கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்

Page 1
R.
தமிழாக்கம்
என். பாலகிருஷ்
தொகுப்பாசிரியர்
 

TI TEU
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்

Page 2
இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 1977 க்குப் பின்னான காலம்

இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
1977 க்குப் பின்னான காலம்
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் (தொகுப்பாசிரியர்)
தமிழாக்கம் என். பாலகிருஷ்ணன்
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 3
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் 2, கின்சி ரெறஸ், கொழும்பு 8, இலங்கை
La Lifold C 2006 ICES
ISBN: 955-580-107-9
Printed by: Unie Arts (Pvt.) Ltd No.48 B, Bloemendhal Road Colombo 13

பொருளடக்கம்
முகவுரை vii
கட்டுரையாளர்கள் Χ
அத்தியாயம் 1 அறிமுகம்
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
அத்தியாயம் 2: பேரினப் பொருளாதார மேலோடு பார்வை 22
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
அத்தியாயம் 3: பொது நிர்வாகச் சீர்திருத்தங்கள் - சாராம்சமும்
திசைவழியும் 60 லொயிட் பெர்னாந்து
அத்தியாயம் 4:நிதித்துறைச் சீர்திருத்தங்கள் 130
ஷாணக்க ஜெயநாத் பீரிஸ்
அத்தியாயம் 5: உழைப்புச் சந்தைச் சீர்திருத்தங்கள் 174
வரியாமலி ரனராஜா
அத்தியாயம் :ே வறுமைக்கெதிரான திட்டங்களின் படிமுறை வளர்ச்சி 230
ஹசிதா விக்கிரமசிங்கா
அத்தியாயம் 7: சீர்திருத்த நிகழ்ச்சி ஒழுங்கும் வறுமைத் தணிப்புத்
திட்டங்களும் 27 கலிங்க ரியூடர் சில்வா மற்றும் மிறியம் பெர்னாந்து
அத்தியாயம் 8: புதியதொரு பொருளாதார காலத்திற்குள்
நுழைதல் - பால்நிலை அனுகுமுறை மீண்டும் பார்வை இழந்ததா? 301 ரமணி ஜெயசுந்தரே

Page 4
அத்தியாயம் 9: வீட்டுப் பணியாளர்களாக புலம் பெயர்ந்த
பெண்கள்: பால்நிலை உறவுகள் மற்றும்
கருத்துநிலை மீதான தாக்கம் 340 ஷெரீன் சாரூர்
அத்தியாயம் 10: தொகுப்புரை 355
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
தேர்ந்தெடுத்த நூல்களின் பட்டியல் 36

முகவுரை
உலகச்சந்தையில் எண்ணெய் விலையின் உயர்வினால் ஏற்பட்ட பொருளாதார, சென்மதிநிலுவை நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்ட நிலை, கடுமையான வறட்சியினால் மின்வலுக் குறைப்பு, விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி, விரைவு வேகத்தில் சென்ற படைத்துறைக்குரிய செலவு ஆகிய தாக்கங்களின் பின்னணியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த 250 மில்லியன் அமெரிக்க டொலர் தாங்குநிலைக் கடன்வசதி சில கட்டமைப்புச் சார்ந்த சீராக்கங்களைச் செய்ய வேண்டிய நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையே செய்யப்பட்ட இத்தாங்குநிலை உடன்படிக்கை இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆர்வத்தினை மீண்டும் தூண்டியது. இப்பின்னணியில் இனத்துவக் கற்கைகளுக்கான (இ.க.ச.ஆ.நி.) சர்வதேச ஆய்வு நிலயம் (ICBS - International Centre for Ethnic Studies) folloi) sepas Qunglds 356 obg60) JuTL6) ஒன்றினை ஒழுங்கு செய்தது. அக்கலந்துரையாடலில் நான் ஒரு விமர்சனக் கட்டுரை தாங்குநிலை உடன்படிக்கை தொடர்பாகச் சமர்ப்பித்தேன். சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் இலங்கை வதிவிடப் பிரதிநிதி, கலாநிதி நடீம் உல் ஹக் (Dr. Nadeem Ul Haque) பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பிரசன்னமாயிருந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துப் பரிமாறலும் நடந்தது. இப்பொதுக் கலந்துரையாடலின் முடிவில் கொழும்பு இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு நிலயத்தின் (CES) பணிப்பாளர் கலாநிதி ராதிகா குமாரசாமி, இலங்கையில் 1977இல் ஏற்பட்ட பொருளாதார தாராளமயப்படுத்தலின் நிறைகுறைகளைப் பற்றிய ஒர் ஆய்வினைச் செய்யும்படி என்னை ஊக்கப்படுத்தினார். அதன் விளைவாக இங்கே பதிப்பிற்குத் தொகுத்துத் தரப்பட்டவை இம்முயற்சியின் இறுதிப் பயனாகும்.
வெவ்வேறு விடயங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதித் தருபவர்கள் உள்நாட்டவர்களாக இருப்பது பற்றித் தீர்மானம் செய்யப்பட்டது. கொழும்பு இ.க.ச.நி. (ICES) பல்கலைக்கழகங்களிலிருந்து கற்றறிவாளர்கள் பொது நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், சிவில் சமூகத்தவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளை வரவேற்றது. இத்தொகுப்பில் உள்ள ஒன்றினைத் தவிர்ந்த ஏனைய கட்டுரைகளும் இங்கு முதல் முறையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கட்டுரை ஆசிரியர்கள் கற்றறிவாளர்கள், தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அபிவிருத்தியில் ஈடுபட்டவர்கள்

Page 5
எனப் பல்வேறு ஆய்வுப் புலங்களிலிருந்து வருபவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தொகுதியின் தனித்துவமான இயல்புகளில் முக்கியமானவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம். இரண்டு கட்டுரையாசிரியர்களைத் தவிர்ந்த ஏனையோரும் இளமைப் பருவத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள். கட்டுரை வழங்கியோர்களில் பால்நிலைரீதியான சமத்துவம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்குப் பங்களிப்புச் செய்தவர்களில் இனரீதியான கலப்பினையும் காண முடிகின்றது. இவ்வாய்வுத் தொகுப்பு 2002 இல் ஆரம்ப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2003 இல் ஒரு வருடத்திற்குள் முடிப்பதாகத் திட்டமிடப்பட்டது. ஆனாலும் இது 2004 இன தொடக்கத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. தனிப்பட்ட கட்டுரைகளின் முதல் வரைவுகள் யூலை 2002 இல் ஒரு இ.ச.ஆ.நி. ஆய்வுப் பட்டறையில் சமர்ப்பிக்கப்பட்டது. இங்கிலாந்தின் சல்போட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசப் பொருளியல் அபிவிருத்திப் பேராசியராகப் பணிபுரியும் கலாநிதி சிம்மன்ஸ் அவர்கள் முதல் வரைவுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்தவர். அவர் இக்கட்டுரைகள் தொடர்பாக விரிவான பயனுடைய குறிப்புகளையும் ஆலோசனைகளையும் மேலும் அவற்றைச் செம்மைப்படுத்துவதற்கு தந்துதவினார். இதற்கு அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். தடங்கல்கள் ஏற்பட்டுள்ள பொழுதிலும், எல்லாக் கட்டுரையாளர்களும் அதிகமான முயற்சியினையும் சிந்தனையையும் இக்கட்டுரைகள் தயாரித்ததில் காட்டியுள்ளனர். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். கலாநிதி வில்பெட் குணரத்தனா (கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்) இந் நூலின் முழுமையான வரைவுகளைப் பொறுமையுடன் விரிவாகப் பரிசீலித்து நூலை மேலும் செம்மைப் படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கினார். அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இத்தொகுப்பாய்விற்கு நிதிப் பொறுப்பினை ஏற்ற கொழும்பிலுள்ள நோர்வேயின் அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (NORAD) ஆழ்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ள விரும்புன்றேன். இறுதியாக, கொழும்பு இ.ச.ஆ.நி உள்ள எல்லாப் பணிப்பாளர்களுக்கும் அவர்கள் வழங்கிய சகலவிதமான உதவிக்கும் நன்றி கூற விரும்புகின்றேன்.
இத்தொகுப்பின் அணித்தலைவர் என்ற முறையில் இதில் இருக்கக் கூடிய தவறுகள் இதில் விடப்பட்டவை மற்றும் குறைபாடுகள் என்பவற்றிற்கு முழுப் பொறுப்பினையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். இத்தொகுப்பின் சிறப்பு அம்சங்களும் பாராட் டுக் களும் முதன் மையாக இக் கட்டுரைகளை வழங்கியவர்களுக்குச் ச்ேருகின்றது. அவர்கள் இத்தொகுப்பு ஒரு தரமுடையதாக இருப்பதற்கு கடினமாக உழைத்துள்ளனர். இத்தொகுப்பு மாணவர்களுக்கு,

ஆசிரியர்களுக்கு கொள்நெறி வகுப்பபோர்களுக்கு மற்றும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அபிவிருத்தி ஈடுபாட்டாளர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்பது எனது விருப்பமும் நம்பிக்கையுமாகும்.
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் ஆய்வு இணைவாளர் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வுநிலையம் Gabst (publ! (WWW.ices colomno.Org)
இலங்கை.

Page 6
கட்டுரையாளர்கள்
லொயிட் பெர்னாந்து
மன்செஸ்ரர் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். ஒரு மூத்த சிவல் சேவை உத்தியோகத்தர் . கொள் நெறித் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அமைச்சில் தேசியத் திட்டமிடுதலின் பணிப்பாளர் நாயகமாகவும் அரச செயலாளருமாகப் பணியாற்றியுள்ளார். மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது கொழும்பு மார்கா நிறுவனத்தின் (இலங்கையின் அபிவிருத்தி பற்றிய நிலையம்) தலைவராகப் பணியாற்றி வருகின்றார். இலங்கை அரசாங்கத்திற்காக முகாமைப்படுத்தப்படுகின்ற அரசாங்கப் பணியாளர்களுக்கு தொலைக்கல்வி செய்திட்டமாக நடாத்தப்பட்டு வருவதன் பணிப்பாளராகவும் தற்பொழுது கடமையாற்றி வருகின்றார். கொழும்பிலுள்ள நிருவாகச் சீர்திருத்தக் குழுவில் உறுப்பினராகவு’ல் கொழும்புப் பல்கலைக்கழக மூதவையின் உறுப்பினராகவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.
மிறியம் பெர்னாந்து
சர்வதேச உறவுகளில் ஒரு விஞ்ஞான பட்டதாரி (BSc) யாக இருப்பதுடன் கொழும்பிலுள்ள வறுமை ஆய்வு நிலையத்தினது வறுமையின் தாக்கத்தை மதிப்பிடும் திட்டத்தில் அறிதொழில் உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றார்.
றமணி ஜெயசுந்தரா
இவர் ஒரு சட்டத்தரணி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வு பற்றிய துறையில் ஒரு முதுமாணிப் பட்டத்தினைப் (M.A) பெற்றுள்ளார். தற்பொழுது பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிதியத்தின் இலங்கையின் நாட்டுப் பிரதிநிதியாகவும் பணிபுரிகின்றார்.
ஷாணக்கா ஜெயநாத் பீரிஸ்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாக இருப்பதுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான
X

முதுமாணி (MSC), கலாநிதிப் பட்டங்களையும் (D.Phil) பெற்றவராவர். தற்பொழுது சர்வதேச நாணய நிதியத்தில் வாஷிங்டனில் பொருளியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
வரியாமலி ரணராஜா
இலங்கையினி உயர் நீதிமன்றத் திணி சட்டத்தரணி, கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து தொழில் நிருவாகத்தில் ஒரு முதுமாணிப் பட்டத்தையும் (MBA) பெற்றுள்ளார். சட்டத்தரணியாக பணிபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து இலங்கை வேலை கொள்வோர் கூட்டில் (Empioyers Federation of Ceylon) கைத்தொழில் தொடர்புகள் ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். வேலைச் சட்டம், கைத்தொழில் தொடர்புகள் மற்றும் மனித வள முகாமை என்பன பற்றி தனியார்துறை நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். கொழும்பில் சர்வ தேச உழைப்பு அமைப்பின் வெளிவாரி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஷெறீன் சாறுர்
சந்தைப்படுத்தலில் B.B.A. பட்டதாரி; மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுத் துறையில் பட்டப்பின் டிப்புளோமா பட்டம் பெற்றுள்ளார். கனடாவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் கொழும்பிலுள்ள திட்ட ஆதரவு அலகின் அபிவிருத்தி ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
பொருளியல் சிறப்புப் பட்டதாரி (B.A, Hons, Delhi) பொருளியல் அபிவிருத்தியில் முதுமாணிப் பட்டம் (MSC. Salford) அபிவிருத்தித் திட்டமிடுதலிலும் நிருவாகத்திலும் முதுமாணிப்பட்டம் (MSc Bristol) அபிவிருத்திப் பொருளியலில் கலாநிதிப் பட்டம் (Wales) ஆகியவற்றையும் பெற்றுள்ளார். தற்பொழுது இனக் குழும சர்வதேச ஆய்வு நிலையத்தில் , கொழும்பு, ஆராய்ச்சி இணைப்பாளராகப் பணியாற்றுகின்றார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே கள்ளக் கடத்தல் பற்றிய நூல் ஒன்றின் இணையாசிரியராகவும், இலங்கையின் இனமோதலின் பால்நிலைரிதியான தாற்பரியங்கள் பற்றியும் இணையாசிரியாகவும் இருந்துள்ளார். மேலும், இந்திய இலங்கை வர்த்தகம் (முறைசார்ந்த, முறை'ாரா) வறுமையும் வருமானச் சமமின்மையும், இலங்கையின் போர்க்கால பொருளாதாரம் ஆகியவை பற்றிக் கட்டுரைகள் பின்வரும் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். Contemporary South Asia (Oxford), Economic & Political Weekly
xi

Page 7
(Milba), l'aultines: Writings on Conflict and Resolution (New Delhi). Inc.' Journal of Regional Science (Kolkata), Journal of Contemporary ,\xi (Miina); South Asia Economic Journal (New Delhi) Sri Lanka 'clic Journal (Colombo) and Sri Lanka Journal of Social Sciences ((()())()). -
கலிங்க ரியூடர் சில்வா
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி. மொனாஷ் பல்கலைக்கழகத்திலிருந்து சமூகவியல் கலாநிதிப் பட்டம் (Ph.D) பெற்றவர். சென்ற பதினைந்து ஆண்டுகளில் பேராதனைப் பல்கலைக்கழத்தில் சமூகவியல் பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் வறுமையின் சமுகவியல் பரிமாணங்களை மையப்படுத்தி ஆராய்ச்சி செய்துள்ளார். அவரின் நூல் வெளியீடுகளில் பின்வருவன குறிப்பிடத்தக்கவை. Watta-dwellers . A 'Sou ological Study of selected Urban Low Incomee Communities in Sri Lanka (Lanham: Iniversity Press of America). No Future in farming? The Potential Irnpact of Commercialization of Non-Plantation agriculture rural p verty in Sri Lanka (Kandy-Centre for Intersectoral Community alth Studies): The Impact of Armed Conflict on Poverty and Displacement ... War affected areas: Evidence from Qualititative Research in Selected Displaced populations in Sri Lanka (The World Bank, Colombo)
ஹசிதா விக்கிரமசிங்க
இலண்டன் பல்கலைக்கழகததின் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாவார். (B.Sc. Honsh; கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் (M.A
Economics) பெற்றுள்ளார். கொழும்பில் தற்பொழுது அபிவிருத்தி வங்கியொன்றில் நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
xiii

அத்தியாயம் 1
அறிமுகம்
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
1. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் - உலகியல் நோக்கு
இன்றைய அபிவிருத்தியடைந்த அநேகமான நாடுகள், இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த காலத்தினைத் தொடர்ந்து அரச தூண்டுதல் முறையான பொருளாதார உபாயங்களைப் பின்பற்றி வந்துள்ளன; இவை பொதுவாக நலன்புரி அரசுகள் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த உபாயங்கள் சோசலிச நாடுகளின் சோசலிச பொருளாதார அமைப்புக்களுக்கு எதிரிடையானதாக அமைந்தன. சோசலிசப் பொருளாதாரங்களின் முக்கிய நோக்கங்கள் அநேகமாக மையப்படுத்தி முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இன்றைய வளர்முக நாடுகளும், காலனித்துவ முறையிலிருந்து விடுபட்டவுடன் ஒத்த விதமான அரசின் உந்துதலின் அடிப்படையான அபிவிருத்தி உபாயங்களைப் பின்பற்றிச் சென்றன. ஆனாலும் எழுபதுகளின் ஆரம்பத்தில் எண்ணெய் நெருக்கடிகளினால் அரச உந்துதலினால் தூண்டப்பட்ட பொருளாதாரக் கொள்நெறிகளும் நலன்புரி அரசுகளும் நிலைத்துச் செல்ல முடியவில்லை. இது வளர்ச்சியடைந்த பொருளாதாரமொன்றிலும் (உதாரணம்: ஐக்கிய இராச்சியம்) பிரச்சினைக்குரியதாக மாறி விட்டது. இப்பின்னணியில் இந்த நாடும் 1976 இல் சென்மதிநிலுவை நெருக்கடியினால் சர்வதேச நரணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. வளர்முக நாடுகளும் எண்ணெய் நெருக்கடியினால் அவைகளின் முதல்நிலைப் பொருள் ஏற்றுமதிகளின் வர்த்தகமாற்று வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
1970களில் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் அரச முனைப்பான பொருளாதார அபிவிருத்திக் கொள்நெறிகள், பொதுநலன் நோக்கிய அரசுகள் ஆகியவை மீள் சிந்தனைக்கு இலக்காயின. ஐக்கிய இராச்சியத்தில் மாக்கிரட்தட்சரும் (MargaretThatcher) ஐக்கிய அமெரிக்காவில் றொனல்டு றேகனும் (Ronald Regan) இந்த பொருளாதார உபாயங்கள் பற்றிய மீள் சிந்தனையினை முன்னெடுத்துச் சென்றனர். மாக்கிரட் தட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் றொனால்ட் றேகன் ஐக்கிய அமெரிக்காவின் தலைவராகவும் பதவி வகித்ததும் முக்கியத்துவம் கொண்டதாக இருந்துள்ளது. இவ்விரு அரசியல் தலைவர்களும் தத்தமது நாடுகளில் வெகுதூரம் சென்ற

Page 8
பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் “நவ தாராண்மைவாதம்” மேலோங்கிச் சென்றது.
அபிவிருத்தி உபாயம் பற்றி ஒத்த முறையில் வளர்முக நாடுகளிலும் மீள் பரிசீலனை இடம் பெற்றது. எழுபதுகளின் நடுப்பகுதிகளில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிடையே சிலி (Chile) என்பது தான் முதன்முறையாக பொருளாதார தாராண்மைவாதத்தினை நடைமுறைப்படுத்திய நாடு எனக் கொள்ள முடிகின்றது. இத்தகைய மீள் ஆய்வின் அறிவுத்திறன் வாய்ந்த ஒரு காரசாரமான விமர்சிப்பினை டீப்பக் லால் (Deepak Lal) என்பவர் “அபிவிருத்திப் பொருளியலின் வறுமை’ என்ற தலைப்பில் 1983இல் வெளியிட்டார். 1970களின் தொடக்க காலத்திலிருந்து இது தொடர்பாக கோட்பாட்டு ரீதியான முன்னேற்றமும் ஏற்பட்டது. இந்த ஆய்வுகள் ஒப்பீட்டடிப்படையான நோக்கில் வர்த்தகக் கொள்நெறிகள் பற்றி ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் நிறுவனம் (OECD), உலக வங்கி (World Bank) தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (NBER) ஆகியவற்றின் ஆய்வுகள் வர்த்தக தாராளமயப்படுத்தலின் வளர்ச்சியைத் தூண்டும் விளைவுகள் ஆதாரமுடையவையாகக் காணப்பட்டன எனவும் அத்தகைய சீர்திருத்தங்களை வளர்முக நாடுகள் மேற்கொள்வது பொருத்தமானது என்பதும் வலியுறுத்தப்பட்டது.
“புதிய தாராண்மை’வாதக் கட்டளைப் படிவத்தின் (neo-liberal paradigm) கூட்டு மொத்தமான கருத்து என்னவென்றால், பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகளும் உள்நாடு சார்ந்த கொள்நெறிகளும் வளர்ச்சியைப் பாதித்துள்ளன. 1980கள், 1990கள் கொண்ட காலப்பகுதியில் முன்னாள் சோவியத் ஒன்றியம், மற்றைய கிழக்கு ஐரோப்பிய சோசலிசப் பொருளாதாரங்கள் ஆகியவற்றின் வீழ்ச்சியும் சீர்குலைவும் ‘புதிய தாராண்மைவாதத்திற்கு' மேலும் பலமூட்டியது. கிழக்கு ஐரோப்பாவிலும் அரச கட்டுப்பாட்டுப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்தன. இதனால் புதிய தாராண்மைவாதக் கோட்பாடு உலகளாவிய ஒரு கருத்தொருமித்த ஆதரவையும் பெற்றது. எப்படியானாலும், தொண்ணுறுகளின் பிற் பகுதியில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியினைத் தொடர்ந்து புதுத் தாராண்மைவாதக் கோட்பாடு தொடர்பாக கருத்து வேறுபட்ட குரல்களும் எழுந்தன. இது குறிப்பாக 1990களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஆசியநிதி நெருக்கடியினைத் தொடர்ந்து எழுந்தது. சென்ற கால் நூற்றாண்டுக் காலப்பகுதியில் முதலாவது, இரண்டாவது மூன்றாவது உலகங்களில் ஏற்பட்ட பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களின் மூலங்கள், காலகட்டங்கள் ஆகியவை மேலெழுந்தவாரியாகக் காட்டப்பட்டுள்ளன. அத்தகைய பொருளாதார அரசியல் சீர்திருத்தங்கள் பொருளாதார முகாமைப்படுத்தலில் அரசின் பங்களிப்பினைப் பற்றியவையாக இருந்தன. பொருளாதார முகாமைப்படுத்தலில் அரசின் பங்களிப்பினைக் குறைத்து சந்தைகளினதும் தனியார் பங்களிப்பினையும் அதிகரித்து அவை மேற்கொள்ளப்படுவதை அவற்றிற்குச் சார்பான நிலைப்பாட்டை பலப்படுத்தியுள்ளது.

2. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் - இலங்கையின் நிலைமை
இலங்கையில் 1977இல் தொடங்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உலகளாவியரீதியில் மாக்கிரட் தட்சர், றொனால்டு றேகன் ஆகியோரினால் தொடக்கப்பட்ட முதலாவது பொருளாதார சீர்திருத்தக் காலத்துக்கு முற்பட்டதாக இருந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. புதிய தாராண்மைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தியதில் தென்னாசியாவில் இலங்கை முதலாவது நாடாகின்றது. இதற்கான முக்கிய காரணம், 1970 - 77 காலப்பகுதியில் நிலவிய பொருளாதார முகாமைப்படுத்தலும் ஏற்பாடுகளும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியில் பெருந்தோட்டத் துறையின் தேசியமயமாக்கல், இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழிலாக்கம் விலைக்கட்டுப்பாடுகள், நாணமாற்று வீதக் கட்டுப்பாடுகள், வட்டிவீத மேற்றடைகள் போன்றவை 1970 இல் இருந்து 1977ஆம் ஆண்டு வரை பின்பற்றப்பட்ட சோசலிச கொள்நெறிகளின் பிரதான கூறுகளாகும். இக் காலக் கட்டத்தில் இலங்கையின் நலன் பேணும் அரச முறைமை இக்காலப்பகுதியில் இருந்த ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் முன்பு இல்லாத அளவுக்கு உச்ச நிலையினை அடைந்தது. அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு, (மக்களின் பிரதான உணவுப் பொருள் உட்பட) அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு பற்றாக்குறை இருந்ததனால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்க வேண்டிய நிலை, முறைசாராச் சந்தைகளின் தோற்றம் ஆகியவை காணப்பட்டன. அந்நியச் செலாவணியில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியதனால் இது தொடர்பாக ஒரு முறைசாராச் சந்தை சுறுசுறுப்புடன் தொழிற்பட்டது. அரசின் கட்டுப்பாட்டு முறைகளினால் நுகர்வுப் பொருள்களின் மீது செயற்கையான வழிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் விளைவாக ஒரு திருப்திப்படுத்த முடியாத அடக்கிவைக்கப்பட்ட நிலை நுகர்வுப் பொருட்கள் தொடர்பாக (அரிசி, சீனி, பால் ஆகியவை உட்பட) உருவாகியது.
1970-77 காலப்பகுதியில் சோசலிசக் கொள்நெறிகள் ஏற்படுத்திய பெரும் அதிருப்தியின் பின்னணியில் 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் 475 பெரும்பான்மையினைப் பெற்று பதவியேற்றது. புதிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்திற்கு சிங்கப்பூர் ஒரு பின்பற்ற விரும்பிய மாதிரியமாக இருந்தது. இப்புதிய அரசாங்கம் தென்னாசியாவில் இலங்கையினை ஒரு சிங்கப்பூராக மாற்றுவதற்கு விரும்பியது. ஆகவே சிங்கப்பூரின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி மாதிரியம் இலங்கைக்கு முதன்மை வழிகாட்டியாக அமைந்து. இப்பின்னணியில் முன்பு இருந்த வெளிநாட்டு வர்த்தக ஒழுங்குகள், அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் நிர்வகிக்கப்பட்ட விலை முறைகள் , வட் டிவீத மேல் வரம்புகள் ஆகியவை தாராள மயப்படுத்தப்பட்டன. இப்புதிய பொருளாதார ஆளுகை முறைமையுடன் அரசியல் அதிகாரமும் ஆளும் கட்சியில் கூடுதலாக ஒருமுகப்படுத்தப்பட்டது. இதனுடைய
3

Page 9
நோக்கம் சிங்கப்பூரில் இருந்த ஒரு கட்சி சனநாயக அரசினை அமிைத்துக் கொள்வது என நோக்கப்பட்து. அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவதற்கு சிங்கப்பூரில் ஒரு கட்சி ஆட்சி அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திச் செழிப்பினைக் கொண்டு வந்தது போல் இலங்கையிலும் அவ்வாறு செய்யலாம் என்ற நம்பிக்கை காரணமாக இருந்தது.
ஒரு கட்சி ஆட்சியினை சிங்கப்பூரில் செய்தது போன்று இலங்கையிலும் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, இலங்கையில் செய்ய முன்வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக எதிரான விளைவுகளை ஏற்படுத்தியது. அரசியல் மாற்றங்கள் / சீர்திருத்தங்கள் ஆகியவற்றினால் (முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மீதும் பிரதம மந்திரி மீதும் எடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் முயற்சி, நிறைவேற்று சனாதிபதி முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் போன்றவை) ஏற்படுத்தப்பட்ட அதிருப்தி பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கும் இடையூறுகளை விளைவித்தது. இத்தகைய அரசியல் காரணங்களினால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் ஒரு வர்த்தகத் தாராண்மையாக்கல் கொள்நெறிப் பாதையாகவே அமைந்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் நிறுவன கட்டமைப்புச் சார்பான அடிப்படைப் பிரச்சினைகள், பெருந்தோட்டத்துறையில் அரச ஆதிக்கம், நட்டமேற்ப்ட்டு வரும் பொதுத்துறைக் கைத்தொழில்கள், நிறுவனங்கள், பெருகியுள்ள அரச சேவைத்துறை, நிதித்துறை மீதான அரச மேலாதிக்கம், உழைப்பினர் சந்தையில் இறுக்க நிலைமைகள் /நெகிழ் வின் மைகள் போன்றவற்றுக்குப் போதியளவு கவனம் கொடுக்கப்படவில்லை. அரசியல் சீர் திருத்தங்களுக்கான எதிர்ப்புக்களும், 1983 இல் இருந்து ஏற்பட்ட இனத்துவ முரண்பாடுகளும் மோதல்களும் ஓர் ஒழுங்கான பொருளாதாரச் சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய முட்டுக்கட்டைகளாக இருந்தன. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு இலங்கை முந்தியே இடம் கொடுத்துள்ள போதும் மேற்கூறிய காரணங்களினால் அவை தடைப்பட்டன்.
1990களில் பெருந்தோட்ட விவசாயத்தின் அரசவுடைமை நீக்கப்பட்டது. மற்றும் அரச கைத் தொழில் களும் தொழில் நிறுவனங்களும் அரச உடமையிலிருந்து நீக்கப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இந்த மாற்றங்கள் அக் கறையுடன் கொண்டு வரப்பட்டன. ஆனாலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத்துறைச்சீர்திருத்தம், நிதித்துறை, உழைப்புச் சந்தை ஆகியவற்றின் சீர்திருத்தங்கள் இன்னும் நடைபெறவில்லை. இலங்கையில் சீர்திருத்த வழிமுறைகள் சிறிது சிறிதாகவே மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் தந்திரோபாய நோக்கும் இடம் பெறவில்லை. இலங்கையில் நடந்தேறிய பொருளாதார அரசியல் சீர்திருத்தங்கள் நான்கு காலகட்டங்களாக உபபிரிவுப்படுத்த முடிகின்றது. அவையாவன: முதலில் 1977-88, இரண்டாவது 1989-1994, மூன்றாவது 1995-2001. நான்காவது 2002இல் இருந்து இன்றுவரை என்ற வெவ்வேறு காலப்பகுதிகளாக நோக்கலாம்.
4

முதலாவது காலப்பகுதியில் (1977-1988) ஏற்றுமதி முதன்மை தாங்கிய
மாதிரியம் ஆதிக்கம் செலுத்தியது. ஆதலால் தேசிய நாணயத்தினைப் பகுதிமுறையாக மிதக்கவிடல், அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளின் தளர்வு, வெளிநாட்டு முதலீடுகளுக்கு (உ+ம்) வரிவிலக்குகள்) ஊக்குவிப்புகள், இறக்குமதி ஏற்றுமதித் தீர்வைகள் குறைத்தல், வர்த்தகம் மீது சுங்கத் தீர்வையல்லாத தடைகளைப் பகுதி ரீதியில் விலக்கல், விலைக் கட்டுப்பாடுகளின் அத்தியாவசியப் பொருள்களை ஒரு சில தவிர்ந்த நிலையாக நீக்கம், உழைப்பினர் மத்திய ழெக்குக்கு அனுப்பப்படுதலை மேம்படுத்தல், சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை பிரதானமாக மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது கால கட்டத்தில் (1989-1994) முதலாவது காலப்பகுதியில் செய்யப்பட்டவையின் தொடர்ச்சியுடன் தனியார்துறையினை முதன்மைப்படுத்திய வளர்ச்சி மாதிரியமும் பிரதான இடத்தைப் பெற்றது. பெருந்தோட்டத்துறையில் அரச உரிமை நீக்கப்பட்டது. நட்டமடைந்திருந்த பொதுத்துறை நிறுவனங்களின் உரிமை மாற்றம் ஆகியவை காத்திரமான வகையில் முன்னெடுக்கப்பட்டன. மேலும், வெளிநாட்டு வர்த்தகத்தின் சீர்திருத்தங்கள், வெளிநாட்டு முதலீடு மற்றும் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டன. இதே காலப்பகுதியில் கைத்தொழில் ஏற்றுமதியில் தயாரித்த ஆடைகளை மையப்படுத்தி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு அரைகுறை ஆர்வத்துடன் பொதுத்துறையின் மறுசீரமைப்பு, மற்றும் அரிசி இறக்குமதியின் தனியுரிமை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
மூனர் றாவது காலப் பகுதியரில் (1995-2001) முக கரியமாக பெருந்தோட்டத்துறையின் அரச உரிமை முற்றாக நீக்கப்படுவதைத் தழுவிய 5lliL(pLib (858 luu g,5Tuj 6hli DIT687 960) DULI (Air lanka, 36jigoj Sri Lankan Airlines) LohOtto Gg55u Qg5ff 6006og Gg5m Lj Lj G&6o6u (Sri Lanka Telecom) ஆகியவற்றின் பகுதிரீதியான தனியார் மயப்படுத்தல் திட்டமும் உள்ளடக்கப்பட்டன. 2001இல் நாட்டு நாணயத்தின் முழுமையான சுதந்திரமாக மிதக்கவிடும் ஒழுங்கு பின்பற்றப்பட்டது. எப்படியாயினும், இக்காலப் பகுதியில் தீவிர நிலையினை அடைந்த உள்நாட்டுப் போர் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலினைப் பெரிதும் பாதித்தது.
சுதந்திரமடைந்ததற்குப் பின்னான காலப்பகுதியில் முதன்முறையாக 2001இல் எதிர் கணிய வளர்ச்சியினைப் பொருளாதாரம் அனுபவித்தது. இவ்வாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதி (GDP) 1.4 சதவீதத்தால் சுருங்கியது. ஆகவே பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் பொருளாதாரத்தில் உள்ள அடிப்படையான நிறுவனரீதியான கட்டமைப்புச் சார்பான பலவீனங்கள் பற்றி இலக்குப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. பெரிய அளவிலான பொதுப்படுகடன் (2002 இல் மொத்த
5

Page 10
உள்நாட்டு உற்பத்தியில் 103% வீதம்) இரண்டு இலக்க பாதீட்டுக் குறைநில்ைகள் ஆகியவை 1980கள், 1990கள் காலப்பகுதியில் தலைதூக்கின. தற்போதைய அரசாங்கம் இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இப்பின்னணியில் அரசாங்கம் பொதுத்துறை, நீதித்துறை, உழைப்பினர் துறை, வறியவர்களுக்கு நலன்புரிச் சேவை வழங்குவதில் மாற்றங்கள் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றது. பொருளாதாரத்தில் நிலவிவந்த அடிப்படைப் பேரினச் சார்பான சமமின்மைகள், சரிப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் அணுகப்பட்டது. இத்தகைய சீர்திருத்த முறைவழிகள், அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே பகைமையும் போர் நிலையும் நோர்வே அரசாங்கத்தின் நடுவர் பங்களிப்புடன் ஒய்வடைந்த பின்னணியுடன் தொர்புடையதாக இருந்ததுள்ளன. இச்சூழ்நிலையில் பொருளாதார அரசியல் நிலைமைகள், ஒரு விரிவான பொருளாதார அரசியல் சீர்திருத்தத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு சாதகமானவையாக அமைந்தன.
இலங்கை 1977 இல் ஒரு திறந்த பொருளாதார முறைமைக்குள் நுழைந்தது. தென் ஆசியாவில் முதன் முறையாக இப்புதிய ஏற்பாட்டுக்குள் இலங்கை புகுந்தது. இத்தாராண்மையாக்கல் முறைவழி ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 25 வருடங்கள் முடிந்து விட்டன. இக்கட்டத்தில் பொருளாதார தாராண்மையாக்கலின் பல்வேறு அம்சங்களையும் அதற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டவற்றையும் எதிராகக் கூறப்பட்டவற்றையும் சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமாகும். இதனைச் செய்வதன் நோக்கம் சென்ற காலத்து தாராண்மையாக்கலின் பலத்தையும் பலவீனங்களையும் அறிவதற்கு உதவும். அவ்வாறு அறிந்தவற்றிலிருந்து அடிப்படையில் எதிர்கால பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் அவற்றின் நிகழ்ச்சிநிரலையும் வரையறுத்துக் கொள்ளலாம்.
2.1 அரசியல் கருத்தொருமைப்பாடு
இரண்டு அரசியல் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) யூரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) இலங்கை 1948இல் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னான காலப்பகுதியில் நாட்டை ஆண்டு வந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 1949-56, 1965-70, 1977-1994 காலப் பகுதிகளிலும் 2001இல் இருந்து பிற்பட்ட காலப் பகுதியிலும் பதவியிலிருந்துள்ளது. ரீலங்கா சுதந்திரக் கட்சி, 1956-65, 1970-1977, 1994-2001 ஆகிய காலபபகுதிகளில் ஆட்சியிலிருந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 32 வருடங்களும் யூரீலங்கா சுதந்திரக் கட்சி 25 வருடங்களும் ஆட்சி நடாத்தி வந்துள்ளன. எப்படியாயிருப்பினும், 1956-1965, 1970-1977; 1994-2001 ஆகிய காலப்பகுதிகளில் அரசாங்கங்கள் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டரசாங்கங்களாக இருந்துள்ளதை நினைவு கொள்ளுதல் வேண்டும். 1970-1977, 1994-2001
6 .

காலப்பகுதிகளில் கூட்டரசாங்கங்களின் இரண்டு பிரதான கட்சிகளாக இலங்கை 3DDToga asub (Lanka Sama Samaja Party), g6uš60)& asbul56b. slidulf (Communist Party of Sir Lanka) g(bbg6,6160T.
பொருளாதார கொள்நெறி, அபிவிருத்தி உபாயம் ஏனையவை குறித்து இரு அரசியல் கட்சிகளும் (ஐக்கிய தேசியக் கட்சி, பூரிலங்கா சுதந்திரக் கட்சி) வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் (இன்றும் அவ்வாறே) தாராண்மைவாத திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்நெறிகளைப் பின்பற்றி வந்துள்ளது. ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கங்கள் தேசியமயமாக்கல் , பொருளாதாரத்தின் மீது அரச கட்டுப்பாடு, இறக்குமதிப் பதிலீடு, விலைக்கட்டுப்பாடுகள் ஆகிய கொள்நெறிகளைக் கடைப்பிடித்தன. ஆனாலும், இறுதியாக பதவியிலிருந்த ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்த gn | Léo D'j' ' 9 J & Tfts &lë (Peoples Alliance) 1994365 ug56) 6Jp gogj. முதன்முறையாக திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்நெறிகளை தனியார் துறைக்கு முக்கியமான இடமொன்றினை வழங்கி, ஏற்றுமதி முதன் நிலைப்படுத்திய பொருளாதார வளர்ச்சி உபாயத்தினை (இலங்கை சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்திருந்தும்) பின்பற்றியது. ஆதலாலி 1994 ஆம் ஆண்டிலிருந்து இரு பிரதான அரசியல் கட்சிகளுக்குமிடையே சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்நெறிகளைப் பின்பற்றுவதில் ஒரு பரந்த அடிப்படையிலான கருத்தொருமித்த நிலைப்பாடு நிலவியது. பொருளாதாரத்தின் திறந்த தன்மை எவ்வளவு என்பது பற்றி வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. கொள்கையளவில் மக்கள் கூட்டரசாங்கம் தாராண்மை பொருளாதாரக் கொள் நெறிகளை ஏற்றுக் கொண்டுள்ள போதும் நடைமுறையில் வெவ்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி கூட்டமைப்புப் பங்காளர்களிடையே பிணக்குகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.
2.2 நிறைவேற்றப்படாத நிகழ்ச்சி நிரல்
சென்ற கால் நூற்றாண்டில் (1977-2001) மூன்று காலகட்டங்களாக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக பல கட்டமைப்புச் சார்பான நிறுவன ஒழுங்குகள் தொடர்ந்துள்ளன. இவற்றை அத்தியாயம் இரண்டில் காட்டப்பட்டுள்ள பேரின ரீதியான குறிகாட்டிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதற்குக் காரணமாக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இலங்கையில் அரைகுறையாகச் செய்யப்பட்டன. அவற்றிற்கு நீண்டகால நோக்கு அடிப்படையாக இருக்கவில்லை. பொருளாதார கொள்நெறியாக்கம் அதிகமாக தனிப்பட அமைந்தவையாக இருந்ததுடன்
7

Page 11
அவற்றிடையே இசைவிணைவும் இணக்கப்பாடும் குறைந்திருந்தன. இதனால் தனியார்துறை பொருளாதார வளர்ச்சிக்கு இயந்திரமாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளுக்கு அரசாங்கத்திடமிருந்து சரியான வழிப்படுத்தலுக்கு தெளிவான சமிக்கைகள் வெளிப்படவில்லை. மேலும் இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருந்து வந்த இனத்துவ மோதலும் தெற்கில் எண்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுக்குப் பெரும் இடையூறாக இருந்தன. சுமை மிகுந்த பொதுத்துறைச் சீர்திருத்தம் மற்றும் அரச மேலாதிக்கம் கொண்ட நிதித்துறை, பழமைசார் உழைப்புத் துறைச் சட்டங்கள், சரியாக இலக்குப்படுத்தப்படாத வறுமை நிவாரணத்திட்டம், ஆகியவையும் முக்கியமான மாற்றங்களும் உயர்வான நிலைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சிப் பாதையை அடைவதற்கு முன்நிபந்தனைகளாக உள்ளன.
சென்ற கால் நூற்றாண்டில் அரசின் பங்களிப்பு பற்றிய நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எழுபதுகளில் செய்யப்பட்ட நிலச் சீர்திருத்தங்களினால் இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் 80 சதவீதம் அரசின் உடமையாக்கப்பட்டது. நிலத்தை நிலமில்லாதவர்களுக்கு மறுபங்கீடு செய்வதற்குப் பதிலாக அரசு இலங்கையில் மிகப் பெரிய நில உடமையாளராக மாறியது. ஆசியாவில், இலங்கை மிகப் பெரிய பணியாள் துறை ஒன்றின் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது (அரசாங்க கூட்டுத்தாபனங்கள் அரைகுறை அரசாங்க நிறுவனங்களும் சேர்ந்ததாக). 2000 ஆண்டில் ஒவ்வொரு 1000 பிரசைகளுக்கும் 57பேர் பொதுத்துறைச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிபரம் ஒப்பீட்டளவில் மலேசியாவில் 45, சிங்கப்பூரில் 37. தாய்லாந்தில் 31, இந்தோனேசியாவில் 21, இந்தியா பாகிஸ்தான் 19, பங்களாதேசம் 10 எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது (World Bank 2000). வேறுவிதமாகக் கூறுமிடத்து, ஒவ்வொரு 16 பிரசைகளுக்கும் 2000இல் இலங்கையில் ஒரு பொதுத்துறை சேவைப் பணியாளர் இருந்துள்ளார். இது 1978 இல் ஒவ்வொரு 24 பிரசைகளுக்கும் ஒரு பணியாளர் இருந்துள்ளார். இலங்கையில் பொதுத்துறை பெரியதாக இருப்பதுடன் அதில் உற்பத்தித் திறன் குறைந்ததாகக் காணப்பட்டுள்ளது. இப் பெரிய பணியாள் துறை இலங்கையில் தொடர்ந்து பதவியிலிருந்த அரசாங்கங்கள் (1977 இல் இருந்து) தனியார் துறையினூடாக பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை அமைக்கும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்துள்ளது. பணியாள்துறையின் பருமனைக் குறைப்பதிலும் அதனை திறமையுடையதாக மாற்றுவதில் ஏற்பட்ட தோல்வி, 1977 இன் பின்னரான காலப்பகுதியில் பொருளாதாரச் சீர்திருத்தம் மெதுவாகச் சென்றதும், மட்டமான பொருளாதார வளர்ச்சிவீதம் அனுபவிக்கப்பட்டதற்குமான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
இலங்கையில் அரசு இரண்டு உற்பத்திக் காரணிகள், நிலம் மற்றும் உழைப்பு ஆகியவை தொடர்பாக, ஒன்றில் பெருமளவு நிலத்தை உடமையாளராகக் கொண்டுள்ளது, அல்லது பெரும் தொகை உழைப்பினர்க்கு வேலை வழங்குகின்றது. மேலே குறிப்பிட்டது போல 80 சதவீத அளவான நிலம் மொத்த நிலப்பரப்பில்
8

அரசுக்குச் சொந்தமாகின்றது. அரசு இலங்கையில் மொத்த உழைப்பினர் படை 6 மில்லியனில், 2000இல் 1.2 மில்லியன் (20 சத வீதம்) பணியாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. பொதுத்துறைப் பணியாளர்கள் ஒழுங்குமுறையான, ஒப்பந்த அடிப்படையான, தற்காலிகமான பிரிவினர் பொதுச் சேவை, பொது அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரை குறையான அரச நிறுவனங்கள் ஆகியவற்றிலே வேலை செய்பவர்கள். இத்தொகை, 1980 இல் 597,000 அளவிலிருந்து 2000இல் 1.2 மில்லியனுக்கு அண்மித்த தொகையாக அதிகரித்துள்ளது. இதன்படி அரசு சுருங்குவதற்குப் பதிலாக ஆளணி குறித்து விரிவடைந்துள்ளது. ஆதலால் கால நுாற் றாணி டு பொருளாதார தாராண்மையாக்கல், சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ள பொழுதிலும் பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றின் மீது அரச ஆதிக்கம் இன்றும் முக்கியமானதாக இருந்து வருகின்றது.
இலங்கையில் இதுவரை நடந்தேறியுள்ள தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள் ஆகிய முறைவழிகளில் பிரதான அம்சங்க்ளில் ஒன்றாக பொருளாதாரத்தில் செல்வாக்கு மிகுந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு சிறப்புப் பெற்றுள்ளது. தற்போது, தேயிலை, தைத்த ஆடைகள், உழைப்பினர் ஏற்றுமதி ஆகியவை பொருளாதாரத்தின் மூலக் கற்களாக முக்கியத்துவம் ப்ெற்றுள்ளன. இம்மூன்று பொருட்களும் சேவைகளும் இலங்கையின் மொத்த அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் மிகக் கூடிய மூலங்களாக 90 சதவீதத்திற்கு மேலாக இன்று காணப்பட்டுள்ளன. மேலும் முக்கியமானதாகக் காணப்படுவது, இவற்றில் பெண்களின் பங்கு அதிகமானதாக இருப்பது; தேயிலைத் துறை எப்பொழுதும் பெண் உழைப்பாளிகள் மீது தங்கியிருந்தது. தாராண்மை மயமாக்கலுக்குப் பின்வந்த துறைகளான தயாரித்த உடைகள் உழைப்பினர் ஏற்றுமதி ஆகியவற்றில் பெண் உழைப்பினரின் பங்களிப்பு மேலோங்கியது. ஆதலால் இலங்கைப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு போதியளவுக்கு அரசினாலும் சமூகத்தினாலும் அங்கீகாரம் பெறவில்லையெனினும் பெரிதளவுக்கு அதிகரித்துள்ளது. இலங்கைப் பொருளாதாரம் சென்ற கால் நூற்றாண்டுப் பகுதியில் ஒரு விவசாய அடிப்படையினை அதிகளவுக்குக் கொண்டிருந்த நிலையில் இருந்து கைத்தொழில், சேவைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் அதிகரித்துச் சென்றதில் பெண்கள் போற்றப்படாத கதாநாயகிகளாக உள்ளனர் என்று கூறுவது மிகையாகாது.
3. பொருளாதார சீர்திருத்தங்களும் பொருளாதாரச் சுதந்திரமும்
ஒரு சனநாயகத்தில் அரசியல் சுதந்திரம் போல் பொருளர்தார சுதந்திரமும் ஒரு இன்றியமையாத கூறாகும். அப்படியிருப்பினும், பொருளாதார சுதந்திரம்
9

Page 12
என்பது அரசியல் சுதந்திரத்துடன் ஒப்பிடுமிடத்தில் குறைந்தளவாகவே விளங்கப் பட்டுள்ளது. எண் பதுகளின் முற்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் (பின்னர் மற்றைய நாடுகளிலும்) நவ தாராளமயமாக்கல் கட்டளைப் படிவம் முன்நிலைக்கு வந்ததனைத் தொடர்ந்து பொருளாதார சுதந்திரம் பற்றிய கோட்பாடும் முன்னிலைக்குத் தள்ளப்பட்டது. அவ்வாறாயினும், பொருளாதார சுதந்திரத்தை அளவிடுவதற்கு ஒரு பொருத்தமான அளவுகோல் விருத்தி செய்யப்படவில்லை. தொண்ணுாறுகளின் நடுப்பகுதியில் மட்டும் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னர் பல அம்சங்கள் சேர்த்தமைத்த குறியீடு ஒன்று முன்வைக்கப்பட்டது.
இப்பகுதியின் நோக்கங்கள் மட்டுப்படுத்திய வகையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
9 பொருளாதார சுதந்திரம் என்பது என்ன? அது எவ்வாறு அளவிடப்படலாம்?
இலங்கையில் பொருளாதாரச் சுதந்திரத்தின் நிலைமை என்ன?
0 இலங்கையில் பொருளாதார சுதந்திரத்தை அளவிடுவதில் என்ன
குறைபாடுகள் காணப்படுகின்றன?
3.1 பொருளாதாரச் சுதந்திரம் - ஒரு அறிமுகம்
கவாற்ணி மற்றும் லோசன் ஆகியோர் (Gwartney and Lawson) பின்வருமாறு பொருளாதார சுதந்திரம் பற்றிக் கூறுகின்றனர். “பொருளாதார சுதந்திரத்தின் பிரதான உள்ளமைவுக் கூறுகள் தனிப்பட்டவர் தேர்வுரிமை விரும்பிய பரிமாற்றம், போட்டியிடுவதற்குச் சுதந்திரம், மற்றும் தனிமனிதனையும் சொத்தினையும் பாதுகாத்தல்” ஆகியவை இடம் பெறுகின்றன. ஒரு நாடு இத்தகைய பொருளாதார சுதந்திரத்தைப் பேணுவது உலகத்தின் பொருளாதார சுதந்திரக் குறிகாட்டியினால் அளவிட்டுக் காட்ட முடிகின்றது. உலகத்தின் பொருளாதாரச் சுதந்திரக் குறிகாட்டி (Economic Feedom of the World) 66ignsuj (Vancouver), as60TLT6 g)6T6T 5(&psi நிறுவனத்தினால் விருத்தி செய்யபட்டது. இக்குறிகாட்டி எல்லாமாக 38 மாறிகளை உள்ளடக்குகின்றது (சர்வதேச நாட்டின் இடர்நேர்வு வழிகாட்டி மற்றும் உலகளாவிய போட்டி நிலை தொடர்பான அறிக்கையில் உள்ள கணிப்பின் அடிப்படையிலான 18 மாறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன). இக்குறிகாட்டி 2001 இல் 123 நாடுகள் பற்றிய தரவுகளை உள்ளடக்கியது. உலகத்தின் பொருளாதார சுதந்திரம் தொடர்பான குறிகாட்டி ஒரு 0-10 கொண்ட அளவு முறையினைக் கையாளுகின்றது. பூச்சியம் பொருளாதார சுதந்திரம் இல்லாத நிலயினையும், 10 மிகக் கூடுதலான பொருளாதார சுதந்திரத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.
இக்குறிக்காட்டி 5 பிரதான உப பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு (1) அரசாங்கத்தின் பருமன் - அரசாங்கச் செலவீடுகள், வரிகள்
10

மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள். (ii) சட்ட அமைப்பும் சொத்து உரிமைகளின் பாதுகாப்பும் (iii) பிழை போகாத உறுதியான பணம் கிடைத்தல் (iv) வெளிநாட்டவர்களுடன் பரிமாற்றம் செய்யும் சுதந்திரம் மற்றும் (V) கொடுகடன், உழைப்பு மற்றும் வியாபாரம் தொடர்பான ஒழுங்குபடுத்தல். அத்துடன் ‘அரசாங்கத்தின் பருமன்' மேலும் ஐந்து (5) பிரதான உட்பிரிவு செய்யப்பட்ட கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 'சட்ட அமைப்பும் சொத்து உரிமைப் பாதுகாப்பும் மேலும் கூறாக்கப்பட்டு ஐந்து (5) பிரதான கூறுகளாகக் காட்டப்பட்டுள்ளன. "பிழைபோகாத உறுதியான பணம்' உட் பிரிவு செய்யப்பட்டு நான்கு பிரதான கூறுகளாகக் காட்டப்பட்டுள்ளது. ‘வெளிநாட்டவர்களுடன் பரிமாற்றல் சுதந்திரம் உட்பிரிவு செய்யப்பட்டு ஒன்பது (9) பிரதான கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ‘கொடுகடன், உழைப்பு மற்றும் வியாபாரம்' பதினைந்து (15) கூறுகளாக உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அறியப்படுவது குறிப்பிட்ட இக் குறிக்காட்டி எல்லாமாக 38 மாறிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
2001இல் பொருளாதார சுதந்திரம் தொடர்பாக மேல்மட்டத்தில் உள்ள பத்து நாடுகளாக இனங்கண்டு கொள்ளப்பட்டவை: ஹொங்கொங் (Honkong) (8.6), disj (Singapore) (8.5), agidiu 9QLDfd35T (United States) (8.3), Slussumpbg (New Zealand) (8.2), gdau 3 JIT& dulb (United Kingdom) (8.2), கனடா (Canada) (8.1), அவுஸ்திரேலியா (Australia) (8.0), அயர்லாந்து (Ireland) (8.0), சுவிற்சலாந்து (Switzerland) (8.0), மற்றும் நெதர்லாந்து (Netherlands) (7.8). கீழ் மட்டத்திலுள்ள நாடுகள் பின்வருமாறு: மியன்மார் (Myanmar (3.8), GasTIE (35 T 560TBTusi (gigujei (Democratic Republic of Congo) (3.9), சிம்பாவே (Zimbabwe) (4.0) அல்ஜீரியா (Algeria) (4.2), கினிபிசோ (Giniea Bissau) (4.4), Qassist (335|T (giquujei (Republic of Congo) (4.5), 2 did (Sp6i (Ukraine) (4.6), (3) TLDIT6fluJIT (Romania) (0.7), LD6)T6) (Malawi) (4.8), Dibb மத்திய ஆபிரிக்கக் குடியரசு (Central African Republic) (4.9). உலக ரீதியான பொருளாதாரச் சுதந்திரம் சராசரியாக 2001 இல் 6.4 என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, தலாவருமானம், வாழ்நாள் நீடிப்பு எதிர்பார்க்கை, வருமானச் சமமின்மை, எழுத்தறிவு, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி கிடைத்தல் ஆகியவை பற்றிய இடைத் தொடர்பு கணிய அளவுடையதாகவும் காணப்பட்டுள்ளது.
3.2 இலங்கை பற்றிய பொருளாதார சுதந்திரம்
தென் ஆசியாவில் பொருளாதார சுதந்திரக் குறிக்காட்டிகள் பின்வரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை தொடர்பாகக் கிடைத்துள்ளன. தென் ஆசியாவில் இலங்கை மிகக் கூடிய பொருளாதார சுதந்திர அளவை (6.3) 2001இல் காணப்பட்டுள்ளது.
11

Page 13
இது ஓரளவுக்கு விளங்கிக் கொள்ள முடிகின்றது. தென் ஆசியாவில் 1977இல் இலங்கைப் பொருளாதாரம் முதன்முறையாக திறந்து விடப்பட்டது. ஆனால் 1980 இல் நேபாளம் (5.7) மற்றும் இந்தியா (5.2) இலங்கையினை (4.9) விட உயர்வான மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. 1985இலும் 1990இலும் நேபாளம் (5.3) இலங்கையிலும் (5.1) பார்க்க உயர்வான தரத்தினை பெற்றுள்ளது. எப்படியாயினும், 1995க்குப் பின்னராக இலங்கை (6.1), (6.1), (6.3) மிகக் கூடுதலான மதிப்பீட்டைக் காட்டியது. என்றாலும் 2000இல் இந்தியா (6.1) மற்றும் இலங்கை (6.1) சமன்பட்ட தரங்களைப் பெற்றன. இவ்வாறு நிலைமை இருந்துள்ள போதும் 2000 மற்றும் 2001 ஆண்டுகளில் முறையே இலங்கையின் (6.1, 6.3) பொருளாதாரச் சுதந்திரம் உலக சராசரியினை (6.3 மற்றும் 6.4) விட சிறிது குறைந்ததாகவே காணப்பட்டுள்ளது. (அட்டவணை 1)
அட்டவணை 1:
தென் ஆசியாவில் பொருளாதார சுதந்திரம் பற்றித் தரமிடல்
நாடு 1970 1975 1980 1985 1990 1995 2000 2001
பங்களாதேஷ் I - 3.8 3.7 4.1 4.6 5.4 5.5 5.6 இந்தியா 5.0 4.4 5.2 5.0 4.9 5.6 6.1 6.1 நேபாளம் - 5.7 5.3 5.3 5.2 5.6 5.7 பாகிஸ்தான் 4.7 3.8 4.6 5.1 5.0 5.6 - 5.5 5.4 இலங்கை 4.9 5.1 5.0 6.1 6.1 6.3
உலக சராசரி 6.3 6.4 - -
eup6) Lib: 356. Tsiboof upp(Dub (36) staf6 (Gwatney & Lawson) 2003
இலங்கை, 1970-1977 வரையான காலப் பகுதியில் ஒரு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உள்நோக்கிய பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது; துரதிஷ்டவசமாக 1970 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு பொருளாதார சுதந்திரக் குறிகாட்டி கிடைக்கவில்லை. ஆனாலும் அது 1980க்கு இருந்த மதிப்பீட்டிலும் பார்க்க குறைவாகவே இருந்திருக்கும்; காரணம், பெருந்தோட்டத்துறையின் தேசியமயமாக்கல் விலை மற்றும் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள், பண்டங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றிற்கு இணையொத்த சந்தைகளைத் தோற்றுவித்தன. உயர்வான இறக்குமதித் தீர்வைகள் மற்றும் உயர்ந்த வருமானம், சொத்து செல்வம் மீதான வரிகள் விதிக்கப்பட்டன. 19701975 வரையான காலப்பகுதியில் பொருளாதார சுதந்திரம் பற்றிய அளவீடு
12

இல்லாவிடிலும் பொருளாதார சுதந்திரக் குறிகாட்டிக் கூறுகள் சில உள்ளன. உதாரணமாக 1970ஆம் ஆண்டுக்கு சில உப கூறுகளான ‘அரசாங்கத்தின் பருமன், * பிழை போகாத உறுதியான பணம் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் ‘வெளிநாட்டவர்களுடன் பரிமாற்றச் சுதந்திரம்' பற்றியவை கிடைத்துள்ளன; அதே வேளை 1975ஆம் ஆண்டுக்கு முன்பு குறிப்பிட்டவற்றுடன் ‘கொடுகடன், உழைப்பு மற்றும் வியாபாரம் தொடர்பாக சில உப கூறுகள் கிடைக்கக் கூடியவையாக இருந்தன.
இலங்கை, தென் ஆசியாவில் பொருளாதார சுதந்திரம் தொடர்பாக மேல் நிலையில் இருப்பினும் அது தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்தில் இந்தோனேசியாவைத் தவிர, பின்நிலையிலேயே உள்ளது. தென் ஆசியாவில் இலங்கையின் உயர்நிலை நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தலாவருமானம் மற்றும் மனிதவள அபிவிருத்தி வாழ்நாள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, சுகாதாரம், குடிநீர் வசதிகள் போன்றவை சாதகமான பெறுபேறுகளைத் தந்துள்ளன. இதனால், இலங்கையின் பொருளாதார சுதந்திரம் தொடர்பான நிலைமை 1980க்குப் பின்னர் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.
பொருளாதாரச் சுதந்திரத்தின் அளவை படிநிலைப்படுத்தும் பொழுது நாடுகளின் உயர்வான, கீழான நிலைமைகளை எடுத்துக் காட்டுகின்றன. படிநிலைப்படுத்தல் குறிகாட்டிகள் தொடர்பாக இலங்கை 1980 இல் (123 நாடுகள் உள்ளடங்கலாக) 70வது இடத்தைப் பெற்றது. இது 2001இல் முன்னேற்றம் அடைந்து 64வது இடத்தினை எடுத்தது. இலங்கையின் நிலை மிகக் குறைந்த 74வது (1990) இடத்திற்கும் மிகக் கூடிய 57வது இடத்திற்கும் (1995) இடையே கூடியும் குறைந்தும் 1980-2001 காலப்பகுதியில் சென்றுள்ளது. (அட்டவணை 2)
அட்டவணை 2: தென்னாசியாவில் பொருளாதார சுதந்திரம் பற்றிய படிநிலைப்படுத்தல்
நாடு 1970. 975 1980 1985 1990 1995 2000 2001
பங்களாதேஷ் - 69 98 93 93 79 92 9. இந்தியா 41 58 59 73 80 74 70 73
நேபாளம் 39 60 64 86 89 89 பாகிஸ்தான் 48 69 76 68 74 74 92 101
இலங்கை 70 68 74 57 70 64
eupou Lib: E6. Tibé0of DsbDjib (36)T F65 (Gwartney & Lawson) 2003
13

Page 14
இலங்கையின் நிலை பொருளாதார சுதந்திரம் தரமிடல் தரவுகளின் பார்வையில் உயர்வு நிலையினை அடைந்ததைக் காண முடிகின்றது. இதனுடைய பின் தொடர்பாக பொருளாார சுதந்திரத்தின் அளவு பற்றி தென் ஆசியாவில் படிநிலைப்படுத்திய தரவுகள் 2001இல் உயர்வான இடத்தைக் காட்டுகின்றன. எப்படியாயினும் 1980இல் நேபாளமும் இந்தியாவும் இலங்கையினை விட முன்னிலையில் இருந்துள்ளன. 1985 இலும், 1990 இலும் நேபாளம் மட்டும் இலங்கையை விட முன்னிலையில் காணப்பட்டது. 1995 இல் இருந்து இலங்கை மிகச் சிறந்த படிநிலையினை, (2000 இல் இந்தியாவுடன் சேர்ந்து) காட்டியது. பொருளாதாரச் சுதந்திரம் தொடர்பாக படிநிலைப்படுத்துதலும் அதிலிருந்து நாடுகளின் நிலைகளை கால அடிப் படையில் ஒப் புநோக்குதலி குறைபாடுடையதாக இருக்கும். ஏனென்றால், உள்ளடக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருப்பதைக் காணலாம். 1970 ஆம் ஆண்டுக்கு 53 நாடுகள் மட்டும் சேர்க்கப்பட்டன. இது, 1975இல் 70 நாடுகளாக அதிகரித்தது. பின்னர் 1980 இல் 102 நாடுகள், 1985 இல் 109 நாடுகள், 1990 இல் 113 நாடுகள் மற்றும் 1995, 2000, 2001 ஆகிய ஆண்டுகளுக்கு 123 நாடுகள் என வேறுபட்டிருப்பதை அறியலாம். கணிப்பில் சேர்க்கப்பட்ட நாடுகள் அதிகரித்துச் சென்ற பொழுது இலங்கையின் நிலையும் முன்னேற்றம் கண்டது. இதன்படி அட்டவணை 2 இல் படிநிலைப்படுத்திய தரவுகள் காட்டுவதை விட இலங்கையின் நிலை நன்றாக இருந்திருக்கும். உதாரணமாக, 1980இல் இலங்கை 70வது இடத்தில் நின்றது. 102 நாடுகள் சேர்க்கப்பட்டிருந்த பொழுது: ஆனால் 2001இல் இலங்கை 64வது இடத்தில் 123 நாடுகள் சேர்க்கப்பட்டிருந்த போது இருந்தது. இதிலிருந்து 2001இல் இலங்கையின் நிலை 6 இடங்களுக்கு மேலாக (அட்டவணை இரண்டில் பிரதிபலிக்கப்பட்டதை விட) முன்னேற்றம் கண்டுள்ளது.
இத்தகைய படிநிலைப்படுத்தல் தொடர்பாக இன்னொரு விடயத்தினையும் கவனித்தல் வேண்டும். அதாவது கூறும் மற்றும் உப பிரிவுக் கூறும் தொடர்பான தரமிடுதலும் படிநிலைப்படுத்துதலும், மொத்த தரமிடுதல் படிநிலைப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து (அட்டவணைகள் 1 மற்றும் 2) வேறுபட்டுள்ளன. இலங்கை மொத்த நோக்கில் பொருளாதார சுதந்திரத்தில் மேல் நிலையில் இருப்பினும் தென் ஆசியாவில் 1995இல் இருந்து சில கூறுகள் மற்றும் உப கூறுகளின் குறிகாட்டிகள் வேறு மற்றைய தென் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது பின்னிலையில் காணப்பட்டுள்ளன. (இது பற்றித் தரவுகள் தந்த கவாற்ணியும் (36)IT& golf - (Gwartne & Lawson) 61 (65glds Jngju6f 6T60Tj. .
3.3 இலங்கையின் பொருளாதார சுதந்திரம் பற்றிய குறிக்காட்டி:
ஒரு மதிப்பீடு
இலங்கையின் மொத்தரீதியான பொருளாதாரச் சுதந்திரம் பற்றிய குறிக்காட்டி நல்லதாக இருப்பினும் அதனுடைய உப கூறுகளின் செயலாற்றம் சில பின்தங்கிய
14

பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. அவையாவன: சட்ட அமைப்பு மற்றும் சொத்து உரிமைகள்’ (படையினர் தலையீடு, சட்ட அமைப்பின் நேர்மை மற்றும் கற்றறிவாளர் சொத்து பாதுகாப்பு) வெளிநாட்டவருடன் பரிமாற்றல் சுதந்திரம்' (வெளிநாட்டு முதல், கொடுக்கல் வாங்கல்கள் மீதான தடைகள் மறைந்திருக்கும் இறக்குமதித்த தடைகள், மற்றும் இறக்குமதி செய்வதன் செலவு) மற்றும் கொடுகடன் உழைப்பு, வியாபாரம் (அரசாங்க பணித்துறையினருடன் செலவளிக்கப்படும் நேரம், விலைக்கட்டுப்பாடுகள், குறைந்தபட்சக் கூலியின் தாக்கம், கூலிக்கு அமர்த்தல், வேலையிலிருந்து விலக்கல், மற்றும் தனியார் உடைமை)
மேலும் சில கூறுகள் தொடர்பாக தரமிடுதலில் ஏற்படும் மாற்றங்கள், ஒரு வருடத்திலிருந்து இன்னொரு வருடத்துக்கு ஐயப்பாடு எழுப்பும் விடயமாகத் தெரிகின்றது. உதாரணமாக இலங்கை பணித்துறையினருடன் செலவழித்த நேரம் தொடர்பாக 2000இல் தரமிடுதலில் 7.2 புள்ளியைப் பெற்றுள்ளது; இது 2001இல் 4.0 அளவுக்கு வீழ்ந்துள்ளது. அதே போல் கூலிக்கு அமர்த்தல், வேலையிலிருந்து நீக்கல் பற்றி 2000இல் இலங்கைக்குக் கிடைத்த புள்ளி 29; இது 2001இல் 4.6 என்ற அளவுக்கு உயர்ந்தது. மேலும் நடுநிலைமையான நீதி மன்றங்கள் தொடர்பாக 2000இல் 5.0 என இருந்தது. 2001இல் 6.1க்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து நோக்குமிடத்தில் கற்றறிவாளர் சொத்துப் பாதுகாப்பு தொடர்பான தரமிடல் 2000இல் 3.5 ஆக இருந்து, 2001 இல் 5.0 அளவையினை அடைந்தது. மேலே குறிப்பிட்ட தரமிடல் பற்றிய நிலைமை மாற்றங்கள் 2000ற்கும் 2001ற்கும் இடையே ஐயத்துக்குரியவையாக உள்ளன. ஏனென்றால் குறிப்பிட்ட காரணிகளில் ஒரு வருடத்தில் அதிகமான முன்னெற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் பொருளாதார சுதந்திர குறிகாட்டியின் புள்ளிவிபர அடிப்படைத் தரவுகளுடைய தன்மையும் கேள்விக்குரியவையாக உள்ளன.
இலங்கையின் பொருளாதார சுதந்திரக் குறிகாட்டியின் தரவுகளுக்கேற்ப நாட்டிலுள்ளவர்கள் அதிகளவான பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது (அட்டவணை 1). இவ்வாறு காட்டப்படினும், உண்மையில் நாட்டில் நடந்துள்ள உள்ளுர் யுத்தத்தினால் சென்ற இருபது வருடங்களாக முக்கிய பகுதியினர் பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்காதவகையில் இருந்துள்ளனர். இலங்கையில் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட வடகிழக்கு மாகாணத்தில் நடந்துள்ள போராட்டத்தினால் பொருளாதாரச் சுதந்திரத்தில் கடுமையான வேறு பாதிப்புக்களுடன் வீழ்ச்சி ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டிலிருந்து வடகிழக்கு மாகாணத்தில் பெரும் பாதிப்புடைய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இது உற்பத்தி நடவடிக்கைகளின் மீதும் பெரிதும் இடையூறுகளை விளைவித்தது. இப்பொருளாதாரத் தடை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் விவசாய உள்ளிடுகள் (வளமாக்கிகள், கிருமிநாசினிகள், எரிபொருள் ஆகியவை) ஏன்பவற்றை உள்ளடக்கியது. மேலும் உள்ளுரில் சட்ட ஒழுங்குகளுக்குப் புறம்பாக விதிக்கப்பட்ட வரிகளும் பொருளாதார சுதந்திரத்தின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தின.
15

Page 15
இலங்கை அரசாங்கம் சனவரி 2002 இல் பொருளாதாரத் தடையினை விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையினை (பெப்ரவரி 2002) ஏற்படுத்துவதற்கு முன்னராக நீக்கியது. போர்நிறுத்த உடன்படிக்கையும் சமாதான முறைவழியும் பிரதேச மக்கள் பொருளாதார சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்க வழிவகுத்தது. ஆனாலும், இது தொடர்பாக கட்டுப்பாடுகளும் இடையூறுகளும் தொடர்ந்திருப்பதால் முன்னேற்றம் முழுமையாக ஏற்படுவதற்குத் தடைகள் உள்ளன.
இப்பின்னணியில் மொத்த நோக்கில் இலங்கையின் பொருளாதார சுதந்திரம் தொடர்பாக காட்டப்பட்ட உயர்வான தரமிடல் நிலை கேள்விக்குரிய விடயமாகும். நாட்டின் வடகிழக்கு நிலை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மொத்த நோக்கில் குறிகாட்டி ஏற்றுக் கொள்ளப்படுமானாலும் இலங்கையில் வடகிழக்குப் பிரதேசத்தின் போர்ச் சூழல் நிலையில் பொருளாதார சுதந்திரம் அர்த்தம் கொண்டதாக இல்லை. போர்ச்சூழல் நிலை தணிந்துள்ள பொழுதிலும் தொடர் நீ திருக்கும் பிரச்சினைகள் பொருளாதார சுதந்திரத்தை குறைந்தளவாகவெனினும் பாதிப்பவையாக இருந்துள்ளன. இரண்டு விதமான குறிகாட்டிகள், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதற்கு ஒன்றும், நாட்டின் மற்றைய பகுதிகளில் இன்னொரு குறிகாட்டியும் தயாரிப்பது பொருத்தமாகும். அவ்வாறு செய்தால் இரண்டினதும் சராசரி மொத்த நாட்டின் குறிகாட்டியாக அமையலாம்.
பொதுவாக நோக்குமிடத்தில் பொருளாதார சுதந்திரக் குறிகாட்டி இயல்பு நிலைச் சூழலிலும் நாட்டுக்குள்ளேயிருக்கும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போதியளவுக்குப் பிரதிபலிப்பதில்லை இத்தகைய நாட்டுக்கு உள்ளாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவை பொருளாதாரச் சுதந்திரத்தில் பாதிப்பினை ஏற்படுத்துபவை; ஏதோ ஒரு முறையில் திருப்திகரமான குறிகாட்டியைத் தயாரித்தல் வரவேற்கத்தக்கது. இத்தகைய பிரதேசரீதியாகக் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் போர்ச்சூழல் காரணமாக இருக்கலாம். அல்லது அவை சாதாரணமான சூழ்நிலையிலும் பொருளாதார அபிவிருத்தி உபாயங்களையும் முறைவழிகளையும் பொறுத்து ஏற்படலாம்.
சரியான உண்மையான தகவல் சந்தைப் பொருளாதாரத்தின் செயற்பாட்டில் மிக முக்கியமானது; அது தொடர்பாக ஒரு சுதந்திரமான ஊடகம் அவசியம். ஊடகத்தின் சுதந்திரம் (அச்சு, மின்பொறி இரண்டும்) பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிடையே ஒரு கணிய அளவு இணைவுத் தொடர்பு இருப்பது பற்றி பல நாடுகளின் அனுபவத்தை (வளர்ச்சியடையும் வளர்ச்சியடைந்த நாடுகள்) உலக வங்கி ஆய்வொன்று சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் ஊடகம் தொடர்பாக அரசுடைமை ஊடக சுதந்திரத் தன்மையில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. அரசுடைமை ஊடகத்தின் சுதந்திரமான நடுநிலைமை பேணும் நிலைக்கு இடையூறாக விளங்குகின்றது. சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும்
16

அச்சிடப்படும் புதினப் பத்திரிகைகள் நடுநிலைமை காப்பதில் (ஆங்கிலப் பத்திரிகைகள் விதிவிலக் கல்ல) ஒர் உறுதியான நிலைப் பாட்டைப் பின்பற்றுவதில்லை. இதனால் அவற்றின் ஊடகப் பங்களிப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே பொருளாதார சுதந்திரம் தொடர்பாக ஊடகச் சுதந்திரம் பற்றிய தரமிடுதலும் தேவைப்படுகின்றது. பொருளாதார சுதந்திரக் குறிகாட்டி ஊடக சுதந்திரத்தின் பிரதிபலிப்பினைக் காட்டுவதாக இருப்பதினால் குறிகாட்டியின் பயன்பாடு அதிகரிக்க முடியும்.
இலங்கையில் பொருளாதார சுதந்திரக் குறிகாட்டி அவ்வளவு அறிமுகம் உடையதாக இல்லை. அது கொள் நெறிக் கருத்துப் பரிமாறலில் பயன்படுத்தப்படுவது மிக அரிது. பணித்துறையினரிடமும், கற்றறிவாளர் சமுகத்தினரிடமும் அது பற்றிய விழிப்புணர்வு போதிளவுக்கு இல்லை. எப்படியாயினும் இக்குறிகாட்டி பற்றி அறிந்திருத்தல் தொழில்சார் சமுகத்தவரிடம் குறிப்பாக வணிகம் கைத்தொழில் ஆகியவற்றின் நலன் மேம்படுத்தும் சங்கங்களிடம் காணப்படுகின்றது, இப்பின்னணியில் பொருளாதாரச் சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பணித்துறையினர், கற்றறிவாளர் சமூகம், வணிகச் சமூகத்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர்களிடத்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பது வேண்டப்படுகின்றது.
தொகுத்துக் கூறுவது, பொருளாதாரச் சுதந்திரக் குறிகாட்டி ஒரு பயன்தரும் அளவீடாக இருப்பினும் அதனை நாடுகளுக்குள்ளேயிருக்கும் வேறுபாடுகளையும் வேறு தேவைப்பாடும் தகுதிவிதிகளையும் சேர்க்கக் கூடிய வகையில் திருத்தப்படுவது பொருத்தமான செயலாகும். பொருளாதார சுதந்திரக் குறிகாட்டி காலப்போக்கினுடாக படிப்படியான வளர்ச்சியினை அடைந்து கொள்ளுதல் வேண்டும்.
4. நூலின் ஒழுங்கமைப்பு
அத்தியாயம் 2 தாராளமயமாக்கலுக்குப் பின்னரான குறிப்பாக 12 ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியின் (1991-2002) பேரினச்சார்பான அபிவிருத்தி தொடர்பான ஒரு மேலோடு பார்வையினை வழங்குகின்றது. இக்காலப்பகுதியில் அநேகமான பேரினப் பொருளாதாரக் குறிக்காட்டிகள் சென்ற 12 வருடகாலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விவசாயம், கைத்தொழில், சேமிப்பும் முதலீடும் வட்டி வீதம், பணவீக்கம், வேலையின்மை, பொதுநிதி, பொதுப்படுகடன், சர்வதேச வர்த்தகம், சென்மதிநிலுவை வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம், சுற்றுலா, வருமான ஏற்றத் தாழ்வும் வறுமையும் ஆகிய பல்வேறு விடயங்களைப் பற்றிய போக்குகள், மாற்றங்கள் தொடர்பான நிலைமைகளை ஆராய்கின்றது. சுருக்கமாக இவ்வத்தியாயம் பொருளாதார தாராளமயமாக்கல் முறைவழிகளின் பலத்தினையும் பலவீனங்களையும் சுட்டிக் காட்டுகின்றது.

Page 16
அத்தியாயம் 3 காலனித்துவ காலத்திலிருந்து இன்று வரை பரிணாம வளர்ச்சி கண்ட பொதுதுறை அமைப்புப் பற்றி விளக்குகின்றது. இத்துறையில் முன்பு செய்யப்பட்ட பொதுத்துறைச் சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் அவற்றின் தாராளமயமாக்கல் காலப்பகுதியில் தோல்விக்கான காரணங்கள் ஆகியவற்றை விளக்கியுள்ளது. இத்துறை சார்ந்த பொருத்தமான சீர்திருத்தங்கள் பற்றி இனங் கண்டு கொள்வதற்கு இவ்வத்தியாயம் மற்றைய பல நாடுகளின் பொதுத்துறைச் சீர்திருத்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. இவை தொடர்பாக அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அனுபவங்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் இறுதியாக பொதுத்துறையின் இலங்கையின் சமகால அபிவிருத்திச் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு சீர்திருத்தம் தொடர்பாக முக்கிய படிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 4, 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை நிதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான சுற்றாய்வினைத் தந்துள்ளது. இதில் தாராளமயமாக்கலின் தாற்பரியங்கள் 1977-1987, 1987க்கு பின்னராக உள்ள காலப்பகுதிகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. மேலும் இவ்வத்தியாயம் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் பேரினச்சார்பான குறிகாட்டிகள் குறித்து விளைவுகளையும் பேரினச் சார்பான கொள்நெறிகளின் நிதித்துறை சார்பான விளைவுகளையும் ஆராய்கின்றது. நிதித்துறை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அரைகுறையான விதத்தில் செய்யப்பட்ட தன்மையினைச் சுட்டிக் காட்டி இத்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் இனங் கண்டு கொள்கின்றது.
அத்தியாயம் 5, காலனித்துவ காலத்திலிருந்து இலங்கையில் உழைப்பினர் இயக்கங்கள் அரசியல் மயமாக்கப்பட்டதன் ஆரம்பத்தினையும் விளக்கியுள்ளது. இவ்வத்தியாயம் இலங்கையில் உழைப்பிற்கான கேள்வி நிரம்பல் ஆகியவற்றைப் பற்றி விளக்குவதுடன் உழைப்பு உறவுகள் பற்றிய அதிகளவான சட்டவாக்கம் பற்றியும் விசேட கவனம் செலுத்தியுள்ளது. உழைப்புச் சந்தையில் நிலவும் கட்டமைப்புச் சார்பான நெகிழ்வின்மை நிலைகளை நீக்கி உலக ரீதியில் போட்டி வலிமையினை அடைவதற்குமான ஆலோசனைகள் பல தரப்பட்டுள்ளன. ஒரு திறமை வாய்ந்த நெகிழ்வான சூழ்நிலைக்கேற்ப இசைந்து கொள்ளக் கூடிய உழைப்புப் படைக்கு அடிப்படையினையும் அதே நேரத்தில் உழைப்பினர் உரிமைகளை பாதுகாத்து ஒரு ஏற்புடைய வேலை வசதித் தேவையினையும் வலியுறுத்தும் ஒழுங்குகளை முன்வைத்துள்ளது.
அத்தியாயம் 8, இலங்கையில் வறுமையின் பல்பரிமாண நிலைகளை உள்ளடக்கும், மற்றைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் ஒப்பிட்ட வகையிலும் இலங்கையில் விரிவான ஓர் ஆய்வினைத் தருகின்றது. பல்வேறு
18

வறுமை எதிர்ப்பு உபாயங்களை வரலாற்று ரீதியான பின்னணியில் நோக்குகின்றது. இலங்கையில் தாராளமயமாக்கலுக்கு முற்பட்ட காலப்பகுதியிலும் (1948-1977) அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலும் (1977- இன்றுவரை) வறுமைத் தணிப்பு தொடர்பான அணுகுமுறைகளைச் சுட்டிக் காட்டி வறுமைக்கு எதிரான உபாயங்கள் பற்றிய கொள்நெறி நிலைப்பாடுகளும் இவ்வத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையில் வறுமை எதிர்ப்புத் திட்டங்களை தாக்கமுடையதாக இருப்பதற்கான வழிமுறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாயம் 7, இலங்கையில் வறுமை, பொருளாதார தாராளமயமாக்கல் போதியளவுக்கு இல்லாததன் விளைவா அல்லது வறுமை தாராளமாயமாக்கலின் விளைவா என்ற வாதப்பிரதிவாதங்கள் கருத்தியல் ரீதியாக ஆராயப்பட்டுள்ளன. இத்தகைய விவாத விடயங்கள் மற்றயை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து படிப்பினையும் மேற்கோள் காட்டி ஆராயப்படுகின்றன. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து குறிப்பாக 1977க்கு பின்னரான காலத்தில் வேறுபட்ட வறுமை தணிப்புத் திட்டங்களைப் பற்றி ஆழமான விமர்சன நோக்கிலான ஆய்வினை அவற்றின் பரந்த வகையிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீதான தாற்பரியங்களையும் கவனத்தில் கொண்டு தருகின்றது. இத்தகைய உரையாடல்களிலிருந்து தற்போதைய வறுமைத் தணிப்புத் திட்டங்களைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வளர்ச்சியினை ஊக்கப்படுத்தி அதே நேரத்தில் சமூகத்திலுள்ள பலவீனமுடைய சமூகப் பிரிவினருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கான வழிமுறைகளையும் கவனத்தில் எடுக்கப்படுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாயம் 8, அரசாங்கத்தின் முக்கியமான கொள்நெறி வெளிப்படுத்தல் ஆவணங்களின் அடிப்படையில் முன் வைக் கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பால்நிலை ரீதியான தாற்பரியங்கள் பற்றிய உரையாடல் இவ் வத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னணியாக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு மேலோடு நோக்கினை விளக்குகின்றது. இது முக்கியமாக தாராமயமாக்கலினால் தூண்டப்பட்ட அம்சங்களான புலம்பெயர் வேலையாட்கள், குறிப்பாக ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை வேலையாட்கள், ஆகியவையும் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் பால்நிலை சமமின்மைப் பிரச்சினையை எவ்வாறு அரசாங்க முயற்சிகள், வேறு நிறுவனங்கள் ஆகியவை அணுகியுள்ளன என்பது பற்றி ஒரு விரிவான விளக்கத்தினையும் சேர்க்கப்பட்டுள்ளது. எல்லாக் கொள்நெறி ஆவணங்களிலும் அவற்றின் உரையாடல்களிலும் பால்நிலை தொடர்பான விடயங்கள் முக்கியப்படுத்தப்படுதலின் அவசியமும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் 9, இதிலே பேரினக் கொள்நெறிச் சூழ்நிலையின் ஒரு சிற்றின ஆய்வினை மெய்ச்சான்று ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழைப்பினர்
19

Page 17
எற்றமதியில் குறிப்பாக மத்திய கிழக்கிற்கு பெண்கள் 70 சதவீத அளவினை அடைந்துள்ளனர். இது 1977ஆம் ஆண்டுக்கு பின்னரான தாராளமயமாக்கலின் விளைவாக ஏற்பட்டது. திறந்த பொருளாதார மாதிரியம் ஏற்படுத்திய பேரின கொள் நெறிச் சூழ்நிலையில் உழைப்பினர் ஏற்றுமதி துண்டப்பட்டது. இவ்வத்தியாயம் புலம்பெயர் பெண் வேலையாட்களின் பொருளாதார சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சமுதாய மட்டத்தில் அதிகரித்துச் செல்லும் சமூகரீதியான விளிம்புப்படுத்தல் நிலை காணப்பட்டுள்ளதும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் ஆண்களைப் போன்று ஏற்புடை வேலை வசதி, கெளரவமான நிலை, சமத்துவம் ஆகியவை உள்ளவாறு பெண் புலம்பெயர் பணியாளர்கள் சர்வதேச உழைப்புச் சந்தையில் இணைந்திருத்தல் வேண்டும் என்பதற்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 10, இவ்வத்தியாயத்தில் சென்ற இரண்டு ஆண்டுகளில் (20022003)) புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும், 2004 ஆம் ஆண்டு சீர்த்திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
பொதுவாக இத் துறையினி எழுத்துக் களில் பொருளாதார தாராளமயப்படுத்தல் பொருளாதாரச் சீர்திருத்தம் ஒன்றுடன் ஒன்று மாறி மாறிப் பயன்படுத்தப்படும் சொற் தொடர்களாக உள்ளன. ஆனாலும் இவையிரண்டுக்குமிடையே ஒன்றின் பகுதி மற்றையதுடன் ஒத்திருக்கும் நிலை இருப்பினும் அவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது ஆசிரியரின் நோக்கில் தேவைப்படுகின்றது. பொருளாதார தாராளமயப்படுத்தல் என்பது தடைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நீக்குதல் தளர்த்தல், அதாவது சென்றகால கொள்நெறியினை இல்லாமல் செய்தல் அல்லது அது குறித்துத் தளர்த்தல், நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மறு புறத்தில் பொருளாதாரச் சீர்திருத்தல், பொருளாதார தேக்க நிலையின் காரணங்களைக் களையும் முகமாக செயலூக்கமான நடவடிக்கைகளைக் கொண்டு வருதல் என்பவற்றைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இத்தகைய அணுகுமுறையில் பொருளாதாரச் சீர்திருத்தல், பொருளாதாரத் தாராளமயமாக்கலை விட கூடுதலான அம்சங்களின் நிலைப்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படலாம். ஆனாலும் முன்கூறப்படுவது (பொருளாதாரச் சீர்திருத்தம்) பின் கூறப்பட்டதையும் (பொருளாதார தாராளமயப்படுத்தல்) உள்ளடக்கலாம். உதாரணமாகக் கூறுமிடத்து, சுங்கத் தீர்வைகளைக் குறைத்தல், சுங்கத் தீர்வையில்லாத வர்த்தகத் தடைகள் என்பவை தாராளமயமாக்கல் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட முடிகின்றது. மறுபுறத்தில் சுங்க அமைப்பு தொடர்பான ஒழுங்குகளை எளிமையாக்கல், சுங்க அமைப்புச் சாந்த ஒழுங்குமுறைகளை பொருள்கள் விரைவுபடுத்திய கணக்கு தீர்த்தல், சர்வதேச வர்த்தகர்களின் நிறுவன ரீதியான மாற்றங்களினால் கொடுக்கல்
20

வாங்கல் செலவுகளைக் குறைத்தல் போன்றவை சீர்திருத்த நடவடிக்கைகளாகும். முதலில் குறிப்பிடப்பட்டதை தாராளமயமாக்கல் எனவும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிக எதிர்ப்பு இல்லாததனால் இலகுவாகச் செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டாவது வகை நடவடிக்கைகளுக்கு வேரூன்றிய நலன்கள் காப்போரிடமிருந்து எதிர்ப்பு ஏற்படுவதால் ஒரு சிக்கலான பிரச்சினையாக எதிர்நோக்கப்படலாம். ஆதலால் பொருளாதார சீர்த்திருத்தங்கள் ஒரு தந்திரோபாயத் தன்மையுடையவை என்பதும் கவனிக்கத்தக்கது.
உசாத்துணைகள்:
1. Government of Sri Lanka, Draft Poverty Reduction Strategy, November
2001.
2. The World Bank, Sri Lanka-Recapturing Missed Opportunities, Country
Report, 2002. A. Department of Census & Statistics, Statistical Pocket Book, 2000. 4. Central Bank of Sri Lanka, Annual Report, 2001.
3.
21

Page 18
அத்தியாயம் 2
பேரினப் பொருளாதார மேலோடு பார்வை
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
1. முன்னுரை
1977 இல் இலங்கைப் பொருளாதாரம் திறந்த பொருளாதாரமாக மாறியது. தென் ஆசியாவில் முதன்முறையாக இலங்கையே திறந்த பொருளாதார முறைமையைப் பின்பற்றியது. இலங்கைப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் தொடக்கப்பட்டு இன்று இருபத்தைந்து வருடங்கள் முடிவடைந்துள்ளன. இக்கட்டத்தில் இலங்கையில் பொருளாதார தாராளமயமாக்கலின் சார்பெதிர்வுகள் பற்றிக் கணக்கெடுப்பது பொருத்தமாகும். அவற்றிலிருந்து பலங்கள், பலவீனங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு இலங்கையில் பொருளாதார சீர்த்திருத்தங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு அமைவது பற்றி வரையறுத்துக் கொள்ளலாம்.
இந்த அத்தியாயம் பிரதானமாக தாராளமயமாக்கல் பின்னணியில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது பற்றிய விமர்சனமொன்றைச் செய்வது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைச் செய்வதில் சென்ற 25 வருட காலத்தில் பேரினச் சார்பான குறிகாட்டிகளைப் பயன்படுத்துவது தேவைப் படுகின்றது. இவ் வத்தியாயத்தின் ஆய்விலிருந்து பிரதான கருத்தோட்டமாக இலங்கையில் பொருளாதார தாராளமயமாக்கல் விரும்பிய பொருளாதார வளர்ச்சியினைத் தரவில்லை என்பது வெளிப்படுகின்றது. இதற்கு கட்டமைப்புச் சார்பான மற்றும் நிறுவன ஒழுங்குகள் சார்பான தடைகளும் உள்நாட்டுப் போரும் காரணங்களாக இருந்துள்ளன.
இவ்வத்தியாயத்தில் கையாளப்பட்ட தரவுகள் சென்ற பன்னிரண்டு வருடங்களுக்கானவை மட்டும் கட்டுரையின் பக்கங்களை மட்டுப்படுத்த வேண்டிய தேவையினைக் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளன. எப்படியாயினும், இதற்கு முற்பட்ட காலத்துத் தரவுகளும் பயனுடையவையாயின் அவையும் கையாளப்பட்டுள்ளன. இங்கே தரப்பட்ட அதிகமான தரவுகள், மொத்த பேரினச் சார்பான தரவுகளாக உள்ளன. அதனால் கவனமாக நோக்கப்படுதல் வேண்டும்; தேசிய மட்டத்திற்கும் அதற்குக் கீழான மற்றும் சிற்றின அளவில் உள்ள தரவுகள் ஆகியவற்றிடையே முரண்பாடுகள் இருக்க இடமுண்டு. கிடைக்கக் கூடியதான பொருத்தமானவையாக இருப்பின் தேசரீதியான மற்றும் தேச மட்டத்திற்கு கீழான தரவுகள் கூறாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமானதாகவும் குறைபாடு உடையதாகவும்,
22

1990ஆம் ஆண்டுக்குப் பின்னான தரவுகளில் வட-கிழக்கு மாகாணத் தரவுகள் போர்ச்சூழல் காரணமாக கிடைக்காததனால் சேர்க்கப்படவில்லை. அவை நீங்கலான புள்ளிவிபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2000 ஆண்டில் ஒரு பொருளாதார நெருக்கடி இலங்கையில் பின்வரும் காரணங்களுடன் தொடர்புடையதாக ஏற்பட்டுள்ளது: உலகச் சந்தையில் ஏற்பட்ட பெற்றோலிய விலை ஏற்றங்கள், வடமாகாணத்தில் கேந்திர முக்கியத்துவம் கொண்ட ஆனையிறவு புலிக் கிளர்ச்சியாளர்கள் கைக்கு மாறியதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசாங்க படைத்துறை விஸ்தரிப்புச் செலவுகளின் அதிகரிப்பு: கடுமையான நீடித்த வரட்சி நிலை மற்றும் சென்மதி நிலுவையில் நடைமுறைக் கணக்கு அதிகரித்ததுடன் அது மொத்த தேசிய உற்பத்தியில் 7 சதவீதத்திற்கு உயர்ந்தது. நாட்டின் அந்நியச் செலாவணி ஒதுக்குகள் அளவு அமெரிக்க டொலர் 01 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இது நான்கு மாதங்களுக்குப் போதுமான இறக்குமதிச் செலவை (ஆகாயவிமான இறக்குமதி நீங்கலாக) மட்டும் குறித்து நின்றது. அந்நியச் செலாவணி ஒதுக்குகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் இலங்கை ரூபா நாணயம் சனவரி 2001இல் சுதந்திரமாக மிதக்க விடப்பட்டது. சென்மதி நிலுவையின் பாதகமான நிலை காரணமாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. சென்ற கால நூற்றாண்டில் இதுவே நான்காவது முறையாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றது. (முன்னர் கடன் பெற்ற ஆண்டுகள்: 1983, 1988, 1991).
2. பொருளாதார வளர்ச்சி
இலங்கையின் வருட மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ. உ.) 1976-2000 வரையான இருபத்தைந்து வருட காலப் பகுதியில் மெய்ரீதியான முறையில் 4.9 சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு முன்னரான 25 வருடங்களில் (1951-1975) வருட மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரி 3.7 சதவீதத்தில் அதிகரித் திரு நீதது. இவற்றினி அடிப் படையில பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின்னரான காலப்பகுதியில் தாராள மயமாக்கலுக்கு முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து பெருமளவு வேறுபட்டிருக்கவில்லை. இது எதிர்பார்த்ததற்கு மாறாகவே இருந்துள்ளது. தாராளமயமாக்கலுக்குப் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்த்ததனை விட குறைந்தளவில் வளர்ச்சி இருந் திருப்பினும் அது நியாயமான அளவுக்கு உறுதியானதாகக் காணப்பட்டுள்ளது. மெய்யான மொத்த உற்பத்தி வளர்ச்சியின் சென்ற 12 வருடகாலப் பகுதியின் வருட சராசரி 4.5 சதவீதமாக இருந்துள்ளது. (அட்டவணை-1)
23

Page 19
அட்டவணை 1: வளர்ச்சிவீதம், 1991-2002
வருடம் வளர்ச்சி வீதம் %
(மொ.உ.உ.)
1991 4.6
1992 - 4.3 1993 6.9
1994 5.6
1995 5.5
1996 3.8
1997 6.3
1998 4.7
1999 4.3
2000 6.0
200 (-) 1.4
2002 4.0
(இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2002)
1990இல் இருந்து தேசிய வருமானக் கணக்கெடுப்பில் வட-கிழக்கு மாகாணம் ஏறத்தாழ நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, சேர்க்கப்படாத காரணத்தினால் வளர்ச்சி சென்ற கால் நூற்றாண்டுக் காலத்தில் அதற்கு முன்னரான கால்நூற்றாண்டுடன் ஒப்பிடுமிடத்தில் குறைவாக இருந்திருக்கும் எனக் கொள்ள இடமுண்டு. அரசாங்கத்தின் ஆட்சி வடகிழக்கு மாகாணத்தில் அநேக பகுதிகளுக்குச் செல்லவில்லை. யூலை 2001இல் (20 ஆண்டுகளுக்குப் பின்) மேற்கொள்ளப்பட்ட தேசக் குடிசன மதிப்பீடு வடகிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள்/பிரதேசங்கள் பல பகுதிகளில் நடாத்தப்பட முடியவில்லை.
வட-கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த உள்நாட்டு யுத்தத்தினால் சென்ற 12 ஆண்டுகளில், புள்ளிவிபரங்களினுடாக நிரூபிக்க முடியா திருப்பினும் , எதிர் கணிய பொருளாதார வளர்ச்சியினை அனுபவித்திருக்கலாம். இப்பகுதிகளில் போரின் விளைவாக விவசாய உற்பத்தி சீரழிந்தது; பொருளாதார சமூக பெளதிகப் பொதுக்கட்டுமான வசதிகள் அழிக்கப்பட்டன. இப்பிரதேசம் அன்றும் இன்றும் பிரதானமாக விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பயிர்கள், மந்தை வளர்ப்பு, மீன்பிடி ஆகியவற்றைப் பெருமளவுக்கு உள்ளடக்கிய பொருளாதாரமாக இருந்துள்ளது. அரிசி, வெங்காயம், மிளகாய், புகையிலை, மீன் ஆகியவை பிரதேசத்தின் ஆகக் கூடிய உற்பத்தி நடவடிக்கைகளைக் கொண்டிருந்தன. எரிபொருளின்
24

கட்டுப்படுத்திய வழங்கலும் அதனுடைய விலை உயர்வும் செயற்கை வளமாக்கிகள் விலை உயர்வும் உணவு உற்பத்தியினைப் பெரிதும் பாதித்தன. இப்பிரதேசத்தில் பாதுகாப்புப் படைகளினால் கடலுக்குச் செல்லக் கூடிய தூரம், காலநேரம் ஆகியவற்றின் மீதான தடைகளின் காரணமாக மீன்பிடி உற்பத்தியும் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளின் சந்தைகளுக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாததனால் இப்பிரதேசத்தின் முதல்நிலைப் பொருள்களின் சந்தைப்படுத்தல் பாதிப்புகளுக்கு உள்ளானதை அறியமுடிகின்றது. அநேகமான உணவு உற்பத்திப் பொருள்கள் விரைவில் அழிந்து போகும் தன்மையுடையவை; இவற்றிற்கு உடனுக்குடன் விரைவான போக்குவரவு வசதிகள் இல்லாததனால் உற்பத்தி பாதிப்படைந்தது. பெப்ரவரி 2002இல் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர் அனேகமான கட்டுப்பாடுகளும் தடைகளும் நீங்கலாயின. இலங்கையின் உத்தியோகபூர்வமான (பொருளாதார, சமூக மற்றும் ஏனையவை) தரவுகளில் 1990ஆம் ஆண்டளவிலிருந்து வட - கிழக்கு மாகாணம் சேர்க்கப்படவில்லை. ஆகவே வட-கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருக்கக் கூடியது எதிர்கணிய வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதி உத்தியோகபூர்வமான தரவுகள் காட்டுவதிலும் பார்க்கக் குறைந்ததாக இருந்திருக்கும் என வாதிடலாம். வட - கிழக்கு மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் கணக்கெடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால், 1976-2000 வரையான கால் நூற்றாண்டின் காலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் அதற்கு முன்னரான கால் நூற்றாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுமிடத்து (19511975) குறைந்ததாகவே இருந்திருக்கும்.
இதிலிருந்து இலங்கையில் பொருளாதார தாராளமயமாக்கல் உயர்ந்த வளர்ச்சி வீதக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும் எனக் கூறுவதற்கில்லை. இலங்கைப் பொருளாதாரம், உள்ளுர் போர் நட்ந்துள்ள போதும் சென்ற 20 ஆண்டுகளில் நிலைமைக்கு ஏற்றதாக மீட்டெழுச்சி ஆற்றல் கொண்டதாகக் கருதப்பட்டது. ஆனால் இவ்வாற்றல் இலங்கைப் பொருளாதாரம் குறித்து ஒரு ஆதாரமில்லாத பேச்சாக இருந்துள்ளது. தேசவருமானக் கணக்கெடுப்பில் எதிர் கணிய வளர்ச்சி கண்ட பிரதேசங்கள் சேர்க்கப்படாததனால் ஒரு அரைகுறையான திரிபுபட்ட பொருளாதாரம் பற்றிய நிலை எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
1951இல் இருந்து 2000 வரையுள்ள காலப்பகுதியில் இரு தடவை மட்டும் இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 சதவீதத்திற்குக் குற்ைவாக வீழ்ச்சியுற்றது. 1956இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.7 சதவீதமாகவும், 1971இல் 0.2 சதவீதமாகவம் இருந்துள்ளது. முதல் கூறப்பட்டது தொடர்பாக ஒரு தேசிய சார்பான உள்நோக்குடைய பொருளாதார முறைமை, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து எட்டு வருடங்கள் தாராண்மைப் பொருளாதார
25

Page 20
நிலைக்குப் பின்னர், மேலோங்கியிருந்தது. பின் கூறிய ஆண்டில் முதன் முறையாக ஒரு இளைஞர் ஆயுதந் தாங்கிய கிளர்ச்சி மக்கள் விடுதலை (yp6i 60760ofluíî6ð g560d6d6ddLDuî6ð (Janata Vimukthi Peramuna — JVP) 5 Ėg5g); இதனுடைய தோல்விக்குப் பின்னர் பொருளாதாரத்தின் மீது மிகுந்த கட்டுப்பாடு கொண்டதாக அரச ஆதிக்கமுடைய ஒரு பொருளாதார முறைமை நிறுவப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் 2001ஆண்டில், முதன்முறையாக பொருளாதாரம் ஓர் எதிர்க்கணிய வளர்ச்சி வீதத்தை அனுபவித்தது; பொருளாதாரம் 1.4 சதவீதத்தால் சுருங்கியது. இதற்கு காரணங்களாக நீடித்திருந்த வறட்சி, அதனால் தூண்டப்பட்ட மின்வலு நெருக்கடி , கிளர்ச்சியாளர்களின் (விடுதலைப் புலிகள்) கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், தாக்கமுடைய நாட்டின் அரசியல் நெருக்கடி, அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் போரின் விளைவாக ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சூழ்நிலையின் பாதகமான மாற்றம் ஆகியவை இருந்துள்ளன. எப்படியிருப்பினும், நாட்டின் பொருளாதாரம் 2002இல் மீட்டெழுச்சி பெற்று மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீத வளர்ச்சியினைக் காட்டியது.
இலங்கையின் தலா வருமானம் 1990-1995 காலப்பகுதியில் சராசரியாக அமெரிக்க டொலர் 549 என்ற அளவை எட்டியது. இது 2002இல் அமெரிக்க டொலர் 856 ஆகக் காணப்பட்டது. தென்னாசியாவில் 2000இல் இலங்கையின் தலா வருமானம் மாலைதீவைத் தொடர்ந்து இரண்டாவது மிக உயர்ந்த மட்டமாகக் காணப்பட்டுள்ளது. ஆனாலும் 2001இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்க்கணிய வளர்ச்சியை அனுபவித்ததால் தலா வருமானம் அமெரிக்க டொலர் 810ற்கு இறங்கியது. பின்னர் 2002இல் 840ற்கு உயர்ந்தது.
இலங்கைப் பொருளாதாரத்தின் துறைரீதியான சென்ற கால்நூற்றாண்டின் பங்களிப்புகளைப் பார்க்குமிடத்து ஏற்றுமதி சார்டான ஒரு புதிய கைத்தொழில் பொருளாதாரம் என்ற கட்டத்தினை அடைவதற்கு இன்னும் வெகுதூரம் செல்லுதல் வேண்டும். முதல்நிலை விளைவுத் துறையினது பங்களிப்பு (விவசாயம், காட்டுவளம் மற்றும் மீன்பிடி) மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து 1978 இல் 30.3 சத வீதமாக இருந்தது. 1990இல் 23.3 சத வீதமாகவும் 2000இல் 19.7 சத வீதமாகவும் இது குறைந்துள்ளது. வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள் கூறுவது, ஒரு பொருளாதாரம் முன்னேற்றமடைந்து செல்லுமிடத்து தயாரிப்புத் துறையின் பங்களிப்பு அதிகரிக்க இடமுண்டு. ஆனாலும் இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து தயாரிப்புத் துறையின் பங்களிப்பின் அளவு 1978இல் 18.4 சத வீதமாக இருந்து 1990இல் 17.5 சத வீதமாகவும் 2000இல் 16.5 சத வீதமாகவும் வீழ்ச்சி காட்டியுள்ளது. கட்டிடத் துறை இதே ஆண்டுகளில் 4.7 சத வீதத்திலிருந்து 6.7 சத வீதம் எனவும் 7.2 சதவீதம் எனவும் அதிகரித்துள்ளது. மேலும் இலங்கைப் பொருளாதாரத்தில் சேவைகள் துறையினது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த பங்களிப்பு 44.4%, 49.5%, 54.6% முறையே
26

1978, 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியினைக் கூறுகளாக்கிப் பார்க்குமிடத்து, 1990-2000 வரையான காலப் பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தினை அடைவதில் உயர்வு வளர்ச்சியுடைய தயாரிப்புத்துறை விரைவில் நிறைவேறும் எனக் கூறுவது சாத்தியமில்லை.
தயாரிப்புத் துறையின் விகிதாசாரப் பங்களிப் பின் குறைவு தாராளமயமாக்கலைத் தொடர்ந்த காலப்பகுதியில் பல சிறு நடுத்தர தயாரிப்புத் தொழில் அலகுகள், மலிவான இறக்குமதிப் பொருள்களுடன் போட்டியிட முடியாது மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டது என விவாதிக்கப்பட்டது. இக்கருத்து ஓரளவுக்கு உணி மையானாலும் வேறொன் றையும் அவதானித்த லி வேணி டும் . தாராளமயமாக்கலுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சிறிய, நடுத்தர தயாரிப்பு அலகுகள் மூடப்பட்டதற்கு நாட்டிலுள்ள உழைப்பாளர் பழைமை சார் சட்டங்கள், தடைகள் ஏற்படுத்தும் உழைப்பினர் சட்டங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. ஒரு நவீன பொருளாதாரத்தில் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக நிலைமைகளுக்கேற்றவாறு தமது உற்பத்தி நடவடிக்கைகளை மறுசீரமைப்புச் செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்வதால் சவால்களுக்கு முகம் கொடுக்கலாம். இது இலங்கையில் நிலவும் உழைப்பினர் சட்டங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக சிக் கலை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக, வேலையாட்கள் தொகையினை (50 தொழிலாளருக்கு மேலாக உள்ள நிறுவனங்களில்) குறைப்பது கஷ்டமானது. இதற்கு ஒரு காலநீடிப்புக் கொண்ட ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இது பல வருடங்களை எடுக்கலாம். இப்பின்னணியில் தொழில் அதிபர்களுக்கு பின்பற்றும் இலகுவான வழி உற்பத்தி நடவடிக்கைகளை மூடுவது அல்லது நிறுத்துவது; அதனால் முழு வேலைப்படையும் வேலையினை இழந்து நிற்கும். இத்தகைய பிரச்சினைகள் பல சிறு, நடுத்தர தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதற்கான பிரதான காரணங்களாக இருந்துள்ளன.
3. விவசாயம்
சென்ற கால் நூற்றாண்டில் இலங்கை முக்கியமாக விவசாயப் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து சேவை-மையப்படுத்திய பொருளாதாரமாக மாறி விட்டது. பிரதான பயிர்களாக நெல், தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகியவை இருந்தன. முதலாவது உணவுப் பயிராகவும் மற்றவை மூன்றும் காசுப் பயிர்களாக பயிரிடப்படடன. தேயிலையும் இறப்பரும் முக்கியமான ஏற்றுமதிப் பண்டங்களாக நெடுங்காலம் வெளிநாட்டு வர்த்தகத்தில் பங்கேற்றன. தெங்குப் பொருளில் முக்கியமான ஒரு பகுதி பதனிடப்பட்ட முறையில் தேங்காய்த்துருவல், தேங்காய் எண்ணெய், உலர்த்திய தேங்காய், தெங்கு களிம்பும் பால்மாவும் ஆகிய வகைகளைாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
27

Page 21
நெல் உற்பத்தி 1991இல் 2.4 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருந்து 2.9 மில்லியன் மெற்றிக் தொன்களுக்கு 2000இல் அதிகரித்தது. இது ஒரு 21 சதவீத அதிகரிப்பு. இவ்விரு ஆண்டுகளுக்குமிடையே தேயிலையின் உற்பத்தி 241 மில்லியன் கிலோ கிராம்கள் அளவில் இருந்து 306 மில்லியன் கிலோ கிராம்கள் அளவுக்கு (27 சதவீதம்) அதிகரித்தது. இறப்பர் உற்பத்தி 104 மில்லியன் கிலோ கிராம்களாக இருந்து 87 மில்லியன் கிலோ கிராம்கள் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. (16 சதவீத வீழ்ச்சி) தெங்குப் பொருள் உற்பத்தி 2.2 பில்லியன் தேங்காய்கள் என்ற அளவிலிருந்து 3.1 பில்லியனாக அதிகரித்தது. (41 சதவீத அதிகரிப்பு) நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்ரெயருக்கான விளைவு 3.4 தொன்களாக இருந்து 3.9 தொன்களாக அதிகரித்தது. ஆனால் இறப்பர் பயிர்ச்செய்கையில் அது (இதே காலப்பகுதியில்) 706 கிலோ கிராம்கள் அளவிலிருந்து 694 கிலோ கிராம்கள் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. எப்படியாயினும் இறப்பர் உற்பத்தி 1992, 1999 ஆகிய ஆண்டுகளில் ஒரு நல்ல உயர்ந்த வளர்ச்சிப் போக்கினை அனுபவித்தது. 2000 ஆண்டு இறப்பர் உற்பத்தியைப் பொறுத்த வரை வழக்கத்துக்கு மாறாக ஒரு பாதகமான ஆண்டாக இருந்தது.
உணவுப் பயிர் செய்கையும் மீன்பிடி உபதுறைகளும் நடந்துள்ள உள்ளுர் போரினால் தடைப்பட்டிருந்தது. வடகிழக்குப் பொருளாதாரம் அன்றும் இன்றும் ஒரு பெருமளவு விவசாயப் பிரதேசமாக இருந்துள்ளது. இம்மாகாணத்தில் சுதந்திரற்கு பின்னரான காலப்பகுதியில் மிகச் சிறு அளவான கைத்தொழில்களே அமைக்கப்பட்டன. குறிப்பிடத்தக்கவை காங்கேசன்துறையில் சீமேந்துத் தொழிற்சாலை, பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை (வடக்கில்) கடதாசித் தொழிற்சாலை (கிழக்கில்) இவை மூன்றும் நடுத்தர அல்லது பாரிய தொழிற்சாலைகளாக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டன.
4. கைத்தொழில்
சென்ற காலி நுாற் றாணி டில் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் கைத்தொழில்துறையில் ஏற்பட்டுள்ளது. 1991இல் மொத்த கைத்தொழிலின் உற்பத்தியின் பெறுமதியில், துணி, அணியும் ஆடை மற்றும் தோல் பொருட்கள் சேர்ந்து 33 சதவீதமாகவும் உணவு, குடிவகை மற்றும் புகையிலை 29 சதவீதமாகவும், இரசாயன, பெற்றோலிய, இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் 19 சதவீதமாகவும் காணப்பட்டன. எப்படியாயினும், முதலில் குறிப்பிட்ட உபதுறை 2000இல் அதனுடைய பங்கினை 47 சதவீதத்திற்கு அதிகரித்தது. மற்றைய இரு உபதுறைகளின் பங்குவீதங்களும் முறையே 23 சதவீத அளவுக்கும் 16 வீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்தன.
அரச கைத்தொழில் துறையின் பங்களிப்பும் அண்மைய காலங்களில் குறைந்து விட்டது. முதலாவதாக, மேலே குறிப்பிட்ட இரு உப துறைகளும்
28

இன்று முழுவதும் தனியார் துறையில் உள்ளன. இரசாயனப் பொருட்கள், பெற்றோலியப் பொருட்கள், இறப்பரும் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் ஆகியவற்றின் உபதுறையில் இரண்டில் மூன்று பங்கு தனியார் துறையிலும் மூன்றில் ஒன்று பொதுத்துறையிலும் (2000) காணப்படுகின்றது. எல்லாமாக பத்துக் கைத்தொழில்கள் 2000இல் அரச உடைமை கொண்டவையாக உள்ளன. அவையாவன: சீனி, உப்பு, தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், மரத்தொழில், கடதாசி, ஆயுள்வேத மருந்துகள், பெற்றோலியப் பொருள், இறப்பர், இல்மெனைட், றுாற்றைல், செப்பனிடாத சிர்க்கொன் மற்றும் பொஸ்பேற் உற்பத்தி ஆகிய இக கைத் தொழில்களில் மொத்தமாக 33,247 ஆட்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு ரீதியாக குறிப்பிடத்தக்க வகையில் ஏற்பட்ட மாற்றமொன்று இலங்கை யரினி ஏற்றுமதகளிலி கைத் தொழில் ஏற்றுமதிகள் விரைவுப்படுத்தப்பட்டதும் விவசாய ஏற்றுமதிகள் குறைந்ததும் கவனிக்கத்தக்கது. கைத்தொழில் ஏற்றுமதிகள் மொத்த உற்பத்திப் பெறுமதியில் 1991இல் 62 சதவீதமான (இலங்கை ரூபாய் பெறுமதியில்) அளவிலிருந்து 2000இல் 78 சதவீத அளவுக்கு அதிகரித்தது. இத்தகைய ஏற்றுமதிகளின் கட்டமைப்பு மாற்றத்தில் தனித்துவமான பங்களிப்பு, துணிகள், அணியும் ஆடைகள் மற்றும் தோற் பொருள்கள் என்பவற்றிலிருந்து ஏற்பட்டுள்ளது. துணிகள் அணியும் உடைகள் மற்றும் தோற் பொருட்கள் ஆகியவை சேர்ந்து 1991இல் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதமாக இருந்து 2000இல் உறுதியான முறையில் 54 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன.
அவ்வாறு இருந்துள்ள பொழுதிலும் இலங்கையின் துணிகள், அணியும் உடைகள், மற்றும் தோல் பொருள்கள் ஆகியவை இரண்டு பிரதான உலக நாடுகளின் சந்தைகளின் அதாவது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் நிலைமை மாற்றங்களினால் பாதிப்படையக் கூடியவை. இரண்டாயிரம் ஆண்டில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதிகளில் 62 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் 22 சதவீதம் ஐக்கிய இராச்சியத்துக்கும் (இலங்கை ரூபாய் பெறுமதி அடிப்படையில்) சென்றுள்ளன. இவ்விரு சந்தைகளும் சேர்ந்து மொத்த அணியும் உடைகளின் ஏற்றுமதிகளில் 2000இல் 84 சதவீதத்தை எடுத்துள்ளன.
பல்வகை நாரியற் பொருள் உடன்படிக்கை (Multi Fibre Agreement) சனவரி 2005இல் காலப் படிநிலை மாற்றத்தை நிர்ணயிக்கும் பொழுது இலங்கை உலக சந்தையில் நேரடியாகப் போட்டியிட வேண்டிய கட்டாயம் எதிர்நோக்கப்படும். இப்பொழுது அனுமதிப் பங்கின் அடிப்படையில் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் பெறும் சலுகை நிலை மாறி விடும். சீனா தைத்த உடைகளில் அனுமதிப் பங்குச் சலுகை இல்லாத சந்தைகளில் மேலாதிக்கம் செலுத்த முடியும். இந்தியா இலங்கைக்கு இன்னொரு போட்டியிடும் நாடாக உள்ளது. முன்பு இலங்கை அதனுடைய உடைகள் ஏற்றுமதிகளை அதிகரித்துச்
35

Page 22
செல்ல முடிந்தது. ஆனால் 2005 இல் இருந்து தைத்த உடைகளின் ஏற்றுமதியும் தேயிலை ஏற்றுமதியைப் போல உறுதியில்லாத நிலையினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பின்னணியில் இலங்கை அதனுடைய தயாரிப்புப் பொருள் ஏற்றுமதிகளை பல்லினப்படுத்துதல் வேண்டும். ஏனென்றால், இப்பொழுது அது அவ்வாறு இல்லை. எழுபது சதவீதத்திற்குத் தயாரிப்பு பொருள் ஏற்றமதியில் துணியும் ஆடைகளும் இடம் பெறுவது ஒரு சமனற்ற நிலையைக் காட்டுகின்றது.
5. சேமிப்பும் முதலீடும்
இலங்கையில் உள்நாட்டு சேமிப்பு வீதம் 1991இல் 12.8 சதவீதத்திலிருந்து 1999இல் 19.5 சதவீதமாக அதிகரித்தது. பின்னர் 2002இல் 14.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய சேமிப்பு வீதம் 15.2 சதவீதத்திலிருந்து இதே காலப்பகுதியில் 23.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. பின்பு 19.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. (அட்டவணை 2). 1991, 1999 ஆகிய ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறுமதியில் உள்நாட்டுச் சேமிப்பு அளவும் தேசிய சேமிப்பு அளவும் முறையே 52 சதவீதத்தாலும் 55 சதவீதத்தாலும் போற்றத்தக்க முறையில் அதிகரித்தன. எப்படியாயினும் இரண்டு சேமிப்பு அளவுகளும் 2001, 2002 ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டுள்ளன. இலங்கையில் சேமிப்பு வீதம் மற்றைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் (குறிப்பாக இந்தியா) ஒப்பிடுமிடத்து குறைவாகவே இருந்து வந்துள்ளது.
குறைந்தளவான சேமிப்பு வீதம் இலங்கையில், வருமானம் பற்றிக் குறைந்தளவாக அறிவிக்கப்படுவதால் அல்லது அறிவிக்கப்படாமல் இருப்பதனால் விளக்கப்பட முடியும். பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தனியார் நுகர்வும் செலவும் பற்றிய தரவுகள், குறைந்து அறிவிக்கப்படுதலினால் அல்லது அறிவிக்கப்படாததினால் நம்பத் தகுந்தவையாக இல்லை. அதேவேளை தனியார் நுகர்வினை மிகைமதிப்புச் செய்தலும் தனியார் சேமிப்பு முதலீடு ஆகியவற்றை குறைத்து மதிப்பிடும் தன்மை காணப்படுகின்றது. இத்தகைய பின்னணியில் அட்டவணையில் தரப்பட்டுள்ள சேமிப்புத் தரவுகள் கவனமாக நோக்கப்படுதல் வேண்டும். சேமிப்பு வீதம் குறைந்திருப்பதன் நிலையுடன் தொடர்புடையதாக முதலீட்டு வீதமும் குறைந்தளவில் இருப்பதாகும். தனியார் முதலீடும் பொதுத்துறை முதலீடும் சேர்த்து 1991இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமாக இருந்து 2000இல் 28 சதவீத அளவுக்கு அதிகரித்தது; அது பின்னர், 2002இல் 21 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது (அட்டவணை 2). 19912000 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீடு அதிகரித்தது, ஒரு ஆக்க முறையான மாற்றம் எனக் கொள்ளுமிடத்திலும் பொதுத் துறையில் ஏற்பட்ட அதிகரிப்பின் ஒரு பகுதி பாதுகாப்புத் துறையில் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடுதல் வேண்டும். இது அபிவிருத்தி தொடர்பானது எனக் கருத முடியாது.
30

மேலும் முக்கியமானதாகக் கவனிக்க வேண்டியது முதலீட்டு விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதத்திற்கு மேலானதாக இருத்தல் 8 சதவீதத்திற்கு அல்லது அதற்கு உயர்வான நிலைத்துச் செல்லும் வளர்ச்சி வீதத்தை அடைவதற்குத் தேவையானது. 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் முதலீடுகளின் வளர்ச்சி, தொலைத் தொடர்பு சேவையின் விரிவாக்கத்தினாலும் அரைகுறையாக தனியார்மயப்படுத்திய தேசிய ஆகாய விமானச் சேவையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஆகாய விமானத்திற்கான செலவு ஆகியவற்றினால் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்த முதலீடு 28 சதவீதமாக இருந்த அளவு 2002இல் 21 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இது ஒரளவுக்கு 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை முதலீடுகள் குறைந்ததன் காரணத்தினால் ஏற்பட்டது.
அட்டவணை 2: சேமிப்பும் மற்றும் முதலீடும் (1991-2002)
Aà
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம்
வருடம் உள்நாட்டுச் சேமிப்பு தேசிய சேமிப்பு மொத்த முதலீடு
% % %
1991 12.8 15.2 22.9
1992 15.0 17.9 24.3
1993 6.0 20.2 25.6
1994 15.2 19.1 27.0 1995 15.3 s 9.5 25.7
1996 5.3 19,0 24.2 1997 17.3 21.5 24.4
1998 9. 23.4 25.2
1999 9.5 23.5 27.1
2000 17.4 21.5 28.0
2001 15.8 20.3 22.0
2002 14.6 19.7 21.3
மூலம்: இலங்கை மத்திய வங்கி - ஆண்டறிக்கை 2002
8. வட்டி வீதம்
வங்கி வட்டிவீதம், நிலையானதாக 17 சதவீதத்தில் 1991இல் இருந்து 1998 வரை இருந்துள்ளது. பின்பு அது 1999இல் 16 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றது.
31

Page 23
2000 ஆண்டில் 25 சதவீதத்திற்கு உயர்ந்தது. இது ஒரு ஆழமாகச் செல்லும் ஒரு பொருளாதார நெருக்கடியினைப் பிரதிபலித்தது. (அட்டவணை 3). குறிப்பிட்ட ஒரு ஆண்டில் மிகக் கூடிய அதிகரிப்பாகக் காணப்பட்டுள்ளது. ஆனாலும் இவ்வீதம் பின்பு 2000இலும் 2002இலும் 18 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றுள்ளது. உயர்வான வட்டிவீதங்கள் நிலவுமிடத்து உள்நாட்டுத் தயாரிப்புத்துறை மலிவான இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புப் பொருட்களுடன் போட்டியிட முடிவதில்லை. உயர்வான வட்டிவீதங்கள் முதலீடு செய்வதற்குத் தடையாக இருந்துள்ளன. உயர்ந்த வட்டிவீதங்கள், அதிகமான சிறு மற்றும் JBG55J Qg5 Tg56) Sq660Tries6ir (Small and Medium Enterprises, SMEs) நிதிச் செயலாற்றத்தைப் பாதித்துள்ளதால் அவை அதிகமானவை மூடப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது.
அட்டவணை 3: வட்டிவீதம் 1991-2002
வருடம் வங்கி வீதம் *
1991 17.0
1992 17.0
1993 17.0
1994 17.0
1995 17.0
1996 17.0
1997 17.0
1998 7.0
1999 6.0
2000 25.0
2001 18.0
2002 18.0
* மத்தியவங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வீதம்
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2002, அட்டவணை 24.
32

7. பணவீக்கம்
பணவீக்கத்தினை அளவிடுவதற்கு இலங்கையில் மற்றைய சில அளவைகள் இருப்பினும் கொள்நெறித் தேவை காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் வேறு அளவீடுகளும் செய்யப்பட்டன. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி, கொழும்பு பெரும்பாக விலைச்சுட்டி மற்றும் மாவட்ட ரீதியான விலைச் சுட்டிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. 2002 நடுப்பகுதியிலிருந்து குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் ஒரு புதிய இலங்கை நுகர்வோர் விலைச்சுட்டி (இ.நு.வி.சு.) 1995-1997 அடிப்படை ஆண்டாகக் கொண்டு (1995-1997=100) 66156 gust filis) (SriLanka Consumer Price Index, SLCPI) ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இ.நு.வி.சு. சனவரியிலிருந்து மட்டும் கிடைத்திருப்பதால் கொ.நு.வி. சுட்டியை பணவீக்கத்தின் அளவையாக இவ்வத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டியில் பல குறைபாடுகள் உண்டு.
总
அவற்றில் மிகத் தாக்கமான குறைபாடு அடிப்படை ஆண்டு பற்றியது. 1952 ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 1952 ஆண்டைத் தழுவிய ஒரு நுகர்வுப் பொருள்களின் கூடை எடுத்துக் கொள்ளப்பட்டது. இது காலங்கடந்த ஒரு நுகர்வுக் கூடையாகின்றது. 1952இல் இருந்து வாடகை தொடர்பாக ஒரு நிலையான பெறுமதி வழங்கியிருப்பது மிக வெளிப்படையான குறைபாடுகளில் ஒன்றாகின்றது. வாடகை குறித்த குறிகாட்டி 2000 ஆண்டில் 109.8 ஆக மட்டும் காணப்பட்டுள்ளது; அது அந்த நிலையில் 1970இல் இருந்து அவ்வாறே இருந்தது என ஏற்றுக் கொள்வது பொருத்தமற்றது. இத்தகைய குறைபாடுகள் இருப்பினும் கொழும்பு நுகர்வோன் விலைச் சுட்டி பணவீக்கத்தின் அளவீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்ற பன்னிரண்டு ஆண்டுகளில் இலங்கையில் பணவீக்கம் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. வருடாந்தம் சராசரியாக 1991இல் 12, 2 சதவீதமாக இருந்து அதிகமாக ஒரே நோக்கில் வீழ்ச்சியடைந்தது. 1995இல் 7.7 சதவீதத்தை அடைந்துள்ளது. மீண்டும் 1996இல் 15.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. பின்னர் தொடர்ச்சியாக 1999 வரை வீழ்ச்சியடைந்தது. திரும்பவும் 2001இல் உயர்ந்து உச்ச அளவாக 14.2 சதவீதத்தை அடைந்தது. ஆனாலும், 2002இல் 9.6 சதவீதத்திற்குக் குறைந்தது (அட்டவணை 4). 2001இல் பணவீக்கம் மிக உயர்வாகச் சென்றதற்கு எரிபொருள் விலை ஏற்றம், ரூபாவின் பெறுமதிக் குறைவு, உயர்வான இறக்குமதி, மற்றும் உள்நாட்டு வரிகளினால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன. கொழும்பு நுகர்வோன் விலைச் சுட்டியினால் அளவிடப்படும் பணவீக்கம் மிக
33

Page 24
உயர்ந்ததாக இருந்திருக்கின்றது; நாட்டின் மற்றைய பகுதிகளில் குறைந்த பணவீக்கம் அனுபவிக்கப்பட்டிருக்கலாம். கொழும்பு நுகர்வோன் விலைச் சுட்டியினை விட மற்றைய பணவீக்கம் பற்றிய அளவைகள் பொதுவாக
குறைந்திருந்த நிலைகளைக் காட்டின.
அட்டவணை 4: பணவீக்க வீதம் (1991-2002)
(கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டி 1952 = 100)
991 1.4
1992 2.2
1993 11.7
1994 8.4
1995 7.7
1996 5.9
1997 9.6
998 . 9.4
1999 4.7
2OOO 6.2
2001 14.2
2002 9.6
மூலம்: குடிசன மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்
8. வேலையின்மை
வேலையின்மையின் அளவு வளர்முக நாடுகளில் மறைவு வேலையின்மையும் குறைவு வேலையின்மையும் பரவலாக இருப்பதால், சரியாக அறிந்துக் கொள்ளல் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இது பற்றி குறிப்பாக விவசாயம், சேவை ஆகிய துறைகள் மேலாதிக் கம் கொணி டதாக (இலங்கை போனி ற பொருளாதாரமொன்றில்) இருக்குமிடத்து அறிவது கடினமானது. இலங்கையின் சேவைத் துறை மொத்த சில்லறை வியாபாரத்தினை உள்ளடக்குகின்றது. விவசாயத் துறையிலும் மற்றும் மொத்த, சில்லறை வியாபாரத் துறையிலும் மறைவு வேலையின்மையும் குறைவு வேலை முறையும் அதிகமாக உள்ளது எனக் கருத முடிகின்றது.
34

எவ்வாறாயினும், தரவுகளின் தரம் குறைந்திருப்பினும் இருப்பவற்றின் அடிப்படையில் நோக்குமிடத்து வேலையில்லாமையின் வீதம் உறுதியுடன் 14.7 சதவீதமாக 1991இலிருந்து 2000இல் 7.6 சதவீதத்திற்குக் குறைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க அடைவாக இருந்துள்ளது (அட்டவணை 5). ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராரினதும் வேலையின்மை வீதங்களும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனாலும் ஏமாற்றத்தைத் தருகின்ற விடயமாக பெண்களினது வேலையின்மை வீதம் ஆண்களை விட இரு மடங்காக இருந்துள்ளது. இவையிரண்டுக்குமான இடைவெளி குறைந்து வருவதையும் அவதானித்தல் வேண்டும். 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் வேலையின்மையின் மொத்தமான அளவு முறையே 79%, 9.2% ஆக மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்ப ஆண்கள், பெண்கள் வேலையின்மை விகிதமும் கூடியுள்ளது.
அட்டவனை 5: வேலையின்மை வீதம் 1999-2002
வருடம் வேலையின்மை % ஆண்கள் % பெண்கள் %
1991 14.7 9.9 23.4
1992 14.6 9.4 23.1
1993 3.8 9.7 21.7
994 13.1 9.7 2O.
1995 12.3 9.0 8.7
1996 1.3 8.2 17.7
1997 10.5 7.7 16.1
1998 9.2 6.5 M 14.0
999 8.9 6.7 3.0
2000 7.6 5.8 1.
2001 7.9 6.2 1.4
2002 9.2 7.0 13.6
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2002
மேலே தரப்பட்ட விபரங்கள் தேசிய மட்டத்திலானவை. இவை வேலையின்மை பற்றிய மாகாண வேறுபாடுகளை வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக தெற்கு மற்றும் மத்திய மாகாணங்கள், தேசிய மட்டத்திலான வீதங்களை விட வேலையின்மை வீதங்கள் உயர்வாக இருந்துள்ளன; இந்த நிலை 1997, 1998,
35

Page 25
1999 ஆண்டுகளில் காணப்பட்டுள்ளது. எல்லா மாகாணங்களிலும் பெண்கள் வேலையின்மை வீதங்கள், ஆண்கள் வீதங்களை விட அதிகமாக உயர்ந்ததாகக்
காணப்பட்டுள்ளன.
9. பொது நிதி
தாராளமயமாக்கல் காலத்திற்குப் பின்னான பிரச்சினைக்குரிய விடயங்களில் ஒன்றாக இருந்தது, அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் (பாதிடு) பற்றாக்குறையின் விரைவான அதிகரிப்பு. பாதீடு 1977ஆம் ஆண்டு வரை ஒரு இலக்க பற்றாக்குறை நிலையிலிருந்து (பாதீடு மொ. உ. உ.யின் பெறுமானத்தின் சதவீதம்) 1978ஆம் ஆண்டிலிருந்து வேகமாக அதிகரித்தது. 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1991ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் பாதீட்டுப் பற்றாக்குறை இரு இலக்க அளவினால் (1984 மட்டும் தவிர்த்து) குறிப்பிடப்பட்டது. இக்காலப்பகுதியில் விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஓரளவுக்குக் காரணமாக இருந்துள்ளது. என்றாலும் தொண்ணுாறுகள் இறை நடவடிக்கைகளை நிலைமை அறிந்து நிர்வகித்த காலமானது. 1992இல் இருந்து அநேக ஆண்டுகளில் பாதீட்டுப் பற்றாக்குறை ஒரு இலக்க அளவுகளுக்கு வீழ்ச்சியடைந்தது. (1994, 1995 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்திற்கு சற்று கூடுதலாக இருந்துள்ளது. - அட்டவணை 6) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (மொ.உ.உ) சதவீதமாக பாதீட்டுப் பற்றாக்குறை இலங்கையில் 1991இல் ஏறத்தாழ 12 சதவீதமாக இருந்து, 2002இல் 9 சதவீதத்திற்கு வீழ்ச்சிடைந்துள்ளது. ஆனால் மீண்டும் 2001இல் 11 சதவீதத்திற்கு உயர்ந்தது. (அட்டவணை 6) சென்ற ஐந்து வருடங்களில் பாதிட்டின் பற்றாக்குறைவினை ஒரு இலக்க அளவுக்கு கொண்டு வந்திருப்பது போற்றத்தக்க ஒரு முயற்சியாகும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைவுகள் கட்டாயமாக விரும்பத்தகாதவை என்பது அர்த்தமல்ல. உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய முதலீடுகளைச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டால் அது பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு விலக்காகக் கூற முடிந்தது, அத்தகைய பொது முதலீடுகள் படைத்துறைக்கு வெளியே செய்யப்படுதல் வேண்டும். மறுபுறத்தில் பற்றாக்குறைவுகள் பிரதானமாக பொதுத்துறை நுகர்வுக்காக இலங்கையில் ஏற்பட்டது போல இருப்பின் அத்தகைய முதலீடுகள் விரும்பத்தகாத விளைவுகளைக் கொண்டு வரும் (உயர்ந்த வட்டிவீதம், பணவீக்கம் போன்ற முக்கிய விளைவுகள் ஏற்பட இடமுண்டு). மேலும் பாதீட்டுப் பற்றாக்குறைவுகள் தனியார் முதலீடுகளை, திறைசேரி உண்டியல்கள் மூலம் அளவுக்கு மேலாக அரசாங்கம் கடன் பெறுதலினால், தனியார் துறையின் தேவைகளை நெருக்கி விலக்கல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
36

அட்டவணை 6: பொதுநிதி 1991-2002
வருடம் 69iJafrtas அரசாங்க பாதிட்டுப்
வருவாய்/ செலவீடு/ பற்றாக்குறை/ 6LDT. 2 .9. 9% 6LDIT.9.9 . 96 6LDr. 9.9 - %
1991 2O.S 32.3 -11.9
992 20.2 28.2 -8.0
1993 19.7 28.4 -8.7
1994 19.0 29.5 10.5
1995 20.4 20.5 -10.1 .
1996 19.0 28.5 -9.4
1997 18.5 26.4 -7.9
1998 17.2 26.3 9.2-ه
999 17.7 25.2 -7.5
2000 16.8 26.7 99.سه 2001 16.7 27.5 -0.9
2002 16.5 25.4 -8.9
மூலம் : மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2002
இலங்கையில் பாதுகாப்புச் செலவீனம் ஒரு சர்ச்சைக்குறிய விடயமாக பிரதானமாக இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் மாறி விட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆணையிறவு முகாம் ஏப்பிரல் 2000இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் அரசாங்கம் கூடுதலான நவீன போர் தளபாடங்களைக் கொள்வனவு செய்தது. இது ஏற்கனவே எரிபொருள் விலைகள் 1999இல் இருந்து உலக ரீதியில் அதிகரித்ததனால் பாதிப்பு நிலையினை அனுபவித்த சென்மதி நிலுவை மேலும் பலவீனமடைய நேர்ந்தது. அட்டவணை 7 இல் பாதுகாப்புச் செலவினங்களையும் சமூகச் செலவினங்களையும் வேறுபடுத்திப் பார்க்கின்றோம். (சுகாதாரம், சுதேசிய மருத்துவம் மற்றும் சமூக சேவைகள், கல்வியும் மற்றும் உயர்கல்வி, வறுமைத் தணிப்புத் திட்டங்கள், ஜனசவிய மற்றும் சமுர்த்தி புனர்வாழ்வு, ஆகியவை சமூக செலவினங்களாக இங்கு சேர்க்கப்பட்டுள்ளன). ஒவ்வொன்றும் மொத்த பொதுச் செலவினங்களில் எவ்வளவு பங்கு என்பதைச் சென்ற பத்தாண்டுக் காலத்தில் காட்டப்படுகின்றது. ஒரு பெரும் அதிருப்தியான விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தொண்ணுாறுகளின் முற்பகுதியில் மொத்தச் செலவினங்களில் பாதுகாப்புச் செலவினங்களின் விகித அளவு மொத்தச் செலவினங்களின் சமூக செலவினங்களின் விகித அளவுக்கு
37

Page 26
ஏறத்தாழ சமனாக இருந்துள்ளது. ஆனால் 1995இல் இருந்து மொத்த செலவினங்களில் பாதுகாப்புச் செலவினங்களின் விகித அளவு விரைவாக அதிகரித்தது. மறுபக்கத்தில் மொத்த செலவினங்களில் சமூகச் செலவினங்களின் விகித அளவு ஏறத்தாழ அதே அளவில் இருந்தது. ஆனால் 2000 ஆண்டில் சமூகச் செலவினங்கள் முக்கியமாக வீழ்ச்சியடைந்தன. பாதுகாப்புச் செலவினங்கள் உயர்ந்தன. இரண்டுக்குமிடையே இருந்த இடைவெளி விரிவடைந்தது; பாதுகாப்புச் செலவினங்களுக்கு சாதகமான நிலை 1995-2000 வரையான காலப்பகுதியில் மேலோங்கி நின்றது. 2000 ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்கள் சமூக செலவினங்களை விட ஏறத்தாழ 80 சதவீதத்திற்கு மேலானதாக இருந்துள்ளது. எப்படியாயினும், 2001இல் இருந்து நோர்வேயின் அனுசரணையுடன் செய்யப்பட்ட சமாதான முறைவழிகளினால் பாதுகாப்புச் செலவினங்களுக்கும் சமூக செலவினங்களுக்குமிடையே இருந்து வந்த இடைவெளி குறையத் தொடங்கியது.
அட்டவணை 7: பாதுகாப்பு, சமுகச் செலவினங்களின், மொத்த பொதுச் செலவில் விகிதப் பங்கு (%) (1991-2002)
1991 1992 1993 1994 1995, 1996 1997 1998 1999 2000 2001 2002
பாதுகாப்புச் செலவினங்கள் 11.2 12.0 10.9 12.9 14.3 17.7 16.8 16.9 16.4 17.7 14.2 10.8
சமூகச் செலவினங்கள் 11.2 13.0 9.9 12.8 12.7 13.5 12.6 12.0 12.7 9.8 11.7 9.6
(1) கல்வி 3.5 5.4 4.3 4.5 3.5 4.2 4.2 4.7 5.0 3.8 4.2 3.3
(ii) சுகாதாரம் 2.4 3.1 19 2.6 5.2 5.0 4.7 4.0 4.8 3.9 3.2 3.6
(iii) 6ngp6ODLDgë
தணிப்பு 5.3 4.5 3.7 5.7 2.0 3.2 3.0 2.5 2.6 2.0 3.0 2.2
(iv) புனர்வாழ்வும்
மீள்கட்டமைப்பும் . - - - 2.0 1.1 0.7 0.8 0.3 0.1 1.3 0.5
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் 其、
படைத்துறை விருத்தி சமூக அபிவிருத்திக்கு 1995-2000 வரையான ஆறு ஆண்டுகளில் எதிராகச் சென்றுள்ளது. படைத்துறை விருத்திக்கு முன்னுரிமை
38

வழங்கியது, அரசாங்கம் “சமாதானத்திற்கான போருக்கு” ஆயத்தமான நிலை உறுதிப்படுத்தியதன் விளைவாக எழுந்தது. சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு போருக்குத் தயார் நிலையில் இருப்பது என்ற நிலைப்பாட்டினால் இலங்கையில், கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, மீள்கட்டுமான வசதிகள் ஆகியவை மோசமடைந்து சென்றன. (பாதுகாப்புத் துறையில் ஊழல்களும் கூடியதுடன் நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன). அனுமதியில்லாமல் படைகளை விட்டு வெளியேறுபவர்கள் அதிகமாக குற்றச் செயல்களுக்கும் பொறுப்பாக இருந்துள்ளனர்.
10. பொதுப்படுகடன்
இலங்கையின் மொத்தப் படுகடன் (உள்நாட்டு, வெளிநாட்டு) அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏறத்தாழ சமனானதாக தொண்ணுாறுகளிலும் அதற்கு மேலாகவும் 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் இருந்ததை அவதானிக்க முடிகின்றது (அட்டவணை 8). 1991-1992 வரையான காலப்பகுதிகளில் பொதுப்படுகடனில் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் காணப்பட்டுள்ளது.
அட்டவணை 8 பொதுப் படுகடன் (1991-2002)
உள்நாட்டு வெளிநாட்டு வெளிநாட்டுப் மொத்தப் வெளிநாட்டுப் படுகடன்/ படுகடன்/ படுகடன்/ படுகடன்/ படுகடன் மொ.உ.உ. மொ.உ.உ | மொ.உ.உ. மொ.உ.உ. சேவைப்படுத்தல் % %, (gou.e.t.) %, (US $) % விகிதம் (%)
1991 40.9 57.6 72.1 98.5 18.5 1992 40.0 55.4 70.4 A. 95.4 17.1
1993 42.8 54. 73.4 96.9 13.8
1994 43.0 52. 70.8 95.1 13.7
1995 43.3 51.9 66.7 95.2 6.5
1996 46.4 46.8 61.1 93.3 15.3
1997 43.5 42.3 54.3 958 13.3
1998 45.5 45.3 55.5 90.8 13.3
1999 49.1 45.3 57.8 9.1 15.2 2000 53.8 43.1 54.5 96.9 14.7
2001 58.8 45.3 54.3 103.3 13.2
2002 59.8 45.5 56.1 105.3 13.2
மூலம் : இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை, 2002
39

Page 27
உள்நாட்டுப்படுகடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் 41ஆக 1991இல் இருந்து 60 சதவீதத்திற்கு 2002இல் அதிகரித்தது. வெளிநாட்டுக் கடன் 58 சதவீதமாக இருந்து (1991) 46 சதவீதத்திற்கு மாறியது. இத்தரவுகள் சென்ற பன்னிரண்டு ஆண்டுகளில் இலங்கைக்கு வெளிநாட்டு உதவி குறைந்ததையும் உள்நாட்டுக் கடன் பெறுவதில் தங்கியிருப்பது அதிகரித்ததையும் எடுத்துக் காட்டுகின்றன. படுகடன் சேவை விகிதம் (நாட்டின் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுமதியில் வெளிநாட்டுக் கடன் சார்பான கொடுப்பனவின் விகிதாசார அளவு) 1991இல் 19 சதவீதமாக இருந்து 2002இல் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் படுகடன் சேவை விகிதம் தென் ஆசியாவில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உயர்வான படுகடன் சேவை விகிதங்களைக் கொண்டவையாகக் காணப்பட்டன.
இலங்கையில் சென்ற பன்னிரண்டு வருடங்களில் பொதுப் படுகடன் உள்ளமைப்பில் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதியின் வீதப் பங்காக வெளிநாட்டுப் படுகடனின் வீழ்ச்சியும் உள்நாட்டுப் படுகடனின் அதிகரிப்பும் பிரதான குறிப்பிடத்தக்க மாற்றமாக அவதானிக்க முடிந்தது. பொதுப்படுகடனின் உள்ளமைப்பு மாற்றம் நன்மைகளையும் பாதிப்புகளையும் கொண்டதாக அமையும். வெளிநாட்டுப் படுகடனில் குறைவாகத் தங்கியிருப்பது அரசியல் ரீதியாக நன்மை கொண்டதாகும். ஏனென்றால் அது அதிகமாக ஏதாவது சில இணைப்புக்கள், நிபந்தனைகளைச் சேர்க்கப்படுபவையாக இருக்கலாம். வெளிநாட்டு கடன் படுகையின் நிபந்தனைகள் அரசியல் சார்பானவையாக அல்லது பொருளாதார ரீதியானவையாக இருக்க முடியும். பொருளாதார ரீதியான விளைவுகள் பொருளாதாரத்திற்குப் பாதிப்பினைக் கொண்டு வரலாம். ஆனாலும் வெளிநாட்டுக் கடன் படுகையில் குறைந்ததாகவும் உள்நாட்டுக் கடன்படுகையில் கூடுதலாக தங்கியிருப்பதும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. உள்நாட்டுக் கடன்படுகையில் கூடுதலாகத் தங்கியிருப்பது அரசாங்கத்திற்கு உள்நாட்டு ரீதியான செலவினை அதிகரிக்கின்றது. வெளிநாட்டுக் கடன் பெறுதல் இருபக்க கடன்படுகை, பல்பக்க கடன்படுகை, சலுகை வட்டி அடிப்படையிலும் நீண்டகாலக் கொடுப்பனவு காலத்தையும் தாராளமான மறு கொடுப்பனவுச் சலுகை காலத்தையும் கொண்டிருக்கலாம். அநேகமான இருபக்க, பல்பக்கக் கடன்கள் வருடத்திற்கு ஐந்து சதவீதத்திற்கு குறைந்த நீண்டகாலக் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்தினால் உள்நாட்டுக் கடன் பெறுகை மேற்கொள்ளப்படுமிடத்து குறுங்காலக் கடன்களாக இருப்பதுடன் இரு இலக்க வட்டி வீதத்தில் பெறப்படுபவையாகவும் உள்ளன. இலங்கையில் திறைசேரி உண்டியல் வீதங்கள் சென்ற பன்னிரண்டு ஆண்டுகளில் இரு இலக்க வீதங்களாக இருந்துள்ளன. இலங்கையில் முன் கூறப்பட்டது போல, வட்டிவீதங்கள் உயர்வாகவே இருந்து வந்துள்ளன. ஒப்பீட்டு ரீதியில் சர்வதேச சந்தையில் வர்த்தக கடன்களுக்கான வட்டிவீதங்கள் 10 சதவீதத்திற்கு குறைந்தே
40

காணப்பட்டுள்ளன. ஆகவே, வெளிநாட்டுக் கடன் பெறுகை இலங்யிைனைப் பொறுத்து ரூபாவின் பெறுமானம் தேய்வடைந்து சென்றுள்ள பொழுதும் மலிவானதாக இருக்கும் எனக் கொள்ள முடிகின்றது.
அரசாங்கத்தினால் கடன் பெறுவது உயர்ந்த வட்டி வீதங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. இது வெளிநாட்டுக் கடன் பெறுவதிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்படும் உள்நாட்டுக் கடன் பெறுதல் இலங்கையின் முதல் சந்தையின் விருத்திக்கும் தடையாக இருந்துள்ளது. திறைசேரிப் பிணைகளும் உணி டியல் களும் அரசாங் கத்தினால் கடன் பெறு கருவிகளாக வெளியிடப்படுகின்றன. இவை பாதுகாப்புடைய நிதி முதலீடுகள் என்பதுடன் அரசாங்கத்தின் உத்தரவாதத்திற்கு உட்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன. ஆதலால் உள்நாட்டு முதலீட்டாளர்கள், இடர்நேர்வுடைய இருப்புச் சந்தை முதலீடுகளுக்குப் பதிலாக உறுதிப்படுத்தப்படும் திறைசேரிப் பிணையங்கள், உண்டியல்கள் ஆகியவற்றின் மீது முதலீடு செய்ய விரும்புகின்றனர். அத்தகைய சூழலில் உள்நாட்டுக் கடன் பெறுகை மீது அதிகமாகத் தங்கியிருத்தல் உயர்ந்த வட்டிகளின் காரணமாக செலவை அதிகரிப்பவையாகவும் காணப்படுகின்றன. மேலும் அவை முதல் சந்தையில் முதலீடு செய்வதில் நெருக்குதல் நிலையினையும் அதனால் அரசாங்கத் துறையல்லா முதலீடு தொடர்பாக விலக்குதல் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆகவே வெளிநாட்டுக் கடன் பெறுகை உள்நாட்டுக்கடன் பெறுகைகளுடன் ஒப்பிடுமிடத்தில் மலிவானதாக உள்ளது என விவாதிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்து செல்லும் வெளிநாட்டுக் கடன்படுகை விகிதம் ஒரு வரவேற்கத்தக்க விடயமல்ல.
வெளிநாட்டுக் கடன் பெறுகையினை குறைத்தும், உள்நாட்டுக் கடன் பெறுகையினைக் கூட்டியும் செல்லும் நிலைக்குப் பின்னணியாக ஒர் அரசியல் காரணம் 1995-2001 வரையான காலத்தில் காணப்ப்ட்டுள்ளது. வரலாற்று ரீதியாக யூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டரசாங்கங்கள் அதிகமாக வெளிநாட்டில் கடன் பெறுவதை விரும்பவில்லை. வெளிநாட்டுக் கடன் படுகையினால் ஏற்படுத்தப்படும் நிபந்தனை நிலைகளை அவை அவ்வளவுக்கு விரும்பவில்லை. இப்பின்னணியில் உள்நாட்டுக்கடன் பெறுகையில் கூடுதலாகத் தங்கியிருக்கும் தன்மை அதிகரித்தது.
11. பன்னாட்டு வர்த்தகம்
1977இல் இருந்து இலங்கையில் அதிகளவுக்கு வர்த்தக தாராளமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகம் பற்றிய தாராளமயமாக்கலே எல்லாவற்றையும் விட மிகுந்த வெற்றியுடையதாக இருந்துள்ளது எனக் கூறுவது பொருத்தமாகும். ஏற்றுமதி வரிகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. இறக்குமதித் தீர்வை வரிகளின்
41

Page 28
அளவு மட்டங்கள் மூன்று பட்டிகளாக 10 சதவீதம், 20 சதவீதம், 25 சதவீதம் (இவை மேலும் இரணி டாக எதிர் காலத்தில் குறைக் கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது) என வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகம் தொடர்பாக தீர்வை முறையான கட்டுப்பாடுகளல்லாதவை முற்றாக நீக்கப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளும், வர்த்தகம் குறித்து அதிகமாக நீக்கப்பட்டு விட்டன. எப்படியாயினும் தற்காலிகமான சில இறக்குமதிகள் மீதான (முக்கியமாக உணவுப் பொருள்கள், அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தாவர எண்ணெய், முதலானவை) உள்நாட்டு உற்பத்தியினை பாதுகாப்பதற்காக கட்டுப்பாடுகள் இடையிடையே விதிக்கப்பட்டு வந்தன. மேலும் இறக்குமதி 40 சதவீத மேலதிகத் தீர்வை 2001இல் இருந்து ஒரு வருடத்திற்கு விதிக்கப்பட்டது. இது சென்மதி நிலுவையின் நிலை மோசமடைந்து சென்றதைத் தொடர்ந்து விதிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டுப் பாதீட்டில் இது 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இலங்கை இரு பக்க முறையான வர்த்தக ஒழுங்குகளை ஏற்படுத்துவதில் முயற்சிகளையும் எடுத்துள்ளது. மார்ச் 2000 ஆண்டில் இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. பாகிஸ்தானுடனும் அப்படியான ஓர் உடன்படிக்கை செய்யப்படவுள்ளது. இத்தகைய இருபக்க முறையான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இறுதியாக பலபக்க முறையான நாடுகளிடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தென் ஆசியாவில் ஏற்படுவதற்கு முன்னோடிகளாக அமையும் என ஆசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை என்பதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பன்னாட்டு வர்த்தகம் முக்கியமாக சாதகமான மாற்றங்களை அடைந்துள்ளது. 1991இல் விவசாய ஏற்றுமதிகள் மொத்தத்தில் 32 சத வீதத்திலிருந்து 2002ஆம் ஆண்டில் 20 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மறுபக்கத்தில், கைத் தொழில் ஏற்றுமதிகள் அதே ஆண்டுகளில் 62 சதவீதத்திலிருந்து 77 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதன் விளைவாக இலங்கை ஏற்றுமதிகளின் பங்கு ஐக்கிய அமெரிக்காவின் சந்தையில் 28 சதவீதமாக 1991இல் இருந்து 32 சதவீத அளவுக்கு 2002இல் அதிகரித்தது. ஐரோப்பிய சந்தையிலுள்ள பங்கு 1991இல் 31 சதவீதத்திலிருந்து 2002இல் 34 சதவீத அளவுக்கு அதிகரித்தது. ஒப்பீட்டு ரீதியாக இலங்கையின் ஆசிய சந்தைகளின் பங்கு 1991இல் 16 சதவீதத்திலிருந்து 2002இல் 13சத அளவுக்கு குறைந்தது. (அட்டவணை 9) இறக்குமதி குறித்து ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆசியா ஆகிய சந்தைகளின் பங்கு 2002இல் 1991ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்துக் குறைந்து விட்டது. ஆனால் "மற்றைய்’ சந்தைகளில் பங்கு 15 சதவீதத்திலிருந்து (1991) 22 சதவீதத்திற்கு அதிகரித்துது (2002). இது இறக்குமதி வேறாக்கும் போக்குகளைக் காட்டியுள்ளது. மற்றைய சந்தைகள் என்று குறிப்பிடப்படுபவை பிரதானமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பிடுகின்றது.
42

அட்டவணை 9: ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும், சதவீதம் (1991-2002)
ஏற்றுமதிகள் இறக்குமதிகள் ஆண்டு விவசாயம் கைத்தொழில் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா|அமெரிக்கா ஐரோப்பா ஆசியா
1991. 32.3 6.7 28. 309 15.9 5.7 19.9 59.6
1992 24.6 7.7 34.0 36.0 2.3 4.5 9.4 60.7
1993 22.9 73.4 35.2 35.6 13.0 3.3 20.5 600 1994 2.9 74.8 34.8 34.9 14.5 6.0 20.6 56.5
1995 2.8 75.4 356 36.4 14.4 3.0 20.1 54.2 1996 23.5 734 34.0 37.2 14.7 3.6 9.4 55.1 1997 22.9 74.1 35.9 36.0 13.4 3.2 7.3 56.6
1998 22.6 75.2 39.3 32.6 11.2 3.9 17.9 60.0 1999 20.5 77.0 38.8 33.0 11.7 3.6 15.1 58.2 2000 18.2 77.6 39.5 31-0 12.7 3.5 13.5 544
2001 - 9.3 77.1 40. 30.9 11.7 4.4 14.7 56.2 2002 9.9 77.3 37.5 33.8 13.4 3.6 15.4 58.6
மூலம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை - 2002
இலங்கையின் வர்த்தக உள்ளமைப்பில் அதனுடைய அநேகமான ஏற்றுமதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்கின்றன. அதனுடைய இறக்குமதிகள் முக்கியமாக இந்தியா, யப்பான் மற்றைய ஹொங்கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. இந்தியா, யப்பான் ஒவ்வொன்றும் மொத்த இறக்குமதிகளில் பத்து சதவீதத்தினை எடுக்கின்றது. ஆகவே இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, ஐரிோப்பிய நாடுகளுடன் வர்த்தக மிகைகளை அனுபவித்துள்ளது. யப்பான், இந்தியா மற்றும் அநேகமான ஆசிய நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக் குறைகளையும் காட்டியுள்ளது.
12. சென்மதி நிலுவை
இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை ஐக்கிய அமெரிக்க டொலர் ஒரு பில்லியனிலிருந்து (1991), ஐக்கிய அமெரிக்க டொலர் (-) 1.4 பில்லியனுக்கு அதிகரித்தது; இது 2000 இல் ஐக்கிய அமெரிக்க டொலரில் 1.8 பில்லியனாக உயர்ந்திருந்தது. எப்படியாயினும் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை ஐக்கிய அமெரிக்க டொலர் (-) 600 மில்லியனாக 1991இல் இருந்து 2000இல் பற்றாக்குறை ஐக்கிய அமெரிக்க டொலர் 01 பில்லியனாக அதிகரித்தது. பின்னர் ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியனாக 2002இல்
43

Page 29
குறைந்தது. இதற்கமைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக நோக்கின் நடைமுறைக் கணக்கு 1991இல் (-) 6.9 சதவீதமாகவும், 2000இல் (-) 6.4 சதவீதமாகவும் 2002இல் (-) 1.6 சதவீதமாகவும் மாறியுள்ளது. 2000இல் இலங்கை ஒரு சென்மதிநிலுவை நெருக்கடியினை அனுபவித்தது. 1991ஆம் ஆண்டும் சென்மதிநிலுவை தொடர்பாக ஒரு பாதகமான ஆண்டாகவே இருந்துள்ளது. இப்பின்னணியில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கட்டமைப்பு சரிசெய்யும் கடன் வசதியினைப் பெற வேண்டியிருந்தது. ஆனால் தொண்ணுறுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கும் 2000இல் அனுபவித்த நெருக்கடிக்கும் இடையே உள்ள வேறுபாடு எதுவென்றால், முன்பு மொத்த நிலுவை (நடைமுறை மற்றும் முதல் கணக்குகள் சேர்ந்த) கணிய அளவுடையதாக இருந்துள்ளது. 2000இல் ஏற்பட்ட நெருக்கடியில் மொத்த நிலுவையும் குறைநிலையினை அடைந்துள்ளது. (அட்டவணை 10)
அட்டவணை 10: சென்மதி நிலுவை 1991-2002 (பெறுமதிகள், மில்லியன் அமெரிக்க டொலர்களில்)
வர்த்தக நடைமுறை | மொத்த முதல் மொத்த மொத்த நிலுவை கணக்கு உ.உ.(%) கணக்கு நிலுவை உ.உ.(%)
நிலுவை
1991 -997 -69 -6.9 858 290 3.2
1992 -1,045 -555 -57 664 190 2.0
1993 - 1,148 -496 -4.8 08 66 1 6.4
994 - 1559 -860 -73 943 240 2.0
1995 -1505 -787 -6.0 699 52 0.4
1996 -1344 -677 -4.9 459 -68 -0.5
1997 - 1,225 -393 -2.6 602 63 i.
1998 - 1,092 -226 -1.4 413 37 O.2
1999 -1,369 -563 -3.6 373 -263 -1.7
2000 -1,798 - 066 -6.4 443 -522 -3.
2001 - 1,158 -244 - 1.5 562 220 1.3
2002 -1407 -264 -1.6 506 338 2.0
மூலம: மத்திய வங்கி ஆண்டறிக்கை 2002
然、
2000இல் அனுபவிக்கப்பட்ட சென் மதி நிலுவை நெருக்கடியானது பெற்றோலியத்தின் விலைகளின் விரைவான அதிகரிப்பு, மற்றையது படைத்துறைச் செலவுகளின் விரைவாக அதிகரிப்பு ஆகியவற்றினால் ஏற்பட்டது. வர்த்தகக்
44

குறைநிலையும் நடைமுறைக் கணக்குக் குறைநிலைகளும் பெருமளவுக்கு அதிகரித்தன; மொத்த சென்மதி நிலுவையில் குறைநிலை ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க டொலர்களில் அரை பில்லியன் அளவுக்கு வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டது. 2000இல் மொத்த சென்மதி நிலுவையின் குறைநிலை மொத்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தயில் 3 சதவீதமாக இருந்துள்ளது. இது ஒரு உறுதியற்ற விடயமாகக் காணப்பட்டது. ஆனாலும் 2001இல் மொத்த சென்மதி நிலுவை முன்னேற்றமடைந்து ஒரு மிகைநிலையினைக் காட்டியது. இது அமெரிக்க டொலர் 200 மில்லியனுக்கு மேலானதாய் கிடைத்தது. இது ஓரளவுக்கு சர்வதேச நாணய நிதியமிடமிருந்து கிடைத்த கடன் பெறுகையினையும் உள்ளடக்கியது. 2002இல் நிலைமை மேலும் முன்னேற்றம் அடைந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் பொருளாதாரம் ஒரு மீட்டெழுச்சியினையும் அனுபவித்தது.
13. பணம் அனுப்பல்கள்
வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் காசனுப்பல்கள் இலங்கையில் ஆடைகள் ஏற்றுமதிகள் தவிர்ந்த மிகக் கூடிய தேறிய அந்நியச் செலாவணி வருவாய்களாகக் காணப்பட்டுள்ளன. இவை 2002இல் ஐக்கி அமெரிக்க டொலர் ஒரு பில்லியனுக்கு மேலானதாகச் சென்றுள்ளன. தேறிய தனியார் காசனுப்பல் (நாட்டுக்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமிடையே உள்ள மிகுதி) சென்ற இரு தசாப்தத்தில் உறுதியாக அதிகரித்துச் சென்றுள்ளது. இதில் மேற்கு ஆசியாவுக்குச் செல்கின்ற இலங்கை உழைப்பினர்கள் ஏறத்தாழ சென்ற சில ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பகுதி கிடைப்பதில் பங்கெடுத்துள்ளனர். காசனுப்பல்களின் பிரதான மூலங்கள் பிரதேசவாரியாக அவற்றின் பங்குகள் ஆகியவை அட்டவணை 11இல் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில் உழைப்பு ஏற்றுமதி, முக்கியமாக பயிற்றப்படாத உழைப்பினரும் மற்றும் பெண்களும் சேருகின்றனர். பெண்கள் மேற்கு ஆசிய நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள்; பயிற்சியுடைய ஆண் வேலையாட்கள் இலங்கைக்கு பணமனுப்புவதில் குறைந்த ஆர்வத்தைக் காட்டியுள்ளளனர். இது மேற்கு ஆசிய நாடுகளல்லாதவற்றிலிருந்து கிடைக்கும் தொகை, தேறிய தனியார் பணமனுப்பல்களுக்குச் சேர்பவற்றிலிருந்து அறிய முடிகின்றது. எப்படியிருப்பினும் மேற்கு ஆசியாவை விட உள்ள பிரதேசங்களிலிருந்து வரும் காசனுப்பல்கள் உத்தியோகபூர்வமற்ற வழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் கணக்கெடுத்துக் கொள்ள முடிகின்றது.
இலங்கையில் உழைப்பு ஏற்றுமதி தாராளமயமாக்கலுக்குப் பின்னாக ஏற்பட்ட ஒரு பிரதான மாற்றம்; ஆகவே பொருளாதார தாராளமயப்படுத்தல் பற்றிய பல்வேறு அம்சங்கள் மேலும் ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.
45

Page 30
பேரினமட்டத்திலும் வெளிநாட்டு செலாவணி பெற்றுத்தரும் பிரதான மூலாதாரமாக இருந்துள்ளது. சிற்றின மட்டத்திலும் உழைப்பினரில் பெரும்பாலும் கிராமியப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களின் வருமானங்கள் அதிகரித்தல் காசனுப்பல்கள் ஒரு முக்கியம்ான பங்களிப்பினை இலங்கைப் பொருளாதாரத்தில் செய்துள்ளது. ஆனாலும் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இந்த சாதகமான மாற்றம் கிராமிய மட்டத்தில் அதிகமான சமூகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமிய மட்டத்தில் குடும்பங்கள் பிளவுபட்டதும் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதால் வீட்டுப் பராமரிப்பில்லாத பல சிறுவர்கள் வழிதவறிப் போவதும் முக்கிய அனுபவங்களாக அறியப்பட்டுள்ளன.
14. சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறை அந்நியச் செலாவணி பெற்றுத் தரும் ஒரு மிகப் பெரிய மூலாதாரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறியப்பட வேண்டியது உண்மையில், மொத்த வருவாய்களை விட தேறிய வருவாய்களின் போக்குகள் முக்கியமாகின்றன. இலங்கை சுற்றுலாக்காரர்கள் வெளிநாடுகள் பயணம் செய்பவர்களினது செலவுகளை இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் செலவுகளிலிருந்து கழிவு செய்து வருவது தேறிய சுற்றுலா வருவாய்களாகும். இவ்வகையில் நோக்குமிடத்து தேறிய வருவாய்கள் குறைவாகவே இருந்துள்ளன. 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் இவை எதிர்க்கணிய அளவுகளாக இருந்துள்ளன. தேறிய அந்நியச் செலாவணி சராசரி வருவாய்கள் சுற்றுலா மூலம் ஐக்கிய அமெரிக்க டொலரில் 27 மில்லியனாக வருடமொன்றுக்கு 19952002 வரையான காலப்பகுதியில் கிடைத்துள்ளது. பொதுவாக கருதப்படுவது போன்று சுற்றுலாவை ஒரு பிரதான அந்நியச் செலாவணி மூலமாகக் கருத முடியாது. ஆனாலும் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிகளாகச் செல்லும் பொழுது அதனால் ஏற்படும் செலவினங்களைச் சரியீடு செய்வதாக சுற்றுலா ஒரு முக்கியமான துறையாக நோக்க முடிகின்றது. மேலும், சுற்றுலாத்துறையின் நடவடிக்கைகள் நாட்டின் உள்ளுருக்குச் செல்வதால், அது முக்கிய வேலை வசதிகளைத் தோற்றுவிக்கின்றது; இவற்றில் அநேகமானவை உழைப்புச் செறிவு வாய்ந்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.
2001இல் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையம் கிளர்ச்சியாளர்களினால் (விடுதலைப் புலிகள்) தாக்கப்பட்டதும், ஆப்கானிஸ்தான் போர் மூண்டதும், ஆகிய நிலைமைகளின் தாக்கம் சுற்றுலாத்துறையைப் பாதித்தது; என்றாலும் அது ஒரு மீட்டெழுச்சி பெற்று 2002இல் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்யப்பட்ட போர்நிறுத்தம் பின்னணியில் சாதகமான சூழ்நிலை உருவாகியது.
46

அட்டவணை 11: தனியார் பண அனுப்புதல்கள் 1995-2002
1995, 1996 1997 1998 1999 2000 2001 2002
தேறிய தனியார் அனுப்பல்கள் 675 710 788 848 887 974. 984 1,097 அமெ.டொலர் ($) மில்லியன்
மேற்கு ஆசியா % 58.2 58. 610 61.2 617 62.9 60.8 59.8 ஐரோப்பிய ஒன்றியம் (%) 14.8 14.7 13.8 3.5 3.6 3.5 15.5 7.1 வட அமெரிக்கா (%) 8.0 8.4 7.8 7.6 7.3 6.7 7.O 6.7 தூரத்து கிழக்கு ஆசியா (%) 7.6 7.3 6.6 6.2 6.1 5.9 5.3 4.9 மற்றைய ஐரோப்பா (%) 5.1 S.2 49 5.3 5.2 5.1 5.2 5.2
மூலம: மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் குறிப்பு : தேறிய தனியார் காசனுப்பல்கள்= நாட்டுக்குள் வந்து சேரும் அனுப்பல்கள்
- நாட்டுக்கு வெளியே செல்லும் அனுப்பல்கள்
அட்டவணை 12 சுற்றுலா - தேறிய வருவாய்கள் 1995-2002
1995, 1996 1997 1998 999 2000 2001 2002
பயணம் 40 (-) 10 29 28 55 8 (-)37 100 (அமெ.டொலர் மில்.)
வரவு 226 166 209 23O 274 252 213 363 கழிவு 186 176 8O 2O2 219 244 250 263
A.
மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் குறிப்பு : வரவு = இலங்கைக்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம்; கழிவு = இலங்கைப் பயணிகளின் வெளிநாட்டுச் செலவுகள்
15. வருமானச் சமமின்மையும் வறுமையும்
சென்ற கால் நூற்றாண்டில் இலங்கையில் வருமானச் சமமின்மை ஏறக்குறைய ஒரே மட்டத்தில் இருந்துள்ளது. இதற்கான தரவுகள் 1953, 1963, 1973, 1979, 1982,1987,1997 ஆகிய ஆண்டுகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. மிகக் கீழான மட்டத்தில் உள்ள 40 சதவீதக் குடும்பங்கள் ஏறத்தாழ 15 சதவீத தேசிய வருமானத்தையும் மிக உயர்ந்த 20 சதவீதத்தினர் 50% வருமானத்தையும் பெற்றுள்ளனர். கினிக்குணகம் (Gini Coefficient) பெரும்பாலும் நிலையானதாக
47

Page 31
(0.45) இக்காலப் பகுதியில் இருந்துள்ளது (அட்டவணை 13). எப்படியாயினும் 1973இல் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மிகக் கீழே உள்ள 40 சதவீதக் குடும்பங்களின், வருமானப் பங்கு அதிகமாக உயர்வடைந்து 19.3 சதவீத நிலையினை அடைந்தது; மிக உயர்ந்த நிலை 20 சதவீதக் குடும்பங்களின் வருமானப் பங்கு முக்கியமாக குறைந்து, 43 சதவீத பங்களவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு ஏற்றதாக கினிக் குணகமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து 0.35 அளவைக் காட்டியது. இது அரச முனைப்பான பொருளாதார பங்களிப்புடைய காலமாக இருந்தது எனவும் இது மிகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மீது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண முடிகின்றது.
சர்வதேச வருமானப் பங்கீடு பற்றி அனுபவங்கள் மூலம் (வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையும் நாடுகள் உட்பட) காண்பதைத் தழுவி பொருளாதார தாராள மயமாக்கலின் ஆரம்ப காலகட்டங்கள் வருமானச் சமமின்மை கூடுகின்றது எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய சர்வதேச அனுபவங்களுக்கு இலங்கை நிலை  ைமகள் ஆதார மூட்டுபவையாக இல் லை. இது தாராளமயமாக்கலின் இலங்கை தொடர்பான ஒரு வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனாலும், இது திட்டமிடப்பட்ட பொருத்தமான பொருளாதாரச் சீர்திருத்தம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டது எனவும் கூற முடிகின்றது.
அட்டவணை 13: வருமானச் சமமின்மை
மிகத் தாழ்ந்த 40 சதவீத மிக உயர்ந்த 20 சதவீதக் கினிக் குணகம் குடும்பங்களினால் குடும்பங்களினால் பெறப்பட்ட வருமானம் பெறப்பட்ட வருமானம்
1953 14.5% 53.8% 0.46
1963 14.7% 52.3% 0.45
1973 19.3% 43.0% 0.35
1979 6.1% 49.9% O.43
1982 15.3% 52.0% 0.45
1987 4.1% 52.4% 0.46
1997 15.7% 49.4% 、 0.43
மத்திய வங்கி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான நுகர்வோர் நிதி மற்றும் சமூகப் பொருளாதாரக் கணிப்பு
48

மேலே கொடுக்கப்பட்ட தரவு தேச மட்டத்திலானவை; ஆகவே வருமானச் சமமின்மை தொடர்பாக கிராமிய, நகர மற்றும் பெருந்தோட்டத்துறைகள் சார்பான நிலைமைகளை எடுத்துக் காட்டவில்லை. நகரத்துறை மிகக் கூடிய வருமானச் சமமின்மையை - கினிக் குணகம் 0.47 காட்டியுள்ளது. அடுத்து கிராமியத் துறையின் கினிக் குணகம் 0.46 ஆகவும், 1995/96இல் இருந்துள்ளது. பெருந்தோட்டத்துறை 0.34 கினிக் குணகத்துடன் 1995/96இல் மிகக் குறைந்த வருமானச் சமமின்மையினைக் காட்டியுள்ளது. எவ்வாறாயினும், நகரத்துறையின் வருமானச் சமமின்மை குறிப்பிடத்தக்களவுக்கு 1990/91, 1995/96 ஆண்டுகளில் குறைந்துள்ளது. கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் எதுவென்றால், கிராமிய நகரப் பிரதேசங்களின் பாகுபாடு காலத்திற்கு ஏற்றவாறு சரிப்படுத்தப்படவில்லை. காலப்போக்கில் கிராமப் பிரதேசங்கள் நகரப் பிரதேசங்களாக மாறுகின்றன. இவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வருமானச் சமமின்மை பற்றி மாகாண அல்லது மாவட்ட அடிப்படையிலான தரவுகள் மூலம் மிகப் பயனுள்ள பிரதேச ரீதியான வேறுபாடுகளைப் பற்றிய நிலைமைகளை அறிந்து கொள்ளலாம்.
குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வறுமையை அளவிடுவதற்கு நுகர்வு தொடர்பாக ஒரு நுகர்வு குறைந்த அளவு மட்டத்தினையும் (இல. ரூபாயில் மாதாந்த அடிப்படையில் ஒருவருக்கு 792 ரூபாய்) மற்றும் ஒரு உயர்ந்த நுகர்வு அளவு மட்டத்தினையும் (இல. ரூபாயில் மாதாந்த அடிப்படையில் ஒருவருக்கு 950 ரூபாய்) என்பவற்றைப் பயன்படுத்தியுள்ளது. முதலாவது வறுமையின் குறைந்த நுகர்வினூடான குறைந்த வறுமைக் கோட்டினையும் மற்றையது உயர்ந்த வறுமைக் கோட்டினையும் காட்டுகின்றது. குறிப்பிட்ட ஆண்டு 1995/96இல் இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ப வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பற்றி-வறுமை அளவீடாக வேறுபட்ட கணிப்பினைத் தருகின்றது. முதலாவது அளவை குறைந்த நுகர்வுக் கோட்டின்படி ஏறத்தாழ 23 சதவீதத்தினர் மொத்த குடிசனத்தில் வறுமையில் உள்ளனர் எனவும் மற்றைய உயர்வான நுகர்வுக் கோட்டிற்கமைய ஏறத்தாழ 32 சதவீதத்தினர் வறுமையில் உள்ளனர் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கிராமியப் புறத்தில் வறுமை மிகத் தாக்கமானதாகவும் அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டத்துறை பாதிப்புக்கு உள்ளாவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1990/1991இல் வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மிகக் கூடுதலான நுகர்வு வறுமையினை அனுபவித்துள்ளதாகக் கூற முடிகின்றது. 1995/96இல் சபரகமுவ மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மிகக் கூடுதலான நுகர்வுசார் வறுமையினையும் மேற்கு மாகாணம் மிகக் குறைந்த வறுமை நிலையினையும் காட்டியுள்ளன. இலங்கையில் மாகாண, மாவட்டரீதியாக பொருளாதாரப் பெறுபேறுகள் பற்றிய அதிக வேறுபாடுகள் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் காணப்பட்டுள்ளன.
49

Page 32
மனித வறுமைநிலை (human powerty) எல்லா மாகாணங்களிலும் நுகர்வுசார் வறுமை என்பதுடன் ஒப்பிடும் பொழுது குறைவாகவே காணப்பட்டுள்ளது. இலங்கையில் மனித வறுமையை விட கூடுதலான நுகர்வு வறுமையினை எதிர்நோக்குகின்றது. இது மேலும் இலங்கையின் போற்றத்தக்க மனித அபிவிருத்திக் குறிக்காட்டித் தரவுகள், குறைந்த வருமானங்கள் பெறும் நிலையிலும் ஆதாரப்படுத்தியுள்ளன. இலங்கையின் சமூக/மனித அபிவிருத்தி நிலமைகள் பெருமளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன (வடகிழக்கு மாகாணம் பற்றிய தரவுகள் அண்மைக் காலங்களில் உள்ளடக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்).
வறுமைநிலையில் உள்ள குடிசனத்தினரின் துறைகள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்கள் ஆகியவை சார்பான பரம்பல் வேறுபட்டுள்ளது. மொத்தமாக வறுமையிலுள்ளவர்களில் 87சதவீதத்தினர் கிராமப்புறங்களில், 9 சதவீதமானோர் நகரங்களிலும் , 4 சதவீதமானோர் பெருந்தோட்டத் துறையிலும் காணப்பட்டுள்ளனர். என்றாலும் மேல் குறிப்பிட்ட துறைகள் ரீதியாக மொத்த வறியவர்கள் பரந்திருப்பது இதே மூன்று துறைகளிடையே காணப்படும் குடிசனப் பங்கீட்டிலிருந்து அவ்வளவு பெரிதாக மாறுபடவில்லை. இச்சந்தர்ப்பத்தில் கிராமப்புறங்கள், நகரங்கள் என்று பாகுபடுத்தல் காலமாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என மீண்டும் குறிப்பிடுதல் வேண்டும்.
மாவட்ட ரீதியில் வறுமையிலுள்ளவர்கள் பரம்பலை நோக்குமிடத்து குருநாகல் மாவட்டம் மொத்த வறுமையிலுள்ளவர்களில் மிகக் கூடுதலான தனியான பங்கிற்குப் (12 சதவீதம்) பொறுப்பாகின்றது. இப்பங்கு அம்மாவட்டத்தின் மொத்த இலங்கையின் குடிசனப் பங்கினை விட (9%) பெரியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வறியோர்களின் மாகாண ரீதியிலான பரம்பலில் வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் ஒவ்வொன்றும் மொத்த வறியவர்களின் தொகையில் 18 சதவீதத்தினை உள்வாங்கியுள்ளன. ஆனாலும் இம்மாகாணங்களின் குடிசன அளவுகளில் வறுமையின் கூடிய சுமை வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்துள்ளது. வட மத்திய மாகாணத்திற்கு மொத்த வறுமையிலுள்ளவர்களில் 7 சதவீதத்தினர் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருப்பினும் இம்மாகாணத்தில் ஏறத்தாழ 47 சதவீத குடியிருப்பாளர்கள் வறுமையிலுள்ளவர்கள் என்பது ஒர் அடர்த்தியற்ற குடிசனத்தைக் கொண்டுள்ள நிலைமையைப் பிரதிபலிக்கின்றது.
நுகர்வு வறுமை என்பதைவிட (ஆட்கணிப்பு) வேறு வறுமை பற்றிய அளவீடுகளும் உண்டு. அவையாவன: வறுமை இடைவெளி; மற்றும் வறுமையின் கடுமையான பாதிப்புக் குறிகாட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கே பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால் அவை பற்றி விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
50

16. பிரதேச அபிவிருத்தி
1977ஆம் ஆண்டுக்குப் பின்னரான தாராளமயமாக்கல் காலப்பகுதியில் கவனத்தை ஈர்த்துக் கொள்ளாத விடயங்களில் அபிவிருத்தி தொடர்பான பிரதேச ரீதியான சமமின்மை ஒன்றாகும். இலங்கையில் பிரதேச ரீதியான சமமின்மை ஒரு தொடர்ந்த பிரச்சினையாக இருந்துள்ள போதும் (மற்றைய 6) அபிவிருத்தியடையும் நாடுகளைப் போல), இது தாராளமயமாக்கல் காலத்தில் குறிப்பாக தொண்ணுறுகளின் பிற்பகுதியில் தீவிர நிலையினை அடைந்தது. பிரதேச ரீதியான சமமின்மைகள் வெவ்வேறு தகுதிவிதிகளின் அடிப்படையில் அளவிடலாம். எப்படியாயினும் இங்கே ஒவ்வொரு மாகாணமும் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு பங்களிப்பைச் செய்துள்ளது என்பதைப் பயன்படுத்தியுள்ளளோம். இதன் மூலம் கடுமையான பிரதேச சார்பான சமமின்மை பற்றி எடுத்துக் காட்ட முடிகின்றது.
இவ்வணுகு முறைக்கேற்றவாறு பார்க்கும் பொழுது மேல்மாகாணம் 2000இல் தேசிய மொத்த உற்பத்தியில் 50 சதவீத பங்கினைக் காட்டியது. இது 1990இல் 40 சதவீதமாக இருந்தது. இதனைவிட, (ஒன்பது மாகாணங்களில்) நான்கு மாகாணங்கள் மட்டுமே 2000இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீத அளவினை எடுத்துள்ளன. மேல்மாகாணம் தனியே 50 சதவீதத்திற்குப் பொறுப்பாக இருந்துள்ளது; மற்றும் வடமேல், மத்தி, தென் மாகாணங்கள் ஒவ்வொன்றும் மொத்த தேசிய உற்பத்தியில் 10 சதவீத பங்களிப்பினைக் காட்டியுள்ளன. 1990-2000 ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு மேல் மாகாணம் 25 சதவீத அதிகரிப்பினை அனுபவித்தது. மற்றைய மத்திய சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் குறைந்துள்ளன. ஊவா, மற்றும் வட மாகாணங்கள் அரைவாசியளவுக்கு குறைந்துள்ளது. (அட்டவணை 14)
பிரதேச ரீதியாக பொருளாதார அதிகாரம், ஆற்றல் ஆகியவை தாராளமயமாக்கல் காலத்தில் பின்பற்றப்பட்ட ஏற்றுமதிச் சார்பான வளர்ச்சி உபாயத்திலிருந்து அதிகமாகப் பெறப்பட்டன. மேலே கூறியது போன்று ஏற்றுமதிக் கைத்தொழில்களே பொருளாதார வளர்ச்சியின் சென்றகால் நூற்றாண்டில் முதல்நிலை பங்காளிகாளாக இருந்துள்ளன. இவ்வேற்றுமதிக் கைத்தொழில்கள் உலக சந்தைகளில் விரைவான நுழைவாய்ப்பினைப் பெறுவது முக்கியமாகத் தேவைப்பட்டது. மேல் மாகாணமே இலங்கையின் ஒரு சர்வதேச விமான நிலையத்தையும், கடல்துறைமுகத்தையும் கொண்டிருந்தது. உட்கட்டுமான வசதிகள் அதிகமாகக் கொண்ட மேல் மாகாணத்தில் அநேகமான ஏற்றுமதிக் கைத்தொழில்கள் அமைக்கப்பட்டன. இதனால் மேல் மாகாணத்தின் பொருளாதார அந்தஸ்து நிலை உயர்த்தப்பட்டது; அத்துடன் அதற்கு தூரத்திலில்லாத வடமேல், மத்திய, தெற்கு மாகாணங்களும் முன்னேற்றமடைய முடிந்தது.
51

Page 33
அட்டவணை 14: மாகாண அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு (%)
om as sasa || 1990 1991 1992 1993 1994, 1995 1996 1997 1998 1999 2000
(Sup. LDT. 40.2 40.4 41.4 41.5 41.9 42.3 43.5 43.9 45.0 48.6 49.4 6U.G.LD.LDst 1.1 9.9 9.9 9.6 9.8 9.6 11.3 2.0 12.0 10.3 10.4
LD.LDT 2.1 12.3 1.8 11.8 1.7 11.7 10.6 11.1 11.1 9.7 9.9 Gg5. DIT 9.5 9.8 9.6 9.7 9.6 9.5 8.9 8.7 9.2 9.4 9.3 3. LDIT 8.1 7.8 7.6 7.7 7.8 7.7 9. 7.7 6.7 6.5 6.7 á Lpsr. 4.2 4.5 4.7 4.7 4.5 4.6 4.8 4.9 5.5 5.0 4.5
sp616) Int. DT 8.1 7.8 7.6 7.7 7.8 7.7 5.0 5.0 5.0 4.0 4.0 6UL– uD.LDst 4.8 6.1 6.0 6.2 6.3 6.3 4.5 3.9 3.6 4.1 3.8 6.L. LOfT 4.4 3.8 3.6 3.2 3.2 3.1 2.4 2.7 2.7 2.5 2.1 இலங்கை 100.0 100.0 100.0 00.0 100.0 100.0 100.0 100.0 100.0 100.0 100.0
மூலம்: 1990-1995 ‘வடகிழக்கு மாகாணம்" (2002) 1996-2000 முதலீப், வசந்தா மறறும் பண்டாரநாயக்கா, 2002
பொருளாதார வளர்ச்சியில் பிரதேச ரீதியான வேறுபாடு பொருளாதார விளைவுகளைக் கொண்டவை என்பதுடன் அரசியல் சமூக சார்பான உராய்வு நிலைகளையும் ஏற்படுத்துகின்றன. பிரதேச ரீதியாக பொருளாதார வளர்ச்சியின் எதிர்பக்க வேறாக்கம் தெற்கிலும் மற்றும் வடகிழக்கிலும் ஏற்பட்டுள்ளது. இளைஞர் கிளர்ச்சி நடப்பதற்கு ஒரு பிரதான காரணியாக இருந்துள்ளது. நாட்டின் தென்பகுதியில் 1971 மற்றும் எண்பதுகளின் பிற்பகுதியில் வடகிழக்கு மாகாணத்தில் எண்பதுகளின் ஆரம்பகாலத்திலிருந்து நடந்த இளைஞர் போராட்டம், கிளர்ச்சிகள் ஓரளவுக்கு பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பொருளாதார இடர்பாடு ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன. இவை பாரதூரமான பிரச்சினைகளாக கவனத்தை எடுத்துள்ளது.
இலங்கையில் இன்று நிலவும் நாட்டின் நிருவாகப் பிரிவுகள், மாவட்டங்கள், மாகாணங்கள் என்ற வகையில் செய்யப்பட்டவை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டவை; அவை இன்றைய பொருளாதார அபிவிருத்தி உபாயங்களுக்குப் பொருத்தமானவை அல்ல என்பது விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைமுறையில் உள்ள நிருவாகப் பிரிவுகள் முழுமையான ஆற்றலையும், பிரதேசங்கள் சார்ந்த ஒப்பீட்டு ரீதியான மற்றும் போட்டிமுறையிலான நன்மைகளைப் பெறுவதற்கு உகந்தவையல்ல. மேலும் சிலருடைய கருத்துப்படி ஆற்றுப்பள்ளத்தாக்குகள் அல்லது நீர்நிலை
52

நிலப்பிரிவுகள் என்பவற்றின் அடிப்படையில் பிரதேசப் பிரிவுகள் பொருளாதாரப் பிரதேசரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பொருத்தமானது என விவாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நாட்டின் நிருவாக ரீதியான பாகுபாடு பற்றிய விமர்சனம் யாப்பின் 13ஆவது திருத்தத்தினால் நிறுவப்பட்ட மாகாணசபை அரசாங்கங்கள் தழுவியவையாக கூறப்பட்டுள்ளன. மாகாணசபை அரசாங்கங்கள் அதிகளவான செலவினை உண்டு பண்ணியுள்ளன. மேலும் பகுதி ஒத்திருக்கும் வகையில் நிருவாக தீ தொழிற் பாடுகளும் மத்திய அரசு கி கும் மாகாண அரசாங்கத்திற்குமிடையே வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் 6 p.60LD5 g560fill pluffulb upbful seld6035ulsi) (Poverty Reduction Strategy Paper) பிரதேச ரீதியாக இருக்கும் வேறுபாடுகளை நீக்குவதற்கு முக்கியமான பொருளாதார உட்கட்டுமான செய்திட்டங்களை முன்வைத்து அவற்றினூடாக மையத்தையும், புறப்பரப்பு (Centre and Periphery) அலகுகளையும் இணைக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கிய ஒழுங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 2002இல் மத்திய அரசாங்கம் பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்களைக் கொண்டு வந்தது. அதனுடைய குறிக்கோள், செயற்திறன் வாய்ந்த முறையில் குழப்பமடைந்த பொருளாதார வளர்ச்சியினைச் சரிப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலீட்டுச் சபை (Board of Investment, BOI) பன்முகப்படுத்தப்பட்டது. இது வெளிநாட்டு முதலீடுகளை மேல் மாகாணத்தை விட்டு மற்றைய பிரதேசங்களுக்கு செலுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது.
இந்த வழிமுறைகளின் விளைவினை இன்று மதிப்பிடுவது சாத்தியமில்லை. பிரதேச ரீதியான பொருளாதார வேறுபாடுகளைச் சரிப்படுத்துவது பற்றிய கொள்நெறி விளக்கங்களும் ஆய்வுகளும் அண்மையில் முக்கியத்துவம் காட்டும் வகையில் வெளிவந்துள்ளன. இலங்கையில் பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அக்கறை எல்லா மட்டங்களிலும் அதிகரித்துள்ளது.
17. இனக்குழும மோதல்களும் பொருளாதார சீர்திருத்தங்களும்
இலங்கையில் ஏற்பட்ட தாராளமயமாக்கல் தொடர்பாக 1977க்கு பிற்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பல இனக்குழும மோதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 1972இல் குடியரசு யாப்பு ஒன்று நடைமுறைக்கு வந்த காலத்துடன் தமிழ் சிறுபான்மை சமுகத்தினரின் பிரிவினைப் போராட்டம் ஆரம்பமாகியது எனக் கூறலாம். ஆனாலும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (Tamil United Liberation Front) 6Ligdisco) 1977 GuTgg (355g,656) faileo)6OT தொடர்பான கோரிக்கையின் அடிப்படையில் பிரச்சாரம் நடத்தி இப்பிரதேசத்தில் பெருமளவு வெற்றியீட்டிய காலத்திலிருந்து தமிழ் சமூகத்தினரின் பிரிவினைவாதப் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆயுதந் தாங்கிய
53

Page 34
போராட்டம் விருத்தியடைந்து ஒரு சிவில் யுத்தம் 1983ஆம் ஆண்டுக்குப் பின்னாக ஆரம்பித்தது.
பொருளாதாரத் தாராளமயமாக்கல் தொடர்பாக எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் வடகிழக்கு மாகாணத்தில் சிவில் யுத்தம் நடந்து கொண்டிருந்ததனால் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கில் பெரும்பாலும் நடந்த சிவில் யுத்தம் பொருளாதார தாராளமயப்படுத்தல் மற்றும் சீர்திருத்த முறைவழி ஆகியவற்றின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதா அல்லது தாராளமயமாக்கலும் சீர்திருத்த முயற்சிகளும் சிவில் யுத்தம் தொடர்பாக பாதிப்பினை எற்படுத்தியுள்ளதா என்பதை அறிந்து கொள்வது ஆர்வத்தைத் தூண்டும் விடயமாகின்றது. சில சமூகவியலாளர்களின் கருத்துப்படி பொருளாதார தாராளமயமாக்கலினால் துாண்டப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமுக படிநிலைப்படுத்தல் ஆகியவை இனத்துவ முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எவ்வாறாயினும், இக்கருத்தினை முன்வைப்பவர்கள் இனத்துவ மோதலுக்கும் பொருளாதார தாராள மயப்படுத்தலுக்குமிடையான தொடர்புகளைத் தெளிவாகவும் போதுமான சான்றுகளின் ஆதாரத்துடன் விளக்கவில்லை. மேலே எழுப்பிய கேள்விக்கு நம்பகரமான காரணத் தொடர்புகள் இல்லாததால் ஒரு விதத்திலோ அல்லது வேறொரு விதத்திலோ முடிபு எடுப்பது சாத்தியமற்றது.
படைகள் தொடர்பான செலவினங்கள் அதிகரிப்பினால் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகள் உயர்ந்து சென்றன எனினும் தாராளமயமாக்கல் முறைவழி வெகுவாகப் பாதிக்கப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் கூற முடியும். சிவில் மோதல் பெரும்பாலும் வடகிழக்கிலே நாடு முழுவதிலுமல்லாது நடந்தது. அத்துடன் சர்வதேச கொடையாளி சமூகத்தினர் (International donor Community) தம்முடைய வெளிநாட்டு உதவியினை முக்கியமாக பொருளாதார தாராளமயப்படுத்தலுடன் தொடர்புபடுத்தினர். அதனால் அரசாங்கம் தாராளமயப்படுத்தல், சீர்திருத்த முறைவழி என்பவற்றைத் தொடர வேண்டிய கட்டாயமும் இருந்தது. மேலும் தாராளமயப்படுத்திய பொருளாதாரம் உயர்ந்தளவான பொருளாதார வளர்ச்சியினை விளைவித்தது. இது மீண்டும் உயர்ந்து சென்ற போர்ச் செலவினை தாங்கிக் கொள்வதற்குத் தேவைப்பட்டது. தனியார்துறை மீது அதிகமாக பொருளாதார வளர்ச்சி குறித்து தங்கிச் செல்லும் தன்மையினால் அரசுக்கு எதிராக தென்பகுதிகளில் எண்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் பொருளாதாரத் தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ள முடிந்தது.
இந்த நூலில் இனத்துவ மேதலின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான தாக்கத்தினை அல்லது நிலையெதிர் மாறாகத் தொடர்புகளை விரிவாக ஆராய்வது நோக்கமல்ல. ஆனாலும் சில பின்வரும் விடயங்களை எடுத்துக் கூறுவது பொருத்தமாகும். பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலும் வருமான
S4

ஏற்றத்தாழ்வுகளும் இனத்துவ மோதல்களுக்கு வழிவகுத்தன என்று கூறுவது உள்ளுணர்வு ரீதியாகக் கூறப்படுவது; நம்பகத்தரமான காரணத் தொடர்பினைக் கொண்ட சான்றடிப்படையில் நிறுவப்பட்ட விதமாகக் கூறப்படுவதல்ல. மேலும், உள்ளுர் யுத்தமும், அதனால் விரைவுப்படுத்தப்பட்ட போர்ச் செலவினங்கள் பொருளாதாரத் தாராள மயப்படுத்தலின் வேகத்தினை, எஞ்சியிருந்த நலன்பேணும் அரசின் சேவைகளைத் தொடர்ந்து வழங்க முடியாத காரணத்தினாலும், அதிகப்படுத்தியிருக்கலாம். இலங்கையில் தொண்ணுாறுகளின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும் நடந்தேறிய இரு தாராளமயமாக்கல் காலகட்டங்களில் நாட்டில் மிகவும் கடினமான பாதுகாப்பு நிலைமை எதிர்நோக்கப்பட்டது. அரசுக்கு எதிராக தென்பகுதிகளில் எண்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியினால் அரசாங்கச் செலவு அதிகரித்து நிதி நிலைமை மோசமடைந்தது; இதன் விளைவாக அரசாங்க செலவுகளை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (நட்டமடையும் அரச தொழில் நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தல், அரசதுறை உழைப்பினர் படை அளவைக் குறைத்தல் போன்ற வழிமுறைகள் கையாளப்பட்டன). . இதே போல தொண்ணுாறுகளின் நடுப்பகுதிக்குப் பின்னர் “ஈழப்போர் 3' மீண்டும் தொடங்கியதால் பொதுத்துறைச் செலவினங்கள் மேலும் வெட்டப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது; இது “சமாதானத்திற்குப் போர்’ என்ற முயற்சிக்குத் தேவைப்பட்டது. இதன் விளைவாக தொண்ணுாறுகளின் பிற்பகுதியில் பிரதானமான தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைகள் இலங்கை தொலைபேசி நிறுவனம் (SriLankaTelecom) இலங்கை ஆகாய விமான நிறுவனம், (Air Lanka) தேயிலைக் கம்பனிகள் ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்டன. இவற்றிலிருந்து கூறக் கூடியது, மோதலும் மற்றும் தாராளமயமாக்கலும் ஆகியவற்றிடையே உள்ள இருபக்க காரண விளைவு தொடர்புகளை எண்பதுகளிலும் தொண்ணுாறுகளிலும் நிலவிய சூழ்நிலைப் பின்னணியில் நிர்ணயிப்பது இலகுவானதல்ல.
18. முடிவுரை
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நாட்டை ஆட்சி செய்து வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே பொருளாதாரக் கொள்நெறி பற்றிய கருத்தொருமித்த நிலை காலப்போக்கில் அதிகமாக வளர்ந்தது. அது தொடர்பாக பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாக இருந்தன:
(i) பொருளாதாரத்தில் அரசின் பங்களிப்பு குறைந்து செல்லுதல்; பொருளாதாரத்தை முகாமைப்படுத்துவதில் தனியார் துறை மீது கூடுதலான பொறுப்பை ஒப்படைத்தல்; இதில் உள்ளடங்கலாக, பொருளாதாரத்தில் முனைப்பான துறைகளான பொதுப்பயன் சேவைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஆகியவை சேருகின்றன.
55

Page 35
(i) இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழிலுக்குப் பதிலாக ஏற்றுமதிக்
கைத்தொழில் வளர்ச்சி இடம் பெற்றது.
(iii) பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதில் அரசின் விலைக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக சந்தைச் சக்திகள் கூடுதலாகப் பங்கு கொள்ளுதல்.
(iv) சுங்கத்தீர்வைகளைக் குறைத்து ஒருங்குபடுத்துவதற்கு வெளிநாட்டு வர்த்தகத்தினை மேலும் தாராளமயப்படுத்துதல், இவைகளினுடாகப் பொருளாதார அமைப் பில் மறுசீரமைப்பும் சீர் திருத்தமும் செய்யப்படுவதற்கு ஒரு சாதகமான பொருத்தமான பொருளாதாரச் சூழலை ஏற்படுத்தி தனியார் துறையின் பங்களிப்பினையும் அதிகப்படுத்திச் சென்று உயர் நீத வளர்ச்சியரினைப் பொருளாதாரத் தல பெறுவது வலியுறுத்தப்பட்டது. W
1977ஆம் ஆண்டிலிருந்து அதிகமான தாராளமயமாக்கல் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொழுதிலும் இன்னும் பல கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான காரணிகள் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைகளாக இருந்து வருகின்றன. பொதுச் சேவை, வங்கியும், காப்புறுதியும், உழைப்புப் பற்றிய சட்டங்கள் ஆகிய துறைகளில் சீர்திருத்தமும் எஞ்சியிருக்கும் றரீலங்கா விமான நிறுவனம், ரீலங்கா தொலைத் தொடர்பு நிறுவனம் போன்றவற்றிலுள்ள அரச பங்குடைமைகளை நீக்குதல், மேலும் அரசு உடைமைகள் இன்னும் மாற்றப்படாமல் இருக்கும் அரச நிறுவனங்கள் (அரச வங்கிகள், புகையிரதச் சேவைகள், கூட்டுறவு மொத்த நிறுவனம் இலங்கை மின்சார சபை போன்றவை) என்பவற்றின் தனியார்மயப்படுத்தல் பற்றிய தொடர்பான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. இவை இன்னும் நிறைவேற்றப்படாத சீர்திருத்தங்களாக உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் (1977-1994 வரையான காலப்பகுதியும் 2001இல் இருந்து இன்று வரையுள்ள காலப்பகுதியும்) பூரிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் (1994-2001) ஆகியவை தனியார் துறையினை ஒரு வளர்ச்சி இயந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொள்நெறி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பொதுத்துறைப் பருமன் சென்ற கால் நூற்றாண்டில் (1976-2000), சுருக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனாலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள பொழுதும் பொதுத்துறைச் சேவை சுருங்கவில்லை. மாறாக பொதுத்துறையில் 1978-2000 வரையான காலப்பகுதியில் வேலை செய்பவர்கள் தொகைரீதியாக நோக்குமிடத்து 100 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 1978இல் பொதுத்துறையில் 600,000 பேர் வேலை செய்தனர்; இத்தொகை 2000இல் 1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது இலங்கையில் தாராளமயமாக்கலின் முரண்பட்ட நிலையினை எடுத்துக்
56

காட்டுகின்றது. ஒரு புறத்தில் தனியார்துறை, பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருப்பது பற்றிக் கூறப்பட்டது; மறுபக்கத்தில் பொதுத்துறையில் மிகை உழைப்பினர் சேர்க்கப்பட்டனர். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தமது ஆதரவாளர்களை ஒழுங்கற்ற வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்துள்ளன. இதன் காரணமாக பொதுத்துறையில் செலவு அதிகரித்தது; வீண்செலவு ஏற்பட்டது. மற்றும் திறமையின்மை நிலைமை அதிகரித்தது; ஆசியாவில் தலாரீதியாக பொதுத்துறை மிகக் கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகின்றது. அதாவது, நாட்டின் ஒவ்வொரு 16 பிரசைகளுக்கும் ஒரு பொதுத் துறை ஊழியர் இருப்பதைக் காணலாம் . ஆனாலும் பொதுமக்களுக்கு பொதுத்துறையிலிருந்து கிடைக்கும் சேவைகள் ஒவ்வொரு பொதுத்துறை ஊழியரைக் குறித்தும் குறைந்த பிரசைகள் விகிதத்தை பிரதிபலிப்பதாகவோ அல்லது நியாயப்படுத்துவதாகவோ இல்லை.
இலங்கையில் தாராளமயமாக்கல் தொடர்பாக மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருப்பது அரசியல்வாதிகளல்ல, தனியார் துறை ஊழியர்களல்ல, அல்லது சாதாரண மக்களுமல்ல; தடையாக இருப்பது ஒரு பெருகிய நிலையிலுள்ள பொதுத் துறை ஊழியர்கள் தொகை இலங்கையில் தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்குப் பெரும் தடையாக உள்ளது, குறைந்த வேலை செய்யும் பொதுத்துறை ஊழியர்களே. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புள்ள பொதுத்துறை ஊழியர்கள் அரசாங்க கொள்நெறிகள் (எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும்) முன்னேற்றகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு விளைவித்து பாதிப்பினை ஏற்படுத்தலாம். இலங்கையில் ஒரு நிலைத்துச் செல்லக் கூடிய உயர்ந்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்துக் கொள்வதற்கு பொதுத்துறையின் பருமனைக் குறைத்து, அதனுடைய திறமையினை மேம்படுத்துவது அத்தியாவசியமாகின்றது. மற்றைய ஆசியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இலங்கையின் போட்டி நிலையினை மழுங்கடிகிகச் செய்துள்ள காரணிகளில் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் பொதுத்துறையின் பருமனைக் குறைக்கத் தவறியது மிக முக்கியமானதொன்று.
பொருளாதாரத்தின் மெய்த்துறைகளின் சீர்திருத்தம் ஏற்படுத்துவதற்கு நிதித்துறையின் சீர்திருத்தம் முக்கியமாகத் தேவைப்படுகின்றது. ஒரு வெற்றிகரமான பொருளாதாரச் சீர்திருத்த திட்டம் வகுக்கப்படும் பொழுது மெய்த்துறைகளினதும் நிதித்துறைகளினதும் ஒன்றுடனொன்று இணைந்த முறையில் செயல்படுதல் வேண்டும். இலங்கையில் இது சென்ற கால் நூற்றாண்டில் ஏற்படவில்லை. நிதித்துறை இப்பொழுதும் அரச வங்கிகளின் மேலாதிக்கத்துக்குட்பட்டதாக இருந்து வருகின்றது. அரச வங்கிகள் வங்கி அமைப்பிலுள்ள மொத்த வைப்புக்களில் 60 சதவீதத்திற்குப் பொறுப்பாக உள்ளன. நிதித்துறையில் அரச கட்டுப்பாடு பெருமளவுக்கு இருக்கும் வரை இலங்கையில் ஒரு சுயாதீனமான பணக் கொள்நெறியினைச் சந்தை சக்திகளினுடாக நிர்ணயிக்க
57

Page 36
முடியாது. அரசாங்கத்தின் கையிலிருந்து நிதித்துறை விலகுமிடத்திலே தான் ஒரு முன்னேற் றகரமான பொருளாதாரத்தின் பணக் கொள் நெறி உருவாக்கப்படலாம்.
இலங்கையில் உழைப்பினர் தொடர்பான சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவையாகக் காணப்படுகின்றன. 1977ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தாராளமாயமாக்கல் மற்றும் சீர்திருத்தத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவையாக உழைப்பினர் பற்றிய சட்டங்கள் இருக்கவில்லை. உழைப்பினர் பற்றிய சட்டங்கள் சந்தைப் பொருளாதாரத்தின் மாற்றங்களுக்கேற்றதாக நெகிழ்வுடையதாக இருக்க வேண்டும். அநேகமான சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களைப் பொறுத்தவரை நெகிழ்வற்ற உழைப்புச் சட்டங்கள் காரணமாக சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு கைத்தொழில் மறு சீராக்கம் இலகுவானதல்ல. இதன் விளைவாக கைத்தொழில் அலகுகளை கடன் தீர்க்க முடியாத நிலைக்குத் தள்ளி வேலை இழப்பினை உண்டுபண்ணி அலகுகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட முடியும். கடன்தீர்க்க வகையற்ற நிலை திரும்பவும் வங்கித்துறையினைப் பாதிக்க முடியும். இச்சூழ்நிலையில் உழைப்புச் சந்தை சீர்திருத்தங்கள் எதிர்காலப் பொருளாதார மீட்சிக்குத் தேவையாகின்றன.
இலங்கையில் மொத்த குடிசனத்தில் 30 சதவீதத்தினர் வறுமை நிலையில் உள்ளனர். ஏறத்தாழ 50சதவீதத்தினர் சமுர்த்தி வறுமைத் தணிப்புத் திட்டத்திலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். மேலும் மிகக் குறைந்த வறுமை நிலையில் உள்ள 40 சதவீத வருமானப் பிரிவினர் சமுர்த்தியிலிருந்து எவ்வித நன்மையும் பெறவில்லை. வறுமை நிவாரணம் வழங்குதலில் இனப்பாகுபாடு ரீதியான சார்பு நிலை இருப்பது போன்று தெரிகின்றது. வறுமை நிவாரணத் திட்டத்திலும் சீர்திருத்தம் தேவைப்படுகின்றது. சென்ற 25 வருட காலப்பகுதியில் வறுமை நிவாரணத் திட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டமை அதன் குறைபாடாக காணப்பட்டுள்ளது. அரசியல்மயமாக்கலுடன் தொடர்பற்றதான திட்டங்களும் அவை பனி முகப்படுத்தப்பட்டவையாகவும் இருப்பது அவசியமாகின்றது. இவை வறுமை தணிப்புப் பற்றிய ஏற்பாடுகளுக்கு முக்கியமானவை.
பொருளாதார சீர்திருத்தங்களில் பால் நிலைச் சமன்பாடு அவசியமானது. இதில் சென்ற காலத்து சமனற்ற நிலைகள் சரிப்படுத்தப்படுதல் வேண்டும். இலங்கையின் 21வது நூற்றாண்டு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனாலும் தேசிய செல்வத்தில் அவர்களுக்கு செல்ல வேண்டிய பங்கு கிடைக்காமல் போய் விடுகின்றது. இலங்கையில் 2001இல் மிக மோசமான பொருளாதார செயலாற்றத்திற்குப் பின்னர் 2002இல் 4 சதவீத வளர்ச்சியுடன் மீட்சி கண்டு 2003இல் 5.5 சதவீத வளர்ச்சியினை அடைந்துள்ளது. இந்த விரைவான மீட்டெழுச்சிக்கு அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே
58

செய்யப்பட்ட போர் நிறுத்த உடன் படிக் கை முக்கியமான காரணமாக }ருந்துள்ளது. 2001 டிசம்பரில் பதவிக்கு வந்த அரசாங்கம் மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் திட்டமிட்டுள்ளது. புதிய அரசாங்கம் இரட்டைச் சவால்களை எதிர்நோக்கியது: உள்ளுர் யுத்தம் ஒரு புறததிலும், மறுபுறத்தில் பொருளாதாரத்தின் குறைந்த செயலாற்றங்களும் உள்ளன. புதிய அரசாங்கம், சமாதானத்தை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதும், நிலைத்துச் செல்லக்கூடிய பொருளாதார வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதும் மிகப் பிரதான சவால்களாக எதிர்நோக்கப்படுகின்றன. இவை இரண்டினையும் அடைவது மிகப் பெரிய சாதனையாகும்.
உசாத்துணைகள்:
I. Central Bank of Sri Lanka, Annual Report, 2002 (Special Statistical
Appendix) 2. Chris Smith, In the Shadow of a Ceasefire: The Impacts of Small Arms
Availability & Misuse, Geneva, 2003. 3. Simon Kuznets, Quantitative Aspects of Economic Growth of Nations: Distribution of Income by Size, Economic development and Cultural change, Part II January , 1963. 4. Department of Census & Statistics, Household Income and Expenditure
1990/91&1995/96, 5. Government of Sri Lanka, Draft Poverty Reduction Strategy, 2001.
59

Page 37
அத்தியாயம் - 3
பொது நிருவாகச் சீர்திருத்தங்கள்: சாராம்சமும் திசைவழியும்
லோயிட் பெர்னாந்து
முன்னுரை
இலங்கை தற்பொழுது அபிவிருத்தியினைப் பாதிக்கும் மும் முனைப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார சமூக அபிவிருத்திக்குச் சேதம் விளைவித்ததுடன், மக்கள் உயிரிழப்புக்களைப் பெருமளவுக்கு ஏற்படுத்திய நீடித்த இனமோதலின் அடிப்படைக் காரணங்களை நீக்க வேண்டிய சவாலை முதலில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இரண்டாவதாக, சனநாயக நிறுவனங்களின் பெறுமானங்கள் படிப்படியாக தேய்வடைந்துள்ளன; அவை பற்றிய செயற்திறன் பற்றிய மக்களின் எண்ணங்களும் மாறி விட்டன. இவற்றைத் தடுத்து மீண்டும் அவற்றின் மீது நம்பிக்கையினை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேவையாகின்றன. மூன்றாவது, பொருளாதார வளர்ச்சியினை விரைவுபடுத்தி வறுமையினைத் தணித்து மக்களின் பொதுவான வாழ்வு நிலையை மேம்படுத்திச் செல்லும் கொள்நெறிகளும் முயற்சிகளும் அவசியமாகின்றன. இம்மூன்று அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளவை. அத்துடன், ஒன்றின்மீதொன்று செல்வாக்கினைக் கொண்டிருப்பதும் அறிய முடிகின்றது. அரசாங்கத்தின் முக்கியமான பங்களிப்பு இம்மூன்று விடயங்களையும் ஒழுங்காக இணைந்த முறையில் அணுகுதலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகின்றது.
அரசாங்கத்தில் அரசியல் நிருவாகத்துறை, அமைச்சரவையும் நிருவாகப் பொறிமுறையும், கொள்நெறிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொது நிருவாக அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்கி வருகின்றது. பொது நிருவாக s)}60)LDULI (Public Administration System) 56ofG3uj 560)L(popju(655Jub பணியுடன் நின்றுவிடுவதில்லை. அது தரவுகளையும் உண்மையான நிலைமைகளையும் ஆய்வு செய்து கொள்நெறிகள் பற்றி நிர்ணயிப்பதிலும் வரையறை செய்வதிலும் மாற்றுத் தகவல்களை வழங்கி அரசியல் நிருவாகப் பகுதிக்கு உதவியான பங்களிப்பையும் செய்யும் பொறுப்பினையும் கொண்டிருககின்றது. அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்வதில் பிரதான பங்களிப்பினை பொது நிருவாக அமைப்பு வகிக்கின்றது.
60

இலங்கையில் பொது நிருவாக அமைப்பின் ஆரம்பம் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்த காலத்துடன் தொடங்குகின்றது. 1948இல் கிடைத்த அரசியல் சுதந்திரம் அதனுடைய பங்களிப்பின் உள்ளடக்கம், முறை ஆகியவற்றில் பெரும் மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை. இது ஓர் உயர்குழாம் தலைமையிலான சிவில் சேவையினால் கொண்டு நடாத்தப்பட்டது. இந்த உயர் குழாம் சிவில் சேவை அதனுடைய சுதந்திரத்தை அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாத்து வந்துள்ளது. இந்த அம்சம் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் அதனுடைய பங்களிப்புப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தினையும் ஏற்படுத்தியது. சிவில் சேவை நாடு முழுவதற்கும் பரவியிருந்தது. நாட்டின் மத்திய நிருவாகத்திற்கு உதவியாக மாவட்ட நிருவாக அமைப்பும் இருந்தது. அது கிராம மட்டத்திற்கும் சென்றுள்ளது. இந்தப் பின்னல் தொடர்பு அமைப்பு இன்றும் இருந்து வருகின்றது. ஆனால் அது கூடுதலாக தொழிற்பாடுகள் சார்பாகவும் அதிகாரக் கட்டளை கட்டுப்பாடு ரீதியாகவும் பல்கூட்டான முறைமையினைத் தோற்றுவித்துள்ளது. அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகள் கொண்டு வரப்பட்டதும் இப் பல்கூட்டான சிக்கல் வாய்ந்த அமைப்பிற்கான காரணங்களில் ஒன்றாகின்றது.
இவ்வத்தியாயத்தில் பொது நிருவாக அமைப்பு தொடர்பான விளக்கத்தில், புறப்பரப்பு நிருவாக அலகுகளான (peripheral administration) மாகாண சபைகள், மாவட்ட பிரதேச பிரிவின் நிருவாக அலகுகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசாங்கத்தினால் கொண்டு நடாத்தப்படும் பாடசாலை, சுகாதார அமைப்புக்களின் பணியாளர்கள் பொது நிருவாகத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால் , உண்மையில் நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருப் போர் சேரக்கப்பட்டுள்ளனர். பொது நிர்வாக அமைப்பின் மொத்தப் பருமன் வேலை செய்யும் பணியாளர்கள் நோக்கில் ஏறத்தாழ 257,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 44 சதவீதம் புறப்பரப்பு, தேச மட்டத்திற்குக் கீழான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த வேலை செய்பவர்கள் தொகை குடிசனத்தில் 1.36 சதவீதமாகவும் உழைப்பினர் படையில் 3.7 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது. இத்துறையில் வேலை செய்பவர்களுக்கான மொத்தக் கூலித்தொகையின் பெறுமதி மொத்த அரசாங்கச் செலவிட்டில் 6 சதவீதமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பெறுமதியில் 1.1 சதவீதமாக இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அத்தியாயத்தில் இலங்கையின் பொதுத் துறைச் சேவையை ஒரு திறம்பட இயங்க வைக்கும் கருவியாக மாற்றுவதற்கு செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், நாட்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்குவது பிரதான நோக்கமாகும். இவற்றுக்குத் தேவையாக சென்ற கால நிருவாகச் சீர்திருத்தங்களை அறிதல் வேண்டும். அடுத்ததாக, சீர்திருத்தங்கள் பற்றிய அரசாங்கங்களினால் அமைக்கப்பட்ட
61

Page 38
ஆலோசனைக் குழுக்கள், சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றினால் சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்ட்ட ஆலோசனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் விட்டதற்கான காரணங்களும் ஆராயப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர் நிருவாகச் சீர்திருத்தங்கள் பற்றிய மற்றைய நாடுகளின் அனுபவங்களைக் கணக்கெடுத்து, இலங்கையில் நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையினை விளக்கியுள்ளோம். இலங்கையில் அபிவிருத்திச் சவால்களுக்கு முகம் கொடுக்கும் நோக்கத்துடன் ஒரு பொருத்தமான செயற்திறன் வாய்ந்த சீர்திருத்தத்திற்கான அணுகுமுறைகளும் இவ்வத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன.
1.0 இலங்கையின் சென்றகால அனுபவம்
சுதந்திரமடைந்த பொழுது இலங்கை ஒரு காலனித்துவ முறைமைக்குச் சேர்ந்த உயர் குழாமை மையப்படுத்திய சிவில் சேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிருவாக அமைப்பினைப் பெற்றிருந்தது. சிவில் சேவையின் தலைமை, அரசாங்கத்தின் மக்கள் விருப்புவாதக் கொள்நெறிகள், திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நோக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது உணரப்பட்டது. ஐம்பதுகளில், அரசாங்கத்தின் தலையீடு விவசாயம், கைத்தொழில், உட்கட்டுமானம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் விரிவடைந்து வந்ததும் அரசாங்க பொதுச்சேவை ஆளணித் தொகையும் அதிகரித்தது. புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள் அதிகமாக கிராமியப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தாம் சிவில் சேவையில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டவர்கள் அதனுடைய மேலாண்மையின் கீழ் இருப்பவர்கள் என உணர்ந்தனர். இப்பின்னணியில் அழுத்தங்கள் குறிப்பாக, நிர்வாக சேவையிலிருந்தே எழுந்தன. இவற்றைப் பிரதிபலித்ததாக நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1951இல் சிவில் சேவையினைப் படிப்படியாக நீக்கி அவ்விடத்தில் ஓர் ஒருங்கிணைந்த நிருவாகச் சேவையினை அமைக்கும் ஆலோசனையை முன்வைத்தார். 1952இல் சிவில் சேவையில் சேர்ந்திராத மூத்த அரசாங்க உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய இலங்கை நிருவாக G33 6.) 6. a 35 pas ló (The Ceylon Administrative Service Association) அமைக் கப் பட்டது. இது ஒருங் கரிணை நீ த நிருவாகச் சேவை தோற்றுவிக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டது.
1956இல் தேசிய சக்திகளின் தலைமையில் அரசாங்க மாற்றம் ஏற்பட்டு தளமாற்றச் சார்பான மாற்றங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொழுதும், இவை சிவில் சேவையின் செல்வாக்கினை முற்றாக நீக்குவதற்குப் போதுமானவையாக இருக்கவில்லை. ஆகவே 1963இல் வில்மற் பெரேராவினது ஆணைக்குழு
62

91s5.d60s (Wilmat Perera Commission Report, 1961) G66futul 561607(3ry அரசாங்கம் சிவில் சேவையினை ஒன்றாக்கப்பட்ட ஒரு இலங்கை நிருவாகச் (33 606 (Ceylon Administrative Service, CAS) 6T6tugb(56 s 6ft 6i Trisis தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது இலங்கையின் அரசமைப்பு ஆழமாக ஒர் அரச கட்டுப்பாடு மிகுந்த பொருளாதாரத்தை முகாமைப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது. இதனுடைய ஒரு பிரதான அம்சமாக சோசலிச நாடுகளுடன் வர்த்தகம் , வெளிநாட்டு உதவி ஆகியவை தொடர்பாக உறவுகள் விரிவாக்கப்பட்டன. இலங்கையின் சிவில் சேவை ஒரு காலனித்துவப் பின்னணியில் பேணி வளர்க்கப்பட்டது. அது காலத்துத் தேவைகளைப் பொறுத்து ஒவ்வாத, முரண்பட்ட நிறுவனமாகக் கருதப்பட்டது. ஆனாலும், பின்னோக்கிப் பார்க்குமிடத்து, சிவில் சேவையின் நீக்கம் இலங்கையினைப் பொறுத்து “நீராட்டிய தண்ணீருடன் குழந்தையையும் எறிந்த” கதையாகின்றது. நிருவாகச் சீர்திருத்தக் குழு (1986) ஓர் உயர்குழாம் சார்ந்த மூத்த முகாமைத்துவ சேவையின் தேவை பற்றிக் கூறியுள்ளது. அத்தகைய ஒரு சேவை தளமாற்ற பொருளாதார சமூக அபிவிருத்தி தொடர்பாக தலைமைத்துவம் வழங்கும் ஒரு கருவியாக அது இயங்க முடிகின்றது. சிவில் சேவைக்கு உள்ளான நோக்கினை மாற்றுவது தேவைப்பட்டது எனவும் அதனுடைய முழுமையான நக் கமல் ல என பதனையும் இக் குழு வலியுறுத்தியுள்ளது.
1.1 பொதுச்சேவை ஆணைக்குழு
இலங்கையில் பொதுச் சேவை அரசியல் தலையீடு என்பதிலிருந்து கூடுதலான பாதுகாப்பினைப் பெற்றிருந்தது. ஒரு சுயாதீனமான பொதுச் சேவை ஆணைக்குழு (Public Service Commission, PSC) ÉSuu D60T Lò SALDTÖMob, ug56 Duj 6, பதவி நீக்கம் ஆகியவற்றினைச் செய்து அவற்றிற்குப் பொறுப்பினை வகித்தது. 1970 இல் அமைக்கப்பட்ட தாக்கமான மாற்றங்களைச் செய்யும் அரசியல் பொருளாதாரத் திட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பதவிக்கு வந்த சோசலிசக் கூட்டாட்சியில் பொதுச்சேவையின் சுதந்திரம் அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தடையாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. அரசாங்கத்திற்கு உள்ளே இருந்தவர்கள் சிலர் 1965-70 வரையான முந்திய காலத்து ஆட்சியில் பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்தி மேலைத்தேச நிறுவனங்கள் நாடுகள் ஆகியவை மீது வெளிநாட்டு உதவிக்குத் தங்கியிருத்தல் பொதுச்சேவையின் நோக்குகளைப் “பழுதடையச்’ செய்துள்ளது எனக் கருதியுள்ளனர். இதன் விளைவாக 1972இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் பொதுச்சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக அரச சேவைகள் ஆலோசனைச் சபை மற்றும் அரச சேவைகள் ஒழுங்காற்றுச் சபை ஆகியவை அமைக்கப்பட்டன. முக்கியமாக, இவற்றின் தீர்மானங்கள், அமைச்சரவை மீதோ
63

Page 39
அல்லது தனிப்பட்ட மந்திரிகள் மீதோ கட்டுப்பாடு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை. பொதுச்சேவை ஆணைக் குழுவிடம் இருந்த எல்லா அதிகாரங்களும் அமைச்சரவைக் கு மாற்றப்பட்டன. அமைச்சரவை அவ்வதிகாரங்களில் சிலவற்றை திணைக்களத் தலைவர்களிடம் ஒப்படைத்தது. இது மீண்டும் தனிப்பட்ட மந்திரிகளின் அதிகாரங்களை அரசாங்க சேவையிலுள்ளவர்கள் நிலைமை தொடர்பாக பலப்படுத்தியது. அத்துடன் இது பொதுச்சேவையை ஏற்கனவே நடந்துள்ள அரசியல் மயப்படுத்தும் முறை வழிக்குச் சட்ட சார்பான பக்க ஆதரவினையும் வழங்கியுள்ளது.
1977இல் புதிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் அரசாங்க சேவையின் கூடுதலான நெகிழ்வுத் தன்மை, செயலாற்றத்தின் ஆயத்த நிலை ஆகியவற்றை வேண்டி நின்றன. ஆனால் அம்மாற்றங்களுடன் பொதுச்சேவையின் ஊக்கத்தினையும் தயார் நிலையினையும் பாதிக்கக் கூடிய அரசியல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு பொதுச்சேவை ஆணைக்குழுவை மீண்டும் கொண்டு வந்தது. ஆனால் அது அமைச்சரவைக்குப் பணிவான அதனுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நிலையில் இருந்தது. புதிய யாப்பின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனம், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவை அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு விலக்காக, செயலாளர்களின் நியமனங்கள் சேர்க்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் செயலாளர்களின் நியமனங்களுக்கான அதிகாரங்களைப் பெற்றிருந்தார். பொதுச் சேவை ஆண்ைக்குழு அதனுடைய கீழ்மட்ட உத்தியோகத்தர்கள் தொடர்பான அதிகாரங்களை திணைக்களத் தலைவர்களிடமும் செயலாளர்களிடமும் ஒப்படைக்கும் தேவையும் விதிக்கப்பட்டது. இவை செய்யப்பட்ட பின்னர் ஆரம்ப அதிகாரங்கள் ஒன்றுமில்லாத நிலை ஏற்பட்டது. மேல்முறையீட்டு அதிகாரங்கள் தொடர்ந்து இருந்தன. ஆனால் அவையும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு பாதிப்புக்கு உட்பட நேர்ந்தது.
13வது அரசியல் யாப்புத் திருத்தத்தினைத் தொடர்ந்து மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மாகாண ஆளுனருக்கு கீழ் பணிந்த நிலையில் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. மாகாண ஆளுனர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் செய்யப்படும் நியமனம், இடமாற்றக் கட்டைைள, பதவி நீக்கக் கட்டளை, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான வேறு எந்த கட்டளை ஆகியவற்றை மாற்றவும் தள்ளுபடி செய்யவும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். 13ஆம் யாப்புத் திருத்தம் தொழிற்பாடுகள் பகிர் விலும் மையத்திற்கும் புறப் பரப்பு அலகுகளுக்குமிடையே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொழிற்பாடுகள் பற்றிய விபரங்கள் மூன்று இணைக்கப்பட்ட பட்டியல்களில் - மாகாண, ஒழுங்கிணைந்த, ஒதுக்கப்பட்ட வகை எனப் பாகுபடுத்தி வரையறுக்கப்பட்டுள்ளன.
64

இவை நடைமுறையில் அர்த்தமுள்ளவையாக இருப்பதற்கு வேண்டிய அரசியல் விருப்பாற்றல் இல்லாததனால் பொது நிருவாகத்தில் மேலும் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
1.2 பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
1977ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இலங்கையில் அபிவிருத்தி முகாமையில் ஒரு புதிய பரிமாணத்தினைக் கொடுத்துள்ளது. இது பொது நிருவாக அமைப்பு தொடர்பாக புதிய சவால்களையும் தோற்றுவித்துள்ளது. தனியார் துறை “வளர்சசியின் இயந்திரம்” என்ற நோக்கில் சீர்திருத்தங்களின் பிரதான மையமாக அதுவே இருந்துள்ளது. அரசாங்கம் முக்கியமாக ஓர் ஆதரவு வழங்கும் பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இப்பங்களிப்பில் பேரினப் பொருளாதாரச் சூழல், ஒரு துணைபோகும் பணிச் சட்டகம், உட்கட்டமைப்பு வசதிகள், நிதிக்கட்டுக்கோப்பு, எல்லாவற்றிலும் மேலாக, சுமுகமான உழைப்பு உறவுகள் ஆகியவை பிரதான இடத்தினைப் பெறுகின்றன. குறைந்த உள்நாட்டுச் சேமிப்பினை அதிகரிப்பதற்காக வெளிநாட்டுதவியினையும் வெளிநாட்டுத் தனியார் முதலீட்டையும் திரட்டுவது தேவைப்பட்டது. இது ஒரு புதிய நோக்கிலான பொதுத்துறை முகாமையினை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இப்பின்னணியில், தற்போதுள்ள பொது நிர்வாக அமைப்பின் குறைபாடுகள் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியின் மந்தமான போக்கு, பணவீக்க அதிகரிப்பு, உட்கட்டுமான இடைவெளி, இறை, சென்மதிநிலுவை ஆகியவற்றின் பற்றாக்குறைகள், வெளிநாட்டு உதவியின் சோர்வு, முதலீடு ஊக்குவிப்பின்மை ஆகிய பிரச்சினைகள் தலைதுாக்கின. இத்தகைய சூழ்நிலையில் உலக வங்கி, சர்வுதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பல்பக்க கடன் உதவி வழங்கும் நிறுவனங்கள், தர் மானமி எடுத்தல் , கொள் நெறி வகுத் தல , செய் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக கூடுதலான தொழின்மைத் தகமை சார்ந்த அணுகுமுறைகள் தேவைப்பட்டதை எடுத்துக் கூறத் தவறவில்லை. ஆகவே, விரிவான நிருவாக அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பலமான குரல் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிலிருந்து எழுந்தது.
1.3 உலக வங்கியின் அழுத்தம்
இலங்கையில் வளர்ச்சியின் இயங்குவிசை குறைதல், முதலீட்டாளர்கள் மற்றும் கொடையாளி நிறுவனங்கள் என்பவற்றின் நம்பிக்கை வீழ்ச்சியுறுதல் ஆகியவை பற்றி உலக வங்கி அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
65

Page 40
இப்பின்னணியில் நிருவாக அமைப்பு புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்றதாக அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. ஆகவே, அரசாங்கம் நிருவாகச் சீர்திருத்தம் பற்றிய நடவடிக்கையில் இறங்கியது.
உலக வங்கி, அரசியல் ரீதியாக எழக் கூடிய பிரச்சினைகள் கஷ்டமானதாக இருப்பதை ஏற்றுக் கொண்டவிடத்திலும், அமைச்சுக்கள் அதிகமாக விரிவடைந்துள்ள நிலை சிவில் சேவை நியமனங்களிலும், பொதுச் செலவு தொடர்பாக குறிப்பிட்ட கூறுகளிலும் அமைச்சுக்களின் தலையீடுகள் ஏற்படுவது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இவை பிரதான விடயங்களாக எடுத்துரைக்கப்பட்டன. அவை மீது அரசாங்கம் கவனம் செலுத்துதலும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், 36 அமைச்சுக்கள் இருந்துள்ளன. அத்துடன் 25 மாவட்ட அமைச்சுக்களும், சில அமைச்சுக்களுக்கு மாவட்ட மட்டத்தில் பிரதிநிதித்துவமும் கொண்ட நிலை காணப்பட்டது. உலக வங்கியின் கருத்துப்படி அமைச்சுக்கள் 10 அல்லது 15 அளவுக்குக் குறைக்கப்பட்டால் விரைவாகவும் கூடுதலான திறமை அடிப்படையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. அது மூத்த உத்தியோகத்தர்கள் மீது சுமையினைக் குறைக்கும் எனவும் உலக வங்கி கருதியது. மேலும் இது போன்ற சீராக்கம் மற்றைய அரசாங்க நிறுவனங்கள் தொடர்பாகவும் செய்தால் அது நிருவாக அமைப்பின் செயற்றிறன் அதிகரிப்பு, பதிலிறுத்தல் பொறுப்பின் ஒரு தெளிவான வரைவிலக்கணம், அரசாங்கம் கொள்நெறிகள் வகுப்பது, அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல் ஆகியவை பற்றி திறம்படச் செயலாற்றுதல் இயலும் என உலக வங்கி எடுத்துரைத்தது. உலக வங்கி தனது அறிக்கையில் அரசாங்க ஊழியர்களின் தரம், செயலுக்கப்பாடு ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளது; இது பற்றிக் குறிப்பாக தொழின்மை சார்ந்த, முகாமைத்துவ மட்டங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் தொடர்பாக உடனடியான பிரச்சினைகள் பொதுத்துறையின் செயலாற்றத் திறனைப் பாதிப்பவையாக உள்ளன. இது குறித்து ஒப்பீட்டு ரீதியாக பொதுத்துறை தனியார்துறை உத்தியோத்தர்களின் வெகுமதி வேறுபாடுகளும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வேறுபாடுகள் நிறைவேற்றுப் பொறுப்புகள் வகிக்கும் தொழின்மைசார் உத்தியோகத்தர்களைப் பெரிதும் பாதிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் உலக வங்கி எச்சரிக்கையாக குறிப்பிட்டது என்னவென்றால், ஏற்கனவே சம்பளங்களும் வெகுமதிகளும் அரசாங்க மீண்டெழும் செலவுகளில் 25 சதவீதமாக இருப்பதனால், இவை தொடர்பாக அதிகரிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் இதனுடன் பொதுத்துறையின் ஆளணித் தொகை சீராக்கலும் குறைத்தலும் சேர்க்கப்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்டது. உலக வங்கியின் மற்றைய ஆலோசனைகளில் முக்கியமானது, ஒரு மூத்த முகாமை மற்றும் தொழின்மை சார்ந்த ஆளணியினை ஏற்கனவே உள்ள சேவையிலிருந்து திறமை, கற்றறிவுத் தகைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில்
66

அமைத்துக் கொள்ளுதல், இத்துடன் சேவைக்கு வெளியிலிருந்தும் குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் நிபுணத்துவம் கொண்டவர்களை சேர்த்துக் கொள்ளுதல், பரிசளிப்புத் தழுவிய ஊக்குவிப்பு முறைகள் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
உலக வங்கி மேலும் ஊழியர்களுக்கு வேலையிலும் முழுநேர அடிப்படையிலும் பயிற்சி ஊக்குவிப்புகள் வழங்கப்படுதல், ஒழுங்குமீறல் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை அரசாங்க சேவையாளர்களின் செயலாற்ற ஆற்றலை உயர்த்துவதற்கு வேண்டிய வழிகளை வற்புறுத்தியது. நல்ல செயற்திறன் வாய்ந்த பயன்விளைவிக்கும் பொதுச்சேவைக்கான அத்திவாரம் அமைக்குமிடத்து ஒரு வேலை அடிப்படையிலான அரசாங்கத் துறையில் பதவிகள் சார்பான ஒரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுதல் அவசியமாகின்றது. இதனுடாக பதவிகள் குறித்து பொறுப்புகள், தொழிற்பாடுகள், கடமைகள் தகைமைகள், பயிற்சி அனுபவம் என்பனவற்றை மையப் படுத் திய நோக்கும் வற்புறுத்தப்படுகின்றது. இவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படுதலின் தேவையையும் உலக வங்கி எடுத்துரைத்தது.
1.4 GGOOI afruas Sõug (Wanasinghe Committee)
உலக வங்கி அக்கறையுடன் எடுத்துரைத்த பல விடயங்களை வணசிங்காவின் தலைமையில் நிருவாக சீர்திருத்தம் பற்றிய அறிக்கையும் பிரதிபலித்தது. இந்த அறிக்கை 1987 ஒக்டோபரில் பத்துப் பாகங்களாக வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் பரிந்துரைகள்/சிபாரிசுகள் நிருவாக அமைப்பின் தொழிற்பாடுகள், கட்டமைப்பு, பணியாட்கள், வேலை ஒழுங்குமுறைகள் என்பவை தொடர்பான குறைபாடுகளை ஆராய்ந்துள்ளது.
கட்டமைப்புச் சார்பாக போதியளவு அதிகாரத்தையும் கொண்டிருக்காத அரசாங்க சேவையாளர்களின் தொழிற்பாட்டுக்கு அர்த்தமும் பொருளையும் கொடுக்கக் கூடியதான அமைப்புச் சார்பான ஒருமுக மையம் இல்லாதது முக்கிய காரணமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
காலப்போக்கில், திணைக் களங்கள் அமைச்சுக்களில் தொழில் நிறுவனங்கள் அதிகார சபைகள் ஆகியவை பொதுத்துறையில் கூடுதலாக அதிகரித்ததும் முக்கியமாக அவதானிக்கப்பட்டுள்ளது. இவை ஒழுங்கமைத்தல், திட்டமிடுதல், திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவை தொடர்பாக பாரதுTரமான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளன. நிருவாகப் பன்முகப்படுத்தல் தொழிற்பாடுகள் தொடர்பாக வகுக்கப்பட்ட வழிமுறைகள் செயற்திறனற்றவையாகவும் காணப்பட்டுள்ளன. நிருவாக அமைப்பு முழுவதிலும் இது ஒரு பிரதான பிரச்சினையாக இருந்தது. இதனால் மூத்த முகாமை மட்டத்தில் பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தி திறமையின்மையினையும் விளைவித்தது.
67

Page 41
அதிகாரப் பன்முகப்படுத்தல் குறைபாட்டை கொண்டதற்கு காரணமாக அதிகார ஒப்படைப்பும் பொறுப்பும் சேர்த்து ஒருமித்து செய்யப்படாதது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியாளர்களின் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இவ்வறிக்கையில் தரம் குறைந்த ஆளணி முகாமைப்படுத்தலினால் ஏற்பட்டுள்ளது கூறப்பட்டது. பொதுச் சேவையில் வழங்கப்படும் வெகுமதி, குறிப்பாக மூத்த முகாமையாளர் மட்டத்தில் கவர்ச்சியுடையதாக அமையவில்லை. மேலும் அறிக்கையின் கருத்துப்படி தேசிய மட்டத்திலான பொதுச்சேவையாளர்களுக்கான பயிற்சிக் கொள்நெறி இல்லாமல் இருந்துள்ளது. இருந்த நிறுவனரீதியான பயிற்சி போதுமானதாக இருக்கவில் ல. இதற்குப் போதுமான வளங்களும் ஒதுக்கப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான விடயம், விஞ்ஞான ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பல்துறை அறிவு சார்ந்த மூத்த முகாமையாளர்களின் குழு இல்லாதது செயற்திறன் கொண்ட முகாமைத்துவத் தலைமைக்கு பொதுத்துறையில் இடையூறு விளைவித்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது.
வேலை ஒழுங்கமைவுகள் தொடர்பாக வணசிங்கா குழு முக்கியமாக அவதானித்து, அவை நீடித்த தன்மையுடையவை. காலங்கடத்தித் தாமதம் ஏற்படுத்துபவை, கட்சிக் காரரைப் பொறுத்து சிநேக பூர்வமற்றவை என வர்ணிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உபயோகம், குறிப்பாக கணினிகள் பயன்பாடு பலவீனமடைந்த நிலையில் இருந்துள்ளது. நிதி முகாமை முறைமைகள் காலத்தோடு ஒவ்வாதவையாகவும் நிதி முகாமை ஆளணியினரின் பயிற்சி வசதிகள் தரம் குறைந்தவையாகவும் காணப்பட்டன.
வணசிங்காவின் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருமுகப்படுத்திய நிலையம் - ஒரு பொதுச் சேவை அமைச்சு - ஆளணியினருடன் அமைக்கப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியது. அத்தகைய ஒர் அமைச்சினை அமைப்பதில் காலதாமதம் ஏற்படக் கூடும். ஆதலால் , அதனுடைய அனுசரணையுடன் ஒரு திறமையாகச் செயலாற்றும் செயலகம் உடனடியாக நிறுவப்பட்டால் நடைமுறைப்படுத்தலை முறிவின்றி தொடக்கி விடலாம் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அத்தகைய ஓர் ஒழுங்கின் தேவை நடைமுறைப் படுத்தலில் ஒரு முழுமையான பார்வையின் அணுகுமுறையாக கையாளுவதற்கு பொருத்தமானது எனவும் வற்புறுத்தப்பட்டது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்து நிருவாகச் சீர்திருத்தத்தில் அதனுடைய நிகழ்ச்சி ஒழுங்கில் சிறு சிறு பகுதிகளாகவோ அல்லது கூறுகளாகவோ நடைமுறைப்படுத்துவது அவற்றின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதும் சரியாகாது. ஆலோசனை தெரிவிக்கப்பட்டதற்கேற்ப நிகழ்ச்சி நிரலினை சிறு சிறு கூறுகளாக நடைமுறைப்படுத்துவதும் ஆபத்தானதாக முடியலாம். ஏனென்றால், அது பொருத்தமில்லாத குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தும். இது நிருவாக
68

பின்னோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கலாம். மேலும் வணசிங்க குழு புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சின் அமைவிடம் நேரடியாக குடியரசுத் தலைவருக்கு கீழே இருப்பது மிகவும் பொருத்தமானது என வலியுறுத்தியது. செய்யப்பட்ட சிபார் சுகளின் தாக்கம் பரவலாக எலி லா அமைச் சுக் களுக்கும் திணைக்களங்களுக்கும் செல்லக் கூடியவை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சிபார்சுகளுக்கு ஆதரவு காட்டும் முகமாக குழுவினால் நிர்வாகச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட நாடுகளின் அனுபவங்கள் மேற்கோளாக காட்டப்பட்டன. குறிப்பாக, மலேசியா, கெனியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சீர்திருத்தங்கள் வெற்றியளித்துள்ளன என்பதுடன் இவை நேரடியாக அரசாங்கத்தின் தலைவரின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளினர் அமைவு முகாமையில் அரசியல் தன்மையினை நீக்குவதற்கு வணசிங்கா குழு ஒரு சுயாதீனமான பொதுச்சேவை ஆணைக்குழுவினை அமைப்பதற்கான பரிந்துரையினையும் முன்வைத்தது. இந்த ஆணைக்குழு அரசாங்க சேவையாளர்களின் ஆளணி சேர்த்தல், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவற்றிற்கு அமைச்சரவையில் நிர்ணயிக்கப்பட்ட கொள்நெறிகளுக்கமைய பொறுப்புடையது. இந்த றுவன ஒழுங்குகள் தொடர்பாக அவற்றைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு புறநிலையான செயலாற்றல் மதிப்பீடு முறை, தேச மட்டத்திலான ஒரு பொதுச்சேவைப் பயிற்சிக் கொள்நெறி ஆகியவை முக்கியமானதாக ஆலோசனை கூறப்பட்டது. இப்பயிற்சிக் கொள்நெறிக்கு நிதி சார்பான ஒழுங்குகள் உறுதிப்படுத்தப்படுதலின் அவசியமும் வற்புறுத்தப்பட்டது. அத்துடன் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோரிடம் பயிற்சிக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. வழங்கப்படும் பயிற்சி பணியாளரின் பதவி முன்னேற்றத்துடன் இணைக்கப்பட்டதாக இருத்தலும் சிபார்சாக அமைந்தது. குழுவின் முக்கியமான சிபார்சாக ‘மூத்த முகாமைப்பிரிவு' ஒன்று நிறுவிப்படுதல் முன்வைக்கப்பட்டது. இதனுடைய பிரதான நோக்கம் பொதுச்சேவையில் ஒரு “தரம் வாயந்த தலைமை” உருவாக்கப்படுவதும் அது பொதுச்சேவை முழுவதற்குமாகவும் சட்டத்துறை, அரசியல் நிருவாகத்துறை ஆகியவற்றிற்கும் இடையே இரு முக இணைப்பினை ஏற்படுத்தும் அலகாகக் கருதப்பட்டது. அத்துடன், இவ்வலகு பொதுச்சேவை முழுவதற்கும் ஒரு மையமான தொனியினை நிர்ணயித்தலுடன், அதனுடைய பெறுமான முறைமையினது பாதுகாவலராகப் பங்கேற்கும் வகிபாகமும் எதிர்பார்க்கப்பட்டது.
1.5 1989 க்குப் பின்னர்
வனசிங்கா குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்காக தெரிந்த கட்டம் ஒரு மிகப் பொருத்தமற்ற காலமாக அமைந்துள்ளது. 1988, 1989 ஆகிய
69

Page 42
ஆண்டுகள் அரசியல் ரீதியாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (Janatha Vimukthi Peramuna, JVP) கிளர்ச்சி ஒரு கொந்தளிப்பு நிலையினை உண்டு பண்ணியது. மாகாண சபைகளின் எதிர்காலம் பற்றி குழம்பிய நிலை, உயர்ந்த பணவீக்கம் ஆகியவையும் நெருக்கடிச் சூழ்நிலையை ஏற்படுத்தின. இக்கட்டத்தில் அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பள உயர்வினை வழங்க முன் வந்தது. அதற்காக, வணசிங்கா குழுவின் அறிக்கையிலிருந்து அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் குறைந்தவை எனக் கூறப்பட்டதனை, அதில் வலியுறுத்தப்பட்ட நிபந்தனைகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டது. வணசிங்கா குழுவினர் சம்பள உயர்வுகள் பற்றிய பரிந்துரையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுதவற்கு முன்னராக இரணி டு முக்கியமான தொடர்புடைய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுதல் வலியுறுத்தப்பட்டது: எல்லாப் பொதுச் சேவை நிறுவனங்களிலும் விரிவான ஆளணி முறை மீள் ஆய்வு, மற்றையது, பொதுச் சேவையில் ஒரு விரிவான வேலைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுதல். குறிப்பாக, இணைக்கப்பட்ட சேவைகளில், நடுத்தர மேல்மட்ட முகாமைப் பிரிவினர் தொடர்பாக செய்யப்பட்ட சிபார்சில், இச்சேவைகள் எல்லாவற்றினதும் சேர்ப்பு விதிகள் மாற்றப்பட்ட பின் முகாமை அல்லது அறிதொழில் சார்ந்த பயிற்சி மிகக் குறைந்த மட்டத்திலிருந்து மிக உயர்ந்த மட்டத்திற்குச் செல்வதற்கான முன் நிபந்தனைகளாக விதிக்கப்படுதல் வற்புறுத்தப்பட்டது. அத்துடன், வெவ்வேறு வகுப்பினர் மற்றும் தரத்தினர் ஆகியோரின் ஆளணியின் முறை அளவினை உண்மையாக இருப்பவற்றின் பதவிகளுக்கு ஏற்றவாறு சமன் செய்தலும் வலியுறுத்தப்பட்டது.
மொத்த சம்பள அளவின் பெறுமதியினை ஏறத்தாழ ஒரே அளவில் வைத்திருக்கும் குறிக்கோளுடன் சம்பள அதிகரிப்புகளையும் உயர்ந்த உற்பத்தித் திறன் அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளையும் இணைத் து உள்ளடக்கியதாகவே வணசிங்கா குழுவின் பரிந்துரைகள் சம்பள உயர்வுகள் பற்றி நோக்கியுள்ளது. தேவைக்கு மேலான நிறுவனங்களையும் மற்றும் மேலதிகமான பணியாட்களைக் குறைக்கும் நடவடிக்கைகளும் கூறப்பட்ட சம்பள அதிகரிப்புகள் தொடர்பான பரிந்துரைகளுக்குப் பல மூட்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. சம்பளத் தொகை சடுதியாக அதிகரித்தால் அரசாங்கம் ஆளணியினரைக் குறைத்து தேவையில் லா நிறுவனங்களை மூடுகின்ற முக்கியமான நடவடிக்கைகளில் இறங்குகின்றது. இரண்டு திணைக்களங்கள், அரசாங்க வழங்கல் திணைக்களமும், பண்டக் கொள்வனவுத் திணைக்களமும் மூடப்பட்டன. ஆளணியினரைக் குறைப்பதற்கு டிசெம்பர் 1990இல் ‘பொன் கைகுலுக் கல்' முறை (விலகுபவர்களுக்கு பணமுடிச்சு வழங்கல்) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி ஓர் அரசாங்க உத்தியோகத்தர் காலத்துக்கு முன்பதாக ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கப்படுவதும் அதற்குப் பதிலாக பின்னர் கிடைக்கும் மாதாந்த ஓய்வூதியத்தில் கழிக்கப்படாத வகையில்
70

கூடுதலான ஒரு மாற்றீடு ஓய்வூதியத்திற்கு உரித்தாளர் ஆக்கப்படுகின்றார். இத்திட்டத்தின் கீழ் 15,000 பேர் நன்மை பெற விரும்பிய பொழுதும் அது எதிர்பார்த்த பயனை அளவு ரீதியாகத் தரவில்லை. இவர்களில் அதிகமானோர் ஆசிரியர்களாகவும் மற்றையோர் வேறு மாற்றுத் தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கு தகுதியுடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொதுச் சேவையில் தொடர்ந்து பயனுள்ள சேவையினை ஆற்றியிருக்கலாம். தோற்றுவிக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு தற்காலிக வேலையாள், இடை வருகையாள் (நாட் கூலியாள்) ஆகியோர் நியமிக்கப்பட்டது ஒரு மோசமான நிலையினைப் பிரதிபலித்தது. பின்னர் அவர்கள் நிரந்தர உறுப்பினர்களாக மாற்றப்பட்டனர். ஆகவே சம்பளத் தொகையும் மற்றும் ஓய்வூதியத் தொகையும் அதிகரித்தன.
1989இல் வணசிங்கா பரிந்துரைகளைத் தொடர்ந்து அமைச்சரவையினால் (p.35|T60)LD 9||56iqb$5 LDsbqub uuibaf 96 (5356ft (Management Development and Training Units, MDTUS) gau6) is 60 p f Ug, T60T g5 60 pas 6f 6i அமைச்சுக்களிலும் அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த அலகுகளின் நோக்கம், பயிற்சிக்கான தேவைகளை இனங்கண்டு கொள்ளுதல், பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல் மற்றும் முகாமை ஆற்றல்களை விருத்தி செய்தல் என்பவற்றை உள்ளடக்கியது. இவ்வலகுகள் தொடர்பாக, பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, பயிற்சித் தேவைகளை இனங் கண்டு கொள்ளுதல் பற்றிய பிரச்சினைகள், செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களின் அர்ப்பணிப்பு போதாமை போன்றவற்றால் அவற்றின் செயற்றிறன் பாதிக்கப்பட்டது. பொது நிருவாக அமைச்சு ஒரு முகாமை அபிவிருத்திப் பயிற்சி அலகினை செயலூக்கத்துடன் அமைத்த பொழுதிலும் அவை மற்றைய அமைச்சுக்களில் நிறுவப்படவில்லை, அல்லது அவை நல்ல விதமாக இயங்கவில்லை. ஆனால், மாகாண சபைகளில் உற்சாகமாகத் தொழிற்பட்ட அலகுகள் காணப்பட்டன.
அரசாங்கம் பொதுத்துறை முகாமைத்துவத்தினை முன்னேற்றுவதற்கான நோக்கத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டதாக இருந்துள்ளது. இதனைச் செய்வதற்கு பொதுத்துறையில் அதன் செயலாற்றத்தை அதிகரிப்பதற்கு வேண்டிய சீர்திருத்தத்தினை மேற்கொண்டு அதனுடைய தொழிற்பாடுகளின் செயற்திறன் நிலைமையினை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் அவசியம் நன்கு உணரப்பட்டது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (UNDP) உதவி நாடப்பட்டது. இதன் விளைவாக ஒரு தொழில்நுட்ப உதவி நன்கொடை 1991இல் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. இந்த உதவியுடன் மறுசீராக்க முகாமை Sl6vg5 Ey6öM (Restructuring Management Unit, RMU) 560IIgougoufl6st déGyp உள்ள கொள்நெறித் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அமைச்சில் அமைக்கப்பட்டது. அதற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் வணசிங்கா குழுவின் பரிந்துரைகளைப் பிரதிபலித்த வகையில் வரையறுக்கப்பட்டது. இவ்வலகின்
71

Page 43
அனுசரணையுடன் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலம் பொதுச்சேவையின் முகாமைத்துவம் பற்றிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேலும் பல பயனுள்ள தகவல்களும் அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் பிரதான ஆய்வுகள் முக்கியமான விடயங்களைப் பற்றிய அறிவையும் கருத்துக்களையும் முன் கொண்டு வந்தன. அவையாவன:
* அமைச்சுகள், திணைக்களங்கள் பற்றிய கட்டமைப்பு, மற்றும் ஆளணி
அமைவு தொடர்பான சீராக்கம்; * மாகாண சபைகள் கட்டமைப்பு மற்றும் ஆளணி அமைவு என்பன பற்றிய
சீராக்கம், * வேலை ஒழுங்குகள் மற்றும் அமைப்பு பற்றிய சீர்திருத்தங்கள், மற்றும்
முன்னேற்றங்கள் * பிரதேச செயலகங்களின் பயனுறுதி, செயற்திறன் என்பவற்றை மேம்படுத்துதல் 696irls)600Tbgs (gp3, T60LD556), g55616) 960LDL (Management Information System - MIS) * திட்டமிடுதல், பாதீடு சார்ந்த கணக்கு ஆகியவற்றின் முறைமைகளைப்
பலப்படுத்துதல் * உச்ச மட்ட அமைச்சுக்களின் ஆற்றலை மேம்படுத்துதல்.
மறு சீரமைப்பு முகாமை அலகு மூன்று வருடங்களுக்குத் தொழிற்பட்ட பின்னர் எதிர்பார்ப்புகளை விடப் பயன் குறைவானதாகக் காணப்பட்டது. இதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக, அதனுடைய பரிந்துரைகள் சில அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரியவையாக காணப்பட்டன. உதாரணமாக திணைக்களங்களின் பருமன், பரப்பெல்லை ஆகியவற்றைக் குறைப்பதும் மற்றும் மாகாண சபைகளின் கட்டமைப்புச் சார்பான ஒழுங்குகளின் அளவுகளைக் குறைப்பதும் அரசியல் மட்டத்தில் எதிர்ப்பினைக் கொண்டு வந்தது. அரசியல் ரீதியில் முன்வைத்த முன்னுரிமை நிலைப்பாடுகள் புறநிலை ஆய்வு நோக்கில் நியாயமற்றவை எனக் கருதப்பட்டதுடன் அதிகமாக முரண்பட்டுமிருந்தன. குறிப்பாக அப்படியான ஒரு நிலை பிரதேச செயலகங்கள் நிறுவப்பட்டதில் எழுந்துள்ளது எனக் கூறலாம். இச் செயலகங்கள் அவசரமாக, அரசாங்கம் அதனுடைய “கிராம ஆட்சி” என்ற கோட்பாட்டுக்கிணங்க அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, மாகாண சபைகளின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சியாக அமைந்தது எனக் கருதப்பட்டது.
1.6 1994 க்குப் பின்னர்
1995இல் புதிய அரசாங்கத்தின் கீழ் நிருவாக சீர்திருத்தம் தொடர்பாக புதியதொரு முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கான உந்துதல், மறுசீரமைப்பு முகாமைத்துவ
72

அலகுக்காக முன்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் எஞ்சியிருந்த பகுதி இப்புதிய முயற்சிக்கான பயன்படுத்தல் காரணமாக ஏற்பட்டது. சனாதிபதி செயலகத்தில் ஒரு நிருவாகச் சீர்திருத்த அலகு அமைக்கப்பட்டது. இந்த அலகின் நோக்கமாக, வணசிங்கா அறிக்கையின் அடிப்படையில் நிருவாகச் சீர்திருத்தத்தினை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது முன்வைக்கப்பட்டது. இக்கட்டத்தில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அதனுடைய ஆளுகை அலகினை (Governance Unit) நிறுவியது. இதனுாடாக இவ்வங்கி தெரிவு செய்யப்பட்ட பிரதேச ரீதியான நாடுகளுக்கு நிருவாகச் சீர்திருத்தம் பிரதான துறையாகக் கொண்டு ஆளுகை தொடர்பான முயற்சிகளுக்குத் தொழில்நுட்ப உதவியினை வழங்க முன்வந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஈடுபாடு (இவ்வங்கி இலங்கையின் மிகக் கூடுதலான கொடையாளி உதவி வழங்கும் நிறுவனம்) நிருவாகச் சீர்திருத்தத் திட்டம் தொடர்பான நிபந்தனைகள் உள்ளடக்கியதாக தயக்கங் கொண்ட அரசாங்கத்தை உற்சாகப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கத் தூண்டும் எனக் கருதப்பட்டது. அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிக்கான முன்வருகையினை ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஓர் அறிவுரை வழங்குனர் அணி அமைக்கப்பட்டது. இவ்வணி ஒரு சுருக்கமான ஆய்வுக்குப் பின்னர் ஓர் அறிக்கையினைச் சமர்ப்பித்தது (பெப்ரவரி 1997); அறிக்கை ஒரு துல்லியமான முறையில் நடவடிக்கை சார்ந்ததாக அமைந்தது. வனசிங்கா பரிந்துரைகளுடன் ஒத்துச் சென்ற பின்வரும் குறிக்கோள்களை அறிக்கை முன்வைத்தது.
9 அரசாங்கத்தின் எதிர்காலச் செல்வழி பற்றிய ஒரு தூர நோக்கினை
வரையறுத்து ஏற்றுக் கொள்ளுதல். 9 அரசாங்கத்தில் கட்டமைப்பு ரீதியாக பயனைக் கூட்டுவதற்கு முயற்சி
மேற்கொள்ளுதல். இது பின்வருவனவற்றிைத் தழுவி அமைதல்:
> தெளிவான இலக்குகளும் செயலாற்றல் தகவலும் > போட்டி நிலவுதல் > சீராக்கல்
0 சேவை வழங்குதலை மேம்படுத்தும் நோக்குடன் முகாமைப்படுத்தல் தொடர்பான ஒரு பணிச் சட்டம் விரிவான செயலாற்றல் குறிக்கோள்களை மையப்படுத்தி வரையறுப்புச் செய்தல்
• பாதீட்டின் செலவுகளில் சேமிப்பினை ஏற்படுத்தும் முறைகள் விருத்தி செய்யும் இயலளவு.
0 தனியார் துறை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சியினை
ஊக்கப்படுத்தும் ஒரு சாத்தியமான சூழல் உருவாக்கப்படுதல்.
73

Page 44
இவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்தது. நிருவாகச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆலோசனைச் சபை இதற்காக Spj6JULg). (Advisory Board on Administrative Reforms, ABAR) g3360) Juj65, முதலாவது தலைவராக சனாதிபதியின் செயலாளர் பொறுப்பினை ஏற்றார். பின்னர் பொது நிருவாக அமைச்சர் தலைவராக வழிநடாத்தினார். சனாதிபதிச் செயலகத்தில் உள்ள நிருவாகச் சீர்திருத்த அலகு வேண்டிய சேவைகளை ஆலோசனைச் சபைக்கு வழங்கியது. முன்னர் செயலாளர்களின் குழுவில் இருந்த உறுப்பினர் சிலர் இந்தப் புதிய ஆலோசனைச் சபைக்குள் சேர்க்கப்பட்டனர். ஆலோசனைச் சபை அதிகமான பயனுள்ள ஆய்வுகளுக்கு அங்கிகாரம் வழங்கியது. இவ்வாய்வுகள் பிரதானமாக நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து தகுந்த தீர்வு வழிகளை விளக்கியது. அரசாங்கம் இவற்றைத் தழுவி சில முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது. இவைகளிலொன்று, ஒவ்வொரு அமைச்சும் திணைக்களமும் ஓர் அடிப்படைப் பணிக் குறிக்கோள் திட்ட பிரகடனத்தை பங்கேற்கும் முறையில் வெளியிடுதல். இதற்கு உதவியாக மீண்டும் சேவைக்குக் கொண்டு வரப்பட்ட முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகுகள் பயன்படுத்தப்பட்டன. பணிக்குறிக்கோள் பிரகடனம் வரையறுத்தலின் நோக்கம், இதன் திட்டப் பிரகடனத்தில் சேராதவற்றை நீக்குவதும் வேறு தற்போது தேவையான புதிய நடவடிக்கைகளை இனங்கண்டு கொள்வதும் வற்புறுத்தப்பட்டது. அரசாங்கம் அமைச்சுக்களுக்கும் திணைக் களங்களுக்கும் வேலை முறைகளையும் ஒழுங்குகளையும் மீளாய்வு செய்து அவற்றைத் திருத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்வது பற்றித் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் மிகப் பிரதானமுடையதாக செயலாற்றல் மதிப்பீட்டு (p60D (Performance Appraisal System). 6 (5LT55 g Libu6T g luj656061Tulb ug56) முன்னேற்றங்களையும் இணைத்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இம்முறை தொடக்கத்தில் நிறைவேற்றுப் பணி உத்தியோகத்தர்களை உள்ளடக்கியது. பின்னர் மற்றைய எல்லாப் பிரிவினரையும் சேர்க்கும் முகமாக விரிவாக்கப்பட்டது. இது அரசாங்க சட்ட ஆலோசகரின் அறிவுறுத்தலுக்கு அமையச் செய்யப்பட்டது. இதுவரை அரசாங்கத்தினால் எடுக் கப்பட்ட முயற்சிகள் வேண்டிய அளவுக்குத் தொடரப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன; ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவை அரசியல் ரீதியாகவும் நிருவாக ரீதியாகவும் போதியளவுக்கு இருக்கவில்லை. மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவத் தகுதியும் ஆற்றலும் பங்கு கொண்ட அலகுகளிடம் போதியளவுக்கு கிடைக்காததும் காரணமாகக் கூறப்பட்டது.
1.7 அரசியல் மயப்படுத்தல்
இலங்கையின் அனுபவத்தில் பொது நிருவாகச் சீர்திருத்த முயற்சிகள், அதாவது, நிருவாக அமைப்பினை அபிவிருத்தித் தேவைகளுடன் அரசாங்க நோக்குகளுக்கு
74

ஏற்றதாக சீர்படுத்தும் முயற்சி 1950களிலிருந்து ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்துள்ள காலப்பகுதியில் எல்லா அரசாங்கங்களும் அபிவிருத்தி முறைவழிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதாகக் கூறி பொதுச் சேவையின் “சுயாதீனத் தன்மையினை பலவீனமடையச் செய்துள்ளன. சிவில் G3F606 (Civil Service) aisb, GLIMTgië (33F6oo6n 6oo60OTäs(g(p (Public Service Commission) நீக்கம் (1972), உண்மையான அதிகாரங்களில்லாமல் அது மீண்டும் கொண்டு வரப்பட்டமை (1978), பொதுச்சேவையின் நியமனங்களில் தலையரீடு, செய் தட் டங்கள் நடைமுறைப் படுத் தலி , திட்டங்கள் நடைமுறைப்படுத்தல், கொள்நெறி நடவடிக்கைகள் ஆகியவற்றில் குறுக்கீடுதல் என்பவை பொதுவாக அரசியல் மயப்படுத்தல் (Politicisation) எனக் குறிப்பிடத்தக்கதான ஒரு நிகழ்வினைத் தோற்றுவித்துள்ளது. மக்ஸ் வெபர் (Max Weber) anu u60ongbgbj60op ஆட்சி முறைகள் தற்கால அபிவிருத்தித் தேவைகளுக்கு முகங் கொடுக்க முடியாதவை பற்றிப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொழுதும், தாறுமாறான வகையில் அரசியல் தலையீடுகள் பொதுச் சேவையின் முனைப் புத் தன்மையினையும் இயக் காற்றல் தன்மையினையும் பெரிதும் பாதிக்க முடிந்தது.
பொதுச்சேவைக்கு முக்கியமான ஓர் அரசியல் பங்களிப்பு உண்டு, அரசாங்கத்தின் அரசியல் விருப்பாற்றலை நிறைவேற்றும் ஊடகமாக அது விளங்குகின்றது. ஆனாலும் அரசாங்க சேவை, விதிகள், ஒழுங்குபடுத்தும் கட்டளைகள், நிருவாக வழிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கும் மற்றும் தொழின்மை சார் ஆலோசனை வழங்குவதற்கும் சுதந்திரமாக அனுமதிக்கப்படுதல் வேண்டும். இவை தொடர்பாக அரசாங்க சேவையாளர்கள் பாரபட்சமின்றி நடந்து கொள்வதனால் தண்டிப்பதற்கு உட்படுபவர்கள் என்ற அச்சம் இருக்கத் தேவையில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுதல் அவசியம். இன்னொரு வகையில் கூறுவதானால், நல்லாட்சியினை நடைமுறைம்படுத்துவதில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் குறுகிய பக்கச் சார்பாக தேவைகளை மறந்து நியாயமாக நடந்து கொள்ளும் சுதந்திரம் அரசாங்க அலுவலர்களுக்கு இருத்தல் வேண்டும். ஒரு துருவ நிலையின் பிரதிபலிப்பாக மிகக் குறுகிய நோக்கங்களைக் கொண்ட ஒரு "மோசடி அமைச்சர்” (rogue Minister) இருப்பதாகக் கண்டால் அதற்கு எதிராக நடந்து கொள்ளுதல் அவசியமாகின்றது. அப்படியான ஒருவர் அரசாங்கத்தின் கூட்டு நலன்களுக்கு முரண்பட்ட விதத்தில் நடந்து கொள்பவர். ஒரு மோசடி அமைச்சர் என்பவர் “அரசாங்கத்தின் ஒரு கூறாக இருந்து கொண்டு அவருடைய தனிப்பட்ட தேவைகள், நலன்கள் ஆகியவை பெருமளவுக்கு அரசாங்கத்தின் நலன்களுடன் முரண்பட்ட நிலையில் உள்ளன” என லார்சனும் கோவும் (Larson & Coe) வரைவிலக்கணம் கூறியுள்ளனர்.
பொதுச்சேவையின் அரசியல்மயமாக்கல் 1977ஆம் ஆண்டு தேர்தல்களின் பின்னர் வேலை வங்கி முறை மற்றும் "துண்டு முறை” ஆகியவை
75

Page 45
புகுத்தப்பட்டதுடன் கூடுதலாக அதிகரித்தது. இந்த முறைகளில் கட்சிக்கு ஆதரவு, விசுவாசம் ஆகியவை திறன்/தேர்ச்சி ஆகியவற்றிற்குப் பதிலாக ஆட்சேர்த்தலில் தகுதிவிதிகளாக இடம் பெற்றன. இது மேலும் ஊழியர்கள் பதவி உயர்விலும் புகுத்தப்பட்டது. இம்முறைகள் அரசியல் மயமாக்கல் நிலைப்பாடுகளைப் பலப்படுத்தின. ஆற்றல் மிகுந்த பொதுச்சேவையாளர்களின் ஒழுங்குச் சிதைவினையும் ஊழற்படுத்தலையும் விளைவித்து முனைவுத் தன்மையினையும் தடுத்தது. அரசியல் உத்தரவுகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இடர்கள் ஏற்படாத வண்ணம் விளைவித்த நடத்தை மேலோங்கியது. 1990இல் அரசாங்கம் அரசியல் நியமனங்களின் பாரிய பாதிப்புக்களை உணர்ந்து "துண்டு முறையினை” நீக்கம் செய்தது.
ஆனாலும் அரசியல் மயமாக்கல் முறைமை தொடர்ந்தது. பொதுவாக நிலவி வந்த ஒரு கருத்து, அரசியல் மயமாக்கலின் அடிப்படைக் காரணம் அரசியல் திட்டத்திலுள்ள மந்திரிகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தை தனிப்பட்ட விடயங்களுக்கு வழங்கும் முன்னேற்பாடு என்ற அபிப்பிராயத்தினை பிரதிபலித்தது. இதுவே சிவில் சமுகத்தினால், அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் ஆகியோரிடம் அரசியல் திட்டத்தில் மாற்றம் சுயாதீனமான பொதுச்சேவை ஆணைக்குழு அமைக்கப்படும் ஏற்பாடு உட்பட செய்யப்படுதல் வேண்டும் என்ற முறையில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
1.8 17வது திருத்தம்
இலங்கை அரசியல் யாப்பின் 17வது திருத்தம் பாராளுமன்றத்தினால் ஒக்டோபர் 2001இல் அங்கீகரிக்கப்பட்டது. இது சிவில் சமூகத்தின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டது. இத்திருத்தத்தின் 55(1) பகுதியில் ஒரு புதிய பொதுச்சேவை ஆணைக்குழு சனாதிபதியினால் அரசியல் திட்டத்தின் சபையின் (Consititutional Council) சிபார்சுக்கு அமைய நியமிக்கப்படுதவற்கான ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த அரசியல் அமைப்புச் சபையிடம் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவிஉயர்வு, இடமாற்றம், ஆகியவற்றிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டது. இந்த அரசியல் சட்டத்திருத்தம், பொதுச்சேவையாளர்களின் சுயாதீன நிலையினை உறுதிப்படுத்தி அவர்கள் பாரபட்சமின்றி நல்லாளுகையினைச் செய்வதற்குப் போதுமானதா என்பது கேள்வியாகின்றது.
இங்கு எதிர்நோக்கப்படும் பிர்சசினை என்னவென்றால், திருத்தத்தின் பகுது 55(3) இல் உள்ள ஏற்பாடு பகுதி 55(1)இல் வழங்கிய ஏற்பாட்டை எடுத்து விடுவது போலத் தெரிகின்றது. 55(3)இல் கூறப்படுவது (55(1)இல் ஏற்பாடுகள் எவையென்றாலும் நியமனம் பதவி உயர்வு, இடமாற்றம் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவையும் மற்றும் எல்லாத் திணைக்களத் தலைவர்களினதும் பதவி நீக்கம் பற்றிய அதிகாரங்களும் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அத்தகைய
76

அதிகாரங்களை ஆணைக்குழுவின் கருத்தினை அறிந்த பின்னர் செயற்படுத்த முடியும். “ஆணைக்குழுவின் கருத்தை அறிந்த பின்னர்” என்ற வாசகப் பகுதி அமைச்சரவை அமைச்சர்களை ஒரளவுக்கு மட்டுப்படுத்தும் அம்சமாக அமைந்தது. 17வது திருத்தத்தின் ஏற்பாடுகள் கூடுதலாக நடுமட்டத்திலும் கீழ்மட்டத்திலும் உள்ள பிரிவுகளின் உத்தியோகத்தர்களுக்கு நன்மை அளிப்பதாகத் தெரிகின்றது. ஆனால் அவர்களின் நிலையிலும் உள்ளுர் மட்டத்து அரசியல் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். அநேகமானோர் பிரச்சினைகளை விளைவிக்காமல் அமைதி நிலையினை விரும்பி ஒத்துச் செல்லும் வழியைக் கடைப்பிடிக்க முயல்வர். அதிகமாக தொழின்மை சார்ந்த ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இலகுவில் நீக்கப்படக் கூடியவர்கள், ஆதலால் அவ்வாறு நடந்து கொள்வர். ஆனால் விலக்காக, திறமைசாலிகளான பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்துடன் பொதுச்சேவை ஆணைக்குழுவினை நாடுவர். முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், அரசியல் கலாசாரத்தின் சமாந்தரமாக ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் குறிப்பிட்ட நிறுவன மாற்றங்களினால் உத்தியோகபூர்வ நடத்தை குறித்து சாதிப்பது அதிகமில்லை. முறைசார்ந்த ஆளணி முகாமை நடவடிக்கைகளான ஆட்சேர்த்தல், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவற்றின் புதிய ஒழுங்குகளினால் நன்மையைக் கொண்டு வரலாம். மூத்த உத்தியோகத்தர்களான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வர். "மோசடி அமைச்சர்” என்ற நிலையிலும் அவருடைய குறுகிய நோக்கங்களைக் கொண்ட அழுத்தங்களுக்கு எதிராக நின்று தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை மூத்த உத்தியோகத்தர்களின் தொழின்மை ஆற்றலிலும், ஆலோசனையும் வழங்குவதிலும், அவை அரசாங்கத்தில் மற்றையவர்களினால் உள்வாங்கி உணரப்படுவதிலும், புரிந்து கொள்வதிலும் தங்கியிருக்கும். இந்த அம்சம் உத்தியோகத்தர்கள் பற்றிய தொழில்நும்ப, தொழின்மை ஆற்றல்கள் தொடர்பான முக்கியமான விடயத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
தொகுத்து நோக்குமிடத்து, இலங்கை நிருவாக அமைப்பு தொடர்பாக ஒரு கட்டளைப்படிவ மாற்றம் (Paradigm Shift) ஏற்பட்டுள்ளது. அதாவது இவ்வமைப்பு பற்றி ஆய்வு நோக்குகள் கோட்பாட்டு நிலைப்பாடுகள் அணுகுமுறைகள் தொடர்பான சிந்தனைகளும் கொள்நெறி இலக்குகளும் மாற்றமடைந்துள்ளன. 1948 இன் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசாங்கங்கள் படிப்படியாக புதிய நிருவாக அணுகுமுறைகளின் தேவைகளை அபிவிருத்தியின் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் நோக்கில் உணர்ந்து ஏற்றுக் கொண்டன. ஒரு வேளை இதன் காரணமாக சாதாரண நிருவாகத் தொழிற்பாடுகள் மீது அரசியல்வாதிகள் தலையிடுவதை நியாயப்படுத்தியிருக்கலாம். அமைச்சர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் கொள்நெறி நிர்ணயிப்பது நிருவாக நடவடிக்கைக்கு வழி நடத்தல் செய்வது ஆகியவை பொதுவாக ஏற்றுக்
77

Page 46
கொள்ளப்படுகின்றது. ஆனால் சனநாயக முறைமையின் ஓர் உறுதியான கோட்பாடு அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கொள் நெறியும் வழிநடத்தலும் நடைமுறைப்படுத்தும் பொழுது பக்கச் சார்பான நலன்களின் அடிப்படையில் தலையீடு இல்லாதிருப்பதும் அவசியம். இவ்விதியினை மீறும் நிலை "மோசடி அமைச்சர்களின்” செயற்பாடுகளினால் ஏற்படுகின்றது. இலங்கையில் இத்தகைய ஒரு மாற்றத்திற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் நீக்கம் ஊக்கமளித்தது. இக்குழு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள போதும் நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஊழியர்கள் ஒழுங்குக் கட்டுப்பாடு ஆகியவற்றின் அதிகாரங்கள் அமைச்சர்களிடமே தொடர்ந்து விடப்பட்டன. இந்த அரசியல் மயமாக்கல் முறைவழி நிருவாக அதிகாரங்களையும் பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் ஆலோசனைப் பங்களிப்பினையும் பலவீனமாக்கியதுடன் பாதிப்புகளையும் அதிகரித்தது. அத்துடன் அமைச்சர்களின் ஆதிக்கம் கூடியதுமல்லாமல் அவர்களின் அமைச்சுக்களின் பருமனையும் எண்ணிக்கையினையும் ஆளணித் தொகையினரையும் விரும்பியபடி நிர்ணயித்தனர். யாப்பின் 17வது திருத்தம் பொதுச் சேவையாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருப்பினும் கூடியளவு சுதந்திரமுடையவர்களாக இருப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்மயமாக்கல் முறைவழியுடன் நியமனங்களின் தரக்குறைவு, உத்தியோகத்தர்கள் தொடர்பாக முனைவுகள், பயனுறுதி, செயற்திறன் ஆகியவைக்கு போதியளவு ஊக்கப்பாடு இல்லாமை, சிக்கலான தாமதமேற்படுத்தும் ஒழுங்குமுறைகள், மற்றும் பதவி உயர்வுகளுக்கு பயிற்சித் தேவையைக் குறைத்து மதிப்பிடுதல், என்பவை கூடிச் சேர்ந்த அம்சங்களாக இனங் கண்டு கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய குறைபாடுகளை ஆராய்ந்து தீர்வு வழிமுறைகளை முன்வைத்த முயற்சிகள், வணசிங்கா குழுவுடன் ஆரம்பித்து மேற்கொள்ளப்பட்டன. கூறப்பட்ட தீர்வு வழிமுறைகள் சரியான நிலைப்பாடுடைய விருப்பாற்றல் இல்லாமை காரணமாக இருந்துள்ளது. சென்ற காலத்து அனுபவம் என்ன சரிப்படுத்தப்படல் வேண்டும் என்பது பற்றி சிந்திப்பதற்கு பலவற்றை தருவதாக இருப்பினும், விரிவான ஒரு நிருவாகச் சீர்திருத்த முறைவழி ஒரு கோட்பாட்டு ரீதியான சட்டகமைவொன்று பின்பற்ற வேண்டிய முன்னுரிமைகளையும் முறைகளையும் வரையறுப்பதற்கான வழிகாட்டல்களை நிர்ணயிப்பதற்கு தேவைப்படுகின்றது. இவை தொடர்பாக இலங்கை சர்வதேச அனுபவத்தின் படிப்பினைகளிலிருந்து அறிந்து கொண்டவற்றினாலும் நன்மை பெற முடியும்.
2.0 பொதுநிருவாகச் சீர்திருத்தங்கள் பற்றி ஒரு கருத்துருவாக்கச்
சட்டகம் პ*.
இலங்கையில் பொதுநிருவாகச் சீர்திருத்தம் செய்வது தனியொரு அனுபவமல்ல. அநேகமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், நிலைமாற்ற நாடுகள்,
78

அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் ஆகியவை இச்சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றன. இவைகளின் பிரதான நோக்கம் அபிவிருத்தி பணியின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கான தேவை இருந்து வருகின்றது. இலங்கையில் இது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து, மற்றைய பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து பயனடைந்து கொள்ளலாம்.
பொது நிருவாகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வேறுபட்ட சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய பொதுத்துறை முகாமை, முகாமைத்துவவாதம், முயற்சியாளனாக அரசாங்கம், அரசாங்கத்தின் மீள் கண்டுபிடிப்பு ஆகியவை முக்கியமாக உபயோகத்தில் உள்ளன. உறுதியானதும் முனைப்பானதுமான முயற்சிகள் வளர்ச்சியடைந்த நாடுகளாகிய ஐக்கிய அமெரிக்கா (US), ஐக்கிய இராச்சியம் (UK), நியுசிலாந்து (New Zealand), அவுஸ்திரேலியா (Australia) ஆகியவற்றில் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அனுபவங்கள் பயன்தரும் படிப்பினைகளை அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் நிலைமாற்றத்தினூடாக செல்லும் நாடுகளுக்கும் தருகின்றன. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மிகவும் வெற்றியீட்டியவையான, தென்கொரியா தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் (கிழக்கு ஆசியாவில்) பொதுநிருவாகச் சீர்திருத்தங்களைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுடன் இணைத்துக் கொண்டன. ஐக்கிய அமெரிக்காவில் ஐந்து சனாதிபதி ஆய்வு ஆணைக்குழுக்கள் (Presidential Study Commissions) 1937 g6ð g(bĖ gbl gə60pLDĖ ab ' uL60T. அவற்றின் நோக்கம் சமஷ்டி நிறைவேற்றுக் கிளையின் கட்டமைப்பினது மீள் ஆய்வு; இது ஒரு தொடர்ச்சியான முறைவழியாக இருக்கும் எனக் காணப்பட்டது. முன்னாள் அமெரிக்காவின் உப தலைவர் அல்கோரின் (Al Gore) அரசாங்கத்தின் மீழ்கண்டுபிடிப்பு தொடர்பாக பணிப்படை 1995இல் அமைக்கப்பட்டது. இது பொது நிர்வாகச் சீர்திருத்தம் பற்றிய ஊக்கப்பாட்ன்ட அதிகரித்தது. ஐக்கிய இராச்சியத்தில் மாகரட் தட்சரின் (Margaret Thatcher) கொள் நெறி செயல்தூண்டும் முயற்சிகள் கொண்ட பங்களிப்பைச் செய்தது. இவர்களின் முயற்சிகள் பொதுச் சேவையினது செயலாற்றலை உயர்த்துவதற்கு தனியார்மயமாக்கல், சிவில் சேவையின் அளவைக் குறைத்து, சிவில் சேவைக் கட்டமைப்பின் மறுசீராக்கம் செய்தல், அவை கூடிய பொறுப்புக் காட்டும் தகைமை கொண்டதாக மாற்றுவது ஆகியவை பிரதான இடத்தைப் பெற்றன. நியுசிலாந்து ஒரு புதிய பரிமாணத்தைப் புகுத்தியது. குறிப்பிட்ட பயனை அடைந்து கொள்வதற்கு ஆட்சேர்த்தல், பதவி நீக்கம், கீழ்மட்ட ஊழியர்களின் நிலையினை முன்னேற்றுதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பாக உள்ள திணைக் களத் தலைவர்களுடன் தேவையான ஒப்பந்த அடிப்படையிலான ஒழுங்கு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இத்தகைய ஒழுங்கு முறைகளைப் பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் ஓரளவுக்கு ஐக்கிய இராச்சியம் ஆகியவை பின்பற்றின.
79

Page 47
வளர்முக நாடுகளிடையே பெற்ற அனுபவம் இலங்கைக்கு மிகக் கூடுதலான பொருத்தப்பாட்டைக் கொண்ட நாடாக மலேசியா காணப்பட்டுள்ளது. மலேசியாவில் பொதுத்துறைச் சீர்திருத்தம் சிவில் சேவையில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் அடங்கியதாக அரசாங்க சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் 1957ஆம் ஆண்டிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளன. அதற்குப் பின்னர் தொடர்ச்சியான முயற்சிகள் பொதுத்துறையின் செயலாற்றத்தை உயர்த்துவதற்கு பொதுத் துறைச்சீர்திருத்த முனைவுகளினுடாக மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் மையப்படுத்திய கவனம் தனியார் துறையினது பொருளாதார அபிவிருத்தியிலான ஈடுபாட்டை அதிகரித்தலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. இத் தொடக்க முனைவுகள் பொதுத்துறையின் செயலாற்றத்தை நிர்ணயிக்கும் பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியது; இம் மாற்றங்கள் பின்வருவனவற்றைச் சேர்த்தன; கட்டமைப்பில் மாற்றங்கள்; முகாமைத் தொழில்நுட்பம்; மற்றும் திறன் விருத்தி, மனப்பாங்குகள், ஒழுங்கமைப்புகள் முறைகள் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. மலேசியா அனுபவத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகமான வளர்முக நாடுகளின் முயற்சிகள் குறுங்காலத்தை நோக்கியவையாகவும் தனிப்பட அமைந்த தன்மையுடையவையாகவும் இருந்தன. "
2.1 பழைய மாதிரியம்
புதிய பொது நிருவாகச் சீர்திருத்த முயற்சிகள் வழமையான வெபேரிய GLITgbllb6)Jff ab uoffgflugègl8öl(Ibbg! (Traditional Weberian Model) 6ölsdalö சென்றுள்ளன. மக்ஸ் வெபரின் (Max Weber) ஆறு விதிகளில் முதலாவது விதி இன்றும் பொருத்தப்பாடுடையதாக உள்ளது. இதன்படி பணிக்குழு ஆட்சி அதிகாரம் சட்டத்திலிருந்து வருவது என்பதை வலியுறுத்துகின்றது. இரண்டாவது, அதிகாரம் ஓர் அடுக்கமைவுக்கு ஏற்றதாக எந்த ஓர் உத்தியோகத்தரும் முழு அமைப்பின் அதிகாரத்துடன் தொழிற்பாடுகள் அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அடிப்படையில் நடந்து கொள்கின்றார் என்பதை விளக்குகின்றது. இரண்டாவது விதியிலிருந்து பெறுவது எதுவென்றால், அமைப்பிலுள்ள வேலையாட்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து அமைப்பு புறம்பாக வேறுபட்டு உளதாயிருக்கும் நிலை. தீர்மானங்கள் முன்னோடி நிகழ்ச்சிகளைத் தழுவியவையாக இருக்கும். இதற்கு ஏற்றதாக பதிவேடுகள், கோவைகள் ஆகியவை வைத்திருக்கப்படுதல் அவசியம். அவ்வாறு இருந்தால் அமைப்பில் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஒரே விதமானதாக முரண்படாதிருக்க முடியும். நான்காவதாக, நிருவாகம் ஒரு விசேடத்துவம் கொண்ட தொழிலாகன்றது. அது தேவைக் கேற்ற பயிற்சியுடையவர்களினால் கொண்டு நடாத்தப்படுகின்றது. ஐந்தாவது, பணிக்குழுவாட்சியில்) வேலை செய்வது முழு நேரத் தொழிலாக இருப்பதும் அது நிருவாகிகளினால் இரண்டாம் நிலை வேலையாகக் கருதப்பட முடியாது.
80

இறுதியாக, அலுவலக முகாமை, பொது விதிகளைக் கொண்ட நடவடிக்கையாக இருப்பதும் அது கற்றறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது: எவர் குறிப்பிட்ட அலுவலகத்தில் வேலை பார்க்கின்றாரோ அவர் ஒத்த விதத்தில் விதிகளைப் பின்பற்ற முடியும்.
இந்த மாதிரியம், சில மாற்றங்களுடன், அநேகமான நாடுகளில் வெளிப்படையான பின்பற்றுதல் இல்லாவிடினும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால், இது பொது நிருவாக அமைப்பின் புதிய கட்டளைப் படிவத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியவில்லை. நடைமுறையில் பொதுநிருவாகம், நேரத்தைச் சிக்கனப்படுத்துபவர்களை, புதிய மாறுதல்களைக் கொண்டு வருபவர்களுக்கப் பதிலாக கூடுதலாகத் தோற்றுவிக்கின்றது; மேலும் நிருவாகிகளை இடர் எதிர்நோக்குபவர்களை விட அதிலிருந்து விலகுபவர்களை ஊக்குவிக்கின்றது; வளங்களைத் திறமையாகப் பயன்படத்துபவர்களை ஊக் குவிப்பதற்குப் பதிலாக அவற்றை வீணடிக் கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. வெபரின் வழி வந்த நிருவாகத்தில் ஊக்கமின்மை, முயற்சி இல்லாமை, “சிவப்பு நாடா” (அளவுக்கு மேலாக விதிகளுக்கு கட்டுப்பட்டிருத்தல்) சாதாரண திறமை, திறமையில்லாமை ஆகியவை விளைவிக்கப்படுவதாக குறை கூறப்பட்டுள்ளது.
2.2 புதிய சவால்கள்
அரசாங்கத்திற்கு வருவாய் தேடுவதும், பொருளாதார நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துவதனையும் செய்யும் ஒரு பொது நிருவாக அமைப்பு அபிவிருத்தி தொடர்பான புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது. அரசாங்கத்தினது பங்களிப்பு உண்மையில் மாறி விட்டது. அதன் விளைவாக அரசாங்கத்தின் நடைமுறைப்படுத்தும் கையாகப் பொதுநிருவாகழ் புதிய தொழிற்பாடுகளைச் செய்வதற்குத் தூண்டப்படுதல் வேண்டும். இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் ஐரோப்பா, யப்பான், அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் முன்னாள் சோவியத் கூட்டு நாடுகள் உள்ளடங்கலாக, அரச முனைப்பான பொருளாதார நடவடிக்கைகள், சமூகநலன் சேவைகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முன் வந்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், சுதந்திர அரசுகளாக தோற்றமளித்த பின்னர் அரச தலையீடு” அணுகுமுறைகளை, அபிவிருத்தியடைந்த நாடுகளினால் பின்பற்றப்பட்டவற்றினை முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டனர். உலகப் பொருளாதாரம் இக்காலப் பகுதியில் பல மாற்றங்களை அனுபவித்தது. பொருளாதாரங்கள் விரிவடைந்தன; பொருளாதார உறவுகள் கூடுதலான சிக்கல் நிலையினை அடைந்தன; தனியார்துறை ஒரு கூடுதலான இயக்காற்றலை கொண்டுள்ள சக்தியாக மாறியது. சர்வதேச வர்த்தகமும் முதலீடும் ஆகியவற்றில் தாராளமயமாக்கல் பரவலாக
81

Page 48
ஏற்பட்டது. உலகமயமாக்கல் தாக்கத்தினை ஏற்படுத்தியது: அரசாங்கங்கள் புதிய அபிவிருத்தி கட்டளைப்படிவத்தின் தேவைகளை மாற்றங்களின்றி முகம் கொடுக்க முடியவில்லை. புதிய உலகமயமாக்கல் மாற்றங்கள், முன்னாள் சோவியத் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து, சர்வதேசப் பொருளாதாரத்தில் பரவலாக ஏற்பட்டன. தகவல் புரட்சியும் சர்வதேசரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரங்களிடையே போட்டியும் தீவிரப்படுத்தப்பட்டது. இத்தகைய மாற்றங்களின் மத்தியில் அரசாங்கத்தின் பங்களிப்பு, அரசு ஒரு முயற்சியாளனாக ஒழுங்கியக்கிச் செல்லும் நிறுவனமாக இருப்பதற்குப் பதிலாக, பொருளாதார சமூக முன்னனேற்றத்தின் ஒரு ஏதுவான சூழ்நிலையினை தனியார் துறைக்கும் மூன்றாம் துறைக்கும் (முக்கியமாக அரசசார்பற்ற நிறுவனங்கள்) ஏற்பாடு செய்யும் பொறுப்பு பிரதான இடத்தை வகிக்கின்றது.
2.3 தனியார்துறையினை முன்னுதாரணமாகக் கொள்ளுதல்
பல நாடுகளினால் பொதுநிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக பின்பற்றப்பட்டு வருகின்ற முயற்சிகளின் பிரதான சாராம்சமாக இருப்பது முழுவதாக ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல், விதிமுறைகளையும் மற்றும் ஒழுங்குபடுத்தும் வழிகளையும் பின்பற்றுதல் ஆகியவற்றினை விட கிடைக்கும் பயன்களையும் பெறுபேறுகளையும் முகாமைப்படுத்துதல் என்பதன் முக்கியத்துவம் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. இப் புதிய அணுகுமுறை தனியார் துறையின் முகாமைத்துவப் பாணியினையும் முறைகளையும் பொதுத்துறைச் சேவைகளை வழங்குவதில் பின்பற்றும் தேவையினை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பார்வை, அணுகுமுறை ஆகியவற்றை ஐக்கிய அமெரிக்காவில் ஒஸ்போர்ன் மற்றும் கேபிளர் (Orsborne and Gabler) இருவரும் தம்முடைய நூலில் பத்து அம்சங்களைக் கொண்ட சாராம்சத்தினை 'அரசாங்கத்தின் மீள் கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் வரையறை செய்துள்ளனர். இவற்றை வேறு நாடுகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் உட்பட பொதுநிருவாகச் சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவை என்ற நோக்கில் பின்பற்ற ஆர்வம் காட்டியுள்ளன.
இவற்றினது முக்கியமான நோக்கம், தனியார்துறையின் முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி அவற்றினுடாக பொதுத் துறைச் சேவைகளை வழங்குதல். இது ஒரு பணித்துறை ஆட்சி முறைமைக்கு பின்னரான வழிகளை ஊக்கப்படுத்துவதாகவும் அமைகின்றது. ஆனாலும், அத்தகைய தனியார் துறை முறைகளைப் பின்பற்றி “பணித்துறை” மேலாண்மை நிலையிலிருந்து பின்னரான நிலைக்குச் செல்லுதல் தொடர்பாகவும் சில தடைகளும் உண்டு. முதலாவது, அரசாங்க நிறுவனங்கள் கட்டாயப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அப்படியான அதிகாரங்கள் தனியார் துறைக்கு இல்லை. மக்கள் தீர்மானங்கள்,
82

வரி செலுத்துதல், ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது; அவர்களின் சொத்துக்கள் வேண்டுமானால் எடுக்கப்படலாம் அல்லது வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். அரசாங்கத்தினால் வழங்கப்படும் பல சேவைகள் அரசாங்க தனியுரிமை நிறுவனங்களினால் வழங்கப்பட்டு வருகின்றன. இவை பற்றிய வழங்கல்களில் மக்கள் தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. இத்தகைய சூழலில் அரசாங்க நிறுவனங்கள் பிரசைகளை, தனியார்துறை நடாத்துவது போல, கட்சிக்காரர்களாகவோ அல்லது வாடிக்கையாளர்களாகவோ நடாத்தும் வழக்கம் குறைவு. இது குறிப்பாக போட்டிச் சந்தை நிலவும் சூழ்நிலையில் தனியார் துறை தொடர்பாக அவதானிக்க முடிகின்றது. அரசாங்க துறையின் பொதுப் பயன் சேவைகள் (Public Utilities) சந்தை தனியார் துறைக்குத் திறந்து விடப்பட்டு அரசாங்க நிறுவனங்கள் போட்டி நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்க நிறுவனங்களும் தொடர்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் செல்வதற்கும், வாடிக்கையாளர்கள் சார்பான நிலைப்பாட்டைப் பின்பற்றுதல் அவசியம். Α
தனியார்துறை முகாமைத்துவப் பாணியினைத் தழுவிக் கொள்வதில் இன்னுமொரு முக்கியமான விடயம் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடைய பொறுப்பேற்றல் முறைகள் வேறுபட்டிருத்தல் தனியார் துறை முகாமையாளர்கள் குறைந்தபடி கொள் கையளவில் அவர்களுடைய பங்களார்களுக்குப் பொறுப்புடையவர்கள். ஆனால் தனியார் துறை முகாமையாளர்கள் அவர்களின் குறைந்தபட்ச இலாபம் தொடர்பான செயலாற்றத்தினால் மதிப்பிடப்படுகின்றனர். எப்படியிருப்பினும், சந்தையின் பங்கினை அதிகரித்தல் அல்லது புதிய சந்தைகளைக் கண்டுபிடித்தல் போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொடுக்குமிடத்து இலாப உச்சப்படுத்தல் தேவை அதி முக்கியத்துவம் கொள்ளத் தேவையில்லை. ஆட்சேர்த்தல், பதவி உயர்வு, இடமாற்றம் அல்லது பதவி நீக்கம், பொருள் வழங்குனர் அல்லது வாடிக்கையாளர்கள் தெரிவு ஆகியவை தொடர்பான விடயங்களில் சமத்துவ வாய்ப்புகள் பற்றியவை, இலாபங்களுக்கு இடையூறு விளைவிப்பவையாக இருந்தால் மட்டும், கவனத்தை ஈர்ந்து கொள்ளும். அல்லாவிடில் சமத்துவ வாய்ப்புகள் பற்றிய விடயம் மிக அருமையாகவே கவனத்துக்கு வருகின்றது. அரசாங்க சேவையாளர்கள் மாறாக, அரசியல் தலைமைத்துவம் பாராளுமன்றம் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பெறுபேறுகள் தொடர்பாகவும் முறைவழிகள் குறித்தும் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கே பெறுபேறுகளை விட முக்கியத்துவம் முறைவழிகள் சார்பாகவே நோக்கப்படுகின்றது. எதிர்பார்க்கும் விளைவுகள் இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியாததனால் இந்த நிலை ஏறி பட்டுள்ளது. பொது தி துறையில குறிக் கோள்கள் இலகுவாக நிர்ணயிக்கப்படுபவையல்ல; பெறுபேறுகளும் இலகுவாக அளவிடப்படுபவையுமல்ல என்று கூறப்பட்டது இவற்றை வலியுறுத்துகின்றது.
83

Page 49
வெபேரியத் தத்துவங்கள் அரசியலமைப்பு பொது நிருவாகத்திலிருந்து பிரித்துக் காட்டுவதற்குச் சார்பானவையாக இருப்பினும், யாதார்த்தம் என்னவென்றால் பொதுச்சேவை அரசாங்கத்தின் விருப்பாண்மையினை நடைமுறைப்படுத்தும் ஒரு முக்கியமான கருவியாக பங்களிப்பைச் செய்கின்றது: இச்சூழ்நிலையில் அரசாங்கமானது சனநாயக முறையினால் தெரிவு செய்யப்பட்டதாக அல்லது இல்லாமல் இருக்கலாம். மேலும் அரசாங்கத்தின் அரசியல் குறிக்கோள்கள், தனியார்துறையில் கடைப்பிடிக்கப்படும் செயற்திறன் மற்றும் திறமை ஆகியவை தொடர்பான கருத்துக்களுடன் ஒத்துச் செல்பவையாக இல்லாமலும் போகலாம். அரசியல் வாதிகளின் முறைமை வாய்ந்த தொழிற்பாடாக கொள் நெறி நிகழ்ச்சியினை நிர்ணயித்துக் கொள்கின்றனர். அவர்கள் நடைமுறை தொடர்பாக தலையீடு ஏற்படுத்துவதற்கும் தயங்க மாட்டார்கள். இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வெளிப்படையாக பொதுச்சேவை உத்தியோகத்தர்களுக்கு வேண்டிய சுயாதீன அதிகாரத்தினை நிருவாகத் தீர்மானங்களை எடுப்பதற்கு வழங்க முடியும். இது தலையீடுகளை நடைமுறைப்படுத்தும் நிருவாகத்துறை மீது குறைத்துக் கொள்ளலாம். எப்படியாயினும், நிலவுகின்ற அரசியல் பண்பாடு, இத்தகைய சுயாதீனமான அதிகார வழங்கலுக்குத் தடையாக இருக்கலாம். அப்படியாக சுயாதீன நரிலை அனுமதிக் கப்படுமாயினி அரசாங் க சேவை உத்தியோகத்தர்களினால் நிருவாகக் கட்டுப்பாடு வகிக்கக் கூடிய அளவானது அரசாங்கத்திலுள்ள மோசடி அமைச்சர்களின் எண்ணிக்கையைப் பொறுத்திருக்கும்.
2.4 தண்டு வலித்தலா? வழிச்செலுத்தலா?
தனியார் துறை முகாமைத்துவ முறைகளை பொதுத்துறையில் புகுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பல நாடுகளில் வழமையாக அரசாங்கத்தினால் செய்யப்பட்டு வந்த சேவை வழங்கல் தொழிற்பாடுகள் தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தனியார் துறை நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் சேவை வழங்கும் முயற்சிகள் ஒப்படைக் கப்படுதவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால், அரசாங்கங்கள் இச்சேவைகள் தொடர்பான பொறுப்புகளைக் கைவிட்டுள்ளன என்பதல்ல. அரசாங்க சேவைகளை பொதுத்துறை முன்பு வழங்கியது. அதற்குப் பதிலாக இன்னும் அவற்றைத் தனியார் துறையினால் வழங்கப்படுதல் என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையினால் அரசாங்கம் அதனுடைய சுமையுள்ள இடஞ்சல் தரும் சேவை வழங்குதலினி தொழிற் பாடுகளிலிருநீது அதிகளவுக் கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கத்தின் முதன்மைக் கடமையான (சட்டத்தையும் ஒழுங்கிணையும் நிலைநாட்டுவதுடன்) கொள் நெறிகளைத் தீர்மானித்தல், அவற்றின் நடைமுறைப்படுத்தலைக் கண்காணித்தல், அவற்றின்
84

தாக்கத்தினை மதிப்பீடு செய்தல், தீர்மானங்கள் நல்லவையாக அமைவதற்கான ஏற்கனவே செய்யப்பட்டவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் ஆகியவை மீது கூடுதலான கவனத்தை அரசாங்கம் செலுத்த முடிகின்றது.
ஒஸ்போன் மற்றும் கேப்லர் ஆகியோர் அரசாங்க தொழிற்பாடுகள் பற்றிய புதிய அணுகுமுறையினை அவர்களின் அரசாங்கத்தின் 'மீள் கண்டுபிடிப்பு (Reinventing Government) என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் அரசாங்க தொழிற்பாடு எல்லாவற்றையும் செய்வதற்குப் பதிலாக ஊக்குவிப்பு பங்களிப்பினைச் செய்வது பொருத்தமாகும் என வற்புறுத்தினர். இப்புதிய தொழிற்பாட்டை “தண்டு வலித்தலுக்குப் பதிலாக வழிச்செலுத்துகை” (Steering against Towing) என வர்ணித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் நிருவாகத்தை கொண்டு நடத்துபவர்களின் தரத்தின் முக்கியத்துவத்தினை, வழிச்செலுத்தல் வெற்றியளிக்க வேண்டுமானால், வலியுறுத்தியதையும் கவனித்தல் வேண்டும். வழிச் செலுத்துகைக்குத் தேவைப்படுபவர்கள் முழுமையான நோக்கில் விடயங்களையும் சாத்தியமானவற்றையும் அறிந்து கொள்ளுதல் வளங்களுக்கான போட்டியுடைய தேவைகளைச் சரிப்படுத்துதல் போன்ற ஆற்றல்கள் உடையவர்களாக இருப்பதும் அவசியமானதாக விளக்கப்பட்டுள்ளது. தண்டு உகைப்புத் தொடர்பாக தேவையானவர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்குப் பணி மீது கவனம் செலுத்துபவர்களாகவும் அவற்றை நன்று செய்பவர்களாகவும் இருப்பதும் முக்கியமாகின்றது. வழிச்செலுத்துகை அமைப்புகள் மிகச் சிறந்த முறைகளைக் கண்டு கொள்ளுதலும் அவற்றினூடாக இலக்குகளை அடைந்து கொள்வதும் தேவைப்படுகின்றது. வழிச்செலுத்துகை நிறுவனங்கள் எப்படியாவது தம்முடைய முறையினைக் கண்டு கொள்வதைப் பிரதான பணியாகக் கொள்கின்றன.
ஒரு துருவநிலை உதாரணமாக “வழிச்செலுத்துகை” விதியினை எடுத்துக் காட்டுவது, நியுசிலாந்தில் பின்பற்றப்பட்ட அரசாங்க சேவை வழங்குதலில் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்ட ஒழுங்குகள் முக்கியமாகின்றன. இந்த ஒழுங்குகளுக்கு ஏற்ப அமைச்சர்கள் அரசாங்கத் திணைக்களங்களில் இருந்து அல்லது பதிலாக மாற்றீடாக பொதுத்துறை அல்லது தனியார் வழங்குனர்களிடமிருந்து சேவைகளைக் கொள்வனவு செய்து கொள்ளலாம். அலென் சிக் (Allen Schick) என்பவர் உலக வங்கியின் அனுசரணையுடன் மேற்கொண்ட ஆய்வொன்றில் இத்தகைய ஒப்பந்த ஒழுங்குகள் கொள் நெறி சார்பான ஆலோசனை வழங்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு அமைய அமைச்சர்கள் வேண்டிய தகவல்களையும் கருத்துக்களையும், ஆலோசகர்கள், மதி உரைஞர்கள் ஆகியோரிடமிருந்தும் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அலென் சிக் இந்த முறையினை பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நியுசிலாந்து அனுபவத்தைச் சிபார்சு செய்யவில்லை. ஏனென்றால், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தேவையான வலுவான ஊக்கமிக்க சந்தைகளையும் நிறுவப்பட்ட பொறிமுறைகளையும் ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் குறைந்ததாக உள்ளது.
85

Page 50
2.5 பொது நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பான அழுத்தம்
ஒவ்வொரு நாடும் மற்றைய நாட்டின் அனுபவத்தினையும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அனுபவங்களையும் அறிந்து அதிகமான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன. இவற்றின் பிரதான நோக்கமாக பொதுச்சேவை முகாமைத்துவத்தை மேம்படுத்துவது இடம் பெற்றுள்ளது. இதற்கான பின்னணி பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாக மாற்றத்தினை ஏற்படுத்தும் சவாலாக இருந்துள்ளது. அல்லது, சிவில் சமூகத்திலிருந்து எழுந்துள்ள அழுத்தங்கள் அரசாங்கங்களுக்கு சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கான உந்துதல்களை கொடுத்துள்ளன. கொள்கைசார்பான நோக்குகள் பொருளாதாரத் திறமை அல்லது நல்ல ஆட்சி நடாத்துதல் அரசாங்கங்களை கஷடமான தெரிவுகளை பொது நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக செய்வதற்கு கட்டாயப்படுத்தவில்லை. மஸ்கறின்ஹஸ் (Mascarenhas) உதாரணமாக, அவதானித்த, பொதுநிருவாகச் சீர்திருத்தம் ஒவ்வொருவருடைய சரிபார்ப்பதற்கான பட்டியலில் காணப்படுமிடத்திலும் ஒருவருடைய நிகழ்ச்சிநிரலிலும் முன்னுரிமை பெற்றதாகத் தெரியவில்லை; அது எப்பொழுதும் பிற்போடப்படும் விடயமாகவும் கருதப்பட்டுள்ளது. மஸ்கறின்ஹாஸ் மேலும் குறிப்பிடுவது; அதிகாரமுடைய அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் உள்ள பிரிவினர் சிலர் ஆகியோர் வேரூன்றிய நலன்களைக் கொண்டவர்களாக இருப்பதனால் இதுகாறும் உள்ள நிலையைப் பேணுவதில் அக்கறையுடையவர்களாகக் காணப்படுகின்றனர். பொதுநிருவாகத்தில் நன்றாக செயற்படாதிருப்பவை அதிகம் அக்கறையினை ஏற்படுத்துவதில்லை; அதனைவிட உண்மையாக செய்யப்படவுள்ள சீர்திருத்தங்கள் நிலைமைகளை மாற்றக் கூடும் என்பது பற்றிய அக்கறை அதிகமாக ஏற்படலாம். மேலும், அதிகமான செல்வாக்குடைய சிவில் சேவையாளர்கள் தம்முடைய பிரத்தியேகமான அதிகாரத்தையும் தொடர்புகளையும் இவை சீர்திருத்தத்தின் மாற்றங்களினால் அவர்களின் இடத்தையும் கட்டுப்பாட்டுச் செல்வாக்கையும் பாதிக்கலாம் என்ற அச்சத்தினால் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறை அதிகமாக இருக்க முடிகின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பொதுநிருவாகச் சீர்திருத்தத்தினைத் துாண்டுவதற்கான நிலை கட்டுப்பாட்டை மீறிய சமாளிக்க முடியாத வரவுசெலவுத்திட்டச் சுமை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் கட்டாயப்படுத்தல் காரணமாக இருந்துள்ளது. இது ஓர் அதிகரித்துச் சென்ற திறமையற்ற செயற்திறன் குறைந்த தனியார்துறையின் செயலாற்றத்திற்குத் தடையாக இருந்த பொதுச் சேவையினால் விளைவிக்கப்பட்டது. பல்பக்க கொடையாளி நிறுவனங்களும் இதனுடைய பாதிப்பினை அறிவுறுத்தி வந்துள்ளதும் ஒரு முக்கியமான பின்னணியாக இருந்துள்ளது. எப்படியாயிருந்திருப்பினும், விதிவிலக்கில்லாமல் வெற்றியளித்த சீர்திருத்தங்கள் அரசியல் உயர்மட்ட அமைப்பிலிருந்து வேண்டிய தலைமைத்துவம் தோன்றிய பொழுது ஏற்பட்டுள்ளது.
86

2.0 பொது நிருவாகச் சீர்திருத்தம் - ஓர் இரத்தினச் சுருக்கம்
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் அநேகமானவை; அவற்றை ஓர் அத்தியாயத்திற்குள் விளக்கி விட முடியாது. பின்வரும் தொகுப்பு கேர்நாகனால் (Kernaghan) தரப்பட்டது. (அட்டவணை வடிவம் 1) அது முக்கியமான விடயங்கள் மீது கவனம் செலுத்த உதவியாக இருக்கும். சர்வதேச மட்டத்தில் சீர்திருத்த முயற்சி செயலூக்கமுடைய பயன்களை விளைவிப்பதை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பொதுநிருவாக அமைப்புகளின் சீர்திருத்தங்களை முன்னெடுத்து சென்ற நடவடிக்கைகள் மக்களினது தேவைகளையும் தனியார்துறையின் வளர்ச்சியினையும் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கங்களும் அவற்றின் தொழிற்பாடுகளை மீள்பரிசீலனை செய்து நல்ல சேவையினை தனியார் துறையின் உதவியினை நாடும் புதிய முறைகளையும் கண்டறிந்தன. புதிய அணுகுமுறை பங்குகொள்ளும் தலைமைத்துவம் என்பதை வலியுறுத்தியதுடன், அரசாங்கத்தின் பங்களிப்பு அபிவிருத்தியினை ஊக்குவிப்பதும் அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டது.
2.7 பொதுச்சேவையின் வகிபாகம்
வெவ்வேறு நாடுகளின் அனுபவங்களை நோக்குமிடத்து அரசாங்கத்தின் பிரதான அக்கறையும் ஈடுபாடும் அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்லுதல் என்பது அறியப்பட்டுள்ளது. மார்ஷ், புலென்டெல் மற்றும் இநொகுச்சி (Marsh, Blondel & noguchi) ஆகிய மூவரும் தம்முடைய நூலில் குறிப்பிடுவது: பொருளாதார சமூக இலக்குகளை எல்லா அரசுகளும் முன்வைத்து இவிவிலக்குகள் நாடுகளிடையே வெளிப்படையாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறப்பட்ட தன்மை வேறுபட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ள நாடுகளிடையே வேறுபாடுகள் அபிவிருத்தி பற்றிய அணுகுமுறை பற்றியதாக இருப்பது கவனிக்க முடிகின்றது. பிரதான கேள்வியாக எழுந்தது எதுவென்றால், அரசாங்கங்கள் தம்முடைய பங்களிப்பினை “தண்டு வலித்தல் முறையாகச் செய்ய வேண்டுமா அல்லது வழிச்செலுத்துதல்” என்பதற்கு இணங்கச் செய்ய வேண்டுமா என்பது. அபிவிருத்தி தொடர்பான வேறுபட்ட அம்சங்கள் வலியுறுத்தப்படுவதிலும் வேறுபாடு காணப்பட்டுள்ளது. நிர்ணயிக்கும் காரணிகள் காலங்குறிக்கும் பின்னணி கொண்டதாகவும் இடஞ்சார்ந்தவையாகவும் இருந்துள்ளன. அபிவிருத்திக் கோட்பாடு பொருளாதார வளர்ச்சியினை மட்டும் உள்ளடக்குவதில்லை. சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் இது தொடர்பான விழிப்பு அபிவிருத்தி பல்பரிமாணங்களைக் கொண்டது என்பதை வலியுறுத்துகின்றது.
87

Page 51
அட்டவணை வடிவம் 1:
பணிக்குழு அமைப்பும் அதற்குப் பின்னான காலத்து அமைப்பும்
பணிக்குழு அமைப்பு - இயல்புகள்
பணிக்குழு அமைப்புக்குப் பின்னான கால இயல்புகள்
கொள்நெறியும் முகாமைப் பண்பாடும்
அமைப்பினை மையப்படுத்திய தன்மை. அமைப்பின் தேவைகள் பற்றிய முக்கியத்துவம்
நிலை, அதிகாரக் கட்டுப்பாடு,
கட்டளையிடுதல், அதற்குக் கீழ்பணிதல்
விதிகளை மையப்படுத்தும் விதிகள், ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள்.
தற்சார்பான நடவடிக்கை, குறைந்த கலந்தாலோசித்தல், ஒத்துழைத்தல் அல்லது ஒழுங்குபடுத்தல். இதுகாறும் உள்ள நிலை பேணப்படுதல், முறைவழிக்குப் பொறுப்புக் கூறுதல்
பிரசைகளை மையப்படுத்தியதன்மை; தரமான தேவைகள் பிரசைகளுக்கு வழங்குதல் (கட்சிகாரர்களும்/ பங்காளர்களும்)
பங்குகொள்ளும் தலைமைத்துவம்; பகிர்ந்து கொள்ளும் பெறுமானங்கள்; பங்கு கொண்டு தீர்மானம் எடுத்தல்.
மக்களை மையப்படுத்துதல், அதிகாரமளித்தல் மற்றும் அக்கறை காட்டும் சமுதாயச் சூழல்
கூட்டுநடவடிக்கை, கலந்தாலோசித்தல், ஒத்துழைப்பும் ஒழுங்குபடுத்தலும்.
பெறுபேறுகள் சார்பான நிலை, பெறுபேறுகளுக்கு பொறுப்புக் கூறுதல்
அமைப்பு
மையப்படுத்தியது, அடுக்கமைவுடையது, மற்றும் மத்திய கட்டுப்பாடுகள்
திணைக்கள முறை, அநேகமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் திணைக்களங்களினால் வழங்கப்படுதல்
பன்முகப்படுத்தியது, அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை பன்முகப்படுத்தல்
திணைக்கள முறையில்லாத ஒழுங்குகள் - வேறுபட்ட முறைகளில் திட்டங்கள் வழங்கப்படுதல்
சந்தைச் சார்பு
பாதிடு மையப்படுத்திய முறை, அநேகமான திட்டங்கள் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் பணத்தினால் நிதிப்படுத்தப்படுதல்
தனியுரிமை நிலை, அரசாங்கத் திட்டங்கள், சேவைகள் வழங்கலில்
அரசாங்க தனியுரிமை நிலவுதல்
அரசாங்க வருவாய்கள் செயலாற்றங்களினால் பெற்றுக் கொள்ளுதல்; திட்டங்கள், செலவு மீளப்பெறும் அடிப்படையில் நிதிப்படுத்தல்
போட்டித்தன்மை நிலவுதல், திட்டச்சேவைகள் வழங்குதலில் தனியார் துறையுடன் போட்டி ஏற்படுதல்.
88

என்றாலும், அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சியினால் முன்னெடுத்துச் செல்லப்படுவது ஏற்றக் கொள்ளப்படுகின்றது. ஆகையால், பொருளியல் அறிஞர்கள், பொருளாதார வளர்ச்சியினை ஒரு தேவையான ஆனால், போதுமான காரணியல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். வறுமைத் தணிப்பு, சூழல் முகாமை, பால்நிலைச் சமத்துவம், கல்வி, சுகாதாரம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகிய முக்கியமான அம்சங்கள் தற்பொழுது மனித அபிவிருத்திக் குறிக்காட்டி (Human Development Index), (gaidu BIT (6.86s siblicbg.gigs g5ulg.g560TT6) தயாரிக்கப்படும்) என்பதில் சேர்க்கப்படுகின்றன.
கீழே தரப்பட்டுள்ள விளக்கப் படம் II இல் நல்ல ஆட்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிடையே உள்ள தொடர்புகளை உலகம யமாக்கலினால் ஒருங்கிணைக்கப்பட்ட உலக மயமாக்கல் சூழலில் எடுத்துக் காட்டுகின்றது.
விளக்கப் படம் II:
அபிவிருத்தி பற்றிய கட்டளைப் படிவம் (The Development Paradigm)
வறுமைத் தணிப்பு கல்வி பால் நிலைச் சுகாதாரம் ಇತ್ಥ೮ சமததுவம SIGMTU சூழல சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்
g நல்லாட்சி உற்பத்தித்திறன் பங்குகொள்ளல் முன்கூறும் தன்மை பொறுப்புக்கூறல் மறைவின்மை ஒழுக்கவியல் சமவாய்ப்பு தொலைநோக்கு
தனியார்துறை
89

Page 52
அபிவிருத்தி தொடர்பாக உலகச் சூழ்நிலை முக்கியமானதே. ஏனென்றால் இனறு எந்த ஒரு நாடும் தனித்து பொருளாதார சமூக அல்லது பொருளாதார ரீதியில் இயங்க முடியாது (பல நாடுகள், புவிச்சரித ரீதியில் தனித்து உள்ளன) புவிச்சரிதரீதியான தடைகளும் இன்று உலகமயமாக்கல் பின்னணியில் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதனுடைய ஒரு முக்கியமான அம்சம் விரைவான தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுவதும் பொருளாதார அமைப்புகளும் கூடுதலான தொடர்புகளை ஏற்படுத்துவதனாலும் பல மாற்றங்கள் உலக ரீதியில் ஏற்பட்டுள்ளன.
நல்ல ஆளுகை என்பது பற்றி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் பொதுவான கருத்தொருமைப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ஏற்றதாக நல்லாட்சி, அரசாங்கம், தனியார்துறை, மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் பங்கேற்றல் முறைமையிலிருந்து ஏற்படுகின்றது. இதில் அரசாங்கம் ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியமாகின்றது. இவற்றின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளன; நல்ல ஆளுகையின் பிரதான அம்சங்கள் வெவ்வேறு விதமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம், திறமை, பங்கேற்றல், முன்கூறும் சாத்தியம், பொறுப்புக் கூறுதல், ஒளிவின்மை, ஒழுக்கவியல் மற்றும் தொலை நோக்கு. இந்த பல்வேறு அம்சங்கள் பிரதான வழிகளாகக் காணப்படுகின்றன. இவற்றினூடாக பொதுச்சேவை அரசாங்கத்தின் பிரதான கொள் நெறி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவை அபிவிருத்திக்குப் பணியாற்றுகின்றன. உலக வங்கியின் அண்மைக்கால ஆய்வுகளில் மெய்ச்சான்று ரீதியான “அபிவிருத்திப் பயன்” நல்ல ஆளுகையிலிருந்து ஏற்படுவதைப் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
2.8 அபிவிருத்திச் சவால்
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றத்திற்கு கொள்நெறி அறிக்கையைச் சமர்ப்பித்த பொழுது ஆற்றிய உரையில் இலங்கையினால் இன்று எதிர்நோக்கப்படும் அபிவிருத்திச் சவால்கள் பற்றிக் குறிப்பிட்டார். அதில் மூன்று அடிப்படை விடயங்கள் முழுவதாக நோக்கப்படுதல் வேண்டும். அவையாவன
9 இலங்கையின் இன மோதலும் சமாதானத்தை அடைதலும் 9 பொருளாதார வளர்ச்சியினை விரைவுபடுத்தலும் வறுமைக் குறைப்பும்
சனநாயகத்தைப் பலப்படுத்துதல்
$ళ్ళ
இப்பிரச்சினைகளின் தீர்வில் நல்லாட்சி என்பதன் பங்காற்றுதல் முக்கியமாகின்றது. இனமோதல் என்பதன் தீர்வில் பேச்சுவார்த்தை மூலம் செய்யப்படும் உடன்படிக்கையினைச் செயற்திறன் கொண்ட வகையில் நடைமுறைப்படுத்துவதும்
90

முக்கியமாகின்றது. அதிகாரப் பரவலாக்கம் ஒரு முக்கியமான கூறாக சமாதான முயறசிகளில் சேர்க்கப்படுவது அவசியம். எத்தகைய \eபடிவத்தில் உடன்படிக்கைகள் அமைவதாக இருப்பினும், ஓர் ஒருமித்த முயற்சி எல்லாப் பகுதியினரையும் உள்ளடக்கியதாக எடுக்கப்பட்டு அதிகாரப் பகிர்வு முறைமையினைத் திறமையாகவும் செயற்திறனுடனும் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியத்துவம் கொண்டது. இது பொதுச்சேவை குறித்து புதிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது. அரசாங்க சேவையில் புதிய ஒழுங்குமுறைகளும் பரவலாக பயிற்சித் திறன்களையும் கொண்டதான அரசாங்க சேவையில் மாற்றங்கள் ஏற்படடு புதிய சவால்களுக்கு முகம் கொடுத்தல் வேண்டும். அதே போன்று பொதுச்சேவை பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கும் வறுமை அளவைக் குறைப்பதற்கும் பிரதானமான ஒரு பங்களிப்பினைச் செய்தல் வேண்டும்.
சனநாயகத்திற்கும் அபிவிருத்திக்குமிடையே உள்ள தொடர்புகள் சரியாக இருபக்க நோக்கிலும் நிறுவப்படவில்லை. கிடைக்கக் கூடிய மெய்ச்சான்றுகள் மூலம் இதனைக் கூற முடிகின்றது. எவ்வாறாயினும் இதில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வழி சனநாயகம் என்பதை ஒரு அபிவிருத்திக் குறிக்கோளாக, ஒர் அபிவிருத்திக் காரணியாகக் கொள்வதை விட, சேர்த்துக கொள்வது தேவையாகின்றது. மறுபக்கத்தில் சனநாயகமும் நல்லாட்சியும் சமூகத்தின் தேவைகளாக ஒன்றையொன்று பலப்படுத்திக் கொள்கின்றன.
2.9 பொருளாதார வளர்ச்சி
அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி குறித்து 10 சதவீத வருடாந்த வளர்ச்சியினை வருமானத்தை அதிகரிப்பதற்கும் வேலையின்மையைக் குறைப்பதற்கும் வறுமை நிலையினைக் குறைப்பதற்கும் முக்கிய தேவையாக முன் வைத்துள்ளது. இக்குறிக்கோளைப் பரிசீலித்துப் பார்க்குமிடத்து சமூகத்தினரை எதிர்கொள்ளும் சவால்கள் எப்படியானவை என்பதை அறிய முடிகின்றது; அத்துடன் இக்குறிக்கோளை அடைவது தொடர்பாக பொதுச்சேவைக்கும் ஒரு முக்கியமான பங்களிப்பு உண்டு என்பதும் வலியுறுத்தப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் பொதுச்சேவைச் சீர்திருத்தங்களும் பொதுச்சேவையினது ஆற்றலைப் பலப்படுத்தி செய்ய வேண்டிய பங்சளிப்பிற்கு வழிவகுத்தல் வேண்டும்.
பொருளாதாரத்தில் சென்ற பத்தாண்டுகளின் சராசரி வளர்ச்சி வீதம் ஏறத்தாழ ஐந்து (5) சதவீதமாக இருந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொள்ளவதற்கு நாடு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சத வீதத்தினை முதலீடாகச் செய்தது. இத்தொகை பின்வருழ் மூலங்களாக அமைந்தது. உள்நாட்டுச் சேமிப்ப: 18 சதவீதம் வெளிநாட்டுதவி : 6 சதவீதம், வெளிநாட்டு தனியார் முதலீடு : 1 சதவீதம்.
91

Page 53
siggsfigup (pg56) G616 fulf'GS 65g, b (ICOR-Incremental Capital Output Ratio) ஏறத்தாழ 5 ஆக இருந்துள்ளது. அதிகரிக்கும் முதல் வெளியீட்டு விகிதத்தில் (ICOR) மாற்றம் இல்லாதவிடத்து, இது பெரும்பாலும் முதலின் திறமைப் பயன்பாட்டினைக் குறிக்கின்றது, 10 சதவீத வளர்ச்சியினை அடைந்து கொள்வதற்கு மொத்த முதலீடு முன்புள்ள அளவினது இரு மடங்காக அதிகரிக்க வேண்டும், அதாவது, வருடமொன்றுக்கு 50 சதவீதம். இது எவ்விதத்திலும் சாத்தியமானதல்ல; வேறு எங்கும் அடைந்து கொள்ளப்பட்டதாகவும் இல்லை, இதிலும் பார்க்கக் குறைந்த அளவு கிடைப்பதற்கும் முதலீட்டின் அமைப்புத் தன் மையும் தடையாக இருக்கின்றன. உள்நாட்டுச் சேமிப்புக்கள் அதிகரிக்கப்படுவதற்கு வெகுசன நுகர்வினைக் குறுங்காலத்தில் குறைத்தல் வேண்டும். இதுவும் இலகுவாகச் செய்யக் கூடியதல்ல. பொருளாதார வளர்ச்சியினூடாக இதனைப் படிப்படியாக அதிகரிக்க முடியும். அதற்குக் கால நீடிப்புத் தேவையாகும்; அத்துடன் கூடிய திறமை நிலையினையும் அடைந்து கொள்ளுதல் வேண்டும்.
வெளிநாட்டுதவி உலகரீதியில் பெறுவது குறைந்து காணப்படுகின்றது. தற்போதுள்ள அளவுகளைப் பெறக் கூடியதாக இருக்குமானால் அதுவே ஒரு பெரும் சாதனையாக இருக்கும். இந்த அளவுகளைப் பெறுவதற்கும் உதவி இனங் கண்டு கொள்வதில் திறமை எய்தல், உதவி தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல், இன்னும் முக்கியமானதாக வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் உதவியினை உள்வாங்குதல் ஆகியவை அவதானிக்கப்பட வேண்டியவை. சமாதான முறைவழி வெற்றியளிக்குமானால், வெளிநாட்டு உதவி பயன்பாட்டை அதிகரிக்கும். ஆனால் உலகளாவிய போக்குகள் இருக்கும் நிலைமையில் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதியில் (முதலீடு) 50 சதவீதம் தேவைப்படுவது தொடர்பாகப் போதியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு உதவி அதிகரிப்பினையும் எதிர்பார்க்க முடியாது. வெளிநாட்டு தனியார் முதலீடு இன்றும் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. பொதுவாக வெளிநாட்டு தனியார் முதலோட்டங்கள் செயலூக்கம் கொண்ட மாற்றங்களுக்கு இடமளிக்கும், வளர்ச்சி ஆற்றல் மிகுந்த பொருளாதாரங்களை நோக்கியே கூடுதலாகச் செல்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டைப் பெறுகின்ற நாடுகளில் உள்ள நிருவாக அமைப்பின் செயலாற்றங்கள் திறமைக் குறைவுகள் ஆகியவற்றைத் தெரிந்தவர்களாவும் உள்ளனர். இச்சூழ்நிலையில், நாடு முதலின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் அதனுாடாக முதலீட்டின் தேவையைக் குறைத்துக் கொள்வதும் அதன் மூலமே திறமை நிலைமையினை அதிகரிப்பதும் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகளாகும்.
உற்பத்தித் திறன் தொடர்பான ஓர் அடிப்பட்ை விடயம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளாகிய அரசாங்கம், தனியார் துறை (மற்றைய மூன்றாவது துறை) அரச சார்பாற்ற நிறுவனங்கள், ஆகியவற்றிடம் வெவ்வேறு தொழிற்பாடுகள் பகிர்ந்து கொள்ளப்படும் முறை முக்கியமாகின்றது. அரசாங்கம்
92

எந்தெந்த நடவடிக்கைகளில் நன்றாகச் செய்வதற்கு ஆற்றல் காணப்படுகின்றதோ அவற்றைக் கொண்டு நடாத்துதல், அவற்றிற்குப் பொறுப்பேற்றல் பொருத்தமாகும். அவ்வாறு ஒழுங்குப்படுத்தப்படாவிட்டால் மற்றைய செயற்திறன் கொண்ட பயன்பாடுகளுக்குச் செல்லக் கூடிய வளங்களை அரசாங்கமே எடுத்து விடுவதாக முடிகின்றது. இது தவறு விளைவிக்கும் செயலாகின்றது. அரசாங்கம் உதாரணமாக, அதனுடைய வருவாய் மூலாதாரங்கள் கடன் பெறுதல் அல்லது தனியுரிமை இலாபங்கள் என்பவற்றினுடாகத் தேடிக் கொள்ளும் ஒவ்வொரு ரூபாயும் ஒப்பீட்டு ரீதியாக சமூக நலன் மேம்பாட்டிற்கு உதவுகின்றது. இதில் தனியார் துறைக்கு அல்லது மூன்றாவது துறையான அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுச் செய்யக் கூடியதிலும் பார்க்க அரசாங்கத்தின் பங்களிப்பு கூடுதலாக இருக்கின்றது. பொதுவாக சட்டமும் ஒழுங்கு நிலைநாட்டல், சொத்து உரிமைகள் பாதுகாத்தல் ஏதுவான பொருளாதாரக் கொள்நெறிச் சூழலை உண்டு பண்ணுதல், பொருளாதாரத்தில் போட்டி நிலையினை ஒழுங்குபடுத்துதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தராதரங்களைப் பேணுதல், சமூகத்தில் பலவீனமான பிரிவினரைப் பாதுகாத்தல் (வறியவர்கள் பெண்கள் சிறுவர்கள் மற்றும் சிறுபான்மையினர்), சுற்றுப்புறச் சூழல் பாதுகாத்தல், \ உழைப்பாளர்களிடையே நல்ல உறவுகளை வளர்த்தல் ஆகிய பல்வகைத் துறைகளில் அரசாங்கங்களின் பங்களிப்புத் தேவைப்படுவதுடன் அவைகளைச் செய்வதற்கு அரசாங்கங்கள் ஆற்றல் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இவற்றில் பொருளாதார நடவடிக்கைகள் சேர்க்கப்படவில்லை என்பதும் வெளிப்படை, வழமையாக அரசாங்க முதலீடுகள் செய்வதற்கு சாதகமாகக் கூறப்படுபவை, இயல்பான தனியுரிமைகள், வெளிவாரி விளைவுகள் விளைவிப்பவை மற்றும் பெருமளவு முதலீட்டைக் கொண்ட இடருடைய செய்திட்டங்கள், நீண்டகால முதிர்ச்சி கொண்ட செய்திட்டங்கள் ஆகிய துறைகள் அடிப்படை நியாயப்பாட்டைக் கொடுக்கின்றன. 4
அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு கூடுதலான பங்கை எடுக்கின்றதோ அந்தளவுக்குத் தனியார் துறைக்குக் கிடைக்கக் கூடிய அளவு குறைகின்றது. 2001ஆம் ஆண்டில் மொத்த அரசாங்க வருவாய் (total government revenue) GLDT.g55 உள்நாட்டு உற்பத்திப் பெறுமதியில் 16.5 சதவீதமாக இருந்துள்ளது. இந்த அளவு அரசாங்கத்தின் மொத்தச் செலவினை அடைப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. இப்பற்றாக்குறை ஏறத்தாழ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிப்படுத்தலும் தனியார் மயப்படுத்தலினுடாக பெற்ற வருவாய்கள் (0.6 சதவீதம்) இரண்டும் சேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. ஆதலால் ஏறத்தாழ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத அளவுக்கு உள்நாட்டு நிதிப்படுத்தல் மூலங்களிலிருந்து கிடைக்கப் பெற்றன. இதனால் தனியார் துறையினர் பயன்படுத்தக் கூடிய நிதித் தேவைகளும
93

Page 54
அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்றன. இக்காரணத்தைக் கொண்டுதான் அரசாங்கம் தெரிவு செய்யும் நடவடிக்கைககள் அது கொண்டு நடாத்தக் கூடியவற்றையே தெரிவு செய்தல் வேண்டும் என்ற கருத்து பலமடைந்துள்ளது. இவ்விடயம் பொதுத்துறை பொதுச்சேவை என்பவற்றைப் பற்றிய அடிப்படையான விடயமாகின்றது. பொதுச்சேவை நடவடிக்கை பற்றிய பொதுநிர்வாகச் சீர்திருத்தத்தினூடாக கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை விடயம் இதுவாகும். மேலும், அதேயளவு முக்கியத்துவம் கொண்டதாக அரசாங்க வளங்களை நடைமுறை, முதலீட்டுச் செலவு ஆகியவற்றிடையே பகிர்ந்து கொள்வது அவசியமாகின்றது. எவ்வாறு இதனைச் செய்து கொள்வது என்பது பிரதான வியடமாகின்றது. இலங்கையில் அணி மைக் காலங்களில் நிகழ்காலச் செலவினங்கள் விரைவாக அதிகரித்துள்ளன. அரசாங்க மொத்த வருவாய்த் தொகைக்கு மேலாக நடைமுறைச் செலவினங்கள் சென்றிருப்பதனை அறிய முடிகின்றது. இதனால் அரசாங்கம் கடன் பெற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பற்றாக்குறை நிதியீட்டம் செய்வதற்கு கடன் பெறுவது தேவைப்பட்டது. அத்துடன் பொதுத்துறை முதலீடுகளுக்கான நிதிகளும் கடன் பெற்று இச் செலவை நிதிப் படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அண்மைக்காலங்களில் பொதுத்துறை முதலீடுகள் படிப்படியாக மொத்த உள்நாட்டுப் பெறுமதியில் எண்பதுகளில் சராசரி 13 சதவீதமாக இருந்து, 2001இல் 6 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது அரசாங்கத்தினால் தெரிந்து கொண்டு பின்பற்றப்பட்ட கொள்நெறியாக இருந்ததால் அரசாங்கம் முதலீட்டு நடவடிக் கைகள் சிலவற்றிலிருந்து தனியார் துறையினை மேம்படுத்துவதற்காக விலகியுள்ளது என நோக்க முடிகின்றது. ஆனால், உண்மையில் நடந்தது அவ்வாறு இருக்கவில்லை. இலங்கையின் அண்மைக்கால அனுபவங்கள் அரசாங்கம் போதியளவு உள்நாட்டு நிதிவளங்களைத் திரட்ட முடியாமல் இருந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்து பெறுகின்ற உதவிக்கு மறுபக்க நிரப்புக் கூறாக (Counterpart funds) உள்நாட்டில் ரூபாய் நிதிகளைத் திரட்டிக் கொள்ள முடியாத காரணம் பொதுத்துறை முதலீடுகள் குறைந்ததற்குப் பொறுப்பாக இருந்துள்ளது.
அரசாங்க நடைமுறைக் கணக்கின் அமைப்பும் அக்கறை உண்டு பண்ணக் கூடிய விடயமாகின்றது. மொத்த வருவாயின் தொகை 40 சதவீதத்திற்கு மேலாக அரசாங்க முற்காலக் கடன் பெறுகைகளின் வட்டி வீதச் செலவாக இருந்துள்ளது என்பதும் தெரிகின்றது; இது பாதீட்டில் (Budget) ஏற்பட்டு வந்த பற்றாக்குறைகள் என்பவற்றைப் பிரதிபலித்துள்ளது. மொத்த பொதுச்சேவையின் கூலி/சம்பள செலவு, பாதுகாப்பு உத்தியோத்தவர்களுக்கு செய்த கொடுப்பனவுகள் நீங்கலாக, மொத்த வருவாயில் 21 சதவீதமாகக் காணப்பட்டுள்ளது. செலுத்தப்படாத இளைப்பாற்றக் கொடுப்பனவுகள் (அரசாங்கத்தினால் செலுத்தப்படும் அளவு) மேலும் 12 சதவீதத்திற்குப் பொறுப்பாக இருந்துள்ளது.
94

பொது நிருவாகச் சேவையின் பருமன் எவ்வளவாக இருத்தல வேண்டும் என்பது ஒரு கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தும் விடயமாகின்றது. உலக Girids, 3, full 9:1565 (555. Gurias (World Bank, Asian levelopment Bank) மற்றும் வனசிங்கா குழு ஆகியவற்றினால் பொது நிருவாகச் சேவையின் பெரிய அளவு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறைக்கப்பட வேண்டும் எனவும் அமமூலங்களிலிருந்து கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணசிங்கா குழுவின் கருத்துப்படி இலங்கையின் பொது நிருவாகச் சேவை 25 சதவீதம் (எண்பதுகளின் நடுப்பகுதியில்) தேவைக்கு மேலான பணியாட்களைக் கொண்டுள்ளது. இக்காலப்பகுதிக்குப் பின்னராக ஏற்பட்ட அதிகரிப்புகளையும் கவனத்தில் கொண்டால் மேலே கூறப்பட்ட கருத்தின்படி மேலதிக பணியாட்கள் தொகை மேலும் அதிகரித்திருக்க இடமுண்டு. எப்படியிருப்பினும் இக்கருத்தினை ஒரு சர்வதேச ஒப்பீடு மூலம் நோக்குவதும் பொருத்தமானது. அட்டவணை 1 இவ்விபரங்களைத் தருகின்றது:
அட்டவணை 1 அரசதுறை வேலை அளவு (மொத்த குடிசனத்தின் சதவீதம்)
இலங்கை நடுத்தர குறைந்த உயர் இந்தியா மலேசியா சிங்கப்பூர் ஐக்கிய பிரான்ஸ்
并 வருமான வருமான வருமான ” இராய்ச்சியம்
நாடுகள் நாடுகள் நாடுகள்
(சராசரி) (சராசரி) (சராசரி) as
மத்திய அரசு 0.76 0.6 0.5 2.8 0.3 1.7 0.9 3.1 3,6
தேச
மட்டத்திற்குக் M கீழான அரசு 0.60 0.6 0.5 2.8 0.6 0.0 3.4 2.4
கல்வி 1.04 1.2 0.9 1.3 0.3 0.9 0.5 1.4 1.6
சுகாதாரம் 0.44 0.7 0.6 1. 0.1 0.2 1.6 1.6 காவல்துறை
(ଗuntଶtiଣୀi)) 0.45 0.3 0. - 0.1 O 2.7
அரசுடைமை
நிறுவனங்கள் 1.43 3.6 13.1 - 0.7 re- •თ.
நிருவாகப் பணியாட்களை, மற்றைய அரச பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாட்கள் போன்றோர்களுடன் சேர்ப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அத்தகைய பிரிவினரைக் கருத்தில் கொண்டால், எல்லாமாக மொத்த நிருவாகப பணியாட்கள மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் வேலை
95

Page 55
செய்பவர்களும் சேர்க்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளுமிடத்து, மொத்தக் குடிசனத்தில் 1.36 சதவீதமாக இலங்கையில் (சிவிலியன் மத்திய அரசாங்கம் + தேசமட்டத்திற்குக் கீழே உள்ளவர்கள்) இருப்பது மற்றைய நாடுகளுடன், இந்தியா சிங்கப்பூர் தவிர்ந்த, நிலையில் நல்ல ஒப்பீட்டு நிலைப்பாட்டைத் தருகின்றது. குறைந்த வருமானப் பிரிவினர் சராசரி இந்தியப் பள்ளி விபரநிலையின் செல்வாக்கினைக் காட்டுகின்றது. இந்தியாவின் சனத்தொகை பெருமளவாக இருப்பதனால் அதனுடைய சதவீத சராசரி சிறிதாகவே காணப்படுகின்றது. முழு அளவுத் தொகையாக நோக்குமிடத்து பொதுநிருவாகச் சேவை இந்தியாவில் ஏறத்தாழ பத்து (10) மில்லியனை உள்ளடக்குகின்றது. மறுபுறத்தில் சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு மேலும் அங்கு பிரதேச நிருவாகம் அல்லது தேச மட்டத்திற்கு கீழான நிருவாகம் இல்லை. இங்கு தரப்பட்ட புள் ளரிவிபரங்களில் ஒரு முக் கரியமான அவதானிப் பு, இரணி டு அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளான ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் பிரான்ஸ் (France) ஆகியவை ஒப்பீட்டுரீதியில் பொதுநிருவாகச் சேவையில் மொத்தக் குடிசனத்தின் சதவீதமாக அதிகமான அளவினைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது.
இதே போன்ற ஒப்பீட்டு நோக்கல் கூலித்தொகைத் தரவுகள் பற்றி அவை வேறுபடுவதால் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. வேறுபாடுகள், அரச பணியாட்கள் என்பவர்களை வரைவிலக்கணப்படுத்துதலில் காணப்பட்ட வேறுபாடுகளிலிருந்து எழுகின்றன. எப்படியாயினும் இலங்கையில் பொது நிருவாக கூலி, சம்பளத் தொகை (கல்வி, சுகாதாரம் ஆகியவை நீங்கலாக) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியில் 1.1 சதவீதமாக மட்டும் இருந்துள்ளது. பொதுநிருவாகச் சேவை மேலதிகமான பணியாட்களைக் கொண்டுள்ளதா அல்லது கூலி, சம்பளத்தொகை மிகை நிலையில் உள்ளதா என்பதைப் பொது நிருவாகச் சேவை தொடர்பாக ஒரு ஆளணித் தேவை ஆய்வினை மேற்கொண்ட பின்னரே தீர்மானிக்க முடியும். w
துறைகளுக் கிடையே வளங்களைப் பகிர் நீது கொள்ளுதல் , பொருளாதாரத்தின் அமைப்பு, இயக்கும் ஆற்றல் ஆகியவை மீது விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பாக உத்தம நிலை அடையுமிடத்து வளங்கள், உற்பத்திச் சாத்தியங்கள் சார்பாகவும் சந்தைகள் ரீதியிலும் மிகக் கூடிய செயலாற்றம் உடைய துறைகளுக்குச் செல்லுகின்றன. துறைகளுக்கிடையே வளங்களின் பாய்ச்சல் முக்கியமாக ஒரு தனியார் துறைத் தொழிற்பாடாக இருப்பினும் ஏதுவான அரசாங்கக் கொள்நெறிகளும் வசதிகள் வகுத்துக் கொடுத்தலும் தனியார் துறை முதலீடுகள் சரியான திசைகளில் செல்ல முடியும். அரசாங்கம் சுகாதாரம், கல்வி, உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றில் இன்னும் பிரதான பங்களிப்பினைச் செய்து வருகினறது. இத்துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைத தனியார் துறையின் நோக்கிலும் முக்கியமானவை என்பது
96

நன்கு அறியபடிட்டுள்ளது. ஆகவே அரசாங்கம பேரினப் பொருளாதாரச் சூழலை அமைத்துக் கொடுத்தலிலும் மற்றும் தனியார் துறையினை ஊக்குவிக்கும் பொருத்தமான சேவைகளை வழங்குவதிலும் போதியளவு ஆற்றலைக் கொண்டிருப்பது அத்தகைய முக்கியமான பங்களிப்பினைச் செயப் (பத் தூண்டுகின்றது. இவை பொதுத் துறைச் சேவையின் பிரதான தொழிற்பாடுகளாக உள்ளன.
அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் பெருமளவுக்கு அமைச்சர் அவையின் அமைப்பு, பருமன், பொதுச் சேவையின் தொழிற்தேர்ச்சி சார்பான ஆற்றல் ஆகியவற்றின் மீது தங்கியுள்ளது. அதாவது உண்மை நிகழ்வுகள் சரியாக முன்வைத்தல், அவற்றை ஆய்வு செய்தல், அதனைத் தொடர்ந்து வேறுபட்ட சாத்தியப்பாடுகளை எடுத்துரைத்தல் என்பவை முக்கியமாகின்றன. அமைச்சரவை தொடர்பாக ஒர் உத்தம பருமன் இருப்பது என்பதும் கேள்விக்குரிய விடயமாகின்றது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆய்வுகள் பெறும் முடிபுகள் தொடர்பாக, அமைச்சரவையின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும், 20ற்குக் குறைந்ததாக இருத்தல் விரும்பத்தக்கது. அது ஒரு போதும் 25ற்கு மேலாக இருப்பது முற்றாக விரும்பத்தககதல்ல என்பதை வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவை தொடர்பாக ஒரு கொண்டு நடாத்தக் கூடிய கணிசமான அளவுடையதாக இருப்பதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
இக்காரணத்தினால் சட்டப்படி அல்லது ஏற்புடையதாக அமைச்சுக்கள் கண்டபடி அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முக்கியத்துவம் கொண்ட இன்னுமொரு விடயம் தொழிற்பாடுகள் அமைச்சுக்களிடையே இரட்டிப்பு நிலையில் இருப்பது அல்லது ஒன்றுக்கு மேற் சென்று கவிந்திருத்தல் முறையில் செல்வது ஆகியவையும் தவிர்க்கப்படுதல் அவசியம். பிளொடன் மற்றும் மத்தீசன் (Plowdon & Mathes)n) ஆகிய அறிஞர்களினால் அமைச்சரவைகள் குறித்து பதின் மூன்று பொதுவான குறைபாடுகள் கட்டிக் காட்டப் பட்டுள்ளன. இப்பின்னணியில் இலங்கையின் சூழ்நிலை பொறுத்து முக்கித்துவம் கொண்டதாக கூறப்பட முடிந்தது, சமாளித்துக்கொள்ள முடியாத நிகழ்ச்சி நிரலுடன் கீழ்மட்டத்தில் சரிபார்த்துக் கொள்ள முடிந்த விடயங்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டு சுமையேற்றபட்ட நிலை காணப்பட்டுள்ளது.
2.10 தொலைநோக்கு
நாடுகளிடையே முரண்பாடு கொண்ட குறிக்கோள்களும் ஒன்றுடனொன்று போட் டியரிடும் வளங்களுக் குத் தேவைகள் ஏற்படுத்தப் படுதலி எதிர்நோக்கப்படுகின்றன. இப்பின்னணியில் அரசாங்கமொன்றிற்கு ஒரு தெளிவான தொலைநோக்கு அடைய வேண்டிய குறிக்கோள்கள் தொடர்பாக குறிப்பிட்ட கால நீடிப்பின் எல்லைக்குள் நிர்ணயிக்கப்படுதல் அவசியம். இத்தகைய
97

Page 56
தொலைநோக்கு ஆட்சியில் உள்ள அரசங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டு அதனுடைய பொதுச்சேவை ஆளணியினரினாலும் மற்றைய நிறுவனங்களினாலும் நடைமுறைப்படுத்தபபடுதல் வேண்டும். நல்ல ஆட்சிப் பின்னணியில் அரசாங்கம் அதனை தொழில் சமூகத்தினருடனும் (தனியார் துறை) சிவில் சமூகத்தினருடனும் பகிர்ந்து கொள்கின்றது. இவ்வாறு பகிர்ந்து கொள்வதில் முற்போக்குடைய அரசாங்கம் மற்றைய இரு பங்காளர்களுடனும் தொடக்கத்திலிருந்து தொலைநோக்குப் பற்றிய வரையறை தயார்ப்ப்டுத்தும் பொழுது பகிர்ந்து கொள்கின்றது.
சிங்கப்பூர் (Singapore), அப்படியான ஒரு தொலைநோக்கினை முன்வைத்தது. அதே போல மலேசியா, தாய்லாந்து, தாய்வான், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் முன் வைத்துள்ளன. சிங்கப்பூரினது தொலைநோக்கின் முக்கியமான அம்சங்களாக பொருளாதார இயக்க ஆற்றல், வாழ்வின் உயர் பண்புநிலை பலமான தேசிய அடையாளப்படுத்தல் மற்றும் உலகளாவிய ஒரு நகரம் உருவாக்கல் ஆகியவை முக்கிய இடம் வகித்தன. மலேசியா அதனுடைய தொலைநோக்கு 2020 பிரகடனம் மற்றும் தேசிய அபிவிருத்திக் கொள்நெறி ஆகியவற்றினூடாக நாட்டுக்கான ஒரு நீண்டகால அபிவிருத்தி உபாயத்தினை விளக்கியது. நாட்டின் பொதுச் சேவை தொடர்பாக ஒரு தொலைநோக்குப் பற்றியும் விளக்கப்பட்டது. 2020 தொலைநோக்குப் பிரகடனத்தில், ஓர் அர்ப்பணிப்பு முறையான பொதுச் சேவை செயற்திறன் வாய்ந்த வகையில் தரமான சேவை முறையினை வழங்குதல் ஆகிய முயற்சிகளைக் கொண்ட சூழலிலும், புதிய மாற்ற நோக்கமுடைய பின்னணியிலும் மலேசியாவினை ஒரு நவீன கைத்தொழில் தேசமாகக் கண்டு கொள்வது அடிப்படை இயல்பாக வலியுறுத்தப்பட்டது. தொலைநோக்கு ஒரு புதிய உளப்பாங்கு விருத்தி செய்யப்படுவது, பல அடிப்படையான பெறுமானங்கள் தரம், உற்பத்தித் திறன், புதிய மாற்றப் பண்புகள், ஒழுங்கு, ஒருங்கிணைவு, பொறுப்புக் கூறுதல் மற்றும் தொழின்மை ஆகியவற்றை உள்வாங்குதல் வலியுறுத்தப்பட்டது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
வேண்டிய தலைமை வழிகாட்டல் என்பவற்றுடன் தொலைநோக்குப் பண்புகளை நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்தல், ஒரு புறம்பான அபிவிருத்தி நிருவாக அலகு பிரதம மந்திரியின் திணைக்களத்திற்குள் அமைக்கப்பட். து.
2.11 சமவாய்ப்பு
சமவாய்ப்பு என்பது பங்கீட்டில் சமத்துவம் என்பதைக் குறிப்பிடுவதல்ல. மக்களுக்கு வாய்ப்புகள் சமனாகக் கிடைக்கச் செய்தல், பாரபட்ச நிலை இல்லாமை ஆகியவை தொடர்பாக ஒரு சாராரின் நடவடிக்கையினால் மற்றொரு சாராருக்கு
98

இழைக்கப்படும் பாத்கமான விளைவுகள் என்பவற்றை உள்ளடக்கின்றது. இவை இனம், சாதி, சமயம், பால், சமூக வர்க்கம் ஆகியவை வேறுபடுவதனால் ஏற்படுவதுண்டு. இது ஒரு தார்மீகப் பிரச்சினையாக இருப்பதுடன் அபிவிருத்தி தொடர்பான ஒரு விடயமுமாகின்றது. பாராபட்சம் என்பது மக்களை அபிவிருத்தியின் பலாபலன்களைப் பெறாமல் தடை செய்கின்றது. அத்துடன் அவர்கள் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்வதனையும் தடுக்கின்றது.
அமற்றியா சென் (Amartya Sen) என்ற உலகப் புகழ் வாய்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் வறுமை பற்றிய நிலையினை இனங்கண்டு கொள்ளுமிடத்து அது குறைந்த வருமானங்களுக்கு மட்டும் சேர்ந்ததல்ல, ஆனால், கூடுதலாக சமூக ரீதியாக விலக்கப்படுதல் என்பதுடன் தொடர்புபட்டது என வலியுறுத்தியுள்ளார்.
“சமூக ரீதியாக விலக் கப்படுதல் எலி லா விதமான இல் லாமை நிலைகளையும் உள்ளடக்குகின்றது. அவை ஒருவரின் வாழ்வு, சுதந்திரம் ஆகியவற்றைக் குறைக்கின்றது; எவ்விதமாக இந்த ஆற்றல் இழப்பு நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் எடுத்துக் கூறப்பட முடிகின்றது. இத்தகைய நோக்கில் வறுமையினை விளங்கிக் கொள்வதில் அது குறைந்த வருமானம் என்பதற்கு மேலாக செல்கின்றது என்பதும் முக்கியமாகக் கவனிக்க முடிகின்றது. குறைந்த வருமானத்திற்கு மேலாகச் செல்லும் விளக்கம், இல்லாமை நிலையின் வடிவம், அதனுடைய காரணகாரியத் தொடர்பு, பெறுமானம் மிகுந்த இலக்குகளை அடைவதில் இவ்விழப்பு நிலைகளின் பங்களிப்பு என்பன முக்கியமாகின்றன. ஒருவர் வறுமையினை குறைந்த வருமானம் குறித்து நோக்குமிடத்திலும் சமூகரீதியாக விலக்கல் பரிமாணத்தை சேர்ப்பது ஒரப்படுத்தப்படும் மக்களின் நிலைமை தொடர்பாக விளக்கத்தில் ஒரு விரிந்த நோக்கினைத் தருகின்றது”.
வாய்ப்புக்களைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் இருப்பதும் ஓரளவுக்குப் பிரச்சினையாகின்றது. மேலும் வேண்டுமென்று பாரபட்சம், வறியவர்கள் கைமாறு செய்வதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பதனால் ஏற்படுத்தப்படும் பிரச்சினையும் எழுகின்றது. வறியவர்கள், பணிக்குழு அதிகாரமுறை ஆட்சியாளர் காரியாலயத்தின் நுழைவாயிலில் பல மணித்தியாலங்கள் அல்லது பல நாட்கள் காத்திருப்பதும், சிலவேளைகளில், ஒரு சிறு விடயத்திற்காகப் பல தடவைகள் வருமாறு பணிக்கப்படுவதும் தெரிந்த விடயங்களாகும். இவை வறியவர்களைப் பொறுத்தவரை சிறு சேவையைப் பெறுவதும் அவர்களுடைய சட்ட உரிமையும், அரசியல் அமைப்பு உரிமையும் இருக்குமிடத்திலும் பணிக்குழு ஆதிக்கமுடைய ஆட்சியில் அவை குறித்துக் கவனம் செலுத்தாமல் இருப்பதும் கண்டுகொள்ள முடிகின்றது.
99

Page 57
வாய்ப்புகள் வசதிகள் ஆகியவை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன
அவ்வாறு வழங்கப்படும் வாய்ப்புகளும் வசதிகளும் பற்றிய பிரச்சினை மேலும் அரசாங்கத்தினால் அரசாங்க அதிகாரிகளினால் விதிக்கப்படும் மிகச் சிக்கல் வாய்ந்த ஒழுங்கு முறைகளினாலும், அதிகமாக படிவங்களின் கடதாசி வேலைகளினாலும் அதிகமாக கஷ்டங்களை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இப்பின்னணியில் தான் சிறு மட்டத்திலான இலஞ்சம், ஊழல் ஆகியவை ஏற்படுகின்றன; இவை வறியவர்களை மிகக் கூடுதலாக பாதிக்கின்றன. பண வசதியுடையவர் பணத்தை இலஞ்சமாக உத்தியோகத்தர்களுக்குக் கொடுத்து தமது காரியங்களைச் சாதிக்கின்றனர். வறியவர்களுக்கு அப்படியாகச் செய்யும் ஆற்றலும் இல்லை. சட்டப்படி அவர்கள் மேல் அதிகாரிகளிடம் இக்குறைபாடுகள் பற்றிப் புகார் செய்யலாம். ஆனால் இதற்கான வாய்ப்பும் பலகாரணங்களினால் அவர்களுக்கு எட்டுவதில்லை. அதே காரணங்களுக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குறைகேள் அதிகாரிகளிடமும் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகின்றது. அரசாங்க சேவை ஒரு திறமை வாய்ந்த சமவாய்ப்புக் கொடுக்கும் மக்களுக்கான சேவையினை வழங்கி வறுமையின் பிடியினையும் குறைத்து முன்னேற வேண்டுமானால் மேறகுறிப்பிட்ட விடயங்களுக்குப் போதியளவு கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
2.12 ஒழுக்கவியல்
பொதுச் சேவை தொடர்பாக வர்த்தக, தொழில் சமூகத்தினர், பிரசைகள் ஆகியோர் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை அபிவிருத்தி முறை வழியில் ஒரு பிரதான அம்சமாகக் காணப்படுகின்றது. நம்பகத்தன்மை, நம்பிக்கையூட்டும் தன்மை ஆகியவை இல்லாத இடத்து அல்லது குறைந்திருக்குமானால் பொதுச் சேவையின் விதிகள், கட்டுப்பாட்டு முறைகள், ஒழுங்கு முறைகள், கொள்நெறிகள் ஆகியவற்றின் அதிகாரத்தினைப் பயன்படுத்துவதைப் பாதிக்கின்றது. பொதுச்சேவையாளர்கள் நியாயமான முறையில் நடந்து கொள்வதுடன் ஊழல் நடத்தைப் பழக்கங்கள் ஆகியவற்றிற்கு மேலாக இருத்தல் அவ்வாறு இருப்பவர்களாக உள்ளவர்கள் என்பதும் முக்கியமானது. ஹியூஸ் (Hughes) என்ற அறிஞர் வழக்கத்திலிருந்த நிலைமை முறிவடைந்துள்ளது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
“அதனுடைய பொற்காலமாக இருந்த பொழுது பொது நிருவாகம் ஒரு பெறுமதியுடைய நன்கு மதிக்கப்பட்ட தொழிலாக இருந்துள்ளது. இன்று அது அப்படியல்ல. தனிப்பட்ட பணிக்குழு ஆட்சியினர் பிரசைகளின் வெறுப்பினைத் தேடிக் கொண்டனர். அதற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. வெபர் (Weber) பணிக் குழுவாட்சியினரை ஓர்
100

உயர்குழாம் பிரிவினராகவும் மதிப்பைப் பெற்றவர்களாகவும், இருப்பார்கள் என விரும்பினார். ஆனால் , மாறாக அவர்கள் கூடுதலாகக் குறைபாடுடையவர்களாக வரி இறுப்பாளர்களின் பணத்தை வீண் விரயம் செய்பவர்களாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய கண்டனம் அதிகமாகக் கூறப்படுவதுடன் அரசாங்கத்தின் நிருவாக அமைப்புகள், முகாமை முறைகள் மற்றும் பொது நலன் என்பதற்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பணிக்குழுவாட்சி (Bureaucracy) என்பது இன்று குறைந்தபட்சமாக இருப்பதும், விரும்பப்படுவதும் அது ஐயப்பாட்டுடன் நோக்கப்படுவதும் காணக் கூடியதாக உள்ளது.”
இச்சூழ்நிலையில் எழுப்பப்படக் கூடிய கேள்வி, ஓர் ஒழுக்கவியல் கோவை பொதுச் சேவையாளர்களுக்கு வகுக்கப்பட்டால் அது அவர்கள் எதிர்நோக்கும் நிருவாகம் தொடர்பான சவால்களுக்கு முகம் கொடுக்க உதவுமா? அத்தகைய ஒழுக்கக் கோவையொன்று போதுமானதல்ல, ஆனால் அப்ப்டியானதொன்று பொதுச் சேவையாளர்களுக்கு ஒரு தேவையான, அவர்களிடமிருந்தே ஒழுக்கவியல் சார்பான நடத்தை அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவ முடிகின்றது. தொடர்புபட்ட சில நிறுவனங்களினால் (உ+ம் Transparency International) செய்யப்பட்ட ஆய்வுகள் ஒழுக்கவியல் சார்பான தரங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதனையும் கூடுதலான ஊழல் பரவலாக காணப்பட்டது பற்றியும் எடுத்துக் காட்டியுள்ளன; இவை வளர்முக நாடுகளைப் பாதிப்பதுடன் வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதித்துள்ளன. இப்பின்னணியில் ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனம் (Organisation for European Co-operation & Developemnt, OECD) 23 g (56) 1998 g6) 95 விதிகளின் தொகுப்பினை ஏற்றுக் கொண்டு, அங்கத்துவ நாடுகள் அவற்றைப் பின்பற்றி பொதுச்சேவையில் நன்று தொழிலுாற்றும் நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஸ்தாபித்து, ஒழுக்கவியல் நடத்தையை பொதுச் சேவையாளர்களிடையே மேம்படுத்தும் நோக்கத்துடன் செயலாற்றுதலின் அவசியத்தையும் கூறியது; குறிப்பிட்ட இவ்விதிகள் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.
1. பொதுச் சேவையிலி ஒழுக் கவியல் நியமங்கள் தெளிவாக
வலியுறுத்தப்படுதல்
2. பொதுச்சேவை நடத்தை நியமனங்கள் சட்ட ஒழுங்கமைப்பில்
பிரதிபலிக்கப்படுதல்.
3. பொதுச்சேவையாளர்களுக்கு ஒழுக்கவியல் வழிகாட்டல் கிடைக்கச்
செய்வதன் அவசியம்.
4. பொதுச்சேவையாளர்கள் தம்முடைய உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை
பற்றிய குறைபாடுகளை எடுத்து விளக்கும் பொழுது அவை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருப்பது முக்கியமானது.
101

Page 58
5. ஒழுக்கவியல் சார்பான அரசியல் அர்ப்பணிப்பு பொதுச்சேவையாளர்களின்
ஒழுக்கவியல் தழுவிய நடத்தைக்கு வலுவூட்டுதல்.
6. தர் மா னங்கள் எடுக் கப் படும் முறை வழி மறைவில் லாமல் வெளிப்படையானதாக இருப்பதுடன் பரிசீலனைக்குத் திறந்து விடப்படுதலும் அவசியமாகின்றது.
7. பொதுத் துறை, தனியார் துறை ஆகியவற்றிடையே ஊடாட்டம் ஏற்படுவதற்கு தெளிவான வழிகாட்டல்கள் இருப்பதும் முக்கியமாகின்றது.
8. முகாமையாளர்கள் ஒழுக்கவியல் நடத்தையை செய்முறை மூலம் காண்பித்துக் காட்டுதலும் மேம்படுத்தலும் முக்கிய இடத்தை எடுக்கின்றன.
9. முகாமைக் கொள் நெறிகள், ஒழுங்குமுறைகள், நடைமுறைகள் ஆகியவையும் ஒழுக்கவியல் நடத்தையினை முன்னெடுத்துச் செல்லுதல் நோக்கமாக இருத்தல்.
10. பொதுச் சேவை நிலைமைகள் மற்றும் மனித வளங்களை முகாமைப்படுத்தல்
ஆகியவை ஒழுக்கவியல் நடத்தையினை ஊக்குவித்து செயலாற்றுதல்.
11. பொதுச் சேவையில் போதியளவு பொறுப்புக் கூறும் வழிமுறைகள்
சேர்க்கப்படுதல்.
12. தவறான வழியில் நடப்பவர்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஒழுங்கு முறைகளும் இசைவாணையும் இருத்தல் அவசியம்.
மேலே தரப்பட்ட ஒழுக்கவியல் விதிகளின் கோவை OECD நிறுவனத்தினால் அபிவிருத்தியடைந்த நாடுகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டவை. ஆனாலும், அதற்கு ஒத்தவிதமான விதிகளின் கோவையினை வளர்முக நாடுகளுக்குப் பொருத்தும் வகையில் தேவைப்படும் திருத்தங்களை செய்து, பண்பாட்டு வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு தயார் செய்ய முடிகின்றது. இம்முயற்சி ஒரு பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், பொதுவான தெரிந்த விதிகள் எதற்காக மீறப்பட்டுள்ளன என்பது பற்றித் தெரிந்து கொள்ளுதல் முக்கியமாகின்றது. இது பற்றி ஹியூஸ் மீண்டும் கூறுவது, “பொருத்தமான ஒழுங் குமுறைகளும் இசை வாணைகளும் சட்ட ஒழுங்குகளினால் வலுவூட்டப்படுமிடத்து அது தவறுகள் செய்யும் நடத்தைக்கு ஒரு கட்டுப்பாடாக அமையலாம்.”
2.13 பொறுப்புக் கூறுதல்
OECD தயாரித்த ஒழுக்கவியல் கோவை பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் பற்றிக் கூறியிருப்பது இரண்டு கேட்பாடுகளிடையேயும் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புக் கூறுதல் வெளிப்படையான செய்கைகள், முன்கூறல் ஆகியவற்றிடையேயும் ஓர் இணைப்பு ஏற்படுகின்றது. இதற்காகவே இவை ஒன்றாக
102

நோக்கப்பட்டு விளக்கப்படுதல் பொருத்தமானது. நல்லாட்சி தொடர்பான இவ்வம்சங்களுக்கும் பங்கு கொள்ளல் என்பதற்கும் இடையே நெருங்கிய தொடர்பும் காண முடிகின்றது.
OECD கோவை பொறுப்புக் கூறுதல் தொடர்பாகவும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு ஏற்றதாக பொதுச் சேவையாளர்கள் தம்முடைய நடவடிக் கைகள் பற்றி பொறுப் பேற் றலை தமி முடைய மேல உத தியோத் தர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பொறுப்பு உடையவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். இப்பொறுப்புக் கூறுதல், விதிகள், ஒழுக்கவியல் விதிகள் மற்றும் அடையப்பட வேண்டிய பெறுபேறுகள் ஆகியவை தொடர்பாக முக்கியமாகின்றன. பெறுபேறுகள் பற்றிக் குறிப்பிடுமிடத்தில் பொதுச்சேவையாளர்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முடிபுகள் முக்கியமானதாக இருப்பதை வலியுறுத்துகின்றது.
மரபுரீதியாக பொறுப்புக் கூறுதலின் நோக்கம் ஊழலைத் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது; அதாவது பொதுச் சேவையில் இருந்து கொண்டு அதனை ஒருவரின் சொந்த நயத்துக்காகப் பயன்படுத்துதலும் ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபடுதல் தவிர்க்கப்படுகின்றது. விதிகளும் மற்றைய கட்டுப்பாட்டு முறைகளும் வகுக் கப்படுதல், பொதுச் சேவையாளர்கள் ஒழுக் கவியல் நியமங்களைப் பின்பற்றுதல் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றல் ஆகியவை பெருமளவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இவை குறிப்பாக நிதி சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சேவையாளர்கள் , உத்தியோகத் தர்கள் , அரசாங்க சொத்துக்களைக் கொள்வனவு, விற்பனை செய்யும் நடவடிக்கைகள் ஈடுபடுவோர் குறித்து மிகக் காத்திரமானதும் நேர்மையானதுமான முறைகளில் நடந்து கொள்வதில் அவர்களின் அத்தகைய செயல்களுக்கு அவர்கள் பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருப்பது அவசியமாகின்றது. இதனுடன் தொடர்பான இன்னொரு விடயம் பதவியினை அதன் அதிகாரத்தையும் நிதிசார்ந்த நயம் வேறு நயம் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பயன்படுத்துவதும் அதற்காக கைமாறு செய்யும் நடவடிக்கைகளும் ஊழல் இலஞ்சக் குறைபாடுகளை விளைவிப்பதற்குப் பொறுப்பாக உள்ளன.
?6f6f6ði6ODDĖ ab IT GOT Fj6(355s 5p6 607b (Transparency International), உலக வங்கி (World Bank), போன்ற நிறுவனங்கள் நடாத்திய ஆய்வு முடிவுகளின்படி ஊழல் சமூக பொருளாதார அபிவிருத்தி மீது ஒரு சிதைக்கும் விளைவினை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் பொதுவாகக் கூறப்பட்டு வந்த விடயமாக, ஊழல் வர்த்தகம் தொழல் நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுத்தும் செல்லும் (இயந்திரங்களுக்கு கொழுப்பு பூசுவது போன்று) பங்களிப்பினைச் செய்வதாகச் சொல்லப்பட்ட கருத்தும் நிலவுகின்றது. அது இல்லாமல் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முடியாது. வர்த்தக
O3

Page 59
வளர்ச்சியும் ஏற்பட இடமில்லை. இக்கருத்து கூறப்பட்டது, சில கிழக்கு ஆசிய நாடுகளில் (சிங்கப்பூர் நீங்கலாக) பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஊழலும் வளர்ச்சியும் சமாந்தரமாகச் சென்றுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளது. ஆனால் இக்கருத்து சர்ச்சைக்குரியதாகின்றது. ஊழல் அற்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாடுகளில் மக்கள் எவ்வளவுக்கு பொருளாதார சமூக மற்றும் அரசியல் ரீதியாக மேன்மை நிலையினை அடைந்திருப்பார்கள் என்பதை அளவிட்டுக் கூறும் குறிகாட்டிகள் இல்லாததனால் இக்கருத்து சர்ச்சைக்குரியதாகவே இன்னும் இருக்கின்றது.
ஊழல் பல வழிகளில் அரித்துச் சிதைக்கும் விளைவுகளை அபிவிருத்தியின் மீது ஏற்படுத்த முடிகின்றது. முதலாவது, அது முதலீட்டில் ஊக்கமின்மையினை உண்டு பண்ணுகின்றது. பொதுவாக தொழில் முதல்வர்கள், ஒரு தொழில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னராக முதலில் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையினை அறிகின்றனர். இது அவர்களுக்கு ஒரு மேலதிகமாக தாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு நிதிச் சுமையாக அமைகின்றது. ஊழல், தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக திறன்கள், ஆற்றல்கள் ஆகியவற்றைப் பிழையான வழிகளில் திசை திருப்புகின்றது. ஏனென்றால் இச்சூழலில் வாடகை தேடிச் செல்லும் நடவடிக்கை, உற்பத்தி சார்பானவற்றை விடுத்து கூடுதலாகக் கவர்ச்சியுடையதாகக் காணப்பட்டுள்ளது. இது அதிகமாக வர்த்தகக் கட்டுப்பாடுகள் (இறக்குமதி கட்டுப்பாடுகள்) சரியாக இலக்குப்படுத்தாத மானியங்கள், விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் அன்னியச் செலாவணி ஒதுக்கீட்டுத் திட்டங்கள் ஆகிய பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ளன. ஊழல் வளங்களின் பிழையான ஒதுக்கீட்டையும் குறிப்பாக வெளிநாட்டு உதவி மற்றும் வெளிநாட்டுத் தனியார் முதலீடு தொடர்பாக விளைவிக்கின்றது. பெரிய அளவான உட்கட்டுமானச் செய்திட்டங்கள் (கல்வி, சுகாதாரத் திட்டங்களை விட) ஊழல் விளைவிப்பதற்கான வாய்ப்புகளைக் கூடுதலாக தருகின்றது. கல்வி, சுகாதாரம் சம்பந்தமான செய்திட்டங்களைப் பொறுத்தும் அவற்றிலிருந்து எழுகின்ற கட்டிட நடவடிக் கைகள் ஊழல் விளைவுகளை உண்டு பணி னுபவையாகக் காட்டப்பட்டுள்ளன.
பொறுப்புக் கூறுதல், ஊழல் மீது ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதில் பின்வரும் அம்சங்கள் முக்கியமாகின்றன.
O பொதுச் சேவையாளர்களினால் பின் பற்றக் கூடிய தெளிவாக வரைவிலக்கணப்படுத்திய விதிகள், நியமங்கள் ஆகியவை பற்றிய ஒழுங்குகள். 氰、
பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கும் உகந்த நிறுவன ஒழுங்குகள் விதிகளை மீறுபவர்களுக்கு அதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய தண்டனை விதித்தல்.
104

பாரம்பரிய மாதிரியத்தில் பொறுப்புக் கூறுதல் விளக்கப்பட்டுள்ளது. இது முக்கியமாக ஊழல் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய புதிய கட்டளைப் படிவத்தில் அரசாங்க அமைப்புகள் பணிக்குழுவாட்சி ஊழல்கள் இல்லாதவையாக இருப்பதுடன் அவை திறமையுடைய நிலையிலும் செயற்திறன் கொண்டதாக இருத்தலும் முக்கியமாகின்றது. பாரம்பரிய மாதிரியம் “பிரச்சினையில்லாமல் நடந்து கொள்ளல்’ என்பதற்குச் சார்பாக நிற்கின்றது. இவ்வாறு ஒஸ்போன் மற்றும் கேப்ளர் ஆகியோர் கருத்துக் கூறியுள்ளனர். அவர்கள் பின்வரும் கூற்றினை மேற்கோளாகத் தருகின்றனர். “அரசாங்கத்தில் எல்லா ஊக்குவிப்புகளும் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு வழங்கப்படுகின்றன; 99 வெற்றியளிக்கும் நிலைகளை ஏற்படுத்தலாம். அவற்றை ஒருவரும் கவனிப்பதுமில்லை; ஆனால் ஒரு தவறு ஏற்பட்டால் பாதிப்பு பெருமளவாக இருக்கும்’
பாரம்பரிய அமைப்பில் பொறுப்பு கூறுதல் நடத்தை பற்றிய முறைவழிகள் மற்றும் உள்ளிடுகள் மீது அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஒப்பீட்டளவில் இதில் பொதுச் சேவையாளர்கள் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பற்றிய கவனம் வழங்கப்படவில்லை. ஒழுங்குகள், விதிகள் ஆகியவற்றைக் கவனமாகப் பின்பற்றலாம். ஆனால் இவை விரும்பிய தாக்கத்தைக் கொண்டு வரத் தவறி விடலாம்.
“பாதுகாப்பாக அல்லது பிரச்சினையில்லாமல் நடந்து கொள்ளல்” என்பதை வலியுறுத்துமிடத்து எவ்விதமான பெறுபேறுகள் கிடைக்கின்றன என்பது கவனிக்கப்படாமல் போய்விடலாம். புதிய பொதுச் சேவை முகாமை பற்றிய ஆய்வுக் கட்டமைப்பில் பெறுபேறுகள் என்பவற்றின் மீது, முறைவழிகளை விட, கூடிய முக்கியத்துவம் காட்டியுள்ளது. இதற்கு ஏற்றதாக பாரம்பரிய நேரான “நியாயமான தன்மையும் மற்றும் நிதிகளும்? என்ற அணுகுமுறையுடன் செயலாற்றம், பொறுப்புக் கூறுதல் ஆகியவையும் இணைக்கப்படுதல் தேவையாகின்றது.
2.14 parfafargoLD (Transparency)
பொறுப்புக் கூறுதல் உறுதிப்படுத்துவதற்கு மிகுந்த செயற்திறன் வாய்ந்த கருவி ஒளிவின்மை முறை. அதாவது, எல்லாவற்றையும் ஒளிப்பு மறைப்பு இல்லாமல் வெளிப்படையாகக் காட்டும் நிலை அவசியமாகின்றது. ஒளிவின்மைப் பொறிமுறைகள் என்பவை அரசாங்க விதிகள் கட்டுப்பாட்டொழுங்குகள், கொள்நெறிகள், தீர்மானம் எடுக்கும் முறைவழிகள் ஆகியவை மக்கள் எளிதில் அணுகக் கூடியவையாகவும் அவர்களுக்குத் தெரிந்தவையாகவும் செய்யும் தன்மையுடையவையாக இருத்தல். ஆனாலும் ஒளிவின்மை முறைகளும்
105

Page 60
விதிகளும் ஒழுங்குகளும் சிக்கல் வாய்ந்தவையாகவும் பங்காளிகளினாலி இலகுவாக விளங்கக் கூடியவையாக இல்லாவிடில் கூறப்பட்ட குறிக்கோளை அடையாமல் போய் விடலாம் . விதிகளும் ஒழுங்கு முறைகளும் எளிமையானவையாகவும், நேரடியாகப் புரிந்து கொள்பவையாகவும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடியவையாகவும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தன் விருப்பான அதிகாரங்கள் வழங்கப்படாதவையாகவும், வேறுபட்ட வியாக்கியானங்களுக்கு இடமளிக்காதவையாகவும் இருத்தல் மிகவும் வேண் டத்தக்கது. இவை பற்றிய நிலை, ஓரினத்தன்மையான சுங் கத் தீர்வைகளுக்கு எதிராக பல்லினச் சுங்கத்தீர்வைகள் விதிப்பதால் ஏற்படும் நிலைக்கு ஒத்ததாகின்றது. பல்லினத் தீர்வைகள் பொருளாதார சமூக ரீதியாக நியாயமானது. எனக் கருதினாலும் அவை அரசாங்க அதிகாரிகளுக்கு தற்துணிவான அல்லது தன்விருப்பான அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள், பண்டங்களைப் பாகுபடுத்தல் தொடர்பாக ஏற்படுகின்றன. ஓரின சுங்கத்தீர்வைகளின் கீழ் வர்த்தகர்கள் சரியாக என்ன கொடுப்பனவைச் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஒளிவின் மை உறுதிப்படுத்தப்படுமிடத்து பிரசைகள் தகவல்கள் பெறுவதற்கான உரிமை அனுமதிக் கப்படுதலும் மதிக் கப்படுவதும் தேவைப்படுகின்றது. தீர்மானம் எடுக்கும் முறைவழிகள் வெளிப்டையாகத் தெரிந்தவையெனக் காணப்படுவதும் தகவல் பெறுவதற்கான பூரண வசதியும் பொறுப்புக் கூறுதலும் குறித்து ஒரு பலமான பொறிமுறையாக விளங்குகின்றது. பிரசைகள் பொறுப்புக் கூறல் தொடர்பாக தமது உரிமையினைப் பயன்படுத்துவது தேர்தல்கள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் மட்டுமே எனவும் காண முடிகின்றது. இதற்கிடையே அழுத்தங்கள் சிவில் சமூக நிறுவனங்களினூடாக ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. இந்த நிறுவனங்கள் “தனிபட்டவர்களை பொதுத்துறை மற்றும் அரசு ஆகியவற்றுடன் இணைக்கின்றன.” ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) சிவில் சமூகத்தை “சமூகத்தின் அரசியல் முகம்” என வர்ணித்துள்ளது. சிவில் சமூக நிறுவனங்கள் பொதுவாக வர்த்தகம், மற்றும் தொழிற்துறை தொழிலாளர் சங்கங்கள், வேலை கொள்வோர் பிரிவினர். கற்றறிவாளர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வெகுசன ஊடகங்கள், சமூகப் பிரிவினர், ஏனையவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்களில் அரசியல் கட்சிகளையும் சேர்த்துள்ளனர்.
ஒளிவின்மை தொடர்பாக எல்லைக் கட்டுப்பாடுகள் உண்டு. இது தொடர்பாக தகவல் ஒரு பண்டமாக தகவல் ஒரு முறைவழியாக என்ற இரண்டுக்குமிடையே வேறுபடுத்தலைச் செய்வது முக்கியமானது. உதாரணமாக அரசியல் ரீதியாக ஒரு தாராண்மை சனநாயக அமைப்பிலும் கூட அமைச்சர் அவையில் நடக்கும் உரையாடல் வெளியே தெரியப்படுத்த முடியாது; ஆனால் ஒரு முறை தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டால் அது மக்களுக்கு தெளிவாக
106

அறிவிக்கப்படுதல் வேண்டும். கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தம்முடைய நிலைப்பாடு பொதுமக்களின் எதிர்ப்புக்கு இலக்காக மாறிவிடும் என நினைத்து விரும்பாமல் இருக்கலாம்; அல்லது எதிரிகள் தெரிவிக்கும் தகவலை தம்முடைய நலனுக்கு பயன்படுத்தக் கூடும் என எண்ணியும் முன்வராமல் போகலாம். ஹில்ரொன் றுாட் (Hilton Root) என்பவர் ஒளிவின்மை எவ்வாறு எதிர்விளைவினை ஏற்படுத்தும் என்பதற்கான மூன்று நிலைகளைச் சான்றாக எடுத்துக் கூறுகின்றார்.
“இராஜதந்திர நடவடிக்கைகளில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவது ஒளிவின்மை தற்காலிகமாக தேவைகளைக் கருதி இடை நிறுத்தப்படுகின்றது. ஓர் உடன்படிக்கை நிறைவேற்றப்படுதற்கு முன்னராக சம்பந்தப்பட்ட தரப்பினர் என்னென்ன விடயங்கள் ஆராயப்படுகின்றன என்பதைப் பங்கெடுத்துக் கொள்ளும் வெவ்வேறு நிலைப்பாடுகளையும் சேர்த்து, சம்பந்தப்பட்டவர்கள் எவ்விதமாக நடந்து கொள்கின்றனர் என்பவை பறறி ஏதாவது முறிவு நிலை ஏற்படுமோ எனக் கருதி உரையாடலில் உள்ள விடயங்களைப் பற்றி வெளிப்படுத்தப்படாமல் இருப்பது நல்லதாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக உள்ளது எனக் கருதப்படுவது உண்டு. இது போன்ற நிலை ஒளிவின்மை புதிய மாற்றங்கள் ஆகியவற்றிடையே விட்டுக் கொடுப்பு ஏற்படுதல் பற்றியது. நடப்பிலுள்ள அரசாங்க பொதுச் சேவைகள் தொடர்பாக கூடுதலான ஆற்றல் விரிவாக்கம் செய்யப்படுவதால் விலை கேட்டல் முறையில் விலை கேட்போர் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது; புதிய ஆற்றல் தரும் இயந்திர சாதனம் பற்றி விலை கேட்கும் ஓர் ஒப்பந்தக்காரர் விபரங்களையும் எவ்விதமாக அவை புதிய முறைகள் செயலாற்றும் என்பதை மற்றைய கேட்போருடன் போட்டி போட்டு விலை கேட்போராக இருப்பதால் ஒளிவின்மையை விட்டுக் கொடுக்க மாட்டார். நாணயமாற்று வீதங்கள் இன்னொரு உதாரணமாக அமையும். காலத்திற்கு முன்பாகவே வெளிப்படுத்துவது கொள்நெறி சம்பநீதமான பாதிப்பினை உத்தேச நடவடிக்கைகள் இடம் பெறக் கூடியதால் விளைவிக்கலாம். ஆகவே, சில சந்தர்ப்பங்களில் முழுவதும் வெளிப்படையாக நடந்து கொள்வது இடை நிறுத்தப்பட வேண்டிய தேவையினை ஏற்படுத்தும்.
2.15 முன்கூறுதல்
சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்நெறித் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவை பின்னர் ஊக்கந் தளராத முறையில் பின்பற்றப்படுகின்றன. இவற்றை இடைநடுவே மாற்றுவது என்பது ஓர் உதைபந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பந்து போடும் கம்பங்களை, பந்தாட்ட முடிபை மாற்றும் நோக்கத்துடன் அரக்குவது போன்ற செயலாகும். எதிர்வுகூறுதல் “சட்டவாட்சி” என்ற அடிப்படை விதியின் மீது
107

Page 61
தங்கியுள்ளது. இதனுடைய அர்த்தம் அரசாங்கத்தினால் செய்யப்படும் தீர்மானங்கள் ஏதேச்சையாகவோ அல்லது விதிக்கட்டின்றியோ எடுத்துரைக்கப்பட்டவையல்ல. மாறாக, அவை நன்கு வரைவிலக்கணப்படுத்தப்பட்ட உரிமைகள், கடமைகள் ஆகியவற்றைத் தழுவியிருப்பவை. மேலும் விலக்கின்றி விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. விதிகள், மாற்றமடைந்து வரும் சூழ்நிலைகள் தொடர்பாக பொருத்தமில்லாது போனால் அவற்றின் நீக்கமும், திருத்தமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுதல் வேண்டும். ஏனென்றால் அவ்வாறு முன்கூட்டியே தீர்மானம் எடுப்பது தனியார் சார்பாக தீர்மானங்கள் எடுப்பவர்களுக்கும் மற்றைய பங்காளிகளுக்கும் அவர்களின் திட்டங்களைச் சரிசெய்து கொள்வதற்குப் போதியளவு கால அவகாசத்தினைக் கொடுக்கின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றத் தவறுமிடத்து முதலீட்டாளர்களினால் அதிக செலவுடைய வழக்காடுதல் ஏற்பட இடமுண்டு. அரசாங்க கேள்விப் பத்திரம் பற்றிய உதாரணம் இங்கு பொருத்தமாகும். இக்கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் செல்லுபடியாகாது என தீர்மானிக்கப்பட்டதற்கான காரணம் சரியான ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படவில்லை. இதிலும் பிரச்சினை õigu நிலைமையும் எதிர்நோக்கப்படலாம். கேள்விப்பத்திரங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டுத் தீர்மானங்களும் எடுக்கப்பட்ட பின்னர் செய்திட்ட குறிக்கோள்களுக்கமைந்த விதத்தில் கேள்விப்பத்திரத்தில் விபரிக்கப்பட்ட நிபந்தனைகள் இருக்கவில்லை எனத் தெரிய வந்தது. இச்சந்தர்ப்பத்தில் கவனிக்க வேண்டியது, ஒரு எதிர்வுகூற முடிந்த ஒழுங்குபடுத்தும் சட்டகம் அமையுமானால், இது நிறுவனங்களினால் தம்முடைய முதலீட்டின் வருவாய் வீதத்தைக் கணிப்பிட முடிகின்றது. மறுபுறத்தில் விதிகள், ஒழுங்குகள் ஆகியவை நடைமுறைப்படுத்தலில் நிச்சயமில்லாத தன்மையைக் கொண்டிருப்பின் அத்தகைய பிரச்சினை முதலீட்டின் இடர்நிலைத் தன்மை அதிகரிக்குமானால் அது முதலின் செலவை அதிகரிக்க முடிகின்றது. முதலீட்டாளர்கள், கேள்விப்பத்திரம் தொடர்பாக விலைகேட்டல் முறைமை நியாயமானவை, தேவையற்ற அரசியல் செல்வாக்கிலிருந்து அல்லது பணிக் குழுவாட்சியினரின் தன்விருப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்து புறம்பானவை என்ற உறுதிப்பாட்டைக் கொடுத்தல் நல்லதாகும். இதற்கு ஏற்றதாக பொதுத்துறை வேலைகளுக்கு கேள்விப்பத்திர விலை கேட்டல் என்பவை பற்றிய முடிபுகள் மதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியும் கிடைக்கின்றது.
2.16 பங்கேற்றல்
伞。
நல்ல ஆட்சியின் சாராம்சம் பங்குகொள்ளுதலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திதிட்ட நிறுவனத்தின் நோக்கில் (UNDP) ஆட்சியென்பது அரசாங்கம், தனியார்துறை,
108

சிவில் சமுகம் ஆகியவற்றின் ஒன்றின் மீதொன்றான செயலாற்றுதலின் விளைவாக ஏற்படுவது. ஒஸ்போர்ன், கேபிளர் ஆகியோர் தரும் வரைவிலக்கணம் பின்வருமாறு: நல்ல ஆட்சியென்பது கூட்டாக நாம் எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைவழி; அதனுாடாக எம்முடைய சமூகத்தின் தேவைகளைப் பெறுகின்றோம். அரசாங்கம் இதற்காக பயன்படுத்தும் செயற்கருவியாக உள்ளது. பங்கு கொள்ளுதலும், ஆட்சியின் மற்றைய அம்சங்களுக்கு நெருக்கமாக இணைக்கப்படுகின்றது; இவை ஒன்றுக்கொன்று வலுவூட்டும் செயற்பாடாகவும் அமைகின்றன. பொறுப்புக் கூறல் பங்குகொள்ளும் முறைவழியினுாடாக மேம்படுத்தப்படுகின்றது. பங்கேற்றல், தொலை நோக்கொன்றினை அடைந்து கொள்ள உதவுவதுடன் அதனை ஒரு நடைமுறைக்கேற்றதான நிலையாக உருவாக்குவதற்கும் உதவுகின்றது. மறு புறத்தில் சமவாய்ப்பு, பங்கு கொள்ளுதலை மேம்படுத்துகின்றது. வெளிப்படையான நிலையென்பது பங்கேற்றல் தகவலின் பகிர்வினூடாக மேலும் கூடுதலாக அதிகரிப்பதற்கு உதவுகின்றது. A.
பங்கு கொளர் ஞ தல வேறுபட்ட விதமான உருவங் களையும் வடிவங்களையும் எடுக்கின்றது. அது தகவல் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளுடன் தொடங்கி நீண்டகால உயர்வான, தாக்கமுடைய ஒத்துழைப்பு என்பவற்றை உள்ளடக்கும் தந்திரோபாய பங்காளி முறைமை வரை செல்லுகின்றது. பங்கு கொள்ளுதலின் நன்மைகள் தகவல் பகிர்ந்து கொள்ளல் என்பதிலிருந்து தீர்மானங்களின் பங்காளிகளின் உடைமையும் மற்றும் இணைந்த நடவடிக்கை வரை செல்லுகின்றது. தந்திரோபாய பங்காளி முறைமை அரசாங்கம், தனியார் துறை, மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி நடைபெறுகின்றது. அவ்வாறு பலவற்றைத் தொடர்புபடுத்திச் செல்லுமிடத்து பங்கேற்றலின் எல்லா நன்மைகளையும் தருகின்றது; அத்துடன் அவற்றின் பிரதான பலம் பகிர்ந்து கொள்ளக் கூடிய தொலைநோக்கு வாய்ப்பினை அளிப்பதாகும். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் தொலைநோக்கு கொள்நெறிகள் தொடர்பாக பங்காளர்கள் உடைமை என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். அத்தகைய உடைமை அரசாங்கத்தினை நிலைமைகள் பிழை போகுமானால் அதிகமாக குறை சொல்வதிலிருந்து காப்பாற்ற முடிகின்றது. மேலும், அது கொள்நெறிகள் நடைமுறைப்படுத்துதல், தேவைப்படுமானால், சரிபடுத்தும் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை இலகுவாக மேற்கொள்ளப்பட முடிகின்றன.
ஒரு தந்திரோபாய பங்காளர் முறைமை இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் இருத்தல் வேண்டும்:
0 தொலைநோக்கு பகிர்ந்து கொள்ளும் விருப்பம். 9 செயற்திறன் வாய்ந்த வகையில் ஊடாட்டங்களை ஏற்படுத்தும் ஆற்றல் 9 ஒரு நிறுவனமயச் சட்டகம்
109

Page 62
பல அவதானிப்பாளர்களின் கருத்துப்படி, அரசியல் மற்றும் பணிக்குழுவினர் உயர்குழாமினர் கிழக்காசிய நாடுகளில் தனியார் துறையுடன், நாட்டினைப் பொறுத்து, வெவ்வேறு பொறிமுறைகள் பயன்படுத்தப்பட்டு தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தொடர்ச்சியான உரையாடல் அரசாங்க கொள்நெறிகள் குறித்து தொடர்ந்து பின்னூட்டல்கள் அக்கொள்நெறிகளினால் பாதிக்கப்பட்டவர்களிலிருந்து கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது.
ஒரு பகிர்ந்து கொள்ளும் தொலைநோக்கினை உருவாக்குதல் இலகுவானதல்ல. இதற்கு தேவையான முதலாவது நிபந்தனை அரசாங்கத்திற்கு அதனுடைய அடிப்படை நோக்கங்களையும் அவற்றினூடாக கிடைக்கும் பெறுபேறுகள் பற்றித் தெளிவு இருத்தல் அவசியம். அரசாங்கத்திற்கு உள்ளே ஒரு நல்ல புரிந்துணர்வும் அது தொடர்பாக கருத்தொருமித்தல் நிலை, நீண்டகால இலக்குகள் பற்றி இருப்பதுடன் ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமிடத்து, எவ்வளவு, எவை சாதிக்க முடியும் என்பது பற்றியும் தெளிவான நிலைப்பாடு தேவைப்படுகின்றது. அரசாங்க சேவை இவ்வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை வரையறை செய்வதிலும் அவற்றின் சாத்தியப்பாட்டை சமூக பொருளாதார நிறுவன எல்லைகள் குறித்து பரிசீலித்தல் என்பவற்றில் பங்களிப்பினை வழங்க முடிகின்றது. இவை செய்யப்பட்ட பின்னரே பொதுச்சேவை தந்திரோபாய பங்களிப்பு முறைமை தொடர்பாக தலைமைத்துவத்தினை வழங்கலாம். பொதுச்சேவையின் தலைமைத்துவம் அதனுடைய விருப்பத்தைத் திணிப்பதற்கு அல்ல; ஆனால் பகிர்ந்து கொள்ளும் தொலைநோக்கு என்பதை வரையறுத்துக் கொள்வதற்கும் சாத்தியமுடைய கூட்டு முயற்சியினுடாக அடைந்து கொள்வதற்குப் பொருத்தமான வழிமுறைகளை நிர்ணயித்துக் கொள்வதற்கும் இத்தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. எல்லோருக்குமான பகிர்ந்து கொள்ளும் செயற்திறன் வாய்ந்த தொலைநோக்கு தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் என்பது குறித்து இவைகளிடையே கருத்தொருமித்த நிலைப்பாடு அவசியமாகின்றது. தொழிலதிபர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் முக்கியமானவையல்ல; ஆனால் அவர்கள் கூட்டு நிலையான சமூகத்தின் பிரதான பகுதியினர் என்ற வகையில் கருத்து முக்கியமாகின்றது. கலந்தாலோசனை செய்வதற்கும் பொது நிலைப்பாட்டைப் பெறுவதற்கும் தேவையான நிறுவன ஒழுங்குகள் தனியார்துறையிலும் சிவில் சமுகத்திலும் உள்ளன என்பதும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
உள்வாரியான கருத்தொருமித்த நிலைப்பாடு அல்லது பொதுவான நிலப்பாடு என்ற விடயத்துடன் தொடர்புடையது, தொழில்நுட்பம், அறிதொழில் தகைமை சார்ந்த இயலுமை என்பது. இது பொதுச் சேவையில் முக்கியமானது மட்டுமல்ல, இது தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் என்பவற்றிற்கும் முக்கியமானது. இப்பிரிவினரின் பிரதிநிதிகள் பொதுச்சேவை அதிகாரிகளுடன் சரிநிகராக நின்று பிரதிநிதித்துவப்படுத்தும் விடயங்கள் பற்றி கலந்துரையாடல்கள்
110

செய்யக் கூடிய ஆற்றல் குறித்துத் தகுதி உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பேரினப் பொருளாதாரக் கொள் நெறிகள் குறிப்பாக இறை மற்றும் நாணயக் கொள் நெறிகள் தனியார் துறை செயலாற்றம் மீது முக்கியமான தாக்கத் தினை ஏற்படுத்துபவையாகும். பொதுவாக தனியார் துறை தொழில்நிறுவனங்கள், வரிகள், சுங்கத்தீர்வைகள் அந்நியச் செலாவணி வீதங்கள் ஆகியவை பற்றி தமது தொழில்கள் சார்ந்த விடயங்களுடன் தொடர்புபடுத்தி கலந்துரையாடல் நடாத்தலாம். ஆனால் இவை பற்றி விரிவான தேசிய நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி விடயங்களை ஆராய்வது அவர்களுக்கு இலகுவானதாக இல்லை. இது தொடர்பாக அரைவாசிப் பிரச்சினை, தரவுகள் தகவல்கள் கிடைப்பது தொடர்பாக எழுகின்றது. இவை மீது கூடுதலான வாய்ப்பினைக் கொண்டவர்களாக அரசாங்க சேவையாளர்கள் உள்ளனர். இக்காரணம் தொடர்பாகவே, ஒளிவின்மை முறைகள் செயற்திறன் வாய்ந்த பங்கு கொள்வதற்கு மிகவும் அவசியமானவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி உலக வங்கி பின்வருமாறு கூறியுள்ளது.
“கழக் கு ஆசியாவிலே , பொதுத் துறை-தனியார் துறை கலப்பாலோசனைக்கான சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றிலி தொழிலாளர் ஒன்றியங்கள், கைத் தொழில் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை கொண்டுள்ளது. பொருளாதாரக் கொள்நெறி தொடர்பான விடயங்கள் மீது பரந்த அடிப்படையிலான உடன்பாடு பெறக் கூடியதாக இருந்துள்ளது. அவ்வாறு ஏற்படும் உடன்பாடுகள் தொடர்பாக உடனடியாகவும் நெகழ்வுடைய விதத்திலும் சீர்ப்படுத்தும் தலையீட்டை ஏற்படுத்துவதற்குமான ஒழுங்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.”
M பொதுச்சேவைக்குள்ளே பலமான பங்காளி முறைமையின் தேவை எழுத்துக்களில் போதியளவுக்கு ஆராயப்படவில்லை; இது எப்படியோ நடைபெறும் என்ற எண்ணத்துடன் கவனிக்கப்படாதிருக்கலாம். பொதுச் சேவையில் உள்வாரியான பங்காளிகள் ஒழுங்கு என்பது அமைச்சுக்களிடையே, திணைக்களங்களுக்கிடையே நிறுவனங்களுக் கிடையே ஏற்படும் பங்குகொள்ளும் முறைகளைக் குறிப்பிடுகின்றது. வழக்கில் உள்ள பயன்படுத்தப்படும் முறை “குழு முறை” ஒழுங்காக அமைந்துள்ளது. இது தகவல் பகிர்ந்து கொள்வது, தீர்மானங்கள் எடுப்பது, இரட்டிப்பு முறைகள் தவிர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது; இவற்றினுாடாக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகள் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்படுதல் ஆகியவை செய்யப்படுகின்றன. கூட்டங்கள் பயனுடையவை என்பதுடன் அவை கட்டாயமாக நடாத்தப்படுவதும் அவசியம். ஆனாலும் அவை சரியாக நடாத்தப்படாவிட்டால் நேரமும் முயற்சியும் வீணடிக்கப்படுவதிலும்
111

Page 63
தெளிவில்லாது முடிவிலும் கொண்டு போய் விடலாம். கூட்டங்கள் நன்கு திட்டமிடப்படுதல் வேண்டும். அவற்றின் குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக் கப்படுதல் அவசியம்; அத்துடன் நிகழ் சிநிரல் முடிவுகள் நிறைவேற்றப்படுவதினால் கவனம் அதிகமமாகச் செலுத்தப்படுவதுடன் ஒவ்வொரு பங்கு கொள்பவரினதும் பங்களிப்பு தெளிவாக இனங்கண்டு கொள்ளப்படுவதும் முக்கியமாகின்றது. ஒரு கூட்டத்தினை வழிநடாத்திச் செல்வதற்கு நல்ல தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. அவ்வாறாக விரும்பிய முடிவுகளை அதிகமாக அடைந்து கொள்ளலாம். கூட்டங்கள் மீது செலவழிக்கப்படும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதற்கு இலத்திரனியல் அரசாங்க முறைமைகள் (e-government Systems) தகவல்கள் பகிர்ந்து கொள்வதிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் பயனுடையவை.
தொகுத்துக் கூறுமிடத்து, பின்வரும் அம்சங்கள் முக்கியமாகின்றன. பொதுச்சேவையின் பங்களிப்பு எல்லா நாடுகளிலும் அபிவிருத்தியின் புதிய சவால்களினால் மாற்றமடைந்து வந்துள்ளது. இப்பங்களிப்பு முயற்சியாண்மை அரசாங்கம், கட்டுப்பாடுகளை விதித்து ஒழுங்கமைக்கும் அரசாங்கம் என்ற நிலையிலிருந்து, பொருளாதார சமூக முன்னேற்றங்கள் குறித்து அவற்றை எளிதாக்கி துணை கொடுக்கும் ஊக்குவிப்பாளர் என்ற பங்களிப்புச் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இதனை முக்கியமாக தனியார் துறையினூடாக செய்வதும் உள்ளடங்குகின்றது. புதிய பொது நிருவாகத்தின் மையமாக இருப்பது, முழுவதும் ஒழுங்கு முறைகள் விதிகள் கட்டுப்பாட்டு நிலைகள் ஆகியவற்றைத் தழுவி நிற்பதற்கு எதிர்பட்டதாக பெறுபேறுகளைக் குறித்து முகாமைப்படுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்புதிய அணுகுமுறையின் முக்கியமான அம்சம் அபிவிருத்தி தொடர்பாக ஒரு தொலை நோக்கினை வகுத்தல்; அதனைச் சுற்றி முழுச் சமூகமும் பங்காளிகளாகவும் உண்மையான பிணைப்பு, அக்கறை கொண்டிருப்போர்களாகவும் திரட்டப்பட முடிகின்றது. நல்ல ஆட்சியின் பல்வேறு அம்சங்கள் அவற்றின் இணைப்புகள் செல் வழிகள் என்பவற்றினுடாக அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவுகின்றன. ஆதலால், ஒரு புதிய நோக்கையுடைய பொது நிருவாகம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மேம்படுத்துவதற்கு நல்ல ஆட்சியினை அடித்தளமாகக் கொள்வது அவசியம்.
3.0 பொது நிருவாகச் சீர்திருத்தம் பற்றிய ஒரு நிகழ்ச்சி நிரல்
இலங்கை அதனுடைய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதானால் இத் தேவையைக் குறித்து பொது நிருவாக அமைப்பு சரியாக திசைப்படுத்தப்பட வேண்டும். ஒரு பங்குகொள்ளும் முறைவழியினூடாக பொதுச் சேவையாளர்கள் தனியார்துறைப் பிரதிநிதிகளுடனும் கற்றறிந்தோர் சமூகத்தினருடனும் கலந்த கருத்துப் பரிமாறல் செய்யப்பட்டு நாட்டுக்கான ஓர் அபிவிருத்தித் தொலைநோக்கினை வரையறுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இத்தொலை
112

நோக்கினை அறிக்கை வடிவத்தில் “இலங்கையினை மீளப்பெறுதல்” (Regaining Sri Lanka) எனப் பெயரிடப்பட்டு வெளிவந்தது. இதில் முன்வைக்கப்பட்ட முக்கியமான விடயங்களில் அரசாங்கத்தின் பருமனைக் குறைத்தல், நேரடியாக அரசாங்கம் பொருள்கள் மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யும் தொழிற்பாடுகளிலிருந்து விலகுதல், அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை அமைத்துக் கொடுத்தல், கட்டுப்பாடுகளைக் குறைத்து தனியார் துறை முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகிய தொழிற்பாடுகளுக்கு இடமளித்தல் முக்கியமாகின்றது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் பொதுத் துறைச் சீர்திருத்தத்திற்கு அரசுடைமை நிறுவனங்கள் உட்பட முக்கியமான இடம் வழங்கப்பட்டது. இத் தேவையினைக் கருதி அரசாங்கம் ஓர் உயர்மட்டக் குழுவினை அமைத்தது. இக் குழுவில் சிரேட்ட பொதுச் சேவையாளர், கற்றறிந்தோர், முன்னாள் அரசாங்க உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார்துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பிரதம மந்திரியின் செயலாளர் தலைமையின் கீழ் இக் குழு நியமிக்கப்பட்டிது. இக் குழு அமைக்கப்பட்டவுடன் அரசாங்கத்தின் திடமான அரசியல் விருப்பம் பொது நிருவாகச் சீர்திருத்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் அவ்வாறான திட்டம் பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டத்துடன் இணைக்கப்பட்டதாகவும் அமையும் என்பவற்றை எடுத்துக் காட்டுவதாக இருந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) எடுத்துக் காட்டியது போல “ஒரு பிரதம மந்திரி அல்லது ஐக்கிய அமெரிக்காவில் உப ஜனாதிபதி முனைந்தும் ஆதரித்தும் முன்னெடுக்கப்படும் சிவில் சேவைச் சீர்திருத்தம் போதியளவு நன்மதிப்பையும் பலத்தையும் அமைப்பில் பெறுவதுடன் செயற்திறன் வாய்ந்த மேற்பார்வை ஒழுங்கு ஏற்படுத்தல் ஆகியவற்றையும் உறுதிப்படுத்த முடிகின்றது. எப்படியாயினும், அரசாங்கத்தினால் விரைவாகவும் முரண்பாடற்ற வகையிலும் சீர்திருத்தங்கள் செய்யப்படக் கூடியதன்மை, தனியார் துறையினதும், சிவில் சமுகத்தினதும் விருப்புணர்விலும் ஆர்வத்திலும் தங்கியிருக்கும். இதற்கான காரணங்கள், முதலாவதாக “சிவில் சேவையினை” சீர்திருத்தம் செய்யாதிருப்பது ஒரு போதும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி அதனை அரசியல் ஓட்டத்திற்குள் கட்டாயப்படுத்தித் தள்ளுவதாகவும் இல்லை, அது எப்பொழுதும் பிற்போடப்பட முடிகின்றது. இரண்டாவது, அரசியல் தரகர்கள் பொதுச்சேவையினை வாழ்தொழிலாகக் கொண்ட சேவையாளர்கள் ஆகியோர் முன்வர முடிகின்றது; அவர்கள் இருப்பு நிலை தொடர்ந்தும் பேணப்படுவதனைப் பெரிதும் விரும்புவதில் ஆர்வமுடையவர்களாகக் காணப்படுபவர்கள். மறுபுறத்தில் அரசாங்கங்களினால் அரசியல் தேவையினை முன்வைத்து பொதுச் சேவையினை பொருளாதார சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகக் கருதப்பட்டுள்ளது. இதற்கு வெளிவாரி ஆதரவினைத் திரட்டும் முயற்சியும் முக்கியமான விடயங்களை பொது மக்களிடத்தே விவாதத்திற்கு விடப்பட்டு
113

Page 64
மேற்கொள்ளப்பட்டு செயற்திறன் கொண்ட தொடர்பாடல் பயன்படுத்தபட்ட நடவடிக்கைகளும் முக்கியமானவையாக இருந்துள்ளன. மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
3.1 பொதுநிருவாகச் சீர்திருத்தத்தின் நிரலொழுங்கு
வனசிங்கா பரிந்துரைகளும் அவற்றில் சிலவற்றைப் பின்னர் நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும், எந்த வகையான பொதுச் சேவைச் சீர்திருத்தங்களும், அவை எவ்வாறு மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் முதலாவது படியாக தேவைப்படுவது, சென்றகால அனுபவரீதியாக, ஓர் அர்த்தமுள்ள சீர்திருத்த முயற்சிக்கு உள்ளடக்கம், திசைப்படுத்தல் ஆகியவை தொடர்பான தந்திரோபாயம் சார்பான விடயங்களையும் நடவடிக்கைகளையும் இனங்கண்டு கொள்ளுதல் முக்கியமாகின்றது. எடுக்கப்படும் நடவடிக்கைகள் தந்திரோபாயம் சார்ந்த நகர்வுகள் என அமையுமிடத்து அவற்றின் நிரலொழுங்கினை திட்டமிடுதல் வேண்டும்; அவை ஒவ்வொன்றும் என்னென்ன வரிசையில் ஏற்பட வேண்டும் என்பதுடன் அவை எப்பொழுது ஏற்படுதல் என்பதும் தீர்மானிக்கப்படுதல் அவசியம். ஸ்சிஆவோ - கம்போ, டி டுமாசோ மற்றும் முக்கர்ஜி (Schiavo - Camp0, de TomeSSO and Mukherjee) ஆகியோர் உலக வங்கியின் அனுசரணையுடன் செய்த ஆய்வொன்றில், சீர்திருத்த முயற்சிகளை உள்ளடக்கி, நிரலொழுங்கின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளனர், “ஒவ்வொரு தீர்மானமும் அதற்கு முன்னராக வந்துள்ளவற்றினால் வழிவகுக்கப்படுகின்றது” எனக் கூறியுள்ளனர்.
தந்திரோபாய நகர்வுகளை இனங்கண்டு கொள்ளுமிடத்தில், அதேநேரத்தில் நிறுவன ரீதியான ஒழுங்குகளை அமைப்பது ஆரம்பிக்கப்படுவதுடன், அவை முரண்பாடற்ற வகையிலும், தொடர்ச்சியாகவும் நகர்வுகளை நிர்வாக அமைப்பின் எல்லா அலகுகளினுடாகவும் கண்காணிக்கப்பட்டு வருதல் முக்கியமாகின்றது. முதலாவதாக, மேற்கொள்ள வேண்டிய தந்திரோபாய நடவடிக்கை நடைமுறைபடுத்துவதற்கு தெரிவு செய்யப்படுவது, ஒப்பீட்டு ரீதியாக இலகுவானதாகவும், அவற்றின் பெறுபேறுகள் எதிர்வு கூற முடிந்தவையாகவும், அவை பொதுச் சேவைக்குள்ளே ஆதரவு கிடைக்கக் கூடியதாகவும் இருப்பவையாக உள்ளன. உதாரணத்துக்குக் கூறுமிடத்தில், மிகையாக உள்ள பணியாளர்களை நீக்குவது முதலாவது நடவடிக்கையாக மேற்கொள்வது உகந்ததல்ல. ஏனென்றால், சாதாரண சூழ்நிலையில் ஏற்புடையவையாக இருப்பவற்றிற்கும் இதிலிருந்து எதிர்ப்பு அதிகரிக்க இடமுண்டு. பொதுச் சேவையாளர்களின் பதவி முன்னேற்றங்கள், தொடர்பானவை பொதுவாக வரவேற்கப்படுவதுண்டு. புறநிலைச் சார்பான செயலாற்றல் மதிப்பீடு சம்பந்தமான நடவடிக்கைகள் இக் குறிப்பிட்ட பிரிவுக்குள் அடங்குகின்றது. சிரேட்ட
114

பொதுச் சேவையாளர்கள், அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான செயல்களுக்குக் குறிப்பாக ஆளணி விடயங்களான நியமனங்கள், பதவி ஏற்றம், இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடிவடிக்கை என்பவை பற்றியவையாக இருப்பவற்றிற்கு, எப்பொழுதும் ஆதரவு வழங்குவார்கள். சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுது, இயனறவரை பொதுச் சேவையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து செய்வது அவசியம். அவர்கள் தீர்மானங்கள் எடுக்கப்படும் முறைவழியிலிருந்து அன்னியப்படுத்தப்படுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும். ஒருமுறை சீர்திருத்த முறைவழி தொடக்கப்பட்டவுடன், அது தொடர்ந்து திட்டமிட்டதற்கு ஏற்றதாக செயல்பட்டுச்செல்வதும் பொருத்தமானது. சிறிது சிறிதாக, அங்குமிங்குமாக, உடனுக்குடன் என்ற வகையில் தலையீடுகள், வனசிங்கா குழுவினால் குறிப்பிட்டது போல, எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தி, இருக்கும் அமைப்பில் குழப்பநிலையினை உண்டுபண்ணலாம்.
8.2 அரசியல்மயப்படுத்தல் நீக்கப்படுதல்
அரசியல் மயப்படுத்தல் நீக்கப்படுதல் அல்லது குறைத்தல் தொடர்பாக எடுக்கப்படும் ஒழுங்குகள் பொதுச் சேவையினருக்கு நம்பிக்கையினைக் கொடுப்பதுடன், நிருவாகம் சார்பான விடயங்களில் அரசியல் தேவையற்ற தலையீடுகளினால் முயற்சி தளர்ந்த நிலையிலுள்ள பொதுச் சேவையினருக்கு ஒரு செயலாற்ற ஊக்குவிப்பினையும் கொடுப்பதாக அமைகின்றது. அமைச்சர்கள் நிருவாகம் சார்ந்த விளைவுகள் மீது அரசியல் ரீதியான அக்கறை கொண்டவர்கள். கொளர் நெறி பற்றிய தீர்மானங் களர் இறுதியாக அவர்களுடைய தனிச்சிறப்புரிமையாக இருப்பதனால், எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியாகவும் செயற்திறன் கொண்டதாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் உரிமையும் சேர்கின்றது. எப்படியாயினும், அந்தத் தேவையினைக்கருதி, பொதுச்சேவையினர் பின்பற்றவேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் பிரயோகப்படுத்தும் விதிகளையும், சமவாய்ப்பளிக்கும் விதிகளை மீறாத விதத்தில், தீர்மானிக்கப்படுதல் தேவைப்படுகின்றது. அரசியல் தலையீடு பொதுவாக, அமைச்சர்களும் மற்றும் அரசியல் வாதிகளும் அவர்கள் விரும்பியவர்களுக்கு சார்பான விதத்தில் நன்மைகள் செல்லுவதற்காக, விதிவிலக்கு நிலைகளைத் தேடிப்பயன்படுத்திக் கொள்வதற்கு உதவுகின்றது. அரசாங்க சேவையிலிருப்பவர்கள் அத்தகைய அழுத்தங்களை எதிர்க்கமுடியாத நிலையும், அவை சமவாய்ப்பு விதிகளை மீறுவதாக இருப்பினும், ஏற்படுகின்றது. இது குறிப்பாக சேவையினரின் சேவை முன்னேற்றங்களின் பாதிப்பை விளைவிக்கக் கூடியதாக இருப்பினும் பொதுச்சேவையாளர்கள் அவ்வாறான அழுத்தங்களை எதிர்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. 17 ஆம் யாப்புச்
115

Page 65
திருத்ததிற்கு ஏற்றவாறு, புதிய பொதுச்சேவை ஆணைக்குழு நடைமுறைக்குக் அரசியல் சார்பான பொதுச்சேவையினர் மீது திணிக்கப்படும் அழுத்தங்களையும், தாக்கங்களையும் நீக்க முடிகின்றது; அது தனிப்பட்ட அமைச்சர்களின் பதவியேற்றங்கள், இடமாற்றங்கள், பதவி விலகல் தொடர்பாகப் பயன்படுத்த விரும்பும் அதிகாரங்களைத் குறைத்திருப்பதால் பொதுச் சேவையாளர்கள் மீது அழுத்தங்களும் மற்றைய விதமான தலையீடுகளும் நீக்கப்படலாம். எப்படியாயினும், இத்திருத்தத்தின் 55.3 பகுதியினால் ஏற்படுத்தப்பட்ட உறுதியற்ற, ஐயப்பாடுடைய நிலைமை, அமைச்சர் அவையிடம் திணைக்களத் தலைவர்களின் நியமனங்கள் ஒப்படைக்கப்பட்டதனை, நீக்குதல் பொருத்தமாகும். இந்த உறுதியில்லாத தன்மை ஒரளவுக்கு அமைச்சரவையின் குறிப்பிட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் குறைக்கப்படலாம். இவ்வாறு செய்ய முடியாதவையெனக் காணப்படின் அவை அனுமதிக்க கூடியவை, நியாயமானவை மற்றும் அடிப்படையானவை என எடுத்துக் கொள்ள முடிகின்றது. அமைச்சர் முன்பு குறிப்பிட்ட இத்தகைய தீர்மானத்தை எடுப்பதும் அதிகாரத்தை, பயன்படுத்துவதும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன்தான் என்பதும் கூறப்பட்டுள்ளது.
அரசியல்மயமாக்கல் குறைக்கப்படுதல் என்பதில் இன்னொரு முக்கியமான விடயம், அமைச்சரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களின் தொழிற்பாடுகளும், அதிகாரங்களும் வரையறுப்பதும் முக்கியமாகின்றது; அவ்வாறு செய்யப்படுதல் நிருவாகத்தில் தலையீடு ஏற்படுவதை மட்டுப்படுத்துகின்றது. ஏப்ரல் 2002 இல் செயலாளர்கள் மற்றும் பிரதான செயலாளர்கள் ஆகியோர் மகாநாட்டில் ஆராயப்பட்ட விடயங்களில் மேல் குறிப்பிட்டதும் முக்கியமான இடத்தைப்பெற்றது. பொதுச்சேவை ஆணைக்குழுவினை மீண்டும் செயலாற்ற விடுவது, அதிகளவுக்கு அரசியல் தலையீடு நீக்கப்படுவதற்கு அல்லது குறைக்கப்படுவதற்கு வழிவகுக்கும். ஆனாலும், அரசாங்கத்தின் ஓர் உறுதியான நிலைப்பாட்டினால் அமைச்சர்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களிலிருந்து அரசாங்கத்தின் கூட்டுத் தீர்மானங்கள் மற்றும் கொள்நெறிகள் ஆகியவை வேறுபடுத்தப்படுவது தேவையாகின்றது. அவ்வாறு வேறுபடுத்தப்படும் உறுதியான நிலைப்பாடு இருக்குமானால் அரசாங்க சேவையினர் கூடுதலான தன்னுறுதியுடனும் புதிய மாற்றங்களைச் செய்யக் கூடியவர்களாகவும் தொழிற்பட முடிகின்றது.
3.3 உந்து சக்தி
பொதுநிருவாக சீர்திருத்தக் குழுவினர், அடிப்படையில் ஒரு கொள் நெறி வகுப்பதற்கும் அவற்றைத் தழுவி பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தலும் , அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பதும் பிரதான ஒழுங்குமுறைகளாக இருந்துள்ளன. சீர்திருத்தங்கள் மத்திய அரசாங்க மட்டத்திலும் மற்றும் புறப்பரப்பு அரச மட்டத்திலும், நிருவாக அமைப்பு தொடர்பாக
116

அமைச்சர்கள், திணைக்களங்கள், மற்றும் அலகுகள் ஆகியவற்றினுாடாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறைவழி வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு பிரதான கொண்டு நடத்தும் உந்து சக்தி ஒன்று தேவைப்படுகின்றது; இதற்காக LTTTTTTTLLTTT TTTTTLL SLLLLLLLL LLLLLLLLS TT TMTT LLLTLTTTT அமைக்கப்பட்டு சீர்திருத்தப் பணிகளைப் பொறுப்பேற்று தலைமைத்துவம் வழங்கப்பட்டு தூண்டுதலும் செயலாக்கமும் கொண்டு இயங்குதல் வேண்டும். இத்தகைய பணிப்படையின் தலைமை, அமைச்சு மட்டத்தில் செயலாளர், மாகாண சபைகள் மட்டத்தில் பிரதான செயலாளர் ஆகியோர், நிருவாக அதிகாரம் அவர்களிலிருந்து கீழே செல்லும் நிலைமைக்கு ஏற்றதாக, பொறுப்பேற்றல் வேண்டப்படுகின்றது. செயலாளர்/பிரதம செயலாளர் ஆகியோருக்கு உதவும் வகையில் சீர்திருத்தத்தின் வெவ்வேறு அம்சங்கள் பற்றிய நிபுணர்கள், பணிப் படையில் அங்கத்துவம் கொண்டவர்களாக அமைவதும் தேவையாகின்றது. நிருவாகச் சீர்திருத்தம் செய்யப்படுமிடத்தில், அது பொருளாதார சமூக அபிவிருத்திக் கொள்நெறியிலிருந்து புறம்பானது எனக் கருதப்படுவதாக இருக்க மாட்டாது; இரண்டும் ஒன்றுடனொன்று இணக்கப்பாடுடையவையாக இருப்பது அவசியம் . பணிப் படையினைச் சிறியளவில் வைத் திருப்பதும் (தகைமையுடையவர்களும் குறைவாக உள்ளனர்) வேண்டப்படுகின்றது. இது நான்கு பிரிவுகளாக வேறுபட்ட தொழிற்பாடுகளை உள்ளடக்கி அமைவது நன்கு பொருத்தமாகும். நான்கு தொழிற்பாட்டுப் பிரிவுகள் பின்வருமாறு: திட்டமிடுதல்; நடைமுறைப்படுத்துதல்; அமைப்பு முறை மற்றும் மனித வள அபிவிருத்தி. பணிப் படையின் உறுப்பினர்கள் செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதுடன் எடுக்கப்படும் தீர்மானங்களை கீழ்மட்ட நடைமுறைப்படுத்தும் அலகுகளுக்கு கொண்டு செல்லுதலும் தேவைப்படுகின்றது. செயற்திறன் வாய்ந்த முறையில் இருப்பதற்கு பணிப் படை உறுப்பினர்கள் ஓர் அணியாக, தொடர்ந்து ஆலோசனை, உரையாடல், தகவல்கள் பகிர்ந்துகொள்ளல், பணிகள் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றினுாடாக செயற்படுதலும் அவசியமாகின்றது.
அனேகமான அமைச்சுக்களும் திணைக்களங்களும் திட்டமிடும் அலகுகளை அமைத்துள்ளன. இவ்வலகுகளின் தலைவர்கள் போதுமான தகைமை கொண்டவர்களாக இருப்பின் அவர்களிடம் சீர்திருத்த நடவடிக்கைகளின் நிரலொழுங்கு, காலத்திட்ட அமைவு ஆகியவற்றினை தந்திரோபாயத் திட்டத்தின் தேவைகளுக்கேற்றதாக இணக்கப்படுத்தல் என்பவை எல்லாவற்றினையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பினை ஒப்படைக் கலாம் . சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தலைக் கண்காணிப்பது முக்கியமான பொறுப்பாகின்றது. அதனைச் செயற்திறன் உடையதாக செய்வதில் திட்டமிடும் அலகு சீர்திருத்தங்கள் பற்றிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றதான முறையில் திட்டங்களாக வகுத்தல் முக்கியமாகின்றது. “நடைமுறைப்படுத்தும்” அலகு நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டினையும்,
117

Page 66
அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பின்னூட்டல் பற்றிய தீர்மானம் எடுப்பவர்கள் அறிந்து கொள்வதற்காக செய்வதும் தேவைப்படுகின்றது. சீர்திருத்த நடவடிக்கைகள் அமைப்புச்சார்ந்த மாற்றங்கள் தொடர்பான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை; இதில் குறிப்பாக வேலை ஒழுங்குகள், கடமைகள், தொழிற்பாடுகள் என்பவை வகுத்தொகுக்குதல், அவைபற்றிய விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவை சேருகின்றன. இவை எழுத்து மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ மட்டும் நிறைவேற்றபடக் கூடியவையல்ல. அமைப்பு சார்ந்த மாற்றம், மரபு, எண்ணப்பாங்குகள், பழக்கவழக்கங்கள், இருப்பு நிலைபேணப்படுவதில் உத்தியோகத்தர்களின் வேரூன்றிய நலன்கள், ஆகியவை பற்றிய உணர்வும் எண்ணமும் இருப்பது தேவையாகின்றது. இவ்விடயங்கள் தாமாகவே அறிவுறுத்தல்கள் விடுப்பதனால் தீர்ந்து கொள்பவை எனவும் எதிர்பார்க்க முடியாது. அவை ஒரு செயல்திறனுடைய பங்குகொள்ளும் முறைவழி மூலம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
மனிதவள அபிவிருத்தி என்பது ஆளணியினரின் பணிகளையும் பொறுப்புக்களையும் கையாளுவதற்கான பயிற்சியினை மட்டும் கருதுவதல்ல. அத்துடன் ஆளணியினரின், புறநிலைசார்ந்த செயலாற்றல், மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் என்பவற்றினுாடாக ஆளணியினரின் செயல்நோக்க நிலைப்பாடுகள் என்பவையும் இடம் பெறுகின்றன. பணிப் படையின் உறுப்பினர்களுக்குப் பயிற்சி, திசைமுகப்படுத்தல் தொடர்பாக தேவைப்படுகின்றது. இது அமைப்பு முறையான பொதுநிருவாகச் சீர்திருத்தம் பற்றிய ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டத்தினுாடாக ஒழுங்கு செய்யப்படுதல் வேண்டும்.
3.4 செயலாளரின் பங்களிப்பு
ஓர் அமைச்சின் செயலாளர் அல்லது மாகாண சபைப் பிரதம செயலாளர் ஆகியோர் பணிப் படைக்குத் தலைமை வகிப்போர் மட்டுமல்ல, அவர்கள் உயர்நிலையில் உள்ள அரசாங்க முகாமைத்துவ ஆளணியின் மெய்நடப்பு உறுப்பினர்களாக விளங்குகின்றனர். சில நாடுகளில், நியூசிலாந்து, நெதர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றில் சிரேட்ட முகாமைப் பிரிவினர் முறைப் படி குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரலுடன் நிறுவப்பட்டுள்ளன. செயலாளருடைய செயலாற்றல் திறமை, அவருடைய தகைமைகள், அர்ப்பணிப்பு, சுதந்திரமாக நடந்து கொள்ள முடிவது, ஆகியவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது; இது சீர்திருத்த முறைவழி குறித்து மிக முக்கியமாக இருப்பதுடன், அமைச்சின் (அல்லது மாகாண சபையினது) தொழிற்பாட்டில் மிக முக்கியமானது. ஆதலால் செயலாளரின் பங்களிப்பினை நோக்குவதும் அப்பின்னணியில், அவரின் செயற்திறனை மேம் படுத்துவதில் ஒரு நிருவாகச் சீர்திருத்தத் தொகுப்பினை வரைவதும் தேவைப்படுகின்றது.
18

6) Tita Lib (885 Toub (Peter E.Larson and Amanda Coe) "yggy' QFuusuT6m it குறித்து பின்வரும் அடிப்படை வகிபாகத்தினை இனங்கண்டு காட்டியுள்ளனர்; அவையாவன: (அ) அமைச்சருக்கான கொள் நெறி ஆலோசகர்; (ஆ) திணைக்களத் தலைவர்; (இ) பொதுச் சேவையின் உயர்நிலை முகாமை ஆளணி உறுப்பினர்.
அமைச்சரின் கொள்நெறி ஆலோசகராக, செயலாளர், புறநிலைத் தகவல், தரவுகள் ஆகியவற்றைத் தழுவி பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து அவை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தலும், ஒவ்வொரு வழிமுறையின் விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறுதலும் உள்ளடங்குகின்றன. இவ்விடயங்கள் தொடர்பாகச் செயலாளர் தம்முடைய தொழில்நுட்பம் சார்ந்த முகாமை, சட்டம், மற்றும் நிதி சம்பந்தமான அறிவுசார் நிலைப்பாடுகளைப் பயன்படுத்தும் பங்களிப்புடன், அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும் மாற்று வழிகளின் அரசியல் தாற்பரியங்களையும் எடுத்துக் கூறுவதும் இப்பங்களிப்பில் இடம்பெறுகின்றது. . அமைச்சர் செயலாளரின் ஆலோசனை மீது மட்டும் தங்கியிருப்பவரல்ல. அவருக்கு வேறு ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைப்பது வழக்கம். செயலாளர், ஆகவே, தனது தகைமையையும், ஆற்றலையும், திறமைகளை மேலும் வளர்ப்பது தேவையானதாகக் காணப்படுகின்றது. அத்துடன் அமைச்சின் நிருவாகத் தலைவர் என்ற முறையில் வேண்டிய தலைமையை வழங்கிச் செல்வதற்கும் தேவையாகின்றன.
செயலாளர், திணைக்களத் தலைவர் என்ற ரீதியில், அமைச்சரின் சார்பாக பிரதானமாகச் செய்யவேண்டியவை அமைச்சின் பணிகளை நெறிப்படுத்தல் மற்றும் முகாமைப்படுத்தல்; இதற்கு அலுவலகப் பணியாளர்களின் ஒத்துழைப்பினையும் நன்மதிப்பையும் பெறுவதும் தேவைப்படுகின்றது. லார்சனும் கோவும் (Larson & Coe) கூறுவது, அமைச்சரின் முன்னுரிமை ஒழுங்குகளுக்கு ஏற்றதாக செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்வது வேண்டப்படுகின்றது. அமைச்சரின், முன்னுரிமைகள், அவருடைய நெறிப்படுத்தலுக்கு இணங்கி அவருடைய நிருவாகம் சார்பான நலன்களுக்கு ஒத்திசைவாக நிருவாகத்தினைக் கொண்டு நடத்துவது செயலாளரின் பிரதான பொறுப்பாகின்றது. இடையிடையே “செயலாளரின் நிருவாகப் பொறுப்பில் உள்ளடங்குபவற்றில் சில விடயங்கள் தொடர்பாக செயலாளர் இணக்கமுடையவராக இல்லாதிருக்கலாம், அல்லது சில விடயங்களுக்கு முன்பு அவர் நிராகரிக்கும் ஆலோசனையும் எடுத்துக் கூறியதாகவும் இருக்கலாம். இப்படியான சந்தர்ப்பங்கள் செயலாளரை எதிர்நோக்குவது முன்பு கூறப்பட்ட "மோசடி அமைச்சர்” தொடர்பானதாக இருக்கலாம். “எப்படியிருப்பினும், ஒரு விசுவாசமுடைய அரசாங்க சேவையாளர் என்ற வகையில் (நிரந்தர) செயலாளர், சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்மட்ட அதிகாரத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை உண்டு; அவி வாறு உணர்ந்து, அவர் கொள் நெறிகளை முழுவதுமாக
119

Page 67
நடைமுறைப்படுத்துவது கடமையாகின்றது.” என்றாலும், அமைச்சர் “மோசடி’ தொடர்பாக செயலாளர் நடந்து கொள்வதில் முதலில் செய்ய வேண்டியது மந்திரியவர்களின் அரசாங்க கொள் நெறிகள் மற்றும் முன்னுரிமை நிலைப்பாடுகள் ஆகியவற்றில் காணப்படும் ஒவ்வாமைகளை எடுத்துக் கூறுதல் அவசியமாகின்றது; இது சரிவராவிட்டால், “சிவில் சேவையின் தலைவர் அவர்கள் அல்லது அமைச்சரவையின் செயலாளர் ஆகியோருடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.” அதில் ஒரு பிரச்சினை எழக்கூடும்; மந்திரி செயலாளருடைய ஆலோசனையைக் கேட்காமல் விடலாம் அல்லது அத்தகைய ஆலோசனை வழங்கியதால் செயலாளரைத் தண்டிக்கலாம். இச் சூழ்நிலையின் செயலாளர் செய்யக் கூடியது அவருடைய “சுயாதீனமான” நிலைப்பாட்டில் அதிகம் தங்கிருக்கும். தலைவர் அல்லது அரசின் தலைவர் (செயலாளர் நியமனங்களைச் செய்பவர்) ஆகியோருடமிருந்து செயலாளர் ஆலோசனை பெறலாம். இதுதான் இறுதியாகச் செயலாளர், “மோசடி மந்திரி” யின் நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான சட்டங்கள், ஒழுங்குகள் என்பவற்றை மீறுபவையாக இருக்குமானால், மேற்கொள்ளக் கூடியது. அரசாங்க முன்னுரிமைகள் ஒழுங்குபடுத்தல் தேவைகள் என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதாக இருக்குமானால் செயலாளரின் நிலை, “அவரும் சேர்ந்துள்ள சிரேட்ட முகாமைக் கூட்டுக் குழுவினரின்” செயற்திறன் என்பதால் நிர்ணயிக்கப்படும்.
3.5 முத்த முகாமை அணியினர்
அரசாங்கத்தின் மூத்த முகாமை அணியின் உறுப்பினராக இருக்கும் செயலாளர்கள் ஒவி வொரு வருடனும் சேர்நீது வேலை செய்வது எதிர்பார்க்கப்படுகின்றது; இதில் முக்கியமாக கூட்டுப் பொறுப்பில் கலந்து கொள்ளுதல் பொதுச்சேவை முழுவதையும் ஆளுகை செய்வதற்குத் தேவைப்படுகின்றது. இக் கூட்டுப் பொறுப்பு பற்றி நியூசிலாந்து அரச சேவைகள் ஆணையாளர் எல்லா பிரதம நிர்வாகிகளுக்கும் (நிரந்தர) செயலாளர்கள் வழங்கிய ஆலோசனையில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: “உங்களுக்கான பிரதான பங்களிப்பில், அரசாங்கத்தின் கூட்டு நலன் கவனிக்கப்படுவது உறுதிப் படுத்தல் வேண்டும் அத்துடன் , இது திணைக் களங்களின் நடவடிக்கையினால் மேலும் அதிகரிக்கப்படுகின்றது. திணைக்களங்கள் சரியாகவும் தேவையேற்படுவதனால், சில விடயங்களில் சிறப்புக் கவனமும் ஆற்றலும் கொண்டிருக்கின்றன; அவ்வாறு இருப்பினும், திணைக்களங்கள் அவற்றின் கொள்நெறி ஆலோசனை, திட்டம் ஆகியவற்றினை அரசாங்க தந்திரோபாயப் பின்னணியில் நோக்குதல் பொருத்தமானது.” மஸ்கறினாஸ் (Mascarenhas) என்பவரும் அத்தகைய கருத்தையே கொண்டிருப்பினும், அவர் சேவையின் தரம் திறமை நிலை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
120

வணசிங்கா குழு முறையான ஒரு சிரேஷ்ட முகாமைத்துவ பிரிவினை நிறுவுவதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இவ்வாறு வலியுறுத்தியதற்கேற்ப, பின்வரும் அம்சங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன: பொதுச் சேவைக்கு உடனடியாகத் தேவைப் படுவது சேவை வழங்கலில் ஒரு தரமான தலைமைத்துவம் , இத் தலைமை அரசாங்க சேவை முழுவதையும் சட்டவாக்கத்துறை மற்றும் அரசியல் - நிருவாகத்துறை ஆகியவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்தும்; முழு அரசாங்கசேவைக்கும் தொனியளிப்பது; அத்துடன் பொதுத் துறைச் சேவையின் பெறுமான அமைப்பிற்கு ஒரு பாதுகாவலராக இருப்பது. 1988 இல் வணசிங்கா குழு அத்தகைய ஒரு சேவையினை உடனே நிறுவப்படுவது பொருத்தமானது எனக் கருதியது. அக்காலந்தொட்டு, அரசாங்க சேவை பற்றிய பொதுவான எண்ணப்பாங்கு, அரசாங்க சேவையின் தரம், அரசியல் தலையீடு இல்லாமல் வேலைசெய்யும் ஆற்றல் மேலும் குறைந்து விட்டது என்பதைப் பிரதிபலித்துள்ளது.
வணசிங்கா குழு, சிரேஷ்ட முகாமைத்துப் பிரிவு என்பது பற்றிக் கூறிய பொழுது, அத்தகைய பிரிவுக்கு, நிருவாக அமைப்பில் உயர் பதவி வகிப்பதால் அதுவே உறுப்பினராகச் சேர்க்கப்படும் தகுதியினை வழங்குவது எனக் கருதவில்லை. குழுவினர் கருத்துப்படி, திறமை, ஆற்றல் என்பவற்றினடிப்படையில் உறுப் பினராக வரக் கூடியவர்களைத் தேடும் முறை வழியரினை வலியுறுத்தியுள்ளது. உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள், கொள்நெறி முகாமைத்துவம் ஆற்றலை வெளிக் காட்டியவர்கள், நெருக்கடிகளை எதிர்பார்ப்பவர்கள், அதனை கட்டுப்படுத்துபவர்கள், மற்றும் தலைமைத்துவப் பணி புகளைக் கொணி டவர்கள் என்பவை போன்ற தகைமைகளை உடையவர்களாகக் கருதப்பட்டது. இத்தகைய பண்புகளை, அமைச்சுக்களின் பணிப் படையினரிடம், நிருவாகச் சீர்திருத்தம் பற்றி வழிவகுப்பதற்கு ஊக்குவிப்பினை விளைவிப்பதற்கானவை என எதிர்பார்க்கப்பட்டது. நிருவாகச் சீர்திருத்தம் வெற்றியளிப்பதாக இருக்க வேண்டுமானால், ஒரு மூத்த முகாமைத்துவப் பிரிவினை நிறுவுதலும் அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளையும் வழங்குவதும் அவசியமானவையாகக் கருதப்பட்டது. அதில், பொருளாதார சார்பான ஆய்வு, சிறந்த முகாமைத்துவ வழக்கங்கள் என்பவற்றை விட உலகமயமாக்கல் முறைவழிபற்றிய ஒரு பூரணமான புரிந்துணர்வும் தேவைப் படுகின்றது. லார்சனும் கோவும் (Larson & Coe) அத்தகைய பயிற்சிக்கான தேவை இருப்பதையும் நோக்கியுள்ளனர். சிரேஷ்ட அரசாங்க சேவையினரும் செயலாளர்களும் அதில் அடங்குவர், சர்வதேச விதிகளை ஆக்குகின்ற நிறுவனங்களாகிய உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) Frio (353 BIT600Tu 5guib (International Monetary Fund) மற்றும் உலக வங்கி (The World Bank), பிரதேச வர்த்தகக் கூட்டுக்கள் ஆகியவற்றுடன் மூத்த அரசாங்க சேவையினர் தொடர்புகளை ஏற்படுத்துதல்
121

Page 68
பயனளிக்கும். உலகமயமாக்கல் விரைவாக ஏற்பட்டுச் செல்லும் சூழ்நிலையில், கொள்நெறி வகுப்பதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கும் மூத்த அரசாங்க சேவையினர் சர்வதேச நிறுவனங்கள், பிரதேச வர்த்தக கூட்டுக்கள் ஆகியவை பற்றிய நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்களாக இருப்பதும் தேவைப்படுகின்றது.
3.6 அமைச்சரவை அமைப்புகள்
பொது நிர்வாகச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளுமிடத்தில், அமைச்சுக்களின் அடுத்தடுத்த பெருக்கத்தினையும், கூறுகள் அதிகரிப்பதனையும் கட்டுப்படுத்தல் அவசியம். இத்தகைய எண்ணிக்கை அதிகரிப்பதனால், அமைச்சரவைக் கூட்டங்களில் அர்த்தமுடைய உரையாடல் ஏற்படுவது கஷ்டமாவதுடன், நல்ல வகையாக துறைகளுக்கிடையேயான ஒழுங்குப்படுத்தலும் தடைபடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டாலும் கிடைக்கக்கூடிய பயன் குறைவாக ஏற்படலாம். அமைச்சரவையில் செய்யப்படும் நியமனங்கள், அவர்களின் தெரிவு ஆகியவை, இலங்கையின் இன்றைய சூழ்நிலையில், அரசியல் ரீதியான சக்திகளின் செல்வாக்கினை அரசாங்கத்திற்குள்ளேயும், கூட்டமைப்புக் கட்சிகளுக்குள்ளேயும் பிரதிபலிக்கின்றது. இன்றைய நிலையிலுள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கையினைப் பெரிதாகக் குறைப்பதற்கு அரசியல் தலைமைக்கு அதிகமான துணிவும் மன உறுதியும் தேவைப்படும். இதற்கு ஒரு வழியாக, பல அமைச்சரவை உபகுழுக்களை, துறைகள் ரீதியான ஒழுங்குபடுத்தலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நிறுவப்படுதல் பொருத்தமாகும். பின்வருவன அமைச்சுக்களை இயலுமான ஒரு கொத்தாகப் பாகுபடுத்துகின்றது:-
(1) விவசாயம், நிலம், நீர்ப்பாசனம், கிராமிய கைத்தொழில்கள், காட்டுவளம்
மற்றும் சுற்றுப்புறச்சூழல் (2) கைத்தொழில், மீன்பிடித்தொழில், நிதி, வர்த்தகமும் சேவைகளும்,
உல்லாசத்துறை உள்ளடங்கியதாக (3) உட்கட்டுமானம் - பாதைகள், பெருந்தெருக்கள், போக்குவரவு, மின்சக்தி
மற்றும் வலுவும் தொலைத்தொடர்புகளும் (4) கல்வி, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், பண்பாடு அலுவல்களும் மற்றும்
விளையாட்டும் (5) சுகாதாரம், சமூகநலன், சிறுவர்கள் மற்றும் பெண்கள் அலுவல்கள் (6) வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது
நிருவாகம், மாகாணச் சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள்
122

மேலே தரப்பட்ட பாகுபடுத்தலுக்கு அமைய அமைச்சரவையின் பருமனை 25 - 26 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தக் கூடியதாகச் செய்யலாம். எப்படியாயினும், உண்மையான அளவு அரசியல் காரணிகளால் நிர்ணயிக்கப்படலாம். மேலும், அமைச்சுக்களின் தொழிற்பாடுகள், அமைச்சரவையின் தனித்தனி உறுப்பினர்களின் அரசியல் மதிப்பீட்டடிப்படை மற்றும் அவர்களின் ஆற்றல்கள் என்பவற்றைத் தழுவி பிரிக்கப்படுவதுமுண்டு. எவ்வாறாயினும், கொள்நெறி ஒழுங்கு செய்தல் நோக்கில், மேல் குறிப்பிட்ட பிரிவுகளுக்கமைய அமைச்சுப் பதவிகளைத் தீர்மானித்தல் இயலுமானது. இது செய்யத்தக்கதுடன் துறைசார்ந்த ஒழுங்கு செய்தலுக்குப் பொருத்தமானது. அரசியல் ரீதியாக மேலதிகமாக அமைச்சுப் பதவிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமானால், துறைசார் ஒழுங்கு செய்தலுக்குப் பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் கூடுதலாக துணை அமைச்சுக்களை, அமைச்சரவை அந்தஸ்த் துடைய அமைச்சுக்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டுத் தொழிற்படுவதற்கு நியமிக்கப்படலாம். மேலே காட்டப்பட்டுள்ள அமைச்சுக்களின் கொத்துக்களின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதிகரித்துக் கொள்ளலாம்; இதுவும் அரசியல் ரீதியான சாத்தியப்பாட்டில் தங்கியுள்ளது. எப்படியாயினும், துறைசார்ந்த பாகுபடுத்தல் முறை சிறந்த கொள்நெறி ஒழுங்குபடுத்தலுக்கு மிக முக்கியமானது,
3.7 செயலாற்றல் மதிப்பீடு
நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக, அரசாங்க சேவையாளருக்கு நிர்வாகத்தில் நன்று பங்கெடுத்துக் கொள்வதற்கான செயல் நோக்கமளிக்கும் வகையில் முன்னுரிமை வழங்கி உள்ளடக்கப்படும் ஒரு பொருத்தமான செயலாற்றல் மதிப்பீட்டு முறை முக்கியமாகின்றது; இச்செயலாற்றல் மதிப்பீடு அவர்களின் எதிர்காலப் பதவி வாய்ப்புகள் மற்றும் வேறுவிதமான ஊக்குவிப்புகள் ஆகியவற்றைக் கொண்டதாக இருப்பதும் அவசியம். செயற்திறன் வாய்ந்ததாக இருப்பதற்கு மதிப்பீட்டு முறை உள்ளிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறையினை நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் கொண்டிருத்தல் வேண்டும். முன்னர் இவை தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் பல காரணங்களுக்காக பயனளிக்கவில்லை. இக்காரணங்கள் பின்வருமாறு: (அ) தனிப்பட்ட உத்தியோகத்தர்களின் பணிகள் தொடர்பாக நோக்கங்களையும் குறிக்கோள்களையும் வரைவிலக்கணப்படுத்த முடியவில்லை (ஆ) மேற்பார்வை செய்பவர்கள் கீழேயுள்ள பணியாளர்கள் செய்யும் வேலைபற்றிப் புறநிலையான மதிப்பீட்டை செய்வதில் விருப்பமின்மை (இ) மதிப்பீடு செய்வது பற்றிய தெளிவான வழிகாட்டல்கள் இல்லாமை.
சேவையிலுள்ளவர்களின் எதிர்கால பதவிவாய்ப்புகள் மற்றும் வேறு செயலூக்க முயற்சிகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு புறநிலை
123

Page 69
மதிப்பீட்டுமுறை பயிற்சித்திட்டங்களைக் கவர்ச்சியுடைதாக்கும். இவற்றைக் கருதி பொருத்தமான பயிற்சி பெறுவதனை ஒரு முக்கியமான செயல் நிறைவேற்றல் குறிகாட்டியாகக் கருதப்படுதல் வேண்டும். எப்படியிருப்பினும், இதற்கு அர்த்தமூட்டுவதற்கு, அரசாங்கம் ஒரு தேசிய மட்டத்திலான அரசாங்க சேவை பயிற்சிக் கொள்நெறி வகுத்தலும் அதனை பொது நிருவாகத்தின் வெவ்வேறு மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதும் மேற்கொள்ளுதல் வேண்டும். தேசிய பயிற்சிக் கொள்நெறி அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அது அரசாங்கம் எல்லாப் பயிற்சித் திட்டங்களுக்கும் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும். பயிற்சி முயற்சிகளுக்கு வலுவூட்டுவதற்கு எல்லா நிருவாக அலகுகளும் “கற்றல் நிறுவனங்கள்’ என்ற கோட்பாட்டுநிலைக்குச் செல்வதை ஊக்கப்படுத்தலும் தேவைப்படும். இக் கோட்பாட்டுக்கமைய, ஒவ்வொரு அலகின் தலைவர், பயிற்சிக்குப் பொறுப்பினை ஏற்று அதற்காக அதனை நேரடியாக தம்முடைய கண்காணிப்பில் கொண்டு வருவதுடன், தேவைப்படும் தலைமைத்துவம் என்பதையும் ஈடுபடுத்தலுTடாக வழங்குகின்றார். இவ்வேற்பாடுகளுக்கமைய, திணைக் களங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் தாமும் ஒரே நேரத்தில் அறிவுரையூட்டுபவர்களாகவும் கற்றலில் ஈடுபடுவோர்களாகவும் காணப்படுகின்றனர். பயிற்சி பற்றிய அணுகுமுறை தனியே திறன்களைப் பெறுவது என்பதுடன் நிற்காமல், அது மனப்பாங்கு சார்ந்த மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்தினையும் குறிப்பிடுகின்றது. இது, அரசாங்க சேவையாளர்கள், முறைவழி முகாமையாளர்கள் என்ற பங்களிப்பினைவிட பெறுபேறுகள் கிடைக்கச் செய்பவர்களாக நிலைமாற்றத்தினை அடைவதும் மிக முக்கியமாகின்றது.
தொகுத்து கூறுமிடத்து, இலங்கையினை இன்று எதிர்நோக்கும் அபிவிருத்தியின் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு, ஒரு விரிவான, இணக்கப்பாடுடைய, நன்கு திட்டமிடப்பட்ட நிருவாக சீர்திருத்த முறைவழி உடனே தேவைப்படுகின்றது. இதனுடைய நிரலொழுங்கு, காலத்திட்ட அமைவு ஆகியவை இன்றியமையா அம்சங்களாகின்றன. சீர்திருத்த முறைவழிக்கு ஒர் உந்து சக்தியும் தேவைப் படுகின்றது. மேலும் அடிப்படையான முன் நிபந்தனையாக, தொடர்ச்சியான இணக்கப்பாடுடைய சீர்திருத்தத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய திடமான முடிவும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றன. முன்பு கூறப்பட்டுள்ளது போல, அத்தகைய ஒரு விருப்பாணை எப்பொழுதும், சர்வதேச மட்டத்திலும் கூட கண்டுகொள்வது பிரச்சினைக்குரியது. இலங்கையில் சென்றகாலத்தில் நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக அதன் தேவைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருந்ததில்லை; இவை தொடர்பாக, பல நல்ல நோக்கங்களைக் கொண்டிருந்தது. எப்படியாயினும், இவை தொடர்பான இணக்கப்பாடு போதுமானதாக இருக்கவில்லை. மற்றைய நாடுகளில்
124

அவதானித்தது போல அத்தகைய திடமான இணக்கப்பாடு போதியளவு அழுத்தம் பெறுவது அவசியம். இது குறிப்பாக சிவில் சமூகத்திடமிருந்து வருவது எதிர்பார்க்கப்படலாம்.
ഗ്ര ഖുഞ]്
அநேகமான நாடுகள், அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள், நிருவாகச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்திய முயற்சிகளை அண்மைக் காலங்களில் எடுத்துள்ளன. இது முக்கியமாக அரசாங்க பங்களிப்பு பற்றிய கருத்தோட்ட அணுகுமுறையின் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ளது. வெபரின் பணிக்குழுவாட்சி மாதிரியம், விதிகள், அதிகாரத்தினூடாக கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தியது. இவை, அரசாங்க பங்களிப்பு தனியார்துறைக்குத் துணை தந்து ஊக்குவித்தல் என்ற விதத்தில் அமையுமிடத்தில் வெபரின் பணிக்குழு ஆட்சிக் கண்ணோட்டம் பொருத்தமில்லாதது. புதிய அணுகுமுறையில், அரசாங்கம் அது எவற்றைத் திறமையாகச் செய்ய முடியுமோ அவை மீது கவனம் செலுத்துதல் சிறந்தது. ஒஸ்போர்ன், கேபிளர் ஆகியோர் தம்முடைய “அரசாங்கத்தை மீள்கண்டுபிடித்தல்” (Reinventing Government) என்ற நுாலில் பயன்படுத்திய மேற்கொள்ளத்தக்க மெய்யுரை பின்வருமாறு: “அரசாங்கம் செய்யவேண்டியது தண்டு வலிப்பதல்ல, வழிச்செலுத்துகையே”. ஆகவே, பொதுநிருவாகம், செயலூக்கமுடையதாக இருத்தல், பெறுபேறுகளைச் சார்ந்திருத்தல், திறமையானதாக இருத்தல், போட்டித் திறன் கொண்டது ஆகிய இயல்புகளைப் பிரதிபலித்தல் அவசியம். சுருக்கமாகக் கூறுமிடத்தில் நல்ல ஆட்சியின் மிகச் சிறந்த பண்புகளைப் பிரதிபலித்தல் வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பின்னர் (1948) பல தடவைகள் நிருவாகச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; ஆனால் இது எப்பொழுதும் தனித்தனியே அல்லது உடனுக்குடன் தேவை கருதிச் செய்யப்பட்டவையாக இருந்தன. 1977 இல் ஒரு முக்கியமான மாற்றம் அபிவிருத்திக் கொள்நெறியில் ஏற்பட்டது. அதற்குப்பின், அரசாங்கங்கள் சந்தை - சார்ந்த பொருளாதாரக் கொள் நெறிகளைப் பின்பற்றியுள்ளன. அதில் தனியார் துறை பிரதான பங்களிப்பினைச் செய்வது எதிர்பார்க் கப்பட்டது. அரசாங்கத்தின் பங்களிப்பு, தனியார் துறை நடவடிக்கைகளுக்குத் துணைகொடுத்து மேம்படுத்துதல் எனக் கருதப்பட்டது; அதேநேரத்தில் அரசாங்கம் முக்கியமான உட்கட்டுமான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பொறுப்பு வகித்தது; இதில், கொள்நெறி சார்பாக எப்பொழுதும் இணக்கப்பாடு இருக்கவில்லை. பொது நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வணசிங்கா குழு அத்தகைய ஒரு பார்வையினை வெளிப்படுத்தியது. அதனுடைய பரிந்துரைகள் விரிவானவை, எதிர்கால நோக்குடையவை என்பதுடன் புதிய அபிவிருத்திக் கொள்நெறியின்
125

Page 70
தேவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது. சிறிது சிறிதாக சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்வதனை இக் குழு விரும்பவில்லை. ஆனால், அவ்வாறே சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வணசிங்கா குழுவின் பரிந்துரைகள் பலமுறை நடைமுறைப்படுத்த முயற்சித்த பொழுதும் அவை செயற்திறன் வாய்ந்தவையாக இருக்கவில் லை. அத்துடன் அவை எதிர்மாறான விளைவுகளையும் ஏற்படுத்தின. ஒரு பிரதான குறைபாடு இம்முயற்சிகள் தொடர்பாக எதிர்நோக்கப்பட்டது. அதாவது, மையப்படுத்திய, சீர்திருத்தங்களைத் திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் கொண்ட நிறுவனம் ஒன்று இருக்கவில்லை.
இலங்கை இன்று அபிவிருத்தி தொடர்பாக புதிய சவால்களை எதிர்நோக்குகின்றது. அரசாங்கம் இவற்றை பின்வருமாறு தெளிவாக்கியுள்ளது: இனத்துவ மோதலைத் தீர்த்தல், பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தி வறுமை நிலையினைக் குறைத்தல், சனநாயகத்தைப் பலப்படுத்துதல். எல்லாச் சவால்கள் தொடர்பாக செயற்திறன் வாய்ந்த கொள் நெறி வகுத்தல் அரசாங்கத்திடமிருந்து தேவைப்படுகின்றது. பொது நிருவாக அமைப்பிற்கும், இக் கொள் நெறிகளைப் பெறுபேறுகளாக மாற்றுவதற்கு முக்கியமான பங்களிப்புண்டு. எவ்வாறாயினும், தற்பொழுது உள்ள அமைப்பு அதனுடைய எதிர்பார்க்கும் பங்களிப்பு குறித்தும், தேவைப்படும் நிருவாகப் பொறுப்புகள் சார்பாகவும் செயலாற்றல் குறைந்ததாகவே கணிக்கப்படுகின்றது. ஆகவே, உடனடியாக நாட்டின் பொது நிருவாகம் தொடர்பான பல்வேறு விடயங்கள் நோக்கிய செயற்திறன் அதிகரிக்கும் அம்சங்கள் பற்றி முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இவை குறித்து வணசிங்கா குழுவினது பரிந்துரைகளும் அவை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் பல படிப்பினைகளைத் தர முடியும்.
இன்றைய அரசாங்கமும் அதற்கு முன்பிருந்த அரசாங்களும், நாட்டின் பொது நிருவாக அமைப் பினை பலப் படுத் துமி தேவைபற்றி உணராமலிருக்கவில்லை. பொதுநிருவாகச் சீர்திருத்தம் பற்றிய ஓர் உயர்மட்டக் குழு பிரதம மந்திரியின் கண்காணிப்பின் கீழ், நாட்டின் அபிவிருத்தித் தேவைகள் குறித்து நிருவாக அமைப்பு முகம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று கொண்டு செல்லுதல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அத்தகைய ஓர் உயர்மட்டக் குழு இதுவே முதல் முறையாக நியமிக்கப்பட்டதல்ல. இப்பின்னணியில், முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் குறைபாடுகளிலிருந்து அறிய வேண்டியவையும் பல உண்டு. அவை பற்றி அறிவது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு உதவியாக இருக்கும்.
நிருவாகச் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்படும் குழு, மிக உயர்மட்ட அதிகாரியின் கண்காணிப்பில் இருப்பினும், அது ஒர் ஆலோசனை மட்டத்திலான பங்களிப்பை மட்டும் வழங்கலாம். ஆதலால், ஒரு மத்திய நிறுவன அமைப்பு
126

;ரு முக்கிய உந்து சக்தியாக இருப்பது அதனுடைய ஆலோசனை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தலாம். வணசிங்கா குழு இத்தகைய தேவையை உணர்ந்து பொதுச்சேவை அமைச்சு ஒன்றினை நிறுவுவது பற்றி சிபார்சு செய்தது. இன்று பொதுநிருவாகம், முகாமை மற்றும் சீர்திருத்த (Ministry of Public Administration, Management & Reform) 360 LD53, 96.70 gurial வருகின்றது. வணசிங்கா குழு எதிர்பார்த்தது போல, அது சிரேஷ்ட மற்றும் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களைக் கொண்டு இயங்குகின்றதா என்பது தெரியவில்லை. மேலும் வணசிங்கா குழு, ஓர் அமைச்சு நிறுவப்படுவது காலதாமதம் கொண்டதாக இருப்பதால், அதன் கண்காணிப்பில் ஒரு செயலகம் அமைக்கப்படுவதையும் சிபார்சு செய்தது. இன்றைய நிருவாகச் சீர்திருத்தக் குழு ஒரு செயலகத்தையும் அமைத்துள்ளது. இச் செயலகம் தொடர்பாக, பொது நிருவாக அமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அதனுடைய அதிகார வரம்புகளை வரைவிலக்கணப்படுத்துதலும் தேவைப்படுகின்றது. இறுதியாக நோக்குமிடத்து, பெறுபேறுகள் அதிகளவுக்கு தனிப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிருவாக அலகுகள் ஆகியவற்றின் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு நடத்தும் ஆற்றலைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். நிருவாகச் சீர்திருத்தங்களின் தன்மை தனியே நிருவாகச் சுற்றறிக்கைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட முடிந்தவையல்ல; அரசாங்க சேவையினரின் செயலூக்கம் கொண்ட பங்குகொள்ளுதல் இதற்குத் தேவைப்படுகின்றது. அத்தகைய பங்கேற்றலை அதிகரிப்பதற்கும் , சீர்திருத்தங்களுக்குச் சரியான உள்ளடக்கத்தையும் நெறிப்படுத்தலையும் கொடுப்பதற்கு, குறைந்தது ஒவ்வொரு அமைச்சிலும் மாகாண சபையிலும் ஓர் இடுபணிப் படையினை, செயலாளரின் அல்லது பிரதம செயலாளரின் தலைமையின் கீழ் நிறுவுதல் தேவைப்படுகின்றது. தகைமை வாய்ந்த உத்தியோகத்தர்களின் அணியொன்று திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல், அமைப்பு ரீதியான மாற்றம் மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பொறுப்பினை பகிர்ந்து கிொள்வதற்கு நியமிக்கப்பட்டுச் செயலாளர்களுக்கு (பிரதம செயலாளர்கள்) உதவியினை வழங்கும் பணியும் சேருகின்றது. இவ்வணியினரின் செயல்முறை “கற்றல் நிறுவனம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எல்லா இலக்குப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக, வகுக்கப்படுதல் பொருத்தமாகும்.
சீர்திருத்தங்கள் பற்றிய வெற்றி அவற்றின் நிரலொழுங்கிலும், காலத்திட்ட தீர்மானத்திலும் தங்கியுள்ளது; அதனால் ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கையும், அதற்கு முன்னராக மேற்கொள்ளப்படுவதனால், இலகுவாக்கப்படுகின்றது. முதலாவதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஒப்பீட்டு ரீதியில் இலகுவானது, ஏற்புடைமை ஆதரவு கிடைத்தல் தொடர்பாக, நம்பிக்கையினைக் கட்டியெழுப்புகின்றது; தொடர்ந்து வருகின்றவற்றையும் எதிர்பாக்கப்படுகின்றது. முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கொண்டு வரப்படுவதும் வரவேற்கத்தக்கது. இவை அரசாங்க சேவையாளர்களில் பெரும்பான்மையினருக்கு, எதிர்கால பதவி
127

Page 71
முன்னேற்றங்கள், வாய்ப்புகள் ஆகியவை பற்றி நன்மை தரக்கூடியவையாகக் கருதப்படும். அரசாங்க சேவையாளர்களுக்கு இவ்வகையில் செயல்நோக்க ஊக்குவிப்பளித்தல், கூட்டுத் தொடர்புகளை வலுவூட்டுகின்றது. இக் கூட்டுச் சேரும் விளைவுகள் சீர்திருத்தங்கள் வெற்றியடைவதில் மிகவும் முக்கியமானவை. சனநாயக அரசாங்கங்கள் குறுங்கால தேர்தல் நோக்குடையதாக இருப்பதும் பொதுவாக நீண்டகால நோக்குகள், குறுங்கால அரசியல் நீடிப்புக்கான தேவைகள் ஆகியவற்றிடையே அரசாங்கங்கள் சிக் குண்டு இருக்கும் அனுபவங்களும் உண்டு. இப்பின்னணியில் நீண்டகால முதிர்ச்சியுடைய திட்டங்கள், நிருவாகச் சீர்திருத்தப் பொதிகள் போன்றவை பொதுவாகப் பின்தள்ளப்படுவதுண்டு. அவை வெளியே இருந்து வரும் அழுத்தங்களினால் தொடர்ந்து செல்லுகின்றன. நிருவாகச் சீர்திருத்தங்கள் அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படும் பொழுது, அவை குறித்து அர்ப்பணிப்புடையதாகவும், இணக்கப்பாடுடையதாகவும் இருப்பது அவசியம். முன்பு குறிப்பிட்டது போல, தொடர்ந்து தனியார் துறையினரிடமிருந்தும், சிவில் சமூகத்தினரிடமிருந்தும் அழுத்தங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பான இணக்கமான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு, முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
உசாத் துணைகள்:
1. Regaining Sri Lanka: Vision & Strategy for accelerated Development,
Government of Sri Lanka, 2002. 2. Wijeweera, B. S., A Colonial Administrative System in Transition. Marga,
1988; and Nadarajah, S., Evolution of Administrative System in M. Somasundram. (Ed.), The Third Wave, 1997.
3. The Senior Management Group, Report No.3 of Admiristrative Reforms
Committee, May 1988, Sessional Paper, Vol. VIII, 1998.
4. Government of Sri Lanka, Sessional Papers Nos. VIII - 1987. VIII- 1988,
- VI- 1987, I- 1988, III - 1988, III - 1988, XI - 1988, and XIII 1988.
5. Peter E. Larson & Amanda Coe, Managing Change, The Evolving Role
of Top Public Servants, Commonwealth Secretariat, 1999.
6. Parliament of the Democratic Socialist Republic of Sri LankaSeventeenth Amendment to the Constitution, Department of Government Printing, 2001.
7. Owen. E. Hughes, Public Management & Administration: An
Introduction. Macmillan, 1988.
8. Mascarenhas, R.C., The New Zealand Civil Service, Conference Papers,
Civil Service Systems in Comparative Perspective. Indiana University.
128

10,
il.
2.
13.
14.
15.
16.
17,
David Osborne & Ted Gaebler, Reinventing Government, Penguin, 1993.
Allen Schik, Why Most Developing Countries should not try New
Zealand Reforms, The World Bank Research Observer, Vol. 13, No. 1, 1998. Ian Marsh, Jean Blondel, and Takashi Inoguchi, (ed.), Democracy, Governance, and Economic Performance. United Nations University Press, 1999. Human development Report, 2002, UNDP, NewYork. UNDP and Governance Experiences and Lessons Learned. Lessons Learned Series, No. 1.G.http://Magnet.undp.org/doc/gov/lessons/.htm William Plowden and Alex Matheson, Strengthening Cabinet decision making in commonwealth countries, Commonwealth Secretariat, 1999. Amartya Sen, On social Exclusion or Inclusion. Development Challenges for Asia and Europe. ADB 2000. A Corruption and Good Governance. UNDP-MPGD, Discussion Paper, No. 3, Oct. 1999. Salvatore Schiavo-Camp, Guille de Tommaso & Anitabha Mukerjee, Government Employment and Pay in Global Perspective, Technical Department for Europe, Central Asia, Middle East and North Anherica, World Bank.
129

Page 72
அத்தியாயம் 4
நிதித்துறைச் சீர்திருத்தங்கள்
ஷாணக்க ஜெயநாத் பீரிஸ்
1. முன்னுரை
1977ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கைப் பொருளாதாரத்தில் நாணயமாற்று மற்றும் வர்த்தக அமைப்பு, நிதித்துறை, வளங்களின் ஒதுக்கீடு மற்றும் விலைகள் நிர்ணயிப்பு ஆகியவற்றின் மீது கடுமையான நிருவாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றின் விளைவாக பொருளாதாரம் மந்த நிலையான வளர்ச்சியினை அடைந்தது.
1977ஆம் ஆண்டில் புதிய ஒரு அரசாங்கம் பதவியேற்றது. இது இலங்கையின் கொள்நெறிகள் தொடர்பாக ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தியது. புதிய அரசாங்கம் ஒரு சந்தை சார்பானதும் ஏற்றுமதி சார்பானதுமான வளர்ச்சி உபாயத்தினை நோக்கமாகக் கொண்டது. 1977இல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட (முதலாவது கட்டம்) தாராண்மைப் பொருளாதாரத் திட்டம் முக்கியமாக வலியுறுத்தியவை பின்வருமாறு: வெளிநாட்டு வர்த்தகம், அன்னியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்; விலைக் கட்டுப்பாடுகள் அநேகமானவை நீக்கப்படுதல்; இறைச் சீர்திருத்தங்கள்; மற்றும் நிதித்துறையின் தாராளமயப்படுத்தல். பொதுவாக நம்பப்பட்டது எதுவென்றால், அமைப்புச் சார்பான சீரமைப்புகள் ஒரு நிலையான தொடர்ச்சியான வளர்ச்சியினைக் கொண்டு வரும், பணவீக்கம் குறைக்கப்படும் மற்றும் ஒரு உறுதியான சென்மதி நிலுவை ஏற்படும் என்பதே. பொதுவாக மேற்கொள்ளப்பட்ட நிதித் தாராளமயப்படுத்தலின் குறிக்கோள்கள் சந்தை சக்திகளின் மீது கூடுதலாக தங்கியிருத்தல் பொருளாதார நடவடிக்கைகளின் திறமையினை அதிகரிக்கும் என்பதுடன், நாணயக் கொள்நெறியின் செயற்பாட்டையும் மேம்படுத்தும் எனவும் கருதப்பட்டது. பிரதான சீர்திருத்தங்கள் பின்வரும் நோக்கங்களைக் குறித்து மேற்கொள்ளப்பட்டன: வட்டிவீதங்களைத் தாராளமயப்படுத்தல்; கொடுகடன் மீதான கட்டுப்பாடுகளைக் குறைத்தல்; நிதி அமைப்பில் போட்டியையும் திறமையையும் அதிகரித்தல்; மேற்பார்வை ஒழுங்குகளைப் பலப்படுத்துதல்; நிதிச்சந்தைகளின் வளர்ச்சியினை மேம்படுத்துவதுடன் அவற்றை ஆழமிகையாக்குதல். உள்நாட்டு நிதி அமைப்பின் தாராளமயமாக்கலுடன் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள், வரம்புகள் தளர்த்தப்பட்டன. அத்துடன் கூடுதலான நெகிழ்வுத்தன்மையுடைய அந்நியச் செலாவணி ஒழுங்குகளும் அமுலுக்கு
130

வந்தன. சந்தைகளின் சக்திகளின் மீது அதிகளவுக்கு நம்பியிருந்த அடிப்படையில் பணக் கொள் நெறியும் செயற்திறன் முன்னேற்றமடைய செய்தலும் எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக நிதித் தாராளமயப்படுத்தல் படிப்படியாகவே மேற் கொள் ளப் பட்டது; முனி னேற்ற வளர் ச் சிகி கட்டங் களாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனாலும், துண்டுதுண்டாக வெவ்வேறாக்கிச் செய்யப்படாமல் ஒரு தொடர்ச்சியான முறைவழியாகவே நோக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதார தாராளமயமாக் கலைத் தொடர்ந்து பொருளாதாரம் தொடக்கக் காலகட்டத்தில் மெய்யான வளர்ச்சி, முதலீடு, மற்றும் நிதிச் சேமிப்புகள் ஆகியவை உயர்வடைந்தன. ஆனாலும் உள்நாட்டுச் சேமிப்புகள், கணிசமான அளவு முதலீட்டின் உயர்வுக்கேற்றவாறு அதிகரிக்கவில்லை; மெய் நுகர்வின் அதிகரிப்பும் சென்மதி நிலுவையின் குறைந்த நிலைக்குக் காரணமாக இருந்துள்ளது. இச்சூழ்நிலையில், சரிப்படுத்தும் முயற்சி மேலும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு உயர்வினைக் கொண்டு வந்தது. வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை கூடியளவுக்கு வெளிநாட்டு மூலாதாரங்களின் வழியாகவும் மற்றும் நிதி அமைப்பிலிருந்து உள்நாட்டுக் கடன் பெறுகையினாலும் நிதிப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல் நோக்கத்துடன் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன; அதனால் பொருளாதாரத்தில் அதிகளவு பேரின உறுதியற்ற நிலை அனுபவிக்கப்பட்டது (1980-85). எப்படியாயினும், பணவீக்க வீதம் ஒப்பீட்டளவில் 1985-87 காலத்தில் குறைந்து காணப்பட்டது; அதிகளவு வரவுசெலவு திட்டத்தில் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத அளவாகக் காணப்பட்ட பொழுதிலும் பணவீக்கம் குறைந்திருந்தது.
உறுதிப்படுத்தல் மற்றும் சரிப்படுத்தல் முயற்சிகள் 1988இல் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் அவை உள்நாட்டுக் குழப்பநிலைகளினால் சீர்குலைந்தன; இது கேள்வி அழுத்தங்களையும் 4 தூண்டியது. இறை சார்பான நிலை மோசமடைந்தது; அதனால் பணப்பெருக்கத்தில் உயர்வும், பணவீக்க அதிகரிப்பும் ஏற்பட்டன.
பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றத்தைக் காட்டியது. மெய் உள்நாட்டு உற்பத்தி வீதம் 1990-1993 காலப்பகுதியில் 5.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. இப்போக்குக்குப் பின்னணியாக இருந்தது 1990களின் முற்பகுதியில் செய்யப்பட்ட அதிகளவு அமைப்புச் சார்பான சீர்திருத்தங்கள் (தாராளமயமாக்கலின் இரண்டாவது கட்டம்). இவை சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிகப்படுத்திய 2960LDL fgust 60T 3 foldug,6) (Enhanced structural adjustment facility of the International Monetary Fund) 63 guigi ap uu6truG55 (3LDsbGasTeirs Tullot. இதில் இடம் பெற்ற பிரதான குறிக்கோள்கள் பின்வருமாறு: அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தின் சீரமைப்பு, தனியார்மயப்படுத்தலை விரைவுப்படுத்தல், கைத்தொழில் அபிவிருத்தியில் அரசாங்கக் கட்டுப்பாட்டை குறைந்தளவுக்கு
131

Page 73
வைத்திருத்தல்; வெளிநாட்டு முதலீட்டை மேம்படுத்துதல்; நிதித்துறைச் சீர்திருத்தம் மற்றும் வர்த்தக கொடுப்பனவு அமைப்பில் கூடுதலான தாராளமயப்படுத்தல். 1994இல் சென்மதிநிலுவையின் நடைமுறைக் கணக்கில் முழுமையான நாணய மாற்றல் வசதி கிடைக்கப் பெற்றது. முதல் கணக்கு கொடுக்கல் வாங்கல்களில் சில தடைகள் நீக்கப்பட்டன. எப்படியாயினும் பேரின நிலுவையின்மைகள் முக்கியமாக தேர்தல்களிலிருந்தும் இறைப்பற்றாக் குறைகளிலிருந்தும் (Fiscal deficits) 1994 இல் தோற்றுவிக்கப்பட்டன. இதே ஆண்டில் ஒரு அரசாங்கம் தொடர்ந்து சரிப்படுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டுத் தனியார் துறையினை “வளர்ச்சியின் ஒரு இயந்திரமாக” பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. வடகிழக்கு மோதலுக்கும் சமாதான முயற்சிகளிலும் கவனம் செலுத்தியது. துருதிஷ்டவசமாக, 1995 இல் சமாதானம் தொடர்பான நம்பிக்கைகுறைந்தது; போர் நடவடிக்கைகள் அதிகரித்தன. இதன் விளைவாக இறைப் பற்றாக்குறையும் உயர்ந்தது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலும் இறை நிலை பலப்படுத்தும் முயற்சிகளும் மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலும் மந்த நிலையினை அடைந்ததனால், தொடர்ந்து அரசாங்கத்தின் பாதீட்டுப் பற்றாக்குறை மற்றும் அரசாங்க படுகடன் இருப்பும் எப்போதும் அதிகரிக்கும் நிலையினை அடைந்தது. பேரினச் சார்பான நிலமைகள் மோசமடைந்ததனால் 2001இல் முற்பகுதியில் ஒரு சென்மதிநிலுவை நெருக்கடியினைக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சுயாதீனமாக அந்நியச் செலாவணி வீதம் மிதக்க விடப்பட்டதுடன் சர்வதேச நாணயநிதியத்துடன் ஒரு தாங்குநிலை நிதி (Standby Agreement) உடன்படிக்கையினையும் செய்யப்பட்டது. இந்த சர்வதேச நாணயநிதி உடன்படிக்கைத் திட்டத்தின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு: இறைக் கணக்குகள் மோசமடைந்து செல்வதைத் தடுத்தல், சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல், நிதித்துறைச் சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. எப்படியாயினும், 2001ஆம் ஆண்டு முதல் அரைவாசியில் வெற்றி ஈட்டியதற்குப் பின்னராக பேரினச் சார்பான நிலைமை அதிகமாக பாதகமாக மாறியது. இதற்கு முக்கிய காரணங்களாக அரசியல் உறுதிப்பாடற்ற நிலை மற்றும் உள்நாட்டு நிலைமைகளின் தாக்கமும், வெளிநாட்டு நிலைமை மாற்றங்களின் அதிர்ச்சிகள் ஆகியவை பொறுப்பாக இருந்தன. அரசாங்கம் சரிப்படுத்தல் வழிமுறைகளை எடுக்க முடியாமல் இருந்தது; சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் வழிதவறியது; அரசாங்கம் அதனுடைய பாராளுமன்றப் பெரும்பான்மையினை யூலை 2001இல் இழந்தது.
வருடமுடிவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றதும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை மீண்டும் வழிக்குக் கொண்டு வந்ததுடன் அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையினை செய்தது; இது சமாதானத்திற்கான அடிப்படையினை வகுத்துள்ளது.
132

இப்பின்னணியில் இலங்கையின் சீர்திருத்த முறைவழியினைப் பற்றி எவ்விதமாக அது சென்றுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினையும் தருகின்றது. இதனுடைய விளைவுகள் எவ்வாறு இருந்துள்ளன என்பதை அறிவதுடன் இச்சீர்திருத்த முயற்சிகள் தொடர்பான விருத்திக்கு உள்ள தடைகளை இனங்கண்டு கொள்வதும் சீர்திருத்தம் குறித்து ஒரு தெளிவான பாதையினை தெரிந்தெடுத்தலும் அவசியமாகின்றது; இதன் மூலம் நாடு அதனுடைய முழுமையான சாதனையை அடைந்து கொள்ளலாம். இவ்வத்தியாயம் நிதித்துறை தொடர்பான விடயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது; அதே நேரத்தில், சிற்றின மற்றும் பேரின பொருளாதாரத்தினாலான இணைப்புக்களையும் கருத்தில் கொள்கின்றது. எப்படியிருப்பினும் வடகிழக்கு மோதலும் அதனால் தோற்றுவிக்கப்படும் குழப்பமான நிலைமை தாராளமயமாக்கல் மீதும் அது தொடர்பான விளைவுகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தினை மிகைப்படுத்திக் கூறுவதற்கில்லை. இவை தொடர்பான விடயங்களின் விரிவான ஆய்வு இவ்வத்தியாயத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை என்பதும் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
இவ்வத்தியாயத்தின் முதலாவது பிரதான கூறு, 1977-87 கால எல்லைக்குள் நிதித் தாராளமயமாக்கல் பகுதி பற்றியும் அதனுடைய விளைவுகளையும் பிரித்து நோக்கப்பட்டும் பேரினச் சார்பான மட்டத்திலும் ஆராய்ந்து கொள்வது முக்கிய பணியாகின்றது. இதில் நிதிச்சீர்திருத்தங்களின் பெறுபேறுகளை பேரினச் சார்பான பொருளாதார கொள்நெறிகளையும் அதனுடைய பின்னணியுடன் இணைத்துக் கவனம் செலுத்தி ஆராயப்படும். நிதி சேமிப்புகள் மீதான விளைவுகள், தனியார் முதலீடு அவை பகிர்ந்து கொள்வதன் திறமையான நிலைமை நிதி சார்பான வழுவற்ற தன்மை ஆகியவை மெய்ச்சான்று ரீதியாக ஆராயப்படுவதுடன் அரசுடைமை நிதிநிறுவனங்கள் பற்றியும் அரசாங்க தலையீடு பற்றி விரிவாக ஆய்வு செய்யப்படும். இரண்டாவது கூறு 1987க்குப் பின்னரான காலப்பகுதியில் நிதித்துறைச் சீர்திருத்தம் தொடர்பான ஒவ்வொன்றினதும் நிலை மீது கவனம் செலுத்தும் வகையில் விளக்கப்படுவதுடன் அவற்றின் தாற்பரியங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படும். இதில் மேலும் நிதி அமைப்பில் எஞ்சியிருக்கும் திரிபுநிலைகளை பற்றியும் இனங்கண்டு கொள்வதுடன் எதிர்கால நிதித்துறையின் சீர்திருத்தம் தொடர்பான கொள்நெறித் திசைவழிகளையும் எடுத்துக் கூறப்படும்.
2. தாராளமயமாக்கலுக்கு முன்பாக நிதித்துறை நிலையும் பேரினச்
சார்பான பின்னணியும்
இலங்கை 1977ஆம் ஆண்டுக்கு முன்னராக ஒரு நீடித்த காலம் தொடர்பாக பொருளாதாரத் தேக்க நிலையினை அனுபவித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்ட பணவீக்கம் 1970-76 காலப்பகுதியில் சராசரி
1.33

Page 74
6.4 சதவீதமாக இருந்துள்ளது. 1976-இலும் 1977இலும் பணவீக்கம் 1.3 சதவீதமாகவும் முறையே மற்றும் 1.1 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது. 1977ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ஒப்பீட்டளவில் பணவீக்கம் குறைந்த அளவின் விளக்கம் உள்நாட்டு விலைக் கட்டுப்பாடுகள், உறுதியான நாணய மாற்றுவீதம் மற்றும் பரவலாக வழங்கப்பட்ட மானியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளது. (மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கி 1974-77 காலப்பகுதியில் சராசரி 14 சதவீதமாக இருந்தது; மேலும் அது பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதியில் 8.8 சதவீகமாகவும் 16 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது). சென்மதி நிலுவை கடுமையான அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொழுதிலும் உறுதியற்ற நிலையில் இருந்தது.
அட்டவணை 1: பேரினச் சார்பான பொருளாதாரக் குறிகாட்டிகள் (1973-1977)
1974-77 1973 1974 1975 1976 1977
g JT gj சராசரி மெய்யான உள்நாட்டு
மொத்த உற்பத்தி வளர்ச்சி
வீதம் (%) 4.2 nnnnn 4.0 4.7 4.40 3.80 மொத்த உள்நாட்டு முதலீடு/ மொத்த தேசிய உற்பத்தி (%) 17.70 15.10 17.40 17.50 19.0 16.80
மொத்த உள்நாட்டுச் சேமிப்பு/
மொத்த உள்நாட்டு உற்பத்தி (%) 13.90 13.70 9.10 9.10 16.30 21.10 இறைப் பற்றாக்குறை/ மொத்த
தேசிய உற்பத்தி (%) -8.0 -5.80 -4.83 -8.92 - 11.35 -6.81 நாணயமாற்றுவீதம் (IUS$) 747 6.40 6.65 8.0 8.5 9.7 சென்மதி நிலுவை
நடைமுறைக் கணக்கு/மொத்த
உள்நாட்டு உற்பத்தி % -0.87 -.088 -3.80 -2.88 -0.17 3.36 முதல் கணக்கு/ மொத்த
உள்நாட்டு உற்பத்தி % 1.55 1.83 2.84 2.26 1.25 -0.14 பணவீக்கம் (கொழும்பு
நுகர்வோர் குறிகாட்டி) % 5.3 12.3 6.7 1.3 1.1 பணவீக்கம் (மொத்த உள்நாட்டு
உற்பத்திச் சுருக்கி) % 14 - 24.20 7.0 8.80 16.0
மூலம் : மத்திய வங்கி
134

1977இல் இலங்கையில் ஒரு கணிசமான நவீன நிதித்துறை, வேறுபட்டதான நிறுவன ஒழுங்குடைய தன்மையைக் கொண்டதாக இருந்தது. இதில் மொத்த நிதிச்சொத்துக்களில் வணிக வங்கிகளின் மொத்த நிதிச்சொத்துக்கள் 35 சதவீத பங்கினைக் கொண்டிருந்தது. நாட்டில் மூன்று பிரதான அரசுடைமை வங்கிகள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் சேமிப்பு வங்கியான - தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை தொழிற்பட்டிருந்தன. இவ் வங்கிகள் உள்நாட்டுச் சேமிப்புகளைத் திரட்டும் நிறுவனங்களாக இருந்துள்ளன. அரச உடைமையற்ற வணிக வங்கிகள், மற்றைய அபிவிருத்தி வங்கிகள் ஆகியவை வங்கித்துறையில் தொழிற்பட்டு வந்தன; ஆனால் அவற்றின் மொத்த நிதிச் சொத்துக்களின் பங்கு ஒப்பீட்டளவில் சிறிதளவாகவே காணப்பட்டது.
நாணயக் கொள்நெறி செயற் கருவிகளாக சீர்திருத்தங்களுக்கு முன்னராக வட்டிவீத ஒழுங்குபடுத்தல் மற்றும் நேரடிக் கொடுகடன் கட்டுப்பாடுகள் ஆகியவை உபயோகிக்கப்பட்டன. இக்கொள்நெறிகள் நிதி சந்தைகளைக் கூறுபடுத்தின. உத்தியோகபூர்வமாக முறைசார் நிதிநிறுவனங்கள் (முக்கியமாக வங்கிகள்) என்பவையும் மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத பகுதியாக முறைசார கொடுகடன் நிறுவனங்களும் மற்றும் தனியார் கொடுகடன் வழங்குவோர் ஆகியவற்றை கொண்டு இயங்கி வந்தன.
நிதி அமைப்பு, நிதிசார்பாக “அடக்கி ஒடுக்கப்பட்ட’ நிலையில் எதிர் க் கணியமான மெய் வட் டி வீதங்களுடனும் , குறைநீ தளான நிதிச்சொத்துக்களுடனும் காணப்பட்டது. முக்கியமான துறைகளுக்கு வழங்கப்பட்ட அநேகமாக கடன்கள் தெரிந்தெடுத்த கொடுகடன் கொள்நெறிகளினூடாக மானியப்படுத்திய தன்மையில் காணப்பட்டன. மானியம் மத்திய வங்கியினால் நிதிப்படுத்தப்பட்டது; இவை தாராளமான கட்டுப்படிாத வகையில் வங்கிகளுக்கு கடன் வசதிகளாக வழங்கப்பட்டு ஒரு மானியப்படுத்திய மறு நிதியீட்டத்தினூடாக செய்யப்பட்டது. நிதி சார்பான நடுவர் செயற்பாட்டு முறையிலும் இலங்கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிக்கப்பட்டது.
1949 நாணயச் சட்டப்படி மத்திய வங்கிக்கு நிறுவனங்களின் கணக்கு நிலைமைகளைப் பரிசீலிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகளின் செயலாற்றல்களை தொடர்ச்சியான கண்காணிப்பினுடாக செய்ய வேண்டிய பொறுப்பும் மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படியாயினும், இலங்கையில் அதனுடைய சட்ட ஒழுங்குகளில் பொதுவான வங்கிகளுக்கான சட்டம் ஆக்கப்படவில்லை. மேலும் போதியளவு வசதிகள் இல்லாததனால் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தடைப்பட்டன. வங்கிகள் மேற்பார்வை
ஒழுங்குகள் செயற்திறன் கொண்டதாகவும் இல்லை.
135

Page 75
அட்டவணை 2: நிதி அமைப்பு (1970-1978)
வருடம் மத்திய பணவீக்க மெய்வட்டி மொத்த நிதிச் சேமிப்பு/
வங்கி வீதம் வீதம் மொத்த உள்நாட்டு வைப்பு வீதம் உற்பத்தி விகிதம் (%)
970 4.75 59 -.5 34.6
1971 4.75 2.7 2.05 37.2
1972 4.75 6.3 ..55 42.7
1973 4.75 9.7 -4.95 38.6
1974 4.75 12.3 -755 34.
975 7.5 6.7 0.8 32.6
1976 7.5 1.2 6.3 36.2
மூலம் : இலங்கை மத்திய வங்கி
3. நிதித் தாராளமயப்படுத்தல்
3.1 வட்டிவீதச் சீர்திருத்த முறைவழி
தொடக்கக் காலத்தில் நிதிச்சீர்திருத்த முறைவழியின் பிரதான உந்துகையாக ஏற்பட்டது வட்டிவீதங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளின் நீக்கம். முதலாவது தேசிய சேமிப்பு வங்கியினது வைப்புகள் மீதான வட்டிவீதங்கள் உயர்த்தப்பட்டன. இது உச்ச மட்டத்தில் உள்ள குறிப்பிட்ட இந்த நிறுவனத்தினூடாக வைப்புகள் அமைப்பில் வீத அளவுகளை சேமிப்பினை ஊக்குவிப்பதற்கு குறிப்பாக நிதி நடுவர் நிறுவனங்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டது. தேசிய சேமிப்பு வங்கியின் ஒரு வருட நிலையான வைப்புகளின் வீதங்கள் 1977 இல் 7.2 மற்றும் 7.5 வீதங்களிலிருந்து முறையே 8.4 சதவீதம் மற்றும் 15 சதவீதங்களாக உயர்த்தப்பட்டன. போட்டி நிலையினை எதிர்நோக்கிய வணிக வங்கிகள் உயர்ந்த வைப்பு வீதங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயப்படுத்தலும் ஏற்பட்டது. வணிக வங்கிகளும் வைப்பு வீதங்களை 5.5 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகவும், ஒரு வருட நிலையான வைப்பு வீதங்களை 7.7.5 சதவீதங்களுக்கிடையே இருந்தவற்றை 1977இன் பிற்பகுதியில் 14-15 சதவீத அளவுகளாக உயர்த்தியுள்ளன. நிருவகிக்கப்பட்ட வட்டிவீதங்கள் 1980இல் மேல் நோக்கித் திருத்தியமைக்கப்பட்டன; இது 1981 வரை தொடர்ந்து ஏற்பட்டது. அக்கட்டத்தில் இவ்வீதங்கள் உச்ச அளவை அடைந்தன. மேலும் தேசிய சேமிப்பு வங்கியும் வணிக வங்கிகளும் இரு வருட நிலையான வைப்புகளை உயர்வான வட்டி வீதங்களுடன் அறிமுகம் செய்தன.
136

3.2 கொடுகடன் கட்டுப்பாடுகள் குறைத்தல்
தெரியப்பட்ட கொடுகடன் கட்டுப்பாடு தொடர்பான கொள்நெறி கூடுதலான தெரிவுத்தன்மையுடன் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது; வட்டிவீதங்களில் வழங்கப்பட்ட சலுகையடிப்படையான அம்சங்கள் குறைக்கப்பட்டன. 1978இல் தெரியப்பட்ட கொடுகடன் பற்றிய வணிக வங்கிகளின் மீது விதிக்கப்பட்ட மேல் எல்லைகள் நிதிக்கம்பனிகளின் கடன் வழங்கல் மற்றும் தவணைக் கொள்வனவு நடவடிக்கைகள் என்பவற்றின் வர்த்தகக் கொடுகடன் தொடர்பாகத் தளர்த்தபபடடன. அத்துடன் அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்க நியதிச் சபைகள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் வர்த்தகக் கொடுகடன் தொடர்பான மேல் எல்லைகள் நீக்கப்பட்டன. பெருந்தோட்டங்கள் அல்லது அசையா சொத்துக்கள் தொடர்பாக, இலங்கையில் வதிவோர் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் தொடர்பாக வழங்கப்பட்ட வரத்தகக் கொடுகடன் மீது விதிக்கப்பட்ட மேல் எல்லைகளும் நீக்கப்பட்டன. வங்கிகளுக்கும் கடன் பெறுவோர்கள் பற்றிய கொடுகடன் வீதங்களை தீர்மானித்துக் கொள்வதற்கான கூடுதலான சுதந்திரமும் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் துறைகள் சார்ந்த கொடுகடன் பகிரப்படுதல் பற்றிய தேவைகளும் தெரியப்பட்ட கொடுகடன் மேல் எல்லைகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டன.
8.3 நிதியமைப்புச் சீர்திருத்தங்கள்
நிதித்துறை நிறுவனங்கள், சந்தைகள் செயற்கருவிகள் ஆகியவற்றினூடாக நிதியமைப்பினை விரிவாக்கம் செய்வதுடன் போட்டியினையும் அதிகரித்து திறனாற்றலை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மத்திய வங்கி அதனுடைய அமைப்புச் சார்பான விரிவாக்கத்தினைப் பின்பற்றியதனால் கொடுகடன் பகிர்வு தொடர்பான செல்வாக்கினை அதிகரிக்க முடிந்தது. பிரதேச காரியாலயங்கள், பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளுடன் அமைக்கப்பட்டன. இவை மத்திய வங்கியின் அமைப்பு ரீதியான விரிவாக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தன. நிதித்துறையில் போட்டி நிலைக்குத் தடையாக இருந்தவற்றையும் சந்தை வேறாக்க நிலைகளையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை கூடுதலான பிரதேச சுதந்திரம் ஏற்படுத்துதல், வெவ்வேறு நிறுவனங்களின் வேறுபட்ட நடவடிக்கைகளின் அனுமதிக்கப்படும் எல்லைகளின் விரிவாக்கம் செய்தல், வெளிநாட்டு வங்கிகளின் நடவடிக்கைகளின் மீது முன்பு விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்படுதல், போன்ற வழிமுறைகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக வெளிநாட்டு வணிக வங்கிகள் படிப்படியாக உள்நாட்டில் கிளைகளைத் திறந்தன. அத்துடன் புதிய உள்நாட்டு வணிக வங்கிகளும் ஆரம்பிக்கப்பட்டன. கூட்டு நிறுவன வங்கிச்
137

Page 76
சேவை வர்த்தகம் மற்றும் திறைச்சேரிச் சேவைகள் ஆகியவை வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையுடன் அதிகரித்தன. மொத்தமாக வணிக வங்கிகளின் பரந்த முறையிலான விரிவாக்கம் அவற்றின் நடவடிக் கைகளிலும் செயலாற்றத்திலும் கூடுதலான செம்மைப்படுத்தலும், ஏற்பட்டுள்ளன. பல வங்கியல்லா நிதி நிறுவனங்களும் நிறுவப்பட்டன. இப்பின்னணியில் இரண்டு அபிவிருத்தி வங்கிகள், மற்றுமொரு அரசுடைமைக் காப்புறுதி கூட்டுத்தாபனம், ஒரு நம்பிக்கை நிதியம், வணிகர் வங்கிகள், மற்றும் ஏழு புதிய நிதிக் கம்பனிகள், ஆகியவை அமைக்கப்பட்டன.
நிதி அமைப்பின் கட்டுப்பாட்டு முறைமை குறைக்கப்பட்டடு வந்துள்ள போதும் அவற்றின் மேற்பார்வை ஒழுங்குகள் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போதியளவாக ஏற்படுத்தப்படவில்லை. இலங்கை மத்திய வங்கி நிதிக்கம்பனிகளின் மேற்பார்வையை 1979ஆம் சட்டம் எண் 27 என்பதற்கு ஏற்ப கண்காணிப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டது. பொதுவான ஒரு வங்கியமைப்புச் சட்டம் பற்றிய உரையாடல் நடந்துள்ள போதும் அது 1988ஆம் ஆண்டு வங்கிச் சட்டம், எண் 30, கொண்டு வரப்படும் வரை நடைமுறைக்கு வரவில்லை. இச்சட்டத்திற்கு முன்னராக வங்கிகளின் மேற்பார்வை மத்திய வங்கியமைக்கப்பட்ட நாணயச் சட்ட அங்கீகாரத்திற்கு ஏற்றதாக செயற்படுத்தப்பட்டது. ஆனால் இதற்குத் தேவையான நல்ல பயிற்சியுடைய உத்தியோகத்தர்கள் மத்திய வங்கியின் திணைக்களத்திடம் போதியளவு இருக்கவில்லை. நடைமுறையில் சட்ட ஒழுங்குகள் போதியளவாக இல்லாததும் மேற்பார்வை தொடர்ந்தும் செயற்திறன் கொண்டதாக செய்யப்படாததும் கவனிக்க முடிந்த அம்சங்களாகின்றன.
அரசாங்கம், செயலிழந்த ஆவணச் சந்தைகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதில் முக்கியமான மாற்றங்கள், உப சந்தைகள், நிறுவனச் செயற்பாடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு முறைகள் தொடர்பானவையாக இருந்துள்ளன. திறைசேரி உண்டியல்களைப் பிரபல்யபடுத்துவதற்கு, குறிப்பாக வங்கியல்லா நிறுவனங்களிடமும் மற்றும் தனியாரிடமும் இலங்கை மத்திய வங்கி 1981இல் ஒரு இரண்டாம் மட்டத் திறைசேரி உண்டியல் சந்தையினை நிறுவியது. அத்தகைய சந்தை விருத்தி செய்யப்படுதல் ஒரு நெகிழ்வான வழியில் திறந்த சந்தை நடவடிக்கைளினூடாக பணச் சந்தையில் திரவ நிலையினை முகாமைப்படுத்துவதற்கு உதவ முடிந்தது. தொடக்கத்தில் வட்டி வீதங்கள் இரண்டாந்தர திறைசேரி உண்டியல்கள் குறித்து வங்கிகளுக்கிடையே அழைப்புக் கடன் பணச்சந்தையினை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் 1982இல் இருந்து மத்திய வங்கியானது இவ்வீதங்களைக் குறைந்த மட்டத்தில் (1981 உடன் ஒப்பிடுமிடத்து) விதித்தது. எப்படியாயினும் 1987இல் இருந்து இச் சந்தை மத்திய வங்கியினால் மிகை அளவாக வைத்திருந்த திறைசேரி உண்டியல்களை குறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக
138

இரண்டாம் மட்ட திறைசேரி உண்டியல் சந்தையில் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் வீதங்கள் உயர்நதுள்ளதைக் காண முடிந்தது. முக்கியமாக 1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது காணப்பட்டுள்ளது. வங்கிகளுக்கிடையேயான அழைப்புக்கடன் பணச்சந்தை 1977ஆம் ஆண்டிலிருந்து பெரும் செயலூக்கம் பெற்றது. இதில் வட்டிவீதங்கள் சந்தை சக்திகளினால் முக்கியமாக நிர்ணயிக்கப்பட்டன. அந்நியச் செலாவணி வசதிகளை விரிவடையச் செய்வதற்கு கரையிலிருந்து விலகிய ஒரு அந்நியச் செலாவணிச் சந்தையை, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலய தொழில்களுக்கு உதவுவதற்காக விருத்தி செய்வதற்கும் இலங்கை மத்திய வங்கி வங்கிகள் புறம்பான வெளிநாட்டுச் செலாவணி நாணய வங்கி அலகுகளை ஆரம்பிப்பதற்கு அதிகாரத்தினை வழங்கியது; இது 1979ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப்பட்டது. இவ்வலகுகள் கால வைப்புகள் மற்றும் கேள்வி வைப்புகள் ஆகியவற்றை வதியாதோரிடமிருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயத்தில் ஏற்றுக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது; அத்துடன் உத்தியோகபூர்வமான அனுமதிக்கு ஏற்றதாக நிறுவனங்களுக்குக் கொடுகடன் வழங்குவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி வைப்புகளின் அத்தாட்சிப் பத்திரங்களை (Certificates of Deposits) புதியதொரு பணச்சந்தைச் செயற்கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடுவதை ஊக்குவித்தது. இப்புதிய வைப்புப் பத்திரங்கள், முறைசாரா பணச்சந்தைகளிலும் கறுப்புப் பணச்சந்தைகளிலும் மிகைத் திரவ நிலையினைக் குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கருவியாக நம்பப்பட்டது. பங்குகளடிப்படையிலான சந்தை நடவடிக்கை 1983ஆம் ஆண்டு வரை கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. இது 1977-83 காலப்பகுதியில் அனுபவிக்கப்பட்ட உயர்வான பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒத்துச் சென்றது. GabsTopLibL , 660OTŮ UfLDTōO ÉOJ6u6OTLb (Colombo Securiteies Exhange) 198536) 5pj6Julg. ge,6600T3 g60pu (Securities Council) 198796) 92,6600Ts. சந்தையின் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
8.4 அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளின் குறைப்பும் நெகிழ்வான
அந்நியச் செலாவணி ஒழுங்குகளும்
உள்நாட்டு நிதிச் சந்தைகளின் தாராளமயமாக்கலுடன் இலங்கையில் அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. 1977இல் வணிக வங்கிகளுக்கு குறிப்பிட்ட நடைமுறைக் கணக்குக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக அதிகாரப் பங்களிப்பு வழங்கும் முறைவழி தொடக்கப்பட்டது. வெளியே இருந்து பணம் அனுப்புதல் குறித்த அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. அத்துடன் வெளிநாட்டுப் பயணம், வர்த்தகம், கல்வி ஆகியவை
139

Page 77
சார்ந்த அந்நியச் செலாவணி அனுமதிகளும் அதிகரிக்கப்பட்டன. வணிக வங்கிகள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளையும் மற்றும் வதியும் இலங்கையரல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளையும் 1980இல் திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. 1978இல் பாரிய கொழும்புப் பொருளாதார ஆணையம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஏற்றுமதிப் பதனிடுதல் வலையங்களில் ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. 1977இல் இரட்டை அந்நியச் செலாவணி முறை நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கிணைக்கப்பட்ட வீதம் கொண்டு வரப்பட்டது. இதில் டொலருக்கு 44 சதவீத நாணய மதிப்பிறக்கம் உள்ளடக்கப்பட்டது. நிலையான அந்நியச் செலாவணி விதிமுறை நீக்கப்பட்டதுடன் அதற்குப் பதில் ஒரு முகாமைப்படுத்தும் மிதக்க விடப்பட்ட முறை தொடங்கப்பட்டது; அமெரிக்க டொலரை தலையிடும் நாணயமாகக் கொண்டு நாணயமாற்றுவீதத்தில் தளம்பல்கள் ஏற்படும் பொழுது பயன்படுத்தப்பட்டது.
4. நிதித் தாராளமயமாக்கலின் விளைவுகள்
நிதிச் சீர்திருத்தங்களின் நிதி அமைப்பு மீதான விளைவுகள், நிதிச் சீர்திருத்தங்கள் தொடர்பான பிரதான கூறுகள் அவற்றின் நடைமுறைப்படுத்தப்படும் முறைகள் என்பவற்றினை விட, இச் சீர் திருத்தங்கள் பேரினப் பொருளாதாரக் கொள்நெறிகளுடன் எவ்விதமான ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் பொறுத்துள்ளது. ஆதலால் இத்தகைய காரணிகளின் சூழலமைவில் நிதிச் சீர்திருத்தங்களின் தாக்கத்தினை ஆராய்வது பொருத்தமானது. நிதிச் சீர்திருத்தத்தினைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மெய்யான வளர்ச்சி வீதம் 7 சதவீத உயர்வினை அடைந்து, சராசரியாக 5.5 சதவீத மட்டத்தினை 1985 வரை எட்டியது. மொத்த உள்நாட்டு முதலீடு விரைவாக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1977இல் 14 சதவீதத்தில் இருந்த மொத்த முதலீட்டு வீதம் 1980இல் மிக உச்ச அளவாக 34 சதவீதத்தினை அடைந்தது. சராசரி வீதமாக 1977-87 காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதமாக காணப்பட்டது. மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த உள்நாட்டுச் சேமிப்பு 1977இல் 18 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக 1980இல் வீழ்ச்சியடைந்தது; 1977-88 காலப்பகுதியில் மொத்த உள்நாட்டுச் சேமிப்பு சராசரி வீதமாக 13.9 ஆகக் காணப்பட்டது. இது ஒப்பிடுகையில் 1970-76 காலப்பகுதியில் 12.1 சதவீதமாக இருந்துள்ளது. இப்பின்னணியில் உயர்வான உள்நாட்டு முதலீடு முக்கியமாக வெளிநாட்டுச் சேமிப்புகளினால் (கடன்படுதல்) நிரப்பப்பட்டது. இவ்வாறாக நிதிப்படுத்தல் சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்கினை விரிவடையச் செய்தது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறிக்காட்டியினால் அளவிட்டு
140

நோக்குமிடத்து பணவீக்கம் 1977-86 காலப்பகுதியில் சராசரி 11.9 சதவீதத்தினை அடைந்தது. இறைப் பற்றாக்குறை (Fiscal Deficit) விரைவாக அதிகரித்தது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 7 சதவீதத்திற்கும் 21 சதவீதத்திற்கும் இடையே காணப்பட்டது. இதற்குப் பின்னணிக் காரணமாக பாரிய உட்கட்டுமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மீண்டெழும் செலவு விரைவாக உயர்ந்து சென்றது.
4.1 வட்டிவீதங்களின் மட்டமும் அமைப்பும்
தாராளமயமாக்கலுக்குப் பின்னரான காலப்பகுதியில், 1980ஆம் ஆண்டு நீங்கலாக வணிக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் ஒரு வருட நிலையான வைப்புகள் மீதான மெய் வட்டிவீதங்கள் கணிய அளவு நிலையினைக் காட்டியுள்ளன. எவ்வாறாயினும் சேமிப்பு வீதங்கள் மீதான மெய்வீதங்கள் பல ஆண்டுகளில் எதிர்க் கணிய அளவு நிலையினை அடைந்தன. சந்தை நிலைமைகளுக்கு ஓரளவுக்கு இடமளிக்கப்பட்டுள்ள பொழுதிலும் வட்டி வீதங்களின் அளவும் அமைப்பும் சந்தையினால் நிர்ணயிக்கப்படுபவை என்று கருத முடியாது. நாணய அதிகார நிறுவனங்கள் வழிகாட்டும் முயற்சிகள் பொதுவாக வணிக வங்கிகளினாலும் நிதிக்கம்பனிகளினாலும் விதிக்கப்படும் வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சமிக்கைகளாக அமைந்தன. உதாரணமாக அதிக நிறுவனங்கள் வட்டிவீத அமைப்பு 1985இல் சடுதியாக பணவீக்கம் வீழ்ச்சியடைந்தவுடன் சரிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், சடுதியாக பெயரளவிலான வீதங்களில் ஏற்படும் குறைப்பு நிதிச் சேமிப்புகளில் ஊக்குவிப்பினைப் பாதித்திருக்க முடியும். நிருவாக முறையான கட்டுப்பாட்டுச் செயற் கருவியாக திறைசேரி உண்டியல் விகிதமும் மத்தியவங்கியின் சொந்த ஆவணங்களின் வருவாய் விகிதமும் இடம் பெற்றன. மேலும் தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச உனிடமை வங்கிகள் தம்முடைய வைப்புகளின் விகிதங்களையும் நாணய அதிகார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கமைய தீர்மானித்தன. நடைமுறையில் திறைசேரி உண்டியல் வீதம் நாணய அதிகார நிறுவனம் விரும்பியதற்கு குறைந்த மட்டத்திலான அளவைப் பிரதிபலித்தது. அதே நேரத்தில் தேசிய சேமிப்பு வங்கியினால் அதனுடைய வைப்புகள் மீது கொடுக்கப்பட்ட வீதம் உயர்மட்ட அளவைப் பிரதிபலித்தது. வணிக வங்கிகளின் கனப்படுத்திய சராசரி கடன் வழங்குதலில் விதிக்கப்படும் வீதங்கள் கணிய அளவு நிலையினைக் காட்டின. இதற்கு விலக்காக 1980 காணப்பட்டது. கொடுகடன் வீத அமைப்பு ஓரளவுக்கு அரச வங்கிகள், அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கினால் திரிபுபடுத்தப்பட்டது. வட்டி வீதங்கள் மீதான மேல்தடைகள் நீக்கப்பட்டன. வெவ்வேறு நிதி நிறுவனங்களினால் விதிக்கப்பட்ட வட்டிவீதங்களின் வேறுபட்ட அளவுகள் சிறிதளவு குறைக்கப்பட்டன.
141

Page 78
4.2 நிதி நிறுவனங்களிடையே போட்டியும் இலாபத்தன்மையும்
நிதித் தாராளமயமாக்கலுக்குப் பின்னர் புதிய வெளிநாட்டு வங்கிகள், உள்நாட்டு வங்கிகள், வெளிநாட்டு நாணய அலகுகள் ஆகியவை இலகுவாக நுழைந்து கொள்ள முடிந்தது. இதனைத் தொடர்ந்து வங்கியல்லா நிதிநிறுவனங்களும் இலகுவாக தொழிலில் ஈடுபட முடிந்தது. எவ்வாறாயினும், நிதிச்சந்தைகள் கூடியளவுக்கு குவிவுத்தன்மையைக் காட்டியிருந்தன. அரச மேலாண்மை அதிகமாக இருந்ததும் பிரதான இயல்பாகக் காணப்பட்டது. ஏறத்தாழ மொத்த நிதிச் சொத்துக்களில் 80% சதவீதம் அரசின் கையிலிருந்தன. தனியார் வங்கிகள், குறிப்பாக வெளிநாட்டு வங்கிகள் திறப்பதில் இன்னும் தடைகள் இருந்தன. திறமை குறைந்த அரசு உடைமை வங்கிகளின் நெரிசல் செல்வாக்கு நிலையும் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. தேசிய சேமிப்பு வங்கியின் நடவடிக்கைகள் அதனுடைய சிறப்புரிமை பெற்ற நிலை ஆகியவை மேலும் பாதிப்புத் தன்மையை அதிகரித்தன. இவை நிதிச் சந்தைகளில் திரிபு நிலையினை ஏற்படுத்தின. தேசிய சேமிப்பு வங்கி உயர்ந்த வட்டி வீதங்களில் அரசாங்கத்தின் மீள் கொடுப்பனவு உறுதியுடன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற முடிந்தது; அதனுடைய நடைமுறைச் செலவு அதனுடைய சொத்துக்கள் மீதான வருவாயினை விட மேலதிகமானதாக இருந்துள்ளது. அரசாங்க மானியம் இவையிரண்டுக்குமிடையே உள்ள எதிர்கணிய வேறுபாட்டை நிரப்புகின்றது. இவ்வாறான நிலைமையிலும் தேசிய சேமிப்பு வங்கி அரசின் சிறப்புச் செல்வாக்குப் பெற்றதனால் தொழிற்பட்டு வந்துள்ளது. இப்பின்னணியில் வணிக வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் தேசிய சேமிப்பு வங்கியுடன் திறம்படப் போட்டியிட முடியவில்லை. மேலும் , அரசாங்க உடைமையுடைய நீண்டகால நிறுவனங்களிடையேயும் போட்டியிருக்கவில்லை; அவை அரசாங்கத்தினால் அரச கடன் பெறுவதற்கான “சிறைப்படுத்திய”, கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களாக, அரசாங்க கடன் பெறுகையின் மூலங்களாகத் தொழிற்பட்டன.
4.3 நிதித்துறையின் வளர்ச்சி
நிதித்துறைக்கு சீர்திருத்தங்கள் என்பவற்றினுடாகச் செறிவுட்டுதல் (deepening) நிதித்துறையில் முதலீட்டுக்கான நிதிகள் கிடைப்பதை அதிகரிப்பதுடன் நிதிகளின் செலவுக்கும் கடன் பெறும் வீதங்களுக்கிடையேயான பிளவும் குறைகின்றது. இதன்மூலம் முதலீட்டுக்குக் கூடிய வசதியினை ஏற்படுத்தி நிதிகளை உற்பத்தி சார்ந்த தேவைகளுக்கு திசைப்படுத்தவும் முடிகின்றது.
நிதி ஆழமிகைப்படுத்தல் பற்றிய தெரிந்த குறிகாட்டிகள் நிதிச் சேமிப்புகளின் நடத்தையினை அளவிடுபவையாகத் தரப்பட்டுள்ளன (அட்டவணை 3).
142

அட்டவனை 3; நிதிப்படுத்தல் செறிவூட்டல் பற்றிய தெரிந்த குறிகாட்டிகள்
ー வருடம் நிதிச் குறுகிய விரிந்த அரையளவான விரிந்த
சேமிப்புகள் பணம்/ பணம்/ பணம் இரையளவான
6Drt.9). 6.9. பணம்
1914 34. 1239 1922 6.82 3.2
1975 32.6 11.62 17.9 6.28 12.2
1976 6.2 13.79 20.93 7.13 13.5
1977 39.9 1474 23.93 9.2 16.3
1978 42.4 3.91 25.53 1.62 19.1
1979 48. 14.64 28.74 14.1 24.0
1980 46.7 14.17 29.85 1568 23.5
198 44.3 11.79 28.76 16.97 As 24.0
1982 48.3 11.85 30.74 1889 27.6
1983 483 12.3 30.64 1851 27.6
984 46.0 10.94. 28, 5 17.3 26.5
1985 54 1155 29.81 18.26 28.8
1986 50.1 1.79 28.32 1653 27.
1987 53.3 2.75 29.65 6.9 28.1
மூலம் : இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை
குறிப்புகள்:
எல்லா இலக்கங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) சதவீதமாகத்
தரப்பட்டுள்ளன. M
நிதிச் சேமிப்புகள் = நாணயம், கேள்வி வைப்புகள், நேரச் சேமிப்பு வைப்புகள் . மத்திய வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி வைப்புக்கள், நிதிக் கம்பனிகளிடம் வைப்புகள், பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளிடம் வைப்புகள், உறுப்பினர்களின் சேம இலாப நிதி நிலுவைகள் மற்றும் ஆயுட் காப்புறுதிகள் குறுகிய பணம் ய நாணயம் + கேள்வி வைப்புகள்
விரிந்த பணம் = நாணய + கேள்வி வைப்புகள் + கால சேமிப்பு வைப்புகள்
மொத்த நிதிச் சேமிப்புகள் விரைவாக அதிகரித்தன. இவை மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதியின் 1976இல் 362 சதவீதமாக இருந்து 1987இல் 53.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. எதிர்பார்த்தவிதமாக காசும் கேள்வி வைப்புகளும் சேர்ந்து (குறுகிய பணம்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் குறைந்துள்ளது; தனியார் துறையினரால் வர்த்தக வங்கிகளிலும் தேசிய சேமிப்பு
43

Page 79
வங்கியிடமும் வைப்புகளாக இருந்தவையும் (அரையளவுப் பணம்) மற்றும் அரையளவுப் பணமும் தனியார் நிதிகம்பனிகளில் உள்ள வைப்புகளும் (விரிவான அரையளவுப் பணம்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக முக்கியமாக அதிகரித்துள்ளன. ஆகவே, 1977-87 காலப்பகுதியில் நிதிச்சேமிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும், மொத்த உள்நாட்டுச் சேமிப்பும் மொத்த உள்நாட்டு தனியார் சேமிப்பும் குறிப்பிடத்தக்க முறையில் அதிகரிக்கவில்லை. இது நிதிச் செறிவுட்டுதல், பெளதீக சேமிப்புகளும் முறைசாராத் துறையின் சேமிப்புகளும் நிறுவனப்படுத்தப்பட்ட சேமிப்புகளாக மாற்றப்படடன என்பதைப் பிரதிபலித்துள்ளது.
அட்டவணை 4: மொத்த உள்நாட்டு மற்றும் மொத்த தனியார் உள்நாட்டுச் சேமிப்பும் (மொ.உ.உ. சதவீதம்)
1976. 1977 1978 1979 1980 1981 1982 1983
மொத்த உள்நாட்டுச் சேமிப்பு 13.8 8.1 15.3 13.8 11.2 11.7 11.86 13.79 மொத்த உள்நாட்டுத் தனியார் சேமிப்பு 14.3 17.8 16.6 13.4 4.8 13.5 13.3 3.7
மூலம் : இலங்கை மத்திய வங்கி N
4.4 வட்டிவீதத்தில் கட்டமைப்புச் சார்பான மாற்றங்களும் கொடுகடன்
பகிர்வும்
வைப்புக்களின் மீதான வீதம் கொடுகடன் மீது விதிக்கும் வட்டி வீதம் ஆகியவற்றிடையே வட்டிவீத இடைவெளி என்பதை பிளவு நிலையாகப் பார்க்கும்மிடத்து அது 1981ஆம் ஆண்டிலிருந்து விரிவடைந்து சென்றது. (அட்டவணை 5). நிதிநிறுவனங்களிடையே குறைந்த போட்டி (குறிப்பாக வெளி மாவட்டங்களில்), நிறுவனங்களின் அரசு உடைமை அதனுடன் தொடர்பான திறமைக் குறைவு, உயர்வான ஒதுக்குத் தேவைகள், நிதி நடுவுக நடவடிக்கைகள் மீது வரிகள், உயர்ந்தளவான வருமானம் ஈட்டாத கடன்கள் ஆகியவை வட்டிவீத விரிவினை விளக்கக் கூடியவையாக உள்ளன.
இலத்தீன் அமெரிக்க நிலை பற்றி டைஅஸ் அலெஜண்டுறோ (Diaz Alenjandro) என்ற அறிஞர் (1985) அவதானித்ததற்கு ஒத்ததாக இலங்கையில் வட்டிவீதச் சீர்திருத்தம் குறுங்கால வைப்பு வீதங்கள் என்பவை நீண்டகாலச் சேமிப்பு செயற்கருவிகள், அரசாங்க பிணைகள், அரச அடமான முதலீட்டு
144

வங்கியின் திபெஞ்சர்கள் ஆகியவற்றை விட மேலாகச் சென்றுள்ளன. இதன் காரணமாக, நடுத்தர, நீண்டகால சேமிப்புச் செயற்கருவிகளின் முதிர்ச்சிக் காலம் அதிகளவுக்குக் குறைக்கப்பட்டது. இப்பின்னணியில் வர்த்தக வங்கிக் கடன் முறையான குறுங்கால கொடுகடன்கள் குவிவு நிலை தோற்றுவிக்கப்பட்டது. நீண்ட கால கடன்களுக்கு அதிகளவு குறுங்கால நிதிகளில் அதிகமாக தங்கியிருத்தல் போன்ற நிலைமைகள் பலமடைந்தன. மேலும் கொடுகடன் வழங்கல், குறைந்த இடருடைய வர்த்தகத் தேவைகள் என்பவற்றுக்கு கூடுதலாகச் சென்றன. இதன் விளைவாக நடுத்தரக் காலம், நீண்டகாலம் ஆகியவற்றில் உற்பத்தி சார்பான முதலீடுகள் குறித்து வங்கிக் கொடுகடன் வழங்கலில் ஒரு அமைப்புச் சார்பான மாற்றம் ஊக்குவிக்கப்படவில்லை. நீண்டகாலக் கொடுகடன் நிறுவனங்களும் நடுத்தர, நீண்டகாலக் கடன் வழங்கலில் உற்பத்தி சார்பான தேவைகள் முக்கியத்துவம் பெறவில்லை. உற்பத்திச் சார்பற்ற தேவைகளுக்குக் கவனம் கூடுதலாகச் செலுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலக் கொடுகடன் நிறுவனங்களின் கடன் வழங்கலில் வீடமைத்தல், மொத்தத்தில் 25-35 சதவீத அளவுக்கு இருந்துள்ளது.
அட்டவனை 5:
வணிக வங்கிகளின் வைப்புகளுக்குக் கொடுக்கும் வீதங்கள், கொடுகடன்களுக்கு விதிக்கும் வீதங்கள் ஆகியவற்றிடையே விரிவுநிலை (%)
வருடம் வைப்புகள் மீது கொடுகடன் மீது விரிவு
கொடுக்கப்படும் வட்டி, விதிக்கும் நிறைப்படுத்திய
மொத்த வைப்புக்களின் சராசரி வீதம
சதவீதம்
M
1977 2.58 11.3 8.72
1978 4.47 2.8 8.33
1979 539 13.9 8.51
98O 7.5 7.2 10.05
1981 0.63 18.4 7.77
1982 73 20.2 84
1983 O.78 20.6 9.62
984 10.5 20.5 9.99
1985 9.69 2O. 10.4
1986 8.7 19.0 10.83
1987 7.05 18.2 i.15
t மூலம் மத்திய வங்கி; வணிக வங்கி தரவுகள்
145

Page 80
அட்டவணை 8: தனியார் துறைக்கு வணிக வங்கியினால் வழங்கப்பட்ட கொடுகடன்கள்- தேவை, முதிர்ச்சி அடிப்படையில்(தேவை அடிப்படை மொத்த கொடுகடனின் சதவீதமாக)
வருட ம் வர்த்தகச் வர்த்தகச் வீடமைத்தல் 1 மொத்தம் -
சார்பான சார்பான குறுங்காலம்
குறுங்காலக் கடன்
1977 47.7 88.8 3.6 77.5
1978 45.5 80.9 3.3 74.0
1979 48.9 82.6 3.7 750
1980 51.2 79.2 4.5 702
1981 48.5 81.2 56 68.9
982 48.0 80.8 6.1 68.9
1983 48.6 82.7 6.3 71.0
1984 49.7 83.5 72 72.2
1985 49.6 81.8 7.5 70.7
986 49.8 8.9 8.4 69.6
மூலம்: மத்திய வங்தித் தரவு
குறுங்காலம் = ஆறு மாதங்கள் வர்த்தகச் சார்பான கொடுகடன் - மொத்த வணிக வங்கிக் கடனில் வர்த்தக
நோக்கத்திற்கு வழங்கப்பட்டதன் சதவீதம் வர்த்தகச் சார்பான குறுங்காலக் கொடுகடன் - வர்த்தக நோக்கங்களுக்கு
வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடனில் குறுங்காலக் கொடுகடன் சதவீதம் வீடமைத்தல் = மொத்த வங்கிக் கொடுகடனில் வீடமைத்தலுக்கு வழங்கப்பட்டதன்
சதவீதம் மொத்தக் குறுங்காலக் கொடுகடன் - மொத்த வணிகக் கொடுகடனில் குறுங்காலக்
கொடுகடன் சதவீதம்
எவ்வாறாயினும், காலக்கடன்களுக்குப் போதியளவு கேள்வி இல்லாமல் இருந்ததும் கவனிக்கக் கூடியதாக உள்ளது. வங்கிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய செய்திட்டங்களும் அரசியல் நிச்சயமற்ற நிலைமையினால் அதிகம் முன்வரவில்லை. மேலும் ஒரு பங்குச் சந்தை விருத்தியடையாமலிருந்தது, உயர்ந்த வட்டி வீதங்களின் (குறிப்பாக தேசிய சேமிப்பு) பாதிப்பாகவும் காணப்பட்டது. இருப்புகளின் அடிப்படையில் கவரக் கூடிய வகையான
146

வெளியீடுகள் செய்யப்படாததும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அத்துடன் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளும் காரணமாக இருந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நன்றாக வரையப்பட்ட சட்ட ஒழுங்குகளும் இல்லாமை நீண்டகால நிதியின் நிறுவன வளர்ச்சியினைப் பாதித்துள்ளது.
5. நிதிச் சீர்திருத்தத்தின் முடிவுகள் தொடர்பாகப் பேரினக்
கொள்நெறிகளின் விளைவு
5.1 இறை அம்சங்கள்
பொதுத்துறையின் தேவைகளுக்காக சேமிப்புகள் கூடுதலாக எடுக்கப்பட்டால், நிதிச் சேமிப்புகளின் அதிகரிப்பு சீர்திருத்த முறைவழியினால் விளைவிக்கப்பட்டு ஏற்படுமிடத்தும் தனியார்துறை முதலீட்டுக்குக்கான தேவைகள், கூடுதலான கொடுகடன் வழங்கப்படும் விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பினும், கட்டாயமாகக் கிடைக்கும் என்றும் கூறுவதற்கில்லை. அரசாங்கத்தின் அதிகரித்துச் செல்லும் செலவினம் 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைவினால் அரசாங்கம் உள்நாட்டுக் கடன் பெறுகையினை முக்கியமாகச் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இது தனியார் துறையின் கடன் பெறுகையினைப் பாதித்தது. (அட்டவனை 7). அரசாங்கத்தின் உள்நாட்டு நிதியீட்டம் உள்நாட்டுச் சேமிப்பின் சதவிதமாக 1970-77 காலப்பகுதியில் 42 சதவீதத்திலிருந்து 1978-87 காலப்பகுதியில் 55.9 சதவீத அளவுக்கு அதிகரித்தது. மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களில் 75 சதவீத அளவை நிதிப்படுத்தியது; மேலும் அரசாங்க வருவாயில் ஒரு முக்கிய பகுதியினை தற்காலிக முற்பணங்களாக வட்டியில்லாமல் வழங்கியது; அத்துடன் 1983 ஆம் ஆண்டிலிருந்து அதனுடைய இலாபங்களும் அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டன. வணிக வங்கிக் கொடுகடனில் ஏறத்தாழ ஐந்தில் ஒன்று அரசாங்கத்திற்காகத் திருப்பப்பட்டது. (அட்டவணை 7). மேலும், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மொத்த கடன் வழங்கலில் அல்லது முதலீடுகளில், குறிப்பாக தேசிய சேமிப்பு வங்கி, சேமலாப நிதி என்பவற்றினூடாக, 85 சதவீதம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. இவை முக்கியமாக குறைந்த வட்டிவீதங்களில் (5-16%) வழங்கப்பட்டவை. (தனியார் துறையினால் உயர்ந்த வட்டிவீதங்கள் எதிர்நோக்கப்பட்டன, 15%-35%). இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், ஏனென்றால், சேமிப்புத் திரட்டுதலில் இருந்தது போல வங்கியல்லா நிதி நிறுவனங்கள் கொடுகடன் பகிர்வது தொடர்பாக முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளன. இது எல்லா வணிக வங்கிகளின் கொடுகடன் வழங்கலை விட பல ஆண்டுகளில் கூடினதாக இருந்துள்ளது.
147

Page 81
அட்டவணை 7: வரவுசெலவுத் திட்டப்பற்றாக்குறை நிதியீட்டம் (ரூ. மில்லியன்)
வருடம் வரவுசெலவுத் வெளிநாட்டு உள்நாட்டு உள்நாட்டு
திட்டப்பற்றாக் நிதியீட்டம் குறை மொத்த உள்நாட்டு
சேமிப்பின் வீதமாக
1977 3.074 1779 1295 196
1978 71.65 454 271 41.6
1979 879 4237 4554 631
980 5967 6735 9232 12.4
1981 14866 8208 6656 66.9 1982 20091 8794 11297 9.6
1983 2329 10950 10379 61.2
1984 1586 1125. 4610 5.1 1985 25676 12205 13471 7.0
1986 28071 15874 12237 56.6
1987 27342 15083 12259 48.6
1970-77 42.2
978-87 55.9
மூலம்: மத்திய வங்கி அறிக்கைகள்
அதிகரித்து வந்த நிதிச் சேமிப்புகள் அரசுடைமை நிதிநிறுவனங்களினால் (கட்டுப்படுத்தப்பட்ட மூலங்கள்) திரட்டப்பட்டன. இவை சந்தையினால் நிர்ணயிக்கப்படாத அரசாங்க பத்திரம் என்பவற்றில் முதலீடு செய்தன. அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்குக் கொடுகடன் வழங்கி வந்தன. இப்பின்னணியில் தனியார் துறைக்குத் தேவையான நிதி கிடைப்பது குறைக்கப்பட்டது; அத்துடன் மெய்வட்டிவீதங்கள் அதிகரிப்பதற்கான அழுத்தங்களும் எழுந்தன; மேலும் வட்டிவீதப் பொறிமுறையினை திரிபுப்படுத்தி முதல் சந்தையின் விருத்தியினையும் பாதித்தது. மத்திய வங்கியின் மீது அரசாங்கம் அதிகளவுக்கு வரவுசெலவுப் பற்றாக்குறையினை நிதிப்படுத்துவதற்குத் தங்கியிருப்பதும், மிகையான பணவிரிவாக்கத்தினையும் அதனால் பணவீக்கத்தினையும் ஏற்படுத்த முடிந்தது. இச்சூழலில் வைப்புகள் மீது உயர்வான வீதங்கள் நிதிச் சேமிப்புக்களைத் திரட்டுவதற்காக பேணப்பட்டு வந்தது. வரவு செலவுத் திட்டப்பற்றாக்குறைகளை நிதிப்படுத்தும் தேவையின் கட்டாய நிலை ஆகியவற்றினால் கொடுகடன் மீது விதிக்கப்பட்ட வீதங்களும் குறைக்கப்பட முடியவில்லை.
148

அட்i.வணை 3: அரசாங்கத்திற்கு கொடுகடன் வழங்கல் (ரூ. மில்லியன்)
ஆண்டு வணிக வங்கிகள் வங்கியல்லா நிதி நிறுவனங்கள்
அரசாங்கத்திற்கு அரசாங்கத்திற்கு வழங்கியது வழங்கியது
1977 171 (29.4) 4945 (94)
1978 2184 (25.4) 6111 (93)
και 9 ας 353 (26.6) 7908 (93)
1980 3475 (2.5) 10437 (91)
a81 4643 (21.8) 11952 (87)
1982 4852 (19.1) 15448 (85)
983 4283 (13.5) 19091 (85)
1984 4794 (13.3) 23081 (82)
1985 4145 (10.6) 27527 (80)
1986 4150 (10.0) 32461 (78)
)78( 39384 )19.3( 980 987ه
உ வங்கியல்லா நிதி நிறுவனங்கள்: ஊழியர் சேமலாப நிதி, தேசிய சேமிப்பு வங்கி, அரச அடமான முதலீட்டு வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் நிதிக் கம்பனிகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. 9 அடைப்புக்குறிக்குள் தரப்பட்டவை நிறுவனங்களின் மொத்த கொடுகடன்
வழங்கலில் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதன் சதவீதம் மூலம்: மத்திய வங்கியும் மற்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள்
நடைமுறையில் குறிப்பிடத்தக்க முறையில் வைப்புகள் மீது கொடுக்கும் வீதங்கள் உயர்ந்திருந்தன. இது அரசாங்கத்தின் கடன் பெறுகையின் தேவைகளை வசதிபபருத்தியது; இது தனியார் துறையினைப் பாதிக்கும் வகையில் விளைவுகளை ஏற்படுத்தியது. இவற்றிலிருந்து ஒரு முக்கிய கருத்தாக முன்வைக்கப்பட்டது எதுவெனில், அரச தலையீடு மற்றும் அதனுடைய நிதியமைப்பின் உடைமை ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதும், அதே நேரத்தில் இறை உறுதிப்பாட்டைப் பேணி நிதிச் சீர்திருத்தங்களிலிருந்து பெறக்கூடிய நன்மைகளை அடைந்து கொள்வதனையும் கவனித்தல் அவசியம்.
5.2 பணச் கொள்நெறி
குறுகிய பணம் (M) விரிவான பணம் (M) ஆகியவை இரண்டும் இரட்டை இலக்க வளர்ச்சி வீதத்தை 1977-87 காலப்பகுதியில் அனுபவித்தன. பணத்தின்
149

Page 82
மிகை அதிகரிப்பானது, M என்பதன் வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி வீதத்தை கழிவீடு செய்யும் விதமாக நோக்குமிடத்து 12.8 சதவீதமாகவும் பணவீக்க வீதம் (கொழும்பு நுகர்வோர் குறிகாட்டி அளவை) 11.6 சதவீதமாகவும் இருந்துள்ளது. இது மிகையளவான பணப்பெருக்கம் என்பதற்கும் விலைகள் என்பவற்றிற்கும் உள்ள தொடர்பினைப் பிரதிபலிப்பதாகக் கருத முடிகின்றது. இது அதே நேரத்தில் சேமிப்பின் மீது மிகையான பண விரிவாக்கத்தின் எதிர்க்கணிய விளைவினையும் எடுத்துக் காட்டுகின்றது.
அட்டவணை 9: பணநிரம்பலில் மாற்றமும் காரணத்தொடர்புடைய காரணிகளும்
வருடம் பணம் 2 அரசாங்கத்துக்கான தனியார் துறைக்கான
(M.) கடன் as Lair
1978 2175 -126 -5.8% 1980 86.90%
1979 4166 O57 25.40% 2003 48.10%
1980 4802 6052 126% 4544 94.60%
98. 4587 3817 83.20% 4055 88.40%
1982 6063 436 71.90% 3986 65.70%
1983 6747 383 5.7% 6170 9.50% 1984 5990 -2979 -49.70% 4104 68.50%
1985 4982 5794 116.30% 3480 69.90%
1986 245 2 198 89.70% 2260 92.20%
1987 7454 45O2 6020% 462 61.90%
மூலம் : மத்திய வங்கித் தரவுகளிலிருந்து பெறப்பட்டவை.
9 இரண்டு முக்கியமான காரணிகளில் ஒவ்வொன்றினதும் பெறுமதியும் குறிப்பிட்ட வருடத்தின் பணம் 2இன் (M) மொத்த மாற்றத்தின் சதவீதமாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
பணம் மற்றும் விலைகள் ஆகியவற்றின் மிகையான வளர்ச்சியின் பின்னணியில் பத்திய வங்கி ஒரு கட்டுப்படுத்தும் தன்மையுடைய பணக்கொள்நெறியினைப் பின்பற்றுவதற்குத் தள்ளப்பட்டது. எவ்வாறாயினும், அரசாங்கமும் மற்றும் தனியார் துறையும் சமரீதியாக மிகையளவான பண அதிகரிப்புக் குப் பொறுப்புடையவையாக இருந்துள்ள போதும் அநேகமான பணகொள்நெறிச் செயறி கருவிகள் தனியார் துறைக் குச் செல லும் கொடுகடனை மட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன; அதே நேரத்தில் அரசாங்கத்தின் நிதித்தேவைகளுக்கு இடமளிக்கப்பட்டது.
15

மத்தியவங்கியின் வங்கி வீதத்தின் கீழ் கடன் பெறுகை கட்டுட்படுத்தப்பட்டது; இது இறுதியாக 1984ஆம் ஆண்டில் விலக்கப்பட்டது. இந்நடவடிக்கையினால் வணிக வங்கிகள் முன்னெச்சரிக்கையான நோக்கங்களுக்காக தனியார்துறைக்குச் செல்லும் கொடுகடனை குறைத்து கூடுதலான திரவதன்மையைப் பேண வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் வணிக வங்கிகள் கூடுதலான திறைசேரி உண்டியல்களை வைத்திருக்கத் தூண்டப்பட்டன; இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் கொடுகடன் அளவினை அதிகரிக்க முடிந்தது. மேலும் தனியார்துறைக்கு வணிக வங்கிகளினூடாக கிடைக்கக் கூடிய கொடுகடன், தெரிந்த முறையான கொடுகடன் மேல் எல்லைகள் விதித்து மட்டுப்படுத்தப்பட்டது. தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி 1978இல் 26 சதவீதமாக இருந்து, 1986இல் 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அரசாங்கத்தின் மீது கொடுகடன் நடவடிக்கைகள் தொடர்பாக எவ்விதமான தடைவரம்பும் விதிக்கப்படாத நிலை பணக்கொள்நெறியின் விலை உறுதிப்பாட்டைப் பேணும் நோக்கத்தின் செயற்பாட்டை முறியடிப்பதாகவே அமைந்துள்ளது.
பணக்கொள்நெறியின் ஒரு செயற்கருவியாக ஒதுக்குத் தேவைகள் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னராக பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. கேள்வி வைப்புகள் தொடர்பாக ஒதுக்கு விகிதம் 1981இல் 14 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது; 6 சதவீதத்திற்கு தவணை சேமிப்பு வைப்புகளின் மீது உயர்த்தப்பட்டது. உயர்ந்த ஒதுக்கு விகிதங்கள் 1987 வரை தொடர்ந்தன. அதற்குப் பின் இவை எல்லாம் ஒன்றாக்கப்பட்டு 10 சதவீத அளவில் பேணப்பட்டது; பின்னர் இவ்விகிதம் 1988இல் 15 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. வட்டிவீதம் செலுத்தப்படாத ஒதுக்குத் தேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. வைப்புவீதங்கள் கொடுகடன் வழங்கல் வீதங்கள் ஆகியவற்றிடையே நிலவி வநத பிளவினை அல்லது வேறுபாட்டை விரிவடையச் செய்தது; இது நடைமுறைச் செலவுகளை அதிகரிக்கச் செய்ததுடன் நிதி நடுவர் நிறுவனங்களின் செயற்பாடுகள் தனியார்துறை முதலீடு ஆகியவற்றின் ஊக்கப்பாட்டினையும் குறைத்துள்ளது.
மத்திய வங்கி 1977-87 காலப்பகுதியில் கொடுகடன் பங்கீடு தொடர்பாக தலையீட்டினைத் தொடர்ந்தது. தேசிய மட்டத்தில் கொடுகடன் திட்டமிடப்படுதல் என்ற ஒழுங்கினை மேறகொண்டு தனியார் துறைக்கான கொடுகடன் வழங்கலை முன்கூட்டியே தீர்மானிப்பது முக்கியமாக வணிக வங்கிகளின் கொடுகடன் திசைப்படத்தப்படுவதன் மீது செல்வாக்கினை ஏற்படுத்தல் என்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மறு நிதியீட்டம் செய்யும் திட்டங்களும் முறைகளும் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரிக்கப்பட்டன. (நடுத்தர மற்றும நீண்டகால கொடுகடன் நிதியம் விரிவாக்கப்பட்ட கிராமிய கொடுகடன் திட்டம், கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பான ஏற்றுமதிக் கொடுகடன், மறு நிதியீட்ட வசதி மற்றும் குறைநிரப்பான மறு நிதியீட்ட வசதி போன்றவை குறிப்பிட முடிகின்றது). மறுநிதியீட்ட கொடுகடன் அளவு 1976இல் 389 மில்லியன் ரூபாவாக இருந்து
151

Page 83
இது விரைவாக அதிகரித்து 1987இல் 3.946 மில்லியன் ரூபா அளவுக்கு உயர்ந்தது; இதில் ஒரு முக்கியமான பகுதி ஏற்றுமதி மறுநிதியீட்டம் எனக் காணப்பட்டுள்ளது. மறுநிதியீட்டம் கிடைப்பது என்பதுடன் மறு நிதியீடடக் கொடுகடன் மானியப்படுத்தப்பட்ட வட்டி வீதங்களினூடாக கொடுகடன் சந்தை வழியாகப் பங்கிடப்படுதலில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. மானியப்படுத்திய வட்டி வீதங்கள் நடுவர் நிறுவனங்கள் தம்முடைய நிதிகளைத் திரட்டுவதன் தேவையினைக் குறைப்பதுடன், குறைந்த அளவிலான நிதி நடுவர் நிறுவனங்களின் செயற்பாடுகளையும் விளைவித்தது. கொடுகடன் வழங்கலில் உறுதிப் பாட்டை கொடுக் கும் ஒழுங்குகளும் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டன. இது சந்தையல்லா கொடுகடன் பங்கீட்டை வழிப்படுத்தும் ஒரு முறையாகப் பயன்படுத்தப்பட்டது. ( உ+ம்: சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், என்பவற்றிற்கான ஒழுங்குகள்)
மொத்தமாக நோக்குமிடத்து, மிகையளவான வரவுசெலவுத் திட்டப்பற்றாக்குறைகள்ை இரண்டு விதமான ஒன்றுடனொன்று முரண்பட்டதான தொழிற்பாட்டை நாணய ஆணையுரிமை நிறுவனத்தின் மீது சுமத்தியது. மத்திய வங்கி பரவலாக ஒதுக்குத் தேவைகள் செயற்கருவியினை பண முகாமைப்படுத்தல் கருதி பயன்படுத்தியது; ஆனால் அது நிதி நடுவர் செயற்பாடுகள் மீது ஒரு வரியாக விதிக்கப்பட்டு வைப்புகள் வீதங்கள், கொடுகடன் வீதங்கள் ஆகியவற்றிடையான வேறுபாட்டை விரிவாக்கும் என்பதும் தெரிந்திருந்தும், அல்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல கொடுகடன் மீது மேல் எல்லைகள் விதிக்கப்படுதல் விலை உறுதிப்பாட்டைப் பேணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது; அதே வேளை, மானியப்படுத்திய மறுநிதியீட்டக் கொடுகடன் இறுக்கப்பட்ட பணக் கொள்நெறியின் பாதகமான விளைவுகள்ைக் குறைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. கொடுக்டன் பகிர்வு தொடர்பான தொடர்ந்தும் தலையிடுதல் வட்டிவீதப் பொறிமுறையினைத் திரிபு படுத்தியது. மறுநிதியீட்ட ஒழுங்குகளினூடாக மலிந்த அளவில் கடன் பெறுதல் உற்பத்தித் திறன் குறைந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் விளைவினை ஏற்படுத்தலாம்; அத்துடன், அத்தகைய கடன் பெறுனர் வேண்டுமென்றே கடன்களைத் திருப்பிக் கொடுக்காமல் விடுவது (நடவடிக்கைகள் இது தொடர்பாக எடுக்கப்படாமல் இருப்பதும் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கின்றது) அதிகளவான செயற்படாத வருவாயீட்டாத கடன்கள் எதிர்நோக்கப்படுகின்றன. தெரிவுசெய்யப்படும் கொடுகடன் மேல்தடைகள் தனியார் துறை முதலீடுகள் மீது பாதிப்புகளை ஏற்படுத்த முடிந்தது.
5.3 பணக் கொள் நெறியின் செயற்பாட்டுத்திறன்
நிதிச் சீர்திருத்தங்களின் விளைவுகள் பணக்கொள் நெறியின் செல்வாக்குக்கு உட்பட்டவை என்பதுடன் நிதி தாராளமயபபடுத்தல் பணக்கொள்நெறியின்
52

செயற்பாட்டுத் திறனை நிர்ணயிக்கின்றது. மத்திய வங்கி கொடுகடன் கூறுகளை இலக்கு வைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது; பணம் 2 (M) என்பதை ஒரு புதிய இலக்காக நாணயக் கொள்நெறி தொடர்பாகப் பயன்படுத்த முன் வந்தது. நிதித் தாராளமயப்படுத்தல், நேரடிக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி சந்தையடியப்படையான செயற்கருவிகள் மீது கூடுதலாகத் தங்கியிருத்தலை ஊக்குவித்துள்ளது. மறைமுகமான செயற்கருவிகளைப் பயனபடுத்துவதன் வளைவு பொருளாதாரத் தர்மானங்கள் சந்தைகளின் கையில் விடப்படுகின்றன; இதன் பயனாக தரிறமை வாய் நீத வளங்களின் பயனர் பாட்டுக் கு வழிவகுக்கப்படுகின்றது. அத்துடன் ஒதக்குத் தேவைகளும் மற்றைய நிதி நடுவர் செயறபாடுகளின் மீதான வரிகளும் குறைத்துக் கொள்ளலாம். மறைமுகமான நாணயக் கட்டுப்பாட்டு நிலைக்குச் சென்றதனால் இலங்கையில் பகிரங்கச் சந்தை நடவடிக்கைகள் மீது கூடுதலாக தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும், தொடக்கத்தில் பகிரங்க சந்தை நடவடிக்கைகள் மத்திய வங்கி வைத்திருந்த அதிகளவு திறைசேரி உண்டியல் கள், தனியார் பணச் சந்தையின் சிறியதான நிலை, திறைசேரி உண்டியல்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாந்தரச் சந்தை, மற்றும் வட்டி வீதங்கள் மீதான நிருவாகச் சார்பான கட்டுப்பாடு ஆகிய காரணங்களினால் இடையூறுகள் எதிர்நோக்கப்பட்டன. ஒவ்வொரு கிழமையும் திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. (1986), திறைசேரி உண்டியலின் வீதங்கள் நிர்ணயிக்கப்படுவதில் குறைந்தளவான தலையீட்டுப் பின்னணியில் திறந்த சந்தை நடவடிக்கைகள் செயற்திறன் கொண்ட வகையில் பயன்படுத்த முடிந்தது. இது குறிப்பாக 19o8ஆம் ஆண்டு தொடக்கம் காணப்பட்டது.
5.4 நிதி இடர்நேர்வு
வருவாயீட்டாத கடன்கள் (Non Performing Loans) மற்றும் முதல் போதாமை ஆகியவை எந்தவொரு வங்கியும் கொடுக்கல் வாங்கல்களை இடை நிறுத்தாத பொழுது வணிக வங்கிகளின் கன் தீர்வாற்றலைப் பாதிக்கின்றன. வருவாயீட்டாத கடன்களின் அளவு முக்கியமானவையாக இருந்ததுடன் அவை 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்தன. 1981ஆம் ஆண்டிலிருந்து முதலின் போதாமை விகிதங்கள் (capital inadequacy) ஒரு வீழ்ச்சியடைந்த போக்கினைக் காட்டியுள்ளது. அவை சர்வதேச நியமமான பாலின் (Paste) 8 சதவீத இடர் நேர்வு சரிப்படுத்திய சொத்துக்கள் சார்பான அளவுக்குக் குறைவாகக் காணபபட்டுள்ளது. (அட் வணை 10)
153

Page 84
அட்டவணை 10: வருவாயீட்டாத கடன்களின் குறிகாட்டியும் முதலின் போதாமையும்
ஆண்டு வட்டிவருவாய்/ கடன் வழங்கல் வருவாயிட்டாதி முதல் மொத்த 3f4 %
கடன் விகிதங்களின் கடன் (அ) சொத்துக்கள்
வழங்கலின் நிறைப்படுத்தி குறியீடு (3) (4)
விகிதம் (1) சராசரி (2) 2-1
1977 7.35 11.3 3.95 374 10252 3.64
1978 9.13 12.8 3.67 520 13837 3.75
1979 10.47 3.9 3.43 906 18563 4.85 1980 13.18 7.2 4.02 1272 266O1 478
1981 6.19 18.4 2.21 2268 32755 6.92
1982 1783 20.2 2.37 2603 4O194 6.47
1983 1649 20.6 4.1.1 2705 50382 536
1984 15.59 20.5 4.91. 2932 56553 5.18
1985 13.ኗ`1 20.1 6.9 3164 62383 5.07
1986 1261 19.0 639 340 66320 S.14
1987 1.01 18.2 7.19 3954 76824 5.14
மூலம் மத்திய வங்கித் தரவுகளிலிருந்து பெறப்பட்டது.
9 பெறுமதிகள்: ரூ மில்லியன் 9 (அ) செலுத்தப்பட்ட முதல், ஒதுக்கு நிதிகள் + பங்கிடப்படாத இலாபம்
பிரசுரிக்கப்பட்ட தரவுகள் வருவாயீட்டாத கடன்கள் தொடர்ப்ாக இல்லாததனால் கடன் வழங்கலில் இருந்து கிடைக்கும் வட்டி வருவாய் கடன் வழங்கலின் வீதங்களின் நிறைப்படுத்திய சராசரியுடன் ஒப்பிட்டு ஒரு அறைகுறையான குறியீடு வருவாயிட்டாத கடன்கள் பற்றிப் பெறப்பட்டுள்ளது. அட்டவணை 10இல் காட்டப்பட்டதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட இரண்டுக்கும் இடையே உள் வேறுபாடு (2-1) 1983ஆம் ஆண்டக்குப் பின்னர் (தனியார் துறை கடன் வழங்கல் தொடர்பாக) முக்கியமானதாக இருந்துள்ளது. இவ் வேறுபாடு 1987இல் நிறைப்படுத்திய சராசரி கடன் வழங்கல் சதவீதமாக நோக்குமிடத்து வருவாயீட்டாத சொத்துக்களின் விகிதம் 39.5 சதவீதமாகக் காட்டப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைப் போல வருவாய் தராத கடன்களின் அளவின் அதிகரிப்பு வட்டிவீத வேறுபாட்டின் அதிகரிப்புடன் ஒத்துச் சென்றுள்ளது. வணிக வங்கிகளினது முதல் அளவின் போதாமை பற்றியும் இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இப்புள்ளி விபரங்கள் மிக அவதானத்துடன் நோக்கப்படுதல் வேண்டும். ஐந்தொகை பட்டியலுக்குள் சேராதுள்ளவை மொத்தச் சொத்துக்களில் அல்லது
154

பொறுப்புகள்களில் சேர்க்கப்படவில்லை; மேலும் சொத்துக்களின் இடர் நேர்வுகள் பற்றியும் தரவ இல்லாதபடியால் அவையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
வங்கிகளிடையெ நிதி இடர் பாடு தொடர்பான காரணங்கள் தெளிவானவையாகக் காணப்பட்டுள்ளன. பேரினச் சார்பான காரணங்களாக பணவீக்கம், விலைத்திரிபு நிலைகள், வங்கிகள் கூடுதலாக சேவைத்துறையின் மந்த நிலையினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றுடன், இடர்பாடு முக்கியமாக போதியளவான செயல்நுட்பமான ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையும் இல்லாது போய்விட்டதால், எதிர்நோக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறப்பட்டது போல ஒழுங்குபடுத்தல் போதாமையினால் இடர் நேர்வு கூடியதான கடன் இழங்கல் செய்யப்பட்டது; செயற்திறனற்ற மேற்பார்வையினால் வங்கிகளின் நட்டங்கள் கவனிக்காமல் விடப்பட்டன. படுகடன் மீட்புப் பற்றிய சட்ட ஒழுங்குகளும் குறைவாக இருந்தது பற்றி முன்பு கூறப்பட்டுள்ளது; அத்துடன் கொடுகடன் தகவல் பகிர்ந்து கொள்வது பற்றி குறைபாடுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அரசாங்கம் கடன் வழங்கலில் சார்புடையவர்களுக்கு கொடுகடன் திசைப்படுத்தலில் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளது. மேலும் இடர்நேர்வு சார்பான கடன்கள் கூடுதலாக இடம் பெற்றன. தகவல்களின் ஓட்டங்கள் தரம் குறைந்தவை, அரச வங்கிகளின் துணைக் கம்பனிகள் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவை கடன் தீர்வில் தவறியமை ஆகியவையும் வங்கிகளின் தொழிற்பாட்டில் குறிப்பாக அரசுடைமை வங்கிகள் தொடர்பாக இருந்ததற்கான காரணங்களாக இனங் கண்டு கொள்ளப்பட்டுள்ளன.
நிதிக்கம்பனிகள், எண்ணிக்கை, வைப்புகள் மற்றும் பொறுப்புகள், குறித்து அதிகமான வளரச்சியினை 1977ஆம் ஆண்டுக்குப் பின்னராக அவை காட்டியுள்ளன. எவ்வாறாயினும், 1987இல் தொழிலில் ஈடுபட்டிருந்த 53 நிதிக் கம்பனிகளில் மொத்த வைப்புகளில் ஐந்தில் $ன்றுக்குப் (1/5) பொறுப்பாக இருந்த 13 கம்பனிகள் நிதிக் கஷ்டங்களை எதிர்நோக்கின. அவற்றின் நடவடிக் கைகள் மத்திய வங்கியினால் 1987-88 காலப் பகுதியில் இடைநிறுத்தப்பட்டது. இவற்றின் தோல் விக்குக் காரணங்களாக ஒழுங்கு ஏற்பாடுகளiன் போதாமை, உண்மை நிலைக்குப் புறம்பாக வட்டி வீதங்கள் வழங்கப்பட்டவை, சரியீட்டு முறையின்றி கம்பனிகளின் வளர்ச்சி ஏற்பட்டது ஆகியவை இனங் காணப்பட்டுள்ளன. மேலும் என்பதுகளின் நடுப்பகுதியில் அனுபவிக்கப்பட்ட மந்தமான போக்கும் பொறுப்பாக இருந்துள்ளது. ஒழுங்குபடுத்தல் முறையில் பாதுகாப்பு நோக்கில் முன்னேற்பாட்டு விதிகள் விகிதங்கள் குறித்துக் காட்டப்படவில்லை. சட்டத்தினூடாக பாதுகாப்புச் செய்யப்படுதல் முறிவுகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமானதாகவும் இருக்கவில்லை.
155

Page 85
நிதி இடர்ப்பாட்டின் பொருளாதார விளைவுகளும் தெளிவாகத் தெரிந்துள்ளன. புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட முடிந்த கொடுகடன் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொடுகடன் பங்கீடும் முறை திறம்பியதாகச் செனறுள்ளது. அதாவது வங்கிகள் மேலும் கடன்களை கடன் தீர்ப்பு வல்லமையில்லாத வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய நிலை கூடுதலாக வங்கிகளின் கடன் தீர்ப்பு நிலையை மோசமாக்கியுள்ளது. கொடுகடனுக்கு கேள்வி அதிகரித்துள்ள நிலை மெய்வட்டி வீதங்கள் மீது மேல் நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. உயர்வான மெய்வட்டிவீதங்களும், வட்டி வீதக் கொடுப்பனவுகளைச் செய்வதற்கு கொடுகடனைப் பரவலாகப் பயன்படுத்துதலும், உற்பத்தி சார்பான முதலீட்டைப் பாதித்துள்ளது. நிதி அமைப்பினது வளங்களில் பகிர்ந்தளிப்பை முன்னேற்றமடையச் செய்வதில் அதனுடைய குறைந்தளவான ஆற்றல் முதலீட்டில் உற்பத்தித் திறன் பலாபலன்கள் ஏற்படுவதற்குத் தடையாக இருந்துள்ளது.
5.5 மதிப்பீடு
கொள்கை நோக்கில், பேரினச் சார்பான உறுதிப்பாடு செயல்நுட்பம், வாய்ந்த ஒழுங்குபடுத்தும் சட்டகம் ஆகியவை வெற்றியளிக்கும் நிதித் தாராளமயமாக்கல் தொடர்பான முன் நிபந்தனைகளாகும். இலங்கையைப் பொறுத்து அதிகமான பேரினச் சார்பான உறுதியற்ற நிலை மிகவும் உயர்ந்த வட்டி வீதங்களைக் கொண்டு வரவில்லை. கடன் தீர்ப்பாற்றல் அற்ற பாதிப்பு பரவலாக ஏற்படவில்லை. வேறு நாடுகளில் நடந்ததைப் போல (தென் முனை நாடுகள்) நேரடியான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படவில்லை. இலங்கையில் தாராளமயமாக்கல் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டது; அரசாங்கம் வட்டிவீதங்கள் மீது ஓரளவு கட்டுப்பாட்டை வைத்திருந்தது மற்றும் முதலோட்டங்களையும் மட்டுப்படுத்தியது. அத்துடன் கூடுதலான போட்டியினை ஊக் குவித்து வட்டி வீதங்கள் சந்தைநிலைமைகளைப் பிரதிபலிக்கும் முறையில் சரிசெய்யப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும் போதுமான ஒழுங்குபடுத்தல் தொடர்பாக ஒழுங்கு முறைகள் இல்லாததனால் நிதி அமைப்பில் இடர்பாடு அனுபவிக்கப்பட்டது. மேலும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்திய தாராளமயமாக்கல் (உ+ம், அரசுடைமை மற்றும் தொடர்ந்த தலையீடு உள்ளார்ந்த பொருளாதாரக் கட்டுப்பாடு) ஆகியவற்றினால் அதிகளவுக்கு உறுதியற்ற விளைவுகள் தவிர்க்கப்பட்டன; ஆனால் தொடர்ந்து இருந்த திரிபு நிலைகள் நிதி அமைப்பின் விரைவுப்படுத்திய விரிவாக்கதினையும் மொத்த உள்நாட்டுச் சேமிப்பு அதிகரிப்பினையும் பாதித்தன. தனியார் நிலையான முதலீடும் எதிர்பார்த்த விதத்தில் அதிகமாக மாற்றத்தைக் காட்டவில்லை. அத்துடன், முதல் வெளியீட்டு விகிதம் மோசமடைந்து சென்றது. நிதி
156

ஆழமிகையாக்கப்பட்டதும் மட்டுப்படுத்திய தனியார் முதலீட்டுக்கான ஊக்குவிப்பும் முதலீட்டின் சராசரி உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யவில்லை. இதற்கு தொடர்ந்த வட்டி வீதத் திரிபுகள், நிதி நடுவர் நிறுவனங்கள் மீது ஏற்பட்ட கட்டுப்பாடுகள், ஆளுகைப்படுத்திய கொடுகடன் திட்டங்கள் அரைகுறையாக நீக்கப்பட்டமை, அரசாங்கத்துறை முதலீட்டின் குறைவான உற்பத்தித் திறன் மற்றும் வரவு செலவுத்திட்ட மிகையான பற்றாக்குறை தனியார்துறை முதலீட்டைப் பாதித்தல் ஆகியவை பொறுப்பாக இருந்துள்ளன.
அட்டவணை 11: மொத்த உள்நாட்டுத் தனியார் நிலையான முதலாக்கம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம்) மற்றும் முதலீட்டின் உற்பத்தித் திறன்
1974. 975 1976 1977 1978 1979 1980 1981. 1982 அதிகரிப்பினுாடாக முதல்/வெளியீட்டு A. விகிதம் 3.78 2.87 4.03 5.82 4.79 6.02 மொத்த நிலையான தனியார் முதலீடு 77 8.2 7.9 7.2 7.9 130 12.9 12.7 14.6
8. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னான நிதித்துறைச் சீர்திருத்தங்கள்
6.1 பணம் மற்றும் படுகடன் முகாமை
முதலாம் மட்ட திறைசேரி உண்டியல் சந்தையில் வட்டிவீதங்கள் சந்தை நிலைமைகளினால் நிர்ணயிக்கப்படவிருந்தன. இது முன்பு நிலவிய நிருவாக முறையாக நிர்ணயிக்கப்பட்ட வீதங்கள் என்பவற்றிலிருந்து வேறுபட்டது. முன்பு குறிப்பிட்டது போல பகிரங்க சந்தை நடவடிக்கைகளைத் திறமாகப் பயன்படுத்துவதற்கும் வட்டிவீத அமைப்பில் திரிபு நிலைகளைக் குறைத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் என்க் கருதப்பட்டது. இவற்றின் விளைவாக திறைசேரி உண்டியல் வீதம் அதிகமாக உயர்வடைந்தது. இதற்கு 1988இல் பிற்பகுதியில் அரசாங்கத்தின் நிதிகளுக்கான கேள்வி அதிகரித்தது காரணமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் மட்ட திறைசேரிச் சந்தையில் கழிவு, மறுகழிவு வீதங்கள் உயர்வடைந்தன; அத்துடன், வங்கிகளுக்கிடையே அழைப்பு பணச்சந்தை வீதமும் மற்றைய வணிக வங்கிகளிடையேயான வீதங்களும் ஏற்றமட்ைந்தன. வட்டிவீதங்கள் கணிசமான விதத்தில் சந்தைச் சக்திகள் தொடர்பாக பதிலிறுப்புத் தன்மையுடையவையாக இருந்தன. 1991
157

Page 86
நடுப்பகுதி வரை பணவீக்க அழுத்தங்களினால் வட்டிவீதங்களும் உயர்வடைந்தன. இலங்கை மத்திய வங்கியினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் அளவு படிப்படியாக குறைந்தன. பகிரங்க சந்தை நடவடிக்கைகள், கூடுதலான திறைசேரி உண்டியல்களின் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் அதிகரித்தன. எவ்வாறாயினும் வட்டி வீத அமைப்பு மீது பரவலான செல்வாக்கினை இன்னும் மீட்டுக் கொள்ளப்படாத அதிகமான அளவு திறைசேரி உண்டியல்கள் இருப்பதனால், முழுவதும் ஏற்படுத்த முடியாததனால் திறைசேரி உண்டியல் வீதங்கள் தொடர்ந்தும் மத்திய வங்கியினால் முகாமைப்படுத்தப்படுகின்ற்ன. ஏல விற்பனைகளில் வேறாக்கும் வீதங்களை மத்திய வங்கி நிர்ணயிக்கின்றது. ஊழியர் சேமலாப நிதியின் (உண்டியல்கள் ஏராளமானவற்றைக் கொள்வனவு செய்யும் நிறுவனம்) விலைப்படுத்தல் பற்றிய தீர்மானங்களை மத்திய வங்கி முகாமைப்படுத்துகின்றது. இவை எல்லாவற்றையும் சேர்ந்ததைப் பிரதிபலிக்கும் திறைசேரி உண்டியல் வீதமாக நிறைப்படுத்திய சராசரி முடிவாக மத்திய வங்கி வெளியிடுகின்றது.
பணக் கொள்நெறியும் மற்றும் அரசாங்கப் படுகடன் முகாமையும் மேலும் 1990களில் பலப்படுத்தப்பட்டது. வணிக வங்கி கடன் வழங்கலில் தெரிவு செய்யப்பட்ட முன்னுரிமை வழங்கிய துறைகள் சார்பான கொடுகடன் மேல் எல்லைகள் 1992இல் நீக்கப்பட்டன. பொதுவாக தெரிந்தெடுத்தவற்றின் அடிப்படையிலான கொடுகடன் கட்டுப்பாடுகள் அளவுகள் குறைக்கப்பட்டன. இலங்கை மத்திய வங்கியினால் மானியப்படுத்திய மறுநிதியீட்டத் திட்டங்களின் அளவுகள் குறைக்கப்பட்டன. அவை இறுதியாக 1997இல் நிறுத்தப்பட்டன. இதற்கான காரணம் மறு நிதியீட்ட வசதிகள் பங்குடைமை நிதியீட்டத்தின் ஊக்கப்பாட்டைக் குறைக்கின்றது; மேலும் மறு நிதியீட்டம், பணக் கட்டுப்பாட்டினை மறு நிதியfட்டம் தகுதியுடைய கடன் களுக்குத் தடங் கலின் றிக் கிடைப்பவையென்பதால் பலவீனப்படுத்துகின்றது. 1995இல் வணிக வங்கிகள் அவற்றின் முதலில் 5 சதவீத அளவுக்கு வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டன; இது இன்று 15 சதவீத அளவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியல் சந்தை முதல்நிலை நடவடிக்கையாளர் முறை அறிமுகப்படுத்திய பின்னர் முன்னேற்றமடைந்துள்ளது. முதல் நிலை நடவடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பொறுப்புகளையும் சிறப்புரிமைகளையும் கொண்டவர்களாக உள்ளனர். ஆனாலும், இன்னமும் இச்சந்தை தொடர்பாக உட்கட்டுமான ஒழுங்குகள், நவீன கணக்குத் தீர்வைமுறைகள் இரண்டாம் மட்ட சந்தை வியாபாரம், போன்றன போதியளவு விருத்தியடையவில்லை. மறு கொள்வனவு உடன்படிக்கைகள், எதிர்மறையான கொள்வனவு உடன்படிக்கைகள் ஆகியவை திறைசேரி உண்டியல் தொடர்பாக (1993) அறிமுகம் செய்யப்பட்டன. இதன் நோக்கம் இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள்ன் ஊடாக குறுங்காலத் திரவநிலையினை முன்னேற்றுவதாக அமைந்தது. மொத்தமாகப் பார்க்குமிடத்து
158

நாணயம் மற்றும் படுகடன் முகாமைக்கான செயற்கருவிகள் முன்னேற்றமான நிலையினை அடைந்தன.
எவ்வாறாயினும், வரவுசெலவுத் திட்டத்தில் உள்நாட்டு நிதியீட்டம் திரிபுநிலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் தனியார் துறை நெருக்குதல்களுக்கு, குறிப்பாக, சந்தையின் நீண்டகால மட்டத்தில் உள்ளாகியது. பிரதான நிதிச் சந்தை செயற்கருவியாக திறைசேரி உண்டியல் விளங்கியது. இவை ஒவ்வொரு கிழமையும் ஆவண நடவடிக்கையாளர்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கி ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட மூலங்கள் உட்பட ஏலத்தில் விடப்படுகின்றன. நிதி நிறுவனங்கள் தொடர்பாக திரவச் சொத்துக்கள் தேவைகள் திறைசேரி உண்டியல்களுக்கு ஒரு கட்டுப்படுத்திய சந்தையினை வழங்குகின்றது. அத்துடன் அரசாங்க படுகடன் ஆவணங்கள் ஏறத்தாழ மூன்றில் இரண்டு (2/3) கட்டுப்படுத்திய “சிறைப்படுத்திய” (Captive investers) முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இம் மூலங்களில் முக்கியமாக தேசிய சேமிப்பு வங்கி ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் அரசுடைமை வங்கிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. விற்பனை செய்யப்படுபவை முக்கியமாக விலை குறைத்துக் கிடைப்பவை, நிலையான வீதமுடையவை சந்தைப் படுத்தாதவை, “ரூபாய்க் கடன்கள்” என்று அழைக்கப்படும் நடுத்தரக்கால செயற்கருவிகள் (அரசாங்க ஆவணங்கள்) ஆகிய வகையான இயல்புகளைக் கொண்டவையாகக் காணப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடு கடன்பெறுகைச் செலவைக் குறைத்து வைத்துள்ளது. ஆனால் வட்டிவீதப் பொறிமுறையினைத் திரிபுபடுத்துகின்றது; அத்துடன் தனியார்துறை முதலீட்டை குறிப்பாக நீண்டகால நிதியீட்டத்தை விலக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது. ஆதலால் உள்நாட்டு படுகடன் சந்தை, அரசாங்க ஆவணங்களின் மேலாதிக்கத்திற்கு உட்படுத்தியிருக்கும் நிலை, சந்தை நிர்ணயிப்பில் ஏற்படும் வட்டிவீதங்களை நிலை/நாட்டுவதில் திறமையில்லாத அரசுடைமை, நிதி நிறுவனங்களின் பரவலான திரிபு நிலைகளும் சேர்ந்து நெருக்குதல்களையும் பாதிப்புகளையும் விளைவித்துள்ளன. மேலும் அரசுடைமை நிதி நிறுவனங்கள் வியாபாரச் சார்பற்ற விதிகளைத் தழுவிய வட்டிவீதங்களினால் ஒழுங்கற்ற தன்மையான நிலைமைகளைத் தோற்றுவிப்பதுடன் அவற்றின் முதலீட்டுக் கொள்நெறிகள் அரசாங்க செல்வாக்கிற்கு உட்பட்டவையாகவும் காணப்படுகின்றன.
வங்கிகளுக் கிடையேயான பணச் சந்தை 1990 களில் மிகச் செயலூக்கமுடையதாகக் காணப்பட்டது; இதில் முந்தியநாள் கொடுகடன் மற்றும் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் கூடுதலாக இடம் பெற்றன; அரசுடைமை வங்கிகள் அரைவாசிக்கு மேலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மொத்தத்தில் பொறுப்பாக இருந்துள்ளன. 2000 ஆம் ஆண்டு பிற்பகுதியிலும் 2001ஆம் ஆண்டிலும் சென்மதி நிலுவையில் ஏற்பட்ட நெருக்கடி ஒரு கடுமையான
159

Page 87
திரவப் பிரச்சினையைத் தோற்றுவித்தது. இது ஒரு முக்கியமான வகையில் வட்டி வீதங்களில் உயர்வுடன் தொடர்பு பட்டதாக இருந்துள்ளது. படிப்படியாக இதனுடைய தாக்கம் குறைந்தது. வங்கிகள் மீது விதிக்கப்பட்ட தற்காலிகமாக தடைகள் அவற்றின் தேறிய பகிரங்க அந்நியச் செலாவணி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதால் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் குறைக்கப்பட்டன; இவற்றின் மீள் பெறுதல் மெதுவாகவே ஏற்பட்டது.
6.2 நிதி நிறுவனங்கள் மீதான ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வையும்
1988ஆம் ஆண்டு, எண் 30, வங்கிச் சட்டம் செயல்நுட்பம் வாய்ந்த ஒழுங்கு முறைகளாக வங்கிகளின் பொறுப்புகளில் 4 சதவீத முதல் விகிதம், பொறுப்புகள் குறித்து ஒரு குறைந்தபட்ச பொறுப்புக்களில் 20 சதவீதம் திரவச் சொத்து தேவை மற்றும் தனியொரு கடன் பெறுனர் குறித்து கடன் வழங்கல் முதலில் 30 சதவீத அளவுக்கு மட்டுபடுத்தல் ஆகியவை சேர்க்கப்பட்டன. மேலும் கூடுதலான விரிவான வங்கி நிலை பற்றி வெளிப்படுத்துதல், மற்றும் அறிக்கை வெளியிடுதல் போன்றவையும் தேவைகளாக எதிர்பார்க்கப்பட்டன. பால் (Basle) உடன்பாடு 8 சதவீத இடர் நேர்வு குறித்துச் சரிப்படுத்திய சொத்துக்கள் அளவு ஒரு குறைந்தபட்ச வழிகாட்டி அளவையாக 1993ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது முன்பு இருந்த தரம் குறைந்த 1988ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்ட விகிதத்திற்குப் பதிலாக முன்வைக்கப்பட்டு ஏற்புடைத் தன்மை பெற்றது. ஒரு இடர்நேர்வு முகாமை நோக்கில் முதல் தேவைகள் மட்டும் செயற்திறன் கொண்டவையாக இருக்கும் எனக் கூற முடியாது; இதற்கு துணையாக கடன்கள் பாகுபடுத்துதல் அவற்றிற்கான முன் ஏற்பாட்டொழுங்கு பற்றிய தராதரங்களும் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்படுதல் அவசியமாகின்றன. இதே காலப்பகுதியில் கூடுதலான ஒழுங்குபடுத்தும் தேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுள் சேர்க்கப்பட்டவை வருவாயீட்டாத கடன்கள் மீது வட்டிக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டதுடன், கூடுதலாக கடுமையான கடன் தீர்வு முன் ஏற்பாட்டொழுங்கும் சேர்க்கப்பட்டது. எவ்வாறாயினும், அதிகளவாகப் பெறப்பட்ட மேலதிகப்பற்று முறையாக கடன் காரணமாக கடன் தீர்ப்பதில் தவறியவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது பிரச்சினையாகக் காணப்பட்டது. மேலும் தொடர்ந்து செயற்பாடற்ற அரசாங்க அனுசரணையுடன் கிடைத்த கடன்கள் மீது வட்டி வருவாய் சேர்க்கப்படுதலும் பிரச்சினையாக எதிர்நோக்கப்பட்டது. (இது தொடர்பாகப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சரிசெய்யப்பட்டுள்ளது). ஆனாலும் கடன்கள் பாகுபடுத்தலும் ஏற்பாட்டொழுங்கு விதிகள் சர்வதேச தரத்திற்குக் குறைந்ததாகவே இருந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு வங்கிச் சட்டம் மேலும் ஒழுங்குபடுத்தும் மேற்பார்வை செய்யும் சட்டமைவினைப் பலப்படுத்தியது. இவை குறிப்பாக பின்வரும் நிறுவனங்கள் தொடர்பாகச் செய்யப்பட்டன.
160

வெளிநாட்டு நாணய வங்கி அலகுகள்; குறைந்தபட்சமான முதல் தேவை நியமங்கள் குறிப்பாக விசேடபணி வங்கிகள் (தேசிய சேமிப்பு வங்கி) பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கி, பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள் அரச அடமான முதலீட்டு வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்) ஆகியவை தொடர்பாக விதிக்கப்பட்டன. இத்தகைய நிதி நிறுவனங்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வை விரிவுபடுத்தபட்டது. எவ்வாறாயினும், வங்கி மேற்பார்வையும் கண்காணிப்பும் பலவீனமுள்ளதாக இருந்துள்ளது. இது முக்கியமாக நடைமுறை ஒழுங்கு முறைகளின் போதாமை மற்றும் இதற்கான மனிதவளப் பற்றாக்குறை ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன. அத்துடன் களத்தில் நடவடிக்கைகள் பற்றிய கண்காணிப்பும் குறைந்திருந்தது. மேலும் செய்நுட்பம் வாய்ந்த தரக்கட்டுப்பாடுகள் வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய அலகுகளுக்குச் செல்லுபடியுள்ளவையாக இருக்கவில்லை; மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டகம் நிதிக்கம்பனிகள் ஓய்வூதிய நிதியங்கள், சேமலாப நிதியங்கள் ஆகியவை குறித்து பலவீனமுடையதாகக் காணப்பட்டது.
இலங்கை மத்திய வங்கிக்கு 1988ஆம் ஆண்டு நிதிக்கம்பனிகள் கட்டுப்பாட்டுச் சட்டம் (எண்: 78) விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளது. இவை நிதிக் கம்பனிகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் வங்கியல்லா நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கான ஒரு புதிய திணைக்களத்தை நிறுவவும் அதிகாரங்களை வழங்கியுள்ளன. மேலும் நிதிக்கம்பனிகள் பாரதூரமான கஷ்டங்களை எதிர்நோக்கியதால் இச்சட்டமும் அதன் திருத்தப்பட்ட பகுதியும் (1991) ஒழுங்கு விதிகள் முதல் தேவைகள் ஆகியவற்றை அதிகரித்தது. இப்பின்னணியில் 20 நிதிக்கம்பனிகள் மட்டும் இத்தேவைகளைப் பூர்த்தியாக்கும் நிலையில் இருந்தன. நிதிக்கம்பனிகள் கஷ்டங்களை எதிர்நோக்கிய பொழுதும், வங்கித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு ஏற்றதாக ஈடு செய்யும் வகையில், போட்டி கடுமையாக இருந்துள்ள போதும் வளர்ச்சியடைந்தன.
6.3 படுகடன் மீட்டல்
எண்பதுகளில் வங்கிகளும் வங்கியல்லா நிதிநிறுவனங்களும் படுகடன் மீட்டலில் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கின. ஆதலால் அரசாங்கம் விசேட நீதிமன்றங்களை கடன்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக நிறுவியது; அத்துடன் சட்டங்களை (1990) கடன் மீட்டல் குறித்து முன்னேற்றத்தினை அடைவதற்கு இயற்றியது. வங்கிகளின் கடன் மீட்பு ஆற்றல் தொடர்பாக வங்கிகள் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை கடன்பெறுனர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் கையேற்றல்
161

Page 88
உரிமையை நிறைவேற்றலாம். இவ்வதிகாரங்கள் கடன் மீட்பு முயற்சியை முன்னேற்றமடையச் செய்துள்ளன. எவ்வாறாயினும் படுகடன் மீட்புச் சட்டம் எப்பொழுதும் நிதிக் கம்பனிகளை உள்ளடக்கவில்லை. அத்துடன் வியாபாரஞ்சார் நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் பட்டவையாகவும் காலநீடிப்புக் கொண்டவையாகவும் இருந்துள்ளன. 1990இல் நிறுவப்பட்ட கொடுகடன் தகவல் 606)uuLib (Credit Information Bureau) 6 stašas6, ppb of 61st au656,ost நிதிநிறுவனங்கள் 1995இலும் ஆகியவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக கொடுகடன் மதிப்பீடு குறித்து முன்னேற்றத்தை வழங்கியுள்ளது; அத்துடன் ஒரு கொடுகடன் தரப்படுத்தும் நிறுவனமும் ஸ்தாபிக்கப்பட்டது. இவை பணச் சந்தையில் ஈடுபடுவோருக்கு தகவல் அடிப்படையிலான நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக இருப்பதுடன் நிதி நிலைமையின் உறுதித் தன்மையினையும் மேம்படுத்த முடிந்துள்ளது.
6.4 வணிக வங்கிகள்
அரசாங்கம் இரண்டு அரசுடைமை வணிக வங்கிகளுக்கும் 1993ஆம் 1996ஆம் ஆண்டுகளில் மீள் முதலீட்டளிப்பு செய்து கொண்டது. (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொகுப்பாக 5 சதவீதத் தொகையெனக் காட்டப்பட்டது). வங்கிகள் தற்காலிகமாக முதலின் போதுமான தரத்தினை நிறைவேற்றின. இலங்கை வங்கியின் செயலாற்றம் மீள் முதலீட்டளித்தலுக்குப் பின்னராக முன்னேற்றம் காட்டியது; ஆனால் மக்கள் வங்கியின் நிலை மோசமடைந்தது. தற்பொழுது இரண்டு அரசுடைமை வங்கிகளும் மொத்தமாக வணிக வங்கிகளின் சொத்துக்களில் 55 சதவீதத்திற்குப் பொறுப்பாக உள்ளன; மொத்த நிதிச் சொத்துக்களில் அவை 30 சதவீதத்திற்குப் பொறுப்பாக இருந்துள்ளன. இரண்டு வங்கிகளும் உயர்ந்த செலவுகளையும் போதாத முதலினையும் கொண்டவையாக இருந்துள்ளன; மக்கள் வங்கி அதிகளவான எதிர்க்கணிய தேறிய பெறுமதி நிலையினைக் காட்டியது. அரசுடைமை வணிக வங்கிகளின் பிரதான பிரச்சினைகள், மிகை ஊழியர்கள் தேர்ச்சிகளின் குறைவு, காலத்துக்கு ஒவ்வாத தொழில்நுட்பங்கள் , அரச கட்டுப்பாட்டிலிருந்து சுயாதீனமாக இயங்க முடியாமை, அதிகளவான வருவாயீட்டாத கடன்கள், படுகடன் சுமையிலுள்ள அரசுடைமை நிறுவனங்களுக்கு கடன் வழங்கல் வெளிநாட்டு நாணயக் கடன்கள் உட்பட இனங் காணப்பட்டுள்ளன. அரசுடைமையல்லா வங்கிகளின் நிலமை பெரிதளவு முன்னேற்றமானது எனக் கூறுவதற்கில்லை. விலக்காக ஒரு சில வெளிநாட்டு, தனியார் உள்நாட்டு வங்கிகள் காணப்பட்டன; அவற்றிடம் மட்டும் வருவாயீட்டாத கடன்கள் விகிதங்கள் 12 சதவீதத்திற்கு குறைவாக இருந்துள்ளன. மேலும் அறிவிக் கப்பட்ட வருவாயிட்டாத கடனி களின் அளவு குறைத் து மதிப்பிடப்பட்டவையாக இருக்கலாம். காரணம் வகைப்படுத்தல் முறை சர்வதேச
162

நியமங்களுக்கு குறைந்ததாக இருந்துள்ளது. அதே நேரத்தில் வருவாயீட்டாத கடன்களின் தீர்வை ஏற்பாட்டொழுங்கு போதுமானதாக இருக்கவில்லை; இதில் பிணையாகக் கொடுப்பவற்றை அளவுக்கு மேலாக நன்மதிப்பு அனுமதிகள் வழங்குதல் காரணமாக ஏற்பட முடிகின்றது.
அட்டவணை 12: வங்கிகளின் ஒப்பீட்டு ரீதியான நிதிச் செயலாற்றம்
சொத்துக்களின் மீது 1989 1993 1995
வருவாய் வீதம்
இலங்கை வங்கி 0.30% 2.10% 2.40%
மக்கள் வங்கி 0.60% 0.80% 1.10%
தனியார் வங்கிகள் 2.10% 1.50% 1.50%
அட்டவணை 13: வங்கிகளின் பயனுறுதித் தன்மை
அரச வங்கிகள் தனியார் வங்கிகள்
1993 1994. 1995 1993 994 1995
வட்டிவீத வேறுபாடு | 8.0 7.7 9. 9.6 12.0 O.O வேலையாட்கள்
செலவு/ மொத்த வருமானம் 41%. 40.10%. 35.8% 26.50% 26.10% 27.30%
மூலம்: உலக வங்கி, 1998.
வணிக வங்கி அமைப்பில் முதலீடாக பயன்படுத்தும் அளவு ஒப்பீட்டளவில் குறைந்த நிலையில் உள்ளது. இது குறிப்பாக உயர்வான வருவாயீட்டாத கடன்கள் குறித்து குறைந்தளவான கடன் தீர்வு முற்காப்பொழுங்கு ஆகியவற்றின் பின்னணியில் நோக்கப்படுதல் பொருத்தமாகும். அரச வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகளில் பலவும் உயர்வான 10 சதவீத இடர்நேர்வு சரிப்படுத்திய முதல் தேவை அளவினை 2003ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இது பூரத்தி செய்வது, பரிகாரம் தேடும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சாத்தியமறறது.
163

Page 89
அட்டவணை 14: வங்கியமைப்பின் பயனுறுதியும் மற்றும் பிழைபடாத்தன்மையின் குறியீடுகளும் (1997-2001) (சதவீதங்களில்)
s
1997 1998 1999 2000 2001
(1) முதலின் போதுமான நிலை இடர்நேர்வு நிறைப்படுத்திய சொத்துக்கள் குறித்து ஒழுங்குபடுத்திய முதல் 11.0 10.7 0.6 8.3 7.8
மொத்தச் சொத்துக்கள் குறித்து தேறிய மதிப்பு 6.5 5.9 4.3 3.7 3.8
(2) சொத்துக்களின் கூட்டமைவும்
தரமும் வருவாயீட்டாத கடன்கள் /மொத்தக் 16.4 16.6 16.6 150 16.9 கடன்களில் முற்காப்பு நீங்கலாக வருவாயீட்டாத . கடன்கள்? 65.6 73.0 90.9 96.1 135.8
(3) பயனுறுதியும் இலாபத்தன்மையும் சொத்துக்களின் வருவாய்வீதம்
(வரிக்கு முன்பு) 1.3 -0.2 0.8 0.8 பங்குமுதல் வருவாய் வீதம்
(வரிக்கு பின்பு) 17.3 13.9 -10.1 13.1 15.5 மொத்த சொத்துக்கள் குறித்து . . . வட்டியின தேறிய வருமானம்: 3.9 3.9 3.2 3.3 3.2 மொத்த வருமானத்தில் பணியாளர் ۔
செலவு 13.0 14.7 16.1 5.5 13.8 வட்டிவீத வேறுபாடு** 5.2 5.7 6.8 1 1.56
(4) திரவத்தன்மை மொத்தச் சொத்துக்களில் திரவச் சொத்துக்கள் 12.5 3.1 1.3 14 9.0
* உள்நாட்டு வங்கி அலகுகள்
* வணிக வங்கிகளின் நிறைப்படுத்திய சராசரி வைப்புவீதம், முதன்மை நிலைக்
கடன் வழங்கும் வீதம் ஆகியவற்றின் வேறுபாடு
மூலம்: மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் 2002
164

அத்துடன் முற்காப்பொழுங்கு கணிசமான அளவுக்கு அதிகரிக்குமானால் வணிக வங்கி அமைப்பில் சராசரி முதல் மட்ட அளவு இடர்நேர்வு நிறைப்படுத்திய சொத்துக்களின் பெறுமதிப்பினைக் குறித்து மோசமடைய நேரிடும். உதாரணமாக, அண்மையில் நடத்தப்பட்ட இலங்கை நிதித்துறை மதிப்பீட்டுத் திட்டம் எடுத்துக் காட்டியதில், வெளிநாட்டு வங்கிகளின் செயல்நுட்பமறிந்த விகித அளவுக்கு ஏற்றதாய் கட்ன்தீர்வு முற்காப்பொழுங்கு விகிதத்தை அதிகரிப்பது சராசரி முதலின் போதுமான தகுதி அளவு 4 சதவீதத்திற்கு குறைந்து செல்ல நேரிடும் என்பது கூறப்பட்டுள்ளது. சென்ற சில ஆண்டுகளில் வங்கி அமைப்பின் பொதுவான திறமையம் இலாபத்தன்மையும் முக்கியமான வகையில் அதிகரிக்கவில்லை. அதேவேளை, வங்கியமைப்பில் மிகைத் திரவத்தன்மைப் பிரச்சினையொன்று நிலவியது. இதற்கு மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கொடுகடன் கேள்வி பெரியளவான அரசாங்கப்படுகடன் இருப்பு ஆகியவை காரணமாக இருந்துள்ளன. மறுமுதலளிப்பு அரசுடைமை வங்கிகள் குறித்துச் செய்யப்பட்டு இலக்குகளும் வரையறுக்கப்பட்டு நெருங்கிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பொழுதும், அரசுடைமை வங்கிகளின் ஆரோக்கிய நிலையும் திறமையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கவில்லை. இப்பின்னணியில் தராளமயப்படுத்தல் தீர்வாக அமையலாம். எவ்வாறாயினும், இத்தகைய நடவடிக்கை இன்று அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்பதனால் மறுசீரமைப்பும் தனியார்மயமாக்கலும் முன்னோடியான ஆயத்தங்கள் மீது கவனம் செலுத்துவதும் பொருத்தமான வழிகளாகக் காணப்பட்டுள்ளன. கடன்தீர்க்கும் ஆற்றலில்லாத மக்கள் வங்கி தொடர்பாக அரசாங்கத்தின் நோக்கம் அதனை ஒரு வணிக வங்கி, ஒரு சேமிப்பு வங்கி மற்றும் படுகடன் மீட்புப் பிரிவு என வெவ்வேறு நிறுவனங்களாக மாற்றுதல் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு தனியாக மீள்அமைக்கப்படக் கூடிய வணிக வங்கியினைப் பின்னர் தனியார்மயப்படுத்தல் என்பதும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8.5 வங்கியல்லா நிதி நிறுவனங்கள்
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அதனுடைய முதல் தளத்தினை 1993இல் பொதுபங்கு வெளியீடு மூலம் விரிவாக்கம் செய்தது; அரசாங்கம் அதிலுள்ள எஞ்சியுள்ள பங்கிருப்பு அநேகமான அளவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 1997இல் விற்பனை செய்தது. அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தில் (DFCC) இருந்த அரசாங்கத்தின் பங்குடமை பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. தேசிய சேமிப்பு வங்கியினை மறுசீரமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை தேசிய சேமிப்பு வங்கி வைப்புகள் அனுபவித்த சாதகமான வரிச சலுகையும், அரசாங்கமல்லாத செயற்கருவிகள் மீது சொத்துக்களின் 40 சதவீத அளவு முதலீடு செய்வதற்கான அதிகாரக் ஆகியவை நீக்குவது பற்றிய நடவடிக்கைகள்
165

Page 90
ஆலோசிக்கப்பட்டன. ஆனாலும், தேசிய சேமிப்பு வங்கியின் மறுசீராக்க விளைவுகள் பற்றி பொறுத்திருந்தே காண முடியும். மற்றைய அரச உடமை நிதிநிறுவனங்கள் தொடர்பாக மறுசீராக்கம் அதிகளவுக்கு ஏற்படவில்லை.
நிதிக்கம்பன்கள் பொதுவாக குறுங்கால வைப்புக்களைத் திரட்டி குத்தகை நடவடிக்கைகளுக்கு பணம் வழங்குகின்றன; இதனால் முக்கியமாக வட்டிவீத திரவத்தன்மை ஆகியவற்றில் இடர் நேர்வுகளுக்கும் சொத்துக்கள் பொறுப்புகள் ஆகியவற்றிடையே இணக்கமில்லாத தன்மைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வீடமைத்தல், நிதிநிறுவனங்களும் சொத்து பொறுப்பு இணக்கமில்லாத நிலையில் உள்ளன. அவை அடைவுப் பிணை கடன் வழங்கும் நடவடிக்கைகள் அடிப்படையினைத் தேடிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவற்றின் ஒழுங்குபடுத்தல் முறைகளின் சட்டகம் ஒரு சம தளமான சூழலை வீடமைப்பு நிதியத்திற்கு உறுதி செய்ய வேண்டும். அதிகளவு எண்ணிக்கையுடைய நிதி 561601 Eisei fru, B(655J (Small and Medium Enterprises, SMEs) நிறுவனங்களுக்கும் மற்றும் வீட்டுத்துறைக்கும் கிராமிய வங்கிகள் சிறு நிதி நிறுவனங்கள் உள்ளடங்கலாக, கடன் வசதிகளை வழங்கி வருகின்றன. இது மேலும் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஆனால் ஒரு சரியான சட்ட ஒழுங்குகள் வரையறுக் கப்படுதல் அவசியமாகின்றது. அதே நேரத்தில் அவை அரசாங்கத்தினால் அனுசரணை செய்யப்பட்ட அல்லது வழிநடத்தப்பட்ட கொடுகடன் திட்டங்கள் என்பவற்றின் செயற் கருவிகளாக வருவது தவிர்க்கப்படுதல் வேண்டும்.
6.6 முலதனச் சந்தைகள்
1990 களில் முதல் சந்தைகள் விருத்திக்கு இடையூறாக இருப்பவை பற்றிய அநேகமான விடயங்க்ள சேர்க்கப்பட்டுள்ளன. இம்முயற்சிக்ள் உளநாட்டு இருப்புச் சந்தை மற்றும் உட்கட்டுமான நடவடிக்கைகள் பற்றியவையாக ஒரு நவீன இருப்புச் சந்தையினைக் கொழும்பில் நிறுவுவது என்பவற்றுடன் முக்கியமாக தொடர்புபடுத்தி நோக்கப்பட்டன. மேலும் பல வரிச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஆவணச்சட்டம் (Securities Act) திருத்தப்பட்டு விரிவான செயலாற்றம் வாய்ந்த அதிகாரங்களுடன் நம்பிக்கை நிதிய நிறுவனங்கள் (Unit Trusts) மேற்பார்வை செய்யும் பொறுப்புகளுடன் தொழிற்பட்டன. மேலும் முதல் சந்தைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன. பங்கு முதல் மீது வெளிநாட்டு முதலீடுகளின் தடைகள் தொடர்பாகத் தாராளமயமாக்கலை மேற்கொண்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. (1990இல் இருந்து) வெளிநாட்டு நிதியங்கள், இலங்கையில் வதியாத தனிநபர்கள் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவை வெளிநாட்டிலிருந்து பங்குகள் மீது
166

வெளியிடப்பட்ட பங்கு முதலில் 100 சத்வீத அளவுக்கு முதலீடு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வொழுங்குகளில், விலக்கல்கள் வேறு விதத்தில மட்டுப்படுத்தல்கள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை அந்நியச் செலாவணிக் கட்டுப்பாட்டாளரினால் விதிக்கப்படக் கூடியவை என இருந்தன. பங்கு முதலீடுகளின் வெளிநாட்டு ரூபாய் கணக்குகள் திட்டம் அத்தகைய முதலடுகளை வசதிப் படுத் தரி கணி காணிப் புக்கு உட் படுத் தரி நடவடிக்கையாளர்களினூடாக அறிமுகம் செய்யப்பட்ட்து (1991). ஆவணங்கள் மற்றும் முதலீடு செய்யும் நிதியங்கள் முகாமைப்படுத்தும் தொழில்கள் பெருமளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கூட்டாகச் சேர்ந்து நிறுவப்பட்ட முயற்சிகளினுடாக முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், வெளிநாட்டுப் பட்டியல்படுத்திய முதலீட்டாளர்கள் கொழும்பு இருப்புச் சந்தையின் வியாபார நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பினைத் தொண்ணுறுகளில் அரைவாசிப் பங்கு அளவைச் செய்துள்ளனர். ஆனாலும் சென்ற சில வருடங்களில் உறுதியில்லாத அரசியல் பொருளாதார சூழல் காரணமாக புதிய வெளியீடுகள் பங்குச் சந்தையில் வியாபார நடவடிக்கைகள் ஆகியவை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளன. மொத்தமாக நோக்கும் பொழுது, கொழும்பு இருப்பு "ரிமாற்றச் சந்தையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதியாக முதல்படுத்திய தொகை 8.5 சதவீதமாக மட்டும் காணப்பட்டுள்ளது. இது தனியார் சேமிப்புக் திரட்டலின் செயற்கருவியாக ஒரு சிறு பங்களிப்பினையே செய்துள்ளது. பொதுவாக உயர்ந்த வடடி வீதங்கள், தனியார்மயப்படுத்தல் திட்டம் முதல் சந்தை விருத்தி ஆகியவற்றிடையே இணைப்புப் போதுமானதாக ஏற்படாமை, அரசாங்க படுகடன் நிதிகளைப் பெறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தடை வரம்புகளினால் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு போதாமை மற்றும் நாட்டு இடர்நேர்வுகள் என்பவை பங்குச் சந்தை (Equity Market) விருத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.
பிணையங்களின் (Bonds Markets) சந்தை விருத்தியில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கூட்டாண்மைத்துறையின் கடன் பெறுகைச் சந்தை விருத்திக்கு ஊக்குவிப்புக் கிடைத்தது; ஆனால் கொழும்பு இருப்புச் சந்தையில் இரண்டாம் மட்ட வியாபாரம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. இதற்கு படுகடன் வியாபாரம் செய்வதற்கான உட்கட்டுமான வசதி மற்றும் ஒழுங்குபடுத்தல ஆகியவை வளர்ச்சியடையாத நிலை அரசாங்க றண்டகால படுகடன் செயற்கருவிகள் இல்லாத நிலை, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் படுகடன் ஆவணங்கள் மீது முதலீடு செய்வது அனுமதிக்கப்படாதது ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன. அரசாங்க படுகடன் செயற்கருவிகளைப் பொறுத்து முதல்நிலைச் சந்தை பெரிதளவாக இருந்துள்ளது. ஆனால் இரண்டாம் மட்டச் சந்தை நன்கு விருத்தியடையவில்லை. இதற்கு பிரதான முதலீட்டாளர்கள் (நிறுவனங்கள்) கட்டப்படுத்தப்பட்டவர்களாக (“சிறைப்படுத்திய” தன்மையினால்)
167

Page 91
இருப்பதும் அதனால் அரசுடைமை நிறுவனங்களில் அரசு படுகடன் ஆவணங்கள் அசைவற்ற தன்மை கொண்டிருப்பதும் காரணங்களாக இருந்ததை அறிய முடிகின்றது. அண்மையில் அரசாங்கம் நீண்டகால திறைசேரிப் பிணையங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதனுடைய நோக்கம் அரசாங்க ஆவணச் சந்தையின் ஆழமிகையாக்குதலும் அதனூடாக தனியார் பிணையங்களின் வெளியீடுகள் விலைப்படுத்தலைச் செய்வதற்கான மட்டக் குறியாகவும் அவை பயன்படுகின்றன. எப்படியாயினும், ஒரு தனியார் பிணையச் சந்தை மேலும் விருத்தியடைவது, இணையான கொள்நெறிகளும் பேரினச் சார்பான பொருளாதார உறுதிப்பாடும் இல்லாமல் சாத்தியமற்றது.
6.7 அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகளும் வெளிநாட்டு முதலீடும்
1990களில் இலங்கையில் அந்நியச் செலாவணிக்கட்டுப்பாடுகள் அதிகளவாகத் தளர்த்தப்பட்டன. 1991இல் ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணய் வங்கி 96)(g,356fullfcbp.bg. (Foreign Currency Banking Units) 3psi(5LD5 D-6f 6f(6356f நிதிப்படுத்துவதற்கான கடன் பெறுதல்கள் அனுமதிக்கப்பட்டன. உள்ளிடுகள் ஏற்றுமதிக் கட்டளைகளை அமுல்படுத்துவதற்குத் தேவைப்பட்டவை, அதே வேளை காசு மாற்றுபவர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்து மாற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டது. இலங்கையில் வதிவோர்களும் வதியாதோர்களும் வதிவோர் வெளிநாட்டுக் நாணயக் கணக்குகளை திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டனர். ஏற்றுமதி வருவாய்கள் வெளிநாட்டு நாணயத்தில் வைத்திருப்பதற்கு, இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அனுமதியும் வழங்கப்பட்டது. (1993). இலங்கை சென்மதி நிலுவை நடைமுறைக்கணக்கு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களினல் எஞ்சியிருந்த தடை வரம்புகளை நீக்கியது. மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் பட்டயத்தில் சரத்து VĩII என்பதும் இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (1994)
1992இல் பாரிய கொழும்பு பொருளாதார ஆணையம் (Geater Colombo Economic Commision) (pg565 (63 F60)u (Board of Investment, BOI) 6T6ip மட்டத்திற்கு நாடு முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டை வசதிப்படுத்தும் நோக்கத்துடன் உயர்த்தப்பட்டது. முதலீட்டுச் சபையின் (BOI) பங்களிப்பும் குறியிலக்குகளும காலப்போக்கில் விரிவாக்கமடைந்தன. அது இன்று ஒரே இட அமைவுடன் நிறுவனமாக வெளிநாட்டு முதலீடு ஏற்றுமதி சார்பான முதலீடு ஆகிய எல்லாவற்றுக்குமான பொறுப்புள்ள நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. எப்படியாயினும், முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்டிருக்கும் பல்வகையிலான ஊக்குவிப்புகள் திரிபு நிலையினை ஏற்படுத்தும் தன்மையுடையவை; அதனால அனேகம் நீக்கப்படுதல் வேண்டும். அதே நேரத்தில் உள்நாட்டு வரி அமைப்பினைப் பலப்படுத்துதலும் தேவைப்படுகின்றது.
168

7. மதிப்பீடும் எதிர்காலக் கொள்நெறி திசைப்படுத்தலும்
சிறிது சிறிதாக 1987ஆம் ஆண்டிலிருந்து செய்யப்பட்டு வந்த நிதித்துறைச் சீர்திருத்தங்கள் கணிசமான அளவுக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் நிதித்துறையின் பங்களவு 1990இல் இருந்து 2000ஆம் ஆண்டு வரை 4.6 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதத்துக்கு அதிகரித்தது. ஏறத்தாழ இதே காலப்பகுதியில் தேசிய சேமிப்புகள் 1987இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.6 சதவீதமாக இருந்து 2000இல் 21.5 சதவீதமாக உயர்ந்துள்ளது; அதேவேளை விரிவான பணம் 28 சதவீதத்திலிருந்து 32 சதவீத அளவை அடைந்தது. ஓரளவுக்கு நிதித்துறை ஆழமிகையாக்கப்பட்டது. ஆனாலும், நிதித்துறை இன்னும் ஆழமற்றதாகவே அதிகமாகக் காணப்படுகின்றது. இது அரசுடமை நிதி நிறுவனங்களின் மேலாண்மைக்குட்பட்டதுடன் உயர்வான நடுவர் செயலாற்றச் செலவுகளும், வட்டிவீத வேறுபாடும் (வைப்புகள், கடன் வழங்கல் வீதங்கள்) கொண்ட திறமையில்லா பகுதிகளும் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. உயர்ந்த வட்டிவீத வேறுபாடுகள் நிதி அமைப்பின் பருமனைக் குறைத்துள்ளதுடன் நாணயக் கொள்நெறிச் செயற்கருவிகளையும் பாதித்துள்ளது; குறிப்பாக வட்டிவீதக் கொள்நெறி செயற்திறனற்றதாக அவை கீழே செல்வதில் விறைப்புத்தன்மையினை காட்டி நிற்பதால் காணப்பட்டுள்ளது. வணிக வங்கி அமைப்பில் வருவாயிட்டாத கடன்களின் அளவு இன்னும் உயர்வாக (10%- 20% மொத்தக் கடன்களில்) இருந்துள்ளது. இது ஒரு குறைந்த மதிப்பீடாக இருக்கும் எனக் கருதலாம். இப்பின்னணியில் கூடுதலான முற்காப்பு ஒழுங்குகள் முதல் உட்செலுத்தும் வணிக வங்கித்துறையில் பாதுகாப்பான நிலையை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான வணிக வங்கிகளின மொத்தச் சொத்துக்களில் 55 சதவீதத்திற்கும் மொத்த நிதிச் சொத்துக்களில் 30 சதவீதத்திற்கும் பொறுப்பர்கி உள்ளன. அவை பெரிய அளவில் வருவாய் பெறாத கடன்களை வைத்திருப்பதும் முக்கியமான அம்சமாகின்றது. இக் கடன்கள் தொடர்பாக இடர்நேர்வு உயர்வாக இருப்பதும் குறிப்பிட்ட துறைகள் அரசுடைமை தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயத்திலும் உள்நாட்டு நாணயத்திலும் குவிவுத் தன்மையுடையவையாகக் காணப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறிதது அரசுக்குச் சொந்தமான வணிக - வங்கிகள் விரிவான படுகடன் மீட்புத் திட்டங்களை அமுல்படுத்துதல் வேண்டும்; அவ்வாறு செய்யுமிடத்து அதனுடைய கடனுக்கான பிணை ஆதாரத்தின் உண்மையான பெறுமதியினை அறிந்து கொள்ளுதல், குறிப்பாக மெய்யாதனம் அரசுடமைத் தொழில் நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டிய கடனைத் தீர்த்துக் கொள்ளல், விசேடமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை மறுசீரமைப்பினைச் செய்யும் பொழுது கவனிக்கப்பட வேண்டியது. ஒரு சொத்து முகாமைப்படுத்தும்
69

Page 92
நிறுவனமொன்றை நிறுவுவது வருவாய் பெறாத கடன்களை ஒழுங்கமைத்தல் செய்வதற்கு பொருத்தமான ஒரு செயலாக அமையலாம். மொத்தமாக மறுசீரமைப்பும் ஏற்கனவே செய்யப்பட்டவை ஓரளவுக்கு நிதித்துறையில் அவசியமாகினறது. அரசுடமை வங்கிகள் தொடர்பாக ஒருங்கு சேர்தல் மற்றும்/ அல்லது தனியார்மயப்படுத்தல் ஆகியவை தவிர்க்க முடியாதவை எனக் கூறுதல் பொருத்தமாகும்.
அரசதுறையின் மேலாதிக்கம் போட்டியினைப் பாதித்துள்ளது. வட்டி வீத ஒழுங்குகள் மீது திரிபுநிலையினை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை பெரிதளவான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகள் தனியார் துறை மீது தொடர்ந்து நெருக்குதல்களையும் விளைவித்துள்ளது. நிதிச்சேமிப்புகளை மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முன்னராகவே எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையினால் தனியார் படுகடன் சந்தைகளின் வளர்ச்சி குறிப்பாக நீண்டகாலக் கடன் சந்தையின் விருத்திக்கு பாதிப்பாக அமைந்தது. இறையமைப்பு நிலை சரிசெய்யப்படுதல் நிதித்துறைச் சீர்திருத்தத்தில் மற்றும் கட்டமைப்பு சரிப்படுத்தல் ஆகியவை முன்னிலை இடத்தினை எடுத்தல் வேண்டும். அரசுடைமை நிதிநிறுவனங்களின் மேலாதிக்கம் தேசிய சேமிப்பு வங்கி, அரச அடமான மற்றும் முதலீட்டு வங்கி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், மற்றும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்கலாக குறைக்கப்படுதல் வேண்டும். அதே வேளை அரசாங்க படுகடன் சந்தை மேலும் தாராளமயமாக்கப்படுதல் தேவையாகின்றது. நிதிசார் நடுவர் நிறுவனங்கள் பலப்படுத்துதல் அவற்றின் நிருவாகத்தைச் சீர்திருத்தல் சந்தைப் போட்டியினை மேம்படுத்தல் மற்றும் செயற்பாடுடைய ஒழுங்குபடுத்தும் ஒழுங்குகள் பேணப்படுதல் என்பவற்றின் மூலம் செய்யப்படுதல் வேண்டும். காப்புறுதி மற்றும் சேமலாப நிதியத் துறைகள் மறுசீரமைப்புக்குட்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன் காலப்போக்கில் அவை பெரியளவான நிதி வளங்களின் ஒரு கூட்டு நிதியத்திலிருந்தும் நவீன முகாமைத் தொழில்நுட்பங்களிலிருந்தும் நன்மை பெறச் செய்வதற்கு தனியார்மயப்படுத்தல் வேண்டும். நிதிசார்ந்த ஒழுங்குபடுத்தல், மற்றும மேற்பார்வைத் துறையில் பாதுகாப்புடைய நியமங்களை உள்நாட்டு வெளிநாட்டு வங்கி மற்றும் நாணய அலகுகள் குறித்து வலுப்படுத்துதல், முதலின் போதுமான அளவும் தன்மை பற்றிய தரங்களை அமுல்படுத்துதல், மற்றைய காப்பொழுங்கு முறையான நியமங்களைக் கடைப்பிடித்தல் ஆகியவை முக்கியமான தேவைகளாக நோக்கப்படுதல் அவசியம்; அதே வேளை மேற்பார்வை முறைகளை தற்கால இடர்நேர்வுகள் மதிப்பீட்டு மாதிரியங்களைப் பயன்படுத்தி பலப்படுத்துதலும் முக்கியமாகத் தேவைப்படுகின்றது. மேலும் மத்திய வங்கி நம்பிக்கைக்குரிய மற்றும் திறமை வாய்ந்த சட்டகமைவினை வகுத்தல் வேண்டும். இவற்றின் நோக்கத்தில் பலவீனமான வங்கிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஒழுங்குபடுத்தல் முறைகள், சீராக்கப்படுதல் அதனுடாக நிதித்துறை
1፲'0

வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வெளிநாட்டு நாணயமாற்றுச் சந்தையிலும் வங்கிகளுக்கிடையேயான ரூபாய்ச் சந்தையிலும் ஏற்படும் திரவப் பிரச்சினைகள் தீர்க்கப்படுதல் வேண்டும்; இதற்கான ஒரு தெரியப்படுத்தும் செயற்திறன் கொண்ட ஒரு ஒழுங்குமுறை இலங்கை மத்திய வங்கியின் சீர்படுத்துவதற்கான தலையீடு குறித்து நிறுவப்படுதல் பொருத்தமானதாகும். பொதுவாக நிதிச் சேமிப்பு ஊக்குவிக்கப்படுதவதற்கு பல்வகை செயற்கருவிகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்பாளர்களின் வேறுபட்ட இடர்நேர்வுகளுக்கு பலனளிக்கும் நோக்கங்களை உள்ளடக்கிய முறையில் தொழிற்படுதல் வேண்டும். கொடுகடன் ஒழுங்குநிலை கடன் பெறுவோர்கள் மற்றும் கடன் வழங்குவோர் ஆகியோரிடையே ஊக்குவிக்கப்படுதல் பல்வேறு ஊக்குவிப்பு முறைகளையும் மற்றும் செயற்திறன் வாய்ந்த சட்ட மற்றும் நீதிமன்றம் சார்பான பழக்க வழக்கங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் என்பவைப்பும் சேர்க்கப்படுதல் அவசியம். இறுதியாக தற்கால கொடுப்பனவு முறை மற்றும் சான்றிதழற்ற படுகடன் வியாபாரம் செய்யும் முறைகள் ஆகியவற்றின் அறிமுகம் விரைவுபடுத்தபபடுதல் வேண்டும்.
8. முடிவுரை
இலங்கையின் தாராளமயமாக்கல் முறை விரிவானதாக எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருந்துள்ளது. நிதித் தாராளமயமாக்கலின் முக்கியமான தாக்கம் வட்டிவீதக் கட்டுப்பாடுகளின் தளர்த்தல், போட்டிநிலை மேம்படுத்தல் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட கொடுகடன் திட்டங்களின் முனைப்பை அதிகளவுக்கு குறைத்தல் என்பன முக்கியமாக இடம் பெற்றன. நிதிச் சேமிப்புகள் அதிகளவுக்கு அதிகரித்தன. இதற்கு கணியளவான மெய் வட்டிவீதங்கள் கிடைக்கச் செய்தது முக்கியமாக இருந்தது. எப்படியாயினும் உள்நாட்டுச் சேமிப்புகள் பெருமளவு வளர்ச்சிய ைடயவில் லை. இதனால் எடுத்துக் காட்டப் பட்டது, நிதி ஆழமிகுதியாக்குதல், பகுதி முறையான பெளதீக சேமிப்புகள் மற்றும் முறைசாராத துறையின் சேமிப்புகள் நிறுவனச் சார்பான நிதிச்சேமிப்புகளுக்கு மாற்றப்பட்டதன் பிரதிபலிப்பாக அமைந்தது. அத்துடன் தாராளமயமாக்கலின் முழுமையான விளைவுகள் எதிர்பார்த்ததைப் போல பயனுடையவையாகவும் இருக்கவிலலை. ஏனென்றால் அவை இணக்கப்பாடற்ற பொருளாதார கொள்நெறிகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஒரு உயர்வான முதலீட்டு வீதம் பேணப்பட்டு வந்தது வெளிநாட்டுக் கடன் பெறுகையினால் சாத்தியமானது; ஆனால் இதன் விளைவு மெய்யான நாணயமாற்றுவீதம் பெறுமதி உயர்த்தப்பட்டது. ஒரு மிகையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகளவுக்கு பண விரிவாக்கஞ் செய்யும் மூலங்களினூடாகவும் நிதி அமைப்பிலிருந்து உள்நாட்டுக் கடன் பெறுகையூடாகவும் நிதிப்படுத்தப்பட்டது.
J11

Page 93
பேரின ரீதியான உறுதிப்பாடில்லாத நிலைமை, திறமையற்ற அரசுடைமை நிதிநிறுவனங்கள், சேமிப்புக்ள், முதலீடு ஆகியவற்றில் ஊக்கங் கெடுவிளைவை ஏற்படுத்தின; அதே வேளை உள்நாட்டு அரசாங்கக் கடன் பெறுகை தனியார்துறை முதலீட்டை விலக்கியது. நாணய உறுதிப்பாட்டைப் பேண முடியாத நிலை இரண்டு வகையான முரண்பட்ட தொழிற்பாட்டுப் பொறுப்பு நாணய ஆணையுரிமை நிறுவனத்தின் மீது ஒப்படைக்கப்பட்டது. அதாவது அது தனியார்துறைக் கொடுகடனை இறுக்கமாகப் பேண வேண்டியிருந்தது. கொடுகடன் பங்கீடு மீது தலையிட வேண்டியிருந்தது. மற்றும் ஒதுக்குத் தேவைகளைப் பரவலாகப் பயன்படுத்தியது. இது வட்டிவீத வேறுபாட்டை விரிவடையச் செய்தது. தென்முைை நாடுகளில் (South Cone Countries) ஏற்பட்ட அனுபவங்கள் போல அதிகளவுக்கு உறுதியின்மை விளைவுகளைத் தோற்றுவித்த நிலைமைகள் இலங்கை தவிர்த்துக் கொண்டது; இதற்குக் காரணமாக இருந்தது, தாராளமயமாக்கல் படிப்படியாகச் செய்யப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்துள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் அதிகமான நிதி நிறுவனங்கள் மீதான தலையீடும் கட்டுப்பாடும் வட்டிவீத திரிபுகளைக் கொண்டு வந்தது; அத்துடன் குறைந்தபட்ச அளவான பயன்களை மட்டும் வளப்பங்கீட்டுத் திறமை நிலையில் கொண்டு வந்தது; அல்லது பயன்கள் ஒன்றுமில்லாத நிலமையும் ஏற்பட்டது. மேலும் போதியளவான முன்னேற்பாடு சார்ந்த ஒழுங்கு செய்யா மையும் மற்றும் மேற்பார்வை போதாமையும் நிதிநிறுவனங்களில் இடர் நிலையினை ஏற்படுத்தியன.
நிதியமைப்பில் இருந்த குறைபாடுகளை மேலும் களையும் நோக்கத்துடன். 1987ஆம் ஆண்டுக்குப் பின்னராக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன. பங்குச் சந்தைகளின் தொடர்பான விருத்தி, படுகடன் மீட்பு, நிதி நிலைமை வெளிப்படுத்தல் மற்றும் முற்காப்பொழுங்கு நியமங்கள் முன்னேற்பாட்டுச் சார்பான ஒழுங்கு செய்தல், மற்றும் நிதிநிறுவனங்களின் மேற்பார்வை, நாணய மற்றும் படுகடன் முகாமைச் செயற்கருவிகளின் செம்மைப்படுத்தல், ஆகியவை தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவான முன்னேற்றம் காணப்பட்டது. எப்படியாயினும் நிதித்துறை ஒப்பீட்டளவில் இன்னும் போதியளவு ஆழமாக்கப்படவில்லை. முன்பு இனங்கண்டுள்ள பிரச்சினைகள் அனேகம் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. உயர்வான நடுவர் செயற்பாடுகளின் செலவுகள் நிலவுவது, வங்கியமைப்பில் திறமையற்ற பகுதிகள் இன்னும் இருப்பதற்கான ஆதார அடிப்படையினைத் தருகின்றது. அரசுடனம வர்த்தக வங்கிகளில் உயர்ந்தளவான வருவாயீட்டாத கடன்களும் அவை குறித்துப் போதியளவான ஈடுசெய் முற்காப்பொழுங்கு இல்லாமையும் அரசாங்கத்தின் இறைப் பகுதிக்கு ஒரு பெரும் செலவிழப்பாக நிகழக் கூடியதாக இருப்பதுடன் தனியார்துறைக் கொடுகடன் நிலையினையும் பாதிக்கின்றது. வரவு செலவுப் பற்றாக்குறையினை உள்நாட்டு நிதிப்படுத்துவது தொடர்ந்து திரிபுநிலையினை விளைவிக்கின்றது. அத்துடன் தனியார் துறையினை விலக்கும் தாக்கத்தினையும்
172

ஏா படுத்துகின்றது. குறிப்பாக நீண்டகாலச் சந்தை தொடர்பாக சந்தைச் சார்பில்லாத அரச நிறுவனங்கள் நீண்டகால சேமிப்புகள் பெருமளவினைத் திரட்டுகின்றன; அவ்வாறு திரட்டப்படுபவை அனேகமாக அரசாங்கத்தின குறுங்கால நடுத்தரக்கால ஆவணங்கள் மீது (திறைசேரி முறிகள் மற்றும் ரூபாய் கடன்கள்) முதலீடு செய்யப்படுகின்றன. அரச துறையின் மேலாதிக்கம் செயலூக்கமுடைய போட்டியினைப் பாதித்துள்ளதுடன், கிடைக்கக் கூடிய நிதிச் செயற்கருவிகளின் வேறுபட்ட தன்மையினையும் குறுகியதாக்கியுள்ளது. இவை எல்லாம் இறைநிலை உறுதிப்பாட்டினையும் குறைந்தளவான அரசின் பங்களிப்பினையும் உள்நாட்டு நிதியமைப்பில் தேவையானவை என்பதை வலியுறுத்துகின்றது; அதன் மூலம் கூடுதலான வளங்கள் திரட்டப்பட்டு அவை உற்பத்திச் சாத்தியம் நிறைந்த முதுலிடுகளுக்கு வழிப்படுத்த முடிகின்றது. இலங்கை மத்திய வங்கி நிதித் துறையில் ஒழுங்குபடுத்தும் முறைமைகளையும் மேற்பார்வை ஒழுங்குகளையும் பலப்படுத்துதல் வேண்டும். அத்துடன் கொள்நெறி சட்டகம் பலப்படுத்துவதும் தேவைப்படுகின்றது. மேலும் மறுசீரமைப்பினையும் மற்றும் ஏற்கன6ே மேற்கொள்ளப்பட்டவற்றின் வலுப்படுத்தலையும் நிதித்துறையில் செய்யப்படுதல் வேண்டப்படுகின்றது. இவ்வத்தியாயம் இலங்கையில் நீதித் துறையின் சீர் திருத்த முறை வழியினையும் போக்குகளையும் ஆராய்ந்துள்ளது. அத்துடன் எதிர்கால சீர்திருத்தம் பற்றிய செல்வழிகளையும் எடுத்துக் காட்டியுள்ளது; ஆனால் இவற்றின் விபரங்கள் மேலும் கூர்ந்து அவதானிக்கப்பட்டு விரிவாக எடுத்துரைக்கப்படுதல் பொருத்தமாகும். இது அபிவிருத்திப் பங்காளர்களின் உதவியுடன் செய்யப்பட்டு செயலூக்கத்துடன் அமுல்படுத்தப்படுவது அவசியமாகும். இவை மூலம் வறுமையினைக் (சறைப்பதற்கும் சமூகநலன் மேம்பாட்டை அதிகரித்துக் கொள்வதற்குமான (வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதும் வேண்டப்படுகின்றது.
உசாத்துணைகள்:
. Central Bank Annual Report- various years, Colombo.
2. Cho, Y.J. & Khatkhate, D., Lessons of Financial Liberalization in
Asia - A Comparative Study, 1989. Vilianenva, D. & Mirakhor, Strategies for Financial Reforms, IMF Staff Papers, Vol. 37, 1990.
.ن
173

Page 94
அத்தியாயம் 5
உழைப்புச் சந்தைச் சீர்திருத்தங்கள்
வழியாமலி றனராஜா
1. முன்னுரை
அரை நூற்றாண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட விரிவானதொரு சட்ட ஒழுங்கமைப்பிற்குள் இலங்கையின் உழைப்புச் சந்தை இயங்கி வருகின்றது. பிற்காலத்தில், வெவ்வேறு ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட விதமான கெRள்நெறி நோக்கங்களின் விளைவாக அல்லது வெவ்வேறு பிரிவினரின் குறிப்பிட்ட வகையான நலன்களுககு ஆதரவு திரட்டும் முயற்சிகளின் விளைவாக சட்டவாக்கங்கள் செய்யப்பட்டன. சட்டத் தொகுப்பில் பொருளாதார மற்றும் கைத்தொழில் குறிக்கோள்கள் கருதித் தேவையான திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்படவில்லை. இவற்றின் விளைவாக, மறுப்பதற்கில்லாத ஒரு இறுக்கமான மற்றும் சிக்கலான சட்ட ஒழுங்கமைப்பு வேலை செய்பவர் பாதுகாப்பினைக் குறியிலக்காகக் கொண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் உழைப்பினர் சட்டவமைப்பினை நிருவாகம செய்யும் தன்மையும், நடைமுறைப்படுத்தும் முறையும் காலப்போக்கில் தரம் குறைந்து விட்டது. இதனால், வேலைப்படையின் அதிகளவு பகுதியினர் சட்ட ஒழுங்கமைப்பிற்கு வெளியாகவே நிற்கவேண்டிய நிலையும், அத்தொழிலாாட்களின் அடிப்படை உரிமைகளும் வேலை செய்வதற்கான குறைந்தபா ச நிலைமைகளும் மறுக்கப்பட்ட நிலையும் காணப்பட்டுள்ளன.
இத்தகைய குறைபாடுகள் உழைப்புச் சந்தையின் திறமை நிலையினை குறைத்துள்ளதுடன், திரிபு நிலைகளையும் ஏற்படுத்தி முதலீட்டின் வளர்ச்சி, வேலையாக்கம், தொழில்களின் விருத்தி ஆகியவற்றிற்குத் தடையாகவும் இருந்துள்ளன. உழைப்புச் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக சீர்திருத்தங்கள தேவையானது என்பதைப் பற்றி அரசாங்கம், வேலைகொள்வோர், வேலைசெய்வோர் ஆகியோரிடம் கருத்தொருமித்த நிலை இருப்பினும், சீர்திருத்தங்களின் இயல்வு அவை எவ்வளவுக்கு என்பது தொடர்பான விடயங்கள் வாதாடப்பட்டு வந்துள்ளன. சட்ட ஒழுங்கமைவின் வலிமையான தன்மை இலகுவில் மாற்றக் கூடியதாக இல்லாத வகையில் நிறுவப்பட்டதுடன, அவ்வமைப்பின் வரலாற்று ரீதியான முக்கியததுவத்தினைக் கொண்ட சட்ட சார்பான ஏற்பாடுகளும் கவனத்துக்கு வருகின்றன இப்பின்னணியில், உழைப்பினர் சந்தைச் சீர்திருத்தம் இரண்டு அடிப்படையான குறிக்கோள்களை சரிநிகர்ப்படுத்தும்
74

அவசியம் உண்டாகின்றது. ஒரு புறத்தில், கூடுதலான நெகிழ்வுத்தன்மை சந்தையில் ஏற்படுவது முக்கியமாகின்றது; அதேவேளை, மறுபக்கத்தில் வேலைப்படையினர் தொடர்பாக பாதுகாப்பு வழங்குதலும் தேவையாகின்றது. சீர்திருத்தங்கள் அதிகளவு பாதகமான தாக்கத்தினை வறுமை மீது ஏற்படுத்தலாம். ஏனென்றால், வேலை செய்வதில் இருக்கக் கூடிய பாதுகாப்பு குறைக்கப்படுமானால், அது வறுமையினால் மிகக் கூடுதலாக பாதிக்கப்பட்ட வேலைப்படையினரின் பிரிவுகளிடையே வருமான மூலங்கள் தொடர்பாக விரும்பத்தகாத விளைவினைக் கொண்டு வரலாம்.
உழைப்புச் சந்தையின் நிலைமைகளை தாங்கி நிற்கும் சட்ட ஒழுங்கு தொடர்பாக தேவைப்படும் சீர்திருத்தங்களை இனங்கண்டு அவற்றின் முன்னுரிமை ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முன்னராக சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் இச்சட்ட அமைப்பு என்பதன் பரிணாம வளர்ச்சியினையும் சுருக்கமாக அறிந்து கொள்வதும் பொருத்தமாகும். அவ்வாறு செய்வது, சீர்திருத்தங்கள் பற்றிய தடைகள் எவ்வாறானவை, அவை இச்சீர்திருத்தங்கள் எவ்வளவுக்கு ஒர் இடர்சார்ந்த முயற்சியாக எதிர்நோக்கலாம் என்பதையும் உணர்வதற்கு பயன்படும்.
2. இலங்யிைல் அரசியல் மற்றும் தொழிலாளர் இயக்கங்கள் -
வரலாற்று இணைப்புகள்
இலங்கை மற்றைய ஆசிய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடுமிடத்து, காலனித்துவ ஆட்சியிலிருந்து இடரில்லா அரசியல் போராட்டத்தினுடாக சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தில், தொழிலாளர்களும் அவர்களின் தலைவர்களும் சுதந்திரம் இறுதியாகப் பெற்றதில் செய்த பங்களிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எப்படியாயினும், அரசியல் குறிக்கோள்களுக்கும் தொழிலாளர் இயக்கத்திற்கும் இடையே இணைப்புகள், தேவைகள் கருதி நூற்றாண்டிற்கு முன்னர் ஏற்பட்டவை, இன்றும் நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னரான முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக செல்வாக்குச் செலுத்துவதுடன், அவற்றின் தன்மையையும் தொடர்ந்து நிர்ணயித்து வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் பிரித்தானியரின் கோப்பிப் பெருந்தோட்டங்கள் நோயினால் அழிவுற்ற பின்னணியில், தேயிலை ஒரு முக்கியமான பெருந்தோட்டப் பயிராக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. தென்னிந்திய உழைப் பினர் இறக்குமதி செய்யப்பட்டு தேயிலைப் பெருந்தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டதும், அவர்களின் மிக மோசமான வேலைசெய்யும் நிலைமைகளும் மற்றும் கட்டுப்படுத்திய நிபந்தனைகளும், தொழிலாளர்களுக்கான முறைசார்ந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு பெரிதும் தூண்டுதலாக அமைந்தன. இவை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது ஒடுக்கு
175

Page 95
முறையான சட்ட ஏற்பாடுகளின் தன்மையினை முன்னிலைக்குக் கொண்டு வந்தன. எவ்வாறாயினும், எதிர்பார்பிற்கு வேறாக, இலங்கையில் உழைப்பினர் இயக்கத்தின் வேர்கள் பெருந்தோட்டங்களில் அல்லாது உண்மையில் பெருந்தோட்டங்களின் வளர்ச்சியினால் விரிவாக்கமடைந்த நகரப் பொருளாதாரத்திலே காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெருந்தோட்டப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு துணைபோகும் நோக்கில் பல வர்த்தக முயற்சிகள் கொழும்பில் தொடக்கப்பட்டு முன்னேற்றம் அடைந்தன. இவற்றுடன், தொடர்புடையதான உழைப்பு வேறாக்கப் பிரிவுகளின் அடிப்படையில், ஒரு புதிய சமூக முறைமை, பழையவை செயலிழந்த நிலையில், உருவாக்கம் பெற்றது. முக்கியமாக பாதைகள், புகையிரதப் போக்குவரத்து, கடல் மாாக்கமான போக்குவரத்து ஆகிய சேவைகள் பெருந்தோட்டங்களை இணைப்பதற்கு விருத்தி செய்யப்பட்டன. இதனால் உழைப்பினர் முன்பு இல்லாத அளவுக்கு பெருந்தொகையினர் ஒன்றாகச் சேர முடிந்தது.
ஆரம்பகாலத்தில் வேலை நிறுத்தங்கள், அச்சுத் தொழிலாளர்கள் 1993 இல், சக்கரவண்டிகாரர்கள் 1906 இல், மற்றும் புகையிரத தொழிலாளர்கள் 1915 இல், ஆகியவை, உழைப்பினரின் நிலைமைகள் பற்றிய முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் முற்றாக வெற்றியளிக்கவில்லை. ஆனாலும், தொழிலாளர்கள் தம்முடைய நிலைமைகளில் முன்னேற்றமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள் ஒன்றாகச் சேர வேண்டியதன் தேவையினை இவ்வேலை நிறுத்தங்கள் வலியுறுத்தின. வேலை நிறுத்தங்களுக்குக் காரணமாயுள்ள சமூக அநீதிகளை நீக்குவதில், சரிப்படுத்துவது தொடர்பாக காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து பதிலிறுத்தல் ஒன்றும் கிடைக்காததனால் தொழிலாளர்கள் அதிகமாக தளமாற்றம் விருப்புடைய தலைவர்களிடம் சென்றனர். அத்தகைய தலைவர்களினால் சிவில் சட்ட மீறல் நடவடிக்கைகள், பணிகளிலிருந்து விலகுதல், மற்றும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைள் ஆகியவற்றை கையாளும் வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டன. இவ்வழிமுறைகளைக் கையாண்டு முழுமையான சுயாட்சி, தொழிற்சங்க உரிமைகள், மற்றும் சர்வசன வாக்குரிமை என்பவை பெறுவது தம்முடைய நோக்கங்களாகக் கொண்டு செயலாற்றும் தலைவர்கள் தொழிலாளர்களைப் பெரிதும் கவர்ந்தனர். தொழிலாளர்களின் வேலை செய் நிலைமைகள், மற்றும் கூலிகள் தொடர்பான சிக்கலான விடயங்கள் தொடர்பாக எத்தகைய உணர்வுபூர்வான பதிலிறுப்பினையும் ஆட்சியாளர் வழங்காத ஆத்திரமூட்டும் செயல் காரணமாக தொழிலாளர்கள் அடிப்படைமாற்ற நோக்குடைய தலைவர்களை ஆதரிக்க முன்வந்தனர்.
இலங்கையில், இலங்கை உழைப்பினர் கட்சி (Ceylon Labour Party) 1928 இல், நீடித்த அனுபவமுடைய தொழிற்சங்க தலைவர் ஏ. ஈ. குணசிங்கா (A.E Gunasinghe), அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கங்களாக முன் வைக்கப்பட்டவை பின்வருமாறு: தொழிலாளர்களைப்
176

பாதிக்கும் சட்ட ஏற்பாடுகளை மாற்றியமைத்தல், சர்வசன வக்குரிமையை ஆதரித்தல், மற்றும் தொழிலாளர்கள் முயற்சியினால் விளைவிக்கப்படும் இலாபத்தில் ஒரு பங்கு உழைப்பிற்குக் கிடைப்பது உறுதிப்படுத்தல். இலங்கையில் இதுவே முதல் முறையாக ஒரு தொழிற்சங்கம் ஓர் அரசியல் கட்சியுடன் இணைந்திருப்பது அல்லது நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது காணமுடிந்தது. இதனுாடாக சட்டசபையில் உழைப்பினர் நலனை மேம்படுத்துவது பிரதான நோக்கமாக இருந்தது. இத்தகைய இணைப்பு, ஒரு காலனித்துவ ஆட்சியின் கீழ் உள்ள நாட்டில் தேவையைக் கருதியே ஏற்பட்டிருப்பினும், அனேகமான அரசியல் கட்சிகள் அக்காலத்திலிருந்து, எத்தகைய கருத்து நிலைச்சார்பு இருந்துள்ள பொழுதிலும், தொழிலாளருடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டன. இப்பின்னணி, முக்கியமாக தவிர்க்க முடியாமல், இன்று நிலவி வரும் உழைப்பினர் உறவுகள் எவ்வகைத் தன்மையானவை என்பதில் செல்வாக்கினை செலுத்தியது.
இக்காலகட்டத்தில், குறிப்பிட்ட முக்கியத்துவம் கொண்ட விடயமொன்று, முதல் முறையாக உழைப்பினர், வேலை கொள்வோர் ஆகிய இரு சாராருக்குமிடையே ஒரு கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 1929 இல் டிராம் வண்டி (tram Car) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், முன்னேற்றமுடைய வேலை நிலைமைகளை வேண்டிச் செய்யப்பட்டது. முன்பில்லாதளவுக்கு கொழும்பில் பொது மக்களின் வன்முறை (வேலைநிறுத்ததை ஆதரித்தவர்கள்) பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டது. இலங்கையின் வேலைகொள்வோர் சம்மேளனம் இலங்கையிலுள்ள பிரதான பிரித்தானிய தொழில் நிறுவனங்களின், பெருந்தோட்டங்கள் நீங்கலாக, பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனமாக 1928 இல் எஸ்.பி ஹேலி (S.P. Hayley) என்பவரைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஏ. ஈ. குணசிங்காவின் தலைமையில் நடாத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் விரிவடைந்தனால் தொழில்கள் பெரும் பாதிப்படைந்த சூழ்நிலையில், வேலைகொள்வோர் சம்மேளனம் உடன்படிக்கை செய்தது. அவ்வுடன்படிக்கையில், இலங்கை தொழில் சங்க 96i5ugsgälsit Sntil 6Didijiai (All-Ceylon Trade Union Congress) (56Oldg56it வரும் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம், வேலைகொள்வோர் சம்மேளனத்தின் உறுப்பினராகிய தொழில் நிறுவனங்களினால் வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக தொழிற்சங்கங்களும் செய்ய வேண்டியவை பற்றியும் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவையாவன: தொழிற்சங்கங்கள் வேலைகொள்வோரிடம் முதலில், பிரச்சினைகளுக்கு தீர்வினை முயற்சிக்காமல் வேலைநிறுத்தத்தில் இறங்குவது தவிர்க்கப்படுதல் வேண்டும், அல்லது வேலைகொள்வோருடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால், வேலைகொள்வோர் சம்மேளனத்திற்கு தெளிவாக ஏழுநாட்கள் முன்னறிவித்தல் வேலை நிறுத்தம் செய்யும் முடிவினை எழுத்து மூலம் கொடுக்காமல் வேலை நிறுத்தம் செய்வது
177

Page 96
தவிர்க்கப்படுதுல் வேண்டும். இந்த உடன்படிக்கை இலங்கையில் ஒரு முக்கிய காலத் திருப்பமாக தொழில் உறவுகள் குறித்து விளங்குகின்றது. வேலை கொள்வோர்களிடையே வெளிப்படையாக முதல் முறையாக தொழிலாளர்கள் ஒன்று சேருவதற்கான உரிமை, கூட்டுப்பேரம் பேசி தம்முடைய நிலைமைகளைத் தொழிலாளர்கள் முன்னேற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு ஈடுசெய்வதாக தொழிற்சங்கங்கள் தொழில்துறையில் அமைதியினைப் பேணுவதும் எதிர்பாக்கப்பட்டது. இவ்வுடன் படிக்கை, உலகத்தின் வேறு பாகங்களில் இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ள நிலைமைகளுடன் ஒப்பிடும் பொழுது அவைகளை விட காலத்தால் முந்தியதாகக் காணப்பட்டது.
1931 இல் இலங்கைக்கு சர்வசனவாக்குரிமை கிடைத்தது. வாக்குரிமை பெற்ற முதலாவது காலனித்துவ நாடு இலங்கையாகின்றது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டதனால், அரசாங்கம் நாளாந்தம் உழைப்பினர் தேவைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைப்பாட்டின் தூண்டுதலை ஏற்படுத்த முடிந்தது. டொனமூர் ஆணையம் செய்த சிபார்சில், வெளிப்படையாக இலங்கையின் சமூக, தொழில்கள் சார்ந்த சட்ட ஒழுங்குகளின் பின்தங்கிய நிலையினைக் கருத்தில் கொள்ளப்பட்டது. வாக்குரிமை தொழிலாளர்களின் ஒரு புறம்பான பிரிவினர் என்ற நோக்கில் அந்தஸ்த்தினை உயர்த்தியது. இதனால் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வாய்ப்பினை அதிகரித்ததுடன் அரசியல்வாதிகளாக வரவிரும்புவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபதையும் தூண்டியது.
இலங்கையில் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கான அரசியல் உரிமையை தொழிற்சங்க உரிமை, தொழில் உறவு உரிமைகள் சட்டப்படி அங்கீகாரம் பெற்றதற்கு முன்னராக, பெற்றுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதிலிருந்து, தவிர்க்க முடியாததாக வாக்களிக்கும் உரிமை, தொழிலாளர்கள் ஒன்றுகூடும் உரிமையினைப் பெறுவதற்குப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதேபோல், தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளைப் பெறுவதற்கு ஒன்றாகச் சேருதலை விரும்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, சோசலிச சார்புடைய அரசியல் தலைவர்களும் பிரதான செயற்பாட்டுச் சாதனமாக அரசியல் கட்சிகளுக்கு வெகுசன ஆதரவு திரட்டுவதற்கு தொழிற்சங்க வாதத்துடன் இணைந்து கொள்ளும் நிலைப்பாடும் பலமடைந்தது. தொழிலிற்சங்கங்களுக்குள் சேருவது வேலைசெய்வோர் வழிநடத்தலினால் ஏற்பட்டதெனினும், பிரதான தொழிற்சங்க அமைப்புகள் முக்கியமாக அரசியற் கட்சிகளினால் நிறுவப்பட்டன. அரசியல்வாதிக்கும் தொழிற்சங்கவாதிக்கும் இடையே உள்ள தொடர்பு உழைப்பினர் சட்டங்கள் உழைப்பினர் சந்தையில் செல்வாக்கு ஏற்படுத்தியதும், வளர்ச்சியடைந்ததும் 1956 இல் அமைக்கப்பட்ட கூட்டாட்சிக் காலத்தில் தெரிய வந்துள்ளது. அவ்வரசாங்கத்தில், முன்னாள் அரசாங்க எழுதுவினைஞர் சேவை 696õóluigoi (Government Clerical Services Union) 56066 gra; g)(555 g.i.
178

இலங்கரத்தினா (T8 IIangaratne) gd 60opůL SÐ6ODD& FUJIrab (Minister of Labour) பதவி வகித்தார். அவரே, தேசியமாக்கிய போக்குவரத்து பஸ் சேவைகள் மற்றும் துறைமுகச் சேவைகள் ஆகியவற்றிற்கு கூட்டுத்தாபன அந்தஸ்த்தைப் பெறுவதற்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ளார். இதனால் அரசு ஒரு பிரதான வகிபாகத்தினை முதல் முறையாக வேலை வாய்ப்பு உண்டாக்குவதில் எடுத்துள்ளது.
கூட்டிணைந்த உழைப்பு, தொழிலாளர் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் ஆகியவை தொடர்பான அரசியல் முக்கியத்துவம் 1970 ஆம் ஆண்டில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அந்தத் தேர்தலில், இலங்கை சுதந்திரக் a5. f (Gri Lanka Freedom Party, SLFP) 6o 6opa gFuDTaFLDT gais olaf, மாக்சிய a; (bggs sóls0606Ou8, g5(Lp6úlu 196DTäðfu 18, 85t' d (Lanka Sama Samaja party, LSSP — Marxist based Trotskyite Partv) Lossbytið g6o 6pabai abubu6f6můL Sid (Communist Party of Sri Lanka) seasu606 (8&irgbgs (b. Jin' LJ& Tsiilabi,605 அமைத்தன. இதில் திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கா பிரதம மந்திரிப் பதவியை வகித்தார். கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர், பெருந்தோட்டங்களின் அமைச்சராகக் கடமை ஆற்றினார். அரசாங்கம் (பிரதானமா. க பிரித்தானியா) கம்பனி உடைமையான பெருந்தோட்டங்களைத் தேசியமயமாக்கியது. இக்காலத்தில் வேறு முக்கியமான மாற்றங்களும கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, அரச கூட்டுத்தாபனங்களில் வேலைசெய்வோர் சபைகள் (Employees Councils) அமைக்கப்பட்டன. இவை, முகாமைப்படுத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டன. மேலும், தொழிற்சங்க உரிமைக் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டது. இத்திருத்தம், அரசாங்க சேவையிலுள்ள எல்லா அரசாங்க சேவையாளர்களுக்கும் பொதுவான தொழிற்சங்களில் சேருவதற்கு அனுமதியினை வழங்கியது. அரசாங்க கொள்ந்ெறியில் இக்காலப்பகுதியில் முக்கியமான அம்சமாக, சட்ட ஒழுங்கு முறைகளைப் பயன்படுத்தி உழைப்பினர் பற்றிய முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துதல் பின்பற்றப்பட்டது. இம்முறையினால், உழைப்பினர் பற்றிய வேலை தொடர்பான ஒப்பந்த விதிமுறைகள், நிலைமைகள் என்பவற்றில் அரசாங்க தலையீடு வேரூன்றிய தன்மையாகப் பலமடைந்தது.
gigsu (8g flusi, Ed. (United National Party, UNP) diggigi LD60) b5 காலத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு, மாற்று நிலையான அரசாங்கத்தை அமைத்துள்ளது. இது, 1977 ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் சட்டசபையில் மொத்தமான 168 ஆசனங்களில் 142 ஆசனங்களைப் பெற்றது. இத்தேர்தலில் வெற்றியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதார சீர்திருத்தம், சந்தை தாராளமயப்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான கொள் நெறிகளாக முன்வைத்தது. இச்சீர்த்திருத்தங்கள், பொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள்,
179

Page 97
இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்நெறிகள் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட குறைபாடுகள் என்பவற்றை அனுபவித்த 1970-77 காலப் பின்னணியில்; கவர்ச்சியுடையவையாக இருந்தன. இவற்றைத் தொடர்ந்து, அதிகமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றில் முக்கியமானவற்றுள் இரண்டாவது, குடியரசு அரசியல் யாப்பு, முதலிடத்தைப் பெற்றது. அத்துடன், உழைப்பினர் குறித்து முக்கியமானதாக அடிப்படை உரிமைகள், மற்றும் சுதந்திரம் தொடர்பான சங்கங்களை அமைப்பதற்கு அடிப்படை உரிமை, தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் அவற்றுள் சேருவதற்குமான சுதந்திரம், ஆகியவை அங்கிகாரத்தை இரண்டாம் குடியரசு யாப்பில் பெற்றன. இவ்வுரிமைகள், முன்பு “நாடற்றவர்கள்’ (Stateless persons) என்று கருதப்பட்டவர்களுக்கும், (முக்கியமாக பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள்) நாட்டில் பத்துவருட வதிவிடம் என்ற அடிப்படையில் கிடைக்கப்பெற்றன.
2.1 சுதந்திர வர்த்தக வலயங்களின் தோற்றம்
பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் 1978 இல், முதன் முறையாக இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களை அமைப்பதற்காக ஒழுங்கனுமதியினை வழங்கியது. இது பொருளாதாரத்திலும், உழைப்பினர் மீதும், தொழில் உறவுகளிலும் பிரதான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐக்கய தேசியக் கட்சி அரசாங்கம், முந்திய பிரதானமாக சோசலிசக் கொள்நெறிகள் தொழிலாளர் சார்பாகக் கொண்டுவந்த சடட ஒழுங்குகள் சிலவற்றை நீக்கம் செய்தது. சோசலிச கொள்நெறி நோக்கில் தொழிலாளர் சார்பாகச் செய்யப்பட்டவை, தனியார் முயற்சி, வெளிநாட்டு முதலீடு ஆகியவை தொடர்பாக ஊக்கப் பாதிப்பினை ஏற்படுத்துபவை எனக் கருதப்பட்டவை நீக்கப்பட்டன.
இவற்றில் முதலாவதாகச் செய்யப்பட்டது, வேலைகொள்வோருக்கு (Employers) பெண்களை இரவு நேர முறைமாற்ற ஒழுங்குகளுக்கமைய வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சர்வதேச உழைப்பு 59460) LDÙĵ6öì (International Labour Organization, ILO) 1948 sg24, ub g2,60ör (6 செய்யப்பட்ட உடன்பாட்டினைப் பின்பற்றும் பொறுப்பிலிருந்து விலகுதல் நிறைவேறிய பின்னர் நடைமுறைக்கு வரவிருந்தது. சர்வதேச உழைப்பு அமைப்பின் பெண்கள் இரவு வேலை தொடர்பான (ILO Convention No 4. 1948 Night work, (Women) ) பிரகடனம் முதலாவதாக சர்வதேச உழைப்பினர் அமைப்பினால் செய்யப்பட்டது அது, எந்த ஒரு தனியார் அல்லது பொது தயாரிப்புத் தொழில் நிறுவனத்திலும் இரவு நேரத்தில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுதலைத் தடைசெய்தது. இது, ஓர் அடிப்படையான வேலைகொள்வது பற்றிய கொள்நெறியாக அந்த சர்வதேச அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து இலங்கை விலகியது, 1980களின் 1990களின் இது பிற்பகுதியில் . நாட்டின் சமுக அமைப்பின் மீது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
180

2.2 பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தலில் உழைப்புச்
சீர்திருத்த நிகழ்ச்சிநிரல்
1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நடைமுறையில் இருந்த உழைப்புச் சட்டம் பற்றி ‘முதலீட்டாளர்கள்” அல்லது 'திறந்த சந்தை” ஆகியவை குறித்து “சாதகமான” தன்மையுடையதாகச் செய்வதற்கான திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. எப்படியாயினும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தரப்பில் இருந்த காலப்பகுதியில் “உழைப்பினருக்குச் சார்பான” அல்லது சோசலிச தன்மையினை அதனுடைய கொள்நெறிகளில் வலியுறுத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள், செய்த சட்டங்கள், படிப்படியாக உழைப்பினர் மற்றும் கைத்தொழில் உறவுகளில் இறுக்கத் தன்மையினை மேலும் வலுப்படுத்தியது.
1987 இல் முன்னாள் சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, உழைப்பின் நடைமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கத்துடன் புதிய வழிமுறைகளை முன்வைத்தார். இதில் சேர்க்கப்பட்டவற்றில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கும் சட்டத்தில் (Termination of Workmen-Special Provision - Act, No.45, 1971) (35606 util திருத்தமும் ஒன்றாகின்றது. இச் சட்டத்தின் திருத்தம் பின்வருவனவற்றை முன்னிலைப்படுத்தியது: வேலை கொள்வோர் வேலையாட்களை தற்காலிகமாக வேலையிலிருந்து விலக்குவது அல்லது வேலையில் இருந்து நீக்கம் செய்வது ஓர் உடன்பாடுள்ள நட்ட ஈடு உள்ளடக்கிய ஒழுங்குடன் நடைமுறைப் படுத்தல், வேலையற்ற நிலையில் நன்மைகள் வழங்கல், மற்றும் நடைமுறையில் இருக்கும் உழைப்புச் சட்ட ஒழுங்குகள் சீாசெய்யப்படுதல், அவை ஒன்றாகத் தொகுத்தல், உற்பத்தித் திறன் தழுவிய கூலி நிர்ணயிப்பு அணுகுமுறை ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
உழைப்பினர் உறவுகள் தொடர்பாக உற்பத்தித் திறன், செயற்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகுவது பற்றி ஆாவம், ஈடுபாடு ஆகியவை காட்டியபொழுதும், எண்பதுகளின் பிற்பகுதியில் அரசாங்கத்தின் தலைமை மாறிவிட்டது அதனால் இவ்வணுகுமுறை தொடர்பான அரசியல் துணிவாற்றலும் மாறிவிட்டது. முன்பு வெளிப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு முரண்பட்டதாக வேலையிலிருந்து நீக்கம் செய்வது (Termination Act) பற்றிய சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது; அதாவது, அதனை தற்காலிக அல்லது இடைவரவு வேலையாட்களுக்கும் செல்லுபடியாகும் திருத்தமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 1989 இல் கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த பெரும்பான்மை குறைக்கப்பட்டது. அத்துடன் வட - கிழக்கில் இனத்துவ மோதல் தீவிரமடைந்ததனாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி 1994 இல் முடிவடைந்தது 1987 இல் வெளிப்படுத்திய குறிக்கோள்கள் ஒன்றும் நிறைவேற்றப்படவுமில்லை.
18

Page 98
ஐக்கிய தேசியக் கட்சி ஆகஸ்ட் 1994 இல் நடந்த தேர்தலில் மக்கள் கூட்டமைப்பினால் (People’s Alliance) - சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி மற்றும் ஒன்பது கட்சிகள் சேர்ந்து கூட்டமைப்புதோற்கடிக்கபபட்டது. மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் உழைப்பினர் தொடர்பான “ஒடுக்குமுறைக் கொள்நெறிகள்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பின்னணியில் சீர்திருத்தங்கள், உழைப்பினர் நிலையில் கொண்டுவருவதாக உறுதியும் வழங்கப்பட்டது. இதற்கமைய செப்ரெம்பர் 1995 இல் அரசாங்கம், “தொழிலாளர்கள் பட்டையம் (Workers' Charter) என்பதை அறிமுகம் செய்தது. இப்பட்டையம் உழைப்பினர் தொடர்பான உறவுகளில், அரசு வேலைகொள்வோர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரின் கடப்பாடு என்பவற்றை விளக்கியுள்ளது. பட்டையம் ஒரு சட்டவாக்கமாக நிறைவேற்றப்படுவதாக இருந்த பொழுதும் தொழில்துறைப் பிரிவினரின் அழுத்தங்கள் காரணமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் முக்கியமான சில சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தொழிலாளர் நட்டஈடு பற்றிய 1934 (19) ஆண்டுச் சட்டத்தில் தொழிலாளர்களின் வேலைத்தளம் சார்பான சுகாதாரப் பாதுகாப்பின் விரிவாக்கம், மற்றும் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் தொடர்பான 1999 இல் செய்யப்பட்ட தொழிலாளர் சங்க வேலையாட்களின் உரிமைகளை விரிவாக்கிய திருத்தங்கள் ஆகியவை முக்கியமாகின்றன.
டிசம்பர் 2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் தேர்தலுக்குப்பின் பதவியேற்றது. இதனால் மீண்டும், முதலீட்டுக்குச் சார்பான மற்றும் தாராளமயமாக்கல் சார்பான உழைப்பினர் சட்ட உறவுகள் பற்றிய சீர்திருத்தங்கள் புதிய ஆர்வத்துடன் அணுகப்பட்டன. பல திருத்தங்கள், வேலை கொள்ளுனர் மீது வேலையாட்களை நீக்கஞ் செய்வது பற்றிய கட்டுப்பாடுகள் குறைக்கபடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அத்தகைய திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டன. இவை குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளினால் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் அவை சட்ட மீறல் செயல்கள் என நடவடிக்கைகள் தொடரப்பட்டன.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றில் அரசியல் சார்பான நலன்களின் ஒரு கருவியாக உழைப்புச் சந்தைச் சீர்த்திருத்தங்கள் நோக்கப்பட்டன. நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை அத்தகைய சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பின்பற்றப்படவில்லை. அதனால் அவ்வாறான சீர்திருத்தங்களின் வழியாக உழைப்புச் சந்தை திறமையாக இயங்குவதற்கு வேண்டிய பொறிமுறைகள், வழிமுறைகள் அறிமுகப்படத்தபடவில்லை; அத்துடன், வேலையாட்களின் உரிமைகள் முயற்சியாளர்களுக்கு வேண்டிய நெகிழ்வு நிலைகள் ஆகியவற்றிடையே இணக்கப்பாடு காண்பதில் சட்டவாக்கங்களின் பங்களிப்பைக் குறைக்கும் வாய்ப்புகளும் ஏற்படவில்லை. இவற்றின் விளைவாக
182

ஏற்பட்ட திரிபுநிலைகளும் ஒழுங்கற்ற தன்மைகளும் இன்றைய உழைப்புச் சந்தையில் காணப்படுகின்றன.
3 உழைப்புச் சந்தை - இயல்புகளும் அதனைக் கட்டுப்படுததும்
நிலைகளும்
சுதந்திரத்திற்குப் பின்னராக, அரசியல் தலைமைத்துவத்தில அடிக்கடி தாக்கமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதிலும், 1990களின் முற்பகுதியில் இலங்கை போற்றத்தக்க முன்னேற்றங்களை சமூகத்துறையில், அடிப்படைச் சுகாதாரம், கல்வி, மற்றைய வாழ்க்கை நிலைக் குறிகாட்டிகள் ஆகியவற்றில் அடைந்துள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே நாட்டின் எழுத்தறிவு மற்றும் வாழ்வு நீடிப்பின் எதிர்பார்ப்பு வீதங்கள், உதாரணமாக, மிக உயர்ந்த இடத்தினை எடுத்துள்ளன. ஆனால், இவ்வடைவுகள் பொருளாதாரத்தில் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. சமூக காப்பொழுங்கு, நலன் பேணும் செலவினம் பெளதீக வாழ்வு நிலையினைப் பெரிதும் முன்னேற்றமடையச் செய்துள்ளமை, முக்கியமாக ஏற்றுமதித் துறையில் பெற்ற மிகை (வரிகள் மூலம்) வழியாக (மற்றைய வேறு முதலீட்டைக் கட்டுப்படுத்திய வழியாகவும்) அடைந்து கொள்ள முடிந்தது. இவற்றினால், இலங்கையின் நீண்டகால வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உலகத்தில் மிகக் கூடிய உள்நோக்கிய நலன் பேணும் நாடாக இலங்கை மாறியுள்ளது. எழுபதுகளின் முற்பகுதியில் அரசாங்கம் பல உற்பத்தித் துறைகளை (தேயிலை, இறப்பர், மற்றும் கைத்தொழில்கள்) கையேற்றது; இக்காலப்பகுதியில் பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைந்தும் வேலையின்மை உயர்ந்தும் காணப்பட்டன. இவற்றிற்குப் பின்னணியாக அமைந்தது, பிரதானமாக ஒர் இறக்குமதிப் பதிலீட்டுப் பொருளாதாரக் கொள்நெறிமுறைமை. 1977 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. புதிய அரசாங்கம், பல முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து, பொருளாதாரத்தை ஓர் அரைகுறையாக மூடப்படிருந்த கட்டத்திலிருந்து திறந்த பொருளாதாரச் சந்தை சினேகமான முறைமைக்கு எடுத்துச் சென்றது. வர்த்தகத் தாராளமயப்படுத்தல், நிதித்துறையில் அரைகுறைத் தாராளமயப்படுத்தல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் துாண்டுதல்களாக அமைந்தன. பொருளாதாரத்தின் உயர்வான வளர்ச்சியும், உயர்வான வருமானங்களும் - நலன்பேணும் செலவினங்களில் குறைவும் - ஏற்பட்ட சூழி நிலையில் தொடர்பான வேறு பல மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த இரண்டு தசாப்தங்களிலும் பொருளாதார வளர்ச்சி, வருடமொன்றுக்கு சராசரி 5 சதவீதத்தினை அடைந்தது. ஆனாலும் இதில் தளம்பல்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிலைமைகளினால் ஏற்பட்டன. இரண்டாவது நிலை குறித்து, இனத்துவ முரண்பாடும் மோதலும் 1983 க்குப் பின்னர் தீவிரமடைந்தது; இத்துடன் தென்பகுதி உள்ளுர் கிளர்ச்சி 1987 - 89
183

Page 99
காலப்பகுதியில் ஏற்பட்டு நாட்டின் பிரச்சினைகளை மோசமான நிலைக்குத் தள்ளியது. இவை பொருளாதார வளர்ச்சி குறித்து மிகவும் குழப்பமான நிலையினைக் கொண்டு வந்தன. இத்தகைய மோதலினால் ஏற்பட்ட போர் 1998 ஆம் ஆண்டளவில் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதுடன், இதனால் நாட்டில் வருடத்தில் 2 (இரண்டு) புள்ளி சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது என மத்திய வங்கியினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளுர் மோதல், போர் ஆகியவற்றின் இடர்சார்ந்த சூழ்நிலையிலும் அதனுடைய 1989 - 95 வரையான காலப்பகுதியில் பொருளாதார நிலைமையின் சரிப்படுத்தல் திட்டம் முன்னேற்றம் அடைந்தது. 1977 இல் தொடக்கப்பட்ட பொருளாதாரத்தின் திசைவழி மாற்றம் தொடர்ந்தும், இனத்துவ மோதலினால் குழப்பமடைந்திருந்த நிலையிலும், முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் இச்சீர்ப்படுத்தலின் இரண்டாவது கட்டத் தொடர்ச்சியும் மாற்றமும் மேலும் பொருளாதாரத்தின் திறந்த தன்மை, போட்டிக்குச் சாதகமான சூழல், மற்றும் தனியார் துறைக்கு முக்கியத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தின. 199395 காலப் பகுதியில் பொருளாதாரம் வலுவூட்டும் தன்மையான வளர்ச்சியினையும், குறைந்த பாதிட்டுப் பற்றாக்குறைவினையும் குறைந்தளவான நடைமுறைக் கணக்கு நிலுவையினையும் அனுபவித்தது. தயாரிப்பு தொழில் சார்ந்த நிறுவனங்களின் தனியார்மயமாக்கலும் முக்கியமாக வெற்றியடைந்தது. ஆனாலும், பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவது, மீண்டும், 1977-87 காலப்பகுதியில் இருந்தது போன்று, வெற்றியளிக்கவில்லை. போர்ச் சூழலின் விளைவாக உறுதிப்படுத்தும் வழிமுறைகள் சிக்கலானவையாக மாறியுள்ளன. அத்துடன், சிவில் சேவை சீர்திருத்தம், இறைச்சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகத் தேவைப்பட்டது தோல்வியினைக் கண்டது. 1995 இல் சிவில் சேவையின் அளவைக் குறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட பிரதான வழிமுறைகளும் எதிர்ப்புறமான மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், முன்பினை விட அதன் பருமனும் அதிகரித்தது. உழைப்புச் சந்தையில் முக்கியமான தாக்கத்தை இன்னொரு விடயமும் ஏற்படுத்தியது. அதாவது, ஏற்றுமதி வலயங்களில் நடந்த முதலீடுகளின் தன்மை கவனத்துக்கு வந்தன. இவ்வலயங்களில் உற்பத்தி அலகுகள், குறைந்த அளவு திறனுடைய உழைப்பின் அடிப்படையில் பெருகின. அவை முக்கியமாக தைத்த ஆடைகள், உடைகள் கொண்ட அலகுகளாக இருந்தன. இக்காலப்பகுதியில் விரைவாக நடந்தேறிய சமூக, அரசியல், பொருளாதார கொள்நெறி மாற்றங்கள் உழைப்புச் சந்தையில் நீடித்திருக்கக் கூடிய தாக்கத்தினை எற்படுத்தின. திறந்த பொருளாதார முறைமையில், பல காரணிகள், உழைப்புச்சந்தையில் சேருகின்ற பெண்களின் அதிகரிப்பு, விவசாயத்திலிருந்து தயாரிப்பு, சேவைத்துறைகளுக்கு மக்களின் அசைவுகள், மற்றும் நாட்டுக்கு வெளியாக உழைப்பினரில் முக்கிய பகுதியினர் சென்றமை ஆகியவை தாக்கத்தினை ஏற்படுத்தின. இவை பிரதானமாக, உழைப்பினர் நிரம்பலில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. வெளிநாட்டு
184

முதலீட்டின் அதிகரிப்பு, மற்றும் பலதேசியக் கம்பனிகளின் உள்நாட்டு உற்பத்திச் செலவுகள் குறைந்த மட்டத்தில் இருப்பதைப் பயன்படுத்துவதற்கான ஆர்வம், கைத்தொழில் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் வழமையாக உள்ள உழைப்பின் கேள்வியில் மாற்றத்தை எற்படுத்தின. இத்தகைய முக்கிய அம்சங்களின் பின்னணியினை விளங்கிக் கொள்வது அவசியம்.
உழைப்புச் சந்தை பற்றிய பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகள் சாதகமான நிலையில் இருப்பதனை அட்டவணை 3.1 இல் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் குடிசனத்தின் வளர்ச்சி தற்பொழுது உலக ரீதியில் மிகக் குறைந்தவற்றில் ஒன்றாகின்றது. அதேவேளை, உழைப்பினர் படையிலும், வேலை அளவிலும் ஏறத்தாழ ஒரு சமன்படும் நிலைக்குச் செல்வதாகக் காணலாம். உற்பத்தித் திறன் முன்னேற்றமடைந்துள்ள நிலையில் மொத்த ரீதியான வளர்ச்சி கணிசமான அளவுக்கு ஏற்பட்டுள்ளது. (2000 - 2001 காலம் ஒரு விலக்கான நிலை). எப்படியாயினும், விரிவாக நோக்குமிடத்து திரிபுநிலைகளும், சமமற்ற நிலைகளும் குறிகாட்டிகளுக்கு உள்ளாக இருப்பதும், உழைப்புச் சந்தையின் தொழிற்பாட்டில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.
3.1 உழைப்புச் சந்தையில் நிரம்பல் - 1990 களில்
குடிசன அமைப்பு மாற்றங்கள்
இரு தசாப்தங்களின் இடைவெளிக்குப் பின் 2001 இல் வீடமைத்தல் மற்றும் குடிசனம் பற்றிய மதிப்பீடு செய்யப்பட்டது. இது, 1981 இல் செய்த குடிசனம் மதிப்புக்காலத்திலிருந்து எத்தகைய மாற்றங்கிள் ஏற்பட்டுள்ளன என்பதை மதிப்பிடவும் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பாகக் கொள்நெறிகளையும் உபாயங்களையும் வகுத்துக் கொள்வதற்கும் பயனுள்ள தரவுகள் கிடைத்துள்ளன. முக்கியத்துவம் கொண்ட விடயங்களில், பெண்கள் தொகையில் விகிதாசார ரீதியான மாற்றம், மற்றும் குடிசனத்தில் வயது அதிகரித்துள்ள தன்மை ஆகியவை உழைப்பின் நிரம்பல் பற்றிய நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருத்தல் எதிர்பார்க்கலாம்.
உழைப்பினர் படை பங்கேற்றல்
உழைப்பின் பங்கேற்பு வீதம் உறுதியாக வீழ்ச்சியடைந்து சென்றது 1998 இல் இருந்து காணப்பட்டது. இவ்வீழ்ச்சி ஓர் அக்கறை கொள்ளவேண்டிய
185

Page 100
விடயமாகின்றது;
அதேபோல விரைவாக பெண்களின்
பங்கேற்பும்
வீழ்ச்சியடைந்ததும் கவனத்தை ஈர்த்தது. பெண்களின் பங்கேற்பு வீழ்ச்சியினை
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிப் பெண்கள் சென்றதை விளக்கமாகக்
கொள்வது பொருத்தமானதாக உள்ளது. இது அவ்வாறு விளக்கம்
அட்டவணை 3.1:
மொத்த உள்நாட்டு உற்பத்தி, உழைப்பினர் படை மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றின் வருடாந்த வளர்ச்சி வீதங்கள் (%) 1959-1999
1959-63 1963-71 1971-80/81 1980/81-90) 1990-99 மொத்த உள்நாட்டு
உற்பத்தி: 4.0 4.4 4.5 3.6 5.
(519360TD : 2.7 2.2 1.7 1.4 1.2 உழைப்பினர் படை: 18 3.4 2.5 2.2 12
வேலை: 0.6 1.7 2.9 2.3 2.1 உற்பத்தித் திறன்: 3.4 2.7 1.5 1.5 3.0
குறிப்பு: உழைப்பினர் படை வேலை பற்றிய தரவுகள்
1990-99 வரையான
காலப்பகுதிக்கானவை; ஏழு மாவட்டங்கள் மட்டும் உள்ளடக்கியுள்ளது.
முலம்: அலைலிமா பற்றீஷியா : இலங்கை - வளர்ச்சியும், பங்கிடும் மீள்பாங்கிடும்,
நிதி மற்றும் திட்டமிடுதல் அமைச்சு, கொழும்பு (2001)
அட்டவணை 3.2: குடிசன மாற்றங்கள் (1971 - 2001)
1971 1981 2001
குடிசனம் ("000): 12,690 14,847 18,732 வளர்ச்சிவீதம: 2.3 1.6 1.2 அடர்த்தி (கி.மீ. ஒன்றுக்கான குடிசனம்): 96 230 299 பால்நிலை வீதம் (100 பெண்களுக்கு r • ஆண்கள்): 106 03.9 97.8 18 வயதுக்குக் கீழானவர்கள் (%): 49.6 41.6 32.9 65 வயதுக்கு மேலானவர்கள (%): 4.2 5.4 7.0
மூலம்: குடிசன மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம், கொழும்பு (2001), குடிசன மற்றும்
வீடமைப்பு மதிப்பீடு.
186

தருவதானாலும், இதே காலப்பகுதியில் நாட்டைவிட்டு தொழில் வாய்ப்புக்காக வெளிச் செல்வது குறைந்துள்ளதும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இதனால், இப்பெண்கள் நாட்டின் முறைசாராத்துறைகளின் பொருளாதார நடவடிக்கைளுக்கு சென்றுள்ளனர் என்ற சாத்தியப்பாடு பற்றிய கேள்வியினை எழுப்புகின்றது. ஆண்கள் பெண்கள் ஆகிய இரு சாரார் 15-19 வயதுப் பிரிவினர் குறித்து ஊழியப்படைப் பங்கேற்பு 1990 களில் சிறு அளவு குறைந்தது. இது, மூன்றாம் மட்டக் கல்வி வாழ்தொழில் கல்வி ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் அதிகரித்து, அதனால் உழைப்பினர் படைக்கு நுழைவது தாமதப்பட்டிருக்கலாம்; வேலைபார்ப்பவர்களிடையே இரண்டாம் மட்டத்திற்குப் பின்னரான தகைமை பெற்றவர்களின் அளவு இரட்டிப்பு அதிகரிப்பை அனுபவித்துள்ளது. அதேவேளை எத்தகைய பாடசாலைக் கல்வியும் பெறாதவர்களின் விகிதாசாரம் முக்கியமாக குறைந்தது இது வேலைபார்ப்பதற்கு கல்வி முக்கியத்துவம் கொண்டது என்பதைக்காட்டுகின்றது.
அட்டவணை 3.3: உழைப்புப் படையின் உள்ளமைவு (1992 - 2001)
1993, 1994. 1995 1996 1997 1998 1999 2000 2001
உழைப்புபடை ‘000: 6032 6079 6106 6242 6266 6660 6673 6627 6730 வேலையில் உள்ளவர்கள். 5201 5281 5357 5537 5608 6049 6082 6310 6207 வேலையற்றோர்: 831 798 749 705 658 61 59 517. 523
உழைப்பினர் படை பங்கேற்றல் வீதம் (%): 49.1 48.7 47.9 48.7 48.7 51.7 50.7 50.3 45.7
ஆண்: 65.3 65.4 64.4 65.9 65.7 67.3 67.7 67.2 66.4 பெண்: 32.0 31.7 31.7 31.6 32.0 36.4 34. 33.9 31.7 வேலைசெய்வோர்
வகை நிலை (உழைப்புபடையின் %)
பொதுத்துறை: 17.4 16.4 15.6 15.0 15.1 14.5 14.4 13.4 13.9 தனியார்துறை: 42.8 44.3 44.2 45.4 44.4 41.1 43.1 42.9 45.4 வேலைகொள்வோர்: 2.0 2.3 2.5 2.3 2.3 1.9 2.0 2.6 2.4
சுயவேலை; 27.4 28.3 28.3 26.8 28.8 28.9 28.3 28.4 28.3 கூலிபெறாத குடும்ப
வேலையாட்கள்: 10.4 9.4 9.4 10.0 9.4 13.6 12.2 13.0 10.2
மொத்தம்: 100.0 100.0 10O.O 100.0 100.0 OOO 100.0 100.0 100.0
மூலம்: காலாண்டு உழைப்புப் படைக் கணிப்பு, குடிசன மற்றும் புள்ளி விபர மதிப்பீட்டுத் திணைக்களம் (2001)
187

Page 101
பத்துவருட பாடசாலைக் கல்வி பெற்ற தகைமையுடையவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கவகையில் மாறவில்லை. எப்படியாயினும், பத்தாவது வருடத்தினைப் பூர்த்தியாக்குவதற்கு முன்னராக பாடசாலைக் கல்வியிலிருந்து, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகச் செல்பவர்கள் சதவீதம் விரைவாக அதிகரித்துச் சென்றுள்ளதுடன் தற்போது அது 20 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. கல்வித் தகைமைகள் பெறுவதற்கு விருப்பமில்லாதவர்கள் அல்லது இயலாதவர்கள் இளையவர்களின் வேலை பெறக் கூடியவர்கள் என்ற நிலையினைப் பாதிக்கமுடியும்; இது அவர்களை நீண்ட காலத்தில் சந்தை சூழ்நிலைகள் தொடர்பாக மேலும் பலவீனப்படுத்துகின்றது.
அட்டவணை 3.4 உழைப்புப் படையினரின் கல்விப்பேறு
பேறுநிலை வேலையில் உள்ளவர்களின் வீதம்
1985-86 1990 1999
பாடசாலைக் கல்வி பெறாதவர்கள்: 0.9 70 4. முதல்நிலை (1-5 வருடம்): 28.5 24.9 21.2 இரண்டாந்தரம் (6-10 வருடம்): 41.0 45. 45.8
பொதுத்தராதரம் (சாதாரணம்); 4.6 6.0 18.0 பொதுத்தராதரம் (உயர்தரம்); மற்றும் மேல் 50 70 1.O
மொத்தம்: OO.0 OOO 10O.O
மூலம்: உழைப்பினர் படை மற்றும் சமூக பொருளாதாரக் கணிப்பீடு 1985/86; காலாண்டு உழைப்பினர் படைக் கணிப்பீடு 1990 மற்றும் 1999.
3.2 உழைப்புச் சந்தைக் கேள்வி - 1990 களில்
1978 ஆம் ஆண்டுக்குப் பின்னராகக் கையாளப்பட்ட பொருளாதாரக் கொள்நெறிகள் உழைப்புச் சந்தையின் உள்ளமைவுக் கூறுகளில், குறிப்பாக. பொதுத்துறையிலிருந்து (இது எழுபதுகளில் மேலாதிக்கம் செலுத்திய துறையாக முற்பகுதியில் இருந்தது) பொருளாதார நடவடிக்கைகள் வேறு திசைக்குச் சென்றது தொடர்பானவை. 1978/79 இல் மொத்த வேலையில் உயர்ந்திருந்த, 20 சதவீதத்திற்கு மேலானதாகக் காணப்பட்ட பொதுத்துறையின் வேலையளவுப் பங்கு 1996/97 இல் 15 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனாலும், இப் பங்கு வீதம் படிப்படியாக அதிகரித்து 2001 இல் 18 சதவீதத்திற்கு மேல்
188

இருந்துள்ளது இங்கே குறிப்பிடும் அதிகரிப்பு, அரசாங்கத்தின் தொழில்ரீதியாக ஏற்பட்டதல்ல; மாறாக அது அரசாங்கத்தில் 1994 ஆம் ஆண்டுக்குப்பின் அமைச்சுக்களின் அதிகரிப்பினாலும், மற்றும் நாட்டுப் பாதுகாப்புச் சார்பாக ஆட்கள் சேர்க்கப்பட்ட எண்ணிக்கையின் அதிகரிப்பினாலும் ஏற்பட்டது.
முறை சாராப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
இலங்கையில் முறை சாராப் பொருளாாதாரம் பல தனிப்பட்ட உற்பத்தி அலகுகள், மற்றும் சிறு உற்பத்தி அலகுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. அவை பல்வகைச் சேவைகளை அதிகமாக சுய உழைப்பு அல்லது குடும்ப அங்கத்தவர் உழைப்பு என்பவற்றைப் பயன்படுத்தி பொதுவாக மிகக் குறைந்த முதலின் உபயோகத்துடன் வழங்கப்படுகின்றன. இவ்உற்பத்தி அலகுகள் குறைந்த வகையான ஒழுங்குமுறைகள், கணக்கு அறிக்கைகள் அல்லது பதிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன; இவற்றில் மற்றவர்களின் உழைப்பினைப் பயன்படுத்துமிடத்திலும் ஒப்பந்த உடன்படிக்கைகள் இல்லாத வகையில் முறைசாரா ஒழுங்குகளுக்கு ஏற்றதாக, விரும்பிய நேரத்தில் அவர்களை நீக்குவது போன்ற வழிகளைப் பின்பற்றுகின்றன. அநேகமான முறைசாரா உற்பத்தி நிறுவனங்கள் குடும்பங்களை (Households) அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியிருப்பதும் காணமுடிகின்றது. இத்துறையினை வரைவிலக்கணப்படுத்தும் பொழுது சட்டப்படியான நிலை அல்லது முறைசார்ந்த பதிவுகள் என்பவற்றைப் பயன் படுத் துவதில் லை; முறை சாராப் பொருளாதாரத்திலுள்ள பல பொருளாதார நடவடிக்கைகள் பதிவு செய்யப்படாதவை; ஆகவே, அவை ஒழுங்குபடுத்தபடுவதும் குறைவாகவே காணப்படுகின்றது.
முக்கியமாக அவதானிக்கக் கூடிய விடயம் என்னவென்றால், தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுவரப்பட்ட, பின்னணியில் பொருளாதார நடவடிக்கைகள் முறைசார்ந்த துறைகளிலிருந்து முறைசாராத் துறைகளுக்கு மாறியுள்ளன; கிடைக்கும் மதிப்பீடுகளின் படி இத்துறை தற்பொழுது இலங்கையின் மொத்த வேலை அளவில் 70 சதவீதத்திற்குப் பொறுப்பாகவுள்ளது. இந்தப் போக்கு கிராமியப் பகுதிகளில் எதிர்ப்புறமான மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது, முறைசாராத்துறை நடவடிக்கைகள் சற்றுக் குறைந்துள்ளதுள்ளன. இதற்குக் காரணங்களாக முக்கியமாக, முறைசார்ந்த துறையின் விரிவாக்கமும், மற்றும் குறைந்தளவுக்கு மாகாணசபை அரசாங்கங்களின் விரிவாக்கமும் இருந்துள்ளன.
பொதுத் துறை பின் வருவனவற்றை உள்ளடக்குகின்றது: மத்திய அரசாங்கத்தின், மாகாணசபை அரசாங்கங்களின் நிறுவனங்கள் (அரச துறை) அரைகுறை அரசாங் கப் பகுதியிலுள்ள நிறுவனங்கள் , பொதுக் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மற்றும் தனியார்-பொதுக்கம்பனிகள்.
189

Page 102
எவ்வாறாயினும், இவை குறித்த தரவுகளிலிருந்து படைத்துறைசார்ந்த பணியாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர். படைகளுக்கு ஆட்சேர்த்தலைவிட, காலத்துக்காலம் ஒழுங்கற்ற முறையில், அரச பணியாளர் நிலைப்பிரிவு ஏற்பாட்டிற்குள் ஆட்சேர்த்தல் குறிப்பாக 1994 இல் அரசாங்க மாற்றத்திற்குப் பின்னாகச் செய்யப்பட்டது. 1995 இல் 35,000 ஆசிரியர்களும், மேலும் 1998 இல் 12,000 ஆசிரியர்களும் சேர்க்கப்பட்டனர். இன்னொரு விலகிய முறையில் 1995 யூனில் ஆரம்பிக்கப்பட்ட வறுமை நிவாரணத்திட்டம் “சமுர்த்தியின்’ கீழ் 24,000 ஊக் குவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1999 மேயில் 8000 பல்கலைக்கழகப் பட்டதாரிகள், சனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஏற்கனவே நிறுவப்பட்ட பணியாளர் ஒழுங்குக்கு புறம்பானதாக, நியமிக்கப்பட்டனர். இந்த முயற்சிகள் அரசாங்கத்தின் படித்த இளையோர் பிரச்சினைகள் பற்றிய பதிலிறுப்பு நிலையினைக் காட்டியுள்ள பொழுதும், உழைப்பினர் சந்தையில் இது ஒரு முன்னறிந்து கூற முடியாத தன்மையினைப் புகுத்தியுள்ளது.
பொதுத்துறை இன்றும், வேலைப்படி நிலையமைப்பிலுள்ள கீழ்மட்டம், நடுமட்டம் ஆகியவற்றில் உள்ளவர்களால் பெரிதும் விரும்பி வேலைசெய்யும் துறையாகின்றது. தொழில் வகையில், ஆசிரியர்கள், வைத்திய, பொறியியில் துறையினர் ஆகியவர்களின் பிரதான வேலைபார்க்கும் மூலமாக அரசாங்கம் இன்றும் காணப்படுகின்றது அத்துடன் “வெள்ளைக் கொலர்” (White Collar) உடலுழைப்பற்ற பணியாட்கள், குறித்தும், பாடசாலை இரண்டாம் தரக் கல்வித் தகைமைகள் பெற்றவர்கள், அரசாங்க துறையினையே பெரிதும் விரும்புகின்றனர். அரசாங்க துறையினை விரும்புவது தாய் மொழிகளில் கல்விபயின்ற பட்டதாரிகளிடையேயும் காணக்கூடியதாக உள்ளது. பொதுத்துறை வேலையில் கவர்ச்சியுள்ளதாகக் கருதப்படும் “சமுக அந்தஸ்த்து’, வேலை உறுதி, இளைப்பாறிய பின்னர் ஓய்வூதிய பாதுகாப்பு நன்மைகள், ஆகியவை மிகவும் முக்கியமானவையாக இருந்துள்ளன. எவ்வாறாயினும், வேலைப் படிநிலையின் மேல்மட்டத்தில் கூடுதலாகத் தனியார்துறை விரும்பப்படுவது, உயர்ந்த கூலிகள், பிறநன்மைகள், உயர்வான வாழ்க்கைத் தரத்தினை அடைய முடிந்தவை ஆகியவற்றிலிருந்து எழுகின்றது.
பெருந்தோட்டச் சமூகத்தினரின் கூட்டுத் தாபனங்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றிலுள்ள வேலை அளவுகள் பெருந்தோட்டக் கம்பனிகள் தனியார் மயமாக்கலுக்குப் பினனர் அதிகமாகக் குறைந்துள்ளது. பொதுத்துறையிலும், மற்றைய அரசுடைமை தொழில் நிறுவனங்களின் தனியார் மயமாக்கலினாலும், அதன் வேலையளவுப் பங்கும் குறைக்கப்பட்டது. பொதுத் துறையின் பங்கு நகரப்புறத்துறையிலும் கிராமப்புறங்களிலும் குறைந்துள்ளது. இது முக்கியமாக அரசுடமை நிறுவனங்களின் தனியார் மயப்படுத்தலினால் ஏற்பட்டுள்ளது. முறைசாராத பொருளாதாரத்தின் விரிவாக்கத்தின் விளைவு முறைசாராத்துறையில் வேலையின் அதிகரிப்பிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது (அட்டவணை 3.5).
190

நாட்கூலி உழைப்பினர் அளவு இன்று உழைப்பினர் படையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இது, முறைசாராத்துறை, கூடுதலாக, தயாரிப்பு, கட்டிடம், மற்றும் வர்த்தகம் சேவைகள் ஆகியவற்றில் உபஒப்பந்தங்கள், வெளிமூலங்களைப் பயன்படுத்துதல் ஆகிய முறைகளை உபயோகித்து வந்தமை காரணமாக ஏற்பட்டுள்ளது. கிராமியத்துறையில் சுயதொழில் செய்பவர்களும், மற்றும் அச்சார்பான வேலையில் ஈடுபடுவோரும் மற்றைய துறைகளைவிட மேலாகக் காணப்பட்டுள்ளது. இது, முறைசாராப் பொருளாதாரத்தில் கூடிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அட்டவணை 3.5: துறைகள் ரீதியாக வேலைசெய்பவர்கள் (1987/88 மற்றும் 1996/97)
துறை நகரத்துறை கிராமியத்துறை பெருந்தோட்டம் மொத்தம்
1986/87 1996/97 1986/87 1996/97 1986/87 1996/97 1986/87 1996/97
பொதுத்துறை 25.2 19.4 15.4 13.5 82.1 8.9 24.5 13.9
மத்திய
அரசாங்கம்: 15.2 1.7 8.4 9.2 6.2 .4 9.3 9.0
உள்ளுர்
அரசாங்கம்: 2.3 2.4 0.3 1.4 0.8 0.2 0.7 1.4
கூட்டுத்
தாபனங்களும்
நியதிச்
சபைகளும்: 6.7 4.7 5.7 2.2 75.1 7.2 13.6 2.8
கூட்டுறவுச் a
சங்கங்கள்: 1.0 0.6 1.0 0.7 0.0 0.1 0.9 0.7
தனியார் துறை
(முறைசார்): 19.3 22.1 6.5 10.8 7.0 72.5 8.8 16.2
தனியார் துறை
(முறைசாரா): 55.5 58.5 78.1 75.7 10.9 18.6 66.5 69.9
மொத்தம்: 100.0 100.0 100.0 100.0 100.0 OOO 100.0 100.0
மூலம்: நுகர்வோர் நிதி மற்றும் சமூக - பொருளாதார மதிப்பீடு, 1986/87 மற்றும் 1996/97
இத்தகைய விருத்தியின் முக்கியத்துவம் எவ்வாறு எழுகின்றது என்பதைப் பார்க்குமிடத்தில், நாளாந்தக் கூலிவேலையின் இயல்பு உழைப்பினர் சந்தையில் ஓர் உறுதியில் லாத தன்மையினைக் காட்டுகின்றது. இவ்வாறாக
191

Page 103
வேலைபார்ப்பவர்கள் முறையான ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்படுவதில்லை அல்லது அவர்களுக்கு வேறு நன்மைகள், கொடுப்பனவுடனான விடுப்பு, நியதிக் கொடுப்பனவுகள் மற்றும் பங்களிப்புகள் - வேலை நீடிப்புப் பாதுகாப்பும் வழங்கப்படாதுள்ள சூழ்நிலையில் - ஆகியவை போன்ற நன்மைகள் இல்லாது வேலை வசதி மட்டும் கிடைக்கின்றது. இவ்வியல் புகள் இத்தகைய வேலையாட்களின் உழைக்கும் ஆற்றல் மற்றும் வருமான உறுதிப்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மேலும் அத்தகைய வேலை நிலைகள் தொடர்பாக ஒழுங்குபடுத்தலையும் கஷ்டமாக்குகின்றது. அதனால், உழைப்பினர் பற்றிய சட்டங்கள், வரிவிதித்தல், கைத்தொழில் பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றை வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் அதிகம் ஏற்படுகின்றன.
பொருளாதார நடவடிக்கைகளின் தன்மைகள்
உழைப்பினர் படையினர் ஈடுபட்டு வருகின்ற பொருளாதார நடவடிக்கைகளின் வகை 1997 ஆம் ஆண்டிலிருந்து தொடக்கப்பட்ட தாராளமயமாக்கலைத் தொடர்ந்து விரைவாக மாறிவிட்டது. தொடக்கக் காலத்தில் விவசாயத்துறை எல்லா பொருளாதார நடவடிக்கைகளில் அரைவாசிக்குக் கூடிய பகுதி அளவுக்குப் பொறுப்பாகவும் சேவைகள் முப்பது சதவீதத்திற்குக் குறைவாகப் பொறுப்புடையதாகவும் இருந்துள்ளன. இதற்குப் பின்னர் விவசாயம் மூன்றில் ஒரு பங்களவால் குறைந்தும் சேவைகள் அதே அளவால் அதிகரித்துச் சென்றதைக் காணலாம். எவ்வாறாயினும், மற்றைய நடவடிக்கைகளில் பொருளாதாரக் கொள்நெறிகளின் பதிலிறுப்புக்கு ஏற்றவாறு ஏற்றவிறக்கங்களைக் கண்டுள்ளன.
வேலையின்மை
1981 ஆம் ஆண்டு குடிசன புள்ளிவிபரத்தகவலில், உழைப்பினர் படையில் வேலையின்மை 18 சதவீதமாக இருந்து 1991 இல் (காலாண்டு உழைப்பினர் படைக் கணிப்பீடு) 14.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மேலும், 2001 ஆம் ஆண்டில் (குடிசனமதிப்பீடு, 2001) 7.7 சதவீத அளவுக்குக் குறைந்தது. பெண்கள் தொடர்பாக வேலையற்றோர் வீதம் ஆண்கள் வீதத்தை விட இரு மடங்கு கூடியதாக இருந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில், பெண்கள் வேலையின்மை 11.6 சதவீதமாகவும் ஆண்களின் சதவீதம் 5.9 ஆகவும் இருந்ததைக் காண முடிகின்றது. (அட்டவணை - 3.6) ہl.
கூடுதலான அக்கறை கொள்ளக்கூடிய விடயம், கல்வித் தகைமை தொடர்பாக வேலையற்றோர் நிலை கவனத்தை ஈர்த்துள்ளமை. 2000 ஆண்டில் 11.3 சதவீத வேலையற்றோர் (உழைப்பினர் படையின் விகிதாசாரம்)
192

பொதுத் தராதர கல விதி தகைமை (சாதாரண மீ ), பரீட் சையை முடித்துள்ளவர்களாகின்றனர் (10 வருட பாடசாலைக்கல்வி);15 சதவீதத்தினர் (வேலையற்றோரில்) பொதுத்தராதர கல்வி (உயர்தர) மட்டம் பரீட்சையை முடித்தவர்கள், அல்லது அதற்கு மேலான தகைமையை உடையவர்களாகக் காணப்பட்டனர். பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டப்படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் உழைப்பினர் படைக்குள் சேருபவர்கள், குறிப்பாக கலை, சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் தகைமை பெற்றவர்கள் தனியர்துறையில் வேலை வசதிகளைப் பெறமுடியாதுள்ளனர்; இவர்களை அரசாங்கம் பொதுத்துறையில் வேலை வசதிகளை “வழங்கி” உள்வாங்க வேண்டிய தேவை (ஓரளவுக்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக) ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் பல்கலைக் கழகங்களில் மிகக் கூடுதலான மாணவர்கள் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கே சேர்க்கப்படுகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது. 1999 இல் வேலையற்றோரில் கால்பகுதியினர் தொழில்சார் பயிற்சியினைப் பெற்றவர்களாகக் காணப்பட்டனர். தொழில்சார்ந்த பயிற்சி வழங்கப்படும் பொழுதும், அத்துறைகள் இனங்கண்டு கொள்ளப்பட்டு தொழில்சார் பயிற்சி வழங்கப்பட்டு உழைப்பினர் படையில் சேர்பவர்களுக்கு அது பயனளிப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காரணம், இப்பயிற்சி நெறிகளின் உள்ளடக்கம் சந்தையின் தேவைகளைத் தழுவி வழிப்படுத்தப்படவில்லை.
கணினிப் பயிற்சி பெற்றவர்களிடையேயும் இலிகிதர் பயிற்சி பெற்றவர்களிடையேயும் வேலையின்மை மிகக் கூடியிருப்பதாகத் தெரிகின்றது. இவ்விரு துறைகளிலும் கூடுதலான வேலை வசதிகள் எதிர்பார்க்கலாம். அதிகமாக கணினிப் பயிற்சி அடிப்படையான பயிற்சியினை மட்டும் வழங்குவதாகத் தெரிகின்றது. ஆகவே அவை பயிற்சியினருக்கு வேலை தேடிக் கொள்வதில் போதுமானவையாகவில்லை. உழைப்புச் சந்தையினால் வேண்டப்படும் தேவைகளைப் பொறுத்து, இரண்டாம் மட்ட, அதற்கு மேற்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளைப் பெறும் தேர்ச்சிகள் பொருத்தமானவையாக இருப்பதில்லை. இதன் விளைவாக 15-29 வயதுப் பிரிவில் உள்ளவர்களில் 50 சதவீதமானோர் வேலையற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
உழைப்பு உள்வாங்கல் தொடர்பாகச் செல்வாக்குடைய காரணிகள்
1990 களில் முறைசார் வேலையில் உழைப்பு உள்வாங்கல் மூன்று பிரதான மூலங்களில் தங்கியிருந்தது.
(1) ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள், மற்றும் முதலீட்டுச் சபையின் கீழ்
வெளிநாம்டு உள்நாட்டு முதலீடுகள்.
(2) நாட்டின் இனத்துவ வடகிழக்கு மோதலினால் படைகளுக்கு ஆட்சேர்த்தல்.
(3) நாட்டுக்கு வெளியே வேலைசெய்தல்.
193

Page 104
அட்டவணை 3.8: பால் நிலை, கல்விமட்டம், மற்றும் வயது வகையான வேலையின்மை (1992 - 2001)
992 1993 1994. 1995, 1996 1997 998 999 20OO 2001
மொத்த வேலையின்மை உழைப்பினர்
படையின் % 14.6 3.5 13.1 12.3 113 10.5 9.2 8.9 7.6 7.8
பால் ரீதியாக
ஆன: 0.7 9.7 9.7 9.O 85 7.7 6.5 6.7 5.8 5.9 பெண்: 22.9 21.7 20.1 18.8 18.0 16. 14.0 13.0 11.1 1.6
கல்வித்தகைமை
நோக்கில்
பாடசாலைக் கல்வி
இல்லாதோர்: 3.0 3.1 2.6 1.8 2.8 2.0 1.0 0.4 1.2 1.2
தரம் 0-4 வருடம் 1-5; 4.7 4.9 5.0 34 34 2.4 24 19 O O தரம் 5-9 வருடம் 6-10: 15.9 13.7 13.0 12.8 12.2 10.6 9.0 8.2 7.5 7.5
பொதுத்தராதரம் சாதராணமட்டம்/ தேசிய பொதுக்கல்வி: 222 21.3 19.6 8.4 16.4 15.9 13.7 13.6 113 1.3
பொதுத்தராதரம் உயர்மட்டம்/ மற்றும், உயர் தேசியக் கல்வித் தகைமை
மற்றும் அதற்கு
மேலானவை: 22.4 23.3 23.7 20.0 19.0 19.3 17.5 17.9 14.9 15.6
வயதுப் பிரிவு
15-19; வருடங்கள் 39.1 38.4 40.7 60.5 36.5 34.O 27.3 28.4 233 30.6 20-29: வருடங்கள் 27.5 25.2 24.5 3.7 22.O 21.9 19.3 18.9 7.4 8. 30-39; வருடங்கள் 7.8 8.4 7.6 8.0 60 5.2 49 4.4 36 3.O 40-49: வருடங்கள் 3.5 3.3 2.5 2.9 1.9 1.7 2.0 1.6 14 12
| 50ம் அதற்கு மேலும் 1.4 1.5 1.2 0.4 0.5 0.6 0.7 0.8 0.8 0.9
மூலம்: கால்பகுதி உழைப்பினர் கணிப்பீடு, குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு.
194

இவைகளினூடாக உழைப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் வெவ்வேறு பிரிவினரை வேறுபட்ட விதத்தில் பாதித்துள்ளது. ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள் பிரதானமாக உழைப்புச் சந்தைக்கு வருகின்ற இளைய பெண்களுக்கு வேலை வசதிகளை வழங்கின. பாதுகாப்பு படைகளில் ஆட்சேர்த்தல் கூடுதலாக கிராமிய இளையவர்கள் குறைந்தது 10 வருட பாடசாலைக் கல்விபெற்றவர்கள் உள்வாங்கப்பட்டனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளினால் சற்று உயர்ந்த வயதுப் பெண்கள் பிரிவினர், பொதுவாக விவாகம் செய்தவர்கள் தங்கியிருக்கும்
குடும்பம் உள்ளோர், உள்வாங்கப்பட்டனர்.
ஏற்றுமதிப் பதனிடல் வலயங்களினுடாக வேலை வாய்ப்புகள் கிடைத்தல்
ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள், கொழும்பு பாரிய பொருளாதார ஆணையம் (Greater Colombo Econmic Commission, GCEC) 1978 g6) G66flybiTG முதலீட்டை மேம்படுத்த அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறுவப்பட்டன. தாராளமான வரிச்சலுகைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு வழங்கப்பட்டன. 1992 நவம்பரில் கொழும்பு பாரிய பொருளாதார ஆணையத்தின் அந்தஸ்த்து உயர்த்தப்பட்டு அது முதலீட்டுச் சபையாக, (Board of Investment, BO) நாடு முழுவதற்குமாக வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நடவடிக்கைகள் விரிவாக்கப்படுவதற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்ட நிறுவனமாக அமைக்கப்பட்டது. இதே ஆண்டில், புதிதாக 200 ஏற்றமதி தழுவிய ஆடைத் தொழிற்சாலைகள் சுற்றுப்புற நிருவாகப் பிரிவுகளில் அமைக்கப்படுவதற்கான திட்டம் தொடக்கப்பட்டது. ஏற்கனவே, ஏற்றுமதிப் பதனிடல் வலயங்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், பின்னர் எல்லா வெளிநாட்டு இணைப்புடைய நிறுவனங்களுக்கும், அவை எவ்விடத்தில் இருப்பினும், வழங்கப்பட்டன.
1994 g6) Dists6s gallbop systicsLib (Peoples Alliance, PA) பதவியேற்றதும், கிராமியப் புறங்களிலும் பிரதேச ரீதியான கைத்தொழிலாக்கல் ஆகியவற்றிற்கு அதனுடைய “இலங்கைக்கான புதிய கைத்தொழில் உபாயம்” (1995 இல் பிரகடனப் படுத்தியது) என்பதில் முன்னுரிமை வலியுறுத்தப்பட்டது. இவ்வுபாயத்தில், ஏற்கனவே நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதிப் பதனிடல் வலயங்களைவிட, ஐந்து மேலான ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள் அமைக்கப்பட்டன (1998-2000); அத்துடன், ஒரு கைத்தொழில் பூங்காவும் ஸ்தாபிக்கப்பட்டது. எவ்வாறாயினும், மூன்று ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்புக்கு அண்மையாயுள்ள மற்றையவை இரண்டும் குறுநாகல் மாவட்டத்திலும் , ஒவ்வொன்றும் குறுகிய தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன. பிரதேச ரீதியாக கைத்தொழிலாக்கம் என்ற குறிக்கோள்
195

Page 105
செயற்திறன் வாய்ந்ததாகப் பின்பற்றப்படவில்லை. கம்பஹா மாவட்டத்தில் மூன்று வலயங்கள் அமைக்கப்பட்டிருப்பது அரசியல் தன்மை வாய்ந்தது போன்று காணப்படுகின்றது; இம்மாவட்டம் பிரதான அரசியல் கட்சியான மக்கள் கூட்டமைப்பின் முதல் நிலை வாக்காளர்களை அடிப்படையைக் கொண்டதாக இருப்பதுடன், சனாதிபதியின் வீடிருக்கும் இடமாகவும், தேர்தல் தொகுதியாக உள்ளதையும் அறியமுடிகின்றது.
முதலீட்டுச் சபை சார்ந்த துறையில் (BOISector) உழைப்பினர் படையில் 70 - 80 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர், அதில் உடைகள் மற்றும் அணியும் ஆடைகள் உற்பத்தியில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே வேலைவாய்ப்புகள் வழங்குவதிலும், ஏற்றுமதிவருவாய் பெறுவதிலும் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்கின்றது. வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் விவாகமாகாதவர்கள்; அத்துடன், பெருமளவினர் இரண்டாந் தரக் கல்வியின் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள். அவர்கள் மேற்கொள்ளும் பணிகள், அவர்களின் பயிற்சி மற்றும் கல்வித் தகைமைகள் ஆகியவற்றுக்கு அல்லது அவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றதாக அமையவில்லை. அதிகமானவர்கள், குறைந்த தேர்ச்சியுடைய வேலைகளிலும், பணிகளிலும் இருப்பது எதிர்கால முன்னேற்றம் குறைவாகவும் இருக்கும் நிலைமையும் கவனிக்கத்தக்கது. மேலும், அவர்கள் விவாகம் செய்தபின்னர் வேலையை விடுகின்றவர்கள் எனவும், விவாகம் செய்த பின்னர் குடும்பப் பொறுப்புகளுடன் வேலை செய்வதனால் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர் என்பதும் அறிய முடிகின்றது. இரு தசாப்தங்களுக்குப் பின்னரும், ஏற்றுமதிப் பதனிடல் வலயங்கள் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து, மொத்த உழைப்பினர் படையில் விவாகம் செய்த பெண்கள் 10 சதவீதத்தினையும் எட்டியதாக இல்லை.
தொழில் நிறுவனங்கள் வரி விலக்கல் சலுகைகளை அனுபவிக்கின்றன. உழைப்பு சம்பந்தமான சட்ட ஒழுங்குகளிலிருந்து சில பாதிப்புத் தணிவினையும் அனுபவிக்கின்றனர். தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அனுமதியில்லாத பேர்வழிகள் தொழிற்சங்க நடவடிக்கையாளர்கள் உட்பட, வலயங்களுக்குள் நுழைவது மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது. வேலை கொள்வோர், வலயங்களுக்குள் தொழிற்சங்கங்கள் இல்லாதது வேலையாட்களுக்கு பாதிப்புள்ளதாக இல்லை என்றும் அவர்களின் நலன்கள் போதியளவுக்கு “வேலையாட்கள் சபைகள்” (Workers Council) என்ற முறையினால் பாதுகாக்கப்படுகின்றது எனவும் கூறியுள்ளனர். முதலீட்டுச் சபையின் அதிகாரத்திற்குள் வரும் துறையில் நடைமுறையில் உள்ள கூலிகள், சட்ட நியதிப்படி உள்ள குறிப்பிட்ட கூலிகள் சபைகளின் குறைந்த பட்சக் கூலி விதிகளுக்கு, விசேடமாக ஆடைகள் தொடர்பான தொழிலில், ஏற்றதாக வழிநடத்தப்பட்டு வருகின்றன. அடிப்படைக் கூலியுடன், மிகைநேரம் வேலைசெய்யும் கொடுப்பனவுகள் மற்றும் மிகைவுதிய நன்மைகள் ஆகியவையும்
196

கிடைக்கின்றன. நியதிப் படியான தேர்ச்சியல்லாதோர் குறைந்தபட்சக் கூலி, ரூ. 2525 (1999) என்பதுடன் ஒப்பீட்டு ரீதியாக நோக்குமிடத் து தேர்ச்சியில்லாதவர்களின் வருமானங்கள் ரூ. 3500 - 4000 சராசரியாக (ஐக்கிய அமெரிக்க டொலரில் நாளொன்றுக்கு 1.50 டொலர் என்பதற்குச் சமனாக உள்ளது) இருப்பது காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொடர்பான சிரமங்கள், நெடுநேரம் வேலைசெய்யும் மணித்தியாலங்கள, வேலைப் பழுவின் பாதிப்புகள் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக இத்துறையில் உள்ளன என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
படையில் வேலை செய்தல்
அரசாங்கப் படைகளில், 1983 - 2001 காலப் பகுதியில் ஆட்சேர்த்தல், தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, ஒர் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தது. எல்லாப் படைப் பிரிவுகளிலும், ஆட்சேர்ப்புத் தரவுகள் கிடைக்காவிடினும், எண்ணிக்கை அதிகரித்துச் சென்றது தெரிகின்றது. கிடைக்கும் மதிப்பீடுகளின் படி, மொத்த படைப்பலம் ஏறத்தாழ 240,000 அளவினை எட்டியுள்ளது. ஆட்சேர்த்தலில அநேகமாக கிராமிய இளையோர் இரண்டாந்தரக் கல்வியுடையவர்கள் பிரதான இடத்தை எடுத்துள்ளனர். அரசாங்கம் பாதுகாப்புப் படையினரின் செலவுக் கொடுப்பனவைச் செய்கின்றது. படைவீரர்களின் சம்பளக் கொடுப்பனவு வழமையான அளவுகளுக்கு ஏற்றதாயிருப்பினும், முக்கியமாக மோதல்கள் நடக்கும் இடங்களைக் கருத்தில் கொண்டு, நன்மைகள் கொண்ட பொதியும் வழங்கப்படுகின்றது.
கொழும்பிலும், வெளியிடங்களிலும் சிவில் பாதுகாப்பு நிலை குழம்பியிருந்த காரணத்தினால் நுழைபாதைகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்ய வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. அண்மைக் காலங்களில் அத்தகைய பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யும் தேவைகளி அதிகரித்ததனால், இவை முறைசாராத் துறை வேலையாட்களுக்கு, பெண்கள் உட்பட, வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது. மேலும், தனியார் பாதுகாப்புச் சேவை வழங்கும் முகவர் நிலையங்களும் அதிகரித்துள்ளன. கூலிச்சபை, இத்தகைய வேலை தொடர்பாக குறைந்தபட்சக் கூலி அளவுகளை விதித்துள்ளது. ஆனாலும் இவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமாகக் காணப்பட்டுள்ளது. மேலதிக வேலை செயபவர்கள் தொடர்பாக வழங்கப்படும் கொடுப்பனவுகள், விடுமுறை வசதிகள், வேலையின் உறுதிப்பாடு ஆகியவற்றில் முறைகேடுகள் காணப்பட்டுள்ளன.
வேலைசெய்வதற்கு வெளிநாடுகளுக்குச் செல்லுதல்
ஒழுங்காக முறைப்படுத்தப்பட்ட வகையில் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு வேலைசெய்யச் செல்லுதல் எண்பதுகளில், திறந்த பொருளாதார முறைமையுடன்,
197

Page 106
மற்றும் நாணய, அன்னியச் செலாவணிக் கட்டுபாட்டு விதிகள், பயணித்தில் தொடர்பாக இருந்த தடைகள் (1970 -77 காலப்பகுதியில் விதிக்கப்பட்டவை) ஆகியவை தாராளமயப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் முக்கியமாகத் தொடங்கியது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சட்டம் (1980) (Foreign Employment Agency Act), மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு 56O)6 ous glib (1985) (Sri Lanka Bureau of Foreign Employment Act) ஆகியவை வெளிநாடுகளுக்கு வேலைபார்க்கப் போகின்றவர்களுக்கு, இவ்வாறான புலப்பெயர்வினை ஊக்குவிப்பதற்கு வேண்டிய நிறுவனங்களையும் வசதிகளையும் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. பலரினால் விரும்பப்படும் நாடுகளாக, மத்திய கிழக்கு நாடுகள் (90 சதவீதத்திற்கு மேலாக) மாலைதீவு, கொரிய குடியரசு, ஹொங்கொங், சைப்பிரஸ், இத்தாலி, மற்றும் மலேசியா ஆகியவை காணப்பட்டன. 2001 இல் வருடமொன்றுக்கான இலங்கைக்கான பணம் அனுப்பல்கள் 1000 மில்லியன் ரூபாய் அளவை அடைந்துள்ளது. இவை இன்றைய நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய்களில் ஒரு பிரதான மூலமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில் பார்ப்பவர்களில், 65 சதவீதத்திற்கு மேலானவர்கள் பெண்கள். இவர்கள் குறைந்த தேர்ச்சியுடைய வீட்டுப்பணி செய்பவர்களாக, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை செய்கின்றனர். எப்படியாயினும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பணமலுப்பல்கள் ஆகியவற்றின் அடிப்படை விரிவாக்கத்தைச் செய்யும் உபாயத்தினை அரசாங்கம் பின்பற்றுவதில், உயர்ந்த தேர்ச்சியுடையவர்களை வெளிநாடுகளுக்குச் செல்வதை ஊக்கிவிக்கின்றது.
அட்டவணை 3.7: வெளிநாடுகளில் வேலைசெய்தல் (1997 - 2001)
1997 1998 1999 2000 2001
ஒழுங்குசெய்யப்பட்ட வேலை
வாய்ப்புகள் - எண்ணிக்கை: 150,283 159,816 79,114 181,370 183,586 பால்நிலைப் பிரிவு (சதவீதங்கள்)
ஆண்: 25 34 35 33 32 பெண்: 75 66 65 67 68
வேலை வகைப்படுத்தல் (வாய்பிடங்களின் சதவீதம்)
வீட்டுப்பணி செய்பவர்கள்: 66 53 49 54 56 தேர்ச்சியுடைய உழைப்பினர்: 16 20 21 20 20 தேர்ச்சியில்லாத உழைப்பினர்: 14 21 24 20 18 மற்றவை: 4. 5 6 6 6
மூலம்: இலங்கை மத்திய வங்கி,ஆண்டறிக்கை,2001
198

வேலைபார்க்க வெளிநாடு செல்பவர்களில் அநேகமானோர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து வருபவர்கள். ஆதலால், அவர்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்தல் இத்தகைய சமுதாய வகுப்புப் படிநிலையிலுள்ளவர்கள் வருமானங்களை அதிகரிப்பதற்கான மூலாதாரமாக அமைகின்றது. எப்படியாயினும், வெளிநாடுகளிலிருந்து தம்முடைய வருவாய்களை, மேலும் வருடா வருடம் தொடர்ச்சியான வருமானங்களைத் தரக்கூடிய முறையில், முதலீடு செய்யும் ஆற்றல் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானங்கள் உயர் பெறுமதியுடைய தனிப்பட்ட நுகர்வுக்காக, மீணி டும் வருமான தி தைத் தேடிக் கொள்ளும் ஆற்றலில் லாது, செலவிடப்படுகின்றன. வெளியே வேலை செய்யப் போகின்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவாகமாகிய பெண்களாக உள்ளனர்; அவர்களுக்குக் குடும்பங்களைப் பராமரிக்கும் பொறுப்பும் உண்டு. ஆனாலும், அவர்கள் வழமையாகச் செய்ய வேண்டிய பொறுப்புகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் கவனிக்கப் படாமல் போய்விடுகின்றன. இதனால், பாதகமான சமூக விளைவுகளும் ஏற்படுகின்றன. நெடுநாட்களுக்குச் செல்வதால் குடும்பங்களை விட்டுப்பிரிதல், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர்களிடமிருந்து பிரிந்திருத்தல், கவனிக்கப்படாத சிறுவர்கள் அல்லது அவர்கள் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்படுவது, தீய வழிகளில் செல்வது, வேலை செய்யுமிடத்தில் பிழையாக நடத்தப்படுதல் அல்லது சுரண்டப்படுதல், திரும்பி வருபவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவது ஆகியவை தொடர்பாக அதிகமான பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளன.
3.3 உழைப்பின் உற்பத்தித் திறனும் கூலிகளும்
பொருளியலாளர் றொட்றிக்கோ (Rodrigo, 2001) கூறுவது, 1991 - 1999 வரையான காலப்பகுதியில் வேலையின் வருடAமொன்றுக்கான 2.6 சதவீத அதிகரிப்புடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மெய்ரீதியில்) வருடமொன்றுக்கு 5 சதவீதத்திற்கு சிறிது மேலாக அதிகரித்த இதே காலப்பகுதியில் மொத்தமாக உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு 2.5 சதவீத அளவுக்கு உள்ளாந்த ரீதியாக ஏற்பட்டுள்ளது. எப்படியாயினும், முதலீட்டுச் சபையின் கீழ் இல்லாத தனியார் துறையில் உழைப்பின் உற்பத்தித் திறன் 2.5 சதவீத அளவுக்கு, 2000 ஆண்டில் உள்ள மட்டத்தைவிட, குறைந்து விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கூலிகளுக்கும், கூலி அதிகரிப்பிற்கும் உற்பத்திறன் என்பவற்றிடையே தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பொதுத்துறையில் கூலிகள் உற்பத்தித் திறன் அதிகரிப்பினால் அல்லாது, சேவைக்காலம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றினால், நிர்ணயிக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களும் கூலி நிர்ணயிப்பதில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமான ஒரு காரணியாகச் சேர்ந்துள்ளது. அமைச்சர்கள் சபை கூட்டாக வருடத்திற்கான மிகை ஊதியக் கொடுப்பனவுகளை
199

Page 107
பொதுத்துறையில் தீர்மானிக்கின்றது. இவை, எத்தகைய பணி அல்லது பணி செயலாற்றல்திறன் என்பவற்றைக் கருதாது பொதுப்பட வழங்கப்படுகின்றன.
தனியார் துறையில் தொழிற் சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் மிக ஊக்கத்துடனும், கடுமையாகவும், மாதக் கூலிகளை உற்பத்தி திறனுடன், இணைப்பதை எதிர்த்துள்ளன. உற்பத்தித் திறன் செயலாற்றல் ஆகியவை நடைமுறையில் அளவிடுவது பற்றிய பிரச்சினைகள், தொழிற்சங்கங்களும் வேலையாட்களும் இரண்டினையும் பற்றி செய்யப்படும் மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டும் நிலை, இவ்வளவீடுகளை தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் போய்விடலாம் என்ற அச்சம் ஆகிய காரணங்கள் கூலி, உற்பத்தித் திறன் இணைப்பினை ஏற்பதற்குத் தடையாக உள்ளன. உற்பத்தித் திறனைத் தழுவிய கொடுப்பனவு முறைகளும் வெளியான செல்வாக்குகளுக்கு உட்படுத்தப்படும் பலவீனமான நிலை தோற்றுவிக்கப்படலாம் என நோக்கப்பட்டது. இது அவ்வாறு நடப்பதனால், முக்கியமாகத் தயாரிப்புதுறையிலுள்ள குறைந்த கூலி பெறும் அனேகமான தொழிலாளர்களைப் பாதிக்க முடிந்தது. இப்பின்னணியில், வேலைகொள்வோர்கள் உற்பத்தித் திறனுடன் தொடர்பான வெகுமதி வழங்கும் கோட்பாட்டை அறிமுகம் செய்தனர். இதில், செயலாற்றம் அல்லது உற்பத்தி தழுவிய ஊக்குவிப்பு முறைகள், நயம் பகிர்ந்து கொள்ளும் முறைகள் (குறிப்பிட்ட முன்பே தீர்மானிக்கப்படும் இலக்குக்கு மேலாகப் பெறும் இலாபத்தில் ஒரு சதவீதம் வேலையாட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுதல்), வேலை அளவுக்கேற்ற கூலி வழங்கும் முறைகள் ஆகியவை அடங்கியுள்ளன. இம்முறைகள், அடிப்படை மாதாந்த ஊதியம் வழங்குதல் முறைகளுக்குப் புறம்பானவை, இவை பொதுத் துறையிலிருப்பது போல வாழ்க்கை செலவு நிலைமைகள் மற்றும் சேவைக்காலம் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், தனியார் துறையிலும் பொதுத்துறையிலும் தனிப்பட்ட செயலாற்றத் திறமை தழுவிய கூலி உயர்வுகள் கிடைக்கும் முறை நிறைவேற்றதிகாரிகள் மட்டத்தில் காணப்பட்டுள்ளது. இது பொதுத்துறையில், நிறுவன ரீதியான தடைகளினால் குறைந்தளவு காணப்படுகின்றது. இவைபோல, எவ்வளவு விற்பனை செய்து முடிக்கப்பட்டது ஆகியவற்றில் வருவாய்களுக்குத் தங்கியிருக்கும் தரகு வணிக முகவர்கள், விற்பனை முகவர்கள் என்பவர்கள் தொடர்பாக இருந்து வருகின்ற முறைகள் எத்தகைய ஊக்குவிப்புகள் தரகு வணிக நடைமுறைகள் கம்பனிகளிடையே இருப்பதைப் பொறுத்து நல்ல விதத்தில் செயற்பட்டு வந்துள்ளன.
கூலிகளை உற்பத்தித் திறன் தொடர்பாக இணைப்பதில் பிரதானமாக இரு தடைகள் இருக்கின்றன் அவை: هذه
(1) தனியார் துறையில், பணவீக்க வீதத்திற்குக் குறைந்த கூலி சரிப்படுத்தப்படுத்தல் முறையினால் மெய்கூலி அதிகரிப்பு இல்லாதிருத்தல்
200

(2) தராாளமான விடுப்பு, விடுமுறை வசதிகள் பொதுத்துறை, தனியார் துறை
ஆகியவற்றில் வழங்கப்படுதல்.
பணவீக்கம் குறித்து போதாத சரிப்படுத்தல்கள்
1977 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தாராளமயப்படுத்தல் பொருளாதார கொள்நெறி நடைமுறைப்படுத்தியதனைத் தொடர்ந்து தனியார் துறையில் கூலிகள் அதிகரித்துள்ள போதும், இவ்வதிகரிப்பு 1980 களின் பிற்பகுதியில் சிறுத்துச் சென்றது. 1999-2001 வரையான காலப்பகுதியில் முறைசார் தனியார் துறையில், பணவீக்க விளைவு தொடர்பாக, வேலையாட்கள் தம்முடைய ஊதியத்தில் நட்டத்தை அனுபவித்தனர். இது சேவைத்துறை தவிர்ந்த மற்றையவற்றில் ஏற்பட்டது. இத்துறையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டது. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுத்துறையில் கூலிகள் குறைந்தளவில் அதிகரித்தன. அதற்குப் பின்னர் காலத்துக்குக் காலம் தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகரித்துச் சென்றது. 1999-2001 வரையான காலப்பகுதியில், பொதுத்துறை கூலிகளில் உண்மையான 5 சதவீத அதிகரிப்பினை அனுபவித்தது. இது, அரசியல் காரணங்களினால் ஊக்குவிக்கப்பட்ட 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் “இடைக்கால சரிப்படுத்தல்களினால்” (Interim adjustments) ஏற்பட முடிந்தது.
விடுப்பு மற்றும் விடுமுறை ஒழுங்குகள்
இலங்கை மிகவும் தாராளமான பொது விடுமுறை ஒழுங்கு வசதிகள் கிடைக்கும் நாடுகளில் ஒன்றாகும். இத்துடன் நியதியாக விதிக்கப்படும் விடுப்புக் காலமும் பல்வேறு வகைத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கின்றது. முழுச்சம்பளம் பெற்றுக் கொண்டு, பொதுத்துறை ஊழியர்கள் ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ அரைவாசி நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் முறை திருத்தப்பட வேண்டும் என்பது நியாயமானது. சில தனியார்துறை வேலை கொள்ளுனர் (Employers) குறிப்பாக காலனித்துவ காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டவை, வருடாந்த அமைய மற்றும் மருத்துவ விடுப்பு வசதிகளை, பொதுத்துறைக்கு ஒத்தவிதத்தில் வழங்கி வந்துள்ளனர். இவற்றை ஒரு தலைபட்சமாக சம்பளத்துடனான விடுப்பு நாட்களை சட்டரீதியாகக் குறைக்க முடியாத நிலையினை எதிர்நோக்குகின்றனர். மேலும் நியதிப்படியான விடுமுறை நாட்கள் (பொது, வங்கி மற்றும் வர்த்தகத் துறை சார்ந்தவை) தனியார் துறை, பொதுத்துறை ஆகியவற்றில் வேறுபட்டிருக்கின்றன. இது எத்தகைய கைத்தொழில் குறிப்பிட்ட நிறுவனம் இயங்கி வருகின்றது என்பதைப் பொறுத்தும் வேறுபாடு எழுகின்றது. பொதுத்தறையும் மற்றும் வங்கி நிறுவனங்களும் - பொதுத்துறை, தனியார் துறை - விடுமுறை நாட்கள் வழங்கும் ஒழுங்குகளைப் பின்பற்றி வருகின்றன. இவை தனியார் வர்த்தகத்துறையில்
201

Page 108
வழங்கப்படுபவற்றிலிருந்து வேறுபடுவதனால் வர்த்தகத் துறையின் வர்த்தக நிறுவனங்களின் நடவடிக்கைகள், அத்தகைய விடுமுறை ஒழுங்கினைப் பின்பற்றாத விடத்து, வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படையும் தன்மையும் ஏற்படுகின்றது. இத்தகைய “இரட்டை அடுக்கு” வகையான விடுமுறை தொடர்பான நிலை இருந்து வருவது அத்தகைய நிறுவனங்கள் குறித்து பாதிப்புக்களையும் நுகர்வோரிடைய குழம்பிய நிலையினையும் ஏற்படுத்துகின்றது. விடுப்பு நாட்கள், விடுமுறை நாட்கள் தொடர்பாக ஒரே விதமான ஒழுங்குள் இருப்பது நடைமுறையிலும் பொதுபடையாகவும் தொழில் நடவடிக்கைகளில் தேவைப்படுகின்றது.
அத்தகைய வகையான விடுப்பு, விடுமுறை ஒழுங்கு ஒரு மறைந்திருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்த முடிகின்றது. இது குறிப்பாக பொது விடுமுறைகள் தொடர்பாக, வேலை கொள்ளுனர் அப்படியான நாட்களில் வேலையாட்கள் தேவைப்பட்டால், அவ்வாறு பெறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இது சாதாரண வேலை நாளொன்றுக்கு எவ்வளவு கூலி கிடைக்கின்றதோ அதன் இரட்டிப்பான கூலிகளின் அடிப்படையில் மேலதிகக் கொடுப்பனவு கணிக்கப்பட்டு வழங்கப்படும்போதே அனுமதிக்கப்படுகின்றது. கடை மற்றும் காரியாலய வேலையாட்கள் சட்டமும் மற்றும் கூலிச்சபை சட்ட ஆணை ஒழுங்கு அகியவற்றின் கீழ் உள்ள இன்னொரு ஏற்பாடு, தனியார்துறை குறித்துச் செல்லுபடியாகின்றது அதாவது, ஒருவருடத்திற்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கையினை மூன்று அல்லது நான்கு மேலதிக நாட்களாகக் கூட்டுகின்றது. இது ஒரு சட்டப்படியான தேவையின் நிமித்தம் ஏற்படுகின்றது. அதாவது, எப்பொழுது ஒரு பொது விடுமுறை நாளொன்று ஒரு வேலை செய்யாத நாளில் வருகின்றதோ, (சனி அல்லது ஞாயிறு) வேலைகொள்வோர் ஒரு மேலதிகமான நாளை விடுமுறையாக பொதுவிடுமுறைக்கு உடனே வருகின்ற கிழமையில் வழங்குதல் வேண்டும். இத்தகைய பொருத்தமற்ற விதிப்பின் நியாயப்பாடு காலத்தினூடாக அறியக் கூடியதொன்றல்ல. ஆனால் இவ் விதியின் காரணத்தால் தனியார் துறையிலுள்ள வேலைகொள்ளுனர் 2001 இல் (உதாரணமாக) மூன்று மேலகதிமான நாட்கள் விடுமுறை நாட்களாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தனியார் துறையிலுள்ள வேலை கொள்ளுனர் ஒர் உலகளாவிய, கால எல்லைகள், அல்லது இட அமைவு, போட்டித் திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை குறித்து கட்டுப்பாட்டெல்லைகளற்ற சந்தைச் சூழ்நிலையில் தொழிற்படவேண்டிய தேவை இருக்கின்றது. இப்பின்னணியில் அவர்கள் இரட்டை விதமான, வேலைநேர இழப்பு அல்லது உயர்ந்த கூலிகள் கொடுத்தல் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். தொழிற்சங்கங்கள், தனியார் துறையிலும், பொதுத்துறையிலும், வேலை நேர நாட்கள் ஒரு வருடத்தில் குறைக்கப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளன. இவை, தொழிற்சங்கங்களினால் அடிப்படையான, வேலை செய்யும் ஒப்பந்த விதிமுறைகளாகக் கருதப்பட்டு வந்துள்ளன.
202

4. உழைப்புச் சந்தையில் இடையீடுகள்
கேள்வி நிரம்பல் ஒவ்வாமை நிலைக்கு மேலாக உழைப்பினர் சந்தை மீது வேறுவகைப்பட்ட இடையீடுகளும் உள்ளன; அவை உழைப்புச் சந்தையில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
4.1 உழைப்பினர் தொடர்பான சட்டவாக்கம்
வேலை தொடர்பான விடயங்கள், வேலையாட்களின் உரிமைகள், வேலைசெய்யும் இடத்தின் வேலை நிலைமைகள், வேலைபற்றிய பிணக்குகள் மற்றும் கைத்தொழில் உறவுகள் ஆகியவை இலங்கையில் 45 எழுத்து வடிவ நிறைவேற்று சட்டங்களைக் கொண்ட சட்டத் தொகுப்பினால் நெறிபடுத்தப்படுகின்றன. இச்சட்டத் தொகுப்பில் அதிகமானவை சுதந்திரத்திற்கு உடனடியாக முன்னரும், சுதந்திரத்திற்குப் பின்னராகவும் ஆக்கப்பட்டன. அதற்குப் பின்னராக பல்வேறு நிருவாகங்கள் இச்சட்டத்தில் மேலான சிறு திருத்தங்களையும் செய்துள்ளன. இவை செயற்படு சாத்தியப் பாட்டை விட கூடுதலாக கருத்துநிலை சார்புள்ளவையாக இருந்துள்ளன. இன்று வேலை ப்ற்றிய விடயங்களை வழிநடத்தும் சட்ட ஒழுங்குகள் பொருளாதாரக் குறிக்கோள்கள் அடைவதற்கான ஒரு பரந்த அடிப்படையிலான உபாயத்தினைத் தழுவியதாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான சூழமைவு நிலைக்கேற்றதானதுடன் மற்றும் உடனுக்குடனாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் உபாயங்கள் என்பவற்றை தழுவியதாகவும் அமைந்தன.
இத்தகைய சட்டமுயற்சிகளின் திரண்ட முறையான விளைவு, வேலை செய்யும் ஒருவருக்கு வேலை வழங்குவதன் ஒப்பந்த ஒழுங்குகளையும், நிபந்தனைகளையும் முழுவதாக வேலை கொள்ளுனர் தீர்மானிக்கும் உரிமையின் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவை, சில சந்தர்ப்பங்களில் வேலை கொள்ளுனர், வேலைபெறுநர் ஆகியோருக்கிடையே விரும்பிச் செய்யப்படும் ஒப்பந்த ஒழுங்கு விதிகளையும் தள்ளி வைத்துள்ளன. எப்படியாயினும், இச் சட்டங்களின் செயற்திறன் தன்மை பெரும்பாலும் அவற்றின் ஏற்பாடுகள் எவ்வளவு அர்ப்பணிப்புடனும் ஆற்றலுடனும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதில் தங்கியுள்ளது.
பிரதான சட்ட ஒழுங்குகளின் முன் ஏற்பாடுகள் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இவை, தனியார்துறை, அரசுடைமை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுக் கம்பனிகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் அல்லது அதிகார நிறுவனங்கள் ஆகியவை பற்றியவை. எப்படியாயினும், அவை, மத்திய, உள்ளுர் ஆட்சிப் பணியாளர்கள் (அமைச்சுக்களும் திணைக் களங்களும்) ஆகியோருக்குப் பொருந்தாதவை. இவ்வகைப்
203

Page 109
பணியாளர்கள் பற்றிய ஒழுங்குகள், நிறுவப்பட்ட சட்டத் தொகுப்பேடு மற்றும் அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களின் காலத்துக்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஆகியவற்றினால் வழிநடத்தப்படுகின்றன.
தொழிற்சங்கங்களின் உரிமைக் கட்டளை 14, 1935
இது, இக்கட்டளையின் கீழ் உள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, தொழிற்சங்கங்களின் பதிவு முதல் நிபந்தனையாக அமைகின்றது. இத் தேவை விதிக்கப்பட்டதனால், இவ்வுரிமைக்கட்டளை தொழிற்சங்கங்களின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டது. எப்படியாயினும், இது முதல் முறையாக, வேலை செய்பவர்கள் ஒன்று சேருவதற்கான சட்ட அனுமதியினை வழங்கியது. அத்துடன் வேலை கொள்வோருடன் கூட்டுநிலையாக பேரம் பேசுவது தொடர்பாக உரிமையினையும் எற்றுக்கொண்டது.
கைத்தொழில் பிணக்குகள் சட்டம், 43, 1950
இது, கைத்தொழில் பிணக்குகள் தொடர்பாக இணக்கத்தை ஏற்படுத்துவது, மற்றும் இரு சாராரும் விரும்பி அல்லது கட்டாயமாக நடுவர் தீர்ப்புக்கு விடுதல், கூட்டு ஒப்பந்தங்கள், உழைப்பினர் நீதிமன்றங்களினூடாக தீர்ப்பளித்தல் முறை ஆகிய ஒழுங்குகளினால் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கு சட்டரீதியான வழிமுறைகளை ஏற்படுத்துகின்றது.
கடை மற்றும் காரியாலயப் பணியாட்கள் சட்டம் 19,1954
இச்சட்டம், கூலிகளின் கொடுப்பனவு, சம்பளத்துடன் விடுப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவுகளின் கணிப்பீடு ஆகியவை தனியார் துறை வர்த்தக நிறுவனங்களில் எவ்வாறு இருப்பது என்பதற்கான ஒழுங்குகளைத் தருகின்றது. இவை, கடைகள், காரியால யங் கள் எலி லா வற் றரிலும் வேலை புரியும் எலி லாத தொழிலாளர்ககளுக்கும் செல்லுபடியாகும்.
வேலையில்ருந்து நீக்கப்படுதல் தொடர்பான சட்டம் 45,1971
இதுவே, ஐயப்பாடின்றி எழுத்து வடிவ நிறைவேற்றுச் சட்டங்களில் வேலை தொடர்பாக தொழிலாளர்களின் சிறந்த காலமான எழுபதுகளின் முற்பகுதியில் இயற்றப்பட்டவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆரம்பத்தில், மூலப்பொருள்களில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில் ஊழியர்கள் அதிகளவினர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்
204

கொண்டுவரப்பட்டது. எப்படியாயினும், இச்சட்டம் தொடர்ந்து சென்றுள்ளது; அத்துடன் தனிப்பட்ட வேலைநீக்கங்கள் குறித்தும் பிரயோசனமுடையதாகக் காணப்பட்டது. இதனால் ஒரு வேலை கொள்ளுனரின், உழைப்பினர் சந்தையினைப் பாதிக்கக் கூடிய பிரதான காரணியாக இருந்துள்ள “வேலைக்கு அமர்த்துதல், “வேலையிலிருந்து நீக்குதல்’ என்பது பற்றிய உரிமையினையும் சிதைத்துள்ளது. வேலை கொள்ளுனர் ஒருவர் 15 வேலையாட்களுக்கு மேலாக வேலைக்கு அமர்த்தப்படுமிடத்தில், அவர்கள் தொடர்பாக இச்சட்டம், வேலைசெய்பவரின் வெளிப்படையான உடன்பாடு இல்லாமல் அல்லது அவ்வாறான விருப்பம் தெரிவிக்கப்படாத நிலையில், உழைப்பினரை ஆணையாளரின் அனுமதியில் லாமல் (ஆணையாளரினால் அவருடைய முழுமையான தன் விருப்புரிமை அடிப்படையில் நட்ட ஈடு வழங்கப்படுதல் தொடர்பான கொடுப்பனவு முறைக்கு உட்பட்டதாக) வேலை நீக்கம் செய்வதைத் தடை செய்கின்றது. உழைப்பு ஆணையாளர், வேலை கொள்ளுனர் ஒருவர், வேலை செய்யும் ஒருவரை நீக்கம் செயப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமிடத்தில் கட்டாயமாக அல்லது தேவைப்பட்டதாக அனுமதி வழங்க வேண்டியதில்லை. அவர் அனுமதியினை மறுக்கலாம் அவ்வாறு செய்யுமிடத்தில் வேலை கொள்ளுனர் ஒருவர் தொழிலாளர் ஒருவரை வேலையில் தொடர்ந்து இருப்பதனை கட்டாயப்படுத்தவும் வேலை கொள்ளுனரின் விருப்பத்திற்கு மாறாகப் பணிக்கவும் முடிகின்றது.
வேலை நீக்கம் பற்றிய இச்சட்டவொழுங்குகள் பற்றிய நேரடியான தாக்கம் 2001 இல் நடந்த பொருளாதாரக் குழப்ப நிலையில் தெரிய வந்தது. பல தொழில் நிறுவனங்கள் நடவடிக்கைகளை பொருளாதார நிச்சியமற்ற நிலைமை மற்றும் சந்தைகளின் இழப்பு ஆகிய காரணங்களினால் தொழிலாளர்களைக் குறைத்துக் கொள்ளும் கட்டாயமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. இப்பின்னணியில், குறிப்பிட்ட சட்டத்திற்கு அமைய தற்காலிக வேலை நீக்கம் கால நீடிப்புக் கொண்டதாகவும், நடைமுனிறச் சாத்தியமற்றதாகவும், காணப்பட்டதனால், பொருளாதார நிலைமை கடினமானதாக இருந்துள்ள போதும் வேலையாட்களை அவர்களின் மாதாந்த குறைந்தபட்ச சம்பளத்தை, உதவித்தொகைக் கொடுப்பனவுகளில்லாமல், கொடுத்து வீட்டிலே நிற்குமாறு கேட்கப்பட்டனர். இதனுடைய நோக்கம், தொழில் நிறுவனங்களின் மூடுதலைத் தவிர்த்து செலவுகளைக் குறைத்துக் கொள்வதாக இருந்துள்ளது. 6f(6.55g good pulo) (Hotel sector) (36.606)u T. E6D6T இடைநிறுத்துவது, கிளர்ச்சியாளர்களின் சர்வதேச விமான நிலையம் 2001 யூலை தாக்குதலுடன் தவிர்க்க முடியாததாகக் கருதப்பட்ட பொழுதும், வேலை நீக்கம் தொடர்பான சட்டம் அவ்வாறு நீக்குவதை அனுமதிக்கவில்லை. இப்பின்னணியில், கட்டாயமாக வேலைமட்டங்கள் பேணப்பட்டு வந்தன, பொருளாதார மந்தமான நிலையினது வேலை அளவுகள் மீதான பாதிக்கப்பட்ட துறைகளில் சரியான ஒரு பிரதிபலிப்பைக காட்டுவதற்குக் தடையாக இருந்துள்ளது.
205

Page 110
வேலை நீக்கம் பற்றிய சட்டம் 2003 இல் திருத்தப்பட்டது. இதற்கு அமைய இச்சட்டத்தின் கீழான எல்லா விசாரணைகளும் இரண்டு மாதங்களில் பூர்த்தியாக்கப்படுதல் அவசியமாக்கப்பட்டது. மேலும், வேலை கொள்ளுனர் ஒருவர், ஒரு வேலை செய்பவரை சேவையிலிருந்து நீக்குவதற்கு அனுமதியினை பெறுமிடத்து அல்லது வேலைநீக்கம் தொடர்பான சட்டத்தினை மீறி (Termination of Employment Act) நீக்குதல் இடம் பெற்றிருக்குமாயின், வேலை மற்றும் உழைப்பு பற்றிய அமைச்சருக்கு உழைப்பு ஆணையாளரினால் வழங்கப்படக் கூடிய நட்டஈடு தொடர்பான கட்டளைச் சுருக்க விதிமுறையினை வெளிப்படுத்துவதற்கு இத் திருத்தம் அதிகாரமளித்தது. இச்சுருக்க விதிமுறை டிசம்பர் 31, 2003 இல் அரசாங்க வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டது. இதில் நட்டஈடு வழங்கப்படக் கூடியதன் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டன. சென்றகால சேவை (மிக்க கூடிய 15 வருடங்கள்) வேலையிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரையான சேவையில் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் நட்டஈடு வழங்கப்படுதல் விளக்கப்பட்டது. இச் சுருக்க விதிமுறை சில வேலைகொள்வோரினால் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பெருமளவுக்கு அணியும் ஆடை உற்பத்தித் தொழிலில் உள்ளவர்கள், பலவகை நார்பொருள் உடன்படிக்கை (Multi fiber agreement) யின் முடிவுக்காலத்துடன், அதன் கீழ் கிடைக்கும் அனுமதிப் பங்கு முறையும் இல் லாமல் போகுமிடத்து, வேலையாட்களை நிறுத்த வேண்டிய நிலையினை எதிர்நோக்கியவர்கள் வரவேற்றனர். ஆனாலும், இச்சுருக்க விதிமுறை சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடியுள்ளது. அவர்களின் கருத்துப்படி செலவு மிகுந்தாக இருக்குமெனக் கூறியுள்ளனர். தொழிலாளர் அமைப்புகளும் இதனை எதிர்த்துள்ளன. இது, வேலை கொள்ளுனர் நட்டஈடு கொடுப்பது பற்றிய ஆற்றலைப் பற்றிக் கவனிக்கவில்லை என அவ்வமைப்புகளினால் கூறப்பட்டுள்ளது. அரசாங்கமும், நட்டஈடு வழங்கும் முறையினையும், வேலையின்மைக்கு நன்மை வழங்கும் திட்டத்தினையும் இணைத்து, வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேலையாட்களுக்கு உதவும் வகையில் இச்சட்ட ஏற்பாடுகள் மூலம் திட்டமொன்றைக் கொண்டு வந்தது. ஆனால், இது பற்றித் தொழிலாளர்கள் மட்டத்தில் குறை கூறப்பட்டது. இது வேலைகொள்வோருக்கு கூடிய நன்மையுடையது எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக எழுந்த பல்வேறு அமைப்புகளின் குறைகூறல்களின் மத்தியில் அரசாங்கம், வர்த்தமானியில் தெரியப்படுத்திய சுருக்க விதிமுறையினை சரிப்படுத்த முயற்சி எடுத்துள்ளது. ஆனாலும், எழுந்துள்ள சூழ்நிலையில் இம்முயற்சி கைவிடப்படுவதற்கான போக்குகள் காணப்பட்டுள்ளன. உழைப்பு ஆணையாளருக்கு முழுமையான அவருடைய தன்விருப்புரிமை அடிப்படையில் ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் நட்டஈட்டினை நிர்ணயிக்கும் அதிகாரம் மீளளரிக்கப்பட்டுள்ளது.
206

பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம், 12,1983 (Payment of Gratuity Act 12, 1983)
இது கொண்டுவரப்பட்டதன் நோக்கம், குறைந்தபட்ச அளவு வருமானமட்டப் பாதுகாப்பினை வேலையிருந்து விலக்கப்பட்ட வேயைாட்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவது. இதனுடைய ஒழுங்கின்படி, ஒவ்வொரு வருட சேவைக்கும், ஒரு குறைந்த பட்ச தகுதியுடைய ஐந்து வருடம் ஒரு வேலைகொள்வோருடன் தொடர்ச்சியான சேவை என்பதற்கு இணங்க, இரண்டு கிழமைகள் ஊதியம் வழங்கப்படுதல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற் சங்கங்கள் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ஏற்றுமதிப் பதனிடல் வலயங்களின் நிறுவனங்களுக்கு உதவுகின்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது எனக் கூறப்பட்டது. இவ்வலயங்களில் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் உயர்ந்தளவான கைமாற்றுப் பணத் தொகையுடையவை எனவும் தகுதியுடைய காலம் ஐந்து வருடங்கள் சேவையும் பூர்த்தியாக்கும் பணியாட்கள் மிகக் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. எப்படியாயினும், இச் சட்டம் ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தில் உள்ள நிறுவனங்களை விட, மற்றைய தனியார் துறையிலுள்ள எல்லா வேலை கொள்ளுனருக்கும் செல்லுபடியாகும். மேலும், சமூகக் காப்பொழுங்கு முறை (Social Security System) ஒன்றின் படிமுறை வளர்ச்சியின் ஒரு முக்கிய இடைக்கால முயற்சியாக இது கருதப்பட்டுள்ளது.
siaSā afou 9 lifolddisas'LogiT 27, 1941 (The Wages Board Ordinance, 27, 1941)
தேவைப்படுமிடத்தில், எந்தவொரு வியாபாரத்திலும் அலலது கைத்தொழிலும் கூலிகள், வேலை நிலைமைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு முப்பகுதிகளைக் கொண்ட கூலிச் சபைகளை (Tripartite Wages Board) இவ்வுரிமைக் கட்டளையின் கீழ் நிறுவப்படுவதற்கான சட்ட அதிகாரம் கிடைக்கின்றது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகத்தில், அமைக்கப்படும் கூலிச் சபை, குறைந்த பட்சக் கூலிகள், மிகக் கூடிய வேலை செய்யும் நேரங்கள், விடுப்பு, விடுமுறை நாட்கள், மற்றும் மேலதிக வேலைசெய்தல் ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு இச்சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிர்ணயிக்கப்படுபவை சட்டப்படியாக கட்டுப்படுத்துபவை என்பதுடன், வேலையாட்களின் வேலை அந்தஸ்த்து எவ்விதமாக இருப்பினும் செல்லுபடியாகும் தன்மை உடையவை. தற்பொழுது, 43 முப்பகுதிகளை உள்ளடக்கும் கூலிச் சபைகள் நடைமுறையில் உள்ளன. இவை விவசாயம், தயாரிப்பு, சேவைகள் ஆகியவற்றின் துறைகளிலுள்ள தொழில்களை உள்ளடக்கியிருந்தன. இப்பல்வகையான அதிகாரமுடைய நிறுவனங்கள் கூலிகள், மற்றும் வேலை
207

Page 111
நிலைமைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதும், கூலிச் சபைகளின் எல்லைகளுக்குள் வருகின்ற பல்பரிமாண வேலைத்தளங்களைக் கவனிப்பதும் ஒரு பெரும் பொறுப்புடைய சிக்கல் நிறைந்த பணியாக மாறிவிட்டது.
தொழிற்சாலைகள் உரிமைக் கட்டளை 45,1942 (The Factories Ordinance,45, 1942)
இச்சட்டம், தொழிற்சாலைகள் கைத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைதொடர்பான சுகாதாரம், வேலையாட்களின் காப்பு நிலை போன்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றது. இதனுடைய செயலெல்லை எல்லாத் தொழிற்சாலை வேலையாட்களையும் வேலை நிலை வேறுபாடில்லாமல் உள்ளடக்குகின்றது. ஆனாலும், இதனுடைய நடைமுறைப்படுத்தல் செயற்திறன் குறைந்ததாக இருந்துள்ளது. வேலைத்தளங்களின் கட்டாயமான பதிவுத்தேவை இல்லாத காரணத்தால் இதன் நடைமுறைப்படுத்தல் முழுமையாகச் செய்யப்படவில்லை.
வேலையாட்களின் நட்டஈடு உரிமைக் கட்டளை 19,1934 (The Workmen's Compensation Ordinance No. 19, 1934)
இச்சட்டம், எல்லா வகையான நிறுவனங்களையும் உள்ளடக்குகின்றது. இதற்கிணங்க, தற்செயலாக ஏற்படும் ஆபத்துக்கள், காயப்படுதல், வேலை செய்யும் நேரத்தில் ஏற்படுவது தொடர்பாகவும், அல்லது கைத்தொழில மற்றும் தொழில் செய்யும் இடங்களில் நோய்கள் வேலைசெய்யும் பொழுது ஏற்படுவதால், நட்டஈடு வழங்கப்படுவது பற்றி இச்சட்டம் ஒழுங்குபடுத்துகின்றது.
பெண்கள், இளையோர், மற்றும் சிறுவர் வேலைச் சட்டம், 47, 1956 (The
Employment of Women, Young Persons and Children Act, No 47 of 1956)
இச்சட்டம் பெண்கள், இளைய தொழிலாளர்கள் நலன்களைக் காக்கும் நோக்கத்தைக் கொண்டது. இச்சட்டத்தின் ஒழுங்குகளினால், வேலைநேரங்கள், வேலைநிலைமைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதுடன், பலவீனமுடையவர்களை கஷடமான வேலைகளில் ஈடுபடுத்துவதை தடைசெய்கின்றது.
மகப்பேற்று நன்மைகள் உரிமைக் கட்டளை 32,1989 (Maternity Benefits Ordinance No 32, 1939) نہور
இச்சட்டம் கடை மற்றும் காரியாலய சட்டத்தின் பொருத்தமான ஏற்பாடுகளும், சம்பளத்துடன் மகப்பேற்று விடுப்பினையும் மற்றைய மகப்பேற்று நன்மைகளையும்
208

வழங்குவதுடன், பெண் தொழிலாளர் மகப்பேற்றுக்கு முன்னரும் பின்னரும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்துவதையும் தடைசெய்கின்றது.
வேலை செய்வோர் சேமலாப நிதியச் சட்டம் 15,1958 (The Employees Provident Fund, Act No. 15 of 1958)
இச்சட்டம் உழைப்பாளர் தொடர்பாக ஓய்வுக் காலத்தில் பண உதவி கிடைக்கச் செய்யும், தொழிலாளர்களும் (வேலை கொள்ளுனரும்) நிதிப் பங்களிக்கும் ஒரு திட்டம். அரசு துறையினை விட மற்றைய எல்லாத் துறைகளில் வேலைபார்க்கும் பணியாளர்களுக்காக வகுக் கப்பட்ட சட்டபூர்வமான ஒழுங்குகளை உள்ளடக்குகின்றது. இதில் குறைந்த பட்ச தொகை தொழிலாளர்களினாலும் வேலைகொள்வோரினாலும் அளிக்கப்பட்ட தொகை ஒய்வுக் காலத்தில் கிடைக்கின்றது. எப்படியாயினும், தொழிலாளர் ஒருவரின் பெயரில் இருக்கும் தொகை முழுவதும் அவரினால் தகுதிபெறும் நேரத்தில் எடுத்துக் கொள்ள முடிகின்றது. ஆகையால், விரும்பத்தக்கதாயினும் இந்த நிதியம் ஒய்வு பெற்ற ஊழியர் ஒருவருக்கு தொடர்ந்து கிடைக்கும் வருமானம் பெறும் மூலமாக தொழிற்படுவதில்லை.
9arguias a siblfdigodas Saud afl'Lib 46, 1980 (The Employees Trust Fund, act No.46 of 1980)
இதன்படி வேலை கொள்ளுனர் எல்லா வேலையாட்களின் சம்பளத்தில் 3 சதவீதக் கொடுப்பனவு செலுத்தப்படுதல் வேண்டும். (இவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகளுக்கு உரித்தானவர்கள்) இந்த நிதியம் பணியாட்களுக்கு இடர்நோக்கும் காலங்களில் உதவி செய்வதற்காகப் பயன்படுகின்றது. ஐந்து வருடங்களில் ஒரு முறை நிதியத்தில் உள்ள பணம் தொழிலாளர்களினால் எடுத்துக் கொள்ள முடிகின்றது.
4.2 தொழிற் சங்க இயக்கமும் தொழிலாளர் அமைப்புகளும்
அரசியல் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ள காரணத்தால் - முற்பகுதியில் விளக்கப்பட்டது போல - இலங்கையில் ஒரு பலமான மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிகுந்த தொழிற்சங்கக் கலாச்சாரமும் நிலவி வந்திருக்கின்றது. எப்படியாயினும், தொழிற்சங்க மயப்படுத்தல் வீதம் அண்மைக் காலங்களில் வேறுபட்டுள்ளது, படிப்படியாக 1990 களின் பின் அரைப்பகுதியில், தொழிற்சங்க மயப்படுத்தல் வீதம் குறைந்து வந்துள்ளது. இது குறைந்து சென்றதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
209

Page 112
ஏற்றுமதிப் பதனிடல், முதலீட்டுச் சபைத்துறையில், தொழிற்சங்கங்கள் (முக்கியமாக வலயங்களுக்கு உள்ளே) இல்லாத துறையில் ஏற்பட்ட வேலைவாய்ப்புகளின் அதிகரிப்பு, முறைசார் துறையிலிருந்து முறைசாராத்துறை நோக்கி வேலையின் அசைவு ஏற்பட்டது, இங்கும் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவது சிரமமாயிருந்தது, மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை பெற்றுத் தொழிலாளர்கள் சென்றுள்ளதும் முக்கியமாகின்றது: இளைய ஆண்கள் கூடுதலாக ஆயுதப்படைகளில் உள்வாங்கப்பட்டு இவர்கள் வருங்கால தொழிற்சங்க உறுப்பினர்களாகும் சாத்தியமும் இருந்துள்ளதாயினும், படைகளின் அதிகரிப்பினால் தெழிற்சங்கமயப்படுத்தலின் வீதத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. படைகளில் சேர்பவர்கள் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேரவும் முடியாது. அத்துடன், அரசுடைமையான பெரிய அரச நிறுவனங்களின் தனியார்மயப்படுத்தலும் தொழிலாளர் படை சிதைவுற்றதன் காரணமாக தொழிற் சங்கங்கள் பாதிக்கப்பட்டன.
தொழிற்சங்கங்களின் விபரங்கள், பல தொழிற்சங்கங்களின் இருப்பதன் நிலைமையை முன்னிலைப்படுத்திக் காட்டுமிடத்திலும், உறுப்பினர்கள் தொகை ஒரு சில பெரிய சங்கங்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிடம் குவிவாக உள்ளதைக் காணமுடிகின்றது. வேலைப்படையின் ஒரு பகுதியாக தொழிற்சங்க மயப்படுத்துதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமே மிகக் கூடுதலாக இருந்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நோக்குமிடத்து மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத் துறையிலேயே காணப்பட்டுள்ளன. 1991 முடிவில், ஒவ்வொன்றும் 5000 உறுப்பினர்களுக்கு மேலானதாக 23 சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மொத்தத் தொகையில் 92.5 சதவீதத்திற்குப் பொறுப்பாக இருந்துள்ளன. உறுப்பினர்கள் தொகையில் அதிகமானவர்கள் ஆண்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்பிற்குள் பெண்களின் பங்கேற்றலும், பிரதிநிதிதுவப்படுத்தலும் பெருந்தோட்டங்களைத் தவிர்த்து மற்றைய துறைகளில் பலவீனமானதாக இருந்துள்ளது.
4.3 பிணக்குத் தீர்த்தல்
6055 Qg5 Tg56) footsi (536s up 5u gillb (The Industrial Disputes Act) பிணக்குகள் தீர்ப்பது பற்றி பல வழிமுறைகளை முன்வைத்துள்ளது. அவையாவன: (1) விருப்பத்துடன் அல்லாது கட்டாயப்படுத்தி நடுவர் தீர்ப்புக்கு விடுதல் இங்கு இரு சாராரும், தீர்ப்பு வழங்கப்படுவதை எதிர்பார்த்து இதுவரையிருந்த நிலைக்குச் செல்லுதல் (2) இணக்கம் ஏற்படுத்துதல் குறித்து பிணக்குச் சார்பாக இருசாராரிடையேயும் உழைப்பு ஆணையாளர் சமரசம் கொண்டுவருதல் (3) உழைப்பினர் நீதிமன்றங்களினால் வழக்குத் தீர்ப்பளித்தல்; வேலை நீக்கம் பிணக்குச் சட்டம், வேலையாள் வேலை கொள்ளுனர் ஆகியோரிடையே உள்ள
210

வேலை தொடர்பான ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் எவ்வாறு இருந்திருப்பினும், வேலை நீக்கத்திற்கு சட்டப்படி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது பற்றி உழைப்பினர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது, (4) உழைப்பினர் ஆணையாளரின் தலையீடு இல்லாமல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுதல் தொடர்பாக (குறிப்பாக, கூலிகள், வேலை நிபந்தனைகள் பற்றி) கூட்டு ஒப்பந்தங்கள் உழைபபு ஆணையாளரினால் பதிவு செய்யப்பட்டு அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.
இவ் வழிமுறைகள் திறமையாகவும், விரைவாகவும், உழைப்பினர் சந்தையை இயங்கச் செய்து, அதனால் உழைப்புச் சந்தை தொழிற்படுவதற்கான தடைகளைக் குறைத்தல் நோக்கமாக இருந்தது (வளர்ந்திருக்கும் குறைபாடுக்ள் சிரமங்களை அமைப்பில் ஏற்படுத்துவதாக இருப்பினும் பணியாற்ற வைக்கும் நோக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது). கைத்தொழில் பிணக்குகளின் சட்டம், செய்யப்படும் ஏற்பாடொன்று, ஒரு வேலையாள், ஆண், பெண், சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதையிட்டு எதிர்ப்புத் தெரிவித்து உழைப்பினர் நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்தபொழுதும், அது மூன்று மாதங்களில் மன்றம் தீர்பளிக்க வேண்டும் என்ற கடப்பாடு இருக்குமிடத்தும், தற்பொழுது அத்தகைய ஒரு விசாரணை மூன்று வருடங்களுக்குச் செல்லுகின்றது. இதேபோன்ற தாமதங்களும் குறைபாடுகளும், நடுவர் தீர்ப்புக்கு விடுதல், சமரசம் ஏற்படுத்துதல், உழைப்பு ஆணையாளரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தீர்ப்புகள் விரைவில் கிடைப்பதற்குத் தடையாக இருப்பது, இவைபோன்ற பிணக்குகள் உழைப்புச் சந்தையில் ஏற்படுத்தும் சமமின்மைகள் தொடர்ந்திருப்பதும், அமைப்பில் இடையூறுகள் தொடர்ந்து அதிகம் இருந்து வருகின்றதைக் காட்டுகின்றது.
பிணக்குகள் தீர்ப்பதற்கு ஒரு வழியாக வேலைநிறுத்தம் செய்யும் 9 fooD A
சட்ட ஒழுங்குகளிலும், வேலைநிறுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்தது தொடர்பாக கூறப்பட்ட நீதிமன்றத் தீர்மானங்களிலும், வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் மேற்கொள்வது ஒரு முறையான அவர்களின் உரிமை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எல்லாத் தொழில்களிலும் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதும், இது தொழிற்சங்க மயமாக்கல் குறைந்துள்ளதனால் ஏற்பட்டிருக்கலாம், மனித நாட்கள் இழக்கப்பட்டதன் எண்ணிக்கை அதிகளவுக்குக் குறையவில்லை. இதற்கு ஒரு காரணம், இருக்கும் ஒழுங்குகள் பிணக்குகள் தீர்ப்பதில் அத்தகைய வேலை நிறுத்தங்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதில் இயலாமை காணப்பட்டது. இது தொடர்பாக தொழில்கள் பிணக்குகள் பற்றிய சட்டத்தின் கீழ் இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிணக்குகள் தொடர்பாக நடுவர்
211

Page 113
தீர்ப்புகளுக்கு, தொழில் சூழலின் அமைதியை மீட்பதற்கு கட்டாயப்படுத்தி விடுவது குறித்து உழைப்புத் திணைக்களம் போதியளவு செயலூக்கத்துடன் தொழிற்படவில்லை. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் தன்மையாக தீவிரநிலை, மற்றும் வன்முறை சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் காணக்கூடியதாகின்றது. இத்தகைய நடத்தைகள், பணையக் கைதிகள் வைத்திருத்தல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், தொழில் நிறுவனங்களின் இடங்களைப் பலாத்காரமாக எடுத்தல் போன்ற நடவடிக்கையாகக் காணப்பட்டுள்ளன. இவை, பேச்சுவார்த்தைகளை விரைவாக வெற்றியளிக்கும் முடிவிற்கு கொண்டு வருவதற்கு தடையாக இருக்க முடிந்தது.
நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் இனத்துவ மோதல் ஆரம்பித்த காலத்திலிருந்து, அவசர காலச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு பல தொழில்களை எனப் பிரகடனப்படுத்தி, அத்துறைகளில்
"அத்தியாவசிய சேவைகள் வேலைநிறுத்தங்கள் சட்டத்திற்கு முரணானவை எனச் செய்யப்பட்டன. அத்துடன் வேலையிலிருந்து நீக்கப்படும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய ஏற்பாடானது பரவலாக எதிர்க்கப்பட்டது மற்றும் சமாதானச் சூழல் ஏற்படும் சாத்தியப் பாடு காணப் படுவதனால் , நிறைவேற்றுத்துறைக்குக் கிடைக்கும் இத்தகைய கடுமையான அதிகாரங்களின் சட்ட மூலாதாரம் பலவீனமடையலாம்.
4.4 கூலிகள் நிர்ணயிக்கப்படுதல்
இலங்கையில் கூலிகள் பலவிதமான முறைகளினால் நிர்ணயிக்கப்படுகின்றன. அரசாங்க துறையில் வெகுமதி மட்டங்கள் இடையிடையே செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இதனை அரசாங்கத்தினால் காலத்துக்கு காலம் நியமிக்கப்படும் உழைப்பூதிய ஆணைக்குழுக்கள் செய்துவந்துள்ளன. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, அத்தகைய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எட்டு ஆணைக்குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன; அவை பல மீளாய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பொதுப்பட்ட மீளாய்வுகளை விட காலத்துக்காலம், அரசாங்க சேவையாளர்களின் உழைப்பூதியத் தொகையில் உதவிப் பண அனுமதிகள் சரிபடுத்தப்பட்டு வந்துள்ளன. இது அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஈடுசெய்யும் நோக்கத்துடன் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. 1980 களில் அப்படியான ஆறு (06) சரிப்படுத்தல்கள் செய்யப்பட்டன, அதனைத் தொடர்ந்து மேலும் மூன்று சரிப்படுத்தல் முயற்சிகள் செய்யப்பட்டன மற்றும் இரண்டு “இடைக்கால சரிப்படுத்தல்கள்” அடுத்தடுத்து வந்த இரண்டு தேர்தல்களுக்கு முன்னராகச் (2000 மற்றும் 2001 தேர்தல்கள்) செய்யப்பட்டன. பொதுத்துறையில் கூலிகள் தொடர்பான அதிருப்தியினைத் தணிப்பதற்கான நோக்கத்தை இவை தழுவியிருந்தன.
212

தனியார் துறையின் தொழிலாளர்கள் குறித்து கூலி நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் பல இருந்துள்ளன. அவை பின்வருமாறு:-
(1) குறைந்தபட்சக் கூலிகள் சட்டம், மற்றும் கடை மற்றும் காரியாலய
வேலையாட்கள் சட்டம்
அதாவது, கூலிகள் சபை மற்றும் வெகுமதி மன்றங்கள், ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கிணங்கிய முப்பகுதி முறையான நிர்ணயித்தல் குறைந்தபட்சக் கூலிகள், முன்பு குறிப்பிட்டது போல, கூலிச் சட்ட உரிமைக் கட்டளையின் கீழ் நிறுவப்படும் கூலிச் சபைகளினால் குறிப்பிடப்படும் தொழில்கள் தொடர்பாக நிர்ணயிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், கூலிச் சபைகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டதான வேலையாட்கள் வேறு முறைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் (உதாரணம், கூட்டுப்பேரம் பேசல்) இதனை தெரிவிக்கப்பட்ட குறைந்த பட்சக் கூலிக்கு உயர்வாக கூலிகளைப் பெறுவதற்கு அவ்வாறு பயன்படுத்தலாம்.
(2) கூட்டுப் பேரம் பேசல்
இவ்வழிமுறை பல நகரச்சார்பான வர்த்தகத்துறைப் பிரிவுகளில், வங்கி ஊழியர்கள், இலங்கையின் வேலை கொள்வோரின் கூட்டமைப்பு உறுப்பினர் நிறுவனங்கள், பெருந்தோட்ட துறையின் காரியாலய உத்தியோகத்தர்கள் (“வெள்ளைக் கொலர்” பணியாட்கள்) ஆகியோரினால அதிகம் விரும்பப்படுவதொன்று. பெருந்தோட்டத் துறையின் “நீலக் கொலர்” வேலைசெய்வோர் தொடர்பாக கூட்டு விலைபேசல் ஒரு பின்வந்த முறையாகும். முதல் முறையாக இத்தகைய கூலி உடன்பாடு 1967 இல் செய்யப்பட்டது. பெருந்தோட்டங்கள் அரச முகாமையிலிருந்து பின்னர் தனியார் கம்பனிகளுக்கு மாற்றப்பட்டதுடன் 1995 இல் இருந்து பொருந்தோட்ட தொழிலாளர் சங்கங்கள் ஒரு பிரதான கூட்டு ஒப்பந்தத்தினை முகாமையேற்ற கம்பனிகளுடன் 1998 இல் செய்து கொண்டன. முகாமைக் கம்பனிகள் அதிகளவுக்கு இலங்கை வேலை கொள்ளுனர் கூட்டமைப்பில் (Employers Federation of Ceylon) douilo, J Tas இருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டப்படியாக, ஒன்று கூடல் உரிமையும் அதனுடன் சேரும் காப்பு நலம், சிறப்புரிமை நலம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. வேலைகொள்வோருக்கும், வேலை பெறுநர்களுக்குமிடையே சமனற்ற கூட்டுப் பலம் தொடர்பாக சரிப்படுத்தும் முயற்சியாக செய்யப்பட்டது, கூட்டுவிலை பேசும் முறைக்கு நல்லதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இருசாராருக்குமிடையே கூட்டுப் பேரம் பேசல் முறை ஊழியச் சந்தையில் பொதுவாக நடப்பதல்ல, விலக்காக
213

Page 114
நடப்பதொன்றாகும். கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட பின்னர் அவற்றின் ஏற்பாட்டொழுங்குகளை தொழிற்சங்கங்களுக்கு எதிராக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவதில் உழைப்பு ஆணையாளர் தயக்கம் காட்டியதன் விளைவாக வேலை கொள்வோர் பொதுவாக கூட்டுடன் படிக் கையின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, தொழிற் சங்கங்களும் வேலை கொள்ளுனர்களினால் வழங்கப்படும் சலுகைகளுக்குக் கைமாறாக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் விருப்பம் காட்டவில்லை.
அரசசார்புடைய நிறுவனங்கள் தொடர்பாக கூலி நிர்ணயிப்பு, மீளாய்வு திறைசேரி, மற்றும் தொடர்பான அமைச்சு ஆகியவற்றால் விதிக்கப்பட்ட வழிகாட்டல்களினால் தீர்மானிக்கப்படுகின்றன. அரச வங்கிகள், தம்முடைய கூட்டு உடன்படிக்கைகள் மூலம் ஒரு பிரதான விலக்கான நிலையினைக் காட்டியுள்ளன. சில வேளைகளில் பணி தொடர்பான விசேட ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டு பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பாக பரிந்துரைகள் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளன. தாராள பொருளாதாரக் கொள்நெறி உபாயம் பின்பற்றப்படும் சூழ்நிலையில், அரசசார்பான நிறுவனங்களின் எண்ணிக்கை தனியார்மயப்படுத்தலினால் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் உடைமை மாற்றப்படும் பொழுது ஊழியப் படையின் நிலையும் மாற்றமடைந்து, பொதுத் துறை ஊழியர்களாக இருந்து தனியார்துறை ஊழியர்களாக மாறியுள்ளனர்.
(8) தொழில் பிணக்குகள் சட்ட ஒழுங்குகளின் கீழ் செய்யப்படும் தீர்ப்புக்
கூறல்கள்
கூலிகள் தொடர்பாக தொழில்களில் ஏற்படும் பிணக்குகள் குறித்துத் தீர்ப்பு வழங்குதல் செய்யப்படுவதுண்டு. இப்பிணக்குகள் விருப்பப்பட்டு அல்லது கட்டாயமாக நடுவர் தீர்ப்பிற்கு விடப்படுகின்றன. நடுநிலைத் தீர்ப்புகள் பிணக்குகள் தொடர்பான எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டுப்படுத்துகின்றது. அதற்குப் பின்னர், சட்ட ஒழுங்கில் கூறப்பட்டதற்கிணங்க தீர்ப்பு நிராகரிக்கப்படலாம்.
(4) தனிப்பட்ட பேரம் பேசுதல் மற்றும் முகாமைசார்ந்த தீர்மானங்கள்
இத்தகைய முறைகள் முறைசாராத்துறையின் பிரதான கூலிநிர்ணயிப்பு முதல் நிலை செயற்பாட்டுக் கருவியாக உள்ளது. தனிப்பட்டோர் பேரம் பேசுதல் உயர்ந்த மட்டத்திலான தொழிலினர்கள், நிருவாகப் பிரிவினர்கள் என்போர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால், செய்யப்பட்ட உடன்பாடுகள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைப்பதில்லை.
214

ஏற்றுமதிப்பதனிடல் வலயம் முதலீட்டுச் சபைத் துறையில் வேலை செய்வோர் தொகை 327,000 என பதிப்பிடப்பட்டுள்ளது இத்துறை தனித்துவம் வாய்ந்த இயல்புகளைக் கொண்டிருக்கின்றது. வேலை கொள்வோர் இத்துறையில் சில சலுகைகளை அனுபவிக்கின்றனர். அதனால், கடுமையான உழைப்பு சட்ட வொழுங்குகளிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கின்றது. உழைப்புத் திணைக்களம், நாட்டின் வழமையான சட்டங்கள் எங்கும் செல்லுபடியாகுபவை அவற்றின் நடைமுறைப் பழக்க வழக்கங்களையும் , தொழிற் சங்க அழுத்தங்களையும் விலகிச் செல்லும் வழிகளும் உள்ளன. வலயங்களுக்குள் தொழிற்சங்க அமைப்புகள் செல்லுவதற்கான தடைகளினால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நிறுவனங்கள் வெளியே உள்ள வேலைகளை உப ஒப்பந்த அடிப்படையில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் செய்து வருகின்றன. இங்கு வேலைசெய்வோர் பெருமளவுக்கு விவாகமாகாத பெண்கள். இந்த நிறுவனங்களில் கூலிகள், சட்ட ஒழுங்கிற்கிணங்க நியதி முறையான குறைந்த பட்ச கூலி வீதங்கள் குறிப்பிட்ட தொழில்களில் நாளொன்றுக்கு 2-3 அமெரிக்க டொலர் அளவாக இருந்துள்ளது. அத்துடன் மேலதிக வேலை, மிகை ஊதியம், கிடைக்கும் நிலையில் கூலிகள் அளவு மாதச் சராசரியாக ரூ. 3500-4000 என அறிவிக்கப்பட்டது.
தனியார்துறை தொழிலாளர்களுக்கு கூலிகள் சரிப்படுத்தல் ஒழுங்கினை அரசாங்கம் விடுக்கும் கட்டளைகள் மூலம் நிறைவேற்றிய அனுபவங்களும் காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஒக்ரோபர் 2000 இல் பொதுத் தேர்தல் பற்றி அறிவிப்பதற்கு முன்னோடி நடவடிக் கையாக சனாதிபதி வர்த்தமானி அறிவித்தலினால் 31 யூலை 2000, மூலம் எல்லா தனியார்துறை வேலை கொள்வோரும், கொடுப்பனவு செய்யக் கூடிய நிலை அல்லது அந்தஸ்த்து என்பவற்றைப் பார்க்காது, எல்லா பணியாட்களின் சம்பளங்களை, மாத ஓராந் திகதியிலிருந்து ரூ. 400/- அதிகரிப்பினை வழங்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டனர். இப்பணிப்பு, கூலி நிர்ணயித்தல் தொடர்பான முழு விதிமுறைகளையும் அவற்றின் பயன்பாடுபற்றிப் பொருட்படுத்தாமல் எடுத்து கொண்ட நடவடிக்கையாகின்றது. இத்தகைய நியாயமற்ற தலையீடுகள் அரசியல் நலன் தேடும் நோக்கில் கொண்டுவரப்பட்டவை, பெரும் இடருக்குள்ளாக்கல் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊழியச் சந்தைச் சீர்திருத்தம் பற்றி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றையும் பலவீனப்படுத்தியுள்ளன.
5. உழைப்புச் சந்தைச் சீர்த்திருத்தம்
இலங்கையில், உழைப்புச் சந்தையின் நிலைமைகள் பற்றிய ஆய்வில் பொதுத்துறையும் சேர்க்கப்பட்டிருப்பினும், உழைப்புச் சந்தை பற்றிய உரையாடல் தனியார் துறையினைப் பற்றியதாக முறைசார்ந்த, முறைசாராப் பகுதிகள்
215

Page 115
உள்ளடங்கலாக இருந்துள்ளது. பொதுத்துறைச் சீர்திருத்தங்கள் பற்றிய நோக்கங்களும் காரணங்களும் வேறுபட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. சீர்திருத்தங்களின் பரம்பலும் ஆற்றலும் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் அரசியல் துணிவாற்றலில் தங்கியுள்ளது. அத்துடன், அரசாங்கம் ஏற்படுத்தக் கூடிய கட்டுப்பாட்டின் அளவு தன்மையும் முக்கியமாகின்றன. இவை சந்தைக்குள் இருந்து வருகின்ற உந்துதல்களைவிட முக்கியத்துவம் கொண்டவையாகக் கருதமுடிகின்றது. மேலும், பொதுத்துறைக்குள் சந்தை சக்திகள் இயங்குவதில்லை. இது, அரசாங்கத்திற்கு உயர்ந்தளவான ஒழுங்கமைத்தல், கட்டுப்பாடு ஆகியவை யாப்பின் சட்ட ஒழுங்குகள், ஏற்பாடுகள் என்பவற்றிற்கு இணங்க வழங்கப்பட்டுள்ளதனைப் பிரதிபலிக்கின்றது. யாப்பு ரீதியான ஒழுங்குகளும் எற்பாடுகளும் மாற்றப்படுவது அல்லது மாறுவது கடினமானது.
5.1 தனியார்துறையில் ஒளழியச் சந்தைச் சமநிலையின்மைகள்
முறைசார்ந்த, முறைசாராத தனியார் துறையில் பலவிதமான சமநிலையின்மைகள் காணப்பட்டுள்ளன:
நிரம்பல் சமநிலையின்மைகள் ஊழியச் சந்தைக்குள் இரண்டாம் தரக் கல்வி மூன்றாம் மட்டக்கல்வி, வாழ்க்கைத் தொழில் சார்ந்த கல்வி ஆகியவற்றினூடாக ஊழியச் சந்தையில் சேருகின்றவர்களுக்கும், கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் என்பவற்றினால் எடுத்துக் காட்டப்படும் தேர்ச்சிகள் என்பவற்றிற்கான கேள்விக்குமிடையே பொருத்தமில்லாத நிலை காண்படுகின்றது; இச்சமநிலையின்மை கூடுதலாக பல்கலைக்கழகக் கல்வியில் குறிப்பாகக் காணப்படுகின்றது. இதில், மூன்றில் இரண்டு பங்கினர் இக்கல்வித் தகைமையுடையவர்களில் வேலை பெற முடியாதவர்களாக இருந்துள்ளனர். அத்துடன் கல்வியின் தரம், பாடசாலைகளின் அமைவிடம் போன்ற அமைப்பு சார்ந்த குறைபாடுகள் காரணமாக வேலைதேடும் உழைப்பினர் படையினர் குறைந்த தேர்ச்சியுடையர்களாகக் காணப்பட்டுள்ளனர்.
வேலை (கேள்வி) ஆக்கத்தில் வேறுபட்ட நிலைகள்: உழைப்புச் சந்தைக்குள் வருகின்றவர்களினால் விரும்பப்படும் வேலை தொடர்பான வகைகள் அவர்களின் தேர்ச்சிகளில் பிரதிபலிக்கப்பட்டிருப்பதற்கும் ஊழியத்தினை உள்வாங்குவதற்கான வாய்ப்புகளுக்கும் இடையே வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டுள்ளன. 19902000 வரையான பத்தாண்டுக் காலப்பகுதியில், வேலை வசதிகளின் உண்டாக்குதல் அதிகமாக முதலீட்டுச் சபைத்துறை, படைகள், வெளிநாட்டுவேலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ளன. முதலீட்டுச் சபைத்துறையின் வேலை வசதிகள் பெருமளவுக்கு தேர்ச்சியில்லாத அல்லது பகுதித் தேர்ச்சி கொண்டவையாக இருந்துள்ளன; இவைகளில் இருப்பவர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவது குறைவாகவே
216

இருந்துள்ளது. இவைகளில் மேலும் வேலை தொடர்பான முன்னேற்றமடையும் வாய்ப்புகள் குறைந்திருந்தன. ஊழியத்தின் மாறுதலும் உயர்வாக இருந்துள்ளது. ஏற்றுமதிப் பதனிடும் வலயங்களில் வேலைசெய்யும் இளம்பெண்கள் தமது வேலையை, பாடசாலைக்கும் விவாகம் செய்வதற்கும் இடைப்பட்டதொன்றாகக் கருதியுள்ளனர். படைகளில் சேரும் இளம் வயதினர் அதிகமாக கிராமத்து, ஆண்கள் அதனை ஒரு விரும்புகின்ற வாய்ப்பாகவோ அல்லது நீண்டகால தொழிலாகவோ, நன்கு அறிந்த காரணங்களுக்காகச் சேரவில்லை. 2001 இல் வெளிநாடு சென்று வேலை பார்த்தவர்கள் 75 சதவீதத்தினர் வீட்டுப் பணியாளர்களாக அல்லது மற்றைய தோச்சியில்லாத வேலைகளுக்குச் சென்றுள்ளனர். அத்துடன் இத்தகைய வேலை வாய்ப்பு குறுகிய காலத்திற்கு கிடைப்பவையாகவே இருந்துள்ளன; இவை, வேலை சார்பான முன்னேற்றமும் இல்லாது காணப்பட்டுள்ளன.
வேலைநீக்கம் செய்வதைக் கட்டுப்படுத்தல்: வேலைகொள்ளுனர் தம்முடைய தொழில்களில் தேவைப்படும் மனித வளத்தை நிர்ணயிப்பது சட்ட விதிகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மந்தப் போக்குடைய காலத்தில் வேலைசெய்வோரின் எண்ணிக்கையினை, நட்டஈடு கொடுப்பனவுகள் அதிகமாக இருப்பதனால், குறைப்பது கடினமாகின்றது. அத்துடன், ஒரு வேலையாளின் சேவையினை நிறுத்தும் தீர்மானம் உழைப்புத் தீர்ப்பதிகார மன்றத்தினால் (Labour Tribunal) அல்லது உழைப்பு ஆணையாளரினால் தள்ளிவைக்கப்பட்டு கட்டாயமாக மீண்டும் வேலையில் அமர்த்தும் கட்டளையும் விதிக்கப்பட முடியும். அப்பொழுது, ஒரு வேலை கொள்ளுனர், நம்பிக்கையிழந்த அல்லது நடத்தைத் தவறுடையவர் என நம்புகின்ற ஒரு தொழிலாளியினை தொடர்ந்தும் வேலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் எதிர்நோக்கப்படுகின்றது. உழைப்பு தீர்ப்புமன்றம், அதனுடைய இத்தகைய தீர்மானத்தை எடுக்கும் பொழுது இரு சாராருக்குமிடையே இருந்த வேலை ஒப்பந்த உடன்படிக்கையினைப் பூொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.
சமுக “இடர் காப்புவலை” இல்லாமை உழைப்பின் அசைவு, எந்தொரு வகையான சமூகப் பாதுகாப்பு அல்லது வேலையற்றோர் நன்மைகள் ஆகியவை இல்லாத காரணத்தினால் தடைப்படுகின்றது; இதனால் பணியாட்கள் வேலைகளிலிருந்து மாறுதலை விரும்புவதில்லை அல்லது விரும்பி விட்டுச்செல்கின்ற திட்டங்கள் என்பவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பின்னணியில், வேலையாட்களைக் குறைக்கும் முயற்சியில், அளவுக்கு மேலான ஒரு சுமை வேலைகொள்வோர் மீது, அவர்களே வேலை இழப்புக்கான நட்டஈடு முழுவதற்கும் பொறுப்புடையவர்கள் என்ற நிலையில் விழுகின்றது. வேலையாளுக்கு அவர் வேறு வேலை கிடைக்கும் வரை வருமான ஆதரவு வழங்கப்படும் திட்டமும் இல்லை. அல்லது மறுபயிற்சி வழங்கப்படுவதற்கான ஒழுங்குமுறைகளும், வேலையிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை.
217

Page 116
கூலி நிர்ணயிப்பில் திரிபு நிலைகள்: வேலை ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ள சாராரினது, வழங்கப்படக் கூடிய கூலியைப் பற்றி நிர்ணயிக் கும் ஆற்றலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (மேலே குறிப்பிட்ட ஏற்பாட்டொழுங்குகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன). குறிப்பாக கைத்தொழில் மற்றும் தயாரிப்புத்துறைகளில் பல்வேறு கூலிச் சபைகள் வேறுபட்ட தொழில்களுக்கென்று அமைக்கப்பட்டதனால் “குழப்பமான” நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு வேலைகொள்ளுனர் பல கூலிச் சபைகளினால் செய்யப்பட்ட தீர்மானங்களுக்கிணங்க வேலையாட்களின் குறைந்த பட்சக் கூலி பற்றி முடிவு எடுக்கவேண்டிய சிக்கலான நிலையினை எதிர்நோக்குகின்றனர். கூலிகள் நிர்ணயிப்பு முறைகளின் இறுக்கமான தன்மையினால் கூலிகள் உற்பத்தித் திறன் என்பவற்றிடையே இணைப்பினையும் ஏற்படுத்திக் கொள்ளுதல் கடினமாக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் பணியாளர்கள் வேலைக்கு வருவதனால், அவர்களினால் செய்யப்படும் வேலை சார்பானவற்றைக் கவனிக்காமல், கூலிகள் வழங்கப்படுவதாக முடிகின்றது.
வேலையாட்களின் “பாதுகாப்பளிக்கப்பட்ட” அந்தஸ்த்து: கொள்கையளவில் வேலைகொள்ளுனரும் வேலைபெறுனரும் வேலை தொடர்பான ஒப்பந்த உடன்பாட்டின் நிபந்தனைகளை சுதந்திரமாக இரு சாராரும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என இருப்பினும், பல நிபந்தனைகளும், வேலை நிலைமைகளும், சட்டப்படி விதிக்கப்பட்டுள்ளன. அவை, வேலைநேரங்கள், அனுமதிக்கப்படும் மேலதிக வேலை நேரம், சம்பளத்துடன் விடுப்பின் அளவு, கூலிகள் கொடுக்கப்படும் முறை, வேலை நிலைமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. தொழிற்சங்கமொன்றுக்கும் வேலை கொள்ளுனர் ஒருவருக்குமிடையே கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் போது, வேலை கொள்ளுனர் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளையும் நிலைமைகளையும் மற்றைய எல்லா வேலை செய்பவர்களுக்கும், தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதோர், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டவர்களுக்கும் செல்லுபடியாகும் என விரிவாக்கம் செய்யும் கட்டாய நிலை வேலை கொள்வோரை எதிர்நோக்குகின்றது.
ஒரு வேலை தொடர்பான ஒப்பந்தம் ஒரு வேலை கொள்ளுனர் ஒரு வேலையாளின் சேவையினை, மூன்று மாத அறிவித்தல் அல்லது, இத்தகைய அறிவித்தலுக்குப் பதிலாக மூன்று மாதக் கூலிகள் வழங்கி, நிறுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டிருப்பினும், இவ்வாறு நீக்கப்படுவதை எதிர்த்து உழைப்பினர் தீர்ப்பு மன்றத்திற்கு முறைப்பாடு செய்தால் மன்றம் குறிப்பிட்ட நிபந்தனையினைப் பொருட்படுத்தாமல் தீர்மானம் எடுக்கலாம். அதேபோல, உழைப்புத் தீர்ப்புமன்றம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான ஒப்பந்தம் என்பதற்கு அப்பாற்பட்டதாகக் கருதி வேலையாள் உண்மையில் ஒரு நிரந்தர வேலை ஒப்பந்தத்திற்கு உட்பட்டவர் எனத் தீர்மானிக்க முடியும். இவ்வகையான ஏற்பாடு அளவுக்கு மேலான நண் மையினை வேலையாட்களுக்கு வழங்குகின்றது. அவ்வாறு
218

செய்யப்படுமிடத்தில், வேலைபெறுவதற்கு மட்டும் இறுக்கமான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, வேலைபெறுனர் அதற்குப் பின்னர் அவ்வகை நிபநதனைகளுக்கு கட்டுப்படாதவர் என்ற நிலைக்குச் செல்கின்றார்.
உற்பத்தித்திறன் தடைகள்: ஒரு தாராளமான விடுமுறை, விடுப்பு வசதிகள் கொண்ட ஒழுங்கு ஊழியச் செலவை அதிகரிக்கின்றது. அதே நேரத்தில், மிகையான பணியாட்களையும், கடமை வரவின்மை உயர்ந்திருப்பதால், கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. வேலையாள் ஒருவர் விடுமுறை நாட்களில் வேலைசெய்யப் பணிக்கப்பட்டால், அதற்குப் பதிலாக கூடுதலான படிவீதங்களும், விடுமுறை நாட்களும் வேலையாளொருவர் விடுமுறை நாட்களில் வேலைசெய்தால் வழங்கப்படுதல் தேவையாகக் காணப்படுகின்றது. இப்பபின்னணியில், இலங்கையில் வேலை கொள்வோர் தாம் உற்பத்திசெய்யும் சந்தைகளில் திறமையாகப் போட்டியிடும் ஆற்றல் பெரிதும் பாதிக்கப்பட முடிகின்றது.
முறைசாராத் துறையின் விரிவாக்கம்: முறைசாராத் துறையின் இயல்புகளில் ஒன்றாக ஒப்பீட்டளவில் குறைந்த கூலிகள், சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றாத தன்மை ஆகியவற்றால், செலவுகளைக் குறைந்த நிலையில் வைத்திருக்க முடிகின்றது; சமூகக் காப்பளிக்கும் கொடுப்பனவுகளைத் தவிர்த்தல், மேலதிக வேலை ஒழுங்குகளைப் பின்பற்றாதிருத்தல் (இவை, மேலதிகமான வேலை செய்வதற்கு கூடுதலான கொடுப்பனவுகள் வழங்கப்படுதல் தேவையுடையது) போன்ற நிலைமைகள் காணக் கூடியதாக உள்ளன. மூன்று கைத்தொழிகள் (தைத்த உடைகள், கட்டிட நடவடிக்கை, கொள்கலன் போக்குவரத்து, ஆகியவை) பற்றிய கணிப்பீட்டின் படியான மாதிரி எடுப்பில், அரைவாசி மட்டும் வேலை செய்பவர்களின் சேமலாப நிதியம் மற்றும் வேலை செய்வோர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் நன்மைகளைப் பெற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளது. மேலும், பதிவுசெய்யப்பட்ட வேலை கொள்வோரிடையே 35 சதவீதத்தினர் மட்டும் வேலை செய்வோர் சேமலாப நிதியத்தின் சட்ட ஒழுங்குகளுக்கு உட்பட்டவர் என்பதும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
5.2 ஒளழியச் சந்தைச் சமநிலையின்மைகளின் தாக்கம்
போட்டித் தன்மை குறைக்கப்படுதல்: உழைப்பினர் சந்தையில் உள்ள திரிபு நிலைகளினால் செயலாற்றம், திறமை, இலாபத்தன்மை, உலகளாவிய ரீதியில் இலங்கையின் போட்டி ஆற்றல் ஆகியவை பாதகமான தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பல்வேறு நாடுகளின் ஒப்பீட்டு ரீதியான போட்டி நிலை பற்றிய கணிப்பீட்டில், இலங்கை 44 வது இடத்தில் இருந்துள்ளது. அது தொடர்பான அளவை இலங்கையைப் பொறுத்து 0.29 ஆகக் காணப்பட்டுள்ளது. முக்கியமாக நோக்க வேண்டியது, மிகச் சிறந்த தரமுடைய நிலையில் சிங்கப்பூர்
219

Page 117
(0.94) (Singapore), G6 spTIEGas TIE (Hong Kong), foTT (China) (0.71) LDibajib லக்சம்பேர்க் (Luxzemburg) (0.68) ஆகியவை காணப்பட்டுள்ளன. இவை உழைப்பினர் சந்தை தொடர்பாக உயர்ந்த நிலையினைக் காட்டியுள்ளன. அத்துடன், உற்பத்தித் திறனும், உயர்வான தரமுடையை மனித வளங்களும் வெளிநாட்டு முதலினை வரவழைப்பதில், மலிவான குறைந்த தேர்ச்சியுடைய உழைப்பினரிலும் பார்க்க, கூடிய கவர்ச்சி கொண்டவையாக உள்ளதும் எடுத்துக்
காட்டப்பட்டுள்ளது.
நெகிழ்வுத்தன்மையும் மாற்றியமைக்கும் ஆற்றலும் இல்லாத நிலை
வேலைதொடர்பாக அதிகளவு உறுதிப்பாடு பிரதான துறைகளாகிய சேவைகள், தயாரிப்புத் தொழில், மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் கம்பனிகள் கடினமான சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது சாத்தியமற்றது. பணியாட்களைக் குறைப்பதும் இடை நிறுத்தம் செய்வதும், குறிப்பாக அப்படியான சந்தையிலிருந்து வெளியேறுவதும், செலவு மிக உயர்ந்ததாக இருக்க முடிகின்றது. வேலை கொள்வோர், விலகும் பொழுது நியாயமானதாக வழங்கும் நன்மைகள் அல்லது விரும்பி விட்டுச் செல்லும் ஒழுங்குகள் ஆகியவை கொடுக்குமிடத்திலும், வேலை செய்வோர் அப்படியான அசைவுகளை விரும்புவதாக இல்லை; காரணம், மாற்று வேலை வசதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன - குறிப்பாக இது குறைந்த தேர்ச்சியுடைய வேலைகள் தொடர்பாக இருக்கும் நிலையாகின்றது.
வேலையுடன் தொடர்பான வறுமை வேலையற்றோர் சதவீதம் ஒற்றை எண் அளவுக்குக் 1998 இல் இருந்து குறைந்திருப்பதும் 1990 - 2000 வரையான காலப் பகுதியில் தலாவருமானத்தின் வளர்ச்சி வீதம் 3.9 சதவீதமாக அடைய்ப்பட்டதும் இலங்கையில் வறுமைத் தணிப்பு ஓரளவுக்கு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும், இலங்கையின் வறுமை நிலைமை பற்றிய ஆய்வு வேறு விதமான தகவலைத் தருகின்றது. வறுமைநிலை பத்துவருடங்களுக்கு முன் இருந்த நிலைமையிலிருந்து மோசமடைந்துள்ளதாகத் தெரிகின்றது.
குடிசனத்தில் 25 சதவீதத்தினர் நீடித்த, சீர்ப்படாத வறுமையில் உள்ளனர் அதே வேளை 40 சதவீத அளவினர் நீடித்த மற்றும் நிலைக்காத தன்மையான வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 70 சதவீதக் குடிசனத்தினர் வாழும் கிராமியப் புறத்தில் வறுமை அதிகளவுக்கு நிலவுகின்றது. கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் எதுவென்றால், கிராமியக் குடிசனத் தொகையில் 27 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் ஒப்பீடாக, நகரப் புறத்தில் 15 சதவீதத்தினரும் பெருந்தோட்டக் குடிசனத்தினரில் 25 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.
220

வருமானங்கள், வறுமை மற்றும் மனித இடர்ப்பாடு ஆகியவற்றிடையே நெருங்கிய இடைத்தொடர்பு இருப்பது காணலாம். எவ்வாறாயினும், இத்தொடர்பினை வெளிநோக்கில் திருகுநிலையாகக் காட்டப்படுவது, வேலை செய்யும் வறியவர்களின் நுகர்வு அளவுகள் இலங்கையில் வேலையற்றோராக இருப்பவர்களின் நுகர்வு அளவினை விட குறைந்ததாக இருப்பது.
மேலும், முக்கியமாகக் கவனித்தல், வறுமையில் வாழும் 95 சதவீதத்தினர் வேலையில் உள்ளவர்கள்; வேலை செய்யும் வறியவர்களில் அதிகளவு விகிதத்தினர் கிராமிய விவசாயம், முறைசாரா நடவடிக்கைகள், மற்றும் பெருந்தோட்டத்துறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்போர் என்பதும் அறிய முடிகின்றது. ஊழியச் சந்தை திறமையாக இயங்குமானால், வேலை செய்பவர்களின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடையும். எவ்வாறாயினும், உழைப்பினர் தொடர்பாக பாதுகாப்பளிக்கும் கொள்நெறி பின்பற்றப்பட்டு ஊழியச் சந்தையின் நிலைமைகளை வழிநடத்திச் செல்வதாக இருப்பினும், வேலை செய்பவர்கள் பற்றிய வருமான உறுதிப்பாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. A
அரசாங்கத்தினால் 2002 இல் வெளியிடப்பட்ட வறுமை தணிப்பு உபாயம் பற்றிய ஆய்வின் திட்டத்தில் (Poverty Reduction Strategy) வலியுறுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு: உழைப்புச் சந்தை சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுதல், இச் சந்தை காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களினாலும் ஒழுங்கமைப்புகளினாலும் திரிபுப்படுத்தப்பட்டுள்ளது. இது முதலீட்டின் வளர்ச்சி, வேலை ஆக்கம், தொழில்களின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு தடையாக இருந்துள்ளது; எவ்வாறு இருப்பினும், உழைப்டிச் சந்தைச் சீர்திருத்தம் சிக்கல் வாய்ந்த முயற்சியாகின்றது; இவை பிழையாக முகாமைப்படுத்தினால் மேலும் வறுமை நிலையின் பாதிப்பை அதிகரிக்கும்.
8. உழைப்புச் சந்தைச் சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகள்
சட்ட ஒழுங்குகளின் கட்டுப்படுத்தல், மற்றைய வகையான கட்டுப்பாட்டு நிலைகள் ஆகியவை உழைப்புச் சந்தையின் இயங்கும் தன்மையினைப் பாதிக்கின்றன. இப்பின்னணியில் சீர்திருத்தம் செய்வதற்கு முக்கிய சிபார்சுகள், மேலே குறிப்பிட்ட சமமின்மைகளை நீக்குவதற்காக, முன்வைக்கப்பட்டுள்ளன.
வேலை நீக்கச் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்து வழிகாட்டல்கள்
அமைச்சர், உழைப்பு ஆணையாளர் அல்லது அவரின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் வேலை நீக்கச் சட்ட மீறல்களுக்கு எதிராக முறைப்பாடுகள், அல்லது வேலை கொள்வோர் முறைப்பாடுகள், அல்லது வேலை கொள்வோர்
221

Page 118
  

Page 119
சுதந்திரம் உடையவர்களாக இருப்பதால், விசாரணை முறைகளைத் திருத்தம் செய்து, மேம்படுத்துதல் பயனளிக்கும். நீடித்த, எதிர்ப்புத் தன்மையான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் என்பதிலிருந்து விலகி, சாட்சி கூறுதல் சத்தியக் கடதாசி மூலம் பெறுதல், இரு சாராரினாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவை பற்றிய உண்மை விடயங்களைப் பதிவு செய்தல் (வேலைசெய்யத் தொடங்கிய காலம், திகதிகள், சம்பளங்கள் போன்றவை), நிர்ணயிப்பதற்கான விடயங்களை ஒழுங்கு செய்தல், என்பவை திருத்தியமைக்கப்படக் கூடியவை. இவை தலையீடு இல்லாமல், தலைவர்களின் மற்றும் வழக்கறிஞர்களின் இத் திருத்தங்கள் தொடர்பான விழிப்புணர்வினையும் அதிகரிப்பதுடன், செய்யப்படலாம். மற்றைய திருத்தங்கள், புது விசாரணைகளை தாமதங்களை தவிர்க்கும் முகமாக நேரம் நீடிக்கும் புதிய விண்ணப்பங்களை நடைமுறை ஒழுங்குகள் பூர்த்தியாக்குதல், மதியத்திற்கு பின்னரான நேரங்களில் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பிரதான குறிக்கோள், ஒவ்வொரு மனுவும் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்காக, விலக்கு நிலைகளை விட, எடுத்துக் கொள்ளப்படுதல் அவசியமாக்கப்பட்டது. இவற்றினால் தாமதப்படுத்தலை மிகக் குறைந்தளவுக்கு அனுமதித்தல் கடைப்பிடிக்கப்பட்டது. தற்பொழுது, புதிய விண்ணப்பம் மொன்றின் மீது 12-18 வரையான மாதங்கள் முடிவதற்கு முன்னராக எடுத்துக் கொள்ளப்படுதல் சாத்தியமில்லை; பழைய விசாரணைக்கு முன்னிடமளித்தலும் அவசியமானதாகக் கருதப்பட்டது.
உழைப்பு மன்றங்கள், நடுவர் தீர்ப்புக்கள் மற்றும் உழைப்புத் திணைக் களத்தின் விசாரணைகள் ஆகியவற்றின் நடைமுறைகளில் முன்னேற்றம், திருத்தங்கள் செய்தல்
கைத்தொழில் பிணக்குகள் சட்டம், வேலைநீக்கச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பங்களை விசாரித்து முடிவுகள் கூறுவதில் தாமதம் எற்படுவதற்கான காரணங்களில் ஒன்று, தொழிலாளர்கள் மற்றும் வேலை கொள்வோர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் நியாயமற்ற பின்போடுதல், விரைவாக செயல்படுத்தல் என்பவற்றில் அக்கறை இல்லாமல், மற்றும் பொறுப்பினை ஏற்காது தொழிற்படுதல் ஆகியவை அறியக்கூடியதாக உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் சட்ட அறிஞர்களாக இல்லாத நிலையில் அவர்களை மேற்பார்வை செய்து கட்டுபடுத்துவதற்கான விதிமுறைகள் இல்லை. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் நடைமுறை ஒழுங்குகள் பற்றிய சட்டத் தன்மையுடைய தொகுப்பு விதிகளை தயாரித்து அவற்றை ஏற்புடையதாக்குதல் இத்தகைய மன்றங்களில் வழக்குரைஞர்களுக்காகச் செய்யப்படுவது தேவையாகின்றது. இது அவர்களிடையே பொறுப் புணர்வானதும் , சமத் துவமுடையதுமான பிரதிநிதித்துவத்தை தொழிலாளர்கள், வேலைகொள்வோர் குறித்து விருத்தி செய்வது பொருத்தமானது. வழக்கறிஞர்களும் மற்றும் வழக்குரைஞர்களும்
224

இத்தகைய விதிகள் தொகுப்பேட்டினையும் அதனுடைய பழக்கவழக்கங்களையும் நிராகரிப்பது நியாயமற்றது, அது வழக்காடுபவர்களிடையே நம்பிக்கையினைப் ஏற்படுத்துவதற்கும் பேணுவதற்கும் - எத்தகைய பிரதிநிதித்துவம் கிடைக்கின்றது என்பது பற்றி அறிய முடிகின்றது.
உழைப்பு மன்றங்களின் தலைவர்கள், நடுவர் தீர்ப்பு வழங்குனர் மற்றும் உழைப்பு உத்தியோகத்தர் தொடர்பாக அறிவு, பயிற்சி ஆகியவற்றுக்கு வசதி அதிகரிப்புச் செய்தல்
இத்தகைய நிறுவனங்களுக்குச் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திலும், சட்டச் சார்பான அம்சம் கொண்ட வியாக்கியானம் இடம்பெறுகின்றது. அதற்கு மேலாக பொருளாதாரம், நிதிசார்பான விதிகள், மற்றும் நுட்பவிடயம் சார்ந்தவையாக இருக்கின்றன. தற்பொழுது, தலைமை வகிக் கும் உத்தியோகத்தர்கள் (குறிப்பாக உழைப்பு மன்றங்களின் தலைவர்கள், அரையளவான நீதி சார்பான பங்களிப்பினைச் செய்பவர்கள்) போதியளவுக்கு, தீர்ப்பு வழிச்சட்டம், சட்டம், தகுதிவாய்ந்த அடிப்படை நூல்கள், முதலானவை தொடர்பான ஈடுபாடு ஏற்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. மேலும், அவர்கள் மற்றைய துறைகளிலும் போதுமான நிபுணத்துவம் கொண்டவர்களாக இல்லை, எடுத்துக்காட்டாக, ஒரு வேலைகொள்ளுனர், வேலையாட்களை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தினை சமர்பித்துள்ள நிலையில் அவருடை நிதி இடர் நேர்வுகளைச் சரியாக இனங்காணல் தேவையாகின்றது. இவை, ஒரு ஒத்துழைப்பு வாய்ந்த அணுகுமுறையூடாக புதிய வசதிகளை ஏற்படுத்துதல், ஏற்கனவே உள்ளவற்றை திறமையாக வழிப்படுத்தி தொடர்ச்சியான பயிற்சி, மற்றும் தீர்ப்பு வழிச்சட்டம், மற்றையவை குறித்து பெறுவழிகளை எற்படுத்துதல் அவசியமாகின்றது. A.
ஓய்வூதியக் காலப் பணம் அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது கிடைக்கும் நன்மைகள் சரியாக முதலீடு செய்யப்படுதல்
ஊழியர் சேமலாப நிதியம் அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான சட்டங்களின் பிரச்சினையாக எழுவது, நன்மை பெறுபவர்கள் தமது கிடைக்கும் பணத்தினை, ஒரு தொடர்ச்சியான வருமானமாக கிடைக்கச் செய்வதில் குறைபாடு காணப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய நிதிகள் குறுங்கால நுகர்வுக்காகப் பயன்படுத்துதல், இவற்றின் நன்மைகளின் அடிப்படை நோக்கம் அடைவதில்லை. அத்துடன், மேலும் பிரச்சினைகளை, வேறு வேலை தேடுதலிலும் , மீள் வேலையின் மை தன்மைகள் தொடர்பாகவும் திரிபு நிலைகளை உண்டாக்குவதால் ஏற்படுகின்றன.
225

Page 120
குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் வேலைசெய்பவர்கள் வேண்டிநிற்கும் நன்மைகளைப் பெறுவதில் உழைப்புத் திணைக்களம் இன்று செய்துவரும் சேவைகளுடன் ஓய்வூதிய நிதிகள், அவைபோன்ற மற்றை நன்மைகள் ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் நிதிகளையும் சரியாக முதலீடு செய்யும் நன்மைகள் பற்றிய ஆலோசனையும் பொருத்தமான வழிகாட்டலையும் வழங்குவதும் பயனுடைதாக இருக்கும். அத்தகைய நிதிகளை வழங்கும் பொதுத்துறை, தனியார் துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், சுயவேலை வாய்ப்புகள் தருவிக்கும் நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்களின் முகவர் நிறுவனங்கள், மற்றும் தேர்ச்சிகள் மேம்படுத்தும், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை ஈடுபாடு கொள்ள முடியும். இவைதொடர்பாக, தனிப்பட்ட வேலை கொள்வோர், தனிப்பட்ட வேலை பெறுவோர்க்கு வழிகாட்டுவது இயலுமானதல்ல; ஆகவே வேலை மற்றும் உழைப்பு அமைச்சு ஒரு முக்கியமான, செயலூக்கமுடைய பங்களிப்பைச் செய்யமுடிகின்றது.
சமுக மற்றும் பொருளாதார காப்பொழுங்கு வழங்கப்படுவதற்கான வழிமுறையை ஆரம்பித்தல்
உழைப்புச் சீர்திருத்தம் தொடர்பான நிகழ்ச்சி நிரல், வேலையின்மை, தேவைப்பட்டோருக்கான வருமானப் பாதுகாப்பு என்பவை பற்றிய ஒரு விரிவான ஒழுங்குமுறை ஒரு முக்கியமான விடயமாக முதன்நிலையில் உள்ளது. அத்தகைய ஓர் அமைப்பு, உழைப்பின் அசைவு மேம்படுத்துவதில் முக்கியமாகின்றது. அத்துடன் வேலை கொள்வோர் சந்தை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மறுசீராக்கல் முதலான மாற்றங்களைச் செய்து, திருத்தியமைத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. இவை குறித்து சாத்தியமான தொன்றாக கருதப்படுவது, சமூகக் காப்பொழுங்குத் தேவை கருதி ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை தொடர்பாக கொடுப்பனவுகள் செய்யத் தவறும் வேலைகொள்வோர் செலுத்தும் மேலதிகக் கட்டணத்தைச் சேர்த்துப் பயன்படுத்துதல்; இம்மேலதிகக் கட்டணம் தற்பொழுது எந்த வேலை செய்பவர் குறித்துச் செலுத்தப்படாத காரணத்தால் மேலதிகக் கட்டணம் அறவிடப்படுகின்ற பொழுதும், அவருக்கு அப்பணம் செல்லுவதில்லை, அது மத் தரிய வங் கரிக் கு மாற் றப் படுகினி றது. மேலதிக கட்டணம் வேலைகொள்வோரினால் நீண்டகாலமாக கொடுப்பனவு செய்யப்படாமல் இருப்பதனால் பெருந்தொகையான மேலதிகக் கட்டணம் சேரமுடிகின்றது. அத்தகைய விதத்தில் பயன்படுத்தும் ஒழுங்குமுறை, சட்டத்தேவைக்கு கீழ்ப்பட நடந்து கொள்வதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அமையலாம்.
தேசிய கூலி மன்றம் நிறுவுதல்
ஒரு தேசிய கூலிமன்றம் அல்லது கூலி ஆணைக்குழு, 1994/1995 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தொழிலாளர் பட்டயம் என்பதில் முறையாக
226

கூறப்பட்ட ஓர் ஆலோசனையாகின்றது. அதற்குப் பின்னரும் வேலைகொள்வோர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் சிலரினால் ஒரு மாற்று வழியாக முன்மொழியப்பட்டது. தற்பொழுது கூலிச்சபைகளின் எண்ணிக்கையினை, அவை இரட்டிப்பான வேலைகளைச் செய்வதையும் அதனால் ஏற்படும் குலைவு நிலையினை நீக்கும் நோக்கத்துடன் குறைப்பது அவசியமாகின்றது. இப் பரிணி னணியரிலி , தேசிய ரீதியரில் செயற்படும் குறைநீ தபட்ச மணித்தியாலத்துக்கான கூலி வீதம் தனியார் துறைக்குத் தீர்மானித்தல், அல்லது பரந்த வரைவிலக்கணத்திற்கு இணங்கிய பிரிவுகள், அதாவது, சேவை, தயாரிப்பு முதலானவற்றில், கூலிச் சபைகளை நிறுவுதல், அத்துடன், விடுமுறை மற்றும் மேலதிக வேலை ஏற்பாடுகள் ஒத்தவையாக அமைத்தல்; விலக்காக, வேறுபட்ட ஏற்பாடுகள் கைத்தொழில்களில் குறிப்பிட்ட நடைவடிக்கைத் தேவைகள் இருக்குமானால் அவற்றைச் செய்வது பொருத்தமாகும்.
மாகாணங்களில் உழைப்புச் சார்பான நிருவாகம் முன்னேற்றமடைதல்
தற்பொழுது, சீர்திருத்தம் பற்றிய அதிகமான அளவுக்கு கொழும்பிலுள்ள உழைப்புச் செயலகத்தின் நடவடிக்கையும் பங்களிப்பும், மாகாணக் காரியாலயங்கள் அடிப்படையான மேற்பார்வை நடடிவக்கைகள், தொழில் பிணக்குகளில் தலையிடுதல் ஆகியவை நடைபெறும் பொழுது, எவ்வாறு திருத்தங்கள், முன்னேற்றங்கள் செய்தல் வேண்டும் என்பது பிரதான கேள்வியாகின்றது. இக்காரியாலயங்களை முழுமையான சேவை வழங்கும் நிலையங்களாக விரிவாக்கம் செய்தல், வேலை, உழைப்பு, மற்றும் பிணக்குத் தீர்த்தல், பன்முகப்படுததிய நிருவாகம், எல்லா நிறைவேற்றுச் சட்டங்களின் ஏற்பாட்டொழுங்குகள் ஆகியவற்றை கவனிப்பதற்கான ஆற்றல் பெற்ற நிலைக்கு உயர்த்துதல் தேவைப்படுகின்றது. இது அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்ட கொள்நெறி, தொழில் நடடிவக்கைகளை மாகாணங்களுக்கு விரிவாக்கம் செய்வது என்பதற்கு முக்கியமாகின்றது. இத்தகைய உபாயம் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணக் காரியாலயங்களின் தொழில்நுட்பம் சார்ந்த செயலாற்றல், ஆளணி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பவை உட்பட்டதாக இருப்பதுடன், அறிவு, தேர்ச்சி, ஆற்றல் ஆகியவை எல்லா உத்தியோகத்தர்கள் குறித்தும் விருத்திசெய்தல் நடைமுறைப்படுத்துவதற்கு செயலூக்கத்துடன் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது.
கல்விச் சீர்திருத்தம்
வேலைகொள்வோரினால் விரும்பப்படும் தேர்ச்சிகளும், ஊழியப்படைக்கு வருபவர்களிடம் கல்வி அமைப்பினால் அளிக்கப்பட்டுப் பெற்றவற்றிற்கும் இடையே
227

Page 121
ஒவ்வாமையின் தன்மையும் அளவும் சீர்ப்படுத்தப்படுவதும் அவசயமாகின்றது. இத்துறையில் தேவைப்படுவதொன்று, ஊழியச் சந்தை பற்றிய தகவல்கள் கல்வி நிறுவனங்களுக்கு அறிய வைத்தல் பொருத்தமானது; அவை தொடர்பான சமநிலையின்மையைக் குறைப்பது முன்னிலைப்படுத்துவது அவசியம். தேசியக் கல்வி ஆணைக் குழுவின் உள்ளமைப்பினை விரிவாக்கம் செய்து வேலைகொள்வோர் மற்றும் வர்த்தகத்துறை ஆகியோருக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதும் முக்கிய கவனத்தை எடுத்தல் வேண்டும்.
இப்பின்னணியில், அண்மையில் வேலை மற்றும் உழைப்பு அமைச்சு எடுத்த முயற்சியில் இணையத்தை அடிப்படையாக வைத்து வேலைக்கான இடமளித்தல் ஒழுங்கினைத் தொடக்கியது; எதிர்காலத்தில் இது மேலும் விரிவடைய நேரிடலாம். இது ஊழியச் சந்தை நிலையின் தகவல் பற்றிய மூலாதாரமாக அமைவதுடன் மேலே குறிப்பிட்ட சமமின்மைகள் சிலவற்றைச் சரிப்படுத்துவதற்குமான ஒரு வழியாகின்றது.
7. முடிவுரை
அரசாங்கத்தின் மற்றைய கொள்நெறி முயற்சிகள் பரிசீலிக்கப்பட்டு அவை உழைப்புச் சீர்திருத்தம் தொடர்பான உபாயங்களில் சேர்க்கப்படுதல் முக்கியமாகின்றது. அத்துடன் மற்றைய கொள்நெறி முயற்சிகளின் உழைப்புச் சந்தை மீதான தாக்கம் பற்றிய ஏற்றுக் கொள்ளப்படுதலும் அறியப்பட்டிருத்தலும் தேவையாகின்றது. எடுத்துக் காட்டாக கூறுவது, அரசுடைமை நிறுவனங்களின் தொடர்ந்து தனியார் மயப்படுத்தல் தனியார் துறையின் தொழில்களிலுள்ள பங்கினை அதிகரிப்பதுடன், உழைப்பினர் படையினது தோற்றத்தினை மாற்றுகின்றது, தனியார் துறை வேலை தொடர்பான போட்டியினை அதிகரிக்கின்றது. இவ்வாறான நிலை குறிப்பாக அத்தகைய நிறுவனங்கள் மறுசீராக்கலுக்கு உட்படுத்தப்படும் சாத்தியம் உடையவையாக உள்ளன.
உழைப்புச் சீர்திருத்தம் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக உட்படாத மற்றைய விடயங்களும் ஒரு நீண்டகாலத் தாக்கத்தினை ஊழியப் படை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை மீது ஏற்படுத்துகின்றன. இலங்கையில், வேலையின்மை, கீழுழைப்பு ஆகியவை வறுமையின் தோற்றத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்பவை. வறுமையானது, நல்ல தரம் வாய்ந்த கல்வி, சுகாதாரக் காப்பு, போஷாக்கு மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வசதிகள் (பாதுகாப்புடைய குடிநீர், ஆரோக்கியச் சூழல், மின்சாரம் போன்றவை) என்பதை தொடர்பாக பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது. அதே போல இலங்கையின் குடிசனத்தின் விரைவான வயது மூப்பும் ஏற்படுகின்றது. இது, வேலை செய்யக்கூடிய வயதுக்கு மேலானதாக இருப்பவர்களுக்கு வருமானக் காப்பொழுங்கு பற்றிய கொள்நெறிகள் மீது தாக்கத்தினை உண்டுபண்ணுகின்றது. வேறுபட்ட விதத்தில் உடல்
228

நலமுடையோர், உடல் தளர்வுற்றோர், மற்றும் பெண்கள், (பெண்களின் பொருளாதார தரத்தில் பங்களிப்பு கூடியுள்ள பொழுதிலும் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்) ஆகிய பிரிவினரின் தேவைகள் குறித்து விசேட வழிமுறைகள் தேவைப்படுகின்றன.
இலங்கையில் இளையோர் கிளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் இளையோரிடையே வேலையின்மை- இது இளையோர் அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக இனங்கண்டு கொள்ளப்பட்டது - ஆகிய பிரச்சினைகள் பற்றிக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. மற்றைய விடங்களாகிய, உழைப்பினர் உரிமைகளையும் நிலைமைகளையும் முறைசார்ந்த துறையில், சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கிடைக்கும் உதவியும் அவற்றின் வளர்ச்சியினையும் பாதிக்காத வகையில், மேம்படுத்துதல் நோக்கப்படுதல் வேண்டும்.
இலங்கையில், உழைப்பு சம்பந்தமாக செய்யவேண்டிய சீர்த்திருத்தங்களினால் எதிர்நோக்கப்படும் சவால்கள், தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் வேலை கொள்வோர் தேவைகளையும் உழைப்பினர் நலன்களையும் குறித்து இணக்க நிலையினை ஏற்படுத்துதல், இரு சாராருக்கிடையே நிலவும் இணக்கப்பாடின்மைகள் ஒரே நேரத்தில் நோக்கப்பட்டுத் தீர்க்கப்படுதலும் அவசியம். துணிவும், பார்வை நோக்குடையதுமான தலைமை, உழைப்புத் தொடர்பான சிக்கல் மிகுந்த சட்ட வொழுங்குகிடையே முன்னேற்றச் செய்வதற்கு சீர்திருத்தங்கள், அரசியல் சுருக்க வழிகள் மூலமான செல்வாக்குகளுக்கு உட்படாமல், ஆலோசனை, மற்றம் பங்கு கொள்ளல் வழிமுறையினூடாக முன்னெடுத்து எல்லா பங்காளர்களையும் சேர்ந்த விதமாக செல்லுதல் சிறந்ததாகும்.
உசாத்துணைகள்:
(1) Ceylon, Report of the Special Commissioner on the Constitution, His.
Majesty's Stationary Office, London (1928). (2) Industrial Policy Statement, Government 6f Sri Lanka (1987). (3) Administration Report of the Department of Labour, 1994. (4) Presidential Commission on Youth, Sri Lanka, 1992. (5) Alailima Patricia, Sri Lanka: Growth, Distribution & Redistribution. M Ministry of Finance & Planning (2001), Colombo.
(6) Department of Census & Statistics (2001),Census of Population &
Housing. (7) Quarterly LabourForce Survey, Department of Census & Statistics (2001). (8) Labour Force and Socio-Economic Survey 1985/86, Quarterly Labour
Force Survey, 1990& 1999. (9) Jeyaweera, S. and T. Sanmugam (2002): Graduate Unemployment in the
1990s, Centre for Women's Research, Colombo. (10) National Employment Policy (2002), Government of Sri Lanka.
229

Page 122
அத்தியாயம் 8
வறுமைக்கு எதிரான திட்டங்களின் படிநிலை வளர்ச்சி
ஹசிதா விக்கிரமசிங்கா
1. முன்னுரை
இலங்கையில் தற்போது காணப்படும் தொடர்ச்சியான வறுமை மட்டம், சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நிலைமாற்றம் அடைந்திருப்பினும், பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்ட சமூக நலன் மேம்பாட்டுக் கொள்நெறிகள் மத்தியிலும் மற்றும் ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடந்து வந்த பங்கேற்றல் அபிவிருத்தி முறை ஆகியவை இடம் பெற்றிருந்த பொழுதிலும், இலங்கை அதனுடைய வறுமைத் தணிப்பு உபாயம் பற்றி மீள் சிந்தனை செய்யப்பட்டு, அவசியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுதல் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் குடிசனத்தில் நாலில் ஒரு (4) பங்கினர் மாதமொன்றுக்கு ரூ. 791 க்கும் குறைவான வருமானம் பெறும் (குறைந்த வறுமைக் கோட்டு மட்டம்) முழுமையான வறுமை நிலையில் உள்ளனர்; மற்றும் உயர்ந்த வறுமைக் கோடு, மாதமொன்று ரூ. 950 க்கு கீழாக, மூன்றில் ஒரு (1/3) பங்கினர் வறுமை நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றிலிருந்து உணர்ந்தவிதமாக அறியக் கூடியது, நாட்டின் அபிவிருத்தி முறைவழி ஒரு முழுமைத் தன்மையுடையதாகவோ அல்லது சமூக நீதித் தன்மை வாய்ந்ததாகவோ இருக்கவில்லை. இதுவரை பின்பற்றப்பட்ட வறுமை தொடர்பான உபாயங்கள் அவற்றின் விளைவுகளை முக்கியமான முறைமைக்குள் இணைத்துக் கொள்வதில் அல்லது வறுமையின் காரணங்களை நீக்குவதில் தோல்வி கண்டுள்ளன; இவை ஏழ்மையாக்கும் நிலைமைகளுக்கு வலுவூட்டுவதாக அமைகின்றன.
இலங்கையில் வறுமைத் தணிப்பு பற்றி செயற்திறன் வாய்ந்த முறையில் கையாளுவதற்கு பிரதான பிரச்சினைகளை இனங்கண்டு அவைதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தேவையான சீர்திருத்தங்கள் அல்லது முன்னேற்ற வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய் வது இந்த அத்தியாயத்தின் நோக்கமாகின்றது. இவ்வத்தியாயம் சுருக்கமாக, இலங்கையில் வறுமைத் தணிப்புத் திட்டங்களின் வரலாற்றை நோக்குவதுடன், அவற்றின் வெற்றி, தோல்விகளை ஆராய்கின்றது. இப்பின்னணியில், செய்யப்படும் பரிந்துரைகள், சென்றகால வேறுபட்ட உபாயங்களின் ஆய்விலிருந்து முக்கியமான விடயங்களை அடிப்படையாகவும், தற்போதுள்ள வறுமைப் பிரச்சினையின் தன்மையைத்
230

தழுவியவையாகவும் அமைகின்றன. பல்வேறு மூலாதாரங்களிலிருந்தும் கிடைக்கும் புள்ளி விபரத் தரவுகள், இன்றைய வறுமை நிலையின் மட்டத்தினையும் இயல்பினையும் ஆராய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. பிரச்சினையின் தன்மை
வறுமை, சமூகத்தவர்களுக்கு வேண்டிய பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளை கிடைக்காமல் செய்யும் பொழுது, அது பட்டினி, கைவிடப்பட்ட நிலை, வாழ்வின் மிகக் குறைந்த கட்டம், மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை விளைவிக்கின்றது வறுமை நாட்டிலுள்ள சமூகத்தவர்கள் ஒரு பகுதியினரை வளர்ச்சி முறைவழியிலிருந்து விலக்கப்படுகின்ற பொழுது எதிர்நோக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் வறுமையில் பிடிபட்டிருப்பவர்கள் வளங்களைப் பெறமுடியாதுள்ளனர், மனித அபிவிருத்தி அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது; அவர்கள் கெளரவத்துடன் வாழ முடியாத நிலையினையும் எதிர்நோக்குகின்றனர். வறுமை ஒரு நாட்டின் அபிவிருத்தி முறைமைக்கு ஒரு சவாலாகவும் ஆபத்தாகவும் உள்ளது; இதனால், வறுமையின் பாதிப்பு நிலையினால் நாட்டின் ஒரு பகுதி மனித மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவை கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன; அவ்வாறான விளைவு நாட்டின் முழுமையான வளர்ச்சி, அபிவிருத்தி ஆற்றலை அடைந்து கொள்வதற்குத் தடையாக விளங்குகின்றது. ஆதலாலி, வறுமை நிலையினை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் முக்கியத் துவமும் , அவசியமும் மிகைப்படுத்திக் கூறுவதற்கில்லை. வறுமையின் காரணங்களைச் சரியாக இனங்கண்டு கொள்வதும், அதற்கேற்ப செயற்திறன் வாய்ந்த, திடமான ஒரு நடவடிக்கைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதும் வறுமைக்கு எதிராக வெற்றியளிக்கும் வகையில் செயலாற்ற உதவ முடியும். இலங்னிகயில், வறுமையின் தன்மை பற்றி ஆராயுமிடத்தில், ஒரு முனைப்பான விதத்தில் கவர்ந்து கொள்ளும் விடயம் - இலங்கைக்கு தனித்துவமானது - இலங்கையின் முன்னேற்றமான தலாவருமானத்துக்கு மேலான மனித அபிவிருத்தியின் மட்டம். இலங்கையின் மனித வள அபிவிருத்திக் குறிகாட்டி தென் ஆசியாவில் உள்ள அயல் நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது உயர்ந்ததாகவும், உயர்ந்த அபிவிருத்தியினை அடைந்துள்ள நாடுகளுடன் சமனளவுக்கு இருப்பதனையும் காணலாம்.
இலங்கையில் வயது வந்தோர்களிடையே எழுத்தறிவு என்பது 1999 இல் 91.4 சதவீதமாக, ஐ.நா. மனித அபிவிருத்தி, (2001) அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இளையோர் எழுத்தறிவு 96.7 சதவீதமாக, அதே ஆண்டில், இருந்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு எதிராக எழுத்தறிவு வீதம் சராசரி
231

Page 123
உயர்ந்ததாகக் காணப்பட்டுள்ளது; அதே போல உலகளாவிய சராசரிக்கு மேலாகவும் இருந்துள்ளது; இது இரு பாலார் குறித்தும் அவ்வாறு இருந்துள்ளது.
அட்டவணை 1: அயல் நாடுகளுக்குள் இலங்கையின் மனித அபிவிருத்தி நிலை
நாடு தலா மொத்த தேசிய மனித அபிவிருத்திக்
உற்பத்தி ($ 1999) குறிகாட்டிப் பெறுமதி - 1999
LD(36)dust 3400 O.774 பிலிப்பைன்ஸ் O20 O.749 இலங்கை 820 0.735 இந்தோனேசியா 580 0.677 இந்தியா 450 0.571 பாகிஸ்தான் 470 O.498 நேபாளம் 220 0.477 பங்களாதேஷ் 370 O-470
மூலம்: உலகவங்கி, உலக அபிவிருத்தி அறிக்கை 1999/2000, ஐக்கிய நாடுகளின்
அபிவிருத்தித் திட்டம், மனித அபிவிருத்தி அறிக்கை, 2001
அட்டவணை 2: இலங்கையின் எழுத்தறிவு வீதமும் உலகளாவிய மற்றும் நாடுகளின் பிரிவு ரீதியான சராசரிகளும்
வயது வந்தோர் நாடுகளின் பிரிவு எழுத்தறிவு வீதம் - 1994
பெண் ஆண்
இலங்கை 87 93 எல்லா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் 60 78 மிகக் குறைந்த அபிவிருத்தியுள்ள நாடுகள் 35 57 கைத்தொழில் நாடுகள் 98 98
உலகம் 83 71.. ک
eypsotb: UNDP, Sri Lanka Human Development Report, 1998, Colombo.
232

இலங்கையின் சுகாதார நிலைபற்றிய குறிகாட்டிகளும் அயல் நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பிரதேச சராசரி உயர்ந்ததாகவும் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுடன் நல்ல ஒப்பீட்டு நிலையினைக் காட்டுகின்றன. இலங்கையில் சுகாதார சேவைகள் நாடு முழுவதற்குமாகப் பரவியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் நாட்டின் 95 சதவீதக் குடிசனத்தினர் முக்கியமான மருந்து வசதிகளைப் பெறக்கூடியதாக இருந்துள்ளது; மேலும் 95 சதவீதத்திற்கு மேலான ஒரு வயது நிரம்பிய பிள்ளைகள் முக்கிய நோய்த்தடுப்பு வசதிகளையும் பெற்றுள்ளனர்.
அட்டவனை 3: தெரிந்த ஆசிய நாடுகளின் சுகாதாரம் பற்றிய குறிகாட்டிகள்
நாடு 1000 உயிர் பெண்
பிறப்புகளுக்கு பிறப்புகளுக்கு ஒருவருக்கான குழந்தைகளின் தாய்மார்களின் மொத்த கருவளப் இறப்பு வீதம் இறப்புவீதம் பிறப்புக்களின் (1998) (1990-98) வீதம் (1998)
மலேசியா 8 39 3.1
இலங்கை 16 60 2. பிலிப்பைன்ஸ் 32 170 3.6
இந்தோனேசியா 43 450 2.7 இந்தியா 70 40 3.2 நேபாளம் 77 540 4.4 பாகிஸ்தான் 91 4.9
மூலம்: உலக வங்கி, உலக அபிவிருத்தி அறிக்கை 1999/2000
இலங்கையின் வறுமை தொடர்பான பிரச்சினை வருமானம் சார் வறுமையாக உள்ளது; இது நான்கில் ஒரு (1/4) பகுதியினரை (வடக்கினையும், கிழக்கினையும் நீக்கலாக) பெரிதும் பாதித்துள்ளது. வறுமையின் விழுப்பாடும், ஆழமும் தொடர்பான வேறுபாடுகள், பிரதேச, மாகாண, துறை சார்பான விதத்தில் காணக் கூடியதாக உள்ளன; ஒவ்வொரு பகுதியின் குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லாமை நிலை பற்றிய வேறுபாடுகளுக்கிணங்க வேறுபட்டுள்ளன. நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள இன மோதல் அப்பிரதேசத்தின் சமூக அமைவினைச் சிதைத்துள்ளது; இப்பிரதேசத்தின் தனித்த வேறுபட்ட பண்புகளைக் காட்டும் பிரச்சினையாக வறுமை விளங்குகின்றது.
நகரத்துறையில் நாட்டின் மற்றைய இடங்களை விட வறுமையின் கடுமையான தன்மை குறைந்துள்ளது. நகரப்புறத்திலுள்ள வறுமை, கிராமிய
233

Page 124
மக்கள் வேலைவாய்ப்புகள் தேடி நகரத்திற்கு செல்லும் அசைவினால், கிராமிய வறுமையின் பரவலாகப் பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில், கிராமதுறையுடன் ஒப்பிடுமிடத்து, கடும் வறுமையில் இருப்பவர்கள் சற்றுக் குறைவாக இருப்பினும், உயர்ந்த வறுமைக் கோட்டின் நோக்கிலிருந்து பார்க்கும் பொழுது பெருந்தோட்டத்துறையிலே மிக உயர்வாக இருந்துள்ளது.
அட்டவணை 4: துறைசார்பாக வறுமையின் மட்டம்
துறை குறைந்த உயர்ந்த
வறுமைக் கோடு (%) வறுமைக்கோடு (%)
நகரம் 15 25
கிராமம் 27 f 41
பெருந்தோட்டம் 25 45
மூலம்: குடும்பங்களின் வருமானம், செலவு பற்றிய கணிப்பு,1995/96 குடிசனம்
மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு
வறுமையின் அளவு/மட்டம் மாகாணங்களுக்கிடையே பெரிதும் வேறுபடுவதையும் அறியலாம். இது தொடர்பாக மேல் மாகாணம் மிகக் குறைந்த பாதிப்பினையும்
ஊவா மாகாணம் மிக்க கூடுதலான பாதிப்பதினையும் காட்டியுள்ளன.
அட்டவணை 5: மாகாண அடிப்படையில் வறுமையின் மட்டம்
LDrabib குறைந்த உயர்ந்த
வறுமைக்கோடு (%) வறுமைக் கோடு (%)
(3p6ů DMT ET637 fò 14 23
மத்திய மாகாணம் 28 43 தென் மாகாணம் 26 41 வட-மேல் மாகாணம் 34 52
வட - மத்தி மாகாணம் 31 47
ஊவா மாகானம் 37 55
சப்ரகமுவ மாகாணம் 32 47
முலம் குடும்பங்களின் வருமானம், செலவு பற்றிய கணிப்பீடு,1995/96, குடிசனம் மறறும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு.
234

இலங்கையில் வறுமை ஒரு துறைசார்ந்த பரிமாணத்தையும் கொண்டிருக்கின்றது. மொத்த வறுமையிலிருப்பவர்களில் 42 சதவீதம் விவசாயத்துறையில் வேலை செய்பவர்கள். சுரங்கத் தொழில், கல்லுடைத்தல் மற்றும் கட்டிடத் தொழில் ஆகியவற்றில், இவை ஒவ்வொன்றிற்குள்ளும் உயர்ந்த வறுமை நிலை காணப்பட்டுள்ளபொழுதிலும் மொத்தமான வறுமைக்கு அவற்றின் பங்களிப்பு குறைந்து காணப்பட்டுள்ளது. வேலையின்மையும், மற்றும் உழைப்பினர் படையில் பங்கு கொள்ளாமை இலங்கையில் வறுமை தொடர்பான ஒரு பிரதான காரணமாக இல்லை; அது, மொத்தமான வறுமை நிலைக்கு (1995/96 காலப்பகுதியில்) 5 சதவீத பங்களிப்பினை மட்டும் செய்துள்ளது. மொத்தமாக வேலையில்லாதோரில் 28 சதவீதத்தினர் மட்டும், இக்காலப் பகுதியில், வறுமைக்குள் சேர்ந்தவர்களாக பாகுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள முக்கிய இயல்பான விரிவுபடுத்திய குடும்பமுறை வறுமை தொடர்பாக பாதுகாப்பினை வழங்கி வருகின்றது.
வறுமை மட்டங்கள் சமூகப் பிரிவினர் தொடர்பான பால், இன ரீதியான பாகுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்டுள்ளன. இலங்கையில் முனைப்பாகத் தெரிகின்ற ஓர் இயல்பு, மற்றைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, முக்கியமான பால்நிலை வேறுபாடு வருமான வறுமை தொடர்பாக, போரினால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பொழுதும், காணப்படவில்லை. அரசின் உதவியும், குடும்ப ஆதரவும் பால்நிலையான சமன்பாட்டைப் பேணுவதில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன. ஐ.நா.அபிவிருத்தித்திட்டப் பால்நிலை அபிவிருத்திக் குறிகாட்டி இலங்கையில் 70 சதவீதத்தினை எட்டியுள்ளது; இது உலகளாவிய சராசரியினை விட, உயர்ந்துள்ளது. (அட்டவணை 6). எங்கு பிரச்சினை எழுகின்றது என்பதை அதிகாரமளித்தல் தொடர்பாகக் கண்டுகொள்ளலாம். ஐ.நா. அபிவிருத்தி திட்ட பால்நிலை அதிகாரமளித்தல் (பெண்களுக்கு) குறிகாட்டி இலங்கையில் 31 சதவீதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: இது எல்லா அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சராசரியினை விட (37) குறைந்துள்ளது.
வெவ்வேறு இனங்களுக்கிடையே, அடிப்படை வசதிகளைப் பெறுதல், வறுமை ஆகியவற் றரிடையே வேறுபாடுகள் காணப் பட்டுள்ளன. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் வருமான வறுமை தொடர்பாகக குறைந்த பலவீனம் உடையவர்களாகக் காணப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு, மற்றைய இனப் பிரிவினரை விட, அடிப்படை வசதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் நல்லதாக இருந்துள்ளன. பெருந்தோட்டத் தமிழர்களிடையே வறுமை மற்றைய இனப் பிரிவினர்களை விட ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது (அட்டவணை 6,7)
235

Page 125
அட்டவணை 8: உலக, நாட்டுப் பிரிவுகள் தொடர்பாக பால்நிலைச் சமன்பாடு
உழைக்கும் வருமானப் பங்களவு I பால்நிலை
அபிவிருத்திக் பென் % ஆண் % குறிகாட்டி
இலங்கை 34 65 0.69 எல்லா அபிவிருத்தியடைந்து
வரும் நாடுகள் 32 68 0.5 மிகக் குறைந்த அபிவிருத்தி
நாடுகள் 33 67 0.32
கைத்தொழில் நாடுகள் 38 62 0.86
உலகம் 33 67 0。64
மூலம்: ஐ.நா.அ.தி, இலங்கை தேசிய மனித அபிவிருத்தி அறிக்கை,1998.
அட்டவனை 7:
வறுமையும் இனத்துவமும்
இனம் சராசரித் தலா நல்ல மலசல கூட பாககாப்புடைய பாதுகாப்பான iमाtD %
தி த ந துகாபபு
மாத நுகர்வு குடிதண்ணிர் வசதி % சுகாதாரம் % சமையல்
இலங்கை பெறுதல் % எரிப்பொருள்
ரூபாவில்
சிங்களவர் 4925 76 92 75 19 61
தமிழர் 1920 75 69 63 1. 45 பெருந் தோட்டத் தமிழர் 1396 76 8. 73 4. 43 (8g TOTEf 2061 91 81 79 23 78
மூலம்: உலக வங்கி, இலங்கையின் ஒன்றிணைந்த வறுமைக் கணிப்பீடு, 1999/ 2000, கொழும்பு.
236

3. இலங்கையில் வறுமைத் தணிப்பு திட்டங்களின் அனுபவம்
சுதந்திரத்திற்குப் (1948) பின்னராக இலங்கை, வறுமை தொடர்பான இரண்டு கட்டளைப்படிவங்களைப் பின்பற்றி வந்துள்ளது. 1978 ஆம் ஆண்டு வரை “மேலிருந்து கீழே வழங்கல்” கட்டளைபடிவம் இலங்கையின் வறுமைத் தணிப்பு முறையில் அரசாங்கம் தலைமை கொண்ட பங்களிப்புடன், மேலாதிக்கம் செலுத்தியது. வறியவர்கள் தொடர்பாக துன்பத்தினை அனுபவிக்கும் ஓர் இலக்கினர் எனவும் , அவர்களுக்கு பல உதவிகளை வழங்குதல் தேவையாகின்றது எனவும் நோக்கப்பட்டது. இக்கட்டளைப்படிவமும் “சமூக நலன் அரசு” என்ற கருத்து நிலையும் ஒன்றாக இணைந்ததைக் காண முடிந்துள்ளது: “சமூகநலன் அரசு” இலங்யிைன் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பிலும் பலமாக இடம் பெற்றுள்ளது.
1977 இல் இலங்கைப் பொருளாதாரம் ஒரு புதிய கட்டத்திற்கு மாறியதும், அதற்குப் பின்னராக சமூக நலன் சார்ந்த கொள்நெறிகள் பகுதி ரீதியாக நீக்கப்பட்டு ஒரு சந்தை - சார்பான பொருளாதார முறைமைக்கு வழிசெய்யப்பட்டது. இதன் விளைவாக வறுமைத் தணிப்புத் திட்டம் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தது; அதனுடன் “பங்கேற்றல் அபிவிருத்திக் கட்டளைப் படிவம்’ முன்வைக்கப்பட்டது; இது மாற்றம் ஏற்படுத்தும் முகவர் திட்டத்தினூடான பரீட்சார்தத முறையாக, புதிய பொருளாதார முறையுடன் இணக்கமுடையதாகவும் கருதப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய கோட்பாடு சார்ந்த ஒழுங்கமைவு மாற்றத்துடன், வறுமைத்தணிப்பில் முன்புள்ள கட்டளைப்படிவத்தின் “இலக்குக்கு உடையவர்களாக” உள்ளவர்கள், அதாவது வறியவர்கள், தற்பொழுது கூறப்பட்ட முறையில் “செயலூக்கமுடையவர்களாக’ எதிர்பார்க்கப்பட்டு திட்டத்தில் செயலூக்கத்துடன் பங்களிப்பைச் செய்பவர்களாக மாறுகின்றனர். வறியவர்கள், இப்புதிய முறைவழியில், அரசாங்கம், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், தூண்டும் சக்திகளாக மற்றும் கொண்டு செலுத்துபவர்களாக மாறியுள்ளனர். இப்புதிய முறைவழியினூடாக வறியோர் இருந்து வருகின்ற பொருளாதார அமைப்புடன், உணர்வுபூர்வமான முயற்சியுடன், இணைக்கப் பட்டுள்ளனர்.
இத்தகைய பங்கேற்றல் அபிவிருத்தித் திட்டங்கள், முக்கியமாக வறியவர்களுக்கு பண உதவியினை, அவர்கள் வறுமையிலிருந்து வருமானம் உழைக்கும் வழியினைக் கண்டுகொள்ளும் வரை, வழங்கி ஆதாரமாயிருக்கும் முறையினைப் பின்பற்றுதல், மற்றைய வழிமுறைகளாகிய சமூகக் காப்பீடு மற்றும் கட்டாய சேமிப்புக் கூறுகள் திட்டத்தில் சேர்க்கப்படுவது ஒரு நீடித்த காலத்திற்கு அவர்களுக்கு வேண்டிய நிதிப் பாதுகாப்பினை வழங்குகின்றன. வறியவர்களை முயற்சியாண்மையுடையவர்களாக வருவதற்கு கொடுகடன் வசதிகள் கிடைக்கச் செய்தல் இன்னொரு முக்கிய அம்சமாக விளங்குகின்றது.
237

Page 126
இத்தகைய வசதிகள் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் வறியவர்கள் சந்தையினூடாக பெறுவது கடினமானது; விழிப்புணர்வு முறைவழி ஆக்கப்படுவது தேவையாகின்றது; இதனுடைய நோக்கம் வறியவர்கள் தம்முடைய நிலைமையினை முன்னேற்றும் எண்ணத்துடன் விழிப்புணர்வு உண்டாக்கப்படுவது அவசியமாகின்றது. கொடுகடன் வசதிகளை வழங்குமிடத்து அவர்களுக்குத் தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரமும் இருப்பதனால் வறியவர்கள் தம்முடைய எதிர்காலத்தினைப் பற்றித் தீர்மானிப்பதற்கு வசதியும் அதிகாரமும் அளிக்கப்படுகின்றது; இதில் அவர்கள் அரசாங்கத்தினாலும் வேறு நிறுவனங்களாலும் தற்காலிகமாக வழங்கப்படும் கடனைப் பயன்படுத்த முடிகின்றது. இதனால் வறியவர்களுக்காக, வெளிப்படையாகவும் உள்ளார்ந்த வகையிலும், அவர்களுடைய நிறுவனங்களினூடாக குரல் எழுப்பப்படுகின்றது; அத்துடன், அவர்களின் ஆற்றல்களும், உரிமைகளும் அங்கீகாரம் பெறுவதையும் காணமுடிகின்றது.
4. நலன் பேணல் மேலிருந்து கீழான வழங்கல் முறைமை
4.1 சுதந்திரத்திற்கு முன்
இலங்யிைன் நவீன காலத்து நலன் பேணும் கொள்நெறிகளின் ஆரம்பம் காலனித்துவ காலத்துடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. இலங்கையின் நலன் பேணும் அரசு பிரித்தானிய சமூக சனநாயக மாதிரியத்தினைத் தழுவியிருந்தது. இலங்கையில் வறுமை மற்றும் வேலையின்மை பற்றிய பிரச்சினையினை அளவு ரீதியாக நோக்கி, அதற்கான தீர்வு வழிகளையும் எடுப்பதற்கான முயற்சி டொனமூர் காலத்தில் ஏற்பட்டது; இக்காலத்தில் நியூகாம் (Newham, 1936) மற்றும் பெட்பேர்ன் (Wedderburn, 1934) ஆகியோரின் அறிக்கைகள் இப்பிரச்சினை தொடர்பாக கவனத்தைக் கோரியுள்ளது. 1930 களின் பாரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட காலத்தில், வறுமை ஓர் அக்கறையை ஏற்படுத்திய கொள்நெறி விடயமாக இடம் பெற்றது; இதற்கு மேலும் வலுவூட்டிய காரணிகளாக, கடுமையான வரட்சியினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளும் மற்றும் பின்தொடர்ந்த மலேரியா பெருமளவுக்கு பரவிய நோயின் பாதிப்புகளும் நிலைமைகளும் முக்கியமாக இருந்தன.
இக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டவை, இன்று உள்ள பிரதான சட்டவாக்கங்களுக்கு முன்னோடியாக அல்லது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இன்றைய நலன்பேணும் முறைமையினை நோக்க முடிகின்றது. பெருந்தோட்டத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட உழைப்பினர் பற்றிய சட்டவாக்கம், அது பின்னர் மற்றைய துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது; மற்றும் வறியவர் சட்ட உரிமைக் கட்டளை ஆகியவை இரண்டு முக்கிய உதாரணங்களாக இருந்துள்ளன; இவை, இன்றைய நலன் பேணும்
238

அரசின் திட்டங்களின் தெரிந்தெடுத்த முறையான தன்மையில் செல்வாக்குச் செலுத்தியதை அறிய முடிகின்றது. எல்லோரையும் உள்ளடக்கியதான இலவசமான சுகாதார, கல்வி முறைகள் பிரித்தானியர் காலத்தில் ஆரம்பித்து விரிவாக்கப்பட்டன; அதேபோல உணவு மானியத் திட்டம், போர்கால வழிமுறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, அரசு தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கு இவற்றைப் பேணிவந்துள்ளது. கிராமிய வருமானங்களை உயர்த்தும் நோக்கமும், நகரப்புற, கிராமியப் புறத் துறைகளுக்கிடையே வேறுபாடுகளை நீக்கும் நோக்கமும், முதல் முறையாக 1939 இல் தொடக்கப்பட்டு, பின்னர் விரிவடையச் செய்த குடியேற்றத் திட்டங்களுக்கு முக்கியமாக அமைந்தன.
4.2 1948 - 1977 வரையான காலம்
1947 இல் நலன் பேணும் செலவு அரசாங்க மொத்த வருவாயில், 50 சதவீதமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் காலனித்துவ ஆட்சியின் இறுதிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நலன் பேணும் வழிமுறைகள், அனேகமாக அதிக மாற்றமில்லாது, தொடர்ந்து சென்றன. விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பு, மாற்றங்கள் அதிகமில்லாது, 1977 ஆம் ஆண்டுக்கு முன்னராக பதவியிலிருந்த அரசாங்கங்களின் காலத்திலும் தொடர்ந்துள்ளது. 1977 ஆம் ஆண்டுவரை உணவு மானியம் நலன் பேணும் முறையில் பிரதான செயல் கருவியாக இருந்துள்ளது. சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் நாடு முழுவதிலும் விரிவடைந்தன; இதன் விளைவாக, உயர்நீத குடிசன வளர்ச்சி அனுபவிக்கப்பட்டது; படித்த இளையோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. எப்படியாயினும், 1970 களில் இலங்கையின் நலன் சார்ந்த பொருளாதார ஒழுங்கில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பொருளாதாரத்தில் போதியளவு வேலை வசதிகள், கல்வியமைப்பிலிருந்து வெளியேறும் அதிகளவான வாலிபர்களை உள்வாங்குவதற்கு அதிகரிக்கவில்லை. பணவீக்கம் அதிகரித்துச் சென்றதால் உணவு மானியத்தின் மெய்ப் பெறுமதி குறைந்தது; அதனால், வறியவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குவதில் அதனுடைய பயன்பாடு பாதிப்படைந்தது. இளைஞர்களிடையே அமைதியின்மை அதிகரித்து இறுதியாக 1971 இல் இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. பல்கலைக்கழக அனுமதி முறை மாற்றம், தனிச் சிங்களக் கொள்நெறி (1956) மற்றும் விருத்தியடைந்த வந்த அரசியல் பண்பாட்டின் தன்மை ஆகியவை நாட்டில் இனத்துவரீதியான உராய்வு நிலையினைத் தோற்றுவித்தது. இனத்துவ மோதலின் முதலாவது காலகட்டத்தின் தாக்கம் அனுபவிக்கப்பட்டது. இது பின்னர், இனங்களுக்கிடையே பிளவினையும் ஏற்படுத்தியதுடன் மோதலினால் பாரிய பாதிப்புகளையும்
239

Page 127
விளைவித்தது. 1970 களின் நடுப் பகுதியில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தப் போக்கினைக் கண்டது, பொருளாதாரத்தில் பல வழிகளிலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. இப்பின்னணியில், 1977 இல் மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்தலில் தெரிந்தனர்; இவ்வரசாங்கம் வளர்ச்சி சார்ந்த கொள்நெறிகளை பின்பற்றுவதற்கு உறுதி கொண்டது; அத்துடன் அதனுடைய கொள்நெறி நோக்கில், இலங்கைப் பொருளாதாரத்தினை உலகப் பொருளாதார அமைப்புடன் இணைக்கும் முயற்சிகளையும் உள்ளடக்கியது.
4.3 1977 க்குப் பின்னரான காலம்
1977 இல் இருந்து பின்பற்றப்பட்ட தாராளமயமாக்கல் கொள்நெறிகள், அதற்கு முன்னரான காலப்பகுதியின் நலன் பேணும் நடவடிக்கைகளைப் பெரிதும் குறைத் துள்ளன. நலன் பேணும் வழிமுறைகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது; அதேவேளை புதிய வளர்ச்சி உபாயத்தின் சமூகத்தின் வறிய பிரிவினருக்குச் சந்தையினுாடாகச் செல்லும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இலவசமான சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் வழங்கல் தொடர்ந்திருந்தன; ஆனால், இச்சேவைகள் மீதான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 1977 க்குப் பின் குறைந்துள்ளதைக் காணலாம்.
அட்டவணை 8: சுகாதாரம் மற்றும் கல்வி மீதான செலவு
காலப்பகுதி கல்விச் செலவு/மொ.உ.உ சுகாதாரம்/மொ.உ.உ
1960-70 4.17 2.12
1971-77 . 3.02 1.72
1978-85 2.51 1.50
1986-1996 2.83 1.61
eyp6)b: Central Bank of Sri Lanka, Economic Progress of Independent
Sri Lanka, 1998.
மற்றைய நலன்பேணும் நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் மதிய உணவு மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு “மகாப்பொல உதவிப் பணம்’ ஆகியவை தாராளமயமாக்கல் காலத்திற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன.
1977 இல் இருந்து பின்பற்றப்பட்டுவந்த ஏற்றுமதி சார்பான கொள்நெறிகள் நாட்டிலுள்ள வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவில்லை; பொருளாதாரம்
240

திறந்துவிடப்பட்ட காலத்தில் உயர்ந்த வளர்ச்சி ஏற்பட்ட பொழுதிலும் உயர்வான வருமானம் மட்டங்களின் நன்மைகள் குறைந்த வருமானப் பிரிவினர்க்கு வடிந்து செல்லவில்லை. உழைப்பினர் படை அதிகரித்துச் சென்ற பொழுதும் வேலை அதிகரிப்பும் போதியளவுக்கு ஏற்படவில்லை; இப்பின்னணியில், இளையோர் நாட்டில் இரண்டாவது கிளர்ச்சிக்குத் தயாராகி கொண்டிருந்த நிலையும் உருவாகியது. வடக்கிலும் கிழக்கிலும் 1983 அளவில் போர் ஆரம்பித்தது; இது பொருளாதாரத்தின் மீது பெரும் பாதிப்புகளை விளைவிக்கத் தொடங்கின. அதனுடைய சமூக விளைவுகள், அகதிகள், பெற்றோரில்லாப் பிள்ளைகள், ஊனமுற்றோர் ஆகியோரை தோற்றுவித்ததுடன் சமூகத்தினர் ஆதரவற்ற நிலையிலும், உளரீதியான பாரிய பாதிப்புகளையும் அனுபவிக்க நேர்ந்தது.
4.4 நலன்பேனும அரசின் சாதனைகள்
பல தசாப்தங்களாகப் பின்பற்றிய நலன் பேணும் கொள்நெறிகள் தொடர்பாக இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் வெற்றி கண்டதை வலியுறுத்த முடிகின்றது. போற்றத்தக்க வகையில் எழுத்தறிவு மற்றும் சுகாதாரக் குறிகாட்டிகள், மனித வறுமை என்பதை எதிர் கொண்டதற்கான நீண்ட காலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பெறுபேறுகளாக அமைவதைக் காட்டுகின்றன.
உலக வங்கியின் இலங்கை பற்றிய நாட்டறிக்கை (World Bank Country Report) யில் கூறப்பட்டது; நாட்டின் நீண்ட கால முயற்சி வறுமைத் தணிப்பு தொடர்பாக ஏற்படுத்திய விளைவு “பட்டினி நிலை நீக்கப்பட்டதுடன், நாட்டில் மக்களின் கைவிடப்பட்ட மற்றும் துணையற்ற நிலையும் தவிர்க்கப்பட்டது.”
அட்டவணை 9: சென்ற முன்று தசாப்தங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி பற்றிய குறிகாட்டிகள் M
வருடம் எழுத்தறிவு வீதம் வாழ்வு நீடிப்பு எதிர்பார்ப்பு | 1000 உயிர்ப்
ஆண் பெண் பிறப்புகளுக்கு
குழந்தைகளின் இறப்பு
1971 78.5 64.2 67.1 45 1981 87.2 67.8 71.7 30
1991 86.9 69.5 74.2 17
2000 96.6 68.0 750 13
மூலம்: இலங்கை மத்தியவங்கி; ஐ.நா.அ.தி மனித வள அபிவிருத்தி அறிக்கை; ஆசிய அபிவிருத்தி வங்கி (2000); பதிவாளர் நாயகம் திணைக்களம்.
24

Page 128
மேலேயிருந்து கீழ்ச்செல்லும் நலன் காக்கும் கொள்நெறிகள் இலங்கையில் பிரசைகளின் வாழ்வு நிலையினை, பாரபட்சமின்றி எல்லோருக்கும் அடிப்படைப் பொருள் மற்றும் சேவை விநியோகம் செய்வதினூடாக முன்னேற்றமடையச் செய்தல் அடிப்படை நோக்கமாக இருந்தது. இத்தகைய நோக்கம் , எல்லோருக்குமாக வழங்கப்பட்டு வந்த சுகாதார, கல்விச் சேவைகள் பெருமளவுக்கு எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்திய நலன் பேணும் கொள்நெறிகள், நாட்டில் வறுமைத் தணிப்புக்கான நல்லதொரு பலமான அடித்தள ஒழுங்கினை அமைத்துள்ளது. மனிதவள அபிவிருத்தியில் அடையப்பட்ட மட்டம் மற்றும் நலன் சார்ந்த உட்கட்டுமான முறை என்பவை ஒரு விரிவாக்கமுடைய மற்றும் சமூக நீதித் தன்மை வாய்ந்த அபிவிருத்திக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவியுள்ளது.
4.5 மேலேயிருந்து கிழே செல்லும் சேவை வழங்கல் முறைமையின்
குறைபாடுகள்
சுதந்திரத்திற்குப் பின்னர், நலன்பேணும் கொள்நெறிகளின் அடைவுகளை வெற்றிகரமாக பொருளாதார அமைப்பினால் உள்வாங்கப்படாமை பாரிய குறைபாடாக அமைந்தது. உயர்வான வளர்ச்சி ஏற்படாமையும், இலவச சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளின் குறைந்த தரமுடைய சேவைகளும் பிரதான காரணமாக இருந்துள்ளன. கல்வியமைப்பில் கல்விபெற்ற அதிகமான இளம் வயதினருக்கான வேலை வசதிகளைப் பொருளாதாரம் வழங்க முடியவில்லை. இப்பின்னணியில் உருவாகிய, தெளிவாகிய நிலைமை என்னவென்றால், வேலை தொடர்பாக பொருளாதாரத்தினால் ஏற்படுத்தப்பட்ட வேலை சார்பான தேவைகளுக்கும், கல்வியமைப்பினால் கல்வியினுாடாக வழங்கப்பட்ட தேர்ச்சி, அறிவு ஆகியவற்றுக்கும் இடையே ஒரு பாரதூரமான ஒவ்வாமை நிலை தோற்றுவிக்கப்பட்டது. கல்வியமைப்பு, காலப்போக்கில் மாற்றமடைந்து சென்ற பொருளாதாரத்தின் வேண்டுகோளுக்கு ஏற்றதாகச் சரியான பதிலிறுப்பு நோக்கில் செயற்பட்டுச் செல்லவில்லை.
நாட்டின் பெரிதாகப் பேசப்படும் உயர்ந்த எழுத்தறிவு, அதனால் ஏற்பட்ட போற்றக் கூடிய மனித அபிவிருத்தி மேலாகச் சென்று உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் கூடிய பொருளாதாரப் பெறுமதி தரக் கூடியதாக மாற்றப்படவில்லை. இத்தகைய ஒத்திசைவு ஏற்படுவதற்கு கல்வி அமைப்பு நாட்டின் பொருளாதார ஒழுங்கமைவு என்பதைக் கருத்தில் கொண்டு, அதனுடைய வேண்டுகைக்கு இசைவாக வேலையாட்களைத் தருதல் வேண்டும். இலங்கையில் உழைப்பினர் படையில் தரவுகளின் படி, வேலையின்மை கல்விமட்டம் உயர்வாக இருப்போர்களிடையே உயர்ந்திருப்பது தெரிகின்றது. இதிலிருந்து அறியக்கூடியது
242

உயர்ந்த கல்வி மட்டத்தினர் குறித்த வேலை உண்டாக்கும், வேலைப் படையின் அதிகரிப்பிற்கு ஒத்ததாக அதிகரிக்கவில்லை.
அட்டவணை 10: கல்வி மட்டம் குறித்து வேலையின்மை
கல்விமட்டம் உழைப்பினர் படையின்
சதவீதமாக வேலையின்மை
பாடசாலைக் கல்வி இல்லாதோர், வருடம் 5 1.5
வருடம் 6-10 6.9
பொதுத்தராதரம் - சாதாரணம் 11.2
பொதுத்தராதரம் - உயர்தரம் மற்றும் மேல் 5.6
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை, 2001, கொழும்பு
2001 இல் அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.02 சதவீத அளவை கல்விக்குச் செலவுசெய்தது. இவ்வளங்களின் முழுமையான உற்பத்தித்திறன் அடையப்படாமல் இருப்பது உழைப்புச் சந்தை உழைப்புத் தொடர்பான தேர்ச்சிகளின் நிரம்பலையும் கேள்வியினையும் சமன்படுத்தத் தவறியுள்ளமை. கல்விபயிலும் பிள்ளைகளைப் பாடசாலைகளில் கூடிய காலத்திற்கு வைத்திருத்தல் வேண்டும். அவர்களுக்குப் பொருத்தமான தேர்ச்சிகளில் பயிற்சியினை வழங்கி, அவர்கள் கல்வியினை முடித்துக் கொள்ளும் கட்டத்தில் வேலை வசதிகளை பெற்றுக் கொள்பவர்களாக உறுதிப் படுத்துதல் தேவைப்படுகின்றது. உலக வங்கியினது உலக அபிவிருத்தி அறிக்கையில் (2000/2001) கூறப்பட்டது, இலங்கையின் தேறிய பாடசாலை ஆரம்ப நிலைக்குச் சேர்த்தல் அளவு ஏறத்தாழ 100 சதவீதத்தில் இருந்துள்ளது. இவ்வெண், இரண்டாம் நிலைக்கு வந்தவுடன் 76 சதவீதத்திற்கு வீழ்ச்சி கண்டது. எவ்வாறாயினும், இத்தரவுகள் இலங்கையில் தென்னாசிய கிழக்காசிய அயல்நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது நல்லவையாகக் காணப்படுகின்றன; மேலும் 1980 இல் 59 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டதைக் காட்டியுள்ளது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான வீழ்ச்சியினை மூன்றாம் நிலைக் கல விக்கு செல்லும் பொழுது ஏற்பட்டுள்ளது. ஐ.நா.அபிவிருத்தித் திட்ட மனிதவள அபிவிருத்தி அறிக்கை (2001) யின் படி, இத்தரவு ஆண்களுக்கு 6 சதவீதமாகவும் பெண்களுக்கு 4 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் ஆகிய சமூக சேவைகளின் வறுமைத்தணிப்புக் குறித்த பொருத்தமான தன்மை, இச்சேவைகள் வறியவர்களுக்குச் செல்வதிலும்
243

Page 129
அதனூடாக அவர்களின் வாழ்வுத் தரத்தினை முன்னேற்றுவதிலும் பங்களிப்பினைச் செய்கின்றன. இலங்கையில் எல்லோருக்குமான இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்திருப்பினும், பிரதேசங்களுக்கு உள்ளும், பிரதேசங்களுக்கு இடையேயும் வழங்கப்படும் வசதிகளின் தரமும், அவை பெறப்படும் வாய்ப்புகளும் வேறுபட்டிருப்பது, வருமானப் பகிர்ந்தளிப்பின் வேறுபாடுகளைப் பிரதிபலிப்பவையாக அமைகின்றது. (அட்டவணை 11)
அட்டவணை 11: பிரதேசங்களிடையே எழுத்தறிவின்மையில் வேறுபாடுகள்
மாகாணம் வயதுவந்தோரிடையே எழுத்தறிவின்மை (%)
(3LD6) 6.2
மத்திய 15.3
தென் 1.2 வடமேல் 8.1
வடமத்திய 9.6
66 17.
சப்ரகமுவ 11.2
மூலம்: சமன் கேலகம: இலங்கையில் வறுமைநிலையும கொள்நெறியும், (2001), ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கையில் வறுமை குறைத்தல்: ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பின் உச்சப்பயன்பாடு 2001
கல்வியமைப்பும், சுகாதார வசதிகள் ஒழுங்கும், காலனித்துவ காலத்திலிருந்து கால நீடிப்புக் கொண்டிருந்த பொழுதும் வசதிகள் வழங்கப்படுவதில், நாடு முழுவதும் குறித்து ஒத்த தரமுடைய சேவைகள் பேணப்படுவதில் தவறிவிட்டன. நகரப்புற, கிராமப்புற மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகியவற்றிடையே சேவைகள் வழங்கல் தொடர்பாக இடைவெளிகள் ஏற்பட்டதுடன், இவ்வேறுபாடுகள் கிராமியத்துறையில் உள்ள இடங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது விரிவடைந்தும் சென்றுள்ளன.
அரசுக்கு எதிரான இளம் வயதினரின் கிளர்ச்சி, பெரும்பான்மையான சிங்களவர்களிலிருந்தும் தமிழ் சிறுப்பான்மையினரிடமிருந்தும் ஏற்பட்டது; இது இலங்கையின் குடிசனத்தில் அதிக தொகையுடையோர் குறித்து பொருளாதாரப் பிரச்சினைகள் உறுதியாகத் தீர்க்கப்படவில்லை என்பதற்கான எடுத்துக் காட்டாக அமைகின்றது. இவ்வாறு செய்யத் தவறியமை சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியிலும் தோல்வி கண்டுள்ளது.
எல்லோரையும் உள்ளடக்கிய, குடிசனத்தினரை நோக்கிய நலன்பேணும் சேவைகள், பாரபட்சமின்றி அனைவரினதும் வாழ்க்கை நிலையினையும்
244

உயர்த்துவது என்ற நேரடியான இக்கொள்நெறிகளின் நோக்கம், எழுத்தறிவு மற்றும் மனித அபிவிருத்தி ஆகியவை குறித்து, அடையப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வறுமைத் தணிப்பில் வருமான வறுமை குறித்து, குறிப்பிட்ட இந்த அடைவுகள் குறிக்கோளை நோக்கிச் செல்வதற்கான வழியாகின்றது, ஆனால், அதுவே முடிவு எனக் கருதுவதற்கில்லை.
நலன்பேணும் சேவைகளின் வழங்கல் மீது அரசாங்கத்தினால் செய்யப்படும் செலவு உற்பத்தி சார்பான இயலுமை/ஆற்றல் என்பதை விருத்தி செய்வதற்கான நீண்டகால முதலீடாக அமைதல் வேண்டும்; அத்துடன், ஆற்றலின் விருத்தியும் பொருளாதாரப் பெறுமானமாக மாற்றப்படுதல் வேண்டும். அதாவது, அத்தகைய செலவு குறித்த வருவாய்களாக வெளிப்படுத்துவதுடன், நாட்டின் வளர்ச்சி முறைவழியில் பிரதிபலிக்கப்படுதல் வேண்டும்; அதனுடன் தொடர்பான அபிவிருத்திக்கான பங்களிப்பும் ஏற்படுதல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் நாட்டுக்கு ஏற்பட்ட விகிதாசார ரீதியாகக் கிடைத்த நன்மைகள் குறைந்ததாகவே இருந்துள்ளன. இப்பின்னணியில், உயர்ந்த அளவான மனித அபிவிருத்தியினை அனுபவிக்கும் குடிசனத்தினர், வருமானம், வீடமைப்பு வசதி, என்ற விதமாக பொருளாதார வருவாய்கள் பெறுவதை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய வருவாய்களைப் பெறத் தவறுமிடத்தில், இச்சூழ்நிலை சமூக அமைதியின்மையை விளைவிக்கின்றது; தவிர்க்க முடியாத வகையில் வன்முறைக்கும் இட்டுச் செல்கின்றது. இலங்கையில் இது உண்மை நிலையாக வெளிப்பட்டுள்ளது.
1970 களின் முன்பகுதியில் நாடு வருமானப் பகிர்ந்தளிப்பில் ஒரு கூடுதலான சமத்துவ நிலையினை நோக்கிச் சென்றது; இடது சாரி அரசாங்கம் பதவியில் இருந்ததனால் இது பகிர்ந்தளிப்புக் கொள்நெறியிலும், இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழிலாக்கத்திலும் கூடிய கவனத்தைச் செலுத்தியது. வளர்ச்சி பற்றி அதிகம் கவனிக்கப்படவில்லை; இதனால் பொநளாதாரத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் 1960 களில் 4.9 சதவீதமாக இருந்து, 1971-77 காலப்பகுதியில் சராசரி 2.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இத்தகைய கொள்நெறிகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாகியது. ஏனென்றால், பொருளாதாரம் போதியளவு வருமான அதிகரிப்பினை, வருமான மீள் பகிர்ந்தளிப்பிற்கு ஆதாரமாயிருப்பதற்கு, கொண்டு வரவில்லை. முதல் திரட்டுதல் சம்பந்தமான நடடிவடிக்கைகள் போதியளவுக்கு விருத்தி செய்யப்படவில்லை; இது தொடர்ந்து முதலாக்கத்திற்கு வலுவூட்டும் முக்கியமான செயற்பாடாகும். ஆதலால், சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை அளிக்கும் வகையில் முதலீட்டு வளங்களும் வாய்ப்புகளும் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை.
இலங்கையின் ஆட்சி அமைப்பு முறை, நலன்பேணும் சார்பு பலமாக இருந்த நிலையில் மக்களுக்கு சொத்துக்கள், அதிகாரம் ஆகியவை அவர்கள்
245

Page 130
வறுமையிலிருந்து வெளியேறுவதற்கு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தினை இனங்கண்டு கொள்வதற்கு தவறிவிட்டது; இது அவர்களுக்கு நீண்ட காலத்தில் வாழ்வுக்கான ஆதாரமாயிருக்கும் வழிகளை கொடுக்க முடியும், அதே வேளை ஆட்சியமைப்பு நாட்டுக்கு தேவையான ஒரு சனநாயக அரசியல் பண்பாட்டை உண்டாக்கவில்லை; அவ்வாறான ஒரு பண்பாட்டு முறை, சமூக ரீதியாக விலக்கப்பட்டுள்ளோரின் குறைபாடுகளுக்குத் தீர்வு வழிகளைக் கண்டிருக்க உதவியிருக்கும். இத்தகைய சாய்வான தன்மைகள் நலன் பேணும் நடவடிக்கை வழங்கலிலும் பிரதிபலிக்கப்பட்டன; இதனால் நலன்பேணும் அரசு பாகுபாடற்ற விதத்தில் பிரசைகளின் பிரச்சினைகளை அணுகத் தவறிவிட்டது. 1970 களின் நடுப்பகுதியில் இருந்த மந்தப் போக்குடைய பொருளாதார நிலைமை, 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு பெரும் வெற்றியினைக் கொடுத்தது. இப்புதிய அரசாங்கத்தினால் ஒரு புதிய நோக்குடைய, வளர்ச்சி சார்பான கொள்நெறி ஒழுங்கினையும், தாராளமயமாக்கல் மற்றும் ஏற்றுமதி சார்பான கைத் தொழில வளர்ச்சி ஆகியவை அடிப் படை மாற்றங்களாக முன்வைக்கப்பட்டன.
புதிய கொள்நெறிச் சட்டகத்தில், வறுமைத் தணிப்புத் தொடர்பான நோக்கு ஒரு கட்டளைப்படி மாற்றத்தினையும் காட்டியது. சென்ற காலத்தில் இருந்துள்ள மேலிருந்து கீழே செல்லும் சேவை வழங்கலுக்குப் பதிலாக பங்கேற்றல் அபிவிருத்தி நிலைப்பாட்டுக்குச் சென்றது. வறியவர்கள், தனியே நலன்பேணும் சேவைகளையும் மற்றும் காசு பெறுபவர்களாகவும் இருப்பதற்குப் பதிலாக வறுமைத் தணிப்பு முயற்சிகளில் பங்குகொண்டவர்களாக மாறியுள்ளனர். பொருள்கள் சேவைகளைப் பெறுகின்ற முறைக்குப் பதிலீடாக மக்களுக்கு அதிகாரமளித்தல் மூலம் அவர்கள் தம்முடைய நலனை மேம்படுத்திச் செல்லும் முயற்சியாக நோக்கப்பட்டது. இந்த முயற்சி வறியவர்களை நிலவுகின்ற பொருளாதார அமைப்பிற்குள், உணரப்பட்டதான முறையில் இணைத்துக் கொள்வதாக அமைகின்றது. எவ்வாறாயினும், இனத்துவ மோதல் புதிய அரசாங்க காலத்துடன் மோசமான நிலையினை அடைந்தது; இந்தக் கொடிய யுத்தம் நாட்டில் இரு தசாப்தங்களாக பெரும் சீரழிவினை விளைவித்தது.
5. பங்குகொள்ளும் அபிவிருத்திக் கட்டளைப் படிவம்
1977 இல் இலங்கைப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதுடன், அரசாங்கம் கொள்நெறி ஒழுங்கு வளர்ச்சியினை மையப்படுத்தி வெளிநாட்டுத் துறையின் தலைமை நிலை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. வளங்களின் ஒதுக்கலும், பயன்பாடும் பிரதானமாக சந்தையினால் வழிநடத்தப்பட்டு, 1977 க்கு முன்னர் இருந்து வந்த நலன்பேணும் ஒழுங்கு முறை அதிகளவுக்கு குறைக்கப்பட்டது; இதன் பின்னணியில் சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளின் பலாபலன்கள்
246

குறைந்த வருமானப் பகுதியினருக்கு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில், சர்வதேச அரங்குகளில் பங்கு கொள்ளும் கருத்துநிலை சார்ந்த கொள்நெறிகள் கூடிய கவனத்தைப் பெற்றன. வறுமைத் தணிப்புத் தொடர்பாக வேறுவிதமாக உணர்தல் விரைவான மாற்றத்தை காட்டியுள்ளது; இதற்காக அதிகாரமளித்தலும் மற்றும் சிறு தொழில் முயற்சிகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெரிதும் கவனத்தை எடுத்தன.
கட்டுப் படுத் தய பொருளாதார மொன றPலிருந்து சநீ தைப் பொருளாதாரத்திற்குச் சென்றது; வறியவர்களுக்குப் பொருள்கள் மற்றும் சேவைகளை வழங்குதலிருந்து தீர்மானம் எடுக்கும் சுயாதீன நிலை, மற்றும் கொடுகடன் ஆகியவற்றினை வழங்கும் முறைக்கு மாறியது; இதில் அரசு ஒரு மாற்றுச் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்கும் பங்களிப்பினை செய்வதாக வலியுறுத்தப்பட்டது. இப்புதிய நோக்கில், தீர்மானமெடுக்கும் உரிமை/அதிகாரம் வறியவர்களுக்கு மாற்றப்பட்டது; அதனுாடாக அவர்கள் தம்முடைய நலன் மேம்பாட்டை இருப்பிலுள்ள பொருளாதார ஒழுங்கு முறைக்குள், தாமே தீர்மானித்துக் கொள்கின்றனர். மில்லியன் வீடுகள் திட்டம், மாற்ற முகவர் திட்டம், மற்றும் 1987 இல் அதிகாரப் பன்முகப்படுத்தல் குறித்த 13 வது அரசியல் சட்டத்திருத்தம் ஆகியவை மூன்றும் வறுமை மற்றும் வருமானச் சமமின்மை என்பவை தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள்; புதிய பொருளாதார ஒழுங்கில் இவை குறிப்பாக நோக்கப்படவில்லை. புதிய பொருளாதார ஒழுங்குகள் இப்பிரச்சினைகள் குறித்து நிலைமையினை சிக்கலாக்கலாம் என்ற நோக்கத்துடன், சமாந்தரமாக வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கிய புறம்பான திட்டம் வறுமை வருமான சமமின்மை குறித்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
பங்கு கொள்ளல் அபிவிருத்தி ஒழுங்கு, இலங்கைக் கொள்நெறிச் சட்டகத்தில் 1978 இல் மாற்றமேற்படுத்தும் முகவர் திட்டத்தினுாடாகச் சேர்க்கப்பட்டது. இது தேசிய மட்டத்திற்கு 1989 இல் ஜனசவிய திட்டத்தினூடாக உயர்த்தப்பட்டது. அரசினை வறியவர்களுக்குச் சார்பானதாக, வறியவர்களை நாடுமுழுவதுமான மட்டத்தில் திரட்டி மற்றும் அவர்களின் பிரச்சினை ஒரு தேசமட்டத்திலான பிரச்சினையாக உணர்வூட்டி, மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இம்முயற்சி இலங்கையின் வறுமைத் தணிப்புத்திட்டத்தில் ஒரு திருப்பமான மாற்றத்தைக் கொண்டுவந்தது. அத்துடன், அது சரியான திசை வழியில் செல்வதாகவும் அமைந்தது. இன்றுள்ள வறுமைத் தணிப்புத் திட்டம், “சமுர்த்தி”, 1994 இல் அரசாங்க மாற்றம் ஏற்பட்ட பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது; இது ஜனசவியத் திட்டத்திற்கு அதனுடைய குறைபாடுகளை நீக்கிய மாற்றுத் திட்டமாக முன்வைக்கப்பட்டது. சமுர்த்தி” நோக்கம் குறித்தும் கோட்பாட்டு ரீதியாகவும், ஜனசவியத் திட்டதிலிருந்து வேறுபட்டதல்ல; அதுவும் வறுமை சம்பந்தமான விடயங்களை பங்குகொள்ளல் அணுகுமுறையூடாக நோக்குகின்றது.
247

Page 131
5.1 ஜனசவியத் திட்டம்
பங்குகொள்ளும் அபிவிருத்தி முறைமை 1989 இல் ஜனசவியத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், தேசிய மட்டத்திற்கு உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், வறியவர்கள் வருமானம் பெறும் வழியினை மேற்கொள்ளுதல்; அவர்கள் சிறு முயற்சியாளர்களாக மாறுவதனால் அல்லது வேண்டிய தேர்ச்சியினைப் பெற்று நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதனால் வருமானம் உழைக்கும் வழியைத் தேடிக் கொள்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கிடைத்த செயற்கருவியாக, மாத மொன்றுக்கு பணம் இரண்டு வருடங்களுக்கு பெறுதல் ; இக் காலப் பகுதியில் குடியிருப்பாளர் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. பணம் கிடைக்கும் அளவு இரண்டு கூறுகளாக அமைந்தன. ஒன்று, மாதமொன்றுக்கு ரூபாய் 1000 நுகர்வுத் தேவைக்காக வழங்கப்பட்டது; இரண்டாவது, ரூ.458 தாம் விரும்பிச் சேமிப்பதற்காக குடியிருப்பாளர் பெறுகின்றார். பன நன்கொடை கிடைப்பது ஒரு நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது, மாதத்தில் 20 நாட்கள் ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலைசெய்தல் என்பதுடன் மிகுதியான நான்கு நாட்களும் உண்மையாகச் செய்யப்பட்ட வேலையின் சமூக ரீதியாகச் செய்யப்படும் மீளாய்வுக்கு என ஒதுக்கப்பட்டது. வேலை செய்தலின் தேவை “சாறகம்’ திட்டத்தின் கீழ் சமூக கட்டுமான அபிவிருத்தியின் மீது கவனம் செலுத்தியது. மேலும், ஓர் ஆதரவாக வழங்கப்பட்டது கடனாக ஒரு செயலாற்றமுடைய செயற்திட்டத்திற்கு என கொடுக்கப்பட்டது.
ஜனசவியத்திட்டத்தின் மிகப் பிரதான அம்சம், செயலூக்கமுடைய சமூகத்தினரைத் திரட்டுதல் முறைவழியூடாக, கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பாக, வறியவர்களிடையே ஒரு விழிப்புணர்வினை உண்டாக்கி அவர்கள் நிலைமையைப் பற்றி நன்கு அறியக் கூடியதாக செய்வது பிரதான நோக்கமாக இருந்துள்ளது; இதனுடாக தீர்வுகளை அவர்களின் சமுதாயத்திற்குள்ளே கண்டுகொள்ளுதலும் வலியுறுத்தப்பட்டது. சமுதாயத்தில் உள்ளவர்களே, உள்ளூர் தகுதிவிதிகளுக்கு ஏற்றதாக மிகக் கூடுதலான தேவையுடையோரை இனங்கண்டனர்; அது தொடர்பான பட்டியல் பற்றி உள்ளுர் மட்டத்தில் நன்கு விளம்பரப்படுத்தி இறுதியான பட்டியலைத் தயாரிப்பதற்கு முன்னோடியான நடவடிக்கைகளாக இவை அமைந்தன. இந்த நடவடிக்கைகளினுாடாக மிகக் கூடுதலாக தேவைகள கொண்டவர்களை இனங்கண்டு கொள்ளுதல் சீர்ப்படுத்தப்படுகின்றது; அதனால், இலக்குப்படுத்துதல் சரியாகச் செய்ய முடிந்துள்ளது; ஜனசவியத்திட்டத்தில் நன்கொடை உதவி கிடைப்பதற்கான தகுதி விதி தொடக்கத்தில் உச்ச வருமானம் அளவாக ஒரு குடும்பம் தொடர்பாக மாதமொன்று ரூ.700 என விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இதற்குப் பதிலாக பின்னர் வேறு விதிகள் முன்வைக்கப்பட்டன. அதாவது, குறிப்பிட்ட
248

பிரதேசத்துக்கான தகுதிவிதியாக, “அவதானிக்கக்கூடிய’ வெவ்வேறு மாறிகள், சொத்துக்களின் உடைமை, மற்றும் வருமானத்தின் மூலங்கள் என்பவை விதிக்கப்பட்டன.
சமூகத்தவர்களை ஒன்று திரட்டுதல் மூலம், இதற்குத் தேவையாக சமூகத்தவர்களில் வெவ்வேறு கூட்டத்தினர் ஒன்றாகச் சேருதல், என்பதன் வழியாக ஜனசவிய தொடர்பாக பங்கு கொள்வோர்களிடையே சிறு பிரிவினராக அல்லது பெரிய அமைப்புகளாக ஒன்று சேர்ந்து செயலுாக்கத்துடன் வறிய சமூகத்தவர்களின் பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசனை செய்து கொள்ள முடிந்தது. ஜனசவிய திட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், வறுமைத் தணிப்புத் தொடர்பாக வறிய நிலையில் உள்ள பெண்களின் செயலூக்கத்துடன் பங்கேற்றல் இடம்பெற்றது. “சாறகம்’ திட்டத்தின் நடவடிக்கைகள் மூலம் சமுதாயச் சொத்துக்கள், கிணறுகள், கால்வாய்கள், முன்பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை பங்கேற்றல் அடிப்படையில் உண்டாக்கப்பட்டன. இப்பொதுச் சொத்துக்களின் ஆக்கம் ச்மூகத்தினருக்கு நன்மை தருபவையாக இருந்தன.
ஜனசவியத் திட்டம் நாடு முழுவதற்குமாக கட்டம் கட்டமாக மொத்தமாக பதினொரு சுற்றுக்களில் நிறைவேற்றுதல் தீர்மானிக்கப்பட்டது. முதலாவது கட்டம் 1989 இல் தொடக்கப்பட்டது; 5 வது சுற்று இறுதியானதாக இருக்கும் என மே 1994 இல் எதிர்பாக்கப்பட்டது. இது அரசாங்க மாற்றத்திற்கு முன்பாக முடிவுறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது; அரசாங்க மாற்றம் இத்திட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வரும் எனவும் கருதப்பட்டது.
ஜனசவியத்திட்டத்துடன் வேறு பல முயற்சிகளும், வறுமைத் தணிப்புக் குறித்து அறிமுகம் செய்யப்பட்டன. இவை, பெரிய அளவான வறுமைக்குச் சார்பான ஒழுங்குகளை கொடுத்ததுடன் இத்திட்டத்தின் நோக்கங்களுடன் இணைந்தும் சென்றன. இத்தகைய முனைப்புகள் வறியவர்களின் குறிப்பிட்ட பிரச்சினைகளாகிய, கொடுகடன் இல்லாமை, சமுதாய மட்டத்தில் அதிகாரப் பகிர்வு, மற்றும் வேலை வசதிகள் வறியவர்களுக்கு இல்லாமை போன்ற பிரதான பிரச்சினைகள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
5.2 விரிவடைந்த திட்டம்
ஜனசவிய நம்பிக்கை நிதியம் (ஐ.ந.நி), ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் கொண்ட நிதியமாக 1991 இல் உலக வங்கியின் முனைப்புடன் இலங்கை அரசாங்கம் பங்காளராகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிதியம் தொடக்கத்தில் ஒரு மையமான நிறுவனமாக, பங்காளர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச முகவர்கள், வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வறியவர்கள் அமைப்புகள் ஆகியவற்றினூடாக நிதிகளை விநியோகித்தது.
249

Page 132
ஐ.ந.நி. மூன்று நிதியங்களைக் கொண்டிருந்தது. இவற்றுக்கான ஆதரவான மனித வள அபிவிருத்தி நிதியின் வழியாக, பங்காளர் அமைப்புகள் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கவும்; இவ்வமைப்புகள் விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதற்கும், மற்றையது முயற்சியாண்மை விருத்தி செய்வதற்குமான நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்கப்பட்டது. இந்த நிதியத்தில் மிகப் பெரிய பகுதி கொடுகடன் நிதியாக, உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கு உதவி வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மற்றைய இரண்டு நிதியங்களும், அதாவது கிராமிய நடவடிக்கைகளுக்கும் நிதி மற்றும் சத்துணவு நிதி என வகுக்கப்பட்டு, உட்கட்டுமான அபிவிருத்திக்கும், சத்துணவுத் திட்டத்தினை நிதிப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டன. முதல் இரண்டு வருடங்களிலும் ஐ.ந.நி அதனுடைய ஆரம்ப கோட்பாட்டிலிருந்து விலகிச் சென்று, பல சிறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டது. பிற்பட்ட கட்டங்களில் இந்த நிதியம் அதனுடைய தொடக்க காலக் கோட்பாட்டு நிலைக்கு சென்றிருப்பினும், மு னினரான காலக் கட்டங்களில் உலக வங்கிக் கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையே இருந்த கருத்து வேறுபாடுகளினால் இதில் திசைமாற்றம் ஏற்பட்டது; நிதியத்தின் செயலாற்றம் எதிர்பார்ப்புகளுக்கு குறைந்ததாகவும் காணப்பட்டது. 1994 இல் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டதுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது.
1992 இல் பிரதேச செயலக அமைப்பு நிருவாகச் சீர்திருத்த நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது; இதனால் சமுதாய மட்டத்திற்குக் கிட்டுமானதாக தீர்மானமெடுக்கும் மட்டம் செயலகத்தினால் செய்யப்பட்டவையெல்லாம் தற்பொழுது பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டது; இன்றுவரை அது நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான மட்டமாக இருந்து வருகின்றது.
200 ஆடைகள் தொழிற்சாலைகள், 1991 க்கும் 1993 க்கும் இடைப்பட்ட காலத்தில், வேலையின்மையினை எதிர்நோக்கிய சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, அதாவது, வறிய குடும்பங்களின் இளைய பெண்கள் ஆகியவர்களுக்கு வேலை வசதிகளை கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. தொழிற்சாலைகள் நாட்டின் தூரமான பகுதிகளில் அமைக்கப்பட்டதன் நோக்கம், அபிவிருத்தி குறைந்த பகுதிகளில் வேலை வசதிகளை உண்டாக்குவது முக்கியமாக இருந்துள்ளது; இதனுடாகக் குறைந்த அபிவிருத்தி நிலையில் இருந்த இடங்கள் முன்னேற்றமடையலாம். இவற்றில் வேலை பெறுபவர்கள் பிரதானமாக ஜனசவிய உதவி பெறும் குடும்பங்களிலிருந்து வந்தனர், அவர்களுக்கு மாதம் அடிப்படைக் கூலியாக ரூ.2500 வழங்கப்பட்டது.
5.3 ஜனசவியத் திடடத்தின் பெறுபேறுகள்
இலங்கையின் வறுமைத் தணிப்புக் கொள்நெறியில் ஜனசவியத் திட்டம் ஒரு திருப்பமாக அமைந்தது. இதில் வறியவர்களின் மற்றும் அரசாங்கத்தின்
250

பங்களிப்புகள் முன்பிருந்த நலன்பேணும் கொள்நெறி முறையிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தன. முன்பிருந்த திட்டத்தில் வறியவர்கள் தம்முடைய செயலற்ற நிலையிருந்து செயலூக்கமுடையவர்களாக மாறினர்; அரசாங்கம், முன்பு தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டதாக இருந்ததுடன், நலன் பேணும் அரசின் வழங்குனர் தொழிற்பாட்டையும் செய்து வந்தது. இதற்குப் பதிலாக அரசாங்கம், புதிய ஒழுங்கில் ஓர் இயைபூக்கமான பங்களிப்பைச் செய்தது. புதிய திட்டத்தின் குறிக்கோள் மக்களை (வறியவர்கள்) ஒன்று திரட்டுதல், வறியவர்களுக்கு அதிகாரமளித்தல், வறியவர்கள் நிலைமை பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்குதல் மிகப் பொருத்தமான தீாவுகளைக் கண்டுகொள்ளுதல், ஆகியவை வலியுறுத்தப்பட்டன. தீர்வுகள் உள்ளுர் நிலைமைகள், உள்ளுரில் கிடைக்கும் வளங்களைத் தழுவியதாக அமைந்ததும் முக்கியமாகின்றது. ஜனசவிய நன்மைகளைப் பெறுபவர்களின் உழைப்பு திரட்டப்பட்டு உள்ளுரில் சமூகத்தினரின் உட்கட்டுமான வசதிகளை விருத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஜனசவிய கொடுகடன் ஒழுங்குகள், மக்கள் முயற்சியாண்மையுடையவர்களாக மாறுவதற்கு வழிவகுத்தது; அதனுாடாக அவர்கள் தம்முடைய தொழில் முயற்சிகளை உள்ளுரிலே விருத்தி செய்வதற்கான ஊக்கத்தை அளித்தது. ஜனசவிய ஒரு முறைவழியாக அமைந்தது; அது சிறு சமூகங்களை, நாடளாவிய அபிவிருத்திக்கு இலக்குப்படுத்திய திட்டமாகின்றது; இதில், இத்தகைய அபிவிருத்தி முறைவழி, படிப்படியாக வளர்ந்து செல்லும் தன்மையுடையது; அத்துடன் அது ஒவ்வொரு சமூகத்தவர்களின் தேவைகள் தொடர்பாக நன்கு உணர்ந்திருக்கும் இயல்புடையது. w
ஜனசவியத் திட்டத்தில் பண உதவி வழங்கப்படுதல், வறியவர்களுக்கு மிகக் கீழான நிலையிலுள்ளவர்களை அவர்களின் நிலைமையிலிருந்து வெளியேற்றி உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு வருதலே பிரதான நோக்கமாக இருந்துள்ளது. மாதத்திற்கான வருமான உதவியாக வழங்கப்படும் ரூ.1458 ஏறத்தாழ குடியிருப்பாளர்களின் மிகத் தாழ்ந்த 3 வது (பத்திலொரு) பிரிவான சராசரி வருமானமாக இருந்துள்ளது. (குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்கழத்தின் வருமானம் மற்றும் செலவு அளவீடு - 1990/91) ஜனசவியத் திட்டம் 1.1 மில்லியன் குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது; இது 1994 ஆம் ஆண்டு வரையான ஐந்து சுற்றுக்களின் தொகையாகக் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வடக்கிழக்கிலுள்ள 34,242 குடும்பங்களுக்கான பண உதவி இடைநடுவே பாதுகாப்பு நிலைமைகள் சீரழிந்தனால் நிறுத்தப்பட்டது.
ஜனசவியத் திட்டத்தில் பண உதவி கொடுப்பதை இலக்குப்படுத்துவது படிப்படியாக முன்னேற்றடைந்தது; குறிப்பாக, ஜனசவிய திடடத்திற்கு முன்னராக உணவு முத்திரை முறையின் கீழ் பண உதவி பெற்று வந்தவர்களில் 31 சதவீதத்தினர் குறைக்கப்பட்டனர். சமூக உட்கட்டுமான அபிவிருத்தி குறித்து
251

Page 133
“சாறகம்’ திட்டத்தினுடாக ரூ.1,139 மில்லியன் சமூகச் சொத்துக்கள் மற்றும் ரூ.455 மில்லியன் எனக் கூட்டான சமூதாயச் சொத்துக்கள் ஆகியவற்றின் பெறுமதியாக (நவம்பர் 1993 வரை) மதிப்பிடப்பட்டுள்ளது.
5.4 சமுர்த்தித் திட்டம்
தற்போதுள்ள வறுமைத் தணிப்புத் திட்டம் அதாவது, “சமுர்த்தித் திட்டம்” 1995 இல் ஜனசவியத் திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப் படுத்தப்பட்டது; இது அரசாங்க மாற்றம் ஏற்பட்டவுடன் கொண்டுவரப்பட்டது. கோட்பாட்டு ரீதியாக சமுர்த்தித் திட்டம் ஜனசவியத்திட்டத்திலிருந்து வேறுபடவில்லை முன்பிருந்த திட்டத்தைப்போல, சமுர்த்தியிலும் காசு உதவி, ஒரு சேமிப்புப் பகுதி, கொடுகடன் திட்டம் மற்றும் முதல் விருத்தித் திட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. பணமாக வழங்கும் உதவி, மாதாந்த வருமானம், மற்றும் குடும்பங்களின் பருமன் என்பவை பொறுத்து மாற்றமடைகின்றது. பண உதவியானது, நுகர்வு, கட்டாயச் சேமிப்பு, மற்றும் ஒரு சமூக காப்புறுதித் திட்டம் ஆகியவற்றிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. முன்பு இருந்தது போலவே, சமுர்த்தி நன்மைகளில் கட்டளைப்படுத்தும் சமுதாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக உழைப்பு விரும்பி வழங்கப்படும் தேவையுமுண்டு; இவ்வாறு வழங்கப்படும் உழைப்பு, பண உதவி பெறும் அளவைப் பொறுத்து, எவ்வளவு நாட்களுக்கென்ற தேவை தீர்மானிக்கப்படுகின்றது. ஜனசவியத்திட்டத்தில் இருந்ததைப் போல சமுர்த்தியிலும் நன்கொடைகள் பெறுவதற்கு ஒரு கால எல்லை என்பது விதிக்கப்படவில்லை. ஒரு குடியிருப்பாளர் ஒருவர் வேலை கிடைப்பதனால் அல்லது குடியிருப்பாளர் வருமானம் ரூ.2000 என்பதற்கு மேலாக இருக்குமானால் அந்த நிலை ஆறு மாதங்களுக்கு தொடருமானால் அப்படியான குடியிருப்பாளர் சமுர்த்தித் திட்டத்திலிருந்து வெளியேறுகின்றார். கொடுக்கப்பட்ட பணத் தொகையில் ரூ.25 மாதமொன்றுக்கான சமூகக் காப்புறுதிக்கு எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் திரட்டப்படுகின்ற சமூக பாதுகாப்பு நிதியம், பிறப்புகள், இறப்புகள், சுகயினம் ஆகியவை தொடர்பாக கோரப்படும் தொகைக் கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன.
சமுர்த்தித் திட்டத்திலுள்ள சேமிப்பு முறை இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. சமுர்த்தியிலிருந்து பெறுவதில் கட்டாயச் சேமிப்புக் கூறு ஒன்று, மக்கள் வங்கியில் அல்லது இலங்கை வங்கி ஆகியவற்றில் கூட்டுறவு நிறுவனத்தினூடாக சேமிப்புகளாக வைக்கப்படுகின்றன; மற்றையது விரும்பிய சேமிப்பு ஒழுங் குக் கு ஏறி ப “ச முர்தி தரி வங் கரிகளினுTடாக” நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சமுர்த்திப் பயனாளிகள், சமுர்த்தி வங்கியில் ரூ. 500 பெறுமதியான பங்கை, இத்திட்டத்தில் ஓர் உறுப்பினராக இருப்பதற்குக் கொள்வனவு செய்தல் வேண்டும். இதில் சேருவதால், சமுர்த்தி வங்கிகளிலிருந்து
252 .

கடன் பெறுவதற்கான வசதி கிடைக்கின்றது. பெறப்படும் கடன்கள், முதலீடு செய்யும் தேவைகளுக்கும், மற்றும் நுகர்வுத் தேவைகளைக் கருதியும், சலுகையடிப்படையான வட்டி வீதத்தில் கிடைக்கின்றன.
சமுர்த்தியின் கொடுகடன் திட்டம் வெவ்வேறு கடன் பெறும் ஒழுங்குகளுக்கேற்றதாக அரச வங்கிகளினூடாக கிடைக்கின்றன. சமுர்த்தி அபிவிருத்திக் கொடுகடன் ஏற்பாடு (“சாசனா’) மற்றும் சமுர்த்தி முயற்சியாண்மை ஏற்பாடு (‘சாவனா’) ஆகியவை இரண்டு பிரதான ஏற்பாடுகளாக, அபிவிருத்தித் தேவைகளுக்கும், முயற்சியாண்மையாளர் கடன்கள் என்ற விதத்திலும் கிடைத்துள்ளன. இவற்றை விட, மற்றைய சிறியளவான ஏற்பாடுகளும் வேறு கொடுகடன் தேவைகளைக் கருதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
முதல் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக இரண்டு வகையான ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்படடன. முதலாவதில், சமுர்த்தி பெறுவோரின் உழைப்பும் மற்றும், சிறு செயற்திட்டங்களாக உள்ளுர் உட்கட்டுமான புனரமைப்பு அபிவிருத்தி ஆகியவை குறித்து நிறுவப்பட்ட சமுர்த்தி அதிகார சபையின் நிதிகளிலிருந்தும் அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி ஆணையாளரின் திணைக் களம் , இரண்டாவது வகையான மூலதன அபிவிருத்தியின் நிதிப்படுத்தலைச் செய்கின்றது. இதில், பருவகாலம் தவிர்ந்த காலத்து வேலை வசதிகளை சமுர்த்தி பெறுனருக்கு வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இச்செயல்திட்டங்கள் பெரிய அளவில் செய்யப்படுபவை, உள்கட்டுமான மேம்படுத்தல், பாதைகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், பாலங்கள், அணைக்கட்டுகள், குடிநீர் வழங்கும் வசதிகள் மற்றும் சனசமூக நிலையங்கள் போன்ற முயற்சிகளினூடாக முன்னெடுத்துச் செல்லுதல் முக்கிய இடத்தைப் பெற்றது.
மற்றைய சமுர்த்தித் திட்டத்தின் கூறுகள் சமூக அபிவிருத்தி ஏற்பாடுகளை உள்ளடக்கின; இவற்றுள், எழுத்தறிவின்மை நீக்குதல், கல்விக்கான உதவிப் பணம், போதைப்பொருள் தடுப்பு ஒழுங்குகள், மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களுக்கான உதவி, மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டு அல்லது வசதியற்றோராக இருப்பவர்களுக்கு உதவும் ஏற்பாடுகள் - வயது முதிர்ந்தோர், வலுக்குறைந்தோர், இடம் பெயர்ந்தோர், வன்முறைக்கு ஆட்பட்டவர்கள், ஒரு பெற்றோரின் குழந்தைகள் ஆகியோர் இதற்குள் உள்ளடக்கப்பட்டனர். இவை குறித்த ஏற்பாடுகள் முக்கியமாக, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முன்பள்ளிகள் அமைத்தல், வாழ்தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் சமூக ரீதியாக ஒன்று திரட்டல் நடவடிக்கைகள் என்பவை இடம் பெற்றன.
இலங்கை மத்திய வங்கியின் 2001 ஆண்டு அறிக்கையின் தரவுகளின் படி சமுர்த்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத அளவை உள்வாங்கியது; இது அரசாங்க நடப்பு மொத்தச் செலவில் 4 சதவீத அளவினைக் காட்டியது.
253

Page 134
5.5 சமுர்த்தித் திட்டத்தின் பெறுபேறுகள்
வறுமை தொடர்பாக சமுர்த்தித் திட்டம் பல்வேறு முறைகளில் நோக்கியுள்ளது. வெவ்வேறு ஏற்பாடுகள் மூலம் வறுமையின் வேறுபட்ட பரிமாணங்களைத் தீர்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முதன்மைப்படுத்திய முறையில் வருமானத்தைக் கொண்டதாகவும் பண உதவி வழங்கப்பட்ட செயற்கருவி முக்கியமாக பயன்படுத்தப்பட்டது. ஜனசவியத் திட்டத்திற்கும், சமுர்த்தித் திட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது, சமுர்த்தியில் ஒரு செயலூக்கமுடைய சமூக ரீதியாக ஒன்று திரட்டுதல் ஒழுங்கு இல்லாததே. சமுர்த்தியில் முக்கிய அளவுக்கு சமூக செயலாற்றல் இல்லாமை அதனை ஜனசவியத்திட்டத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு மென்மையான திட்டமாகவே கருத முடிகின்றது.
சமுர்த்தி பெற்றவர்களின் தொகை 2001 இன் முடிவில் இரண்டு (2) மில்லியன் குடும்பங்களாகக் காணப்பட்டுள்ளனர். இது, குறைந்த வறுமைக் கோடு ரூ.860 ஒரு மாத தலா வருமானம் (1995/96 நுகர்வோர் நிதி அளவீடு கொடுக்கும் தரவு) என்ற அளவுக்குக் குறைந்ததாக வாழும் குடும்பங்களை விட இரு மடங்கு எண்ணிக்கையாக உள்ளது. இத்தகவல் எதனைக் காட்டுகின்றதென்றால், சமுர்த்தித் திட்டத்தில் இலக்குபடுத்துவது - பெறுபவர்கள் குறித்து - சரியாகச் செய்யப்படவில்லை. சமுர்த்தித் திட்டம் பற்றி உலக வங்கியினால் செய்யப்பட்ட ஒரு மதிப்பீடு கூறுவது, இலக்குபடுத்தும் மட்டங்கள், முதல் நிலைக் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற இலக்குபடுத்தாத திட்டங்களில் பொதுவான மட்டங்களுக்கு ஒத்ததாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாய்வில், சமுர்த்தியினூடாக செலுத்தப்பட்ட பண மாற்றல்களின் பகிர்வினை (இலங்கையின் ஒருங்கிணைந்த கணிப்பீடு 1999/2000) நோக்கும் பொழுது கணிப்பிட்ட தரவுகள் காட்டுவது, மொத்த சமுர்த்தி உணவு முத்திரை வரவு செலவுத் திட்டத்தில், 56 சதவீதம் மட்டும், (வருமானப் பாகுபாட்டில்) ஐந்து பிரிவினராக வகுக்கப்பட்டவர்களில், மிகக் குறைந்த இரண்டு பிரிவினர்களுக்குச் சென்றுள்ளது; எஞ்சிய மிகுதியான 44 சதவீதம் 3வது, 4வது மற்றும் 5வது பிரிவினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. மாவட்டங்களிடையே இலக்குபடுத்தப்படுதல் கூடியளவுக்கு சரியாகவும், ஆனால் அவ்வாறு, ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உள்ளே, இருக்கவில்லை. இதிலிருந்து, அடிமட்டத்தில் காணப்படும் பிரச்சினையாக அதிக தவறான பங்கீடு ஏற்படுவதாகத் தெரிகின்றது. உலக வங்கி ஆய்வு மேலும் தெரிவிக்கும் விடயங்கள் பின்வருமாறு: சமுர்த்தி நன்மைகள் கிடைக்கும் சாத்தியப்பாடுகள், குறைந்த வருமானம் பெறும் பெரிய குடியிருப்பாளர்களிடம் காணப்பட்டுள்ளது; மற்றும் இத்தன்மை பெண்கள் தலைமை வகிக் குமி மற்றும் வலுக் குறை நீ தோரு டைய வீட் டு அலகுகளுகிடையேயும் காணப்பட்டுள்ளது. இவ்வாய்விலிருந்து வருகின்ற ஒரு
254

குழப் பத்தினை உணர் டு பணி னும் விடயம் , சமுர்தி தி நன் மைகள் செலுத்தப்படுவதில் இனத்துவ ரீதியான சார்புத்தன்மை காணப்பட்டுள்ளது. சமுர்த்தி நன்கொடைகள் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மற்றும் சோனகர், சிங்களவர்களை விட, குறைந்த அளவினையே பெறக்கூடிய சாத்தியப்பாடு இருந்துள்ளது. கீழ்மட்டத்திலுள்ள மொழித் தொடர்புகள் தடையாக இருப்பதுடன், சமூக அரசியல் பாரபட்சம் இதில் பிரதான பங்களிப்பினைச் செய்துள்ளது.
கவனிக்க வேண்டிய இன்னொரு பிரச்சினை, இலங்கையில் இலக்குப் படுத்தும் வறுமைத் தணிப்பு திட்டங்கள் அரசியல் மயப்படுத்திய சூழலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமுர்த்திப் பயனாளிகள், சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் ஆகியோர் தெரிவுகள் அதிகளவுக்குச் எதேச்சையான முறையில் செய்யப்பட்டுள்ளன; அரசியல் சார்பு நிலையினைத் தவிர்க்கும் ஒரு நல்ல முறை பின்பற்றப்படவில்லை. சென்றகால அரசாங்கத்தினால் சமுர்த்தித் திட்டம் கூடுதலான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது; இதில் அரசியல் தன்மை சார்புடையதாகக் காணப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
8. தாராளமயமாக்கலுக்கு பிற்பட்ட காலத்தில் வறுமை மட்டங்கள்
பற்றிய ஒரு மதிப்பீடு
தாராளமயமாக்கலுக்குப் பிற்பட்ட காலத்தில் வறுமைத் தணிப்புத் திட்டங்களின் பெறுபேறுகளை மதிப்பிடுவதில், வறியவர்களின் வருமானம், வறுமை மட்டமும் மற்றும் வருமான இடைவெளி நிலை ஆகியவற்றினுடாக வெவ்வேறு திட்டங்கள் தொடர்பான பெற்ற அடைவுகள் பற்றி சில வெளிப்பாடுகளையும் அவற்றின் தன்மையினையும் அறிந்து கொள்ள முடிகின்றது. தாராளமயமாக்கலுக்குப் பின்னரான காலப்பகுதியில் கினிக் குணகம் (Gini Coefficient) வருமான சமமின்மை பற்றிய ஓர் அளவை, மேல் நோக்காகச் சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது; 0.43 (1978/79) ஆக இருந்து 0.45 (1981/82) ஆக கூடியது; (குணகம் கூடுவதும் குறைவதும் முறையே ஒப்பீட்டு வருமானப் பங்கீட்டுச் சமமின்மை கூடும் அல்லது குறையும் நிலையைக் குறிப்பிடும்) மேலும் இக்குணகம் 1986/87 இல் 0.46 என்ற அளவினை அடைந்தது. எப்படியாயினும், வருமானப் பகிர்ந்தளிப்புத் தரவு வேறு விதமான நிலைமையைக் காட்டுகின்றது. அதாவது, 1986/87 - 1996/97 வரையான காலப்பகுதியில், வருமான சமமின்மை குறைவதைக் குறிப்பிட்டுள்ளது. தரவுகளின் படி, மிகக் குறைந்த 40 சதவீதத்தினரின் வருமான பங்கு 14.14 சதவீத்திலிருந்து 15.3 சதவீதத்திற்குக் கூடியுள்ளது; மிகச் செல்வந்த நிலையில் உள்ள 20 சதவீதத்தினர் பங்கு 52.3 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக வீழ்சசியடைந்துள்ளது; கினிக் குணகமும் ஒரு முன்னேற்றமான நிலையினை 0.46 சதவீதத்திலிருந்து 0.43 சதவீதத்திற்கும் மாறியதனைக் காட்டியுள்ளது.
255

Page 135
அட்டவணை 12: வருமானப் பகிர்வு (செலவு அலகுகளினால் பெறப்படும் % வருமானம்)
வருமானப் பிரிவு 1973 || 1978/79 || 1981/82 1986/87 || 1996/97
மிகவறிய பிரிவு, 40%: 1929 16.06 15.25 14.14 15.30 நடுப்பிரிவு 40%: 37.76 34.07 32.79 35.56 34.80 மிகச் செல்வந்தப் பிரிவு 20%: 42.95 49.87 51.96 52.30 49.90 கினிக் குணகம்: 0.35 0.43 0.45 0.46 0.43
மூலம்: இலங்கை மத்திய வங்கி, சுதந்திர இலங்கையின் முன்னேற்றம் 1998
எப்படியாயினும், 1995/96க்கு குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடியிருப்பாளர் வருமானம் மற்றும் செலவு அளவீட்டின் (Department of Census and Statistics, Household Income and Expenditure Survey) தரவுகளின் படி, 1995/1996 இல் கினிக் குணகம் 0.46 இருந்ததைக் காட்டியுள்ளது. அத்துடன் வறுமையின் படுகையும், குறைந்த வறுமைக் கோட்டின் முறைப்படி, 1990/91 இல் 21 சதவீதமாக இருந்து 1995/96 இல் 25 சதவீதமாக கூடியுள்ளதனைக் காட்டுகின்றது. மத்திய வங்கியின் நுகர்வோர் நிதி அளவீடு (Consumer Finance Survey of the Central Bank of Sri Lanka) as TGS6 go), வறுமையின் மட்டம் 1996/97 இல் 19 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்விரு மூலாதாரங்களும் ஒப்பிடக்கூடியவை அல்ல. எனினும், அவற்றின் அடிப்படையில் வறுமை மட்டங்கள் ஒரு வருட பொருளாதார மீட்புக் காலத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. நாட்டின் பொருளாதாரம் பல கஷ்டமான நிலைகளை, அதாவது, கடுமையான வரட்சி, வலுநெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, அனுபவித்தது; வறுமைத் தணிப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பினும் குறைந்த வருமானப் பிரிவில் உள்ளவர்கள் பொருளாதாரத்தின் அதிர்ச்சி நிலைமைகளினால் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலே குறிப்பிட்ட வருமானப் பகிர்வு பற்றிய மூலத்திலிருந்து கிடைத்த தகவல் (குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்) கூறுவது, மிகக் குறைந்த மட்டத்திலுள்ள 4 (5 ந்தின் பிரிவுத் தொகுதி) பிரிவினர்களின் 10 சதவீதத்திற்கு மேலான வருமானம் அரசாங்க மாற்றல்களிலிருந்து (transfer) கிடைத்துள்ளன. மிக வறுமை நிலையிலுள்ள 10 சதவீத குடும்பங்கள் ஜனசவிய/சமுர்த்தி நன்மைகள் அவர்களின் மொத்த மாத வருமானத்தில் 25 சதவீதமாகக் காணப்பட்டுள்ளது. மிகக் குறைந்த நான்கு (ஐந்தின் தொகுப்பு) பிரிவினர்கள், ஐம்பதிற்கும் அறுபதிற்கும் இடைப்பட்ட சதவீத குடியிருப்பாளர்கள், நன்மைகளைப் பெற்றவர்களாகக் காணப்பட்டுள்ளனர்.
256

வருமானப் பகிர்ந்தளிப்பின் தரவுகள் காட்டுவது, வருமானத்தின் (பத்தில் ஒரு கூறான) மிகக் குறைந்த வருமானக் கூறைச் சேர்ந்த 34.4 சதவீதக் குடியிருப்பாளர்கள் சமுர்த்தி/உணவு முத்திரை ஆகியவை பெறுபவர்களல்லர்; அதேவேளை, 6வது கூறைச்சேர்ந்த குடியிருப்பாளர்களில் 38.2 சதவீதத்தினர் மாதமொன்றுக்குச் சராசரி வருமானம் ரூ.4,836 உடையவர்கள் அத்தகைய நன் மைகளைப் பெறுகின்றனர். நண் மைகளின் பெறுகை சரியாக இலக் குப் படுததப் படவில் லை, உணர்மையில் உள்ள நிலையிலி , இலக்குப்படுத்தலில், அதிகளவான தகுதியுடைய குடியிருப்பாளர்கள் தவறவிடப்பட்டுள்ளனர்; அத்துடன் வறியவர்களல்லாத குடியிருப்பாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்பதும் அவதானிக்க முடிகின்றது.
வறுமை கிராமப் புறத்தில் குவிவாக இருக்கும் தன்மை அறியப்பட்டுள்ளது; வறியவர்கள் தொடர்பான வேலை பெறும் துறைகளும் அவற்றின் தன்மையும், இலங்கையின் அபிவிருத்தி முறைமை பலமாக பிரதேச ரீதியாகவும், துறைகள் ரீதியாகவும் குவிவு நிலையினைக் காட்டுவது தெரிகின்றது. உட்கட்டுமான வசதிகளின் கிடைப்பதன் நிலை, பெறுவதன் நிலை ஆகியவற்றின் தரவுகள் இதற்குச் சான்றளிக்கின்றன. புள்ளிவிபரங்கள் காட்டுவது, உட்கட்டுமானம் மற்றும் பொருளாதார சமூக வசதிகள் தலா நுகர்வு மட்டத்திற்கு ஏற்றதாக வேறுபட்டுள்ளன. (அட்டவணை -13) உட்கட்டுமானத்தின் அபிவிருத்தி மட்டங்கள் மற்றும் வசதிகள், தனியார் துறை முதலீடுகளின் ஊக்கப்பாட்டில் முக்கியமான காரணியாக ஒவ்வொரு பிரதேசத்திலும், விளங்குகின்றன.
அட்டவணை 13: துறை ரீதியாக அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள் பெறுதல்
துறை பெறும் வசதி % 4 பயண நேரம் (நிமிடங்கள்)
பாதுகாப்பான உடல்நலம் மின்சாரம் பிரதான வங்கி பேருந்து
குடிநீர் மேம்படுத்தும் LJT60)g5 தரிப்பிடம்
சுகாதாரம்
நகரம் 97 91 84 11 12 13 கிராமப்புறம் 74 72 57 19 28 24 பெருந்தோட்டம் 72 60 43 38 50 44
மூலம்: உலக வங்கி, இலங்கையில் வறுமை மதிப்பீடு - 1999/2000, கொழும்பு.
257

Page 136
வறுமைத் தனிப்பில் ஒரு பிரதான தேவையாக இருக்க வேண்டியது, வறுமைக்குச் சார்பான வளர்ச்சி. இலங்கை தாராள மயமாக்கலுக்குப் பின்னர் 4 சதவீத சராசரி வளர்ச்சியினை அடைந்துள்ளது; கடந்த தசாப்தத்தில் இவ்வளர்ச்சி வீதம் 5 சதவீத அளவாக இருந்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதும் பொருளாதாரப் பெறுமதிகள் அதிகரிப்பதும் உயர்வான வேலைமட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன; ஆனாலும், வளர்ச்சியின் பலாபலன்கள் பொதுவாக வறியவர்களிடையே, இதற்கென்றே வளங்களைத் திசைப்படுத்தினாலன்றி, பரவுதல் சாத்தியமில்லை. சென்ற இரு தசாப்தங்களில் இலங்யிைன் உற்பத்திக் கட்டமைப்பு, விவசாயத்தைத் தழுவியிருந்த பொருளாதாரமொன்றிலிருந்து, சேவைகளும் தயாரிப்புத் தொழிலும் ஆகியவற்றைக் கூடியளவுக்கு தழுவியுள்ள அமைப்பாக மாறிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்தின் பங்களிப்பு 31 சதவீதமாக 1977 இல் இருந்து, அதிகமான வீழ்ச்சியுடன் 2001 இல் 20 சதவீதமான நிலையினை அடைந்தது. விவசாயத்துறையில் வளர்ச்சி, 1951-77 காலப்பகுதியில் 3 சதவீதமாக இருந்து, 1978-96 காலப் பகுதியில் 2.4 சதவீதமாக வீழ்ச்சியுற்றது. 2000 ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மாற்றத்திற்கு விவசாயத்தின் பங்களிப்பு 6.3 சதவீதமாக மட்டும் இருந்துள்ளது; ஒப்பீட்டு ரீதியாக தயாரிப்புத் துறையின் பங்களிப்பு 25.9 சதவீதமாகவும், சேவைத்துறையின் பங்களிப்பு 59.6 சதவீதமாகவும் காணப்பட்டன. எப்படியிருப்பினும், நாட்டின் ஊழியப்படையில் 46 சதவீதத்தினர் விவசாயத்தில் இன்னும் வேலையிலுள்ளனர்; இத்துறையில் வறியவர்களின் அதிகளவான வீதத்தினரும் இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி முறைமையில், விவசாயத்தின் குறைந்து செல்லும் முக்கியத்துவம், இத்துறையின் பிரச்சினைகளை மேலும் பாதித்துள்ளதுடன், இத்தறையில் வாழும் மக்களின் நிலைமையினையும் மோசமாக்கியுள்ளது. உதாரணத்துக்காக, தொழில்நுட்பப் பயன்பாடு, கிடைக்கும் புள்ளிவிபரங்களிருந்து பார்க்குமிடத்து, உழவு இயந்திரங்களின் பயன்பாடு விவசாயத்துறையில் மிகக் குறைந்தளவில் இருக்கின்றது; மற்றைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து பிரதேசத்தின் சராசரிக்கும் குறைவாகக் காணப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் தொடர்பாக பெறுவது குறைவாக இருப்பது குறைந்தளவான உற்பத்தித்திறன் என்பதுடன், விவசாயத்தில் போட்டித் தன்மையின் வீழ்ச்சியினையும் ஏற்படுத்துகின்றது. விவசாயத்தில் செயற்பாட்டு ரீதியாக தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது, கூடுதலான வெளியீடு மற்றும் உயர்வான வருமானம் ஆகியவற்றை இத்துறையில் உள்ளவர்களுக்குக் கொண்டுவருகின்றது. மேலும், விவசாயத்தில், கிராமப்புறத்தில், உயர்ந்த வருமானத்தைப் பெறுபவர்கள் தங்களுடைய வருமான தி தைக் கூடுதலாக விவசாய மல லாத நடவடிக்கைகளிலிருந்து பெறுகின்றனர் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.
258

அட்டவணை 14:
கிராமப்புற வருமானங்களில் உள்ளமைவு
கிராமப்புற வருமானம் விவசாயமல்லா முலப் பங்கு (ரூ/மாதம்) (%)
OOO 25-30
2000 35-40
3000 50-55
4000 65-70
5OOO 75-80
மூலம்: உலகவங்கி, இலங்கையில் ஒன்றிணைந்த வறுமை அளவீடு, 2000/2001,
கொழும்பு
இலங்கையின் மிகக் கூடுதலான ஏற்றுமதி வருவாய் தரும் தொழில்கள், அதாவது தேயிலைத்துறை, தைத்த ஆடைகள் தொழில், மற்றும் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள், அதிகமாக உற்பத்தி மட்டத்தில் வறிய பெண்களைப் பயன்படுத்துகின்றனர். இத்தொழில்கள் நாட்டின் வளர்ச்சி முறைமையிலும் சென்மதிநிலுவை அமைப்பிலும் முக்கியமான இடத்தினைப் பெற்றிருப்பினும், இத்துறைகளில் வேலையிலுள்ள பெண்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்; அத்துடன் வறுமை நிலையில் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர், இது குறிப்பாகப் பெருந்தோட்டத் துறை தொடர்பாகக் கூற வேண்டியது, துறை ரீதியான வளர்ச்சியும், அது வறியவர்களுக்குச் சார்பாக, உணர்ந்த வகையிலும், செயலூக்க முயற்சிகளினுாடாக, இருப்பதும் அவசியமாகின்றது.
இலங்கையில் வறுமைக்கு எதிரான திட்டங்கள், பெண்களின் சமூகங்களின் அபிவிருத்தியில் பங்களிப்பினை எடுத்துக்காட்டுகின்றன. பெண்களின் பங்களிப்பினை மேம்படுத்துவதும், பயன்படுத்துவதும் இருபக்க நோக்கில் வறிய பெண்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையில், பெண்களைப் பொறுத்த வரை போற்றத்தக்க முறையில் எழுத்தறிவு கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள பொழுதும், இத்துறைகள் குறித்து பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இன்னும் தொடர்ந்து செல்லுகின்றன. பெண்பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் கல்வி குறித்து, அடுத்த தலைமுறைக்கு, நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு முக்கிய பங்களிப்புச் செய்வது அறிய முடிகின்றது; இது கருவளம், மற்றும் குழந்தை, தாய் மரண வீதங்கள் ஆகியவை தொடர்பாக ஆக்கபூர்வமான விளைவினையும்
259

Page 137
கொண்டு வருகின்றது. ஆராய்ச்சியின் தரவுகளின்படி, தாயின் ஒரு வருடக் கல்வி ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளிடையே 9 சதவீத இறப்பு வீத வீழ்ச்சியினைக் கொண்டு வரமுடிகின்றது என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிமையளித்தலும், அவர்களை பங்கு கொள்ளும் விதத்தில் ஊக்குவிப்பதும், நாட்டின் வறுமைத் தணிப்பு முறைவழியில் தலைமைத்துவப் பங்கினை வகிக்கும் முறையில் செயலூக்கமான முயற்சிகள், நாட்டின் அபிவிருத்தி தொடர்பான முறையில் புதிதாகக் கண்டறியும் ஆற்றலையும் அறியத்தருகின்றது. வருமான வறுமையானது அதிகளவு இடைவெளியினை ஆண் - பெண் வறுமை மட்டங்களுக்கிடையே காட்டுவதாக இல்லையெனினும், பால்நிலை ரீதியாக அதிகாரமளித்தல் குறிகாட்டியின் படி, பெண்கள் உரிமையளித்தல் குறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. பெண்களின் அரசியல் பங்கேற்றலில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக உள்ளன; இதே நிலை பெண்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகள் தொடர்பாகவும் இருப்பதை அறியலாம். வறுமை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெண்களின் புலனுணர்வு மற்றும் அவர்களின் குடும்ப மற்றும் சமுதாய அடிப்படையிலான அனுபவங்கள், அபிவிருத்தி முறைவழிக்கு ஒரு மக்கள் சார்ந்த நிலைப்பாட்டினைத் தருகின்றது. பெண்களின் உழைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒரு மேலேற்றும் ஊக்கப்பாட்டை தருவதுடன், வறுமையிலிருந்து மீட்சி பெறுவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
வெவ்வேறு நாடுகள் வேறுபட்ட முறைகளைக் கையாண்டு வறுமை நிலைக்கு பரிகாரம் தேடுகின்றன. இவ்வேறுபட்ட உபாயத்தில் நல்ல அம்சங்களும் பலவீனங்களும் உண்டு. இலங்கையின் அனுபவம் காட்டுவதைப் போல். இவை தொடர்பான உபாயங்கள் இரண்டு வகையினைச் சேர்ந்தவை. அதாவது, நாடுகள் புறம்பான வறுமைத் தணிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், இன்னொன்று வறுமைத் தணிப்பு நடவடிக்கைகளை பேரினப் பொருளாதார ஒழுங்குகளுக்குள் இணைத்தல். வறுமையின் தன்மைகள் காணப்படுவதற்கு ஏற்றவாறு, அவை வேர் மட்டத்தில் நோக்கப்பட்டு வழிமுறைகள் மேற்கொள்ளப்படுதலுடன், ஒழுங்கு முறையான கட்டமைப்புகள் முறியடிக்கப்பட்டு, துருவமுனைப்புகள் ஒரப்படுத்தல் விளைவுகள் ஆகியவை எழுவதைத் தடுத்தல் வேண்டும். புறம்பான வறுமைக் கெதிரான திட்டங்கள் உருவாக்குமிடத்து அவை நிலைத்துச் செல்லக் கூடியவையாக நீண்ட காலத்தில் இருத்தல் வேண்டும். வறுமைத் தணிப்பு நடவடிக்கைகளின் சாதனைகளை உறுதிப்படுத்துவதில், வறுமை தொடர்பாக கவனஞ் செலுத்தும் பொழுது அதனுடைய எல்லா முக்கியமான விளைவுகளையும் விரிவான கொள்நெறி முறைமைக்குள் கொண்டுவருவதுடன், அவற்றிற்கான தேசிய மட்டத்திலான மையப்பாட்டையும் வலியுறுத்துதல் வேண்டும். இலங்கையும் “வறுமைத்தணிப்புக்கான தேசியத் திட்டம்” என்ற நிலையிலிருந்து “வறியவர் சார்பான” தேசிய அபிவிருத்தித் திட்டம் என்ற நிலைக்குச் செல்லுதல் வேண்டும்; இதில் நாட்டின் கொள்நெறிச் சட்டகம் ஒரு வறியவர் - சார்ந்த நிலைப்பாட்டை பிரதிபலிப்பது அவசியம்.
260

வறுமைக்கு எதிராக இலங்கையில் எடுக்கப்பட்ட வழிமுறைகளின் உரையாடலில் முன்னுக்கு வந்த விடயங்களில் கவனிக்கத் தவறிய அம்சங்கள் அல்லது சரியான முறையில கவனஞ செலுத்தப் படாதவை இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய விடயங்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தி வறுமையினை அதனுடைய வேர் மட்டத்திலான காரணங்களை இனங்கண்டு முறியடித்தல் என்பவற்றில் இலங்கையில் எதிர்காலத்தில் வறுமைத் தணிப்பு முயற்சிகள் வெற்றியளித்தல் சாத்தியமாகலாம்.
பரிந்துரைகள் ל
வறுமைத் தணிப்பு பற்றிய நடவடிக்கைகளை திட்டமிடும் பொழுது, குறுங்கால, நீண்டகால அம்சங்கள் ஆகியவை கவனததில் கொள்ளப்படுவதுடன், இவ்விரு கூறுகளும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒருங்கிணைதல் வேண்டும் குறுக்காலக் குறிக்கோள், வறியவர்களின் தற்காலிகமான பாதுகாப்பினை, பொருளாதாரம் நல்லவிதமான வாய்ப்புகளை, அவர்களின் பலவீனங்களைக் குறைத்து வறுமையிலிருந்து வெளியேறும் வரை, வழங்குதல் தேவையாகின்றது. நீண்ட கால உபாயத்தில் எல்லா வாய்ப்புகளும் நாட்டின் பொருளாதார ஆட்சி முறைமையிலிருந்து வருபவை என்னும் உறுதிப்பாடு இருத்தல் வேண்டும்.
7.1 புறம்பான வறுமைத் தணிப்புத் திட்டம் பற்றிய முன்னேற்றங்கள்
குறுங்கால இலக்குகள், குறிப்பிட்ட நேரத்தில் நாட்டிலுள்ள வறுமைக்கெதிரான திட்டத்துடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட முடிகின்றது. சமுர்த்தித் திட்டத்தின் உரையாடலில் இனங்கண்ட குறைபாடுகளைக் கவனத்தில் கொண்டு, குறுங்காலத்தில் அவற்றினால் வழங்கப்படும் உதவியின் பொருத்தப்பாட்டையும் தரத்தினையும் முன்னெடுத்துச் செல்லுவது தேவைப்படுகின்றது இவை தொடர்பாக இலக்குப்படுத்துதல் முன்னேற்றப்படுத்துவதுடன், இனத்துவ ரீதியான, அரசியல் ரீதியான சார்புத் தன்மைகள் இருப்பதை நன்மைகள் செலுத்தப்படுவதில் நீக்கப்படுதல் அவசியம். இத்திட்டத்தினைக் கொண்டு நடத்துவதில் அரசு முகி கரியமான பங்களிப் பைச் செய்து வருவதனாலி , அரசியல் செல்வாக்குகளிலிருந்து, நன்மைகள் வழங்சப்படுதல் பாதுகாக்கப்படுவதற்கான ஒரு முக்கிய ஒழுங்கமைப்பிற்கு உள்ளாகவே இருத்தல் வேண்டும். இதனைக் கூடியளவுக்கு அடைந்து கொள்வதற்கு, ஊக்குவிப்பாளர்கள், பயனாளிகள் ஆகியோரின் தெரிவு மறைவின்றிச் செய்யப்படுவதும், தெளிவாக விதிக்கப்பட்ட தகுதி விதிகள் இதற்காக விதிக்கப்படுதலும் முக்கியமாகின்றன. விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல் அத்துடன் கூடிய கண்காணிப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுதல் இனத்துவ ரீதியான சார்புத் தன்மையைக் குறைத்துக்
261

Page 138
கொள்ளலாம். மாகாணங்களுக்குள்ளே, இலக்குப்படுத்துதலை மேம்படுத்துவதற்கு, வறியவர்கள் பங்கேற்றுக் கொள்ளுதலைத் திட்டத்தில் பலப்படுத்திக் கொள்ளப்படுதல் அவசியமாகின்றது. சமூக ரீதியாக ஒன்றுதிரட்டல் தொடர்ந்து ஏற்பட்டுச் செல்லும நிகழ்வாக இருப்பது முக்கிய தேவையாக உள்ளது, இது அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார மற்றும் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக முன்னேற்றத்தையும் கொண்டு வர உதவுகின்றது. வறுமைத் தணிப்பு முறை வழி மற்றும் வறியவர்கள் தம்முடைய பிரச்சினைகளையும் கரிசனைகளையும் நல்ல முறையில் வெளிப்படுத்துவதற்கு, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது பற்றிய விழிப்புணர்வும் உண்டாக்கப்படுதல் வேண்டும். வறியவர்களுடன் உரையாடல் தொடர்புகளும் பலப்படுத்தப்படுவதுடன் அவர்களுடனான தொடர்பாடல் வழிகளும் தொடர்ந்து திறந்திருத்தல், வறியவர்களின் தேவைகளின் அடிப்படையில் முறைவழி செயற்பட்டு வருவதற்கு தேவையாகின்றன.
அர்ப்பணிப்புடனான ஒரு வறுமைத் தணிப்புத் திட்டம் தொடர்பான மற்றுமொரு அம்சம் எதுவென்றால், சமூக ரீதியாக எல்லைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் நிரந்தரமான வேலை பெறமுடியாதவர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் இருப்பது அவசியம். பல்வேறு பிரிவினர்களாகிய, பெண்கள், சிறுவர்கள், அகதிகள் என்போருக்கான விசேட வழிமுறைகள் தேவைப்படுகின்றன; இவை அவர்கள் தொடர்பான சமூக சார்புத் தன்மை மற்றும் பலவீனமான நிலைமை ஆகியவை குறித்துத் தேவையாகின்றது. இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு இலக்குபடுத்திய திட்டம் வேண்டப்படுகின்றது. வருமான மட்டத்தில் குறைந்த அளவில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு, வலுக் குறைந்த குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதனால் அவை அரச திட்டங்களினூடாக போதியளவு உதவி வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய மக்கள் வறுமைக்குள் வீழ்ந்து விடாமல் பார்ப்பதற்கு ஒரு “பாதுகாப்பு வலை’ ஒழுங்கு அமைத்தல் வேண்டப்படுகின்றது.
7.2 சொத்து உடைமை
வறுமையைத் தணிப்பதில் ஒரு முக்கியமான அம்சம், மக்களுடைய சொத்துக்கள் பற்றிய உடைமை. நிலப்பகிர்வு, வீட்டு உடைமை மற்றைய சொத்துக்களின் உடைமை ஆகியவை தொடர்பான விடயங்கள் நோக்கப்படுதல் வேண்டும்; தேவையான சட்ட ஒழுங்குமுறை நிறுவப்பட்டு அதனுடாக வறியவர்கள் சார்பாக சொத்துடைமை உரிமை மாற்றப்படுவதற்கு வழிசெய்தல் வேண்டும். அரசிடமுள்ள நிலம் மீள்பங்கீடு செய்தல் மற்றும் வறியவர்களுக்கான வீடமைப்பு, இயந்திரம், தளபாடம் ஆகியவை குறித்து கொடுகடன் வசதிகள் அமைத்துக் கொடுப்பதும் வறியவர்களின் சொத்து அடிப்படையினைக் கட்டியெழுப்புதற்கு உதவுகின்றது.
262

பொருளாதார சுதந்திரம் மற்றும் அது பற்றிய சொத்து உடைமை வழியாகப் பெறப்படும் உரிமை ஆகியவை வறுமைத்தணிப்பின் பிரதான அம்சங்களாக விளங்குகின்றன.
7.8 கிராமிய சேமிப்புகள்
கிராமப்புற மக்களின் குறைந்த வருமானம் காரணமாக கிராமிய சேமிப்புகளும் குறைவாகக் காணப்படுகின்றன. இத்துறையில் சேமிப்பின் முக்கிய மூலாதாரமாக இருப்பது, வெளிநாடுகளுக்குச் சென்று வேலைபார்க்கும் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் இப்பண அனுப்பல்கள் தொடர்பாக விசேடமான ஒழுங்குகள், அவற்றை வங்கி அமைப்பில் நீடித்த காலம் வைத்திருக்க ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவது கிராமிய சேமிப்புகள் ஆகியவற்றை அதிகளவுக்கு கூட்டுவதற்கு உதவமுடிகின்றது. கிராம மக்களின் சேமிப்புகள் அவற்றை வைத்திருப்போருக்கு நன்மை தரக்கூடிய வகையில் திசைப்படுத்தப்படுதல் வேண்டும்; "அவை “கிராமிய மிகை’ நகர்ப்புறங்களுக்கு வங்கியமைப்பினுTடாக மாற்றப் படுவது தவிர்க்கப்படுதலும் தேவைப்படுகின்றது. வங்கி வழக்கினை கிராமிய இடங்களில் பிரபலப்படுத்துவதன் மூலம் முதலீடு, சேமிப்பு தொடர்பாக அவற்றிற்கான வழிகாட்டல் மற்றும் தகவல்கள் வழங்கப்படுவது தேவையாகின்றது; அத்தகைய சேமிப்புகளை அதே இடங்களில் முதலீட்டுச் செயல்திட்டங்களில் பயன்படுத்துவதும் சிறந்த வழிகளாகின்றன.
7.4 பேரின - சிற்றின இணைப்புகள்
பண மாற்றல்கள் மூலம் பொருள்கள் சேவைகள் என்பவற்றை வறியவர்களுக்கு வழங்குதல், கொடுகடன் ஒழுங்குகள் மற்றும் 4 சுகாதார, கல்வி சேவைகள் ஆகியவை, பிரதான அமைப்பொழுங்குகளுக்கு வெளியே எடுக்கப்பட்டு வறுமைத் தணிப்பு வழிமுறைகளாக இருப்பினும், அவற்றினை விரிவான பேரின பொருளாதார சட்டகத்துடன் இணைப்பது முக்கியமானது. ஏனென்றால் அவ்வாறு செய்வது அவ்வழிமுறைகளின் தொடர்ச்சியான பலன்களை அனுபவித்துக் கொள்வதற்குத் தேவையாகின்றது.
இன்னொரு அம்சம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால், பேரினச் சட்டகத்தின் ஒருங்கிணைவினை நீண்ட காலப்போக்கில் ஏற்படுத்துவதன் நிமித்தம் வறியவர்களுக்கு வழங்கப்படும் வேறுபட்ட கொடுகடன்களினூடாக வேலை வசதிகள் உண்டாக்குதலின் முக்கியத்துவம் உணரப்படுதல். தொடக்கத்தில் இக்கொடுகடன்கள் மூலம் நிறுவப்படும் தொழில்கள் வருமானம் அதிகரிப்பு அதனால் வறியவர்களின் நிலைமை முன்னேற்றம் என்பவற்றைக் கொண்டுவருவதுடன், நீண்ட காலத்தில் m
26.

Page 139
விருத்தியடைவதற்கு அவற்றிற்கான சந்தைகள் பெறுவதும் உறுதியான, தொடர்ச்சியான சந்தை வாய்ப்பு ஏற்படுவதும் அவசியமாகின்றன. இத்தகைய சிறிய நிறுவனங்களுக்கு விரிவடைவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பது அவசியமாவதுடன் , அவற்றின் உதவியுடன் தொழில் நிலைமை ஸ்திரப்படுத்தப்படுவது தொடர்ந்து வளர்ச்சியினையும் சந்தைப் போட்டியினால் பாதிக்கப்படாத வகையில், அனுபவித்துச் செல்வது முக்கியமாகின்றது.
பொதுப்பட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்வதில், சிற்றின மட்டத்திலான திட்டங்களையும், பேரினச் சட்டகமைவுடன் இணைப்பது தேவையானதுடன், அதற்காக இரு மட்டங்களிலுமுள்ள உபாயங்களுக்கு மறுவடிவம் கொடுக்க வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. வறிய சமூகங்களில் சந்தைகளை விருத்தி செய்வதற்கும், மற்றும் உற்பத்தி சார்ந்த வேலை வசதிகளை விரிவாக்குவதற்கும் உட்கட்டுமானம் மற்றும் வேறு வசதிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட பிரதேசங்களில் விருத்தியடையச் செய்யவதும் தேவைப்படுகின்றது. விருத்திகுறைந்த பிரதேசங்களை விருத்தியடைந்துள்ள பிரதேசங்களுடன் மற்றைய பிரதான நகர்ப்புறங்களுடன் இணைப்பதற்கு ஒரு நிறைவான பாதைகளின் வலையமைப்பும் மற்றும் ஒரு செயற்பாடு மிகுந்த போக்குவரத்துச் சேவையும் தேவைப்படுகின்றன. நாட்டின் எல்லாப் பிரதேசங்களுக்குமாக தொழில்நுட்ப வசதிகள்ன் பெறுகை முன்னேற்றமடைதல், நாட்டுக்குள்ளே நிலவுகின்ற 'அபிவிருத்தி இடைவெளியினை நிரப்புவதற்கான முக்கிய படியாக விளங்கும். தொலைத்தொடர்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பிரதேசங்களை இணைப்பதற்கு முக்கியமான பங்களிப்பினைச் செய்ய முடிகின்றன; இதனால் சந்தைகளின் பெறுவழி மற்றும் தொழில்கள் பற்றிய அறிவு-வறிய சமூகங்களில் உள்ள கைத்தொழில்கள் தொடர்பாக-ஆகியவையும் முன்னேற்றம் காணமுடிகின்றது.
7.5 சமத்துவமான அபிவிருத்தி
நாட்டின் அபிவிருத்திச் சட்டகத்தின் பின்னணியில், தேசிய மட்டத்தில் கவனத்திற்கு வருகின்ற விடயம் சமத்துவமான அபிவிருத்தி பற்றிய கேள்வியாகும். உட்கட்டுமான விருத்தியிலும் மற்றும் சேவை வழங்குதலிலும் ஏற்படும் பிரதேசங்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இவ்விடயங்கள் அணுகப்படுதல் வேண்டும். இவ்வசதிகள் அபிவிருத்தி குறைந்த நிலையிலுள்ள பிரதேசங்களில் மேம்படுத்துவது, தனியார் துறை முதலீடு குறித்து ஊக் குவிப்பினை வழங்குவதுடன் கூடியளவு வேலை வசதிகளின் உண்டாக்கத்தையும், மேலும் தொடர்ந்த அபிவிருத்தியினையும் கொண்டுவர முடிகின்றது. இத்தகைய மாறறம் ஏற்படுமிடத்து, அது கிராமத்திலிருந்து நகரத்திற்கு மக்களின் அசைவினைக் கட்டுப்படுத்தி நகரப்புறத்தில் வறுமை அதிகரிக்கும் பிரச்சினையைத் தணிப்பதற்கும் உதவுகின்றது. கீழேயிருந்து நோக்கி
264

மேலே செல்லும் அணுகுமுறை அபிவிருத்தியின் தேவைகளை பிரதேசங்களிடையே இனங்கண்டு தொள்வதற்கு உதவுவதுடன்,அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் வளங்களிலிருந்து கூடிய விளைதிறனை பெற்றுக் கொள்ள முடிகின்றது. தேசிய அபிவிருத்தி உபாயம், மக்களின் உணர்த்தப்பட்ட அபிவிருத்தித் தேவைகளை, தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை தேசியமட்டத்தில் உள்ளதுடன் இணைக்கப்பட்டு பிரதிபலிக்கப்பட்ட ஒழுங்கு முறையாக வகுப்பதன் தேவை மிகைப்படுத்திக் கூறுவதற்கில்லை.
7.6 வறியவர்களுக்குச் சார்பான பொருளாதார வளர்ச்சி
தடைகள் நீக்கப்பட்டு, அதனால் வளர்ச்சியின் நன்மைகள் வறியவர்களுக்குச் செல்கின்ற முறையில் வறியவர்களுக்குச் சார்பான வளர்ச்சி என்பது ஏற்பட முடிகின்றது. வறிய உற்பத்தியாளர்களுக்கு தொழில் நுட்பம் செல்லக் கூடியதாக இருப்பின், தேர்ச்சிகளை/ திறன்களை விருத்தி செய்வதும் அவற்றுக்கு பெறுமதி கூட்டப்படுவதும் அவற்றின் வெளியீட்டை அதிகரிப்பதுடன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் முடிகின்றது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு முன்னேற்றமான விலைகள் கிடைக்க முடிகின்றது. வறுமையினை எதிர் நோக்கி வளர்ச்சியினுாடாக வெற்றி காணும் முயற்சியில் வளங்களைத் திசைப்படுத்தும் பொழுது, இந்த முறைவழியில் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் - கைத்தொழில்களில் - அத்தகைய முயற்சிகளின் நன்மைகள் பெறுகின்றனர் என்பது உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வருவது எதுவென்றால், வளர்ச்சியின் பயன் வடிந்து செல்லும் விளைவு' (trickle down effect), தொழில் களிடையேயும் மற்றும் மொத்தமாகப் பொருளாதாரத்திலும் செயற்படத் தவறிவிட்டது. ஆகவே இந்தப் போக்கில் திசை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், துறைரீதியாக ஏற்படும் வளர்ச்சியில் ஒரு நியாயமான அளவினை தொழிலாளர்கள் பெறுகின்றனர் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். அவர்களின் உரிமைகள், காப்பொழுங்கு, மற்றும் தரமுடைய வாழ்வு நிலை ஆகியவை கிடைப்பது பாதுகாக்கப்படுவதும், நியாயமான கூலிகளும் அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குமான தேவையான சட்டகமைவு ஆகியவை முக்கியமான காரணிகளாக விளங்குகின்றன; இவை தொழிலாளர்களின் நிலைமை முன்னேற்றப்படுவதற்கும் அதனுாடாக அவர்கள் வறுமையின் எல்லாப் பரிமாணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு அதிலிருந்து வெளியேறுவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பதை வலியுறுத்த முடிகின்றது.
7.7 பெண்களுக்கு அதிகாரமளித்தல்
வறுமைக்கு எதிரான போராட்டத்தில் விசேடமாக கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டியது, வறிய பெண்களின் அபிவிருத்தித் தேவைகள். தங்களுடைய
265

Page 140
குடும்பங்களில் பெண்கள் செய்யும் பங்களிப்பினை, சமுதாய அபிவிருத்தி என்ற முறையில், மேம்படுத்துவதும் விரிவாக்குவதும் அதிக பலனைத் தரக்கூடியது. பெண்களின் கல்வி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன், உழைப்புப் படையில் பெண்கள் கூடுதலான பங்களிப்பைச் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்கள் பால்நிலை ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆற்றலை வளர்ப்பதற்கு உதவுகின்றது. பெண்களுக்கு அதிகாரமளித்தல், சட்ட ஒழுங்கு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் என்பவற்றிற்கு மேலாகவும் செல்கின்றது. சமூகக் கட்டுப்படுத்தல்கள் மற்றும் கட்டுப்படுத்தும் மனப்பாங்கு நிறுவனங்களிடையே இருந்து வருதல் ஆகியவை முக்கிய காரணங்களாக இப்பிரச்சினையினை அணுகும் பொழுது கவனத்தில் எடுப்பது அவசியமாகின்றது. விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், பால்நிலை சார்பான உரையாடலை பலப்படுத்தித் தொடர்ந்து ஏற்படச் செய்வது பெண்களுக்கு உரிமையளித்தல் விடயத்தின் முக்கியமான அம்சங்களாக கவனித்தல் வேண்டும்.
7.8 விரிவான கொள்நெறிச் சட்டகம்
இத்தகைய விடயங்களை பேரின ரீதியான கொள் நெறி முறைமையில் உள்ளடக்குவது வறுமைத்தணிப்பு நடவடிக்கைகள் செயற்திறன் வாய்ந்தவையாக இருப்பதற்குத் தேவையாகின்றது. வறுமைத் தணிப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக பங்களிக்கும் பல்வேறு கூறுகள், வேறுபட்ட அமைச்சுக்களின் தொழிற்பாட்டு எல்லைக்குள் சேருவதாக இருப்பினும், அவைகள் எல்லாம் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் வெவ்வேறு பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்டு ஒன்றாகச் சேர்க்கப்படுதல் முக்கியமானது. வறுமைப் பிரச்சினை பற்றிய பரிகாரத்தினைத் தேடிக் கொள்வதில், இறைக் கொள்நெறி மற்றும் கைத்தொழில் கொள்நெறி ஆகியவை வறியவர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினைக் கொண்டவையாக இருப்பதும் அவசியமாகின்றது. தேசிய பாதீடு, வறுமைத் தணிப்பு நோக்கில் இனங்கண்டு கொள்ளப்பட்ட மக்களின் தேவைகளைப் பலமாகப் பிரதிபலித்தல் வேண்டும். கைத்தொழில் அபிவிருத்தி ஒரு விரிந்த அடிப்படையைத் தழுவி இருப்பதுடன், பிரதான நகரங்களிலிருந்து விலகி கிராமப்புறங்களுக்கும் பரவுதல் வேண்டும். தனியார் துறை முனைப்புகளுக்கு, உப நகரப்புறங்கள் மற்றும் கிராமப்புறம் ஆகியவற்றில் போதியளவான வாய்ப்புகள் அமைத்துக் கொடுத்தல் தேவையாகின்றது; அதனால் இப்பிரதேசங்களின் அபிவிருத்தி விரைவுபடுத்தப்படலாம். முதலீட்டாளர்கள் குறித்த சினேகபூர்வமான சூழலை ஏற்படுத்துவதும் இப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு உதவுகின்றது. இலங்கையில் கொள்நெறி வகுப்போரை எதிர் நோக்கும் சவால்கள், சமத்துவம் மற்றும் சமூக நீதிசார்ந்த பெறுபேறுகளை அடைந்து
266

கொள்வதற்கு உள்நாட்டு அபிவிருத்தித் தேவைகளையும் நிலைத்துச் செல்லும் அபிவிருத்தியினையும் இணைத்துக் கொள்வதில் எழுகின்றன.
தற்பொழுது மேலாண்மை செலுத்தும் பொருளாதாரக் கருத்து நிலை உலகளாவிய சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட அபிவிருத்திப் பாதை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. வளங்களுக்கான தேவை, உயர்ந்தளவான பொருளாதாரங்களின் இணைப்பு, உலகளாவியூ" அமைப்பில் தங்கியிருத்தல் என்பவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தம்முடைய அமைப்புகளில் இக்குறிப்பிட்ட காரணிகளுக்கு ஒத்திசைவாக மாற்றங்களை ஏற்படுத்தும் கட்டாய நிலைகளும் எதிர்நோக்கப்படுகின்றன. சந்தைகளின் விரிவாக்கங்கள் மற்றும் முதலின் வளர்ச்சி ஆகியவை அதிகமான பெறுபேறுகளைக் கொண்டுவர உதவுகின்றன. இத்தகைய நிலைகள் போதியளவுக்கு இல்லாவிடில், வளர்ச்சி, அதனால் ஏற்கனவே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அருமையாகக் கிடைக் கும் வளங்களின் அடிப்படையின் விரிவாக்கம் ஆகியவை நடைபெறுகின்றன. எப்படியாயினும், வளர்ச்சியினதும், முதலின் விருத்தியும் தேறிய ரீதியில் ஒரப்படுத்தல் மேலும் வறுமையாக்குதல் என்ற விளைவுகளுக்கு இடமளிக்கத் தேவையில்லை. வருமான இடைவெளி, வளர்ச்சியின் பலன் போதியளவுக்கு வடிந்து கீழே செல்லுவது தோல்வியடைவதும், மற்றும் உழைப்பினது முதல் விரிவாக்கத்தினால் சுரண்டப்படுதல் மற்றும் உழைப்பினர் இழிவு நிலைக்குத் தள்ளப்படுதல் ஆகியவை நன்கு உணரப்பட்டு குறிகொண்ட வழிமுறைகள் மூலம் தவிர்க்கப்படுதல் வேண்டும். உழைப்பின் உற்பத்தித் திறனை, பயிறகி மூலம் மற்றும் அவர்கள் தகவல்கள் பெறுவதனை வசதிப்படுத்தல் என்பவற்றினூடாக மேம்படுத்துவதுடன், இவை உடலுழைப்பாளிகளின் நிலையினையும் முன்னேற்ற உதவுகின்றன.
இன்று இருந்து வரும் அபிவிருத்தி மற்றிய கருத்தாடலில், கொவன் LDsbgb G6ş6ðJ6öt (Cowen & Shenton) ஆகியோர்,இரண்டு விதமான அபிவிருத்தி பற்றிக் கருத்துரைத்துள்ளனர்; அதாவது "இயல்பாயுள்ள அபிவிருத்தி, குறிக்கோளமைந்த அபிவிருத்தி’. முதலாவது வகை ஓர் உள்ளார்ந்த ரீதியான செயற்பாடுடைய அல்லது இயங்கு விசை கொண்ட முறையானது; மற்றையது குறிக்கோளமைந்த, உணர்த்தப்பட்ட வகையான அபிவிருத்தி, இதில் முதலாவது வகையில் ஏற்படும் பாதகமான முறைவழிகளுக்கு ஈடுசெய்யும் முறையில் இரண்டாவது வகை அபிவிருத்தி பங்களிப்புச் செய்கிகள்றது. இவ்விரு முறை வழிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குவதில் அர்த்தமுள்ள அபிவிருத்தியினை அடைவதற்குத் தேவையாகின்றன.
நாட்டின் பேரின ரீதியான சட்டகமைவு வேறுபட்ட தேவைகளுக்கு ஏற்றதாக பதிலிறுப்பு முறையில் அமைவதும் வேண்டப்படுகின்றது; அத்துடன் இது ஒரு புறம்பான திட்டத்தினை உள்ளடக்குவது, பிரதான பொருளாதார அமைப்புகள், ஆட்சிமுறை ஆகியவற்றினால் விளைவிக்கப்படும் பிரச்சினைகள் அல்லது
267

Page 141
கவனிக்கத் தவறிய நிலைமைகள் என்பவை குறித்து முகம் கொடுப்பதற்குத் தேவைப்படுகின்றது.
7.9 அரசாங்கத்தின் பங்களிப்பு
அரசு வறுமை ஒழிப்புத் தொடர்பாக முக்கியமான பங்களிப்பினைச் செய்கின்றது. அரசாங்கம் ஒரு கட்டமைப்பினை ஆக்குவதும் அதனுடாக வருமானம் பகிர்ந்தளிப்பில் சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுதல் வேண்டும். இப்பிரச்சினைகளை கொள்நெறி வகுப்பதில் முன்னுக்குக் கொண்டுவருவதும், வேண்டிய சூழல், இக் கருத்துக்கள் குறித்து உள்வாங்குதல் என்பது குறித்து வளர்த்துக் கொள்வதும் அரசின் பொறுப்பாக உள்ளது. பொருளாதாரத்தில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அரசாங்கம் படிப்படியாக கட்டம் கட்டமாக விலகிக் கொள்ளும் பின்னணியில் அரசின் பங்களிப்புப் பகுதிகளைத் தெளிவாக இனங்கண்டு அதனுடைய பொறுப்புகளையும் சரியாக வரைவிலக்கணப்படுத்தி வகுத்துக் கொள்வதும் முக்கியமான தேவையாகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் அனுபவத்தில், வறுமைப் பிரச்சினையினை சந்தை அமைப்பு, சில குறிப்பிட்ட தலையீடுகள், வழிகாட்டல்கள் இல்லாமல் தீர்வை நோக்கிச் செல்ல முடியாது. அரசாங்கம் தொடர்ந்தும் இயைபூக்கமான நிலைமாற்றம் ஏற்படுத்தும் பங்களிப்பினை செய்வது முக்கியமாகின்றது; இது வறியவர்களை ஒன்று திரட்டுதல், மற்றும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையமைப்பினை, உடனடியான நிவாரணம் வழங்குதலில், ஏற்படுத்திக் கொடுப்பதும் பிரதான பொறுப்பாக உள்ளது. அரசாங்கம் மேலும், நாட்டின் சிந்தனையினை திசைப்படுத்தி வறியவர்களுக்குச் சார்பான ஒழுங்கமைபபினை நிறுவுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளின் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றது. அத்துடன் அரசாங்கம் தனியார் துறையினைப் பொறுத்து இலங்கைச் சமூகத்தில் ஒரு பரவலான பகுதியினர்க்கு நன்மை கொண்டுவரும் முறையில் கைத்தொழில் அபிவிருத்தியின் போக்குகள் தொடர்பாகவும் வழிநடத்தும் பணியும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் முக்கியம். இனத்து" ரீதியான மற்றும் பால்நிலை ரீதியான சார்பு நிலைகளை நீக்குவதில், குறிக்கோளமைத்து உணர்த்தப்பட்ட வகையில் செய்யப்படுவதும், அதில் அரசு ஒரு தலைமையான வழிகாட்டல் பொறுப்பினை, ஏற்பதும் முக்கியமாகின்றது; இத்தகைய நடவடிக்கைகளில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சட்ட ஒழுங்குகளைக் கட்டியெழுப்புதல், இனப் பிரிவினரைப் பாரபட்சப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு, அரசின் பங்களிப்பும் வழிநடத்தலும் முக்கியமாகின்றன. அடிமட்டத்தில் உரையாடல் பலப்படுத்தப்படுவதுடன், தொடர்பாடல் முறைகளும் திறந்த வகையில் அனுமதிக்கப்பட்டு மக்கள், மற்றும் அரசாங்கம் ஆகிய இரு சாராருக்குமிடையே தகவல் போவதும் வருவதும்
268

இலகுவானதாக செய்தல் தேவைப்படுகின்றது. அரசாங்கம் சந்தைகளை உண்டாக்குவதில், சந்தைகள் கிராமிய உற்பத்தியாளர்களுக்கு பெறுகின்ற வாய்ப்புகள் முக்கியமானவை. பங்கீட்டு வழிகள் நிறுவப்பட்டு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் உயர்ந்த தரமுடைய உள்ளிடுகள் கிடைக்கக் கூடியவையாகச் செய்வதும், கிராமிய விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு, முக்கிய தேவைகளாகக் கவனிக்கப்படுதல் அவசியம்.
7.10 அதிகாரம் பகிர்ந்து கொள்ளுதல்
சமுகத்தினருக்கு கிட்டியதாக அதிகாரம், பகிர்ந்தளிப்பினால் செய்வது வறியவர்களுக்குச் சார்பான ஆட்சி ஒழுங்கில் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. நாட்டின் சனநாயக அரசியல் கட்டமைப்பினைப் பலப்படுத்தவதிலும் வறியவர்கள் சார்ந்த அபிவிருத்தியினை மேம்படுத்த உதவுகின்றது. அபிவிருத்தி முறைவழியில் மக்கள் பங்கெடுத்துக் கொள்வதில், அரசியல் அதிகாரம், மக்களின் தேவைகளை அடைந்து கொள்வதில், கைக்கு எட்டக்கூடியதாக இருத்தலும் தேவைப்படுகின்றது. எப்படியாயினும், இலங்கையில், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் வேறு ஓர் அரங்கில், சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கின்றது. ஆனாலும், தீர்மானங்கள் எடுப்பதற்கான அதிகாரமும் நிறுவன ஒழுங்கும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் - உள்ளூர் அடிப்படையிலானவை குறித்து - கீழ் மட்டங்களுக்குச் செல்லுதல் முக்கியமாகின்றது. இது எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகின்றது.
7.11 சமாதான முறைவழி
இலங்கையில் சமாதானம் அடையப்படுதல் ஒரு முக்கியமான பங்களிப்பாக வறுமைத்தணிப்பு தொடர்பாக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. சமாதானம் நிலவும் பொழுது உற்பத்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு வளங்கள் திசைப்படுத்த முடிகின்றது; அத்துடன் முதலீடு அதிகரிப்பதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுகின்றது. 1980 - 2001 காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு மேலான அளவு பாதுகாப்புத் தேவைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. போர்ப் பிரதேசங்களில் சொத்து அழிவும் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதும் நாட்டுப் பொருளாதாரம் தொடர்பாக பாரதூரமான சுமைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதப் பாதிப்புகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார இடர்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன; படைகளுக்கான அதிகரித்த செலவுகள் நாட்டின் வளங்களின் வீண் விரயத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பின்னணியில், சமாதானம் வெற்றியளித்தல் முக்கியமான பலன்களை ஏற்படுத்தி, வறுமைத் தணிப்புக் குறித்து பொருளாதார
269

Page 142
பயன்பாட்டுக்கான வளங்களின் அதிகரிப்பையும், மோதல் சார்ந்த வறுமை நிலையின் பாதிப்பினையும் நிறுத்தும் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்த முடிகின்றது.
8. முடிவுரை
அபிவிருத்தியின் தோல்வியின் விளைவே வறுமைத் தணிப்புக்காக எடுக்கப்படும் முயற்சிகள் ஆகியவற்றின் தேவையினைக் கொண்டு வந்துள்ளது. வறுமையினை நீக்குவதில் முட்டுக்கட்டையாக விளங்கும் பொருளாதார மற்றும் அதிகார அமைப்புகளின் பாதிப் புகளை முறியடித்தல் தேவைப் படுவதுடன் , வறியவாகளுக்குச் சார்பான ஒழுங்குகளை ஏற்படுத்துதலும் அவசியம். 2001 இல் ஐ.நா. திட்டத்தின் அறிக்கையில் வறுமையினை வெற்றிகொள்வதில், கூறப்பட்டது, ‘வறியவர்களல்லாதவர்கள் வறுமையை அகற்றுவதில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும்; அல்லாவிடில், வறியவர்கள் ஒன்று சேர்ந்து அதனை நீக்குவதற்கான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பார்கள்’. இவ்விரண்டு அம்சங்களும் சேர்ந்து வறுமைத் தணிப்பு தேசிய மட்டத்திலான நோக்கினையும் உணர்வினையும் ஏற்படுத்துவதுடன், அதற்காக சமூகத்தில் எல்லாப் பகுதியினரையும், மற்றும் நாட்டின் பொருளாதார, ஆட்சி ஒழுங்கின் அமைப்புகளின் எல்லா அலகுகளையும் ஒன்று சேர்த்து நடவடிக்கைகள் வழிநடத்தப்படுதல் வேண்டும்.
உசாத்துணைகள்:
1. Department of Census and Statistics 1995/96, Household Income and
Expenditure Survey, Colombo.
2. UNDP, Human Development Report, Making New Technologies Work
for Human Development, Oxford University Press, 2001.
3. Jeyasuriya Laxsiri, Welfarism and Politics in Sri Lanka, University of
Western Australia, 2000.
4. The World Bank, Sri Lanka Poverty Assessment, 1995, Washington.
5. The World Bank, An Empirical Evaluation of Samurthi Program (draft
paper), 2000.
6. SAARC, Report on the Independent South Asian Committee on Poverty
Alleviation: Meeting the Challenge, 1992.
7. Shanmugaratnam, N. On the Meaning of Development: An Exploration
of the Capability Approach. in Forum for development Studies, 2001.
270

அத்தியாயம் 7
சீர்திருத்த நிகழ்ச்சி ஒழுங்கும் வறுமைத் தணிப்புத் திட்டங்கள் எதிர்நோக்கும் சவால்களும்
கலிங்கா ரியூடர் சில்வா, மிறியம் பேர்னாந்து மற்றும் ஏ.கே.ஜெயநிதி
1 அறிமுகம்
இலங்கையில், சீர்திருத்தத்தினை ஆதரிப்பவர்களும் அதனைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் ஏதோ ஒரு வகையில் வறுமை பற்றிய ஆய்வினை தம்முடைய கருத்துக்களுக்கு ஆதரவு தேடும் வகையில் பயன்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, உலக வங்கியில் இலங்கை குறித்த ஆய்வில் தொடர்ந்து கூறிவந்த கருத்து, நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி, போதியளவு பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யப்படாத நிலையில் சந்தைத் தலைமையிலான விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்தவையும் உயர்வான வறுமை நிலையின் அடிப்படைக் காரணங்களாக இருந்துள்ளன. மறுபுறத்தில், தாராளமயமாக்கலின் விமர்சகர்கள் கூறுவது, வறுமையின் போக்குகள் தொடர்பாக சமூக மற்றும் சமூக-பொருளாதார இருமுனைப்படுத்திய நிலைகள் மற்றும் தாராள மயாக்கலினால் உண்டாக்கப்பட்ட சமூக உராய்வுகளின் கோலங்கள் போன்றவற்றின் வேறுபட்ட வெளிப்படுத்தல்களும் பொறுப்பாக இருந்துள்ளன. அண்மைக் காலங்களில், அரச கொள்நெறிகளைப் பொறுத்தவரை, நவ - g5TJT60ö6oLd LDuLDTä856ö (neo-liberal approach) 8J60ö6 LilygöT6T gJålusö கட்சிகள் தொடர்பாக ஆதரவைப் பெற்றுள்ளதால், அவை சந்தைக்குச் சார்பான கொள்நெறிகளைப் பின்பற்றி வந்துள்ளன. இலங்கையில் வறுமை குறைத்தல் 2 usTujub - Sri Lankan Poverty Reduction Strategy, PRS) LD(i) pub hot 6 bgs “இலங்கையை மீளப் பெறுதல்” (Regaining Sri Lanka) என்ற தலைப்புடைய ஆவணத்தில் தெளிவாகக் கூறப்பட்டவை, வறியவர்களுக்குச் சார்பான (propoor growth) வளர்ச்சியை வலியுறுத்திக் கருத்துரை வழங்கப்பட்டது; அத்துடன் அரசசார்பான பொருளாதார நடவடிக் கைக் குப் பதிலான தனியார் டவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதும் வற்புறுத்தப்பட்டது. இவை, வறுமைத் தணிப்பின் முன் நிபந்தனைகளாகவும் கூறப்பட்டன.
271

Page 143
2002 இல் இருந்து தலையாய அரச துறை, வறுமைத்தணிப்புத் திட்டமாக இருந்துள்ள, சமுர்த்தித் திட்டத்தின் மீது கவனம் செலுத்தி, இவ்வத்தியாயம், அத்திடடம் தொடர்பான சீர்திருத்தம் அல்லது மறுசீரமைப்பு பற்றி எழுந்த உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களை ஆராய்கின்றது. அத்துடன், அத்தகைய அழுத்தங்களின் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான நிகழ்ச்சி நிரலுடன் எவ்வாறு, சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களின் உந்துதலினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன என்பவையும் நோக்கப்படுகின்றன. மேலும், இவ்விடயங்களுடன் தொடர்புடையதாக சீர்திருத்த திட்டம், மறுசீரமைக்கப்படுவதற்கான ஒழுங்குகள், மற்றும் அவற்றின் ஒப்பேற்றுத் தன்மை மற்றும் ஏற்படக் கூடிய சவால்கள் ஆகியவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வு, கிடைக்கும் தகவல்களையும் மற்றும் அண்மையில் முடிந்துள்ள மற்றும் நடந்து கொண்டிருக்கும், “வறுமை ஆய்வு நிலையத்தின்’ ஆராய்ச்சி (p196856fi (Centre for Poverty Analysis) 6T6iu66lub uuu6ir UG55u' (S6f 6T60T. பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி ஆதரவாக வாதிட்டவர்கள் வறுமை தொடர்பாகக் கூறியவற்றின் ஒரு மீளாய் வுடன் இந்த அத்தியாயம் தொடங்குகின்றது. அதற்குப் பினனர், சமுர்த்திக்குப் முன்னராக நடப்பிலிருந்த ஜனசவியத் திட்டம் பற்றி, இலங்கையின் சமூக - அரசியல் மற்றும் கொள்நெறிப் பின்னணியில் வைத்து நோக்கப்படுகின்றது. சமுர்த்தித் திட்டத்தின் பிரதான அடிப்படைகள் ஆய்வு செய்யப்பட்டு திட்டத்தினை மறுசீரமைப்பதற்கான உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் விளக்கப்படுகின்றன. மேலும், அத்தியாயம் ஆலோசனை கூறப்பட்ட மாற்றங்கள் என்பவற்றின் ஒப்பேற்றுத்தன்மையுடன் அவற்றின் தாக்கம் பற்றிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. இறுதியாக இவ்வத்தியாயத்தில், ஒரு யதார்த்தமான சமூக - பொருளாதார மற்றும் அரசியல் உணர்வு நிலையுடைய வறுமை நிகழ்ச்சி நிரல் பற்றிய சீர்திருத்தம் தொடர்பான சிபார்சுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
2. நவ - தாராண்மைவாதம் சார்பான சீர்திருத்த நிகழ்ச்சிநிரலின்
சூழமைவில் வறுமையின் ஆய்வு
இலங்கை அதிகளவு முன்னேற்றத்தினை வாழ்வின் தரத்தின் நிலை தொடர்பாக, (அல்லது மனித அபிவிருத்தி) விரிவான பொதுத் துறை முதலீடு கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகியவற்றில் செய்யப்பட்டதனால் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை உலக வங்கியினால் செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டியுள்ளதனை அறிய முடிகின்றது. ஆனாலும் இதே ஆய்வுகளில் உலக வங்கி நீரூபிப்பது என்னவென்றால், இலங்கையில் “வருமான வறுமை’ பற்றிய சாதனை தோல் வியாக அமைந்துள்ளது. மேலும், இவ் வாய்வுகளில் வலியுறுத்தப்படுவது சந்தை/தனியார் துறை ஆகியவற்றுக்குச் சாதகமான கொள்நெறிகள் தேவையானவை என்பதுடன், அவற்றின் தலையாய பங்களிப்புடன்
272

முனனேடுத்துச் செல்லப்படும் விரைவான பொருளாதார வளர்ச்சி இலங்கை வறுமைத்தணிப்பில் அதிகளவு தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு உகந்தது எனவும் வாதிடப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, உலக வங்கியின் துனுசரணையுடன் செய்யப்பட்ட, ஆய்வுகளில் வறுமைத் தணிப்பு கொள்நெறி மற்றும் திட்டங்களை மீள் திசைப்படுத்தலின் தேவையின் அவசியத்தையும் எடுத்துக் கூறப்பட்டது; அத்தகைய மறுதிசைப்படுத்தல் மூலம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மற்றும் திட்டங்களையும் வறுமைத்தணிப்பில் கூடிய செயற்பாட்டுத் திறன் கொண்டவையாகச் செய்வதற்குத் தேவைப்படுகின்றது.
இலங்கையில் வறுமையினைக் குறைப்பதற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன் நிபந்தனையாக இருப்பதற்கு ஆதாரமாக வாதிடுமிடத்தில், உலக வங்கியின் ஆய்வுகள் மூன்று விதமான ஒப்பீட்டு நிலைகளைப் பயன்படுத்தியுள்ளன. முதலாவதாக, சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் செயலுாக்கத்துடன் பின்பற்றப்பட்டு வந்த தென்கிழக்கு ஆசிய (தெரிவு செய்யப்பட்ட) நாடுகளிலும் இலங்கையிலும், வறுமை, வருமான மட்டங்கள் ஆகியவை பற்றிய ஒப்பீட்டு ஆய்வு நோக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, இலங்கையில், காலப் போக்கிலான வறுமையின் போக்குகள் பற்றி கொள்நெறிச் சூழமைவில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களின் தாக்கத்தினை, அம்மாற்றங்கள் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலிருந்து விலகியவையாக அல்லது அவற்றை நோக்கியதாகச் சென்றவை என்ற விதமாக விளங்கிக் கொண்டு மதிப்பிடுதல். மூன்றாவதாக, இலங்கையில் வெவ்வேறு துறைகள் மற்றும் பிரதேசங்கள் தொடர்பான வறுமையின் தோற்றப்பாடுகளை, வறுமையின் வேறுபட்டநிலைகள் மற்றும் போக்குகள், கூடுதலான முன்னேற்றமுடைய, குறைந்த வளர்ச்சி கொண்ட துறைகள் என்பவற்றிடையே கண்டறிதலும் ஒப்பிடுதலும் முக்கியமாகின்றது. நாடுகளுக்கிடையே வருமான, வறுமை மட்டங்கள் ஆகியவற்றினை ஒப்பிட்டு நோக்குதல் நவ-தாராண்மைவாதம் சார்ந்த மதிப்பீடுகளில் மையமான தன்மையுடையது என்பதும் கவனிக்கத்தக்கது. 1960 களில் இலங்கையின் தலா வருமானம் கொரியாவிலும் பார்க்க உயர்ந்தும், தாய்லாந்துடன் ஏறத்தாழச் சமனாகவும் இருந்தது; அத்துடன், இலங்கையின் சிறிய பருமன் சனநாயக வழிமுறைகளின் முன்னேற்றம் ஆகியவற்றினால் ஏறத்தாழ நிலையான வளர்ச்சியினது சாத்தியப்பாடுகள் நல்லவையாக இருந்தன. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் முடிவில், இலங்கையின் வருமானம் தாய்லாந்திலும் பார்க்க மிகக் குறைந்ததாகவும் மலேசியாவின் வருமானத்தில் நான்கில் ஒரு பங்காகவும், கொரியாவினது வருமானத்தில் பத்தில் ஒரு பங்காக மட்டும் இருந்ததைக் காணலாம். அதே வேளை, இலங்கை, வறுமையைக் குறைப்பதில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இந்தோனேசியாவினை விட, குறைந்தளவான முன்னேற்றத்தினையே காட்டியுள்ளது. இது தேசிய வறுமைக்கோடுகள் அல்லது சர்வதேச வறுமைக் கோடுகள் என்பவற்றில் எதனைப் பயன்படுத்தினாலும் முடிவு ஒன்றுதான்.
273

Page 144
அட்டவணை 1:தெரிந்தெடுத்த நாடுகளில் தலா மொத்த தேசிய உற்பத்தியும் வறுமையின் படுகையும்
வருமானம் - வறுமையின் படுகை அமெ. டொலர் (வறுமைக் கோட்டுக்குக்
கீழான குடிசனத்தின் %)
தலா மொத்த தேசிய சர்வதேச தேசிய உற்பத்தி வறுமைக் வறுமைக்
கோடுகள் கோடு
நாளுக்கு நாளுக்கு 1 GLIT6)f 2 டொலர்
நாடு 1960 கள் 1999
இந்தோனேசியா 55 58O 15 66 20 கொரியக் குடியரசு 04 84.90 >2 >2 LDG36dfu uT 388 3400 - 15 இலங்கை 151 820 7 45 25 தாய்லாந்து 149 1960 >2 28 13
மூலம்: உலக வங்கி, (2002)
உலக வங்கியினது இலங்கை பற்றிய வறுமை மதிப்பீடு 2002 ஆம் ஆண்டுக்கு இலங்கையில் குறைந்த சாதனை வறுமைத் தணிப்பில் ஏற்பட்டிருந்ததனை, மற்றைய தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது பின்வருமாறு விளக்கியுள்ளது:
“இலங்கையின் குறைந்தளவான வறுமைக்குறைப்பு சராசரி வருமானங்களை உயர்த்துவது ஆகியவற்றில் காணப்பட்ட நிலை நவீன பொருளாதார மற்றும் சமூக கொள்நெறிகளைத் தழுவியதில் காட்டிய தயக்கம் காரணமாக நடந்துள்ளது. அத்தகைய கொள்நெறிகள் பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் (அ) அரசு, தனியார் துறை கூடிய திறமையுடன் செயற்படும் நடவடிக்கைகளிலிருந்து விலகுதல், அத்துடன் சந்தைகள் செயற்பாட்டுடன் தொழிற்படுவதற்குத் தடையாக இருக்கும் கட்டுபாடுகளை நீக்குதல்; அவ்வாறு செய்தல் பல்வேறு வாய்ப் புகளை உணர் டாக்குவதற்கு ஒரு கொள் நெறி ஒழுங்குமுறையினை ஏற்படுத்துதலின் முக்கியத்துவம், (ஆ) அரசு, தனியார் துறையினர் வழங்க முடியாத தேவைப்பட்ட உட்கட்டுமான வசதிகளை வழங்குதலில் கவனம் செலுத்துதல்; (இ) சமூக
274

கொள்நெறிகள் வேறுபட்ட தன்மைகளுக்கு இடமளிக்கும் நோக்கில் அமைதல்; இனத்துவ, மொழி அரசியல் , சமயசார்பான வேறுபாடுகள் கொண்ட வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே புரிந்துணர்வு நிலையினை வளர்த்தல்; இவைகளினூடாக வளங்கள் மற்றும் வாய்ப்புகள் என்பவற்றின் நியாயமான, வெளிப்படையான பெறுகையினையும் உறுதிப்படுததுவது முக்கியமாகின்றது. மேலும், சிறிதளவான கூடுதலான மறைவினி மை கொணி ட வறுமைக் கெதிரான திட்டங்களை, மிகத் தாழவுநிலை வறியவர்களை இலக்குப்படுத்தி வழங்குவதும் தேவைப்படுகின்றது.”
இலங்கையில் காலப்போக்கில் வறுமையின் போககுகளை பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளுடன் இணைத்துப் பார்ப்பது கஷ்டமானதாக உள்ளது; காரணம், சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் முரண்பட்ட முறையான நிலைகளைப பிரதிபலித்துள்ளது; மற்றது, அவை சிறு சிறு அளவுகாகச் செய்யப்பட்டன; அத்துடன், உள்நாட்டுப் போரினது தாக்கமும் மற்றும் இயற்கைப் பாதிப்புகள் காரணமாக நுகர்வின் மீதும் நாட்டின் வறுமை மீதும் ஏற்படுத்திய விளைவுகளினால் தோற்றுவிக்கப்பட்ட குழம்பிய நிலையும் காரணமாக இருந்துள்ளது. உலக வங்கியின் வறுமை மதிப்பீடுகள், இலங்கையில் 1985-1990 காலப்பகுதியில் வறுமையில் குறைவுப் போக்கினைக் காட்டியுள்ளது; ஆனால், 1995 இல் எதிர் மாறான போக்கைக் காட்டியுள்ளது. இப் போக்குகள் அதிகமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீத மாற்றங்களையும் மற்றும் போர்நிலை மற்றும் சூழல்-தொடர்பான குழப்பங்கள் அதிர்ச்சிகள் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாகக் கருதப்பட்டன. உலக வங்கியின் கருத்துப்படி பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகள் 1977 இல் ஆரம்பித்து, பின்னர் 1980 களின் முற்பகுதியில் தளர்ச்சியுற்று மீண்டும் 1989 இல் ஓரளவு செயலூக்கத்துடன் பின்பற்றப்பட்டன. வறுமையின் நிலைமைகளை விளக்குவதில், உலகவங்கி இக் குறுங்காலப் போக்குகள் உள்நாட்டுப் போரின் செல்வழிப் பாதை, மற்றும் சூழமைவு அதிர்ச்சிகள், கொள்நெறி மாற்றங்களை விட, காரணங்களாக இருந்துள்ளன என்பதைக் காட்டியுள்ளது. எப்படியாயினும், உலகவங்கியின் வறுமை மதிப்பீடு, 1985 - 1990 காலப்பகுதியில் கண்ட கீழான வறுமைப் போக்கு, 1989 இல் மீண்டும் சீர்திருத்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது வறுமையின் மீது குறுங்காலத்தில் பாதகமான விளைவினை ஏற்படுத்தவில்லை என்பதைத் தெரிவித்துள்ளது.
நவ-தாராண்மைவாதச் சட்டகமைவினைப் பயன்படுத்திய ஆய்வுகள் துறைகளுக்கிடையே மற்றும் பிரதேசங்களுக்கிடையே வறுமையின் படுகை பற்றிய வேறுபாடுகள் மீது கூடிய கவனம் செலுத்தியுள்ளன. கிராமப்புறத்தில் அறிவிக்கப்பட்ட வறுமையின் படுகை மிகக் கூடியதாகவும், அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டத்துறை மற்றும் நகரப்புறத்துறை வந்துள்ளன. கிராமியத் துறையில்
275

Page 145
வறுமையின் விழுப்பாடு 1995 இல் 27 சதவீதம், பெருந்தோட்டத்துறையில் 25 சதவீதம் எனவும் நகரப்புறத்துறையில் 15 சதவீதம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. வறுமையின் போக்குகள் குறித்து, நகரப்புறத்துறை 1985 இல் இருந்து தொடர்ந்து வீழ்ச்சியினைக் காட்டிய் பொழுதும், மற்றைய இரு துறைகளில் ஏற்ற இறக்கங்கள் கூடுதலாகக் காணப் பட்டுள்ளன. பிரதேச ரீதியான வேறுபாடுகளை நோக்குமிடத்தில், நகரப்புறச் சார்பு கூடுதலாக இருந்த மேல் மாகாணம் மிகக் குறைந்த வறுமையின் படுகையினைக் (1995-14%) காட்டியதுடன், துாரத்தேயுள்ள ஊவா மாகாணம் 37 சதவீதத்தினைக் காட்டியுள்ளது.
துறைகள் சார்பான, மற்றும் பிரதேச ரீதியாக எழுந்துள்ள வேறுபாடுகள், வேறுபட்ட பொருளாதார வளர்ச்சி வீதங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளன. இவை மீண்டும், வெவ்வேறு பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கொள்நெறி ஒழுங்குகளின் வேறுபாட்டிலிருந்து எழுந்துள்ளன என விளக்கப்பட்டுள்ளது. “வறுமை குறைந்தளவாக இருந்து ஐயப்பாடில்லாமல் நகரப்புறத்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது: அங்கேதான் மிக முக்கியமான இயக்காற்றலை சார்புடைய நடவடிக்கைகள் - தயாரிப்பும், சேவைகளும் - கூடுதலாக காணப்பட்டுள்ளன' (உலக வங்கி, 2002) மேலும், உலக வங்கி கூறுவது, நிலம் மற்றும் நீர்வளங்கள் ஆகியவற்றின் அதிகளவு அரசுடமை, ஏற்க முடியாத அளவுக்கு அரசாங்க ஒழுங்குபடுத்தல் விவசாயப் பொருள்களின் உற்பத்தி விநியோகம் ஆகியவற்றில் இருந்து வந்துள்ளது; அத்துடன் பாதகமான கொள்நெறிகள் சந்தை சக்திகளின் விருத்தி குறித்து விவசாயத் துறையில் இனங்கண்டு கொள்ளப்பட்ட தடைகளாக கிராமப்புறங்களில் வருமான வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்பு என்பவை தொடர்பாக இருந்து வந்துள்ளன.
நவ-தாராளமயக் கோட்டுபாட்டுக்கு ஏற்றதான நோக்கினைக் கொண்ட, உலக வங்கியின் ஆய்வுகள் இலங்கையில் வறுமைப் போக்குகளை விளங்கிக் கொள்ளும் தேவையைக் கருதி ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த சட்டகமை வினைத் தந்துள்ளது. கிடைக்கக் கூடிய தரவுகளைப் பயன்படுத்தியதுடன், உலக வங்கி நிதிப்படுத்திய ஆய்வுகளும் கிடைத்துள்ள தரவுகளின் இடைவெளிகளை நிரப்பியுள்ளது; இதில் முக்கியமாக மோதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பற்றிய தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், முக்கியத்துவம் கொண்டதாக, உலக வங்கியினால் தொடக்கப்பட்ட வறுமை பற்றிய ஆய்வுகள் நெருக்கமாக உலகளாவிய ரீதியில் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளையும் இணைத்தவையாக அமைந்துள்ளன. உலக வங்கியினால் வறுமை பற்றிய ஆய்வு வறுமைக்கு எதிரான கொள்நெறிகளின் திட்டங்களின் திருத்தங்களைச் செய்வதுடன், பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்வதன் தேவையினையும் பொருளாதார சமூக அமைப்புகளின் குறைபாடுகளை நீககுவதனையும் வலியுறுத்தியது. இப் பிரதான
276

ஆய்வுகளில், அரசின் பருமனைக் குறைப்பதுடன் தனியார் துறைக்கான, மற்றும் சந்தை சக்திகளின் வாய்ப்புகளை விரிவடையச் செய்வதும் முக்கியமான தீர்வுகளாக முன்வைக்கப்பட்டன. இப்பின்னணியில், ஒரு ஆழமான மற்றும் நுட்பரீதியான விளக்கம் இலங்கையின் தனிவகைப் பட்ட - அதனுடைய பரவலாகப் பேசப்பட்டு வந்துள்ள மனித அபிவிருத்தி - நிலை தொடர்பாக தேவையாகின்றது. இது மீண்டும் அரச கொள்நெறிகள் மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்பேணும் சேவைகள் கொண்ட திட்டங்களின் விளைவாகக் கிடைத்தவை என்பதும் மறுப்பதற்கில்லை.
இலங்கையில் வறுமை தொடர்பான உலக வங்கியின் ஆய்வுகள் வளர்ச்சி பற்றிய விடயங்கள் மீது, பகிர்ந்தளிப்பு விடயங்களை விட்டு, கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிலைப்பாடு, ஏற்கனவே அரச நிதிப்படுத்தலினால் எல்லோரையும் உள்ளடக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் பலாபலன்கள் கிடைத்துள்ளதனால் நியாயமானது போலத் தெரிகின்றது. விரைவான பொருள்ாதார வளர்ச்சியின்றி இலங்கையின் நலன்பேணும் அரசினை நிலைத்து நிற்கச் செய்வது சாத்தியமற்றது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். எப்படியாயினும், போரும் மற்றைய சமூக உராய்வுகளின் வெளிப்பாடுகள் இலங்கையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டைத் தருகின்றது; அதாவது, பகிர்ந்தளித்தல் பிரச்சினைகள் வளர்ச்சிப் பிரச்சினைகளைப் போல முக்கியத்துவம் கொள்கின்றன. எடுத்துக் காட்டாக, உலக வங்கியின் ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டதற்கு ஏற்ப, கிராமிய, நகரப்புற ஏற்றத் தாழ்வுகள் - வறுமை மட்டங்கள் தொடர்பாக-உயர்ந்த வளர்ச்சிக்கு சார்பான ஏற்பாடுகள் கிராமப்புறங்களில் தேவையானவை என்பதை வலியுறுத்துவது பொருத்தமானது. ஆனாலும், தற்பொழுது நடப்பிலுள்ள கொள்நெறிகள் கிராமிய-நகரப்புற வேறுபாடுகளையும் மற்றைய வகையான ஏற்றத்தாழ்வுகளையும் தீவிரப்படுத்த கூடிய தன்மைகள் பற்றிய ஒரு மீளாய்வும் தேவைப்படுகின்றது.
இவ்வத்தியாயத்தின் மிகுதியான பகுதிகளில் இலங்கை அரசின் வறுமைத் தணிப்புத் தொடர்பான திட்டங்களை, நாட்டின் சமூக - அரசியல் யதார்த்த நிலைகளையும் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தவிர்க்க முடியாத தன்மைகளையும் கவனத்தில் கொண்டு விளக்கப்படுகின்றன.
3. இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னாக அரசாங்கம் நிதிப்படுத்திய வறுமைக்கு எதிரான திட்டங்கள் பற்றிய ஒரு மேலோடு பார்வை
இலங்கையில் நலன் பேணும் அரசின் முந்திய காலத்து பெறுபேறுகள் அரசாங்கத்தினால் நிதிப்படுத்திய திட்டங்களாக, சுகாதாரம், கல்வி மற்றும் மானிய அடிப்படையில் உணவு விநியோகம் முழுக் குடிசனத்தினரையும்
277

Page 146
உள்ளடக்கியதாக இருந்துள்ளன. இத்திட்டங்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் இறுதிக்காலப் பகுதியில் பல்வேறுபட்ட நிலைமைகள் குறித்த பதிலிறுத்தல் நடவடிக்கையாகத் தொடங்கின. அவற்றில் பின்வருவன முக்கியமானவையாக இருந்தன: 1934/35 காலப்பகுதியில் பெரிய அழிவினை ஏற்படுத்திய மலேரியா நோயின் பரவல்; 1931 இல் இருந்து நிறுவனமயப்படுத்திய தேர்தல் தொகுதி அரசியல், மக்கள் விருப்புவாத அரசியல் கோரிக்கைகள் வெவ்வேறு இடது சாரி மற்றும் தேசியவாத அரசியல் வாதிகளினால் முன்வைக்கப்பட்ட நிலை; மற்றும் அக்காலத்து ஒரு சாதகமான அரசாங்க வருவாய் அடிப்படை வாய்ப்பு கிடைத்த நிலை. எல்லோரையும் உள்ளடக்கிய சேவைகள் கல்வி, சுகாதாரம், மற்றும் அரிசி மானியங்கள் என்பவற்றை விட்டு, பிரித்தானியர் காலத்திலிருந்து வறியோர் நிவாரண ஒழுங்குமுறை ஆதரவற்றவர்களின் நன்மை கருதி நடைமுறைப் படுத்தப்பட்டும் வந்துள்ளது. எல்லோருக்குமான நலன் பேணும் திட்டங்களிலிருந்து மாறி கூடிய கவனஞ் செலுத்தி இலக்குப்படுத்திய வறுமைக்கு எதிரான திட்டங்கள் முன்வந்தன. அரிசிப் பங்கீட்டு முறை நீக்கப்பட்டு அந்த இடத்தில் உணவு முத்திரைத்திட்டம் 1978 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அரிசிப் பங்கீட்டு முறை 1930 களிலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது. எல்லோருக்கும் கிடைத்துள்ள அரிசிப் பங்கீட்டு முறைக்குப் பதிலாக உணவு முத்திரை வறியவர்களை நோக்கி வழங்கப்பட்டது. அரிசி மானியச் செலவு அரசாங்க மொத்தச் செலவில் 17 சதவீதமாகவும் மொத்த தேசிய உற்பத்தியில் (1970 களின் நடுப்பகுதியில்) 6 சதவீத அளவாகவும் காணப்பட்டது. இவ்வாறு உயர்ந்த செலவைத் தாங்கிக் கொள்வதில் பிரச்சினைகளைக் கொடுத்த காரணத்தினால் கூடிய வறுமை!பில் உள்ளவர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் உணவு முத்திரைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அரிசி மீதான மானியங்கள் அரிசி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கக்கேடு என்பதையும் தோற்றுவித்ததுடன் சந்தையில் திரிபு நிலைகளையும் விளைவித்தன. பொருளாதார மந்த நிலை மற்றும் அதிகரித்துச் சென்ற வேலையின்மை ஆகியவை நாட்டின் நலன்பேணும் நடவடிக்கைகளை மீள் ஒழுங்கு செய்யும் தேவையினையும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக படிப்படியாக எல்லோரையும் உள்ளடக்கும் திட்டங்களுக்குப் பதிலாக இலக்குப்படுத்திய ஒழுங்குகள், பயனாளிகளை இனங்கண்டு கொள்வதில் வருமானம் குறித்த அடிப்படையினைத் தழுவிய முறையில், கொள்நெறி ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இப்புதிய ஒழுங்கு முறைகள் நடைமுறைக்கு வந்ததும், பயனாளிகளின் எண்ணிக்கை முக்கியமான அளவு குறைக்கப்பட்டது. இதன் நிமித்தம், உணவுப் பங்கீடு பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட வெட்டுப்புள்ளிக்கு கீழான வருமானமுடைய குடும்பங்கள் மட்டும் தகுதிபெற்றனர். உணவு முத்திரை முறையின் மொத்தச் செலவு 1992 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாகக் காணப்பட்டது; முன்பு 1970 களில் இருந்த அரிசி மானியம், ஒப்பீட்டு ரீதியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருந்தது.
278

மேலும், உணவு முத்திரை முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன் (1979) மானியப்படுத்தலின் தன்மை, பொருள்கள் பங்கீடு என்பதற்குப பதிலாக, வருமான மானியமாக மாறியுள்ளது. இதனுடைய இறைசார்ந்த நயம் எதுவென்றால், உணவு முத்திரையின் பெயரளவிலான (ரூபாய்) பெறுமதி என்பது வரவுசெலவுத்திட்டதிற்கு, இதிலிருந்து, ஒரு “நிலையான” தன்மையினைக் கொடுத்தது. ஆனால் இது பயனாளிகளைப் பொறுத்து பயன் குறைந்ததாக மாற்றுகின்றது; காரணம், உணவின் விலைகள் உயர்ந்து செல்லும் பொழுது உணவு முத்திரையின் மெய்யான பெறுமதி குறைந்து சென்றது. எவ்வாறாயினும், உணவு முத்திரையின் பங்கீடு அரசியல் காரணங்களினால், விதிக்கப்பட்ட வருமானத் தகுதி என்பதை விட்டு, வழிநடத்தப்பட்டதனால் இலக்குப்படுத்திய குறைபாடுகளைக் கொண்டிருந்தது.
1977 இல் இருந்து அரசாங்கத்தினால் கொண்டு வரபட்ட பல வறுமைத்தணிப்புத் திட்டங்கள் நடைமுறையில் காலத்துக்கும் காலம் இருந்து வந்துள்ளன. (அட்டவணை 2) இக் காலப் பகுதியில் பொருளாதார தாராளமயப்படுத்தல் கொள்நெறிகள் அறிமுகம் செய்யப்பட்டதனால் (1977 க்குப் பின்), இப் பின்னணியில், இக்காரணியின் செல்வாக்கு வறுமைக்கு எதிரான திட்டங்களின் தன்மையினைப் பின்னான காலப்பகுதியில் நிர்ணயித்திருப்பதனை அறியமுடிகின்றது. ஒரு புறம், வறுமைக்கு எதிரான திட்டங்கள் 1977 க்குப் பின் தொடக்கப்பட் சீர்திருத்த முறைவழியின் பாதகமான தாக்கத்தினை, மானியங்கள் நீக்கப்பட்டது உள்ளடங்கலாக, ஈடுசெய்யும் முயற்சியினையும் கொண்டிருந்தது. மறுபுறம், சீர்திருத்த முறைவழிக்கு தடையாக இருந்தவற்றினை - வறுமைக்கு எதிரான திட்டங்களில் இருந்து எழுந்தவையும் சேரலாக - நீக்கும் நோக்கமும் புதிய திட்டங்களில் இடம் பெற்றன. மொத்தமாக நோக்குமிடத்து, வெளியிடப்பட்ட குறிக்கோள்கள் நலன் பேணும் நோக்கிலிருந்து வளர்ச்சிக்குச் சார்பாக மாற்றமடைந்ததுடன், தேவையுடைவர்களுக்கு வெறும் வழங்கல்கள் என்ற நிலையினை விட்டு திடமாக தனியார் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகளாகக் கருதப்பட்டன.
இலங்கையில் வறுமைத் தணிப்புக் குறித்து நடைமுறையிலிருந்த திட்டங்கள் இருபக்க, பலபக்க கொடையாளிகள் செல்வாக்குகள், மற்றும் இலங்கையில் உள்நாட்டு ரீதியான அழுத்தங்கள் ஆகியவற்றின் செல்வாக்குகளுக்கு ஏற்றதாக வடிவமைவு பெற்றன. தாராளமயமாக்கப்பட்ட கொள்நெறி நிலைப்பாடுகள் நிலவிவந்ததனால் கூடுதலான கொடையாளி ஆதரவு கிடைக்க முடிந்தது; இது மேலும் கொடையாளி செல்வாக்குகளுக்கு சாதகமான பதிலிறுத்தலையும் பெற்றது. மறுபுறம், உள்நாட்டு அரசியல் சூழமைவு காரணமாக வேறுபட்ட விதமான அழுத்தங்கள் ஏற்பட்டன. இவற்றுள், ஆட்சிபுரியும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் முன்னேற்றம் அடைந்து கொள்வதற்கு, குடிசனத்தில் வறிய பிரிவினரிடையே நல்ல ஆதரவினைப் பெறுவதும் முக்கியமாக
279

Page 147
அட்டவணை 2: w பொதுத்துறையில் தெரிந்தெடுத்த வறுமைத்தணிப்புத் திட்டங்கள் (1977 இல் இருந்து)
திட்டம் தொடக்கம் முடிவு நோக்கு
உணவு முத்திரை: 1979 1994 நலன்பேணல் பாடசாலை மதிய உணவு: 1989 1994 நலன்பேனல் ஒருங்கிணைந்தகிராமிய அபிவிருத்திட்டங்கள்: 1979 2000 வளர்ச்சி 2000 ஆடைத்தொழிற் சாலைகள்: 1990 வளர்ச்சி மாற்றும் முகவர் திட்டம்: 1978 1998 நலன்பேணலும் வளர்ச்சியும் ஜனசவியத்திட்டம: 1989 1995 நலன்பேணலும் வளர்ச்சியும் ஜனசவிய நம்பிக்கை நிதியம்: 1991 1994 நலன்பேணலும் வளர்ச்சியும் சமுர்த்தித் திட்டம்: 1994 நலன்பேணலும் வளர்ச்சியும்
மூலம்: சில்வா, அபயசேகரா, டி சில்வா மற்றும் நாணயக்காரா, 1996
இருந்துள்ளது. அத்துடன் இலங்கையின் தென்பகுதியில் 1971 இலும் மற்றும் 1987-89 காலப்பகுதியிலும் மற்றும் தமிழ்ப் பிரிவினைவாத இயக்கம் 1983 க்குப் பின்னர் வடக்கில் செல்வாக்குப் பெற்ற நிலை ஆகிய நிகழ்வுகளிலிருந்து எழுந்த சவால்களும் எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்தகைய சவால்களுடன், திரும்பவும், அரசு மற்றும் ஆட்சியிலிருந்த உயர்மட்டத்தினர் சமூக நீதிப் பிரச்சினைகளுக்குக் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டிய தேவையும் அதிகரித்தது. 1989 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜனசவியத் திட்டமும் மற்றும் 1994 இல் தொடங்கிய சமுர்த்தி திட்டமும் மேலே குறிப்பிட்ட வேறுபட்ட, முரண்பட்டதுமான செல்வாக்குகளின் தாக்கத்தைப் பிரதிபலித்தன.
ஜனசவியத்திட்டம்
ஜனசவியத்திட்டம் (“மக்கள் அதிகாரம்”) ஒரு முக்கியமான பொதுத்துறைத் திட்டமாக வறுமை ஒழிக்கும் நோக்குடன், பதினொரு சுற்றில் (22 வருடங்கள்) முழுவதும் நடைமுறைப்படுத்தும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டது. திரு. பிரமதாசா, ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரபலமான செல்வாக்குப் பெற்ற அரசியல்வாதியாக அடிமட்ட தொடர்புகள் கொண்டவராக
280

இருந்தவர்; இத்திட்டத்திற்கு தலைமை ஏற்று அவர் வழிநடத்தியதும் முக்கிய அம்சமாகின்றது. ஒவ்வொரு சுற்றிலும், இரண்டு வருடங்களுக்குச் செல்பவையாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், வறியவர்களை இனங்கண்டு தெரிந்தெடுக்கப்பட்டு இத் திட்டதி தின் பயனாளிகளாக நோக்கப் பட்டனர். இவி வாறு இனங்கண்டுள்ளவர்களுக்கு ஒரு நிலையான மாதாந்த காசு உதவி, நுகர்வுப் பகுதி மற்றும் கட்டாய சேமிப்புப் பகுதி என வழங்கப்பட்டது; இதை இவர்கள் பெறும் பொழுது படிப் படியாக வறுமையிலிருந்து, பண உதவி, சலுகையடிப்படையிலான கடன்கள், சமூக ஒன்று திரட்டல், முயற்சியாண்மை மற்றும் தேர்ச்சிப் பயிற்சி - அரசாங்கத்தினாலும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டவை - ஆகியவற்றைப் பயன்படுத்தி வெளியேறும் முயற்சியில் ஈடுபடுதல் எதிர்பாக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் அத்தியாயம் 6 இல் விளக்கப்பட்டுள்ளன. வறுமை பற்றிய சீர்திருத்தம் குறித்து ஜனசவியத்திட்டம் பல ஆக்க பூர்வமான அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவது, எல்லோருக்குமென வழங்கப்பட்ட நலன்பேணும், முன்பு இருந்த, திட்டங்களிலிருந்து விலகிச் சென்ற தன்மை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது; அவ்வாறு, வறியவர்களை இனங்கண்டு கொள்வதில் கூடுதலான புறநிலைச் சார்பான தகுதி நிலைகளை வகுத்துக் கொள்ளப்பட்டது. இத்தகுதி விதி, ஆரம்பத்தில் குடியிருப்பாளர் குறித்து மாதாந்தம் ரூ 700/- வருமானத்திற்கு குறைந்த மட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது; தெரிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் கொண்ட பட்டியல் கிராமிய மட்டத்திலான கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிலிருந்து வேறுபடுபவர்கள் தங்களது கருத்தினை இக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டது. மதிப்பீடொன்றின் படி, முன்புள்ள உணவு முத்திரையுடன் ஒப்பிடும் பொழுது பயனாளிகளின் தொகையில் 31 சதவீத அளவில் குறைவு மாற்றத்தினால் ஏற்பட்டது.
இரண்டாவது, அரசின் உதவியில் வறியவேர்கள் எதிர்பார்த்து நிற்கும் தங்கியிருப்பு முறை முடிவுற்றது; மாறாக பண மாற்றங்கள் வறியவர்களுக்கு இரண்டு வருட காலத்துக்குச் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து வறியவர்கள் படிப்படியாக தம்முடைய சொந்த வாழ்க்கைத் தொழில்களை விருத்தி செய்வது அவசியம். இந்த இலக்கு அடைந்து கொள்வதில் யதார்த்த நிலைக்கு ஒவ்வாததாயிருக்கும் என எண்ணத்தோன்றுகின்றது. ஆனாலும், வறியவர்கள், தம்முடைய வாழ்தொழிலை இரண்டு வருட காலத்தில் ஜனசவிய உதவியினைப் பயன்படுத்தி விருத்திசெய்ய வேண்டிய தேவைப்பாடும் அவசியமாகின்றது.
மூன்றாவதாக, ஜனசவிய திட்டம், சமூகத்தின் உட்கட்டுமான அமைப்பினை, பயனாளிகளில் விரும்பிய உழைப்பினரை ஒருங்கு திரட்டி விருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது; அத்துடன் இத்திட்டத்தினுாடாக வறியவர்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டு தாராளமயப்படுத்தப்படும் பொருளாதார சூழமைவில் ஒப்பீட்டு நயத்தினை
281

Page 148
பெறுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இது, முக்கியத்துவம் கொண்டதாக, அரசியல் உராய்வு நிலைகள் நிலவுகின்ற இலங்கையின் சூழ்நிலையில் காணப்பட்டுள்ளது; வறுமையாக்குவது மேலும் ஏற்படுத்தப்படுதல், நிலவுகின்ற உராய்வு நிலைகளுக்கு கூடுதலாக வலுவூட்டல் விளைவினைக் கொண்டு வரலாம்.
எவ்வாறாயினும், ஜனசவியத்திட்டம் வறுமைச் சீர்திருத்தம் தொடர்பாக பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. முதலில், திறைசேரிக்குச் சுமையாக இத்திட்டம் இருந்ததனால், அதனுடைய அளவு குறைக்கப்பட்டது; இவ்வாறு செய்யப்பட்டது கால எல்லைகள் தொடக்கத்தில் விதிக்கப்பட்டவை உண்மையில் அடைந்த கொள்ள முடியவில் லை. எடுத்துக் காட்டாக, பயனாளிக் குடியிருப்பாளர்கள் ஒரு மொத்தத் தொகையாக, இரண்டு ஆண்டு முடிவில். ரூ 25,000 பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை சிறு தொழில்கள் ஆரம்பிப்பதற்காகத் தேவைப்பட்டால், முதலாகப் பயன்படுத்தலாம். ஆனால், அரசாங்கத்திற்கு இறைசார்ந்த கட்டுப்பாடுகளினால் இது நடக்கவில்லை; ஆனால் ஒரு மாதாந்த வட்டிக் கொடுப்பனவாக 250 ரூபாவைத் தொடர்ந்து, தொகைக் கொடுப்பனவுக்குப் பதிலாக, கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் வருமான ஆதரவு இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் கிடைத்துள்ளது.
அடுத் து, ஜனசவியத் தரிட் டமி அதரி கள வுக்கு அரசியல மயப்படுத்தப்பட்டுள்ளது; இத்திட்டம் தொடர்ந்து செல்லக் கூடிய தன்மை அதிகளவுக்குத் தனிப்பட்ட அரசியல்வாதிகள் இத்திட்டத்திற்கு தலைமை வழங்கியவர்களின் அரசியல் முன்னேற்றம் என்பதில் தங்கியிருந்தது. இத்திட்டம் அதிகளவு அரசியல் வெளிப்பாடு, அரசியல் வலுவுடையதாக சனாதிபதி பிரேமதாசா அவர்கள் அதிகாரமுடைய பங்களிப்பினைச் செய்த காலப்பகுதியில், காணப்பட்டது. இவர் இத்திட்டத்தினைப் பயன்படுத்தி, சமூக பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்ட நிலையில் இருந்தவர்களிடையே அரசியல் அடிப்படையைப் பலப்படுத்தினார், அவர்களுடன் தம்மை இனங்கண்ட வகையிலும் அவருடைய அரசியல் பங்களிப்பும் செல்வாக்கும் இடம்பெற்றது. எப்படியாயினும், அவருடைய படுகொலையைப் பின் தொடர்ந்து இத்திட்டதிற்கு முன்பு இருந்த அரசியல் பேராதரவு இல்லாமல் போய்விட்டது. இத்திட்டம், முன்னைய ஆட்சியுடன் அரசியல் ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்ததனால், 1994 இல் தேர்தலின் பின் மக்கள் கூட்டமைப்பு அரசாங்கம் முடிவுறு காலத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தினை நீக்கியது; அப்பொழுது, எதிர்பார்த்த 11 சுற்றுக்களில் 5 சுற்றுக்கள் மட்டும் சேர்ந்த நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டன.
மேலும் , இத் திட்டம் அரசியல் நலன் தேடும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டதனால், திட்ட நடவடிக்கைகள் பற்றிய புற நிலைச்சார்பான மதிப்பீடு அல்லது கண்காணிப்பு ஊக்குவிக்கப்படவில்லை; அது நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கவில்லை. இத்திட்டம் அரச உத்தியோகத்தர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது, அதனுடைய
282

உண்மையான நடைமுறைத் தலைமை தெரிந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு விசுவாசமான பணிக்குழு அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஜனசவியத்திட்டம் முன்புள்ள “மேலிருந்து கீழே செல்லும்’ அரசாங்க அணுகுமுறையிலிருந்து விலகிச் சென்றதாகக் காட்டப்பட்ட பொழுதும், அது முக்கியமாக அதிகாரம் மற்றும் மத்தியப்படுத்திய அதிகார வலு ஆகியவற்றினை உள்ளடக்கியிருந்தது. கருத்தியல் ரீதியான உந்துதலினால் சமூக ஒன்றுதிரட்டல் மற்றும் வறியவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பவை வலியுறுத்தப்பட்ட பொழுது, வறியவர்களிடையே பொதுவான நலன்களைத் தெளிவாக குரல் கொடுப்பதற்கு அல்லது வறியவர்களுக்குச் சார்பான கொள்நெறிகளின் வளர்ச்சிக்கு துணை போவதற்குத் திட்டத்தின் சாதனைகள் போதுமானவையாக இருக்கவில்லை.
முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் ஜனசவியத் திட்டம் அதிகளவுக்கு அரசு நிருவாகப்படுத்திய திட்டமாகையால், வறுமைத் தணிப்பு முயற்சிகளில் மற்றைய அரசதுறையல்லாத பங்காளிகளின் சேர்ந்த ஈடுபாட்டுக்கு இடமளிக்கவில்லை. தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் 1991 இல் உலக வங்கியினால் நிறுவப்பட்டது; அதனுடைய குறிப்பிட்ட நோக்கமாக, சிவில் சமூகத்தினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றை வறுமைத்தணிப்பு முயற்சிகளில் ஈடுபடுத்துவது வலியுறுத்தப்பட்டது. என்றாலும், கொடையாளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக முடிவுகள் காணப்பட்டன. தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம், ஜனசவிய நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்பட்ட பெயருடன் அரசாங்கத்தினால் ஜனசவியத்திட்டத்துடன் இணைத்த விதமாக அமைக்கப்பட்டது. ஆனாலும், நடைமுறையில், இது அரசினால் நடைமுறைப்படுத்திய இன்னொரு திட்டமாகத் தொழிற்பட்டதும் அரசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புக் குறைவாகவே இருந்துள்ளது. இறுதியாக, சுயாதீனமாக மதிப்பீடுகள் இத்திட்டத்தைப் பற்றி அதனுடைய பிற்காலங்களில் செய்யப்பட்டன. இவற்றின் மூலம் தெரியப்படுத்தியது எதுவென்றால், எதிர்பார்த்த அநேகமான இலக்குகள் அடையப்படவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டது, பயனாளிகளினால் ஆரம்பிக்கப்பட்ட வருமானம் ஈட்டும் பல நடவடிக்கைகள், அவர்கள் வறுமையிலிருந்து வெளியேறுவதில் வெற்றியளிக்கவில்லை. அல்லது அவர்கள் அரசாங்கத்தின் மீது தங்கியிருத்தலையும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. இதே போன்ற குறைபாடுகள், ஜனசவிய நம்பிக்கை நிதியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பல பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளன.
சமுர்த்தித் திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்து விலகிய பின்னர் மக்கள் கூட்டமைப்பு அரசாங்கம் 1994 தேசிய தேர்தலின் பின் பதவியேற்றது. பதவியேற்ற அரசாங்கமும் ஒரு புதிய வறுமைத் தணிப்புத் திட்டத்தினை, சமுர்த்தி, அறிமுகம் செய்தது.
283

Page 149
இது ஜனசவியத் திட்டத்தின் இடத்தை எடுத்தது. புதிய ஆட்சியாளர்களும் புதிய திட்டத்திற்கு கூடிய முக்கியத்துவம் கொடுத்தனர். வறுமைக்கு எதிரான முயற்சிகளை மேற்கொண்டு தங்களுடைய நாட்டுப்புற அரசியல் தளத்தினைப் பலப்படுத்தும் அரசியல் நோக்கம் முக்கியமாக இருந்துள்ளது. கூட்டமைப்பில் ஒரு பிரபல்யமான அரசியல்வாதியின் தலைமைத்துவத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சமுர்த்தித் திட்டம் ஜனசவியத் திட்டத்தைப் பல வழிகளில் ஒத்திருந்தது. ஜனசவியத்திட்டத்தைப் போல சமுர்த்தியில் பல்வகை அம்சங்கள் சேர்க்கப்பட்டன. வருமான மாற்றல், “விருப்பப்படி’ செய்யும் சேமிப்பு, கொடுகடன் வசதிகள், உட்கட்டுமான விருத்தி, மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு, சிறுதொழில்களில் ஆரம்பம் ஆகியவை உள்ளடங்கலாக சேர்த்து வரையப்பட்டது. ஜனசவிய திட்டத்தினைப் போலல்லாது, தனிப்பட்ட பயனாளிகள் வறுமையிலிருந்து வெளியேறுவது குறித்து கால எல்லை விதிக்கப்படவில்லை. கால எல்லை விதிக்கப்படாததால் அல்லது குறிப்பிட்ட ஒரு நடைமுறைப்படுத்திய பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒழுங்கும் இல்லாதவிடத்து, சமுர்த்தித் திட்டம் நாடு முழுவதிலும் உடன் நிகழ்வாக நடைமுறையிலிருந்தது; விலக்காக, மோதல் நடைபெற்ற அநேகமான பிரதேசங்கள் (2002) சேரவில்லை.
மே மாதம் 2002 இல், சமுர்த்தித் திட்டம் 2.1 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியது. இது, வட - கிழக்குத் தவிர்ந்த குடிசனத்தில் 55 சதவீதமாகக் காணப்பட்டது. சமுர்த்தியின் பாதீடு 2000 இல் 12 பில்லியன் ரூபாயாக, மொத்த நலன்பேணும் பாதீட்டில் 15 சதவீதமாகவும் மொத்தப் பொதுத் துறைச் செலவிட்டில் 2 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாகவும், உலகவங்கி, நிதிஅமைச்சு, ஆகியவற்றின் மதிப்பீட்டிலிருந்து தெரிந்துள்ளது (2002). சில வழிகளில், சமுர்த்தித் திட்டம் ஜனசவியத்திட்டத்துடன் ஒப்பிடும் பொழுது, கூடுதலான அரசியல் மயப்படுத் தலைப் பிரதிபலித்துள்ளது. ஜனசவியத்திட்டம் நாளாந்த அரசாங்க நிருவாக இயந்திரத்தினுTடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், சமுர்த்தித் திட்டம் ஒரு திரட்டிய இயக்குபவர்களின் ஆளணியாக 22000 பேரைக் கொண்டிருந்தது. இவர்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயலூக்கமுடைய இளையோர் ஆளணியாகத் திரட்டப்பட்டு அவர்களின் பங்களிப்புடன் திட்டத்தின் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதுடன் நடைமுறைப்படுத்தபட்டும் வந்துள்ளது. சமுர்த்தித் திட்டம் ஒரு மட்டத்தில் வேலை வாய்ப்புகள், ஆட்சியிலுள்ள கட்சியினால் திரட்டப்பட்ட வேலையற்ற இளையோருக்கு வழங்கும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது. இறுக்கமான நோக்கில், தகுதிவிதிகளுக்கு ஏற்றதாக பயனாளிகளைத் தெரிவு செய்வது கஷ்டமானதாக இருந்துள்ளது. காரணம், இளையோர் ஆளணி இப்பணியினைச் செய்யும் பொழுது அவர்கள் தம்முடைய கட்சி ஆதரவாளர்களை விரும்பி தெரிவினைச் செய்வது எதிர்பார்க்கப்பட்டது. சமுர்த்தி ஆளணியினர், பயனாளிகள் ஆகியோர் தேசிய அல்லது உள்ளுர் மட்டத்தில் உள்ள அரசியல்
284

வாதிகளினால் தெரிவு செய்யப்படுவார்கள். இதனால், அரசியல் செல்வாக்கு அதிகமாகச் கலந்துள்ளது. வறுமைத் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக புறம்பான ஒரு நிருவாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பினும் (சமுர்த்தி அமைச்சு) பயனாளிகளின் தெரிவுக்குப் பொறுப்பாக உள்ள இளையோரைக் கொண்ட ஆளணியினர் அரசியல் தொடர்புகளினால் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதும் தெரிந்துள்ளது. அதே காரணங்களுக்காக பயனாளிகளின் தெரிவும் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு இருக்கும் சாத்தியப்பாடு, நிருவாகச் சீர்திருத்தம் பற்றிய துறையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பிரதான பொதுத்துறை வறுமைத்தணிப்புத் திட்டம் என்ற வகையில் சமுர்த்தி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக பாதகமான நிலையினையும் விளைவித்தது.
முதலில், சமுர்த்தியின் இறைச் சுமை, ஜனசவியத்திட்டத்தை விட கூடியதாக இருந்தள்ளது; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தினையும், ஒப்பீட்டளவில் ஜனசவிய 0.7 சதவீதத்தினையும் எடுத்துள்ளன. - நடைமுறைப்படுத்தலின் உச்சக் கட்டங்களிலான மதிப்பீடு. சமுர்த்தியில் திடமான கால எல்லை இல்லாததனால், வறியவர்கள் தம்முடைய நிலையிலிருந்து வெளிவேறுவது பற்றியும் பலமாக அரசியல காரணங்களினால் நடைமுறைப்படுத்தப்படாததனால், சமுர்த்தித் திட்டம் இறைக் கட்டுப்பாடு, முகாமை என்பவை குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இக்காரணத்தினால், திறைசேரி இத்திட்டத்தில் அதிகமான அக்கறை காட்டியதுடன், இது தொடர்பான மறுசீராக்கம் பற்றியும் கவனம் செலுத்தியது.
இரண்டாவது, சமுர்த்தித் திட்டத்தில் குறைந்த தரமுடைய இலக்குப்படுத்தல் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்துள்ளது. சமுர்த்தி பற்றிய மதிப்பீட்டில் இரண்டு முக்கியமான இலக்குப்படுத்தும் பிரச்சினைகள், அதாவது ஒழுக்குகள், (வகை ஒன்று) விலக்குகள் (வகை இரண்டு), என விபரிக்கப்பட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒழுக்குகள் என்பவை, வறியோரல்லாது குடும்பங்கள் அரசியல் அல்லது சமுகத் தொடர்புகள் காரணமாக சமுர்த்தி நன்மைகளைப் பெறுவது ஏற்பட முடிகின்றது. விலக் கல்கள் என்பவை உண்மையான தேவையுடைய வறியவர்கள் திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றனர் என்பதைக் (குறிக்கின்றது; இது, அரசியல் காரணங்களினால் பாதிக்கப்பட்டதனால் அல்லது போதியளவு அதிகாரம் அல்லது தொடர்புகள் இல்லாததனால் நிகழலாம். அளவுக்கு மேலான திட்டத்தின் அரசியல் மயப்படுத்தல் இவ்விரண்டு விதமான குறைபாடுகளுக்கும் காரணமாக இருந்திருக்கும். அவ்வாறு இலக்குபடுத்தலில் ஏற்படும் குறைபாடுகள், திட்டத்தின் வறுமை தொடர்பான தாக்கத்தின் செறிவினைக் குறைத்துவிடுவதுடன், அரசினால் வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதில் பாரபட்சமான நிலைகள் தோன்றுவது சமூக உராய்வுகளையும்
அதிகரிக்க முடிகின்றது.
285

Page 150
மூன்றாவது, இத்திட்டத்தின் வறுமை குறைப்பதன் செயற்திறன் தன்மை பற்றியும் பல அவதானிப்பாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இவை திரும்பவும் தரம் குறைந்த இலக்குப்படுத்தல், வறுமையின் அடிப்படைக் காரணங்களை அணுகுவதில் பயன்படுத்திய உபாயங்களின் செயற்திறன் பற்றிய பிரச்சினைகளுடன் தொடர்புபட்டவையாக இருந்துள்ளன.
இறுதியாக, தனிப்பட்டவர்களின் செயலூக்கம், முனைவுகள் தடைபடுதல் பெறுகின்ற மனப்பாங்கு பயனாளிகளிடையே வேரூன்றுதல் ஆகிய விடயங்களும் சமுர்த்தியின் தாக்கம் பற்றிய விளைவுகளில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகின்றன. கிடைக்கும் தரவுகளைக் கொண்டு முக்கியமான மூன்று விடயங்களைப் பற்றி பின்வரும் பகுதியில் விளக்கப்படுகின்றது.
4. இலக்குப்படுத்தும் பிரச்சினைகள்
சமுர்த்தித் திட்டத்தில் இலக்குப்படுத்தல் தொடர்பாக தவறுகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. திட்டத்தின், வறுமையின் விழுப்பாடு குறித்து செயலெல்லை, திட்டத்தின் செயலெல்லை வேறுபட்ட வருமானப் பிரிவினர், வேறுபட்ட இனக் குழுமங்கள் தொடர்பாக எவ்வாறு இருந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்வதற்கு மாதிரி அளவீடுகள் என்பவற்றையும் சேர்த்து இலக்குப்படுத்தலில் குறைபாடுகளை இனங்கண்டு கொள்ள முடிந்தது.
முதலாவது, சமுர்த்தியின் அறியப்படுத்திய செயலெல்லை மற்றும் அறியப்பட்ட வறுமையின் விழுப்பாடு ஆகியவற்றிடையே முரண்பாடு காணப்பட்டுள்ளது. மொத்தமான குடியிருப்பினர்களில், 55 சதவீதத்தினர் (வட கிழக்கினைத் தவிர்ந்த) பயனாளிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது நாட்டிலுள்ள வறியவர்கள் என மதிப்பிட்ட தொகையில் இரண்டு மடங்காகக் காணப்படுகின்றது. இதிலிருந்து நன்மைகளின் கசிவுகள் வறுமை நிலையில் இல்லாதவர்களுக்குச் சென்றுள்ளன என்பதற்கான ஆதாரமாக விளங்குகின்றது.
இரண்டாவது, (அட்டவணை 3) வறுமையின் விழுப்பாடு மற்றும் சமுர்த்தியின் செயலெல்லை ஆகியவற்றிடையே வெவ்வேறு மாவட்டங்களில் இணக்கமான தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை.
சமுர்த்தியின் செயற்பாட்டெல்லை, கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகள் மூலம் அளவிட்ட மனித வறுமை அல்லது வருமானம், செலவு அளவுகளின் அடிப்படையில் அறியப்பட்ட நுகர்வு வறுமை ஆகியவற்றிடையே ஓர் இணக்கமுடைய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக நோக்கும் பொழுது, கம்பகா மாவட்டத்தில் நுகர்வு வறுமைத் தரவுகளின் படி நுகர்வு மற்றும் மனித வறுமை குறைந்த மட்டத்தில் இருந்துள்ளன; இதனுடைய சமுர்த்தியின் மொத்த முழுப்பரப்பு கூட்டுதலானதாக இருந்துள்ளது. நுவரெலிய மாவட்டம் மனித வறுமை தொடர்பாக மிக உயர்ந்த அளவிலும், நுகர்வு
286

அட்டவணை 3: வறுமையின் விழுப்பாடும் எதிர்நிலையான, சமுர்த்தியின் செயலெல்லையும்
மாவட்டம் நுகர்வு வறுமை மனித வறுமை சமுர்த்திபெறும்
குடும்பங்களின் % பங்கு
கொழும்பு 9 13 23.27
கம்பகா 21 - 2 47.17
களுத்துறை 38 16 37.53
கண்டி 42 17 47.06
மாத்தளை 51 21 57.14
நுவரெலியா 40 30 3O37
காலி 39 19 48.15
மாத்தறை 44 19 54.0
அம்பாந்தோட்டை 43 23 59.54
குருநாகல் 53 22 61.28
புத்தளம் 5 19 52.29
அனுராதபுரம் 50 2. 52.57
பொலநறுவை 40 28 45.82
பதுளை 48 27 40.49
மொனறாகலை 66 29 62.33
இரத்தினபுரி 52 25 65.43
கேகாலை 4. 24 5334
அம்பாறை • 57.69
மூலம்: ஆசிய அபிவிருத்தி வங்கி, 2001
வறுமை மிதமான அளவிலும் காணப்பட்டுள்ளன; இம்மாவட்டத்தில் சமுர்த்தியின் செயற்பாட்டெல்லை குறைந்ததாக இருந்துள்ளது. இதேபோல காலி மாவட்டம் ஒரு உயர்ந்த சமுர்த்தி அளவினை பதுளை மாவட்டத்தை விட, காட்டியுள்ளது; ஆனால் பதுளை நுகர்வு வறுமை மற்றும் மனிதவறுமை என்பவற்றில் உயர்ந்த படுகையினைக் கொண்டிருந்தது. இவற்றிலிருந்து தெரியக் கூடியது, உண்மையான தேவைகளைக் கருதி, சமுர்த்தியில், வருமான உதவி பகிர்ந்து கொள்ளுதல் என்பதுடன், அதிகாரமுடையவர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் வகிக்க முடிந்த செல்வாக்கு சமஅளவு முக்கியமானதாக அல்லது அதற்கு மேலான முக்கியத்துவத்தினைக் கொண்டதாக இருந்துள்ளது. கட்சி முக்கியஸ்தர்களினால் வெவ்வேறு மட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள்
287

Page 151
சமுர்த்திப் பயனாளிகளைத் திரட்டுபவர்கள் மீது முக்கியமானதாக இருந்தது; இவ்வழுத்தங்கள், சமுர்த்தியில் கட்சி ஆதரவாளர்களைச் சேர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சான்றுகள் சில ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மூன்றாவது, இலங்கையின் ஒருங்கிணைந்த அளவீடு (Sri Lanka Integrated Survey, World Bank) உலக வங்கியினால் மேற் கொள்ளப்பட்டபொழுது, அதிலிருந்து சமுர்த்தியில் ஒழுக்குகள் (வெளியேறுதல்) மற்றும் விலக்குகள் ஏற்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அறியப்பட்டது முக்கியமாக, வருமான ஐம்பிரிவில், மூன்று உயர் ஐம்பிரிவிலுள்ள குடியிருப்பாளர்களில் 14 க்கும், 42 க்கும் இடைப்பட்ட சதவீதத்தினர் சமுர்த்தி வருமான மாற்றல்களைப் பெற்றுள்ளனர்; மேலும் இரண்டு மிகக் குறைந்த (ஐம்பிரிவில்) பிரிவின் குடியிருப்பாளர்களில் 36 க்கும் 47 க்கும் இடைப்பட்ட சதவீதத்தினர் சமுர்த்தி வருமான மாற்றல்களைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. (அட்டவைண 4). இம் மாதிரி அளவீட்டில், சமுர்த்தியின் வருமானக் கொடைகளில் 40 சதவீத்திற்கு மேலானவை குடிசனத்தில் மிகக் கூடிய 60 சதவீத செல் வநீத நிலையிலுள்ளவர்களுக்கு மாற்றல்கள் கிடைத்துள்ளன. கசிவுகள் தொடர்பான விடயத்தினை விட, இந்த நிலைமை சமூக முரண்பாடு விளைவிப்பதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைப்போல, குறைந்த வருமான
அட்டவணை 4: சமுர்த்திச் செயற்பாட்டு அளவும் நன்மைகளும் -வருமான ஐம்பிரிவு முறையாக உலக வங்கியினால் செய்யப்பட்ட ஒரு மாதிரி அளவீடு
நன்மை ஐம்பிரிவு மொத்தம்
1. 2 8 4.
மிகக் மிக A. குறைந்த உயர்ந்த
பெறுகையினரின் (%) 64 53 42 30 14 40 தலா குடியிருப்பாளர்க்கு ரூ (மொத்தம்) 403 390 378 362. 303 38 தலா ரூ (மொத்தம்) 88 96 93 105 107 95 தலா ரூ. குடியிருப்பாளர் (தேறிய) 322 315 307 30 260 310 தலா ரூ. (தேறிய) 71 78 77 88 94 78
மூலம்: உலக வங்கி (இலங்கை ஒருங்கிணைந்த அளவீடு) குறிப்பு: மொத்த வருகை - கட்டாய கழிவையும் உள்ளடக்குகின்றது; தேறிய
வருகை இவற்றைச் சேர்க்கவில்லை.
288

ஜம்பிரிவுகளில் உள்ளவர்கள் உயர்வான ஐம்பிரிவு மட்டங்களில் உள்ளவர்களை விட வருமான மாற்றல்களைக் கூடுதலாகப் பெற முடிந்தவர்களாக உள்ளனர்; மேலும், குடியிருப்பாளர்களின் பருமன் பெரியதாக இருத்தல், குறைந்த வருமானம், வலுக் குறைந்தநிலை, நிலமில்லாமை, மின்சாரம், மற்றும் கழிவறை வசதியில்லாமை போன்றவை வருமான மாற்றல்களை சமுர்த்தியிலிருந்து பெறும் சாத்தியம் அதிகரிக்கின்றது. எப்படியாயினும், உலக வங்கியின் இலங்கையின் ஒருங்கிணைந்த 96(65G (Sri Lanka Integrated Survey) (p196IITsai Singp6, g5 “Gig 606.ju6f 6ft குறிப்பிட்ட குடும்பங்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பாக இருப்பதற்குப் பதிலாக, சமுர்த்தி ஒரு வருமான ஆதரவு கூடுதலாக வழங்கும் திட்டமாகவே தெரிகின்றது.”
நான்காவது, மேலே குறிப்பிட்ட மாதிரி அளவீடு, எடுத்துக் கூறிய இன்னொரு முக்கியமான விடயம், சமுர்த்தியின் மொத்த அடக்கத்தில், சிங்களவர்களிடையே, மற்றைய இனச்சிறுபான்மையினருடன் ஒப்பிடுமிடத்தில், உயர்ந்ததாக இருந்துள்ளது. இத்திட்டம் பல மோதல்கள் ஏற்பட்ட பிரதேசங்களில், போக்குவரத்துப் பிரச்சினைகளினால் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்ல்ை. மோதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இத்திட்டத்தினை விரிவாக்குவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும், வேறு நிவாரண புனர்வாழ்வு உதவித் திட்டங்கள் இப்பிரதேசங்களில் இருந்தனாலும் சமூர்த்தித்திட்டம் இப்பிரதேசங்களுக்குச் செல்லவில்லை. மேலும், சமுர்த்தியின் செயலெல்லைகள் பெருந்தோட்ட வதிவோர்களிடம் குறைந்து காணப்பட்டது; ஓரளவுக்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஒழுங்கான கூலி வருமானங்களைப் பெற்றதும் ஒரு காரணமாக இருந்திருக்க முடிகின்றது. எவ்வாறாயினும், சமுர்த்தி வழங்கல் முறை அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருந்ததனால், அரசினால் குடிசனத்தின் சில பகுதினருக்கு, இனச் சிறுபான்மையினர் உட்பட, குறைந்தளவு சேவை வழங்கப்பட்டமை மறுப்பதற்கில்லை.
5. சமுர்த்தித் திட்டத்தின் பயனுறுதி
இவ்விடயத்தினை இரண்டு வகையில் அளவிட்டுப் பார்க்கலாம். ஒன்று, வறியவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையமைப்பாக அது எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை அறிதல்; மற்றையது, வறியவர்களிடையே அதனுடைய செயற்பாடு எவ்வளவுக்கு வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளைத் தந்துள்ளது என்பதை நோக்குதல். இவை இரண்டினையும் பொறுத்து சமுர்த்தியின் பெறுபேறுகள் திருப்திகரமாக இருக்கவில்லை.
சமுர்த்தி ஒர் இடர் காப்பு வலையமைப்பாக இருத்தல்
சமுர்த்தித் திட்டத்தின் செயற்பாடுகளின் எல்லை விரிவானதாக இருப்பினும், அதனுடைய முன்பகுதியில் கூறப்பட்ட குறைபாடுகளுக்கு அமைந்தவிதத்தில்,
289

Page 152
ஒவ்வொரு பயனாளியினாலும் பெறப்பட்ட நன்மைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்துள்ளது. (அட்டவணை 5). மேலேயுள்ள அட்டவணையிலிருந்து ஆகஸ்ட் 2001 இல் அதிகளவான சமுர்த்தி பயனாளிகள் மாதாந்த உதவித் தொகை ரூ. 700, அதனை தொடர்ந்து ரூ. 400, ரூ. 350 மற்றும் ரூ.250 என்ற விதத்தில் பெற்றுள்ளனர். நாளொன்றுக்கு ஒரு டொலர் என்ற அளவை எடுத்தால், சமுர்த்தி உதவித் தொகையின் மிகக் கூடிய ரூ. 1000, மாதத்தில் பத்து நாட்களுக்கு ஒரு வயது வந்த குடியிருப்பாளருக்கு வாழ்வதற்கான செலவைத் தாங்குவதற்கு மட்டும் போதுமானது. அனேகமான பயனாளி - குடியிருப்பாளர்கள் குறிபிட்ட அளவுக்கு மிகக் குறைந்த தொகையினைப் பெறுகின்றனர். சட்ட விதிக்கமையச் சேமிக்க வேண்டிய கூறு மேலும் குடியிருப்பாளருக்குக் கிடைக்கும் தேறிய வருகையினை வருமான மாற்றல் முறையில் குறைக்கின்றது. (அட்டவணை 4). பெறுகின்ற நன்மைகள் பணவீக்கம் மற்றும் அல்லது வாழ்கைச் செலவு குறித்தும் சரிப்படுத்தப்படாதிருப்பதால், சமுர்த்தி நன்மைகளின் மெய்ப்பெறுமதி, காலப்போக்கில் விரைவாகக் குறைந்து செல்கின்றது. இலங்கையின் ஒருங்கிணைந்த அளவீடு காட்டுவது, வறிய குடியிருப்பாளர்களுக்கு வருமான மாற்றலின் அளவு உயர்வாக இருப்பினும், தலா ரீதியான உதவிக் கொடை அளவு, உயர்ந்த வருமானமுடைய குடியிருப்பாளர்கள் குறித்து, அவர்களின் குடும்பப் பருமன் சிறிதாக இருப்பதனால் உயர்வாக இருப்பது தெரிகின்றது. மேலும் இவ்வளவீடு காட்டுவது, பயனாளி குடியிருப்பினர் தொடர்பாக மொத்த
அட்டவணை 5: சமுர்த்தி உதவித் தொகை பெறுகின்ற குடும்பங்கள், பெறும் உதவித் தொகை அளவின் அடிப்படையில் நோக்குதல், ஆகஸ்ட் 2001
பெறும் உதவித்தொகை குடும்பங்களின் எண்ணிக்கை %
ரூ. 140 9,282 O.O.
ரூ. 250 233,718 11.9
eb. 350 363,752 Հ 18.5 eb. 400 487,991 24.8
eb. 500 5, 182 O.O.
eb. 700 858,902 43.6
eb. 1000 8,968 0.01 மொத்தம் 1967,795 100.0
மூலம்: சமுர்த்தி அதிகார சபை, கொழும்பு
290

குடியிருப்பினர் உணவுச் செலவில் சராசரியாக 14 சதவீத அளவானது, சமுர்த்தி கொடையிலிருந்து நிறைவு செய்ய முடிந்துள்ளது. இது, 21 சதவீதம் மிகக் குறைந்த வருமான மட்டம் பெறுபவர்கள் தொடர்பாகவும், 8 சதவீதம் மிக உயர்ந்த வருமானப் பிரிவினர் தொடர்பாகவும் வேறுபட்டிருந்ததும் தெரிந்துள்ளது.
சமுர்த்தியினுாடாக செய்யப்படும் வருமான கொடை மாற்றல், வீட்டினரின் வருமானங்கள் குறித்து ஒரு பெரிய ஏற்றத்திற்கான வழியாக இருக்கும் என, மிகக் குறைந்த வருமானமுடையவர்கள் மட்டத்தையும் சேர்த்துக் கூற முடியாதிருப்பினும், இம் மாற்றல்கள் வறியவர்களிடையே அவர்களினால் பிழைத்து வாழ்வதற்காக கையாளப்பட்டு வந்துள்ள உபாயங்களில் ஒரு முக்கியமான கூறாக இருந்துள்ளது என்பது மறுக்கப்படுவதற்கில்லை; அண்மையில் வறுமை ஆய்வு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினால் தெரியப்படுத்தியது, வறிய குடிருப்பாளர்கள் உறுதியற்ற கூலி உழைப்பில் தங்கியிருப்பவர்களாக இருப்பதினால் குறித்து சமுர்த்தி உதவித் தொகை மட்டும் ஒரு எதிர்வு கூறும் வருமான மூலமாக, மிகவும் நிச்சியமற்ற பிழைப்பூதிய மூலங்க்ளின் மத்தியில் வாழ்கின்றவர்களுக்கு கிடைக்கின்றது. சமுர்த்தி சேமிப்புகளும் மற்றும் கொடுகடன் திட்டங்களும் வறியவர்களின் பிழைத்து வாழ்வதற்கான உபாயங்களைப் பலப்படுத்தக் கூடியவையாக உள்ளன. மொத்தமாக நோக்குமிடத்தில், சமுர்த்தி உதவித் தொகை மாற்றல்கள் வறிய குடியிருப்பாளர்களிடையே நுகர்வின் கிடைப்பு நிலை தொடர்பாக சரிநிரப்பாக உதவும் பங்களிப்பைச் செய்துள்ளது.
சமுர்த்தியின் வருமானம் உண்டாக்குதல் தொடர்பான பயனுறுதி
சமுர்த்தியின் தாக்கம், வருமானம் மேம்படுத்தும் நடவடிக்கைகள், வறியவர்களிடையே எவ்வாறு காணப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆய்வுகள் பல செய்யப்பட்டுள்ளன. சமுர்த்தியின் குறிக்கேரிள்களில் முக்கிமானதொன்று, சேமிப்பு வழக்கத்தினை வளர்த்து அதனுாடாக தற்சார்பு நிலையினை ஊக்குவித்து, மற்றும் வருமானம் உண்டாக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு சுயவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி முன்னேற்றம் காணுதல். எப்படியாக இருப்பினும், சமுர்த்தித்திட்டம் நடைமுறைப்படுத்துவதில், நுகர்வுக் கூறுவருமான மாற்றல்கள் மிகக் கூடுதலான இடத்தைப் பெற்றுள்ளன; சமுர்த்தியின் பாதீட்டில் 80 சதவீதம் அதனுடைய வருமான மாற்றல் சார்பாகச் செய்யப்பட்டது தெரிகின்றது. ஆதலால், திட்டத்தின் மிகப் பெரிய கூறு வறுமை நிவாரணம் என்பதை நோக்கி, வறியவர்களின் சார்பான வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் உருவாக்கத்தை விட, செலுத்தப்பட்டது.
குணத்திலக்கா மற்றும் சாலி (Gunatilake & Salih) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள், சமுர்த்தித்திட்டத்தின் சேமிப்பு மற்றும் கொடுகடன் கூறு பற்றிய பங்களிப்பினை மதிப்பீடு செய்தனர். அவர்களுடைய ஆய்வில், இவை
291

Page 153
வறியவர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கிய பொழுதும், அது தொடர்ச்சியான வகையில் செல்லக் கூடிய தன்மை, பயனுறுதி ஆகியவை இல்லாமல் இருந்துள்ளது. சமுர்த்தியின் பிரிவுகளுக்கிடையே கொடுகடன் தொடர்பான முக்கிய பங்களிப்பு, வறியவர்களுக்கு ஒரு இடர் காப்பு வலையமைப்பாக மற்றும் அவர்களுடைய பலவீனத்தைக் குறைத்துள்ள ஒரு காரணியாகவும் செயற்பட்டுள்ளது. எப்படியாயினும், பங்குகொண்ட வீதம் உயர்வாக இருந்துள்ள போதும், கொடுகடன் காப்பு வலையமைப்பு வருமான மாற்றல்களினால் ஏற்பட்ட உயர்வான சேமிப்பு பங்குகொள்ளலினால் விளைவிக்கப்பட்டுள்ளது; இது ஒரு இயக்காற்றலுள்ள சேமிப்பு மற்றும் கொடுகடன் பண்பாட்டின் வளர்ச்சியினால் ஏற்பட்டதாகக் கருதுவதற்கில்லை. இத்திட்டத்தில் சேமிப்பு, கொடுகடன் ஆகியவற்றின் முழு அடிப்படையும் வருமான மாற்றல்களைத் தழுவி இருந்ததனால். இதனுடைய நிலைத்துச் செல்லக் கூடிய தன்மையினைப் பலவீனப்படுத்தியுள்ளது. வருமான மாற்றல்களை நிறுத்தினால், அது அதிகமான சமுர்த்தி வங்கிச் சங்கங்களைப் பெரிதும் பாதிக்க முடிந்தது; அவை வருமான மாற்றல் திட்டத்திற்குள் சேர்க்கப்பட்ட உரிமைக் கட்டளைச் சேமிப்புகளில் தங்கியுள்ளன. ஆதலால், திட்டம் பயனாளிகள் தொடர்ந்து அரசின் மீது தங்கியிருப்பதை - சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தது போல - நீடிக்கச் செய்கின்றது. aw
சமுர்த்தித் திட்டம் வறியவர்கள் தமது நிலைமையிலிருந்து உயர்ந்த வருமானப் பிரிவுக்குள் செல்வதற்கு வழிசெய்யத்தவறியுள்ளது. இதற்கான காரணங்கள் பல; கடன்கள் மிகச் சிறிய சுய வேலை வாய்ப்புகளுக்காக வழங்கப்படுபவை; (ஒவ்வொரு செய்திட்டமும் ஒருவருக்குமட்டும் நன்மை கொடுக்கின்றது) கடன்கள் மிகச் சிறிய அளவுடையதாக இருப்பதால், குறைந்த அளவான முதலீடு செய்வதை மட்டும் நிதிப்படுத்துகின்றது; அவை நிலவி வருகின்ற பிழைத்து வாழ்வு உபாயங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளன. மேலும், கடன்கள் திருப்பிக் கொடுக்காத உயர்ந்த வீதம் அனுபவிக்கப் பட்டதனால், கொடுகடன்-சேமிப்பு ஒழுங்குகள், நிலைத்துச் செல்லும் சிறு நிதித்திட்டம் என்பதல்லாமல் ஒரு வருமான மாற்றல் முறையாகவே நடைமுறையில் இருந்துள்ளது.
இத்துடன் இன்னொரு விடயமும் கவனத்துக்கு வருகின்றது. வறியோர் தம்முடைய பிள்ளைகளுக்கு நிரந்தரமான வருமானம் தரும் உறுதிப்பாட்.ை வழங்கும் அரசாங்க உத்தியோகத் தை, அவர்களிடையே சுயமான வேலைசெய்யும் இடர்நேரும் தொழில் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, விரும்புவது காணக்கூடியதாக உள்ளது. ஆகவே சமுர்த்தித் கொடுகடன்களை இளையோருக்கு வழங்க முன்வந்த பொழுதிலும் மிக குறைந்த அளவுடையோர் மட்டும் இவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். கொடுகடன் வழங்கல் ஒழுங்குகள் இளையோருக்கு நலன் பயக்கும் முகமாக செய்யப்பட்ட பொழுதும் , இவ்வாய்பினைப் பயன்படுத்த அதிகமானோர் முன்வரவில்லை.
292

இவற்றிலிருந்து எழும் கேள்வி என்ன வென்றால், வறியவர்களை நோக்கிய அபிவிருத்தி உபாயமாக சிறுதொழில் அபிவிருத்தி எவ்வளவுக்குப் பொருத்தமானது என்பது, குணத்திலக்கா மற்றும் சாலி ஆகிய ஆய்வாளர்கள் கூறுவது, “மிக வறுமையில் உள்ளவர்கள் தேர்ச்சிகள், இடர்கள் நோக்குதல் தொடர்பான எண்ணப் பாங்கு என்பவற்றைக் கொண்டவர்களாக இல்லை; அத்துடன், மேலதிகமான நிதிப்படுத்தும் மூலங்கள் சிறு ஒப்பேற்றக் கூடிய தொழில்களை ஆரம்பித்து பிழைத்து வாழ்வதற்கான முயற்சிகளுக்கு மேலாக செல்வதற்கு தேவையான ஆற்றல்களைக் குறைவாகக் கொண்டவர்கள்” மேலும் பேரின ரீதியான நிலைமைகள், சிறுதொழில்களின் வெற்றியினையும், அவைதொடர்ந்து செல்வதனையும் அவற்றினால் நிர்ணயிக்கும் வளர்ச்சிச் சூழமைவை உண்டாக்குவதிலும், முக்கிய செல்வாக்கு வகிக்கின்றன. வறியவர்களிடம் கூலியடிப்படையான வேலை வசதிகள் விரும்பப்படுவதும் பலமடைந்துள்ளது.
வறுமைத் தணிப்பு பற்றிய வெற்றியளிக்கும் நிலையினை மதிப்பீடு செய்வதற்கு முக்கியமான தகுதிவிதி, எத்தனை குடியிருப்பாளர்கள், செயற்திட்டத்தினுTடாகச் செல்லும் பொழுது, வறுமையை விட்டு வெளியேறுகின்றனர் என்பது. எவ்வாறாயினும், சமுர்த்தித் திட்டத்தில் இத்தகைய வெளியேறும் பொறிமுறைகள் பலவீனமுடையவையாக உள்ளன; உண்மையில், இதில் தெளிவான வெளியேறுவது பற்றிய விதிகள் உள்ளடக்கப்படவில்லை. திட்டத்தின் அதிகமான அரசியல்மயப்படுத்தலினால் சமுர்த்தி பெற்றவர்களின் படிப்படியாக மாறும் வீதம் மிக்க குறைவாக இருந்துள்ளது.
வறியவர்களின் செயலுக்கம், முனைவு என்பவற்றின் மீது சமுர்த்தியின் தாக்கம்
சமுர்த்தித் திட்டத்தின் பொருளாதாரச் சீர்திருத்தும் பற்றிய தாக்கத்தின் தன்மை பற்றிய நோக்கில், இவை முக்கியமானவையெனினும் போதியளவுக்கு இவை இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் கவனத்தை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், அங்குமிங்குமான ஆதாரம், மற்றைய அரசாங்கத்திட்டங்கள் தொடர்பாகக் கூறப்பட்டதைப் போன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது, சமுர்த்தித் திட்டமும் வறியவர்களிடையே தங்கியிருக்கும் உளப்பாங்கிற்கு மேலும் வழிவகுத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. உலக வங்கியின் வறுமை தொடர்பான மதிப்பீட்டில் (2002) சமுர்த்தியைப் போன்ற பெரிய வருமான ஆதரவு வழங்கும் திட்டங்கள் “உரிமை அளிக்கும் பண்பாட்டை வளர்த்துள்ளது. இது தனிப்பட்டவர்கள் முயற்சியின் ஊக்கப்பாட்டைக் குறைக்கின்றது, வறியவர்கள், வறியோரல்லாதவர்கள் ஆகிய இரு சாராரையும் நலனாற்றும் அரசின் மீது தங்கியிருக்கச் செய்கின்றது. சமுர்த்தித் திட்டத்தின் தேறிய நன்மைகளின் பெறுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும், இத் திட்டம், பல அரசாங்கத் திட்டங்களில் ஒன்றாக வறியவர்களின் வாழ்வுக்கான தொழில்கள்
293

Page 154
தொடர்பாக நிலம், வேலை செய்தலின் பரவல் போன்ற முக்கியதுறைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை ஆசிரியர்களின் அண்மையான வெளிக்கள அவதானிப்புகளில், வறியவர்கள் வீட்டு நெடுவாழ்வுப் பொருள்களைக் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டியதனை, சமுர்த்தி நன்மைகளை இழக்க வேண்டி நேரிடலாம் என்ற அச்சத்தின் விளைவை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளமுடிந்தது. வேறொரு எடுத்துக்காட்டாக, சில சிறு முயற்சியாளர் தம்முடைய சிறு தொழில்களை மீண்டும் விரிவாக்க விரும்பவில்லை, காரணம், சமுர்த்தி உணவு முத்திரையினை இழக்க நேரிடலாம் என்ற அச்சத்தினால் அவ்வாறு நடந்து கொண்டனர்.
சமுர்த்தியின் வருமான மாற்றல் ஒழுங்குகள் உழைப்பின் நிரம்பல் மற்றும் உற்பத்தித்திறன், குறிப்பாக கிராமியப் புறங்களில், மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விடயமாகின்றது. கிராமிய விவசாயத்தின் நாளாந்த கூலிகள் உயர்ந்தவையாக இருக்கின்றன; அத்துடன் சில துறைகளில், சிறு உடைமைத் தேயிலைப் பயிர்ச் செய்கை, தெங்குத் தொழில் பயிர்ச்செய்கை, மற்றும் வர்த்தகம் சார்பான விவசாயம், ஆகியவற்றில் உழைப்பு கிடைப்பது குறைவாக உள்ளது - அதே வேளை இளையவர்கள் வேலையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இலங்கையில் கிராமியப் பொருளாதாரம் ஒரு “பணம் அனுப்பப்படும் மற்றும் பணம் மாற்றல் செய்யப்படும்” பொருளாதாரமாக விபரிக்கப்பட்டுள்ளது; இதனால் சந்தைச் சக்திகள் குறித்து பதிலிறுப்புத் தன்மை அதிகமாக இல்லாமல் காணப்பட்டுள்ளது; இது செய்யவிருக்கின்ற சந்தை சார்பான மாற்றங்கள் பெருந்தோட்ட மல்லாத விவசாயத்தில் அறிமுகம் செய்யக் கூடியவற்றையும் உள்ளடக்குகின்றது. இது திரும்பவும் கூடுதலான ஓர் ஒழுங்கு கொண்ட மதிப்பீட்டை, சமுர்த்தியின் சமூக, பொருளாதார ஊக்கப்பாதிப்பு, இயக்காற்றல் இல்லாமை ஆகியவற்றின் தாக்கத்தினை கிராமியத் துறை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது; இத்தகைய மதிப்பீட்டில், இவற்றின் பொருளாதார சீர்திருத்த முறைவழி தொடர்பான ஊக்கங்கெடு நிலையும் நோக்கப்படுதல் வேண்டும்
8. வறுமைக் கொள்நெறி சீர்திருத்த தொடக்குமுனைவுகள்
சமுர்த்தித் திட்டம் மறுசீரமைப்புப் பற்றி அழுத்தங்கள் பல்வேறு விதத்தில் வெளிப் படுத்தப் பட்டன. அவையாவன: சமுர்தி தித் திட்டத் தினை நடைமுறைப்படுத்தும் பாதீடு தொடர்பான கட்டுப்பாடுகள், வறுமையினைக் குறைப் பதில் திட்டத்தின் பயனுறுதியில் லாத தன்மை; இத்திட்டத்தில் இலக்குப்படுத்தல் தொடர்பாக எழுந்த குறைபாடுகள; மற்றும், கட்டமைப்பு ரீதியாகவும், நிறுவனரீதியாகவும் காணப்பட்ட பலவீனங்கள் காரணமாக கொடையாளி ஆதரவு கிடைக்காத நிலை. இவை தொடர்பாக கவனிக்க வேண்டிய
294

விடயங்கள், நேரடியான பாதீடு சம்பந்தமான அழுத்தங்களும் மற்றும் கொடையாளி அழுத்தங்களும், சமுர்த்தித் திட்டத்தினை மறுசீரமைப்புச் செய்வதில் மிக முக்கியமாக இருந்துள்ளன. அரசாங்கத்தின் மாற்றம் 2001 இல் ஏற்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக கிராமியப்புறங்களில், திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள், முக்கியமாக, முன்னைய ஆட்சியிலிருந்த பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பக்கச் சார்பான நிலைமைகள் சரிப்படுத்த வேண்டிய அவசியம் எடுத்துக் கூறப்பட்டது.
6um160DLD8 (9568)ịDü L! Đ_LJ Tu Jưô (Poverty Reduction Strategy, PRS) இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச கொடையாளி சமூகத்தினருடைய ஒத்தாசையுடன் தயாரிக்கப்பட்டது (2002); இதனுடைய மிகப் பிரதான நோக்கம், பேரினக் கொள்நெறிகளுக்கும் வறுமை பற்றிய உபாயங்களுக்கும் இடையே நல்ல இணக்கப்பாடு ஏற்படுத்தலின் அவசியம். முதல் முறையாக, வறுமைக் குறைப்பு உபாயம் (வ.கு.உ) இலங்கை அரசாங்கத்திற்கும் மற்றும் கொடையாளி சமூகத்தினருக்கும் இடையே வறுமைக்கு எதிரான வருங்காலத் திட்டங்கள் கொள்நெறிகள் எவ்வாறு செல்லும் என்பது பற்றிய ஒரு பொதுவான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. அரசாங்கப் பக்கத்தில் சிலர் காலத்துக்குக் காலம், வ.கு.உ தொடர்பாக இரட்டைப் போக்குடைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பொழுதிலும், வ.கு.உ பல வழிகளில் இரு சாராரும் சேர்ந்த ஒரு தொடக்கு முனைவாக, வெவ வேறு பங்காளர்களினி கருதி துக் களையும் பிரதிநித்துவப்படுத்திய, அரசாங்கம், கொடையாளிச் சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் தனியார் துறை ஆகியோரைச் சேர்த்த நிலைப்பாடாக வெளிப்பட்டது.
வ.கு.உ, வறுமைக் குறைப்புத் தொடர்பாக அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து ஓர் அடிப்படையான நிலை மாற்றத்தை ஆதரித்து வாதிட்டது. "அரசாங்கத்தின் புதிய பங்களிப்பு என்பது, பொதுத்துறைச் செலவினுடாக அல்லது தனியார்துறைப் பொருளாதார நடவடிக்கையை மட்டுப்படுத்தி வறுமையை நேரடியாக தீர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, வறுமைக் குறைப்பு நடப்பதற்கு ஏதுவான சூழமைவை ஏற்படுத்திக் கொடுத்தல்”. வ.கு.உ. சமூக காப்பொழுங்கு முறையினைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தினை மீண்டும் வலியுறுத்தும் பொழுதிலும் அதில் சீர்திருத்தம் செய்யப்படுவதன் தேவையினையும் வற்புறுத்தியுள்ளது.
சமூகக் காப்பொழுங்கு தொடர்பாக வ.கு.உ வின் நோக்கங்கள் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளன; மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை அதிகரித்தல், அதனுடைய தரத்தினை உயர்த்தல்; வருமான மாற்றலின் தாக்கத்தினையும் திறமையினையும் மேம்படுத்துதல்; பொதுவேலைகள் கீழ்மட்டத்திலுள்ள வசதிகள் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல்; வறியவர்கள் இடர் நிலைகளை எதிர்நோக்குவதில் கூடிய உதவியளித்தல்; மற்றும் விசேடமாக சமூகரீதியாக விலக்கப்பட்டவர்கள்
295

Page 155
மற்றும் பலவீனமுடையவர்களின் தேவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல். வ.கு.உ, புதிய வறுமைக் கெதிரான உபாயத்தில் முக்கியமான அம்சமாக, மோதலினால் தூண்டப்படும் வறுமையை கவனத்தில் எடுத்துக் கொள்வதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. வ.கு.உ ஆவணம் ஒரு விசேடமான பகுதி “சமுர்த்தித் சீர்திருத்தம்” என்பதைச் சேர்த்துள்ளது. இது முக்கியமாக நோக்கமாகக் கொள்வது தற்போதுள்ள தேசிய வறுமைத் தணிப்புத் திட்டத்தை இணக்கப்பாடு கொண்டதாக மாற்றியமைத்தல்; இதில் திட்டத்தில் இலக்குப்படுத்துதல் முன்னேற்றமுடையதாகச் செய்தல். அவ்வாறு செய்வதால் வறுமைக் குறைப்புத் தொடர்பாக அதனை கூடிய செயற்திறனுடையதாக மாற்றுதலுடன், திட்டம் நடைமுறைப்படுத்துவதில் பாதீட்டின் இக்கட்டான நிலைகளைக் குறைத்தலும் வேண்டப்படுகின்றது.
சமுர்த்தியின் மறுசீரமைப்புக்கான ஒழுங்குகள்
வ.கு.உ வின் விருத்தி பற்றிய முன்னேற்றம் ஏற்பட்டுச் சென்றதும், இலங்கை அரசாங்கம் சமுர்த்தியின் மறுசீரமைப்புத் தொடர்பான தொடக்குமுனைவுகளை எடுத்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தயாரித்த ஒரு முன்வரைவு கொள்நெறி ஆவணத்தில் கூறப்பட்டதற்கு ஏற்ப (2002) சமுர்த்தி மறுசீரமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு:-
9 பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் ‘முதலாம் வகை தவறு
(ஒழுக்குகள் ) நீக்கப்படுவதுடன் திட்டத்தின் செயலெல் லை குறைக்கப்படுவது, 2.1 மில்லியன் குடும்பங்களிலிருந்து 1.1 மில்லியன் குடும்பங்களாக குறைத்தல். இது சனவரி 2003 இல் பூர்த்தி செய்யப்படுதல் ‘இரண்டாவது வகை’ தவறுகள் (விலக்கல்) நீக்கப்படுவதுடன், உண்மையில் தேவையின் நிமித்தம் முன்பு வெளியே இருந்த வறியவர்கள் சேர்க்கப்படுதல் - ஆகஸ்ட் 2003 இல் பூர்த்தி செய்தல். 9 பொதுவான ஏற்புடைத்தன்மை வாய்ந்த மற்றும் தரப்படுத்திய தெரிவு செய்யும் தகுதிகளும் மற்றும் வெளியேறும் தகுதிகளும் தயாரித்தல் 0 இத்தகுதி விதிகளைப் பின்பற்றி அவற்றினுTடாக திட்டத்தினை இணக் கப்பாடுடையதாக மாற்றியமைத் தல . இதனால் திட்டம் சீர்ப்படுத்தப்பட்டு அதனுடைய பயனுறுதித் தன்மையினை வறுமை குறைப்பது தொடர்பாக அதிகரிக்கச் செய்தல்.
இலக் குப் படுத் தலி தவறுகளை நீக குவதற்கு பயனாளிகள் , பயனாளிகளல்லாததோர் தொடர்பான குடியிருப்பாளர்கள் குறித்த அளவீடு ஒன்றினைச் செய்ய வேண்டியது எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான தொழில் நுட்ப ஆதரவு அரசாங்கம், அரசாங்க சார்பற்ற மற்றும் தனியார் துறை
296

நிறுவனங்களிடமிருந்து பெற முடிந்தது. சமுர்த்தி அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள தகுதி விதிகளுக்கமைய மதிப்புப் பெற்ற சமூகத்திலுள்ள தலைவர்களைக் கொண்ட ஒவ்வொரு இடத்திற்குமாக குழு பயனாளிகள் தெரிவு செய்வதன் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதும் வரவேற்கப்பட்டது. இவற்றுடன் திட்டத்தின் ஒழுங்குப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்துவதற்கு சட்ட ரீதியாக வழிமுறைகள் பற்றிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு ஏற்றதாக புதிய சட்ட ஒழுங்குகள் திட்டத்தில் தகுதியற்றவர்களினால் துஷ பிரயோகம் அல்லது பிழையாக நடந்து கொள்ளல் என்பவற்றுக்கு எதிராக, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட எண்ணியுள்ள சமூக நலன் நன்மைச் சட்டத்தின் (Welfare Benefit Law) ஒரு பகுதியாக சேர்க்கப்படுவது உத்தேசிக்கப்பட்டது. சமுர்த்தித் திட்டம் தொடர்பாக, புதிய சமூக நலன் நன்மைச் சட்டம் என்பதனுடாக சட்ட அடிப்படை வழங்கப்படுவது முக்கியமானதாகக் கருதப்பட்டதுடன் , இலக்குப்படுத்தல் உண்மையாகத் தேவையுடையவர்களைக் குறித்து முன்னேற்றமடைதல், மற்றும் வெளியேறுவதற்கும் வழிகாட்டிகள் புதிய சட்டத்தில் சேர்க்கப்படுவதும் வரவேற்கப்பட்டது. நடுத்தர காலத்தில், எல்லா நலன் நோக்கு ஒழுங்குகளும் நலன் நன்மைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
முடிவுரை
வறுமைத் தணிப்புப் பற்றிய திட்டங்களின் பிரதான மறுசீரமைப்பு இலங்கையில் பல காரணங்களுக்காக தேவைப்படுவது வலியுறுத்தப்பட்டது. முக்கிய காரணங்கள் பின்வருமாறு: (அ) தற்போதுள்ள திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் மிகையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன, (ஆ) வறுமை குறைப்பது தொடர்பாகத் திட்டங்களின் செயற்திறன் குறைந்தவையாகக் காணப்பட்டுள்ளன; (இ) சில பலவீனமுடைய பிரிவினர், மோதலினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கவனிக்கப்படவேண்டிய தேவையுள்ள வறியவர்கள் உள்ளடங்கலாக, பரவலாக விலக்கப்பட்டுள்ள நிலை; (ஈ) பொருளாதார சீர்திருத்தமுறைவழி மற்றும் பொதுவாக சமூக அமைதி ஆகியவற்றின் மீது ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள். நவ-தராண்மைவாத ஏற்பாடுகளின் நோக்கில் பார்க்குமிடத்து, இலங்கையில் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள், கொள்நெறிக் கருத்தாடல்கள் பொதுத்துறையின் அரசியல் நோக்கங்களைத் தழுவிய நாடு பூராகவும் நடைமுறை செய்யப்படும் வருமான மாற்றல் திட்டங்கள் என்பவற்றின் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் ஆகியன வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளன. வ.கு.உ. ஆவணத்தில் பிரதிபலிக்கப்பட்டிருப்பது போல, பல்வேறு பங்காளர்களிடம், அரசாங்கம், கொடையாளி சமூகத்தினர், அரசார்பற்ற அமைப்புகள், மற்றும் வேறு செயற்பாட்டாளர்கள், வறுமை எதிர்ப்புக் கொள்நெறிகள் திட்டங்கள் ஆகியவற்றின் சீர்திருத்தத்தின் தேவை பற்றிய கருத்தொருமித்த நிலை உருவாகியுள்ளது.
297

Page 156
உத்தேசித்துள்ள இலக்குபடுத்தல் முயற்சிகள் பல சவால்களை, எத்தகைய உபாயங்கள் பின்பற்றப்படுவது குறித்தும், எதிர்நோக்குகின்றன. இச்சூழ்நிலையில் அரசியல் ரீதியாக ஏற்கப்படாத தீர்மானங்களை ஆட்சியாளர் எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. தற்பொழுது நிலவுகின்ற பலவீனமுடைய மற்றும் உறுதியில்லாத தன்மையும் கொண்ட அரசியல் நிலை காணப்படும் பொழுது, சமூக நலன்புரிச் சேவைகள் தொடர்பாக ஏற்படக் கூடிய அதிகமான வெட்டுதல் காரணமாக நாட்டின் தென்பகுதியில் விளைவிக்கப்படக் கூடிய பரவலான அமைதியின்மையின் விளைவுகள் நடைமுறையிலுள்ள சமாதான முறைவழி மீது பாதிப்புகளைக் கொண்டுவரக் கூடும். இவற்றினால் வறுமைக்கு எதிரான திட்டங்களில் அதிகமான மறுசீராக்கத்தை வரவேற்கப்படக் கூடிய சாதகமான சூழ்நிலையாக இருக்காது. மறுபுறத்தில், அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி, படுகடன் தொடர்பான நெருக்கடியான நிலையில், பெரிய பலபக்க கொடையாளர் அமைப்புக்கள் குறிப்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் மீது, கொள்நெறிகள், திட்டங்கள் தொடர்பாக, வ.கு.உ போன்ற செயற் கருவிகள் பயன்படுத்தியும், செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் உள்ளன.
வ.கு.உ வில் எதிர்பார்க்கப்பட்டது போல, வறுமை சம்பந்தமான சீர்திருத்தம் தனியார்துறைத் தலைமையிலான வளர்ச்சி முன்னெடுப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவது அவசியமாகின்றது. இதில், வறியவர்கள் வறுமைத் தணிப்பு திட்டங்களிலிருந்து உற்பத்தி தரும் வேலைசெய்தல் நிலைக்கு மாறும் சாத்தியமும் அதற்கான ஊக் குவிப்புகளும் கிடைக்க முடிகின்றது. இடைக்காலத்தில், சுயவேலை மற்றும் சிறு தொழில்கள் ஆகியவை இலாபத் ‘தன்மை முறையில் சில முயற்சியாற்றல் உடைய வறியவர்களினால் பயன்படுத்தப்படலாம்; ஆனால் பொதுவாகக் கூறுமிடத்து, முன்பு கூறிய ஆதாரங்கள் காட்டுவது போல வறுமை தொடர்பாக இவை செயற்திறன் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. எமது ஆய்வு காட்டுவது, பாதுகாப்பு வலையமைப்பினையும் மற்றும் வருமானம் உண்டாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இணைப்பது வறுமைத்தணிப்பு ஒழுங்கமைப்பில் செயற்திறன் கொண்டதாக இருப்பதில்லை அல்லது அவை எதிர்மாறான விளைவுகளைக் கொண்டுவரலாம். அரசாங்க மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் முயற்சிகள், வருமானம் உண்டாக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில், ஒரு கலப்பான, ஆனால், அதிகமாக எதிர்க்கணிய பெறுபேறுகளைத் தந்துள்ளன. எப்படியாயினும், பாதுகாப்பு வலையமைப்பு மற்றும் முயற்சியாண்மை இரண்டும் வேறுபடுத்திய விதமாக மேம்படுத்தல் தேவைப்படுகின்றது; முக்கியமாக முதல் கூறியது அரசின் பொறுப்பாகவும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், தனியார்துறை ஆகியவை முயற்சியாண்மை விருத்தியில் கூடுதலான பொறுப்பினைக் கொண்டுள்ளன.
பாதுகாப்பு வலையமைப்பு ஒழுங்கு தொடர்பாக சமுர்த்தியும் மற்றைய அரசு நிதிப்படுத்தும் உதவித் திட்டங்களும் மற்றும் சமூக காப்பொழுங்கு முறைகளும் (உதாரணம் ஓய்வுபூதிய நிதிகள், முறைசாராத்துறையில் வலுவிழந்தோருக்கான பொதுத்துறை உதவி, மற்றும் சில நிவாரண மற்றும்
298

புனர்வாழ்வு உதவித் திடடங்கள் ஆகியவை) ஒரு விரிவான அறிதொழிலர். பங்கு கொண்ட சமூக நலன்புரி அமைப்பிற்குள் இணைக்கப்பட முடிகின்றது (இது பயிற்சியுடைய சமூக வேலையாட்களினால் வழங்கப்படலாம்). இவ்வழி, தற்பொழுதுள்ள அரசாங்க திட்டங்களை ஒழுங்கமைத்து இணக்கப்பாடுடைய மாற்றங்களைச் செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்க உதவுகின்றது. இத்தகைய முறையில் வறுமைத் தணிப்பினை அரசியல் மயமாக்கலிலிருந்து விலக்கிக் கொள்ளவும், அமைப்பில் உள்ள வாய்ப்புக்களை அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்வதையும் தடுக்க முடிகின்றது. ஆனாலும் அத்தகைய ஒருசேவை வழங்கல் அளவுக்கு மேலான பணிக்குழு ஆட்சி அதிகார நிலைகள் இருப்பது வறிவர்களுக்கும் மற்றைய வசதியற்றவர்களுக்கும் கஷ்டங்கள் ஏற்படலாம்; அவற்றைத் தடுத்தும் அவற்றிற்கு எதிரான பாதுகாப்புகளை வகுத்துக் கொள்ளும் தேவையும் ஏற்படுகின்றது. தேவையுள்ளவர்களுக்கு செயற்பாடுள்ள பாதுகாப்பினை வழங்கும் பொழுது, இவ்வொழுங்குகளிலிருந்து (வறுமைத் தணிப் புத் தொடர்பானவை) வெளியேறுவதற்கும் தெளிவாக வெளிப்படையாக தெரியப்படுத்தலுடன், மற்றும் இதற்காக எத்தகைய ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும்-பாதுகாப்பு வலையமைப்பிலிருந்து உற்பத்தி பயனுடைய வேலைசெய்யும் நிலைக்கு மாறுபவர்கள் - நன்கு அறிந்தவையாக இருப்பதும் முக்கியமாகின்றது.
இறுதியாக, சீர்திருத்த முறைவழி எவ்வகையிலும் இலங்கை அரசின் நன்றாக வேரூன்றிய பங்களிப்பாக முக்கியமாக சமூக துறைகளில், கல்வி மற்றும் சுகாதாரம் இருந்துள்ளதைப் பாதிப்பது தவிர்க்கப்படுதல் அவசியம். இலங்கையில் பொதுவாக கல்வி, சுகாதாரம், மனித முதல் என்பவற்றின் முன்னேற்றங்களும் பெறுபேறுகளும் நன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை; இது நவ தாராண்மைவாத எழுத்துக்களிலும் முக்கியமாக அவதானிக்கப்பட்டுள்ளன; ஆலோசிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் இப்பெறுபேறுகுளை வைத்து கட்டியெழுப்புவது சரியான முறையாகின்றது; அவற்றை முற்றாக எதிர்திசைக்குத் திருப்புவது பொருத்தமாற்றது, விரும் பத்தக்கதுமல்ல. கல்விச் சீர்திருத்தங்கள் தேவைப் படுகின்றன; இவை இளையவர்களை பொதுத் துறை வேலை வாய்ப்புகளுக்கல்லாது தனியார்துறை வாய்ப்புக்களுக்குத் தயார்படுத்துவது தேவையாகின்றது. அதேபோல சுகாதாரத்துறையில் வசதிகளை விருத்தி செய்வதற்கும், அத்துடன் பொதுத்துறையின் பொதுவாகக் குடிசனத்தினருக்கு, வறியவர்கள் உட்பட வழங்கும் சேவைகள் நிலைத்து நிற்கப் பேணப்படக் கூடியவையாக செய்தல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பயனுள்ள சில உள்நோக்குள்ள அம்சங்களை நவ - தாராண்மைவாத அணுகுமுறையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவை நலன் பேணும் அரச கொள்நெறிகளுடன் இணைக்கப்பட்டு, அவை சமரீதியாகவும் ஒரே நேரத்திலும் வளர்ச்சியினையும் நீதித் தன்மையினையும் விளைவிக்கக் கூடியதாக இருப்பதும் வேண்டப்படுகின்றது.
299

Page 157
உசாத்துணைகள்:
l.
2.
World Bank: Sri Lanka Poverty Assessments, 1995 & 2002, Washington. V− Clearly, S., The World Bank and poverty Reduction in Sri LankaReflections on Bank's Poverty Assessment, NGO Forum, Sri Lanka, 1995. Government of Sri Lanka, Ministry of Finance, Samurthi Restructuring Programme, Draft Concept Paper, 2002. Government of Sri Lanka - A Framework for Poverty Reduction, 2000. Asian Development Bank, Poverty Reduction in Sri Lanka 2001, Colombo.
300

அத்தியாயம் 8
புதியதொரு பொருளாதார காலத்திற்குள் நுழைதல்: பால்நிலை அனுகுமுறை மீண்டும் பார்வை இழந்ததா?
றமணி ஜெயசுந்தெரே
1. முன்னுரை
சமாதானம் பற்றிய விழிப்பு நிலையிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதலிலும், இலங்கைப் பொருளாதாரம் தொடர்பான சீர்திருத்தம் இன்று முன்பு இல்லாதவாறு முக்கியத்துவம் பெறுகின்றது. இன்று, இலங்கை வடகிழக்குப் போர் சூழலிலும் மற்றும் தென் பகுதி கிளர்ச் சிக் காலத்திலும் செய்யாதவற்றை, பொருளாதாரத்தினை பொருத்தமான வழிகளிலும் நடவடிக்கைகளினாலும் முன்னேற்றிச் செல்வது மிக முக்கிய கவனத்தை எடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில், புவிச்சரித முறையில் பிரதேசங்கள் விலகிச் செல்வது, இனத்துவரீதியாக பாரபட்சம், மற்றும் வர்க்க ரீதியாக வேறுபாடுகள் ஆகியவை கூடுதலாக உணரப்படுவதன் பின்னணியில் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் வேறுபட்ட, ஆக்க முறையான நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், இம் முறைவழியின் பால்நிலை சார்பாக பார்வையில்லாத தன்மை முன்பிருந்தது போல 'இன்றும், பல ஆண்டுகளாக பால்நிலைபற்றிப் பலமாகப் பேசப்பட்டு வந்துள்ள போதும் தொடர்கின்றது.
இவ்வத்தியாயம், முக்கியமான கொள்நெறி ஒழுங்குமுறைகளை - அரசாங்க பொருளாதார சீர்திருத்தம் தொடர்பாக நோக்குகின்றது. அவைகளில் பின்வரும் ஆவணங்களில் தெரியப்படுத்தியுள்ள நிலைப்பாடுகள் முக்கிய கவனத்திற்கு வருகின்றன: இலங்கை தொடர்பாக வேலை செய்தல் பற்றிய தேசிய கொள்நெறி, (வேலை செய்தல் மற்றும் உழைப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டது); இலங்கையினை மீளப்பெறுதல்: தொலைநோக்கும் விரைவுப்படுத்திய அபிவிருத்தி உபாயமும்; மற்றும், வளர்ச்சியுடன் இணைத்தல்: இலங்கையின் வறுமைத்தணிப்பு உபாயம் (இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டது) மற்றும் நிவாரணம், புர்ைவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையே இணக்கப்பாடு என்பவை பற்றிய சட்டகமைவு (இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டது, 2002)
30

Page 158
இவை எல்லாம் முக்கியமான இக்காலத்துக்குப் பொருத்தமான விடயங்களின் உத்தியோகபூர்வமான கொள்நெறி ஆவணங்களாக இருப்பதுடன், மிகவும் முக்கியமான வறுமைப் பிரச்சினை பற்றியும், வேலைசெய்தல் பற்றியும் இலங்கை முழுவதையும் குறித்து மற்றும் மோதல் அனுபவிக்கப்பட்டு வருகின்ற பிரதேசங்களும் சேரலாக கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவை இன்று இலங்கைப் பொருளாதாரத்தில் பிரதான பிரச்சினைகளைக் கொண்ட பகுதிகளாக இனங்கண்டு கொள்ளப்படுவதுடன், மிகவும் முக்கியமாக இலங்கையில் பெண்களின் தீர்க்கமான பங்களிப்பு, பங்கு கொள்ளுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பகுதிகளாகவும் உள்ளன.
2. பெண்களின் பொருளாதாரப் பங்குகொள்ளுதல் பற்றி ஒரு
சுருக்கமான பின்னணி
இலங்கைப் பொருளாதாரம், சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. 1970களின் முற்பகுதியிலும் மற்றும் நடுப்பகுதியிலும், ஓர் உள்நோக்கு பொருளாதாரம் என்ற நிலையில் பெரும்பாலும் இருந்தது. அக்கட்டத்திலிருந்து, 1977 இல், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள் நெறிகளுக்குச் சென்றுள்ளது; இவை முழுவதும் ஒரு திறந்த பொருளாதாரத்தினை தழுவியிருந்தன. நாட்டின் பொருளாதாரம் சராசரி 4 - 5 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீதத்தில் வளர்ச்சியடைந்தது. நாடு அதனுடைய கொள்நெறிகளின் வேறுபட்ட விளைவுகளின் தாக்கத்திற்கு உட்பட்டது. இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சி, வெவ்வேறு துறைகள் மீது வேறுபட்டுச் சென்ற அனுபவம் அறியப்பட்டுள்ளது. திறந்த பொருளாதாரக் கொள் நெறிகள் வேலைவாய்ப்புகளின் அதிகரிப்பினை ஏற்படுத்தியதுடன், பொருளாதாரத்தின் உற்பத்திக் கட்டமைப்பும் விவசாயத்திலிருந்து தயாரிப்பு தொழில்களுக்கு மாறியது. தயாரிப்புத் தொழில் ஏற்றுமதிகளின் பெறுமதி 1978 இல் 5 சதவீதமாக மட்டும் இருந்தது. இது 1994 இல் 72 சதவீத அளவுக்கு அதிகரித்தது; வேலை செய்தல் வீதம் அதிகரித்ததன் காரணமாக வேலையின்மை வீதமும் குறைந்தது. (அட்டவணை 1)
இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம், நல்லதாக உள்ள முறையில், நாட்டின் உழைப்பினர் படையான 6.7 மில்லியன் தகுதியுடைய குடிசனத்தின் மீது மிக முக்கியமானதாக இருந்துள்ளது. 1990 - 1998 வரையான காலப்பகுதியில் உழைப்பினர் படையின் பங்குகொள்ளல் வீதம் 48-52 சதவீதத்திற்கு இடைப்பட்டதாக ஏற்றவிறக்கங்களை அனுபவித்தது; இது 1999 இல் தகுதியுடைய குடிசனத்தில் 52.3 சதவீதத்தை எட்டியது. இதன் விளைவாக வேலையின்மை வீதம் 15.9 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதத்திற்கு குறைந்தது.
302

அட்டவணை 1: வேலையற்றோர் வீதம்
வருடம் කෞ,ඤහෝt பெண் மொத்தம்
1990 9.1 23.4 14.0
1994米 11.4 17.9 - 13.3
1996米 8.8 6.2 11.1
1997米 7.7 16.1 0.5
1998: 6.5 14.0 9.2
1999* 6.7 3.0 8.9
* வடகிழக்கு சேர்க்கப்படவில்லை மூலம்: குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2000, கொழும்பு.
அட்டவணை 2: உழைப்பினர் படையின் பங்குகொள்ளல் உழைப்பினர் படை பங்கு கொள்ளும் வீதம் (%)
வருடம் மொத்தம் මජ්ඤit பெண் !
1981 44.4 65.4 22.5 1990 53.3 674 39.4
1994 48.5 68.6 28.9
1998 51.6 66.6 37.6
1999 52.3 68.2 36.6
M மூலம்: 1981-1999 குடிசன மதிப்பு: பொருளாதார-சமூக அளவீடு 1985/86; உழைப்பினர் படை அளவீடுகள் 1980, 1994, 1999 குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு.
3. பெண்களின் உழைப்பினர் படைப் பங்குகொள்ளல்
இலங்கையில் உழைப்பினர் படை பங்கு கொள்ளல் இயல்புகளில், முக்கியமானதாக, ஆண்கள் பங்கு கொள்ளும் வீதம் உயர்ந்திருப்பது காணப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் வேலைப்படையில் ஆண்களின் தொகையில் அரைவாசியாகவே இருந்துள்ளனர். எவ்வாறாயினும், உழைப்பினர் படையில் பெண்களின் பங்கேற்றல் நிலை மெதுவான, தொடர்ச்சியான
303

Page 159
அதிகரிப்பினை சென்ற இரு தசாப்தங்களில் காட்டியுள்ளது. 1960 களின் முற்பகுதியில் இவ்வீதம் 20 சதவீதத்திலிருந்து 39.4 சதவீதத்திற்கு 1990 இலும் மற்றும் 1999 இல் 36.6 சதவீத அளவுக்கும் உயர்ந்தது. பெண்கள் கூடுதலாக உழைப்பினர் படையில் பங்கேற்றதனால், முக்கியமாக பெண்களின் வேலையின்மை வீதமும் குறைந்தது, இது 1990 இல் 23.4 சதவீதமாக இருந்ததுடன், 1998 இல் 13.0 சதவீதமாகக் குறைந்தது. ஆனாலும் பெண்களின் வேலையின்மை வீதம் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது இரு மடங்கு கூடுதலாக இருப்பது தெரிகின்றது. இப்பிரச்சினை தொடர்பாக சுவர்ணா ஜெயவீரா (Swarna Jeyaweera) கூறுவது பின்வருமாறு: “பெண்கள் வேலையற்ற நிலை தொடர்பாக கூடுதலாக பலவீனமான நிலையில் உள்ளனர்; இது குறிப்பாக 1960 களிலிருந்து அவர்களின் கல்வித் தகைமை மட்டங்கள் உயர்ந்து சென்றுள்ளதனாலும் மற்றும் 1980 களில் குடும்பங்கள் மீதான பொருளாதார அழுத்தங்களும் காணப்பட்ட சூழ்நிலையில் பெண்களின் வேலையின்மை வீதம், தொடர்ச்சியாக சென்ற மூன்று தசாப்தங்களில் ஆண்களின் வீதத்தில் இரண்டு மடங்காக இருந்துள்ளது.” பெண்களின் உழைப்பினர் படையில் பங்கேற்றல் அதிகரித்து வந்தது மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்துள்ள பங்களிப்பு முழுவதும் திருப்திகரமானதாக இருக்கவில்லை. ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது பெண்களின் எண்ணிக்கை உழைப்பினர் படை தொடர்ந்தும் குறைந்து காணப்படுதல் கவனிக்க முடிந்தது; அத்துடன், மொத்த உழைப்பினர் படையினால் பெறப்படும் வருமானத்தில் 31 சதவீதம் மட்டும் பெண்கள் பெறுகின்றனர். மேலும் பெண் உழைப்பினருக்கான கேள்வி தொடர்ந்து தற்காலிகமான, குறைந்த வெகுமதியுடைய உழைபிற்கே, பெண்களின் கல்வித் தகைமைகள் அதிகரித்திருக்குமிடத்திலும், இருந்து வந்துள்ளது. பொருளாதாரத்தில் மற்றும் சமூக துறைகளிலும் பெண்கள் பற்றிய நிலையினை அவர்கள் செய்யும் வேலை தொடர்பாக நோக்கும் பொழுது தெளிவான வாழ்நிலை வேறுபாடு, பாரபட்சம், சமத்துவமில்லாத வாய்ப்புகள் மற்றும் சுரண்டப்படும் நிலைமைகள் ஆகியவை உழைப்புச் சந்தையில் இருப்பதை அறிய முடிகின்றது; இவை பெண்களை ஒரு பலவீனப்படுத்தும் பகுதியினராக மாற்றியுள்ளது.
கிடைக்கின்ற புள்ளிவிபரங்களைப் பார்க்குமிடத்தில், பெண்கள் உழைப்பினர் படையில் ஈடுபடுதல் அதிகமாக தீர்மானமெடுக்கும் வாய்ப்புக்கள் இல்லாத மட்டங்களில் காணப்பட்டுள்ளது. பிரதான தொழில் பிரிவுகளை நோக்கும் பொழுது, பெண்களின் ஈடுபாடு, நிருவாக, முகாமை, அறிதொழில் நிலைப்பட்ட, மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள், கண்காணிப்பாளர்கள் ஆகியவற்றில் மிகக் குறைவாக, எழுதுவினைஞர், விற்பனை நடவடிக்கை, மற்றும் அரைவாசி பயிற்சி மற்றும் பயிற்சியற்ற நிலைகள் என்பவற்றுடன் ஒப்பிடும் பொழுது காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பெண்களின் வேறுபட்ட நிலைகளில் ஈடுபாடு பற்றிய சதவீத அளவு 1993 இல் 1975 இலும் இருந்ததைவிட
304

நன்றாகக் காணப்பட்டுள்ளது; இது அவர்களின் உழைப்பினர் படைப் பங்கேற்றலின் வீதம் உயர்ந்து சென்றதற்கு ஏற்றதாக ஒத்திருந்துள்ளது (அட்டவணை 3)
அட்டவனை 3:
வெவ்வேறு தொழில் பிரிவுகளுக்கிடையே பெண்களின் ஈடுபாடு
பிரதான தொழில்/ 1975 பெண்களின் % 1993 பெண்களின் %
வேலைப் பிரிவுகள்
நிருவாக மற்றும்
முகாமைச்சார்ந்தவை 6.6 16.4 அறிதொழில், தொழில்நுட்பம் உடையவை மற்றும்
தொடர்பானவை 11.1 23.9 எழுதுவினைஞர் மற்றும்
தொடர்பானவை 7.1 40.5 விற்பனை வேலையாட்கள் 13.2 35.4 தொழிலாளர் மேன்முறையாள்,
ஆண்கள்/பெண்கள் 12.9 24.6 பயிற்சியுடைய மற்றும்
அரைவாசிப் பயிற்சியுடையவர்கள் 34.9 56.6 பயிற்சியில்லா வேலை செய்வோர் 41.0 51.9 மொத்தம் 348 48.3
Ꮺ மூலம்: உழைப்புத் திணைக்களம், வேலைசெய்வோர் அளவீடுகள் 1975, 1993,
G&T(Լքլbւ
1990 இல், இலங்கையிலுள்ள எல்லா நிறுவனங்களிலும் 0.42 சதவீதமான பெண் வேலைகொள்பவரைக் கொண்டிருந்தது. மேலும் 1971 இல் மொத்த உழைப்புப் படையில் 0.8 சதவீதமே பெண வேலை கொள்வோராக இருந்தனர்; இது சிறு அளவாக 1995 இல் 1.1 சதவீத நிலைக்குச் சென்றது. இதே ஆண்டு வேலையாள் மட்டத்தில், 67.6 சதவீத பெண் உழைப்பினர் படை வேலை செய்தனர். சொந்தமாக வேலை செய்யும் வேலையாட்கள் அல்லது சுயாதீனமாக செய்தவர்கள் குறைந்த அளவாக 11.2 சதவீதமாக 1971 இல் காணப்பட்டனர்; இது ஒரு சிறு அளவுக்கு உயர்ந்து 1995 இல் 15.1 சதவீத நிலையை எட்டியது (அட்டவணை 4)
305

Page 160
கிடைக்கப் பெற்ற தரவுகள் ஒரு முரண்பட்ட நிலையைப் பிரதிபலிக்கின்றன. அதாவது, இலங்கையில் தாராளமயமாக்கலின் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவற்றின் விளைவாக பெண்கள் ஒரு முக்கியமான பங்களிப்பினைப் பொருளாதாரதி தரி லி செயப் துளிர் ள பொழுதலுமி வரிளைவுகள் பொருத்தமுடையவையாக இருக்கவில்லை. தற்பொழுது, தேயிலை, உடைகள், மற்றும் உழைப்பினர் ஏற்றுமதி ஆகியவை மூன்று பிரதான பொருளாதாரத்தின் பங்களிப்புப் பகுதிகளாக, மொத்த நாட்டின் அந்நியச் செலாவணியில் 90 சதவீதத்திற்கு மேலாக பெற்றுத்தருகின்ற துறைகளாகக் காணப்பட்டுள்ளன. இப்பிரதான துறைகளின் உழைப்புப்படைகளில் பெண்கள் பெரும்பான்மை நிலை வகிப்பதும் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
இக் குறிப்பிட்ட பிரதான துறைகளினால், ஒன்று (தேயிலை) பாரம்பரியதுறை, மற்றைய இரண்டும் முழுவதும் நாட்டின் திறந்த சந்தைக் கொள் நெறிகளின் விளைவாக ஏற்பட்டவை. பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கையின் திறந்த சந்தைக் கொள் நெறிகள், பொருளாதார வளர்ச்சியைப் போல, என்ைனிக் கை ரீதியாக அல்லாமல் தரமுடைய வேலைவாயப்ப்புகளை உண்டாக்கவில்லை என்பது கவனிக்க முடிந்தது. உயர்ந்த வருமானம் பெறும் மூன்று மூலாதாரங்களும் தேயிலை, ஆடைகள் மற்றும் உழைப்பு ஏற்றுமதி என்பவற்றில் பெண்களின் பெரும்பான்மை நிலை இருந்து வருகின்றது. மேலும் இவ்வெல்லாத்துறைகளும் குறைந்த வெகுமதி, குறைவான தேர்ச்சி கொண்ட பெண்கள் உழைப்பு முதன்மையாக இருப்பதை அறியமுடிகின்றது.
4. அரசின் கொள்நெறித் தோற்றப்பாட்டின் உறுதிப்பாடு
மேலே குறிப்பிட்டது போல, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலினை நோக்கும் பொழுது. குறிப்பாக மூன்று ஆவணங்கள் நாட்டைப் பற்றிய முக்கியமான தேவைகளை உணர்த்தியுள்ளன. அவையாவன: தேசிய வேலைக் கொள்நெறி; இலங்கையினை மீளப்பெறுதல், வறுமைக் குறைப்பு உபாயத்தினையும் இது உள்ளடக்குகின்றது; மற்றும் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் இணக்கப்பாடு, இது குறிப்பாக மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை இலக் காகக் கொண்டுள்ளது. இம் மூன்று ஆவணங்களையும் நோக்கும் பொழுது, இன்றைய அரசாங்கத்தின் எண்ணப்பாங்கு பால்நிலை தொடர்பாக அரசாங்கக் கொள்நெறியிலும் நிருவாகத்திலும் பிரதான அம்சமாக சேர்ப்பது என்பதைக் கணக் கெடுத்துக் கொள்ளுதல் தேவைப்படுகின்றது. பதவியேற்ற சந்தர்ப்பத்தில் 22 சனவரி 2002, பிரதம மந்திரி நாட்டின் பொருளாதாரம் பற்றிய தேவைகளை வெளிபடுத்தினார்.
306

அட்டவணை 4: வேலை நிலை சார்ந்த சதவீத பகிர்ந்தளிப்பு
வேலை நிலை மொத்தம் பெண்கள் ஆண்கள்
1971
மொத்தம் 100.0 100.0 100.0 வேலைகொள்வோர் 3. 0.8 38
வேலைபெறுவோர் 66.6 76.9 63.7 சொந்தமாக வேலை செய்பவர் 250 11.2 29.0 கூலிபெறாத குடும்ப வேலையாள் 5.3 1.1 3.5
1981
மொத்தம் 100.0 100.0 1OO.O வேலைகொள்வோர் 2.2 2 2.4 வேலைபெறுவோர் 65.8 79.4 62.3 சொந்தமாக வேலை செய்பவர் 28.4 12.9 A 32.5 கூலிபெறாத குடும்ப வேலையாள் 3.6 6.5 2.8
1985/86
மொத்தம் 1 OC. O 100.0 100.0 வேலைகொள்வோர் 2.3 0.9 2.8
வேலைபெறுவோர் 58.5 59.0 28.3 சொந்தமாக வேலை செய்பவர் 26.0 7.4 29.7 கூலிபெறாத குடும்ப வேலையாள் 13.2 22.7 9.2
1991- முதல் காலாண்டு*
மொத்தம் OO.O 100.0 OOO வேலைகொள்வோர் .9 0.5 2.6 வேலைபெறுவோர் 59.8 M 59.6 59.9 சொந்தமாக வேலை செய்பவர் 27. 18O 3.7 கூலிபெறாத குடும்ப வேலையாள் 1.2 21.8 5.8
1995 முதல் காலாண்டு*
மொத்தம் 100.0 OOO 100.0 வேலைகொள்வோர் 2.5 1. 3.1
வேலைபெறுவோர் 62.4 67.6 60.0 சொந்தமாக வேலை செய்பவர் 26.2 15.1 31.2 கூலிபெறாத குடும்ப வேலையாள் 8.9 16.2 5.7
மூலம்: குடிசன மற்றும் வீடமைப்பு மதிப்பீடு, 1971 & 1981: இலங்கையின் உழைப்பு அளவீடு, 1985,1991,1995 குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு. * வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சேர்க்கப்படவில்லை
307

Page 161
பால்நிலை சார்ந்த விடயங்களுக்கு ஓர் உண்மை உணர்வுடன் அர்ப்பணிப்புள்ள வகையில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் காட்டிய பொழுதிலும், அரசாங்கம் ஒரு பந்தியை மட்டும் பெண்களின் பங்களிப்புப் பற்றிய விளக்கம் முயற்சித்த பொழுது ஒதுக் கப் பட்டது; நாட்டினி அரை வாசிக் களவான பகுதியரினர் ஒரப்படுத்தப்பட்டுள்ளனர்; அதற்கு தனியொரு அமைச்சு, பெண்கள் விவகார அமைச்சு வழங்கப்பட்டதுடன் தேசிய பாதீட்டில் ஒரு சதவீதத்திற்குக் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. “பெண்கள் நாட்டில் பெரும்பான்மையினராக விளங்குகின்றனர்; சனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் வேண்டும், நாங்கள் “வனிதா டிறிமாகா” என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் இதனால், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமத்துவம் உறுதிப்படுத்த முடிகின்றது, எங்களுடைய பெண்கள் விவகாரத்திற்கான அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளை முன்மொழிந்து இந்த இயக்கத்தின் கொள்றிெகளை நடைமுறைப்படுத்த முடியும்.”
பால்நிலை சார்ந்த சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசின் ஒழுங்குகள்
பெண்கள் விவகார அமைச்சு பால்நிலைச் சமத்துவம் தொடர்பாகப் பெண்களின் நிலையினை முன்னேற்றுவது குறித்து தொடக்கு முனைவுகள் அறிமுகப்படுத்துதல் வலியுறுத்தப்பட்டது. அதனுடைய குறிக்கோள்களில், கொள் நெறிகள், செயற்திட்டங்கள், மற்றும் திட்டங்கள் என்பவற்றை முன்வைத்தல், அவற்றினூடாக பால்நிலையினைப் பிரதான கொள்நெறி நீரோட்டத்திற்குள் கொண்டுவருதல், மனித மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தல், பால்நிலைச் சமன்பாடு மற்றும் பெணி களின் நிலையினைப் பலப் படுத்துதலி ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
இலங்கையில் பெண்களுக்கான பட்டயம்
அரசினால் ஒழுங்குபடுத்தப்படும் முறைகளை விட்டு, பெண்களின் சமத்துவநிலை நாட்டின் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; அத்துடன் இது, இலங்கைப் பெண்களின் பட்டயம் மற்றும் பெண்கள் தொடர்பாக தேசியக் குழு ஆகியவற்றினால் வலுவூட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பெண்கள் பற்றிய பட்டயம் அரசினால் மார்ச் 1993 இல் வரையப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது அரசாங்கத்தின் பிரதான கொள்நெறி அறிவிப்பாக, பெண்களின் உரிமைகள், அரசின் அவை தொடர்பான உறுதிப்பாடு எல்லாவகையான பெணகளுக்கெதிரான பாரபட்சம் நீக்கப்படுதல், மற்றும் பெண்கள் தொடர்பான விடயங்களைக் கவனத்தில் எடுத்தல் ஆகிய அம்சங்கள் முக்கியமாக இடம் பெற்றன. பால்நிலை
308

சார்பான பாரபட்சப் போக்குகள் இல்லாமல் செய்தல் பால்நிலைச் சமத்துவம் நிறைவேற்றுதல் என்பவை பட்டயத்தின் நோக்கமாக விபரிக்கப்பட்டது. அத்துடன் முக்கியமாக, பட்டயம் நியமங்களை நிறுவி பிரதான ஏழு துறைகள் தொடர்பான அவதானிப் புக் களை மேற் கொள்ளும் பொறுப் பினையும் ஏற்றது. இவ்வேழுதுறைகளும் பின்வருமாறு: அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் : குடும்பத்திற்குள் உரிமைகள்; கல்வி மற்றும் பயிற்சி பெறுவதற்கான உரிமை; பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் தொடர்பான உரிமை சுகாதாரம் மற்றும் சத்துணவுப் பாதுகாப்புக்கான உரிமை, சமூக பாரபட்சத்திலிருந்து பாதுகாப்பு; மற்றும் பால்நிலை வகையான வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன. பெண்களின் பட்டயம் முதல் முறையாக ஓர் ஆக்க முறையான ஏற்பாடாக இலங்கை அரசாங்கத்தினால் பெண்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து வெளிப்படுத்தப்பட்டது. 1981 இல் CEDAW அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும், இலங்கையில் பெண்கள் பட்டயம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பத்து வருடங்களுக்கு மேலாக காலம் எடுத்துள்ளது. ஆகவே, இலங்கையின் பெண்கள் பட்டயம் ஓர் அதிகார பூர்வமான அரசின் முத்திரை பதித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக, பால்நிலை சார்பான பாரபட்சம் மற்றும் பெண்களின் சமத்துவத்தை அடைவதற்கான ஒரு பிரதான 1ங்களிப்பு செய்யக் கூடிய ஒழுங்காக அமைகின்றது. இப்பட்டயம் மேலே குறிப்பிட்டது போல, முக்கியமான அதிகாரததை சட்டபூர்வமான ஒழுங்கு, தடுப்பு, தண்டனை வழங்குவதற்கான ஒழுங்குகள்; அமைப்பு ரீதியான சீர்திருத்தம் சட்ட நடைமுறை அதிகார ஒழுங்கமைவுக்கு உள்ளாக செய்யப்படும் வாய்ப்பு, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக - அடிப்படையான அமைப்புகள் மற்றும் வேறு நிறுவனங்கள் / திட்டங்கள் ஆகியவற்றிற்கு, பால்நிலை வகையான வன்முறைக்கான பரிகாரம் தேடுவதற்கு ஆதரவு வழங்குவதற்கு செய்யப்படக் கூடிய ஒழுங்குகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தொடர்பாக தேசியக்குழு
அரசாங்க ஒழுங்குகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டதில் மிக முக்கியமானதாக, பெண்களுடைய பட்டயத்தின் அங்கீகாரம் பெற்று அமைக்கப்பட்ட பெண்களின் தேசியக்குழு பிரதான செயற்கருவியாக காணப்பட்டுள்ளது. பெண்களுக்கான தேசியக் குழு, சனாதிபதியின் குழுவாக, முக்கியமாக மூன்று கூறுகளைக் கொண்ட அதனுடைய நடவடிக்கைகள் பாகுபாடு செய்யமுடிந்தது; பால் நிலை சார்ந்த பாரபட்சம் பற்றிய முறையீடுகள் வரவேற்கப்படுவதுடன், அவை கூர்ந்து நோக்கி ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல்; பால்நிலைப் பிரச்சினைகள் பற்றி
309

Page 162
ஆராய்வுகளை ஊக்குவித்தல்; மற்றும் பெண்கள் விவகாரப் பொறுப்புகளுடைய அமைச்சருக்கு பெண்கள் விவகார ஆலோசனை கேட்கப்படுமிடத்தில் அல்லது தேவையெனக் கருதினால் அதனை வழங்குதல்.
பெண்கள் பட்டயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பத்து வருடங்கள் கழிந்த பின்னர் அதனுடைய முழுமையான சாத்தியப்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்குள்ள காரணங்களில் ஒன்று அதற்கான உரிமையுடனான அதிகாரம் அதனைக் கண்காணிக்கும் பகுதியான பெண்களின் தேசியக் குழுவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இக்குழு பட்டயத்தின் செயற்பாடுகள் அடைந்து கொள்வதற்கு அதனுடைய முன்னேற்றத்தையும் மேற்பார்வை செய்வதற்கும் நிறுவப்பட்டிருப்பினும் சட்டப்படி தேவையான அடிப்படையினையும் மற்றும் அதிகாரத்தினையும், நடைமுறைப்படுத்துவதற்கு பெற்றிருக்கவில்லை; அவை இன்னும் சட்ட ஒழுங்குகளாக ஏற்பாடுகள் குறித்து வலுவூட்டுவதற்கும் அதிகாரங்களை வலியுறுத்தி செயற்படுத்துவதற்கும் தேவைபட்டுள்ளன. செயற்திறன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பட்டயத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பெண்கள் தொடர்பான தேசியக் குழு, தேவைக்கு ஏற்றபடி ஒரு சட்ட முறைக்கு ஏற்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாறுவது தேவைப்படுகின்றுது; அவ்வாறு மாற்றம் ஏற்பட்டு அது சட்ட, நிருவாக மற்றும் அதிகாரம் வாய்ந்த அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக தொழிற்படுவது அவசியம்.
பெண்கள் தொடர்பாக தேசிய மட்டத்தில் செயற்படும் திட்டம்
இலங்கையில் பெண்கள் நலன் குறித்து தேசிய மட்டத்திலான செயற்பாடுடைய திட்ட ஒழுங்குகள் பெண்களின் உலக மகாநாட்டுக்கு (1995, பீஜிங்) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது (மே 1996) மீண்டும் நிலைமை பலப்படுத்தப்பட்டது. தேசியத்திட்ட ஒழங்கு, பெண்கள் குறித்து உலகளாவிய செயற்பாடு முறையினைத் தழுவி எடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் அரசசார்பற்ற துறைக்குமிடையே ஒத்துழைப்பு காரணமாக வகுக்கப்பட்டது. இது பின்வரும் பிரதான விடயங்கள மீது கவனம் செலுத்தியது: பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களும் மனித உரிமையும், பெண்களும் ஆயுதந்தாங்கிய மோதலும், கல்வியும் பயிற்சியும், பொருளாதார நடவடிக்கைகளும் வறுமையும், சுகாதாரம் சூழமைவு, தீர்மானம் எடுத்தல்; பெண் பிள்ளை மற்றும் தொடர்பு சாதனம் ஆகியவை முக்கியமாக இடம்பெற்றன. தேசியத்திட்ட ஒழுங்கு அக்கறையுள்ள ஒவ்வொரு பகுதியிலும் எதிர்நோக்கும் பிரச்சினையை இனங்கண்டு கொள்ளுதல், அத்தகைய பிரச்சினை குறித்து வேண்டிய தீர்வுமுறைகளைக் கவனித்தல்; இனங்கண்டு கொண்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களை அறிந்து கொள்ளுதல். அரசின் சார்பாக பெண்கள் தேசியக் குழு தேசியத் திட்ட நடவடிக்கை நிறைவேற்றப்படுதலுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றது.
310

“வனிதா டிறிமாக”
அரசாங்கத்தின் பெண்கள் தொடர்பான கொள்நெறி முன்பு குறிப்பிட்டவற்றிற்கு மேலாக, முதல் முறையாக அரசியல் கட்சியொன்றினால் அதனுடைய பெண்கள் பற்றிய விஞ்ஞாபனம் “வனிதா டிறிமாக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது; ‘வனிதா டிறிமாக” (“பெண்களின் துணிவுடன் செல்லும் பாதை”) ஒழுங்குக்கு அமைய “பெண்களின் மன்றம்’ ஒன்று ஐம்பது இடங்களை நாட்டில் உள்ளடக்கியதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக சட்டங்கள் மற்றும் கொள்நெறி சார்பான விடயங்கள் பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை பற்றி இந்த மன்றத்தின் ஆலோசனை பெறுவது சட்டப்படியான தேவையாக விதிக்கப்பட்டது; அது ஒரு பாராளுமன்றக் குழுவிற்குள் 6ா அதிகாரங்களைக் கொண்டதாக இருந்தது. “வனிதா டிறிமாக” ஒழுங்கமைவில் இனங்கண்டு கொள்ளப்படும் முக்கியமான விடயங்களாக பெண்களின் அரசியல் பங்குகொள்ளல், பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாணும் விதமாக நடவடிக்கை எடுப்பதற்கு “நிலையங்கள” அமைத்தல் மற்றும் தேசியப் பட்டயம் பற்றிய சட்ட ஒழுங்கு மேற்கொண்டு பெண்களின் தேசிய ஆணைக்குழு நிறுவப்படுதல். இப்பின்னணியில் பலவற்றைக் கலந்த, நல்ல எண்ணங்கள், பெயரளவில் பேசுதல், உண்மையான உணர்வு பூர்வமான விடயங்கள் - பெண்களை பொருளாதாரத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றின் மத்தியில் அரசாங்கம் அதனுடைய கொள் நெறிகளை முன்வைத்துள்ளது; அவற்றில் பால்நிலை தொடர்பாக தெளிவில்லாத நிலை, பார்வை இழந்த நிலை என்பதை விட, பிரதிபலிக்கப்பட்டதே கூடுதலாக அறிய முடிந்தது.
S. தேசிய வேலைக் கொள்நெறி
M
பால்நிலை குறித்த நோக்கில், தேசிய வேலைசெய்தல் பற்றிய கொள்நெறி (வரைவு) ஒரு தெளிவான நிலைப்பாட்டைக் காட்டவில்லை. பால்நிலை தொடர்பாக ஒரு நடுநிலைமைத் தொனி அதனுடைய ஏழு பகுதிகளில் தென்படுகின்றது; வேலைபற்றிய பிரச்சினைகளை, பால்நிலை நடுநிலை என்ற போர்வையில் நோக்குகின்றது, அது பால்நிலை பற்றி பார்வை இழந்தது போன்ற ஒரு தன்மையைப் பிரதிபலித்துள்ளது. இரண்டு பகுதிகள் இந்த ஆவணத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் “சமூகப் பொறுப்புகள்” ஆகியவை நேரடியாக, தவிர்க்க முடியாத வகையில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றிக் கூறியுள்ளது; என்றாலும் பெண்களை, ஆதரவுப் பாவனை வழங்கும் பாணியில் மற்றும் பாரபட்சமுடைய முறையிலும் ஒரப்படுத்தும் தன்மை வெளிப்படுகின்றது. இது பால்நிலை பற்றிய கூருணர்வினைத் தவறாக புரிந்து கொள்ளும் எடுத்துக் காட்டாகவும் காணப்படுகின்றது.
311

Page 163
இக்கொள்நெறியில் இரண்டு விடயங்களாக, உற்பத்தித் திறனை மற்றும் இலங்கையர்களின் போட்டித் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல் வலியுறுத்தப்பட்டது. அதனுடைய அறிமுகக் குறிப்புகளில் பிரதான சவால்கள் எவையென முன்வைக்கப்பட்டுள்ளது: வேலை உண்டாக்குதலை பொருளாதார வளர்ச்சியினுடாக ஊக்குவித்தல், இருக்கும் உழைப்பினர் படையினர் நிலைமையினை முன்னேற்றுதல் என்பவை முக்கியத்துவம் கொண்டுள்ளன. அதனுடைய குறிக்கோள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
“இலங்கையின் மனித முதலின் மேம்படுத்தலும் அபிவிருத்தி பற்றிய ஒரு தெளிவான திட்டம் புத்தாயிரம் காலத்திற்கு (new millennium) வகுக்கப்பட்டு, இலங்கையின் தொலை நோக்கு இலட்சியமாகிய உலகளாவிய ரீதியில் வேலை செய்யும் ஆற்றலுடைய, போட்டித் தன்மை வாய்ந்த மனிதமுதல் ஆக்கப்படுதல் தேவையாகின்றது; இவை புத்தாயிரம் காலத்தில் நாட்டு மக்களை உயர்த்தி, முன்பு அடைந்திராத கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ; இவற்றினூடாக இலங்கை எந்த ஒரு முதலீட்டாளருக்கும், வெளிநாட்டு உள்நாட்டு வேண்டிய மனிதவளத் தேர்ச்சியினையும் திறன்களையும் அவர்களுடைய தொழில்களை நடத்துவதற்கும் வழங்க முடிகின்றது. இச்சூழ்நிலையில், மக்கள் தங்களுடைய திறமைகளையும் ஆறறல்களையும் பயன்படுத்தி உற்பத்திப் பெறுமதியினை உண்டாக்குவதிலும், தரமுடைய தேர்ச்சியுடைய மனித வலுவினை உலகசந்தையில் வழங்குவதிலும் தலையாய இடத்தினை வகிப்பதற்கு முயற்சித்தல் அவசியமாகின்றது; அங்கு, எங்களுடைய மக்கள் எந்த ஒரு வேலை கொள்வோருக்கும் உற்பத்திசார் பெறுமதியினை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டால் தம்முடைய வாழ்வின் தரத்தினை உற்பத்தி உண்டாக்கும் வேலையினூடாக மேம்படுத்திக் கொள்ளலாம்”
இவ்வறிக்கையின் ஆலோசனைக் குழுவில் 15 ஆண் உறுப்பினர்களும், மற்றும் ஒரு பெண் உறுப்பினரும் இருந்துள்ளனர். பொருளாதாரம், தனியார்துறை தொழிற்சங்கங்கள், அரசதுறை ஆகிய பங்காளர்களின் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகக் காணப்பட்டுள்ளனர்; இவை பொதுவாக எல்லா உழைப்பினர் படை பங்குகொள்வோர், பால்நிலை வேறுபாடுகள் கவனத்திற்குக் எடுக்காமல், கல்வி கற்றவர்கள் மற்றும் இளையோர் விசேட பிரிவினராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாவணத்தில் கொள் நெறி பால்நிலை சார்பாக நடுநிலை வகிக்கும் தன்மை பிரதான அம்சமாக வேலைப்படை முழுவதற்குமான நிலைகுறித்து இருந்துள்ளது. இலங்கையின் முழு உழைப்பினர் படை மொத்தக் குடிசனத்தில் 52.3 சதவீதமாக - இருந்த நிலையில், அந்த மொத்தத்தில் ஆண்களின் பங்கு கொள்ளும் வீதம் 68.2 சதவீதமாகவும் பெண்களின் வீதம் 36.6 சதவீதமாகவும் காணப்பட்டுள்ளது.
312

8. சமுகக் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றல்
பெண்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பு நகல் கொள்நெறிப் பகுதி 5 இல் சமூகக்கடப்பாடு சார்ந்த பொறுப்புகள் நிறைவேற்றுவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி நாட்டின் பல சமூகப் பிரச்சினைகள் என்பவை பெண்களின் பங்களிப்பினை வேலை செய்வது தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தாதது பற்றி நேரடியாக அரசினைக் குறைச்சொல்வதும் சரியாகாது. ஏனென்றால் கொள்நெறி பகுதி ஐந்தின் தொலைநோக்கு கூறுவது, வேலை தொடர்பான கொள்நெறி கூறியது, “சமூகக் கடப்பாட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன், உலகளாவிய போட்டி ஆற்றலுடையதான வேலைப்படையினை உண்டாக்குவது என்பதுடன் வாய்ப்புக்கள் சமூகத்திலுள்ள எல்லாத்துறைக்கும் வழங்கப்படுவதும் எத்தகைய பாரபட்சமில்லாதவகையில் இது நடத்தல் வேண்டும்”. ஆனால் இத்தொலை நோக்குக்கு முரணான விதத்தில் இவ்வாவணம் ஒரு பால்நிலை சார்பாக பார்வையிழந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அது பெண்களை ஆண்கள் வேலைப்படையிருடன் ஒப்பிடுமிடத்து ஒரு சமனற்ற மற்றும் வசதியற்ற நிலையில் உள்ளவர்களாக கருதப்பட்டுள்ளனர்.
இந்த ஆவணம் தொடர்பாக வேலையிலுள்ள பெண்களைப் பற்றி எடுத்துக் காட்டுமிடத்து, விரிவான ஆய்வும் மற்றும் எழுத்தக்களும் பெண்கள் வேலையிலிருப்பது பற்றி காணப்படும் பொழுதும், ஒரு சமூக ரீதியாக பார்வை இழந்த நிலையில் நோக்குவது போன்ற தன்மை வெளிப்படுகின்றது. பகுதி 5.1 கூறுவது, பெண்கள் உழைப்பினர் படைப் பங்கேற்றல், ஆண்களின் வீதத்தை விட, கூடுதலான வீதத்தில் அதிகரித்துள்ளது எனவும், இது பெண்களின் உயர்ந்து செல்லும் கல்வித் தகைமை மட்டங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அழுத்தங்கள் ஆகியவை காரணமாக எற்பட்டுளிளது பற்றிக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இங்கு கவனிக்க வேண்டியது பெண்களின் உழைப்பினர் படைப் பங்கேற்றல் அதிகரித்துள்ளது எனினும், இது பெண்களின் உயர்ந்து செல்லும் கல்வி மட்டங்கள் என்பதனால் நடந்தது எனக் கூறுவது சரியாகாது; இதற்குக் காரணம், வேலை வாய்ப்புகள் கைத்தொழில்களில் அதிகரித்ததும் அவை குறைந்த தேர்ச்சியுடைய, குறைந்த செலவுகொண்ட பெண் உழைப்பினரின் கேள்வியினை அதிகரித்தது முக்கியமாகின்றது. பெண்கள் தொடர்பான வேலையின்மை புள்ளிவிபரங்களை நோக்குமிடத்தில், பெண்களிடத்தே மிக உயர்ந்த வேலையின்மை வீதம், 10 - 13 வருடங்கள் கல்வி பயின்றவர்கள் மற்றும் பொதுத் தராதர (சாதாரணம்), பொதுத் தராதர (உயர் மட்டம்) ஆகிய பரீட் சைகளில் சித்தியடைந்த பெண்கள் மத்தியில் காணப்பட்டுள்ளது.
(அட்டவணை 5).
313

Page 164
அட்டவணை 6: கல்வி மட்டம் மற்றும் பால்நிலை அடிப்படையில் வேலையின்மை வீதம்
1985/86 1994 1996/1997
ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
பாடசாலை செல்லாமை: 7.7 4.8 4.6 2.3 O.2 1.
பாடசாலை ஆண்டு 1-5; 7.0 9.4 3.8 3.7 .8 3.6
பாடசாலை ஆண்டு 6-7: 9.5 16.5 14.9 22.9 8.9 21
uMT LaFT GOp6o S60ớG 9-10: 15.4 3.9 - - - - a
பொதுத்தராதரம் சா. மட்டம்: 14.4 35.6 16.3 28.3 8.2 24.1
பொதுத்தராதரம் உ. மட்டமி: 18.7 44.9 5.6 30.7 10.9 36.4
பட்டப்படிப்பு: 3.3 10.2 2.5 4.0 6.9 2.2 பட்டப்பின் படிப்பு: 4.2 3.2 -
மொத்தம் 10.8 20.8 11. 4 17. 9 6. 17.5
epsol b: Facets of Change: Women in Sri Lanka, 1986-1995,CENWOR, 1995
மேலே குறிப்பிட்ட கொள்நெறி ஆவணத்தில் பெண்களின் வேலையின்மை அளவுகளை/மட்டங்களைக் குறிப்பிடாது “உயரும் கல்வி மட்டங்கள்’ என்று மட்டும் கூறப்பட்டுள்ளது; அல்லது வேலைமட்டம் தொடர்பாக பெண்களின் நிலைமையை உயர்த்துவது பற்றிய வழிமுறைகளைச் ச்ொல்லவில்லை. பெண்கள் வேலைசெய்தல் குறைந்த மட்டங்களில் இருந்துள்ளது; அதிகமாக எழுதுவினைஞர், விற்பனை நடவடிக்கை, மற்றும் அரைத் தேர்ச்சி மற்றும் தேர்ச்சியில்லாத வகையாகக் காணப்பட்டுள்ளன. மேலும், கூடிய சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலை பார்க்கும் பெண்களில் அதிகமரனோரும் குறைந்த தேர்ச்சி அல்லது தேர்ச்சியில்லாத மட்டங்களில் பல தசாப்தங்களாக இருந்துள்ளனர். ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெண்கள் அரைச்தேர்ச்சி மற்றும் தேர்ச்சியில்லா அல்லது பயிலுனர் மட்டங்களில், சிறு சதவீதத்தினர் மேற்பார்வை அல்லது தொழில் நுட்ப மட்டங்களில், காணப்பட்டுள்ளனர்.
நகல் கொள்நெறி, பெண்களின் வேலை தொடர்பாக ,அது பாரதுாரமாக நிலவுகின்ற பால்நிலை எண்ணப்பாங்குகள் சமூகத்தில் மாறிலி படிவங்களின் நிலைகள் ஆகியவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆகையால், பெண்கள் வேலை நிலை குறித்து உழைப்புச் சந்தையில் அவர்களின் வேலை பெறத்தக்க தன்மை முன்னேற்றமடைதலின் அவசியத்தையும் வற்புறுத்தியுள்ளது. கொள்நெறியின் குறிக்கோள்கள் ஆக்க முறையானவை எனினும், இவை குறித்துக் கூறப்படும் வழிமுறைகள், பெண்கள்
314

சந்தையில் ஒரு கீழ் நிலைப் பணி உழைப்பினர் எனக் கருதப்படல். எதிர்வரும் தசாப்தங்களிலும் காணப்படலாம். கொள்நெறி, பெண்களின் மகப்பேற்றுப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுதவற்கு போதிய கவனம் செலுத்தப்படுவதை அர்பணிப்புடையதாகச் செய்தல் குறித்து போதியளவு பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவையினையும் வற்புறுத்தப்படுகின்றது; இதில், மகப்பேறு தொடர்பான பொறுப்புகள் அவர்களின் தொழில் முன்னேற்றம் குறித்து முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருத வேண்டியதில்லை. அதேவேளை, வேலை கொள்வோரிடையே அவர்களின் எண்ணப்பாங்கிலும் மாற்றங்கள் தேவையெனவும் அதற்கான முயற்சிகள் எடுத்தலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் மகப்பேற்று நன்மைகள் தொடர்பாக 25 வருடங்களுக்கும் முன் சட்டமியற்றப்பட்டது; அக்காலத்திலிருந்து சமூகத்தைப் பார்க்கும் பொழுது, பெண்கள் அதிகமானோர் தாய்மார்களாக மாறிய பின்பு தமக்குக் கிடைக்கும் மட்டங்களில் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளனர்; மற்றும் மாறாத குறுகிய எண்ணப்பாங்குகள் சமூகத்தில் (வேலை கொள்வோர் உள்ளடங்கலாக), பெண்களின் இடம் வீட்டிலே என்ற நிலைப்பாடு வளர்ந்துள்ள நிலை; வீடுகளை விட்டு பெண்கள் வெளியே வேலை செய்யப் போவதனால் ஏற்படும் குடும்பங்கள் குறித்த உயர்வான சமூகச் செலவு என்று எண்ணுவதும் அவதானிக்க முடிகின்றது; இவை புத்தாயிரம் காலத்தின் தேவைகள் நோக்கிச் செல்லும் வேளை இலங்கையின் தொடக்க நிலைக் கொள்நெறி நிலைப்பாடு கேள்விக் குறியுடன் உள்ளது என்பதையும் கூற முடிகின்றது.
மேலும், பெண்களின் வேலை தொடர்பாக ஆதரவளிக்கும் விதமாக குழந்தைகள் பராமரிப்பு வசதிகளை, வேலைசெய்யும் பெண்களுக்கும் மற்றும் சுயவேலைப்பார்க்கும் பெண்களுக்கும் தேர்ச்சிபெறும் பயிற்சியினை, உணவு தருவிப்பு, அச்சிடல், படப்பிடிப்பு, தொடர்பாடல், குழந்தைப் பராமரிப்பு மற்றும் வயது முதிர்ந்தோர் பராமரிப்பு, சுயதொழில் தொழில்நுட்பமாற்றல் ஆகியவற்றில் வழங்குதலும் சேர்க் கப்பட்டுள்ளன. வேலைக் கொள் நெறிகள் பற்றி உய்த்துணரக்கூடியவை குறித்து எழுதுவதில் வெறும் சொல்லாட்சித்திறம் மட்டும் பயனளிக்காது. எப்படியாயினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் பெண்கள் வேலைசெய்வது பற்றிய உரையாடலில் இடம் பெற்ற வாதங்கள் இன்றும் பொருந்துவதாக இருக்கின்றன. பெண்கள் உழைப்புச் சந்தையில் தொடர்ந்தும் ஒரு இரண்டாம் தரநிலையிலும், கட்டாயத் தேவையில்லதவர்கள் எனவும், புள்ளிவிபரங்கள் வேறான உண்மை நிலைமையினைக் காட்டுமிடத்திலும், கருதப்படுவது காணமுடிந்தது; மற்றும் சமூகம், பெண்களின் பிள்ளைப்பேறு தொடர்பான பங்களிப்பினை பாதகமான நோக்கில் கருதுவதுடன் பழங்கால நம்பிக்கைளுக்கு இணங்க, அவர்கள் பராமரிப்பாளர்கள் பேணிவளர்ப்பவர்கள் என வீட்டு மட்டத்திலான பார்வையில் கருதப்பட்டுள்ளனர்.
315

Page 165
7. புலம்பெயர் வேலைவாய்ப்பு
கொள் நெறி ஆவணத்தில் “பால் நிலை நடுநிலைமை” என்பதிலிருந்து விலகியிருப்பது அதனுடைய வெளிநாட்டு வேலைபார்த்தல் தொடர்பாக 3 வது தொடக்கு முனைவு விளக்கியதிலிருந்து தெரிகின்றது. கொள் நெறி, புலம்பெயர்ந்தோர் பண அனுப்புதல்கள் அமெரிக்க டொலர் 1 பில்லியன் 2000 ஆண்டில் கிடைத்ததைக் கூறும் பொழுது, இதில் 70 சதவீதத்தினர் பெண்கள் என்பது பற்றி ஒரு சாதாரணக் குறிப்பாகவே இடம்பெற்றுள்ளது. தொடக்குமுனைவு 3 இல், வெளிநாட்டு வேலை பற்றிய தெளிவற்ற சமிக்கைகள் விடப்பட்டுள்ளன. அது வெளிப்படையாக பால்நிலைபற்றி சார்புத் தன்மையைக் காட்டியதுடன், மற்றும் அவ்வாறான பால்நிலை சார்புத் தன்மை கொண்ட நாட்டின் தற்போதைய வெளிநாட்டு வேலை செய்யும் ஒழுங்கினை எவ்வித ஐயப்பாடுமில்லாது ஏற்றுக் கொள்கின்றது. கொள்நெறி, பால்நிலை தொடர்பாக ஒரு நடுநிலைத் தன்மையை வெளியிட்டுள்ளது; அதன்படி ஒரு செயலூக்கம் சார்ந்த அணுகுமுறையில் வேலைவாய்ப்புகளை இனங்கண்டு கொள்வதில் கையாளப்படும் எனவும், புலம்பெயர்ந்தோர் மனித முதலுடைய படிமம் மற்றும் தேர்ச்சிகள் என்பவை உயர்த்தப்படுவதற்கு வேண்டிய பொருத்தமான பயிற்சியும் வழங்கப்படுவது தொடர்பாகவும் நடவடிக்கைகளின் அவசியம் உணரப்பட்டது; அவற்றினூடாக அவர்களின் போட்டி வல்லமையும் மேம்படுத்தப்படமுடிகின்றது; ஆனால் அது தொடர்பான உபாய நோக்கிலான அணுகுமுறையில் முக்கியமாக பெண், ஆண் வேலையாட்கள் என்பது தொடர்பாக வேறுபாட்டினை ஏற்படுத்தியுள்ளது. கொள்நெறி, வெளிநாட்டு வேலை வசதிகள் மக்களுக்கு வாய்ப்புகளை வேறுபட்ட தேர்ச்சி மட்டங்களுக்கு ஏற்றதாக வழங்குகின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறது; கொள்நெறி மேலும், பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்லுதலின் ஆர்வத்தைக் குறைப்பதாக இல்லை; மற்றும், அதிகமாக உரையாடலுக்கு உள்ளாக்கப்படும் விடயமான புலம்பெயர்ந்த பெண்கள் குறைந்த சமூக அந்தஸ்த்தில் இருப்பவர்கள் என்பதையும் ஏற்பதாக இல்லை; அவை அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமைகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆண், பெண் வேலையாட்களுக்கும் பொருந்துவதாகக் கருதப்படுகின்றது; இது குறிப்பாக, வெளிநாட்டு வேலைசெய்வது பற்றிய நிலையம் பலப்படுத்தப்பட்டு உடன்படிக்கைகள் மற்றும் கூட்டு அவைத் தீர்மானங்கள் என்பவற்றை அங்கீகரிப்பதுடன், சேரவிருக்கின்ற வேலையாளர்களுக்கு நிதி உதவி அளித்தல், சுரண்டல் நிலைகள் குறைக்கப்படுவதற்கு பயிற்சியும் மற்றும் ஆட்சேர்த்தல் ஒழுங்குமுறை செய்யப்படுதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டன. பெண் தொழிலாளர்கள் குறித்து இனங்கண்டு செய்யப்படவுள்ள வழிமுறைகளில் பின்வருவன முக்கியமானவை: வேலை ஆரம்பிப்பதற்கு முன்பாக பயிற்சி
316

(உள்நாட்டு வேலையாட்கள்) மொழி, நிதி முகாமை, ஒழுக்கவிதிகள் மற்றும் அறிமுகப்படுத்தல் விதிகள், தொல்லை கொடுப்பதை இல்லாமல் செய்தல், மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லுதலில் முறைவழியில் ஏற்படக் கூடிய துஷ்பிரயோக நிலைகள் நீக்குதல், குடும்பங்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதனால ஏற்படும் சமூகச் செலவைக் குறைத்தல் தொடர்பாக ஆதரவளித்தல், மற்றும் திரும்பிய பின்னர், குடும்பங்களுடனான மறு இணைவு மற்றும் முதலீடு செயப் த ல் என்பவையும் இடம் பெற்றன. பெணி வேலையாளர்களுக்காக எடுக்கப்படும் வழிமுறைகள், வெளிநாடு செல்லவிருக்கும் எல்லா பெண் தொழிலாளர்களும் குறைந்த தேர்ச்சியுடைய வேலையாள் பிரிவுக்குப் பொருந்துபவர்கள் என்ற எடுகோளின் அடிப்படையில் அமைகின்றன; ஆனால் இது விரிவாக ஆராயப்படாத ஒரு கருதுகோளாக இருக்கின்றது.
இந்த நகல் கொள் நெறி வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மீது ஏற்படும் பாதகமான விளைவுகளை ஏற்றுக கொள்கின்றது; இது பெண்களின் வெளிநாட்டு வேலை பார்த்தலின் ஒரு பிரதான குறைபாடாக விளங்குகின்றது. எவ்வாறாயினும், இவ்விடயம், சமூகப் பொறுப்பு, மற்றும் சமூகப் பொறுப்புக் கூறுதல் என்பவற்றுடன் தொடர்புடையது; ஆனால் அவ்வாறு நோக்கத் தவறியுள்ளனர்; இதற்குப் பதிலான விடயத்தினை நலன் பேணுதல் நோக்கிலிருந்து அணுகப்படுகின்றது; அவ்விதத்தில் அணுகுமிடத்து சமூக சேவைகள் மற்றும் நலன் பேணுதல் தொடர்பாக ஆதரவு தேடுவதாக அமைகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கல்வி தொடர்பாக ஆதரவளித்தல் மற்றும் பிள்ளைகளின் சுகாரதாரம், நலன் பேணல் ஆகியவை சர்ச்சைக்குரியவையல்ல; அத்தகைய சேவைகள் ஏற்கனவே உள்ளதனை முறைப்படுத்தி விரிவாக்கப்படுதல் வேண்டும். வெளிநாடுகளில் வேலைசெய்யும் பெண் தொழிலாளர்களுக்கு தேவைப்படுவது, அரசின் சமூகப் பொறுப்பினை உறுதி செய்யும் ஓர் ஒழுங்குமுறை; இது குடும்பங்கள் மீது கட்டுப்பாடுகளையும் நிலுவைப் படுத்தலையும் ஏற்ப்டுத்த உதவுகின்றது; பெண்கள் வெளிநாடு சென்றதனால் வயது வந்தோர் கிடைக்கும் நன்மைகளைப் பெறுபவர்களாதலால் பொறுப்புகளை, அதாவது கணவன்/மனைவி மற்றும் விரிவாக்கிய குடும்பத்தினர் ஆகியோர், ஏற்றலும் வேண்டப்படுகின்றது. வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்களின் குடும் பங்களைப் பற்றி அதிகம் ஆவணப்படுத்திய தகவல்கள் கிடைப்பது மிகக் குறைவு: குறிப்பாக, தாய்பார் வெளிநாடு வேலைபார்க்கச் சென்றிருப்பின், அவர்கள் இல்லாத காலத்தில் எவ்வாறு வாழ் வினை வெற்றிகரமான நடாத்திவருகின்றனர் என்பது முக்கியமானது. பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கணவன்மார் தொடர்பாக, பிள்ளைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. புள்ளிவிபரங்கள் எடுத்துக்கூறுவது, வெளிநாடு வேலை செய்யப்போகும் பெண் தொழிலாளர்களில் உயர்ந்த
317

Page 166
வீதத்தினர் விவாகமானவர்கள்; அத்துடன், குழந்தைகள் உடையவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. மேலும் தெரியவருவது, அவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் வேலை செய்திருக்காதவர்கள்; அவர்கள் முழுநேரக் குடும்பப் பணியாட்களாகவும் மற்றும் வீட்டு வேலையாட்களாகவும் வெளிநாடுகளில் முதல் முறையாக வேலை செய்துள்ளனர். இதன் நிமித்தம், கணவன் அல்லது மனைவி இல்லாமல் குடும்பங்கள் சூழமைவுக்கு ஏற்றவாறு தம்முடைய நிலைமைகளைச் சரிசெய்து கொள்வதும் கடினமாக இருந்துள்ளமை செயப் யப் பட்ட ஆய்வுகளிலிருந்து அறிய முடிந்தது, பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை செய்யப்போவதனால் பாரதூரமான விளைவுகள் அனுபவிக்கப்பட்டுள்ளன. அதாவது, சிறுவர்கள் போதியளவு பராமரிப்பு இல்லாததனாலும், மற்றும் கவனிப்பாரற்ற நிலையினாலும், வேறு பெளதீக, உளச் சார்பாக தவறான முறையில் பயன்படுத்தப்படுவதனாலும் இப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக நிலவி வந்த கருத்தும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைப்பாடும், தாயில்லாத சூழ்நிலையில் சிறுவர்கள் கவனிக்கப்படாமல் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுதுல் என்பவை விளைவுகளாக எற்படுகின்றன; அத்துடன் பெண் உற்றார், உறவினர் இல்லாதவிடத்து, வெளிநாடு சென்றுள்ள பெண்ணின் குடும்பத்திலான தகப்பன் மற்றும் ஆண் உறவினர் மீது பொறுப்பு, சமூகப் பொறுப்புக் கூறல் ஆகியவை ஒப்படைத்தல் சிறிதளவே சென்றுள்ளது.
யாப்பா (Yapa) என்ற ஆய்வாளர் தாய்மாரினால் கைவிடப்பட்ட இளம் சிறுவர்கள் பற்றிய ஒரு மாதிரி அடிப்படையினை நாட்டின் எல்லா மாவட்டங்களையும் பிரதிபலித்ததாக தெரிந்தெடுத்து ஆராய்ந்துள்ளார். இதிலிருந்து அவர் கூறுவது, அநேகமான தாய்மார் சிறுவர்களை விட்டுச் சென்ற பொழுது, சிறுவர் நன்றாகக் கவனிக்கப்படுவார்கள் என்ற உறுதிப்பாடு கிடைத்ததன் பின்னரே சென்றனர்; மேலும் 50 சதவீதமான வெளிநாடு சென்ற தாய்மார் (மாதிரி எடுப்பில்) நெருங்கிய அல்லது விரிவுபடுத்திய குடும்ப உறவினர், விட்டுச் சென்ற சிறுவர்கள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். இது இவ்வாறு இருப்பினும், ஹெற்றிகே (Hettige) என்ற மற்றுமொறு ஆய்வாளர் வேறு விதமாக குறிப்பிட்டுள்ளார்; அவர் கூறுவது, அநேகமாக எல்லா வெளிக்கள ஆய்வுகள், வெளிநாடு சென்ற தாய்மாரினால் விட்டுச் சென்றுள்ள சிறுவர்கள் மிகவும் கடுமையாக, அவர்கள் இல்லாததனால், பாதிக்கப்பட்டுள்ளனர் ' என்பதற்குச் சான்று கூறுவதுடன், எல்லா வயதுச் சிறுவர்களும் மீண்டும், மீண்டும் பாட்டிமாரின் கவனிப்பில் விடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறுவர்களைப் போதியளவுக்குக் கவனிப்பதற்கான இயலுமை இல்லாதவர்கள்; நிலைமை சீரழிந்ததற்குக் காரணமாக, வெளிநாடு சென்ற பெண்களின் கணவன்மாரின் வராமை அல்லது அவர்களின் கவனக் குறைவு ஆகியவை காணப்பட்டுள்ளன. சரியான கவனிப்பு சிறுவர்கள் பராமரிப்பில் இல்லாதது ஒரு பாரதூரமான பிரச்சினையாக உள்ளது
318

என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை ஆய்வுகளின் சான்றுகளில் பிரதிபலித்துள்ளன; இவை உச்சநிலைப் பாதிப்புக் கட்டத்தினை அடைவதாக, பாடசாலைகளிலிருந்து சிறுவர்கள் முன்பாக விலகுதல், போதைவஸ்த்துப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், மற்றும், மேலும் பாரதூரமான நிலைக்குத் தள்ளப்பட்டு உறவினர்களினால் தகப்பன்மாரும் உள்ளடங்கலாக பெளதீக ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலைகள் போன்ற முக்கிய விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில், சிறுவர் பராமரிப்பு குடும்பங்களில் பிரதானமாக பெண்களின் பணியாக இருந்துவருகின்றது. வெளிநாடு தொழில் பார்ப்பதற்கு போவதாகத் தீர்மானிக்கும் பொழுது, ஒரு பெண் பொதுவாக சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோர் குறித்த பராமரிப்புத் தொடர்பாக ஒழுங்குகளைச் செய்வது பொறுப்பாகின்றது. இதில் (வெளிநாட்டுச்குச் செல்லவுள்ள) பெண்/ தாய் தனது கணவன் மீது முக்கியமாகத் தங்கியிருப்பது உண்டு. அத்துடன் மேலதிக ஆதரவிற்காக அவருடைய விரிவுப்படுத்திய குடும்பத்தினர் மீதும் தங்கியிருத்தல் வழக்கில் உள்ளது. எவ்வாறாயினும், வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் அவர் செய்கின்ற ஒழுங்குகள் போதுமானவையல்ல என்பது நன்கு தெரிந்தவராக உள்ளவர்; அதனால் அவருடைய கணவன் மீது ஏற்படுத்தப்பட்ட சுமையினைக் குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றார்; இதற்காக கணவனுக்குக் கூடுதலான குடும்ப வருமானம் கிடைத்தல் மற்றும் குடும்பச் சிறுவர்களுக்கு பொருள் ரீதியான நயம் கிடைத்தல் பற்றிய உறுதிப்பாட்டையும் வழங்குகின்றனர். அத்துடன், பெண் வெளிநாட்டு வேலைக்குச் செல்வது பற்றிய தனது தீர்மானம் - சிறுவர்களைப் பிரிந்து செல்லுதல்-குடும்ப நன்மைக்காக என்ற திருப்தியுடன் செல்கின்றார்.
எப்படியாயினும், இலங்கைப் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை செய்வதற்காகச் செல்லுதல் முற்றாக குடும்பூ முறிவினையும், சிறுவர்கள் கவனிக்காமல் போய்விடுவதனையும் விளைவுகளாக ஏற்படுத்தியுள்ளது என்ற முடிபுக்கு வருதல் தவறானதாக இருக்கும்; இத்தகைய நிலைமையும் எண்ணப்பாங்கும் தொடர்பு சாதனங்களினால் பரபரப்பூட்டும் செய்திகளாக பெரிதுபடுத்தி வெளியிடப்படுவதுமுண்டு. சென்ற தசாப்தத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள், பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் அதிலிருந்து பெற்ற வருமானத்தினால் குடும்பங்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. பெண்கள் குடும்பங்களின் தரமுடைய வாழ்வு நிலைக்கு செல்வதற்காக பங்காற்றியுள்ளனர்; சிறுவர்களும் நல்ல உணவு, சத்துடன் கூடியதாக கிடைக்கப் பெற்றுள்ளனர்; மற்றும் கல்வியிலும் கூடுதலான ஊக்கப்பாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்கள் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் என்பவற்றிற்கு ஆளாகின்றனர் என்பது தொடர்பான விடயத்தில் கொள்நெறி
319

Page 167
ஆவணம் இருப்பு முறையில் நாடுகளிடையே, குறிப்பாக உழைப்பினர் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன், செய்யப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பாக பிறநாட்டு இலங்கையின் இராஜத்தந்திரிகள் பங்களிப்பினைப் பலப்படுத்துவது போன்ற நடவடிக் கைகள் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டியது பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமான சொல்லளவிலான பேச்சுக்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன; இது தொடர்பாக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் துாதரங்களில் - உழைப்பினரை இறக் குமதி செய்யும் நாடுளில் ஸ்தாபிக்கப்பட்டவை - தெரிந்த துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என்பவைபற்றி இவ்வாவணம் போதியளவு கவனம் செலுத்தவில்லை; இக் குறைபாடுகள் களையப்படாமலும் தீர்வு காணப்படாமலும் இன்னும் தொடருகின்றன.
விமர்சனம் செய்யப்படும் நகல் ஆவணத்தில் ஒரு முக்கிய பகுதியாக வெளிநாட்டில் வேலை பார்த்த பின்பு திரும்புவர்களின் சேமிப்புகளை சரியாக முதலீடு செய்வதன் அவசியம் வலியுறுத்தபட்டுள்ளது; அத்துடன் திரும்பி வருபவர்கள் பிரச்சினையில்லாத வகையில் தங்களது சமூகத்தில் மீண்டும் இணைதல் முக்கியமான அம்சமாக கவனிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து திரும்பவர்களின் சேமிப்புகளை உள்ளுர் நடு அளவுச் செயற்திட்டங்கள் ஆகியவற்றின் மீது முதலீடு செய்வதற்கான சந்தைப்படுத்தல் மற்றும் உள்நாட்டு வேலை வசதிகள் பற்றிய தகவல்களையும் வழங்குதல் பயனளிக்கும் முயற்சியாக இருக்கும்; தேர்ச்சிகள் தொடர்பான பயிற்சியினையும் அவர்களுக்கு வழங்கினால் மீண்டும் அவர்களின் சமூகத்துடன் இணைதல் சுமுகமானதாக ஏற்படமுடியும்
மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள தொடர்பாக எழுதப்பட்டவற்றை - இவை கொள்நெறி குறித்து அதிகளவான செல்வாக்கினை ஏற்படுத்தாவிடினும் - கவனிப்பது பொருத்தமானது. வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் தன்மைகள் பற்றி நோக்குமிடத்து, உடனே தெரிய வருவது பெரும்பான்மையினர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து வருகின்றனர்; அவர்களில் அதிளவானோர் முன்பு வேலையிலிருந்தவர்கள் அல்ல - ஆதலால் குடும்பவருமானத்திற்குப் முன்பு பங்களிப்புச் செய்யாதவர்கள். வெளிநாட்டில் வீட்டுப் பணிகள் செய்யும் தொழிலாளர்களாகச் சென்றதனால் வருமானம், தனிப்பட்ட ரீதியிலும் குடும்ப ரீதியிலும் அதிகரித்தது. இது வெளிநாட்டு வேலை வாய்ப்பினால் கிடைத்த மிக முக்கியமான விளைவான அதிகரித்த வருமானங்கள், வாழ்க்கைத்தர உயர்வினையும், மற்றும் வீடமைப்பு தொடர்பாகவும் மற்றும் வீட்டின் நெடுவாழ்வுப் பொருள்கள் ஆகியவை மீதான முதலீடும் கொண்டுவந்தது. அநேகமான குடும்பங்களில் சிறுவர்களின் கல்வி முக்கியத்துவம் பெற்றது; வெளிநாடு சென்று பணம் உழைத்த பெண்களின் கவனத்தில் அவர்களின் சிறுவர்களுக்கான கல்வி இடம் பெற்றதைக் காணலாம். செலவீடுகள் செய்யப்படுவதில் பொதுவாக அளவுக்கு மேலான செலவை நுகர்வுக்கும் மற்றைய முக்கியமான நுகர்வுப் பொருள்களுக்கும் செய்து கொள்வது வாழ்க்கை தரத்தை
320

உடீர்தத உதவும்; ஆனால், இது நீண்ட காலத்திற்கு நிலைத்துச் செல்வது சாத்தியமற்றது. உற்பத்திசாராத, பயனில்லாத நுகர்வு செய்யப்படுதல், சேமிப்புச் செய்வதற்குத் தடையாக இருக்கின்றது; அத்துடன், இது முதலீடு மீது செலவு செய்வதற்கு இடையூறு விளைவிக்கின்றது, குடும்பத்தினர் மற்றும் பெண்கள் இச்சூழ்நிலையில் இரண்டாம் முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகின்றது.
வெளிநாடுகள் சென்று வேலை பார்க்கும் பெண்தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பற்றிய ஆய்வுகள் காட்டுவது, இத்தொழிலாளர்கள் சேமிப்புகளைக் குறைவாகவே செய்கின்றனர்; அதிகமான உழைப்புகள் வீடுகள் திருத்துதல், நுகர்வுப் பொருள்களுக்குச் செலவு செய்தல், படுகடன் தீர்த்தல், வேறு நுகர்வுத் தேவைகளின் கொள்வனவு, சிறுவர்களின் கல்வி, குடும்ப உறுப் பினர்களுக்கு உதவி ஆகிய பல வேறு தேவைகளுக்காகச் செலவி ப்படுகின்றன; மிகக் குறைந்தளவே மேலும் வருமானம் தரும் நடவடிக்கைகள் மீது செல்கின்றது. அத்துடன், பண அனுப்புதல்களின் பயன்படுத்தலை நோக்குகின்ற பொழுது அது காட்டுவது என்னவென்றால், கூடுதலான உழைப்புக்களினால் ஏற்படும் பொருளாதார நிலைமை மேம்பாடு நிதிசார்பான அல்லது பொருளாதார சார்பான பெண்கள் பாதுகாப்பினை, வெளிநாட்டில் வேலை செய்தவர்கள் தொடர்பாக, உறுதப்படுத்தியதாகத் தெரியவில்லை.
உழைப்பு ஆற்றலின் தன்மை மற்றும் செலவு செய்யும் முறைகள் என்பவற்றையும் வெளிநாடுகளில் வேலைசெய்யும் பெண்கள் தொடர்பான சமூக நிலைமையினையும் சேர்த்து பார்க்குமிடத்தில் முககியமாக எழுகின்ற ஒரு கேள்வி, இக்குறிப்பிட்ட உழைப்பினர் பகுதியினர் நீண்ட கால முதலீடுகளின் நன்மைகளை அறிந்தவர்களா என்பது. செலவு முறைகளை ஆராந்துள்ள பொழுது, அவை அநேகமாக, வெளிநாடு செல்லுதற்கு முன்பாக இருந்த வறிய நிலையிலிருந்து, உடனடி நிவாரணம் தேடும் வகையாக இருந்துள்ளன; இதனால் மிகச் சிறியளவு வருமானம் தரும் முயற்சிகளுக்குச் சென்றுள்ளது, நீண்ட கால உழைப்புகள் பற்றிய முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது. இதனை ஹெற்றிகே (Hettige) பின்வருமாறு விளக்கியுள்ளார். “வெளிநாடுகளில் வேலை செய்யும் பெண்கள் வறிய குடும்பங்களிலிருந்து வருகின்றனர். இது அவர்களைப் பொறுத்து, போதியளவு பணம் சேமிப்பதும் அவற்றைப் பின்பு தொடர்ந்து வருமான்ம் தரும் முயற்சிகளில் முதலீடு செப்வது மிகவும் கடினமான செயல். வெளிநாடுகளில் வேலைசெய்யும் பெண்களின் மீது தங்கியிருக்கும் குடும்பத்தினர் அனுப்பும் பணத்தினை உற்பத்தி சார்ந்த நுகர்வுத் தேவைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதனால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்கள் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு, அவர்களின் வருமானத்தை நீண்ட காலத்திற்குப் பெறுவதற்கு, கட்டாயம் ஏற்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பணமும் மற்றும் அதிலிருந்து சேமிப்பவைகளும் குடும்பங்கள் உயர்ந்த வாழ்க்கைத்
321

Page 168
தரத்தினை அனுபவிக்க முடிகின்றது; அத்துடன் வீடமைப்பு வசதிகள் மற்றும் நெடு வாழ்வுப் பொருள்கள் மீது முதலீடு செய்யவும் முடிகின்றது. ஆனாலும், நீண்ட காலத்தில், திரும்பி வருகின்றவர்களின் குடும்பங்கள் தங்களது சேமிப்பினை விரைவில் முடித்து விடுகின்றனர், மீண்டும் வறுமை நிலைக் குத் தள்ளப்படுகின்றனர். இது வீணாகும் நுகர்வுச் செலவு அல்லது சேமிப்புகள் முதலீடு செய்யப்படாமை அல்லது இரண்டும் சேர்ந்த நிலைமையின் விளைவாக ஏற்படுவதைப் பார்க்கலாம்.
1992 இல் மக்கள் வங்கியினால் முதலீடு ஊக்குவிப்பதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இம்முயற்சி யூனிசெவ்வுடன் (UNICEF) சேர்ந்து, வளைகுடா நாடுகளிலிருந்து (Gulf States) திரும் புவர்களின் நலன் கருதி, இந்த நாடுகளிலிருந்து திரும்புவர்களின் புனர்வாழ்வு தொடர்பான செயற்திட்டத்துடன் ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் என்பவற்றிற்காக கடன்கள், அதிகமாக வீட்டுப் பணித்தொழிலாளர்களாக குவைத்திலிருந்து (Kuwait) திரும்பி வருபவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அத்திட்டம் ஒரு தோல்வியாகவே முடிந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. ஒரு காரணம், இத்திட்டம் திரும்பி வருபவர்களின் மீள் இணைப்பு, எதிர்காலத் தொடர்ச்சி என்பவற்றை முக்கிய நோக்காகக் கொண்டு தொடக்கப்பட்டது; அரசாங்க ஆதரவளிக்கப்படாத திட்டமாக இருந்ததனால் இதற்கு வேறு வகையான ஆதரவும் முக்கியத்துவமும் குறைந்து காணப்பட்டது. இவ்விடயம் குறித்து கூடுதலான முக்கிய காரணம், திரும்பி வருபவர்களிடம் ஊக்கப்பாடு மற்றும் தேர்ச்சிகள் ஆகியவை நீண்டகால தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இருக்கவில்லை; அத்துடன் இம்முயற்சிகள், ஒரு போதும் வெளியே வேலை செய்தவர்களின் சம்பளங்களுக்குச் சமனாக வருமானங்களைக் கொடுப்பவையாகவும் இல்லை. இத்துடன், வேறு குறைபாடுகளும் இத்திட்டத்தில் இருந்தன. அதை நடைமுறைப் படுதியவர்களும் மற்றும் கடன் பெற்றவர்களும் அடிப்படையான வர்த்தகச் சார்பான முயற்சிகள் வெற்றியடைவதற்கான தேவைகளான சந்தைகள், போட்டிக்கு ஈடு கொடுத்தல் மற்றும் முகாமை என்பனபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. உத்தியோகத்தர்கள், திரும்பி வந்தவர்கள் ஆகியோரிடையே போதியளவு புரிந்துணர்வும் ஏற்படவில்லை. இப்பின்னணியில் முன்பு வேலை செய்து விட்டு திரும்பிவந்தவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை முகவர்களுக்குக் கொடுத்து மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தினர்; அல்லது, அக் கடன்களை தங்களுடைய நுகர்வுக்காக அல்லது அவசர தேவைகளுக் காகச் செலவு செய்தனர் என்பது அறியமுடிந்தது. இக்காரணங்களினால் கடன் திட்டம் தோல்வியாக முடிந்தது.
அரசாங்கம், தற்பொழுது சில சேவைகளை, முதலீடு ஊக்கப் படுத்துவதற்காக, மற்றும் நீண்டகால முறையான திட்ட ஒழுங்கை திரும்பி
322

வருகின்ற வெளிநாடு சென்று வேலை பார்த்தவர்களுக்குப் பல கடன் திட்டங்களின் உதவி வழங்கி வருகின்றது. இவை எவ்வளவு துாரம் ஒப்பேற்றும் வாய்ப்புடையவை, வெற்றி தரக்கூடியவை என்பது இன்னும் அறியப்படவில்லை.
விரிவான எழுத்துக்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை வெளிநாடு சென்ற பெண்களைப் பற்றி காணப்படுமிடத்திலும், நகல் கொள்நெறிப் பரிந்துரைகள் தேங்கிய நிலையில் உள்ளன. ஆனாலும், ஆண் வேலையாட்கள் பற்றிய உயர்ந்திருக்கும் நிலை வேறுபட்டதாக இருப்பதைக் காணலாம். தேர்ச்சிகள், திறன்கள் மேம்படுத்ததல் தொடர்பான பகுதியில் - ஆண் தொழிலாளிகள் குறித்து - கையாளப்பட்ட அடிப்படை நோக்கில், ஆண்கள் வெளிநாடு செல்பவர்கள் பெண்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எனக் கருதபபட்டுள்ளது; அத்துடன் இலங்கையிலிருந்து செல்கின்ற ஆண்கள் மற்றையவர்களிலிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்குகின்றனர் எனவும் கருதப்பட்டது. இவ்வடிப்படையில், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தேர்ச்சியுடைய தொழிலாளர்களை ஊக் குவித்தல் ; வழமையான தேர்ச்சியில் லாத தொழிலாளர்களிலிருந்து இலக்கினை மாற்றுதல்; ஆண் தொழிலாளர்களுக்கு, தேர்ச்சிகள், தொழில் அறிவு ஆகியவற்றை, மற்றைய நாடுகளிலிருந்து போட்டியினை எதிர்கொள்வதறகு, வழங்குதலில் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பொதுத்துறை, தனியார் துறை என்பவற்றின் ஒத்துழைப்புடன், பயிற்சி வழங்குதலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கொள்நெறி ஒழுங்குகளின் படி, நன்கு தெரிந்த பட்டியல் வெவ்வேறு துறைகளான, இலத்திரனியல், இராசனவியல், வாழ்வு விஞ்ஞானம், பொறியியல், தொடர்பு சாதனத் தொழில் நுட்பம், ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், நிதிச் சேவைகள், கல்வி, சுகாதாரம் பராமரிப்பு, தொடர்பாடலும் ஊடகமும், மற்றும் கலைகளும் பொழுது போக்கும் ஆகியவற்றில் தேவை அதிகமாக ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொள்நெறி ஆண், பெண் தொழிலாளிதள் என்ற பாகுபாட்டை இரு துருவ நிலையில் வைத்துப் பார்க்கின்றது. இதனால், பெண் தொழிலாளர்களை குறைந்த தேர்ச்சியுடைய வேலையாட்களாக, நிறுவனமயப்படுத்தும் முயற்சியும் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தேர்ச்சியுடைய ஆண் தொழிலாளர்களுக்கே காணப்படுகின்றது என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்ட எண்ணப்பாங்கு, வெளிப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பின் கிடைப்பு நிலையில் பால்நிலைபற்றிக் குறிப்பிடவில்லை என்ற நிலையிலும், மேலோங்கி இருப்பது கவனிக்க முடிகின்றது. இதனை அடிப் படையாகக் கொணி டு, கொள் நெறியின் பரிந்துரை ஆணி வேலையாட்களுக்கான தேர்ச்சியில்லாத வேலை நிலையிலிருந்து தேர்ச்சியுள்ள வேலைக்கு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தொடக்கு முனைவு 3 இன் நியாயப்பாடு இலகுவில் விளங்கக் கூடியதாக இல்லை; அத்துடன் அடிப்படையில் சமஉரிமைகள் என்ற நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகவும் அமைகின்றது.
323,

Page 169
8. உள்நாட்டில் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லையா?
மேலே கூறப்பட்ட வேலை தொடர்பான நகல் கொள்நெறியில் ஒரு முக்கியமான உள்நாட்டு ஆடைத் தொழிற்சாலை வேலையாட்கள் பற்றிக் கூறப்படவில்லை; இது ஒரு பெரிய பொறுப்புப் புறக்கணிப்பாகக் கொள்ளமுடிகின்றது. 1977 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார தாராண்மைக் கொள்நெறி நடைமுறையில் இருந்துவந்துள்ளது; அதன் விளைவாக கைத்தொழில்துறை திறந்து விடப்பட்டது: மற்றும் புதிய வேலை வசதிகள் இவற்றினால் இளையவர்கள் குறித்து அதிகரித்தது. இளைய (கல்வியறிவுடைய, கல்வியறிவு இல்லாத) பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன; குறைந்த தேர்ச்சி, குறைந்த செலவு உழைப்பினர் தொழிற்சாலைகளுக்கு ஆடைகள் தயாரிப்பதற்குத் தேவைப்பட்டனர், ஏற்றுமதிக்காக நிறுவப்பட்ட தொழிற்சாலைகள், இலங்கையில் பெண்கள் வேலை செய்யும் பெரும் துறையாக மாறியது. இவ்வாடைத் தொழில்கள் பற்றி அதிகமான விவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இவை ஏற்றுமதிப் பதனிடும் வலயங்களாக, கட்டுநாயக்க (1978), பியாகம (1985), மற்றும் கொக்கல (1990), ஆகிய இடங்களிலும் இவற்றிற்கு வெளியேயும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன; இங்கு மலிந்த உழைப்பு தேவையேற்படின் கலைத்து விடக்கூடிய வேலையாட்கள், வெறுக்கத்தக்க நிலைமைகள்; சுரண்டல் முறைக்கு உட்பட்ட சூழமைவு ஆகியவை காணப்பட்டன.
வெளிநாடு சென்று வேலை பார்க்கும் உழைப்பினரைப் போல, பெண்களுடைய உழைப்பு கைத்தொழில் நடவடிக்கைளில் பங்கு கொள்வதால் பொருளாதார நன்மைகளை அவர்களுக்கு கொடுத்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இதனால், சமூகச் செலவும் ஏற்பட்டது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்கள் பற்றிய ஆய்வுகள் விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளன. இவற்றின் படி புதிய வேலை வாய்ப்புகள் குறைந்த - வருமானமுடைய குடும்பங்களின் வாழ்வின் தன்மையை உயர்த்தியுள்ளன; பெண்களின் பொருளாதார நிலைமையும் சுயாதீனமான அதிகாரமளிக்கப்பட்ட வருமான உழைப்புகள் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளது. எவ்வாறாயினும், வேலையின் தரம், நகரப்புறங்களுக்கும் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கும் செல்லுதல் காரணமாக சமூக விளைவுகள் பெண்கள் குறித்து ஏற்புடைய தரமான வேலை ஒழுங்குகளைக் கொண்டதாக இருக்கவில்லை.
பெண்கள் மலிந்த செலவில் வேலை செய்பவர்கள், இலகுவாக ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள், ஒத்திசைவான உழைப்பை கைத்தொழில்துறைக்கும், குறிப்பாக உடைகள் தயாரிக்கும் கைத்தொழிலுக்கு வழங்குபவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையாக இருந்து வந்துள்ளது. எவ்வாறாயினும், சுரண்டல் தன்மை வாய்ந்த வேலை விதிக்ளும் நிலைமைகளும்
324

வேலை தொடர்பாக தரம் குறைந்த வேலைத்தள சூழமைவும், பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளாக இருந்துள்ளதும் அறிய முடிகின்றது. இது குறித்து இருந்த நிலை தொடருகின்றது என்பதும் தெரிகின்றது.
அட்டவணை :ே
பாரிய கொழும்பு பொருளாதார ஆணையம்/ முதலீட்டுச் சபைக் கைத்தொழில்களில் வேலை,1996
வேலைப்பிரிவுகள் ஆண் பெண் மொத்தம் பெண் (%)
நிருவாக உத்தியோகத்தர்கள் 2362 841 3203 26.3 நிறைவேற்று அதிகாரிகள்
தொழில்நுட்பம் சார்ந்த 1697 277 974. 14.O தொழில்நுட்பம் சாராத 1840 247 2087 11.8
மேற்பார்வை
தொழில்நுட்பம் சார்ந்த 2139 938 3077 30.5
தொழில்நுட்பம் சாராத 637 2212 3849 57.5 எழுதுவினைஞர் மற்றும் இணைந்த 3120 385 6935 55.0
தேர்ச்சியுள்ள 93O7 15105 24412 61.9 அரைவாசித் தேர்ச்சியுள்ள 8500 52475 60975 86.
தேர்ச்சியில்லாத 85.60 1558O 24140 64.5
பயிலுனர் 5558 23400 28,958 80.8
ஏனையவை 3813 1721 5534 3.0 மொத்தம் 48533 16611 1651-54 70.8
மூலம்: பாரிய கொழும்புப் பொருளாதார ஆணையம்,
1999.
உடைகள் தயார்க்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் செயல்முறைகளை ஒழுங்கு செய்யும் பிரதான சட்ட ஏற்பாடாக இருப்பது Ggillsby T606)56fair 2 flood Dis35L6061T (Factories Ordinance, No 45, 1942). இது தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பணியாளர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றிற்கான சட்டரீதியான ஒழுங்குகளை மேற்பார்வை செய்கின்றது. அது வழங்கும் ஏற்பாடுகள் பால்நிலை தொடர்பாக நடுநிலைமைத் தன்மையுடையதாக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உடல் நல ஆக்க முன்னேற்றம் என்பவை மீது கவனம் செலுத்தப்படுகின்றது; ஆனால் பெண் வேலையாட்கள் குறித்து அவர்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் எந்த ஒரு விசேட கவனத்தையும்
325

Page 170
செலுத்தவில்லை. பொருத்தமான சட்ட ஒழுங்குகள் இல்லாததனால், வேலைச் சூழல் அமைவு, வேலைசெய்யும் நிலைமைகள், மணித்தியாலங்கள், கூலிகளின் கொடுப்பனவு, விடுமுறை, இரவுவேலை மற்றும் மேலதிக வேலை நேரம் போன்றவை கூடுதலான பாரபட்ச நிலைகளை அடைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது; இவை, மற்றைய வேலை தொடர்பாக நடப்பிலுள்ள சட்ட ஒழுங்குகளுக்கு, உதாரணமாக பெண்கள் மற்றும் இளையோர் வேலைக் கட்டளை உரிமை போன்றவற்றில் இருக்கும் ஏற்பாடுகளுக்கு, முரண்பட்டவையாக
உள்ளன.
இத்தகைய பின்னணியில், ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களுக்கு உள்ளும், வெளியேயும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகளில் உண்மையில் காணப்படுவது, உழைப்பினர் சட்டங்கள் குறித்து குறைந்த பங்களிப்பினைச் செய்பவையாகக் அறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சக் கூலி வழங்குதல், வேலைநேரங்கள் சடடப்படியான நேர விதிகளை மீறுதல், மேலதிகநேரம் வேலைசெய்பவர்களுக்கு கொடுப்பனவுகள் மறுக்கப்படுதல், விடுமுறைகள் தொடர்பாக கட்டுப்படுத்தல்கள், மற்றும் ஆதார சேவைகள் குறித்து, ஒய்வு நேரம், மருத்துவ வசதிகள், மற்றும் மகப்பேற்று வசதிகள் ஆகியவை பற்றிய சட்ட ஒழுங்குகள் நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படாததன் விளைவாக, வேலைசெய்யும் இடங்களில் சுரண்டல் நிலைகள் அதிகமாக விளைவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வேறுபட்ட பிரச்சினைகள் மேலும் கேடாக்கலுக்கு உட்படுத்தப்பட்டன. இதனால், வேலை செய்யும் இடங்களில் வேலை தொடர்பான சுகாதார இடர் நிலைகள் விளைவிக்கப்பட்டன. இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமாக இருந்துள்ளன. ஒன்று, வேலை செய்யும் நிலைமைகளின் விதிகள் மற்றும் ஒழுங்குகள் ஆகியவற்றினால் சுகாதார இடர் நேர்வுகள்; மற்றையது, தண்டிக்கும் நடவடிக்கைகளினால் பயமுறுத்தல் செய்யப்படுதல், இவை பின்வரும் முறைகளில் இடம் பெறலாம்: கூலி வெட்டுதல், நீடித்த வேலைநேரங்கள், பிந்தி வருபவர்களுக்கு இடைவேளை குறைக்கப்படுதல், குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகள் அடைவதில் தோல்வி, விதிக்கட்டின்றி வேலை இடைநிறுத்தம் செய்தல் அல்லது அதுபற்றிய அச்சுறுத்தல், நியாயமற்ற முறையில் வேலைநீக்கம் செய்யப்படும் வேலையாட்களுக்கு சரியான சட்டப்படியாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கைகள் இல்லாமை, மற்றும் வேலையாட்கள் தொழிற்சங்கங்களில் சேருவதன் ஊக்கத்தை கெடுத்தல்.
சமூகவியல் ரீதியாக நோக்குமிடத்தில், தொழிற்சாலை வேலை வழங்குதலில் கூடுதலான பங்களிப்புடைய ஏற்றமதி ஊக்குவிப்பு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதிகரித்துள்ளது. ஆனாலும் இதனுடைய மிகப் பாதிப்புடைய வாழ்வு நிலைமைகள் ஏற்றுமதி வலயங்களின் தொழிற்சாலைகளில் காணமுடிகின்றன. சென்ற இரு தசாப்தங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள், ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் வீட்டிருப்பு வசதிகள்
326

மிகவும் கவலைக்கிடமான நிலைமைகளைப் பிரதிபலித்துள்ளன; பத்து பெண்களுக்குக் கூடியவர்கள் ஒரு சிறிய அறையில் வாழ்கின்றனர்; சத்துள்ள உணவு பற்றிச் சிந்திக்காத நிலையும், சுகாதார காப்பொழுங்கு இல்லாத நிலையும் காணப்பட்டுள்ளன. நில உடமையாளர்களினால் சுரண்டலும், வேறுவகையான ஏமாற்றல் நடவடிக்கைகளையும் பெண்கள் எதிர்நோக்கியுள்ளனர். இளம் வயது பெண்கள் உணர்வெழுச்சி உறவுகளுக்குத் தூண்டப்படுவதால் ஏற்பட்ட பிரச்சினைக்ளையும் இதில் ஏமாற்றுக்காரப் பேர்வழிகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தகைய உறவுகளில், ஆண்கள் பாதுகாப்பு, ஆதரவு, மதிப்பு ஆகியவற்றை விவாகத்தின் வழியாகத் தருவதாகக் பெண்களுக்குக் கூறி, இறுதியில் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அபகர்த்துச் சென்ற ஏமாற்று அனுபவங்களும் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் அறியப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு திரட்டப்பட்டும் அரசின் கொள்நெறி மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பது ஏற்றுமதி சார்ந்த கைத்தொழில் அபிவிருத்தியின் முன்னேற்றத்தில், தொழிற்சாலை வேலையாட்களின் வதிவிட அல்லது இருப்பிட வசதிகள் தொடர்பhக மாற்றங்களைக் கொண்டு வருவது இன்னும் போதியளவுக் குச் செய்யப்படவில் லை. இத் தொழிற் சாலைகளில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற திருப்தியுடன் பொருளாதார நிலையில் தனித்து வாழும் வாய்ப்பும் எட்டிவிட்டதனால், குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளும் முன்னேற்றமடைந்து விட்டன என்ற “திருப்தியில்”, எல்லா ஊக்குவிப்புகளும், ஆதரவளிக்கும் சேவைகளும், மற்றும் நன்மைகளும் தொடர்ந்தும் முதலீட்டாளர்களுக்கே செல்லுகின்றன.
ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களிலிருந்தும், ஏற்றமதி சார்பான, நகரங்களிலுள்ள, கைத்தொழில்களிலிருந்தும் விலகிய விதமாக ஆடைகள் தயாரிப்புக் கைத்தொழில்களை கிராமங்களுக்கு 1990 களின் முற்பகுதியில் எடுத்துச் சென்றது ஒரு திருப்பமாக அமைந்தது. இக்காலப் பகுதியில், ஏறத்தாழ 200 ஆடை தயாரிப்பு தொழில்கள் நாட்டில் கிராமத்து மட்டத்தில் அமைக்கப்பட்டன. இவற்றில் வேலையாட்களாக, பெண்கள் அவர்களின் கிராமங்களிலிருந்து - அவர்களின் வதிவிடங்களிருந்து வந்து போவதற்கு வசதியுடன் - வேலை செய்யத் தொடங்கினர். இது, பெண்கள் வழமையாக நகரத்திற்கு அசைவுறுதல் முறையினை மாற்றியது, ஆனாலும், அதனை முழுவதும் நிறுத்தியதாகச் சொல்வதற்கில்லை. எப்படியாயினும், பெண்கள் தங்களின் வீடுகளுக்கு அண்மையாக உள்ள இடத்தில் வேலைபார்ப்பதற்கான வசதி ஏற்பட்டது. இது வதிவிடம், குடும்பப் பராமரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அமைந்தது; ஆனாலும், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் நிலைமைகள் வேறு இடங்களில் இருந்த அதே தன் மையுடையதாக, சுரண் டல் உட்படக் , காணப்பட்டுள்ளன.
327

Page 171
தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதில் இன்னொரு நிதழ் வினையும் தோற்றுவித்துள்ளது; அதாவது, உற்பத்தியினை உப ஒப்பந்த அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளைச் செய்து கொடுத்தல், இவை அனேகமாக வீடுகளில் பெண்களினால் செய்து கொடுக்கப்படுகின்றன.
இப் புதிய ஒழுங்குகள் வேலை வசதிகளையும் ஏற்படுத்துவதுடன், வருமான மட்டங்களையும் உயர்த்துகின்றது. அவ்வாறான மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பினும், பெணகளின் மீதும் அவர்களின் குடும்பங்கள் மீதும் மேலதிகமான சுமையினையும் ஏற்படுத்தியுள்ளது; அதாவது, உற்பத்தி இலக்குகளை நிறைவேற்றும கட்டாயத்தின் காரணமாக தங்களுடைய ஆற்றலுக்கு மேலாக வேலை செய்ய வேண்டிய நெருக்குதல்களும் ஏற்படுகின்றன; இதனால் பெண்கள் நீண்ட நேரங்கள், குறைந்த கூலிக்காக, பொதுவாகக் குடும்பத்திலுள்ள கூலி பெறாத உழைப்பினைப் பயன்படுத்தப்படுவது, அவர்களின் உடல் நலத்தையும் குடும்ப வாழ்க்கையினையும் பாதிக்க முடிகின்றது.
நகல் தேசியக் கொள்நெறி தொழிற்சாலை சார்ந்த வேலை தொடர்பான ஒரு மாற்றத்தை, தொழிற்சாலை வேலைக்கு ஏற்பட்டிருக்கும் குறைந்த தேவை பற்றிய நிலையினைக், கவனிக்கத் தவறிவிட்டது. கட்டுநாயக்கா ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் உத்தியோகப்பற்றற்ற பதிவுகள் காட்டிய தகவலின் படி, 14000 வெற்றிடங்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளன; அதை நிரப்ப முடியாமல், விண்ணப்பங்கள் குறைந்துள்ள காரணத்தினால் அவ்வாறான நிலை தொடர்ந்துள்ளது. உடனடியாக கிடைக்கின்ற உழைப்பினர், வெளிநாட்டு வேலைச் சந்தைகளுக்குச் செல்வது தெரிகின்றது; காரணம், வெளிநாட்டு உழைப்பினர் சந்தைகள் கூடியளவுக்கு ஆதாயம் மிகுந்ததாகவும் , வீட்டுபணிசெய்யும் வேலையைவிட நல்லதாகவும் கவர்ச்சியுடைதாகக் காணப்பட்டுள்ளது. அரைவாசித் தேர்ச்சியுடைய மற்றும் தேர்ச்சியில்லாத உழைப்பினரில் அதிகமானவர்கள் முன்பு வருமானமுடைய வேலையில் இருந்தவர்கள், தொழிற்சாலைக் கைத்தொழிலினால் வழங்கப்படும் சமூக - பொருளாதார நிலைமைகளை இனிமேலும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. மாற்று நிலைகளைத் தேடும் முயற்சிகள், முறைசார் மற்றும் முறைசாராப் பொருளாதாரத் துறைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனாலும், இத்தகைய மாற்று வேலை வசதிகள், வேலைப்படையில் சேரும் பெண்களுக்கான வாய்ப்புகள் பொருளாதார ரீதியில் உறுதியானவையாக இருப்பதுடன் அதேவேளை நாடும் பயன் தரும் வளர்ச் சிப் பாதையில் செல்லும் அவசியமும் வலியுறுத்தப்படுகின்றது; நீண்டகாலத்தில் இவை பெண்களின் உழைப்புக்கு வேண்டுமான கெளரவத்தினையும் தருவதாக இருத்தல் வேண்டும். நகல் கொள்நெறி இத்தகைய வேலைப் பிரிவினரை, இலங்கைக்கு இரண்டாவது மிக உயர்ந்த வருமானம் உழைப்பவர்கள், போதியளவுக்கு கவனிக்காமல் விட்டது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாகின்றது.
328

9. இலங்கையை “மீளப்பெறுதல்”
“இலங்கையை மீளப்பெறுதல்” (Regaining Sri Lanka) என்ற தலைப்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இன்னொரு பிரதானமான கொள்நெறி ஆவணம் வெளிப்படையான பால் நிலை தொடர்பாக நடுநிலைகாட்டும் ஆவணமாகக் கொள்ளப்படமுடிகின்றது. தொலைநோக்கு, ஒன்றினையும் மற்றும் வகுத்துள்ள உபாயம் ஆகியவை நாட்டின் விரைவுபடுத்திய அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இலங்கையினை மீட்டெடுத்தல் பற்றிய ஆவணம் பொருளாதார சட்டகமொன்றினை முன்வைத்தள்ளது. இது, தனியாம் துறை, பொதுத்துறையிலுள்ள பலரின் உதவியுடன் வரையப்பட்டுள்ளது; இது பெரும்பாலும் உடனடியாகத் தேவைப்படும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த ஆவணம், ஒரு பேரின ரீதியான பொருளாதாரப் பின்னணியினைத் தழுவி, இலங்கையின் பொருளாதார எதிர்கால நிலைமைகள் மீது மீண்டும் வழிப்படுத்தும் செல்வாக்கினை ஏற்படுத்துவதற்கான குறிக்கோள் மையப்படுத்தப்பட்டுள்ளது; வேலையற்றிருப்போருக்கு வேலை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதும், மற்றும் குறைந்த வேலை நிலையிலுள்ளவர்களுக்கு வேலை வசதிகளை மேம்படுத்தலும் என்பவற்றை நோக்கங்களாகக் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கொள்நெறி ஆவணம் நான்கு பிரதான சவால்களை இனங்கண்டு கொள்கின்றது. அவையாவன: 2 மில்லியன் புதிய வேலை வசதிகளை உணி டாக்குதல் ; பொதுப் படுகடனில் வெற்றி காணல் ; வளங்களை மீள்கட்டியெழுப்பும் தேவைகள், மற்றும் அதிகரிக்கும் வருமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை வற்புறுத்தப்பட்டுள்ளன. இவை நிறைவேற்றப்பட்டால், சமூகத்தில் உள்ள பல்வேறு மட்டங்களிலுள்ளவர்கள் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும். ஒரு தேக்கமான நிலையில் உள்ள பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கான உறுதிப்பாட்டை, எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைக்காவிடினும், வழங்குகின்றது.
இலங்கையினை மீளப்பெறுதல் என்பதன் முக்கியமான விடயங்களாக நாட்டின் பொருளாதாரத்தைக் குறித்து எவர், எதனைப் பங்களிப்பாக செய்கின்றார், எவர் பொருளாதாரச் சீர்திருத்தத்தினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார், என்ற பிரதான பிரச்சினைகள் முன்னிலைக்கு வருகின்றன. எல்லா விடயங்கள்/ பிரச்சினைகள் கவனிக்கப்படுவதாக இருப்பினும், பால்நிலை (பெண்களைப் பற்றி) நடுநிலை வகிக்கும் நோக்கில் அணுகப்படுகின்றது. இதனால், பெண்களின் நிலை பொருளாதாரத்தில் முதன்மையாக இலங்கையின் பிரதான வருமானம் உண்டாக்கும் மூலமாகவும், முன்மொழிந்த திட்டங்கள் எவ்வாறு அவர்களைப் பாதிக்கும் என்பவை தொடர்பாகவும் முக்கியத்துவம் இழந்த தன்மையினைப் பிரதிபலிக்கின்றது. இலங்கையினை மீளப்பெறுதல் ஆவணம், முன்பு கூறப்பட்ட வேலை தொடர்பான நகல் கொள்நெறியில் இருப்பது போன்ற ஒரு பால்நிலைத் தெளிவின்மை நோக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
329

Page 172
வறுமைக் குறைப்பு உபாயம் இலங்கையினைப் மீளப்பெறுவதன் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வறுமைக் குறைப்பு உபாயத்தில் பால்நிலை சார்பான விடயங்கள் மீது கவனம் செலுத்தும் முயற்சி ஓர் அம்சமாகச் சேருகின்றது.
10. வறுமைக் குறைப்பு உபாயம் (Poverty Reduction Strategy)
பொருளாதாரத்தில் வேலை அளவு அதிகரித்தும் வேலையின்மை வீதம் குறைந்தும் காணப்பட்ட பொழுதிலும், வருமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்திருந்தன; மற்றும் சந்தைத் தாராளமயப்படுத்தல் இலங்கையின் மாறிச் சென்றுள்ள வறுமை நிலை மீது ஏற்படுத்திய விளைவு மிகச் சிறியதாகவே இருந்துள்ளது. வறுமைக் குறிகாட்டிகள், இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலத்திலிருந்து மூடப்பட்ட பொருளாதாரக் காலப்பகுதி வரை, மீண்டும் திறந்த சந்தைக் காலம் வரை, சிறிதளவு ஏற்றவிறக்கங்களைக் காட்டியுள்ளன. தற்பொழுது ஒரு பெரிய பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். வருமானப் பகிர்ந்தளிப்பு நிலையினைப் பார்க்கும் பொழுது மிகக் குறைந்த மட்டத்திலுள்ள 40 சதவீதக் குடும்பங்கள் 15 சதவீத வருமானத்தைப் பெறுகின்றனர்; மற்றும் மிக உயர்ந்த மட்டத்திலுள்ள 20 சதவீதத்தினர் 50 சதவீத தேசிய வருமானத்தைப் பெறுகின்றனர். மேலும் குடிசனத்தில் 30.4 சதவீதத்தினர் உத்தியோகபூர்வமான வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் (அட்டவணை 7)
அட்டவணை 7 வருமானச் சமமின்மை
1953 1963 1973 1979 1982 1987 1997 மிகக் குறைந்த நிலையிலுள்ள 40 சதவீத குடும்பங்களினால் பெறப்பட்ட வருமானம் 14.5% 14.7%|19.3%|16.1% 15.3% 14.1% | 15.7%
மிக உயர்ந்த நிலையிலுள்ள 20 சதவீத குடும்பங்களினால் பெறப்பட்ட வருமானம் 53.8%|52.3%|43.0%|499% 52.0%|52.4% 49.4%
மூலம்: இலங்கை மத்திய வங்கி, நுகர்வோர் நிதிகளும் மற்றும் சமூக - பொருளாதார அளவீடும், கொழும்பு.
இலங்கையில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அடுத்தடுத்துப் பதவியேற்ற அரசாங்கங்களினால் சமூக நலன் பேணும் மனித வள அபிவிருத்திக் கொள்நெறிகளை, இலவசக் கல்வி, இலவச மருத்துவச் சேவைகள், உணவு மானியங்கள் கொடுகடன் வசதிகள் ஆகியவை உள்ளடங்கலாக வறியவர்களின்
330

தேவைகள் கருதி, வறுமை நிலை, குறித்த ஒரு காப்பளிக்கும் வலையமைப்பாக வழங்கப்பட்டு வந்துள்ளன.
தற்பொழுதுள்ள பொருளாதார சீர்திருத்தங்களில் வறுமை ஒரு பிரதான பிரச்சினையாக இடம் பெற்றுள்ளது. இப்பின்னணியில் அரசாங்கத்தின் வறுமைக் G560)sDüL! D_LTuulè (Poverty Reduction Strategy) SCB g5ul- 9(Lprůl ab Tab வறுமைத்தணிப்புக் குறிக்கோள் பற்றி 2000 இன் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது; இது 1998 இல் இருந்து பல்வேறு பகுதியினருடன் நடாத்திய ஆலோசனை, உரையாடல் ஆகியவற்றின் விளைவாக வகுக் கப்பட்ட வறுமைத் தணிப்பு உபாயமாகின்றது. இவ்வாவணம் “இலங்கையினை மீளப்பெறுதல்” என்ற தலைப்பிலான ஆவணத்துடன் சேர்க்கப்பட்டது. இந்த வறுமைத் தண்ப்பு ஆவணததில் பெண்கள் தொடர்பான விடயங்கள் மீது தோன்றி மறையும் குறிப்புகள் மட்டும் அதனுடைய பிரதான பாகத்தில் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பகுதி V இல் அத்தியாயம் 7 இல், ஆவணத்தின் இறுதியில், 2 பக்கங்கள் “பால்நிலை சார்பான பாரபட்சத்திற்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுத்தல்” என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இவ்வாவணம் மீண்டும் ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதனுடைய உள்ளடக்கத்தில், பால்நிலை குறித்து நடுநிலை என்ற பாவனையில், அது ஒரு பார்வை இழந்த தன்மையைக் காட்டுகின்றது. மறுபுறத்தில் பால்நிலை குறித்து உணர்வுபூர்வமான தோற்றப்பாடு இருப்பது போல காணப்படுவதாயினும், அது பெண்களுக்கு எதிராக, பாரபட்சமான முறையில் அமைகின்றது. அரசின் முக்கியமான ஆவணமொன்றில் சொல்லாட்சி மேலோங்கி இருப்பதற்கான இன்னுமொரு உதாரணமாகின்றது.
இதில், அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக “இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்து வறுமையினை இல்லாமல் செய்தல்’ ; இதற்காக “மக்கள் மீது முதலீடு செய்தல்” பற்றிக் கவனம் செலுத்துகின்றது. மற்றும் “எல்லா வறுமைக்கும் எதிரான முயற்சிகளிலும் பால் நிலையினையும் பெண்களையும் பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டு வருதல” இவ்வாறாகக் கூறப்பட்டிருப்பினும், வறிய பெண்கள் பற்றிய நிலை தொடர்பாக கவனம் எடுக்கப்படவில்லை; அதனால் பால் நிலை பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டுவருவது எனக் கூறுவது பால் நிலை சார்பானதாக் காட்டுகின்ற பொழுதிலும் பொருத்தமற்றதாக உள்ளது. வறிய பெண்களின் கடுந்துயரம் தொடர்பாக அரசினது தொடர்பான வறுமைத்தணிப்பின் அர்பணிப்பு பற்றி வெவ்வேறான நீதி, சமத்துவம் பற்றிய செயற்கருவிகள் மூலம், பெண்களின் பட்டயம், தேசிய பெண்களுக்கான நடவடிக்கைத் திட்டம், மற்றும் பெண்களின் விஞ ஞாபன மி , போன ற வறி றில எடுத் துரைத் தவை அதிகமாக அர்த்தமுடையவையாகத் தெரியவில்லை.
பல ஆண்டுகளாகப் பேச்சளவில், கொள்நெறிகள் பால்நிலை பிரதான நீரோட்டத்திற்குள் சேர்ப்பது என்பது வேறுவிதமாக உண்மையான தாக்கத்தை
331

Page 173
ஏற்படுத்தவில்லை; சிந்தனைப்பாங்கு, உபாயங்கள் மற்றும் பிரதான கொள்நெறி ஆவணங்களைத் தழுவிய நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக தாக்கம் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் எழுகின்ற கேள்வி, பால்நிலை பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டுவரப்படுதல் என்பதன் தேவையினையும் அர்த்தத்தினையும் நடைமுறை மட்டத்தில் எவ்வாறு விளங்கிக் கொள்வது. திட்டமிடல் அமைச்சின் மூத்த உறுப்பினர், வறுமைக் குறைப்பு உபாயம் பற்றி உரையாற்றுகையில் கூறியது பின்வருமாறு: “பால்நிலை பற்றிய கூருணர்வு எல்லாவற்றுக்குள்ளும் சேர்க்கப்படுவது இயலாதது; இது ஆவணத்தின் பக்கங்களை 500 என்ற அளவுக்குக் கொண்டுவந்துவிடும்”. இவ்வாறு கூறியதே பால்நிலைபற்றிய இணைப்பு முக்கியத்துவமுடையது என்பதைக் காட்டுகின்றது. வழமையான சிந்தனைப் பாங்கு நிலவுமிடத்து பால்நிலை பற்றிப் போதியளவுக்குக் கொள் நெறியில் பிரதிபலிக்கச் செய்வது சாத்தியமில்லை. பால் நிலை கொள்நெறிகளில் இணைத்துக் கொள்ளப்படுதல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது எனினும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் நிறைந்தவையென்பதும் தெரிகின்றது.
வறுமை இலங்கையில் பெண்களின் நிலையினை வெவ்வேறு விதத்தில் பாதிக்கின்றது. கோற்ரெகொட (Kottegoda) என்பவரின் ஆய்வில் பெண்களும் வறுமையும் பற்றிய விடயத்தில், பெண்களை ஒரு தனியாக உளதான கூறாக வறுமை தொடர்பாக எழுதுமிடத்து கவனத்தில் கொள்வதன் அவசியத்தை பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
“குடிசனத்தனர் வறுமையரிலுள்ள நிலையில் , வறியவர்கள் ஓரினத்தன்மையுடையவர்கள் அல்லர்; வறியவர்கள் பெண்கள், ஆண்களாக இருக்குமிடத்தல், அவர்கள் சமூக அமைப்பில் ஒரு பகுதியினராக பெண்களும் ஆண்களும் உள்ளனர்; அவர்களைப் பொறுத்து பால்நிலை முறையான குறிப்பிட்ட பங்களிப்பினை உடையவர்கள்; அதை அவர்கள் வீடுகளிலும், தங்களுடைய கூட்டத்தினரிடையும் மற்றும் சமூகத்திலும் பங்களிப்பினைச் செய்கின்றனர். எங்களுடைய சமூகத்தில், சமூக-பண்பாட்டு ரீதியாக பால்நிலை தொடர்பான வேறுபடுத்தல் ஆண்களின் மற்றும் பெண்களின் வகிபாகத்தினையும் இடத்தினையும் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளில் வரையறுக்கின்றது. பெண்கள், பொருளாதாரம், உற்பத்தி மற்றும் வருமான இயலுமை ஆகியவற்றில் குறிப்பிட்ட வழிகளில் இட அமைவு பெறுவதுடன், பெண்கள், ஆண்கள் ஆகிய இரு பாலாரிடையேயும் ஒரு பொதுவான சமச்சீரற்ற நிலை அதிகாரம் குறித்தும், சமூக, வீட்டு விவகாரங்களிலும், பெண்களை ஒரு கீழ்ப்படிவான நிலைக்குத் தள்ளும் ஒழுங்குகள் இருந்து வருகின்றன. பால்நிலை தொடர்பான எல்லை வரையறுத்தல் மற்றும் பெண்கள் கீழ்ப்பணிவான நிலையில் இருப்பதும், பெண்களின் வறுமை நிலை குறித்து முக்கியத்துவம் கொள்வதுடன், அவர்கள் இந்த நிலைமைகளை எதிர்த்து முன்னேற்றம் காண்பதிலும் பாதிப்புக் கொண்டதாக உள்ளது.”
332

இத்தகைய சமச்சீரற்ற அதிகாரம், பொருளாதார நிலை, உற்பத்தி, வளங்கள் மற்றும் வருமானம் ஆகியவை குறித்து நிலவுவதனால், இது பெண்களை ஒரு தாழ்த்துகின்ற இடத்திற்கு, வறிய ஆண்களை விட, தள்ளுகின்றது; அத்துடன், சமூக மற்றும் வீட்டு துறையில் ஒரப்படுத்தப்படும் நிலைகள் பெண்களைக் கூடுதலான பலவீனப்படுத்தும் இடத்திற்கு எடுத்துச் செல்கின்றது. இது குறித்து வலியுறுத்தப்படுவது, வறுமையை நீக்கும் முகமாக எடுக்கப்படும் கொள் நெறி முனைவுகளில், பெண்களை ஈடுபடுத்துதல் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுடன், தீர்மானங்கள் எடுக்கப்படும் மட்டங்களில் கொள்நெறியளவிலும, நடைமுறையிலும் பெண்கள் பங்கெடுத்தல் பிரதான இடத்தினை வகிப்பதும் தேவைப்படுகின்றது. இவற்றுடன், எல்லா விடயங்கள் மற்றும் அக்கறை ஏற்படுத்தும் நிலைகள் மக்களின் வறுமை தொடர்பாக உள்ளவற்றில் பால்நிலை எந்தளவுக்கு பிரதான நீரோட்டத்துடன், எல்லா வறுமைத் தணிப்பு உபாயங்களிலும் , எல்லாத் தேவையான மட்டங்களிலும், சேருகின்றது என்பதும் அறியக் கூடியதாக இருத்தல் வேண்டும். இது ஒரு விருப்பத்துடன் செய்கின்ற முறைவழியாக இருப்பதும், தயக்கத்துடன் சேர்க்கப்படும் விடயமாக தப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுவதும் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
வறுமைக் குறைப்பு கொள்நெறிக் குறைபாட்டைக் கொண்டுள்ளது; அதாவது, இதற்குள்ள பொறுப்புகள் பற்றிய விளக்கம் போதுமானதாக இல்லை. வறுமையினைக் குறைப்பது, இலங்கையில், அதனுடைய வறுமையின் தன்மை அதனுடைய அளவு என்பவை பற்றி விளங்கிக் கொள்வது முதல் படியாகின்றது. வறுமைக் குறைப்பு உபாயம் பிரதேச ரீதியான வறுமையின் வெளிப்பாடுகள், மோதல் நிலையினால் ஏற்படும் வறுமை, சமூக சேவைகளின் கிடைப்பு நிலை, சூழமைவு வறுமையினால் கேவலப்படுத்தப்படுதல், மக்களுக்கு வளங்களின் பெறுகை ஆகிய விடயங்கள் அவதானிக்கப்பட்டிருப்பினும், அது பெண்கள் ஒரு பிரிவினர் என்ற வகையில் அவர்கள் மீது ஏற்படும் வறுமையின் பாதிப்பினை, வேறுவிதமாக வறுமையினால் பாதிக்கப்படுபவர்கள் என்ற வகையில், கவனிக்கத் தவறிவிட்டது. வறுமைக் குறைப்பு உபாயத்தின், பாஸ்நிலை நடுநிலை என்ற நிலைப்பாடு தொடக்கத்திலிருந்து ஒரு கருத்துக் குழம்பிய நிலையினைத் தோற்றுவித்தது. வறுமைக் குறைப்பு ஆவணத்தில் பால்நிலை நடுநிலை என்ற தொனி தொடர்ந்து செல்கின்றது. ஆனாலும், அத்தியாயம் 6 இல், மக்கள் மீது முதலீடு செய்தல் என்பதில் பெண்கள் பற்றிய குறிப்பான விடயங்கள் இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளன; அதாவது, சுகாதாரமும் சத்துணவும், கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய விடயம், பெண்களிடையே இரத்தச் சோகை, மற்றும் அதிகளவான குறைந்த வருமானம் பெறும் கொழும்பிலுள்ள சேரிப்பகுதிகளின் குடும்பங்களில் பெண்கள் தலைமை தாங்குகின்றனர் என்பதும் கவனத்தினை எடுக்கின்றன.
வறுமைக் குறைப்பு ஆவணத்தின் அத்தியாயம் 7 அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. காரணம், அது “வறியவர்களுக்குச் சார்பான
333

Page 174
ஆழுகையுடன் அதிகாரமளித்தல்” என்பது பற்றி அர்பணிப்புடன் செயற்படுதுல் எதிர்பார்க்கப்படுகின்றது: அரசாங்கத்தின் ஆட்சியில் நல்லாட்சிக்கான ஒழுங்குகள் பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது.
“சர்வதேசப் பின்னணியிலிருந்து கிடைக்கும் அனுபவம், நன்றாக ஆழுகை செய்யப்படும் நிறுவனங்கள், வறுமைக் குறைப்பு முயற்சிகளில் செயற்திறன் வாய்ந்த முறையில் தொழிற்படமுடிகின்றன. அத்தகைய நிலை இல்லாவிட்டால், நிறுவனங்கள் செயற்பாடு குறைந்தவையாக இருக்கும், ஆளுகை தரத்திற்குக் குறைந்தாக இருப்பதால், வறியவர்கள் அதனுடைய கூடுதலான சுமையினைத் தாங்க வேண்டியுள்ளது”. -
இவ்வாவணத்தில் அத்தியாயம் 7, உபபகுதி V இல் முக்கியத்துவம் அதிகம் கொண்டதாக பால்நிலை தொடர்பான பாரபட்சத்தை எதிர்த்து நடவடிக்கை எடுத்தல் பற்றிக் கூறப்பட்டுள்ளது, பால்நிலை விடயங்கள் குறித்த விவாதத்தில் முக்கியமாகின்றன. இங்கு பால்நிலை நடுநிலை பேணுவதிலிருந்து விலகி, பெண்கள் எதிர் நோக்கும் பாரபட்சத்திற்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக நோக்கப்படுவது, பெண்கள் நாட்டின் மூன்று மிகக் கூடுதலான வருமானம் தேடும் மூலங்களில் மையப் பகுதியாக உள் ளது ஏற்றுக்கொள்ளபடுகின்றது; அத்துடன் மேலும் ஏற்றுக் கொள்ளப்படுவது, இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுத்துச் செல்லப்படுவதில், பெண்கள் இன்னும் குறைந்த தேர்ச்சியுடைய, குறைந்தளவு கூலிபெறும் வேலைகள் ஆகியவற்றில், வீட்டுப்பணி, ஆடைகள் தயாரித்தல், விவசாயம் மற்றும் வழமையாகப் பெண்களுகெனப் ஒதுக்கப்படும் வேலைகள் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னுமொரு முக்கியமான விடயமும் தொட்டுச் செல்லப்பட்டுள்ளது; அதாவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, பாராளுமன்றத்திலும் அரசியலிலும் குறைவாக உள்ள பிரதிநிதித்துவம் ஆகியவை பால் நிலைப் பாரபட்சம் - பெண்களுக்கு எதிரான - முறைகளாகக் காணப்படுகின்றன.
அத்தியாயம் 7 இல் உப பகுதி V இல், வறுமைக் குறைப்புக் கொள்நெறி அரசாங்கத்தின் சார்பில், எல்லா வறுமைக் கெதிரான நடவடிக்கைளிலும் பால்நிலை தொடர்பானவற்றை பிரதான நீரோட்டத்தில் சேர்ப்பது பற்றிய உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது; அத்துடன் சில முக்கியமான வழிமுறைகளையும் முன்னிலைப்படுத்திக் கூறியுள்ளது: பெண்களின் உரிமைகளை 'சிடோவின்' (CEDAW) தொகுப்பில் பேணப்பட்டு வந்துள்ளவை பாதுகாத்தல் ; பாரபட்சம் காட்டும் சட்டங்கள் திருத்தப்படுதல் ; சமஅளவான பயிற்சி வாய்ப்புகள் குறித்து வேலை மேம்படுத்தல்; தகுதியான வேலை நிலைகள்; இவற்றில், சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலையாட்கள், புலம்பெயர் வேலையாட்கள், உய ஒப்பந்த அடிப்படை வேலையாட்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் சமூக நிலைமைகள் பற்றிய அலசி ஆராயப் தல கள்
334

உள்ளடங்குகின்றன. பெண்களின் முயற்சியாண்மை தொடர்பாக சிறு சுயதொழில் வேலைகளுக்கு வசதி ஏற்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுதல் ; சுகாதாரத் திட்டங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்; பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல்; மற்றும் பெண்கள் உரிமைகள், நிலைமைகள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்துதல். அத்துடன், இப்பிரச்சினைகள் தொடர்பாக பொதுத்துறை, தனியார் துறை ஆகியவற்றில் கூருணர்வூட்டும் திட்டங்களை அமுல் செய்தல், ஆகியவற்றுடன் வேறுபலவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
வறுமைக் குறைப்பு உபாயம் பெண்கள் தொடர்பாக அதிகமாகவுள்ள ஆய்வுகள், கொள்நெறிக் கருத்தாடல்கள், மற்றும் கொள்நெறி தயாரிப்பதற்கான ஒழுங்கிற்கு செய்யப்பட்ட எழுத்துக்கள், என்பவற்றை அத்தியாயம் 7 பகுதி V இல் அதிகமாக ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாகப் போதியளவுக்குப் பயன்படுத்தவில்லை. பத்திரிகையொன்றில் கூறியது போல, “வறுமை குறைப்பு உபாயம் பற்றிய ஆவணம் பல கொள் நெறிக் குப் பொறுப்பான உத்தியோகத்தர்களின் தன்மைக்கு ஏற்றதாக, குறிப்பாக பால்நிலை பற்றிக் கவனம் செலுத்தப்படும் பொழுது, உள்ளுர் வளங்கள், நிபுணத்துவம் ஆகியவற்றை, கருத்து வெளியீடுகளாக, ஆராய்ச்சிப் பெறுபேறுகளாகக் கிடைப்பதனை அல்லது தகைமையுடையவர்கள், ஆற்றலுடைவர்கள் இருப்பதனை பல்வேறு விதத்தில் கவனிக்கப்படவில்லை அல்லது புறக்கணிக்கப்பட்டது தெரிகின்றது’.
“வறுமைக் குறைப்பு உபாயம் பற்றிய ஆவணத்தில், காலந்தாழ்த்தி பால்நிலை தொடர்பான விடயங்களைச் சேர்ப்பதற்கான முயற்சி எதனைக் காட்டுவதென்றால், பெயரளவில் அதிகம் பேசப்படும் மத்தியில் உலகளாவிய நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பால்நிலை முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பிரதான நீரோட்டத்தில் இணைத்தல் என்பது எப்பொழுதும் போல, இறுதியில் புகுத்தப்படும் கூறாக நோக்கப்பட்டுள்ளது”.
இது மீண்டும் ஒரு வெறுஞ்சொல் கூற்றாகின்றது. அரசாங்கம் ஒரு மீளாக்கத்தில் ஈடுபட்டுள்ளது; இதில் பால்நிலை பற்றியும் கூறப்பட்டுள்ளது பெண்களின் பிரச்சனைகளை தனியே இனங்கண்டு கொள்வதற்கும், மற்றும் அவற்றைப் பிரதான அரசியல், நிருவாக, கொள்நெறி மற்றும் அபிவிருத்தி நீரோட்டத்தில் இணைப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு வறுமைக் குறைப்பு ஆவணத்தில் முழு அளவானதாக இருப்பது, இருபது வருடங்களுக்கு முன்னாக வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்களில் இருந்ததைப் போல காணப்பட்டுள்ளது.
11. முக்கூறு உள்ளடக்கிய சட்டகமைவு
நிவாரணம், புனர்வாழ்வு, மற்றும் இனங்களுக்கிடையே இணக்கப்பாடு ஆகிய மூன்றினையும் உள்ளடக்கிய ஒழுங்கமைவு, அரசாங் கத்தினால
335

Page 175
முன்வைக்கப்பட்டது. மோதல் சூழ்நிலையிலிருந்து பின்னான காலத்துச் சவால்களை எதிர்நோக்குவதற்காக, வறுமைக் குறைப்பு உபாயம் பற்றிய ஆவணத்துடன் சேர்ந்ததாக, ஆனால் முக்கியமாக வடகிழக்கில் போருக்குப் பின்னான நிலை குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது முக்கூறு உள்ளடங்கிய சட்டகமைவு (Triple RFramework - Relief Rehabilitation and Reconciliation) upbui gy,6600TLb.
முக்கூறு உள்ளடங்கிய சட்டகமைவு ஆவணம் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டவையாக, மோதலினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்; இப்பிரதேசங்களில் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுதல்; மற்றும் இனங்களுக்கிடையே சமரசம் ஏற்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தல்.
இம் மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இச்சட்டகம் மூன்றையும் இணைத்த முறையில், இலக்குகளை விபரித்துள்ளது. அவையாவன: வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உண்டாக்குவதுடன் மற்றும் வறியவர்களிடையே சமூக தேவைகள் பெறப்படுவதற்கு வழிசெய்தல்; ஒரு செயற்திறன் வாய்ந்த சமூகக் காப்பொழுங்கு முறையினை உறுதிசெய்தல்; மற்றும் வறியவர்களுக்கு வலுவளித்தல், அவர்களுடைய விடயங்கள் தொடர்பாக அவர்களின் வாழ்வைப் பாதிப்பவை குறித்து எடுத்துரைபதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.
மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய கொள் நெறி ஆவணம் , இனங்களுக்கிடையே இணக்கப்பாடு என்பதையும் மறுபக்கத்தில் மோதலினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடியான தேவைகளையும் சேர்க்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டது. இவை நிபந்தனையற்ற விதத்தில் ஏற்றுக் கொள்ளப்படுபவை என்பதும் உறுதியாகின்றது. எனினும், இவ்வாவணத்தைத் தயாரித்தவர்கள் மீண்டும் பால்நிலை பற்றி ஒரு நடுநிலை அணுகுமுறையிலைாப் பின்பற்றியுள்ளனர் என்பதும் அதனுடைய குறைபாடாக இருக்கின்றது. நீண்ட கால ரீதியிலும், பரவலாகவும் கொள்நெறி வழிகாட்டிமுறைகள், நிருவாகம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றினுடாக பிரதான விடயங்களை, பொருளாதார, சமூக சார்பான, அவை வெவ்வேறு விதத்தில் ஆண்கள், பெண்கள் என்பவர்கள் மீது தாக்கத்தினை ஏற்படுத்துபவை என்பதும் அவதானிக்க முடிகின்றது. இதில் பால்நிலை குறித்து நடுநிலை அணுகுமுறையின் பொருத்தப்பாடு கேள்விக்குரியது. இலங்கையின் மோதல் சூழ்நிலைப் பிரதேசங்களில், பெண்கள் அதிகமான பால்நிலை குறித்த பாரபட்ச நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். இது, மற்றைய வகையான இனத்துவ, சமய அல்லது வேறு விதமான சமூகத்தில் நிலவும் தப்பெண்ணங்கள் ஆகியவற்றினால் விளைவிக்கப்படும் பாரபட்சங்களைப் போல தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவை நிலவுகின்ற சூழ்நிலையில் அவற்றைச் சமத்துவமாகவும் நியாயமாகவும் அணுகுவதில் பால்நிலை குறித்து நடுநிலை பிரயோசனமற்றது. மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய சட்டக ஒழுங்கில்
336

பெண்கள் விவகார அமைச்சு இடம் பெறவில்லை என்பதும், மற்றும் பாடல்நிலை பற்றிய உப குழுவொன்று சமாதான முறைவழி தொடர்பாக மூன்று பகுதிகளின் ஆவணம் சிறு வடிவத்தைப் பெற்றதற்கு மிக நீண்ட கால இடைவேளைக்குப் பின் அமைக்கப்பட்டதும் காட்டுவது எதையென்றால், எல்லா அரசாங்க கொள்நெறி ஆவணங்களும் ஒரு சரியான பார்வையுடைய விளங்கிக் கொள்ளும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை; எல்லாப் பொருளாதாரக் கொள்நெறிகளும் பால்நிலை தொடர்பாக நடுநிலை உடையதாக இருக்கும் என்ற தவறான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
முடிவுரை
பேச்சளவில் அதிகம் கூறப்பட்ட பொழுதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பால்நிலை விடயங்களை வெற்றிகரமாக பொருளாதாரக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. அவ்வாறு செய்யப்படாமை பால்நிலை தொடர்பாக நடுநிலை வகிப்பது என்ற போர்வையில் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமூகத்தில் வேலை அமைப்பில், உற்பத்தியில், கல்வியில் மற்றும் வேறு துறைகளிலும் பெண்களின் நிலை குறித்து நோக்குமிடத்து, பால்நிலையின் நடுநிலைக் கொள்நெறிகளின், பெண்களைத் தாழ்த்தும், பாதகமான தன்மைகளை ஏற்படுத்தும் விளைவுகளையும் மற்றும் ஒரப்படுத்தலையும், மாற்ற முடியாது. பால்நிலை சார்பாக நடுநிலை உண்மையில் அவ்வாறு இருப்பதில்லை என்பதும் இலங்கைக்கும் நன்று பொருந்துவதாகும்.
பாக்கர் (Bakker) என்ற ஆராய்ச்சியாளர் இந்த நிலைபற்றி பின்வருமாறு கூறியுள்ளார். “ஒழுங்காக பால்நிலைத் தொடர்புகள் பற்றிய ஆய்வினை (5. பொருளாதார சட்டகமைவுடன் இணைப்பது கடினமானது. இது, பால்நிலை பற்றிய விடயங்கள் குறித்து, பொருளாதார விடயங்கள் பற்றிய கருத்தாடலில், ஒரு பார்வையற்ற அணுகுமுறை உள்ளது; பொருளாதார ஆய்வு அதனுடைய அணுகுமுறையில், அதனுடைய அடிப்படை எடுக்கோள்கள் தொடர்பாக ஒரு பால்நிலையின் - நடுநிலைத்தன்மையுடன் பிரித்தெடுத்த ஆய்வு முறையான சந்தைகள், ஓரினத் தன்மையான உழைப்பு, உள்ளிடு என்பதுடன், தொழிற்படுகின்றன. எவ்வாறாயினும், சந்தைகளுக்கு ஒரு பால்நிலை சார்பான - பெண்கள் சேர்ந்த - பரிமாணம் உண்டு. ஒரு பால்நிலை பற்றிய தொடர்புகளின் ஆய்வு, எவ்வாறு சந்தைத் தொடர்புகள் உள்ளார்ந்த முறையில் பால்நிலை பற்றிய நடுநிலையுடன் ஆண்கள் நோக்கு நிலையினைத் தருகின்றது என்பதைக் காணமுடிகின்றது”. இது இலங்ககைக்கு நன்று பொருந்துகின்றது. இலங்கையில் கொள்நெறி வகுப்பவர்கள், அரசாங்கக் கொள்நெறிகள் தேவைப்பட்டதாக பால்நிலையினை பிரதான கொள்நெறித் தொகுப்பில் முக்கிய பகுதியாகச்
337

Page 176
சேர்ப்பதனை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். பொதுவாக, எது, ஏன், எவ்வாறு பால்நிலை பற்றி பிரதான முறையில் உட்பகுதியாக சேர்க்கப்படுதல் தொடர்பாக அதிகம் அறியப்படவுள்ளது; அத்துடன் கொள்நெறி மட்டத்தில் இவற்றை அடைந்து கொள்வதில் அக்கறையில்லாமல் இருந்ததற்கு அரசாங்கங்கள் காட்டிய நிலைமைகள் பற்றிய ஆதாரமில்லாத, மேலதிகத் திருப்தி என்பது “இலங்கையை மீளப்பெறுதல்” ஆவணத்திலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. "மற்றைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் பெண்கள் சர்வசன வாக்குரிமையை அனுபவிக் கிண்றனர், உயர்ந்த வாழ்வு நடிப் புக் காலத்தினைக் கொண்டவர்கள். இவையெல்லாம் உபகண்டத்தில் இல்லாதவை”. இலங்கையினை மீளப்பெறுதல் ஆவணம் உறுதிப்பாடுகளை வழங்குவதில் பின்வாங்கவில்லை.
இவ்வாவணம், பால்நிலை தொடர்பான அக்கறைகள் மற்றும் விடயங்கள் ஆகியவற்றை கொள்நெறி வகுப்பவர்கள் விளக்கம் கூறியும் எவை சீர்திருத்தம் தேவைப்பட்டவை என்பதையும் இனங்கண்டு விளக்கியுள்ளது. இவை பல விடயங்களை உள்ளடக்குகின்றன. அவையாவன: பெண்களின் வேலையில் கீழான தேர்ச்சி, குறைந்த கூலி ஆகிய நிலையிலிருந்து உயர்த்துதல் , அத்துடன் அவர்கள் உரிமைகளையும் பாதுகாப்பினையும் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உறுதிப்படுத்துதல்; பாரமரிப்பு முறையில் பெண்களின் வேலை தொடர்பாக மாற்றங்கள் கொண்டுவருதல் , அரசியலில், அரசாங்கத்தில் மற்றும் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்; பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளுதல்; அத்துடன், பெண்களுக்கு எதிராக எல்லா விதமான வன்முறைகளையும் நீக்குதல். பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியப்படுத்தி அவற்றை வெளிப்படுத்தும் அரசாங்கத்துறை, மற்றைய துறைகள், என்பவற்றிலிருந்து வருகின்ற ஆவணங்கள் கூடிய கவனத்தை எடுத்தல் வேண்டும். முன்பு குறிப்பிட்ட “தேசிய வேலை பற்றிய கொள்நெறி”, மற்றும் “இலங்கையை மீளப்பெறுதல்” என்பவை போன்ற ஆவணங்கள் இவை தொடர்பாக முன்னிலை வகிப்பது நல்லதாகும். பால்நிலையின் அக்கறைகளை எல்லைப்படுத்தி ஓரிரு பந்திகள் அல்லது பகுதிகளில் மட்டும் எடுத்துக் கூறுவது, இப்பிரச்சினைகளைப் பிரதான அரசியலின் மற்றும் பொருளாதாரத்தின் நீரோட்டத்துடன் சேர்ப்பதற்குப் போதுமானதல்ல. முன்பு குறிப்பிட்டது போல, ஆரம்பத்திலிருந்தே பால்நிலை பற்றிய பிரச்சினைகள் முக்கியமாக நிலைப்படுத்தி, பின்னர் ஒவ்வொரு கட்டத்திலும் கவனத்தில் இருத்தல் அவசியம்; இவை தொடர்பாக பிரதானமாக நோக்கப்படுதல், கொள்நெறி மட்டத்தில் தீர்மானம் எடுத்தல் பெண்களையும் ஆண்களையும் சமூகத்தில் ஒரே மாதிரித் தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை; அவை வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இப்பின்னணியில், பால்நிலை பற்றி நடுநிலையைக்
338

கடைப்பிடித்தல், ஏற்றுக் கொள்ளுதல், பால்நிலை குறித்து நுண்ணுணர்வற்ற மற்றும் பாரபட்சமுடைய கொள்நெறிகளைப் பின்பற்றுவதாகவே முடிகின்றது. இவ்வாறு இருப்பது வளங்களின் பகிர்ந்தளிப்பு, அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பாக சமனற்ற விளைவுகளைக் கொண்டு வருவதுடன்,
அதிகமாகப் பெண்களுக்கெதிரான பாரபட்ச நிலைகளையும் தோற்றுவிக்கின்றன.
உசாத்துணைகள்:
1.
Annual Report, Central Bank of Sri Lanka, 2001. Swarna Jeyawera, Socio Economic Development in Sri Lanka - Trends since the Social Summit. South Asian Regional Conference, Centre for Women's Research, Colombo, 1999. Central Bank of Sri Lanka, Consumer Finances and Socio Economic Survey, 1996/97. Hettige, S.T., Social Cost of Migration in Documents from the International Conference on Migration of Women Workers, Sri Lanka, 1997.
Facets of Change, Women in Sri Lanka, CENWOR, 1995. Kottegoda, S. Women in Poverty in Sri Lanka, Trends & Characteristics, CENWOR, Colombo, 2000. Women Workers in the FreeTrade Zone of Sri Lanka, a Survey, Voice of Women, 1983.
339

Page 177
அத்தியாயம் 9
வீட்டுப் பணியாளராகப் புலம்பெயரும் பெண்தொழிலாளர்கள்: பால்நிலை மற்றும் கருத்துநிலை மீதான தாக்கம்
வழிரீன் சாரூர்
“பொதுவாக ஆணாதிக்க உலகில் நாடுகளுக்கிடையே பெண்களின் புலம் பெயர்தல் அதிகம் தியாகம் செய்தல், துன்புறுதல் நிகழ்வுகளாகக் காட்டப்பட்டுள்ளன; மற்றும் இதில் பெண்கள் தனிமைப்படுத்திய விதத்தில் பாதிப்பிற்குள்ளாகின்றனர் எனவும் கருதப்படுகின்றது. பெண்களின் புலம்பெயர்தல் அல்லது பால்நிலை அமைப்புக்குள் இது நடப்பது ஆகியவற்றில் எது பிரச்சினையாக உள்ளது என்பது தெளிவாக இல்லை”
(நிக்கோலா பைப்பெர் - 2003)
முன்னுரை
2002 இல் இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட மொத்த தொகை ரூ. 123 பில்லியன் (ஐ. அமெ. டொலரில் 1.30 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய அன்னியச் செலாவணி வருவாயின் மூலமாகவும், இலங்கைப் பொருளாதாரத்தின் சென்மதி நிலுவைக்குப் பலமுட்டிய கூறாகவும், இருந்துள்ளது. ஆதலால், அரசாங்கம் புலம் பெயரும் தொழிலாளர்கள் நடவடிக்கைக்கு பெரும் ஆதரவினை வழங்கி வந்துள்ளது. இந்த பெரியளவான அன்னியச் செலாவணி வருவாய் பெறுவதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது; ஏனென்றால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 70 சதவீதத்தினர் பெண்களாகின்றனர். இவர்களில் அநேகமானவர்கள் வளைகுடா நாடுகள் (Gulf States), ஹொங்கொங் (Hong Kong) மற்றும் சிங்கப்பூர் (Singapore) ஆகிய நாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் பயிற்சியற்ற தேர்ச்சியல்லாத வீட்டுப் பணி செய்யும் தொழிலாளர்கள் (அட்டவணை 1) இவர்களில் பெரும்பான்மையினர் 21-40 வயதுக்குட்பட்டவர்கள்; விவாகமானவர்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளவர்கள்.
இப்புள்ளி விபரங்கள் காட்டுவது, இலங்கையில் அதிகமான பெண் உழைப்பினர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்; இது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு ஒத்ததாகக் காணப்பட்டுள்ளது.
340

அட்டவணை 1: இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற வேலையாட்கள் - பால்நிலை மற்றும் நாடுகள் தொடர்பான தரவுகள்
பென் % ஆண் % மொத்தம்
மத்திய கிழக்கு 570,600 70 244,600 30.0 815,200 ஐரோப்பா 56,750 75.1 18,850 24.9 75,600 ஆசியா 18,900 53.5 16,450 46.5 35,350
ஏனையவை 3,450 54.3 2,900 45.7 6,350 மொத்தம் 649,700 69.7 282,800 30.3 932,500
மூலம்: இலங்கையின் வெளிநாட்டு வேலை நிலையம், 2002
இலங்கையின் சென்மதி நிலுவைக்குப் பெருமளவு பங்களிப்பினைச் செய்துள்ள 649,700 (அட்டவணை 1) புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்களின் நிலையினை மதிப்பிடும் பொழுது அவர்கள் எவ்வளவு தனியான சமூக ரீதியான இடர்களை எதிர் நோக்கியுள்ளனர் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவங்கள் இல்லாதவர்கள், அவர்கள் எதிர்பாராத வகையில் பலவகையான வேலைபார்க்கும் நாடுகளுக்குச் செல்வதற்கு முன்னராகவும் அதற்குப் பின்னராகவும், கவர் டங்களை, இன்னல்களை அனுபவித்துள்ளனர். அனுபவித்த இன்னல்கள் பலவகையானவை: வேலை கிடைப்பதற்காக அதிகமான ஆட்சேர்ப்புப் பணச் செலவு; வேலை கொள்ளுனர்கள் வேலை உடன்படிக்கையின் விதிகள், நிபந்தனைகள் என்பவற்றை மறுத்தல்; வழங்கப்படாத கூலிகள்; சேமிப்புகளின் இழப்பு: காலத்துக்கு முன்பாகவே உடன்படிக்கையை ரத்துச் செய்தல்; உடல்ரீதியாக மற்றும் மனவெழுச்சி ரீதியாக தவறாகப் பயன்படுத்தியநிலை; பால் ரீதியாகத் தொல்லைகளுக்கு உள்ளாகுதல், கற்பழிப்பு மற்றும் சித்திரவதை இதனால் ஏற்படும் வலுவிழப்பு அல்லது இறப்பு. பெண்கள் ஆய்வு நிலையத்தின் (Centre for Women's Research) தகவல் கூறுவது, இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று வீட்டுப் பணியாளர்களாக வேலைபார்க்கும் பெண்களில் பத்து (10%) சதவீத்தினர் வேலை கொள்ளுனர் அல்லு வீட்டு உறுப்பினர் ஆகியோரினால் பால் ரீதியான தொல்லைகளுக்கும் மற்றும் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். இலங்கையின் வெளிநாட்டு வேலை நிலையத்தின் தகவலின் படி 2002 இல் மட்டும் 114 இறப்புகள் அறிவிக்கப்பட்டன; புலம் பெயர்ந்து சென்றவர்களில் குடும்பங்கள் தொடர்புகொள்ள முடியாத 1756 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; 441 பெண்கள் உடன்படிக்கைககள் முடிந்த காலத்திலிருந்து காணாமல் போய் விட்டனர். மேலும், 1,411 பெண்கள் வேறு தொல்லைகளுக்கு இலக்காகியுள்ளனர்;
341

Page 178
மிகப்பாரதூரமானது, அண்மையில் அறிவிக்கப்பட்ட சம்பவம், ஒரு 41 வயதுடைய பெண்ணின் உடல் குவைற்றிலிருந்து (Kuwait) சில உறுப்புகள் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளது (குவைற்றிலோ அல்லது இலங்கையிலோ இது பற்றிப் போதிய விசாரணை நடாத்தப்படவில்லை).
1980களின் நடுப்பகுதியிலிருந்து புலம் பெயர்ந்த பெண் வேலையாட்கள் தவறாக நடாத்தப்படுகின்றனர் எனவும், அது தொடர்பாக அரசாங்கத்தினால் போதியளவு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அரச சார்பற்ற அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. இவை எல்லா மட்டங்களிலும் உள்ளுர் பிரதேச மற்றும் தேசிய அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. அரச சார்பற்ற அமைப்புகள் இது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து முக்கியமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவதும் பாதுகாத்தலும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு வற்புறுத்தப்பட்டன; வழிகாட்டலும் ஆலோசனை வழங்குதலும்; வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னராகவும் பின்னராகவும் மீள் இணைப்பு தொடர்பாக பயிற்சித் திட்டங்கள்; ஆராய்ச்சியும் தகவல் வெளியிடுதலும்; பிரச்சாரம் செய்வதும் ஆதரித்து வாதாடலும்; ஆதரவு தேடுதலும் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வலையமைப்புத் தொடர்புகளை ஏற்படுத்துதல் . அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய விருத்தி, வேலை செய்யும் பெண்கள் நாட்டில் இல்லாதவிடத்தும் வாக்குரிமை வழங்கல் கோரிக்கை; இதனுடைய நோக்கமாக இருந்தது, அவர்களுடைய அதிகாரத்தை மேம்படுத்திக் கொள்நெறி ஆக்குவோர், அரசியல்வாதிகள் ஆகியோரிடையே செல்வாக்கினை ஏற்படுத்துதல். புலம் பெயர் நீ த பெணி தொழிலாளர்கள் பல சவால் களை எதிர்நோக்குமிடத்திலும் இவை விரைவில் நீங்குபவையாகவும் இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இலங்கையில் பெண்களிடையே உயர்ந்தளவான வேலையின்மை வீதம் இருந்து வருகின்றது. 20 சதவீதத்திற்கு மேலான வேலையின்மை நிலவுகின்றது. பெண்கள், தாங்களாகவே குடும்ப ரீதியில் இல்லாது புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர்; இது அவர்களிடையே சுதந்திரமாக தெரிவு செய்யும் வாய்ப்பு கூடுதலாக இருப்பதை பிரதிபலிக்கின்றது; எவ்வாறாயினும் அவர்கள் கூடுதலாக சில பலவீனமுடைய துறைகள் மீது தங்கியிருப்பது, இது பெண்களின் வாழ்வில் புலம்பெயர்ந்து செல்லுதல் எவ்வாறு ஓர் உறுதியான ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி அதிகளவான அக்கறையினைத் தோற்றுவித்துள்ளது.
அதிகாரமளித்தல் எதிர்நிலையான துன்புறுத்தலுக்குள்ளாகுதல்
பால்நிலை சார்பாக எமது சமூகத்தில் நிலவுகின்ற கருத்துநிலை, பெண்களுடைய இடம் வீட்டில் உள்ளது என்பதும், ஒரு நல்ல குடும்பத்தினை வளர்த்தெடுத்தல்
342

பொறுப்பும் பெண்களுடையது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு எடுகோள, வெளிநாடு சென்று வேலைபார்க்கும் பெண் வெளிநாடு செல்வதனால் ஏற்படுகின்ற எல்லா எதிர்க்கணிய விளைவுகள் முழுவதும் அவருடைய பொறுப்புமாகின்றது. இப்பின்னணியில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்து குடும்பத்திலிருந்து வெளிநாடு செல்லுதலும் அவர் திரும்பி வருகின்ற பொழுது ஒரு அவப்பெயரையும் அவருக்கு ஏற்படுத்துகின்றது. வெளிநாட்டில் வேலைபார்த்துத் திரும்பும் பல பெண்கள் குடும்பத்தில் அமைதியில்லா நிலையினை எதிர்நோக்குகின்றனர். இப்பெண்ணின் குடும்பத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுகின்றன. அவையாவன: சிறுவர்கள் கவனிக்கப்படாமை, அவர்களுடைய படிப்புகளும் குழம்பிய நிலையில் இருப்பது, ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகுதல், முறைதகாப் பாலுறவு நடத்தை, போதைவஸ்துக்கு அடிமையாகுதல், மற்றைய பெண்களுடன் பாலுறவு, வீட்டில் வன்முறை, பிரிந்து வாழ்தல் மற்றும் தற்கொலை.
இவைகளை விட வெளிநாட்டிலிருந்து திரும்பும் பெண்கள், பால்ரீதியாக ஒழுக்கமற்றவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் உணர்வதிர்ச்சி நிலைக்கும் உள்ளாகின்றனர். அத்துடன் வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் விடுகின்றனர் எனவும் குறை கூறப்படுகின்றனர். இவ்வத்தியாயத்தின் நோக்கம் பெண்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் விட்டுப் பணி செய்து வந்ததனால் ஏற்பட்ட தாக்கம் எவ்விதமாக இருந்துள்ளது என்பதை இனங்கண்டு கொள்ளுதல்; இத்தாக்கம் பால்நிலை உறவுகள் மற்றும் கருத்துநிலை ஆகியவற்றில் எவவாறு பதிந்துள்ளது என்ற விடயம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. பல்நிலை உறவுகள் தொடர்பான தாக்கம் என்பதை ஆராயுமிடத்து ஆக்கமுறையான மற்றும் பாதகமான விளைவுகள் என்பவற்றையும் இனங்கண்டு கொள்ளுதல் முக்கியமாகின்றது. இந்த அத்தியாயத்தில் புலம் பெயர்ந்து சென்ற பெண்கள் வெளிநாட்டில் வீட்டுப் பணி வேலை செய்துள்ளதால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியாக அமைகின்றது. மாக்சிய மற்றும் சோசலிச நோக்கில் பெண்நிலை வாதிகள் கூறுவது, பெண்களின் கீழ்ப்படிவுத் தன்மை, அவர்கள் பொருளாதார ரீதியாக சமூகத்தில் முக்கியத்துவம் கிடைப்பவர்களாகப் பங்கு கொள்ளும் பொழுது மாற்றமடைகின்றது; அவர்களின் நிலை முன்னேற்றப்படுகின்றது. ஆனால் இதற்கு எதிராகக் கூற முடிந்ததனை சில கேள்விகளினூடாக கவனிக்க முடிகின்றது. எவ்வாறு, பெண்களின் பொருளாதார சுதந்திர நிலை முன்னேற்றமடைந்து அவர்கள் பொருளாதார சுதந்திர நிலை அடைவதனால் அவர்களுடைய விடுதலைப் பாதைக்குப் பங்களிக்க முடிகின்றது? இவ்வாறு பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால் உண்மையாக மரபு ரீதியாக இருந்து வரும் தலைவன் வழி அமைப்பினை முறியறிக்கக் கூடிய நிலையினை அடைகின்றனரா? வெளிநாடுகளில் வேலை செய்யும் பெண்கள் பெறுகின்ற
343

Page 179
பொருளதார நன்மைகளில் எவ்வளவு அவர்களின் நலனுக்காக கிடைக்கின்றது? புலம் பெயர்ந்து செல்வது பெண்களின் கீழ்பணிவு நிலையில் எவ்வகையான மாற்றத்தைக் கொண்டுவரலாம்? பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்வது பால்நிலை உறவுகளை மாற்றுகின்றதா? இது பெண்களைப் பொறுத்து ஒரு புதிய அடையாளத்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளதா? இக்கேள்விகளும் அவை தொடர்பான விடயங்களும் முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன.
எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கிற்குப் பெண்கள் வேலை செய்வதற்குச் செல்லுதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள் சர்ச்சை அதிகமாக முக்கியமான ஒரு கருத்துநிலை சார்பான எண்ணத்திலிருந்து வந்துள்ளது; அதாவது பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை செய்யப் போவதால் அவர்கள் தங்களது குடும்பம் தொடர்பான கடமைகளைப் புறக்கணித்துள்ளனர்; அவர்கள் நல்ல குடும்பப் பெண்களாக மனைவிமார்களாக, தாய்மார்களாக இருப்பது முதன்மைப் பொறுப்பாகின்றது; இவ்வாறு அவற்றைப் புறக்கணித்தல் சிறுவர்கள் சமூகத்தில் சேர்ந்து பழக்கப்படுதலுக்கு இடையூறாக இருப்பதுடன் மொத்தமான வாழ்வு நிலையினையும் பாதிக்கின்றது. இலங்கையின் தற்போதைய சமூகச் சூழமைவில் “தாய்மை” இனப்பெருக்கம் தொடர்பானது மட்டுமல்ல, அது குழந்தைகளைப் பாலூட்டி வளர்த்தல், அவர்களுக்கு உணவூட்டல், மற்றும் இளம் பருவத்தினர், வயது வந்தவர்கள், சுகவீனமுள்ளவர்கள் கணவன்மார் ஆகியோரையும் கவனித்துப் பேணும் பொறுப்பும் உள்ளடங்குகின்றது. ஆகவே அததகைய ஒரு கருத்துப்பாங்கு பெண்கள் மீது ஒரு பெரிய பொறுப்பினையும் சுமையினையும் இடுகின்றது. சமூக சார்பாகவும், கருத்துநிலை சார்பாகவும் எழுகின்ற நிலை பெண்மை (நல்ல தாய், மனைவி மற்றும் மகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது) தொடர்பான எண்ணப்பாங்கு முதன்மை கொள்ளும் சூழலில் அவர்களின் பொதுத் துறைப் பங்களிப்பிற்கு இடமளிக்காத காரணமும் வெளிநாட்டில் வேலை செய்து தீரும்புகின்ற பெண்கள்மீது அவதூறு கூறும் நிலைக்குப் பொறுப்பாகின்றன. மரபுரீதியாக விதிக்கப்பட்ட வகிபாகங்கள் தொடர்பாக பெண்கள் தவறும். பொழுது அவர்கள் “கடமை தவறியவர்கள்”, “ஒழுக்கக் கேடானவர்கள்”, மற்றும் “அவமதிப்பு விளைவிப்பவர்கள்’ எனக் கருதப்படுகின்றனர். இக்கருத்துப் பாங்கிற்கு ஏற்ப மேலும் கூறப்படுவது, ஒரு பெண் வெளிநாட்டில் சில ஆண்டுகளாக வேலை செய்வது அவருடைய கணவன் மற்றும் பிள்ளைகள் குறித்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதில் தவறி விட்டார்; அவர் தன்னுடைய கடமைக்கு மேலாக பணம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். மறு புறத்தில் எமது சமூகத்தில் ஆண் பிரசைகள் குடும்பத்தின் வருமானம் உழைப்பவர்களாக, பங்களிப்புச் செய்பவர்களாகின்ற பொழுது வீட்டு வேலைகளைச் செய்பவர்களாகக் கருதப்படுவதில்லை. ஆண்கள் குழந்தைகளைக் கவனித்தல், வளர்த்தல், தாய்மார் இல்லாதவிடத்து, ஆகிய பொறுப்புகளை ஏற்பது ஒரு “அசாதாரண நிலையாகக்” கொள்ளப்படுவதுண்டு;
344

இது சில வேளைகளில் “பிழையாகக் கையாளுதல்’, சிறுவயதினர் தவறான வகையில் பயன்படுத்துதல், மேலும் முறை தகாத நடத்தை ஆகிய விளைவுகள் ஏற்படலாம்.
பெண்கள் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதற்குச் செல்வது பற்றிய செய்திகள் தகவல் கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி ஆவணங்கள் ஆகியவற்றில், வீட்டுப் பெண் வெளிநாடு செல்வது வீட்டில் குடும்பத்தில் ஒழுங்கற்ற நிலையினை உண்டு பண்ணுவதாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது தொடர்பாக எடுத்துக் கூறப்படுவது, பெண்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தீர்மானம் பெண்ணின் தீர்மானமாகவே ஏற்படுகின்றது. இந்த எடுகோள் இலங்கையைப் போன்ற ஒரு தலைவன் வழிச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் இத்தகைய ஒரு சமூகத்தில் ஆண்கள் அதிகமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்களில் ஏறத்தாழ 68 சதவீதத்தினர் விவாகமானவர்கள். அவ்வாறான நிலையில் புலம் பெயர்வதற்கான தீர்மானத்தை இப்பெண்களே எடுத்திருப்பார்கள் என்று கூறுவதும் நம்புவதற்கில்லை. ஆய்வொன்றில் நேர்காணல் முறை பின்பற்றப்பட்ட பொழுது அவ்வாறு நேர் காணலில் பங்கு கொண்ட பெண்கள் கூறியது என்னவென்றால், அவர்கள் தங்களுடைய கணவன்மாருடன் சேர்ந்து வெளியே போகும் தீர்மானத்தை எடுத்துள்ளனர்; சிலருடைய கூற்றுப்படி தங்களின் தீர்மானத்தில் கணவன்மார் பிரதான காரணியாக இருந்துள்ளனர்; வெளிநாடு செல்வதற்கான தீர்மானத்தைப் பெண்கள் எடுப்பதில் பிரதான காரணமாகக் காணப்பட்டது, கணவன்மார் வேலையில்லாது இருந்துள்ளமை அல்லது அவர்கள் ஓர் ஒழுங்கான வேலையில் இருந்தவர்களாக இல்லாத நிலை. வேறு விதத்தில் கூறுவதானால் வறுமை பெண்கள் புலம் பெயர்வுக்கு முக்கிய காரணமாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் திரும்பி வந்த பெண்கள் கூறியவை பல இவ்விடயும் தொடர்பான உண்மைகளை விளக்குகின்றன. இக்கூற்றுக்களில் சில பின்வருமாறு; “என்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவன் ஆகியோரின் நன்மை கருதியே நான் வெளிநாட்டில் வேலை செய்வதற்குச் சென்றேன்”, “எனக்காக உழைத்தது முழுவதும் என்னுடைய கணவனுக்கு அனுப்பியுள்ளேன்; அவர் எங்களது பிள்ளைகளை நன்றாகப் பார்ப்பார் என்ற எண்ணத்துடன் அவ்வாறு செய்துள்ளேன், ஆனால் எனது கணவன் அதைச் செய்யவில்லை.” “என்னுடைய கணவன் ஒரு பொழுதும் நிரந்தரமான வருமானம் பெற்றவராக இருக்கவில்லை; எனக்கு மூன்று சிறுபிள்ளைகள் உள்ளனர்; அவர்களுக்கு ஒரு நல்ல வீடு மற்றும் வாழ்வு தேவைப்பட்டதனால் நான் வெளிநாடு சென்றேன்”. இவ்வாறு கூறியவை அவர்களின் அனுபவத்திலிருந்து வருபவை. இப்பெண்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடியதாக இருந்திருக்கும் பொழுதிலும் வெளிநாட்டுக்குச் சென்றனர். அவர்கள் நாட்டின வருவாய்க்குப் பங்களிப்புச் செய்வதுடன் அவர்களின்
345

Page 180
வெளிநாட்டு உழைப்பு அவர்களின் குடும்பங்களின் வாழ்வின் தரத்தினையும் உயர்த்தியுள்ளது; இதில் பலர் கூறியதன்படி தம்முடைய சொந்த நலனுக்காக வெளிநாடு உழைக்கச் செல்லவில்லை; குடும் பங்களே முக்கியமாக இருந்துள்ளன.
இவ்வத்தியாயத்தின் இன்னொரு நோக்கம், புலம்பெயரும் பெண்கள் செல்லும் நாட்டில தனியாக இருப்பவர்கள் என்ற பின்னணியில் அவர்களின் பாலியல்தன்மை சார்பாக களங்கம் ஏற்படுவது பற்றிய விடயங்களை விளக்குவது முக்கியமாகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட கருத்து நிலை நோக்கில், வெளிநாட்டில் (ஆண் துணைப் பாதுகாப்பில்லாமல்) வேலை செய்வதில் இப்பெண்களின் பால்தன்மை தொடர்பாக ஒழுக்கக் கேடு நிலை ஏற்பட முடியும் எனக் கருதப்பட்டுள்ளது. இக் காரணத்தினால் அவர்கள் திரும்பி வரும் பொழுது அவர்களின் குடும்பத்தினாலும் சமுதாயத்தினாலும் ஒதுக்கப்படுகின்றனர். அப்பெண்கள் சமூகத்திலும், வீட்டிலும், வெளியிலும் வன்முறைக்கு ஆளாகின்றனர். பெண்கள் மரபு ரீதியான எல்லைகளைத் தாண்டி வெளியேபோகும் பொழுது ஒழுக்கக் கேடு கொண்ட நிலைக்குச் சென்று விடுகின்றனர் என்ற மாறா நிலைப்படுத்திய எண்ணம் ஆதிக்கம் செலுத்துகின்றது.
இத்தகைய நிலைக்கு பிரதானமாகப் பங்களிப்பைச் செய்வது தொடர்பு சாதனம். ஏனென்றால், வீட்டுப் பணி செய்வதற்குப் பெண்கள் புலம் பெயர்தல் பற்றிய செய்திகள் இப்பெண்களை ஒரு பாதகமான நிலையில் எடுத்துக் காட்டும் 'வழக்கம் இருந்து வருகின்றது. பொதுவாக புலம்பெயரும் பெண்களைப் பற்றிய செய்திகள் வாசகர்களினிடையே “கவர்ச்சியூட்டும்” விபரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தொடர்பு சாதனங்கள் பங்களித்துள்ளன. தொடர்பு சாதனங்கள் அடிப்படையில் பெண்களை ஏதாவது பிழைகள் ஏற்பட்டால் குறை கூறுவது வழக்கமாகி விட்டது. அவர்களின் நடத்தை பற்றியும் அவதூறு சொல்லும் விதத்தில் செய்திகள் வெளியிடப்படுவதுண்டு. ஒருமுறை இலங்கை வெளிநாட்டு வேலை நிலையத்தின் ஓர் உயர் அதிகாரி கூறியுள்ளது என்னவென்றால், 80 சதவீத வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கைப் பெண்கள் அரேபிய வேலை கொள்வோரினால் பாலுறவுக் காகப் பயன்படுத்தப் பட்டனர். இவ்வுத்தியோகத்தர் எவ்வாறு இப்படியான முடிவுக்கு வரலாம்? இது முற்றிலும் ஆதாரமற்றதாகக் காணப்படுகின்றது. இத்தகைய கூற்றுக்கள் புலம் பெயர்ந்த பெண்கள் வேலை கொள்வோருடன் பாலியல் உறவுகளை விரும்பி வைத்துக் கொள்கின்றனர் என்ற எண்ணத்தை வளர்க்கின்றது. இதுவும் மீண்டும் பெண்களைப் பற்றி வெளிநாடு சென்று வேலை பார்க்கும் பெண்கள், மாறா நிலைப்படுத்திய ஒரு எண்ணப்பாங்கு, அது மேலும் அவர்களைத் துன்புறும் நிலைக்குத் தள்ளுகின்றது.
உழைப்பு இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் கூடுதலான பால்நிலை சார்ந்த வன்முறை ஏற்பட்டிருப்பது பெண்கள் ஒழுக்கக்கேடு அவமதிப்பு ஏற்படும்
346

விதத்தில் நடந்து கொள்கின்றனர் என்ற எண்ணப்பாங்கு வளர்ந்துள்ளதற்கான இன்னொரு காரணமாக இருந்துள்ளது. இப்பெண்கள் தங்களுடைய மரபு ரீதியான கட்டுக்கோப்பிலிருந்து விலகி வெளியே செல்லும் போது பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர். இது தொடர்பாக, இத்தகைய எண்ணப்பாங்கு விளக்கத்திற்கு ஏற்ப மேலும் கூறப்படுவது, வரலாற்று ரீதியாக பெண்களின் உடல் மீது வன்முறை மற்றைய “ஆண்களினால்” பயன்படுத்தும் பொழுது அது பெண் மீது புரியும் வன்முறை பெண்ணுக்கு எதிரான குற்றச் செயலாக இல்லை; மாறாக அப்பெண்ணுடைய கணவன், தகப்பன் அல்லது பாதுகாவலர்கள் ஆகியோருக்கு எதிராகச் செய்யும் செயலாகின்றது என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது. இது முக்கியமாக அவ்வாறு கருதுவதற்கான காரணம் அப்பெண்ணின் உடல் அவரது கணவனுடைய சொத்து என நோக்கப்படுவது. இத்தகைய கருத்துநிலைக்கு ஏற்ப ஒரு பெண்ணுடைய ‘நன்மதிப்பு” அவருடைய உடலின் “தூய்மை”யில் தங்கியுள்ளதுடன் மற்றும் அவருடைய பாலியல்தன்மையைக கட்டுப்படுத்துதலும் தேவையாகின்றது; அவரது குடும்பத்திலுள்ள ஆண்களின் பங்கள்ப்பு பெண்ணின் “ நன்மதிப்பை” பாதுகாத்துக் கொள்ளுதல்; பாலியல் வன்முறை அனுபவித்த பெண் கள் தம் முடைய உணர் வதிர்ச்சி வேதனை அனுபவங்களை உள்ளானதாக்கிக் கொள்கின்றனர்; காரணம் அதனால் ஏற்படக் கூடிய சமூக இழுக்கு மற்றும் குடும்ப இணைப்புக்களின் முறிவு, குறிப்பாக கணவனின் நிலையையும் கருதிய விளைவுகளுக்கு அஞ்சி அவ்வாறு நடந்து கொள்கின்றனர். இப்பின்னணியில் பெண்கள் தம்முடைய வேலை கொள்வோரினால் பாலியல் துஷ்பிரயோகப் பயன்படுத்தல் பற்றி வெளிப்படுத்தாது நடந்து கொள்கின்றனர். மார்கா நிறுவனம் (Marga Institute) மற்றும் பெண்கள் ஆராயச்சி நிலையம் (Centre for Women's Research) gau pou60T stasoflot T65 (8 ppb.Games 6T'u'll ஆய்வுகள் எடுத்துக் காட்டுவதன்படி, வெளி நாடுகளில் வேலைபார்த்து திரும்பிய பெண்களின் புதிய வருமானம் நீடித்துச் செல்லக் கூடியதாக இல்லை; அவை பயனளிக்கும் வகையில் உபயோகிக்கப்படவில்லை. இவ்வாயப்வுகளின் தகவல்களிலிருந்து அறியக் கூடியவை; (i) பெண்களினால் அனுப்பப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி அவர்களின் கணவன்மாரினால் வீட்டுச் செலவுகளுக்கும் மற்றும் நுகர்வுப் பாவனைப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. (ii) புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்த பொழுதில் பயனளிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சேமிப்பு மிகக் குறைவாக அல்லது சேமிப்பு இல்லாத நிலை எதிர்நோக்கப்பட்டது. (iii) புலம் பெயர்ந்த பெண்கள் நாட்டின் அந்நியச் செலாவணியினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பை செய்துள்ளனர்; குடும்பங்களின் உறுதிப்பாட்டுக்கும் உதவியுள்ளனர்.; எவ்வாறு இருப்பினும் திரும்பி வந்த பெண்களின் பொருளாதார நிலையில் நிரந்தரமான மாற்றம் மிக அருமையாக காண முடிந்தது; (iv) இதற்குக் காரணம், வெளிநாட்டில் வேலை செயத பெண்ணின் உழைப்பு வருமான ஆற்றல் அவர்களுடைய குடும்ப
347

Page 181
உறுப்பினர்களினால் குறிப்பாகக் கணவன்மாரினால் எடுக்கப்பட்டுள்து. (V) பொருளாதார நோக்கில் கூற முடிந்தது, குடும்பங்களின் நிலைமை குறிப்பிட்ட காலப்பகுதியில் மூன்று நான்கு வருடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது; பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும் காலப்பகுதியில் அவர்கள் திரும்பி வந்ததும், நிலைமை புலம் பெயர்வதற்கு முன்னிருந்த நிலைக்கு அல்லது இன்னும் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளது.
சமூக பெண்நிலைவாத நோக்கில் அவதானிக்கும் பொழுது குடும்பத்தில் பெண்களின் நிலை வெளிநாடு வேலை பார்ப்பதற்குச் சென்றதனால் நல்லதாக மாறி விட்டது. அவர்கள் செய்யும் வீட்டுப் பணி பயனுள்ள வருமானம் தரும் வேலையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புலம்பெயரும் பெண் வீட்டில் கட்டுப்படுத்திய எல்லைக்குள் இருந்து வெளியுலகத்திற்கு சென்ற அனுபவம் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்ட வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இப்பெண்களில் சிலர் ஆய்வுக்கான நேர்காணலில் பங்குபற்றியவர்கள் கூறியவை, அவர்கள் தம்முடைய வீட்டுச் கடமைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெற்றுள்ளதாகவும், சொந்தமாகத் தாங்களே சில விடயங்களைச் செய்வதற்கான பலம் கிடைத்துள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தீர்மானங்கள் எடுப்பதில் கட்டுப்படுத்தல்கள் இல்லாது இருப்பது பற்றியும் வீட்டுக்கு வெளியே சென்று மற்றவர்களுடன் பழகுவதில் எத்தகைய தயக்கப்பாடும் இல்லாத அனுபவத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பின்னணியில் கருத்துநிலை சார்ந்த பால்நிலை நியம நோக்கில், குடும்பத்தில் ஆண்கள் பிரதான பொருளாதார சொத்து என்ற நிலை மாறியுள்ளது. ஆய்வின் மாதிரி எடுப்பில் ஆண்களில் சிலர் தங்களுடைய இடைச் செல்லுகை வேலையை அவர்களின் மனைவிமார் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவுடன் விட்டுள்ளனர். இதனால் அவர்கள் மனைவிமார் உழைப்பில் தங்கியிருக்க வேண்டியிருந்துள்ளது. ஆண்களில் சிலர் தம்முடைய மனைவிமார் தங்களின் வருவாயை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு மேலான உழைப்புடையயோராக இருந்தனர் என்பதை ஏற்றுக் கொண்டனர். கூலி உழைப்பில் பெண்கள் பங்கேற்றல் மற்றும் தங்களுடைய சரிநேர் ஆண்களை விட கூடுதலாக உழைப்பதும் ஒரு முக்கியமான ஆக்கமுறையான மாற்றமாகின்றது. இது மரபு ரீதியாக பால்நிலை சார்ந்த உழைப்புத் தொடர்பான பிரிவை முறியடிக்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
மரபுரீதியான உழைப்புப் பிரிவில் பெண்கள் தங்கியிருப்பவர்கள், நுகர்வோர் என மட்டும் கருதப்பட்டனர். எவ்வாறாயினும், இலக்கு நோக்கில் நடந்திருக்க வேண்டியது என்னவென்றால் பால் நிலை வகிபாகங்கள் எதிர்மாறாக மாற்றமடைந்து குடும்பங்களுக்கிடையே சமத்துவமான உறவுகள் வளர்ந்திருப்பது. பெண்கள் குடும்பத்தில் முதன்மையான வருமான உழைப்பாளிகளாக இருக்கையில் பால்நிலை ரீதியாக ஏற்கனவே இருந்து வருகின்ற உழைப்பு
348

பிரிவு நிலையில் உள்ள சமமின்மையை கவனத்தில் கொண்டு மரபு முறையாக உள்ள பால்நிலை சார்ந்த வகிபாகங்கள் மாற்றமடைவது தேவைப்படுகின்றது. ஆனால் யதார்த்த நிலை இன்னும் வேறுபட்டிருக்கின்றது. குறிப்பாக, இலங்கையின் பாரம்பரிய சமுகப் பின்னணியில் ஆண்கள் நாளாந்த வீட்டு வேலைகளில் பங்கெடுப்பது மிகக் குறைவு. அநேகமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகின்ற பெண்கள் கண்டிருப்பது அவர்களின் கணவன்மார் கிடைக்கும் வருமானங்களை தங்களுடைய பொழுது போக்கு நடவடிக்கைகளில் செலவழிப்பதும் குடும்ப நலன் பற்றிக் குறிப்பாக, சிறுவர்களைக் கவனிக்காது நடந்து கொள்வதும் தெரிய வந்துள்ளது.
தொடக்கத்தில் பெண்களின் புலம்பெயர்வும் வெளிநாட்டு வேலையும் முழுவதுமான பொருளாதார சுதந்திரநிலையினை கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாவிடினும் குடும்பங்களின் பொருளாதாரக் கஷ்டங்களைக் குறைப்பதற்கு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பது போதியளவுக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இதனால் பெண் களின் சமூக, அந்தஸ் து உயர்த்தப்பட்டுள்ளது; இவ்வாறு நடந்தது பெண்கள் விடுதலை பெறுவதற்கும் முதல் படியாக விளங்குகின்றது. ஏங்கெல் ஸ் (Engels) விவாதித்தது என்னவென்றால், பெண்கள் ஒரு முறை உழைப்பினர் படையில் சேர்க்கப்பட்டால் அதிலிருந்து கூடிய பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்க முடிகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆண்களின் மேலாதிக்கம் தேவைப்படாது போய் விடுகின்றது. ஆனால் பொருளாதாரக் காரணிகள் மட்டும் பெண்களின் கீழ்பணிவு நிலைக்குக் காரணங்கள் அல்ல; ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்குமிடையே வேறுபாடு உண்டு. பெண்கள் பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதுடன் ஒடுக்குமுறைக்கும் இலக்காகின்றனர். புலமபெயர்ந்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பென்ைகள் திருமணஞ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்குவது ஒரு முக்கியமான அம்சமாக இருந்துள்ளது. பெண்கள் இவற்றை வெளிப்படுத்துலுதில்லை; இது தொடர்பாகப் பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் பேசாமல் இருந்து வருவது அவர்களின் வழமையான செயலாகின்றது. ஆய்வுக்காக எடுக்கப்பட்ட மாதிரி எண்ணிக்கையில் 65 சதவீதப் பெண் கள் திரும்பி வந்த பின்னர் கணவண் மாருடன் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளனர். குடும்ப அங்கத்தவர்களுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துதல், குறிப்பாக கணவன் மற்றும் சிறுவர்கள் ஆகியோருடன் சில வருடங்களுக்குப் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக திரும்பி வந்த பெண்கள் கூறியுள்ளனர். மேலும் அவதானிக்க வேண்டிய விடயம், வெளிக்கள ஆய்வுகள் காட்டியதற்கு ஏற்ப பெண்ணொருவர் நம்பிக்கையூட்டப்பட்டவராக மாறுவது வெளிநாட்டிலிருந்து பெற்ற அனுபவம், அங்குள்ள பண்பாட்டு இயல்புகளை அறிந்தவர்களாக ஒரு புதிய அடையாளத்தையும் பெற்றவர்களாக, பொருளாதார வளத்தை குடும்பத்திற்கு வழங்குபவர்களாக இருப்பதும் பெண்கள்
349

Page 182
தங்களுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதனால் ஆண் துணைவர்கள் இன்னும் மரபுரீதியான சூழலில் குடும்பத் தலைவன் என்ற கருத்துநிலை வழக்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக தம்முடைய “ஆணுக்குரிய அதிகாரத்தினை” இழந்து விட்டார்கள் என கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலை ஏற்படும் பொழுது குடும்பத்தில் பிளவினைக் கொண்டு வருகின்றது; அதேவேளை பெண்கள் மீது கூடுதலான அதிகாரத்தை உபயோகிப்பதும் ஒரு ஆணுடைய இயல்பாக அதிகரிக்கின்றது. இத்தகைய உள்வாரியான அதிகாரம் தொடர்பான போராட்டம் ஏற்பட இடமுண்டு; இதனை ஊடகங்களும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் நடத்தை பற்றிச் செய்திகள் சில வேளைகளில் மிகைப் படுத்தி வெளியிடுவதும் நிலமையினை மோசமாக்குகின்றது; இத்தகைய செய்திகளை கணவன்மாரும் கேட்டு அவர்களின் ஐயப்பாடுகள் அதிகரிக்கின்றன. இதுவும் ஆண்கள் தம்முடைய ஆணாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு - ஏற்கனவே துணைவியர்களின் புதிய அடையாள மாற்றங்களினால் தளர்ந்து போயிருக்கும் ஆண்கள் - முயலுகின்றனர். மெளனகுரு அவர்கள் (Maunaguru) பின்வரும் கருத்தினை வலியுறுத்தியுள்ளார். “ஒரு சமுதாயத்தின் ஆதிக்கம் செலுத்தும் கருத்துநிலை வழியான எண்ணப்பாங்கிலிருந்து வேறுபடும் பெண்கள் பொதுவாக ஒழுக்கக் கேடு உடையவர்கள் எனக் குற்றம் சுமத்துவது அறிய முடிகின்றது; இங்கே பாலியல் தன்மை பால் நிலை சார்ந்த ஓர் ஆபத்தான, கட்டுப்படுத்த வேண்டிய நிலையாகின்றது” என வாதாடப்பட்டதைக் காண முடிகின்றது. இது தொடர்பான அதிகாரப் போராட்டத்தில் பெண்கள் இரையாகின்றனர். அவர்கள் தமது கணவர்மாரை வேறு பெண்களிடம் செல்வதால் இழந்து விடுகின்றனர். அல்லது கணவன்மார் போதைவஸ்த்துக்கு அடிமையாகின்றனர். இதன் விளைவாக சமுதாயம் பெண்களைக் குறைசொல்லுகின்றது; இச்சூழ்நிலையில் தங்களுடைய கணவன்மார் நடத்தைப் பற்றிக் குற்ற உணர்வுடன் காணப்படுகின்றனர். இன்னொரு வழியும் இப்பெண்களுக்கு உண்டு. அதாவது அவர்கள் தம்மை மீண்டும் வீட்டு வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு வீட்டில் மீண்டும் அமைதியினை, ஒற்றுமையினை ஏற்படுத்த முயலுகின்றனர். இதில் அவர்கள் சமுகத்தின் கருத்துநிலை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் ஒத்திசைவாக நடந்து கொள்கின்றனர். ஏனென்றால், அவர்கள் இவை குறித்து ஏற்கனவே சமுதாயஞ் சார்ந்ததான முறையினை உள்ளானதாக்கியுள்ளனர். அல்லது அவர்கள் வேறுவழியில்லாததால் இவ்வழியைப் பின்பற்றியுள்ளனர்.
புலம் பெயர் நி த பெணி தொழிலாளர்கள் உள்ளுர் வீட்டு நிலைமைகளிலிருந்து விடுபட்டு வெளியே நாடுகடந்து சென்றுள்ளதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். உள்நாட்டில் வேலை செய்கின்ற பெண்களுக்கு இரட்டைச் சுமை உள்ளது; வீட்டையும் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு; அதே வேளை பொருளாதார ரீதியான பொறுப்புக் களை
350

கணவன்மாருடன் பகிர்ந்து கொள்ளுகின்றனர். வெளிநாடு வேலை செய்யும் பெண்கள் அங்கும் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் வீட்டு வேலைகளாகிய சமைத்தல், சிறுவர்களைக் கவனித்தல், ஆகியவற்றைச் செய்கின்றனர். இவையிரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் வெளிநாட்டு வீட்டுப் பணிகள் செய்வதற்காகக் கூலி அல்லது சம்பளம் கிடைக்கின்றது: தங்களுடைய சொந்த வீடுகளில் செய்கின்ற சம்பளம் பெறாத வேலைகளுக்கு ஏறத்தாழ அதே விதமான வேலைகளை வெளிநாடுகளில் செய்வதற்கு சம்பளம் பெறுகின்றனர்.
பெண்களின் இடம், பால் ரீதியான உழைப்புப் பிரிவுமுறையில் அவர்கள் அளவு மீறிப் பெரிதான வீட்டு வேலைக்குப் பொறுப்பு வகிக்கின்றனர். இதனால் பெண்களின் கூடுதலான அக்கறை வீட்டுக்குள்ளே இருந்து வீடமைப்பு வசதி மற்றும் உணவு வழங்கல் ஆகியவை மீது காட்டுகின்றனர். பெண்கள் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வீட்டுப் பணிகள் செய்பவர்களாக இருந்த பொழுதும் மரபுரீதியாக அவர்கள் எந்த எல்லைக்குள் இருந்தனர் . என்ற நிலை மாற்றமடையவில்லை. அதற்குப் பதிலாக பெண்கள் வீட்டுப் பணிகளில் மட்டும் அக்கறை கொண்டவர்கள் என்பதை மீண்டும் வலுப்படுத்துகின்றது; இது உழைப்புச் சந்தையில் ஒரு இரண்டாம் தர நிலையினைக் கொடுக்கின்றது. வீரக்கோன் (Weerakoon) என்ற ஆய்வாளர் பெண்கள் புலம்பெயர்தல் பற்றிய கட்டுரையில் இக்கருத்தினை மேலும் விளக்கியுள்ளார், “பால்நிலை சார்ந்த சமமின்மைகள் காரணமாக வீட்டில் பெண்களினால சம்பளமில்லாமல் செய்கின்ற பணிகள் குழந்தை பராமரிப்பு, சுகயீனமுற்றோரைக் கவனித்தல், வயது முதிர்ந்தோரைக் கவனித்தல், பொதுவாக வேலையாகக் கருதப்படுவதில்லை. வெளிநாட்டு பெண் வீட்டுப் பணி செய்யும் தொழிலாளி ஒரு குறைந்த நிலையில் வைத்து நோக்கப்படுகின்றார்; இதற்குக் காரணம் பால்நிலை, வர்க்கம் மற்றும் வேலை ஆகியவை பொறுப்பாகின்றன; இத்துடன் வறிய நாடொன்றிலிருந்து வருகின்ற பிறநாட்டு பெண்தொழிலாளி என்ற நிலை முக்கியம் பெறுகின்றது. அவர்கள் எப்பொழுதும் சுரண்டல் நிலைமைகளுக்கு, புலம் பெயர்வின வெவ்வேறு மட்டங்களில், உள்ளாகும் வாய்ப்பு கூடுதலாக ஏற்படுகின்றது’. விமலதர்மா (Vimaladharma) தனது இவ்விடயங்கள் தொடர்பான ஆய்வில் பின்வரும் அவதானிப்புகளைக் காட்டியுள்ளார்: இவருடைய ஆய்வு புலம்பெயர்ந்த பெண் உழைப்பாளர்களின் பால்நிலை தொடர்பான தாக்கத்தைப் பற்றியதாகும்; இவருடைய விவாதத்தில் கூறப்படுவது, முதலாளித்துவ முறைமையில் உற்பத்தியும் மறு உற்பத்தியும் மிகை உழைப்பின் சுரண்டல் பெண்களின் சம்பளம் பெறாத வீட்டு வேலையினூடாக ஏற்படுவதுடன், இது உழைப்பினை முதலாளித்துவத்தில் ஒரு மலிவான பொருளாக்குகின்றது; பெண்கள் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் பொழுது தங்களுடைய வீட்டு எல்லைக்குள் சமூக மறு உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் வெளிநாட்டு முதலாளிமார்
3S1

Page 183
அவர்களின் மிகை உழைப்பினைச் சுரண்டுகின்றனர்; பெண்கள் முதலாளித்துவச் சுரண்டல் தொடர்பாக வீட்டு மட்டத்தில் நிலவுகின்ற தலைவன் வழியான சமூக அமைப்பினால் திணிக்கப்பட்டிருப்பினும் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு பிற நாடுகளுக்கு வீட்டுப் பணி செய்வதற்குச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் வேறொரு வீட்டு சுரண்டல் முறைமைக்குள் சேருகின்றனர்; இங்கு அவர்களின் உழைபபு நிலை குறைவாக மதிப்பிடப்படுகின்றது. ஒரு பழக்கப்படாத சூழமைவில் இருப்பதுடன் பாலியல் ரீதியான வன்முறையை எதிர்நோக்குகின்றனர்.
இலங்கையிலிருந்து செல்லுகின்ற பெண்கள், அனேகமாக தலைவன், ஆணாதிக்க முறையான (குறிப்பாக அரேபிய நாடுகள்) நிலைமைகளை உழைப்பினை இறக்குமதி செய்கின்ற நாடுகளில் அனுபவிக்கின்றனர். அரேபிய நாடுகளில் நிவுகின்ற சமய, பண்பாட்டு பழக்கவழக்கங்கள், பெண்களுடைய குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தொடர்பாக கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அநேகமானவர்கள் “படுதா” வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு செய்வதில் அவர்கள் அந்த நாடுகளின் பண்பாட்டு நிலைமையுடன் ஒத்திசைவாக நடந்து கொள்கின்றனர். இது தொடர்பாக இன்னொரு அவதானிப்பு, முஸ்லிம் பெண்கள் வீடு திரும்பியதும் அவர்களின் பெண் ரீதியான வகிபாகம் மாறவிலி லை. அததுடன் சிலரிடையே அது மேலும் கூடுதலாக கடைப்பிடிக்கப்படுகின்றது; அதாவது, திரும்பி வந்தவர்கள் வீட்டுக்கு வெளியே செல்லும் பொழுது திரை போட்டு தங்களைத் தலையிலிருந்து கால்வரை மூடிக் கொண்டு ஆண் துணையுடன் செல்வது காணக் கூடியதாக உள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தின் (Sri Lanka Bureau of Foreign Employment) தரவுகளின்படி புலம் பெயர்ந்து வெளிநாட்டு வேலை செய்வதற்குச் செல்லும் பெண்களின் 21 சதவீத்தினர் பழமை பேணும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பங்களில் வறுமை காரணமாகவும் மற்றும் எண்ணெய் வளமுடைய அரேபிய நாடுகள் முஸ்லிம் தாதியரை விரும்புவதனாலும் அதிகமான முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை செய்யச் செல்கின்றனர். இவர்கள் தொடர்பான சர்ச்சையில் முக்கியமான விடயமாக இருப்பது இவர்கள் இலங்கையில் இருக்கும் பொழுது அதிகம் வெளியே செல்வதில்லை; அப்படியானவர்கள் எவ்வாறு வெளிநாடு செல்கின்றனர் என்பது கேள்வியாக எழுகின்றது. முஸ்லிம் புலம் பெயரும் பெண்கள் பற்றி நடாத்தப்பட்ட முதலிப் (Muthalif) என்பவரின் ஆய்வில் வெளியிடப்பட்ட அவதானிப்புகள் முக்கியமாகின்றன. இவ்வாய்வில் வெளிநாடு சென்ற முஸ்லிம் பெண்களின் கணவன்மாருடைய பதிலிறுப்புகள் விளக்கப்பட்டன. இவ்வாய்வாளரின் பிரதான அவதானிப்புகள், இப்பிரச்சினை தொடர்பான சர்ச்சையினை ஒரளவுக்கு விளக்குகின்றது: “எங்களுடைய பெண்கள் இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்கின்றனர்; அங்கு குர்ஆன் (Quaran) சமய ஒழுங்கு விதிகள் இறுக்கமாகப் பின்பற்றப்படுகின்றன; பெண்கள் தகாத முறையில் வேறு ஆண்களுடன் பாலியல்
352

உறவு கொள்வது மிக்க கடுமையான தண்டணைக்குட்பட்டது; விவாகமான பெண்களுக்கு இத்தகைய செயலுக்கு முன்புள்ள தண்டனை, கல்லெறிந்து கொல்லப்படுதல் என்பது இப்பின்னணியில் கணவன், கூறுவது அவருடைய மனைவி தன்னுடைய உடலை மற்றவர்களிருந்து தண்டனைக்குப் பயந்து பாதுகாத்துக் கொள்வார்’ என்ற திடமான நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். V−
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பெண்ணொருவரின் கணவன் ஆய்வின் மாதிரி எடுப்பில் சேர்க்கப்பட்டவர், மேலே கூறியது போலவே பதிலளித்தார்: “மத்திய கிழக்கில் வேலை செய்யும் எங்களது பெண்கள் அங்கு சென்ற பின்பு கூடுதலான சமய ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களை முழுவதும் மூடிக் கொள்கின்றனர்; அரேபிய மொழி தெரிந்தவர்களாகக் காணப்படுகின்றனர்; இது அவர்கள் குர்ஆனை (Ouran) விளங்கிக் கொள்வதற்கு உதவுகின்றது; சிலர் ஹஜ் (Haj) சடங்குகளையும் மெக்காவில் நிறைவேற்றியுள்ளனர். இன்னொரு பாதுகாப்பு முறையாக பெண்கள் குறித்து இருப்பதிலும், அவர்கள் பாலியல் தன்மையினைக் கட்டுப்படுத்திக் கொள்வதிலும், சமய ஈடுபாடு முக்கியமாகின்றது; அதிகளவுக்கு அவர்கள் சமய ஈடுபாட்டில் உண்மையாக உணர்ந்து காணப்படுவது, அவர்கள் பாவத்தைச் செய்வதைத் தடுக்கின்றது. ஆய்வில் பங்கு கொண்ட கணவன்மார் நம்புவது தங்களுடைய மனைவிமாருடைய, மற்றும் முஸ்லிம் பெண்களுடைய உடல்கள் நடத்தை ஆகியவை நல்ல முறையில் அவர்கள் வெளியே வேலை செய்யும் பொழுது இஸ்லாத்தின் சமயக் கட்டுக் கோப்பினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் இக்கணவன்மார் ஒரு வகையில் தனி னிறைவு மிக் கதான நிலையிலும் மன ஆறுதல் கொண்டவர்களாகவும் பன்ைபாடு தழுவிய பெண் உடல் பற்றிய நிலைப்பாட்டில் உள்ளனர்; ஏனென்றால் பெண்ணொருத்தி சமயக் கட்டுக்கோப்பிற்கு வெளியே அதனை மீறிச் சென்றால் பாரிய தண்டணையினை அனுபவிக்க நேரிடும். (ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மாதிரி எடுப்பில் 17 முஸ்லின் பெண்கள் நேர்காணலில் பங்கு கொண்டவர்கள் இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்தவர்கள்).
முடிவுரை
பால்நிலை சார்ந்த உறவுகள் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் சூழமைவில் இலங்கையில் புலம் பெயர்வு ஏற்பட்டுள்ளது. இவை பற்றிய நோக்குகளும், புலம் பெயர்வு எவ்வாறு பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது, எவ்வாறு இவை தொடர்பாக ஆய்வாளர்கள், செயலுக்கப் பங்காளர்கள், கொள் நெறி ஆக்குபவர்கள் ஊடகம் மற்றும் புலம் பெயர்ந்தோர் ஆகிய பல்வகைப் பட்டோரினால் பதிலிறுத்தல் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சரியாக அறிந்து
353

Page 184
கொள்ளுதல் தேவையாகின்றது. பெண்களின் புலம்பெயர்வு பற்றி சுற்றியுள்ள பல விடயங்கள் தனிப்படுத்தி நோக்குவதும் புலம் பெயர்ந்தோர் வெளியே செல்லுதல் தியாகம், இன்னல்கள் எதிர்நோக்கப்படல் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்ப்பதும் வெவ்வேறுவிதமான கொள்நெறிச் சார்பினை வலியுறுத்துவதாக அமைகின்றது; இவை கொள்நெறிச் சார்பான புலம் பெயர்ந்து செல்லும் பெண்களின் வெவ்வேறான பாதுகாப்பு முறைகளை முன்னுக்குக் கொண்டு வருகின்றன. கொள்நெறி வகுப்பவர்களின் பாதுகாப்பு முறைகள் என்பவை பற்றிய எண்ணப்பாங்கும் புலம் பெயர்ந்த பெண்களின் அதிகாரம் அளித்தலின் தேவை பற்றிய நோக்கமும் வேறுபடுகின்றன. அதிகாரமளித்தல் என்பது இங்கு பெண்கள் தொடர்பாகக் கிடைக்கக் கூடிய தேர்வு நிலைகள் நடவடிக்கை நிலைகள் ஆகியவை ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடு கொண்ட தெரிவு நிலைகளை மேலும் கட்டுப்படுத்தும் “பாதுகாப்பு’ முறைகளிலிருந்து, வேறுபட்டுள்ளன. இலங்கையில் பெண்கள் புலம் பெயர்வு தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் கொள்நெறி சார்பான ஆக்கங்கள் அநேகமாக கவனம் செலுத்துவது, அது ஒரு மிகவும் அக்கறை உண்டு பண்ணும் விடயமாக நோக்கப்படுதல்; இதனால், பால் நிலை அமைப்பு பற்றிய வேண்டிய விமர்சனம் போதியளவு செய்யப்பட வில்லை; இந்த விடயம் முக்கியமானதுடன், நன்று வேரூன்றிய பால்நிலை சார்ந்த வகிபாகங்கள் பற்றிய மாற்றங்களை அத்தகைய விமர்சனக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகள் கொண்டு வரலாற்; அல்லது அத்தகைய மாற்றங்கள் மீது செல்வாக்கினை ஏற்படுத்தலாம். இந்த அத்தியாயத்தில் முக்கியமாக நோக்கப்பட்ட விடயங்களின் சாராம்சம் புலம்பெயரும் பெண்தொழிலாளர்கள் தங்களுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி சர்வதேச உழைப்புச் சந்தையில் கெளரவத்துடன் சேருவதற்கு முனைவதில் தடையாக இருக்கும் கட்டமைப்பு ரீதியான வெவ்வேறு வடிவத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் முக்கியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்த நோக்கில் புலம் பெயர்வு அணுகப்படுவதும் அது பெண்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருவது பற்றிக் கவனம் செலுத்துதலும் முக்கியமாகின்றது.
உசாத்துணைகள்:
l. Central Bank of Sri Lanka, Annual Report 2002, Statistical Appendix. 2. The Sunday Times, August, 1996.
3. Sri Lanka Bureau of Foreign Employment, 2002.
4. Centre for Women's Research (CENWOR) 1995, Colombo.
5. Daily Mirror, August 17 & 19, 2002.
3.54

அத்தியாயம் 10
தொகுப்புரை
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
சென்ற கால் நூற்றாண்டில் (1977-2002) இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தாராளமயப்படுத்தல் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி முன்புள்ள அத்தியாயங்களில் ஆராய்ப்பட்டுள்ளன. விமர்சன நோக்கில் சென்ற காலப் பொருளாதார தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள் என்பவை பற்றி பொதுத்துறை, நிதித்துறை. உழைப்புச் சந்தை, வறுமைத் தணிப்புத் திட்டங்கள் மற்றும் பால்நிலை உறவுகள் உள்ளடக்கியதாக ஆராய்ந்த கட்டுரை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் வெவ்வேறு துறைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்து விளக்கியுள்ளனர்.
2001 டிசெம்பரில் பதவி ஏற்ற புதிய அரசாங்கம் முக்கியமான கால நீடிப்புக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை முன்வைத்தது; அரசாங்கத்தின் கொள்நெறியினை மையப்படுத்திய நடுத்தரக் காலத்தைக் GESIT 60ối u, “g6lIdsF6D8E560puu Lổ6MTÜ Gupg56ö” (Regaining Sri Lanka) 6T6ð sp தலைப்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தைத் தழுவி சீர்திருத்த முயற்சிகள் அமைந்தன. முதல்முறையாக அரசாங்கம் அடிப்படையான நிறுவன ரீதியான மற்றும் கட்டமைப்புச் சார்ந்த இடையூறுகளாக இருப்பவற்றை இனங்கண்டு கவனத்திற் குக் கொணி டு வந்தது. இவை எல்லாமி இலங்கைப் பொருளாதாரத்தினை விரைவாக முன்னெடுத்துத் செல்லும் நோக்கங்களைப் பிரதிபலித்தன. ஏற்கனவே சென்ற இரண்டு வருடங்களில் (2002-2003) பொருளாதாரத்தின் செயலாற்றம் குறிப்பிடத்தக்க முறையில் சீரடைந்ததைக் காண முடிந்தது.
இலங்கையில் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னான காலத்தில் முதல் முறையாகப் பொருளாதாரம் 2001இல் எதிர் கணிய வளர்ச்சி வீதத்தை அனுபவித்தது, மீண்டும் 2002 இல் முன்னேற்றத்தை அடைந்து வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தினைப் பதிவு செய்தது; இதிலிருந்து 2003இல் 6 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் மொத்த பொதுப்படுகடன், 2001இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 105 சதவீத அளவிலிருந்து 2002இல் 103 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து; மேலும் 2003இல் 100 சதவீத அளவை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. பாதீட்டுப் பற்றாக்குறை (Budget Deficit) 2001இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத
355

Page 185
அளவிலிருந்து 2002இல் 9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது; இது மேலும் 8 சதவீதத்திற்கு 2003இல் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வருடாந்த பணவீக்கத்தின் சராசரி வீதம் 2001இல் 14 சதவீதமாக உயர்ந்திருந்தது. 2002 இல் 10 சதவீதமாக இறங்கியது: 2003இல் இது 6 சதவீத அளவுக்கு மேலும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சராசரி முதன்மை கடன் பெறும் வீதம் 2001இல் 18 சதவீதமாக இருந்து 2002இல் 12 சதவீதத்திற்கு இறங்கியது; இதுவும் மேலும் 8 சதவீதத்திற்கு 2003இல் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
பின்வரும் இரு பகுதிகளும் பாதீடு 2004, நிதிமந்திரியினால் நவம்பர் 2003இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
2002 மற்றும் 2003 ஆண்டுகளில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
2002 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அதிகளவான, சட்ட ஒழுங்கு சார்பான, நிருவாகம் சார்ந்த மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் இலங்கையில நிலவி வந்த பேரின ரீதியான உறுதியற்ற நிலை என்பதன் காரணங்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வகுத்தல். இவற்றுள் முக்கியமான ஒன்றாக அரசாங்கம் இறைநிலை தொடர்பான பொறுப்புடனும் செயல்நுட்பமாகவும் கொண்டு நடத்துவது பற்றித் திடமான அர்ப்பணிப்பினை ஏற்றுக் கொண்டு இறைமுகாமை (பொறுப்பு) சட்டத்தினை (Fiscal Managment (Responsibility Act)) & 6016 if 200396) G35|T600 (6 6. Bg5g. இச்சட்ட ஒழுங்கின் முக்கியமான, தனித்துவமான அம்சம் எதுவென்றால், இது உள்ளுர் ரீதியான ஒரு முனைவாக முற்பட்ட ஆண்டுகளில் (1999-2001) காணப்பட்ட இறைநிலையில் பொறுப்புக் குறைந்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தவற்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட முயற்சியாகின்றது.
இச் சட்ட ஒழுங்கின் படி இறைநிலையின் முகாமைப் படுத் தலி முக்கியமானதாக நோக்கப்பட்டு, பாதீட்டின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்குக் குறைந்ததாக 2006இல் அடைந்து கொள்ளுதல், அதற்குப் பின்னர் அதே அளவில் இருத்தல் இலக்கு முன்வைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வருட நடுப்பகுதியிலும் இறைநிலை பற்றிய அறிக்கை பாராளுமன்றத்திற்கு நிதிமந்திரியினால் சமர்ப்பிக்கப்படுதலும் முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டது; இது முதல் முறையாக யூலை 2003இல் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு நடுப்பகுதி அறிக்கை பாதீட்டின் தொடக்க ஆலோசனைகள் குறித்து இறைநிலை எவ்விதமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. தொடக்க மதிப்பீடுகள் குறித்து விலகல் நிலை ஏற்பட்டிருந்தால் நிதி மந்திரி அதற்கான காரணங்களையும் நியாயப்பாடுகளையும் எடுத்துக் கூறுவதும் அது தொடர்பாக எடுக்கப்படவுள்ள தீர்வு முறைகளையும் அரசாங்கம் அறிவித்தல் - நிதி மந்திரியூடாக - வேண்டும். இறைநிலை முகாமைப்படுத்தல்
356

சட்டம் அரசாங்கத்தினை வரவுசெலவுத் திட்டம் குறித்த பற்றாக்குறை நிலைகள் பற்றி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்குக் குறைவாக இருத்தல் சடடப்படி கட்டுப்படுத்துகின்றது.
அத்துடன் 2006ஆம் ஆண்டு முடிவில் மொத்தப் பொதுப்படுகடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்திற்கு மேலாகச் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய போக்குகள் பற்றி எதிர்வு கூறும் இலக்காக 2013இல் மொத்தப் பொதுப்படுகடன் (வெளிநாட்டுப் படுகடன் உட்பட) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கு மேலாகச் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இறைநிலை முகாமைப்படுத்தல் சட்டத்தின் இன்னொரு கூறு தேர்தல் காலங்களில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தால் அவற்றின் இறைநிலை சார்ந்த விளைவுகளையும் வெளிப்படையாக விளக்குதல் வேண்டப்படுகின்றது. இச்சட்ட விதியின் கூறு தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவது சட்டப்படி விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நன்நோக்கத்தைக் கொண்ட சட்ட் விதியாகின்றது. ஏனென்றால் இலங்கையில் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு வாக்குகளைக் கவரும் நோக்கத்துடன் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். நடைமுறையில் இந்த நல்ல நோக்கத்துடன் சேர்க்கப்பட்ட வதி சாத்தியமாகுமா என்ற கேள்வி முக்கியமாகின்றது.
ஒவ்வொரு பொது நிறுவனமும் (திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள்) வருடாந்த செயலாற்றம் பற்றிய அறிக்கை, கணக்குகள் ஆகியவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி அமைச்சுக்கு சமர்ப்பித்தல் ஒரு தேவையாக விதிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இதற்குப் பொறுப்பாக உள்ள உயர் அதிகாரியின் தகவலின் படி 2003இல் 90 சதவீத பொது நிறுவனங்கள் இத் தேவையினைப் பூர்த்தி செய்துள்ளன. திறைசேரி அவ்வாறு சமர்ப்பிக்காத பொழுது நிறுவனங்களின் நிதி வழங்கலை வெட்டியுள்ளது என்பதும் அறிய முடிந்தது.
பொதுத்துறை பற்றிய சீர்திருத்தங்கள் தொடர்பாக துறைமுக அதிகார 36ou (Ports Authority) Lippguib GuDITgig33 Sint (Sp6n impl6)I6TLib (Co-operrative Wholesale Establishment - CWE) ஆகியவற்றின் பருமன் குறைக்கப்பட்டுள்ளது. இது அங்கு வேலை செய்பவர்கள் விரும்பி ஓய்வு பெறும் திட்டங்களுடங்க நிறைவேற்றப்பட்டது. 2003இன் பிற்பகுதியில் மொத்தக் கூட்டுறவு நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை (Ceylon Electricity Board) மறு அமைப்புச் சீராக்கல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது; தனியார்துறையும் மின்சாரம் விநியோகிப்பதில் கூடுதலாகச் சேர்ந்துள்ளது. இலங்கைப் Gugb(3pt 6óluud sini (Sg595Tu60Tub (Ceylon Petroleum Corporation) 3953)j60)Luu எண்ணை செப்பனிடுதல் சில்லறை விற்பனை ஆகியவற்றின் தனியுரிமை, இந்திய
357

Page 186
எண்ணெய்க் கம்பனியின் (Indian Oil Company) வருகையுடன் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையில் ஒரு மூன்றாவது போட்டியாளரும் விரைவில் சேரலாம் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. புகையிரதத் திணைக்களம், வர்த்தகம் சார்பான முறையில் இயங்க வைப்பதற்கு புகையிரத அதிகார சபையாக (Railway Authority) மாற்றப்பட்டுள்ளது; இது அதனுடைய உடைமை முற்றாக மாற்றப்படுவதற்கான முதற்படியானதாகக் கருதப்பட்டுள்ளது. ஒரு பொதுச் சேவை 9,60600T disg(p6tb (Public Service Commission) QuT656m) g60p600td. (g(p6qub (Police Commission) நிறுவப்பட்டுள்ளன; இவற்றினால் பொதுச்சேவையில் அரசியல்மயப்படுத்தலைக் குறைத்துக் கொள்ளுதல் நோக்கமாக இருந்தது. ஒரு முக்கியமான தொடர்பாடல் அலகு பொருளாதாரச் சீர்திருத்த அமைச்சில் நிறுவப்பட்டுள்ளது. தனியார்மயப்படுத்தல் மற்றும் வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பாக தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்புவது இந்த அலகின் நோக்கமாக இருந்துள்ளது.
நிதித்துறைச் சீர்திருத்தங்கள் தொடர்பாக அதனுடைய ஒரு பகுதியாக இலங்கை மத்திய வங்கி ஒரு விரிவான மறுசீரமைப்பு முறை வழியினை மேற்கொண்டுள்ளது; இது மத்திய வங்கியின் ஊழியர் அளவைக் குறைக்கும் (40 சதவீதத்தால) முயற்சியுடன் ஆரம்பித்தது. இலங்கை மத்திய வங்கியின் இரண்டு பிரதான தொழிற்பாடுகளாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவை, (i) பொருளாதார மற்றும் விலை அமைப்பின் உறுதிப்பாடு (ii) நிதி அமைப்பின் உறுதிப்பாடு. நாணயச் சட்டம் (மத்திய வங்கியின் அதிகாரங்களை வழங்கிய ஆரம்பச் சட்டம்) 2003இல் திருத்தப்பட்டது. இதனுடைய நோக்கம், மத்திய வங்கியின் மேற்பார்யைாளன் என்ற வகிபாகத்தினை இறுக்கமானதாகச் செய்வது. மத்திய வங்கி தனது தொழிற்பாடுகளை வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறும் முறையிலும் செய்து கொள்ளும் நோக்கத்துடன் நாணயக் கொள்நெறி பற்றி ஒரு மீள் ஆய்வினை (Monetory Policy Review) ஒவ்வொரு மாதமும் பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கு வெளியிடுகின்றது; இந்த மீள் ஆய்வு பொதுவாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் அதனுடைய நாணயக் கொள்நெறி மீதான தாக்கத்தையும் சுட்டிக் காட்டும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பான சட்டமும் (Exchange Control Act) திருத்தப்பட்டது. இத்திருத்தங்கள் மேலும் அந்நியச் செலாவணிச் சந்தையைத் தாராளமயமாக்கியதுடன், நாணயச் சபையின் உறுப்பினர்கள் மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது; இருவர் கூடுதலாக தனியார்துறைப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நாணயக் கொள்நெறி தொடர்பாக தனியார்துறைக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுப்பதும் அரசாங்க செல்வாக்கினை மட்டுப்படுத்துவதற்காகவும் உறுப்பினர் தொகையில் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய வங்கியில் உண்மையான நேர மொத்தத் தீர்வு முறை, பத்திரமில்லா ஆவணங்களின் தீர்வைமுறை மற்றும் தானாக இயங்கும் பொறிமுறைப்படுத்திய பதிவேடு முறை ஆகியவை சேர்ந்த மாற்றங்கள்
358

செய்யப்பட்டுள்ளன. நேரத்தைக் குறைத்து நடவடிக்கைகள் திறமையாகச் செய்யும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
உழைப்புப் படை தொடர்பாகச் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவது பற்றிய சட்டம் (Termination of Employment of Workmen's Act) 605505mpl6ö 3600tó(g556ń 3FLLub (Industrial Disputes Act) ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன (சனவரி 2003). என்றாலும், இத்துறையில் நிறைவேற்ற வேண்டியவை இன்னும் அநேகம் உள்ளன. உழைப்புச் சந்தையின் நெகிழ்வற்ற தன்மைகள் நீக்கப்பட வேண்டிய தேவை இருந்து வருகின்றது. வறுமைத் தணிப்பு தொடர்பாக சீர்திருத்தங்கள் சட்ட ஒழுங்குகளில் தேவைபபட்டன. இப்பின்னணியில் நலன்கள் பெறும் சட்டமொனறு (Welfare Benefit Law) 2003 g6) (oast 607(6 6 Ju'l-gs. 25(g)5. 919tu66)Lu$6) நன்மை பெற விரும்புவோரின் தகுதி நிலைகளைப் பரிசீலனை செய்து முடிபுகள் எடுப்பதற்கு உதவும் முகமாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு புதிய நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைச் சட்டிம், நுகர்வோர் ust glassTL3 F.Lib (Consumer Protection Act, 1979) LDfbplb (315560) Dust 60T 6uj9553 fillb (Fair Trading Commission Act, 1987) setsu606) pigsui G இரண்டையும் இணைத்து பதில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்கள், வர்த்தகர்கள், சேவை வழங்குவோர் ஆகியோரை நேர்மையற்ற போட்டி என்பதிலருநதும் மற்றும் நுகர்வோரை நெறிமுறையற்ற தயாரிப்பாளர்கள், வர்த்தகர்கள், சேவை வழங்குவோர் ஆகியோரிடமிருந்தும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுப் பயன் (3s 606,355, 360601dgcup5 glid (Public Utilities Commission Act) GasT60ir(6 வரப்பட்டது. இச்சட்டம் வலு, நீர் மற்றும் பெற்றோலியத்தின் வழங்கல்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.
2004ஆம் ஆண்டுக்கு எண்ணியுள்ள சீர்திருத்தங்கள்
6cbiblihu QuéQupp guillb (Voluntary Retirement Scheme) 96 p. 2005 பாதீட்டில் பொதுச் சேவையாளர்கள் கருதி அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப அரசாங்கம் 100,000 அரசாங்க சேவையாளர்கள் 2004இல் மற்றும் 2006 இல் மேலும் 200,000 அரசாங்க சேவையாளர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க் கப்பட்டது. அநேகமாக நடுமட்ட மற்றும் கீழ் மட்ட பிரிவுகளிலிருப்பவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என நம்பப்பட்டது. 2004இல் பின்வரும் சட்ட ஒழுங்குகள், பொருளாதார சீர்திருத்தத்தின் தொடர்ச்சியான முயற்சிகளாக திட்டமிடப்பட்டிருந்தன:
O 6ł056uTu głgarJ360uś 3 lub (Revenue Authority Act) O 9:5ńuś G56)T660óí (pastópLDö 3LLib (Foreign Exchange Mangement Act)
359

Page 187
O Gurglä, 5600Tä(gü uf(33 T56-601ä gFLLib (Public Audit Act) O 6 stild 3 g L-gs globjs.g51,356ft 3illb (Amendments to Banking Act) O G3 Tg55 (gp35|T60)LD& Flub (ASSet Managent Law) O Guirgil Sgá FLib (Public Finance Act) O GUT(56TT5ITU (p8760LDś 3 lub (Economic Management Law) o g58556) dig55gylb upb5u FLib (Freedom of Information Act)
வருவாய் அதிகாரச் சபைச் சட்டம், அரசாங்கத்தின் வருவாய் சேகரிக்கும் மூன்று பிரதான பகுதிகளாகிய, உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், சுங்க மற்றும் உள்நாட்டுப் பொருள் வரித்திணைக்களம் ஆகியவற்றை ஒரே அமைப்பாக மாற்றும் நோக்கத்தினை நிறைவேற்றும் சட்டமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூறப்பட்ட அந்நியச் செலாவணி சென்மதி நிலுவை முதல் கணக்கினை தாராளமயப்படுத்தல் ஆகியவை நிறைவேற்றுவதற்கான சட்டமாக முன்வைக்கப்பட்டது. பொதுக் கணக்குப் பரிசோதனைச் சட்டம் கணக்குப் பரிசோதனை நாயகம் மற்றும் கணக்குப் பரிசோதனைத் திணைக்களம் தொடர்பான சுதந்திர நிலை பலப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கான சட்ட முயற்சியாக எத்தனிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட புதிய வ்ங்கிச் சட்டம், வங்கித்துறையில் திருத்தங்கள் அதனுடைய பங்களிப்பைப் பலப்படுத்துதல் மத்திய வங்கியின் நீதித்துறை மீதான மேற்பார்வை செய்யும் வகிபாகத்தை இறுக்கமாக செயல்படுத்துதல் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கியது. சொத்து முகாமைச் சட்டம் அரசுடைமை வங்கிகளில் வருவாயிட்டாத கடன்கள் தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளை உள்ளடக்கிய முனைவாக அமைந்துள்ளது. எண்ணியுள்ள பொது நிதிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சின் பொது நிதி விவகாரங்கள் ஆளுகை செய்யப்படுதல் சீராக்கப்படுவதுடன் வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் முயற்சிகளும் வலியுறுத்தப்பட்டன. பொருளாதார முகாமைச் சட்டம் கொண்டுவர எண்ணியுள்ள பிரதான நோக்கம், பொதுத்துறையில் நிதிஒழுங்குமுறை பலப்படுத்தப்படுதல், பற்றிய தேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை நீக்கி அந்த இடத்தில் தகவல் சுதந்திரச் சட்டம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது; அரசாங்க கொடுக்கல் வாங்கல்கள் கூடுதலாக வெளிப்படையானவையாகவும் பொறுப்புக் கூறும் தன்மையுடையனவையாகவும் இருப்பதன் அவசியம் இச்சட்ட ஒழுங்கில் வலியுறுத்தப்பட்டது. ஆண்டுகள் 2002, 2003 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் மற்றும் 2004 ஆண்டில் சட்ட ஒழுங்குகளாகத் தீர்மானிக்கப்பட்டவை காலத்தின் தேவைகளைக் கருதி வரவேற்கப்பட வேண்டியவை. இப்பின்னணியில் விளங்கிக் கொள்ள வேண்டியது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்ந்த ஒரு பரிணாம வளர்ச்சி முறையில் செல்பவை; ஆகவே அவை எந்த அரசாங்கம் பதவியிலிருந்தாலும் தொடர்ந்து தடையின்றி முன்னெடுத்துச் செல்லப்படுவது அவசியம்.
360

Selected Bibliography
Abevkoon A.T. P.L. and Steven, (2001), National Planning Department: An External Review, Ministry of Finance and Planning, Colombo.
ACFFTC-AAFLI, (1995), Rights at Risk: A Study on Sri Lanka's Free Trade Zones, All Ceylon Federation of Free Trade Unions, Colombo.
Agnihotri, V.K. and B.V. Subramanyam, (1999), “Quality in Government', Management in Government: A Journal of Administrative Reforms, Vol. XXI. No. 3, October - December.
Alailima, Patricia J, (2001), Sri Lanka: Growth, Distribution and Redistribution. Ministry of Finance and Planning, Colombo.
Alwis M.de, (1993), Seductive Scripts and subversive Practices: Motherhood and Violence in Sri Lanka, Paper presented at the research colloquium on Violence, Suffering and Healing in South Asia, Department of Sociology, Delhi School of Economics.
Arunatilake, Nisha, Sisira Jayasuriya, and Saman Kelegama, (2000), The Economic Cost of the War in Sri Lanka, Institute of Policy Studies, January, Colombo. al
Asian Development Bank, (2001), Poverty Reduction in Sri Lanka, Colombo.
Aturupana, D.H.C. (1996). Unemployment Among Educated Women in Sri Lanka, National Planning Department, Ministry of Finance and Planning, Colombo.
Aturupane, Harsha, (1999), Poverty in Sri Lanka: Achievements, Issues and Challenged, Report prepared for the workshop on poverty alleviation, Department of External Resources, Ministry of Finance and Planning, Colombo.
361.

Page 188
Aturupane, Harsha, (1998), Education and Poverty in Sri Lanka, Technical report prepared for the Department of External Resources, Ministry of Finance and Planning, Colombo.
Athukorala, P. and Rajapatirana, S. (1993), “Liberalization of the Domestic Financia Market: Theoretical Issues with Evidence from Sri Lanka'. International Economic Journal, Vol.7.
Aucoin, Peter and Ralph Heintzman, (2000), "The Dialectics of Accountability for Performance in Public Management Reform', International Review of Administrative Economic Sciences, Vol. 66, pp 45-55.
Bajpai, Nirupam, (1995), "Economic Reforms in Developing Countries: Theory and Evidence', Economic and Political Weekly, January 14, Mumbai. ܥ.ܶ •ی
Bakker, Isabella, (1994), ' Introduction: Engendering Macro Economic Policy Reform in the Era of Global Restructuring and Adjustment', in The Strategic Silence: Gender and Economic Policy, The North-South Institute, Canada. • -
Bhalla, S.S. & Glewwe, P. (1986), “Growth and Equity in Developing Countries: A Reinterpretation of the Sri Lankan Experience', The Wrorld Bank Economic Review Bol. 1, pp. 35.63.
Board of Investment of Sri Lanka, (1993), Sri Lanka Foreign Investors' Guide, Colombo.
Central Bank of Sri Lanka, Annual and Monthly REports, 1977-2001, Various issues, Colombo.
Central Bank of Sri Lanka, Consumer Finance and Socio Economic Survey, various years, Colombo.
Central Bank of Sri Lanka, (1998), Economic Progress of Independent Sri Lanka, Colombo .
362

CENWOR, (1995) Facets of Change: Women in Sri Lanka 19861995 Centre for Women's Research, Colombo.
Cho, Y.J. (1990), "McKinnon-Shaw versus the Neo - structuralists on Financial Liberalisation: A Conceptual Note”, World Development, March, Vol. 18. No.3, pp. 477-480.
Cho.Y.J. and Khatkhate, D. (1989), Lessons of Financial Liberalisation in Asia: A Comparative Study, World Bank Discussion Paper 50, Washington D.C.
Cheng, Shu-Ju A, (2001), Serving the Household and the Nation: Filipino Domestics and the Development of Nationhood in Taiwan, Ph.D. Dissertation, University of Texas. A.
Clayton, Peter and Helen Ayres, (1996), "Perfornamce Appraisal or Performance Development? A Tale of Two Schemes', Management in Government: A Journal of Administrative Reforms, Vol. XXVIII, Nos. 3-4, October — March.
Clearly, S. (1995), The World Bank and Poverty Reduction in Sri Lanka: Reflection on the Bank's Poverty Assessment, A Report to the NGO Forum on Sri Lanka, Colombo.
Coalition of Women's Organizations, (2001), Women's Manifesto, Social Scientists Association, Colombo.
Collins, P. (1993), "Civil Service Reform and Retraining in Transitional Economies: Strategic Issues and Options", Public Administration and Development, Vol. 13, pp. 323-344.
Colombage, S.S. (1996), The Economy of Sri Lanka in the Liberalized Phase, Friedrich Ebert Stiftung, Colombo.
Cowen, M.P. and R.W. Shenton, (1996), Doctrines of Development, Routledge, London.
Department of Census and Statistics, Census of Population various years, Colombo.
363

Page 189
Department of Labour, Quarterly Labour Force Survey (QLFS), various issues, Colombo.
Department of Labour, (2002), National Employment Policy, Colombo.
Dias, M and Shanmugam, T. (1993), A Credit Programme for Kuwaiti Returinees: An Evaluation Report, Centre for Women's Research, Colombo.
Diaz-Alejandro, C, (1985), "Good-Bye Financial Repression, Hello Financial Crash', Journal of Development Economics, Vol. 19 Nos. 1&2, pp 1-24.
Dissanayake, G. K.B., (1998), Linking Wages with Labour Productivity: Sri Lankan Experience, paper presented at the ILOSAAT National Tripartite Seminar on the Effects of Globalization on Industrial Relations, Colombo, May 21-24.
Dunham, D, (2000), Policy Impact Analysis in Contemporary Sri Lanka, Institute of Policy Studies, Colombo.
Dunham, D. & Edwards, (199), Rural Poverty and Agrarian Crisis in Sri Lanka 1985-1995, Institute of Policy Studies, Colombo.
Dunham, David and Sisira Jayasuriya, (2000), "Equity, Growth and Insurrection: Liveralisation and the Welfare State in Contemporary Sri Lanka”, Oxford Development Studies, Vol.28. No. 1, pp. 99-1 10.
Economic Development Institute, (1991), Financial Systems and Development in Africa, EDI, Seminar Series, The World bank, Washington D.C.
Economist Intelligence Unit, Country Profiles and Country Reports, 1989-2001, various issues, London.
Ecumenical Institute for Study and Dialogue, (1998-1999), Dialogue: A Critical Evaluation of the Post-Independence Period 1948-1998, NS Vols, XXV-XXVI.
364

Edwards, S. and M. Khan, (1985), Interest Rate Determination in Developing Countries, IMF Staff Papers, Vol. 32, International Monetary Fund, Washington D.C.
Ekanayake, U.B., (2001), Impact of Labour Legislation on Labour Demand in Sri Lanka, International Labour Organization, Colombo.
Fyre, A, J. S. Jayawickrema, S. Gunarathne, and R. Samitha dasa, (2001), Survey on Safety and Health Conditions of Free Trade Zone Women Workers in Sri Lana, American Centre for International labour Solidarity, Colombo.
Fernando, D. J.G. (1991), Financial Reforms, in Sri Lanka, Central Bank of Sri Lanka Colombo.
Fernando, G, (1984), Money Supply Causal Factors: The Sri Lankan Experience, Central Bank of Sri Lanka Colombo.
Fernando, Neil (Ed), (1980), Public Management, Sri Lanka Institute of Development Administration, June 15.
Fisher, B, (1981), "Rural Financial Savings Mobilisation in Sri Lanka: Bottlenecks and Reform Proposals“, Savings and Development, No. 1, pp 75-90.
Fry, M.J., (1995), "Money, Interest, and Banking in Economic Development'. The Johns Hopkins Press, London.
Fry, M.J. (1989), "Financial Development: theories and Recent Experience", Oxford Review of Economic Policy, Vol. 5, Winter.
Gamburd, Michele Ruth, (2000), The Kitchen Spoon's Handle: Transnationalism and Sri Lanka's Migrant Housema1ds, Cornell University, Ithaca.
Gooneratne, Wilbert, (2001), "Rethinking Sri Lanka's Regional Development: Concepts, Policies and Institutions', Chapter 4 in Karunanayake, M.M., (Ed), Poverty, Spatioal Imbalances and
365

Page 190
Regional Planning: Policies and Issues, University of Sri Jayawardenepura, Colombo.
Gooneratne, Wilbert, (2002) A system of development regions for Sri Lanka, paper presented at the organisation of Professional Associations, August 05, Colombo.
Government of Sri Lanka, (1988), Report by the High Level Committee of Officials on Poverty Alleviation Through People Based Development: Final Report on and Action Programme, Colombo.
Government of Sri Lanka (1993), Presidential Commission of Finance and Banking, Colombo.
Government of Sri Lanka, (1995), Policy Statement of the Government of Sri Lanka, International Monetary Fund, Washington D.C.
Government of Sri Lanka (2000), Sri Lanka: A Framework for Poverty Reduction, External Resources Department, Ministry of Finance, Colombo.
Government of Sri Lanka, (2002), Connecting to Growth: Sri Lanka's Poverty Reduction Strategy, External Resources Department, Ministry of Finance, Colombo.
Government of Sri Lanka, (2002), Samurdhi Restructuring Programme: Draft Concept Paper, Ministry of Finance, January, Colombo. (Mimeo)
Gunatilake, Pamani, (1996), The National Development Trust Fund, Institute of Polic v Studies, Colombo.
Gunathilake, Ramani, (1997), Credit based participatory poverty alleviation strategies in Sri Lanka: What have we learnt? Poverty and Income Distribution Series No.2, Institute of Policy Studies, Colombo.
366

Gunatilake, Ramini, (2001), Freedom of Association and Collective Bargaining in Sri Lanka: Progress and Prospects, paper prepared for the International Labour Organisation, Colombo. (Unpublished)
Gunatilake, Ramani and Rozana Salih, (1999), How successful is the Samurdhi's saving and credit programme in reaching the poor in Sri Lanka? Poverty and Income Distribution Series, Institute of Policy Studies, Colombo.
Gunatilake, Ramani and Tushara Williams, (1999), The Interated Rural Development Programme in Sri Lanka: Lessons of Experience for Poverty Reduction, Poverty and Income Distribution Series No. 4, Institute of Policy Studies, Colombo.
Gunatilake, Godfrey, et al. (2001), The Cost of the War: Economic, Social and Human Cost of the War in Sri Lanka, National Peace Council, January, Colombo. (updated in 2003)
Gwartney, James and Rovert Lawson, (2003), Economic Freedom of the World: 2003 Annual Report, Fraser Institute, Bancouver. http: //www.freetheworld.com/release.html
Haque, Nadeem UI, and J. Peter Montiel, (1994), The Role of the Government in Economic Development, Hacienda Espanola.
Hettige, S.T., (1997), 'Social Cost of Migration, in Documents from the International Conference on Migrant Women Workers, The American Centre for International Labour Solidarity, Colombo.
Hughes, Owen E. (1998), Public Management & Administration: An Introduction, Second Edition, Macmillan Press, London.
Indraratna, A.D. V. de S, (1998), (Ed), fifty year's of Sri Lanka's Independence: A Socio Economic Review, Sri Lanka Institute of Social and Economic Studies, Colombo.
International Monetary Fund, (1983), Interest Rate Policies in Developing Countries, Occasional Paper 22, Washington D.C.
367

Page 191
International Monetary Fund, (1997), Sri Lanka: Selected Issues, IMF Staff Country Report, Washington D.C.
International Monetary Fund, (2002), Sri Lanka: Staff Report for the 2002 Article IV consultation, www.imf.org.
International Monetary Fund, (2002), Financial Sector Stability Assessment: Sri Lanka”, www.imf.org
Ives, Denis, (1999), The Public Servant as Superman? Matching expectations and Reality, Fourth National Civil Service Conference, Intan, Kuala Lumpur, Malaysia.
Jayasuriya, Laksiri, (2000), Welfarism and Politics in Sri Lanka, The University of Western Australia.
Jayawardena, L. and P.N. Radhakrishnan, (1987), Stabilization and Adjustment Policies and Programmes, Country Study 15: Sri Lanka, WIDER, Helsinki.
Jayaweera, Swarna, (1999), Socio Economic Development in Sri Lanka: Trends Since the Social Summit, Centre for Women's Research, Colombo.
Jaya weera, Swarna, And T. Sanmugam, (2002), Graduate Employment in Sri Lanka in the 1990s, Centre for Women's Research, Colombo.
Kalirajan, Kaliappa, (2004), "An analysis of India's reform dynamics', Oxford Development Studies, Vol. 32. No. 1, March, pp 119-134.
Kanapathy, Vijayakumari, (2001), "International Migraton and Labour Market Adjustments in Malaysia: The Role of Foreign Labour Management Policies, Asian and Pacific Migration Journal, Vol. 10. No.3-4, pp 429 — 461.
368

Kapila, Raj and Uma Kapila (Ed), (2002), A Decade of Economic Reforms in India: The past The Present, The Future, Academic Foundation, New Delhi.
&arunasena, S.A., (1991), A Macroeconomic Overview of Sri Lanka 1970-87: With Special Reference to Stabilisation Issues, April, Institute of Policy Studies, Colombo.
Karunasena, A.G. (1996), Changing Financial Systems in Open Economies: Sri Lanka's Experience, Bank for Infernational Settlements (BIS) Pol1cy Paper No. 1, pp l 14- 125.
Karunatilake, H.N.S., (1987), The Economy of Sri Lanka, Centre for Demographic and Socio-Economic Studies, Colombo.
Karunati lake, H.N.S., (1989), "The Performance and Role of Finance Companies in the Economy of Sri Lanka', Sri Lanka Economic Journal, Vol.4.
Kearney, Robert, (1971), Trade Unions and Politics in Ceylon, University of California Press, Berkeley.
Kelegama, Saman, (1993), Privatization in Sri Lanka: The Experience during the Early Years of Implementation, Sri Lanka Association of
Economists, Colombo.
M
Kelegama, Saman, (1998), Globalization and Industrial Relations in Sri Lanka, paper presented at the ILO-SAAT National Tripartite Seminar on The Effects of Globalization on Industrial Relations, May 21-24, Colombo.
Kettl, Donald F, (1999), The Global Public Management Revolution, A Report on the Transformation of Governance, The Brookings Institutions.
Khatkhate, D.R., (1982), "Anatomy of Financial Retardation in a Less Developed Country: The Case of Sri Lanka 1951-1976", World Development, Vol. 10. Nb.9, September, pp 829-840.
369

Page 192
Kotlikoff, L.J., (1984), Economic Impact of Deficit Financing, IMF Staff Papers, Vol. 31, Washington D.C.
Kottegoda, S, (2000), Women in Poverty in Sri Lanka: Trends and Characteristics, Centre for Women's Research, Colombo.
Kumar, Vivek, (1999), "Accontability and Transparency in Administration: A Case for More People's Participation', Management in Government: A Journal of Administrative Reforms, Vol. XXXI. No.3, October-December.
Lakshman, W.D., (1997), Dilemmas of Development: Fifty Years of Economic Change in Sri Lanka, Sri Lanka Association of Economists, Colombo.
Lal, Deepak, (1983), The Poverty of Development Economics', Hobart Paperback 16, The Institute of Economic Affairs, London.
Larson, Peter E and Amanda Coe, (1999), Managing Change: The Evolving Role of Top Public Servants, Managing the Public Service: Strategies for Improvement Series No.7, Commonwealth Secretariat, London.
Leelaratne, P.M., (2001), The Relationship between Education, Training and Employment, background paper for the workshop on Towards Employment Strategy Framework in Sri Lanka, International Labour Organization, Colombo.
Lim, Lin L. and O. Nana, (1996), International Migration of Asia: Women: Distinctive Characteristics and Policy concerns' in Graziano, Batistella and Anthony Paganoni (Ed), Asian Women in Migration, Migration Centre, Quezon City (Philippi8nes), pp. 47-51.
Liyanege, K, (2000), Voting rights of the migrant workers, paper presented at the International migrants Day Commemoration, Colombo.
Mahbub ul Haq Human Development Centre, (2003), Human Development in South Asia 2002, Oxford University Press, Karachi.
370

Marsh, Ian, Jean Blondel and Takashi Inoguchi (Ed), (1999), Democracy, Governance & Economic Performance: East and South East Asia, United Nations University Press.
Maunaguru. S, (1995), Gendering Tamil Nationalism: The Construction on Women in Projects of Protest and Control in Pradeep Seganathan and Qadri Ismail (Ed), Un-Making the Nation, Social Scientists' Association, Colombo.
Mauro, Paolo, (1997), Why Worry about Corruption? February, International Monetary Fund, Washington D.C.
McKinnon, R.I., (1973), Money and Capital in Economic Development, Brookings Institution, Washington D.C.
McKinnon, R.I., (1989) Financial Liberalization and Economic Development: A Reassessment of Intercist Rate Policies in Asia and Latin America, Oxford Review of Economic Policy, Vol. 5. No.4, Winter.
Mendis, P. (1992), The Economics of Poverty Alleviation: The Janasaviya Programme in Sri Lanka, South Asia Journal, Vo.5. No.3, pp 289-298.
Ministry of Finance, (2002), Samurdhi Restructuring Programme - Draft Concept Paper, mimeo, Colombo.
Moore, M.P., (1995), Economic Liberalization, Growth and Poverty: Sri Lankan Experience in Long-run Perspective, Institute of Development Studies, University of Sussex, Brighton.
Muthalif., S.A. (1994), Migration of Muslim Women to West Asia and its Impact on the Economic Status and Family Relations among Muslims Households in Sri Lanka, A research paper presented to the Faculty of Graduate Studies, University of Colombo, Colombo.
Navaratne V.T. (Ed), (1980), Current Issues in Public Personnel Management in Sri Lanka, Sri Lanka Institute of Development Administration, Colombo.
371

Page 193
Newham Report, (1936), Report on the Relief of Distress due to Sickness and Shortage of Food, Sessional Paper 5, Ceylon Government Press, Colombo.
OECD, (1987), Structural Adjustment and Economic Performance, Paris.
O'Sullivan, Meghan, (2001), Sri Lanka: Civil Strife, Civil Society, and the State 1984-1995, Chapter 7 in Stewart, Frances and Valpy Fitzgerald, War and Underdevelopment, Volume II, Oxford University Press, Oxford.
Paranjipe, Nalini, (1998), "Towards a Code of Ethics for Public Services', Management in Government: A Journal of Administrative Reforms, Vol. XXIX. No. 4, January - March.
Peiris, S. and Shyamali Ranaraja, (2001), "Promoting Social Dialogue and Freedom of Association in EPZS in Sri Lanka in Oberai, A, etal (ed), Labour Issues in Export Processing Zones in South Asia: Role of Social Dialogue, International Labour Organisation - SAAT, New Delhi.
Peiris, S.J., (1999), “A Survey of Financial Sector Reforms in ri Lanka”, Upanathi, Vol. 10. Nos. 1&2, pp 15-51.
Perera, M, (1997), A profile of Female Migrants, Marga Institute, Colombo. w R
Perera, M., (1997), Research in Labour Migration: Findings of a Recent Study in Sri Lanka, American Centre for International Labour Solidarity, Colombo.
Piper, N, (2003), "Bridging Gender, Migration and Governance: Theoretical Possibilities in the Asian Context', Asian and Pacific Migration Journal, Vol. 12. Nos. 1&2, pp 21-43.
Piper, N. and Anders, U. (2002), "Transnational Advocacy Networks and the Issues of Female Migration and Trafficking in East and
372

Southeast Asia: A Gendered Analysis of Opportunities and Obtacles', Asian and Pacific Migration Journal, Vol. 11. No.2, pp 171-196.
Porter, Michael, (1990), The Competitive Advantage of Nations, The Free Press, New York.
Poverty Reduction Strategy Paper (PRSP), (2003), in Regaining Sri Lanka, Ministry of Policy Development, Colombo.
Prajapati, Trivedi, (1995), "Management in Government: Improving Government performance' Management in Government: A Journal of Administrative Reforms, Vol. XX.V.II. No. 1, April-June.
Ranaweera, T.W.Y. (1971), The Demand for Money in Ceylon 195069, Central Bank of Sri Lanka Staff Studies, Colombo.
Rodrigo, Chandra, (1994), 'Structural Reform and the Labour Market 1977-1992: Sri Lanka Case Study in R. Islam (ed) Social Dimensions of Economic Reforms in Asia, ILO-SAAT, New Delhi, pp. 215-270.
Rodrigo, Chandra, (1995), "Wage Behaviour in the Liberalised Economy 1978-1993: A view of Evidence, Upanathi, Vol.7. Nos. 1&2.
Rodrigo, Chandra, (2001), Labour Market Developments: Sri Lanka Country Profile in the 1990s, backgroung paper for the workshop entitled Towards an Employment Strategy Framework in Sri Lanka, International Labour Organisation, Colombo.
Roe, A.R., (1982), "High Interest Rates: A New Conventional Wisdom for Development Policy? Some Conclusions from Sri Lanka Experience', World Development, Vol. 10.No.3, March pp. 211-222.
Root, Hilton L. (1996), Small Countries Big Lessons: Governance and the Rise of East Asia, Oxford University Press, New York.
Root, Hilton L., (1995), Managing Development through Institution Building, Economics & Development Resource Centre Occasional Papers No. 12, Asian Development Bank, Manila.
373

Page 194
SAARC, (1992), Report of the Independent South Asian Committee on Poverty Alleviation: Meeting the Challenge, Colombo.
Sahn, D & Alderman, H. (1996), The Effect of Food Subsidies O Labour Supply in Sri Lanka, Economic Development and Cultural Change, Vol.45 No. 1.
Saini, K.G, (1982), “The Monetarist Explanation of Inflation: The Experience of Six Asian Countries”, World Development, Vol. O. No. 10. October.
Sanderatne, Nimal, (2000), The Informal Sector in Sri Lanka: It's Nature, Extent and Impact of Globalization, International Labour Organisation, Colombo.
Saravananthan, Muttukrishna, (2003a), An Introduction to the Conflict Time Economy of the North & East Province of Sri Lanka, Working Paper 1, International Centre for Ethinic Studies, May, Colombo Reproduced in the Indian Journal of Regional Science, Vol36. No. 1, June 2004, Kolkata.
Saravananthan, Muttukrishna, (3003b), “Economic Revival in North and East Sri Lanka: What Are the Impediments?” Economic and Political Weekly, Vol.XXXVIII. No. 19, May 10-16, pp 1844-1850, Mumbai.
Saravananthan, Muttukrishna, (2004), "Economic Imperative for Peace in Sri Lanka', Faultilines: Writings on conflict and Resolution, Vol. 15, February, pp.39-55, New Delhi. Senge, PeterM, (1990), The Fifth Discipline - The Art and Practice of the Learning Organisation, Curency Double Day, New York.
Shanmugaratnam, N, (1999), Rural Poverty in Sri Lanka: A Synthesis of Preliminary Qualitative Studies, The world Bank, Washington D.C.
Shanmugaratnam, N, (2001), On the Meaning of Development: An . Exploration of the Capability Approach, Forum for Development
Studies, No. 2.
374

Shaw, E.S., (1973), Financial Deepening in Economic Development, Oxford University Press Oxford.
Shaw, J., (1999), “A World Bank Intervention in the Sri Lankan Welfare Sector: The National Development Trust Fund', World Development, Vol.27.No.5, pp 825-838.
Silva, Amala de, (1998), Health and Poverty, Report prepared for the Department of External Resources, Ministry of Finance and Planning, Colombo.
Silva, K.M. de, Peiris G.H. and Samarasinghe S.W.R.D.A. (Ed), (2002), Corruption in South Asia: India, Pakistan & Sri Lanka, ICES South/South East Asia Study Series 4, Kandy (Sri Lanka).
Silva, K.T. (1999), Sociological Aspects of Poverty in Sri Lanka, Paper presented as part of Framework for Poverty Analysis, Department of External Resources, Ministry of Finance and Planning, Colombo.
Silva, K.T. R. Abaysekera, Amala de Silva, & V. Nanayakara, (1996), Approaches to Poverty Alleviation in Sri Lanka, GTZ, Kandy.
Silva, K.T, N. Weeratunge, & C. Ibaraguen, (2002) Sri Lanka Report on Community Food Profiling, World Food Programme, Colombo.
Sirisena, N.L., (1987), "Deterninants of Economic Growth in Sri Lanka 1970-86', Sri Lanka Economic Journal, Vol. 2.
Siriwardana, Susil, (1998), Social mobilization in the Janasaviya Programme: Issues of a countrywide programme, (unpublished)
Somasunderam.M. (1997), The Third Wave: Governance and Public Administration of Sri Lanka, Colombo & New Delhi.
Soysa, G.D.G.P. (2000), "Replacing the Bureau with an overseas employinent authority', The Sri Lanka Migrant, Vol.7, pp 8-10.
375

Page 195
Sri Lanka Bureau of Foreign Employment, (2001), Statistical Handbook on Foreign Employment, Colombo.
Sri Lanka Economic Association, (1993), Monetary Policy in an Open Economy: The Experience of Sri Lanka, Colombo.
Stiglitz, J.E. and A. Weiss, (1981), “Credit Rationing in Markets with Imperfect Information', American Economic Review, Vol 71, June, pp. 393-410.
Tennakoon, M.U.A. (1998), Samurdhi Programme in Poverty Alle viation, Report Submitted to the Department of External Resources, Ministry of Finance and Planning, Colombo.
Todorova, Mariana, (2000), "The Challenge of Restoring a Well Functioning and Effectives Public Administration System in Sri Lanka', Sri Lanka Economic Journal, Vol. l. l. No. 1, June.
Tseng, W. and R. Corker, (1991), Financial Liberalisation, Money Demand, and Monetary Policy in Asia Countres, IMF Occasional Paper No. 84, Washington D.C.
UNDP, Human Development Report 2001, Oxford University Press.
Villanueva, D. and A. Mirakshor, (1990), Strategies for Financial Reforms, IMF Staff Papers, Vol.37, No. 3, International Monetary Fund, Washington D.C.
Vimaladharma, K.P. (1997), EscapeRoute or Blind Alley? Sri Lankan female migrant labour in West Asian and its impact on gender relations, Changing Gender Roles and Relations, Center for Women's Research, Colombo.
Waidyanatha, W.G.S, (2001), "Rationale for Liberalization of Sri Lankan Economy: Some Milestones, Economic Review, Vol. 27, No. 1-3, April-June, Colombo.
376

Wanasinghe, Shelton, (1995), Management Development in Public Administration. The Experience of Sri Lanka, The Indian Institute of Public Administration, New Delhi.
Wanasinghe, Shelton, (2001), The Implications of the Changing Role of Governance in Sri Lanka, Gevernance Series No. 7, December, Institute of Policy Studies, Colombo.
Wanasinghe, Shelton and harshitha Gunaratne, (1996), Enhancing the Effectiveness of Public Policy Management. The Challenges for Sri Lanka, Gevernance Series No. 3, October, Institute of Policy Studies, Colombo.
Weddweburn Report, (1934), Report on Unemployment in Ceylon, Sessional Paper No.20, Ceylon Government Press, Colombo.
Weerakoon, Bradman and Shelton Wanasinghe, (1994), Reflections on Gevernance, Development Review Series, Marga Institute, Colombo.
Weerakoon, N, (1997), International Female labour Migration: Issues/ problems and policy recommendations, Centre for Women's Research, Colombo.
Welliamuna, J.C. (2000), "Voting rights for Sri Lankan overseas workers in the context of UN convention", Migrant Year Book 2000, Migrant Service Centre, Colombo.
Wignaraja, Ponna, and Susil Siriwardena, (2004), Pro-poor Growth : and Governance in South Asia: Decentralisation and Participatory Development, Sage Publications, India.
Wijerama, Lionel, (1998), Grama Sanwardeneya Saha Sanwardeneya, Rural Development Training and Research Institute, Colombo.
Wijesinghe, D, (1997), Administrative Reforms: International Perspectives and the Case of Sri Lanka, August, Colombo.
377

Page 196
Wijeweera B.S., (1988), A Colonial Administative System in Transition: The Experience of Sri Lanka, Marga Institute, Colombo.
World Bank, The, (198), World Development Report, Washington D.C.
World Bank, The (1989), World Development Report, Washington D.C.
World Bank, The, (1995), Sri Lanka in the Year 2000, Washington D.C.
World Bank, The (1996), Non plantation Crop Sector Policy Alternatives, Washington, DC.
World Bank, The, (1998), Sri Lanka: Financial Sector Reforms, Vol. 1 (sector report), Washington D.C.
World Bank, The, (2000), Sri Lanka: Recapturing Missed Opportunities, Washington D.C. . . .
World Bank, The, (2000), An Empirical Evaluation of Samurdhi Programme, Background paper prepared for the World Bank's work on Poverty in Sri Lanka, Washington D.C.
World Bank, The, (2001), World Development Report 2000/2001: Attacking Poverty, Oxford University Press.
World Bank, The, (2002), Sri Lanka Poverty Assessment, Washington D.C.
World Bank, The, (2002), The Right to Tell: The Role of Mass Media in Economic Development, Washington. D.C.
Yapa, K.L, (1995), The Decision Making Process of international labour Migration with Special Reference to the Sri Lankan Housemaid, Colombo.
Yapa, L., (1998), "The Poverty Discourse and the Poor in Sri Lanka', Transactions of the Institute of British Geographers, NS. 23, pp 95-115.
378


Page 197


Page 198

w
E0|
ജ88 ! IñILLIMI :
ILLAHKAIYIL PORRULATHARA SEEF J
--പ= -