பதை நிர்ண யித்தான் ; ஏனெனில், நொதுமலர் பலசாத்லினுலும், இனிமேல் அவ்வாருகக் கூடியவர் இன்னும் பலராவர் ஆதலினலுமென்க. அவர்கள் செல்வாக்கில் மாகாண உடன் படிக்கைகள் ' குறிப்பிட்ட வோரிடத்திலிருந்து போரினைச் சில வேளைகளில் விலக்குதற்கு நிறைவேற்றப்பட்டன. ஆனல், அமைதியின் நொய்மையான இத் தடைகளை வளர்ந்துவரும் பெருக்கு வாரிக் கொண்டு போயிற்று.
உரோமன் கத்தோலிக்கர் அனைவரும் அரசரையும், இன்னும் முக்கியமாய்த் தம் கட்சியின் உண்மையான தலைவியான அரசியை யும் சார்ந்து நின்றனர். அவர்கள் வடமாகாணங்களிலும் இலங்கா சயரிலும் வலிமை பெற்றிருந்தனர். அங்கு நிலமானியக் கத்தோ விக்கத்துக்கும், ஆடை தெய்யும் மாவட்டங்களிலுள்ள ஆாய்மை யாளருக்குமிடையில், அவ்வவ்வூரில் நடந்த உள்நாட்டுப்போர் வன் மம் மிக்கதாயமைந்தது. முதற் சாள்சின் தனிப்பட்ட ஆட்சியில் தண்டனைச் சட்டங்களில் நியமித்துள்ள குற்றப்பணம் நிறுத்தி வைக்கப்பட்டதால், பழைய கத்தோலிக்கப் பெருமக்களும் விழுமி யோரும் திரட்டி வைத்த தம் செல்வத்தைக் குறைந்து போயிருந்த அவனுடைய போர் நிதிக்குத் தயங்காது தரக் கூடியவராய் இருந்தனர். உவோசெத்தர் வேள் ஆண்டொன்றுக்கு 24,000 பவுண் வாடகை வரியாகப் பெற்று அனுபவித்துக்கொண்டு, ஓர் அரசருக்கேற்ற தம் வள்ளன்மையினுல் 1642 ஆம் ஆண்டில் அரசனைப் பணமின்மையால் வீழ்ச்சியடையாது பாதுகாத்தான். அவனின் இசாக்கலன் கோட்டையும் உவின்செசித்தர் மாக்கிசுவின் வேசிங்கு மனையும் போரில் உரோமன் கத்தோலிக்கத்துக்கும் அரசுக்குமுரிய அரண்களாய் அமைந்தன. நீண்டகால தாமதத்திற் குப் பின்னர் ஏற்பட்ட அவற்றின் வீழ்ச்சி பலவிடங்களிற் கொண்டாடப்பட்டது. உரோமன் கத்தோலிக்கத் தொகுதி சமூ கத்தின் வேறெந்தப் பகுதியிலும் கூடிய அபாயமானதும் நிலை யானதுமான துன்பத்தை வருங்காலக் கலகத்தில் அனுபவிக்க
விருந்தது.

பாராளுமன்றம் வரி விதிக்கிறது
அரசன் பணமில்லாமையால் ஈற்றில் போரில் தோல்வியுற்முன். அவன் ஆணையை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்தின் பகுதிகள் அவனே எதிர்த்து நின்றவரினும் சராசரியாகக் குறைந்த செல்வமுடையன
வாகும். அவலுடைய தலைமை நிலையம் ஒக்சுபோட்டிலிருந்தது.
அது செல்வத்திலும் கல்விக்கே கூடிய புகழ்பெற்ற ஒரு சிறிய நகர மாகும். அன்றியும், அது அரசனின் பகைவரின் உரிமையிலிருந்த இலண்டனுக்கு ஈடாகாது. கிராமியப் பெருமக்கள் தம்முயிரையும், வாள், குதிரை, வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றையும் அரசனு க்குக் கொடுத்தனர்; அவர்கள் தம் நிலம் பறிமுதல் செய்யப்பட்ட பொருளென மொட்டைத்தலை வரிசைகளுக்குள் ஏலத்தில் விடப் படும் வரை அதனை இலகுவாக அடையமுடியாதிருந்தனர். மேலும், சாள்சு இலவசமாகப் பல பொருள்களைப் பெற்றனனெனின் பாராளு மன்றமும் அவ்வாறே பெற்றது. ஏனெனில் தூய்மையாளரான பெருஞ்செல்வரும் கடைக்காரரும் பெருந்தொகையான வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருந்தனர்; மேலும்,
பாத்திரம் பல மாற்றியே ஈட்டியும் வாளும் நன்கீந்தனர்.
பாராளுமன்றம், அரசனுக்குச் சற்றுங் குறைவின்றி, கனவான்களை அமிடனின் ‘பச்சைச்சட்டைப் படையினைப்போன்ற தனிப்பட்ட சேனைப்பகுதிகளைத் திரட்டுமாறு அழைப்பதாயிற்று. தனிப்பட்ட வள்ளன்மையை நாடிச் செய்த வேண்டுகோளில் இருகட்சியினரும் சமமான நிலையிலிருந்தனர்; இந்நிலையிற்முன் போர் தொடங்கிற்று. ஆனல், மொட்டைத்தலையர் நீடித்துப் போரிடும் ஆற்றல் மிக்குடைய சாவர்; ஏனெனில், அரசர் செய்யமுடியாததொன்றை அவர்கள்
செய்யவல்லவராதலினலென்க. அதாவது, அவர்கள் இலண்டன்
மாநகரில் கடன்வாங்கவும், இங்கிலாந்தின் வணிகத்துக்கும் செல்வ மிக்க மாவட்டங்களுக்கும் முறையான வரி விதிக்கவும் கூடிய வாாஞர். உள்நாட்டுப் போருக்குப் பணம் பெறும்பொருட்டு நீடித்த பாராளுமன்றம் வணிகப் பொருள்களுக்கு உண்ணுட்டுத் தீர்வையும், நிலபுலன்களுக்குரிய வரிகளுக்குத் திருந்திய மதிப்பீடும் ஏற்படுத் திற்று. அவை பழைய உதவிக் கொடைக்குரிய கவனயீனமான மதிப்பீட்டை விடப் பொதுமக்களுக்குச் சாதாரணமானவையும், தனிப்பட்டோர்க்கு அதிகம் அநீதியிழையாதனவாயு மிருந்தன. நீடித்த பாராளுமன்றத்தின் கட்டளைச்சட்டங்களில் எமது இக் காலத்து வாரியத்துக்குரிய முறையின் வித்தினைக் காண்கின்ருேம். இலிசபெத்துக்கு விருப்பமின்றிக் கொடுக்கப்பட்டதும், சேமிசுவுக் கும் சாள்சுக்கும் கொடுக்க மறுக்கப்பட்டதுமான இங்கிலாந்தின் வருவாயைப் பாராளுமன்றம் தன் சார்பாக நடந்த போரில் தன்ன
லத்திற்கு முதன் முதலாகப் பயன்படுத்திக்கொண்டது.
53.

Page 36
54
கவலியர் திறன்
அரசனின் பகைவர் கடலினைத் தமக்குரிமையாக்கிக் கொண் டனர். அரச கடற்படை பிம் அரசனின் பக்கத்தைச் சேர்ந்து கொண்டது. துறைமுகங்கள் வணிகக் கடற்படையினைப் பாராளு மன்றத்துக்கு இனமாகக் கொடுத்தன. புரட்சிக்காரரின் செல்வத் தைப் பெருக்குதற்காக இங்கிலாந்தின் கடல் கடந்த வணிகஞ் செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சாள்சு பிறநாட்டிலிருந்து போர்க்கருவிகளை இறக்குமதி செய்வது கூடக் கடினமாயிருந்தது. பாராளுமன்றம் வகுவித்த உண்ணுட்டுத் தீர்வை காரணமாகப் பொருள்களுக்கு ஏற்றமான விலை கொடுபட்டு வந்தது. அதனை மலை நாட்டுக் கவலியர் மொட்டைத்தலைக் கட்சிக்குரிய தொழிற்சாலை களிலும், துறைமுகங்களிலும் வரி விதிக்கப்பட்ட பொருள்களி லிருந்து பெற வேண்டியவரானர்.
பாராளுமன்றம் பணவிடயத்தில் தனக்கிருந்த இந்நல்வாய்ப்புக் களைப் போரிற் பயன்படுத்தக் கூடியதாய் இருந்திருந்தால், போர் நீடித்த காலத்துக்கு நடைபெற்றிருந்திராது. அன்றியும், அப் போரில் பிம், அமிடன், எசுட்சுவாகியோரின் கீழ் தொடக்கத்தி லிருந்துள்ள பாராளுமன்றக் கட்சி, ஏற்பாடு செய்துள்ள கொத்து லாந்தரின் கீழ் இங்கிலாந்தின் சமயவாதிகளின் தொல்லையோடு கூடிய உதவியைப் பெறவேண்டிய தேவை யெதுவுமின்றி வெற்றி கொண்டுமிருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இங்கிலாந்தின் வரலாறு முழுதும் வேறுவிதமாக மாறியிருக்கும். ஆனல், அவ்வாறு செல்ல நேர்ந்திலது. கவலியர் அனுகூலஞ் சிறிதுமின்றித் தொடங்கி யும், விரைவில் தம் நிலைமையைத் திருத்திக்கொண்டனர். 1643 ஆம் ஆண்டின் இறுதிவரையில் வடமேற்கினை யடிப்படுத்திக்கொண்டு அம்பாாற்றுக்கு வடபாலுள்ள தம் நிலையினைத் திடமாக்கிக் கொண்டனர்.
தொடக்கத்திலே அரசரின் தளபதிகள் வெற்றிகளைப் பெற்றனர்; ஏனெனில், மிக விரைவில் சிறந்த போர் வீரராகக்கூடிய மனிதர் அவர்களிடையேயிருந்தனராதலினலென்க. இராணுவத்தைச் சிறி துஞ் சேராத அச்சமுதாயத்தில் எக்கட்சிக்கும் பயிற்றப்பட்ட படை எதுவும் இல்லை; ஏனெனில் அங்கிருந்து குடிமக்கள் படை யினைப் பொருட்படுத்தாதவராதலினலென்க. ஆனல், நன்கு சவாரி செய்ய வல்ல பெருஞ் செல்வரையும், அவர்தம் வேட்டைக்காரரை யும், குதிரைப் பாகரையும் பலமானவோர் குதிரைப் படையாகப் பயிற்றுவதற்கே ஒரு போர்வீரன் மாத்திரம் தேவைப்பட்டான். அதிட்டவசமாக இத்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவொருவன் அங்கிருந்தனன். அரசரின் மருகஞன உரூபேட்டு எனும் இரு பத்திரண்டு வயதினனை இளைஞன் சேர்மனியிற் போர் நடவடிக்
கையை உள்ளபடி கண்டவன். அவனதுற்சாகம் தீபோற் கனன்றது.

உரூபேட்டு : குதிரைப்படை
அவன் பாராளுமன்றக் கட்சியில் எவரும் எதிர்க்க முடியாத குதி ாைப் படையொன்றினைத் தன் மாமனுக்காக உருவாக்கி அதனுல் 1642 ஆம் ஆண்டில் அவனை இடுக்கண் மிகுந்த சங்கடத்தினின்று
காப்பாற்றினன்.
உரூபேட்டு, தன் கூட்டாளிகளான தளபதிகளோடு கொண்ட பல பிணக்குகள்ல் முதலாவதொன்றில், அரச கட்சியினரின் குதிரைப் படை எசட்சில் ஒல்லாந்தரின் பழைய வழக்கப்படி ஆறு நிரை யில் மிக ஆறுதலாக ஊர்ந்து சென்று சற்றே நின்று அதன்பின், கைத்துப்பாக்கிகளாற் சுடுவதற்குப் பதிலாக, சுவீடின் நாட்டார் வழக்கப்படி மூன்று நிரையில் அணிவகுத்து நின்று, கவசமணிந்த வீரரோடு சேர்ந்து, நெருங்கித் தாக்கிப் போர் செய்யவேண்டு மென்று உறுதியாக வாதாடினன். சுவீடின் நாட்டினரின் ஊக்க மிக்க இக்காலத்திற்குரிய போர்த் தந்திரம் இரு பக்கச் சேனைகளா லும், சிறப்பாய்க் குருேம்வெலின் இரும்புப் படையினராலும், கைக் கொள்ளப்பட்டது.
காலாட்படை, எப்படியாயினும், ஆறு நிரையில் அணிவகுத்துத் தொகுதியாய் நின்று இடைவிடாது பொருதிற்று. சிற்சில வேளை களில் ஓரிடத்தைத் தாக்குதற்காக அது மூன்று நிரையாக்கப் பட்டது. ஈட்டிவீரர் நடுவிலும், துப்பாக்கி வீரர் படையின் இரு மருங்கிலும் நின்றனர். குறி தவருது சுடுபவர், சுட்டுவிட்டுத் தங்கள்
துப்பாக்கிகளைத் திருப்பிக் கொண்டு எதிரிகளை நெருங்கினர்; அந்
நேரத்திற்ருனே வலிமை மிக்க போர் வீரரும், அதிகாரிகளும் பகைவரைத் துப்பாக்கிகளின் பின்புறத்தாற் முக்கினர். ஆனல், மிக நெருக்கமாக நின்று செய்யும் சண்டையில், முடிவு ஈட்டிவீர ரின் தாக்குதலைப் பொறுத்தது. கரடுமுரடான அல்லது அடைப் புள்ள நிலத்தில் துப்பாக்கிவீரர் ஈட்டிவீரரிலும், காலாட்படை வீரர் குதிரைப்படைவீரரிலும், உண்மையில், அதிக பயனுடைய வராவர். ஆனல், துப்பாக்கிமுனை ஈட்டி இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லையாதலால் புறத்திலே வந்து குதிரைப்படையினுற்முக்குவ தால் துப்பாக்கி வீரர்களுக்குச் சேதத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தது. சேனையானது முன்புறத்தில் வேறு காலாட் படையோடு போர் செய்யவும், ஈட்டிவீரரது பாதுகாப்பில் துப்பாக்கி வீரர் தமது துப்பாக்கிகளைக் கெட்டிக்கவும் அவகாச மில்லாமற்போக நேர்ந்தால் இத்தகைய குதிரைப்படைத் தாக்கு தல் அச்சேனை முழுவதையுமே அழித்தலும் சாத்தியமாகலாம். இலாஞ்சிடவுனுக்கு அல்லது நியூபெரிக்கு நிகரான சில போர்க் களங்களிலும், பிறகித்தனில் அல்லது உலோசித்தரில் நடந்த பிந்திய போர்களிலும், முள்வேலிகள் அல்லது காட்டு நிலம்,
55
ஒற்ருேபர், 1642。

Page 37
56
குதிரைப்படையினர் வலிமை
காலாட்படையின் முயற்சிகளுக்குக் காப்பும் வாய்ப்பும் அளி, தது; ஆனல், வட கிழக்கு நாடுகளுக்கும் மத்திய நாடுகளுக்கு முரிய அக்காலத்து இயற்கையமைப்பிற் பெரும்பகுதி திறந்த
வெளியான காம்புநிலமாகவோ, அடைப்பற்ற வயல்களாகவோ
普
ஆபத்தான சேவைக்கு gdunika sågå
|- ser a
is E. :-:- ==== ...........ürml -- 售 等 huu um j j j * į jį į ši į jį į
اسسسسس سنوي ===
、مصص
ロ \ துப்பாக்கி வீரரால் = &ffari Gagdມແບໍ່ແ6) 4 A. が
பொதிவண்டி e -ሪ
سم“ ہے۔ جsحS
படம் 1-அணிவகுத்த படை உள்நாட்டுப் பெரும்போர்.
இருந்தது, மாசுதன் மூவரிலும், நேசுபிக்குரிய மேடுபள்ளமுள்ள நிலங்களிலும் காலாட் படைவீரர் குதிரைப்படைவீரரின் தாக்கு தலுக்குப் பாதுகாப்பின்றி விடப்பட்டனர். ஆணுல், பண்டைக் காலத்தில் அவ்விடங்களைத் தடைப்படுத்திய காட்டுநிலங்களிலோ இன்று வரிசையாய் அமைந்து அவற்றிற்குக் குறுக்காகச் செல்லும் முள்வேலிகளுக்கு நடுவிலோ, அவர்கள் அத்தகைய ஆபத்திற்
குள்ளாகியிருக்கமாட்டார்கள்.
இக்காரணங்களினிமித்தம் போரின் முடிவை நிச்சயிக்கும் சண் டைகளிற் குதிரைப்படைவீரரே வென்றனர். 1642-43 ஆம் ஆண்டு வரை உரூபேட்டுவைப் போலவும், 1644-45 ஆம் ஆண்டு வரை குருெம்வெலைப் போலவும் மிகச் சிறந்த குதிரைப்படையினை நடத்

இலண்டன் தாக்குதல் : பிழைத்த திட்டம்
திய ஒருவன், குருெம்வெலைப்போல, போரின் போக்கு முழுவதையும் ஒரு தளபதியைப்போன்று மதிப்பிடக்கூடியவனுயிருந்தால் அவன் தன் கட்சியை இங்கிலாந்துக்குத் தலைமையுடையதாக்குவன்."
1643 ஆம் ஆண்டில் அரச கட்சியினர் பொதுவில் மிகச் சிறந்த குதிரைப்படையினைப் பெற்றிருந்தனர் எனலாம். அது மாத்திர மன்றி ஒப்பிற்றணின் கீழ் வியத்தகு வினைத்திறனையுடையரான கோண்வால் மக்களைக் கொண்ட இணையற்ற ஒரேயொரு காலாட் படையினையுங் கொண்டிருந்தனர். இவ்வாருண நல்வாய்ப்புக்க ளிருந்தமையால் அவர்கள் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதி முழுவதையும் பாழாக்கினர். மேலும், தனிப்பட்டோரால் அல்லது உள்ளூரில் திரட்டப்பட்டனவும், அப்போது மொட்டைத்தலைக் கட்சியின் பிரதிநிதியாகவிருந்தனவுமான பயிற்சியற்ற சிறிய படைகளை ஒன்றன்பின்னென்முக அழித்தனர்."
பாராளுமன்றத் தளபதிகள் இலக்கொன்றுமின்றி அலைந்து திரிந் தனர்; அப்போது ஒவ்வொருவராகத் துணிக்கப்பட்டனர். கவலியர் தலைவர், யோக்குசயர், தேமிசுப் பள்ளத்தாக்கு, தென்மேற்குப் பகு தியாகிய விடங்களிலிருந்து ஒரேமுறையில் மூன்று பகுதிகளாகச் சென்று இலண்டன் மாநகரைத் தாக்குவதன் மூலம் போரினை யொழித்தற்குத் தந்திரமான பெரிய திட்டமொன்றினை எண்ணத் தொடங்கினர். ஒப்பிற்றன் தென்மேற்கிலிருந்து இலண்டன்மேற் சென்றமை கெந்துவில் அடக்கப்பட்டுக் கிடந்த அரசகட்சியினர் கெந்துக்குச் செல்லுதற்குரிய வழியைத் திறந்து விடுவதற்கே யாகும். அத்திட்டம் நம்பிக்கையுள்ளதொன்முகும். ஆனல், அது அரசபடைகளின் ஒழுங்கற்றதும் அவ்வவ்வூருக்குரியதுமான நடத்
தையினல் தோல்வியடைந்தது: கோண்வாலுக்கும் தெவனுக்கு முரிய மக்கள் முறையாகச் சம்பளம் பெற்றிலர்; அன்றியும், அவர்
போர்க்களத்தில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன; ஆனல், 1645 ஆம் ஆண்டில் இலாங்குபோட்டில் நடந்த புதுமையான சண்டையை விட முக்கிய மான வேறெச் சண்டையிலும் அவை முக்கிய பங்கெடுக்கவில்லை. ஆயினும், அரச ரின் படைகள் களத்தில் ஒருமுறை குலைந்ததும்,பாராளுமன்ற வரியின் விளைவாய புதுமாதிரிப் படையின் முற்றுகையிடும் பரிவாரம், அவரின் காவற் படையினைக் கொண்ட நகரங்களையும், கோட்டைகளையும், பண்ணை வீடுகளையும் விரைவில் அழித்துப் போரினையும் முடித்துவிட்டது.
2. கவலியர் படைப்பகுதிகள் முதலில் மிகச் சிறந்த தளபதிகளின் கீழ் அமைந்திருந்தபோதும், மொட்டைத்தலைப் படையினளவுக்கு அவையும் தனிப்பட்டோரால் திரட்டப்பட்டனவே. அரச கட்சியினரினரான நாடகா சிரியரொருவர் கூறுவது வருமாறு : “ நேர்மையுள்ளவஞன நாட்டுப் பெரு மகன் தன் செலவிற் சேனையைத் திரட்டுகின்றன் ; பின் பள்ளநாட்டு உபசேனதிபதியொருவரைத் தன் சேனையை நடாத்துதற்குப் பெறுகிருன். அதன் பின்னர், தன் மகனைப் பாடசாலையிலிருந்து குதிரைப்படைக் கொடித் தலைவனுக அனுப்புகிறன்."
57

Page 38
مثل الشعا * قة قي 3.
ஒலிவர் குறுெம்வெஸ்
கள் நீடித்த சேவைக்குரிய நியமமான படைவீரருமல்லர். ஆஞல், அவர்கள் தாமாகவே விரும்பிப் போர்த்தொழில் மேற்கொண்டன ாாயினும் தம் பேஃக்தவத்திலும் விட்டிலுமிருந்து வரையறனர்? காலம்வரை வெளியேயிருக்க மனமில்லாதவராயிருந்தனர். அவர்கள் அவ்வாறிருக்கற்குக் கொண்ட வெறுப்பு இன்னும் அதிகமாகும் : ஏனெனில், பிளிமது இன்னமும் பாராளுமன்றத்தின் கடற்படை யின் வசம் இருந்ததால், தம்மாகாணம் பின்புறத்திலிருந்து எப் போதும் தாக்கப்படலாம் எனும் அச்சம் அவர்களுக்கிருந்தது. பிறித்தல், உண்மையில் பிடிபட்டது; ஆனூல், தூய்மையாளரின் நெசவுத்தொழில்களுக்குரிய இடங்களான குளசித்தரும் கோண்ட ணும் இன்னும் எதிர்த்து நின்றன. இலண்டனேக் காக்குகிற்கு முன், இவ்விடங்களே முகவின் ஒடுக்கவேண்டுமென்பது தெளிவாயிற்று எனவே குனசிக்கனா நெருங்கி முற்றுகையிட்டனர்; ஆஜல் இலண்டனில் தொழில்பழகும் படைக் தொகுதியினர் இங்கிலாந்தி ஒாடே அணிவகுத்துச் சென்று அதற்கு உதவியளித்தனர். அவர் தம் த&வர் மேற்கில் 'நல்ல பழைய நோக்கத்துக்குரிய கோட்டை காப்பாற்றப்படும்போது, இரு மாதங்களுக்கு வேல் மந்தகதியில் நடக்கவேண்டுமென்று விரும்பினர்.
கிரமான சம்பளமும் பயிற்சியுமுடையதும், நீடித்த சேவைக் குரியதுமான படையொன்ஜினே முதலில் எந்தக் கட்சி உருவாக் குமோ அது இவ்வாறுன நிபந்தனேயோடு செய்யப்படும் போரில் வெல்லுமென்பது தெணிவானதொன்குகும். இதைச் செய்தற்கு அரசர்க்குப் பணமில்ஃ. பார் ளுமன்றத்துக்கோ சாமர்க்கிய முண்டானுல் எவ்வளவு பணமும் திரட்டுதற்கு வாய்ப்புக்களிருந்
தன.
அதே வேளேயில், வடபாலில் யோக்குசயரிலிருந்து இலண்டனே நோக்கிச் சென்ற படை, தென்மேற்கிலுள்ள பிளிர்துவை யொக் ஆரன்ன ஆல் துறைமுகத்தின் எதிர்ப்பினுல் ஓரளவிற்குத் தடுக்கப் பட்டது; அவ்வாறே, கீழ்த்திசைச் சங்கத்தின் சிற்றுWர்களிலும், மொட்டைத் தலைக் கட்சியினரின் நாட்டுக்கும் படைக்குமுரிய அமைப்பின் அளவுகடந்த உறுதிப்பாட்டினுலுத் தடுக்கப்பட்ட தாகும். அக்ர்ேக் திசைச் சங்கத்திற்ருன் ஆய்மையானர் மிக வலிமைபெற்று விளங்கினர் அன்றியும், அங்கேயே அவர்கள் தம் மிகச்சிறந்த தஃவரையும் பெற்றுன்னனர்.
ஒலிவர் குருெம்வெல் வைதிக இனத்தைச் சேர்த்த ෆිෆි. பெருஞ் செல்வனுவன். அவன் தன் கமத்தைத் தானே செய்து வந்தான். மேலும் நாட்டு நகரப் பகுதிகளில் வாழ்ந்த மத்திய, கீழ்வகுப்பு மக்களோடு வியாபார உள்ளூர் அரசியல் விவகாரங்கணேப் பொறுத்த
 

(ዶ
قابت ته يوه
"یوه به قدرتش * قائم సోడ్ల
ஆாப்பு
LT
ീ*(
توغتيايا
ކްހް:
)྾4༦༦ زیرسانی
: ಆಕ್
1643-44 குனிர்காலத்தில் Pili
LEW Tarrtir
20 a 顿在 ցը լմն է:
*"Run" u BELLI u Taut Lim i - - பாராளுமrத்தின் Fallig LILL- பiயடிங் &
நீங்ாந்தின் சுவியாபாகேபிசி"
நதி ஓரளவிற்கே சாபாாாயாரும் எல்மேப்புரும்ாங்ட்டிகளி
பருந்நீக்காடிடிா அப்தரிபூரும் நகர்வுத் தா"ே
போட்ாபர், தீர்க் கண்வர் ஆங் ட்ங்களும் மீத
༄༽
ஆாாருங். இ",""ேே'பூழ் நா.
தாங்ாக்க ாபோக்க ಕಿನ್ತಿ।
..." „H LIT Ehud "(Laiklik
ாண்டதாயிருந்தது.  ே ==
ஆதிதநர்சயரும் ! Gari Pih اتيايايا s يعي يتميز 'இரடியவரும் சேர்ந் i
32 3. میلادلهٔ Pri Irmi iii ii ki fro! மீரேந்துள் ர்நீர்நீர்
gETEETا
இங்கிலாந்தும் உல்ேல்சும்
ދީދީ ,品 Pr ”گمحمد =.
劾 须 盜 އަޔޯޖޯޑޯ 5ی۔ ^ M 중 Ž 後 黎 بینک t 4. "| ،۱عه 鲨数茨 %2* s
கடிே 缀 劾 ஜி سمي "శొ R =### 。彭徐影後劾
"... g |- நக் స్టో 3.
நர்சிபுரி تفتخرت .፪ நியூ PuFi و تيكن"؟ = تقی "
தி நாம் %
*
ዜb፻፺l
Aku కి
ஆண்ா ஒரு 11
°
لاis n" Eur بهبود و بیسی
LILI.
T

Page 39

இரும்புப் படையினர்
வரையில் நெருங்கிய தொடர்பு பூண்டவனுயிருந்தான். பள்ளத் தாக்கான சதுப்பு நிலத்தை வெள்ளத்திலிருந்து மீட்பது பற்றிய விடயத்தில், உழவரதும் பாதவாதும் பொதுவுரிமைகளை அவனு தரித்து வந்தான். அதனல், நீடித்த பாராளுமன்றம் எப்போதாயி ணும் கூடுதற்கு முன்னர், அவன் நாட்டுமக்களின் முதலான அன் பினைப் பெற்றுள்ளான். அவன் எச்சுகிலில் போர் செய்தான் ; அங்கு, தம்முறவினனன அமிடனுக்குக் கூறியது போல, கவவி யரின் துணிகரமான குதிரைப்படைகளை எதிர்த்து நின்ற உணவு, மதுவகைகள் ஆகியவற்றைப் பரிமாறும் பழைய தளர்ச்சியுற்ற மக்களிலும் அப்படைகள் உயர்ந்தனவாயிருந்ததைக் கவனித்துக் கொண்டான். கிழக்கு அங்கிலியாவுக்குத் திரும்பியதும், அவன் தானறிந்துள்ளவரும், தன்னையறிந்துள்ளவருமான வேளாளர், வரி யில்லா நிலத்தையுடைய வகுப்பினர் ஆகியோரிடையேயிருந்து கவசமணிந்த வீரரைக் கொண்ட சிறந்த குதிரைப்படை யொன் றைத் திரட்ட முயற்சி செய்தான். மேலும், கண்டிப்பான படைப் பயிற்சியை அவர்கள்தம் சமய ஆர்வத்தோடு சேர்த்துக் கொள்ளப் பழக்கினன். அவர்கள் பொதுவான போர் வீரரிலும் பார்க்க விளங்குமாற்றல் உடையராவர். பணம் சம்பாதித்தலை விட்டு, பொது மக்களுக்குரிய மகிழ்ச்சியெதுவோ, அதே தம்பேறெனக் கொண்ட னர். முதலிலிருந்து அவர்கள் சமூகமும் அரசும் பற்றிய பிரச்சினை களில் குடியரசுக்குரிய சீரிய மனுேநிலையுடையரென்றும், துய்மை யாளர் மத நம்பிக்கைவகைகளில் வைதிகமில்லாதவரென்றும், மதிக்கப்பட்டனர். இவ்வேளையில் குருெம்வெல் எழுதியது வரு
tfitti .
நீங்கள் ஒரு கனவான்' என்று அழைப்பதைவிட, Aவேறென்றுமில்லாத ஒருவனிலும் பார்க்க, தான் எதற்காகப் போர் செய்கின்றனென்று அறிய வனும், தான் அறிந்ததை விரும்புகின்றவனுமான எளிமையான ஆடைய ணிந்த கபடமற்ற படைத்தலைவணுெருவனைப் பெற நான் விரும்புகிறேன். அப்பேர்ப்பட்ட ஒரு கணவானயே, உண்மையில், நான் கனம்பண்ணுகின்றேன். ஆற்றல் உள்ள சிலர்க்கு அவ்வாறன கபடமற்றமக்கள் குதிரைப்படைத் தலைவ ராக்கப்படுதலைப் பார்க்கக் கோபமுண்டாகலாம். ஆணுல் வேலை நடைபெற வேண்டுமென்பது ஒருவர்க்கு அவசியமானுல், அவர்க்கு ஒருவருமில்லாதிருத்த லினும், கபடமற்ற மக்கள் இருத்தல் மிகச் சிறந்ததாகும்.
ஆங்கிலப் போரிலும் அரசியலிலும் புதியதொரு காலத்தைத் தொடங்கிய கிழக்கு அங்கிலியாப் படையினரை உலகம் மிகச் சிறப்பாக அறிய வந்தது அவர்க்கிடப்பட்ட 'இரும்புப் படை யினர்' என்னும் பட்டப் பெயரினலாகும்; அது, முதலில் அவர்
களின் தலைவர்க்கு நேரே யிடப்பட்ட ஒரு பெயராகும். இப்படை 1648,
யினரே புதுமாதிரிப் படையினதும், குருெம்வெலினதும் பிந்திய படைகள் எல்லாவற்றினதும் தோற்றத்துக்கு உண்மையில் காரண மாவர். வடபாலுள்ள கவலியர், இலிங்கன்சயர்க்கூடாகச் சென்று
59

Page 40
60
ஒக.-செத், 1643.
கொந்துலாந்தர் பேரம்
கேயின்சுபரோ, வின்சுபி ஆகிய இடங்களில் நடந்த சண்டை களிலே அரைமனதோடு கலந்ததைத் தடுத்ததும், அச்செயலால் அல்லின் கடல் தீரத்திலிருந்து அம்பாாற்றுக்கு வடக்கே மொட்டைத்தலையர் கட்சியின் நோக்கத்தை இன்னும் ஆதரித்துக் கொண்டிருந்த சேர் தோமசு பெயர்ப்பாக்கிசுவோடு தொடர்பு கொண்டதும் அவைகளின் முக்கியமான முதற் சேவையாகும்.
ஆனல், கவலியர் இலண்டன் மேற் சென்றதைத் தடுத்தது மாத்தி ாம் போதாது. நாடு போராற் களைத்துப்போயிற்று. ஆகையினல், தலைநகரிற்ருனும், பலமுள்ள ஒரு பகுதியினர் அரசரிடத்தே சரண் புகுதலுக்கொப்பான ஏற்பாடு ஒன்றினைச் செய்துகொண்டு அதனுற் சமாதானம் பெறவேண்டுமென்று இடைவிடாது ஓலமிட்டனர். இவ் விடரான நிலையில், கொத்துலாந்தரோடு செய்துகொண்ட உடன் படிக்கையே பிம்மின் அரசியல் ஞானத்துக்குரிய கடைசிச் செயலா கும். அவர்களின் தேசீய உரிமைகள் கிருத்தியான முறையில் நிறை வேறிய பின்னர், 1641 ஆம் ஆண்டு ஒகத்துத் திங்களில் தம் பக்கத் துள்ள துவித்தாற்றின் கரைக்குப் படையினையகற்றினர். அப்படை யைப் பாராளுமன்றத்திற்கு உதவும் பொருட்டு இங்கிலாந்துக்குத் திருப்பியனுப்ப அவர்கள் இப்போது உடன்பட்டனர். அதற்குக் கைம்மாமுக, கொத்துலாந்தின் திருச்சபையைப் போல ஆங்கிலத் திருச்சபைச் சீர்திருத்தம் இருக்கவேண்டுமென்று உரிமையுடன் கேட்டனர்.
அவர்களின் கோரிக்கையை முற்முக ஒப்புக்கொள்ளப் பாராளு மன்றத்தினர்க்கு முடியாதிருந்தது; ஏனெனில், குருமாரையும், வழிபாட்டு நூலையும் ஒழிக்கவும், சமய இயக்கத்தினுள் பொதுமக் கள் சிலரைப் புகுத்தவும் அவர்கள் விரும்பியபோதும், ஆங்கிலேயர் யாவரையும்போல அவர் திருச்சபைமேல் அரசுக்குள்ள முதன்மை யின் காவலராவராதலினுலென்க. மேலுமொரு தொல்லையுண்டா யிற்று; கொத்துலாந்தரும் அவர்தம் ஆங்கிலக் கட்சிக்காரரும், மதத் தலைவர்களுக்கெதிராகச் செய்த போர் இன்னும் வெற்றிபெருத போதிலும், வைதிக வொழுக்கமற்ற ஆராய்மையாளர் கட்சியினர் யாவரையுந் துன்புறுத்தவேண்டுமென்று கேட்டனர். இவ்வாருகவே தம் போர்த்தொழிலுக்குக் கடவுளின் திருவருள் கிட்டுமென்று அவர் கள் எதிர்பார்த்தனர். பலர் கொண்ட கருத்தும் அதுவேயாகும்.
இவ்வேளையில், இங்கிலாந்தில் பொதுமக்களுடைய தூய்மை மார்க் கம், அதன் மிகவிரைவான பெருக்கத்துக்குரிய காலம் முழுவதும், பெரிதும் அவைதிகமானதாயிருந்தது. அது தனிப்பட்ட புதிய ஆற் றலும் விகற்பமும் நிறைந்ததாகும். அன்றியும், அது பலவித கொள் கையையும் வழக்கங்களையும் விளைவித்தது. இளைஞனுன யோச்சு

வைதிகம் வேண்டாம்.
பொக்கிசுவையும் யோன் பன்னியனையும் இறுகப் பற்றிக்கொண்ட எளிய ஆங்கில மக்களின், பெருஞ் சமயக் கிளர்ச்சியானது மக்களே நினைக்கப் பழக்கியது வருமாறு:
புதிய பிரெசு பித்தீர் என்பது பழைய குருவின் பருமனனது பாரீர். எதிர்வுட் கூறுவதிலீடுபட்ட செம்மார்களையும், தகர வேலைக்காரரை யும் சிறையுளடைப்பதற்கு உவெசுத்துமினித்தரில் வீற்றிருந்த
கனந்தங்கிய அங்கத்தவர்கள் சிறிதேனும் தயங்கியிருக்க மாட்டார்
கள். இந்த வகுப்பினரிடையிருந்தே சில காலத்தில் "இரட்சணிய யாத்திரிகம்’ எழப்போகின்றதென்பதும், "நண்பர் கழகம்’ அமைக்கப்படப் போகின்றதென்பதும், தெரிந்திருந்தாலுங்கூட இவ்வங்கத்தவர்கள் இம்மக்களைப்பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனல், குருெட்வெல் தொடக்கம் கீழ்த்தாங்க ளெல்லாவற்றிலுமிருந்த சிறந்த ஆங்கிலப் போர்வீரர் வைதிகத் துக்கு மாறுபாடாக மிகுந்த புரட்சிப்போக்குடையரா யிருந்தமை பெரும் ஆபத்தாகும். " கூலிக்கேவல் செய்யும் சமயகுருமார்” மிகக் கடுமையான சண்டைக்காரரால் இரக்கமற்ற முறையில் கண்டிக்கப்படுவராயினர். அக்கதியினையே " கோபுரமுள்ள வீடு களும்” அடைவனவாயின. படையணிகளிலும், பாராளுமன்றத் தின் அதிகாரத்தை ஆதரித்த உள்ளூர் ஆலோசனைச் சபைகளிலும் ஒரு பாதியில் சுயேச்சையாளர் பிரெசுபித்தீரியரை வெளிப்படை யாக எதிர்த்துக்கொண்டனர். மேலும், பிரெசுபித்தீரியர் சுயேச்சை யாளரை விலக்கவேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொண்ட னர்; ஏனெனில், சுயேச்சையாளர், முழுவுரிமையுடையதும், வைதி கமான கருத்தினையும் பழக்கத்தையும் வற்புறுத்தக் கட்டுப் பட்டுள்ள பொதுவான எந்த இயக்கத்தின் சோதனைக்குமுட்படாத தும், தம் ஆட்சியுடைய கூட்டத்தினரைக் கொண்டதுமான திருச் சபையொன்றினை வேண்டினராதலினலென்க.
பகைவரை எதிர்த்து நின்று செய்த இச்சண்டை அரச படை களின் வெற்றியை ஏறக்குறைய நிச்சயமாக்கிற்று. எங்ங்ணமாயினும் 1643 ஆம் ஆண்டின் கார்காலத்தில் கொத்துலாந்தர், பாராளு மன்றமே ஏற்பாட்டைப் பயன்படுத்தியதால், கணநோத்துக்கு மகிழ்ந்திருந்தனர்; மேலும், அவர்கள் ‘சிறந்த சீர்திருந்திய திருச் சபைகளின் பிரகாரமும், மனத் திடத்திற்காக மேலும் கூறப்பட்ட வாறு 'கடவுளின் வாய்மொழியின் பிரகாரமும், ஆங்கிலத் திருச் சபை முற்முகச் சீர்திருத்தம் செய்யப்படும் எனும் தெளிவற்ற வாக்குறுதிகளாலும் திருத்தியடைந்திருந்தனர். சிறிது ஈரடியான
இச்சொற்களைப் பயன்படுத்தி பிம் கொத்துலாந்தரின் போர்ப்படை
களின் உதவியைப் பெற்றன் ; பெற்றபின் கிசெம்பரில் இறந்தான்.
6

Page 41
62
யூலை 2,
1644.
செத், 2, 1644.
மாசுதன்மூர் : குருெம்வெலின் உயர்வு
அடுத்தவாண்டில், இறந்துபோன அரசறிஞனின் நடைமுறை யினுல் விளைந்த பயன் மாசுதன்மூரிற் பெற்ற வெற்றியாகும். குருெம்வெலின் கிழக்கு அங்கிலியரும், பெயர்ப்பாக்கிசுவின் யோக்கு சயருக்குரிய அாய்மையாளரும், அலச்சாந்தர், தாவீது இலசுலி ஆகியோரின் கீழுள்ள கொத்துலாந்தரும் ஒன்முகச் சேர்ந்ததனு லான இருபத்தேழாயிரவரை மொத்தமாகக் கொண்ட மூன்று சேனைகளும், உரூபேட்டுவின் பதினெண்ணுயிரவரைக் கொண்ட படையினரோடு சேர்ந்துள்ள வடபாற் கவவியரின் சேனைகளை அழிந்துவிட்டன. அப்போரில் நிகழ்ந்த யாவற்றுள்ளும் மிகப் பெரிய செரு அதுவேயாகும். உரூபேட்டு இதுவரையும் நிகரில்லா திருந்ததும் மிகச் சிறந்ததுமான தன் குதிரைப் படையோடு இரும் புப் படையினரின் தாக்குதலுக்கு இப்போது பணிய நேரிட்டது. ஒரே தாக்கில் வட இங்கிலாந்து முழுவதும் மொட்டைத்தலையாதி காரத்துக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது.
எசெக்கிசு அவனுடைய காலாட்படை முழுதோடும் கோண்வாலி அலுள்ள உலோத்துவித்தியல் என்றவிடத்தில் பகைவர் கையில் ஒப் படைக்கப்பட்டான். ஆங்கு அவன் முன்னரே முன்பின் சிந்திக்கா தும், நோக்கமில்லாதும் நுழைந்துள்ளான். அதனுல், மாசுதன்மூர் வெற்றி இத்தோல்விக்கு ஈடுசெய்யப்பட்டதாயிற்று. அரசனுடைய படையினை அழிக்க முயலுவதற்குப் பதிலாக அவன் அரசர்க்குரிய நாடுகளைக் காலத்திற்கு முந்தி நாசமாக்க முயன்றன். அதனல் அவ னுக்கே கேடு குழ்ந்தது. இப்பேரிடர் குருெம்வெலின் உயர்வுக்கு வழிவகுத்தது. சமுகவரிசையில் உயர்ந்தவனும், அரசியற் கொள் கையில் மிதமானவனும், பாராளுமன்றம் போரினைத் தொடங்கு தற்கு உதவியளித்த சமய ஒழுக்கத்தை வைதிக முறையிற் கடைப் பிடிப்பவனுமான பழைய மாதிரிக்குரிய தளபதி, உலோத்துவித்தி யலில் மீண்டும் பெறமுடியாத முறையில் தன் மதிப்பினையிழந்தான். மாசுதன்மூரின் குருதிப்பலியால் வெற்றிபெற்ற சமயவாதிகளும், 'வீட்டில் நெய்த மேற்சட்டையணிந்த படைத்தலைவரும் பாராளு மன்றத்தினர் மனத்தில் மிகச் சிறந்த மதிப்பொடு விளங்கினர். இவ் வாறு நிகழ்ந்தனவெல்லாம் திருவருளினலென்று கூறின், சமயவாதி கள் அவ்வாண்டில் மிகப்பெரிய பங்கினைப் பெற்றவராகத் தோன்றி னர் எனலாம்.
1644-5 ஆம் ஆண்டு குளிர்காலத்தில், போரானது பொது மக்கட் சபையாரின் அரசியல் ஞானமுடைய தீர்ப்புக்களினல் நிச்சயிக்கப்பட்டது. மொட்டைத்தலையர் படைகள் அக்காலத்தின் திறமைமிக்க போர்ப்படையாக வளர்ச்சியடைந்தமையும், சமய உடன்பாடு பற்றி பிரெசுபித்தீரியரும் திருமுழுக்காளரும் செய்த சண்டையும் ஏதோ ஒருவிதத்திலே தொடர்புடையனவாய்விட்டன.

புதுமாதிரிப்படை
பாராளுமன்றம் இருபிரச்சினைகளையும் ஒன்முகத் தீர்க்கவேண்டியதா யிற்று. மன்றவுறுப்பினரிற் சிலரே சமயவாதிகளுக்கு இரங்கினர்; மேலும், பலர் அவர்களைக் கலகமும் கெடுதியுமுண்டாக்குகிறவ ரென்று கருதி வெறுத்தனர். ஆனல், மறுபுறமாக, பொதுமக்கட் சபை ஆங்கிலப் பாராளுமன்றத்தைக் கொத்துலாந்துத் திருச் சபைக்கும், ஆங்கிலப் பெருஞ்செல்வரை, சான்முேசையும், குரு மாரையுங் கொண்ட விசாரணைக் குழுவினர்க்கும், கீழ்ப்படுத்த விரும்பிற்றிலது. சுயேச்சையாளர் தம் தலைவர்க்காகப் பயமில்லாது போர் செய்து வெற்றிகொண்டபின்னர், கண்ணியமான உறுப்பினர் சிலர் அவர்கள் ‘போராடிப் பெற்ற சுதந்திரத்துக்காக அவர்களை ஏமாற்றக் கருதினர். இத்தந்திரம் எவ்வளவுக்கு வஞ்சகமுள்ளதோ அவ்வளவுக்கு அபாயமுள்ளதுமாகும் ; இவ்வாறிருந்தும், பய முறுத்திக் கொண்டிருக்கும் தீங்குகள் இரண்டிலும் போர்க்களத்தி லுடனடியான வெற்றியை உறுதிப்படுத்துவது ஒன்றையே அம் மன்றம் சிறிது காலத்திற்கு விரும்பியது.
இப்பொழுது இருமன்றங்களும் குருெம்வெலைப் பிரெசுபித்தீரிய சான மான்செத்தர் வேள் என்னும் அவனுடைய எதிரிக்கு மாமுய் ஆதரித்தன; ஏனெனில், சமயவாதி மிகச் சிறந்த போர்வீரனவா ஞதலினலென்க. எந்த மன்றத்திலாவது உறுப்பினராயிருந்த அதிகாரிகள் எல்லோரும், சுயநலமறுப்புக் கட்டளைச் சட்டத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனல், மீட்டு நியமனஞ் செய்யுமுரிமை ஒத்திவைக்கப்பட்டது. இப்படியாக எத்தடையையும் நீக்கிப் போருக்குக் கப்பலை ஆயத்தமாக்கியபின், பெயர்ப்பாக்கிசு வைத் தம் படைகளின் பிரதம தளபதியாக அம்மன்றங்கள் தேர்ந் தெடுத்தன. அவன், பிரெசுபித்தீரியர் கொள்கிைக்கும் ஏனைய சம தெடுத்தன. அவன், பிரெசுப்பித்தீரியர் கொள்கைக்கும் ஏனைய சம யப் பிரிவுகளுக்குமுள்ள அறிவுக் கூர்மையான அக்கறையின்மை யைப் படைக்குரிய உயர்ந்த தனது திறமைகளோடு சேர்த்துக் கொண்டான். அவை ஈற்றில் குருெம்வெலை அவனின் உதவித் தளபதியாக நியமித்துக் குதிரைப்படை முழுவதையும் அவனின் பொறுப்பில் விட்டன. குருெம்வெலின் இரும்புப் படையினர் புது மாதிரிப் படையின் குதிரைப் படையில் அரைப்பங்காயமைந்தனர். சுயேச்சையாளர், திருமுழுக்காளர் ஆகியோரின் நிலைமை இப் போது போர் நிலைத்திருக்குங் காலமட்டுமே பாதுகாப்பானதாகும்.
பெயர்ப்பாக்கிசுவும் குருெம்வெலும் நடத்தவேண்டியிருந்த புது மாதிரிப் படை நிலையான இராணுவத்தைச் சேர்ந்ததொன்ருகும். அது பாராளுமன்றத்தின் நேரடியான சேவைக்குப் பதிவுசெய்யப்
பட்டதாகும். மேலும், அது ஒவ்வொரு கட்சியிலும் இதுவரை
யிருந்த எப்படையிலும் மேலான முறையில் உணவுஞ் சம்பளமும்
63

Page 42
அரசபடையின் ஒழுங்கீனம்
பெற்று வளர்ந்ததாகும்; ஆகையினல், மிகக் கண்டிப்பான ஒழுக் கத்தை வற்புறுத்தல் சாத்தியமாயிற்று. போரினை விரைவில் முடிக்க “அடியார்க்கு' வாய்ப்பளித்த சிறந்த நடத்தைக்குக் காரணமா
யுள்ளன அவர்க்குக் கிடைத்த உணவும், சம்பளமும், அவர்தம்
சமயமுமாகும். தனியார் திரட்டும் படைகளிலும் உள்ளூர் வரி முறைகளிலும் மிகச் சிறந்த சாதனமொன்றை இப்போது பாராளு மன்றம் பெற்றிருந்தது. முன்பு தனியாரது சேனைப்பகுதிகளுக்கு உணவு முதலியவை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட முதல்வரும், படையுணவுப் பொறுப்பாளரும் அவற்றை மிகக் குறைவாகக் கொடுத்துவந்தனர்; அதனுல் அவைகள் கொள்ளையடித்துத் தம் சீவியத்தைக் கழிபனவாயின; இப்பொழுது, பணப்பையானது பாராளுமன்றத்தின் கையிலிருந்தது ; அதனை எவ்வாறு பயன் படுத்தலாமென்று பாராளுமன்றம் ஈற்றிலறிந்துகொண்டுமிருந்தது."
மறுபுறமாக, அரசன் மிகப்பெருங் கடனுளியாகவிருந்தமைக் கேற்ப, அரச கட்சியினரின் கொள்ளையிடும் பழக்கமும் 1642 ஆம் ஆண்டிலும் பார்க்க 1645 ஆம் ஆண்டில் மிக மோசமான நிலையி லிருந்தது. ஒழுக்கமுடைமை, உண்மையில், ஒரு காலத்திலும் வீர முள்ள கவலியரின் ஒருறுதியான பண்பன்று. அவர்தம் படைத்தலை வர் முதன்மையும் தனிப்பட்ட போட்டியுங் குறித்து ஒருவரோ டொருவர் செய்த சண்டைகளிலும், சமயமும் அரசியலும் குறித்துச் செய்தவை எண்ணிக்கையில் மிகக் குறைந்தனவாகும். படைத்தலை வர்களது கட்டுப்பாட்டுக்குட்படாது செயலாற்ற முனையும் விார் களின் சுதந்திரமனப்பான்மையும் அவர்களது பழமையான அரு ளாண்மையுணர்வும் முதலிலிருந்து கடைசிவரை அரசபடைகளுக்கு அழிவைக் கொணர்பவையாயிருந்தன. சண்டையில் அச்சமற்ற வரும், இடைவேளைகளில் குடித்து வெறித்துச் சூதாடுபவருமாகிய சாதாரண கவலியர், புரட்சிசெய்யும் வாழ்க்கைக்குரிய நுண்மை யான ஆத்திகரையும், கீதம்பாடுவோரையும் தாம் ஒத்திராமை யைக் குறித்து இறுமாப்புக்கொண்டனர். மேலும், அவர்தம் தலைவர் பணமின்மையால் அவர்களை மேன்மேலும் பசியால் இறக்க விட்டதால் அவர்கள் நாட்டுப்புறத்திற் கொள்ளையடித்துத் தங்களை மேன்மேலும் தாபரிப்பாாயினர். ஈற்றில், வடமேற்கிலுள்ள மிகுந்த அரச பற்றுடைய மண்டலங்களிலுள்ளாரும் கோரிங்கும் அவரைப்
1. 1646 ஆம் ஆண்டில் புதுமாதிரிப்படையின் சம்பளம் பெரிதும் நிலுவை யிலிருந்ததென்பது உண்மையே; ஆனல், 1645 ஆம் ஆண்டில் அச்சம்பளம் திருத்திகரமான முறையில் ஒழுங்காயிருந்திருக்கவேண்டும். 1645 ஆம் ஆண்டு மாச்சுத் திங்களுக்கும் 1647 ஆம் ஆண்டு மாச்சுத் திங்களுக்குமிடையில் பெயர்ப்பாக்கிசுவின் போர்வீரர், உண்மையில், 11,85,551 பவுண் பெற்றனர். Firth's Cromwell's Army, 183-4, 202-3 untitats.

நேசுபி: ஒக்சுபோட்டு வீழ்ச்சி
போன்ருரும் புறங்காட்டியோடியதைக் கண்டு மகிழ்ந்தனர்; அன்றி யும், தம் கமத்தின் விளைபொருளைப் புதுமாதிரிப் படைப்பாசறைக் குக் கொணர்ந்து விற்றுக் காசும் பெற்றனர்.
அரசனின் மிகச் சிறந்த பணியாளன் எல்லாவற்றையுங் கண்டு குறிப்பிட்டது வருமாறு :-
அரசனின் படைத்தலைவருக்குக்கீழுள்ளார், கட்டுப்பாடற்ற நடத்தை, ஒழுங் கீனம் (கிளாறெண்டன் இவ்வாறு எழுதினுன்), புரட்சிக்காரரிடத்தில் தாம் கண்டித்த சமயப்பற்றின்மை ஆகியவற்றில் தாமேகண்டபடி ஈடுபடுவாராயினர் ; ஆணுல், புரட்சிக்காரரோவெனில், ஒழுக்கமுறை, தாளாண்மை, அமைதி ஆகிய பண்புகளில் வளர்வாராயினர். அப்பண்புகள் அஞ்சாமை மனவுறுதி ஆகிய வைகளையும், அருஞ்செயல் முயற்சிகளாகியவற்றில் தேர்ச்சியினையும் அவர் களிடத்தே பிறப்பித்தன. ஒரு கட்சி குழப்பமெனுங் கருவிகொண்டு அரசுக்காகப் போரிடக் காணப்பட்ட அவ்வளவுக்கு மறுகட்சி முடியரசுக்குரிய எல்லா நேர்மை யொழுங்குகளோடும் அரசரையும் அரசாங்கத்தையும் அழிப்பதாகக் காணப் பட்டது.
அரசாங்கம் தனிப்பட்ட நிலையிலிருக்கும் போதும் ஒருமித்த நிலையிலிருக்கும்போதும் மிகுந்த உறுதிப்பாடுடையதாயிருக்கக் கூடுமென்று நிரூபித்தல், உண்மையில், நீடித்த பாராளுமன்றத்தின் கடமையாகும். 1645 ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில் அக்கூற்று முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
தனக்கு முந்தியிருந்த எசெட்சைப் போன்றிராத பெயர்ப் பாக்கிசு வென்பான், அரசனின் சேனையைக் களத்தில் அழிப் பதையே தனது போரின் இலக்காகக் கொண்டுளான். நேசுபியில்
அச்சேனையை அவன் கண்டு குருெம்வெலினதும் அவனுடைய
குதிரைப்படையினதும் துணையினல் அதனை அழித்துவிட்டான். அதன்பின்னர், எஞ்சிய கவலியர் படைகளின் மனவுறுதி விரைவில் தளர்வதாயிற்று ; அதேசமயத்தில், மக்கள் நன்றியிறிவோடு அல்லது சகிப்புத் தன்மையோடு அமைதியைத் தருங் கட்சியெதுவோ அதை ஏற்கத் தயாராயிருந்தனர். புது மாதிரிப்படையின் நன்க மைத்து வைக்கப்பட்ட பீரங்கிப்படைப் பரிவாரமும், காலாட் படையின் தாக்குந்திறனுடைய உற்சாகமும் தேர்ச்சியும் அரசனின் மிகப் பலவான காவற்படைகளை வியத்தகு விாைவிற் குறைத் துள்ளன. அப்படைகள் கோட்டைகளிலும், பண்ணை வீடுகளிலும், மதில்குழ்ந்த நகர்களிலும் மேற்குத் திக்கு முழுவதும் சிதறிக் கிடந்தன. நேசுபிச் சண்டைக்குப் பன்னிரண்டு திங்களுக்குப் பின், ஒக்சுபோட்டானது பகைவர் கையில் ஒப்படைக்கப்பட்டமை உள் நாட்டுப் பெரும்போரின் முடிவினைக் குறிப்பதாயிற்று. இங்கிலாந் தில் இலான்செண்டு தொட்டுப் பேவிக்கு வரையும் பாராளுமன்றத் தின் செயலே சட்டமாய் வழங்கிற்று.
ஆற்றலுடைய இப்போர்முறைகளின்போக்கு மொந்துருேசுவின் விந்தையான பொழுதுபோக்கினல் அதிகம் தடைப்பட்டிலது. அவன்
யூன் 14 1645。
யூன் 24, 1646·

Page 43
66
போர் முடிந்தது
ஒகத்து, 1644, ஒரு குதிரைக்காவலனுக மாறுவேடம் பூண்டுகொண்டு அரசனின்
செத், 13, 1645。
பாசறையிலிருந்து, கொத்துலாந்துக்குச் சென்று, சில ஆயிரக் கணக்கான மலைப்பிரதேச வாள்வீரரின் தலைவராகத் தாழ்நிலங் களைத் தாக்கி வெற்றிபெறுவானுயினன். தளபதியாக குருெம்வெலின் எதிரி அவனுெருவனேயாவன்; ஆயினும், அஞ்சாதவரும் நாகரிக மற்றவருமான பழங்குடிமக்களை நடாத்தவேண்டிய பொறுப்பு அவனுடையதாயிற்று. அப்பழங்குடிகள் தம் வெற்றிகளுக்குப் பின் தமது கொள்ளைப்பொருள்களைத் தமக்குரிய குறும்பள்ளத்தாக்கு களிற் சேமித்து வைத்தற்காக மறைந்துவிட்டனர்; எஞ்சியுள்ள சிறு பகுதியினை மாத்திரம் அவனுக்கு விட்டார்கள். அதனையும் தாவீது இலெசுலியின் குதிரைப்படை பிலிப்போவில் தாக்கி முற்முக அழித்து விட்டது. கொத்துலாந்துத் திருச்சபையின் உலகியலதிகாரத்தை அழித்திருக்கவேண்டிய மொந்துருேசுவின் பெருமுயற்சியில் மிஞ்சியது எதுவுமில்லை. ஆயினும், அந்நாளி லுள்ள தாழ்நிலத்துக் கொத்துலாந்தருக்கு மிக்க கசப்பானதும், அவர்தம் சந்ததியாருக்கு மிக அருமையானதுமான நினைவொன் அறுமே மிஞ்சியதாகும். அதுவே சேர் உவாற்றர் இசுக்கொத்து காலந்தொட்டு உயர்நிலத்தாரையும் தாழ்நிலத்தாரையும் இணைத்த பொதுவான தேசியப் பெருமையில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அத்தியாயம் IV
இணக்கமேற்படுத்தத் தவறியமை. கோக்கொலை. புரட்சியான அரசாங்கங்கள், அயலாந்தும் கொத்துலாந்தும். பிளேக்கும் கடற்படை புதுப்பித்தலும். புரப் பகத்தின் உள்நாடு, திருச் சபை, வெளிநாடு ஆகியவற்றுக்குரிய பூட்கைகள். ஒலிவரின் இறப்பும், பாராளுமன்ற மீட்சியும்.
மொட்டைத்தலைக் கட்சியினர் பூரண வெற்றியடைந்தனர். ஆனல் அது பொருள், படை ஆகிய துறைகளில் மட்டும் ஏற்பட்டதன்று. அவர்தம் பகைவரின் எதிர்ப்பானது மனவுறுதி குலைவுற்றமையால் கெட்டுப்போயிற்று. நொதுமலரோ, புதுமாதிரிப்படையின் வெற்றியே காவலையும் அமைதியையும் மீண்டும் அளிக்கும் வழியென்று எங்குங் கூறி ஆர்ப்பரித்தனர். போர்த்தொழிலை விட்டும், படையினை அணிகுலத்தும், சோர்வுக்கும் ஆறுதலுக்கும் இடைப்பட்ட மணப் போக்கோடு விடுசென்ற கவலியர் கனவான் தானும் கடுங்கோபங் கொண்டிலன்; ஆனல் அத்தகைய கொடிய வெறுப்பை அவனும் அவனது மகனும், அவர்தம் சொத்துக்களுக்கு மிகுதியான குற்றப் பணம் விதித்தமை, அவர்தம் சமயவிலக்கு, அரசனைத் தூக்கி விட்டமை ஆகியன நிகழ்ந்த பன்னிராண்டு இராணுவ ஆட்சிக்குப் பின்னர் வளர்க்கவேண்டியவராயிருந்தனர். 'நீங்கள் இப்போது

போருக்குப்பின் நெருக்கடி
உங்கள் வேலையைச் செய்து முடித்துவிட்டீர்கள்; ஆகையினுல், உங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ளாவிட்டால், நீங்கள் போய் விளையாடலாம்' என்று சேர். யாக்கோபு ஆதிலியென்பான் தான் சரணடைந்தபோது போரில் வெற்றிபெற்றவருக்குக் கூறினன். அவன் அவ்வாறு கூறியபோது நீக்கமுடியாத வெறுப்புக்குரிய சொற் களைப் பிரயோகித்தானல்லன்.
இணக்கம் செய்தற்கு ඖෂ பெரிய நல் வாய்ப்புக் கிடைத்தது. மூன்முண்டுகளில் அத்தகைய வாய்ப்பு முற்றும் கைநழுவவிடப் பட்டது. இதன் விளைவாய், இராணுவ வல்லாட்சியைப் பயன்படுத் தியதால் மட்டுமே பேரரசைக் குழப்பநிலையிலிருந்தும், இங்கிலாந்தை ஆட்சியறவிலிருந்தும் காப்பாற்றக்கூடியதாகவிருந்தது. 1660-2ஆம் ஆண்டில் ஏற்படுத்திய மீட்சி உடன்படிக்கை 1647 ஆம் ஆண்டில் பெற்றிருக்கக்கூடியதிலும் பார்க்கத் தன்னளவில் மிகக் கீழானதா யிருந்தபோதிலும், உண்மையில், நாட்டின் ஈடேற்றத்திற்குரிய தாகும்.
மக்களின் சம்மதத்தோடு அரசினை நடத்தத் தவறியமை ஒப்புக் கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது; மேலும், பெயரளவில் குடி யாட்சிக்குரிய குறிக்கோள்களை அடைதற்கும், ஆனற் செயலளவில் பெருங் குழப்பத்தைத் தடுத்தற்கும் 'வற்புறுத்தப்பட்ட வதிகாரம்' நிலைநாட்டப்பட்டது. இவை யாவும் நடந்த அந்த நேரத்தை முதலாம் சாள்சின் மரணதண்டனை குறிப்பிடுவதாகும். அந்நிலைமை எவ்வாறு ஏற்பட்டது? முதலாவதான உள்நாட்டுப் போருக்கும்,
வயிற்றேலுக்குமுன் நிகழ்ந்த துக்க சம்பவத்துக்கும் இடைப்
பட்ட காலமே, வெற்றியடைந்துள்ள் பாராளுமன்றம், சிறைப் பட்டுள்ள வாசர், சேனை, ஒலிவர் குருெம்வெல் ஆகிய நான்கு கட்சி கள் உற்சாகத்தோடு ஈடுபட்ட நடைமுறைகளிலிருந்து வரிசையாக உண்டான வஞ்சகச் சூழ்ச்சிகள், ஆலோசனைகள், ஆட்சிப் புரட்டு கள், படையின் செயல்கள் ஆகியன யாவும் பரந்து நிலவிய கால மாகும்.
நெருக்கடியான இந்த மூன்முண்டுகளில் போற்றற்குரிய அல்லது பிழை பொறுத்தற்குரிய நடத்தையை மிகக் குறைவாகவுடைய கட்சியே பாராளுமன்றமாகும். சரியான நடவடிக்கைகளை எடுக்க வும், போர்க்காலத்தில் ஏற்ற மனிதரை நம்பவும் அறிந்து கொண்ட மக்கள் மன்றமொன்று, தன் வெற்றிகளை அரசியற் கருமங்களுக்குப் பயன்படுத்த நேர்ந்தபோது மாத்திரம் தவறியது என்பது விந்தை
யாகத் தோன்றலாம். ஆனல், உரோமர் மேற்சபைக் காலந்தொட்டு
எங்கள் காலப் பாராளுமன்றங்கள் வரையும், வரலாற்றில் ஒன்றுக்
கொன்று முரணுன இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளனவாகும்.
67
யூன், 1846F607. 1649.

Page 44
68
பாராளுமன்றத்தின் தவறுகள்
பராக்கிரமம் படைத்த மக்களைக் கொண்ட மன்றங்கள் போரில் நேரும் இடர்களினல் ஊகமுள்ளனவாக்கப்படலாம்; ஆனல், போரில் அடையும் வெற்றியால் அல்லது அவ்வெற்றித் தோற்றத்தால் விளை யும் அதிகாரம் அம்மக்கள் தம் பகுத்தறிவை அழித்து அவர்களை மந்தைகளுக்கியல்பான உள்ளக் கிளர்ச்சிகளுக்கு அடிப்படுத்தலாம். ஆகையால், 1647 ஆம் ஆண்டில் பொதுமக்கட் சபையினர் தம் கூலி யாளான புது மாதிரிப் படையானது நாட்டு மக்கள் எல்லோரின் சமயங்கள் மீதும், குடித்திணைகள் மீதும் தலைமையானவதிகாரத் தைத் தமக்களித்துள்ளதென்று எண்ணினர்; மேலும், அவர்கள், சாள்சுவின் ஆதிக்கம் நிலவிய காலத்திற் காட்டிய மதிப்பளவு
தானும் உண்மையான இங்கிலாந்துக்குக் காட்டாது, தம் முற்
நீர்ப்புகளுக்கேற்ப, ஆங்கேயருக்குரியன யாவற்றையும் ஒழிப்ப தற்கு முன்வந்துள்ளார்.
சாள்சை வீழ்த்தியதும், மீட்சி இணக்கத்தைக் கெடுக்கவிருந்தது மான பிழையே நீடித்த பாராளுமன்றம், உள்நாட்டுப் போரின் பின், சமாதானம் உண்டாக்கத் தவறியதற்குரிய மிக முக்கியமான காரணமுமாகும். பிரிந்துள்ள ஒரு நாட்டில் சமயப் பொறுமைக் குரிய தேவையினை ஒப்புக்கொள்ளுதற்கு வேண்டிய ஆற்றல் ஒரு கட்சியிடமும் இல்லாதிருந்தமையே அப்பிழை. ஆனல், ஆங்கிலக் கிறித்துவரையும், சமயவாதிகளையும், குறுகிய மனப்பான்மை யுடைய பிரெசுபித்தீரியரின் வைதிக வொழுக்கத்தின் சார்பாகத் துன்புறுத்த முயன்றமை, நீடித்த பாராளுமன்றத்தின் துடுக்குத் தனமாகும். அவ்வொழுக்கம் ஆங்கிலேயருடைய சமயத்தின் எதிர் காலத்தை அந்நாளிலிருந்த ஏனைய இயக்கங்கள் பாதித்த அளவி லும் மிகக் குறைவாகவே பாதித்தது.
ஒரே சமயத்தில் நீடித்த பாராளுமன்றத்தினர் போர்க்களத்திற் சிறிது காலத்திற்கு முன் தம் பகைவராயிருந்தவரின் சொத்தினைக் கைப்பற்றும் மிக இலகுவான உபாயத்தினுல் தமது பெரிய பணத் தொல்லைகளைப் போக்குதற்கான தூண்டுதலுக்கு இணங்கினர். பொருத்தமான விலக்குகளோடு, அண்மையில் நிகழ்ந்த போரில் இருகட்சியினரின் நிலங்கட்கும் பெருஞ் செல்வங்கட்கும் பாது காப்பு அளிக்கப்பட்டிருந்தால், அந்நூற்றண்டின் மீதிக் காலமுழு வதும் கவலியரான பெருஞ் செல்வர் தம் வகுப்பினரின் நடத்தையை அடக்கியாண்ட வைதிக சமயத்தின்மீது மிகுந்த வெறுப்பினை மனத்திற் கொள்ளாதிருந்திருப்பர். அவர்கள் உலோட்டுவுக்கும் அவர்தம் குருமாருக்கும் இதுவரையும் சிறிதளவு அன்பு காட்டினர். ஆனல், துரோகிகள்" எனக் குறிப்பிடப்பட்ட தோல்வியுற்ற கட்சியினர்க்கு விதித்த குற்றப் பணத்தினுல் அவர்களிற் சிலர் தம்

பாராளுமன்றத்தின் தவறுகள்
காணிகளிற் சில பகுதிகளை அந்நேரத்தில் வெற்றி பெற்றேர்க்கு விற்கும்படி வற்புறுத்தப்பட்டனர். பெரும்பாலும் சமூகத்தில் தம்மி லும் குறைந்த தரத்தில் உள்ளவரான-போரிற் கொள்ளை இலாபம் பெற்றவருக்கே அவர்கள் அவ்வாறு விற்றனர். மேலும் அதே சமயத்தில் அவர்கள் பழகிக்கொண்ட வழிபாட்டு நூற்படி செய்யும் ஆசாதனையும் தடுக்கப்பட்டது. இவைகளின் விளைவாகப் பெருஞ் செல்வர், உலோட்டுவின் குருவாயத்தாருக்குப் புதியதோர் அன்பு காட்டத் தொடங்கினர். இவர்கள் தொகையில் ஏறத்தாழ 2,000 பேராவர். இவர்களும் பெருஞ்செல்வரைப்போல் கொசேம்ானவர் கையிற் சிக்கித் துன்புறுத்தப்பட்டவர்கள். குருமாருக்கும், பொது மக்களுக்கும் இடையே உலோட்டு உண்டாக்கிய பிளவு, அாய்மையா ளரின் துன்புறுத்தலால் நீங்கியது. பெருஞ் செல்வருக்கும் சமயப் பாதிரிமாருக்குமுரிய அரசியல் நேச உடன்படிக்கையும், விசுப்பு மாரினதும் வழிபாட்டு நூலினதும் பகைவர்க்கும் மாமுய் ஒருங்கே அவர்கள் வளர்த்து வந்த வெறுப்பும் இந்நேரத்திலுண்டான உள் ளக் கிளர்ச்சியிலிருந்து தொடங்குகின்றன.
நீடித்த பாராளுமன்றத்தினர் அரசகட்சிப் பெருமக்களை இணங் காதவராக்கியதோடு திருத்தியடையாமல், நம்பமுடியாத மடமை யோடு, கிருமுழுக்காளரை வாழ்நாள் முழுவதும் சிறைசெய்தற்கும், பொதுமக்கள் வெளியாகப் போதனை செய்தலைத் தடுத்தற்கும், புதுமாதிரிப் படையிலிருந்து சுயேச்சை அதிகாரிகள் எல்லோரை யும் விலக்குதற்கும் சட்டங்கள் வகுத்தலை மேற்கொண்டனர். பாரா ளுமன்றத்தினரில் பெரும்பான்மையோர், போர்க்களத்திற் றம்மைக் காத்த மனிதர்க்குத் தம் நன்றியின்மையைக் கரட்டிய அச்செயலில் இலண்டன் மாநகரத்துள்ள மேலதிகாரமுடைய கட்சி மனப் பான்மையுடையரால் அாண்டப்பட்டனர். பெரும் புத்தியீனமான இச்செயலுக்குச் சிகாம் வைத்தாற்போலப் படைக்குரிய பெரிய சம்
கவலியர் குற்றப்பணங் கொடுப்பதற்காக, உண்மையில், விற்ற காணித்
தொகை மிகைப்படுத்தப்பட்டதென்று சமீபகாலவாராய்ச்சி விளக்கிக் காட்டு கின்றது. தனிப்பட்ட கவலியரின் காணிகளை வாங்கிய மக்கள் மீட்சிக்காலத்தில் அவற்றைத் தாமே வைத்துக் கொண்டனர். ஆகையால், இரண்டாஞ் சாள்சு தன்னையும் தன் தந்தையாரையும் பின்பற்றியவர்க்கு நன்றி தெரிவிக்கவில்லை யென்று அநியாயமான, ஆயினும், இயல்பிற்கு விரோதமல்லாத முறையிற் குற்றஞ் சாட்டப்பட்டான். மறுபுறமாக, குருெம்வெலைப் பூரணமாகப் பின்பற்றியவர்கள் அவருள்ளும் பெருந் தொகையான படையதிகாரிகள், தம் சம்பளத்தையும் ஊதியத்தையும். கொடுத்து மலிவாக வாங்கிய திருச் சபைக்கோ, அரசுக்கோ உரிய காணிகளை இழந்து விட்டனர். அவர்கள் சமூகத்தில் எந்த நிலையிலிருந்து உயர்ந்தார்களோ மீட்சிக் காலத்தில் அந்த நிலையைய்ே அயலாந்து தவிர்ந்த ஏனைய இடங்களில் மீண்டும் அடைந்தார்கள்.
1646647.
69

Page 45
70
ஒக. 1647,
பாராளுமன்றமும் படையும்
பள நிலுவையைச் செலுத்தாமல் அதனை அணிகுலைக்கத் தீர்மானித் தனர். இது, படைத்தலைவரையும், போர்வீசரையும் உற்சாகமிக்க சமயவாதிகளையும், வரிகளினுற் பெற்ற பணத்தைக் கொண்டு கொடுத்த நல்ல சம்பளத்தினுல் போர்வீரர் வரிசையிற் கவரப்பட் டுச் சேர்ந்தோரையும் ஒன்முகச் சேர்த்து, அவர்களுக்கிடையே நெருங்கிய உறவை உண்டாக்கியது. அநீதியானது, மனக்குறை களினலும் கோபத்தினுலும் ஒன்முகச் சேர்ந்துள்ள படையை ஒரு கட்சி மனப்பான்மையுடையதாக்கியது. எல்லா வகுப்புக்களிலுள் ளோரும் தம் மத்தியிலுள்ள உற்சாகமுடைய பருமாற்றவாதிகள் தம் கொள்கையைப் பாப்புவதற்காகச் செய்த பிரசாரத்தை மிகுந்த பேராவலோடு உற்றுக்கேட்டனர். பருமாற்றவாதிகள் நீடித்த பாராளுமன்றத்திலிருந்து சருவசன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட குடியரசுக்கும், குடியாட்சிக்குமுரிய குறிக்கோள்களுக்காக முறையிட்டனர். இத்தகைய கொள்கைகள் செயல்முறையிற் காட்ட முடியாதன்வென அக்காலத்தில் நிரூபிக் கப்பட்டன; ஆனல், மனிதத் தன்மைப்படி கூறின், போர்விரர், தாமே தமது மிகச் சிறந்த படைச்சேவைகளால் நாட்டின் தலைவ சாக்கியவர் இழைத்த சமயத் துன்புறுத்தல்களுக்குப் பணிய மறுத் தமைக்கும் தம் நியாயமான பணவுரிமைகளை அசட்டை செய்த
மைக்கும் அவர்களைக் குறைகூறமுடியாது.
மேலும், பாராளுமன்றத்தைப் படை கட்டாயப்படுத்தியமை சரி யென்று காட்டக்கூடுமானலும், அது யாப்புக்களமைந்த ஆட்சியின் அழிவுக்குக் கட்டாயமான காரணமாகும்; அன்றியும், குருெம்வெ வின் சர்வாதிகாரத்துக்குப் படிப்படியாக வழிகோலியதுமாகும். அவன், இரு சபைகளுக்கும் போர்வீரர் செய்யவேண்டிய கடமை யைக் கவனித்தலில் நெடுங்காலமாக ஈடுபட்டிருந்தான். மேலும், அவன் மிகப் பிந்திய காலமான 1648 ஆம் ஆண்டு ஆடித் திங்களில் அவர்களுக்குக் கூறியது வருமாறு: "நாங்களும் அவர்களும் பலவந்த மில்லாது பெறுவது பலவந்தத்தாற் பெறுவதிலும் மும்மடங்கு கூடச் சிறந்ததாகும்; மேலும், அங்ங்ணம் பெறுவதே உண்மையாக, எம்முடையதும் எமது சந்ததியாருடையதுமாகும். நீங்கள் பலவந் தமான வழியிற் பெறுவதெதையும் நான் ஒரு பொருளாக மதி யேன். இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற செயல்வீரன் ஒருவன் கூறிய இவ்வெச்சரிக்கை அவன் தன் வாழ்க்கையில் மேலும் நிகழ விருந்த எல்லாவற்றையும் பற்றிய ஒரு துன்பமான குறிப்பாகும்.
பாராளுமன்றத்துக்கும் படைக்குமிடையே நிகழ்ந்த சண்டை யானது (இது பாராளுமன்றத்தாலேயே அாண்டப்பட்டது) அரச சமநிலையைச் சிறைப்பட்டுள்ள அரசர் கையிலிட்டது. இரு கட்சி

இரண்டாம் போர் ; சிரச்சேதம்
களும் அவனுக்குத் தம் புத்திமதிகளைக் கூறின; அவனும், அவற்றில்
ஒன்ருேடோ, மற்றதோடோ சேர்ந்து கொண்டு நாட்டை ஒருவேளை
ஒழுங்குபடுத்தியிருத்தல் கூடும். ஆனல், அவனுடைய பண்புகளும், குறைகளும் அதனைச் செய்ய முடியாததாக்கின. முடியரசுக்கும் அதன் தொடரான திருச்சபைக் குருபரிபாலனத்துக்குமுரிய நிய மத்தோடு அவன் கொண்ட உறுதியான சார்பினல் படையோடோ பாராளுமன்றத்தோடோ அவன் இணங்க முடியாது போயிற்று. மேலும், குருபரிபாலனத்துக்காக ஒருவர் செய்யக்கூடிய மிக மோச மான எதையும் அவன் தேவையானல், தானே சகித்துக்கொள்ளத் தயாராயிருந்தான். மேலும், அவன் நேர்மையான இணக்கத்தை யடையவும், அதன்படி ஒரே நிலையாக நிற்கவும், மனேநிலையளவில் திறமையற்றவணுவன். அவனுடைய பண்பற்ற குணமானது, இரு கட்சிகளோடும் பொய்யான சமாதானப் பேச்சினுல் அதிகாரத்தை மீட்டும் பெறுதற்கான உபாயத்தை நாட அவனைத் தூண்டியது. அச் செயல் இருதிறத்தாரோடு பகையை உண்டாக்கக் கூடியதாகும். வெற்றியடைந்துள்ள பகைவரோடு, அவரை வஞ்சிக்கும் நம்பிக்கை கொண்டு தொடர்புகொள்ளல் எஞ்ஞான்றும் அபாயமானதாகும்.
என்ருலும், அவனுடைய மரணதண்டனை எவ்வளவுக்கு அவனின்
குறிக்கோள்களுக்கு அழிவையுண்டாக்கியதோ, அவ்வளவுக்கு அவ னுடைய பகைவரின் குறிக்கோள்களுக்கும் அழிவையுண்டாக்கியது.
அவனுடைய மகனின் காலத்தில் பன்னிரண்டாண்டுகளுக்குப்பின்,
அவனுடைய திட்டம் வெற்றியடைந்துள்ளது; ஏனெனில், அவ
னுடைய நடைமுறை துரிதப்படுத்திவிட, அவனின் இறப்பு
சுயேச்சையாளருக்கும் படைக்கும் மாருய்ப் பிர்ெசுபித்தீரியர் அரச கட்சியினரோடு கொண்ட நேச உடன்படிக்கையை இணைத்துவிட்ட தாதலினென்க. அவ்வுடன்படிக்கையின் முதற் பருவம், இரண்டாம் உள்நாட்டுப் போருக்கும் பிறகித்தனில் குருெம்வெல் கொண்ட வெற்றிக்கும், அதனுல் சாள்சின் மரணதண்டனைக்கும் வழிகாட்டி யது. கடைசி விளைவு அவர்தம் மகனின் மீட்சியாகும். அப்போது, பிரெசு பித்திரியர் அவன்தன் குருவாட்சிக்குரிய நேயர்களின் எடுப் பார் கைப்பிள்ளைகளாயும் அவர்களால் ஏமாற்றப்பட்டவர்களாயு மிருந்தனர். முடியும், பாராளுமன்றமும், குருபரிபாலனமும் ஒன்முக மீட்டமைக்கப்பட்டன; ஆனல், பத்துப் பன்னிரண்டாண்டுகளாக மதக்கட்சிகளைக் காத்தும், வளர்த்தும் வந்த குருெம்வெலினதும் படையினதும் முயற்சியின் நிமித்தமாக, இணங்காமைக்குரிய அளப் மையாளர் சமயத்தின் எதிர்காலம், மதக்கட்சிகளிற்றங்கியிருந்ததே பன்றிப் பிரெசு பித்தீரியர் வைதிகத்திலன்றென்க.
1648.
7.

Page 46
72
சன. 30,
1649.
மக்கள் மனப்பாங்கு
அரசனின் நீதி விசாரணையும் அவனின் மரணதண்டனையும் நடந்த காலத்தில், அவன் சார்பாக மக்கள் மனத்தில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது காலப்போக்கில் மிகப் பெரிதாக விரிவடைந்தது. அதற்கு முக்கிய காரணமானது அரசனின் பகை வர் மீறிக்கொண்டிருந்த சட்டங்களையும் அவர்கள் அழித்துக்கொண் டிருந்த பழைய நிலையங்களையும் அரசன் ஆதரிப்பவனுயிருந்து துன்பப்பட்டதேயாகும். எவ்வித படாடோபமுமின்றித் தன்னி டத்தே இயல்பாக அமைந்திருந்த பெருமையோடு தன் பாகத்தை நடிக்க அரச நடிகனின் தோற்றம் மக்களின் மனித உணர்ச்சி களை வெகுவாகத் அாண்டவல்லதாயிருந்தது ஒருபுறமிருக்க, இயல் பாகவே பழமைப் பற்றுள்ள ஆங்கில மக்களின் மனமும் இந் நிகழ்ச்சிகளினல் பெரிதும் புண்படுத்தப்பட்டது. தமது வாழ்க்கை தமது வரலாற்றிற்கு முற்றிலும் புதிய திசைகளில் இட்டுச் செல் லப்படுவதாக ஆங்கிலேய மக்கள் உணர்ந்தனர். அது, அவர்கள் சிறிதும் எதிர்பாராதவோர் புதிய போக்காகும். இந்தக் குடியரசு வாதம் எத்தகையது? உண்மையில், அது போதனை செய்யும் உத வித் தளபதிகளின் ஆட்சிபோலக் காணப்பட்டது. ஆயினும், விடய மறியாதவரும் கலக்கமுற்றவருமான ஆங்கில மக்களின் பெய சால், படையினுதவியால் அதிகாரத்தைக் கைப்பற்றியோரும், குறிப்பாக அவர்களிற் குருெம்வெலும் வருங்காலத்திற் பலவாண்டு களுக்கு ஆட்சி செய்யும் துணிவும் ஒப்பிலாத் திறமையுமுடையரா யிருந்தனர். அவர்கள் முற்முக முடியாத நிலைமைபொன்றிலிருந்து இழிவற்ற யாதோவொன்றை ஆக்கினர். அது பெரிய பிரித்தானியா வினதும் அதன் பேரரசினதும் வருங்கால வளர்ச்சிக்கும் முக்கிய மான சிலவகைகளில் LSö5 பயனுடையதாயிற்று.
அரசர்க்கும், பாராளுமன்றத்திற்கும், படைக்கும் உண்டான முக்கோணப் போட்டியில் தீர்ப்பான காரணியாயிருந்தவன் ஒலிவர் குருெம்வெல்லாவன். முற்பட்ட காலமான 1647 ஆம் ஆண்டில் அவன் பாராளுமன்றத்தில் பின்னிரை உறுப்பினனுயும், பெயரள வில் முதன்மையான படைத்தலைவனயும் இருந்தபோதும் தனது குணவலிமையால் அப்பொழுதும் செயலளவில் அவனே மக்களில் முதன்மையுடையவனுயிருந்தான்.
அரசர்க்கும், பாராளுமன்றத்தினருக்கும், படையினருக்கும் தனித்தனிக் கொள்கையுண்டு. அது காரணமாக, அவர்கள் ஒரு மனப்படுதல் முடியாத காரியமாயிற்று. தலைமையான ஒரு சந்தர்ப்ப வாதியாகிய குருெம்வெல், தாம் எங்குச் செல்கின்றரென்பதை முடிவுசெய்யாத ஒருவர் செல்லும் அளவு அாரத்துக்குத் தாம் செல்லுமிடத்தை அறிந்து செல்வோர் செல்வதில்லை!" என்று ஒரு முறை கூறினல் நியாயத்தைக் கேட்டு நடத்தற்கு அவர்கள் சித்த

குருெம்வெலது குணநலம்
முடையாாயிருந்திருந்தால், அவன் பத்துப் பன்னிரண்டு சாத்திய மான வழிகளை அவர்களுக்கு இலகுவாய் அமைத்திருக்கக்கூடும். எவரேனும் விவரித்துக் கூறிய மிகச் சிறந்த வழி, குருெம்வெலும் அயேட்டனும் சாள்சுக்குக் கூறிய யோசனைகளேயெனலாம்'. அவை,
வரம்பிலாப் பொறுமைக் குணம், வழிபாட்டு நூலைக் கோவிலில் விரும்பியோர் உபயோகித்தல், அடக்குதற்கு அதிகாரமற்ற விசுப்பு
மார், கவலியரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தலைத் தடுத்தல்
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டனவாகும். ஆனல், அச
சன் இணக்கப் பேச்சைப் பரிகாசம் பண்ணிக்கொண்டு மாத்திரம் இருந்தான். மேலும் படையோ, பாராளுமன்றமோ வெற்றிகொள் ளப் பட்டோரை மிகத் தாராளமாக நடத்தும் முறையைப்பற்றி எவ்வித எண்ணமும் கொண்டிலது. குருெம்வெலும் அயேட்டனும் தமக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்தமான கருத்துக்களைத் தழுவி நின்றனர். ஆனல், ஒன்றில் தாம் படையொடு செல்லவேண்டும், அன்றேல் மாள வேண்டுமென்று ஈண்டுக் கண்டனர். மக்களிடத்தே திடீரென்று ஏற்படும் மனமாற்றங்களில் ஒன்றினைக் குருெம்வெல் அனுபவித்தான். அதனேடு கழிவிரக்கமும் இறைவணக்கமும் அவ னிடத்தேயுண்டாயின. அவை அங்ஙனம் தக்க நேரத்தினுண்டான மையால் அவனுடைய பகைவர் அவற்றை வெளிவேடமென்று தவருகக் குறிப்பிட்டனர்.
ஒலிவரின் திகைப்பளிக்கும் ஆற்றலை அறிந்துகொள்ள வேண்டி யது அவனுடைய நிலையற்ற எண்ணங்களிலிருந்தன்று; ஆனல், அவனின் உறுதியான குணத்திலிருந்தேயாகுமென்க. அந்தந்த நேரத்துக்குரிய பிரச்சினைக்கு ஒரு செயல்முறை பற்றிய வழியை, என்ன செலவானுலுஞ்சரி, காண்டற்கு வேண்டிய அவனுடைய இயல்பூக்கம் அவனின் மிதமான போக்குக்கும் பலவந்தத்தில் அவன் கொண்ட வெறுப்பிற்கும் பெரும்பாலும் எதிரிடையாயமைந்துள்
ளது. புரட்சிக்காலங்களில் பெரும்பாலும் நடப்பதுபோல, உடன்
படிக்கை பிழைத்தால், அப்போது அவன், எத்துணை விருப்பமில்லா
திருந்தபோதிலும், குறுக்கு வழியில் சிக்கல்களைத் தீர்த்து வைப்
பான்; ஏனெனில், நாட்டில் அரசாட்சி நடைபெறவேண்டுமாதலி னென்க. அன்றியும் பகுத்தறிவு அவனுடைய மனப்பாங்கின் முக்கிய பண்பாயமைந்தபோதிலும், அது மனேநிலைக்குரிய உற்சாகச் குழ்நிலையிற் பயன் விளைப்பதாயிற்று. அதனல், கிழமைக் கணக்கில் ஆழ்ந்து சிந்தித்த பின்னர், ஒருமுறை தீர்மானஞ் செய்த தும் அவனுக்கு ஐயமோ, அச்சமோ இல்லாது போயிற்று; ஏனெ னில், அவனுடைய கடைசித் தீர்ப்பு ஈற்றில் வெளிப்பட்டபோது,
73
செத். 1647.
அது கடவுளின் அருட்சிந்தையாகவே அவனுக்கு எஞ்ஞான்றுந்
தோன்றிற்முதலினென்க. அடுத்து நிகழ்ந்த போர்கள் ஒவ்வொன்றி

Page 47
4.
குடியரசும் குறெம்வெலும்
அலும் அவன் அடைந்த வெற்றிகளின் பொழுதும் கடவுள் பேசினர். குருெம்வெலின் மிகப் புதிய கருத்துக்கள் அவனை எவ்விடத்துக்கு வேண்டுமானுலும் செல்லத் தாண்டின. அதனையும் கடவுள் காட்டி யுள்ளார். ஆகையினுல், அரசரோடு ஒத்துப்போதற்கு ஒரு வழியைக் காண்டற்குத் தாம் செய்த முயற்சிகள் யாவும் பயனிலவாயின வென்று ஈற்றில் அறிந்தபோது, அவனும் “சாள்சு சுதுவட்டு எனும் மனிதன்” பால் சேனை கொண்டிருந்த வெறிபிடித்த மனப்போக்கின் வயப்பட்டான். இங்கிலாந்து சிறிது காலத்திற்குப் போர்வீரர் மூல மாக ஆளப்படல்வேண்டும் அன்றேல் ஆட்சியறவுக்குள்ளாக வேண்டுமென்றும் அவன் அறிந்தபோது, குடியரசிற் கொண்ட நம் பிக்கை அவன் உள்ளத்தில் சுடர் விடலாயிற்று. பிறெசுற்றன் வெற் றிக்குப் பின்னர் திரும்பிய வீரரும் அத்தகைய நம்பிக்கையுடைய ராயிருந்தனர்; எனினும் அவ்வமையத்திற்குத் தேவையானது குடி யாசே என அவன் முற்முக நம்பினுன் என்று கூறமுடியாது. பத் தாண்டுகளுக்குப் பின், யாப்புக் கமைந்த அரச பதத்துக்குத் தன் மனத்தைத் திருப்பினன். இம்முறை தானே அப்பதவியைப் பெற வெண்ணினன். அதனல், பழைமையானதும் நாட்டுக்குரியதுமான சட்டரீதியான ஆட்சியை விரும்பிய அக்காலத்துக்குரிய எண்ணப் போக்கைத் தானும் ஏற்றுக்கொண்டு படையாட்சியை நீக்குவதே அவனது எண்ணமாயிருந்தது. வலிய குணம்படைத்தவனன அவன் எச்சூழ்நிலையையும் சமாளித்து வெற்றிபெறும் இயல்புடையவன். சந்தர்ப்ப நிலையொடு அவன் நடாத்திய மாபெரும் போராட்டத்தை அவனுடைய மரணம் நிறுத்தியிராவிட்டால், ஒன்றன்பின் ஒன்முக வருகிற இன்னும் எத்தனை நெருக்கடிகளை அவன் சமாளித்திருப் ? זr68חj_ן
அந்நேரத்திருந்த உள்ளக் கிளர்ச்சியை உண்டுபண்ணத்தக்க குழப்பத்தின் துரண்டுதலினுலும், உள்நாட்டுப் போர்ப்புரட்சிகளி ஞல் மிகுந்த திறமையுடையோர் அடையத்தக்க பல தொழில்களி ணு,லும், மொட்டைத்தலையர் கட்சியில் தன்னை நிலையிலுயர்த்திய வனும், அறிவாற்றலுள்ளவனும், பொதுநன்மை கருதியவனுமான வன் குமுெம்வெல் ஒருவன் மாத்திரமல்லன். வானே, பிளேக்கு, அயேட்டன், மொங்கு ஆகியோர்க்கும், துண்டுப்பிரசுரம் எழுது
வைதிகர்மேற் பாடப்பட்ட புகழ்பெற்ற வசைக்கவியான கூடிபிருசு என் னும் நூலின் ஆசிரியனன பற்றிலர் என்பவன் குருெம்வெலுக்குப் பொருத்த மானவையாய்த் தந்துள்ள நான்கடிகள் வருமாறு :
" புது-ஒளியின் அருளாலே மக்களெதைச் சொன்னலும் அதுசரியல்லால் பிழையல்ல என்பதுதான் நிச்சயமே அதுவேதான் ஆன்மாவின் ஒளியற்ற விளக்காகும் அதுவுடையார் தாமல்லாது வேறெவருங் காணுரே."

குடியரசின் தலைவர்கள்
பவரும் செயலாளருமான மிவிற்றணுக்குமுரிய காலம், பொது நல வாசு என்னும் பெயரினல் பெருமைப்படுத்தற்குத் தகுதி வாய்ந்த புகழ் பெற்ற பொதுப் பணியாளர்க்குரிய காலமாகும். படை அலு வலரும், பிறைற்றுவின் வெளியேற்றத்திற்குப் பின்னர் பாராளு மன்றத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த சிறுபான்மை உறுப்பினருமே
75
திசெ, 1848.
அரசனின் கொலைக்குக் காரணமாயிருந்த அரசாங்கத்தினராவர்.
இவர்கள் துணையற்றவரோ வெறியரோ அல்லர். 1649 ஆம் ஆண்டு சனவரித் திங்கட் கடைசி நாளில் அவர்கள் இருந்த நிலைமை, நிதான புத்தியோடு கூடிய வீரத்தில் அவர்கள் பொது மக்களுக்கு மேற் பட்டவராயிருந்திராவிட்டால், அவர்தம் கேட்டினையும், பிரித்தானிய பேரரசின் குலைவையும் விரைவில் விளைத்திருக்கவேண்டும். இவர்கள் பால் மிகவும் விரோதம் பூண்டிருப்பினும், தன்னளவில் முரண்பாடு களையுடையதாயிருந்த பொதுமக்கள் கருத்து, இவர்களது குடியாட் சிக் கொள்கைகளுக்குப் பொருத்தமான, ஆனல் அதே நேரத்தில் இவர்களது பொறுப்புணர்ச்சிக்கும் தற்காப்புக்கும் பாதகமான கட்டுப்பாடற்ற தேர்தல் வேண்டுமென இவர்கள் வேண்டுகோள் செய்யவொண்ணுது தடுத்தது. அரசாங்கத்தவர் எங்கு பார்த்தா லும் அவர் தம் எதிர்காலம் கடைசிவரையும் மங்கலாகவே தென் பட்டது. கவலியரும், பிரெசுபித்தீரியரும் மட்டுமன்றி அந்நாளில் தம்மைப் பின் பற்றும் பொதுமக்கள் அனேகரையுடைய யோன் இலில்வேண் முதலிய விடாப்பிடியான குடியாட்சிக் கொள்கை யுடையோரும் இவ்வரசாங்கத்திற்கு ஆளும் உரிமையுளதென்பதை மறுத்தனர். கடற்படை, கலகத்தால் ஆற்றல் குன்றியது. கொத்து லாந்தும் அயலாந்தும் இளைய சாள்சுக்காகப் போர் செய்ய ஆயத்த மாயிருந்தன; வேசீனியாவும் பாபடோசுவும் அபகாரிகளின் அதி காரத்தை ஏற்க மறுத்தன; மசச்சூசெற்று இணிக்கமாக விருந்த போதிலும், இங்கிலாந்தில் தொல்லைகள் தொடங்கிய காலந்தொட்டு, அது ஒரு சுதந்திரநாடுபோல நடித்துக் கொண்டது. ஒல்லாந்தும், பிரான்சும், இசுப்பெயினும், ஐரோப்பாக் கண்டத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் யாவும், மன்னரைக் கொன்றவரைப் பறையராக வும், இங்கிலாந்தை மாண்பிழந்தவொரு நாடாகவும் மதித்தன. ஆயினும், நான்காண்டுகளில் அரசாங்கசபை, ஒலிவரின் காப்பாளர் அரசாகிய புரட்சிக்குரிய ஆட்சியின் கடைசி நிலையை நாடுதற்கு முன், குருெம்வெலின் வாளினதும் பிளேக்குவின் கலங்களினதும் உதவிகொண்டு, இவ்விடர்களை வெற்றி கொண்டுவிட்டது.
குடியரசு அரசாங்கம் பிரித்தானியப் பேரரசை மீட்டமைக்குங் கால் ஆற்றிய முதற்செயல் அயலாந்தைக் கீழ்ப்படியச் செய்தமை யாகும். அது குருெம்வெலுக்கும் அவர்தம் சேனைக்கும் மிக இலகு வான செயலாயிருந்தது; ஏனெனில், ஆங்குள்ள புரட்டெசுத்தாந்

Page 48
ሽ #;
li-'-l
அயலாந்திற் குருெம்வெல்
தர், தம் அசவியற் பக்தி எதுவாயிருந்தபோதிலும், தம் சாதிக்கும் சமயத்துக்கும் வெற்றி விசராக விளங்கிய அவரைச் சார்ந்திருக்க விரும்பினராகவினென்க. அதேவேளேயில் அயலாந்தரின் எதிர்ப்பு அரச கட்சிக்குரியதWயில்லாது குலம்பற்றியதும், கத்தோலிக்கருக் குரியதுமாயிற்று. துரோகெதர வீழ்ந்தபின்னர் உவெச்சுபோட்டு வும், குளொலுேம் ழேக்கில் எதிர்ப்பை அடக்கிவிட்டன. அதன்
பின் குருெம்வெல், கெவிக்கிய மக்களுக்கும் ஆங்கிலேயருக்குமுரிய
அக்கிமப் போரினே மேற்கில் அதன் துக்கமான முடிவுவரை நடத் தும்படி ஆயேட்டனே விட்டுவிட்டுக் தான் விடு சென்றனன்.
IIIIIII
பெருமாலும் புட்டெசுந்தாந்த ஈசுகாதாடிாயபுடிை ற்ாவட்டங்கள் 陕
ஆரோப்யேலிங் ஆட்சியின் காத கனடாம்டி
ஆாாருங்கோ நதுக்கப்பட்ய நிங்
f
ఫో
测
ऎे “බ`ද්ද්ඨි”
d
18 டம்பர் பக்
* g్ళ
".
படம் I.-17 ஆம் நூற்றண்டில் ஆயவிரிந்து.
அயலாத்திற் காணி நிர்ணயம், பிரித்தானிய தீவுகளுள் குருெம் வென் செய்த ஆக்க aேஃப்களுள் மிகவிழித்த LITäLory): ஆணுல் ஏறக்குறைய அவன் நிஃநாட்டிய அதே அமைப்போடு கணிசமான காலத்திற்கு அவனுக்குப் பிறகுமிருந்தது அதுவே. அது அயலார் தசான உரிமையாளரிடமிருந்து பிரித்தானிய உரிமையாளருக்கு நிலங்களே மாற்றும் வேஃபைப் பூர்த்தி செய்தது. அவ்வேலே கியூடர்
 
 
 
 
 
 
 
 

காணி நிருணயம்
காலத்திற் ருெடங்கி கதுவட்டாசசின் காலத்திலே அதுரிதப்படுத்திப் பட்டதாகும். நோக்கம் மூன்று பிரிவினேயுடையதாகும் முகலா வது, போர் புரிந்த விார்க்கும், வெற்றிக்கு வேண்டிய பனமனித்த முதலானிகட்கும், சீசரினதும் வெற்றிவிசனுய டிவிலியத்தினதும் முதிய விார்க்கும் கைம்மாறு செய்தி விதமாக, அயல்ாத்தில் நிலக் தைக் கொடுத்தலாகும் இரண்டாவது, 1841 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலகத்தைப் போன்ற வேறென்றுக்குமாமூக சேனே அணி குஸ்க்கப்பட்ட பின்னரும், ஆங்கிலேயர்க்கு அயலாந்திலுள்ள அதி காரத்தை உறுதி செய்தலாகும் : கடைசியாக, கத்தோலிக்க சம யத்தை வேரொடழித்தலாகும். முதலிரண்டு நோக்கங்களும் சித்தி பெய்கின.
சானலுக்கு மேற்புறத்தேயுள்ள அயலிாந்து அதன் : rf?a3)La யாளர்க்கு ஒதுக்கிவைக்கப்பட்டது. அத்தீவின் மிகுதிப்பாகம் புரட் டெசுத்தாந்த நிலக்காரர்க்குச் சென்றது. கெவித்திய மக்கள் முழுக் தொகையினரையும் சானலுக் கப்பால் துரத்தவேண்டுமென்று மெண்ணம் குருெம்வெலது மனத்திலுள்னதாகும் ; ஆணுல் அது நிறைவேற்றப்பட்டிலது. நிலத்துக்குரியவர் அன்னியரான நிலக் காார்க்கு அடிமைத் தொழில்கன் புரிவோசாய்க் கம் வினேகிளிங் களிற் பெரும்பாலும் தங்கியிருந்தனர். அந்நிலக்கரசர், ஆங்கில வாசக் குடிமையிற் செய்யும் வழக்கமான திருக்கங்கள், புதுப்பிக் தங்கள் ஆகியவற்றைச் செய்யக் கடமைப்பட்டிாாமல், அயலாக் தின் வழக்கத்திற்கொப்ப, அவர்களிடமிருந்து கொடிய குத்தகை வாங்கினர்.
அல்சுதரில் மாத்திரம் வாரக்குடிக்குச் சிறிதளவு காப்புண்டு. அல்கதரில் மாத்திரம் குடிமக்கள் மிகுதியாய்ப் பிரித்தானியாா யும் புரட்டெசுத்தாந்தராயுமிருந்தனர். அதற்குக் காரணம், முதலாம் சேமிவின் குடியேற்றக் காலந்தொட்டு விடாமுயற்சியுள்ள கொத்து லாந்தர் அண்மையான கடற்கரையோச நிலத்திலிருந்து குடியேறிய தேயாகும். அயலாந்தில் வேருேர் இடத்தில் நிலக்கிழாராகக் குடி யேற்றப்பட்டவரும், குருெம்வெலின் தனிப்பட்ட போர் வீாரு மானுேர் கம் சமயத்தையும் நாட்டுப்பற்றையும் காப்பாற்றத் தவறி னர்; ஏனெனில், அவர்கள் மிக விரிவாகப் பரந்திருந்தனாாத வினுலும், புரட்டெசுத்தாந்தப் பெருமக்களிலிருந்து சமூகக் கடை எனினுற் பிரிக்கப்பட்டனராதலினுலுமென்க, வேளாளரிற் சிலர் 4ம் வினேநிலங்களேக் கைவிட்டனர்; அதேசமயத்தில் ஏனேயோர் ஒனர் மக்களோடு கலப்பு மணஞ்செய்து கொண்டனர். அதன் பயனுக அவர்தம் சந்தகியார் கெலிக்கிய மக்களினதும், கத்தோலிக்கரின தும் எதிர்ப்பு, மேலும் உறுதியடை&ம்படி ஆங்கிலேயர்க்கும் இரும் புப் படையினர்க்குமுரிய பண்புகளேப் பெற்றனர். கிளாட்சனின்
T

Page 49
78
ଗଣ୍ଡ;$. 8, 1650. செத், 3, 1651.
இடன்பாரும் உவோசெத்தரும்
நிலச் சட்டத்தோடும் பாணலின் நிலவுரிமை இயக்கத்தோடும் இறுதிநிலை தொடங்கும் வரையும், நிலக்கிழார் தம் உரிமைகளையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தபோதிலும் தனித்தவராயினர்.
ஒலிவர் விட்டுச் சென்றபோதும், அதன்பின் நீண்டகாலமாகவும் அயலாந்தில் துன்புறுத்தப்பட்ட குருமார் மாத்திரமே மக்களின் தலைவராயிருந்தனர்; ஏனெனில், ஆங்கிலேயர் ஊர்ப்பிறந்த மேன் மக்கள் வகுப்பை அழித்துவிட்டனாாதலினென்க. குருெம்வெலின் அமைப்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகள்வரை அயலாந்தரை ஐரோப் பாவில் குருமார் வழிகாட்டலுக்குரிய குடிமக்களாக்கியது.
கொத்துலாந்தைப் பொதுநலவாசுக்குக் கீழ்ப்படிய வைப்பதே குருெம்வெலின் அடுத்த கருமமாகும். துவித்துவாற்றுக்கு வடக்கே சமயவாதிகட்குரிய அல்லது குடியரசுக்குரிய கட்சி கிடையாது; அன்றியும் சரியாகக் கூறின் பாராளுமன்றக் கட்சியுமில்லை. இங்கி லாந்தின் அரசியலுக்குரிய பிரெசுபித்தீரிய கொள்கைக்குப் பெரி தும் வேறுபட்டதும், கடுமையானதுமான திருச்சபைக்குரிய பிரெசு பித்தீரியர் கொள்கைக்கும், கவலியர் நலனுக்குமுரியதாக நாடு இரண்டாகப் பிரிந்துள்ளது. கொத்துலாந்தில் கவலியர் நலன் உலோட்டுவுக்குச் சார்பானதன்று ; ஆனல், திருச்சபையானது அரசை ஆண்டுவந்ததை எதிர்த்து விழுமியோரும் ஏனையோருஞ் செய்த கலகத்துக்கு ஆதரவாயிருந்தது. பிரெசு பித்தீரியரும் கவலி யரும் ஒருவரையொருவர் வெறுத்தனர்; ஏனெனில், மொந்துருே சின் போர்களிற் சொரிந்த குருதி அவர்களிடையே ஆறுபோற் பெருகிப் பாய்ந்ததாதலினென்க. ஆணுல், இரண்டாம் சாள்சுக்காக அவர்கள் ஒரு பொய்யான ஒப்பந்தத்தைத் தமக்குள் ஒழுங்கு படுத்திக் கொண்டு படைவலிமூலம் அவனை இங்கிலாந்தில் மீட்டும் அரசு கட்டிலேற்றத் திட்டமிட்டுக் கொண்டனர். அவர்தம் திட்டங் கள் யாவும் இடன்பாரிலும் உவோசெத்தரிலும் நடந்த சண்டை களாற் பாழாயின. பிரித்தானிய நிலத்தில் குருெம்வெலின் சேனை பெற்ற வெற்றிகளுள் அச்சண்டைகளாலேற்பட்டனவே கடைசி யானவையும், போர் பற்றிப் பேசுமிடத்து மிகப் புகழ்பெற்றவையு மாகும- − வீரர் தம்திறனுல் இடன்பாரின்மேற் சென்றும் போர்வென்முர் செவேண் நதியினைத் தாண்டியும்.
* கொத்துலாந்தரும் கவலியரும் இங்கிலாந்தைத் திடீரெனத் தாக்கி னர். அச்செயல் உவோசெத்தரில் முடிவெய்தியது. அவர்கள் அவ்வாறு செய்த போது ஆங்கிலேயர் அவர்களைச் சேராதது மட்டுமன்றி, இராணுவம் அவர்களை அடக்குதற்கு மிக விரைவாக முன்வந்தது கவனிக்கத் தக்கதாகும். அரசரைக் கொன்றவர் புகழற்றவராயிருந்தால் அவர்தம் பகைவரும், முக்கியமாகக் கொத்துலாந்தரும், அவ்வாறே இருந்தனர்.

கொத்துலாந்தில் ஒலிவர் ஆட்சி
ஒலிவரின் ஆட்சி துவித்துவாற்றுக்கப்பால் இருந்ததற்கு ஒரே
யொரு அத்தாட்சி, ஆங்கிலப் படை ஆங்கிருந்ததேயாகும். ஆகை யினல், அவன் செய்த ஒழுங்குகள் நிலைத்திருக்க இயலாதன வாயின. ஆனல், படையாட்சி நிலவியகாலம் வரையும் அது, கொத்து லாந்தின் நன்மைக்காக ஒலிவர் தன் தெளிந்த பூட்கையை எதிர்ப் புக்குவிட்டுக்கொடாது நடத்துதற்கு உதவியளித்தது. கொத்து லாந்தின் அகத்தேயுள்ள பாம்பரைப் பகை அதனை அது பலமுறை எதிர்த்து நின்ற அதன் பெரிய அயல்நாட்டுக்கு ஈற்றில் கீழ்ப்படுத் தியது. அவன் தீவு முழுதையும் ஒரு தனித்த பொதுநலவாசாகச் சேர்த்துள்ளான். மேலும், கொத்துலாந்தர் காப்பாளர் அரசின் கீழ் நிலவிய பிரித்தானிய பாராளுமன்றங்கள்ல் உறுப்பினராயிருந்தனர். முதன் முதலாக, கொத்துலாந்து இங்கிலாந்தோடும், கடலுக் கப்பாற்பட்ட அதன் சந்தைகளோடும் கட்டுப்பாடற்ற வியாபாரத் தில் ஏற்படக்கூடிய நன்மைகளை அனுபவித்தது. முன்னுெருபோதும் அதன் வரலாற்றில் இல்லாத முறையில் ஒழுங்கு நிலைநாட்டப் பட்டது; ஒருபாற்கோடாது நீதி செலுத்தப்பட்டது. மலைப்பிர தேசங்கள்தாமும் படைக்காவல் பெற்று, பல இனமக்களும் கட்டுப் படுத்தப்பட்டனர். ஆட்சி நல்லதாயிருந்தது; ஆனல், இங்கிலாந்திற் போல அது செலவு மிகுந்ததொன்முயிற்று. மேலும், வரிகள் தாங்க முடியாதனவாயிருந்தன. அதனல், மக்கள் அவற்றை அதிகமாக வெறுத்தனர்.
கொத்துலாந்தில் பிரெசுபித்தீரியர் திருச்சபையின் பெருந்தகை மையும், திறமையும் காப்பாற்றப்பட்டன; அதே சமயத்தில் பிற ரைத் துன்புறுத்தாமலும் அரசின்மேல் அதிகாரஞ் செலுத்தா மலும் அச்சபை தடுக்கப்பட்டது. "சீர்திருத்தத்தின் பின் இக்குறு கிய காலத்தில், கிறித்துவுக்காக மதமாற்றப்பட்டவர்களின் தொகை மிகப் பெரிதாகும். ஏனைய காலங்களில் இதைப்போல மும்மடங்கு நீண்ட காலத்திற்ருனும் இத்துணைப் பெருந்தொகையின்ாை மத மாற்றம் செய்வது அரிதாயிருந்திருக்கும் என்று நான் மெய்யாக நம்புகிறேன் ? என்று கொத்துலாந்துத் திருச்சபையின் பிரெசு பித்தீரியர் ஒருவர் காப்பாளர் அரசைப் பற்றிக் குறித்துள்ளார். ஆங்கிலப் போர்வீசர் இந்நாட்டைப் பணிய வைத்தவரேயெனினும் தமது கடமை எனக் கொண்டு அற்பச் செயல்களில் ஈடுபடாது நடந்துகொண்டனர். ஆயினும், தம் கொள்கைகளை ஏற்காத இடங் களில் திருமுழுக்காளர் கோவில்களை நிறுவ முயன்றதையும் அல்லது வழிபாட்டு நேரத்தில், 'ஆழ்ந்த கருத்துடையோர்க்கு' வெறுப்புண்டாக்கத்தக்கதாகவும் கோவிற் சபையிலுள்ள இளைஞர்
தகாத நேரத்தில் நகைக்கும்படியும் கழிவிரக்கங்கோருதற்குரிய
முக்காலிகளில் இருந்தவாறு வழிபட முயன்றவேளைகளையும்
(11/62) 5981 13ـسمــس
79

Page 50
80
ஒன்றுபட்ட பிரித்தானியா
தவிர்த்து நோக்கின் என நோங்களில் குற்றங் கூறமுடியாதபடி நடந்து கொண்டனர் எனலாம்.
1660 ஆம் ஆண்டில் இரண்டாம் சாள்சின் மீட்சியைக் கொத்து லாந்தர் தம் தேசீய சுதந்திரத்தின் மீட்சியெனப் பாராட்டினர். அது உண்மையில் இங்கிலாந்தோடு கொண்ட கண்டிப்பான ஒற்றுமையினதும் அதனுடன் கட்டுப்பாடற்ற வியாபாரத்தினதும் முடிபாகும்; ஆனல் 1688 ஆம் ஆண்டுப் புரட்சிவரையும் தேசிய சுதந்திரம் உண்மையில் மீட்டுப்பெறப்பட்டிலது. அதுவரையும் கொத்துலாந்தர் தம்முட் கெர்ண்ட நீண்டகாலப் பகைமை ஒன்றன் பின் ஒன்முய் வந்த ஆங்கிலவாசின் திட்டங்களுக்கு அவர்தம் நாட்டை எளிதாக இடமளிக்கச் செய்தது. மேலும், இவ்வந்நிய அரசுகளில் ஒலிவருடைய அரசே முதலாவதும் மிகக் குறைந்த அளவு தீமையுடையதுமாகும்.
ஒலிவர் காப்பாளராகவிருக்கையில் ஒன்று சேர்க்கப்பட்ட பிரித் தானிய தீவுகளைப்பற்றிய தம் இலட்சியத்தைச் சாதித்தார். கொத்து லாந்தும் அயலாந்தும் சட்டம் பொருளாதாரம் எனும் இவற்றல் இங்கிலாந்தோடு இணைக்கப்பட்டன : அவற்றின் பிரதிநிதிகள் உவெசுத்துமினித்தரிலுள்ள பாராளுமன்றத்தில் உறுப்பினரா யிருந்து வந்தனர்; அவற்றின் வணிகர் ஆங்கிலேயரின் சந்தை யில் பொருள்களைத் தடையிலாது வாங்கியும் விற்றும் வருவாரா யினர். ஒலிவர் உயிரோடிருக்கும் வரையும், அயலாந்தில் புரட் டெசுத்தாந்த நலன் இங்கிலாந்தின் நலனில் ஒருபகுதியேயாகு மென்று அது அருமையாக வளர்க்கப்பட்டும் உற்சாகமூட்டப்பட் டும் வந்தது. மீட்சி, பிரித்தானிய தீவுகளின் ஒற்றுமையைக் குலைத்துவிட்டது. மேலும், புரட்டெசுத்தாந்த அயலாந்தரை ஆங்கி லேயரின் வர்த்தகப் பொருமைக்கும், பிரெசு பித்தீரியர் சமயத்தின ரைப் பழிவாங்குதற்கு ஆங்கிலத் திருச்சபை கொண்ட வேட்கைக் கும் பலியாக்கிற்று. அயலாந்தின் துயர்கள் யாவற்றையும் ஒலிவரின் தலைமேற் சுமத்த முடியாது.
ஆங்கிலக் கடலாதிக்கத்தைப் புதுப்பித்ததனுலும், நிலையான ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அதனுற் கடற்படையை நிலை நாட்டியதனுலுமுண்டான கீர்த்தி அரசரைக் கொன்ற அரசாங்கத் துக்கே உரியதாகும். அதனைப் பின் வந்த ஒவ்வோர் அரசும் தன் அரசியற்றேற்றம் எவ்வாறிருந்தபோதும், நேர்மையாகக் காப் பாற்ற முயன்றது. அரசசபையானது உள்நாட்டுப் போர்களில் வெற்றிபெற்ற மக்களை இப்போது கொண்டுள்ளது. அவர்கள் சமூ கத்தின் ஒவ்வொரு வகுப்பிலுமிருந்து அவர்தம் செயலினல் தேர்ந் தெடுக்கப்பட்ட வலிமையுடைய மக்களாவர். அவர்கள் ஒவ்வொரு
சந்தர்ப்பமும் தோன்றும்போது, அதனைப் போர்வீரர்க்குரியனவும்

புதிய கடற்படை
அனுபவத்திலுள்ளனவுமான பழக்கங்களைக் கொண்டு நோக்குமியல் புடைய மக்களாவர். அன்றியும் அவர்கள் பணத்தைத் தேவையான அளவுக்கு வரியினுற் சேகரித்தலில் சுதுவட்டரசர் ஒருபோதும் அனுபவித்திராத நிலைமையிலுமிருந்தனர். கடற்படையின் மூன்றி லொரு பங்கு விளைத்த கலகமும், இளவரசனுன உரூபேட்டு ஆழ மான கடல்களில் தன் மாமனுருக்காகப் பழிவாங்குதற்கு அந்நிய துறைமுகங்களில் நிறுவிய அப்படையின் அமைப்பும், உள்நாட்டுப் பெரும்போர்க்காலத்தில் முன்னெருபோதும் இல்லாத அளவு ஆங் கிலக் கால்வாயில் இலண்டனுக்கும் இங்கிலாந்து முழுதுக்குமுரிய வர்த்தகத்துக்கு இடராயின. புதியவரசுக்குரிய மக்கள் இவ்வபாயத் தைத் தாம் அகற்றல்வேண்டும் அன்றேல் மடியவேண்டுமென்று தெரிந்துகொண்டு, தம் திறமையையும் ஏற்பாடுகள் செய்யும் ஆற்ற
லையும் கடற்படையமைப்பிற் செலுத்தினர். அவர்தம் போர்ப்பயிற்சி,
போர்புரியும் ஆங்கிலக் கடற்படையின் பாம்பரைப் பழக்கத்தைப் பூர்த்தி செய்தற்கு வேண்டியவற்றை மட்டும் கப்பற்படையின் ஒழுங்குமுறையுள்ளும் போர்த் தந்திரத்துள்ளும் புகுத்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியது. அவர்தம் நடவடிக்கைகள் கடற் படையினை இக்காலத்துக்கு ஏற்ற ஒன்முக மாற்றியுள்ளன. மேலும்,
இங்கிலாந்தையும் உலகத்தில் பெரிய கடற்படையாதிக்கமுடைய
நாடாக நிறுவியுள்ளன" என்று யூலியன் கோபெற்று என்பான் குறித்துள்ளான். ஆணுல், இங்கிலாந்துக்கு நல்வாய்ப்புள்ள ஒரு நேரத்தில் உருெபேட்டு பிளேக்கைப் பொதுநலவரசின் கப்பற்படை யினை நடத்த அவர்கள் அழைத்திராவிட்டால், அச்செயலில் வெற்றி யடைந்திருக்க மாட்டார்கள்.
இக்கர்லத்துக் கடற்படை வரலாற்ருளர் கருத்தின்படி, பிளேக்கு என்பான் திரேக்கு நெல்சன் ஆகியோர்க்கிணையாக அவ்வரிசையில் மூன்ரும் இடத்தைப் பெற்றிருக்கிருன், உரூபேட்டு, தூனிசிலுள்ள பாபரிக் கடற்கொள்ளைக்காரர், ஒல்லாந்தர் கடலுக்கனுப்பிய மிகப் பெரிய கப்பற்படையினர், அவர்தம் தலைவர், எம்மை நீண்டகால மாக நிந்தித்த பிரான்சியர், இசுப்பானியராகிய பலவிதப் பகைவ ரோடும் எண்ணிறந்தனவும் வெற்றியுடையனவுமான போர்களைச் செய்தான். அப் போர்களும், கடற்செலவில் எட்டாண்டுகளாக அவ ாது தலைமையில் கடற்படை ஆற்றிய சாதனைகளும் ஒருங்கு சேர்ந்து பிரித்தானிய கடற்படை இலிசபெத்தின் ஆட்சியில் அடைய அவாவுற்றதும், முந்திய சுதுவட்டாராட்சியில் இழந்த தும், பிளேக்குவின் காலத்துக்குப் பின் கணநேரத்துக்குமேல் ஒரு போதும் கைவிடப்படாததுமான இடத்தை அப்படைக்கு அளித் துள்ளன. மீட்சிக்குப்பின் குருெம்வெலின் தரைப்போர்க்கொள்கை, அதன் அரசியற்முெடர்பு காரணத்தால் நிராகரிக்கப்பட்டபொழுது,
8.
648-649.
1649-165.

Page 51
82
பிளேக்கின் சாதனை
கவிலியர்க் கட்சியினரும் தோரிக் கட்சியினரும் தம் கடற்கொள் கையில் பிளேக்கு நிறுவிய கொள்கையை ஏற்றுக்கொண்புமை, இக் காலத்துப் பிரித்தானிய வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்ருகும்.
கிரேக்கு, நெல்சன் என்போரைப் போன்ற அள்வுக்குக் கப்ப லோட்டும் வாழ்வுக்கெனப் பிளேக்கு பயிற்றப்பட்டவனல்லன். பிறிச்சுவாட்டரிலுள்ள செல்வம் நிறைந்த வணிகனுெருவனின் மக னகையால் அவன் பாத்துக் கழிமுகத்திலும் பிறித்தல் கால்வாயி லும் நடந்த கப்பல் வர்த்தகத்தை நன்கறிந்துள்ளான். ஆனல் ஒக்சு போட்டுப் பேராசிரியராவதற்கு முயன்ற அவன் சிறந்தவெர்ரு தூய் மையாளப் போர்விரணுயினன். உள்நாட்டுப் பெரும் போரில் கவலி யர் தென்மேற்குப் பகுதியை அழித்துச் சென்றபோது, முதலில் இலைம் இறக்கிசுவும், பின்னர் தோண்டனும் விளைத்த வலிமையான தாக்குதல்களுக்கெதிராகப் பிளேக்கு அமைத்த காவல், போரில் தூய்மையாளரின் உற்சாகத்தைக் காட்டும் மிகச் சிறந்த செயல் களுள் தலைசிறந்து விளங்கிற்று. ஆனல், அவனைச் சமய ஆர்வ முடையோன் என்பதிலும் பார்க்கத் தனது கடமையைச் சிறப் புடன் செய்அவன் எனலே பொருந்தும். அரசனின் மரணதண்டனை நடந்த சில நாட்களுக்குப் பின், கப்பற் படையை நடாத்தி ஆங் கில கடற்படை இழந்த சுதந்திரத்தை அதற்கு மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு அவனை வேண்டியபோது, தன்னை அவ்வாறு அழைத் தமையை வியந்துகொண்டே அதற்கிணங்கினன். அவனை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் கப்பல்களையும் கப்பலோட்டிகளை யும் பற்றி அவனுக்கிருந்த அறிவு, குறைந்த பட்சம், ஏனைய போர் வீரர்களின் அறிவிலும் சிறிதாவது அதிகமாக இருந்தமையே என் பதில் ஐயமில்லே. அந்நேரமுதற்கொண்டு அவன் கடற்போர்களில் வெற்றியீட்டுவதிலே நிகரற்று விளங்கினன்.
உரூபேட்டு ஒரு சிறந்த போர் வீரனும் கப்பலோட்டியுமாயிருந் தும் குருெம்வெலைத் தரையிலும், பிளேக்குவைக் கடலிலும் எதிர்க் கும் அவப்பேற்றைப் பெற்றனன். பிளேக்கு அயலாந்தின் துறை முகங்களில் அவனை முற்றுகையிட்டான் ; போத்துக்கலுக்கும் அத ற்கு வெளியேயும் அவனை விரட்டி, பின் அங்கிருந்து மத்தியதரைக் கடலுக்கும் துரத்தினன். அங்கே கவலியரின் கப்பற்படையிற் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த இச்

Sifத்த ானிய கடலாதிக்கம்
செயல்கள் ஆங்கிலக் கடலாதிக்கம் பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் அரசர்க்கு வியப்பும் திகிலுமுண்டாக்கும் வகை யில் முதன்முதல் மத்தியதரைக் கடலில் திறம்பட ஆற்றப்பட்டன. உரூபேட்டுவைப் பின் தொடர்ந்து பிளேக்கு அங்கு பெற்ற வெற்றி களே ஒலிவர் அறிந்து அவனைச் சிலவாண்டுகளுக்குப் பின் உள் நாட்டுக் க்டலுக்கு மீட்டும் அனுப்பினன். ஆங்கு அவன் எமது வணி காைக் காப்பதற்கு மாத்திரமன்றிக் காப்பாளர் அரசின் விரிவான செயற்றிறனுக்குச் செல்வாக்கைக் கூட்டுதற்கும் அவ்வாறு அனுப் பப்பட்டான். அக்காலமுதல் மத்தியதரைக் கடலில் பிரித்தானிய கடலாதிக்கம் உலக வரலாற்றில் ஒரு முக்கிய காரணியாயிருந்து வருகிறது:
பிளேக்கின் கீழ், போர் புரியும் கடற்படையைப் புதுப்பித்தமை யும், வணிக சமூகத்தோடும், சிறப்பாக, இலண்டனேடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள வகுப்பினர் நாட்டினை ஆண்டமையும், ஒல் லாந்தருடன் மீண்டும் போட்டியைப் புதுக்குவதற்குத் தவிர்க்கமுடி யாத முறையில் தூண்டிவிட்டன. சென்ற ஒரு தலைமுறையாக ஒல் லாந்தின் கப்பலோட்டிகள், வட ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கு முரிய கடல்களிலும், ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்குமுரிய சமுத் திரங்களிலும், பலமுறை போதிய இறுமாப்போடு அதிகாரஞ் செலுத்தி வந்ந்தனர்; அன்றியும் அவர்கள் மீன்பண்ணைகளுள் அனு மதியின்றி நுழைந்தும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலுள்ள அதன் குடியேற்ற நாடுகளிலும் நடந்த வணிகத்தில் தனியுரிமை பெற்றும் வந்தனர். ஆங்கிலேயர் மீண்டும் தமது கப்பற் போக்கு வரத்தைத் தீவிரமாக விருத்தி செய்ய முற்பட்டவர் என்பது 1651 ஆம் ஆண்டுக் கப்பற்போாக்குவரத்துச் சட்டத்தாலும், 1652-4 ஆம் ஆண்டுவரை நடந்த ஒல்லாந்தர் போரினலும் தெளி வாகியது. ஆனல், ஒல்லாந்தரின் கடலாதிக்கத்துக்கு மாருக நடந்த போராட்டத்தின் முடிவு பதினெட்டாம் நூற்ருண்டின் முற்கூறு வரையும் இறுதியாக நிர்ணயிக்கப் பட்டிலது. ஒல்லாந்துக் கெதி ராக நிகழ்ந்த இப்போட்டி தீர்மானமொன்றைத் தொடர்ந்து
1623 ஆம் ஆண்டில் முதலாம் சேமிசு அல்சியேசுவிலுள்ள கடற் கொள்ளைக் காரருக்கு மாருய், மத்தியதரைக் கடலுக்குக் கலங்களை அனுப்பியிருந்தான் ; ஆனல், வெற்றியெதுவும் விளைந்திலது. இங்கிலாந்துக்கு மத்தியதரைக் கடல் மிக முக்கியமானதென்பதை ஒலிவர் தன் மனத்தில் பதித்ததனுல் அவன் சிபுரோத்தரைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்ள வெண்ணினன்.
83
1650.
1654-1655.

Page 52
84
652-1654.
ஒல்லாந்தரொடு கடற்போர்
செய்யப்பட்டவோர் செயலன்று. ஆனல் உண்மையான ஆரம் பத்திற்கானராக நிகழ்ந்த இப்போட்டி தீர்மானமொன்றைத் தொடர்ந்து செய்புலப்படலாயின." 4
கப்பற் போக்குவரத்துச் சட்டங்கள், ஆங்கிலத் துறைமுகங் களில் அந்நிய கலங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கமாக இரண் டாம் இறிச்சேட்டின் ஆட்சிக்காலத்தைப் போன்ற பழைய காலத் தில் நிறைவேற்றப்பட்டன. ஆனல், போதிய அளவு ஆங்கிலக் கலங் களில்லாமை காரணமாக அச்சட்டங்களை வற்புறுத்த முடியாதிருந் தது. ஆகையினல், 1651 ஆம் ஆண்டுச் சட்டத்தின் தத்துவத்தில் புதியதொன்றுமில்லை; அன்றியும், அதனைக் கண்டிப்பாக வற்புறுத் தத் தவறியதிலும் அவ்வாறே புதுமையெதுவுமில்லை. எனினும், அது ஒல்லாந்துக்கு எதிரான ஒரு மனேநிலையை வெளியிட்டது; மேலும், இது முதற்கொண்டு இச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரு வதற்குக் குறைந்த பட்சம் ஓயாத முயற்சி செய்யப்பட்டு வந்தது; ஏனெனில், முந்திய காலங்களிலிருந்ததிலும் கூடிய தொகையான ஆங்கிலக் கலங்கள் இருந்தனவாதலிலென்க. மீட்சி அரசாங்கம் நியூயோக்கை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றியதன் மூலம் அது அமெரிக்காவில் ஒல்லாந்தரின் கடல் நடவடிக்கைகளுக்கு மிகவும் பயன்பட்டவொரு தளத்தை நீக்கிவிட்டது. அதனல், அது புதிய இங்கிலாந்தின் துறைமுகங்களில் கப்பற் போக்குவரத்துச் சட்ட த்தைச் செயல் முறையிற் பயன்படுத்த உதவியது.
ஒல்லாந்துக்கு மாருய்ப் பொதுநலவசசு செய்த கடற்போர், கடற்ாெடர்புடைய சமமகக்கினரின் போட்டியில் நேர்ந்
P :...? ? மேலொருவர் கொண்ட பொருமையைத் தவிர, அதற்குக் காரணம் ஒன்றேயொன்றுதான் உண்டென்று கூற முடியாது. அது ஓர் அசு ாப் போராகும். பிளேக்குவும் வான்திறம்புவும் உலகில் மிகப்பெரிய இரு கப்பற்படைகளே நடாத்திக் கொண்டு ஒருவரையொருவர்
1851 ஆம் ஆண்டுக் கப்பற் போக்குவரத்துச் சட்டம், “ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவில் அல்லது அமெரிக்காவிலுள்ள எந்நாட்டிற் செய்யப்பட்ட பொருளும், அவற்றைக்கொண்டு செல்லுங் கலங்கள் ஆங்கிலேயர்க்கு அல்லது ஆங்கிலக்குடி யேற்ற நாடுகளில் வசிப்பவர்க்குரியனவாயும் அவற்றையோட்டும் மாலுமிகளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ஆங்கிலக் குடிமக்களாயும் இருந்தாலன்றி பொது நலவரசின் மாவட்டம் எதனுள்ளும் கொண்டுவரப்பட முடியாதென விதித்தது. ஐரோப்பாவின் எப்பாகத்திலிருந்தாயினும் இறக்குமதிப் பொருள்களை ஆங்கிலக் கலங்களில் அல்லது இப்பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உண்டாக் கப்பட்ட நாட்டினுக்குரியாருடைய கலங்களில் மாத்திரம் கொண்டு செல்லலாம் ”. ஒல்லாந்தரது கடலாதிக்கம் பற்றி இந்நூலில் பக்கம் 21 ல் காண்க.

வெளிநாட்டுக் கொள்கை
எதிர்ப்பாாாயினர். அப்படைகளிரண்டும் தம் கப்பலமைப்பிலும், மாலுமிகளின் தொழிற்றிறமையிலும் நைல் நதி, திறவற்கார் ஆகிய வற்றின் படைகளிலும் சிறிதும் குறைந்தனவல்ல. ஒல்லாந்து இங்கி லாந்திலும் அதிகமான துன்பம் அனுபவித்தது ; ஏனெனில், அதன் தரை வருவாய் மிகச் சிறியதாதலினலும், இப்பொழுது அது ஒரு தனி நாடாய் மலர்ந்ததன் பின், அதன் சீவிய முறையையும் செல்
வத்தையும் தொலையிலிருந்து கொணர்ந்த வணிக கலங்களை
எதிர்த்து ஆங்கிலக் கால்வாயைத் தடைசெய்த பகையான நாடொன்றை முதன்முறையாகக் கண்டதாதலினுலுமென்க. ஈடு கொடுக்குமாற்றலில் இங்கிலாந்தின் மேம்பாடு இம்முதற் போட்டி யிலேயே தெளிவாய்த் தெரிந்தது.
ஒல்லாத்தோடு செய்த போர், படைகளினிடத்தே பெற்ற பாராட்டைவிட அதிக பாராட்டை இலண்டன் நகரத்தாரிட மிருந்து பெற்றது. மேலும், குருெம்வெல் புரட்டெசுத்தாந்த ஒத்துழைப்பு உலக முழுவதும் இருக்க வேண்டுமென்று விரும்பி ஞன். கர்ப்பாளனுக அவன் செய்த முதற் செயல்களிலொன்று இங்கிலாந்துக்கு அனுகூலமான முறையில் ஒல்லாந்தோடு சமா தானஞ் செய்ததேயாகும்.
ஆனல், ஒலிவரின் நேரடியான ஆட்சி வெளிநாட்டுப் போரினை விலக்கத் தவறியது. அவ்வாறு விலக்கின், அவனுடைய உண்ணுட்டு முறைமையின் நிதியுறுதி நிலைக்கும் இறுதியாகப் புகழுக்குமுரிய ஏதேனுமொரு நல்வாய்ப்பை அளித்திருக்கும். அவனுடைய புரட் டெசுத்தாந்தமும் உலகமெங்கணுமிருந்த ஆங்கில வணிகர்க்கும் குடியேறுநர்க்கும் உதவிசெய்ய அவனுக்கிருந்த விருப்பும், அவனை இசுப்பெயினேடு சண்டை செய்யத் தாண்டியது. இசுப்பானிய குடி யேற்ற நாடுகளோடு வணிகஞ் செய்தற்கும், மதவழக்கு மன்றத்தின் அதிகாரத்திற்குட்படாமலிருக்கவும் விரும்பி, முன்பு இலிசபெத்தின் காலத்து ஆங்கிலர் விடுத்த உரிமைக் கோரிக்கைக்கும் புத்துயிரளித் தான். இசுப்பானிய அரசியற்றுாதன், அது தம் தலைவரின் இரு கண் களையும் கேட்பது போலாகுமென்று பதில் கூறினன். ஒரு புறத்தில் இசுப்பானிய படைகளுக்கும், மறுபுறத்தில், குடியேறிய ஆங்கிலே யர், மேற்கிந்திய தீவுக்கூட்டத்தின் வணிகர், கடற்கொள்ளைக்காரர் ஆகியோர்க்கும் ஓயாத போர்க்குரிய செயல்கள் நடந்து கொண் டிருந்தன. மேற்கிந்திய ஆச்சிபலகோத் தீவுகளில் ஆங்கிலக் குடி யேற்றங்களிலிருந்தும், அத்தீவுக் கூட்டத்தினை இசுப்பெயின் தம தென்று கருதி வந்தது. ஒலிவர் மேற்கிந்திய தீவுகளிலுள்ள ஆங் கிலேயர்க்குத் தாய்நாட்டின் ஆற்றலை உதவினன். அங்கு ஒரு படையை அனுப்பினன். இது இசுப்பானியோலாவில் வெற்றிபெறத் தவறியபோதும், யமேய்க்காவைக் கைப்பற்றியது. இது அம் மேற்
85
1654.
IV gih தேசப் படத்தைப் tuititas.
655.

Page 53
86
1655-658,
இசுப்பெயினெடு போர்
கிந்திய தீவுகளில் பிரித்தானிய பேரரசின் விருத்திக்கு மிக முக்கிய மான ஒரேயொரு ஆதாரமாகியது. அப்பேரரசு பிற் காலத்தில் நூற்றைம்பது ஆண்டுகளாகப் பிரித்தானிய வணிகத்திலும் அரச தந்திரத்திலும் போரிலும் முதன்மையான ஒரு பதவியை வகித் துளளது.
குருெம்வெல் காலத்து இங்கிலாந்தை யாவரும் ஐரோப்பிய அர சியல் முறையில் ஒரு காரணியாகக் கருதி அதற்குப் பயப்பட்டும், அதனை நன்கு மதித்தும் வந்தனர். ஆனல், மிகுபுகழ்பெற்ற எதை யும் அது அடைந்திலது. வடோய்க் குழுவினர்க்கு அளித்த பாது காப்பு ஒரு சிறப்பான செயலாகும். சிறப்பும் பண்பும் மிக்க இந் நடவடிக்கை மிக நன்முய் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசி தந்திரச் செயலுமாகும். ஆனல், இது மிக முக்கியமான தொன்றன்று. இசுப் பெயினேடு செய்த போர், உண்மையில், அத்திலாந்திக்குக் கடலுக் கப்பால் நடந்ததாகும். அது, ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கோ, புரட்டெசுத்தாந்தத்திற்கோ விளைத்த நன்மை அற்பமானதாகும். தெனறிவின் கோட்டைகளுக்குக் கீழே இசுப்பானிய கப்பற் படை க்குப் பிளேக்கு விளைத்த அழிவு நிச்சயமாக இங்கிலாந்துக்குப் புகழைக் கொணர்ந்ததே. நெல்சன் பின்பு ஒரு கையை இழந்ததும் அங்குதானுகும். மேலும், எமது பிரான்சிய நேயர்களின் சேனை வியப்போடு பார்த்துக்கொண்டு நிற்க, செஞ்சட்டையணிந்த நமது காலாட்படை இடன்கேக்குக்கு அண்மையில் வழுக்குமியல்புடைய மணற் குன்றுகளைத் தாக்கியதிலும் பெருமையுண்டு. ஆனல், ஐரோப்பாவில் அரசியல் வலுச்சமநிலை நிலவவேண்டுமென்பதில் பிரித்தானியர் என்றும் ஆர்வமுடையராதலில், அவ்வாறு வேகத் துடன் தலையிட்டமை அவசியமற்றதென்க. ஏனெனில் குருெம்வெ வினது பலம்மிக்க தலையீடின்றியே அச்சமயம் ஐரோப்பிய அரசி யல்வலு சமநிலை பெற்று விளங்கியது. இசுப்பெயின் ஏலவே வலு வழிந்திருந்தது. பிரான்சும் யாரும் அஞ்சத்தகுவண்ணம் இன்னும் வளர்ந்திலது. முப்பதாண்டுப் போர் முடிவடைந்துவிட்டது. சிறிது காலத்துக்குக் கசுத்தாவசு அடோல்பசுவுக்கு யாரையும் தாக்கு தற்கு நல்வாய்ப்பு எதுவும் கிடைத்திலது. 1618 ஆம் ஆண்டில் அல் லது 1630 ஆம் ஆண்டில் அல்லது மீண்டும் 1670 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஒலிவர் தம் சேனையோடும் கப்பற்படையோடும் அவ்விடத்தில் நின்றிருந்தால், குறிப்பிடத்தக்க ஏதாவதொன்றை அடைந்திருத்தல் கூடும். 1654 ஆம் ஆண்டில் அவன் அங்கிருந் தான். ஆனல் காலங் கழிந்துவிட்டது அல்லது இன்னும் வந்திலது என்க. தற் செயல் நிகழ்ச்சிகளை அல்லது அவற்றின் இன்மையைக் கொண்டுள்ளதே வரலாழுகும்.

நிதி நெருக்கடி வரிச்சுமை
ஒல்லாந்தரின் போர்ச் செலவுடன் இசுப்பானியப் போரும் சேர் ந்து நாட்டின் வரிச்சுமையைக் கூட்டி, அதன் செழிப்புக்கும் வர்த் தகத்துக்கும் பெருந்தீங்கு விளைவித்தன. ஒலிவருக்குப் போர், ஏகா திபத்தியம் ஆகியவை மீதிருந்த ஆர்வம் அரசியற் காரணங்களால் மாத்திரமன்றி, அதிக செலவை ஏற்படுத்துவதாயுமிருந்த காரணத் தாலும் EDக்களிடை அதிருப்பதியை ஏற்படுத்தலாயிற்று. ஒருவர் தம் சொத்தின் பெரும் பகுதியை ஆண்டுதோறும் வரியாகக் கட்” டாயமாகக் கொடுக்க வேண்டுமென்பது இற்றைநாள் வாழ்க்கையில் வழக்கமான நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும், அக் காலை பொறுக்கமுடியாத ஓர் அக்கிரமமாகத் தோன்றியது. எனி னும் அதிகமான வரிகள், அரசுக்கும் குருபரிபாலனத்துக்கு முரிய காணிகளின் விற்பனை, கொடியோர்க்கிட்ட குற்றங்கள், அய வாந்தின் அசைப்பங்கு நிலம் பறிமுதலானமை ஆகியனவிருந்துங் கூட, ஒலிவர் கடனளியாய் இறந்தான். நிதி நிலைமையைக் குறித்து மாத்திரம் நோக்குமிடத்து, சேனையை அணிகுலைக்க வாய்ப்பளிக் கும் ஒரு முறை அவசியமாயிற்று. ஆனல் மக்கள் இணக்கத்தோடு செய்யும் ஆட்சியை மீட்டும் அமைத்தற்கான வழியைக் கண்டு பிடிக்கும்வரை சேனையை அணிகுலைக்க முடியாதிருந்தது. ஒலிவர் அவ்வழியைத் தேடுவதில் தன் கடைசிக் காலத்தைக் கழித்தான். ஆனல் அவ்வழியை அவன் ஏலவே இழந்துவிட்டான். கடைசி வரையும் தன் சுமையைத் தாங்கிச் செல்ல வேண்டியது அவன்
விதியாயிற்று.
காப்பாளரின் புலவர்களான இரு செயலாளரில் பதவியாற் குறைந்தவராயினும், புத்திக்கூர்மையில் எவ்வகிையிலும் குறைந்த வரல்லாதவருமான அந்துறு மாவல் என்பார் பாடியது வருமாறு:
அதிகாரம் பெற்ற அம்மதியூகமே தான் f அதைநிலைநாட்ட மேலும் உறுதேவை யாகும்.
ஒலிவர், “பாராளுமன்றங்களைக் குலைத்த சித்திராபோத்தையும் ஏனையோரையும் போன்றிராது. பாராளுமன்ற ஆட்சி தேவையா
னதேயென்று கடைசிவரையும் எண்ணியிருந்தான். மேலும் குடி
யரசுகளை நிறுவிய மற்றையோரைப் போலன்றி, அவன் யாப்புக் கமைந்த அரச பதத்தின் பயன்களில் நம்பிக்கை உடையணுய்த் தன் வாழ்க்கையைத் தொடங்கியும் முடித்து முள்ளான். ஆயினும், அரசபதம் பாராளுமன்றம் ஆகிய இரண்டிலுமிருந்து தூய்மையா ளரின் குறிக்கோள்களைப் பிரித்துக் கொடுத்து விடுதலும், தானே விரும்பிய மக்கள் நியாயமுறையை மீட்டும் அமைத்தற்கு மாமுன தடைகளைத் தன் மாணத்தினலேயே நீக்குதலும் அவனுக்கு நேர்ந்த
87

Page 54
88
653.
திசெ., 1653.
1657-8.
ஒலிவரும். பாராளுமன்றமும்
விதியாகும். அது அவனுடைய விகிதான். அதுவே அவனின் குறை பாடுமாகுமா? அதனைக் குறித்து மிக மேலான அறிவுடைய வச லாற்ருளரே முடிவான ஒரு கருத்தினைத் துணிந்து கூறத் தயங் குவர்.
நீடித்த பாராளுமன்றத்தின் காலத்தில் நிலவிய குறைப் பாசா ளுமன்றம் தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்ய முயன்றபோது, அதனை அவன் நீக்கியமை ஒருவேளை அவசியமானதேயாகும். ஒரு திங்கள்வரை அது மக்களுக்கு மிக நல்லதாகத் தோன்றியது. அப் பொழுது சிந்துப்பாடகர் பண்ணுேடு பாடியது வருமாறு : தேவதை போலவே தோன்றினர் ஒலிவர் பாராளு மன்றத்தே தலைவரும் தயங்கினர் போய்விடு மாறு ஆர்த்தனர் சபையில் போதிய காலம் போக்கினீர் இங்கே தீர்புநாள் வரையும் தரிக்கவோ எண்ணம் ? ( ஆணுல், மன்றத்தினுள்ளே அவனுடைய இராணுவ வீரர் செய்த திடீர்ப் பிரவேசமும் கட்டியக்கோலைக் குறித்து அவர் செய்த அத் தனை பண்பற்ற கேலியும் நிலையான மனக் கசப்பை விளைத்தன. கட்டியக் கோலும், அதனேடு பயன்படக்கூடிய முடியும் சிற்றலங் காரப் பொருள்களாயின. வாளைவிட மதிக்கத்தக்க பொருள் வேறு யாதுளது ?
அவன் காப்பாளஞன பின்னர், அவனின் பிந்தின பாராளுமன்ற ங்கள், காலத்துக்கு வேண்டிய முறையில் கட்டுப்பாடுகளோடு தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவனுேடிணங்கி நடக்க முடியா கிருந்தன. மிகவும் இன்றியமையாத இணக்கமொன்று அப்பிரச் சினையின் முக்கிய பகுதியாயிருந்தபோதிலும், அதனை உண்டாக்க அவன் மிகத்துணிந்து செயலாற்றியிருக்க வேண்டுமோவென ஆரா யப்புகின் அஃது வசம்பிகந்து விரியுமென்க. வாள் கொண்டு செய் யும் படைத்தலைவர் ஆட்சியே மற்ருெரு வழியாகும். அது நாட்டை யும் அவர்தம் இயல்பூக்கங்களையும் பங்கப்படுத்தியது. அவனுடைய கடையிாாண்டுகளும் சட்டவமைப்பாளரோடும் அரசவமைப்பாள ரோடும் நிபந்தனைகளை ஏற்படுத்தி அவற்றினல் சேனையிற்றங்கி யிருத்தலினின்றுந் தன்னை விலக்குதற்கு வேண்டிய வேலையிற் செல வாயின. அவன்தன்னையே அரசனுக்கி, அத்தால் அரசபதத்துக்கு மீட்டும் புத்துயிரளிக்க வேண்டுமென்று அவர்கள் அவனைக் கேட் டனர். அதனைக் குறித்து அவர்கள் கொண்ட நோக்கத்துக்கிணங்க அவன் தலைப்பட்டான். ஆனல், அவன் மிகவுஞ் சார்ந்திருந்த படைத் தலைவரிற் சிலர் குடியரசுக் கொள்கையிற் பிடிவாதமுடையாாயிருந் தனர். மிதமானவரும் அனுபவத்திலுள்ளவருமான மக்கள் பலரின

ஒலிவரது ஆட்சி
அம், சிறப்பாக வழக்கறிஞரினதும் விருப்பம் ஒலிவர் முடி குட வேண்டு மென்பதேயாகும். அம் மக்கள் தாமே ஈராண்டுகளுக்குப் பின் அதிே நியாயங்களுக்காகச் சாள்சை அழைப்பதிலும் பேரார் வம் காட்டினர். பாராளுமன்றத்தின் மீட்சிக்கும் ஒழுங்குமுறை ஆட்சிக்கும் முடியரசு நீக்குதற்கரியதொன்றெனத் தோன்றிற்று.
காப்பாளன் இப்புதிய மலர்ச்சியின் ஆரம்பத்திலேயே இறந்தான். ஆனல், வெறியரும், தீவிரவாதிகளுமானவரைச் சேனையிலிருந்து விலக்குதலில், அவன் முன்னரே சிறிதளவு முன்னேற்றமடைந் அதுள்ளான். இக் காரணத்தாற்ருன் செயற்றிறனுள்ளவனுன மொங்கு வென்பான் தன் தோழரான போர் வீரரிடையேயிருந்த மிக வலிமையுள்ள கட்சியின் பிரதிநிதியாயிருத்தற்குத் திறமை பெற் அறுள்ளான் மேலும், ஒலிவர் இறந்த பின் பதினெட்டு மாதங்களாக நிகழ்ந்த நீடித்த அவசர நிலையின் முடிவில் தானே அதிகாரத் திறமையையும் பெற்றுள்ளான். அதன்பயனக, விரும்பிய படை நீக்கம், முடியரசின் மீட்சி, பாராளுமன்றம், ஒழுங்குமுறையாட்சி ஆகியன, பழைய அரச பரம்பரையின் பேரில் குருதியின்றிச் சம்ப வித்தன. ஒலிவர் உயிரோடிருந்திருந்தால், அவன் பேரில் அவை சம்பவித்திருக்கக் கூடுமோ என்பது ஐயத்திற்கிடமானதே.
ஒருவேளை ஒலிவர் இருந்திருந்தால், மீட்சி உடன்படிக்கையை, நாம் கருதுவதிலும் அமைதியோடு ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம்; ஏனெனில், அவன் சிறந்த நாட்டுப் பற்றுடையவனும், பெரிய சந் தர்ப்பவாதியும், மனத்திலுணர்ச்சி மிக்க பாராளுமன்ற வாதியு மாவானதலினென்க. அவனின் மிகப் பெரிய ஏமாற்றம் புதிய அரசு முறையின் சமயம்பற்றி யுண்டாயிருக்கலாம். ஆயினும், ஆங்கில சமயத்திலும் அவன் ஏற்படுத்திய மாற்றத்தை மறத்தலரிது. முதலாம் உள்நாட்டுப் போரில் அவன் பெற்ற வெற்றி, அரசர்க்குப் பதிலாதப் பாராளுமன்றமே, திருச்சபைக்குரிய விசாரணைகளில் முடிவான அதிகார உரிமையுடையதென நிருணயஞ் செய்தது. அத் தீர்ப்பினை இரண்டாம் சேமிசு மாத்திரம் பயனின்றி மறுக்க முயன் முன். இரண்டாம் உள்நாட்டுப் போரில் அவன் பெற்ற வெற்றி துன் புறுத்தும் பிரெசு பித்தீரிய வைதிகத்தை நிலைநாட்டலை விலக்கியது. அவர்தம் நீடித்த ஆட்சி சமயக்கட்சிகளை வலிமைமிக்க ஊக்கமூட்டி வளர்த்து வந்ததன் விளைவால், பிரெசு பித்தீரியல்லாமல், அக்கட்சி களே ஆங்கிலத் தூய்மையாளருக்குப் பிணக்கு நிறைந்ததான பிற் காலத்தில் அவர்தம் கொள்கையின் பண்பையும் இயல்பையும், உருவாக்கின எனலாம். ஆங்கிலேயரின் பலவகைப்பட்ட சமயக் கருத்தும் பயிற்சியும், திருச்சபையின் எல்லைக்குள்ளேயே செல்வாக் குப் பெற்று, என்றும் சுதந்திர எண்ணத்தைச் சார்ந்திருந்தன.
செத், 3, 1658.
1660.
89

Page 55
90
சமயக் கொள்கை : குவேக்கர்கள்
மேலும், அவை ஆங்கிலேயரின் பண்பில் உள்ள அடிப்படையான இயல்பொன்றிலிருந்து எழுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடிஃr அவை குருெம்வெலின் காலத்திலிருந்து தொடங்குகின்றன.
காப்பாளரின் பூட்கை திருச்சபையினுள் நிதானத்தையும், அதற்கு வெளியே சமயப் பொறுமையையும் ஒன்று கூட்டியுள்ளது. அவன் தீர்வையையும் கொடை முதல்களையும் ஓம்பிய அதே நேரத் திற்ருனே, துன்புறுத்தலையும் விலக்கியுள்ளான். திருச்சபைக்குரிய மானியங்களைப் பிரெசுபித்தீரியரும் சுயேச்சையாளரும், அல்லது திருமுழுக்காளரும் வேறுபாடின்றி ஆண்டனர். அப்பொழுது கட் ப்ெபாடற்றனவும், விசித்திரமானவையுமான சமயக் கிட்டங்கள் வெளியே பெருகின. இவ்விதமாக ஒலிவர் தான் அரசியல் துறையில் பெறுதற்கு முக்கியமாகத் தவறிய பலவகைப்பட்ட துய்மையாளர் கட்சிகளை எல்லாம் சமயத்துறையில் ஒருமைப்படுத்தியுள்ளான். வழிபாட்டு நூலுக்கு மறைவாக இடங்கொடுத்துமுள்ளான். அன்றி யும், நாடு கடத்தப்பட்ட சுதுவட்டரின் நன்மையும், ஆங்கிலத் திருச்சபையும் ஒன்றென மெய்ப்பித்துக் காட்டிய அரசியல் நிலை இருந்திசா விட்டால், அவன் அந்நூலுக்கு வெளிப்படையாகவும் இடங்கொடுத்திருப்பான். முன்பு தானும் அயேட்டனும் சாள்சுக்குக் கூறிய யோசனைகளிற் கண்டவாறு ஆங்கிலக் கிறித்துவருக்கு உரிய இடத்தை அளிக்க முடியாதுபோனமையும் அவனது மதப் பூட்கையில் ஓர் பெரிய குறைபாடாகியது. உரோமன் கத்தோலிக்கர் பிரெசு பித்தீரியரின் அல்லது ஆங்கிலக் கிறித்துவரின் பாராளுமன்றங் களிஞட்சியிலும் காப்பாளர் ஆட்சியில் குறைவாக வருத்தப்பட்ட னர். மேலும், திவ்விய பூசை சட்டமுறைப்படி அனுமதிக்கப் படா திருந்தபோதும், இணங்காமைக்குரிய சட்டங்கள் நீக்கப்பட்டன.
இந்நிபந்தனைகள் சமயத்துக்குரிய சிறப்புக்காலம் குன்றத் தொடங்கும் வரையும், புதிய சமய இயக்கங்களின் வளர்ச்சிக்கு, மீட்டு நிகழ்ந்த வேறெந்த நிபந்தனையிலும் மிக மேலான வாய்ப் பளித்தன. உலக அமைதிக்குத் தொண்டாற்றும் சமய குவ்ேக்கர் இயக்கம், அதிகார பீடத்திலுள்ள மக்கள் பலர்க்கு வெறுப்புண் டாக்குகிறதொன்முயிருந்த போதிலும், ஒலிவரது ஆதரவையும் பெற்று உருவாகும் ஆற்றல் பெற்றுள்ளது. காப்பாளர் ஆட்சியில் அது ஆழமாக வேரூன்றி விட்டதனல், மீட்சிக் காலத்தில் நேர்ந்த மிகக் கொடிய துன்புறுத்தல்களும், அதனை அழிக்கும் ஆற்றல்
1. இந்நூல் பக்கம் 73 பார்க்க.

கல்வி
பெற்றில. யோச்சு பொக்சுவென்பான் ஆங்கிலேயரது சமய வரலாற் றிலே தனக்கே இயல்பான மாற்றம் ஒன்றைப் புகுத்தினன். மிகப் புனிதமானதும், சம்பிரதாயத்துக்கு அதிக மதிப்பளியாததுமான அவனுடைய கிறித்துவ சமயம், பதினேழாம் நூற்றண்டின் கடைசி அரைப் பகுதியிலிருந்த துரய்மைச் சமயவாதிகளுக்குள் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்தது. குவேக்கர் மதம் தன் அதி காசத்திக்குரிய இந்த முற்காலப் பகுதியில் உள்ளொளி யெனும் கோட்பாட்டினை, அதாவது, ஒவ்வொரு கிறித்துவ ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய நேரான தனிப்பட்ட அருட் புலமையை அடிப் படையாகக் கொண்டிருந்தது. அது மனேநிலையிலும், முறைகளி லும் பொதுமக்களிடையே புத்துணர்ச்சியை உண்டாக்குதற்குரிய தொன்முயிற்றேயன்றி, பிந்திய தலைமுறைகளிலிருந்ததுபோல, நிதானமும் ‘அமைதியு' முடையதொன்றன்று.
நீடித்த பாராளுமன்றத்தினரும், காப்பாளரும் கிரமமான உதவிக் கொடைகளினுலும் திருச்சபை நிலநன்கொடைகளினுலும் கல்விக் குத் தம்மாலானமட்டும் உதவியளித்தனர். தியூடர் காலத்தில் திருச் சபையைக் கொள்ளையடித்தவர்கள் கல்வியில் ஒருபோதும் ஆவ லுடையராயிருந்திலர். அதற்கு மாமுக, அாய்மையாளர் இயக்கம் பெரும்பாலும் வைதிகர் செல்வாக்கில் மிகுந்த ஆவலுடையதாயிருந் தது. பதினேழாம் நூற்முண்டின் முதலரைப் பகுதியில் அதற்கு முந் தின நூற்றண்டுகளிலும் மிக விரைவாகப் பள்ளிகள் நிறுவப்பட்டன. கல்விபற்றியுண்டான மிகுந்த உற்சாகத்தின் நோக்கம் பெரும்பா இலும் சமயத்துக்குரியதாகும் ; ஆனல் கல்விக்கும் சமயத்துக்கும் அதனுடன் சமயத்துக்கும் அரசியல் முறைக்குமுள்ள தொடர்பு, முத லில் தூய்மையாளர் ஆசிரியரை உலோட்டுவும், பின்னர் உலோட்டு வின் ஆசிரியரைத் தூய்மையாளரும், ஈற்றில் ஆங்கிலக் கிறித்துவத் துக்குரிய ஆசிரியாைவிட மற்றெல்லோரையும் மீட்சிக்காலப் பாராளு மன்றங்களும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் விலக்கியதான முக்கியமான குறையினை உண்டாக்கியது. வேறு வகைகளில் ஊக்கமும் உற்சாகமும் காட்டிய இரு பல்கலைக்கழகங் களுக்கும் நேர்ந்த விளைவு வருந்தத்தக்கதாகும். மேலும் அது ஈற்றில் பதினெட்டாம் நூற்முண்டுக்குரிய விருத்தியற்ற நிலைக்கு அவற்றைத் தாழ்த்தியது. அரசியலிலோ சமயத்திலோ விவாதத்திற் கிடமளிக்காது வைதிகத்தை ஏற்குமாறு வற்புறுத்தல் பல்கலைக் கழக வாழ்க்கைக்கு முரண்பாடானதாகும்.
நாட்டுக்குரிய அதிகாரத்திலும் செல்வாக்கிலுமிருந்து தூய்மை
யாள" சல்லாதார் எவரையும் நாட்டின் ஆட்சியாளரான தூய்மை
யாளர் விலக்குதற்கு நேர்ந்தமை அவர்தம் பெருங் குற்றமாகும்.
9.

Page 56
92
1661-1665.
தூய்மையாளர் தவறு
அவர்கள் வெளிப்படையான சமய உற்சாகத்தைத் தமது குழுஉக் குறியாகக் கொண்டதால் அவரிடையே அநேக போலிகள் தோன்றி னர். மக்களை வற்புறுத்தி நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடுநாடகங் களைத் தமக்கே தீங்கு விளையும்வகையில் தறுகண்மையுடன் தடுத்த மையும், ஏனைய ஒழுங்கற்ற முயற்சிகளும் அவர்தம் குற்றமாகும். மீட்சி நேர்ந்தபோது, சமூகத்தின் சமயப் பற்றற்ற பகுதியினர், இருபதாண்டுகளுக்குமுன் உலோட்டுவின் குருமாரை வெறுத்தது போல, தூய்மையாளரை வெறுக்கத் தொடங்கினர். அக்காலத்துச் சமூக ஒழுங்கில் முக்கியமாக வலிமைக்குரியரான ப்ெருஞ் செல்வர், படைத்தலைவரின் இராணுவ ஆட்சியினலும், நாட்டின் பழைய சங் கங்களின் புரட்சியாலும் அவமானப்படுத்தப்பட்டனர். உள்நாட்டுப் பெரும்போரில் பெருஞ் செல்வரோ, அவர்தம் மூதாதையரோ, எக் கட்சியைச் சார்ந்திருந்தாலும், அவர்கள் தாம் ஏற்றுக்கொள்ள மறுத்த அரசியலிலும் சமூகத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைத் தூய் மையாளர் சமயத்தோடு சேர்த்துக்கொண்டனர். ஆகையினல், எலி யற்று, பிம் ஆகியோர் காலந்தொட்டு ஒரு விந்தையான முறை பிறழ்வினுல் கிளாறெண்டன் சட்டத்தொகுப்பிலுள்ள தூய்மை யாளர்க்கு மாமுன சட்டம் பாராளுமன்றத்தினதும், பெருஞ் செல் வரினதும் வேலையேயன்றி, அரசினரதும் அவர்தம் அவையத்தாரின தும் வேலையன்றென்க. ஆயினும், பாராளுமன்ற ஒழுங்கில், சுது வட்டரின் வல்லாட்சியை உலோட்டு சித்திராபோத்து ஆகியோரின் மாதிரிபோல நீடிக்குமாறு செய்திருந்தால், தூய்மையாளர் கட்சி யினர் ஒருபோதும் பெற்றிருக்க முடியாத சமயப் பொறுமையை ஓரளவுக்கு என்ருே பெறுதற்கு நம்பியிருத்தல் கூடுமென்க.

அத்தியாயம் V
ஆங்கிலேயரின் கிராம, பட்டின வாழ்க்கையும் அதன் கடல் கடந்த படர்ச் சியும். பதினேழாம் நூற்றண்டில் குடியேற்றத்தின் இயல்பும் குடியேற்ற நாடு களுக்குரிய பூட்கையும். புதிய இங்கிலாந்தும், வேசீனியாவும், ஒல்லாந்தரின் மத்திய குடியேற்ற நாடுகளை ஒன்று சேர்த்தலும். இங்கிலாந்தும் பிரான்சும் ஒல்லாந்தும்.
சுதுவட்டர் காலத்து நாளாந்த வாழ்க்கையை, எமது காலக் தோடு ஒப்பிடும்போது, துன்பமும், அறியாமையும் கொடுமையும் நிறைந்த தொன்முயிருந்தபோதும், இவற்றுக்கு ஈடுசெய்தற்குரிய பெருநல்வாய்ப்புக்களையுமுடையதாயிருந்தது. அது சுவையற்ற தாயோ இயல்பிற்கு விரோதமானதாயோ இருந்திலது. பெரும் பாலும் நாட்டுப்புறங்களில் கழிந்த இவ்வாழ்க்கையில் மனிதன் செய்த மாற்றங்களெவையும் இயற்கையின் அழகைக் குறைத்தில. இக்காலித்தில் மக்கள் தாமே இயந்திரங்களுக்குக் கீழ்ப்படிந்து அவற் றின் விருப்பப்படி தொழில்களைச் செய்வது போலல்லாது, அக்காலத் தில் அவர்கள் தம் விருப்பப்படி தொழில்களைச் செய்வதற்குக் கருவி களை உபயோகித்தனர். மேலும், கலையழகுக்கும் இலாவண்ணியத்துக் கும் பகை இயந்திரமேயன்றி, மனிதனல்லன். இயந்திரக் காலத்துக்கு முன், பொதுவாகக் கம்மியர், பரும்படியாகப் பொருள்களைச் செய் யும் இக்காலப் பணியாளிலும் ஓரளவுக்கு விழுமியதும் தனிப்பட்ட துமான தொழிலைச் செய்யும் கலைஞராயிருந்தனர். ஆகையால் தம் வாழ்க்கையின் நிலைமைகள் பல, மனிதத்தன்மை மிக்குடைய எமது தலைமுறையில் சிகிக்க முடியாதனவாயிருந்த மோதிலும் தமக்குக் கிடைத்த நிலையையிட்டு அவர்கள் இக்காலத்தவர்களைவிட அதிக திருத்தியுடையராயிருந்தனர்.
இக்கைத்தொழில்கள் இயற்கையின் வனப்பை அழித்துள்ள மிகப் பரந்த நிலையையிட்டு நடத்தப்பட்டனவல்ல. அக்கால இங்கிலாந்தில் இத்தகைய நகரமாயிருந்தது, அந்நூற்முண்டின் முடிவில் ஐந்து லட்சம் மக்களைக் கொண்ட இலண்டன் ஒன்றேயென்க. அங்கு தானும் ஒருவர் நகரப்பெருவழிகளுள் அக்காலத்து மிகப் புகழ் வாய்ந்த தேமிசுவாற்றங்கரையில் நின்று களிப்புறலாம்; ஒரு படகிற் செல்ல இயலாவிட்டால், அவர் பேரொலி நிறைந்த சீப் சயிட்டுக்கு வெளியே வானம்பாடிகளுறையும் மலையடிவாரத்தில் உள்ளான் குருவி, கௌதாரிகளைப் பிடிக்க வேட்டைக்காரர் கண்ணி வைத்துள்ள பசும்புற்றரைகளுக்கு அரைமணி நேரத்தில் நடந்து
93

Page 57
94
பழைய இங்கிலாந்து எனை நகர்கள்
செல்லலாம். இலண்டனில் வாழும் எவரும், இயந்திர வாகனதி களின் துணையின்றியே இயற்கையழகுள்ள இடங்களை இலகுவில் அடைந்து அவ்வியற்கையின்பங்களை அனுபவிக்கலாம்: ر&
தலைநகரத்துக்கும் இன்றுள்ள சில நகரங்களுக்குமுள்ள விகிதத் தில் மிகச் சிறியனவான இங்கிலாந்தின் ஏனைய நகரங்களெல்லாம் தோமசு ஆடியென்பார் தாம் பிள்ளைப் பருவத்திற் கண்ட உடொ செத்தர் நகரத்தைப் பற்றிக் கூறிய வருணனைக்குத் தகுதியுடை பனவாகும்.
காசுத்தர்பிரிட்சு (உடொசெத்தர்) கமத்தொழில் மூலமே சீவன த்தை நடத்தியது. அயலிலுள்ள கிராமங்களைவிட அது நீரூற்றி லிருந்து சிறிது தூரத்திலிருந்தது. நாட்டுப்புறத்தாருடைய நிலை மையிலுண்டான ஒவ்வோர் ஏற்றத்தாழ்வையும் நகர வாசிகள் தெரிந்து கொண்டனர்; ஏனெனில், அது கூலியாளின் பேறுகளைத் தாக்கிய அளவுக்கு அவர்களின் பேறுகளையும் தாக்கியதாதலினென்க. அதே காரணத்துக்காக, பத்து மைல்களுக்குட்பட்ட இட்ங்களில் வசித்த உயர்குடிக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளிலும் மகிழ்ச்சியிலும் அவர்களும் ஈடுபட்டனர். . . . . . . காசுத்தர்பிரிட்சு எல்லாப் புறத்துமுள்ள கிராம வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் ஓரிடமேயன்றிக் கிராம வாழ்க்கைக்கு மாமுன நகரப் பண்புடைய இடமன்று. நகரின் மேற் புறத்தேயமைந்த விளைபுலங்களிலுள்ள தேனீக்களும் வண்ணுத்திப் பூச்சிகளும் கீழ்ப்புறத்தேயுள்ள பசும் புற்றரைகளுக்குச் செல்லவிரும்பின், அவை சுற்றுவழியாற் சென் றில; தமக்கு அந்நியமானவொரு நிலப்பரப்பினைக் கடந்து செல் கின்றனவென்ற உணர்ச்சி யெதுவுமின்றி மேட்டுவீதி வழியே நேராகப் பறந்து சென்றன.
இலிசபெத்தின் காலந் தொட்டு மூன்ரும் யோச்சின் காலம் வரை யும், இங்கிலாந்திலுள்ள நகரங்களின் தன்மை இத்தகையதே. மேலும் இவை இவ்வாறிருந்தும் மக்கள் தொகையிற் சிறிய பகுதி
இலண்டன், எனைய நகரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பதினேழாம் நூற்றண்டின் இறுதியில் மிகப் பெரியவொரு நகராக வளர்ந்ததற்குக் காரணம் அது உலகத்தில் மிகப் பெரிய துறைமுகமாயிருந்ததேயாகும். அன்றியும், அது மொத்தமாகவும் சில்லறையாகவும் செய்யும் வணிகத்துக்கு வேண்டிய பொருள்களைப் பங்கீடு செய்யும் பெரிய மையமாகவும் அமைந்துள்ளது. அதன் பொருள்கள் செய்யப்பட்ட இடங்கள் தொழிற்சாலைகள் அல்ல ; ஆனல், வேறிடங்களிற் போல, அப்பொருள்கள் வீட்டுத்தொழில் முறையிற் செய்யப் பட்டனவே. வீட்டுத் தொழில்முறை, உண்மையில், பதினெட்டாம் நூற்ருண் டில் தொழிற் புரட்சிக்குப் பின் வடக்கிலும் நடுநாடுகளிலும் இருந்ததிலும் இலண்டனில் மிக நீண்ட காலத்துக்கு நிலவியது. ஆனல், இலண்டனின் பரப்பளவு அந்நூற்றண்டிற்ருன் குறைவதாயிற்று.

ஆங்கிலக் கிராமங்கள் : தொழில்கள
யினருக்கே வசித்தற்கு இடங்கொடுத்தன; ஏனெனில், தியூடர், சுதுவட்டர் காலங்களில் கைத்தொழில்களும், உற்பத்திகளும் தொகுப்பாயுள்ள நகரங்களிலன்றி நாட்டுப்புறத்திலேயே நடந்தன வாதலினென்க. பல கிராமங்களும் சிற்றார்களும் உள்நாட்டுச் சந்தைகளுக்கும் பிறநாட்டுச் சந்தைகளுக்கும் பொருள்களை உற் பத்தி செய்தன. உழவனின் மத்திய காலத்துத் தனிநிலை மாறியது. அவன் பல தொழில்களைச் செய்பவரும் தொலைவிலுள்ள சிற்றுார் களில் அதிக வணிகஞ் செய்பவருமாகிய மக்களைத் தன் சொந்தக் கிராமத்திலேயே சந்தித்தான். வணிகமூலம் ஏற்பட்ட இத்தொடர்பு கள் முழுநாட்டையும் ஒன்று சேர்த்தன. அன்றியும், அவை கிராம வாசியின் புத்தியைத் தீட்டி, மனுேபாவத்தை விரிவுபடுத்த உதவின. முதற் சுதுவட்டாசர் அரசு கட்டிலேறிய போது, மக்கள் தமக்குட் பேசிக்கொண்டது வருமாறு:
கடவுளாணை, கொறேசியோ, இம்மூன்முண்டுகளாக இதனை நான் கவனித்து வந்திருக்கிறேன். குடியானவனின் காற்பெருவிரல் அரசவூழியனின் குதிக்காலுக்கு அத்தனை அண்மையிலிருத்தலினல் அவனுடைய காற்புண்கள் மேலும் இடிபட்டுப் புண்ணுகின்றன.
பிரான்சிலும், சேர்மனியிலும் வாழ்ந்த குடியானவர் தமது காலத் துக்குப் பொருந்தாத நிலமானியம் அங்கு நீடித்திருந்த காரணத் தால் மனவுறுதி குலேந்திருந்த அதே சமயத்தில் சமயமோ, அரசி யலோ, கைத்தொழிலோ, குடியேற்றமோ பற்றிய எந்தப் புதிய அபி விருத்தியிலும் சுயேச்சையாக ஈடுபட ஆங்கிலக் கிராமவாசி ஆயத் தமாயிருந்தான். யாத்திரைப் பிதாக்களிற் ப்ெரும்பாலார் தொடக் கத்தில் ஆங்கிலக் கிராமவாசிகளாக விருந்தவர்கள். மத்திய கால அடிமைக் குடிகள் புதிய இங்கிலாந்தின் கட்டுப்பாடற்றனவும், தன் னிறைவுள்ளனவுமான நகரஞ் சார்ந்த ஊர்களை ஒருபோதும் உண் டாக்கிருயிருக்கமாட்டார்கள். இப்பதினேழாம் நூற்முண்டிலேயே நிறுவப்பட்ட பிரான்சிய கனடாவில் மத்தியகாலக் குடியானவன் தன் மானியப் பிரபுவினதும், குருவினதும் தலைமையின்கீழ் குடியேறி ஞன். அதே சமயத்தில் ஏற்பட்ட ஆங்கில மக்களின் குடியேற்றம் அரைப்பங்கு கைத்தொழிலுக்குரியதும், பொருளாதாரத்துறை யிலும் அறிவுத்துறையிலும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொண்டதுமாகிய ஒரு புதிய சமூகத்தின் குடிப்பெயர்ச்சியாகும்.
புதிய வேளாண்மையும், அடைப்பு நிலங்களும், செல்வமுள்ள குத் தகைக் கமக்காாாதும் கட்டுப்பாடற்ற நிலத்தையுடைய வேளாள ாதும் தொகையினையும் சிறப்பினையும் வளரச் செய்தன. தோமசு புல்லர் என்பான் உள்நாட்டுப் போர் தொடங்கியகாலை எழுதும் போது வேளாளரைப் பின்வருமாறு வருணிக்கின்றன்.
95

Page 58
ஆங்கிலக் கிராமங்கள் சமூகவமைப்பு
வேளாளர் என்போர் இங்கிலாந்துக்கே ஏறக்குறையச் சிறப்பாக
வுரிய குடித்திணையினர். பிரான்சும் இத்தாலியும் சொக்கட்டான் விளையாட்டில் மிகக் குறைந்த புள்ளிக்கும் கூடிய புள்ளிக்கு மிடையே வேறு புள்ளிகளைப்பெருத பகடைக்காயொன்றைப் போன்றவையாகும். அதாவது, அவை விழுமியோரையும் குடியான வர்களையும் கொண்டுள்ளனவாகுமென்க. வேளாளன் தான் பருக் கன் புடைவையுடுத்திருப்பான்; ஆனல், மிக உயர்ந்த சம்பளங் கொடுப்பான் , அவன் புறத்தே ஏழைபோற்முேன்றினும், உண்மை யில், அகத்தே செல்வமிக்குடையவனுயிருந்தான். தன் சொந்த ஊரில் அவன் நடுவரவையில் தலையாய மகளுவான். அவன் அரிதாகவே வெளிச்செல்வான். அன்றியும், அவன் செல்வாக்கு அவன் பயணஞ் செய்த அாரத்துக்கு அப்பாலும் பரந்துள்ளது. இலண்டனுக்கு அவன் செல்வதில்லை; ஆனல், தனக்குக் குற்றம் வராதபடி காத்துக்கொள்ள நடுவரவைக்குச் செல்வான். ஆங்கு அரசரை ஒருமுறை கண்டதும் அதன் பின் அவர்க்காக என்றும் வழி டாடாற்றுவான்.
இந்த உடலூரமுள்ள வகுப்பினரிற் பலரைக் கொண்டமைந்த
நாற்பது சிலின் வரியிலா நிலக்கிழார் வகுப்பு கோட்டத் தேர்தல் களில் பாராளுமன்ற வாக்குரிமையை அனுபவித்தது. மேற்கில் சாள்சு அரசர்க்காகவும், அமிடனின் பக்கிங்காம்சயரிலும், குருெம் வெலின் கீழிங்கிலாந்திலும் பாராளுமன்றத்திற்காகவும் வேளாளர் ஆற்றிய சுதந்திரமான கடமை, நோமர் காலத்துப் பெருமக்கள் கொடுமையாக நடத்திய அடிமைக்குடிகளின் அறியாமையிலும், அவர்களைச் சார்ந்திருத்தலிலுமிருந்து அதிக நலமான ஆங்கிலக் குடியானவரின் வகுப்புக்குரியார் எவ்வளவு முன்னேறியுள்ளா ரென்று காட்டியுள்ளது.
பெருஞ் செல்வரும், வரியிலா நிலமுடைய வேளாளரும் குத்த கைக்காரக் கமக்காரரும், கம்மியரும் கிராம மக்களிற் பெரும்பகுதி யினராயிருந்தனர். ஆனல், அங்கு கமத்தொழிலாளரைக் கொண்ட சமூகமொன்றுண்டு. சுதுவட்டர்கால முடிவில் பத்திரிகைத் தொழி லாளனன கிறகோரி கிங்கு என்பான், குடிசைவாசிகளும் வறிய வர்களும் வரியிலா நிலமுடைய வேளாளரிலும், செல்வமுள்ள குத் தகைக் கமக்காரரிலும் எண்ணிக்கையில் அதிகம் மிகுந்தும், கூலி யாட்களிலும் வெளி வேலையாட்களிலும் சிறிதளவு மிகுந்து மிருந்தனரென்று கருதினன். இந்த எண்ணிக்கைகள் யாவும் ஐயத் துக்கிடமானவை; இவ்வெண்ணிக்கைகளில் ஊருக்கு ஊர் ஏற்படக் கூடிய மாற்றங்கள் எல்லையற்றவை. இவைகளில் கிறகோரி கிங்கு என்பானின் உத்தேசத்தைத் தவிர உண்மையான புள்ளிவிவரம்

பொழுது போக்கு
எதுவும் எளிதில் கிடைக்கக்கூடியதன்று. ஆனல், ஒவ்வொரு கிரா மத்திலும் வறிய மக்கள் பெருந்தொகையினராயிருந்தனரென்பது நம்பக்கூடியதாகும். அவர்களுள் ஒரு பகுதியினர் நிலம் அற்றவரா யும் கூலிக்கு வேலை செய்பவராயுமிருந்தனர். மற்றப் பகுதியினர் பொது நிலத்தில் சில துண்டுக் காணிகளில் அன்ருட வாழ்க்கைக்குப் போதுமான அளவுக்கு உழைத்தும், அன்றேல் மேய்ச்சல் நிலவுரி மைகளிற்றங்கியும், அல்லது பொதுவான தரிசு நிலத்திலிருந்தும் தம் சீவியத்தைக் கழிப்பாராயினர். அக்காலத்திலும் தெருக்கள், ஒழுங்கைகள் எங்கணும் அலைந்து கிரிகிற மக்கள் இருந்தனர். அவர் கள் யாரெனில், சிறு பள்ளத்தாக்கில் கூடாரத்தில் வாழ்பவர், தகர வேலே செய்வோர், ஊரூராகத் திரிகிற கம்மியர், தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வரும் குறவர், குறைக்காரர், வழித்திருடர், சிந் துப்பாடகர், போலி வைத்தியர், வேடிக்கை காட்டுவோராகியோர் என்க. அவர்கள் எல்லேயற்ற பலதிறப்பட்ட மனித இனத்தைச் சேர்ந்தவரும், வேடிக்கையானவரும் களிப்பூட்டுவோருமாவர். அவர்களை ஆதியில் செகப்பிரியர் பெரிதும் விரும்பினர்; யோச்சு
பரோ என்பான் இக்கால “முன்னேற்றம்'
எனப்படும் இரக்கமற்ற
படையணிவகுப்புப் போன்ற வாழ்க்கைக்கு முன்னர் அவர்களின்
வாழ்க்கையானது அற்றுப்போகும் காலத்தில், அவர்களை வருணித்
தெழுதியுள்ளான்.
கிராமிய சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பினரும், குழிமுயல்களை யும், காட்டுப்பறவைகளையும், காட்டு முயல்களையும், அப்போது அவற் றைப் பாதுகாக்க எவரும் எண்ணுத இடங்களில், தாம் கண்ணி வைத்துப் பிடித்தல் தமக்கு மிகுதியான பிழைப்பினையும், மகிழ்ச்சி யினையும் கொடுப்பதாகக் கண்டனர். அதனுடன், அவர்கள் வெள்ளை முயல்களை வளர்க்குமிடங்களுள்ளும், பூஞ்சோலைகளுள்ளும் துணிவு மிக்குடையராய் அனுமதியின்றி நுழைந்தனர். உள்நாட்டுப் போர்க் காலத்தில் கிராமிய தொழிலாளரிடையேயிருந்து இரு கட்சிக்கு முரிய இராணுவத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஏழைக் காலாட் படையினர்' ' புரட்சி செய்கிற " அல்லது "வன்மமுள்ள பிரபுக்களின் மான்கணம் வசிக்கும் கணக்கிலாச் சோலைகளை அழித்தலில் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பேருக, மான்கணம் இங்கிலாந்தில் மீண்டும் ஒருபோதும் பூசண விருத்தியடைந்திலது. மேலும், நரிவேட்டை, மீட்சிக்குப் பின்னர் மான்வேட்டையோடு போட்டியிடத் தொடங் கிற்று. அதற்குமுன்னர், நரிகள் அவசியம் நேர்ந்தபோது கொல்லப் பட்டனவேயன்றி, வேட்டைக்குதவுமெனக் காப்பாற்றப்பட்டில. கண்ணி வைத்து விலங்குகளைப் பிடிப்பதும் பறவைகளைக் கொண்டு பறவைகளைப் பிடிப்பதும் முன்பு வேட்டையாடுவோர்
கைக்கொண்ட வழிகளாகும். துவக்குகளை உற்பத்தி செய்வதில்
97

Page 59
98
ஒற்றுமையும் வேற்றுமையும்
ஏற்பட்ட அபிவிருத்தியினுல் இப்போது அவ்வழிகளுக்குப் பகி லாகத் துவக்குகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. முந்திய இத்துப்பாக்கிக் கொலைகாரர் பறவைகளை இருக்கவிட்டு வெடி வைக்கப் பதுங்கிச் செல்வர்; வான்கோழிகளைச் சேக்கையில் விட்டுச் சுடுவர்; கெளதாரிகளைச் சுடுவர், அல்லது நிலத்திலிருக்கும் போது வலையாற் பிடிப்பர். எவ்வாறயினும், இரண்டாம் சாள்சின் ஆட்சிமுறையில், பிரபுக்கள் பலர் மிருகவேட்டையில் மிக நாகரிக மான முறையைக் கையாண்டனர். உண்மையில், அவர்கள் பறவை களைப் 'பறக்கும்போது சுட்டனர்.”*
சுதுவட்டர் காலத்தில், இங்கிலாந்தில் நகர வாழ்க்கை முறைக் கும் நாட்டு வாழ்க்கை முறைக்குமிடையில் துலக்கமான வேற்று மையிருக்கவில்லை. செல்வரின் நிலப்பண்ணைக்குரிய மானிய வாழ்க்கை ஒழிந்துபோனதாலும், நகர வாழ்க்கை அழிந்துபோனதாலும், கிராமம் நகரமாகிய யாவும் பாராளுமன்ற நியதிச் சட்டங்களினல் ஆட்சி செய்யப்பட்டனவேயன்றி, தத்தம் தல-சட்டங்களினலல்ல. மேலும், அவை தேசீய அளவுக்குரிய ஒரேயொரு பொருளாதார அமைப்பில் இணைந்து இயங்கின."
மேலும், அரசியலும் பொருளாதாரமும் பற்றி இங்கிலாந்து ஐக் கியப்பட்டிருந்தபோதும், பிரயாண சாதனங்கள் இன்னும் நாகரிக மற்ற நிலையிலும், போதிய பராமரிப்பற்றனவான தெருக்கள் வெறுக்கத்தக்க நிலையிலுமிருந்தன. அதன்பேருக, பேச்சு, வழக்கம், குணம் ஆகியவற்றில் ஒவ்வொரு மாகாணத்திற்குமுரிய சிறப்பியல்பு கள் அழியாதிருந்தமை வாழ்க்கைக்கு அழகினையும், உணர்ச்சியைத் தூண்டும் ஆற்றலையும் அளித்தது. செய்தித்தாள் அச்சகமும், ஒரே யளவுப்படி யமைந்ததும், எங்கும் நிறைந்ததுமான கல்விமுறையும் இல்லாமை, அவ்வவ்வூருக்குரிய பாரம்பரியம் பாதுகாக்கப்பட ஏது வாயிற்று. சிற்றுாருக்குச் சிற்றுாரும், நகரத்துக்கு நகரமும் கிராமத்
l “The Gentleman's Recreation” at67gpuh Guugolu 1686 ஆம் ஆண்டுப் பத்திரிகை கூறுவது வருமாறு : “ பறக்கும்போது சுடு வதுதான் இப்போதைய முறையாகும் ; ஏனெனில், அனுபவத்தில் அதே மிகச் சிறந்ததும் நிச்சயமானதுமெனக் கண்டுள்ளாராதலினென்க. பட்சி பறந்து கொண்டிருக்கும்போது அதன் விரிந்துள்ள சிறகில் எவ்விடத்திலாயினும் ஒரு சூடு பட்டால், அது இறவாவிடினும், கீழே விழ நேரும். உடனே உன் நாய் அதனைக் கொன்றுவிடும். ” ஏனையோர் அவ்வித்தை மிகக் கடுமையான தெனக் கண்டனர். தோம் யோனிசு என்ற நூலில் (நூல் VII, அத்தியாயம் XI) 1657 ஆம் ஆண்டில் பிறந்தவரென்று கூறப்படும் பிரபு தம் உடன் பிறந்தானின் துவக்குத் திறமையைப் பற்றிக் கூறுவதாவது, "நீங்கள் நம்பமுடியாததென்று ஒருவேளை எண்ணினலும், நிலையியற் பொருளொன்றை மிகுந்த உறுதியோடு சுடும் ஆற்றலுடையரேயல்லாமலும், அவர் மேலே பறந்துகொண்டிருந்த காகமொன்றை உண்மையில் சுட்டு வீழ்த்தியவருமாவர். "
? இந்நூல் (முதலாம் பாகம்) பக்கங்கள் 406, 425 பார்க்க.

ஒவ்வொருவரும் தம்தம்பாடு
துக்குக் கிராமமும் வேறுபாடுடையனவாகும். மனிதரிடையே அவர்
தம் குணத்தின் வெளிப்பாடுகளைப் பொறுத்தவரையிலாயினும்
இப்போதிருப்பதிலும் கூடிய தனித்தன்மை அப்போதிருந்தது.
ஆண்களும், பெண்களும் தீவெங்கும் வரம்பின்றிப் பாந்திருந் தனர். அடிக்கடி பிரிந்தும், தனித்தும் இருக்கவேண்டிய காலங்களி லெல்லாம் தத்தம் தேவைகளைத் தாம்தாமே பூர்த்திசெய்ய வேண்டி யவராயிருந்தனர். வெளி நிலத்திற் பரந்த கிளைகளோடு தனித்து நிற்கும் ஒக்கு மரத்தைப்போல, வழக்கமாகவுள்ள மாதிரியெதற் கும் அமைய வேண்டிய தொல்லையெதுவுமின்றி ஒவ்வொருவரும் தத்தம்மிட்டப்படி வளர இடமிருந்தது. ஒவ்வொருவரும் ‘தம்தம் பாடு என்பதே அப்போதைய நிலை. வேளாளர் கமக்காரர், சிறிய கம்மியர் ஆகியோரின் அக்காலப் பொருளாதார வாழ்க்கை யானது ஒவ்வொருவரையும் அவர் மத்தியகாலத்து நகரவாசிகளுக் கும் அடிமைக் குடிகளுக்குமுரிய தொகுப்பாயமைந்த வாழ்க்கை யிலிருந்ததிலும் அன்றேல், அவர் எமது காலத்தில் முதலாளி தொழிலாளிக் கலப்புக்களால் ஏற்பட்ட நிலையிலிருந்ததிலும் அதிக சுதந்திரமுடையவராகச் செய்தது.
ஆனல், அவ்வாருன தனித்துவம், நெருக்கமிக்க இன்றைய உலகில் காணக்கூடியதிலும் மிக அதிகமாகக் காணப்பட்டதெனினும் பெண்கள் ஆண்களுக்குப் பெரிதும் அடிமைப்படுத்தப்பட்டனர். மேல் நடு வகுப்புக்களுக்குரிய பெண்கள் தங்களுக்குரிய 5626 ரைத் தாமே தேர்ந்தெடுத்தல் அரிதாகவே நிகழ்ந்தது. மேலும், கணவன் நியமிக்கப்பட்டவுடனே சட்டமும் வழக்கமும் பற்றி யாயினும் அவனே முதலாளியும் குடும்பத் தலைவனுமாவான். என்ருலும், செகப்பிரியரின் பெண்பாத்திரங்களாயினும்சரி, பதி னேழாம் நூற்றண்டுக்குரிய மெய்யான வாழ்க்கை வரலாறுகளில் நாம் காணும் வேணி, கச்சின்சன் ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களாயினும் சரி, தனிப்பட்ட பண்பிலும், குணத்திலும் குறை
பாடுடையாாய்க் காணப்படுகின்றிலர்.
ஆற்றலும், சுதந்திரமும், முனைப்பும் மிகவும் நிறைந்துள்ள இப் புதிய ஆங்கிலவுலகம் பிரித்தானிய பேரரசுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குமுரிய அத்திவாரங்களை இட்டுள்ளது. முந்திய சுது வட்டர் காலங்களில் நடந்த குடியேற்றம் அதன் முக்கியத்துவத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஆங்கிலோ சக்சனியரினதும், நோசு சாதியாரினதும் குடியேற்றத்துக்கு ஒப்பான ஓர் உலக இயக்கமாகும். இலிசபெத்தின் காலத்தவர் கடல் வழியை ஆயத்தஞ் செய்தனர். பின்னிகழ்ந்த ஆட்சிகளில் பெருந்திரளாகக் குடியேறிய வர் அதனைப் பயன்படுத்தினர்.
99

Page 60
1OO
அமெரிக்காவிற் குடியேற்றம்
முதலிலிருந்து ஆங்கிலோ அமெரிக்கரில் மிகப் பெருக்தொகை யினர் இங்கிலாந்தின் தென்கிழக்கிலிருந்து வந்தனர். அவர்கள், அத் நாட்டில் மிக முண்ப்பான நோதிக்குச் சந்ததியின் பிரதிநிதி களாவர். அவர்கள் தென் கிழக்கிலும், மத்திய நிலத்திலுமுள்ள பெருங் கிசாமங்களிற் பயின்றனரேயன்றி, மேற்கிலும், வடகிழக்கிலு முள்ள சிறிய கிராமங்களிலும் தனிப்படுத்தப்பட்ட வினேநிலங்களி ஜிம் பயின்றிலரென்க. ஆகையினூல், அத்திலTந்திக்குக் கடலின் மறு புறத்தை அவர்கள் அடைந்தபோது, புதிய இங்கிலாந்தின் நகாஞ் சார்ந்தவூரினே உருவாக்கியமை அவர்கள் இயல்புக்கேற்ற செயலே பாகும். அத்தகைய நிறுவனங்கள் து"த்துக்குப் பரிந்து வட அமெரிக்கா முழுவதினதும் எதிர்காலத்தை உருவாக்கப் பெரிதுமுத வின. பண்படாத இக்காட்டு நிலத்தில் உறுதியான நிலையங்கனே நிறுவுவதற்கு உண்மையில் அவரே தகுதிவாய்ந்தவராவர்; ஏனெனில் அவர்கள் கங்கள் பழைய இடங்களில் தன்முயற்சியையும், பொரு ளே"Tசத் தனிப்பண்பையும் வேனாண்மை, கைத்தொழில்கன், வணிகம் ஆகியன ஒருங்கே செழிப்படைந்த பெரிய கிராமத் தொகுதிகளிலுள்ள இருப்பிடத்தோடு இணேத்து வாழ்ந்தவராவர். யாக்திசைப் பிதாக்கன் தாம் பயிற்சிபெற்ற துறைகளில் தம்மைத் தொழில்கள் காத்திருக்குமெனும் நம்பிக்கையோடு வெளிச் சென் விவிர் ஆணுல், சந்தர்ப்பம் அளித்த எத்தொழிலேயுஞ் செய்ய ஆயக்கராயிருந்தனர். அவர்கள் கேட்டது நிலம் மட்டுமேயாகும். அது அங்கு நிறைய விருந்தது.
சேமிசு, முதலாம் சாள்சு ஆகியோரின் ஆட்சிகனில் குடியேறிய வரில் பெரும்பாலார் சென்றது புதிய இங்கிலாந்துக்கன்று ஆணுல், பேமுடாசுக்கும் , மேற்கிந்திய தீவுகளுக்கும், 1807 ஆம் ஆண்டில் மீட்டு நிறுவப்பட்ட ஆங்கிலக் குடியேற்ற நாடுகனில் முதலாவதான இராஃபின் வேசீனியாவுக்குமென்க, இப்பரப்புக்கனில் சுவாத்தியம் பலவிதத்திலே கவர்ச்சியானதாகும் வேனிேயாவில் புகையிலேச்
1840 ஆம் ஆண்டில் புதிய இங்கிலாந்தின் குடியேறின எறக்குறைய 25,000 ஆங்கிலேயரில் நூற்றுக்கு ஐம்பது பேர் தேம் சபோக்கு, எசெட்சு, எடிசுவாகிய இடங்களிலிருந்து வந்தனரென்று புள்ளி விவர வல்லுநர், வான்முதை வரலாற் ருளாாகியோர் சிலர் கணக்கிட்டிருக்கின்றனர்; நூற்றுக்கு இருபது பேர் வீதம் நோபோக்கு இலிங்கன்சயர், நொற்றிங்காம், யோக்சயர், மிநிஸ்செட்சு ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். "யாத்திரைப் பிதாக்கள்" என்னும் பெயராலேயே குறிப்பிடக்கூடியவரான முதலிற் குடியேறிய இந்த 25,000 பேரும் மிகுந்த சந்த திப் பெருக்கமுடையவராவர். அவர் சந்ததியாரே பிற்றைக் காலங்களில் ஏறக் குறைய 1870 ஆம் ஆண்டு வரையும் அப்பஐேசிய மலேத்தொடருக்கு மேற்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நிகழ்ந்த வளர்ச்சியின் அரசியல், சமூகம் எலுமினாற்றிற்குரிய பண்பாட்டினே எற்படுத்தப் பெரிதும் உழைத்தவராவர்.

, Irmieri, سده - காப்பதுபிேராங்போது
யாருேந்ததுயிரின்
தோளியது.
- Ниш нili i libili
ஆட்டி புவி பங்கா
ug: է էմ ։
ஆங்கிவரு அமெரிக்கக் குடியிருப்புக்கள்
爵 17 ஆம் நூற்றாண்டிங் வீற்புருதி
H" i - నె "சுரு +ektikaj alia LIAகிர்டி:Tடி, 甲 பிரகார், k II 曜
காப்பு, "4 دلدالسلسمسطا
LkLT TTLST TMeLCCCCC LLLCLLATT TLGL L TTeMSGTSS
குடிப்பந்தங்வாடிருந்தா.
மெச்சிக்கோ ஃாகுடா
III * + j-21** ప్ لیاقت" ශ්‍රී: சுந்தபே l ==" مقتبس قد Gırlığı'lir: :::::- r- స్టేట్స్లో
- "عدة لديه لن يتمت
瞄盟 Ħiliiruman sell ஃrib. ୍*୍
"ኞ أنه لم يتم -్యగో
ršas ital கரிபியன் கடல் f urse
:ே புரோவிடகா டி:
Hr

Page 61

ஆதிநாளிற் புதிய இங்கிலாந்து
செய்கையும், தீவுகளில் கரும்புச் செய்கையும் சிலர்க்கு விரைவில் செல்வ மீட்டுதற்கு வழிகாட்டின. ஆபிரிக்காக் கண்டத்துக் காப் பிரிகள் படிப்படியே பெருந்தொகையாக அடிமை வேலைக்கு அமர்த் தப்பட்டனர். ஆனல், ஆதியிலிருந்து பிரபுக்களின் தோட்டங்களில் வேலை செய்தற்குக் குற்றவாளிகளோ, அல்லரோ எவராயிருந்தாலுஞ் சரி, ‘ஒப்பந்தச் சீட்டுள்ள வேலைக்காரரைத் தேருஞ் சுபாவம் இருந்தது.' மேற்கிந்திய குடியேறுநருட் சிலர் தூய்மையாளராவர்; சிலர் அரச கட்சியிடத்தனுதாபங் கொண்டுள்ள ஆங்கிலத் திருச்ச பைக்குரியவராவர்; இன்னும் சிலர், பழைய உலகில் வாழ்க்கையில் வெற்றிபெறத் தவறியமையால், கடல் கடந்த நாடுகளிற் புதிதாகத் தொழில் எதையும் தொடங்கிச் செய்தற்கு அனுப்பப்பட்டவராவர். அவர்கள் குடியேற்ற நாட்டுக்கு ஒருபொழுதும் அதிக நன்மை செய்தவரல்லர். வேசீனியாவிலும், தீவுகளிலுமுள்ள ஆங்கிலக் குடி யிருப்புக்களில் உள்ளூர்ச் சுய ஆட்சி ஏற்படலாயிற்று. அது ஏனைய நாட்டினங்களின் குடியேற்ற நாடுகளுக்கும் அக்குடியிருப்புக்களுக்கு முரிய வேறுபாட்டைக் காட்டுவதாயிற்று.
ஆனல், அயனமண்டலத்தைச் சார்ந்த இக் குடியேற்றநாடுகள், பிரதானமுடையனவாயிருந்தும், வட அமெரிக்கா முழுவதிலும் ஆங்கிலச் சட்டத்தையும், மொழியையும் புகுத்த முடியாது போயிற்று. இரு கடல்களுக்கிடையேயுள்ள அக்கண்டத்தை மூடி மறைத்தற்கான கிளைகளையுடைய மரமானது, புதிய இங்கிலாந்தின் நகாஞ் சார்ந்த ஊர்களுக்குரியதும், நெருக்கமாகக் குடியேற்றப் பட்டதும், குடியாட்சிக்குரியதுமான தூய்மையாளர் நாட்டிலேயே மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. அங்கு குளிர்காலம் நீண்டதும் தாங்க முடியாததுமாகும்; நிலம் மண்வளமற்றதும், கற்கள் நிரம் பியதுமாகும்; காடுகள் எல்லாவற்றையும் மூடி மறைத்துக்கொண்டு கடற்கரைவரையும் அடர்ந்துள்ளன ; செவ்விந்தியர் ஊருக்குப் புறத்தேயிருந்த விளைநிலத்தையும், சிலவேளைகளில், போதிய காப்பில்லாத நகரஞ் சார்ந்த ஊரையும் திடீரெனத் தாக்கிச் சுற்றிலும் கொள்ளையிடத் திரிவர். ஒவ்வோர் ஏக்கர் நிலமும், கோடரி, கலப்பைகள் கொண்டு பாடுபட்டுத் திருத்த வேண்டி யும் வாள், துவக்குகள் கொண்டு காக்க வேண்டியுமிருந்தது. ஆயினும், அவ்வாறன நிலத்தில் முந்திக் குடியேறியபோது எல்லாக் கடின வேலைகளும் அங்கு குடியேறியவரின் சிறப்பான குணங் காரணமாகவும், அவர்கள் இங்கிலாந்திலிருந்து அங்கு வந்தமை காரணமாகவும், பொறுமையோடு மேற்கொள்ளப்பட்டு வந்தன. உலோட்டுவின் துன்புறுத்தல் மிகச் சிறந்த மேன்மக்கள், வேளாளர், கம்மியர் ஆகியோர் சிலர்க்குக் குடியெழும்பும் விருப் பத்தை விளைத்தது. அவ்வாருரன மக்கள் தமக்குச் சொந்தமானதும்
10.
1620–1640.

Page 62
102
குடியேறுநர் இயல்பு
புதியதுமான ஊரின் இயல்பினைக் குறித்து அக்கறையில்லாதிருந்தா சல்லர். அந்நாளுள்ள ஆங்கிலத் தூய்மையாளன் தான் மேற்கொள்ள விரும்பியதும், தன் அயலார் மேற்கொள்வதைத் தான் காண விரும்பி யதுமான ஒரு தனிப்பட்ட சமய வாழ்க்கையில் தன்னைக் காத்தற் குரிய பெரியதும், ஒரே தன்மைத்தானதுமான சமூக மொன்றைத் தேடினன். நிலத்தை இனமாகப் பெறவிருந்த விருப்பமும் பொரு ளாதார நல்வாய்ப்பும் அவர்களைக் கவர்ந்தனவெனிலும் அவை மாத் திரம் புதிய இங்கிலாந்தின் முல்லை நிலத்தை மக்களால் நிரப்பி யிருக்க மாட்டா; ஏனெனில், 1640 ஆம் ஆண்டில் துன்புறுத்தல் ஒழிந்ததும், அவ்விடத்திற் குடியேற்றமும் ஒழிந்துவிட்டதாதலி னென்க. ஆணுல், முந்திய இருபதாண்டுகளில் அங்கு குடியேற்றப் பட்ட சந்ததிப் பெருக்கமுள்ள வமிசம் வட அமெரிக்காவின் வருங் காலத்துக்கு வழி வகுத்ததென்க.
இப்பேர்ப்பட்ட குடியேறுநர் உறைபனி மூடியதும், பாறை கள் நிரம்பிய காடுகளடர்ந்ததுமான அக்கொடிய நிலத்தில் முதற் குளிர்காலங்களைச் சகிக்கவும், அந்நிலைகளுக்குத் தம்மைப் பழக்கிக் கொள்ளவும் வல்லவர் ; ஏனெனில், அவர்கள் தம்மிலும், தம்மோடு சேர்ந்தவரிலும் நம்பிக்கையுடையவரும் பொதுவான இலக்கொன் றைத் தம்மிடையே கொண்டவருமான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் களும் பெண்களுமாவாாதலினென்க. அவர்களிற் சிலர் செல்வமுள்ள வர்; மேலும் மசச்சூசெற்றுகிய குடியேற்ற நாட்டுக்கு ஆங்கில மக்கள் பணமும், பொருள்களும் நல்ல அமைப்பாளரும் அனுப்பி ஆதரவு காட்டினர். அவ்வாறு செய்த மக்கள் தம் சொந்தவூரிலேயே இருந்த செல்வமுள்ள தூய்மையாளப் பிரபுக்களும், பெருஞ் செல் வரும் இலண்டன் மாநகர வணிகருமாவர். அவர்கள் இச்செயல் களுக்கு உதவி செய்தற்கு ஓரளவுக்குச் சமயமும், ஓரளவுக்குத் தம் பணத்தை முதலீடு செய்யும் விருப்பமும் காரணமாகும்.
முதலாம் சாள்சு இந்நடவடிக்கைகளைத் தடுத்தான் அல்லன்; ஏனெனில், தனக்குத் தொந்தரவு தரக்கூடியவர்கள் தாமாகவே ஊரைவிட்டு நீங்குதலைக்காண விரும்பினணுதலினென்க. பன்னிரண் டாண்டுகளாக அவன் நடத்திய தனியாட்சி முழுவதும் அவனுடைய ஆங்கிலக் குடிமக்கள் எதிர்ப்பின்றி இருந்ததற்கு அப்பிசாசுகள் புறப்பட்டமை உண்மையில் பெருங்காரணமாயிருந்தது. இலிசபெத் தின் காலத்திலும் அதன் பின்னரும் ஆங்கிலக் கிறித்துவத் துன்புறுத் தல் அரைப்பங்குக்கு மேலாக அரசியற் காரணத்தால் ஏற்பட்ட தாகும். உரோமன் திருச்சபையோ, ஆன்மாக்களே ஈடேற்றத் துன் புறுத்தியது; ஆகையால், அதனுடன் இணங்கல் அரிதாயிருந்தது. உரோமாபுரி உலகின் எப்பாகத்திலாயினும் புறநெறியைச் சகிக்கமுடி யாதிருந்தது; ஆகவே, பதினன்காம் உலூயி கனடாவில் இயூகனற்

மக்களுரிமையும் திருச்சபையமைப்பும்
அறுக்களுக்கு இடங்கொடுக்கவில்லை; மேலும் இசுப்பெயினும் தென் அமெரிக்காவில் புரட்டெசுத்தாந்தர்க்கு இடங்கொடுக்கவில்லை. ஆனல், முதலாம் சாள்சும், பிந்திய ஆண்டுகளில் கிளாறெண்டனும், ஆங்கிலத் திருச்சபை உடன்பாடு அரசியலமைப்பின் அடிப்படை யாகத் தாய் நாட்டில் அனுசரிக்கப்படல் வேண்டுமென்னும் நிபந்தனை யின்பேரில் அத்திலாந்திக்குக் கடலுக்கு மறுபுறத்தே குடியேறிய வராகிய தூய்மையாளர்க்கும் உரோமன் கத்தோலிக்கர்க்கும் இடங் கொடுத்தனர்.
புதிய இங்கிலாந்து ஆகியோடந்தமாய் மனேநிலையிற் குடியாட் சிக்குரிய நாடாகும். சக்சனிய பட்டினமுறை கிழக்கு அங்கிலியா
விலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்; ஆனல் பெருஞ் செல்வர்
வகுப்பினர் அங்கு சென்றிலர். காடுவெட்டித் திருத்தித் தாமே பயிர் செய்ய ஆயத்தரான எவர்க்கும் சுதந்திரமானியங்களாக ஏராளமான நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இச்செயல் முறையே ஆதியான வட அமெரிக்கக் குடியரசின் உறுதியான அடிப் படையாகும். நிலங் குறைவாகவும் உயர்ந்த பெறுமதியுள்ளதாகவும் குறைவான குடிமக்கள் தொகை கொண்டதாகவுமுள்ள தீவொன் றில் பெருஞ்செல்வர் வகுப்பினர் தொடர்ச்சியாக முன்னேற்றமடை வாராயினர்; ஆனல் புதிய இங்கிலாந்தில் அதற்கு மாமுன நிலைமை கள் நிலவின. போர்வீரரான நிலக்காரரின் கீழ் தற்காப்புக்காகச் சமூகத்தை ஒழுங்குபடுத்த நிலமானியமுறை எழுந்தது. ஆனல் புதிய இங்கிலாந்தில் சமூகம் ஒருமித்துச் செயலாற்றியது. நகசஞ் சார்ந்தவூரும், குடியேற்றநாடும் செந்நிற மக்களோடு சண்டை செய் தற்குத் தேவையான ஒழுங்கினைச் செய்து கொண்டன. மேலும், தாய்நாடு ஒல்லாந்தரையும், பிரான்சியரையும் தோற்கடிக்க உதவி யளித்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, திருச்சபை குடியாட்சிக்குரியதாகும். மேலும், குடியேற்ற நாட்டை நிறுவியதற்குச் சமய நோக்கங் களே காரணமெனலாம். ஆரம்பத்தில் மசச்சூசெற்றில், அதே காலத்துள்ள கொத்துலாந்திலும் மேலாகக் குடியரசுக்குரிய திருச் சபை அரசாங்கத்தை நடத்தி வந்தது. மக்கட்டொகை முழுவதி
அலும் பெரும்பகுதியாயுள்ள 'திருச்சபை யுறுப்பினர்’க்கே பூரண"
மான அரசியல் உரிமைகள் கொடுக்கப்பட்டன. குடியேற்ற நாட் டுக்குள்ளே சமயச் சகிப்பு காரணமான பாசாங்கு எதுவும் நிலவ வில்லை. மசச்சூசெற்றில் நிலவிய தனிப்பட்ட விதமான தூய்மை நெறியிலிருந்து சமயச் சுதந்திரம்தேடும் இணங்காதார் பெயர்ந்து போய் உருேச்சர் உவிலியம்சு என்பானின் தலைமையில் சகிப்புத் தன்மையுடை தூய்மையாளர்க்குரிய குடியேற்ற நாடாகிய அண்
இந்நூல் (முதலாம் பாகம்) பக்கம் 126 பார்க்க.
03

Page 63
104
புவியியலால் நேர்ந்த இடர்
டையிலுள்ள உருேட்டு தீவை நிறுவினர். கடுமையானதும், கட்டுப் பாடற்றதுமான இருவகைப்பட்ட தூய்மை நெறியையும் புதிய இங்கிலாந்து கொண்டிருந்தது.
புதிய இங்கிலாந்திலுள்ள சமூகம் நீரிலும் நிலத்திலும் வாழ்ந் தது. சிறந்த துறைமுகங்களையும், குடாக்களையுமுடைய கடலோ ரப் பிரதேசமும், அதற்கு அண்டையிலுள்ள மீன்பிடிக்கு மிடங் களும் கரையோரமாக மக்களை வாழச் செய்து அவர்களைத் திட காத்திரரான கடலோடிகளாக்கின. கடலருகேயுள்ள வணிக நகர மான பொசுதன் அவர்தம் தலைநகரமாகும். அத்திலாந்திக்குக் கடல் ஒரங்களிலுள்ள காடுகள், இரும்புக் கலங்களின் காலம் வரைக்கும், அவர்கள் கப்பல் கட்டற்கு வசதியளித்தன. பழைய ஆங்கிலக் காட்டில் முந்திய சக்சனியரின் வீடுகள் எங்கும் மாத் தால் கட்டப்பட்டிருந்ததுபோலவே அவர்களின் வீடுகளும் கட்
டப்பட்டிருந்தனவென்க.
புதிய இங்கிலாந்திலும், அமெரிக்க கடலோரப் பிரதேசத்திலுள்ள ஆங்கிலக் குடியேற்ற நாடுகள் எவற்றிலும் குடியிருப்போர் கரை யோரமாகவே வாழ விரும்பினர் என்பதோடு நாட்டினுள்ளே நன்கு நுழையாதபடி பாதகமான இயற்கை நிலைகளினல் தடுக்கப்பட்டு முள்ளனர். அப்பலேசிய அலெகானி மலைகளும், சென் உலோறன்சு குடாவரையும் மரங்களடர்ந்த காடுகளாக வடக்கு நோக்கிக் கிடக் கும் அவற்றின் தொடர்ச்சியும், உள்நாட்டிலும், ஒகையோப் பள்ளத் தாக்கிலும் செழிப்பான மண்ணுள்ள பெரும் பிரெயரிசுப் புல்வெளி கள் உள்ளன என்பதை முந்திக் குடியேறிய ஆங்கிலேயர் அறிய விடாது தடுத்தன. ஆனல், பிரான்சிய குடியேற்ற நாட்டாரின் பெரும் பாதையான சென் உலோறன்சு ஆற்றைப் போல, உள்நாட் டுக்குட் செல்வதற்கு இலகுவான பாதையொன்றை அவர்களுக்கு வேறெந்த ஆறும் அளித்திலது. இப்புவியியல் தடை, நெருக்கமான குடியேற்றத்துக்கும், கரையோரமாகவுள்ள குடியேற்ற நாடுகள் பலவற்றின் வளர்ச்சிக்கும் வாய்ப்பளித்தது. இக்குடியேற்ற நாடு கள் யாவும் உறுதியான அரசியலமைப்பையும் மிகுந்த சனத்தொகை யையும் உடையன. இக்காரணத்தால் பதினெட்டாம் நூற்முண்டில் இங்கு வாழ்ந்த ஆங்கில மக்கள் அப்பலேசியத் தடையினை ஈற்றில் தாண்டி ஒகையோப் பள்ளத்தாக்கிலும், மத்திய மேற்கிலுள்ள பெரும் புல்வெளிகளிலும் பிரவேசித்தபோது அப்பிரதேசங்களில் முன்பே குடியேறியிருந்த பிரான்சியரைத் தொலைத்துவிடவும், அதன் பின்னர் வெறுமையான கண்டத்தினூடாக வியத்தகு விாை வொடு முன்னேக்கிச் செல்லவும் போதுமான ஆற்றல் வாய்ந்தவரா யிருந்தனர். அதனுடன், என்றும் மாறிக் கொண்டிருக்கும் எல்லைப்

கனடாவிற் பிரான்சியர்
புறத்தையுடையதான புதிய இங்கிலாந்தின் வாழ்க்கை முறை யினைப் பரந்த நிலப்பரப்புக்களெங்கணும் நிறுவுபவருமாயினர்.
சென் உலோறன்சு ஆற்றின் கரையோரங்களில் பிரான்சியர் குடி யேறியமை புதிய இங்கிலாந்தின் குடியேற்றத்தோடு சமகாலத்த தாயிருந்த போதிலும், அவையிரண்டும் ஒன்றற்கொன்று முழுதும் வேறுபட்டனவாகும். ஒன்று கடலோரப் பிரதேசத்தின் குடியேற்ற மாகும். மற்றது, கண்டத்தினுட்புறத்தே தொலைவாக இட்டுச் செல் அலும் ஒரு போாற்றுப் பெரும்பாதையினதாகும். முன்னரே குடியே
றிய ஆங்கிலேயர் தம் தொகையினரைப் பெருக்கிக்கொண்டு, பெரிய
ஆம், ஆயினும் வரம்புக்குட்பட்டதுமான நிலப்பரப்பினைக் கொண்ட வேளாண்மைக்குரிய ஊர்களில் தமது சத்தியைச் செலுத்துவாாா யினர். அப்பொழுதே பிரான்சியர் மத போதகராகவும், விலங்கு ரோம வணிகராகவும் சென் உலோறன்சு ஆற்றைத் தாண்டிச் சென்ற னர்; சென்று பேரேரிகளைக் கண்டு பிடித்தனர். அப்பால் மிசிசிப்பி ஆற்றின் வழியாகச் சென்றனர். விலங்குரோம வணிகமே அவர் களின் பொருளாதார நோக்கமாயிருந்தது. ஆகையினல், அவர்கள், விலங்குரோமம் வாங்கும் மக்களான கண்ணிவைத்து மிருகங்களைப் பிடிக்கும் செவ்விந்தியரோடு சினேகமான முறையில் நடந்து கொண்டு அவ்வணிகத்தைப் பெற முயற்சி செய்தனர். மறுபுறமாக புதிய இங்கிலாந்து மக்கள் இந்தியனின் வேட்டை நிலங்களிலே தாம் பயிரிட விரும்பினர். மேலும், அவனை அாைப்பங்கு மாத்திரம் மனித இயல்புடையனென்றும், தம் பகைவனென்றும் மதித்து வரு வாாயினர். ஆங்கிலேயரின் நிறவுணர்ச்சி பிரான்சியரின் உணர்ச்சி யிலும் மிக வைரமுள்ளதாகும்.
புதிய இங்கிலாந்து குடியரசுக்கும், தாய்மைவாதத்துக்குமுரிய
நாடான அளவுக்குப் பிரான்சிய கனடா நிலமானியத்துக்கும் உரோமன் கத்தோவிக்கத்துக்குமுரிய நாடாயிற்று. பழைய பிரான் சில் பத்தியும் பணிவும் மிக்குடைய பிறற்றன் குடியானவன் தன் குருவினதும், பிரபுவினதும் தலைமையில் புறப்பட்டு, புரோகிதத்துக் கும் மானியத்துக்குமுள்ள சமூகத்தைச் சென் உலோறன்சு ஆற்றங் கரையில் மீட்டு நிறுவினன். அச்சமூகம் மாத்திரமே அவன் அறிந் துள்ளதாகும். வட அமெரிக்காவிற் குடியேறிய பிரான்சிய மக்களி டத்தே குடியாட்சி அல்லது சுய ஆட்சி பற்றிய கருத்தெதுவும் காணப்பட்டதில்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்க் கொணரப் பட்டதின் பேருகப் பதினெட்டாம் நூற்முண்டின் பிற்பகுதியில் குடி யாட்சியை அல்லது சுய ஆட்சியைப் பற்றிய கருத்துக்கள் இடை யிற் புகுத்தப்பட்டன. குடியேற்ற நாட்டினை நிறுவ ஒழுங்கு செய்து உதவி நிதியளித்த பிரான்சிய அரசாங்கம் அதனை அதிக கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஒவ்வோர் ஆடவனேயும் கட்டாய
05

Page 64
106
முடியும் குடியேற்ற நாடுகளும்
மான படைச் சேவைக்குட்படுத்தியது. உலுயி அரசனின் அனுமதி யின்றிக் குடியேற்ற நாட்டுக்குள் எவரும் போக முடியாதி, அன்றி யும், அவ்வனுமதி இயூகனற்றுக்களுக்குக் கொடுபடவுமில்லை.
இணங்காமையால் ஏற்பட்ட தன்முயற்சியால் உண்டான விளைவு எனப்படும் இங்கிலாந்தின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள், தம் சொந்த அரசாங்கத்துக்குப் பிரான்சு, இசுப்பெயின், ஒல்லாந்து ஆகியவற்றின் குடியேற்ற நாடுகளிலும் குறைவாகவே கீழ்ப்படிந் துள்ளன. ஆங்கிலக் குடியேற்ற நாடுகள் அரசின் சட்டங்களால் தோன்றியனவன்று. ஆனல், அவைகூட்டு மூலதனக் கம்பனி களின் அல்லது தனிப்பட்ட முதலாளிகளின் முயற்சிகளாற் முேன்றியவையென்க. அவைகள் முடியின் ஆட்சிக்குப் படிப்படி யாகக் கொண்டுவரப்படுகையில் குடியேற்ற நாட்டினுள் சுய ஆட்சிப் பழக்கத்தை அரசவதிகாரியின் ஆட்சிக்கேற்றவாறு இடை விடாது அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு செய்கை யில் சச்சரவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றின் விளைவு பல சண்டை களை உண்டாக்கிய ஓர் 'இரட்டையாட்சி' யாகும்; ஆனல், அக் காலச் சூழ்நிலையில் அது அவசியமாயிருந்தது.
ஆள்பதி ஒருவர் இருந்தும், குடியேற்ற நாடுகள் நடைமுறையில், தம் உள்நாட்டு அலுவல்களைப் பொறுத்தமட்டில் சுயஆட்சியுடை யனவாகும். உலோட்டு புதிய இங்கிலாந்தின் சமயச் சுய நிர்வாகத் தில் தலையிட நினைத்தான். மேலும், முதலாம் சாள்சின் வல்லாட்சி படைய நாட்டில் பாதுகாப்பாக நிலைநாட்டப்பட்டிருந்தால், கட லுக்கப்பால் தன் விருப்பப்படியான அரசாங்க முறையினை விரி வாக்கும் முயற்சியிலிருந்து ஒரு நெருக்கடி விரைவில் தோன்றி யிருக்கும். ஆனல், தாய்நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களினல், குடி யேற்ற நாடுகள் தம் சுதந்திரமனேநிலையை வளர்த்தற்கு இருப தாண்டுக் காலத்தைப் பெற்றன. மசச்சூசெற்று போர் தொடுத்துப் புதிய குடியேற்ற நாடுகளைத் தாய்நாட்டரசாங்கத்தைக் கேளாமல் நிறுவியது; அன்றேல் கைப்பற்றியது. 1649 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற பாராளுமன்றம், அரசகொலையடிப்படையில் பேரரசின் ஒற்றுமையை மீட்டு வற்புறுத்தும்போது, ஆங்கிலப் பாராளுமன்றம் குடியேற்ற நாடுகளுக்குச் சட்டமியற்றவும் அவற்றை ஆட்சிசெய்ய வும் கூடுமென்ற புதுமையான கோட்பாட்டினை வெளிப்படுத்தியது உண்மையேயாகும். ஆனல், ஒலிவர் காப்பாளராகவிருந்துகொண்டு, புதிய இங்கிலாந்தின் உணர்ச்சியோடு கூடிய சுதந்திரத்தைப் பெரி தும் மதித்துள்ளான். மேலும், மீட்சி குடியேற்ற நாடுகள் பாராளு மன்றத்தோடன்றி நேரடியானவொரு தொடர்பை மீண்டும் அர சோடு ஏற்படுத்திக்கொள்ளுதற்கு வழிசெய்தது.

மசச்சூசெற்றர் பிணக்கு
மசச்சூசெற்று சுயேச்சை ஆதிபத்தியத்துக்கு உரிமை கோருவது போன்ற ஒரு உளப்போக்கை முந்தியே மேற்கொண்டுள்ளது. இது சாள்சு, இரண்டாம் சேமிசு ஆகியோரின் ஆட்சிகள் முழுதும் ஒரு நீண்ட வெறுப்புக்குரிய தகராற்றைத் தூண்டிற்று. 1683 ஆம் ஆண்டில் இது உச்ச நிலையை அடைந்தது. அவ்வாண்டில் மசச்கு செற்றின்.உரிமைச் சாசனமானது இங்கிலாந்தில் தோரிக் கட்சியின ரின் எதிர்ப்பு உச்சநிலையிலிருந்த சமயத்தில் நீக்கப்பட்டது; அப் போதே எத்தனையோ ஆங்கில நகரங்கள் தங்கள் பழைய உரிமை களிலிருந்து அதே மாதிரி விலக்கப்பட்டன. மசச்சூசெற்றைப் பொறுத்த அளவில் அவ்வூராரது மிதமிஞ்சியபோக்கு இந்நடவடிக் கைக்குப் பெருமளவிற் காரணமாயிருந்ததெனலாம். எனினும், அக் குடியேற்றப் பகுதியை வல்லாட்சிக்குக் கீழ்ப்படுத்தச் செய்த முயற்சி நியாயமானதென்று கூறமுடியாது. 1689 ஆம் ஆண்டுப் புரட்சி எத்தனையோ முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க வாய்ப் பளித்ததுபோல, இதற்கும் வாய்ப்பளித்தது. புதியதோர் உரிமைச் சாசனம் கொடுக்கப்பட்டது; சுய ஆட்சியும் மறுபடி அமைக்கப் பட்டது. இவற்றிற்கு நிபந்தனை என்னவெனில், அரசியல் உரிமைகள் திருச்சபை உறுப்பினர்க்கு மாத்திரமேயன்றி, குடி யேறிய முழுச்சமூகத்துக்கும் கொடுக்கப்படவேண்டுமென்பதே யாகும். திரு. திருசுலோ ஆதாமிசு என்பான் எழுதியது வருமாறு : * இங்கிலாந்தின் நன்மையினல், மதச்சார்பாட்சிக்கு ஈற்றில் நியாய மான பேரிடி விழுந்தது ; அன்றியும், உண்மையான சுய ஆட்சிக்கும் சமயப் பொறுமைக்கும் அத்திவாரமும் இடப்பட்டது.'
புதிய இங்கிலாந்து தாய்நாட்டு அரசாங்கத்திலிருந்து தன்னை ஒரு காலத்தில் விடுவித்துக்கொள்ளுமென்ற 'நிலைமை ஆகி தொட்டே இருந்து வந்தது. அது, இரண்டாம் சாள்சின் மீட்சிப் பொழுது பழைய இங்கிலாந்துக்கும் புதிய இங்கிலாந்துக்குமுள்ள சமூகமும் சமயமும் பற்றிய வேறுபாடுகள் மாற்றமுடியாவாறு அமைந்தபோது, இவ்வாறு நிகழும் என்பது மேலும் உறுதிப்
பட்டது. தாய்நாட்டில் ஆங்கிலத் திருச்சபையும் உயர்குடியாட்சி
யும் அாய்மையாளர் சமயத்தையும் குடியாட்சியையும் மீண்டும் கீழ்ப்படுத்தியுள்ளன. இவ்வொழுங்கினை 1689 ஆம் ஆண்டுப் புரட்சி சற்றே மாற்றியதேயன்றி முற்முகத் திருப்பியமைக்கவில்லை. வேசி னியாவையும் பாபடோசுவையும் அரசகொலைக் குடியரசுக்கு அடங்கி நடக்கச் செய்தற்குச் சண்டைசெய்து கட்டாயப்படுத்த வேண்டி யிருந்தபோதும், குருெம்வெல் மசச்சூசெற்றேடு சினேகமான முறை யிலிருப்பது இலகுவானதெனக் கண்டனன். சமயமும் சமூகமும் பற்றிய ஒழுங்கொன்று காப்பாளராட்சியின் கருத்துக்களோடு ஒத்துள்ளதாய், தாய்நாட்டில் நிலைபெற்றிருந்தால், பழைய இங்
1691.
O

Page 65
08
1664.
குருெம்வெலும் சாள்சும்
கிலாந்துக்கும் புதிய இங்கிலாந்துக்குமிடையே நேர்ந்த சமூகமும் அறிவும் பற்றிய தப்பெண்ணமானது பதினெட்டாம் நூற்முண்டின் நடுப்பகுதியில் வலுப்பெற்றதுபோல நிகழ்ந்திராது.
குருெம்வெல் பேரரசுக்குரியவன் என்ற உணர்ச்சியோடு இங்கி லாந்தை முதல் ஆட்சிசெய்தவனுவன். அவனுக்கு முன்னர், குடி யேற்றம் சம்பந்தமாக அரசாங்கம் கொண்ட கருத்து அனுமதி கொடுக்கிறதொன்முய் மாத்திரம் அமைந்துள்ளது. காப்பாளன் சமேய்க்காவைச் சண்டைசெய்து கைப்பற்றினன்; அதனுல் மேற் கிந்திய தீவுக்கூட்டத்தில் ஆங்கிலேயர்க்குள்ள உடைமைகளின் முக்கியத்துவத்தைப் பெரிதும் உயர்த்தியுள்ளான். அவன் பிரான் சியரிடமிருந்து ஆக்கேடியாவையும் பிடித்தான்; ஆனல், மீட்சிக் குப் பின்னர் அது திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ஆக்கேடியாவை நழுவவிட்டனவேயெனினும், இரண்டாம் சாள் சின் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் கிளாறெண்டன். சாவ்சுபரி ஆகியோரின் செல்வாக்கிலகப்பட்டு, குருெம்வெலின் குடியேற்றப் பூட்கைக்குரிய உற்சாகத்தை இன்னமும் பெற்றிருந்தன. அவைகள் பெரும்பாலும் ஆங்கிலேயரின் வணிகத்தை வளர்ப்பதையும் அவர் தம் பொருள்களுக்கு அங்காடிகளைக் காண்டலையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்கரின் அலுவல்களில் புத்தியாக அக்கறை எடுத் தன. இளவரசனுன உரூபேட்டுவும் அரசபரிவாரத்தினரும், கனடா வில் மிருகங்களைக் கண்ணிவைத்துப் பிடிக்கும் வடபாலுள்ள பிரான் சியரைத் தம்பால் திருப்பிக் கொண்டு அட்சன் விரிகுடாவுக்குச் சென்ற விலங்குரோம வணிகரான ஆங்கிலேயரை ஆதரித்தனர். முக்கியமாக, புதிய இங்கிலாந்துக்கும் வேசீனியாவுக்குமிடையே உள்ள கூட்டமான மத்திய குடியேற்ற நாடுகளை இங்கிலாந்து ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றித் தன்வசமாக்கியது ; புதிய அமித்தடாமைப் புதிய யோக்குவாக மாற்றியது. அதனல், மேயினி லிருந்து புதிய குடியேற்ற நாடாகிய கருேலின வரையும் பிரித்தா னிய கொடியின் கீழ் கடற்கரையையொட்டி இடையருத பிரதேச மொன்றைப் பெற்றது. அக்கடற்கரைக் குடியேற்ற நாடுகளின் பிற் புறத்தே நிறுவப்பட்டதே எவற்றினும் மிக விந்தையான குடி யேற்றநாடு : இரண்டாம் சாள்சின் அரசாங்கம், இங்கிலாந்தில் தோரிக் கட்சியினரின் எதிர்த்தாக்கம் மிக வலிமையுற்றிருந்த
குருெம்வெல் காலந்தொட்டு செச்சுமூர்ப் போர்வரையும், அதன் பின்னரும் உள்நாட்டுப் போர்களின் விளைவால் அரசியற் குற்றவாளிகளாயும், போரிற் சிறைப்பட்ட துக்கம் நிறைந்த பெருந்தொகையினராயுமுள்ளோர் மேற்கிந்திய பண்ணையாளர்க்கு ஒப்பந்தச் சீட்டுடைய வேலைக்காரராகவும், செயல்முறையில் அடிமைகளாகவும் சில்லாண்டெல்லைவரை பணியாற்றுதற்கு அனுப்பப்பட்டனர். இவ்வித இழிவான முறையில் ஆங்கில வமிசம் பெருகுவதாயிற்று.

மத்திய குடியேற்ற நாடுகள்
நேரத்திலே முல்லை நிலத்தில் துன்புறுத்தப்பட்ட நண்பர்க்குப் புக லிடமாகப் பென்சில்வேனியாவை அமைத்தற்கு 'குவேக்கரான ' அரசவூழியரும், அமைப்பாளருமான உவிலியம் பென் என்பார்க்கு அனுமதி யளித்தது. ஆங்கே இக்குடியேறுநர் செந்நிற மக்களோடு நேர்மையாக நடந்துகொள்ளுதல் எனும் வழக்கமற்ற கோட்பாட் டினைக் கடைப்பிடித்தொழுகுவாராயினர். ܫ
இம்மத்திய குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றி அவற்றில் மேலும் மக்களைக் குடியேற்றியகாலை பிரித்தானிய பேரரசின் அமைப்பிலே மிக முக்கியமானவையான இரண்டு புதிய தத்துவங்கள் நடை முறையிற் புலப்பட்டன. அவையாவன : பிரித்தானிய கொடியின் கீழ் வேறுபட்ட பல சாதிகள் சம உரிமைகளோடு ஒன்றுபட்டிருத் தலும், எவரிடத்தும் காட்டவேண்டிய சமயப்பொறுமையுமாகும். அத்தத்துவங்கள் புதிய இங்கிலாந்தில் எழுந்தவையல்ல. அவைகள் ஒல்லாந்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மத்திய குடியேற்ற நாடுகளில் பெருமளவில் விருத்தியாக்கப்பட்டன. அங்கே ஒல்லாந்தர் தம் வழக் கங்களுக்குக் காட்டப்பட்ட மரியாதையாலும், தங்கள் சொந்தக் கொடியின் கீழ்த் தாமறிந்திராத சுய ஆட்சிக்குரிய உரிமைகளை அனு பவித்ததிலுைம் விரைவில் இணக்கப்படுத்தப்பட்டனர். புதிய யோக்குவாகிய குடியேற்ற நாடு, பென்சில்வேனியா, மேரிலாந்து, புதிய சேசி ஆகிய இடங்களிலுள்ள ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சுவீடி யர், சேர்மனியர், பிரான்சியர், அல்சுத கொத்துலாந்தர் ஆகியோர் சுதந்திரச் சமவுரிமையோடு முற்முக ஒன்றுபடுத்தப்பட்டனர்அவர்கள் ஆங்கிலக் கிறித்துவர், தூய்மையாளர், கல்வின் கொள்கை யினர், உலூதர் கொள்கையினர், உரோமன் கத்தோலிக்க்ர், குவேக் கர், பிரெசுபித்தீரியர் ஆகியோரென்க. பதினன்காம் உலூயி காலத்து ஐரோப்பாவில் உரோமன் கத்தோலிக்கரின் துன்புறுத்தலை மீண்டும் தொடங்கியபோது அதற்குப் பலியாகிய இயூகனற்றுக்கள் உவந்த குழ்நிலையொன்றுக்கு வந்தவர்போல, அவ்விடத்துக்கு வந்தனர். மேலும், பிரித்தானிய தீவுகளில் மாத்திாம் நடந்த ஆங்கிலக் கிறித்துவரின் சகியாமையாற்றுன்புற்ற உரோமானியரும் தூய்மை யாளரும் அதேபோல அங்கு வந்தனர்.
பெரிய பிரித்தானியாவுக்கு எதிராக ஈற்றில் புரட்சி செய்த பதினெட்டாம் நூற்றண்டிற்குரிய வட அமெரிக்காவானது, புதிய இங்கிலாந்து, மத்திய குடியேற்ற நாடுகள், தெற்கில் அடிமைகளே யுடைய உயர்குடி மக்களைக் கொண்ட நாடுகளாகிய மூவகைக் குடி யேற்ற நாடுகளின் இணைப்பாலானதாகும். இக்கால அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க மனேநிலை அத்திலாந்திக்குக் கடலிலிருந்து பசு பிக்குக் கடல்வரையும் ஈற்றில் பரந்துள்ளது. அம்மனேநிலை குடி
6-R 593 (11162)
68.
109

Page 66
110
நிலைபெயரும் எல்லைப்புறம்
யாட்சிக்குரிய நகரின் கருத்துக்களும் பழக்கங்களும் புதிய இங்கி லாந்தின் தன்னம்பிக்கையுடையதான தூய்மைவாதத்தோடு கலந்த தனல் உண்டானதாகும். ஆயினும், மத்திய குடியேற்ற நாடுகளில் முதற் கலந்துள்ள சாதிகளும், சமயங்களும் வளர்ந்துவந்த சமயம் சாதிகள் பற்றிய தப்பெண்ணம் ஆங்கிருந்ததில்லை.
மேனியிலிருந்து கருேவினவரையுமுள்ள குடியேற்ற நாடுகள் எல்லாவற்றிற்கும் பொதுவாகவுள்ள மூன்ருவது அமிசம் எல்லைப்புற மனுேநிலையாகும். அமெரிக்க வரலாற்றில் எல்லைப்புறம் என்ருரல் ஐரோப்பாவிற் போல, படைக்காவலர் அணிவகுத்து நடக்கும் நிரந்தரமான எல்லையென்பது கருத்தன்று ; ஆனல், முல்லை நிலத் துள் வெள்ளைக்காரன் மிக அண்மைக் காலத்தில் நுழைந்த பகுதிக்கு வழங்குஞ் சொல்லாகும். எல்லேப்புறம் என்றும் மாறிக் கொண்டிருக்கும்; ஆனல், எல்லைப்புறத்தான் என்றும் ஒரே தன்மை யானவனகவே யிருப்பான். அத்திலாந்திக்குக் கடலோரப் பிரதே சத்திலிருந்து தூரஞ் சிறியதோ பெரியதோ எதுவாயிருந்தாலும், பதினேழாம் நூற்முண்டில் அல்லது அதற்கடுத்த இருநூற்றண்டுக ளில் மேற்கு நோக்கி முதன்முதற் சென்றவர்களிடம் சிறப்பியல்பு கள் சில என்றுங் காணப்பட்டன. அவையாவன துணிவு, திறமை, அஞ்சாமை ; வறுமையும் தம்முயற்சி உடனடியாகப் பயனளிக்கும் எனும் நம்பிக்கையும் ; குடியாட்சிச் சமத்துவமும், அரசியலோ அறிவோ பற்றிய எவ்வகைப் பயிற்றலிலும், அதிகாரத்திலும் கொண்ட வெறுப்பும் ; நிதானமற்றுப் பிறர் பொருட்டுச் செலவு செய்தலும், தந்திரமாகத் தம்நலன் பேணலும் விசாரணையற்ற தண்டனையை அனுமதிக்கும் சட்டமும், நல்ல தோழமையும், தொலைவிலுள்ள ஐரோப்பாக் கண்டம் பற்றிய பூரண அறியா மையும் ஆகியனவாகும். இவை யாவும் ஒருங்கு சேர்ந்து நன் கறிந்த ஒருவகைச் சீலத்தைப் படைத்தன. அது, கடற்கரைக்கு மிக அண்மையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த மக்களின் பழமையிற் பற்றுள்ள பழக்கங்களுக்கு மிக வேறுபாடுடையதாயிருந்தது. அம் மாவட்டங்களே இரண்டொரு தலைமுறைகளுக்கு முன்னர் தாமே எல்லப்புறமாயமைந்திருந்தன.
உயர்குடியாட்சிப் பிரித்தானியா எப்போதாயினும் தன் குடி யேற்ற நாடுகளைக் கடுமையாக எதிர்த்து நிற்க நேர்ந்தால், கடற்கரை நகரங்களில் நிலையாயுள்ளவரும் செல்வருமான மக்களுட் சிலராவது அதனை ஆதரிப்பர். இவர்கள் சந்ததிகள் காலஞ் செல்லச் செல்ல செல்வமிக்குடையராயும், ஓரளவு ஒழுங்குக்குட்பட்டவராயும் வருவாராயினர். ஆனல், புதிய இங்கிலாந்தின் தூய்மையாளரான உழ வருள் மாத்திரமன்றி, ஒவ்வொரு குடியேற்ற நாட்டின் ஆதரவுடை யரும், குடியாட்சிக்குரியருமான எல்லைப்புறத்தாருள்ளும் அடக்க

தாய்நாட்டார் பெறுபயன்
முடியாத புரட்சிக்காரரைக் காணலாம். சமூகத்தில் அதிகமான நாகரிகமுள்ள மக்கள் இப்பகுதியினரைக் கடைசி நேரம் வரையும் அடிக்கடி இகழ்ந்தோ மறந்தோ போகின்றனர்.
பதினேழாம் நூற்றண்டின் கடைசிக் கூற்றில் இங்கிலாந்தின் அரசியல் தந்திரமுடையரும், வணிகரும் அமெரிக்க நாடுகளை உயர் வாகக் கருதினர். அவைகளின் மிகப்பெரிய எதிர்கால, விரிவினை உண்மையில் அவர்கள் முன்னதாக அறிந்திலர் , 1700 ஆம் ஆண்டில் இரண்டரை இலட்சம் மக்களைக் கொண்ட கடற்கரைக் குடியேற்ற நாடுகள் பத்துக் கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடாக எப்போ தாயினும் விருத்தியடையுமென்று எவரும் கணநேரத்துக்கும் நினைத் கிலர். அப்பலேசிய மலைகள் பிரித்தானிய அரசியல் தந்திரமுடைய ரின் பார்வைக்கு மாத்திரமன்றி, ஆங்கில அமெரிக்கரின் பார்வைக் குமே எல்லையிட்டன. ஆங்கிலேயர் கரும்புச் செய்கையுடைய தீவு களையும் கண்டத்தின் கடலோரப் பிரதேசக் குடியேற்ற நாடுகளையும் கிட்டத்தட்டச் சமமாக மதித்தனர்.
கடல்கடந்த குடியேற்ற நாடுகள் இரட்டை நோக்கத்தை நிறை வேற்றுவனவாக மதிக்கப்பட்டன. முதலாவதாக, அவைகள் பழைய இங்கிலாந்திலுள்ள முயற்சியுடையார், இணங்காதார், துன்புறுத்தப் பட்டோர், கடன்காரர். குற்றவாளிகள், வாழ்க்கையில் தோல்வி யடைந்தோராகியோர்க்கு உகந்த புசலிடங்களாயின - அவ்வாறு வகுக்கப்பட்ட இடத்தில், தம் சொந்த நாட்டிலுள்ள நல்லோ ரும் தீயோரும் தம் திறமைகளைப் பொதுநன்மைக்குப் பயன் படுத்தும்படி தாமாகவே முயன்று வருவாராயினர்; ஆயினும், பொருளாதார நெருக்கடி பற்றிக் குடிமக்கள் தொகை இது வரை இங்கிலாந்தில் மிதமிஞ்சி விட்டதா கீன்ற கேள்வியே ஆங்கில்லை. இரண்டாவதாக, குடியேற்றநாடுகள், இங்கிலாந்தின் கைத்தொழிலுக்கும் வணிகத்துக்கும் நல்வாய்ப்பாக, மூலப் பொருள்களை வாங்குதற்கும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களே விற்றற்குமுரிய அங்காடிகளென உயர்வாகக் கருதப்பட்டன. ‘அமெ ரிக்காவின் முக்கியத்துவத்தை நான் உங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றேன் ; இஃது ஒர் இரட்டைச் சந்தையாகும். கொள் வனவுக்கும் கொடுப்பனவுக்குமுரிய சந்தையாகும்' என்று சதாம் என்பான் கூறினன். குருெம்வெல், கிளாறெண்டன், சாவ்சுபரி,
சோமேசு ஆகிய எல்லோரும் அதனையே கூறியிருப்பர்.
இங்கிலாந்தின் வெளிநாட்டுப் பூட்கை வணிகச் செல்வாக்குக்கு மேன்மேலும் உட்பட்டது. 1660 ஆம் ஆண்டில் பழைய சமூக ஒழுங் குக்குரிய செல்வாக்கின் மீட்சிதானும் இப்போக்கைத் தடுக்கவேண் டிய அளவுக்கு உதவவில்லை. வயிற்முேலில் அல்லது உவெசுத்து
11

Page 67
112
1668-174.
ஆங்கிலர் வணிகம்
மினித்தரிலிருந்துகொண்டு அரசாங்க விதிகள் மூலம் வெளிநாட்டு வணிகப் போக்குக்கு வழிகாட்டல்-அது கப்பற் போக்குவரத்துச் சட்டங்களை உள்ளடக்கிய திட்டமாகும்-ஒரு விதத்தில் பெருநிலப் பகுதிக்குரிய குடியேற்ற நாடுகளின் நன்மைக்காக நடத்தப்பட்ட தாகும்; இன்னுெரு விதத்தில் அது சொந்த நாட்டுக்காக அல்லது கரும்புத் தீவுகளுக்காக அக் குடியேற்ற நாடுகளின் நன்மையைக் கைவிட்டதாகும்-உடனே புதிய இங்கிலாந்தர் கள்ளக்கடத்தலில், அதுவே தமக்கு இயல்பாகவுரிய தொழில்போல இலகுவாக ஈடுபடத் தொடங்கினர்.
சுதுவட்டராட்சி முடிவில் இங்கிலாந்து பொருளுற்பத்தியிலும், வணிகத்திலும் உலகத்திற் சிறந்த மிகப்பெரிய நாடாயிருந்தது. அன்றியும் இலண்டனும் உலகத்தின் மிகப்பெரிய பண்டசாலையாக அமித்தடாமிலும் மேலாக மேம்பட்டு விளங்கிற்று. அங்கு கீழ்நாடுக ளோடும், மத்தியதரை நாடுகளோடும் அமெரிக்க குடியேற்ற நாடுக ளோடும் ஆங்கிலர் வணிகம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது ; அதன் அடிப்படையான நோக்கம், புதிய ஊழியில் சமுத்திரத்திற் செல்லும் பெருங் கலங்களில் உலகத்தின் மறு புறத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆங்கிலேயரின் நெசவுப் பொருள்களை விற்பனை செய் தலேயாகும். இங்கிலாந்தின் வணிகம், அமெரிக்காவிலும், வேறெங் கணும் ஆங்கிலேயரால் ஆக்கப்பட்ட பொருள்களை விற்றலிற் பெரும் பாலும் அமைந்திருந்தது. கடலாதிக்கத்தில் அந்நாட்டின் முன்னேடி களோடு ஒப்பிடும்போது அதன் வலிமை அவ்வணிகத்திற்றங்கி யுள்ளது. வெனிசு, ஐரோப்பா முழுவதிற்கும் ஆசிய அங்காடிகளுக் கும் வேண்டிய வணிகப் பொருள்களை ஐரோப்பாவின் எல்லையி லிருந்து ஏற்றியனுப்பிய நகரமாகும். இசுப்பெயின் கொள்ளேப் பொருளைக் கொண்டும் திறையாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டும் வாழ்ந்துள்ளது. ஒல்லாந்துதானும் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் மக்கள் வாழ்வதற்கும் போதிய நிலமுடையதாயிருக்க வில்லை.
பதினன்காம் உலூயி, ஒல்லாந்தைப் பலமுறை தாக்கியதன் விளை வாகத் தற்காப்புக்காகத் தன் செல்வத்தையும் திறமையையும் நில வளத்தைப் பயன்படுத்துவதிலேயே செலுத்தவேண்டிய நிலை ஏற்
பட்டது. அதனல், அது வணிகத் தலைமைக்கான போட்டியில்
இங்கிலாந்துக்குப் படிப்படியாகப் பின்னிடுவதாயிற்று. கடற் போட்டியிருந்தபோதும், பிரான்சியர் கையிற் சிக்காதபடி ஒல்லாந் தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், இசுப்பானிய நெதலாந்துக் களைக் காப்பதும் இங்கிலாந்தின் விருப்பமாகும்; ஏனெனில், இறை

பிரான்சும் ஒல்லாந்தும்
யின் ஆற்றின் கழிமுகத்தீவு பிரான்சுக்குரியதாக அமைந்திருந்தால், இங்கிலாந்தின் கடலாதிக்கமும், சுதந்திரமும் நெடுங்காலம் தப் பிப் பிழைத்திருக்க முடியாதிருக்குமாதலினென்க. ஆங்கில மக்கள் நன்குணர்ந்திருந்தவாறு ஆங்கிலேயரினதும், ஒல்லாந்தரினதும் உரிமைகள் வேற்றுமையற்றனவாகும். ஆனல் சாள்சும் இரண்டா வது சேமிசும் இதை உணரத் தவறினரென்க. ஆனல், கடற்படைக் கும், விணிகத்துக்குமுரிய ஆதிக்கத்துக்காக இங்கிலாந்தோடு போட்டியிட்டுக்கொண்டிருந்த இரு நாடுகளான பிரான்சும் ஒல்லாந் தும் இந்நெருக்கடியான காலமுழுதும் பெரும் இராணுவச் செலவில் ஈடுபட்டிருந்தமை இங்கிலாந்தின் தன்னல மேம்பாட்டுக்கு நல்வாய்ப் பாயமைந்தது. பிரான்சு தன் விருப்பப்படியும் பேராசையாலும் அவ் வாறு செய்தது. ஒல்லாந்து தற்காப்பினவசியத்தினுல் அவ்வாறு செய்தது.
இதற்கிடையில், மீட்சிக்கும் புரட்சித் தீர்மானத்துக்குமுரிய இங்கிலாந்தில் ஆட்சி செய்த வகுப்பினர் கடற்படையின் பொருட் த்ெ தேவையான தொகையும் தரைப்படையின் பொருட்டு இயன்ற வரை குறைந்த தொகையும் செலவிடற்கு முடிவு செய்துகொண்ட
60TT.
அத்தியாயம் VI
மீட்சியும் இரண்டாம் சாள்சின் ஆட்சியும். உவிக்கு தோரிக் கட்சிகள் அமைப்பு
சீசர், நெப்போலியன் என்ற பெரியர்களோடு இணைக்கப்பட்ட அரசாங்க நெறிகளை இங்கிலாந்தில் பொதுமக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. குருெம்வெல், சிறந்த ஆங்கிலப் போர்வீரர் எவரை யும் போல, தன் நாட்டினரைப் படைத்தொழிலால் ஆளும் எண் ணத்தை வெறுத்தான் ; அவர்களும் அவன் அவ்வாறு செய்வதை வெறுத்தனர். அவனுடைய கடைசி ஆண்டுகளில் சட்டம், வழக்கம், பாராளுமன்றம் ஆகியவற்றின் ஆட்சிக்குரிய வழியை அவன் மீண்டும் தேடுவானுயினன். ஆனல், சட்டம், வழக்கம், பாராளு மன்றம் ஆகியன இத்தீவில் பல நூற்முண்டுகளாக வேற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியாலும் வழி வழியாயடைந்த கருத்துத் தொடர்ச்சியாலும் அரச கடமையோடு பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. அதன் பேருகத் தேசமக்கள் தம் பழைய உரிமைகளை மீண்டும் அனுபவிக்க வேண்டின், முடியாட்சியின் மீட்சி
வேண்டப்பட்டதாயிருந்தது.
113

Page 68
14
659.
1ᏮᏮ0 .
முடியாட்சியின் மீட்சி
ஒலிவர் உயிரோடிருந்திருந்தால், அவன் தானே அரசனுகி, முடி யாட்சிக்குப் புத்துயிரளித்து, அதனல் யாப்புக்குட்பட்ட ஆட் சியை மீட்டமைத்தலாகிய-தன் வாழ்க்கையில் மிகக் கடினமானவேலையை மேற்கொண்டிருப்பானென்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அவனுடைய வலிமையற்ற மகனுக இறிச்சேட்டு வைப் பொறுத்தமட்டில் அது ஒருபோதும் முடியாத காரியமா யிற்று. உரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்ற காலங்களில் இருந்தது போல, படையாட்சியினை நடத்த உறுதியான ஒருவர் இல்லாத போதும், பண்டயின் ஒரு கூறு மற்ருெரு கூற்றுடன் சண்டைசெய் யத் தொடங்கியபோதும், ஒரு படைத்தலைவன் மற்றவனுக்கு மாமுய் எழத்தொடங்கியபோதும், அவ்வாட்சியின் உண்மையியல்பு வெளியானதோடு அவ்வாட்சி சிறிதும் பொறுக்க முடியாததுமா
யிற்று. ஆட்சியறவு உள்நாட்டில் ஏற்படாது தடுத்தற்கும்,
கடல்கடந்த பேரரசு நிலைகுலைதலை நிறுத்துதற்கும், சுதுவட்டர் கால்வழிக்குரியவரை மீட்டும் அழைத்தலைவிட வழிவேறெதுவும் இருந்திலது. பாராளுமன்றத்தினரும், பழைய மொட்டைத்தலைக் கட்சியினரும் அதனை எவ்வளவு விரைவாகவும் விருப்பத்தோடும் செய்வார்களோ, அவ்வளவுக்கு மீட்டமைக்கப்பட்ட அரச பதவியில்
குடிமகனின் சுதந்திரமும் பெரிதாயமையும் என்க.
படையில் உணர்வும், நாட்டுப்பற்றுமுள்ள பகுதியினர்க்குப் படைத்தலைவனை மொங்குவென்பான் வகித்த தலைமையானது, மரபுப் பாராளுமன்றத்தைக் கட்டுப்பாடின்றித் தேர்ந்தெடுக்க வாய்ப்பளித்தது. அவர்கள் பழைய பிரெசுபித்தீரியர் கூட்டக் கட் சிக்குரிய மிதமான மொட்டைத்தலையரும், பலமுள்ள கவலியரும் ஒருங்கு சேர்ந்த கூட்டத்தினராவர். அவர்கள் நாடு கடத்தப்பட்டு ஒல்லாந்திலிருந்த இரண்டாம் சாள்சை மீட்டு அழைத்தனர். அா சாங்க அமைப்பின் முக்கியமான இந்நெருக்கடியில் பாராளுமன்றத் தைக் கூட்டியவர் அரசால்லர் ; ஆணுல், பாராளுமன்றமே அரசரை அழைத்தது. அரசரின் தெய்வீக உரிமை பற்றிய அடிப்படைக் கொள்கையானது மீட்டமைக்கப்பட்ட ஆங்கிலக் கிறித்துவத் திருச் சபையின் பிரியமான கோட்பாடெனப் போதனை செய்யலாம். வழக்கறிஞர் தம் பழக்கத்தின்படி நாடு கடத்தப்பட்டவனுன சாள்சு, அவனுடைய தந்தையின் தலை அாக்குமேடையில் விழுந்த நோந் தொட்டே இரண்டாம் சாள்சுவாயினனென்று பாசாங்கு செய்யலாம்; அவ்வாறிருந்தபோதும், உண்மை உலகறிந்த தொன் முகும். அதாவது, பொதுத் தேர்தலின் பேருக இரு மன்றங்களின் வாக்குரிமையால் சாள்சை அரசனுக்கி அதனுல் நீண்ட இடைக்கா லத்திற்குப் பின் முடியரசானது புதுப்பிக்கப்பட்டது.

மீண்ட அரசு
அரசனின் அதிகாரமும், பாராளுமன்றத்தின் அதிகாரமும் பிரிக்க முடியாதனவென்று மீண்டும் கருதப்பட்டது. அவைகள் நெடுங்கால மாகப் போட்டியிடுவனவாயிருக்கலாம் ; சிலவேளைகளில் ஒன்றுக் கொன்று பகையாகவும் இருக்கலாம். ஆனல் சித்திராபோத்துவும் அரசகொலையாளரும் அவைகளை அமைத்ததுபோல, அவைகள் ஒன் அறுக்கொன்று சிறிதும் ஒவ்வாத இரு முறைகளாக மீட்டொருபோ அம் இருக்கமாட்டா. தனியாண்மையும், மக்கள் அரசுமாகிய இரண் ம்ெ மறைந்துபோயின; அன்றுமுதல், அஃதிரண்டில் யாதாயினு மொன்றினை இங்கிலாந்தில் புதுப்பிக்க, இரண்டாம் சேமிசு வைவிட, வேறெவரும் பொறுப்பாக மேற்கொண்டிலர்.
இவ்வாருக, 'அரசர் தமக்குரியதை மீட்டும் அனுபவித்தார். ' இரண்டாம் சாள்சு ' தனக்குக் கிடைத்ததெதையும் அனுபவிப் பான்’ என்று உண்மையில் நம்பமுடியும் ; ஆணுல், “அவனுக் குரியது ' இனிமேல் அவனுடைய மூதாதையர்க்குக் கிடைத்த அதி காரத்தின் நிறைவான பரம்பரை உரிமையன்று. நீடித்த பாராளு மன்றத்தின் முதற் கூட்டத்தில் முடியின் உரிமைகள் பல நீக்கப் பட்டன; அன்றியும், மீட்சிக்காலத்தில் அவற்றை முடி திரும்பப் பெறவில்லை. பழைய உரோமாபுரிச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டனவும் தம்முட் போட்டியிடும் வகையில் அதிகாரமுடை யனவுமான புகழ் பெற்ற சிறப்புரிமை மன்றங்கள், பொது வழக்கறி ஞர்க்கு வெறுப்பூட்டுவனவாகவும் குடிமகனுக்கு மாருக அரசனின் கருவியாகவும் இருந்தமையால் அவை புதுப்பிக்கப்பட்டில; உடுமன் றமும் உயர் விசாரணைச் சட்ட மன்றமும் சட்ட விரோதமானவை யென்று ஒழிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின லன்றி வரி விதித்தல் ஒருபோதும் முடியாததொன்முயிற்று. சித்திரா போத்துவுக்கு நெடுங்காலமாகப் பகையாயிருந்த சேர். எட்டுவேட்டு கோக்கும் அவனுடைய ஆண்டுநூல்களும், அமிடனும் கப்பல் வரிபற் றிய அவனின் நெறிதவமுக் கொள்கையும் மீட்சியில் பெற்ற வெற்றி, வெண்ணிற அங்கியணிந்த உலோட்டு பெற்றதிலும் மிகக் குறைவான
தனஅறு.
அத்தலைமுறைக்குரிய கண்ணியமான இறந்தோர் எவரையும் விட, தப்பிப் பிழைத்த ஒருவன், மீட்சியுடன்படிக்கைக்குக் காரண கர்த்தாவாதற்கிருந்தான்-அவனே, இப்பொழுது கிளாறெண்டன் வேளும், நீதிநாயகனும் அரசகுடும்பம் நெடுங்காலமாக நாடுகடத் தப்பட்டிருந்தபோது, அதற்குண்மையுள்ள ஊழியனயுமிருந்த எட்டுவேட்டு அயிட்டு ஆவான். சுதுவட்டர் தாம் அந்நிய நாடுகளி லிருந்து திரும்பிவந்ததற்காக, அவர்க்குக் கடமைப்பட்டவரா யிருந்தனர்; ஏனெனில், ஆங்கேயும் இளைய சாள்சுவை, அரசியான
115
1640-164.

Page 69
16.
கிளாறெண்டனும் மீட்சியும்
தாயாரும் வாள்வீரரும் இருந்தும், ஓரளவுக்கு ஆங்கிலக் கிறித்து வத் திருச்சபையோடும், யாப்புக்கமைந்த அரச கட்சியினரோடும் தொடர்புடையராக்கினராதலினென்க. இப்போதும், ஆட்சியின் நெருக்கடியான முதல் மாதங்களில், கிளாறெண்டனின் அறிவும் அடக்கமும் அரசனின் ஊக்கத்தோடும், நற்குணத்தோடும் சேர்ந்து நாட்டுக்கமைதியளித்தும், பழிக்குப் பழி வாங்கும் கோபா வேசத்தை நிறுத்தியும், மீட்டமைக்கப்பட்ட முடியரசில் எல்லாக் கட்சிகளும் தம் நன்மைக்காகவேனும், அரசபத்தியுள்ள குடிமக்க ளாக வாழ வழி வகுத்தும் உள்ளன.
போக்கிலாந்தின் பிரான சினேகிதனுயும், சித்திராபோத்துக்கு மாருய் அமிடனின் தோழனயுமிருந்த கிளாறெண்டன் 1640 ஆம் ஆண்டிலிருந்த மனப்பாங்கோடேயே இன்னுமிருந்தான். அவன், ஆங்கில வரலாற்றில் நெருக்கடியான இருபதாண்டுகளும் இன்னும் கழிந்தில என்று கூறும்படியாக, அரசியல் முறையை இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருதலை மேற் கொண்டான். அவன் அதில் முற்றிலும் வெற்றிபெருது விட்டானு மல்லன். அரசர்க்கும் பொதுமக்கட் பிரதிநிதி மன்றத்திற்குமுள்ள சமநிலையாதிக்கம், நீடித்த பாராளுமன்றத்தின் முதல் வைகலி விருந்த அந்நிலையிலேயே 1660 ஆம் ஆண்டிலும் அமைக்கப் பட்டது. அரசாங்க அமைப்பில் மீண்டும் நாட்டப்பட்ட சமநிலை, புரட்சிக் காலக் குழப்பங்களின் பின் அவ்வாதிக்கம் முன்னிலை யடைதற்கும் மீண்டும் வளர்தற்கும் வேறெதுவுஞ் செய்திருக்க முடியாத அளவில் மிகச் சிறிய அவகாசத்தைத் தரப் பயன் பட்டது. ஆனல், சமநிலைமாத்திரம், சித்திராபோத்து, பிம் ஆகிய இருவரும் எதிர்பார்த்ததுபோல, பலமுள்ளதும் வளர்ச்சியுறுவது மான நாடொன்றுக்கு நிலையான அரசாங்க அமைப்பை அளிக்க மாட்டாது. நாட்டின் நடவடிக்கை, முதன்மையாகக் கடல்கடந்த நாடுகளில், நிர்வாகத்திற்கும், சட்டத்துக்குமுரிய இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டதனல், ஆற்றல் இழந்தது. தகராறு நிகழுங்கால், அவ்விரண்டில் எதுவேனுமொன்று மற்றதற்கு அதிகாரியன்று. பாராளுமன்றத்தின் வசம் வெளிநாட்டுப் பூட்கையும் நிதியும் இருக்கும்வரையும், அரசனின் அமைச்சர் பொதுமக்கட்சபைப் பணியாளராகவும் இருக்கும்வரையும் அரசனின் ஆட்சி ஐயத்திற் கிடமானதாயும், நிதிவசதியில்லாததாயும், தடைக்குட்பட்டதாயு மிருக்கும்; மேலும், பாராளுமன்றம் கவலியர்' என்ருே உவிக்கு” என்றே எவ்வாறு வழங்கினலும், முடிக்கும் இரு மன்றங்களுக்கும் போராட்டம் மீண்டும் நடக்கும்.
கிளாறெண்டன், அரசர்க்கும் பொதுமக்கட்சபைக்கும் நடுவணுகக் தானெடுத்துக்கொண்ட அக்கறைபற்றி, உண்மையில், சிறிதும்

புதிய தலைமுறை
மகிழ்ச்சியடைந்திலன் ; ஏனெனில், அவன் அமைத்த வரையறைக்கு மாருய் இருகிறத்தாரும் கோபங்கொண்டனராதலினென்க. அவ னுடைய அடுத்த ஏமாற்றத்துக்குக் காரணமென்னவெனில், அவன் தன்னுடைய இளமையில் கண்ட நேர்மையும், மக்களின் பொது நல மனப்பான்மையும் யாண்டும் காணமுடியாமையாகுமென்க. போர், பறிமுதல் செய்தல், புரட்சி ஆகியவற்றின் பாதிப்பினல் ஆங்கில அரசியல்வாதிகளின் குணமும், குறைந்த அளவில், பொது வாக நிலக்கார மேன்மக்கள் வகுப்பினரின் குணமும் சீர்கெட்டுப் போயின. அரசியல்வாதிகளும், புலவரும், இரண்டொருபேர் மிகச் சிறந்த புறனடையாகவிருக்க, தம் ஒழுக்க நியதிகளையும், அரச பத்தியினையும், மாரிகோடைகளில் உடுப்பினை மாற்றுதல்போல மாற்றப் பழகியுள்ளனர். இப்போது பிறரை மதியாது முரட்டுத் தனமாக நாட்டில் நடந்துகொண்ட அரசகட்சிக்குரிய இளைய பெருஞ் செல்வரும் தமக்குரிய கடமைகளை ஆற்றுதற்கு நன்கு பயின்றிலர்; ஆணுே, சீன் ஆகிய ஆறுகளுக்கருகேயுள்ள மாடி வீடுகளில், இவர்களிற் சிலர் தம்பள்ளி நாட்களாயிருக்க வேண்டிய காலத்தை அந்நிய நகரங்களில் இழிந்தோர் மத்தியில் கழித்தனர்; அதே சமயத்தில் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்கள், தம் சொத்து ஏலத்தில் விற்கவிடப்பட்டபோது, இடித்துத் தள்ளப்பட்ட பண்ணை வீட்டின் மூலையில் பணியாளர் மத்தியில் வளர்ந்துவந்தனர். தமது அன்ருட உணவினைப் பெறுதற்கு அவர் கையாண்ட தாழ்ந்த தந்திரங்களே அவர்தம் கல்வியும், பழக்கமுமாகும்; மேலும், சமய போதனைக்குப் பதிலாகத் தூய்மைவாதிகளிடம் வெறுப்பே அவர் களுக்கு ஊட்டப்பட்டது.
இவ்வாறு பயின்ற மேல்வகுப்பினர், தூய்மையாளரது உயர்வும் அவர்தம் வீழ்ச்சியும் சேர்ந்து, நொட்டை சொல்லுதற்கும், தாம் விரும்பியவாறே வீணர்போல வாழ்வதற்கும் நல்லவோர் வாய்ப் பைத் தந்தன என்றே எண்ணி நடப்பர். ஒழுக்கத்துக்கும், வெளி வேடத்திற்குமுள்ள வேறுபாடு ‘கூடி பிருசு ' என்ற நூலைப் பரிக சித்த முதற்சந்ததியார்க்குத் தெளிவற்றதாயிருந்தது. இந்நிலைமை களின் விளைவாகத் தோன்றிய இரண்டாம் சாள்சும் தனது மனத் தைக் கவரத்தக்கதும் ஆடம்பரமானதுமான அரண்மனையில் நவ நாகரிக உலகத்தின் இன்பப்பாதையை விரிவாக்கினன். கிளா றெண்டனின் பழமைப்பட்ட ஒழுக்கம் அவனை அவனுடைய தலைவரிலிருந்தும் பாராளுமன்றத்தின் புதிய சந்ததியாரிலிருந்தும் பிரித்துள்ளது. அவனுடைய சிறந்த ஒழுக்கம் பிற்றுவினுடைய தையோ, பீலினுடையதையோபோல சீர்கெடாத மத்திய வகுப்பி னர் மதிப்பைப் பெற்றிருக்கலாம். அவர்கள் வீடுகளில் குடும்பப் பிரார்த்தனை நாள்தோறும் நடந்துவந்தது. ஒழுக்கம் பின்பற்றப் பட்டு வந்தது. ஆனல், அரசியலும் சமயமும் பற்றிய உறவுகள்
17

Page 70
118
1660,
நட்ட ஈடும் நில நிர்ணயமும்
கிளாறெண்டன் அவர்களின் தலைவராய் வருதற்குரிய வாய்ப்பைக் கெடுத்தன; அரசியலில் மக்களின் வாக்குரிமையைத் தேடுதலில் அவனே கடைசியானவன் ; மேலும், இளைய பக்கிங்காம் முதலிய ஒழுக்கக் கட்டுப்பாடில்லாதவரிடத்திலும், சாவ்சுபரி முதலிய நாத்திகரிடத்திலும் புத்துயிர் பெற்றவரான இணங்காதாரையும், வணிக உலகத்தினரின் அரசியல் அபிலாசைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தான்.
கிளாறெண்டனும், சாள்சும் செய்த மிகப் பெரிய வேலை அவ்விரு வரையும் மேன்மையான நன்மதிப்புக்குத் தகுதியாக்கியது. அதா வது, அவர்கள், மொட்டைத்தலைக் கட்சியினர்மீது பெருமளவிற் பழிவாங்கலை அனுமதிக்க உறுதியாக மறுத்தனர். அவ்வாறே அர சர் தம்மைச் சொந்த நாட்டுக்கு வரச்செய்தனவும், தாம் ஒல்லாந் தில் அளித்தனவுமான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்; அவ் வாறே அரசவதிகாரத்தை எக்கட்சியினரும் ஒப்புக்கொண்ட தேசீய நிலையமாக மீண்டும் நிறுவ முடியும். நட்ட ஈட்டுச்சட்டமும் குற்றமறுப்புச் சட்டமும் 'அரசனின் பகைவர்க்கு நட்ட ஈடு
என்றும் அவனுடைய நண்பர்க்குக் குற்றமறுப்பு' என்றும் கூறிக்
கவலியர் அவற்றைப் பழித்தனர். அரசகட்சியினர் எதிர்க்கட்சி யாரைக் கொன்றும், அவர்களின் சொத்துக்களைப் பறித்தும் பழி வாங்கக் காத்திருந்தனர்; ஆனல், அவர்கள் பெரும்பாலும் ஏமாற்ற மடைந்தனர்; கிளாறெண்டனையும் ஒருபோதும் மன்னித்திலர்.
அரசரைக் கொன்ற பன்னிரண்டுபேரும், பொதுநலவரசின் அரச வறிஞரிற் தப்பிப் பிழைத்தவருள் சிறந்தவனை வானே என் பானும் பலியிடப்பட்டனர்; இங்கிலாந்தில் ஒருபோதும் நீடித்துக் காணப்படாத பழிவாங்கும் உணர்ச்சி, இம்முறை இவர்களது மரணத்தோடு தணிந்தது. ஆனல், நிலக் கோரிக்கை பலத்தது. நிலம், இன்னும் பேரவாவின் முக்கிய இலக்கும், செல்வம், அதி காரம், சமூகப்பயன் ஆகியவற்றின் முதன்மையான பிறப்பிடமும் ஆகும். நிலத்தைக் குறித்த தர்க்கத்தில் கிளாறெண்டன் ஓர் இணக்கத்தை நிறைவேற்றினன். அதன்படி முந்திய மொட்டைத் தலையரிற் பெரும்பகுதியினர் புதிய அரச முறையினை ஏற்றுக் கொண்டனர். திருச்சபைக்கும் அரசுக்குமுரிய நிலங்களும், புரட்சி செய்யும் அரசாங்கங்கள் பறிமுதல் செய்து விற்றுள்ள கவலியர்ப் பிரபுக்களின் தனிப்பட்ட சொத்துக்களும், அவற்றை வாங்கி னேர்க்கு நட்ட ஈடின்றி மீண்டும் அப்பிரபுக்களாற் கைப்பற்றப் பட்டன. ஆனல், 'மிகக் கொடியோர்க்கு விதிக்கப்பட்ட குற்றங் களைக் கொடுத்தற்கு, கவலியர் தாமே விற்ற நிலங்கள் வாங்கிய வரிடத்திலேயே விடப்பட்டன. புதிய மக்களான பெரும்பகுதி யினர் ஆங்கிலப்பெருஞ் ဓ#ဓါဓု# மத்தியில் வந்து இடம் பிடித்தனர்;

கிளாறெண்டன் சட்டத்தொகுப்பு
அதற்காக அவர்கள் செய்ய வேண்டியிருந்தது என்னவெனில் மீட்டமைக்கப்பட்ட ஆங்கிலத் திருச்சபையின் வழிபாட்டிற் பங்கு பற்றுவது மட்டுமேயென்க. முன்மொட்டைத்தலைக் கட்சியினரா யிருந்த இச்செல்வர் பலர் பிற் காலத்தில் உவிக்குக் கட்சியின் தலத்துக்குரிய தலைவராயினர்.
இந்த ஒழுங்கின்படி கவலியர் பலர், கெட்ட காலத்தில் தங்கள் அரசபத்தியின் பெறுமதியாக விற்க வற்புறுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் பெறத்தவறினர்; எனவே அரசாங்கத்தின்மீதும் இவர்கள் ஆத்திரம் கொண்டிருந்தனர். மேலும் முந்திய மொட்டைத்தலேய செல்லோரையும் தனிப்பட்டதும் அரசியலுக்குரியதுமான பகைமை யோடு வெறுத்து இக் கவலியர் வருவாாயினர். இம்மன நிலைமை 1661 ஆம் ஆண்டில் எதிர்த்தாக்கம் உச்சநிலையில் இருந்த போது, தெரிவு செய்யப்பட்ட கவலியர்ப் பாராளுமன்றத்தின் நடை முறையைப் பெரிதும் பாதித்துள்ளது. புதிய உறுப்பினரில் பெரும் பான்மையோர் ஒரு கட்சியை உருவாக்கினர்-பின்னுல் அது * தோரி யெனும் பெயர் பெற்றது. அது அரசகட்சிச் சார்பைவிட ஆங்கிலத் திருச்சபைச் சார்பையும் நிலமுடைய கூட்டத்தினர் சார் பையுமே மிகுதியாகவுடையது. அது அரசினை வரிகளால் பெற்ற சிறிய படிச்சம்பளத்தைக் கொண்டு ஆதரித்தது ; சாள்சு, கிளா றெண்டன் ஆகியோரின் புத்திமதியைக் கண்டித்து விலக்கிற்று; அரண்மனைக்குரியதிலும் மேலாக நகரபரிபாலன சபைகளை அவை களின் சொந்தத் திருச்சபையினதும் கட்சியினதும் நன்மைக்காக
மீட்டமைத்தது ; அாய்மையாளரான இணங்காதோரைத் துன்புறுத்
தலில் அரசர் அல்லது ஆங்கிலத் திருச்சபையினனும் துணிவான வனுமான நீதிநாயகன் விரும்பிய எதனிலும் மிதக்கொடிய முறை யைப் பாராளுமன்ற நியதிச்சட்டத்தால் ஏற்படுத்தியது.
இணங்காதார்க்கு மாமுன 'கிளாறெண்டன் சட்டத்தொகுப்பு' என்று வழங்கிய சட்டங்கள், உண்மையில் கிளாறெண்டனின் நூலன்று ; சாள்சினுடையதுமன்று ; ஆனல் அது பாராளுமன்றத் தினதும், பெருஞ் செல்வரினதுமாகுமென்க. எப்போதுமிருந்த கிலும் மிகுந்த கொடிய சமயத் துன்புறுத்தலை வற்புறுத்தியதனல், எல்லாவற்றிலும் மேலாகச் சமயப் பொறுமை அவசியமாயிருந்த புதியகாலத்தின் ஆரம்பத்தில் அவ்வாட்சியின் கடையாண்டுகளைச் சீரழியச் செய்த கட்சிப் பிரிவுகளிடத்தே குழப்பங்களையும், சண்டை சச்சரவுகளையும் பாராளுமன்றம் துளண்டிவிட்டது. * கிளாறெண்டன் சட்டத்தொகுப்பு கவலியர் தாங்கள் நெடுங்காலம் துன்பமணுப வித்ததற்காகவும் தங்கள் நிலங்களை இழந்ததற்காகவும் இழைத்த பழிவாங்கலாகும். நட்டஈட்டுச் சட்டத்தால் தடுக்கப்பட்டதனல்,
இந்நூல் பக்கம் 69 ஐயும் அடிக்குறிப்பையும் பார்க்ச
119
166-1665.

Page 71
20
சமய எற்பாடு
அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த வழி யைக் கையாண்டனர். அவர்கள் அரசியற் பேரார்வத்தாலும், தனிப் பட்ட தீங்குகள், நட்டங்களின் நினைவிலுைம் அாண்டப்பட்டதிலும் மிகக் குறைவாகச் சமயமூடபத்தியால் துரண்டப்பட்டனர். அத் தீங்குகள் நாட்டங்கள் ஆகியவற்றிற் பல இன்னும் சீர்ப்படுத்தப் படடில்,
இணங்காதார் இப்போது துன்பப்படவேண்டியதன் காரணத் தைப் பாராளுமன்றத்தினர் மிகக் கொடியார்க்கு இட்ட தண் டனைகளினுலும், உலோட்டு, முதலாஞ் சாள்சு ஆகியோரின் மரண தண்டனையினலும் கண்டுபிடிக்கலாம். அது பழிக்குப் பழி மாத்திர மன்று 'கிளாறெண்டன் சட்டத்தொகுப்பு மொட்டைத்தலைக் கட்சி புத்துயிர் பெறுவதைத் தடுக்க ஓரளவு வல்ல பாதுகாவலா கும். 1662 ஆம் ஆண்டின் ஏக வழிபாட்டுச் சட்டம், வழிபாட்டு நூலே மறுபடியும் அமைத்தது. மேலும், அது, அந்நூலில் அடங்கி யுள்ள எவற்றிற்கும் தங்கள் கபடமற்ற உடன்பாட்டையும், இணக் கத்தையும் துணிந்து கூறமுடியாத 200 குருமாரை நட்ட ஈடின் றித் திக்கற்ற நிலையில் அகற்றிவிட்டது. ஈராண்டுகளுக்குப்பின் வந்த இரகசியச் சமயக்கூட்டச் சட்டம், சிறைச்சாலை புகுவதையும், நாடு கடத்தப்படுதலையும், இணங்காதார் வழிபாட்டுக்குரிய செயல் களிற் பிடிபட்டோர்க்குரிய கதியாக்கியது. இச்சட்டங்கள் பாராளு மன்றத்தின் பூட்கையாகுமேயன்றி, அரசருடையனவாகா. உலோட்டு வின் சமயம் வெற்றிபெற்றது; ஆனல், அவ்வெற்றி அரசவதிகாரத் தினல் அல்லது அவர் மீட்டமைக்க முயன்ற குருமாருக்குரிய அதி கார எல்லையாலும், அதிகார உரிமையாலும் பெறப்பட்டதன்று; ஆனல், பாராளுமன்றப் பெருஞ்செல்வரின் செயலினுலாகுமென்க. சமயத்தைக் குறித்துத் தம் கருத்தினைக் கூறுதற்கான அவர்களின் உரிமையை உலோட்டும், முதலாம் சாள்சும் தாங்கள் உயிரிழக்க
நேரிடினும், ஏற்றுக்கொள்ளார்.
மீட்சியின் சமய ஏற்பாடு அரச சமூகங்களுக்குரிய ஏற்பாட்டைக் குறித்த இணக்க மனேநிலையில் உண்டானதன்று. ஆயினும், அது தாபிக்கப்பட்ட திருச்சபையின் எல்லைகளை அதிகமாக விரிவாக்குவ தால் விளையக்கூடிய சுதந்திரத்தைவிடக் கூடுதலாகச் சமயம், அறிவு, அரசியல் என்பவை சார்ந்த சுதந்திரத்தைத் தூண்ட வில்லையா என்ற கேள்வி எழலாம். 1661 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கைகூடாத சவோய் ஆலோசனைச் சபையில் பாக்சிதரையும், மித மான வைதிகரையும் சேர்த்துக் கொள்ளச் செய்த ஏற்பாடு வெற்றி பெற்றிருந்தால், இன்னும் வெளியே விடப்பட்டிருக்க வேண்டிய 'குவேக்கரும்', 'திருமுழுக்காளர்களும் முன்னேற்றமுடைய சம

பாராளுமன்றமும் சமயப் பிணக்கரும்
யக் கட்சியினரும் சமயப் பொறுமையுரிமை தமக்களிக்கப்பட வேண்டுமென ஒருபோதும் வற்புறுத்த முடியாத அவ்வளவு தனித் தவராயும் அற்பதொகையினராயு மிருந்திருப்பர். உண்மையில் இறுதியிற் செய்த ஒழுங்கில் ஆங்கிலத் திருச்சபையும், ஏனைய வைதிகத் திருச்சபைகளுமாகிய ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன் தன் சொந்த வளர்ச்சிக்குரிய வழிகளைக் கவனித்துவந்தது. அவ்வொழுங்கு சமயப் பொறுமையைச் சிக்கிரத்தில் தவிர்க்க முடி யாததாக்கிற்று. மேலும், அது மாறுபாடும், போட்டியுமுள்ள சமயக் கட்சிகளைத் தூண்டியுது. அவைகள் இடைக்காலத்துக்கும், தியூடர் சுதுவட்டர் காலங்களுக்குமுரிய திருச்சபை அரசுகள் பற்றிய கருத்துக்களோடு முழுதும் மாறுபாடுடைய இக்கால இங்கிலாந்தின் சிறப்பியல்பினைக் காட்டின.
தூய்மைவாதக் கட்சியினர் பல்கலைக்கழகக் கல்விப்பயிற்சியி லிருந்தும், சமூகச் செல்வாக்கு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் தமக்குரிய இயல்பான பங்கிலிருந்தும் நீக்கப்பட்டமையினல், பெரு நட்டமடைந்தனர் என்பது உண்மையே; ஆனல், அவர்தம் குறை பாடுகளும், மனக்குறைகளுமே இருநூருண்டுகளுக்குச் சுதந்திர வீரராயும், அரசாங்கத்திற் பிழை காண்பவராயுமிருக்க அவர்களைத் துரண்டியுள்ளன. அரசியலில் எமது இரு கட்சி முறை மிக நீண்ட காலமாகவும், உறுதிப்பாட்டுடனும் முன்னேற்றமடைந்த்து ; ஏனெ னில், சமயமும் உரிமையுடையோர், உரிமையற்றேர் என்ற இரு பெரும் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாதலினென்க,
ஆனல், மீட்சிக்கும் புரட்சிக்குமிடையில், புரட்டெசுத்தாந்த இணங்காகாராகிய பெருங்கட்சியினரால் நாடு பிளவுபட்டுச் சின்ன பின்னப்படுத்தப்பட்டது. உவிக்கு, தோரி என்னும் இரு கட்சி களும் திருச்சபையிடத்தே கொண்ட கருத்தில் ஒன்றிற்கொன்று முற்றிலும் மாமுகவிருந்தபோதிலும், அவ்விரு கட்சிகளுக்குமுரிய பெருஞ்செல்வர், உண்மையில், ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டிற்கு இணங்கி நடந்தனர். ஆனல், பாக்சிதர், பன்னியன், யோச்சு, பொக்சு ஆகியோரின் காலத்தில் நடுத்தர கீழ் வகுப்புகளிலுள்ளோர் பலர், பாராளுமன்றம் சட்டத்துக்கு மாருணவையென்று விதித்த கடவுட் பணிகளுக்குச் செல்லுதலைக் கைவிடுதலிலும், நட்டமும், சிறைத் தண்டனையும் மேலானவையென்று கருதி அவற்றை அனுபவித்தனர். வணிகக் குழுவினர், இணங்காதாருக்கு விதித்த கடினமான தண் டனைகளினல் ஏற்பட்ட துன்பங்களைச் சகித்தனர். அதன்பேருக, அவர்கள் ஆங்கிலக் கைத்தொழிலிலும் வணிகத்திலும் ஏற்பட்ட சேதத்தையிட்டு ஈற்றில் திகிலடைந்தனர். ஐந்துமைல் சட்டத்தாற்
கல்விக்கு நேர்ந்த பெருந் தீங்கினைப் பற்றி அதிகம் சிரத்தையுள்ளவ 1665.
2.

Page 72
22
1662, 1672.
பாராளுமன்றமும் சமயப் பிணக்கரும்
ராயிருக்கவில்லை. அச்சட்டம் எந்தக் குருவோ, ஆசிரியரோ, ‘தாம் , திருச்சபைக்கு அல்லது நாட்டுக்குரிய அரசாங்கத்தில் எவ்வித மாற் றமும் எப்போதாயினும் செய்ய முயலமாட்டாரென்று ' சத்தியஞ் செய்தாலன்றி, அவர் நகரத்தின் ஐந்துமைல் சுற்றளவுக்குள் வருத லைத் தடுத்தது. தூய்மைவாதம் நகரங்களில் மிகவும் வலிமையுற்றி ருந்தது. மேலும், அதன் கலாசாரத்திற்கு அவ்வகையில் ஏற்பட்ட நட்டம் ஒருபோதும் முற்முக ஈடுசெய்யப்பட்டிலது.
இணங்காதார் தொகை இருபத்தைந்தாண்டுகளாக இடைக்கிடை நிகழ்ந்த கொடிய துன்புறுத்தலினல் அதிகரிக்காமற் றடுக்கப்பட் டது. ஆனல், நம்பிக்கையுள்ளோர், தமது மிகக் கொடிய துன்பங் களின்போதும், பாராளுமன்றத்தினுல் தமக்கு உதவி கிடைக்கு மென்று அடுத்த பொதுத்தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். இக்கார ணத்தினல், உலோட்டு, சித்திராபோத்து ஆகியோரின் காலத்தில் நிகழ்ந்ததுபோல, மக்கள் பெருந்தொகையாக அமெரிக்காவுக்குச் செல்லவில்லை. கவலியர்ப் பாராளுமன்றம் நிலவும்வரை - அது பதி னேழு ஆண்டுகளுக்கு நிலவிற்று - தூய்மையாளர்களுடைய தொல்லைகளுக்குப் பொதுமக்கட் பிரதிநிதி மன்றம் முக்கியமான பிறப்பிடமாயிருந்தபோதும், அவர்கள் அதனிடத்தில் நம்பிக்கை யுடையராயிருந்தனர்.
வயிற்றேலிலே இரண்டாம் சாள்சின் அரசமன்றத்தில் சமயப் பொறுமைக்காக மிகப் பரிந்து பேசுபவர் பலர் உளர். ஆங்கு உரோ மன் கத்தோலிக்கச் சமயம், நாத்திகம் ஆகிய இரண்டுக்கும் உவெ சுத்துமினித்தரில் பாராளுமன்ற உறுப்பினரிடையே இருந்ததிலும் பார்க்க மேலான செல்வாக்கிருந்தது. சிந்தையில் உரோமன் கத்தோ விக்காான அரசர் கத்தோலிக்கரை ஆதரித்து, அவர்களை மேம்படச் செய்ய விரும்பினர். அவ்வாறு செய்தல், தாய்மையாளர் குறையை அதே நேரத்தில் தீர்த்தாலன்றி, புத்தியானதன்று என்பதை அவர் அறிவர். அல்லாமலும், இத்திறமையுள்ள இன்ப தத்துவத்தைப் பின்பற்றுபவன் மற்றையோரை அவர்தம் கருத்துக்களுக்காகத் தண்டித்தலில் அத்துணை நாட்டமுள்ளவனல்லன். துன்புறுத்துஞ் சட்டங்கள் ஒருமுறைக்குமேல் அரசரின் மன்னிப்பால் ஒத்தி வைக்கப்பட்டன. சட்டங்களை நிறைவேற்றுவதில் தலையிடுமிச்செயல் சட்டத்திற்கு மாமுனதென்று பாராளுமன்றம் முடிவுசெய்தது. மேலும், இம்மன்னிப்புக்களினல் சிற்சில வேளைகளில் நன்மை பெற்ற தூய்மையாளர் அவைகள் எதேச்சாதிகாரத்தின் செயல்க ளென்றும், அவற்றின் நன்மைகளில் உரோமன் கத்தோலிக்கரும் பங்குபெற்றனர் என்றும் அறிந்து துன்பப்பட்டனர்; அாய்மை

தோரி, உவிக்குக் கட்சிகளின் தோற்றம்
யாளரும் உரோமன் கத்தோலிக்கரும் தண்டனைச் சட்டங்களுக்கு முழுதும் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்று பாராளுமன்றம் தீர் மானித்துள்ளது. உரோம், கந்தபுரி, செனீவா ஆகிய மூன்றிற்கும் அரசர், பாராளுமன்றத்தினர், வருந்தும் குடிமகன் ஆகிய மூவர்க் குமிடையே வினேதமான 'முக்கோணச் சண்டை யொன்று இவ் வாறு நிகழ்ந்ததென்க. 1688-9 ஆம் ஆண்டு நேர்ந்த இறுதி நெருக் கடி வரையும் அது பலவித மாறுதல்களை அடைந்தது.
மீட்சிக்கால ஆட்சியின் இரண்டாம் ப்த்தாண்டில் புரட்டெசுத் தாந்த இணங்காதார் மன்னுரிமையிலும் மிகச் சிறப்பாகத் தமக்கு இசைந்த ஓரிடத்தில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஆராய்வாராயினர். பாராளுமன்றத்தின் இருசபைகளும், பழைய உறுப்பினர் இறந்துபோக, இடைத்தேர்தல்களினுல் தம் உறுப்பின ரைக் கிரமமாகப் பெருக்கின. ஆங்குள்ள சிறுபான்மையோர் 'இள கிய மனச்சாட்சி யுடையார்க்கு ச் சட்டப்படி சகாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கினர்; மேலும் கவலியரையும், அரச மன்றத்தாரையும் எதிர்த்து நின்றனர்.
இறுதியில், ! உளிக்கு' என்றே வழங்கிய இந்தக் கட்சியிலுள்ள சாதாரண மக்கள் வைதிகத்தோடும், மேல்வகுப்பினர் பரந்த மனப் பான்மையுடையராகிப் புதிய காலத்துப் பகுத்தறிவு வாதத்தோ டும், சமய சம்பந்தமாகத் தொடர்புடையராயிருந்தனர். ஆாய்மை யாளரும் பகுத்தறிவாளரும் ஒருங்குசேர்ந்து செல்வாக்குள்ள மேற்றிருச் சபையாளரை எதிர்த்து நின்றனர். திருமுழுக்காளப்
போதகர் இரகசிய சமயக் கூட்டங்களுக்குச் செல்லும்போதெல்
லாம் உளவறிதற் பொருட்டு ஒற்றர் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். கோபங் கொண்ட சமாதான நீதிபதிகள் இப்போதக ரைச் சிறைச்சாலைகளுக்கு மாறி மாறி இழுத்துச் சென்ருரர்கள். அவர், 'உலிக்கு தலைவர், புரட்டெசுத்தாந்தர் எல்லோருக்குமாகப் பாராளுமன்றப் பொறுமையை மேற்கொண்டுள்ளாரென்று கேள் விப்பட்டபோது, மிக மகிழ்ச்சியடைந்தார். அதனல் அவர் அல் கேணன் சிட்டினி கருணைகூர் நிலையிலிருந்தாரா என்றும் அன்றேல் 'அறிவுள்ள மக்கள் எல்லோருக்குமுரிய சமயம்' என்றதற்குச்
சாவ்சுபரி கொண்ட கருத்து என்ன என்றும் விசாரித்தார்.
அரச கழகமும், கேம்பிரிட்சிலுள்ள திருநிற்றிக் கல்லூரியில் சேர். ஐசாக்கு நியூற்றணிடத்தே தன் பூரண அறிவுப் பேரொளியைக் கண்ட பெரிய விஞ்ஞான இயக்கமும், இளமையில் இரண்டாம் சாள் சினதும், ஐயப்பாடும் ஆராயுமவாவுமுடைய அரச ஊழியரினதும், ஆதரவால் வளர்க்கப்பட்டன. விஞ்ஞானம் பற்றியதும், பரந்த மனப்பான்மையுடையதுமான இயக்கம், உவிக்குத் தத்துவஞானி
93
LS). 1642, இ. 1727.

Page 73
124
தூய்மைவாதத்தின் செல்வாக்கு
யாகிய யோன் உலொக்கு வென்பான் விரித்து விளக்கிய சமயப் பொறுமையாகிய கோட்பாட்டுக்கு இணக்கமான குழ்நிலையை மெல்ல மெல்ல உருவாக்கியது. அதே சமயத்தில், அரசியலுக்குப் புறத்தே முதலில் நீதிபதிகளும், பின்னர் நடுவரும் தத்துவ அறிவிற்குரிய ஐயப்பாடுகளை உணரத் தொடங்க, சுதுவட்டர் காலத்தின் முதல் அரைப்பகுதியில் மிகுதியும் நடைபெற்ற செயலாகிய குனியக்காரி களைத் தேடுதல் குறையத் தொடங்கியமை கவனிக்கத் தக்கதாகும்.
தேசீயத் திருச்சபையுள் பரந்த மனப்பான்மையுடைய கட்சி யொன்றுண்டு. அதன் தொகையிலும் பார்க்க அதன் கல்விக்கும் சொல்லாற்றலுக்கும் மிகுந்த மரியாதையுண்டு. அது நாட்டுப்புறத் திலும் பார்க்க இலண்டனில் மேலான ஆற்றல் வாய்ந்ததாகும். அதுவே 'கீழ்த்திருச்சபைக்' கட்சியாகும். அப்பெயர் அப்போது எவாஞ்சலிசத்தைக் குறிப்பிட்டிலது ; ஆணுல், நாமிப்போது வழங்க வேண்டிய பரந்த நோக்கமுடைய அல்லது "முற்போக்குடைய ' கொள்கைகளையே குறிப்பிட்டது. அரசியல் சம்பந்தமாக இசித்தலிங் பிளிற்று, கிலற்சின், பேணற்று முதலிய கீழ்த்திருச்சபையார் சமயப் பொறுமைக்காகப் பரிந்து பேசுபவராயும், புரட்டெசுத்தாந்த இணங் காதாரின் நண்பராயும் இருந்தனர். அதேமாதிரி, குருமாரில் பெரும் பான்மையோர்க்கும் அவர்தம் ஊக்கமிக்க பொதுமக்கள் ஆதா வாளர்க்கும் வழங்கப்பட்ட மேற்றிருச்சபை' என்ற பெயர் அப் போது சடங்குகள் செய்வோனைக் குறிப்பிட்டிலது. அது இணங்கா தாரிடத்தும், உரோமன் கத்தோலிக்கரிடத்தும் காட்டவேண்டிய மிகுந்த வெறுப்பையும், அரசர்க்கும் அவர்தம் பரம்பரைத் தெய்வீக உரிமைக்கும் எதிர்ப்பின்மை பற்றிய கொள்கையில் நம்பிக்கையை யும், தியாகியான சாள்சு அரசர்க்குக் காட்டும் பெரும் பயபக்தியை யும் - குருமாரிடத்தென்றலும் - அரசாங்கத்திலும், சமூகத்திலும் திருச்சபையின் அதிகாரம்பற்றிய உயர்ந்த கருத்தையும் குறிப்பிட் டது. கலாநிதி யோன்சன் என்பான், நூற்றண்டுகளுக்குப் பின் வாழ்ந்திருந்தபோதும், மீட்சிக்கும் பிரான்சிய புரட்சிக்குமிடைப்
பட்ட காலத்தில் நிலவிய மேற்றிருச்சபை மனப்போக்குக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாவான்.
தூய்மைவாதக் கட்சிகளின் அரசியல் வீழ்ச்சிக்குப் பின்னரும் திருச்சபைகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தூய்மைவாதத்துக்கும் அல்லது புரட்டெசுத்தாந்தத்துக்குமுரிய கொள்கைகளிலும், செயல் முறைகளிலும் எஞ்சியிருந்தது எவ்வளவு என்பது, உண்மையில், கவ னிக்கத்தக்கதாகும். குடும்பங்களிற் கூட்டு வழிபாடும், வேதநூற்

அரசும் நிதியும்
பயிற்சியும், பத்தியுள்ள பெரும்பான்மையோரிடம், அவர்கள் திருச் சபையராய் இருந்தாலென், இணங்காதாராயிருந்தாலென், தேசீய வழக்கமாய் அமைந்துள்ளன. ஆங்கிலேயரின் குணம் தூய்மையாளர் சமயத்திலிருந்து சில இயல்புகளைப் பெற்றது. அக்குணம் துய்மையா ளாது பலவந்தத்தை நீக்கியும் இணங்காதாரை மரியாதையுடைய சமூகத்திலிருந்து துரத்தியும் விட்டபோதும், அடுத்த இருநூருண்டு களாக அவ்வியல்புகளை வெளிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் துய்மையாளர் ஆற்றும் வழிபாடும் ஒழியாது என்றும் வழக்கம்போல் நடந்தது. முதலாம் சேமிசும், உலோட்டும், ஆங்கில மக்கள் வழக்கம்போல ஞாயிறுதோறும் பிற்பகல் வேளைகளில் விளை யாடவேண்டுமென்று பேராவல் கொண்டனர். அவ்விருப்பத்தை எச் சாதியாருள்ளும் உடற்பயிற்சி மிக்காரும், விளையாட்டுவீரரும் அங்கீ கரிப்பர் என்று அவர்கள் கருதினர். ஆயினும், மீட்சிக் காலத்திற் முனும் அாய்மையாளன் என்ற பெயரே வெறுப்புக்கும் வசைக்கு முரியதொன்முய் இருந்த காலத்தில் சிறைச்சாலைகளில் குற்றமற்ற குவேக்கரும் திருமுழுக்காளரும் நிறைந்திருந்தனர். அவ்வாருன காலத்தில், ஞாயிற்றுக்கிழமை, ஒய்வுக்கும் தியானத்திற்குமுரிய தெனத் திடமாக ஒதுக்கி வைக்கப்பட்ட நாளாகும் என்ற தூய்மை யாளர் கருத்து ஆங்கில மக்களின் அரசபத்தியை இறுகப்பற்றிக் கொண்டேயிருந்தது. நாட்டினமொன்று ஒவ்வொரு கிழமையும் ஏழா வது நாளில் கிட்டமிட்டு வகுத்த களியாட்டத்தையும், தொழிலையும் கைவிடவேண்டும் எனத் தானுகவே மேற்கொண்ட ஒழுங்குமுறை யின் நன்மை தீமைகளைச் சமூக வரலாற்ருளன் எவனும் நடுநிலை யோடு இன்னும் ஆராயவில்லை.
பொதுச் செலவிற் சுருக்கம் குருெம்வெலின் அமைப்பின் வீழ்ச்சியாலுண்டான பெரிதும் விரும்பப்பட்ட விளைவுகளிலொன் முகும். கவலியர்ப் பாராளுமன்றம் ஒவ்வாத மிகக் குறைந்த படிச் சம்பளத்தை அரசர்க்கு அளித்தது. அதனுல் ஆட்சியில் எல்லாப் பகுதிகளுக்கும் இடையூறு விளைந்தது. மேலும், பிரான்சிய அரச ஞன பதினன்காம் உலூயிக்கு வெளிநாட்டுப் பூட்கை அதிகாரத் துக்கு விலை பேசுவதற்குச் சீக்கிரத்தில் அவனைத் தூண்டிவிட்டது. ஆனல், படிச்சம்பளக் குறைவு, “சட்ட அமைப்பின் சமநிலைக் குத் திரும்பியதன் இயல்பான விளைவாகும்; இவ்வாறு சமநிலையை அடைவதையே கிளாறெண்டன் அரசியல் ஞானத்தின்படி மிக உகந்த வழியென நம்பினன். பாராளுமன்றம் பூட்கையையும், செலவையும் கட்டுப்படுத்தக்கூடியவரையும், பொதுப்பணத்தை மிதமிஞ்சிச் செலவு செய்யச் சம்மதிக்காது. ஒல்லாந்தோடு செய்த கடற்போருக்கு அளித்த காசு, உண்மையாக, எவ்வாறு பயன்
125

Page 74
126'
நிரந்தரப் படை
1666. படுத்தப்பட்டதென்று அறிதற்கு அரசகணக்குப் புத்தகங்களைத்
தேடப் பொதுமக்கட் பிரதிநிதி மன்றம் வற்புறுத்திநின்றபோது, கிளாறெண்டனும் அவனுடைய அரசவூழியரும் நிர்வாகசபையில் பெருந்திரளான சட்டசபையினரால் நிந்திக்கப்பட்டனர். ஆயினும் பாராளுமன்றம் செலவினைக் கட்டுப்படுத்தும் வழிக்கு முதற்படி யிதுவேயாகும். அக்கட்டுப்பாடு ஒன்றே தாராளமாகவும், தொடர்ச் சியாகவும், இக்காலத்தில் ஒரு நாட்டினத்துக்கு முக்கியமான வரியிறுப்போரின் பொருளை அரசாங்கத்திற்கு உரித்தாக்க முடியும்.
குருெம்வெலின் மிதமிஞ்சிய செலவு முறைகளைக் குறைத்ததனு லேற்பட்ட கடும் விளைவுகளைத் தாங்கியது இராணுவத் தாபனமே ய்ன்றிக் கடற்படைத் தாபனமன்று. செலவு நிதிக்குரிய ஒரு தனிப் பட்ட பெருமுயற்சியினல், மீட்சியில் புதுமாதிரிப் படையினை, அதற் குரிய பணத்தைக் கொடுத்துத் தீர்த்து அணிகுலேத்து விட்டனர். நீடித்த பாராளுமன்றம் தக்கவாறு அறிவுறுத்தப்பட்டிருந்தால், பதின்மூன்முண்டுகளுக்குமுன் அது அவ்வாறு செய்திருக்கக்கூடும். அப்படைக்குப் பதிலாக வேறெப் பெரும்படையும் நிறுவப்பட்டிலது. அரசனின் இாதத்தோடு சென்று அவனை மூட அபிமானிகள் அரச துரோகிகளாகியோரிலிருந்து காத்தற்கு நியமிக்கப்பட்ட மெய் காப்பாளரைவிட, காலாட்படைகள் சிலவும், தாஞ்சியர்" முதலிய அந்நியநாட்டுப் படைகளுமே ஆங்கிருந்தன. பிரித்தானிய சேனை யின் மிகப்பழைய படைமரபுகள் "குளிராற்றுக்காவல ரைப் போல, குருெம்வெலின் நீண்டகாலச் சேவையுடைய படைகள் சிலவற்றிடமிருந்து அல்லது ஒல்லாந்த சேவையிலுள்ள பவிசு முதலிய படைகளிடமிருந்து பெறப்பட்டன.
இங்கிலாந்தின் நாட்டுப் பிரபுக்களின் மனத்தை உருக்குமுணர்ச்சி பிரதிபலிக்கும் கவலியர் பாராளுமன்றத்தினர் நிலையற்படை' என்ற பெயரை வெறுத்தும் அதற்குப் பயந்தும் வந்தனர். அவர்கள், உரிமையான அரசர் தங்களை உறுதியாகவும், அபகரிக்கும் காப்பாள ரைப் போல மிக இலகுவாகவும் ஏமாற்றக்கூடுமென்று நன்கறிவர். நல்ல கவலியர் எவரும் நம்பியதுபோல, அரசன் மாத்திரம் தளபதி Εξετ நியமனஞ் செய்யவும், போருக்கு ஆயத்தமாயுள்ள படைகளுக் குக் கட்டளையிடவும் உரிமையுடையனவான். அப்பேர்ப்பட்ட அதி காசம் எதையும் பாராளுமன்றத்துக்கு உரியதாகக் கேட்க ஒருவர்
தாஞ்சியரும், பம்பாயும் பிறக்கன்சாவைச் சேர்ந்த கதறைன் என்னும் போத்துக்கேய இளவரசியான, இரண்டாம் சாள்சின் மனைவிக்குச் சீதனமாக வந்துள்ளன. அதற்குக் கைம்மாருக, தளர்ச்சியுறும் இசுப்பெயினிடமிருந்து போத்துக்கல் மீட்டுப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைக் காப்பாற்ற இங்கி லாந்து உதவியளித்தது ; அன்றியும் இங்கிலாந்துக்கும் போத்துக்கலுக்கும் வர்த்தக அரசியற் றெடர்புகள் எற்பட்டன. அவை இரண்டரை நூற்றண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்தன.

கடற்படை
புரட்சிக்காரராகவும், மொட்டைத்தலேயராகவுமிருக்க வேண்டும் , ஏனெனில், உள்நாட்டுப் பெரும்போர் தொடங்கியமை அப்பிரச்சினை யினலாகுமாதலினென்க. ஆனல், மகாராசா நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளத் தூண்டப்படக்கூடாதபடி சேனை மிகச் சிறியதா யிருக்க வேண்டுமென்பது அரசபத்திமிக்க இக்கொள்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும்.
எவ்வளவோ தக்க அடிப்படையுள்ள இப்பாதுகாப்பு சமயந் தப்பித் தோன்றியது. அப்போது இரண்டாம் சேமிசுக்கு 30,000 பேரைக் கொண்ட காலாட்படையொன்றினைப் பேணிவைக்க அனு ץ மதி கிடைத்தது. அவன் அப்போது எழுப்பிய புரட்சியின் விளே வாக, நாட்டின் சுதந்திரத்துக்கு மாருகச் சேனை பயன்படுத்தப் பட மாட்டாதென்று பாராளுமன்றம் நடைமுறை பற்றிய பாது காப்பைப் பெற்றது. அப்போதுதான் மூன்றும் உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளில் நிரந்தர படை ஒன்றினல் உண்டாகும் அச்சம் தணியத் தொடங்கிற்று. அவ்வச்சமின்மை பதினன்காம் உஆாயிக்கு மாமுக நடந்த தரைச் சண்டையிற் கவனம் செலுத்திய உவிக்கு அரசியற்றந்திரிகளிடத்தே முதல் உண்டானதாகும். தோரிப் பெருஞ்செல்வரின் மனம் மிக மந்தமாகவே செயற்பட்டது. நேசு பிச் சண்டைக்கு நூற்முண்டுகளுக்குப் பின் அணிவகுத்துச்
சென்ற நிலையான வீரரைக் கொண்ட ஒரு படையின் தோற்றம்,
அவனுடைய பாட்டனின் மாளிகைக் கதவை இடித்தும், அவனது சொத்தைப் பாழாக்கியும், சமயத்தைச் சட்டவிரோதமாக்கியும், அரசனின் தலையை வெட்டியுமுள்ள இராணுவ வீரரை நினைக்கச் செய்தது. தன்னைப் போன்ற நாட்டுப் பெருஞ்செல்வர் நடாத்திய பயிற்சியற்ற மாகாணப் படையொன்றையே அவன் உறுதியாக
நம்பினுன்.
அவ்வாறன அச்சமும், நினைவும் கடற்படையின் பரிபாலனத்தைத் காக்கியதேயில்லை. அரசு, மீட்சிப் பாராளுமன்றம் ஆகிய இரண்டும் பொதுநலவரசின் போர் செய்யும் கப்பற்படையின் தலைமுறைப் பழக்கங்களை ஏற்றுக் கொண்டன. அப்படையினைப் பிளேக்கு ܐ
தான். இரண்டாம் சாள்சும், அவனின் தம்பியான சேமிசும் கடற் படைக்குரிய காரியங்களை அறிந்து தனிப்பட்ட அக்கறையெடுத்த னர். மேலும், பெப்பிசு, அவனுடைய ஆதரவாளர் முதலியோர் கடற் படைப் பகுதிக்கு நல்ல உதவியளித்தனர். கவலியர் பாராளுமன்ற மும் தோரிக் கட்சியும் கடற்படையைப் பேராதாவோடு நன்கு மதித்தன.
வென்பான் தான் இறக்கும் தருணத்திற் பிற்சந்ததியார்க்கு அளித்
127

Page 75
128
1665-667.
1667.
யூன், 1667.
665.
1666.
மீண்டும் ஒல்லாந்தரோடு போர்
இன்னுமொரு கடற்போர் ஒல்லாந்தோடு விரைவில் தொடங்கி யது; இவ்வாறு பொதுநலவரசின் கீழ் இரு வணிக சமூகத்தினர் நடத்திய சண்டை மீண்டும் தொடங்கப்பட்டது. அதனை இரு கட்சியினரும் முன்போலப் போர் செய்யும் கடலோடிகளுக்குரிய அதே மாதிரியான சிறப்புடைய இயல்போடும், பிரமாண்டமான அளவிலும் நடாத்தினர். மேலும் பெரிய நாடு போரில் கூடிய நன்மை பெற்றது; பிறடா உடன்படிக்கைப்படி ஒல்லாந்து நியூ யோக்கை இங்கிலாந்துக்குக் கொடுத்தது*
ஆனல், உடன்படிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கும்போது, தி இறைற்றரின் தலைமை யில் உள்ளதும், ஆங்கில மாலுமிகளால் செலுத்தப்பட்டதுமான ஒல்லாந்துக் கப்பற்படை, கேமிசு, மெதுவே ஆகிய ஆறுகளிற் சென்று, சதாமுக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த எமது மிகச் சிறந்த போர்க்கலங்களை எரித்தும், கைப்பற்றியும் உள்ளது. அந்த மானக்கேடு உடன்படிக்கையின் நிபந்தனைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றமெதையும் விளைத்திலது ; ஆனல் இலண்டனில் உண்டான கொள்ளைநோய், தீ ஆகியவற்றை அடுத்து இது நிகழ்ந்தமை, ஆங்கிலேயரின் மனப்போக்கையும், அரசியல் முறையையும் பெரிதும் பாதித்தது. கேமிசு ஆற்றிற் கேட்ட பகைவரின் துவக்கு வெடிச் சத்தம் இலண்டன் மாநகர மக்களுக்குப் புதியதாகும். ஒலிவரின்
உடலை மிகச் சமீபகாலத்திலே துரக்கில் தொங்கவிட்ட இம்மக்கள்
என்னென்ன அச்சமற்ற காரியங்களை அவன் செய்து, அயல்நாட் டரசர் யாவரையும் தனக்குப் பயப்படச் செய்தானென்று கூறி, அவனைப்பற்றிச் சிந்தித்தனர். உலக மக்கள் கூறியது வருமாறு : "அரசன் தன் சிற்றின்ப ஆசையை விட வேறெதையும் கவனிக் கின்றிலன்; சண்டையிட்டுப் பிரிந்திருந்த சீமாட்டி காசிமேயினை யும், இதிவாட்டின் மனைவியையும் உறவாக்க, தன் அரசை எப்போ தாயினும் காத்தற்குச் செலுத்திய கவனத்திலும், செய்த பெரு முயற்சியிலும் பத்துமடங்கு மேலாகச் செய்துள்ளான்.” வயிற் முேலில் இருந்து "உரோமன் கத்தோலிக்கக் குருமார் நம்மை ஆண்டுவந்தனர் என்ற ஊர்ப்பேச்சு அப்போதே உண்டாயிற்று. குருமார் இலண்டனை எரித்துச் சாம்பராக்கினர் என்று போதிய ஆதாரமின்றி மக்கள் நம்பினர்; சில ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் ஏற்பட்ட தீக்குத் தூய்மையாளர் காரணரென்று கூறி யுமிருப்பர். மாற்றமடைந்த இச்சூழ்நிலையில் கவலியர் பாராளு மன்றத்தில் இதுவரை அறிந்திருந்த எதனிலும் மிக்க பயங்கரமான எதிர்க் கட்சிகளும், பூட்கைகளும் உண்டாக்கப்பட்டன.
இந்நூல் பக்கங்கள் 84,108 பார்க்க.

கிளாறெண்டன் வீழ்ச்சி
இன்னும் மெதுவே விபத்துக்கு முக்கியமான காரணம், பொது மக்கட் பிரதிநிதி மன்றம் தான் கட்டுப்படுத்த முடியாததும், தான் ஐயங்கொள்ளத் தொடங்கியதுமான ஓர் அரசாங்கத்துக்குப் பணம் தாராளமாய்க் கொடுக்க விரும்பாதிருந்ததே ஆகும். வலிந்து முயன்று செய்யும் சிக்கனமாக, கப்பல்கள் ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன; மாலுமிகளும் அணிகுலைக்கப்பட்டனர். உண்மை யில் எத்தனையோவாண்டுகளாகப் பிரித்தானிய மாலுமிகள் சம்பளம் பெருதிருந்தனர். அதன் விளைவாக, அவர்கள் பெருந்தொகையின சாய்த் தப்பியோடி, விலை போகத்தகாத ‘நிதிச்சாலை முகவரிச் சீட்டுக்களு’க்குப் பதிலாகத் தம் மாலுமிகளுக்குப் பணமளித்த ஒல்லாந்தரை அடுத்தனர்.
இலண்டனில் உண்டான கொள்ளைநோய், தீ, மெதுவே விபத்து, இணங்காதாரைத் துன்புறுத்தியமை, போப்புமார் தம்மை ஆடம்பர மாகக் காண்பித்தமை ஆகியனவெல்லாம், குழப்பத்தை முன்னறி வித்த நாட்டில் ஒரு மனமாற்றத்தை எழச் செய்தன. இவ்வாருரன அறிகுறிகள் நேர்ந்த காலத்து சாள்சு வழிகாட்டியை நீக்கி ' விடத் தீர்மானித்தான். கிளாறெண்டன்மீது பழிசுமக்க மக்கள் உண்மையாக எண்ணினர்; ஏனெனில், தவறுக நிகழ்ந்த எல்லா வற்றிற்கும் அவனே பொறுப்பாளனவன் என்று அவர்கள் கருதின ராதலினென்க. சம்பளம் பெருத மாலுமிகள், துன்புறுத்தப்பட்ட இணங்காதார், அவன் மரியாதை காட்ட மறுத்த, அரசனது வைப் பாட்டிகள் நியமித்த இடத்திலேயே இருக்கவேண்டுமென்று அவன் விரும்பிய பாராளுமன்றத்தினராகிய எவரும் அவனை வெறுத்தனர். அன்றியும், உலகமுழுதுமுள்ள பேராவலுடைய இளைஞரின் உழைப் புக்குரிய வழியை அவன் அடைத்த காரணத்தால் அவர்களும் வெறுத்தனர் என்க. உண்மையில், இக்காலத்துக்குப் பொருந்தாத கொள்கைகளையுடையவனுன அவன் இங்கிலாந்துக்குச் சேவை புரியக்கூடிய நிலையிலிருந்திலன். ஆனல், அவனுக்குப் பதிலாகச் சாள்சு தேர்ந்தெடுத்த மக்கள், அரசனையும் நாட்டையும் அபாயத் துக்குள்ளாக்கினர். அதனை அவன் விலக்கியிருப்பான். அவர்கள் நாட்டின் நலனைப் பிரான்சுக்குக் காட்டிக்கொடுத்தனர்; மேலும், அவர்களிற் சிலர் தம் தலைவரோடு சேர்ந்த புரட்டெசுத்தாந்த
திருச்சபைக்கும் இரண்டகம் பண்ணச் சதிசெய்தனர்.
'தன்னலக்குழுவில்' ஆங்கிலத் திருச்சபைக்குரிய தகுதியுடைய வன் ஒருவனேனுமிலன்; நாட்டுப்பற்று உடையவன்தானுமிலன். கிளிபோட்டு ஓர் ஆர்வமிகுந்த உரோமன் கத்தோலிக்கனுவன். ஆளிங்டன் வேறெதனினும் மேலாக உரோமன் கத்தோலிக்கத்துக்கு உரியனவான் ; உலோடடேலும், பக்கிங்காமும் முறை பிறழ்ந்தே லும் தம் சாமர்த்தியத்தால் பிழைப்பவராவர்; சாவ்சு பரிப் பிரபு
129
நவெ., 1667.
1667-1673

Page 76
30
பிரான்சும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும்
வான அந்தோனி ஆசிலிகூப்பர் முதல் உலிக்குக் கட்சியை ஆக்க வும், பின் அதனைக் கடும் சினங்கொண்டு அழிக்கவும் நியமிக்கப் பட்டவனுவான். கிளாறெண்டனின் கட்டுப்பாட்டிலிருந்து நிலையற்ற இக் கூட்டாளிகளால் விடுவிக்கப்பட்டதும், சாள்சு ஈற்றில் தானே தன் தலைவனுய் விந்தையான பாதைகளில் இறங்கினன்.
ஐரோப்பாவில் புதியகாலம் பற்றிய பேருண்மையென்னவெனில், அக்கண்டம் முழுவதும் பிரான்சின் போர்க் கருவிகளும், அதன் செல்வாக்கும் பரவியமையாகுமென்க. சேர்மனியிலும், இத்தாலி யிலும் உள்ள மிகப் பெரிய நிலப்பரப்புக்கள் எண்ணிறந்த நாடுகளா கப் பிரிக்கப்பட்டுள்ளன. அங்கே வெல்லமுடியாத ஒாதிகாரத்தை அவ்விரு தேசங்களும் உருவாக்கத் தவறியமையும், இசுப்பெயினின் வீழ்ச்சியும், பிரான்சு தன் பேராவலை அடைதற்கு வேண்டிய வழியை உண்டுபண்ணிவிட்டன. பிரான்சின் ஒற்றுமையையும், உள் ளமைப்பையும் திருத்தூதரான இறிச்செலியும், மசறினும் பூசண மாக்கினர். இளைஞனன பதினுன்காவது உலூயியும் அவனுடைய உதவியாளரான அறிவுபடைத்த அரசியல் தந்திரிகளும், போர் வீரர்களும் பிரான்சின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது திருத் அாதரான இறிச்செலியுவினுலும் மசறினலும் ஏற்கெனவே நாட்டின் ஒற்றுமையும் உள்நாட்டு ஆட்சியின் சீரமைப்பும் பூரணப்படுத்தப் பட்டிருந்தன. ஐரோப்பாவில், கத்தோலிக்கத்துக்கும், புரட்டெசுச் தாந்தத்துக்கும் உரிய நாடுகள் திகிலடைந்திருந்தன. ஆனல், அவைகளின் திறமையின்மையும், தன்னயமும் ஒன்றின்மேல் ஒன்று கொண்ட அழுக்காறும், ஒறேஞ்சு நாட்டு உவிலியம் என்பான் தோன்றுதற்கு முன், அவைகள் தற்காப்புக்காக ஒற்றுமைப்படு தலைத் தடுத்தன. துருக்கிய நாட்டானுக்கு மாமுய் வியன்னுவுக்குச் செல்லும் வழிகளைக் காவல் செய்வதில் ஈடுபட்டிருந்த ஒசுற்றி இடையிடையே மாத்திரமே மேற்கில் தன் கவனத்தைச் செலுத்தக் கூடியதாயிருந்தது. இசுப்பெயின், ஒரு காலத்தில் ஓங்கியிருந்த அதன் வலிமைகெட்டுப்போக, தன் முந்திய பகைவரான ஒல்லாத் தின் புரட்சிக்காரரிடம் நெதலாந்துக்களிலுள்ள தன் சொத்துக் களின் பாதுகாப்பை விட்டுவிட வேண்டிய நிலையில் இருந்தது.
மானியத்துக்குரிய ஐரோப்பாவின் பயனற்ற முடியரசுகளும், இளவரசுகளும் முப்பதாண்டுப் போரினல் மனேநிலையிலும் பொருள் நிலையிலும் களைத்துப் போயின. இந்நிலையில், பிரான்சின் எழுச் சியை எதிர்த்தற்கு மணற்கரைகளுக்கும் கடலுக்குமிடையேயிருந்த வணிகர்களது சிறிய குடியரசான ஒல்லாந்தையே நம்பியிருக்க வேண்டி யிருந்தது. தன் கீழ்த்திசைக் குடியேற்ற நாடுகளாலும், உலகமெங்கும் பரவியுள்ள தன் வணிகத்தாலும் செழிப்புற்றதும், எல்லாச் சாதி சமயங்களுக்குமுரிய அகதிகளுக்குப் புகலிடமா

நேசஉடன்படிக்கை
யுள்ளதும், குருேற்றியசு, இடெக்காட்டு, இசுப்பினுசா, இறம்பிருந்து, வேடமீர் ஆகியோரின் சொந்த நாடாயுள்ளதுமான பிரான்சு, தத்துவஞானம், கல்வி, பொருளாதாரக் கலை, ஓவியம், தோட்டக் கலை, விஞ்ஞானமுறையிற் செய்யும் வேளாண்மை ஆகியவற்றிலும், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பிக்கும் கலைத்திறமை கைத் தொழில்களாகிய இன்னோன்ன பிறவற்றிலும் உலகத்துக்கு வழி காட்டி வருவதாயிற்று. ஐரோப்பாவில் ஒல்லாந்து பிரான்சுக்குச் செல்வாக்கில் எதிரியாகும்; மேலும் அது அரசரோ, பிரபுவோ, குருவோ எவரினதும் ஆடம்பர ஊர்வலமின்றி, இவ்வுயரிய நிலை யிலிருந்தது. அதன் புகழ் பெற்ற முதல் நீதிபதியாகிய இடிவிற்று என்பானுக்கு அவனுடைய வீட்டில் ஒரு பணியாளேயிருந்தான் ; அன்றியும், விதிகளில் அவன் பரிவாரமின்றி நடந்து திரிவான்.
நடுத்தாச் செல்வர், வணிகர் முதலியோரைக் கொண்ட கல்வி னின் குடியரசை அழித்தமையும் அதேமாதிரியாக, பிரான்சிலும் இயூக்கனற்றுக்களை அழித்தமையும், உலூயியினதும் அவனுடைய ஆட்சியின் இலட்சியங்களையும் பூட்கையையும் உற்சாகப்படுத்திய பிசான்சிய இயேசு இயக்கத்தாரினதும் முக்கியமான திட்டங்களா கும். பிரான்சிய இயேசு இயக்கத்தாரும், பிரான்சிய அரசரும் ஈற் றில் மிகுதியும் பகைத்த இத்தாலியின் பாப்பரசரின் மிக மிதமான விருப்பங்களைப் பற்றி பிரான்சியப் பண்பும் ' தேசீயமுங் கலந்த உணர்ச்சி அதிகமாகவமைந்துள்ள இப்பூட்கையில் எதுவும் குறிக் கப்பட்டிலது.
நெதலந்து அரசியல் அறிஞன் ஒருவனன சேர். உவிலியம் தெம்பிள் என்பவன் 1668 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஒல்லாந்து, சுவீடின் ஆகிய மூவரசுகளுக்குமுரிய நேச உடன்படிக்கை யொன் அறுக்கான பேச்சுவார்த்தைகளைப் பெருந்திறமையோடு நடத்தினன்; அதனல், இரைன் ஆற்றையடுத்தும், இசுப்பானிய நெதலந்து களுக்குள்ளும் பிரான்சியர் செல்வதைத் தடுப்பதே அவனின் நோக்கமாகும். அதன்பயன் உடனே கிடைத்தது. உலூயி எயிச் சிலாச்சப்பெல் உடன்படிக்கையின் நிபந்தனையை ஏற்குமாறு வற் புறுத்தப்பட்டான். இங்கிலாந்து வாய்ப்பான பூட்கையை உறுதி யாகக் கைக்கொண்டிருந்தால், சண்டைகள் ஏற்படாது தடுத்து, அதனல் ஐரோப்பாவைக் காப்பாற்றியிருக்கக்கூடும். தெம்பிளின் உடன்படிக்கைக்கும், 1668 ஆம் ஆண்டுப் புரட்சிக்கும் இடைப்பட்ட இருபதாண்டுகள் வரையும் நாம் பிரான்சுக்குத் துணையாகவிருந் தமை, உலூயியின் அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்த் தியது ; அந்நிலையிலிருந்து அதனை உவிலியம், மாள்பரோ ஆகி யோரின் நீண்ட போர்களினல் மாத்திரமே அகற்றக்கூடியதா யிருந்தது.
13

Page 77
132
சமநிலையாதிக்கம்
ஆங்கிலப் பாராளுமன்றமும், நாடும் சமநிலையாதிக்கம் பற்றிய தெம்பிளின் பூட்கையிலும், ஐரோப்பாவில் புரட்டெசுத்தாந்த நிர்வாகத்திலும் முதலில் நல்ல விருப்பங்கொண்டன. ஆனல் இக் கொள்கைகளை இரகசியமாக எதிர்ப்போர் ஏலவே இரு புகழ்பெற்ற போர்களை உண்டாக்கியதான ஒல்லாந்தோடு கொண்ட வணிகப் போட்டி பற்றிய உணர்ச்சியை வெளிப்படையாய்த் தூண்டுவது இலகுவாயிருந்தது. வெளிநாட்டுப் பூட்கைபற்றிய அலுவல்கள், அரசாங்க அமைப்பு அப்போது இருந்த பிரகாசம், அரசர் கையிலிருந்தன. இரண்டாம் சாள்சின் ஆட்சியின் நடுப் பகுதியில், உரோமன் கத்தோலிக்கத்துக்குரியதும், கொடுங்கோன் மையுள்ளதுமான அவனுடைய போக்கு தன் விருப்பங்களைப் பங் கப்படுத்தியும், அரசியல் நிதிச்சாலைக்குப் பணம் கொடுக்க மறுத்து முள்ள கவலியர் பாராளுமன்றத்தின்மீது அவன் கொண்ட இயல் பான கோபத்தைத் தூண்டிவிட்டது. அவன் உலூயியிடம் பணம் பெற்றுக் கொண்டு இங்கிலாந்தின் குழப்பமடைந்த மக்களிடையே புகழ்பெற்ற பிரான்சிய கத்தோலிக்க அரசாங்க முறையை ஒரள வுக்குப் புகுத்த முடியாதா ? சாள்சு தானே பிறப்பாலும், வளர்ப் பாலும் அரைப்பங்கு பிரான்சியனுவன் ; மேலும் அவன் குடும்பம் ஆங்கில நிறுவனங்களை விரும்புதற்குரிய நியாயமொன்றுமேயில்லே.
அன்றியும், 1670 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் அரசன் ஒல்லாந் தோடு ஒரு குடும்பச் சண்டையிட்டனன். இடிவிற்றுக் குடும்பச் னரின் சில்லோராட்சிக் 皮_f互丁<子 றேஞ்சு ாட்டுக்குரிய
குடி 9تفاه AD)ژوع ந கு அவனின் மருமகனுன’ உலிலியம் முடியரசு போன்ற அரசப்
சாள்சு 1 = என்றியற்ருமரியா, இற. 1649. பிரான்சின் என்றி IV இன் மகள்
சேமிசு 11 = 1. ஆன் அயிட்டு மேரி = உலிலியம் II
FITGirsr II இற. 1685 இற. 1701 கிளாறெண்டன் மகள் ஒறேஞ்சு இளவரசர்
2. மொடனுமேரி இற. 1650
உவிலியம் T1 = மேரிIT
1650 ,($ן இற. 1702 . Guoff III = GólaúMuuth III g6Ö7 சேமிசு, முதிய போலியுரித்தாளி ஆன் அயிட்டின் மகள் ஆன் அயிட்டின் மகள் மொடன மேரி மகன். இற. 1694 இற. 1714 பிற. 1688, இற. 1766
சாள்சு எட்டுவேட்டு,
*இளையபோலியுரித்தாளி, பிற. 1720, இற. 1788.

உடோவர் உடன்படிக்கை
பிரதிநிதிப் பதவியைப் பெறுவதைத்தடுத்துக் கொண்டிருந்தது. அப்பதவியை உவிலியம் தன் பிறப்புரிமையென்று மதித்தான்; அதனை ஒல்லாந்தின் பொதுமக்கள் கட்சி அவனுக்குத் திருப்பிக் கொடுக்க விரும்பியது. சாள்சு உலூயியோடு செய்துகொண்ட உடோவர் உடன்படிக்கையின்படி, இங்கிலாந்தும் பிரான்சும் குடி யாசையும் அதன் சொத்துக்களையும் தாக்கிப் பங்கிட்டுக்கொள்ள வேண்டியனவாயின. மிச்சமானதை ஒறேஞ்சு நாட்டு உவிலியம், பிரான்சின் சிற்றரசனுக ஆட்சிசெய்ய வேண்டியவனனன். பிராய மடையுமோர் இளைஞன் பிரான்சும் இங்கிலாந்தும் சேர்ந்து செய் யும் கடுந்தாக்குதலை முறியடித்தற்கு வேண்டிய சாதனத்தைச் தேடிக் கண்டுபிடிப்பானென்ற எண்ணமோ, ஓரிளவரசன் தன் இறு மாப்புக்கும் இன்பத்துக்கும் மிக வாய்ப்பான ஒழுங்கொன்றுக்கு மறுப்பானென்ற எண்ணமோ, குற்றங் குறை கூறுமிவர்கள் மனதில் ஒருபோதும் தோன்றவேயில்லை.
சாவ்சுபரியும் தன்னலக் குழுவினரின் புரட்டெசுத்தாந்தரும் தமக்கு நிலையான அவமானத்தைத் தேடிக்கொண்டு வெளிப்படை யான உடோவர் உடன்படிக்கைக்கு உடன்பட்டமை இவ்வாருகு மென்க. ஆனல், அவர் அறியாததும், தன்னலக் குழுவின் உறுப்பின ரான கத்தோலிக்கர் கைச்சாத்திட்டதுமான ஒரு மறைவான உடன் படிக்கையும் ஆங்குண்டு. அதன்படி, சாள்சு தன்னை ஓர் உரோமன் கத்தோலிக்கன் என்று வெளியிடுதற்கும், தன் சமயக் கூட்டாளிகளை இங்கிலாந்தில் அதிகார நிலைக்குப் படிப்படியாக உயர்த்துதற்கும் வேண்டிய பிரான்சியப் போர்வீரரையும் பணத்தையும் அவனுக்குக் கொடுக்கும் பொறுப்பினை உலூயி மேற்கொண்டான்.
ஈருடன்படிக்கைகளும் பிரான்சிய கத்தோலிக்கவாசு ஐரோப்பா வையும் இங்கிலாந்தையும் உட்படுத்தற்குரிய தனித்த ஒரு திட்ட மாகும். ஆனல், ஆர்வமிக்க இத்திட்டத்துக்கு வேண்டிய பணம் தவருகக் கணக்கிடப்பட்டது. ஒல்லாந்தரோடு செய்தபோர் இங்கி லாந்துக்கு உலூயி கொடுக்கக்கூடிய பணத்திலும் மிகவதிகமான பணச் செலவை உண்டாக்கியது. மேலும், சாள்சின் கடன் தீர்க்க முடியாத நிலை அவனை மீட்டும் பாராளுமன்றக் கட்டுப்பாட்டுக்குள் ளாக்கியது. உலூயி, ஆங்கிலப் பெருஞ் செல்வர் தாம் ஏமாற்றப்பட் டனரென்பதை உணர்வதற்கு மிக முன்னர், தன் குதிசைவிார் ஏக்கு, முெட்டடாம் ஆகிய இடங்களில் செல்வமுள்ள கல்வின் கொள்கையுடையர் செலவில் இடவசதி இலவசமாக அளிக்கப்படு வர் என்று எதிர்பார்த்திருந்தனன். மேலும், ஒல்லாந்தரின் மனநிலை யும், அவர்தம் நிலத்தின் இயற்கையமைப்பும், ஒறேஞ்சு நாட்டு உவி
1670.
133

Page 78
34
1672.
674.
பாராளுமன்றம் தலையிடல்
லியம் இப்போது உலகத்துக்கு முதன்முதலாக வெளிப்படுத்திய பண்புகளும் வேறுவிதமானவையா யிருந்திருந்தால் அவன் எதிர் பார்த்தது போலவே நடந்திருக்கும்.
பிரான்சின் பெரும்படை பெரும்பாலும் பாதுகாப்பில்லா ஒல் லாந்தின் பிரதேசங்களுட் புகுந்தபோது, பொதுமக்கள் கட்சியினர் சீற்றத்தோடும், நம்பிக்கையின்மையோடும் எழுந்தனர். எழுந்து இடிவிற்றுக் குடும்பத்தினரை இாக்கமற்ற முறையில் கொலை செய்து, அவர்களின் குடியரசைக் கவிழ்த்தனர்; மேலும் உவிலி யத்துக்குச் சித்திராகொலேற்றுப் பதவியை அளித்து அதனை மீட்டு நிறுவினர் - ஆனல், அவ்வாறு செய்தமை அவர்கள் சரணடை தற்கு ஆரம்ப ஏற்பாடாகவன்றென்க. மாருக, அவர்கள் அகழ்களை உடைத்தும், கரைகட்டி கால்வாய் வெட்டப்பட்ட ஆறுகளின் நீரைத் தாழ்வான பசும்புற்றரைகளுக்குப் பாய விட்டும், அதனல் நீரில் மூழ்கிய தங்கள் செல்வங்களை இழந்தபோதும் பிரான்சிய படைகள் தங்கள் நாட்டினுட் செல்லாது தடுத்தனர். அதேவேளை யில் அவர்களின் கடலோடிகள் இங்கிலாந்தினதும் பிரான்சினதும் ஒன்றுபட்ட கப்பற்படைகளைச் சோல்பேயில் மிகத் தீவிரமாய் எதிர்த்து நின்றனர். மேலும் அரச தந்திரத்துக்கு வேண்டிய உவி லியத்தின் ஒப்பிலாத் திறமை, உலூயிக்கு மாமுய், தம் ஐரோப்பிய கூட்டுக்கட்சிகள் பலவற்றுள் முதலாவதை விரைவாக அமைக்க அவனுக்கு வாய்ப்பளித்தது.
எதிர்பார்த்திராத இந்நிகழ்ச்சிகள் உவெசுத்துமினித்தரிலுள்ள பெருஞ் செல்வர் நிலைமையை ஆராயவும், தன்னலக் குழுவினதும் அதன் தலைவரினதும் பூட்கை முழுதையும் மாற்றவும் ஈராண்டுக் காலத்தை அவர்க்கு அளித்தன. பாராளுமன்றம் ஆதிக்கநிலையில் இருந்தது ; ஏனெனில், போரினுல் சாள்சு கடனளியாகிவிட்டாணு தலினென்க. 1763 ஆம் ஆண்டில் அவன் பாராளுமன்றத்திடம் பணம் பெறுவதன் முன்னர் கத்தோலிக்கர் அரச சேவையிற் சோ முடியாது என்னும் மதத்தடைச் சட்டத்திற்கு அங்கீகாரமளிக்க வேண்டியிருந்தது. அதனல் யோக்குப் பிரபுவும், அரசுக்குரியவனு மான சேமிசு ஓர் உரோமன் கத்தோலிக்கனென்ற பயங்கரமான உண்மையும் வெளியாயிற்று. அடுத்தவாண்டில் பாராளுமன்றம் இங்கிலாந்தைப் போரிலிருந்து விலக்கிவிட்டது.
கவலியர்ப் பாராளுமன்றம், இப்போர் கடலாதிக்கத்துக்காக இங்கிலாந்தும் ஒல்லாந்தும் செய்து வந்த பழைய போட்டியின் தொடர்ச்சியன்று என உற்றறிந்து கொண்டது; ஆனல், பிரான்சிய ரும், இயேசு இயக்கத்தாரும் ஐரோப்பாவைக் கைப்பற்றுதற்கு முக்கிய தடையாகவிருந்த ஒல்லாந்தின் சுதந்திரத்துக்கு ஒரு

ஒல்லாந்தும் பிரான்சும்
முற்றுப்புள்ளியிடச் செய்த திட்டமாகுமென்றும் அறிந்துகொண் டது. அல்லாமலும் சுதந்திர நாடாகிய ஒல்லாந்து மறைந்தமை இங்கிலாந்தின் கடற்பாதுகாப்புக்கு அபாயம் விளைப்பதொன்ருகும். ஏனெனில், இசையின் ஆற்றின் கழிமுகத்தீவு அப்போது பிரான் சியர் கையிற் சிக்குமாதலினென்க. பிரான்சும் ஒரு கடல் எதிரி யாகும் ; ஒரு விதத்தில் ஒல்லாந்திலும் மிகப் பயங்கரமானது ; மேலும், பிரான்சின் அதிகாரம் அமித்தடாமில் நிறுவப்பட்டால் அது ஆங்கிலக் கடலாதிக்கத்தை விரைவில் அழித்துவிடும். இனி 1588, 1793, 1914 ஆம் ஆண்டுகளில் நிலவிய பிரச்சினை என்ன வெனில், ஒல்லாந்தும் பெல்சியமும் ஐரோப்பாவின் மிகப் பெரிய இராணுவ அதிகார வாட்சிக்குட்படுதலை இங்கிலாந்து விரும்பாத தேயாகும்.
ஒல்லாந்து சில காலத்துக்குக் காப்பாற்றப்பட்டது; ஆனல், பிரச்சினை தீரவில்லை. எதிர்காலத்தில் நாற்பதாண்டுகளுக்கு இங் கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்குமுரிய அரசியல் முறையை இப் பிரச்சினை பாதித்தது. 1674 ஆம் ஆண்டுக்குப் பின், உலூயி ஐரோப்பாவைப் பணியச் செய்யப் பிரித்தானிய போர்க் கருவி களின் உதவியை எதிர்பார்க்க முடியாதிருந்தது ; ஆனல், எமது அரசாங்க வமைப்பின் நேர்மையான சமநிலையின் நன்மையால், அவன் அரசனையும் பாராளுமன்றத்தினரையும் தம்முள் மாறுபடச் செய்தும், பாராளுமன்றத் தலைவர்க்குக் கையூட்டுக்கொடுத்தும், அர சர்க்குப் பணவுதவி செய்தும், 1688 ஆம் ஆண்டுப் புரட்சி வரையும் நாம் தனது நடவடிக்கைகளிற் றலையிடாது பார்த்துக் கொண்டான். ஈங்குள்ள இந்தப் பூட்கையின் பொருட்டுப் பெரிதும் உழைத்த முக வர்கள் யாரெனில் அவனுடைய அரசியற்றுாதஞன பரிலோனும், சாள்சின் பிரான்சிய வைப்பாட்டியும் போட்சுமதுச் சீமாட்டியுமா யிருந்தவளும், ' கார்வல் அம்மை, ' என்று எம்மூதாதையரால் வழங்கப்பட்டவளுமாகிய உலூயி இடிகுவறெயிலுமாவரென்க.
ஒல்லாந்தின் வீழ்ச்சிக்குத் தான் காரணமாயிருப்பதன் மூலம் ஐரோப்பா முழுவதும் பிரான்சுக்கு அடிமைப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டமை இங்கிலாந்தின் நல்வாய்ப்பே. இந்தப் பூட்கை ஆங்கிலேயரின் நன்மையைப் பொறுத்தமட்டில் புத்தியற்றதாகும். ஆயினும், இது சுதுவட்டர் கால்வழியின் அரச பரம்பரைக்கும் சமயத்துக்குமுரிய திட்டங்களின் ஒரு பகுதியாகுமென்று விளக்கிக்
உடோவர் உடன்படிக்கையின்படி சீலாந்து தீவுகளிற் சில, பிரித்தானிய அரசோடு இணைக்கப்பட வேண்டியனவாயின; ஆனல், அவை பிறகித்து விலிருந்து சைடர்சீ வரையும் பரந்துள்ள பிரான்சிய ஆதிக்கத்துக்குட்படாது நெடுங்காலத்துக்கு அவ்வாறிருக்க முடியாதனவுமாயின.
35

Page 79
36
674-1678.
தன்னலக் குழுவின் வீழ்ச்சி
கூறத்தக்கதாகும். இது தெரியவந்ததும், அரசனுக்கும் தம்பிக்கும், அவர்களின் கத்தோலிக்க அறிவுரைகளுக்கும் மாமுக ஓர் எதிர் ப்பு எழுந்தது. அது, ஆங்கிலத் திருச்சபை, நாடு, அரசாங்க அமைப்பு ஆகியவற்றுக்குரிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கவலியர் பாராளுமன்றத்துக்கு நாலாண்டுகளுக்கு அதி காரம் அளித்தது. சாள்சு தான் எழுப்பிய புயலினல் தீர ஏங்கி, மீண்டும் தான் பயணம் போவதில்லையென்று தீர்மானித்துக் கொண்டு, தனது உரோமன் கத்தோலிக்கத் திட்டங்களைக் கைவிட் டான். பின்னர் ஆங்கிலத் திருச்சபைக்கும், தோரிக் கட்சிக்குமுரிய கருத்துக்குத் தானும் உடன்பட்டுப் பாதுகாப்புத் தேடுவானுயினன். அவனுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும், நிறைவான மன உறுதி யோடும், திறனுேடும் செயற்படுத்திய பூட்கை இத்தகையதேயாகும்.
சாள்சு தன் செயல்முறையை மாற்றியதால் நம்பிக்கையிழந்த தன்னலக்குழு அமைச்சரைக் கைவிடவும், கவலியர்ப் பாராளு மன்றத் தலைவரும், இடான்பிப் பிரபுவுமான தோமசு ஒசுபோனுக் குக் கீழ்ப்படியவும் வேண்டியவனுயினன். இடான்பி என்பான் பிறப் பில் யோக்சயருக்குரிய ஒரு பெருஞ்செல்வனவன். அவன் தன்னு հծ)t-Ամ வகுப்புக்குரிய அரசியல் சமயங்கள் பற்றிய கொள்கைகளை உண்மையாய்க் கைக்கொண்டான். செல்வத்திலும், பட்டங்களிலும், அதிகாரத்திலும் பேராசை மிகுந்தவனுயிருந்தபோதிலும் கிளா றெண்டனைப் போல அவனும் நெறியுடைய ஒருவனவன். அவ்வா றிருந்தாலும், அவன் அரசியற்றந்திரத்தில் பெருந்திறமை மிகுந்த வனுயும், பலவகைகளிலும் செயலாற்றும் வல்லமை கூடியவனுயு மிருந்தான். அவன் கிளாறெண்டனிலும் மேலாகப் பாராளுமன்றத் தில் முற்றிலும் தங்கியிருந்தான்; மேலும், அவன் அரசவதிகாரத் தில் தனக்குள்ள நிலைக்காக, பொதுமக்கட் பிரதிநிதி மன்றத்துக்குக் கடமைப்பட்டுள்ள முதன்மந்திரியாவன். அன்றியும், அம்மன்றத் தின் தனிப்பட்ட உறுப்பினர்க்குக் கையூட்டளித்தலை ஓர் முறை யான வழக்கமாக விருத்திசெய்து அதனல் அங்கு பெரும்பான்மை யோரின் ஆதரவைப் பெற்றவனுமாவன். அக்கையூட்டுமுறை மீட்சி யில் தொடங்கி உவால்போல், மூன்ரும் யோச்சு ஆகியோரின் காலங்கள் வரையும் நிலவிய தொன்முகும். தேர்வுப் போட்டிகளின் தொகை, அவற்றின் செலவு, அவற்றல் விளைந்த கையூட்டு ஆகி யனவும் அதிகரித்துள்ளன. அரசியல் பாராளுமன்றத்தின் ஆதிக் கம் வளர்ந்த அளவுக்கு மிக மேலாக, ஒருவனின் வாக்குரிமையை யும், அதனல் மன்றத்திற் பெறும் இடத்தையும் உலகம் மதித்தது. இதற்கு முற்பட்ட காலத்திருந்த நாட்டுப் பற்றுடையோரின் தூய்மை இவ்வாறு சோதிக்கப்பட்டிலது.

இடான்பியும் உலிலியமும்
இடான்பியே தோரிக் கட்சியை நிலைநாட்டியவனென்று கொள்ள லாம். ஆயினும், இந்தக் கொள்கையளவிலுள்ள இணக்கத்தின் வெற்றி வீரன், மீட்சிக்கும் மூன்ரும் உவிலியத்தின் ஆட்சிக்கும் அடிகோல எந்த உவிக்குக் கட்சியினனிலும் மேலாக முயன்ருன். தான் அதிகாரம் வகித்த நாலாண்டுகள் முழுவதும் அவன் ஒல்லாந் தோடு நட்புக்கொண்டு பிரான்சினை எதிர்த்தான். மேலும், அவன் ஒறேஞ்சு நாட்டு உவிலியத்திற்கும், சேமிசுவின் மகளும் சேமிசு இறந்தபின் இங்கிலாந்து கொத்துலாந்துக்களின் அரசுகளுக்குரிமை யுடையவளுமான மேரிக்கும் திருமணத்தை நிறைவேற்றி வைத் தான். அதன்மூலம் சில காலங் கழித்தாவது சிறந்த உறவுமுறை ஏற் படுவதற்கு வழிவகுத்தான். சேமிசு அத்திருமணத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான்; ஆனல், சாள்சு மக்களைச் சமாதானம் செய்ய வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்துகொண்டு, இடான்பியின் திட் டத்தை ஆதரித்தான்; திருமணமும் நிறைவேறியது. தோரி அமைச் சன் ஓர் உண்மையை உணர்ந்தான். அதனை அவனுடைய கட்சி யினர் பின் சிறிது காலத்திற்கு மறந்துவிட்டனர்; அதாவது, பாராளுமன்ற மரபுக்கு இணங்குவதான அரசும், ஆங்கிலத் திருச் சபையும் நிலைநிறுத்தப்பட வேண்டின் புரட்டெசுத்தாந்தத்துக்குரிய ஒருவன் அரசனுக வேண்டியது அவசியமாகுமென்பதே அவன்
கண்ட உண்மை என்க.
இடான்பியின் மந்திரிசபைக்குரிய காலமுழுவதும், தோரிக் கட்சி யினர் ஒறேஞ்சு நாட்டுக் கால்வழியினரிடத்தே, எதிர்க்கட்சித் தலை வரினும் மேலான பற்றுள்ளவராயும், பிரான்சினிடத்தே அதிக பகை யுடையராயுமிருந்தனர். உவிக்குக் கட்சியினர் இளைய அரசுப் பிரதி நிதியின் சிறந்த முடியாட்சிக்குரிய கோட்பாடுகளுக்கு அஞ்சினர்; மேலும், இடான்பி பிரான்சுக்கு மாமுய் ஒரு போரினைத் தூண்ட முயன்றபோது, அவர்கள் தம் அரசியற் பகைவரிடத்தே ஒரு சேனை யிருப்பதைப் பார்த்துப் பயந்தனர். இக்காரணங்கள் உவிக்குக் கட் சியின் உறுப்பினர் சிலர் உலூயியுடைய அரசியற்றுாதரிடமிருந்து பெற்ற கையூட்டுக்களால் வலிமை பெற்றன. மற்றவைகளில் மிகவும் கருத்து வேறுபட்டவரான சாள்சும் உவிக்குக் கட்சியினரும் போருக்கு மாருயிருந்தனர்; மேலும், அவர்கள் ஒன்றுபட்டு அதைத் தவிர்த்து விட்டனர்.
கவலியர் பாராளுமன்றம் பதினைந்தாண்டுகட்குமேல் நிலவி யுள்ளது. புதுத் தேர்வொன்று புரட்டெசுத்தாந்த இணங்காமைக் குக் கூடிய ஆதரவுடையதும், அரசுக்கும் உரோமன் கத்தோலிக்கர்க் கும் குறைந்த ஆதரவுடையதுமான புதிய பொதுமக்கட் பிரதிநிதி மன்றம் ஒன்றை உறுதியாக உண்டாக்கிவிடும். ஆகையினுல்,
137
167.
இந்நூல் பக்கம் 134
ஐப் பார்க்க,

Page 80
38
1675.
இடான்பியின் மதியீனம்
இடான்பி, சாள்சு ஆகிய இருவரும் பாராளுமன்றத்தைக் குலைத தலிற் கொண்ட பேரச்சத்திற்குத் தனித்தனி நியாயமுண்டு. இடான்பி பிந்தின ஆண்டுகளில் இருந்ததுபோல, அப்போதே அறி வுள்ளவனுகவிருந்தால், தன் கட்சியினரும் அப்போதுள்ள பாராளு மன்றத்தினரும் நாட்டின் எவ்வளவு இழிவான பிரதிநிதிகளாயிருந் தனரென்று ஆராய்ந்திருப்பான்; அன்றியும், துன்புறுத்துஞ் சட்டங் களைக் குறைத்து மிருப்பான். அவன் சாள்சோடு சேர்ந்து பாராளு மன்றத்தைக் குலைத்தலை இயன்றளவு நெடுங்காலம்வரை விலக்க மிக விரும்பினுன்; மேலும், அரசியல், சமயங்கள் பற்றித் தோரிக் கட்சிக் குண்டான பகைவரை அடியோடு அழித்தற்கு அவ்வருமையான இடைக்காலத்தைப் பயன்படுத்தினன். கிளாறெண்டன் சட்டத் தொகுப்பு புதிய ஆற்றலோடும் மீட்டும் வற்புறுத்தப்பட்டது : மேலும் குருட்டு வாய்ப்பொன்றே அவனுடைய 'இணக்கச் சட்டத்தை விதியாக்க விடாது அவனைத் தடுத்தது. அது கோபத் தைத் தூண்டும் செயல் எதுவாயிருந்தாலும் சரி, அதைக் கவனியாது, 'அரசுக்கு இணக்கம்' என்ற தோரிக் கட்சிக் குழுஉக் குறியைச் சொல்ல மறுத்த எவரையும் பாராளுமன்றத்திலிருந்து நீக்க வேண்டுமென்று கூறிற்று. பத்துப் பன்னிரண்டாண்டுகட்குப் பின் இடான்பி, சேமிசு அரசனுக்கு மாமுய் யோக்குசயர்க் கலகத்தை நடத்தியதின் மூலம் இக்கோட்பாட்டினை மறுப்பதில் தன் கட்சி யினருக்குத் தானே முன்மாதிரியாக நடந்து காட்டினன்.
புரட்சிக்கு முற்பட்ட பத்தாண்டுகளில் பிரித்தானிய அரசியலில் உண்டான குழப்பத்திற்கும் கொடுமைக்கும் காரணம், வேறு பட்ட இரு சண்டைகளைப் பழிக்கு அஞ்சாத எதிரிகள் வற் புறுத்தியதேயாகும். ஒன்று, புரட்டெசுத்தாந்தத்திற்கும் கத்தோ விக்கத்திற்கும் உண்டான மாறுபாடு பற்றி அரசுக்கு மாருய்ப் பாராளுமன்றம் எழுந்ததனுலும் மற்றது, திருச்சபைக்கும் இணங்கா மைக்கும் உண்டான மாறுபாடுபற்றி உவிக்குக் கட்சிக்கு மாமுய்த் தோரிக் கட்சி எழுந்ததனுலுமுண்டாயினவென்க. அவற்றின் பய ஞக, பிரச்சினையினிடையே எழுந்த வேறுபட்ட கருத்துக்களும், அவை காலப்போக்கில் மாறுபட்ட வகைகளும் பெருஞ் சிக்கலை ஏற் படுத்தின. இடான்பி, அரசையும் உரோமன் கத்தோலிக்கரையும் பாராளுமன்றத்துக்குக் கீழ்ப்படுத்தி வைத்துக்கொண்டு, நெடுங் காலமாகத் தவணை கடந்த பாராளுமன்றத்தின் குலைவு வருவதன் முன் சட்டத்தைக் கண்டிப்பாகப் பயன்படுத்தி, இணங்காமைக்கும் உவிக்குக் கட்சிக்குமுரிய நன்மைகளைத் தான் அழித்துவிட முடியு மென்று 1678ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில் இன்னும்

ஒற்றசுவின் சதி : கோல்மனது கடிதங்கள்
கணக்கிட்டுக்கொண்டிருந்தான். அது அபாயமானதும் நியாய மற்றதுமான ஓர் பூட்கையாகும்; அன்றியும், அது இப்போது உவிக்கு எதிர்க்கட்சியின் தலைவனுன சாவ்சுபரியைக் கொரேமான
வழிகளிற் செல்லவும் தூண்டிவிட்டது.
அவ்வாறன நிலைமையில் தைதசு ஒற்றசு “போப்பாண்டவர்க்கு மாருய்ச் செய்த சதி வெடிமருந்தில் தீபற்றியதுபோற் பலித்தது. அவன் பரப்பிய பொய்கள் சிறிது காலத்துக்குப் பெரும்பாலும் எல்லாரிடத்தும் நம்பிக்கை உண்டாக்கின; மேலும், அவன் கவலி பர்ப் பாராளுமன்றத்தை அதன் கடைசி மாதங்களில் ஓர் உவிக்குப் பேரவையாக, உண்மையில், மாற்றிவிட்டான் ; ஏனெனில், ஒற்றசு வின் பொய்களிற் கொண்ட நம்பிக்கையானது போதுமான அளவுக் குத் திகைக்க வைக்கும் ஒருண்மை வெளிப்பட்டதனுல் உறுதிப்படுத் தப்பட்டதாதலினென்க. யோக்குக் கோமகனின் நம்பிக்கையான செயலாளனுகத் தொண்டாற்றிய கோல்மனின் கடிதங்கள் கைப்பற் றப்பட்டு வெளியிடப்பட்டன. அவைகள் பெரிய பிரித்தானியாவை மறுபடி பலவந்தமாய் மத மாற்றஞ் செய்வதற்கான திட்டங்களைப் பிரான்சிய அரசனின் பாவமன்னிப்பாளரோடு சேர்ந்து ஆலோசிக்கு முகமான செய்திகளைக் கொண்டிருந்தன.
கோல்மன் என்பான் வரைந்தது வருமாறு : “நாங்கள் மாபெருஞ் செயலொன்று ஆற்றவேண்டியிருக்கிறது. அது மூன்று அரசுகளையும் மதமாற்றஞ் செய்தலாகும். அதனுல் நெடுங்காலமாக இவ்வட நாட்டின் பெரும் பகுதியை மேற்கொண்டுள்ள தீய வேதப்புரட்டினை அடக்கலாம். மேரி அரசின் இறப்புக்குப் பின், இப்போது எமது காலத்தில் இருப்பதுபோல், நம்பிக்கையான வாய்ப்பு என்றும் இருந்திலது. கடவுள் இப்போது நமக்கு ஓர் இளவரசனைத் தந்திருக் கிருரர். அவன் அப்பேர்ப்பட்ட மகத்தான வேலையில் பெருமுயற்சி யுடையனுயும், அதற்குரிய கருவியாயும், கர்த்தாவாயும் அமைந்துள் ளான் . எல்லாம் வல்ல இறைவனின் திருவருளுக்கும், எனது தலைவனகிய பிரபுவின் ஆதரவுக்கும் அடுத்ததாக, நமக்கு மிகப் பெரிய நம்பிக்கை தருவது எதுவெனில், அதுவே மிகச்சிறந்த கிறித்துவ மாட்சிமையுடைய அரசனின் ( பதினுன்காம் உலூயி )
பலமான ஆதரவாகும் .
கோல்மனின் தலைவன் அரசுகட்டிலேறுதலினல் தம் சமயத்தில் ஏற்படும் புரட்சியைத் தடுத்தற்கு மக்கள் என்ன உபாயங்களைப் பயன்படுத்தவேண்டும்? உவிக்குக் கட்சியினர் சேமிசு பெயரளவிற் முனும் அரசனயிருப்பதை விலக்குதற்கும், தோரிக் கட்சியினர் அவ னின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதற்கும் திட்டமிடுவாராயினர். கட்சிக் கொடுமைக்கும், சமயக் சகிப்பின்மைக்கும் உரிய மனே
1678.
39

Page 81
40
679-1681,
உவிக்குக் கட்சியினர் கொடுமை
நிலையில் “ விலக்குதலுக்கோ கட்டுப்படுத்துதலுக்கோ’ மேற்கொள் ளும் முயற்சி உள்நாட்டுப் போரைப் பெரும்பாலும் தூண்டிவிடக் கூடும். உவிக்கு, தோரி ஆகிய இரு கட்சிகளின் அரசியற்றந்திரிகள், கொடிய துன்பத்திற் பயின்றதன் பயனல் பத்தாண்டுகளுக்குப் பின் செய்ததுபோல் தாம் ஒருவரோடொருவர் கொண்ட பகைமை யினைக் கைவிட்டும், தம்முடைய உரிமைகளை விட்டுக்கொடுத்தும் ஒன்றுசேர்தலைவிட வேறெதுவும் 1679 ஆம் ஆண்டில் நாட்டினைக் காப்பாற்றியிருக்க முடியாது.
அம்முயற்சியை முதற்முெடங்கவேண்டியவரான உவிக்குக் கட்சி யினர் மிக வெட்கக்கேடான முறையில் நடந்துகொண்டனர். அந் நேரத்திலிருந்த உணர்ச்சிப் பெருக்கை வாய்ப்பாகக் கொண்டு ஒரு தேசிய இணக்கத்தை நாடுதற்குப் பதிலாக, பன்முறை அதனை அவர் கள் தூண்டி அதனல் தம் கட்சிக்குரிய நன்மையை ஆக்குதற்கு முயன்றனர். ஒற்றசுவின் சதியை நம்புதற்கு வேண்டிய சான்று சிறிது சிறிதாய்க் குறையத் தொடங்கிய பின்னரும், அச்சதியினைத் தம் நலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் குற்றமற்ற கத்தோலிக்கரைக் கொலை செய்ய முயன்றனர். அரசோடு கொண்ட மாறுபாட்டினும் குறைவின்றித் தம் தோரி எதிரிகளோடு மாறு பட்ட மூன்று தொடர்பான உவிக்குப் பாராளுமன்றங்களின் கொடுமையும் , இலண்டன் மாநகர்க் குழப்பக்காரரும், சாவ்சுபரி யின் 'உற்சாகமுள்ள இளைஞரும் மிதமான மக்களை அச்சுறுத்தி யமையும் பூரணமாக இணக்கவேற்பாடு நீக்குதலைத் தவிர வேறு எதையும் அமைதிக்காக ஆராய மறுத்தமையும் ; கடைசியாக, உவிக் குக் கட்சியின் பதுமைகளாயிருக்க வாக்களியாத உவிலியம், மேரி ஆகியோரின் உரிமைகளைப் புறக்கணித்து, வேசி மகனன மன் மதுவை அரியணைக்குரிய அபேட்சகன் என்று நேசங் காட்டி அவனை எய்த்தமையும்-அவ்வாருகத் தோன்றிய வேறுபாடுகள் யாவும், 1641 ஆம் ஆண்டு மீட்டும் வந்துவிட்டது என்ற நம்பிக்கை யும், குதும் வாய்ச்சாலமும் உள்ள அலிபாச்சின் தலைமையில் மித மான கொள்கையுடைய பெருந் திரளான மக்களைத் தோரி அரச கட்சிகளோடு கூடுதற்குத் அாண்டின. மேலும், 1661 ஆம் ஆண்டு தொட்டுத் தம்முள் போட்டியிட்டு வந்த தோரிக் கட்சியினரும் அரசினரும், மொட்டைத் தலைக்கட்சி மீண்டும் வலுப்பெறுதலுக்கு அஞ்சி ஒரு தனிப்பட்ட கட்சியாக ஒன்று சேர்ந்தனர்.
தோரிக் கட்சியின் “ கட்டுப்படுத்தற் றிட்டத்தை ”ப் பற்றிச் சுவிற்று என்பான் நெடுங்காலம் சென்றபின் எழுதியது வருமாறு :-“ அது மிகுந்த யூக முடையது ; எனெனில், அதற்கு அதிக எதிர்ப்பு இராதாதலினுலும் அரசனும் அதற்கு உடன்படுவானதலினலுமென்க. அன்றேல், அதை விலக்கல் மிகச் சிறந்ததாயிருந்திருக்கும்”.

தோரிக்கட்சியினர் கொடுமை.
உவிக்குக் கட்சியின் கொடுமையைத் தொடர்ந்து அதைவிடக் கூடிய கொடுமையைத் தோரிக்கட்சி இழைத்தது. இடான்பி நிறுவிய கட்சியினை அவன் ஊகமான வழிகளில் ஒருவேளை நடத்தியிருக்க லாம்; ஆனல், உவிக்குக் கட்சியின் வன்மம் அவனைத் துரோகக் குற்றவிசாரணையை எதிர்பார்த்துக்கொண்டு சிறையிலிருக்க வைத் துள்ளது. அலிபாச்சு முதலிய சாதுரியமுள்ள 'நடுநிலையாளர்' பாராளுமன்றத்தில் தோரிக் கட்சிக்காக வாதாடுவோருள் பேராற் றல் வாய்ந்தவர்களாயிருந்தபோதும், அக் கட்சி அவர்களிடத்தே பற்றுடன் இருக்கக் கடமைப்பட்டிலது ; அவர்களின் மிதவாதத்தை யும் வெறுத்தது. பெருஞ் செல்வர் வகுப்பிற் பெரும்பாலாரும், மேற் றிருச்சபைக் குருமாரும் தீவிரவாதிகளான அரச கட்சியின்ராயினர். அவர்கள், செயல்முறையில் தம் கட்சியின் அறிவாற்றலுள்ள தலை வய்ை வந்துள்ள சாள்சினிடம் பெரும் பத்தியுடையோராயினர்; மேலும், திருச்சபையிடத்தே கொண்ட நகைப்பிற்கிடமான செல் வாக்கைச் சிறிது காலத்திற்கு அனுபவித்த சேமிசுவினிடமும் பெரும் பத்தியுடையராயினர். அத்திருச்சபையினையே தலைகீழாக் கும் தருணத்தைச் சேமிசு பெரிதும் விரும்பிக் கொண்டிருந்தான்.
மூன்றம் உவிக்குப் பாராளுமன்றம் ஒக்சுபோட்டில் 1681 ஆம் ஆண்டில், குலைந்த பின்னர் தோரிக் கட்சியின் நடவடிக்கை எல்லை கடந்ததாயிற்று. உவிக்குக் கட்சியின் கோபாவேசக் காலமுழுவதும் நிறுத்தப்பட்டிருந்த புரட்டெசுத்தாந்த இணங்காதாரைத் துன் புறுத்தல் இரட்டிப்பான உற்சாகத்தோடு புதுப்பிக்கப்பட்டது. உவிக்குக் கட்சித் தலைவரிற் சிலர் தாம் சட்டமுறைப்படி தோற்று விட்டனரென்றறிந்து ஒரு கலகத்தையுண்டாக்து இரகசியமாகச்
குது செய்தனர் ; அதே சமயத்தில், பழைய மொட்டைத்தலைக்
கட்சிப் போர் வீரர்கள், அரச குடும்பத்தினரான உடன் பிறப்பாள் ரிருவரும் நியூமாக்கெற்றுக் குதிரைப் பந்தயத்திலிருந்து திரும்பி வந்த போது, அவர்களை வழியிற் காத்திருந்து இறைகவுசிற் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். இக்கொடுமைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது தோரிக் கட்சியினரின் அதிகாரமும் சீற்றமும் உச்ச் நிலையெய்கின. உவிக்குக் கட்சியார் பதராய்ப் பறந்தனர். சாவ்சு பரி ஒல்லாந்துக்குக் கடத்தப்பட்டு ஆங்கு இறந்துபட்டான். இறசலும், சிட்டினியும், ஏனையோரும் தூக்குமேடையில் மாண்டன்ர். அக் காலத்தே நிலவிய பொதுவான நம்பிக்கையின்மை உவிக்குக் கட்சி யில் சிறைப்பட்ட்வர்க்கு மாமுய்ப் பொய்ச் சாட்சிகளைப் பயன் படுத்தியதன் மூலம் காண்பிக்கப்பட்டது. அச் சாட்சிகள் கத்தோ விக்கரை ஏமாற்றும் எண்ணத்துடன் வாக்களித்தனரென்று அரசி னரும் தோரிக் கட்சியினரும் அறிந்தனர்,
7-R 5931 (11162)
683
4.

Page 82
理42小
68-685.
அரசர் மீண்டும் அதிகாரம் பெறல்
ஆட்சியின் கடைசியான நாலாண்டுகள் முழுவதும் பாரளு மன்றம் கூடியதேயில்லை. அது, சில்லாண்டுகளாகத் தலையாய விடத்தை வகித்த அரசாங்க அமைப்போடு சிறிது காலத்திற்குக் கலந்து கொள்ளாது விட்டுவிட்டது. மேலும், பொதுமக்கட் பிரதி நிதிமன்றம் எப்போதாயினும் கூடினல் அப்போது அது பழைய வாக்காளர் தொகுதிகளின் அல்லது ஏதேனுமொரு சுதந்திரமான தேர்தற்ருெகுதியின் பிரதிநிதியாக இருக்கமாட்டாது. நகச நிர் வாக மன்றங்கள் இலண்டன் உட்பட 'மாற்றியமைக்கப்பட்டுள்ளன.” உவிக்குக் கட்சியினர் அவற்றிற்குப் புறத்தே விலக்கிவிடப்பட்டனர். தியூடர் கால்வழியினர் எவரும் ஆங்கிலப் புரங்களின் குறிப்பிட்ட இடத்துக்குரிய வாக்குரிமைகளில் இவ்விதமாக எப்பொழுதாவது தலையிட்டிலர். மேலும், 'உரிமைப்பட்டயங்களை ஒப்படைத்தமை ’ குறிப்பாக உணர்த்தியதுபோல இங்கிலாந்தின் அவ்வவ்வூருக்குரிய உரிமைகளைக் கொடுமையாகத் தாக்க, கோரிக் கட்சியின் ஆதரவை விட வேறெதுவும் முடியரசுக்கு வாய்ப்பளித்திருக்க முடியாது.
அரசனது அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தைப் பற்றி மேற்கொண்டு எவ்வித செய்தியுங் கிடைக்கவில்லை. தோரிக் கட்சி யினர், இணங்காதாருக்கு மாமுய் ஆங்கிலத் திருச்சபையின்பாற் கொண்ட பேரார்வத்தினல், உரோமுக்கு மாமுன தம் பாதுகாப்புக் கள் எல்லாவற்றையும் கைவிட்டனர். அவர்கள் இலிசபெத்து அரசி யின் அதிகாரத்திலும் பார்க்கப் பலவழிகளிலும் மேலான அதிகாரத் தைக் கொள்கை வெறிபிடித்த உரோமன் கத்தோலிக்கர் ஒருவர் வகித்தலை உற்சாகத்தோடு ஆதரிக்க ஆயத்தராயிருந்தனர். உவிக்குக் கட்சிக்கு மாமுன அவர்தம் உற்சாகத்தினுல், அரசன் நீரோவைப் போல நடந்துகொண்டாலும், அவனேடு இணங்கி நடத்தற்கான மிக விழிந்த கோட்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தினர். அவைகள் இங்கிலாந்தின் வரலாற்றில் புதியனவாகும். மேலும், இக்கொள்கை களை உக்கிரத்தோடு வெளிப்படுத்திய அறிவற்ற மக்களும் அவற்றை முற்முக நம்பவில்லை. இதற்குப் பின்னர் நடந்த சம்பவங்களின் பின் இவ்வுணர்ச்சி நினைக்குந்தோறும் நகைப்பையூட்டுவ தொன்முயிற்று. ஒக்சுபோட்டுப் பல்கலைக்கழகம், அரச கருத்துக்குத் தடையின்றிக் கீழ்ப்படிய ஒப்புக்கொள்ளும் பிரகடனங்களைப் பகிரங்கமாகச் செய் தது. மேலும், சேமிசு மனித இயல்பினைச் சிறிதும் அறியான். அத னல் அவன் கழகப் பேராசிரியர்கள் சொல்வதை நம்பி வருவானு யினன்.
அரசு பூரணமாக வெற்றிபெற்றது; அதனைப் பொதுமக்கட் பிரதி நிதிகள் மன்றம் இனிமேல் ஒருபோதும் தொல்லைப்படுத்த இடமில்லை. ஆனல் அது, நீடித்த பாராளுமன்றத்திற்கு முற்போந்த காலத்திற்

பதினன்காம் உலூயி
போல, அரண்மனைக் கபடச் செயல்கள் காரணமாக மாத்திரம் தன் பூட்கையில் ஊசலாடியது. இரண்டாம் சாள்சின் கடைசி ஆண்டு களில் அரசில் இரு கட்சிகளிருந்தன. அலிபாச்சும், மிதவாதிகளும் பிரான்சிய அறிவுரைகளை எதிர்த்து நின்றனர். மேலும், இங்கிலா ந்து ஐரோப்பாவில் சமநிலையாதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டுமென் அறும் அவுர்கள் விரும்பினர். ஆணுல், அரசுக்குரியவரும், அவர்தம் வளர்ச்சியுறும் நல்வாய்ப்பை அடுத்திருந்த அவையத்தாரும் பிரான் சைச் சார்ந்து நின்றனர். சாள்சும், செலவுக்குத் தேவையான பொருளைப் பாராளுமன்றம் கொடாமையினல் பிரான்சின் செல் வத்தை நம்பியிருந்தான். அலிபாச்சுவின் செல்வாக்குக் குறைவதா யிற்று. இவ்வாண்டுகளிற்முன் உலூயி, இாையின் ஆற்றங்கரையோரல் களிலுள்ள புதிய நாடுகளிலும் இசுப்பானிய நெதலாந்துக்களிலும் பெரும் பெரும் பகுதிகளை மேலும் மேலும் கைப்பற்றிக் கொண்டிருந் தான். அதன் பயனுகவே, ஐரோப்பாக் கண்டத்தில் அதிக ஆதிக்
கத்தையும் அவன் தேடிக்கொண்டான். இதனையே இங்கிலாந்து பின்
னர் இருபதாண்டுகளாகப்போர் செய்து அவனிடமிருந்து கைப் பற்ற வேண்டியிருந்தது.
இங்கிலாந்தில் போட்டியிடும் கட்சியுணர்ச்சிக் கொடுமை பெரிய பிரித்தானியாவையும், ஐரோப்பாவையும் அடிமைத்தனத்துக்குக் கொண்டு சென்றது. ஆனல், இரண்டாம் சாள்சின் பிந்தியவாண்டு களில் தவமுன பாதையிற் செலுத்தப்பட்டனவும், மக்களுக்குரியனவு மான இச்சத்திகள் இருபெரும் கட்சிகளைத் தோற்றுவித்தன. அவற்றின் உள்ளிணைப்பும் ஒன்ருேடொன்றிட்ட போட்டியும் எதிர் கால நூற்முண்டுகளில் பிரித்தானிய நாட்டையும், பேரரசையும் ஆளு தற்குப் பாராளுமன்ற ஆட்சியை ஏற்றதாக்கின. விலக்குச் சட்டப் போராட்டத்திலிருந்து உவிக்கு, தோரி என்ற பெயர்கள் மாத்திர மன்றி, கட்சியமைப்புக்கும் பிரசாரத்துக்குமுரிய புதிய வளர்ச்சி யும், தேர்தலிலீடுபடுதலாகிய சிறப்பான ஆங்கிலத் திறமையும் தொடங்குகின்றன. தேர்தலும் பாராளுமன்றமும் பற்றிய போட்டி களில் மிக ஆழமாய்த் தன்னைத்தானே ஒருமுறை ஈடுபடுத்திய நாடொன்று கொடுங்கோன்மையின் கீழ் நீண்ட காலத்துக்கு அமைதியோடிருப்பது பெரும்பாலும் நிகழக்கூடிய தொன்றன்று. சாவ்சுபுரியும் அவனுடைய பகைவரும் ஆராவாரம், செலவு, குரோ தம், களிப்பு ஆகிய எல்லாவற்றேடும் கூடிய ஈற்றன்சுவில் தேர்த வின் வியப்பான வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்-அது அரு இச்சொற்கள் ஆங்கிலக் கட்சிகளைக் குறிக்கும்போது, முதன் முதலாக இரண்டும் விரோதவுணர்ச்சியைக் குறிக்கும் புனைபெயர்களாகவிருந்தன. " தோரி" என்பது அயலாந்திற் கத்தோலிக்கனய்ச் சட்டவரம்பை மீறின ஒருவனையும் "உவிக்கு" என்பது கொத்துலாந்தில் ஒப்பந்தம் செய்யும் கொள்கை வெறி பிடித்த ஒருவனையும் குறித்தன.
143

Page 83
144
இருகட்சி முறை
மையானதும் வினுேதமானதுமான ஒரு தேசீயப் பரம்பரை உரிமை யாகும்; எனெனில், அது தேர்தல்களின் நிர்வாகத்தையும் விளைவை யும ஊன்றிக் கவனிப்பதற்கு உற்சாகம் கொடுத்ததாதலினென்க. அவ்வூக்கமின்மையினல் எமது காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பாராளுமன்றக் தேர்தல் முறை அழிந்தொழிந்து போயிற்று. -
விலக்குச் சட்டப் போராட்டத்திற்குரிய அதே காலத்தில் கட்சிப் பத்தி' பற்றிய கருத்து தலைவரிடத்தும், கீழ்ப்பட்ட மக்களிடத்தும் வளர்வதாயிற்று. சேமிசு, உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளில் மிக முக்கியமான அரசியற்றந்திரிகள் சிலர் வளர்த்து வந்த ஒரே யொரு பத்தி, உண்மையில், அதுவேயாகும். கட்சிப்பத்தி அதனேடு சேர்ந்து வருகிற தீங்குகளை உடையது; ஆனல், அது உறுதியான பாராளுமன்ற ஆட்சியைச் சாத்தியமானதொன்முக்கும் இயல் புடையது. பதினன்காம் உலூயி ஈற்றில் தோல்வியுற்றன் ; உலிக்கு நிர்வாகசபையினரும் அவர்களின் ஆதரவாளரும் ஒருவர்மீதொரு வர் கொண்ட நம்பிக்கையால், கொத்துலாந்தோடு ஐக்கியம் ஏற் படுத்தப்பட்டது ; அதேமாதிரிக் கடுமையான சந்தர்ப்பத்திலேயே தோரிக் கட்சி இணைப்பினுல் உத்திரெத்து (யூற்றெற்று)ச் சமாதான மும் பெறப்பட்டதாகும். h
உவிக்கு அமைப்புக்களையும் தோரி அமைப்புக்களையும் தத்தமக் குள் ஒன்றுபடச் செய்த தொடர்பொன்றுண்டு. அதனல் ஒவ்வொன் றம் கிட்டத்தட்ட இருநூருண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தன. அத்தொடர்பு கற்பனையுமன்று; கோட்பாடு மன்று; ஏனெனில் கற்பனைகளும் கோட்பாடுகளும் மாற்றமுறும் சந் கர்ப்பங்களால் தாமும் மாறுதலடைகின்றனவாதலினென்க - ஆனல், அது சமயத்துக்கும் சமூகத்துக்குமுரிய நிரந்தரமான பிளவு களின் அடிப்படையில் அமைந்தவோர் தொடர்பாகும். அப்பிளவை இரு கட்சிகளும் தம் அரசியற் கருமங்களில் வெளிப்படையாகக் காட்டி வந்தன. சாவ்சுபரி நிறுவிய உவிக்குக் கட்சி, 1832 ஆம் ஆண் டின் சீர்திருத்தச் சட்டத்துக்குப் பின்னும் நீண்ட காலம் நிலவியது. அது சிறப்புரிமையற்ற இணங்காதார்க்கும், உயர்ந்த பிரபுக்கள் பிரி வின்கீழ் வரிசையாய் அமைந்த வணிக கூட்டத்தார்க்கும், நடுத்தா வகுப்பினருக்குமுரிய கட்சியாகும். தோரிக் கட்சியோவெனில், இடான்பி, பிற்று, பீல் ஆகியோரின் காலங்களிலிருந்ததுபோலவே ஏனைய வகுப்புக்களில் பெரும்பாலும் உறுதியான ஆதரவாளர்களை 'புடையதாயிருந்தும், உண்மையில், நிலக்காரருக்கும் ஆங்கிலத்

இருகட்சி முறை
திருச்சபைக் குருமாருக்கும் அவர்தம்மைப் பின்பற்றுவோருக்கு முரியதாகும். பத்தொன்பதாம் நூற்முண்டின் பிற்பகுதியிற்முன் தொழிற்புரட்சி இணங்காதோரின் குறைபாடுகளை நீக்கியதுடன், சமூக வகுப்புக்களையும் முற்முக மாற்றியது. இச்செயல்கள் கட்சி முறையைப் புதிய சமூக நிலைகளுக்குப் படிப்படியாக மாற்றி யுள்ளன; அத்துடன், அவைகள் ஆங்கில அரசியல் முறையில் தலையாய இயக்கத்துக்குக் காரணமான சமய வேறுபாட்டினையும் ஒழித்துவிட்டன.
1685 ஆம் ஆண்டில் கட்சி முறையைப் பற்றியோ பாராளுமன்ற ஆட்சி முறையைப்பற்றியோ அரசியல் ஞானி எவனும் எதையும் நிறமாக முன்னறிவித்திருக்கமாட்டான். இரு கட்சிகளும், மன மாற்றமுள்ள தம் ஆரம்பகாலத்தில் தமக்குத் தாமே கேடு விளைத் துக்கொண்டன. ஆனல், முதலில் உலிக்குக் கட்சிக்கும், புதிய ஆட்சி யில் தோரிக் கட்சிக்கும் உடனடியாகக் கிடைத்த தண்டனையின் உக்கிரமானது அவைகளுக்கு நல்ல படிப்பினையாயிற்று. அதனல் அவைகள் பிரித்தானியாவையும், ஐரோப்பாவையும் பாதுகாத்தற்கு வேண்டிய வாய்ப்பினைச் சில்லாண்டுகளிற் பெற்றன.
அத்தியாயம் VII
இரண்டாம் சேமிசும் ஆங்கிலப் புரட்சியும், 1685-1688.
புரட்சி உடன்படிக்கை, 1689.
A. இரண்டாம் சாள்சின் கடையாண்டுகளில் அரசாங்கம் ஒருபுறத்தில்
அரசவைக்கும் மறுபுறத்தில் மேற்றிருச்சபை தோரிக்கட்சி ஆகிய வற்றுக்குமிடையேயுள்ள நெருங்கிய உடன்பாட்டை ஆதாரமாகக் கொண்டுள்ளது. கோமறைக்கழகம் வயிற்முேலில் முடிவுசெய்ததை ஊர் நீதிபதி சுணங்காது செய்து முடித்தான். அதனைக் கோயிற் பற்றுக் கோயிலிலிருந்த குரு தம் பீடத்தினின்று பாராட்டினர். தங்கள் பொதுவான பகைவராகிய உவிக்குக் கட்சியினரையும் இணங்காதோரையும் அடக்குதலும், சட்டச் சாதனத்தையும் அதன் அதிகாரிகளாகிய சமாதான நீதிபதிகள், ஒரு கட்சியைச் சேர்ந்த நியாயாதிபதிகள், அரச சார்புடைய நடுவர் ஆகியோரை யும் ஒவ்வொரு மிகச்சிறிய எதிர்ப்பியக்கத்தையும் அல்லது கட்டுப் பாடற்ற பேச்சையும் கண்காணித்துக்கொண்டிருக்க நியமித்தலு மாகிய இவை யாவும் அரசவையினருக்கும் உயர்தரத் தோரிக் கட்சி யின்ருக்கும் உவப்பான செயல்களாயிருந்தன. பின் கூறப்பட்டவ ரான தோரிக் கட்சியினர் அரச நடைமுறையைக் குறைகூறுவோர்
145
1681-1685,

Page 84
146
(ou ul., 1685.
யூன்-பூலை,
685.
அரசனும் தோரிகளும்
எவர்க்கும் மாமுன இந்தக் கடுமையான செயலுக்கு, அரசோ டிணங்கி நடத்தற்குரிய திருச்சபைப் பூட்கையில், ஒரு சமய அங்கீகாரத்தைக் கண்டனர். அவர்கள் மிகுதியானதை மறந்து, சிறியவளவானதை முன்னுணர்ந்து அறிந்தவராய், அரச பூட்கை யானது தங்கள் விருப்பங்களுடனும் நலன்களுடனும், ஒன்று பட்டிருத்தல் வேண்டுமெனக் கருதுபவராயிருந்தனர். ஆனல் இந்த அந்தமிலாக்காலம், சாள்சின் வாழ்நாளைப் பொறுத்தமட்டில், அந்த முடையதாகும். அவன் உயிரோடிருந்த காலம்வரையும், அவன் 1674 ஆம் ஆண்டில் கைவிட்ட உரோமன் கத்தோலிக்க திட்டங்கள் மீட்டு உயிர்பெற்றில. அவன் உலூயியிடமிருந்து, உண்மையில், இன்னும் சம்பளம் பெற்று வந்தான். அவன் அவ்வாறு செய்தது பாராளுமன்றத்தை விட்டுவிடுதற்கும், பிரான்சோடு சமாதானங் கொண்டிருத்தற்கும், உள்நாட்டிலோ வெளியிலோ உரோமன் கத்தோ விக்கத்துக்காகச் செயல்முறையில் எதனையும் மேற்கொள்ளாதிருக்க வுமே ஆகும். அவன் இறக்கும்பொழுதுதான் திருச்சபைக்கும் அவனுக்குமிருந்த பகைமை நீங்கி நட்பேற்படுத்தப்பட்டது.
இரண்டாம் சேமிசு பாராளுமன்றத்தைக் கூட்டித் தனது புதிய ஆட்சியைத் தொடங்கினன். அது அரச ஆதரவாளரைக் கொண்ட பேரவையாகும். அதன் உறுப்பினர் பலர் ஆங்கு அமரும் உரிமைக் காக, உவிக்குக் கட்சியினர் எவரேனும் இல்லாது நீக்கப்பட்டனவும் மாற்றியமைக்கப்பட்டனவுமான கூட்டுத் தாபனங்களுக்குக் கட மைப்பட்டவராயிருந்தனர். தோரிக் கட்சியும் அரச அவையும் ஒற் அறுமையாகவிருக்கும்வரை அவைகள் பொதுத் தேர்தலுக்குப் பயப்
படவேண்டிய காரணம் மீட்டு என்றுமே இருக்கமாட்டாது. ஓர்
உவிக்குப் பாராளுமன்றம் மீட்டு ஒருபோதும் ஆங்கிருக்க முடியாது. கடநத காலத்தில் அரசர்க்கும் பொதுமக்கட் சபைக்கும் பெரும் பாலும் உண்டான 'பிணக்குகளுக்கு இடையிடையே மன்னிப் பிருந்தது. இனிமேல் அவ்வாறன மன்னிப்பொன்றுமின்றி கிளா றெண்டன் சட்டத் தொகுப்பானது உறுதியாகக் கையாளப்பட்டு இணங்காதார் நலன்கள் சில்லாண்டுகளில் அழித்துவிடப்படும்.
1685 ஆம் ஆண்டுப் பாராளுமன்றம் உணர்ச்சியளவில் கவலியர் பாராளுமன்றத்திலும் மேலாக அரசவாட்சியை ஆதரித்து வந்தது ; ஆனல் சேமிசுக்கு ஒரு விடயத்தில் உதவியளிக்க அது மறுத்ததுஅதுவே ஆங்கிலத் திருச்சபையையும் நாட்டையும் உரோமன் கத் தோலிக்கத்துக்குக் கீழ்ப்படுத்தலாகும். இதுபற்றி சேமிசுக்கும் பொதுமக்கட்சபைத் தோரிக் கட்சியினருக்கும் உண்டான பிணக் கினை ஒரு நிகழ்ச்சி தீர்த்துவைத்ததுமன்றி அவர்களை அதற்கு முன் என்றுமிருந்ததிலும் விரைவாக நண்பராக்கியது-அதுவே மேற்கில் மன்மது விளைத்த கலகமாகும்.

மனமதுவின் கலகம்
மன்மதுவின் கலகம் மூன்முண்டுகளுக்குப் பின்னர், புரட்சிக்குப் பலமளித்த உவிக்குப் பிரபுக்களினதோ, மிதவாதிகளினதோ கவ னத்தை ஈர்த்திலது. அது தூய்மையாளர் அனுபவித்த துன்புறுத்த லுக்கு எதிரான அவர்தம் எழுச்சியாகும். அவ்வெழுச்சியானது இக் காலத்து உவிக்குக் கட்சியின் மனேநிலையிலிருந்து தோன்றியது போலிராது மொட்டைத்தலைக் கட்சியின் மனேநிலையில் உண்டான தொன்ருகும். ஆனல், குருெம்வெலின் காலத்தில் மொட்டைத்தலைக் கட்சி சத்திவாய்ந்த மேல்வகுப்பினரைத் தலைவராகக் கொண்டிருந் தது. தூய்மையாளர் சமயம் இப்பொழுது பொதுமக்களுக்குரிய தொன்முயிற்று. சொமசெற்றுவிற்ருனும் அது தோண்டனிலிருந்த கடைக்காரருக்கும், நாட்டுப்புறத்து நிலக்கிழாருக்கும், கூலியாட் களுக்கும் உரியதாயிற்று. செச்சுமூரில் முடிவுபெற்ற சண்டையில் இம்மக்கள் வியத்தகு பத்தியோடு தம்முயிரை விட்டனர். அச் செயல், யக்கோபியரின் நிமித்தமாக மலைப்பிரதேச வாசிகள் பலரை இணைத்த பத்தியைப் போன்றதொரு நிலமானிய பத்தியை அவர் கள் தம் தலைவரிடத்தே கொண்டதனுல் உண்டானதன்று ஆணுல், தகுதியற்ற மன்மது தங்கள் சமயத்தின் வெற்றி வீரன் என்ற தப் பான நம்பிக்கையினுல் உண்டானதாகும்.
போர்வீரரும் புரட்சிக்காரரை முதலிற் பழிக்குப்பழி வாங்கினர்.
அதன்பின்னர் கொடிய வெறியனை செபிறிசும் அவ்வாறே செய்
தான். அச்செயலுக்குத் தூண்டுகோலாயிருந்தது அரசனின் கட் டளையாகும். புதிய ஆட்சியில் தோரிக் கட்சியினரைத் திடுக்கிடச் செய்ததும், அவர்களுக்கு வெறுப்பூட்டியதுமான முதற்செயல் அதுவேயாகும். உவெசெட்சின் தெருவோரங்களில் நீண்ட வரிசை
களில் இணங்காதாரைத் தார் பூசித் துாக்கில் தொங்கவிட்ட காட்சி,
யால் ஒது பொதுவான பேரச்சம் எழுந்தது. அதனுல் அரசியல், சம யம் என்பன பற்றிய ஆங்கில வாழ்க்கையை நெடுங்காலமாகப்
பாழாக்கிய, கட்சிகள் ஒன்றேடொன்று கொண்ட சீற்றமானது.
முதன் முதலாகத் தணிந்தது. அதுவே புதிய காலத்தின் தேசிய ஒற்றுமைக்கும் பொறுமைக் குணத்துக்குமுரியதாய் முதலில் உண் டான இயற்கையான இயக்கமாகும்.
சேமிசை மன்மது எதிர்த்ததின் விளைவு அவ்வாசனைப் புதிய கொடுங்கோலாட்சிக்குத் தூண்டிற்று. பிரான்சியரும் இயேசு இயக் கத்தாரும் புத்திகூற, அவன் தன்னுடைய ஆட்சியின் முதல் மாதங் களில் கருதியிருந்தவற்றிலும், நாட்டினை உரோமன் கத்தோலிக் கத்துக்குரியதாக்க மிகவிரைவான முறைகளைக் கையாண்டான். 30,000 பேரைக் கொண்ட படையொன்றினைத் தயாராக்கவும்,
47

Page 85
148
சேமிசு படை சேகரித்தல்
தலைநகரை அச்சுறுத்தற்குப் பெரும்பாசறையொன்றை அவுன் சிலோ ஈதில் அமைக்கவும், அவனுக்கு இப்போது ஒரு தலைக்கீடிருந் தது. படையினிடம் கொண்டிருந்த மிதமிஞ்சிய நம்பிக்கை, தோரிக் கட்சிப் பாராளுமன்றத்தையும், சிற்றுாருக்குரிய நீதி வழங்கும் பதவியையும், ஆங்கிலக் கிறித்துவத் திருச்சபையையும் எதிர்த்து நிற்குமாறு அவனைத் தூண்டிற்று. நாட்டின் சட்டங்களைத் தன் அரசபதவிக்குரிய தனியுரிமையால் தான் விரும்பியபடி ஒத்திவைக் கும் தகுதி தனக்குண்டென்று தெரிவித்தான். அச்சட்டங்களுக்கு மாருக அவன், இத்தகைய மிக அபாயமான சேவையில் இறங்கும் படி தான் தூண்டக்கூடிய உரோமன் கத்தோலிக்கப் பிரபுக்கள் யாவரையும் தன் சேனைப்பகுதிகளில் உத்தியோகத்தர்களாக நிய மித்தான். அவர்களின் தொகை போதியதாயிருக்கவில்லை. மேலும் கெலித்தியமொழி பேசும் நாட்டுப்புறத்தாரைக் கப்பற்கணக்காக அயலாந்துக்கு வருவிக்கச் செய்தி அனுப்பும்வரை, படைகளை நிரப் புதற்கு ஒரே சமயத்துக்குரியாரைக் கண்டுபிடிக்க முடியாதிருந் தான். ஆங்கிலப் போர்வீரரும், பொதுமக்களும் இராணுவத்தில் புதிதாக மிக அண்மையிற் சேர்ந்த இவர்களை அந்நியராகவும், நாக ரிக மற்றவராகவும் மதித்தலில் ஒருமனப்பட்டிருந்தனர். இவர் களைத் தம் சொந்தத்திவிலேகூடக் கீழ்ப்படிகிறவராயும், ஆயுதம் தரிக்காதவராயும் வைத்திருத்தல் ஆங்கிலோ சக்சனியரின் கடமை யாயிற்று. அவர்கள் இப்பொழுது இங்கிலாந்துக்கே தலைவராக்கப் படவேண்டியவராயினர்.
புரட்சி தொடங்குவதற்கு முன்பே சேமிசு தன் சிறந்த படையின் ஒழுக்கத்தையும், பத்தியையும் பாழாக்கிவிட்டான். ஆனல், புரட்டெ கத்தாந்த சமயத்தை வேரோடு களைதற்குப் பயன்படுத்தக்கூடிய படையாய் அதனை இன்னும் மாற்றி வைத்திலன். பலம் வாய்ந்த அந்த இராணுவ வளர்ச்சியின் முடிவினை முன்னறிந்து செயலாற்று தற்குப் புரட்சியைப் பரப்புவோர் அதற்குரிய நேரத்தை, உண்மை யில் குறித்துள்ளார். ஆனல், சேமிசு நிரந்தரமான படைகளுக்கு மாருய்த் தோரிக் கட்சிப் பெருஞ்செல்வரின் வெறுப்பினை இன்னு மொரு நீண்ட காலத்திற்குத் தேடிக்கொள்வதற்குத் தேவையான தைப் போதிய அளவு செய்துள்ளான். ஒருமுறை குருெம்வெலும், மறுமுறை இரண்டாம் சேமிசும், மேன்மக்களை அடக்குதற்கும், திருச்சபையினைச் சீர்கெடுத்தற்கும் அப்படைகளைப் பயன்படுத்தி யதை அப்பெருஞ்செல்வர் கண்டுள்ளார்.
மன்மதுவின் தோல்வியும், அவனின் கொலைத்தண்டனையும் சேமிசை அழிவுக்குரிய வழியிற் செல்லத் தூண்டியபோதும், அவை ஒறேஞ்சு நாட்டு உவிலியத்தின் பாதையிலுள்ள தடையொன்றை அகற்றிவிட்டன. அவைகள் ஆங்கிலக் கட்சிகள் யாவற்றையும் அவ

சேமிசு, உலூயி, போப்பாண்டவர்
னின் தலைமையில் முன்னிருந்ததைவிட அதிகமாக ஐக்கியப்படுத் தின. அவன், இடான்பியின் மந்திரிசபைக் காலந்தொட்டு தோரிக் கட்சியினரோடு சினேகமான முறையில் ஒழுகிவந்தான்; ஆனல், உவிக்குக் கட்சியில் அரைவாசிப்பேர் மன்மதுவின் அறிவற்ற செய லினல் தவருன நெறியில் நடத்தப்பட்டனர். அப்போலியாளன நீக்கியமை ஆங்கில உவிக்குக் கட்சியினரையும் இணங்காதாானை வரையும் உவிலியத்திலும், மேரியிலும் நம்பிக்கை வைக்கத் துரண்டியது. 1687 ஆம் ஆண்டில் மிகப் பெருந் தொகையினரான ஆங்கிலேயர், சேமிசு விரைவில் இறப்பானென்றும், அவனுடைய மகளான மேரி விரைவில் அவனின் உரிமையைப் பெறுவாளென்றும் நம்பி ஒன்றுபட்டிருந்தனர்.
இங்கிலாந்திலுள்ள உரோமன் கத்தோலிக்கக் கூட்டத்தின் பலம்
வாய்ந்த ஒரு பகுதியினர் நாட்டுப்புறத்துப் பெருஞ் செல்வராவர்; அவர்கள் நீதி வழங்கும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனரே யன்றிச் சமூகத்திலிருந்தன்று; அவர்கள் தம் தோரிக் கட்சி அயலா ரோடு இணக்கமாக நடந்துகொண்டனர். பிரான்சியரையும் இயேசு சபையாரையும் கொண்ட கட்சியின் புத்திமதிப்படியும், செபிறிசு, சந்தர்லாந்து முதலிய புகழ்பாடிகளான நேர்மையற்ற ஆங்கிலே யரின் பாராட்டுடனும் சேமிசு ஏற்றுக்கொண்ட பூட்கையை அப்பகுதியினர் விரும்பவில்லை. கத்தோலிக்கப் பெருஞ் செல்வர், அந்நிய நாட்டுப் போர்க் கருவிகளும், உள்நாட்டுப் போருமின்றித் தம் சமயம் ஆதிக்கம் பெற ஒருபோதும் முடியாதென்று திடமாக நம்புவதற்கு வேண்டிய அளவுக்குத் தம் நாட்டினரை நன்கறிவர் ; மேலும், இரண்டாம் உள்நாட்டுப் போரொன்று, முதலாவது போர் அரைவாசி நிறைவேற்றிய கத்தோலிக்கரழிவை முடிவுசெய்யக் கூடும் அல்லது செய்யா தொழியக்கூடும். அவர்கள் இக்கொள்கை களுக்கு, மிதமானவரும் பகுத்தறிவுடையரும், இலிசபெத்தை மதவிலக்குச் செய்த போப்பாண்டவர்களிலிருந்து மிக வேறுபட்ட வருமான போப்பாண்டவராகிய பதினேராம் இனசெந்து என்பாரின் ஆதரவைப் பெற்ருரர்கள். அவருக்குப் பதினன் காம் உலூயியோடும், பிரான்சிய இயேசு சபையாரோடும் சச்சரவுக ளிருந்தன. இத்தாலியிலும், ஐரோப்பாவிலும் பிரான்சிய வதிகாரத் துக்கு அவர் அஞ்சினர். ஆதலினுல், அவர் உவிலியத்தின் புரட்டெ சுத்தாந்தத்தின் சார்பான நடவடிக்கைகள் இங்கிலாந்தில் வெற்றி பெறுமாறு அனுதாபத்தோடு கண்காணித்துவந்தார்; ஏனெனில், அது இங்கிலாந்தைப் பிரான்சிய ஆதிக்கத்திருந்து விடுதலை செய்யுமாதலினென்க. -
149

Page 86
50
1685.
நாந்தேசுக் கட்டளைகளும் உலூயியும்
போப்பாண்டவரும் மிதமான ஆங்கிலக் கத்தோலிக்கரும் இங்கி லாந்திற் பெற எதிர்பார்த்திருந்தது சமயப் பொறையன்றி அரசியல் ஆதிக்கமன்று. உவிலியம் தான் தன்னலானமட்டும் முயன்று இதனை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதாகப் பகிரங்கமாய் வாக்களித்தான். அவன் தனது மனேநிலை, நடைமுறை, சந்தர்ப்பம் ஆகியவற்றிலும் சமயப் பொறையை ஆதரிப்பவனுவான். ஒல்லாந்து, இந்த அடிப்படையிலேதான் அவனின் சிறந்த மூதாதையரின் கீழ் வெற்றிகரமாக ஒற்றுமைப்பட்டிருந்தது. உலூயிக்கு மாருய், ஒசுற் றியாவையும், இசுப்பெயினையும், உரோமின் போப்பாண்டவர்களை யும் ஒல்லாந்தோடும், புரட்டெசுத்தாந்தச் சேர்மனியோடும் ஒன்ரு கச் சேர்க்க முயற்சி செய்த கூட்டவையொன்றுக்கு அவன் தானே தலைவனுய் விளங்கினன். சேமிசு சிறிது பொறுமையோடு நடந்து கொண்டிருந்தானேயானுல் தானே உண்மையில் செயல்முறையில் வெளிப்படையாய் நடத்திய கத்தோலிக்கச் சடங்குகளுக்குச் சட்டபூர்வமான அனுமதியைத் தன் பாராளுமன்றத்திடமிருந்து பெற்றிருக்கக்கூடும். ஆனல், தோரிக் கட்சியினரோ, உவிலியமோ உரோமன் கத்தோலிக்கர் சேனையில் உத்தியோகம் வகிப்பதையும் நீதிபதிகளின் பீடத்திலும் அரசவாலோசனை அவையிலும் கடைசி யாக ஆங்கிலத் திருச்சபைப் பதவிகளிலும் அமர்வதையும் அனு மதிக்கத் தயாராயிருந்திலர். ஆயினும், இங்கிலாந்தை வலிந்து மாற்றுதற்குரிய வழியினை ஆயத்தஞ் செய்வதைத் தவிர வேறு நோக்கமெதுவுமின்றிச் சேமிசு மூன்முண்டுகளாக நாளுக்குநாள் அதிகரிக்கும் கொடுமையோடும் நீதிக்கேட்டோடும் பின்பற்றிய முறை அதுவேயாகும்.
இவ்வாண்டுகளிற்குரனே அவனுடைய நேயனுன பதினன்காம் உலூயி சகிக்கும் தன்மையுள்ள நாந்தேசுப் பிரகடனத்தை அழித் தும், பிரான்சிய இயூகனற்றுக்களை மிகக் கொடூரமாகத் துன்புறுத் தியும் வருவானுயினன். மேலும், அவர்களைத் தம் நாட்டைவிட்டுத் தப்பியோடத்தானும் விடாது தடுத்தும், கத்தோலிக்கப் பூசைக்குப் போகும்படி துன்புறுத்தித் துரத்தியும் வந்தான். குடும்பமாயுள் ளாரை நீகிரோ அடிமைகளைப் போல எண்ணிப் பிரித்துவிட்டான் ; ஆண்களைத் துடுப்புடைக் கலங்களில் வேலை செய்ய அனுப்பினன்; பெண்களையும் பிள்ளைகளையும் சவுக்காலடித்தும், முறைகேடாக நடத்தியும், அவர்கள் வெறுத்த மத நம்பிக்கையிற் பயிற்றிவந்தான். அவ்வாறு வேண்டுமென்றே விளைவிக்கப்பட்ட மக்களின் பெருந் துன்பம், நினைப்பதற்கே கோரமானதொன்ருகும். ஆண்டுகள் செல் லச்செல்லச் சில நூருயிரக்கணக்கானேர் பெரும்பாலும் இங்கிலாந் துக்கோ ஒல்லாந்துக்கோ பிறகியாவுக்கோ தப்பியோடிவிட்டனர். அவர்களிற் பெரும் பகுதியினர் கம்மியரும், சிறந்த குணமுடைய

ஆங்கிலர் ஆததிரம்
வணிகருமாவர். அவர்கள் வர்த்தக இரகசியங்களையும், புதிய கைத் தொழில் முறைகளையும் தாம் சென்ற நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் வருகையை வர்த்தகப் பொருமை கெடுத்து விடாதவாறு சமய அனுதாபம் தடுத்தது. இம்மக்களில் மிகப் பலரைப் பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு மாற்றியமை, பிரித்தா னியா தனக்கருகில் உள்ள பெரிய நாட்டினை வர்த்தகம் கைத் தொழில்கட்குரிய முயற்சியில் இதுவரை வென்றதற்கான காரணங் களுள் மிகச் சிறியதொன்றன்று. பிரான்சில் நடந்த சமயத் துன் புறுத்தலின் மிகப்பெரிய கொடுமையினுல் பிரான்சிய கைத்தொழில் கள் பல அழிந்தன ; ஆங்கிலக் கைத்தொழில்கள் பல நிறுவப் பட்டன.
ஆங்கிலக் கால்வாய்க்கப்பால் நடந்த இச்செயல்களினுலும், இரண்டாம் சேமிசின் குடிமக்கள் மத்தியிலே உரோமன் கத்தோ விக்க மதப்பித்துக் கிலக்கான தீங்கற்ற மக்கள் பெருந் தொகை யினராக வந்துசேர்ந்தமையாலும், அக்குடிமக்களுக்குண்டான விளைவு, அல்வாவின் கொடுமைகளாலும், புனிதபதலோமியுவின் கொலையினலும், இலிசபெத்தின் காலத்து இங்கிலாந்துக்குண்டான விளைவுடன் ஒப்பிடத்தக்கதாகும். அன்றியும், செத்தெம்பர்த் திங்களில் நடந்த கொலைகளினுலும் உருேபெசுப்பியர் இழைத்த கொடுமைகளாலும், பொக்சு பிற்று ஆகியோரின் காலத்தவர்க்கு விளைந்த பயனுக்கும் ஒப்பிடத்தக்கதாகும். நாந்தேசுப் பிரகடனங் களை அழித்தமை, 1688 ஆம் ஆண்டுப் புரட்சிக்கும் அதற்குப்பின் பிரான்சோடு நிகழ்ந்த நீண்டகாலப் போர்களுக்கும் வேண்டிய மனேநிலைக்கும் உணர்ச்சிக்குமுரிய சூழ்நிலையைத் தயாரித்தது. உலூயிக்காகவும் அவனுக்கு மாமுகவும் ஐரோப்பா முழுதும் இப்போது அணிவகுத்திருந்த பெரும் பிரிவில், போப்பாண்ட வரின் உருவத்தை எரிப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த மக்கள் கட்சியை அப்போப்பாண்டவரும் சேர்ந்திருந்தார் என்க. அப்போர் கள் இங்கிலாந்திலும் கத்தோலிக்கச் சமயத்திற் கொண்ட வெறுப் பினை உச்ச நிலைக்கு உயர்த்திவிட்டன.
ஆங்கிலேயர் கத்தோலிக்கச் சமயத்தைப் பற்றிய தம் கருத்துக் களே, மகிழ்ச்சியற்ற இயூகனற்றுக்களை அடியோடழித்தற்குப் பேராவலோடு போதனை செய்துவந்த பிரான்சிய இயேசு சபையா ரும் குருமாருமான மிக அணித்தாயுள்ள தம் அயலாரிடமிருந்து, பெற்றனர். சேமிசின் செயல்களின் பேருக, அவர்களுடைய அமைப்பு இங்கிலாந்துக்கு உதவாதிருத்தற்காக அப்பேரச்சம் பொக்சுவின் 'பிராணத்தியாகிகள் நூலு 'க்கும் மேரியின் காலத்திய துன்புறுத்தல் பற்றிய கதைகளுக்கும் ஒரு புதிய யதார்த்தத்தை
அளித்தது. தலைமைக் குருவான சான்குருேத்து தொடக்கம் பாக்
15

Page 87
152
சேமிசு தோரிகளை எதிர்த்தல்
சிதர், பனியன் ஆகியோர் வரையுமுள்ள சிறு வேறுபாடுதானு முடைய புரட்டெசுத்தாந்தசெவரும், அரசனின் மதப் பித்துடைய நடைமுறைக்கும், இங்கிலாந்தின் சட்டங்களை விட்டுவிடுதற்கு அவன் உரிமைகொண்டாடிய எல்லையற்ற அதிகாரத்துக்கும் மாருய்ப் பழைய சண்டைகளை மறந்து ஒன்முக நிற்றற்கு வேண்டிய அவசியத்தை நன்கறிந்தனர். புரட்டெசுத்தாந்தரெவரிடத்துமுண் டான இம்மனவொற்றுமை ஆங்கில கீழ்த்திருச்சபையினர்க்கும், பொறுமைக் குணமுடைய உவிக்குக் கட்சியினர்க்கும் மேம்பாட் டினை அளித்தது. அதே சமயத்தில், அரசோடிணங்குதலாகிய தோரிக்கட்சிக் கோட்பாடு, அதனை முன்பின் சிந்திக்காமல் ஏற்றுக் கொண்ட மக்களைத் தம் அரசியற் கொள்கைகளைக் கைவிடுதற்குரிய இழிவான விருப்பத்தோடிருக்க விட்டது; அல்லது அவர்களைத் தங் கள் வாதங்கள் சடுதியாக ஒரு நீரோ வாக உருவமெடுத்துத் தம் சமயத்தை அழிப்பதைக் கைகட்டிப் பார்த்து நிற்கவிட்டது.
தோரிக் கட்சியினர், உண்மையில் அறமும் அறிவும் பற்றிய நிலையி லிருந்து மாத்திரமன்றிப் பொருளுக்கும் அரசியலுக்குமுரிய நிலை களிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர். 1685 ஆம் ஆண்டில் கோமறைக் கழகத்தார், கிராமத்துக்கும் நகர நிர்வாகத்துக்குமுரிய நீதிபதிகள், பிரபுக்கள் பிரதிநிதிகள், கோட்டமணியகாரராகிய எவரும் கிட்டத் தட்ட விலக்கின்றித் தோரிக் கட்சிக்கும், மேற்றிருச்சபைக்கு முரியராயிருந்தனர். மூன்முண்டுகளுக்குப் பின், புரட்சி தொடங் குஞ் சமயத்தில் தோரிக் கட்சியினரும், மேற்றிருச்சபையினரும் உள்ளூருக்குரிய மத்திய அதிகார நிலையங்களிலிருந்து நீக்கப்பட்ட னர். இச்செயல் ஒலிவர் தானே ஆற்றினுற்போன்ற அளவு திறமை it it did செய்யப்பட்டது. சேமிசு, சட்டங்களெவற்றிற்கும் மாமுய் அவர்களுக்குப் பதிலாக உரோமன் கத்தோலிக்கரை நியமிக்க முயன்றன். ஆனல், அவனுடைய யோசனையில்லாத்திட்டங்களுக்கு உதவிசெய்ய ஆயத்தாாயுள்ள அவனது சமயத்துக்குரியவர் போதிய தொகையினராக இருந்திலர். ஆகையினல் அவன் புரட்டெசுத் தாந்த இணங்காதாரையும் வேண்டிக்கொண்டான் ; ஆயினும், புரட்டெசுத்தாந்த நலனையும் நாட்டின் சட்டங்களையும் புறக்கணித்து மேற்றிருச்சபையார்மேல் பழிக்குப்பழி வாங்கத் தயாராயுள்ளார்
எவரையும் சேமிசு கண்டிலன்.
அரசும் திருச்சபையும் இணங்காதாரின் ஆதரவைப் பெறுதற்கு ஒன்ருேடொன்று போட்டியிட்டுக்கொண்டிருந்தன. அரசு தீங்கான சட்டங்களை ஒத்திவைத்துச் சட்டத்தின்வழி அமையாத பாவமன் னிப்புப் பிரகடனத்தால் சமயப் பொறுமையையும் மக்களுக்குரிய சமநிலையையும் அளிக்க முன்வந்தது. கட்டுப்பாடற்ற பாராளுமன்ற

சேமிசு திருச்சபையை எதிர்த்தல்
மொன்று கூடியவுடனே, சட்டத்தால் உறுதியாக்கப்படும் சமயப்
பொறுமையை அளிப்பதாகத் திருச்சபை வாக்களித்தது. இணங்கா தார், ஒருபுடை, அரசவதிகாரத்தைவிட்டுப் பாராளுமன்ற வதி காரத்தைத் தாம் வழக்கமாக விரும்பியதாலும், மறுபுடை, பிரான் சியக் கொடுங்கோன்மையின் தன்மையினதாகிய உரோமன் கத்தோ விக்கக் கொடுங்கோன்மைக்கு அஞ்சியதாலும் திருச்சபை அளித்த குறைவான கவர்ச்சியுடையனவும், ஆயினும், மிகக் குறைவான அபாயமுடையனவுமான கொடைகளை ஏற்றுக்கொண்டனர்.
அரசன் ஆங்கிலக் கிறித்துவக் குருமாரின் சொத்துக்களையும், வரியிலா நிலங்களையும் இப்போது வெளிப்படையாகத் தனதாக்கி ஞன். உயர் விசாரணை மன்றம் திருச்சபையைத் துன்புறுத்தற்குரிய அரசனின் FITB, GOTLD tras, சட்டத்துக்கு மாமுகப் புதுப்பிக்கப்பட்டது. இலண்டனின் சமயத் தலைவரான கொம்பிற்றன் என்பார் புரட் டெசுத்தாந்தவாதிகளின் வாயையடக்குதற்கு மறுத்தமைக்காகத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். பெருந் தொகையான திருச்சபை மானியங்களை உரோமன் கத்தோலிக்கர் நியைப்பெற்றனர். ஒக்சுபோட்டிலுள்ள மோற்வின் கல்லூரி அங்கத் தவர் தம் உரிமைகளிலிருந்து சட்டவிரோதமாக விலக்கப்பட்டார் ; அன்றியும், அவர்தம் கல்லூரியும் உரோமன் கத்தோலிக்கக் குரு மாரின் பயிற்சிப் பாடசாலையாக மாற்றப்பட்டது. இக்கொடுஞ் செயலின்விளைவு ஒக்சுபோட்டுக்கும் ஆங்குள்ளார்தம் கருத்துக்களை எதிர்பார்த்திருந்த எவர்க்கும் மிகப் பெரியதாகும். இது இணக்கத் துக்கும் தெய்வீக உரிமைக்கும் உரித்தான அரணுகிய ஒக்சு போட்டை ஒரு புரட்சி செய்யும் நகரமாக மாற்றியது. அந்நகரத் தின் பெருவீதியில் ஒறேஞ்சுநாட்டுப் படைக்கொடி,ஆங்கில வரலாற் றில் மிக முக்கியமான குளிர்காலம் முழுதும் பறந்துகொண்டி ருந்தது.
கடைசியாக உரோமன் கத்தோலிக்கர்க்கும் இணங்காதார்க்கும் மாமுன சட்டங்களை நிறுத்தி வைத்ததும், நாட்டு நிர்வாகத்துக்கும், படைக்குமுரிய பதவிகளில் அவர்களுக்கு இடங்கொடுத்ததுமான அரசனின் மன்னிப்புப் பிரகடனத்தைக் கோவிற் பிரசங்க பீடங் களினின்று வாசிக்க வேண்டுமென்று குருமாரெல்லோரும் கட்டளை யிடப்பட்டனர். குருமார் இந்த அறிக்கையைச் சட்டவிரோதமான தென்று கொண்டுள்ளனரென்று, எல்லோரும் அறிந்திருந்ததனுல் அதனை வாசிக்க இட்ட கட்டளை அவர்களை அவமானப்படுத்தற்குச் செய்த சூழ்ச்சியாகும்; ஆனல், அவர்கள் யாவரும் ஒருசேர நில்லா விட்டால், உயர்விசாரணை மன்றம், கீழ்ப்படிய மறுத்தவர்களைத் தம் பதவியை இழக்கச் செய்துவிடும். கந்தபெரித் தலைமைக் குருவான சான்குரோத்துவின் தலைமையில் ஏழு சமயத் தலைவர்கள், கட்ட
53
687.
1688-1689.

Page 88
54
gór 30, 1688.
யூன் 10, 1688.
இடான்பியும் தோரிகள் மனமாற்றமும்
ளைக்கு மாமுக அரசனுக்கு விண்ணப்பஞ் செய்தனர். அாசக்துரோக மான அவதூறென்றை வெளியிட்டதற்காக அவர்களை நீதி விசா ாணைக்கு அனுப்பவேண்டுமென்பதே அவ்விண்ணப்பத்துக்கு அா சன் கொடுத்த விடையாகும். ஏழு சமயத்தலைவர்களையும் நீதி விசா ரணை செய்ததும், அவர்களை நடுவர் விடுதலை செய்ததும், மக்களிடத் துண்டான கிளர்ச்சியை உச்சநிலையடையச் செய்தன; மேலும், அன்றிாவிற்முனே உவிக்குத் தோரிக் கட்சிகளின் தலைவரான எழு வர் கைச்சாத்திட்ட அழைப்பொன்று ஒறேஞ்சு நாட்டு உவிலியத் துக்கு அனுப்பப்பட்டது. அவனின் பிரதிநிதிகள் கடந்த சில கால மாக இங்கிலாந்தில் பலதிறப்பட்ட கருத்துக்களுக்குத் தலைவரா யுள்ளாரோடு நெருங்கிய தொடர்புடையாாயிருந்து வந்தனர்.
வேல்சின் இளவரசனுக ஒரு பிள்ளை பிறந்தமை, அப்பிள்ளையின் இன அடையாளத்தைக் குறித்து அவனுடைய பகைவர் பலவாண்டு களாக அநியாயமாக வாதிட்டபோதும், சேமிசுவின் இறப்போடு
அவனது பூட்கை முடிவடையாதென்பதற்கு ஓர் எச்சரிக்கை
யாய்ப் பயன்பட்டது. அரசுரிமை பெறுபவர் புரட்டெசுத்தாந்த மேரியுமல்லர், ஆனுமல்லர்; ஆனல் அவர்களின் புதிய கத்தோலிக்க உடன்பிறப்பாளராவர். இச்செய்தியே ஈற்றில் தோரிக் கட்சிப் பெரும்பான்மையோரை, இணக்கத்தைக் குறித்து அவர்கள் கொள் கைகளை மீண்டும் புனராலோசனை செய்யும்படி செய்தது. கட்சியின் இந்த மனமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவன் அதனை நிறுவிய வனும் செயல்விரனுமான இடான்பி என்பவனேயாவான். அவனே பதவி நீக்கப்பட்டிருந்த சமயத்தலைவரான கொம்பிற்றன், வேருெரு
தோரிப்பிரபு, நான்கு உவிக்குத் தலைவர் ஆகியோருடன் இளவரச
லுக்கு அனுப்பிய அழைப்புக்குக் கைச்சாத்திட்டவணுவான்.
உவிலியத்தின் முயற்சிக்குத் தடையாகவிருந்த அபாயங்களும்,
V தொல்லைகளும் எண்ணற்றனவாகும்; அவற்றில் அரைவாசி ஐரோப்
பாவுக்கும், மற்ற அரைவாசி இங்கிலாந்துக்கு முரியனவாகும் ; அவை எத்தன்மையுடையனவென்றும், பூட்கையையும் நல்வாய்ப் பையும் அருமையாக இணைத்து எவ்வாறு அவைகளைத் தவிர்க்க முடியுமென்றும் அவன் மாத்திரமே தெரிந்து கொண்டான். அவற்றைத் தவிர்க்க முடியாவிடில், ஐரோப்பாவில் உலூயிக்கு மாமுய்த் தான் மிக நீண்ட காலத்துக்கு வெற்றிபெற முடியாதென் அறும் அறிந்தான்; ஆகையினல், அவன் பயமின்றித் துணிவுகொள்ள முடிவுசெய்தான். இங்கிலாந்து அவனை வேண்டிநின்ற அளவுக்கு அவனும் இங்கிலாந்தை வேண்டிநின்றன். அன்னியோன்னியமான இந்தச் சார்பு அவனின் இறப்புவரையும் இங்கிலாந்துக்கும் அவனுக் குமிருந்த மனப்பற்றுக்குக் காரணமாயிருந்தது.

புரட்சி
உவிலியத்தின் படையெடுப்பைப் பெரும்பாலும் தடுக்கக்கூடிய தாயிருந்த அபாயம் ஒல்லாந்துக்கு மாமுய்ப் பிரான்சியப் படை கள் வெளிப்படுத்திய எதிர்ப்புணர்ச்சியேயாகும். இவ்வபாயத்தைச்
சேமிசு தானே அகற்றிவிட்டான். உலூயியின் உதவி உண்மையாகத்
தேவைப்பட்ட ஒரேயொரு தருணத்தில் அதனை வெளிப்படையாய்ப் புறக்கண்த்தமையால் உலூயியின் பகைமையை அவன் சம்பாதித் துக் கொண்டான். ஆகையினுல், உவிலியம், மன்மதுவின் படுதோல்வி போன்றதொன்றுக்கு மாறுபாடாகத் தன்னைக் காத்தற்கு வேண்டிய அளவு பெரியதும் ஐரோப்பாவிலுள்ள புரட்டெசுத்தாந்த வகுப்புக் களெல்லாவற்றிலுமிருந்து திரட்டியதுமான சேனையொன்றைத் தோபேய்க்குக் கொண்டுவர ஒல்லாந்தின் கடலிலும் தரையிலு முள்ள படைகளைப் பயன்படுத்தக் கூடியவனுயிருந்தான். மொங்கு வைப்போல, அவன் கட்டுப்பாடற்ற பாராளுமன்றம் ஒன்று வேண்டு மென்று வெளிப்படையாகக் கூறினன். அதனிடம் விவாதத்துக்குரிய எல்லா விடயங்களையும் சமர்ப்பித்தான். சேமிசுவின் சேனையிலுள்ள புரட்டெசுத்தாந்தர் அங்குள்ள கத்தோலிக்கருக்கு மாமுயும், ஆங்கி லேயர் அயலாந்தருக்கு மாமுயும் கட்சிகளாகப் பிரிந்திருந்தனர். அச்சேனையை வருங்காலத்தில் மாள்பரோ என வழங்கிய யோன் சேச்சிலும், அதன் தலைவரான ஏனையோரும் ஆபத்தான வேளையில் கைவிட்டனர். அச்சேனை அடைந்த குழப்ப நிலைமையின் பேருக, சேமிசு சண்டை செய்யத் துணிந்திலன். உவிலியம் பல நியாயங் களுக்காகச் சண்டையைத் தவிர்க்க ஆவலுள்ளவனுயிருந்தான். ஒவ் வொருநாளும் அவனுடைய பலம் அதிகரித்துக்கொண்டு வந்தது. நாட்டுப் பொதுமக்கள் அவனுடைய படைக் கொடியின்கீழ் வந்து கூடினர்; அவனின் கட்டுப்பாடற்ற பாராளுமன்றத் திட்டத்துக்கு உடன்பட்டு நின்றனர். இடான்பி தானே வடபாலெழுந்த கலகத்துக்
குத் தலைவனனன் ; தோரிக் கட்சியில் இரண்டாவதாக மிகப்பெரிய
தலைவனுன சேய்மூர் என்பான் உவிலியத்தின் பாசறைக்கு உவெ செட்சு மக்களை வரவழைத்தான் ; அதே சமயத்தில் தெவன்சயரி லுள்ள உவிக்குக் கட்சியினர் மத்திய நிலத்தவரை ஒழுங்காக அமைத்தனர்; இலண்டனின் குழப்பக்காரரும் தலைவனுெருவனுமில் லாமலே புரட்சி செய்தனர்.
55
நவெ. 5,
1688.
சேமிசு தானகவே நாட்டை விட்டு ஓடி, பிரான்சிய அரண்மனை திசெ. 1688.
யில் தன் மனைவியோடும் ஆண்குழந்தையோடும் தஞ்சமடையச் சென்றிராவிட்டால், அப்பொழுதுகூட அவனை ஆட்சிப்பீடத் திலிருந்து விலக்கியிருக்க முடியாதிருந்திருக்கலாம். அரசனின் தெய் வீக உரிமைக்காகத் தோரிக் கட்சியினர் கொண்ட மனவெழுசசி அத்தகைய உறுதியுடையதாகும்.

Page 89
மாண்புறு புரட்சி'
1688-1689 ஆம் ஆண்டுவரையும் நடந்த புரட்சியைப் பல தலை முறைகளாக எம்மூதாதையர் 'மாண்புறு புரட்சியென்று பேசி வந்தனர். அதன் மாட்சி, போர்த்தொழில் எதனிலும் அல்லது ஆங் கில மக்களின் சிறப்பான பராக்கிரமச் செயல்கள் எவற்றிலும் அல் ologil. Al- அரசனுெருவனிலும் பார்க்க நாட்டு மக்கள் வலிமைமிக் குடையரென்று நிறுவிய உண்மையிலும் அமைந்திருந்ததன்று. அந்நிய கடற்படையும், தரைப்படையும் அவை எவ்வளவு விரும்பத் தக்கனவும் சிநேகமுள்ளனவுமென்ருலும், ஆங்கில மக்கள் மூர்க்க மான தம் கட்சிச் சண்டைகளால் தாறுமாமுகச் செய்திட்ட உரிமை களை மீட்டுப் பெறுதற்குத் தேவைப்பட்டன என்பது, உண்மையில் அவமானத்துக்கிடமானது. பிரித்தானிய புரட்சியில் குருதி சிந்தப் படவில்லை ; உள்நாட்டுப் போர் ஆங்கில்லை ; கொலையில்லை ; எதுவும் சட்டவிரோதமாக்கப்படவில்லை ; எல்லாவற்றிலும் மேலாக, மக்களை யும் கட்சிகளையும் நீண்டகாலத்துக்குப் பெருவிரோதத்தோடு பிரி த்து வைத்த அரசியல் சமயங்கள் பற்றிய வேறுபாடுகளையிட்டு இரு டன்படிக்கை மக்கள் சம்மதத்தோடு நிறைவேறியது. ஆகவே, இவற்றிற்முன் அப்புரட்சியின் உண்மையான புகழ்' அமைந்துள் ளது. 1689 ஆம் ஆண்டின் உடன்படிக்கை காலச்சோதனையைக் கட
ந்து நின்றது. அது பிரித்தானியாவில் முன் எப்பொழுதாவது அறிந்
கிருந்த சுதந்திரத்திலும் மேலாகப் பரந்ததும் புதியதுமானதொன்
அறுக்கு வழிகாட்டியதோடமையாது, மக்கள் மத்தியிலும், பேராசின் ஆட்சியிலும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுக்கும் தகுதிக்கும் வழி
காட்டியுள்ளது. அரசுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையில் நெடுங் காலமாக நிகழ்ந்துகொண்டிருந்ததும் அத்தாபனங்களின் சத்தி களை உறிஞ்சிக் கொண்டிருந்ததுமான போட்டி, பாராளுமன்றத் தைத் தலைமையான பங்காளியாகக் கொண்டு அவ்விருதாபனங்
களும் நிறுவிய கூட்டுறவாக மாறியது. பதினேழாம் நூற்ருண்டில் காணப்பட்ட இங்கிலாந்தின் வலிமைக்குறைவு நீங்கி அந்நாடு மாள் பரோ, உவால்போல், சதாம் ஆகியோரின் தொடர்ச்சியான ஆட்சிக் காலங்களில், போர்ப் படைகள், குடியேற்ற நாடுகள், வணிகம், அர
சியல் சமயங்களுக்குரிய சுதந்திரம், அறிவாற்றல் ஆகியவற்றில் உல
கத்தில் தலைமைவகிக்கும் நாடாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்க அளவு
வளர்ச்சியுறுவதாயிற்று.
1689 ஆம் ஆண்டிலிருந்த மக்கள் வீரரல்லர். அவர்களிற் சிலரே
நேர்மையுடையர். ஆனல், அவர்கள் மிக அறிவுத்திறமை வாய்ந்த
வர்கள். கொடிய அனுபவத்திற் பயிற்றப்பட்டவராதலால், அவர்கள்
இம்மேலான அவசரநிலையில் மிதமான போக்கும் பகுத்தறிவு முள் ளவராகவே நடந்துகொண்டனர். மிகுந்த அறிவுடையோரும் ஸ்ப் போதும் இத்தகைய ஒழுங்கோடு நடந்து கொள்வர் எனக் கூற

பாராளுமன்றம் அரசனைத் தேர்தல்
முடியாது. பிரான்சு எம்மோடு போரிட ஆயத்தமாயிருந்தது ; கொத்துலாந்து பிரிந்திருந்தது; அயலாந்து இழந்த பொருளா யிற்று. இவ்வாருகிய நிலையிற்முன், 1689 ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் நாட்டினை எதிர்நோக்கியிருந்த அபாயமானது உவிக் குத் தோரிக் கட்சிகளின் ஒன்றுக் கொன்றெதிரான கொள்கை களுக்கும் கட்சியுணர்ச்சிகளுக்கு முரியதும், நாம் புரட்சி உடன் படிக்கையென்று வழங்குவதுமான பிரசித்திபெற்ற ஒப்பந்தத்தை மரபுப் பாராளுமன்றத்திலுண்டாக்க அவர்களைத் தூண்டியது. அது, திருச்சபைக்கும் அரசுக்குமுரிய ஆங்கில நிறுவகங்களின் உறுதி யான அடிப்படையாக, சீர்திருத்தச் சட்டகாலம் வரையும் கிட்டத் தட்ட மாற்றமின்றியிருந்து வந்தது.
முந்திய இலையுதிர் காலத்தில், எதிர்ப்பின்மைக் கொள்கையை ஏலவே கைவிட்ட தோரிக் கட்சியினர் பெப்புருவரித் திங்களில் தெய் வீகப் பாம்பரையுரிமையையும் கைவிடத் தாம் வற்புறுத்தப்பட் டதை யறிந்தனர். அவர்கள் அரசு கட்டிலேறும் உரிமையொழுங்கில் பாராளுமன்றச் சட்டமூலம் சிறு மாற்றஞ் செய்யப்படல் வேண்டு மென்பதை ஒப்புக் கொண்டனர். இது முதற்கொண்டு பாராளுமன் றம் 'தெய்வீகத் தன்மையுடையதாயி "ராவிட்டால், ஆங்கில வாச ரின் ஆட்சியுரிமை மனிதனுல் ஏற்படுத்தப்பட்ட ஒன்ருகும் தருக்க ரீதியான இத்தோல்வியை விலக்குதற்கு, தோரிக் கட்சியினர் பலர் சேமிசுவின் பெயரில் அரசபிரதிநிதி யொருவனை விரும்பியிருப்பர் ; மேலும், சேமிசுவின் மகளான மேரி தன் நாயகனை அரசியின் கணவனென்ற நிலையில் மாத்திரம் வைத்துக்கொண்டு, அவளே தனி யாக ஆளவேண்டுமென்று இடான்பிசுட விரும்பினன். ஆனல், இவ்வொழுங்குகள் செய்வதற்கியலாதனவென்று தோன்றியபோது, தேசீய அபாயம் பற்றிய உணர்ச்சியினல் தோரிக் கட்சியினர் அரசு கட்டிலேறும் உரிமையொழுங்கை மாற்றச் சம்மதித்தனர். அம்மாற்ற மென்னையெனில், உவிலியம் மேரி ஆகியோரில், நிர்வாக வதிகாரத் தைக் கணவனுக்குக் கொடுத்து அவ்விருவரையும் கூட்டாக அரசுரி மைக்கு உரியராக்கியதேயாகுமென்க.
தோரிக் கட்சியினர் பலர், உண்மையில் தம் கொள்கைக்கு மாமுக, நடைமுறையில் உரோமன் கத்தோலிக்கனுெருவன அரசு கட்டி லேருது விலக்குதற்கு வேண்டிய அவசியத்தை மிகக் கடுமையாக வுணர்ந்தனர். அதன்பேருக, உவிலியம், ஆன் ஆகியோருக்குப் பின்னர் புரட்டெசுத்தாந்தத்துக்குரிய அனேவர் வமிசத்துக்கு அரசவுரிமையை அளித்த அரசுரிமை நிர்ணயச் சட்டத்தை அங்கீ கரித்தலை அவர்கள் 1701 ஆம் ஆண்டில் ஆளியின் தலைமையில் மேற் கொண்டனர். வலதுசாரிக் கட்சி மாத்திரம் யக்கோபியரைச் சார்ந்து நின்றது. மேலும், மேற்றிருச்சபைத் தலைமைக் குருமார்
157
Quu., 1689

Page 90
58
சமயப்பொறை விதி
பெருந் தொகையினர், சான்குருேத்துவும் உட்பட, நடுவர் நிலையி லிருந்து விலகி மனச்சாட்சிக்காகத் தம் அதிகாரத்தையும் முன் னேற்றத்தையுங் கைவிட்டு, உவிலியத்துக்காக உறுதிமொழி கூற மறுத்தனர். நம்பிக்கையுள்ள இந்த மக்கள் சிலரின் குற்றச்சாட்டுக் கள் அவர்களுடைய மிகவும் இணக்கமான இனத்தாரைச் சமாதான மற்றவராக்கியுள்ளன. தோரிக் கட்சியினர், புரட்சி உடன்படிக்கை யில் பொதுவாகப் பற்றுடையாாயிருந்த போதும், தம் மனவுறுதிக் கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்பட்டபோதும் அந்நிலையிலேயே யிருந்தனர். அவர்களிடத்தே இக்காலக் கருத்துக்களுக்கியைந்த தும், உவிக்குக் கட்சியுள் ஏற்பட்ட மாற்றத்தைவிட அதிக துன்பத் தோடு கூடியதுமான நுண்ணிய மாற்றமொன்று நிகழ்ந்துகொண் டிருந்தது. அது, ஆன் அரசி இறக்குங் காலத்தில், தோரிக் கட்சி
யின் பிளவுக்கும் அழிவுக்கும் காரணமாயிற்று.
ஆனல் மற்ற வகைகளில் தோரிக் கட்சிச் சத்திகள் திருச்சபை யிலும் அரசிலும் தம் பகைவரைத் துன்புறுத்தும் அதிகாரத்தை விடப் புரட்சியினுல் வேறெதையும் இழந்தில. திருச்சபை ஆங்கிலக் கிறித்துவத்துக்குரியதாகவேயிருந்தது; மேலும், மிதமான இணங் காநாரை உள்ளடக்கும்பொருட்டு அத்திருச்சபையின் எல்லைகளை விரிவாக்கச் செய்த கடைசியான முயற்சி 1689 ஆம் ஆண்டில் வலி யிழந்தது. ஆனல், அவ்வாண்டின் சமயப் பொறைவிதி புரட்டெசுத் தாந்த இணங்காதார்க்குச் சமய வழிபாட்டுரிமையைப் பல கட்டுப் பாடுகளோடு அளித்துள்ளது. அக்கட்டுப்பாடுகள் இன்று விந்தை யாகத் தோன்றும் ; ஆணுல் அவை, சமயப் பொறுமையைப் பலர் ஒரு சிறந்த கோட்பாடல்லவென்றும், தவமுன நம்பிக்கையோடு
செய்து கொள்ளும் இன்றியமையாத ஒப்பந்தமென்றும் மதித்த
காலத்தில் இருதிறத்தாரும் இணங்குதற்கு அவசியமானவை யாகும்.
யக்கோபியரின் கட்சிக்கு மிகுந்த ஆதரவாயுள்ள உரோமன் கத் தோலிக்கக் கூட்டத்தினர் தம்மைப் பின்பற்றியவர்களுக்குச் சட்ட பூர்வமான உதவி எதுவும் பெற்றுக்கொடுத்திலர் ; அவர்களுக்கு மாருகக் காலத்துக்குக் காலம் புதிய சட்டங்களும் அங்கீகரிக்கப்பட் டன. ஆனல், உவிலியத்தின் பூட்கையும், அக்காலத்தின் போக்கும் ஆகிய இரண்டும் இங்கிலாந்தில் நடைமுறையில் ஒரளவு கட்டுப் பாடற்ற சமய வழிபாட்டை அவர்களுக்கு அளித்தன. கொடிய தண்டனைச் சட்டங்கள் பெரும்பாலும் நடைமுறையிற் பயன்படுத் தப்படவில்லை. மேலும், அவை யக்கோபியருக்காக எழுந்த கலகக் காலங்களில் அரைகுறையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தனிப்பட்டோர் விடுகளிற் செய்த வழிபாடு எப்போதாயினும் தடைசெய்யப்பட்டிலது. பொதுமக்களுக்குரிய கோவில்கள் கட்டப்

உவிக்குக் கட்சியினர் பேறுகள்
பட்டன; குருமாரும் சட்டங்களுக்கு மாமுய் வெளிப்படையாய்ச் சுற்றித் திரிந்தனர். அவ்வாறே வளர்ச்சியுறுங் கூட்டமான திரித்து வக் கோட்பாட்டை மறுத்த கிறித்துவருக்கு மாமுன சட்டங்களும் அமைதியாகக் கைவிடப்பட்டன. புதிய காலத்தின் வாய்ப்பான குழ்நிலையில் பொறைச் சட்டத்தின் சாாம் மிக விரிவாகப் பயன் படுத்தப்பட்டது.
சமய வழிபாட்டுச் சுதந்திரம் சில விலக்குகளோடு, உண்மையில், வெற்றிபெற்றது. ஆனல், சமயச் சோதனைகள் பத்தொன்பதாம் நூற்றண்டுவரையும் நன்முக நடத்தப்பட்டு வந்தன. ஆங்கிலத் திருச்சபையின் சடங்கு விதிகளுக்கேற்றவாறு நற்கருணை பெருத புரட்டெசுந்தாந்தசோ உரோமன் கத்தோலிக்கரோ அரசியல் அல் லது நகர நிர்வாக சபைகளில் பதவி வகிக்காது இன்னும் தடுக்கப் பட்டனர் : உரோமன் கத்தோலிக்கருக்குப் பாராளுமன்றத்துக்குச் செல்லுமுரிமையும், எவ்வித இணங்காதார்க்கும் பல்கலைக்கழகங்க எதிர்ப்பு ஆகியவற்றின் வெற்றியில் அமைந்துள்ளதோடு, ஆங்கிலப் திருச்சபை ஒரு துன்புறுத்துங் கூட்டமாயிருந்திலது ; ஆனல், வருங்கால முழுதும் அரசியலுக்கும் கல்விக்குமுரிய தனிப்பட்ட உரிமைகளையுடையதாகவிருந்தது. அவற்றை உவிக்குக் கட்சியினர்
முதலிரண்டு யோச்சரசரின்கீழ் தம் அதிகாரம் மேலோங்கியிருந்த
காலத்தில் மாற்ற ஒருபோதும் துணிந்திலர்.
இப்படியாக, அரசுக்கும் திருச்சபைக்குமுரிய முதன்மையான நிறுவகங்கள் 1660-1 ஆம் ஆண்டு அடிப்படைகளில் நிலைத்துவந் தன; அன்றியும் அவை உலிக்குக் கட்சிக்குரிய மாற்றமெதையும் அடையவுமில்லை. புரட்சியில் உவிக்குக் கட்சியினர் பெற்ற வெற்றி அவர்தம் கோட்பாடுகளான சமயப் பொறுன்ம, அரசவதிகார எதிர்ப்பு ஆகியவற்றின் வெற்றியில் அமைந்துள்ளதோடு ஆங்கிலப் புரட்சியும், பதினன்காம் உலூயியின் அதிகாரத்துக்கும் கொள்கைக் கும் அப்புரட்சி இட்ட தடையும் காரணமாக, முழுவுலகமும் மேற் கொள்ளவிருந்த இக்காலத்துக்கேற்ற நிலைமை பரந்த மனப் பான்மை, பாராளுமன்ற ஆட்சி ஆகியவற்றை நோக்கியெழுந்த பொதுப் போக்கிலும் அமைந்துள்ளதாகும்.
1715 ஆம் ஆண்டில் அனேவர் வமிசத்தின் ஆட்சித் தொடக்கத் தில் உலிக்குக் கட்சியினர் தாம் பெற்றதுபோன்றதொரு பதவிச் சிறப்புரிமையை 1689 ஆம் ஆண்டில் பெற்றிலர். அவர்கள் தோரிக் கட்சியினரிலும் பார்க்க உலிலியத்தை மேலாக ஆதரிக்கக் கட மைப்பட்டிருந்தபோதிலும், உவிலியம் எவ்வகையிலும் அவர்களின்
தலைவனல்லன்; ஏனெனில், அவர்கள் யக்கோபியருக்காக உண்டான மீட்சியில் மிக அதிகமாக நட்டமடைந்தவராதலினென்க. ஆனல்,
159

Page 91
160
புரட்சி நிர்ணயம்
உவிலியம் உலூயியை வெல்லத் தனக்கு உதவியளிக்கும் மக்களையே தேடினன். அவர்கள் உலிக்குக் கட்சிக்கோ தோரிக் கட்சிக்கோ உரிய சென்பது பற்றி அவன் அக்கறையற்றவனுயிருந்தான். மேலும், 1690 ஆம் ஆண்டில் உலிக்குக் கட்சியினர் புரட்சி இணக்கத்தின் போக் கினை மறுக்கவும், தம் பழைய கட்சிக் குற்றங்களுக்காகத் தோரிக் கட்சியினர்மேற் பழிவாங்கவும் முயன்றபோது, அவன் பாராளுமன் றத்தைக் குலைத்துவிட்டு, அவர்களுக்கு மாமுய்த் தனக்கு வாய்ப்
பாக மக்களிடம் முறைப்பட்டான்.
அவனையடுத்து வந்தவளான ஆன் என்பாள் உவிக்குக் கட்சியின ரிலும் தோரிக் கட்சியினரை மிகப் பெரிதும் விரும்பினுள். உண்மை யில், முதலாம் யோச்சரசனின் வருகைக்குமுன், உவிக்குக் கட்சியி னர் அவர்தம் மாற்ருருக்கு மேலாகக் கொண்டுள்ள ஒரேயொரு நல் வாய்ப்பு என்னவெனில், அவர்கள், நிரந்தரமான சேனையையும், அதிகமான நிலவரியையும் வழக்கமாக வெறுத்த தோரிக் கட்சிப் பெருஞ் செல்வரிலும் மேலாக, பதினன்காம் உலூயியிக்கு மாருய்த் தரைப்போரை நடத்த ஒன்றித்த உற்சாகமுடையராயிருந்ததே யாகும.
ஆனல் குறித்த புரட்சியானது, நாட்டையே அழித்துவிடக்கூடிய அளவு விரோதமுடைய இரு பெருங் கட்சிகளுக்கு நலமாக நியாயந் தீர்த்தலினும் மேலானதொன்றை நிறைவேற்றியது. அது பாராளு மன்றத்துக்கும் அரசுக்குமுள்ள சமநிலையைப் பாராளுமன்றத்துக்கு அனுகூலமாகத் தீர்த்துள்ளது; ஆனல், அது அரச சட்டத்தோடு இணக்கமுள்ள ஒரு நிர்வாகத்தை இங்கிலாந்துக்களித்தது. காலக் கிரமத்திற்முன் அப்புதிய இயக்கத்தின் நுண்ணிய விவரங்கள் அமைச்சர் சபை அமைப்பினதும் முதலமைச்சரின் பதவியினதும் வளர்ச்சியினல் திட்டவட்டமான உருவம் பெற்றன. ஆனல் 1689 ஆம் ஆண்டிலும் அப்பாலும் எந்தவரசனும், மூன்மும் யோச்சு தானும் தன் இளமையில், பாராளுமன்றமின்றியோ பொதுமக்கட் சபையின் வாக்குரிமைக்கு மாருகவோ எப்போதாயினும் ஆட்சி செலுத்த முயன்றிலன். பாராளுமன்றத்தை வசப்படுத்தல் ஒன்று; அதனை எதிர்த்து நிற்றல் மற்முென்று.
எவ்வாசனேனும் இங்கிலாந்தின் ஊர்களுக்குரிய உரிமைகளை அசட்டை செய்யப் பின் ஒருபோதும் முயன்றிலன். உண்மையில், பதினெட்டாம் நூற்றண்டில் மத்தியவரசாங்கம் சமாதான நீதிபதி களுக்கு மிகவும் அடங்கியதாயும், சாசனவுரிமை பெற்ற நிறுவனம் எதிலும், சுயநலப் பற்று ஒழுங்கீனங்கள் என்பனவற்றைப் பொருட்

புரட்சி நிர்ணயம்
படுத்தாவியல்புடையதாயும் மாத்திரமே அமைந்துள்ளது. கட் டுப்பாடற்ற அதிகாரத்தின்மேற் சட்டம் கொண்ட வெற்றியா னது மனித இனத்துக்குப் பொதுவாக ஒரு மிகப்பெரிய பேருகும். ஆனல், அடுத்த நூற்றண்டுகள் வரையும், அதற்கு மேலும், சட்டத் தின் வெற்றியும் வேரூன்றிய நலன்களும் பிளாக்கிதோன், பேக்கு, எல்டன் . ஆகியோரின் காலங்களிலிருந்ததுபோல எதைப்பற்றியும் மிதமிஞ்சிய வியப்பை உண்டாக்கியுள்ளன ; அவர்கள் யாவரும் பழமையிற் பற்றுள்ள பெரிய புரட்சியை மனித நடவடிக்கைகளின் கடைசியான அளவுகோலென மதித்தனர். இரண்டாம் சேமிசு நாட் டின் நிறுவகங்களை அழிக்க முயன்ற காரணத்தினுல், அவற்றைத் திருத்துவதை வேறெவரும் நெடுங்காலமாக மேற்கொள்ள முடியா திருந்தது.
கட்சிச் சார்பான நியாயங்களெவற்றிற்கும் புறம்பாக்கப்பட்ட நீதியும் மனித இனமும் சேமிசு, செபிறிசு ஆகியோரின் குறிப்பிடத் தக்க வீழ்சியினல் பெருநன்மையடைந்தன. அரசின் இச்சைப்படி நீதிபதிகளை நீக்குதல் நிறுத்தப்பட்டது. குற்ற விசாரணைகள் நேர் மையோடும், பொதுவாகப் பண்போடும் நடத்தப்பட்டன. இரக்க மற்ற சவுக்கடியும் பெருந்தொகைத் தண்டப் பணமும் கட்சி அாசி யல் முறையின் வழக்கமான கருவியாயில்லாது ஒழிந்தன. 1695 ஆம் ஆண்டில் அச்சகத்தை அடக்கும் அதிகாரம் அழிந்துபோக விடப் பட்டது; அதனுல் உத்தரவின்றி அச்சிடும் உரிமையாகிய மிலிற் றனின் கனவு இங்கிலாந்தில் நனவாயிற்று. ஆற்றல் வாய்ந்த உவிக் குத் தோரிக் கட்சிகளின் சமநிலை, ஒவ்வொரு பக்கத்திலுமிருந்து
அரசாங்கத்தைக் குறைகூறியவரைப் பாதுகாத்தது. கிளாறெண் டன் சட்டத் தொகுப்பின் கீழ் துன்புறுத்தலை நிறுத்தியமை
தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த துன்பம், பகைமை, அநீதி ஆகியவற்றை ஒழித்துவிட்டது. ஆயிரமாண்டுகளாக நிலவிய, சம யம் எனின் அது கொடுமை விளைக்க வேண்டுமென்னும் கருத்து அற்றுப் போயிற்று. அதற்குக் காரணமென்னவெனில், சிந்தனைக் குரிய விடயங்களைப்பற்றி மனிதர் வேறுபட்ட எண்ணங்களையுடை யாாயிருத்தல் அவர்தம் திருத்தமுடியாத இயல்பாகுமென்ற அடிப் படையுண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதேயாகுமென்க. மாற்றமுடி யாத அந்த உண்மைபற்றி இக்கால அரசு, மத்தியகாலத்திருச்சபை போல, தன் மண்டையை வீணுக உடைத்துக் கொண்டது. தனிப் பட்ட ஒருவனின் மனச்சாட்சிக்குக் கிடைத்த இவ்வெற்றியின் மறை முகமான விளைவுகள் பாரதூரமானவையும் எண்ணிறந்தவையு
16.

Page 92
162
IᏮᏮ0-1Ꮾ85 .
கொத்துலாநதும் அயலாந்தும்
மாகும். இவைகள், நியாய விரோதத்துக்கும் அரசியல் பற்றிய நல் லெண்ணத்துக்குமிடையே ஒட்டுவேலைபோன்ற அந்த விந்தையான இணக்கத்தை உருவாக்கிய உவிக்குத் தோரிக் கட்சிகளுக்குரியரின் வாழ்நாளில் வெளிப்படுத்தப்பட்டில. அந்த இணக்கத்தின் விளைவே
1689 ஆம் ஆண்டுச் சமயப் பொறைச் சட்டமாகும்.
அத்தியாயம் VIII
மீட்சிக் காலத்திருந்து ஆன் அரசிகாலம் வரையும் கொத்துலாந்தும் அயலாந்தும்,
ஈருடன்படிக்கைகள்.
குருெம்வெலின் போர் நடவடிக்கைகள் கொத்துலாந்திலும் அய லாந்திலும் ஆங்கிலேயராட்சியை நிலைநாட்டி விட்டன : அன்றியும் இரண்டாம் சாள்சு மீண்டும் வந்ததனுல் பிரித்தானிய தீவுகள் மேற் கொண்ட அரசியற் கட்டுப்பாட்டின் ஒற்றுமைக்கு முடிவேற்பட வில்லை. 1660 ஆம் ஆண்டு தொட்டு 1690 ஆம் ஆண்டுவரையும் அய லாந்துக்கும் கொத்துலாந்துக்குமுரிய அலுவல்கள் இங்கிலாந்தின் புரட்சியான மாற்றநிலைமைகளை யொட்டியே நடைபெறுவனவாயின.
இரண்டாம் சாள்சின் ஆட்சி முழுவதும் கொத்துலாந்தை அதன் கோமறைக் கழகம் எடின்பரோவிலிருந்து ஆட்சி செய்து வந்தது; ஆனல், அக்கழகம் வயிற்முேலின் குறிப்பின்படி நடந்தது; மேலும், அது கொத்துலாந்துப் பாராளுமன்றத்தினதோ திருச்சபைக் கூட் டத்தினதோ கட்டுப்பாட்டுக்கமைந்திலது. ஆதலினல், இங்கிலாந் தோடும், அதன் குடியேற்ற நாடுகளோடுமிருந்த கட்டுப்பாடற்ற வர்த்தகமானது விரும்பத்தகாத விதமாக அழிந்ததை விட, தேசீய சுதந்திரத்தின் உண்மையான மீட்சி ஆங்கில்லை. பாராளுமன்றம் கோமறைக் கழகத்துக்கு முற்முகக் கீழ்ப்பட்டிருந்தது; அன்றியும், மக்களின் எண்ணிறந்த தொல்லைகளைக் குறித்துத் தன் கருத்தினை வெளியிட முயற்சியுஞ் செய்திலது.
மிடிலித்தன், உருேதேசு, உலோதாேல் ஆகியோரின் காலங்களில் கொத்துலாந்தை ஆட்சி செய்த கோமறைக் கழகம் கவலியர் நலனை ஆதரித்தலில் அல்லது அங்கீகரித்தலில் நம்பிக்கை கொண்டிருந்தது. மொந்துரேசின் மரபுமுறைகளையுடைய கொத்துலாந்துக் கவலியர்,
1. புரட்சி உடன்படிக்கை பதினெட்டாம் நூற்றண்டில் எவ்வாறு உருப் பெற்றுச் செயற்பட்டதென்பதைப்பற்றிய கூடுதலான குறிப்புக்கள் பின்வரும் அத்தியாயங்களிற் காணப்படும் ; உதாரணமாக நூல் 11, அத்தியாயம் 1, பார்க்க.

மீட்சிக்குப்பின் கொத்துலாந்து
உயர் குடிமக்களும், அரச ஆதரவாளரும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த நீண்டகால விரோதத்தின் பின் கருத்தொருமித்த தைக் காண்பித்தனர்; அன்றியும், பொதுமக்களுட் குறைந்த மத வெறி கொண்டோர், குருெம்வெல் அழித்த திருச்சபையின் பழைய கொடுங்கோன்மை அவனுடைய அதிகார வீழ்ச்சியின் பின் மீட் டெழுதலைத் தடுத்தற்குச் செய்து கொண்ட உறுதியான தீர்மானத் தையும் அவர்கள் குறித்தனர். பலர் குருமாரினதும், கோவிலதிகாரி களினதும் கொடுமையிலும் அரசர் சபையின் அதிகாரம் மேலான தென எண்ணினர். பாராளுமன்றத்துக்குச் சொந்தமான அதி காரமோ, பூட்கையோ இல்லாதிருந்த காலம் வரையும், அவ்வரசர் சபையின் கொடுமையை விடத் தேர்ந்தெடுத்தற்கு வேறெதுவு
மிருந்ததாகத் தோன்றவில்லை. கவலியர்க் கட்சியின் பலம் விழுமி
யோரிடத்தேயுள்ளதாகும். விழுமியோருள் பொதுவான பெரும் பகுதியினர் பிரெசுபித்தீரியரோடு கொண்ட உறவு இடையிடையே அழிந்து மீண்டும் ஏற்றபட்டதொன்ருயும் முழுமனதோடு ஏற் படாததாயுமே என்றுமிருந்தது. மேலும், அவ்வுறவு சிறந்த ஆக யில் குடும்பம், தான் தேர்ந்தெடுத்த கொள்கையிலே கொண்ட உறுதியான பற்றைப் பொறுத்த முக்கியத்துவத்தைவிட, வரலாற் றில் ஒரு காரணியாக ஆற்றிய பங்கு முடிவடைந்துவிட்டது. மற்ற வகைகளில் திருச்சபையினது அடிப்படை ஆதாரமாகவிருந்தோர் மிகச் சிறிய நிலவுரிமையாளரேயாவர்.
கோமறைக் கழகமானது திருச்சபைமேல் அரசு கொண்ட அதி காரத்தைக் காப்பாற்றுதற்குத் தனக்குத் துணையாக, உண்மையில், உறுதியான கருத்துடைய மக்கள் பலரைக் கொண்டதாயிருந்தது. உலோட்டுவின் வழிபாட்டு நூலைக் கையாள்தல் மீட்டும் அதிகார பூர் வமாக விதிக்கப்பட்டிலது, ஆனல், ஏற்பாடு கைவிடப்பட்டது. குரு மார், கோவிற்பற்றுக்குரிய சமயச் சார்புடைய சமூகத்தின் குடி
யாட்சி முறைப்படியான தெரிவினலன்றி ஆதரவாளரால் நியமிக்கப்
பட வேண்டியிருந்தனர். கீழைத்திசைக் கொத்துலாந்தின் பெரும் பகுதியினர் ஏற்றுக்கொண்ட இத்திட்டத்தைக் கோமறைக் கழகத் கார் எச்சரிக்கையோடும் மனிதத்தன்மையோடும் செயலாற்றியிருந் திருந்தால், தென்மேற்கிலுள்ள மக்கள் தாமும் அங்கீகரித்திருப்பர். ஆனல், மீட்சிக்குப் பின் முதலாண்டுகளில் கொத்துலாந்தை ஆட்சி
செய்த குடிகாரர் தமக்குரியதல்லாத வழியிற் சென்று, பிரெசுபித்
தீரிய குருமார் பலர் கட்டாயம் மறுக்கும்படியான முறையில், அவர் களைக் கடுமையாக விசாரணை செய்தனர். அவர்கள் மிகுதியாய்த் தென் மேற்கிலுள்ள கோவிற்பற்றுக் குருமாரில் மூன்றிலொரு பங் கானவரின் வசிப்பிடங்களையும், விளைபுலங்களையும் கவர்ந்து கொண்
1662。
163

Page 93
164
679.
இரகசிய சமயக் கூட்டங்கள்
டனர். அக்குருமாருக்குப் பதிலாக ‘உப குருமாரை நியமித்தனர். இவர்கள் பொதுமக்களின் செல்வாக்கைப் புறக்கணித்தும், போர் வீரரோடும் அதிகார வலிமையுடையரோடும் உறவு கொண்டும், தம்
மைப் பராமரித்து வருவாராயினர்.
இவ்வாறன நிலைமையிலிருந்துண்டானவையே "இரகசிய சமயக் கூட்டங்கள்'. இக்கூட்டங்களிலே 'விலக்கப்பட்ட குருமார் விசுவா சிகளுக்குப் போதனை செய்தனர். என்ருலும், ஆங்கிலேயரில் இணங் காதாரின் இரகசிய சமயக் கூட்டங்கள் பண்டசாலைகளில் அல்லது மேற் கூடங்களில் நடத்தப்பட்டன. உடன்படிக்கை செய்தோரான கொத்துலாந்தரின் கூட்டங்களோவெனில், தனித்த மலைப் பக்கங் களில் அல்லது சிற்முேடையருகே குடைந்த விடத்தில் அல்லது பிரம்புக் காட்டின் மத்தியில், சதுப்பு நிலத்தினூடாகச் செந்நிற வுடையுடைய போர்வீரர் கிட்ட நெருங்கி வருதலைக் கண்காணிக்க நாலாபக்கமும் காவலர் சூழ்ந்து நிற்க, நடத்தப்பட்டனவாகும். மேலும், இங்கிலாந்தில் கிளாறெண்டன் சட்டத் தொகுப்பைச் சமா தான நீதிபதிகள் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கொடு மையாக வெனினும், நிர்வகித்துவந்தபோது, கொத்துலாந்தில் கோமறைக் கழகம், அதிகாரத்தை எதிர்த்த மாவட்டங்களைப் படை யின் மிதமிஞ்சிய அட்டூழியங்களுக்கும் மலைப்பிரதேச சாதியாரின் கொடிய கொள்ளைகளுக்கும் இடமாக்கியது. அவ்வாறன கெட்ட பழக்கம் போர் வீரராகவும், எல்லைப் புறத்துக் கொள்ளைக்காரராக வும் முன்பு வாழ்ந்த பள்ளத்தாக்குக் குடியானவரை மீண்டும் அவ் வழிகளிற் செயலாற்றத் தூண்டிவிட்டது. 1666 ஆம் ஆண்டிலுண் டான பெந்துலாந்துக் கலகத்துக்குப் பத்துப் பன்னிரண்டாண்டு களுக்குப் பின் எழுந்தது அதனிலும் மிகப் பயங்கரமானதும், பிர சித்திபெற்றதுமான ஒரு கலகம். அது அதிமேற்றிராணியாரான சாப்புவின் கொலையோடு தொடங்கியது. பின் அது திரங்குளோக்கு மோசுவில் இரகசிய சமயக் கூட்டத்தினர் போர்க்கருவி தாங்கி கிளேவர் அவுசை விரட்டுவதற் கேதுவாயிற்று. ஈற்றில் அது போத்துவெல் பிறிக்கில் முடிவடைந்தது.
திடீரென்று வெளிப்பட்ட சமய வெறியுடைய இவ்வுணர்ச்சியை அரசாங்கம் தூண்டிவிட்டுப் பின் அடக்கி வைத்த கொடுமையானது கொத்துலாந்தரின் நினைவை விட்டு அகலாது ஆழமாகப் பதிந்து விட்டது. மகிழ்ச்சியான பிற்றைக் காலத்தில், 'கொலைக் காலங் களின் கதைகளும், தனித்த பலவிடங்களில் சுடுபட்டிறந்த அல்லது கிருசு மாக்கெற்றில் 'நியாயமான தண்டனை பெற்றுத் தூக்கிவிடப் பட்ட உயிர்த் தியாகிகளின் சமாதிகளும், புராணக் கதைகளும், கொத்துலாந்து முழுவதும் பிரெசுபித்தீரியத்துக்குக் குரு பரம்பரை

கொத்துலாந்தர் புரட்சி
நூலாயும் புதுமைக் கதைகளாயும் அமைந்தன. அவற்றின் மூலம் பிரெசு பித்தீரியம் நாட்டுக்கும் சமயத்துக்குமுரிய சுதந்திரத்தை நிலைநாட்டுகின்றது என்ற புகழைப் பெற்றுள்ளது. ஆயினும், 'ஏற்பாட்டை ஆக்கும் உயிர்த் தியாகிகள் வற்புறுத்தத் திட்டமிட் டது சுதந்திரத்தையன்று; அல்லது அவர்கள் முறையிடக் கருதியது பிற்சந்ததியாருக்குமன்று; உயிருள்ள கடவுளுக்கே அவர்கள் முறை யிடக் கருதினர்; ஏனெனில், அவர்கள் அழிவுற்ற ஓர் உலகில் தாமே அக்கடவுளின் தனித்தவூழியரென்று நம்பினராதலினென்க.
குழப்பம் நிறைந்ததும் கொலைபாதகமானதுமான இரண்டாம் சாள்சின் ஆட்சி முடிவெய்திய காலத்தில், கொத்துலாந்தின் மக்கள் ஏற்பாட்டில் தீவிர ஆர்வமுள்ளவரை மெச்சுதலில் எவ்வகையிலும் ஒன்று சேர்ந்திலர். கோமறைக் கழகமும் சித்திரவதைக்குரிய அதன் அலுவலகமும் மரியாதையான மக்களெவர்க்கும், உண்மையில், வெறுப்பூட்டினவாகும்; ஆனல், கீழ்த்திசை நாடுகள், அரசாங் கத்தை எதிர்த்து நிற்கும் மிதமான ஒரு தலைவரைத் தாம் பின்பற் றப் பெருமையினல், அரசாங்கத்தை முக்கியமாக ஆதரித்தன. அதேசமயத்தில், மேற்றிசை நாடுகள், அடக்கப்பட்ட புரட்சியின் நிலையிலிருந்தன. கிளேவாவுசுக்கும் அவனுடைய போர் வீரருக் கும் இங்கிலாந்தில் புரட்சி இல்லாதிருந்த காலம் வரையும், தனக் குள்ளேயே மாறுபட்டுப் பிரிந்துள்ள நாடொன்றை அடக்கி வைத் தல் இலகுவான தொன்ருயிற்று. ஈரரசுகளின் குடிமக்களையும் ஒற்றுமையும் விடுதலையும் அடைதற்கான வழியிற் செலுத்தியவர், மக்களைக் கத்தோலிக்கராக்கும் நடைமுறையைக் கையாண்ட ஏழா வதும் இரண்டாவதுமான சேமிசுவேயாவர்.
M இரு நாடுகளிலும் ஒரே சமயத்தில் நடைபெற்ற புரட்சி, இங்கி லாந்தின் ஆதிக்கமின்றி நடைமுறையிற் சுதந்திரத்தை அடையும் நிலைக்குக் கொத்துலாந்தை மீட்டமைத்தது. அச்சுதந்திரத்தைக் கொத்துலாந்து இடன்பார்ப் போருக்குப் பின்னர் அனுபவித்ததே யில்லை. கொத்துலாந்து, அதன் இறைகளாக உவிலியத்தையும் மேரி யையும் தேர்ந்தெடுத்தாற்ருன் அதன் திருச்சபைக்குரிய அலுவல் களையும் ஏனையவற்றையும் அது விரும்பியபடி செய்வதற்கு அனு மதிக்க, உவிக்கு, தோரிக் கட்சிகளைச் சேர்ந்த ஆங்கில அர சியல் வல்லுனர் விரும்பினர். பிரித்தானியாவிலுள்ள அரச பரம் பசை பற்றிய தகராறு கொத்துலாந்தின் கையில் ஒரு நெம்பு கோலா
யிற்று. அதனல், அந்நாடு முதலில் புரட்சியின்போதும் பின்னர்,
ஐக்கியச் சட்டத்தின்போதும் உலக கருமங்களிலும் ஆன்மீக கருமங் களிலும் தான் விரும்பிய நிபந்தனைகளைப் பெற்றுள்ளது.
1.65
1685-688

Page 94
66
1689.
1690.
கொத்துலாந்தும் உவிலியமும்
எடின்பரோவில் நடந்த மரபுப் பாராளுமன்றக் கூட்டமே ஏழாம் சேமிசுவை ஆட்சிப் பீடத்திலிருந்து விலக்கி, உவிலியத்தை யும் மேரியையும் இறைகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அரசினை ஏற்றற்கு வேண்டிய நிபந்தனைகளையும் விதித்தது. மேலும், பாராளு மன்றமே ஏற்பாட்டைப் புதுப்பிக்காமல், பிரெசுபித்தீரிய சமயத்தை முறைமைப்படி மீட்டமைத்தது. கோமறைக் கழகத்தின் வல் லாட்சி புரட்சியின் இன்றியமையாத விளைவாக முடிவெய்தியது. இது முதற்கொண்டு எடின்பரோவிலுள்ள பாராளுமன்றமானது அரசாங் கம் மதிக்க வேண்டிய ஒரு சுதந்திரமான சத்தியாய் அமைந்தது. அது 1639 ஆம் ஆண்டில் இருந்ததுபோலத் திருச்சபைக் கூட்டத் தின் எதிரொலியாய் மாத்திரம் அமைந்ததன்று; அல்லது 1661 ஆம் ஆண்டில் இருந்ததுபோலக் கோமறைக் கழகத்தின் எதிரொலியாய் மாத்திரம் இருந்ததுமன்று. அது தனக்குச் சொந்தமான பூட்கை களையுடையதாயிருந்தது. நிலமானிய முறைப்படி நடத்தப்பட்ட அதன் தேர்வு நாட்டு நிலையோடு தொடர்பு சிறிதுமற்ற விதமாகப் பிரதிநிதிகளை அளித்தது ; ஆனல், அது திருச்சபை, அரசு ஆகிய வைகளின் ஆதிக்கமின்றிச் சுதந்திர முடையதாயும், ஆயினும், இரண்டோடும் நட்புடையதாயுமிருந்து சாதாரண மக்களின் கருத்தை வெளியிடுவதாயிற்று. அதனேடு கொத்துலாந்துக்கு மிகச் சிறந்ததான காலமொன்று மெல்ல மெல்லத் தோன்றுவதாயிற்று.
ஆயினும், துவித்துவாற்றுக்கு வடக்கே உலிலியத்தின் ஆட்சி குழப்பமுடையதொன்முயிற்று. அங்கே யக்கோபியர் கட்சி இங்கி லாந்திலிருந்ததிலும் மிகப் பலமுடையதாயிருந்தது. அது விழுமி யோருட் பெரும்பான்மையோரையும், கிழக்கில் சிறப்பாகச் சமய உறுதி கொண்டு நின்ற மரியாதையும் செல்வாக்குமுடைய குழுவின சையும் தன்னுட்கொண்டது. அவர்கள் அண்மையில் உரிமையிலிரு ந்து விலக்கப்பட்ட குருவாட்சிக்குரிய குருமாரின் சமயத் தொண்டி னைப் பற்றிக்கொண்டனர். தாபித்த திருச்சபையிலிருந்து கிடீ ரென விலக்கப்பட்டதும், புதிய கொத்துலாந்தில் ஆதரவைப் பெரு ததுமான குருவாட்சிக்குரிய திருச்சபையானது, ஆங்கில தோரிக் கட்சியினர் யக்கோபியருக்குக் காட்டிய ஆதரவிலும் மேலான ஆதா வைக் காட்டாதிருத்தல் முடியாது. புரட்சி உடன்படிக்கையின்படி தோரிக் கட்சித் திருச்சபையானது சேதமுழுதபடியும், பேரளவிற் சிறப்புரிமை யுடையதாயும் விடப்பட்டிருந்தது. அல்லாமலும், மலைப் பிரதேச எல்லைக்கு வடக்கே, மேலதிகாரமுள்ள காம்பெல் சாதியினர் மீதும், அவர்தம் முதல்வரும், கொத்துலாந்து முழு வதும் உவிக்குக் கட்சிக்கும், பிரெசுபித்தீரியர் கட்சிக்கும் உண்மைத் தலைவராயிருந்தவருமான ஆகயில் மீதும் கொண்ட பொருமையி ல்ை 'கிலிட்'டணிந்த சாதிகளுட் பெரும்பான்மையோர் யக்கோ

கொத்துலாந்தும் உவிலியமும்
பியர் கட்சிக்குரியராயினர். மலைப்பிரதேசம் தென் திசையைத் தாக்கியது. அத்தாக்குதலை மொந்துமுேசுவின் மாதிரியைப் பின் பற்றி நடத்தினுன் கிளேவர்வுசு. அது வெற்றிபெறுஞ் சமயத் தில் அவனின் இறப்பு காரணமாக கில்லிக்கிருங்கியில் தடைப்பட் டது. அத்தாக்குதல் சில வாரங்களின் பின்னர், பழங்குடி மக்கள் இடன்கெல்டுவில் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டவரும் கமறனின் ஆதரவாளருமானவரால் தோற்கடிக்கப்பட்டபோது, முடிவெய்தி யது. ஆனல், மலைப்பிரதேசப் பள்ளத்தாக்குகளை 1746 ஆம் ஆண் டுக்கு முன் மக்கள் என்ருயினும் தங்கள் வீரத்தால் ஒழுங்காகக் கைப்பற்றி அங்கு குடியிருந்திலர். கிளென்கோவில் நிகழ்ந்த கொலை கள் யக்கோபியருக்காக மக்களின் உணர்ச்சியை வளர்த்தற்கும், அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுத்தற்கும் பேரளவிற் காரண மாயின. இவ்வபாயங்களெல்லாவற்றிற்குமிடையே பாராளுமன்றந் தானே கடைசித்தறுவாயில் சேமிசுவிற்கு மாமுய் உவிலியத்தைத் தவிர்க்க முடியாத முறையில் ஆதரிப்பதாயிருந்தபோதிலும், அா சியற் கற்றுக்குட்டிகளின் ஒழுங்கற்ற நடையினுலும் தன்னலச் சார்பினுலும் அதில் பிரிவேற்படுவதாயிற்று. அத்தகைய அரசிய லார் வல்லாட்சியில் வளர்க்கப்பட்டவராவர்; அவர்கள், கட்டுப்பா டற்ற சமூகமொன்றில் கருமங்களை நடத்துதற்குத் தேவையான பயிற்சிப் பழக்கமில்லாதவராவர்; அன்றியும், பொது அறத்திலோ ஆழ்ந்த அறிவிலோ பழக்கமற்றவருமாவர்.
ஆயினும், உவிலியத்தின் அரசாங்கம் கொத்துலாந்தில் ஏதோ ஒரு விதத்தில் தப்பிப் பிழைத்தது; ஏனெனில், அஅ தனக்கு முன் னிருந்தவற்றிலும் எப்படியாயினும் கூடிய பொறுமையுடையதா தலினலும், அரசு திருச்சபை சம்பந்தப்பட்ட அதன் தீர்மானம் புதிய காலப்போக்கின்படியே உள்ளதாதலினலுமென்க. பிரெசுபிக் தீரியரின் சமயம் தேசீய சமயமாக மீட்டமைக்கப்பட்டபோதிலும், அரசியல் முறையில் மறுமைக்குரியவற்றிற்குப் பதிலாக இம்மைக் குரியவற்றைப் படிப்படியாகப் புகுத்துவதே அரசாங்கத்தின் இலக் காகும். திருச்சபைக் கூட்டம் கட்டுப்பாடின்றி மீண்டுங் கூடியது, தன் சொந்தக் கருமங்களைப் பேசித் தெளிதற்கும் முடிவு செய் தற்குமேயன்றி, அரசாங்கத்துக்கு நடைமுறைகளை என்ருயினுங் கட்டளையிடுதற்கன்று என்க. கமறனைப் பின்பற்றிய பழமையுடை யோர், திருச்சபை அதனுடைய பழைய அதிகாரத்துக்கும் மேன்மைக்கும் மீட்டமைக்கப்படவில்லையென்று தெளிவாயுணர்ந்து
கொண்டு ஒல்லாந்தில் கல்வின் கொள்கையுடையனயும், இங்கிலாந்
தில் தலைமைக் குருவாயும், எல்லா இடங்களிலும் கண்டிப்பான
167
யூலை, 1689.
1692.

Page 95
፱ fiS . பொருளாதார நிலை
சமயப் பொறுமையுடையணுயு மிருக்கக்கூடிய அரசனுெருவன ஏற் அறுக்கொள்ள மறுத்தனர். ஆனல், மக்கள் குழாம், துன்புறுத்தலிலும் கொலையிலும் வெறுப்புக் கொண்டு, புதியவாட்சிமுறையில் திருத்தி யடைந்தது.*
கொத்துலாந்தின் திருச்சபைக்குரிய பிரச்சினைகளைத் தீர்த்தற்கு வேண்டிய வழி கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளை வாக, இருநூற்முண்டுகளாகக் கொத்துலாந்தர் ஆழ்ந்த சமயப் பற்றுடைய மக்களாகவிருந்து கொண்டு, அதே சமயத்தில் உலகியற் பிரச்சினைகளில் தம் கருத்தைச் செலுத்தக் கூடியவரானர். 1689 ஆம் ஆண்டில், அவர்களின் வறுமை அவர்தம் மனேசத்திக்கும் பண்புக்கும் முற்றும் நேர்மாமுயிருந்தது. வேளாண்மையில் உலோ கியரின் செழிப்புள்ள மண்ணிற்கூட இடைக்காலத்துக்குரிய முறை களே கையாளப்பட்டன. நீர் வடிந்துபோகக்கூடிய வசதிகளில்லா மையால் மிகச் சிறந்த நிலத்திற் பெரும்பகுதி, நீர் தேங்கிப் பயனற் றதாயிற்று. அதனுல் தரிசு நிலமான மலைச்சாரல்களை உழுது பயன் படுத்தவேண்டியதாயிற்று. பண்டைக்காலத்திய காடுகள் மறைந்து போயின; இக்காலத்துக்குரிய தோட்ட நிலங்களோ, அடைப் புக்களோ, சுவர்களோ காற்றுப்படும்படி கிறந்துள்ள நிலத் தோற் றத்தை இன்னும் மாற்றவில்லை. அங்கே செம்மறியாடுகளும், மற் அறும் ஆடு மாடுகளும் கடுங்குளிர்காற்றில் பரிதாபகரமாக நடுங்கிக் கொண்டு நின்றன. நிலத்தைத் திருத்துதல் இயலாத காரியமா யிற்று; ஏனெனில், அது காவலுரிமைத் திட்டமின்றி மிகக் குறைந்தகாலக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டதாதலினென்க. நிலத்துக்குரியவர்க்கோ, வாரக் குடிகளுக்கோ நிலத்தைப் பயன் படுத்தப் பணமில்லை; மேலும் பிரபுக்கள் தம் காணிகளை முக்கிய மாக வேட்டைக்குரிய நிலங்களாக மதித்து அவற்றில் விருப்பமுள்ள வாாயினர். பண்ணை வீடுகள் புற்பாய்களினல் அமைக்கப்பட்ட அல்லது சுண்ணச் சாந்தின்றிக் கற்களினற் கட்டப்பட்ட குடிசை களாகும். அவற்றிற்குப் பெரும்பாலும் சாளரங்களோ புகை போக்கிகளோ இரா. கதவுகளே காற்றும் ஒளியும் உட்செல்ல உத வுங் கருவிகளாகும். ஒருவகைச் சாராயமும் கொள்ளு மாவுமே எப்போதும் உணவாகக் கிடைத்தபோதும், அவை ஆரோக்கியந் தருவனவாகவும் போதுமான அளவுக்குமிருந்தன. இதற்குப் புற னடையாக, உவிலியத்தின் ஆட்சியில் பொருள்களின் விலை மிகுந்த
1. அமைச்சரை நியமித்தற்குச் சாதனமாக, தனிப்பட்டவர்களுக்கு ஆதர வளிக்கும் வழக்கம் அழிக்கப்பட்டமையினல், பிரெசுபித்தீரியர் கருத்துக்கு ஒரு முக்கிய சலுகை அள்க்கப்பட்டது; அடுத்த நூற்றண்டில் அந்த ஆதரவளிக்கும் முறை பலவித பாரதூரமான விளைவுகளோடு புதுப்பிக்கப்பட்டது. --

கொத்துலாந்தர் சமூகவமைப்பு
ஆண்டுகள் மீண்டும் மீண்டும் பயங்கரமாக நிகழ்ந்ததுபோல, விளைவு குறைந்த ஆண்டுகளிலே பசி பட்டினி ஏற்பட்டது. பெய ரளவில் கொத்துலாந்தின் இறையாட்சியிலிருந்த ஏறக்குறைய அரைவாசி நிலப்பரப்பு, ஆங்கிலம் பேசும் நாடுகளின் சட்டத்துக் கும் நாகரிகத்துக்கும் உட்படாத மலைப்பிரதேசச் சாதிகளின் தலை வர்களுடைய ஆட்சியிலிருந்தது.
வர்த்தகமும் கைத்தொழிலும் இன்னும் மிகச் சிறிய அளவிற்முன் இருந்தன. கிளாசுக்கோவுக்குச் சொந்தமான கப்பற்முெழிலெது வும் இன்னும் தொடங்கப்படவில்லை. மிகப்பெரியதும் செல்வம் மிகுந் ததுமான நகரம் எடின்பரோவேயாகும் ; ஆனல், அதன் உயர்ந் தோங்கிய விதியிலுங்கூட கண்ணுடிச் சாளரங்களைக் காண்டல் அரி தாயிருந்தது. மொத்தத்தில் ஏறக்குறையப் பத்து இலட்சம் கொத் துலாந்தர் தம் சொந்த நாட்டிலிருந்தனர்; மேலும், சில ஆயிரக்
கணக்கானுேர்மட்டுமே, முக்கியமாகப் பெருஞ் செல்வந்தேடிச்
சென்ற போர்வீரருட்பட, கடல் கடந்த நாடுகளில் வசித்தனர். அரசியல் உரிமைகளின்றி, இன்றும் மிகுதியாய் மானியம்பற்றிய சமூக ஒழுங்கு முறைகளுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்துவந்த மிகவும் ஏழ்மையரான இக்குடிமக்கள், பாராளுமன்ற முறைக்குரிய இங்கி லாந்தின் செல்வமுள்ள உழவரிலும் கடைக்காரரிலும் பார்க்க, வேத நூல் அறிவிலும் வேதசாத்திர விவாதத்திலும் மேலாகத் தேறின வசாய்த் திகழ்ந்தனர்; அன்றியும் மனப்போக்கிலும், சுதந்திர உணர்ச்சி குறைந்தவருமல்லர். கொத்துலாந்தர் தமது நன்கு பண் பட்ட மனத்தையும் வீரக் குணத்தையும் இந்த வாழ்க்கையில் தங்கள் கதியை மேம்படச் செய்ய எப்போதாயினும் பயன்படுத்து வார்களேயானுல், அதன் விளைவு வியக்கத்தக்கதாகவேயிருக்கும்.
கொத்துலாந்தின் நிலத்தோற்றத்திலும் ஆக்கத்திலும் அடுத்த நூருண்டுகள் விளைவிக்கவேண்டியிருந்த பெரிய மாற்றம், அதாவது சாற்றணுக்குரிய பிளெச்சர் காலத்துக் கொத்துலாந்து, உருெபேட்டு பேணிசு, வாட்டர் இசுக்கொத்து ஆகியோர் காலத்ததாக மாறி யமை, நிலச் சொந்தக்காரர் முதல் குடிசை வாசிகள் வரையுமுள்ள ஒவ்வொரு வகுப்பினரும் ஊக்கத்தோடு பின்பற்றிய புதிய வழி காரணமாக உண்டானதாகுமென்க. இம் முன்னேற்றத்துக்கு முன் பிருந்த நிலைமைகள் இரண்டினைக் கவனிக்கலாம். முதலாவதாக, நீண்ட்காலக் குத்தகைகளை ஏற்படுத்தியமை நியாயமான நில வாட்சியுரிமையை அளித்தது. இதல்ை தோட்டஞ்செய்தல், வேலி யடைத்தல், மதில் எழுப்புதல், வீடு கட்டுதல், புதிய வேளாண்மை முறைகளைக் கையாளுதல், கால் நடைகளைப் புல் மேயவிட்டு வளர்த்
169

Page 96
170 .
1695-102.
1707.
பெரிய பிரித் தானியா ஒன்றுடடல்
தல், அவற்றைப் பெருக்குதல் ஆகியவற்றைச் செய்தல் சாத்தியமா யிற்று. இரண்டாவதாக, 1707 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் வடக்கிலும் தெற்கிலுமுள்ள நாடுகள் ஒன்றுபட்டமை, இங்கிலாந்துக் கும் அதன் குடியேற்ற நாடுகளுக்குமுரிய அங்காடிகளைக் கொத்து லாந்தின் கைத்தொழில் கமத்தொழில்களால் வந்த பொருள்களை விற்றக்குரிய இடங்களாக அமையச் செய்தது ; அன்றியும், உலக மெங்கணும் இங்கிலாந்துக்கிருந்த வர்த்தக உரிமைகளிற் கொத்து லாந்தரைப் பங்கெடுத்துக் கொள்ளவுஞ் செய்தது. உவிலியத்தின் ஆட்சியில் கொத்துலாந்து தேரியனில் தன் தேசீயக் குடியேற்றம் அமைப்பதில் வெற்றி பெருததிலிருந்து, தனக்கே தனியாக அங் காடிகளைத் திறப்பதற்கும் குடியேற்ற நாடுகளே நிலைநாட்டுவதற்கும் ஏற்ற ஆற்றலும் வழிவகையுமில்லையென்பதைத் துன்பத்தோடு அறிந்துகொண்டது.
குறித்த ஐக்கியமானது கொத்துலாந்தின் பாராளுமன்றத்தையும் கோமறைக் கழகத்தையும் இங்கிலாந்துக்குரியவற்றேடு இணைத் துள்ளது. எடின்பரோ சட்டத்துக்கும் பண்பாட்டுக்குமுரிய தலை நகரமாயும், ஆயினும், அரசியலதிகாரத்துக்கு இனிமேல் உரிய நிலை யமாயில்லாது மிருந்தது. இது கொத்துலாந்தின் பெருமைக்குப் பங்கம் விளைத்தபோதிலும், அந்நகரத்தின் பொருளாதாரப் பெருக் கத்துக்கு இன்றியமையாததாகவிருந்தது. அவ்வாறு விட்டுக் கொடுத்தல் மிகவும் பொறுக்கக் கூடியதாகும்; ஏனெனில், கோம றைக் கழகமோ பாராளுமன்றமோ, தேசீய சுதந்திரத்துக்குரிய தோர் அறிகுறியாயிருந்ததைவிட, தம்மளவில் மக்களுக்கு மிக உவப்புடையனவாயிருந்தில. திருச்சபைப் பேரவை பெருந்திர ளான மக்களின் அன்புணர்ச்சியிலும் அவர்தம் அன்ருட வாழ்க் கையிலும் ஆழமாக வேரூன்றியிருந்தது ; ஐக்கியச் சட்டம் கொத் துலாந்தின் சட்டத்தில் தலையிடாததுபோலவே அதன் சமயத்தி லும் தலையிடாமற் புறம்பாக்கிவிட்டிருந்தது.
கொத்துலாந்தரைப் பங்காளியுரிமையாளராதல் வேண்டுமென்று ஆங்கிலேயர் வற்புறுத்தியதன் காரணம் அரசியல் பற்றியதேயன் றிப் பொருளாதாரம் பற்றியதன்று. கொத்துலாந்து பிரெசு பித்தீரி யருக்குக் கூடியவுரிமையுடைய நாடாகும்; இருந்தபோதிலும், அது இங்கிலாந்திலும் பார்க்க யக்கோபியர் கட்சிக்குக் கூடிய சார்புடை யதாகும். மேலும், அது புனிதசேமிசுவின் அரண்மனையில் அனேவர் பரம்பரை நிறுவப்படுஞ் சமயத்திற்முனே, ஆன் இறந்தவுடன், நாடு கடத்தப்பட்ட சுதுவட்டரை ஒலிறாட்டிலிருந்து ஆட்சி செய்யக்

காரணமும் விளைவுகளும்
கொண்டு வருவதாக அச்சுறுத்தியது. அச்சுறுத்தல் எவ்வளவுக்கு இடர்நிறைந்ததென்றும், எவ்வளவுக்குக் கொத்துலாந்து தேரி யனைக் குறித்து இங்கிலாந்தோடு கொண்ட வெறுப்பினையும், ஏனைய மனக் குறைகளையும் வெளிப்படுத்துவதொன்ருயுள்ள தென்றுங் கூறுதல் கடினமாகும். ஆனல் பதினன்காம் உலூயியோடு மாள் பரோ செய்த சண்டைகளின் மத்தியில், பிரித்தானிய பேரரசா னது பிளவுபடும் நிலையிலிருந்தது என்பதில் ஐயமில்லை. பேரரசு ஒற்றுமையாகவிருத்தற்கு ஆனின் ஆட்சியிலுள்ள உவிக்குக் கட்சி யைச் சார்ந்த அரசியற்றந்திரிகள், ஆளி முதலிய மிதமான தோரிக் கட்சியினரின் ஆதரவோடு, ஈராசுகளும் இரு பாராளுமன்றங் களும் ஒன்முனல், ஐக்கியம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகிய பெரு நல்வாய்ப்பைக் கொத்துலாந்துக்கு அளிப்பதாகக் கூறினர். உடன் படிக்கையைக் கொத்துலாந்து விருப்பமின்றி ஏற்றுக் கொண்டது; ஆனல், அதன் சுதந்திரத்தை உண்மையிலன்றிப் பெயரளவில் மாத் திரம் பறித்துக்கொண்ட ஓர் ஒழுங்குமுறையினுல் அது பெருநன்மை படைந்துள்ளது. அவ்வொழுங்கு அந்நாட்டின் எதிர்கால விருத் கிக்குரிய வாய்ப்புக்களையும் அளித்தது. இங்கிலாந்து, உடனடி யாக அவசியம் பூர்த்தி செய்யப்படவேண்டிய தன் தேவையாகிய் அரசியற் பாதுகாப்பைப் பெற்றதோடு, பேரரசின் வர்த்தகத்துக்கும் அரசியலின் வளர்ச்சிக்கும் கொத்துலாந்தரின் அறிவையும் ஆற்றலை யும் பயன்படுத்தும் வாய்ப்பையும் பெற்றது.
இக்காலத்துக்குரிய ஒரு சட்டத்தை இயற்றியதான இப்பெருஞ் செயலால், இங்கிலாந்து, இதுவரையும் வறுமையானதும் தனித்ததும் ஆயினும், ஐரோப்பாவில் மிகச்சிறந்த கல்விப் பயிற்சியுள்ளதும், மிகுந்த ஊக்கமுள்ளதுமான ஒரு சிறிய நாட்டை, வர்த்தகம் குடி யேற்றம் பண்பாடாகியவற்றில் உலக அரங்கில் இடம் பெறச் செய் தது. இங்கிலாந்து கொத்துலாந்து ஆகிய இருநாடுகளும் பயனடை யுமாறு ஏற்பட்ட இந்த நல்வாய்ப்பு மிகப் பெரிதாகும். மேலும், அது செல்வந் திரட்டுதற்கு மாத்திரம் பயன்படவில்லை. பிரித்தா னிய இலக்கிய நூல்கள், விஞ்ஞான அறிவு, போர், அரசியல் முறை, நிர்வாகம், குடியேற்றம் ஆகியவற்றில் கொத்துலாந்தரின் பங்கு அவர்தம் மக்கட்டொகையினர் அளிக்கக்கூடிய அளவிலும் மிகக் கூடியதாகும். ஒருவருக்கொருவர் உதவக்கூடிய இந்த நல்வாய்ப்பி னைப் பாமரர் உண்மையில், நெடுங்காலமாக ஒப்புக்கொண்டிலர்.
அரசன் உவிலியத்தின் ஆட்சியில் வயிற்றேல் எரித்துத் தரை மட்டமாக்கப்பட்டது; அவனே கென்சிங்டனிலும், அமிடன் மன்றத்திலும் வசித்து வந்தான். ஆனின் ஆட்சியிலும், அப்பாலும் பிரித்தானியவரசர் பத்தொன்தாம் நூற்றண்டில் பக்கிங்காம் அரண்மனைக்குப் பெயர்ந்துபோகும் வரையும் புனித சேமிசுவின் அரண்மனையில் தங்கியிருப்பாராயினர்.
17

Page 97
172
அயலாந்திற் காவற்படை
கொத்துலாந்தை மெச்சு மாறு ஆங்கிலேயரை முதற்பழக்கியவனும், இருசாதி மக்களும் தம் பங்குரிமையில் மகிழ்ச்சியும் பெருமையு மடையுமாறு அவர்களை ஒருமைப்படுத்தியவனும் சேர் வாட்டர் இசுக்கொத்து ஆவான். புரட்சிக்கும் ஆனின் ஆட்சிக்குமுரிய அரசறி ஞர்கள் பிரித்தானியாவுக்கு நன்முறையில் சேவையாற்றியுள்ளனர். கொத்துலாந்தரின் திறமைகளும் சத்திகளும் இரு நாடுகளுக்
கும் பொதுவான நோக்கங்களுக்குப் பயன்படுவதற்குப் பதிலாக,
சென்ற இருநூற்றண்டுகளிலும் இங்கிலாந்துக்கு மாருகச் செலுத்
தப்பட்டிருந்தால், உலகம் இன்று மிக வேறுபட்டதாயிருக்கும். மேலும், சிறிதளவிலேனும், பொறுப்பின்மை அல்லது அறிவுக் குறைவு, அதிகமாக ஒரு பக்கத்திற்ருனும் இருந்திருந்தால், அந் நிலைமை இலகுவாக ஏற்பட்டிருத்தல் கூடும்.
இங்கிலாந்தில் குருெம்வெலின் ஆட்சிமுறை வீழ்ச்சியின்போது கெலித்திய-ஐபீரிய சாதியினர் குருெம்வெல் அங்கு செய்வதை யாவும் அழிந்துபோகுமென எதிர்பார்த்தனர்; மேலும், தங்களுக் கான பழைய சாகிப்பற்றுணர்ச்சி இன்னும் மிக்குடைய மக் கள் மத்தியிலே தங்கள் இனத்துக்கும், பரம்பசைகளுக்குமுரிய தலைவர்களுக்கு, அவர்கள் முன்னுெருகால் உரிமையாக்கிக்கொண்ட நிலங்களை மீட்டுக் கொடுக்கவும் விரும்பினர். ஆனல், இவை பெரும் பாலும் கைகூடவில்லை. புரட்டெசுந்தாந்த நிலக்காரர் ஆங்கிலோஅயலாந்தை வெற்றிகொண்ட ஒரு புதிய சாதியினராகவிருந்தனர்.
அன்றியும், அவர்கள் இசுத்துருேங்குபோ, பிரிசுசோலாதர் ஆகி
யோரைப்போல, தம்மைச் சுற்றியுள்ள அந்நாட்டுக் குடியானவர்க
ளோடு கலந்து ஒன்றுபட்டு வாழ்ந்தவருமல்லர். சமயத்தால் ஏற்
பட்ட புதிய தடை நாகரிகங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை நீடித்து நிலைக்கச்செய்தது. மேலும், அது தன்னலத்திற்கும் சாதிப் பெருமைக்குரிய அரசியல் முறையையே சிறந்ததெனக் கருதும் செய்தது. அல்லாமலும், இங்கிலாந்துக்குச் செய்தி முதலிய -ני-י வற்றை அனுப்புதல் மிக இலகுவானதாயிருந்தது. மேலும், இங்கி லாந்தின் ஆற்றல் இடைக்காலங்களிலிருந்ததிலும் மிக அதிகரித்தி ருந்தது. அல்சுதரிலுள்ள எல்லா வகுப்புக்களுக்குமுரிய புரட் டெசுத்தாந்தரான ஆங்கிலேயரும் கொத்துலாந்தரும் ஆங்கில நல ணுக்கு அயலாந்தில் முன்னேருபோதும் இருந்திரா வலிமையை அளித்தனர். 1689 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகள், பகையுடைய குடி
குருெம்வெலின் நிலக்கிழார், எப்படியாயினும், பெரும்பாலும் அவ் வாறு செய்தனர். இந்நூல் பக்கம் 78 பார்க்க,

இலண்டன்ெ தரியில் உவிலியம்
யானவர் மத்தியில் அத்தீவு எங்கணும் நெருக்கமற்றுச் சிதறியிருந்த குருெம்வெலின் நிலவுரிமையாளரிலும் அல்சுதரில் குடியேறினவர் கள் ஒரு காவற்படையாக ' எவ்வளவு மிகுந்த சத்தி வாய்ந்தவ
சென்று காட்டின.
இரண்டாம் சேமிசு பிரித்தானியாவில் மிகச் சிறிய சிறுபான்மை யினாாயிருந்த தம் சமயத்தைச் சேர்ந்தாரை அந்நாட்டை அடக்கி
17.3
யாளுபவராக்க முயன்முன். அவர்கள் அயலாந்தில் பெரும் பகுதி
யான குடிமக்களாயிருந்தனர். அங்கும் வெற்றிபெறுதற்கேற்ற வாய்ப்போடு அவன் அதேமாதிரியான முயற்சியிலிடுபட்டான். அவ னுடைய கத்தோலிக்கப் பதிலாளான தேர்க்கொனலும் தபிளி னிலுள்ள கத்தோலிக்கப் பாராளுமன்றத்தினரும் குருெம்வெலின் உடன்படிக்கையை அழித்து ஊர்ப்பிறந்த நிலவுரிமையாளர்க்கு அவர் சொத்துக்களை மீட்டுக் கொடுக்கத் தீர்மானித்திருந்தனர். ஆனல், புதியவரசுமுறை பலப்படுத்தப்படுமுன் இங்கிலாந்திலுண் டான புரட்சி, அயலாந்திலுள்ள புரட்டெசுத்தாந்தர் ஒன்றுபடுதற் கும், தம் சொத்தினையும் அதிகாரத்தையும் காத்தற்கும் வேண்டிய நிலைமையை அளித்தது. நல்வாய்ப்பைத் தவறவிடக்கூடிய மக்கள் அவர்களல்லர், வயிற்முேலிலும், எடின்பரோவிலும் பார்க்க எனிசு கிலன், இலண்டன்தெரியாகிய இடங்களில் மிகுந்த பத்தியோடு உவி வியத்தை அரசனுகப் பறைச்சாற்றினர். வடபாலுள்ள வேளாண்மை செய்யும் பெருமக்களும் நிலக்கிழாரும், குதிரையிற் சவாரி செய்ய வும் வயலில் வேலை செய்யவும் பழகின எல்லைப்புறத்து மக்களாவர். அவர்கள் வாட்பயிற்சியும் ஏர்ப்பயிற்சியு முடையவராவர். மேலும்,
அவர்கள் துாய்மைவாதத்தில் ஊக்கமிக்குடையருமாவர். அவர்கள்.
எனிசுகிலனை, திறந்த வெளியான தேசத்தில் விசித்தோடு போர் நடத்துதற்கான தலைமை நிலையமாக்கினர். அதே வேளையில் இலண் டன்தெரி நகரவாசிகள் காளெம், இலெயிடன் ஆகிய நகரங்களின் மக்கள், தம்மை இசுப்பானியர் முற்றுகையிட்டபோது தாமும் பட்டினி கிடந்தும் அப் பிரத்கிபெற்ற முற்றுகையைச் சகித்தார்கள். இம்மக்கள் உஷிலியத்தின் தலைமையிற்முனே தென்புறமாய் தபி ளின் மேற்செல்லுதற்குப் போதிய அளவு வேண்டிய துணைப்படை
பாகம் 1, படம் 11 ஐப்
unities.
1689.
கப்பலில் வரும்வரையும், வட அயலாந்தில் இங்கிலாந்தின் எல்லையா
யமைந்துள்ள நதியின் பாலத்தை விடாது பற்றிக் கொண்டு நின்றனர்.
1690 ஆம் ஆண்டில் அயலாந்து ஐரோப்பிய நெருக்கடியின்
மையமாயிருந்தது. பிரித்தானியாவின் கதி உவிலியத்தின் போர் நடவடிக்கையிலே தங்கியிருந்தது. மேலும், பிரான்சின் அரசிய லாதிக்கத்தை ஐரோப்பா எதிர்ப்பதனல் உண்டாகும் வெற்றி
8-—R, 5931 (11/62)

Page 98
14
ga) 1, 1690.
போயின் செரு
அல்லது தோல்வி பிரித்தானியாவின் விதியைப் பொறுத்ததாயிருந் தது. இன்னும் தணிந்திலாததும், அண்மையில் நேர்ந்ததுமான புரட்சியால் உலிலியத்தின் அதிகாரம் அழியும் நிலைமையிலிருந்தது. ஆங்கிலத் திருச்சபையும் சேனையும் விரோதப்படுத்தப்பட்டன; நாட்டு நிர்வாகம், இராணுவம் கடற்படையாகியவற்றிற்குரிய சேவைகள் பெரும் குழப்பத்திலிருந்தன; பாராளுமன்றத்திலுள்ள உவிக்குத்தோரிக் கட்சியினர் தம் பழைய பரம்பரை விரோதத்தைப் புதுப்பித்துக்கொண்டிருந்தனர். இருகட்சிகளிலுமுள்ள பொதுமக் களுள் அரைவாசியினர் யக்கோபியரின் கட்சியினரோடு தொடர்பு கொண்டிருந்தனர்; ஏனெனில், அச்செயலை அவர்கள் விரும்பின ரல்லர் ; ஆனல், மீட்சியை எதிர்பார்த்தனராதலினென்க. ஆதலால், உலூயி முதலில் அயலாந்தைப் பணியவைக்கும் செயலை முடித்தற் குத் தன் பணியாளனன சேமிசு வைப் பிரான்சின் பணத்தையும் போர்வீரர்களையும் தலைவர்களையும் கொடுத்து, நல்ல நம்பிக்கை யோடு அனுப்பிவைத்தான். அந்நாட்டு மக்களுள் முக்கால்வாசியி னர் முன்னரே அவனுக்கு அடங்கியுள்ளனர். அயலாந்தை உவிலி யத்துக்குரியதாகத் திடமாக்கும் வரையும், இங்கிலாந்து ஐரோப் பிய போரில் பங்கு கொள்ள முடியாதிருந்தது. மேலும், அது தானே எதிர்ப் புரட்சி யொன்றில் விரைவில் ஈடுபட்டு வருந்தவுங் கூடும்.
போயின் ஆற்றருகே நடந்த சண்டை இரண்டு குழப்பங்களின அலுண்டானதாகும். அது அயலாந்தில் தலைமைப் பதவிக்காகக் கெலித் திய ஐபீரியரை எதிர்த்து ஆங்கிலக் கொத்துலாந்தர் செய்த சண்டையாகும்; ஆனல், அது இங்கிலாந்தும் அதன் ஐரோப்பிய நேய நாடுகளும், இங்கிலாந்தில் யக்கோபிய கட்சியாரின் மீட்சியை யும் அதன் விளைவாகப் பிரான்சிய முடியரசு உலகத்திற் கொள்ளும் ஆதிக்கத்தையும் தடுத்தற்குச் செய்த சண்டையிலுங் குறைந்த தன்று. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து வந்த சேனைகள் ஆற்றின் இருமருங்கிலு மிருந்தமை உலகெங்கும் ஐயத்துக்கிடமாயிருந்த விளைவுகளை வெளிப்படுத்தியது. அந்நாட் சண்டையின் பலன் ஊர்ப் பிறந்த அயலாந்தரை எதிர்காலத்திற் பல தலைமுறைகளுக்குத் ஆரன் புறுத்தலுக்கும் கொடுங்கோன்மைக்கும் ஆளாக்கியது. ஆனல், அது ஐரோப்பாவில் புரட்டெசுத்தாந்தத்தைக் காப்பாற்றியது. மேலும், அது ஆக்கத்துக்கும், சுதந்திரத்துக்கும், கடல் கடந்த நாடுகளின் மீது தன் ஆதிக்கப் பெருக்கத்துக்குமுரிய புதிய நெறியில் உறுதி யோடு பிரவேசிக்கப் பிரித்தானியப் பேரரசுக்கு வாய்ப்பளித்தது.
ஆனல், எனிசுகிலன், இலண்டன்தெரி, போயின் ஆறு ஆகியவிடங் களில் நடந்த சண்டைகள் இங்கிலாந்தினதும் உலகினதும் வரலாற் றின் முன்னேற்றப் பாதையில் ஒரு கட்டமாய் மாத்திரமிருந்த

அயலாந்து நிர்ணயம்
நேர்த்தில், அய்லாந்தில் ஆட்சி செய்த சாதியாரின் மனக் கற்பனை யில் அவை ஒரு முக்கியமான காலத்தைக் குறித்தனவாகும். ஒடுக்கப்பட்ட கெலித்திய மக்கள், இலிமறிக்குவை வீரத்தோடு பாதுகாத்ததையும், பின்னர் ஆங்கு அடக்கப்பட்ட சாதியரோடு வெற்றியாளர் கைச்சாத்திட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறினதையும் இடைவிடாது நினைப்பாராயினர். இலிமறிக்குவில் நடந்த சண்டைகளில் வீரனன சாசுபீல்டு வென்பான் தோல்வி யுற்றர்க்குப் புதிய அயலாந்தின் பிரதிநிதியாகவிருந்தான். அவனு டைய துன்பமுறும் அன்னைக்கு அவன் உண்மை மகனவான். அயலாந்தின் வரலாற்றில் சாசுபீல்டு வகித்த இடம் குறிப்பிடத் தக்கதாகும்; ஏனெனில் அவன் அந்நாட்டின் பழங்குடி மக்களது ஆதரவைப் பெறத்தக்க நீண்டகால உரிமையுடைய பழம்பெருமை வாய்ந்த எக் குடும்பத்தினதும் சந்ததியைச் சேராதவனதலினென்க. ஆங்கிலேயர் குல அடிப்படையிலமைந்த சமூகத்தை அடியோடு அழித்தும், குலங்களுக்குரிய தலைவர்களே நாடு கடத்தியும் அல்லது கொன்றும் விட்டனர். கொத்துலாந்தில் பழைய குலத்துக்கும், நில மானிய பத்திகளுக்கும் பதிலாகவிருந்த புதிய சமுதாயத்தின் பிரதி நிதியாக வலேசு இருந்தமைபோல, அடக்கிவைக்கப்பட்ட பழங் குடிகளுக்குப் பதிலாக இருந்து வந்த புதிய சமுதாயத்துக்குச் சாசுபீல்டு பிரதிநிதியாகவிருந்தான்.
அயலாந்தில் மீட்டமைக்கப்பட்ட ஆங்கில ஆட்சியானது உவி லியத்தின் அறிவுடைமையையும் பொறையுடைமையையும் ஒரு சிறிதும் காட்டிற்றிலது. இங்கிலாந்திலே கத்தோலிக்கருக்கு எவ் வளவோ நன்மைகளைச் செய்த அவன் கத்தோலிக்கரைக் கொண் டுள்ள இத்தீவில் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஏதையும் செய்ய இயலாதிருந்தான். அயலாந்திலேற்பட்ட புதிய ஆட்சி, உவெசுத்து மினித்தர் பாராளுமன்றத்தின் உவிக்கு, தோரிக் கட்சியினரின் அறியாமையையும் தப்பெண்ணத்தையும் காட்டியது. அவர்களே மீண்டும் வெற்றிகொள்ளப்பட்ட அந்நாட்டின் உண்மையான
தலைவராவர். குரோதம் காரணமாக அரசியலிலும் சமூகத்திலும்
கற்பிக்கக்கூடிய சகல இன்னல்களுக்கும் அயலாந்தின் கத்தோலிக் கரைத் தண்டனைச் சட்டத்தொகுப்பு ஆளாக்கியது. மேலும், குருெம்வெலின் நில முறைமையின் கீழ், அவர்களின் தலைவராயி ருந்த குருமாரையும் துரத்தித் துன்புறுத்தியது. அதே நேரத்தில், மடமையின் சிகாம்போன்ற செயலொன்றினல் ஆங்கில புரட்டெசுத் தாந்த உட்பிரிவினருக்கிடையே ஏற்பட்ட சண்டைகள் அல்சுத ருக்கு மாற்றப்பட்டன. ஆங்கிலத் திருச்சபையின் சகிப்பின்மை, இலண்டன் தெரியின் மதில்களைக் காத்தவரும், போயின் ஆற்றைக் கடந்து சென்றவருமான பிரெசு பித்தீரியர்க்கு அரசியற் சமத்துவத்
175
1690, 1691.

Page 99
176
கொத்துலாந்தும் அயலாந்தும்
தையும், சிறிது காலத்துக்குச் சமயச் சுதந்திரத்தைத்தானும் மறுத்துவிட்டது. மீட்சிக் காலத்திலும் அதற்கப்பாலும், அயலாந் தின் ஆடு மாடுகளையும் ஆடையையும் ஏற்றுமதி செய்தலைத் தடுக் கும் சட்டங்களினல் அயலாந்தில் புரட்டெசுத்தாந்த நலனைக் குறைப்பதற்கு ஆங்கில வர்த்தகருக்கு இடங்கொடுக்கப்பட்டது. ஆங்கிலப் பாராளுமன்றத்தின் கட்டளைகளினல் உவிலியத்தின் ஆட்சிமுடிவில் அயலாந்தின் ஆடை வணிகத்துக்கு நேர்ந்த அழிவு ஆங்கில சக்சனிய குடியேற்ற நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் தடைப்படுத்தியது. உவாசிந்தனுக்குரிய விருதுக் கொடியைப் பின் பற்றியவரில் மிகப் பெருந்தொகையினருக்கு இருந்ததிலும் பார்க்க அத்திலாந்திக்குக் கடலுக்கப்பால் அப்பலேசிய மலைத்தொடரில் புகலிடந் தேடிய பலவாயிரக் கணக்கான அல்சுத கொத்துலாந் தர்க்கு அமெரிக்கச் சுதந்திரப் போரில் இங்கிலாந்தின்மேற் பழி வாங்குதற்கு உண்மையான அநீதிகள் அனேகமிருந்தன.
ஒலிவர், பிரித்தானிய தீவுகளெங்கணும் புரட்டெசுத்தாந்த நலன் களை மேம்படச் செய்துள்ளான். அயலாந்து ஆங்கிலேயருக்குரிய ஒரு குடியேற்ற நாடாயிருக்கவேண்டுமானல், ஆங்கிலேயர் அங்கு பெருந்தொகையாகக் குடியேறவேண்டுமென்று அவன் உணர்ந்தான். ஆனல், காப்பாளர், அரசர், என்போரிலும் பலவழிகளில் மிகக் குறு கிய நோக்கையுடைய கவலியர்க்கும், உவிக்கு தோரிப் பாராளு மன்றங்களுக்கும் வணிகத்துறையிலும் திருச்சபையையொட்டியும் ஏற்பட்ட பொருமை காரணமாக ஒலிவரின் மரணத்தின் பின் புரட்டெசுத்தாந்த நலனும், ஆங்கிலோ சக்சனிய குடியேற்றமும் பாதிக்கப்பட்டன. ஆயினும், குருெம்வெல் காலக் கொடுமையுடன் கத்தோலிக்கர் இன்னும் துன்புறுத்தப்பட்டனர். அயலாந்தையிட்டு ஒலிவர் செய்த ஒழுங்கில் தீயன யாவும் நிலைநிறுத்தப்பட்டன; நல்லன யாவும் முறைகேடாக மாற்றி அமைக்கப்பட்டன*
ஆங்கிலப் புரட்சியால் கொத்துலாந்திலும் அயலாந்திலும் தோன் றிய சமூக முறைகள் அத்தன்மையனவாகும். அவைகள் பண்பி அலும் போக்கிலும் மிக வேறுபட்டனவாகும். ஆயினும், அவைகள் மாற்றங்களில்லாததும் அமைதியானதுமான பதினெட்டாம் நூற் முண்டின் பெரும் பகுதியான கால முழுதும் ஒரு தன்மைத்தாய் மாருமல் இருப்பதாகத் தோன்றின. உண்மையில், 1715ஆம் ஆண்டிலும் மீண்டும் 1745 ஆம் ஆண்டிலும், அனேவரிய அரசாங் கத்துக்கு அயலாந்தைவிடக் கொத்துலாந்து கூடிய தொல்லை விளை வித்தது. ஆயினும், இணக்கத்துடன் செய்து கொண்ட கொத்துலாந் தின் உடன்படிக்கை, பலாத்காரத்தால் ஏற்பட்ட அயலாந்தின் உடன்படிக்கையை விட ஈற்றில் நீண்டகாலம் நிலவியது.
இந்நூல் பக்கங்கள் 79, 80 பார்க்க.

வேலிசு
பின்னிருந்த சுதுவட்டர்களின் ஆட்சியில் இங்கிலாந்து கொத்து லாந்து ஆகிய நாடுகளை அதிரச் செய்த நிகழ்ச்சிகளினுல், கெலித் திக்கு வேலிசு பாதிக்கப்படாதது குறிப்பிடத்தக்கதாகும். தியூ டர் அமைப்புக் காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்ருரண்டு வரை யும், சமூகத்துக்கும் சமயத்துக்குமுரிய மந்தமான வளர்ச்சியை விட, வேலிசு வரலாற்றிலே குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியெதுவு மில்லை. மேல்வகுப்பினர் பண்பாட்டிலும் தொடர்பிலும் படிப்படி யாக ஆங்கில மக்களாயினர்; இக்கைத்தொழிற் காலத்துக்கு முன்னர் சரியான வேலிசு மக்களாயிருந்த மலைப்பிரதேசத்துக்குரிய
குடியானவர்கள் இப்பொழுது குணத்திலும் பேச்சிலும் கெலித்திய
மக்களாக மாறிவிட்டனர்; ஆனல் இவர்கள் இங்கிலாந்துமீதோ அல்லது வேலிசு இப்போது முக்கியமான ஒரு பகுதியாயமைந்துள்ள ஆங்கில நிறுவனங்கள்மீதோ அரசியல் பற்றிப் பகைமையுணர்ச்சி கொண்டிலர். பிற்காலங்களோடு ஒப்பிடும்போது, அறிவு முயற்சி கள் குறைந்த நிலையிலிருந்தன; ஆனல், அவ்விடத்துக்குரிய இசை யும் கவிதையும் மக்களிடத்தே நிலைத்திருந்தன. மேலும், பதி னேழாம் பதினெட்டாம் நூற்முண்டுகள் முழுதும், வேலிசு நாட்டுப் பொதுமக்கள் ஆங்கிலத் திருச்சபையை அக்கறையற்ற முறையில் அங்கீகரித்தலைவிட்டு, தமக்குச் சொந்தமான ஒன்றை-கிறித்துவ மதப் பிரசாரஞ் செய்தலை-மேற்கொண்டனர். அதனல், தேசிய உணர்வும் ஆர்வமும் ஈற்றில் புத்துயிர் பெற்றன.
அத்தியாயம் IX உவிலியம், மாள்பரோ ஆகியோரின் போர்கள். 14 ஆம் உலூயியின் வீழ்ச்சியும், பெரிய பிரித்தானியாவின் கடலும் வணிகமும் பற்றிய ஆதிக் கத்தின் ஏற்றமும். ஆனின் இறப்பும், அரசவமிச நெருக்கடியும்.
அரசர், அரசியர் : உவிலியமும் மேரியும், 1689-1694; 3 ஆம் உவிலியம் (தனிய), 1694-1702 : ஆன், 1702–1714.
1688-9 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு
நிகழ்ச்சிகள் ஒன்றுசேர்ந்து பத்துப் பன்னிரண்டாண்டுகளுக்கு முன் இடான்பியால் ஏற்பாடு செய்யப்பட்ட போர்த் திட்டப் படியே, பிரான்சுக்கு மாமுன நேய உடன்படிக்கைக்குத் தலைமை தாங்கும் வண்ணம் இங்கிலாந்தைப் பலவந்தப்படுத்தின. இப் போர்த் திட்டமானது சாள்சு அரசனுலும் உவிக்குக் கட்சியின ாாலும் தடைப்படுத்தப்பட்டிருந்தது. புரட்சிக்குப் பின்னர், புதிய வரசருக்கும் மீட்டு நிறுவப்பட்ட உவிக்குக் கட்சியினர்க்கும், ஒரள
* இந்நூல் பக்கம் 137 பார்க்க.
177

Page 100
178
W -gblña படத்தைப்
பார்க்க.
போர்கள் : உவிலியமும் மாள்பரோவும்
வில், நாடு முழுவதற்குமே பிரான்சை எதிர்த்தல் முதற்பொறுப்பா யமைந்தது. சேமிசுவினதும் அவனுக்குப் பின் அவனின் மகனின தும் ஆட்சியை இங்கிலாந்தின்மேல் மீண்டுஞ் செலுத்த உலூயி இடைவிடாது செய்த முயற்சி, உவிலியம், மாள்பரோ ஆகியோர் செய்த போர்களைத் தவிர்க்க முடியாதனவாக்கியது.
ஒக்கிசுபேக்குச் சங்கப் போரெனப் பெயர்பெற்ற உவிலியத்தின் போர் 1689 ஆம் ஆண்டு தொடங்கி 1697 ஆம் ஆண்டு வரையும் நிலைத்திருந்து, பின் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வராத இறி சுவிக்கு உடன்படிக்கையால் முடிவெய்தியது. அமைதியில்லாத இடைக்காலமாகிய நான்காண்டுகளுக்குப் பின், போர் பெருமள வில் மீண்டுந் தொடங்கியது. அதுவே, ஐரோப்பாவின் படைத் தலைவனும் முதன்மையான அரசியற் றந்திரியுமான மாள்பரோ நடத்திய இசுப்பானிய அரசுரிமைப் போராகும். அது 1713 ஆம் ஆண்டில் உத்திசெத்து உடன்படிக்கையால் முடிவெய்தியது. அந்த உடன்படிக்கையோடு பதினெட்டாம் நூற்முண்டு நாகரிகத் தில் நிலையானதும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமான காலம் தொடங் கிற்று. அது பழைய பிரான்சிய முடியரசால் ஐரோப்பாவுக்கு நேரக்கூடிய ஆபத்தின் முடிவைக் குறித்தது. அன்றியும், அது உல கத்துக்கே மிக முக்கியமான ஒரு மாற்றத்தை-பெரிய பிரித்தானி யாவுக்கு கடல், வணிகம், பொருளாதாரம் ஆகியவற்றிலேற்பட்ட ஆதிக்கத்தைக் குறித்தது.
தரையிலோ கடலிலோ உலூயிக்கு மாமுன சண்டையால் ஏற் பட்ட முதன்மையான விளேவு இங்கிலாந்துக்கும் ஒல்லாந்துக்கு மேற்பட்ட நட்புறவாகும். வணிகத்திலும் கடற்படைத் தலைமை யிலும் மிக நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கரு தப் பழகிக் கொண்ட இரு நாட்டு மக்களுக்குமுண்டான நட்புறவு 1689 ஆம் ஆண்டில் மிகுந்த உள்ளன்புள்ளதன்று ; ஆனல், அவர்கள் ஒன்முகச் சேர்ந்து போர் செய்யவேண்டியது அக்காலத்துக்குத் தேவையாயிற்று; மேலும், அதனை இரு நாடுகளிலும் நிருவாகிகளுக் குத் தலைவராய் அமைந்தவரும், ஐரோப்பாவில் மிகச் சிறந்த அரசி யல் ஞானியுமானவர். சாத்தியமாக்கினர். உவிலியத்தின் பராமரிப் பில் இங்கிலாந்திலும் ஒல்லாந்திலுமுள்ள அமைச்சர் போர் காரணமாக நெருங்கிய ஒத்துழைப்புக்கு வேண்டிய பழக்கவழக் கங்களை ஏற்படுத்திக்கொண்டனர்; உவிலியம் இறந்த பின்னரும் மாள்பரோ, எயிசியசு ஆகியோர் அவைகளைத் தொடர்ந்து
கையாண்டு வந்தனர். ஒத்துழைப்பு கடினமானதொன்முய் அமைய
வில்லை. ஏனெனில், ஒல்லாந்தின் கப்பல்களின் விகிதம் நேய கப்பற் படையில் ஆண்டுதோறும் குறைந்து வந்தாலும், ஒல்லாந்தின் வணிகமும் பொருளாதாரமும் அதன் நேயநாட்டில் புதிதாகத்

போரிற் கடற்படையின் பயன்
திாட்டப்பட்ட வருவாயிலும் குறைந்தனவாயிருந்த காரணத்தால், வணிகம் பற்றி ஒல்லாந்தின்மீது இங்கிலாந்து கொண்ட பொருமை யானது குறைவதாயிற்று. போராலேற்பட்ட வரிச்சுமையும், சோர்வும் சிறிய குடியரசின் போலியான மேன்மையை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் இங்கி லாந்து. போரினல் நன்மையடைந்தது. ஆன் அரசியின் பிற்பகுதியாட்சியில் இலண்டனிலுள்ள வணிக சமூகம் ஒல்லாந்தின் வணிகத்திற் பொருமை கொள்ளுதற்கான காரணம் சிறிதுமிருக்க வில்லை. ஆனல், உவிக்குக் கட்சியினரும், பணமுள்ளோரும் ஒல்லாந்
துக்குச் சமாதான முறையிற் சில சலுகைகள் அளித்தற்கு
ஆலோசித்தனர். அவற்றைத் தோரிக் கட்சியினரும் நிலபுலங் களுடையரும் அளவுகடந்தனவென்று கண்டித்தனர்.
மேற்கு ஐரோப்பாவையும், மத்திய ஐரோப்பாவையும் அதன்
179
அமெரிக்க குடியேற்ற நாடுகளையும் சிக்கவைத்த இந்நீண்ட 1889-1713.
போர்க்கால முழுவதும், கடற்படைப்போர் முறைகள் உலிலியத்தின் அரசியற் றந்திர வெற்றிகளோடும், மாள்பரோவின் போர் வெற்றி களோடும் நெருங்கிய தொடர்புடையனவாய் நிலைபெற்றிருந்தன. ஆனல், மிகச் சமீப காலங்களில் மாத்திரந்தான், கடற்படைத் தலைவரான மாகனினதும், அவனைப் பின்பற்றினோதும் கருத்தை யொட்டி, உலூயிக்கு மாமுன சண்டையிற் கடல் சம்பந்தமான நிலைமை உண்மையாக மதிப்பிடப்பட்டதாகும். சேர். யோச்சு உறுாக்கும், சேர். கிளவுடிசிலிசவெலும் சிறந்த மாலுமிகளா யிருந்தபோதிலும், மாள்பரோவுக்கு எதிராக, திரேக்கு, பிளேக்கு அல்லது நெல்சன் போன்ற எவரும் காணப்பட்டிலர். மேலும், இலா ஒக்குவிற் கடற்படை கொண்ட தனியொரு வெற்றி, பிளன்கீம், இரு மிலிசு ஆகிய இடங்களிற் கொண்ட வெற்றிகளுக்கும், கைப்பற்றப் பட்ட மிகப் பலவான மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் இணை யாகக் காணப்பட்டிலது. ஆயினும், போரும் அரசியற்றந்திரமும் பற்றிய பெரிய திட்டங்கள் யாவும், கடலில் எங்கோ சென்று கொண்டிருந்த இங்கிலாந்தின் போர்க் கலங்களிற் றங்கியிருந்தன. பிரான்சின் உலூயி, அவனுக்கு முன்னிருந்த இசுப்பெயினின்
போரின் செலவு பிரித்தானியாவின் செல்வத்தின் அளவுக்கு மேற்பட்ட தன்று ; மேலும், இக்காலப் போரினல் எற்படும் உயிர்ச் சேதத்தோடு ஒப்பிடும் பொழுது அப்போதைய சேதம் சிறியதாயிருந்தது. பிளின்கீமில் உடன்பட்டு ஒன்றித்த சேனை 9,000 பிரித்தானியரையும், 36,000 அயல் நாட்டாரையும் மாத்திரங் கொண்டுள்ளதாகும். மேலும், சராசரியாக ஈராண்டுகளுக்கொரு முறை இப்பெரிய சண்டைகளில் ஒன்றினை மாத்திரம் பிரித்தானிய சேனைகள் செய்து வந்தன.

Page 101
80
1692.
இலா ஒக்கு
பிலிப்பைப் போலவும் பின்னிருந்த நெப்போலியன், கைசர் உவிலியம் ஆகியோரைப் போலவும் அவன் என்றுங் கண்டிராத மக்களால் விரட்டப்பட்டான்.
இலா ஒக்குச் சண்டை அந்நீண்டகாலப் போரின் நாலாமாண்டில் நிகழ்ந்ததாகும். அகிற் கிடைத்ததே கடைசியான கடல் வெற்றியா கும். அது மிக வியப்பானதொன்முகும்; ஏனெனில், கடற்படைத் தலைவனை மாகன் எமக்குக் கூறுகிறபடி, பிரான்சியர் 1689, 1690 ஆம் ஆண்டுகளில் கடற்போரில் ஆங்கிலேயரிலும் ஒல்லாந் தரிலும் மிகவதிக ஆற்றலுடையவராயிருந்தனர். போரின் முதல் மாதங்களில், அப்போது பலம் வாய்ந்த தன் கப்பற்படை
யைச் செவ்வையாகப் பயன்படுத்தி, பிரான்சிய கடலாதிக்கத்தை
நிலைநிறுத்தவும் ஆங்கிலப் புரட்சியின் வெற்றியைத் தடுக்கவும், உலூயிக்கு நல்வாய்ப்பிருந்தது. ஆனல், மீண்டு பெறமுடியாத அச் சந்தர்ப்பம் பயன்படுத்தப்படாது கழிந்தது. அவன் 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், அடுத்த ஈராண்டுகளில் அயலாந்துக் கும் உவிலியம் படைகளைக் கப்பலிலேற்றி அனுப்பாது தனது கடற்படையைக்கொண்டு தடுத்தற்கு வேண்டிய முயற்சி எதுவுஞ் செய்திலன். பீச்சிமுனைக்கப்பால் ஆங்கிலேயருக்கும் ஒல்லாந்த
ருக்கு முரிய சிறிய தொகைக் கப்பற்படைகள்மீது 1690 ஆம் ஆண்
டில் பிரான்சியர் கொண்ட வெற்றி, போயின் சண்டை நடந்த வாண்டு இங்கிலாந்துக்கும் அயலாந்துக்குமுள்ள போக்குவரத் தைத் தவிர்க்க என்ன செய்திருக்கக்கூடுமென்று காட்டிற்று. ஆனல், உள்நாடான வேர்சையிலிலுள்ள அரசவூழியர் கடற்படைக் குரிய நல்வாய்ப்புப்பற்றிய அறிவு குறைந்தவராயிருந்தனர். இத் தகைய குறைபாடு தேமிசுவாற்றங் கரையிலிருந்து உலகைக் கவ னித்துக்கொண்டிருந்த அரசியல் ஞானிகளிடம் காணப்படுவது மிக அரிது.
நேயநாடுகளாகிய இருநாடுகளும் ஆங்கிலக் கால்வாயில் பிரான் சிய கப்பற்படை மேற்கொண்ட வெற்றியினுலும், அதன்பின் சேபேக்கு, இலா ஒக்குவாகிய துறைமுகங்களில் பதினைந்து பிரான் சிய போர்க் கலங்களின் அழிவினுலும், 1692 ஆம் ஆண்டில் நிலைமை மாறிவிட்டது. ஈராண்டுகளுக்கு முன் பீச்சிமுனையில் நேயநாடுக ளிாண்டும் அடைந்த சேதங்களிலும், உண்மையில், இச்சேதங்கள் மிகப் பெரியனவல்லவாயினும், இலா ஒக்குச்சண்டையும், திறவல்
பீச்சிமுனையிலும், இலா ஒக்குவிலும் முறையே இங்கிலாந்துக்கும் பிரான் சுக்குமுரிய கடற்படைத் தலைவராயிருந்த தோரிங்டனையோ, தூர்விலையோ எவரும் கண்டிக்கமுடியாது. இருவரும் தாங்கள் சரியெனக் கருதியதற்கு மாறய், தம் அரசுகளின் கட்டளைப்படி சண்டை செய்ய வற்புறுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் இவ்வாறு செய்ய வேண்டியிருந்த பணி சிறப்புடைய தன்ருயினும் அதனைத் தம்மாலியன்றளவு திறமையாகச் செய்துமுடித்தனர்.

இலா ஒக்குவின் Sair
கார்ச் சண்டையைப்போல முடிவானதொன்முகத் தோன்றிற்று ஏனெனில், உலூயி செம்மையற்றதும் செருக்குடையதுமான தன் அரசியற்றந்திரத்தினுல் ஐரோப்பா முழுவதையும் ஒரு தரைப் போருக்கு எழும்படி செய்தனன். ஆனல், தன் நாட்டின் எல்லைகள் யாவற்றையும் ஒரே சமயத்திலே பாதுகாத்தற்கு வேண்டிய படை களையும் கோட்டைகளையும் பாதுகாப்பதற்கும், பிரான்சிய கப்பற் படை முழுவதையும் பலப்படுத்தற்கும் ஆற்றலில்லாதிருந்தனன். பிரான்சிய கடற்படை 1690 ஆம் ஆண்டில் அரசின் போர்க் கொள்கையில்ை சொற்ப காலத்துக்கு மேம்பட்ட நிலை யிலிருந்தது. மேலும், அது இங்கிலாந்துக்கும் ஒல்லாந்துக்குமுரிய
கடற்படைகளைப் போல, வணிகக் கப்பற்ருெகுதிக்கும் வணிகச்
செல்வத்துக்குமுரிய வருவாய்க்குத் தக்க அளவு தொகையைக் கொண்டு நிறுவப்பட்டிலது. பிரான்சு நாந்தேசுப் பிரகடனத்தைத் தானே அழித்ததால் அதன் வணிகமும் கைத்தொழிலும் மெல்ல மெல்லக் குறைந்துபோயின. ஆகையினல், உலூயி தரைப்படைகளில் கவனம் செலுத்திக் கடற்படையை அசட்டை செய்தபொழுது பிரான்சிய கடற்படையின் வீழ்ச்சி விரைவானதும் நிலையானது மாயிற்று; இதனுல், பிரான்சின் வர்த்தகத்துக்கும், குடியேற்ற நாடுகளுக்கும் நட்டமேற்பட்டது.
உலூயி அரசனின் படைகள் போரில் மும்முரமாக ஈடுபடாது விலகிக்கொண்டன. இதனுல் உலிலியம், மாள்பரோ ஆகியோர் தம் சேனைகளைத் தமக்கு வேண்டிய பொருள்களோடும், துணைப்படை களோடும் ஐரோப்பாக் கண்டத்துக்குத் தடையெதுவும் இன்றி கொண்டுசெல்லக்கூடியதாயிற்று. மேலும், அரசியற் றந்திரங்களால் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் தயங்கிநிற்கும் நாடுகளைப் பிரித்தானிய கப்பற்படை நெருக்குவதற்கும் இதனுல் வாய்ப்பு ஏற் பட்டது. உவிலியத்தின் ஆட்சியில், நேயநாட்டுக் கப்பற்படை பாசலோனவைக் கைப்பற்றி, உலூயிக்குமாருய் இசுப்பெயின் எதிர்த்து நின்றதை நீடிக்குமாறு செய்தது. மாள்பசோவின் போர் கள் நடந்த காலமுழுவதும் போத்துக்கலோடும், புரட்சிப் போக் குள்ள கற்றலோனியாவோடும் நாம் செய்து கொண்ட நட்புறவும், மத்தியதரைக்கடலிலும் இசுப்பெயினிலும் நாம் கையாண்ட போர் நடைமுறை முழுதும் அக்கடல்களில் நமக்கிருந்த கடலாதிக்கத்திற்
18
703-170 .
றங்கியிருந்தன. அவ்வாதிக்கத்துக்காக சிபுரோத்தரும் மினேக் 1704-108
காவும் முன்னரே ஈடாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரான்சு மாலுமிகள், தம் பெரிய கப்பற்படை குலைந்து போனதும் பகைவரின் கப்பல்களைச் குறையாடுதலில் தம் ஊக்கத்தைச்
செலுத்தினர். சீன்பாட்டு என்பான் கடற்படைத் தலைவனன.
தூர்விலின் கீர்த்தியை மங்கச்செய்தான். ஆங்கில வணிகம்

Page 102
182
உலூயி : நிதி நெருக்கடி
அவனுலும் அவனைப் போன்முேராலும் சிறிது நட்டமடைந்தது ; ஆனல், நட்டத்திலும் மேலாக விருத்தியடைந்தது ; அதே சமயத் தில் பிரான்சிய வணிகம் கடல்களிலிருந்து மறைந்துவிட்டது. பிரான்சின் எல்லைப்புறங்கள் எதிரிகள் வசப்பட்டபோது, அந்நாடு தனது குறைவுறும் வருவாயிற்றங்கி வாழ நேர்ந்தது ; அந் நேரத்திற்முனே இங்கிலாந்து சீனுவிலிருந்து மசச்சூசெற்று வரையுமுள்ள உலக அங்கர்டிகளைத் தனக்குரியனவாக்கிக் கொண்டது.
மிகச் சிறந்த அரசனுடைய ஆட்சியின் முந்தியவாண்டுகளில், அவனின் அதிபுத்திசாலி அமைச்சனன கொல்பேட்டு என்பான் பிரான்சிய கைத்தொழிலையும் வணிகத்தையும் வியத்தகு விதத்தில் விருத்தி செய்துள்ளான். ஆயினும், இத்தகைச் சட்டங்களை இங்கி லாந்தில் யாரும் புகுத்த முனைந்திருப்பின், தனித்தனியே தத்தம் செல்வத்தை விருத்தி செய்வதில் நாட்டங் கொண்ட அந்நாட்டு வணிக மக்கள் அதனை விரும்பியிரார் எனலாம். நாட்டுச் சட்ட திட் டங்களினலேயே அவன் பெரும்பாலும் அவ்வாறு செய்தான் என்க. ஆனல், 1672 ஆம் ஆண்டுப் போரிலிருந்தும் அதற்கப்பாலும் உலூ வோயின் கேடு குழும் செல்வாக்கும் கொல்பேட்டுவிடம் அரசன் கொண்ட பற்றினைப் படிப்படியாக மாற்றிவிட்டது. ஐரோப்பாவில் போர் வெறி பிடித்த பேரவாவும், சொந்த நாட்டிலுள்ள சமயத் துன்புறுத்தலும் ஆட்சியின் முற்பகுதியிலுண்டான தேசீய நல் வாழ்வின் அமைப்பினை அழித்துவிட்டன. உலூயி துயரம் மிகுந்த தன் குடியானவர்க்குத் தான் விரும்பியபடி, உண்மையில், வரி விதித்திருக்கக்கூடும் ; ஆனல் அவன் தானும் அவர்களிடத்திருந்ததி அலும் மிகுதியாக எதையும் பெறமுடியாதிருந்தான். மேலும், அவன் மாள்பரோவைத் தோற்கடிக்குமுன்னரே அவர்களின் இரத்தத் தைப் பிழிந்தெடுத்து விட்டான். அடியோடு பணமிழந்த அவனு டைய நிலைமை அவன் அமைத்த ஒழுங்கை அழித்துவிட்டது; அதனுடன் வல்லாட்சிக்கும் சமயத் துன்புறுத்தலுக்கு மிருந்த மதிப்பும் வீழ்ச்சியுற்றது.
அவ்வாறிருக்க, உவிலியத்தின் ஆட்சியின் முதலீராண்டுகளில் மிக வலிமையற்றதும் குழப்பமடைந்ததுமான ஆங்கில அரசாங்கம், அந்த நீண்ட காலச் சண்டை முழுவதும் உள்நாட்டமைதி, பொரு ளாதார விருத்தி, போருக்குரிய ஆற்றல் ஆகியவற்றைப் பெற்று வருவதாயிற்று. அதனல், அரசு, திருச்சபைகளைப்பற்றிய புதிய ஆங்கிலக் கோட்பாடுகள் உலகமதிப்பில் இடையருது வளர்வனவா யின. இங்கிலாந்து பெரிய நட்புறவுக்கு உதவும் அதிகாரியாயிற்று; சேர்மானிய அரசர்களுள் தேவைப்பட்டவர்களுக்கு, மானியங் கொடுத்தும் ஆண்டுதோறும் தொகை, பயிற்சி, திறமை ஆகியவற்

ஆங்கில வங்கியும் தேசீயக் கடனும்
றில் வளர்ந்துவந்தனவும், நன்கு அணிவகுக்கப்பட்டனவுமான தரைப்படை, கப்பற்படை ஆகியவற்றைத் தன்னிடத்தே கொண்டு மிருந்தது. ཆ་
அரசாங்க யாப்பில் மிகக் கூடிய அதிகாரம் பெற்றிருந்த பாராளு மன்றம் உவிலியத்துக்கும் ஆனுக்கும் செலவுக்கு வேண்டியதை அளிக்கும் விருப்பமுடையதாயிருந்தது. சாள்சு அரசர்கள் இருவரில்
எவர்க்கேனும் முன் என்றும் அது அவ்வாறு அளித்ததேயில்லை.
போருக்கு வேண்டிய பணத்தை நோக்குமிடத்து, அரசனின் அமைச்சர்க்கும் இலண்டன் மாநகரத்துக்குமுள்ள ஒப்பந்தம் சிறப் பிலே குறைந்ததன்று. அது அரசாங்கம் நீண்ட தவணைக்குக் கடன் வாங்கும் ஒரு புதிய முறைக்கு வழிகாட்டியது. சென்ற காலத்தில், அரசாங்கம் வருமானத்தை எதிர்பார்த்துக் கடன்பட்டு வந்தது. சில வரிகள் அறவிடப்பட்டவுடன் முதல் கொடுக்கப்படுமென்பது அவ்வாருன, கடனின் பொருத்தமாகும். புதிய ஒழுங்கின்படி நாட் டுப் பற்றுடையவனன முதலீடு செய்பவன் தன் நலனுக்கும், நாட் டின் நலனுக்குமாகத் தன் முதலை விரைவில் மீட்டுப் பெற விரும்ப வில்லை. அரசாங்கம் பிணை நின்றதால் தன் காலம் முழுவதும் அம் முதலுக்குரிய நல்ல வட்டியை வாங்கி வருதற்கு விரும்பினன். அரசுக்கு வட்டிக்குக் கொடுப்போர் இங்கிலாந்து வங்கியின் உறுப் பினராய் அமைந்தனர். அவ்வங்கி தனிப்பட்ட வணிகரோடு செய்து வந்த வங்கித் தொழிலுக்குரிய நடவடிக்கைகளுக்கு அமைச்சர்களே ஆதரவளித்தனர்.
இங்கிலாந்தின் வங்கியும் நிலையான தேசீயக் கடனும், கொத்து லாந்தரான உவிலியம் பாத்தேசனினதும், உவிக்குக் கட்சியைச் சேர்ந்த கருவூலநாயகன் சாள்சு மொந்தேகுவினதும் கூரிய அறிவின் விளைவாகும். முழு இயக்கத்தையும் தோரிக் கட்சிக்குரிய நாட்டுக் கனவான்கள் சந்தேகத்துடன் நோக்கினர். அவர்கள், அா சுக்கு இதுகாறும் அறிவுரையாளராயிருந்தோரைவிடப் பணத் தொடர்புடையாருடைய செல்வாக்கு மிகுவதைக் கண்டு பொருமை கொண்டனர். இலண்டன் மாநகரம் அரசியல், சமயம் ஆகியவற் றைப் பொறுத்தமட்டில் முக்கியமாக உலிக்குக் கட்சிச் சார்புடைய தாயிருந்தது. மேலும் புரட்சியாலுண்டான அரசுக்கு நீண்ட தவணைக் கடன்களைக் கொடுக்கும் இம் முறையினல் உலிக்குக் கட்சிக்கு இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டுள்ளது. ஏனெனில், போலியாளன் எப்போதாயினும் திரும்பி வந்தால், தன் பகைவ னின் கடன்களை மறுத்திடுவாணுதலில் அவன் திரும்பி வருதலைத் தடுத்தற்கே உலிக்குக் கட்சியினர் தோரிக் கட்சியினரிலும் ஒருபடி மேலான உறுதிகொண்டிருந்தனர்.
1694.
183

Page 103
84.
இலண்டன் மாநகர்
திரட்டிவைத்த முதலினுலும் பிரயோக முதலினுலும் உலக வரு வாயை வளர்ப்பதற்கான இயக்கத்தின் செயல்முறைக்கு வேண்டிய பிரதானமான இடமாக இவ்வூழியில் இங்கிலாந்து விளங்கியது. முதலைக்கொண்டு கைத்தொழில் செய்தல் சிறிய அளவிற் முன் இன்னும் நடந்து வந்தது ; விட்டுப்பணியாக ஆடை நெய்வோர், முதலுடைய தாகர் மூலமாகவே தங்கள் வணி கத்தை நடத்தினர். ஆனல், முதலைக்கொண்டு செய்யும் உலக வர்த்தகம் முன்னரே பேரளவில் நடந்துவந்தது; மேலும், அமித்தடாமைவிட்டு இலண்டனே அதன் மத்திய இடமா யமைந்து வருவதாயிற்று. உவிலியம், மாள்பரோ ஆகியோரின் காலத்துள்ள இலண்டன் கைத்தொழிலிலும் பார்க்க வணிகத்தி லும் பணத்திலும் மேம்பட்டுள்ள ஒரு பெரிய வியாபார நகர மாயிருந்தது. அங்கு நடைபெற்ற தொழில்களில் ஈடுபட்டோர் முரட்டு மக்கள். இக்கூட்டத்தினர் சுமைகூலியாட்கள், கப்பற்றுறைத் தொழிலாளிகள், நாட்கூலி வேலைக்காரர், தோணிக்காரர், குற்றஞ் செய்தலையே தம் தொழிலாகக் கொண்டோர் ஆகியோர் அடங்கிய மரியாதை தெரியாத நாகரிகமற்ற மக்கட் குழுவினராவர். அவர்கள்
கவனிப்பாரின்றியும், பெரும்பாலும் ஊர் காவலரின் பாதுகாப்பின்
றியும், சுற்றிச் சுற்றிச் செல்லும் வழிகளையுடையனவும், விழும் நிலை
யிலிருந்தனவும், சுகக்கேடானவையுமான வீடுகளில் வசித்து வந்த னர். அவ்வீடுகளிற் பல, நகரின் மதிற்புறத்தேயுள்ள "சுதந்திர முடைய இடங்களிலும் பிளிற்று விதியை மையமாகக் கொண்ட தும், முதன்மையாக மக்கள் தொகை பெருகியதுமான நிலப்பாப் பிலுமிருந்தன. அதற்கடுத்தாற்போல, உயர்ந்த வேலைப்பாடுடைய தொழில்களிற் பெரும்பாலும் ஈடுபட்டுள்ள கம்மியரையும், மரியா தைக்குரிய கடைக்காரரையும் கொண்ட பெருந்தொகையான நடுத் தர வகுப்பினரும் ஆங்கிருந்தனர். எவர்க்கும் மேலாக, ஐரோப்பா வில் வேறெந்த மண்டலத்திலும் இணையானவரைக் காட்டமுடியாத செல்வமுள்ள வணிகரும், பணக்காரரும் நகரத்தின் சிறப்பான இடத்தில் வசித்து வந்தனர்.
இலண்டன் மாநகர மாந்தரும் அவர்தம் தலைவரும் பேளி, கிறசாம் ஆகியோர் காலத்திருந்ததுபோல அரசாங்கத்துக்கு மீட்டும் உடந்தையாக விருந்தனர்; ஆனல், இலிசபெத்து பிலிப்புவுக்கு மாருய்ச் சிக்சனமாகப் போர் நடத்திய காலத்துக்குப் பின், அா சாங்கப் பணத்தின் ஒழுங்குகளும், இலண்டனின் செல்வத்தினள வும், அச்செல்வம் எளிதிற் கிடைக்கக்கூடிய தன்மையும் பெரிதும் வளர்ந்தும் திருந்தியுமுள்ளன. சாள்சு மொந்தேகு கிரேக்குவுக்கு உதவி செய்திருந்தால், அவன் இசுப்பெயின் அரசனின் தாடியைப் பொசுக்குவதைவிட, இன்னும் அநேக நட்டங்களைப் பிலிப்புக்கு

கிழக்கிந்திய வணிக islands AD
ஏற்படுத்தியிருப்பான். பிரான்சில் ஏறக்குறைய இரண்டு கோடி மக்களும், இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் கிட்டத்தட்ட எழு பது லட்சமும் இருந்தபோதிலும் ஆங்கிலப் பாராளுமன்றமும் இலண்டன் மாநகரமும் ஒருசோ, தம்மிலும், மிகுதியான பணத் தொகை யுடையன வென்பதைக் கசப்பான அனுபவமூலம் அறிய வேண்டியவனனன் இப்பிரான்சிய மாமன்னன்.
இலண்டனின் கிழக்கிந்திய வணிக சங்கம், சுதுவட்டர்கால ஆசம் பத்தில் இலவங்கத் தீவுகளிலிருந்து ஆங்கில வணிகரை மிக முரட் த்ெதனமாக விலக்கியதும், ஒரு சமயம் ஆதிக்கமுடையதுமான ஒல்லாந்தர் சங்கத்தைச் சமமான முறையில் எதிர்த்து நின்றது. சென்னையிலும் பம்பாயிலுமுள்ள நிலையங்களிலிருந்து பெருநிலப் பகுதியில் மொகலாயப் போரசோடு உறுதியான வணிகம் நடைபெற் றது. பின்னர், வருங்காலக் கல்கத்தாவுக்குக் கருவாயமைந்துள்ள தும் கங்கை நதியின் கழிமுகத்திலுள்ளதுமான போட்டு உவிலி பத்திலிருந்து அவ்வாறே நடைபெற்றது. ஐக்கிய மூலதனக் கம்பனி யின் பங்காளர், உலூயியோடு போர் நடந்த காலத்தில், கைமாறி மாறி இடைவிடாது பெருஞ் செல்வம் ஈட்டி வருவாராயினர்.
பிரான்சிய கடற்கொள்ளைக்காரரால் கப்பல்கள் அழிக்கப்பட்ட
போதிலும், தேயிலை, வாசனைத் திரவியங்கள், சால்வைகள், நூற் அறுணிகள் ஆகியவற்றின் தேவை குறைந்திலது, மேலும், வெடி மருந்து செய்தற்கு வேண்டிய வெடியுப்பின் தேவை மிகுதியாக அதி கரித்துவிட்டது. சங்கம் சீனுவிலும் இந்தியாவிலும் ஆங்கில வணி கப் பொருள்களுக்கு வேண்டிய பெரிய சந்தையொன்றைப் படிப்படி யாக அமைத்துக்கொண்டு வந்தபோதிலும், அது தங்கக் கட்டியை ஏற்றுமதி செய்து வெறும் போகப் பொருள்களை மாத்திரம் இறக்கு மதி செய்வதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனல், போகப் பொருள்களும் பெரிதும் குற்றஞ்சாட்டப்பட்ட கம்பனியிற் பங்கு களுமே வேண்டுமென்று நாட்டவரான ஆடவரும் பெண்டிரும் எப் போதும் கோரினர். உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளில் பட்டயம் பெற்ற வணிகர்க்கும், கள்ள வணிகர்க்கும் இடையே உண்டான கலகமும், பழைய சங்கத்திற்கும் புதிய சங்கத்திற்கும் உண்டான கலகமும், வணிகவுரிமைகளுக்கு அரச நடுவராக அரச வையிற் கால்வைத்த பொதுமக்கட் பிரதிநிதி மன்றத்தை நடுங் கச் செய்தன. புரட்சியை அடுத்த முதல் ஆருண்டுகளில் சேர். யோசையா சைல்டு வென்பான், பழைய சங்கத்தின் சிறப்புரிமை யைக் காத்தற்காக அமைச்சர் குழுவினர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்க்கும் 1,00,000 பவுன் கொடுத்தான். இச்சண்டைகளில் கட்சிப் பேரார்வத்தாலும், தனிப்பட்ட பேராசையாலு முண்டான
கோபாவேசம் முழுவதும், கீழ்த்திசை நாடுகளின் செல்வம் பொய்
85

Page 104
86
1704, 1708.
IV gth படத்தைப் பார்க்க.
மத்தியதரை நாடுகளில் ஆங்கில வணிகர்
யானதன்று எனவும் அங்கிருந்தே ஆண்டுதோறும் இலண்டனுக் குப் பெருஞ் செல்வம் சேர்க்கின்றதெனவும், புதிய மாவட்டக் குடும் பங்கள் நிறுவப்பட்டும் வருகின்றனவெனவும் தெரியவந்தபோது, மேலும் அாண்டப்படலாயிற்று. தம் முயற்சியாலுயர்ந்த இச்செல் வச் சீமான்களுள் மிகத் தனிச் சிறப்புடையவனும், வெல்லமுடியாத வனும், புகழ்பெற்ற சதாமின் பாட்டனும் பேர்படைத்த பிற்று வைரத்தையுடையனுமான தொமசு பிற்று ஆவன். அவன் இந்தியா வில் முதலில் திருடனயும், அதாவது முதலில் கள்ள வணிகனயும், பின் சங்கத்துக்காகச் சென்னை அதிகாரியுமாயிருந்து தன் செல் வத்தை ஈட்டிய பின்னர், தன் சொந்தவூரில் நிலச்சொத்தையும், பழைய சாரம் என்ற பெயருடைய பாராளுமன்றப் புரத்தையும் விலைக்கு வாங்கியுள்ளான்.
அக்காலத்துப் பிரசித்திபெற்ற கோப்பிக் கடைகளில் உபயோ கித்த கோப்பிக் கொட்டையை மத்தியதரை நாடுகளில் வணிகஞ் செய்த ஆங்கில வணிகர் இறக்குமதி செய்ததிலும் குறைவாகக் கிழக் கிந்தியக் கம்பனி இறக்குமதி செய்தது. அவ்வணிகர் கொன்சு தாந்திநோப்பிளில் ஏனை ஐரோப்பியரிலும் அதிக செல்வாக்குடை யாாய் விளங்கினர். மேலும், அவர்கள் இத்தாலி, வெனிசு, இல வாந்து நாடுகள் ஆகியவற்றின் துறைமுகங்களில் ஆங்கில ஆடை வணிகத்தை விருத்திசெய்து வருவாராயினர். பாபரி நாட்டுக் கடற்கொள்ளைக்காரரும், தாலோனிலும் பிறகித்திலுமிருந்து விரைந்து சென்று கப்பற் குறையாடுவோருமிருந்தும், துருக்கியி லும் வெனிசிலுமிருந்த எங்கள் வணிகர் போர்க் காலத்தில் விருத்தியடைந்து வந்தனர். ஆகவே, சிபுரோத்தரும், மினுேக் காவும் பிடிபட்டபின்னர், மேல் மத்தியதரைக் கடலில் கடற்படை நிலையாகவிருந்தமை அவர்களின் காவலும் மதிப்பும் அதிகரித் தற்கு ஏதுவாயிற்று.
அத்திலாந்திக்குக் கடலின் மறுபுறத்தில் ஆங்கிலேயர் கடலாதிக் கத்தில் நல்வாய்ப்பைப் பூரணமாகப் பெற்றிருந்தனர். இரண்டு தலை முறைகளுக்குப் பின்னர் உவூல்வும், சதாமும் உச்சநிலைக்குக்
கொணர்ந்த பிரச்சினைகள் இக்காலத்திலேயே தோன்றின. அமெ
ரிக்க குடியேற்ற நாடுகளின் ஊக்கமிக்க மசச்சூசெற்றின் மக்கள் பதினன்காம் உலூயியோடு செய்த போர்களின் காலத்தில் பிரான் சியரிடமிருந்து ஆக்கேடியாவை இருமுறை கைப்பற்றினர்; இறிசு விக்கு உடன்படிக்கைப்படி அது ஒருமுறை திருப்பிக் கொடுக்கப் பட்டும், உத்திரெத்து உடன்படிக்கைப்படி பிரித்தானியாவோடு
* கோப்பி சத்துள்ள உணவன்று ; அது பேரூண் பிரியத்தையும் உண்டாக் காது. ஆதலால், அது சிறிதும் பயனற்றதென்று அதனை இறக்குமதி செய்தல் 1680 ஆம் ஆண்டில் கண்டிக்கப்பட்டது.

அமெரிக்காவிற் போரும் சமாதானமும்
இணைக்கப்பட்டும் நோவா இசுக்கோசியாவென்ற மறுபெயர் பெற் றது. அதே உடன்படிக்கைப்படி பிரித்தானியா பிரான்சியருக்கு மீன் பிடிக்கும் உரிமைகள் சிலவற்றைக் கொடுத்து நியூபண்ணிலாந் தைச் சேர்த்துக்கொண்டது. அவ்வுரிமைகள் எட்டுவேட்டின் ஆட்சி யில் ஒரு முடிவுபெறும்வரையும், இடைவிடாத விவாதத் துக்குரிய பொருளாயிருந்தன. அட்சன் குடாநாடு அதன் உறை பனியுடைய காடுகளோடு பிரித்தானியாவுக்கு உரியதாயிற்று. ஆங்கி ருந்து ஆங்கில வணிகர் தம் சொந்தவூரிற் செய்யும் உரோம வணி கத்திற்கு வேண்டிய உரோமத்தை அனுப்பி வந்தனர். ஆகையினல் -அரசபடைகளும் குடியேற்ற நாட்டுப் படைகளும் சேர்ந்து திறமையின்றிக் குவிபெக்கைத் தாக்கியமை பலனளிக்கத் தவறிய போதும்-சென் உலோறன்சு கழிமுகத்துக்கணித்தாயும், அப் பேராற்ருேரத்தே பிரான்சியர் கொண்டுள்ள குடியேற்றப் பகுதி களின் வடதுருவப் பக்கத்திலும், போரின் முடிவில் பிரித்தானியர் நிலையாகக் குடியேறினர்.
போரும் அதன் பின் ஏற்பட்ட சமாதானமும் பிரித்தானியரின் கடல் கடந்த பிறிதொரு ஆசையைத் தூண்டின. அதாவது, அந் நிய வணிகர் எவரையும் நீக்குதற்கான இசுப்பானிய அரசாங்க கட்டளையிருந்தும், தென் அமெரிக்காவின் பெரிய சந்தையில் எமது வணிகத்தைப் புகுத்தச் செய்த முயற்சியாகும். இசுப்பானிய வாசோடு முதலாம் சேமிசு சமாதானங் கொண்டகால முதல், ஆங்கில கடற்கொள்ளைக்காரர் தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும், நடுவிலும் இசுப்பானியரோடு சண்டை செய்து வந்தனர். இரண்டாம் சாள்சின் ஆட்சியில் மேற்கிந்திய தீவுகளி லுள்ள கடற்கொள்ளைக்காரர் இசுப்பானிய கடலோரமாக இங்கி லாந்து செய்த சண்டைகளை ஆதரிப்போராக விருந்து தமக்குண் டான வீரந்ததும்பிய மேன்மையாற் கிடைத்த மகிழ்ச்சியிற்றிளைத் தனர். உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளில், அவர்கள் தீச் சுவைப்போன்று கருங்கொடி தாங்கிச் சென்று கப்பற் குறையாடு வோரின் கீழான நிலைமையும், குணமும் அடைவாராயினர். அவர் கள் எந்நாட்டு மக்களுக்கும் மாமுயிருந்தனர். அவ்வாறே எவரும் அவர்களுக்கு மாமுயிருந்தனர். ஆனல், அவர்கள் படிப்படியாகவே இத்தகைய இழிநிலையை யடைந்தனர். கிட்டு, குவெற்சு முதலி யோர் பலர் கடற்கொள்ளை, பகைவர் கப்பல்களைச் குறையாடுத லாகிய இரு செயல்களில் எதற்குரியரென்று சொல்ல முடியாத ஐயப்பாடான நிலையிலிருந்தனர். மேலும், குடியேறிய மக்களின தும், பிரித்தானிய அதிகாரிகளினதும் மனேநிலை சந்தர்ப்பங்களுக் கும் ஆட்களுக்கும் தகுந்தவாறு வேறுபட்டது.
இந்நூல் பக்கம் 15 பார்க்க.
73.
7.
87

Page 105
188
TI3.
1689-1 GT.
1692, .
C-13.
உவிலியத்தின் போர்கள்
உத்திரெத்து உடன்படிக்கையில் இசுப்பெயினுேெ எமக்குள்ள தொடர்பினே ஒழுங்காக்க ஒரு முயற்சி செய்யப்பட்டது. அப்போது கோரி அரசாங்கம் பிரசித்திபெற்ற 'அகியேன்ருே' என்ற சம்மதம் ஒன்றைப் பெற்றதஞல், மிகக் கடுமையாகக் குறைகூறுவோரிடத்தி லிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ளது. அகன்படி வலிமை வாய்ந்த அந்நிய நாடுகளுள் இங்கிலாந்து மாத்திசம் இசுப்பானிய அமெரிக் காவோடு வணிகஞ் செய்தற்கு ஆண்டுதோறும் ஒரு கப்பலே அனுப்பு தற்கும், ஆங்கு á8øð grð L'Af அடிமைகளேக் கொண்டு செல்வதற் கும் அனுமதி பெற்றது. ஆணுல், மிதமான இச்சிறப்புரிமை பதினெட் டாம் நூற்றுண்டில் சட்டவிரோதமான பெரியதொரு வணிகத்தின் தொடக்கமாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், கென் அமெரிக்கா வில் ஒரு வித தடையுமின்றி எல்லோரும் வணிகம் செய்யவேண்டு மென்பதற்காக நடந்த சண்டை, பொலிவார், கனிங்கு ஆகியோரின் காலத்தில் இசுப்பானிய ஆட்சி ஒழிந்தபோதே முடிவெய்தியதாகும்.
ஐரோப்பாவில் நடந்த போர் சம்பந்தமாகக் குறிப்பிடின், உறிாயியை அடிபணியச் செய்த சண்டையின் இரு பிரிவுகளுக்கும் கணிசமான வேறுபாடிருந்ததெனலாம். மூன்ரும் உவிலியம் அரசி யலுக்கும் இராணுவத்துக்குமுரிய கல்வணுயிருந்த ஒக்கிசுபேக்குச் சிங்கப் போரில் பிரான்சு தனது தரை எல்ஃப்புறங்கள் எங்கணும் இசுப்பெயின், ஒல்லாந்து, சேர்மனி ஆகிய நாடுகளுக்கு மாறுகச் சண்டை செய்தது. ஆயினும், தன் நிைேய விடாகிருந்தது. இத்தின் கேக்கிலும், இலான்டெனினும் நடந்த சண்டைகளில் பிரான்சு வெற்றிபெற்றதெனிலும், இரு கட்சிகளில் ஒன்றேனும் அதி முக்கிய மான வெற்றி எதையும் பெற்றிலது. எக்கட்சியும் எங்கேலும் குறிப் பிடத்திக்க முன்னேற்றமெதையும் அடைந்திலது, இசுப்பானிய நெதலாந்துக்கும், பிசான்சுக்குமிடையேயுள்ளதும், சண்டையிற் பெரும்பாகம் நடந்ததுமான ராஸ்லே செயல்முறையில் மாற்றப்பட" கிருந்தது. பெருமளவில் சண்டைகளே வெல்லவோ, தோற்கவோ ஆற்றல் படையாக உலிலியத்தின் கலேமையில், பிரித்தானியப் படைகள் போர்விக்கையைக் கற்றுக்கொண்டன. அவைகளேக் தன்னிலும் பெரிய தளபதியொருவனுக்குக் ககுந்த கருவியாக அவன் அளித்துள்னான்.
மறுபுறமாக இசுப்பானிய அரசுரிமைப் போரில், கடலாதிக்கத் தைவிட எண்ய நல்வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் கொண்ட பிரான்சு சண்டையைத் தொடங்கியது. அதன் படைகள் ஐரோப் பாவில் இசுப்பானிய உரிமை முழுதையும், உலூயியின் போனும் இகப்பெயினின் புதிய வாசனுமான ஐந்தாம் பிளிப்பின் பெயரில் கைப்பற்றிக்கொண்டன. பிானிசு மலேத்தொடருக்கப்பாலுள்ள அா சாங்கம், இத்தாலிய மிலான், நேப்பிள், புகழ்பெற்ற கோட்டைகளே
 

*TLTunnn巴恩*目「@也用*hrö了國 國割官厄國* A日—了
터테대해서*_닉시기의 고시,
±1引 ? .盘『、----*圖書謂曹』证影曲 * *|- ■實 * =* 晓日틀邱叱 ) }雷 *IIĘiEIĘi討封劑駐于韩非王仁堂*다.■■ 七明 *社■■时•• 先代日„sorinjë sher코비궤회데력用性.= +
月제에 """,「*********?**』*』
绝--++++++++++++++- - ----- 鹽---=曲』團**
***』』曹豐團* |-*劑 圖*劑強駐

Page 106
190
மாள்பரோவின் போர்கள்
யுடையனவும் நெடுங்காலமாகப் போட்டியிட்டனவுமான இசுப்பா னிய நெதலாந்து ஆகிய யாவும், போர் தொடங்கிய போது பிரான் சின் பெருநிலப்பரப்பாயிருந்தன. இன்னும், சேர்மனியின் மத்தியி லுள்ளதும், மிகவும் நெருக்கப்பட்ட ஒசுற்றியாவின் எல்லைகளி லுள்ளதும், மறுபக்கத்தில் அங்கேரியின் கலகத்தால் தாக்கப் பட்டதுமான பெரிய பவேரியா உலூயிக்கு நேயநாடாகவிருந்தது. நேயநாடுகளின் நோக்கத்தைப் பொறுத்தமட்டிலும் ஒல்லாந்துக் கும் இங்கிலாந்துக்கும் தரைவழியாகவும் கடல்வழியாகவுமுள்ள வருங்காலப் பாதுகாப்பைப் பொறுத்த மட்டிலும் நிலைமை நம் பிக்கையளிப்பதாக இருக்கவில்லை. இந்நிலப் பாப்புக்களிலிருந்தும், முக்கியமாய் நெதலாந்துக்களிலிருந்தும் உலூயியை அவர்கள் துரத்த முடியாவிட்டால், அவன், உண்மையாக, ஏற்கெனவே ஆகிய படி ஐரோப்பாவின் தலைவனுயிருப்பான். ஆனல், காத்திராப்பிரகாச மாக, முந்தின போரில் கைப்பற்றுவதற்கு ஒரு குழி நிலமுமில்லா திருந்த நேயநாடுகள் பிரான்சியசை, இசுப்பெயினைத் தவிர்த்து ஏனைய நாடுகளெல்லாவற்றிலுமிருந்து துரத்திவிட்டன. இசுப்பெயி னில் சிறு சிறு குழுவினராய் மறைந்திருந்து செய்யும் போர் முறை யில் ஒப்பில்லாத் திறமைபெற்ற இசுப்பானிய மக்கள் பேபன் நாட் டுப் பிலிப்பைத் தாம் விரும்பிய அரசராகப் பெற்றுள்ளார்.
1704 ஆம் ஆண்டில் மாள்பரோ தானியூப்பு மேற் படையெடுத் துச் செற்றமையாலும், பிளன்கீமில் கிடைத்த வெற்றியாலும், ஒசுற் றியா காக்கப்பட்டது; பவேரியா கைப்பற்றப்பட்டது. மாள்பரோ இசுப்பானிய நெதலாந்துக்களை இராமிலீசில் 1706 ஆம் ஆண்டில் கைப்பற்றினன். மேலும், அதே ஆண்டில் தியூரினில் யூச்சினின் சண்டையால் மிலானும், நேப்பிளும், இத்தாலிய தீபகற்பத்தில் அரசியல் ஆதிக்கமும் ஒசுற்றியாவுக்குரியனவாயின. இசுப்பெயின் பேபன் நாட்டுப் பிலிப்புக்குரியதாகவேயிருந்தும், ஒசுற்றியாவின் நிலப்பரப்புக்களை முக்கியமாய்ப் பெருக்குதற்கும், ஒல்லாந்துக்கும் பெரிய பிரித்தானியாவுக்கும் வேண்டிய பாதுகாப்பைப் பெறுதற் கும், இசுப்பானிய பேரரசு கைப்பற்றப்பட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மிகப்பெரிய வெற்றிகளை முந்தின போரின் முறிவோடு ஒப்பிட் டால், மாள்பசோவின் இராணுவத் திறமையும், அவனுடைய நண்ப னும் ஒசுற்றிய தளபதியும் சவோய் நாட்டின் இளவரசனுமான யூச்சின் என்பான் காட்டிய சிறந்தவாற்றலும், உண்மையான ஒத்து ழைப்பும் ஒருங்கு சேர்ந்து அவற்றிற்குப் பேரளவிற் காரணமாயின வென்று மதிப்பிட்டுக் கூறலாம். ஆயினும், பிரித்தானியாவின் கடல், வணிகம், பொருள்கள் பற்றிய்தும் என்றும் வளர்ச்சியுறுவதுமான அதிகாரமும், அதனை மாள்பரோ, கொடோல்பின் ஆனின் உவிக்கு அமைச்சராகியோர் ஆண்மையோடு உபயோகித்தமையும் அனுகூ

குத்துவாளும் அணியமைப்பும்
லங்கட்குக் காரணமெனக் காட்டலாம். மாள்பரோ உலகப் போர்க் கலையையும் அனுகூலமான போர் முறைகளில் கடல் தரைப்படை களின் ஆற்றல்களை ஒன்றுகூட்டும் விதத்தினையும், இங்கிலாந்தின் கதியினை நிர்ணயித்தோருள் சதாமைவிட தனக்குப் பின் வந்தோ ரெவரினும் மேலாக அறிந்திருந்தான். இங்கிலாந்து மென்மேலும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அதே சமயத்திலே பிரான்சு கடலிலிலும் பணநிலையிலும் அடைந்த வீழ்ச்சி கடந்த ஐம்பதாண்டு களாக உலகத்தைத் கைப்பற்ற பிரான்சு செய்த முயற்சிகள் யாவும்
அதனைச் சோர்வடையச் செய்து வெற்றிபெறும் நேரத்தில், கைக் கெட்டியது வாய்க்கெட்டாததுபோல, ஏமாற்றிவிட்டன. நாட்டி
லேற்பட்ட பெருஞ் சோர்வு உலூயியின் புதிதாகத் தோன்றிய தள பதிகளின் திறமை குறைந்ததன் மூலமும், அவனுடைய படைகள் மாள்பரோவினல் முதலில் தோற்கடிக்கப்பட்டபின் அவை தன்னம் பிக்கையை இழந்ததன் மூலமும் வெளிப்படைய்ாகக் காணப்படுவ தாயிற்று.
போர்க் கலங்களின் பருமனும், அவற்றிலுள்ள போர்க் கருவி களும், கடற்போர் நடத்தும் தந்திர முறைகளும், பிளேக்கின் காலத்துக்கும் நெல்சனின் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பெருமாற்றம் எதுவும் அடைந்தில. ஆனல், தசைப்போர் நடத்தும் முறைகள், ஆனின் ஆட்சித் தொடக்கத்தில் மாள்பசோ படைத் தலைவனுயிருந்தபோது, கசுத்தாவசு அடோல்பசுவினதும், குருெம் வெலினதும் முறைகளிலிருந்து பெரு மாற்றமடைந்துள்ளன. மீட்சிக்காலமுதல் குத்துவாள் படிப்படியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாயிற்று. மேலும், கில்லிக்கிருரங்கிச் சண்டையிற் பெற்ற அனுபவத்தின் பின் உவிலியத்தின் ஆட்சியில், வெடி தீரும்போதும் துவக்கில் பொருத்தியபடியே யிருக்கக்கூடியதான, வளையமிட்ட குத்துவாள் பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டது. ஆகையால், குருெம்வெல் காலத்தில் சேனையின் அரைப்பங்காயமைந்த ஈட் டிக்காரர் அறவே நீக்கப்பட்டனர். இது முதற்கொண்டு, முனையிற் குத்துவாள் கொண்ட பழையகாலத் துப்பாக்கி தாங்கிய தனிப்பட்ட ஒரேயொருவிதமான காலாட்படையே யிருந்து வந்தது. போர்க் கருவியில் நேர்ந்த இம்மாற் றத்தை யொட்டி, ஈட்டிவீரர்க்கு மிகப் பொருத்தமாக ஆறு நிரை யில் அணிவகுக்கப்பட்ட காலாட்படை மூன்று நிரை அணிவகுப் பாக மாற்றப்பட்டது; ஏனெனில், ஓரிடத்திற் றிரண்டு நின்று மிகப் பெருந்தொகையான துப்பாக்கிகளாற் பகைவரைச் சுடுதற்கான முறை அதுவேயாகுமென்று கருதின்ாாதலினென்க. காலாட்படைப் பயிற்சி, பிற்காலங்களிலிருந்தது போல மிகத் திறமை வாய்ந்ததாய்
இந்நூல் பக்கம் 60 பார்க்க.
1702.
91

Page 107
192
1689-1697.
1701-1713.
பழைய போர்முறை
அல்லது படைவகுத்தல் மிகப் பொருத்தமானதா யில்லாதிருந்த போதும், பேர்படைத்த பிறற்றிக்கு அல்லது வெலிங்டன் பயன் படுத்திய காலாட்படைக்குரிய போர்த் தங்திரங்களை இப்பொ ழுதே காணக்கூடியதாயிற்று. பிளன்கீமிலும், இராமிலிசிலும் நிகழ்ந்ததுபோல, குதிரைப்படையே சண்டையில் வெற்றி தோல் விகளை நிச்சயிக்கக்கூடிய நிலையில் இன்றுமிருந்தது. ஆனல், போரில் வகித்த இடம் ' எளிய காலாட்படை'யின் மிகுந்த வாற்றல் காரணமாகக் குருெம்வெல் காலத்திலிருந்ததிலும் அப் போதே மிகச் சிறியதாய் விட்டது.
பதினன்காம் உலூயியின் காலத்திற் போர் நடத்துதல் பெரும் பாலும் கோட்டைகளைப் பற்றியதாகவிருந்தது. 'திரித்தாம்சாண்டி’ என்ற நூலினைப் படிப்போர், அங்கு உவிலியத்தின் வயது முதிர்ந்த போர்வீரர் இருவரும் மாள்பரோவின் படையெழுச்சிகளிலும் சண் டைகளிலும் பார்க்க அவர்தம் முற்றுகைகளிலேயே தமது ஈடு பாட்டை மிக அதிகமாகக் காட்டுவதை நினைவில் வைத்திருப்பர். உலூயி அரசனின் இராணுவ கர்த்தாவான பெயர் பெற்ற திரு. வோபன் என்பான் பாதுகாப்புக்குரிய திறமையை நன்கு விருத்தி செய்து பூரண நிலைக்குக் கொண்டுவந்தான். மேலும், பிரான்சும் அதன் அயல் நாடுகளும், அரணிட்டு ஒன்றையொன்று கண்காணிப் புச் செய்தன. நெதலாந்தில் இவ்வரண்கள் கூடுதலாக விருந்தன.
அதன் விளைவாக இராணுவ முயற்சியிலும், சுறுசுறுப்பிலும் தடையேற்படும் சுபாவமுண்டாயிற்று. இது ஒக்கிசுபேக்குச் சங்கப் போரி நன்கு காணத்தக்கதாயிருந்தது. ஆனல் இசுப்பானிய அா சுரிமைப் போரில் மாகாணங்களை விரைவிற் கைப்பற்றியமை கசுத் தாவசுவை நினைக்கச் செய்தது; நெப்போலியன் வருகைக்கு முன் னறிகுறியாயும் அமைந்தது. இசுப்பானிய பேரரசுக்கும் பவேரியா வுக்குமுரிய நிலப்பரப்புக்களுள் பிரான்சின் எல்லைப்புறங்களுக்கப் பால் உலூயியின் சேனைகள் தடைசெய்யப்படாது முன் சென்றதால் இம்மாற்றத்துக்கு வேண்டிய வழி ஒழுங்கு படுத்தப்பட்டது. மாள் பரோ தலைமைத் தானத்தை ஏற்றுக்கொண்டபோது, பிரான்சியர் தம் வழக்கமான அரண்வரிசைகளுக் கப்பால் மிக முன்னேறிச் சென்று விட்டதை அறிந்தான். அவனுடைய பக்கத்தே வழக்கமாக வுள்ள கோழைத்தனமுடையோர் போச்சங்கொண்டபோதும் இரா ணுவப் பெயர்ச்சிப் போரினைப் புதுப்பித்தற்குரிய தருணத்தை அவன் பயன்படுத்திக் கொண்டான். ஐரோப்பாவினூடாக தானி யூப்பு ஆற்றங்கரைக்கு, ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்குமுரிய படைகளை ஒசுற்றியாவைக் காத்தற்கும், பிளன்கீமில் வெற்றி கொள்ளவும் கொண்டு செல்ல அவன் தீர்மானித்தான். அப்போது விழிப்பாயிருந்த ஒல்லாந்து அதிகாரிகளையும், செலவு மிகக்க

மாள்பரோ
தம் படைகளே அத்தகைய அபாயமான வழியிலே பயன்படுத்தற்கு உடன்படாத பாராளுமன்றத் தோரிக் கட்சியினரையும் அவன் ஏமாற்ற வேண்டியிருந்தது.
மாள்பரோ படைத் தலைமையிலும் போர்த் தந்திரத்திலும் அதனு டன் போரரசியல் ஞானத்திலும் போரரசியற்றந்திரத்திலும் வர லாற்றில் ஆங்கிலேயர் எவர்க்கும் குறைந்தவனல்லன். அவனுடைய திறமைகள், சதாமுக்கும் கிளைவுக்குமுரிய திறமைகளை ஒருங்கு சேர்த்தால், அவற்றிற்கே நிகரா கும்; ஆயினும், சதாமைப்போல அலங்காசமான பேச்சின லும், அறிவு மிகுந்த உணர்வெழுச்சியினுலும் பொதுவாகத் தம் நாட்டு மக்களின் ஊக்கத்தைத் தூண்டு மாற்றல் மட்டுமே இல்லா திருந்தான். பெரியதோர் இராணுவ முடியரசை வீழ்த்தற்கு அவ னுக்கிருந்த திறமை வெலிங்டன், காசில்றி ஆகியோரின் திறமைகளை ஒருங்கு சேர்த்தால், அவற்றிற்கே ஒப்பானதாகும். மேலும், உவிக் குக் கட்சியினர் அவனின் எண்ணப்படி விட்டிருந்தால், 1815 ஆம் ஆண்டில் காசில்றி, அல்லது 1713 ஆம் ஆண்டில் பொலிங்புருேக்குச் செய்துள்ள நல்ல சமாதானத்தைப் போன்ற தொன்றை 1709 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்கு அவன் அளித்திருக்கக் கூடும்.
குருெம்வெல் மாத்திரமே அவனுக்கொப்பாவன் எனலாம். ஆனல், ஒலிவர் தன் குணத்தின் வியத்தகுமியல்புகளினலும், அரசி யல், சமயம், ஆகியவற்றில் தனக்குள்ள பற்றுக்களிலுைம் சிலருக்கு விருப்பையும் சிலருக்கு வெறுப்பையும் உண்டுபண்ணு வான்; மாள்பரோ தன் நாடும் உலகமும் தனக்குக் காட்ட வேண் டிய நன்றி பற்றி விருப்பு வெறுப்பு எதுவும் ஏற்பட இடங் கொடான். விதி அவனைப் பிறப்பாலும் வளர்ப்பாலும் தோரியும், பிந்திய தொடர்பினுல் உலிக்குவும் ஆக்கியபோதிலும், அவனே குறிப்பிட்டவாறு, 'உவிக்கு, தோரியென்ற வெறுக்கப்பட வேண்டிய பெயர்கள்' அவனுக்குக் கருத்தற்றனவேயன்றி வேமுென்றுமல்ல. இரு கட்சிகளும், அவன் தம்மில் ஒருவன யிருக்காததற்காக அவன்மேற் பழிவாங்கின; தோரிக்கட்சி யின்ர் அவன் குணத்தை விடாப்பிடியாகப் பழி சொல்லி இழிவுபடுத் தினர்; உலிக்குக் கட்சியினர் அத்தாக்குதலை எதிர்த்தலில் அக்கறை யற்றவராயிருந்தனர். ஓய்வுகாலச் சம்பளம் பெற்ற உலூயி காலத்து ஆங்கிலேயரோடும் நாடுகடத்தப்பட்ட சேமிசு காலத்து உவிக்கு, தோரிக் கட்சியினரோடும் ஒத்த காலத்தவனுக அவனை நோக்கின், மீட்சி அரசும் புரட்சிப் பாராளுமன்றங்களும் தோற்றுவித்த சாமா னிய மக்களிலும் அவன் சிறந்தவனல்லன். ஆனல், பணத்தை அவன் விரும்பினுலும், ஏனைய ஊழியரெவரிலும் மேலாக, தான் பெற்ற ஒவ் வொரு சதத்துக்கும் இங்கிலாந்துக்குச் சிறந்த சேவை செய்தான்.
193

Page 108
194
1697-1701.
யூன், 1701.
உவிக்குகள், தோரிகள், ஆளி
தலையாய நல்வாய்ப்புக்கள் கிடைப்பதை அவன் நோக்கியிருந்தா லும், அவனுடைய சாதுரியத்தினுல் பத்தில் ஒன்பது பங்கு முன் னேறியது அவனின் நாடேயாகும். நிச்சயமான வெற்றிக்கு அவன் நடத்திச் சென்ற போர்வீரர்கள் தவிர ஏனையோரிடம் விசுவா சத்தை ஏற்படுத்த அவன் தவறினுலும் அவனின் மகத்தான திறமை யும் ஆரவாரமற்ற தன்மையும், குருெம்வெலின் நகைச்சுவையும் மனவெழுச்சியும் மிகுந்த மனிதத்தன்மைக்கும், ஆசையும் அமைதி யின்மையுமுடைய மனப்போக்குக்கும் எவ்வளவு குறைந்தவையோ அவ்வளவு உயர்ந்தவையுமாகும். நியாயம், பொறுமை, பகுத்தறிவு ஆகியவற்றுக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் காலமொன்று தோன்று வதை ஒப்பற்ற அறிவுத்திறம் படைத்த மாள்பரோ ஆதரித்தான்.
உலகப் போரொன்றினை வெற்றிகரமாக நடத்துவதில் இரண்டு வேறுபட்ட செயல்முறைகள் உள-இரண்டும் மிகக் கடினமானவை -ஒன்று போர் செய்து வெற்றிபெறுதல், மற்றது, அதன் பின்னர் உறுதியான சமாதானஞ் செய்தல், அவப்பேருக, போருக்கு வேண் டிய மனேநிலையும், பண்புகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் சரியாக நடத்துதற்கு எப்பொழுதுந் தகுந்தவையல்ல. இது காரண மாக, எம்மிடத்தே இரு கட்சிமுறையிருந்தது மிகவும் நல்லது. உவிக்குக் கட்சியினர் போரை வெல்லவும், தோரிக் கட்சியினர் சமாதானஞ் செய்யவும் அது நல்வாய்ப்பளித்தது.
புரட்சிக்குப் பின்னர் உவிக்குக் கட்சியினர் கொடுங்கோன்மையின் பிரதிநிதியும், போலியின் ஆதரவாளனுமான உலூயியின் மிக நாட் பட்ட பகைவராய்விட்டனர். உவிக்குக் கட்சியினரின் சார்பாக எட்டுணைப் பாரபட்சந்தானுமில்லாத மூன்றும் உவிலியம், ஒக்சு பேக்குச் சங்கப் போரினைத் தேவையான ஆற்றலோடும், பொருள் வசதியோடும் உலிக்கு மந்திரிசபை யொன்றுதான் நடத்தக்கூடு மென்று செயல்முறையில் அறிந்து கொண்ட ரன், ஆனல், அவன் தானே ஆங்கில அமைச்சரின் உதவியின்றி இறிசுவிக்கில் சமாதா னத்தைப் பூர்த்திசெய்தான். அதற்குப் பின் போரினைப் புதுப்பித்த அலுக்கு முன்னுள்ள இடைக்காலத்தில் தோரிக் கட்சியினர் தாமா கவே மீட்டும் உயர்வடைந்தனர். மேலும், தம்மை ஆதரிப்பவளான ஆன் அரசி அரியணையேறியதும், அதிகாரத்தில் ஏறக்குறையப் பிரத்தியேகவுரிமை பெற்றனர். ஆனல் சமாதானம் நிலவிய சற்றே குழப்பமான இந்நான்காண்டுகள் முழுதும் பொதுமக்கட் பிரதிநிதி மன்றத்தில் தன் செல்வாக்கை மிகத் தீவிரமாகச் செலுத்தியவன் மொட்டைத்தலைக் குடும்பத்துக்குரியனும் அதனேடு தொடர்புடை யனும், தோரிக் கட்சியைச் சேர்ந்தவனுமாகிய மிதவாதியான ஆளி யென்பவனேயாவன். அவன் 'தன் கட்சியினருக்கு அறிவுபுகட்டி ஞன்”, ஆன் அரசி பிள்ளைகளின்றி இறக்க நேரின், அனேவர் பரம்

இசுப்பானிய அரசுரிமைப் போர்
பரைக்கு அரியணையேறுமுரிமையை முடிவுசெய்த அரசுரிமை நிர்ண யச் சட்டத்தை விதியாக்குதற்கும், பிரான்சோடு போரினைப் புதுப் பித்தற்கும் தோரிக் கட்சியினரைத் தூண்டினன். அப்போது உலூயி இறிசுவிக்கு உடன்படிக்கையில் உலிலியத்தை ஒப்புக்கொண்ட போதும், அவன் போலியாளனை இங்கிலாந்தின் அரசனன மூன்மும் சேமிசுவென்று பிரகடனஞ் செய்தான். இசுப்பானிய பேரரசின் மிகப்பெரிய உடைமையை ஆளுதல், உலகத்தலைவனுகத் தன்னை அப் போதே மதித்த அப்பேரரசனின் ஆற்றலுக் கப்பாற்பட்டதாகும்.
ஆகையினல், இசுப்பானிய அரசுரிமைப் போரினை மிதமானதோரி உவிக்குக் கட்சியினர் ஒன்று கூடி, மாள்பரோவையும், கொடோல் பினையுஞ் சேர்த்துக்கொண்டு தொடங்கினர். ஆனல் அங்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகள் உவிக்குக் கட்சி பெரும்பாலாயுள்ள போர் அமைச் சொன்றை மறுபடியும் ஆக்கின; ஏனெனில், தோரிக்கட்சியிற் பலர் உலூயியை வெல்லுதலினும் இணங்காதார்க்கு மாமுய்ச் சட்டங்களை விதித்தலிற் கூடிய விருப்பங் கொண்டிருந்தனர். ஆனல், ஆளியின் மனம் போரிற் படிந்திருந்தது. அவன் உலூயி இசுப்பானிய நெத லாந்துக்களிலிருந்து துரத்தப்படும்வரையும், அதனுடன் கொத்து லாந்தோடு ஒற்றுமையை நிறைவேற்றும்வரையும், உவிக்கு அமைச் சில் ஒர் உறுப்பினணுயிருந்தனன். ஈற்றில் 1708ஆம் ஆண்டில் ஆன் அரசி ஆளியில்லாமல் முழுதும் உவிக்குக் கட்சியினரைக் கொண்ட ஓர் அமைச்சை ஏற்கும்படி வற்புறுத்தப்பட்டாள். மாள்பரோவும், கொடோல்பினும் தோரிக் கட்சியிலிருந்து முற்முக நீக்கப்பட்ட பின், அவர்கள் உலிக்கு அரசியற் கட்சியின் கட்டளைப்படி நடக்க வேண்டியவரானர். கலப்பான மந்திரிசபைகள் பெரும்பாலும் பய னுள்ள வேலை செய்திருந்தபோதும், பாராளுமன்ற அமைப்பில் அவை பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன. புரட்சிக்காலம் முதல் இங்கிலாந்து ஒரே அரசியற்றன்மை வாய்ந்ததும், பொறுப் புள்ளதுமான இக்காலத்துக்குரிய மந்திரிசபை அமைப்புக்கு வேண்டிய நடவடிக்கைகளையெடுத்துக் கொண்டிருந்தது.
போரினல் இருமுறை உயர்வும் செல்வாக்குமடைந்த உவிக்குக் கட்சியினர் சமாதானஞ் செய்வதிலே தாமதமுள்ளவராயிருந்தனர். மேலும், துர்ப்பாக்கியமாக, சொந்த நாட்டில் கிடைத்த அவர்தம் அரசியல் வெற்றி சமாதான நடவடிக்கைகளை முக்கியமாக மேற்
1701 ஆம் ஆண்டில் அரசுரிமை நிர்ணயச் சட்டத்துக்குத் தோரிக் கட்சியி னர் ஆதரவு அளிப்பது 1696 ஆம் ஆண்டில் உவிலியத்துக்கு மாருகச் செய்த படுகொலைச் சதியிலிருந்து யாக்கோபுவின் ஆதரவாளர்க்கு ஏற்பட்ட அவ மானம் காரணமாக இலகுவாயிற்று. இச்சதி இரண்டாம் சாள்சுக்கு மாறக உவிக்குக் கட்சியினர் செய்த " இறைகவுச்" சதிக்குப் பல அமிசங்களில் ஒப்பானமை வியப்புக்குரியது.
195
செத், 1701.
1701-1705.
1708.

Page 109
196
* போர் வேண்டாம் : சாச்ச்வெறல்
கொள்ள வேண்டிய சமயத்தில் ஏற்பட்டது. மாள்பரோ இராமிலிசி அலும் ஒடெனட்டிலும் நடந்த சண்டைகளால் இசுப்பானிய நெத லாந்துக்களை ஒசுற்றியாவுக்குப் பெற்றுக் கொடுத்தான். அதற்குப் பின் அவசியமற்ற போர் நடந்த நான்காண்டுகளாகப் பிரான்சின் எல்லைப்புறத்தைக் காவல் செய்த கோட்டைகளை அழித்தலில் ஈடு பட்டுள்ளான். பயங்கரமான சங்கடநிலையிலிருந்த உலூயி, இசுப் பெயினிலிருந்த தன் போனின் உதவி முழுதையும் விலக்கிவிடுத லுட்பட, நேய நாடுகள் பொருத்தமாகக் கேட்கக்கூடிய எல்லாவற் றிற்கும் 1709 ஆம் ஆண்டில் இணங்கினன். ஆனல், உவிக்குக் கட்சி யினர் தாம் சமாதானஞ் செய்தற்குத் தகுதியற்றவரெனக் காட்டி னர். அவர்கள் உலூயி இணங்கமுடியாததொன்றை மாத்திரங் கேட் டனர்-அதாவது, எட்டாண்டுகளுக்குமுன் உலூயி இசுப்பெயி னுக்கு அரசனுக்கிய பிலிப்பை ஆங்கிருந்து துரத்திவிட அவனு டைய படைகளை அவனே அனுப்பவேண்டுமென்பதேயாகும். இசுப் பானிய மக்களின் பேரன்புக்குரியணுகப் பிலிப்பு இருந்ததால் அவனைத் துரத்துதற்கு நேய நாடுகளால் முடியாமற்போனமையே இந்தக் கொடிய வேண்டுகோளுக்குக் காரணமாகும். "இசுப்பெயி னின்றிச் சமாதானமின்று ' என்ற உவிக்குக் கட்சியின் வாய்ப்பாட்
டின் கருத்து செயல் முறையில் சமாதானம் எந்தவகையிலுமில்லை யென்பதேயாகும். உலூயி தன் குடிகளுக்கு முறையிட்டான். அவ் வாறு செய்ய அவன் முன்னென்றும் கருதியதில்லை. அவன் தங்களுக் குச் சமாதானம் பெறுவதற்குத் தன் பெருமையைப் பெரிதும் தியா கஞ் செய்துள்ளானென்று அவர்கள் அறிவர். ஆனல், அது பயனில் லாததாயிற்று. ஆகையால் அவர்கள் தமது நாட்டைப் பாதுகாக்கப்
பிரான்சிய மக்களுக்கு இயல்பான பிரசித்திபெற்ற பேராண்மை
யால் அவனேடு சேர்ந்து கொண்டனர். மேலும், மலப்பிளாக்கேயில்
செத், 1709,
அளவுகடந்த செலவோடு பெற்ற வெற்றியில் மாள்பரோவை முதன் முதலாகத் தடைசெய்தனர்.
ஆங்கில மக்களும் வெற்றிக்குரிய சமாதானத்தில் மிகுந்த ஆர்வங்கொண்டிருந்தனர். அதனை உவிக்குக் கட்சியினர் கொடுக்க மறுத்துவிட்டனர். போரை நிறுத்தற்கெழுந்த கூக்குரல், உள்நாட்டு அலுவல்கள் விளைவித்த தோரிக் கட்சியின் நடவடிக்கைகளுக் கான வாய்ப்பைப் பெருக்கியது. மேற்றிருச்சபை உணர்ச்சி அலையொன்று, அாசிமீதும் அவளின் குடிகள்மீதும், சில் லாண்டுகட்கு முன் யக்கோபியரைக் கலைத்தும் ஆராதனை ஆலயங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தும் வந்தவரும், பின் இணங்காதாரின் சிறு கோவில்களை எரித்தலாகிய வேலையி வீடுபட்டவருமாகிய குழப்பக்காரர்மிதும் விசியது. சாச்ச வெறல் என்னும் பண்டிதர் ஒருவர் புரட்சி நினைவுக்காக

உத்திரெத்து உடன்படிக்கை
ஒதுக்கிவைக்கப்பட்ட புனிதநாளில் அதன் கொள்கைகளுக்கு மாமுய் ஒரு சமயச் சொற்பொழிவாற்றினர். அதற்காக அவர் மீது பிரபுக்கட் பிரதிநிதி மன்றத்தில் குற்றஞ்சாட்டிய உவிக் குக்கட்சி மந்திரிகளின் மடமையினுற் பொதுமக்களின் உணர்ச்சி பொங்கியெழுவதாயிற்று.
அரசியல், சமயங்களில் அரசிகொண்ட அனுதாபமும், அவளி டத்தே மாசாம் என்பவரின் மனைவிக்கிருந்த செல்வாக்கும், மாள்ப ரோப் பிரபுவின் மனைவியான சோாவின் தனிப்பட்ட அதிகாரத்தை நீக்குவதற்கு அரசிக்கு ஈற்றில் வாய்ப்பளித்தன. உவிக்குக் கட்சி யினர் தாங்கள் வீழ்ச்சியடைந்ததுமட்டுமன்றி மாள்பரோவையும் விரைவில் வீழ்ச்சியுறச் செய்தனர். ஆன் அரசி தன் அமைச்சரை மாற்றுவதில் எடுத்துக்கொண்ட முயற்சி பொதுத் தேர்தலில் ஆதர வைப் பெற்றது. உவிலியம் இங்கிலாந்திற்கு வந்த ஆண்டின் குளிர் காலமுதல், மக்களிடத்தும் அவர்களுடைய திட்டங்களிலும் இதைப் போன்ற பூரணமானதும் உடனடியானதுமான மாற்றம் எதுவும் ஏற்பட்டிலது. ஆயினும் இது ஒரு புரட்சியன்று ; அரசாங்க அமைப் பின் வழக்கமான நடைமுறையாகும். அந்த அமைப்பு, உவிக்கு தோரிக் கட்சியினர் மாறிமாறி நடாத்திய மந்திரிசபைக் கட்சி அர சாங்கத்துக்கு அடிகோலுவதாயிருந்தது. பூரணமாற்றத்திற் குறைந்த மாற்றம் எதுவும் அத்தருணத்தில் ஐரோப்பாவிற்குச் சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க மாட்டாது.
புதிய தோரிக் கட்சி மந்திரிசபை இருவர் தலைமையில் பதவியேற் அறுக் கடமையாற்றியது. ஒருவன் தன் அரசியற் கருமங்களைச் செய்த லில் உவிக்குக் கட்சியினரை அடக்கவும், இணங்காதாரை அடியோடு அழிக்கவும் வேண்டிய எவ்வித முயற்சியும் செய்ய ஆயத்தமா யிருந்தவனும், மிகுந்த அறிவு படைத்தவனுமான சென் யோன் ஆவன். மற்றவன், தாமதமுள்ளவனும், மிதமானவனுமான ஆளி பாவன். நாட்டு மக்கள் எல்லோரிடத்தும் ஒற்றுமை மனேநிலையை மேம்படச் செய்யவேண்டு மென்ற விருப்பமே அவனின் சீரிய பண் பாகும். அக்குணம் அவன் காலத்திருந்த அரசியல் ஞானிகளிடத்து அரிதாயிருந்தது. ஆனல், அரசாங்கம் முதற்றேவையான சமா தானத்திற்காவது இணங்கிற்று. இசுப்பெயினின் பிலிப்பு மீது பழிவாங்குதற்கு எங்கள் கற்றலோனிய நண்பர் செய்த இரண்ட கத்தைவிட, உத்திசெத்து உடன்படிக்கையின் நிபந்தனைகளில் குறையெதையுங் காணுதல் எளிதன்று. மேன்மையான இச்சமா தானத்தைப் பெறுதற்குக் கையாண்ட முறைகள் ஒருவேளை கண்ட னத்துக்குரியனவாயிருக்கலாம். நேய நாடுகள் இல்லாதவிடத்தில் பிரான்சோடு நடத்திய இரகசியப் பேச்சுவார்த்தைகளையும்-இநிசு விக்கு உடன்படிக்கையைப் பெறுதற்கு உவிலியமும் அதேமாதிரிச்
1710.
1713
197

Page 110
198.
W -gey tib படத்தைப் untitas.
உத்திரெத்து உடன்படிக்கை
செய்திருந்தபோதும்--மாள்பரோவுக்கேற்பட்ட மானக்கேட்டையும், பகைவரைக் கண்டதும் போர்க்களத்திலிருந்து பிரித்தானிய படை களைப் பின்வாங்கச் செய்ததையும் உவிக்குக் கட்சியினர் கண்டித்த னர்; நாட்டு மக்களும் இவற்றை விரும்பிற்றிலர். ஆயினும், பிரான் சோடு எந்த நிபந்தனைகளையும் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு அவற்றை நேய நாடுகள் ஏற்குமாறு வற்புறுத்தற்கான ஒரேயொரு வழி இம்முறைகள்தாம் எனக் காணப்பட்டன. அதற்கு உவிக்குக் கட்சி, ஒல்லாந்து, ஒசுற்றியா ஆகியவற்றின் பிடிவாதமே பெரும்
பாலும் காரணமாகும்.
பிரித்தானிய குடியேற்றத்துக்கும், வணிகத்துக்கும் வேண்டிய உரிமைகள், நாம் கண்டதுபோல, தாராளமாக ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும், அவைகள் தோரிக் கட்சி அமைச்சர் பிரான் சோடு செய்துகொண்ட வணிக உடன்படிக்கை உவிக்கு எதிர்க் கட்சியினர் ஆங்கில வணிகரிடையே மூட்டிவிட்ட பொருமை காா ணமாக அழிக்கப்பட்டிராவிட்டால், இன்னுங் கூடிய நன்மை அடைந் திருக்கும். ஐரோப்பாவில் குறிப்பிட்ட நிலப்பகுதிக்குரிய ஏற்பாடு சம்பந்தமாக, உத்திசெத்து உடன்படிக்கையின் நிபந்தனைகள், ஐரோப்பாவில் இசுப்பானிய ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசங் களை ஒசுற்றியாவுக்கு ஒழுங்குமுறைப்படி ஒப்படைத்ததை யும், இசுப்பெயினையும் அமெரிக்காவில் அதன் ஆதிக்கத்துக் குட்பட்ட பிரதேசங்களையும் பேபனுக்குரிய பிலிப்புக்கு ஒழுங்கு முறைப்படி ஒப்படைத்ததையும் அடிப்படையாகக் கொண்டுள் ளன. அது போரின் நிகழ்ச்சிகளால் நிலைநாட்டப்பட்ட அமைப்பினை அங்கீகாரம் மாத்திரஞ் செய்ததாகும். அவ் வமைப்பைக் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த செயல்கள் நிலைகுலையச் செய்யவில்லை. இங்கிலாந்துக்குக் கடற்காவல் கிடைப்பது நெதலாந்துக்களை ஒசுற்றியாவிடம் ஒப்படைத்ததால் உறுதியாயிற்று. அந்நாடு மத்திய ஐரோப்பாவில் உள்நாட் டதிகார முடையதாகும். அந்நாட்டால் நமக்கு எதுவித பயமு மில்லை. நாம் அஞ்சுவதற் கெதுவுமில்லை. இறையினின் கழிமுக நிலத் துக்குப் பிரான்சினலேற்பட்ட ஆபத்து 1793 ஆம் ஆண்டுவரை நீங்கி யது.
இவ்வேற்பாடுகள் பதினெட்டாம் நூற்முண்டின் நாகரிகத்துக்கு நிலையான அடிப்படையாயின. பிரான்சுப் புரட்சி ஐரோப்பாவுக்குப் புதியதொரு வாழ்க்கையொழுங்கினை ஏற்படுத்திய காலம்வரை, ஐரோப்பா பிரான்சின் ஏற்றத்தினுலுண்டான அபாயத்தால் மீட்டொருபோதும் பாதிக்கப்பட்டிலது. உவிக்குக் கட்சிசும் ஒசுற்
* இந்நூல் பக்கங்கள் 188, 189 பார்க்க.

பிளவுச் சட்டம்
றியாவும் ஆலோசித்தபடி பழிவாங்குங் கொடுமையோடு உலூயி நடத்தப்பட்டிருந்தால், மாள்பரோ குறுக்கு நெடுக்காக இணைக்கப் பட்ட கோட்டைகளை ஈற்றில் உடைத்துக்கொண்டு பாரிசை அடைந் திருக்கவேண்டிய நேரத்திலே, பழிவாங்கும் மனேநிலை பிரான்சிய மக்களிடத்தே ஒரு நிரந்தரமான இடம் பெற்றிருக்கக் கூடும்; அன்றியும், அது அவர்களைப் பழைய அரசுமுறைக்குரிய முடியா சோடு சேர்த்துக்கொண்டு, பதினெட்டாம் நூற்றண்டிலுள்ள
ஐரோப்பாவை அரச பரம்பரைக்குரிய போர்களேவிட இன்னும்
அதிகமானவற்றல் அடிக்கடி கலக்கியிருக்கவுங் கூடும்.
உத்திரெத்து உடன்படிக்கையொன்றே பொலிங்புருேக்குப் பிரபு வான சென். யோனின் பெரிய அரசியலுக்குரிய அருஞ்செயலாக விளங்குகின்றது. அதில் அவனுடைய இயல்பான பெருந்திறமை முழுதையுங் காட்டியுள்ளான். அன்றியும், அவன் தனது சொந்த நாட்டினருள் தனது அரசியற் கொள்கையைப் பின்பற்ருதாரோடு தான் ஒருபோதும் நடந்துகொள்ளாத அளவு மிதமான முறையில் பிரான்சு சம்பந்தமாக நடந்துகொண்டான்.
தோரிக் கட்சியினர் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டு, அதனுல் தம் உள்நாட்டுத் திட்டத்திற் கிடைக்கும் பலனை அனுபவிக் கும் நம்பிக்கையுடனிருந்தனர். அவர்கள், தம் காணியிலிருந்து ஆண்டொன்றுக்குக் குறைந்த பட்சம் 300 பவுண் பெருத எவரும் ஒரு நகரின் பிரதிநிதியாகத்தானும் பாராளுமன்றத்தில் இருத் தலை விலக்குதற்கான ஒரு சட்டத்தை விதியாக்கினர். ஆனல், நரி வேட்டை வீரரும், மதுக்கடை வாடிக்கைக்காரருமான தோரிக் கட்சிப் பெருஞ்செல்வரின் முதன்மையான அரசியற் பேரார்வம் இணங்காதாரை ஒறுத்தற்கெழுந்த விருப்பத்தினுலுண்டானதாகும். அம்மக்கட் கூட்டத்துக்குத் தலைவனுயிருந்தவன் சமயமரபுப் பற் பற்ற பொலிங்புருேக்காவன். நெடுங்காலமாக விவாதிக்கப்பட்ட " சிலவேளை இணக்கச் சட்டத்தை” விதியாக்கியதே முதலில் திடீ ரெனத் தோரிகள் செய்த செயலாகும். அச்சட்டம், எவரொருவர் ஆங்கிலத் திருச்சபையொன்றில் பிரசாதம் பெற்று அதனுல் நாட் டின் அல்லது நகரத்தின் உத்தியோகத்துக்குத் தம்மைத் தகுதி யாக்கிக் கொண்டு, பின்னர் இணங்காதார் வணங்குமிடத்திற்குஞ் செல்கின்ருரோ அவரை மிகக் கடுமையாகத் தண்டித்தது. ஆனல் மூன்முண்டுகளுக்குப் பின் எழுந்த பிளவுச் சட்டம் மிகுந்த ஆபத் தான தொன்முகும். அது இணங்காதாரிடமிருந்து அவர்தம் பிள்ளை களின் கல்விப் பொறுப்பைக்கூட நீக்கி, அதனைத் தாபித்த திருச் சபைக் குருமாரினல் அங்கீகரிக்கப்பட்ட ஆட்களிடத்தே ஒப்ப டைக்க வேண்டுமென்று விதித்தது. இணங்காதார் தம் செல்வில்
1711.
171.
714.
199

Page 111
200
gas., 17ll.
தோரிக்கட்சியின் வீழ்ச்சி
நிறுவிய மேன்மையான கல்லூரிகள் பல நடைபெருது தடுக்கப் பட்டன; அவற்றிலிருந்த ஆசிரியரும் கிக்கற்ற நிலையெய்தினர். குரு மாரின் அனுமதிபெற்ற ஆசிரியர்தாமும் திருச்சபைக்குரிய வினு விடை நூலேவிட வேறெதையும் கற்பிக்க முடியாது. சமயப் பொறைச் சட்டத்தை நேரே நீக்கிவிடாமல், வெறுக்கத்தக்கதும், இயல்புக்கு மாமுனதுமான இச்சமயத் துன்புறுத்தலின் மூலமாக அடுத்த தலைமுறையில் இணங்காமையை அடியோடு அழித்தலின் மூலம் அதனைத் தந்திரமாக அகற்றத் திட்டமிடப்பட்டது. பிளவுச் சட்டம் புரட்சிக்குப் பிற்பட்ட காலத் தோரிக் கட்சியின் சரித்திரத் தில் மிகப் பெரிய களங்கத்தை உண்டுபண்ணிவிட்டது. மேலும், அது இங்கிலாந்திற் சமயச் சுதந்திரம் நிலவுதற்கு அக்கட்சி முதலில் வீழ்ச்சியடைய வேண்டுமென்பதை நிபந்தனையாக்கியது. ஆகவே, அச்சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் சமய நம்பிக் கையில் வேற்றுமைகளை அழித்தற்கு அல்லது உள்நாட்டுப் போரொன்று உண்டாதற்குக் காரணமாயிருந்திருக்கும். ஆனல் ஆன் அரசியின் இறப்பினுல் அரச வமிசத்தில் ஏற்பட்ட நெருக்கடி யான நிலை தோரிக் கட்சியைப் பிரித்து அழித்தது ; அதே சமயம் இணங்காதாரைப் போரின்றிப் பாதுகாத்தது. அம்மட்டுமன்றி நாட்டில் சமாதானத்தையும் சமயப் பொறுமையையும் பரந்த மனப்பான்மையையும் பதினெட்டாம் நூற்முண்டு முழுவதும் நிலை நாட்டியுள்ளது.
அனேவர் வமிசத்தவர் அரியணையேறியபோது உவிக்குக் கட்சி யினர் கொண்ட வெற்றி மிதமான மக்களின் வெற்றியைக் குறித் தது. அதற்குக் காரணம் உவிக்குக் கட்சியினர் சிறுபான்மையோரா யும் துன்புறுத்தும் நிலைமையிலில்லாதிருந்ததுமேயாகுமென்க. மறு புறத்தில், தோரிக் கட்சியினர் ஆன் அரசியின் ஆட்சிக் கடையாண்டு களில், பொலிங்புருேக்கின் தலைமையில் மக்களில் வலிமை மிக்குடை யோர்க்குத் தாம் பிரதிநிதிகளாயுள்ளாரென்ற உணர்ச்சியுடைய
* பிளவுச்சட்டமும், சிலவேளை இணக்கச் சட்டமும் முதலாம் யோச்சின் ஆட்சி ஆரம்பத்தில் உவிக்குக் கட்சியினரால் விலக்கப்பட்டன; ஆனல் நாட்டுக் கடமைக்கு வேண்டிய சமயவினைப் பரிசோதனை 1828 ஆம் ஆண்டில் யோன் இறசல் பிரபுவின் சட்டம் பிறக்கும் வரையும் வைத்துக்கொள்ளப்பட்டது. அரசியற் பதவி பெறுதற்கு சமய வினையைப் பயன்படுத்தலில் மேற்றிருச்சபைக் கட்சி உறுதியாக நின்றமை ஒருவேளை சமயத்துக்கு மிக நல்லதொன்றன்று என லாம். செயலாளரிடம் (பொலிங்புருேக்கு) அதிகாலையிற் சென்றேன் ; ஆனல் அவர் வழிபாட்டுக்குப் போய்விட்டார் . . . . . . ஒழுக்கங் கெட்டவருட் பலர் அவ்வாறே செய்தனர். அவர்கள் அப்படிச் செய்தமை, பாராளுமன்றச் சட்டத்தின்படி, உத்தியோகம் பெறுதற்கேயன்றி, பத்திக்காகவன்று" என்று சுவிற்று கூறுகின்றன். என்றலும், அவர்கள் இணங்காதாரல்லராய், ஆனல், ஒழுக்கங் கெட்டவராய் மாத்திரம் இருந்தமட்டும், சுவிற்றின் கட்சியினர் தூய்மை கெடுதலைக் கண்டிலர்.

கட்சிகளின் அமைப்பு
கட்சியினர்க்கு இயல்பாகவுள்ள சகியாமைக்குரிய மனேநிலையைக் காட்டினர். தொழிற் புரட்சிக்கு முந்தி நிலக்காரரே மிகுந்த ஆற்றல் வாய்ந்த வகுப்பினராவர்; உவெசிலியின் கொள்கை வளர்ச்சியுறு தற்கு முந்தித் தாபித்த திருச்சபையே எல்லாச் சமயப் பிரிவுகளையும் ஒன்று சேர்த்தால், ஏற்படக்கூடிய வலிமையிலும் பன்மடங்கு
வலிமை மிக்குடையதாகும். நிலபுலங்களுக்குரிய நலனுக்கும், திருச்
சபை நலனுக்கும் மாமுக, அரைவாசி மேன்மக்கள், பெருஞ்செல்வர் சிலர், நிலக்கிழாரிற் சிலர், வணிகர், பணமுடையோர் ஆகியவருட் பெரும்பகுதியினர், கண்டத்திலிருந்து தஞ்சம் புகுந்த புரட்டெசுத் தாந்தர், ஆங்கில இணங்காதோராகியோரை மட்டுமே உவிக்குக் கட்சியினர் நிறுத்தக் கூடியவராயிருந்தனர். இவ்வித கலப்புடைய மக்கள் தொகையிற் குறைந்தவராவர்; ஆயினும், தம் ஒழுங்கான அமைப்பினுலும், தம் நோக்கத்திற்கு வேண்டிய ஒற்றுமையினலும் அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். அதற்குக் காரணம் அவர்தம் செல் வாக்கு நகரங்களிலும், சிறப்பாய் இலண்டனிலும் இருந்ததேயாகும்; மேலும், தோரிக் கட்சிப் பெருஞ் செல்வரின் நோக்கங்கள் சமயமும் வகுப்பும் பற்றிய உணர்ச்சிகளினல் வேற்றுமைப்பட்டு வலியிழந் தன. அதுபோலத் தங்கள் நோக்கத்தில் எவ்வகை வேற்றுமையு மேற்படாது ஒருமுகமாக அவர்தம் தலைவர் தங்கள் கட்சியின் அரசியற் பயனை நாடக்கூடியவராயிருந்தனர். அது மற்றக் காரண மாகும். பொதுவான உவிக்குக் கட்சிக்காரன் ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இணங்காதவனயிருக்க, உவிக்குக் கட்சித் தலை வர் மேல் வகுப்புத் திருச்சபையாளராயும், பெரும்பாலும் பரந்த அல்லது சமயப் பற்றற்ற மனப்பான்மை யுடையராயுமிருந்தனர். உவிலியம் பென், யோன் பிறைற்று ஆகிய இருவரின் காலங்களுக் கிடையில் இணங்காதாரெவரும் இங்கிலாந்தின் அரசியல் வாழ்க்கை யில் தலைவராய் முதன்மை பெற்றிருந்திலர். என்ருலும், அக்காலத் தில் அரைவாசிக் காலம்வரை அவர்கள் உவிக்குக் கட்சியினரை அதிகாரபீடத்தில் வைத்திருந்தனர்.
சமாதான காலத்தில் தோரிக் கட்சியினர் தொகையாலும் நில முடைமையாலும், பொதுவாக, கூடிய வலிமையுடையாாயிருந்தனர். மேலும், அவர்களின் பிரிவையும் அழிவையும் உண்டுபடுத்திய அரச பரம்பரை விவாதத்தால் ஏற்பட்ட இக்கட்டு நேர்ந்திராவிட்டால்,
* இலண்டனில் இன்று வசிப்பவரில் ஏறக்குறையப் பத்திலொரு பங்கினர் வசித்த காலத்திலே, பிரான்சிய கியூக்கனேசர் ஆலயங்கள் அங்கு முப்பதுக்கு மேலிருந்தன. அவற்றில் வழிபாடாற்றிய மக்களிற் பெரும்பாலானேர் செயற் றிறன் வாய்ந்தவராவர்; அவர்களிற் பலர் தம்மை ஏற்றுக்கொண்ட நாட்டிற் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்தனர்; மேலும், அவர்களின் சமய வழிபாட்டு விதிகளுக்குத் தோரிக் கட்சியினர் மாறயிருந்த காரணத்தால், எறத்தாழ எல்லோரும் உவிக்குக் கட்சியினரானர்.
201

Page 112
202
712
174.
அரச பரம்பரைபற்றிய பிரச்சினை
பதினெட்டாம் நூற்றண்டில் அவர்கள் இங்கிலாந்தை ஆட்சி செய் திருப்பர். உவிலியத்தின் ஆட்சி முடிவில் ஆளியென்பான், ஆன் பிள்ளைகளின்றி இறக்க நேரிடின் அரசினை அனேவர் வமிசத்திடம் ஒப்படைத்தற்கான அரசுரிமை நிர்ணயச் சட்டத்தை விதியாக்க வேண்டுமென்று அக்கட்சியினர்க்கு அறிவுறுத்தியுள்ளான் முக்கிய மான இம்முடிவு பெருஞ்செல்வரும் ஆங்கிலத் திருச்சபையாரும் உரோமன் கத்தோலிக்க அரசன் ஒருவனிடம் தம்மை மீட்டொரு போதும் ஒப்படைப்பதில்லை என்று செய்த முடிவான தீர்மானத்தை வெளிப்படுத்தியது. சுதுவட்டர் கால்வழி புரட்டெசுத்தாந்தத்துக்கு மாற வேண்டியதுதான் தடை, அரசுரிமை நிர்ணயச் சட்டத்துக்கு இறுமாப்புள்ள தோரிக் கட்சியினரைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மையொன்றுமிராது; ஆனல், முத்த அல்லது இளைய போலியாளர் அரசினைப் பெறுதற்குத் தம் சமய நம்பிக்கையை விட்டுக் கொடுக்கச் சம்மதப்படார். இவ்வுறுதி அவர்க்குப் பெருமை யளித்தது. மேலும், அவர்தம் நேர்மை பிரித்தானியாவை எல்லை பற்ற தொல்லைகளிலும் உள்நாட்டுப் போரிலுமிருந்து காப்பாற்றியது.
அவ்வாறிருந்தபோதிலும், அரசுரிமை நிர்ணயச் சட்டம் அரச பரம்பரை விவாதம் பற்றி எழுந்த தோரிக் கட்சியினரின் உணர்ச்சி யில் அரைவாசி உணர்ச்சியையே பிரதிபலித்தது. மீதி அரைவாசி உணர்ச்சியும் சிலவேளைகளில் அலைபோல் மேலெழுந்தும் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் தணிவதுமாயிற்று. (நல்லரசர் சாள்சினதும், அரசபத்தியால் எவ்வகைத் தீங்கும் ஏற்படாததுமான) பொற்காலத் தில் தெய்வீக உரிமைக்குரிய கோட்பாடுகளில் வளர்க்கப்பட்டவரும் அடுத்த தலைமுறைக்குரியருமான தோரிக் கட்சியினருக்குச் சுது வட்டர் கால் வழியை எதிர்ப்பது துன்பமான செயலாகவேயிருந் தது. பழைய கொள்கையும், பழைய பனப்பற்றும் மீளவும் கட்சி ஆதாய உபாயங்களுக்குரிய இக்கால நோக்கங்களால் ஆதரிக்கப்பட் டன; அனேவர் கால்வழியினர் உவிக்குக் கட்சியினரோடு நட்புக் கொண்டிருந்தனர். இனிமேல் முதலாம் யோச்சாய் வரப்போகிறவர் ஒறேஞ்சு நாட்டு உவிலியம் அரசினை ஏற்றற்கு முன்னும் பின்னும் உவிக்குத் தோரி ஆகிய இரு கட்சிகளிடமும் காட்டிய அக்கறை யின்மையைத் தாம் காட்ட மறுத்தனர். அல்லாமலும், தோரிக் கட்சி அமைச்சர் வாழ்வின் முடிவை யடைந்துகொண்டிருந்த தம் தலைவி யான அரசியோடு அரண்மனையில் சண்டையிடாமல் அனுேவரின் அரச அவையில் மரியாதை செய்ய முடியாதவராயிருந்தனர்; ஏனெ
1 முதலாம் சேமிசு தொடக்கம் அனேவர் சந்ததியினரைப்பற்றிய விவரத்தை இந்நூல் 22 பக்கத்திலும் இரண்டாம் சேமிசுவின் சந்ததியினரைப்பற்றிய விவரத்தை இந்நூல் 132 பக்கத்திலுங் காண்க.

பொலிங்புறேக்கின் திட்டம்: தோல்வி
னில், இலிசபெத்துக்குத் தம்மை அடுத்து வருபவர் மேலிருந்த பொருமை முழுதும் ஆன் அரசிக்கும் தம்மை அடுத்து வருபவர் மேலிருந்ததாதலினென்க. மேலும், ஏனைய தோரிக் கட்சியினர்
பலரைப்போல, நடைமுறையிலில்லாவிடினும், உணர்வளவில் அவ
ளும் யக்கோபியரைச் சார்ந்துள்ளவளாவள். இன்னும், தன் தம்பி யின் பாம்பரை யுரிமையினின்று அவனை நீக்கிவிடுதலைத் தானே கைவிட்ட பின்னரும், அவனை நீக்கிவிடவிருந்த சேர்மனிய அரசர்
மேல் அவள் வெறுப்புக்கொண்டாள்.
ஆகையினல், தோரிக் கட்சியினர் வருங்காலத்தில் யோச்சரசரின் ஆதரவைப் பெறுதற்கான நல்வாய்ப்பு முழுதையுமிழந்து ஆன் அரசியின் இப்போதைய ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். உவிக் குக் கட்சியினர் முற்றிலும் இதற்கு நேர்மாமுக நடந்து கொண்ட னர். முதலாம் யோச்சு அரியணையேறல் தோரிக் கட்சியினரை அதிகாரத்திலிருந்து விலக்குதலைக் குறிப்பிடுமென்று ஒரு கருத்து வளர்ச்சியுற்று வந்தது. அது, ஆனாசியின் இறப்பின் பின், யக்கோ பியரை மீட்டும் அமைத்தற்கு அல்லது குறைந்தபட்சம் உரிமை யாளர் இருவரில் ஒருவர்க்கோ மற்றவர்க்கோ நிபந்தனைகளைக் கட்டளையிடக்கூடிய யக்கோபிய மந்திரி சபையினுல் நாடு பூரண மாய் ஆட்சி செய்யப்பதெற்கு வேண்டிய வழியை ஒழுங்குபடுத்தப் பொலிங்புருேக்குவை அவனுடைய கடைசியான நெறிமுறைகளைக் கையாளத் தூண்டியது. இத்திட்டம் நீதிபதிகள் சபை, தசைப் படை, கடற்படை, அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து உவிக்குக் கட்சியினர், மிதமான தோரிக் கட்சியினராகிய எல்லோரையும் அகற்றிவிடுவதை அவசியமாக்கியது. அன்றியும், மத்தியிலுள்ளதும் அவ்வவ்வூருக்குரியதுமான அரசாங்க நிர்வாகம் முழுதையும் யக் கோபிய அனுதாபமுள்ள மக்களிடம் ஒப்படைத்தற்கு வேண்டிய ஆரம்ப ஏற்பாடாக, அப்போது ஒக்சுபோட்டுப் பிரபுவான, ஆளி யென்பானை நீக்குதலையும் அவசியமாக்கியது. அப்பிரபு யூலை மாதம் 27 ஆம் திகதியன்று நீக்கப்பட்டான். அதன்பின் அவனின் எதிரிகள் கட்டுப்பாடற்றவராயிருந்தனர். ஐந்து மாதங்களில் அல்லது ஐந்து கிழமைகளிலுமென்முலும் முன்னேற்றத்துக்குரிய நிலைமை ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும்; ஆனல், ஐந்து நாட்களில் அரசி இறந்தாள் ; அதனல் பொலிங்புமுேக்கின் திட்டங்கள் யாவும் வீழ்ச்சியுற்றன. ‘நல்வாய்ப்புக் கைகூடும் அந்நேரத்திற்ருனே அது பாழாயிற்று' என்று குறித்தான் சுவித்துவென்பான். அவனை அப்பேரிடர் தபிளி னில் ஒரு குருவாக வாழச் செய்தது.
பொலிங்புருேக்கின் கபடச் செயலினல் முதலாம் யோச்சு எதிர்ப் பின்றி அரசுகட்டிலேறினன். அவன் தோரிக் கட்சி முழுதிலும்
203
ஒக. 1, 1714.

Page 113
204
174-76.
உவிக்குகளின் ஆட்சி
உறுதியான நம்பிக்கையற்றவனுயிருந்தான். அவ்வாறேயிருந்தனர் அவனின் குடிமக்களிற் பெருந்தொகையினரும். அவர்கள் உவிக்குக் கட்சிக்குரியருமல்லர் ; இணங்காதாருமல்லர் ; ஆணுல், அவர்கள் ஒரு புரட்டெசுத்தாந்த அரசினரதும் பாராளுமன்றத்தினதும் ஆட்சியில் சமாதான வாழ்வை விரும்பினர். அடுத்த நாற்பத்தேழு ஆண்டு களும் தோரிக் கட்சியினர் பதவியின்றியிருந்தனர். மக்கள் அவர் களை யக்கோபியர் என்று எண்ணி அவர்கள்மீது ஐயங்கொண்டனர். மேலும், அவர் தம் உணர்ச்சிகளிலும், அரச பத்தியிலும் ஒரே மன நிலையுடையராயிருந்திலர்.
உவிக்குக் கட்சியினர் பொலிங்புருேக்குவைப் பொதுவாழ்வில் மீட்டும் பங்குகொள்ளவிடாது நீக்கிவிட்டனர். வெளிநாட்டில் போலியாளரின் அரசாங்க செயலாளராய்ச் சிலகாலம் சேவை செய்த பின்னர், அவன் மனச்சலிப்பினல் அவ்வரண்மனையைவிட்டு நீங்கினன். அதன்பின், தன் பழைய எதிரியான ஆளியென்பானின் மிதமான கொள்கைகளையும், புரட்சி உடன்படிக்கையின் அவசியத் தையும், கட்சி மனப்பான்மையால் விளையும் கேடுகளையும், சுதுவட்ட ால்லாத நாட்டுப் பற்றுடைய அரசனெருவனிலேயே வருங்காலத் கில் நம்பிக்கை வைக்கவேண்டி வரும் என்பதையும் பற்றி ஒரு நூலாசிரியனுக விருந்து மக்களுக்குப் போதனை செய்தலில் தன் மிகுந்த அறிவுடைத் திறமையைப் பயன்படுத்தினன்."
உவிக்குக் கட்சியினர் வரலாற்றின் இக்கட்டத்தில் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தடையற்ற அதிகாரத்தை அனுபவித்தமை, முற்றிலும் நன்மையையே பயந்ததெனக் கூறமுடியா தெனினும், ஆங்கிலேயரின் அரசியல், மத உரிமைகளைப் பெற்றுள்ளது; ஏனெ னில், உவிக்குக் கட்சியினர் சிறுபான்மைக் குரியராதலினல் பிளவுச் சட்டத்தை ஆக்கியோர் துன்புறுத்தியதுபோல, அவர்கள் துன் புறுத்த முடியாதிருந்தனர். 1721 ஆம் ஆண்டு தொடங்கி 1742 ஆம் ஆண்டு வரையும் அதிகாரம் வகித்த உவால் போல் என்பான், உவிக்குக் கட்சியினர் தமக்குரிய உத்தியோகத்தி
* 505. 1565763 GT6óTL76ó7576ó7 Grup64 "History of the Tory Party” என்னும் நூலிற் கூறுவது வருமாறு : “ ஆன் அரசியினதும் மூன்றம் யோச் சரசனினதும் ஆட்சிகளுக்கிடைப்பட்ட காலத்திற்றேன்றிய சந்ததிகளுக்குப் பயிற்சி யளித்தவன் பொலிங்புருேக்காவனென்று ஐயமின்றிக் கூறிவிடலாம். அவனு டைய பிற்காலத்திலெழுதிய கடிதங்களிலும் ', ' விளக்கக் கட்டுரைகளி லும் தோரிக் கட்சியின் சிந்தனை முழுதையும் புதுப்பித்துள்ளான்.

உவிக்கு மிதவாதத்தின் வெற்றி
லிருந்துகொண்டு, அனேவர் வமிசத்தினரை அரச பதவியில் வைத்துக் காப்பாரென்ற உணர்வுடையணுயிருந்தான் ; ஆனல், அவர்கள் திருச்சபையின் தனியுரிமைகளில் தலையிடாது விடுவதன் மூலமும், நாட்டுப்புறத்து ஆட்சியைப் பெரும்பாலும் தோரிக் கட்சிச் சமாதான நீதிபதிகளின் பொறுப்பில் விடுவதன்மூலமும் மாத்திரமே அது கைகூடுமெனறும் உணர்ந்தான். சென் சேமிசுவிலும் உவெசுத்துமினித்தரிலும் உவிக்குக் கட்சியினர் நடத்திய அரசாட்சி யில், திருச்சபையினரும் பெருஞ்செல்வரும் மாவட்டத்திலும், கோயிற்பற்றிலும் பல்கலைக் கழகத்திலும் தங்களுக்கு அருமை யானவை எவையோ அவற்றைப் பாதுகாத்துக் கொண்டனர்.
இந்த இணக்கம் உவால்போலின் ஒப்புதலைப் பெற்றுள்ளது ; மேலும், அது யக்கோபியர் அனேவர் கால்வழியைக் காப்பாற்றி யது. இந்நிலை சாவ்சுபரியின்கீழ் ஆதியிலிருந்த உவிக்குக் கட்சியின் கொடுமையிலும் மனேநிலையிலும் மிக வேறுபட்டது. உவால்போல் அதிகாரம் பெற்றபோது, உவிக்குக் கட்சியினர் "மிதம் ' என்னும் பாடத்தை முற்முகக் கற்றுக்கொண்டனர்; ஆணுல், அவர்கள் அத னைப் படிப்படியாகவே கற்றுக்கொண்டனர். உவிலியம், ஆன் ஆகி யோரின் ஆட்சிகளில் தம் அரசியற் பகைவரைத் துன்புறுத்தற்கு விருப்பங் காட்டினர். அதற்கு, உதாரணமாக, புரட்சிக்குப் பின் நட்டஈட்டுச் சட்டத்தை நிறுத்திவைக்க அவர் செய்த முயற்சியை யும் (இது உவிலியத்தால் தடைப்பட்டது) பென்விக்கு, சாச்ச வெறல் ஆகியோரின் நீதி விசாரணைகளையும், ஈற்றில் முதலாம் யோச்சின் ஆட்சியில் உத்திரெத்து உடன்படிக்கையில் ஒக்சு போட்டுப் பிரபு பங்கு கொண்டமைக்காக அவர் துரோகக் குற்ற விசாரணைக்காளாக்கப்பட்டமையையும் எடுத்துக் காட்ட லாம். ஆனல், பொறுமையும் விழிப்பும் மிக்குடையதும், சோமேசு, கூப்பர், அடிசன் முதலியோர் வழக்கமாகக் காட்டியதுமான மனே நிலையொன்று, வாட்டனின் தலைமையிலுள்ள கடும் போக்குடையோ ருக்கு மாமுய், அக் கட்சியிலுள்ள ஒரு பகுதியினரிடங் காணப்பட் டது. அமைதியும், உதாாகுணமுமுள்ள இல்வியல்பினலும், 'உறங்கு வோர் உறங்கட்டும்” என்ற தம் கோட்பாட்டாலும் உவால்போல்
வெற்றி பெற்றன்.
உவிலியம், ஆன் ஆகியோரின் ஆட்சிகளிலிருந்த சமமான இரு கட்சிகளின் போட்டிகள், பாராளுமன்றத்தில் அறிவும் பேச்சுத் திறனும் வாய்ந்த மக்களுக்கு உவிக்கு தோரிக் கட்சிகள் அடிக்கடி விடுத்த வேண்டுகோள், துண்டுப் பிரசுரங்கள், தேர்தலில் ஈடுபடுதல்,
9-R 5931 (li162)
205

Page 114
206
ஆங்கிலர் அரசியல் வாழ்வு
மக்களின் பேச்சு ஆகிய யாவும் விவாதித்தற்கும், கருத்தினைக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தற்கும், வேண்டிய பழக்கத்தை மக்கள் மனதில் பதித்துவிட்டன. அவைகள் வருங்காலத்தில் ஆங்கி லேயரின் அரசியல் வாழ்க்கையின் அறிகுறியாய் விளங்கின. கட்சி வெறுப்பு அடிக்கடி நிகழ்ந்த அன்புறுத்தலுக்குப் பொறுப் புள்ளதாயிருந்தபோதும், இரு கட்சிகளும் தமக்காகப் பரிந்து பேசுபவர்க்கு வழக்கமாக அளித்த பாதுகாப்பு, பேச்சுக்கும் பத்திரி கைக்கும் வேண்டிய சுதந்திசம் இங்கிலாந்தில் குறிப்பிடத்தக்க வரையில் வளர்ச்சியடைய வலு அளித்தது.

நூல் 11
உத்திரெத்து தொடக்கம் உவாற்றலூ வரையும். கடலாதிக்கமும் உயர்குடி ஆட்சியும், கைத்தொழிற் புரட்சியின் முதற்கட்டம்.
தோற்றுவாய்
இங்கிலாந்தின் பதினெட்டாம் நூற்றண்டு அரசியல் வரலாறு, 1689 ஆம் ஆண்டின் புரட்சி நிர்ணயத்திலிருந்து தொடங்குகின்றது. பதினெட்டாம் நூற்றண்டின் அரசியல் வரலாற்றைப் புரட்சி நிர்ண யத்தின் விளக்கம் என்று கூறலாம். அனுேவர் வமிசம் 1714 ஆம் ஆண்டில் அரியணையேறியது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் உவிலியத்தையும் மேரியையும் அரியணை யேற்றக் காரண மாயிருந்த கொள்கைகளே உறுதிப்படுத்துவதாயும் விரிவாக்கு வதாயுமேயிருந்தது.
புரட்சி நிர்ணயம் தனக்கு இயல்பாகவுள்ள குறைகளையும் கொண் டிருந்தது. தவிர்க்க முடியாத வகையில் அது பழைமை பேணு வதாய் அமைந்ததெனலாம். எவ்வாறிருப்பினும் தற்காலத்தவர் களுக்கு அவ்விதமே அது தோன்றுகின்றது. கழிந்த காலத்தைப் பின்னுேக்கிப் பார்க்கும் சிலர், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பாராளுமன்றத் தொகுதிகளைச் சனத்தொகைக்கு ஏற்றவகையில் மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். குருெம் வெலின் காலத்தில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்தபோது நாட்டுப்புறப் பிரபுக்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவை என்ற காரணத்தால், பாழ்பரோக்கள் ஒழிக்கப்பட்டன. அதற் கேற்ற அளவிற்கு மாவட்டப் பிரதிநிதிகளின் தொகை கூட்டப் பட்டது. ஆயினும் இசண்டாவது சாள்சு மன்னனின் ஆட்சியிற் பழைய தொகுதிகள் திரும்பவும் அமைக்கப்பட்டன. இவ்விதம் கிரும்பவும் அமைக்கப்பட்ட சீர்திருத்தப்படாத பிரதிநிதித்துவ முறையைப் புரட்சி ஒழுங்கிற்குப் பொறுப்பாயிருந்தவர்கள் சீர் திருத்தாது விட்டமையால், இம்முறை காலம் செல்லச் செல்ல மிக இழிவடைந்தது ; அதனல் தேசத்திற்கு எத்தனையோ தீமைகள் விளைந்தன. அமெரிக்காவுடன் ஏற்பட்ட பிணக்கு இத்தீமைகளுள் ஒன்முயிருக்கக்கூடும். ஆயினும் சம்மதத்தோடு ஏற்படுத்தப்பட்டது எனும் பண்பே புரட்சி ஒழுங்கிற்கு மகிமை தந்தது. நிலையூன்றிய பற்றுக்களை இயன்றவரை பாதிக்காது விடுவதனுல் மட்டுமே இச்
2O7

Page 115
208
* புரட்சியின் நோக்கம் மாற்றமன்று '
சம்மதத்தைப் பெறக்கூடியதாயிற்று. சனப்பிரதிநிதிகள் சபைக்குப் பிரதிநிதிகள் தெரிவு செய்வதிற் சில பரோக்களிற் சில பிரபுக்களுக்
கும் உயர் மக்களுக்கும் இருந்த செல்வாக்கு இந்த நிலையூன்றிய
பற்றுக்களுள் ஒன்ருகும். அக்காலத்து உவிக்குக்களோ, தோரிகளோ சீர்திருத்தமுறி ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
உண்மையில், புரட்சிக்கு வெளிப்படையாகக் கூறக்கூடிய நோக்கம் பழைமை பேணலேயன்றி மாற்றமன்று. திருச்சபை, பல்கலைக் கழகங்கள், நகரசபைகள், பாராளுமன்றத் தொகுதிகளுக்குரிய தேர்தல் உரிமைகள், இறையிலி நிலமுடையோரின் சொத்துக்கள் ஆகிய நிலையூன்றிய பற்றுக்களையும் பட்டயம் பெற்ற கூட்டுத் தாபனங்களேயும் இரண்டாவது சேமிசு மன்னன் முறைகேடாகத் தாக்கினன். அன்றியும் நாட்டின் சட்டங்களின் தகைமையை அவன் மறுத்தான். இவ்வுரிமைகளை உரிய வகையில் முறைகேடான தாக்கு தல்களினின்றும் காப்பாற்றியதன் பிரதிபலனுக, அறிவுடைச் சட்ட முறையில் அவற்றைச் சீர்திருத்தம் செய்வதையும் நூற்றுநாற்பது வருடங்களுக்குத் தடுக்கக்கூடிய ஒரு பவித்திரத் தன்மையைப் புரட்சி அவற்றிற்கு அளித்தது. இரண்டாவது சேமிசு மன்னனின் செயல், பிரித்தானியரின் சுதந்திரமும் நிலையூன்றிய பற்றுக்களும் ஒன்றே என்னும் எண்ணத்தைச் சில காலம் வரை நிலவச் செய்து விட்டமையால், புரட்சிக்குக் காரணமாயிருந்த அநியாயங்கள் நிலை யூன்றிய பற்றுக்களைக் காக்கும் கொள்கைக்கு ஒரு தனி உற்சா கத்தை ஊட்டின. இவ்விலட்சிய ஆர்வம் எக்காரணத்தால் எழுந் ததோ அக்காரணம் மறைந்தபின்னும் நிலைபெற்று நின்றது. இரண் டாவது சேமிசு மன்னன் தனது கொடுங்கோல் ஆட்சியில் மீறிய சட்டங்கள் நீதிபதி பிளாக்சுதனுக்கும் 18 ஆம் நூற்முண்டு மக்க ளுக்கும் தீவிர வழிபாட்டுக்குரிய பொருளாயமைந்தன.
நிருவாகத்துறைக்கெதிராகப் போராடி நியாயவாதிகள் பெற்ற வெற்றியாகப் புரட்சி அமைந்தது ; மன்னனின் செயல்கள் சட்டத் திற்கு அமைந்தனவோ, அல்லவோ என்பதை நிர்ணயித்தற்கு, வழமைச் சட்டத்தைப் பரிபாலிக்கும் மன்றுகளின் சுதந்திரமான விசாரணைக்கு அவற்றை உட்படுத்தல் வேண்டுமெனக் கோக்கும்
செல்தனும் தொடங்கிய நீண்ட போராட்டத்தின் முடிவாகவும்
அஃது அமைந்தது. பொறுப்பற்ற, தன்னிச்சை கொண்ட அரசாங் கத்திற்கு எதிராகச் சட்டம் வெற்றி பெற்றது நாகரிகத்திற்கே மெச்சத்தக்க ஒரு வெற்றியாகும். ஆனல் இந்த வெற்றி பதினெட் டாம் நூற்றண்டிலிருந்த நியாயவாதிகளின் கருத்திற்கு அதிக செல்வாக்கைக் கொடுத்தது. கொடுங்கோன் மன்னனின் சட்ட விரோதமான மாற்றங்களை எதிர்க்கத் தோன்றிய புரட்சியைப்

நிறுவகங்களின் நிலைபேறு
பிளாக்சுதனும் பேக்கும் நிலையான ஒரு ஆதாரமாகவும் பிரமாண மாகவும் மதித்தனர்; அவ்வாறு மதித்து அப்பிரமாணத்தைக் கொண்டு மக்களுக்கு ஏற்ற சட்ட முறையான சீர்திருத்தங்களையும் அத்திருத்தங்கள் நிறைவேறு முன்னரே கடிந்தனர்.
ஓர் அளவிற்கு இக்காரணத்தினலேயே உவால்போல், பிற்றுக்கள் ஆகியோர் காலத்தில் எல்லாவித கூட்டுறவுகளிலும் ஊழல்கள் கண் டிக்கப்படாது மலிந்து கிடந்தன. திருச்சபையிலிருந்தும் பல்கலைக்
கழகத்திலிருந்தும் அறநிலையங்களிலிருந்தும் மற்றைக் கல்வித்
தாபனங்களிலிருந்தும் மானியங்களைப் பெற்று வாழ்ந்தவர்கள் விசாரணையோ சீர்திருத்தமோ ஏற்படுமென்ற மனக்கிலேசமின்றி வாழ்ந்தனர். பாடசாலைகளை நடத்தாது ஆசிரியர்கள் தங்கள் சம் பளத்தைப் பெறக்கூடியதாயிருந்தது. பல்கலைக்கழகங்கள் போதனை யில்லாமலும் பரீட்சையில்லாமலும் பட்டங்களை விற்றன. பாராளு மன்றத்திற்குரிய நகர சபைகளும் பரோக்களும் அதிக இழி நிலை அடைந்து சீர்குலைந்திருக்கலாம் ; ஆனல், அவைகள் பழைமை வாய்ந்தனவாக இருந்தாற் போதும். “அரச பட்டயம் பெற்றவை யாயின் அந்தத் தாபனங்கள் நேரியவை ’ என்பதே பதினெட்டாம் நூற்முண்டின் குறிக்கோளுரையாய் அமைந்தது.
ஆதலால் அரைத்தூக்கத்திலிருந்த திருச்சபை, பல்கலைக்கழகம்,
பாடசாலைகள், குடியியற் சேவை, நகரத்தொகுப்பகங்கள் முதலிய கூட்டுறவுகளைக் கொண்டு புரட்சியை அடுத்து வந்த ஊழியில் இங்கி
லாந்தின் பெருமையைக் கணிக்காது இங்கிலாந்தின் தனிப்பட்டவர் களைக் கொண்டும் கட்டுப்பாடற்ற ஆண்மைமிக்க மக்கள் பெற்ற பேற்றைக் கொண்டும் உலகச் சந்தைகளில் வியாபாரிகளுக்கும் கைத் தொழிலாளர்களுக்கு மிடையிலிருந்த போட்டியைக் கொண்டு தீர் மானித்தல் வேண்டும். கூட்டுறவுத் தாபனங்களை உண்மையில் தாம் நீதியான முறையில் சீர்திருத்திவிட்டோமெனினும் சுதந்திர சமூ கத்தில் சுதந்திரமாகச் செயலாற்றிய மாள்பரோ, உவெசிலி, கிளைவு, உவாரன் ஏசிங்கு, தந்தை பிற்று, மகன் பிற்று, தலைவன் குக்கு, கலாநிதி யோன்சன், இறெயினேல்சு, பேக்கு, அடம் சிமிது, கியூம், சேமிசு வாற்று, பேண்சு, உவிலியம் பிளேக்கு, இன்னும் இவர்கள் போன்ற பல தனிப்பட்டவர்களின் ஆற்றலிலும் 18 ஆம் நூற்ருண் டுப் பிரித்தானியாவின் பெருமை தங்கியிருந்தது.
சுதுவட்டு அரசர் காலத்தில் அரசியலிலும் சமயத் துறையிலும் ஏற்பட்ட நீடித்த நெருக்கடிக்குப் பின்னர், பொதுவாகத் தாராள வியல்புடைய சட்டங்களின் கீழ் அதேயளவு நீடித்த காலத்திற்கு அமைதி நிலவியமையால், தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஓரளவு தடையேற்பட்ட போதிலும் நன்மையும் ஏற்பட்டது. அரசியலில் அதிக முன்னேற்ற மேற்படவில்லையெனினும் நாடு நலிவடையவில்லை
209

Page 116
20
1760-1820.
பொருளாதாரத்துறை மாற்றங்கள்
யென்பதைச் சதாம் என்பானின் சாமர்த்தியத்தால் பிரித்தன் திடீ ரெனக் காட்டிய எழுச்சியிலிருந்தும், கனடா தேசத்தை வென்று பேரரசுடன் சேர்த்ததிலிருந்தும், இந்தியப் பேரரசிற்கு அடிகோலிய திலிருந்தும் நாம் அறிந்துகொள்ளலாம். பழைய ஆட்சிமுறைக் காலத்திலிருந்த உலக அரசாங்கங்கள் எல்லாவற்றுள்ளும் கூடிய ஆற்றலுடையவாகவும் சுதந்திரமுடையவாகவும் பிரித்தானிய அர சும் யாப்பும் விளங்கின. உள்நாட்டிலுள்ள அரசியல் யாப்பிலுள்ள குறைவுகள், சீரழிவுகள் காரணமாகவும் அமெரிக்காவுக்கும் இங்கி லாந்துக்கு மிடையில் உள்ள தொடர்புகளிலிருந்து பொதுக் கார ணங்களாலும் அமெரிக்கக் குடியரசுகளை இங்கிலாந்து இழக்க நேரிட்டது. பேரரசு அலுவல்களிலும் வெளிநாட்டு அலுவல்களி அலும், பிரித்தானியாவை இக்காலத்தில் ஆண்ட பிரபுக்கள் பெருமள வில் வெற்றிகளையும் தோல்விகளையும் அடைந்தனர்; இவ்வகையில், அக்காலத்துப் பிரெஞ்சு நாட்டுப் பூபன் வல்லாட்சியிலும் கூடிய வெற்றியை அவர்கள் கண்டனர். பொதுவாகப் பார்க்குமிடத்து, பிரித்தன் பதினெட்டாம் நூற்ருண்டில் செழித்தோங்கியது. பிரித் தானிய நாகரிகம் நன்கு நிலையூன்றிப் பாவிற்று.
வருங்காலத்தில் அதி முக்கிய விளைவுகளைத் தருமியல்புடையதும் விரைவான பொருளாதார சமூக மாற்றங்களைக் கண்டதுமான பருவத்துடன், மாற்றப்படாத சட்டமும் நிலைமாருத் தாபனங்க ளும் உள்ள இக்காலத்து இறுதிப் பகுதியும் சேர்ந்தமையால் தீங்கு ஏற்பட்டது. கைத்தொழிற் றுறையிற் புரட்சி எங்கள் தீவிலேயே முதலிலே தொடங்கியது. மூன்ரும் யோச்சு மன்னரின் ஆட்சியின் முற்பகுதியிலே இப்புரட்சி ஆரம்பமாயிற்று என்று கூறலாம். அவனுடைய நீண்டகால ஆட்சியின் பொழுது கட்டுக்கோப்புத் தளர்ந்ததும், உயர்குடி மேவியதும், தன் இறுதி வந்தடுத்தமையை உணராததுமான சமுதாயத்தைப் புதிய புதிய எந்திர சாதனங் களும் பெருநிதி படைத்த கைத்தொழின்முறைகளும் தம் இச்சை வழி இயக்கின.
கலாநிதி யோன்சன், எடுமன் பேக்கு போன்றவர்களின் மனப் பான்மையுடையோரான, உயர்ந்த நாகரிகம் கொண்டு நன்முறை யில் மேலோங்கிய அக்காலத்தவர்கள் அரசியலைப் பற்றியும் இலக்கி யத்தைப் பற்றியுமே சிந்தித்தனர். ஆங்கிலரின் விவாதத்திற்கும் பழிப்பிற்கும் இடமானவையும் கடலுக்கப்பால் பிரெஞ்சு தேசத்தில் நிகழ்ந்தவையுமான அரசியல் மாற்றங்களிலும் பார்க்க அதி முக்கியம் வாய்ந்த புரட்சி ஒன்று தங்கள் மத்தியிலேயே ஏற்பட்டு நாள்தோறும் வளர்ந்து வருவதையும், பொது அதிகாரத்தினல் ஏற்றமுறையில் சீர்திருத்தப்படாமலே பழைய வாழ்க்கை முறை அவ்வழி சிதைவதையும் அவர்கள் அவதானிக்கவில்லை. முன் ஒரு

விழுமியோர் வாழ்ந்த ஊழி
காலத்திலும் காணப்படாத முறையில், அரசியல் தாபனங்களிலும் நகர சபைகளிலும், தொழிற்றுறைப் புரட்சியின் முன்னேற்றத் தின் காரணமாகச் சீர்திருத்தம் அதி அத்தியாவசியமாயிருந்த நேரத்தில், வெளிநாட்டிலிருந்து பரவிய யக்கோபியர் புரட்சிப் பிரசாரத்திற்கு ஆட்சி வகுப்பினர் காட்டிய எதிர்ப்பு மனப்பான்மை அவர்களைக் கொள்கையளவில் எவ்வித அரசியல் சீர்திருத்தமும் செய்ய விடாமல் தடுத்தது. இந்நிலையில் பொருளாதார மாற்றங்கள் முழு வேகத்துடன் நடைபெறுகையில் அவற்றைத் தடை செய் யவோ அவற்றுக்கு வழிகாட்டவோ ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இத்துடன் சேர்ந்து நெப்போலியன் காலத்து இருபது வருடப் போரும் ஏற்பட்டது. இந்தப் போரினல் தேசத்தின் கவனம் தனது சொந்த உள் நாட்டு அலுவல்களிலிருந்து திருப்பப்பட்டது. இப்போர் தொழிற்றுறைப் புரட்சியை அதன் இடர்நிறை காலத்தில் போர் காலத்திலேற்படும் வியாபாரம், விலை, உழைப்பு ஆகியவற்றின்
அசாதாரண நிலைமையினுல் இன்னும் அதிக சிக்கல் அடையச்
செய்தது.
இந்த வகையில் சாந்தமாகவும் மன நிறைவோடும் 18 ஆம் நூற் முண்டிலிருந்த இங்கிலாந்து தேசம் யாரும் உணராத முறையில் தொல்லைகள் நிறைந்த ஆபத்தான நிலைமையை அடைந்தது. இந் நிலேயிலிருந்து ஒரு புது உலகம் உரிய காலத்தில் தோற்ற விருந்தது. இப்படிப்பட்ட ஆபத்தானதும் சிக்கல் நிறைந்ததுமான சோதனை காலத்திலும், தனிப்பட்ட ஆங்கிலேயனிடம் மறைந்து கிடந்த சத்தியினுலும், கடல் தலைமைக்கு இங்கிலாந்தின் தீவு நிலைமை அனு கூலமாயிருந்ததனுலும், யுத்த காலத்தில் இங்கிலாந்தின் தொழில் யந்திரங்கள் சத்தி வாய்ந்தனவாயிருந்ததனுலும், சமீப காலத்தில் தனது அமெரிக்கக் குடியரசுகளைப் பிரித்தானியா இழந்திருந்தும் அது நெப்போலிய யுத்தங்கள் முடியும் நேரத்தில் அவற்றுள் வெற்றி பெற்ற நாடாகவும் ஒரு புதிய பேரரசுக்குத் தலைமையெய்தும் சிறப் பையுடையதாயுமிருந்தது. இலிசபெத்து இராணி காலத்தில் மலர்ந் தது போலவே இந்த யுத்தம் கொடூரமாக நடந்த காலத்தும் கடற் படையாற் பாதுகாக்கப்பட்ட இங்கிலாந்தின் ஆக்க ஆர்வம் மறு மலர்ச்சி அடைந்தது. நெல்சனும் உவெலிந்தனும், பொக்சும் பிற்றும், காசில்றியும், கனிங்கும் புகழ்பெற்ற இக்காலமே உவேட்சுவேது,
கொலரிச்சு, இசுக்கொற்று, பைறன், செல்லி, கீற்சு, தேனர், கொன்சு
ரேபில், கொபெற்று, உவில்பபோசு, பெந்தம், ஒவென் போன்ற பலர் வாழ்ந்த காலமுமாகும். இக்காலத்தவர் தாம் சுவாசித்த தீவுக்காற்றிலிருந்தே புத்திக்கூர்மையையும் பலத்தையும் பெற்றர் களெனத் தோன்றியது. பதினெட்டாம் நூற்றண்டின் வழி வந்த வையும் இன்னும் அழியாது நிலைத்தவையுமான பழைய நாட்டுப்புற
211

Page 117
212
* உவிக்குச் சில்லோராட்சி’
வாழ்க்கை முறையும் சுதந்திரமும் பண்பாடும் எல்லாம் முதன்முத லாய்க் கைத்தொழிற் புரட்சியொடு தொடர்புற்ற ஆதி நாளில்சமுதாயத்திற் குறைகள் பல இருந்தபோதும் ஏழைமக்கள் இடர்ப் பாடு உற்றபோதும்-நல்ல வசதி வாய்க்கப்பெற்ற வகுப்பாரிடையே தனிமனிதன் தனிப்பெரும் வளர்ச்சி பெற்றன்.
அத்தியாயம்
அனுேவர் வமிசத்து ஆட்சி முதற்பகுதியில் இங்கிலாந்து. உயர்குடி ஆட் சியின் தன்மை, பிரதம மந்திரி, மந்திரமும் பாராளுமன்றமும், பதினெட் டாம் நூற்றண்டின் போக்கு. யோன் புல்லும் பிரெஞ்சுச் செல்வாக்கும். திருச்சபையும் உவெசிலிய இயக்கமும், கொத்துலாந்து. பல்கலைக் கழகங்களும் பாடசாலைகளும். கிராமியவாழ்க்கை. சுதந்திர கமக்காரன் கீழ்நிலை அடை யத் தொடங்குதல். குற்றங்கள் மலிந்த உலகம். ஒப்புரவாண்மை. கைத்
தொழிற் புரட்சிக்கு முன்னர்.
அரசர் : யோச்சு 1 1714-1727 ;
罗梦 Gurdja III 1727-1760 ;
GBuTğFg TIII 1760.
ஒறேஞ்சு வமிசத்து உவிலியம் இங்கிலாந்தில் அரசாட்சி செய்ய வந்தமை உவிக்குகளின் கோட்பாடுகளை உறுதிப்படுத்தியதுடன் தோரிகளின் கோட்பாடுகளைக் குலைத்தது; எனினும், இதனல் உவிக்குகள் தங்கள் எதிரிகளிலும்பார்க்க எத்தகைய நலன்களை யும் பெறவில்லை. உவிலியத்தினதும் மேரியினதும் ஆட்சிக்காலம் முழுவதும் இரு கட்சியினரும் ஆதிக்கத்தைப் பகிர்ந்து அனுபவித்த னர். காலச் சூழ்நிலைக்கேற்ப, வாக்காளரும் அரசரும் முதல் ஒரு கட்சிக்கும் பின்னர் மற்றக் கட்சிக்கும் ஆதரவு கொடுத்தனர். பொது வாக நாட்டிற்கு நல்விளைவுகளைக் கொடுத்த இக்கட்சிப் போராட்டம் மும்முரமாகவும் சில காலங்களில் பயங்கரமாகவும் நடைபெற்றது. முதலாம், இரண்டாம் யோச்சு மன்னர்களின் ஆட்சிக்காலத்திலேயே சில விளக்கங்களையும் திருத்தங்களையும் சேர்த்துக் கொண்டால், f உவிக்குக்களின் சில்லோராட்சி' என்று வருணிக்கக்கூடிய ஒரு நிலையைக் காண்கிருேம். அத்துடன் தோரிக் கட்சியினருள் அரை வாசியினர் அரசாங்கத்திற்கெதிரான யக்கோபிதக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்திராவிட்டால் இக்குழுவாட்சி இக்காலத்திற்கு லும் ஏற்பட்டிருக்க முடியாது.
ஓரளவிற்கு இக்காரணத்தாலும் ஓரளவிற்கு முதலாம் யோச்சு மன்னர் ஆங்கில மொழி, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந் திராத காரணத்தாலும் மூன்ருவது உவிலியமும், ஏன் ஆன் அரசி

*உலிக்குச் சில்லோராட்சி’
யும்கூட, ஒரு காலத்திலும் தம் கையிலிருந்து நழுவ விட்டிருக்க மாட்டாத முடிக்குரிய சிறப்புரிமைகளை அனேவர் வமிசத்து முதல்
இரு அரசர்களும் உவிக்குத் தலைவர்களிடம் ஒப்படைத்தனர். மந்திரி
சபைகள் ஏற்படுத்துதல், பாராளுமன்றத்தைக் குலைத்தல், திருச் சபைக்கும் அரசுக்கும் சகாயஞ் செய்தல் முதலிய உரிமைகள் யாவும் நடைமுறையில், மன்னரிடமிருந்து உவிக்குத் தலைவர் கைக்கு மாறின. இக்கருத்தின்படி இந்தவிதமாக நோக்கும்பொழுது 1714 ஆம் ஆண்டில் அரசியலில் சில்லோராட்சி ஏற்பட்டதென்று கூறலாம். ஆனல், இன்னுெருவிதத்தில், பொதுமக்கள் சபையின் சம்மதத்தில் தங்கியிருக்கும் மந்திரிசபைகளின் ஆதிக்கம் நிலைபெற்றதாலும் மரபுவழி முடிமன்னரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டதாலும் எங்கள் யாப்பிலிருக்கும் குடியாட்சித் தன்மை மேலும் வளர்ந்ததெனக் கூறலாம.
பிற்காலத்தில், புரட்சி இணக்கத்திற்குக் காரணமாயிருந்தவர் களின் நோக்கங்களுக்கிணங்க மூன்ரும் யோச்சு மன்னர் தனது
ஆட்சியின் முதலிருபது வருட காலத்திலும் முடிக்குரிய புரப்
புரிமைகளை மீண்டும் அரசர் கைக்கு மாற்ற முயன்றனர். அவர்
இவ்விதம் முடிக்குரிய புரப்புரிமைகளைத் திரும்பவும் பெற்றவுடன் அவ்வுரிமைகளை உவால்போலும் உவிக்குகள் சிலரும் பொதுமக்கள் சபையினரை ஊழலில் ஈடுபடுத்துவதற்குப் பயன்படுத்தியதிலும் அதிகமாகப் படிப்படியாகப் பயன்படுத்தினர். சுதுவட்டு மன்னர் கள் போல, பாராளுமன்ற இயல்புக்கு மாறய், மூன்றுவது யோச்சு மன்னரோ, உவிக்குக்களோ ஆட்சி செலுத்த முற்படவில்லை. பொது
மக்கள் சபையிற் பெரும்பாலோரின் சம்மதத்துடனேயே நிருவா
கிகள் தமது அதிகாரத்தைச் செலுத்த முடியுமென்பதை அவர்கள் மறுக்கவில்லை. காலஞ்செல்லச் செல்ல, பாழ்பரோக்கள் நாட்டின் பிரதிநிதிகளாய் அமையத் தவறியமையால், புரப்புரிமைகளைப் பங்கிடுவதன்மூலம் 18 ஆம் நூற்முண்டில் அங்கத்தவர்களை நீதியற்ற செயல்களுக்கு உடன்படுத்தக் கூடியதாயிருந்தது.
முதல் இரு யோச்சு மன்னர்களினது காலத்தில் பொதுமக்கள் சபையின் அதிகாரம் வளர்ந்தது. ஆயினும், அக்காலத்தில் மக்களுக் கும் அச்சபைக்கும் இருந்த தொடர்பு குறைந்தது. தோரிக்கட்சி யின் நீண்டகாலச் சோர்வினுலும் அரசியலில் பிணக்குகளின்மை யாலும் உத்தியோகங்கள், இலஞ்சங்கள் பங்கீடு செய்வது தவிர்ந்த மற்றைய பாராளுமன்ற அலுவல்களில் பொதுமக்களுக்கு அக்கறை குறைந்திருந்தது. 1716 ஆம் ஆண்டு அனேவர் வமிசத்தை பக் கோபித எதிர்த்தாக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக நிறைவேற் றப்பட்ட எழுவருடச் சட்டம் பாராளுமன்ற அமர்வுக்காலத்தைக்
213
1760-1780.

Page 118
214
மந் திரிகள் சபையின் மலர்ச்சி
கூட்டியது. அரசியலை இவ்விதம் உறுதியுடையதாக்கியமையால் தேசத்தில் அரசியலிலிருந்த அக்கறை குறைந்ததோடு அரசாங்கத் திடம் இலஞ்சம் பெறுவதற்குப் பாராளுமன்ற அங்கத்தினரும் அதிக இணக்கமுடையராயினர்.
மூன்றும் யோச்சு மன்னர் காலத்தில் அரசியலிலே பொதுமக்க ளுக்கு ஆர்வம் திரும்பவும் ஏற்பட்டது. ஆயினும், குடியாட்சி முறைப்படி பாராளுமன்றத்தின் மீது பொது மக்களின் செல்வாக்கு அதிகரிக்கவில்லை. ஆயினும், 1832 ஆம் ஆண்டின் சீர்திருத்த மசோதா மூலம், மத்தியதர வகுப்பினர் பொதுமக்கள் சபையில் தமக்கு முன்பிருந்த செல்வாக்கிலும் கூடிய செல்வாக்கைத் திரும்ப வும் பெற்றபொழுது, சுதுவட்டு அரசர் காலத்தில் இருந்த அரசி லும் பார்க்கக் கூடிய சத்திவாய்ந்த அரசியலமைப்பைத் தற்காலத் துப் பாராளுமன்றத்திலும் மந்திரிசபையிலும் கண்டனர். வருங் காலத்துக் குடியாட்சிக் கருவிகளைப் பதினெட்டாம் நூற்றண்டில் பாராளுமன்றத்து உயர்குடி மக்கள் தயார் செய்து கூர்மையுள்ளன வாக அமைத்திருந்தனர். பொதுமக்களுடைய சபைதானெனக் கீழ்ச்சபையைக் கருதியிருந்தால் விழுமியோரும் பெருஞ்செல்வரும், கீழ்ச்சபைக்கு இவ்வளவு அதிகமான பலத்தையும் கொடுக்கச் சம்மதித்திருப்பார்களோ என்று நாம் ஐயுறவேண்டியிருக்கிறது. இச்சபையைப் பிரபுக்களின் இனத்தவர்களும், பிரபுக்களால் நியமிக்கப்பட்டவர்களுமே அதிகமாயிருக்கும் பெருமக்கள் சபை யென்றும், இலண்டன் மாநகரில் உள்ள சங்கங்களில் சிறந்த சங்க மென்றும், உரோமாபுரியின் செனெற்றுச் சபையைப் போன்ற இச் சபையிடம் தேசத்தின் முக்கிய விவகாரங்களை ஒப்படைக்கலாமென் அறும் இவர்கள் கருதினர்.
இத்தகைய நிலைமைகளில் பிரித்தானிய அரசியல் மரபு வளர்ச்சிக் குப் பதினெட்டாம் நூற்முண்டு உயர் குடிமக்கள் தாமாகவே பெரி தும் உதவினர். சட்டசபை, நிருவாகத்தைத் திறமையாக ஆற்று வதற்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படாதவகையில் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிவகையை உயர்குடி மக்கள் வகுத்த னர். இவ்வழிதான் மந்திர முறைமையும், பிரதம மந்திரிப் பதவியு மாம். பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களும், பொது மக்கள் சபையின் சம்மதத்திலே தங்கியிருப்பவர்களும், ஒரு பொதுக்கொள்கையை ஏற்றவர்களாகவும், தம்முள் ஒவ்வொருவரது செய்கைக்கும் எல்லாரும் பொறுப்பாளராகவும், நாட்டின் அரசாங் கத்திற்கு முழுப்பொறுப்பாளராகவும் உள்ள மந்திரிகளைக் கொண்ட குழுவையே இங்கிலாந்தில் மந்திரிகள் சபை (மந்திரம்) எனக் குறிக்கின்ருேம். புரட்சி இணக்கத்தில் பிரதம மந்திரி பதவியையோ,

பிரதம மந்திரிப் பதவி உவால்போல்
மந்திர முறைமையையோ அமைக்க வேண்டுமென்ற கருத்து ஏற்பட வில்லை. பொர்க் காலத்திலும், சமாதான காலத்திலும் தேசத்தின் தேவைகளுக்கு ஏற்ற முறையில், படிப்படியாக இவ்விருமுறைகளும் வளர்ந்தன. ஒருமித்த பொறுப்புடைய மந்திரத்தை அமைப்பதற்கு, உலூயிக்கு எதிராக யுத்தத்தை நடாத்தும் நோக்கத்துடன் மூன்ரு வது உவிலியம் வழி தேடினன். ஆயினும் அவன் தானே தனது பிர தம மந்திரியாகவும் வெளிநாட்டு மந்திரியாகவும் விளங்கினன். ஆன் இராணி ஆட்சியில் போர்க்காலத்தில் படையலுவல்களிலும் வெளி நாட்டு விவகாரங்களிலும் அரசாங்கத்தின் தலைவனுக மாள்பரோ கடமையாற்றினனெனினும், பாராளுமன்றத்தைக் கொண்டுநடத்தும் வேலையைத் தனது கூட்டாளிகளிடம் விட்டுவிட்டான். சமாதான காலத்தில் உலிக்குப் பிரதமராக 1721 ஆம் ஆண்டு தொடக்கம் 1742 ஆம் ஆண்டுவரையும் பதவி வகித்த சேர் உருெபேட்டு உவால்போல் என்பான் மந்திரி சபையைச் சேர்ந்தவர்களின் ஒருமித்த பொறுப் பையும் பொதுமக்கள் சபையிலும் மந்திரிசபையிலும் பிரதம மந்திரியே ஒரே காலத்தில் முதல்வனுயிருக்கும் முறையையும் வகுத் தற்குக் கூடிய பொறுப்பாளியானன். ஒரு பிரபு ஆவதைத் தனக்கு முன் பிரதம மந்திரிகளாயிருந்த தோரிகளைப் போலவோ, அல்லது உவிக்குகளைப் போலவோ சேர் உருெபேட்டு விரும்பவில்லை என் பதும், தான் தேசத்தை ஆளுதற்கு விரும்பிய காலம் வரையும் கீழ்ச்சபையை விட்டு விலக மறுத்ததும் குறிப்பிடத் தக்கனவாம். ஓபோட்டு வேளாதற்கு அவன் சம்மதித்த நேரத்தில் அவன் பிரத மர் பதவியிலிருந்து விலகிக் கொண்டான்.
அரசியல் வழக்கங்களில் இந்த மாற்றங்களை ஏற்படுத்திய போது உவால்போல் தனது சொந்த ஆதிக்கத்ல்த மிகுவிக்கும் ஆசையினலேயே இதனைச் செய்த போதிலும் தேசத்திற்குப் பெரும் சேவையே புரிந்தான். தனது மந்திரி சபையிலிருந்து தனது கொள்கையை ஏற்க மறுப்பவர்களையும் பிரதம மந்திரியான தனது தலைமையை ஏற்காத மந்திரிகளையும் நீக்கியதனுல் அன்றுதொட்டு, போர்க் காலத்திலும்சரி சமாதான காலத்திலும்சரி, இங்கிலாந்தில் இன்றும் நிலவும் ஆட்சி முறையை ஏற்படுத்தினன். நிருவாகம் ஐநூறு, அறுநூறு அங்கத்தவர்கள் விவாதிக்கும் சபைக்குக் கட்டுப் பட்டதாயினும், பொறுப்பு வாய்ந்ததும் ஒற்றுமையானதுமாகிய ஆட்சியின் மூலம் ஆங்கிலேயர் திறமான ஆட்சியைப் பெறுவதற்கு மந்திரிசபை முறையே ஏற்றவழியாக அமைந்தது. வேறுபல தேசங் களில் தீர்க்க முடியாத இப்பிரச்சினையை ஆங்கிலேயர் தீர்த்து வைத்தனர்; எவ்வாறெனில், மூன்முவது உவிலியத்தின் ஆட்சிக் காலத்தில் பல முறைகளில் உத்தேசிக்கப்பட்டது போலப் பொது மக்கள் சபையிலிருந்து மந்திரிமார் வெளியேறுவதற்குப் பதிலாக
2.5

Page 119
26
எழுதா யாப்பு
சேர் உருெபேட்டு உவால்போல் போல மந்திரிமார்கள் பொதுமக்கள் சபையிலிருந்து அச்சபையைக் கொண்டு நடத்த வேண்டுமென வற் புறுத்தியதனுலென்க. மந்திரிகள் சபை நிருவாகத்தையும் சட்ட சபையையும் இணைத்தது. உண்மையில் இஃதொரு நெருங்கிய இணைப்பேயாகும். தற்காலத்துப் பிரித்தானிய அரசியலில் இஃதோர் இன்றியமையாத அமிசம்*
நன்கு வரையறுக்கப்படாத, மாற்றமுடியாத புத்தம்புதிய யாப் பொன்றை எழுத்திற்றராதமை, இங்கிலாந்திற்கு நன்மையே பயந் தது. பழைய பேரரசிலிருந்து பிரிந்த பின்னர் வட அமெரிக்க அரசுகளைக் கூட்டாட்சியில் ஒன்றுசேர்ப்பதற்கு, முற்முக எழுத்தில் அமைந்ததும் புனிதத்தன்மை வாய்ந்ததுமான ஒரு யாப்பு அங்கு தேவையாயிருந்தது. ஆனல், இங்கிலாந்திற்கு அவ்வித யாப்பு தேவை யாயிருக்கவில்லை; அன்றியும் அவ்வித யாப்பொன்று ஏற்பட்டிருந் தால் பிற்காலத்தில் அது கட்டாயமாகத் தொல்லைக்குக் காரணமா யிருந்திருக்கும். இரண்டாவது சேமிசு மன்னனை அரசபதவி யினின்று நீக்கிய காலத்தில் மாற்றமுடியாத ஒர் யாப்பொன்று இங்கிலாந்தில் அமைந்திருந்தால், உவிலியத்தினதும் மேரியினதும் முடிசூட்டுவிழாவிலிருந்து முப்பது வருடங்களுக்குள் தமது பாராளுமன்ற ஆலோசகர்களால் (மந்திரிமாரால்) கையாளப்படும் படி அரசர்களால் விடப்பட்ட உரிமைகள் யாவும் முடியுடையோ ருக்கே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன், 1689 ஆம் ஆண்டில் நிலவிய அரசியல் ஞானத்தின்படி தயாரிக்கப்பட்ட வரையறையான ஒரு யாப்பில் அரசருடைய மந்திரிமார் பொது மக்கள் சபையிலிருக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கவும் கூடும்.
வழமையான சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினின் அறும் வேறுபட்ட ஒரு யாப்பானது ஆங்கிலேய அரசியற் போக்குக் குப் பொருந்தாததாகும். நாட்டு இணக்கத்துக்கான அடிப்படை யொன்றைக் காணவியலாதமையால், ஒருபோதும் மாற்றமுடியாத தனிமுதன்மையான ஒரு பிரிவினுல், புரவலரதும் பாராளுமன்றத் அக்காலத்து ஆங்கிலேயர்கள் அரசியற்றத்துவஞானிகளா யிருக்கவில்லை யாயினும், அவர்கள் பெரிய அரசியல்வாதிகளாயிருந்தனர். அவர்கள் பிரெஞ்சு தேசத்துத் தத்துவஞானி மொன்ரெசுக்கீ, தன், “ எசுபிறிடி யோய் சட்டத்தின் தாற்பரியம் ' என்ற நூலில் ஆங்கிலேய சுதந்திரத்தின் இரகசியம் இங்கிலாந்தில் சட்ட சபைக்கும் நிருவாகத்துக்கும் தொடர்பின் மையே என்று உலகிற்கு எடுத்துக்கூற-உண்மை பெருமளவிற்கு இதற்கு முழுமாருக இருந்தபோதிலும் - இடம் தந்தனர். பிளாக்கு சுரோனுல் ஊர்சிதம் செய்யப்பட்ட, மொன்ரெசுக்கீயின் இந்தத் தப்பான கருத்தின் காரணமாகவும், ஒரளவிற்கு வேறு காரணங்களுக்காகவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கூட்டாட்சி யாப்பு சட்டமியற்றுந் துறையிலிருந்து நிருவாகத்துறை யைப் பிரிக்கும் நோக்கத்துட்னேயே அமைக்கப்பட்டது.

பிரபுக்கள் மன்றமும் பொதுமக்கட் சபையும்
தினதும் அதிகாரத்தை வரைந்த யாப்பினுல் விளம்பரஞ் செய்து பிரித்தமை குருெம்வெல் அடைந்த இக்கட்டான நிலைமைக்கு ஓர் அறிகுறியாம். ஆங்கிலேயரின் உண்மையான முன்னேற்ற முறைக்கு இவ்வித குழ்வகை யுத்திகள் முழு முரண்பாடானவை. இலண்டன் மாநகரம் மூடுபனியினல் மறைக்கப்படுவதுபோல் உவெசுத்து மினித்தரில் பாராளுமன்றத்திற்கும் நிருவாகிகளுக்குமுள்ள உண்மை யான தொடர்புகள் வெளிப்படையாகப் புலப்படாத முறையில் காலத்திற்குக் காலம் எழும் தேவைகளுக்கேற்ப மாறவல்லதாக யாப்பு அமைந்துள்ளது.
முதலிரு யோச்சு மன்னரின் கீழுள்ள உவிக்குச் சில்லோராட்சி யென்கையில், பொதுமக்கள் சபையின் மாருத ஆதரவைப் பெறும் நிபந்தனையின் கீழ் தங்களுக்குள் ஒற்றுமையாகவோ, இகல் கொண்டோ அரசின் அதிகாரத்தையும் பேராதாவையும் பெற்ற ஏறக்குறைய எழுபது குடும்பங்களையே நாம் கருதுவோம் (கிட்ட வட்டமாக எதையும் கருதுவோமாயின்). பெரிய உவிக்குக் குடும்பங் களின் தலைவர்கள் பெரும்பாலும் பிரபுக்களுடனிருந்தனர். அவர் தம் இளையோர் பொதுமக்கள் சபையிலிருந்தனர். கீழ்ச்சபையின் அரசியற் கொள்கைகளை உண்மையில் எதிர்க்காத காரணத்தினுலும் ஓரளவில் கீழ்ச்சபையின் அங்கத்தவருட் பெரும்பாலோரைத் தெரிவு செய்த பாழ்புரங்களின் சொந்தக்காரரானமையினுலும் கீழ்ச் சபையிலுள்ளவரின் நம்பிக்கையைப் பிரபுக்கள் பெறக்கூடியதா யிற்று. அதனுல் இப்பெரும் விழுமியோர், பெருமிதமான, ஆனல் அதிகாரங் குறைந்த தமது சபையின் உரிமைகளைக் கோர விரும்ப வில்லை. பெருமகார்க்கு உத்தியோகபூர்வமற்ற முறையிலாயினும், பொதுமக்கள் சபையில் போதிய பிரதிநிதிகள் இருந்தனர்; அதனுல் கீழ்ச்சபையின் அதிகாரம் வளருவதை இப்பிரபுக்கள் எதிர்க்கவில்லை.
பத்தொன்பதாம் நூற்றண்டில், 1832 ஆம் ஆண்டுப் பாராளுமன் றச் சீர்திருத்த மசோதா காலத்திலும் அதன்பின்னருமே பெரும கார் தங்கள் சபையின் நேரடியான அதிகாரத்தை உறுதிப்படுத்தல் அவசியமென்று கருதினர். அப்போதுதான் தேசத்திற்குரிய சட்டங் களைப் பொதுமக்கள் சபை தான் விரும்பியபடி இயற்றும் உரிமை யைப் பெருமகார் எதிர்ப்பதற்குக் காரணமேற்பட்டது. ஆனல், பத்தொன்பதாம் நூற்றண்டில் இவ்வித எதிர்ப்பு முழுதாகப் பய னற்றதாக இல்லாததாயினும், காலம் தாழ்த்திய காரணத்தினல் அதிக பயனற்றதாயிற்று. பொதுமக்கள் சபை உயர்குடிமக்களின் சபையாயிருந்த போதும் அதனுட்சிக்குட்பட்டுப் பழகிய ஆங்கி லேயர், தேசத்தின் உண்மையான பிரதிநிதியான தன்மையைப்
217
1714-1760.

Page 120
218
சட்டத்தின் ஆட்சி : தனியார் உரிமைகள்
பொதுமக்கள் சபை பெறத் தொடங்கும் நேரத்தில் அச்சபையின் அதிகாரத்தைக் குறைக்கவோ கட்டுப்படுத்தவோ உடன்பட்டார்.
1714 ஆம் ஆண்டு முதல் 1760 ஆம் ஆண்டு வரையும் தேசத்தின் ஆட்சியும் ஆதிக்கமும் உவிக்குப் பெருமக்கள் கையிலிருந்த போதி லும், திசரெலியால் அவர்களுக்கு ஒப்பிடப்பட்ட வெனிசு தேசத்தை ஆண்ட சில்லோரைப்போல் அவர்களும் வரம்பற்ற முறை யில் வல்லாட்சி செய்திலர். 1689 ஆம் ஆண்டில் நிருவாகத்தின் அதிகாரத்தைத் தனக்குக் கீழ்ப்படுத்திய சட்டத்தின் ஆட்சி நடந்த காலமாக இக்காலம் அமைந்தது. பிளாக்சுதனுடைய காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் நிலவிய சட்டங்கள் நாட்டை ஆட்சி செய்ப வர்களின் அதிகாரத்தை நன்கு வரையறுத்தன. ஐரோப்பா முழுவதி லுமுள்ளவர்கள் பார்த்துப் பொருமைப்படக்கூடிய அளவிற்கு அரசாட்சி செய்பவர்களிடமிருந்து குடிமக்களைக் காப்பாற்றப் பல மான பற்பல பாதுகாப்புக்கள் இருந்தன. வெனிசுக் குடியரசின் மனம் போனபடி நடத்தப்பட்ட கொடுங்கோல் ஆட்சி போன்ற ஒன்றை இங்கு கற்பனையிலும் காண முடியாது. 1714 ஆம் ஆண்டிற் கும் 1760 ஆம் ஆண்டிற்குமிடையிலுள்ள அமைதியான ஆண்டு களில் கொடுமை நிலவியிருந்தால், அது நாட்டுப்புறத்தில் உள்ள பெருஞ் செல்வரின் சமூகக் கொடுமையேயொழிய, பாராளுமன்றத் தினதும் மந்திரி சபையினதும் அரசியற் கொடுங்கோன்மையன்று.
கியூடர் காலத்திலும் சுதுவட்டு அரசர் காலத்திலும் ஓரளவிற்குத் தாம் நிலச் சொந்தக்காரர் என்ற காரணத்தினுல் உள்ளூரிலுள்ள முதன்மையாலும், ஓரளவிற்கு மத்தியவரசாங்கத்தினுல் நீதி செலுத்துவதற்கு நியமனம் கிடைத்த காரணத்தினுலும், சமா தான நீதவான்களே ஆங்கிலக் கிராமங்களையும் மாகாணங்களை யும் ஆட்சி செய்தும் அங்கு நீதி வழங்கியும் வந்தனர். போல்சிராப்புவின் நண்பரும் குளோசெற்றர்சயர் கோட்டத்தைச் சேர்ந்தவருமான நீதிபதி சாலோவைச் சித்திரிக்கும்போது செகப் பிரியர் இவ்விதமான, நாட்டுப்புறத்திலேயே வளர்ந்த அரசமுகவர் ஒருவரையே சித்திரிக்கிருர், அடிசனின் கதாபாத்திரமான சேர் உருேசர் டி கவளியும் அவர்போன்ற இன்னுமொருவராவர். அா சாங்கம் நடைபெறுவதற்கு, சம்பளம் பெற்று அரசாங்கத்தின் தய வில் தங்கியிருக்கும் பணிக்குழுவாட்சியை நம்பாது, அரசாங்கத் திடம் சம்பளம் பெருது முகவர்களாகக் கடமையாற்றிய உள்ளூர் மேன்மக்களோடு செய்த ஓர் அரசியல் ஒழுங்கையே அரசாங்கம் நம்பியிருந்தது.
கியூடர்களினதும் சுதுவட்டுக்களினதும் ஆட்சியில் இவ்வித ஒழுங்கு இருந்தது. இத்தகைய ஒழுங்கிற்காக மத்திய அரசும் உள் ளூர் ஆட்சியினரும் ஒத்துழைக்குமாறு செய்வதற்கு வேறுபல

நாட்டுப்புறத்தில் நீதிபரிபாலனம்
ஆங்கிலேய விவகாரங்களில் தேவைப்படுவது போன்ற புத்தி நுட்ப மும் இருவயினுமொத்த ஒற்றுமையும் வேண்டியிருந்தன. இரண் டாவது சேமிசு மன்னன் இவ்வொழுங்கைப் புறக்கணித்து விட்டான். உரோமன் கத்தோலிக்கப் பிரச்சினையில், வெள்ளை மாளிகையிலிருக் கும் குழுவினரின் விருப்பத்திற்கேற்ப மேன்மக்களைப் பணிந்து நடக் கும்படி செய்ய அவன் முயற்சித்தான். வழக்கத்திற்கு மாமுன முறையில் இவ்விதம் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை வலியு அறுத்துவதற்குத் தேவையான அமைப்பு இருக்கவில்லை. நாட்டுப்புற மேன்மக்களில் ஒருசாராரை ஏனையோர்க்கு அவர் தமக்கே எதிரா கப் பயன்படுத்த முடியவில்லை. அத்துடன் சம்பளம் பெற்ற பணிக் குழுவாளருமிருக்கவில்லை. 1689 ஆம் ஆண்டுப் புரட்சியில் ஒருபகுதி மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டுப்புறத்தினர் எழுந்த எழுச்சியாக அமைந்தது. இதனை வேறுவிதமாகச் சொல்லுவதா யின், கோமறைக் கழகத்துக்கு எதிராக நாட்டுப்புறப் பெருமக்கள் செய்த புரட்சி என்று கூறலாம். மன்னனுக்கு எதிராக நாட்டுப்புறப் பெருமக்களுக்கு மிகவும் சிறந்த வெற்றி கிடைத்தபடியால் அவர்
கள் அன்றுதொடக்கம் ஒரு நூற்முண்டிற்கு மேற்பட்ட காலத்திற்கு
அரசியற்றுறை, சமயத்துறைகளில் மாத்திரமன்றிச் சமூகத் துறை யிலும் பொருளாதாரத் துறையிலும் மத்திய அரசாங்கத்தின் கட் ப்ெபாட்டிலிருந்து விடுதலை யடைந்தனர். மத்திய அரசாங்கம் நாட் ப்ெபுறப் பெருமக்களுடன் அதிகமாய் ஒருமித்து நடக்கப் பழகிக் கொண்டமையால் கோமறைக் கழகம் இலிசபெத்தின் காலத்திலும் சுதுவட்டு அரசர்களின் ஆட்சியின் முற்பகுதியிலும் ' ஏழைகள் சட் டம் போன்ற விடயங்களில் பொது நலத்திற்காக, நாட்டுப்புறப் பெருஞ்செல்வர்களைக் கட்டுப்படுத்தியதுபோல, கபுட்டுப்படுத்துவதற் குப் புரட்சிக்குப் பின் ஒருபொழுதும் முயலவில்லை.
புறட்சியினல் ஏற்பட்ட இந்த அனுபவம் மறக்கப்படவில்லை. உவிக்குச் சில்லோராட்சியினர் முடிக்குரிய அதிகாரத்தைத் தாமே செலுத்தும் காலம் வந்தெய்திய பொழுது, நாட்டுப்புறத்தை நாட் ப்ெபுறப் பெருஞ்செல்வரே-அவர்கள் தோரிகளாயினுஞ்சரி உலிக் குக்களாயினுஞ்சரி-ஆண்டு நீதி செலுத்தும்படி புத்தியாக விட்டு விட்டனர். தொம் யோன்சு ’ என்னும் கதையில் இடம்பெறும் பெருஞ்செல்வனன வெற்றேன் என்பான் சிறந்த தோரியாயிருந்தும் அவனல் எப்பொழுதும் தூற்றப்பட்ட உவிக்குப் பிரபுக்களினதும் அனேவரிய பதர்களினதும்' தயவினலேயே சமாதான நீதவானுக நியமனம் பெற்றுக் கடமையாற்றுகிருன். நீதிநாயகராற் றேர்ந் தெடுக்கப்பட்டு அரசனின் ஆணையைச் சமாதான நீதவான்கள் பெற்
த அ தான நத מן
லூம், வர்களுக் ரசற்ை சம்பளம் கொடுக்கப்படவில்லை. ത്ര 9ے[ ளுககு அரசனுற அவர்களது, செல்வமும் ஊராரிடையே அவர்க்கிருந்த செல்வாக்கும்
29

Page 121
220
ஐரோப்பாவும் இங்கிலாந்தும் வேறுபாடுகள்
அரசாங்கத்தால் தீண்ட முடியாத அவர்களின் நிலங்களிலிருந்து கிடைத்தன. இவ்விதமாக, மத்திய அரசியல் ஆதிக்கம் செலுத்திய உவிக்குப் பிரபுக்களின் அரசியற் பலம், பெருமளவில் தோரிக்கட்சி யைச் சேர்ந்த பெருஞ்செல்வர் சிலரின் ஆதிக்கத்தால் உள்ளூர்களில் மட்டுப்படுத்தப்பட்டது. உவிக்குக்களாயினும் தோரிகளாயினும் காணிச் சொந்தக்காரரான பெருமக்களுக்குச் சமூகத்தில் இருந்த ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படக்கூடியவொன்முக விருக்கவில்லை. மத் திய அரசாங்கத்தினுல் கட்டுப்படுத்தப்படாத, ஏன், மத்திய அர சாங்கத்தையும் ஓரளவு தாங்களே கட்டுப்படுத்திய நாட்டுப்புற நிலப் பிரபுக்களே உண்மையான சில்லோராட்சி நடத்தினர்கள். இங்கிலாந் திலே குடியாட்சி முறையில் நகர ஆட்சி நடக்கவில்லை; 1888 ஆம் ஆண்டில் முதன்முறையாக, சலிசுபரிப் பிரபுவின் மந்திரிசபை யினுல், தெளிவு செய்யப்பட்ட மாநிலக் கழகங்கள் நிறுவப்பட்டன. அக்காலம் வரையும் இங்கிலாந்திலே உள்ள நாட்டுப்புறங்கள் உயர் குடியைச் சேர்ந்த சமாதான நீதவான்களால் ஆளப்பட்டன.
இவ்விதமாக இங்கிலாந்தின் நாட்டுப்புறம் உயர்குடியினரின் செல் வாக்கை யுடையதாயிருந்தது. ஆதலினுல் 18 ஆம் நூற்றண்டில் இங்கிலாந்தின் பெரும்பாகம் உயர்குடியினரின் செல்வாக்கையுடைய தாயிருந்தது என்று சொல்லலாம். கைத்தொழிற்புரட்சி பெரும்பா அலும் கிராமம் சார்ந்ததாயிருந்த சமுதாயத்தை மாற்றிக் கைத் தொழிலில் ஈடுபடுவதும், நகரம் சார்ந்ததும், உயர் குலத்தோருக்கு இயற்கையாகவே ஆதிக்கமில்லாததுமான சமுதாயமாக்கி இங்கி லாந்து தேசத்தைக் குடியாட்சிக்குரியதாக்கும்வரையும் நிலைமை இவ்வாறே இருந்தது.
ஐரோப்பாவில் பழைய முறை இராச்சியங்களிலுள்ள அரசாங்கங் களுக்கும் இங்கிலாந்திலுள்ள அரசாங்கத்துக்கும் முக்கியமான இரு வேறுபாடுகளிருந்தன. பாராளுமன்றத்தின் கட்டுப்பாடும், மக்க ளுக்கு இருந்த பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரம், நீதிமன்றங்களில் தக்க விசாரணையின்றி எவரையும் மறி யலில் வைக்கவோ, தண்டிக்கவோ இடங்கொடாமை ஆகிய உரிமையுமே இவ்வேறுபாடுகளாகும். தங்களுக்கு இருந்த இந்த மேம்பாடான நிலையைப் பிரித்தானியர் நன்கு உணர்ந்திருந்ததோடு பெருமையுமடைந்தனர். அவர்கள் சுதந்திரமாகப் பிறந்த தங்களைப் போலல்லாமல், குருமாருக்கும் மன்னர்களுக்கும் விழுமியோருக்கும் அடிமைப்பட்ட சேர்மானியர்களையும் பிரெஞ்சுக்காரரையும் இத்தா லிய நாட்டவர்களையும் தம்மிலுந் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களா கக் கருதினர். பிரித்தானியா தேசத்தில் சுதந்திரம் சமீபகாலத்தி லேயே கிடைத்ததென்ற காரணத்தினலும், அச்சுதந்திரம் ஐசோப்

வகுப்புக்களிடையே நல்லுறவு
பாக் கண்டத்தில் இன்னும் அரிதானதொன்முயிருந்ததென்ற கார ணத்தினுலும், எமது மூதாதையர் தங்களுக்குக் கிடைத்த நன்மை கள் எல்லாவற்றிலும் உயர்ந்ததாகச் சுதந்திரத்தைப் போற்றினர்.
ஆயினும், ஒய்வான வாழ்க்கையை விரும்பிய மக்கள் வாழ்ந்த பதினெட்டாம் நூற்முண்டில், அரசியலாதிக்கமும் சமூக ஆதிக்கமும் நிலப் பிரபுக்களான ஒரேயொரு வகுப்பினரின் கையிலேயேயிருந் தன. கைத்தொழிற்புரட்சியால் ஏற்படும் சமூகக் குறைகளைப் பன் மடங்கு அதிகரிக்கச் செய்வதற்கு இந்தக் குறையே பிற்காலத்தில் காரணமாக அமையக்கூடியதாயிற்று. பொருளாதாரத் துறையில் பெரிய மாற்றமேற்படுவதற்கு முன்னர், முதலிரு யோச்சு மன்னர் கள் காலத்தில் நாட்டிலும் நகரத்திலும் கூலிக்கு வேலைசெய்பவர்கள்
தங்களுக்கு அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கமில்லாததைப் பற்
றிச் சிறிதளவிலாவது வருத்தமடைந்தாரெனத் தோன்றவில்லை. அக்காலத்தில் ‘நேர்மையான வேளாளன்', அல்லது ‘கற்றுக் குட்டி' என்று அழைக்கப்பட்ட தொழிலாளி, தேர்தற் காலத்தில் உயர்குடும்பத்தவரின் நன்மைக்காகக் குடித்து வெறிப்பதில் இன்பங்கண்டான். பெரும்பாலும் பெருமகார் ஒருவரின் மகனன தேர்தல் அபேட்சகன், எறியப்பட்ட கூழ்முட்டை தலைமயிரிலிருக்க, தனது கையை நெஞ்சிலே வைத்துக் கொண்டு குனிந்து தாழ்மை யாக "மேன்மக்களே' என்று அழைத்துத் தனக்கு முன்னிற்கும் சாமானியச் சனக்கூட்டத்தின் ஆதரவைப் பெறுவதே தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமெனக் கருதியவன்போல ஆதரவு கேட்கும் நேரத்தில், இத்தொழிலாளி தனக்கு வாக்கு இல்லா விடினும் மேடைக்கு முன்னின்று கேலிக் கூச்சவிடக்கூடியவனயும் ஆதரித்து ஆர்ப்பரிக்கக்கூடியவனயுமிருந்தான். இக்காட்சியைப் பிறநாட்டவர் பார்க்கும்போது வியப்படைந்தனர். அக்கால இங்கி லாந்திற்கே சிறப்பாக உரியதாய முறையில் பிரபுக்களின் இயல்பும் பொதுமக்களது உரிமையுணர்ச்சியும் நன்கு இணைந்து இயங்குவன வாகக் காணப்பட்டன. பணக்காரருக்கும் வறியவர்களுக்குமிடை யிலும் ஆண்டோர்க்கும் ஆளப்பட்டோருக்கு மிடையிலுமுள்ள தொடர்பு இதைவிட மோசமானதாயிருந்திருக்கலாம். அக்காலத்தில் வகுப்பு விரோதமிருக்கவில்லை. மிக உயர்ந்தோருக்கும் மிகத் தாழ்ந் தோருக்குமிடையில் அதிக வேற்றுமையிருந்தபோதிலும் அவ் வேற்றுமைகள் படிமுறையாக அமைந்திருந்தனவாதலால், ஐரோப் பாக் கண்டத்திலிருந்ததுபோன்ற தீவிரமான வகுப்புப் பிரிவுகள் இருக்கவில்லை. சமூகத்தின் கவலையற்றதும் நல்ல இயல்புடையது மான இந்நிலை, கைத்தொழிற் புரட்சி ஏற்பட்ட பின்னர் அதிக காலத்திற்கு நீடித்திருக்க முடியவில்லை.
221

Page 122
222
இற. 1762.
18 ஆம் நூற்றண்டின் ஒழுக்கமுறை
வாழ்க்கையிலும் சிந்தனையிலும் பொது அறிவையும் நியாயத்தை பும் நன்கு இடம்பெறச் செய்வதும், பழக்கவழக்கங்களை நாகரிக மடையச் செய்வதும், வாழ்க்கை நடைமுறையில் மனிதத்தன்மை நிரம்பச் செய்வதுமே பதினெட்டாம் நூற்றண்டின் முக்கிய கடமை யாய் அமைந்தது. யாவராலும் ஏற்கப்பட்டதும், தென் அமெரிக்கா வுக்கு அடிமைகளை வழங்குவதற்கு ஏற்பட்டதுமான ‘அசியென்ருே’ ஒப்பந்தத்துடன் தொடங்கிய நூற்முண்டு முடியும் சமயத்தில் உலில் பபோசுவும், அடிமைகள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு ஏற்பட்ட குழுவும் தேசத்திலே அடிமைகள் வியாபாரத்தை எதிர்க்கும் இயக் கத்தைத் தொடங்கினர். உவெசிலி, உவொல்ரெயர் ஆகியோரினதும், பெக்கெரியா, யோன் ஒளவாட்டு ஆகியோரினதும் காலத்திலிருந்த சமயம், பகுத்தறிவு ஆகியவற்றின் தனியியல்புகளின் விளைவாகவே மூன்று கண்டங்களின் நாகரிகத்தையும் காப்பாற்றிய அவ்வியக்கம் தோன்றியது.
சுதுவட்டு மன்னரின் ஆட்சி முடிவடைந்த காலத்திலும் உயர்ந்த வகுப்பை, கல்வி அறிவிலும் பழக்க வழக்கங்களிலும் தமக் கிடையே அதிக வேறுபாடுடையோரான பெருஞ்செல்வர் உவெற் றேண், பெருஞ்செல்வர் ஆல்வேதி, சேர். உருேசர் டீ கவளி போன்ற பாத்திரங்கள் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் புனைகதைகளில் சித்த ரிக்கக்கூடியதாயிருந்தது. பதினெட்டாம் நூற்முண்டின் இறுதியில் யேன் ஒசுசென் எழுதத்தொடங்கிய காலத்தில் பெருமக்களிடையே பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் யாவராலும் ஏற்கப்பட்ட ஒழுங் கான முறை ஏற்பட்டிருந்தது.
பாத்து என்னும் இடத்தில் நாகரிகம் படைத்த சமூகத்திற்குத் தலைமை தாங்கிய போ நாசு, தங்கள் குடும்பத்தாரோடு அங்கு வந்து குழுமிய நாட்டுப்புறத்துப் பெருஞ்செல்வர்களுக்கு மரி யாதை மிக்க சமூகத்தின் விதிகளைக் கற்பித்தான்; அத்துடன், பெருமகனது இடுப்பிலே அணிதற்கு ஏற்ற அணிகலனெனக் கரு தப்பட்ட வாளும் விரைவில் மறைவதாயிற்று. பெரும்பாலும் இக் காரணத்தினலேயே கொலைகளுக்குக் காரணமான கலகங்களும், இரவில் விருந்துகளுக்குப் பின்னர் ஏற்பட்டு, கொலைக்குக் காரண மாக இருப்பனவும், மறுநாட்காலையில் வருந்துவதற்குக் காரண மாக அமைவனவுமான கைகலப்புக்களும் பெருமளவிற்குக் குறைந் தன. ஆயினும், பத்தொன்பதாம் நூற்றண்டிலே நடுத்தர வகுப் பினர் மனப்பான்மையினதும், இவாஞ்சலிசத்தினதும் செல்வாக்கு மனிதத்தன்மையையும் பொது அறிவையும் பரப்பும்வரையும் கைத் துப்பாக்கியுடன் ஆளுக்கு ஆள் நேராகச் சண்டையிடும் வழக்கம் மறையவில்லை. இக்காலத்தில் சாதாரண மக்களிடையே குத்துச் சண்டையில் ஏற்பட்ட ஆர்வம் கத்தியால் குத்துதலிலும் கொலை

கலாசார வளர்ச்சி : ஆங்கிலமொழி
செய்வதிலும் பெருவெறுப்பை ஏற்படுத்தியது. இருவர் தமது கைமுட்டிகளைப் பயன்படுத்திக் குத்துச் சண்டையிடுவதைப் பார்ப் பதற்கு அவர்களிருவரையும் சூழ்ந்து வட்டமாக நிற்கும் வழக்கம் நேர்மையான முறையில் போட்டியிடும் உணர்ச்சியை வளர்த்தது. அத்துடன் சிலோலெற்றினதும் பீல்டிங்கினதும் நூல்களிலும் அக் காலத்து வாழ்க்கை வரலாறுகளிலும் பலமுறை குறிப்பிடப்படும் கோரமான முறையில் ஏற்படும் மிலேச்சத் தன்மையான சண்டை
களையும் படிப்படியாகக் குறையச் செய்தது.
கலைகளையும் இலக்கியத்தையும் ஆதரிப்பதில் முன்னெருகாலத் திலும் ஏற்படாததும் பிற்காலத்தில் அரிதாகப் பேணப்பட்டது மான ஓர் உயர்ந்த நிலையை ஆங்கிலேய உயர்வகுப்பினர் அடைந்த னர். நிலப்பிரபு வகுப்பினர் விளையாட்டிலும் அரசியலிலும் கமத் தொழிலிலும் மாத்திரமன்றி நுண்கலைகளிலும் விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் பூரணமாக ஈடுபட்டதுபோல, நாட்டுப்புறச் சமூ கம் அவற்றிலே பூரணமாக ஈடுபடும்படி செய்வதற்கு ஒல்காம், அல் தோப்பு, இசுரோவு போன்ற வாசிகசாலைகளும், கலைச்செல்வங்கள் நிரம்பிய பிரபுக்களின் இல்லங்களும் மாத்திரமன்றி, பல பெருமக்க ளின் சிறிய இல்லங்களும் ஏதுவாயிருந்தன. தூங்கிக்கொண்டி ருந்த பல்கலைக் கழகங்களிலும் பார்க்க, நாகரிகத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் நாட்டுப் புறத்திலுள்ள நிலப் பிரபுக்களின் இல்லங் களும் நாகரிகமுடைய சமுதாயமும் அதிக சேவை புரிந்தன. யோன் சனையும் கரிக்கையும் வழிகாட்டிகளாகக் கொண்டு உயர்தர வகுப் பினர் மனித குலத்தின் தலைசிறந்த பெருமகன் என்ற முறையில் செகப்பிரியர் வழிபாட்டைப் பொதுமக்களிடையே புகுத்தினர். இப்பொதுமக்கள் செகப்பிரியரைப் படித்தறியும் அறிவு படைத்த வராயில்லாவிடினும் பெருமக்களின் கருத்துக்களுக்குத் தலைவணங்கி இலக்கியத்துக்கு மதிப்புக் கொடுத்தனர்.
சுதுவட்டுக் காலத்தில் தொடங்கிய ஒருமுறை 18 ஆம் நூற்றண் டில் முடிவெய்தியது. அஃதென்னவெனில், கல்விமான்கள் இலத்தீ
னில் எழுதாது ஆங்கிலத்திலெழுதும் வழக்கத்தை நிறுவியமையாம்.
இம்மாற்றம் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. ஒருகாலத் திலும் இல்லாத விதத்தில் பிரித்தானிய கல்விமான்களுக்கும் ஐரோப்பாக் கண்டத்திலிருந்த கல்விமான்களுக்கு மிடையில் தொடர்புகள் இல்லாமற் போயின. எண்ணங்களும் கல்வியும் அதிகம்
தேசியமயமானவையாகவும், பொதுமக்களோடு தொடர்புடையன
வாகவும், இலக்கியத்துடன் அதிக தொடர்புடையனவாகவும் அமைந்
தன. பென்றிலி, பிளாக்குதோண், கிப்பன், அடம்சிமிது ஆகியோர்
223

Page 123
224
ஆங்கிலப் பிரபுக்களும் பிரெஞ்சு மோகமும்
கல்வியறிவுடைய வாசகர்களுக்காக எழுதாது சாதாரண அறி வுடைய தமது தேசத்தவர்களுக்காகவே தமது நூல்களை எழுதினர். மறுபுறமாக, இலிசபெத்தூழியோடு 18 ஆம் நூற்ருண்டுப் பண் பாட்டு இயக்கத்தை ஒப்பிடுகையில், பிறநாட்டு மாதிரிகளை மதிப் பது அப்பண்பாட்டின் சிறப்பியல்பாயிருந்தது. ஓரளவிற்கு நாகரிக வளர்ச்சிக்கு உயர்குடிமக்கள் தலைமைதாங்கியமையே இதற்குக் காரணமாகும். நுண்கலைகளையும் இலக்கியத்தையும் ஆதரித்து ஊக்க மளித்த பிரபுக்கள், ஐரோப்பாவிலே இக்காலத்தில் பெருமளவிற்குச் சுற்றுப்பிரயாணம் செய்பவர்கள் அரிதாகச் செய்வதுபோலல்லாது, பிறநாட்டு அரசவைகளைச் சேர்ந்ததும் தலைநகரங்களில் உள்ளது மான சமூகத்தோடு நன்கு சேர்ந்து பழகினர்கள். திரும்பும் பொழுது சிலைகளையும் சித்திரங்களையும் வணக்கத்துக்குரிய துளய பொருள்களையும் பிரெஞ்சு இலக்கியக் கருத்துக்களையும் தத்துவ ஞானக் கருத்துக்களையும் இத்தாலிய இயல், இசை மரபுகளையும் இவர்கள் இங்கிலாந்திற்குக் கொண்டுவந்தனர். கண்டத்துடன் இருந்த தொடர்பு இருவயினுமொத்திருந்தமையால் கூடிய பலம் பொருந்தியதாக இருந்தது. பிரித்தானிய கலைச்சாலைகளுக்கும் பிரித்தானிய சிந்தனையாளருக்கும் பிறதேசத்தவர் காட்டிய மதிப்பே பிரான்சு தேசத்தில் பகுத்தறிவுத் தத்துவ சாத்திரத்தில் கலைக்களஞ்சிய இயக்கம் தோன்றியதற்கு முக்கிய அடிப்படைக் காரணம். இலண்டனிலும் எடின்பருேவிலும் "சான்முேன் நியூற்ற னுக்கும்” உலொக்குவுக்கும் கியூமுக்கும் இருந்த அளவு உயர்ந்த மரியாதை அவர்களுக்குப் பாரிசு நகரத்திலுமிருந்தது.
1688 ஆம் ஆண்டுப் புரட்சியையடுத்த நூற்ருண்டுகாலத்தில், இங்கிலாந்திலே பிரான்சிய அரசியற் கொள்கைகளுக்கும் சமயக் கொள்கைகளுக்கும் கடூரமான எதிர்ப்பு இருந்தபோதிலும், மேற் கிலும் கிழக்கிலும் பிரான்சியரினதும் ஆங்கிலேயரினதும் கடற் படை அடிக்கடி போரிலீடுபட்ட போதிலும், பிரான்சிய மக்களுடன் தொடர்புள்ள யாவற்றையும் இங்கிலாந்தின் பொதுமக்கள் அறியா மையாலும் தப்பெண்ணத்தாலும் நிந்தித்து வெறுத்தபோதிலும், எழுத்திலும், சிற்பத்திலும், வீட்டு அலங்கரிப்புக் கலையிலும் பிரான் சிய இத்தாலியக் கருத்துக்களுக்கு நாம் பெரும்பாலும் கட்டுப்பட்டி ருந்தமை உண்மையில் வியத்தகு விடயமாகும். இரண்டாவது சாள்சு மன்னனின் ஆட்சிக் காலத்திலே வேர்சை அரண்மனைக் கலா சாரத்துக்கு ஐரோப்பாவின் மறுபகுதிகள் உட்பட்டது போலவே நாமும் உட்பட்டோம். பிளன்கீம் போருக்கும் இலா ஒக்குப் போருக் கும் பின்னரும் இந்த நிலைமை மாறவில்லை. இலக்கியத் துறையில் எங்களுடைய தராதரங்களைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்திய தினுல் நன்மையுமேற்பட்டது; நட்டமும் ஏற்பட்டது. ஆங்கில வசன

இலக்கியம் : இசை
நடை நயமடைந்தது; ஆங்கிலச் செய்யுள் முறைக்கு நட்டமேற் பட்டது. சிந்தனையிலேற்பட்ட தெளிவினுலும் எடுத்துக் கூறுவதி லேற்பட்ட தெளிவினலும் நன்மை ஏற்பட்டது; கற்பசைத்திக்கும் இயற்கையாக உள்ள ஊக்கத்திற்கும் நட்டமேற்பட்டது. இந்நூற் முண்டில் இறுதியான பத்து வருட காலத்தில் இசுக்கொற்று, கோல் றிசு, உவேட்சுவேது ஆகியவர்களால் இலக்கியத்தில் தொடக்கப் பட்ட கற்பன இயக்கமும் இயற்க்ை நவிற்சி இயக்கமும் பிறநாட்டு மரபுகளை எதிர்த்து நம் நாட்டிற்குத் தனியான பரம்பரை முறை களையும் இயற்கையான சுதந்திர மனப்பான்மையையும் தழுவும் இயக்கங்களாயமைந்தன. ஆயினும், பதினெட்டாம் நூற்றண்டு முழு வதும் இங்கிலாந்திற்கே உரித்தான நாவல் இலக்கியம் பிறநாட்டு மாதிரிகளுக்குத் தலைசாயாமல் இடிபோ தொடக்கம் சிமோலெற்று, பீல்டிங்கு மூலமாகச் செல்வி ஒசுரென் வரைக்கும் கட்டுப்பாடின்றி வளர்ந்தது. அத்துடன், எங்கள் நாடகங்களும் பிரெஞ்சுக்காரரின் கால தேச ஒற்றுமைக் கட்டுப்பாடுகளை ஏற்கவில்லை.
மேல்வகுப்பினரின் செய்யுளும் இலக்கியமும் கற்பனை குறைந்தன வாகவும், பகுத்தறிவுக்கு அதிகமேற்றனவாயும் அறிஞர் கருத்துக்கு ஏற்றனவாயுமிருந்த இக்காலத்தில் பொதுமக்கள் பைபிளை மாத்திர மன்றிப் பேய்க்கதைகளையும், அரமகளிர் கதைகளையும், தங்கள் நாகரிகமற்ற வாழ்க்கையையே சித்திரிப்பது போன்றதும் வீரச் சுவை நிறைந்தவையுமான நாட்டுப் பாடல்களையும் கதைகளையும் இன்னும் பேணி வந்தனர் என்பதை மறத்தலாகாது. பத்தொன் பதாம் நூற்முண்டின் இலக்கியத்தில் புனேவியல்திறம் முதன்மை பெற்ற அதே நேரத்திற்ருன் பொதுமக்கள் தாம் தமது குடிசை களில் குளிர்காயும் நெருப்புக்கருகிலிருந்து / மரபுமுறையாகப் படித்த நாட்டுக்கதைகளுக்குப் பதிலாக, புதினத்தாள்களையும் பாட சாலைக்குரிய பாடப் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினர். உண்மையான கீழ்நிலையின் சலிப்புத்தன்மையிலிருந்து தப்பும் நோக்கத்தோடு கற்பனு சத்தியைப் பெரிதும் உபயோகித்த பத் தொன்பதாம் நூற்ருண்டிலும் பார்க்க உஷிலியம் பிளேக்கு, பேண்சு, உவேட்சுவேது ஆகியோர் தோற்றிய பதினெட்டாம் நூற்முண்டு தான் உண்மையில் கற்பசைத்தி நிறைந்த காலமென்று வாதிக்க முடியும்.
இஃது எவ்வாறிருந்தபோதிலும், பதினெட்டாம் நூற்முண்டுப் பண்பாட்டின் செயற்கைத் தன்மை சங்கீத உலகில் பிறநாட்டு ஆதிக்கத்தைத் திணிப்பதற்கு ஏதுவாயிருந்தது. ஆண்டெலின் சங்கீதமும் இத்தாலிய இசைநாடகமும், ஐரோப்பாவிலே ஒருகாலத் தில் மிகவும் சிறந்தவை எனக் கருதப்பட்ட நமது தேசீய இசையின், இடத்தைப் பெற்றன. வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு புகழீட்
225

Page 124
226
1728
ஓவியக்கலை
டிய இசை நாடகங்களை ஆங்கிலேயரின் சிறப்பியல்புக்கேற்ற வகை யில் எள்ளல் செய்யும் தன்மையுடைய "ஆண்டி இசை நாடகங் கள் ” வழியாகப் பத்தொன்பதாம் நூற்றண்டிலும் பொதுமக்க ளிடம் செல்வாக்குடன் விளங்கிய இசை நாடகங்கள் தோன்றின. வெளிநாட்டு இசை நாடகங்களின் செல்வாக்கு ஓங்கி இருந்த காலத்தில் உரையாடல் நிறைந்த இந்நாடகங்கள் (கில்பேட்டும் சுலை வனும் இக்காலத்தின் இறுதியில் தோன்றினர்கள் ) உண்மையில் நாட்டுப் பண்பு வாய்ந்தவையாய் அமைந்தன.
ஐரோப்பாக் கண்டத்தின் பண்பாட்டுடன் நாகரிகம் நிறைந்த ஆங்கில சமூகத்தினர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததனல் ஓவியக்கலை அதிக நன்மை அடைந்ததன்றி எதையும் இழக்கவில்லை. இறெயினேல்சினதும் கேயின்சு பருேவினதும் காலமே இத்தீவுச் சித்திரக் கலையின் முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க மலர்ச்சிக் காலமாக அமைந்தது. பெரிய குடும்பங்களின் பொருட்டு ஏற்பட்ட இக்கலையின் காலம் நற்காலமாயமைந்தது. ஆதிக்கத்திலும் புகழி அலும் மகிழ்விலும் ஆங்கில உயர்குடியினர் தமது உச்ச நிலையை அடைந்திருந்த அக்காலத்தில் திசையில் மிகுந்த திறமையோடு வரையப்பட்ட உருவச் சிக்கிரங்களில் உள்ள அமைதி நிறைந்த முகங்கள் இக்காலத்தில் முற்றிலும் வேறுபட்டவகையில் வரையப் பட்டுள்ளவரான இக்காலக் கலையாதரவாளரது முகங்களிலும் உயர்ந் தனவாகத் தோன்றுகின்றன.
பதினெட்டாம் நூற்றண்டில் சிறப்பாக ஏற்பட்ட சீர்திருத்தம் ஒழுக்கத்திலும் நற்குணங்களிலும் பார்க்கப் பழக்க வழக்கங்களி அலும் அறிவிலுமே அதிகமாக ஏற்பட்டது. எங்கள் காலத்திலும் பார்க்கக் கூடிய அளவில் செல்வந்தரிடம் சூதாடும் வழக்கம் நில வியது. அத்துடன், அளவு கடந்து மது அருந்துவது ஒரு குற்றமா கக் கருதப்படவில்லை. மறுவாழ்வைப் பற்றி மேல்வகுப்பினருட் சிறந்தவர்கள் அரிதாகவே பேசினர்கள். அவ்விதம் பேசும்போது நம்பிக்கையின்மையுடனேயே பேசினர். மறு உலக வாழ்க்கைக்குத் தயார் செய்வதிலும் பார்க்க இவ்வுலக வாழ்க்கையில் பகுத்தறிவுக் கேற்பப் பூரணமான இன்பம் நுகர்வதே அவர்கள் நோக்கமாயிருந் தது.
அனேவர் வமிசம் அரியணையேறியதனுலும், அவ்விதம் அரியணை யேறியதிலிருந்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரை உவிக்கு கள் ஆட்சி புரியும் கட்சியினாாயிருந்தமையாலும், ஆங்கிலேயத் திருச்சபைக்கு அரசியலிலும் சட்ட சம்பந்தமான விடயங்களிலும் இருந்த தனி உரிமைகள் யாவும் குறைக்கப்படாமலிருந்தன. ஆயினும், அரசாங்கம் விசுப்பாண்டவர்களையும் மற்றும் குருமார்களை Այւբ நியமிப்பதில் பரந்த மனப்பான்மையுடன் நடக்குமாறு அத்

* நியாயமான சமயம்
திருச்சபையைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அதன்மீது தன் செல் வாக்கைச் செலுத்தியது. உயர் திருச்சபைக் கட்சியினரிடமிருந்த பக்கோபிக அனுதாபத்தினுலும், ஆன் அரசியின் ஆட்சி இறுதிக் காலத்தில் இணங்காதார் என்று சொல்லப்படுபவர்களைத் துன்புறுத் துவதில் அச்சபைக்கிருந்த ஆர்வம் வெளித்தோற்றியமையாலும், சமாதானத்தை நிலவச் செய்யவும் அனேவர் வமிசத்தைக் காப்பாற்றவும் நியமனங்களில் பாந்த நோக்கு அவசியமாயிருந்தது.
கிருச்சபையில் பரந்த நோக்குடைய கட்சியினரின் அறிவுப் பலமும், புதிய நூற்ருண்டில், நிலவிய பகுத்தறிவுடன் கூடிய சகிப் புத்தன்மையும் அரசாங்கத்தின் இக்கொள்கையை வெற்றியடையச் செய்தன. பிரெஞ்சுப் புரட்சியும் இவாஞ்சலிக்க இயக்கமும் புதுப் பிரச்சினைகளை எழுப்பும்வரையும் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த மதகுருமார் அரசியலிலோ சமய விடயங்களிலோ தீவிர வாதிகளாக இருக்கவில்லை. கோல்சிமிதின் உவேக்பீல்டுப் பாதிரி யார் கிறித்துவ சமயத்தின் எல்லாப் பிரிவினரும் சமய சம்பந்த மான ஆர்வம் சிறிதளவாயினும் இருந்தாலன்றி போதிய அளவு மதிக்கப்படாத சாதாரண பண்புகளையே சாதனையாலும் போதனை யாலும் கற்பித்தார். சொற்ப காலத்திற்கு, கோயிற்பற்றுக்களுக்குப் பொறுப்பாக இருந்த பாதிரிமார் நல்லொழுக்கத்தை வளர்க்க முய ற்சி செய்வதில் திருத்தியடைந்தனர். சமயக் கொள்கைகளைப் போதிப்பதில் ஒரு சிறிது அக்கறை காட்டினர். கட்சி உணர்ச் சிக்கோ, கற்பனைக்கோ, மனவெழுச்சிக்கோ அவர்கள் இடம் கொடுக்க வில்லை. கிறித்துவ சமயத்தின் நியாயமான தன்மை வலியுறுத் தப்பட்டது; விவிலிய வேதத்திற் கூறப்படும் அற்புதங்கள் யாவும் எக்காலத்திலும் பொது அறிவும் தத்துவஞானமும் ஏற்கக்கூடிய ஒரு சமயக் கோட்பாட்டின் சரித்திர பூர்வமான சான்றுகளெனக் கருதப்பட்டன. பென்ரிலிக்கும் போசனுக்குமிடையில் உள்ள காலத்தில் இலத்தீன், கிரேக்க இலக்கியத்தை முதன்மையாகப் பாதிரிமார் படித்தமைக்கும் எல்லாவற்றையும் தொகுத்து நோக் கும் அக்காலத் தன்மைக்கும் இயைவுபாடிருந்தது. விசுப்பாண்ட வர்களான பேக்கிளியும் பட்லரும் எழுதிய பெரிய தத்துவ நூல் களில் கிறித்துவ சமயம் பகுத்தறிவுக்குப் பொருந்தியது என எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பதினெட்டாம் நூற்ருண்டின் இங்கி லாந்திலோ, திருச்சபை அக்காலத்தில் நிலவிய விஞ்ஞான உணர் வுக்கும் பரந்த நோக்கத்திற்கும் ஒத்த தன்மையுடன் விளங்கியது. ஆங்கிலேயரின் பண்பான இணக்கமுடைமையும் இதற்கு ஏற்றதா
யமைந்தது. ‘கடவுள் உளர்’ என்று காட்டிய முன்னேற்றமடைந்த
இயக்கம், இந்நூற்றண்டின் முற்பகுதியில் இங்கிலாந்திலே தொடங்
227

Page 125
228
S. 1720. இ. 1793.
குருமாரும் பெருஞ்செல்வரும்
கியதாயினும், பிரான்சு தேசத்திலேயே அது செல்வாக்குடன் நில வியது; இங்கிலாந்திலே அந்த இயக்கம் “மரியாதைக்குரியதாக க் கருதப்படவில்லை.
இவ்வித உயர் பண்புகளைக் கொண்டிருந்த குருமாரும், கொண்டி ராத குருமாரும் சில விதத்தில் முன்னெக் காலத்திலாவது இதற்குப் பிந்திய காலத்திலாவது ஏற்படாத வகையில் பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உண்மையில் தற்காலத்து நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து அக்காலத்திலிருந்த குரு மார்கள் தங்கள் கோயிற்பற்றிலிருந்த பொதுமக்களுடன் மிதமிஞ் சிய அளவிற்கு ஒருமைப்பட்டு விளங்கினர். பெருமளவிற்கு நல்ல குடிமகனின் தூய உணர்ச்சியுடன், சம்பளம் பெருத நீதிபதிகளாய்ப் பல காலங்களில் இவர்கள் பயன்தரு சேவையாற்றியுளர். சமாதான நீதவானுகக் கடமையாற்றும் பாதிரி அவருடனிருந்த அதே கடமை யாற்றும் பெருஞ் செல்வரிலும் பார்க்கக் கூடிய அளவு சட்டமறிந்த வாாகவும் கூடிய மனிதத்தன்மை உடையவராகவும் களவாக வேட்டையாடுபவர்களை அத்தனை கடுமையாகத் தண்டிக்காத மனப் பான்மையுடையவராகவும் விளங்கினர். இவாஞ்சலிக்க இயக்கம் தொடங்குமுன்னர் கருநிறச் சட்டையணிந்த குருமார்கள் வேட்டை யாடுவதிலீடுபடுவது கண்டிக்கப்படவில்லை.
சுதுவட்டு அரசர்காலத்தில் கோயிற்பற்றுக் குருமார்களிடையே ஓரளவிற்கு உயர்குலத்திற் பிறந்தவர்கள் இருந்தனர். ஆனல், அனே வர் வமிசத்தின் ஆட்சிக்காலத்தில் பெருஞ்செல்வரினதும் குரு மாரினதும் சமூக நிலைமை பெரும்பாலும் ஒன்முகவேயிருந்தது. திருச்சபைக்குக் கிடைக்கும் திறையின் பெறுமதி உயர, பெருஞ் செல்வர் தமது குடும்பத்தின் கோயிலுக்குத் தமது இளைய மகனைக் குருவாக நியமித்து, குரு வசிக்கும் வீட்டிற்குச் சில திருத்தங்களைச் செய்து அதனை ஒரு சிறு பண்ணை வீடுபோற் செய்தனர். இவ்வித குடும்ப ஒழுங்குகளைச் செய்வதும் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் களின் வாழ்க்கையை இன்பமுள்ளதாகச் செய்வதில் ஒரு பகுதி பாகும். பதினெட்டாம் நூற்முண்டிலிருந்தவர்கள் இதிலே திறமை புடையவர்களாயிருந்தனர். இம்முறையினுற் சமூகத்திற்குப் பிரயோ சனமேற்பட்டது. ஏனென்ருல் ஒவ்வொரு கோயிற்பற்றிலும் 'ஒரு படித்த பெருமகனை வைத்திருக்கவேண்டு' மென்ற ஆங்கிலத் திருச் சபையாரின் நோக்கத்தில் ஒரு சிறிதளவாயினும் நன்மையிருந்தால், அந்நன்மை கிட்டுவதற்கு இந்த முறை ஏதுவாயிருந்தது. கில்பேட்டு உவைற்று என்பவரான ஒரு நாட்டுப்புறப் பாதிரியார் காலத்திற் குக் காலம் தமது பறவைகளை அவதானித்த பின்னர், “மனிதனை யும் பட்சிகளையும் மிருகங்களையும் நன்முக நேசிப்பவனே நன்முக இறைவனை வணங்குகின்றன்' என்று மக்களுக்குப் போதித்து

18 ஆம் நூற்றண்டில் திருச்சபை
உணரச் செய்தார். இத்தகைய மத குருமாரும் பெருஞ் செல்வரும் ஒன்று சேர்ந்து சுதுவட்டர் காலத்தில் முக்கியமாகத் தூய்மையா ளர் ஆட்சியில் நிலவிய மந்திர வித்தைக்காரரை வதைத்தல் போன்ற மூட நம்பிக்கைகளை அகற்றக்கூடியதாயிற்று.
இவ்விதமாகப் பதினெட்டாம் நூற்றண்டில் நடந்த சீர்திருத்த வேலையில் இங்கிலாந்தில் தாபித்த திருச்சபை பூரணமாகப் பங்கு பற்றியது. எனினும் இத்திருச்சபையினிடத்தே இரு பெருங் குறை கள் காணப்பட்டன. எவ்வித கொள்கையிலும் ஆர்வம் காட்டுவதைக் குறைத்தது ஒன்ருகும்; மற்றது, முக்கியமாகக் கரிச்சுரங்கங்களி லும் கைத்தொழில்கள் நிறைந்த நகரங்களிலும் உள்ள வறியவர் களைக் கவனிக்காததாகும். இருநூறு வருடங்களாகப் பொருளியற் அறுறையில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டதும், இப்பொழுது முன்னுெரு காலத்திலும் இராத வகையில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதுமான ஒரு நாட்டில், நகராட்சியிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் இருந்ததுபோல, திருச்சபை ஒழுங்கின்படி ஏற்படுத்தப்பட்ட கோவிற்பற்றுப் பிரிவுகளுள் மக்கட் செறிவுக்கு ஏற்றனவாய் நன்கமையவில்லை. அத்துடன் அக்காலத்தில் ஆங்கிலேய ரிற் பெரும்பாலோர் படிப்பறிவில்லாதிருந்தமையால், திருச்சபை யிலே பட்லரின் "உவமை ”யிலிருக்கும் நியாயங்களையும் உயர்ந்த சமய தத்துவங்களுக்குரிய காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் போதனைகளால் அதிகம் பயனடைந்
திருக்கமாட்டார்கள்.
குருெம்வெலின் காலத்திலே நிலவிய ஆவேசத்தையும் ஆர்வத் தையும் அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்டதும், இரண் டாவது சாள்சு மன்னன் காலத்தில் ஏற்பட்ட மதத் துவேசத்தால் ஏற்பட்ட கொடுமைகளாலும் அழிந்தொழியாது தப்பியதுமான பனியன் மரபு முறையைத் தழுவிய இணங்காதார் சில மாவட்டங் களில் வறியவர்களுக்கு நன்மை செய்தனர்; ஆனல், இவர்களும் அதிகம் “மதிப்பை " நாடுபவர்களாயும் “ஆர்வம்' குறைந்தவர் களாகவும் மத்திய வகுப்பினரின் மனப்பான்மை அதிகமுடையவர் களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். பிரெசு பித்தீரிய குழுவினர் பெரும்பாலும் யூனிற்றேறியன்களாக மாறிவிட்டனர். குவேக்கர் களும் பொதுமக்களிடையே மறுமலர்ச்சிக்காரர்களாயிருந்த காலம் போய் சமயவிடயங்களில் அமைதியாக வாழ்பவராயும் செல்வம்
அதிகமுடையவராயுமிருந்தனர்.
சமூகத்துறையில் அக்காலத்தில் இருந்த சமயக் குழுவினரி
229
டத்தே காணப்பட்ட இந்தப் பெரிய குறைகளை உயிர்களை ஈடேற்று பி. 1708, வதில் யோன் உவெசிலிக்கு இருந்த தணிக்க முடியாத ஆர்வம் இ. 1791,

Page 126
230
LS). 1714, இ. 1770.
உவெசிலியும் மெதெடிசமும்
நீக்கியது. தலைசிறந்த சமயப்பிரசாரகர்களுள்ளும் தலைசிறந்த மத அமைப்பாளர்களுள்ளும் ஒருவனை உவெசிலி சிறந்த மேடைப் பேச்சாளர்களுள் ஒருவனை யோச்சு உவைற்பீல்டுவின் காலத்திலே வாழ்ந்தான். உவைற்பீல்டை உவெசிலியின் ஆதரவாளனுகவோ, அல் லது அவனுடன் போட்டியிட்டவனுகவோ கருதலாம்.
பதினெட்டாம் நூற்றண்டில் நிலவிய மனப்பான்மையைக் காட் டும் நற்குணங்களிலும் குறைபாடுகளிலும் எல்லாவிதத்திலும் இம் முதல், மெதெடிசுக்கள்' வேறுபட்டவராயிருந்தனர். உவெசிலி தாபித்த திருச்சபைக்குத் தன்னை விசுவாசமுள்ள ஒரன்பனய்க் கடைசிவரையும் கருதியபோதிலும், இவ்வேற்றுமை காரணமாக அக்காலத்தில் தாபித்த திருச்சபையிலிருந்து இவர்கள் பிரிந்தது ஓரளவிற்குத் தவிர்க்க முடியாது போலும். உவெசிலி போதித்தபடி சமயத்தின் அடிப்படை, நியாயத்தின்பால், அல்லது சமயக்கிரியை களின்பாற் பட்டதாகாது. மனிதனுக்குத் தனது ஆன்மா இரட்சிக் கப்படுமென்ற மனுேதிடம் சடுதியாக ஏற்பட்டு அவன் புதுவாழ் வடைந்து பாவத்திற்கு மேற்பட்டவணுவதே சமயமாற்றமென்ற கோட்பாடே சமய அடிப்படையாகும். இக்கோட்பாட்டை அவன் மொருவியரிடமிருந்து பெற்றன். புத்துயிரளிக்கும் இக்கோட்பாடு உவெசிலியும் உவைற்பீல்டும் போதித்த தன்மையினலே பேராற்றல் பெற்றது. ஆயினும் விற்முேறியா இராணியின் பிற்காலத்தில் இரட் சணிய சேனையின் தொடக்கச் செயல்கள் கசப்பாயிருந்ததுபோல, அக்காலத்திலும் ஒழுங்கற்ற முறையில் பெருந்திரளான மக்களுக்கு நாட்டுப்புறங்களிலே போதனைபுரிவதும், புதிதாகச் சமய மாற்ற மடைந்தவர்களின் துன்பமும் பரவசமும் அக்காலத்து ‘மதிப்புக் குரிய குருமாருக்குஞ் சாதாரண மக்களுக்குங் கசப்பை ஏற்படுத் தின. இந்த மெதெடிசுக்களின் நடவடிக்கைகளை விசுப்பாண்டவர் களும் குருமாரும் தடை செய்தது இயல்பான செயலாகும் , சமயப் பொறைச் சட்டம் இணங்காதாரை மாத்திரம் பதிவுசெய்ய அனு மதித்தால் உவெலிசியன் குழுவினர் தாங்கள் இணங்காதாராகப் பதிவுசெய்வதா, அல்லது ஆன்மாக்களைக் காப்பாற்றும் தொழிலைக் கைவிடுவதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. அக்காலத்தி லிருந்த குழ்நிலையில், திருச்சபைக்குள்ளேயே தங்கள் கொள் கையை நிலைபெறச் செய்யுந் திட்டத்தை நிறைவேற்ற முடிய வில்லை.
இந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றண்டிலே தாாாளர் கட்சிக்
குப் பெருநன்மைதரும் முறையில் சமயப் புத்துயிர்ப்பு, நிலையான
ஒரு நிறுவனவமைப்பைப் பெற்றவுடன், தாபித்த திருச்சபையைச் சேர்ந்தவர்களின் தொகையையன்றி, இணங்காதார் குழுக்களைச் சேர்ந்தவர்களின் தொகையையும் அதிகரிக்கச் செய்தது. உறுதியான

உவெசிலியும் மெதெடிசமும்
தோரிக்கட்சியைச் சேர்ந்தவரொருவரால் தொடக்கப்பட்ட உவெசிலி யன் இயக்கம் தொடக்க காலத்தில் சமூகத் துறையிலும், ஓரளவிற்கு அரசியல் துறையிலும் பழைமை பேணும் தன்மையுடையதாய் விளங்கியது. யக்கோபினரது காலத்திலும் முழுமாற்றவாதிகளின்
பிரசாரம் தொடங்கிய காலத்திலும் வறியவர்களே இப்பிரசாரத்
தால் மனந்திரும்ப விடாது மெதெடிசுப் பிரசாரம் தன்பால் ஈர்த் தது. மெகெடிசம் அரசாங்கத்தாற் சற்றும் கவனிக்கப்படாத கோடிக் கணக்கானவர்களை முதற்புரட்சியிற் பங்குபற்றவிடாது வேறு வழி களிலே திருப்பி அவர்களுக்கு உலக விடயங்களை விட முக்கியமான பற்றுக்களையும் உயர்ந்த நோக்கங்களையும் கொடுத்தது. பொருள் உள்ளவர்களுக்கு மாத்திரம் உரிமைகள் என்ற வேறுபாடில்லாத ஒரு மறு உலகத்தின் குடிமக்கள்தான் தாம் என்ற தன்மான உணர்ச் சியை அவர்களிடையே வளர்த்தது. அத்துடன் அவர்களுக்குக் குடியாட்சி முறையிலேயமைந்த சமய சம்பந்தமுள்ளதும் கல்வி சம்பந்தமுள்ளதுமான ஓர் அமைப்பையும் மெதெடிசம் கொடுத் தது. ஆயினும் காலஞ் செல்லச் செல்லத் தொழிலாளரின் சமயமும் அவர்களின் அரசியலும் பெரும்பாலும் ஒன்முயின. கிராமங்களில் பாதியார் பல சந்தர்ப்பங்களில் புரட்சிக்காகக் கிளர்ச்சி செய்பவ ராகவும் விளங்கினர்.
பதினெட்டாம் நூற்றண்டின் இறுதிக் காலத்திலேதான் மெதெடி சத்தின் செல்வாக்கு, தாபித்த திருச்சபையினுள்ளும் உயர்குடி மக் களிடையேயும் ஓரளவு புகத் தொடங்கியது. இந்த மாற்றம் ஏற்படு வதற்குப் பிரான்சு நாட்டிலேற்பட்ட புரட்சியின் காரணமாகத் திருச்சபையைச் சேர்ந்தவர்களிடமும் உயர்குடி மக்களிடமும் ஏற் பட்ட பொறுப்புணர்ச்சி உதவியாயிருந்தது. ஆயினும், இவாஞ்ச லிசத்திற்குத் திருச்சபையின் மதகுருமாரிடையே ஒரு பலமுள்ள கட்சியின் ஆதரவு கிடைத்தபோதிலும், உவில்பபோசு போல அடிமை வியாபாரத்தை எதிர்த்த மற்ற ‘நல்லோர்' களிடையும் மக்களுக்காகப் பாடுபடும் சாவ்சுபரி போன்றவர்களிடையும் இந்தி யாவையும் பேரரசையும் வென்று ஆட்சி செய்தவர்கள் பல ரிடையும் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த சாதாரண மக்களிடை யும் கிடைத்த ஆதரவினலேயே இவாஞ்சலிசத்தின் பலம் அதிகரித் திதி.
உவெசிலியன் இயக்கம் அதனைத் தொடக்கியவர்களால் இரண்டா வது யோச்சு மன்னர் காலத்தில் அமெரிக்கக் குடியரசுகளில் பாப்பப் பட்டது. வருங்கால ஐக்கிய இராச்சியத்தில் ஆற்றல் மிக்கவொரு சத்தியாயும் மக்கட்பலம் பெற்றதாயும் அது அமைந்தது. உவேல் சிலே உற்பத்தியான இவாஞ்சலிச இயக்கத்தில் தோன்றிய தேசிய மறுமலர்ச்சியை மெதெடிசம் விரிந்து பாவச் செய்தது. கொத்து
23

Page 127
232
1721, 793.
1711, 1776.
. 1723, 1790.
கொத்துலாந்தின் சமய வரலாறு
லாந்திலே மட்டும் மெதெடிசம் தோல்வியடைந்தது. அங்கிருந்த மக் கள் தாங்களே நடாத்தும் திருச்சபையை யுடையவர்களாயிருந்த படியாலும், தங்கள் தேசத்திற்குத் தனியாகவுள்ள மதவியலில் நன்கு பயின்று ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தபடியாலும் அங்கு மெதெடிசம் தோல்வியடைந்தது.
ஆயினும், அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைத் தாண்டி அமெரிக் காவிற் பரவிய மெதெடிசம் துவிட்டு ஆற்றங்கரைக்கு அப்பாற் செல்லாது தடுக்கப்பட்ட போதிலும் கொத்துலாந்தின் பதினெட் டாம் நூற்றண்டுச் சமய வரலாறு அக்காலத்து இங்கிலாந்தின் சமய வரலாற்றுடன் பெருமளவிற்கு ஒத்திருந்தது. இந்நூற்ருண் டின் நடுப் பகுதியில் ' மொடறேற்றிசம்' என்னும் பரந்த மனப் பான்மை இயக்கம் பழைய பிரெசுபித்திரியர்களிடை பிடிவாதமான மூட நம்பிக்கை நிறைந்த கொடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதி ராகத் தோன்றியது. இந்த இயக்கத்தில் எடின்பருே? பல்கலைக் கழகத் தலைவனுயிருந்த சரித்திராசிரியன் கலாநிதி உவிலியம் உருெ பேட்சன் முக்கிய பங்குபற்றினன். டேவிட்டு கியூம் போன்ற பதி யுண்மைவாதிகள் கூடக் கண்டிக்கப்படவில்லை. கிளாசுக்கோ பல் கலைக் கழகத்தில் பேராசிரியனுகவிருந்த அடம் சிமிது அறிவுலகில் ஒர் உன்னத நிலையைக் கொத்துலாந்திற் களித்தான். நகரங்களிலும் நாட்டுப் புறத்திலும் பெருகிய செல்வ வளர்ச்சி, உருெபேட்டு பேண்சு, சேர் உவோற்றர் கொத்து போன்றவர்கள் தோன்றிய சமூகத்தை வளாச் செய்து அறிவு வளர்ச்சிக்கு இருந்த கட்டுப் பாடுகளையும் விரைவில் நீக்கியது."
நாட்டுப்புறத்துப் பல கோவிற்பற்றுக்களில் உள்ள பொதுமக்கள் பழைய ஆர்வத்துக்கும் சித்தாந்தத்துக்கும் பதிலாக இக்காலத்து ஆர்வம் அற்ற நற்குணங்களைப் பற்றிய அறிவுரைகளை விரும்ப வில்லை. தனிப்பட்ட பெருந்துணைவர், அவையத்தின் விருப்பைப் பொருட்படுத்தாது சமயக் குருமாரை நியமிப்பதை அனுமதிக்கும் “நியமிப்புரிமை' என்பதைப் புதுப்பிப்பதில் மிதவாதிகள் தங்கி யிருந்தனர். இஃது அபாயகரமானது; இம்முறைமை இங்கிலாந்தில் எதிர்க்கப்படவில்லை. ஆனல் கொத்துத் திருச்சபை இஃது ஒழுங்கற் றதும் விரும்பத்தகாததுமெனக் கருதியது. பத்தொன்பதாம் நூற் முண்டின் முற்பகுதியில் பிரெசுபித்தீரியர் குழுவிலேற்பட்ட இவாஞ் சலிச மறுமலர்ச்சி மீண்டும் சமய ஆர்வம் ஏற்படுவதற்குக் காரண
1. இக்காலத்தில் கொத்துலாந்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி இரண்டு சுவையான புத்தகங்கள் இருக்கின்றன. ஒன்று, எச். சி. கிரகாம் எழுதிய “பதினெட்டாம் நூற்றண்டில் கொத்துலாந்தில் நிலவிய சமூக வாழ்க்கை” மற்றது, காலிற்றினA “ கோவிற்பற்றுக்களின் வரலாறுகள். ”

ஒக்சுபோட்டும் கேம்பிரிட்சும்
மாக இருந்ததுடன், ஈற்றில் சமேர்சுவின் கீழ் திருச்சபையில் நிய மனவுரிமை பற்றிப் பிளவு ஏற்படுவதற்கும் காரணமாயிருந்தது. ஆனல் அவ்விதம் நடைபெறுவதற்கிடையில் மிதவாதம் கொத்து லாந்தில் மாற்றுக்கொள்கை யுள்ளவர்களின் பொறுமைக் குறைவை அடியோடு அகற்றிச் சமுதாய அறிவை விரிவடையச் செய்தது.
பதின்ெட்டாம் நூற்றண்டில் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களின் செயலற்ற நிலை, திருச்சபையினது இடையிடையே செயற்பட்ட நிலையிலும் அதிகம் பழிப்புக்கிடமானதாயிற்று. கேம்பிட்சுச் சருவ கலாசாலையிற் சில சோதனைகள் நடாத்தப்பட்டன, ஒக்சுபோட் டில் சோதனைகள் நடத்தப்படவேயில்லை என்றே கூறலாம். அள வுக்கு மேற்பட்ட சோதனைகளிலே தேறவேண்டிய நிர்ப்பந்தமுள்ள நம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இதனை ஒரு வரப்பிரசாதம் என்று கருதக்கூடும். ஆயினும், ஒய்வு அதிகமுள்ள பேராசிரியர்க ளும் விரிவுரையாளர்களும் எழுதிய குறைந்த தொகை அறிவு நூல் களுடன் சேர்த்துப் பார்க்கையில் அக்காலத்தில் போதிக்கப்பட்ட
விடயங்களின் அளவுக் குறைவும் தாக்குறைவும் உண்மையில்
விசனப்படவேண்டியவையாகும்.
இங்கிலாந்திலும் உவேல்சிலும் உயர்தர கல்விக்காக இரு பல்கலைக் கழகங்களே இருந்தன. சுதுவட்டு அரசர்களின் ஆட்சியின் முதற் பகுதியிலிருந்த மாணவர்களின் தொகையிலிருந்து அதன் அரைவா சிக்கு மாணவர் தொகை இக்காலத்திற் குறைந்துவிட்டது. 1750 ஆம் ஆண்டில் ஒக்சுபோட்டில் 190 மாணவர்களும் கேம்பிரிட்சில் 127 மாணவர்களும் பிரவேச, அல்லது மற்றிக்குலேசன் சோதனை யிற் சித்கியெய்கினர். கவனமாகப் படிப்பதில் அக்கறையில்லாத பிரபுக்களும் பெருங்குடி மக்களுமே இம்மாணவர்களுட் பெரும்
பாலானேர் ; மற்றவர்கள் ஏழை மாணவர்கள். திருச்சபையில் சோ
எல்டன் பிரபு என்பான் (அக்காலத்தில் சாதாரண யோன் கொத்து) 1770 ஆம் ஆண்டு ஒக்சுபோட்டில் பட்டம்பெற்றுத் தேறினன். தனது சோதனை யின் போது இரு கேள்விகள் மாத்திரம் கேட்கப்பட்டதாக அவன் கூறுவதுண்டு. * கீபுறு மொழியில் தலைமண்டை ஒட்டுக்கு என்ன சொல் ? என்பதும் சருவ கலாசாலையைத் தாபித்தவர் யார் ? என்பதுமே அவை. " கொல்கொதா " என்றும் அரசன் அல்பிரெட்டு என்றும் மறுமொழி சொல்லி கீபுறுவிலும் சரித்திரத்திலும் அவன் சித்தியடைந்தான். கேம்பிரிட்சுச் சருவகலாசாலையில் திறமைமிக்கவர்கள் மிகவும் கடினமான “ கணக்குத் திறைப்போசு ” சோதனை க்குத் தோற்றினர்கள். இச்சோதனையின் ஒருபகுதி நேர்முகப் பரீட்சையாகவே இக்காலத்திலும் நடத்தப்படுகின்றது. ஆனல் இலத்தீன், கிரேக்க மொழிகளில் சோதனைகள் நடைபெறவில்லை.
233
1843.

Page 128
234
பல்கலைக் கழகங்களின் இழிநிலை
விரும்புபவர்களாயும், அல்லது தேசத்தின் வடபகுதித் தொடர்புகள் அதிகமுள்ள கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் நியூற்றன் மரபு முறைப்படி கணித சாத்திரம் படிக்க விரும்புபவர்களாயும் இந்த ஏழை மாணவர்களிருந்தனர்.
விஞ்ஞானத்துறையிலும், பழைமையை ஆராய்வதிலும் அதிக மான அக்கறை கொண்டவர்களும், அறிவுப்பலம் நிறைந்தவர்களும் வாழ்ந்த தலைமுறையில் பல்கலைக்கழகங்கள் இவ்விதமான தாழ்வு நிலையடைந்தமை வியப்புக்குரியதாகும். இணங்காதாரைச் சருவ கலாசாலைகளிற் சேர்க்காமையை ஒரளவிற்கு இதன் காரணமாகக் கூறலாம் ; பொதுமக்களிடையே கல்வி ஆர்வம் நிறைந்த காலத்தில், சருவகலாசாலைகளிலும் கல்லூரிகளிலும் சில பதவிகள் தவிர்ந்த ஏனைய உத்தியோகங்கள் யாவும் மத குருமாருக்கே உரியவை யென்று சட்டமூலம் ஒதுக்கிவைத்தமையும் இதற்கு ஓரளவு காரண மாயிருந்தது. கல்வித்துறையில் ஆர்வம் அதிகமில்லாமல் துறவறத் திலே அதிகம் ஆர்வங்கொண்ட கல்லூரிகள், பல்கலைக் கழகத்தின் உரிமைகளேயும் கடமைகளையும் முற்றிலும் தமக்கே சுவிகரித்துக் கொண்டதும் ஒரு தீமையாகும். கூட்டமைப்பு நிலையங்கள் யாவற் அறுக்கும் பாதுகாப்பளிக்கப்பட்டிருந்த அவ்வூழியில் எவ்வித சோதனையோ, மாற்றமோ ஏற்படுமென்ற பயமிருக்கவில்லை. இரண் டாவது சேமிசு மன்னனுக்கும் மக்டாலென் கல்லூரிக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கின் விளைவினல் எச்சரிக்கை யடைந்த உவிக்கு ஒக்சுபோட்டில் நடைபெற்ற இழிவான யக்கோபித இயக்கத் தையோ, அஃதளவு இழிவான கேம்பிரிட்சுக் கல்லூரிகளையோ தாக்கவில்லை. இக்காரணத்தினுல் கல்வித்துறையில் மாற்றம் வேண்டு மெனக் கிளர்ச்சி ஏற்படுமென்ற பயமே ஏற்படவில்லை.
பதினெட்டாம் நூற்றண்டு இங்கிலாந்தின் பள்ளிக்கூடங்களில் இலாபமும் நட்டமும் ஏற்பட்டன. ஒருபக்கத்திலே மானியமுடைய பழைய பள்ளிக்கூடங்கள் திறமையற்று ஊழல் நிறைந்தனவாயின. மறுபக்கத்தில் சம்பளத்திற்கு மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் இணங்காதார் கழகங்களும் வேறு பலதரப்பட்டவர்களின் தனிப் பட்ட பாடசாலைகளும் அதிக செலவின்றி நல்ல தற்காலக் கல்வி புகட்டின. வறிஞர் சார்பாகத் தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்த புத்திகூர்மையான மாணவருக்குத் தங்கள் நிலையிலிருந்து உயர் வதற்கு வாய்ப்பளித்த சில உயர்நிலைப் பள்ளிகள் தவிர, முதன் முறையாகத் தொழிலாளர் வகுப்பினருக்கு முறையான தொடக்க நிலைக் கல்விபுகட்ட ஏற்பட்ட இயக்கங்கள் ஆன் இராணியின் ஆட்சிக்காலத்திலே தொடங்கிய அறப்பாடசாலைகளை நிறுவுதற்கான

பள்ளிக்கூடங்கள்
இயக்கமும், 1780 ஆம் ஆண்டளவில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழ மைப் பாடசாலை இயக்கமுமாகும். (செல்வி எம். சி. யோன்சு : அறப்பாடசாலை இயக்கம் 1938-பதினெட்டாம் நூற்றண்டுச் சமூக வரலாற்றைப் பற்றிய ஒரு முதன்மையான நூல்).
தற்காலத்து ஒழுங்கு முறையான போதன முறைக்குரிய தனிப் பட்ட நன்மைகள் அக்காலக் கல்விமுறையிலில்லாவிடினும், அதைப் போலவே தற்கால முறையில் உள்ள குறைகளுமில்லாமலிருந்தன. உயர்ந்த வகுப்பினருடைய கல்வியாவது, மத்தியதர வகுப்பினரின் கல்வியாவது எல்லோரையும் ஒரேமாதிரி உருவாக்கவில்லை. இக் காலத்துக் கருத்தைக் கொண்டு நோக்கினல் கமக்காரரின் மக்களுக்
கென ஒக்குசெட்டில் இருந்த பழையமுறைப் பள்ளிக்கூடம் சிறந்த
தெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு மணிநேரமும் ஒழுங்குபடுத் திய விளையாட்டுக்கும் போதனைக்குமெனக் குறிக்கப்பட்ட கல்வி பெறும் மாணவன் வளரமுடியாத வகையில் உவேட்சுவேது என்னும் ‘நாணமுள்ள மென்பயிர் ' தனக்குரிய விநோத முறையில் வளர அக்கல்வி இடங்கொடுத்தது. ஒக்குசெட்டிலிருந்த பள்ளிக் கூடத்திற்கும் உயர்குடி மக்களின் பொதுப் பாடசாலைகளுக்கும் அதிக வேறுபாடிருந்தது. பொதுப்பாடசாலைகளில் நிலவிய ஒழுங் கின்மையாலும் அங்கு மாணவர்களிடையே நிலவிய தொல்லைகளா அலும் அவை இழிவுற்றன. ஆயினும், முறையான அமைப்பில்லாத தனலேயே தனிப்பட்ட மாணவர்களுடைய திறமையையும் நூதனமான மனப்போக்குக்களையும் வளர்ப்பதற்கு அப்பொதுப் பாடசாலைகள் ஏதுவாயிருந்தன. எங்கள் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றண்டு மக்களி டையே காணப்பட்ட திறமை மிக்கோர் விகிதம் அக்காலத்திற் புகட்டப்பட்ட கல்வியளவால் ஏற்படக்கூடியதிலும் அதிகம் கூடிய தாகத் தோன்றுகிறது. -
வீட்டில் பிள்ளைகளுக்கு இருந்த கட்டுப்பாடும் ஒழுங்குகளும் முற் காலங்களிலும் பார்க்கக் கொரேம் குறைந்தவையாயிருந்த போதி லும் கடுமையாயிருந்தன. பிரம்பை உபயோகிப்பதால் வரக்கூடிய நன்மைகளில் பெற்றேரும் ஆசிரியரும் தீவிர நம்பிக்கை வைத் திருந்தனர். வாலிபர்களுக்கு நடுத்தரக் கல்வி வசதிகளில்லாத குறையை ஒரளவிற்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் முறை ஈடு செய்தது. தியூடரினதும் சுதுவட்டர்களினதும் காலத்தில் இருந் தது போலத் தொழிற்பயிற்சி முறை எல்லாம் விடங்களிலும் காணப்
* 18 ஆம் நூற்ருண்டு ஆரம்ப பாடசாலையில் சிறந்த ஒன்றைப்பற்றி
அவனுடைய " முகவுரை ” என்னும் நூலின் முதலாம், இரண்டாம் புத்தகங் களிற் காண்க.
235

Page 129
236
* தொழில் பயில்வோர் ' முறை
படவில்லை; எனினும், பெருமளவிற்குப் பரவியிருந்தது. எங்கள் காலத்தில் பாடசாலைப் படிப்புக்குப் பின்னர் வாலிபர்களுக்குப் போதிய வசதிகளில்லாதிருப்பது போலல்லாது, ஒரு தொழிலில் நன்முகப் பயிற்சி பெறுவதற்கும் வீட்டில் ஒழுங்காக நடப்பதற்கும் இம்முறை தக்க வசதிகளை ஏற்படுத்தியது.
வீடுகளில் தொழிற்பயிற்சி பெறுபவர்களுடைய நிலைமையை அக் காலத்திலும் யாருங் கவனித்திலர். தனது அயலாரிடம் கெட்ட பெயர் பெறும் பயத்தைத் தவிர, வேறெப் பயமுமின்றிக் கெட்ட மனமும் பேராசையுமுடைய தொழில் ஆசிரியன் தன்னிடம் தொழில் பயிலுபவனை வருத்தக்கூடியதாயிருந்தது. பிற்காலத்தில் தொழிற்சாலைகளில் வறிய குடும்பத்துப் பிள்ளைகள் மாய்ந்தது போல இக்காலத்திலும் கீழ்த்தரமான தொழில் பயிற்றும் ஆசிரியனிடமோ, ஆசிரியையிடமோ தொழிற்பயிற்சி பெற்ற வறிய பிள்ளைகள் இன்ன அலுற்று மாய்ந்தனர். யாவருங் காணுமாறு கொடுமைகள் யாவும் தொழிற்சாலையில் ஒரே இடத்தில் நிகழ்ந்ததனல் அது நல்லவர் களின் ஆத்திரத்தைக் கிளப்பி அக்கொடும் முறையை ஒழிப்பதற்கு ஏதுவாயிருந்தது. கிருப்பு என்பான் எழுதிய பீட்டர்கிறைம்சு ' என்பானின் கதை மூலமும், திருமதி பிறவுண்றிக்கும் மற்றை யோரும் தொழிற்பயிற்சி பெறுபவர்களை வருத்திக் கொலை செய் தமை பற்றிய உண்மைச் சான்றுகள் மூலமும், வேறு கதியில்லாத குழந்தைகளுக்குப் பழைய் தொழிற்பயிற்சி முறையில் நேர்ந்த கதியை அறியலாம். இவை புலவர்தம் உள்ளத்தைப் புண்படுத்தும் கதைகளே எண்பிக்கின்றன.*
இதற்கு எதிர்மாருக, தனக்குத் தொழில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியனுடன் அவன் குடும்பத்தவருள் ஒருவராக வாழ்ந்து, அவ ணுடைய மகளை விவாகம் செய்து, அவனுக்குப் பின் அவனது தொழில் நடாத்த எதிர்பார்க்கும் “மகிழ்ச்சியான கற்றுக்குட்டி', அல்லது "முயற்சியுடைய கற்றுக்குட்டி ' என்று சொல்லப்படுவோ ரும் கைத்தொழிற் பயிற்சி பெறுவோருள்ளே காணப்பட்டனர். அன்றியும், சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு வேலை கற்பவனும் தொழில் பழக்குவோனின் குடும்பத்தைச் சேர்ந்தவனுக விளங்கி
1 அக்காலத்தில் இலண்டன் நகரத்தில் வறியவர்களின் விடுதிச்சாலை களிலுள்ள பிள்ளைகளைப் பிடித்து ஈவிரக்க உணர்ச்சியோ, நீதி மனப்பான்மையோ சிறிதும் இல்லாது உதவி தேவைப்பட்ட தொழிலாளரிடம் தொழிற்பயிற்சி பெறு வதற்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்படைத்து விடுவார்களென்றும், அத் தொழிலாளர்கள் பரிதாபம் காட்டவேண்டிய அனதைகளைத் தங்களுக்கு உழைக் கும் அடிமைகளாக்குவார்களெ னறும் பீட்டர் கேள்விப்பட்டிருந்தான் (பருே 22). கிறைம்சு தன்னிடம் தொழிற்பயிற்சி பெறுபவர்களை ஒவ்வொருவாரகக் கொல்லு கின்றன். திருமதி யோச்சு எழுதிய ** பதினெட்டாம் நூற்றண்டில் இலண்டன் Fகரம்’ என்ற நூலில் 231-3 பக்கங்களைப் பார்க்க.

கிராமவாழ்க்கை : தொழில் முறை
னன். தொழிற்சாலை முறையினுல் மக்களுக்கிடையே வகுப்புக்கள் ஏற்படும் வரை மனிதத் தன்மைக்கு ஏற்றதெனப் பாராட்டக்கூடிய இந்த ஒழுங்குகளைக் கைத்தொழில் முறைமை பெருமளவிற்கு ஆதாரமாகக் கொண்டிருந்தது.
இக்குடிசைத் தொழில்கள் எல்லாம் நகரங்களிலும் தொழில்முறை சம்பந்தமான மாவட்டங்களிலும் மாத்திரம் ஒருங்கு சேர்ந்து அமைந்திருக்கவில்லை. கிராமிய வாழ்க்கையிலுள்ள எல்லா வசதி களும் மரபு முறைகளுமுள்ள பல கிராமங்களில் இத்தொழில்கள் அமைந்திருந்தன. கிராமங்கள் பெரும்பாலும் தங்களுக்கு மாத்திசம் தேவையானவற்றை ஆக்கியதோடு நில்லாது, தேசிய தேவைக்கும் பிற தேசங்களின் தேவைக்கும் வேண்டிய பொருள்களிற் பெரும் பகுதியையும் உற்பத்தி செய்து கொடுத்தன. நூல் நூற்பதும் தடித்த துணியையும் மிருதுவான சீலையையும் நெசவு செய்வதும் தவிர, நாட்டுப்புறத்திற் சிறு தொழிற்சாலைகளில் மணிக்கூடு செய்தல் போன்ற அதிகம் விரிவான வேலைப்பாடுள்ள பல தொழிற்றுறை களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இரும்பிலும் மாத்திலும் எல்லா விதமான கருவிகளும் பாத்திரங்களும் கொல்லராலும் தச்சாாலும் வண்டிச் சக்கரம் செய்வோராலும் செய்யப்பட்டன. பல கிராமங் களில் இன்னமும் கிராமத்தவர்களே தங்கள் சொந்த விடுகளைக் கட்டக் கூடியதாயிருந்தது. எல்லா வகையான பொருள்களும் பெறக்கூடிய கிராமக் கடைகள் காணப்படுவது அரிது. ஏனெனில், பட்டணத்திலிருந்தே கிராமத்துக்கு வேண்டிய பொருள்கள் யாவும் கிரமமாகப் பெறப்படல் வேண்டும் எனும் போதுதான் அத்தகைய கடைகள் தோன்ற இடமுண்டு. ஊர் ஊராகச் சுற்றித் திரியும் விலைஞர் இப்போதைக்குக் கிராமத்தவருடையூ தேவைகளைப் பூர்த்தி செய்தனர். メ
எங்கள் தீவின் வரலாற்றில் கிராமங்கள் சாதாரணமாகத் தனித் தியங்கக்கூடிய பகுதிகளாகக் கடைசியாக விளங்கியது இக்காலத் திற்றன். முதலாம், இரண்டாம் யோச்சு மன்னர்கள் காலத்தில் எவ் வகையான கமத்தொழிலிலும் ஈடுபடாத பலருட்பட ஆண்களிலும் பெண்களிலும் பெரும்பாலானுேர் உண்மையில் கிராமத்தவர்களா கவே விளங்கினர். அவர்களுக்கு அக்காலத்திலிருந்த புதினத்தாள் களிலிருந்து அரிதாகத் தெரியவரும் உலகத்து அரசியல் விடயங்களி லாவது, விளையாட்டுலகில் உள்ள புதினங்களிலாவது, நகரவாழ்க்கை முறையிலாவது, தொழிற்சாலைகளிலாவது, தொழிலாளர் சமாசத்தி லாவது அக்கறையிருக்கவில்லை. வயல்களும் காடுகளும் குழ்ந்த தங்கள் கிராமத்திலும், அக்கிராமத்தின் வரலாற்றிலும், அங்கு நில விய பேய்க் கதைகளிலும், அங்கு நிலவிய கட்சிப் பிளவுகளிலும் பகைமைகளிலும், அயலவர்களுடன் நிலவிய சினேக மனப்பான்மை
10-Ꭱ 5981 (11IᏮ2)
287

Page 130
238
கிராமவாழ்க்கையின் உயர்நிலை
யிலும், அவர்களின் அறியாமை காரணமாக மறைபொருளாயுள்ள மறு உலகத்திலுமே அவர்களுக்கு அக்கறையிருந்தது. கைத் தொழிற் புரட்சி தொடங்குமுன்னர் இத்தகைய அரைகுறையான, ஆனல் இலகுவில் நம்பக்கூடிய விடயங்கள்தாம் எங்கள் மூதாதை யர் சிந்தனைக்குரிய விடயங்களாயமைந்தன. கிராமத்துப் புல்வெளி களிலும், கிறிக்கெற்று மைதானத்திலும், குருவிகளையும் விலங்குகளை யும் வேட்டையாடும் புதர்களிலும் தாங்கள் பார்த்துப் பங்குபற்றிய வற்றை விட அவர்களுக்கு விளையாட்டைப் பற்றி வேருென்றும் தெரியாது.
யோச்சு மன்னர்கள் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் கிராம வாழ்க்கை பொதுவில் நன்கமைந்த பொருளாதார சமூக அமைப்பை எடுத்துக்காட்டியது. ஆனல், காணியைச் சொந்தமாக வைத்திருக்கும் முறையைத் தளரவிடாது, கிராம ஆட்சியில் கூடிய அளவு சுயஆட்சி முறையும் ஏற்படாது, பெருநிலக்கிழாரின் அதி காரம் வளர்வுற்றதே இந்த முறையிலே காணப்பட்ட குறையாகும். முதலாம், இரண்டாம் யோச்சு மன்னர்களின் ஆட்சிக் காலத் திலேயே கட்டுபாடற்ற சிறுநிலக்கிழார்தம் தொகையும் செல்வர் கள்தம் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே யிருந்தது. சொந்த நிலமுடைய சிறுநிலக்கிழாரான கமக்காாரும் கச்சிதமான சிறு தோட்டங்களும் செழிப்புற்றேங்கிய காலம் தியூடரினதும் சுது வட்டர்களினதும் காலமே. தங்கள் காணிகளுடன் பிற காணிகளை வாங்கிச் சேர்க்கும் விருப்பம் பெருநிலக் கிழார்களிடம் முன்னுெரு காலத்திலுமில்லாத வகையில் ஆன் அரசியினுடைய காலத்தில் அதிகமாகக் காணப்பட்டது. அரசியலிலும் சமூகத் துறையிலும் தங்கள் ஆகிக்கத்துக்குட்படாத சிறு நிலக்கிழார்மீது பெருஞ் செல்வர் பொருமை கொண்டனர். அக்காலத்தில் தாங்கள் வேட்டை யாடும் பட்சிகளையும் மிருகங்களையும் மற்றவர்கள் கொல்லாவண்ணம் தடுப்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் காரணமாக, குலவிருது பெழுத ஒருவன் தனது சொந்த நிலத்தில் வேட்டையாடுவதைக்கூட வெறுத்தனர். உண்மையில் பிற்காலத்துச் சுதுவட்டு அரசர்களின் காலத்தில் பெருஞ்செல்வர் நிறைந்த பாராளுமன்றங்கள் நூறு
* தியூடர் காலத்திலும் சுதுவட்டர்களின் காலத்திலும் நிலக்கிழார் என்று சொந்தக் காணியுடைய கமக்காரர்களையும் குத்தகைக்குக் காணிபெற்ற கமக் காரர்களையும் வழங்கினர். ஆதர் யங்கு நிலக்கிழார் என்ற சொல்லைச் சொந்தக் காணியுடைய கமக்காரரைக் குறிக்கவே உபயோகித்தனன். பத்தொன்பதாம் நூற்றண்டில் இச்சொல்லுக்கு இக்குறுகிய கருத்து நிலைத்தது. அடம் சிமிது, பதினெட்டாம் நூற்றண்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆகியோருட்படப் பலர் பழைய விரிந்த கருத்துப்பட இச்சொல்லையாண்டனர்.

சிறுநிலக்கிழார் : கீழ்வகுப்பார் நிலை
பவுண் வருமானத்துக்குக் குறைய உள்ள சொந்த நிலக்காாரைத் தங்கள் சொந்த நிலத்திற்கூட வேட்டையாடாதபடி கொடிய முறை யில் வேட்டைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை நிறைவேற்றின.*
சிறுநிலக்கிழாரின் காணிகளை விலைக்கு வாங்குவது அவர்களைத் தொலைப்பதுக்கு மிகவும் வாய்ப்பான வழியாயிருந்தது. சிறுநிலச் சொந்தக்காானப் பொறுத்த வரையில் அவன் தனது கமத்திலிருப் பதிலும் பார்க்கத் தற்கால உலகில் வேறு துறைகள் மூலம் நன்மை யடையக்கூடுமென்று கருதினன். பதினெட்டாம் நூற்முண்டு முழுவ தும் சுதந்திரக் கமக்காரக் குடும்பங்கள் நகரங்களில் குடியேறிக் கொண்டிருந்தன. இவைகளுட் பல குடும்பங்கள் தற்காலத்து இங் கிலாந்தில் விளங்கும் பெரிய வியாபாரத் தாபனங்களை அக்காலத் தில் தாபித்தனவாகும். பெரும்பாலும் தங்கள் சொந்தக் காணிகளை விற்றவர்கள், குத்தகைக்குக் கமம் செய்யும் பெரிய கமக்காரர்களாக மாறினர். இவ்விதம் மாறுவதால் அவர்கள் ஒருவேளை தங்கள் சுதந் திரத்தையிழந்ததிலும் பார்க்க அதிக செல்வமும் முக்கியத்துவமும் பெற்று இலாபமடைந்தனர் எனலாம்.
கீழ்வகுப்பினரிடத்திலும் பார்க்கக் கல்வி கற்ற வகுப்பின ரிடத்திலே நெடுங்காலமாக மனிதத்தன்மை இயக்கமும் பகுத்தறிவு இயக்கமும் காணக்கூடியனவாயிருந்தன. கேயினதும் ஒக்காத்தி னதும் காலத்தைச் சேர்ந்த கீழ்ச் சமூகத்தினர் உவெசிலியும் உவைற் பீல்டும் தங்கள் இயக்கத்தை அச்சமூகத்தினரிடையே தொடங்கிய காலத்தில் எவ்வளவு ஊக்கம் நிறைந்தவராயும் வீறுடையாாயு மிருந்தனரோ அவ்வளவிற்கு முரட்டுத்தனமுடையாாயு மிருந்த னர். தொழிற்றுறைப் புரட்சி ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் கவனக் குறைவால் பல பெருந் தீமைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன : இலண்டனிலும் விரைவில் வளர்ச்சியடைந்துகொண்டிருந்த மற்ற நகரங்களிலும் வறியவர்களைப்பற்றி அரசாங்கமோ, சமூகமோ அக்கறை காட்டாத நிலையொன்று; கொத்துலாந்தின் எல்லைக்குத் தெற்கே சாதாரண மக்களுக்குக் கல்வி கற்க வசதிகள் இல்லாமை இன்னுமொன்று;
நல்லவரான சேர் உருேசர் டி கவளிகூட வருடத்துக்கு நூறு பவுண் வருமானமுடைய கமக்காரனை விரும்பவில்லை. “ வேட்டைச் சட்டத்திலிருந்து அரும்பொட்டாகத் தப்புகிறன். அத்துடன் ஒரு முயலையோ, குருவியையோ கொல்லும் தகுதியை அதனல் அடைகிறன். தனது துப்பாக்கியால் ஒரு கிழமையில் இரண்டு அல்லது மூன்று முறை தனது இரவு உணவைப் பெறுகின்றன். இதன்மூலம் தன்னைப்போல நல்ல காணி வைத்திருக்காத வர்களிலும் பார்க்கக் குறைந்த செலவில் வாழுகின்றன்” என்கின்றர்.
239

Page 131
240
வழிப்பறிகள்வர் : வழக்கு விசாரணைகள்
ஆதிகாலந்தொட்டு ஆங்கிலேயனின் மரியாதைக்குரிய பானங்களா கிய எலுக்கும் பியருக்கும் பதிலாக மலிவான கெடுதி நிறைந்த சின் பானம் அமைந்ததும் மற்முென்று.
நகரங்களிற் குவிந்திருந்த இனவாரியாகப் பிரிக்கப்படாத மக்கள் தொகுதியைக் கண்காணிப்பதற்குக் கிலுகிலுப்பையுடன் திரியும் நகர் காவலர்களையும் பொலிசு நீதவான் பீல்டிங்கினது, தொகையிற் குறைந்த, ஆனல் தகுதி மிக்க "போ வீதி ஒட்டக்கா ார்களையும்” விட வேறு சிறந்த பொலிசுப்படை இருக்கவில்லை. 1780 ஆம் ஆண்டிற் கூட, நிலைமையை அடக்கும்படி போர்வீரர் W களுக்குக் கட்டளையிடுமுன்னர் பிரபு யோச்சு கோடன் தலைமையில் கலகக்காரக் கூட்டத்தினர் இலண்டன் நகரம் முழுவதையுமே எரித்துவிடுவார்கள் போலிருந்தது. குதிரைமேற் சவாரி செய்யும் வழிப்பறிக் கொள்ளைக்காரர் உலகத்திலேயே மிகப் பெரிய தலைநக சத்திற்கு எல்லாத் திசைகளிலுமிருந்து வரும் விதிகளிலெல்லாம் தண்டனைக்குப் பயமின்றிச் சீர்கேடான முறையில் திரிந்தனர். இவர்களைப் பொதுமக்கள் விசாரமற்ற ஆங்கிலேயர்தம் வீரத்திற் கும் சுதந்திரத்திற்கும் உதாரணங்களாகக் கருதினர். அக்காலத்திற் கவி இயற்றுபவரொருவர், வழிக்கொள்ளைக்காரர் அறுவர் இன்ப சுதந்திரத்துடனும் பெரிய வாள்களுடனும் தனது பிணத்தைக் காவிச் செல்வதே ஒரு சிறந்த மரியாதை நிறைந்த பிண ஊர்வலமாக நினைத்துப் பாடியிருக்கிருரர்.
புரட்சிக்குப் பின்னர் அரசியற் குற்றங்கள், பழிச்செயற் குற்றங்கள், ஆகியனபற்றிய வழக்கு விசாரணைகள் முன்னரிலும் பார்க்கப் பாரபட்சமின்றி நடத்தப்பட்டன. அத்துடன் வரலாற்றில் முதன்முறையாகச் சட்டவாணர், நூலியல் முறையான சாட்சிய முறைகளைப் படிப்படியாக அறிந்து கொள்ளத் தொடங்கினர்.
1736 ஆம் ஆண்டிற்கு முன்னர் சின்னுக்கு அதிகமான தீர்வை விதிக்கப்படவில்லை. வருடாவருடம் வடிகட்டப்படும் பிரித்தானிய மதுபானங் களின் சராசரி 1684 ஆம் ஆண்டில் உள்ள 5 இலட்சம் கலன்களிலிருந்து 1735 இல் 55 இலட்சத்திற்கு உயர்ந்தது. பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகு தியில் வறியவர்களிடையே சின் குடிப்பதில் புதிதாகத் தோன்றிய விருப்பினுல்
குற்றங்களும் மரண வீதமும் கூடியது. சில்லறை வியாபாரிகள் தங்கள் வாடிக்
கைக்காரரை ஒரு பென்னி கொடுத்து வெறியேறும் வரைக்கும் இரண்டு பென்னி கொடுத்து அறிவு கெடும் வரைக்கும் குடிக்க அழைத்தனர். இதற்கு எதிராகக் கிழக்கு இந்தியக் கம்பனியாரால் பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை, மக்களின் பானம் என்ற இடத்திற்குக் குடிவகையுடன் போட்டியிடத் தொடங்கியது. 1742 ஆம் ஆண்டளவிலேயே தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்த ஆகக் குறைந்த தரமான குடும்பங்கள் கூட எலைக் கைவிட்டுத் தேநீருடன் தங்கள் காலை உணவை உட்கொள்ளுகின்றன என்று குறை கூறப்பட்டது.

சிறைச்சாலைகள்
ஆனல் மறியற்காரரிடமிருந்து ஆதாயம் பெறும் சிறைக்காவலரிடம் குத்தகைக்கு விடப்பட்ட சிறைச்சாலைகள் உவெசிலியின் அபிப்பிரா யப்படி நாகம் எனக் கூறத்தக்க அளவு சீர்கேடான நிலையிலிருந் தன ; குற்றமற்ற கடன்காரன் அதிக தண்டனைக்குட்பட்டான். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சிறு குற்றங்களுக்குத் துளக்குக் தண்டனை விதிப்பது இக்காலத்தில் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆடவரும் பெண்டிரும் பகிரங்கமாகச் சவுக்கடி பெறுதல் இன் னும் நிறுத்தப்படவில்லை. இந்நூற்முண்டின் இறுதிப் பத்தாண் டில் சுதுவட்டர் முதலியோரின் தலைமையிலே தொடங்கிய ‘ஒப்புர வாண்மை இயக்கம் நெடுங்காலத்துக்கு முன்னர் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடிக்க முற்பட்டது. இவ்வியக்கம் பதினெட் டாம் நூற்முண்டில் தோற்றிய போதிலும் சின் குடிவகை ஒன்றைத் தவிர்த்து இவ்வியக்கம் ஒழிக்கவிரும்பிய தீமைகள் யாவும் மனிதன் நாகரிகம் பெற்ற காலந்தொட்டே ஏற்பட்டனவாகும்.
கைத்தொழிற் புரட்சியுடன் தொடர்புறும் வகையில் முதலாம், இரண்டாம் யோச்சு மன்னர்கள் காலத்திலுள்ள வாழ்க்கை முறை அமையாதபோதிலும், ஒருசில இயந்திர சாதனங்கள் செய்யப் பட்டால் இப்பெரிய மாற்றத்தை விரைவில் நிகழ்விக்கக்கூடிய நிலேமையிலேயே அவ்வாழ்க்கை அமைந்தது. அனேவர் காலத்து இங்கிலாந்திற்குச் சிறப்பாக அமைந்த சட்டங்களும் வழக்கங்களும் தனிப்பட்டவர்களுக்கு மிகுந்த சுதந்திரத்தைக் கொடுத்தன. அத் துடன் தனிப்பட்டவர்கள் தாமாக மேற்கொள்ளும் முயற்சியைத் தடுக்கும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையெனலாம். சமயப் பொறுமையானது இணங்காதாரான வணிகரைப் பொதுவாழ்க்கை யில் பங்குபற்றவிடாது தடுத்து, பணமீட்டுவதில் அவர்தம் ஆற்றலைச் செலவிட முழுச் சுதந்திரம் கொடுத்தது. வெளிநாடுகளிலிருந்து வியாபார இரகசியங்களுடனும் தொழில் நுட்ப அறிவுடனும் வந்த புரட்டெசுத்தாந்தருக்கு நாட்டில் பொருளாதாரத் துறையிலிடுபடு வதற்கு உரிமை கிடைத்தது. வியாபாரத்தையும் உற்பத்தியையும் கட்டுப்படுத்தும் முறையில் அரசாங்கத்தினதோ நகரசபையினதோ தொழிற் குழுக்களினதோ கட்டுப்பாடுகள், மற்ற நாடுகளிலிருந்த வற்றிலும் பார்க்கக் குறைவாயிருந்தன. சேர்மனி, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளில் அக்காலத்தில் அந்நாடுகளைப் பிரிக்கும் எண்ணற்ற சுங்கவரிகள் இருந்ததற்கு மாமுக இங்கிலாந்து முழு வதிலும் ஒரு தடையுமின்றி வியாபாரம் செய்யக்கூடியதாயிருந்தது. பிரான்சு தேசத்திலும் சேர்மனியிலுமுள்ள விழுமியோர் போன்றி சாது, இங்கிலாந்தை ஆண்ட பிரபுக்களும் பெருஞ்செல்வர்களும், வியாபாரத்துறையிலும் தொழிற்துறையிலும் உள்ள தலைமக்களு
24

Page 132
242
கைத்தொழிற் புரட்சியின் ஆரம்பம்
டன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்; அன்றியும், இவர்களுக் கிடையில் வேறுபாடு மதிகமில்லை. சுரங்கவேலைகளே, அல்லது தொழிற்சாலை வேலைகளைத் திருத்தியமைப்பதற்கு வழிவகைகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்த முயற்சியும் துணிவுமுள்ள வியாபாரிகளும் அவர்தம் பெருந் துணையாளரான உயர்குடிப் பிறந் தோரும் நியூற்றன் பிறந்த நாட்டில் விஞ்ஞானத்திற்கு மதிப்புக் கொடுத்து அதனைப் பயன்படுத்தினர். உலகத்தின் சரித்திரத்தில் முன்னெரு காலத்திலுமில்லாத வகையில் இக்காலத்தில் முதல் சேர்ந்திருந்தது. பெருமளவில் வியாபாரத்தில் முதலிட்டுப் பழக்க முள்ள ஆங்கிலேயப் பணக்காரர், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் தொழிற்றுறையிற் புது வாய்ப்புக்களை ஏற்படுத்தினுல் மேலும் பெருமளவு முதலிடத் தயாராயிருந்தனர். தாய்நாட்டில் ஆக்கப்படும் பொருள்கள் பெருமளவில் ஆக்கப்படின் அவைகளை விற்பதற்கு அக்காலத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிழக்கு நாடுகளிலும் இருந்த விற்பனைச் சந்தைகளை, எங்கள் வர்த்தகச் சேவை மூலம் எல்லையின்றி விருத்தி செய்யக்கூடியதா யிருந்தது. இவ்விதமாக எல்லாவிதத்திலும் இக்காலத்தில் இங்கி லாந்து நாடே கைத்தொழிற் புரட்சி தொடங்குவதற்கு உரிய இட மாக அமைந்திருந்தது.
நினைவுக்கு அப்பாற்பட்ட பழைமை வாய்ந்த இரும்புத்தொழில், இக்காலத்திலும் விறகுக்கு, சசெக்சு உவீல்டிலும் மத்திய நிலங்களி லும் செவேண் பள்ளத்தாக்கிலும் உள்ள விரைவில் குறைந்து கொண்டு செல்லும் காடுகளை நம்பியிருந்தது. விறகு கிடைப்பது
1. பிறிட்சுவாட்டர் கோமகனே “ உள்ளூர்க் கப்பற் போக்குவரத்தின் * தந்தையெனவும் மாஞ்செற்றர் நகரின் முதல்மகன் எனவும் அழைக்கப் பட்டான். 1777 ஆம் ஆண்டு இறந்த சேர் உவாற்றர் பிளாக்கெற்றைப் பெருஞ் செல்வனென்பதா, வியாபாரி என்றும் முதலாளி என்றும் மதிப்பிடுவதா ? இவன் நியூக்காசிலிலும் இரையின்சைட்டிலும் மிகவும் முக்கியம் வாய்ந்தவனுக இருந்தான். ஆனல், கிராமியப் பகுதியான நோதம்பலாந்தின் மத்தியிலும் பெரிய ஒரு தோட்டத்தைச் சீர்படுத்திக் கமம் செய்தான். இத்தோட்டத்தில் ஒரு பெரிய கிராமிய வீடும் அதற்கு எற்ற வசதிகளும் வேட்டையாடும் வசதிகளும் இருந்தன. 1711 ஆம் ஆண்டு தோரிகள் நிரம்பிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதும், உவால்போலின் தலைமையில் பிற்காலத்தில் ஆட்சி புரிந்த உவிக்குகளினல் நீக்கப்படாததுமான ஒரு சட்டத்தில் விதித்தபடி, எவ்வளவு பெரிய பணக்காரனயிருந்தபோதிலும், காணிக்குச் சொந்தக் காரணுயில்லாத வியாபாரி எவனும் பொதுமக்கள் சபையின் அங்கத்தவனுக முடியாது. இச்சட்டத்தின் நோக்கம் எதுவாயிருந்தாலும், இச்சட்டம் வியாபாரி களைப் பாராளுமன்றத்திலிருந்து விலக்காது, அவர்களைக் காணிச் சொந்தக் காரராக வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. பதினெட்டாம் நூற்றண்டில் சேர், உவாற்றர் பிளாக்கெற்றினுடைய தோட்டம் உட்படப் பல பெரிய தோட்டங்கள் வியாபாரத்திலும் தொழிற்றுறையிலும் ஈட்டிய பணத்தைக் கொண்டு சீர் திருத்தப்பட்டுச் சிறப்படைந்தன.

இரும்பு : நிலக்கரி போக்குவரத்து
அரிதானுல், எந்த நேரத்திலும் இரும்பை உருக்குவதற்கு நிலக்கரி யைப் பயன்படுத்தலாமெனப் புத்திக்கூர்மையுள்ளவர்களுக்குத் தோன்றக்கூடும். பிளந்தாசெனற்றர் காலந்தொட்டு பூமியின் மேற் பரப்புக்கணித்தாய்ச் சுலபமாகக் கிடைத்த நிலக்கரி வீட்டுத்தேவை களுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது; சிறப்பாக இலண்டன் நக சத்தில் நிலக்கரி, இரையினிலிருந்து கடல்மார்க்கமாகத் தேமிசு நதி யின் முகத்துவாரத்துக்குக் கொண்டுவரப்பட்டதாதலால், ‘கடற் கரி யென்று வழங்கியது. ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குப் பாரமான பொருட்களை வண்டிகளில் ஏற்றிச் செல்வது இக்காலத் தில் அரிதாயிருந்தது. நீரின்மேல் வள்ளங்களிலோ, கப்பல்களிலோ கொண்டு செல்வதற்கு வசதியில்லாத இடங்களில் நிலக்கரி மூட்டை கள் பொறுமைமிக்க பொதிசுமக்கும் குதிரை மேல் ஏற்றி உவேல்சுக் குன்றுகளிலுள்ள கணவாய்கள் வழியாகக் கொண்டுசெல்லப்பட் டன. உவால்போல் பிரதம மந்திரியாயிருந்த காலத்திலும் இந்தப் பழைய முறையிலேயே யோக்குசயர், இலங்கா சயர், கொற்சுவால்டு முதலிய இடங்களில் உற்பத்தியான சிலைகொண்டு செல்லப்பட்டது. குவிபெக்கு நகரைக் கைப்பற்றிய ஆண்டில் யோசையா உவெச்சு வூட்டு சிறந்த குயவன்வேலை தொடங்கியபோதும், கழுதைகளின் மீதோ, குதிரைகளின் மீதோ களிமண் ஏற்றிக்கொண்டு செல்லப் பட்டது. வனையப்பட்ட களிமட் பாண்டங்களும் அவ்விதமே
கொண்டு செல்லப்பட்டன.
பழைய இங்கிலாந்திலே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மோசமான நிலைத்ான் கைத்தொழிற்புரட்சித் தொடக்கத் துக்கும் ஒரு பெருந்தடையாக அமைந்திருந்தது. மூன்ரும் யோச்சு மன்னனின் ஆட்சிக்காலத்திலேதான் கால்வாய்கள் வெட்டத் தொடங்கினர், மாரிகாலத்தில் விதிகள் சேறு நிறைந்திருந்தன; இச்சேற்றில் பொதிசுமக்கும் குதிரைகள் வயிறுவரை புதைந்தன; வண்டிகளை வெளியே எடுக்கவே முடியாது. பிரதான விதிகளில் சில பாகங்களில் மாத்திரம் பாராளுமன்றத்தின் ஆணையுடன் வரி விதித்து விதிகளை நல்ல நிலையில் வைத்திருக்க ஆயங்களைத் தனிப் பட்ட குழுவினர் நிறுவினர்கள். ஆயினும், ஏழாண்டுப் போர் நடந்த காலத்தில் இங்கிலாந்தின் பிரதான விதிகளிற் பெரும்பகுதி சேற்றினூடே போகக்கூடியவர்கள் ஆயவரி கொடுக்காமலே போகக் கூடியதாயிருந்தது. உவாற்றலூப் போருக்குப் பின்னர் மக்கடத்தி ஞல் திருத்தி அமைக்கப்பட்ட விதிகளிலே பாரம் குறைந்த மாத்தி ணுலமைக்கப்பெற்ற வண்டிகள் போக்குவரத்துச் செய்த முறைக்கு மாமுய் இக்காலத்தில் பாரமான வண்டிகள் விதிகளிலுள்ள கிடங்கு களுக்கூடாக ஆடியசைந்து சென்றன. 1754 ஆம் ஆண்டில் “பறக் கும் வண்டியையுடையோர்' ' எவ்வளவு நம்ப முடியாததாகக்
1759.
243

Page 133
244
வீதிகள் : எரிபொருட் பஞ்சம்
தோற்றினலும், மாஞ்செற்றரிலிருந்து புறப்பட்டு நாலசை நாட் களில் (இடையூறுகள் ஏற்படாவிடின்) இலண்டனை உண்மையில் இவ்வண்டி அடையும் ” என்று விளம்பரம் செய்தனர். இலண்டனுக் கும் யோக்குக்குமிடையில் பிரயாணம் செய்வதற்கு ஒரு கிழமை சென்றது. போற்றியசுக் கலகங்கள் நடைபெற்ற காலத்திலும் நாற்பத்தைந்தாமாண்டுக் கலகத்தின்போது கொத்துலாந்தை ஆளும் தலைநகரமென்று சொல்லப்பட்ட இலண்டன் நகரத்திற்கும் எடின்பமுேவுக்குமிடையில் ஒழுங்கான போக்குவரவுச் சாதன மிருக்கவில்லை.
கைத்தொழிற் புரட்சிக்குச் சற்று முந்திய காலத்திலிருந்த சமூகத்தில், மிகவும் கவர்ச்சிகரமான பல அம்சங்கள் இருந்தன. அவையாவன : நிலத்தையும், அதனைச் செப்பனிட்டுப் பயிரிடும் வேலைகளையும், விளையாட்டுக்களையும், கிராமத்தையும், அதன் மரபு வழக்கங்களையும் அன்புடன் போற்றிய கிராமக் குடிமக்கள் ; வேறு பட்ட இல்புகளையுடைய பல மக்கள் ; மக்களின் பொருளாதார வாழ்க்கையின் ஒரியற்கையான பகுதியாகத் தொழிலிலும் கலைகளி லும் தனிப்பட்ட பயிற்சியும் திறனும் விருப்பும். நீர்க்கால்வாய்கள் மூலமும் பிற்காலத்தில் புகையிரத மூலமும் கரி கொண்டு செல்லப் பட்டுப் பயன்படுமட்டும் பதினெட்டாம் நூற்றண்டில் எங்கள் தீவின் பல பாகங்களிலும் இருந்த மரங்களைப் பயன்படுத்தி முடித்ததனல் ஏற்பட்ட விறகுப் பஞ்சத்தை நினைவு கூருவதஞலேயே கைத் தொழிற் புரட்சி எங்கள் தீவில் ஏற்படுத்திய மாற்றத்தை அளவிட முடியும். விறகுப் பஞ்சம் எங்களுடைய பழமை பொருந்திய இரும் புத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருந்தது ; அத் துடன் வீட்டு வாழ்வின் தரத்தையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டிருந்தது. உலோன்சிற்றணில் வாழ்ந்த செல்வனை வியாபாரி ஒருவன் தனது அயலவனுக்கு அவனது தீயைக்கொண்டு ஆட்டி றைச்சி சமைப்பதற்கு மூன்று பென்னிகள் கொடுக்க வேண்டிய நிலைமையேற்பட்டது; அவனிலும் வறிய அவனுடைய அயலவர்கள் இங்கிலாந்தின் தென்பாகத்தில் நிலக்கரியல்லது பீற் கிடைக்காத பகுதிகளில் வசித்த கமக்காரரிற் பெரும்பான்மையினரைப் போலப் பாணையும் பாற்கட்டியையும் உண்டு வாழ்ந்தனர். விறகினல் ஏற் படக்கூடிய சுகங்களை அவர்கள் அருமையாகவே நுகர்ந்தனர். விற குப்பிரச்சினையைத் தவிர, பெரிய பிரித்தானியாவின் மக்கட்தொகை எழுபது இலட்சத்துக்கு மேல் அதிகரித்தபோதும் அதன் வாழ்க் கைத்தரம் அக்கால அயலாந்தில் நிலவிய அளவுக்குத் தாழ வில்லை. இது மூன்ரும் யோச்சு மன்னர் காலத்தில் தொழிற்றுறை யிலும் கமத்தொழிற்றுறையிலும் ஏற்பட்ட மாற்றங்களின்றி நிகழ்ந் திருக்க முடியாது என்று துணிவுடன் கூறலாம்.

அத்தியாயம் II
முதலாம் யோச்சும் இரண்டாம் யோச்சும் . உவிக்குச் சில்லோராட்சி. 1715 ஆம் ஆண்டுக் கலவரமும், 1745 ஆம் ஆண்டுக் கலவரமும்-கொத்துலாந்திற் சமூக விளைவுகள். உவால்போலும், பெரிய பிற்றும். அமைதிக் காலத்திலும் போர்க்காலத்திலும் பெரிய பிரித்தானியா, கனடாவைப் பேரரசிற் சேர்த்த லும் இந்தியப் பேரரசு உருவாதலும்.
மன்னர்கள் : யோச்சு 1, 1714-1727; யோச்சு 11, 1727-1760.
முதலிரு யோச்சு மன்னர்களது ஆட்சிக்காலத்தில், அனேவர் வமிசத்தை அரியணையில் நிலைத்திருக்கச் செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அதற்கேற்றவாறே பிரித்தானிய அமைச்ச ரின் உள்நாட்டுப் பூட்கையும் வெளிநாட்டுப் பூட்கையும் அமைந்தன. இதனுல், அங்கிலிக்கன் வணக்கமுறையை அனுசரிப்பவர்கள் மாத்திரம் அரசியல் ஆதிக்கத்தை அனுபவிக்கவேண்டும்; நாட்டுப் புறத்துத் தோரிக்கட்சியைச் சேர்ந்த பெருஞ் செல்வர்க்கு எதிர்க் கட்சியினரின் ஆட்சியில் திருத்திக்குறைவு ஏற்பட இடமளித்தல் கூடாது என்ற இத்தகைய நிபந்தனைகள் பேரில், உவிக்குக் கட்சி யினர் தொடர்ந்து ஆட்சிப் பீடத்திலிருக்கவேண்டியேற்பட்டது. அனுேவர் வமிசத்தில் வெறுப்பிருந்தாலும் தோரிகள், உரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சுதுவட்டுக்களுள் ஒருவரை மீண்டும் அரியணையில் அமர்த்த விரும்பவில்லை. இக்காரணத்தினுல் 1715 ஆம் 1745 ஆம் ஆண்டுக் கலகங்களில் அவர்கள் எக்கட்சியுட னும் சேர முடியவில்லை. அத்துடன் அவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல்களிலாவது, பாராளுமன்றத்திலாவது பழன்தருமுறையில் நடவடிக்கைகள் எடுக்கவும் முடியவில்லை.
இங்கிலாந்திலே பழைய 'கவலியர் 'தம் வழிவந்தோர் பெரும் பாலும் சட்டத்திற்கு அமைந்து வீட்டிலேயே காலத்தைக் கழிக்கும் தோரிகளாகவும், சில சந்தர்ப்பங்களில் பெருமூச்சுடன் தங்கள் தோள்களைக் குலுக்கிக் கடலுக்கப்பாலிருக்கும் அரசனை வாழ்த்தி அவனுடைய நற்சுகத்திற்காக உவையின் குடிப்பவர்களாயும் மாறிய நேரத்தில், கொத்துலாந்தில் உள்ள ‘கவலியர்கள் தருணம் வாய்க்கும்போது போருக்குத் தயாராக இருக்கும் யக்கோபிதர் களாகப் பெருமளவிற்கு மாறிவிட்டனர். அரசாங்கத்திற்குக் கீழ்ப் படிந்து நடக்கும் பழக்கங்களும் உள்நாட்டுப் போருக்கு அச்சமும், இங்கிலாந்திலும் பார்க்க வெகு காலத்திற்குப் பின்னரே கொத்து லாந்தில் தோன்றி வளர்ச்சி அடைந்தன. 1707 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடன் கொத்துலாந்தை இணைத்தமை இன்னும் பெரும் பாலோரால் விரும்பப்படவில்லை. இதனுல் யக்கோபினரின் ஆட்சி
245

Page 134
46
15 ஆம் ஆண்டுக் கசிவரங்கள்
மீண்டும் ஏற்பட்டால் கொத்துலாந்திற் சுதந்திரம் திரும்பவும் நில வும் என்று எதிர்பார்க்கப்பட்டது. துவிட்டு ஆற்றுக்குக் கெற்கே நிறுவப்பட்டு உரிமை பெற்ற எப்பிசுகோபாலியன் திருச்சபை, வடக்குப் பிரித்தானியாவில் ஆயுதபலத்தின் மூலமே ஆதிக்கத்தைக் கிரும்பவும் பெறுவதற்கு நினைக்கலாம். கடைசியாக, காம்பெல் சாதி யினரின் ஆகிக்கத்துக்கு மாமுன உயர்நிலக் கொல்குடிகளின் கஃ) வர்கள் உயர்நில வழமைப்படி பழங்காலத்து விசோகத்தை நீட்டிக் அப் போர்புரிய ஆவாக்கொண்டிருந்தனர். இக்காரணங்களினுல், 4*1 ஆம் ஆண்டிலும் 1748 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட இலகங்கள் கொக்கிலாந்தில் தோன்றி, ஆங்கிலேயரிடமிருந்து உதவி கிடை
பாதையால் தோல்வி யடைந்தன.
1713 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் எழுச்சி, இளம் இடேவெந்து வரீட்டர் வேள் தஃமையிலும், புரட்டெWத்தாந்தத்தைச் சேர்ந்த பொய்க்குகினா வேடதாரிபோன்ற பொசுதரின் தலைமையிலும் நோகம்பலTத்திலுன்ன உரோமன் கத்தோலிக்கப் பெருஞ் செல்வர்க எளிடையே பாவியதேயன்றி மற்றையோரிடம் பாவிைல்ஃப். எல்லேப் புறக்சிலுள்ள சில நட்பாளர்களைச் சேர்த்துக்கொண்டு இக்கலகக் விாார் இலங்கா சயரிலுள்ள உரோமன் கத்தோலிக்கரைத் தூண்டு தென்பொருட்டு, கம்பலாத்துக்கடாகக் குதிசைமீது அங்கு சென்ற னர். குரெம்வெல் இதனிலும் பார்க்கப் பலம் கூடியதும், தெற்கி விகுந்து இப்பாதைவழியே வந்ததுமான கவலியர்தம் வெல்லற்கசிய படையெடுப்பைத் தலித்த இடமான பிரெசுதன் நகர வீதிகனிலே இச்சிறு படை அரசர் படைக்குத் தோல்வியுற்றது. இங்கிலாந்தின் 1713 ஆம் ஆண்டுக் குழப்பமே இங்கிலாந்தின் வடமாகாணங்கனின் பழைய நிலதானிய முறைமையினதும் உரோமானிசத்தினதும் இறுதி முயற்சியாகவும் "இறுதி பாத்திரை 'பாகவும் அமைந்தது. இக்குழப்பத்தின் பின்னர் அதில் பங்குபற்றியவர்களின் சொத்துக் ஃளப் பறிமுதல் செய்து அரசாங்கம் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கது. கிரெந்துக்கும் துவிட்டுக்குமிடையில் உள்ள பிரதேசத் கில் தொழிற்புரட்சியும் உவெசிலியன் இயக்கமும் விரைவில் ஒருது உலகை ஆக்கவிருந்தன.
கொத்துலாந்தில் 1715 ஆம் ஆண்டுக் குழப்பம் கடுமையாயிருந் தது. காம்பெல்லினருக்கு எதிரான கொல்குடிகள் கிழக்குக் கரை யோரத்திலிருந்த எப்பிசுகோபாவிய சபையினருடன் சேர்ந்து, முப்பது வருடங்களுக்குப் பின்னர் இளவரசன் சாள்க எட்டுவேட் டைப் பின்தொடர்ந்த இத்தகைய படையிலும் பார்க்கத் தொகை யிற் பெரிய படை ஒன்றைத் திட்டினர். ஆயினும் இச்சந்தர்ப்பக் தில் அரியணேயைக் காக்க, இதற்குப் பிற்காலத்தில் காட்டியதை
 

ஆங் ப்ார்க
翡檀
1,000 அடி பாரந்திந்த மேற்பட்டநிரம்.
இாம் ாேயோள் சுேந்த பாத74-டி =.
படம் WT யக்கோபினருடைய கார்த்தில் கொத்துவிாந்தும் &lட இங்கிலாந்தும்.

Page 135

* 15 ஆம் ஆண்டுக் கலவரங்கள்
விடக் கூடிய ஆற்றலையும் துரிதத்தையும் உலிக்குகள் தம் செயலிற் காட்டினர். முதலாம் யோச்சு மன்னர் அரியணையேறியதன் கார ணத்தால் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதனுல் 1745 ஆம் ஆண்டில் நடந்ததுபோல இக்குழப்பம் சடுதியாக ஏற்பட் டதொன்முக விருக்கவில்லை. கொத்துலாந்தின் அரச படைக்குத் தளபதியாயிருந்த அக்காலத்து ஆகைல் கோமகளுன யோன் காம் பெல் என்பான் பிறெசுதொன்பன்சை இழந்த சேர் யோன் கோப்பி ஆலும் சிறந்த தளபதியாக விளங்கினன். மலைநாட்டு உயர்நிலத்தின் ஒருபகுதியின் தலைவனுக இருந்தமையாலேற்பட்ட செல்வாக்கை யும் ஆகைல் பிரபு இந்த நெருக்கடியில் நன்கு பயன்படுத்தினன். போத்துக் கழிமுகத்திற்குத் தெற்கே உள்ள பிரெசு பித்தீரியர் தங் கள் உலிக்குக் குருமாரைப் பின்பற்றினர். ஒரு சிலரைத் தவிர, ஏனைய நகரமக்கள் அனேவரியருக்காகப் போர் புரியத் தயாரா யிருந்தனர்; இத்தகைய விருப்பு 1745 ஆம் ஆண்டிற் காணப்பட வில்லை. ஏனெனில் முப்பதாண்டு நீடித்த அமைதி தாழ்நில மக்களின் போர்ப்பழக்கங்களைக் கைவிடச் செய்தமையாலும், பட்டணங்க ளின் படைகளைக் குலைத்திருந்தமையாலுமென்க. 1715 ஆம் ஆண் டில் கொத்துலாந்து யக்கோபினரின் தளபதியாயிருந்த மார்வேள் அரசியல் அறிஞணுகவோ போர்த்தலைவனுகவோ ஆற்றல் பெற்றி ருக்கவில்லை. ஆகைலின் தலைமையில் 3,500 போர்வீரர், மாரின் தலைமையிலுள்ள 8,000 போர்வீரரை முன்னேழுது செறிபுமுயிரில் தடுத்து நிறுத்திய போர் அந்நேரத்தில் வெற்றியைத் தீர்மானிக்க முடியாவிட்டாலும் கலகத்தை வளரவிடாது தடுக்கவும் அது இறுதி யிற் தோல்வியடைதற்கும் ஏதுவாயிருந்தது. மேலும் இரண்டாம் சேமிசுவின் மகன் ‘முது போலியாளன்" என்னுழ் சேமிசு அதிகம் காலந்தாழ்த்திக் கொத்துலாந்திற்கு வந்தபோது, 1745 ஆம் ஆண்டுக் கலகத்தில் அவனுடைய மகன் சாள்சு எட்டுவேட்டு மக் கள் ஆர்வத்தைத் தூண்டுவதிலே அடைந்திருந்த அளவு ஆற்றலை யுடையவனுயிருக்கவில்லை.
அனேவர் வமிசத்தினர், மக்களின் முழு வெறுப்பைப் பெறுமுன் னர் யக்கோபினரின் இம் முதன்முயற்சி ஏற்பட்டமை புது ஒழுங்கு நிலைபெறுவதற்கு நல்வாய்ப்பாயமைந்தது. முதலாம் யோச்சு, மன்னர்களுள் மிகக் கெட்டவனல்லனுயினும் அவன் மக்கள் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம். அவனுல் ஆங்கிலத்திலே பேச இயலாது; அவன் பருத்த பிறதேசப்பெண்களைத் தனது ஆசைநாயகிகளாக வைத்திருந்தான். சேர்மனியில் அவன் குடும்பத் தில் ஏற்பட்ட கொடுந்துயர் காரணமாகவும் மற்றும் மேற்கூறிய குறைகள் காரணமாகவும் அவனை அவனுடைய புதிய குடிமக்கள் பாராட்டவோ விரும்பவோ முடியவில்லை. ஆங்கிலேயருடைய விட
247
நவெ. 1715.

Page 136
248
காடினல் அபரோணியும் XII ஆம் g-ITGildfin
யங்கள் பற்றி அவன் நன்கு அறிந்திராமையாலும், அவற்றில் அவ னுக்கு அதிக அக்கறை இல்லாதமையாலும் உள்நாட்டுப் பூட்கை பற்றிய பிரச்சினைகள் யாவற்றையும், திருச்சபையிலும் அரசிலு முள்ள நியமன உரிமையையும் தனது மந்திரிமாரிடமே விட்டுவிட் டான். இக்காரணத்தால் உண்மையில் எங்கள் யாப்புக்களடைந்த சுதந்திரங்களை அவன் வளர்ச்சியடையச் செய்தான். உவிக்குகளே தனது மந்திரிமாரா யிருக்கவேண்டுமென்பதில் மட்டுமே அவன் பிடிவாதமாயிருந்தான். சிறிது அனுபவம் பெற்றபின்னர் நற்
பேருக, உவிக்குகளில், உவால்போலிடமே இங்கிலாந்தின் ஆட்சிப்
பொறுப்பை விடுவதே தொல்லையைக் குறைக்குமென அவன் உணர்ந் தான். ஏனெனில், முதல் இரு யோச்சுகளின் ஆட்சிக் காலத்திலும் முதன்மந்திரியைத் தெரிவுசெய்வதில், பொதுமக்கட் சபையுடனும் உவிக்குச் சில்லோராட்சியாளருடனும் மன்னனும் பங்குபற்ற வேண்டியவனுயிருந்தான்.
இத்தகைய மன்னரைக்கூட யக்கோபிதம் வீழ்த்த முடியாத மைக்குக் காரணம் நாடு கடத்தப்பட்ட சுதுவட்டர்கள், இரண் டாம் சாள்சு மன்னன் பாசாங்கு செய்ததுபோலத் தாமும் புரட் டெசுத்தாந்தசெனப் பாசாங்கு செய்ய மறுத்தமையே யென்க. மேலும் பதினைந்தாம் உலூயி மன்னனின் ஆட்சியின் முற்பகுதியில் பிரான்சில் அரச பதவியை ஏற்றிருந்த ஒலியன்சு ஆங்கிலேயரு டைய நட்புக்கு மதிப்புக் கொடுத்தமையால் முதலாம் யோச்சு மன் னனின் ஆட்சிக்கு ஏற்படக்கூடிய இடர் குறைந்தது. அனேவர் வமிசத்துக்கு வேற்று நாட்டிலிருந்து முதன்முதலாக ஏற்பட்ட இடர், நெடுங்காலமாகக் கீழ்நிலையடைந்து அழியும் நிலையிலிருப்பது போன்ற நிலையிலிருந்து காடினல் அல்பரோணி என்ற அதிபுத்தி நுட்பமுடைய இத்தாலியனெருவனின் ஆட்சியிலே புத்துயிர் பெற் அறுச் சிறிதுகாலம் ஆற்றலுடன் விளங்கிய இசுப்பெயின் தேசத்திலி ருந்து எதிர்பாராத முறையில் வந்தது. துணிகரச் செயல்களில் ஈடு படும் பேராற்றல் வாய்ந்தவனன அல்பரோணி இசுப்பானிய கடற் படைக்கும், தரைப்படைக்கும் புத்துயிரளித்து, இசுப்பெயினின் ஆதிக்கத்தை இத்தாலிய தேசத்திலும் மத்தியதரைப் பகுதியிலும் திரும்பவும் நிலைநாட்டவும், சுதுவட்டு வமிசத்தைப் பிரித்தானிய அரியணையில் மீண்டும் ஏற்றவும் ஓரளவு பேராசை மிக்க திட்டங் களை வகுத்தான். அனேவர் வமிசத்துக்கு எதிராக அவனுடன் நேயங்கொண்டவன் புரட்டெசுத்தாந்த சமயத்தைச் சேர்ந்த சுவி டின் நாட்டுப் பன்னிரண்டாவது சாள்சு மன்னன். கேட்டவர்களைப் பயத்தினுல் முகம் வெளிறச் செய்யும் அவனுடைய பெயர் ஒர் உண் மையை எடுத்துக்காட்ட அல்லது ஒரு கதையில் நல்ல இடம் பெறத் தக்கது. சாள்சும், அவன் வாழ்க்கை முழுவதும் அவனுடன் போட்டி

பசறே முனை : தென்கடற் குமிழி
யிட்ட இரசிய நாட்டின் பெரிய பீற்றரும், அனேவர் வமிசத்திற்கு மாருகச் சாதித்த பகைமையைவிட வேருெரு விடயத்திலும் ஒற்று மைப்படவில்லை. போர்ப்பிரியனுன இச் சுவீடின் நாட்டு மன்னனின் தலைமையில் யக்கோபிதரின் அடுத்த படையெடுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அல்பரோணியின் இசுப்பானிய கடற்படை சிசிலியிலுள்ள பசருேமுனைக்கருகில் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டதையடுத்து சுவீடின் நாட்டு மன்னன் சாள்சு, நோவே நாட்டின் ஒரு சிறு அரணுக்கு முன் கொல்லப்பட்டான். இவ்விரு நிகழ்ச்சிகளும் முதலாம் யோச்சு மன்னனின் அரச பதவியை உறுதிப்படுத்தியதுடன் சிபுரோத்தரையும், மினுேக்கா வையும் தளமாகக் கொண்டு, மத்தியதரைக் கடலில் பிரித்தானிய கடற்படை ஆதிக்கம் செலுத்துவதையும் உறுதிப்படுத்தின*
அனேவர்களுக்கு ஏற்பட்ட அடுத்த இடர் உள்நாட்டிலேயே தோற்றியது. ‘தென்கடற்குமிழி' என்ற உத்தேச வியாபாரத்தின் மீதுள்ள பித்து, மூலதனப்பத்திர வியாபாரத்தின் ஆரம்பகாலத்தில் எல்லாவகுப்பு மக்களிடமும் பரவியது. அரசாங்கங்கூட இதில் ஈடு பட்டது. அரசாங்கத்தின் உடைமைகளும், கடமைகளும் மிகவும் புத்தியீனமானமுறையில் தென்கடல் வியாபாரத் தலைவர்களின் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டன. மன்னனின் சேர்மன் காமக்கிழத் தியரும், உவேல்சு அரசிளங் குமரனும் இத்திட்டங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ந்தனர். பின்னேக்காகப் பார்க்குமிடத்து, இத்திட்டங் கள், கைம்பெண்களையும் அநாதைப் பிள்ளைகளையும் ஏமாற்றிப் பணம் பறிப்பதற்கென்று வேண்டுமென்றே செய்த குழ்ச்சிகள் போலத் தோன்றின. இத்திட்டங்கள் பலிக்கத்தவறியதும், இதனல் அழிந்தவர்களினதும், ஏமாந்தவர்களினதும் கூக்குரல் நாடெங்கும் பரவியது. இதனினும் பார்க்கச் சிறந்தவொரு வாய்ப்பு யக்கோபி னர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் கணநேரமே நிலைத்த இந்த நற்பேறு அவர்களுக்கு நிலையான தீமையையே கொணர்ந்தது. ஏனெனின் தென்கடற் பிரச்சினை சேர் உருெபேட்டு உவால்போலை
* பிரித்தானிய அரசாங்கம் சமாதானத்தை அதிகம் விரும்பியமையால் சமாதானத்தின் பொருட்டு சிபுரோத்தரை அல்பரோணிக்குக் கொடுப்பதாகக் குறிப்பாகச் சொல்லப்பட்டது. ஆனல், புத்தியீனமாக அவன் அதை ஏற்க மறுத்துவிட்டான். பசருே வெற்றிக்குப் பின்னர் புறமுதுகுகாட்டியோடிய பகைவரின் கப்பல்களைத் துரத்திய தளபதி உவாற்றன் தான் பெற்ற வெற்றி யைக் குறித்துக் கடற்படைத் தளபதி சேர் யோச்சு பிங்கிற்கு ஓர் கடிதம் எழுதினன். அவன் எழுதிய கடிதம், பலரால் மேற்கோளாகக் குறிப்பிடப்படும் பின்வரும் சொற்களுடன் முடிவடைந்தது. “ கரையிலிருந்த இசுப்பானியக் கப்பல்கள் எல்லாவற்றையும் பிடித்து அழித்துவிட்டோம் ; அவைகளின் தொகை கடிதத்தின் ஒரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. " கடிதத்தின் கடைசி வசனமாகிய இவ்வசனம் மட்டுமே அக்கடிதத்தில் அடங்கியகெனத் தவருக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது.
178.
120.
249

Page 137
250
1721-1742.
1733.
உள்நாட்டுப் பூட்கை
அதிகாரபீடத்தில் ஏற்றியது. இவ்விதம் அல்லற்பட்ட தருணத்திலே தேசத்தின் தலைமைப்பதவியைக் கைப்பற்றிய அவன் இருபது வரு டங்களுக்கு அதிகாரத்தைத் தன் கையிலேயே வைத்திருந்தான். தென்கடற் பித்து உச்சத்திலிருந்த நேரத்தில், தனது கூட்டாளி களுக்கும், பொதுமக்களுக்கும் அவன் எச்சரிக்கை செய்திருந்தான். அத்துடன் அதன் முடிவையும் வருவது கூறுவதுபோல் ஏற்கனவே கூறியிருந்தான். ஆகவே நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் தேசத்தின் நாணயத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் நிலைநாட்டும்படி
அழைக்கப்பட்டான்.
புதுநூற்முண்டு இதுகாறும் கட்சிகளுக்கிடையிலும் வமிசங்களுக் கிடையிலும் கடுந் தகராறுகள் நிறைந்ததாயிருந்தது. இங்கிலாந் தின் சிறப்பியல்பென்று பெரும்பாலுங் கருதப்படும் உள்நாட் டமைதி, உறுதிப்பாடு ஆகிய இரண்டையும் உவால்போலின் நீண்ட கால ஆட்சியே 18 ஆம் நூற்முண்டில் ஏற்படுத்தியது. மூன்று தலை முறைகளாக நீடித்த போராட்டத்தின் பின்னர் சேர் உருெபேட்டு பிரித்தானியாவில் ஏற்படுத்திய அமைதி அவன் நல்கிய பெரும்
கொடையாம்.
உவிக்குகளுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட கசப்பான போட்டி கள் தவிர-புல்லிணியும் காற்றெற்றும், தவுன்செண்டும் உவால் போலை எதிர்த்தனர்-உவால்போவின் அரசாங்கத்துக்கு நாட்டில்
நிலவிய யக்கோபிதமே -உண்மையான எதிர்ப்பைக் காட்டியது.
அனேவர் வமிசத்திற்கு மாருய் இப்புரட்சி ஏற்படக்கூடுமென்ற அச்
சம் மந்திரத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியது. போர்க் காலத்தில் பெருஞ் செல்வரை நிலவரி அதிகந் தாக்கியமையால் அவர்கள் விசுவாசமற்றவர்களாகக் கூடுமென்ற பயத்தினுல், உள் நாட்டில் ‘மிதமான கொள்கையையும், வெளிநாட்டில் சமாதானக் கொள்கையையும் உவால்போல் கடைப்பிடித்தான். யக்கோபிதத் தைப்பற்றியும் அவன் கொண்டிருந்த அச்சமே இத்தகைய உண் ஞட்டு வரிக்கெதிராக எழுந்த மூட எதிர்ப்புக்கு அவனைத் தலை சாயச் செய்தது. அவன் இம்மசோதாவிற்காகத் தான் நாட்டை ஆயுதபலத்தினுல் ஆட்சிசெய்ய விரும்பவில்லை எனக் கூறினன். பெரிய பாராளுமன்ற வாதியாயிருந்தபோதும் அவன் தனக்குப் பாராளுமன்றத்தில் இருந்த செல்வாக்கை அளவுக்கு மிஞ்சி மதிப் பிடவில்லை. அன்றியுந் தான் செய்யும் ஒவ்வொரு செயலும் தான் செய்யாது விடத் தீர்மானிக்கும் ஒவ்வொரு செயலும் பொதுமக்கள் அபிப்பிராயத்தில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நோக்குபவனல்லன். ஆற்றல் வாய்ந்த பொலிசுப் படை எதுவுமின்றி

உவால்போலின் உள்நாட்டுப் பூட்கை
ஒரு சிறு சேனையை மட்டுமே யுடையதாயிருந்த அக்காலப் பிரித்
தானிய அரசைக் கலகங்களால் மட்டுப்படுத்தப்பட்ட ஓர் உயர்குடி என வருணிக்கலாம்.
அரசியலில் பிறப்புரிமைகளையிழந்த தோரிப் பெருஞ்செல்வர்களை அனேவர் வமிசத்துடன் திரும்பவும் இணங்கச் செய்வதற்கு அவர்க ளுக்குக் கோபமூட்டாது, நெருக்கடிகள் ஏற்படுத்தாது காலங் கழியவிடுவது தவிர வேருென்றும் தேவைப்படவில்லை. இவ்விதமா கக் காலங்கழிய உவால்போல் வழிவகுத்தான். அரசியல் தவிர, சட் டத்திலும், சமூக வழக்கங்களிலும், பதினெட்டாம் நூற்முண்டுலகம், பெருஞ் செல்வர்க்கும் அங்கிலிக்கன் குருமார்க்கும் ஏற்றமுறையில் நன்கமைந்திருந்தது. அனேவர் வமிச ஆட்சி, ஏலவே நிலைபெற் அறுள்ள அவ்வழக்கங்களைக் குழப்பாமற் பேணுந் தன்மையையுடை யது. ஆனல் சுதுவட்டர்களை மீண்டும் அரியணையேற்றினல் திரும்ப வும் தொல்லைகளும் எதிர்பாராத நிலைமைகளும் நிறைந்த கடலில் பிரயாணம் செய்யத் தொடங்குவதுபோலாகும். மூன்ரும் யோச்சு மன்னன் அரசுகட்டிலேறிய காலத்தில் இவ்வுண்மை எல்லாருக்கும் தெளிவாயிற்று பெருஞ் செல்வரும் மத குருமாரும் அரச வமிசத் தின் தலையாய துணைவராயினர். இந்த இடைக்காலத்தில், உவால் போல் சமாதானத்தினுலும் செல்வப் பெருக்கினலும், பிற்று போரி ணு,லும் புகழினுலும், ஆங்கிலேயருள் எல்லா வகுப்பினர்க்கும், மதத் தினர்க்குமிடையில் ஒர் ஐக்கிய உணர்ச்சியை ஏற்படுத்தினர்கள். உவால்போலும், பிற்றும் பொதுமக்கள் சபையிலிருந்தே பிரதம மந்திரி தலைமை வகிக்கும் மந்திரி சபை மூலம் பேரரசை ஆட்சி
செய்தனர்.
1760.
25
உவால்போலினல் ஆளப்படுவது தோரிப் பெருஞ்செல்வர்க்குத் 1721-1742.
துன்பமாயிருக்கவில்லை. அவன் நோபோக்கிலுள்ள பழங்குடியைச் சேர்ந்த மிதமான செல்வமுடைய ஒரு நிலக்கிழான். அவன் பிரதம ராயிருந்த காலத்திலும், தனது வேட்டை மிருகங்களைக் காவல் செய்பவன் அனுப்புந் தபால்களையே மற்றெல்லாத் தபால்களுக் கும் முன்னர் வாசிப்பவனென்று பெயர் பெற்றவன். அவன் தனது வீட்டிற்குப் போக முடியாவிடின் இறிச்சுமண்டுச்சோலையில் தனது வேட்டை நாய்களுடன் வேட்டையாடுவான். தவருமல் மதுவருந்து
வான்; அவ்விதமருந்தும் நேரத்திற் பல கதைகளைச் சொல்வான்;
* தவுனிங்குத் தெருவில் அமைந்திருக்கும் பிரதம மந்திரியின் புகழ் பெற்ற மாளிகை இக்காலத்தில் தோன்றியதே. இரண்டாவது யோச்சு மன்னன் அதை உவால்போலுக்குப் பரிசாகக் கொடுத்தான். ஆனல் அவன் அதைத் தனக்குப் பின் பிரதமர்களாயிருப்பவருக்கும் சேரவேண்டிய உத்தியோகபூர்வ மான பரிசிலாகமட்டுமே ஏற்கத் தயாராயிருந்தான். மந்திரிகள் சபை முறையும் பிரதம மந்திரிப் பதவியும், வளர்ச்சியடைவதற்கு இவன் செய்தனவற்றை மேலே 215, 216 பக்கங்களில் பார்க்கவும்.

Page 138
252
757.
சமாதானப் பூட்கை
நல்லுள்ளம் படைத்தவன்; பிரெசு பித்தீரியனுமல்லன், பட்டணத் துப் புதுப் பணம் படத்தவனுமல்லன்; இறுமாப்புள்ள தனிப்பட்ட விழுமியோனுமல்லன். விசுவாசம் நிரம்பிய ஓர் உவிக்கான உவால் போல் உவிக்குப் பெருமகாருடனும், செல்வர்களுடனும், இணங்கா தோருடனும் சேர்ந்து ஆட்சி செய்தான். ஆனல், தன்னளவில் இங்கிலாந்திலுள்ள பெருஞ் செல்வரின் பிரதிநிதியாக விளங்கினன். அவன் தனது மன்னர்களின் மனநிலைக்கேற்ற முறையில் நடந்து கொண்டான். முதலாம் யோச்சு மன்னனுடன் மணித்தியாலக்கணக் கில் இருந்து 'பஞ்சு ' என்னும் மதுவருந்திக்கொண்டு, அவனுடன் பேசுவதற்கு உதவிய ஒரே மொழியான இலத்தீன் மொழியில் பேசு வான். தனது தகப்பனரிலும் பார்க்கச் சிறந்தவனன இரண்டாவது யோச்சு மன்னன், உவால்போலுடன் உள்ள தொடர்புகளில், அரசி யல் யாப்புக்கு அமைந்து நடப்பவனுய் விளங்கினன். தனது மாசற்ற மனைவியான அன்பாச்சுக் கமுேலினுக்கு அவன் துரோகம் செய்த போதிலும், தனது காதற் கிழத்தியருக்கு மேலாக அவளை மதித் தான். அவன் பொது விவகாரங்களில் தனது மனைவி கூறிய புத்தி மதிகளைக் கேட்டான். அவை குடிமக்களுக்குப் பெரும் நன்மையை விளைவிப்பனவாயிருந்தன. அரசனுடைய மனைவி சேர் உருெபேட் க்ெகு நல்ல நண்பராகவும் சிறந்த ஆலோசகராகவும் விளங்கினுள்.
உவால்போலின் உள்ளமும் இயல்பும், உள்நாட்டிலும், வெளிநாடு களிலும் சமாதானத்தை உண்டாக்குவதற்கு ஏற்றவாறு சிறப்பாக அமைந்திருந்தன. எந்த விதத்திலும் பரிபாலனத்தை நன்கு நடத்துவதில் அவனுடைய தனித்திறமை புலணுகியது. உயர்ந்த கொள்கைகளோ அல்லது வீரமோ அவனைத் துணிகரமான அல்லது போரை உண்டுபண்ணக்கூடிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் துண்டவில்லை. நல்லுறவும், அன்புமே அவனுடைய சிறந்த குணங் களாயிருந்தன. குற்றங் கூறுவதே அவனிடம் காணப்பட்ட குறை Uாயிருந்தது. அவனுடைய பரந்த முகத்தில் நல்ல குணத்தின் காரணமாகத் தோன்றும் புன்சிரிப்பு ஓரளவிற்கு ஏளனச் சிரிப்பா கவுமிருக்கும். படைப்பலத்தினலோ, பயமுறுத்தலினலோ ஆட்சி செய்ய அவன் விரும்பவில்லை. ஆயினும் தேசத்தின் தேசியவுணர்ச்சி யைத் தூண்டி ஆட்சி புரிவதிலும் வெளிப்படையாக நிலவியனவும் வழக்கமானவையுமான, பொதுமக்கள் சபையின் ஊழல்களைப் பயன் படுத்தி ஆட்சி செய்வதைத் தீமையுடையதாக அவன் கருதவில்லை. பெரிய பிற்று, அடுத்த தலைமுறையிலேயே மேலே குறிப்பிட்ட தேசிய உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்ய முயன்று தோல்வியடைந்தான். அதனல் ஏழாண்டுப் போரை வெல்லு முன்னர் ஊழல்களுக்குப் பேர்பெற்ற நியூகா சிலைச் சமாதா னப்படுத்த வேண்டியிருந்தது. உவால்போல் தொடக்கத்திலிருந்தே

* நேர்மையான தரகன்'
உலகத்தையும் பாராளுமன்றத்தையும் அவையிருந்த நிலையில் ஏற் அறுக்கொண்டான். எதிர்க்கட்சியிலிருந்தவர்களின் ‘நாட்டுப்பற்றை அவன் எள்ளிநகையாடினன். கெளரவமிக்க அங்கத்தவர்கள் பணம் கொடுத்துப் பதவி பெற்றர்கள் என்றும் கருதினன். அக்காலத்து நிகழ்ச்சிகள் அவன் கருதியது சரியென்பதை மெய்ப்பித்தன. அச்
குழ்நிலையில், உவால்போல் மூலம் அறநெறியின் மறுமலர்ச்சி ஏற்
படக்கூடியதாயிருக்கவில்லை.
வெளிநாட்டலுவல்களில் சமாதானத்தை அவன் உண்மையாகவே விரும்பினன். எல்லாக்காலமும், இலட்சியவாதிகளால் மட்டும், சமாதானம் நிலைநாட்டப்படவில்லை. உவால்போலுடைய சகாக்கள் பூபோன்களிடம் உவிக்குகளுக்கிருந்த பகைமையைத் திரும்பவும் புதுப்பிக்க விரும்பினர்கள். உவால்போல் குறை கூறுபவனுயும் முர டனயுமிருந்தபோதும் மனிதாபிமான முடையவனுனமையால் போலந்தின் அரசுரிமைப் போரில் இங்கிலாந்து பங்கு பற்ருதபடி தடுத்தான். இதனுல் அவன் தனது சகாக்களின் விருப்பத்தையும் நிராகரித்தவனனன். 1734 ஆம் ஆண்டு கருேலின் இராணியை நோக்கி, ‘அம்மணி ! இவ்வருடம் ஐம்பதினுயிரம்பேர் ஐரோப்பா விற் கொல்லப்பட்டனர். ஆனல் அவருள் ஒருவராவது ஆங்கிலேய ரல்லர்”, என்று அவன் கூறினன். மாள்பரோ காலத்துப் போர்கள், பிரான்சுதேசத்தின் ஆகிக்க அபாயத்தை நீக்கியபடியால், கண்டத் தில் உள்ள வல்லரசுகளின் விண் பிணக்குகளில் பங்குபற்ருது, பிரித்தானியா நன்கு ஒதுங்கியிருந்திருக்கலாம். அண்மையில் மிக வும் முக்கியமான விடயங்களுக்கு ஏங்களுக்குத் தேவையான பலத் தைச் சேர்ப்பதற்கு நாங்கள் போரிலிருந்து விலகியிருந்தமை உத வியது. ஈற்றில் போரை முடிவுறச் செய்த சமாதான ஏற்பாடுகளில், ‘நேர்மையான தாகன்' என்ற முறையில் உவால்போல் சிரத்தை யுடனும், வெற்றியுடனும், பங்குபற்றினன்.
இசுப்பெயினுடன் கடலிலே போர் செய்ய வேண்டுமென்ற பெரிய இயக்கங்கள் பரவியதால், சேர் உருெபேட்டின் சமாதானக் கொள்கை முடிவடைந்தது. 1739 ஆம் ஆண்டில் இந்த இயக்கம், நன்கு அமையாமலும் நேரான வழியில் நடத்தப்படாமலுமிருந்த போதும், இருபது வருடங்களுக்குப் பின்னர் இந்த இயக்கமே பொதுமக்களிடை நாட்டுப்பற்றை எற்படுத்தி, உவிலியம் பிற்றை ஆட்சிப் பீடத்திற்குக் கொண்டுவரவும், இந்தியாவிலும், வட அமெ ரிக்காவிலும், பிரெஞ்சுக்காரரை முறியடிக்கவும் காரணமாயிற்று. 1739 ஆம் ஆண்டிலும், சமுத்திரத்திற்கப்பால், பொதுமக்கள் உள் ளுணர்ச்சியாலேயே தமது நோக்கைச் செலுத்தியது சரியே. பொதுமக்களே, ஐரோப்பிய தேசங்களின் எல்லைத் தகராறுகள் கிளர்ச்சி செய்யத் தூண்டவில்லை. மன்னன் மட்டுமே அனுேவரின்
253
1733-1738.

Page 139
254
சென்கின்சு இழந்த செவி : போர்
நன்மையை மனதிற் கொண்டான். தென் அமெரிக்காவுடன், கட்டுப் பாடின்றி வியாபாரம் செய்யும் உரிமை வேண்டுமெனக் கோக்கின்சு, திறேக்கு ஆகியவர்களின் காலந் தொடங்கியே செய்யப்பட்டு வந்த பழைய கோரிக்கையும், அசியென்றே ஒப்பந்தத்தில் வியாபாரத் தைப் பற்றி உள்ள நிபந்தனைகளுக்கு இவ்வியாபாரம் கட்டுப்பட வேண்டுமென்று இசுப்பெயின் வற்புறுத்தியமையுமே பொதுமக்க
விடம் ஆத்திரத்தை உண்டாக்கின. செக்கின்சுக்குச் செய்த பிழை
களும் கோபங்கொண்ட இசுப்பானிய சுங்க அதிகாரிகளால் அவ னது செவி கிழித்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டமையுமே பொதுமக்களிடையே பெரிய கிளர்ச்சியை உண்டுபண்ணியபடியால் உவால்போல் தலைசாய்த்து வாளைக் கையிலெடுத்தான். ஆயினும் வாள் அவன் கைக்கு உரியதாகத் தோன்றவில்லை.
நெடுங்காலச் சமாதானத்தின் பின்னர் இங்கிலாந்து போரில் இறங்கியபொழுது வழக்கமாக நடப்பதுபோல, போர் நடவடிக்கை கள் ஒழுங்காக அமையவில்லை. போற்றேபெல்லோ மீதும், காதா சென மீதும், கியுபா மீதும் செய்த தாக்குதல்கள் தென் அமெரிக்க வியாபாரப் பிரச்சினையைத் தீர்க்காது, பேரளவில் முன்பிருந்த நிலை யிலேயே விட்டன. ஆனல் இசுப்பானியாவில் நடந்த போரின் எதிர் விளைவுகள் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டன. உவால் போல் மன்னனினதும் பிரபுக்கள் சபையினதும் ஆதரவைப் பெற் அறும் பொதுமக்கள் சபையில் அவனுக்கு எதிராகக் கிடைத்த வாக் கினல், பதவி இழந்தான். நன்மையும் முற்ருன தீர்ப்பும் தரக்கூடிய தென்று தான் கருதாத போரை நடத்த முயற்சிக்காது மூன்று வரு டங்களுக்கு முன்னரே பதவியிலிருந்து அவன் தானகவே விலகி யிருந்தால் நன்முயிருந்திருக்கும்.
இசுப்பெயினுடன் நடந்த கடற்போரின் மற்ற விளைவு, பிரான் சுடன் ஏற்பட்ட கண்டப்போர். உத்திசெத்து ஒப்பந்தத்தின் விளை வாக, பிரனிசு மலையின் இருபக்கங்களிலும் ஆட்சி செய்த பூபோன் மன்னர்களிடையே “குடும்ப ஒற்றுமை” நிச்சயம் ஏற்படும் என்று உவிக்குகள் எண்ணிய எண்ணம் இதுகாறும் பலன் தாவில்லை. ஒசுற் றிய அரசுரிமைப்போர் மீண்டும் ஐரோப்பாவில் போர்த் தீயை மூட்டிவிட்டகாலை சென்கின்சினது காதினுல் இசுப்பெயினுக்கு எதி ாாக ஏற்பட்ட போரின் காரணமாக, உவால்போலின் வழிவந்தோர் பிரான்சு தேசத்துடன் தடுக்கமுடியாதவகையில், போரிலீடுபட நேரிட்டது. முப்பது வருடகாலமாகப் பிரான்சிற்கும் இங்கிலாந் திற்குமிடையில் நிலவிய சமாதானம் முடிவெய்தியது. இந்தச் சிறு அவகாசம் (மூச்சுவிடுவதற்கு நேரம் கிடைத்ததுபோல இங்கிலாந் திற்கு நன்மை பயந்தது. இக்காலத்துக்குள் இங்கிலாந்தின் சுதந்
· G3uo(3ao 187 Luiasib untitatas.

* 45 ஆம் ஆண்டு '
திர தாபனங்கள் வலுவுற்றன; அத்தோடு இங்கிலாந்தின் செல்வ மும் ஆதிக்கமும் வளர்ந்தன. ஆனல் இந்தியாவிலும், அமெரிக்கா விலும் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருந்த புதுப் பிரச்சினை களேத் தீர்ப்பதற்கு வேறு தலைவர்களையும், பிற நடவடிக்கைகளையும் இங்கிலாந்து நாடி நின்றது.
புதிய உலகப் பேரரசை நாட்டுவதற்காக ஒகையோப் பள்ளத் தாக்கில் ஆங்கிலேய குடியேற்றக்காரருக்கும் பிசான்சுக் குடியேற் றக் காாருக்குமிடையில் ஏற்பட்ட போராட்டமும், கருநாட்டிலும், கங்கையின் கழிமுகத்தெதிர் நிலத்திலும் ஆதிக்கத்திற்காகப் பிரான் சுக் கம்பனியாருக்கும் ஆங்கிலேயக் கம்பனியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறும், அவ்வவ்விடத்திலே இருந்த இரு சமூகத்தா ருக்குமிடையில், குழ்நிலை காரணமாகத் தடுக்க முடியாத முறையில் எழுந்தவையாம். ஐரோப்பாவிலிருந்த அரசியல் தலைவர்களின் பேராசையினலோ குழ்ச்சியினலோ இவை ஏற்படவில்லை. ஆனல் இவற்றைத் தீர்ப்பதற்கு, இங்கிலாந்தின் அரசியலின் தலைவனுக, உவால்போலிலும் மிக வேறுபட்ட தன்மையுடைய தலைவன் தேவைப் பட்டான். உவால்போல் பதவியிலிருந்து விலகிப் பதினைந்து வருடங் களுக்குப் பின்னரே, அத்தகைய ஒரு தலைவனுய் உவீலியம் பிற்றுக் தோற்றினன். மகா பிறெடறிக்குக் கூறியதுபோல, இங்கிலாந்து நெடுங்காலம் வயிறு நொந்து, கடைசியாக ஓர் தலைவனைத் தோற்று வித்தது.
பிரான்சு, இசுப்பெயின் பூபோன் மன்னர்களுடன் திரும்பவும் போர் ஏற்பட்டால், யக்கோபினர் அனேவர் வமிசத்தை மறுபடியும் தாக்க முனைவர் என்று உவால்போல் எச்சரித்தமை சரியாயமைந் தது. இத்தாக்குதல் ஏற்படாதவண்ணம் உவால்போல் தன் அறிவு நுட்பத்தால் இதுவரை தடுத்திருந்தான். வெற்றியடையாவிட்டா அலும், எங்கள் காலாட்படைகள் பிரான்சுப் பட்டாளங்களுக்கெதிரா கப் பாராட்டத்தகும் வகையில் ஒல்லாந்து தேசத்தில் புரிந்த பொன் றினுேய்ப் போர் நடந்த அவ்வாண்டிலேயே அரசகுமாரன் சாள்சு எட்டுவேட்டும் தனது துணிகரச் செயலைப் பிரித்தானியாவில் தொடங்கினன். அவன் இங்கிலாந்துத் தீவு படைகளின்றி யிருப் பதையும், இங்கிலாந்திலுள்ள மக்கள் போரிலும், தற்பாதுகாப்பு விடயங்களிலும் ஒருவித அனுபவமுமில்லாதவர்களாகவும், சுயநல வுணர்ச்சி காரணத்தினல் சுதுவட்டருக்கும் அனேவர்களுக்குமிடை யில் உள்ள பிணக்கில் அக்கறையில்லாதவர்களாகவுமிருப்பதைக் கண்டான். இவ்வாறு இங்கிலாந்து மக்கள் இருந்தமையால், அவர் கள், கொத்துலாந்தைச் சேர்ந்த 5,000 படையினர்கள் வாளும் கேடயமுமே தாங்கியிருந்தும், வாயைப் பிளந்து பார்த்தார்களே தவிர அவர்களை எதிர்க்கவில்லை; எடின்பருேவிலிருந்து இடேபி
255
1745。
La W. Limfaifiag.

Page 140
256
* 45 ஆம் ஆண்டு '
க்கு முன்னேற விடுத்து வாளாவிருந்தனர். யக்கோபினரின் கருத்துப்படியென்ருலென்ன, அனேவர் வமிசத்தினர் ஆதரவாள ரின் கருத்துப்படியென்றலென்ன, 1745 ஆம் ஆண்டில் பிரித்தானிய மக்களிடம் பொதுநல உணர்ச்சி அதிகம் இல்லாதிருந்தமை உவால் போலின் ஆட்சிக் குறையை எடுத்துக் காட்டியது. பன்னிராண்டுக ளுக்குப்பின்னர் உவிலியம் பிற்று, இதே பிரித்தானியாதும் அவர்தம் பிள்ளைகளினதும் ஆர்வத்தையும் தியாகத்தையும் மந்திரவித்தைக் காரன்போலத் தூண்டியமை மேற் காட்டிய சோர்வுடன் ஒப்பிடும் போது வியப்பேற்படுகின்றது.
நாகரிகம் படைத்த உலகம் தனது தாபனங்களைப் பாதுகாப் பதில் சோர்வடைந்ததன் காரணமாக மலைநாட்டுச் சாதியினர் பாராளுமன்றத்திற்கும், சட்டங்களுக்கும் மாமுக, இங்கிலாந்தின் ஆளும் வமிசத்தை மாற்றியிருந்தால், கனவில் மாத்திரம் காணக் கூடியதான அநியாய அரசாட்சி மட்டும் ஏற்பட்டிருக்கும். கிலிற் அறுடை யணிந்த வாள்வீரர் அடிப்படைச் சட்டங்களை ஒழித்தலை, பூரண வாக்குரிமையின் அடிப்படையில் அமையாத, ஊழல் நிறைந்த பாராளுமன்ற அரசாங்கம் எதிர்த்து நிலைத்திருக்க முடியாது. இந்நிபந்தனைகளோடு மீண்டும் ஆட்சி ஏற்பின் சுது வட்டர்கள், அனேவர் வமிசத்தினிடம் விசுவாசமுடைய இணங்கா தாரை வருத்தித் தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்பர். தங்கள் வாழ்க்கை முழுவதும் கொண்டிருந்த விசுவா சத்தை மாற்ற முடியாத ஒவ்வொரு அரசியல்வாதியையும், திருச் சபையைச் சேர்ந்தவனையும், போர்விசனையும், கடற்படை விரனை யும், நாடு கடத்தவேண்டிய நிர்ப்பந்தம் வெற்றிபெற்ற சுதுவட்டர் களுக்கு ஏற்பட்டிருக்கும். இங்கிலாந்தின் தேவைகளைப்பற்றி ஒன்றுமே யறியாத துணிவு மிகுந்த ஐரிசுக்காரராலும் கொத்து லாந்தராலும், இங்கிலாந்து ஆளப்பட்டிருக்கும். இளமையில் எவ் வளவுக் கெவ்வளவு துணிவும் ஆற்றலும் மிகுந்தவனுயிருந்தானே, அவ்வளவுக்கவ்வளவு விணனுகப் பிற்காலத்தில் மாறிய ஓர் இளவர சன் இங்கிலாந்தை ஆண்டிருப்பான். உள்நாட்டுப் போர் தொடர்ச்சி யாக ஏற்பட்டு, அதன் விளைவாக உள்நாட்டில் நாகரிகத்திற்கும் கைத்தொழிலுக்கும் கடலுக்கப்பாலுள்ள பேரரசிற்கும், வணிகத் திற்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.
என்ன நிகழ்ந்திருக்குமென்று கற்பனை செய்வது விணுகும். ஆணுல் பண்பற்ற மலைச்சாதியினர் இலண்டனில் திடீரென்று ஆட்சி யைக் கைப்பற்றியிருந்தால் அதன் விளைவுகள் வருந்தத்தக்கவை யாகவும், விபரீதமானவையாகவும் அமைந்திருக்கும். புகழ் பெற்ற வெளிநாட்டுப் போர்களிலிருந்து, திரும்பி வரும்படி கட்டளையிடப்

குலோடன்மூர் ; கம்பலாந்துக் கோமகன்
பட்ட, சிறிய, ஆனல் சிறந்த தரைப்படை பிரித்தானியாவை இவ் வித நிலைமை ஏற்படாது காப்பாற்றியது. இடெற்றிங்கன் போரிலும், பொன்றினுேய்ப் போரிலும் போர் புரிந்து அனுபவம் முதிர்ந்த போர் வீரர்கள் இவ்விதமாகப் பல இடங்களிலுமிருந்து வந்து திரண்டனர். கொத்துலாந்து எல்லையைக் கடந்தபின்னர், 300 மாஞ் செத்தர்ப் போர்வீரர்களே மட்டுமே கொண்ட தனது படையை அழிவு நிச்சயமென்று தெரிந்தபின் இடேபியிலிருந்து மேலே செல் இம்படி தூண்டுவது சாள்சு எட்டுவேட்டினுல் முடியாத செயலா யிற்று. ஆயினும், உடனடியாகவல்லாவிடினும், கொத்துலாந்துக்குக் திரும்பிச் சென்ற யக்கோபினர்கள் அழிவது உறுதி. எதிர்பாராத விதமாக அவர்கள் படையெடுத்தது அவர்களுக்கு வாய்ப்பாகியது உண்மையே. ஆனல் வாய்ப்பான நிலைமை மாறியதும் அவர்களுக்கு உதவுவதற்கு எதுவுமிருக்கவில்லை.
கலகத்தின் தொடக்கத்தில் பிறெசுத்தன்பான்சு அமைந்தது போல இடேபியிலிருந்து திரும்பிய பின்னர் போல்கேக்குப் போரில் மலைச்சாதியினருக்கு வெற்றி கிடைத்தது. ஆயினும் சில மாதங்க ளுக்குப் பின்னர், குலோடன் மூரில் கொத்துலாந்தரின் வரலாற்றி லேயே கடைசியாக ஏற்பட்ட தொல்குடியினரின் தாக்குதல். சன்னங்கள் போட்ட பீரங்கியாலும் நீண்ட நிரையில் மும்மூன்று போாக அணிவகுத்து நின்ற சிவப்புடையணிந்த போர்வீரர்களின் துப்பாக்கிச் குட்டினுலும் முறியடிக்கப்பட்டது. இந்தப் போர் முடிந்தபின்னர் கம்பலாந்துக் கோமகன் நல்ல போர்வீரனென்ற பெயரும் தான் செய்த பொதுச்சேவைகளும் மாசுபடும் விதமாக, அக்காலத்தில் திகில் அடைந்திருந்தவர்களும் கோபங்கொண்டுள்ள
வர்களுமான ஆங்கிலேயருக்கு ஏற்புடையனவாயிருந்தன வெனி
அனும், அன்றுதொடக்கம் இழிவாகக் கருதப்பட்ட கொடுமைகளை மலைப்பிரதேசத்தவர்களுக்கு இழைத்தான். அப்போது நடந்தவை மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகைப்படுத்தாமல் நோக்கினும் அவை கொடுமையானவையே என்பது வெளிப்படை. அக்கால முழு வதும், சோர்வும் ஆட்சித் திறனின்மையும் அரசாங்கத்திடம் காணப் பட்டன. இவையே கலகங்களுக்குக் காரணமாயின. பிரபுத் தலைவன யிருந்த போப்சு மட்டும் ஆர்வமும் அறிவுமுடையவனுக விளங்கி னன். அவனுடைய புத்திமதியின்படி நடந்திருந்தால், கலகமே ஏற் பட்டிருக்க முடியாது. கடைசியிலாவது அவன் புத்திமதிக்கு மதிப் புக் கொடுத்திருந்தால், தங்கள் தலைவர்களைப் பின்பற்றிய மலைப் பிரதேசத்தினர் தயவுடனும் நீதியுடனும் நடத்தப்பட்டிருப்பார்
so
257
வெள்ளிக் கிழமை, திசெ. 6,
1745.
எப். 16, 1746.

Page 141
258
பரம்பரை அதிகார ஒடுக்கம்
இங்கிலாந்திலே 45 ஆம் ஆண்டுக் கலகத்தினுலும் அதனை அடக்கியமையாலும் ஏற்பட்ட விளைவுகள் மறைமுகமாய் அரசியலில் மட்டுமே ஏற்பட்டன. அவை யக்கோபிதத்தை மேலும் நலிவுறச் செய்வனவாயமைந்தன. ஆனல் கொத்துலாந்தில், அவ்விளைவுகள் நேரடியாய்த் தாபனங்களை மாற்றத்தக்கனவாயமைந்தன. தலைவர் களும், பிரபுக்களும் மற்றக் கனவான்களும் தங்கள் குடிமக்களிடம் கொண்டிருந்த ஆதிக்கத்தினல் யக்கோபினர் எழுச்சி வெல்லற் கரிய தொன்முயிருந்தது. ஆகவே, மலைப்பிரதேசங்களிலும், பள்ளத் தாக்குகளிலும் ஒருங்கே பரம்பரை உரிமைகளை நீக்குதல், அச்சமயத்துக்கு ஏற்ற இலகுவான நடவடிக்கையாயிற்று. மத்திய அரசாங்கத்திற்கு அதிக பாதுகாப்பும், ஆதிக்கமும் கொடுப்பதற்காக, கொத்துலாந்தில் நெடுங்காலமாக நிலவிய மானிய முறைமை நீக்கப்பட்டது. ஆனல் இவ்விதம் நீக்கப்பட்டமை, 1759 ஆம் ஆண்டில் பேண்சு பிறந்த கமக்காரர் சமுதாயத்தில், சுதந்திர உணர்ச்சியும் சமத்துவவாதமும் மேலும் நன்முகப் பாவ ஏதுவாயிற்று. இச்சமுதாயத்தில் மனிதனே தெய்வமாக மதிக்கப்
பட்டான்.
கொத்துலாந்து தேசம், ஈற்றில் ஆங்கிலேய படைகளினுதவியு டன், தன் மலைப்பிரதேசப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய நிலைமை ஏற்பட்டமை முக்கியமாகும். தீவின் வடபாகத்தில் நாகரிகம் முன்
னேறவேண்டுமாயின் தொல்குடியினரின் போர் அமைப்புக்களையும்,
சட்டத்தையும் விஞ்சிய தலைவர்களிடம் அவர்களுக்குள்ள பற்றை யும் ஒழித்தல் அவசியமாயிருந்தது. மன்னனின் கட்டளைகள் நாடெங்கணும் மதிக்கப்படல்வேண்டும். “தற்கால அதென்சி" லிருந்து ஐம்பது மைல் எல்லைக்குள் ஓர் அபுகானியன் தலைகாட்ட முடியாது.
மிகவும் அவசியமான இம்மாற்றம் ஈற்றில் கைகூடியது; ஆனல் இதன் பொருட்டுக் கையாளப்பட்ட முறை சிறந்ததன்று. தாழ்நிலத் தில் நிலவிய சட்டமே மலைப்பிரதேசத்திலும் காணி ஆட்சிமுறை களுக்கும் வழக்கங்களுக்கும் அமைவதற்கான, நடவடிக்கையெடுக் கப்பட்டது. இத்தகைய நடவடிக்கையெடுத்தவர்கள் முன்னேற்ற மடையாத சமுதாயத்தின் உண்மையான நிலைமையை யறியாதவர் கள். தலைவர்கள் நிலக்கிழாராயினர். இதுவரையும் அவர்களைப் பின் பற்றிய தொல்குடியினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்; அவர்கள் இத்தலைவர்களது நிலங்களில் வாழும் குடிமக்களாயினர். நெடுங்
* கொத்தினதும், சுதீவின்சனதும் நன்கு தெரிந்த நூல்களைவிட, திரு. நீல்மன்றேவினது " புதுப்பாதை ” என்ற நவீனத்தில், பழங்காலத்து மலைச் சாரல் மக்கள் சமுதாயத்தைப் பற்றியும், 1715 ஆம் ஆண்டிற்கும், 1745 ஆம் ஆண்டிற்குமிடையில் நடந்த சதியைப்பற்றியும் சிறந்த வர்ணனை இருக்கின்றது.

கொத்துலாந்தில் வளர்ச்சி
காலமாகத் தங்களுக்கிடையிலிருந்த தொடர்புகளை மறந்து, இப்புது நிலக்கிழார், மலைச்சாரல்களிலுள்ள சிறு கமங்களி லிருந்து மக்களை வெளியேற்றி மலைகளுக்கிடையிலுள்ள வெளிக ளெல்லாவற்றையும் செம்மறியாட்டுப் பண்ணைகளாக மாற்றினர். அமெரிக்கப் புரட்சிக்கு முன்னரே 30,000 மலைச்சாரல்மக்கள் அத்தி லாந்திக்குச் சமுத்திரத்திற்கப்பால் குடியேறினர்கள் என்று நம் பப்படுகின்றது.
ஆயினும், மலைப்பிரதேச எல்லை, அரசியல் அடிப்படையில் அமை யாது புவியியல் அடிப்படையில் மட்டுமே அமைவதாய் மாறிய வுடன், நாட்டில் சமாதானம் நிலவியது. தெருக்கள் அமைக்கப்பட்ட மையாலும் அத்தெருக்களில் பிரயாணம் செய்வோர் அச்சமின்றிப் பிரயாணம் செய்யக்கூடியதாயிருந்தமையாலும், விரைவில் கொத்து லாந்து முழுவதும் நெருங்கியதொடர்புள்ள ஒரு சமுதாயமாக விளங்கியது. திடபத்தியுள்ள பிரெசுபித்தீரிய பாதிரிமார் நாட்டிலே பொதுவாக நிலவிய சமயக்கொள்கைகளையும் கல்விக்கொள்கைகளை யும், மலைச்சாரல் மக்களிடையே பரப்பினர். மூத்த பிற்றினது, மிகவும் குறிப்பிடத்தக்கதும், மகிழ்ச்சிக்குரியதுமான செயல்
கொத்துலாந்திற்காகவும் பேரரசிற்காகவும் கனடாவிலும் உலக
மெங்கணும் போர் புரிவதற்கு, மலேச்சாரல் மக்களிடையே படைகள் திரட்டியமையாம். இந்த மாற்றங்களின் பயனுகவும், இம்மாற்றங் களைத் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட முன் னேற்றத்தினலும் பேண்சு, சேர் உவாற்றர் கொத்து ஆகியோரின் நாடான தற்காலக் கொத்துலாந்து உருவாகியது. தங்களேப் பற்றி யும், தங்கள் முழு வரலாற்றைப் பற்றியும் பெருமை கொள்வோரும் ஒருவரோடொருவர் ஒற்றுமையுடையோருமானவீர்களைக் கொண்ட ஒரு சமுதாயம் காலகதியில் உருவாயிற்று. கெலித்திய சாதியின ாைப் பற்றியும், சக்சனிய சாதியினரைப் பற்றியும், ஏற்பாடுகளை மதிப்பவனைப் பற்றியும், யக்கோபினரைப் பற்றியும் இவர்கள் பெருமையடைந்தார்கள். இம் மீக்கள் வலசு தொடக்கம் புறாசு ஈருரகவும் யோன் நொக்சு மூலமாக புளோரு மக்டோனுல் ஈருரகவும், தேசிய மனப்பான்மையில் பிடிவாதகுணமும் பகுத் தறிவுத் தன்மையும், கற்பனையும், துணிவும், சுதந்திரத்தில் ஆர்வ மும், தலைவனிடத்து விசுவாசம் நிறைந்த அன்பும் ஒருங்கு சேர்ந் திருப்பதை எடுத்துக்காட்டும் பரம்பரையைப் பெற்றிருந்தனர். துக்ககரமான தாறியன் காலத்தில் கொத்துலாந்து, எதிர்பார்த்ததி லூம் பார்க்கக் கூடிய அளவுக்குக் கமத்தொழிலிலும், கைத்தொழி விலும், வியாபாரத்துறையிலும் செழிப்படைந்தது. எனினும், புதிதாகப் பொருட்பெருக்க மேற்பட்டபோதும், ஆத்மீகத்துறைக் குத் தேவையானவற்றுக்கும் உரிய மதிப்பை அந்நாடு கொடுத்
259

Page 142
260
1748-1756.
பெல்காம்களின் ஆட்சி : சமாதானம்
தது. உலகெங்கணும் பிரித்தானியப் பேரரசை விருத்தி செய்து ஆட்சி செய்வதற்குக் கொத்துலாந்து தேசம் தனது பண்பட்ட மக்களே அனுப்பியது. முன்னேற்றம் நிறைந்த இந்நூற்றண்டின் இறுதியில் இங்கிலாதுக்குக் கொத்துலாந்து முன்னெருப்ோது மில்லாத அளவு நல்ல அயல்நாடாகவும் நேயநாடாகவும் விளங்கி யது. அவ்விதமே இன்றும் விளங்கிவருகின்றது.'
ஐரோப்பாவிலே ஒசுற்றிய அரசுரிமைப் போருக்கும் ஏழாண்டுப் போருக்குமிடையில் சமாதானம் நிலவிய காலமும், இங்கிலாந்திலே என்றி பெல்காமும், அவனுடைய சகோதரனும், பாழ்பரோக்களில் பணம் செலவுசெய்து பாராளுமன்றத்திலாகிக்கம் பெறுவதில் இங்கி லாந்தில் மிகவும் சிறந்தவனுமாகிய நியூகாசில் கோமகனும் ஆட்சி புரிந்த காலமும் ஏறக்குறைய ஒன்முகும். இவர்கள், உவால்போல் கையாண்ட முறைகள் போகிய அளவு பொருந்தாத காலத்தில், அம் முறைகளைத் திரும்பவும் கையாண்டனர். இங்கிலாந்திலே இவ் வருடங்கள், பதினெட்டாம் நூற்றண்டில் மனநிறைவும் அமைதியும் மிக அதிகமாகக் காணப்பட்ட காலமாம். ஏனெனில் யக்கோபிதம் ஓர் இடராக இருக்கவில்லை. அதோடு, அரசியலில் ஆரவாரம் ஏற்படுவதற்கு உவால்போலுக்கும் அவனுடைய எதிரிகளுக்கு மிடையில் இருந்த பிரசித்தமான போட்டிகள் போன்ற போட்டி களும் இருக்கவில்லை. பொது மக்கள் சபையிலே ஆணவம் பிடித்த பிற்றினது மனவேகம் அக்காலத்தில் நிலவிய சாந்தம் நிறைந்த தன்மைகளினல் கட்டுப்படுத்தப்பட்டது. அவன் தனது சொற்
சாதுரியத்தை மந்திரிசபையிலே பிரயோகிப்பதையும் சிறிதுகால
மாக நிறுத்திவிட்டான். ஏன்! அவன் படைகளுக்குச் சம்பளம் கொடுப்பவனுகக் கடமையாற்றுவதுடனேயே திருப்தியடைந்தான். ஆனல், பெயரளவில் சமாதானம் நிலவிய இக்காலத்தில், நித் திரையிலாழ்ந்திருப்பது போன்ற நிலையிலிருந்த பிரித்தானியாவை எழுப்பும் வகையில் இந்தியாவிலும், வட அமெரிக்காவிலும் போர் நடவடிக்கைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பிரான்சியரே போரைத் தொடங்கினர். மொகலாயப் பேரரசு குலைந்ததன் காரணமாகக் கரு நாடகப் பகுதியில் இந்திய சிற்றரசர்கள் சுதந்திரமடைந்ததும், ஆங் கிலேயரிலும் பார்க்க வியாபாரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்த பிரான்சுக் கம்பனி, இந்திய அரசர்கள் சிலருடன் இராணுவ ஒப்பந் தம் செய்து, பிரான்சு உத்தியோகத்தரின் கீழ் சிப்பாய்களைப் பழக் கிச் சேனைகளைத் திரட்டி, சென்னையிலும் மறு இடங்களிலுமிருந்த
* இக்காலத்திற் கொத்துலாந்திலே திருச்சபையில் நடந்த இயக்கங்களைப் பற்றி மேலே 232 பார்க்கவும்.

கீழ்த்திசையில் பிரான்சியர்
பிரித்தானிய கிழக்கு இந்தியக் கம்பனியாரின் வியாபாரத் தலங்களை அழிக்கலாம் என்ற எண்ணம் உடுப்பிளேக்குத் தோன்றியது. கன டாவிலே, நன்முக ஆலோசித்து இட்ட திட்டப்படி சென் உலோ றன்சு நதியின் முகத்துவாரத்திலிருந்து ஏரிகள் வரையும், ஒகை யோப் பள்ளத்தாக்கிலிருந்து மிசிசிப்பி வரையும், அங்கிருந்து மெச்சிக்கன் குடாவில் உள்ள பெரிய ஆற்றின் முகத்துவாரம் வரை யும், நிரையாக இராணுவத் தாபனங்களைப் பிரான்சியர் நிறுவினர். இந்த ஆற்றுப் பாதைகள் மூலம், அப்பலேசியன் மலைகளுக்கும் அலெகானி மலைகளுக்கும் வடக்கேயும் மேற்கேயுமுள்ள அமெரிக்கா முழுவதையும் பிரான்சு தேசத்திற்காகக் கைப்பற்ற அவர்கள் உத் தேசித்தனர்.
இந்தியாவிலே ஆங்கிலேயக் கம்பனி பிரான்சுக் கம்பனியிலும் பார்க்கக் கூடியகாலம் உழைத்துச் செல்வத்தால் உயர்ந்திருந்தது டன் பிரான்சுக் கம்பனியிலும் பார்க்க நாட்டு வாழ்க்கையில் கூடிய அளவிற்கு வேரூன்றியுமிருந்தது. வட அமெரிக்காவிலே கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆங்கிலம் பேசும் இருநூறு இலட்சம் குடி யேற்றக்காரர் வட அமெரிக்காவில் வாழ்ந்த பிரான்சுக் கனடியரை விடத் தொகையில் அதிகமாயிருந்தனர். ஆதலினல் பிரான்சியர் வெற்றி பெறுவது அவர்களுக்குள் கூடிய ஒற்றுமையிலும், வீறுள்ள தலைவர்களிலும், தாய்நாட்டிலிருந்து அதிகப்படியான கடற்படை தரைப்படை உதவியிலுமே தங்கியிருந்தது. இந்தியாவிலே ஆங்கி லேயரைத் தோற்கடிப்பதற்கு, கேப்பு முனையிலிருந்து போகும் பாதையில் மொறிசசுத் தீவே பிரான்சியரது கடற்படைத் தளமா யிருந்தது. இதைப்போலவே வட அமெரிக்காவைக் கைப்பற்று வதற்கு, பிறெற்றன் முனையிலுள்ள உலூயிசுபேக்கே அவர்களின் தள மாகும். தொடக்கத்தில் கருநாடகப்பகுதியில் உடுப்பிளே தனது ஆற்றலினல் எல்லாவகையினுலும் வெற்றி பெற்முன். ஆனல் உருெ பேட்டு கிளைவு வியாபார வேலையை விடுத்துப் போர் வீசனகப் போர் புரிந்து ஆர்காட்டைக் கைப்பற்றி அதனைத் தாக்குதல்களி லிருந்து காப்பாற்றும் வரையுமே உடுப்பிளேயின் இந்த வெற்றி நீடித்தது. சமாதானகாலத்தில் கரையோரம் முழுவதும் கோசமான நேரடி யுத்தம் நடந்தது. வியாபாரத்தில் பிரான்சியரிலும் ஆங்கிலே யர் மிக மேம்பட்டிருந்த காரணத்தால் போரிலும் அவர்களுக்கு வசதிகள் பல கிடைத்தன. இதனுல் இந்தப் போர் ஆங்கிலேயருக் குச் சாதகமாய் முடிந்தது. ஏழாண்டுப் போர் தொடங்கிய காலத் தில் இந்தியாவிலே பிரான்சியரின் ஆதிக்கம் வீழ்ச்சியுறத் தொடங் கியது.
26
IV Lullh பார்க்க.
1751.
LILlth X
பார்க்க.

Page 143
அமெரிக்காலிற் பிரான்சியர்
வட அமெரிக்காவிலே நிலேமை இதற்கு மாருக விருந்தது. அங்கே மசச்சூசெற்றுத் தவிர்ந்த மற்ற ஆங்கிலக்குடியேற்ற நாடுகள் தங் கள் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போர் புரிய விரும்பவில்லே. அம்துடன் அவை ஒரு பொதுக் கொள்கையைக் கிடைப்பிடித்து ஒன்றுசே முடியாதவையாயுமிருத்தன. ஆங்கிலக் குடியேற்றப் பகுதிகளுக்கிடையில் போக்குவரத்து வசதி குறைவாகவே பிருந் தது. அத்துடன் குடியேற்ற நாடுகளுக்கிடையிலிருந்த போட்டிகளா லும், தேசாதிபதிக்கும் சட்டசபைக்குமிடையிலிருந்த போட்டியினு லும், மானிய முறையினதோ அரசினதோ கட்டுப்பாட்டுக்கு ஒது காலத்திலும் ம்ேப்படியாத புது உலகத்தின் கடும் தனியாண்மையி ஜலும் இக்குடியேற்ற நாடுகள் தற்பாதுகாப்பிற்காக ஒருங்கு சேர்ந்து நடவடிக்கைகள் எடுப்பது தடைப்பட்டது:
மறுபுறமாக திருச்சபைக்கும், அரசாங்கத்துக்கும், பிரபுவுக் கும் கீழ்ப்படியும் பழக்கமுடையவரும், சுதந்திசத்தை ஒருகாலத்தி டூம் அனுபவியாதவருமாகிய பிரான்சக் குடியேற்றக்காரர், கங்கள் அரசாங்கத்திடம் பற்றுடையாாயிருப்பதில் ஒன்று சேர்ந்திருந்த னர். இப்பிரான்சுக் குடியேற்ற தாரிகன் சென் உலோஹன்சிற்கும் மிசிசிப்பிக்கும் அருகில், ஒரு மாஃபிலே கோத்த மணிகள் போல அடுத்தடுத்து அமைந்திருந்தன. பிரான்சு தேசத்திவிருந்து சிறந்த அரச சேனேகளும், கஃபீவர்களும் இவர்களுக்கு உதவி செய்ய ம்ெ கட்டளேயிடவும் அங்கு இருந்தனர். மேலும், செவ்விந்தியக் சொல்குடியினருடன் பிரான்சியர் நெருங்கிய தொடர்பு கொண்டி இந்தனர். இச்சாகியினரைப் பிசான்சியர் நன்னூக நடத்தினரெனி லும், இவர்களேத் தயக்கமின்றி மனுத்தன்மையற்ற முறையில் தங் கள் ஐசோப்பிய எகிரிகளுக்கு எதிராக உபயோகித்தனர். 1753 ஆம் ஆண்டில் ஒகையோப் பன்னத்தாக்கிளிருந்து ஆங்கிலேய வியாபாரி கண் வெளியேற்றி ஆவர்கள் கிரும்பாது தடுப்பதற்காக உடுக்கின் கோட்டையைப் பிரான்சியர் கட்டினர். ஈராண்டுகளுக்குப் பின்னர் நியூகாவிலின் ஆாசWங்கத்தினுல் அலெகானி மல்ேகளுக்கப் பால், ஆங்கிலேயரின் உரிமைகளேக் கிரும்பவும் நிநோட்டுவதற்குத் *ளபதி பிரடொக்கின் தன்மையில் அனுப்பப்பட்ட சேனை முழுவ ஆம், தரீக்குவதற்குப் பதுங்கிக் காத்திருந்த பிரான்சிபரிகுலும் சிவப்பு இந்தியர்கனாலும் பின்னூபின்னப்பட்டு அழிந்தது.
*சிஆேம் ஆண்டில் விழாண்டுப் போர் தொடங்கிய பின்னர், தினே வினது தனித்திறமை ஏற்கனவே மேலோங்கியிருந்த இந்தியா தவிர்ந்த ஏனைய எல்லா விடங்களிலும், பிரான்சியரின் முயற்சி
வட அமெரிக்காவிலே ஆங்கிலேயரினதும், பிரான்சியரினதும் குடி யேற்றப் பகுதிகளின் இயல்பு பற்றிய விவரங்களே 100-108 பக்கங்களிற்
E.
 

·(gol. I Norriesgos@ : off-Trael!) glı I 'Iseos@frog, his somnoggræs, mėgigs ursī ‘ITA QI-III
(gılı ropaeosae)
(ự* Noong ulongiae mae usēsų (p) soțuosoɛɛnīñĝo,Jong U
q1+i}+\fırı95)JIso so poľsão

Page 144

* விழுமிய பொதுமகன்'
கள் யாவும் வெற்றி பெற்று மிளிர்ந்தன. உலக நெருக்கடி ஏற்பட்ட தும், உவிக்குச் சில்லோராட்சி முடிந்துவிட்டதென்பது தெளிவா யிற்று. ஆட்சிபுரிவதற்கு அதற்கிருந்த அதிகாரம் முடிவடைந்தது ; அதன் குறிக்கோளும் நிறைவேறிவிட்டது. யக்கோபிதம் ஒழிந் தது; ஆதலினல், வேறு காரணமில்லாவிடினும் உவிக்குகளின் பழைய திட்டங்களும் ஒழுங்குகளும் இறுநிலையிலிருந்தன. இக்குழு நல்லாயிருந்த காலத்தில் பேணி வளர்த்த புதுச் சத்திகளுடன் இக்காலத்தில் தொடர்பற்றுப்போயிற்று. இக்குழுவின் ஆட்சி, ஊழ விலும் 'முகாமை' யிலும் தங்கியிருந்தது. ஆனல் நியூகாசிலினல், பிரான்சுப் படைகளைக் கனடாவிலிருந்து இலஞ்சங் கொடுத்து வெளியேற்றவோ பிரான்சுக் கடற்படைத் தளபதிகளை, அவர்களின் சகோதரர்களை அயலாந்தில் விசுப்பாண்டவர்களாக நியமிப்பதன் மூலம், கடலிலே பிரான்சிய ஆதிக்கத்தைக் கைவிடும்படி தூண் டவோ முடியாதிருந்தது.
பழைய உவிக்குக் கட்சி பெயரளவில் மட்டுமிருந்ததெனின் பழைய தோரிக்கட்சி அம்மட்டிலுமிருக்கவில்லை. புதிய தோரிக்கட்சி இன்னும் உருவாகவுமில்லை. பிரித்தானிய மக்கள் இடையனில்லாச் செம்மறி ஆடுகள் போலிருந்தனர்; அல்லது பட்டிக்குள் ஓநாய் புகுந்திருக்கும் நேரத்தில் இடையர்கள் "கடுதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லலாம். உவிலியம் பிற்று, “என்னல் இந்நாட்டைக் காப்பாற்ற முடியும், வேருெருவராலும் முடியாது ' என அவன் கூறியது உண்மையேயன்றி விண் பெருமையன்று. அவன் அரசாங்கத்தின் படிமுதல்வனுக இருந்த காலத்தில் தன் மூலம் கொடுபடும் பணத்தில் வழக்கமாகப் பெறக்கூடிய கழிவைப் பெற மறுத்த, சுயநலம் கருதாத அரசியல் வாதியெனக் கண்டு, அவன் ஒருவனிடம் மட்டுமே மத்திய வகுப் பினரும் தொழிலாளர் வகுப்பினரும் நம்பிக்கை வைத்தனர். பிரித் தானிய அரசியல் தலைவர்களிடையே அவனெருவன் மட்டுமே பேரர சைப் பற்றியே எப்பொழுதும் சிந்திப்பவனுவன். அமெரிக்காவில் குடியேறியவர்களிடம் நிலவிய சுதந்திர மனப்பான்மையையும், திருத்தியின்மையாலேற்பட்ட பொறுமையற்ற மனப்பான்மையை யும் அவனுெருவனே உணர்ந்திருந்தான். அத்துடன், இந்த மனப் பான்மையைத் தூண்டிப் பொது நன்மைக்குப் பயன்படுத்த அவன் ஒருவனலேயே முடியும். அவன் புகழ்பெற்ற ஒரு ஆங்கிலேய இந்தியனின் போன்புக்குரிய போனவான். இலண்டன்மாநகரத் தின் வணிகர்களினதும் நகரபிதாக்கள் ஆகியோரதும் நெருங் கிய நண்பனுக அவன் விளங்கினன். “பெரிய பொதுமக்கள் சபை அங்கத்தவன்' என்று கருதப்பெற்ற அவன் அக் காலத்தில் ஆட்சி புரிந்த உவிக்குக் கட்சியை வெளிப்படை
263

Page 145
264
பேச்சாளன் பிற்று
யாகவே அலட்சியம் செய்தான். ஆனல் தனது தேசத்தவ ரிடம் பெரும்பான்மையோருக்கு, அவர்கள் எக்கட்சியினரென்று தங்களைக் கூறிக்கொண்டாலும், உணர்ச்சியூட்டக்கூடிய வகையில், 1688 ஆம் ஆண்டுப் புரட்சியின்மூலம் நிலைபெற்ற சுதந்திர அரசியல் சட்டத்தைப்பற்றிப் பெருமை, எவ்வித குறைகளிருந்தாலும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் நம்பிக்கை, எல்லா வகுப்பினரையும் எல்லாச் சமயப் பிரிவினர்களையும் கொண்ட மக்கள் எல்லாரிடமும் நம்பிக்கை, கடலுக்கப்பால் உள்ள உரோமன் கத்தோலிக்க சமயத்தின் ஆதிக்கத்தையும் வல்லாட்சியையும் பற்றிய அச்சம், சமுத்திரமும் வட அமெரிக்காவும் பூபோன் மன்ன னின் ஆட்சிக்குக் கீழ்ப்படாது தடுக்கும் தீர்மானம், ஆங்கிலச் சாதியினரின் வருங்காலச் சுபீட்சத்தில் நம்பிக்கை ஆகியன போன்ற இக்காலத்தில் நிலவிய, பழைய உவிக்குக் கொள்கை களுக்கு அவன் புத்துயிர் கொடுத்தான்.
பிற்றின் கொள்கை இதுவாக அமைந்ததினுல், அவன் அழைத்த வுடன் பிரித்தானிய மக்கள் உடனே அவ்வழைப்பை ஏற்றனர். சிறு இலஞ்சங்களுக்காகத் தங்கள் ஆன்மாக்களையே விற்றவர்களான அங்கத்தவர்களும் பிற்றின் நாவன்மையால் முற்றிலும் அடக்கப் பட்டமையாலும், ஓரளவிற்குத் தூண்டப்பட்டமையாலும், பொது மக்கள் சபை அவன் அழைப்பைப் புறக்கணிக்க வழியில்லாது ஏற்றது. பிற்றின் நடத்தை அவனுக்கு இயல்பாகவே அமைந்த தன்று எனக் கண்டிக்கப்பட்டது. ஆனல் அவன் நடத்தையில்
'உண்மையாகவே மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் இருந்தன. அவன்
என்றும் ஒரு நடிகனக விளங்கினன். ஆனல் மேடையிலும், சபை யோரிடத்திலும் அவன் குரலும் சமிக்கைகளும் ஆட்சி செலுத்தின.
ஒப்பற்ற பேச்சுத் திறனுடையவனுகவும், பாராளுமன்றம், தேசம் ஆகிய இரண்டுக்கும் இணையற்ற தலைவனுகவும் திகழ்ந்த பிற்றுக்கு இச்சத்திகளுடன் போர் மந்திரிக்கு வேலண்டிய பெருங்குணங்களும் அமைந்திருந்தன. அவன் உலக விரகுவல்லுநனுக விளங்கினன்; எக் காலத்திலும் பிரித்தானியாவின் போர்ப் பலத்திற்குக் காரணமான கடற்படைப் பலத்தையும் தரைப்படைப் பலத்தையும் முறையான வகையில் இணைத்துப் பயன்படுத்துவதில் ஆற்றலுடையணுய் விளங் கினன். தரையிலும் கடலிலும் ஆணை செலுத்துவதற்கேற்ற தளபதி களைத் தேர்ந்தெடுத்து, தனக்கிருந்த ஆர்வத்தை அவர்களுக்கு ஊட்டி, போதிய அளவு படைகளுடன் சரியான வேலைகளுக்கு அவர் களை அனுப்பினன். போர் மந்திரியாக அவன் இலிங்கனிலும் பார்க் கத் தலைசிறந்து விளங்கினன். நெருக்கடியான காலத்தில் தேசத்

போர் மந்திரி பிற்று
, கின் தலைவராகவிருந்த நிலையில் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்க லாம். அவர்கள் கையாண்ட முறைகளில் உள்ள வேறுபாடுகளையும் நோக்கலாம்.
1758 ஆம் ஆண்டிற்கும் 1760 ஆம் ஆண்டிற்குமிடையில் உலகமெங் கணும் கிடைத்த வெற்றியை ஓர் அளவிற்குப் பழைய உவிக்கு வெளி நாட்டுக் கொள்கையின் கடைசி வெற்றியென்று சொல்லலாமெனி லும், உவ்க்குக் குழுவினரின் சாதனை என்று கூறமுடியாது. ஆனல் உவிக்குச் சில்லோராட்சி ஏழாண்டுப் போரின் முதற் பகுதியில் போரைச் சீர்கேடான முறையில் நடாத்தித் தேசத்தைப் பெரிய ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்தபடியாலேயே, தேசத்தைத் தோல்வியடையாது காக்கும்படி மக்களின் தேர்ந்தெடுத்த தலைவன கப் பிற்று அழைக்கப்பட்டான். இருதிறத்தினருக்கும் ஏற்ற ஓர் ஒழுங்கின்படி, பாராளுமன்றத்தினரைக் கைக்கூலி கொடுத்து வசப்படுத்தும் பொறுப்பும் பொதுவாழ்க்கையில் நியமன உரி மையும் நியூகாசிலிடம் விடப்பட்டன. அதிகாரம் பிற்றுக்குக் கொடுக்கப்பட்டது. அவன் தாய்நாட்டில், பிரித்தானிய யாப் பில் உள்ளூரவிருந்த நயப்புறு தன்மைகளையும் மசச்சூசெற்றில், நன்முக விருத்தியடைந்திருந்த அத் தன்மைகளையும் மக்களின் மனதைக் கவரும்வகையில் எடுத்துரைத்தான் ; பேராசைக் காப் டதன்பொருட்டுச் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டினன்.
“அடிமைகளாகவல்ல சுதந்திரமுடைய மக்களாகவே புகழை நோக்கி உங்களை அழைக்கின்ருேம். சமுத்திரத்தின்மீது சுதந்திர மாக வாழும் மக்களே விட அதிக சுதந்திரமுடையவர்கள் வேறு யார் இருக்கின்றர்கள்?" இவ்விதமாக அக்காலத்தில் கடற்படையின் போர்ப்பாடலொன் றில் பாடப்பட்டிருக்கின்றது. உண்மையைக் கூறுவதாயின், அக் காலத்தில் அரசாங்கத்திற்கும். குடிகளுக்கும் இருந்த தொடர்பில் குறைபாடான தன்மையாகக் கொள்ளத்தக்கதாயிருந்தது கடற் படைக்குக் கட்டாயப்படுத்தி ஆட்கள் சேர்க்கும் முறைமையாம். அவ்விதமிருந்தபோதிலும், கடற்படையும், பேரரசும் பிரான்சு நாட் டிற்கு எதிராகச் சமுத்திரத்திலும், கனடாவிலும் ஒகையோப் பள் ளத்தாக்கிலும் பூரணமான வெற்றியை ஈட்டிய காலத்தில் இருந்த உணர்ச்சியை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. வட அமெரிக்கா வில் சுதந்திர தாபனங்களையொழித்து வல்லாட்சி ஏற்படாமல் இந்த வெற்றி தடுத்தது.
போரில் பிரசிய நாட்டுப் பெரிய பிரெடரிக்கு பிற்றுடன் சேர்ந்து போர்புரிந்தான். அடிமைநிலையிலிருந்து பூரணமாக விடுதலை பெருத இருநூறு இலட்சம் கமக்காரரும், வடசேர்மனியில் சில மணற் பிர தேசங்களிற் குடியிருந்த ஏறக்குறைய இருபதினுயிரம் இயூகனற்று
(62/R 5981 (1l---سس 11
265
யூன், 1757,

Page 146
266
பிற்றும் பிரெடரிக்கும்
அகதிகளும், ஒசுற்றியா, இரசியா, பிரான்சு ஆகிய நாடுகளின்
தாக்குதலை ஏழு வருடங்களாக எதிர்க்கத் தங்கள் அரசருக்கு உதவிசெய்தமை வியப்பாகத் தோன்றும். பிரெடரிக்குக்குப் போரி லுள்ள திறமையால் மாத்திரம் இது சாத்தியமாகவில்லை. அவனும் அவனுடைய வயோதிபரான முரட்டுத்தகப்பனரும், அடக்கமான மக்களுக்குச் சமாதானகாலத்தில் அளித்த போர்ப்பயிற்சியே இதற் குக் காரணமாகும். மக்களிடம் கடுமையான, ஆனல் அக்கறையுள்ள ஒர் ஆசிரியரைப் போன்ற, தன்னலமற்ற, உழைப்புமிக்க மன்னனல் நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதும், விஞ்ஞான முறைப்படி யமைந்ததுமான ஓர் இராணுவத் தனியாட்சித் தத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய்ப் பிரெடரிக்குத் திகழ்ந்தான். பழைய ஆட்சி முறை வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்த அரசாங்கங்களுக்குத் தலைமை தாங்கியவர்களும், மக்களின் உணவையே பறித்துச் சொந் தச் சுகம் அனுபவிப்பவர்களுமாகிய ஐரோப்பாக் கண்டத்து அரசர் கள், பொம்படோரின் ஆசீர்வாதத்துடன் அவனுக்கு எதிராகத் திரண்டிருந்தனர். இதற்கிடையில் பிற்று போர்க் காலத்தில் பிரித் தானிய சுதந்திரத்தின் பலத்தை நிதர்சனமாக நிரூபித்துக் காட்டி ஞன். பிற்றும், பிரெடரிக்கும் உலகத்திற்கெதிராகப் போராடுவதில் ஒன்றுசேர்ந்தமை அவர்களின் வெற்றிக்குக் காரணமாகும். நெருக் கடியின் காரணமாக ஏற்பட்ட இந்த ஒற்றுமையை ஆங்கில மக்கள் தங்கள் இயல்புக்கேற்பச் சிறந்ததாக மதித்தார்கள். அவர்கள் இரு நாட்டிற்கும் பொதுவான பந்தமாகவமைந்த புரட்டெசுத்தாந்த சமயத்தைப் பற்றி ஆர்வத்தோடு பேசினர்கள். அத்துடன் ஒசுற் றிய பிரான்சு ஆகிய நாடுகளுக்குரியதும், மறுசமயத்தவர்களைத் துன்புறுத்துகின்றதுமான கத்தோலிக்க சமயத்தை வெற்றியுடன் எதிர்க்கின்ற புரட்டெசுத்தாந்த சமயத்திற்காகப் பரிந்து போராடு கின்ற விரணுகப் பிரெடரிக்கைக் கருதினர்கள்."
ஒசுற்றிய அரசுரிமைப் போர்க்காலத்தில், தான் முன்கொடுத்த வாக்குக்கு மாமுகக் கைப்பற்றிய சயிலேசியன் மாகாணத்தை, ஐரோப்பாவின் மூன்று பெரிய இராணுவ அரசுகளின் தாக்குதலி லிருந்து காப்பாற்றுவதில் பிரெடரிக்கு ஏழுவருடப் போரின் போது ஈடுபட்டிருந்தான். இத்தாக்குதலிலிருந்து அம்மாகாணத்தைத் திறமையாகக் காத்தமை அதனை முன்னர் ஒழுங்கீனமான முறை யில் கைப்பற்றியதால் ஏற்பட்ட இழிவை மறைத்தது. இவ்வித 1. வொல்ரெயரின் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருந்தபோதிலும் 1762 ஆம் ஆண்டில் புரட்டெசுத்தாந்த சமயத்தைச் சேர்ந்த கலசு என்பவனை நீதிமன்றத்தில் விளங்கி மரணதண்டனை விதித்துக் கொலை புரிந்தனர்.
இக்காலத்தில் ஒசுற்றியாவிலும் பிரான்சிலும் இருந்த புரட்டெசுத்தாந்த சமயத்தவர்களின் நிலையையும் அயலாந்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர் களின் நிலையையும் ஒப்பிட்டுக் கவனிக்கலாம்.

கடலிலும் தரையிலும்
மிருந்தும் பிற்றுச் செய்த பண உதவியும், பிரான்சிற்கெதிராக அவ னுடைய நாட்டின் மேற்குப்புறத்தைக் காப்பாற்றிய பிரித்தானிய படைகளும் (இவ்விதம் உதவிசெய்யும்போது பிரித்தானிய படை கள் மின்டெனில் நடந்த போரில் வெற்றிபெற்ற). இல்லா விடின், பிரெடரிக்கும் தோல்வியடைந்திருப்பர்ன். பிரெடரிக்குக் தோல்வியடைந்திருந்தால் ஐரோப்பாக்கண்டம் முழுவதும் ஒரு மித்து இங்கிலாந்தை எதிர்த்திருக்கும். கனடாவை வெல்லற்குச் சேர்மனியில் வெற்றிபெறவேண்டு மென்பதே பிற்றின் கொள்கை. அதனைச் செயலிலும் சாதித்தான். ஐரோப்பாக் கண்டத்திலும், அனுேவரிலும் ஏற்படும் தகராறுகளில் இங்கிலாந்து ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களிடமிருந்து தோன்றிய எதிர்ப்பை மிக முன்னணியில் நின்று முன்பு ஆதரித்தவனுயினும், இப்போது ஐரோப்பாக் கண்டத்தில் நடந்த போரைப் பொதுமக்கள் ஏற்கும் படி செய்தான். கணக்கற்ற மதுபானக் கடைகளின் பெயர்ப்பலகை
களில் “பிரசிய அரசனும்’ சேர்மனியின் போர்க்களங்களில் எங் கள் துருப்புக்களுக்குத் தலைமை தாங்கிய தைரியம் வாய்ந்த
* கிருன்பியின் மாக்குயிசும் ’ இடம் பெற்ருர்கள்.
இங்கிலாந்தைப் பாதுகாப்பதும், அப்போதிருந்த நிலைமையை நீடித்திருக்கச் செய்வதுமே, ஐரோப்பாக் கண்டத்திற் பிற்று போர் புரிந்ததின் நோக்கமாகும். கடலுக்கப்பால்தான் அவனின் உண்மை யான குறிக்கோள் இருந்தது. அவன் நினைத்த போரின் பொருட்டு இங்கிலாந்தின் கடற்படையின் ஆதிக்கத்தைத் திரும்பவும் நிலை நாட்டுவது மிகவும் அவசியம். இங்கிலாந்தின் மீது பிரான்சியர் படையெடுப்பார்கள் என்ற அச்சமும், அதனல் ஒருவகையான 56) வரமும் 1756 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலேற்பட்டது. இங்கிலாந்து மினேக்காவை இழந்தது. மந்திரிமாசைப் பொதுமக்களின் ஆத்தி
ாத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, தோல்வியடைந்த கடற்படைத்
தளபதி யோன்பிங்கு என்பான் பிற்றின் கருத்துக்கு மாமுகச் சுட் டுக் கொல்லப்பட்டான். பிற்றின் அரசாங்கத்தின்கீழ் தொட்ர்ச்சி யாகத் தீவிரமாய் நடந்த செயல்களினல் கடலாதிக்கம் மீண்டும் விரைவிற் பெறப்பட்டது. குவிபெரோனுக்கப்பால் கோக்கு பெற்ற முக்கிய வெற்றி இவை யாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல மைந்தது.
சென் உலோறன்சு நதிக் கரைகளிற் பரந்திருந்த பிரான்சுக் குடி யேற்றப் பகுதிகளைக் கொண்டிருந்த அக்காலக் கனடாவைக் கப் பற் படைகளின்மூலம் கொண்டுவரப்பட்ட தரைப்படைகளினு லேயே கைப்பற்றுதலியலும், இருபடைகளும் திறமையான முறை யில் ஒத்துழைத்ததனல் அப்பெரிய நதியைக் காவல் செய்யும் நகர மாகிய உலூயிசுபேக்கை முதலிற் கைப்பற்றக்கூடியதாயிற்று. அத்
759.
56.
1759.
758.
267

Page 147
268
1789。
Lib VIII
பார்க்க.
星757.
董宵60。
குவிபெக்கு உவுல்பின் வசமாதல்
துடன் இவ்வொத்துழைப்பினுலேயே அடுத்த வருடம், நதியின் கரை யிலிருந்து துணிகரமாக மலையிலேறி ஆபிரகாம் மலை உச்சியை யடைந்து பிரான்சு மன்னனின் படைகளிடமிருந்து குவிபெக்கையே கைப்பற்றக் கூடியதாயிற்று. கனடாவின் எதிர் காலத்தைத் தீர் மானித்த, நினைவுக்குரிய அந்த நாளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் உவுல்வும் அவனுடைய எதிரியான பெருந்தன்மைவாய்ந்த மொன் காமும் படுகாயப்பட்டனர். இதற்கிடையில் ஒகையோப் பள்ளத் தாக்கிலே கொத்துலாந்தின் மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த படையி னரும், அமெரிக்கக் குடியேற்றக்காரரும், பிற்றின் தலைமையில் இயலுமென எல்லாருங் கருதிய வகையில் ஒத்துழைத்து, அலெ கானி மலைகளைக் கடந்து, பிரான்சியசை வெளியேற்றி, உடுக்கீன் கோட்டைக்குப் பிற்கபேக்கு என்ற மறுபெயர் குட்டினர்கள். ஏழாண்டுப் போர் முடிவடைவதற்கு முன்னர் வட அமெரிக்காவி லிருந்து பிரெஞ்சு ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. ஆங்கிலம் பேசும் மக் களுக்குப் பொதுமக்கள் சபையின் பெரிய வீரன் அளித்த பரிசி லாக மேலை நாடுகள் அமைந்தன.
போர் நடந்த காலத்தில், மேற்கு ஆபிரிக்காவிலும் மேற்கிந்திய
தீவுக்கூட்டத்திலும் பிரான்சுக்குரிய பல இடங்கள் கைப்பற்றப்
பட்டன; கிழக்கேயும் ப்ெரிய பேரரசு ஒன்று நிறுவப்பட்டது. இந் தியாவிலே நடைபெற்ற போருக்கும் அரசாங்கத்துக்கும் பிற்றிலும்
மேம்பட்ட வேருெருவரின் புத்திசாதுரியமே உண்மையில் காரண
மாயிருந்தது. தவுணிங்கு வீதியிலிருந்தே எங்கள் வெற்றிக்குத் கிட்டம் வகுப்பவருக்குச் சென் உலோறன்சுப் போர்த் திட்டம் வகுத்ததைப்போலக் கங்கைக்கரைப் போர்களுக்குந் திட்டத்தை வகுப்பதற்குக் கேப்புமுனையைச் சுற்றிய பிரயாணம் ஆறு மாதம் தொடக்கம் ஒன்பது மாதம்வரையும் நீடித்தமை தடையாயிருந்தது. உண்மையில், இந்தியாவிலே பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட பெரிய பிரதேசமாக வங்காளத்தைக் கிளைவு கைப்பற்றுவதற்கு ஏதுவா யிருந்த பிளாசே யுத்தம் பிற்றின் மந்திரிசபை சிரமப்பட்டு உருவா கிக்கொண்டிருந்த மாதங்களில் நடைபெற்றது.
மூன்ரும் யோச்சு தனது பாட்டனுக்குப் பின்னர் அரசுரிமை பெற்றபோது, முன்பெக்காலத்திலாவது, பிற்காலத்திலாவது, இல் லாத முறையில், பிரித்தானியாவின் பெயருக்கு உலகத்திலுள்ள நாடுகள் மதிப்புக்கொடுத்தன. பிரித்தானியாவின் சுதந்திர தாபனங் கள் குறையுள்ளனவாயிருந்தனவென்று எங்களுக்குத் தெரிந்தாலும் அவை அக்காலத்து ஐரோப்பிய தேசங்கள் பொருமை கொள்ளத் தக்கனவாயிருந்தன. "ஆங்கிலேயரிடம் வெறுப்புக் ' கொள்ளும் நிலைமை இன்னும் தோன்றவில்லை. ஐரிசு மக்கள் சமாதானமாக வாழ்ந்தனர். அவர்களைப்பற்றி ஏனையோர் மறந்திருந்தனர். அமெரிக்

பொற்காலம்
கக் குடியேற்ற நாடுகள் தாய் நாட்டுடன் ஒற்றுமையாக இணைந் திருந்தன. அத்துடன் அவை பிற்றிடம் அன்பு வைத்திருந்தன. தங்களைக் கீழ்நிலைக்குக் கொண்டுவருவதற்குக் காரணமாயிருந்த வல்லாட்சித் தாபனங்களில் வெறுப்புற்றிருந்தவர்களும், பெருந் தன்மை நிறைந்தவர்களும், மெய்யுணர்வுள்ளவர்களுமான பிரான்சு மக்கள், இங்கிலாந்துக்கும், அதன் பெரும் பொதுமக்கள் சபைத் தலைவனுக்கும் எவ்வளவு அஞ்சினரோ, அவ்வளவு அந்நாட்டையும் அத்தலைவனையும் மதித்தனர். ஆங்கிலேய சாதியினர் பொற்காலத் தின் உச்சியில் இருந்தனர். இங்கிலாந்து இந்நிலையையடைவதற்கு, அதன் நற்பேறும் நெடுங்காலமாய் நடந்த நிகழ்ச்சிகளும் காரணமா யிருந்தன. ஆயினும் கடைசிக்காலத்தில், இடரிலிருந்தும், அவ மானத்திலிருந்தும் மூன்று வருடங்களிற் காப்பாற்றி உயர்நிலைக்குக் கொண்டுவந்த ஒருவனே இந்நிலைக்குக் காரணமாவான். ஆயினும், இன்னும் இருபது வருடங்களில் இரு துருவங்களிலும் எங்கள் செல் வாக்குத் திரும்பவும் குறையுமென்ற விதியிருந்தது. அவ்விதம் குறைவதற்கு, பாராட்டப்பட்ட எமது அரசியற் சட்டத்திலிருந்த குறைபாடுகளும், பாராட்டப்பட்ட இப்பெரியாரின் குறைபாடு
களும் பெருமளவிற்குக் காரணமாயிருந்து
அத்தியாயம் II
மூன்றம் யோச்சின் அரசாங்கம். அமெரிக்கப் பிரச்சின. முதலாம் பிரித் தானியப் பேரரசின் குலைவு. கட்சியும் மந்திரி சபையும் அரசாங்கத்தை மீண் டும் ஏற்படுத்தல். புதிய உவிக்குக் கட்சியும் புதிய தோரிக் கட்சியும். பேக் கும், பொக்சும், இளைய பிற்றும்.
மன்னன் : யோச்சு 111, 1760-1820.
1760 ஆம் ஆண்டில் மூன்ரும் யோச்சு அரசுகட்டிலேறுவதற்கு முன்னர் சுதுவட்டர் காலத்தில் அரசாங்கத்திற்கு இடையூருயிருந்த சட்டசபைக்கும் நிர்வாகத்தருக்குமிடையிலிருந்த பிணக்கு ஒரு புது வழியில் முற்முகத் தீர்க்கப்பட்டது. இதன்படி பிரதம மந்திரி யின் தலைமையில் பொறுப்புள்ளதும், ஒற்றுமையுள்ளதுமான ஒரு மந்திரிசபை யிருந்தது. இம்மந்திரிசபையிலுள்ள எல்லா மந்திரிமா ரும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தல் வேண்டும். ஆயினும் மந்திரிசபை, பொதுமக்கள்சபையிற் பெரும்பான்மையோரின் வாக் குக்களிலே தங்கியிருந்தது. 1689 ஆம் ஆண்டின் ஒழுங்கின்படி எதிர் வழியில் சாதித்ததிலும் பார்க்கப் பெருமளவிற்கு இவ் வொழுங்கு, சுதந்திர அரசாட்சியைச் சாத்தியமாக்கியது. அன்று
269

Page 148
270
1783-1801.
6-782.
மந்திரிசபை ஆட்சிமுறை
முதல், இம்முறை சுய ஆட்சியுள்ள ஆணிலப்பதமுடைய நாடுகளி லும், ஐரோப்பாவிலுள்ள் பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அரசியல் ஆட்சிமுறைமையின் வளர்ச்சிக்கு இதுவே இங்கி லாந்தின் முதன்ன்மயான சேவையாக விளங்குகின்றது.
இம்முறை, சாமதானகாலத்தில் உவால்போலின் கீழும், போர்க் காலத்தில் பெரிய பிற்றின் கீழும் நன்முறையிற் பயன்பட்டுள்ளது. புத்துயிர் கொடுக்கப்பட்ட தோரிக்கட்சியின் தலைவனன பெரிய பிற் றின் மகனுல் இவ்வரசாட்சி முறை மாறுதலில்லாத அமைப்பொன் றைப் பெற்றது. அவன்காலம் தொடக்கம் பின்னர் எப்பொழுதும் பிரித்தானியா இம்முறைமைப்படி ஆளப்பட்டிருக்கின்றது. ஆயினும் பெரிய பிற்றின் பெரிய மந்திரிசபைக்கும், அவன் மகனது மந் திரி சபைக்குமிடையிலுள்ள இருபது வருடகாலத்தில், பொறுப்பு வாய்ந்த மந்திரிசபையாலும், பிரதம மந்திரியாலும் நடத்தப்படும் ஆட்சி முற்முக அற்றுப்போகாவிடினும் குழப்ப நிலையிலிருந்தது. 1689 ஆம் ஆண்டுப் புரட்சி ஒழுங்கின்படி முடியிடம் விடப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதற்கும், பிரதம மந்திரியை மன்ன னின் விருப்பத்தை நிறைவேற்றும் உத்தியோகத்தனக்குவதற்கும், பெயரளவிலும் நடைமுறையிலும் மந்திரிசபையை “மன்னனின் ஊழியர்க ”ளாக்கி, மந்திரிசபையின் ஆதிக்கத்தைக் குறைப்பதற் கும், மூன்ரும் யோச்சு திறமையுடன் செய்த முயற்சியினலேயே, அரசியல் யாப்பு வரலாற்றின் வளர்ச்சியில் அந்தக் குழப்பநிலை ஏற் பட்டது. 1760 ஆம் ஆண்டிற்கு அடுத்த ஆண்டுகளில் தீவிரமான போராட்டங்களின் பின்னர் இவை யாவற்றையும் மன்னன் தற் காலிகமாகச் சாதித்து முடித்தான். அரசின் நியமனவுரிமைகளைத் தன் கையிற் பற்றிக்கொண்டு நியமனவுரிமையும் கைக்கூலி கொடுப் பதும் உவிக்குகளின் ஏகபோக உரிமையாவதற்கு இடங்கொடாது பொதுமக்கள் சபை அங்கத்தவருக்குத் தானே கைக்கூலி கொடுத்த படியால் இவ்விதம் அவன் வெற்றிபெற்றன்.
மந்திரிசபை ஆட்சிமுறை தனியாட்சியாயிராது குடியாட்சியாய் அக்காலத்திலிருந்திருந்தாலும், "முகாமையில்’ தங்கியிராது பொது மக்கள் அபிப்பிராயத்தில் தங்கியிருந்தாலும், மூன்ரும் யோச்சு வெற்றிபெற்றிருக்க மாட்டான் என்பது தெளிவாகின்றது. பதினெட்டாம் நூற்முண்டின் நடுப்பாகத்தில் நிலவிய பாராளு மன்றத்தினதும், மந்திரிசபையினதும் ஆட்சிமுறை, சிறந்த அரசி யற் சாதனமாயிருந்த போதிலும், அறவலிமையும், பொதுமக்களின்
ஆதசவு மில்லாததாகவிருந்தது. ஏழாண்டுப் போர் தொடங்கிய
காலத்தில் தீமையும் ஆபத்தும் ஏற்பட்டதும், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு உவிக்குச் சில்லோர் ஆட்சிக்குழு தலைசாய்த்து, நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பிற்றைப் பிரதம மந்திரியாகப்

கட்சிமுறை : வலியிழந்த தோரிகள்
பொறுப்பேற்க விட்டது உண்மையே. ஆயினும், பொதுமக்கள் சபையில் உள்ள அங்கத்தவருள் பெரும்பான்மையினர், தனிப்பட்ட ஒருவரின் விருப்பப்படி அங்கத்தவரைத் தெரிவுசெய்யும் “நியமன பரோக்களின் ' பிரதிநிதிகளாக இருந்தமையால் பொதுசன அபிப் பிராயத்தைப் பொதுமக்கள் சபையில் வற்புறுத்த முறையான வழி யிருக்கவில்லை. அத்துடன் அக்காலத்திலிருந்த விசித்திரமான அர சியற் சாதனத்தின்மீது பெரிய பிற்றுக்கு நேரடியான அதிகார மிருக்கவில்லை. முன்பு நகரமிருந்த இடத்தில் இப்போது செம்மறி யாடுகள் மேயும் வெறும் மேடொன்று மட்டுமே காணப்பட்ட பழைய சோத்திற்கு அவன் உறுப்பினணுயிருந்தபோதிலும், அவன் ஒரு பெரும் " பரோ வியாபாரி'யுமல்லன்; பரோ வியாபாரிகளின் நண்பனுமல்லன். அவன், அவர்களைக் குறைவாகக் கருதினன். அத்துடன் இறுமாப்புடன் உவிக்கு ஆட்சிக்குழுவினரை எள்ளி அவமதித்தான். அதற்குப் பதிலாக, அவர்களும் அவனுக்குப் பயந்து அவனை வெறுத்தார்கள். “பிரபுவே, அதிகம் பேசவேண் டாம், ஏனெனில், வெகுகாலத்திற்கு முன்பு தொடங்கியே உங்கள் வார்த்தைகளுக்கு நான் மதிப்புக்கொடுப்பதில்லை” என்று நியூகாசி அலுக்கே சொன்னன். இதனல், நாட்டிற்கு ஏற்பட்ட இடர் பிற்றின் வெற்றிகளால் தவிர்க்கப்பட்டபோது பிற்றுக்கும் உவிக்குப் பிரபுக் களுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஒழுங்கு நிலையான ஓர் அரசியல் முறை ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைய முடியாது போயிற்று. ۔
மன்னனையும், உவிக்குகளையும் அடக்கத்தக்க பலமுள்ள தோரிக் கட்சியில்லாததே மூன்ரும் யோச்சுக்கு, பாராளுமன்றத்தில் கைக் கூலி கொடுத்து மன்னனின் ஆதிக்கத்தைத் திரும்பவும் பெறுவதற்கு வாய்ப்பளித்த சந்தர்ப்பமாகும். பாராளுமன்றத்திற்குப் பொறுப் புள்ள மந்திரிசபைமுறை நன்முக இயங்குவதற்கு, ஒன்றையொன்று கண்டிப்பனவும், ஆட்சிக்கு ஒன்றைவிட்டு ஒன்றைத் தேர்ந்தெடுப் பதற்கு நாட்டிற்குச் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடிய முறையில் போட்டியிடுவனவுமாகிய இரு கட்சிகள் அவசியம் தேவை. உவிலி யத்தினதும் ஆணினதும் ஆட்சியில், உவிக்குகளும் தோரிகளும், அடிக்கடி தீவிரமான முறையில் கட்சி மனப்பான்மையுடன் போட்டி யிட்டபோதும், இச்சேவையை நன்கு ஆற்றியிருந்தனர். யக்கோ பிதம் நிலவியதனல், முதலாம் யோச்சினது ஆட்சிக்காலத்திலும், இரண்டாம் யோச்சினது ஆட்சிக்காலத்திலும் தோரிக்கட்சியின் உண்மையான எதிர்ப்பு இருக்கவில்லை. தனது சேர்மன் பாட்டன ருக்குப் பின்னர், “தான் பிரித்தானியன் என்பதிற் பெருமை அடை பவனும் ” பொதுமக்களால் விரும்பப்பட்டவனுமாகிய இளம் ஆங்கி லேயனுகிய “கமக்கார யோச்சு” அரசுகட்டிலேறியவுடன், 1745 ஆம்
27.1

Page 149
272
60-182.
763-1769.
175-782.
யோச்சு, சதாம், உவிக்குகள்
ஆண்டு எழுச்சிக்குப் பின்னர் அழியும் தறுவாயிலிருந்த யக்கோ பிதம் அழிந்தது. முந்திய யக்கோபினர்களும் கலாநிதி யோன்சன் போன்ற உயர் தோரிகளும், மரியாதைக்குரிய இவ்வரசனிடம் முழுமனத்துடன் விசுவாசஞ் செலுத்துவோராயினர். புரட்சி உடன் படிக்கையை ஏற்றுக்கொண்ட தோரிக் கட்சியின் புத்துயிர்ப்பு நெடுங்காலத்திற்கு முன்னரே நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஆயி னும், புது ஆட்சி தொடங்கி இருபது வருடங்களுக்குப் பின்னரே இளம் பிற்றின் மூலம் அது நிகழக் கூடியதாயிற்று.
இந்த இடைக்காலத்தில், மந்திரிசபையை அரசரின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக்கி, பாராளுமன்றத்தை அரசரின் வள்ளன்
மையால் உபகாரச் சம்பளம் பெறுபவர்களைக் கொண்டதாக்கி,
மூன்ரும் யோச்சு கட்சியில்லாமலே ஆட்சிசெய்தான். பொதுமக்கள் சபையில், “மன்னனின் நண்பர்கள் ' என இருந்தவர்கள், அவனு டைய கூலிக்காாராயினர். எவ்வளவு சிறப்பாகக் கருதினும் அவர் கள், மன்னனை வழிப்பட்டோராகக் கருதத்தக்கவரேயன்றி உண் மையான தோரிக் கட்சியைச் சேர்ந்தவராகக் கொள்ளத்தக்கவர்க ளல்லர். இதன் விளைவுகள் அரசியற் கட்சியெதையும் சாராத “நாட் ப்ெ பற்றுள்ள மன்னர்' ஆட்சி ஏற்பட்டதும் பொற்காலம் தோன் அறுமெனப் பொலிங்புறாக்கு உரைத்தமைக்கேற்ப எவ்வகையிலும் அமைந்திருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட உயர்ந்த இலட்சியம் உவிக்கு உயர்குடியினர் ஆட்சியில் சலிப்படைந்த பலரையும் அரசனையும், சதாம் போன்ருேரையும் கவர்ந்தது. ஆயினும், இந்தக் கொள்கையை நடைமுறையில் கையாண்டவுடன், அற ஆர்வமுள்ள அரசனுக்கு, நன்றியுடைய மக்களிடமிருந்து கிடைக்கவேண்டிய பாராட்டுதல்களுக்குப் பதிலாக ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக் குமிடையில் பெரும் பிணக்குகளே ஏற்பட்டன. மிடில்செட்சு வாக் காளர்கள் பாராளுமன்றத்துக்குத் தங்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் சபையை யும், ஆட்சிசெலுத்துபவர்களையும் எதிர்த்துப் பொதுமக்களின் உரி மைக்காகப் போராடும் விரனுகவும் பூசிக்கப்படும் தியாகியாகவும் கெட்ட பெயருள்ள உவிட்சுவை மதித்தமை, அக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாகும். வெளிநாடுகளில் ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து ஈட்டிய புகழும் பாராட்டுக்களும் முதலில்
பியூற்று என்பான் 1763 ஆம் ஆண்டில் பாரிசு சமாதானத்தைப்
பெறுவதற்கு உபயோகித்த முறைகளாலும், பின்னர் எங்கள் சொந் தக் குடியேற்ற நாடுகளுடன் தவமுன முறையில் நடத்திய சண் டையினலும் மறைந்தன. பேராசின் உள்நாட்டு நெருக்கடி உச்ச

சதாம் வேள் பிற்று இறுதி நாட்கள்
நிலையை யெய்தியபோது இங்கிலாந்துக்கு ஐரோப்பா பகையாகவே யிருந்தது. அங்கு நண்பர் எவரும் இலர். பெரும்பாலும் பகைவர் களே இருந்தனர்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புதுமன்னனின் ஆட்சியில் முத லிருபது வருடங்களிலும், நிலைமை சீரழிந்தமைக்கு மன்னனினதும் அவனுடைய எதிரிகளான உவிக்கு உயர்குடியினரினதும் தவறுதல் கள் மட்டுமே காரணமென்று சொல்லலாகாது. துக்கம் நிறைந்த இந்தக் காலத்தில் சதாத்தின் வேளாக மாறிய பிற்றும் இதற்கு ஒரளவிற்குப் பொறுப்பாளியாவன். பொதுமக்கள் சபையாற் போ திய அளவிற்குப் பிரதிபலிக்கப்படாத நாட்டின் அபிலாசைகளின் பிரதிநிதியாக இவன் விளங்கியபடியால், பாராளுமன்றத்தின் ஒழுங் கான ஆதரவு இவனுக்கு இருக்காவிடினும், அரசனுக்கும், உவிக்குக ளுக்குமிடையில் சமநிலை ஏற்படுத்தக்கூடியவனுக விளங்கினன். ஆனல் சதாம், தனது அரசியல் அனுதாபங்களைப் பொறுத்தவர்ை யில் பொதுமக்களால் விரும்பப்பட்டவனெனினும் உயர்குடி மக்களை விட அதிக இறுமாப்புடையவனுயிருந்தான். இவன் பெருந்தன்மை யுடனும் தாராளமனப்பான்மையுடனும் தன்னிச்சைப்படி நடப்பவ ஞயிருந்தனனேயொழிய மற்றவர்தம் கூட்டாளியாய் ஒருகாலமும் இருந்திலன். மத்தியட்சனுக நடுநிலைமை வகித்துச் சண்டைகளைத் தீர்க்கவேண்டியவனுயிருந்த இவன் தனது கோபக்குணமும், மற்ற வர்களை விளங்கிக்கொள்ளாமையுமான குறைகளின் காரணமாகக் குழப்பமான நிலைமையை மேலும் குழம்பச் செய்தான். இவனுல் யோச்சுடன் சேர்ந்து செயலாற்ற முடியவில்லை; உவிக்குகளுடன் சேர்ந்து செயலாற்றவும் முடியவில்லை. அவர்களுக்கிடையில் ஒரு ஒழுங்கையேற்படுத்தவும் முடியவில்லை. a
சடுதியாக, சதாத்தினிடம் திரும்பவும் அரசாங்கம் ஒப்படைக்கப் பட்டது. இம்முறை உண்ணுட்டுக் கோளாறுகளிலிருந்து இன்னு மொரு முறை நாட்டைக் காப்பாற்றுவதற்காகக் கட்சிப் பற்றற்ற" ஒரு மந்திரிசபையை அமைக்கும்படி இவன் அழைக்கப்பட்டான். ஆனல் அந்த நேரத்தில் இவனுடைய தேகபலமும், மனுேபலமும் நலிவுற்றிருந்தன. ஈற்றன் கல்லூரியில் படிக்கும் காலம் தொடக்கம் இவனை வருத்திவந்த கீல்வாதம் இப்போது மிக அதிகரித்து இனி மேல் அவனுல் அதனைத் தாங்கவியலாதென்ற நிலைமை ஏற்பட்டுவிட் டது. வருத்தமுற்ற சிங்கம் தனது குகைக்குள்ளிருக்கும்போது பயங்கரமானதாகவும் கிட்ட அணுகமுடியாததாகவுமிருப்பது போன்று மாதக்கணக்கில் ஆலோசித்துக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்திருந்தான்; செய்வதறியாது மனங்குழம்பியிருந்த தனது கூட்டாளிகளைப் பார்க்கவும் இவன் மறுத்தான். இவனுடைய
273
1766-1769.

Page 150
மூன்றம் யோச்சின் வெற்றி
தலைமை தவிர வேறு எதனுலும் ஒற்றுமைப்பட்டு இயங்கமுடியாத இவனுடைய மந்திரி சபை, நாட்டினதும் பேரரசினதும் இறுதி நம்பிக்கையைக்கூடக் கனவாங்கி, சீர்குலைந்து வீழ்ச்சியடைந்தது.
1770 ஆம் ஆண்டளவில், மூன்றும் யோச்சு தனது பகைவர்கள் எல்லோரையும்-' உவிக்குத் தொடர்புள்ளவர்களையும்’-தமக்கென ஒரு கொள்கையில்லாது, தனக்குச் சேவைபுரியத் தயாராக விருந்த இரண்டாந்தர அரசியல்வாதி தவிர்ந்த ஏனையோரைப்போல அவ EMIGðò ljud பெருவெறுப்புக்காளாகியிருந்த சதாத்தையும் வென்முன். தான் பாதுகாக்கத் தவறிய பேரரசைப் பேணிப் பெருப்பித்த ஒரு வருக்கு "இராசதுசோகத்தைப் பாப்புபவர்” என்பதே அவன் கொடுத்த பெயர். தன்னுடன் என்ன மனுேபாவத்துடனிருக்கிருர் கள் என்பதிலிருந்தே அரசியல்வாதிகளின் திறமையைக் கணித்த மூன்ரும் யோச்சுக்கு, மன்னனின் கொள்கையைக் கண்டிப்பது 'இராசதுரோகமாகத் ' தோற்றியது. சதாத்தின் அரசதுரோ கத்தினும் கூடிய துரோகத்திற்கும், பேரரசின் தொடர்பு பற்றிய மிகச் சிக்கலான பிரச்சினைக்கும் இடமாயிருந்த புதிய இங்கிலாந் தின் குடியேற்றக்காரசோடிருந்த தொடர்புகளில் இவன் இதைவிட அதிகப் பண்போடு நடந்து கொள்ளுவானெனத் தோன்றவில்லை.
ஏழாண்டுப்போரின் பலனுக வட அமெரிக்காக் கண்ட்த்திலிருந்து பிரான்சியக் கொடி மறைந்தமை முதற் பிரித்தானியப் பேரரசு குலை வதற்குக் காரணமாயிருந்தது. இதனல், ஆங்கில குடியேற்றக்காரர் கள் தாய்நாட்டிடம் பாதுகாப்பை எதிர்பார்க்கும்படி செய்த ஆபத் துக்கள் இல்லாமற் போயின. அதே நேரத்தில், சமீபத்தில் நடந்த போரின் செலவுகளும், பெரிய பிரித்தானியாவுக்கு அதனல் ஏற் பட்ட பெரிய கடன்சுமையும், நிலவரியும், அதன் கெட்ட காலத் திற்கு தாய்நாட்டுடனுள்ள தொடர்பினுல் ஏற்படும் இராணுவச் செலவில் ஒருபகுதியையாவது குடியேற்ற நாடுகளைக் கொண்டு கொடுப்பிக்கலாம் என்ற எண்ணத்தைப் பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு உண்டாக்கின. குடியேற்ற நாடுகளில் சட்டப்பத்திரங் களுக்கு யோச்சு சிறென்வில்லு விதித்த முத்திரைவரி மூலம் வருங் காலத்தில் அமெரிக்காவிலுள்ள மன்னனின் படைகளின் செலவு களுக்காகப் பணம் பெற முயற்சி செய்யப்பட்டது. இச்சட்டம்
1 778 ஆம் ஆண்டில் சதாத்தின் சடலத்திற்கு உவெசுத்துமினித்தர் அபேயில் நடந்தேறிய இறுதிச் சடங்குகள் * சொந்த அளவில் எனக்கு எதிராகச் செய்யப்பட்ட செய்கை ” என்று இவன் முறையிட்டான் ; தனது குடிகள், இறந்த வர் எழாண்டுப்போரில் வெற்றி ஈட்டியவரென நினைவுகூர்ந்தனரென்பதும் அவர் இறக்கும்போது சந்தோசமாகவோ மனத்தாபத்துடனே இறந்தாரென் ப்தில் அந்நேரத்தில் அவர்களுக்கு அக்கறையிருக்கவில்லை யென்பதும் அவ “னுடைய மனதிற் படவில்லை, . . . . . . و . . . .

அமெரிக்காவோடு பிணக்கு
1765 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட்து. ஆனல் அத்திலாந்திக், குச் சமுத்திரத்திற்கப்பால் இது எழுப்பிய தீவிர எதிர்ப்பின் காரண மாக உருெக்கிங்காமின் தலைமையில் உவிக்குகளினல் இது விலக்கப் பட்டது. 1767 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலே, தேயிலைக்கும் வேறு.
பொருள்களுக்கும் சாள்சு தவுன்செண்டினல் வரி விதிக்கப்பட்டது. குடியேற்ற நாடுகளில் வரி விதிப்பதை மிகவும் கடுமையாக எதிர்த்த ஆங்கில்ேயனுகிய சதாம் பெயரளவில் மாத்திரமே அக்காலத்தில் பிரதம மந்திரியாயிருந்தான். அவனைக் கீல்வாத நோயும், துக்கம் நிறைந்த ஆலோசனைகளும் அரசியலிற் பங்குபற்ற முடியாதவாறு செய்தன. தேயிலை வரியினல் வருவாய் மிகவும் சொற்பமாகவிருந்த போதும் கொள்கைக்காக மாத்திரம், அதிகம் மாற்றியமைத்த முறையில், அந்த வரிமட்டும் மூன்ரும் யோச்சின் கையாளான நோத்துப் பிரபுவால், தொடர்ந்து வசூலிக்கப்பட்டது. அவப் பேருக, எட்டாண்டு காலமாக, வரியைப்பற்றி நடந்த வாக்கு வாதம் குடியேற்றநாட்டு மக்களிடையே ஆத்திரத்தை யுண்டாக்கி யிருந்தபடியால் அந்தக் கொள்கையைத் தோல்வியடையச் செய்வ தற்கு எவ்வித கலகமும், தியாகமும் செய்வது தகுமெனக் கருதப்
பட்டது. " பிரதிநிதித்துவம் இல்லாது வரி விதிக்கமுடியாது’ என் பதே கூச்சலாயிருந்தது. அத்துடன் ஒவ்வொரு கமக்காானும், காடு வெட்டியும், தன்னை அமிடனுகவும் நோத்தை இசிருபோட்டு ஆகவும்
கருகினன்.
தங்களுக்குப் பெயரளவிலேகூடப் பிரதிநிகித்துவமில்லாத பாசா
ளுமன்றத்தால் வரி விதிக்கப்படுவதை-அது எவ்வளவு மிதமாகவும் நியாயமாகவுமிருந்தபோதிலும்-அமெரிக்கர்கள் எதிர்த்தமை இயற்
கையே. மசச்சூசெற்று, சுதுவட்டர் காலத்தில் சில தருணங்களில்
முடிக்குரிய விசுவாசத்தை அசட்டைசெய்ததுடன், மன்னருடன்
கலந்தாலோசிக்காது பிரான்சு தேசத்துடன் போரிட்ட போதும், அமெரிக்கர்கள் எப்பொழுதும், முடிக்குத் தங்கள் அளவுகடந்த விசு வாசத்தைக் காட்டினர்கள். ஆனல், உவெசுத்துமினித்தரிலே கூடும்
இரு சபைகளும், தமக்கென உள்ளூரிலமைந்த சட்டசபைகளைக் கொண்ட குடியேற்ற நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களை யும் வரிகளையும் நிறைவேற்றலாமென்ற கருத்தில், அமெரிக்கர்
ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதன்மையை ஒரு காலத்திலும்
ஒப்புக்கொள்ளவில்லை. வரலாற்றிலுள்ள பெரிய நெருக்கடிகளில் எங் கள் இனத்திற் பிளவை உண்டாக்கிய அரசியற் சட்டப் பிரச்சினை
275.

Page 151
276
பேரரசும் குடியேறுநரும்
களிற் பெரும்பாலானவை போன்று இந்தப் பிரச்சினை பற்றியும் இருசார்பிலும் சட்டமுறைப்படி விவாதிக்க முடியும். ஆனல் அர சியலின் சந்தர்ப்பவாதத்திற்கேற்ப, பிரித்தானிய பாராளுமன்றம் வரி விதிப்பதிலும்பார்க்க, பேரரசு நோக்கங்களுக்காகக் குடியேற் றக்காரரின் பிரதிநிதிகளே வரி விதித்தல் உகந்ததாயிருந்திருக்கும்."
அவப்பேருக, ஒரளவிற்குச் சிக்கனம் காரணமாகவும், ஓரளவிற் குப்பேரரசுத் தொடர்பில் அக்கறையின்மையாலும், வரி விதிப்ப தற்கு எதுவித நடவடிக்கையுமெடுக்கப்படவில்லை. பிரான்சினல் ஏற் படக்கூடிய இடர் நீங்கியவுடன், மத்திய மேற்கிலுள்ளவர்களுக்கு இக்காலத்தில் ஐக்கிய தேசசபை எவ்வாறு ஒரு தூரத்துப் பொரு ளாயிருக்கின்றதோ அவ்வாறே அலெகானியிலுள்ள காடு வெட்டுபவர் களுக்குப் பேரரசும் தூரத்திலிருக்கும் மானசீகப் பொருளாயிற்று. பேரரசை நன்கறிந்திருந்த கரையோரப் பகுதிகள்கூட எப்பொழு தும் பேரரசை அதிகம் விரும்பவில்லை. ஒன்றேடொன்று கலக்கக் கூடிய இயல்பில்லா நெய்யும் வின்னுரியும் போலக் குடிநாட்டுச் சமுதாயத்துடன் சேர்ந்து ஊடாடத் தகுதியற்றவர்களான பிரித்" தானிய மேல் வகுப்பினைச் சேர்ந்த தேசாதிபதிகளும், கேணல் களும், தலைவர்களுமே பேரரசின் பிரதிநிதிகளாயிருந்தனர். மேலும் அமெரிக்கர் மனத்தில் பேரரசானது, பொருமையுள்ள ஆங்கிலேய வியாபாரிகளின் நன்மைக்காகவோ, அல்லது இன்னும் அடிமை வியாபாரத்தின் அநீதி பற்றிக் கவலைப்படாத தாய்நாட்டின் அபி மானத்துக்குரிய குடியேற்றக்காரான, கரும்பும் புகையிலையும் உற் பத்தி செய்யும் மேற்கிந்தியரின் நன்மைக்காகவோ, தங்கள் சொந்த வியாபாரத்துக்கும் கைத்தொழிலுக்கும் கட்டுப்பாடு விதிக்குமொன் முகத் தோன்றியது.
1 அரசியற் சட்டத்தைப் பற்றிய இப்பிரச்சினை பற்றி சி. எச். மக்கில்வெயின் எழு திய " அமெரிக்கப் புரட்சி : அரசியற் சட்ட விளக்கம்” (பக்கம் 250) என்ற நூலை யும், அதனைக்கண்டித்து 1924 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்தில் * சரித்திரம்” (பக்கம் 250) என்ற சஞ்சிகையில் பேராசிரியர் பொலாட்டு எழுதியதனையும் வாசிக் கவும். 1688 ஆம் ஆண்டிற்கு முந்திய உதாரணங்களை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்கர், எல்லைகளுக்குட்பட்ட அதிகாரத்தையுடையதாகத் தாங்கள் ஒப்புக் கொண்ட முடிக்கும், உள்நாட்டுச் சட்டசபையென்று தாங்கள் கருதிய உவெசுத்து மினித்தரிலுள்ள பாராளுமன்றத்திற்கும் தெளிவான வித்தியாசம் காட்டினர் கள். “ பாராளுமன்றத்தில் முடியை" உயர்ந்த அதிகாரபீடமாகக் கருதிய ஆங்கி லேயருக்கு இவ்வித வித்தியாசம் காட்டுவது சாத்தியமாயிருக்கவில்லை.

சேய்நாட்டார் மனப்பாங்கு
சதாம், அல்லது கடினமான மனிதனுகிய உவிலியம் பிற்று போர்க்காலத்தில் அமெரிக்காவிற் போசசுத் தொடர்பை விரும்பத் தக்கதாகச் செய்தனர்; இத்தொடர்பைச் சமாதான காலத்திலும் நீடிக்கத் தக்கதாகச் செய்திருக்கக்கூடும். ஆனல் பேரரசின் அரசி யல் விவகாரங்களில் சதாத்தின் செல்வாக்குக்கு இடமில்லாமற் போய்விட்டது. தீமை வரப்போகின்றது என்று மூன்ரும் யோச்சை வீணே எச்சரித்ததும், தான் பட்ட பிரயாசைகளுக்கு 'இராசத் துரோக பிரசாரகன்' என்ற அவப்பெயரைப் பெற்றதுமே அவன்
செய்யக்கூடியவையாயிருந்தன.
கொள்கையளவில்-இங்கிலாந்தில் நிலவிய கொள்கையளவிலா வது பேரரசானது ஒன்றுசேர்ந்த ஒரு தனி அரசாகும். நடைமுறை யில், கூட்டாட்சி நிபந்தனைகளை வரையறை செய்து கொள்ளாதன
வும், எப்பொழுதும் அந்நிபந்தனைகளைப் பற்றித் தகராறுடையன
வாயுமுள்ள சுய ஆட்சிச் சமுதாயங்களின் கூட்டாட்சியாகவே இது விளங்கியது. இவ்வித நிலைமை இடர் நிறைந்திருந்தது; இந்நிலை மையும் அதனிலடங்கிய இடரும், கவனிக்கப்படாதபடியால் ஆபத்து இன்னும் அதிகமாயிருந்தது. மறைந்துபோன உவிக்கு ஆட்சிக்குழு வினருக்குக் குடியேற்றக் கொள்கை ஒன்று இருந்ததென்முே அன் நேல் பேரரசின் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவான எண்ணங்கள் இருந்தனவென்ருே சொல்லமுடியாது. பிற்றின் பெரிய மந்திரிசபை தோன்றி மறைந்துவிட்டது. இப்பொழுது, பேசாசின் நிதி சார்ந்த நெருக்கடியான தேவைகளைத் தீர்ப்பதற்காக, மூன்ரும் யோச்சின் மந்திரிமார், குறையுள்ளனவும், ஒருபக்கச் சார்புள்ளனவுமான வழி களைக் குறிப்பிட அவற்றை அமெரிக்கர் ஏற்கவுமில்லை; வேறு ஏற்ற வழிகளெவற்டிையும் தாங்கள் குறிப்பிடவுமில்லை. அன்றியும் இவ் விடரை நீக்கவல்ல வழிவகைகளைத் தேடுவதற்கு நல்லெண்ண மக் களைக் கொண்ட வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டி அதன் மூலம் வழிகண்டிருக்க முடியும். இந்த மாநாட்டில் வியாபாரக் கட் டுப்பாடுகளைக் கைவிடப் பிரித்தானியா முன் வந்திருக்கலாம் ; அமெ ரிக்கரும், தங்களுக்காகத் தாய்நாடு இராணுவத்திற்குச் செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியையாவது கொடுப்பதற்குத் தாங்கள் தயாரென்று தெரிவித்திருக்கலாம்.
277.

Page 152
37.8
13 நாடுகள்: ஒற்றுமையீனம்
ஆனல், இவ்விதமாநாடு பற்றிய எண்ணம் அக்காலத்தில் அத்தி லாந்திக்குச் சமுத்திரத்தின் இருபக்கங்களிலுமுள்ளவர்களுக்கு ஏற்படவில்லை. இங்கிலாந்தில் அச்சமயத்தில், பழைய முறையான "வணிகவியற்" கொள்கைகளும், தாய்நாட்டு வர்த்தகத்தைக் காப் பாற்றும் கொள்கைகளுமே ஆட்சி செலுத்தின. இங்கிலாந்து தனது குடியேற்றநாடுகளை முக்கியமாகத் தனது பொருள்களை விற்கும் சந் தைகளாகவும், அந்நாடுகளின் வியாபாரம் தாய்நாட்டின் பொருளா தாரத்திற்கு இசைவானதாயிருக்கும் அளவிற்கே அனுமதிக்கப்பட வேண்டுமென்றுங் கருதிற்று. பிரித்தானியக் குடியேற்றக் கொள் கையின் வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டதுபோல “1765 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நெருக்கடியைத் துரிதப்படுத்தின என்பது தெளிவு, ' ஆயினும், பெரிய பிரித்தா னியா, குடியேற்ற நாடுகளைப் பற்றிக் கொண்டிருந்த முழுமனப் பான்மையையும் மாற்றியிராவிடின், விரைவிலோ காலம் தாழ்த் தியோ அந்த நெருக்கடி நிச்சயம் ஏற்பட்டிருக்குமென்பதும்
2-2.
பேரரசின் செலவுகளுக்கு அமெரிக்கா தானகவே பணம் கொடுக் கக்கூடுமென்ற நம்பிக்கைக்கு இடமிருக்கவில்லை. பதின்மூன்று குடியேற்றநாடுகளும், தங்களுக்குள் பொருமைகொண்டனவாயும், மாகாண மனப்பான்மையுடையனவாயும் ஒவ்வொன்றும் மற்றதி லிருந்து அதிக தூரத்தாலும், இயற்கைத் தடைகளாலும், சமூக, பொருளாதார வேறுபாடுக்ளாலும் பிரிக்கப்பட்டனவாயுமிருந்தன. அவைகள், அல்டினியின் 1754 ஆம் ஆண்டிற், பெரிய நெருக்கடியான சமயத்தில், பிரான்சுக்கெதிராய்ப் போர் செய்வதற்குக்கூட ஒன்று சோத் தவறின. சமாதான காலத்தில், தாங்கள் அவசியமானதென்று கருதாத பேரரசுப் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தி ஒழுங்கு செய்வதற்கு ஒன்றுசேரக்கூடுமென்று எதிர்பார்த் தல் பொருந்தாது. -
இவ்வாருக, விடயங்கள் பேரிடரிற்கு இட்டுச் சென்றன. ஒருபக் கத்தில் தனது அரசனின் விருப்புக்கு மாமுக நடக்க விருப்பமில்லா தவனும், நல்ல குணமுடையவனுமான நோத்துப் பிரபுவுக்குக் கொள்கையை விதிக்கும் மூன்ரும் யோச்சு விட்டுக்கொடாத பிடி
3. எகேற்றன், "அமெரிக்கப் புரட்சி 4 ஆம் பக்கம். கட்டிலா வியாபாரத்தைப் Lჰfზეტყu கொள்கைகளே எடுத்துக் கூறுகின்ற அடம்சிமித்தின், “ நாடுகளின் செல்வம்” என்ற நூல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ச்ெய்யப்பட்ட 1776 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. a -

அமெரிக்க பருமாற்றவாதம்
வாத குணமுடையவனுயிருந்தான். மறுபக்கத்தில், அமெரிக்கரிடை யில், பிரிவினையே நல்லதென்று படிப்படியாகத் தீர்மானித்த சாமு வேல் அடம்சு என்பானைத் தலைவகைக் கொண்ட பருமாற்றவாதிக ளிருந்தனர்."
ஆங்கிலேயரும், அமெரிக்கரும் ஒருவரையொருவர் புரிந்து கொள் ளவியலாதிருந்தமைக்குரிய காரணங்கள் பலவாகவும் ஆழமானவை யாயுமிருந்தன: அவற்றுட் பல காலப்போக்கில் அகன்றுவிட்டன. எனினும் அக்காலத்திலிருந்ததிலும்பார்க்க, இக்காலத்தில் அவர்க ளுக்கிடையில் உள்ள இனவேறுபாடு மிகவும் அதிகம். அக்காலத்தி லும் ஆங்கிலேய சமுதாயம் உயர்குடிமக்களின் ஆதிக்கத்திலிருந் தது. ஆனல் அமெரிக்கச் சமுதாயம் குடியாட்சிச் சார்புடையதா யிருந்தது. இலண்டனுக்கும், பொசுதனுக்குமிடையில் பிரயாணம் செய்வதாயின் ஆறு அல்லது ஏழு கிழமைகள் சமுத்திரத்தில் கப்பலிலிருந்து துன்பப்படவேண்டும். இக்காரணத்தினுல் இரு சமூகத்தினருக்குமிடையில் தொடர்பு மிகவும் குறைவாயிருந்தது. அத்துடன் 1640 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பெருந்திரளாக இங்கி லாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று குடியேறுவதும் பெரி தும் குறந்துவிட்டது. இங்கிலாந்தில் அரசியலிலும், நல்லினமக்க ளிடையேயும் தூய்மைவாதிகளுக்கு இடமேயில்லாதிருக்கையில், புதிய இங்கிலாந்தில் தூய்மைவாதம் ஆதிக்கம் செலுத்தி மற்ற எல் லாக் குடியேற்றநாடுகளுக்கும் பரவியது ; ஆங்கிலித் திருச்சபை யைச் சேர்ந்திருப்பது மசச்சூசெற்றில் நாகரிகமற்றதாயிருந்
அமெரிக்க * தோரிகளை ” வென்று பிரித்தானியாகிடமிருந்து பிரிவுை ஏற்படுத்திய கட்சியின் மனேநிலையையும், திட்டத்தையும் “ பருமாற்றவாதம்” என்றே விவரிக்கவேண்டும். அமெரிக்கப் புரட்சிக்காரர் உவிக்குகளல்லர். ஏனெ னில், அவர் உயர்குடிகளைச் சேர்ந்தவர்களுமல்லர். மிதவாதிகளுமல்லர். அவர்கள் * தாராளரு” மல்லர். எனெனில் கடைசியாக நாட்டிலிருந்து கடத்திய தங்கள் எதிரிகளுக்கு கருத்துச் சுதந்திரமோ அல்லது பேச்சுச் சுதந்திரமோ கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. சொத்தைப் பிரித்துக்கொடுக்கும் திட்டம் அவர்களிடம் இராதபடியாலும், பொருளாதாரத்துறையில் தனியார் உரிமைகளைப் போற்று பவர்களாக அவர்கள் இருந்தபடியாலும் அவர்கள் " சோசலிற்று” அல்லது சமவுடைமைக் கொள்கை உள்ளவர்களுமல்லர். அவர்கள் மக்களிடமிருந்து நேரடியாகப் பெற்ற அதிகாரம் தவிர்ந்த வேறு எவ்வித அதிகாரத்துக்கும் சிறிதளவு மதிப்பும் கொடுக்காத சனநாயக மனப்பான்மையுடையவர்கள். அவர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்குச் சிறுபான்மையினரைக் கட்டுப்படுத்தி அரசியலில் வறிய மனிதனுக்கும் செல்வனுக்கும் " சமநில்ை pp ஏற்படுத்த விரும்பினர்கள். உண்மையில் ஆங்கிலேய அரசியற் சொல்லாட்சிப்படி அவர்களைப் " பருமாற்றவாதிகள் ” என்றே விவரிப்பது சிறந்தது.
279

Page 153
28G
1Ꮨ?8.
14.
பொசுத்தன் : பாராளுமன்றத்தின் தவறு
தது. ஆங்கிலேய சமுதாயம் பழமையுடையதாயும், அநேக ஒழுங்கு முறைகளைக் கொண்டதாயும், செயற்கையாயமைந்ததாயுமிருக்கை யில், அமெரிக்க சமுதாயம், புதியதாயும், எளிதாயும், இயல்பா யமைந்ததாயும் விளங்கியது. மக்களது செல்வநிலையில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வே ஆங்கிலேய சமுதாயத்தின் அடிப்படையிருக்கையில், இங்கிலாந்திலும் பார்க்க அமெரிக்காவில் சொத்துக்கள் சம அள விலே பங்கிடப்பட்டிருந்ததுடன், ஆற்றலுள்ள ஒவ்வொரு இளைஞ னும், ஒருகாலத்தில் தனது பட்டினத்தில் அதிக செல்வாக்குடைய வனுடைய நிலையைக் தானும் அடையலாமென்ற நம்பிக்கையுட னிருந்தான். இங்கிலாந்தில் அரசியல் அபிப்பிராயம் பெரும்பாலும் பெருஞ் செல்வரின் அபிப்பிராயமாயிருக்கையில் அமெரிக்காவிலே அரசியலபிப்பிராயம், கமக்காரரினதும், துறைமுகத் தொழிலிலீடுபடு பவர்களினதும், காட்டை வெட்டி நாட்டின் எல்லையைப் பெருப்பிப் பவர்களினதும் அபிப்பிராயமாக விளங்கியது.*
இவ்வாருக, சாதாரண வாழ்க்கையின் குழ்நிலையிலும், சந்தர்ப் பங்களிலும், பெரிய அளவில் வேறுபட்ட சமுதாயங்களில், அத்தி லாந்திக்குச் சமுத்திரத்தின் மறுகரையிலுள்ள சாதாரண மனித னுக்கு இப்பிரச்சினைகள் எவ்வாறு தோன்றின வென்பது பேக்கு, சதாம், பொக்சி போன்ற கற்பனைத் திறனுடையவர்களாலேயே உணரக்கூடியதாயிருந்தது. மூன்ரும் யோச்சு மனுேபலமும், விடா
முயற்சியும் செயற்றிறனுமுடையவனுயிருந்தான். ஆனல் அவனுக்
குக் கற்பணுசக்தி இருக்கவில்லை.
பொசுத்தன் துறைமுகத்தில் தேயிலைப் பெட்டிகள் பற்றிய விட யத்தில் ஏற்பட்ட அவமானத்திற்குப் பின்னர், இயற்கையாகவே மிகவும் ஆத்திரமூட்டப் பெற்ற ஆங்கில அரசாங்கம் ஆபத்தையுண் டாக்கும் பெரும்பிழையைச் செய்தது. பொசுத்தன் துறைமுகத்தை மூடும்படியும், மசச்சூசெற்றின் அரசியற் சாசனத்தை நீக்கும்படி யும் அரசியல் வழக்குகளில், அமெரிக்கரை இங்கிலாந்திலே விளங் கும்படியும் கட்டளை பிறப்பித்ததோடு மசச்சூசெற்றுக்கெதிரான தண்டனைச் சட்டங்களை அரசாங்கம் அவசரமாகப் பாராளுமன்றத் தில் நிறைவேற்றியது. இந்த நடவடிக்கைகள், மற்றக் குடியேற்ற நாடுகளை மசச்சூசெற்றுக்கு உதவிசெய்ய முன்வரும்படி செய்த துடன், அவைகளுட் பழைமையைப் பேண விரும்பும் சத்திகளையும் பருமாற்றவாதிகளுடன் சேர்ந்துகொள்ளச் செய்தன. இந்தத் தண் டனைச் சட்டங்களை நிறைவேற்றியது குடியேற்றநாடுகளுடன்
அமெரிக்க சமுதாயத்தைப் பற்றியும் எல்லைப்புறத்தவர்களின் செல்வாக் கைப் பற்றியும் முன்பு கூறிய குறிப்புக்களை மேலே 109, 110. பக்கங்களிற் பார்க்கவும்,

இலெச்சிந்தன் அரச பற்றுள்ளோர்"
28.
போர் தொடங்கியதற்கு ஒப்பாகும். போர் தொடங்குவதாயின் படம் VII
இந்தச் சட்டங்கள் எற்புடையனவாகும். அத்துடன், இந்த வடிக்கைகளைக் கையாளுவதாயின், போரில் வெற்றிபெறுவதை நிச் சயமாக்கும் ஆயத்தங்களுடனேயே இவை மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆயினும், அவ்வாண்டிலேயே, பிரித்தானிய அரசாங்கம், கடற்படையிலுள்ள வீரர்களின் தொகையைக் குறைத்ததுடன், அமெரிக்காவிலுள்ள தங்கள் படைகளைப் பலப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடைசியில் நிலைமை சீர்குலைந்து இலெச்சிந்தனில் சண்டை தொடங்கிய போது பொசுத்தனிலிருந்து பேர்கோயின் இவ்விதம் எழுதினன்.
கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாத்திரமன்றி, அவ்வித நடவடிக்கைகளுக்கு ஆயத்தங்கள் செய்வதிலும் ஆபத்துக்குக் காரணமான முறையில் காலதாமதஞ் செய்தபின்னர், “உறுாபிக் கனை” க் கடப்பது போன்ற தீர்ப்பான ஒரு நடவடிக்கையை மேற் கொண்டோம். இப்போது போரை நடத்துவதற்கு, வெடிமருந்து தவிர, கட்டாய தேவைக்குரிய வேறெந்தப் பொருட்களுமில்லாது ஒரு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளோமென்று உணருகின்ருேம்.
இலெச்சிந்தன் போருக்கு முந்திய பன்னிரு மாதங்களில் பிரித் தானிய ஆட்சியாளர்கள் புதிய இங்கிலாந்தைப் போருக்கு வலு வில் இழுத்தபின்னர், பொசுத்தனைக் கைப்பற்றி அங்கு படைகளைச் செயலின்றி வைத்திருப்பதுடன் திருத்தி அடைந்திருக்கையில், பொசுத்தனுக்கு வெளியில் பருமாற்றவாதக் கட்சி இந்தத் தரு ணத்தைப் புரட்சிக்காரரின் சக்தியைத் திரட்டுவதற்கும் தன் எதிரிகளைப் பயமுறுத்துவதற்கும் அல்லது வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தியது. முத்திரைச்சட்டம் முதன்முதலாக நிறைவேற் றப்பட்ட காலத்திலிருந்து, “சுதந்திரத்தின் மக்கள்" தங்களி டையே அபிப்பிராய ஒற்றுமை ஏற்படுத்துவதற்குத் தார்பூசுவது, செட்டைகள் குத்துவது போன்ற முறைகளையும் தாம் வாழ்ந்த விடங்களிலே நிலவிய ஏனைய முறைகளையும் பயன்படுத்தினர்கள். அவ்விதமிருந்தும், பதின்மூன்று குடியேற்ற நாடுகளில் பெரும்பா லானவற்றில், “அரசபற்றுள்ளோர்" பெருந்தொகையினராயிருந்த னர். பிரித்தானிய அரசாங்கம் போர் மூட்டுவதற்கு எடுத்த நட வடிக்கைகளை வெகு சிலரே, சரியென்று ஒப்புக் கொண்டார்கள். ஆனலும் அவர்கள் போாசைப் பிரிப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அத்துடன், தங்கள் சொந்த சமூக காரணங்களுக்காகவும், அரசியல் நியாயங்களுக்காகவும் அவர்கள் பருமாற்றவாதிகளின் ஆட்சி ஏற் படுவதை வெறுத்தார்கள். வியாபாரிகள், உத்தியோகத்தர், கரைப் பகுதிகளிலுள்ள பெரிய நிலக்கிழார் ஆகியோரே அரசபற்றுள்ளவர்
A5 - unitalias.
ar., 1775.

Page 154
282
யோச்சு உவாசிங்டன்
களுக்கு ஆதரவளித்தனர். அத்தோடு அரசபற்றுள்ளோர் புதிய இங்கிலாந்திலும் பார்க்க, நடுப்பகுதியிலும் தெற்குப் பகுதியிலு முள்ள குடியேற்ற நாடுகளில் அதிக ஆதரவைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு எதிராக, அனேக பகுதிகளிலுள்ள சிறுகமக்காசர், மேற்குப் பக்கத்திலுள்ள எல்லைப்புறத்தவர்கள், ஆர்வமுள்ளவர்க ளும் வியத்தகு வீரம் நிறைந்தவர்களுமான தலைவர்களின் கீழ் அணி வகுக்கப்பட்டிருந்தனர். அரசபற்றுள்ளோர் மெல்லெனவே இயங்கி னர். போரினும் பார்க்க இணக்கத்தையே அவர்கள் விரும்பினர். அத்துடன் வழிகாட்டக்கூடியவர்களும் அவர்கள் மத்தியிலே மிகச் சிலரே இருந்தனர். பல காலங்களிலும் அவர்களைப் புரட்சிக்கார ருடன் சேரும்படி செய்யத்தக்க அளவுக்கு வருத்தியவர்களும் தகாதமுறையில் நடத்தியவர்களும் அவர்களிடம் அக்கறை காட்டா தவர்களுமான பிரித்தானியர் மத்தியிலும் அவர்களுக்கு வழிகாட்டப் பலரிருக்கவில்லை.
இவ்விதமிருந்தும், சிறந்த போர்வீரனும் ஒழுங்குகள் செய்வதி அலும் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதிலும் சிறந்தவனுமான ஆற்றல்மிக்க் ஒரு அரசறிஞன் தலைமை தாங்காதிருந்தால் பருமாற்றவாதிகள் மூன்றும் யோச்சின் பயிற்சிபெற்ற போர் வீரரையும் தங்கள் மத்தியிலிருந்த அரசபற்றுள்ளவர்களையும் வென்றிருக்க முடியாது. யோச்சு உவாசிங்டன் குணத்திலும் மரபிலும் பருமாற்றவாதிகளை யன்றி அரசபற்றுள்ளோரையே ஒருவாறு சேர்ந்தவன். ஆயினும் அவன் சிறப்பாக வேசீனியாப் பெருமகனுகவே விளங்கியபோதிலும், அவன் அலெகானிக்கப்பால் இந்தியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கு மெகிராகப் போராடியவகைவும், இளம் அமெரிக்காவின் மனப் பான்மையைப் பிரதிபலிப்பவனுகவும் விளங்கினன். நல்ல வேசினிய கை இருந்தபோதிலும் அவன் தனது குடியேற்ற நாட்டில் மட்டுமே பெற்ற அனுபவமும் உணர்ச்சிகளுமுடைய குறுகிய மனப் பான்மையுடையவனல்லன். ‘அமெரிக்கக் கண்டம் முழுவதையும் பற் றிய' எண்ணம் அவனுக்கு இருந்தமையாற்ருன் தான் உருவாக்கிய நாட்டைத் தன் மனக்கண்ணிலே காணக்கூடியவனுன்ை. வியப்புறு முறையில் தனது நாடு மேற்குப் பக்கமாக எதிர்காலத்தில் முன்னே அறும் என்ற உண்மை நிலையையறிந்ததினலே, அமெரிக்காவின் சுதந் திரத்திற்குக் காரணமாயமைந்த போசொன்றில் யோச்சு உவாசிந் தன் ஈடுபடும்படியாயிற்று. இயற்கையுடன் போராடிப் பெற்ற, தச்சு வேலை அனுபவம், குறிவைத்துச் சுடும் ஆற்றல், துன்பத்தைத் தாங் கும் தன்மை, சக்தி, வீசம் முதலிய நற்குணங்கள் உள்ளவர்கள் அமெரிக்கச் சேனையிலிருந்தனர். ஆயினும் அவர்கள் தூய்மையாளர் தனிப்பட்டவர்களுக்குப் பயிற்றிய ஒழுக்கமும் உவாசிங்டன் சேனைக்கு விதித்த கட்டுப்பாடும் தவிர, ஒழுக்கக் கட்டுப்பாட்டில்

இங்கிலாந்திற் கருத்துவேற்றுமை
குறையுடையவர்களாயிருந்தனர். பிரதம தளபதியாகப் போர்க்
களத்திலிருந்து அமெரிக்கக் கண்டத்தின் திறமையற்ற காங்கிச
சோடு அவன் செய்த நெடுங்காலப் போராட்டமானது போருக்குள் ஒரு போர் போலிருந்தது. அவனுடைய நற்பேமுக பிரித்தானிய படைக்குச் சிறந்த ஆற்றல்களிலிருந்தும், அது போரில் மாத்திர மன்றி அரசியல் தந்திரப் போட்டியிலும் மேலும் மேலும் பிழையான வற்றையே செய்தது.
கடைசியாகப் போர் முடிந்தபோது, அங்கு இருநாடுகள் ஓங்கி நின்றனவெனினும் அது இரு நாடுகளுக்கிடையில் நடந்த போரா காது உள்நாட்டுப் போராகவேயிருந்தது. அது ஓர் உள்நாட்டுப் போராயிருந்தமையாலும் அதன் முடிவு வருங்காலத்தில் இங்கிலாந் தைப் பாராளுமன்றத்தின் மூலம் மன்னர் ஆட்சிபுரிவதா அல்லது மன்னர் மூலம் பாராளுமன்றம் ஆட்சி செய்வதா என்பதைத் தீர்மா னிக்கும் என்ற காரணத்தினுலும், அமெரிக்காவில் மாத்திரமன்றி
இங்கிலாந்திலும் அபிப்பிராயம் பிளவுபட்டிருந்தது. போராட்டம்
தொடங்கியவுடன் பிரித்தானிய மக்களுட் பெரும்பகுதியினர், குடி யேற்ற நாடுகளைத் திரும்பவும் வென்று கைப்பற்றலாம் என்ற நம் பிக்கையிருக்கும்வரை, தங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். ஆனல் சகோதரருக்கிடையில் நடந்த அப்போரில் அவர்கள் அதிக ஆர்வம் கரட்டாத காரணத்தினுல், படைகளுக்கு ஆட்களைச் சேர்ப் பது மிகவும் கடினமாயிருந்தது. அதனல், சம்பளத்திற்காகப் போர் புரியும் சேர்மானியர்களை அரசாங்கம் பயன்படுத்தியது. இச் சேர்மானியர் தங்கள் நடத்தைகளால் குடியேற்றக்காரருடைய கோபத்தை மேலுந் தூண்டினர். மேலும், இங்கிலாந்திலே சதாம், பேக்கு, இளம் சாள்சு, பொக்சு போன்ற ஆற்றல் மிக்கவர்களடங் கிய பலமுடைய சிறுபான்மையினரென்றுமிருந்தனர். இவர்கள் போர்க்கொள்கையை முற்ருகக் கண்டித்து, பேரரசின் ஐக்கியத் தைக் காப்பாற்றும் பொருட்டுக் காலம் தாழ்த்தாது இணக்கத்துக்கு வழி தேடும்படி தூண்டினர்.
முன் யோசனையின்றிப் போர் நடவடிக்கைகளைத் தொடக்கியது போலவே போரை நடத்திய முறையும் தவமுகவே யிருந்தது. பங்கர் குன்றில் நடந்த போரிலிருந்து தாய்நாட்டுப் படைவீரர் பிளன் மிே அலும், மின்டெனிலும் போர் செய்த வீரர்களுக்குச் சளைத்தவர்க ளல்லர் என்பது புலனுயிற்று. ஆனல் தளபதி பேர்கோயினும், தள பதி ஒளவும் இராணுவப் போர்முறையிலே செய்த தவறுகள் மிக வும் பாரதூரமானவை. அவர்கள் செய்த பிழைகளளவு பாரதூர idrar பிழைகளைத் தாய்நாட்டு அரசாங்கமும் செய்தது. கியூபெக் கைக் கைப்பற்றப் பிற்று திட்டம் வகுத்ததுபோல இங்கிலாந்தில்
283,
யூன், 1775,

Page 155
284
ஒற், 1777,
சறதோகா : பிரான்சியர் தலையீடு
யோச்சு யேர்மேன் பிரபுவும் திட்டம் வகுத்தான்; ஆனல் பலன்கள் வித்தியாசமாயிருந்தன. அவனுடைய திட்டம் அமெரிக்கருக்கு நாட் டின் உட்பகுதிகளில் சாதகமான நிலையை ஏற்படுத்தியது. அவன் புதிய இங்கிலாந்திற்கு மேலும் அமெரிக்க வீரர்களது உதவி கிடை யாது அதனைத் தனிப்படுத்தும் நோக்கத்துடன் பேர்கோயினைக் கட்சன் வழியாகக் கனடாவுக்குச் செல்லுமாறு அனுப்பினன், ஆனல் இவனை ஒள என்பான் தெற்கிலிருந்து சென்று சந்திப்பான் என்பகைத் திடப்படுத்தத் தவறிவிட்டான். இதன்பலனுக பிலெ டெல்பியாவில் ஒள என்பான் தயங்கிக்கொண்டிருக்கையில் சென் லோறன்சு ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள காடுகளில் பேர்கோயினும் அவனுடைய ஐயாயிரம் போர் வீரர்களும் திசை தெரியாது அலேந் தனர் ; ஈற்றில் அவர்கள் சறதோகாவில் அமெரிக்க வீரரிடம் சாண டைந்தனர்.
சறதோகாவுக்குப் பின்னர் பிரான்சிய வல்லாட்சியினர், புதிய உல கில் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உதவ முன்வந்தனர். குறிப்பி
டத்தக்க இத்தீர்மானம், பிரித்தானிய பேரரசைத் துண்டித்தது.
ஆயினும் பூபோன் வமிசத்தினரை மீண்டும் உலகத்தில் ஆதிக்க முள்ள வல்லரசாக்கும் நோக்கம் கைகூடவில்லை. புரட்சி பற்றிய எண் ணம் ஒருக்கால் அமெரிக்காவில் வெற்றிபெற்ருல் எதிர்பாராத முறை
யில் இலகுவில் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்து அது பர
வக்கூடுமெனத் தோன்றியதே கைகூடாமைக்குக் காரணம். இச்சம
யம் எதிர்பாராத முறையில், சிதைந்த பழைய பிரித்தானியப் பேசா
சிலிருந்து பிற்காலத்தில் விரைவில் வளர்ச்சியடைந்த இரு புது வல்
லரசுகள் தோன்றின. இன்னும் பூகோளத்தில் எங்கும் பரவுவதும்
இன்னும் கடற்பரப்பில் ஆட்சிபுரியவல்லதும் இன்னும் ஐரோப்பாக்
கண்டத்திலுள்ள வல்லரசுகள் யாவற்றுக்கும் எதிராகத் தலைதூக்கி
நிற்கவல்லதுமாய புதுப்பேரரசு ஒன்று. அத்திலாந்திக்குக் கரையோ
சத்தில் ஒன்றின்மீதொன்று பொருமைகொண்ட பதின்மூன்று குடி யேற்றநாடுகளுக்குப் பதிலாக, வருங்காலத்தில், அத்திலாந்திக்குத்
தொடக்கம் பசிபிக்குவரையும் பாந்து, பலகோடிமக்களைக் குடிகளா கப் பெறும் ஐக்கியப்பட்ட அமெரிக்க நாடு மற்றது.
அமெரிக்கா உருவாக்கப்பட்டது நல்லதே. பிரித்தானியாவுடன் நிகழ்ந்த போரின் மூலமே அது உருவாக்கப்பட்டமை துக்கத்துக் குரியது. ஒரு காலத்தில் ஏதோ ஒருவகையில் இப்பிரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததே. ஆயினும், பகையோடு பிரிந்ததும், அவ்விதம் பிரிந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா தனது வரலாற்றின் தொடக்கமா கக் கருதி அதனை நினைவில் வைத்திருப்பதும் நாம் இன்றும் வருந்து தற்குரிய விளைவுகளை ஏற்படச் செய்துள்ளன.

ஆங்கிலர் இழப்பு: அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அமெரிக்க விடுதலைப்போர், இறுதியில் உலகத்தின் அரைப்பாகத் திற்கு எதிரான போராய் மாறியது. முன்பு நடந்ததுபோல, பிரான்சு தேசமும் இசுப்பெயின் தேசமும் சேர்ந்து, பூபோன் 'குடும்ப உடன் படிக்கையின் காரணமாகப் பிரித்தானியாவுடன் தரையிலும் கட லிலும் போர் புரிந்தன. சபிறெனின் தலைமையில் பிரான்சுக் கப்பல் கள் இந்தியாவுடன் பிரித்தானியாவுக்கிருந்த போக்குவரத்துத் தொடர்புகளுக்குப் பெருந்தடைகளை உண்டுபண்ணின. கடல் இராணியான பிரித்தானியாவுக்கெதிராக, நடுநிலைமை வகிக்கும் நாடுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இரசியாவும், பிரசியா வும், ஒல்லாந்தும், கந்தினேனியன் நாடுகளும், கடற்படைகளையும் குழியல் திறனையும் ஒருங்கு பயன்படுத்தின. முதன்முறையாகவும் கடைசி முறையாகவும் அயலாந்தில் புரட்டெசுத்தாந்தரும் கத் தோலிக்கரும், தங்கள் பொது நலங்கள் இங்கிலாந்தின் நன்மைக் காகப் பலியிடப்படும் முறையைக் கவிழ்க்க ஒன்றுசேர்ந்தனர்.
பிரித்தானியாவிற் புத்தியற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட இடர் நிறைந்த நிலையிலிருந்து அந்நாட்டின் வீரர்கள்தான் நாட்டைக் காப்பாற்றினர்கள். அரசியல் தலைவர்களுள் காள்தன் கனடாவைக் காப்பாற்றினன், உவாறன் ஏசிங்கு இந்தியாவைக் காப்பாற்றினன். பிரான்சினதும், இசுப்பெயினினதும் படைகளுக்கெதிராகப் போர் புரிந்து சிபுரோத்தாை எலியொற்று காப்பாற்றினன்; அத்துடன் உமுெட்னியின் வெற்றி கடலின் ஆதிக்கத்தை டி கிருசிடமிருந்து மீட்க உதவியது.
ஐக்கிய அமெரிக்க நாடுகளாக உருப்பெற்ற பதின்மூன்று குடி யேற்ற நாடுகளையும் திரும்பவும் கைப்பற்றுவது ஒநபோதும் முடி யாததொன்முகிவிட்டது. அவ்விதம் திரும்பவும் இவைகளைப் பெற லாம் என்ற நம்பிக்கையை இழக்கமாலே சதாம் இறந்தான் ; ஆனல் மூன்று வருடங்களுக்குப் பின்னர் யோச்சு மன்னனின் எல்லாப் பிா சைகளும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். நெடுங்காலமாக நம்பிக்கையையும் ஆர்வத்தையுமிழந்திருந்த அவனுடைய மந்திரிகள் அவ்வேலையை மேலும் தொடர்ந்து செய்ய முடியாதென்று நேராக மறுப்பது தவிர வேறெதலுைம் மன்னனின் மனத்தைத் திருப்ப முடியாதிருந்தது. மந்திரிமாருக்காக வாக்களிப்பதற்குக் கைக்கூலி பெறும் பொதுமக்கள் சபையிலே பெரும்பான்மையினரிடம் தமக் கிருந்த செல்வாக்கையும் மந்திரிமார் இழந்துவிட்டார்கள். 1780 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதமளவிலேயே "முடியினது செல்வாக்கு அதி கரித்துவிட்டது; அதிகரித்துக் கொண்டிருக்கின்றது ; அதனைக் குறைக்கவேண்டும்” என்று இடன்னிங்கு கொண்டுவந்த தீர்மானம் பொது மக்கள் சபையில் 233 வாக்குகள் சார்பாகவும் 215 வாக்குகள்
285
1780.
182.

Page 156
286.
ஒற்.
78.
முடியின் தனிஆட்சி"யின் இறுதி
பாதகமாகவும் பெற்று நிறைவேற்றப்பட்டது. வாக்காளரின் உண்மை
யான அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்கும் மாகாணத்தவருள் அறுப தின்மர் இத்தீர்மானத்திற்குச் சார்பாகவும் எண்மர் மாத்திரம் பாதக மாகவும் வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோக்டவு: னில் உவாசிங்டனிடம் கோண்வாவிசு சரணடைந்தவுடன் அமெரிக் காவில் போர் உண்மையில் முடிவடைந்தது ; அத்துடன் இந்தப் போரைப் பற்றிய தகவல் இங்கிலாந்திற் பரவியதும், மன்னனே ஆட்சி முழுவதற்கும் பொறுப்பென்ற நிலைமையும் முடிவடைந்தது.
அமெரிக்காவில் தொடர்ந்து போர் புரிவதற்கு எதிராகக் காரசாா. மாக வரையப்பட்ட தீர்மானமொன்றைப் பொதுமக்கள் சபையா னது வாக்கெடுப்பில் பிரிவினையின்றியே ஏற்றுக்கொண்டது. 1782 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் நோத்துப் பிரபு பதவியிலிருந்து நீங்கிய நாளிலிருந்து மன்னனுக்குமட்டுமன்றிப் பொதுமக்கள் சபையின் சுதந்திரமான தீர்மானத்திற்கும் முக்கியமாகக் கட்டுப்பட்ட முதன் மந்திரியாலும், மந்திரிசபையாலுமே பிரித்தானிய ஆட்சி செய்யப் படுகின்றதேயொழிய வேறெவ்விதத்திலும் ஆட்சி செய்யப்படவில்லை. அமெரிக்காவில்ேற்பட்ட பேரிட்ரின் காரணமாக, முடி அரசியல் ஆதிக்கத்தைத் திரும்பவும் பெறுவதற்குச் செய்த முயற்சி முடி வடைந்தது. அவ்விதம் அந்நேரத்தில் நிகழ்ந்தது மிகவும் முதன்மை வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். மூன்ரும் யோச்சினதும் அவனுடைய பிள்ளைகளினதும் சொந்த ஆட்சிமுறை அடுத்த நூற்ருரண்டிலும் நீடித்திருந்திருந்தால், குடியாட்சிப்பாற்பட்ட இயக்கங்களும், சீர் திருந்த இயக்கங்களும், பழமையைப் பேணும் மன்னர் எதிர்ப்பினல், மன்னர் ஆட்சியை எதிர்ப்பனவாகவும் பெரும்பாலும் குடியரசு முறையை ஆதரிப்பனவாகவும் அமைந்திருக்கும்.
பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் பூரணமாக ஏற்பட்டதும் அதனுடன் தொடர்புள்ள கட்சி ஆட்சிமுறையும், திரும்பவும் ஏற்பட் டது. பொலிங்புருேக்கின் கருத்திற்கிணங்க மூன்ரும் யோச்சு கட்சி யாட்சியை ஒழிக்க முயன்றன். ஆனல் அமெரிக்காவை இழக்க நேரிட்டதோடு இவனுடைய செயல்களின் விளைவாக புதிய உவிக்குக் கட்சியும், புதிய தோரிக்கட்சியும் தோற்றின; பொதுமக்களிடையே அரசியலில் அக்கறை ஏற்பட்டது; இது ஐம்பது ஆண்டுகளுக்குப் பாராளுமன்றச் சீர்திருத்தம் ஏற்படுத்துவதற்குத் தவறியபோதிலும் உருெக்கிங்காம் பிரபுவினதும், பேக்கினதும் பொக்கினதும் தலை மையிலுள்ள உவிக்குக்கட்சிக்கும் இளைய பிற்றினல் உருவாக்கப் பட்ட தோரிக் கட்சிக்கும் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அடிமை வியாபாரத்திற்கும் எதிராக, உவில்பபோசு செய்த தீவிர போராட்டத்திற்கு உதவிபுரிந்தது.

உருெக்கிங்காம் உலிக்குகள் : பேக்கு
நோத்து வீழ்ச்சி அடைந்தவுடன், மன்னனுக்கு வெளிப்படையா 1782.
கவே பகைமை காட்டிய உருெக்கிங்காம் தலைமையிலிருந்த உவிக்கு க்ள் சில மாதங்களுக்கு மந்திரிகளாயிருந்தனர். அவர்கள் இக்காலத் திலும் உயர்குடியினரின் தலைமையிலிருந்தபோதிலும், முதலாவதாக
பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தியபடியாலும்,
பாராளுமன்றத்திலிருந்த ஊழல்களைக் குறைக்க அவர்கள் பெரிதும் உறுதி பூண்டிருந்தமையாலும், அவர்கள் நியூகாசிலின் கொரேமான ஆட்சிக் குழுவினர் போலிருக்கவில்லை. நெடுங்காலமாக அவர்கள் அனுபவித்த அன்பங்கள் அவர்களுக்கு நல்ல புத்தி புகட்டியிருந்தன. அன்றியும் எற்மண்டு பேக்கினிடமிருந்தும் நல்லறிவு பெற்றிருந்தார் கள். அவனுடைய, ஐரிசியருக்கு உரித்தானதும், விசாரென்று சொல் லக்கூடிய அளவுக்குள்ளதுமான முற்கோபத்தின் காரணத்தால் அவ னுடைய வாழ்க்கையின் எக்கட்டத்திலும், உவிக்காக இருந்த காலத்திலும், யக்கோபினரை எதிர்த்த காலத்திலும், இந்தியாவிற் சீர்திருத்தம் கோரி நின்ற நேரத்திலும், தனது வாழ்க்கையின் ஒவ்
வொரு கட்டத்திலும் ஒரு பிரச்சினையின் ஒரு அம்சத்தை மட்டுமே
யன்றிப் பிரச்சினை முழுவதையுமே அவன் கருத்திற் கொள்ள முடி யாதவனுனமையாலும், தனது கொள்கைகளைச் சிறந்த பேச்சுவன் மையாலேயே பரப்பியதாலும் அவனுடைய ஆழ்ந்ததும் புத்திக் கூர்மை நிறைந்ததுமான அரசியல் உள்நோக்கம் அதிகம் சத்தி வாய்ந்ததாகவும், ஆனல் நம்பத்தகாததாகவு மிருந்தது. 1782 ஆம் ஆண்டில் அவனுடைய அரசியற் பெருந்துணைவர் உருெக்கிங்காம் பிரபு பதவியேற்றபொழுது அவனுடைய அரசியற் கொள்கை, அப் பொழுதும் தாராளக்கட்சிக் கொள்கையை ஆதரிக்கும் முதற்கட்டத் லேயே இருந்தது. அந்தக் கோடைகாலத்தில் உருெக்கிங்காமினது குறுகிய கால மந்திரிசபை, பேக்கினது பொருளியற் சீர்திருத்த முறியை நிறைவேற்றி, அரசாங்கம் தனது ஆதரவாளருக்கு வேலை செய்யாது பணம் பெறும் உத்தியோகங்களையும் பதவிகளையும் கொடுப்பதைப் பெரிதும் குறைத்து, உவால்போலும், நியூகாசிலும், மூன்ரும் யோச்சும் முன்பு செய்ததுபோல வருங்காலத்தில் எவரும் பாராளுமன்றம் முழுவதையும் இலஞ்சம் கொடுத்துத் தம் பக்கம் சேர்க்க முடியாதவண்ணம் செய்தபடியால், எங்களுடைய பொது வாழ்வில் பெரும் நன்மையை ஏற்படுத்தியது. இதனல் அசைவாசி ஊழல்கள் நீங்கின.
உருெக்கிங்காம் இறந்ததும், உவிக்குகள் செல்பேண் பிரபு காரண மாகத் தங்களுக்கிடையில் சச்சரவு செய்தபோது பொக்சு நெடுங் காலமாகக் கடுமையாகத் தான் கண்டித்த நோத்துப் பிரபுவுடன்
ஒன்று சேர்ந்து, நாட்டிலுள்ளவர்கள் அவமதிக்கத்தக்க விதத்தில்
287

Page 157
288
1782-1783.
1783-1793.
இளம் பிற்று : தோரிகள் மறுமலர்ச்சி
முறைதவறி நடந்தான். மன்னன் செய்த செயல்களினுல் பொக்சு - நோத்து மந்திரிசபை வீழ்ச்சியடைய, புத்துயிர் பெற்ற தோரிக்கட் சியின் தலைவனுக இளம் பிற்று பதவியேற்முன். மன்னனுடைய ஆட் சியையும், அமெரிக்கக் கொள்கையையும் அவன் முன்னர் எதிர்த்தவ ஞயினும், தனது நிபந்தனைகளுக்கு அமைய முடியுடன் சேர்ந்து ஒப்பந்தம் செய்யத் தயாராயிருந்தான். வருங்காலத்தில் தனித்து ஆட்சி செய்ய முடியாதிருந்தமையால் யோச்சு உவிக்குகளின் ஆத ாவைவிட பிற்றின் ஆதரவையே பெரிதும் நாடினன்.
பிரான்சியப் புரட்சிப் போர்கள் நாட்டுப் பிரச்சினைகளைக் குழப்ப முறச் செய்யுமுன்னர் பிற்றினுடைய மந்திரிசபை அதன் முதற் பத் தாண்டுகளிலும் உவால்போலின் மந்திரிசபை போன்று அறிவாற்ற விற் குறைவுபடாதும், ஊக்கத்தில் அதனினும் கூடியதாகவும், சமா தானத்தை நிலைநாட்டுவதிலும் சீர்திருத்தங்களைச் செய்வதிலும் ஈடு படுவதாகவும் விளங்கியது. பிற்று, நாட்டின் பொருளாதார நிலை யைத் திருத்தியமைத்து, தேசத்தின் புகழை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மீண்டும் நிலைநாட்டி, சீரழிந்த பழைய பேரரசின்மீது புதிய பிரித்தானிய பேரரசை அமைக்கத் தொடங்கி, கனடாவின தும் இந்தியாவினதும் அரசாங்கத்தைக் காலத்திற்கேற்றவாறு திருத்தியமைத்து உறுதிப்படுத்தினன். உவால்போலைப் பின்பற்றி அரசின் பிரதம மந்திரி, மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாய் மாத்திரம் விளங்காது நாட்டை உண்மையில் ஆட்சி புரி பவனுகவும் அதிகாரமுடையவனுகவும் விளங்கச் செய்தான். சுதந்திர வியல்புடைய பொதுமக்கள் சபையொன்றில் தங்கியிருக்கும் பொறுப் புள்ள ஒரு ஐக்கிய குழுவே மந்திரிசபை என்ற மந்திரிசபை பற்றிய பிரித்தானிய கருத்தை இறுதியாய் அவன் நிலைநிறுத்தினன். கட்சி (முறையைத் திரும்பவும் நிலைநிறுத்துவதற்கு அவனுக்கு முன்னர் பதவியிலிருந்த உருெக்கிங்காமும் உவிக்குகளும் தொடங்கிய முயற் சியை நன்முறையில் அவன் நிறைவேற்றினன். அவனுடைய தலைமை யில் புத்துயிர்பெற்ற தோரிக்கட்சி, “மன்னனின் நண்பர்களுக்கு" இடப்பட்ட வேருெரு பெயரே என்ற நிலைமை மாறி ஒரு தனிப்பட்ட பாராளுமன்றக் கட்சியாகித் தனது சொந்தப் பாழ்பரோக்களையுடை யதும் தேர்தல் செலவுக்குச் சொந்தப் பணமுடையதும், சமூகத்தில் பெருவகுப்பினரிடையே பெரும் ஆதரவைப் பெற்றதுமாக விளங்கி யது. அக்கட்சியின் அங்கத்தவர்களும் அவர்தம் உள்ளமும், திருச் சபையையும் பெருஞ் செல்வர்களையும் நாடி நின்றபோதிலும், சாள்சு
* கனடாவைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் கீழே 339-345 பக்கங்களிற் பார்க்கவும்.

பிற்றும் தோரிக்கட்சியும்
மொன்றேக்கும், உவால்போலும் முன்னர் பெற்றது போல, ஆனல் கோரித் தலைவரொருவரும் முன்னெரு காலத்திலும் பெருத அள வில், வணிக இன மக்களின் நம்பிக்கையை அக்கட்சியின் இளம் தலைவன் ஈட்டினன். புறூக்கில் சிறிதளவில் மட்டுமே கற்பிக்கப்பட்ட அரசியலையும் பொருளியலையும் பொக்சுக் காலத்து உவிக்குகளைப் போன்று பிற்று நன்கு அறிந்திருந்தான். அவன் சிறுவனுயிருந்த பொழுது கேம்பிரிட்சுச் சர்வகலாசாலையில் பெம்புமுேக்குக் கல்லூரி யில் கற்கும் காலத்தில் அடம் சிமிதின் “நாடுகளின் செல்வம்' என்ற நூல் முதல் வெளிவந்தபோது மணித்தியாலக் கணக்கில் அதனை வாசித்திருந்தான். சிலவாண்டுகளுக்குப் பின்னர் செல்பே ணின் புத்திமதியுடன் புதிய கோட்பாடுகளைத் திறைசேரியில் நடை முறைக்குக் கொண்டுவந்தான். தனது தந்தையாரைப்போல அவனும் நகரமண்டபத்தில் நகரப் பெரியார்களுடன் நன்கு பழகி னன். நகரத்தவர்களும் தந்தையை நம்பி அன்பு செலுத்திய போல மகனையும் நம்பி அன்பு செலுத்தினர்கள்.
பிற்றின் சொந்தச் செல்வாக்கின் உயர்வினல், புத்துயிர் பெற்ற தோரிக்கட்சி ஒரு சிறிது காலத்திற்கு முன்னேற்றத்திற்குரிய கருவியாக அமைந்தது. உவிக்குகள் செய்திருக்கக்கூடிய காரியங் களைத் தானே செய்வதன் மூலம் தாராள நடவடிக்கைகளைக்கூட பேக்கும் பொக்சும் எதிர்க்கும்படியான ஒரு நிலைமையை உருவாக்கி னன். நாட்டின் பழைமை பேணும் பெரிய சத்திகளை உள்ளடக்கிய கட்சியின் தலைவர் மாற்றங்களைப் பெரிதும் நாடும் பாதைவழியே வரையறையின்றிச் செல்லவிடாது தடுக்கப்படுவது இயற்கையே. அமெரிக்கப் போரினல் ஏற்பட்ட பேரிடர்கள் காரணமாக நாட்டி லெழுந்த இயக்கத்திற்கு இணங்கிய பிற்று பாராளுமன்றச் 9颅 திருத்தத்தைச் சிறிய அளவிலே செய்யத் தொடங்கியபோது அவன் வழிப்பட்டோரே அதனை விரும்பவில்லை. பொருளியற் சீர்திருத்த முறியினல் பேக்கு பாராளுமன்றத்தில் இலஞ்ச ஊழலை அகற்றிவிட் டான். ஆனல் அவனயினும் அவனுடைய எதிரிகளான தோரிகளா யினும், பாழ்பரோக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் அதனைச் செய்ய விரும்பவில்லை. இந்த ஊழல் இன்னும் பலகாலம் நிலைக்க இடமிருந்தது. ஏனெனில், பிரான்சியப் புரட்சியுடனும், அதனைத் தொடர்ந்த போர்களுடனும், இங்கிலாந்தில் எல்லா அரசி யல் மாற்றங்களுக்கும், முப்பது வருட காலத்திற்குத் தடையேற் பட்டது. அவ்வருடங்கள் மேன்மையானவையாயிருந்தபோதும் துன்பம் நிறைந்தவையே. தனது மந்திரிசபையின் முதற் பத்தாண் க்ெ காலத்தில் பிற்று செய்த சேவைகளினலேயே அவ்வருடங்களில் நாம் தப்பிப் பிழைக்கக் கூடியதாயிற்று.
1785.
289

Page 158
290
1793-80.
பிற்று அவன் குறைநிறைகள்
யக்கோபினிசத்தையும், அதன் கடற்படைகளையும் தரைப்படை
களையும் எதிர்த்து நிற்கும் போர் மந்திரி பிற்று, அமெரிக்கப் போரின் பின்னர் நிலைகுலைந்திருந்து முற்முக அழியாது தன்னுற் காப்பாற்றப்பட்டுப் பின் ஆற்றலுடன் விளங்கும்படி செய்யப் பட்ட இங்கிலாந்தின் பொதுமக்களின் ஊக்கத்திலும் நம்பிக்கை யிலும் மாத்திரம் தங்காது, அரசியலில் எந்தச் சுயநலச் சத்தி களைத் திருத்தவும் அகற்றவும் அவன் இதுவரை காலமும் அதிக வெற்றியின்றி முயன்ருனே அதே சத்திகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. பிறநாட்டவர் தனது நாட்டைத் தோற் கடித்து அடிமைப்படுத்தாது தடுப்பதற்குப் போர் புரியும் ஒரு வன், தன் நாட்டைப் பாதுகாப்பதற்குச் சில சத்திகளை நம்பி யிருக்கும் நிலைமை ஏற்பட்டால் அச்சத்திகளிற் குறைகாண முடி யாதவனுகின்முன்; தான் வேலைசெய்யும்போது பயன்படுத்தும் பொருட்களுக்கு அவன் கட்டுப்படுகின்றன். தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் தொழிற் புரட்சியின் ச்மூக பொருளாதார அம் சங்களையும் இக்கால அரசியல் மனப்பாங்கு பாகித்திராவிடின் நெப்போலிய போர்க் காலத்தில் பழமை பேணும் தீவிர சத்தி களடைந்த வெற்றியினுல் ஒருவேளை நிரந்தரமான தீமையெதுவு மேற்படாமல் இருந்திருக்கலாம்.
அத்தியாயம் IV
தோரிக்கட்சிச் சில்லோராட்சியும் குடியாட்சி இயக்கத்தின் தொடக்கங்களும் ; தொம்பெயினும் யக்கோபினருக் கெதிரான செயல்களும், பேக்கு, பொக்சு என்போரும் உவிக்குக் கட்சிப் பிளவும்.
முடிக்குரிய அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான மூன் மும் யோச்சின் முயற்சி தோல்வியடைந்ததும், உயர்குடியினரைக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி கிரும்பவும் முற்முக நிலைபெறுவ தாயிற்று. உவால்போல்-நியூகாசில் காலத்து முன்னைய உலிக்குக் கட்சிச் சில்லோராட்சி நன்கு நிலைபெற்றிருந்தாற்போன்று இப் பொழுது இளைய பிற்று அவர்களின் அறிவுமிக்க அரசியல் ஆற்ற லால் தோரிக்கட்சிச் சில்லோராட்சி நன்கு நிலைபெறுவதாயிற்று. அரசாங்கம் அரசவையின் தயவில் தங்கியிருக்காது மீண்டும் பாரா ளுமன்றச் சபைகளின் நற்றிர்ப்பிலே தங்கியிருப்பதாயிற்று. வெளி யேயுள்ள பொதுமக்களின் அபிப்பிராயம் முற்முகப் புறக்கணிக்கப் படாவிடினும், இரண்டாவது படியாகவே கொள்ளப்பட்டது. உவால்போல், இளையபிற்று ஆகிய இருவரும், பெருமகார்களால் ஆதரிக்கப்பட்டாரேனும், உண்மையில் அவர்கள் பொதுமக்கள் சபையின் ஆட்களேயாவர். அவர்களதிகாரம் பிரபுக்கள் சபையி
லதிகந் தங்கியிராது பாழ்பரோப் பிரதிநிதித்துவ முறையிலேயே

உவிக்குகளும் தோரிகளும் : சில்லோராட்சி
பெரிதும் தங்கியிருந்தது. முக்கியமாக, பாழ்பரோக்களையுடை யார்க்கு அவர்களின் ஆதரவைக் கீழ்ச்சபையிற் பெறும் பொருட்டு, அநேக புதிய பெருமகார் ’ப் பதவிகளைப் புதிதாக ஆக்கியளித் திருந்தாணுகையால், பெருமகார் கெளரவம் இப்போது மிக வும் தாழ்ந்திருந்தது. பேக்கின் பொருளாதாரச் சீர்திருத்த முறை காரணமாக, ஊழல்களுக்கான வழிவகைகள் நியூகாசில் அல்லது நோத்து ஆகியோரின் கீழ் இருந்ததைப் பார்க்கிலும் இளைய பிற்றின்கீழ் குறைவாகவும் கொடுமை குறைந்தனவாகவும்
இருந்தனவேனும், ஊதியந்தரு பட்டங்களும் ஒய்வுகாலப் பணமும்
அளிப்பதில் தகர்ச் செயல்கள் மலிந்திருந்தன.
அரசியற் கட்சிப் பெயரில் மாற்றமிருப்பினும் பண்டைய உலிக் குக் கட்சியினரதும் புதிய தோரிக் கட்சியினரதும் சில்லோராட்சி கள் தம்முட் பெரிதும் ஒத்தனவாகவே இருந்தன. அதிகாரத்தில் நிலச் சொந்தக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கிருந்த முழு வுரிமை முன்போலவே இருந்து வந்தது. புதிய தோரியினர் கொண் டிருந்த அரசியல், சமய முறைகள் உவால்போலின் ஞானத் தினுலும் பிற்றின் தந்தையாரின் ஊக்கத்தினுலும் காப்பாற்றப்பட் டவையான பழைய அனேவரியன் முறைகளே யன்றி வேறெ வையுமல்ல. ஆனல் மாற்ற மொன்றேற்பட்டது. அம்மாற்றம் உண்மையில் நோக்கத்திலன்று; நோக்கத்தை வற்புறுத்திய முறை யிலேயேயாகும். ஏனெனில், அரசியலமைப்பு யக்கோபைற்றுக ளாலல்லாமல் யக்கோபினராலேயே (பொல்லாச் சூழ்ச்சிக்காரர்) எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டமையால் என்க. உவிக்குக் கட்சிச் சில்லோராட்சியாளர் சுதுவட்டு ஆதரவாளர் நடவடிக்கைகளுக்கு எதிராக அப்போதிருந்த முறையையே போற்றி வந்துள்ளனர். சுதுவட்டர்களுடைய முயற்சிகளைப் பிரான்சிய பூபோன் வல் லாட்சி ஆதரித்தது. தோரிச் சில்லோராட்சியாளரும் அப்போ திருந்த முறையையே உள்நாட்டில் ஒரு புதிய குடியாட்சி இயக்கத்துக் கெதிராகவும், வெளியே ஆயுதந்தாங்கிய பிரான் சியப் புரட்சிக்கெதிராகவும் பேணிவந்துள்ளனர். இத்தகைய மாற்றமடைந்துள்ள நிலைமையிலே, உவிக்குக் கட்சியிலிருந்து தோரிக் கட்சிக்குப் பேக்கு மாறியமை, புதிய குடியாட்சியோடு அடி யோடு தொடர்பில்லாத துறைக்கு “உலிக்குத் ' தொடர்புடை யாரை அழைத்துச் செல்லும் நோக்குடன் பொக்சு மறுதிசையில் மாற மனங் கொண்டதிலும் பார்க்க ஆச்சரியப்படக்கூடிய ‘கொள்கை மாற்றம்' அன்று. w
யக்கோபினருக்கு விரோதமான மனேநிலையிலே, பிற்காலத் தில் பேக்கு கூறிய போதனைகளை உளங்கொண்ட தோரிக் கட்சியி
மேலே 287ம் பக்கம் பார்க்கவும்.
1291

Page 159
292
உரோமன் கத்தோலிக்கர் உரிமைக் கோரிக்கை
னர், ஆங்கிலப் புரட்சி இணக்கத்துக்குத் தாமே உண்மையான உரித் துடையவரென்றும் பிரான்சியப் புரட்சியின் பொய்யொளியினின் அறும் அதைக் காப்பவர் தாமே என்றும் தம்மைப் புகழக் கற்றுக் கொண்டனர். யக்கோபினரின் நேரடி நடவடிக்கைக்கும் நெப்போ லியனின் மக்கள் விரும்பும் தனியாட்சிக்கும் மாமுகத் தோரிக் கொள்கை பாராளுமன்ற ஆட்சியை ஆதரிப்பதாயிற்று. அங்ங்ன மான உறுதியைத் தோரிகள் கொண்டிருந்தமை உலக அரசியல் வளர்ச்சிக்கே செய்யப்பட்டவொரு பெரும் பணியாயிற்றென் பது நீண்ட காலப் போர்கள் முடிந்தபின்னர் தோரிக் கொள் கைக்குக் கனிங்கு கொடுத்த விளக்கமும் ஐரோப்பிய விடுதலையும் சிலகாலம் ஒரே கருத்தையே குறித்தன என்பதிலிருந்து நன்கு புலப்பட்டது. தோரிகளே போற்றிப் புகழ்ந்த இந்தப் பாராளு மன்ற யாப்புமுறைவாதம் அவர்களின் சொந்த வரைவிலக்கணத் தின்படி பிரதிநிதித்துவ முறையானதுமன்று மக்களாட்சி முறை யானதுமன்று ; அது பெரும்பாலும் உயர்குடி ஆட்சிமுறையைக் கொண்டதெனினும், ஓரளவிற் பொதுசன அம்சம் கொண்டதும், அரசர் சிற்சில பொழுதில் தலையிடவசதி அளிக்கக் கூடியதுமான தொரு கலப்பு அரசியலமைப்பாகும்'.
அதே நேரத்தில் இங்கிலாந்திலும் அயலாந்திலும் மக்கள் உரிமை களுக்காக உரோமன் கத்தோலிக்கர் மீண்டும் தம்கோரிக்கைகளைப் புதுப்பித்தமை தோரிகளை 1689 ஆம் ஆண்டுக் கொள்கைகளை முற் முய் ஏற்கச் செய்தது. கத்தோலிக்கரின் கோரிக்கைகளை எதிர்ப் பதில் மூன்மும் யோச்சும் அவனின் வாக்குரிமையற்ற குடிகளுட் பெரும்பான்மையினரும் தோரிக் கட்சியுடன் மனமார ஒற்றுமைப் பட்டனர். புரட்டெசுத்தாந்தத்துக்கு ஏற்படக் கூடிய இன்னல் களையே தேர்தற் பிரசாரத்துக்கேற்ற விடயமாக, முன்னர் உவிக் குகள் பயன்படுத்தினர். இப்பொழுது அதையே தோரிகள் தங்கள் தேர்தற் பிரசாரத்துக்குரிய விடயமாக்கிக் கொண்டனர். அரசவழிப் பட்ட மக்களின் பல நோக்கங்களையும் ஒருவழிப்படுத்துவதே தோரி களின் குறிக்கோளாயிருந்தது. பிரான்சியப் புரட்சியாளர்பாற் கொண்ட பயம் ஒருபுறமும் உரோமன் கத்தோலிக்கர்பாற் கொண்ட பயம் மறுபுறமும் அவற்றை எளிதில் இணங்கவைத்தன. தேவால யத்துக்குள்ளேற்பட்ட இவாஞ்சலிக்க இயக்கமும் வெளியிலேற் பட்ட உவெசிலியன் இயக்கமும் ஐரிசுப் புரட்சிக்காரரின் போப்பு மதக் கொள்கைக் கெதிராகவும் தொம்பெயினின் நம்பிக்கையற்ற தத்துவஞானத்துக் கெதிராகவும் மக்களிடையே இருந்த வெறுப்பை மிகுவித்தன. ஐரோப்பாவிலே யக்கோபினியமும் உரோமன் கத்தோ லிக்கமும் ஒன்றையொன்று ஒழித்து வருகின்றன என்ற உண்மை தானும் அவை இரண்டும் ஆங்கிலக் கொள்கைக்கு அடியோடு

அரசியற் கட்சிகளின் சமயச் சார்புகள்
வேறுபட்டன என்றும், எமது 'திருச்சபையிலும் அரசிலுமுள்ள மகிழ்வான யாப்புமுறை யோடு இயைபுபடாதன என்றும் எம் தீவுக்குரிய பழமைபேணும் வாதம் அவற்றைக் கடிவதையும், அவற்றுக்குப் பயப்படுவதையும் தடைசெய்துவிடவில்லை. 1790 ஆம் ஆண்டுக்கும் 1830 ஆம் ஆண்டுக்கும் இடையான எக்காலத்தி அலும் “மகாபட்டயம், ' பைபிள் ஆகியனவும் இந்த இரு பரிசுத்த ஆளல்களுக்கு மேலே வைக்கப்பட்டதான அரசமுடியும் மக்களின் தேசீய உரிமைகளைக் காட்டும் சின்னங்களாகத் தோரிக்கட்சி யின் நகைச்சுவைச் சித்திரங்களில் தீட்டப்பட்டன. இவற் றையே பொக்சுவைச் சார்ந்த உவிக்குக் கட்சி தனது நம்பிக்கை யற்ற நேயர்களுடனும் போப்பாண்டவருடைய நேயர்களுடனும் சேர்ந்து அழிக்க முயல்வதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. உலகில் நடைபெறும் பலவற்றேடு சீர்தூக்கிப் பார்க்கின் இத்தகைய கருத்து குறைபாடுகளையுடையது என்பது புலனுகும். சுயநலம் கருதும் அரசியல்வாதிகளாலும் சுயநலவகுப்பினராலும் இக் கருத்து தத்தம் நலத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. கைத்தொழி லார்வங்கொண்ட இங்கிலாந்திலும் அரசியலார்வங்கொண்ட அய லாந்திலும் இது குழப்பத்தை விளைத்தது. எனினும் ஆங்கிலேய இயல்புக்கும் மரபிற்கும் இது மிக ஏற்றதாயிருந்தமையினுல் நெப் போலியனை வெற்றி கொள்ளத் துணை புரிந்தது. வெறும் அரசிய லிலும் பார்க்க அது மக்கள் மனதில் அதிகம் பதிந்திருந்தது; அது போர் நிகழ்ந்த நீண்ட காலங்களில் மத்தியவகுப்பினரை அரசாங்கத்தினிடம் பற்றுடையவர்களாயிருக்கச் செய்தது.
புத்துயிரளிக்கப்பட்ட தோரிக்கட்சி, அனேவர் குலத்தினர் பற்றி யும் புரட்சி இணக்கம் பற்றியும் உற்சாகங் கெtண்டிருந்தமையா அலும் உரோமன் கத்தோலிக்கருக்குக் குடியுரிமைகளைக் கோர உவிக்குக் கட்சியினர் தொடங்கியிருந்தமையாலும் இந்த இரு கட்சிகளும் இாைற்றசு ஒட்சு, கலாநிதி சக்கவொல் ஆகியோர் காலம் தொடங்கி இந்த வேறுபாடான காலங்கள் வரைக்கும் எவ் வாறு தொடர்ந்து நிலைபெற்றன என்ற நியாயமான கேள்வி எழும். திருச்சபை நலன்களோடு தோரியினர் கொண்டிருந்த இடையீ டற்ற தொடர்பிலேயும், இணங்காதாரான வாக்காளருடன் உயர் குடி உவிக்குகள் கொண்டிருந்த தொடர்பிலேயுமே முக்கியமாக இக் கட்சிகளின் தொடர்ச்சியைக் காணலாம். புரட்டெசுத்தாந்தர், கத்தோலிக்க இணங்காதார் ஆகியோர் உத்தியோகங்கள் பெறுவ தைத் தடைசெய்வதான சோதனைச் சட்டம், நகராட்சிச் சட் டம் ஆகியவற்றை நீக்க வேண்டுமென்பதனை 1787 ஆம் ஆண்டி லும் அதன் பின்னர் 1789 ஆம் ஆண்டிலும் பிற்று எதிர்த்தான். மறுபுறத்தில் சாள்சு பொக்சு என்பவன் சமய சமத்துவத்துக்குப்
293

Page 160
294
1789-179.
780-85.
சீர்திருத்தம் : திருச்சபையும் இணங்காதாரும்
பெரிதும் ஊக்கமளித்தான்; அத்துடன் ஒரு அரசியற்ருரபணத்தை மதிப்படுவதற்குச் சமயம் ஏற்ற கருவியாகாது என்ற கொள்கை யையும் நிலைநாட்டினன்.
எனவே இவ்வாறு முரண்பட்டோர்கள், பொக்சுவின் கீழுள்ள
புதிய உவிக்குக் கட்சியினலும், பாராளுமன்றச் சீர்திருத்தத்
தாலுமேயன்றிப் பொதுசன உரிமைகளைப் பூரணமாகப் பெற முடியாதெனக் கண்டனர். பாழ்பரோப் பிரதிநிதித்துவ முறை நீக்கப்பட்டால் தங்களது தேர்தற்ருெகுதி வலிமை தங்கள் துன்பங்களைத் துடைக்கும்படி பாராளுமன்றத்தை வற்புறுத் தும் என அவர்கள் நம்பினர். இதைப் போன்ற காரணங்
களினல் தாபிக்கப்பட்ட திருச்சபைக் குருமாரும் அவர்
களின் ஊக்கமிக்க ஆதரவாளர்களும் பாராளுமன்றச் சீர் திருத்தத்துக்குப் பெரும் விசோதிகளாயினர். அவர்கள் அது சீர்குலைவுக்கு இட்டுச் செல்லுமென அஞ்சினர். அப்புதிய ஊழி
கள், அப்பிரச்சினை 1832, 1867, 1884 ஆம் ஆண்டுகளின் சீர்திருத்த முறிகளினல் முற்முக அகற்றப்படும்வரை அரசியற் போக்கைப்
பாதித்தே வந்தன.
சமய சமத்துவம், பாராளுமன்றச் சீர்திருத்தம் ஆகிய இரண்டு பிரச்சினைகள் காரணமாக இங்ஙனம் ஆங்கிலேய அரசியற் கட்சிகள் பிரிந்து கொள்ளத்தொடங்கும் அந்நேரத்தில் பிரான்சிலிருந்து ஒரு பெரிய செய்தி வந்து சேர்ந்தது. இன்னும் யக்கோபினியத்தை ஏற்றுக்கொள்ளாத பிரான்சு கொடுங்கோலாட்சியை நீக்கிவிட்டு யாப்பு முடியாட்சியை அதற்குப் பதிலாக நிறுவியது. எவ்வகை ፱ 1፱`õÖT · சமயக்கோட்பாடுள்ளவர்களையும் குடியுரிமை அளவில் ஒரே படியில் வைக்கக்கூடியனவான சட்டங்களை அது ஆக்கிக் கொண் டிருந்தது. பிரான்சியப் புரட்சியின் முதற் கட்டங்கள் பற்றி ஆங் கிலேய திருச்சபையினரும் முரண்பட்டோரும் கொண்ட கருத் துக்கள், பிரான்சில் நிகழ்ந்தனவற்றிற்கும் உள்நாட்டில் அவர் களுடைய நிலைக்குமிடையேயிருந்த ஒற்றுமையினல் இயல் பாகவே பாதிக்கப்பட்டன. இதுவரை ஆங்கிலேயருக்கே முற்முக உரிய ஒரு சிறப்பான இயக்கமாக இருந்த பாராளுமன்றச் சீர்திருத் தத்தின் நற்பேறுகள் அரசியல் சமூக நோக்கங்கள் யாவற்றிலும் எங்கள் நாட்டிலிருந்து வித்தியாசமான ஒரு நாட்டின் அலுவல் களோடு திடீரென நெருங்கிய தொடர்புடையனவாயின.
பாராளுமன்றச் சீர்திருத்தத்திற்கான முதற்கிளர்ச்சி உவிக்குக் கட்சியைச் சேர்ந்த நிலச்சொந்தக்காரரான மேன்மக்களின் ஆதா வில் பண்டை வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் யோக்குசயரிலுள்ள வரியில்லா நிலமுடையாரிடையே தோன்றியது. கைத்தொழிற் புரட்சியுடனேனும் அக்காலத்துத் தனிப்பட்ட சமுதாய அரசியல்

பொருளாதாரச் சீர்திருத்தம்
நியதிகள் எவற்றுடனேனும் அதற்கு எத்தொடர்புமிருக்கவில்லை. அது பெரிய பட்டின வாசிகளையேனும் புதிய நடுத்தர வகுப் பினரையேனும் வாக்குரிமை படைத்தவர்களாகச் செய்வதற்கான ஒரியக்கமுமன்று. பாழ்பரோக்களுட் சிலவற்றை அகற்றிவிட்டு அதனல் நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பெருக்க அது திட்ட மிட்டது. சிறிதளவான இத்தகைய பாராளுமன்றச் சீர்திருத்தத் துக்கு அக்கிளர்ச்சி ஆதரவளித்தமை நடுத்தா அல்லது கீழ்த்தா வகுப்பினருக்கு உயர்வளிக்கும் ஏதேனும் கொள்கையினலன்று ; வறியார்க்குப் பணம் கிடைக்கச் செய்வதற்குமன்று ; ஆனல் திற மையான அரசாங்கத்தை மீண்டும் நிலைநாட்டவும் அரசனையும் பாராளுமன்றத்தையும் பொதுமக்களின் அபிப்பிராயத்தின் வழி யான ஒரளவு கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவுமேயாம். அக்கிளர்ச்சி மூன்ரும் யோச்சுக்கு எதிராகவே எழுந்தது. பொதுமக்கள் சபை யில் நியமனம் காரணமாகவும், கைலஞ்சம் காரணமாகவும் பெற்றுக் கொண்ட பெரும்பான்மை கொண்டு அவ்வரசனுற் செலுத்தப்பட்டு வந்த அவனின் தனியாட்சிக்கு முடிவு காணவே அது கருதியது. எனவே அது சந்தர்ப்பத்தால் மட்டுமன்றிக் கொள்கைநெறி காரண மாகவும் ஏற்பட்ட இயக்கமாகும்.
ஆகவே, இளைய பிற்றின் கீழ் யாப்புமுறையான திறமைமிக்க அர சாங்கம் திரும்ப நிறுவப்பட்டதும் முன்னிருந்த வேகம் தணிந்தது. 1782 ஆம் ஆண்டிலே பேக்கு ஏற்படுத்திய பொருளாதாரச் 9仔 திருத்த முறியானது, பாராளுமன்றத்தின் ஊழல்களைக் குறைத்த தன் காரணமாகத் தேர்தற்ருெகுதிப் புத்தமைப்பிற்கும் சீர்திருத் தத்துக்கும் ஓரளவிற் பதிலாயமைந்திருந்தது. 1785 ஆம் ஆண்டில் பிற்றின் மிதமான சீர்திருத்த முறி ஏற்கப்படாமை இந்த முதற்
கிளர்ச்சியின் முடிவினைக் குறித்தது. விரைவில் பிற்றும் சீர்திருத்
தத்துக்கு விரோதியாக மாறினன்.
சீர்திருத்தக் கிளர்ச்சியின் இரண்டாவது நிலை தத்துவஞான முடையோரும் இணங்காதோருமான பிரைசு, பிரீசுகிலி என்போ ரின் தலைமையில் நிகழ்ந்த ஓரளவு கல்விக்குரிய இயக்கமாகும். அது பாராளுமன்றச் சீர்திருத்தத்தின் மூலம் சமய சமத்துவத்தை ஏற் படுத்துவதனைக் குறிக்கோளாகக் கொண்டது. அன்றியும் பிரான் சில் ஏற்பட்ட முந்திய, கடுமை குறைந்த மாற்றங்களுடன் பொது வாக அனுதாபங்கொண்டு, 'மனித உரிமைகள்', 'குடியரசின் உல கப்பொதுவான நெறிகள்,' ஆகியவற்றை ஆதரித்தது. பத்தாண்டு களுக்கு முன்னர் ஏற்பட்ட யோக்குசயரிலுள்ள வரியில்லா நில முடையார்களின் சீர்திருத்தக் கிளர்ச்சியோடு ஒப்பிடும்பொழுது இப்புதிய இயக்கம் அதனினும் குறைவற்ற ஒரு பிரித்தானியக் கிளர்ச்சியாம். அது அமெரிக்க மணம் வீசியது. அதனைத் தொடக்கி

Page 161
296
1791.
பிரீசுதிலி, பேக்கு, பெயின்
யவர்கள் கருதிய அளவிலும் அதிகமாக அதன் தத்துவஞானவியல் பும் பொதுத்தன்மையும் கொண்டு சென்றுவிடுமோவெனக் தோரி மேல்வகுப்பினர் புயந்தனர். மிகவும் பிரசித்திபெற்ற அரசியற் பிர சுரமொன்றில் பிரிசுதிலியையும் பிரான்சியப் புரட்சியையும் பேக்கு ஒருசேரத் தாக்கியுள்ளான். பேமிங்காமைச் சேர்ந்த “திருச்சடை யும் அரசனும் " அத்தத்துவ ஞானியின் வீட்டைச் சூறையாடி அவனுடைய விஞ் ஞான உபகரணங்களையும் தீக்கிரையாக்கினர். உள்ளூர் அதிகாரிகள் இச் செயலைச் செய்யவிடாது இவர்களைத் தடுக்கவில்லை. மாஞ்செக் தரில் நடந்த இவ்வகையான பொதுமக்களின் கலகங்கள் மத்திய வகுப்புத் தத்துவஞானிகளான இணங்காதோரால் நடத்தப்பட்ட சீர்திருத்தத்துக்கான இந்த இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத் தன. மத்திய வகுப்பு முழுவதுமே இதனைப் புறக்கணித்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கிறேயினுடைய சீர்திருத்த முறிக்கேனும் அதனிலும் மோசமான வேறெதற்கேனும் தேவை யாயின், போராட ஆயத்தமாயிருந்த தொழிலாளர் வகுப்பினரும், தொழிலாளர் வாழும் இரண்டு பெரிய இடங்களிற்கூட இவ்வியக்கத் துக்கு மாமுயிருந்தனர்.
' என்ற கொள்கையையுடைய மக்கட் கூட்டத்தினர்
பேமிங்காமிலும் மாஞ்செத்தரிலும் உண்டான மக்கள் கூட்டத் தினரின் செயல், அடுத்துவரும் தலைமுறையிலும், 'குடியாட்சி' நோக்கங்கள் வறியோரிடையிலுங்கூட ஒரு சிறுபான்மையினரா லேயே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதனைக் காட்டியது. எனினும், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலேயே, தொம்பெயினும், முறை யான குடியாட்சிக் கிளர்ச்சியைத் தொழிலாளர் வகுப்பினருள் ஒரு
பகுதியினரிடையே தொடக்கினன். இதிலேயே நாம் ஆங்கில அரசிய
லூக்கும் கைத்தொழிற் புரட்சியால் உண்டாக்கப்பட்ட புதிய சமு தாய நிலைமைகளுக்கு மிடையிலுள்ள நெருங்கிய தொடர்பினை முதன்முதலாகக் காண்கின்ருேம். இங்கிலாந்து, கொத்துலாந்து எங்கணும் தொழிற்சாலைகளிலும் கைத்தொழில் மாவட்டங்களிலும் பெருந் தொகைத் தொழிலாளர் ஒன்றுசேரும்பொழுது, பெயினின் கொள்கைகள் பரப்பப்படக் கூடியனவும் ஆராயப்படக் கூடியனவு மான கூட்டங்களும் சபைகளும் தோன்றின. பொருளாதார மாற் றங்களின் காரணமாகத் தம் சுதந்திரத்தையும் நலனையும் இழந்து துன்புறும் பலர் தங்கள் நிலைமைக்கு வேறு பரிகாரம் தேட வழி காணுசாய் அரசியலை நோக்கத் தொடங்கினர். கிராமப்புறங்களிலிரு ந்து புதிய உற்பத்தி நிலையங்களான மாகாணங்களுக்குச் சென்று அங்கு குடியேறும் மக்கட்கூட்டத்தினர், அங்கே தொம்பெயின் என் பான், எல்லாச் சத்திகளும் உரிமைப்படியே மக்களுக்கே சொந்த

* மக்கள் உரிமைகள்
மானவையாயினும் அனுபவத்தில், அவை பணக்காரரான முதலாலி மாராலும், பெரிய பண்ணைக்காரராலும், நிலச்சொந்தக்காரச் சமா தான நீதவான்களாலுமே தமது முழு உரிமையாகப் பயன்பட்டு
வருகின்றன எனப் போதிப்பதைக் கேட்டனர். பதினெட்டாம்
நூற்ருரண்டின் ஆங்கில வாழ்க்கைக்கு அடையாளமாய் இதுகாறும் அமைந்திருந்த பல வகுப்புகளிடையேயான ஐக்கியம், இப்பொழுது சுயநலம், விரோதம், தமக்கிடையே நம்பிக்கையின்மை ஆகியவற் முல் சிதைக்கப்பட்டது.
இது தவிர்க்கமுடியாத தொன்முயிருந்திருக்கலாம். ஆனல் பேக்கி னது " பிரெஞ்சுப் புரட்சிபற்றிய சிந்தனைகள்', பெயினினது “மக் கள் உரிமைகள்” என்பனவற்றின் கடுந்தன்மை இருவயினு மொத்த நல்லெண்ணம் உண்டாக வாய்ப்பளிக்கவில்லை. இந்த இரண்டு நூல்களும், அடுத்த நாற்பது ஆண்டுகள் வரையும் சமு தாயத்தின் இரண்டு தனிப்பட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய ஆகிக்கம் செலுத்தி வந்தன. பேக்கின் கம்பீரமான பேச்சும், அவ னது ஒரு பக்கச்சார்பான, ஆயினும் ஆழமான தத்துவஞானமும் அக்காலத்துக் கல்வியறிவுடைய வகுப்பினரின் மனத்திற் பதிவ தற்கும் அவர்க்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் மிக வாய்ப் பானவையாயிருந்தன. பாராளுமன்றத் தேர்தற் காலங்களில் தம் எண்ணம்போல் நடக்கவும் கலகம் உண்டுபண்ணவும் சந் தர்ப்பமளிப்பதாகக் கருதியதுமட்டுமேயன்றி அரசியல் அது வரை இன்னதென எண்ணியுமிராத வகுப்பினரின் பண்
படாத மனங்களுக்குப் பெயினின் முரட்டுத் தருக்கம் புதிய குடி வெறி யூட்டுவதுபோலிருந்தது. பெரிய சிந்தனையாளர்கூட இவ்வித
மாகச் சில சந்தர்ப்பங்களில் ஒரு விடயத்தின் ஒரு அம்சத்தையே யன்றிப் பிறிதைக் கவனிக்கின்றால்லர் என்பது வருந்த வேண்டிய தொன்ருகும். பேக்கும் பெயினும் எதுவித இணக்க நோக்கமுமற்ற முறையில் பழமைபேண்வாதத்தின் நிலைமையையும் குடியாட்சித் தன்மையையும் எடுத்துக் கூறினர்.
அக்காலத்திலும் அதற்குப் பல ஆண்டுகள் பின்னருமிருந்த பழமைபேண் கொள்கை குடியாட்சியுடன் தொடர்புடையதா கக் கருத இடமளிக்கவில்லை. 1689 ஆம் ஆண்டின் புரட்சி நிர்ண யத்தின் அடிப்படையில், அரசர், பிரபுக்கள், பொதுமக்கள் (சபை) ஆகியோர்க்கிடையே யாப்புச்சமநிலையையே அக்கொள்கை குறித் தது. பிற்றின் சட்டத்துறை நாயகரும் (அற்முேணி செனரல்) பின்னர் எலிடன் பிரபுவானவருமான, யோன் கொத்து அவர் கள், சப்பாத்துச் செய்வோனை பருமாற்றவாதி தோமசு ஆடி “இங்கு தாபிக்கப்பட்டிருக்கும் அரசியலுக்கு நேர்மாமுன பிரதிநிதி த்துவ அரசியலை' க் கோரினன் என்ற காரணத்தினுல் அவனைப்
12-R 5931(1762)
297
1791-1792.

Page 162
298
தொம் பெயின்
பெரிய தேசத்துரோகத்துக்கான தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என 1794 ஆம் ஆண்டில் வற்புறுத்தினர். பேக்கின் மதிநுட்பம் எலிடனின் பெருமையற்ற வாழ்வை மேலும் இருள்படர்ந்ததாகச் செய்ய உதவியமை விதியின் விளையாட்டே.
“எல்லாப் பரம்பரை அரசாங்கங்களும் அரசராலாயினும் சரி, பிரபுக்களாலாயினும் சரி 'மனிதவருக்கத்துக்குச் சுமையேயாம் ; மக்களிடமிருந்தே அதிகாரங்கள் பெறப்பட்டன; தகுந்த பிரதிநிதி த்துவமுள்ள சபையினுல் அமையும் அரசாங்கம் ஒன்று உடனேயே நிறுவப்பட்ல் வேண்டும் ' எனப் பெயினின் “மனித உரிமைகள்" கோரியது. பின்னர் வரிகளிலிருந்து பணக்காரருக்கு வழங்கப்படும் ஒய்வுக்கால வேதனங்கள் வேறு வழிகளில் மாற்றப்படும் எனவும், தரப்படுத்தப்பட்ட வருமானவரியுடன் அது வறியவர்களுக்குக் கல்வியூட்டவும், முதுமைக்கால ஓய்வுப்பணம், பிரசவ சகாயப் பணம் என்பன வழங்கவும் உபயோகப்படுத்தப்படும் எனவும் அவன் முன்னுணர்வாய்க்' கூறினன். இந்தக் கூற்றுகள், இவற்றுட் சில கூர்மையான முன்னுணர்வுடைய அரிய ஆலோசனைகளாயினும், முடியாட்சி நீக்கப்படல் வேண்டும் எனக் கோரியதன் மூலம் அவன் செய்த பெரிய பிழை காரணமாகத் தக்க மதிப்பைப் பெறவில்லை.
பெயினின் இலகுவிற் கிளர்ச்சியடையும் மனதைப் புதிய அமெரிக்க
யாப்பின் சிறப்புக்கள் பெரிதும் கவர்ந்தன. ஏனெனில், அந்த யாப்பு பிரதானமாக, அரசனையோ பிரபுக்கள் சபையினையோ கொண்டிராமையினலென்க. பிரித்தானிய யாப்பில் பழையனவான தேவையற்றன எல்லாவற்றையும் நீக்கும்படியான அவனின் கோரிக்ண்க, அவனின் கிளர்ச்சிக்குக் கிடைக்கக்கூடிய வெற்றியின் வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் பாழாக்கியது ; காந்துறை வாழ்க் கையை மேற்கொள்ள அவனை ஏவியது ; அவன் எழுதியவற்றைப் பசப்புதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது; அஃது அடிக்கடி
புரியப்பட்டதொரு குற்றமுமாயது.
அடுத்த பலவாண்டுகளுக்குப் பெயினினது குடியரசுவாதம் தாராளமான எதற்கும் முட்டுக்கட்டையாயிற்று. பொக்சு, கிறே என்போர் அவனை மறுத்ததும் வீணுகியது. யக்கோபினக் குடியரசு டன் போர் தொடங்கியதும் உள்ளூர் அரசியலைப்பற்றி நியாயமான அளவில் மக்கள் எண்ணக் கூடியதாக விருந்த இறுதி வாய்ப்புக் கூட மறைந்தது. தெருவிலே செல்பவர், கில்றேயின் நகைச்சுவைச் சித்திரங்களைக் கடைகளின் வலைகளிடப்பட்ட சாளரத்தினூடாகப் பார்க்கும்பொழுது, உயர்குடியினரைச் சார்ந்த உவிக்குக்கட்சியினர் * பழைய நல்ல அரசரின் தலையைக் கொய்து கடும் புரட்சிக்கார ரைக் கொண்டு செழுமையற்ற மக்களாட்சியை நிறுவக் கருதியுள் ளனர் என எண்ணத்தொடங்கினர்.

பிரெஞ்சுப் புரட்சி : ஆங்கிலர் கட்சிகள்
፲?98 ஆண்டின் தொடக்கம் வரையும் இங்கிலாந்து பிரான்சு டன் போரிலிடுபட்டிருக்கவில்லை. 1792 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் நாடகத்தை ஆங்கிலேயர் நடுநிலையாளர் நிலையிலிருந்தே கவனித்தனர். அச்சம்பவம் இங்கு அச்சமயம் நிலவிய மனேநிலை யைப் பெரிதும் பாதித்தது. தங்கள் தளபதி பிரன்சுவிக்கினல் வெளியிடப்பட்ட அறிவித்தலிற் கூறப்பட்ட விதமாகப் பிரான்சியப் புரட்சியை இரத்தத்துள் ஆழ்த்தப் பழைய ஆட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய முடிமன்னரின் முயற்சி ; அதனைத் தாங்க முடியாது அதற்குப் பதிலாகப் பிரான்சிய மக்கள் செய்த கிளர்ச்சி ; 'வாமி' படையெடுப்பில் புதிய பிரான்சின் எதிர்பாராத வெற்றி ; பாரிசிலே ஒரே நேரத்தில் யக்கோபினியமும் குடியரசுவாதமும் வெற்றி பெற்றமை ; சிரச்சேதமும் படுகொலையும் ஆகிய பிற்சந்ததியினரை வியப்படையச் செய்யும் துர்க்குறியான எல்லாச் சம்பவங்களும் ஆங்கில அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவர்ந்தன; எங்கள் கட்சிகளைத் திருக்தியமைப்பதற்கு அவை உதவின. அடுத்த 40 வருடங்களுக்கு எங்கள் அரசாங்கத்தின் போக்கை அவை தீர்மா னித்தன. s
புறாக்கின் நாகரிகமான கரைகளிலுள்ள பொக்சுவைச் சேர்ந்த உவிக்குகளும் கடிதப் போக்குவரத்துச் சங்கமென்னும் சங்கத்தி அலுள்ள கீழ் வகுப்பினைச் சேர்ந்த பருமாற்றவாதிகளும் சேச்சுவின் சேனைகளுக்குச் சமானமானவர் எனப் பொக்சு ஒப்பிட்ட சேர் மானியக் கொடுங்கோல் ஆக்கிரமிப்புக்காரர்களுக் கெதிராகப் பிரான்சிய மக்கள்மீது பெருமளவில் அனுதாபங் கொண்டனர். நெகிழ்ந்த மனத்துடன் துடுப்பான தனது இயல்பில், செத்தெம்பர் மாதக் கொலைகளைப் பற்றிய செய்தி வந்தெட்டுவதற்குச் சற்று முன் னர் பொக்சு பிரான்சிய மக்களைப்பற்றி, "அவர்களின் தவறுகளும், தேவையற்ற செயல்களும் எவ்வாறிருப்பினும் அவர்களின் வெற்றி யைப் பற்றி நானும் மிகப் பெருமளவில் அக்கறை கொண்டுள்
)
ளேன்” என எழுதினன். அதன்பின்னர், பாரிசுச் சிறைச்சாலைகளில் நடந்த படுகொலைகளைப் பற்றிய முதற் செய்திகள் வந்து சேரலா யின. "அன்று பகலிலும் இரவிலும் நடந்த பயங்கரச் செயல்கள் அடிப்படைக் கொள்கையோடும், தளராத உறுதியோடும் உண்மை யான இலட்சியத்தின்மீது பற்றுக்கொண்ட என்போன்ருேருக்கு ஏற்பட்டவற்றுள், எமது இதயத்தை மிக அதிகமாகப் புண்படுத் திய நிகழ்ச்சிகள் என நான் உண்மையிற் கருதுகிறேன்; என் எண் ணத்தின்படி இந்தப் பயங்கரமான படுகொலைகளில் நியாயம் சிறி தேனும் கிடையாது; இது மிகக் குறைந்த அளவிலுங்கூட மன்னிக்
கப்படுவதற்குத் தகுதியற்றது” என அவன் எழுதினன்.
1792.
299 .

Page 163
300
1792-1793.
குடியரசுவாதிகளின் ஆக்கிரமிப்பு
ஆனலும் பொருள் வளமுடைய வகுப்பினர்களுட் பெரும்பான்மை யினரின் அனுதாபங்கள் என்றுமே பிரன்சுவிக்கின் பக்கமே இருந்து வந்தன. சென் பாத்தோலமியூவின் செய்திகளாலும், நாந் திசுப் பிரகடனத்தை நீக்கியதாலும் உருவான கிளர்ச்சிகள்போல செத்தெம்பர் மாதப் படுகொலையும் 'கிலற்றினின் ஆதிக்கமும் எங் கள் தீவில் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. இங்கிலாந்தின் ஒவ் வொரு கிராமத்திலும், நகரத்திலும் இலையுதிர்காலத்திலும் கார் காலத்திலும் பொதுமக்களின் அபிப்பிராயத்தினுல் மக்களாட்சிக் கிளர்ச்சி பெரிதும் அடக்கப்பட்டுவிட்டது. தேசத்தின் பலவிடங்களி லும் விசுவாசிகளின் சங்கங்கள், பெரும்பாலும், தங்கள் உள்ளூர் விசோதிகளாகிய இணங்காதாரான சீர்திருத்தவாதிகளுக்கு எதிரா கத் திருச்சபையினர்களின் தலைமையிலே தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டில் சீர்திருத்தவாதிகளை அடக்கவும், வாளினல் ஐரோப்பிய “விடுதலையை’ப் பெற முயலும் பிரான்சியப் பாசாங்கினைத் தேவை யாயின் ஆயுதத்தினலேனும் வன்மையாக எதிர்க்கவும் இச்சங்கங் கள் அரசாங்கமறியாது ஆதரவு தேடின.
அதே கார்காலத்தில், பிரசிய அளக்குமரங்களை எதிர்பார்த்திருந்த பிரான்சியக் குடியரசுவாகிகள் அச்சமயம் தங்களுக்குக் கிடைத்த ஆரம்ப வெற்றிகளினுலும் தமக்குப் புதிதாகக் கிடைத்த அதிகாரத் தினுலும் ஏற்பட்ட மதிமயக்கத்தினல் சவோய் இரைனிலாந்து, ஒசுற் றியன் நெதலந்துக்கள் ஆகியவற்றின்மீது படையெடுத்தும் ஐரோப் பிய சமாதான ஒப்பந்தங்கள் யாவும் இருப்பவும், சுகெல்டில் கப்பற் போக்குவரத்துத் தடையெதுவுமில்லேயெனப் பிரகடனப்படுத்தியும், ஒல்லாந்தின்மீது படையெடுக்க முயற்சிகள் செய்தும் வந்தனர். தங் கள் பழைய அரசாங்கங்களைக் கவிழ்க்க விரும்பும் எல்லா நாடுகளுக் கும் அவர்கள் ஆயுத உதவி அளிக்க முன்வந்தனர். பதினன்காம் உலூயியின் பெருமையும் ஆவலும், அவனுடைய சிலைகளைப் பிடுங்கி, அவனுடைய வழித்தோன்றல்களைச் சிரச்சேதஞ் செய்து அவனு டைய சமயத்தை வோறுத்த மக்களின் இதயங்களில் புத்துயிர்
பெற்றன. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய சேனைகளுடனும்,
இரண்டாவது பெரிய கடற்படையுடனுமிருந்த வல்லரசு இாைன் நதியின் கழிமுகத்தை ஆக்கிரமித்தமை, ஆங்கிலரின் தற்காப் புணர்ச்சிக்கு, அதே உலகப்பகுதியில் அவ்விதமான பாசாங்கு களுடன் இசுப்பெயின் நாட்டுப் பிலிப்பு, உலூயி, கைசர் ஆகியோர் எதிர்த்து நின்றதுபோல், அறைகூவுவதாயிற்று. ஐரோப்பாவின்மீகி ருந்த பிரான்சின் ஆதிக்கத்துக்கு, குறிப்பாக நெதலந்துக்கள் மீதி ருந்த ஆதிக்கத்துக்கு மாமுன எதிர்ப்பு, தங்கள் பிரன்சுவிக்கு வெருட்டுதல்களினல் யக்கோபிய சிங்கத்தை விணே அாண்டிவிட்டுப்

அரசியற் கட்சிகளும் போரும்
பின் ஓடி ஒளிந்தவல்லாட்சிமன்றம் எதிலும் பார்க்க, உறுதியான தீர்மானத்துடன், பாராளுமன்ற அமைப்புள்ள இங்கிலாந்தினற் கைக்கொள்ளப்பட்டது.
பழைய ஆங்கிலநாடு, புதிதாகத் தோன்றிய பிரான்சுநாடானது ஐரோப்பாவில் வலியிழந்த அரசுகளைத் தனது அடிமைநாடுக ளாகச் சேர்க்கவிடாது தடுத்ததன் நோக்கம் பிற்றினல் திறம்பட உருவாக்கப்பட்டு, அவனுல் தன்னை பின்பற்றுவோர்களிடம் ஒப் படைக்கப்பட்டது. அவர்களும், காசில்றியினது காலத்தில் தாம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக உறுதிப்பாட்டோடு போற்றிவந்த முயற்சிகளின் பலனை ஒருவாறு பெற்றனர். அப்பேருன சூழ்நிலை காரணமாக இவ்வுறுதிப்பாடு, உள்ளூரிலே சீர்திருத்தத்துக்கும், ே திருத்தம் பற்றிய எல்லாப் பேச்சுக்களுக்கும் தடைவிதிக்கும் கொள்கையினுேடும், கைத்தொழிற் புரட்சியால் நொந்தோரும் பொதுவாக வறியோரும் வருங்கால யக்கோபினராமெனக்' கருதப்படுவதனுல் அவர்கள்மீது ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியோடும் தொடர்பு படுத்தப்பட்டது.
அரசியலறிவுள்ள உள்ளத்தினருக்கும் பெரும்பாலும் தவமுன
கருத்துக்களை ஏற்படுத்தும் இக்கருத்துத்தொடர்பு முறையினுல், அரசியலில் மிதவாதம், சிறிதளவு சீர்திருத்தச்சார்பு, பொருளாதார நெருக்கடிக்கு அல்லது அரசாங்கத் துன்புறுத்தலுக்குப் பலியாகிய வர்பால் இரக்கம் ஆகியன போரில் ஆர்வமின்மை, புதிய பிரான்சின் நாட்டுபற்று, பேரரசுவாதம் ஆகியவற்றின் தன்மையை ஒப்புக்கொள் வதில் தாமதம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டன. பொக்சு, ஒல்லாந்துப்பிரபு, சிட்னிசிமிது, உரோமிலி, உவிட்பிரெட்டு, பைான் பருமாற்ற வாதியாயிருந்த கொபெற்று என்போர்கள் இம் மனப் பாங்குக்குச் சிறந்த உதாரணங்களாவர். A
எனவே அடுத்த தலைமுறையார் காலத்திலும், சீர்திருத்தவாதிகள் இரட்டைவடுவினல் துன்புற்றனர்-அவையாவன போர்க்காலத்தில் நாட்டுப் பற்றுக் குறைந்தவர்களெனவும், பெயினின் குடியரசுவாதக்
கோட்பாட்டை ஆதரிப்பவர்களாகவும் (இது உண்மையன்றென
அவர்கள் மறுத்தபோதும்) கருதப்பட்டமையேயாகும். இத்தகைய இரட்டை வெறுப்பினுல் பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கா வது, பாராளுமன்றச் சீர்திருத்தம் பற்றிய பேச்சு நிகழ்ந்தால், தனது அதிகாரத்தைச் செலுத்தி அதனைப் தடுப்பது பிற்றுக்கு இலகுவாகியது; இவ்வெறுப்புணர்ச்சி அத்தகைய நடவடிக்கை யைத் தேவையற்றதாக்கியது எனவுங் கொள்ளலாம். பத்திரிகையா சிரியர்கள், இணங்காதாரான போதகாசிரியர்கள், பிரசாரத்தில் ஈடுபடத் தக்க இயல்புடையோர் எனக் கருதப்பட்டோர் ஆகியோ ருக்கெதிராகப் போரின் முதலிரண்டு ஆண்டுகளிலும் அடிக்கடி
30.

Page 164
302
1793.
தோரி அடக்குமுறை
வழக்குகள் தொடரப்பட்டன. இவர்கள் பிரான்சைப் பின்பற்றிப் பெரும்பாலும் புத்தியற்ற விதமாகவும் கோபம் மூட்டும் விதமாக வும் பாராளுமன்றச் சீர்திருத்தத்தை ஆதரித்து வாதாடத் துணிந் தனர். மூரும் பாமரும் கொத்து நீதிபதி யுெப்பிரெசு பிராக்சுவீல்டு என்போர் முன் விசாரிக்கப்பட்டு ஒரு நேர்மையற்ற தீர்ப்பின் பிர காரம் பொற்றணிக் குடாநாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர். முன் னைய சீர்திருத்தவாதியான பிற்றும் இத்தண்டனையைக் குறைக்க மறுத்துவிட்டான். இந்தச் சீர்திருத்தத் தியாகிகள்' இருவருக் கும் நேர்ந்த இக்கதியினல் உண்டான அனுதாபம், பருமாற்ற வாதம் வளர்வதற்குத் துணைபுரிந்தது. பத்தொன்பதாம் நூற்முண் டில் பருமாற்றவாதத்துக்குக் கொத்துலாந்து பெயர்போன தாயிற்று. V−
இறுதியாக 1794 ஆம் ஆண்டில் சீர்திருத்தவாதிகளின் உயிர் களுக்கே தீங்கு தேடுமளவிற்கு அரசாங்கம் பயத்தினல் அறிவிழந் தது. சப்பாத்துத் தயாரிப்பவனகிய தோமசு ஆடிக் கெதிராகப் பாரிய துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. இவனே தொழிலாளர் வகுப்பினரிடையிலான அரசியல் யாப்பில் இயக்கத்துக்குப் பிரதம தலைவனும் கடிதப் போக்குவரத்துச் சங்கத்தின் தாபகனுமாவன். விரிவுரையாளர் தெல்வால், மொழியியல்வல்லுநர் ஒண்தூக்கு போன்ற நற்சுபாவமுடைய பண்பாளர் பலரும் அதே துரோகத் தண்டனைக்குரிய குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டனர். இங்கிலாந் தின் சிறந்த பண்பு, அந்நாட்டுக்கே சிறப்பான நிறுவனமாகிய நடு வர் முறையினல் அதன் பெயரைக் காப்பாற்றியது. ஆங்கிலரின் நேர்மை நியாய உணர்ச்சிக்களுக்குப் பங்கம் விளையும் விதத்திற் பிற்று நடந்துகொண்டான். ஏசுகினது வசப்படுத்தும் வாக்கு வல்ல மையினுல் தோரி நடுவர் பன்னிருவர் ஆடியையும், அவரோடிருந்த ஏனைய சிறைவாசிகளையும் கொலைக்குற்றத்திலிருந்து விடுதலை செய் தனர். அத்துடன் உரோபெசுப்பியரினுடைய முறைகள் அங்கு தேவைப்படுவனவல்ல என அரசாங்கத்துக்கு ஞாபகப்படுத்தினர். யக்கோபினருக்கு மிக விரோதமாயிருந்தபோதிலும் இலண்டன் அவர்களது விடுதலையைக் களியாட்டாகக் கொண்டாடியது.
உரிய காலத்திலேற்பட்ட இந்தத் தடை பயங்கர ஆட்சியிலிருந் ஆம், ஒரு சமயம் ஏற்பட்டிருக்கக்கூடிய பழிவாங்கும் புரட்சியிலிருந் தும் இங்கிலாந்தினைக் காப்பாற்றியது. ஆனல் கூடுதலான பொது அங்கீகாரத்தோடு அடுத்த பல்லாண்டுகள் அரசியல் வாக்குவாதங் கள் எழாவண்ணம் அரசாங்கம் நடைபெற்று வந்தது. கடிதப் போக்குவரத்துச் சங்கமும் ஏனைய சங்கங்களும் பாராளுமன்றச் சட்டத்தினல் அடக்கப்பட்டன. “ஆளுரிமைச்" சட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டுத் தங்களுக்கு எதிராகச் சாட்சி எதுவுமில்லாத

இணைதலொழிப்புச் சட்டம்
பெருந்தொகையினரான மக்கள் பல வருடங்களாகச் சிறையில் வைக்கப்பட்டனர். நீதவான்களால் உத்தரவுப் பத்திரங்கள் வழங் கப்படாப் பொதுக்கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன. பொதுக் கூட்டமெதற்கும் உத்தரவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது. அடிமை வியாபார எதிர்ப்பு இயக்கம் ஒன்று தவிர (அதுவும் சிலகாலம் குன்றியிருந்தது ) பிரித்தனில் அரசியல் வாழ்க்கை அடியோடு தடைப்பட்டு விட்டது. நிலைமையை மேலும் மோசம் அடையச்செய் வதுபோன்று, பொக்சுவை ஆதரித்த உவிக்குகளும், அரசாங்கத் தைக் கண்டிக்கக்கூடிய ஒரே ஒரு இடமான பாராளுமன்றத்தி லுள்ள தமது கடமையை, மனத்தளர்வினுலும் சோம்பலினலும் கைவிட்டுக் குறிக்கோளற்ற 'ஒதுக்கம் தேடித் தங்கள் கிராமப்புற விடுகளுக்குச் சென்றனர்.
பிற்றின் 'இணைதலொழிப்புச் சட்டங்கள் அக்காலத்து அடக்கு முறை மனப்பான்மையின் மற்முெரு தோற்றமேயாகும். இவை தொழிற்சங்க நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக்கின; சம்பளம் பெறும் வேலையாட்கள் ஒன்றுசேர்தலைத் தண்டனைக்குரிய செயலாக் கின. நியாயமான சம்பளத்தினைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத் துவதற்கு அவை எத்தகைய வழியையுமுடையனவாயிருக்கவில்லை. வேலையாட்கள் தங்களுக்கு வேலை கொடுப்போரின் தயவில் இருக்க வேண்டியதாயிற்று. அரசாங்கத்தின் கொள்கை உண்மையில் தற் போக்குக் கொள்கை யன்று ; அது தொழிலாளர்க்கெதிரான முத லாளி வகுப்பினர் சார்பான அரசாங்கத் தலையிடேயாம். அக்கா லத்து அரசியல் பொருளாதாரத்துக்கு ஏற்பச் சம்பளங்களைக் கட் டுப்படுத்தி வைக்கும் அவாவினுல் மட்டும் அது உந்தப்பட்டதன்று; * தொழிலாற்றும் வறிஞர்கள்' பலவகையாக ஒன்றுசேருதல் காரண மான யக்கோபினப் பகைமை இயக்கப் பயத்தினுலும் அது உந்தப் பட்டதாகும். இரண்டு சபைகளிலும் அச்சட்டங்களை எதிர்த்த அர சியல்வாதிகளுள் முக்கியமானேர் செறிடன், ஒல்லாந்துப்பிரபு என்ற உவிக்குகள் இருவர்மட்டுமே ஆவர்.
கைத்தொழிற் புரட்சியாற் முேற்றுவிக்கப்படுகின்றதும் பட்டினங்
களிலேயே மிகுதியும் காணப்படுவதுமாகிய புதிய தொழிலாளர் வகுப்பு முறையே அரசியற் சங்கங்களின்மூலமும் பொருளாதாரத் தொழிற் சங்கங்களின்மூலமும் ஒப்பானவழிகளில் தமக்கு வேண்
303
1797-1799.
1799-1800.
டியவற்றைத் தாமாகக் கற்றுக்கொள்வதிலும், தாமே தமக்கு உதவி
செய்வதிலும் முதலில் இவ்வித ஆர்வத்தைக் காட்டியது. இவை இரண்டினையும் நசுக்கப் பிற்றின் அரசாங்கம் முயற்சித்தது. எனி லும் பொருளாதாரத்துறையிலும் பார்க்க அரசியல் துறையில் அவன் அதிகம் வெற்றி எய்தினன். போர்கள் முடிவுற்றதன் பின்னர் பீற்றர்லூவின் ஊழியில் தொழிலாளர் வகுப்பினரின் அரசியல்

Page 165
304
தொழிலாளர் உரிமைகள்
வாழ்வும், தொழிற்சங்க இயக்கமும் தனித்தனி புதிதாய் முன்னே றிச் சென்ற பொழுது அவர்கள் தேசத்துக்குப் புறம்பானேர் போன்று அங்கு வாழும் உரிமைக்கே போாட வேண்டியவராயினர். அதன்பின்னர் பிற்றின் காலத்தில் பொதுவாக, தோரி ஆட்சியை ஆதரித்த பொது மக்கள் அபிப்பிராயம் விரைவில் அதற்கு மாருகச் செல்லலாயிற்று. போர்க் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரா கப் பிற்றினல் தொடங்கப்பட்ட அடக்குமுறைக் கொள்கை காலப் போக்கிலே நாட்டின் வழக்கமாகிவிட்டது. அத்துடன் சமாதான காலத்தில், பிற்றுக்குப் பின் வந்தோரால் பெரும்பான்மையினருக்கு எதிராக அப்பூட்கை தொடர்ந்து கையாளப்பட்டு வந்தது. வறிய வர்க்கும், அவர்களின் நிலைமைகளை எடுத்துரைக்க முயன்றவர்க்கும் எதிராக அரசாங்கம் முதலாளி வகுப்பினர் பக்கம் சார்ந்தமை, பிரான்சிய புரட்சியினதும் பிரான்சியப் போரினதும் காரணமாக எவ்வளவு இயற்கையேயானுலும் கைத்தொழிற் புரட்சிக் காலச் சமுதாய மாற்றங்களைக் கசப்புடையனவும் இயல்பு பிறழ்ந்தனவு மாக்கியது ; அதைத்தொடர்ந்த ஆறுதலளிக்கும் காலத்திலும் கூட முற்முக ஆற்றப்படாத தழும்புகளையுடையதாகச் செய்தது. 1823 ஆம் ஆண்டிலேதான் தொழிற் சங்கங்களுக்கு விரோதமான "இணைதலொழிப்புச் சட்டங்கள் ” விலக்கப்பட்டன. இதுவே சட்ட ஆக்கத்துக்குரிய மலர்ச்சியின் முதற்படியாகும்.
இப்பொழுது நடுத்தர வயதினையடைந்துள்ள சாள்சு பொக்சுவின தும் அவனின் விருப்புக்குரிய வாலிபர்களான ஒல்லாந்துப் பிரபு, சாள்சு கிறே என்பவர்களினதும் தலைமையில் பாராளுமன்ற உவிக் குகள் யக்கோபினப் பகைமைவாதத் தோரிகளுக்கும் பெயினிய பருமாற்றவாதிகளுக்குமிடையே இங்குமங்குமான தொரு நிலை மையை வகித்தனர். பெயினின் கொள்கைகளை எதிர்த்துக்கொண்டு 1793 இலிருந்து 1797 வரை யக்கோபினப் பகைமைவாத எதிர்த் தாக்குதலின் வேகத்தில் பாழ்பரோக்கள் அழிக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டி சீர்திருத்தங்களை இவர்கள் பாரா ளுமன்றத்திற் பிரேரித்துவந்தனர். இவர்கள் பிரான்சுடன் அனுதா பங் கொண்ட தேசத் துரோகிகள் என இவர்களைப் பற்றி அஞ்சிய பெரும்பான்மையினர் இவர்களுக்கெதிராக வாக்களித்து இவர்களை அடக்கினர். பாராளுமன்றத்துக்குரிய சுதந்திரத்துக்கும், நற் முெடர்புடையாரும் நாகரிகமுடையாரும் சற்றே தம்மிச்சைப்படி நடத்தற்குரிய சுதந்திரத்துக்கும் ஆங்கிலேயர் எல்லோருமே பெரி தும் கெளரவமளிப்பவராதலினல் இதனினும் இழிவான விளைவுகளே
இவர்கள் அடையாவகை காக்கப்பட்டனர்.

விக்குகளின் * ஒதுக்கம் ”
இத்தகைய சூழ்நிலைகளில் சீர்திருத்த உவிக்குகளுக்குப் பேக்குட லும் தங்கள் சொந்தக் கட்சியில் பாதித்தொகை அங்கத்தவர்களு டனுமிருந்த பிணக்கு கசப்பான நிலையையடைந்து முற்றுப் பெற்றது. பேக்கினைப் பின்பற்றிய உவிக்குகள் தோரி அமைச்சின் ஆதரவாளரோடு சேர்ந்து அக்கட்சியினராயினர். பொக்சுவைப் பின் பற்றிய . உவிக்குகள் அக்கட்சியின் மூலபுருடர்களானதுமன்றி அதன் மரபினைப் பேணுபவருமாயினர். பிற்றுக்கும் அவனின் தோரி வழித்தோன்றல்களுக்கும் பொக்சார் தொடர்ந்து காட்டிய எதிர்ப்பு பாராளுமன்ற எந்திரம் முழுவதும் யக்கோபின பகைமை இயக்கத் கின் ஒருபாகமாய் அமைவதனைத் தவிர்த்தது; இவ்வெதிர்ப்பு புதிய ஊழியில், மக்கள் வகுப்புக்களுக்கிடையேயிருந்த பிளவினை நீக்கும் ஒரு பாலமாக-அது எத்துணை ஈடாடிக் கொண்டுள்ள பலமற்ற தொன்முயிருந்த போதிலும்-அமைந்தது. பாராளுமன்றச் சீர்திருத் தங்களை நடைமுறையில் ஏற்படுத்த முடியாத நாட்களிலும்கூட உவிக்குகள் பாராளுமன்றச் சீர்திருத்தங்களையே ஆதரித்துக் கொண்டிருந்தமை நிலைமை முற்முக மாறியதும் 1832 ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் சீர்திருத்த முறியினுல் உள்நாட்டுக் கலகத்தினையும் சமுதாய வீழ்ச்சியையும் தவிர்க்க வாய்ப்பளித்தது.
இன்னமும் அதிதூரத்திலுள்ள அந்த ஊழிவரைக்கும் உவிக்கு களின் நிலைமை ஒதுங்கியிருத்தலேயாகவிருந்தது. பிரான்சுக்கெதி ராகப் போர் செய்வதற்கான தேசீய ஆர்வத்தின் கடும் வேகத்தினற் முக்கப்படாமலும், அதேபோலத் தொம்பெயினினதும் அவனுக்குப் பின்னர் அவன் வழி வந்த உவிலியம் கொபெற்றினதும் கீழ்த்தர வகுப்புப் பருமாற்றத்தில் அனுதாபங் கொள்ளாமலும் அவர்கள் இருந்தனர். முப்பது ஆண்டுகளாக மக்களிடம் செல்வாக்கில்லா திருந்தமை, அதிகாரத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை ஆகியன கூட உவிக்குக் கட்சியை அடியோடு அழித்துவிடவில்லை. அவர்கள் ஒருவரிடமொருவர் கொண்டிருந்த பற்றும், கட்சி மரபுமுறைகளும், அவர்களின் பெரிய மகிழ்வூட்டும் நாட்டுப்புற இல்லங்களிலும் புறூக் கின் சங்கமண்டபத்திலும் கூடும் பெரும் கூட்டங்களில் அவர்களை ஒன்முய்ப் பிணைத்து வைத்திருந்தன. உயர்குடிமக்களும், கலைஞர் களும், விளையாட்டு வீரர்களுமான அவர்கள் பதவிகளையும் மக்கள்
விருப்பினையும் கருதாது வாழ்வினை மகிழ்வுடையதாக்க வல்லாா
யிருந்தனர். பாழ்பரோக்களில் ஒரளவு பங்குடையராயிருந்தனராத லின் பாராளுமன்றத்தில் அவர்கள் தங்கள் தானங்களை இழக்கும் படி நேரவில்லை. தங்களிலும்பார்க்க நாகரிகம் குறைந்த மக்கள் எனத் தோரித் தேசாதிபதிகளை அவர்கள் இகழ்ந்தனர். அவர்கள் அத்துணை நற்றெடர்புடையாாய் இருந்தமையின் குடியாட்சியை
305

Page 166
306
சாள்சு பொக்சு
இழிவாகக் கருதக்கூடியவர்களாயிருந்தனர். அவர்கள் அக்காலத் தின் கோலமாயிருந்தனராதலின், யக்கோபினியமும் அவர்களிட மேற்பட்ட வினேதமான ஒரு போக்காகவே தோன்றியது. 1806 ஆம் ஆண்டில் பொக்சின் மரணம்வரை அவனிடமும் அதன்பின்னர் அவனின் நினைவிலும் அவர்கள் கொண்டிருந்த பற்று ஆங்கில அரசியலின் போக்கை.நிர்ணயித்த தற்செயலான சந்தர்ப்பங்களுள் ஒன்ருகும். பொக்சு தனது நண்பர்களால் விரும்பப்பட்டான். அவன் எங்கிருந்தானே, அங்கே உலிக்குக் கட்சியும் இருக்கும். அவன் பிற்றினிடமும் யக்கோபினியப் பகைமைவாதத்துடனும் சேர்ந்திருந்தால் உலிக்கு-தாராளர் கட்சி என்பதொன்று உண் டாயிராது. அதே சமயம் பத்தொன்பதாம் நூற்முண்டின் அரசி யல் அமைப்பு பாராளுமன்றச் சீர்திருத்தத்தினுலன்றி ஆயுதந் தாங்கிய புரட்சியாலும் எதிர்த்தாக்கத்தினுலும் ஏற்பட வேண்டிய தாயுமிருந்திருக்கும்.
மூன்ரும் யோச்சால் நாட்டினை ஆளும்படி இளமைமிக்க பிற்று முதன்முறையாக அழைக்கப்பட்டபொழுது உவிக்குக் கட்சி வசைக் கவி வல்லார் “பாடசாலை மாணவனிடம் ஒப்படைக்கப்பட்டதோர் இராச்சியம்' என நையாண்டி செய்தனர். ஆனல் பாராளுமன்ற மும் நாடும், விரைவில் பிற்று ஒரு பாடசாலை மாணவனல்லன் என் பதையும் அவன் கட்டுப்பாடு, கண்ணியம், அடக்கம் ஆகிய இயல்பு களையுடைய ஆற்றல் மிக்க பாடசாலையாசிரியன் என்பதையும் கண்டன. என்றென்றும் பாடசாலை மாணவனுக விருந்தவன் பொக்சேயாவ்ன். அவன் நண்பர்களிடம் விசுவாசமுடையான் ; எதிரிகளிடம் உதார குணமுடையான். எனினும் காரணத்தோடா யினும் காரணமின்றியும் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவான். அவனுக்குத் தொல்லையில்லாத காலமே கிடையாதெனலாம். உயிர் களிடத்தும் மனித வருக்கத்திடத்தும் அவன் போன்புகொண்ட வன்; எதிர்க் கட்சித் தலைவனுவதற்கென்றே பிறப்பெடுத்தவன் ; எறக்குறையத் தனது நீடிய வாணுள் முழுவதும் பொதுமக்கள் சபையில் எதிர்க்கட்சித் தலைவனுகவே இருந்தான். பொக்சுவிலும் பார்க்க சதாம் என்பான் சிறந்த வாக்குவல்லமை யுடையணுகவும், அவனின் மகன் அவனிலும் சிறந்த தருக்கவாதியாகவும் விளங் கினர். ஆனல் உணர்ச்சி மிகுந்த சொல்வன்மையோடு தருக்கவாத ஆற்றலும் இயையுமிடத்துப் பொக்சுக்கு எதிர்நிற்கவல்லார் எவரு மிலர். சிறு பராயத்தில் குதாட்டத்தில் ஈடுபட்ட போது அவனின் ஊதாரித்தனமும் பின்னர் அரசியல்வாதியா யிருந்தபோது -96υ னின் மட்டுமிகைச் செயல்களும், நோத்துடன் கொண்ட கூட்டி ணைப்பும், எண்பதாம் ஆண்டுகளில் பிற்றின் எத்தனையோ அரிய நடவடிக்கைகளுக்கு அவன் செய்த கட்சிச்சார்பான எதிர்ப்பும்

al്ഞഥ வியாபார ஒழிப்பு
அவனைத் தளர்ச்சியடையச் செய்தன. முதுமையும், பொது வாழ்வில் பங்குபற்றும் வாய்ப்பின்மையும் அவனுடைய உணர்ச்சி களையடக்க, கட்சிச் சார்ப்பில் முன்பு பெரிதும் பிரயோகிக்கப்பட்ட அவனது மனுேசக்தி இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் அயலாந் கிலும் நொந்தோர்க்குப் பரிவு கொள்வதில் பிரயோகிக்கப்பட்டது. நீகிரோ அடிமைகளின் விவகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக
அவனைக் கவர்ந்தது. என்றுமே பிரித்தானிய பேரரசையும்,
ஐரோப்பா முழுவதனையும் பொனப்பாட்டிடமிருந்து காப்பாற்று வதிலேயே என்றும் அதிக கவனம் செலுத்திவந்த பிற்று, ஏனை எல்லாவற்றையும் மடிந்தானுய், அடிமை வியாபார எதிர்ப்புக் கொள்கைக்கு உதவியளிக்க எதனையும் செய்திலன். ஆனல் உவில்ப வோசுக்குப் பொக்சு என்றுமே நம்பிக்கைமிக்க ஒரு தோழனுக விருந்தனன். அவனின் அயரா உழைப்பின் காரணமாகவும், பிற் றின் மரணத்தின் பின்னர் சில திங்களுக்கு ஏற்பட்ட கூட்டு அமைச்சொன்றல் உலிக்கு முதல்வர்களை உத்தியோகத்தில் இட்ட சந்தர்ப்பத்தின் காரணமாகவும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழவேண்டிய அடிமை வியாபார ஒழிப்பு 1807 ஆம் ஆண்டி லேயே நிகழ்ந்தது. பொக்சு தன் மரணத்தின்போது உலகுக்கும் தன் நாட்டிற்கும் விட்டுச்சென்றது அதுவேயாம்.
காலங்கள் இடர் மிக்கனவாய் இருந்தன எனினும், இங்கிலாந்து தோற்றுவித்த மனிதர்கள் பெரியர் அன்றே! பிற்று, காசில்றி என் போரையும், நெல்சன் வெலிந்தன் என்போரையும் தனக்கு, முன் எஞ்ஞான்றும் நிகழ்ந்திராத அதிபயங்கரப் பரிசோதனைகளுக் கூடாகத் தன்னை வழிநடத்திச் செல்வதற்கெனபி பெற்றதோடு போர்க்காலத்திலுங் கூடத் தன் மனச்சாட்சியைப் பேணப் பொக்
சினையும் உவில்பவோசினையும் இங்கிலாந்து பெற்றிருந்தது.
அத்தியாயம் V
பிரான்சிய புரட்சிப் போர்களும் நெப்போலியப் போர்களும் ; பிற்று நெல்சன் ஆகியவர்களின் காலம், 1793-1805 ; வெலிந்தன் காசில்றீ ஆகிய வர்களின் காலம், 1808-1815 ; கப்பற் படை, வியாபாரம், இராணுவம் ஆகிய துறைகளிற் பிணக்குகள் ; இறுதி இணக்கம்.
ஒரேயொரு தனிவல்லரசினுல் ஐரோப்பா முழுவதும் வெற்றி கொள்ளப்படுதலைத் தவிர்ப்பதற்கென இக்கால இங்கிலாந்து ஒரு பெரும் போரினை வெற்றிகரமாக நான்குமுறை மேற்கொண்டது. பிலிப்பின் இசுப்பெயினும் மத வழக்குமன்றமும் மாமன்னன்
307

Page 167
308
1799, 1809.
மீண்டும் இரைன்நதிக் கழிமுகம்
உலூயியின் பிரான்சும், யக்கோபினரின் பிரான்சும், அவற்று டன் எமது காலத்தில் சேர்மானிய படைப்பல முடியாட்சி யும் ஒன்றன்பின் ஒன்முக முறையே முறியடிக்கப்பட்டன; ар}- மன்னனின் பிரான்சோடு இயேசு சபையினரும் யக்கோபினரின் பிரான்சோடு நெப்போலியனும் முறியடிக்கப்பட்டனர். இந்த நான்கு சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றிலும் இங்கிலாந்து இரட்டை நோக்கத்கினையே கொண்டிருந்தது-ஐரோப்பாவில் அரசு வலுச் சமநிலையை ஏற்படுத்தல் ஒன்று; கடல்களுக்கப்பாலுள்ள தனது சொந்த வியாபார நலன்களினதும் குடியேற்ற நாட்டு ஆட்சியின தும் எதிர்கால ஏமம் மற்றையது. மேலும், ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும், ஐரோப்பாவினதும் கடல் சார்ந்த பகுதிகளினதும் ஒரு மித்த நலனுக்காக நெதலந்துகளும், இாைன் நதிக் கழிமுகமும் கண்டத்தின் மிகப் பெரிய கடற்படை, தரைப்படை ஆகியவற்றின் பலம் பொருந்திய அரசனுல் கைப்பற்றப்படுவதை இங்கிலாந்து தவிர்க்கவேண்டியிருந்தது. இலிசபெத்தின் கீழும் உவிலியம், ஆன என்போரின் கீழும், ஐந்தாம் யோச்சின் கீழும் கண்டத்தின் கண்ணே ஆங்கிலேய படைகள் முக்கியமாக நெதலந்துகளில் தலை யிட்டமை தற்செயலான ஒரு நிகழ்ச்சியன்று; எங்கள் கரை நாடு களுக்கும் கால்வாய்மீது எமது கப்பற்படை ஆதிக்கத்துக்கும் ஏற் பட்ட இடர் காரணமாகவே அவ்வாறு நிகழ்ந்தது. அதே காரணத் தினலேயே மூன்ரும் யோச்சின் பேரால் புரட்சிகரப் பிரான்சிற் கெதிராகப் புரியப்பட்ட போர்கள் 1793-1794 ஆம் ஆண்டுகளில் நெதலந்துகளில் எங்கள் சேனைகளின் தோல்வியொடு தொடங்கி அதே பகுதியில் உவாற்றலூவில் அவைகளின் வெற்றியோடு முடி வுற்றன. அடுத்த இருபது ஆண்டு இடைக்காலத்தில் பெல்சியத்தின் மீதும் ஒல்லாந்தின்மீதும் பிரான்சுக்கிருந்த ஆதிக்கம், எங்களின் படைகளை அல்குமார், உவால்கெறென் என்பவற்றுக்குச் சென்ற வெற்றியற்ற சிறிய படைகள் தவிர, பற்பல பற்றுரிமைகள் மோது தற்கு இடமாயிருந்த நெதலாந்துட் செல்லவிடாது தடுக்கத் தக்க பலமுடையதாயிருந்தது.
நெப்போலியப் போர்கள், மாள்பரோப் போர்களுக்கும் எங்கள் காலத்துப் பெரும்போருக்கும் காலத்தால், அளவால், தன்மையால்
இடைப்பட்டனவாய் உள்ளன. மாள்பரோப் போர்களோடு உள்ள
ஒப்புமையே மிக வெளிப்படையானது. ஏனெனில், கடலிலும் தரை
யிலும் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் இரண்டு காலங்களிலும் ஏறத்தாழ ஒரு தன்மையன ; இரு காலங்களிலும் பகையரசு பிரான்சேயாகும். எனவே நெப்போலியன அடக்கிய கடற்படை தரைப்படைகளின் செயல்களுக்குரிய குழ்நிலையும் விாகும் பதினன் காம் உலூயியை அடக்கியவற்றுக்கு ஒப்பாயின. மேலும், உவிலியத்

பிரித்தானியருடைய பெரும் போர்கள்
தினதும் மாள்பரோவினதும் காலத்தைப் போலவே, பிற்றினதும் காசில்ரீயினதும் காலத்திலும் பிரான்சுக்கு எதிரான கூட்டுறவுக்கு இரு ஊன்று கோல்களாக அமைந்தவற்றுள் ஒன்று எல்லாக் கரை யோரங்களிலும் உபயோகிக்கப்பட்ட பிரித்தானியக் கடற்பலம் மற்றது ஐரோப்பாவின் இறைசேரிகளில் பாதித்தொகையிலிருந்து கிடைக்கப்பெற்ற பிரித்தானிய பொருளுதவி. திாபல்காரில் வெற்றி கொண்ட பாரிய பிரித்தானியக் கப்பல்களின் பீரங்கிகள் இலா ஒக்கில் வெற்றிகொண்டனவற்றேடு ஒத்த தன்மையினையுடையன வாயிருந்தன; எமது காலாட்படைகளும் பிரித்தானிய குதிரைப் படையும்கூட, பிளன்கீம், இராமலிசுப் போர்ச் சூழ்ச்சிகளி லிருந்து பெரிதும் வேறுபடாச் சூழ்ச்சிகளாலேயே உவாற்றலூவில் வெற்றிபெற்றன. கண்டத்தின் பெரிய சேனைப் படைத்தாபனங் களின் மத்தியில் ஒரு சிறிய, ஆனல் திறமைமிக்க சேனைக்குத்
தலைமைதாங்கிய தனித்திறமை படைத்த பிரித்தானியத் தளபதி
ஒருவன் முடிவை நிச்சயிக்கும் செயலொன்றை மீண்டும் புரிந்தான். நெதலந்துகளிலும் இசுப்பெயினிலும் மத்தியதரைத் தீவுகளிலும் அமெரிக்கக் கரையோரங்களிலும் பிரிட்டிசுப் படைகள் இறக்கப் பட்டன. 1713 ஆம் ஆண்டினைப் போலவே மீண்டும் 1815 ஆம் ஆண்டிலும், நெதலந்துகளிலே தனக்கு முற்றிலும் சாதகமான ஒரு வல்லரசினை நிறுவியதுடனும் குடியேற்றப் பேராசின் பெரு விருத்தியுடனும், தன் கடல்சார்ந்த புகழின் வளர்ச்சியோடும் இங்கிலாந்தின் போர் முற்றுப்பெறுவதாயிற்று.
ஆனல் நெப்போலியப் போர்கள் பழைய காலச் சம்பவங் களையே மீண்டும் நிகழச் செய்து, எதிர்காலத்தில் நிகழ விருக்கும் சம்பவங்களுக்கும் முன்னேடியாய் அமைந்தன. உலூயியோடு ஏற்பட்ட பிணக்குகளின் விளைவு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கு
மிடையே யேற்பட்ட வியாபாரப் போட்டியின் போக்கினல் உண்மை
யில் பாதிக்கப்பட்டது. எனினும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், வியாபாரஞ் சார்ந்த போட்டியே, அதிக உறுதியுள்ள போர்க் கருவியாயமைந்தது. நெப்போலியனின் ஐரோப்பாவைப் பிரித் தானியா முற்றுகையிட்டதும், பேளின், மிலான் பிரகடனங்கள் மூலம் இங்கிலாந்தினைப் பட்டினிக்குட்படுத்த அவன் செய்த முயற்சி களும் எங்கள் காலத்து மத்திய வல்லரசுகளைப் பிரித்தானியா முற்றுகையிட்டதற்கும் சேர்மானிய நீர்மூழ்கிக்கப்பற் போராட்டத் திற்கும் ஒப்பான ஒரே வகையான பொதுத்தன்மை வாய்ந்த போர் நடவடிக்கைகளாம். அவைகள் அகில உலகத்தின் பொருளா தாரத்தினையும் சீர்குலைத்தன; அன்றியும் அவ்வாறு போராடும்
309

Page 168
310
கப்பற்படை தந்த காப்பு
நாடுகளுக்கு ஐக்கிய அரசுகளுடனும், எதிர்கால நடு நிலைமை நாடுகளுடனுமுள்ள தொடர்பு சார்பாகப் பாரிய விளைவுகளை உண்டாக்கின. .
மேலும் பிரான்சியப் புரட்சியிலிருந்து தோன்றிய போர்களில் இக் காலத்திற்கே சிறப்பாகவுரிய அரசியல் அம்சம் ஒன்றுளது. பிரான் சில் ஏற்பட்ட புதிய ஆட்சி, அதன் குறைபாடுகளோ குற்றங்களோ எப்படி இருப்பினும், அதிகந் தாழ்ந்த நிலையிலிருந்த பிரான்சிய விவசாயியையும், நடுத்தர வகுப்பினனையும் அந்நாட்டுக் குடிமகன் என்ற பெருமையினையும் தாயகப்பற்று எனும் உணர்ச்சியை யும் பெருமளவிற் பெறச்செய்தது; இராணுவ சேவை பொதுமக்கள் சேவை ஆகியவற்றைப் பிறப்பு வேறுபாடின்றி அறிவு மிகுந் தார்க்குக் கிடைக்கக் கூடியதாக்கியது; அன்றியும் பொனபாட்டின் ஆதிக்கத்தில் முற்றும் புதுமுறைத் திறமையினையுடைய பாலன முறையைப் புதிய நாட்டிற்கு வழங்கியது. கண்டத்தின் ஏனைய நாட்டு மக்கள் கூலியாட்கள் அல்லது அடிமைகள் போலவே களத் துக்கு இட்டுச் செல்லப்பட்டனரேயன்றிக் குடிமக்கட் போர்வீா ாாக அல்ல. பிரித்தனல் மட்டுமே பிரான்சின் இந்தப் புதிய சத்திக்கு அதனிலும் முன்னராகவே தோன்றியுள்ள தனது தாயகப் பற்றி னெடு எதிர் நிற்க முடியும். ஆனல் கடலாதிக்கத்தினையும், வியா பாரத்தினையும் காத்தற்பொருட்டு மட்டுமே ஆங்கிலேயருக்கு ‘வெற்றிகொள்வதிலுள்ள மனவுறுதியை முற்முகத் தூண்ட முடி யும். 1794 ஆம் ஆண்டில் நாங்கள் நெதலந்துகளிலிருந்து வெளி யேற்றப்பட்டபின்னர், ஏனையோர் யாவரும் பிரான்சுக்கு அடி பணிந்தனராக, நாங்கள் மட்டும் தொடர்ந்து போரிலிடுபட்டிருந் தோம் என்பதுண்மையே. எனினும் ஐரோப்பாவிற்குட் கொண்டு செல்லாது, பன்னிரண்டு ஆண்டுகளாக எங்கள் சேனைகளை ஒன்று சேர்த்துக் கப்பற்படையின் பாதுகாவலில் வைத்திருந்தோம். மசென்கோ, அவுத்திரலித்து என்ற இடங்களில் தோல்வியடைந்த இரு கூட்டமைப்புப் போர்களிலும் எமது கடற்படையும் பண வுதவியும் சிறிது பயன்பட்டனவேயெனினும் வேறு பெரும் பங் கெதுவும் எடுத்திலோம். அன்றியும் 1808 ஆம் ஆண்டின் தீபகற்
பப்போர் வரையும், தரையில் முக்கியத்தராகப் போர் செய்யத்
தொடங்கினுேமல்லோம். தொடங்கிய அப்பொழுதுங்கூட ஒவ் வொரு சமயத்திலும் தொகையில் 30,000 ஆங்கிலேயருக்கு மேற் படாத சேனையினையே கொண்டிருந்தோம்.
பிரான்சியச் சீர்திருத்தத்தினல் ஏற்பட்ட நன்மைகளைப் பிரான் சியக் கொடுங்கோலாட்சியின் கொடுமை விஞ்சியதைக் கண்டு ஏற் பட்ட ஆத்திரம் காரணமாக இசுப்பெயின், இரசியா, சேர்மனி ஆகிய இடங்களில் மக்கள் மனதில் நாட்டின உணர்ச்சி எழுந்த

பிரான்சின் வெற்றிகளும் இங்கிலாந்தும்
போதுதான் நேயநாடுகள்மீது வெற்றியின் ஒளி வீசத் தொடங்கி யது. அதன் இறுதிக் கட்டத்திலேயே எம் காலத்துப் பெரும் போரிற் பங்குகொண்ட தன்மான உணர்வுள்ள நாடுகளிடையே நிகழ்ந்ததைப்போன்ற போர் நிகழ்ந்தது. மக்கள் தங்களைப் பேரர சர்களுக்கும் அரசர்களுக்கும் கீழ்ப்படிந்த அடிமைகளாகக் கரு தாது எவ்வளவுக் கெவ்வளவு தாங்களாகவே விருப்பத்தோடு போர் செய்யத் தூண்டப்பட்டுப் போரில் ஈடுபட்டனரோ அவ்வள வுக்கவ்வளவு பயங்கரமும் படுகொலையும் பெரிதும் மல்கின. மொசுக்கோ, இலீப்சிக்குப் படையெடுப்புக்கள், விஞ்ஞான எந்திரங் களையும் போக்குவரத்துச் சாதனங்களையுமுடைய பிற்கால ஐரோப் பாவில் தேசீய உணர்ச்சி எழும்போது ஏற்படப்போகும் இரத்த வெள்ளத்திற்கு முன்னறிவிப்பாயமைந்தனவென்க.
போரின் இருபது ஆண்டுகாலத்திற் பெரும்பகுதியில், கண்டத்தி னேச் சேர்ந்த நாடுகளின் பழைய அரசியல்முறை வழிவந்த உளுத் துப்போன பழமைமிக்க ஆட்சியமைப்பு முறையிலும் பார்க்கப் புதிய பிரான்சிய தேசிய உணர்வும் அமைப்பும் அடைந்திருந்த அளப்பரும் மேம்பாடு பிரான்சுக்கு எதிராக இங்கிலாந்தினுல் தூண் டப்பட்டுப் பணவுதவியுமளிக்கப்பட்ட ஒற்றன்பின் ஒன்முன கூட்ட மைப்புக்களின் தோல்விகளுக்குக் காரணமாயிற்று. தீபகற்பப் போரும் இரசியாவிலும் சேர்மனியிலும் தோன்றிய மக்கள் விரும் பும் இயக்கங்களும், வெலிந்தனினதும் காசில்றியினதும் மாபெரும் படையெடுப்புக்களைச் சாத்தியப்படுத்தும்வரை இங்கிலாந்தின் பயன்தரு செயல்கள் கடலோடு மட்டும் நின்றன. ஐரோப்பிய நாடு கள் முழுவதுமே பிரான்சிய அடிமை மண்டலத்துத்குட்பட்டிருப்ப வும் இங்கிலாந்து உலகத்தின் எல்லாக் கடல்களின்மீதும் தனது ஆதிக்கத்தைப் பேணிக்கொண்டமை சிறப்பான தொன்ருகும். இங் கிலாந்தின் ஆதிக்கத்தின் எல்லை பகை நாட்டின் கரையோரம்வரை
அகன்றிருந்ததாதலின் அது ஐரோப்பிய சுதந்திரமானது நிராகரிக்
கப்பட்டுவிட்ட தென்பதைப் பலவாண்டுகளாக ஒப்புக்கொள்ளா திருக்கக் கூடியதாயிருந்தது. ஆங்கிலேயருக்கு இயல்பான தீவிர கடற்படை முயற்சி, பிரான்சிய ஆதிக்கத்திற்கு விடாப்பிடியான எதிர்ப்பு ஆகிய தேசீய ஊக்கங்களிரண்டும் நெல்சனிலும் பிற்றிலும் பூரணமாகக் குடிகொண்டிருந்தன. இவ்விருவரினதும் மனமார்ந்த பூரண கூட்டுறவு பிரித்தானியப் பேரரசினைக் காப்பாற்றியது.
தனக்கும் தன் நாட்டுக்கும் அனுகூலமானதானதொரு ஒசையிற் றந்த நெல்சன் ஆர்வமிக்காணுகவும் எந்நேரமும் கடலில் வாழ் வனுகவும் இருந்தனன். பிற்று சமாதானத்தையே பெரிதும் விழை ம் இயல்புடைய அமைச்சனவன். தன் எண்ணத்துக்கு மாமுகப்
311
1812-1813.
1793-1805.
1808-1815.

Page 169
3.
SLLLLL YYYYYSLYYYK KKYYY Y00LLLLLLLLr0S 00LLSYYY L SLLLL L S
* * * * * * * * * * * * * =:= * = + + + + + → +→. + 圈 例*鼎鼎鼎豐豐
* ++++++++ +-+-+-+-+-+ +--+=i++, r−+++++
 
 
 

பிற்றின் போர்க் கொள்கை
போர்ச் சுமையினேக் தாங்கும்படி செய்யப்பட்ட அவன் இறக்கும் வரை அதனேச் சுக்க வேண்டியவனுஜன். உண்ணுட்டில் பத்து ஆண்டு நல்லரசாலும், கனடாவுக்குரியனவும் இந்தியாவுக்குரியனே மான தனது சட்ட ஆக்கங்களினுலும் நாட்டினேயும் பேராசினேயும் இந்த முக்கியமான சோதனேக்கு அன்ை தயார் செய்திருந்தான். அமெரிக்கக் குடியேற்ற நாடுகளே இழந்த அத்துனேச் சிறிய காலக் துக்குன்னாகப் பிரித்தன் புதியதொரு இக்கட்டுக்குட்படுவதை அவன் உண்மையாக விரும்பவுமில்லே, எதிர்பார்க்கவுமில்லே. 1793 ஆம் ஆண் டில் புரட்சிகரப் பிரான்சிற்கு மாமூகப் பிற்போக்கான நரங்கன் செய்த முதல் எதிர்ப்பிற் கலந்துகொள்ளப் பிம்' மறுத்துவிட் டான். உண்மையில், அவ்வாண்டின் தொடக்கத்தில் இனி காலம் திற்குப் போர் எதுவும் ஏற்படாகெனக் கூறி எது போர்ப்படை கனின் தொகையையும் குறைத்திருந்தான். ஆணுல் தெசுலங்கைப் பிரான்சு தாக்கியதால், 1793 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆவன் போரில் ஈடுபடவேண்டியவனுயினன்.
இதற்குள்ளாக அவன் உள்ளூரில் சீர்திருத்தவாதிகளின் செயல் கிளாற் பயமடைந்தவனுய், பக்கோபினரின் கடும் விரோதியாகிவிட் டான். ஆணுல், பேக்கினேப்போன்று, இது மிக உயரிய இலட்சியங் களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போரென அவன் கருதினுனெனவோ இதில் அதிக ஆர்வங் காட்டினுனெனவோ கூறமுடியாது. அன்றியும், பிரான்சு எவ்வகை ஆட்சிமுறையை ஏற்கவேண்டுமென நிர்ணயிப் பது எங்கள் தொழில் என அவன் கருதவுமில்லே. ஐரோப்பாவின் ஆார் முறைமையிே ப் பிரான்சிங் ஆக்கிரமிப்பிவிருத்து ሠ ሃሳ'' (! காக்கலும், குறிப்பாக ஒசுற்றிய நெதலந்துகளும், ஒல்லிTச் தும் வளிந்திணேக்கப்படுவதஃனத் தவிர்ப்பதும், மேற்கு இந்திய நாடுகளிலிருந்த பிரான்சின் குடியேற்றப் பகுதிகள் சிலவற் நைக் கைப்பற்றி ஆங்கில வரி செலுத்துவோரின் செலவுகளே ஈடு செய்தலுமே அவனின் நோக்கங்கனாயிருந்தன.
பேக்கின் கற்பனைத்திறனே, நன்மைக்கோ தீமைக்கோ பிர்அப் பெற்றினின், உலகத்திலேற்பட்டிருந்த நெருக்கடியானது, மாற்ற மடைந்த அரசியல் நிைேமகளிடையே ஏற்பட்டுள்ன எழ"ண்டுப் போரின் மறுதோற்றமே என அவன் கருதினுன், ஐரோப்பாவில் எமது நேயநாடுகளுக்கு உதவியனிக்கச் சில பிரித்தானிய சேண் களேயும் அதிக பிரித்தானிய பணத்தையும் அலுப்பி விட்டுத் தனது தந்தையார் முன்னர் போரிட்ட வண்ணம் கடற்படை மேன்மைக் காகவும், குடியேற்ற நாடுகளேக் கைப்பற்றுவதற்காகவும் போரிட
அவன் எண்ணியிருந்தான். ஆணுல் அவன் தன் தந்தையாகுக்
இந்நூல் பக்கம் 341-443 பார்க்க.
l

Page 170
314
மேற்கிந்திய தீவுகளிற் போர்
கிருந்த அளவு போர்ஞானம் உடையவனல்லன். அவன் காலத்திலே பிரான்சின் நிலைமையும் மிகவும் வேறுபட்டதாயிருந்தது. மாமன் னர் பிரெடறிக்கு இப்போது இலர்-எவ்வாறயினும் அவர் எமது பக்கத்திலே இலர். உயர்குடி உத்தியோகத்தர்களினுல் கைவிடப் பட்ட பழைய அரச படைகளிற் கலகஞ் செய்த வகுப்பினரிடையே யிருந்து புதிய பிரான்சிய சுதந்திர சேனை ஒன்றினைக் காணுே என் பான் திரட்டுவதன் முன்னர், 1793ஆம் ஆண்டில் நெதலந்திலிருந்து பாரிசுக்கெதிரான பலத்த தாக்குதல் ஒன்று நிகழ்ந்திருப்பின், அது வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்திருக்கும். ஆனல் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டது; புரட்சி தனது மறைந்திருந்த சக்திகளைத் திரட்ட அவகாசம் பெற்றது. அப்பொழுது பிளாண்டே சிலிருந்த ஒசுற்றிய சேனைகளேனும், பிரித்தானிய சேனைகளேனும் அத்தகைய தாக்குதலுக்கு வேண்டிய பயிற்சியையேனும் தலைமை யையேனும் பெற்றிருக்கவில்லை; நாங்கள் பின்னர் இசுப்பெயி லுக்கு அனுப்பிய திருத்தியமைக்கப்பட்ட சேனைகளுடன் வெலிந் தன் அல்லது சேர் யோன் மூர் அத்தகைய முயற்சி யொன்றைத் துணிகரமாக மேற்கொண்டிருக்கலாம்.
மேலும் 1793 ஆம் ஆண்டில், அப்போதிருந்த பிரித்தானிய சேனையில் ஒரு பெரிய பகுதியினைப் பிற்று மேற்கிந்திய நாடுகளுக்கு அனுப்பினன். அவன் பின்பற்றி யொழுகியது மாள்பசோவின் போர்த்திட்டங்களையல்ல ; சதாமுடையனவற்றையேயாகும். சதாம் கனடாவைப் பேரரசுக்காகப் பெற்றதுபோலத் தானும் பிரான் சிய மேற்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்ற வேண்டுமென்பது அவன் கருத்தாயிற்று. ஆங்கிலத் தோட்ட முதலாளிகள் பெரிய செல்வம் ஈட்டுவதற்கு இடமளித்த கரும்புத் தீவுகள் அவனின் சீவிய காலத்தில் கனடாவிலும் மேலான வளமுடையனவாய் மதிக்கப் பட்டன. அத்தகைய தீவுகளைப் பெறவும் அவற்றைப் பாதுகாத்து வரவும் பிற்று செய்த தியாகங்கள், இக்காலத்து வரலாற்ருசிரி யர்களால் எத்துணை அதிக குறைகூறப்படினும் அந்நேரத் கில் பெரிதும் பொருத்தமான செயல்களாகவே தோன்றின. எவ் விதம் கனடாவும் ஒகையோப் பள்ளத்தாக்கும் வெற்றிகொள் ளப்படவேண்டும் என்பது பற்றி அவனுடைய தந்தையார் பெற்றிருந்த அறிவுடன் ஒப்பிடக்கூடிய அளவில் மேற்கிந்திய தீவுகளிலிருந்த போர்முறைகளின் நிலைமைகள் பற்றிய அறிவு அவனுக்கிருக்கவில்லை. ஆயிரக்கணக்கில் பிரித்தானிய படையினரை நோய் கொள்ளை கொண்டது. அவர்கள் மேற்கொண்ட முயற்சி பற்றிப் புதிய பயங்கரமும், அம்முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் விதத்தில் பிரெஞ்சுத் தீவுகளிலும் ஆங்கிலத் தீவுகளிலுமிருந்த அடிமைகள் கிளர்ச்சி செய்தனர்; இதனல் தீவுத்தொகுதி முழுவ

ஐரோப்பாவில் பொனப்பாட்டு
தனையும் 'எயித்தி' யைப் போன்று காட்டுமிராண்டித்தனத்துள் மூழ்கும்படி விட்டுப் பிரித்தானிய படையைப் பின்வாங்கச் செய் வதும் முடியாதுபோயிற்று. பிரித்தானிய பேரரசுக்குச் சிறிதேனும் நன்மை தராத இந்த அலுவல், மூன்று ஆண்டுகளுள் 40,000 பிரிக் தானிய படையினர் இறந்த பின்னரே கைவிடப்பட்டது. இக் தொகை வெலிந்தன் ஆறு ஆண்டுகளில் நெப்போலியனின் படை களை இசுப்பெயினிலிருந்து வெளியே துரத்துவதற்குப் பயன்படுத் திய தொகைக்கு ஓரளவு சமமானதாகும்.
அயனவலயப் பகுதிகளில் ஏற்பட்ட இந்தப் பயங்கரமான சேதங்
களும், அந்நாளைய திறமையற்ற படை அமைப்பு முறையும் ஐரோப்
பாவில் இங்கிலாந்தின் முயற்சிகளை மட்டுப்படுத்தின. 'வதைக்கப் பட்ட போலந்தின் பிணத்தினைப் பங்கு போடுதலில் பிரசியாவும்
இாசியாவும் தத்தம் நலன்மீது கவனத்தைச் செலுத்தியதனல்,
பிற்றின் திட்டப்படி அவை பிரான்சுக்கெதிராக மேற்கொள்ள வேண்டிய செயல்களை மேற்கொள்ளத் தவறின. பிரிட்டிசுப் படை களும், ஒசுற்றியப் படைகளும் கீழ்த்தேயங்களிலிருந்து மார்சலே கீத முழக்கத்தோடு விரட்டப்பட்டன. ஒல்லாந்திலும் இசையின் நிலப்பகுதிகளிலும் ஓரளவுக்கு அங்கு வாழ்ந்தோருடைய சம்மதத் தோடேயே பிரான்சினரால் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப் பட்டன. இறுதியாக, பொனப்பாட்டு இத்தாலியை வெற்றிகொண் டமையும் தனக்குக் கீழ்ப்பட்ட குடியரசுகளை அங்கு தோற்றுவித்த மையும் பிரான்சிய வெற்றியிலும் உலக அரசியலிலும் ஒரு புதிய ஊழியினை உண்டாக்கின. 1797 ஆம் ஆண்டில், இந்த இளம் விர ஞல் அடிபணியச் செய்யப்பட்ட ஒசுற்றியா, பிரான்சுக்கெதிராக இங்கிலாந்தினைத் தனியே விட்டுப் போரிலிருந்து விலகியது.
உவிலியமும் மாள்பரோவும் அடக்கிய 'மாபெரும் மன்னனி
லும் பயங்கரமிக்க அந்த "மாபெரும் நாடானது ’ இப்பொழுது தலைகொய் எந்திர சகாப்தத்தின் வாரிசான ஒரு முரடர் கூட்டத்
தால் அமைக்கப்பட்ட பணிக்காயத்தினல் நடாத்தப்பட்டது.
இக்காலப் போருக்கும் படையெழுச்சிக்கும் தந்தையர் எனக் கருதப்படக்கூடிய இவர்கள் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைக் கொள்ளையடித்துப் பிரான்சின் நிதிநிலைமையினைச் சீர்ப்படுத்த உறுதிகொண்டனர். இம்மனிதர்களுள் அதிக வல்லமை பொருந் திய சேவையாளன், விரைவில் இவர்களின் தலைவன் ஆகவேண்டிய வன், பிரான்சிய ஐரோப்பாப் பேரரசு ஒன்று எங்ஙனம் நிறுவப்
படலாம் எனவும், எங்கினம் அது புரட்சியின் நன்மைகளைச் சமயப்
35
1793-1796.
1793-1794.
179b-1797.

Page 171
316
797.
1797.
கடற்போரினிடை நெருக்கடி
பொறுமையுடனும் பணிக்காயம் இதுவரை திருத்தியமைக்க வலி யற்றதாயிருந்த அரசியல் ஒழுங்குடனும் இணைக்கும் அடிப்படை யில் நிறுவப்படலாம் எனவும் தனது இத்தாலிய அனுபவத்தினைக் கொண்டு ஏலவே கற்று வருவானுயினன்.
இங்கிலாந்து இதற்கிடையில் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. போரிலே அதன் பகைநாட்டின் கட்சியில் இசுப்பானியர் சேர்ந்து கொண்டமையால் மத்தியதரைக் கடலுட் செல்ல அதன் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை. போர்களில் வெற்றி ஈட்டித்தந்தவர்களான மாலுமிகளுக்கு எப்பொழுதும் காட்டப்பட்ட உதாசீனமான மனப் பாங்குக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் எதிராக இசுப்பி தெட்டிலும், நோரிலுமிருந்த உள்ளூர்க்கப்பற் படைகள் கிளர்ச்சி செய்தன. தரையில் அதன் படைகளின் கெளரவம் மிகவும் குறைந்துவிட்டது. தன்னை அழிக்கும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்திருக்கும் மேற்கு ஐரோப்பா முழுவதையும் வேறு நாடுகளின் துணையின்றி எதிர்த்து நிற்க அதனுல் முடியாதெனத் தோன்றியது.
இந்தக் கெட்ட காலத்தில் பிற்றின் தைரியத்தின் சிறந்த தன்மை யினுலும், கடற்படை அலுவல்களில் அவனுக்கிருந்த இயல்பான திறமையாலும் இங்கிலாந்து காக்கப்பட்டது. படைக்கிளர்ச்சி கள் அடக்கப்பட்டன. கப்பல்களில் ஓரளவு சிறந்த வாழ்க்கை வசதிகள் அளிக்கப்பட்டன. முந்தைக் கிளர்ச்சியாளர் இடங்கன் என்பானின் தலைமையிற் புறப்பட்டுக் கம்படவுன் எனுமிடத்தில் ஒல்லாந்துக் கப்பற்படையை அழித்தனர். கிரென்வில் மூலம் தான் கைக்கொண்ட குழியல் நடவடிக்கைகளிலும், இடண்டாசு மூலம் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளிலும் பிற்று தோல்வியும் குறைபாடும் கண்டான். எனினும் அவனைத் தகுதியற்ற போர் மந்திரி எனக் கூறலாமோ எனின் அங்ங்னம் செய்வது அவனுடைய கடல் நடவடிக்கைகளைப் பொருட்படுத்தத் தவறுவதாகும். அவை களே ஆங்கில அரசறிஞர்தம் போர் நடவடிக்கைகளில் பாதிப் பங் கினைக் கொண்டனவாம். தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக் கேற்ற மனிதரெனப் பென்சரையும் சேவிசையும் தெரிந் தெடுத்துக் கொண்டான். விருதுடை உத்தியோகத்தரின் பெயர் வரிசையில் அதிக வயது குறைந்தவர்களுள் ஒருவனை நெல்சன் என்பவனைத் தேர்ந்து கொள்ள அவர்களுக்குப் பிற்று உதவியளித்தனன். ஒராண் டுக்கு மேலாகப் 'பிரான்சியரின் ஒரு வாவி’ யாகவேயிருந்த மத் தியதரைக் கடலினை மீண்டும் கைப்பற்றுவதற்கு நெல்சனையே திரும் பவும் அனுப்பும்படி அவன் வற்புறுத்தினன். இதன் விளைவே நைல் நதிப் போராகும்.

நைல்நதியில் வெற்றி : கடலாதிக்கம்
37
நைல்நதிப் போர் உண்மையிலேயே எல்லாப் போர்களுக்கும் அடிப் ஒக, 1,1798.
படையானவற்றுள் ஒன்ருயமைந்தது. இப்போர் பிரித்தானிய கப் பற்பலம் ஊசலாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அதனைத் திரப்
படுத்தி எங்கிருந்து அது பின்வாங்கப்பட்டதோ அங்கு அதனைத்
திரும்பவும் நிலைநாட்டியது. சாதனைகள் நிரம்பிய ஒருவனது வாழ்க் கைக்கும், வெற்றிகரமான போர்களுக்கும் சிகரமாயமைந்தது என்
பதே திாபல்கார் வெற்றியின் சிறப்பாகும்.
பிரான்சிய கப்பற் படையினுல் பொனப்பாட்டு பாதுகாப்பாக எகித்துக்குக் கொண்டு செல்லப்பட்டான். போகும் வழியில் அப் படை சென். யோவான் நைற்றுகளிடமிருந்து மோல்ருவைக் கைப் பற்றியது. பெரிய அலெச்சாந்தருக்குப் பின்னர் ஏகாதிபத்திய வேட்டை கொண்டவனுன பொனப்பாட்டுக்குக் கொன்சுதாந்தி நோப்பிளுக்கும் இந்தியாவுக்குமுள்ள பாதை திறக்கப்பட்டுள்ள தாகத் தோன்றியது. ஆனல் நெல்சன் நைல் நதி முகத்துவாரத் தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த அவனுடைய கப்பற்படைகளை எப் பொழுது அழித்தனனே அப்பொழுதே கிழக்குத் தேசங்கள் பற் றிய அவனது கனவுகளும் மங்கி மறைந்தன. அடுத்தவாண்டில் பொனப்பாட்டு தனது படைகளே எகித்தில் அடைபட்டிருக்க விட்டு விட்டுத் தான் பிரான்சுக்குத் தப்பிச் செல்லவேண்டிய நிலையேற்பட் டது. அங்கே தனது மனக்கோட்டைகளை மேற்கத்திய அடிப்படை யில் கிருப்பி அமைத்து, பலவாண்டுகளுக்குப் பின்னரேயே இரசிய வெற்றியின் மூலம் திரும்பவும் கிழக்குக்கு ஒரு பாதை வகுக்க முயன்றனன். அந்த வேனிற்கால மாலைப்பொழுதில் எகித்துக்கரை யில் நெல்சன் நடத்திய பீரங்கிப் போர், மைசூர்' திப்புசாகிப்பின்' இடர்மிக்க அந்த நாட்களிலும், உவெலசிலி சகோதரர்களால் நடாத் தபட்ட மாதப்போரின் இடர்மிகு நாட்களிலும் இந்தியக் குடாநாட் டில் பிரித்தானிய ஆதிக்கம் நிலைக்கத் தக்கதாகச் செய்தது.
நைல்நதிப் போரின் மற்முெரு விளைவு மத்தியதரைக் கடல்களில் பிரிட்டனின் ஆதிக்கம் மீட்கப்பட்டதாகும். எங்கள் கப்பற்படை கள் 1800 இல் பிரான்சிடமிருந்து எம்மாற் பெறப்பட்டதும் பின்பு ஒருபோதுந் திருப்பிக் கொடுக்கப்படாததுமான மோல்மு விலும், நேப்பிளிலிருந்து நாடுகடத்தப்பட்ட அரச குடும்பத் தினர் நெல்சனின் நண்பர்களாகி, அதன்பின் எப்போதும் இங்கி லாந்தின் பாதுகாப்பில் வாழ்ந்த சிசிலியிலும் உறுதியாக நிறுவப்
பட்டுள்ளது.
ஆனல் தென் இத்தாலிய பூபோன்களிலும் அதிக பலமிக்க வேறு
நட்பாளர்களையும் நைல்நதிப் போர் தோற்றுவித்தது. ஒசுற்றியாவும்,
இரசியாவும் இரண்டாவது கூட்டிணைப்பில் உற்சாகம் காண்பித்தன;
1799.

Page 172
38
斑蟹99–卫800。
1801.
1802,
படைபூண்ட நடுநிலைமை
இக்கூட்டிணைப்பும் சுவோறு என்பானின் கீழ் வட இத்தாலியில் திடீரெனப் பெறப்பட்ட வெற்றியையுடைய ஒரு சிறு பொழுதின் பின்னர், பொனப்பாட்டிடம் மரென்கோப் போர்க்களத்தில் அடைந்த தோல்வியோடு அழிந்தது. முதற் தேச காவலனுக இப் பொழுது அவன் பிரான்சின் எல்லாத் தேசிய இராணுவ சத்திகளை யும் தனது அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டனவாக்கினன். தனது வாழ் வின் மிகச் சிறந்த நான்கு ஆண்டுகளில் அவைகளை இதன் முன்னர் வேறு எந்த நாடும் தனது படைகளைத் திருத்தியமைக்காத வகையா கத் திருத்தியமைத்தான் ; இதனுல் அன்றிலிருந்து இன்றுவரை பிரான்சு கையாண்டு வருகின்ற நவீன பரிபாலனத் தாபனங்களை ஏற்படுத்தியவனனன்.
பின்னர் எழுந்ததுதான் இங்கிலாந்துக்கெதிராகக் கந்தினே வியன் அரசுகளாலும், இரசியாவாலும் உருவாக்கப்பட்ட படை பூண்ட நடுநிலைமை,' என்ற இடைக்கதை, கடற்பிரபுக்களின் தேடலுரிமைக் கெதிராக நடுநிலையாளர் செய்த முறைப்பாடு கள் காரணமாகவும், இந்நாடுகள் பொனப்பாட்டின் தோழமையை விரும்பினவையாயும் அவனை செச்சுவனவாயு மிருந்தமை காரண மாகவும் இவ்வுடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. சார் போல் பொனப் பாட்டுடன் நட்புக்கொள்வதற்குப் பேராவலுடையணுயிருந்தான். சாரின் படுகொலையும், கொப்பனேகன் கோட்டைகளிலிருந்த துப் பர்க்கிகளையும் பொருட்படுத்தாது நெல்சன் தேனிசுக் கப்பற்
படைக்கு ஏற்படுத்திய அழிவும் இந்நாடுகளிலிருந்து ஏற்படக்
கூடிய அபாயத்திற்கு ஒரு முடிவினைக் கொணர்ந்தன. தெற்குச் சமுத்திரங்களிற்போலவே வடகடல்களிலும், பிரிட்டனின் வலிமை பரவியிருந்தது. பிரெஞ்சு, இசுப்பானிய, ஒல்லந்து, தேனிசுக் கப்பற்படைகள் யாவும் சிதறடிக்கப்பட்டன. துன்பத்துக்குள் ளான பிரான்சின் நட்பாளர்களின் குடியேற்ற நாடுகளுக்குப் பிரிட்டன் தானகவே தான் விரும்பியவாறு உதவியளித்தது. நன் னம்பிக்கை முனையும் இலங்கையும் இந்தியாவுக்கான கடல்மார்க் கத்தினைப் பெறும்பொருட்டு ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றப் Luli ... 307.
எனினும் தரையில் பொனப்பாட்டுக்கு எதிராகத் தலையெடுப்பார் எவருமிலர். வெற்றிபெற்ற இரு பகைநாடுகளும், ஆமியென்சு உடன் படிக்கைப்படி தத்தமக்குரிய எல்லைகளை ஏற்றுக்கொண்டன. இங் கிலாந்தில் மகிழ்வுடன் வரவேற்கப்பட்ட பொழுதிலும், நெடுநாள் விழைந்திருந்த சமாதானம் ஒரு வெறும் போசோய்வாகவே முடிந் தது. தன்மனம் கொண்ட எந்த ஐரோப்பிய நாட்டினையும் தன தாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தைத் தனக்களித்துவிட்டுப் பிரிட்டன் கடலாகிய திரையின் பின்னர் ஒதுங்கிக் கொள்ளவேண்டும் என்

திரபல்கார்
பதே ஆமியென்சு உடன்படிக்கையின் கருத்தெனப் பொனப் பாட்டுப் பொருள் கொள்வதாகத் தெரியவந்தது. தாம் கைச்சாத் திட்ட சமாதான உடன்படிக்கைக்கு ஆங்கில அரசறிஞர் தந்த பொருள் அதுவன்று; அவர்கள் கருத்துப்படி அது பிரெஞ்சுப் படர்ச்சிக்கு ஒப்புக்கொண்டவொரு எல்லையை வகுத்தது. எனவே சோர்வடைந்த இரு நாடுகளும் மீண்டும் போருக்குத் திரும்பின.
இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை பிரான்சுக்கு எதிராகத் தனியே போரணியில் நின்றது. அத்தருணத்தில் பூலோன் பாசறையிலி
ருந்து ‘இங்கிலாந்தை 'ப் பயமுறுத்துவதற்குப் பயன்படுவது தவிர பொனப்பாட்டுக்கு அத்தகைய பயங்கரமான படையி ஞல் ஆகத்தக்கது வேறு எதுவுமிருக்கவில்லை. கால்வாயில் ஆதிக் கத்தினைப் பெற அவனின் தீவிரமான, ஆனல் நடைமுறையிற் சாதி ப்பதற்கரிய திட்டங்களும் பிறெற்று, தூலன் ஆகிய கப்பற்படை களுக்கு மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு பெரிய சந்திப்பு நிலையத்தினை அமைத்தமையும் நெல்சனினதும் அவனது 'உடன் பிறப்பார் குழு வினதும்' உற்சாகத்தாலும் விழிப்பினுலும் பயன்படாது தடைப் பட்டன. அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்தும் எங்கள் கப் பல்கள் பிரெஞ்சுக் கப்பல்களைத் தொடர்ந்து நாசஞ் செய்தன. துரத் தப்பட்டவர்கள் திணறிக்கொண்டு தரையைநோக்கிப் பிரான்சின் துறைகளுக்கும் இசுப்பெயினின் துறைகளுக்கும் விரைந்தனர். அதன்மேல் இங்கிலாந்தின்மீது படையெடுப்பு என்னும் பேச்சு எழவே இல்லை. பின்னர், யாவும் முடிந்தனபோற்றேன்றிய அமை யம், நற்பேறற்ற தனது தளபதி வில்லெனவ்வுமீது நெப்போலியன் கொண்ட சீற்றம் இறுதிமுறையாகப் பிரான்சினதும் இசுப்பானி யாதும் பிரதான படைகளைத் துறைமுகத்துக்கு வெளியே வரச்
1803.
1804。
39
செய்தது. கிாபல்கார் முனைக்கு அண்மையில் அவையாவும் இறுதிஒற். 21, 1805.
யாய் நாசம் செய்யப்பட்டன. போரின் அடுத்த பத்து வருட காலத் திலும் பிரிட்டனுக்கு முற்றுகையிடும் வேலே இல்லாமற் போயிற்று. இவ்வெற்றி இங்கிலாந்தின் கடற்படை ஒருபோதும் வெல்ல முடி யாத பலமுடையதென்னும் அழிக்க முடியாத எண்ணத்தினை ஐரோப்பிய மக்கள் மனதிற் பதித்தது. இந்த எண்ணம் பத் தொன்பதாம் நூற்முண்டினைப் பிரித்தானியர்க்குச் சமாதானமும் பாதுகாவலும் நிறைந்த ஒரு காலமாகச் செய்வதில் துணைபுரிந் தது ; பின்னர் தரையிலும் கடலிலுமான பெரிய போர் ஒன்றி னல், செழிப்பும் சிறந்த நாகரிகமும் நிறைந்த நீண்டகாலம் முடி வுக்கு வந்தபோதும் இந்நம்பிக்கை நன்முறையிற் பயன்பட்டது.

Page 173
32O
திசெ., 1805.
சன, 1806.
நெல்சன்
ஆங்கிலேயரின் காதுகளுக்கு மிக உவப்பான பெயர் நெல்சனுகும். அவனின் ஞானம் காரணமாகவும் அவன் நமக்குச் செய்த நன்மை காரணமாகவும் ஏற்படக்கூடியதிலும் பார்க்க அவனுடன் எமக் குள்ள தொடர்பு அதிகமானதாகும். ஏனெனில், மாள்பரோ மக் களால் விரும்பப்பட்டிலன். அந்த இரும்புக்கோமகனுக்குள்ள மதிப் பிலும் பாராட்டலிலும் பயத்தின் அமிசம் ஒன்றும் இருந்தது. உண்மையில் பொதுச் சேவையில் வெலிந்தன் கொண்ட நிறைந்த ஈடுபாடு ஒரு சிறந்த, ஆனல் விரும்பத்தகாத உயர்குடிப் பெருமை யில் வேரூன்றியிருந்தது; இது நெல்சனுடைய தவறுகள் அவனுக்கு ஏற்பட்ட கண்ணியத்தாழ்வு ஆகியவை வெலிந்தனுக்கும் ஏற் படாது தடுத்து அவன் தன்னை ஒரு தனித்துவாழும் மனிதனுகச் செய்தது. ஆனல் நெல்சன் பொதுமக்களின் உள்ளத்தில் இலகுவாக இடம் பெற்றுவிட்டான். திரபல்கார்ப் போராட்டத்தினை எதிர்பார் த்து நிற்கும்பொழுது தனது கப்பல்களுள் ஒன்ருன விக்டரி என்பதி அலுள்ள சிறந்த ஒரு கப்பலோட்டி எல்லாக் கடிதங்களையும் திரட்டிக் கடிதம் கொண்டு செல்லும் கப்பலிற் சேர்ப்பிக்கும்போது தனது மனையாளுக்குத் தான் எழுதிய கடிதத்தினைப் பொதியினுட் போட மறந்துவிட்டான். அக்கப்பலும் இங்கிலாந்து நோக்கி அதிவிரைவிற் பாய்விரித்துப் புறப்பட்டுச் சென்றது. இதனை அறிந்த நெல்சன் “அக்கப்பல் திரும்பிவரச் சமிஞ்ஞை செய்யுங்கள், யார் அறிவர் நாளேயே அவன் மடியக்கூடும் ; ஏனைய கடிதங்களுடன் அவனது கடிதமும் செல்லல்வேண்டும்” எனக் கூறினன். அந்த ஒரு கடிதத் துக்காக மட்டும் அக்கப்பலும் திருப்பிக்கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே இப்பொழுது பேரரசனகியுள்ள நெப்போலியன் உபயோகமற்ற பூலோன் பாசறையிலிருந்து அவுத்திரவிச்சில் கிழக்கு ஐரோப்பாவினை வெற்றிகொள்வதற்கெனத் திரும்பினன். அவனின் வெற்றி நெல்சனின் வெற்றியினை ஒத்ததாக விருந்தது. இறந்த நெல்சனின் கடல்மீதமைந்த பேரரசிலும் பார்க்க அது விரைந்தழியக் கூடியதென்பதனை அப்பொழுது மக்கள் அறியமுடிய வில்லை. அந்த வேளை இங்கிலாந்துக்குப் புகழ்தருவதும் இருளடைந் ததுமாக விருந்தது. நோய், ஏமாற்றம், கவலை என்பனவற்றினல், இளைப்புற்ற பிற்று தனது பணிநிலையத்திலேயே இறந்தனன். இரு பதாண்டுப் போர்களின் முதற்பகுதியின் முடிவைக் குறிப்பது வெலிந்தன், நெல்சன் ஆகிய இருவரது மரணமேயன்றிப் பயன் படாத ஆமியென்சு உடன்படிக்கையன்று.
பெரும் பிரெஞ்சுப்போர்-நெல்சன், பிற்று காலமான முதற்கட் டத்திலும், அதுபோலவே, வெலிந்தன், காசில்றி என்போரின் கால மான இறுதிக்கட்டத்திலும் - மக்கள் சபையாலேயே நடாத்தப்

போரும் பாரளுமன்றமும்
பட்டது. அனிபல் என்பாரோடு போராடிய உரோமன் மேற்சபை யின் நினைவே ஒவ்வொரு படித்த மனிதனின் மனதிலும் ஏற்பட் டது. சபையின் நம்பிக்கைக்குரிய மக்கள், நகர்ப்புறப் பெருமக்க ளுக்குத் தங்கள் திட்டங்களை விளக்கி அவர்தம் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நாட்டின் அதிகாசத்தினையும் பணத்தையும் பெறக் கூடியவர்களாக விருந்த னர். இக்காரணத்தினுல் பாராளுமன்றச் சொல்வன்மை உச்ச நிலையை யடைந்திருந்தது. தேர்தற் காலத்தில் சில பொதுத் தேர் தற்முெகுதிகளில் தேர்தல் நியமனநேர மேடைப் பேச்சுக்கள் தவிர மக்கள் விரும்பும் நாவன்மை இன்னமும் முதன்மை பெறவில்லை. பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. போர் நடந்துகொண் டிருந்த காலம்வரைக்கும் ஏன் அதற்குப் பின்னரும் சீர்திருத்தவாதி
களுக்குப் பேச்சிலேனும் அச்சிலேனும் சுதந்திரம் இருக்கவில்லை.
சேர்மானிய கூலிப்படையினரால் பிரித்தானிய தேசியப் படையி னர் சவுக்கடி பெற்றதன இடித்து உரைத்தமைக்குக் கொபெற்று
என்பான் இரு வருடங்கள் தண்டனை பெற்றனன். மக்கள் சுதந்
கிரத்தின்மீதும் பிரசாரத்தின்மீதும் உள்ள தடைகள் ஓரளவில் போர்க்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாம். எனினும் அவை கள் போருடன் முடிவுறவில்லை. ஏனெனில், அவை உள்நாட்டுச் சீர்திருத்தத்திற்கான இயக்கம் மீண்டும் உயிர் பெறுவதைத் தடுத் தற்கெனச் செய்யப்பட்ட ஒரு திட்டத்திலுள்ளனவுமாயிருந்தன. யக்கோபின பகைமை வாதத்தினர் இத்தகைய சீர்திருத்தத்தைச் சட்ட எதிர்ப்புக் குற்றமெனக் கொண்டனர்.
சுதந்திரமென்பது ஓரளவில் தடைப்பட்டிருந்த போதிலும் பாரா ளுமன்றத்தின் அதிகாரத்தினைக் குறைப்பதற்கேனும் அமெரிக்க குடியேற்ற நாடுகளை இழந்த அரசராட்சியை மீட்பதற்கேனும் g76
ரும் தூண்டப்படவில்லை. மூன்ரும் யோச்சு அதிகாரத்தை அடி
யோடு இழந்தவனகி விடவில்லை. தனது முதுமையைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த மனநோய்க்கிடையிலும் ஐரிசுக் கத்தோலிக் கருக்குப் பிற்று வாழ்வு அளிப்பதைத் தடுக்க அவனுல் முடிந்தது. பாராளுமன்றக் குழுக்களுக்கும் பெரியார்களுக்குமிடையே ஏற் பட்ட மந்திரிசபை உத்தியோகம் சந்பந்தமான மோதுதல்களி அலும் அவனது செல்வாக்கு ஓரளவு இடம்பெற்றது.
இரு கட்சிமுறைக்குப் பதிலாகக் குழுக்கள் முறையினைத் தற்கா லிகமாக மீட்பித்தமை அக்காலத்தின் ஒரு அம்சமாகும். இது அா சசை மக்கியத்தராக்கி அவர்களது ஆகிக்கத்தினைப் புதுப்பிக்க ஒருவகையில் ஒரளவு வாய்ப்பளித்தது. இருகட்சிமுறைமை அக்
காலத்திற் பூரணமாகச் செயலாற்றக்கூடிய முறையில் இருக்க
1801.
321

Page 174
322
18.
1807.
போரும் பாராளுமன்றமும்
வில்லை. ஏனெனில் சீர்திருத்தத்தின் காரணமாகவும் பிரெஞ்சுப் புரட்சி காரணமாகவும் உவிக்குக் கட்சியில் ஏற்பட்ட பிளவு, பொக்சு சார்பானுேரை ஒரு நூறு அங்கத்தவர்களாகக் குறைத்து அத்தோடு ஒரு தலைமுறை காலத்துக்கு அதிகாரம் பெறும் நம் பிக்கை எதுவும் அற்றேராகச் செய்தது. 1793 க்கும் 1830 க்கும் இடையே உவிக்குக் கட்சி செயலற்றிருந்தவாறு 1714 க்கும்
1760 க்கும் இடையே தோரிக் கட்சியும் செயலற்றிருந்தது. மக்
கள் சபையின்கண் குழுக்கள் முறையினைப் புதுப்பித்தமையே இத ஞல் ஏற்பட்ட விளைவாகும். தோரிகளின் நீண்ட கால வலிமை யின்மை உலிக்குகளை உவால்போலைச் சேர்ந்தோர் கட்சியெனவும் உவால்போலுக்கு எதிர்க்கட்சியெனவும் பிரியச்செய்தவாறே, தோரிகளும் பத்தொன்பதாம் நூற்முண்டின் முதலாண்டில் பிற் றைப் பின்பற்றுவோர் அதிந்தனைப் பின்பற்றுவோர் கிரென்வில் குடும்பத்தைச் சேர்ந்த உவிக்குத்தோரிகளைப் பின்பற்றுவோர் எனப் பிரிந்துகொண்டனர். இந்தக் குழுக்களுக்கிடையே நில
விய வேற்றுமைகள் அரசியல் காரணமானவையல்ல. இக்குழுக்
கள் பொக்சர்களுள் எஞ்சியோருடன் மீதிப் போர்க்காலங்களில் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சிகளையும் அமைப்பதற்கெனச் சேர்ந்துகொண்டன. -
இத்தகைய குழ்நிலைகளில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான அதிகாரம் முதிய அரசனுக்கு இருந்துவந்தது. அவனது மனநோய் மாற்றமுடியாதது என அறிவிக்கப்பட்டதும் அவ்வதிகாரம் யோச்சு இளவரசனிடம் சேர்ந்தது. பொக்சைச் சேர்ந்த உவிக்குகளையுட் படுத்திய எந்தக் கூட்டுக்கும் எதிராகவே அவர்கள் இருவரும் அத னைப் பெரிதும் பயன்படுத்தினர். பிற்றினது மரணத்தின் பின், இறக் கும் தறுவாயிலிருந்த பொக்சு உட்பட்ட “ வல்லுநர் யாவரையும் கொண்ட “ கூட்டு அமைச்சு ஒன்றுக்கு ஒருவருட காலத்துக்கு மூன் மும் யோச்சு கீழ்ப்படியும்படி செய்யப்பட்டான் ; அதன்பேறு இறுதி யாக அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டமையாம். எனினும் அரசன் தான் அத்துணை வெறுத்த தன் பணியாளரை விரைவாக ஒருவாறு நீக்கிக்கொண்டான். அவன் அவர்களை வேலைநீக்கம் செய்த காரணங் கள் ஆதரிக்கப்படக்கூடியன வல்லவேனும் அவை உண்மையில் அவப் பேருனவையல்ல. ஏனெனில் உலிக்கு முதல்வர்களும் அவர்களது கிரென்வில் தோழர்களும் நல்ல போர் மந்திரிகளாக அமையவில்லை. பூலோன் பாசறையின் காலந்தொட்டு பொக்சைச் சேர்ந்தவர்கள் பிரான்சுடன் போர் செய்வதன் அவசியத்தை ஒப்புக்கொண்டிருந் தனர். அவர்கள் தலைவனும், வெளி நாட்டலுவல்கள் காரியாலயத்தில் தான் பெற்ற சில மாத அநுபவத்தால், தனது மரணத் தறுவாயில் நெப்போலியனுடன் சமாதான மென்பது முடியாத காரியம் என்

தில்சிற்று ஒப்பந்தம்
னும் கொள்கையை ஒப்புக்கொண்டான். இக்கொள்கையை இவனே முன்பு பெரிதும் இழிவாகக் கூறியிருந்தான். எனினும் ஒல்லந்துப் பிரபு கிறேபிரபு போன்ற உவிக்கு முதன்மையாட்சியிலுள்ள இவ னின் வழித்தோன்றல்களும் இலகுவில் மனத் தளர்ச்சியடையக் கூடியவராயும் நீண்டதும் வெற்றியைப்பற்றி நம்பிக்கையற்றது மான போரினை நடாத்துதற்கு வேண்டிய துணிவேனும் நுண்திற னேனும் அற்றவராயும் இருந்தனர்."
உண்மையான தோரிக்குழுக்கள் 1807 இன் பின்னர் நாட்டினை ஆளவும் மக்கள் சபை முகாமைமுலம் நெப்போலியனுடன் போரி டவும் ஒன்றுசேர்ந்தன. உவாற்றலூவின் கெளரவமும் இறுதி வெற்றி யும் என்றும் அடிபணியாததும் நம்பிக்கை மிகுந்ததுமான நாட்டின் பெருமைக்குதவின. உறுதியான தீவுவாழ்வுடையார்களின் வெற்றி அரசராலோ அவர் பிரதியாளராலோ ஈட்டப்பட்டதன்று; அவ் வெற்றி பிரித்தானியப் பாராளுமன்றத் தாபனங்களினல், பிரித்தா னிய உயர்குடி மக்களினல், பிரித்தானிய மத்திய வகுப்பினரின் விரைவிற் பெருகிவரும் பொருள்வளத்தின் நிலையான தன்மை யினல் பெறப்பட்டதாகுமென்பதே உலகின் தீர்ப்புமென்க.
நெப்போலியன் மூன்று ஆண்டுக்கால முயற்சியின் பயனுக இாசி யாவின் எல்லைவரை கிழக்கு ஐரோப்பாவை வெற்றிகொண்டு போர சன் என முடிசூட்டிக்கொண்டனன். ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்ந் asj.
மற்ருெரு மரணத்தாக்கல் மடிந்ததுமற்றேர் மாபேரரசு
அவுத்திரலித்துவில் ஒசுற்றியாவும், சேணுவில் பிரசியாவும், பிரிட்லந்தில் இரசியாவும் தோல்வியுற்றன. a இவ்வெற்றி கள் நீமெனில் ஒரு கட்டுமரத்தின் மீது செய்யப்பட்ட தில்சிற்று ஒப்பந்தத்தோடு 1807 இன் கோடைகாலத்தில் உச்ச நிலையை யடைந்தன. அப்பொழுது ஐரோப்பாவின் சோக நாடகத்தில் முன் முடிந்த ஒவ்வொன்றினைப் போலவே பின்வரும் ஒவ்வொன்றினையும் அத்துணை மனமார்ந்த உணர்ச்சியோடு பலவிதமாக நடிக்க விதி வழி செய்திருந்த உள்ளங்கவரும் இளமைமிக்கானன சார் அலெச்சாந் தரை நெப்போலியன் கட்டித்தழுவினன். நான்கு வருடங்களாக அவன் தான் நெப்போலியனின் நண்பன் எனவும் கண்டத்தின் ஆட்
நெப்போலியனுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இசுப்பானிய மக்களின் நோக்கங்களுக்காக முதலில் ஒரளவு ஆர்வங்கொண்ட உவிக்குகளிற் பலர், மூர் பின்வாங்கியதோடு குடாநாட்டுப் போர்பற்றி அச்சங்கொண்டனர்; அன்றியும் வெலிந்தன் தோல்வியுறுவது நிச்சயம் எனவும் எண்ணினர்.
1805,
1806,
1807.
323

Page 175
324
1806, 1807.
1807, 1812.
பேளின் கட்டளைகள் : இங்கிலாந்தின் பதில்
சியில் அரைப் பங்கு பெற்றவன் எனவும் இறுமாந்திருந்தான். யூறலி லிருந்து பிரனிசு வரையுமுள்ள நாகரிகம் படைத்த உலகம் இங்கி லாந்துக்கு மாமுகத் திரண்டெழுந்து அதன் கப்பற் போக்குவரத் தைத் தடுத்தது மட்டுமன்றி அதன் பொருள்களையும் இறக்குமதி செய்யாது விட்டது. எனினும் அந்த அதி விரோதப் பாசறையிலுங் கூட அதற்கு எத்தனையோ இரசிய நண்பர் இருந்தனர். இவர்களைக் கலகம் செய்ய ஏவுவதே அதன் அரசியல்வாதிகளின் முக்கிய தொழி லாகவிருந்தது. அவர்கள் போருக்கு எழுவராயின் பணவுதவி கிடைக்கும் என 'ஊக்குவிக்கப்பட்டனர். அன்றியும் தேயிலை, கோப்பி, சீனி, பருத்தி ஆகியவற்றை அவர்கள் பிரான்சில் அடிமை
களாகவிருக்கும்வரை பெறமாட்டார் எனவும் எச்சரிக்கப்பட்டனர்.
இப்பொழுது இங்கிலாந்தும் பிரான்சும் முற்றுகையிடுதலும், பட்டினி போடுதலுமான உலகப்போர் முறையை முன்னர் எப் பொழுதுமே கண்டிராத அளவுக்கு உருவாக்கி வருவனவாயின. ஏனெனில் திரபல்கார் போருக்குப் பின்னர் இங்கிலாந்தைப்
போன்ற கடற்பலமேனும், தில்சிற்றுக்குப் பின்னர் நெப்போலிய
னதைப்போன்ற தரைப்பலமேனும் போர் வரலாற்றில் ஓரிடத்தி லும் காண்பதற்கில்லை. நெப்போலியனின் பேளின், மிலான் கட் டஃளகளின் பிரகாரம் நடுநிலைமைநாடுகளும் பிரான்சிய நட்பு நாடு களும் பெரிய பிரித்தனுடனே அதன் குடியேற்றநாடுகளுடனே வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டிருந்தது. பிரித்தனும் அரச வைக்கட்டளைகள் மூலம் பதிலிறுத்தது. அவை நெப்போலிய ஐரோப்பா முழுவதையும் முற்றுகைக்குள்ளாக்கிய தொடர்ச்சியான கடும் நடவடிக்கைகளாம்.
துன்பத்துக்குட்பட்ட மூன்று வகுப்பினருள்ளும் யார் முதலில் கிளர்ச்சி செய்வர்? நெப்போலியனின் சேர்மானிய அடிமை நாட் டினரும் இரசிய நட்பாளர்களும் அவன் பொருட்டாகத் தமது செளகரியங்களையும் சுகபோகங்களையும் இழந்தவர்களுமானவர் களா? அல்லது நெப்போலியன் நீர்மூழ்கிக் கப்பல்களை உடையனல் லனுதலின், வெறும் பிரசித்தங்கள் மூலம் பிரித்தனுடன் வியா பாரம் செய்யாது தடுக்க முடியாதவனுகவே, ஐரோப்பியத் துறை முகங்களுக்குத் தங்கள் யாங்கிக் கப்பலோட்டிகள் சென்று சேரா வகையாக ஆங்கிலக் கப்பல்களினுற் பலமுறை தடுக்கப்பட்டதன் காரணமாக இங்கிலாந்துடன் சீற்றம் கொண்ட ஒரேய்ொரு நடு நிலைமை நாடான ஐக்கிய நாடா ? அல்லது ஆங்கிலேய மத்திய வகுப்பினரதும், கீழ்வகுப்பினரதும் வியாபாரம், தொழில், வேதனங் கள் ஆகியன இந்தப் பயங்கரமான ஆண்டுகளின் போர்க்காலச்

அமெரிக்காவோடு போர்
சந்தைகளினதும், விலைகளினதும் தடுமாற்றங்களுக்குட்படுத்தப் பட்டிருந்தமையால், இவ்வகுப்பினரால் இப்போர்ச்சுமை தாங்க வொணுததாகுமா ? (1811 இல் நெப்போலியன் இவ்வாறே நம்பினு னென்க. இவ்வாறு அவன் கருதுவதற்கு ஓரளவு நியாயமும் இருந்ததெனலாம்).
உண்மையில் 1812 இல் நெப்போலியனின் கட்டளைக்கு எதிராக இரசியாவும், பிரித்தானிய அரசவைக் கட்டளைகளுக்கும் கப்பற் றஃலவர்களால் உபயோகிக்கப்பட்டுவந்த தேடலுரிமைக்கும் எதிராக ஐக்கிய நாடுகளும் கிளர்ச்சி செய்தன. போராற் பெரிதும் துன்புற்ற பிரித்தான்ரிய உண்ணுட்டு முன்னணியினர் உறுதி தளராதிருந்த னர். வர்த்தக சமுதாயத்தினர் நெப்போலியனுக்குக் கீழ்ப்படிய மறுத்து, எஞ்சியுள்ள எங்கள் பெரிய வாடிக்கைக்கார நாடான ஐக் கிய அரசுடன் போர் ஏற்படாது தவிர்த்தற்கு வேண்டிய அளவு அர் சவைக் கட்டளைகளைத் தளர்த்துமாறு பேர்சிவல் அமைச்சினை வற் புறுத்தினர். எனினும், மத்தியவகுப்பினர் இன்னமும் பெரும்பாலும் வாக்குரிமையற்றவர்களாகவே இருந்ததோடு ஆட்சிசெய்யும் வகுப் பினரான தோரிகளின் முக்கிய சபைகளில் சேர்க்கப்படாதவராயு மிருந்தனர். அவர்களின் அறிவுரைகள் காலங்கடந்தே கவனிக்கப்பட் டன. அதற்கிடையில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கு மிடையே போர் மூண்டுவிட்டது. போர்காரணமாக வியாபாரம் நிறுத்தப்பட் டதால் பிரித்தனுக்கு அச்சமயம் பெரும் துன்பம் ஏற்பட்டது. ஆயி னும் அத்துன்பமேனும் அமெரிக்கக் கடலோரங்களிலும் கனேடிய எல்லைப்பகுதிகளிலும் ஏற்பட்ட கப்பற்படைத் தசைப் படைக் குழப்பங்களேனும் ஐரோப்பாவிற் பிரித்தனின் வெற்றிக்குக் குந்த கம் விளைக்கவில்லை; ஏனெனில் அதே ஆண்டுகளில் இரசியாவும் சேர் மனியும் பிரான்சுக்கு எதிராகப் புரட்சிசெய்தன. அடுத்த தலை முறையினரான ஆங்கிலேயர்கள் பெரிய நெப்ப்ோலியப் போராட்
டங்களிடையே நிகழ்ந்த அமெரிக்கப்போரைத் துன்பமானதும்
தேவையற்றதுமானவொரு நிகழ்ச்சியென எண்ணி மறந்துவிட்ட னர். ஆனலும் அமெரிக்கர்கள் அதனைத் தாம் தனிநாடாக வளரத் தொடங்கிய காலத்தின் நாட்டுப் பற்றுக்குரிய அடையாளமாகவ்ே நன்கு நினைவிற் பதித்திருந்தனர். எதிர்கால ஆங்கில அமெரிக்கத் தொடர்புகள் சம்பந்தமாக எண்ணும்பொழுது இளைய குடியரசின் முதல் வெளிநாட்டுப் போர் அதன் தாய்நாட்டுடன் நடைபெற்றது மிகவும் அவப்பேருகும்; அன்றியும் அதன் சுதந்திரப்போரும் அத் தாய்நாட்டுக் கெதிராகவே நடைபெற்றது.
எங்கள் காலத்துப் பெரும் போரினைப்போலவே நெப்போலியப் போராட்டமும் பிரித்தனுக்குச் சில சமயங்களில் ஆபத்தானதா யிருந்தபோதிலும் அதனினும் குறைந்த அளவிலேயே மக்களின்
325
1812一1814。

Page 176
326
1795-1807.
போரும் பொருளாதாரமும்
வாழ்க்கையைப் பாதித்தது; எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டு மக்களின் அழிவு சிறிதளவே ஏற்பட்டதாகும்; மிகச் சிறிய அளவி லூம் சிற்சில சமயங்களிலும் நடந்தனவான படையெடுப்புக்களிற் பங்குபற்றியவற்றைவிடப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குக் கண்டத் தில் எமது சேனைகள் எவையும் இருக்கவில்லை. இருபது வருடங்கள் முழுவதிலும் இறந்தோர் தொகை ஏறக்குறைய 1,00,000 ஆகலாம். இத்தொகையில் அரைப்பங்குவரையினர் பிற்றின் காலத்தில் மேற் கிந்தியத் தீவுகளில் மடிந்தோராவர். மேலும் 40,000 தொகையினர் குடாநாட்டில் ஆறுவருடப் போரில் மடிந்தோர். எனினும் இங்கி லாந்து வருந்தியது பொருளாதாரமுடையினலேயேயாம். இந்த நெருக்கடியான இருபதாண்டுகளிலும் கைத்தொழிற் புரட்சியின் போக்கு போரின் அவசிய தேவைகளினற் பெரிதும் பாதிக்கப்
.Jلاقے-LLل
எனினும் பொருளாதாரத் துன்பம் எல்லா மக்களாலும் ஒரு பெற்றித்தாய் அனுபவிக்கப்படவில்லை. மேல்வகுப்பினர் கூடிய வீட்டுவாடகைப் பணத்தினுற் பயனடைந்தனர் ; போர்வரிகளாக மிகச் சிறு தொகையே கொடுத்தனர்; ஏனெனில் உணவுப் பொருள் கள் மீதுள்ள வரிகள் மூலமே அரசாங்க வருமானம் பெரும்பாலும் அறவிடப்பட்டது. விலைகளின் அதிகரிப்பினல் வறியவர்களே பெரி தும் பாதிக்கப்பட்டார்கள். போர் முடியும்வரை பின்பற்றப்பட்ட பிற்றின் உபயோகமான வருமானவரிபற்றிய புதிய வழிகள் ஏனை யோர்க்கு முற்முயில்லாவிடினும் ஓரளவாவது ஆறுதலளிக்கச் சிறி துதவியது. 1815 இல் நேர்வரி விதிப்பு மூலம் இலட்சம் ரூபாவும் மறைமுக வரி விதிப்பு மூலம் 670 இலட்சம் ரூபாவும் பெறப்பட் டன. வாடகைப் பணத்தினையும் பத்திலொன்று வரியினையும் பெறும் நற்குடிப் பிறந்தோரைக் கொண்ட ஆளும் வகுப்பினர் மட்டுமே போர்க்கால இன்னல்களை அறியாதிருந்தனர்.
உண்மையில், அது தீவின் உயர்நாகரிகத்திற் குறிப்பிடத்தக்க ஒரு காலமாகும். போர்க்காலமுழுவதும் இயற்கைக்காட்சி ஒவிய ரும் புலவர்களும் எழுத்தாளர்களும் தம் படைப்புகளை நன்கு ᎯbjᏯ5 ரக்கூடிய ஒய்வும், பணமுங் கொண்ட ஆர்வமுள்ள ஒரு பெரிய வகுப்பினர்க்காகப் பெரிதும் முயன்றனர். நாட்டுப்புற வாழ்க்கை எக்காலத்திலுமே இவ்வளவு வளமுடையதும் குதூகலமுடையது மாக நரிவேட்டை, குறிவைத்துச் சுடுதல், பரந்த நூல்கள் நிறைந்த நிலையங்களில் ஒய்வுகாலங்களைச் செலவிடுதல் ஆகியவற்றுடன் மிளி ாவில்லை. புதிதாகத் திருத்தப்பட்ட விதிகளில் வண்டிப் பிரயாணங் கள், விழுமியோரால் ஆதரவளிக்கப்படும் மல்யுத்தப் போட்டிகள் ஆகியவற்றைக் கொண்ட விளையாட்டுச் சார்ந்த வாழ்க்கை இத்து ணைக் கவர்ச்சியுடையதாய் ஒருபோதுமிருக்கவில்லை. குமாரி ஒசுத்

போர்க்காலச் சமூகநிலை
தின் இயற்கையைச் சித்திரித்துக்காட்டிய சித்திரங்களில் போர் காரணமான கவலையோ துன்பமோ பற்றிய எவ்வித அடையாளமும்
காண்பதரிது.
மத்திய வகுப்பினர் கூடுதலான வருத்தமடைந்தனர். “பகட்டுச் சந்தை ” யிற் ருேன்றும் அனுதாபத்துக்குரிய திரு. செட்லி போன்ற பல வணிகர்கள், சந்தைகள் திடீரெனத் திறக்கப்படுதல் மூடப்படுதல் காரணமாகவோ போர் விலைகளின் உயர்ச்சியினுலும், வீழ்ச்சியின அமோ இடருற்றனர். அதே சமயம் புதிய தொழிற்சாலைகளினலும், உலகமெங்கணும் கறுத்தவர்களுக்கும் பொது நிறத்தவர்களுக்கும் உடைகள் விற்பதன் மூலமும் - பெருமளவில் நடைபெற்ற இவ்வியா பாரத்தில் ஆங்கிலேயருக்கு வேறுயாரிடமிருந்தும் போட்டியேற்பட வில்லையென்க-பலர் செல்வந் தேடிக் கொண்டனர்.
போரினல் துன்பமுற்றவர்களில் முக்கியமானேர் தொழிலாளி வகுப்பினரே ; ஏனெனில், குடும்பங்கள் பசியினுல் இறவாதிருப்பதற் கான சம்பள உயர்வு விகிதங்களை வழங்குவதற்கு இசுபீனுமிலந்துப் பேக்குசயர் நீதவான்கள் தொடக்கிவைத்த முறையைப் பொது வில் கையாண்டது தவிர வேறெதுவுமே செய்யப்படவில்லை. ஆகக் குறைந்த சம்பளத்தை வரையறுப்பதுபற்றிய நயமிக்க கொள்கை ஆலோசிக்கப்பட்டதெனினும் பழங்காலத்ததும் முறையற்றதுமென அவப்பேருக அது கைவிடப்பட்டது. இதற்கிடையில் பிற்றின் சட் டம், தொழிற்சங்கங்கள் சட்டத்துக்கு மாமுனவையென விதித்தது; எனவே அதிகாரம் தமக்கு விரோதமாயிருந்த இந்நிலையில் பொருள் விலைகளுக்குத் தக்க வேதனங்களைப் பெற்றுக்கொள்வதில் தொழி லாளர்களுக்கு வில்லங்கமேற்பட்டது.
கூடிய சுதந்திரமுள்ள எங்கள் நாட்களில் பெரும்போர் நடந்த
போது எல்லாவகுப்பினருள்ளும் காணப்பட்ட சகோதரத்துவ
உணர்ச்சி, யக்கோபினருக்குப் பகைமையானேரிடத்திற் காணப்பட வில்லை. நெல்சனின் போக்கும் அவனின் கப்பற்காானின் கடிதமும் பிறிதொரு தன்மைத்தாக இருப்பவும், தனது போரினை வென்று தந்த தன் படைமக்களைக் குறித்து, வெலிந்தன் "மண்ண்ங்கட்டி
கள் ; குடியினை விரும்பி வந்தோர்' எனக் கூறியமை அக்காலத்து
அக்கோமகன் மேலுங் கூறிய ஆனல் எப்பொழுதும் எடுத்துக்கூறப்படாத கூற்றுக்களையும் நினைவுகூருதல் நியாயமாகும். அக்கூற்றுக்கள் " திறமைமிக்க மக்களாக நாம் அவர்களே ஆக்கியது உண்மையில் வியப்பானதே ” என்பனவாம்.
327

Page 177
328
1808.
1812.
1808.
குடாநாட்டுப் போர்
மேல் வகுப்பினரின் பொதுவான மனப்போக்கைக் காட்டுகின்றது. போர்வீரர் மாலுமிகள் என்போர் மட்டுமன்றி இலுட்டையர்களும் தொழில்புரியும் வறிஞர்களும் கொடூரமாய் நடத்தப்பட்டனர். நெப் போலியனைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும்பொழுது அதிகாரத்தி னர் பசியால் வாடும் மக்களைப் பொறுத்தமட்டில் இரு கடமைகளை உணர்ந்தனர். ஒன்று அவர்களை உயிர் பிரியாமற் பார்த்துக்கொள்ளு தல்; மற்முென்று தக்கபடி கீழ்ப்படிவுள்ளவராக வைத்திருத்தல் QT6374 16076jitLA
ஐரோப்பாவுக்குப் பிரித்தானியப் பொருள்கள் வராது தடுப்பதை நோக்கமாகக் கொண்ட கண்டத்து முறைமையைச் செயற்படுத்து வதற்கு நெப்போலியன் எடுத்த முயற்சி - அடக்க முடியாதவர்க ளான தீவு வாழ்நரைப் பழிவாங்குவதற்கு அவனுக்கு வாய்த்த ஒரே வழி அதுதான் - அவனின் வரலாற்றில் மிகப் பெரிய இரு தவறுக ளேற்பட வகை செய்தது. இசுப்பெயினை அதன் மக்களின் விருப்ப மில்லாது இணைத்துக்கொள்ள முயன்றமை ஒன்று, இரசியாவின் பரந்த பரப்பின்மீது படையெடுத்தமை மற்முென்று. இந்த இரு செயல்களும், அந்நாட்டு அரசர்களை அவன் வெற்றிகொண்ட பின்பு, அந்நாட்டு மக்களின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டன. அவற்றுள் பாதகமிக்கதான முன்னைய முயற்சி, குடாநாட்டுப்போரை இங்கி லாந்து தொடங்குதற்கு வாய்ப்பளித்தது. மிகவும் அடக்கமான எங் கள் நடவடிக்கைகள் முன்னிகழ்ச்சிகளுக்கமைவாக எமது நட்பாள ரான போர்த்துக்கேயரின் சுதந்திரத்தைப் பேணுமுகமாகத் தொட ங்கின. மாள்பரோப் போர்க்காலங்களில் இசுப்பெயினில் பிரித்தா தானிய சேனைகளின் அதிட்டங் குறைந்த நடவடிக்கைகளில் நிகழ்ந்ததுபோன்று அடுத்த ஆறு ஆண்டுகளிலும் போத்துக்கலே தளமாகவும், எல்லா அலுவல்களுக்கும். கடலாதிக்கமே :fr:f 6ð0)'LOf:5 வும் அமைந்தன.
போத்துக்கேயர்கள் பிரித்தானிய உத்தியோகத்தர்களால் பயிற் றப்படவும் அவரின் அதிகாரத்தின் கீழ் அமையவும் இயைந்தனர். அதன்பேருக இந்தப் போரில் அவர்கள் மிகவும் கெளரவமான சேனைகளாக அணிவகுத்து நின்றனர். இசுப்பானியர்களோ வெனில் ஒரளவு ஒழுங்குடையவராகவேனும் இருக்கவில்லை; எனினும் கொரில்லாப் போரை மிகவும் திறமையுடன் புரிய அவர்கள் தவ றியதில்லை. இசுப்பானிய சுபாவத்தினதும் சமூகத்தினதும் பண் படாத தன்மையினல் நெப்போலியன் வெறுத்து வந்த அந்த நாடு, இதுகாறும் பிரான்சுப் படைகள் தாண்டிவந்த இக்காலத்து நாகரிக மிருந்த ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க அதிக இடர் விளைப்பதா யிருந்தது. இதன் காரணமாக இசுப்பெயினிலிருந்த 3,00,000 க்கும்

குடாநாட்டுப் GBLJIT fir
அதிகமான பிரான்சுப் படையினர் போக்குவரத்து முதலியனவற் றைக் காவல் காக்கப் பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டனராகையி ஞல் மூர் அல்லது வெலிந்தன் தலைமையிலிருந்த 30,000 வீரர் வரை யுள்ள பிரித்தானியப் படைக்கு எதிர்நின்று அவற்றை நாசம் செய் யத் தேவையான சக்தியைத் திரட்ட இயலாதவராயினர். இரசியா விலும், சேர்மனியிலும் நெப்போலியனின் பெருகிவரும் தேவைகள் குடாநாட்டில் பிரான்சின் வலுவினைப் படிப்படியாகக் குறைத்து வரவே நன்முகத் திட்டமிடப்பட்ட படையெழுச்சிகள் மூலமாக வெலிந்தன் போத்துக்கலிலிருந்து தொடங்கி இசுப்பெயினுக்கூடாக ஒவ்வோர் ஆண்டிலும் வளர்முறையில் பூரணப்பட்டுவந்த தல வெரா சலமன்கா, விற்றேரியா ஆகிய வெற்றிகளை ஈட்டி வந்தன. புரட்சிகரப் போர்களின் தொடக்கத்தில் அதிக தாழ்மையெய்தியி ருந்த பிரித்தனின் படைப் பலமும் திறப்பும் மாள்பரோ, குருெம் வெல் என்பாரின் கீழ் இருந்த அளவுக்கு உயர்த்தப்பட்டன. எங் கள் கொடிகளிற் குறிப்பிடப்பட்ட அத்தகைய தொகையான குடா நாட்டுப் போர்களும் அடுத்த நூறு ஆண்டுகளுக்குப் பிரித்தானிய படையின் உண்மையான வாழ்வாயமைந்த படைமரபு முறைகளைத்
தோற்றுவித்து நிலைநிறுத்தின. 魏
இசுப்பானிய வெற்றிகள் யோக்குக் கோமகனும், சேர். யோன் மூரும் சேனையினைச் சீர்திருத்தியதன் மூலம் செய்த முன்னைய செயல்களாலும், வெலிந்தனினது சொந்தச் சூழ்ச்சிகர யூகமிக்க திறமையினுலுமே பெரும்பாலும் பெறப்பட்டன. ஆயினும் பிரான் சிய அணியினும் மேலான பிரித்தானிய படைவரிசையின் திறமை யும் அவற்றைப் பெறுதற்கு உதவியது. ஆணியமைப்பு வேறுபாட் டின் வரலாறு மிக வியப்பானது. மரபுவழிப்பேர்ர்கள் மாள்பரோவி லிருந்து பதினெட்டாம் நூற்ருண்டின் பெரிய பிரெடறிக்கு வரை அணிவகுப்பு முறையில் நடைபெற்றன. முதலில் மும்மடியாயிருந்த இவ்வணிவகுப்பு பின்னர் அந்நூற்முண்டின் இறுதியில் இருமடி யாய்க் குறைக்கப்பட்டது. இத்தகைய போர்முறை நாகரிகமுள்ள படைகளுள் பெருமளவிலமைந்தது, அதிக பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் திறமைமிக்க பயிற்சியினை எடுத்துக்காட்டியது. எனவே பிரான்சுக் குடியரசின் முதற் படைகள், வயல்களிலிருந்தும் வியா பார நிலையங்களிலிருந்தும் நேரே புதிதாகத் திரட்டப்பட்ட பயிற்சி யற்ற, எனினும் உற்சாகமிகுந்த, கூட்டத்தினருடன் போர்ப்படை ஏந்தியபோது, சிறு சிறு போர்களைச் செய்பவர் முன்னே செல்ல, திரண்ட கூட்டங்களாகப் புதியவர்கள் இட்டுச் செல்லப்பட்டனர்.
இவர்களின் தொகையும் ஆர்வமும் அதிகமாகவிருந்தமையினல்
இந்த ஒழுங்கற்ற அமைப்பினும் கூட, தமக்கெதிர் நின்ற தக்க முறை
யாக அணிவகுத்திருந்த ஒசுற்றியப் படையினரை மீண்டும் (162 11)5981 Rܝܚ-18
1809, 1812, 183.
329

Page 178
330
1801, 1806.
1813.
யூன் 18, 1815.
உவாற்றலூ! பொனப்பாட்டின் இறுதி
மீண்டும் விரட்டி ஒட்டினர். இவ்வண்ணம் தோற்கடிக்கப்பட்ட ஐரோப்பிய முடியரசுகள், தங்கள் வெற்றியாளர்களின் குறைபாடு டைய தந்திரங்களையும் அமைப்புக்களையும், பின்பற்றி அவர்கள் போலப் பாவனை செய்தனர். ஆனல் பிரான்சியரின் வெற்றிக்கு உண்மையான காரணமாயிருந்த அந்த ஆர்வத்தை அவர்கள் பெற்றி லர். பிரித்தானியப் படை மட்டுமே மதிநலம், பழமைபேணல் என்பவற்றின் பயனுக அணிவகுத்துப் போரிடும் முறையையே தொடர்ந்து கைக்கொண்டு வந்தது. ஆகையாற்முன் அவைகள் பிரான்சினை எகித்திலும் தென் இத்தாலியிலும் போர்முனையிலே சந்தித்த சந்தர்ப்பங்களில் வேறு எந்நாட்டவரும் பெற்றிராத வாய்ப்பினையுடையவராக விருந்தன. மேலும் இப்பொழுது மிகுதி யும் தொடர்ந்து நிகழ்ந்த குடாநாட்டுப் படையெடுப்புக்களில் பிரான்சுப் படையின் முன்னணி, நீண்ட பிரித்தானிய வரிசையின் பலத்த தாக்குதலுக்கு மீண்டும் மீண்டும் இலக்காகி அழிந்தது. இக் காலத்தின் தலைசிறந்த இராணுவ அறிஞன்தானும் தனது காலாட் படையின் பிற்போக்கான போர் முறைகளைச் சீர்திருத்த முயல வில்லை என்பது உண்மையில் வியப்புக்குரியதாகும்.
இரசியாவிலும் சேர்மனியிலும் பிரான்சியருக்கேற்பட்ட வீழ்ச்சி யானது இசுப்பெயினில் அவர்களின் படைத் தொகையைப் படிப் படியாகக் குறைத்து வந்தமையினல் இறுதியாகக் குடாநாட்டுப் போரில் வெற்றி பெறப்பட்டது. இதுபோலவே நெப்போலியன் தானே நின்று போரிட்ட இவீப்சிக்கில் எமது நட்பாளரின் உறுதி யான வெற்றி, தெற்கிலே பிரான்சியப் படையின் ஒரு பகுதி யோடு வெலிந்தன் போரிட்டுக்கொண்டிருந்ததாலேயே சாத்திய மாகியது. 1814 இன் முற்பகுதியில் பிானிசுக்கூடாக வெலிந்த னும், இரைனுக்கூடாக ஒசுற்றியர், பிரசியர், இரசியர் ஆகியோ ரும் பிரான்சினுள் நுழைந்தனர். 1813-14 இல் மத்திய ஐரோப் பாவில் காசில்றியின் சூழ்ச்சித்திறன், ஆற்றல் என்பவற்றலேயே இறுதிவெற்றி பெறப்படுவதாயிற்று. இது பொருமைமிக்க அரச குமாரர்களை அவர்தம் பொது நோக்கம் கைகூடும்வரை ஒன்று சேர்த்து வைத்திருந்தது.
நெப்போலியனின் முதல் வீழ்ச்சி எல்பாவிலிருந்து அவன் திரும்பி வந்த பின்னர் ஏற்பட்டது. சேனையின் முதிர்படைவீரர்கள் அவனின் வெற்றிக்கொடியின் கீழ்த் திரண்டனர். பிரான்சு மக்கள் இரண்டுபட்ட உணர்ச்சியோடு பார்த்து நின்றனர். அவனின் 100 நாள் வீரப்போர் உவாற்றலூவில் முடிவுற்றது. இந்த இறுதிப் போர் நற்பேருய்க் குறுகிய காலத்துள் முடிவடைந்ததன் கார ணம், பிரித்தானிய அரசாங்கம் உடனடியாகத் துணிவுடன் போர்ப்

வீயன்னச் சமாதான ஒப்பந்தம்
பிரகடனம் செய்து, கிழக்கிலிருந்து நேய நாடுகளின் படைகள் பெருந்திரளாக வந்து சேரும்வரையிலும் புளூச்சருடனும் அவ னின் பிரசியர்களுடனும் இணைந்து ஒல்லாந்தினையும் பெல்சியத் தினையும் பாதுகாக்கும்படி வெலிந்தனை அனுப்பியமையேயாகும். இப்பெரும் போரின் உறுதியான தன்மை போருக்கு ஒரு திடீர் முடிவை ஏற்படுத்தியது; ஏனெனில் அதனைத் திருப்பிப் புதுப்பிப் பதில் பிரான்சு முழுமனத்தோடு ஈடுபடாததால் என்க.
நெப்போலியனது வெல்லற்கரிய பெரும் விரோதி எனப் பெரிய பிரித்தனின் புகழ் உவாற்றலூவின் பயனக உச்சநிலையை எய்தி யது. சமாதான உடன்படிக்கை மாநாட்டில் காசில்றியும் வெலிந்த னும் அரசர் பேரரசர்களுக்கிடையே எதிருாைப்பார் எவருமில் லாத அதிகாரத்துடன் உரை நிகழ்த்தினர். இந்த ஆங்கிலேயஐரிசு உயர்குடியினர் இருவரின் செல்வாக்கிலேயே வீயன்னச் சமா தான ஒப்பந்தத்தின் சிறப்புக்கள் பெரும்பாலும் தங்கியுள்ளன.
1815 இன் இணக்க ஏற்பாட்டின் அதி முக்கிய சிறப்பு யாதெனில் புளூச்சரிடத்தும் சேர்மானியரிடத்தும் பிரித்தானிய மக்களிற் பெரும்பகுதியினரிடத்தும் இயற்கையாகவே அமைந்துள்ள பழி வாங்கும் அவாவுக்கு மாருகச் சார் அலெச்சாந்தரின் உதவியோடு காசில்ரீ, வெலிந்தன் ஆகிய இருவரும் மிக வற்புறுத்தியபடி தோல்வியுற்முருக்கு வழங்கிய நீதி காரணமாகவும் ஆதரவு காரண மாகவும் ஐரோப்பாவில் ஒரு நீண்டகால அமைதி பெறப்பட்ட மையேயென்க. பிரான்சு-பூபோன்கள் மீட்கப்பட்டு, ஆனல் புரட் சியின் சமுதாய ஒழுங்கு அகற்றப்படாது இருந்தவாறு விட்டு வைக்கப்பட்டபடியிருப்ப, 1792 இன் அதன் பழைய எல்லைகளையும் பெற்றது. அல்சேசு உலொரேன் என்பவற்றைத் திருப்பிக் கொடுக் கும்படி பிரான்சு கேட்கப்படவில்லை. அன்றியும் போர்க்காலங் களில் ஆபிரிக்காவிலும் இரண்டு இந்தியத்தீவுகளிலும் கைப்பற் றிய உடைமைகளை இங்கிலாந்தினிடமிருந்து பிரான்சு மீண்டும் பெற்றுக்கொண்டது. நட்ட ஈடாகப் பிரான்சு கொடுக்கவேண் டிய பணமாக முதலில் ஒரு சிறு தொகையே தீர்மானிக்கப்பட் டது. மூன்று ஆண்டுகளில் நேயநாடுகள் படைகள் முழுவதும் பிரான்சுப் பிரதேசத்தை விட்டு நீங்கின. பழிவாங்கல் தவிர்க்கப் பட்டது. எனினும் ஆங்கிலேயர் தமக்கு ஆபத்து ஏற்படாதபடி அதிக தூரத்திலுள்ள சென் எலன தீவிலே காவலில் வைத்திருந்த நெப்போலியன் திரும்பிவருவதனைத் தவிர்ப்பதற்காகச் செய்த ஓர் ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
33

Page 179
332
வீயன்ன இணக்கத்தின் சிறப்பு
அக்கண்டத்திலே பிரான்சின் எல்லைகளுக்கு வெளியே தேசியம், சுதந்திரம் ஆகிய இரண்டும் பொருட்படுத்தப்படாது போனமையே 1815 இணக்கத்திலுள்ள குறையாகும். இங்கிலாந்து தவிர்ந்த, வெற் றியடைந்த ஏனைய “பெரும் வல்லரசுகள்’ பிற்போக்குடையன வும் கொடுங்கோலுடையனவும் ஆகும். காசில்றிகூட இங்கிலாந் துக்கு வெளியேயுள்ள பாராளுமன்றங்களைப் பொருட்படுத்தவில்லை. இரசியா, பிரசியா, ஒசுற்றியா என்பவற்றின் ஆட்சியாளர்கள், போலந்து, சேர்மனி, இத்தாலி என்பவற்றைத் தமக்கிடையே பிரித்துக்கொண்டனர்; அந்நாடுகளிலுள்ள மக்கள் அரசுப்பங்கீடு காசரிடையே பண்டமாற்றஞ் செய்யப்படுவதுபோலப் பகிர்ந்து கொள்ளப்பட்டனர். மத்திய இத்தாலிமீது போப்பின் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இசுப்பெயினிலும் சேர்மனியிலும் பிரான்சுக்கெதிரான பிற்காலத்துத் தேசப்பற்றுக் கிளர்ச்சியைத் தூண்டியனவான நாட்டின் உணர்வும், தன்னுணர்ச்சி வெளிப்
பாடும் அடியோடு அழிக்கப்பட்டன.
ஐரோப்பாவுக்கு நாற்பதாண்டு அமைதியை நல்கியமையே வீயன்ன இணக்கத்தின் சிறப்பு. ஆனல் அதன் குறைகள் இறுதியிற் போரினைத் தவிர்க்க முடியாததொன்முக்கின. அப்போர் மெற்றணிக் கின் முறையினுல் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படமுடியாத நாட் டின அவாக்களையும் பொதுவிருப்புக்களையும் நிலைநாட்டுவதற்கான ஒன்ருகும். *
1815 இன் போர் முடிவு ஒப்பந்தங்களில் பிரித்தன் அதிகமாக அக்கறை கொண்டிருந்த வேருெரு விடயம், ஒல்லாந்துக்கு ஒறேஞ்
காசில்றீயின் மேன்மைமிக்க வாழ்க்கை வரலாற்ருசிரியரான பேராசிரியர் உவெபுசுத்தர் என்பார் எழுதுவதாவது : “ நாட்டினம் என்பதிலும் பார்க்க நன்கு உணரப்பட்டதான குடியாட்சிக்கொள்கை பற்றிய ஊக்கத்தினைக் குறைத் தமையே இன்னும் மேலான குற்றப்பாடாகும். அலெச்சாந்தரும் அவனுடைய ஆலோசகர் சிலரும் மட்டும் குடியாட்சிக் கொள்கைக்கு ஆதவரவளித்தனர்; தலி ருந்தின் உதவியுடன் அவனே பிரான்சியர்க்குப் “ பட்டயம் ” பெற்றுக்கொடுத்த வனவன். தலிருந்து, தானும் பிரான்சுப்புரட்சியின் இந்நோக்கத்தின் அடிப்படை யான முதன்மையை அறிந்திருந்தான். ஏறக்குறைய பிற அரசறிஞர் யாவர்க்கும் குடியாட்சி யென்பது ஆட்சியறவையும் புரட்சியையும் குறிப்பதாயிருந்தது; இவர் களுட் பெரிய பிரித்தானியாவின் தோரி அமைச்சர்களையும் உட்படுத்தல் வேண்டும். பிரிட்டிசுப் பிரிதிநிதிகளின் மறைமுகமான இணக்கத்துடன் அமைக்கப்பட்ட
யாப்பினைத் தாக்கியவர்களை இவர்கள் ஒளிவுமறைவாக ஊக்குவித்தனர். இத்
தகைய பூட்கையினலேயே பின் ஏற்பட்ட நாட்டின் இயக்கங்கள், மக்களின் ஆவல்களை வெளிப்படுத்துவனவாயிராது விபரீத நெறிகளிற் செல்லவேண்டிய தாயிற்று-வீயன்னு மாநாடு ப. 147.

இரண்டாவது பிரித்தானிய பேரரசு
சின் அங்குலோபில் வமிசத்தினரைத் திரும்பவும் சேர்ப்பித்த அலும் அவர்களின் இராச்சியமான நெதலந்துகளுடன் பெல்சியத் தினை இணைத்தலுமாகும். இங்கிலாந்து பயங்கொள்வதற்கு எது வித காரணமுமில்லாதவர்களிடத்தே இரைன் கழிமுகமிருந்தது. எனினும் பதினைந்தாண்டுகளுக்குப் பின்னர், வெவ்வேருன, சுதந் திரமுடைய இருநாடுகள் என்னும் அடிப்படையில் ஒல்லாந்தி லிருந்து பெல்சியம் பிரிக்கப்பட்டு ஒரு நிலையான இணக்கத்தை ஏற்படுத்தும்போது இக்கட்டான மற்ருெரு நெருக்கடி ஏற்படுதல் தவிர்க்கமுடியாததாயிற்று.
கடல்களுக்கப்பாலேயே பிரித்தனின் மிக முக்கிய நலவுரிமை பாந்து கிடந்தன. ஆங்கே அது முதன்மைபெற்றுத் திகழ்ந்தது. போரில் தான் கைப்பற்றிக்கொண்ட குடியேற்றநாடுகளுள் எத்தனை யைத் திருப்பிக்கொடுக்கலாம் என முடிவு செய்வது தனியே அதனைச் சார்ந்தது. பொதுவாக திருப்பிக் கையளிப்பதில் அது தாராளமில்லா திருக்கவில்லை. இலங்கை, நன்னம்பிக்கைமுனை, சிங்கப்பூர் என்பவற் றினே வைத்துக்கொண்டும், முப்பது இலட்சம் பவுண்களுக்குக் கயணு வின் ஒருபகுதியை விலைக்குப் பெற்றுக்கொண்டும், பிரித்தன் ஒல் லாந்தர்க்கு அவர்களின் பழைய உடைமைகளான யாவாவினையும், ஏனைய கிழக்கிந்தியத்தீவுகளையும் திருப்பிக் கொடுத்தது. அன்று தொடக்கம் இவையே ஒல்லாந்தின் வெளிநாட்டுச் செல்வத்தின் முக் கிய ஊற்றக அமைந்தன. பிரான்சும் தென்மாக்கும் மிக முக்கிய மான தமது தீவுகளைப் பெற்றன. எனினும் மொரிசியசினையும் எலி கோலந்தினையும் அவற்றுடன் மத்திய தரைக்கடற் கேந்திர நிலையங் களான அயோனியன் தீவுகளையும் மோற்றவினையும் இங்கிலாந்து தன்னிடமே வைத்துக்கொண்டது. விரைவில் நிலக்கரிகொள்நிலை யங்களுமாக உபயோகிக்கற்பாலனவான பிரித்தானிய கடற்படை, கரையோர, வியாபார நிலையங்கள் பூகோளத்தின் எல்லாப்பாகங் களிலும் தோன்றி வலைபோலச் செறிந்து பரவ ஆரம்பித்துவிட் டன. கப்பல்நாயகன் குக்கின் பிரயாணங்களால் (1769-1775)
சமாதானமாகப் பெற்ற அவுத்திரேலியாவில், மக்கள் குடியேறி
னர். கனடா மேற்பகுதியில் ஆங்கிலேயரும் கொத்துலாந்து மக்க ளும் மிகுதியும் குடியேறினர். இழந்த பேரரசுக் கீடாக இரண்டா வது பேரரசொன்று தோன்றுவதாயிற்று; இதுவும் இழந்த முந் தைப் பேராசுபோலவே கடலாதிக்கம், வணிகம், சுதந்திரம் என்ற
அடிப்படையில் நிறுவப்பட்டது.
333
1830.83.

Page 180
அத்தியாயம் V!
மூன்றம் யோச்சின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்த பேரரசு : தீவு வாழ்வின் வெளியுலக விரிவு: இங்கிலாந்தும் கொத்துலாந்தும் அயலாந்தும். கனடாவும்அவுத்திரேலியாவும். இந்தியா. அடிமைவியாபார எதிர்ப்பு இயக்கம். உவில் பபோசும் இவாஞ்சலிக்கர் கூட்டத்தினரும்.
பிரித்தன் வாழ் மக்கள் வெளித்தொடர்பின்றித் தனித்து வாழ வேண்டும் என்பது ஆகியில் இயற்கையின் நியதியாயிருந்தது. எனி ணும், அத்தகைய வாழ்வு பல தன்மைகளை உடையது. நோமானிய வெற்றிக்குப் பின்னர் பல தலைமுறைகளாகப் பிரான்சு நாகரிகத்திற் குரிய நிலமானிய கத்தோலிக்க உலகினது ஒரு பாகமாகவே ஆங்கி லேயர் எல்லா வகையிலுந் தோன்றினர். இடைக்காலத்தின் பிற்பகு திகளில், ஆங்கிலேயர் கியூடர் புரட்சியில் முடிவடைந்த படிப்படி யான ஒழுங்குமுறை ஒன்றினல் தீவுத்தன்மை ஒன்றினைச் சட்டத் தில், அரசாங்கத்தில், சமயத்தில், பண்பாட்டில், குணத்தில், வாழ்க் கைப் பழக்க வழக்கங்களில் தமதாக்கிக்கொண்டனர். அவர்களைப் பற்றி இலிசபெத்து உரைத்தவாறே கண்டத்திலிருந்து உட்புகும் தாக்கங்களாற் பாதிக்கப்படாது, அவர்கள் “ சுத்த ஆங்கிலேயராகி” விட்டனர். ஆயினும் அவர்கள் தமக்கு இயல்பாகவுள்ள ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கவே, ஒவ்வோராண்டும் கடல்களுக்கப் பாலுள்ள இடங்களில் மேன்மேலும் ஆதிக்கமுடையவர்களாக அவர்தம் தீவு வாழ்வு ஒழிந்தது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பூகோளப்பகுதி ஒவ்வொன்றிலும் அவர்கள் காணப்பட்டனர். அங் கெல்லாம் தம் நாட்டுப் பண்பட்ட கருத்துக்களையும் வாழ்க்கைத் தாங்களையுங் கொண்டு சென்றனர்.
உவாற்றலூ ஊழியில் இத்தீவினர் நாடுகாண்போராயும் வியாபாரி களாயும், போர்வீரர்களாயும் ஆட்சியாளராயும் உலகெங்கணும் செய லாற்றித் தம் வாழ்க்கையை இடைவிடாது வளம்படுத்தியும் விரிவு றச் செய்தும் வந்தனர்; இம்முயற்சிகள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளிலும், ஐரோப்பிய வியாபாரத்தினதும் செல்வாக்கினதும் இயல்பான பிரதிநிதிகளா கப் பிரித்தானியரைக் கருதிய அமெரிக்கா, சீன போன்ற நாடுகளி லும் பரவியிருந்தன. இலிசபெத்தின் காலந்தொடங்கி நாட்டிற்கு வெளியே படர்ந்து கொண்டிருந்த ஆங்கில வாழ்க்கைக்குப் புது வேகத்தையும் ஆற்றலையும் கைத்தொழிற் புரட்சியளித்தது. இதன்
334

கொத்துலாந்தரொடு இணக்கம்
Lui (6)5 III ஆம் யோச்சின் ஆட்சியில் அயலாந்து, கனடா, அவுத் கிரேலியா ஆகியவற்றேடு தொடர்புள்ளனவும், வெள்ளையர்க்கும் ஆபிரிக்க நீகிரோவர்க்கும் உள்ள தொடர்பு பற்றியவுமான புது முறைப் பேரரசுப் பிரச்சினைகள் தோன்றின. இவை யாவற்றிலும் இளைய பிற்று முக்கியமாகப் பங்குபற்றினன்.
ஒரு பிரச்சினை பற்றிய கவலை ஒழிந்தது. இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்கு மிடையிலான உறவு பெரும் இன்னல் விளைக்கும் பேரரசுப் பிரச்சினையாக இராது மகிழ்ச்சிதரும் நட்புறவாக மாறிற்று. சிலகாலம் சீரழிந்திருந்த அரசுகளினது ஐக்கியம் பொறு மையாலும் காலத்தாலும் நேர்படுத்தப்பட்டது. யக்கோபித இயக்கத்தின் மறைவு, கொத்துலாந்தில் மானிய நிலமுறையையும், குடிவகுப்பு முறையையும் ஒழிக்க 1745 இன் பின்னர் கையாளப் பட்ட நடவடிக்கைகள், இந்நெருக்கடி நீக்கப்பட்டதன் பின்னர் கொத்துலாந்தில் ஏற்பட்ட பணப்பெருக்கம் ஆகியவை கொத்து லாந்தினரிடம் இங்கிலாந்துக்கு நன்மதிப்பு வளர உதவின. 'சேர் உவாற்றர் எழுதிய கொத்துலாந்தரின் வீரக் கதைகளும் உவாற்ற அலுவில் திறம்படப் போர் புரிந்த, முழந்தாள்வரை கவசமணிந்த வீரர் படைகளும் தீவின் மரபு முறைக்கும் அதிகாரத்துக்கும் புதிய தொரு ஆற்றலை அளிப்பனபோல ஆங்கிலேயர்க்கும் நாகரீக உலகம் முழுவதற்கும் தோன்றியது. அன்றுமுதல், இருநாடுகளும் ஒன்றை யொன்று ஆதரித்தமை பிரித்தானிய அரசின் முக்கிய ஊன்று கோல்களுள் ஒன்முக இருந்து வருகின்றது.
பேண்சு, கொத்து ஆகியோர்தங் காலப் பேரரசின் விரிவுக்கும் செல்வவிருத்தி, பெருமை ஆகியவற்றுக்கும் பேர்பெற்ற காலமான அதுவே அந்நாடுகளிாண்டும் ஒன்முனதன்பின் முதன்முதலாக ஏற் பட்ட மகிழ்ச்சியான காலமுமாகும். கொத்துலாந்தின் உள்நாட்டு விவகாரங்களில் தொல்லைகள் சில இருந்தன எனினும் இங்கிலாந்தி லும் அம்மாதிரியான இன்னல்களே இருந்தமையால் தீவின் இரு அந்தங்களும் இவ்வின்னல்களாலேயே பிணிக்கப்பட்டன. இருநாடு களிலும் இருந்த, காலத்துக்கு ஒவ்வாத பண்டை அரசியற்ருப னங்களினுலும், பாழ்பரோக்களினலும், காலத்துக்கியைந்த திறமை யுள்ள மாநகரசபைகளும், உள்ளூர்ச்சபைகளுமின்மையாலும் கைத்
தொழிற் புரட்சியினலேற்பட்ட சமுதாயப் பொருளாதாரப் பிரச்சி
னைகள் சிக்கலாயின. மாநிலத்தேர்தல்கள் தாமும் ஒரு கேலிக்கூத்தா யமைந்த கொத்துலாந்தில் அரசியல் எந்திரமும் இங்கிலாந்திலுள்ள தைக் காட்டிலும் நவீன காலத்துக்கு ஒவ்வாததாயிருந்தது. யக் கோபித இயக்கத்தை அடக்கும் ஆர்வம் மிக அதிகமாயிருந்தது.
அதே சமயம் குடியாட்சி ஆர்வமும் மேலோங்கியது. இங்கிலாந்தி
லும் பார்க்கக் கொத்துலாந்திலே கூடிய கெடுதி யுடையனவாகத்

Page 181
336
18 ஆம் நூற்றண்டில் அயலாந்து
தோன்றுதற்கென்று போலும் இன்னல்கள் சிலகாலம் மறைந்திருந் தன. எனினும் எதிர்காலத்திலே, அரசியற் சீர்திருத்தம், சமுதாய அபிவிருத்தி ஆகியவை இரு நாடுகளிலும் ஒரே தன்மையானவாயி ருந்தமை இரு நாடுகளின் வாழ்வும் இறுகப் பிணைப்புற ஏதுவா
தவுணிங்கு வீதியில் கொத்துலாந்து ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகக் கருதப்பட்ட நிலைமை ஒருவழியாக ஒழிய, நீண்ட கால அமைதியின் பின் ஐரிசுப் பிரச்சினையானது மிகச் சிக்கலான ஒரு புகிய கட்டத்தை எய்திக்கொண்டிருந்தது. இது எங்கள் காலத் துப் பெரிய நிகழ்ச்சிகள் வரையும் இடையிடையே பிரித்தானியப் பேரரசிற்குத் தொடர்ந்து தொல்லை தருவதாயிருந்து வந்தது.
பதினெட்டாம் நூற்முண்டில் யக்கோபிதக் கொத்துலாந்து ஆபத் துக்கும் தொந்தரவுகளுக்கும் காரணமாக விருந்தபொழுது ஐரிசு மக்கள் தலைதூக்கும் அறிகுறியெதுவும் காணப்படவில்லை. சார் சுபீல் டின் நாட்கள் தொடங்கி, ஐரிசு யக்கோபிதப் பாரம்பரியத்துக் காட்டுவாத்து ’க்களான ஊக்கம் மிகுந்த புரட்சியாளர்கள் பிரான் சுப் படைகளில் சேவை புரிந்துளர்; இவர்கள் பொன்றினுேய் போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே ஆங்கிலேயரைச் சுடுவதற்கு வாய்ப்புப் பெற்றிருந்தனர். குருெம்வெலினலும், உவிலியத்தினுலும் இருமுறை வெற்றிகொள்ளப்பட்டதான இத்தீவு, பிரித்தானிய புரட் டெசுத்தாந்தரது அதிகாரத்தின்கீழும் கத்தோலிக்கருக்கு மாமுன நீதியற்றனவும் ஓரளவிற் றிணிக்கப்பட்டனவுமான தண்டனைச் சட் டத்தின்கீழும் அடங்கிக் கிடந்தது.
அந்நூற்ருரண்டின் இறுதி முப்பதாண்டுகளிலும் அழிவுப்பள்ளத் தாக்குட் கிடந்த பழைய எலும்புகள் புதிய ஊழியின் உயிர்ப்பளிக் கும் காற்றுகளினல் இயங்கத்தொடங்கின. முதலில் இவ்வியக்கம் கத்தோலிக்கராலும் கெவித்தியராலும் தொடங்கப்படவில்லை ; புரட் டெசுத்தாந்தராலும் தாராளராலுமே தொடங்கப்பட்டது. ஆங் கில வியாபார நலன்களுக்காக அயலாந்து முழுவதையும், அங் கிலிக்கன் ஆதிக்கத்திற்காக அயலாந்திலுள்ள மற்றெல்லாச் சமயக் கொள்கையுடையார்களையும் பலியாக்கும் கொடுங்கோன் முறையை எதிர்த்து எழுந்ததே அவ்வியக்கம் , அது ஒரளவு அல்சுதரிலுள்ள பிரெசு பித்தீரியர்களாலும் ஓரளவு கிரட்டன்போன்ற பரந்த நோக் குடைய அரசியலறிஞர்களாலுந் தொடங்கப்பட்டதாகும். அந்நூற் முண்டின் தொடக்கத்திலிருந்து, பிழை பொறுத்தலன்றி, வேறெத் தீங்கையுஞ் செய்யாதவர்களான தம் தேசக் கத்தோலிக்கர் பற் றித் தமது மூதாதையர் கொண்டிருந்த பயங்களையும், இந்தத் தாராளமான மனநோக்கில் புரட்டெசுத்தாந்தர் பலர் மறந்து விட் El 61.

சமயப் பிணக்குகள் 337
அமெரிக்க விடுதலைப்போரின் காலத்தின் புரட்டெசுத்தாந்தரான 1778-1782. தொண்டர்படையின் கைகளுள் அயலாந்து அகப்பட்டது. எனினும் அவ்வியக்கம் கத்தோலிக்க அபிப்பிராயத்தின் ஆதரவினைப் பெற் றது. பிரான்சிய ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து தீவினைப் பாது காத்துக் கொள்ளத் தொண்டர்படையினர் தயாராயிருந்தனர். எனி னும் அவர்கள் இங்கிலாந்து அரசாங்கத்துக்குத் தங்கள் நிபந்தனை களை உறுதியாகக் கூறினர்-அயலாந்தின் வியாபாரத் தடைகளை அகற்றுதல், பிரித்தானிய கட்டுப்பாட்டிலிருந்து அதன் பாராளுமன் றத்தினை முறைப்படி விடுவித்தல் என்பன அவை. அயலாந்து தனது பொருள்களுக்கு விரும்பியவாறு சந்தைகளைப் பெற்றது; ஆனல் அடுத்த இருபது ஆண்டுகளிலும் அதன் அரசியற் சுதந்திரம் உண் மையானதாயிருக்கவில்லை; ஒரு தோற்றமாகவே இருந்தது. ஏனெ னில், தபிளின் பாராளுமன்றத்தில் இன்னமும் கத்தோலிக்கர்க்கு 1789-1801. எப்பங்கும் அல்லது எப்பதவியும் வழங்கப்படவில்லை. தபிளின் மாளிகையிலிருந்த சில்லோராட்சியினர் புரட்டெசுத்தாந்த அய லாந்துகூடத் தன்னுட்சியைத் தொடங்குவதற்கு முன்னர் சீர் திருத்தமுறி ஒன்று நிச்சயமாகத் தேவையென்ற் முறையிலேயே
பாழ்பரோக்களைக் கையாண்டுவந்தனர்.
எனினும் புது ஊழியில் நம்பிக்கை இருந்தது. தண்டச்சட்டங்க ளுள் மிகக் கேவலமானவை நீக்கப்பட்டன. சாதிகளையும் சமயங்களை யும் படிப்படியான ஒரு புத்தாக்க முறைமையினுல் சாந்தப்படுத்த எண்ணிய கிரட்டன் என்பானின் தலைமையில் சீர்திருத்தம் பற்றிய கருத்துக்கள் பரவின. கத்தோலிக்காதும் புரட்டெசுத்தாந்தாதும் மதவெறி தணிந்திருந்தது. பதினெட்டாம் நூற்முண்டுச் சகிப்புத் தன்மையும் பரந்த மனப்போக்கும் மேலும் பெருமளவில் எங்கும் செறிந்து விளங்கின. பிரித்தானிய அரசியலறிஞர்கள் கிரட்டனின் ஆர்வத்தில் பாதியளவேனும் உடையவராயிருந்திருப்பின் எவ்வ ளவோ செய்திருக்கலாம். ஆனல், யக்கோபினியத்தினதும் யக்கோ பின விரோதத்தினதும் ஆர்வமும், புதுக் கத்தோலிக்கத்தினதும் ஒறேஞ்சியத்தினதும் ஆர்வமும் அதி விரைவிற் முேன்றின. அவை பதினெட்டாம் நூற்ருண்டிலே காலத்தால் எழுந்த ஆர்வத்தினுற் முேற்றுவிக்கப்பட்ட தாராளமான சந்தர்ப்பத்தினை நாசம்செய்தன. இங்கிலாந்துத் தோரிகள் பழைய உலிக்குக் கூக்குரலான “போப்பு மதம் வேண்டாம்” என்பதனைத் தமது தேர்தற்காலக் கொள்கை யாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பிரான்சியப் புரட்சி கார ணமாய் அவர்கள் எவ்வித மாற்றத்துக்கும் இணங்கினால்லர். பிற்றி னல் நிறைவேற்ற வியலாதுபோன ஆசைகளைப் பதிலரையன் விற்சு உவிலியம் பிரபு தூண்டிவிட்டனன். தாராள மனமுள்ளான் எனினும் 1795.

Page 182
338
சன. 1, 1801.
விற்க உலிலியம் : “ தொண்ணுாற்றெட்டு '
சாவதானமற்றவனுன அப்பிரபு தபிளினிலிருந்து திருப்பி அழைக் கப்பட்டான். அவன் திரும்பி வந்ததனல் கத்தோலிக்கருக்குச் சாந் தமளிக்கும் செய்கைமூலம் பிரான்சுக்கெதிரான போரில் அயலாந் தின் ஆதரவைப் பெறும் முயற்சிக்கு ஒரு முடிவேற்பட்டது. எனவே, பிரான்சியப் படைப் பிரசாரத்தினர் அயலாந்துக்குக் குடி
யரசுச் சுதந்திரம் வழங்க முற்பட்டபோது, அவர்களின் உதவியை
ஆங்கிலப் படையினின்றும் விலகியவர்களான வுல்வு தோன், எட்டுவேட்டு விற்ககால்டு ஆகிய ஐக்கிய ஐரிசு மக்களின் தலைவர்கள் ஏற்றனர். இவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான போர் அணியில் அய லாந்திலிருந்த சமயங்களை ஒன்று சேர்க்கக் கருதினர். ஆனல், பிரான்சிய உதவியில் அவர்கள் கொண்ட நம்பிக்கையின் உண்மை யான பேறு யாதெனில் பழைய உலிலியம் காலத்துப் போர்களிற் போல் புரட்டெசுத்தாந்தரும் கத்தோலிக்கரும் ஒருவரை ஒருவர் கொன்றதேயாம். ஏனெனில், ஆங்கில அரசாங்கத்துக்கெதிராக அல்சுதர் கொத்துக்களும், பிரெசு பித்தீரியர்களும் பெரும் குற்றங் கள் இழைத்தரெனினும், அவர்கள் குருமாரின் ஆதிக்கமுடைய ஒரு கெலித்திய குடியரசினை நிறுவப் பிரான்சுடன் சேர்ந்திலர். தம் மூதாதையர் கொண்டிருந்த, கத்தோலிக்கரைப் பற்றிய அச் சத்தைத் திரும்பவும் அடைந்தோரும் புதிய "ஒறேஞ்சு விடுதி களில் தம்மைச் சீர்படுத்திக் கொள்ள முயல்வோருமான அய லாந்து விசுவாசிகளும் நொந்துபோயுள்ள பிரித்தானிய அரசாங்க மும் சேர்ந்தமையால் 1798 ஆம் ஆண்டுப் புரட்சி அடக்கப்பட் டது. அந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அடைந்த இரா ணுவ, அரசியற் பலவீனம், உள்ளூர்க் கட்சிக்காரரது துணையை வேண்டத் தகாத அளவுக்கு நாடும்படி செய்தது. அவர்களும் தம் கலவரத்தில் அந்நாட்டு ஐரிசு மக்களைப் பெருங் கொடுமைகளுக்கு ஆளாக்கினர். 'தொண்ணுாற்றெட்டின் நினைவுகள் ஒவ்வொரு குடி சையிலும் அழியாது காக்கப்பட்டும் தந் தேசப்பற்றுடையோரா லும் புரட்சிவாதிகளினுலும் வழிவழியே தத்தம் நலத்துக்குப யோகிக்கப்பட்டும் வந்த பகைமையின் மரபுரிமைகளாய் அமைந்
தன.
இந்நிலைமைகளில் உவெசுத்துமினித்தரில் ஒரே பாராளுமன்றத்தி ல்ை இரு தீவுகளையும் ஐக்கியப்படுத்துவதே ஒழுங்கையும் நீதியை யும் நிலையாக நாட்டுவதற்கான ஒரே வழி எனப் பிற்று முடிவுசெய் தான். ஆனல் ஒழுங்கினை மட்டுமே நிலைநாட்ட அவனல் முடிந்தது. இரு பாராளுமன்றங்களின் இணைப்பை, அதனேடு கத்தோலிக்க விடுதலையையும் சேர்த்து நிறைவேற்றுவதன்மூலம் கெலித்திய ஐரிசு மக்களுக்கு அதையுகந்ததாக்க அவனுக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை. அந்த நம்பிக்கையும் தபிளின் பாராளுமன்றத்தில்

கத்தோலிக்கர் நிலை : ஒகொன்னெல்
நடைபெற்ற ஊழல் வெறியாட்டங்களும் இரு நாடுகளின் ஐக்கி யத்தை நிறைவேற்ற ஓரளவு போதியனவாயிருந்தன. எனினும் பிற் றின் அரச ஆசிரியர், அவனுடைய கூட்டாளிகள் பலர், அவனுடைய கட்சியினர், அவனுடைய நாட்டு மக்களிற் பெரும்பாலானேர் ஆகிய அனைவரும் அயலாந்திலேனும் இங்கிலாந்திலேனும், உரோமன் கத் தோலிக்கர்களுக்கு அரசியலுரிமைகள் வழங்குதலினலேற்படக் கூடிய விளைவுகளுக்குப் பயந்தனர். தன் பொருட்டாக, அக்காலத் கில் அதிக பலமுடையனவாயிருந்த இரு சத்திகளான யக்கோபி னப் பகைமைவாதமும் இவாஞ்சலிக்கமும் ஒன்றுசேர்ந்தன. இருபத் தெட்டாண்டுகளாக உரோமன் கத்தோலிக்கர்கள் பெரிய பிரித்தானி யாவினதும் அயலாந்தினதும் ஐக்கிய பாராளுமன்றத்தில் இடம் பெருது தடுக்கப்பட்டிருந்தனர்.
எனவே கத்தோலிக்கக் கெவித்தியர் திரும்பவும் ஒதுக்கப்பட்ட னர். இம்முறை இங்கிலாந்து தன் முழுப்பலத்தையுங் கொண்டு அவர்களைத் தாக்கியது. அதே சமயம் வடக்குப் பகுதியிலுள்ள ஐரிசு மக்கள் ஒறேஞ்சு உற்சாகத்தில் பெருமிதமடைந்தவராயுமிருந்த னர். கத்தோலிக்கர், அல்லாதார் எனும் இருசாராரும் நேருக்கு நேராக மீண்டும் போயின் போராட்டத்தினை நாள்தோறும் பேச்ச ளவிலே செய்துவந்தனர். அளவுக்கு மிஞ்சிய சனத்தொகையுடைய தும், உருளைக் கிழங்கையே உணவாகவுடையோரைக் கொண்ட தும், துன்பப்படுத்தப்படும் கமக்காரர்களுக்குரியதுமான இத்தீவில் நிலப்பிரச்சினை அரசியலில் முக்கியமானதொரு இடத்தினைப் பெறத் தொடங்கியது. இந்த நிலைமைகளில், கத்தோலிக்க வழக்கறிஞர் இடானியல் ஒகொன்னெல் என்பவனின் ஒப்பற்ற வாக்குவன்மை யினலே புரோகிதவாதம், நாட்டினவாதம், சாதாரண உரிமை வேட்கை ஆகிய யாவும் வெல்லற்கரியவொரு இணைப்பாய் அமைக் கப்படலாயின.
இரண்டாம் யோச்சின் ஆட்சியின் இறுதியாண்டுகளில் பிரான்சிய கனடா போரில் வெற்றி கொள்ளப்பட்டது. மூன்றும் யோச்சின் ஆட்சியில் பிரித்தானியப் பேரரசின் கீழ் பிரான்சியக் கனடியர் 6նուք இணங்கினர். இது அவர்களின் சமயம், உரிமைகள், வழக்கங்கள் ஆகியவற்றுக்குக் காட்டிய ஆதரவினலேயே ஏற்பட்டது. அயலாந் திலே அதே ஆண்டுகளிலே புரட்டெசுத்தாந்தரும் ஆங்கிலேயரும் தம் “உயர்வு’க் காலத்திலே கையாண்ட கொள்கைக்கு இது நேர் மாமுயிருந்தது. வட கனடாவிலும், பெரிய வாவிகளின் கரையோரங் களிலும் கரையோரக் குடியேற்ற நாடுகளான புதிய பிரன்சுவிக்கி
1 1821 ஆம் ஆண்டில் அயலாந்திலுள்ள ஐரிசு மக்கள் 68,03,000 ஆகப் பெருகியுள்ளனர். மேலும் அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பத்து இலட்சத் தால் அத்தொகை அதிகரித்தது. இவ்வாண்டுகளில் பெரிய பிரித்தானியாவில் இத்தொகையின் ஏறக்குறைய இருமடங்கான குடிசனங்களே யிருந்தனர்.
339
1801-1829.

Page 183
34)
노 | I T
ქეჭIşჭ: t R 稀 曬
|ሽርሱኞ|Š! S a |||||||||||||olo
岛RO
须
·
疾
 
 
 
 
 
 
 

இருகண்டாக்கள் பிற்றின் ஏற்பாடு
லும் நேவாகோசியாவிலும் ஆங்கிலேயரும் கொத்துக்களும் மூன் ரூம் யோச்சியின் ஆட்சியில் குடியேற்றப்பட்டனர். புதிதாக வர் தோர்களுட் பலர் அமெரிக்காவில் விடுதலேப்போரில் தாய்நாட் டின் ஆதரவாளர்களாயிருந்தனர்-அதாவது விடுதஃப்போரின் பின்னர், வெற்றிபெற்றவர்கள்-போரின்போது அவர்க்கு விரே" திகளாயிருந்த கம்பாற் காட்டிய சகிப்பின்மையாலும் அவ ாது அநீதியாலும் இடம் பெயர்ந்தோர் ஆவர். கனடாவில் பிரிட்டிசுக் குடியேற்றத்தின் மற்றைய பகுதியினர், தாய் நாட்டிலிருந்து பொருளாதாரங் காரணமாக வெளியே புறப் பட்டோராவர். மூன்றும் யோச்சு அரியணே ஏறியபொழுது 75 இலட்சமாகவிருந்து அவன் இறக்கும்போது 140 இலட்சமாக - இவ் வனவு தொகையினர் வெளிநாடு சென்றபோதும் - அதிகரித்த சனத்தொகையின் அதிகவினாவான பெருக்கத்தின் காணமாகப் பத்தொன்பதாம் நூற்றுண்டின் முற்பகுதியில் இந்த இயக்கம் வலுத்தது.
கனடாவிலே, பிரித்தானிய இனத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் பெருந்தொகைகனில் வந்து சேர்ந்தகனுல் அவர்களி னின்றும் பெரிதும் வேறுபட்ட பழக்க வழக்கங்களேயுடைய IfRттєзг சிய மக்களே ஆளுதல் சிக்கலானதொன்றுயிற்று. புதிதாக வந்தோர் கள் அமெரிக்க குடியேற்ற நாடுகளிலும் ஓரளவுக்கு இங்கி லாந்திலும் சுயஆட்சியை அனுபவித்தவர்கள். அச்சுயஆட்சி யினே இங்கு உடனேயே கோரினர். ஆணுல் பிரான்சிய விவசாயிக் ளுக்குச் சுயஆட்சியினுல் ஒரு பலனுமில்லே, அவர்களுன் மேலோர் கள் பிரிட்டிசு வெற்றியின் பின்னர் பெரும்பாலும் பிரான்சுக்கே திரும்பி விட்டனர். அவர்கள் தம் குருமாரிடம் தும்பிக்கையுடை" பிருந்தனர். புறநெறியானாான அந்நியர்கள் தங்கள் சட்டங்கனில் மாற்றங்களேச் செய்வர் என அஞ்சினர். நன்னவேனேயாகப் பிரித்தா னிய விசுவாசிகள் வருவதன் முன்னரேயே பிரான்சியரின் நம்பிக் கைக்குப் பாத்திரமாயிருந்தது அரசாங்கத்துக்கு ஒரு நல்ல தொடக்கமாயிற்று. நேரத்துப் பிரபுவின் 177 இன் குவிடெக்குச் சட்டமும், சேர் கை காற்றன் புத்திசாதுரியமாகவும் தா"ளமாக வம் கனடாவை ஆண்டமையும் அவர்கள் தங்கள் உரிமைகன் என்று நிணேத்தெைபற்றி ஒரு பாதுகாப்புணர்ச்சியை ஆவிர்க ளுக்கு அளித்தது.
அடுத்த கட்டமாக, கனடாவில் இரு சாதியினரும் ஒருவருக்கொ ருவர் அருகிவிருந்தமையாலேற்பட்ட சிக்கலான பிரச்சினேயைப் பிந்து தைரியமாகவும், வெற்றிகரமாகவும் தீர்க்க முன்வந்தான்.
அவன் அதனேப் புவியியல் அமைப்புக் கேற்பத் தீர்த்து வைக்கக்
தீர்மானஞ் செய்தான். வட கனடாவின்த் தென் கனடாவிலிருந்து
路蚌]

Page 184
342
五了90一1840。
丑769一丑775,
அவுத்திரேலியா
வேருக்கி, பழைய மாவட்டம் பிரான்சியச் சட்டத்தினையும் வழக் காற்றையும் பின்பற்றவும் வாவிப்புறங்களில் புதிதாகக் குடியேறி னேர் தங்கள் நிறுவனங்களில் பூரணமான பிரித்தானியராக விளங்கு மாறுஞ் செய்தான். இந்த இரு மாகாணங்களும் ஒவ்வொன்றும் தாம் தாமே தெரிவு செய்த சபையை யுடையனவாயிருக்க வேண் டும். ஆனல் அச்சபைகள் முழுப் பொறுப்புள்ளனவாகவோ மந்திரி மார்களைத் தெரியும் உரிமையுடையனவாகவோ இருக்கவில்லை; வரி விதிக்கவும், சட்டமியற்றவும் அதிகாரமுடையனவாயும் இலிசபெத் அக் காலத்தில் பாராளுமன்றத்துக்கும் முடிக்கு மிடையிலிருந்த தொடர்பைப் போன்ற உறவினைத் தேசாதிபதியோடும் அவனுடைய உத்தியோகத்தரோடும் கொண்டனவாயும் இருந்தன. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தருகம் என்பானின் ஆலோசனைப்படி வழங்கப்பட்ட ‘பொறுப்பாட்சி அதன் பிற்காலத் தேவைக்கேற்ற வாறு அமைந்தது போன்று இந்த ஏற்பாடும் அக்காலத்தில் கனடா வின் தேவைக்கு ஏற்றதாயிருந்தது. இந்த இடைக்காலத்தில் பிரான் சிய மக்களுக்குப் பிரதிநிதித்துவ சபைகள் பற்றிய அறிவு புகட்டப் பட்டது. பித்தானியக் குடிமக்களும் அரை நூற்முண்டில் 10,000 இலி ருந்து 4,00,000 ஆகப் பெருகினர். மனித நடமாட்டமற்ற அத்த கைய நிலத்திலேற்பட்ட இச்சனப் பெருக்கத்திற்கு, சென் உலோ றன்சு ஓரமாக ஆங்கிலேயரும் கொத்துலாந்தரும் குடியேறிய மையே காரணமாகும்.
பிரித்தானியக் கனடாவிற் பயிர்ச்செய்கையும் ஆரம்ப வளர்ச்சி யும் இடம்பெற்ற அதே காலத்திலேயே அவுத்திரேலியாவிலும் அம் மாதிரியான அபிவிருத்தியேற்பட்டது. முதல் முதலில் குடியேறிய காரணமும் குடியேறிய முறையும் இந்த இரு இடங்களிலும் வேறு பட்டனவெனினும் இரு இடங்களின் குடியேற்ற இயக்கத்தின் பொது அம்சங்கள் ஒரே தன்மையின. கனடா போரினுல் கைப்பற் றப்பட்டது , பிரான்சிய மக்கள் எங்களுக்கு முன்னரே சென்று பின் வந்து குடியேறுவோருக்கு வழி செய்தனர். அவுத்திரேலியா, பதி னேழாம் நூற்முண்டில் ஒல்லாந்தராற் கண்டுபிடிக்கப்பட்டுப் புறக் கணிக்கப்பட்டதாய் சில தொல்குடிகள் தவிர இன்னமும் மக்களின் றியே கிடந்தது. அரச கப்பற் படையைச் சேர்ந்த கப்பல் நாயகன். குக்கு என்பான் அதன் கரைகளைக் கண்டுபிடித்துப் பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதனை அறிவித்து வைத்தான். பிற்று, உண்ணுட்டுச் செயலாளரான சிட்னிப் பிரபு ஆகிய இருவரது கட்டளைப்படி, எதிாடியிடமாகிய அவுத்திரேலியா வில் பேரரசொன்றை நிறுவ வேண்டுமென்ற நோக்கத்தினுலன்றி நாடுகடத்தப்ப்ட்ட குற்றவாளிகளைக் குடியிருத்துதற்கு அது ஏற்ற இடமென்ற காரணத்தாலேயே அங்கு முதலில் குடியேற்றம் ஏற்பட்

உவாறன் எசிங்கு
டது. பழைய அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இப்பொழுது பிரிந்து கொண்டமையின், அவர்களை அங்கு குடியேற்றுவது இயலாத தாயிற்று. ஆனல் குற்றவாளிகளின் குடியேற்றமும், அவர்களைக் காவல் புரிந்த சேனைகளும், நல்ல தளமொன்றையும், தூரத்தி லிருந்த இங்கிலாந்துடன் போக்குவரத்து முறையொன்றையும் அளித்தன; இவை, மிக விரைவில் தொடர்ந்து நிகழ்ந்த கட்டுப் பாடற்ற குடியேற்றத்துக்கு அதன் ஆரம்ப நிலையில் மிக வேண்டிய வையாயிருந்தன. கனடாவுக்கு மக்களை அனுப்பிய பொருளாதார காரணங்களே அவுத்திரேலியாவுக்கும் மக்களை யனுப்பின. உவாற் றலூ காலத்து கொட்டில் வாசிகள்' எனக் குறிப்பிடப்பட்ட முத லாளிகளான ஆட்டுமந்தைப் பண்ணைக்காரர் இக்கால அவுத்திரேலி யாவை உருவாக்க உவாற்றலூ காலத்திலேயே தொடங்கிவிட்டனர். இந்தியாவிற் பிரான்சுக்கிருந்த அதிகாரத்தைக் கிளைவு அழித்த தும் ஆங்கு முதன்முதலாக ஆங்கிலேய ஆட்சிக்குட்படுத்தப்பட்ட பெருநிலமெனத்தக்க வங்காளத்தைக் கைப்பற்றியதும் இரண்டாம் யோச்சின் ஆட்சியில் நிகழ்ந்தவை. இவை கிழக்கிந்தியக் கம்ப னியை ஆயுதந்தாங்கிய வியாபாரக் கூட்டுத்தாபனம் என்ற நிலையி லிருந்து ஆசியாவில் ஒரு வல்லரசாய் மாற்றியது. இத்தகைய மாற் றம் மூன்ரும் யோச்சின் ஆட்சிக்காலத்திலே இந்தியாவில் உவாறன் ஏசிங்கு, கோண்வாலிசு, உவெலசிலி என்போராலும் தாய்நாட்டில் பிற்றினலும் வகுக்கப்பட்டது.
இந்துத்தானத்திலே தனக்கென ஒரு பேராசினை நிறுவப் பிரான்சு செய்திருந்த திட்டம் கிளைவினல் முறியடிக்கப்பட்டது. ஆனல் பிளா சேயிலிருந்து அடுத்த ஐம்பது ஆண்டுகளிலும் பிரான்சியர்கள் முதலில் ஏசிங்கு என்பார்க்கு எதிராகவும் பின்னர் உவெல சிலிக்கு எதிராகவும் இந்திய நீதிமன்றங்களைத் தூண்டுவதனுலும், இந்தியச் சேனைகளை ஏவுவதனலும் பிரித்தானியர்க்கு இடரிழைப்ப வராகவே இருந்தனர். அவர்களுடைய செயல்கள் குடாநாட்டி னுாடே பிரித்தானிய ஆதிக்கம் மேலுங் கூடிய வேகத்தில் பவுவ தற்கு ஏதுவாயின.
அமெரிக்க விடுதலைப் போரின் காலத்திலே உவாறன் ஏசிங்கு இவ் வெளியாபத்துக் கெதிராகப் போராடவும், அதே நேரத்திலேயே தனது உள் அதிகாரத்தினைத் தனது சபையின்கண், தனது விரோதி யான பிலிப்பு பிரான்சினல் உண்டான எதிர்ப்புக்கெதிராக நிலை நிறுத்தவும் போதிய வழிவகையற்றவனுயிருந்தான். இவை எல்லா வற்றிற்கிடையேயும் அவன் இந்தியாவிற் பிரித்தானிய ஆட்சியினைக் காப்பாற்றினன்; எனினும், இக்கட்டான அவசர காலங்களில் பல சாலியான மனிதன் ஒருவன் இழைக்கக்கூடிய பிழைகளை இழைக் காது விட்டானல்லன் , பிரான்சிசின் வன்மத்தினுலும், பேக்கு,
343
786-87
1757-1805.
1772-1785.

Page 185
IIIA),
할
s
戀
i
*இலங்கை
14% த்தாளிட ஆள்புகல். Š
டிய "ra": "", "Fail:[LIIII)
STT TLSS S SSSA LSLLL SLLLaSC C LL
i pi
SL0LHSLLLL LLLLTS 0S TCLTT L TTAT SS S SS S S
படம் X, 19 ஆம் நூற்றண்டுத் தொடக்கத்தில் இந்தியா,
 
 
 
 
 
 
 
 

కొట్టి "رs{ R
偲
蝎
zum ===
படம் XI, 1906 இன் பிரித்தானிய ஆள்புப் பரப்பையும் ஆதிக்கத்தியும்
காட்ம்ே இந்தியா,

Page 186
346
1788-1795.
1784。
1786-1793
இந்தியாவின் நிர்வாகமும் பிற்றும்
பொக்சு, செறிடன் என்போரின் கற்பனையினலும் மிகவும் பெருப் பிக்கப்பட்டனவும் பிழையாக விளக்கம் கொடுக்கப்பட்டனவுமான இச்செயல்களுக்காக உவெசுத்துமினித்தர் சபையில் அவன் குற் றஞ்சாட்டப்பட்டான். பிரசித்திபெற்ற அந்நடவடிக்கைகள் அவ னுடைய விடுதலையில் முடிவடைந்தனவேனும், அநீதியான அந் நடவடிக்கைகள் மூலம் பிரித்தானிய அரசியலறிஞர்களும் பிரித்தா னியப் பொதுமக்களும் இந்தியப் பிரச்சினைகளையும் பொறுப்புக்களை யும் நன்கு உணர்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இந்தியர்கள் பால் எமக்குள்ள கடப்பாட்டையொட்டிய சரியான குறிக்கோளைப் பேக்கு போதித்தான். ஆனல் அவன், ஏசிங்கினது ஆளுகைக்கும் இந்தியப் பிரச்சினைகளுக்குமுள்ள தொடர்பினைத் தப்பாக விளங்கிக் கொண்டான்.
இதற்கிடையில், பொக்சினல் கொண்டுவரப்பட்ட, பெரும்பாலும் இதையொத்த, ஆனல் துணிகரமான முறியினைக் குறைகூறி நிரா கரித்துவிட்டுப் பிற்று தான் இயற்றிய இந்தியச் சட்ட மூலம் கிழக் கிந்தியக் கம்பனியின் வியாபார முழுவுரிமையை இருந்தவாறே விட்டுவிட்டு, அதன் பரிபாலனத்தைப் பிரித்தானிய அமைச்சர் சபையின் அதிகாரத்துக்கு உட்படுத்தினன். அதே நேரத்தில் கல் கத்தாவிலிருந்த மாதேசாதிபதி தம்முடைய சபையின் பாதுகாப் பிலே தங்கியிருக்கும் நிலையிலிருந்து பிற்றின் முறி அவருக்கு விடுதலையளித்தது , அச்சபை ஆலோசனைச் சபையாய் மட்டும் மாறியது. பிரான்சிசுக்கும் ஏசிங்குக்குமிடையில் ஏற்பட்டவை போன்ற சம்பவங்கள் சபைக் கூட்டங்களில் இனி ஒருபோதும் இடம் பெறலரிதாயிற்று. வல்லாட்சி ஒன்றினை மட்டுமே அறிந்த நாட்டின் கண் மாதோ சாதிபதி வல்லாட்சியாளனுக்கப்பட்டான். ஆயினும், மந்திரியின் தரத்திலுள்ள தலைவர் ஒருவரின்கீழுள்ள கட்டுப்பாட்டுச் சபையின் மூலம் தாய்நாட்டாட்சியின் கட்டுப் பாட்டுக் குட்பட்டவனுய் அவன் இருந்தான். பிற்றின் கனடா ச் சட்டவாக்கம் தருகம் பிரபுவின் காலம்வரை கனடாவில் எத்துணை நிறைவாகப் பயன்பட்டதோ அத்துணை நிறைவாக அவனது இந் தியச் சட்டவாக்கமும் கலகக்காலம்வரை இந்தியாவிற் பயன் பட்டது.
மாதேசாதிபதியாக இந்தப் பெரும் அதிகாரங்களைச் செலுத்து வதற்குத் தக்க மனிதரைத் தேர்ந்தனுப்பும் சிறப்பினைப் பிற்று பெற்றிருந்தான். கோண்வாலிசுப் பிரபு ஏசிங்கினது உள்நாட்டு வேலை களை முற்றுவித்தனன் , அத்துடன் பின்னர் பிரிட்டிசாரால் பரிபா லித்து வரப்பட்ட எல்லா மாகாணங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்த ஒருமுறையில் வங்காள அரசாங்கத்தினையும், வரிவிதித்த லையும் வரையறுத்தனன். பிரித்தானியக் கொடியின்கீழ் மட்டுமே

கோண்வாலிசும் உவெலசிலியும்
போர் போன்ற ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் கொடிய உள்நாட்டு அடக்கு முறைகளிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்குமென்பதை இந்தியர் உணரத் தொடங்கினர். இதிலேயே பிரித்தானிய அரசின் நிலைபேறு, அதற்குரிய காரணம் ஆகிய இரண்டும் தங்கியிருந்தன. வங்காளத்தில் எமது முதல் வெற்றி ஏற்பட்டபோது கிளைவு எம் நாட்டவர்களின் உணர்ச்சிகளைத் கட்டுப்படுத்த முயன்றபோதும் அம் முயற்சி பலனளியாது நடைபெற்ற கொள்கையும், தகாத ஆட்சியும் புதிய அரசமுறையின்கீழும், இப்புதிய ஆர்வத்தின் செல் வாக்கின் கீழும் ஒருபோதும் திரும்பி நிகழக் கூடியனவல்ல. ஆங்கில இந்திய குடும்பங்களின் மேன்மையான பண்பாடு உருப் படுவதாயிற்று. அவர்களுட் பலர் கொத்துலாந்தைச் சேர்ந்தவர்கள். ஏனெனில், பிற்றின் நண்பன் என்றி இடன்டசு என்பான் திற மான இளம் கொத்து மக்களை இந்தியாவுக்கு அனுப்புவதன் மூலம் கொத்துலாந்திலே தனது அரசியல் நோக்கத்தையும் நிறை வேற்றினன்.
பிரித்தானிய அதிகாரம் நியாயமானதெனக் காட்ட உண்ணுட்டிற் கோண்வாவிசு அதிகம் செய்தானெனில் வெலிந்தனின் தமையனுன உவெலசிலிப் பிரபு அதனைப் பரப்பவும் பரப்பியதனை நியாயமான தெனக் காட்டவும் எவ்வளவோ செய்தான். மைகுரினைச் சேர்ந்த கிப்புசாகிபு என்னும் போரிடும் முகமதிய அரசனது அதிகாரத் தையும், இதுகாறும் அயல் நாடுகளைத் தாக்கியும் பயமுறுத்தியும் வந்த குதிரை வீரர்களையுடையதும் மத்திய இந்தியாவிலுள்ளது மான பெரிய மாதநாட்டுக் கூட்டிணைப்பின் அதிகாரத்தையும் அவன் தகர்த்தெறிந்தான். அண்மைக்காலத்தில் இக்கூட்டிணைப்பு பிரான் சிய உத்தியோகத்தர்களின் உதவியுடன் ஐரோப்பிய முறையில் தன் சேனைகளைப் பயிற்றியும் ஆயுதம் தரிப்பித்தும் வைத்திருந்தது. மாதேசாதிபதி என்ற தன்மையில், ஐதராபாத்து போன்ற இந்திய
அரசுகள் பலவற்றிற்குப் பிரித்தனின் பாதுகாப்பினையளித்து,
அதன் காரணமாகச் சிறுசிறு அரசுகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்துவைத்து, தீபகற்பம் முழுவதிலும் சமாதா னத்தைக் காத்து வந்ததும், இப்போது அழிந்துபோனதுமான மொகலாயப் பேரரசின் இடத்தினைப் பெறுதலே உவெலசிலியின் கொள்கையாகவிருந்தது. சிக்கல் மிக்க இக்கொள்கைக்கு இறுதி யில் இமாலயமும் கடலுமே எல்லையாகுமேயொழிய வேறு புவியியல் எல்லை எதுவுமிருக்க முடியாதாதலின், இங்கிலாந்திலிருந்த கிழக் கிந்தியக் கம்பனியின் நிதானபுத்திபடைத்த தலைவர்கள் இதனை விரும்பவில்லை. அன்றியும் பிற்றினுலும் அவன் அமைச்சர் சபையி ஞலும் இது ஒரளவே விரும்பப்பட்டது. பிரித்தானியா முன்
347
1798-805.

Page 187
348
857.
பேரரசின் வளர்ச்சி
னேறுவதைத் தடுப்பதற்கு உவெலசிலியின் ஒய்வுக்குப் பின்னரே மும்முரமாக முயற்சி செய்யப்பட்டபோதும் மாற்றமுடியாத சில நிலைமைகள் காரணமாய் அவை பயன்படாவாயின.
பஞ்சாப்பிலும் ஏனைய இடங்களிலும் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இந்தியாவிற் சமாதானமென்பது ஒரு தனி வல்லரசின் ஆதிக்கத்தை ஏற்பதனுல் மட்டுமே பேணப்படும் என நிரூபிக்கப் படவிருந்தது. இக் கூற்றினை மிகச் சிலரே மறுக்க முயல்வர். ஐதரா பாத்துப் போன்ற பாதுகாப்புப் பெற்ற தேசிய அரசுகளிற் பெரும் பகுதி இந்திய அரசர்களிடம் விடப்பட்டிருப்பின், அத்துடன் பிரித் தானிய ஆளுகைக்கு நேரே உட்பட்ட உண்மையான இடப்பரப்பு மேலும் சுருக்கப்பட்டிருப்பின், இப்போது இந்தியாவில் எமது நிலை இலகுவானதாக விருந்திருக்குமா என்பது ஒரு வாதத்துக்குரிய கேள்வியாகலாம். எனினும் இடால்கவுசி போன்ற ஆட்சிக்காரருக் கிருந்த குடிகளின் நலனை விரும்பும் சீர்திருத்த ஆர்வம் பிரித் தானிய நேர் ஆளுகையானது நல்ல ஆட்சிப் பரிபாலனத்திற்கான ஒரு வழியெனக் கருதும்படியும் அத்தகைய ஆளுகையை மக்கள் விரும்பும்படியுஞ் செய்தது. நற்பேருரன பத்தொன்பதாம் நூற்ருண் டிலே, மின்னல் வேகத்தில் நிகழ்ந்த அக்கலக ஆண்டு தவிர்ந்த ஏனைய காலங்களில் இந்தியப் பிரச்சினைகளின் அரசியல் அம்சங்கள் பரிபாலன அம்சங்களோடு பிணைபடாமற் பின்னணியிலேயே தங் கிக்கொண்டன.
நெப்போலியப் போர்க்காலங்களிலே குடியேற்றத்திலும் வியா பாசத்திலும் ஏனைய ஐரோப்பாவினைப் பார்க்கிலும் பிரித்தனின் முன்னேற்றம் மிகவும் அதிகரித்திருந்தது. புதிய எந்திர ஊழியின் நலன்களில் அது இன்னமும் ஏறக்குறைய முழுவுரிமையையும் அனுபவித்தது. நெப்போலிய ஐரோப்பாவிற்கெதிரான போரிலே அதன் கப்பற்படை மாற்ருர் வியாபாரக் கப்பற்கூட்டங்களைக் கடல்களிலிருந்து அகற்றி வைத்திருந்தது. சமாதானம் திரும்ப வும் நிலைநாட்டப்பட்டபொழுது, அதன் ஊக்கமும், விரைவில் வளர்ந்துவரும் சனத்தொகையும் முதற் பெறப்பட்ட நலன்களே நெடிது பேணி வந்தன. வட அமெரிக்காவின் மத்திய பகுதியி அலுள்ள ஆறுகளையும் சமபூமிகளையும் கடந்து அலெகானிக்கு அப்பால் ஐக்கிய அரசுகளின் ஆங்கிலம் பேசும் மக்கள் முன்னேறி யது தவிர, பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் பிரித் தானியாவின் இரண்டாவது பேராசின் வேகமான படர்ச்சிக்கு ஈடாக வேறெதுவும் இருக்கவில்லை. இந்த முன்னேற்றம் கடலி லேனும், உலகச் சந்தைகளிலேனும் பிரித்தனுடன் கடுமையான போட்டியிடுவதிலிருந்து அமெரிக்காவை வேறு திசையிலே திருப் பியது.

ஆபிரிக்காவும் ஐரோப்பியரும்
எனவே, இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நிறச் சாதியார் களின் கதியை நிர்ணயிக்கவேண்டிய பொறுப்பு முழுவதும் பிரித் தனிடமேயிருந்தது. சீனவோடுள்ள தொடர்பிலும், இந்தியாவோ டுள்ள நெருங்கிய தொடர்பிலும், ஆரம்பமாகிக்கொண்டிருந்த ஆபிரிக்க வளர்ச்சியிலும் அது ஐரோப்பாவின் பிரதிநிதியாக விருந்தது. சுதேசிகள் விடயத்தில் வெள்ளையர் மேற்கொண்ட ஞானமில்லாத, தன்னலமுள்ள, பொறுப்பற்ற நடத்தைகள் மேலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமாயின் நாகரிகமானது அழிவுப்பாதையில் விரைந்து செல்வதாகும். இங்கிலாந்தின் உணர்ச் சியேனும் மனச்சாட்சியேனும் நேரத்துடனேயே தூண்டப்படுமா ? நாம் ஏலவே கண்டவாங்கு, இந்தியாவில் சமாதானத்துக்கும் பல கோடி மக்களின் நன்மைக்கும் வழிசெய்வதன் பொருட்டுத் தமது நலன் கருதாது, அரசாங்கத்துக்குத் தொண்டு செய்பவரான அரச சேவையாளரிடத்தும் படைகளிடத்தும் ஆங்கில இந்திய ஆட்சி யின் சிறந்த மரபுகள் வளர்வதன் மூலம் ஒரு நல்ல நிலைமை தோன்றி விருத்தியடைவதாயிற்று. ஆபிரிக்காவில் வெள்ளையர்க்கும் கறுத்த வர்க்குமுள்ள தொடர்பு இருவர்க்கும் கேடாக முடிவதற்கு முன்னர், ஆபிரிக்காவிலே அடிமை வியாபாரத்தினையும், அடிமை கோடலை யும் நிறுத்துவதே முதல் அலுவலாகியது.
அடிமை வியாபாரத்தை நிறுத்தும்படி 1807 இல் பிரித்தானிய மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதிலும் ஆபிரிக்க உள்நாட்டுப் பகுதிகள் ஐரோப்பிய சாதியினரால் வளம்படுத்தப்படுவதற்குச் சற்றுமுன்னர், 1833இல் பேரரசில் அடிமைகோடலை அழிப்பதிலும் உவிலியம் உவில்பவோசும் அவனின் நண்பர்களும் வெற்றிபெற்றமை உலக வரலாற்றின் ஒரு திருப்பநிலையேயாகும். அடிமைகோடலும், அடிமை வியாபாரமும் பத்தொன்பதாம் நூற்ருண்டு முழுதும் நிலைத்திருக்குமாயின், கைத்தொழிற் புரட்சி, தற்கால விஞ்ஞானம் ஆகிய புதிய கருவிகளின் துணையோடு வெள்ளையர் நலனுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு அடிமைக் களரியாக அயனமண்டலம் மாறியிருக்கும். ஐரோப்பிய சாதியினரும், தமது நாடுகளில், பழைய உரோமன் பேரரசு அழிந்தொழிவதற்குக் காரணமான அடிமை நாகரிகத்தின் கேடுகளினல் தாழ்நிலையடைந்திருப்பர்.
நற்பேருய் உலில்பவோசு அடிமை வியாபாரத்தினை எதிர்க்கத் தொடங்கியபொழுது, பிரித்தானியத் தலைவர்கள், அச்சம்மிகு அத் திலாந்திக்குக் கடற்பிரயாணத்துக்கென நீகிரோக்களை ஆபிரிக்கக் கரைகளிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லும் நிலையிலேயே அவ்வியாபாரம் இன்னமுமிருந்தது. இருண்ட கண்டத்தின் உட் பகுதிகள் இன்னமும் ஐரோப்பியர்களுக்குத் தெரியாதிருந்தன. இங்கிலாந்தின் கடலாதிக்கம் அத்துணை முதன்மை பெற்றிருந்த
349

Page 188
350
அடிமை வியாபார ஒழிப்பு
மையால் அடிமை வியாபாரம் ஒழியவேண்டும் என அது செய் யும் தீர்மானத்தினை வேறு எந்த வல்லரசு தானும் கடுமையாய் எதிர்க்கத் துணிந்திராது. இங்கிலாந்தின் மனதை மாற்ற உவில் பவோசால் முடியுமாயின், பின் இங்கிலாந்து உலகத்தையே தன் கருத்துக்கு இசைவிக்கும்.
இம்மனமாற்றத்தை நிகழ்வித்த முறையே பிரித்தானியப் பொது வாழ்க்கையின் ஒரு காலவவதியாயமைந்தது. அடிமை வியாபார ஒழிப்பு இயக்கந்தான், நவீன காலத்து முறையை யொத்த வெற்றி கரமான முதற் பிரசாரக் கிளர்ச்சியாகும். பத்தொன்பதாம் நூற் முண்டின் விசேட அம்சங்களாயமைந்த அரசியல், சமயம், வள் ளன்மை, பண்பாடு ஆகியவற்றையொட்டிய சங்கங்கள், சபைகள் ஆகியவை யாவும் பின்னர் அம்முறையைப் பின்பற்றின. மனித இனத்துக்கு ஆற்றிய சேவைகளுள் மிக முதன்மை வாய்ந்த இச் சேவையான அடிமை ஒழிப்பை “நண்பர்கள் சங்கம்” முதலிற் ருெடங்கியது; இவ்வடிமை வியாபாரப் பிரச்சினையிலே பின்னர் சாப்பு, கிளாட்சன் போன்ற வள்ளல்களும், மனமாறிய நாகரிக மனிதனன உவில்பவோசும், சக்காரி மக்கோலே என்போரும் தம் கவனத்தைச் செலுத்தினர். சக்காரி மக்கோலே யென்பாரின் கொத் துலாந்தருக்குரிய குணங்கள், ஆங்கிலேய இவாஞ்சலிக்கத்துக்கு ஒரளவு மிடுக்கைக் கொடுத்தன. அடிமை வியாபார ஒழிப்பிற் காகப் பாடுபட்டோரில் அநேகர் அக்காலத்துப் புரட்டெசுத்தாந் தப் பொதுமக்கள் பலரின் சமய ஆர்வத்தினுல் உந்தப்பட்ட குவேக்கர்களோ இவாஞ்சலிக்கசோ ஆவர். இத்தகைய ஆர்வம் மனிதாபிமானம் காரணமாக அன்றேல் பேரரசின் எதிர்காலத்தை யொட்டி விஞ்ஞானத் திட்டங்களை முன்னேற்றுவது காரணமாக அவர்கள் பரிந்து பேசுவதனல் ஏற்படக்கூடியதைவிட அந்நாட்ட வரின்-சிறப்பாக இணங்காதாரின்-இதயங்களைச் சென்றெப்து வதற்கு இலகுவான வழி ஒன்றினைக் காட்டியது. புதுயுக மனி தாபிமான உணர்ச்சி இவர்களுக்கு உதவிற்று. அடிமை வியா பாரத்தை எதிர்த்தோரான பொக்சு போன்ற மூதறிஞர், புருேம் போன்ற இளைஞர் ஆகியோரும் இவர்களை ஆதரித்தனர்; அதே சமயத்தில் உத்தியோகத் தொல்லைகள் அதிகரித்தமையால் பிற் அறுக்கு, தொடக்கத்திலிருந்த ஆர்வம் குன்றிற்று.
பிரான்சியப் புரட்சிக்குச் சற்று முன்னராகத் தொடங்கப்பட்ட தான நாட்டின் கொள்கை மாற்றம் யக்கோபின விரோத எதிர்த் தாக்கத்தின்போது இடர்களுக்கிடையிலும் தொடர்ந்து நடை பெற்றது. அப்பொழுது அடிமை வியாபார ஒழிப்பைக் கோருவோர் பிரித்தனிலும் இலிவர்ப்பூலிலுமுள்ள வியாபாரிகளின் நன்மை களே, மனிதாபிமானம் எனும் சமத்துவக் கோரிக்கையைச்

இவாஞ்சலிக்க இயக்கம்
சாட்டாகக் கொண்டு சிதைக்கும் 'சீர்திருத்தவாதிகள்' என ஏளனம் செய்யப்பட்டனர். எனினும் சில கால மந்தநிலைக்குப் பின் னர் அவ்வியக்கம் வலுவடைந்தது. 1807 இன் சட்டம் அடிமை வியாபாரத்தினை அடியோடு ஒழித்தது. பெரும்போரின் மத்தி யிலே வேறெக்கிளர்ச்சிக்கும் இடமளிக்கப்படாத காலத்திலே இது நிகழ்ந்தமையின் இது குறிப்பிடத்தக்கது. பொது நிலையங் களில் ஊழல்கள் மலிந்திருந்தபொழுதுகூட பிரித்தானிய பொதுசன
அபிப்பிராயம் அக்காலத்தில் உலகத்திலிருந்த வேறு எந்தப் பொது
சன அபிப்பிராயத்தொடும் ஒப்பிடும்போது, சுதந்திரமுடையதாய், நலம் பொருந்தியதாய் இயைந்துகொடுக்கக் கூடியதாயிருந்தது. கட்சி மாறிய யோக்குசயரின் சுதந்திர அங்கத்தினனன உவில்ப வோசு, இங்கிலாந்தின் அரசியல் எந்திரத்தைச் சிறந்ததும், புதிய அமான ஒரு முறையில் பயன்படுத்த வழிகண்டான்.
எனவே, வீயன்னுப் பொருத்தனைகளின்பொழுது காசில்ரீ, புதிய ஊழியின் அடிமைவியாபார ஒழிப்பு நியதி என்ற கொள்கையை ஐரோப்பிய வல்லரசுகள் ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு விருப்ப மும் ஆற்றலும் உடையவனனன். ஒரு திடீர் மாற்றத்தால் “பிரித் தானிய ஐக்கியக்கொடி' கறுத்தவரின் விடுதலையோடு தொடர்பு அறும் சிறப்பைப் பெற்றது.
இச்சமயத்தில் தோரிக்கட்சியுனுள் இவாஞ்சலிக்க மதம் நன்கு இடம் பிடித்துக்கொண்டது. பிரதம மந்திரி பேர்சிவல் ஒரு இவாஞ் சலிக்கரே. பழைய வகுப்பைச் சேர்ந்த பல தோரிகள் கிளவம் குழு' எனப்பட்ட இவர்களை வெறுத்தனர். ஏனெனில் இவர்கள் இணங்காதாருடன் நட்புறவு கொண்டிருந்தமையாலும், தங்களின தும் ஏனை மக்களினதும் ஆன்மா பற்றி அதிக அக்கறை கொண் டிருந்தமையாலும், அப்பமும் மதுவும் உண்டு கழிப்பதைப் பாராட் டத் தவறியமையாலும், மனித அன்பு அல்லது மனச்சான்று காரண மாய்க் கட்சிச் செயல்களை யாற்ற அடிக்கடி பின்வாங்கியமையாலும் என்க. தோரிக் கட்சியில் இருந்த இத்தகைய பிளவும், சமய உலகில் நரிவேட்டையாடிக் களித்துப் பொழுதுபோக்கும் திருச்சபையினர்க் கும், கண்டிப்பான இயல்பையுடைய அவர்களுடைய இவாஞ்சலிக் கச் சகோதரர்க்குமிடையில் இருந்த போட்டியும், மனக்கொதிப்பை உண்டுபண்ணினவெனினும் அவை யாவும் கட்சியியங்க உயிர் கொடுத்தன. குறிக்கோள் பற்றிய இத்தகைய வேறுபாடுகள் போருக்குப் பிற்பட்ட ஆண்டுகளில், பழைய தோரிக்கட்சியினதும் தாபித்த திருச்சபையினதும் குறைபாடுகள் வருந்தத்தக்க முறை யில் வெளித்தோன்றியபோது, கட்சியும் திருச்சபையும் நாட்டின் பிற சக்திகளோடு ஓரளவு தொடர்புற்றிருக்க உதவின. இவாஞ் சவிக்க மதமும் மனிதாபிமானமும்-எப்பொழுதுமல்லாவிடி
351
1815.
1809-182.

Page 189
352
கைத்தொழிற் புரட்சி
னும் பெரும்பாலும் இணைந்துள்ளவை-புதிய ஊழியின் சத்தி களாம்; இவையிரண்டும் கட்சிப் பிரிவுகளுக்குக் கட்டுப்படாது பரவலாக பிரித்தானிய அலுவல்களிற் செயற்பட்டன; அன்றி யும் பொது வாழ்க்கைக்கும் பாராளுமன்ற வாழ்க்கைக்கும் புதிய
தோர் அர்த்தத்தையும் நல்கின.
அத்தியாயம் VII
மூன்றம் யோச்சின் ஆட்சியும் அதன் பொருளாதார வியல்பும். கைத் தொழிற் புரட்சியின் முதற் கட்டம். மக்கட் செறிவு. கால்வாய்கள். எந்திர சாதனம். நிலக்கரி, கிராமத்திலிருந்து பட்டனத்துக்குக் கைத்தொழிற் பெயர் ச்சி. அடைப்பு. வீடமைத்தல். பரிபாலனத்தவறுகள். தற்போக்குக் கொள்கை.
அரசன் : மூன்ரும் யோச்சு, 1760-1820.
இயற்கையை மனிதன் பயன்படுத்திய விதங்களில், ஏற் பட்ட மாற்றங்களையும், அதன் விளைவால் வாழ்க்கை முறையி லேற்பட்ட மாற்றங்களையும், மூன்றும் யோச்சின் ஆட்சியில் இங் கிலாந்திற் ருெடங்கிப் பின் உலகத்தின் பெரும் பகுதிக்குப் பரந்து சென்றமையையும் கூறுவதென்பது வரலாற்ருசிரியரின் வேலை யைக் கடினமாக்குகிறது. கைத்தொழிற் புரட்சிக்காலம் வரை யும், பொருளாதார, சமூக மாற்றங்கள் தொடர்ச்சியாய் நிகழ்ந் தனவெனினும் அவை மெல்ல மெல்லவே நிகழ்ந்தன. ஆனல் உவாட்டு, தீபன்சன் என்போர் காலத்தில் அவை பிரமிக் கத்தக்க வேகத்தை அடைந்தன. பின் அவற்றின் வேகம் குறையவேயில்லை. பிரான்சியப் புரட்சி பன்னிரண்டு ஆண்டு கள் நீடித்தது. ஆனல் கைத்தொழிற் புரட்சியோவெனின் ஒன் றன்பின் ஒன்முகத் தொடரும் புதுப்புதுப் பொருளாதார, சமூக வாழ்வினைத் தோற்றுவித்தும் பின்னர் அவற்றை மாற்றிக் கொண்டும் பல நூற்ருண்டுகளுக்கு நீடித்தது. அதனல் வரலாற்ரு சிரியர், 'இது அல்லது இதுதான் இக்கால இங்கிலாந்தின் வழமை யானநிலை' என அறுதியிட்டுக் கூற இயலாதவராயினர். உதாரண மாகப் போக்குவரத்துத்துறையில் நூற்றறுபது ஆண்டுக் காலத்தி னுள்ளே, குதிரைச் சவாரி, கால்வாய்களும் தெருக்களும், புகை யிரதம், மோட்டார் என ஒன்றை அடுத்து ஒன்முக நான்கு மாற்றங் கள் ஏற்பட்டன. V
புள்ளி விவரங்கள், பொருளாதார நிலைபற்றிய விவரங்கள் இல் லாமை முற்கால வரலாற்ருசிரியர்களின் வேலையை இலகுவானதாக் குகின்றது ; ஆனல் விரிவாக ஆராய்ச்சி செய்தலையும் நிச்சயமான

சமூக மாற்றங்கள்
முடிபுக்கு வருவதையும், இந்நிலை அசாத்தியமாக்கிற் றெனலாம். பாராளுமன்ற வெளியீடுகள் பத்தொன்பதாம் நூற்முண்டிலேயே தொடங்குகின்றன. பெரிய பிரித்தானியாவில் குடிசனமதிப்பு 1801 இலேயே முதன் முதலாக எடுக்கப்பட்டது. உண்மையில், எமது பொருளாதாரம் பற்றிய திட்டமான விவரங்கள் கைத்தொழிற் புரட்சியின் முதற் கட்டத்தின் நடுவிலேயே கிடைத்தன. எனவே, மூன்றும் யோச்சின் பிற்காலத்திலன்றி ஆங்கிலேயர் பெரும்பாலோ ரின் பொருள் நலத்தினை மதிப்பிடுதற்கு எங்களுக்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆகவே, உண்மையில் கொபெற்றின் காலத்து இங்கிலாந்து பற்றிப் பொருளாதார வரலாற்முசிரியர் எமக்குக் கூறுவன சில முக்கிய அம்சங்களில் மகிழ்ச்சி தருவன வல்ல. ஆயினும், இவைகளே நமக்கு முதன் முதலாகக் கிடைக்கும் திட்டமான விவரங்களாகையால் இவற்றுக்கு முற்பட்ட எவையும்
இவற்றைக் காட்டிலும் மகிழ்ச்சி தரவல்லனவோ என்பது ஐயத்
கிற்கிடமானது. இதற்கு முடிவான பதில் கூறுவதற்கு எவரும் a தயங்குவர்.
நகர வாழ்வினைப் பார்க்கிலும் நாட்டு வாழ்வினை விரும்புதல் உண்
மையில் இயற்கைக்கு மாறன்று, ஆனல் இதன் விளைவாக, கமக்
காரர், கம்மியர் ஆகியோருக்குரிய இடத்தில் எந்திரந் திருத்துவோ ருள்ளனர் என வருந்தவும் நேரிடும்; இதற்கு நேர்மாமுக நினைக்க வும் இடமுண்டு. எந்திரங்களாற் செய்யப்படும் பொருள்கள் அழ குச் சிறப்பின்றி ஒரேமாதிரியாக விருப்பதுபற்றி நாம் வருந்துதல் வேண்டும். முன்னர் செல்வர்க்கும் வறியவர்க்கும் பொதுவாயிருந்த தெளிவான கவின்கலை இன்பங்களைப் பெரும்பாலுக் நாம் இழக்கத் தக்க அளவுக்குத் தொழிற்சாலைகளால் இயற்கையழகுகள் சிதைக் கப்பட்டமை பற்றியும் நாம் வருந்துதல் வேண்டும். ஆனல் பெரிய பிரித்தன் இக்கால எந்திர சாதனம் இருந்திருந்தாலன்றி 1921 இல் 4 கோடியே 20 இலட்சம் மக்களை அப்போதிருந்த அவ்வளவுயர்ந்த பொருட் செளகரியத்தின் தசத்தில் வைத்திருத்தல் கூடும் என எக் காரணத்தினுலும் நாம் எண்ணுதலியலாது; 1821 இல் 1 கோடியே 4 இலட்சம் மக்கள் இழிந்த நிலையில் வைத்திருந்தது எனக் கரு அதுவதும் பொருந்தாது. 60 அல்லது 70 இலட்சம் மக்களிடையே 1721 இல் இருந்த சராசரி வாழ்க்கைத் தராதரம் எத்துணையது என்பது வல்லுநர்கள்கூட அபிப்பிராயபேதப்படும் ஒரு விட யமாகும். ஏனெனில் அக்காலம் பற்றிய புள்ளிவிவரங்கள் இப்பொ ழுது கிடைப்பது அரிது ; கிடைப்பினும் மிகச் சிலவே கிடைக்கும். இப்பொழுது இருப்பதனெடு அக்காலத்து உண்மையான மகிழ்ச்சி யினதும் ஒழுக்க நலன்களினதும் அளவினை ஒப்பிடும்பொழுது, நாங்
353

Page 190
354
சனத்தொகைப் பெருக்கம்
கள் திட்டவட்டமாக எதையும் அறிய முடியாதவர்களாகவே இருக் கின்ருேம். ஆயினும் அக்காலத்தைப்பற்றிய அறுதியான விவரங்கள் கிடைக்கவில்லையென்ற காரணத்தால் அவற்றை அறிவதிலுள்ள ஆர்வங் குறையவில்லை.
எந்திர சாதனங்களிலும், அமைப்பு முறையிலும் நிகழ்ந்த புரட் சியுடன் இணைந்து தோன்றிய மிகக் குறிப்பிடத்தக்கதொன்று மூன் மும் யோச்சின் ஆட்சிக்கால மொன்றிலேயே எழுபத்தைந்து இலட் சத்திலிருந்து ஏறக்குறைய நூற்று நாற்பது இலட்சமாகப் பெரிய பிரித்தனின் சனத்தொகை பெருகியமையேயென்க. ஆணுலும் அக் காலத்துக் கைத்தொழில் விவசாய மாற்றங்களும் இந்தச் சனப் பெருக்கமும் எத்தகைய தொடர்புடையன என்பதை வரையறுத் துக் கூறுவது இலகுவன்று. அண்மைக் காலம்வரையும் ஏற்றுக் கொள்ளப்பட்டனவான சில விளக்கங்கள் இப்பொழுது சந்தேகிக் கப்படுவனவாயுள்ளன. அதே ஆண்டுகளில் கெலித்திய அயலாந்தி அலுங்கூட இவ்விதமே முன் எப்பொழுதுமேற்படாத சனப்பெருக்கம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்பதும் கெலித்திய அயலாந்தில் கைத்தொழிற் புரட்சி சிறிதேனும் ஏற்படவில்லை என்பதும் ஞாப கத்திற் கொள்ளவேண்டியன. ஒரு குழந்தைக்கு இன்ன வீதம் என இறைப்பணத்திலிருந்து பணவுதவி அளிப்பதான இசுபீனுமிலந் துத் திட்டத்தினலேயே சனப்பெருக்கம் ஏற்பட்டது என்பது பொருத்தமாகாது. ஏனெனில் அத்திட்டம் 1795 இலேயே தொடங் கிற்று. அத்திட்டம் நடைமுறைக்குப் பூரணமாக வந்தது மேலும் பலகாலம் கழித்தே ; “இசுபீனுமிலந்து' மாகாணங்களான நடு நாடுகளிலும் தெற்கிலும் உண்டான சனப்பெருக்கம் போன்ற அதே அளவு விரைவாய்ச் சனப்பெருக்கமடைந்த கொத்துலாந்து, வட இங்கிலாந்து, அயலாந்து ஆகிய இடங்களில் அத்திட்டம் கையாளப் படவில்லை. மேலும் மரண விகிதம் மிகக் குறைந்தது காரணமாகச் சனத்தொகை தொடர்ந்து பெருகி வந்ததேனும் 1790 இலிருந்து பிறப்பு விகிதம் சிறிதளவு குறைவாயிருந்தது.
1760 ஆம் ஆண்டு முதலாக முன்னென்றும் நிகழாவகையில் சனத்தொகையில் ஏற்பட்ட பெருக்கம், இளம்பராய மணத்தினுலும் பிறப்புவிகிதம் கூடியமையினுலும் ஏற்பட்டதன்று. எனினும், 1790 க்கு முன்னர் இந்நிலைமைக்கு அவைகளும் பெரிதும் காரணமா யிருந்தன; ஆயினும் வைத்தியக்கலையிலும் அதன் செய்கைமுறை யிலும் ஏற்பட்டிருந்த திருத்தங்களினுல் மக்கள் காப்பாற்றப்பட் டமையும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் குறைந்த விலையிற் பொருள்களே உற்பத்தி செய்தமை ஓரளவு காரணமாய் மக்

சனத்தொகைப் பெருக்கம்: காரணங்கள்
கள் வாழ்க்கைத்தரம் திருத்தமுற்றமையுமே முக்கிய காரணங்க,
ளாம். அத்தீவின் கண்ணிருந்த பெரிதும் நீடித்துப் பரவியிருந்தகொள்ளைநோய் நீங்கியமை; சொறி, காப்பன், வைசூரி ஆகியவை ஏற்படாது தடுக்கப்பட்டமை; நாட்டிலே நீர் தேங்காது செய்ததன் மூலம் குலைப்பன் காய்ச்சல் குறைக்கப்பட்டமை; துப்புரவான பழக்கங்கள் மிகுந்தமை ; மலிவான பருத்திச் சட்டைகளின் உப யோகம்; ஒவேட்டின் காலத்திருந்த சுகாதார வசதிகள் இன்று எம்மை எவ்வளவு திடுக்கிடச் செய்யத்தக்கனவேனும், இலண்டனி லூம் ஏனைய விடங்களிலும் முன்னிருந்தவற்றுடன் ஒப்பிடும் போது முன்னேறியுள்ளனவான சுகாதார வசதிகளின் அபிவிருத்தி; இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பிரசவத்தின்போதும், வலி', கணநோய் போன்ற ஏனைய குழந்தை நோய்களினலும் ஏற்படும் மரணங்கள் பெரிதும் குறைவதற்குக் காரணமாயிருந்த சிறந்த வைத்தியசாலைகள்; குழந்தைகள் தாய்மார்க்கான சிறந்த வைத் தியப் பராமரிப்பு-இவை யாவும் பதினெட்டாம் நூற்முண்டினதும் பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்கூற்றினதும் சாதனைகளாம்."
இருபதாம் நூற்முண்டின் ஆரம்பகாலம் வரையான பல்லாண்டு காலத்திலும் பிறப்பு விகிதம் சிறிதளவே மாற்றமடைந்துள்ள தென்பதும் சனத்தொகையின் இக்காலப் பெருக்கம் திறமுடனுயிர் வாழச் செய்யச் சமூகம் மேற்கொண்ட முயற்சிகளினல் ஏற்பட்ட வொன்றேயென்பதும் நம்பக்கூடியனவே. மூன்ரும் யோச்சின் ஆட்சியின் முடிவில் பிரான்சிய மரணவிகிதம் ஆங்கிலேயர் மரண விகிதத்திலும் 20 சதவிகிதம் கூடியதாகும். இங்கிலாந்தில் பதி னெட்டாம் நூற்முண்டின் பிற்பகுதி, பல குறைபாடுகள் உட்ையதா யினும் அஃது, ஆராய்ச்சித்திறன், தூய்மை, மனிதாபிமானம் ஆகியவற்றுக்குரிய ஒரு காலமாகும். கைத்தொழிற் புரட்சியானது மக்களை வாழ்க்கையில் கடினமான நிலைமைகளுக்குட்படுத்திய தென்பது அண்மைக்காலத்திற் முேன்றிய கருத்து. ஆயினும் மக்கோலே போன்ற விற்முேரியா ஊழியின் வரலாற்ருசிரியர், தம் நாட்டின் சமூகவாழ்விலும் செளகரியத்திலும் ஏற்பட்ட நிரந்தர மான முன்னேற்றத்தையிட்டுப் பெருமைகொண்டமை பெருமள விற்குப் பொருத்தமானதே யெனலாம். புள்ளி விவரங்களைக்
* கேம்பிரிட்சு அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட முக்கியமான நூலாகிய Population Problems of the Age of Malthus, by S. Talbot Griffith 6Tait us&T'unfass. GLng) b, London in the Eighteenth Century, Liai. 1-61 by Mr. George என்பதனையும் பார்க்க.

Page 191
356
கால்வாய்கள்
கொண்டே எல்லாவற்றையும் மதிப்பிட வேண்டுமென்றில்லை; எனினும் கிடைத்த மட்டும் அவை பழைய மரபினரின் நன்மைக் கோட்பாட்டுக் கொள்கையையே ஆதரிக்கின்றன."
இக்காரணங்களேனும், இக்காலத்தில் புலப்படாத வேறு காா ணங்களேனும், வரலாற்றில் முன்னுெருபோதுமில்லாத அளவு சனப் பெருக்கத்தினைத் தோற்றுவித்தனவெனின், புதிய ஊழியில் ஏற் பட்ட கைத்தொழில் கமத்தொழில் மாற்றங்களிலவெனில், அதி கரித்த பல இலட்சத் தொகையினரைத் தீவின்கண் பேணுவதற்கு வழிவகையிராது ; உண்மையாகவே 1760 இன் பின்னரும் பழைய பொருளாதார முறை மாற்றமில்லாது இருந்து வந்திருப்பின், இன் அறுள்ள 70 இலட்ச மக்களும் முன்னர் இருந்த வசதிகளுடன் அதிக நாள் தொடர்ந்து தீவில் வசித்துவந்திருப்பார்களோ என்பது ஐயத் துக்கிடமாகும். பிரித்தானியாவில் மரங்கள் அழிக்கப்பட்டதால் விறகுப்பஞ்சம் ஏற்பட்டு, பல வீட்டு அடுப்புகளிற் குளிர் படிந்தது. கடலுக்கப்பால் அமெரிக்கா, கந்தினேவியா ஆகிய தேசங்களில் இன்னமும் பயன்படுத்தப்படாத காடுகளிருந்தபடியால் இரும்புத் தொழில் அங்கு வளரலாயிற்று. அத்தருணத்தில் தென் இங்கிலாந் தில் உள்நாட்டுப் பகுதிகளில் வீட்டு அடுப்புக்களுக்கும் நாட்டின் குளை உலைகளுக்கும் கரியைக் கொணர்ந்த புதிய கால்வாய் முறை, நிலைமையைக் காத்தது.
உரோமன் ஊழிக்குப் பின்னர் போக்குவரத்து முறைகளில் ஏற் பட்ட விரைவான முன்னேற்றங்களே கைத்தொழிற் புரட்சிக்கு வழிகோலின மூன்ரும் யோச்சின் ஆட்சியின் தொடக்கத்திலிருந்து பல மாகாணங்களிலும் வலைபோற் செறிந்த கால்வாய்கள் பல, படிப்படியாக அமைக்கப்பட்டன. தனது கடலோர அமைப்பின லும் கடல் கொணர் கரியினலும் இலண்டனல் எப்பொழுதும் அநூ பவிக்கப்பட்டுவந்த நன்மைகள் யாவும், இம்மாகாணங்களுக்கும் கிடைப்பனவாயின. இறுதியில், தீவின் எல்லாப்பகுதிகளிலும் கால் வாய்கள் அமைக்கப்பட்டன. எனினும், 10 சதவீதத்துக்கு மேற்
1 இங்கிலாந்திலும் பார்க்க அயலாந்தில் உடல்நல நிலைமைகள் குறைவாகவே திருந்தியவெனினும், ஓரளவாவது நிகழாமலில்லை. அயலாந்துக் குடிமக்கள் தொகை 18 ஆம் நூற்றண்டிற் பெருகியதற்குக் காரணம் அங்கு உருளைக்கிழங்குப் ஞ்சம் எற்படாமையே. 1846-7 ஆம் ஆண்டு உருளைக்கிழங்கழிவு குடிமக்களை அமெரிக்காவிற்குக் குடிபெயரத் தூண்டியதன் மூலம் 80 இலட்சத்துக்கு மேலி ருந்த அவர்களின் தொகையை 50 இலட்சமாகக் குறைத்தது. பயிர் முற்ருய் அழிந்தாலொழிய உருளைக்கிழங்கு மிகக் குறைந்த தரத்தில் இலகுவாய் வாழ்க்கையை ஆதரிக்கக்கூடியது.
2. இந்நூல், முதலாம் பாகம், பக்கம் 63-4 பார்க்க.

வீதிகளும் கரியும்
பட்ட இலாபந் தந்தவை பெரும்பாலும் நடுநாடுகளிலும் வட பகுதியிலும் இருந்த கைத்தொழில், சுரங்க மாகாணங்களில் உள் ளவை அல்லது அம்மாகாணங்களைத் தேமிசுப்பள்ளத்தாக்குடன் இணைக்கப் பயன்படுபவையே. உள்நாட்டுக் கப்பற் போக்குவரத்து என்று கூறப்பட்ட அம்முறைமை, இக்கால வர்த்தகக் கடற்படை போன்று கரி வியாபாரங் காரணமாகவே வளர்ச்சியடைவதாயிற்று. புகையிரதிப் பாதைகள் தோன்றியபொழுது, அவையும் கரியைக் கொண்டு செல்லவும், கால்வாய்களை மேலும் இணைக்கவுமே முதலிற் பயன்பட்டன. எனினும் யோச்சு சுதீபின்சன் காலத்தின் தொடக் கத்தில் இங்கிலாந்திற் கால்வாய்கள் குறுகிய காலத்துக்கே பயன் படும் என்பது முன்னறிவுடையோர்க்குத் தெளிவாகியது. b፡
இக்காரணத்தினுலேயே பெரிய இலண்டன் விடுதிகளிலிருந்து பாத்து அல்லது ஒலிகெட்டு அல்லது யோக்கு அல்லது கிறெற்றின கிறீன் ஆகிய இடங்களுக்கேனும் சேர் உவாற்றரின் கொத் துலாந்துக்கேனும் மணித்தியாலத்துக்குப் பன்னிரண்டு மைல் வேகத்தில் ஓடும் அஞ்சல் வண்டிகளும் ‘தலிகோ' எனப்படும் வண்டி களும் செல்லும் கடினமான 'மக்கடாம் வீதிகளினது புகழும் குறு கிய காலத்ததாயிற்று. இவையும் இக்கால்வாய்கள் போலவே, முத அலுடைக் கம்பனிகளாலேயே நடத்தப்பட்டு வந்தன. அவைகள், காவற்றடை ஏற்படுத்தப்பட்டவிடங்களில் பிரயாணிகளிடமிருந்து தமக்குரிய தொகையைப் பெற்றன. செம்மையான விதிகளை அமைக்கும் இவ்வியக்கம் தபால் அலுவலகத்தின் உதவியைப் பெற்றது ; அரசசேவை பொதுமக்களுக்குக் கடமை செய்ய வேண்டும் என்பது தற்காலக் கொள்கை. இதனை முதன்முதலாக உணர்ந்த அலுவலகங்களில் தபால் அலுவலகமும் ஒன்ருகும். ஆங்கில விதிகளின் சிறப்பான காலம் நெப்போலியப் போர்களின் பொழுதுதான் உன்னத நிலையினை எய்தியது. இருபது ஆண்டுகளுக் குப் பின்னர் வந்த புகையிரதப்பாதைகள் இவ்வாழ்க்கையின் முடிவை முன்கூட்டியே அறிவித்தன. அந்த ஊழியில் குதிரைகளே எல்லாமாய் விளங்கின; ஒண்காசிற் சந்தையே அவற்றின் மெக்கா; நரி வேட்டையாடுவோர், வண்டிச் சாாதிகள், குதிரையோட்டும் வீரர்கள் ஆகியவர்களே விலங்குகளில் விழுமியதான அவ்விலங்கின் பாற்கொண்ட நாட்டின் ஆர்வத்தை வளர்க்கும் குருமார்கள். இவ் ஆழி குறுகியதாயினும், அது உண்மையில் ஆங்கிலேயருக்கேயுரிய சிறப்பியல்பைப் பெற்றிருந்தது. அது பீற்றலூவின் காலமும்
இக்கால்வாய்களை வெட்டிய தொழிலாளர் * கடலோடிகள் ” என வழங்கப்பட்டனர்.
357
S. 78. g, 1848.

Page 192
58
819.
புதியனவும் பழையனவும்
ஆகும் எனவும், கைத்தொழிற்புரட்சியின் கெடுதிகள் உச்சநிலையை யடைந்த காலமுமாகும் எனவும் எண்ணும்பொழுது தவிர, பிற்சந் ததிகள், அந்தத் தலைமுறையினரையே 'மகிழ்வான இங்கிலாந்தின் இறுதித் தலைமுறையினர் எனக் கருதுவதில் இன்னமும் இன்பங் கொள்கின்றன.
உண்மையிலேயே பழைமையினை நாம் நமது மனக்கண்ணில் பட மிட்டுப் பார்த்தோமானல் வளர்ந்து வரும் ஒரு நாட்டின் வாழ்வில் தனித்தனிப் பிரிவுகளாய் அக்கம் பக்கமாகச் செல்லும் புதியதும் பழையதுமான பலவகைப்பட்டவற்றை நினைவுகூர்தல் எப்பொழு தும் இலகுவானதன்று. சில நேரங்களில் நாம் தொழிற்சாலை முறையே மூன்ரும் யோச்சின் இறுதியாண்டுகளின் முதன்மையான
சின்னம் என்று எண்ணுகிருேம். ஆனல், அது புதிய தோற்றமாகவும்
ஒரு எதிர்காலத்தையுடையதாகவும் இருந்தபொழுதிலும் இரண் டொரு மாகாணங்களிற்றவிர அது எவ்வகையிலும் அதுவரை முதன்மை பெற்று விளங்கவில்லை. பெனைன் நீரோடைகளின் நீர் வலுவுக்குப் பக்கத்திலே நிறுவப்பட்ட சிறு எந்திரசாலைகளிலும், பின்னர் பாந்த எந்திரசாதனத்துடன் கீழ்ப்பாகத்துள்ள பரந்த வெளிகளிலும் பெருமளவிற் ருெடங்கப்பட்ட இலங்காசயரின் பருத்தி வியாபாரம் திடீரெனத் தோன்றிய ஒன்று. இப்புதுக் கைத் தொழிலின் துறைமுகமாக அமைந்து தேவையான மூலப்பொருள் கள் எல்லாவற்றையும் அமெரிக்காவிலிருந்து பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுட் பெரும்பாலானவற்றைக் கடல் கடந்து விற்கவும் வாயிலாயிருந்த இலிவர்ப்பூவிலும், அதற்கேற்ற வாறு அபிவிருத்தி ஏற்பட்டதெனினும் பீற்றலூப் போர் நிகழ்ந்த பொழுது இங்கிலாந்தில் இருபதிலொரு பகுதிக் குடும்பத்தினருள் ஒருவராவது பருத்திக்கைத்தொழிலில் ஈடுபட்டிருக்கவில்லை. கமத் தொழிலே எல்லாவற்றுள்ளும் பெருந்தொழிலாகவிருந்து வந்தது. அதனை அடுத்துக் கட்டிடத்தொழில்களும் வீட்டுச் சேவையும் இடம் பெற்றன ; பருத்தி நூற்கும் எந்திரம் கமக்காரர் வகுப்பினைச் சேர்ந்த முயற்சியுள்ள குடும்பப்பெண்கள், சிறர்கள் ஆகியோருள் அநேகரின் குடிசைக் கைத்தொழிலை ஏற்கனவே அழித்துவிட்ட தெனினும் கம்பளி நூல் நெசவு இன்னமும் எந்திரசாலையை அடை யும் நிலையை எய்திவிடவில்லை; நாட்டிலுள்ள மிகப் பெரிய தொழில்
களான உடை தைத்தலும், சப்பாத்துச் செய்தலும் இன்னமும்
வீட்டுத்தொழில்களாகவே நடாத்தப்பட்டு வந்தன, குதிரைச் சேவைகளில் ஈடுபட்டிருந்தோர் தொகை மிகப் பெரிதாயிருந்திருத் தல் வேண்டும்.

புதியனவும் பழையனவும்
கைத்தொழிற் புரட்சியானது குறிப்பிட்ட காலத்தில் நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியன்று; தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த ஒன்ருகும். வெலிந்தன் ஊழியின் பண்பும் பயனும் கொண்ட பிரித் தனத் தோற்றுவித்தது புதிய வாழ்க்கை முறையும் பழைய வாழ்க்கை முறையும் சேர்ந்ததனலேற்பட்ட கலப்பே. பத்தொன்ப தாம் நூற்ருண்டு கழியும் பொழுதுதான் புதிய எந்திர சாதனங் களிலும் பெரிய வியாபாரங்களிலும் மக்களிற் பெரும்பகுதியினர் ஈடுபடலாயினர். ஆண்டுதோறும் தொழிற்சாலைகளின் ஆதிக்கம் வீட்டுக்குரியனவும் விட்டுக்கு வெளியேயுள்ளனவுமான பணிகளைக் குன்றச்செய்து தான் பெருகுவதாயிற்று. நற்பேருய், தொழிற் சாலேயே எல்லா வேலைகளும் நிறைவேற்றப்படும் இடமாயமைந்த போது அதன் மிகக் கெடுதியான ஊழல்கள் படிப்படியாக நீக்கப் படலாயின. 1833 இலிருந்து அது பழைய முறையான விட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டோர் பொருமை கொள்ளு மளவுக்கு அரசாங்கத்தின் பரிசோதனைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மேன்மேலும் அமைவதாயிற்று.
இலங்காசயர் பருத்தி வியாபாரத்தினும் பெரியதாய் மூன்மும் யோச்சின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய அபிவிருத்தி யாதெனில், மேற்கு நடு நாட்டு மாகாணங்களிலே கருநாட்டினைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவாயிருந்த இரும்புக்கரியுபயோகிக்கப்படு வதனுலேற்பட்ட புரட்சியாம். நாற்பது ஆண்டுகளுள் பிரித்தனில் கரியின் உற்பத்தி பத்து மடங்காக அதிகரித்தது. இந்தப் புதிய அபிவிருத்திக்கும், மேலும் மேலும் இரும்பிலும் கரியிலும் தங்கியுள் ளனவான இரும்புப் பொருள்கள், வனதற்பொருள்கள், மற்றும் தொழில்கள் ஆகியவற்றுட் பெருந்தொகைக்கும் ப்ல வகையிலும் முக்கிய இடமாக அமைந்தது கருநாடேயாகும். தீவு எங்கும் புதிய தொழில்கள் தோன்றின; இவை யாவும் சுரங்கங்களே அகழ்வதற்கும், பொருட்களே உற்பத்தி செய்வதற்கும் சேமிசு உவாட் டின் நீராவி எந்திரத்தைப் பற்பல விதங்களிற் பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட்டவை. இரும்பும் எந்திரசாதனங்களும் இக் காலத்து எந்திரத் தொழிலாளி என்னும் புதிய வகுப்பினைத் தோற் அறுவித்தன. பெரிய பொருளாதார மாற்றங்கள் தொழிற்சாலையிற் சிறுவருக்கு அல்லது கரிச்சுரங்கத்தில் ஆண், பெண் அல்லது சிறுவ ருக்குச் சிறு நன்மையும் இன்னமும் கொண்டுவாவில்லை யெனினும் அவை நல்ல வேதனம் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றவர்களுமான பொறியியலாளர் வகுப்பொன்றினைத் தோற்றுவித்தன. தீவு எங்க இணும் பாந்து கிடக்கும் கணக்கற்ற தொழிற்சாலைகளில் அவர்களை வேலைக்கமர்த்துபவர்கள் அவர்களின் அறிவுரைகளுக்கு மதிப்புக்
கொடுத்து அவர்களை நாடினர். அத்தகைய வேதனம் பெறும் வகுப்
359
S. 736. இ. 1819,

Page 193
360
வட பகுதியின் வளர்ச்சி
பைச் சேர்ந்ததே தைன் சயிட்டைச் சேர்ந்த சுதீபின்சன் பெருங் குடும்பம். பதினேழு வயதில் தானகவே வாசிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் நீராவி எந்திரத்தைக் கண்டுபிடித்தவனன இவன் நடுத்தர வகுப்பினனு மல்லன். எதிர்வரும் காலத்தின் குறிக்கோள் 'தன்னு தவி” அல்லது தனிப்பட்டவர் வாய்ப்பாகும்; அன்றியும் அதன் நலன்களை மத்தியவகுப்பினர் தமது முழுவுரிமைகளாகக் கொள்ள வில்லை. எந்திரத்தொழிலாளர் நிலையங்களிலிருந்தே புதிய ஊழியின் 'வளர்ந்தோர் கல்விமுறை தொடங்குவதாயிற்று.
ஆங்கில சக்சன் காலத்திலிருந்து முதன் முதலாகப் பண்டைய நோதம்பிரியாவையும் மேர்சியாவையுங் கொண்ட இங்கிலாந்தின் வடமேற்குப் பாதியானது தானியம் விளையும் நிலங்களையுடைய கிழக் கும் தெற்குமான பகுதிகளுடனும், இலண்டனுடனும், அதனுடன் இணைந்த மாகாணங்களுடனும் போட்டியிடுவதில் முதன்மை பெற் றது. கிழக்கு அங்கிலியாவினதும், சொமசெற்றினதும் கொசுவால் சினதும் பழைய துணிமணி வியாபாரங்கூட எந்திர ஊழியில் வட பள்ளத்தாக்குக்களின் கடும் போட்டியிஞ்ல் வீழ்ச்சியுறுவதாயிற்று. முற்காலத்திலே எல்லைப்புறக் கொள்ளைக்காரர், நிலமானிய ஏவலா ளர் ஆட்டிடையர் ஆகியவர்கள் வாழ்ந்த கட்டாந்தரைகள் இப் பொழுது செல்வங் கொழிக்கும் பூமியாகவும், தேர்ந்த அறிவின் இருப்பிடமாகவும் திகழ்ந்தன. இங்கினம் மாறியமை அடுத்து வரும் ஊழியில் அரசியல் மாற்றத்திற்கு, பாராளுமன்றத்தொகுதிகள் புதுமுறையில் பிரிக்கப்படுதற்கும் காரணமாயிற்று. நெப்போவியப் போர்கள் நிகழும் வரையும் அவை முடிவுபெற்றுப் பத்து ஆண்டு களுக்கு மேலாகவும் புதிய மத்திய வகுப்பினர் பணம் திரட்டுவ தோடு திருத்திபெற்று, புதிய இங்கிலாந்தில், தமக்குரிய உரிமை யைச் செலுத்தவொட்டாது ஒதுக்கிவைத்த அரசியல் சமூக ஆதிக்கத்தைக் கருத்துடன் எதிர்த்தாரல்லர். புதிய கைத்தொழில் மாகாணங்களிலே திாண்ட தொழிலாளர் துயர் தாங்காமல் கொபெற்று, அந்து என்பவர்களின்கீழ் பருமாற்றவாதிகளின் கிளர்ச் சியில் ஈடுபட்டனரேனும் அவர்களுக்கு மத்திய வகுப்பினரின் ஆதரவு இல்லாமையாலுங் சட்டமுறையான தொழிற்சங்கம் அவர்களுக்கென இல்லாமையாலும் அவர்களை அடக்கி வைத்திருத் தல் இன்னமும் இலகுவாகவேயிருந்தது.
மூன்ரும் யோச்சின் ஆட்சிக்காலத்தில் ஆண்களும் பெண்களும் கைத்தொழில் மாகாணங்களான கிளைசயிட்டு, வடக்குக் கரிச்சுரங்
கங்கள், இலங்கா சயர், கரியநாடு, தென் உவேல்சு, இலண்டன்,
இந்நூல், முதலாம் பாகம், பக்கம் 83 பார்க்க.

தொழிலாள ர் நிலை
வேறும் புதிய கால்வாய்கள் வெட்டுதல் வீதிகள் அமைத்தல் ஆகிய வேலைகளைப் பெறக்கூடிய எவ்விடத்தும் பெருகிவந்தனர். இத் தொழில் நிலையங்களைச் சுற்றியுள்ள கமத்தொழிற் கூலியாட்கள் முன்பு தாம் பெற்ற மிகக் குறைந்த கூலியிலும் அதிக கூலியை இப்போது பெற்றனர். மிகத் தொலைவிலுள்ள கிராமப் பகுதிகளில் மாற்றுத்தொழில் பெறும் போட்டியின்மையால் அங்கு கூலி குறை வாகவேயிருந்தது. எனினும் புதிய கைத்தொழில் வேலைக்காரர் களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கதாயிருந்தது மட்டுமன்றி, நெப்போலியப் போரினல் ஏற்பட்ட திடீர் ஏற்றவிறக்கம் காரண மாக விலை, கூலி, வேலைகிடைத்தல் என்பவற்றில் ஏற்பட்ட நிலை மாற்றங்களால் மேலும் துன்பத்துக்கிடமானது.
புதுப் பொருளாதார முறைமையின் இந்த ஆரம்ப காலத்தின் கேடு கள் மிகப் பெரியனவாகும். எனினும், அவை புதியனவாகத் தோற் றியனவல்ல ; பழைய கேடுகளே பெருகித் தீவிரமடைந்துள்ளன வென்க. கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் மிகக் கேவலமான வீடு களில் வாழ்ந்து வந்தனர்; குறைவான ஊதியமே பெற்றனர்; அளவுக்கதிகமாக வேலை வாங்கப்பட்டனர். விபத்துகள் நேரிடாமற் றவிர்க்க ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. விபத்துகள் நேர்ந்த பின்னர்கூட விசாரணைக்கு ஏற்பாடு எதுவுமிருக்கவில்லை." உண்மை யில் 1815 க்கு முன்னர் நோதம்பலந்து, தறம் ஆகிய விடங்களி லுள்ள சுரங்கங்களில் மரணங்கள் நேரிடினும் மாணவிசாரணைகள் செய்யும் வழக்கமிருக்கவில்லை. கொத்துலாந்தில் சுரங்கத்தொழி லாளர்கள் பதினெட்டாம் நூற்ருண்டின் முடிவின் அண்மைவரைக் கும் அடிமைகளாகவே இருந்தனர். இங்கிலாந்திற்கூடப் பெண்களும் சிறுவர்களும் பழைய காலத்தில் சுரங்கத்தில் ஈரந்நிறைந்த இருட் டில் சொல்லொணு நிலைமைகளில் வேலைசெய்யுமாறு துன்பப்படுத்தப் பட்டனர். கைத்தொழிற் புரட்சி முதலில் சுரங்கத் தொழிலாளர் நிலைமைகளைத் திருத்தாது அவர்களின் தொகையை மிகவும் அதிகரிக்கச் செய்தது. 1842 ஆம் ஆண்டு சுரங்க அறிக்கையினல் அவர்கள் தகாத முறையில் நடாத்தப்படுதலை, இரக்கம் மிகுந்தோ ரும் ஆராயும் குணம் படைத்தோருமான தலைமுறையினர் அறியக் கூடியதாயிற்று. முன்னர், திருமதி பிரவுண்றிக்கு, பீட்டர் கிரை மிசு" போன்றேரது இல்லங்களில் அன்போடு பாதுகாக்கப்படுவதற் காக ஒப்படைக்கப்பட்டவை போன்ற வறிய குழந்தைகள், இக் காலத்தின் புதிய குழ்நிலையில், ஈவிரக்கமற்ற நெஞ்சினரான வடக் கத்திய ஆட்களால் நடத்தப்பட்ட பஞ்சாலைகளில் வேலைக்கமர்த்
மேற்பரப்பிலுள்ள கரி எடுக்கப்பெற்றதும், சுரங்கங்கள் ஆழமாகின : அன்றியும் விபத்துகள் நேரும் நிலைமையும் அதிகரித்தது.
* இந்நூல் பக்கம் 236 பார்க்க.
14- R 5931 (1162)
36.

Page 194
362
குடிசனப் பெயர்ச்சி
தப்பட்டனர். பெரும்பாலும், ஓரிரு நூறு பவுண்களைக் கடனுகப் பெற்றே தொழிலதிபர்களான இப்புதுப்பணக்காரர், இவ்வேழைக் குழந்தைகளிடம் கடுமையாக வேலைவாங்குவதற்குச் சற்றேனும் தயங்கினரில்லை. தம்மைப் பராமரிக்கக் கூடிய பெற்ருேரையுடைய சிறுவர்களும் வேதனமின்றித் தத்தம் விடுகளில் வேலை செய்யும் நிலைமாறி, ஆலைக்கேனும் தொழிற்சாலைக்கேனும் செல்லும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருந்தது. 1833 இல் தொழிற்சாலைப் பரி சோதனைக் காலந் தொடங்குவதற்கு முன்னர் இம்மாற்றம் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமின்றேனும்-பெரும்பாலும் முன்னிருந்ததிலுங் கூடிய தீமையையே விளைத்திருத்தல் வேண்டும். இக்காலத்திலிருந்த வறியவர்களின் துன்பத்தை அவர்களின் முன்னேர்களின் துன்பக் துடன் ஒப்பிட்டு மதிப்பிடுதல் கடினமானது. ஏனெனில் முற்காலங் கள் பற்றிய போதிய விவரங்களில்லை. இவர்களுள் அநேகரின் அளவுகடந்த துன்பம் மறுக்க முடியாதவொரு உண்மையாம்.
புதிய கைத்தொழில் மாகாணங்களிற் குடியேறியமக்கள் தொகை, 1760 முதலாகப் பெரிய பிரித்தனின் குடிமக்களின் தொகையில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வினுலதிகரித்த சனத்தொகையின் பெருக்கேயாகும். இங்கிலாந்திலும் உவேல்சு, கொத்துலாந்து, அய லாந்து போன்றவிடங்களிலுமுள்ள கிராமப் புறங்களில் வாழ்ந்த இம் மக்கள் தமது பகுதிகளில் மேலும் இருப்பதால் பெறுவது பட்டினி யேயன்றி வேறு எதுவுமல்லவென உணர்ந்தனராதலால், உண்ண உணவு வேண்டி, தொழில் வளர்ச்சியுள்ள பகுதிகளுக்குச் சென்ற னர். இங்கிலாந்தின் புதிய தொழில் வளர்ச்சிக்கு அவசியமாயிருந்த மனித பலமாக உதவினுேர் இவரே. ஐரிசுக் குடியேற்றம் சுதுவட் டரின் காலத்திலிருந்தே இலண்டன் வாழ்வின் ஒரு அம்சமாகவும் ஆங்கிலேயர் கொத்துலாந்தர் ஆகியோர்க்கு பெரும் நன்மையான தாகவுமிருந்தது. ஆனல் அனேவரியன் காலத்தில் அது மிகவும் முக்கியமானதாயிற்று. ஐரோப்பாவின் மத்தியிலிருந்தும் கிழக்குப் பகுதியிலிருந்தும் யூதர்களும் பெருந்தொகையினராக வந்து சோத் தொடங்கினர். இதன் விளைவாகப் பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியில் இலண்டனில் பெரும்பாலும் மிக வறிஞரான 20,000 மக்கள் இருந்தனர். பத்தொன்பதாம் நூற்முண்டில் அமெரிக்கா இவர்களைக் கவர்ந்திராவிடின் ஆங்கில சமூகத்தில் யூதர், ஐரிசு மக்கள் ஆகியோரின் கலப்பு இப்போதிருப்பதிலும் பார்க்கக் கூடிய தாகவிருந்திருக்கும். ஐரிசார் தம்முடன் வறிய வாழ்க்கையையும் சொற்ப கூலிமுறையையும் கொணர்ந்தோராய், மிகக் கேடான சேரிகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தனர். இலண்டனில்

குடிசனப் பெயர்ச்சி
அவர் வாழ்ந்த நிலவறைகள் அவர்கள் கன்னமராவில் விட்டு வந்த குடிசைகளைப் போலவே வானிலைகளாற் பாதிக்கப்படா தனவாயிருந்தன. பாணும் பாற்கட்டியும் கன்னமராவில் அவர் களுக்குக் கிடைத்த உருளைக்கிழங்கினும் மேலானவையாகவிருந் தன. ஆங்கில வேலையாளின் ஏற்கனவே மிகக் குறைவாயிருந்த கூவி இவர்களினல் மேலும் குறைந்தமை இலண்டனிலும் கமத்தொழிலாளரிடையேயும் இவர்களுக்கெதிராக அடிக்கடி கலகங் கள் ஏற்பட ஓரளவு காரணமாயிற்று. உண்மையில் ஐரிசுத் தொழி லாளர்மீதுள்ள பகைதான் யோச்சு கோடன் பிரபு காலத்திலும், அதன் பின்னர் வெகுகாலத்துக்கும் பெரிய பிரித்தனின் பொதுமக் கள் உரோமன் கத்தோலிக்கருக்கெதிராகக் கொண்ட பகையுணர்ச்சி க்குரிய காரணங்களுள் ஒன்ருகும்.
கைத்தொழில் நிலையங்களில் ஏற்பட்ட புதிய தொழில் வசதிகளும்,
குடிசனத்தொகைப் பெருக்கமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தமையாற்
கிராமாந்தரப் பகுதிகளிலிருந்த ஆங்கிலேயரின் பெரிய இடப் பெயர்ச்சியொன்று எதுவிதத்திலும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஆனல் அதே காலத்தில் நாட்டுப்புறங்களின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன; இவை பலவழிகளில் நகரங்களுக்கு மக்கள்
பெயர்வதன் வேகத்தினைப் பாதித்தன. மேலே குறிப்பிட்ட மாற்றங் கள் இருவிதமானவை. எந்திரசாதனத்திலும் அமைப்பிலும் ஏற்
பட்ட புரட்சியின் காரணமாகக் கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களு க்குக் கைத்தொழில்கள் மாற்றப்பட்டமை ஒன்று. பொது நிலங் களும் திறந்த வயல்களும் அதிகக் கோதுமை உற்பத்திக்காக அடை க்கப்பட்டமை மற்முென்று. ஆங்கில நாட்டுப்புற ஒவாழ்வைப் புரட்சி யடையச் செய்வதற்கு இவை யிாண்டும் ஒன்று சேர்ந்து கொண் 6. ஆயினும் இவை தம்முள் ஒன்றுக்கொன்று நேரான காரண காரியத்தொடர்பு உடையனவாயிருக்கவில்லை.
கைத்தொழிற்புரட்சியானது, எந்திரசாதனத்தைத் தோற்றுவித்த மையினுலும், அதன் காரணமாகத் தொழிற்சாலைகளும் நகர்ப்புறங் களுமே சகல தொழில்களுக்குமுரிய இடமானமையினலும் படிப்படி
யாக இருவகைக் கிராமக் கைத்தொழில்கள் அழிந்தன. முதலில்
கமக்காரக் குடும்பங்களின் பிள்ளைகளும் பெண்டிரும் செய்துவந்த நூல்நூற்றற் ருெழிலும் ஏனைய சிறு தொழில்களும் அழிந்தன. இரண்டாவதாக, மணிக்கூடு செய்தல், தோல் பதப்படுத்தல், ஆலைத் தொழில், குடிவகை வடித்தல், குதிரைக்கடிவாளம், ஆசனங் கள் செய்தல், பாதவணி திருத்துதல், தையல்வேலை, பெரிய சுதேசக்
1780.
கைத்தொழிலான துணி நெசவு செய்தல் ஆகிய பலவகைப்பட்ட
தொழில்களிலீடுபட்டிருந்த கிராம மக்களின் முழுநேர முயற்சி
363

Page 195
564
கிராமக் கைத்தொழில்களின் மறைவு
களும் அழிந்தன. இக் கலைகள், கைத்தொழில்கள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அக்கிராமங்களிலேயே உபயோகிக்கப்பட்டன. ஏனையவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்பட் டவை சுதேசச் சந்தைகளுக்கும் உலகச் சந்தைகளுக்கும் அனுப்பப் பட்டன. மூன்மும் யோச்சின் ஆட்சித் தொடக்கத்திலிருந்து நூற்று எழுபது ஆண்டுகாலத்துள் பிரித்தானிய கைத்தொழில்கள் ஏறக் குறைய முழுவதுமே பட்டினங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
ஆலைத்தொழிலும், கைப்பணியும் இடம் பெயர்ந்தமை முன்பு தூம்சுடே காலத்திலிருந்ததுபோலக் கிராமங்களைத் திரும்பவும் ஏறக்குறைய முற்றிலும் கமத்தொழிலையுடையனவாக்கியது. பாட சாலைக் கல்வி, அண்மைக் கால ஆண்டுகளில் அரைகுறைப் பரிகார மாக அமைந்ததே தவிர கிராமம் இன்னும் குறுகிய நோக்கமுடைய தாயேயிருந்தது. கிராமத்தவனின் விவேகமும் சுயேச்சையும் கீழ் நிலையெய்தின. ஆனல் நாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலக் கிராமத்தில் திறமையான பாடசாலை எதுவும் இருக்கவில்லை. தொழிற்பயிற்சியும் கைப்பணியுமே பழமையான கல்வியாக விருந் தன. அவைகளும் மறைந்தொழிவனவாயின. கிராம மக்கள் வாழ் வதற்குக் காரணமான கைத்தொழிலுக்குக் கிராமங்களில் இட மில்லாது போகவும் சுயேச்சையான குடும்பங்கள் பல உவேட்சு வேத்தின்
“ வறிய குசன்” போலத்"தாரணியிற்மும் விரும்பும் தனியோரில்லம்"
ஆகும் தம் ஆற்றங்கரைக் குடிசையை விட்டகன்று இக்கால நகரத் தின் சிறப்பியல்பிலாத் தெருக்களிலே ஒதுங்கவேண்டியவராயினர். கமக்காானல் வயல்களில் வேலைக்கமர்த்தப்பட்டோராய்த் தங்கி நின்ருரும் மேலதிகச் சிறு தொழில் எதையும் மேற்கொள்ள முடியாதமையினுல், கூடிய வேதனம் பெற வழி பெற்றிலர் ; கிடைத்த வேதனத்தைக் கொண்டு வாழ முடியவுமில்லை. பத்தொன் பதாம் நூற்ருரண்டிற் கிராம வாழ்க்கை சலிப்புத்தன்மையுடையதா யிருந்ததற்குக் காரணம் முக்கியமாகக் கைத்தொழில்கள் நகர்ப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தமையேயாம். ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டினைப்பார்க்கிலும் இங்கிலாந்திலேயே நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் மிகப் பெருமளவில் ஏற்பட்டது.
epøðr(Uplh யோச்சு இறந்தபொழுது கிராமத்திலிருந்து கைத் தொழில்களின் நகர்ப்புறப் பெயர்ச்சி அரைவாசியளவே நிறைவேறி யதெனினும், காணிகள் அடைக்கப்படுதல் பெரும்பாலும் முற்றுப் பெற்றது. திறந்த வெளிகளையும் பொதுத்தரிசு நிலங்களையும் தடுத்
தடைத்தற்கான தனிப்பட்ட பாராளுமன்றச் சட்டங்களின் கால 1820. மும் மூன்ரும் யோச்சின் ஆட்சிக்காலமும் ஒன்றேயாகும்.

கணிப்டைப்பு : காரணங்கள்
தானியம் மிக நன்கு வளரும் பகுதியான நடுநாடுகளிலும் கிழக்கு அங்கிலியாவிலும் மத்தியகாலத்து முறையாகிய திறந்தவயற் பயிர்ச் செய்கை இன்னமும் இருந்துவந்தமை சிறிதும் பொருத்தமற்ற வொன்முயிருந்தது. பயிரின் விளைச்சலினதும், அதன்மூலம் சனத் தொகையினதும் பெருக்கத்திற்கு அடைப்புக்கள் எவ்வாறு நன்மை பயந்தனவென்பது கியூடர் காலத்திலும் சுதுவட்டர் காலத்திலும்" பல மாகாணங்களில் தெளிவாகப் புலப்பட்டது. மூத்த பிற்றின் காலத்தில் தீவின் சனத்தொகை அளன்ெறிப் பெருகத் தொடங்கிய பொழுது, தானிய உற்பத்தியைப் பெருக்குதலே தேசிய தேவை களுள் முக்கியமானதாயது. நெப்போலியப் போர்களின் பின்ன சன்றி, அதற்கு முன்னர் இரசியாவேனும், கடல் கடந்துள்ள வேறு நாடுகளேனும் குறிப்பிடத்தக்க அளவு தானியத்தைப் பிரித்த னுக்கு வழங்கவில்லை. அந்தக் காலங்களிலே அத்தீவானது தானே தனக்குத் தேவையான உணவை உற்பத்திசெய்தல் அவசியமா யிற்று. அன்றேல் பட்டினி கிடக்க நேரிட்டது.
எனவே, மூன்றும் யோச்சின் ஆட்சிக்காலத்திலேயே நடுநாடு களும் கிழக்கு அங்கிலியாவும், வட ஆங்கில, கொத்துலாந்து நிலப் பரப்புக்களுள் பெரும்பாலனவும் இக்காலத் தோற்றத்தினை, அதா வது கற்சுவர்களாலேனும் செடிகளினலேனும் சுற்றியடைக்கப் பட்ட' எண்ணற்ற வயல்களைக் கொண்ட சதுரங்கப் பலகை அமைப் பினைப் பெற்றன. தீவின் அதிதூரத் தென் கிழக்குப் பகுதியிலும் பல மேலை மாகாணங்களிலும் இம்மாதிரியான அமைப்பு பல நூற்ருண்டு களாகவே காணப்பட்டு வந்துள்ளது."
மூன்றம் யோச்சின் ஆட்சிக்காலத்திற் பெருமளவிற் செய்யப் பட்ட அடைப்புக்கள், கியூடர், சுதுவட்டுக் காலங்க்ளில் ஓரளவுக் குச் செய்யப்பட்ட அடைப்புக்கள் போலவே, திறந்த கிராம வயல்களின் பரந்த துண்டுகளுக்குப் பதிலாக அடக்கமான தொரு பரப்பில் கமக்காரர் சிறந்த பயிர்ச்செய்கை செய் வதற்கு வழிகோலின. இச்சந்தர்ப்பங்களை அவர்கள் நழுவவிட வில்லை; ஏனெனில், பதினெட்டாம் நூற்முண்டு ' சீர்திருத்தும் நிலப் பிரபுக்களின் காலமாயிருந்தது. அவர்கள் தங்கள் மூலதனங்களை
இந்நூல், முதலாம் பாகம், பக்கம் 225-26 இல் விவரிக்கப்பட்டுள்ளது.
* இந்நூல், முதலாம் பாகம், பக்கம் 431 பார்க்க.
* 18 ஆம், 19 ஆம் நூற்றண்டுகளிலுளள அடைப்புக்களிலிருந்த பிரதேசங் களை அறிவதற்குக் கொனரின் பொதுநிலமும் அடைப்பும் " என்னும் நூலின் இறுதியிலுள்ள தேசப்படங்களைப் பார்க்க. இங்கிலாந்தின வட மேற்கு மூலையில் அடைப்புக்கள் தரிசு நிலங்களைக் கொண்டனவாயிருந்தன. கமச் செய்கையில் திறந்தவயல் முறை வடக்கே வாழ்ந்தவர்களினற் பெரிதும் கையாளப்படவில்லை : அங்கே, இங்குமங்கும் சிதறியிருந்த கமங்களே வழக்கமாயிருந்தன.
365

Page 196
366
அடைப்புகளின் பயன்
நிலத்திலேயே இட்டு, விஞ்ஞானமுறைப் பயிர்ச்செய்கையினையும், மந்தை வளர்த்தலையும் கற்றும் பயின்றும் போதித்தும் வந்தனர். * திருந்தும் நூற்றண்டின் ' காலத்திலே இங்கிலாந்தில் ஆடுகளும், மாடுகளும் அவற்றுடன் குதிரைகளும் பரிபூரணமாக அபிவிருத்தி செய்யப்பட்டன. வளர்ப்புப் புல்லுகள், கிழங்குப் பயிர்கள், தானியம் வளர்ப்பதற்குத் தகுந்த முறைகள் ஆகிய திறந்த வயல் முறையில் இயலாதன யாவும் ஆங்கிலக் கமக்காரருக்கு விதிவிலக்கா யிராமல் வழமையான பழக்கமாய் இருந்தன. புதிய கமத்தொழிலை முதன் முதலில் உணர்ந்தவன் ஆதர்யங்கு என்பவனவன்; அதனே நடைமுறையிற் செய்து காட்டியவர்களுள் சிறந்த எடுத்துக்காட் டாகக் கொள்ளத்தக்கவன் மூன்ரும் யோச்சின் பகைவனும், வலிமை மிக்க உலிக்கும், அமெரிக்கப் புரட்சியிலிருந்து, பீல் என்பானின் பிா தம மந்திரி காலம்வரையும் ஒல்காமில் ஆட்சி செலுத்தி, தனது வாடகை வருமானத்தை 2,200 பவுணில்ருந்து 20,000 பவுண்வரை உயர்த்தி, பிரித்தானியா, ஐரோப்பா எங்கணுமிருந்து பயிர்ச் செய்கை வல்லுநர்கள் வந்து பார்வையிடத்தக்கதாய் ஒரு மண் மேட்டு எலிப்புற்றினைப் பெருமைவாய்ந்த தோட்டமாகச் செய்து அதன்மூலம் செல்வமடைந்து, தன் அயலிலுள்ள எல்லா வகுப்பின ாதும் அன்பையும் பெற்று விளங்கியவனுமான நோவோக்குக் கோக்கு ஆவன்.
மூன்றும் யோச்சு ஆளத்தொடங்கியபொழுது கொத்துலாந்து மரஞ்செடிகளற்றதாக விருந்தது. மத்திய இங்கிலாந்தினைப் போல அது பெரிய கிராமங்களைக் கொண்ட நாடாகவிருக்கவில்லை. ஆனல் வட இங்கிலாந்தினைப்போல சூழ்ந்துள்ள காட்டுப்புறங்களுக்கு நடுவே யமைந்து இங்குமங்குமான கமங்களையும் சிறு கிராமங்களே புமுடைய நாடாக விருந்தது. கொத்து நிலப்பிரபுக்களின் அதிகா ாம் மிகப் பெரியது. வாரக்காரர் ஒருவருடக் குத்தகையிலேயே கமங் களைப் பெற்றனர். விஞ்ஞான முன்னேற்றத்தில் ஆர்வம் இங்கிலாந்தி னைப்பார்க்கிலும் கொத்துலாந்திலேயே மிகுதியாகக் காணப்பட் டது. நீண்ட காலக் குத்தகை கொடுக்கும் புதிய வழக்கம் கமக் காரனே முயற்சியுடையவனுக்கவும் சுயேச்சையுடையவனுக்கவும் உத வியது. சிறு நிலக்கிழார், தம் அதிகாரத்தினை நிலமடைப்பதற்கும், புது முறையிற் பயிர் செய்வதற்கும் உபயோகித்தனர். கொத்துலாந் தின் வயல்களிலமைந்த உறுதியான கட்டிடங்கள், வயற்சுவர்கள், பயிர்ச் செய்கைகள் என்பன மூன்றும் யோச்சின் ஆட்சித்தொடக்
கத்திலிருந்து தோன்றி வளர்ந்தவை.

அடைப்புகளினற் பாதிக்கப்பட்டோர்
இந்தக் காலத்திலே, கொத்துலாந்து இங்கிலாந்து ஆகியவற்றி லேற்பட்ட மாற்றங்களோடு ஒப்பிடும்போது கிராமாந்தர உவேல் சிலே ஏற்பட்ட மாற்றம் சிறிதளவேயாகும். ஏனெனில் கெலித்திய மலேநிலவடைப்பு கமத்தொழிலோடு ஒரே காலத்ததாயிருந்தது. ஆனல் உவேல்சு தனக்கெனவே ஒரு கரு நாட்டினைப் பெற்றுவருவ தாயிற்று. அங்கு அதன் தெற்குக் கரையில் கரிச்சுரங்கங்கள் கடல் வரை செறிந்திருந்தன.
நிலமடைக்கும் இயக்கம் வளர்ந்து வரும் சனத்தொகைக்கு உண வளிப்பதற்கு அவசியமானதொன்முயிருந்தது. தங்கள் தோட்டங்க ளிலே பணத்தைச் செலவழித்த நிலப்பிரபுக்களின் செல்வத்தை மட் டுமன்றி அந்த இயக்கத்தில் அவர்தம் முகவர்களாயிருந்த பெரிய குத்தகைக்காரக் கமக்காரரின் செல்வத்தினையும் அது பெருக்கியது. மூன்ரும் யோட்சின் ஆட்சியின் இறுதியில் உவாற்றலூப் பண்ணை விடு' எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் கச்சிதமான புதிய செங் கல்வீடுகளில் வாசஞ் செய்பவரும், இருசில்லுக் குதிரை வண்டி களிலே சந்தைக்குச் செல்பவரும், தமது மேசையிலே குடிவகையை யுடையவரும், தம் பெண்குழந்தைகளுக்கென வரவேற்பு மண்டபத் தில் பியானே இசைக்கருவியுடையவருமான கமக்காரர் பலரைக் கண்டதும் கொபெற்றுத் திகைப்பும் வெறுப்பும் அடைந்தான். எனி னும் இப்பொருள்கள் யாவும் அதிகரித்துவரும் செல்வம், செளகரி யம், கல்வி என்பனவற்றின் அறிகுறிகளேயாம். பழைய முறையிலே வாழ்ந்த சிறிய பண்ணைக்காார் நெடுங்காலமாகத் தொகையில் அருகிவந்துள்ளாரேனும் முற்முக மறைந்துவிடவில்லை. 1831 இன் குடிசனமதிப்பு, எவரிடத்தும் வேலையிலமராதும், எவரையும் வேலைக் கமர்த்தாதும் பயிர் செய்வோர்களின் எண்ணிக்கை, ஆட்களை வேலைக்கமர்த்தும் கமக்காரர், அவர்களின் வேலையாட்கள் ஆகி யோரது எண்ணிக்கையோடு ஒப்பிடப்படும்பொழுது ஆறுக்கொன் முக இன்னமும் இருப்பதைக் காட்டியது. 1851 வரை கூட, பெரிய பிரித்தனின் கமங்களுள் மூன்றில் இரண்டு பங்கானவை நூறு ஏக்கர்களுக்குக் குறைந்த அளவுள்ளனவாகவே இருந்தன.
அடைப்புக்கள் அவசியமானவையெனினும் அவை எல்லோருக்கும் ஒரே அளவான நன்மைகளைத் தரவில்லை. வறியவர் பெற்ற நன்மை போதிய அளவினதாயிருக்கவில்லை. அவர்கள் கிராமக் கைத்தொழில் களை இழந்தமை ஏற்கனவே குறிப்பிடப்பட்டது; அன்றியும் இதுவே அவர்களுடைய துன்பங்களிற் பாதியளவுக்கேனும் அதற்குக் கூடு தலான பகுதிக்கேனும் காரணமாகும். அடைப்புமுறை வறியவர் களைப் பற்றிப் போதிய அக்கறை கொள்ளவில்லை. புதிய திட்டங் களில் வறிய கமக்காரர்களை அவர்களின் நிலங்களிலேயே நிலைத்
367

Page 197
அடைப்புகளினற் பாதிக்கப்பட்டோர்
திருக்கச் செய்ய மிகச் சிறிதளவு முயற்சியே செய்யப்பட்டது. மக் களின் ஆதரவிலே தங்கியிருந்த மன்னன் ஒருவனல் ஆளப்பட்ட நாடாகிய அக்காலத் தென்மாக்கிலும் இவைபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டபொழுது, வறிஞர்வரையுள்ள எல்லா வகுப்பினரது நலன் களும் நன்கு கவனிக்கப்பட்டன; அதனல் இன்றைய கமத்தொழில் நாடான தென்மாக்கு மிகச் சிறந்த பேறுகளை யடைந்தது. ஆனல் மூன்ரும் யோச்சின் இங்கிலாந்தின் யாப்பும் ஆதரவும், உவிக்குகள், தோரிகள், அரசருடைய நண்பர்கள் ஆகிய இவருள் யார் ஆட்சி செலுத்தினும், உயர்குடிகளுக்குச் சாதகமானவை யாயே யிருந்தன். அடைப்புச் சட்டங்களை நிறைவேற்றிய பாராளு மன்றச் சபைகளில் பெருமளவு நிலமில்லாதார் எவரும் இடம் பெருதபடி சட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சமாதான நீத வான்கள் நாட்டுப்புறத்து வல்லாளராகவும் இருவகுப்பினருக்கு மட்டுமே பிரதிநிதிகளாகவுமிருந்தனர். இங்கிலாந்தினது நிலத்திற் பெரும்பகுதி பெரும் நிலமுடைக் குடும்பத்தாரிடமேயே இருந்தது. இத்தகைய சமூக, அரசியல் நிலைமைகளுக்கிடையே, பெரிய நிலப் பிரபு வகுப்பினரின் எண்ணப்படியே அடைப்புமுறையை நிறை வேற்றுதல் இன்றியமையாததாயிருந்தது. அவர்களுடைய எண்ணங் கள் நாட்டிற்குத் தேவையான அதிக உணவு உற்பத்தியைக் குறிக் கோளாகக் கொண்டிருந்தன வெனினும், சிறிய நிலங்களை அல்லது சிறிய ஆதனங்களைப் பேணவோ பெருக்கவோ வேண்டிய நாட்டுத் தேவையைக் குறிக்கோளாகக் கொள்ளவில்லை.
திறந்த வயல்களும் பொதுத் தரிசு நிலங்களும் உரிமையாளருக் கும், கமக்காரருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டபொழுது, வறியவனே வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கமிருக்கவில்லை. ஆனல் அவனுக்கு நியாயமான அளவுக்கு மேற்படக் கொடுக்கும் விருப்பமும் இருக்க வில்லை. பொதுவாகவே அவன் பொதுநிலத்தின்மீது தனக்கிருந்து வந்த உரிமையைச் சட்டப்படி நிரூபிக்கவியலாதவனுயிருந்தான். பெரும்பாலும் கிராம வயல்களில் இரண்டொரு சிறு துண்டுகளில் அவனுக்கிருந்த உரிமைக்கும் அங்கு பசுக்களை அல்லது தாராக்களை வளர்க்கும் சட்டப்படியான அவனுடைய உரிமைக்குமீடாக அவனு க்கு நட்டப்பணம் வழங்கப்பட்டது. ஆனல் அத்தொகை அவனை ஒரு முதலாளிக் கமக்காரனுக ஆக்கவோ அவனுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துண்டிற்கு வேலியிடவோ போதுமானதாக இருக்கவில்லை. அத் நட்டஈடு குடிவகை விடுதியில் ஒரு மாதம் நிறைய மது அருந்து வதற்கு ஒருவாறு போதியதாயமையும். எனவே, அவன் நில மற்றவனுன ஒரு தொழிலாளியாயினன். ஆதர்யங்குதானும்

இசுபீனமிலந்து
தானே முதல்முதலாக ஆதரிக்கத் தொடங்கிய இவ்வியக்கத்தின் பேறுகளுட் சில பற்றித் திகில் கொண்டான். 1801 இல் அவன் எழு தியதாவது, 'அடைப்பு முறிகள் இருபதிற் பத்தொன்பதினல் வறிய
வர்கள் துன்பமெய்தினர், அதுவும் அதிகக் கொடூரமாகவே' என்ப
தாம்.
தன் மனைவியாலும் மக்களாலும் முன்னர் நடாத்தப்பட்ட கைத்தொழில்களை யிழந்தவனுன விவசாயத் தொழிலாளியின் நிலைமை உண்மையிலேயே மிகத் துன்பந்தருவதாகும். வாழ்க் கைக் கேற்றதொரு வேதனத்தைக் கட்டாயமாகக் கொடுக்கும் முறைமை பண்டை ஆங்கிலக் கொள்கைக்கும் செயல்முறைக்கும் முரண்பட்டதன்று. பொது நீதிப்படி அது தொழிலாளிக்கு உரியதே. ஏனெனில், பிற்றினது சட்டங்கள் தொழிற் சங்க நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக்கியிருந்தன. சமாதான நீதவான்களைப் பிரதிநிதி களாகக் கொண்ட நிலப்பிரபுக்கள் கமக்காரர்களை வாழ்க்கைக்கான தொரு வேதனத்தைத் தொழிலாளர்க்கு வழங்கும்படி கட்டாயப் படுத்துவதில்லை என முடிவு செய்தனர். அதற்குப் பதிலாக, 1795இல் இசுபீனுமிலந்தில் பேக்குசயர் நீதவான்களால் விவரிக்கப்பட்ட வொரு கொள்கையை-அதாவது, வேதனம் போதாதவிடத்துப் பணவுதவியளிப்பதை-ஏற்றுக் கொண்டனர். வறியவனைக் காப்ப தற்காகக் கமக்காரர்களையும் ஊழியரை வேலைக்கமர்த்துவோர்களை பும், தமக்குரிய நியாயமான பங்கைக் கொடுக்குமாறு வற்புறுத்து வதற்குப் பதிலாக வரியிறுப்போரிடமிருந்தே மேலும் மேலும் வரி வசூலிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அது மிகக் கெடுதியான கொள்கையாயிருந்தது. ஏனெனில், கமக்காரர் கூலிகளைக் குறைப்ப தற்கு அது தூண்டுதலாயிருந்தது. 1834 இன் புதிய வறியார் சட்டம்வரை இருந்து வந்ததான அம்முறை கிராமக் கூலியாளேப் பிச்சைக்காரன் ஆக்கியது. சிக்கனத்திலும் தன்மானத்திலும் அவனுக்கிருந்த அக்கறையைக் குன்றச்செய்தது. எவ்வகையிலும் தனக்குத் தானே உதவி தேட முயலாது அதிகாரிகளிடம் தலை குனிந்து பிச்சையேற்றலே அதிக பயனுடையதாக அவனுக்குத் தோன்றியது. இசுபீனுமிலந்துமுறை தெற்கும் நடுநாடும் ஆகிய மாகாணங்களிற் பரவியிருந்தது. ஆனல் கொத்துலாந்திலும் வட இங்கிலாந்திலும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை.
* எனினும் அடைப்பு இயக்கம் குடிசையாளரின் தோட்டங்களை முற்ருகப் வறித்ததென்பது உண்மையன்று. மூன்றம் யோச்சு இறந்தபோது குடிசைத் தோட்டங்களும் உருளைக்கிழங்குத் தோட்டங்களும் பெரும்பாலும் காணப்பட்டன.
309

Page 198
370
சமூக வேற்றுமைகள்
அங்கே இக்கட்டான காலங்கள் அடிக்கடி ஏற்பட்டபோதும், கமக் தொழிற் கூலியாள் அத்தகைய சமூகத்தாழ்வையேனும் நல்லொழுக் கத்தாழ்வையேனும் எய்தவில்லை.
நாட்டிலும் நகரத்திலும் செல்வம் அத்துணை விரைவாக அதிகரித் தமையால், வறியவாது வாழ்க்கைக்கும் பணக்காரரது வாழ்க் கைக்குமிடையேயான வேற்றுமை பழங்காலத்திலும்பார்க்க அதிக தீவிரமானதும், துலக்கமாய்க் காணக்கூடியதுமாயிருந்தது. கைத் தொழிலுலகத்திலே புதிய மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் வேலைத்தலங்களில் வசிப்பதை விட்டு, மேன்மக்களின் வாழ்க்கை யைப் பின்பற்றித் தனியான மாடங்களையும் மாளிகைகளையும் கட்டிக்கொண்டனர். தம் தொழில்பயில்வோருடனும், பயிற்சி முடித்தவருடனும் ஒரே வீட்டில் வாழும் வழக்கம் அவர்களாற் கைவிடப்பட்டது. நிலனுடைமேன்மக்கள் தமது பண்ணை இல் லத்தை உரிமைக்குரிய தம் மூத்த மகனுக்காகவும் போதகரில்லத் தைத் தம் இளைய மகனுக்காகவும் பெருப்பித்து வருவாராயினர் ; மேலும், சென்ற முந்நூறு ஆண்டுகளில் சிறிது சிறிதாகத் தோன்றி வந்துள்ள அமைப்பையுடைய முக்கோணக்கூரை வீடுகளைப் புதிய பலிடியன் பாணியில் மேன்மக்கள் இருக்கையாக அவர்கள் மாற்றி வந்தனர். பசியால் வாடும் மக்களிடையே, திருடவரும் மனிதனின் உயிருக்கோ அவயவத்துக்கோ நட்டமேற்படினும், தமது வீசனப் பறவைகளைக் காத்தற்கென முட்செடியினிடையே பொறித் துவக்கு களும், ஆட் பொறிகளும் வைக்கப்பட்டன. மிருகங்கள் வேட்டை யாடப்படாவகை இவ்வாறு பாதுகாத்தல் சிறு வேட்டைத் திருட் டுக்களுக்கும், ஆயுதந்தாங்கிய சிறு போர்களுக்கும் அதனுல் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுதல்களுக்கும் வழி செய்தது. இத்தகைய முரண்பாடுகளே புதிய ஊழியின் பரு மாற்றவாதத்துக்கு அனேவரிய இங்கிலாந்தில் முன் ஒருபோதும் கண்டிராத சத்தியைக் கொடுத்தன. வறியவர்கள் இருகாலத்திலும் பண நிலையைப் பொறுத்தமட்டில் ஒரு தன்மைத்தாய் நொந் திருந்தனர். A
வடக்கு, நடுநாட்டுப் பகுதிகளிலுள்ள கரியும் இரும்பும், சுது வட்டர் காலத்திலே நோவிச்சும் பிறித்தலும் இருந்ததுபோல, இலண்டனைக் காட்டிலும் அத்துணை அளவு சிறியனவல்லாக் கைத் தொழில் நகரங்களை உண்டுபண்ணிவந்தன. இலண்டனும் அவற் றைப்போன்ற ஒரு கைத்தொழில் நகரமாகாவிடினும் உலகம் அதிர்ச்சியும் வியப்பும் அடைக்கூடிய அத்துணை வேகத்தில் வளர்ந்து வந்தது. அதன் செல்வவிருத்தி, கைக்தொழிற்புரட்சிக்கு முன்னர் இருந்ததுபோலவே, வியாபாரத்திலும் விநியோகத்திலும் வகிக்கும் அதன் தனித்தானத்திலும், இன்னமும் உள்நாட்டு முறை

இலண்டன் வீடமைப்பு
யில் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நுட்பமான பொருள்களிலுமே தொடர்ந்து தங்கிவருவதாயிருந்தது. எனவே இன்னமும் அது இருவகை வகுப்பினரான குடியேற்றக்காரரைக் கவர்ந்தது. அவர் கள் கப்பற்றளங்களிற் பண்டங்களைச் சுமந்து செல்பவரும் அதிக முரடருமான தொழிலாளரும், நுட்பமான தொழில்களிற் கைதேர் ந்தவரும் மதிநுட்பமுடையவருமான வேலையாட்களுமாவர். உலகத் தின் வேறு எந்தப் பட்டினத்திலும் பார்க்க, எழுது வினைஞர்,
அமைப்பாளர், அரச ஊழியர் என்போரிற் பெருந்தொகை விகிதத்
தினரையும் கல்விமான்களையும் இலண்டன் பெற்றிருந்தது.
இலண்டனைச் சுற்றி எங்கணும் பச்சைப் பசும் வயல்களினூடே கட்டடங்களின் தொகை அதிகரிக்கலாயிற்று. மூன்றம் யோச்சு
இறந்தபொழுது இப்பட்டினம் அமர்சிமிது, இடற்வோட்டு,
ஐகேற்று, படிந்தன் ஆகிய இடங்களுடன் ஏறக்குறைய ஒரு தொடர்ச்சியான விட்டு வரிசைகளால் இணைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், இலண்டனும், ஏனைய ஆங்கிலேயப் பட்டினங்களைப் போலவே, வெளிப்பரந்து வளர்ந்ததேயொழிய மேல்நோக்கி வளா வில்லை. அரண்சுவர்களுக்கப்பால் வீடுகள் அமைக்கப்படுதலைத் தடை செய்துள்ள பிறநாட்டு நகரங்களான பாரிசும் வேறுபலவும், பக்கச் சார்பாய் விசாலமடைதல் இயலாமையின் வறியார்க்குக் கீழ்த்தரச் சிறிய வீடுகளும், மத்திய வகுப்பினர்க்கு மாடி வீடுகளு மாய் வானை நோக்கி வளர்ந்தன. ஆனல் பரம்பரையாக ஆங்கிலே யன் தனது சொந்த விடு எத்துணைச் சிறியதாயினும், அது தனது வேலைத்தலத்திலிருந்து எத்துணைத் தூரத்திலிருப்பினும், அதி லேயே வசித்து வந்தான். பொதுவாக, சிக்கனமானதல்லவெனினும் ஆங்கிலேய முறையே மிகச் சிறந்ததாயிருந்தது. *
உறுதியில்லாக் கட்டிடங்கள் பல தோன்றியமையே கைத்தொழிற் புரட்சியின் மிகப் பெரிய குறைபாடாகும். பெரும் அளவில் அதி கரித்துள்ள குடிமக்களுக்கு விட்டுவசதியளித்தமை பெரும் பேறென்பதில் ஐயமில்லை. அன்றியும் சராசரியாகக் கருதுமிடத்து,
எடின்பரோவிலிருந்த உயரமான பல மாடிகளையுடைய நீளமான “ சந்து கள் ” முக்கியமான தெருப்பகுதிக்கு வெளியில் வாழ்க்கை பேராபத்தாகவிருந்த நாட்களை நினைவூட்டின எனினும், சேர் உவாற்றர் கொத்துவின் காலத்தில்
பிரின்சசு தெருவும் அதற்குக் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட இக்காலத்துக் கேற்ற பட்டணமும் விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. கொத் துக்கள் அப்பொழுது பட்டணத்திலும் கிராமத்திலும் வீடுகளமைத்தமுறை இக் காலத்திலுமிருப்பதுபோன்று, ஆங்கிலேயரது வீடமைப்பு முறையினும் பின் தங்கியதாயிருந்தது. வறிய வேளாளர் வாழ்ந்த மாவட்டங்களில், புல்நிலத்திலே, மண்ணினல் அல்லது காறை சேராத கற்களினல் கட்டப்பெற்ற ஒரே அறையை
யுடைய குடிசைகள் இன்றும் காணப்படுகின்றன.
371

Page 199
372
* தற்போக்கும் அத60 d.11ைங்களும் '
மக்கள் தாங்களோ அல்லது தங்கள் தந்தையரோ வாழ்ந்த கிராமப் புறக் குடிசைகளிலும் பார்க்க அவர்கள் புதிய நகர்ப்புறப்பகுதிகளிற் பெற்ற வீட்டுவசதி தாங்குறைந்தது எனக் கூறுவதும் பொருத்தமோ என்பது தெளிவாயில்லை. இலண்டன், கிளாசுகோ, மாஞ்செத்தர் அல்லது சுரங்கத்தொழில் மாகாணங்கள் ஆகியவற் றில் கீழ்வகுப்புத் தொழிலாளருக்குக் கீழறை கூடிய ஒற்றையறைத் தொடர்வரிசை வீடுகளே பெரும்பாலும் கிடைப்பனவாயின. வியாபாரத் தலங்களிலுள்ள பெருந்தொகை எழுதுவினைஞரும் கூலிவேலையாளருட் பெரும்பகுதியினரும் அவர்களிலும் விசேட மான விட்டுவசதி பெற்றனர். எனினும் அவர்களின் இருப்பிடங்கள் கூட ஒரே தன்மையனவாய், பார்வைக்கு இழிந்த தோற்றமளித் தன. நகரை நிர்மாணித்தலேனும், தெரு முன்றில்களைத் தூய்மை யாக்க அல்லது அழகுபடுத்த எவ்வகை முயற்சியைச் செய்தலேனும் அக்கால வழக்கிலிருக்கவில்லை. வேலைக்கமர்த்துபவரும், தாம் வேலையிலமர்த்த விரும்பும் தொழிலாளர் வசிக்கக்கூடிய இருப்பிடங் களையே விழைந்தனர். கட்டிடமமைப்போன் அத்தொழிலின் மூலம் பணம் சேர்ப்பதிலேயே கருத்துடையவனுயிருந்தான். இவைகளைப் பற்றி வேறெவரும் அக்கறை கொள்ளவில்லை. இவ்விதமாகவே புதிய இங்கிலாந்து உருவாகியது.
தற்போக்கு அல்லது அரசாங்கம் தலையிடுதலை எதிர்ப்பது ஒரு கொள்கையாயிற்று. ஆனல் ஏலவே அது நடைமுறையிலிருந்தது. பதினெட்டாம் நூற்ருண்டில் இங்கிலாந்தின் அமைப்பு முழுவதுமே, திறமையான பரிபாலனத்துடன் இயைபிலாததொன்றே. தற்காலத் தேசமொன்று, தியூடர் ஆட்சிமுறையினலோ அல்லது, இருநூறு ஆண்டுகள் சென்றதன் பின்னர் அவ்வாட்சிமுறையில் எஞ்சியவற் முலோ ஆளப்பட்டு வந்தது. இத்தகைய சூழ்நிலைகளில், அரசாங் கத்தின் அல்லது மாநகர சபைகளின் கட்டுப்பாடுகள் பற்றி மக்கள் பெற்றிருந்த சிறு அநுபவம் அவற்றிடம் மேலும் எவற்றையாவது கேட்க அவர்களை ஊக்கவில்லை. உள்ளூர் ஆட்சி, மத்திய அரசாங்கம் என்பன புதிதாக அமைக்கப்படும்வரை-1832 இன் பின்னரே அவை அமைக்கப்படலாயின-அரசாங்கம் எவ்வித முயற்சியுமெடா திருப்பதே நன்றென அநுபவவாயிலாக அறியக்கிடந்தது. அண்மைக் காலங்களில் அரசாங்கம் உண்மையிற் செய்துள்ளனவற்றுட் சில, சட்டத்தினல் தொழிற்சங்கங்களை அடக்க முயற்சித்தமை, வரிப் பணத்திலிருந்து வேதனப் பற்ருக்குறைகளைப் பூர்த்திசெய்தமை, 1815 இன் தானியச் சட்டம் என்பனவாம். நகர அமைப்புத்திட்டம்,

பொதுநலவரசின் தோற்றம் "
தொழிற்சாலைப் பரிசோதனை, சுகாதாரம், பொதுக்கல்வி என்பன
வற்றை அரசாங்கமும் மாநகரசபைகளும் கையாளக் கனவிலும் எண்ணுமுன்னர் நிகழவேண்டியவை எத்தனையோ இருந்தன. புதிய தலைமுறை ஒன்றும் புதிய கொள்கைகளும் முதலில் முற்றகவே தோன்றவேண்டியிருந்தன.
பதினெட்டாம் நூற்றண்டின் ஆங்கில அரசியலின் பண்பு-அதா
வது-பாராளுமன்றக் கட்டுப்பாட்டாலும் தனியாரின் உரிமைகளா
அலும் மட்டுப்படுத்தப்பட்ட உயர்குடி அதிகாரம்-கண்டத்திலிருந்த
வல்லாட்சிக்கேனும் எங்கள் காலத்து அதிகாரமுடையார் குடி யாட்சிக்கேனுமுரிய அம்சங்கள் எவற்றையும் உடையதாயிருக்க வில்லை. பெந்தாம், கொபெற்று, புருேகாம் என்போரால் ஆாண்டப்
பட்ட சீர்திருத்தவாதிகள் பழைய அரசாங்க முறைக்கும் கைத்
தொழிற் புரட்சியினலேற்பட்ட புதிய நிலைமைகளுக்குமிடையே யுள்ள தொடர்புபற்றிய பிரச்சினையை ஆராய்ந்து வரிகளைக் குறைப் பதிலும், அரசாங்கம் தலையிடுவதைக் குறைப்பதிலுமே இப்பிரச் சினைகளுக்குப் பரிகாரம் தங்கியிருக்கின்றது என நம்பினர். பாராளு மன்றச் சீர்திருத்தத்தின் பேறு அவ்வாருகவேயிருக்கும் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். நிகழ்ந்தது அதற்கு எதிர்மாறே. செயலில்,
தாராண்மை என்பது அரசாங்கம் தலையிடுவதைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டுவதாகவே முடிந்தது. எனினும் அரசாங்கத்தை
முதலில் பொதுசன அபிப்பிராயத்தின் கருவியாக்குவது அவசியமா
யிற்று. பொதுச் செயல்கள் மூலமாகவும் பொதுச்செலவிலும் படிப், படியான சமூக சேவையினைத் தோற்றுவித்தலே பத்தொன்பதாம் நூற்றண்டில் சமூக நலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரதான
சேவையாகவிருந்தது. ஆனல் 1816 இல் சமாதானமேற்பட்டதும் மக்கள் விருப்பத்துக்கிணங்குமுகமாக, வருமானவரியை நீக்கும்படி புருேகாம் என்பான் அரசாங்கத்தை வற்புறுத்தியபோது, மேற் கூறிய அந்தச் சமூகசேவைகள் 19 ஆம் நூற்ருண்டிலேற்படுமென எவரேனும் எதிர்பார்க்கவில்லை.
373

Page 200
1832. 1867.
T6v III
பிந்திய அனேவரியர்கள். பொறியக ஊழியில் கடலாதிக்கம். குடியாட்சி உருவாகிய காலப்பகுதி.
முகவுரை
முதன் மூன்று யோச்சு மன்னர்களின் கீழ் நடைபெற்ற உயர் குடியினரது பாராளுமற்ற ஆட்சி, பிரித்தானிய கடலாதிக்கத்தை நெல்சன் விட்டுச் சென்ற உன்னத நிலையை அடையச் செய்தது ; கடல் கடந்த பேரரசொன்றை இழந்து, பிறிதொன்றை ஈட்டியது ; கொத்துலாந்துடன் நிலவிய இணக்கத்தை நிறைவாக்கி, அயலார் துடன் நிலவிய பிணக்கை நீடிக்கச் செய்தது ; கைத்தொழிற் புரட்சியினலேற்பட்ட சமூக விளைவுகளைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாது விட்டது. அப்புரட்சியின் அரசியல் விளைவு களைப் பற்றிய முன்னறிவில்லாதிருந்தபோதும் அதன் ஆரம்பக் கட்டங்களுக்கு அனுகூலமான ஓர் அரசாங்க அமைப்பைப் பேணி வைத்திருந்தது. உவிக்கு, தோரி ஆகிய உயர்குடியாட்சிகள் தங்கள் கூட்டுறவுத் தலைமை நிலவிய நீண்ட காலவவதியில் மந்திரத்தையும் முதலமைச்சரையும் அச்சாகக்கொண்டதாய்ப் பாராளுமன்ற ஆட்சி க்கு ஆற்றலளித்த ஒரு புதுமாதிரியான அரசாங்க அமைப்பை நிறைவுபடுத்தி அமைத்தனர். இம்முறையின் உதவியைக் கொண்டு ஆங்கிலேயப் பொதுமக்கள் சபை முடியாட்சிகளுடன் அடுத்தடுத்து நிகழ்த்திய போர்களில் வெற்றிகொண்டு விளங்கியது. பிற்று, காசில்றீ என்பார் ஆட்சிப் பீடத்திலிருந்த காலத்தில் இச்சபை நெப்போலியனையே தோற்கடித்து, ஐரோப்பாவிற்கு அமைதியை அளித்து, பெரிய பிரித்தானியாவுக்கு நூறு ஆண்டுகளுக்குத் தற் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுத்தது.
பிற்று, காசில்றி ஆகியோருக்குப்பின், அனேவர் குலத்தைச் சேர்ந்த பிந்திய மன்னர்களின் கீழ் அவர்கள் பதவியை வகித்தவர் களை எதிர்நோக்கியிருந்த வேலை கைத்தொழிற்புரட்சியால் உண் டாய புதிய சமூக நிலைமைகளுக்குப் பாராளுமன்ற மந்திர அரசாங்க முறையை ஏற்புடையதாக்கலாகும். இங்ஙனம் செய்யுங் கால் முதலில் மத்திய வகுப்பினரையும் பின் தொழிலாளர்களையும் அரசியலமைப்பைக் கட்டுப்படுத்தும் பணியிற் சேர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்த ஒழுங்குகளைச் செய்யத் தவறின் பாராளுமன்ற முறை வீழ்ச்சியடையும். அதுமாத்திரமன்றி, பீற்ற அலூவும் ஆறு சட்டங்களும் ஏற்பட்டகாலத்தில் எதிர்காலத்திற்கு
374

விற்றேறியா ஆட்சி நாட்டின் வளம்
முன்னறிகுறி காட்டுவதாகத் தோன்றிய வகுப்புவாதச் சண்டை ஏற்படுவதற்கும் வழிகாட்டியிருக்கும்.
ஆனல் ஆங்கில அரசியலின் நற்றிறன் நம்பிக்கையற்றதாகத் தோற்றிய நிலைமைகளைப் பன்முறையும் சீர்படுத்தியிருக்கிறது. 1688 இல் நிகழ்ந்த புரட்சியே இற்றை வரையில் நிகழ்ந்த கடைசிப் பிரித்தானிய புரட்சியாகும். பொதுவாகத் தீவிரமில்லாதும் ஒரு போதும் பின்னடையாதும், படிப்படியாகக் குடியாட்சியை நோக்கி நிலைமை மாறிய காரணத்தால் அரசியலுரிமைகள் பெருங்கேடின்றி யாவருக்கும் அளிக்கப்பட்டன. எல்லா வகுப்பினரும் கட்சியினரும் பொதுவாக, ஆழ்ந்த அரசியல் ஞானமும் நல்லுணர்ச்சியும் உடையவராயிருந்தனர். விற்முேரியா ஆட்சிக் காலம் பிரித்தானி யாவுக்கு அமைதியும் வெளிநாட்டு அபாயங்களிலிருந்து பாது காப்பும் அளித்த காலப்பகுதியா யமைந்தது. அக்கால நடுப்பகுதி முன்னெருபோதுமில்லாத செழிப்புடன் விளங்கியது. எனவே இந்தச் சிறந்த குழ்ச்சித் திறச்செயல் எவ்வித தடையுமின்றி நிறை வேற்றப்பட்டது. ஈற்றில் அரசியல் வாக்குரிமை சகலருக்கும் அளிக்கப்பட்டமை, தனியாரினதும், மதப்பிரிவினரதும் சிறு சிறு முயற்சிகளைத் துணைகொண்டு நாட்டினக்கல்வி முறையை விரிவு படுத்த நாட்டைக் கட்டா பப்படுத்தியது. \
முக்கியமாக, இந்த பப் பறம் பழைய இருகட்சி முறையைப் புதுப்பிப்பதாலும் பலப்படுத்துவதாலும் நிறைவேற்றப்பட்டது. நிரந்தரமான இரு கட்சிகளைக் கொண்ட சிறப்பான ஆங்கில மரபுப்
பண் லவிய இடக்கில், கோரிகள் எதிர்ப்பாரின்றித் தலைமையா
ւ հ՝ இடத்தில், தே தி த
யிருந்த இக்காலப்பகுதியில் ஒரு கூட்டுமுறை அரசியல் நிறுவப் பட்டது. தோரிகளின் தலைமையுடனேயே இந்நூற்ருண்டு தொடங் கியது. ஆனல் 1830-32 சீர்திருத்த முறியின் காலவவதியில் உவிக்கு கள் புதிய போர்க்குரலுடனும் கிட்டங்களுடனும் தங்கள் பழைய மரபுப் பண்புகளுக்கு மெருகிட்டனர். அச்சமயத்திலிருந்து இரு கட்சியினரும், தீவிரமாக மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் தாம் செல்லும் வழகியில் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்ட புதிய சமூகக் கூட்' வவுகளை ஒன்றன்பின் ஒன்முய் ஆக்கிக்கொண்டு முன் னேறிக் கொண்டிருந்தனர்.
இரண்டாம் சாள்சின் காலத்து உவிக்குகள், தோரிகள் என்போரே விற்முேரியா இராணியின் காலத்துத் தாராளர், பழமைபேணுவோர் என்போராக மாறியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டவல்ல அடிப் படையான தொடர்பு, முந்தியோருக்கும் பிந்தியோருக்குமிடையே தொடர்ந்திருந்த, திருச்சபையினர்-இணங்காதோர் என்னும் பிணக்கேயென்க. திருச்சபைக்குச்சில தனியுரிமைகள் அளிக்கப் பட்ட வரையில், ஆங்கிலேயர் மதவாழ்விற் காணப்பட்ட பிளவு,
1819.
1870.
375

Page 201
376
இருகட்சிமுறை நிலைபெறுதல்
அவர்களது அரசியலிலும் பிரதிபலிப்பது தவிர்க்கமுடியாததே. ஒன்றுக்கொன்று வேறுபட்ட சூழ்நிலைகளையேற்படுத்திய காலப் பிரிவுகளினூடாக, நாட்டின் இரு கட்சிகளின் கொள்கைகளும், மரபு களும் மாற்றமடையாதிருந்தனவெனக் கொள்வது உண்மையிற் பொருந்தாது. ஆனல் இருநூறு ஆண்டுகளாக ஏற்பட்ட மாறுதல் களுக்கூடாக, மதவாழ்விலிருந்த இப்பிளவொன்றே இருகட்சிகளுக் கும் நிலையானவொரு பண்பாயிருந்தது. பத்தொன்பதாம் நூற்றண் டுத் தொடக்கத்தில் நிலவிய தொழிலாளர் இயக்கம் ஒரளவு இணங்காதாருடன் தொடர்புடையதாயும், அக்காலத்தில், தாபித்த திருச்சபையின் ஆகிக்கத்திற்குப் பெரும்பாலும் முற்முகப் புறம் பானதாயு மிருந்தது. அரசியலின் மதப்பிரிவு நிலைமை ஓரளவுக்குத் தொழிலாளரின் பருமாற்றவாதத்தை உலிக்குதாராளர் கட்சியுடன் இணைப்பதற்குப் பயன்பட்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம், தொடக்கநிலையிலிருந்த சமவுடைமைவாதம் என்னும் தங்களுக்கு உரிய முறைகளால் பொருளாதார சமூக சீர் திருத்தங்களைத் தேடியதோடு உவிக்குதாராளர் கட்சியின் மூலமா கத் தங்கள் அரசியல் வாக்குரிமையைப் பெற முயற்சித்தனர். 19 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதியில் ஆங்கிலேயரிற் பெரும் பாலோர் ஒரே மதத்தினால்லாவிடினும் மதப்பற்றுடையராயிருந்த னர். இந்த உண்மை அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குக்கு
இன்னுமொரு காரணமாயிருந்தது; எனினும், கட்சிகளதும் வகுப்
புக்களதும் பூசல்களை ஒரளவு மட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு அது உதவிற்று.
பாராளுமன்ற அரசாட்சியும், அத்துடன் தலவாட்சியும் புதய ஊழியின் குடியாட்சிப் பண்புக்குப் படிப்படியாக ஏற்புடையன வாக்கப்பட்டமை, புதிய சமூகம் காப்பாற்றப்பட வேண்டிற் செய்ய வேண்டிய திருத்தத்தின் ஒரு சிறு பாகம் மாத்திரமேயாகும். முன் னர் எழுபது இலட்சம் மக்கள் வாழ்வது கடினமாகக் காணப்பட்ட தீவில் நான்கு கோடி மக்கள் அதிகரித்த வசதிகளுடன் வாழக்கூடிய தாகச் செய்யப் பல்வேறுபட்ட புதிய அமையங்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. 18 ஆம் நூற்ருண்டு மனிதப் பெருக்கமுடைய தாயும் தனியாரின் பலத்தை அதிகமாகக் கொண்டதாயும் இருந் தது. ஆனல் கூட்டமைப்புக்களோ, நிறுவனங்களோ அக்காலத்தில் அவ்வளவு விருத்தியடையவில்லை. 19 ஆம் நூற்றுண்டோ பாராளு மன்றம், நகரசபைகள், திருச்சபை, பல்கலைக்கழகங்கள், பள்ளிக் கூடங்கள், குடியியற்சேவை ஆகியவற்றுக்குப் புதிய குடியாட்சி முறையில் ஊக்கத்தை அளித்தது. அதுமட்டுமன்றி வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியினுடனும் செயற்முெடர்புடைய புதிய பொது அமைப்புக்களையும் தனி அமைப்புக்களையும் ஏராளமாக உருவாக்கி

முயற்சிமிக்க ஒரு நூற்றண்டு
யது. அக்காலம், மக்கட் பணி, பண்பாடு ஆகிய துறைகளில் எழக்
கூடிய எவ்வித தேவைக்கும் தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங் கங்கள், ஆதாயச் சங்கங்கள், கூட்டவைகள், சபைகள், ஆணைக் குழுக்கள் ஆகியன எழுந்த காலமாகும். வாய்பேசா மிருகங்கள் தாமும் திட்டமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பின்றி விடப்பட வில்லை. புதிய உருவங் கொண்ட கூட்டமைப்புக்கள், நிறுவனங்கள் என்பன மலிந்த வாழ்க்கையை உண்டாக்குவதில் 19 ஆம் நூற் முண்டு இடைக்காலத்துடன் போட்டியிட்டது. எனினும் சுய உதவியிலும், சுய முனைப்பு உளப்பான்மையிலும் அது 18 ஆம் நூற்றண்டிற்கு அதிகம் விட்டுக் கொடுக்கவில்லையெனலாம். 19 ஆம் நூற்முண்டு தோற்றுவித்த மேதைகளின் பட்டியல் பலமுறையும் திருப்பித் திருப்பிக் கூறப்பட்டிருக்கின்றது. அந் நூற்ருண்டு உண்டாக்கிய புதிய அமையங்களின் பட்டியல் இன்னும் நீண்டதாக வும் முக்கியத்தில் குறைவில்லாததாகவுமிருக்கும்.
ஒன்றன்பின் ஒன்முக ஏற்பட்ட வெவ்வேறுவகையான அரசாட்சி களும் மானிட முயற்சிகளும் உண்மையாகவே மிகச் சிக்கலானவை. ஆதலால் அவற்றை இப்புத்தகத்திற் சுருக்கமாகக் கூறுவது கடினம். ஆனல் அவைகளிற் பல எங்களின் சொந்த நாளாந்த அலுவல் களைப் போல நன்கு தெரிந்தவை. புதிய தேசிய அமைப்பின் சிறப்புப் பண்பு, ஒரு புறம் தனியாரின் மக்கட்பணி முயற்சிக்கும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கு மிடையிலும், மறுபுறம் தல மத்திய அரசாங்கங்களுக்கிடையிலும் வளர்ந்து வந்த நெருங்கிய தொடர் பாகும். இப்பண்பு விற்முேறியா இராணியின் ஆட்சியின் முடிவுக்கு அண்மையான காலத்தில் முற்முகப் புலனுயது. பாராளுமன்றமும் தல வரசாங்கமும் முழுச் சமுதாயத்தினது தேவைகளைப் பிரதி பலிக்கத் தொடங்கின. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற நூற்றுக்கணக்கான துறைகளிலே தனியார் ஈடுபட்டிருக்கும் வேலை களில் அரசாங்கம் வாவா அதிகமான விவேகத்துடன் அக்கறை கொண்டது. இவை காரணமான ஒரு விரிவான முறையுடைய அா சாங்க உதவி, பரிபாலனம், கட்டுப்பாடு என்பன ஏற்பட்டன. தல நிறுவகங்களுக்கு இறைசேரி நன்கொடை, தொழில், வாழ்க்கை ஆகியவற்றின் குழ்நிலைகளை அரசாங்கம் கண்காணித்தல், தொழிலா ளர் காப்புறுதி, தற்காலக் கல்விமுறை என்பன மூலம் இவை உரு வாயின. அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெற்ற சுயாதீனமான தனியாரின் முயற்சி, ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அரசாங் கம் மாத்திரம் செய்த அல்லது எவராலும் செய்யப்படாத அநேக காரியங்களைச் செய்து நிறைவேற்றியது.
மத்திய ஆட்சிக்கும் தல ஆட்சிக்குமிடையிலும் தனியார் முயற் சிக்கும் அரசாங்கம் மேற்கொண்ட காரியங்களுக்கு மிடையிலும்
377

Page 202
378
முயற்சிமிக்க ஒரு நூற்றண்டு
ஏற்பட்ட சிக்கலானதும் அடிக்கடி மாறுவதுமான தொடர்பு, அறி வுத்திறன், அனுபவம், குற்றமற்ற மரபுப் பண்பு ஆகியவற்றையுடை யதும் அரசியற் சார்பற்றதும் நிரந்தரமானதுமான பிரித்தானியக் குடியியற் சேவையின் வளர்ச்சியின் மூலம் சாத்தியமாயிற்று. இந்த நூற்ருண்டின் மூன்ரும் பருவத்தில் சேவையிற் சேர்ப்பதற்கு யாவர்க்கும் பொதுவான போட்டித்தேர்வுகள் ஏற்படுத்தப்பட்ட தன் மூலம் குடியியற் சேவையின் அரசியல் நியமனம் ஊழல்களுக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டது. இத்திட்டம் எவ்வளவு புதுமை யாகத் தோன்றியதோ அவ்வளவு சித்தியளிப்பதாயுமிருந்தது.
புது ஊழியிலெழுந்த பிரச்சினைகளை எதிர்த்து நின்று சமாளிக் கும் பிரித்தானிய முறைகள் செயன்முறையிற் புதியது காணும் பேராற்றலைக்காட்டின. அவை வலிமை பொருந்திய ஒரு பரம் பரை வழக்கின் வழிவந்தவை. ஒப்பு நோக்கின் அவற்றுள் மிகச் சிலவே கண்டப் பகுதி இயக்கங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டன. பாராளுமன்ற முறை எங்களுடைய சொந்த முறை. தல ஆட்சியும் பிரித்தானிய முறையிலேயே சீர்திருத்தப்பட்டு விரிவு படுத்தப் பட்டது. தொழிற்சாலைக் கண்காணிப்பு, தொழிற்சங்கமுறை, கூட்டுறவு இயக்கம் ஆகியவை பிரித்தானியாவிலேயே தோன்றி யவை. குடியியற் சேவையின் பரம்பரை வழக்கங்களும் பரீட்சை
மூலம் தெரிவு செய்யும் சிறப்பு முறையும் இந்நாட்டிற்கே உரியவை.
மனிதத்தன்மை, குடியாட்சி, கல்வி என்பனவற்றின் முன்னேற்ற மும், அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இருபாலாரையும் கொண்ட ப்ெருந்திரளான உழைப்பாளர்களை ஒருங்கு சேர்க்கும் கைத்தொழில் முறை மாற்றங்களும், சமூகத்தில் பெண்களின் நிலை மைபற்றிய ஒரு புதுக் கருத்து உதிக்க வழிகாட்டின. பெண்கள் கல்வி பெரும்பாலும் முற்முகப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்து, இரண்டு சந்ததி காலத்தில் ஆண்கள் கல்விக்கு ஒப்பான நிலையை அடைந்தது. குடும்பத்தில் பெண்கள் வகிக்க வேண்டிய நிலைபற்றிச் சட்டத்தின் நோக்கில் மாற்றமேற்பட்டதோடு, பொதுவாக நடை முறையிலும், மக்களது கருத்திலும்கூட மாற்றமேற்பட்டது. ஈற்றில் அவர்களுக்கு அரசியல் வாக்குரிமை அளித்தல் வேண்டும் என்ற இயக்கம் மூடத்தனமானது எனக் கருதும் நிலைமை நீங்கி
tiմֆ].
பிரித்தானியாவில் 19 ஆம் நூற்றண்டின் சிறப்பியல்புகளாயமை
ந்த அமைதி, செழிப்பு, தற்பாதுகாப்பு ஆகியன இல்லாதிருந்தால்,
பாரிய இம்மாற்றங்கள் யாவும் பெருங்கேடின்றி ஒருகாலும் நிறை வேற்றப்பட்டிரா. உவாற்றலூ சண்டைக்கு 40 ஆண்டுகளின்பின் தன் கொள்கையைப் புதிப்பிக்கும் வரையும், பிரித்தானியாவின்

சமாதானம் ஈந்த வெற்றிகள்
பொதுப்பட்ட பூட்கை கண்டத்திலுள்ள நாட்டினர்களின் சண்டை யில் பங்கெடுத்தலைத் தவிர்த்தலாகும். கிரைமிய யுத்தம் இதற்கு விதி விலக்கு அரசு வலுச் சமநிலை அச்சமயம் நன்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. அதனல் எந்த ஒரு நாடும் அதன் சார்பு நாடுகளும் ஐரோப்பாவை வெல்வதைத் தடுப்பதற்காக நாங்கள் போர் செய்ய வேண்டிய தேவையேற்படவில்லைச்
இவ்வண்ணமே ஐக்கிய நாடுகள் பற்றிய சம்பந்தமான தொடர்பு
379
களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தபோதிலும், அத்தொடர்பு திசெம்பருக்கு கள் கெந்துப்பொருத்தனையின் பின்னர், சில அலங்கோலமான முன், 1814.
நெருக்கடிகள் தவிர மிகுதியும் சமாதானமானவையாயேயிருந்தன. கனடாவின் எல்லைப்புறத்தின் இருமருங்கும் நிரந்தரமாகப் படைக் கலந் துறக்கக் காசில்றியும் மொனரோவும் ஒப்புக்கொண்டமை பெருமளவிற்கு இந்த நற் பேற்றுக்குக் காரணமாயது. அதன் விளை வாக, எல்லைப்புறம் மேற்கு நோக்கி மேலும் மேலும் நீண்டு கொண்டு போனபொழுது, எழுந்த பல பிணக்குக்கள் போரினல் முடிவு செய்யப்படும் நிலையை யடையவில்லை. வேருெரு முற்போக் கான நடவடிக்கை கிளாட்சன் அலபாமா சம்பந்தமான உரிமைகளை
மூன்ரும் பகுதியாரின் நடுத் தீர்ப்புக்கு விட ஒப்புக்கொண்டமை
யாகும். அதே போன்று ஆசிய ஆபிரிக்க ஆள்புலங்களைப் பங்கீடு
செய்வதில், பிரான்சுடனும், சேர்மனியுடனும் ஏற்பட்ட தகராறு கள், நூற்முண்டின் பின்னைய ஆண்டுகளில் சில சமயங்களில் மோச மான நிலையை அடைந்தன. எனினும் பிரித்தானியாவின் மிக முக்
கியமான இலட்சியம் சமாதானமேயெனக் கொண்ட சோல்சுபரி,
பிரபுவின் முயற்சியால் அத்தகராறுகள் சமாதான நடுவர் தீர்ப்
பாலோ உடன்படிக்கையாலோ தீர்க்கப்பட்டன.
விற்றேரியா இராணி காலத்தில் பிரித்தானிய விாபாரத்திற்கும்
கைத்தொழிலிற்கும் வியக்கத்தக்க செழிப்பைக் கொண்டு வந்த
1886 ஆம் ஆண்டுக்குப்பின், ஐரோப்பாவிலே மிகுந்த வலுப்பெற் றிருந்த பிரிவைச் சேர்ந்த சேர்மனி, ஒசுற்றியா, இத்தாலி ஆகிய முக்கூட்டுறவு நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலிருந்த நட்புறவுகள் பற்றி பலோடன் நாட்டுக் கிறே பிரபு தன் வாழ்க்கைக் குறிப்பில் பின்வருமாறு கூறுகின்றர் : * ஐரோப்பிய அரசியலில் உறுதிநிலையையும் அமைதியையும் தோற்றுவிக்கக் கூடிய முறையில், வலுப்பெற்றிருந்த சில நாடுகள் அங்கு மேம்பட்டிருந்த மைக்குப் பெரிய பிரித்தானியா கொள்கையளவில் எதிர்ப்புக்காட்டவில்லை. இத்தகைய நாடுகள் ஒன்று சேர்வதற்குப் பெரும்பாலும் பிரித்தானியா தனது சிறந்த விருப்பத்தைக் காட்டியே வந்திருக்கிறது. மேம்பட்டிருக்கும் நாடொன்று வலிந்து தாக்க முனையும் பொழுதும், தனது நலவுரிமைகள் பாதிக்கப்படு மென்று பிரித்தானியா உணரும்பொழுதும், வேண்டுமென்றே திட்டமிட்டுள்ள கொள்கையின் விளைவாக இல்லாவிடினும், தனது தற்பாதுகாப்புணர்ச்சியின் பாற்பட்டாவது, அரசுவலுச் சமநிலையென்று சொல்லக்கூடிய எதாவதோரி அமைப்பினல் பிரித்தானியா ஈர்க்கப்பட்டுவிடுகின்றது. '
1817.

Page 203
380
குடியேற்றம் பிரித்தானிய பேரரசு
உலக நிலையும், சமாதானமும் தீவுக்குள் புது ஒழுங்கால் ஏற்பட்ட பெரும் அரசியல் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாய் அமைந்துள. வெளிநாட்டு விவ காரங்களில் பிரித்தானியா முக்கியமாக அக்கறை கொண்டது யுத்தத்திலுமன்று , யுத்தத்திற்காக ஆயத்தஞ் செய்வதிலுமன்று; ஒவ்வொரு பத்தாண்டிலும் வியக்கத்தக்க விதமாக வளர்ந்துகொண் டிருந்த அதன் வெளிநாட்டு வணிகத்திலும் திரபல்கார், உவாற்றலூ சண்டைகளின் வாகை வீரர்கள் விட்டுச்சென்ற அதன் புதிய குடி யேற்றப் பேரரசின் அபிவிருத்தியினுலுமாகும். நெப்போலிய யுத்தங்களின் பின் பிரித்தானியாவில் தோன்றிய அளவு மீறிய குடித்தொகை, போதிய வேலையின்மை ஆகிய நெருக்கடிகள், எவ் வித கைத்தொழிற் காப்புறுதி முறையாலும் அந்நாட்களில் தீர்க்கப் படவில்லை. அதனுல் இலட்சக்கணக்கான ஆங்கிலேயரும், கொத்து லாந்தரும் குடியேற்ற நாடுகளுக்குச் செல்லும்படி துரண்டப்பட்ட னர். 19 ஆம் நூற்முண்டு முதற் பாதியில் புறக்குடியேறிகளுள் அநேகர் எங்கேனும் நிலம் தேடித் தங்களின் நலனுக்காக அதைப் பண்படுத்த விரும்பிய விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழி லாளிகளுமாவர். அக்காலப்பகுதியின் முடிவிலேதான் இங்கிலாந் தில் நாட்டுப்புறத்திற்குரிய வாழ்க்கையின் சிதைவும், தற்கால நகர வாழ்க்கையின் கவர்ச்சியும், நாட்டுப்புறத்தில் குடியேறவோ குடி யிருக்கவோ விருப்பமற்ற நகர்வாழ் இனத்தினராக ஆங்கிலேய இனத்தினர் மாறக்கூடுமோ என அஞ்சுதற்குரிய நிலையை உண்
டாக்கியது.
20 ஆம் நூற்றுண்டு தொடங்கியபொழுது குடியேற்ற நாடுகள் சுய ஆட்சி நாடுகளாகவும் செயலளவில் புதிய நாடுகளாகவும் உரு வாயின. ஐம்பது ஆண்டுகளாகவோ அல்லது மேலாகவோ உள் நாட்டு அலுவல்களைப் பொறுத்த அளவில் பூரண தன்னுட்சி அனு பவத்தை நுகர்ந்தபின் கனேடியர், அவுத்திரேலியர், தென் ஆபிரிக்கர் ஆகியோர் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்தத் தேசிய கண்ணுேட்டத்தின் அடிப்படையில் உலகத்தை நோக்கத் தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில் ஏதோ ஒருவகையான கூட் டாட்சி யாப்பில் பேரரசை நன்கு ஒன்றுபடுத்த முடியுமென 19 ஆம் நூற்முண்டு முடிபில் பேரரசு சார்ந்த இயக்க காலத்தில் பிரித்தானிய அரசறிஞர் தம் மனத்திற் கொண்ட நம்பிக்கைகள் கைகூட முடியவில்லை. 1914 ஒகத்து மாதத்தில் சேர்மனியுடன் யுத்தம் தொடங்கியதனுல் பேரரசு தனது அடுத்த பெரிய நெருக் கடியில் அமிழ்ந்தியது. அப்பொழுது பொதுநலன், நட்புறவு ஆகிய வற்ருல் ஏற்பட்ட பிணைப்பு பேரரசைப் பிரியாதபடி ஒன்று சேர்ந்து வைத்திருந்தது.

தானியச் சட்டங்கள்
அத்தியாயம் 1
அடக்குமுறையும் சீர்திருத்தமும் 1815-35. தானியச் சட்டமும் வருமான
வரியும். கொபெற்றும் பீற்றலூவும் ஆறு விதிகளும். தோரி 1ளின் சீர் திருத்தம். பிலும் அசுக்கிசனும். காசில்றீயும் கனிங்கும். வெலிந்தன் அமைச்சு. உவிக்குகளும் சீர்திருத்த முறியும். நகராட்சித் தொகுப்பகங்கள் விதியும் அடிமை முறை ஒழிப்பும், பெல்சியம்.
அரசர்கள் : II ஆம் யோச்சு , இறப்பு 1820 ; TV ஆம் யோச்சு, 1820
1830 ; TV ஆம் உவிலியம், 1830-1837.
அமைதிப் பொருத்தனையின் பின்னர் பொருட்களின் விலை திடீ ரெனக் குறைந்தமை அக்காலத்தில் கூலிப்பணங் கொண்டு பொருட் கள் வாங்கும் சத்தியைப் பெருக்கியபோதும் பல கமக்காரர்களை யும் வணிகர்களையும் வறுமையில் ஆழ்த்தி எண்ணிறந்த மக்களை வேலையில்லாது திண்டாடச் செய்தது. இப்போது ஆங்கில வரலாற் றில் முதன் முறையாக, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியானமையால் விலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப் பொருட்கள் அமெரிக்காவிலிருந்தன்றி ஐரோப்பாவிலிருந்தே இறக்குமதியாயின. மலிவான தானியவகை நாட்டிற் புகுவதைத் தடுக்குமுகமாகத் திட்டமிடப்பட்ட 1815 ஆம் ஆண்டுத் தானியச் சட்டம், வறியோர்களுக்கு மாத்திரமன்றிக் கைத்தொழிலிலிடுபட்ட
நடுவகுப்பாருக்கும், அவமதிப்பும் தீங்கும் இழைப்பது போலத்
தோற்றியது. வறியோர் தங்கள் உழைப்புக் கூலி முழுவதையும்
a அப்பம் மாத்திரம் வாங்குவதில் செலவழிக்க வேண்டியிருந்ததை இந்நடுவகுப்பார் விரும்பவில்லை. கைத்தொழில் முதல்வர்களும், தொழிலாளரும், அரசியல் ஆதிக்க முழுவுரிமையை நிலக்கிழார் வகுப்பினர் தங்கள் நலனுக்கே பயன்படுத்துவதை ஆத்திரத் துடன் எதிர்த்து நிற்பதில் முதன் முறையாக ஒன்று சேர்ந்தனர்.
மத்திய, கீழ் வகுப்பினர்களின் இந்த எதிர்ப்பியக்கம் விரைவில் மறைந்தொழிந்தது. ஆனல் முடிவாகவன்று. வறியவர்கள், உண்மை யாகவே, வெறும் இடுக்கண் காரணமாக அமைதியற்ற நிலையில் இருந்தனர். கொபெற்று, அந்து என்போரால் தூண்டப்பட்ட கிளர்ச் சியை அவர்கள் கைவிடவில்லை. இக்கிளர்ச்சி நான்கு ஆண்டுகளின் பின் பீற்றலூ அட்பூேழியத்திலும் ஆறு விதிகளிலும் முடிவுற்றது. ஆனல் நடு வகுப்பார் சிறிது காலம் அரசியலரங்கிலிருந்து ஒதுங்கி னர். வெற்றி வீரராகிய புருேகாமும் பாராளுமன்ற உவிக்குத் தல்ை
38

Page 204
382
1816,
வருமானவரி ஒழிப்பு
வர்களும் ஈட்டிய வெற்றியுடன் இவர்கள் திருத்தியடைந்தனர். இவ் வெற்றி வீரர் அரசாங்கத்திடமிருந்து வருமானவரி யொழிப்பைக் கட்டாயத்தின் பெயரில் பெற்றவராவர். தீவின் எல்லாப் பகுதிகளிலு முள்ள நகரம், கிராமம் ஆகியவற்றில் வாழும் மரியாதைக்குரிய மக் களிடமிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மனுக்களினல் கிளர்ச்சி நடத்தப்பட்டது. இவர்கள் அமைதிக் காலத்தில் வருமான வரி தொடர்ந்து வசூலிக்கப்படுவதை எதிர்த்தனர். முக்கியமாக எண்ணிறந்த பரிசோதகர்களும், ஒற்றர்களும் பார்வையிடுதற்காக, மனுதாரர்கள் தமது அலுவல்களைப் பகிரங்கமாக்குதல் வேண்டு மென நிர்ப்பந்திக்கும் முறைக்கு எதிராக மனுச் செய் தனர். அரசாங்கம் இக்கிளர்ச்சிக்குத் தலைவணங்க வேண்டிய தாயிற்று. இது மக்கள் விருப்பத்துக்கு இணங்கி மேற்கொள்ளப் பட்ட முதல் நடவடிக்கையாகும். ஆனல் அவப்பேருக இது முற்ரு கத் தவமுன திசையில் சென்றது. இது ஏற்கனவே அளவுக்கு விஞ்சி யிருந்த வரிப்பளுவை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதனுல் தனவந்தர்கள் பாதிக்கப்பட்டஅளவு வறியோர்களும் பாதிக்கப்பட் டனர். இந்நிலைமை 1842 இல் பீல் என்பான் வருமானவரியைப் புதுப்பிக்கும் வரையும் நிலைத்திருந்தது.
உயர் குடியைச் சேர்ந்த அரசியல் தரகர்கள் வகித்த ஊதியம் மிகுந்த பணிவிடைகளுக்கும், அவர்களின் ஒய்வுக்காலத்திற்கும் மறுபதவிகளுக்கும் ஊதியம் கொடுக்கவும், செல்வந்தரான நிதியா ளர்களுக்கு நாட்டுக்கடன் வட்டியிறுக்கவும், மறைமுக வரியீடு பயன்படுத்தப்பட்டது. ஆகவே, அரசியலில் ஈடுபட்டிருந்த பிரபுக் கள் தமது உறவினருக்கு ஊதியம்மிக்க அவசியமற்ற பதவிகளை அளிக்கும் வழக்கத்தைக் கொபெற்று கண்டித்தபோது, நாட்டுக் கடன் முறையும் அவனது பலத்த கண்டனத்துக்குள்ளாகியது. செல்வர்களை ஆதரிக்கவே வறியோர் மீது வரி விதிக்கப்படுவதாக ஒரளவு நியாயத்துடன் கூறப்பட்டது. அக்காலப் பருமாற்ற வாதிக்கு வரியுண்போர்' வரியிறுப்போர் நலனுக்கு முழு மாமுன வரும், வேருன, மனிதரல்லாத ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் போலவும் தோற்றினர். எதிர்க்கட்சியிலிருந்த உவிக்குகளும் பரு மாற்றவாதிகளும் வரியின் பாரத்தைப் பங்கிடுவதற்குப் பதிலாக, ஆட்குறைப்பாலும் வரிக்குறைப்பாலுமே மக்களின் பெருந் துயரைத் தணிக்க நினைத்தனர். ஆனல் சீர்திருத்த முறியின்பின் அவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்ததும் மிக அதிகமானேரின் அதிக மனமகிழ்ச்சிக்கு ஆட்குறைப்பு ஒரு சுலபமான வழியன்
றென விரைவிற் கண்டனர்.

உவிலியம் கொபெற்று
உவிலியம் கொபெற்று நிதியியலைப்பற்றியும் வேறு பல விடயங் களைப்பற்றியும்* ஆத்திரத்துடன் சாரமற்ற விடயங்களை ஏராள மாக எழுதியுள்ளான். எனினும் ஆங்கில வரலாற்றில் ஒரு முக்கிய மான நன்மை பயக்கும் பாகம் வகித்துள்ளான். பெயின் ஆரம்பித்த தும் பிற்று அடக்கி ஒடுக்கியதுமான தொழிலாளரிடையுண்டான அரசியல் இயக்கத்தை அவன் புதுக்கினன். ஒரு குடியாட்சி அல்லது யக்கோபிய இயக்கமாக அவன் அதைப் புதுப்பிக்கவில்லை. பாட்டாளிகளுக்கு வாக்குரிமை கோரி அவர்களின் துயரத்தைத் தணிக்க வாக்குரிமையையே வழியாக நோக்கும்படி கற்பித்து அதை ஒரு பாராளுமன்ற இயக்கமாகப் புதுப்பித்தான். 1816 இல் அவன் செல்வாக்கு உச்ச நிலையை அடைந்திருந்தபொழுது, அவன் தன் வாசகர்களைக் கலகம் செய்தல், வைக்கோற்போர் எரித்தல் ஆகிய போக்கிலிருந்து, அரசியல் பற்றிய உரையாடல்களுக்கும் அமைதியான அரசியல் நடவடிக்கைகளுக்கும் திருப்பினன் என்னும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகைத் தொழிலில் இளம்பருவத்தில் போாற்றலுடைய ஒரு பத்திரிகையாளனுயிருந் திராவிட்டால், வறியோர் தவித்துக்கொண்டிருந்த ஆற்றெணு நிலைமையை வேறெவரினும் மிகத்திறமையுடன் அவன் வெளிப் படுத்தியிராவிட்டால், அவனுடைய அறிவுரையில் அவர்கள் அதிகம் கவனஞ் செலுத்தியிருக்கமாட்டார்கள். நகரிலும் நாட்டி அலும், திருச்சபையிலோ அரசாங்கத்திலோ அதிகாரமுடைய எவ ரும் தங்களுக்கு விரோதமாகத் தொழில் முதல்வர்களுக்கு உடந் தையாய் இருப்பதாக அவர்களுக்குத் தோற்றியது. அவர்களுக்காக விசாரணை செய்வோர் இலர். மத்திய அரசாங்கத்திலோ, தலவாட் சியிலோ அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. தெரழிற்களத்தில் தங் கள் எண்ணிக்கையின் பலத்தை உணரச்செய்யத் தொழிலமயம் போன்ற சட்ட சாதனமில்லை. அவர்களின் சார்பில் பயனுறும் வண் ணம் முதலில் பேசியவன் கொபெற்று ஆவான்.
உவிலியம் கொபெற்று ஒரு பழைய கால ஆங்கிலேயனவன். பழை
மையையும், நன்மணம் கமழும் நாட்டுப்புறத்தையும், உழவரையும்
கலப்பையையும் வேய்ந்த குடிசையையும் விரும்பியவன். அந்
கொபெற்று என்பவன் 1826 இல் கைட்டு பாக்கு கோனர் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு எழுதினன் : “ பொல்லாத வாயாடியான புருேகாம் என்பவனுல் ஊழிக்குரிய பெருந்தலைவன் ’ எனக் குறிப்பிடப்பட்ட வனது சிலை இந்தப் பூங்காவிற்கருகில் இருக்கின்றது. இச்சிலை * ஆங்கிலமாத ரசிகள் ” விரும்பும் அம்மனக்கோலமுடைய அக்கிலசு என்பவனது சிலைக் கணிமையில் அமைந்திருக்கின்றது. இதனடியில் வெலிந்தன் எனனும் பெயர் பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஏனைய சிலைகளிலுள்ள எழுத் துக்களெல்லாம் மிக மிகச் சிறியனவாகும். நாட்டிலுள்ள வரிவிழுங்கிகளும் பணச் சூதாடிகளும் இந்தப் பூங்காவிற்குச் சென்று இச்சிலையின் முன் மண்டி யிடும் பொழுது இது பெருந் தலைவனின் உருவமேயென எண்ணுகின்றனர்!”
383

Page 205
384
802-1835.
உவிலியம் கொபெற்று
நியரை இழிவாகக் கருதுபவனும், வெறும் கொள்கையை வெறுப்ப வனுமாகிய அவன் யக்கோபியரின் விரோதியாகவும், பெயினையும் " மனிதனின் உரிமைகள்' என்ற கொள்கைகளையும் எதிர்த்தும் தன் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கியிருந்தான். ஆனல் ஆங் கிலேயரின் பழைய உரிமைகள் அபகரிக்கப்படுவதாக அவன் கண்டபொழுது அல்லது அபகரிக்கப்படுவதைக் கண்டதாக அவன் கருதியபொழுது மீட்சி அளிக்க ஆரவாரத்துடன் விரைந்து சென் முன். அவனது செய்கை அவனுடைய முன்னைய கூட்டுறவாளருக்கு அதிக கோபத்தையும் திகைப்பையும் உண்டாக்கியது. அவனது அரசியற் பதிவேடு ' புதர்ச் செடிவேலிகளினடியிலும், தொழிலகங் களிலும் எழுத்தறியா அவையோர்களுக்கு உரத்து வாசித்துக் காட்டப்பட்டது. மதிப்புக்குரியவர்கள்தாமும் அப்போக்கிரியின் கூரிய அறிவுள்ள தாக்குதலுக்காக அவனுடைய நூலைச் சில வேளை களில் வாசித்து, சிரித்து, அவன் ஆணவத்தைச் சபித்து, தாங்கள் வாசித்ததைப் பற்றி யோசனை செய்து கொண்டு, தங்கள் வழியே சென்றனர். இவ்வண்ணம் உயர்தர உலகத்தவர் வறியோரின் வாழ்க் கையையும், துன்பங்களையும் பற்றி முதன் முதலாக ஒரளவு தெரியப் பெற்றனர். அவனைத் தவிர ஏனைய யாவரும் தங்களைக் கொள்ளையடித்து வருத்தி இழித்துக் கூறிச் சதி செய்யக் கூடி யிருப்பதாகத் தோற்றியபொழுது வறியோர் அவனை எவ்வளவு விரும்பியிருப்பார்களென்பதை ஊகித்துக்கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கொடுமை செய்யும் பெருந்திரளானேசை எதிர்த்து நிற்க ஒரு கொடுமைக்காான் தேவைப்பட்டான். பழைய இங்கி லாந்து-வேளாளரும் தவறணைகளும் விளங்கியிருந்த காலத்து இங்கிலாந்து-கடைசியாக புகழ்பெற்றவனுயும் எதிர்த்துப் பய முறுத்த முடியாதவனுயும் செயலில் கோழைத்தனம் சிறிதும் இல்லாதவனுயும், பிணக்குகளின் போதன்றி ஏனை வேளைகளில் வன்மமற்றவனுயும் விளங்கிய இப்போக்கிரியைத் தோற்றுவித்தது.
கொபெற்று, 19 ஆம் நூற்முண்டுப் பிரித்தானியாவில் பல சாதன்ை களைப் புரிந்ததும் சிறிதும் தத்துவச் சார்பற்றதுமான பருமாற்ற வாதத்தின் பிதாவானன். அது ஒரு மனநிலையேயன்றி, ஒரு கோட் பாடு அன்று. வறியோர் அனுபவிக்கும் தீங்குகளைப் பற்றிய ஆத்தி ரம் அனேகமாகத் தாராண்மைவாதத்தைச் சார்ந்திருந்தாலும் அத ணுடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னும் குறைவாகவே அது தற்போக்குக் கொள்கையுடன் பிணைக்கப்பட்டிருந்தது. பல்வேருன அரசியலாளர் மூலமும், கட்சிகள் மூலமும் செயற்பட்டு, அது தொழிற்சாலை விதிகளை நிறைவேற்றி, தானியச் சட்டங்களை

பருமாற்றவாதிகள், உவிக்குகள், தோரிகள்
ஒழித்து, வாக்குரிமை, கல்வி, பேச்சு, பத்திரிகைச் சுதந்திரங்களை ஏற்கச் செய்து, ஈற்றில், கீழ்வகுப்பினர் மீது உயர்வகுப்பினர் கொண்டிருந்த மனநிலையை முற்முய் மாற்றியது. பெந்தாம், மில் என்பார் கொபெற்றிலும் கூடிய கூரறிவுடையவர்கள் எனினும் தங்கள் படிப்பறைகளிலிருந்தபடியே இங்கிலாந்தை, கொபெற்றி னுதவியின்றி அவ்வளவாக மாற்றியிருக்க முடியாது.
பாட்டாளிகள் இயக்க வரலாமுனது, கைத்தொழிற் புரட்சி அதற் குத் தன்முனைப்புக் கொடுத்த காலம் தொடக்கம் அரசியல் நட வடிக்கைகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்குமிடையில் இடைவிடாது மாறிமாறி ஊசலாடிக் கொண்டிருந்தது. உவாற்றலுT சண்டையின் பின்னர் அதன் நடவடிக்கை அரசியல் சார்ந்ததாக இருந்தது. அது இன்னும் தொழிற்சங்கங்களாக உயர்தர அமைவு எய்தவில்லை. கூடிய தொழிற் கூலி வேண்டும் என்னும் திருத்தி யடையாத அவாவைத் தவிர எநதப பொருளாதாரக் கோட்பாட் டெனே முன்றிட்டத்துடனே அது இன்னும் ஒன்றுபடுத்தப்பட வில்லை. 1815 தானியச் சட்டம், அரசியல் நடவடிக்கைக்கு ஒரு அறைகூவல்போலத் தோன்றியது. எவ்விதப் பொருளாதார அபி விருத்திக்கும் முதற்படியாகப் பாராளுமன்றச் சீர்திருத்தம் கோரப்
- -gl.
இதுவரையும் நடுவகுப்பார் நொதுமலராய் விலகிநின்றனர். கொபெற்று, அந்து என்பார் தலைமையில் ஒழுங்குகள் அமையப் பெருத பாட்டாளிகள், உயர் குடியினர்க்கும் அரசாங்கத்தின் முழு வலுவுக்குமெதிராகச் சீர்திருத்தப்போர் புரிந்தனர். உவிக்குகள் அல்லது உயர்குடித் தாராளர் கட்சியினரும், பாராளுமன்றச் சீர் திருத்தப் பிரச்சினைபற்றித் தம்முட் பிளவுபட்டிருந்தமையால் செயலற்று வெறும் காட்சியாளராக வாளாவிருந்தனர். உவிக்குகள், தோரிகளின் அடக்குமுறைகளைக் கண்டித்தனர். பருமாற்றவாதி களின் பிரசாரத்தின் தொனியையும் அதேயளவு வெறுத்துள்ளனர்.
உருெபேட்டு ஒவன் என்பான் தொழிலாளர் நலனுக்காக அரசியல் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை எப்பொழுதுமே இகழ்ந்து வந் திருந்தான். அவன் இவ்வமயத்திற்கூட ஒரு பரோபகார முதலாளியாக விருந்தானேயன்றி, சனநாயகத் தலைவனுக விளங்கவில்லை. அமைதி வற்பட்ட முதற் சிலவாண்டுகளில், தொழிற்சாலைகளில் வேலைசெய்வோரது வாழ்க்கை நிலுைமைகளையும் கல்வியறிவையும், விருத்தி செய்வதனல் முதலாளி வர்க்கத் துக்கும் தேசத்துக்குமே நன்மை எற்படுமென்று, தன்னேடொத்த முதலாளி களையும் அமைச்சரவையையும் பாராளுமன்றத்தையும், தூண்டிக்கொண்டிருந் தான். அவன் தனது சொந்த நியூ இலனக்கு ஆலைகளின் மூலம் இவ் வாருன விருத்திகளைச் செய்து பயன்பெறலாமென்பதை நிரூபித்துமிருந்தான்.
அவன் கூறியதை அப்பொழுது நாம் செவிமடுத்திருப்போமாயின், இன்று
நாம் இதனினும் மாறுபட்டதோர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம்.
385.
87-89.

Page 206
386
ஒக. 16, 819.
பீற்றலூ
எனினும், அதைச் சீர்படுத்தும் ஓர் உறுதியான வழியைத் தாங்க
ளாகக் குறிப்பிடக்கூடியவர்களாயிருக்கவில்லை. எனவே செல்வாக்கு,
இலிவர்ப்பூல், வெலிந்தன், காசில்றி என்பாரின் தோரி அரசாங்கத் தின் கையிலேயே நிலைத்திருந்தது.
அவப்பேருக, உவாற்றலூவிலும் அமைதி மாநாட்டிலும் வெற்றி கண்ட வீரர்களுக்கு, உள்நாட்டில் அவர்கள் தீர்க்கவேண்டியிருந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான வழிவகைகளைக் காணும் ஆற்றல் இருக்கவில்லை. கடும் அடக்குமுறைகளைக் தவிர அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருளாதார அரசியற் கழுவாய் அவர்களிட மிருக்கவில்லை. எண்ணிக்கையாற் குறைந்த பிற்றின் யக்கோபிய ருக்கு எதிரான அடக்குமுறை போர்க்காலத்திலே சிறுபான்மை யினருக் கெதிராகப் பயனளித்தது. இப்போது அந்நடவடிக்கை அமைதிகாலத்தில் ஏறக்குறைய நாட்டின் பெரும்பான்மையோ ருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. கலகக்காரர் இராச துரோகத்திற்காக, மன்றில் விசாரணை செய்யப்பட்டனர். அச்சிடு வோரும், நூலாசிரியர்களும் சட்ட எதிர்ப்புக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டனர். நடுவர்கள், மத்திய வகுப்பினரா யிருந்தமையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இகழ்ச்சிக் குரிய ஒலிவரைப் போன்ற ஒற்றர்களும் ஏவன் முகவர்களும் பருமாற்றவாதிகளினிடையே அரசாங்கத்தினுல் அனுப்பப்பட்டார் கள். ஆளுரிமை விதி நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லாப் பருவ வெளியிட்டுப் பிரதிகள்மீதும் விதிக்கப்பட்ட 4 பென்சு வரி பருமாற்றவாதிகளின் பிரசாரங்களை மாத்திரமன்றி எவ்வித தகவலையும் இயன்றவரை வறியோர்க்குக் கிட்டாததாக்கிற்று. ஒரு பென்னி பெறுமதியான பத்திரிகையின் ஆகக் குறைந்தவிலை 1836 வரைக்கும் 5 பென்சாகும். அறிவாழம் பொருந்திய பாராளுமன்றத் தின் தீர்ப்பு இது.
பொதுக்கூட்டங்களும் பொதுவாகத் தடுக்கப்பட்டன. மாஞ்செத் தர் என்னும் நகரில் சென் பீற்றர் வெளியில் மிகப் பெரிய அளவி லும் ஒழுங்கான முறையிலும் பாட்டாளிகள் ஆண்களும் பெண் களுமாகப் பாராளுமன்றச் சீர்திருத்தம் வேண்டிக் கூடினர். அப் பொழுது நீதிபதிகள் திடீரெனத் திகிலடைந்து அவர்களைத் தாக்க வேளாண்படையை ஏவினர். இப்படையினர் பன்னிருபேரைக் கொன்று இருபாலாரையும் கொண்ட நூற்றுக் கணக்கானேசைப் படுகாயப்படுத்தினர். கூட்டங்கூடுதலை முற்முகத் தடுத்திருந்தால் உத்தமமாயிருந்திருக்கும்.

கேற்றே வீதிச் சதி
அமைச்சு விசாரணை செய்யப் பொறுத்திருக்காது, இந்தத் துன்ப கரமான தவற்றுக்கு அங்கீகாரமளித்தது. நாட்டின் பெரும்பகுதி யின் கருத்தோ வேறு. பருமாற்றவாதிகளும் பாட்டாளிகளும் மாத்திரமன்றி தங்கள் உயர்ந்த நாட்டுப்புற இருக்கைகளிலிருந்த உவிக்குகளும், தங்கள் வசதியான கூட்டங்களிலிருந்த வணிகர் களும், தங்கள் உடன் குடிகளின் உணர்ச்சியற்ற படுகொலையைக் கண்டு அச்சப்பட்டனர். உவாற்றலூ வெற்றியின் பொருட்டு நாடு செலுத்த வேண்டிய நன்றிக் கடனை இப்படுகொலை தள்ளுபடி செய்தமையால் இதற்குப் பீற்றலூ எனப் பெயரிடப்பட்டது. இது எல்லா வகுப்பினரதும் எல்லாக் கட்சியினரதும் வளர்ந்துவரும் சந்ததியாரின் மனதைப் பெரிதும் பாதித்தது. ஏனெனில், இது, யக்கோபியருக்கு மாருன தோரிகளின் வெறும் எதிர்மறையான கொள்கை நாட்டை இட்டுச் சென்ற குருட்டு வழியின் முடிவைப் புலனுக்கியது. ஆனல் அவ்வேளையில் அக்கொள்கைக்கு மாற்றுக் கொள்கை இருக்கவில்லை. இணக்கம் இல்லாதிருக்கவேண்டியிருந்த மையால் அந்தக் குளிர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஆறுவிதி களைக் கொண்டு ஒழுங்கு மிகக் கவனமாகப் பேணப்படவேண்டிய தாயிற்று.
முழு மந்திரத்தினரையும் இராப்போசனத்தின் பொழுது கொலை செய்யத் திசிலூட்டு என்பானின் தலைமையில் பலாத்கார பருமாற்ற வாதிகள் திட்டமிட்ட "கேற்றே வீதிச் சதி” அடுத்த பெப்புருவரி மாதம் நடைபெற்றது. அரசாங்கத்திற்குச் சாதகமான மக்கள் அபிப்பிராயம் கணிசமானதாகவிருந்தது. ஆனல் சரியாலோசனை யின் பயங்கரத் தன்மையைச் சிந்திக்கும்பொழுது அவ்வபிப் பிராயம் நிலைக்காமற் போனது ஆச்சரியத்துக்குரியது. நான்காம்
யோச்சின் அமைச்சரால் கருேலின் இராணிக்கெதிராக ஏற்பாடு
செய்யப்பட்ட நடவடிக்கைகள் முன் எக்காலத்திலும் பார்க்க அவர் களே மக்களின் வெறுப்பிற்குள்ளாக்கியது. நாட்டின் குடிகளுக்கோ, இராணியின் ஒழுக்கத்தைப் பற்றிச் சற்றே ஐயுறவு இருந்தாலும் அரசனின் ஒழுக்கத்தைப் பற்றி அவர்களுக்குச் சிறிதும் ஐயப்பாடி ருக்கவில்லை. ஒரே காலத்தில் அவனுக்கு இரு மனைவிகள் இருந்தன ரென்னும் உண்மை பொதுவாக அப்போது அறியப்படாவிடினும் பெரிதும் ஊகிக்கப்பட்ட ஒன்ருகும். அரசன் பலருமறிய வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்தும்பொழுது, நாட்டுப் பெருமகார் முன்னிலையில் அரசியின் நற்பெயருக்கெதிராகச் சத்தியஞ் செய்ய அரசனுடைய முகவர் இழிவான இத்தாலிய சாட்சிகளை வருவித் தமை ஆங்கில தரும உணர்ச்சிக்கு மானக்கேட்டை விளைவித்தது. பொதுமக்கள் சபையைச் சேருமுன் "துன்ப தண்டனைகள் முறி”
நீக்கப்பட்டது. யோச்சு குறாச்சாங்கு என்பவனைத் தலைவனுகக்
1830.
387

Page 207
388
1822
魏822–1829。
இராணியின் விசாரணை
கொண்ட இக்காலத்திற் பிரபலமானவரான நையாண்டிப் படம் சித்திரிப்போர், கிலிறே காலத்தில் தம் முன்னேர் பொக்சு என் பானையும் யக்கோபியரையும் தாக்கிய அதே வன்கண்மையுடன் நான்காம் யோச்சின் அப்போது அழகு இழந்த உருவத்தையும் கூச்சலிடும் பெண்களின் உடல்களை வேளாண்படையினரது குதிரை
கள் மிதித்துச் செல்வதையும் சித்திரித்தார்கள்.
இராணியின் வழக்கு விளக்கக் குழப்பத்தின்பின் அரசாங்கத்துக் குப் படுதோல்வி அளித்து நாட்டின் பண்பை மேம்படுத்தி மக் களின் உளநிலையைத் திருத்தம் செய்ததன்பின்னர் தோரி அமைச்சு பழைய நன்னிலையை மீண்டும் பெற ஆரம்பித்தது. இதனுல் அவர் கள் தங்கள் கட்சிக்கு இன்னும் பத்தாண்டுகளுக்கு அதிகாரம் கிடைக்கப்பெற்றனர். இந்நன்னிலை எய்தும் வாய்ப்பை மூன்று நிகழ்ச்சிகள் அவர்களுக்கு அளித்தன. முதலாவதாக வணிகத்தில்
ஏற்பட்ட நன்னிலை ; இரண்டாவது பாராளுமன்றத்தில் அவர்களின்
ஒரே போட்டியாகிய உவிக்குக் கட்சியின் தேய்வு, மூன்ருவது காசில்றியின் மரணம். காசில்றியின் பேராற்றல் வெளிநாட்டலுவல் களிலேயன்றி உண்ணுட்டு அலுவல்களிலன்று. மந்திரத்தில் ஓர் உறுப்பினனுக இவன் இருந்தமையால் புதிய தாராளத் தோரி வாதத்தின் வலிமை படைத்த பிரதிநிதியான கனிங்கு உயர்வு பெற முடியாமற்போயிற்று.
தொடர்ந்து பின்வந்த எட்டு ஆண்டுகளில் அண்மைக்காலத்து யக்கோபியருக்கெதிரான உறுதியான அமைப்பு மாத்திரமன்றி 1689 தொடங்கி மக்கள் அறிந்திருந்த பிரித்தானிய யாப்பும் எதிர்பாராத இடங்களில் பிளவு ஏற்பட்டுச் சீர்குலைய ஆரம்பித்தது. தேர்தல் முறைமை பொது மக்களிற் பெரும்பாலோர்க்கு நேர்பிரதிநிதித் துவம் அதிகம் அளிக்காத போதிலும், அக்காலத்துப் புதிய உளப் பாங்கைப் பிரதிபலிப்பதில் பாராளுமன்றம் முற்ருய்த் தவறிவிட வில்லை. பாழ்பரோ ஒழிப்பு உவிக்குகளுக்கு நீதியான வாய்ப்பை அளிக்கும்வரை பழைய இரு கட்சி முறைமை புத்துயிர் பெற முடிய வில்லை. ஆனல் கூட்டுமுறை நாட்டு மக்களின் கருத்து வேறுபாடு களைத் தெரிவிப்பதில் ஓர் அளவு உதவிற்று. தோரி மந்திரத்திலேயே இரு தொகுதியினர் இருந்தனர். கனிங்கும், அசுக்கிசனும் கூடிய தாராளமான நோக்கினை வேண்டி நின்றனர். வெலிந்தனும் வய
" தாராண்மை ” என்பது 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதிவரை ஒரு கட்சியைக் குறிக்கும் சொல்லாக இருக்கவில்லை. அது பருமாற்றவாதம் உவிக்கு, அல்லது கனிங்கைப் பின்பற்றுந் தோரி ஆகியதொரு கட்சியைச் சேர்ந்த முன் னேற்றமான கருத்துக்களைக் கொண்டவொரு மனிதனைமட்டுமே குறித்தது.

தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெறல்
தான எல்தன் பிரபுவும் சிறிதும் விட்டுக் கொடுக்க விரும்பாதா ராய்ப் பழைமையை வேண்டி நின்றனர். முதலமைச்சர் இலிவர்ப் பூலும் ஊகமுடையவனுன பீலும் அமைதி பேண முயன்றனர். எனினும் வெலிந்தனின் முதல் அமைச்சில் பழைய காவல் வீரர் தங்கள் எதிரிகளை வெளியே துரத்திய பொழுது, நிகழ்ச்சிகளின் வேகத்தால் சில நடவடிக்கைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத் தப்பட்டனர். இவற்றைக் கனிங்கினுல்தானும் நடைமுறைக்குக் கொண்டுவர இயலாதிருந்தது.
தோரி ஆட்சியின் கடைசி எட்டு ஆண்டுகளின் பெறுபேறுகள் முக்கியமான பல சீர்திருத்தங்களும், யக்கோபியருக்கெதிரான தோரிக் கட்சியின் குலைவுமாகும். இக்கட்சி ஒரு சந்ததி காலத்திற்கு மேல் ஆட்சி செய்தது. இதனிடத்தில், பாராளுமன்றச் சீர்திருத்தப் பிரச்சினை காலத்தில் ஒரு புதிய உவிக்குதாராளர் கட்சியும் ஒரு புதிய பழைமை பேண் கட்சியும் தோன்றின. வருங்காலவவதியில் இவை மாறிமாறி நாட்டை ஆட்சி புரிந்தன. இவ்வாருக, நூதன மான இக்குழப்ப காலத்தின் பின் சிக்கல்கள் அதிகரித்தன. என்ரு
இலும், திருத்தப்பட்ட பாராளுமன்றத்தின் விரிந்த வாழ்க்கையிற்
சம்பந்தப்பட்ட வகுப்பினர் தொகையும் நலன்களும் பெருகின. எனினும், பாராளுமன்ற வாழ்க்கை பழையபடி இருகட்சி முறைக் குத் திரும்பியது.
தோரி ஆட்சியின் கடைசி ஆண்டுகளைக் குறிப்பிடத்தக்கதாகச் செய்த தாராளமான நடவடிக்கைகளில் மிக முக்கியமானவைகளி லொன்று தொழிலாளர் சங்க நடவடிக்கையைச் சட்ட விரோத மானதாகச் செய்த பிற்றுவின் கூட்டு விதிகள் விலக்கப்பட்டமையா கும். அதற்குக் காரணம் அமைச்சர்களில் எப்டிகுதியாருமல்லர் ; பொது மதமாற்றமும், தனிச்சிறப்புக்குரிய பிரான்சிசு பிளேசு என் னும் தையற்காாப் பருமாற்ற வாதியொருவன் யோசேப்பு இயூம் என்னும் பாராளுமன்றப் பருமாற்றவாத உறுப்பினர் மூலமாக ஆற் றிய புத்தி நுட்பமான செயல்களுமாகும். பிளேசு என்பான் வட பகுதியிலுள்ள தொழிலக மாவட்டங்களில் மனுக்களையும் சாட்சி களையும் ஒழுங்கு செய்து தனது கருத்தைப் பாராளுமன்ற உறுப் பினர் மனத்திற் பதியச் செய்யவும் அதற்கு அவர்களை இணங்கச் செய்யவும் அவர்களை உவெசுத்துமினித்தருக்கு வருவித்தான்.
உண்ணுட்டுச் செயலாளராகப் பீல் காட்டிய முனைப்பின் பயனகத் தொடர்ச்சியாகப் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இலங்கசயர் தொழிலதிபரின் மகனன இளைய உருெபேட்டு பீல், அரோ, கிறைத்து சேச்சுக் கல்லூரிகளின் ஆட்சியிலிருந்த தோரித் தொகுதிக்கு அறி முகம் செய்து வைக்கப்பட்டான். அவனின் வாலிபப் பருவத்தின் முற்பகுதியிலேயே இங்கிலாந்திலுள்ள நிலப் பிரபுக்களதும்
389
828-1829.
1830-1832.
1824-1825.

Page 208
390
பீல் சட்டச் சீர்திருத்தம
குருக்குழாத்தினதும், அயலாந்தில் உச்சநிலையிலிருந்த கட்சி யினதும், பிரியமான அரசியல் முகவணுகவும் அவர்கள் சார்பில் பேசுபவனுகவும் ஆயினன். ஆகவே அவனின் வாழ்க்கை முழுவதும் நீடித்த தொடர்புகள் பழைய மாதிரித் தோரிகளின் மிகச் சிறப்பான காலத்தில் உருவாக்கப்பட்டன. தீபகற்பத்திற்குரிய போர் அக் காலத்திற் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. பத்து ஆண்டு களின் பின் பொதுப்பணியில் சேர்ந்திருப்பானுகில் கனிங்கு அசுக்கிசன் ஆகியோரைப் போலத் தானும் தாராளமானபழைமைபேண் கொள்கையினன் என்ற உண்மையைக் கண்டுபிடித் திருப்பான். உண்மையாகவே கடைசியாகப் போராடிக்கொண்டிருந் தவர்களுள் அவன் வகித்த பொறுப்புறுதியான நிலைமை, இடர் ஏற் படும் காலத்தில் அவ்வரிசையினர் உறுதியாய் நிற்பதை நேர், எதிரிகளுடன் அவன் போர் புரிந்தால் ஏற்படக்கூடியதிலும் பார்க்கக் கடினமாக்கியது. தான் தொடங்கிய முயற்சிகளின் முடிவை முன்கூட்டியே உணரும் ஆற்றல் கோமகன் பீலுக்கு இல்லையென வெலிந்தன் வருக்கத்துடன் ஒருமுறை தெரிவித்த தாக ஓர் அறிக்கை உண்டு. பீலேப் பற்றிய இந்த விமரிசனம் அரசியல்வாதி என்ற முறையில் வெலிந்தன் கோமகனுக்கே அதிகம் பொருந்தும். ஆயினும் " தான் எங்கே போகிருனென அறியாதவனைப் போல வேறெவரும் அவ்வளவு தூரம் போவ தில்லை' என்ற குருெம்வெலின் கூற்றைச் சேர்த்துக் கொண் டால் இவ்விமர்சனம் நியாயமற்றதன்று. வேகமாக மாறிக்கொண் டிருந்த அக்கால இங்கிலாந்தின் சிறப்புப்பண்பு, அதன் மிகச் சிறந்த அரசறிஞர்கூட நான்கு ஆண்டுகள் கழித்து நடக்கவிருந் ததை முன்னறிய முடியாமையாகும்.
1822 இல் உள்ளூர் அலுவலகத்தில் சிட்மது பிரபுவின் பதவியைப் 96) வகிக்கத் தொடங்கியவுடன் பருமாற்றவாதப் பாட்டாளிகளுக் கெதிராக அரசாங்கம் பயன்படுத்திய ஒற்றறி முறைகளும் அடக் குதல் முறைகளும் முடிவடைந்தன. வகுப்பினர்களுடனும் கட்சிகளு டனும் நற்முெடர்புகள் உண்டாகும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. குற்றத்தடுப்புச் சட்டச் சீர்திருத்தத்திற்காகப் பெந்தாம், உரோமிலி, சேர் யேமிசு மாக்கின்தோசு என்போரால் பல ஆண்டு களாகக் கொண்டு நடத்தப்பட்ட அறப்போர்த் தத்துவங்கள் சட்ட உருவம் பெற்றன. நூற்றுக்கணக்கான வெவ்வேறு குற்றங்களுக்குரிய மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. முடிவாக 1829 இல் அவன் செய் திறனுள்ள, போர்ப்படையினரல்லாத பொலிசு அமைப்பொன்றை எங்கள் சரித்திரத்தில் முதன் முறையாக நிறுவினன். அவர் களைப் பொதுமக்கள் அவனது இரு பெயர்களுள் ஒன் (ரல் அன்புடன் அழைத்தனர். சாதாரண குற்றங்களுக்கு ஏற்ற

பொலிசு : அசுக்கிசன்
நடவடிக்கைகள் எடுப்பதால் ஏற்படும் சமூக நலனுக்குச் சமமாகப் பருமாற்றவாதிக் கூட்டத்தினரை அவர்கள் கண்காணிப்பதால் அரசியல் நலனும் ஏற்பட்டது. ஏனென்றல் ஈற்றில் படைவீரர் களின் இடம் குடிமைப் படையால் நிரப்பப்பட்டுவிட்டது. இவர் களது ஆயுதம் ஒரு சிறு தடியாயிருந்தபோதும் மக்கள் கூட்டத்தை எதிர்த்து நிற்கவும், படைவீரர்களைப் போலன்றி, குழப்பத்தின் முதற்குறி” தோன்றியவுடனேயே அதனை அடக்க அத்தடியை உப யோகிக்கக் கூடியவர்களாயுமிருந்தனர். இப்படை தன் கடமை களே நிறைவேற்றுமிடங்களில் இனிமேல் கோடன்பிரபு கலகங்களும், பீற்றலூ அட்Nேயங்களும் இருக்கமாட்டா. இரு ஆண்டுகளின் பின்னர் பிறித்தல் நகரைத் தீக்கிரையாக்கிய திருத்தமுறிக் கலகங் களைத் தக்க தருணத்தில் ஏற்ற நடவடிக்கை எடுத்திருந்தால் நூறு புதிய பொலிசார் இலகுவாக நிறுத்தியிருக்கக்கூடும். இலண்டன் மாநகரத்தில் முதலாவதாக நிறுவப்பட்ட இப்புதிய பொலிசு சகலரதும் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சந்ததிகாலத்தில் நாடெங் கணும் தாபிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே அவர்களுடைய உடை சாதாரண மக்களனியும் நீல நிறமானதே முதலாண்டு களில் அவர்கள் எஃகுக்குல்லாய் அணியவில்லை; பெலமான உயர்ந்த தொப்பிகள் தான் அணிந்திருந்தனர்.
அதே காலப் பகுதியில் நாட்டின் நிதிப்பொறுப்பை அசுக்கிசன் ஏற்முன் வருமானத்தை நோக்கினும் சரி, காப்பை நோக்கினும் Fif, இறைமுறையானது, ஒழுங்கற்ற கொள்கைகளாகவும்
தொடர்பற்ற பரிசோதனைகளாகவுமிருந்தது. இது வணிகத்தை
ஒவ்வொரு திருப்பத்திலும் தடைசெய்வதாயிற்று. அசுக்கிசன் கட் zņGIMIT வியாபாரத்தைப் பூரணமாக நடைமுறைக்குக் கொண்டு வர விரும்பவில்லை. அரசாங்க வருமானத்தைக் கூட்டுவதற்காக வரு மானவரி மீண்டும் விதிக்கப்படுவதைப் பொதுமக்கள் எதிர்த்ததால் அவன் தனது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. எனினும் இறைமுறைப்பட்டியலை மிகவும் குறைத்து, எஞ்சிய வற்றை ஒழுங்குபடுத்தினன். ஒரேயொரு பொருள் மாத்திரம் மிக முக்கியமானதாயிற்று. பாழ்பரோக்கள் மூலம் அதிகாரத்தின் முழு வுரிமையும் நாட்டின் உயர்குடிப் பிறந்தோரில் ஒரு பகுதியாரிட மிருக்கும் வரையும் ஆங்கில அரசியலில் தானியமே அரசனுக விளங்கியது.
அசுக்கின் பழையமுறைக் கப்பலோட்ட விதிகள்மீது முதல்
முறையாகப் பெரும் மாற்றங்களைச் செய்தான். இவ்விதிகள் பிரித்தா 1928
னியத் துறைமுகப் பட்டினங்களில் நூற்றைம்பது ஆண்டுகளாகப்
39.

Page 209
392
1849.
1822.
காசில்றீயும் கனிங்கும்
பிரித்தானிய கப்பற்றெழிலுக்கு முழுவுரிமைச் சிறப்புச் சலுகை அளித்து வந்தவை. அதன் காலத்திலே ஆதம் சிமிது என்பால்ை புகழ்ந்துரைக்கப்பட்ட இந்தச் செயற்கை ஆதாரத்தைப் பிரித்தா னிய வணிகக் கப்பற்படையின் பூரண வளர்ச்சியடைந்த வலுக் காரணமாகத் தவிர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. கட்டிலா வியாபாரம் தேசியக் கொள்கையென ஒப்புக்கொள்ளப்பட்ட பிந் திய காலப் பகுதியிலும், காப்பு இறைமுறைகளில் எஞ்சியவை ஒழிக்கப்பட்ட பொழுதும் கப்பலோட்டல் விதிகளை ஒழிக்கும் செயன்முறை பூரணமாக்கப்பட்டது. கப்பலோட்டல் விதிகள் அளித்த முழுவுரிமை ஒழிக்கப்பட்டமை பிரித்தானியக் கப்பல் அதிபர்களையும், கப்பல் செய்வோர்களையும் விழித்தெழுந்து தங்கள் முறைகளைத் திருத்தும்படி கட்டாயப்படுத்தியது. விற்றேரியா இராணி காலத்துப் பிரித்தானியாவின் கைத்தொழில் ஆதிக்கம் காரணமாகக் கடலில் நீராவியும் இரும்பும் முக்கியத்துவம் பெற்றமை முற்முக அதற்குச் சாதகமாயது. சிறப்பாக மரம் பெற்றுக்கொள்வ தில் தொல்லை இருந்தமையே இதற்குக் காரணமாகும். உலகத் தின் அதிகமான துறைமுகங்களில் விலைப்படக்கூடிய நிலக்கரி பிரித்தானிய கப்பற் ருெழிலுக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தது. அந்த நூற்முண்டின் எஞ்சிய காலம் முழுவதும் எங்கள் வணிகக் கப்பற் படை முக்கியமான போட்டியாளரில்லாது தொடர்ந்து வளர் ந்தது.
மந்திரத்தின் தனியொருவனின் மிக வலுவாய்ந்த சக்தியாகக் காசில்றியின் செல்வாக்குக்குப் பதிலாகக் கனிங்கு என்பானின் செல்வாக்கை நிலைநாட்டியமை உண்ணுட்டு அலுவல்களில் மாற்றம் வேண்டிய சக்திகளுக்கு ஊக்கம் அளித்தது. ஒருவர் பின்னெருவ ராக வந்த இவ்விரு பெருமனிதரின் சிறப்பு வட்டாரமாகிய வெளி நாட்டு அலுவலகத்தில் கனிங்கு, காசில்ரீயின் கொள்கைகளை நேர் மாருக மாற்றவில்லை. தன்னுடைய அடக்க ஒடுக்கமான உயர் குடிப்பிறந்த முற்பதவியாளரின் முறைக்கு எதிராக அவன் பொதுமக்கள் சபையை மாத்திரமன்றிப் பாமர மக்கள் உள்ளங் களையும் கவர்வதில் ஆர்வமுடையவனனன். கிரன்வில்லு, காசில்ரீ என்பாரின் ஆட்சியிற்போன்று வெளிநாட்டலுவல்கள், முதிர்ந்த அரசறிஞர் மட்டுமே பெற்ற தனிப்பட்ட திறமைக்குரியனவாயிருப் பது ஒழிந்தது. வெளிநாட்டுப் பூட்கைப் பிரச்சினைகள் பொதுத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வரையும் கனிங்கின்
1. இந்நூல் பக்கங்கள் 83-4 ஐயும் குறிப்பையும் பார்க்க.

காசில்றீயும் கனிங்கும்
விளம்பரப் புதுமுறைகள் பாமேசுதன், கிளாட்சன், திசரெலி என் போர் கையில் வளர்வதே நியமமாயிருந்தது. அந்நூற்முண்டின் முடி பில் சோல்சுபரி பிரபு காசில்றியின் கூடிய அமைதியான முறைக ஒரளவு மீண்டும் பின் பற்றினன்.
ஆகவே கனிங்கின் வருகையுடன், அக்காலக் குடியாட்சி முறைக் கும் அறிவுதேடும் உளப்பான்மைக்கும் ஏற்ற முக்கியமான முறை மாற்றம் ஏற்பட வேண்டியதாயிற்று. பிரித்தானிய வெளிநாட்டுப் பூட்கையின் செல்கதி விரைவுபட்டபோதும் அதன் செல்திசை, மாற்றம் அடையவில்லை. அத்துடன் அதன் தாராளத்தன்மையும் பிரித்தானிய நோக்கும் மிகத் தெளிவாக வற்புறுத்தப்பட்டன.
சிறப்பாக “ஒரு நல்ல ஐரோப்பிய " கிைய காசில்றீ சர்வதேசப் பூசல்களை ஒழிப்பதற்கு வல்லரசுகள் மாநாடு பருவந்தோறும் கூட்டுவதை ஆதரித்தான். ஆனல் வல்லரசுகள் மக்களின் பிரதியாள சாயும் அரசுகள் மனித இனங்களின் பிரதிநிதிகளாயும் இருக்கவில்லை. ஆதலால் தற்கால நாட்டுக் கூட்டவையை நெருங்கி ஒத்திருக்கக் கூடியதாக வளர்ந்து கொண்டுவர இந்த மாசபைகளுக்கு வாய்ப் புக் கிடைக்கவில்லை. இதற்கு எதிரிடையாக ஒசுற்றிய மெற்றெணிக் கினதும், தன் வாழ்வின் இறுதிப் பிற்போக்கான பருவத்தையடைந் திருந்த சார் அலெச்சாந்தரினதும் ஆதரவுடன் நடைபெற்ற மாசபை கள், சுதந்திரத்தினதுந் நாட்டினவாதத்தினதும் முதலெழுச்சிகளை அடக்க உடன்படிக்கை செய்துகொண்ட புனிதக் கூட்டுறவு அரசாங் கங்களின் சீர்திருத்த எதிர்ப்பை நீக்குவதற்குத் தவமுன வழியிற் பயன்படுத்தப்பட்டன. வெளிநாடுகளின் உண்ணுட்டுக் காவற் பிரச் சினைகளில் இங்கிலாந்து ஈடுபடுவதை விரும்பாத காசில்றி மாசபை கண்டத்தின் அரசியல்களில் பங்கெடுப்பதைத் தன் விருப்பத்திற்கு மாருகவே குறைத்துக் கொள்ள எண்ணிக்கொண்டிருந்த பொழுது அளவுமீறிய வேலையால் உண்டான அயர்வினல் தற்கொலை செய்தி றந்தான். ஆனல் கிரேக்க, இத்தாலிய சுயவாட்சி இயக்கங்களுக்கு எதிராக அவன் காட்டிய வெறுப்பு, அவனுக்குப் பின் பதவியிலமர்ந் தோன்' கையாண்ட தாராள வழியை அவன் பின்பற்றியிருக்க மாட் டான் என நாம் கருத இடம் கொடுக்கிறது.
ஒரு விதத்தில், காசில்ரீயின் பணியைத் தொடர்ந்து நடத்திய கனிங்கு, கண்டத்திலுள்ள பிற்போக்குக் கட்சியினருக்குக் கடு மெதிர்ப்பை ஏற்படுத்தினன். யக்கோபியவாதத்திற்கும் வல்லாண் மைக்கும் இடைநடுவேயுள்ள நிலையை ஆங்கில அரசு விரும்பிற்றென அவன் காசில்றியிலும் பார்க்கக் கூடுதலாக அறிந்திருந்தான். வாலி
காசில்றீ பற்றிய விவரங்களுக்கும் 1815 இல் ஐரோப்பாவின் ஒழுங் கமைப்புப் பற்றிய விவரங்களுக்கும் இந்நூல் பக்கங்கள் 330-32 பார்க்க.
15-R 5931 (11162)
393
185-1822.
1822.

Page 210
394
1823.
இசுப்பெயின்
பப் பராயத்தில் அவனை மிகச் சிறந்த யக்கோப்பிய எதிரியாகத் தூண்டிய அதே பிரித்தானிய உணர்ச்சி, நடுவயதில் வெளிநாட்டு அமைச்சனென்ற் முறையில் அவனை வல்லாளரின் பெரும் பீதிக்கும் கண்டத்திலுள்ள தாராளரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக்கியது. * மரபுரிமை” மன்னர்களுக்குப் பிரித்தானியப் படைக் கலங்களும் பண உதவியும் மீண்டும் பெற உதவிய அதிகாரங்கள் போத்துக்கலிலிருந்து போலந்துவரை எல்லா நாடுகளிலும் அரசி
ஐரோப்பிய
பல், கலாசார இன உரிமைகளை ஒடுக்குதற்குப் பயன்பட்டன.
இதையிட்டு அவனுடைய நாட்டினர் மனக் கசப்புற்றனர். கனிங்கும் அனுதாபம் கொண்டான். படைக்கலங்களின் வலியால் இசுப் பெயினிற் கிளம்பிய யாப்புக்கமைந்த இயக்கத்தை அடக்கி ஒடுக்க, பிரான்சிய அரசகட்சியாதரவாளருக்கும், மதகுருமாருக்கும் புனித கூட்டுறவால் அதிகாரம் அளிக்கப்பட்டது. அப்பொழுது வகுப்பு, கட்சிவேறுபாடுகளின்றி இங்கிலாந்து முழுமையும் பெரும் ஆத்திரம் கொண்டது. ஆனல் கனிங்கு இசுப்பெயின்மீது பிரான்சு படை யெடுத்ததை எதிர்க்கும் பொழுது ஒரு புதிய தீபகற்பப் போரிலோ அல்லது இழிவான குழியற் பின்வாங்கலிலோ இந்நாட்டை ஈடுபடச் செய்யும்படி பயமுறுத்தாது நிதான அறிவுடன் விலகிக் கொண்டான்.
இசுப்பானியப் பிரச்சினையின் மறு அம்சம், அதாவது பழைய முடி யாட்சிக்கெதிராகக் கிளம்பிய மத்திய, தென் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் கலகம், கூடிய அளவு பூரணமாகக் கனிங்கின் கட்டுப்பாட் டிற்குள் இருந்தது. ஏனெனில் பிரித்தானியக் கடற்படையின் அனு மதியின்றிப்பிரான்சை அல்லது புனிதக் கூட்டுறவைச் சார்ந்த அறப் போர் வீரர் பொலிவரின் தலைமையிலுள்ள கலகக்காரரை அடக்க அத்திலாந்திச் சமுத்திரத்தைக் கடக்க முடியாது. மேலும் தென் அமெரிக்காவின் சுயவாட்சி பொருளாதாரத்தைப் பொறுத்த அள வில் பிரித்தானியாவின் கவனத்திற்குரியதாகும். தென் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுடன் இங்கிலாந்து வியாபாரம் செய்வது பற்றி இசுப்பெயின் விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக மிகவும் வாதிக்கப்பட்ட பிரச்சினையாகும். இக்குடி யேற்ற நாடுகள் தாமே சுதந்திர நாடுகளாகி, பிரித்தானியாவுடன் நட்பாகவும் அதன் வியாபாரிகளுடன் வணிகஞ் செய்ய விரும்புவ தாயுமிருந்தால் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க இப்பொழுது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பிருந்தது. உவால்போல் காலத்தில், திரேக்கும், கடற்கொள்ளைக்காரரும் நடத்திய போர்கள் சென்கின் காது 'ப் போர் ஆகியவை உண்டாக்கிய மனக்கசப்புகளை இறுதி யாகவும் முற்முகவும் போக்குவதற்கு இதுவொரு வாய்ப்பாயிற்று.

தென் அமெரிக்கா
இந்தச் சூழ்நிலையில் புதிய ஆங்கிலத் தொழிற்சாலைகளில் பெரு மளவிலே தேங்கியிருந்த ஆக்கப் பொருட்களை விற்பனை செய்யப் புதிய சந்தைகளைப் பெறுவதற்கான பிரித்தானிய வணிகர்களதும், தொழிலதிபர்களதும் ஆவல், உலகெங்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்னும் உளப் பூர்வமான ஆர்வத்துடன் கலந்திருந்தது. கலகஞ் செய்யும் அரசாங்கங்களின் கடற்படைத் தலைவனுக கொக்கி ரேன், சிலி, பேரு ஆகிய கடற்கரைகளுக்கப்பால் ஆற்றிய தீரச் செயல்களைக் கண்டு இவ்வணிகர்களும் தொழிலதிபர்களும் மகிழ்ந் தார்கள். தீபகற்பத்தில் அண்மையில் எய்திய போர் வெற்றிகளுக் காகப் பிரான்சியர் மீதும் வாக்குத் தவறி நடந்த கொள்கை வெறி யுள்ள அவர்களின் ஆதரவிலிருப்பவனை இசுப்பெயினைச் சேர்ந்த WI ஆம் பேடினந்தின் மீதும் வஞ்சம் தீர்ப்பதில் எல்லா ஆங்கிலே யர்களையும் போலவே இவ்வணிகர் திருத்தியடைந்தார்கள். இக் கருத்துக்களையே சான்றுகளாக எடுத்துக் காட்டி, பழைய உலகத் தின் சம நிலையைச் சீர்செய்ய ஒரு புதிய உலகத்தைத் தோற்றுவித் ததாகப் பொதுமக்கள் சபையில் கனிங்கு உறுதியாகக் கூறினன்.
395
எக்காலத்தும் புதிய உலகங்களைவிடப் பழைய உலகங்களையே
விரும்பிய எல்தனும் வெலிந்தனும் மக்கள் பேதகனுக மாறிய தங் கள் கூட்டாளியை அளவிற்கு மிஞ்சி வெறுத்தார்கள். தோரிகள் கட்சிப் பிளவு மேலும் பெரிதாகிற்று.
தென் அமெரிக்காவின் சுதந்திரத்தைப் பிரசித்தஞ் செய்வதிலும் ஆதரிப்பதிலும் ஆங்கில அரசறிஞரும் மக்களும் ஐக்கிய நாட்டு மக் களின் கருத்தையே கொண்டிருந்தனர். ஐரோப்பிய நாடுகள் ஏற் கெனவே கங்கள் வசமுள்ளதை விடப் புதிய ஆள்4லத்தையோ, அச சியல் செல்வாக்கையோ, தென் அமெரிக்காவில் ஈட்டும் உரிமையை மறுக்கும் கோட்பாட்டை விதிக்கக் குடிப்பதி மொன்றே இவ்வாய் ப்பைப் பயன்படுத்தினன். எதிர்காலத்தில் இது கீர்த்தியும் முக்கிய த்துவமும் வாய்ந்ததாயிற்று. அப்போது இது புனித நட்புநாடு களைச் சேர்ந்த வல்லரசுகளுக்கு ஒர் எச்சரிக்கையாகக் கருதப்பட் டது. ஆனல் பிரித்தானியாவிற்கு எதிர்காலத்தைப் பற்றிய ஓர் எச் சரிக்கையுமாயிற்று. கனிங்கு அதை விரும்பவில்லை. அவனே அவன் பின் அப்பதவியை வகித்த அவன் சீடனை பாமேசுதனே கனடா வின் எல்லைப்புறப் படைக்கலந் துறத்தல்பற்றி காசில்றி ஐக்கிய நாடுகள் மீது காட்டிய நட்புணர்ச்சியைக் கொண்டவர்களாயிருக்க
வில்லே. ஆனல் கனிங்கின் காலத்தில் ஐக்கிய நாடுகளுடன் வாதிக்
இந்நூல் பக்கம் 444 ஐப் பார்க்க.
திசெம்பர் 1823.

Page 211
396
1823-1826.
மொன்றே கோட்பாடு
கப்பட்ட பிரச்சினைகள் துலக்கமாக வெளிப்படவில்லை. அத்தருணத் கில் ஆங்கிலம் பேசும் இனத்தினரின் இரு பிரிவினரும் ஒத்த மனத் தனாாயிருந்தனர். எப்படியாயினும் பிரான்சும் புனித கூட்டுறவு நாடுகளும் இசுப்பானிய குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்காமல் தடுத்தது பிரித்தானியக் கடற்படையேயன்றி மொன்ருே குடிப்பதியின் கோட்பாடு அன்று.
தென், மத்திய அமெரிக்காவின் மிகவிரிவான பிரதேசங்களைத் தவிர உலக அரசியல் தேசப் படத்தில் ஒரு சிறிய இடம் கனிங்கின் முயற்சியின் அடையாளத்தை இன்றும் பெற்றிருக்கின்றது. இரிசின் சுயவாட்சிக்கு அவனே பெரிதும் காரணமாயிருந்தான். திறந்த அத் திலாந்திச் சமுத்திரத்திற் செய்யக்கூடியதாயிருந்ததுபோல் இல வாந்துக் குடாவில் கனிங்கு ஐரோப்பிய வல்லரசுகளின் விருப் பத்தை அசட்டை செய்ய முடியவில்லை. ஆனல் துருக்கிக்கெதிராகக் கிரேக்கர் கலகஞ் செய்த விடயத்தைப் பற்றிப் புனித நட்புறவு அர சாங்கங்கள் ஒன்றேடொன்று மாறுபட்டிருந்தன. துருக்கியை புரட்சியை எதிர்க்கும் நாடாகக் கொண்டு, உண்மையாகவே ஒசுற் றியா அதனை எப்போதும் ஆதரித்தது. இரசியா தன் சொந்த நோக் கங்களுக்காகவும் பாம்பரை அனுதாபத்தாலும் கீழ்த்திசைக் கிறித் அவர்களின் அறவிானுயிருந்தது. பிரான்சும் ஓரளவு மதம், பண் பாடு ஆகிய மனப்பற்றுக் காரணமாக அதே வழியை நாடியது. ஆகவே இங்கிலாந்தின் போக்கிலேயே அநேகமாக எல்லாம் தங்கி யிருந்தன. காசில்றியை எடுத்துக்காட்டாகக் கொண்டு உவெலிந்தன் துருக்கர் சார்பாயிருந்தான். அச்சமயத்தில் பைறணின் தியாகத்தா லும் மரணத்தாலும் பாதிக்கப்பட்டவர்களாயும் பண்பாட்டில் பண்டைக் கிரேக்க இலத்தின் வசமானவர்களாயும் இருந்த பிரித் தானியப் பொதுமக்கள் கிரேக்க கிளெப்சுக்களைத் தோமோபிலே யுத்தவாகை வீரர்களெனப் போற்றினர். தொடர்ந்து நடந்து கொண்டுவந்த வெறுத்து ஒதுக்க வேண்டிய துருக்கியரின் கொடிய ஆட்சியை ஆதரிப்பதைவிடச் சுயவாட்சியான ஒரு கிரேக்க அா சைத் தாபித்து இலவாந்துக்குடாவில் இரசியாவின் ஆக்கிர மிப்பைத் தடை செய்யக் கனிங்கு உந்தப்பட்டான். இரசியப் போ வாவைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க நாட்டினவாதத்தை நம்பி யிருக்கும் அவன் பூட்கை கிரீசைப் பொறுத்த அளவில் வெற்றி அளித்தது. ஆனல் பின்னர் கிாைமிய யுத்த காலத்தில் பாமேசுதன், இரசல் கிளாட்சன் என்பவர்களாலும் இருபது ஆண்டுகளின் பின் னர் திசரெலியாலும் இரசியாவைப்பற்றிப் பிரித்தானியா கொண்ட அச்சம் காரணமாகப் போல்கன் கிறித்துவர்களின் நலன்கள்
தியாகம் பண்ணப்பட்ட பொழுது இப்பூட்கை கைவிடப்பட்டது.

கனிங்கும் வெலிந்தனும்
கனிங்கு இறந்த சில வாரங்களின் பின்னர் தளபதி கொடிறிந்த னின் தலைமையில் பிரித்தானிய பிரான்சிய கடற்படைகள் நவாரி னுேக் குடாவிலே துருக்கிய கப்பற்படையை வெடிகுண்டினுல் தகர்த் தெறிந்தபொழுது, கனிங்கின் பூட்கை வெற்றியடைந்தது. அந்த அமர்க்களத்தில் புனித நட்புறவு ஐரோப்பிய அரசியலில் ஒருபெரும் சத்தி நிலையிலிருந்து குலேக்கப்பட்டது. வெலிந்தன் முதலமைச்சர் பதவிக்கு வந்தபொழுது நவாரினுேச்சண்டை சந் தர்ப்பத்துக்கு ஏற்காத ஒரு நிகழ்ச்சியெனக் கவலைப்பட்டான். ஆனல் அதன் விளைவுகளை வேண்டிய அளவு கட்டுப்படுத்த அவனுல் முடியவில்லை.
இலிவர்ப்பூல் மந்திரத்தில் வெளிநாட்டுச் செயலாளனுக விருந்த கனிங்கு புதிய இங்கிலாந்தினதும் புதிய ஐரோப்பாவினதும் வீரம் ததும்பிய தாராண்மை உணர்ச்சியைப் பெருமளவிற்குத் தூண்டியி ருந்தான். அதன் பயனகத் திறமை படைத்த உவிக்குத் தலைமை இல்லாத போது அவன் பிரித்தானியாவிலுள்ள முன்னுேக்குக் கட் சிக்குத் தலைமை வீசனுகத் தேரன்றினன். ஆகவே இலிவர்ப்பூல் நோயுற்றுப் பதவியினின்றும் இளைப்பாறத் தோரி மந்திரம் பிளவுற்
றது. கனிங்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்கினன். வெலிந்தன், பீல்,
எல்டன் என்போர் தலைமையிலுள்ள பழைய காவல்வீரர் அவ்வரசாங் கத்தில் சேர மறுத்தனர். அப்பொழுது புதிய முதலமைச்சன் பாரா ளுமன்றத்திலுள்ள அரைப்பங்கிற்கு மேற்பட்ட உவிக்குகளின் ஒத் அதுழைப்பையும் நாட்டிலுள்ள தாராள மனப்பான்மையுடைய மக் களினது நல்லாசியையும் பெற்றன். சில மாதங்களின் பின் அவன் இறக்க அவன் அமைச்சு. சிறப்பாகக் குறிப்பிடத்தக்க எதையும் நிறைவேற்றுமுன் முடிவெய்தியது. அப்படியான அமைச்சு அமைக் கப்பட்டதென்ற உண்மையே கட்சிகள் கலைவதற்கும், அநேகர் கட்சி மாறுவதற்கும் ஒரு முக்கிய படி ஆயஅது. அதிற் பணிபுரிந்த பாமேசு தன், மெல்போண் போன்ற கனிங்குக் கட்சித் தோரிகள் பின்னர் தீவிரமாகச் சீர்திருத்த முறியை நிறைவேற்றியதும் புத்துயிர் அளிக் கப்பட்டதும் பெரிதாக்கப்பட்டதுமான உவிக்குக்கட்சியைச் சேர்ந் தனர்.
எனினும் கடைசிவரையும் கனிங்கு பாராளுமன்றச் சீர்திருத் தத்தை எதிர்த்து நின்றனென்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
ஆகவே அவனது மறைவு அவன் உண்மையாகவே ஏற்படுத்த விரும்
பிய அரசியல் மாற்றங்களின் வேகத்தை துரிதப்படுத்தியிருக் கலாம். பல ஆண்டுகளாகப் பாழ்பரோக்களைப் பாதுகாத் திருக்கக்கூடிய இங்கிலாந்திலுள்ள ஒரேயொரு மனிதன் அவனே. ஆனல் அவன் இறந்த பின் சீர்திருத்தக்காரருக்குச் சா சுகமாகவே யாவம் பயன்படுத்தப்பட்டன. சீர்திருத்தப்படாத பாராளுமன்ற
397
ஒற். 1827.
GLt. 827.
ஒக. 1827.

Page 212
398
1828-1830.
1828.
சமய சமத்துவம்
மும் தோரிக்கட்சியும் புதிய ஊழியில் நாட்டை முன்னேற்றப்பாதை யில் வழி நடத்தும் என்ற நம்பிக்கை, வெலிந்தனைத் தலைமையாகக் கொண்ட உயர்ந்த தோரி அமைச்சால் முற்முக அகற்றப்பட்டது. இப்புதிய ஊழி கனிங்கு அசுக்கிசன் ஆகியவர்களின் கீழ் சிறப் புடன் விளங்கியவொன்ருகும்.
வாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சீர்திருத்த முறிக்கிணங்கக் கட்சிகள் ஈற்றில் புதிதாக அமைக்கப்படுமுன் வெலிந்தன், பீல் என் போரின் மந்திரம் அவர்கள் விருப்பத்திற்கு மாமுக, மதங்களின் சமூக சமத்துவ தத்துவத்தின் சார்பில் முக்கியமான சலுகைகளை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. திக்குமுக்காடும் அரச றிஞர்கள் நாளுக்கு நாள் வகித்து வந்த நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்முகக் கவிழ்த்துக்கொண்டு மாற்றமெனும் பேரலை வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. சோதனைச் சட்ட விலக்கலேத் தடுப்பதற் கும் கத்தோலிக்கர் விடுதலையை மாற்ருது விடவும் தன் மந்திரத் தின் வாக்குறுதியைப் பெறுவது அவசியமென 1827 இல் கனிங்கு கருதினன். விடுதலை அளிப்பது பற்றி அவன் சொந்தக் கருத்து வேமுக இருந்தது. எனினும் கொள்கையைக் கைவிடுவதில்லை என்ற அடிப்படையில் வெலிந்தன் பதவி ஏற்றுக்கொண்ட பதி னைந்து மாதங்களின் பின், இவ்விரு சகாயமளிக்கும் முறிகளும் தீவிரவாதத் தோரி அமைச்சின் ஆதாவில் நாட்டின் சட்டமாயின.
கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்த இணங்காதாரும் அரசாங்க,
நகரவைப் பதவிகள் வகிக்கக் கூடாதெனத் தடுத்த சோதனைச்
சட்டத்தை இரண்டாம் சாள்சின் ஆட்சிகாலம் தொட்டு ஏற்பாட் டின் தோணியெனத் திருச்சபையார் மதித்தனர். புரட்சி இணக்க மும் அனேவரியர் மரபுரிமையும் சோதனைச் சட்டம் வலியுறுத்தப் படும் எனும் நிபந்தனையின் பேரிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டன. யோன் இரசல் பிரபுவின் பிரேரணையில் அதை விலக்கியமை முக்கி யத்துவமுடையது. ஆனல் உடனடியாகப் பயனுடையது அன்று. ஏனெனில் பாராளுமன்ற, நகராட்சித் தேர்தல்கள் குடியாட்சி முறைக்குரியனவாக்கப்படும் வரையும் இணங்காதார்க்குப் பதவி வகிக்கும் வாய்ப்புக் கிடையாது. 1835 நகராண்மைத் தொகுப்பக விதியும், 1867 இாண்டாம் சீர்திருத்த முறியும் நிறைவேற்றப்பட்ட பின்னரே சோதனைத் திட்டம் விலக்கப்பட்டமையின் பயனுன, இணங்காதாரின் பூரண அரசியல் விடுதலை பெறப்பட்டது.
1829 இல் இன்னும் கூடுதலாக இணங்காதார்க்கு இடம் கொடுக் கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக அயலாந்து மக்கள், மதக் குருமாரை அதிகாரிகளாகவும் தானியல் ஒ கொனலை ஏவுநர் முதல் வணுகவும் கெரெண்ட ஒரு கத்தோலிக்க சங்கத்தில் அமைந்திருந்த

சமய சமத்துவம்
னர். அதிகாரத்திலிருந்த யாவரும் இந்த இயக்கத்திற்குப் பகைமை யாயிருந்த போதிலும், மக்ககள் ஒருளப்பாடுடையோராய் இருந் தமை அச்சந்தருவதாயிருந்தது. பல நூற்முடுகளாக அடக்கியாளப் பட்டமையால் மந்தை ஒழுக்க இயல்புணர்ச்சி வலுவடைந்த கல்வி யில்லாத ஒரு தனி வகுப்பினரைக் கொண்ட நாட்டினரேயல்லாது பெருந்தொகையான பிற மக்கள் எவரும் அவ்வளவு பூரணமாகக்
கட்டளைக்குப் பணிந்து இயங்குவதில்லை. கத்தோலிக்க விடுதலையை,
அதாவது உரோமன் கத்தோலிக்கர் இரு பாராளுமன்றச் சபையி
லெகிலும் உறுப்பினராய் இருப்பதைத் தகை செய்யப்படாதென்று ஒ கொனல் உறுதியுடன் கோரினுன். உவாற்றலூ வாகைவிரன் அய லாந்தின் கத்தோலிக்க சங்கத்துடன் போட்டியிடத் தயங்கினன். பிரித்தானிய படை ஆட் குறைப்பாலும் குறைந்த வரியாலும் மிகக் குறைந்த அளவிற்குக் குறைக்கப்பட்டிருந்தது. ஆகையால் அப் படை பிரித்தானியாவிலுள்ள சொத்துக்களைப் பசியால் வதங்கும் தொழிலாளிகளிடமிருந்தும் வைக்கோல் போருக்கு நெருப்புவைக் கும் குடியானவர்களிடமிருந்தும் காப்பாற்றப் போதியதாயிருக்க வில்லை. மேலும் வெலிந்தன் மாற்றுவழியில்லாதபோது கடைசி விநாடிவாைக்கும் சலுகை கொடுக்கப் பன்முறையும் மறுத்தான். எனினும் அவன் எப்பொழுதும் உண்ணுட்டுப் போரில் இரத்தம் சிந்துவதைப் பெரிதும் வெறுத்தான். பீலும் வெலிந்தனும் ஓ கொன லுக்குப் பணிந்து போனமை அவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்த உயர்தோரிகளுக்குக் கடும் சினத்தை உண்டாக்கியது. கத்தோலிக்க விடுதலைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே வெலிந்தன் தன் பாலனத்திவி ருந்து கனிங்கு கட்சியினரையும் கத்தோலிக்க விடுதலையில் நம் பிக்கையுள்ளவரையும் விலக்கிவிட்டான். தோரிக் கட்சியின் அமைப்பு ஒன்றுடனென்று கோபமுள்ள மூன்று கட்சிகளாக அதா வது கனிங்கு கட்சியினர், உயர்தோரிகள் அரசாங்கத்தின் திக்கு முக்காடும் ஆதரவாளர் எனப் பிளவுபட்டது. வெலிந்தனின் அாசி யல் தந்திரங்களில் ஏற்பட்ட தவறுகள், அவன் மிகவும் அஞ்சிய உண்மையான பாராளுமன்றச் சீர்திருத்த முறிக்கும், உண்மையான சீர்திருத்த அமைச்சுக்கும் இடராயிருந்த தடைகளை நீக்கிவிட்டன. பொக்சு இறந்ததிலிருந்து உவிக்குக் கட்சிக்குப் பெயரளவில் முதல்வனுயிருந்த சாள்சு கிறே பிரபு பல ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவனுகக் கடமையாற்றிய விதம் அரசியல் தலைமைபற்றிய தற் காலக் கருத்துப்படி மிகவும் குறைபாடுடையதாகும். நோதம்பிரியக் கடற்கரையிலுள்ள அவனுடைய விடும், நூல்நிலையமும், அவனு டைய பதினைந்து பிள்ளைகளும் நாட்டுப்புறம் அவனுக்களித்த ஓய் வும் உவெசுத்துமினித்தரிலும் மிகவும் அதிகமான கவர்ச்சிகளை
யுடையனவாக அவனுக்குத் தோன்றின. ஆனல் அவனுடைய துடுக்
1829.
399

Page 213
400
கிறே பிரபு : பாராளுமன்றச் சீர்திருத்தம்
கான வாலைப் பராயத்தில் பொக்சுவை 1792 இல் பாராளுமன்றச் சீர்திருத்தத்தின் ஆதரவாளனகத் தன்னைப் பிரகடனப்படுத்துவதற் குத் தூண்டியவனுவான். அவ்வாறு பிரகடனஞ் செய்வதன்மூலம் போட்லந்துவிடமிருந்தும் பேக்குவைப் பின்பற்றி உவிக்குக் கட்சியி விருந்து பிரிந்து யக்கோபித எதிர்ப்பாளர் கட்சியிற் சேர்ந்தோரிட மிருந்தும் பொக்சு விலகுவதற்குக் காரணமாயிருந்தவனும் இந்த கிறே பிரபுவே. பிரித்தானியாவில் பாராளுமன்ற அரசாங்கத்தைப் பேண பெருந்தொகையான பாழ்பரோக்களை ஒழிப்பதை அடிப் படையாகக் கொண்டு தேர்தல் தொகுதிகளை மாற்றியமைத்தல் வேண்டும் என்ற நம்பிக்கையை அவன் ஒருபோதும் கைவிடவில்லை. இக்கருமத்தில் தொழிலாளிப் பருமாற்றவாதிகள் மாத்திரம் அக் கறை காட்டிவரும்வரை, இன்னும் காலம் வரவில்லை எனக் கருதிப் பல்லாண்டுகளாக அக்கோட்பாட்டைப் பற்றி மேடையுரையாற்று வதை நிறுத்திக் கொண்டான். மக்கள் தாமே, குறிப்பாக உறுதியான வர்களும் மதிப்புக்குரியவர்களுமான நடுவகுப்பார், இந்தப் பிரச் சினையை வெகு ஊக்கத்துடனும், ஆசையுடனும் கவனிக்கும் காலம் வரும்வரையுமே காத்திருக்க வேண்டியது அவசியமாகுமென அவன் இன்னும் கூறி வந்தான். கடைசியில் அக்காலம் வந்துவிட்டது. நட் பாளருக்குப் பெரிதும் வியப்பூட்டும்வகையிலும் எதிரிகளுக்குத் திகில் விளக்கும் வகையிலும் அந்த வயது சென்ற விழுமியோன் தன் வாக்குறுதியைப் பேணினன். வாலிபப் பராயத்தில் அவன் கனவு கண்ட திருத்தி அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தைப் பிரித் தானியாவுக்களிக்கும் பொருட்டு மூன்றுண்டுகள் தன் நாட்டுப்புறத்
தனிவாழ்க்கையைக் கைவிட்டான்.
1830 இல் பாராளுமன்றச் சீர்திருத்த இயக்கம் அக்காலத்திற் குரிய நிலையிலிருந்து இயல்பான செய்முறையால் உண்டாயதெனத் தோன்றியது. தீமையான காலம் மீண்டும் வந்தமை, நகரிலும் நாட் டிலும் தொழிலாளர் மனமுறிவாலெழுந்த பலவந்தச் செயல்கள், கீழ்த்தாத்தாருள் சமூக எழுச்சி உண்டாகுமென்ற நடுவகுப்பாரின் அச்சம், அவ்வெழுச்சியை வெறும் அடக்கு முறைகளால் தடுக்க முடியாதென்ற நம்பிக்கை ஆகியவையே அக்காலச் சூழ்நிலையாகும். இக்காரணங்களுடன் மேலும் கோமகனின் தவறுகளின் விளைவாகத் தோரிக் கட்சியில் மக்களுக்கிருந்த மதிப்புப் போய்விட்டது. அத் துடன் பாரிசு யூலை புரட்சியின் எடுத்துக்காட்டும் ஒன்முயிற்று. 1789 இல் போல் சமூக மாற்றமின்றி X ஆம் சாள்சின் பிற்போக்கு அர சாங்கத்திற்கு அப்புரட்சி முற்றுப்புள்ளியிட்டது. நிலக்கிழாரிலி ருந்து வண்டியோட்டி வரையும் பருத்தி முதலாளி முதல் அலைத் தொழிலாளி வரையும் ஒவ்வொருவரும் சீர்திருத்த அவசியத்தைப் பற்றி உரையாடினர். எனினும் அவர்கள் கருத்தும் வற்புறுத்தலும்

உவிக்குப் பெருந்தலைவர்கள்
வேறுபாடுடையனவாயிருந்தன. கலந்தாராயும் பொருட்டு எடுத்
அதுக்கொள்ளப்பட்ட புதிய வாக்குரிமையின் விரிவையும் தன் மையையும் பற்றி மிகவும் வேறுபாடு இருந்தது. ஆனல் பாழ்பரோக்களை வெறுப்பதில் யாபேரும் ஒரே தன்மையினரா யிருந்தனர். மிக்க மரியாதையுடன் இதுவரை மதிக்கப்பட்ட அவற்றின் சொந்தக்காரர்கள் இப்போது பாழ்பரோ வணிகர் எனப் பொதுப் பழிக்கும் ஆளாக்கப்பட்டனர். இவர்கள் நாட் டின் பிறப்புரிமையை அபகரித்தவர் எனக் கருதப்பட்டனர். புதிய கைத்தொழில் மாவட்டங்களுக்கும் பழைய நாட்டுப்புற மாவட்டங்களுக்கும் அவைகளின் செல்வத்தினதும் அவைகளின் குடிசன எண்ணிக்கையினதும் விகிதப்படி பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்பதைப் பற்றிப் பொது உடன்பாடு இருந்தது. பாழ்பரோக்களுக்கு எதிரான எல்லா வகுப்பினரதும் நட்புறவு பேசிங்காம் அரசியல் ஐக்கிய சங்கமாகப் பரிணமித்தது. தொமசு அற்வுட்டு இதற்குத் திறமையுடன் தலைமை தாங்கினன். நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய பேமிங்காமில் மக்கள் திரள் சீர்திருத்தக் காாரின் வீடுகளைப் பாழாக்கியது. ஆனல் இப்போது குடிமக்கள் மிதுலந்து தலைநகருக்குப் பாராளுமன்ற பிரதிநிதித்துவ உரிமை
உண்டென்பதை ஒப்புக்கொண்டனர்.
கிறே என்பானும் இளைய சந்ததியில் அவனிலும் கூடிய முற்போக் கான துணைத்தலைவர்களாகிய யோன் இரசல் பிரபுவும் தறம் பிரபு வும் இந்த இயக்கத்தின் தலைமையில் உவீக்கு பாராளுமன்றக் கட் சியை அமர்த்த ஏற்ற காலம் வந்ததெனக் கண்டனர். தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் மிகைப்படத் திருத்தஞ் செய்தல், எல்லாப் பரோக்களிலும் பத்துப் பவுணுக்குக் குறையாத விட்டு வரி செலு த்து வோருக்கு வாக்குரிமையை ஏற்படுத்தல் என்பனவற்றை அடிப் படையாகக் கொண்டு பாராளுமன்றத்திலுள்ள உயர்குடி உவீக்குத் தலைவர்கள் நாட்டின் நடுவகுப்பார் ஆதரவைப் பெற்றனர். கைத் தொழிற்புரட்சி காரணமாக நடுவகுப்பினர் பதினெட்டாம் நூற் முண்டிலும் கூடிய மதிப்புக்குரியவர்களாயிருந்தனர். உவெசிலி கொள்கையினரின் பெருக்கம் காரணமாக இணங்காமை சமய உலகத்தில் ஏறக்குறையப் பாதியெனக் கணக்கிடப்பட்டது. ஆகவே திருத்தப்பட்ட தேர்தல் முறைமையை ஆதாரமாகக் கொண்டு உவிக்கு உயர் குடி, நடுவகுப்பினருக்கு மீண்டும் தலைமை வகிப் பது, அடுத்த சந்ததி காலத்திற் பெரிய பிரித்தானியாவின் அரசாங் கத்தின் உறுதியான அமிசமாக நிலைத்திருக்கலாயிற்று. புத்தி நுட்ப முள்ள மத்திய வகுப்பினரின் கிளர்ச்சியாளனும் தலைவனுமான பொதுக்குடிக்குரிய என்றி புரோகாமே இந்த நட்புறவின் பிரதிநிதி யாளன். கடினமான ஆனல் அடிக்கடி மாறும் தோற்றத்தையுடைய
401

Page 214
402
உவிக்கு அமைச்சர்
இவன் பொறிகளையும் முன்னேற்றக் கருத்துக்களையும் கொண்ட இப் புது ஊழியின் இயல்புகள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டிருந் தான் எனலாம். அன்றியும் உவிக்குத் தலைவர்களோடும் 'எடிபன்சோ றிவியூ" என்னும் வெளியீட்டுடனும் நெருங்கிய தொடர்புடையவன். 1830 இல் இவனில்லாது ஒரு உவிக்கு மந்திரமும் அமைக்க முடியாது. எதிர்க்கட்சியில் இவன் காட்டிய ஆர்வத்திற்கும் போாற்றலுக்கும் சமமான விவேகத்தையும் நம்பிக்கைவைக்கத் தகுந்த தன்மையை யும் தன்பதவியில் இருக்கும்போது காட்டியிருப்பாணுகில், புதிய ஊழியின் முதன்மையான அரசறிஞனுக இருந்திருப்பான். அவ்வா றன்றி அவன் தனது பெயர் மங்கத் தக்க நிலையை எய்தினன்.
உவிக்குகளதும் நடுவகுப்பாாதும் அரசியல் நட்புறவில் வேறு புது ஆட்களும் சேர்ந்தனர். மெபோண், பாமேசுதன் போன்ற கனிங் குக் கொள்கையினரும், வட இங்கிலாந்தின் மதிப்புக்குரிய வகுப் பினரின் பிரதியாளர்களாகிய இளம் சிதான்லி, சேர் யேமிசு கிறகரம் போன்ற சுயேச்சையாளரும், மிதமான அளவு பாராளுமன்றச் சீர் திருத்தத்தினுல் மாத்திரம் நாட்டைக் காப்பாற்றக்கூடுமென அண்மையில் நம்பத் தொடங்கினர். 1830 இலையுதிர்காலத்தில் நாட் டின் குறைகளை நீக்க வெலிந்தனையே இன்னும் எதிர்பார்த்தனர். அவனே பிரதிநிதித்துவ முறை நாட்டின் பூரண நம்பிக்கையை உடையதெனவும் அதைத் திருத்துவது மனித விவேக எல்லைக்கு அப்பாற்பட்டதெனவும் பலருமறியக்கூறி மிதவாதிகள் யாவருடைய தொடர்பையும் அகற்றினன். இந்தப் பலருமறிந்த விளம்பரத்தின் விளைவாகச் சிதான்லியும் கிறகாமும் பாராளுமன்றச் சீர்திருத்தத்தை நிறைவேற்றும் பொருட்டு உடனே உவிக்குகளுடன் தற்காலிகமாக நட்புறவிற் சேர்ந்தனர். கனிங்குக் கொள்கையினரான பாமேசுத னும், மெல்போனும் உவிக்குத் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டுத் தங்கள் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவ்வண்ணமே நிலைத்து நின்றனர். வெலிந்தனின் அமைச்சு ஈடாடியது. உயர் தோரிகள் இந்த நெருக்கடியான வாக்கெடுப்பில் அவ்வமைச்சுக்கெதிராக வாக் களித்து, கத்தோலிக்க விடுதலையை நிறைவேற்றியதற்காக அவன் மீதும் பீல் மீதும் வஞ்சம் தீர்க்க இந்த வாய்ப்பைப் பயன் படுத்தினர். 1830 நவெம்பர் மாதத்தில் கோமகன் அதிகார பீடத்தி லிருந்து விலக புதியவனும் மக்களன்பிற்குரியவனுமான ‘மாலுமி என வழங்கிய அரசன் நான்காம் உவீலியம் கிறேபிரபுவை ஒரு
1830 செத்தெம்பரில் மாஞ்செத்தர்-இலிவர்ப்பூல் இருப்புப்பாதை தொடங் குமிடத்தில், கனிங்கைப் பின்பற்றிய தலைமைச்சிறப்புடைய மற்ருெரு தோரியான அசுகிசன் என்பான் இயந்திரத்திற் சிக்கி மாண்டான். அச்சமயம் அவன் கிறே என்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.

பாழ்பரோக்கள்
அமைச்சை அமைக்குமாறு கேட்டுக் கொண்டான். அமைதி, ஆட் குறைப்பு, சீர்திருத்தம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வமைச்சு அமைய வேண்டியதாயிற்று.
கிறே பிரபு அமைத்த அமைச்சினர் உயர்குடியைச் சேர்ந்தவர். ஆனல் உலிக்கு அமைச்சிலுள்ள உயர்குடியினர் தொகுதி பாராளு மன்றத்திலுள்ள மிகவும் திறமை வாய்ந்த மிகவும் முற்போக்கான மனிதர்களைக் கொண்டதாயிருந்தது. கிறேயின் பொதுவான மேற் பார்வையின் கீழ் தறம் பிரபுவும் யோன் இரசல் பிரபுவும் சீர்திருத் தத்திற்குத் திட்டம் செய்தனர். இதனை அல்தோப்பு பிரபு பொது மக்கள் சபையில் நிறைவேற்றி முடித்தார். அன்றுதொட்டு இச்சீர் திருத்தம் போதியதல்லவெனக் குறை கூறப்பட்டதெனினும், அந் நாட்களில் அதன் அளவு கடந்த போக்கினல் நட்பாளரையும் எதிரி களையும் திகைக்கச் செய்தது. தீவின் புதிய சமூக வகுப்பினருக்கும் புதிய மாவட்டங்களுக்கும் அரசியலதிகாரத்தைப் பரவச் செய்தது என்ற கருத்தில், தோரிகள் முறையிட்டதுபோல், அது உண்மை யாகவே ஒரு புதிய யாப்பாகும்.
எல்லாப் பாழ்ரோக்களையும் ஒரே வீச்சில் ஒழிக்கும் முறி ஒரு காலும் எதிர்பார்க்கப்படவில்லை. அதைப்பற்றிய அறிக்கை, இலான்சு எந்திலிருந்து யொன்ஒ குரோட்டு வரையும் ஆச்சரியத்தையும் குதள கலத்தையும் ஏற்படுத்தியது. பிரேரணையை எதிர் பார்த்த தோரி களைக் கோபங்கொண்ட எதிரிகளாக்கிற்று. ஏனெனில் இப்போதுள்ள சபையிலும் உண்மையாகவே இப்போது பொதுவாக நிலவிய மன நிலையிலும் பாட்டாளிகளுக்கு வாக்குரிமை அளிக்கும் முறி நிறை வேற்றுவது இயலாத காரியமென அவர்களறிந்திநந்தனர். பிளேசு, கொபெற்று போன்ற மிகவும் செல்வாக்குள்ள பர்ட்டாளித் தலைவர் களும் நிருவாகிகளும் அந்த முறிக்கு ஆர்வத்துடன் பூரண ஆதா வளித்தனர். முடிவைப்பற்றி உவிக்குகள் என்ன கூறிய போதும் நியமன பரோக்களின் மீது நெடுங்காலமாக நிலைத்திருந்த அவர் களது அக்கறை பாதிக்கப்பட்டால், இம்முறி ஒரு நாளைக்கு வந்தே யாக வேண்டுமென அவர்கள் ஏலவே அறிந்திருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்கு எல்லா வகுப்பினரும் ஒற்றுமை பூணுதல் அவசியம். ஏனெனில் அரசியற் சட்டத்தின்படி பிரபுக்கள் சபைக்கு அந்த முறியை வீட்டுச் செய்ய அதிகாரமிருந்தது. அத்துடன் என்ன இடர் நேரினும் அவ்வதிகாரத்தைப் பயன்படுத்த அச்சபை யினர் உறுதி கொண்டிருந்தனர்.
புதிதாக வாக்குரிமை அளிக்கப்பட்ட பரோக்களிலுள்ள நடுவகுப்
பாளரின் மேற்றாப்பினரும் கடைக்காரரும் தாங்கள் தங்களுக்காகக்
ofTjfers,
1831.
கேட்டுப் பெறவேண்டிய யாவும், 10 பவுண் வீட்டுவரி கொடுப்
போருக்களிக்கப்பட்ட வாக்குரிமையில் அடங்கியிருப்பதைக் கண்ட
403

Page 215
404
излезт 1831
G3to I,832.
பெருஞ் சீர்திருத்த முறி
னர். வாக்குரிமையிலிருந்து விலக்கப்பட்ட நடுவகுப்பினரிற் பாதிப் பேர் புதிய கைத்தொழிற் பிரதேசங்களுக்கு வாக்குரிமை கிடைப்ப தனுல் தங்கள் நலன்களுக்கு மறைமுகமான பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்தனர். அத்துடன் ஒல்டு சாரத்திற்குப் பதிலாக மாஞ் செக்தருக்கு இரு உறுப்பினர் இருக்க வேண்டுமென்றும், கோணிசு கிராமங்கள் சிலவற்றிற்குப் பதிலாக செபீல்டு சிறிது காலத்தில் தானிய வரி ஒழிப்பைப் பெறுமெனவும் எதிர் பார்ந்தனர். ஆனல் நிலக்கிழாரும் வாரக் கமக்காரர்களும் அந்த ஆபத்தைப் புறக்கணித் தனர். எனெனில் முறியினுல் மாவட்டப் பிரதிநிதித்துவம் அதிகரிக் கப்பட்டமையாலும், நாட்டுப் புறத்தொகுதிகளில் நிலக்கிழார் அதி காரத்தைக் குறைக்காது கூட்டுவதெனச் சொல்லக் கூடிய வாரக்கார வாக்குரின்மச் சலுகையாலும் அவர்கள் திருத்தியடைந்திருந்தனர்* அரசியல் அதிகாரத்தை நடுவகுப்பினரில் பாதிப்பேருக்கும் நிலக் கிழார் முழுப்பேருக்குமிடையில் பிரிக்கும் பிரேரணை அவ்வளவு தாரம் மக்களின் ஆர்வத்தை எழுப்பக்கூடியதாயிருந்தது என்பது இன்று ஆச்சரியமாகத் தோற்றலாம். பெரும்பாலும் எல்லோரையும் பாழ்பரோ ஒழிக என்னும் கூக்குரல் ஒற்றுமைப்படுத்தியது. பழைய அதிகாரப் பிரிவினையால், நேராகவோ மறைமுகமாகவோ பயன டைந்த பலரும், சீர்திருத்த முறியின் விளைவாகத் தமது நிலை குலையுமெனவும் தமது தருமசாதனங்கள் நீக்கப்படு மெனவும் தவருக நம்பிய திருச்சபையினரும் ஒற்றுமைப்படவில்லை. இன்னு மொரு முறை வாக்குரிமை பெருக்கப்படும் வரையும் கட்டாய திருச்சபை வரிகளை ஒழிக்கவோ, பல்கலைக்கழகங்களில் இணங்கா தாரைச் சேர்க்கவோ அது வழிகாட்டவில்லை. 1832 முறியின்படி நடுவகுப்பாருக்கும் அவ்வளவு குறைபாடாகவே அதிகாரம் அளிக்கப்பட்டது.
பிரித்தானிய வரலாற்றில் ஈடு இணையற்ற பதினைந்து மாத அரசியற் கிளர்ச்சியின் பின் பெருமகாரின் எதிர்ப்பு இருந்தும் சீர்திருத்த முறி
1 1832 ஆம் ஆண்டுக்கு முன், இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு கோட்டத் திலிருந்தும் இரு உறுப்பினர்கள் மட்டுமே சட்டசபையிலிருந்தனர். ஆனல் பரோக்களின் பிரதியாளராக நானூறு உறுப்பினரிருந்தனர். ஏறக்குறையப் பாழ்பரோக்களுக்கே இவர்கள் பெரும்பாலும் பிரதிநிதிகளாயிருந்தனர். இப் போது பிறப்பிக்கப்பட்ட விதியால் அழிக்கப்பட்ட இருநூறு பாழ்பரோத் தொகுதி களில் அறுபதை 1830 இல் உலிக்குகள் கைப்பற்றிக்கொள்ள எண்ணினர். இந்த இருநூறு தொகுதிகளில் நூற்று நாற்பது தொகுதிகள் முற்றக அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியிருந்த எறக்குறைய அறுபது தொகுதிகளும் பத்துப்பவுண் வாக்குரிமை முறை எனும் புதிய முறை எற்பட்டதன் வி?ளவாகப் பாராளு மன்றப் பிரதிநிதித்துல உரிமையைக் காப்பாற்றிக்கொண்டன. பிரசுதன், உவெத்துமினித்தர் போன்ற மிகச் சில தேர்தற் ருெகுதிகளிற்ருன் அந்தந்தத் தலத்தில வாழ்ந்த தொழிலாளரினத்துக்குப் பிரதிகூலமாக, பத்துப் பவுண் வாக்குரிமை முறையினல் வாக்குரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பெருஞ் சீர்திருத்த முறி
நிறைவேற்றப்பட்டது. முதல் நெருக்கடி, நம்பிக்கை வைக்கத் தகாத, நிலையில்லா ஒரு மேலதிக வாக்குக்குப் பதிலாக நிச்சயமான 136 மேலதிக வாக்குகள் கிடைத்த ஒரு பொதுத் தேர்தலாகும். இரண்டாவது நெருக்கடி பிரபுக்கள் சபையில் 41 வாக்குகளால்
அந்த முறி தள்ளுபடி செய்யப்பட்டமையாகும். முக்கியமாக
அண்மையில் தோரிகளால் சிருட்டிக்கப்பட்ட பெருமகாரும் விசுப் பாண்டவர் குழுவும் இம்முறையை எதிர்த்தனர். அந்தக் குளிர் காலத்தில் கைத்தொழில் கமத்தொழில் மாவட்டங்களில் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வாந்திபேதி தீவிரமாகப் பா விக் கொண்டிருந்தது. பிரபுக்களின் செய்கையால் மக்களிடையே
எழுந்த சீற்றம் சமூகத்தில் குலைவுநிலையை உண்டாக்குமோ வென்ற
அச்சமேற்பட்டது. ஆனல் பிறித்தல் கலகம் நிதான புத்தியுள்ள யாவருக்கும் ஓர் எச்சரிக்கையாகப் பயன்பட்டது. பேமிங்காமை முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் தோற்றிய அரசியல் ஐக்கிய சங்கங்களால் பலவந்தம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் சங்கங்கள் இருந்தமை முறி ஈற்றில் தள்ளுபடி செய்யப்பட்டால் உண்மையில் அதிக இடர் நிரம்பிய உள்நாட்டுப்போர் எழக்கூடும் என்பதை உணர்த்திற்று.
இந்த முறிக்கு அபாயம், அதன் பாட்டாளி ஆதரவாளர் பிரிந்து, தங்களின் சொந்தப் புரட்சி இயக்கத்தை தொடங்கலாமென்பதே. அதனுல் ஒழுங்கைப் பேணும் போராட்டத்தில், அதனை எதிர்ப் போர் வலு பெறக்கூடும். ஆனல் நீண்ட காலம் அக்கறை கொள்ளா மலிருந்த நடுவகுப்பினர் இப்பொழுது அக்கறை கொள்ளத் தொடங் கினர். பருமாற்றவாதிகள் தோரிக்கட்சியினருடன் மோதிச் சமூகம் அழியுமுன் அந்த முறியை நிறைவேற்ற வேண்கிமென உறுதியாக நின்றனர். உண்மையாகவே அம்முறி நிறைவேற்றப்படுதலிலேயே நாட்டின் அமைதி தங்கியிருந்தது. ஈற்றில் முன் அரசுத் தலைவர் எவ ரும் கண்டிராத அத்தகைய புயலில் மனம் குழம்பிய நேர்மை யான கடலோடி அரசன் உவிலியம் அம்முறியை நிறைவேற்றப் புதுப்பெருமார்களை நியமிப்பதற்கு முடிக்கிருந்த உரிமையைப்
முந்திய ஆண்டில் முதன்முறையாக ஆட்சியேற்ற உவிக்குகள் , 1830 நவெம்பரில், நாட்டின் தெற்குப் பகுதிகள் சிலவற்றிலிருந்து நாளொன்றுக்கு அரைக் கிரெளன் வேதனங்கோரிச் செய்யப்பட்ட "உழவர்களின் இறுதிக் கிளர்ச்சி ’ யொன்றை எதிர்நோக்கவேண்டியிருந்தது. பட்டினி கிடந்த விவ சாயத்தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனரெனினும் இரத்தம் சிந்தவில்லை. ஆனல் அவர்கள் சில சொத்துடைமைகளை அழித்துவிட்டனர். இக்கிளர்ச்சியைக் கண்டஞ்சிய உவிக்குகள் அத்தொழிலாளர்களை மிகக் கொடூரமாகத் தண்டித் தனர். அவர்களிலநேகர் தூக்கிலிடப்பட்டனர். எஞ்சியிருந்தவர்களில் 450 பேர் அவர்கள் குடும்பத்தினருக்கு எத்தகவலுமின்றியே அவுத்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
405
மே, 1831. ஒற். 1831.

Page 216
406
(βια, 1832.
1867, 1884, 1918.
* மே தினங்கள் ”
பயன்படுத்தப் போவதாகக் கிறேயுக்கு வாக்குறுதி செய்தான். உத்திசெத்து அமைதியை அக்காலத் தோரி அமைச்சின் சார்பில் நிறைவேற்ற இராணி ஆன் பெருமகாரை உண்டாக்கிய முன்மாதிரி நிகழ்ச்சி பயன்படுத்தக் கூடியதாயிருந்தது. கடைசி நேரத்தில் உவிலியம் தயக்கமடைந்து தோரிகள் அதிகார பீடத்திற்கு வரவுந் தங்களுக்கேற்ற சொந்த வழிப்படி முறியை நிறைவேற்றவும் முயற்சி செய்தான். இது பலருமறிந்த “மே தினங்கள்” எனும் கடைசி, நெருக்கடியை விளைவித்தது. கிறே பிரபு தன் பதவியி லிருந்தும் விலகினன். ஒருவாரமாக, வெலிந்தன் படையின் உதவி
யுடன் ஆட்சி செய்யப் போவதாக நாடு நம்பியது. பெரிய நகரங்
கள் எதிர்ப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்தன. ஆனல் ஆட்டம் தோல்வியடைந்ததென்பதைப் பீல் கண்டான். பெருமகாரும் அரச னும் தங்கள் நிலையைக் கைவிட வேண்டுமென்ற நிபந்தனையுடன் கிறே வெற்றிகரமாக மீண்டும் பதவியை ஏற்றன்.
இக்கடைசி நெருக்கடி புதிய யாப்பில் பொதுமக்களது நிலைக்குத் திடீரென ஒரு முக்கியத்துவத்தை அளித்தது. இந்நெருக்கடியே சீர் திருத்த விதியை உண்மையாக நிறைவேற்றச் செய்தது. மக்கள் பொதுவாக ஆட்சியாளரிடமிருந்து தற்கால மகா பட்டயத்தை வலிந்து பெற்றுக் கொண்டனர். அச்சமயத்திலிருந்து நாட்டுமக்களே தங்கள் நாட்டின் தலைவர்கள் ஆயினர். ஆனல் நாட்டின் அரசியலிற் பங்குடையோரின் தொடர்ச்சியான வாக்குரிமைப் போராட்டங்க ளால் வரையறுக்க வேண்டிய தேவை இன்னும் இருந்தது. இப் போராட்டங்கள் போகப் போக வலுக் குறைந்தன. 10 பவுண் விட் டுக்காரரும் வாாக்கமக்காரரும் மாத்திரமே எக்காலமும் நாட்டின சாக அமைவது நடக்கக் கூடிய ஒன்றன்று. ஒரு நாட்டின் அமைதி யான புரட்சியால் அழிக்கப்பட்ட நிலை ஊன்றிய பற்றுக்களையுடைய வர்களான பரோக்கிழார்போல் நாட்டை ஆள அப்படியான பாம் பரையுரிமையெதுவும் இவர்களுக்குக் கிடையாது.
கொத்துலாந்தில் பழைய பிரதிநிதித்துவமுறை இங்கிலாந்திலும் அதிக சீர்கேடாயிருந்தது. ஏனெனில் துவீது நதிக்கு வடக்கே மாவட்டத் தேர்தல்கள்தாமும் செம்மையானவையாக விருக்க வில்லை. அரசியலைப் பொறுத்தவளவில் கொத்துலாந்து ஒரு மாபெரும் பாழ்பசோவாயிருந்தது. நெருக்கடி காலத்தில் வடகுடியாட்சியின ாது கிளர்ச்சியின் வேகமும் அதிகமாயினதாயிருந்தது. 1832 இல் முதன் முறையாகக் கொத்துலாந்தர் தங்கள் திருச்சபையல்லாத தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஏற்க பொது அமைப்புக் களையும் பெற்றனர். சீர்திருத்தமுறியின் விளைவான 1833 ஆம் ஆண்டுப் பரோ முறி கொத்துலாந்திலுள்ள முதற் பொதுமக்கள் நகர சபைகளைத் தோற்றுவித்தது.

நகரசபைத் தொகுப்பகச் சட்டம்
இங்கிலாந்து அதன் நகரசபைத் தொகுப்பக விதிக்கு 1835 வரை யும் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. பாராளுமன்ற பாழ்பரோக் களின் வீழ்ச்சி காரணமாக நகரசபைப் பாழ்பரோக்களும் வீழ்ச்சி யுற்றன. பழைய ஆட்சி முறையின் கீழ் ஒருபோதும் வீழ்ச்சியடைந் திராத இவை தல ஆட்சித்துறையில் பாராளுமன்ற பரோக்களுக்கு ஒப்பான, உடன் குழுக்களாகும். நகரசபைப் பாழ்பரோக்களும் வீழ்ச்சியடைந்தன. 1835 ஆம் ஆண்டு விதி, சீர்திருத்த முறியிலும் கூடிய குடியாட்சி மயமானது. ஏனெனில் அது புதிய நகரசபை களுக்கு வாக்கு அளிக்கும் உரிமையை வரியிறுப்போர் எல்லோ ருக்கும் வழங்கியது. ஈற்றில் ஆங்கில நிறுவன கூட்டு வாழ்க்கையின் ஆரம்பகாலம் முடிவெய்தியது. சமுதாயத்தின் வாழ்க்கை புதிய பொருளாதாரச் சமூகத்தின் உண்மையான தேவையின்படி புது மாதிரியாக அமையத் தொடங்கியது. யெரெமி பெந்தாம் மரணப் படுக்கையில் இருந்தானெனினும் அவனது கருத்து நாட்டில் எங்கி ணும் பரவியிருந்தது. “அதன் பயன் என்ன?’ என்னும் அவனு டைய கேள்வி எல்லாவற்றுக்கும் பயன்பட்டது. உவிக்கு சீர்திருத்த அமைச்சுடன் வேத்தியல் ஆணைக்குழுக்களினதும் அவற்றின் அறிக் கைகளினதும் ஊழி தொடங்கியது. அதன் முதற்பயன்களில் நக ராண்மைத் தொகுப்பக விதி ஒன்ருகும்.
இந்த விதி பெரு நகரங்களிலேயே செயற்படுத்தப்பட்டது. 1888 இல் சலிசுபெரிபிரபுவின் அமைச்சால் தெரிவு செய்யப்பட்ட சபைகள் தாபிக்கப்படும்வரையும் நாட்டுப்புற மாவட்டங்கள், இன் னும் சமாதான நீதிபதிகளின் பாலனக் கட்டுப்பாட்டின் கீழேயே விடப்பட்டிருந்தன. தல ஆட்சி வகைகளுக்கிடையில் காணப்பட்ட இவ் வேறுபாடு புதிய பட்டினத்திற்குரிய இங்கிலாந்து ஏற்கெனவே குடியாட்சி உளப்பான்மயுடையதாயிருக்கையில் நாட்டுப்புறத்திற் குரிய இங்கிலாந்து நிலக்கிழாருக்குக் கீழ்ப்பட்ட உளப்பான்மை யுடையதாயின்னுமிருந்த நிலையோடு பொருந்துவதென்க.
1835 நகராட்சித் தொகுப்பகங்கள் விதி, அது செயலாற்றும் புவியியலெல்லை போதாவிடினும் ஒரு வலுவுடைய அதிகார முறையை முக்கியமான நகரப் பிரதேசங்களில் தாபித்தது. இவ்வதி காரம் பொதுமக்கள் கட்டுப்பாட்டிற்கு அமைந்ததும், தலவரி விதிக் கத் தகுதி வாய்ந்ததுமாயிருந்தது. இத்தொடக்கத்திலிருந்தே புதிய தொழிற்பாடுகள் மேன்மேலும் ஒருமுகப்பட்டு வந்தன. அடுத்து வரும் நூற்றண்டு முழுவதும் புதிய அதிகாரங்கள் நகராட்சித் தொகுப்பகங்களுக்கு மேன்மேலும் கொடுக்கப்பட்டு வந்தன. தவ றணைகளுக்கு உத்தரவுச்சீட்டு அளித்தல், நீதிபரிபாலன அதிகாரம் என்பனவற்றைத்தவிரத் தல ஆட்சியில் பெரும்பான்மையாக எல்லா
407.

Page 217
408
தொழிற்சாலைச் சட்டம்
அமிசங்களுடன் அவை செயற்முெடர்பு கொண்டிருந்தன. இவை இரண்டுந் தெரிந்தெடுக்கப்பட்ட குழுவினர்க்கு உரியவையல்லாத தொழிற்பாடுகளென மதிக்கப்பட்டன. புதிய நகர சபைகள், பிள்ளை களுக்குக் கல்வி கற்பிப்பதிலும், பொதுமக்களுக்கு மின்வண்டி, வெளிச்சம், நீர், வீடுகள் என்னும் வசதிகள் அளிப்பதிலும், பெரும் அளவில் வணிகத்திலும் பெருந்ந்தொழில்களை நடத்துவதிலும் ஈற் றில் ஈடுபடுமென மிகச் சிலரே முன்னறிந்திருந்தனர். N
1835 தொடக்கம் உவைற்றேலிலுள்ள அரசாங்க அலுவலகங் களுக்கும் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலக்குழுக்களுக் குமிடையே தொடர்பு வளர்ந்தது. இத்தொடர்பு அரசாங்க மேற் பார்வை, உள்ளூர் இறைக்கு, வரியிறுப்போர் பணத்திலிருந்து இறை சேரி உதவி நன்கொடை அளித்தல் என்பனவற்றை அடிப்படையா கக்கொண்டிருந்தது. இவை யாவும் முன்னே எதிர்பார்க்கப்படாவிட் டாலும், 1835 இல் உலிக்குகள் நிறைவேற்றிய துணிகரமான ஒரே சீரான சட்ட ஆக்கத்தினுல் நிகழக்கூடியனவாயின. இவ்விதமே, தொழிற்புரட்சியின் கட்டுப்பாடற்ற சமூக விளைவுகளை மேற்கொள் ளும் தாமதமான செயல்முறை தொடங்கியது. ஆனல் இவை யாவற் றிலும் ஆட்குறைப்புக்கு வழி எங்கே? வழி தென்படவேயில்லை.
1833 இல் முதன் முதலாக நன்கு அமைந்த தொழிற்சாலை விதி ஒன்று அல்தோப்பு பிரபுவினுல் நிறைவேற்றப்பட்டது. இவ்வித முறையே சிறுவர்களது இளைஞர்களது வேலை நேரங்களைச் சட்ட முறைப்படி வரையறுப்பதாகும். இம்முறியின் தலையாய நலன் சட் டத்தைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு அரசாங்கம் கண்காணிப் பாளர்களை நிறுவியமையாகும். இது அப்பொழுது செவ்வனே உண ரப்படவில்லை. இது சமூக நலனில் ஒரு புதிய வளர்ச்சியின் தொடக்கமாகும்.
சீர்திருத்த முறியின் வேருெரு உடனடியான விளைவு, 1833 விதியி ஞல் பிரித்தானியப் பேராசில் அடிமையூழியம் ஒழிக்கப்பட்டமை யாகும். உவில்பவோசு, தன் வேலை பூரணமாக நிறைவேறியதும், அவ் வாண்டிலேயே மரணமானன். அவன் வாழ்வின் அந்திய காலத்தில் அடிமையூழியத்தை எதிர்த்த இயக்கத்திற்குச் சேர் தோமசு பவல் பகுதன் என்பார் ஊக்கம் மிக்க தலைவராக விளங்கினர். புருேகாம் என்பான் இவர்க்கு உற்சாகமிக்க ஆதரவாளனுகவிருந்தான். உவில்ப வோசின் முதல் முயற்சியின்போது அடிமை வியாபாரத்தின் ஆதா வாளர், பிறித்தலிலும், இலிவர்ப்பூலிலுமுள்ள முக்கியமான பிரித் தானிய கப்பல் வணிகப் பற்றுடையோராவர். அடிமை வியாபாரம் நிறுத்தப்பட்டபின் அடிமை யூழிய ஆதரவாளர் குடியேற்ற நாடு
இந்நூல் பக்கங்கள் 349, 350 ஐப் பார்க்க.

அடிமை ஊழிய ஒழிப்பு
களிலும் பார்க்க இங்கிலாந்தில் குறைவாகவே காணப்பட்டனர். அடி மைகளை இனிமேல் இறக்குமதி செய்ய முடியாதாகில், இப்போது இருக்கும் அடிமைகளிலிருந்து அவர்களது எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளலாம். மேற்கிந்திய தீவுகளிலும் வேறு அயன மண்டலக் குடியேற்ற நாடுகளிலுமுள்ள தோட்ட முதலாளிகள் எந்த நியதிப்படியும் தங்கள் அடிமைகளை விடுதலை செய்யும் பிரே ரணை தங்களுக்கு அழிவை உண்டுபண்ணுமெனக் கண்டனர். அவர் கள் தங்கள் வழக்கையை நிதான புத்தியுடன் நடத்தவுமில்லை ; தங்கள் நீகிரோ இனத்தவர்களையோ அவர்களிலன்புடைய சமய பிரசாரகர்களையோ நன்முய் நடத்தவுமில்லை. அவர்களது மூர்க்கத் தனம் பிரித்தானிய பொது மக்களினது ஆத்திரத்தைக் கிளப்பியது. குறிப்பாக, அப்போது மிகவும் செல்வாக்குடையவர்களாயிருந்த சமய பிரசாரகர்களதும் இணங்காதோரதும் ஆத்திரத்தைக் கிளப் பியது. 1833 அடிமை ஊழியம் ஒழித்தல் விதியின்படி அடிமைச் சொந்தக்காரருக்கு இரண்டு கோடி பவுண் அவர்கள்தம் அடிமை களே இழந்ததால் நேர்ந்த நட்டத்திற்கு ஈடாக வழங்கப்பட்டது. இத்தொகை தாய் நாட்டால் மனநிறைவோடு கொடுக்கப்பட்டது.
உவிக்கு அமைச்சு வெற்றிகரமாக நிறைவேற்றிய வேருெரு பெரிய செயல் பெல்சிய பிரச்சினையைத் தீர்த்து வைத்தமையாகும். 1816 ஆம் ஆண்டுப் பொருத்தனைகளின்படி பெல்சியம் ஒல்லாந்துடன் கூட்டாட்சி நடத்துவதாயிற்று. பாரிசுப் புரட்சியின் பின் 1830 இல் ஒல்லாந்துடன் ஏற்படுத்திய கூட்டு ஆட்சியிலிருந்து விலகும் நோக் கத்துடன் பெல்சியம் கலகம் செய்தது. இக்கலகத்தை விளேத்தோர் ஓரளவு தாராளரும் ஒரளவு குருமாரும் ஆவர். பிரான்சியக் குருமார், தாராளர் ஆகியவரின் செல்வாக்கும் இக்கலகம் எழுதற்கு உதவியது. கீழ் ஐரோப்பாவின் பிற்போக்கான வல்லரசுகள், பொது மக்கள் இயக்கத்தால் 1815 பொருத்தனைகளுக்கு ஏற்பட்ட பங்கம் புனித நட்புறவு முறையின்படி அடக்கப்படவேண்டிய ஒன்றெனக் கருதின அது, சிறப்பாகக் கிறேயை முதன் மந்திரியாகவும் பாமே சுதனை வெளி நாட்டுச் செயலாளராகவும் கொண்ட தாராள அமைச் சின் கீழ் இருந்த பெரிய பிரித்தானியாவின் கருத்தன்று. ஆனல் பிரி த்தானியா தன்னைப் பொறுத்தவளவில், பலவந்தமாகக் கைப்பற்று தலாலோ பிரசெல்சில் பிரான்சிய இளவரசன் ஆட்சி செய்வதனுலோ பெல்சியத்தின்மீது பிரான்சியர்கள் செல்வாக்கைத் தாபிப்பதைப் பலமாகக் கண்டித்தது. பாரிசிலுள்ள மிகையபிமானக் கட்சி யினரது உற்சாகம் குடிப்பதி உலூயி பிலிப்பினுலும் அவன் அமைச்ச ராலும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டது. வல்லரசுகளான இரசியா, ஒசுற்றியா, பிரசியா ஆகியவை பகையாயிருந்தமையால், பொது
வாகத் தாராள மனப்பான்மையுடைய இங்கிலாந்தின் நட்பைப்
409

Page 218
40
1831.
பெல்சியம் தனிநாடாதல்
பெறும் ஆசையால் உலூயி பிலிப்பும் அவனுடைய அமைச்சர்களும் அாண்டப்பட்டனர். நிலைமை இக்கட்டானதாயும் அபாயமுடையதா யிருந்தது. ஆனல், பல நெருக்கடிகளின் பின்னர், சக்ச கோபேக் கைச் சேர்ந்த இலியபோல்டு இளவரசன் பெல்சிய அரசனுக ஆதரிக் கப்படவேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டு நிலைமை திருத்திகரமாகத் தீர்த்துவைக்கப்பட்டது. அவன் பிரித்தானிய அமைச்சர்களின் சொந்த நண்பனும், எதிர்கால விற்றேரியா இராணியின் அன்புக்குரிய சிறிய தந்தையுமாவன். 1839 இல் ஒரு பொருத்தனையால் பாமேசுதன் அச்செயலை நிறைவேற்றினன். தொல்லை கொடுத்த ஒல்லாந்த பெல்சிய எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து, பெல்சியத்தின் நடுநிலைமையை உத்தரவாதம் செய்தது இப்பொருத்தன. இந்தப் பொருத்தனையில் பெல்சியம், பெரிய பிரித்தானியா, பிரான்சு, இரசியா, ஒசுற்றியா, பிரசியா என்னும் நாடுகள் கையொப்பமிட்டன. நமக்கு அச்சத்துக்கு இடந்தாாத ஒரு வல்லரசை நெதலாந்தில் நிறுவ வேண்டுமென்ற பிரித்தானிய ஆசை நெடுநாட்களுக்கு நிலைக்கத் தக்க வகையிற் பூர்த்தி செய்யப்
பட்டது.
அத்தியாயம் 11
உவிக்குகளின் நிதி நெருக்கடி. பீலும் புதிய பழைமைபேண் கட்சி யும். புதிய வறியோர் சட்டம். பட்டயவாதம். தானிய வரிகள் விலக்கல் 1846. திசரெலியும் பீலும், உவிக்குப்பாமேசுதன் ஆட்சி. குடியியற் சேவை. விற்றேரியா இராணி. கிரைமியாவும் இத்தாலியும். செல்வம் மிகுதலும் சமூக இடர் குறைதலும். வாக்குரிமைக் கிளர்ச்சியும் இரண்டாம் சீர்திருத்த முறியும், 1867.
விற்றேரியா இராணி, 1837.
நான்காம் உவிலியத்தின் ஆட்சிக்காலத்தில் உலிக்குகள் பெந்தாம் கொள்கையினரால் ஊக்கப்படுத்தப்பட்டும், பருமாற்றவாதிகளால் நெருக்கப்பட்டும் தற்கால வினைத்திறனினதும் பொதுமக்கள் பிரதி நிதித்துவத்தினதும் அமிசங்களை அரசாங்க அமைப்பில் இடம்பெறச் செய்தனர். சீர்திருத்த முறிமூலமும், நகராட்சித் தொகுப்பக விதிமூலமும் இதனைச் செய்தனர். இது ஒரு தொடக்கமெனினும் இது முக்கியமானது. அந்நாளைய சமூகப்பிரச்சினைகளை நன்குணர்ந்த ஒரு பெரிய அரசறிஞனை அல்லது திறமை வாய்ந்த நிதியமைச் சைெருவனைத்தானும் உவிக்குகள் தங்களுள் தோற்றுவித்திருந் தால் அவர்கள் இடருற்றுப் பொறுமையிழந்து நிற்கும் நாட்டு மக்களின் ஆவல் மிக்க நம்பிக்கைகளுக்குத் தாங்கள் திறந்து விட்ட முன்னேற்றப் பாதை வழியே அவர்களை வெகுதூரம் வழி நடத்திச் சென்றிருக்கலாம். ஆனல் பண்டைக் காலத்தில் சாள்சு மெனெரேகு,

உவிக்குகளின் நிதிநெருக்கடி
கொடோல்பின், உவால்போல் என்பவர்களின் சேவைகளால் நற் பயன் எய்திய இந்தக் கட்சி பொருளாதார மந்தத்தாற் பீடிக்கப்பட் டது. அந்நாளேய நிதி, பொருளாதாரப் புதிர்களுக்கு விடையாக வருமான வரியையும் கட்டற்ற வியாபாரத்தையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு பீலிடம் விடப்பட்டது. விற்றேரியா இராணி அரசெய் திய காலத்தில் உவிக்குக் கருவுலநாயகன் முடிவில்லாத பற்றக் குறைகளினருகே ஒரு வெறும் பெட்டகத்தின் மேலிருந்து கொண்டு எவ்வாறு ஒரு வரவு செலவுத் திட்டத்தை அமைக்கலாமெனத் தரு ணம் பார்த்துக் கொண்டிருப்பவன்' போலத் தோன்றின்ை. இப்படி பீல் நகைச்சுவையில் வேண்டுமென்றே ஈடுபடும் அரிதான வேளை யொன்றிலே கூறியுள்ளான்.
இவ்வண்ணம் சீர்திருத்த முறி நிறைவேற்றப்பட்டு ஆறு ஆண்டு களுள் உலிக்குகளின் ஆற்றல் கூடிய அளவு பயன்படுத்தப்பட்டு முடிந்த தென்பதும் நாட்டில் இன்னும் கடுமையாயிருந்ததும் பொரு ளாதாரம், கைத்தொழில் ஆகியவற்றைச் சார்ந்ததுமான இடரை நீக்க அவர்களிடம் வேறு திட்டமில்லை யென்பதும் எல்லாருக்கும் புலப்பட்டது. உவெசுத்துமினித்தரில் எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மாற்று அமைச்சு அமைக்கக் கூடியதாயிருந்தமை சீர்திருத்தியமைக் கப்பட்ட பாராளுமன்ற ஆட்சியின் நலனுக்குகந்ததாயிருந்தது. சீர் திருத்த முறியால் அழிக்கப்பட்ட தோரிக் கட்சியில் எஞ்சியிருந்த வர்களைக் கொண்டு பீல் ஒரு பழைமை பேணும் கட்சியைப் புதிதாக அமைந்திருந்தான். பாழ்பரோக்களை ஒழிக்க உலிக்குகளுக்கு ஆத ரவு அளித்த சிதான்லி, கிறகாம் போன்ற பலரை, அவன் மீண்டும் கவர்ந்து கொண்டிருந்தான். உயர்வகுப்பினரில் பல்வேறு பகுதியினர் கங்கள் சிறப்புரிமைகளை இழந்தபோதும் அக்கரரணத்தால் சமூக வாழ்விலிருந்து ஒதுங்கிக்கொள்ளவில்லை. அவர்கள் புதிய குழல்களுக் குத் தங்களை ஏற்றவர்களாக்கிக் கொண்டனர். இதுவே 18 ஆம் நூற்முண்டு இங்கிலாந்தின் சிறப்புத்தன்மையாகும். இத்தன்மை அந் நிய நாடுகளது தன்மையிலிருந்து வேறுபாடுடையது. 1832 இல் 1 ஒகொனல் என்பான் தன் சொந்தக் காரணங் கருதிப் பீல் என்பானை விரும்பவில்லை. அவன் பீலின் புன்முறுவல் சவப்பெட்டியிலுள்ள வெள் ளித் தகட்டைப் போன்றதொன்று ’ எனக் கூறினன். பீலினது ஒதுங்கிச் செல் லும் இயல்பைக்கொண்டு, அவன் உணர்ச்சியற்றவனெனவும் யாவரும் தவருக முடிவு செய்தனராகையால், அவன் தனது கட்சியைச் சேர்ந்த சாதாரண உறுப்பி னர் களினின்றும் தனித்தொதுக்கப் பட்டவனுயிருந்தான். மேலும் இப்பழக்க வழக்கங்களாலேயே ஓரளவுக்கு அவ்வுறுப்பினர்கள் அவனைக் கைவிடவேண்டிய நிலைமையும் 1846 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அவனது அமைச்சவையைச் சேர்ந்த கூட்டாளிகள் அவனை நன்கறிந்திருந்தமையால் அவனை விட்டு நீங்கா திருந்ததுடன் பீலுக்கு உரியராயு மாயினர். பீலை நன்ருக அறிந்து
கொள்ளும்வரை விற்றேரியா அரசி அவனை விரும்பினுளல்லள். ஆனல்
அவனை நன்கறிந்த பின்னர் அவள் அவனை என்றுமே விரும்பினள்.
41

Page 219
42
பீலும் பழமைபேணுவோரும்
நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தத்தைப் பற்றித் தற்காலத்திற் குறை
கூறப்பட்டாலும் மேல்வகுப்பினரின் அரசியல் வாழ்க்கைத் தொடர்பு
பற்றிய மரபு அழியாதபடி காப்பதற்கும் அரசியலேயே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ஒரு வகுப்பினர் விருத்தியடைவதைத் தடுப் பதற்கும் அது நல்வாய்ப்பை அளித்தது. சிறிது சிறிதாக வாக் குரிமை வழங்கும் செயல்முறை நியாயவாதத்துக்குப் பொருந்தாத காயிருக்கலாம், ஆல்ை குடியா:சிக் கட்டுப்பாட்டை நோக்கித் தடையின்றி இயங்குங்கால் படிப்படியாகச் செல்லும் தன்மையே நாட்டின் வாழ்க்கைக்குச் செயல்முறையில் பெரிதும் பயனுடைத்தா யிருக்கலாம்.
1834 இல் வெளியிடப்பட்ட பீலின் “தாம்வேதுப் பிரகடனம்” சீர்திருத்த முறியை அதன் எல்லா உட்கருத்துக்களுடனும் ஒரு முடிந்த காரியமாக ஒப்புக்கொண்டது. இவ்வுட்கருத்துக்கள் என்ன என்பது பீலுக்கு மாத்திரமேனும் விளங்கியிருந்தது. அவனது நடு வகுப்புப் பிறப்பும், வணிகம் கைத்தொழில் ஆகியன செய்யும் வகுப்பினருடன் அவனுக்கிருந்த இயல்பான இன உறவும், உவிக்கு களிலனேகமானவரிலும் தோரிகளிலனேகமானவரினும் பார்க்க அதிகமாக நாட்டின் பொருளாதார நிதிசார்ந்த தேவைகளை அவன் விளங்கிக்கொள்வதற்குத் துணைபுரிந்தன. உண்மையாகவே தான் தலைமை தாங்கிய நிலக்கிழார் கட்சியின் உளப்பான்மையை விளங் கிக்கொண்டு அதன் மீது அனுதாபமுடையவனுயிருப்பதிலும் பார்க்க அவன் நடுவகுப்பினரின் பொருளாதார நிலையை விளங்கிய வனயும் வறியோரின் துன்பங்களையிட்டுக் கூடிய அனுதாபங் கொண்டவனயுமிருந்தான். நிலக்கிழார் கட்சி தான் விரும்பிய எவ் வித நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தும்படி தன்வசம் ஒப்படைக்கப்பட்ட அரசாங்க சாதனமென அவன் கருதத் தொடங்கினன்.
எனினும் பழைமை பேண் கட்சியினரிற் பெரும்பான்மையோருக் குச் சொநதத் தேவைகளும் விருப்பு வெறுப்புக்களும் இருந்தன. அவர்கள் பீலின் தனிப்பற்றுக்குரியவர்களான தொழில் உற்பத்தி யாளர்களை வெறுத்தனர். அவர்கள், தானியச் சட்டங்களையும் திருச் சபையையும் பாதுகாப்பதில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தனர். கொடுமைகளைத் தடுக்கப் பிரபுக்கள் சபையிருந்தது. எனினும் இனங்காதோரை ஒக்சுடோட்டு, கேம்பிரிட்சு பல்கலைக்கழகங்களிற் சேர்க்கவும், அயலாந்துத் திருச்சபை தாபிப்பதற்ை கிடைக்கும் தேவைக்கு மேற்பட்ட செல்வத்தின் ஒரு பாகத்தை உலகியல் சார்ந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் வேண்டுமென உவிக்கு கள் கொண்டு வந்த பிரேரணைகளிலிருந்து திருச்சபை ஆபத்தி லிருப்பதாக அவர்கள் நம்பினர்கள். அப்படியான பிரச்சினையில்

புதிய வறியோர் சட்டம்
பீலுக்கும் அவனைப் பின்பற்றுவோருக்கும் கவனம் இருந்தது உண் மையே. ஆனல் மக்கள் நிலைமைபற்றிய பிரச்சினையையும், வணிக சகாயத்தின் நிதிசார்ந்த அம்சங்களையும் அறிவதிலே தலைவரின் உணர்ச்சியும் ஊக்கமும் வர வர அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருந் தன. காளையிலும் மற்ருேரும் மக்கள் நிலைமைபற்றிய பிரச்சினை யைத் தீர்ப்பதே பாராளுமன்றங்களினதும் மந்திரங்களினதும் முக்கியமான கடமையென மதித்தனர். கிறகாம், அபடின், காடுவல், கிளாட்சன் போன்ற எதிர்காலப் பீல் கொள்கையினரான தன் நெருங்கிய நண்பர்களைத் தன்பக்கம் ஈர்த்துக் கொள்வதில் பீல் வெற்றியடைந்தான். ஆனல் தன் கட்சியினரைத் தன் கருத்துக் களில் தன்னைப் பின்பற்றச் செய்யும் தனிப்பண்பு, அவர்களைத் தன் கருத்துக்களுக்கு இணங்கச் செய்யும் சாதுரியம் ஆகிய அம்சங்கள் அவனிடம் இருக்கவில்லை. சீர்திருத்த முறியின் காலத்திற்கு முன் ணும் மந்திரத்தின் தீர்ப்பு சட்டமாயிருந்த கனிங்கு காலத்திற்கு முன்னும் அவன் தன் அரசியற் பயிற்சியைப் பெற்றிருந்தான். சீர் திருத்த முறியின் பின், மந்திரத்திற்கும் பொது மக்களுக்குமுள்ள தொடர்பை அறிந்த அளவு அம்மந்திரத்திற்கும் அதனை ஆதரித்த கட்சியாளருக்குமிடையேயுள்ள புதுத் தொடர்பை அவன் விளங்கிக் கொள்ளவில்லை.
1841 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் பயணுக உலிக்குகள் இறு தியாக நாட்டினரசாங்கத்தைப் பீலிடம் ஒப்படைத்தனர். இதற்கு முன் அவர்கள் பீல், வெலிந்தன் என்போரின் முழு உடன்பாட்டு டன் சமூகப் புது அமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத் திருந்தனர். அந்நடவடிக்கை புதிய வறியோர் சட்டத்தை நிறைவேற் றியமையாகும். அவர்கள் நாசோ சீனியாதும், அவனின் உடன் துணையாளரதும் அறிவுரையின்படி, வேலைக்கூலிக்கு மேலதிகமான உதவிப் பணமாக வரிப்பணத்திலிருந்து கொடுத்து வந்த இசுபீன மிலந்து முறையை ஒழித்தனர். அவ்விதம் தென் இங்கிலாந்தி லிருந்து தொழிலாளிகளைப் பிச்சை பெறும் நிலைமையிலிருந்து விடுவிக்கவும், அவர்களின் சுயமரியாதை, தன்னம்பிக்கை என்னும் பண்புகளை அவர்களுக்கு மீட்டுத்தரவும் தொடங்கியிருந்தனர். அவப்பேருக, இந்த அவசியமான நடவடிக்கை, இப்பிரச்சினையின் மனித சுபாவத்தைப் பற்றிய அம்சத்தைப் புறக்கணித்து இரக்க மற்ற கோட்பாட்டாளர் முறையில் மேற்கொள்ளப்பட்டது. நகரி லும் நாட்டுப்புறத்திலும் பல ஆயிரக்கணக்கானேர் நிறுவனங்க ளுக்கு வெளியே கிடைத்த உதவியைக் கொண்டே வாழ்ந்தனர். அப் பொழுது வாழ்க்கைக்குப் போதிய கூலியைக் கட்டாயப்படுத்தா
மலும், (வேலையும் உணவும் அளிக்கும்) வேலை விடுதியைத் தவிர்த்து
இந்நூல் பக்கம் 369 ஐப் பார்க்க.
1834。
413

Page 220
44
838.
புதிய வறியோர் சட்டம்
வேலையற்றவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் வசிக்க இடம் அளிக்காமலும் திடீரென இடர் உதவியை முற்ருக ஒழிப்பது பயங்கரச் செயலாயிருந்தது. மேலும் தாங்கள் ஒழித்த முறை பிச்சைக்காரத்தனத்திற்குக் காரணமாயிருந்ததென்பது பற்றி ஆணையாளர் உண்மையாக அச்சமுற்றிருந்தனராதலால் வேலை விடுதி வாழ்க்கை, விடுதிகளுக்கு வெளியே வாழும் கட்டற்ற தொழிலாளர் வாழ்க்கையை விட அதிக வெறுப்பைத் தருகிறதாயிருக்க வேண்டுமென்பதை, ஆணையாளர் ஒரு நியதி ஆக்கினர். வேறு விதமாகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்யவும், வேலை விடுதியிலும் பார்க்கக் கட்டற்ற தொழிலாளரின் குழலைக் கூடிய கவர்ச்சியுடையதாக உயர்த்த நிய திச் சட்டத்தின்மூலம் முயற்சி செய்யவும், அக்காலப் பொருளா தாரக் கொள்கைகள் இடங் கொடுக்கவில்லை. அந்நாட்களில் இளைப் பாறற்கால சம்பளமோ, தொழில் சார்ந்த காப்புறுதியோ இல்லாத வயது சென்றவர்களும் வீட்டில் வசிக்க வழிவகையில்லாதிருந்தனர். எனினும் அவர்கள் தங்கள் தவறு காரணமாக வேலை விடுதிற்கு வந் தவர்கள் போலவே நடத்தப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையிற்முன் ஒலிவர் துவித்து என்பானைப் பற்றி எழுதிய இளம் நூலாசிரியன் தொழில் விடுதிகளைப் பற்றி அங்கே வசித்தவர்களின் கருத்து என்ன வென்பதைப் பற்றி விவரமாகக் கூறினன். இச்சூழ்நிலையில் ஆணை யாளரைப் பெந்தாம் கொள்கையின் இலட்சியரீதியான உட்கருத்துக் களில் ஈடுபடுவதைக் கைவிட்டு யதார்த்தமான நிலைமைகளை நோக் (தம்படி ஆர்வத்துடன் கோரினுன். இந் நிலைமைகளே புதிய விற் ாே?ரிய ஊழியின் உணர்ச்சி மிகுந்த சந்ததியினரைக் கவர்ந்தன.
முற்றிலும் கடுமையான தீர்க்கமான இத்திடீர் நடவடிக்கைகளால் பிச்சைக்காரத்தனம் என்னும் இழிநிலை அகற்றப்பட்டது. இடத்துக் கிடம் மிகையான வேறுபாடும் தனித்தனி வட்டாரங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டமையுமே பழைய வறியோர் சட்டத்தின் குறைபாடுகள். புதிய வறியோர் சட்டத்தின் நாட்டின இயல்பும் ஒரு சீராக நிறைவேற்றப்படும் தன்மையும் முதலாம் தலைமுறையில் அளவுக்கு விஞ்சிக் கொடுமையாகப் பிரயோகிக்கப்பட்டதெனினும், பின்னர் பொதுமக்கள் வற்புறுத்திய தணிப்புகளையும் திருத்தங்களை யும் நிறைவேற்றுவதை இலகுவாக்கின. அவப்பேறுடையவர்களுக் குத் தொழில் விடுதிகள் தண்டக்குடியிருப்பாயிருப்பது படிப்படி யாகக் குறைந்து விட்டது. முதிர்ந்தோர் இளைப்பாறற் காலச் சம்பள மும் நாட்டுக் காப்புறுதியும் வழக்கிலுள்ள எங்கள் காலத்திலே இடர் நிறைந்த சமயங்களிற் கூட தொழில் விடுதிகள் பெரும்பாலும் வெறுமையாயிருந்து வருகின்றன.

பட்டயவாதம்
புதிய வறியோர் சட்டத்தைப் பற்றிக் கூலிப்பிழைப்பு வகுப்பினர் கோபமுற்றனர். அக்கோபம் அரசியல் வலியற்றதாதலால் தங்கள் விருப்பங்களை உவெசுத்துமினித்தரில் நேரடியாகச் செயற்படுத்து முன் வேருெரு சீர்திருத்தமுறி தேவைப்படும் என்பதை அவர் கள் உணர்ந்தனர். தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் நேரத்தை நியதிச் சட்டத்தால் கட்டுப்படுத்தச் சாவுதுபரி பிரபுவும் பருத்தி நூல் நூற்கும் தேர்ச்சியாளன் பீல்தனும் நடத்திய பத்துமணி நேர முறி கோரும் கிளர்ச்சி தாராளர் கட்சிக்கும் பழைமை பேணு வோருக்குமிடையில் பிளவை ஏற்படுத்தியமையால் அம்முறி 1847 வரையும் நிறைவேற்றப்படவில்லை. கைத்தொழில் மாவட்டங்களில் நிகழ்ந்த இக்கிளர்ச்சிகளும், தொடர்ந்து நிலவிய இடரும் பட்டய வாதம் எழுவதற்குக் காரணமாயின. பட்டயவாதம் செயலளவில் 1867 இலும் 1884 இலும் வழங்கப்பட்டவற்றையே கோரியது-அதா வது, 1832 முறியின் மூலம் வாக்குரிமை பெருது விடுபட்ட வகுப் பினர்க்கு வாக்குரிமை அளித்தலைக் கோரியது. மக்களின் பட்டயக் தின் ஆறு விடயங்களும் முற்முக அரசியல் சார்ந்தன. ஆனல் கிளர்ச் சியின் குறிக்கோளும் தன்மையும் சமூகச் சார்பானவை. அது நடு வகுப்பினரின் உதவியை நீக்கியது ; அது கூலிப் பிழைப்பாளனது ஆத்திரத்தினதும் வகுப்புணர்ச்சியினதும் கூக்குரலாகும். இப் போது வெளியிலுள்ளோர் கருத்துக்களை முன்னையைவிட அதிக மாகப் பிரதிபலித்து வந்த பாராளுமன்றத்திலும் அதன் செல்வாக் குப் பயன்பட்டது. பட்டயவாதத்தின் விளைவுகளைப் பற்றிய அச்சம், தொழிற்சாலை விதிகள், தானியவரி விலக்கல், பண்டமாற்று எதிர்விதிகள், சாவுது பரியின் சுரங்க விதி, சாடுSக்கின் அறிக்கை காரணமாகப் பொதுப் பிரச்சினை என ஒப்புக்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தினுல் முதன் முதல் 1848 இல் காலந்தாழ்த்தி நிறைவேற்றப்பட்ட சுகாதார விதி ஆகியவை நிறைவேற்றப் படுவதைத் துரிதப்படுத்தியது.
இவ்விதம் பட்டயவாதம் பாட்டாளிகளின் நிலைமையை மறைமுக மாகச் சீர்ப்படுத்தி அதன் உண்மையான குறிக்கோள்களிற் சில வற்றை எய்தியது. ஆனல் சருவ வாக்குரிமை என்னும் அதன் அர சியற்றிட்டம், நடுவகுப்பினர் சங்கத்தினதும் தலைமையினதும் உத வியிலைன்றித் தொழில் முதல்வர்களைத் தாக்குவதனுற் பெறவேண் டியதாயும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கான நடவடிக்கையாயும்
கோரப்பட்டு வந்த வரையும் அது சித்தியடையச் சந்தர்ப்பம் வாய்க்
இந்நூல் பக்கம் 417 அடிக்குறிப்பைப் பார்க்க.
1838.
415

Page 221
416
1846,
வகுப்புக்களும் கட்சிகளும்
கவில்லை. பட்டயத்தலைவர்கள் செயற்றிறமையுள்ள அரசியல்வாதிக ளாகப் பயன்படவில்லை. 60 ஆம் ஆண்டுகளில் அந்த இயக்கம் வெற்றி யடைந்தது. ஏனெனில் அப்போது பிறைற்று, கிளாட்சன் என்போ ரின் தலைமையில் நடுவகுப்பார் கூலிப்பிழைப்பாருடன் சேர்ந்து வாக்குரிமையை இன்னும் மிகுவிக்க வேண்டுமெனக் கோரினர். இந் நடுவகுப்பினரிற் பாதிப்பேர் வாக்குரிமையிலிருந்து விலக்கப்பட்ட
வராவர்.
பட்டயவாதத்தின் முற்பகுதியிலும் பார்க்கப் பிந்திய பத்தாண்டு களில், நடுவகுப்பினருக்கும் பாட்டாளிகளுக்குமிடையே கூடிய நட்புறவு நிலவியது. இடைக்காலத்தில், சமூகத்தின் எல்லாப் பரி வினரது வாழ்க்கைத் தாமும் உயர்ந்ததன் விளைவாக, வறுமை தோற்றுவித்த மனக் கசப்புப் பெரிதும் குறைந்தமை இதற்கு ஒர ளவு காரணமாகும். பீலின் அமைச்சுக் காலத்தின் நன்மைபயக்கும் நிதி நிலைமையும் தானிய விதிகள் ஒழிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிறந்த சூழ்நிலைகளும் மேலே குறிப்பிட்ட வகுப்பினரிடையே இணக் கம் ஏற்பட்டதற்கு வேறு காரணங்களாகும். நடுவகுப்பினருக்கும் பாட்டாளிகளுக்குமிடையில் கருத்து வேறுபாடில்லாத விடயத்தில் கொபுடனது தானிய விதி எதிர்ப்புச் சங்கம் இருவகுப்பினருக்கு மிடையிலிருந்த கருத்தொற்றுமையை நன்கு பயன்படுத்தியது. நிலக்கிழாரது உறுதியான எதிர்ப்பிருந்த போதும் ஆறு ஆண்டுகள் இடைவிடாது கிளர்ச்சி செய்து சங்கத்தினர் எய்திய பொது வெற்றி கூலிவேலை செய்வோருக்கும் சமூகத்தில் ஏனையோருக்கு மிடையில் அரசியல் வேற்றுமைகள் ஏற்படுத்தப்படுவதைத் தடுக்கப் பெரிதும் பயன்பட்டது. மெல்போண், பாமேசுதன் ஆகியோருடைய உவிக்குக்கட்சியானது உயர்குடியினரில் ஒரு பகுதியினரும் மத்திய வகுப்பினரும் சேர்ந்த கட்சி கிளாட்சனின் தாராளக் கட்சியாக மத்தியவகுப்பினரில் ஒரு பகுதியினரும் கூலி பெறுவோரும் சேர் ந்த கட்சியாக படிப்படியாக மாற்றமடைவதற்கு வழி கோலப்
பட்டது.
வகுப்புகளதும், கட்சிகளதும் இந்தச் சிக்கலான இயக்கங்கள், குறுக்குப் பிரிவுகளாகவும் இரட்டை விசுவாசங்களாகவும் மேலும் சிக்கலுடையனவாயின. எனினும் பாராளுமன்ற உலகில் இரு கட்சி முறை தொழிற்பட்டுக் கொண்டேயிருந்தது. இச்சூழ்நிலையிலே விற்
முேரிய ஊழி, வகுப்பினரிடையே பெருங் கலகங்கள் ஏற்படாமல்
1838. தவிர்ப்பதில் சித்தி எய்தியது. பட்டயவாத காலத்திலும் உருெபட்டு

வகுப்புக்களும் கட்சிகளும்
ஒவனது தேசீயமகா தொழிற் சங்க காலத்திலும் இக் கலகங்கள் நிகழுமோ என்ற அச்சம் தோன்றியது. வாழ்க்கைச் சூழலில், எப்படி யெனினும், நாட்டுப் பகுதிகளுக்குப் புறம்பே இடைவிடாது முன்னே ற்றம் ஏற்பட்டுக் கொண்டிராவிட்டால், வகுப்புச் சண்டையை எவ் விதத்திலும் தவிர்த்திருக்க முடியாது. சமூக மீட்சிக்குக் காரணம் சமுதாய கட்சிகளின் முயற்சியும், நிதான புத்தியும் மாத்திரமன்றி 40 ஆம் ஆண்டுகளில் நிலவிய வியாபார முன்னேற்றமும் செழிப்பு மென்க. விற்முேரிய ஊழியின் நடுப்பகுதியில், பிரித்தானியா உலகத்தின் கைத்தொழில் மையமாய் இருந்தது. மற்ற நாடுகள் உணவுப் பொருள்களையும், கைத்தொழில் மூலப் பொருட்களையும் கொடுத்து நிலக்கரியையும், கைத்தொழிற் பொருள்களையும் வாங் கப் பெரிய பிரித்தானியாவை நம்பியிருந்தன.
இத்தகைய உலகில் பூரணக் கட்டிலா வியாபாரப் பூட்கையிலேயே தங்கள் நலன் தங்கியிருப்பதை நடுவகுப்பினர் கண்டனர். இவ் விடயத்தில் அவர்கள் நன்றியுடன் நிலக்கிழார் வகுப்பினரின் அரசி யற்றலைமையை ஏற்றுக்கொண்டபோதும் அவ்வகுப்பினருக்கெதிரா கத் தங்கள் உரிமையை வற்புறுத்தினர். இயக்கத்தைப் பின்பற்று வோருக்குத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் நகரமக்கள் உயர் குடியினரால் வழி நடத்தப்படுதல் இங் கிலாந்தின் பழைய வழமையாகும். 1832 இல் வாக்குரிமை பெற்ற 10 பவுண் வீட்டுக்காரர் பன்முறையும் நாட்டு விழுமியோரையே பிரதி நிதிகளாகத் தெரிவு செய்தனர். 1867 இரண்டாம் சீர்திருத்தமுறி வரையும் நடுவகுப்பிற் பிறந்தோரும் அவ்வகுப்புக்குரிய தரத்தவரு மேயான கொபுடன், பிறைற்று போன்முேர் பொதுமக்கள் சபையில் சமுகமாயிருந்தமை அவர்களைச் சுற்றியிருந்த உவிக்குத் தோரி உயர் குடியினரால் சகித்துக் கொள்ளப்பட்டது; அல்லது முறை யற்றதென எதிர்க்கப்பட்டது. ஏனெனில் அந்நாட்களில் பணம் படைத்த நடுவகுப்பினருக்கும் உயர் குடியினருக்குமிடையே வேற்றுமை இன்னுமிருந்தது. வேற்றுமையைப் போக்கவல்ல பொதுப் பாடசாலைக் கல்விமூலம் அவர்கள் இன்னும் கலந்து ஒரே
உருெபேட்டு ஓவன் என்பான் வேதனம் பெறுவோரை அரசியற்கிளர்ச்சி செய்வதிலிருந்து விடுவித்து, அவர்கள் ஓரளவு புரட்சிகரமான பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ளவும் இறுதியில் சமவுடைமைக் கொள்கையைக் கடைப்பிடிக்கவும் செய்வதற்கு விரும்பினன். அவன் தனது தொழிலாளர் களின் சொந்த நன்மைகருதி அவர்களின் வாழ்க்கையை உருவாக்கியமைத்த, தன்முனைப்பான சிந்தனையுடையவொரு முதலாளியாகத் துவக்கத்திலிருந்த வனதலால், சனநாயக வாக்குரிமை பற்றி அவன் ஒருபொழுதுமே அக்கறை காட்டவில்லை. ஆஞல் பெந்தாம் என்பானைப் போன்று இவனும், சமுதாயத்தை ஒருபொழுதும் உயர்வகுப்பிலிருந்து தொடங்கிச் சீர்படுத்த முடியாதென்பதை, உண்மை நிகழ்ச்சிகளின் காரணமாகக் கட்டாயம் உணரும்படியாயிற்று.
1833.
47

Page 222
18
1842-1845.
தானிய வரி
சமூகமாகவில்லை. பல வேளைகளில் சமயவழிபாட்டு வேறுபாடு இருந்தது. அந்நாட்களில் இது மிக முக்கியமானதாகக் கருதப் பட்டது. ஏனெனில், ஒக்சுபோட்டு, கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகங்களிலிருந்து இணங்காதோர் ஒதுக்கப்படுதல் போன்ற சமூக நிலைமைகளை இது குறிப்பிட்டது. ஒரு வகுப்பினரின் பண்பாடு இலத்தின், கிரேக்க மொழிக் கல்வியையும் மற்ற வகுப்பினர் பண் பாடு விவிலிய வேதத்தினையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒரு வகுப்பினரின் பற்றுகள் விளையாட்டு, அரசாங்கம், நில உடைமை ஆகியனவாகும்; மற்ற வகுப்பினர் வரவு கணக்குகளோடு ஒட்டி யிருந்தனர். தற்கால வியாபாரிகளுடையனவற்றைவிட அவர்களு டைய பொழுதுபோக்குக்கள் குறைவாயிருந்தன வரமுடிவு விடு முறைகளும் குறைவாயிருந்தன.
1832 ஆம் ஆண்டுக்குப்பின்னும் நடுத்தாவகுப்பினர் உயர்ந்த வகுப்பினரின் பிரிவுணர்ச்சியையும் பரிவையும் தம்மிடம் அவர் காட்டும் பரிவையும் பெரிதும் சகித்துக்கொண்டனர். ஆனல் கட்டி லாத் தானிய வியாபார அலுவலிலோ அவர்கள் கண்டிப்பாயிருந்த னர். இவ்விடயத்தில் இவர்களுக்கு வாக்குரிமையற்ற மாபெரும் மக்கள் கூட்டத்தின் ஆதரவிருந்தது. பாராளுமன்றப் பழைமை பேணும் கட்சி தானிய வரி ஒழித்தலை எதிர்த்து நின்றது. உவிக்குக் கட்சி அப்பிரச்சினையில் பிளவுபட்டிருந்தது. பீல், தனது பிரசித்தி பெற்ற அமைச்சின் முற்பகுதியில் வருமான வரியைப் புதுப்பித் தான். அதன் உதவியுடன் பல பொருட்களின் இறக்குமதி வரியைக் குறைத்து ஒழித்தான். அதனுல் நாட்டு வியாபாரம் பெரும் நன்மை அடைந்தது. ஆனல் வெளிநாடுகளிலிருந்து வரும் தானியத்தின்மீது விதித்த தீர்வையை ஒழிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. தானியமே இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தது. ஒ கொனலின் கத்தோலிக்க சங்கம் அயலாந்தின் நாட்டுப்புறத்தில் வெல்ல முடியாமலிருந்தது போல, கைத்தொழில் இங்கிலாந்தில் தானியச்சட்ட எதிர்ச் சங்கம் பெரும்பாலும் வெல்ல முடியாததாக இருந்தது. 1829 இல் இவற்றுள் ஒன்றுக்கு விட்டுக்கொடுத்தவனன பீல் 1840 இல் மற்றதற்கும் விட்டுக் கொடுத்தான். இதற்குக் கார ணம் அரசாங்கம், ஆளப்படுவோரின் சம்மதத்துடன் நடைபெற வேண்டுமென்ற உணர்ச்சியும் பொது மக்கள் சபையில் பொருளா தாரப் பிரச்சினை பற்றிய பேச்சில் கொபுடன் அவனை இணங்கச் செய்ததும் 1845-6 இல் அயலாந்தில் உருளைக்கிழங்குப் பயிருக்குப் பெரும் சேதம் விளைத்த அழிவு நோயால் அவன் தானிய வரியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது அயலாந்து மக்களைப் பதினுயிரக் கணக்கில் மடிய விடவோ வேண்டும் என்ற நிலை ஏற்

தானியச் சட்ட ஒழிப்பு
பட்டதுமாகும். வெளிநாட்டுத் தானியத்தீர்வை ஒருமுறை நிறுத்தப் பட்டால் பெரிய பிரித்தானியாவில் புரட்சி இயக்கம் உண்டாகாது அதைத் திரும்ப விதிப்பது அரிதாகும். தானியச் சட்டத்தை உட னடியாக ஒழித்தமை பிற்றின் ஐக்கியச் சட்டத்தின் எதிர்பாராத விளைவாகும்."
தானிய விதிகளின் ஒழிப்பு பலகாரணங்களால் முதலாம் இரண் டாம் சீர்திருத்த முறிகளுக்கிடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்ச்சியாகும். முதலாவதாக அது பழை மைபேண் கட்சியை முறிய அடித்து, குறுகிய இடைக்காலப் பகுதி களைத் தவிர இருபது ஆண்டுகளுக்கு உவிக்குகளை அதிகார பீடத் தில் அமர்த்தியது. பீல் கொள்கையுடைய அரசறிஞர் அபடின், காடு வல், கிறகாம் போன்றவர்களின் அறிவுரையையும், அவர்களின் வாக் குகளையும், அதிகம் தேவைப்பட்ட கிளாட்சனின் பொரு ளாதார ஆற்றலையும் உவிக்குகள் இடைக்கிடை பயன்படுத்திக்
கொண்டனர்.
பழைமை பேணும் தனி உறுப்பினரின் பீலுக்கெதிரான கிளர்ச்சி பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை. நெருப்பு வைத்தால் வெடிமருந்து கொழுந்து விட்டெரிய வேண்டும். அதுபோல, தலைமை யிலிருக்கும் துரோகிக்கெதிராகக் கூறிய திசரெலியின் ஆவேசமான பேச்சின் சத்தியும் தன்மையுமே பாராளுமன்றப் பின்னிருக்கை யினரைக் கிளம்பிக் கலகஞ் செய்யத் தூண்டின. தானிய விதிகளை ஒரு பொருளாதாரப் பூட்கையாகக் கொண்டு திசரெலி திட நம்பிக்கை வைத்திருந்ததாகக் தோன்றவில்லை. அதன் பின்னர் காப்பு வரி நாசமானதாக அவன் அக்கறையின்றிப் பேசிக்கொண்டி ருந்தான். அவனுக்கு முன் பொலிம்புரோக்கு/ செய்ததுபோல், நாட்டுக் கட்சியினருடன் தொழின் முறையில் தன்னை இணைப்பது தன் கடமையெனக் கருதினன். மறு கட்சிக்கு உரிமையான உவிக்கு குலத்தினரை அவன் தவிர்க்க வேண்டியிருந்தது. எங்கள் நிறுவகங் களின் வெளிநாட்டுப் பார்வையாளனுக அவன் இருந்தமையால் இங்கிலாந்தின் சரித்திரப் பெருமை வாய்ந்த மாபெரும் குலங்கள் அவன் கற்பனையைப் பெரிதும் கவர்ந்தன. தானியச் சட்டத்தைக் கைவிட்டதனுல் இங்கிலாந்தின் கனவான்களைப் பீல் துன்புறுத் திக் காட்டிக் கொடுத்தான். அவ்விடயத்தில் தங்கள் கருத்துக்களைப்
1 வெலிந்தன் என்பான் பீல் என்பானின் அரசியற் குட்டிக்கரணத்தை ஆதரி த்தான். இதற்குக் காரணம் அவன் பீலின் நடவடிக்கை சரியெனக் கொண்டமை யன்று; பீல் ஓர் அமைச்சன் என்ற அளவில் அவன் மீது நம்பிக்கை வைத்திருந்த மையேயாகும். " அழுகிய உருளைக்கிழங்குகள்.இதற்குக் காரணமாயிருந்துள்ளன : அவைகளே திகில் தரும் பீதிக்குப் பீலை ஆளாக்கி யுள்ளன ” என்று வெலிந்தன் வேண்டாவெறுப்பாகக் கூறினன்.
1846.
419

Page 223
420
1867.
பீலும் திசரெலியும்
போதிய அளவு வெளிப்படுத்துவது இக்கனவான்களுக்கு கடினமா யிருந்தமையால் திசரெலி தனது முன்னேற்றத்திற்குத் தடையா யிருந்தவனுக் கெதிராக இவர்களுக்காகப் பாடுபடும் வீரன் ஆனன். பில் வீழ்ச்சியடையும் வண்ணம் அவன் நடந்து கொண்டமையால் 20 ஆண்டுகளுக்குப் பழைமை பேண் கட்சியினர் அதிகார பீடத் கில் அமர முடியாமற் போயிற்று. ஆனல் திசரெலி தன் பின்னிருக் கையிலிருந்து சிதான்லியின் பின், நேரே தலைமைப் பதவிக்கு உயர்த்தப்பட்டான். கீர்த்தி வாய்ந்த முதன் மந்திரியாய பீல் தனது நாட்டினரிடையே எய்திருந்த செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயம், அவனது அரசியல் வாழ்வுக்குத் திடீர் முற்றுப்புள்ளி வைத்த திசரெவி, தானும் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே மாதிரியான விரும்பப்படாத பூரண மாற்றம் ஒன்றைச் செய்வதற் குத் தனது கட்சியைத் தயார் செய்தான்.
மேதைக்குச் சில சிறப்புரிமைகள் உண்டு. அதைப் பற்றி எவரும் பொருமைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மேதை மாத்திரமே, போர் புரட்சி என்பவற்றைப் பற்றிய கூடிய அபாய கரமான வரலாறுகளைப் போல பாராளுமன்ற நடவடிக்கைகளையும் அக்காலப் பார்வையாளருக்கும், சரித்திர மாணவருக்கும் கவர்ச்சி யுடையனவாக்கலாம். பாமேசுதன், திசரெவி, கிளாட்சன் ஆகிய ஒவ் வொருவரும் வேறு வேமுன வழியில் புதிய குடியாட்சியின் கற்பனு சத்தியைக் கவரவும் பாராளுமன்ற அரசாங்கத்தில் தனிப்பட்ட பற்றைக் காட்டவும் இக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டனர் எனத் தோன்றியது. ஏனெனில் இத்தனிப்பற்று இல்லாமையால் சில தேசங் களில் பாராளுமன்ற நிறுவகங்கள் நீர் இல்லாச் செடிகள் போல வாடிவிட்டன.
தானிய விதி எதிர்ச்சங்கத்தின் வெற்றி மத்திய வகுப்பினர் விழு மியோர் மீதும், கைத்தொழில் நலன் விவசாய நலன்மீதும் எய்திய முதல் முக்கியமான வெற்றியாகும். ஆனல் விவசாய நலன், இப்பதத் தின் கூடிய விரிவான கருத்தில் உண்மையாகவே இப்பிரச்சினை பற் றிப் பிளவுபட்டிருந்தது. பெருந் தொகையான உழவோர் சிறு சிறு துண்டுகளான நிலத்தை உடையவர்களாய் இருந்தால் அல்லது அவற்றில் குடியிருந்தால் நிலக்கிழாரும் பெரிய கமக்காரர்களும் இந்தப் போராட்டத்தில் தனிமையில் விடப்பட்டிருக்கமாட்டார்கள். நிலமற்ற விவசாயத் தொழிலாளியிடம் அவனுடைய கருத்தை அரசியல்வாதிகள் கேட்டிருந்தால் அவன் பொதுவாக மலிவான உணவு கிடைப்பதற்கான கொள்கையையே நாடியிருப்பான்.
விவசாயப் பற்றுள்ள நிலக்கிழாரும் பெரிய கமக்காரரும் தானிய வரி விலக்கலால் தங்களுக்கு அழிவு நேரவில்லையென்பதை விரைவில்

தானிய உற்பத்தி
கண்டு கொண்டனர். கலிபோணியாவிலும் அவுத்திரேலியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டமையால் நாணயத்தின் விலை விழுந்தது. இருந்தும், தடையற்ற இறக்குமதி தானிய விலைகள் மிகவும் உயர் வதைத் தடுத்தது. தானிய விலைகள் இன்னுெரு சந்ததி காலம் வரையிலும் பொதுவாக மாரு திருந்தது. காலம் செழிப்படைந்ததும், மக்கள் பாணை அதிகமாக வாங்க ஆரம்பித்தனர். திரலோப்பின் நாவல்களினதும், யோன் வீச்சின் சித்திரங்களினதும் ஊழியாய விற் முேரியா ஊழியின் நடுப்பகுதியிற்போல கூடிய செல்வமுடைய னவாகவோ, அதிக சனத்தொகை உடையனவாகவோ, மனநிறை வுடனே, இங்கிலாந்திலுள்ள நாட்டுப்புற வீடுகளேனும் பண்ணை களேனும் வேறு எப்போதாவது இருந்ததில்லை. உண்மையாகவே, நகருக்கும் நாட்டுக்குமிடையில் பிணக்கு ஏற்படும் முக்கியமான காரணங்கள் அகற்றப்பட்டன. ஆதலால் இன்னும் முப்பது ஆண்டு களுக்கு மிகவும் பொருமைப்படவேண்டிய அளவுக்குத் தமக்குச் சாதகமான சமூக நிலையில் "பழம் பெரும் இல்லங்கள் ” விடப் பட்டன. அதன் பின்னர் அமெரிக்க கண்டத்துக்குக் குறுக்கே செல்லும் இருப்புப் பாதைகளும் பெரிய புகைக் கப்பல்களும் அபி விருத்தியடைந்தன. இவை அமெரிக்கா பெரும் அளவான உணவை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்து குவிக்க உதவின. ஆதலால் இறுதியில் திசரெவியின் அமைச்சின் கீழ்க் கழிந்த 76 ஆம், 77 ஆம், 78 ஆம், 79 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய தானிய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவிய பிரித்தானிய வியாபார அமைப்பு எத்திசையிலிருந்தும் எங்கள் தீவிற்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தது. நாங்கள் இன்று அறிந்திருக்கிற விவசாய நிலைமை அபிவிருத்தியடையத் தொடங்கியது.
தானியச் சட்ட எதிர்ச் சங்கம் 1846 இல் எய்திய வெற்றி, அர சியற் கல்வி, அரசியற் பிரசாரம் என்பனவற்றின் புதிய முறைகளின் வெற்றியாகும். இம்முறைகள் குடியாட்சிப் பாதையில் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றத்தின் அறிகுறிகளென்க. செழிப்பும் சமூக அமைதியும் விளங்கிப் பின் தொடர்ந்த இருபது ஆண்டுகளில் இம் முறைகள் ஓரளவு நடைமுறையிலில்லாதிருந்தன. ஆனல் 1867 இலும் 1884 இலும் இலட்சக் கணக்கான புதிய மக்களுக்கு வாக் குரிமை அளிக்கப்பட்டபின், இவை இரு கட்சியாராலும் சாதாரண மாகக் கையாளப்படலாயின.
தானியவரி பற்றிய பிணக்கிலிருந்து விளைந்த, நிலக்கிழார் ஆலைச் சொந்தக்காரரிடைக் கடும் பூசல், ஒவ்வொரு கட்சியையும் அதன் எதிர்க்கட்சியினல் துயருறுவோரை ஆதரிக்கச் செய்தது. நாட்டுப் புறத் தொழிலாளியின் மிகக் குறைவான கூலிமுறை, வீட்டு நிலைமை
42

Page 224
422
1842.
1847.
சாவ்சுபரி
ஆகிய குறைபாடுகள் சங்கமேடைகளிலிருந்து நிகழ்த்தப்பட்ட பேச்சுக்களுக்கு விடயங்களாயின. தொழிற்சாலைத் தொழிலாளி களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளே பெரும்பாலும் எதிர்க்கட்சி யினுல் எடுத்துக்காட்டப்பட்டது நியாயமாயிருந்தன. இவ்வண் ணம் வாக்குரிமை அளிக்கப்படாதோர் தங்கள் குறைகளைப் பற் றிப் பிரசாரம் செய்யவும், சில சமயங்களில் சீர்படுத்தவும் முடிந் தது. நிலக்கிழாரும், ஆலைச்சொந்தக்காரமும் ஒருவரைப்பற்றி யொருவர் குற்றம் கூறிய காலத்தில் சாவ்சுபரியின் சுரங்க விதியும் கீர்த்தி வாய்ந்த தொழிற்சாலை சம்பந்தமான பத்து மணிநேர முறியும் நிறைவேற்றப்பட்டன. விவசாயத் தொழிலாளிகளுக்கு இவ்வளவு வசதிகள் செய்யப்படவில்லை. ஏனெனில் அவர்கள் தொழிற்சங்கங்கள் மூலம் ஒன்றுசேர்க்கப்பட்டு தொழிற்சாலைகளில் ஒருங்கு கூடும் தொழிலாளிகளிலும் பார்க்கப் பரந்த பிரதேசத் தில் சிதறியிருந்தனர். ஆகவே அவர்களைப் பற்றிய அச்சமும் அவர் களுக்கு உதவி செய்யும் வசதியும் குறைவாயிருந்தன.
தானியச் சட்டம் பற்றிய பிணக்கு அடங்கியதும், மத்திய-விற் முேரிய வியாபாரக் கைத்தொழிற் பெருக்கம் அதே காலத்தில் தொடங்கியது. இதனுல் நாட்டில் மிகுந்த வளத்தில் சமூகப் பிரச் சினையும் சேரிவாழ்நரின் கலகமும் மறைந்தன. அரசியலும் ஓய்வு நிலையைப் பிரதிபலித்தது. 1864 தொடங்கி 1866 வரையுமுள்ள காலப்பகுதி, மக்களின் தனிப்பற்றுக்குரிய பாமேசுதன் பிரபு ஆதிக் கம் செலுத்திய உவிக்கு-பீல் கட்சியினரின் ஆட்சிக் காலமாகும். எங் கும் இடரின்றியும், உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எதுவும் அதிக முக்கியமாகத் தோற்ருமலும் இரசியாவுடன் ஒரு போரைத் துவக்கு தல்கூட ஒரு வரையறுத்த பொறுப்பை மாத்திரமே கொண்டதாயும்
தொழிற்சாலைகளில் இளைஞர்களும் பெண்களும் நாளொன்றுக்கு 10 மணிநேர வேலை செய்யும் வரையறை இந்த முறியினல் எற்படுத்தப்பட்டது. இதுபோன்று ஆண்கள் வேலை செய்வதற்கான நேரத்தின் அளவும், தொழிற் சாலைகளிலிருந்த வேலை செய்யு மொழுங்குகள் காரணமாகக் குறைக்கப்பட வேண்டுமென்பது இதன் விளைவாக எற்பட்டதொன்றகும். இந்த முறியைத் தான் பிறைற்று என்பான் எதிர்த்தான். தவருக அடிக்கடி கூறப்பட்டு வந்ததுபோல், இவன் ஒரு பொழுதாவது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்ட தொழிற்சாலை முறியை எதிர்க்கவில்லை. இம் முறியினுல் உவிக்குக் கட்சியிலும் பழைமைபேணுங் கட்சியிலும் பிளவு எற்பட்டது. பதின்மூன்று வயதிற்குக் கீழு ள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காகப் பிறப்பிக்கப்பட்ட முறி, 1833 ஆம் ஆண்டில் உவிக்குக் கட்சி அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதொன்ருகும். இந்த முறியின் விளைவாகத் தொழிற்சாலைப் பரிசோதனையெனும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தத்துவமடங்கிய சட்டம் நடைமுறையிற் புகுத்தப்பட்டது. இம்முழு விடயம் பற்றிய முழுவிவரத்தை கச்சின்சும் கரிசனும் எழுதிய * History of Factory Legislation' at 68769) b 15taglia, as thogo7G 6TcpSuu "Shaftesbury" என்னும் நூலிலும் காண்க.

குடியியற் சேவை
இந்தக் காலப்பகுதிக்குச் சால உகந்ததாக அவனுடைய வினை முறைகளிருந்தன.
இதற்கிடையில் முதலில் பழையபாணித் தோரியாயிருந்து பிறகு முன்னேற்றக் கொள்கைகளையுடைய தாராளனுக மாறிய தனது நீண்ட வாழ்க்கைப் பாதையின் இந்தக் கட்டத்தில் கிளாட்சன், சமுதாயத்தின்பால் ஓர் அரசறிஞனின் கடமை உறுதியான நிதி நிலையை நிறுவுதலே எனக் கண்டான். அத்துடன் இந்த ஆண்டு களில் தான் நெருங்கிச் சம்பந்தப்பட்ட இறைசேரியில் பொது நிதியைச் செலவழிப்பதில் கண்டிப்பான சிக்கனமும் நேர்மையும் கொண்ட ஒரு மாபை ஆக்குதலும் ஒரு கடமை எனக் கண்டான். நிாந்தரமான குடியியற் சேவையின் பல பகுதிகளிலும் முறைமை யும் மரபும் வளர்வதற்கு அது ஒரு முக்கியமான காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியிலிருந்த அலுவலகங்களின் மீது அடுத்துவரும் அதிக முயற்சியுள்ள ஊழி சுமத்தவிருக்கும் மிக அதிகமான பாலனச் சுமையைச் சமாளிப்பதற்கு இக்காலப்பகுதியிலேயே ஆயத்தம் செய்யப்பட்டது. அதே காலத்திற் குடியியற் சேவைக் குத் தேர்வு செய்வதில் ஊழல்களுக்குப் பதிலாகப் பழைய போட்டித் தேர்வுகள் நடத்துவதில் பரிசோதனைகள் செய்யப் பட்டன. மனிதரை மதிப்பிட உதவும் தேர்வின் உபயோகம் ஒக்சுபோட்டு, கேம்பிரிட்சு பல்கலைக்கழகங்களிடமிருந்து தெரிந்து கொள்ளப்பட்டது. இப்பல்கலைக்கழகங்களில் நூற்றண்டின் தொடக் கத்திலிருந்து தேர்வுகள் பெரிதும் வழக்கில் வந்தன. பதிலாண்மைக் காலத்திலிருந்த பொது வாழ்வுத் தரங்களைக் கொண்டிருந்தவனன பாமேசு தன் அரசாங்க ஆதரவு மூலம் நியமனங்கள் தரும் உரி மையை ஒரு தேர்வுக்குழுவுக்கு முற்முக வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தான். ஆனல் புதிய ஊழியின் தொனியோ தியர்குடியின் ஆற் றலின்மையையும் அவர்களுக்கிருந்த தனிச்சலுகைகளையும் எதிர்க் கும் முறையில் அமைந்திருந்தது. பாமேசுதன் மரணத்தின் சிறிது காலத்தின் பின் கிளாட்சன் உவைற்முேல் நியமனங்கள் யாவற்றிற் கும், கட்டற்ற போட்டி முறையை விதித்தான். கிளாட்சன் இச் செயலில் மிசவும் அக்கறை யுள்ளவனுயிருந்தான்.
சமூக நலன் கருதும் அதிக சட்டங்களை இயற்றியும் தேசீய ஆரம்ப உயர்தரக் கல்வி முறையொன்றையும் ஏற்படுத்தியும் கூடிய முன்னறிவுள்ள ஒரு சந்ததி, விற்றேரியா கால நடுப்பகுதியின் வளம் நிறைந்த ஆண்டுகளே, அடுத்து வரவிருந்த வளமற்ற ஆண்டுகளுக் கெதிராகக் காப்புறுதி செய்யப் பயன்படுத்தியிருக்கலாம். பொது மக்கள் உடல் நலத்திற்காக ஏதோ செய்யப்பட்டது உண்மையே. ஆனல் பொதுவாக, முறையிடுவோர் கூக்குரல் நாட்டில் பலமாய்க் கேட்காத பொழுது, எல்லாக் கட்சிகளின் அரசறிஞர்களும் நன்றி
423
1870.
847-1865,

Page 225
424
அரசியலிற் சிறிது அமைதி
யுடன் ஒய்வெடுத்து மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இக்காலத்தில் நிலவிய வளத்தின் காரணமாகப் பெருமளவிற்கு மறைந்திருந்த ஆசாபாசங்களும் அலங்கோலங்களும் மீண்டு ஒரு போதும் பாராளு மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படா என்ற நம்பிக்கை புடையாராயிருந்தனர்.
கல்வியைப் பொறுத்தவரை அல்பேட்டு இளவரசன் ஒரு சேர்மா னியனென்பதும், சர்வசனக்கல்வி என்பது ஒரு மனமயக்கம் என் பதும் நினைவிற்குக் கொண்டுவரப்பட்டன. எங்கள் சீலம், உலகில் நாங்கள் பெற்றுள்ள நிலை எனும் நற் பயன்களைப் பெருத மத்திய ஐரோப்பாவிலுள்ள உழைப்பாளிகளான அந்நியருக்கு ஒருவேளை இக்கல்வி ஏற்றதாயிருக்கலாம். எனினும் கல்விப் பிரச்சினையிற் கைவைப்பது அரசியலறிவினத்தின் உச்சமாகும். ஏனெனில் எதைச் செய்யினும் ஒன்றல் திருச்சபையினர் அல்லது இணங்காதோர் கோபத்துடன் எதிர்த்துத் துள்ளி எழுவர். பண்டைய உவால் போலின் பூட்கையைப்போல் புதிய உவிக்குகளின் பூட்கையும் பிர புக்கள் சபை வாயிலில் இப்போது சங்கிலியால் கட்டப்பட்டிருக் கும் துயிலுகின்ற திருச்சபை நாயை எழுப்பலாகாது என்பதே. பீலின் கொள்கையினுடைய பழைமைபேண் கட்சியினருடன் நட்புறவு செய்து கொண்டமையால் உலிக்குகள், இணங்காதார்மீது கட்டாயமாக விதிக்கப்பட்டிருந்த திருச்சபைவரிகளை ஒழித்தும் பல்கலைக்கழகங்களிற் சேர அவர்கள் அனுமதிக்கப்படாதிருந்த நிலையை மாற்றியும் இணங்காதாரின் குறைபாடுகளை நீக்க முடிய வில்லை. எனினும், உண்மையாகவே அவ்வளவு இன்பம் வாய்ந்த செழிப்போங்கிய உலகத்தில் எந்த மனிதக்குழுவும் அதன் குறை பாடுகளை மிகக் கூர்மையாக உணர்வது கடினமாகும். இருந்தாலும் பிறைற்று மட்டும் குமுறிக் கொண்டேயிருந்தான். தனிப்பட்ட அக் குமுறல் ஒரு நாள் மக்கள் ஒலமாக மாறலாம்.
உள்நாட்டில் இச் குழலிருக்க, அக்காலப் பகுதியின் முக்கியமான அரசியற் பற்றுகள், வெளிநாட்டலுவல்களினவேயாகும். இவ் விடயத்தில் பிரவேசிக்கவே பாமேசுதன் பிறந்திருந்தான். அவன் இக்காலத்தில் மிகுந்த புகழொடு விளங்கினன் என்பதை எவரும் மறுக்க முடியாது. எனினும் அப்புகழை அடைய எவ்வளவு பொன் செலவு செய்யப்பட்டதென்பது அன்றும் என்றும் ரசமான விவாதத்திற்குரிய விடயமாகும்.
தீபகற்ப யுத்தகாலத்தில், பாமேசுதன் பீலேப்போல் தன் பொதுச் சேவை வாழ்க்கையை ஒரு தோரி அமைச்சனுகத் தொடங்கினன். இவன் பின்னர் கனிங்கைப் பின்பற்றுவோனக இருந்தான். அவன், வலிமை பெற்றிருந்த தனது முதிர்ந்த வயதில் கனிங்கினது தோரிக் கொள்கைகளும் உயர் குடிப் பிறந்த உவிக்கு மனப்பான்மையும்

புாமேசுதன்
சேர்ந்த மனப்பாங்கையும் உடையவனுகவிருந்தான். அவன் கனிங் குக்கும் உவிக்குகளுக்கும் பொதுவான வொருமுறையில் வெளி நாட்டு வல்லாளர்களுக்கெதிராகப் பிரித்தானியப் பொது மக்களின் உணர்ச்சியை எடுத்துக் கூறினன். சமயத்தையும் திருச்சபையையும் பற்றிய தன் 'கலியோ ' நோக்கிலும், அரசவையின் செல்வாக்கை எதிர்த்து நிற்பதிலும், அவன் ஒரு உவிக்கு உயர் குடியாளனயிருந் தான். உண்ணுட்டு அரசியலில் குடியாட்சிப் பெருக்கத்தையும், குறிப் பாக வாக்குரிமை மேலும் பலர்க்கு வழங்கப்படுதலையும் எதிர்த்து நின்முனெனினும் வெளிநாட்டுப் பூட்கையை ஓரளவுக்குப் பொது
மக்கள் கட்டுப்பாடு செய்வதை அவன் எதிர்த்து நிற்கவில்லை. அவன்
வெளிநாட்டு அமைச்சனுய் இருந்த பொழுது தனது அரசன், இணை வர் இவர்களுடையதை விடப் பொதுமக்கள் அபிப் பிராயத்திற்கே காது கொடுக்க வேண்டுமென அவன் கருதினன். அவனுக்கு முன் கனிங்கு செய்ததுபோல் அரசவைக்கும் மந்திரத்தின் பகைமைக்கும் எதிராகத் தன் வெளிநாட்டுப் பூட்கையைப் பாதுகாக்க நடுவகுப் பினரின் ஆதரவைக் கோரினன். சில வேளைகளில் தகுதிக் குறை வான காரணத்திற்காகவும் ஆதரவு கோரினன் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
பாமேசுதனின் புகழ் நாட்டில் பேரளவினதாயும், பாராளுமன்றத் தில் கணிசமானதாயும் மந்திரத்தில் சிறிய அளவாயும், அரசவையில் சற்றுமில்லாதுமிருந்தது. அவன் நாட்டினருள் அவனது செல் வாக்கு ஓரளவு, “வயதான நண்பன்' பெருந்தன்மையுடையவன்
என்ற தனியாரின் கருத்திலிருந்தும், ஓரளவு அவன் பூட்கையின்
தன்மையிலிருந்தும் எழுந்தது. அது இருவகையான கவர்ச்சி யுடையதாய் இருந்தது. அவன், ஒசுற்றியா, இரசியா, நேப்பிள், உரோம் என்னும் வல்லாட்சிகளில் தாராளர் கொண்ட வெறுப்பை, பிரித்தானியாவுக்கு மட்டும் உரிய உரிமைகளை வற்புறுத்தும் தொணி யுடன் ஒரு முகப்படுத்தியிருந்தான். இதனைப் பின்னைய சந்ததி குறு கிய போலிப்பற்று எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும். பாமேசுதனின் உணர்ச்சி வேகம் பொருந்திய மொழியில் ஒரு பிரித்தானிய குடி மகன் ஒரு உரோமானிய குடிமகன் ஆவான். மோல்ரு யூதனன அவன் அதென்சில் மோசடி செய்தாலும் பிரித்தானிய கடற்படை யின் ஆதரவு அவனுக்கு இருந்தது. கண்டத்தில் 1848 ஆம் ஆண்டுத் தாராண்மை இயக்கம் வீழ்ச்சியடைந்தது. அதன் பின் அங்கேரியிலும், இத்தாலியிலும், வேறிடங்களிலும் ஒசுற்றிய, இரசிய கொடுங் கோன்மைக்குப் பலியானவர்கள்மாட்டு அவன் காட்டிய அனுதாபத்தில் அதே கலங்காத உளப்பான்மை வெகு சிறப்பாகத் தெரிந்தது. அப்போது பிரித்தானியாவின் சார்பில் பாமேசுதன் இராணியையும், அல்பேட்டு இளவரசரையும் எதிர்த்
16-R 5931 (11162)
425

Page 226
426
விற்றேரியாவும் அல்பேட்டும்
துக் கைக்கொண்ட இந்நோக்கு இழிவானதாகவோ, முற்முய்ப் பயனற்றதாகவோ இருக்கவில்லை. ஏனெனில், இது, பெரிய வல்லரசு களுள், யாப்புச் சுதந்திரத்தை இதய பூர்வமாக விரும்பும் நாடொன்று இன்னும் இருக்கிறதென்பதைக் குறிப்பிட்டது.
பாமேசுதனுக்கும் அரசவைக்குமிடையே நிலவிய சச்சாவு அவ ணுடைய துணிச்சல் நிரம்பிய வாழ்வின் பொழுதுபோக்காகவும் மகிழ்சிக்குரியதாயுமிருந்தது. ஆனல் இராணிக்கோ அது சின மூட்டுவதாயிருந்தது. இராணியின் ஆதரவில் அரசவை நான்காம் யோச்சு பதிலாளி அரசனுக இருந்த கால நிலைக்கு நேர் மாருக வந்துவிட்டது. பாமேசுதன் பதிலாளியை விரும்பாவிட்டா லும்தன் பதிலாண்மைக்கால அனுபவங்களை விரும்பினன். அந் நாட்களில் மன்னரோ, பெருமகாரோ, அமைச்சரோ கடைக் காாருக்குக் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுப்பார்களென்ருே, வேறு தனியுரிமையற்றவர்கள்பால் முன்மாதிரியானவர்களாக நடந்து கொள்வார்களென்றே ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அரசி யலிலும் மாற்றம் அதேயளவு குறிப்பிடத்தக்கதாயிருந்தது. மூன்ரும் யோச்சும் நான்காம் யோச்சும் உயர் தோரிகளின் சீர்திருத்த எதிர்ப்புக் கொள்கைகளை ஏற்றியிருந்தனர். ஆனல் விற்றேரியா இராணியோ, ஏதுவும் மனதில் எளிதிற் பதிகிற இளமைப் பருவத் தில், பிரித்தானிய முடியாட்சியின் நோக்கம் அமைச்சர்களுக்கெதி
ராகச் சதி செய்வதிலோ பொதுமக்கள் பெறவிரும்புவதற்கு மாமுகப்
போராடுவதிலோ இருக்கவில்லையெனக் கற்றிருந்தார். இதை அறி வுரையாளராயிருந்த வயதான மெல்போண் பிரபுவிடமிருந்து கற்றி ருந்தார். இவரிடம் கற்றதை இராணி ஒரு காலமும் மறந்ததில்லை. அக்காலத்தில் இராணி உவிக்குக்கட்சியிடம் அளவுக்கு மிஞ்சிய பாரபட்சம் காட்டி வந்தாரென்பது உண்மையே. ஆனல் நெருங்கிப் பழகியதின் பின் பீலுக்கு அவனது உண்மையான தகுதிக்கேற்றபடி மதிப்பளிக்கக் கற்றுக் கொண்டார். அல்பேட்டு இளவரசனின் செல் வாக்கினல் அவர் பிறநாட்டு அரச குலத்தினரிடம், குறிப்பாகச் சேர் மானிய அரசகுலத்தினரிடம் அதிக ஆதரவு காட்டினர். ஆனல் உண்ணுட்டு அலுவல்களில் அவரின் கட்சிச்சார்பற்ற தாரளமான போக்கு அதிகரித்திருக்கலாம். அவரின் வாழ்க்கைத் துணையால் அது நன்கு விளக்கம் பெற்றது.
மக்களின் கற்பனையிலோ புதிய பேரரசு அமைப்பிலோ முடியாட்சி, அந்த நூற்முண்டு முடிவில் அது துய்த்த பூசணநிலையை இன்னும் எய்தவில்லை. ஆனல் ஏலவே அண்மைக் கால ஆட்சிகளின் அவப் பேருண பாம்பரை வழக்கங்களிலிருந்து அது விடுவிக்கப்பட்டது. விற்முேரியா, தான் இராணியாயிருந்த நீண்ட காலம் முழுவதும், தன் அமைச்சர்களின் செய்கைகளைக் கூர்ந்து கவனித்து விளங்கிக் கொண்

விற்றேரியா
டார். தான் ஒப்புக் கொள்ளாவிடத்துப் பலமாகத் தடுத்து விளக்கிக் கூறுவார். அதனல் பலமுறையும் திருத்தங்கள் செய்துள்ளார். ஆனல் தன் கருத்தை முற்முகக் கேட்டபின் அவர் அமைச்சர்கள் உறுதி யாய் நின்முல் ஒருபொழுதும் அவர்களின் பூட்கையை நிராகரிக் கவோ மாற்றவோ முயலாது விடுவதும் அவர் வழக்கமாயிருந்தது. அவர் எதிர்க்கட்சிமீது இடையிடை தன் செல்வாக்கைச் செலுத்தி யிருக்கிருரர். இங்ங்னம் அவர் செலுத்தியது குறிப்பாகப் பிரபுக்கள் சபையிலாகும். கிளாட்சனின் தலைமையில் அதிக போர்விருப் பமுள்ள தாராண்மை புத்துயிர் பெற்றபின், தமது ஆட்சியின் பிற்
427
1869, 884.
பாதியில் சில முக்கியமான வேளைகளில் இரு பாராளுமன்ற சபை'
களுக்கிடையிற் சச்சரவுகளைத் தீர்ப்பதில் விற்றேரியா தனிச் சிறப்பு வாய்ந்த முறையில் வெற்றியடைந்தார்.
விற்முேரியா ஆட்சியின் நடு இருபது ஆண்டுகளின் அமைதியான அரசியலும் செழித்தோங்கும் வளமும் கிரைமியப் போரினல் நடு வில் தடைப்பட்டன. உவாற்றலூ சண்டையின்பின் நாற்பது ஆண்டு கள் கழிந்துவிட்டன. புதிய சந்ததிப் பிரித்தானியர், போர் புரியும் மனநிலைக்கு இலகுவாகத் தூண்டப்பட்டனர். அக்கால அச்சுலகு, சிறப்பாகப் பாமேசுதனின் செல்வாக்குக்குக் கீழ்ப்பட்ட பகுதி, தெரிவு செய்யப்பட்ட செய்திகளுடனும் இரசியாவுக் கெதிரான தூண்டுதல்களுடனும் யுத்த உணர்ச்சியை வளர்த்தது. பகைநாடாக இரசியாவைத் தெரிவு செய்தமை முதற் பார்வையில் ஓரளவு தன் னெண்ணப்படியான செய்கையாகத் தோற்றுகிறது. அண்மை ஆண் டுகளில் இரசிய ஆதிக்கத்தைப்பற்றிய பயங்காம் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வளர்ந்து கொண்டேயிருந்தது. சாரைத் தாக்கி அரசு வலுச் சமநிலையைச் சீர்செய்வது தேவையிெனக் கருதியவை, உண்மையாகவே இரசியாவுக்கு மிகவும் அருகிலுள்ள ஒசுற்றியாவும் பிரசியாவும் அல்ல. பிரான்சும் இங்கிலாந்துமே சாருக்கெதிராக சேர் மனியின் சுதந்திரத்தை ஆதரிக்க அழைக்கப் பட்டனவாக உணர்ந் தன. இதன் காரணம் ஓரளவு அரசியல், ஏனே விடயங்களோடு, சார்ந்ததாகும். ஒசுற்றியாவும், பிரசியாவும், இரசியாவும், பரிசுத்த உடன்படிக்கையெனும் பழைய கொள்கைக்காக ஒன்று சேர்ந்து 1848 எழுச்சிகளை அடக்கி ஒடுக்கின. விற்றேரியா இராணி காலப் பிரித்தானியாவும் மூன்ரும் நெப்போலியன் காலப் பிரான்சும், ஒவ்வொன்றும் வெவ்வேறு வழியில் கூடிய தாராண்மையையே ஆதரித்தன. போலந்தை நடத்தின முறையினுலும், 1849 இல் அங்கேரியை அடிபணியச் செய்யப் பிற்போக்கான சார் நிக்கலக அளித்த உதவியாலும் இங்கிலாந்தில் தாராண்மை உணர்ச்சிக்குப் போவமதிப்பு ஏற்பட்டது.
854-856.

Page 227
4B
கிரைமியப் போர்
பாமேசுதலுக்கும் இாசலுக்கும் இரசியாவுடன் சச்சரிவு ஏற்பட்ட தற்கு உண்மையான காரணம் அவர்கள் துருக்கிக்குக் காப்பளித்த மையாகும். 1835 யூஃ வியன்னுக் கடிதத்தில் நாங்கள் பிரேரித்த உடன்படிக்கை நிபந்தனேகளே இரசியா ஏற்றுக்கொண்டதென்பதும், துருக்கி ஏற்றுக் கொள்ளவில்ஃயென்பதும் உண்மையே. எனினும் தாங்கன் இருக்கிக்காக இாசியாவுடன் போர் புரிந்தோம். இவ்விதம் அரசதந்திரத் திறமைசீனம் அம்பலப்படுத்தப்பட்டதால், அமைச் சர்கள் பொதுமக்கள் சபையில் பிறைற்றின் கண்டனங்களுக்கு அளிக்க விடையெதுவுமிருக்கவில்ஃப். ஆணுல் போர் ஆர்வத்தில் எவ்விடையும் தேவைப்படவில்லே. போல்கன் நாடுகளில் உரிமை பெதுவு மற்று வாழ்ந்த கிறித்துவ மக்களின் கிலேமையோ, அவர் கன் அங்கே இருந்தமை தானுமோ அந்நாள் பிரித்தானியாவில் நினேக்கப்படவில்லே. எனவே, இரசியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கக் கனிங்கு கிசிசின் சுதந்திரத்தைத் தாபித்ததுபோலப் பன் கேரியாவினதும், சேவியாவினதும் சுதந்திரக்கைத் தாபிக்க எத் தகைய முயற்சியும் நடைபெறவில்ஃப், பழைய துருக்கிய அரசே இரசியாவின் போவாவுக்கு ஏற்படக் கூடிய ஒரே தடையெனக் கருதபபடடது.
போல்கலுக்கு வெளியே ஐரோப்பாவில் பிற்போக்கின் முக்கிய ஆதாரமாகச் சார் நிக்கலிசு கருதப்பட்டான். இதற்கு ஆதாரமில்லா மற் போகவில்லே. கிரைமிய புத்தத்திற்கான ஆர்வம் அக்காலச் சூழ் நில்களிலும் பாமேசுதனின் உருவிலும் இருந்து எழுந்த தாாாண் மையினதும் போலிப்பற்றினதும் கலப்பேயாகும். ஆணுல் அப்போர் விடுதலையளிக்கும் போசாகப் புரியப்படவில்லே. ஏனெனில் ஆங்கிலபிரான்சிய நட்புறவைச் சேரும்படி ஒசுற்றியா அழைக்கப்பட்டது. ஒசுற்றியா மறுத்தபொழுது மாத்திரமே அதற்குப் பதிலாகக் கஜபூ ரின் சிறிய நாடான பியற்மொந்து அணிக்க முன்வந்த உதவி ஏற்றுக் கொன்னப்பட்டது. ைெரமியாவில் செய்ய மேற்கொண்ட காரியத்தில் ஒசுற்றியாவிற்குப் பதிலாகப் பியற்மொந்தை வைத்தமை இத்தாலி பின் விடுதலேயை விரைவுபடுத்தியது. ஆனூல் யுத்தத்தை உண்டாக் கியவர்களுக்குத் தொடக்கத்திலிருந்த நோக்கம் அதிவன்று.
பிரான்சுடனும் மூன்ரும் நெப்போலியலுடலும் பிரித்தானியாவின் நட்பு கிாைமியப் போரின் நற்பயன்களிலொன்றெனவே கூறவேண் டும். இந்நட்பு ஏற்பட்டது போர்ப்பாதையில் இன்னுமொருமுறை பிரான்சு செல்ல ஆயத்தமும், பிரித்தானிய மக்களின் உணர்ச்சி நெப்போவிய வெற்றியின் புதிய ஊழியின் ஆரம்பத்தை எதிர்த்து நிற்க ஆயத்தமும் செய்த ஊழியிலாகும். பிரான்சிய அரசு கட்டி லேறுதற்கு மிகுந்த சூழ்ச்சித் திறமையுடன் செயலாற்றிய தனிச் சிறப்புடையோன் தன் சிறிய தகப்பனின் வாழ்க்கை நெறியை
 

படைச் சீர்திருத்தம்
அறிந்திருந்தது விண்போகவில்லே, ழ்ேத்திசை வல்லாட்சி வல்லாசு கண்யும், இங்கிலாந்தையும் ஒரே காலத்திற் பகைப்பது பிரான்சிய பேரரசுக்கு எப்பொழுதும் பேசாபத்தாய் முடியுமென்பதை அவன் கண்டான். பிரித்தானியாவின் நட்பை அவன் பேராவலுடன் விரும் பிஜன். அவனது நாணயக்கை முதல் நம்பியவன் பாமேகதன் ஆவாள். பிரிக்க தனியர் பொதுவாக நம்பிக்கையற்றவராயிருந்தனர். இச்சியாவுக்கெதிரான நட்புறவு பிரான்சுக் கெதிராகப் போர் புரியும் அபாயத்தினிருந்து நல்ல பாதுகாப்பாகச் சிறிது காலமிருந்தது.
பிரிக்கானிய படைத்துறை சார்ந்த பயிற்சியினதும் பரம்பசை வழக்கத்தினதும் உறுதிப்பாட்டையும், மேல் அதிகாரிகளின் பூான சுகவின்னமயையும், அமைப்பு, மேற்பணியாளர்சேவை என்பனவற் பின் குறைபாடுகளேயும், படையுணவுப் பகுதியினதும் மருத்துவ முன்னேற்பாடுகளினதும் பற்குக் குறையையும் புத்தத்தின் போக்கு ஆம்பலப் படுத்தியது. பலக்கினனா துறைமுகத்திலிருந்த எங்கள் ፵ኖ ! -ண்படையிலிருந்து ஆறு மைல் ஆராத்திலிருந்த எங்கன் போர்வீரர் பட்டினியாவிறத்தினர். ஏனெனில் அவர்களுக்குக் கருவித்த உணவு முதலிய பொருள்களே அவர்களிடம் சேர்க்க முடியாதிருந்தது. இப் படி அவசியமின்றி மாண்ட சிறந்த போர் வீரர்களின் இடத்தை நிசப்ப அனுப்பப்பட்ட அனுபவமில்லாத புதுப் படைவீரர் இாேதன் சாக்கலிற் சித்தி எய்தவில்லே. இதனுல் முந்திய ஆண்டில் அல்மா,
R.
இங்கமன் போர்கள் வெற்றிகளால் பிரித்தானிய படைக் கலத்திற்கு செதி. நதுெ.
ஐரோப்பாவிற் கிடைக்க மதிப்பு ஒரு அனவுக்குக் குறைந்தது.
ஆங் ரங்கள்
霍
133 - "ser". El f”, E I gjor-Lu Tir,1
ாங் பீதேதிர்-ா-----
r – Li Tin Liri
- ö.3 rildi
ኣ§ பூ - வாங்கோபு
* புதவி TurkTürk L
Llih XIII. Eryri Ayusa

Page 228
430
1868.
உவிலியம் இரசல்
எங்கள் இராணுவ அமையத்தில் இத்தகைய குறைபாடுகள் இருந் தமை, அக்காலத்து எங்கள் வியாபார, கைத்தொழிற் செய்திறனேெ ஒப்புநோக்கின் உண்மையாகவே குறிப்பிடத்தக்கவொரு முரண் பாடாய் அமைந்திருந்தது. இவை குதிரைக்காவல் வீரர்களதும் போர் அலுவலகத்தினதும் சீர்திருத்த எதிர்ப்பு உளப்பான்மையின் பெறுபேருகும். படைச்சீர்திருத்தம் வேண்டும் என்ற பொதுக் கோரிக்கை எதுவும் ஏற்படாமையால் இவை இதுவரை பாதிக்கப் படவில்லை. பாழ்பரோக்கள், நகர அவைகள், பல்கலைக்கழகங்கள், திருச்சபை, குடியியற்சேவை, என்பன யாவும் வேறு வேறு அள விற்கு மக்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்டு மாற்றம் அடைந்தன. உவாற்றலூவின் பின் நாட்டில் அமைதி நிலவியமையால், போர் அலு
வலகச் செலவுகள் நன்முகக் குறைக்கப்பட்டிருக்கும்வரை படை
யின் நிலைமையைப் பற்றி ஒரு போதும் விசாரணை நடைபெறவில்லை.
பின்னர் போர் ஆர்வத்தினுல் ஏற்பட்ட உற்சாகத்தில் தனக்கு ஒரு சிறு தொகையான செவ்விய ஒரு வரிசை படைவீரர் இருப்பது இங்கிலாந்தின் நினைவுக்கு வந்தது. பழைய தீபகத்திற்குரியது போன்ற பெறுபேற்றை எதிர் பார்த்து, அவர்களை இரசியரோடு போர்புரியும்படி அனுப்பினன். ஆனல் படையினரின் உற்சாகத்தை யும் இன்னும் அவர்களிற் பலர் தரித்திருந்த பழைய பிரவுண் பெசு
துப்பாக்கியையும் தவிர வெலிந்தனின் படையில் வேமுென்றும்
எஞ்சியிருக்கவில்லை. அப்பொழுது தளபதிகளுக்கும் போர் அலுவ லகத்துக்கும் மாமுக ஒரு கூக்குரல் எழுந்தது. எனினும் போர் Cliftவெய்தியவுடன் இராணுவ அலுவல்களைப்பற்றிப் பழையபடி அக் கறையின்மை மீண்டும் தோற்றியது. கிளாட்சனின் முதலமைச்சுக் காலத்தில் காடுவல் யுத்த அலுவலகத்துக்கு வரும்வரை படைச்சீர் திருத்தம் மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்
-܀ • آقای با
நாட்டின வாழ்க்கையில் கிாைமிய யுத்தத்தின் விளைவு அரசி யல் துறையில் தனிச்சிறப்புக் குரியதாயிருக்கவில்லை. யுத்தப் பூட்கை யைக் கண்டித்தமையால் கொபுடன், பிறைற்று என்பாருக் கெதிராகத் தற்காலிகமான எதிர்ப்பு உண்டாயது. ஆனல் பல பருமாற்றவாதிகள் போருக்காகப் பலமாக வாதாடியிருந்தனர். நடவடிக்கைகள் கொண்டுநடத்தப்பட்ட திறமைக் குறைவால் உயர் குடியாட்சி முறைமையின் தன்மதிப்பு, பொதுவாகக் குறைந்ததே யன்றிக் கூடவில்லை , * தைமிசு ’ பத்திரிகையைச் சேர்ந்த உவிலியம் இாசல் என்பான் யுத்த நிருபர் என்னும் ஒரு புதிய வாழ்க்கைத் தொழிலை உண்டாக்கினன். இதனுல் அவன் யுத்தகளத்துச் சேனுதி பதிகளை, முன்போ பின்போ பட்டறியாத நேரடியான குடிகள் விமரிசனத்திற்கு உட்படுத்தினன். தைமிசுப் பத்திரிகைக்கு அவன்

புளோரன்சு நைற்றிங்கேல்
அனுப்பிய செய்திகள் செபத்தப்போல் போர்முனையிலுள்ள எங்கள்
படையின் திடுக்கிடச் செய்யும் நிலைபாத்தைப் பற்றிய இராணுவ இரகசியத்தைப் பகைவனுக்கு வெளிப்படுத்தின. இப்படி வெளிப் படுத்தியமை, காலம் முற்முக மிகவும் கடந்து செல்லுமுன் பொது சன அபிப்பிராயத்தையும் பாராளுமன்ற நடவடிக்கையையும் தூண்ட வேறெவற்றிலும் பார்க்க அதிகம் பயன்பட்டது. அபடின் பிரபுவின் இடத்தில் இந்த நெருக்கடியில் பாமேசுதன் முதன் மந் திரியாக இடம் பெறுதல் ஏற்புடைத்தே. அபடின் போரை ஒரு போதும் விரும்பவில்லை.
கிரைமியாவில் நாடு இழந்த 25,000 மக்களின் உயிர்ச்சேதம் பின் வந்த ஆண்டுகளில் இத்தொகையிலும் மிக அதிகமான மக்களைக் காப் பாற்றக் காரணமாயிற்று. ஏனெனில் உண்மையில் அப்போரின் தலைமை உறுப்பினர் புளோரன்சு நைற்றிங்கேல் ஆவர். அதன் மிக வும் சந்தேகத்துக்கிடமில்லாப் பெறுபேறு, இராணுவத் துறையிலும் குடியியல் துறையிலும் தோன்றிய நோயாளரைப் பேணும் தற்கால முறையும் பயிற்சியும் கல்வியும் பெற்ற பெண்டிரின் உள்ளார்ந்த இயல் பும் சமூகத்தில் அவர்களது நிலையும்பற்றி ஏற்பட்ட புதிய உணர் வும் ஆகும். இது முறையே அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் சுது வட்டு மில் என்பான் நடத்திய பெண்கள் வாக்குரிமை இயக்கத் திற்கு அடிகோலியது. இதனைச் செல்வி நைற்றிங்கேல் ஆதரித்தார். மேலும் பெண்கள் கல்லூரி தாபிப்பதற்கும், பெண்கள் பாடசாலைத் திருத்தத்திற்கும் இது அடிகோலியது. ஈற்றில் இராணியின் அரை வாசிக் குடிகளான பெண்களின் புறக்கணிக்கப்பட்ட உயர்தரக் கல்விக்குச் சில முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. உறைந்த, இரத் தக்கறை படிந்த செபத்தப்போல் முனையிலுள்ள பதுங்கு குழி களிலிருந்தும் முதற் சுகுதாரி மருத்துவச்சால்களின் கோரமான காட்சிகளிலிருந்தும், சாதாரணப் படைவீரனின் தன்மையும் உரிமைகளும் பற்றிய நேர்மையான நாட்டின எண்ணம் எழுந்தது. அன்றியும் போர்முனைகளுடனும் குளிர் மிகுந்த மேட்டுநிலத்தில் எங்கள் போர் வீரர்கள் அனுபவித்த துன்பங்களுடனும் தொடர் பற்றவைகளாகத் தோன்றும். தற்கால வாழ்க்கையின் பல அம்சங் களும் அவற்றின் விளைவாக ஏற்பட்டன.
விற்ருேரிய ஊழியில், பிரித்தானிய வெளிநாட்டுப் பூட்கை மிகக் தெளிவான வெற்றியுடன் செயற்பட்டவிடம் இத்தாலியாகும். பிரிக் தானியா, மற்றப் பெரிய வல்லரசுகளின் விருப்பத்திற்கு மாருக மத்தியதரைக் கடலிலும் ஐரோப்பிய அவைகளிலும் ஒரு புதிய 1 நைற்றிங்கேல் அம்மையாரின் கருத்துப்படி, முறைகெட்ட பாலனத்தின் விளைவால், இத்தொகையில் 16,000 பேர் உயிரிழந்தனர். இவ்வம்மையாரின் உதவியால் சுகுதாரியிலிருந்த மருத்துவ மனைகளில் ஆயிரத்துக்கு 42 சத வீதத்திலிருந்து 22 சத வீதமாக மரண வீதம் குறைந்தது.
43

Page 229
432
1859-1865
இத்தாலிய நெருக்கடி
சுயேச்சை நாடு உருவாவதற்கு உதவிபுரிந்தது. போர் புரியாமலும் பேரீரெழக்கூடிய பேராபத்தை ஏற்படுத்தாமலும் சட்ட முறையான குழியல் நடவடிக்கையையும் உறுதியுடன் வெளியிடப்பட்ட மக்கள் பரிவையும் ஆதாரமாகக் கொண்டே இவ்வுதவியைப் பிரித்தானியா செய்தது. இந்நிகழ்ச்சி ஐரோப்பிய அரசியலில் நீடித்திருந்த சிக் கலை நீக்கியதுடன் ஆங்கிலேய-இத்தாலிய நட்பைத் தொடக்கி வைத்தது. இந்நட்பு எங்கள் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் யுத் தத்தில் இத்தாலி பங்கு பற்றும் காலம் வரை நிகழ்ந்த செயல்களில் ஒரு முக்கிய அம்சமாகத் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது.
1848 இல் பாமேசுதன் வெளிநாட்டு அலுவலகத்திற் கடமையாற் றினன். இத்தாலியைப் பற்றிய பிரித்தானியர் அபிப்பிராயம் ஏறக் குறைய கட்சித்தொடர்பில் அப்போது பிளவுபட்டிருந்தது. பாமேசு தன் இத்தாலிய தன்னுண்மைக்குச் சாதகமாய் நின்றன். ஒசுற்றியா வுக்கு ஏற்படக்கூடிய நன்மையைச் சுட்டிக்காட்டி, அதனை உலம் பாடி சமவெளியிலிருந்து வெளியேற்றக் கருதினன். ஆனல் புரட் சிகள் நிலவிய அந்த ஆண்டில் இத்தாலியப் பிரச்சினையைத் தீர்க் கும்வழி பாமேசுதன் கையிலிருக்கவில்லை. ஒரு பிரித்தானிய அமைச்சன் என்ற முறையில் ஒரு பொது ஐரோப்பிய யுத்தத்தைத் தடுத்தலே தன் முதற் கடமை என உணர்ந்தான். சிறப்பாகப் பிரான்சு ஒசுற்றியாவைத் தாக்கக் கூடிய போரைத் தடுத்தலே முக்கியமெனக் கருதினன். இதனுல் வெற்றியும் வல்லாட்சிக் கொள் கையும் விளங்கும் ஒரு புதிய ஊழியில் இறங்குவதை உணர்ந்தான். எனினும் பிரான்சுக்கும் இத்தாலிக்குமிடையில் போர் நடைபெரு மலே சுயவாட்சியை நோக்கி முன்னேறுதல் இத்தாலிக்குச் சாத் தியமாகவில்லை.
1859 ஆம் ஆண்டு கோடை காலத்தில் இத்தாலியப் பிரச்சினை ண்டும் பீதியை உண்டாக்கியபொழுது, பாமேசுதன் தன் இரண் டாம் அமைச்சை அமைத்தான். இவ்வமைச்சு ஆறு ஆண்டுகளின் பின் அவன் இறக்கும் வரையும் நிலைத்திருந்தது. இரசல் என்பான் அவனது வெளிநாட்டு அமைச்சனனன். மண்டல நாயக ஞன கிளாட்சன் மந்திரத்தின் ஆதிக்கம் படைத்த உறுப்பினருள் முக் கிய இடம் பெற்றன். பிறவிடயங்களில் இம்மூவரும் பெரிதும் வேறுபட்டிருந்தனரெனினும் இத்தாலியைப் பொறுத்த அளவில் ஒரே மனதுடையாாயிருந்தனர். அமெரிக்கா, சேர்மனி, அண் மைக் கீழ்நாடுகள் என்பனவற்றைப்பற்றி இம்மூவரும் யாதும் அறியாதிருந்தனர். எனினும், இதற்கு எதிராக மூவரில் ஒவ்வொரு வரும் சிறந்ததொரு வாய்ப்பினல் இத்தாலிய அலுவல்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தனர். அதன் பெறுபேருக 1859-60 இல் ஏற்பட்ட தீவிரமான இத்தாலிய நெருக்கடியில் கூரறிவுடனும்

இத்தாலிய நெருக்கடி
வீரத்துடனும் அவர்கள் செயலாற்றினர். பலன்களும் மகிழ்ச்சி தருவனவாயிருந்தன.
இத்தாலியப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் இங்கிலாந்தி னிடமிருந்தது. 1848 இல் இப்படியிருக்கவில்லை. சிறிது காலத் திற்கு முன் ஆட்சியிலிருந்த இடாபிப் பிரபுவின் அரசாங்கம் போரைத் தடுப்பதற்கு எவ்வளவு முயற்சித்தும், மூன்ரும் நெப்போலியன் கவூரின் பியற்மொந்துடன் நட்புறவுகொண்டு ஒசுற்றியருடன் போருக்குச் சென்றிருந்தான். அவன் நோக் கம், இத்தாலிய தீபகற்பத்திலிருந்து ஒசுற்றிய செல்வாக்கை அகற்றி அதனிடத்தில் இத்தாலியருக்கு அதிக கேடு விளைக் காத வகையில் பிரான்சிய செல்வாக்கை நிலைநாட்டுவதாகும். அவன் இத்தாலியரிடம் உண்மையான பரிவு கொண்டிருந்தான். ஆனல் அவன் அமைக்க விரும்பியது ஒரு சுயவாட்சியுடைய இத்தா லிய நாடன்று. தன்னைச் சார்ந்தவையான பல இத்தாலிய மாகா ணங்களை அமைப்பதே அவன் விருப்பமாகும். ஆனல் கவூரோ ஒசுற்றியாவை வெளியேற்ற நெப்போலியனைப் பயன்படுத்தினன். பின் இத்தாலியை உண்மையாகவே சுயவாட்சி நாடாக்கக்கூடிய நிபந்தனைகளுடன் முழு இத்தாலிக்கும் விடுதலையளிக்க எண்ணி னன். இருவருள்ளும் திறமையுள்ளவனுய் விளங்கிய கவூர் வெற்றி படைந்தான். ஆனல் பிரித்தானியாவின் உதவியின்றி அவன் வெற்றியடைந்திருக்க முடியாது.
கிரைமிய யுத்தத்தின் பின் இரசியா முன்போல் அவ்வளவு வலிமை படைத்ததாகவோ ஒசுற்றியாவுடன் அவ்வளவு நட்புடையதாகவோ இருக்கவில்லை. எனினும் இத்தாலி எவ்வகை விடுதலையையும் எய்து தலை எதிர்ப்பதில் இரசியாவும் பிரசியாவும் ஒசுற்றியாவுக்கு ஆதT வளித்தன. இச்சிக்கலான நிலைமையில் இங்கிலாந்து, பிரான்சிலும் பார்க்க இத்தாலியின் சுயவாட்சியையும் ஐக்கியத்தையும் முற்முக வும் அனுதாபத்துடனும் ஆதரித்தது. இதனுல் கவூர் தனது செயல் வேகத்தை மிகுவிக்க இங்கிலாந்து துணைபுரிந்தது. சிசிலி கரிபோல் டியினுல் விடுவிக்கப்பட்ட பின்னர், பிற்போக்கான நேப்பிள் இராச் சியமும், மத்திய இத்தாலியில் அதிக பாகத்திலுள்ள போப்பாட்சி அரசாங்கமும் வீழ்ச்சியுற்றன. நெப்போலியனும் தன் விருப்பத் திற்கு மாமுக இவ்வெற்றிகளுக்கு இணங்க வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒசுற்றியா மீண்டும் வெற்றிகொள்வதற்கு நெப்போலி யன் உடன்பட முடியாமையால் இத்தாலிய தேசிய இயக்கம் என் னும் பெருவெள்ளம் பியற்மொந்து முடியாட்சியின் கீழ் ஐக்கிய மடைதற்கென வேகமாகச் செல்வதை எதிர்த்து நிற்கக்கூடிய நிலையில் அவன் இருக்கவில்லை. அப்பொழுது இத்தாலிய இயக்கம் பிரித்தானிய அமைச்சர்களது குழியல் ஆதரவையும், பிரித்தா னிய மக்களின் ஆர்வம்படைத்த ஆதரவையும் பெற்றிருந்தது.
1859.
860.
433

Page 230
434
தென்மாக்கு
ஐரோப்பிய அலுவல்களில் அதிகம் நற்பேறுகளின்றி இாசல், பாமேசுதன் என்பாரின் ஊழி முடிவெய்தியது. செல்சுவிக்கு-ஒல்சு தைன் மாகாணங்களைப்பற்றித் தென்மாக்குக்கும் அதன் சேர்மா னிய அயல்நாடுகளுக்குமிடையில் ஒரு தகராறு இருந்தது. இம் மாகாணங்களிலிருந்து 1400 ஆண்டுகளுக்குமுன் ஆங்கில மக்களிற் பெரும்பகுதியினர் பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்தனர். முற் கூறிய தகராறைப்பற்றி அபிப்பிசாய பேதம் இருந்தது. யாவருட னும் நட்புப் பூண்ட நடுநிலையுணர்வுள்ள ஒரு மூன்ரும் கட்சியின் நன் முயற்சிக்கு இடமிருந்தது. ஆனல் பாமேசு தனும் இரசலும் சிறிய தென்மாக்கை ஊக்கப்படுத்துவதில் பகட்டார்ப்பரிப்புச் செய் தனர். ஆனல் பிசுமாக்கு அவர்களின் வெற்ருன அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புக் காட்டியபொழுது அவர்களால் சிறிய தென்மாக்கைப் பாதுகாக்க முடியவில்லை. தென்மாக்கைத் தாக்குவோர், தென்மாக் குடன் மாத்திரம் போரிட வேண்டியிராது என்று பாமேசுதன் பிச கடனம் செய்திருந்தான். ஆனல் போர் தொடங்கியபொழுது தென்மாக்குக்கு நட்பாளர் இருக்கவில்லை. ஏனெனில், எங்க ளுடைய, இன்னும் திருத்தி அமைக்கப்படாத படை பிரசியா, ஒசுற்றியா, முழுச்சேர்மனி என்பவற்றின் ஒன்று சேர்ந்த படை களுக்கெதிராகப் போரிலீடுபடக் கூடிய நிலைமையிலில்லை. விற்றே ரிய ஊழி நடுப்பகுதியின் கீர்த்தி வாய்ந்த தொண்டர் இயக்கம் இன்னும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாத்திரமே பயன்படுத் தப்பட்டது. பிற பிரச்சினைகளைப் பற்றிய எங்கள் சூழியல் 9 Titair சுக்கும் இரசியாவுக்கும் அண்மையில் சினமூட்டியமையால் அவற் றின் உதவில்)ய நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே பாமேசுதன் ஊழி மதிப்பீனம் ஒன்ருேடு முடிவெய்தியது. இது அக்காலத்தோர் அறிந்திருந்ததைவிட இன்னும் அதிக முக்கி யத்துவம் படைத்ததாயிருந்தது. ஏனெனில் பிரசியாவின் தற்கால இராணுவ முடியாட்சியின் முழு ஆற்றலும் 1866 இல் ஒசுற்றியா மீதும் 1870 இல் பிரான்சுமீதும் எய்திய வெற்றிகளால் வெளிப்படுத் தப்பட வேண்டியதாயிருந்தன. பாமேசுதனின் மக்கணயக்கும் எழுச்சியூட்டும் குழியற் செயல்களின் காலம் மலையேறிவிட்டது. அவை இன்னும் தொடர்ந்து நிகழ்ந்தால், உருவாகி வருகின்ற பயங்கரமான புதிய உலகத்தில் அபாயகரமான ஆபத்தை விளைப் பனவாகக்கூடும். ஏனெனில் விஞ்ஞான சாத்திரத்தின் விளைவான தற்காலி போக்குவரத்து வசதிகளையும் வியப்புக்குரிய ஆற்றல் களையும் துணைகொண்டு தேசீயவாதம் போருக்கு ஆயத்தஞ் செய் யக் கற்றிருந்தது.
* இந்நூல் பக்கங்கள் 42, 57 ஐப் பார்க்க.

கிளாட்சனும் பிறைற்றும்
அந்த இரண்டு “ கலகத்தலைவர் 'களில் பாமேசுதன் முதலாவதாக இறந்தமை அரசியல் வரலாற்றில் முக்கியமான விளைவுகளை உண்டு பண்ணியது. இப்போது வேள் ஆகிய இரசல், உவிக்குதாராளர் கட்சியின் தலைவனனன். அவன் ஒருகாலம் "அறுதியோன்” என அழைக்கப்பட்டான். எனினும், வாக்குரிமையை இன்னும் பரப்பு வதற்கும், உயர்குடி உவிக்குக் கொள்கையினின்று குடியாட்சித் தாராண்மைக்குரியதாகத் தன் கட்சியை விருத்தி செய்வதற்கும் நீண்ட காலம் ஆதரவு அளித்தான். பாமேசுதனின் முன் இரசல் இறந்திருப்பானுகில் அப்படியான வளர்ச்சியை எதிர்த்து, மன இயல்பிலும் பூட்கையிலும் தனக்கு எதிர்மாமுனவனன கிளாட்ச லுடன் பாமேசுதன் பகைத்திருக்கலாம். புதிய நிலை மாறுாழியில், வயது மிக முதிர்ந்தவனுன இரசல் முதலமைச்சன் ஆனன். ஆனல்
தன் ஆற்றலின் உச்சநிலையிலிருந்த கிளாட்சனுக்குக் கட்சியின்
தலைமையைச் செயலளவில் ஏற்றுக்கொள்ள அனுமதியளித்தான்.
இவ்வண்ணம் அரசில் முதன்மையுடையோணுகிய கிளாட்சன் யோன் பிறைற்றுடன் நட்புறவு கொண்டான். இவன் நகரங்கலைத் தொழிலாளிகளுக்கும் நடுவகுப்புக் கீழ்த்தரத்தினருக்கும் வாக் குரிமை அளிக்க வேண்டுமென்னும் இயக்கத்தின் தலைவனுயிருந் தான். பாட்டாளி இயக்கத்தின் அரசியற் பலம் இப்பத்தாண்டுகால அவதியில், நடுவகுப்புப் பருமாற்றவாதிகளுடன் செய்து கொண்ட நட்புறவிலேயே தங்கியிருந்தது. வாக்குரிமையிலிருந்து இவ்விரு வகுப்பினரும் விலக்கப்பட்டமை இந்நட்புறவின் அடிப்படைக் காரணமாகும். பழைய பட்டய இயக்கத்தின் ஊக்கத்திற்குக் காரணமாயிருந்த வகுப்புணர்ச்சி நாட்டிலேற்பட்ட செழிப்பின் காரணமாக மறைந்து விட்டது. பிறைற்று நாட்டின் தலைவனும், பாராளுமன்றத்தில் இக்கூட்டு இயக்கத்தின் பிரதிநிதியாகப் பேசு பவனுமானன். அமெரிக்க உள்நாட்டு போரில் அவன் மதிப் பிட்டது சரியாயிருந்ததன் காரணமாக அவனுக்கும் அவன் ஆதரித்த குறிக்கோளுக்கும் அதிக மதிப்பு ஏற்பட்டது. இப்போரில் வடபகுதியினரது குறிக்கோளுக்கு அவனை நன்கு உணர்ந்தவனன, அதற்கு உறுதியான ஆதரவாளனுயிருந்தான். உவிக்கு, பழைமை பேண் அரசறிஞரிலதிகமானேர், வெவ்வேறு அளவில் தெற்குப் பகுதியினரது குறிக்கோளை ஆதரிக்க நாட்டம் கொண்டனர். போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபொழுது, மக்கள் தாங்க ளிருந்த நாட்டில் குடியாட்சியை விரும்பினரோ, உயர் குடியாட் சியை விரும்பினரோ, கூடிய அல்லது குறைவான வாக்குரிமையை விரும்பினரோ என்பனவற்றில் அவர்கள் கருத்துப் பெரிதும் வேறு பட்டிருந்தது. போரின் பெறுபேறு ஆபிரகாம் இலிங்கனுக்கும் வட
* இந்நூல் பக்கங்கள் 414, 416 ஐப் பார்க்க.
435
1865.
866
1861-1865.

Page 231
436
1866.
உலோவும் திசரெலியும்
பகுதிக் குடியாட்சிக்கும் சாதகமாக முடிந்தது. ஆங்கில உள்நாட்டு அலுவல்களில் அதன் பயனை அளவிட்டுக் கூற முடியாவிடினும் அதிகமாயிருந்தது எனலாம். உண்ணுட்டலுவல்களில் குடியாட் சியை நோக்கித் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தானெனினும், கிளாட்சன் உண்மையாகவே தென்பாகச் சார்பினனுயிருந்தான். அமெரிக்கப் போர் முடிவின் பின், பிறைற்றுடன் அவன் செய்து கொண்ட நட்புறவும் பாமேசுதன் மரணமும், வாக்குரிமைப் பிரச் சினையைப் பிரித்தானிய அரசியுவில் முன்னணிக்குக் கொண்டு வந்தன."
இரண்டாம் சீர்திருத்த முறி நிறைவேற்றப்பட்ட முறை முதலாம் முறியின் முறையிலிருந்து மிகவும் வேறுபட்டது. ஆட்சியிலிருக்கும் வகுப்பினரும் பழைமைபேண் வகுப்பினரும் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மாற்றத்தை எல்லாவற்றுக்கும் முடிவெனக் கருதாது அரசியல் வாழ்க்கையின் சாதாரண நிலைமையெனக் கருதினர். இவ் வாறு அவர்கள் மர்ற்றத்துடன் எவ்வளவு பழக்கப்படுத்தப்பட்டு வந்திருந்தார்களென்பதையே இவ்வேறுபாடு சுட்டிக் காட்டியது. தாவினின் அப்போது பெரிதும் வாதாடப்பட்ட மலர்ச்சி என்னும் கோட்பாடு அரசியல் உணர்ச்சியில் ஏலவே இடம் பிடித்துவிட்டது
எனலாம்.
எப்படியாயினும் கடுமையான ஒரு போராட்டம் ஏற்பட்டது. மிதமான அளவு பாட்டாளிகளுக்கு வாக்குரிமை அளிக்கும் திட்டம் கிளாட்சனுற் புதிதாகக் கொண்டுவரப்பட்டது. ஆனல் உலிக்குத் தாராண்மைக் கட்சிப் பெரும்பான்மை கடந்த வருடத்தில் தெரிவு செய்யப்பட்டமை, பாமேசுதனை ஆதரிக்கவேயன்றித் தொழிலாளர் வகுப்பினருக்கு வாக்குரிமை அளிக்கவன்று. மிகவும் மிதமான இச் சீர்திருத்தத்தைத் தோல்வியுறச்செய்ய, பேச்சுவன்மையுள்ள, ஆனல் புத்தியற்றவனுன உருெபேட்டு உலோ என்பானின் தலைமை யில் “அதுல்லாபின் குகை' எனப் பிறைற்றல் மாறுபெயர் கொடுக்கப்பட்ட உள நிறைவற்ற உவிக்கு உறுப்பினர் குழுவொன்று திசரெலியுடனும் பழைமைபேணும் கொள்கையினருடனும் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் கருத்தின்படியும் இது புத்தியற்ற செயலா கும். ஏனெனில் நடு வகுப்பினருடன் ஒப்பு நோக்கும்பொழுது கூலிப் பிழைப்புக்காரர் ஒழுக்கத்திலும் அறிவிலும் குறைந்தவர்கள் என்பதை உலோ என்பான் சீர்திருத்த எதிர்ப்பிற்கு ஆதாரமாகக் கொண்டான். இப் பொருள்பற்றி அவன் ஆற்றிய கவனயீனமான
பிரித்தானியாவும் அமெரிக்க உண்ணுட்டுப் போரும் என்னும் விடயம்பற்றி இந்நூல் பக்கங்கள் 447, 448 ஐப் பார்க்க.

திசரெலியும் தொழிலாளரும்
சொற்பொழிவு பாட்டாளிகளிடையே பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. வாக்குரிமை யளித்தலைப்பற்றிய கிளர்ச்சி அடக்க முடியாததும் அச்சத்தை விளைவிப்பதுமாயது. அரசியற் கூட்டங் கள் அரிதாயிருந்த காலத்தில் எதிர்ப் பிரசாரக் கூட்டத்தை ஏற் பாடுசெய்யப் பெரிய கைத்தொழில் மையங்களிலுள்ள தொழிற் சங் கங்கள் மத்திய வகுப்பினருடன் ஒன்று கூடின. பிறைற்று இக்கூட் டத்திற் சொற்பொழிவாற்றினன்.
கிளாட்சனின் சீர்திருத்த முறி தோற்கடிக்கப்பட்டபின் தாரா ளர் அரசாங்கம் பதவியிலிருந்து விலகியதேயன்றிக் குலேக்கப்பட வில்லை. ஆனல் பழைமை பேணுவோர் ஆட்சிப்பீடத்திலமர்ந்தனர். இடாபி பிரபுவின் புது அமைச்சில் கருவூலநாயகனன திசரெவி பொதுமக்கள் சபையின் தலைவனுகி, மந்திரத்தில் ஆதிக்கஞ் செலுத் தினன். இவ்வாதிக்கம் சில வாரங்களின் முன் இரசல் வேளின் அா சாங்கத்தில் அவன் எதிராளி கிளாட்சன் செய்தது போன்றதாகும். தன் கற்பனை உலகிற் கனவு கண்டு தன் மனதைத் திரிய விடாத வேளைகளில் திசரெவிக்கு உண்மைகளைக் கண்டு அறியும் சக்தி இருந் தது. அவன் நாட்டின் நிலைமையை அறிந்திருந்தான். விட்டுக் கொடுத்து இணக்கம் ஏற்படுத்துவது அவசியமெனக் கண்டான். மேலும் தொழிலாளர் வகுப்பினரிடம் அவனுக்கு உலோவிலும் பார்க்க அதிக உண்மையான பரிவு இருந்தது. உவிக்கு அபேட்சக ணுக்கு வாக்கைக் கொடுத்துத் தங்கள் வாக்குரிமையை விணக்கும் தொழிலதிபதிகளைவிட வாக்குரிமையற்ற தொழிலாளர் எவ் வளவோ மேல் என்று சில சமயங்களிற் பேசியுள்ளான். திசரெவி அண்மையில் வாக்குரிமை விரிவு பற்றிய கிளாட்சனின் வாதத்தை * தொம்பெயினின் கோட்பாடு” எனப் பழித்துக் கூறியது உண்மையே. ஆனல் தொம்பெயினுடையதோ வேறு யாருடை யதோவாக இருப்பினும் அக்கொள்கையை இப்போது நடை முறைக்குக் கொண்டுவரவேண்டிய காலம் வந்துவிட்டதென அவன் கண்டான்.
மேலும் திசரெலியால் வேறெந்த முறையிலும் பாராளுமன்ற நிலை மையைச் சமாளிக்க முடியவில்லை. ஏனெனில் பழைமைபேணும் அா சாங்கத்திற்குப் பெரும்பான்மை வாக்குரிமை இருக்கவில்லை. தாாா ளக் கட்சியிற் பெரும்பான்மையோர் சீர்திருத்தத்தில் ஒரு பகுதி யுடன் மட்டும் திருத்தியடையவில்லை. நாடு கொந்தளித்துக்கொண் டிருந்தது. விற்றேரியா இராணியின் அறிவுரை இப்பிரச்சினையை இணக்கம் செய்து வைப்பதற்கே சாதகமாயிருந்தது. தனது இளமைப் பருவத்தில் 'வாதத்தில் உறுாபேட்டு” என அழைக்கப் பட்டவரும் முதலாம் சீர்திருத்தமுறியை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்கெடுத்தவருமான இடாபி பிரபு, இப்போது
437

Page 232
438.
1867。
இரண்டாவது சீர்திருத்தமுறி
உவிக்குகளைத் தோற்கடிக்கவும் எது நேர்ந்தாலும் நோட்டும் என்ற துணிவோடு நடவடிக்கை எடுக்கவும் முற்முக ஆயத்தமா யிருந்தான். ஆகவே ஒரு முறையைக் கையாண்டு திசரெலி மிகவும் திறமையுடன் பிரச்சினையைத் தீர்த்து வைத்து நாட்டில் அமைதியை நிலவச் செய்தான். இறுதியாகத் திருத்தப்பட்ட பொழுது இம்முறி, அளவுக்கு மிகுதியான தீவிரமானதெனக் கடந்த ஆண்டில் அதுல்லாக் கொள்கையினரும் பழைமைபேண் கொள்கையினரும் நிராகரித்த முறியிலும் அதிக தீவிரமான தாயிற்று. மாவட்டத் தொகுதிகளிலுள்ள விவசாயத் தொழி லாளரும் சுரங்கம் அகழ்வோரும் இன்னும் உண்மையாகவே வாக்குரிமையளிக்கப்படாது விடப்பட்டனர். ஆனல் பரோக்களி லுள்ள வீட்டுக்காரர் வாக்குரிமை செயலளவில் இரண்டாம் சீர்திருத்த விதியின் அடிப்படைக் கொள்கையாயிற்று. இது பழைமைபேண் கட்சியினர் கொண்டு வந்த முறியானமையால் இலகுவாகப் பிரபுக்கள் சபையால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையைத் தங்கள் அடிப்பன்டக் கொள்கைக்குத் துரோகமாகக் கருதியவர் பின்னர் கீர்த்திவாய்ந்த சோல்சுபரிப் பிரபுவான கிரான்போன் பிரபு மாத்திரமல்லர். அதை அரசியல் நல்லறிவின் வளர்ச்சி எனக் கொள்ள இடமுண்டு. எப்படியெனினும் இதேபோன்ற வேளையில் திசரெவி பீலே நடத்தியது போலத் திச செலியை நடத்தக்கூடியவர் எவருமிருக்கவில்லை. பிளவு ஏற்படாது இப் பெரும் மாற்றத்தை ஒப்புக்கொண்டதனுல் பழைமை பேணும் கட்சி புதிய குடியாட்சி உலகில் தனக்கு ஓர் எதிர்காலத்தை ஆக்கிக் கொண்டது. திாாாளர் கட்சி, உண்மையான பழைமை பேணுவோர் ஊழி உதிக்குமுன் நிறைவேற்ற வேண்டிய காலம் கடந்த சீர்திருத் தங்களின் திட்டத்தை உடையதாயிருந்தது. கிளாட்சனுக்கும் தாராளர். கட்சிக்கும் 冠868 பொதுத் தேர்தலில் உடனடியாக நற் பயன் கிடைத்தது.
அத்தியாயம் II
மிகப் பிந்திய ஊழியில் வெளிநாட்டு அபிவிருத்தி. இரண்டாம் பிரித்தா னியப் பேரரசின் சிறப்பியல்பு. கனடாவின் வளர்ச்சி. ஐக்கிய நாடுகளுடன் தொடர்புகள். அவுத்திரலேசியா, தென் ஆபிரிக்கா. இந்தியா.
இரண்டாம் பிரித்தானியப் பேரரசு, நாங்கள் ஏற்கெனவே அறிந்து கொண்டபடி நெப்போலியப் போர்கள் முடிவெய்தியபொழுது நல்ல வளர்ச்சியுடைய ஆரம்ப நிலையிலிருந்தது. நீராவி, இரும்பு,
* இந்நூல் பக்கம் 334 ஐப் பார்க்க.

இரண்டாவது பேரரசு
மின்சத்தி, தெளிந்த நில எண்ணெய், அயனமண்டலத்தில் பயன் படுத்தப்பட்ட மருத்துவ முறைகள் என்பனவற்றல் அபிவிருத்தி யடைந்த வணிகம், செய்திப் போக்குவரத்து, பொருட் போக்கு வாத்து ஆகியவை காரணமாக அடுத்த நூற்முண்டில் நிலப்பாப்பி லும் செல்வத்திலும் குடித்தொகையிலும் அதன் வளர்ச்சி அள விடற்கரியதாயிற்று. உள்நாட்டு நிலைபாங்கள் குடியேற்றத்திற்குச் சாதகமாயிருந்தன. பத்தொன்பதாம் நூற்ருண்டின் கடைசிப் பத் தாண்டுகள் வரையும் பெரிய பிரித்தானியாவில் குடித்தொகைப் பெருக்கம் அதிகம் தடை செய்யப்படவில்லை. வெகுகாலமாகத் தொழிலகங்களைத் தவிர வேலையில்லா நிலைமையைப் போக்க வேறு முற்காப்பு ஏற்பாடு எதுவுமிருக்கவில்லை. ஆகவே தீவிலிருந்து மக்கள் பெருந்தொகையாக வெளியேறினர். அலெகானி மலைகளுக் கப்பாலுள்ள மிகப் பெரிய வெளிகளில் மக்களைக் குடியிருத்துவதில் ஈடுபட்டிருந்த ஐக்கிய நாடுகளுக்கு ஒரு பகுதியினர் சென்றனர். ஆனல் பெரும்பான்மையோர் கனடா, அவுத்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். முப்பதாம் ஆண்டு களில் குடியேற்ற அலுவலகம் குடியேற்றத்தைப்பற்றி அக்கறை யற்றதாகவும் புத்தியற்ற செயல்களைச் செய்வதாகவுமிருந்தது. ஆனல் தறம் பிரபுவும் கிபன் உவேக்குபீல்டும் திருச்சபையினதும், தனி அமையங்களினதும் உதவியுடன், பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் பிரித்தானிய குடியிருப்பை முறைப்படி காக்கவும் ஊக்கப்படுத்தவும் ஒரு இயக்கத்தை நடைமுறையில் ஏற்படுத்தி னர். ஈற்றில் இவ்வியக்கம் பிரதம மந்திரியையும் தன்பக்கத்துக்குத் திருப்பி அவரது ஆதரவைப் பெற்றுக் கொண்டது.
a
விற்முேரிய ஊழி முடிவுவரையும் பிரித்தானியாவில் விவசாயிகள் பெருந்தொகையினராயிருந்தனர். இவர்கள் சமுத்திரத்திற்கப்பால் தங்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பெறுவதைவிட வேறெதை யும் விரும்பாதவர்களாயிருந்தனர். ஆங்கில இனத்தினர், உள் நாட்டிலும் குடியேற்ற நாடுகளிலும் வழமையாகவே நாட்டு வாழ்க் கையை விலக்கி நகர வாழ்க்கையையே விரும்புவர் என்ற அச்சம் அண்மையிலேதான் ஏற்பட்டது.
இரண்டாம் பிரித்தானியப் பேராசின் மறு அம்சம் வியாபாரத்
தொடர்பாலும் அரசியல் ஆட்சியாலும் ஏற்பட்ட ஆசியா ஆபிரிக்கா ஆகியவற்றின் பெரும்பாகங்களின் அபிவிருத்தியாகும். உவில்ப வோசு காலம் தொடங்கியும், பிற்றினுலும் அவன் ஆள்பதி நாயகங், களாலும் இந்திய அரசாங்கம் திருத்தியமைக்கப்பட்ட காலந்,
1439

Page 233
440
இரண்டாவது பேரரசு
தொடங்கியும் தவுணிங்கு வீதியில் பொதுவாக நடைமுறை பிலிருந்த தண்ணளியிலட்சியங்களின்படி ஆபிரிக்காவிலும் கிழக்கு மேற்கிந்திய தீவுகளிலும் அரசியலாட்சி நடத்தப்பட்டது. மக்கள் பலர் அதிக நன்மையடைந்தனர். ஆபிரிக்காவில், தொல்குடிகளுக் கிடையே நடந்த போரும் அடிமைகளாக்கும் பொருட்டுச் சுதேசி களைக் கைப்பற்றுதலும் நிறுத்தப்பட்டன. இந்தியாவிலும் எகித் திலும் பிற இடங்களிலும் இக்கால விஞ்ஞானமும் அமைப்புமுறை களும் விவசாயிகள் உட்பட எல்லோருடைய நன்மைக்காகவும்
பயன்படுத்தப்பட்டன.
ஆனல் ஐரோப்பியர் அல்லாதோர்மீது நிருவாக ஆட்சி செய்யும் பொழுது இரு பிரச்சினைகள் ஏற்பட்டன. சுயவாட்சி கோரக்கூடிய அளவு பெருந்தொகையினராக மேற்கிந்திய தீவுகளிலும், தென் ஆபிரிக்காவில் நிரந்தரமாகவும் வசித்த விவசாயிகளும் வியாபாரிகளு மான வெள்ளையர்கள் செய்த கோரிக்கைகள் முதலாவது இக்கட் டாகும். இந்தியாவிற் போல, நீண்டகால அமைதியும் செவ்விய அா சாங்கமும் மேற்கு நாகரிகத் தொடர்பும் ஆளப்படுவோர் தாமே ஆள்வோராவதற்கு விரும்பும்படி செய்வது தவிர்க்க முடியாதபடி எழும் இரண்டாவது பிரச்சினையாகும். “ எவ்வளவு திறமாய், எவ் வளவு தீவிரமாய், எந்த அளவுக்கு இக்கோரிக்கைகளைப் பேரிடர் ஏற்படாது சமாளிப்பதென்பது " ஒரு நல்ல அரசாங்கம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் மிகச் சிக்கலான பிரச்சினை
எனலாம்.
கைத்தொழிற் புரட்சியின் புதிய நிலைமைகள், சில காலம் மாத்திரம் உலக வணிகத்தினதும் நிதியியலினதும் மையமாகவும், அபிவிருத் தியிற் குறைந்த நாடுகளினுடைய கைத்தொழில் மையமாகவும் பிரித்தானியாவின் நற்பயன்களைப் பெருக்கின. இச்சூழ்நிலைகளின் விளைவாகக் கட்டில்லா வியாபாரம் பேணப்பட்டது. இறைமுறை களும் கப்பற் போக்குவரத்து விதிகளும் ஒழிக்கப்பட்டன. குடி யேற்ற நாடுகளின் வியாபார நலன்கள் பிரித்தானிய நலன்களோடு இணைந்திருந்தனவெனினும் அவை பிரித்தானிய நலன்களுக்குக் கீழ்ப்பட்டனவென மதித்த பழைய வணிகம் சார்ந்த கொள்கைக்கு இப் புதிய கொள்கைகள் முற்றுப்புள்ளியிட்டன. பிரித்தானிய குடி யேற்ற நாட்டு வியாபாரத்தைப் பிரித்தானிய தனியுரிமையைப் போல் கட்டுப்பாடு செய்தல் இதன்பின் விரும்பப்படவில்லை. சுதந் திரம், சமத்துவம் என்னும் தவிர்க்க முடியாத அடிப்படைக் கொள் கைகளின் விளைவாக வணிக ஒழுங்குகளின் முடிவு ஒவ்வொரு சுய வாட்சி நாட்டுக்கும், அது தன் சொந்தக் கைத்தொழில்களைத் தாய்

இரண்டாவது பேரரசு
நாட்டுக்குத்தானும் எதிரான இறைமுறைகளால் பாதுகாப்பது விருப்பமோ வென்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அளித்தது. எங்களுடைய காலத்திலும் இந்தக் கொள்கை இந்தியாவைப் பொறுத்தளவில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
மிகப் பரந்த அளவில் நோக்கும்போது, பிரித்தானியாவின் தடை யற்ற வணிகப் பூட்கையும், எங்கள் குடியேற்ற நாடுகளுடனும் எங்களுக்குரிய நாடுகளுடனும் வர்த்தகம் செய்வது இனிமேலும் எங்கள் தனி உரிமையெனக் கொள்ளாமையும் பிற நாடுகளுடன்
சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய காரணங்களை அகற்றின என்பது
441
புலனகும். இரண்டாம் பிரித்தானிய பேரரசுக்குள் அடங்கிய உலகத்
தின் அவ்வளவு பெரிய பகுதியுடன் தாங்கள் வியாபாரம் செய்யாது தடுக்கப்படுவதைப் பிற நாடுகள் விரும்பியிருக்கமாட்டா.
கடலுக்கப்பாலுள்ள சமுதாயங்களின் சுயவாட்சித் தத்துவம், நாங்கள் இழந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளில் முன்னர் நிலவி யதும், இரண்டு கனடாக்களிலும் பிற்றுவால் ஆரம்பித்து வைக்கப் பட்டிருந்ததுமான அரசாங்க முறைகளின் விரிவேயாகும். சம
உரிமை நாடுகளிலே பாராளுமன்றப் பொறுப்பாட்சித் தத்துவத்
தைத் தருக்க முறையாகவும் பூரணமாகவும் பிரயோகிக்கப்படுத்தி யமை வெற்றியடைந்ததற்குக் காரணம் தறம் பிரபுவின் நுண்ணாறி வும் ஆற்றலுமாகும். அக்காலத்தில் அநேக உளிக்குகளும் பழைமை
பேண் அரசறிஞர்களும் கருதியதுபோல, சுதந்திரம் பிரிவுக்குக்
காரணமெனக் கருதாது பேரரசுத் தொடர்பைப் பேணும் சாதன
மெனக் கருதிய பெருஞ் சிறப்பு அவனுக்குண்டு.
அந்த நூற்றண்டு முடிவுக்கண்மையில் யோசேப்பு சேம்பலேன் காலத்தில் பேரரசு என்பதன் கருத்ததைப்பற்றிய பூரண உணர்ச்சி விழிப்பு ஏதோ ஒரு வகையான பேரரசுக் கூட்டாட்சியின் மூலம் அல்லது கூடிய ஐக்கியம் பூண்ட யாப்பின் மூலம் வெளிப்படுத்தப் படக்கூடுமென்ற பின்னைய விற்முேரிய ஊழியின் நம்பிக்கை நிறை வேறவில்லை. ஏற்கெனவே சமவாட்சி நாடுகளாக விருத்தியடைந் திருந்த குடியேற்ற நாடுகள் இப்போது தனித்தனி நாடுகளாக
இந்நூல் பக்கங்கள் 106,341 ஐப் பார்க்க
1838-1839,

Page 234
442
1861-65.
uŁub IX
பார்க்க.
கனடாவில் நெருக்கடி
விருத்தியடைந்து கொண்டிருந்தன. சட்டமுறைப்படி முடியாட்சி யால் ஒன்று சேர்க்கப்பட்ட இரண்டாம் பிரித்தானியப் பேரரசு ஆங்கிலம் பேசும் நாட்டுக் கூட்டவையாகிக் கொண்டிருந்தது. பேரரசு ஐக்கியத்தின் விவரிக்க முடியாத பிணைப்பு செயலளவில் எவ்வளவு உறுதியானது என்பது பெரும் போரின்போது நிகழ்ந்த சம்பவங்களின் மூலம் புலனுயது. காகிதத்தில் எழுதப்பட்ட யாப் பின் மூலம் மட்டும் இப்போரினுல் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கி யிருத்தல் முடியாது. −
19 ஆம் நூற்முண்டு பிரித்தானிய அரசறிஞரின் வட அமெரிக்க
பூட்கை கனடிய பிரச்சினைகள், ஐக்கிய நாடுகளுடன் பிரித்தானிய
தொடர்புகள் ஆகிய இரு விடயங்களைப் பற்றியதாயிருந்தது. இவை யிரண்டும் ஒன்முேடொன்று நெருங்கிய தொடர்புடையன. தறம் பிரபுவினதும் அவனுக்குப்பின் எல்சின் பிரபுவினதும் நற்செயல் களால் கனடிய பிரச்சினை தொடக்கத்திலேயே நன்கு பரிலேனே செய்யப்பட்டு ஏற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாயின. அமெரிக்க உண்ணுட்டுப் போர் முடியும்வரையும் ஐக்கிய நாடு களுடன் எங்கள் தொடர்பின் முழு நோக்கத்தையும் உவிக்குகளோ பழைமைபேணுவோர்களோ அல்லது பிரித்தானிய பொதுமக்களோ உணரவில்லை.
1837 இல், இலகுவாக அடக்கி வைக்கப்பட்ட இரு கலகங்கள் கனடாவில் திடீரென ஏற்பட்டன. ஒன்று பிரான்சிய குடியேறுநர் களுக்கிடையில்; மற்றது மேல் மாகாணத்தில் ஆங்கிலம் பேசும் குடியேறுநர்களுக்கிடையில். பிரித்தானியாவுக்கு நற்பேருக, இரு கட்சியினரும் ஒருவரோடொருவர் பகையாயிருந்தனர். இவருள் எவரும் ஐக்கிய நாடுகளுடன் ஒன்றுசேர விரும்பவில்லை. ஆனல் நிர்வாகத்திற் கெதிராக இரு கட்சிகளுக்கும் மனக் குறைகள் இருந் தன. நிருவாகிகளைத் தொல்லைப்படுத்தக் கூடிய அளவு வலிமை பிற்று நிறுவிய இரு மாகாண மன்றங்களுக்கும் இருந்தது. ஆயினும் அவர்களை நியமனம் செய்யவோ கட்டுப்படுத்தவோ வலிமை இருக்க வில்லை." பூரண பொறுப்பாட்சி அளிக்க இப்போது காலம் வந்து விட்டது. ஆயினும் பிரித்தானியாவிலுள்ள பிரித்தானிய அரசறிஞர் தொல்லைகள் தீர்வதற்கு அதுவே ஏற்ற வழியென்பதையோ, ஆயுதங்களும் உபயோகிக்கப்பட்ட ஒரு கலகத்தின் பின் உடனடி யாகப் பொறுப்பாட்சி அளிப்பது புத்தியானதென்பதையோ
இந்நூல் பக்கம் 341 ஐப் பார்க்க,

தறம் அறிக்கை
ஒப்புக்கொள்ளுவரெனக் கருத இடமிருக்கவில்லை. முதலாம் சீர் திருத்த முறியை எதிர்த்துப் பின் நிறைவேற்றிய அரசறிஞரிடம் குடியேற்றச் சூழ்நிலைகளைப்பற்றிய அறியாமை அதிகமாகவும் குடியாட்சியில் நம்பிக்கை குறைவாகவுமே இருந்தது. நற்பேருக மெல்போண் பிரபுவின் உவிக்கு அரசாங்கத்திற்கு, ஆற்றல் படைத்த ஆனல் மூர்க்கமான குணமுடைய சகாவான தறம் பிரபுவைக் கனடாவுக்கு அனுப்ப வேண்டுமென்ற நல்லன்ெணம் உகித்தது. மந்திரத்தினருள் சிறந்த பேரரசு வாதியாகவோ, குடியாட்சி வாதி யாகவோ வேறெவருமிலரெனக் கூறக்கூடிய காலத்தில் அவன் இரண்டுமாயிருந்தான். அவனும் அவன் செயலாளர் சாள்சு புல்ல ரும், பூரண சுயராச்சியம் வேண்டுமென்பதைக் கண்டு கொள்ளவும், கீர்த்தி வாய்ந்த தறம் அறிக்கையில் அவ்வண்ணமே மிக உறுதி யாகக் கூறவும் ஏற்ற ஆற்றலுள்ளவர்களாயிருந்தனர்.
எப்படியாயினும், பிரச்சினையோ, இங்கிலாந்திலுள்ள எவரும் உணர்ந்ததிலும், தறம்தானும் அவ்விடம் சேரும் வரை அறிந்த திலும் மிக அதிகம் சிக்கலானதாயிருந்தது. இரு இனத்தினர், பிரான்சிய மொழி பேசுவோரும் ஆங்கிலம் பேசுவோரும், ஒருவரோ டொருவர் மாத்திரமன்றி அரசாங்கத்துடனும் எதிர்த்து நிற்பதை அவன் கண்டான். மேற்குப் பாகத்தில் பிரித்தானிய குடியேற்றமும் கமச்செய்கையும், கனடா முழுவதையும் நோக்கின் அங்கு பிரான் சியரைத் தீர்க்கமாகச் சிறுபான்மையினராக்கி விட்டன. ஆனல் தங்களுக்குச் சொந்தமான கீழ் மாகாணத்தில் பிரசின்சிய குடியான வர்கள் இன்னும் ஆங்கிலம் பேசும் வணிகர்களிலும் தொழிலதிபர் களிலும் அதிகமானுேராயிருந்தனர். சமய, பண்பாட்டு வேற்றுமை கள் அவர்களுக்கிடையேயிருந்த பிளவை மேலும் மிகுவித்தன. அச் சந்ததி காலத்தில் கீழ்க் கனடாவில் பொறுப்புடைய சுயவாட்சி நிறுவப்பட்டால் அரசாங்க முறிவு ஏற்பட்டிருக்கும். சமுதாயத் கின் இரு கட்சிகளுக்குமிடையில் சச்சரவு கிளம்பியிருக்கும். தற மின் துணிகரமான திட்டம், இரண்டு மாகாணங்களையும் ஒன்ருக்கி, நிருவாகத்தின்மீது பூரண அதிகாரமுடைய தேர்வு செய்யப்பட்ட மன்றமொன்றை நிறுவுவதேயாகும். அதன் அதிகாாம் ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையினர் வசமிருக்கும். 1840 கனடாச் சட்டத் தினுல் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. பிரான்சியர் இதனை எதிர்த்துப் பேசினர். ஆல்ை கீழ்ப்படிந்து நடந்தனர். எல்சின்
1839.
443

Page 235
444
18--1-
8.
118.
கனடிய எல்லே
பிரபு புத்தி சாதிரியத்துடனும் தாராளப் போக்குடனும் வழி காட்ட புதிய கனடிய யாப்பு 1867இல் கனடிய வரலாற்றில் ஏற்பட்ட அடுத்த பெரிய நெருக்கடி வரையும் நடைமுறையி விருந்தது."
ஆணுல் 1887 இல் ஏற்பட்ட கண்டிய கூட்டாட்சிக்கு வழிகோவிய திண்மைகளே விளங்கிக் கொள்ள ஐக்கிய நாடுகளுடன் பிரித்தானியா வின் தொடர்புகளேத் தொடர்ந்து ஆராய்வது அவசியம். காவில்றி வெளிநாட்டு அமைச்சனுக விருந்தபோது பின் சந்ததியார் அவ லுக்கு நன்றி செலுத்துவதற்கேற்ற பல செயல்கண்ப் புரிந்தான். அவைகளுள் மிக முக்கியமானது, கனடிய எல்ஃப் பகுதியின் இரு மருங்கிலும் படைக்கலம் அகற்றுவதற்கும் சிறப்பாக, பிரித்தானிய ஆள்புலத்தை ஐக்கிய நாடுகளிலிருந்து இன்றும் பிரித்துக் கொண்டி ருக்கும் மாபெரும் வாதிகளிலுள்ள புத்தக் கப்பல்களே அகற்றுவதற் கும், இரு பகுதியினரும் செய்து கொண்ட உடன்படிக்கையில் அவன் எடுத்துக் கொண்ட பங்காகும். அடுத்த ஆண்டில் அதே உளப்பான்மையுடன் மேற்கு நோக்கிச் செல்லும் எல்லேயைத் தீர்மா னிக்க ஆரம்பித்தான். அடுத்த சங்கதிகாலம் முழுவதும் சவு ரிைங்கு வீதியிலும் உவாசிந்தனிலும் உள்ள அரசறிஞரின் கவ னத்தை ஈர்க்க இந்த அபாயகரமான நடவடிக்கை, வாதாடப்பட்ட எல்லேயின் இருமருங்கிலும் பெரிய படைக்கலம் பூண்ட படைகளும் இராணுவ பரம்பரை வழமைகளும் இருக்கிருத்தால், ஒரு அமைதி யான முடிவை எய்தியிருக்க முடியாது.
காசில்ரீயின் காலத்தில் உடன்படிக்கைப்படி 49 ஆம் அகலக்கோே நெடுக 1 இலேக்கு ஒத்த உட்ைசு" (காட்டுவாவி) தொடக்கம் உரோக்சுே மஃகனின் உச்சிவரையும் அந்த எல்லே நீர்மானிக்கப் பட்டது. உரொக்கே மஃகளுக்கும் பசிபிக்குச் சமுத்திரக் கரைக் கும் இடையேய/ன்ன நிலப்பகுதியைப் பற்றிய முடிவான உடன்படிக் கையைத் தீர்மானியாது விடுவதே புத்தியென்பது ஒப்புக் கொள்ளப்
1 யோன் இரசஸ் பிரபுலின் முயற்சி காரணமாக, தறம் என்பானின் அறிக்கை 1840 இல் சேயற்படுத்தப்பட்ட போழுதிலும், மெஸ்போண் பிரபுவிஜய் தறம் என்பான் நேர்மை சிறிதுமற்ற முறையில் 1839 இ* கனடாவினிருந்து திருப்பியழைக்கப்பட்டான். இதற்குகி காரணமாயிருநதவை புரோகாம் என் பாவின் சதியாஜோசனேகனாரும். பழைமைபேஜங் கட்சிப் பெருமக்கள் இவற்றை இயல்பாகவே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். தறம் ஆற்றிய கருமங்களேப் பற்றிப் புரோகாம் கொண்டிருந்த கருத்தும், தறம் அறிக்கை என வழங்கப்படும் அறிக்கையில் தறம் எதனேவும் எழுத ஜிஸ்ஐயென்று புரோகாம் வெளியிட்ட தவறன அறிவிப்பும் "Diptionary of Mntimal Biography " எனும் ஆாவில் சிறிதும் தகுதியற்றதொரு பக்கத்தில் இன்றும் இடம் பெறறிருக்கின்றன. எக்காலமும் இவ்வாறே இது இாாதேன நான் நம்புகின்றேன்.

445

Page 236
446
1846.
கனடிய எல்லை
பட்டது. அந்த மிக விரிவான பிரதேசம் முழுவதும் “ஒாகன்” எனக் குறிப்பிடப்பட்டது. இன்னும் வெளி உலகத்துடன் போக்கு வாவுக்குப் பசுபிக்குக் கடற்கரையிலேயே தங்கியிருந்த இரு நாட்டி னங்களையுஞ் சார்ந்த வேட்டையாடுவோரும் பொறி வைப்போருமே அப்பிரதேசத்தில் வசித்து வந்தனர். ஆயிரத்து எண்ணுாற்று நாற்பதாம் ஆண்டுகளில் அமெரிக்கக் குடியாட்சிப் படை வரிசை யின் முன்னணி ஒாகனுக்குத் தீவிரமாகச் செல்லும் வழியில் உரொக்கீசு மலைத்தடையைத் தகர்க்கும் வரையும், ஐக்கிய நாடு களிலிருந்தும் பெரிய பிரித்தானியாவிலிருந்தும் வந்து ஒரகனில் ஒன்று சேர்ந்து குடியிருந்தோர் சனநெருக்கம் குறைந்த இந்தப் பிரதேசங்களில் அமைதியாய் வாழ்ந்தனர்.
அமெரிக்கர் தமது பிரதேசங்களை விரிவுபடுத்துவதில் நாட்ட முடையராயிருந்தனர். அவர்கள் இயற்கையை வென்று, உலக வரலாறு முன் ஒருபோதும் கண்டிராத வேகத்துடன் ஒரு கண்டம் முழுவதும் குடியேறினர். இது மெச்சிக்கோப் போர் நிகழ்ந்த காலம். விம்புக்கதைகள் நிகழ்ந்த காலமும் இதுவே யாகும். எல்லையற்ற படர்ச்சியினுலும் புதிதாக உணரப்பட்ட ஒரு பெரிய புதிய நம்பிக்கையினலும் ஏற்பட்ட உண்மை யான எழுச்சியை இக்காலப் பகுதி ஓரளவு முறையில் குறித்தது. 1844இல் வட அகலக்கோடு 54° 40 வரையும் ஆள்புல உரிமை கோருவதெனப் பொருள்படும் ‘ஐம்பத்து-நான்கு நாற்பது அல்லது போர்' என்னும் கூச்சலைக் கொண்டே ஐக்கிய நாட்டுக் குடிப்பதித் தேர்தலில் வெற்றி எய்தப் பெற்றது. இதன்படி பசிபிக் குச் சமுத்திர்க் கரையிலிருந்து பிரித்தானியப் பேரரசு முற்முக அகற்றப்பட்டிருக்கும். ஆனல் எதிர்காலத்தில் மேற்குத் திசை நோக்கிப் படரும் உரிமை கனடாவுக்குமிருந்தது. எக்காலத்து ஆங்கில அமைச்சரிலும் மிகவும் நுண்ணறிவு படைத்தவனும் சமா தானம் விரும்புவோரில் ஒருவனுமாகிய பீல், உறுதியுடையவனுக வும் இணக்கத்தை விரும்புவோனுகவும் பகுத்தறிவுடையவனுகவு மிருந்தான். அவன் தன் பதவியிலிருந்து வீழ்ச்சியடைந்த அதே கணத்தில் தானியச் சட்டங்களை ஒழித்தலைப் போன்ற அளவு முக்கியமான ஒரு அருஞ்செயலை நிறைவேற்றினன். காசில்ரீயின் 49° அகலக்கோட்டை நீட்டுவதன்மூலம் மேற்குச் சமுத்திரம் வரைக்கும் ஒரு நீதியான சமாதானமான எல்லேவரையறுப்பைப் பெற்றன். அத்திலாந்திக்குச் சமுத்திரத்திலிருந்து பசிபிக்குச் சமுத்திரம் வரையுமுள்ள கண்ணுக்குப் புலனுகாத நீண்ட எல்லை காக்கப்பட்டிருப்பது காவல் வீடுகளாலும் எதிர்ப்படைக்கலங் களின் போட்டியாலுமன்று; இரு பெரிய சமுதாயங்களின் நிதான புத்கியாலும் நல்லுணர்ச்சியாலுமேயாம்.

அமெரிக்க உள்நாட்டுப் போர்
இந்தப் பகுத்தறிவினதும் நல்லெண்ணத்தினதும் வெற்றியின் பின்னர், வெகுகாலத்திற்கு முன் நிகழ்ந்த போர்களாலும், சமூக மத பேதங்களாலும் இரு நாடுகளுக்கிடையேயும் வளர்க்கப்பட்ட அறியாமையும் தப்பெண்ணமும் நீங்கி, பெரிய பிரித்தானியாவும் ஐக்கிய நாடுகளும் ஒன்றையொன்று நன்கு உணர்ந்துகொள்வதில் முன்னேற்றம் ஏற்படலாமெனத் தோற்றியது. பிரித்தானிய நிறுவ கங்கள் உயர்குடி மயமாயிருக்கும் நிலைமை நீங்கி, குடியாட்சி மய
மாக மாறிக் கொண்டே வந்தன. அமெரிக்கரின் மாகாண மனப்
பான்மை குறைய, தாய்நாட்டுடன் ஏற்பட்ட கடந்த காலப் பூசல்
களைப்பற்றிச் சிந்திப்பதைக் குறைக்கக் கூடியதாயிருந்தது. பதி னேழாம் நூற்ருண்டின் பின் எக்காலப்பகுதியிலும் அதிகமாக ஐக்கிய நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புதிய குடியேற்றம், இரு கட்சிகளின் குடும்பங்களுக்கிடையில் தனி மனிதரின் தொடர்பு களை ஏற்படுத்தியது. இத்தொடர்பு தற்கால அஞ்சல் முறை வசதி களின் மூலம் பெரும்பாலும் செவ்வனே பேணப்பட்டது. ஆனல் அவப்பேருக, அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயுள்ள தனியாரின் தொடர்புகள், அக்காலத்தில் இங்கிலாந்தில் வாக்குரிமை பெருத சாதாரண மக்களுக்கிடையில் மாத்திரமே அப்போது இருந் தன. உயர் குடியினரும் மேற்றர நடு வகுப்பினரும் அமெரிக்க ருடன் கலப்பு மணஞ் செய்தல், அமெரிக்காவில் பிரயாணம் செய்தல் ஆகிய வழக்கங்களே இன்னும் மேற்கொள்ளவில்லை. எங்கள் நாடுக ளுக்கிடையிலுள்ள தொடர்புகளில் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு புதிய நெருக்கடியை உண்டாக்கியபொழுது இவர்களே வெளி நாட்டுப் பூட்கை, அச்சுலகம், பாராளுமன்றம் என்பனவற்றை இன் னும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
யுத்த காலத்தில் பாமேசுதன், இரசல் என்பாரின் அரசாங்கம் தவ றில்லாத முறையில் நடந்து கொண்டது. தனது மரணப்படுக்கை யிற் கிடந்த அல்பேட்டு இளவரசி தடுத்தமையினல் எங்கள் அமைச் சர்கள், குடிப்பதி இலிங்கனின் அரசாங்கத்துடன் ஏற்பட்ட அபாய கரமான “திாந்து ’ நிகழ்ச்சியை, இணக்கமான நிலைக்குக் கொண்டு வருவதற்கு உதவிபுரிந்தனர். அவப்பேருக, சிறு தயக்கத்தின்பின், தென்பாகத்தில் அடிமைச் சொந்தக்கார ஐக்கியத்திலிருந்து விலகு வோரின் நன்மைக்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியிட எத்தனித்த மூன்ரும் நெப்போலியனுடன் சேர அவர்கள் மறுத்த னர். ஆனல் பிரித்தானிய மேல் வகுப்பினரது அனுதாபம் பெரிதும் தென் பகுதியினரிடமேயே இருந்தது. புதிய இங்கிலாந்திலுள்ள பொதுசன அபிப்பிராயத்தைப் பெரிதும் கவருவனவான கால
வர்த்தமானி', 'பஞ்சு ' என்பவற்றின் மூலமும் வேறு பத்திரிகைகள்
மூலமும் இவ்வனுதாபம் வெளியிடப்பட்டது. இங்கே அடிமை
447
1861-1865.
1861-2.

Page 237
448
ஒற்றேயர், 1862.
அமெரிக்க உள்நாட்டுப் போர்
முறைக்கு அனுதாபம் இல்லையென்பது உண்மையே. ஆனல் குடிப்பதி இலிங்கன் அப்பொழுதிருந்த பிரச்சினை, நாட்டு ஐக்கியமேயன்றி அடிமை முன்றயன்றென விளம்பரஞ் செய்து போரைத் தொடங்கியபொழுது, அவனுடைய கூற்றுக் கும் உண்மையான நிலைமைக்குமுள்ள தொடர்பை விளங்கு வதற்கு அமெரிக்காவைப் பற்றி ஆங்கில மக்களிலனேகர் போதியளவு அறிந்திருக்கவில்லை. தென்பகுதி நிரந்தரமாகவே ஐக் கிய நாட்டின் உறுப்பாக இருக்கும்படி பலவந்தம் பண்ணப்படக் கூடுமோ வென்பதைப்பற்றி ஆங்கிலேயர் ஐயுறுவது மன்னிக்கப் படக்கூடாத குற்றமன்று. ஆனல் கலகம் செய்யும் தென்பகுதிக் கூட் டாட்சியிலுள்ள எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அளிக்கவேண்டு மென்று இலிங்கன் பிரகடனம் செய்தபொழுது இங்கிலாந்தின் பொதுசன அபிப்பிராயம் வட பகுதியினர் பக்கம் திரும்பத் தொடங்கியது. யோன் பிறைற்று, தபிளியூ. ஈ. பொசுதர் என்பவர் களாலும் மற்றவர்களாலும் நன்கு அறிவுறுத்தப்பட்ட பாட்டாளி களும் கீழ்த்தர நடு வகுப்பினரும் ஆகிதொடக்கம் அந்தம்வரையும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட குடியரசு அமைக் கப்படுவதற்கு எதிராகவும் வடபகுதியினரின் குடியாட்சி முறைக் குச் சார்பாகவுமிருந்தனர். வடபகுதியின் வெற்றிக்கும் இலிங்கனின் படுகொலைக்கும் பின்னர் மற்றவர்களும் அதே பக்கம் சேரலாயினர். ஆனல் போர் நடைபெற்ற காலம் முழுவதும் எங்கள் சொந்தத் தீவில் வாக்குரிமை விரிவாக்கப்படுவதை மக்கள் விரும்புகிருரர்களா அல்லது எதிர்க்கிருரர்களா என்பதை யொட்டிய பிரித்தானிய அனு தாபமும் மாறிக்கொண்டிருந்தது.
வடபகுதியினர் தாங்கள் போராட்ட காலத்தில் எதைப் பிரித் தானிய அபிப்பிராயமெனக் கருதினர்களோ அதைப் பற்றிப் பெரி தும் ஆத்திரம் கொண்டனர். அதிக உதவியை எதிர்பார்த்த தென் பகுதியினரும் திருத்தியடையவில்லை. அத்திலாந்திக்கின் இருகரை களிலும் அபிவிருத்தியின் பொதுப் போக்கிலே இரு நாட்டினரும் ஒருவரையொருவர் செவ்வனே விளங்கிக் கொள்வதற்கு வழி தயாரா கிக் கொண்டிருந்த அதே கணத்தில், அமெரிக்கரின் உணர்ச்சியில் மீண்டும் இங்கிலாந்திற் கெதிராக ஒரு பலமான திருப்பம் ஏற்பட் டது. உள்நாட்டுப்போரினல் தற்செயலாக ஏற்பட்ட குழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்த இம் மனவேற்றுமை நிரந்தரமாக இருக்கவில்லை யென்பது உண்மையானலும் ஆங்கில அமெரிக்க இன முன்னேற்றத் திற்கு மிகவும் பிரதிகூலமான காலத்தில் நிகழ்வதாயிற்று. பெரிய

அலபாமா கோரிக்கைகள்
பிரித்தானியாவுக்குப் பகையான அயலாந்து மக்களினதும், வேறு பட்ட பரம்பரை வழமையும் பண்பாடுமுள்ள ஐரோப்பியரினதும்,
குடியேற்றம் மிகப்பெரும் அளவில் நிகழ்ந்தமையால், அந் நூற்.
முண்டு முடிவில், அமெரிக்க குடியரசில் அதன் முன்பு நிலவிய ஆங்கில சக்சனிய இயல்பு பெரிதும் மாற்றமடைந்தது.
உள்ந்ாட்டுப் போரிலிருந்து வழிவழி வந்த சிறந்த குழியல் உரிமை அலபாமா உரிமையைப் பற்றியதாகும். இரசல், வெளி நாட்டு அமைச்சனுயிருந்தபொழுது தனது கவனக்குறைவால் பேக்கன்கெட்டிலுள்ள கப்பல் கட்டும் துறையிலிருந்து அந்தத் தீங்கு குறித்த கப்பல் தப்பிப் போவதற்கு இடமளித்திருந்தான். அக்கப்பல் தென் கூட்டாட்சிக் கொடியின் கீழ் வடபகுதி யினரின் வியாபாரத்தைத் தாக்கத் தொடங்கியது. யுத்தம் முடிந்தபின்னர், வட பகுதியினர் இங்கிலாந்துக்கெதிராகத் தங்கள் கோபத்தை, இக்காரணம் பற்றி அளவுக்கு விஞ்சிய நட்ட ஈடு கோரி, வெளிப்படுத்தினர். அந்த நெருக்கடி பல ஆண்டுகளாகப் பேரிடரை ஏற்படுத்தக்கூடியதாயிருந்தது. ஆனல் 1872 இல் செனி வாவில் கெளரவமான முறையில் அது தீர்க்கப்பட்டது. அப்போது முதல் அமைச்சனன கிளாட்சன், நட்டஈடு அளிப்பைப்பற்றி மூன் மும் கட்சியொன்று தீர்ப்புக் கூறுவதை ஒப்புக்கொண்டமையால், போர்காலத்தில் தென்பகுதியினரிடம் அநுதாபம் கொண்டு தான் கூறிய புத்தியினமான வார்த்தைகளுக்கு ஈடு செய்தான். அவன் செயல், உலக நடுத் தீர்ப்பு, அமைதி என்பவற்றின் வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றமான நடவடிக்கையாகும். அந்நூற்றண்டின் கடைசிப் பத்தாண்டில் கிளிவிலந்து குடிப்பதிக்கும் சோல்சுபரி பிரபுவுக்கும் இடையில் எழுந்த வெனசுவெல்ா எல்லைபற்றிய வாதத்தாலேற்பட்ட கடும் நெருக்கடி நடுத்தீர்ப்பினுல் இணக்கி வைக்கப்பட்டது. கியூபன் பிரச்சினை பற்றி இசுப்பெயினுக்கும்
1895.
அமெரிக்காவுக்குமிடையில் பின்னர் நிகழ்ந்த போரில், ஐரோப்பாக் 1898,
கண்டப் பகுதியினரின் அபிப்பிராயத்திலும் பார்க்க இங்கிலாந்தின் பொது மக்கள் அபிப்பிராயம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அமெரிக் காவுக்குச் சாதகமாயிருந்தது. இவ்விரு நிகழ்ச்சிகளும் ஐக்கிய நாடுகளிடம் பிரித்தானியா நிரந்தரமாகக் கொண்ட சினேகப் பான்மைக்குச் சான்று பகர்ந்தன.
உள்நாட்டுப் போர் காலத்தும் அதன்பின் உடனடியாகவும் பிரித் தானியாவுக்கெதிராக நிலவிய வட நாடுகளின் சினமும், கனடிய எல்லைப்புறத்து அயலாந்துப் பீனியருடைய முயற்சிகளும் கனடா வின் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படக்கூடுமெனக் கனடாவுக்கு
எச்சரிக்கை செய்வனவாயின. நற்பேருக, ஒரு சந்ததி கால பூரண
449

Page 238
450
1867.
LILLb XIII
பார்க்க.
கனடிய கூட்டாட்சி
சுயஆட்சி அச்சமயத்தில் தன் நற்பயனை அளித்து விட்டது. பிரித் தானிய வட அமெரிக்காவின் சுயவாட்சிக் குடியேற்ற நாடுகள், நியூ பண்ணிலாந்து நீங்கலாக, தங்கள் சொந்த விருப்பப்படி நன்கு இணைந்த கூட்டாட்சியாக அமைந்தன. இதன் உடனடியான நோக் கம், அயலிலுள்ள வலிமை பொருந்திய குடியரசின் வல்விணைப்புப் போக்கைத் தார்மீக முறையில் எதிர்ப்பதாகும். இக்கூட்டாட்சிக் குப் பிரதான காரணமாயிருந்தவர் கனடிய அரசறிஞர் சேர் யோன் மாத்தொனல்டு ஆவர். கூட்டாட்சிப் பூட்கை, பொதுவான கனடிய ஒற்றுமை என்னும் பிணைப்பிற்கமைய, பிரான்சிய கீழ்மாகாணத்திற் குச் சுயவாட்சியை மீட்டும் கொடுத்தது என்பது இங்கே குறிப் பிடத்தக்கது. இக்காலம் வரையில் பிரித்தானிய பிரான்சிய சமுதா யங்கள் அதிக சச்சரவின்றி அக்கம் பக்கமாய் வாழக் கற்றுக் கொண்டன. பிரான்சியர் பாராளுமன்ற ஆட்சிமுறைக்குத் தங்க ளைப் பழக்கப்படுத்திக்கொண்டனர்.
வெற்றிகரமாய் நிறைவேறிய கூட்டாட்சியின் விளைவாகச் சம
ஆட்சி நாடாகிய கனடா இனிமேல் பெரிய பிரித்தானியாவின் மூல
மாக மாத்திரமன்றித் தானுகவும் வர வர அதிகமாக ஐக்கிய நாடு கள் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது. கூட்டாட்சியைத் தொடர்ந்து பத்தாண்டுகளில் கனடிய ஐக்கியத் தின் புதிய உணர்ச்சி, பிரித்தானிய கொடியின் கீழ் ஆங்கிலம் பேச வோர் தூர மேற்குத் திசையிலுள்ள பரந்த பிரதேசங்களிலே குடி யேறுவதற்கு அனுகூலமாகக் கனடிய-பசிபிக்கு இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. அந்த இருப்புப்பாதை புதிய கனடிய நாட்டுக்கு முதுகெலும்பு போன்றதாயிற்று.
பத்தொன்பதாம் நூற்முண்டில், அவுத்திரேலியா வெளிநாடுகளின் தொடர்பில்லாத ஓர் உலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகளைப் போல ஒரு அயல்நாடு அதற்கு இல்லை. அதன் வரலாறும் கனடாவின் வரலாறு போல் தொடக்கத்தில் நீண்ட பாலைவனங்க ளாற் பிரிக்கப்பட்டுத் தனித்தனியாயிருந்த குடியேற்ற நாடுகள், நூற்ருண்டின் நடுப்பகுதியில் பூரண சுய ஆட்சி நாடுகளாகி, நூற் முண்டு முடிவில் நீண்ட இருப்புப்பாதைகளால் ஒரு பொருளாதாரக் கூட்டிணைப்பாக்கப்பட்ட வரலாறேயாகும். கனடாவில் 1867 இல் வந்தது போல அவுத்திரேலியாவிலும் 1901 இல் ஒரு கூட்டாட்சி ஐக்கியம் ஏற்பட வேண்டிய காலம்வந்தது. ஆனல் அவுத்திரேலிய குடியேற்ற நாடுகளின் கூட்டாட்சி ஐக்கியம் கனடாவினது போல அவ்வளவு நெருங்கியதாயிருக்கவில்லை. அவுத்திரேலிய அரசியலின் சிறப்புப் பண்பு, தொழிற் கட்சியின் ஆரம்ப பலமும், நிலத்தைச் சமமாகப் பிரிப்பதற்காகவும், பெரிய பண்ணைகளைத் துண்டுகளாக்கு

அவுத்திரேலியாவும் நியூசிலந்தும்
வதற்காகவும் குடியாட்சி “குடியிருப்போருடன்’ நிகழ்த்திய போராட்டமுமாகும். கண்டத்திலிருந்து எல்லா நிறத்தினரையும் தவிர்க்கும் பூட்கையும், அதனல் தற்கால யப்பானினது தொடர்பில் ஏற்படக்கூடிய விளைவுகளும் அண்மைக் காலத்தில் அவுத்திரேலியா வின் தீவிரமான தேசீயவாதத்தில், வேறு நாடுகளுடன் கொள்ள வேண்டிய குழியல் தொடர்பு பற்றியும் பிரித்தானிய தொடர்பின் முக்கியம் பற்றியும் ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளன. அவுத்திரேலியாவின் இலட்சியம் நல்ல திடகாத்திரமும் உயர்ந்த வாழ்க்கைத் தாமுமுடைய வெள்ளையரின் சமத்துவச் சமூகத்தை அமைப்பதேயாகும். விரைவான அபிவிருத்தியை இழந்தாவது இந்த இலட்சியத்தை அடைய அவர்கள் உறுதி பூண்டிருந்தனர்.
நியூசிலந்து, மாயோரிச் சாதியினருக்கும் வேறினத்தவருக்கும் இருக்க இடங்கொடுக்கக் கூடுமெனப் பொதுமக்களை நம்பும்படி செய்தவன் கிபன் உவேக்குபீல்டு ஆவன். 1837 இல் அடிகோலப் பட்ட அவனது நியூசிலந்துச் சங்கம் அங்கே முதலாவது பிரித்தா னிய குடியேற்றத்தைத் தாபித்தது. இத்தீவுகளைப் பிரான்சு வலிந் திணைத்தலைத் தடுக்கக்கூடிய கடைசி விநாடியிலேயே இது நிகழ்ந் தது. பதினைந்து இலட்சம் மக்களைக் கொண்ட நியூசிலந்து, பிரித்தா னிய சுய ஆட்சி நாடுகளில் மிகச் சிறியவற்றிலொன்றெனினும் அதன் அன்புக்குப் பாத்திரமானதாகவேயிருந்தது*
தென் ஆபிரிக்காவின் வரலாற்றிலே மற்றச் சமநிலை நாடுகளுக்கும் தென் ஆபிரிக்காவுக்குமிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காணலாம். அவுத்திரேலியாவிலும் கனடாவிலும் போல, தென் ஆபிரிக்காவும் இருப்புப்பாதை இணைப்புக்களதும் அரசியற் கூட்
எமது காலத்தில் தன்னுட்சியுரிமையுடைய ஆணிலங்களில் (தொமினி யன்கள்) இருக்கும் குடித்தொகை விவரம் பின்வருமாறு :
self 1,03,76,786 (1931) அவுத்திரேலியா a ... 66,30,600 (1933) நியூசிலாந்து . . - ... 14,63,278 (1926) தென்னபிரிக்கா . . 20 இலட்சத்திற்குச் சிறிது குறைவான வெள்ளை uftas.gif. பெரிய பிரித்தானியா, இங்கிலாந்து -
வேல்சு 1931) 447,90,485 -۔(
கொத்துலாந்து - போர் முடிந்தபின், ஐரிசுச் சுதந்திர அரசு ஆணிலப் பதத்தைப் பெற்றது ; அல்சுதர் பிரதேசம் பொறுப்பான தன்ஞ்ட்சியுரிமையைப் பெற்றது. 1926 இல்
வட அயலாந்தின் குடித்தொகை 12,56,561 ஆக விருந்தது ; ஐரிசுச் சுதந்திர
அரசின் குடித்தொகை 30 இலட்சத்திற்குச் சிறிது குறைவாக விருந்தது.
45

Page 239
452
1833.
தென் ஆபிரிக்கா
டாட்சியினதும் ஊழியின் முன், பாந்த பாலைநிலங்களால் பெரிதும் பிரிக்கப்பட்ட ஒரு பெருந் தொகையான பெரிய ஆனல் தனிப்பட்ட சமுதாயங்களின் அமைப்பாகவேயிருந்தது. கனடாவிற்போல், குடி யேற்றம், சுய ஆட்சி ஆகிய பிரச்சினைகள், ஆங்கிலேயர் வருமுன் அங்கே குடியேறிய வேருெரு ஐரோப்பிய இனத்தினர் இருந்தமை யாற் சிக்கலாயின. உவுல்வு, மொன்காம் என்போர் காலத்திற்போல் சிச்சினர், போதா என்போர் காலத்திலும் அமைதியான உடன் பாடு ஏற்படுமுன் போரிடுதல் அவசியமாயிருந்தது. எனினும் சொந்த நாட்டினர் ஆட்சி செய்யும் பிரதேசங்களைத் தவிர்த்தால், தற்காலத் தென் ஆபிரிக்க ஐக்கிய நாட்டில் வெள்ளையர்கள் நாலி லொரு பங்கான சிறுபான்மையாாவர். இயற்கையாலும் குடியேற் றத்தாலும் கனடா ஒரு வெள்ளையர் நாடாகும். அவுத்திரேலியாவின் சில பகுதிகள் நிறத்தினரை ஆதரிக்கக்கூடும். ஆனல் நாட்டின் பூட்கை முழுக் கண்டத்தையும் வெள்ளையருக்கே ஒதுக்கி வைத் திருக்கின்றது. ஆனல் தென் ஆபிரிக்காவோ, ஐரோப்பிய இனத் தினரும் ஆபிரிக்க இனத்தினரும் அக்கம்பக்கமாக வளமான வாழ்வு வாழும் நல்ல சுவாத்தியமுள்ள உள்நாட்டு மேட்டு நிலங்களை யுடைய நிலப்பிரதேசமாகும். தென் ஆபிரிக்க வெள்ளையர் சுயராச் சியத்தைக் கோரவும் அதை வெற்றிகரமாகக் கொண்டு நடத்தவும் போதுமான தொகையினராயிருந்தனர். இந்த நிலைமை அந்நாட்ட வர் பிரச்சினையை அடிக்கடி பாதித்தது.
நெப்போலிய யுத்தகாலத்தில் நன்னம்பிக்கை முனை என்னும் கடல் சார்ந்த நிலையத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரித்தானிய தென்ன பிரிக்க வரலாற்றின் முதலாம் கட்டம், தேபில் மலைக்கு அண்மையில் வாழ்ந்த பிரித்தானிய அதிகாரிகளால் பூவர்கள் என்னும் சிறு சமு தாயம் ஆளப்பட்டமையேயாம். பூவர்கள் ஒல்லாந்துக் கொடியின் கீழ் சுயஆட்சி நடத்தப் பழகியிராமையாலும் பிரித்தானிய குடி யேறுநர்கள் பெரும் தொகையினராமையாலும் ஆரம்பத்தில் இக் கட்டுக் குறைவாயிருந்தது. ஆனல் ஆயிரத்து எண்ணுாற்று முப்ப தாம் நாற்பதாம் ஆண்டுகளில், பிரித்தானிய அகக்குடியேறுநர், மொழி, சட்டம், வழமை சார்ந்த பிரச்சினைகளை எழுப்பக்கூடிய அளவு பெருந்தொகையினராக வந்து சேரத் தொடங்கின. அதே காலத்தில் பிரித்தானியப் பேரரசிலுள்ள எல்லா அடிமைகளும் விடுதலை பெற்றனர். பூவர்கள் விடுதலை பற்றி இக்கட்டு உண்டாக்க வில்லை. ஆனல் வாக்குறுதி செய்யப்பட்ட நட்ட ஈடு முழுவதும் தங்களுக்குக் கொடுபடவில்லையென ஓரளவு நியாயத்துடன் முறை யிட்டனர். அதே காலத்தில் உண்ணுட்டுப் பகுதிகளிலுள்ள போர்ப் பிரியமுள்ள அவ்வூர்ப் பிறந்த சாதியினரால் எல்லைப்புறங்க லிருந்த பூவரின் பண்ணைகள் கொள்ளையிடப்படாது பாதுகா’

பூவர் பெயர்ச்சி
கப்படவில்லை. மெல்போண் பிரபுவின் தகுதியற்ற குடியேற்ற நாட்டு அமைச்சனன கிளநற்கு பிரபு, அந் நாட்டினர் பிரச்சினைகள் யாவற்றைப் பற்றியும் குறிப்பிட்ட சிலவிதமான கருத்துகட்கு மட்டுமே செவி சாய்க்கும் அக்கால பிரித்தானிய அதிகாரிகள் சில ரின் இயல்புக்கு உதாரணமாயிருந்தான். எல்லைப்புறப் பண்ணைக் காரருக்கிருந்த இம்மனக்குறைகளும் ஒரளவு இயல்பாகவே அவர் களைத் தூண்டிக்கொண்டிருந்த துணிகர மனப்பான்மையும் அவர் களின் பெரும் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாயிருந்தன. பூவர்கள், தங்கள் பெண்டு பிள்ளைகளைத் தங்களுடன் தங்கள் மாட்டுவண்டி களில் ஏற்றிக்கொண்டு புல் வெளியைக் கடந்து உள்நாட்டிற்குள் வெகு தூரம் நுழைந்தனர். அங்கே தங்கள் சொந்த, சுதந்திரமான, பிதாவழி முறையில், தங்கள் பெரிய விவிலிய நூலை வாசித்துக் கொண்டு, தங்கள் ஆட்டு மாட்டு மந்தைகளைப் பெருக்கிக்கொண்டு, தங்களைச் சுற்றிக் காணப்பட்ட பெரிய காட்டு மிருகங்களைச் சுட்டு, இலக்குக் கவருத தங்கள் துப்பாக்கிகளதும் சுழல் துப்பாக்கி களதும் பாதுகாப்பில் அந்நாட்டு வீரம் படைத்த சாதியினரிட மிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்தனர்.
அப்படியான தனிப்பட்ட வாழ்வு பத்தொன்பதாம் நூற்முண்டு ஆபிரிக்காவில் நிலைத்திருக்க முடியாது. சமயம் பரப்பும் குழுவினர், வேட்டையாடுவோர், குடியானவர்கள், பொன் வைரம் ஆகியவற்றை அகழ்ந்தெடுப்போர், முதலீடு செய்யும் நோக்கமுடையோர் போன்ற பல வேருண பிரித்தானிய ஐரோப்பிய அகக்குடியேறுநர் முதலில் நேத்தாலிலும் பின்னர் வால் நதியின் இருமருங்கிலும் வந்து சேர்ந் தனர். பழைய வகை வெள்ளையர் சமூகத்திற்கும் புதிய வகை வெள் ளேயர் சமூகத்திற்குமிடையே மோதுதல்கள், நூற்ருண்டு முழுவதும், பல்வேறு வகையிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன.
போர் விரும்பும் அந்நாட்டுத் தொல்குடிகள் அங்கே வசித்தமை பூவர்களும் பிரித்தானியர்களும் ஒருவரோடொருவர் சண்டை செய் வதை வெகுகாலமாகத் தடை பண்ணியது. ஆனல் பிரித்தானிய படைகளாலும் அதிகாரிகளாலும் குலு போர்வீரர்கள் அடக்கப் பட்டு அமைதிப் படுத்தப்பட்ட பின் பூவர்கள் சிறிது கூடிய காப் பிருப்பதாக உணர்ந்தனர். நெருக்கடியான இக்காலத்தில் பிரித்தா னிய அரசாங்கம், பிரதானமாக கிளாட்சன் அரசாங்கம் திரான்சு வால் பூவர்களுடன் ஏதோ ஒருவகையான உடன்பாட்டைச் செய்து
கொள்வதற்குக் காரணமாக மகுபாவில் பிணக்கு ஏற்பட்டது. வால்
நதியின் மறுபுறத்திலுள்ள தங்கள் இரத்த உரித்தாளருடன் முனைக்
யேற்ற நாட்டு ஒல்லாந்தர் நன்மை தீமைகளில் ஒன்று சேருவ குடி ஒ ஒ ரு
1836.
879.
188
453

Page 240
454
மகுடா : செசில் உரோட்சு
ரென அஞ்சி, கினாட்சன் பிரித்தானியர் தோல்வியை ஒப்புக்கொண் டான். இவ்வண்ணம் திரான்சுஜரால் தென் ஆபிரிக்கக் குடியரசாகத் தன் சுகத்திக்கை மீண்டும் அடைந்தது. கிரான்சுவால் மாகாணத் தில் போன், வைரம் அகழ்ந்தெடுத்தல் அபிவிருக்கியடைந்தடை யால் மகுபT பூட்கை சிக்கி எய்தக்கூடிய எந்த வாய்ப்பும் பயனற்ற தாகும்படி செய்யப்பட்டது. செல்வத்தைப் பெறுவதற்கான போராட்டம், உலகப் பொதுவான தொழிலதிபருக்கும், தன் நாட் டின் அரசியலிாகிக்கம் சுரங்கம் அறுப்போரைச் சோவிடாது சுரங் கங்களேப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய பழைய புத்தி நுட்பமுன்ன ஒல்லாந்துக் கமக்காாலுக்குமிடையில் முன் எக்காலக் தாம் இல்லாத பிணக்கைத் தோற்றுவித்தது.
அதே க'லிக்கில் செசில் உரோட்சும் அவனிடம் உரிமைப் பத்திரம் பெற்ற வணிகக் குழுவினரும் திரான்சுரேலின் மேற்கிலும் வடக்
மாேனந்து .*--/ "o!
莆 岂 년 F. .
சேர்மானிய உரோே
k "vir". -"
ற்கு!
பேங்குமாறாத்து i III
JL, Lio XIIW Ggair -24, li al R&&I, IT, 184] ).
கிலும் உள்ள புதிய பிரித்தானிய ஆள்புலங்கனே அபிவிருத்தி செய்துகொண்டிருந்தனர். உரோடேசியW உற்பத்தியாயது. உன் நாட்டுக்குன் நுழைந்ததற்கு ஒானவு காரணம், சேர்மானியர் தங்கள் ஆள்புலங்களேச் சேர்மானிய தென் மேற்காபிரிக்கா
இந்நூல் பக்கம் 512 இல் அடிக் குறிப்பைப் பார்க்க.
 
 
 
 
 
 

ܠ ܐܙܕ.
தென் ஆபிரிக்க யுத்தம்
விவிருந்து பேWத்துக்கேய ஆள்புலம்வரையும் கண்டத்துக்குக் குறுக்கே பரப்புவார்களென உசோட்சு மனதிற் கொண்ட பயமே யாகும். அப்படியான அபிவிருக்கி சரியான காலத்திற் செய்யப் பட்டால், அது பிரித்தானிய இனத்தினரின் வடக்கு நோக்கிய முன் னேற்றம் ஒருபோதும் நிகழwதபடி தடுக்கிருக்கும். ஆகவே சம்பசி நதிக்கப்பாலுள்ள பிரதேசங்களுடன் ஓர் இணேப்பைக் தாபிக்க உரோட்சு நோக்கங் கொண்டான். இப்பிரதேசங்களி லேயே முந்திய சந்ததி காலத்தில் இவிவிந்தோலும் வேறு பிரிக் தானிய மதம் பரப்புவோரும் மத்திய ஆபிரிக்காவின் நப்ே பகுதிக் குச் செல்லும் பாதையைக் காட்டி, அந்நாட்டவர்களுக்குக் கலேமை தாங்கி அவர்கஃனச் செவ்வனே வழிநடத்தும் முறையையும் விளக்கி ஞர்கள். இவற்றுக்கு வடக்கில் பிரித்தானியா எகிச்தைத் தன் படையிருக்கையாக்கிக் கொண்டது. ஆகவே உரோட்சுவின் நம் பிக்கை நிறைந்த உனத்திற்கு நன்னம்பிக்கை முண்பிவிருந்து கைருே வாைக்கும் பிரித்தானிய ஆன்புலத்திற்கூடாக ஒரு இருப் புப்பாதை அமைப்பது எப்படியும் முடியாத காரியமாகத் தோற்ற வில்லே.
செயலாற்றலுடைய இக் கனவு காண்போன், ஆபிரிக்க புவியிய விலும் வரலாற்றிலும் தன் அடையாளத்தைப் பதித்துச் சென்றிருக் கிருன். ஆணுல் அவன் செய்தவை யாவும் அவன் ஆரம்பத்தில் செய்ய விரும்பியவையல்ல. அவன் பிரித்தானிய ஒல்லாந்த இனத்தினருள் இணக்கத்தை ஏற்படுத்த விரும்பினுன் ஆணுல் துன்பம் நிறைந்த பல ஆண்டுகளுக்கு அவர்களிடையே வினோதத்தை வளர்த்தான். மூனேக் குடியேற்ற நாட்டின் முதலமைச்சஜக அவனிருந்த பொழுது, தென்னுயிரிக்க குடிப்பதியும் பணிழய உலகக்அப் பழைமை பேணியல்பையுடைய பூவருமான போல் குரூகருடன் சச்சரவில் ஈடுபட்டான். கூடாத காலத்தில் திரான்சுவாலேப் படை தாங்கித் தாக்க திட்டமிட்டான். 'சேமிசனின் கொள்னே ஆபிரிக் காவிலுள்ள ஒல்லாந்த இனத்தவர் யாவரையும், நேர்மையான கோபமும் ஐயுறவும் காரணமாக ஒன்றுசேரச் செய்தது. குரு கசைப் பூரண படைக்கலம் பூனச் செய்து, இரண்டாம் பூவர் புக் தத்திற்கு வழிகோளியது. ஏனெனில் இங்கிலாந்துக் குடியேற்ற அலுவலகத்திருந்த சேம்பலேனுக்கும் தென் ஆபிரிக்காவினிருந்த சேர் அல்பிாற்று மில்நருக்கும், உடனே பிரச்சினேகளே ஒரு முடிவுக் குக் கொண்டுவருவதைவிட வேறுவழி தோன்றவில்ஃப்,
தென்னுபிரிக்க புக்கம், அகன் எதிர்பாாாக கிருப்பங்கனினுலும் பூவர் குடியானவர்களின் ஊக்கம் படைக்க கொரில்லா முறை எதிர்ப் பால் அதிக காலம் நீடித்தமையாலும், பிரித்தானிய பேராசைப்
生函5
நத்தார்
1E,
3
1403.

Page 241
456
தென் ஆபிரிக்க யுத்தம்
பல விதத்திலே பாதித்தது. அது பத்தொன்பதாம் நூற்முண்டின் கடைசி ஆண்டுகளில் பேராசிலே காணப்பட்ட ஒரளவு தற்புகழ்ச்சி யிலிடுபடும் தன்மைக்கு முற்றுப்புள்ளியிட்டது. இந்த உளப் பான்மை, பிரித்தானிய பேரரசைப் பற்றிய எண்ணத்தை மக்களி டையே பரவ உதவுவதன்மூலம் அச்சமயத்தில் பயன்பட்டதெனி னும் நாங்கள் இப்போது அணுகும் ஆபத்தான ஊழியில் இடர் உண்டாக்கியிருக்கக் கூடும். இந்த இரண்டாம் பூவர் யுத்தத்தின் இடர் நிரம்பிய தன்மை எல்லாக் கட்சிகளின் உறுப்பினர்களேயும், பேரரசின் கடமைகளைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் அடக்கமாகவும் பரந்த மனத்துடனும் சிந்திக்கும்படி செய்தது ; இராணுவத் திறனுக்கும் படைச் சீர்திருத்தத்திற்கும் ஒரு புதிய அாண்டுகோலாகவும் அமைந்தது. இச்சீர்திருத்தங்கள் பன்னிரண்டு ஆண்டுகளின் பின் பெரும் பயனளித்தன. பூவர் யுத்தத்தை நாங்கள் மிக இலகுவாக வென்றிருந்தால் சேர்மன் யுத்தத்தை ஒரு போதும் வென்றிருக்க முடியாதிருந்திருக்கலாம். ஈற்றில், நெருக் கடிக்குட்பட்ட பேரரசின் சார்பில் போர் செய்யத் தென்னுபிரிக்கா வுக்கு வந்த கனடியாதும் அவுத்திரேலியாதும் ஆர்வத்தோடு கூடிய ஆதரவும் கிடைத்தது.
உருெபேட்டு பிரபுவும் கிச்சினர் பிரபுவும் போர்க்களங்களில் ஈட் டிய வெற்றிகளின் பயனகத் திரான்சுவாலும், ஒறேஞ்சு சுதந்திர
மே, 1902 நாடும் வலிந்திணைக்கப்பட்டன. வெரிநிக்கிங்கு பொருத்தனையின்
910.
மூலம் சமாதானம் ஏற்பட்டது. இதன்படி, பாழாய்க்கிடந்த புல் வெளியில் வாழ்ந்த இன்னும் சரணடையாத படையினருக்குக் கெளரவமான உடன்படிக்கை நிபந்தனைகள் அளிக்கப்பட்டன. பண்ணைகளைப் பழைய நன்னிலைக்குக் கொண்டுவருவதற்குப் பெரிய பிரித்தானியா உடனே வேண்டிய முயற்சி எடுப்பது, ஒல்லாந்த ஆங் சில மொழிகளுக்குச் சமநிலையளிப்பது, காலவவதியில் பிரித்தானிய கொடியின் கீழ் பூரண பொறுப்பான சுயஆட்சி கொடுப்பது ஆகிய இந்த உறுதி மொழிகள் யாவும் நிறைவேற்றப்பட்டன. பல்வூரும் மில்நரும் பழைமை பேண் கட்சியினரும் நாடு பாழாய்ப் போமெ னக் கூக்குரலிட்டபோதும், 1906 இலேயே சேர் என்றி காம்பல்பன மன் என்பவனுல் பொறுப்புள்ள சுயஆட்சி நிறுவப்பட்டது. இவற் றின் பயனகத் தென்னுபிரிக்கா சாந்தப்படுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளின் பின்னர், உரோடேசியாவும் நாட்டவர்கள் புரப்பகங் கள் சிலவுந் தவிர, அந்த உபகண்டம் முழுவதும் தென்னுபிரிக்க ஐக்கிய நாட்டுடன் கூட்டாட்சிப்படுத்தப்பட்டது. 1902 இல் பிரித் தானிய படைகளுக்கெதிராகக் கடைசிவரையும் சரணடையாது போர்புரிந்த போதா, சிமற்சு என்னும் தளபதிகள் போரில் சேர்

இந்தியா
மனிக் கெதிராக ஐக்கிய தென்னுபிரிக்காவுக்குத் தலைமைவகித்து, பேரரசின் மிக ஆபத்தான காலத்தில் அதன் செல்வநிலையையும் அதிலும் முக்கியமாக அதன் மனப்பலத்தையும் மிகுவிக்கப் பெரிது முதவினர்.
பதினெட்டாம் நூற்றண்டில் மோகல் பேரரசு வீழ்ந்தமையாலும் இந்தியாவில் சிற்றரசர்கள், பிரதானிகள், படைவீரர் ஆகியோர் தமக்கிடையே போரிட்டமையாலும் ஆட்சியறவு ஏற்பட்டது. அப் போது பிரித்தானிய கிழக்கிந்திய சங்கம் பெருமளவில் இராணுவ நடவடிக்கைகளையும் அரசியற் பொறுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. தங்கள் எதிரிகளை இந்தியாவிலிருந்து வெளி யேற்றப் பிரான்சியர் செய்த முயற்சியினுல் இச்செயல் தீவிரப்படுத் தப்பட்டது. இந்தியத் தனியரசு வட்டாரத்தினுள் எங்கும் “பிரித் தானிய ஆதிக்கம்” ஒப்புக் கொள்ளப்படும் வரையும் முன்னேற வேண்டிய அவசியத்தை முன்னுடியே உணர்ந்தவர் முதலாம் ஆள் பதி நாயகம் உவெலசிலி பிரபு ஆவர். தீபகற்பத்தின் கிழக்குத் தெற்குப் பாகங்களில் நிலவிய ஆட்சியறவை அவரின் மராட்டிய யுத்தங்கள் தடுத்து நிறுத்தினவெனினும் மத்திய இந்தியாவில் நில விய அமைதியின்மைக்குரிய காரணங்கள் இன்னும் கட்டுப்படுத்தப் படவில்லை. உவெலசிலி பதவியிலிருந்து இளைப்பாறியபின், பிரித் தானிய பொறுப்பை வரையறுக்கவும் இந்தியாவினுள்ளே மேலும் முன்னேறுவதை நிறுத்தவும் முயற்சி செய்யப்பட்டது.
ஆனல் குழப்பங்கள் குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பாலும் பா வாமல் அவ்வெல்லைகளுக்குள்ளேயே கட்டுப்பட்டு நிற்குமென நம்பு வது வீண் என்பதைப் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் விரைவிற் புலப் படுத்தின. வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் நிலவிய குழப் பமான நிலைமை மறுபாகங்களில் அமைதி நிலவ முடியாமற் செய்து விட்டது. உவெலசிலியின் முற்போக்குப் பூட்கை ஏசிங்கு பிரபு வால் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அவன் காலத்தில் நேபாள மலைவாசிகளான கூர்க்கர் போரினல் ஆட்சிக்குட்படுத்தப்பட்டனர். அன்று தொடக்கம் அவர்கள் நாடு எங்கள் நட்புறவு நாடாயிருந் திருக்கிறது. எங்கள் இந்திய படைகளுக்குப் போர்வீரர்களை அளிக் கும் இடமும் அதுவேயாயிருந்தது. இன்னும் ஏசிங்கு பிரபு காலத் கில், மராட்ட பிரதானிகளும் மத்திய இந்தியாவிலுள்ள திருடர் கூட்டத்தினரும் மூன்ரும் மராட்டிப் போரிலும் பிந்தாரி போர்களி லும் ஈற்றில் வெற்றி கொள்ளப்பட்டனர். ஆறு ஆண்டுகளின் பின், பர்மியப்படைகள் அசாமுக்குள் திடீரெனப் புகுந்து வட கிழக்கு
* இந்நூல் பக்கங்கள் 347, 348 ஐப் பார்க்க. 17-R 5931 (11162)
457
798-1805.
படம்x
Lμπή εξέύ.
1814-1816.
1816-1818.

Page 242
458
1824一6。
18281835.
1838.
இந்திய பிரச்சினை
இந்தியாவைத் தாக்கியமை முதலாம் பர்மிய யுத்தத்திற்கும் பர்மாவை வலிந்து இணைப்பதற்கும் வழியாயது. 1853 இலும் 1886 இலும் பர்மா முற்முக இணைக்கப்பட்டது. திபேத்திய சீனவிலே தோன்றியவர்களும் புத்த மதத்தைத் தழுவியவர்களுமான பர்மி யர் மதத்திலும் இனத்திலும் எவ்விதத்திலும் இந்தியாவோடு சேரக் கூடியவர்களல்லர். ஆனல் பிரித்தானிய இந்தியாவில் நடை பெற்ற ஆட்சி முறையே சிற்சில மாற்றங்களோடு பர்மாவிலும் கைக்கொள்ளப்பட்டது.
ஏசிங்கு பிரபுவினதும் அவனுக்குப் பின் பதவிக்கு வந்தவனதும் ஆட்சிக் காலத்தில் நிலவிய முற்போக்கு இயக்கங்களுக்கும் போர் களுக்கும் பின், சில ஆண்டுகளாக அமைதி நிலவியது. பின்னர் வடமேற்கு எல்லைப்புறப் பிரச்சினைகளாலும் அபுகானித்தானிலுள்ள பட்டாணியருடனும் பஞ்சாப்பிலுள்ள சீக்கியருடனும் ஏற்பட்ட தொடர்புகளாலும் ஒன்றன் பின் ஒன்முகப் பல போர்கள் ஏற்பட் டுப் பல நாடுகளும் வலிந்து இணைக்கப்பட்டன. அமைதி நிலவிய
காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியின் நல்ல அம்சமும் இந்தியா
சார்பில் நம்பிக்கைப் பொறுப்புணர்ச்சியும் உவிலியம் பெந்திங்கு பிரபுவாலும் வேறு ஆற்றலும் நல்லார்வமுமுள்ள பொது ஊழிய ராலும் பெரிதும் விதந்து பேசப்பட்டன. கிளைவு, உவாறன் ஏசிங்கு தொடக்கம் உவெலசினி, ஏசிங்கு பிரபு என்போர் உட்பட, மெற் காவு, உலோரன்சு சகோதரர்கள் வரை போரிலும் வலிந்திணைத்த விலும் ஈடுபட்ட பிரித்தானிய ஆட்சியாளருள் உண்மையாகவே நம்பிக்கைப் பொறுப்புணர்ச்சி இருக்காமலில்லை. ஆனல் உவிலியம் பெந்திங்கு பிரபுவுக்குப் பரம்பரையாக வழிப்பறி, கொள்ளை, கொலை என்பனவற்றில் ஈடுபடும் சாதியினரான 'தக்கு” என்னும் வட இந்தியக் கொள்ளைக் கூட்டத்தினரைத் தவிர எவரையும் வெல்லவோ, இந்து விதவைகளை எரிக்கும் சதிமுறையை ஆதரிப் போரின் எதிர்ப்தை விட வேறு எந்த எதிர்ப்பையும் முறி யடிக்கவோ அவசியமெதுவும் ஏற்படவில்லை. அவன் வெற்றிகள் அமைதி காண் வெற்றிகளாகும்.
கிழக்கிந்திய சங்கத்திற்கு அளிக்கப்பட்ட பிரித்தானிய இந்திய வணிக முழுவுரிமை 1813 இல் ஒழிக்கப்பட்டது. இருபது ஆண்டு களின் பின் பிரித்தானிய-சீன வணிக முழுவுரிமையும் ஒழிந்தது. யோன் சங்கம் தன் வியாபார அக்கறையைக் கைவிட்டது. எனினும் 1858 வரையும் அரசியலதிகாரப் பகட்டைக் கைவிடவில்லை. உண்மையான அதிகாரம் வெகு காலத்துக்கு முன்னரே முடியாட்சி யின் அமைச்சரின் கைவசமாயது. 1833 புதிய பட்டயம் பெந்திங் கின் பூட்கையின் ஒரு போக்கைப் பின்வரும் வார்த்தைகள் மூலம் புலப்படுத்துகின்றது. "இந்தியாவிற் பிறந்த எவரையும் மாட்சிமை

இந்தியரும் ஆங்கிலரும்
தங்கிய அரசனின் பிரசையாகப் பிறந்த எவரும் மதம், பிறப்பிடம்,
மரபு, நிறம் காரணமாக எந்த உத்தியோகத்தையோ பதவியையோ
வகிக்க இயலாது என்று விலக்க முடியாது” பிரித்தானியர் ஆற்றும் பணிகளிலே சேரத் தகுதியுள்ளவர்களாவதற்கு இந்திய நிருவாகி களைப் பயிற்றும் செயல் இனிமேற்ருன் மேற்கொள்ள வேண்டியிருந் தது. பெந்திங்கும் அவன் காலத்தவரும் அதிக ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் அச்செயலை மேற்கொள்வதிலும் அதனடு தொடர் புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஈடுபட்டனர்.
இக்காலப்பகுதியில் ஐரோப்பியருக்கும் இந்தியருக்குமிடையில்
அதிக மனக்கசப்பு இருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சிக்கு முன் இருந்த நிலைமையைப் பற்றிய நினைவுகள் மக்கள் மனதில் பசுமை யாயிருந்தமையால் நன்றியுணர்ச்சி இன்னும் இருந்தது. இந்தியா விலுள்ள ஆங்கிலேயரும் கொத்துலாந்தரும் சிறு தொகையினரா யிருந்தனர். ஒரு கலப்பில்லா ஆங்கில சமூகத்தை உருவாக்கக் கூடிய அளவு தொகையினராக அவர்கள் இருக்கவில்லை. தங்கள் தாய்நாட்டையடைய ஆறுமாத காலம் பிரயாணஞ் செய்ய வேண் டியிருந்தமையால் அநேகமாக வாழ்நாள் முழுவதும் அங்கு செல் லாமலிருந்தனர். இந்தியா அவர்களுக்கு இரண்டாம் தாய்நாடா யிற்று. கலப்புமணம் அரிதாயினும் அது விலக்கப்படவில்லை. அந்த நூற்முண்டின் முடிவில் ஆயதுபோல் நிற உணர்ச்சி எந்தக் கட்சி யிலும் இன்னும் வலுவடையவில்லை. இந்தியருக்கு இங்கிலாந்தைப் பற்றியோ ஐரோப்பாவைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவர் களே ஆளுவோர் அவர்களுக்கு வியப்பைத் தருகிறவர்களாகவும், வானத்திலிருந்து வந்தவர்கள் போலவும் தாங்கள் அறிந்த பல தேவர்களையும் அரசர்களையும் விட இதமானவர்களரகவுந் தோன்றி னர். மகிழ்ச்சிகரமான இந்த நிலைமையை எதுவும் நிரந்தரமாக்கி யிருக்க முடியாது. அச்சமயம் நடைமுறையிலிருந்ததை விட வேறெந்தக் கல்வி முறையாவது, இந்தியாவில் ஏற்பட்ட தடுக்க முடியாத மாற்றத்தை மேலும் நல்லதாக்கியிருக்குமோ அல்லது தீயதாக்கியிருக்குமோ என்பது கேள்விக்குரியது.
கல்வியும் பாலனமும் ஆங்கிலமொழி மூலமே நடைபெறவேண்டு
மென்ற தீர்மானம் பெந்திங்கின் ஆட்சிக் காலத்திலேயே செய்யப் பட்டது. அதையொட்டிய வாக்குவாதம் அப்போது கல்கத்தாவில்
மன்றத்துறுப்பினனன மகோலே என்பான் காட்டிய உறுதியான
ஆனல் அளவுக்கு மீறிய நம்பிக்கையோடுகூடிய காரணங்களால் தீர்த்து வைக்கப்பட்டது. ஆங்கிலத்தைவிட வேறெந்த மொழியாவது நிரந்தரமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென நம்புவது கடின மானது. இந்தியா முழுதும் ஒருங்கு ஆளப்பட வேண்டியிருந்தமை
459

Page 243
460
கல்வியும் மொழிப்பிரச்சினையும்
யால் ஒரேயொரு பொதுவான அரசாங்கமொழி வேண்டியதா யிற்று. கீழைத்தேசத்திலுள்ள கணக்கற்ற மொழிகளுள் ஏதாவது ஒன்றை மட்டும் தெரிந்தெடுத்து அதையே போதன மொழியாகவும் அரசாங்க மொழியாகவும் பயன்படுத்துமாறு பிரித்தானியரையும் இந்தியரையும் கட்டாயப்படுத்த வல்லார் யார்?
எனினும் ஆங்கிலத்தைக் கற்பிப்பதில் சில அபாயங்கள் இருந்தன. அவற்றைத் தடுப்பதற்குப் பிந்திய சந்ததியினர் சரியான வழிவகை களைக் கையாளவில்லை. கடந்த பல நூற்றுண்டுகளாக எல்லாத் துறைகளிலும் சுயஆட்சியிலே பயிற்றப்பட்டுச் சுயமான கட்டுப் பாட்டையும் பொது ஒழுங்கையும் உறுதியாகக் கைக்கொண்ட ஆற்றல் படைத்த வெள்ளை இனம், தனது இலங்கியங்களிலும் அரசியல் தத்துவத்திலும் சுதந்திரமே வாழ்க்கையின் இலட்சிய மென வற்புறுத்துவது இயல்பு. ஆனல் தாய்நாட்டில் கடைப் பிடிக்கப்பட்ட இந்த இலட்சியங்களை உலகத்தின் மறுபாகத்தி லுள்ள வேறு வித அனுபவங்களையுடைய மக்கள் அறிந்தால் எதிர் பாராத விளைவுகள் உண்டாகலாம். புரட்சி இலக்கியத்தைப் பயிற்று வதன் மூலம், இந்தியாவில் ஒரு ஆளும் இனத்தினரை வளர்க்க நாங்கள் முயற்சி செய்தோமென்று சொல்வதில் ஓரளவு உண்மை உண்டு. கல்வித்திட்டத்தில் தவறுகள் இருந்தன என்பது உண்மையே. மேல்நாட்டு இலக்கியத்தையும் மொழியையும் பாட சாலைத் திட்டத்தில் சேராது விடும் இலகுவான வழிதுறையைக் கையாண்டிருந்தால் எங்கள் சமீபகால இக்கட்டுக்கள் யாவற்றை யும் தவிர்த்திருக்கலாமென வாதிப்போர் 1835 இலேயே ஆங்கிலம் படிக்க இந்தியர்கள் எவ்வளவு ஆவல் கொண்டிருந்தார்களென்பதை யும், அன்று தொட்டு அவர்கள் இலக்கியமும் எண்ணமும் புத்துயிர் பெறுவதற்கு மேற்கு நாட்டவர்களின் அறிவியல் இலக்கியங்கள் எவ்வளவு தூரம் உதவின என்பதையும், எங்கள் பிரசைகளை மேல் நாட்டு விஞ்ஞான சாத்திரங்களையும் அறிவியல் நூல்களையும் கற்க விடாது நிரந்தரமாகத் தடுப்பது எவ்வளவு பெருந்தன்மையற்ற தும் சாதிக்க முடியாததுமான செயலாகுமென்பதையும், அவர்கள் நன்கு வ்ெளிப்படுத்திய விருப்பத்திற்கு மாமுக அவர்களை அறியா மையில் வைத்திருக்க அரசாங்கம் செய்யும் பயன்படாத முயற்சி யினுல் எவ்வளவு ஆபத்து ஏற்படுமென்பதையும் யோசிப்பதில்லை.
பெந்திங்கு ஆட்சியின் கீழ் அமைதியான உறுதிப்பாடு நிலவிய காலத்தின் பின் முன்னேற்ற இயக்கம் மீண்டும் தொடங்கிற்று. நாற்பதாம் ஆண்டுப் போர்களும் உடன்படிக்கைகளும் வட மேற்கு எல்லைப்புறப் பூட்கையையும் எல்லைப் பிரிவுகளையும் பெரும் படியாகத் தீர்மரனித்தன. பிரித்தானிய இந்திய ஆட்சி எல்லைக்குள்

இக்தியா போர்கள்
அபுகானித்தானிலுள்ள மலைப்பிரதேசத்தில் வசிக்கும் தொல்குடி களைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட முயற்சி காபுலிலிருந்து பின்வாங்கிய படை முழுவதும் நாசமானதால் பெருந்துன்பமாக முடிவுற்றது. இதை மறைமுகமான கடவுளருட்பேறு எனலாம். ஏனெனில், இரசியாவினதும், பிரித்தானியாவினதும் ஆசிய ஆள் புலங்களுக்கிடையில் தன் மலைநாட்டுச் சுதந்திரத்தைக் கவனமாகக் காவல் செய்யும் தடைநாடான அபுகானித்தானுடன் நட்பாயிருக் கும் பூட்கையிலேயே இறுதியில் இந்திய தீபகற்பத்தின் அமைதியும் பாதுகாப்பும் தங்கியிருப்பதாகப் பின்னர் தெரியவந்தது. தனி ஆட்சியுடைய நாடாக அபுகானித்தான் இருந்தமையால் ஆசியா விலுள்ள இரசியாவுடன் நாங்கள் படைக்கலம் பூண்டு போர் புரிய
ஒருபோதும் நேரிடவில்லை.
மலைப்பிரதேசத்தில் இத்தடையேற்பட்ட ஆண்டுகளில் சிந்து, பஞ் சாப்பு என்னுமிடங்கள் வலிந்திணைக்கப்பட்டன. அதனுல் வடமேற் குச் சமவெளிகளிலுள்ள பெரிய ஆற்றுப் பிரதேசங்கள் பிரித்தானி யாவுக்குரியனவாயின. பஞ்சாபிலிருந்த சீக்கியர்கள் ஒரு குடியாட்சி முறையான சமய சகோதரத்துவ குழு; இவர்களை இந்துப் புரட் டெசுத்தாந்தர் எனக் குறிப்பிடலாம். இவர்கள் மலையில் வதியும் முகமதிய தொல்குடிகள் உட்புகாமலும், மத்திய ஆசியாவிலிருந்து
படையெடுப்போரிடமிருந்தும் இந்திய சமவெளிகளை வெகுகாலம்
காப்பாற்றி வந்திருந்தனர். இவர்களின் கீர்த்திவாய்ந்த தலைவன் இரஞ்சித்சிங்கு, ஐரோப்பிய முறைகளில் சீக்கிய படைவீரர் களைப் பயிற்றினன். ஆங்கிலேயருடன் நட்பாயிருந்தான். ஆனல் அவனது மரணத்தின் பின் இந்தச் சிறந்த படைவீரர் பிரித்தானிய இந்தியாவைத் தாக்கச் சற்லெசு ஆற்றைக் கடந்த பெருந்தொகை யாகச் சென்றனர். பின் நிகழ்ந்த மூடுகி, சோபிரன், சிலியன்வாலா போன்ற சண்டைகளைக்கொண்ட போராட்டம் இந்திய நிலத்தில் பிரித்தானியர் புரிந்த எந்தப் போராட்டத்திலும் கடுமை குறைந்த தாயிருக்கவில்லை. போரில் வெற்றி எய்தியபின் உலோரன்சு சகோ தரர்கள் பஞ்சாப்பை நல்ல முறையில் ஆட்சி செய்து சீக் கியரின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றனர். ஆகவே கலகம் என்னும் புயல் தொடங்கியபொழுது, கலகஞ் செய்த அயோத்தியை மீண்டும் வெற்றி கொள்ளுவதற்குப் புதிதாகக் கைப்பற்றிய பஞ்சாப்பைப் படைக்கல நிலைமையாகப் பயன்படுத்தக் கூடியதா யிருந்தது. நெருக்கடியான இக்காலத்தில் அபுகானித்தான் நட்பா யிருந்தமையால், கலகம் அடக்கப்படும் வரையும் வடமேற்கு எல்லைப்புறத்திலிருந்து படையினரை அபாயமின்றி வெளியேற்றக் கூடியதாயிருந்தது.
46
1839-1841.
படங்கள் X XI urtitias.
1857.

Page 244
462
Glo, 1857.
படைக் கிளர்ச்சி
படைக்கிளர்ச்சி என்பது அச்சொல் குறிப்பதுபோல் பீரங்கிப் படையினரில் பெரும் பகுதியோர் உட்பட, பிரித்தானியரிடமிருந்து சம்பளம் பெறும் சிப்பாய்ப் படைப்பகுதியினர் சிலரின் கிளர்ச்சியே யாகும். குடிமக்களை இந்த நிகழ்ச்சியில், பங்கு பற்றுவோர் எனக் கொள்வதிலும் காட்சியாளர் எனவே கொள்ள வேண்டும். படைவீரர் களுக்கிருந்த மனக்குறைகளே இத்தகைய கலகங்களுக்குக் காரண மாகும். அாய பசுவினதும், வெறுக்கப்படும் பன்றியினதும் கொழுப் புப் பூசப்பட்ட தோட்டாக்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டன. நன்கு சிந்தியாது செய்யப்பட்ட இத்தகைய தவமுன செயல்களால் அவர்கள் மனவேதனையடைந்தனர்.
வங்காளப் படைகிளர்ச்சி மீரட்டில் தொடங்கியது. தாங்கள் கிளப்பிய புயலை அடக்குந் திறனற்ற அதிகாரிகளின் புத்தியீனமான செயலே கலகத்தின் உடனடியான காரணம். கலகக்காரரிற் சிலர் பிரித்தானிய படைப்பகுதியில்லாத இடமாகிய தில்லியை நோக்கி நேரே சென்றனர். தில்லி விரைவில் இயக்கத்தினர் வசமாயது ; மூன்று வார விர எதிர்ப்பின் பின் கோன்பூரும் அவர்கள் வசமா யிற்று. எதிர்த்துப் போராடுவதிலே தன் உயிரையிழந்த சேர் என்றி உலோரன்சு வசித்த இராசமாளிகை தவிர, இலட்சுமணபுரி முழு வதும் அதே கதியடைந்தது. 1857 கோடை காலத்தில் இந்த மேற் கங்கைப் பிரதேசத்தில் போர் புரியப்பட்டு வெற்றி எய்தப்பட்டது. அப்போது இந்தியாவில் இருந்த பிரித்தானியராலும் விசுவாசமுள்ள இந்தியப் படைவீரராலும் இவ்வெற்றி கிட்டியது. இங்கிலாந்தி லிருந்து படைகள் வந்து சேர்ந்த பின்னும் பலமாதங்களாகக் கடும் போர் நிகழ்ந்தது. எனினும் இந்தியாவிலிருந்தவர்கள் தாங்கள் மாத்திரமே வெற்றிக்குக் காரணமானவர்கள் எனக் கூறுவதிலும் உண்மையுண்டு. நிகல்சன், உலோரன்சு சகோதரர்கள், அவலக்கு, அவுதிராம், கொலின் கம்பல், இயூ உரோம் என்போரும் அவர்கள் திரட்டி நடாத்திய சிறு சிறு படைகளும் புரிந்த அருஞ்செயல்களும், தில்லிமுகடு, காசிமீரவாயில், இலட்சுமணபுரி கைப்பற்றப்பட்டமை ஆகியன பற்றிய கதைகளும் இந்தியாவில் மாத்திரமன்றி ஐரோப்பா விலும் பிரித்தானியாவினது மதிப்பை மீண்டும் நிலைநாட்டின. ஐரோப்பாவிலே கிரைமிய யுத்தம் நன்கு அனுபவப்பட்ட எமது படைவீரரின் போர்த்திறனை வெளிப்படுத்திய அளவு துலக்கமாக |எமது இராணுவ அமைப்பிலிருந்த குறைகளையும் வெளிப்படுத்தி
J9).
புரட்சித் தீ பரவுமுன் மத்திய இந்தியாவிலேயே அது முற்ருய் அணைக்கப்பட்டது. வங்காளத்திற் பெரும்பகுதி, சென்னை, பம்பாய், வடமேற்கு ஆள்புலங்கள் முழுவதும் ஆள்வோரிடம் விசுவாசமுடை யனவாயிருந்தன. மைசூர், ஐதராபாத்து போன்ற பெரிய தனி

படைக்கிளர்ச்சியும் அதன் பின்னரும்
யரசுகளும் அவ்வண்ணமே. இக்கிளர்ச்சியின் விளைவுகளுள் ஒன்று தண்ணளியுடைய பாலனம் நிலவும் நிலப்பரப்பை விசாலமாக்கும் வண்ணம் இந்திய ஆட்சியாளரின் புரப்பக ஆள்புலங்களை உண்மை யான பிரித்தானிய ஆள்புலங்களுடன் ஒன்முகச் சேர்ப்பதற்கு ஆள் பதி நாயகமான இடால்கவுசி பிரபு தன் அளவு மீறிய ஊக்கத்தினல் பின்பற்றிய வழிக்கு முற்றுப்புள்ளி யிடப்பட்டமையேயாகும். உண்மையாகவே படைக்கிளர்ச்சியின் நிலையமாகிய அயோத்தியைத் இடால்கவுசி விலிந்திணைத்தமை மறைமுகமாக அதனைத் தூண்டு வதற்கு உதவியது. 1857 இன்பின் தனியாசு நாடுகள் பிரித்தானிய இராச்சியத்தின் வலிமைக்கு இன்றியமையாத ஆதாரங்களாக மதிக் கப்பட்டன. மிக அண்மையான காலங்களில் பிரித்தானியாவால் நேரே ஆளப்பட்ட மாகாணங்களில் ஏற்பட்ட அரசியற் பிணக்குக் காலங்களிலும் அவை அங்கினமே மதிக்கப்பட்டன.
கிளர்ச்சி படையினராற் செய்யப்பட்டதே யன்றிப் பொது மக்களாற் செய்யப்பட்டதன்று. எனினும் அது இந்தியாவில் மேலைத்தேய முறைகள் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்தைப் பற்றி இந்தியாவிலுள்ள பெருந் தொகையான மக்களிடத்தே தோன்றிய பொதுவான அமைதியின்மையுடனும் அச்சத்துடனும் தொடர்புடையதாயிருந்தது. சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத் திற்கும் இடால்கவுசி காட்டிய ஆர்வம் இருப்புப்பாதைகள் தந்திகள்
ஆகிய புதிய சாதனங்கள் பலவற்றின் மூலமும் ஐரோப்பிய தரமான
வினைதிறன் சுகாதாரம் ஆகியவற்றின் மூலமும் புலப்படலாயிற்று.
கிளர்ச்சியின் பின்னரும் இவைகள் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டே வந்தன. இந்தியா இவைகளுடன் பழக்கப்பட்டு விட்டது.
இவற்றையடுத்து ஒரு நீண்ட கால அமைதியுடன் குதிறமற்ற பாலன
மும் இடம்பெற்றது. 1858 இன் பின், வெகுகாலம் செயலளவில் இருந் ததுபோல் பெயரளவிலும் பிரித்தானிய அரசாங்கம் கிழக்கிந்திய சங்கத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது. திசரெவி கூறிய புத்தி மதியின்படி 1877 இல் விற்றேரியா இராணி இந்தியாவின் பேராசி என்னும் பட்டத்தை வகித்துக் கொண்டார்.
சிந்திய இரத்தம், இனப்பூசல்கள் ஆகியவற்றின் நினைவு ஆள் வோர், ஆளப்படுவோர் ஆகிய இரு சாரார் மனத்திலும் ஒரு கற்பனைத் தோற்றம்போல இப்போது மறைந்திருந்தது. ஆயினும் கிளர்ச்சியின் பின் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் நற்பணிகள் தடையின்றித் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. பஞ்சமும் கொள்ளை நோயும் விஞ்ஞானத்தின் துணைகொண்டு முறைப்படி தடுக்கப்பட்டன. முன்னெருபோதுமில்லாத அளவுக்குச் செல்வ மும் குடிசனமும் பெருகின.
463

Page 245
464
1904.
இந்தியர் மனப்பாங்கு : பகைமை
இவையனைத்தும், உதவியற்ற இலட்சக் கணக்கான மக்களின் நன் மைக்காகச் செய்யப்பட்ட உயர்தரமான செயல்களாகும். எனினும், பயனுள்ள ஆண்டுகள் தனிச்சிறப்புடை நிகழ்ச்சி எதுவுமின்றிக் கழிந்து செல்ல, பணிக்குழுவாட்சியை வெறும் தனியாட்சியான எந்த அரசாங்கத்திடமும் காணப்படும் தவிர்க்க முடியாத குறை பாடுகள் பற்றிக் கொண்டன. முன் செய்யப்பட்ட நல்ல வேலைகளைப் பற்றி மாத்திரமே அது அளவுக்கு விஞ்சிச் சிந்தித்தது ; அரசியற் குழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. நாட்டின இயக்கத்திற்கு அதன் ஆரம்ப கட்டங்க ளில், உதாரணமாக இந்திய நாட்டினர் பேரவைக்கு எண்பதாம் தொண்ணுாராம் ஆண்டுகளில், மேலதிகாரிகள் அனுதாபமும் அன் பும் காட்டியிருந்தால் எதிர்கால நிகழ்ச்சிப் போக்கு இலகுவாயிருந் திருக்கக்கூடும். ஆனல் அமைதியான முறையிலே கண்டனம் தெரி விக்கப்பட்ட பொழுது அச்செயல் ஆங்கிலேயரால் பலமுறையும் இராசத்துரோகமானதெனக் கருதப்பட்டது. ஈற்றில் அது உண்மை யாகவே இராசத்துரோகமாயது.
அந்நூற்முண்டின் பிற் பத்தாண்டுகளில் நிற உணர்ச்சி இரு பகுதி யினரிடத்தும் வலுப்பெற்றது. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயர் தொகை பெருகியது. அவர்கள் வெளி உதவி தேவைப்படாத நிலையை யடைந்தனர். அடிக்கடி தாய் நாட்டுக்குப் பிரயாணஞ் செய்து தம் தாய்நாட்டுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களுமாயினர். அதே சமயம் இந்தியருள்ளே கல்வியறிவு பெற்முேர் மலைக்கும் கடலுக்கும் அப்பாலுள்ளதும் ஆங்கிலேயருக்கும் ஏனையோருக்கும் தாய்நாடாக வுள்ளதுமாகிய உலகத்தைப்பற்றி அதிகம் அறியவும், வெள்ளையர் ஆட்சியென்னும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி வரலாற்று உண்மையென வும் அது வானத்திலிருந்து வந்திறங்கியதல்லவெனவும் உணரவுந் தொடங்கினர். தேசிய உணர்ச்சிகளையும் தாராளக் கருத்துக்களையும் வளர்த்த ஐரோப்பாவின் அரசியல் முன்னேற்றத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். தங்கள் வெளிநாட்டு ஆட்சியாளரின் தற்காலப் பழக்க வழக்கங்களுக்கெதிரான இனஞ் சார்ந்த பழை மைபேணும் கிளர்ச்சி, அக்கருத்துக்களுடன் அவர்கள் மனங்களில் கலந்தது. இரசியாமீது யப்பானியர் எய்திய வெற்றி வெள்ளையர் ஆதிக்கத்தைப்பற்றி ஆசிய மக்கள் அனைவரும் கொண்டிருந்த மன நோக்கைப் பாதித்தது. கல்வியறிவுடைய இந்தியர்களிற் பலர் புதிய ஆளற்றண்டிலே பகைமை யுணர்ச்சியை வளர்த்து அதன் விளைவாக அடிக்கடி அரச துரோகத்திலும் அரசியற் குற்றங்களிலும் ஈடுபட லாயினர். படித்தவர்கள் ஆங்கிலேயருக்கெதிராகச் செய்த பிரசாரம், பழைமைபேண் மனமுடையவரும் கல்வியறிவில்லாதவருமான குடி யானவர்களை ஓரளவாவது பாதிக்காது விடவில்லை.

சலுகைகள் வழங்கப்படல்
இவ்விதமாக எழுந்த கிளர்ச்சிகளை அடக்கும்பொருட்டு மேலதி காரிகள் சிற்சில சலுகைகளை வழங்கத் தொடங்கினர். வங்காளப் பிரிவினைபற்றிய பிரச்சினையில் ஒரு கீர்த்திவாய்ந்த பதிலாையனின் பாலனத் தீர்மானம், பொது மக்களது அபிப்பிராயத்தை யொட்டிச் சில ஆண்டுகளின் பின்னர் நேர்மாமுக மாற்றப்பட்டது. கல்கத்தா விலிருந்த மிந்தோ பிரபுவினதும் உவைற்றேலிலுள்ள மோளி பிரபு வினதும் கூட்டு முயற்சியால் ஏற்பட்ட 1909 இந்திய கழகங்கள் விதி அரசாங்க நடவடிக்கைகளைப்பற்றி ஆலோசனை கூறவும் விமரிசம் செய்யவும் அதிகாரமுடைய உறுப்பினர் தொகையைக் கூட்டி அதன் மூலம் சட்டசபைகளைப் பெருப்பித்தது. 1911 இல் ஐந்தாம் யோச்சு புதிதாகத் தலைநகராக்கப்பட்ட தில்லியில் கொலுவீற்றிருந்தார். தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு விசயஞ் செய்த முதலாம் முடியரசர் இவரேயாவர்.
1914 மாபெரும் போரே ஆணிலப்பத நாடுகளுடன் சமத்துவம் கோா இந்தியாவைத் தட்டியெழுப்பியது. இப்பெரும்போரே ஆணிலச் சுய ஆட்சியைப் பெரிதும் ஊக்கப்படுத்தியது. ஐரோப்பா வில் சுயநிருணயத்துக்காகப் போர் புரிவதென வெளிப்படக்கூறும் பிரித்தானியா அந்த உரிமையை இனிமேல் தங்களுக்கு மறுக்க முடி யாதென இந்தியர் கருதினர். பிரித்தானியப் பேரரசின் ஓர் உறுப் பாக இந்தியாவில் பொறுப்பாட்சியைப் படிப்படியாக விருத்தி செய் வதே தனது பூட்கையென 1917 இல் பிரித்தானிய அரசாங்கம் அறி வித்தது. 1919 இந்திய அரசாங்க விதி, முக்கியத்துவம் வாய்ந்த அந்த அறிக்கையின் விளைவாகும். இவ்விதி இந்திய யாப்புச் சீர் திருத்தங்களைப்பற்றி மொந்தேகு-செல்மிசுபோட்டு அறிக்கையில் ஆதரிக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டது. நிருவாகப் பொறுப்பு ஓரளவுக்கு மாகாண சட்டசபைகளினிடம் விடப்பட்டது. ஆனல் மத்திய அரசாங்க அலுவல்கள் யாவும் பிரித்தானிய அரசாங்கத் திற்கும் பாராளுமன்றத்திற்கும் மாத்திரமே பொறுப்பாயிருக்க அது திட்டம் செய்திருந்தது. அதிக கல்வியில்லாத தேர்வுத் தொகுதி களிலிருந்து தெரிவு செய்யப்பட்டதும் அனுபவமற்றதுமான சட்ட சபையிடம் பாதுகாப்பு வெளிநாட்டலுவல்கள் போன்றவைகளை ஒப்படைப்பது புத்தியல்லவெனக் கருதப்பட்டது. பிரித்தானிய இந்தியாவுடன் மாத்திரமன்றித் தனியரசுகளுடனும் மத்திய அர சாங்கம் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தது. இவையே மேற்குறிப் பிட்டவாறு திட்டஞ் செய்தமைக்கு ஒரளவு காரணங்களாகும். பூரண தன்னட்சிக்குக் குறைந்த எதைக்கொண்டும் நாட்டின வாதிகள் திருத்தியடையவில்லை. ஆதலால் பல மாகாணங்களில் புதிய முறைகள் செயலிற் பயன்படவில்லை. அமைதியின்மை,
465
丑9]4一1918。
99-1939,

Page 246
466
இநதிய அரசாங்க விதி
பலதுறைகளிலும் நடைபெற்ற வேலை நிறுத்தம், புரட்சிகரமான முயற்சி, பிரித்தானிய பொருள்களைப் பகிட்கரித்தல், காந்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டமறுப்பு, மற்றும் கீழ்ப்படியாமை இயக் கங்கள் என்பவற்றின் மூலம் மக்களிடையேயிருந்த அமைதியின்மை வெளிப்பட்டது. 1930 இல் சைமன் ஆணைக்குழு அறிக்கை, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பதைத் தவிர்த்து, மாகாணங்களில் பூரண பொறுப்பாட்சியை, பாதுகாப்புகளுடன் நிறுவுவதை ஆதரித்துக் கூறியது. எனினும் சிற்றரசர்களிற் சிலர், அகில இந்திய கூட்டவையொன்று சுயஆட்சி அடிப்படையில் அமை க்கப்பட்டால் அதிற் சேரத் தாங்கள் தயாராயிருப்பதாகத் தெரிவித் தனர். எனவே, 1931 இல் இராமிசே மாத்தொனல்டு அரசாங்கம், கூட்டவைச் சட்ட சபையின் பொறுப்பின் கீழேயே கூட்டவைய நிருவாக அமைப்பு இயங்க வேண்டுமெனும் கொள்கையைத் தாம் ஒப்புக்கொள்ளுவதாகப் பிரகடனஞ் செய்தது. இந்திய மக்களது அபிப்பிராயத்தைப் பலமுறையும் அறிந்தபின் 1935 இல் இந்திய அரசாங்க விதி நிறைவேற்றப்பட்டது. இது பதினெரு பிரித்தானிய இந்திய மாகாணங்களையும் அவற்றேடு சோ ஆயத்தமாயிருந்த தனி யாசு நாடுகளையும் கொண்ட அகில இந்திய கூட்டவையை நிறுவ ஏற்பாடு செய்தது. கூட்டவைய அலுவல்களாகும் பாதுகாப்பும் வெளிநாட்டுப் பூட்கையும் தவிர மற்ற அலுவல்களில் கூட்டவைய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் தங்கள் சட்டசபைகளுக் குப் பொறுப்பாயிருக்க வேண்டியிருந்தது.
ஆகவே 1937 இன் பின் மாகாணங்கள் சுயஆட்சி செய்துவந்தன. ஆனல் 1937 செத்தெம்பரில் பெரிய பிரித்தானியாவுக்கும் சேர் மனிக்குமிடையில் போர் மூண்டமையால் யாப்பில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய முடியாமற் போயிற்று. அதனல் மையத்தில் பொறுப்பாட்சியை நிறுவுவதும், அகில இந்தியக் கூட்ட வையை அமைப்பதும் நிறைவேறவில்லை. இந்தியக் கூட்டவைத் திட்டம் நிறைவேறுவதற்கு எல்லாத்தொகுதிகளுடைய ஒத்துழைப் பும் இன்றியமையாதது. ஆனல் அத்தொகுதிகள் யாவும் அத் திட்டத்தை எதிர்த்தன. பிரித்தானிய இந்தியாவின் ஆதிக்கத்திற்கு அஞ்சிச் சிற்றரசர்கள் அத்திட்டத்திற்கு உடன்படி விரும்பவில்லை. ஆகவே தேவையான தொகையினர் அதற்குத் தங்கள் சம்மதத்தை அளிக்கத் தவறினர். சுயராச்சியம் ஏற்பட்டால் அதிகாரம் பிரித்தா னியரிடமிருந்து இந்துக்கள் கைக்கு மாறக்கூடுமென முசிலிம் சங்கம் அஞ்சியது. எல்லாக் கட்சியினரும் போரை வெல்லுவதற்கு லக்த்துழைக்க விரும்பினர். ஆனல் மாசபை, சமாதான உடன் படிக்கை நிறைவேற்றப்பட்டபின் பூரண ஆணிலப்பதம் அளிப்ப தெனப் பிரித்தானிய அரசாங்கத்திலிருந்து ஒரு தெளிவான வாக்

இனபேதங்கள்
குறுதி கோரிற்று. சிற்றரசர்கள், முசிலிங்கள், வேறு சிறுபான்மை யோர் என்போரின் சம்மதமின்றி அப்படியான வாக்குறுதி கொடுக்க முடியாது. ஏனெனில் இவர்களின் நலன்கள் காப்பாற்றப்படவேண்டி யிருந்தது. எனவே மாசபை எட்டு மாகாணங்களின் அமைச்சுகளை விலகும்படி செய்தது. அதனுல் பொறுப்பாட்சி ஒழிந்துபோகவே ஆள்பதிகள் அவசரகால நிருவாகங்களை நிறுவ வேண்டியவரா யினர். ஆகவே வகுப்புவாதம் இந்தியாவின் அரசியலமைப்பில் ஏற் படக்கூடிய முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தவும் இந்து-முசிலிம் தொடர்புகளே மேலும் பங்கப்படுத்தவுங் கூடிய நிலைமை ஏற்பட்டது. எனினும் ஈற்றில் 1947-50 இல் இந்தியா என்னும் இந்துக் (54q. U r சாகவும் பாக்கித்தான் என்னும் முசிலிம் ஆணிலமாகவும் இந்தியா பூரண சுயஆட்சி பெற்றது. பிரித்தானிய ஆட்சி முடிவெய்தியது. ஆங்கிலேயருக்கும் இந்தியருக்குமிடையில் நட்பை அடிப்படை யாகக்கொண்டே இந்த மாற்றம் நிறைவேற்றப்பட்டது.
எங்கள் நாட்டவர் இப்போது இந்தியாவை ஆள்வதில்லை. மிகப் பரந்த அந்த உபகண்டத்தை நாங்கள் ஒருகாலம் ஆட்சி செய்தோ மென்னும் பெரிய வரலாற்றிலும், அக்கிரமம், போர் என்னும் குழப் பங்கள் நிலவிய இடத்தில் நாங்கள் எப்படி அமைதியை நிலை நாட்டினேமென்பதிலும், 150 ஆண்டுகளாக ஆள்பதிகளின் முதல்
எண்ணம் எப்படி ஆளப்படுவோரின் நலனைப் பற்றியதாக விருந்த
தென்பதிலும், காலம் வந்துற்றபோது இந்தியர், எங்கள் செயல்கள் காரணமாக எப்படிச் சுயஆட்சியை ஏற்று நடத்தக் கூடியவர்களா யிருந்தார்களென்பதிலும் எப்பொழுதும் நாங்கள் பெருமை கொள்ள லாம்.
அத்தியாயம் IV
புதிய சீர்திருத்த ஊழி. கிளாட்சனின் முதலமைச்சு, 1868-74. திசரெலி யும் தற்காலப் பழைமைபேண் கொள்கையும். கிளாட்சன், எகித்து, உள் நாட்டு ஆட்சி. சோல்சுபரி பிரபுவின் அமைச்சுகள். கொண்டாட்ட ஊழி. சமூக சீர்திருத்தமும் பேரரசுவாதமும்.
அமெரிக்க உள்நாட்டுப்போரில் வடபாகத்தின் வெற்றியும் பாமேசுதனின் மரணமும் ஒன்று சேர்ந்து, ஆங்கில அரசியலுலகத் தில் தீவிரமாற்றமுடைய வேருெரு காலத்துக்கு அறிகுறி ஆயின. மாற்றமடைந்து கொண்டிருந்த புதிய உலகத்துக்குத் தலைவனுக விருந்தவன் கிளாட்சன் ஆவான். அவன், ஆர்வம், நன்மையையே எதிர்பார்க்கும் மனப்பான்மை, மனித சுபாவத்தில் நம்பிக்கை,
467

Page 247
468
கிளாட்சனும் தாராளவியக்கமும்
இலட்சியம், சொல்லளவு மட்டில் நின்று விணுகாது காப்பாற்றிய சட்ட ஆக்க, சட்ட நிர்வாக நுட்பங்களிலே ஒப்பற்ற தேர்ச்சி என்பன அடங்கிய அக்கால அரசியற் போக்குக்களனைத்தும் எடுத்த உருவமே ஆவான். கிளாட்சன் பழைய உவிக்குக் கட்சியைப் புதிய தாராளக் கட்சியாக மாற்றி முடித்தான். அவன் தனது முதலா வதும் மிகச் சிறந்ததுமான 1868-74 அமைச்சினது சட்ட ஆக்கத்தால், நெடுங்காலமாகச் செய்யப்படாமல் எஞ்சிநின்ற நிறுவக மாற்றங்களை நிறைவேற்றினன். முன்னேற்றத்தையே முக்கிய இலக்காகக் கொண்ட கட்சியின் நடவடிக்கைகள் பாமேசுத னின் தலைமை காரணமாக, நெடுங்காலத்துக்குத் தடைப்பட்டு நின் றன. இப்போது சீர்திருத்தங்கள் துரிதமாக நடைபெற்றன. எதிர்ப்பு இல்லாதபடியால் அமைதியாகவே நடைபெற்றன.
ஏனெனில் அதே சமயம் பழைமைபேணும் கட்சியும் அதனுடன் சட்ட ஆக்கத்தின்மீது பிரபுக்கள் சபையின் வீட்டு அதிகாரக் கட்டுப்பாடும் அறிவாளிகள் வசமாயின. தன்னையும் உள்ளடக்கியே திசரெலி 1968 இல் இங்கிலாந்தின் ‘முதலமைச்சர் எதிலும் மித மிஞ்சிய ஆர்வம் உடையவராய் இருத்தலாகாதென இராணிக்கு எழுதினன். இராணியின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இது பொருந்துமென்று சேர்த்தெழுதியிருக்கலாம். பழைமைபேண் கட்சித் தலைவனின் ஆய்ந்தறிந்து தெளியும் மனநிலை எங்கள் நிறுவகங்கள் குடியாட்சிக்குரிய இயல்புடையனவாக்கப் படுதலைத் தடுக்க முடியாதென ஏற்றுக் கொள்ளும்படி தன் கட்சியைப் பயிற் அறும் வேலைக்கு ஏற்புடையதாயிருந்தது. அதைச் செயற்படுத்தும் பொருட்டுச் சில பகுதிகளுக்குத் தானே தலைமை தாங்க வேண்டிய வனனன். ஆனல் கிளாட்சனின் ஆர்வம் மிகுந்த இயல்பு 1868-74 கீர்த்திவாய்ந்த சட்ட ஆக்க அருஞ் செயல்களுக்குத் தேவைப் பட்டது.
மாற்றத்திற்குரிய இக்கால அரசறிஞர்க்கு ஆதரவளித்தவன் யோன் சுதுவட்டு மில் என்னும் அரசியல் தத்துவ அறிஞனவான். அவன் நூல்கள் அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் கற்ருேரிடையே பிரசித்தியடைந்திருந்தன. அவன் பெந்தாமின் பயன்பாட்டுக் கொள்கையைப் பூரணப்படுத்த, தற்போக்குக் கொள்கையின் கடின மான பிணைப்பினின்று அதனை விடுவித்தான். நாட்டுத் தேர்தல்களில் மாத்திரமன்றித் தலத் தேர்தல்களிலும் ஒவ்வொரு ஆணும் பெண் அணும் பங்குபற்றவேண்டுமென்ற கருத்தில் பூரண குடியாட்சிக் கோட் பாட்டைப்பற்றி மில் போதித்தான். ஆயினும் குடியாட்சி முறையின் குறைபாடுகளை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆகவேதான் அரசியல் வாதிகளுக்கு வெவ்வேறு விடயங்களைப்பற்றிக் கருத்துரை கள் வழங்குதற்கும் பொதுவில் குடியாட்சி அரசைச் சீரிய வழியிற்

மில் இடாவின் ஒக்சுபோட்டு இயக்கம்
செலுத்துதற்கும், ஒவ்வொரு விடயத்தைப் பற்றியும் விசேட திறமை பெற்ருேரைக் கொண்ட, அரசாங்க திணைக்களங்கள் இருத்தல் வேண்டுமென அவன் கருதினன். அதிகாரம் பரவலாயிருந்தாலும், ஆட்சிக்கு வேண்டிய அறிவுத்திறன்-அஃது பயனுடையதாய் இருக்க வேண்டுமாயின்-ஒருமுகப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என மில் கூறினன். உவைற்முேல் சிவில்சேவையாளரது கடமை களுடன் தவுனிங்கு விதி அரசியல்வாதிகளினதும், நாட்டின் வாக்காளர் தொகுதியினதும் கடமைகளே, அவை ஒன்முேடொன்று பொருந்தும் வகையில், இணைத்தல் நல்லாட்சிக்கு அத்தியாவசியம் என மில் கருதினன். மில்லின் இக்கொள்கைகளின் ஒரு சிறு அம்ச மேனும் கொபெற்றுவின் பழைய பருமாற்றவாதத்திலோ அன்றேல் பூரண தன்னிச்சைவாதத்திலோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தககஅறி.
பெண்களை அடிமைப்படுத்துதல் ' என்னும் நூலில் பெண்கள் உரிமைகளுக்காக மில் பரிந்து பேசியுள்ளான். அவன் வாழ்நாளில் அரசியல் வாக்குரிமையை அது பாதிக்காவிடினும் பெண்கள் சுதந் திரத்தில் மதிப்பும், பிந்திய விற்றேரிய ஊழியின் தனிச்சிறப்பாக விளங்கிய பெண் கல்வியின் முக்கியத்துவத்தில் நம்பிக்கையும் பெருகுவதற்கு உதவிற்று. மில், புளோரன்சு நைற்றிங்கேல் என்னு மிருவருமே எங்கள் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் நிலைமைக்குக்
காரணததர்களாவர்.
சுதந்திரத்தைப்பற்றி மில் எழுதிய தனி நூலில், அப்போது சட்டத்தாலில்லாவிடினும் சமூக மாபால் பெரிதும் கட்டுப்படுத்தப் பட்ட அறிவாராய்ச்சி, கலந்துரையாடல் என்னும் இரண்டிலும் சுதந் திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தினன். எதிர்காலச் சந்ததி யினர் இச் சுதந்திரக் கோட்பாட்டுடன் வளர்ந்தனர். இக்கோட்பாடு அரசியலில் மட்டுமன்றி மற்றெல்லாத்துறைகளிலும் காணப்பட்டது. விவிலிய நூலின் பல பகுதிகளில் வைதிருந்த நம்பிக்கையைப் பாதித்த தாவினின் பரிணுமவாதக் கருத்தைப்பற்றிப் பெரிய வாக்கு வாதங்கள் நடந்த காலமது. ‘உயிரினங்கள் உற்பத்தி' என்னும் நூலும் மில்லின் ‘சுதந்திரம்' என்னும் நூலும் ஒரே ஆண்டில் வெளி யிடப்பட்டன. (1859). இயற்கை விஞ்ஞான வகுப்பு கேம்பிரிட்சில் தொடக்கப்பட்டது. பூசே, கெபிள், நியூமன் (நியூமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவுவதன்முன்) என்பவர்கள் ஒக்சுபோட்டில் ஆரம் பித்த இந்த இயக்கம் கல்வியோடு மட்டும் தொடர்புடையதாக விருந்த நிலைமை மாறி, திருச்சபையிலும், பொதுமக்களிடையிலும்
* இநநூல் பக்கம் 431 ஐப் பார்க்க.
469
1833-1845

Page 248
470
திருச்சபைச் சீர்திருத்தம்
பரவி ஆங்காங்கு நிலவிய கருத்துக்களோடு இணையத்தொடங்கிற்று. பிாதரிக்கு தெனிசன் மோறிசு, சாள்சு, கிங்சிலி என்பாரின் கிறித் துவசம உடைமையெனக் குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் செல்வாக் கினல் குடியாட்சி, கைத்தொழிற் புரட்சியினலேற்பட்ட சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைப்பற்றிய திருச்சபையின் கருத்துக் களில் மாற்றம் ஏற்பட்டது. யோவெற்று, சிதான்லி, கொலன்சோ என்பாரின் தலைமையில் தற்காலக் கருத்துக்களுக்கு கேற்புடைத் தாக்கப்பட்ட சமய சித்தாந்தம் தாவினிய வாதப் பிரதிவாதம், வா லாற்று முறை அறிவு இவற்றின் மூலம், பலரும் ஏற்கும் முக்கியத் துவம் பெற்றது. திருச்சபை வெளியுலகில் ஏற்பட்டுக் கொண்டிருக் கும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கத்தக்க அம்சங்களைக் கொண்டதாயிற்று. பல துறைகளிலும் தன் அறிவைப் பெருக் கிற்று. அதன் ஊக்கம் வளர்ந்தது. உள்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் சமயத்தைப் பரப்பும் ஊக்கம் புத்துயிர் பெற்றது. குடியேற்ற ஆரம்பத்திலே நியூசிலந்தில் விசுப்பாண்டவராயிருந்த செல்வின், பிரசார ஆர்வமும் சனநாயக உளப்பான்மையுமுடைய வாாயிருந்தார். இவ்வுளப்பான்மை உள்நாட்டுத் திருச்சபையைப் பாதித்தது. பாமர மக்களுக்கும் திருச்சபைக் குருமார் குழாமிற் கும் இடையில் இருந்த தொடர்பு சோம்பல் நிறைந்த பதினெட் டாம் நூற்றண்டில் நிலவிய தொடர்பிலிருந்து மிகவும் வேறுபட்டி ருந்தது.
திருச்சபை வருமானம் ஒரேமாதிரிப் பங்கீடு செய்யப்படாததால் ஏற்பட்ட பாரதூரமான ஊழல்கள் பீலாலும், உவிக்குகளாலும், முதலாம் சீர்திருத்த முறியின் பின்னர் அவர்கள் நியமித்த திருச் சபைக்குரிய ஆணையாளாாலும் சீர்திருத்தப்பட்டன. ஆகவே, 1867 இல் வாக்குரிமை விரிவடைந்ததன் விளைவாகத் தனக்கேற்படக் கூடிய எதிர்ப்பைத் தாங்க, திருச்சபை பலவிதத்திலும் தயாரா யிருந்தது. அதன் தனிப்பட்ட சிறப்புரிமைகளிற் பல, பிரதானமாகப் பல்கலைக்கழகங்களில் உள்ளவை கைவிடப்படவேண்டுமென்பது உண்மையே. அரசாங்க திருச்சபையின் எதிர்த்து நிற்கும் ஆற்றல் 1832 இல் இருந்ததிலும் பார்க்க ஒரே காலத்தில் அதிக உறுதியான தும் அதிக அளவு இசையும் ஆற்றலுடையதாகவுமிருந்தது.
இந்நூல் பக்கம் 228 ல் காண்க. 1830-40 ஆம், 1840-1850 ஆம் ஆண்டுகளுக்குரிய திருச்சபையின் வரலாற்றை டீன் சேச்சு எழுதிய The Oxford Movement எனும் நூலிலும், டபிள்யூ. எல். மாதீசன் எழுதிய English Church Reform, 1815-40 67 g) to piro5g) b &iTaois.

பல்வகை மாற்றங்கள்
1832 இல், ஆர்வமுள்ள சமய மக்கள் முதலாம் சீர்திருத்த முறி யைத்தானும் அது திருச்சபையின் அதிகாரம், தருமசாதனங்கள் என்பன அழிவதற்கு வழிகாட்டுமென்ற காரணத்தால் எதிர்த் திருந்தனர்.
அறுபதையடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் முயற்சி
கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண் டெழுந்த பல இயக்கங்களை எடுத்துரைப்பது சிரமம். இவை களில் மிக முக்கியமானவை தேர்ச்சி வேண்டிய தொழில்களில், சிறப்பாகப் பொறியியல்துறையில் வல்லமையுள்ள தொழிற் சங் கங்கள் அமைத்தலும் கூட்டுறவுஇயக்கத்தின் வளர்ச்சியுமாகும். கூட்டுறவியக்கம் பாட்டாளிகளிற் பலரைத் தொழினுட்பங்களி லூம், சிக்கனத்திலும், ஒருவரிலொருவர் நம்பிக்கை வைப்பதி அலும் பயிற்றி, கடை முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து அவர் களை விடுவித்து, நாட்டின் வளர்ச்சியில் அவர்களுக்கு ஒரு பங் களித்தது.
இரண்டாம் சீர்திருத்த முறிப்படி புதிதாக வாக்குரிமை அளிக் கப்பட்ட வகுப்பினர், 1868 இல் தங்கள் வாக்குரிமையை முதன் முறை பயன்படுத்தியபொழுது, கிளாட்சனைத் தலைவனுகக் கொண்ட பருமாற்றவாதப் பகுதிக்குப் பெரும்பான்மை வாக்கை அளித்து அதை வலுப்படுத்தினர். அவன் முதலமைச்சே ஆங்கில வரலாற்றில் முதன் முறையாக உஷிக்கு என்று குறிப்பிடாமல் தெளிவாகத் தாரா ளர் எனக் குறிப்பிடப்படக் கூடியது. 1868 இல் பழைமை பேணும் கொள்கையும் சம உடைமைக் கொள்கையும் இரண்டும் தற்காலிக மாக நடைமுறையில் இல்லாதிருந்தன. இந்நிலிை அதிக காலம் நிலைக்கக்கூடிய ஒன்றன்று. ஆனல் அவனின் வாழ்வின் மிகக் கீர்த்தி வாய்ந்த ஆறு ஆண்டுகளில் அவன் அச் செல்வாக்கைப் பயன்படுத்தி நவீன சேவைகள், நிறுவகங்கள் ஆகியவற்றை நாட்டுக்கு உதவி ஞன். இவைகளின்றி நாடு எதிர்காலத்துச் சமூக, பேரரசுப் பிரச் சினைகளை எதிர்த்து நிற்க ஆயத்தமில்லாதிருக்கக்கூடும். அவ்வாண்டு களில் பல்கலைக்கழகங்களில் எல்லாவித மதக் கோட்பாட்டினரும் சேரக்கூடியதா யிருந்தது; நாட்டின முறையான ஆரம்பக் கல்வி தாபிக்கப்பட்டது. இராணுவச் சீர்திருத்தம் தொடக்கி வைக்கப்பட் டது. குடியியற் சேவையில் எவரும் சேர வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டன. வாக்குச் சீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட் டது. அயலாந்துடன் இணக்கம் செய்வதில் முதல் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன.
* இந்நூல் பக்கங்கள் 435-38 ஐப் பார்க்க.
47.
1868-1874.

Page 249
472
மீண்டும் அயலாந்து
உருளைக்கிழங்கு விளைச்சல் மிகக் குறைவானபடியால் உண்டாகிய (1845-46) அயலாந்துப் பஞ்சம் ஐக்கிய நாடுகளிலும் குடியேற்ற நாடுகளிலும் குடியேற்றத்தை வெகுவாக மிகுவித்தது. இதன் விளை வாக நூற்றண்டு முடிவில் இச்சன நெருக்கமான தீவின் குடித் தொகை பிறப்பு வீதம் அதிகமாயிருந்தபோதும், 80 இலட்சத்தி லிருந்து 45 இலட்சமாகக் குறைந்தது. ஆனல் பஞ்சத்தின் பின் இரு பது ஆண்டுகளுக்கு மேலாக ஐரிசுக் குடியானவன் தன் ஆங்கில நிலக்கிழார் கையிலகப்பட்டு அனுபவித்த துன்பங்களைத் தீர்க்க எது வும் செய்யப்படவில்லை. அயலாந்தின் பழைய வழமைப்படி நிலக் கிழார் வாரக்காரனிடமிருந்து அளவுக்கு மிஞ்சிய வாடகை அறவிட லாம், அவனை வெளியேற்றவும் முடியும். ஆனல் தானே நிலத்துக்கு முதலிடுவதுமில்லை, திருத்தங்கள் செய்வதுமில்லை. சிறு குடியான வன் தானே தனது குடிசையைக் கட்டிப் பாதுகாக்க வேண்டும். நிலத்தில் செய்யவேண்டியதெதற்கும் தானே பொறுப்பு வகிக்க வேண்டும். ஆங்கில முறையிலிருந்து மிகவும் வேறுபாடான இம் முறையை நிலக்கிழார்கள் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள் தங்கள் வாரக் காரரிலிருந்து இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டவர்கள்; தங்கள் முகவர் அயலாந்திலுள்ள தம் நிலத்தைப் பண்படுத்துவோரிடமிருந்து பிழிந்தெடுக்கும் வரு மானங்களைச் செலவழித்துக் கொண்டு அயலிலுள்ள தீவிலேயே பெரும்பாலும் வசிப்பவர்கள்.
பஞ்சத்தின் பின் இருபது ஆண்டுகளுக்குக் கெலித்திய இனத் தினர் வாழும் அயலாந்து, நலிந்து கிளர்ச்சி செய்ய இயலாத நிலையி லிருந்தது. ஐக்கிய நாடுகளிலும் குடியேற்ற நாடுகளிலும் குடியே றிய ஐரிசு மக்கள் ஈட்டிய செல்வமும், முக்கியத்துவமும், அவர் ஆங் கிலேயரிடம் கொண்ட வெறுப்பும், வெகு விரைவில் தாய்நாடுகளைப் பாதித்தன. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், பிரிந்து போகும் குறிக்கோளையும், பாதகச் செயல்முறைகளையும் கொண்ட பீனியர் இயக்கம், அமைதியான அயலாந்துப் பிரச்சினை அசட்டை செய்யப்பட்டதேயன்றித் தீர்த்து வைக்கப்படவில்லையென்ற கசப் பான உண்மையை ஆங்கிலேயருக்கு நினைவூட்டியது.
அயலாந்தை இணக்கப்படுத்த முழு அக்கறையுடன் முயன்ற முதல் அரசறிஞன் கிளாட்சனுவன். அவனுடைய 1870 அயலாந்து நிலவிதி ஒரு மிகச் சிறு அளவுக்கே இணக்கத்தை ஏற்படுத்தியது. ஆனல் அது அந்தப் பிரச்சினையை ஆங்கிலேயர் உணர்ந்து கொண் டதைக் குறித்தது. இதன் பின்னர், 12 ஆண்டுகளுக்குப் பின் நியா யமான வாடகையையும் உரிமைப் பாதுகாப்பையும் நிலைநாட்டக்

ஐரிசு நில, திருச்சபைப் பிரச்சினை
கூடிய செயலுறுதியான சட்டத்தை அவன் இயற்றினன். பழைமை 1881. பேண் அரசாங்கம் ஆங்கில நிலக்கிழாருக்கு இலஞ்சம் கொடுத்தே 1903.
473
அயலாந்திலிருந்து அவர்களை வெளியே அனுப்ப வேண்டியிருந்தது. 1868-1874,
நிலக் கூட்டவை காலத்தில் பகிட்கரித்தல் மூலமும் விவசாயி களுக்கு நடந்த அட்டூழியங்கள் மூலமும் நிலப்பிரச்சினைக் கிளர்ச்சி நடந்து கொண்டேயிருந்தது. கிளாட்சனின் முதலமைச்சுக் காலத் தில் அயலாந்து நிலப்பிரச்சினையின் உண்மையான நோக்கமும் ஆங் கிலப் பிரச்சினையிலிருந்து அது எங்ஙனம் வேறுபடுகிறதென்பதும் கிளாட்சன் ஒருவனுக்குத் தவிர, இங்கிலாந்தில் மிகச் சிலருக்கே
விளங்கிற்று எனலாம். அநேக தாராளக் கொள்கையினர் அயலாந்
தில் நிலக்கிழாருக்கும் வாரக்காரனுக்குமிடையே ஏதோ கட்டுப்பா டில்லா ஒப்பந்தம் இருந்து வருகிறதெனக் கருதி, பழைமை பேண் கட்சியினரைப் போலவே அதில் தலையிட மனமில்லாதிருந்தனர்.
மறுபுறம், மில்லின் மெய்விளக்கத்துறையில் பயிற்றப்பட்ட அறி வாற்றலுள்ள வகுப்பினராலும், இரண்டாம் சீர்திருத்த முறியால் விடுதலைபெற்ற இணங்காதோராலும் சமய சமத்துவம் மனப்பூர்வ மாய் ஒரு இலட்சியமாகக் கொள்ளப்பட்டது. அவர்களின் பொதுத் தலைவனும் புதிய கோட்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த உயர்முறை சமய வாதியுமாகிய கிளாட்சன், ஒச்சுபோட்டுச் சமயக் கோட்பாடுகளை யும் அரசியல் தாராண்மையையும் தன் மனதிலேயே இணைத்து வைத் திருந்தான். திருச்சபையையும் அரசையும் பற்றிய மகோலேயின் மதிப்புரை கொண்ட புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவன் வெளியிட்ட கருத்துக்களை இப்போது உடையவனுயிருக்கவில்லை. ஆகவே, சமய சமத்துவம் அளித்து அயலாந்தை இணக்கப்படுத்து தல் 1869 இல் செய்யக்கூடியதாயிருந்தது. அது செய்தும் முடிக் கப்பட்டது. அயலாந்துப் புரட்டெசுத்தாந்த திருச்சபையை நிலை குலைத்தலையும் ஒரளவு அறக்கொடையை நிறுத்துதலையும் கிளாட்சன் மிக்க திறமையுடனும் பண்பு குறையாமலும் செய்து முடித்தான். இணக்கப் பேச்சு நடைபெறும்பொழுது, ஆர்வமுள்ள சமய வாதி யென்ற அவன் நிலைமை அவனுக்குப் பெரிதும் பயன்பட்டது. திருச் சபைப்பிரச்சினை சம்பந்தமாக முப்பது ஆண்டுகளுக்கு முன் தமகசூ முன்னிருந்தவர்கள் மனநிலையினின்றும் மிகவும் வேறுபட்டிருந்த பிரபுக்கள் சபையினரும் விசுப்பாண்டவர்களும் தங்களால் இயன்ற அளவு விட்டுக் கொடுத்து முறியை நிறைவேற்ற அனுமதித்தார்கள். கிளாட்சன் தாராள சமய நோக்குடையவனுயிருந்தமையும் இணங்காதோருக்கும், சமய சமத்துவ ஆதரவாளருக்கும் அவன் அச சியற்றலைவனுய் விளங்கினமையும், பல்கலைக்கழகம், கல்வி என்னும் இங்கிலாந்துக்கு மட்டுமே உரிய பிரச்சினைகளுக்கு உதவின. ஐம்ப

Page 250
474
1871,
1870.
பல்கலைக்கழகங்களும் கல்வியும்
தாம் ஆண்டுகளில் முதற் பல்கலைக்கழக ஆணைக்குழு கிளாட்சனின் திறமை படைத்த தலைமையில் செயலாற்றத் தொடங்கிய பொழுது பாராளுமன்றச் சட்டத்தினுல் வெகுகாலம் தடைப்பட்டிருந்த ஒக்சு போட்டு, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களின் சீர்திருத்தத்துக்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனல் அக்காலத்தில் திருச்சபையின் தனியுரிமையை ஒழிக்க முடியவில்லை. இரண்டாம் சீர்திருத்த முறியினதும் 1868 தேர்தலினதும் விளைவாகவே கல்லூ ரிக்கழக உறுப்பினர் நிலையையும் பல்கலைக்கழக உயர்பணி நிலையை யும் எவ்வித வித்தியாசமுமின்றி எவரும் அடையத் தக்கதாயிருந் தது. இலண்டன், தறதம் ஆகிய பல்கலைக் கழகங்கள் ஏற்கெனவே தாபிக்கப்பட்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்ருண்டு முடிவிலும் இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கிலாந்திலும் உவேல்சிலும் நிறுவப் பட்டன. கொத்துலாந்தில் ஏற்கெனவே போதுமான பல்கலைக் கழகங்களிருந்தன.
பல்கலைக்கழகப் படிப்பு மிகச் சிலரின் தனியுரிமையாயிருப்பது நிறுத்தப்பட்டு, உயர்பள்ளிப் படிப்புப் பரவியது ; தரத்திலும் உயர்ந்தது. மத்தியூ ஆனல்டு ஒருமுறை ஐரோப்பாவிலேயே மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ளதென மிகைப்படக் கூறிய ஆங்கில நடுவகுப் பின் கல்வியின் பிற்போக்கான நிலையைத் திருத்த அந்த நூற்ருண்டு முடிவில் அதிக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்வியும் பண் பாடும் நடுவகுப்பினரிடையே பரவ, உடற்பயிற்சி விளையாட்டுகளும், அறிவாற்றல் சர்சாத இன்பப் பொழுதுபோக்குகளும் அதே வேகத் திற் பரவின. பதினெட்டாம் நூற்ருண்டின் ஆரம்ப பகுதியில் நிலவிய கடின உழைப்பர்சாரமுறை, மாறி வரும் வாழ்க்கைத்தா நெறிகளுக்கு அதிகம் இடம் கொடுத்தமையால், ஒவ்வொரு பத் தாண்டிலும் எல்லா வகுப்பினருள்ளும் ஓய்வு நேரத்தையும் பொழுதுபோக்கையும் கோருமியல்பு வளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாழ்க்கைத்தா நெறிகள் யாவுமே பழையனவற்றைவிடச் சிறந்தன வென்று சொல்ல முடியாது.
உவிலியம் எட்டுவேட்டு பொசுதர் என்பானின் கல்விச் சட்டத்தால், ஆரம்ப கல்வி நாட்டின அடிப்படையில் தாபிக்கப்பட்டது. பள் ளிக்கூடம் எங்கே இல்லையோ, அங்கே ஒரு தெரிவு செய்யப்பட்ட பள்ளி ஆயற்திற்கமைய, ஒரு பள்ளிக்கூடம் தாபிக்கப்பட்டது. கட்சி சாராத சமயக் கல்வி மட்டும் புகட்டப்பட்டது. தாமாக ஏற்பட்ட பாடசாலைகள் ஏற்கெனவே சில பாகங்களிருந்தன. இவை இறைசேரியிடமிருந்து கூடுதலான பொருளுதவி பெற்று நடத்தப்

கிளாட்சனின் சீர்திருத்தங்கள்
பட்டன. அநேகமான பாடசாலைகளில் சமய போதனையில் முன் பிருந்த நிலைமை மாமுதிருந்தது. இந்தக் கூடுதலான பொருளுதவி இணங்காதோருக்குக் கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஏனெனில் நாட்டுப் புறங்களிலுள்ள இவர்கள் பிள்ளைகள் இந்தத் திருச்சபைப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டியவராயினர். சமய விடயத்தில் விட்டுக் கொடுத்தபடியால் அந்தச் சட்டம் பிரபுக்கள் சபையில் நிறைவேறிற்று. இந்தச் சட்டம், தாராளர் கட்சியின் பகுதிகளில் ஏற்பட்ட அதிருத்தியால் அக்கட்சிக்குக் கேடு விளைத்தாலும் நாட் டிற்கு ஒரு பெரும் சேவையைச் செய்தது. எழுத வாசிக்கத் தெரிந்த குடித்தொகையை ஈற்றில் இங்கிலாந்துக்கு அளித்தது. கவனிப்பாரின்றிருந்த சேரி வாழ் சிறுவர்க்குப் பயிற்சியும் ஒழுக்க மும் கொடுத்தது. அடுத்த ஐம்பது ஆண்டுகளிலேற்பட்ட சிறந்த கல்வி முன்னேற்றத்தைத் தொடக்கி வைத்தது.
கிளாட்சனின் முதலமைச்சு வெகு காலந் தடைபட்டிருந்த இரா அணுவ சீர்திருத்தத்தையும் ஆரம்பித்து, தீபகற்பப் போர் முறை, கிரைமியப் போர் முறை ஆகியவைகளிலிருந்து வேறுபட்ட தற்கால இராணுவ முறையையும் சிருட்டித்தது. யுத்தச் செயலாள ணுயிருந்த காடுவல் என்பவனே இந்தச் சீர்திருத்தங்களுக்குக் காரணமாயிருந்தவன். ஆனல் இராணியின் உறவினனுன கேம் பிரிட்சு இறைமகனின் தலைமையில் பழைய படைப் பிரதானிகளின் சுயநல வேட்கைகளும் தப்பெண்ணங்களும் அவனுக்கெதிரா யிருந்தன. ஆனலும் பல முக்கிய சீர்திருத்தங்களை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. படைமீதுள்ள இருபுடையாட்சி முறைமையை ஒழித்தது. இதனல் குதிரைக் காவற்படை யுத்த அலுவலகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. அதாவது ஏவுநர் முதல்வன் யுத்த மந்திரிக்குக் கீழ்ப்பட்டவனனன். மித வரும்படி யுள்ளவர்களின் உயர்ச்சியை அச் சீர்திருத்தங்கள் ஒழித்தன. குறுகிய கால சேவைக்குப் படையிற் சேரும் முறைமையை நிறு வின. இவ்விதம் முதல் முறையாக ஒழுங்கான ஒதுக்கப் படையை அமைத்தனர். இம் மாற்றங்களினுல் அந்நூற்முண்டின் பிந்திய ஆண்டுகளில் யுத்த முறைகளில் நல்ல பலன்கள் ஏற்பட்டன. ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் நிறமக்களுக்கெதிராக நடத்திய போர்களில் இவற்றின் பலன்கள் நன்கு புலனுயின. இம்மாற்றங் களுக்குக் காரணமாக விருந்தவர் சேர் காணெற்று உவுல்சிலி என் பார். இரண்டாம் பூவர் யுத்தத்திலே பெற்ற, மனதைப் புண்படுத் ஆம் அனுபவங்கள் மேலும் மாற்றங்கள் நிகழ ஊக்கம் அளித்தன. இவற்றின் விளைவாக 1914 இல் பலமுள்ள போர்ப் படையும் நாட்டுக் காவற் படையும் எங்களிடமிருந்தன.
475

Page 251
476
1874-1880.
திசரெலியின் உளநாட்டுப் பூட்கை
படையில் பதவியை விலைக்கு வாங்குவதை ஒழிக்க வழிகாட்டிய அதே கருத்துக்கள், பொதுத் தேர்வு மூலம் போட்டி வைத்துக் குடி யியற் சேவைக்குப் பணியாளரைத் தெரிவு செய்யும் முறைக்கும் வழிகாட்டின. இம்முறையை 1870 இல் கிளாட்சன் செயற் படுத்தினன்.
ஆறு ஆண்டுகளின் முயற்சியின் பின் கிளாட்சனின் முதல் மந்திரம் தன் செயலை முடித்து விட்டது. திசரெலி அமைச்சர்களை ' எரிந் தொழிந்த எரிமலைத் தொடர்களுக்கு' ஒப்பிட்டது பொருத்த மானதே. ஏனெனில் அவனே மிகவும் தந்திரமாக அவர்களின் வேகந் தணியும்வரை வாளாவிருந்தான். பிரபுக்கள் சபை அவர்கள் பூட்கை நிறைவேறுவதைத் தடைசெய்யவில்லை. நாடு அவர்களிடமிருந்து எதிர்பார்த்தவைகளுள் முக்கியமான பகுதி செயற்பட்டுவிட்டது. எனவே 1874 தேர்தலில் ஒரு இயற்கையான விளைவாகப் பழைமை பேணுவோர் பதவிக்கு வந்தனர்,
இவ்வண்ணம் திசரெலி தன் எழுபதாம் வயதில், முதன் மந்திரி யாக முதல் முறை முழு அதிகாரத்தையும் எய்தினன். அவனது அமைச்சின் செயல்களில் உள்நாட்டுப் பூட்கை, வெளிநாட்டுப் பூட்கை இரண்டிலும் அவனுடைய கருத்துக்கள் நன்கு பிரதி பலித்தன.
உள்நாட்டலுவல்களில் சமூக சீர்திருத்தம், பாட்டாளிகளைத் திருத் திப்படுத்தல் இவையிரண்டுடனும் புதிய பழைமை பேண் கொள் கைக்கு உள்ள தொடர்பை எடுத்துக் காட்டத் திசரெலி விரும்பி ஞன். இரிச்சாட்டு குருேசு என்னும் ஆற்றலுடைய உள்நாட்டுச் செயலாளரின் உதவியுடன் 1875 பொதுச் சுகாதார விதியையும் தொழிலாளிகள் இருப்பிட விதியையும் கொண்டு சேரிகளையும் சுகா தாரக் குறைகளையும் ஒழிக்கப் போராடினன். இத்தகைய நட் வடிக்கைகளும், தல அதிகாரிகளின் அதிகரித்துக் கொண்டே யிருக் கும் முயற்சிகளுடன் சேர்ந்து தொழிற்படும்படி 1871 இல் கிளாட்ச ஞல் தாபிக்கப்பட்ட தலதாபன பேராயத்தின் இடைவிடாத உழைப்பும் முக்கியமான நோய் தீர்க்கும் மருந்துகளாயின. மோச மான கட்டிடங்களும் சீரற்ற நகர அமைப்பும் கடந்த நூறு ஆண்டு களில் நன்கு இடம் பெற்றுவிட்டமையால், பின்பொருபோதும் அக் குறைகளைப் பூரணமாக நிவர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.
பழைய கைத்தொழிற் காலத்திற்கு முந்திய உலகத்தின் அழகை யும் நானவித இயல்புகளையும் பாழாக்கும் முறையில் மிகுந்து கொண்டு போகும் அவலட்சணமான, ஒரே தன்மைத்தான இயல்பு இந்தியாவிலும் இங்கிலாந்திலும் சிவில் சேவையாளராகவிருந்த சேர். சாள்சு திரவெலியன் இந்த இரு இயக்கங்களையும் தோற்றுவிப்பதில் பெரும் டணியாற்றினன்.

திசரெலியின் உள்நாட்டுப் பூட்கை
களைக் கட்டுப்படுத்தவும் ஒன்றும் செய்து கொள்ள முடியவில்லை. நாடு எவ்வளவு செழித்தோங்கி முன்னேறிக் கொண்டிருந்ததோ அவ் வளவு தீவிரமாக அந்தப் பாழாக்கும் வேலையும் விரைவாக நடந்தது. எத்தன்மையான வேலையைச் செய்ய மனிதன் ஆரம்பித்தபோதிலும் யந்திர சாதனங்களைக் கைக்கொண்ட அவனல் அழகை அழிக்கா திருக்க முடியவில்லை."
வேலை நிறுத்தம் நிகழ்ந்த காலத்தில் தொழிலாளிகளின் உரிமை பற்றிய ஓயாது திரும்பத் திரும்ப ஏற்படும் தொல்லே மிகுந்த பிரச்சினையையும் திசரெலி தீர்த்து வைத்தான். 1867 இல் நீதி மன்றங்களின் நீதித் தீர்ப்பு, 1824-25’ சட்ட ஆக்கத்தின்மூலம் தொழிற் சங்கங்கள் அனுபவித்து வந்த சட்ட உரிமையைப் போக்கி யது. தொழிலைத் தடைசெய்யும் நோக்கமாக ஒன்று சேருதல் சட்டத் திற்கு விரோதமென நீதிமன்றங்கள் திடீரெனத் தீர்ப்பளித்தன. 1871 தொழிற்சங்க விதியால் கிளாட்சன் இக்குறையை நிவிர்த்தி செய்தான். ஆனல் அதே ஆண்டில் அவனின் பாதகவியற் சட்டத் திருத்த விதி, வேலை நிறுத்துங் காலத்தில் நிகழும் வேலை மறியலும் வேறு செயல்களும் சட்டத்துக்கு விரோதமானவையென விதித் தது. 1868 தேர்தலில் தாங்கள் ஆதரித்த கிளாட்சன் மீது தொழிற் சங்கங்கள் சினமுற்றன. பழைமைபேண் பிரதம மந்திரி 1875 இல் கிளாட்சனின் பாதகவியற் சட்டத் திருத்த விதியை நீக்கி வேலை நிறுத்த காலத்தில் பலவந்தம் செய்தலும் பயமுறுத்தலும் பொதுப் பாதகவியற் கோவையுள் அடங்கும்படி செய்தான்.
வெளிநாட்டுப் பூட்கையில், திசரெலி தான் தலைமை வகித்த கட்சிக் கும் பிரித்தானிய நாட்டின நலன்களுக்குழுள்ள தொடர்பைப் புதுப்பித்தான். உவாற்றலூவின் பின் அத்தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை வீயன்னப் பொருத்தனைகளின் பின்னர், ஐரோப்பாவில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பெரிதும் பணி புரிந்த தோரி அல்லது பழைமை பேணும் கட்சி சிலவேளைகளில் பாமேசுதனையும் அவன் கட்சியினரையும் விட அதிக அளவு அமைதியை விரும்பியது. இதற்குக் காரணம், உவிக்குகளும்
* இதுபற்றி மிக நன்றக எழுதப்பட்டிருக்கின்றது. “19 ஆம் நூற்றண்டானது அழகைத் தாக்கவில்லை ; ஆணுல் வெறுமனே அழகைத் தன் காலடியின் கீழ் வைத்து மிதித்தது. அதன் விளைவாக எமது காலத்துச் சனநாயகம் ஊட்டக் குறைவுடன் அழகிழந்து பிறந்திருக்கின்றது. அழகுக் கலைமீதுள்ள ஆர்வம், வெண்கலக்காலம் முதல் கைத்தொழிற் புரட்சியால் அது தற்காலிகமாக அழிக்கப்பட்டிருந்த காலம்வரை, பண்பாடுடைய மனிதனுக்குரிய அம்சங்களி லொன்றக இருந்து வந்துள்ளது. அவ்வார்வத்தை மீண்டும் பெறுவதில் இப்போது சிரமமேற்பட்டிருக்கின்றது.”
* இந்நூல் பக்கம் 389 ஐப் பார்க்க.
477

Page 252
478
கிழக்குப் பிரச்சினை
பருமாற்றவாதிகளும் 1815 உடன்படிக்கைக்குக் குறைந்த மதிப் பும், அதைக் குழப்ப விரும்பிய கண்டத்திலுள்ள நாட்டினர்மீதும் கட்சிகள்மீதும் கூடிய அனுதாபமும் உடையராயிருந்தமையே. தறம் பிரபுவைப் பற்றிப் பெமைப்படும் எதிரிகளை விடப் பழைமை பேணும் கட்சியினர் குடியேற்ற நாடுகளில் அதிக அக்கறை கொள்ளவில்லை. 1852 இல் திசரெவிதானும் இந்தப் பாழான குடியேற்ற நாடுகள் எங்கள் கழுத்திற் கட்டிய பாருங் கல்லெனக் கூறியிருந்தான். ஆனல் புதிய நிலைமையைக் கூர்மதிபடைத்த அவன் நன்கறிந்து கொண்டமையால் பேராசிற் பெருமை கொள்ளும்படி யும் வெளிநாட்டுப் பூட்கையிற் சிரத்தை எடுக்கும்படியும் புதிதாக வாக்குரிமை அளிக்கப்பட்ட குடியாட்சியைத் தனது வயது முதிர்ந்த காலத்தில் வேண்டிக் கொண்டான். குடியேற்ற நாடு களில் இருந்த அக்கறை இன்னும் அப்படியே யிருந்தது. யோசேப்பு சேம்பலேன் தலைமையில் அடுத்த சந்ததியின் காலத்திற்முன் அது அதிகரித்தது. திசரெவியின் நடவடிக்கைகளுக்கு முக்கியமான களம் அண்மைக் கிழக்குப் பகுதியாகும். சுயெசுக் கால்வாயில் இங்கி லாந்தின் சார்பில் அவன் வாங்கிய பங்குகள், இங்கிலாந்துக்கும் எகித்துக்குமிடையே தொடர்பொன்றை ஏற்படுத்தி அவன் மரண மடைந்து சில காலங் கழிந்தபின் முக்கியமான அபிவிருத்திகள் ஏற் படக் காரணமாயின. 1876-78 இல் அவனும் கிளாட்சனும் தாங்கள் ஒருவரோடொருவர் கொண்ட சினத்தினுல் எழுந்த சிறந்த வாக்கு வாதத்தில் போல்கன் போர்களையும் கொலைகளையும் பற்றிய விவரங் களை எடுத்துக் காட்டித் தங்கள் நாட்டவர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பினர்கள். இவற்றில் இந்தப் பேராற்றலுடைய மேதைகள் ஈடுபடாதிருந்தால் போல்கன் போர்கள் ஏதோ இங்கிலாந்து சற்றும் அக்கறை எடுக்க வேண்டாத அளரதேச பருந்து களுக்கும் காகங்களுக்குமிடைச் சண்டை போலத் தோற்றியிருக் கும.
இப்போது பீகன்சு பீல்டு பிரபுவான திசரெலி ஐரோப்பாவில் துருக்கியை இரசிய ஆதிக்கத்திற்கெதிரான தடை நாடாக்கித் தனது அரசாங்கத்தின் ஆதரவையும் அதற்கு அளித்தான். ஆனல் எதிர்க்கட்சியிலிருந்த கிளாட்சன், துருக்கியினது பல்கேரிய அட்டூழியங்கள்பற்றிய தன் பிரசாரத்தால் கீழ்த்திசையிலுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட கிறித்துவ இனத்தினருக்குச் சாதகமான பொதுசன அபிப்பிராயத்தைப் பிரித்தானிய மக்களில் அரைவாசிப் பேர் ஆதரிக்கும்படி செய்தான். அது பிளவுபட்ட எங்கள் நாட் டுக்கு ஆபத்து விளைவிக்கும் புதிய நிலைமையாயிற்று. நற்பேருக, இரசியாவுக்கும் பிரித்தானியாவுக்கு மிடையிற் போர் மூளாது

திசரெலி
பேளின் பொருத்தனையுடன் அந்நிலைமை முடிவெய்தியது. இதுவே 1878.
திசசெலியின் கெளரவத்தோடு கூடிய அமைதியாகும். ஐரோப்பிய சபைகளில் இங்கிலாந்தை மீண்டும் முக்கிய இடம் பெறச் செய் தான். அதன் விருப்பத்தைக் கவனிக்குமாறு மற்ற நாடுகளைக் கட்டாயப்படுத்தினன். விடுதலையாக்கப்பட்ட மசிடோனியரை இன்னுமொரு தலைமுறைக்கு மீண்டும் துருக்கியரின் ஆட்சிக்குக் கீழ்ப்படுத்தியதை இங்கிலாந்து விரும்பியிருக்க வேண்டுமோவென் பது தீர்க்க முடியாத பிரச்சினையாகும் திசசெலி, புதிதாயமைக்கப் பட்ட பல்கேரிய நாட்டுடன் மசிடோனியாவைச் சேர்த்தலாகா தெனத் தீர்மானித்திருந்தான். இத்தீர்மானம் சரியாயிருக்கலாம். ஆனல் போல்கன் நாடுகளை அறிந்த பலர், பேளின் பொருத்தனை யில் அவன், அதன் நல்லாட்சிக்கு வேண்டிய திருத்தியான பாது காப்புக்களுடன் அதை ஒரு கிறித்துவ ஆள்பதியிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உறுதியாய் நிற்கவில்லையென வருந்தினர். அப்படி யான ஒழுங்கு, இருபதாம் நூற்ருண்டில் போல்கன் போர் அரங்கத் தில் இன உணர்ச்சிகளின் வேகத்தைக் குறைத்திருக்கலாமென எண்ணவாவது இடமுண்டு.
1880 பொதுத் தேர்தல் திசசெலியின் அமைச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒய்வு பெற்று ஒரு ஆண்டின் பின் அவன் இறந்தான். உள்நாட்டின் மாறுதலடைந்த குழல்களே, மறைக்காது ஒப்புக் கொண்டு, புதிய குடியாட்சி உலகத்தில் பழைமைபேண் கட்சிக்கு அதன் ஒழுங்கமைப்பை அளித்தான். உயர் வகுப்பினருக்கு, தாங் கள் இழந்த உரிமைகளைப்பற்றிச் சினங்கொண்டு தங்கள் பாசறை யிற் போய்ப் படுக்காது, வெளியே போய்த் தாயகப்பற்று, பேரரசு நலன் இவற்றின் அடிப்படையிலே பிரசாரம் செய்து மக்கள் உள்ளத்தை ஈர்க்கும்படி கற்பித்தான். அடுத்த பத்தாண்டுகளில் கிளாட்சன் தென்னுபிரிக்காவிலும் எகித்திலும் செய்த தவறுகளும் அவனுடைய சுயராச்சிய முன்திட்டங்களும் அத்தகைய பிரசாரத் திற்கு ஏற்றவையாயின. நாடு முழுவதும் ஒன்று, நாட்டின் நலன்
களில் யாவருக்கும் அக்கறை உண்டு என்ற முறையில் மேல்
வகுப்பினர் கீழ்வகுப்பினருக்கு முறையீடு செய்தல் என்னும் தத்துவம் , திசரெவியின் மரணத்தின் பின் அவன் நினைவிற்காக அடி கோலிய பிறிமுசோசு மன்றத்திலும் நாடு முழுவதும் பரவியிருந்த பழைமைபேண் சங்கங்களிலும், கட்டங்களிலும் பிரதிபலித்தது. எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோரிக்குடியாட்சி என்னும்
கருத்து வளர இாந்தோல்பு சேச்சில் பிரபுவின் குறுகிய ஆனல் திடீ
ரென ஏற்றம் பெற்ற வாழ்க்கை பெரிதும் உதவியாயிருந்தது.
479

Page 253
480
1880-1885.
கட்சிகளின் குடியாட்சியமைப்பு
அதே காலத்தில் கோக்கசு என்னும் மறுபேர் கொண்ட தல சங்கங்களின் நாட்டின தாராளர் கூட்டவையம், மற்றக் கட்சியின் பருமாற்றவாதத் தலைவர் யோசேப்பு சேம்பலேன் முயற்சி யினுல் ஒழுங்காக அமைக்கப்பட்டு வந்தது. அவனுடைய அரசியல் அதிகாரம் பேமிங்காம் தல அரசியல்மீது அவனுக்கிருந்த சொந்த அதிகாரத்தினல் ஏற்பட்டதாகும். குடியாட்சிக்குரிய பிரசாரமும் விரிவான அமைப்பு முறையும் இரு கட்சியின் தேர்தல் முறைகளி அலும் அரசியல் திட்டங்களிலும் இடம் பெற்றன. பழையன மறைந்து அவற்றினிடத்தில் புதிய விதமான செல்வாக்குகளும் மறைவாக நிகழ்ந்த ஊழல்களும், புதுவகை இலட்சியங்களும் பொதுச்சேவைப் பற்றும் தோன்றின. சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்ட நவீன ஒழுங்கமைப்பும் கட்சிப் பிரசாரமும், தேர்தலிலும் அரசியலிலும் பொது மக்களுக்கு அக்கறையூட்டிப் பிரித்தானியாவில் பாராளு மன்ற அரசாங்கம் வீழ்ச்சியடையாதபடி பாதுகாத்தன. பிரிக்கும் தத்துவங்கள், வகுப்புப் பிரிவினை, சுயராச்சியம் போன்ற முக்கிய மான பிரச்சினைகள் ஆகியவற்ருல் இங்கிலாந்தில் மிகத் திறம்பட அமைக்கப்பட்ட இரு கட்சிமுறைமை, பதவி வேட்கையை விட வேமுென்றையும் கருதாத வெறும் உயிரற்ற பொறியகமாக இருக்க வில்லை".
கிளாட்சனின் இரண்டாம் அமைச்சு முதலாம் அமைச்சைப் போல வெற்றிகரமானதாயிருக்கவில்லை. 1880 இல், 1868 இல் போல தாராளர் கட்சிக்கு ஒரு தெளிவான சொந்த அரசியல் தத்துவமோ ஒப்புக்கொண்ட அரசியல் திட்டமோ இருக்கவில்லை. திசரெவியின் பிடிவாதத்தின் விளைவாலோ, சமூக சீர்திருத்தத்துக்கான தெளி வான திட்டங்களாக உருவாகாத தெளிவற்ற குடியாட்சி ஆர்வங் களினலோ தாராளர் கட்சி அதிகார பீடத்தை அடைந்தது. அது ஒரே சமயத்தில் அயலாந்து, எகித்து, தென் ஆபிரிக்கா என்னு மிடங்களில் இருந்த தவிர்க்கமுடியாத பிரச்சினைகளை எதிர்த்து நிற்கவேண்டியதாயிற்று. 1880 இல் தாராண்மையோர், மற்ற ஆங்கி லேயரைப் போலவே இவற்றை அறிந்து கொள்ளவுமில்லை; அறிய முற்படவுமில்லை. கிளாட்சன் உண்மையாகவே அயலாந்துப் பிரச் S&OT adu அறிந்திருந்தான். அதில் அவன் அக்கறை கொண்டிருந் தான். நீதியான வாடகைகளும் உரிமைப் பாதுகாப்பும் அளிக்கும் அவனின் 1881 நிலவிதி உண்மையாகச் சீர்திருத்தத்துக்கான ஒரு நடவடிக்கையாகும். ஆனல் நிலப் பிரச்சினையை அது தீர்த்து
* பிரித்தானிய அரசியலிலே இந்த ஊழியில் செய்யப்பட்டிருந்த மாற்றங்கள், 6,9rgb(B(07, Gastór6 616örum6oflóór Democracy & the Organization of Political Parties, Vol. 1. எனும் நூலில் கருணையற்ற முறையிலும் கடுமையான முறையிலும் நுணுகி ஆராயப்பட்டிருக்கின்றன.

3 ஆம் சீர்திருத்தமுறி : நாட்டுப்புற மாற்றங்கள்
வைக்கவில்லை. பிரித்தானிய பொதுமக்கள் சபையின் கவனத்தை யீர்த்த பாணல் என்பானின் புதிய ‘முட்டுக்கட்டை'ப் பூட்கையா லெழுந்த சுயராச்சியம் வேண்டும் என்ற அரசியற் கோரிக்கையும் நிலக் கிளர்ச்சியும் ஒன்று சேர்ந்து கொண்டன. இவற்றைப் பிரிப் பது இன்னும் கடினமாக இருந்தது.
இந்த அமைச்சின் முக்கியமான சாதனை மாவட்டத் தொகுதிக ளுக்கு வாக்குரிமையை அளித்த மூன்ரும் சீர்திருத்த முறியை நிறை வேற்றியதேயாகும். விவசாயத் தொழிலாளிகளுக்கும் சுரங்கம் அகழ்வோருக்கும் ஈற்றில் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதுவரை யும் அவர்கள் வாழ்க்கை நிலைமை நன்கு கவனிக்கப்படவில்லை. விவ சாயத் தொழிலாளர் சங்கத்தை முந்திய பத்தாண்டில் தொடங்க யோசேப்பு ஆச்சு என்பான் செய்த முயற்சி அரசியலதிகாரத்தின் உதவியில்லாமையால் சித்தியடையவில்லை. செழிப்பான காலங்களி லேயே தொழிலாளி நன்முய்ப் பாதுகாக்கப்படவில்லை. பிந்திய எழுப தாம் ஆண்டுகளில் அமெரிக்க இறக்குமதி அதிகரித்தது. அதனுலேற் பட்ட விவசாய மந்த ஆண்டுகளில் அவர்களின் நிலைமை இன்னும் கேவலமாயது. மற்றப் பொருளாதார சமூக குழ்நிலைகளுடன் 1884 இல் விவசாயி வாக்குரிமை பெற்றதும் சேர்ந்து, மெதுவாக அவனு டைய வாழ்வுக்கு விடிவேற்படுத்திற்று. ஆனல் இதற்கு முன்னரே நாட்டுமக்கள் நகருக்குப் புறப்பட்டமையால் கிராமங்களின் சனத் தொகை மிகவும் குறைந்தது. பத்தொன்பதாம் நூற்முண்டு இங்கி லாந்தின் நாட்டுப் பகுதியினது சமூக வரலாறு பல வகையிலும் துயர் நிரம்பியதாகும்.
நாட்டுத் தொழிலாளிக்குப் பாராளுமன்ற வரிக்குரிமை கிடைத்த வுடன் நாட்டு மாவட்டங்களில் தேர்தல்மூலம் தலத்தன்னுட்சி தாபிக்கப்பட்டது. இதுவரையும் நியமிக்கப்பட்ட சமாதான நீதி பதிகள் பிதா வழியாட்சிமுறையில் அம்மாவட்டங்களைப் பாலன முஞ் செய்து வந்தனர். 1888 இல் பழமைபேண் அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட அவைகளை நிறுவியது. 1894 இல் தாராளர் அரசாங்கத்தினல் நகர, நாட்டு மாவட்ட அவைகள், வட்டார அவைகள் ஆகியவை நிறுவப்பட்டதுடன் நாட்டுப் புறங்களில் குடி யாட்சிமுறை நிலவியது. நீதிமன்ற அதிகாரம் வழங்கலும் தவறணை உத்தரவுச் சீட்டளித்தலும் இன்னும் சமாதான நீதிபதிகளிடமே
இந்நூல் பக்கம் 421 ஐப் பார்க்க.
1881 ஆம், 1921 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் விவசாயத்திலீடு பட்டிருந்த குடித்தொகையின் வீதம், எறக்குறைய 12 சத வீதத்திலிருந்து, விறக்குறைய 7 சத வீதத்திற்குக் குறைந்தது,
884.
48

Page 254
482
1882.
எகித்தும் சூடானும்
விடப்பட்டிருந்தன. ஆனல் அவர்களின் முக்கியமான பாலனத்திற் குரிய அதிகாரங்கள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட குழுக்களிடம்
விடப்பட்டன.
கிளாட்சனின் அமைச்சுத் தொடங்கிய மாதங்களில் தென் ஆபி ரிக்கப் பிரச்சினையை அசட்டை செய்தமையால் மகுபாத் துன்ப நிகழ்ச்சி ஏற்பட்டது. எகித்திய அலுவல் சிறப்பாகத் தொடங்கி யது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார, சுயநல வேட்கை களுக்கு இடமளித்த எகித்தில், துருக்கிய அரசாங்கமும் அந்நாட்டு அரசாங்கமும் வீழ்ந்தவுடன், உவுல்சிலி என்பானின் தலைமையில் பிரித்தானியப் படைகள் தெலல்கபிர் என்னுமிடத்தில் அரேபியரை வென்று, எகித்தைக் கைப்பற்றின. இதுவரையில் எகித்து ஆங்கில ஆகிக்கத்திலும் பார்க்கப் பிரான்சிய ஆதிக்கத்தின் கீழிருந்த போதும், நெருக்கடியான நேரத்தில் பிரான்சு தலையிட மறுத்து
விட்டது. எகித்தில் பிரித்தானிய ஆதிக்கம் தொடங்கியதுடன்
எகித்திய குடியானவனின் பொருளாதார நிலை விருத்தியடைந்தது. கேடிவு அரசாங்கத்திற்குச் சேர் எல்வின் பேயரிங்கு (பின்னர் குரோமர் பிரபு), நாடோறும் புகட்டி வந்த பலமான ‘அறிவுரை யினுல் நைல் பள்ளத்தாக்குச் செழித்தோங்கியது. அங்கே நாங்கள் இருப்பதைக் கண்டு பிரான்சியர் பொருமைப்பட்டனர். மனத் தாங்கலான காரியங்கள் பல நடந்தன. 1904 இல் இலாஞ்சுதவுண் பிரபு எகித்தைப் பற்றியும் வேறு விடயங்களைப் பற்றியும் பிரான் சுடன் ஒரு முக்கியமான உடன்படிக்கையை நிறைவேற்றும் வரை
யும், இத்தொல்லைகள் தீரவில்லை.
ஆனல் எகித்திய பிரச்சினையுடன் நெருங்கி இணைக்கப்பட்டது குடானிய பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் கிளாட் சன் படுதோல்வியுற்றன். நைல் நதியின் கீழ்ப்பரப்பில் எகித்தின் பண்டைய நாகரிகம் விளங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதன் மேற்பரப்பில் சூடானியக் கூட்டத்தின் மிலேச்சத்தன்மை நிலவி யது. இப்பகுதி அக்காலத்தில் மாதியினதும் அவனுக்குப் பின் பத விக்கு வந்தோர்களினதும் தலைமையில் ஆபிரிக்காவில் அடிமை களைக் கொள்ளையிடும் இடமாகி எகித்துக்கு ஓயாத ஆபத்து விளைப் பதா யிருந்தது. எகித்தில் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட எந்த ஆள்பதியும், ஆபிரிக்கா முழுவதிலும் உண்மையாக அக்கறை கொண்ட எந்த வல்லரசும், குடானின் இப்பயங்காம் நிறைந்த பகுதியைத் திருத்தவேண்டிய நடவடிக்கையை எடுக்க முயற்சிப்
* இந்நூல் பக்கம் 452 ஐப் பார்க்க.

எகித்தும் சூடானும் : பாணல்
பது அவசியம். ஆனல் அதற்கு இன்னும் காலம் வரவில்லை. முதலா வதாக எகித்தில் ஒழுங்கை நிலைநாட்டி அதன் பொருளாதாரத்தை யும், இராணுவத்தையும் நன்கு அமைத்தல் வேண்டும்.
ஆனல் குடானிலிருந்து எகித்திய காவற்படைகளைப் பிறக்கீடு செய்ய நேர்ந்தபொழுதுதான் கிளாட்சனின் அரசாங்கம் தவறு செய்துவிட்டது. தற்கால உணர்ச்சியூட்டும் பத்திரிகைத் தொழிலின் பிதாவாகிய உவிலியம் சிதீதுவால் துரண்டப்பட்டு, அமைச்சு, சாளிசு கோடன் என்பானை அவ்வேலைக்குத் தெரிவு செய்தது. இவன் முன்வைத்த காலைப் பின் வைக்கத் தெரியாத சிறந்த விான். குடானிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்குப் பதிலாக, மாதியின் கூட்டத்தால் முற்றுகையிடப்பட்டுக் காட்மிேல் விரைவில் படைகளுடன் இவன் அடைபட்டுக் கிடந்தான். இவர் களை விடுவிக்கப் பிரித்தானிய அரசாங்கம் அனுப்பிய படை காலங் கடந்தே வந்து சேர்ந்தது. கோடன் மடிந்தான்; அவனுடன் கிளாட்சனுக்குச் சொந்த நாட்டில் இருந்த செல்வாக்கிற் பெரும் பகுதியும் அழிந்தது. ஆபிரிக்காவைப் பொறுத்த அளவில் இந்தத் தோல்வி அவ்வளவு முக்கியமானதாயிருக்கவில்லை. அந்நேரம் எப் படியெனினும் சூடானிலிருந்த படை வெளியேற்றப்பட்டிருக்கும். குரோமர் தன் பணியை எகித்தில் செய்து முடித்த பின்னரே சோல்சுபரிப் பிரபுவின் அரசாங்கம் 1898 இல் கிச்சினர் தலைமையில் பிரித்தானிய எகித்திய படைகளுடன், சூடான வெற்றிகொள்ள முடிந்தது.
கோடன், காட்ம்ே ஆகியவை காரணமாக, 1885 பொதுத் தேர்த லில், பரோக்களில், தாராண்மைக் கட்சி படுதீோல்வி யடைந்தது. ஆணுல் புதிதாக வாக்குரிமை அளிக்கப்பட்ட விவசாயத் தொழி லாளி, தனக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுத்த கட்சிக்காக, தன் துயரம் நிரம்பிய வாழ்க்கையில் ஏதாவது நன்மைகள் பெறும் நம்பிக்கையுடன் தன் வாக்கை அளித்தான். ஆகவே சோல்சுபரிப் பிரபு நாட்டை ஆள கூடுதலான பழைமைபேணுவோர் பெரும் பான்மையைப் பெறவில்லை. இதன் விளைவாக, கட்சியின் பக்க பலத்தை நிர்ணயிப்பது ஒரு விசித்திர மனிதன் கையிலிருந்தது. இவன் ஆங்கில-சக்சன் மரபினனுய் இருந்தபோதும் பிரித்தானிய தாராண்மைக் கட்சியினரையும், தோரிகளையும் அறவே வெறுத் தான். பிரித்தானிய பாராளுமன்றத்தில் 85 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த அயலாந்திலுள்ள சுய ஆட்சிக் கட்சியின்மீது தன் சொந்த ஆதிக்க நிலையினை விட்டுக்கொடுக்காத கட்டுப்பாட்டை,
சாள்சு சுதுவாட்டுப் பாணல் நிலைநாட்டியிருந்தான். இது முதற்
கொண்டு 1801 இன் ஐக்கியம் நிலைத்தவரையும், அயலாந்தின்
சனவரி, 1885.
483

Page 255
484.
1886.
பாணலும் ஐரிசுச் சுய ஆட்சியும்
விவகாரங்கள், பிரித்தானிய அரசியலைப் பாதிக்கும் நிலைமை ஏற் பட்டது. நூற்றண்டின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் அயலாந் துப் பிரதிநிதிகளிற் பலர் பிரித்தானிய கட்சிகளிாண்டினுள் ஏதா வது ஒன்றில் சேர்ந்திருந்தனர். இங்கினமே இனியும் அரசியல் நடைபெறமுடியாது. இரு பிரித்தானிய கட்சிகளும் பாணலுக் கெதிராக ஒன்றுசேர வேண்டும். அல்லது அவைகளிலொன்று அவனுடன் உடன்படிக்கை செய்யவேண்டும். கிளாட்சன் அவனுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஒரு சுய ஆட்சி முறியைப் புதிதாகக் கொண்டுவந்தான்.
பின் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு எங்கள் சந்ததியிலுள்ளோ ரிற் பலர் அப்படியான தீர்ப்பு இயற்கையானது மட்டுமன்றி எதிர் பார்க்கக்கூடிய தென்றும் கருதுவர். ஒன்றன்பின் ஒன்முக நிகழ்ந்த பயங்கர நிகழ்ச்சிகளுக்குப்பின் 1921 இல் தீர்க்கப்பட்ட அயலாந் தின் சுயவாட்சிப் பிரச்சினையை அப்போது அமைதியாகத் தீர்த் திருக்கக்கூடுமெனவும் எண்ணுவர். ஆனல் கிளாட்சனின் நட வடிக்கைகளால் அயலாந்தின் இணக்கம் எங்ஙனம் பாதிக்கப்பட்ட தெனக் கூறுவது கடினம். அவ்வளவு மிக முக்கியமான விடயக் தைப் பற்றிய அவனது திடீர் மாற்றம் பிரித்தானிய மக்களைப் பிரமிக்கச் செய்து, அவர்தம் கோபத்தை உண்டாக்கியது. சுய ஆட்சிப் பிரச்சினை தாராண்மைக் கட்சியில் பிளவு ஏற்படுத்தி அடுத்த 20 ஆண்டுகளில் அதன் பலத்தை வெகுவாகக் குறைத்தது. ஆனல் பழைமைபேண் கொள்கை அயலாந்தின் ஐக்கி Այd; கோட்பாட்டை மிகவும் ஆதரித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய அயலாந்தின் ஒரு பாகமாகப் புரட்டெசுத்தாந்த அல்சுதர் இருக்கவேண்டுமென்ற பாணலின் கோரிக்கையைக் கிளாட்சன் ஒப் புக்கொண்டமை மதியினமான செயலாகும். இன சம்பந்தமாகவும் அரசியல் சம்பந்தமாகவும் நிகழக்கூடியனவற்றிற்கு இது நேர் மாமுனதுமாகும்.
1885 தேர்வு காலத்தில் பழைமைபேண் கட்சி ஐரிசு மக்களின் வாக்குகளைத் தமக்காக்கிக்கொள்ள முயன்றமை விண்போகவில்லை. ஆனல் அக்கட்சி கிளாட்சன் பாணலுடன் ஒப்பந்தம் செய்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிரித்தானிய நாட்டின உணர்ச்சியைத் அாண்ட முயன்றது. காட்டூம் நிகழ்ச்சியைச் பிற்புலமாகக் கொண்டு சுய ஆட்சி மதிப்பிடப்பட்டது. கடல் கடந்த தன்னட்சி ஆணிலப் பகுதிகளில் அயலாந்தின் தன்னுட்சிக்கு அதிக ஆதரவு இருந்தது. எனினும் முற்போக்கினரின் அதிகரித்துக் கொண்டிருந்த பேரரசு
உணர்ச்சி அயலாந்துக்குச் சுய ஆட்சி அளிப்பதைப் பேரரசின்
புதிய கோட்பாட்டின் இன்றியமையாத அமிசமென அங்கீகரிக்க

கிளாட்சனின் தோல்வி
வில்லை. சுய ஆட்சிவாதத்தால் இங்கிலாந்தில் ஏற்பட்ட மனவெழுச்
சியை வர்த்தமானிப் பத்திரிகையில் 1887 இல் கள்ள ஒப்பம் இடப்
பட்ட பாணல் கடிதங்களைப் பிரசுரித்தல் போன்ற சிறப்பாகக் குறிக் கக் கூடிய நிகழ்ச்சிகள் குறிப்பனவாகும். இம்மனவெழுச்சி இரு
கட்சியினரும் ஒத்துமேவி நிதானமான அரசறிவு தொழிற்படுவதை
இயலாததாக்கிவிட்டது. எனினும் வேறெதுவும் அவ்விடயத்தைச் சமாளித்திருந்திருக்காது.
1886 ஆம் ஆண்டுத் தேர்தலில் கிளாட்சனுக்கும் சுய ஆட்சிக்கும் மாமுன விளைவு அவ்வளவு பலமாயிருந்தபடியால் கிளாட்சனின் தாராண்மைக் கட்சியினரும் ஐரிசியரும் சேர்ந்து பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பழைமைபேண் கட்சியினர் தனித்தே பெற முடிந்தது. தாராள ஐக்கிய வாதிகளது, சிறப்பாக, புதிய பேரரசுக் கொள்கையின் ஆதரவாளனுன யோசேப்பு சேம்பலேனது நட்புறவுடன் ஒரு வலிமை பொருந்திய பழைமைபேண் கட்சி சலிசு பரி பிரபுவின் தலைமையில் ஆட்சியை ஏற்றது. மூன்று ஆண்டு தாராளர் கட்சியினுட்சி (1892-5) யைத் தவிர அந்த நூற்றண்டு முடிவில் பூவர் யுத்தம் முடிந்து சிலகாலம் வரையும், இவ்விதமே நாடு ஆளப்பட்டது. அப்போது தாராண்மைக் கட்சியும் ஐரிசியரும் கிளாட்சன் தலைமையில் 34 பெரும்பான்மையான வாக்குகளால் சுய ஆட்சி முறியைப் பொதுமக்கள் சபையில் பலவந்தமாய் நிறை வேற்றினர். பிரபுக்கள் சபை அதனை நிறைவேற்ற மறுத்தது. 1895 ஆம் ஆண்டுத் தேர்தலில் நாடு அவர்களின் செயலை அங்கீகரித் தது. இந்நிகழ்ச்சி தற்கால அரசியலில் பிரபுக்கள் சபையின் கடமை யைப்பற்றி ஒரு புது எண்ணத்தைப் பழைமைபேண் கட்சித் தலைவர் கள் மனதில் உதிக்கச் செய்தது. இவ்வெண்ணம் முன்னெச்சரிக்கை யுள்ள பீல், திசரெவி என்போர் நடைமுறையில் கையாண்டதை விடத் துணிகரமானதாயிருந்தது. அடுத்த நூற்ருண்டில் அதன் விளை வாகக் குடியாட்சி அபிப்பிராயத்தில் அடுத்த பெரிய மாற்றம் ஏற் பட்டபொழுது இரு பாராளுமன்ற சபைகளிடையேயும் ஏற்பட்ட போட்டியால், 1832 இற்குப் பின் எங்கள் அரசியலில், ஒரு போதும் தோற்றியிராத மிகவும் பாரதூரமான யாப்பு நெருக்கடி ஒன்று ஏற் Lit --g
1895 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுய ஆட்சிக் கொள்கையினர் அடைந்த தோல்வி பின்வந்த பல ஆண்டுகளுக்கு உறுதியானதா யிருந்தது. ஐரிசிய அலுவல்களில் தற்காலிகமான அமைதி நிலவியது. பழைமை பேண் அமைச்சு ‘அன்பு காட்டிச் சுய ஆட்சி வாதத்தை அழிக்கும் பூட்கையை மேற்கொண்டது. முன் இவர்கள் அயலாந் தைப் பலவந்தத்தின்மூலம் ஆட்சி செய்யலாம் என நம்பியிருந்தனர்.
485

Page 256
486
1898.
கிளாட்சனின் மரணம்
இவர்கள் தலத் தன்னுட்சியை விரிவாக்கி, ஆங்கில நிலக்கிழார்களை இலஞ்சங் கொடுத்து வெளியேற்றி ஐரிசிய நிலப்பிரச்சினையைக் குருெம்வெல் காலத்து நிலைக்காவது கொண்டுவரக் கூடியதாயிற்று. ஆனல், தன்னுட்சியோ அதற்கு மேலுமோ கோருவதிலுள்ள ஆர்வம் தணியவில்லை. இருபதாம் நூற்றண்டில் தன்னுட்சி வேண்டும் என்ற நாட்டினக் கோரிக்கை ஐரிசிய செல்தியரின் மனதில் மிகவும் ஆழ மாகப் பதிந்திருந்தது. ஆதலால் அது, பாணலின் வீழ்ச்சிக்கும் மரணத்துக்கும் (1890-91) பின்னும் நிலம்பற்றிய குறைபாடுகளை அகற்றிய பின்னும்-பேரரசின் அரசியலைக் கலங்கச் செய்யுமளவு சத்தியை இக்கோரிக்கைக்கு அளித்த மனிதனும் பிரச்சினையும் ஒழிந்த பின்னும்-அவர்கள் மனதை விட்டகலவில்லை.
கிளாட்சன் ஒய்வு பெற்றபின் தனது 89 ஆம் வயதில் இறந்தான். அம்மாபெரும் முதியோனின் ஆர்வம் நிரம்பிய ஐரிசிய தன்னுட்சி பற்றிய முயற்சிகள், வெற்றிபெருவிடினும் அவை அவன் வாழ்க்கை யிலே உணர்ச்சி நிரம்பிய, தனிச்சிறப்புடைய பகுதியாகும். தாராளர் கட்சியும் பொதுவாகப் பேரரசின் அரசியலும் அவன் வாழ்வின் இறுதிக் காலத்தில், அத்தலைமுறையினரிடம் விடப் பட்டிருந்தால் அவை இன்னும் இயல்பாக விருத்தியடைந்திருக்கும். கிளாட்சனின் அளவு கடந்த முயற்சி துணைவரையும் பகைவரையும் ஒதுக்கி அவர்கள் நினையாத நிலைமைகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. ஆனல் இவனுடைய வாழ்க்கை முழுவதையும் நோக்கின், பிரித்தானிய ஆட்சிமுறைமையையும் பிரித்தானிய அரசியல்வாதி களின் பழக்க வழக்கங்களையும் பழைய உலகின் தரத்திற் குறையா மல் தற்காலக் குடியாட்சி நிலைமைகளுக்கியைய அமைக்க, மற்றவர் களைவிட இவன் அதிகமாகப் பாடுபட்டானென்றே பலரும் முடிவு
செய்வார்கள். «Z
அவனுடைய முதலமைச்சு ஆக்கிய சட்டங்கள் எங்கள் நிறுவகங் களைத் தற்காலத்துக்குரியனவாக்க அதிகம் துணைபுரிந்தன. இரண் டாம், மூன்மும் சீர்திருத்த முறிகள், பாமேசுதனின் மரணத்தின்பின் இவன் நாட்டிற்குக் காட்டிய வழியின் பயனேயாகும். பொதுமக் களின் பகுத்தறியும் சத்தியையும் நேர்மை உணர்ச்சியையும் அாண்டியே புதிய குடியாட்சிக்குப் பாராளுமன்ற அரசாங்கத்தில் அக்கறை உண்டாகச் செய்தான். அவனுடைய பகுத்தறியும் முறை குறைபாடுகள் உடையதாய் இருக்கலாம். எடுத்ததற்கெல்லாம் அவன் நேர்மையினத்தைப்பற்றி அடிக்கடி கண்டித்திருக்கலாம். எனினும் பொதுவாக நாட்டின் சிக்கலான பிரச்சினைகளை மக்கள்

சோல்சுபரியின் வெளிநாட்டுப் பூட்கை
சமூகம் என்னும் பொது மன்றின் முன்னர் சமர்ப்பிக்கும் அவனு டைய முறை எங்கள் பொது வாழ்க்கையின் நிலைமாறும் காலப் பகுதியில் ஏற்பட்டமை ஒரு சிறந்த பயன் நிரம்பிய எடுத்துக் காடடாகும். *
சோல்சுபரிப் பிரபுவின் பழைமைபேண் அமைச்சுகள், தாராள ஐக்கிய வாதிகளின் நட்புறவுடன் செய்த பெரிய பிரித்தானிய ஆட்சி வணிகம் செழிப்புற்ருேங்கிய ஒரு காலப்பகுதியையும், இரண்டாம் பூவர் யுத்தம் வரையும் சீர்திருத்தமுடைய மக்களுடன் அமைதி நிலவிய ஒரு காலப்பகுதியையுமுடையதாயிற்று. பெரிய பிரித் தானியாவின் மிகச் சிறந்த தனிமைக் கொள்கை” யின் அடிப் படையில் கண்டத்திலுள்ள வல்லரசுகளுடன் நல்லுறவு பேணப்
பட்டது. மற்றைய பெரிய வல்லரசுகள் எங்கள் காலத்தில் நடந்த
பெரிய உலக அழிவுச் செயலுக்கு முன்னேற்பாடாக இரு பாசறைக ளாக ஏற்கெனவே பிரிந்து கொண்டு, படைபூனுவதில் போட்டி யிட்டன. பிரான்சு, இரசியா என்னும் நாடுகளின் இருவர் கூட்டுறவுக் கெதிராக, சேர்மனி, ஒசுற்றியா, அக்காலத்தில்
இத்தாலி ஆகியவற்றின் மூவர் கூட்டுறவு ஏற்பட்டது. பெரிய
பிரித்தானியா இவ்விரு தொகுதியுள் ஒன்றினேடும் சேரவில்லை. ஆனல் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் எங்கள் குடியேற்ற எதிரியான பிரான்சின் பகைமை உணர்ச்சியாலும், அபுகானித் தான், இந்தியா என்னும் நாடுகளைப் பற்றி இரசியா கொண்ட நோக்கங்களைப்பற்றிய பயங்கரம் இருந்தமையாலும் சோல்சுபரிப் பிரபு பொதுவாக, சேர்மானிய வல்லரசுகளுடனேயே கூடிய சினே கத் தொடர்புடையவராயிருந்தார். ஆனல் பிசுமாக்கு ஏற்படுத்திய பெரிய வல்லாட்சிக் கொள்கையுடைய பணிக்குழுவுடன், பாராளு மன்ற முறையையும் பொதுமக்கள் உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் வைத்திருக்கும் தொடர்பு ஓரளவு அமைதி யற்றதாகவே எப்பொழுதுமிருக்கும். சேர்மனியின் புதிய தலைவர் களுக்கும் பிரித்தானிய அரசியல் நிறுவகங்களின் செல்வாக்கைப் பற்றி இயல்பான அவநம்பிக்கை நெடுக உண்டு. பிரித்தானிய கடற்படையைக் கண்டு வியந்த கைசர் உவிலியம் போட்டியான ஒரு கடற்படையை அமைக்கும்வரை இந்த அவநம்பிக்கையினல் பிரித்தானிய பூட்கையின் பொதுவான ஒழுங்கமைப்புப் பாதிக்கப் படவில்லை. கைசரின் கடற்படை அபிவிருத்தி அடுத்த நூற்முண்டி லேயே ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையை உண்டாக்கிற்று. சோல்சுபரிப் பிரபுவின் முகாமையின்கீழ், அமைதியான உடன் படிக்கையின்படி ஆபிரிக்காக் கண்டம் பெரிய வல்லரசுகளுக்கிடை
* இந்நூல் பக்கம் 455 ஐப் பார்க்க.
48
1886-1892.
1895-1902.

Page 257
488
சமூகச் சீர்திருத்தங்கள் : மாறும் உலகம்
பில் பங்கிடப்பட்டது. நவீன போக்குவரத்துச் சாதனங்களும் அயனமண்டல நோய்களுக்கேற்ற நவீன மருந்துகளும் கொண்டு, ஐரோப்பியர் இருண்ட கண்டத்தின் உட்பாகத்தில் நுழைந்து அதைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் செய்தனர்.
உள்நாட்டில், அந்நூற்றண்டின் கடைசி இருபது ஆண்டுகளும், விற்முேரியா இராணியினது ஆட்சியின் கடைசி 20 ஆண்டுகளும், தாராளர் அமைச்சின் கீழோ, பழைமை பேணுவோர் அமைச்சின் கீழோ, சமூக பாலனத்தில் சிறப்பாக நகராண்மைச் சபைச் சமவுடைமைக் கொள்கையில் முன்னேற்ற ஆண்டுகளாகும். நீராடு மிடங்கள், ஆடை வெளுக்கு மிடங்கள், காட்சிச்சாலைகள், பொது நூல் நிலையங்கள், மலர்ச்சோலைகள், தோட்டங்கள், திறந்த இடங் கள், நிலப் பங்கீடுகள், பாட்டாளி விடுதிகள் இவை யாவும் வரிப்பணத்திலிருந்தே ஈட்டப்பட்டன, அமைக்கப்பட்டன அல்லது தாபரிக்கப்பட்டன. மின்னூர்திகள், நிலக்கரி வளி, மின்வலி, நீர் என்பன பல இடங்களில் நகரசபை ஆட்சிக்குட்படுத்தப்பட்டன. அஆதி தொண்டு மனப்பான்மையுடையோரது காலமாகும். தொயின்பிகோல் போன்ற குடியேற்றப் பகுதிகள் ஏற்பட்டன. உலகத்தில் மிகச் செல்வம் படைத்த நாடெனக் கருதப்பட்ட இங்கிலாந்தைப்பற்றி அப்போது நிலவிய கருத்து சேரிகளினது குழல்களின் பயங்கரமான விளைவுகளைப்பற்றி எல்லா வகுப்பி னரிடையேயும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. திருத் தொண்டர் பானற்றின் விஞ்ஞான ரீதியில் ஏற்பட்ட சமய ஞானம், சாள்சு பூதினதும் அவன் துணையாளரதும் இலண்டன் வாழ்க்கை யின் சில உண்மைகளைப்பற்றிய புள்ளி விவர ஆராய்ச்சிகள், முதிர்ந் தோர் உதவிச் சம்பளத்தை ஆதரித்து அவன் எடுத்துக் காட்டிய நியாயங்கள், இரட்சணிய சேனை மூலம் சேனதிபதி உவிலியம் பூது வின் மீட்பு வேலை, அதே முறையில் திருச்சபையின் பணி, புதிய இலண்டன் மக்களின் பொறுப்புணர்ச்சி, பாற்றசீயைச் சேர்ந்த யோன் பேண்சினுலும், ஆரம்ப காலத்தில் இலண்டன் மாவட்ட சபையின் முன்னேற்றக் கட்சியினுலும் ஆரம்பிக்கப்பட்ட அதன் முயற்சிகள், தாராள பழமைபேண் அரசாங்கங்களிலிருந்தும்
1 1888 இல் பழைமைபேணுங் கட்சி அமைச்சனன திரு. இரிச்சி என்பான் தனது மாநிலக் கழக விதியைப் பிறப்பித்தான். அதன்படி மாநிலங்களை ஆட்சி செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகங்கள் நிறுவப்பட்டதுடன், பெரிய நகரங்களை மாநிலத்துக்குரிய புரங்களாக மாற்றுவதன்மூலம் நகரச் சனநாயகத்திற்காக நடைமுறையிலிருந்து வந்த கழகங்கள் விரிவாக்கவும் பட்டன. அன்றியும், பழைய " மாநகர்” எல்லை தவிர்ந்த இலண்டன் மாநகரமனைத்தையும் பாலனஞ் செய்வதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலண்டன் மாநிலக் கழகமும் இவ்விதியின்படி நிறுவப்பட்டது.

ஆங்கில-இரசிய உடன்படிக்கை
அல்தேன், பழைய தொண்டர் படையையும் வீர வேளாண்படை யையும் திறம்படைத்த போர்வீரர் தொகுதியாக மாற்றி, ஆள்புலப் படையை அமைத்தான். வெளிநாடுகளில் சேவை செய்து கொண் டிருந்த கிச்சினர், போர்ப்பயிற்சி பெருப் பழைய தொண்டர் படை அல்ல இது என்பதை அறியாது, யுத்த அலுவலகத்துக்கு அழைக் கப்பட்டபொழுது, ஆள்புலப் படை அமையத்தைப் பயன்படுத்த மறுத்தர்ன். ஆனல் அது பயிற்றி வைத்திருந்தவர்களை அவன் பயன் படுத்தினன்.
அவ்வாண்டுகளில் அலுவலாளரின் பயிற்சிப் படைப் பகுதி தாபிக்கப்பட்டது. இராணுவ கிட்டங்களை வகுக்கப் பொதுப்பணி யாளர் பகுதியும் தாபிக்கப்பட்டது. படைக்கு உத்தியோக பூர்வ மாகத் திட்டம் வகுக்கும் ஒரு தலைமைக் காரியாலயம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளின் முன் இலாஞ்சுதவுன் பிரான்சுடன் சச்சரவு ஏற்படும் காரணங்களை அகற்றியதுபோல் 1907 இல் கிறே இரசியா வுடன் சச்சரவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தனவற்றை அகற்ற ஓர் ஆங்கில-இரசிய உடன்படிக்கையை நிறைவேற்றினன். சேர்மனியின் நட்பின்மையும் அதன் கடல் ஆதிக்கமும் ஆண்டு தோறும் அதிகரிக்கும் சமயம் இரசியாவுடன் யுத்தத்தில் ஈடுபடுதல் மூடத்தனமான செயலாகும். எனினும் உடன்படிக்கையினல் பாரசீ கப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், போர் மூளக்கூடும். இரசியர் ஏற்கெனவே வடபகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந் தனர். பாரசீகக் குடாவுக்கும் அபுகானிய எல்லைப்புறத்துக்கும் தங் கள் ஆதிக்கத்தைப் பரப்பத் திட்டமிட்டிருந்தனர். குடாவில் எங் கள் நலவுரிமை சம்பந்தமான பழைய முக்கியமான பற்றுகள் இருந் தன. அபுகானித்தானின் சுதந்திரத்தைக் காப்பாற்றுதல் இந்தியா வின் பாதுகாப்புக்கு இன்றியமையாததெனக் கருதப்பட்டது. பார சீகரால் இரசியாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒன்றில் பாரசீ கம் முழுவதையும் குடாவையும் நாம் இரசியரிடம் விட வேண்டும். அல்லது பாரசீகத்தின் சுதந்திரத்துக்காக அவர்களுடன் போர்புரிய வேண்டும் அல்லது எங்கள் ஒவ்வொருவருடைய செல்வாக்குக்கு முரிய வட்டாரத்தைப்பற்றி ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிந்திய வழியையே கிறே தெரிவுசெய்தான். இதில் கம்பெல் பனமனதும் இந்திய செயலாளர் மோளியினதும் இருதயபூர்வமான ஆதரவைப் பெற்றன். ஆனல் ஆங்கில-இரசிய உடன்படிக்கை தாராளரில் முற்போக்கான அரைவாசிப்பேராலும் தொழிற்கட்சியினராலும் தாக்கப்பட்டது. பாரசீகத்தின் நலன்களை அசட்டை செய்து, இரசியத் தனியாட்சியோடு நட்புறவு கொள்வதை விரும்பாதவ ராய இவர்கள் படைக்கலங்கள் பெருக்கப்படுவதையும் விரும்ப வில்லை. எனினும் பாரசீகத்தைக் காப்பாற்றும் பூட்கையைப் பின்
19-R 5931 (11162)
521

Page 258
522
சேர்மனியும் ஐரோப்பாவும்
பற்றுவதில் ஆர்வம் காட்டினர். இப்பூட்கை, இரசியாவுடன் போரை மூட்டிவிட்டிருக்கும்-அத்துடன் சேர்மனியும் சேர்மானி
யக் கப்பற்படையும் நம்மைச் சூழச் செய்திருக்கும்.
கிறேயின் ஆங்கில-இசசிய ஒப்பந்தமே எங்கள் பாதுகாப்புக்கு உதவியாயிருக்கக்கூடிய ஒரே ஒரு வழி. இதுவும் மோசமான வழியென்முலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது வேறில்லை. எங்களைப் பெரிதும் பாதித்திருக்கக்கூடிய பிசோக்கோ உடன்படிக்கை போன்ற உடன்படிக்கையை இது தடுத்தது. ஆனல் தாங்கள் எப் புறமும் 'குழப்பட்டிருப்பதான உணர்ச்சியைச் சேர்மானிய பொது
மக்களுக்கு உண்டாக்கியது.
சேர்மனியைச் ‘குழும் பூட்கையைப் பெரிய பிரித்தானியா வேண்டுமென்றே உருவாக்கியது என்ற குற்றச்சாட்டு, அந்நாட்டில் அடிக்கடி கூறப்பட்ட போதிலும் அது உண்மையல்ல. கிறே, சேர்மனியுடன் நல்லவொரு தொடர்பை ஏற்படுத்துவதற்காக பாத் தாத் இருப்புப்பாதை உடன்படிக்கை மூலமும், போத்துக்கல் தன் குடியேற்ற நாடுகளை விற்கும் காலத்தில் சேர்மனியும் தன் பங்கைப் பெறவேண்டுமென்ற ஒப்பந்த மூலமும், சேர்மனிக்கு ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் போவதற்கு வழி கொடுக்க முன் வந்தான். அது 'குழும் பூட்கையன்று. போல்கன் சச்சரவுகளில் பற்றற்ற நடுநிலைமையாளனுகக் கிறே நின்று ஒசுற்றிய-அங்கே ரிக்கு எதிராக ஒரு போல்கன் அல்லது சிலாவு கோட்டி உருவாவ தைத் தடுக்க் முயன்றன். கொன்சுதாந்திநோப்பிளில் சேர்மனி காட் டிய ஆதிக்கத்தையும் அவன் எதிர்க்கவில்லை.
எனவே அரசியற் சார்பில் சேர்மனி 'குழப்படவில்லை. இராணு வச் சார்பில், தெளிவாகச் சேர்மனியின் மத்திய நிலையே போர் தொடங்கியபொழுது அதற்கு மிகப் பெரிய சாதகமாயிருந்தது. சேர்மனி 'குழப்பட்டமை தானே வருவித்துக்கொண்ட ஒன்ருகும். அல்சேசு-உலொரேன் சம்பந்தமாகப் பிரான்சோடும், போல்கன் குடாநாட்டில் ஒசுற்றிய-அங்கேரியில் சிலாவு மக்களுக் கெதிரான பூட்கையை ஆதரிப்பதன் மூலம் இரசியாவோடும், போட்டியாகக் கடற்படை ஒன்றை அமைத்து இங்கிலாந்தோடும் விரோதம் கொண்டமையாலேயே அது பகைநாடுகளாற் குழப்பட்டிருந்தது. அது ஒசுற்றிய-அங்கேரியுடன் சேர்ந்து ஐரோப்பாவின் மத்தியில் படைக்கோட்டி ஒன்றை உருவாக்கியது. வலிமை மிகக் கொண்டு அமைதியின்றியிருந்த சேர்மனியின் இரு பக்கத்திலுமுள்ள அயல் நாடுகள் ஒன்றில் அதன் சார்பு நாடுகளாக இருக்க வேண்டும்

போல்கன் பிரச்சினை
அல்லது தற்பாதுகாப்புக்காக அதற்கெதிராக ஒன்றுகூட வேண். டும். இயற்கையமைப்பால் கியூதோனியர் பிரான்சியருக்கும் சிலா, வியருக்குமிடையில் இருந்தமை புவியியலமைப்பில் சேர்மனி யரை “ஒரு வட்டத்தின் நடுவில்' இருக்கும்படி செய்தது. இது அவர்களின் இராணுவ வலிமையை இன்னும் பலமான தாக்கியது. அவர்கள் தங்கள் குழியற் குறிக்கோள்களை எய்தும் பொருட்டு, எத்திசையிலும் அச்சத்தை உண்டாக்கத் தங்கள் மைய நிலைமையைப் பயன்படுத்தினர். பின்னர் தாங்கள் எல்லாத் திசை களிலும் ' குழப்பட்டிருப்பதாக முறையிட்டனர். எந்தக் கெட்ட நேரத்தில் பிசுமாக்கு ஒசுற்றிய-அங்கேரியுடன் நட்புறவை நிறை வேற்றினனே அந்நேரத்திலிருந்து பிரான்சிய இரசிய நட்புறவும் உண்டாகும் ஒரு நிலைமை ஏற்படத் தொடங்கிற்று. சேர்மனி ஆரம் பித்து வைத்த இப்படிப்பட்ட அபாயகரமான நட்புறவுகள் இரு பெரு ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையில் நிகழும் எந்த எதிர் காலச் சண்டையும் ஒரேயிடத்தில் நிகழுவதைத் தடுத்து முடிவில் போல்கன் பிரச்சினையைப்பற்றி எழுந்த போரில் உலகத்தில் பாதிக்கு மேற்பட்ட பகுதியை ஈடுபடச் செய்தன.
1914 வரையில் இங்கிலாந்துக்கும் சேர்மனிக்கு மிடையில் சண்டை, சச்சரவு ஏற்படுத்தக் கூடிய எந்த முக்கியமான காரணத்
தையும் கிறே ஒப்பந்தத்தால் அகற்றி வைத்தான். ஆனல் ஐரோப்
பிய யுத்தம் ஒன்று நிகழுங்கால், பிரான்சு பெல்சியம் என்னும் நாடுகளின் சுதந்திரத்தை அழித்து, பேளினின் அடிமை நாடு களாக்கித் தன்கீழ் ஐக்கியப்பட்ட ஐரோப்பிய கண்டத்துடன் இங்கி லாந்தை எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்த சேர்மானிய வல்லரசு
ஒன்று ஏற்படுவதை அவனே, வேறு எவருமோ தவிர்க்கமுடிய
வில்லை. 1906-14 ஆண்டுகள் செல்ல, எங்களுக்குப் போட்டியாகக் கட்டப்பட்ட சேர்மானிய கடற்படையின் பெருக்கமும், ஐரோப்பா வில் ஒன்றின்பின் ஒன்முய் ஏற்பட்ட நெருக்கடிகளும், நிலைமை யின் அபாயங்களை ஒரளவு அறியும் ஆற்றலை ஆங்கில மக்களிடம் உண்டுபண்ணின. ஆனல் எத்தருணத்திலும், எங்கள் நாடு பிரான் சுடனும் இரசியாவுடனும் ஏற்படுத்திக்கொண்ட நட்பை உடன் படிக்கையாக மாற்ற விரும்பவில்லை. சேர்மனியையும் அதன் கடற் படையையும் கண்டு யாவரும் அச்சமுற்றனர். ஆனல் எங்கள் நாடு உண்மையில் அவசியம் ஏற்படும் வரையும் தன் நடவடிக்கை எதுவாக இருக்கக்கூடுமென்று முன்னரே தீர்மானிக்க விரும்ப வில்லை.
போல்கன் குடாநாடுகளும் மொாக்கோவுமே யுத்தக் கொந்தளிப் பிடங்கள். இங்கு விசும் போர்ப்புயல் உலக முழுவதும் பாவுமென் பதற் கையமில்லை. 1906 அல்சசிராசு உடன்படிக்கையின் விளைவாக,
523

Page 259
52堡·
1919.
வீயன்னவும் போல்கன் நாடுகளும்
1911 இல் இரண்டாம் மொாக்கன் நெருக்கடி எழுந்தது. சேர்மா னியர் ஒரு யுத்தக் கப்பலை அனுப்பிய மொாக்கோத் துறைமுகத்தின் பெயரால் அப்பிரச்சினை “அகதீர்' என அழைக்கப்பட்டது. பல வார அபாயத்தின் பின்-இப்பிரச்சினை ஒத்து மேவி இணக்கஞ் செய்யப்பட்டது . அந்நாட்களில் பிரித்தானியா பிரான்சை ஆதரித்தது. பிரான்சு, சேர்மனியருக்கு வேறிடத்தில் சில குடி யேற்ற ஆள்புலத்தைக் கொடுத்து மொரக்கோவில் தான் கோரிய உரிமைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது.
மொாக்கன் பிரச்சினைபற்றிய அகதிர் உடன்படிக்கை, பிரான்சுக் கும் சேர்மனிக்குமிடையிலுள்ள சச்சரவின் கடைசி நேரடியான காரணத்தை அகற்றிவிட்டது. ஆனல் அவர்களின் நட்பாளருக் கிடையில் மனத்தாங்கள் ஏற்படின், அவர்களும் சண்டைக்கு இழுக் கப்படலாம். ஏனெனில் போல்கன்பற்றிய பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஒசுற்றிய-அங்கேரிய பேரரசின் கதி போல்கன் பிரச்சினையாலேயே நிர்ணயிக்கப்படல் வேண்டும். அதன் ஆட்சி பொசினியாவில் இருந்த யூகோசிலாவியர் மீது பரவியிருந்தது. எனவே சேபியாவிலுள்ள விடுதலையடைந்த யூகோசிலாவியர், தங்கள் கொடிக்கீழ் தங்கள் நாட்டினரை ஒன்று சேர்ப்பதற்காக, ஆபிசுபேக்கரின் பேரரசு பிளவுபடுவதை விரும்பினர். வீயன்னவுக் கும் பெல்கிறேற்றுக்கு மிடையில் கடும் பகை நிலவிற்று. ஒவ்வொரு சமயத்திலும் சேர்மனி தன் நட்பாளரான ஒசுற்றிய-அங்கேரிய ருக்கு ஆதரவளிக்கவும், இரசியா போல்கனிலுள்ள சிலாவியர் நல
லுக்கு ஆதரவளிக்கவும் கடமைப்பட்டிருப்பதாக எண்ணின.
நெருக்கடிகள் ஒன்றின் பின் ஒன்முக இந்தப் பிரதேசத்தில் ஏற் பட்டன. ஒவ்வொரு முறையும் ஒரு உலக யுத்தம் மூளுமாப் போலி ருந்தது. சேபியா, கிரீசு, பல்கேரிய் நாடுகளின் படைகள் மசிடோ னியாவிலிருந்தும் திரேசிலிருந்தும் தருக்கியரை எப்பொழுதோ வெளியேற்றியிருக்கவேண்டும். அங்ங்னம் வெளியேற்றுவது நியா யமே. ஆனல் அச்செயல் ஒசுற்றிய-அங்கேரிக்கும் அதன் தென் பாகத்திலுள்ள அயல் நாடுகளுக்கு மிடையில் நிலவிய நெருக்கடியை அதிகரிக்கச் செய்தது. ஏனெனில் துருக்கியை வெற்றி கொண்ட சேபியா இராணுவபலம் வாய்ந்த நாடாகியது. இன்னும் ஒசுற்றிய ஆட்சிக்குக் கீழிருக்கும் எல்லா யூகோசிலாவியரையும் விடுதலையாக் கும் போரார்வத்துடன் தனது கவனத்தை இப்போது அது வடக்கே திருப்பிற்று. அச்சுறுத்தப்பட்ட பேராசின் ஆள்புலங்களைச் சேத முருது பேணுவதற்காக, ஒசுற்றிய - அங்கேரிய ஆட்சியாளர், சேபி

போர் (1914)
யரை நசுக்குவது தங்கள் கடமையெனக் கருதினர். கிறே நடுவராக நின்று இணக்கமேற்படுத்தியமையாலும் அச்சமயத்தில் சேர்மனியும் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு ஆதரவளித்தமையாலும் இப் பிரச்சினை பற்றிய போர் 1913 இல் தவிர்க்கப்பட்டது. அடுத்த வரு டம் விளைவு வேறுபட்ட்டது.
1914 யூன் 25 ஆம் திகதி சரசீவோவில் நடந்த, ஒசுற்றிய மாபெரும் இறைமகன் பிரான்சிசு பேடினந்தின் படுகொலை, பொசி னிய யூகோசிலாவியரை மீட்பதற்குச் சேபியாவில் ஏற்பட்டிருந்த கிளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்தக் கிளர்ச்சியை நிறுத்துவதாக உறுதியளிக்கும்படி வியன்ன பலவந்தப்படுத் தும் என்பது தவிர்க்க முடியாதது. அவப்பேருக, ஒசுற்றிய அங்கேரியப் பூட்கைக்குப் பொறுப்பாளிகளாயிருந்த அரசறிஞரும் L6- வீரரும் அப்படியான உறுதியளிக்கப்பெறுவதோடு மட்டும் நில்லாது சரசீவோப் படுகொலை அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் சேபியாவைத் தரைமட்டமாக்கத் தீர்மானிக் தனர். இரசியா தலையிடுமென்ற ஆபத்து இருந்தபோதிலும் சேர் மனி இரசியாவைத் தலையிடாது தடுக்குமென நம்பியிருந்தனர். ஆகவே சேர்மனிக்கும் இதில் பெரும் பொறுப்புண்டு. தங்கள் நட் பாளர் தங்களோடு கலந்தாலோசியாமல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று சேர்மனியர் வற்புறுத்தியிருக்க வேண்டும். அவப் பேருகக் கைசரும் அவர் மண்டலநாயகன் பெதுமன் ஒலுவெக்கும், உண்மையாக யுத்தத்தை விரும்பாவிடினும், வீயன்னவுக்கு அது விரும்பிய இறுதி எச்சரிக்கையை அனுப்ப, யூலை 5 ஆம் திகதி
பூரண சம்மதம் தெரிவித்தனர்.
ሥ
யூலை 23 ஆம் திகதி இறுதிக் கூற்று வெளியிடப்பட்டபொழுது அதன் எல்லை மீறிய வாசகம் கைசரையும் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படியான நிபந்தனை எப்பொழு தாவது ஒரு சுதந்திர நாட்டுக்கு இடப்பட்டதில்லை. எனினும் அந்நிபந்தனையில் பத்தில் ஒன்பது பகுதியைச் சேபியா ஏற்றுக் கொண்டது. எஞ்சியிருந்த வேறுபாட்டை ஒரு ஐரோப்பிய மாசபை இலகுவாக நீக்கியிருக்கக் கூடும். அப்படியான இணக்கத்தின் அவசியத்தைக் கிறே சேர்மனிக்கு வற்புறுத்திக் கூறினன். ஆளுல் கைசரோ, தன் நட்பாளரின் இறுதி எச்சரிக்கையை ஒப்புக் கொள்ளாதபோதும் மாசபை கூட்டுவதை முற்முக எதிர்த்தான். அந்தப் பிரச்சினை ஒசுற்றிய-அங்கேரியினதும் சேபியாவினதும் சொந்த அலுவலென்றும், இரசியாவோ வேறெந்த நாடோ அதைப்
பற்றி அக்கறை எடுக்கவேண்டியதில்லை. யென்றும் விளம்பினன்.
அப்படியான வார்த்தைகள் போரையே குறிக்கும். ஏனெனில்
岛2捞

Page 260
526
பெல்சியம், ஒகத்து 1914
சேபியாவின் சுதந்திரத்தை அழிக்க விடுவது இரசியாவின் முழுப் பூட்கையையும் பயனற்றதாகச் செய்வதாகும். அது தன் படை களைத் திரட்ட ஆரம்பித்தது. போர்த் திட்டங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் இராணுவ வீரர் கையிலிருந்த சேர்மனி, இரசியாவுக்கும் அதன் நட்பு நாடான பிரான்சுக்கும் இறுதி எச்ச ரிக்கைகள் அனுப்பியது. ஒகத்து தொடக்கத்தில் பிரமாண்டமான, பலம் வாய்ந்த சேர்மன் சேன சமுத்திரம், கிழக்கு நோக்கி இரசியா வுக்கெதிராகச் செல்லாது, மேற்கு நோக்கி, குற்றமற்ற பெல்சியத் திற் கூடாகப் பிரான்சுக் கெதிராகத் திரண்டு சென்றது.
அந்த யுத்தம்பிரித்தானியாவுக்குத் தொடர்பில்லாக் கீழ்ப்பகுதிப் பிரச்சினைகள் பற்றித் தொடங்கியதாயினும் ஆரம்பத்திலேயே பிரான்சு, பெல்சியம் என்னும் இரு நாடுகளின் சுதந்திரத்துக்கும் ஆபத்தை உண்டாக்கியது. நிலைமையிருந்த மாதிரிக்கு பெல்சியமும் பிரான்சும் தலையெடுக்கவே முடியாது. தலையெடுத்தாலும் சேர்மனிக் குக் கட்டுப்பட்ட நாடுகளாகவே யிருக்கவேண்டும். மத்திய வல் லரசுகள் வெற்றி ஒரு பேரரசின் கீழ் ஐரோப்பா முழுவதும் அடி மைப்பட்டுக் கிடப்பது என்பதையே குறிக்கும். இப் பேரரசு நெப் போலியனுடையதைப் போன்று சிலகால வாழ்வுடையதாயிராது ஐரோப்பாமீது நிரந்தரமாக ஆட்சி செலுத்தும் பேரரசாகவே விளங்கும். தங்களை ஆள்வோர் ஆட்டிவைத்தபடி நடக்கும் அடிமைத்தனத்தில் ஊறியவர்களான சேர்மானிய மக்கள், ஐரோப்' பாவையும் நிரந்தர அடிமையாக்கும் ஆபத்தை உண்டுபண்ணினர்.
யுத்தத்தைத் தவிர்க்கச் சேர் எட்டுவேட்டு கிறே செய்த பெரு முயற்சி மனிதவர்க்கத்தில் குறிப்பாக அமெரிக்காவில், பெரும்பகுதி யினருக்குப் பிரித்தானியாமீதும் அதன் நட்பாளர்மீதும் அனுதாபம் ஏற்பட உதவியது. ஆனல் இந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. கால்வாய்த் துறைமுகங்கள், நெதலாந்து என்பன-உண்மையில் ஐரோப்பா முழுவதுமே-ஏற்கெனவே வெளிப்படையாகக் கடலில் எங்கள் எதிரியான ஒரு வல்லரசின் சார்பு நாடுகளாவதை நாங்கள் தடுக்க வேண்டுமென எங்கள் தற்காப்பு உணர்ச்சியே அச்சமயம் எங்களுக்கு எச்சரிக்கை செய்தது. பெல்சிய நடுநிலைக்கு ஏற்பட்ட பங்கமும் பெல்சியத்தின் எதிர்ப்பைப் படையெடுத்தோர் படுத்திய பாடும் பிரித்தானிய மக்களே உணர்ச்சி வசப்படுத்தின; அமைதியை விட வேறென்றையும் விரும்பாத அவர்கள் உள்ளத்தில் அக்கணத் தின் பயங்கர உண்மைகளையும் அவசியத் தேவைகளையும் அழுத்தம் திருத்தமாகப் பதியவைத்தன.

பெல்சியம், ஒகத்து 1914
ஒகத்து தொடக்கத்தில், பெல்சியத்தின்மீது படையெடுக்கப்படும் கணம் வரையும், ஐரோப்பிய யுத்தத்தில் பங்குபற்றும் அவசியத் தைப் பற்றிப் பிரித்தானிய அபிப்பிராயம் பிளவுபட்டிருந்தது. யூலை முடிவில் இலண்டனிலும் வட இங்கிலாந்திலும், தாராளர், தொழிற் கட்சிகளிலும் நடுநிலையுணர்ச்சி வலுவுடையதாயிருந்தது. மந்திரத் திற் பாதி உலோயிடு யோச்சின் தலைமையில் நடுநிலை வகித்தது. பிறகு சிலர் குறிப்பிட்டதுபோல், கிறே தான் செய்ததிலும் ஒரு நாள் முந்தித்தானும் போரில் பங்குபற்றுவதாகச் சேர்மனியை அச் சுறுத்துவது அடியோடு முடியாத காரியம். யூலை மாதத்தில் தக்க காலத்திற்கு முந்திப் பெரிய பிரித்தானியாவை யுத்தத்தில் பங்குபற் றச் செய்திருப்பின், அதன் மிக ஆபத்தான வேளையில், மந்திரம் கலைந்திருக்கும்; நாட்டில் பிளவேற்பட்டிருக்கும். அப்படியானதோர் ஆபத்து வருமெனத் தோன்றியது. ஆனல் தன் இணைவரையும் நாட் டினரையும் இணைத்து வைத்த அசுகுவிதின் நுண்ணறிவே அதைத் தவிர்த்தது. குழப்பமும் அச்சமும் நிரம்பிய அந்த வாரத்தில் ஆக்தி ாம் நிரம்பிய அபிப்பிராய பேதம் தோன்றியிருக்கும். பெல்சியத்தின் மீது உண்மையாகவே படையெடுக்கப்பட்டதின் விளைவாக நாடு பிளவுபடுமென்ற அபாயம் நீங்கிற்று. ஒகத்து நான்காம் திகதி, பெல்சிய நடுநிலையைப் பாதுகாக்கத் தான் செய்த பொருத்தனை காரணமாகப் பெரிய பிரித்தானியா ஏகோபித்து யுத்தத்திற் சேர்ந் தது. நாங்கள் சண்டை செய்ய வேண்டும் அல்லது சாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதற்குக் காரணம் பெல்சியம் மாத்திர மல்ல. ஆனல் பாரிசும், கால்வாய்த் துறைமுகங்களும் சேர்மனியர் ஆகிக்கததினுள் அகப்படாதபடி தடுக்க, தக்க தருணத்தில் நாம் ஒன்றுபட்டுத் தாக்கக் கூடியவர்களாயிருந்தமையும் காரணமாகும்.
அத்தியாயம் VIII
முதலாம் உலக யுத்தம். 1914-1918,
யுத்தத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளின் சுருக்கம் அதன் பொது வான இயல்புகளைப்பற்றிய குறிப்புரைக்கு ஒரு பயனுள்ள பீடிகை
யாயிருக்கலாம்.
சேர்மானிய யுத்தத் தலைவர்கள் வெகு காலமாக ஆயத்தஞ்செய்த திட்டம், நடுநிலை வகிக்கும் பெல்சியத்துக்கூடாகச்சென்று பாரிசைத்
தாக்கி, ஒரே அடியில் பிரான்சிய எதிர்ப்பை நசுக்கி, பின் கிரும்பி.
527

Page 261
ஒகத்து, 1914。
மொன்சு
இாசியாவில் ஆறுதலாகத் திரட்டப்படும் படைகளுடன் பொர ஏற்ற நடவடிக்கைகள் எடுப்பதாகும். அவர்கள் நினைத்தபடியே அநேகமாக நடந்துவிடுமாப்போலிருந்தது. யோவர், போசு என்னும் பிரான்சிய தளபதிகள், தங்கள் அணிவகுப்பின் வடபாகத்தில் வரும் தாக்குதலை எதிர்க்க ஆயத்தஞ் செய்வதற்குப் பதிலாக முன்பின் பாராது 2.லொரேன் மீது போர் தொடங்கி, அதன் பின் வெகு சேத் துடன் பின்வாங்க வேண்டியதாயிற்று. இதற்கிடையில் சேர்மானியப் படைகள் பெல்சியத்தை நசித்துக்கொண்டு அதனூடே சென்ற பகைவர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் திகில விளைவிக்கும் வகையில் எதிர்ப்பைத் தவிடுபொடியாக்கித் தற்காலப் போரின் புதிய இாக்கமற்ற முறைகளைக் கையாண்டார்கள். குற்றமற்ற பெல் சியம் நடத்தப்பட்ட முறை இங்கிலாந்தை ஒன்றுபட்டு யுத்தத்திற் சோத் தூண்டிற்று. அமெரிக்காவிலும் ஆதரவை எழுப்பியது.
பிரான்சிய திட்டங்கள் என்னவென்று தெரியாத பிரித்தானிய இராணுவப் பிரதானிகள் சேர்மானியரின் தாக்குமுறை பற்றித் தங்கள் நட்பாளர் கொண்டிருந்ததைவிடச் சரியான கருத்துடைய ராயிருந்தனர். அல்தேன் திரட்டிய ஏறத்தாழ ஒர் இலட்சம் படை 6ն մի ஒரு மனிதனையும் இழக்காது ஒரு விநாடியும் தாழாது கால் வாயைக் கடந்தனர். அவர்கள் பெல்சியத்திலிருந்து வெளியேறும் முக்கியமான சேர்மன் முன்னணியின் பாதையைத் தடைசெய்து நின்றனர். எண்ணிக்கையில் அதிகமாயிருந்த எதிரிபடை பிரித் தானியர் படையை மீறிக்கொண்டு மேற்சென்றது. ஆயினும் மொன் சிலிலும் இல சாற்முேவிலும் எதிரிக்குத் தாமதம் ஏற்படும்படி போராடினர். இதன் விளைவாக உடனே புதிய யுத்தத்தில் எங்கள் படைவீரரின் புகழ் நிலைநாட்டப்பட்டது. இதன்பின் பிரித்தானியர் மொன்சிலிருந்து பின்வாங்கினர்; பிரான்சியரும் தமது நீண்ட முன்னணி முழுவதிலிருந்தும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
1 * புறக்கணிக்கத்தக்க சிறிய பிரித்தானிய போர்ப்படை” என்று தான் கூறியதாகத் தன்மீது இப்பொழுது பழி சுமத்தப்பட்டமைக் கெதிராகத் தான் ஒருபொழுதேனும் அச்சொற்றெடரை உபயோகிக்கவில்லையெனக் கூறிக் கைசர் மறுத்தான். ஆனல் 1914 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்தில் படையெடுத்துச் சென்ற படையினராகிய “ மொன்சு போர்ப்படைப் பழம் வீரர்கள்’ புறக்கணிக் கப்பட்ட பழையவர்கள் என்று தாங்கள் தொடர்ந்து அழைக்கப்பட்டு வர வேண்டுமென வேடிக்கையாகக் கோரினர். அவர்கள் கோரியவாறு அவர்கள் என்றுமே பிரித்தானியரால் அழைக்கப்பட்டு வருவர். எ. ஈ. கவுசுமன் எழுதிய Epitaph on an Army of Mercenaries pig) h gia) is at Juppé குறிப்பிடுகின்றது.

மாண்நதி அற்புதம்
இன்னுமொரு வாரத்தில் சேர்மானியர் பாரிசில் நுழையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. யாவும் இழக்கப்பட்டதாகத் தோற்றியது. ஆனல் பின்னர் இயற்கையான காரணங்களினல் * மாண் நதி அற்புதம்' நடைபெற்றது.
யோவரும் போசும் யுத்தத்தின் முதல் மாதத்தில் பிரான்சுக்கு அவ்வளவு சேதம் விளைவித்த பாரதூரமான தவற்றின்பின், குழல் கள் நம்பிக்கையளிப்பனவாய் இல்லையெனினும், தடுமாற்றமடை யாது வேகத்தில் முன்னேறிவந்த வேறு வேருண சேர்மன் படை களுக்கிடையில் தொடர்பில்லாதிருந்தமையைத் தமக்குச் சாதக மிாகப் பயன்படுத்தி எதிர்த்தாக்குதலினல் மிகச் சிறந்த முறையில் நிலைமையைச் சீர்திருத்தினர். படையெடுத்து வந்தோர் பிரான்சிய ாாலும் பிரித்தானியாாலும் மாண் போரில் தோற்கடிக்கப்பட்டு, பாரிசின் அயற்புறங்களிலிருந்து பின்னிட வேண்டியதாயிற்று. ஆனல், பெல்சியத்தையும் பிரான்சின் ஒரு பெரிய பகுதியையும்கிட்டத்தட்ட இரும்புச் சுரங்கங்கள் முழுவதும் நிலக்கரிச் சுரங்கங்
களில் எண்பது சதவீதமும் உட்பட-தம்மிடம் வைத்துக்கொண்டு
பகைவர்கள் ஆள்புலத்தில் பதுங்கு குழிகள் வெட்டி அங்கே தங்கி னர். ஆனல் கால்வாய்த் துறைமுகங்கள் சேர்மானிய படை வீரர் களின் படை வரிசைக்கு வெளியே விடப்பட்டன. அதனுல் பிரான் சிலுள்ள நட்பாளர் படைகளுக்கு இங்கிலாந்துடன் அது தருவிக் கும் பொருட்களைப் பெறத்தக்க நேரடியான போக்குவரத்து வசதி களிருந்தன. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்நிலைமையே நில விற்று. ' பதுங்கு குழியுத்தம்' தொடங்கிவிட்டது. கால்வாயிலிரு ந்து சுவிசு எல்லைப்புறம்வரையும் நீண்டிருந்த எதிர்த்து நிற்கும் படைகளின் வரிசைகள் கூடியும் குறைந்தும் கொண்டிருந்தன. எனினும் 1918 இலையுதிர் காலம் வரையும் எப்பொழுதாவது உண்மையாக நிலைகுலையவில்லை. இந்த மேற்குப்புற நெருக்கடியை நீடிக்கச் செய்வதற்காக ஏற்பட்ட தாக்குதலிலும் எதிர்த் தாக்குத லிலும் இலட்சக்கணக்கான உயிர்களும் கடந்த நூற்முண்டு ஐரோப் பிய முன்னேற்றத்தில் திரப்பட்ட செல்வமும் நாசமாக்கப்பட்டன.
கிழக்குப் பாக நடவடிக்கைகளால் மேற்குப் பூாக நெருக்கடியை நீக்கக்கூடுமா? யுத்தத்தின் ஆரம்ப வாரங்களில் இரசிய படைகள் கிழக்குப் பிரசியாமீது படையெடுத்தன. இதனல் மேற்குப் பாகத்தி லிருந்து இரு சேர்மனிய படைப் ப்குதிகள் அங்கு அனுப்பப்பட் டன. இது மாண் போரின் முடிவுக்குப் பெரிதும் உதவிபுரிந்தது. ஆனல், இந்த உதவிகள் வந்து சேருமுன்னரே தனன்பேக்குப் போர் 20-R, 5931 (11162)
529
செத், 1914,

Page 262
5:30
ஒக. 30, 9薰4。
ஒற்ருேபர், 94.
தாதனெலிசு
முடிந்தது. பிரசியா மீது படையெடுத்துச்- சென்றவர்கள், (அன்று தொடங்கி இவர்கள் சேர்மானிய யுத்தத்தின் இரு வெற்றி வீரர்களானர்கள் ) இந்தன்பேக்காலும் அவன் படை முதல்வன் உலுத்தன்தோலினலும் மூன்று இலட்சம் மக்கள் உயிர்ச்சேதத் துடன் தோற்கடிக்கப்பட்டனர்.
தனன்பேக்கின் பின்னர், இரசியாவின் படைகள் ஒருபுறமும், சேர்மானிய, ஒசுற்றிய, அங்கேரிய படைகள் மறுபுறமுமாக யுத்தம் மிகப் பெரிய அளவில் தொடர்ந்து நடந்தது. மேற்கிலும் பார்க்கக் கிழக்கில் பதுங்குகுழிச் சண்டை குறைவாயிருந்தது. மூன்று ஆண்டுகளாக நாட்டின் மிகவும் அகன்ற வெளிகளிலே, முக்கியமாக நலிவுற்ற போலந்திலே போராட்டம் முன்னேறுவதும் பின்வாங்கு வதுமாக நடைபெற்றது. சில சமயங்களில் இரசியா வெற்றியடைந் தது. ஆணுல், தங்கள் நாடு போதிய அளவு நாகரிகம் அடையாத காரணமாகவும், அழிவை நோக்கிச் செல்லும் ஈடாடிய சார் அா சாங்கத்தின் திறமையின்மையும் ஊழலும் காரணமாகவும், படைக் கலங்களும் வேறு பொருட்களும் வருவது குறைந்ததும் அவர் களுக்கு இடைஞ்சலாயிற்று. இரசியாவுக்குச் செல்ல ஒரு நேரடி யான, இலகுவான பாதை பிரித்தானியாவுக்குக் கிடைத்திருந்தால், இாசியாவின் படைக்கலக் குறைபாடுகளைக் கூடிய அளவு நீக்கி யிருக்கலாம். ஆனல், போற்றிக்கடல் மூடப்பட்டது. தாதனல் மூலம் கருங் கடலுக்குப் பாதை திறக்கும் முயற்சி பயனடையவில்லை.
1915 ஆம் ஆண்டில் தாதனெலீசையும் கொன்சுதாந்திநோப்பிளை யும் தாக்கிப் போர் செய்வோரைச் சோர்வடையச் செய்வதன் மூலம் வெற்றி எய்துதலே இங்கிலாந்துக்குக் கிடைத்த ஒரே ஒரு வாய்ப் பாகும். இந்தப் போர்முறை திறத்தில் வெற்றியடைந்திருந்தால் யுத் தத்தை ஈராாண்டுகளால் குறைந்திருக்கலாம். துருக்கி மத்திய வல் லரசுகளுடன் சேர்ந்தமையால் இங்கிலாந்தின் பொறுப்பு அதிகரித் தது. ஏனெனில், பலத்தீனில் வேண்டிய நடவடிக்கைகளெடுத்து துருக்கியிடமிருந்து எகித்தையும் சுவெசு கால்வாயையும் காப்பாற்ற வேண்டியிருந்ததுமன்றி, மெசப்பொத்தேமியாவில் வேண்டிய நட வடிக்கைகளெடுத்துப் பாரசீகக்குடாவையும் அதன் எண்ணெய்க் கிணறுகளையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. மேலும், துருக்கி யுத் தத்தில் இறங்கியமை, சேபியாவைத் தாக்கித் தன் சொந்தக் கார
* உலகப் பெரும்போரின் விளைவாக, 1919 இல், போலந்து மீண்டுமொரு சுதந்திர நாடாக உருவாகியது. ஏனெனில் போலந்தின் எதிரிகளாகிய சேர்மானியரும் இரசியரும் எதிரெதிராக நின்று போரிட்டபோதும் இருவருமே தோற்கடிக்கப்பட்டனர்.

கடற்போர்
ணங்களுக்காகப் பழிவாங்கப் பல்கேரியாவைத் தூண்டியது. பல் கேரியா பகைவர் சார்பில் அணிவகுத்துச் சென்ருல் ஒசுற்றிய அங் கேரியின் கணக்கற்ற படைகளுக்கெதிராகச் சேபியாவைக் காப் பாற்றுவது முடியாததாயிருந்திருக்கும். ஆனல், பல்கேரியா பகை வர்களுடன் சேருமுன் இங்கிலாந்து தாதனெலிசையும் கொன்சுதாந் திநோப்பிளையும் கைப்பற்றினல், பெரும்பாலும், நிச்சயமாகப் பல் கேரியா எங்கள் கட்சியில் சேரும். போல்கன் நாடுகள் யாவும் ஒசுற் றிய-அங்கேரிக் கெதிராகத் தங்கள் படைகளைத் திரட்டும். இந்த நியாயங்களுக்காக தாதனெலீசைத் தாக்க வேண்டியதாயிற்று. அதில் தோல்வி காணவே அதன் விளைவாகப் பல்கேரியா மத்திய வல்லரசுகளுடன் சேர்ந்தது. சேபியா படையெடுத் தழிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிரான்சிய ஆங்கிலப் படைகள் மசிடோனியாவின் துறைமுகமான சலோனிக்காவில் தங்கியிருந்தன. பகைவரின் வலிமை குறையத் தொடங்குங்கால் எதிர்காலத்தில் முன்னேறுவதற்கான ஒரு தளமாக அதைப் பயன் படுத்த அவை எண்ணியிருந்தன*
மறுபுறத்தில், 1915 மே மாதத்தில் நட்பாளர் பக்கம் இத்தாலி போரிலீடுபட்டது. மேற்கு முன்னணியில் நடந்தது போலப்பதுங்கு குழிச்சண்டை அல்பிசின் அடிமலைக் குன்றுகளில் ஆரம்பித்தது. ஒசுற்றியப் படைகளின் மிகப் பெரும்பாகம் இங்கே சிக்கிக்கொண் டமையால், போல்கன் தோல்வியின் மிக மோசமான விளைவுகள் தவிர்க்கபபட்டன. ஒசுற்றிய-அங்கேரி 1918 வரை தப்பியிருந்தது. ஆனல், இத்தாலி நெருக்கியபடியிருந்தமையால் மேற்கு முன்னணி யில் சேர்மனிக்கு உதவிபுரியவோ, போல்கனிலும் துருக்கியிலும் பெற்ற நற்பலன்களைப் பெருக்கவோ முடியவில்லை."
அசுகுவிதின் தலைமையில் பிரித்தானிய மந்திரம் யுத்தத்தின் தொடக்கத்திலேற்பட்ட நெருக்கடியைத் திறம்படச் சமாளித்தது. பணமுறிவு தவிர்க்கப்பட்டது. ஒற்றுமைப்பட்ட உள்நாட்டு முன்னணியில் நாடு ஒன்றுபட்டது. கடற்படை தன் ஆரம்ப வேலையை நன்முய் ஆற்றியது. போர்மேற்செல்லும் படை பிரான்சில் தாமதமின்றிப் பத்திரமாகப் போய் இறங்கிற்று. தாதனெலிசுத்
1916 இல் அல்லது 1917 இல் சலோனிக்காவைத் தாக்கியிருந்திருப்பின், ஒசுற்றிய-அங்கேரியப் பேரரசு முடிவடைந்திருக்கும் எனச் சிலர் கருதினர். அவ்வாறு கருதியோர், சேர்மனியானது உட்பிரதேசத்தைத் தன்வயமாக்கிக் கொண்டிருந்தமையால், பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளை விட மிக விரைவில் போல்கனுக்குப் போர்ப்படைகளையும் உணவுப் பொருள்களையும் அனுப்பக்கூடியதாயிருந்திருக்குமென்ற உண்மையை அறியாது போயினர். ஆஞல் 1915 இல் தாதனெலீசைத் தாக்கிய பொழுது சேர்மனியானது தனக்குப் பகையான ஆள்புலத்தினூடும் நொதுமலான ஆள்புலத்தினுடும் போர்ப் படைகளை நேரடியாக அனுப்பக்கூடிய நிலையிலிருக்கவில்லை.
53.
நவெம்பர்,
915.

Page 263
532
மே, 1916,
கடற்போர்
தாக்குதல் மாத்திரமே ஒரு படுதோல்வியாயது. பிரிவுபட்ட ஆலோ சனையே இதற்குக் காரணமாகும். இதன் காலத்திற்கு முந்திய அரைகுறை முயற்சிகளால் பகைவர் முன்னெச்சரிக்கை கிடைக்கப் பெற்றனர். இந்தப் பொறுப்பில் படைவீரர், கப்பலோட்டிகள், அா சறிஞர் யாவரும் பங்கு பற்றவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் வெற்றி கண்டவன் ஒருவனுமில்லாவிட்டாலும் தவறு செய்தவன் என்று ஒரு தனிமனிதனையும் குற்றஞ் சாட்ட முடியாது.
தாதனெலீசுச் சம்பவத்தைவிட மற்றப்படி கடற்போர் முயற்சி [းခေါ်r நன்கு நடந்தன. போர்மேற்செல்லும் படை பத்திரமாகப் பிரான்சை உடனே அடைந்தது. பகைவரின் போர்க்கப்பல்கள் உல கத்திலுள்ள கடல்கள் யாவற்றிலும் தேடி அழிக்கப்பட்டன. யப்பா னியர் நட்புறவு துTாகிழக்குக் கடல்களைக் காவல் செய்தது. 1914 திசெம்பரில் போக்கிலாந்து தீவுகளுக்கப்பால் கடற்றளபதி இசு தேடி, இசுபீயின் சேர்மானிய கடற்படைப் பகுதியை அமிழ்த் தினன். யெலிகோவின் தலைமையிலிருந்த மாபெரும் கடற்படைக்கு இசுகாபா புளோவில் தங்குமிடமளிக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் உபயோகிக்கப்படும் புதிய குழ்நிலையிற்கூட இது பாதுகாப்பான இடமாயிருந்தது. அவ்விடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கு வட சேர்மானிய கடற்கரையிலுள்ள துறைமுகங்களிலிருந்த பகை வனின் மாபெரும் கடற் படையைக் காவல் செய்த முறைமை அாலோனுக்கப்பால் நெல்சன் காவல் செய்வதை ஒத்திருந்தது. ஆணுல் நவீனப் போர் முறை காரணமாக மிகவும் எட்ட நின்றே காவல் செய்ய வேண்டியிருந்தது. ஒருமுறை மாத்திரம் சேர்மன் கடற்படை வலிமை கொண்டு வெளிவந்தது. இதல்ை யத்லாந்தின் போர் விளைந்தது. அந்தச் சண்டையின் பயனுக, சேர்மன் கடற் படை தப்பியோடிவிட்டது. அதன் பின் ஒருபோதும் அது கடலிற் செல்ல முயற்சிக்கவில்லை. இச்சண்டையினுல் இரு கட்சிகளுக்கும் சேதம் அதிகம்,
அதே ஆண்டு 1916 இல் உயிர்ச்சேதம் அதிகம். ஆனல், மேற்கு முன்னணியில் உண்மையான மாற்றமில்லை. வேடனிலுள்ள பிரான் சிய பாதுகாப்பைத் தகர்த்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிக்குரிய இளவரசனது படைகள் செய்த பெருமுயற்சி பலமாத உழைப்பின் பின் தோல்வியுற்றது. புதிதாகக் திரட்டப்பட்ட பிரித் தானிய படைகள் சோம் நதி மீது செய்த முதற் பெரும் தாக்குதலி லுைம் பயன் ஒன்றும் கிட்டவில்லை.
யத்லாந்துச் சண்டையின் பின் சேர்மனியர் நீர்மூழ்கிக் கப் பற் முக்குதலில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். 1917 ஏப்பிரி லில் அதனுல் ஏற்பட்ட அமோக வெற்றியால், இங்கிலாந்து பட்டி

நட்பாளர்களுக்கு விற்பட்ட நெருக்கடி
னியால் வருந்த வேண்டிய நிலையும் நட்பாளர் பக்கம் படுதோல்வி யடையும் நிலையும் ஏற்படுமோ என்ற அபாயம் இருந்தது. ஆனல், அடுத்த மாதங்களில் வணிகக் கப்பலோட்டிகளின் வீரச் செயல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் புதிய விஞ் ஞானக் கருவிகளைப் பயன்படுத்தியமை, பாதுகாப்புடன் செல்லும் கப்பற்கூட்ட முறை ஐக்கிய நாடுகளின் சொந்தக் கப்பல்களுக்கெதி ாாக நடந்திய நீர்மூழ்கிக் கப்பற் தாக்குதலின் விளைவாக அந்நாடும் யுத்தத்தில் புகுந்தமை ஆகியவற்ருல் நிலைமை மாறிற்று. அதற் கிடையில் பிரித்தானிய முற்றுகை சேர்மானிய மக்களின் விடாப் பிடியான எதிர்ப்பை வலுவிழக்கச் செய்தது.
பெரிதும் அரசாங்கத்தின் தகுதியின்மை காரணமாக, யுத்தத்தில் தாம் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஏற் பட்ட போல்சிவிக்குப் புரட்சியின் விளைவாக இரசியா யுத்தத் திலிருந்து விலகியிராவிட்டால் 1917 இலேயே சேர்மனி தோற் கடிக்கப்பட்டிருக்கும். இரசியா போரிலிருந்து விலகிய காலத்திற் கும் 1918 கோடை காலத்தில் ஐரோப்பாவுக்கு அமெரிக்கப் படை களின் வருகைக்கும் இடைக்காலப் பகுதி நட்பாளர்களுக்கு மிக வும் ஆபத்தான காலங்களிலொன்ருகும். 1917 ஏப்பிரில் மாதத்தில் செமின் தெசு தேமிசு என்னுமிடத்தில் பிரான்சியரின் தாக்குதல் படுதோல்வியுற்றது. கலகமும் புரட்சியும் ஏற்படுமெனத் தோன்றி யது. இலையுதிர் காலம் முழுதும் மழையிலும் சேற்றிலும் புரியப் பட்ட வேதனை நிறைந்த பச்சந்தேல் சண்டையில் ஈபிரிசு முன்ன ணியில் கேய்க்கு என்பானின் அஞ்சத்தக்க தாக்குதலினல் பிரான் சின் நெருக்கடி தீர்க்கப்பட்டது. பயங்கரமான சேதம் உற்றபின் பும் மிகச் சிறிய அளவே முன்னேற முடிந்தது. அலன்பியின் தலை மையில் எகித்திலிருந்து முன்னேறிக்கொண்டிருந்த பிரித்தானிய படை நத்தார் காலத்தில் துருக்கியரிடமிருந்து யெருசலத்தைச் கைப்பற்றியமை துன்பம் நிறைந்த ஆபத்தான 1917 ஆம் ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய சம்பவமாகும். அடுத்த ஆண்டில் அலென்பி பலத் தீன் முழுவதையும் வென்று தமாக்கசில் நுழைந்து துருக்கிய இரா ணுவத்தை நாசமாக்கினன். இப்போர்களிலேயே அரேபிய உலோ ான்சு என்பான் விட்டுவிட்டுத் தாக்கும் அராபிய படையின் தன
பதியாகப் பெரும் புகழீட்டினன்.
1918 இல் அமெரிக்காவில் திரட்டப்பட்டுப்பயிற்றப்பட்ட படை கள் சிறிது சிறிதாகப் பிரான்சிற்கு வருவதைக் காணலாம். சேர் மனிக்கு நுண்ணறிவிருந்திருக்குமாகில் அவைகள் வந்தடையுமுன் அமைதிக்கு ஆகவேண்டிய இணக்கப்பேச்சை நடத்தியிருக்கலாம்.
53.3
எப்பிரில், 19.

Page 264
534
கேய்க்கின் இறுதி வெற்றி
ஆனல், அதன் இராணுவ அதிகாரிகள் தங்கள் சேதங்களைக் குறைக்க விரும்பவில்லை. இப்போதும் “உலகத்தை வெல்வோம், அன்றேல் மாள்வோம்” என்பதே அவர்கள் குறிக்கோளாகும். ஐரோப்பாவின் கதி உலூதன்தோவு கையில் இருந்தது. இவன் அமெரிக்காவினது இராணுவ வலிமையைக் குறைவாக மதித்தான். அமெரிக்கர் வரு முன்னே இலைதுளிர் காலத்தில் ஒரு பெரிய தாக்குதல் மூலம் பிரான்சை வெற்றிகொள்ள விரும்பினன். இரசியா யுத்தத்திலிருந்து விலகியதன் காரணமாக மேற்கணியில் அச்சமயம் சேர்மனியர் எண்ணிக்கையில் மேம்பட்டவர்களாயிருந்தனர். இதுவே அவர்களை அவர்களின் அழிவிற்கு இட்டுச் சென்றது. 1918 மாச்சு மாதத்தில் பிரித்தானியப் படை திடீரென்று தாக்கப்பட்டபோது அது, போதிய அளவு பலமுடையதாயிருக்கவில்லை. கேய்க்கு தாக்கமாட் டானென்ற நம்பிக்கையில் உலோயிடு யோச்சு நிர்வாகத் திறமைக் குறைவினல் கவனமின்றியிருந்ததும் இதற்கொரு காரணமாகும். சேர்மானியரின் வல்லமை கூடிய இறுதி முயற்சிக்கு தக்க வானிலை உதவியாயிருந்தது. இம்முயற்சியின் பயனுக, 1914 செத்தெம்பரில் நடந்தது போல, ஆங்கிலேயரும் பிரான்சியரும் பின் வாங்க வேண் டியதாயிற்று. பாரிசுக்கும் கால்வாய்த் துறைமுகங்களுக்கும் மீண் ம்ெ உடனடியாக ஆபத்து ஏற்படும் போலிருந்தது. ஆனல், பிரான் சிய, ஆங்கில படைகள் எதிர்த்து நிற்கும் உளப்பான்மையை இழந்துவிடவில்லை. கோடைகாலம் வந்தது ; எஞ்சியிருக்கும் ஐரோப்பிய அனுபவசாலிகளுக்கு அவ்வளவு பயங்கரமான பாா மாய் வந்துவிட்ட போரில் சேர ஆவலுடன் ஓயாது வந்துகொண் டிருந்த இளம் அமெரிக்கரைக் கொண்ட படைகளினல் ஊக்கம் பிறந்தது. காலம் மாறியது. போசு என்பானை ஏவுநர் தலைவனுக்கிய மையால் ஈற்றில் நட்பாளர் படைகளுக்கிடையில் கூடிய அளவு ஒத் துழைப்புப் பெறப்பட்டது.
ஆனல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த எதிர்த்தாக்குத
லுக்குரிய புகழ், கேய்க்கு என்பானின் தீர்மானிக்கும் திறனுக்கும்
பிரித்தானிய படையின் செய்திறனுக்குமே உரியது. பிரித்தானிய அரசாங்கம் 1919 அல்லது 1920 வரையில் யுத்தம் முடியுமென எதிர் பார்க்கவில்லை. கேய்க்கு தாக்கத் தீர்மானித்ததில் உலோயிடு யோச் சுக்குக் கடைசிவரையும் நம்பிக்கையில்லை. எவ்வாறெனினும், தாக் குதல் இம்முறை பலனுடையதாய் முடிந்தது. ஒரு யுத்தத்தில் ஆங் கிலேயர் ஒரேயொரு சண்டையில், அதாவது கடைசிச் சண்டையில் மாத்திரம் வெற்றிபெறுகிறவர்களென்ற பழமொழி முற்முக உண்மை யல்ல. ஆனல், 1918 ஒகத்துத் தொடங்கி நவெம்பர் வரைபு முள்ள நிகழ்ச்சிகளை உற்றுநோக்கினுல் அப்பழமொழி ஓரளவு

போர்
உண்மைபோலக் காணப்படுகிறது. இஃலதுளிர் காலத்தில் உலூதன் சோவின் தாக்குதல், எங்கள் கடல் முற்றுகையாற் பலமிழந்து சேர்மனியைச் சோர்வடையச் செய்து, இன்னும் எதிர்த்து நிற்ப தற்குத் தேவையான உளவலியையும் பொருள் வலியையும் தகர்த் தெறிந்தது. இத்தாலிய, துருக்கிய, போல்கன் முன்னணிகளில் சேர் மனியின் நட்பாளர் தோற்கடிக்கப்பட்டு செயலற்றவர்களாக்கப் பட்டனர். துருக்கியும் பல்கேரியாவும் வென்று கைப்பற்றப்பட்டன. ஒசுற்றிய-அங்கேரி, தொடர்ச்சியான புரட்சிகளால் அதன் பழைய இனவாரியான பகுதிகளாகக் குலைக்கப்பட்டது. உலூதன் கோவின் இரும்புபோன்ற மனவுறுதியும் தளர்ந்தது. அவன் போர் நிறுத்தத்தைக் கோரினுன், கைசர் ஒல்லாந்துக்கு ஓடியதும் சேர்மன் புரட்சியும் நவெம்பர் போர் நிறுத்தமும் பின் நிகழ்ந்தன.
நெப்போலியப் போர்களின் காலத்துடனும் முறைகளுடனும் முதலாம் உலக யுத்தத்தைச் சில அமிசங்களில் ஒப்பிட்டு இந்நூலை முடிப்பது பொருத்தமாயிருக்கும்.
முதலாவது, புவியியல் நிலையில் வேறுபாடு இருந்தது. யாக்கோ பின், நெப்போலியன் காலங்களில் பிரான்சு தன் வடமேற்குக் கோணத்திலிருந்து ஐரோப்பாவை வெற்றிகொள்ள முயற்சித்தது. சேர்மானிய வல்லரசுகள் மையத்திலிருந்து செயலாற்றின. போருக் கேற்ற முறையில் யாரும் வெல்ல முடியாதமைந்திருந்த மையமிது. இது இரசியர், போல்கன் நாட்டினர், இத்தாலியர், ஆங்கிலேயர், பிரான்சியர் ஆகிய சகலருக்கும் எதிராகப் போரில் ஒரு பாது காப்பை அவைகளுக்கு அளித்தது. கிழக்கும் பகுதியிலுள்ள அதன் நட்பாளர்களுடன் முக்கியமாக இரசியாவுடன், பிரித்தானி யாவின் போக்குவரத்துகள் பகைவல்ை தடைப்படுத்தப்படக் கூடிய னவாயிருந்தன. இந்த யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தால் ஐரோப் பாவையும் மேற்காசியாவையும் நிரந்தரமாகக் கீழ்ப்படுத்தி வைத் திருப்பது மத்திய வல்லரசுகளுக்கு நெப்போலியனையடுத்து ஆட் சிக்கு வந்தவர்களிலும் பார்க்க மிகவும் இலகுவாயிருந்திருக்கும். இலைப்சிக்குச் சண்டையின் முடிவு வேருயிருந்திருப்பினும் பிரான்சு சேர்மனியரை எக்காலமும் கீழ்ப்படுத்தி வைத்திருக்க முடியாது.
இரு யுத்தங்களின் சூழ்ச்சிமுறைகளைப் பற்றியும் போர் நட வடிக்கைகளைப் பற்றியும் கூறின், இரண்டிலும் பிரித்தானியாவின் பங்கு, நட்பு நாடுகளுக்குப் பண உதவியும் கடற்படை உதவியும் கொடுத்துப் பகைவனைக் கடலில் முற்றுகையிடலாகும். ஆனல், பிந்திய போரில் இன்னுமொரு கடமையை மேற்கொண்டோம். இலட்சக்கணக்கில் படைகளை அனுப்பினுேம் அந்த நான்கு ஆண்டு
535

Page 265
536
(8 míř
களிலும் பத்து இலட்சம் மக்கள் மடிந்தனர். இருபது இலட்சக் அக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர். 1793 தொடக்கம் 1815 வரையும் நடந்த பிரான்சிய போர்களில், எங்கள் இராணுவ முயற்சி முக்கியமாயிருந்தது ; எனினும் அதிகமாயிருக்கவில்லை. எங்கள் சாா சரி ஆண்டு உயிர்ச் சேதம் ஐயாயிரத்துக்கு மேற்படாதிருந்தது. சேர்மனிக்கு எதிராகச் செய்த போரில் எங்கள் சராசரி வருடாந்த உயிர்ச் சேதம் ஏறக்குறைய இரண்டரை இலட்சம். பிந்திய போரில் கூடிய இராணுவ முயற்சி செய்வது அவசியமெனக் காணப்பட் டது. இதற்குக் காரணம் ஓரளவு மத்திய வல்லரசுகளின் வெல்லுதற் கரிய வலிமையும் அவர்களின் புவியியல் நிலையும் ஆகும். நெப்போலி யன் செய்ததுபோல் சேர்மானியரை முழு ஐரோப்பாவையும் படை யெடுத்து அழிக்க ஒருமுறை விட்டோமாகில் அவர்களை மீண்டும் வெளியேற்றுவது ஒருபொழுதும் இயலாது.
ஆனல், தசை யுத்தத்தில் நாங்கள் கூடிய பங்கெடுத்ததற்கு இன் லுமொரு நியாயம், தரைப்படை, கடற்படை ஆயுதங்கள், தந்திரங் கள், என்பவற்றிலேற்பட்ட மாற்றங்களேயாம். இவை எங்கள் தீவு நிலைமையின் பழைய பாதுகாப்பு நிலைக்கு ஆபத்து விளைவித்தன. நெப்போலியனையும் பூலோனிலிருந்த அவனின் சமதள நாவாய்களை யும்விடக் கால்வாய்த் துறைகளைக் கைப்பற்றிய எவரும் நெடுந் தூரம் பாயும் பீரங்கிகளாலும் வானூர்திகளாலும் நீர்மூழ்கிக் கப்பல் களாலும் எங்கள் வாழ்வைக் கூடிய பயங்கரமான அளவுக்கு அச் சுறுத்தலாம். ஆகவே, படைவீரர்களான பிரித்தானிய மக்கள் சண் டையின் முடிவான நடவடிக்கைகளில் பிரதானமாகப் பங்குபற்றி னர். தற்கால இலைப்சிக்கு, உவாற்றலூச் சண்டைகள், நூற்றுக்கணக் கான மைல்கள் நீளமான அணிவகுப்பு வரிசை நெடுக நான்கு ஆண் டுகள் இரவு பகலாகப் புரியப்பட்ட தொடர்ச்சியான சண்டையே யாகும். தற்கால நிதி உதவி முறையும், போர்வீரரையும் உணவை யும் யுத்தத்திற்கு வேண்டிய மற்றப் பொருள்களையும் ஏற்றிச்செல் லும் சாதனங்களும் முக்கியமான முன்னணிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டாண்டு தோறும் இலட்சக்கணக்கான போர்வீரர்களை ஓயாது பதுங்கு குழிகளிலே தாபரிக்க உதவின.
இரு யுத்தங்களுக்குமிடையே மிகக் குறிப்பிடவேண்டிய வேறு பாடு, போர்க் கருவிகளையும் போர்த்தந்திரங்களையும் பற்றியதே யாம். நீண்ட கால நெப்போலியனின் போர்கள் தொடங்கியதும் முடிந்ததும் பிறவுண்பெசு துப்பாக்கிகளுடனும் நெருங்கிய ஒழுங் கமைந்த பிரித்தானிய அகலவரிசை, பிரான்சிய நீள்வரிசைப் போர் செய்யும் முறைகளுடனுமாகும். காலமுழுவதும் இங்கிலாந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்தியது. ஆனல், இம்முறையை எந்நாடாவது யுத்தத்திற்குப் பயன்படுத்தவில்லை.

பேரரசில் மாற்றம்
வெலிந்தனின் போர்க்கருவிகளும் உபாயங்களும் பெரும்பான்மையும் மாள்பருேவினது போன்றவை. நெல்சனின் கப்பல்கள் பிளேக் கினது போன்றவை. நெப்போலியன் பரிபாலனம், ஒழுங்குமுறை என்பவற்றிற்கும் போருக்குமுள்ள தொடர்பை உணர்ந்தான். ஆனல், நற்பேருகத் தற்கால விஞ்ஞானத்தினுல் இராணுவத்தில் ஏற் படக்கூடிய விருத்திகள் பற்றி அவன் யோசிக்கவில்லை. ஆனல், இச் சண்டையின்போதோ, போரின் முறைகள் நான்கு வருட காலத்திற் பன்முறையும் புரட்சிகரமான மாற்றங்களடைந்தன. படைப் பெயர்ச்சிச் சண்டையினிடத்தைப் பதுங்கு குழிச் சண்டையெடுத் தது. அதுமட்டுமல்லாமல், பெருமளவில் அபிவிருத்தியடைந்த ஆகாய, நீர்மூழ்கிச் சண்டைமுறை, சேர்மனியர் கையாண்ட நச் சுப் புகைச் சண்டை ஆங்கிலேயர் புதிதாகக் கையாண்ட உருள் கோட்டைச் சண்டைமுறை ஆகியவை ஈடிணையற்றன. நெப்போலி யனின் விஞ்ஞானரீதியிலமையாத போர்களில் இவற்றுக்கு ஒற்றுமை காணவே முடியாது. இப்பொழுதோ விஞ்ஞான அறிவு நன்கு பயன்படுத்தப்பட்டது. குடிமக்கள் யாவரும் படையில் சேர்க்கப் பட்டனர். எங்கள் முன்னேர்கள் யுத்த காலத்தில் (சுகொற்று) பாடல்களையும் நாவல்களையும் (உவேட்சுவேது) கவிதைகளையும் எழுதிக்கொண்டு (கொந்தபிள், தேனர்) சித்திரங்களை வரைந்து கொண்டும் மகிழ்ச்சியுடன் நெல்சனின் கவசத்தின் காப்பில் பாது காப்புடன் வாழ்ந்தார்கள். ஆனல், இப்போது பெரிய பிரித்தானியா வின் குடிகள் நான்கு ஆண்டுகளாகத் தங்கள் முழுப் பலத்தையும் அறிவையும் ஒருமுகப்படுத்திக் கொல்லவும் கொல்லப்படவும் ஆயத்தமாயிருந்தனர்.
பிற்று, காசில்ரீ என்போர் காலத்தில் பிரான்சக்கும் அதன் நட் பாளருக்கும் நட்டமேற்படுமாறு, நாம் நமது குடியே ற்றப் பேரரசை விருத்திசெய்தோம். ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர் சேர்மனிக்கு நட்டமான முறையில் அவ்வண்ணமே செய்தோம். ஆனல், முந்திய போரில் குடியேற்ற நாடுகள் எவ்வித பங்கும் எடுக்கவில்லை. ஏனெ னில், பிற்றின் காலத்துக்கு முன்பே முதலாம் பிரித்தானிய பேரரசு அழிந்துவிட்டது. இரண்டாவது பேரரசோ இன்னும் வளர்ச்சிபெற வில்லை. நூறு ஆண்டுகளின் பின்னர் அது முற்ருய் வளர்ந்துவிட் டது. பேரரசை அணிவகுத்து வரிசையிற் செல்லும்படி செய்ய உண் மையில் ஒரு பேரரசுக் கூட்டாட்சியமைப்பு இருக்கவில்லை. ஆனல் கனடா, அவுத்திரேலியா, நியூசிலந்து ஆங்கில ஒல்லாந்து, தென்ன பிரிக்கா ஒவ்வொன்றும் தாமாகவே விரும்பி, முழுப் போராட்டத்தி
அலும் உதவி செய்தன. அவை தங்களுக்குள் 15 இலட்சம் படைஞ
bo,

Page 266
538,
போருக்குப் பின்
ரைக் கொண்ட கொண்ட வெளிநாட்டுப் படைகளைத் திரட்டினர். யுத்தம் முடிந்ததும் ஒவ்வோர் ஆணிலப் பகுதியும் தன் நாட்டினத் தன்மையைப் பூரணமாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியது. அவைகள் ஒவ்வொன்றும் நாட்டுக் கூட்டவையில் தனித்தனிப் பிரதி நிதித்துவ உரிமையையும் யுத்தத்தில் தாங்களே கைப்பற்றிய சேர் மானிய குடியேற்ற நாடுகளைத் தாமே வைத்திருக்கும் உரிமையை யும் கோரின. ஈற்றில் 1931 இல் உவெசுத்துமினித்தர் நியதிச் சட் டம், ஆணிலங்கள் விரும்பினல் மட்டுமே பெரிய பிரித்தானிய பாரா ளுமன்றம் அவைகளுக்கான சட்டங்களை இயற்றலாமென்ற நீண்ட கால மரபொழுங்குக்குச் சட்ட அதிகாரம் அளித்தது. முடியின் மரபுரிமையைப் பாதிக்கும் சட்டங்கள் ஆணிலப் பகுதிகள் யாவற் றினதும் உடன்பாட்டின்படியே மாற்றப்படலாம். ஆணில அரசறிஞ ரிடமிருந்தேயன்றி, ஆணில நியமனங்களைப்பற்றியோ வேறெந்த நடவடிக்கை பற்றியோ அரசன் அறிவுரை பெறலாகாது. யுத்தத்திற் குப் பிந்திய உலகத்தில் பாராளுமன்றமன்றி, முடியே ஒரு சின்ன மாக விளங்கி விசுவாசத்திலும் சட்டத்திலும் பேரரசைப் பிணித் தது.
பிற்று, பொனப்பாட்டு என்போர் காலத்தில் இந்திய அரச மன் றங்களிலும் படைகளிலும் பிரான்சு செலுத்திய ஆதிக்கத்திற்கெதி ராகக் கடைசிப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றது. ஆனல், 1914-15 காலப்பகுதியில் ஐரோப்பிய சண்டையில் பங்குபற்று வதில் ஆர்வங்கொண்ட பெருந்தொகைப் படையினரை இந்தியா அனுப்பிவைத்தது. அவப்பேருக இந்தியாவிலும் எகித்திலும் அய லாந்திலும், புத்தம் நீடித்ததும் மிகவும் அபாயகரமானதாகவும் இருந்தமை அமைதியின்மையையும் அரசியல் மனவெறுப்பையும் உண்டாக்கிவிட்டது. தொடக்கத்தில் இவை தோன்றும் அறிகு சிறிதேனும் இருக்கவில்லை. w
யுத்த காலத்தில் பிரித்தானியாவின் அயலாந்தைப்பற்றிய போக்கு, இதயபூர்வமான நட்பு நிறைந்ததாகவும் 1795-1800 கால உளப்பான்மையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகவுமிருந்தது. ஆனல், செயலாட்சி கவலைக்கிடமானதாயிருந்தது. ஐரிசிய நாட்டின வாதிகள் கடல் கடந்து சேவை புரிய முதல்முறை ஆயத்தமாகத் திடீரென்று முன்வந்தனர். அப்பொழுது கிற்சினர் ஆதரவு காட்டி அவர்களைப் பயன்படுத்த மறுத்ததனல், 1914 இலையுதிர் காலத்தில் கிடைத்த வாய்ப்புக் கைதவறிவிட்டது. 1916 ஈத்தர் காலத்தில் (இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாள் விழா) இடபிளினில் சின்பெ யின் கலகம் கிளம்பி, அதன் தலைவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்ட னர். இச்செயல் இவர்களை ஐரிசிய மக்களின் எண்ணத்தில் உயிர்த்தி

பேரரசில் மாற்றம்
யாகிகளாக மாற்றி, இரடுமனின் தனியாட்சிப் பூட்கையிலிருந்து சின்பெயினரின் குடியரசுக் கோரிக்கையாக அத்தீவின் குறிக்கோளை மாற்றியது. போர்முடியுங் காலத்தில் இம் மன மாற்றம் பூரணமாகி உயிர்ச்சேதம் நிறைந்த அவமானமான இடை நிகழ்ச்சியொன்றின்
பின் 1921 பொருத்தனைக்கு வழிகாட்டியது. இப்பொருத்தனை ஐரி
சிய சுயேச்சை நாட்டை ஓர் ஆணிலப் பகுதியாகத் தாபித்தது. அல்சுதரில் அடங்கியுள்ள ஆறு புரட்டெசுத்தாந்த மாவட்டங்கள் சிலமாதங்களுக்கு முன்னரே உவெசுத்துமினித்தர் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்துடன் கூடிய தங்கள் சொந்தத் தனியாட்சி முறையையும் பெற்றன.
யுத்தத்தின்பின் எகித்து, பெரிய பிரித்தானியாவின் நெருங்கிய நட்புறவு நாடெனினும் ஒரு சுதந்திர நாடாயது. இந்தியாவும் சுய ஆட்சி பெறுவதற்கான முன்னடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1918 இன் பின் பேரரசு பெரும்பாலும் பழைமை பேண் கட்சி அா சறிஞரால ஆட்சி செய்யப்பட்டது. எனினும் அவர்களின் பேரரசுப் பூட்கை மிகவும் தாராளத் தன்மையுடையதாயிருந்தது. யுத்த காலத்தில், ஆங்கிலோ-சக்சன் ஆதிக்கம், கழிந்த ஓர் ஊழியைச் சேர்த்ததென்பது தெரிந்ந்தது. தென்னுயிரிக்கா பாதுகாக்கப்பட் டது. போதா, சிமற்சு என்பாரைத் தலைமையாகக் கொண்ட ஆணி லப்படை அயலிலிருந்த சேர்மானிய ஆள்புலங்களைப் படையெடுத்து அழித்தன. இவர்கள் பன்னிராண்டுகளின் முன்னர்தான் போர்க்
களத்தில் எங்கள் பகைவராயிருந்தனர்.
யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகளுடன் எங்கள் தொடர்புகள், நெப்போலியன் காலத்திற்போல அதே பொதுச்சூழ்நிலைகளுக்கு ஓரளவு உட்படலாயின. ஆனல், கூடிய புத்தி நுட்பமான செயலாட் சியாலும் உத்தமமான உளப்பான்மையாலும் விளைவு எதிர்மாமுன தாயிற்று. இரு சந்தர்ப்பங்களிலும் போரிட்ட வல்லரசான இங்கி லாந்தின் நலன்கள், ஐரோப்பிய சந்தைச் சாவடிக்குத் தன் பொருள்களே அனுப்ப விரும்பும் நடுநிலையான வணிக வல்லரசின் நலன்களுடன் மோதின. ஆனல், பேசிவல் அமைச்சு ஐக்கிய நாடு களுடன் போர் நடத்துதல் பற்றி நன்கு ஆலோசியாது அப்போரில் இறங்கியது. எனினும், அப்படியான தவற்றை சேர் எட்டுவேட்டு கிறே செய்யவில்லை. தொடக்கத்திலேயே எங்களுக்கெதிராக அமெ ரிக்க அபிப்பிராயம் எழுவதைத் தடுக்கப் பருத்தியையும் பகைவ னுக்கு அதிகம் தேவைப்பட்ட வேறு பொருள்களையும் கொண்டு செல்வதற்கு அனுமதி யளித்தான். அதனல் போரில் தனக்கு ஏற் படக்கூடிய பாதகமான விளைவுகளே அவன் பொருட்படுத்தவில்லை. சேர்மானியர் எஞ்சியவற்றைச் செய்து முடித்தனர். பிரித்தானிய
539

Page 267
54
கடற் போர்
முற்றுகைரீதியான குழியல் நிரம்பிய முறைகள், ஐக்கிய நாட்டில் நட்பாளருக்கு அனுதாபம் காட்டும் உணர்ச்சி அமெரிக்க மக்களை யும் கப்பல்களையும் சேர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தாக்கியமை ஆகியவை செயற்படவும் அதன் மூலம் வல்லமை படைத்த இந் நடு நிலைமை நாட்டைப் போரில் எங்கள் பக்கம் ஈர்க்கவும் இடமளித் தன.
முற்றுகை நிலைமைகள் நெப்போலியன் காலத்திலிருந்து பல முக் கியமான வகைகளில் வேறுபட்டிருந்தன. பகைவனின் முக்கியமான கடற்படையின் முற்றுகை, வெகு தூரத்திலுள்ள இசுகாபா புளோ விலிருந்து எங்களால் நடத்தப்பட்டது. எனினும் படையெடுக்கும் எல்லா வாய்ப்புக்களையும் தடை செய்வதிலும் பகைவனின் பெரிய கப்பல்களை இயங்காமற் செய்வதிலும், பிறத்து, தூலோன் என்னு மிடங்களுக்கப்பாலிருந்து செய்யப்பட்ட நெல்சனின் நெருங்கிய காவல் போலவே செயற்றிறமையுடையதாயிருந்தது. நெல்சன் இருந்தபோதிலும் பிரித்தானிய வணிகத்துக்கெதிராகச் சிறு சிறு கூட்டங்களாய்ப் போரிட்ட நெப்போலியப் போர்க்கப்பல்களும், விசை போர்க்கப்பல்களும் யுத்தத்தின் பிற்பகுதியில் இங்கிலாந் தைப் பட்டினியால் வருத்திச் சரணடையச் செய்யும் நிலையிலிருந்த சேர்மானிய நீர்மூழ்கிக் கப்பலுக்கு நிகராகாவெனவே கூறலாம். புதிய ஆபத்தை எதிர்த்துப் போராடக் கண்டு பிடிக்கப்பட்ட யுத் தம் செய்யும் புதிய முறைகள் முழுவதும் தற்கால விஞ்ஞான செய் திறனுடன் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், அரச கடற்படையும் வணிகக் கடற்படையும் தங்கள் பழைய போர்த்திறமையையும் தைரியத்தையும் இழந்துவிடவில்லை எனலாம்.
நெப்போலியன் காலத்திற்போல் இப்போது இங்கிலாந்து தனக் குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதில்லை. என்வே, கட லாதிக்கம் அதற்கு எக்காலத்திலும் பார்க்க இன்றியமையாததா யிற்று. ஆனல், அனுபவத்திற் கண்டதுபோல், மத்திய பேரரசுகளும் எல்லையில்லாமல் நெடுங்காலத்திற்குத் தேவையான உணவை உற் பத்தி செய்ய முடியவில்லை. பிரித்தானிய முற்றுகை கடுமையான பொழுது சிறப்பாக அமெரிக்க யுத்தத்திற் சேர்ந்து குழியியலிலும் கடலிலும் திக்குமுக்காடச் செய்யும் பிடியை இறுக்கியபொழுது சேர்மனியும் ஒசுற்றியாவும் பசியால் வருந்தத் தொடங்கின. கைத் தொழிற் புரட்சியின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் சீர்திருத்தத்தி லும் புதுமையிலும் எந்த அளவுக்கு உன்னத நிலை அடைந்திருந் தனவோ அந்த அளவிற்கு உணவு விருத்தி குறைந்துவிட்டது. தற்காலத்தில் இலட்சக்கணக்கானுேர் வாழ்க்கையை நடத்தும் பொருளாதார அமைப்பு சர்வதேசங்களையும் பாதிப்பதாகவிருந்

உள்நாட்டு நிலைமை
தது. விஞ்ஞானகாலப் போர்ச் செயல்களால் ஏற்படும் சேதத் தைத் தாங்கி வெகுகாலம் அது நிலைத்திருக்க முடியாது. ஒரு தன்மையாக நான்கு ஆண்டுகளைக் கடத்த முடிந்தது. இக் காலப் பகுதியில் நூற்முண்டுகளாகத் திரட்டி வைத்த செல்வ மும் வளர்ந்து வந்த நாகரிகமும் அழிந்துபோயின. பயங்கர மான நான்கு ஆண்டுகளும் முடிவுக்கு வந்தபொழுது ஐரோப்பா பொருள் நிலையிலும் ஒழுக்க நிலையிலும் சீரழிந்திருந்தது. பழைய நன்னிலையை அடைவது அசாத்தியமாயிருந்தது. அவ்வகையான தொரு போர் மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சத்தை அகற்று வதைத் தவிர வேறென்றும் உயர்தா நாகரிக வாழ்க்கையின் சுதந்திரத்தையும் தன்னிலைக்கு மீளும் ஆற்றலையும் மீண்டும் தொடக்க உதவியளிக்க முடியாது. இன்னுமொரு யுத்தமும் வந்து சேர்ந்தது.
நெப்போலிய யுத்தத்துக்கும் சேர்மன் யுத்தத்துக்குமிடையே பாட்டாளிகளின் நிலைமை பற்றியும் பிரித்தானியருள் ஒருவருக் கொருவரிடைத் தொடர்பு பற்றியும் ஒரு குறிப்பிடத் தக்க வேறு பாடு காணப்படுகிறது. பிற்றும் காசில்றியும் அரசியற் றிட்டத்துக்கு அமைந்தொழுகும் அரசறிஞராகப் பொதுமக்கள் சபையைக் கொண்டு அதன்மூலம் போர் புரிந்தனர். நாட்டின் அபாய வேளே யில் யாக்கோபியர் எதிர் இயக்கத்தை அடக்குதலையும் பாராளு மன்ற சிர்திருத்தக்காரர்களை மெளனமாயிருக்கச் செய்தலையும் தவிர எவ்வித முகாமையோ சலுகையோ பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாக அவர்களுக்கோ அவர்களின் இணைவர்களுள் எவருக்கோ மனதிற் படவில்லை. யுத்தத்தில் வெற்றியடைதல் பற்றி யும் இந்த மதிப்பீடு தவருகவில்லை. ஆனல், 1914 - 18 காலப் பகுதி யில் உள்நாட்டு நெருக்கடிகள் மிகவும் வேறுபர்டான முறைகளால் சமாளிக்கப்பட்ட வேண்டியிருந்ந்தன. 1918 தொடக்கத்தில் யுத்தம் இன்னும் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தபொழுது பொதுச் சம்மதத்துடன் நான்காம் சீர்திருத்த முறி நிறைவேற்றப் பட்டது. இம்முறி செயலளவில் சகல ஆண்கள் வாக்குரிமையையும் பெருமளவிற்குப் பெண்கள் வாக்குரிமை என்னும் புதிய தத்துவத் தையும் அளித்தது. பெண்கள் வாக்குரிமை கோருவோர் தங்கள் எதிர்ப்புகளைக் கைவிட்டமையும், தொழிற்சாலைகளிலும் வேறிடங் களிலும் பெண்கள் ஆற்றிய சிறந்த யுத்த கால சேவையும், அவர்க ளுக்கு வாக்குரிமை அளிப்பதை மறுத்து நின்ற பலரின் மனதை மாற்றியது. அரசாங்கத்துக்கும் பொதுமக்கள் சபைக்கு மிருந்த தொடர்பைப் பொறுத்த அளவில் சருவாதிகார அமிசம் பிற்றின் காலத்தினும் கூடிய வலுவுடையதாயிருந்திருக்கலாம். ஆனல், 1914-18 காலப் பகுதியில் ஆங்கில மந்திர அமைச்சர்கள் எப்
5垒基

Page 268
542
உள்நாட்டு நிலைமை
பொழுதும் மக்களிடம் மதிப்புடன் கோரிக்கை செய்ய வேண்டிய வராயினர். ஏனெனில், வெடிமருந்துச் சாலையில் வேலை செய்வோர் தங்கள் வேலையின் வேகத்தைக் குறைத்தால் அல்லது நிறுத்தினல் அவர்களைக் கொண்டு திருத்தியாக வேலை செய்விப்பது தண்டலாள ாதும் விர வேளாண் மரபினதும் அதிகாரத்தில் இனிமேல் இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்தது. கீழ் வகுப்பினர், வாக்குரிமை
பெற்ற, ஓரளவு கல்வி பயின்ற குடியாட்சியினராக விருத்தியடைந்த
மையால் இலத்து காலத்தில் அடக்கு முறைகளால் நிறைவேற்றப் பட்டவற்றை இப்போது இசைவிப்பின் மூலமே செய்விக்க முடிந் தது. பிரான்சிய யாக்கோபியருடன் செய்த போரில் யுத்த காலத் திற்கேற்ற வழிவகைகள், தொழிற் சங்கங்களை அடக்கி ஒடுக்கும் கூட்டு விதிகளாகும். சேர்மனியருடன் நடத்திய போரில் அவ்வழி வகை கூலியை முன்னெருபோதுமில்லாத அளவிற்கு உயர்த்தித் தொழிற்கட்சித் தலைவர்களைக் கூட்டு மந்திரத்திற் சேருமாறு தூண் டுதலேயாம். யுத்த காலக்கொடுமை, நூறு ஆண்டுகளுக்கு முன் போலக் கூலிப் பிழைப்பாளரை அவ்வளவு கடுமையாகத் தாக்க வில்லை. எப்படியாயினும் நெப்போலியனுக்கெதிராகப் போர் நடந்த காலத்திலிருந்ததைவிட, இக்காலத்தே, யாவருக்கும் பொதுவான ஆபத்தான போர் நீடித்தவரையில், எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த பிரித்தானியரிடையே நிலவிய சகோதா உணர்ச்சி, ஆழ
மான தென்க.
1915 இல் கொன்சுதாந்திநோப்பிளேக் கைப்பற்றியிருக்கக் கூடு மாகில், மத்திய வல்லரசுகளுக்கெதிராக எல்ல r போல்கன் நாடுகளையும் ஒன்று கூட்டி, இரசியாவுக்குத் தேவையான பொருள் களைத் தருவிக்கத் தங்குதடையற்ற ஒரு பாதையையும் திறந்து இரு ஆண்டுகளில் வெற்றி எய்திருக்கலாம். ஆனல், கிச்சினரும் மந்திர மும் தாதனெலிச்மீது செய்த கப்பல், இராணுவத் தாக்குதல்க ளுக்கு ஏற்ற நேரத்தில் ஏற்ற உதவியளிக்கத் தவறினர். இதனல், யுத்த காலத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த வாய்ப்புக் கைநழுவியது. அத்தோல்வியின் விளைவாக மேற்கு முன்னணியில் இலட்சக்கணக் கான மக்களின் உயிர்ச்சேதத்தால் படிப்படியாகச் சோர்வடைந்து, பிரித்தானிய முற்றுகையால் ஒசுற்றிய-அங்கேரியும் சேர்மனியும் படிப்படியாகப் பட்டினியால் வருந்திய பின்னரே, போர் ஒரு முடி வுக்கு வந்தது. 1917 இல் நிகழ்ந்த போல்சிவிக்குப் புரட்சியின் விளை வாக இரசியா, நட்பாளர் கூட்டுறவிலிருந்து விலகியது. அப் பொழுது, சேர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களால் அமெரிக்கக் கப்பல் கள் அமிழ்த்தப்படும் செயலை மேலும் மன்னிக்க முடியாதிருந்த ஐக் கிய நாடுகள் அதனிடத்தை மிக அவசியமான நோத்தில் நிரப்பின.

போர்க்கால அரசியல்
போரின் இரண்டாம் ஆண்டில் அசுகுவிதின் தலைமையில் தாரா ளரையும் பழைமை பேணுவோரையும் கொண்ட ஒரு யுத்த காலக் கூட்டமைச்சு உருவாக்கப்பட்டது. 1915 இல் தாதனெலிசில் ஏற் பட்ட தோல்வியின் இறுதியான விளைவு 1916 திசெம்பரில் அசுகு விது வீழ்ச்சியடைந்தமையாகும். ஆனல் இது உடனடியானதன்று. அவனுடன், யுத்த நெருக்கடிக்குப்பின் வாழ முடியாத, ஆனல் சமாதான உடன்படிக்கையில் மிகவும் பயன் அளித்திருக்கக் கூடிய தாராள அமிசமும் மறைந்தது. யுத்த கால முதல் அமைச்சருக்கு வேண்டிய பல பண்புகள் அசுகுவிதிடம் இருந்தன. ஆனல், அவ னுக்கு ஆற்றல் படைத்த இராணுவ அறிவுரையாளனுெருவன் கிடைக்கவில்லை. அவன்தன் யுத்த செயலாளனுகிய காட்டூமோ கிச் சினரோ அவன் விரும்பிய அளவு ஆற்றல் படைத்தவராயிருக்க வில்லை. நாடு, கட்டாயப் படைச்சேர்ப்பை ஏற்றுக்கொள்ள இன்ன மும் தயாராகாத நிலையிலிருக்கையில் கிச்சினர், போரின் தொடக் கத்திலேயே, அதன் அளவையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டித் தொடக்க மாதங்களிலேயே “கிச்சினர் படைகளில் ' விரும்பினேரைச் சேரும்படி வேண்டிக்கொண்டான். அவன் சிறந்த தனிப் பண்புடையவனென்பது உண்மை. பொது மக்களின் உளத் தில் அவனுக்கொரு சிறந்த இடம் நிலையாயிருந்தது. ஆனல், தற் கால விஞ்ஞானமுறைச் சூழ்நிலையில் ஓர் உலக யுத்தத்தை நடத் துவதற்கு அவசியமான எளிதாகவும் விரைவாகவும் முடிவுகளுக்கு வரக்கூடிய உளம் அவனுக்கிருக்கவில்லை.
நாட்டினரிற் பெரும்பான்மையோரின் கருத்துப்படி, அத்தருணத் துக்குத் தகுந்தவன் உலோயிடு யோச்சாவான். ஆயுத சாலை அமைச்சனுக அவன் செய்த முயற்சி யுத்த அலுவலகத்தில் முன்னாேயிருந்த குறைபாடுகளை நீக்கியது. 'அவன் க ற் பஞ) சத்தி எப்பொழுதும் தொழிற்பட்டுக் கொண்டேயிருந்தது. அவனின் ஊக்கம் மற்றவரையும் பற்றும் தன்மையது. பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்முகத் தீர்த்த அவனின் துணிகரமான உணர்ச்சி நிலை, அசுகுவிதின் பொறுமையைச் சோதிக்கும் விசக்தி தரும் அமைதி யினும் சாதாரண மக்களுக்கு அதிக நம்பிக்கையளித்தது. வெற்றி யில் உலோயிடு யோச்சின் பங்கைப் பற்றி எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்தே தீரும். ஆனுலும், அவனின் முயற்சியும் துணிவும் போரின் கடைசி இரு கொடூரமான ஆண்டுகளில் நாட்டுக்கு நம் பிக்கையும் அதன் தலைவர்களுக்கு ஊக்கமும் அளிக்க உதவின.
543

Page 269
544
பின்னுரை
பின்விளைவு
போசின் குழியலுக்கும் கேய்க்கின் தாக்குதலுக்கும், ஈற்றில் சேர் மானியப் படை விட்டுக்கொடுத்ததனல், 1918 நவெம்பரில் எதிர் பாராதவிதமாகத் திடீரென வெற்றி கிடைத்ததும், இங்கிலாந்தும் பிரான்சும் கொடிய யுத்த மனநிலையிலிருந்து அமைதிக்குத் தேவை யான நிதானம், முன்னறிவு, பெருந்தன்மை என்பன கொண்ட நிலைக்கு ஒரு கணத்தில் தங்கள் எண்ணங்களைத் திருப்ப வேண் டியதாயிற்று. பிரான்சு நிதான புத்தியுடன் யோசிப்பதற்குப் பல ஆண்டுகள் ஆயின. ஆனல், இரண்டோர் ஆண்டின் இங்கிலாந்து தன் வழக்கமான நற்றன்மையை மறுபடியும் பெற்றுவிட்டது; ஆயினும் தன் நல்ல பகுத்தறிவைப் பெறவில்லை. அவப்பேருக,யுத்த மனவெழுச்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் அடங்காமலி ருந்த முதல் ஆறுமாதத்தில், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டியதாயிற்று. உலோயிடு யோச்சு, அக்கண மனவெழுச்சி களுக்கு எதிராகப் போராடித் தன் பிரபல்யத்தையும் தன் பெருஞ் செல்வாக்கையும் இழக்க விரும்பவில்லை. இவ்வெழுச்சிகள் எளிதில் மாறுகின்ற அவனுடைய உளத்தை அதிகம் பாதிக்கும் தன்மை வாய்ந்தன. மேலும், யுத்தத்தின் கடைசி இரண்டாண்டுப் பகுதியில் அவன் முதலாம் அமைச்சனக அசுகுவிதின் பதவியை ஏற்றபோது நிலவிய குழல்கள் அவனுக்குந் தாராளர் கட்சியிற் பாதிக்கு மேற்பட்டோர்களுக்குமிடையில் ஒரு பிளவை யுண்டாக்கியது. உலோயிடு யோச்சு போர் நிறுத்தகாலத்தில் சேர்மானியரின் யுத்த பாதகங்களுக்காக வஞ்சம் தீர்க்க வேண்டுமென உக்கிாத்துடன் குரல் எழுப்பிய புகழ்பெற்ற பத்திரிகைகளின் சொந்தக்காரருடன் அரசியல் நட்புறவாயிருக்கக் காணப்பட்டான். ஆகவே, 1918 திசெம்பர் பொதுத் தேர்தலில் அசுகுவிதின் கட்சியினர் உலோயிடு யோச்சினுல் வேண்டுமென்றே விலக்கப்பட்டு, தேர்தலில் ஒழிக் கப்பட்டனர். அமைதி காப்பதில் மிதவாதிகளாக இருந்திருக்கக் கூடிய தாராளர் கட்சி பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அது மீண்டு ஒரு காலமும் முக்கியத்துவம் எய்தவில்லை. ஏனெனில், பிந்திய தேர்தல்களில் தொழிற்கட்சி படிப்படியாக அதனிடத்தைத் தன தாக்கிக்கொண்டது.

வேர்சைப் பொருத்தனை, 1919
போர் நிறுத்தத்திற்கும் வேர்சையில் நடந்த அமைதி ஏற்பாட் டுக்கு மிடையில் இந்தச் சூழல்களில் நடத்தப்பட்ட பொதுத்தேர் தலில், யுத்தத்திற்காகச் சேர்மனியிடமிருந்து நட்ட ஈட்டை அற விடுவதென்று வாக்குறுதி செய்து கொண்ட ஒரு பொதுமக்கள் சபை தெரிவு செய்தனுப்பப்பட்டது. மிகப் பெரும்பான்மையோசை உலோயிடு யோச்சு தன்வசமாக்கினன் - உலோயிடு யோச்சும் அப்பெரும்பான்மையோர் வசமாயினன். இத் த கைய jడి) யில், இவன் உலகத்திற்கு அமைதியளிக்கும் பொருட்டு கிள மன்சோவுக்கும் உவில்சனுக்கும் உதவிபுரிய வேர்  ைசக் குச் சென்றன். துன்பமணுபவித்த பிரான்சு வஞ்சம் தீர்ப் பதில் இங்கிலாந்தைவிட இன்னும் அதிகம் கண்ணுங் கருத்துமாயிருந் தது. உவில்சன் நல்லெண்ணமுடையனயினும் ஐரோப்பாவின் உண்மை விடயங்களைப் பற்றியோ அமெரிக்க பொதுசன அபிப் பிராயத்தைப் பற்றியோ நன்கறிந்திருக்கவில்லை.
இாைன் நதியின் கிழக்குக் கரையின் சேர்மானிய பகுதியை, பிரான்சு நிரந்தரமாகக் கைப்பற்றுவதை உலில்சனும் உலோயிடு யோச்சும் தடுத்தனர். பிரான்சிய எல்லைப்புறங்களைத் தாக்குதலிலி ருந்து காப்பாற்றுவதாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் உறுதி யளித்த பின்னரே இதைத் தடுக்கக் கூடியதாயிற்று. இந்த வாக் குறுதியை முறையேற்புச் செய்ய அமெரிக்கா மறுத்தது. தொடர் ந்து இங்கிலாந்தும் சிறிதுகாலம் இக்கடப்பாட்டை மறுத்தது. எனவே, சில ஆண்டுகளுக்குச் சேர்மனியைப் பற்றிய பிரான்சிய பூட்கையைக் கட்டுப்படுத்த முடியாது போயிற்று. அதே சமயத்தில் சேர்மனிக்கு நாடுகளைக் கைப்பற்றுவதில் இருந்த ஆசை மீண்டும் தலைகாட்டுவதற்கும் இது காரணமாகிறது.
பொதுவாக, வேர்சையில் வரையப்பட்ட ஐரோப்பிய எல்லே கள் தவருனவையல்ல. புதிய ஐரோப்பா, நாட்டினம் என்னும் உண் மையான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பல நாடுக ளால் ஆக்கப்பட்டிருந்தது. அரசறிஞர், மாற்றத்தை உறுதிப்படுத்த வேர்சையில் கூடுமுன், யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின் விளை வாக ஒசுற்றிய அங்கேரியின் மரபுரிமையில் வந்த நாடுகள், உண் மையாகவே அவைகளின் சொந்தக் குடிமக்களின் செயலால் உரு வாகிவிட்டன. ஆபிசுபேக்கரின் பேரரசை அழித்தது யுத்தமே ; சமாதானமன்று. 1920 இல் சோவியத்து இரசியாவுடன் புரிந்த சண்டையின் விளைவாகப் போலந்து முன்யோசனையின்றி, இங்கி லாந்து ஒப்புக்கொண்ட கேசன் எல்லைக்கு அப்பாலும் தன் கிழக்கு எல்லைப்புறத்தை விரிவாக்கியது.
545

Page 270
546
வேர்சைப் பொருத்தனை, 1919
வெற்றியடைந்த நட்பாளர் சேர்மனியை நடத்திய முறையில் இருவகைத் தவறுகளையிழைத்திருந்தனர். முதலாவது சேர்மனியி லுள்ள யுத்த முதல்வர்களே இரகசியமாகப் படைக்கலம் தயாரிப்ப தைத் தடைசெய்ய, அவர்களைத் திறமையுடன் மேற்பார்வையிடும் முறை எதுவும் கட்டாயப்படுத்தப்படவில்லை. அன்றியும், புதிய சேர்மன் குடியரசைச் சேர்மன் மக்கள் விரும்பத்தக்கதாக்குவ தற்கு எதுவும் செய்யப்படவில்லை. சேர்மனி ஓர் அமைதியான குடியாட்சியாக நிலைப்பதற்கு உதவி செய்வதே, இங்கிலாந்தின தும் பிரான்சினதும் முதற் குறிக்கோளாயிருந்திருக்க வேண்டும். வேர்சையில் உடன்படிக்கையின் நிபந்தனைகளால் சேர்மன் நாட்டி னர் தாழ்த்தப்பட்டனர். இந்நிபந்தனைகளின் கொடுமை பற்றி வெற்றிபெற்ருேருக்கு முறையிடத்தானும் சேர்மனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அமைதியாக ஒசுற்றியாவுடன் சோவும், அனு மதிக்கப்படவில்லை. நாட்டுக் கூட்டவையிலிருந்தும் ஒதுக்கப்பட் டது. நட்டஈடு விடயத்திலும் ஆத்திர மூட்டும் வகையில் அது நடத்தப்பட்டது.
அதேகாலத்தில் நாட்டுக் கூட்டவை நிறுவப்பட்டுப் பொருத்தனை நிபந்தனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக்கப்பட்டது. ஆனல், பெரிய வல்லரசுகளில் பெரிய பிரித்தானியா ஒன்றே கூட்ட வையின் உண்மையான பெருந்தன்மையான உளப்பாங்குக்கு ஆதா வளித்தது. சேர்மனியின் குறைபாடுகளை, முக்கியமாக நட்ட ஈடு பற்றியனவற்றை நீக்க இங்கிலாந்தே ஓரளவு முயற்சிசெய்தது.1918 திசெம்பர் பொதுத் தேர்தலில் நிலவிய மனநிலை, பொருத்தனை நிபந் தனைகளை விதித்தபின் விரைவில் ஆங்கிலேயரின் மன்னிக்கும் குண முடைய நெஞ்சத்திலிருந்து அகன்றது. ஆங்கிலேயர், யுத்தத்தின தும் அமைதியினதும் இயற்கையான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு வலுவிழந்ததான நாட்டுக் கூட்டவையில் அளவுக்கு மிஞ்சிய நம் பிக்கை வைத்துத் தமது படைகளைக் குறைக்கவும் போாைப் பற் றிய நினைவுகளை மறக்கவும் விரைந்தனர்.
அமெரிக்கா ஒதுங்கிக்கொண்டது. நாட்டுக் கூட்டவையின் பூட் கைக்கு ஐரோப்பாவை ஈடு வைப்பதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட அமெரிக்கா கடைசி விநாடியில், தான் அதிற் சேர மறுத் துவிட்டது. இதன் பின் அமைதியைப் பேணுவதற்கும் அது எவ் வகை நடைமுறை ஒத்துழைப்பையும் தாவில்லை. அது பின்வாங் கியமை ஐரோப்பிய அரசியற் குழப்பத்தை இன்னும் மோசமாக் கியது ; ஐரோப்பிய குழப்பம், அதனை மீண்டும் ஐரோப்பிய அலு வல்களில் தலையிடுவதில்லையெனத் தீவிரமாகத் தீர்மானிக்கச் செய் தது. நட்ட ஈட்டு ஆணைக்குழுவிலிருந்து அது விலகிக் கொண்டது.

நாட்டுக் கூட்டவை
இங்கே அது இருந்திருக்குமாயின் பிரான்சைக் கட்டுப்படுத்துவதில் இங்கிலாந்துக்கு உதவியாயிருந்திருக்கும். இதஞலேயே இங்கிலாந் தும் பலவாறு கண்டித்துக் கொண்டிருந்தபோதும், 1923 இல் உரூர் என்னும் சேர்மானிய ஆள்புலம்மீது பிரான்சு கார ண மின் றிப் படையெடுக்கவும் விட்ட அச்செயலுக்குப் போலிச் சட்ட நியாயங்களைச் சாட்டாகக் காட்டவும் முடிந்தது. இவற்றின் விளைவு, கிற்லரின் சேர்மனியாகும். பாசிசு-நாசிச ஆட்சிமுறை கள் எழுந்ததற்கு வேருெரு முக்கியமான காரணம் ஒரே காலத் தில் பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றியும் அதற்கு எதிராகவும் நடந்தமையாகும். இரசியாவில் போல்சிவிக்குப் புரட் சியின் வெற்றி இக்கோட்பாட்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரும் ஆதரவை அளித்தது. சுதந்திரம், குடியாட்சி, பாராளுமன்றங் கள் என்பவை ஐரோப்பாவின் பெரும் பாகத்தில் அழிந்தமையே யுத்தத்தின் விளைவாயிருந்தது. சித்திரவதை செய்தலையும் கொலை செய்தலையும் அடிப்படையாகக் கொண்ட நாசிச ஆட்சிமுறை தற் கால ஐரோப்பா தன் அனுபவத்தில் கண்ட எதனிலும் அளவிட முடியாத அளவு கொடுமையானதாயிருந்தது. ஆகையால் 1940 இல் பெரும்பாலும் முழுக் கண்டத்தின் மீதும் அது தன் பயங்கா நடவடிக்கைகளைப் பாப்பும் வரையும் அதன் உண் மையோ உட்கருத்தோ இங்கிலாந்தில் நம்பப்படவில்லை.
அமைதிப் பொருத்தனைகளுக்கு ஒப்பமிட்டதையடுத்த ஆண்டு களில் இங்கிலாந்தின் பூட்கை, நல்லெண்ணம் எனும் ஒரு நற்பண் புடையதாயிருந்தபோதும் முன்னறிவையோ, மன உறுதியையோ கொண்டதாயிருக்கவில்லை. சேர்மானிய மக்களின் ஆத்திரத்தை ஆரம்பத்திலேயே தணிக்கக்கூடியதாயிருந்தும் அவ்வாறு செய்வ தற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுத்தம் மிகவும் நெருங்கி அதனுல் ஆபத்தேற்படும் வரை உண்மையாகப் பயனளிக் கும் ஆயத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
ஆங்கில மக்கள் தற்கால ‘முழு' யுத்தத்தின் விவரிக்க முடியாத கோரங்களின் நான்கு ஆண்டு அனுபவத்தின் பின்னர், இயல்பா கவே, அமைதியியக்கத்தையும், ஒருதலையான படைக்கல ஒழித்தலை யும் அமைதியைப் பெறுவதற்கான ஒரு முறையாகக் கருதியதோடு, நாட்டுக்கூட்டவையையும், மாயவித்தையாலோ அல்லது தானே
இயங்கும் செயல்முறையாலோ எல்லாரையும் காப்பாற்றி வைத்திருக் கக்கூடிய ஓர் இயந்திரமென, வாழ்த்துக்கூறி “ வரவேற்ற ன ή,
அந்தோ! இங்கிலாந்து, நாட்டுக் கூட்டவையின் ஆணைகள் மதிக் கப்படவேண்டுமென எதிர்பார்த்திருந்தால், கட்டா யப்படுத் தி மற்ற நாடுகளை இவ்வாணைகளுக்குக் கீழ்ப்படியச் செய்யும் பல
மான நிலையில் தன்னை வைத்திருக்க வேண்டும். ஏனெனில்,
547

Page 271
548
நாட்டுக் கூட்டவை
வேறெந்த நாட்டுக்கும் அங்ஙனம் கட்டாயப்படுத்தற்கான பல மும் விரும்பமும் இருக்கவில்லை. ஒரு ஐரோப்பிய வல்லா சாக இருக்க அது கருதினுல் மற்ற நாடுகள் போ ருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தது போலத் தானும் தயா சாகியிருக்க வேண்டும். எல்லாவகைகளிலும் மிகவும் தீக்குறி யான நிகழ்ச்சியாய 1933 நாசிப் புரட்சியின் பின்தானும் எங்கள் நாட்டில் எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை. சேர்மனி தனது பெரிய தரைப்படையை மீண்டும் உருவாக்குகையில் நாம் வாளா விருந்தோம். அதுமட்டுமன்றி ஆகாயத்தில் தற்காலிக ஆதிக்கத் தைப் பெறவும், பொருத்தனைக்கு மாமுக இசைனிலந்தில் படையை நிறுத்தவும், மத்திய ஐரோப்பாவிலிருந்து எங்களை விலக்கத்தக்க தாக இாைனிலந்தில் சிசுபிறைற்று அரணை வரிசையை அமைக்க வும் சேர்மனி அனுமதிக்கப்பட்டது.முசோலினியின் அபிசீனிய ஆக் கிரமிப்புக்கெதிராக (1935-6) " பொருளாதாரச் சட்டவலு" சிறிது பயன்படுத்தப்பட்டமையால் இத்தாலி சேர்மனியுடன் நட்புறவு கொள்ளத் தூண்டப்பட்டது. அதே காலத்தில் ஒசுற்றியாவுடனும் போல்கன் நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு கொள்வதை, இத் தாலி தன் புவியியல் நிலையைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தக் கூடியதாயிற்று. அபிசீனிய விவகாரத்தில் இங்கிலாந்து தலையிடு வதை விட்டு விடவுமில்லை; உண்மையாகவே போர் செய்வதாக அச்சுறுத்தவுமில்லை. அபிசீனியாவுக்காக விணே ஐரோப்பா பலி யிடப்பட்டது. இதற்கிடையில் நாசி சேர்மானிய ஆக்கிரமிப்பைத் தடைசெய்ய இரசியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு எவ் வித முக்கியமான முயற்சியும் செய்யப்படவில்லை.
நீண்ட தொடர்ச்சியான தவறுகளுக்கான பழியை, நாட்டின் தொடர்ச்சியான அரசாங்கங்கள்மீதும், எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் மன நிலையையுடைய எதிர்க்கட்சி, அரசாங்கங்கள் அடிக்கடி உறுதியின்றிப் பின்பற்றிய பொதுசன அபிப்பிராயம் ஆகியவைமிதும் பகிர்ந்து சுமத்தும் விரும்பத்தகாத கடமை பிற் கால வரலாற்ருசிரியர்க்கு உண்டு. சில மாதங்களுக்கு முன் செய்து கொண்ட மியூனிக்கு உடன்படிக்கையை மீறிக் கிற்லர் பிருக்கு நக ரைக் கைப்பற்றிய பொழுதுதான் 1939 முற்பகுதியில் பிரித்தானிய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தாம் இருபதாண்டுகளாகச் சென்று கொண்டிருந்த பாதையினது நிலைமை பற்றிய பயங்கரமான உண் மைகளை உணரும் விழிப்பு ஏற்பட்டது. அப்போதுதானும் படை பூணும் வேகம், எவ்வழியிலும் நெருக்கடிக்குத் தேவையான அள வுக்கு இருக்கவில்லை. உண்மையான யுத்தம் தொடங்கி ஆறு மாதங் களின் பின்னரே கட்சிகளின் ஒற்றுமையும் யுத்த முயற்சியின்

போருக்குப் பின்
பூரண அபிவிருத்தியும் ஏற்பட்டன. ஈற்றில் இங்கிலாந்து தன் பண் டைய துணிகரத்துடன் பேராபத்தை எதிர்த்து நின்றது. இத்துணி கரத்தின் சின்னமாக விளங்கியவன் உவின்சன் சேச்சில்.
இவ்வண்ணமே, அமெரிக்காவின் பிறர் தொடர்பற்ற தனித் தன்மை இயக்கமும், இங்கிலாந்தின் போர் ஒழிப்பு இயக்கமும் சேர்ந்து, உவின்சன் சேச்சில் குறிப்பிட்டது போல, ஓர் அவசியமற்ற யுத்தத்திற்கு இடமளித்ததன் மூலம், உலகத்தை இக்கட்டான நிலை மைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின் ஐரோப்பிய நாடுகள் கட்டின்றிச் சுயேச்சையாயிருந்தன. 1918 இல் முடிந்த யுத்தத்தின் பெறுபேருக இாசியா சேர்மனி இரண்டும் தோற்கடிக்கப்பட்டமையால், போலந்து, செக்கோசில வாக்கியா, அங்கேரி, போல்கள் நாடுகள், போற்றிக்கு நாடுகள் என்பனவும் சுயேச்சையாயிருந்தன. எனவே, ஐரோப்பா கட்டின்றி யிருந்தது. இரண்டாம் யுத்தம் நடைபெற்றிராவிட்டால் இவை இன்னும் சுயேச்சையாய் இருந்திருக்கும். அந்த யுத்தத்தின் பயனுக (1939-45) சேர்மனி இரண்டாம் முறையும் தோற் கடிக்கப்பட்டது. ஆனல் கிழக்கில் இரசியா வெற்றியடைந்தது. சில நாடுகளின் விடுதலைக்காகச் சேர்மனியுடன் போர் செய் தோம். ஆனல், அவைகளிற் பல இப்போது இரசியாவுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவில் இந்த யுத்தத்தினுல் ஏற் பட்ட அளவு பொருள் அழிவும் தார்மிக அழிவும் வரலாற்றில் இடம்பெற்ற வேறு எந்த யுத்தத்திலும் ஏற்படவில்லை.
புதிய கண்டுபிடிப்புக்களின் அதீத முன்னேற்றத்தால் இருபதாம் நூற்ருண்டில் ஓயாத சலனமும் அமைதியின்மையும் நிலவின. இவை மனித இனத்தை தாமாகத் தெரிந்தெடுக்கிாப்பாதைகளினூ டாகத் தங்குமிடமில்லாமல் உதவியற்றுத் தப்பியோடுபவனைப் போல அலைத்தன. இருப்புப் பாதை ஊழியிலும் பார்க்க மின் இயக்க ஊழி வாழ்வை அதிகம் மாற்றியது. இப்போது வாழ்க்கையை வான் ஊழி மாற்றுகின்றது. இனி அணுச் சத்தியோ அன்றி வெறெதுவுமோ வாழ்வை மாற்றக்கூடும். பெரிய நகர்வாழ்க்கை அநேக ஆங்கிலேயரை இயற்கையோடு தொடர் பற்றவர்களாக்கிவிட்டது. தொழில் நுட்பம் தனிமனிதரிடையே ஒழிந்தமையும் அதனிடத்தை மொத்த உற்பத்தி செய்யும் இயந்தி ாங்கள் எடுத்துக் கொண்டமையும் வேலை செய்தலினுல் ஏற்படும் மகிழ்ச்சி, பெருமை ஆகியவைகளிற் பெரும்பகுதியை மனித வாழ்வி லிருந்து அகற்றிவிட்டன. கல்வியில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒலிபரப்புமுறை அறிவாற்றலில் மாற்றம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதன் பயனை இப்போது மதிப் பிடவியலாது. இவற்ருல் ஏற்பட்ட நன்மைகளை அளவிடுவது கடி
549

Page 272
550
முன்னேற்றம்
னம். முதலாம் உலக யுத்தத்தினுலும் அதன் விளைவுகளினலும் ஏற் பட்ட பயங்கரமான தடங்கலிருந்திருந்தும் இத்தீவு மக்களிற் பெரும் பான்மையோரின் பொருளாதார நல்வாழ்வு, ஒரு சந்ததிக்கு முந்திய காலத்திலும் பார்க்க 1939 இல் அதிகமாயிருந்ததென்பதை எண்ணும்போதே ஓரளவு ஊக்கமேற்படுகிறது. பிரித்தானியர் முதலாம் உலக யுத்தத்தில் தங்கள் பிதாக்கள் காட்டியதிலும் கூடிய ஆற்றலையும் மன உறுதியையும் இரண்டாம் உலக யுத்தத்திலே காட்டினர். ஆகவே, ஒருமுக ஆதிக்கமான யுத்தத்திலிருந்தும் பல வந்தத்திலிருந்தும் தப்ப ஒருவழியைக் கண்டுபிடிக்கக் கூடுமானல் மனிதன் தன் வாழ்வை முன்பிருந்ததிலும் அதிக பூரணமானதாக வும் கூடிய மகிழ்ச்சியுடையதாகவும் செய்வதற்குத் தன் புதிய சத்தி களை ஈற்றில் பயன்படுத்துவானென்று நம்ப இடமுண்டு.
அரைவாசிக்குமேல் சேறும் சகதியுமான பசிய காடாகக் கிடந்த இந்தத் தீவில், வதிவதற்கேற்ற மேட்டு நிலங்களில், உயிரினங்களுள் உயர்ந்தபடியிலுள்ளவனன மனிதன் தன்னையும் தன் சந்ததியையும் தன் குழுவையும் ஒநாய்களிடமிருந்தும் கரடிகளிடமிருந்தும் தன் போன்ற மனிதரிடமிருந்தும் காப்பாற்றும் பொருட்டுக் கூட்டங்க ளாகவும் சமூகங்களாகவும் வாழ்ந்த நாட்களிலிருந்து, அந்நிலையி லிருந்து முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் முதிர்ந்த இன்றைய நாள்வரை இத்தீவின் வாழ்க்கை வளர்ச்சியின் சில அமிசங்களே இச்சிறிய நூலில் எழுத நான் முயன்றுள்ளேன். முந்திய ஊழியில் இயற்கையை எதிர்த்து நிற்க மனிதனின் ஆற்றல் போதாதிருந்த மையால் அவனுடைய வாழ்வு விலங்குத்தன்மையுடையதாயும் குறுகியதாயுமிருந்தது. இன்ருே அவன் இயற்கைமீது எய்திய ஆச்சரியப்படத்தக்க அற்புதமான ஆதிக்கமே அவனுக்கு மிகவும் ஆபத்து விளைக்கக் கூடியதாக வந்துவிட்டது. எதிர்காலத்தைப் பற்றி அறிவதற்கு மற்றவர்களிலும் கூடிய விசேட தீர்க்கதரிசன ஆற்றல் எதுவும் வரலாற்ருசிரியனுக்கு இல்லை. பழைய காலத்தை யும் அதன் பல்வேறுபட்ட நுட்பமான போதனைகளையும் காட்சி காட்டுபவனைப்போலச் சுட்டிக்காட்ட மட்டுமே அவனல் முடியும்.

1918 க்குட் பின் நிகழ்ந்த
சில முக்கியமான நிகழ்ச்சிகள்
1918 (திசெ.) உலோயிடு யோச்சினது பொதுத்தேர்தல்,
1919
1920
1921
1922
1923
1924
1925
1926
1927
1928
g29
வேர்சைப் பொருத்தனை.
நாட்டுக்கூட்டவை நிறுவப்படல்.
பிரித்தானியா தன் படைக்கருவிகளைக் குறைக்கின்றது ; பிரான்சும் இத்தாலியும் அவ்
வண்ணம் செய்யவில்லை.
மொந்தேகு-செம்சுபோட்டு சீர்திருத்த அறிக்கையின்படி இந்தியாவில் இரட்டையாட்சி
தாபிக்கப்படல்; குழப்பமும் அடக்கலும்.
ஐக்கிய நாடுகள் மூதவை நாட்டுக் கூட்டவையைச் சேர்வதிலிருந்து அமெரிக்காவைத் தடைசெய்கிறது ; பிரான்சிய ஆள்புலத்தைப் பாதுகாக்க அமெரிக்கா மறுக்கிறது ; எனவே, பிரித்தானியாவும் அவ்வண்ணமே நடந்துகொள்கின்றது “ அல்சுதர்” வேருன ஒரு பாராளுமன்றத்தைப் பெறுகின்றது (திசெம்பர்).
சின் பெயினருக்கெதிராக நடத்திய போராட்டம் பொருத்தனையால் திசெம்பரில் முடி
வெய்தியது ; ஐரிசிய சுதந்திரநாடு ஓர் ஆணிலப் பகுதியாக நிறுவப்பட்டது.
துருக்கியர் சின்ன ஆசியாவிலிருந்து கிரேக்கரை வெளியே துரத்தல் பிரித்தானியா
துருக்கியரைத் தொடுகடலில் நிறுத்துதல்,
உலோயிடு யோட்சு அமைச்சின் வீழ்ச்சி.
முசோலினி இத்தாலியில் பாசிசத்தை நிலைநாட்டுதல்.
உரூர் மாகாணத்தில் பிரான்சியர் படையிருப்பு.
A.
தாராளர் வாக்கு உதவியுடன் முதலாம் தொழிற்கட்சி அரசாங்கம் எட்டு மாதங்கள்
நிலைக்கிறது.
உலொக்கானேப் பொருத்தனைகள் ; ஐரோப்பிய நெருக்கடிநிலை தற்காலிகமாகத்
தளர்தல். நாட்டுக் கூட்டவையைச் சேர்மனி சேருதல்.
பொதுவேலைநிறுத்தமும் சுரங்கமகழ்வோர் வேலைநிறுத்தமும்.
படைக்கலந்துறத்தல் மாசபைகள் பயனளிக்கத் தவறுதல்.
தலவாட்சி விதி.
தாராளர் வாக்கு உதவியுடன் இரண்டாம் தொழிற்கட்சி அரசாங்கம் இரண்டு ஆண்டுகள்
நிலைக்கிறது.
55

Page 273
552
1931
1932
உலக விலையிறக்கமும் நிதி நெருக்கடியும். (ஒகத்து) தொழிலமைச்சு முறிவு. நாட்டின அரசாங்கம் உருவாக்கப்பட்டுத் தொழிற்கட்சிக்கெதிராகத் தேர்தலில் வெற்றி
பெறுகிறது. உவெசுத்துமினித்தர் நியதிச்சட்டம் ஆணிலங்களைச் சட்ட பூர்வமாக உறுதிசெய்கிறது. வேலையில்லாத்திண்டாட்டத்தினுல் கடினமான பிரச்சினை ; படிப்படியாக ஓரளவு மீட்சி உலகப் பொருளாதார மாசபை பயனளிக்கத் தவறுதல். மஞ்சூரியா பற்றி யப்பான் நாட்டுக்கூட்டவையை எதிர்த்து நின்று, பின் அதனினின்றும்
விலகுதல்.
1933-4 கிற்லர் சேர்மனியில் நாசிச ஆட்சியைத் தாபித்தல் ; நாட்டுக் கூட்டவையினின்றும் விலகி
1935
1936
1938
1939
1940
941
1942
வேர்சைப் பொருத்தனைக் கட்டுப்பாடுகளை நிராகரித்து மீண்டும் சேர்மனியைப் போருக்கு ஆயத்தம் செய்தல். ஐரோப்பிய நெருக்கடி நிலை மீண்டும் அபாயகரமானதாதல். ஐந்தாம் யோச்சு அரசனின் கொண்டாட்ட தினம். பாராளுமன்ற விதி மூலம் இந்தியாவுக்குப் பொறுப்புள்ள தன்னுட்சியும் கூட்டாட்சி
யாப்பும் அளித்தல். கூட்டவையின் உறுப்பினதான அபிசீனியாவை முசோலினி தாக்குதல். கூட்டவையின் " பொருளாதாரச் சட்ட வலு” அபிசீனியாவைக் காப்பாற்றத் தவறுதல் கிற்லர் மீண்டும் இரைனிலாந்தைக் கைப்பற்றுதல். சுதந்திர நாடாக எகித்துடன் பொருத்தனை. ஐந்தாம் யோச்சு இறக்க எட்டாம் எட்டுவேட்டு பட்டத்திற்கு வருதல்; (சனவரி-திசெம்பர்) இவன் முடிதுறக்க, ஆரும் யோச்சு பட்டத்திற்கு வருதல் ; இசுப்பானிய உள் நாட்டுப் போர் ஆரம்பம். பிரித்தானியா ஆறுதல்ாக மீண்டும் படை பூணத் தொடங்குகின்றது. மாச்சு. கிற்லர் ஒசுற்றியாவை வலிந்திணைத்தல். செத்தெம்பர். மியூனிக்கு. கிற்லர் செக்கோசிலவாக்கியாவின் காவல் எல்லைப்புறத்தைக் கைப்பற்றுதல். மாச்சு. கிற்லர் பிறக்குட் புகுதல். செத். கிற்லர் போலந்தைத் தாக்குதல். இரண்டாம் உலக Uಷ್ರಣೆ தொடக்கம்.
யூன் 22. பிரான்சின் வீழ்ச்சி. சனவரி 6. நேசநாடுகளின் அமைதிக் குறிக்கோள்கள்-" நான்கு விடுதலைகளும யூன் 22. கிற்லர் ஐ. சோ. ச. கு. மீது போர் மேற்செல்லல். ஒகத்து 11. அத்திலாந்திக்குப் பட்டயம். திசெம். 7. முத்துத் துறைமுகத்தை (பேள் ஆபர்) யப்பானியர் தாக்குதல் அ. ஐ. நா. சேர்மனி மீது யுத்தப்பிரகடனம் செய்தல்.
சனவரி 1. உவாசிந்தனில் ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம்,

及943
1944
1945
1947
1948
1949
1950
1951
1952
1953
1955
553
சனவரி கசபிளாங்கா மாசபை.
யூன் 6. நேசநாடுகள் நோமண்டியிலிறங்குதல்.
மே 7. சேர்மனி சரணடைதல். யூன் 26. ஐக்கிய நாடுகள் பட்டயம் ஒப்பமிடப்படல். யூலை 5. பொதுத்தேர்தல்.
ஒகத்து 14. யப்பான் சரணடைதல்.
ஒகத்து 15. இந்தியாவுக்கு ஆணிலப் பகுதி நிலைமை ; இந்தியாவிலிருந்து பாக்கித்தான்
பிரிக்கப்படுதல்.
யூலை 5. நாட்டின் சுகாதார சேவை ஆரம்பம்.
எப்பி. 18. அயலாந்துக் குடியரசு விதி நடைமுறைக்கு வருதல்.
பெப். 23. பொதுத்தேர்தல்.
யூன் 25. கோரியாச் சண்டை ஆரம்பம். மே 3. பிரித்தானிய விழா தொடக்கி வைக்கப்பட்டது. ஒற். 25. பொதுத்தேர்தல்.
பெப். 6. ஆரும் யோச்சு மரணம்.
மாச்சு 24. மேரி இராணி மரணம். யூன் 2. இரண்டாம் இலிசபெது இராணி முடிசூடல். யூலை 27. கோரிய போர் நிறுத்தம் ஒப்பமிடப்படல்.
மே 26. பொதுத்தேர்தல்.

Page 274
554
770-1782
1782
1782-1783
1783
1883-180
801-1804
1804-1806
1806-1807
1807-809
1809-1812
82-1827
1827
1827
1828-1830
1830一1834
】834
1834一1835
1835-1846
1841-1846
846-1852 1852 1852-1855
1855-858
1858-1859
1859-1865
865-1866
1866-1868
1868-1874
1874-1880
1880-1885
1885-1886
1886
1886-1892
1892-1894
1894一1895
1895-1902
1902-1905
1905-1908
அமைச்சுகள் விவரம்
நோது (தோரி, அரசரின் நட்பாளர்).
உரொக்கிங்காம் (உவிக்கு)
செல்போண் (அரசரின் நட்பாளரும் சதாமியரும்)
நோதும் பொக்சும் சேர்ந்த கூட்டமைச்சு (உலிக்குகளும் தோரிகளும்)
பிற்று (சதாமியரும் அரசரின் நட்பாளரும் தோரிகளாதல் ; பழைமைபேணும்
உவிக்குகள் 1794 இல் சேருதல்) r
அடிந்தன் (தோரி)
பிற்றின் இரண்டாவது அமைச்சு (தோரி)
ஆற்றல்-படைத்த-அனைவரையும் கொண்ட அமைச்சு (உவிக்குகளும் தோரி
களும்).
போத்துலத்து (தோரி)
பேசிவல் (தோரி)
இலிவர்ப்பூல் (தோரி), 1822க்குப் பின் தாராளர் கொள்கையைப் பின்பற்றல்
கனிங்கு (தாராளர் தோரி)
கோட்ரிச்சு (தாராளர் தோரி)
உவெலிந்தன்-பீல் (தோரி)
கிறே (உலிக்கு)
மெல்போண் (உவிக்கு)
பீல் (பழைமைபேண்கட்சி)
மெல்போண் (உவிக்கு)
பீல் (பழைமைபேண்கட்சி)
இரசல் (உவிக்கு)
இடேபி-திசரெலி (பழைமைபேணுவோர்)
அபதின் கூட்டமைச்சு (பீலைச்சேர்ந்தவர்களும் உவிக்குகளும்)
பாமேசுதன் (உவிக்கு)
இடேபி-திசரேவி (பழைமைபேணுவோர்)
பாமேசுதன் (உவிக்குகள், பீலைச் சேர்ந்தவர்கள், தாராளர்)
இரசல் (உவிக்கும் தாராளரும்)
இடேபி-திசரெலி (பழைமைபேணுவோர்)
கிளாட்சன் (தாராளர்)
திசரெலி (பழைமைபேணுவோர்)
கிளாட்சன் (தாராளர்) ,
சலிசுபரி (பழைமைபேணுவோர்)
கிளாட்சன் (தாராளர்)
சலிசுபரி (பழைமை பேணுவோர் தாராளச் சங்கத்தினருடன்)
கிளாட்சன் (தாராளர்)
உரோசுபரி (தாராளர்)
சலிசுபரி (சங்கத்தினர்)
பல்வூர் (சங்கத்தினர்)
கம்பெல்-பனமன் (தாராளர்)

1908-1915
195-96
96-922
1922-1923
1923-1924
1924 1924-1929
1929-1931
1931-1935
1936-93
937
1940
1945
950
1951
1955
1957
555
அசுகுவிது (தாராளர்) அசுகுவிது (கூட்டமைச்சு ) உலோயிடு யோச்சு (கூட்டமைச்சு) போனர்லோ (பழைமைபேணுவோர்) போல்வின் (பழைமைபேணுவோர்) மக்டொனல்டு (தொழிற்கட்சி) போல்வின் (பழைமைபேணுவோர்)
மக்டொனல்டு (தொழிற்கட்சி)
மக்டொனல்டு (தேசியம்) போல்வின் (தேசியம்) நெவில் சேம்பலேன் (தேசியம்) வின்சன் சேச்சில் (கூட்டமைச்சு) அட்லி (தொழிற்கட்சி) அட்லி (தொழிற்கட்சி) வின்சன் சேச்சில் (பழைமைபேணுவோர்) ஈடன் (பழைமைபேணுவோர்) மாக்மிலன் (பழைமைபேணுவோர்)

Page 275


Page 276


Page 277