கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டிராசன் கதை

Page 1

리
■
| सा।
طر |||||||||||||||||||||||||||||| | "محریر کم سے | 1

Page 2


Page 3

கண்டிராசன் கதை
சாரல்நாடன்
சாரல் வெளியீட்டகம்

Page 4
சாரல்வெளியீடு : 13 முதற் பதிப்பு ஜூன் 2005
இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையின் நுால் வெளியீட்டு உதவிச் செயல்திட்டத்தின் கீழ் இந்நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கமானது சபையின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது தவிர இந்நூலுக்கான சகல உரிமையும் பொறுப்பும் நூலாசிரியருக்கானது. என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீடுகளில் உள்ள Lւլգա 16Ù ՖՄ6).
b6b60)6DULUT, 85(b'60DL Ju JT
கண்டிராசன் கதை /கருப்பையா நல்லையா கொட்டகலை: சாரல் வெளியீட்டகம். 2005 - ப. 68 : செ.மீ 21. ISBN No :955-8589-07-1 5UT - 170/= 1. 954/ ஒரு டி.டி.சி 22 1. தலைப்பு 1. இலங்கை வரலாறு.
ISBN NO : 955-8589-07-1
சாரல் வெளியீட்டகம்
7 ரொசீட்டா பல்கூட்டு சந்தை, கொட்டகலை.
தொ.பே: 051-2222889
Printed by : SUNPRITS
No. 67, Mapanawathura lane, Kandy. T.P.: 081-2239186, 077-6635662
Price : 170/=

கண்டிராசன் கதை
கலாபூசணம் சாரல்நாடன்
சாரல்பதிப்பகம்
7 ரொசிட்டா பல்கடட்டு சந்தை, கொட்டகலை. 65.Gr: O 51-2222889

Page 5
கண்டியை ஆண்ட மன்னர் பரம்பரையின் கதையை நுால்களில் வடித்து, அவர்களின் நினைவுகள் சாகாமல் இருக்க உதவியவர்களுக்கு இந்நூால் சமர்ப்பணம்

முன்னுரை
கண்டிராஜ்யம் வீழ்ந்துபட்டதற்கான காரணத்தை, நூற்றி எண்பத்தைந்தாண்டுகளின் பின்னாலும் நம்மால் நிதானிக்க முடியாமலிருக்கிறது. இதன் உண்மை வரலாற்றை, நிதானத்துடன் நோக்கியவர்கள், புலமைத்திறத்துடன் அதை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர்.
சிங்களத்திலும், தமிழிலும் பாடல்களாகவும், கவிதைகளாகவும், நாடகங்களாகவும் அவ்ை இருக்கின்றன.
இந்த இரண்டையும் உள்ளடக்கியதுதான் இந்நூல். இயன்றவரையில் 1815ல் முடிவுற்ற கண்டிராஜ்ய வரலாற்றை உண்மை முறையிலேயே கூறமுற்பட்டிருக்கிறேன்.
கண்டிராஜ்ய பழைய வரலாறு, முறையாக நம்மால் படிக்கப்பட்டு, நம் மாணவர்களுக்கு, முழுவதாகக் கற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
கண்டிராஜ்யத்தில் பிரதானிகளாயிருந்தவர்களுக்கு, ஆங்கிலம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், சிங்களம் ஆகிய ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் இருந்தது என்பதை (பக்கம் 34) நாம் அறிகையில் தற்கால அரசியல்வாதிகள் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒருவர் மொழியை மற்றொருவர் படித்துத்தேறி வாழ்ந்த அந்த பழைய காலம் இனியும் தோன்றாதா?
வரலாறு மீண்டும் திரும்புகிறது. இந்நூல் ஆக்கத்துக்கு, உதவிய நூலக சேவையின் அபிவிருத்திச் சபையை சார்ந்த குணசேன விதானகேக்கு என்னுடைய நன்றிகள்
அன்புடன் சாரல்நாடன்

Page 6
பொருளடக்கம்
முன்னுரை
அறிமுகம்
நாயக்கர் வம்சம் விஜயசிம்மனுக்குப் பிறகு விக்கிரமனின் ஆட்சி கண்டி மன்னன் கைது மன்னர்கள் ஆற்றிய பணிகள் தமிழ் நாட்டில் கதை வடிவில் கண்டிராசன் எழுத்துவடிவில் நிறைவாக நுால் எழுத பயன்பட்டவைகள்
1
0.
13
16
26
49
52
54
58
59
63

அறிமுகம் இலங்கையில் சிங்கள இராஜதானி அமைந்த இடங்களென அநுராதபுரம், பொலனறுவை, தம்பதெனிய, குருனாகல், கம்பளை, கோட்டே, கண்டி ஆகிய நகரங்கள் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் அநுராதபுரம், பொலனறுவை, கண்டி ஆகிய இராஜதானிகள் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை வரலாற்றில் காணலாம். .
புகழ் பெற்ற எல்லாள மன்னன் அநுராத புரத்திலும் (கி.மு. 205 - கி.மு.161) பாண்டிய மன்னர்கள் (கி.பி. 1198 - கி.பி. 1222) பொலனறுவையிலும் நாயக்க மன்னர்கள் (கி.பி. 1739 - கி.பி - 1815) கண்டியிலும் அரசாண்டிருக்கின்றனர்.
கந்த உட பஸ்ரட என்ற பெயரைச் சுருக்கி கண்டி என்று முதலில் அழைத்தவர்கள் போர்த்துக்கேயரே என்பது
வரலாறு.
கோட்டே இராஜதானியை கண்டிக்கு இடமாற்றம் செய்த மன்னன் விக்கிரமபாகு (கி.பி. 1469 - 1511) என்பவராவார். கோட்டே இராஜ்யம், யாழ்ப்பாண இராஜ்யம், கண்டி இராஜ்யம் என்ற மூன்றுக்கும் தனித்தனியான வரலாறு உண்டு. கண்டி இராஜ்யம் பின்வரும் மன்னர் மரபைக் கொண்டது.
விக்ரமபாகு கி.பி. 1469 - 1511 ஜயவீர பண்டார 1511 - 1552 கரலியத்த பண்டார 1552 - 1582 இராஜசிம்மன் 1 1582 - 1593 விமலதர்ம சூரியன் 1 1593 - 1604 செனரத் 1604 - 1635 இராஜசிம்மன் 2 1635 - 1687 விமலதர்ம சூரியன் 2 1687 - 1707 சிறி வீர பராக்கிரம நரேந்திரசிம்மன்1707 - 1739 சிறி விஜய ராஜ சிம்மன் 1739 - 1747 கீர்த்தி சிறி இராஜசிம்மன் 1747 - 1782
grgobbTL6ós. ._్య్వ, • '.' ; கண்டிராசன் B605

Page 7
சிறி ராஜாதி ராஜ சிம்மன் 1782 - 1798 சிறி விக்கிரம இராஜசிம்மன் 1798 - 1815 இந்த ஒழுங்கில், பத்தொன்பதாண்டுகள் ஆட்சிபீடத்திலிருந்த இரண்டாம் விமலதர்மன் முதலாவதாக மதரையிலிருந்து பெண் எடுத்ததை அறியலாம்.
1706ல் கண்டிய மன்னனுக்குப் பெண் கேட்டு மதுரைக்குச் சென்ற துாதுக்குழுவில் சிதம்பரநாத், அடையப்பன் என்ற இரண்டு தமிழர்கள் இருந்தனர். அவர்கள் கண்டியிலே குடியேறி வாழ்ந்திருந்த இரு தமிழ்ப்பிரமுகர்கள். அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களாக அரச அங்கீகாரத்துடன் துாதுக்குழுவில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்ற எழுத்து விண்ணப்பம் சிங்களம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன. இந்த விபரங்கள் “உடரட்ட வெட்டி’ என்ற சிங்கள நூலிலும் “கண்டி தேசக் கதை” என்ற தமிழ் நூலிலும் காணப்படுகின்றன. இந்த நூல்களின் மூலப் பிரதிகள் ஆபிரிக்க - கீழைத்தேய கல்வி இயக்குனராக லண்டனில் பணியாற்றிய டாக்டர். ஆ. மார் மூலம் தனக்கு கிடைத்ததாக லெனோரா தேவராஜா குறிப்பிடுகிறார். ል
அடுத்து ஆட்சிக்கு வந்த பூரீ வீர பராக்கிரம நரேந்திரசிம்மனும் 1708ல் மதுரையிலிருந்து மணப் பெண்ணாக பிட்டிநாயகரின் மகளைத் தெரிவு செய்தார். மீண்டும் 1710ல் மற்றொரு மணமகளையும் மதுரையிலிருந்தே தெரிவு செய்தார். இந்த இரு மனைவிகள் மூலம் அவருக்குக் குழந்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. அவருக்குக் கண்டிய மனைவிகளும் இருந்தனர். அவர்களில் ஒருத்திக்கு கிடைத்த ஆண்மகன்கள் இளமையிலேயே இறந்து போயினர். அவருடைய காமக் கிழத்தி ஒருத்திக்கு உனம்புபண்டார என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னர்கள் பல மனைவியர்களை வைத்திருப்பது கீழைத்தேயங்களில்ஒரு சம்பிரதாயமாக இருந்தது. முதல் மனைவி சட்டப்பூர்வமானவள். அவளை
கண்டிராசன் கதைல்ே 8:
 

மகேஷி என்றழைப்பர். சட்டப்பூர்வமான மரபுவழி பதவிகள் மகேஷிக்கோ, மகேஷி மூலம் கிடைத்த பிள்ளைகளுக்கோ தான் கிடைக்கும். சம்பிரதாயமாக உணம்புபண்டாரவை தன் வாரிசாகக் கொள்ளமுடியாதென்று நினைத்த மன்னர் 1708லிருந்து தன்னோடு மாளிகையில் ஒன்றாகவே வாழ்ந்து வந்த தன் மைத்துனனை - பிட்டிநாயகரின் மகனை - முதலாவது மகேஷியின் சகோதரனை தன்னுடைய வாரிசாக நியமித்தான். சிறி விஜயராஜசிம்மன் என்ற பெயரில் அவர் ஆட்சிக் கட்டிலில் 1739ம் ஆண்டு அமர்த்தப்பட்டார்.
அவருடைய ஆட்சியுடன் தான் இலங்கையில் நாயக்கர் மரபு ஆரம்பித்து 1815ல் ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றும் வரையிலும், தொடர்ந்து ஓர் எழுபத்தாறாண்டுகள் நாயக்க மன்னர்கள் ஆட்சியே நடந்தது. யாழ்ப்பாணத்து, ஆரியச் சக்கரவர்த்திகளின் தமிழ் ராஜ பரம்பரைக்கு அடுத்ததாக இலங்கையிலிருந்த ஒரே தமிழ் ராஜ பரம்பரை கண்டி நாயக்கர் ராஜ பரம்பரைதான்.
சிறி விஜயராஜசிம்மன் கண்டிக்கு மன்னராகும் முன்னமேயே, இரண்டாம் விமலதர்மன் காலத்தில் (1687) கண்டியில் தமிழ் மக்கள் பரவலாக வாழ்ந்திருந்தனர். அதற்கும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பதினான்காம் நூற்றாண்டில் கம்பளை இராஜதானியில் இலங்காதிலக, கடலாதெனிய என்ற இரண்டு விகாரைகள் கட்டப்பட்டன. இவைகளைக் கட்டுவதற்கு தென்னிந்தியக் கட்டிடக் கலைஞர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
கணேஷ்வர ஆச்சாரியார், இஸ்தாபதியார் என்ற சிற்பிகள் தலைமைச் சிற்பிகளாக இருந்து இங்கு கடமையாற்றியுள்ளனர். இலங்காதிலக விகாரையில் காணப்படும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி எழுத்துக்கள் காணப்படுகின்றன. கம்பளை இராஜதானிகாலத்தில் இலங்கைக்கு வந்த யாத்ரீகர்களில் சர்வதேசபுகழ் பெற்றவர் இப்னுபதுாதா என்பவராவார். அவர்தான் இலங்கை
சாரல்நாடன்இஜ்:9: கண்டிராசன் கதை

Page 8
யாத்திரிகையின் போது சிவனொளிபாத மலைக்குச் சென்றார். அவர் சிவனொளிபாதமலையில் கிறித்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோரைக் கண்டார் என்று கூறப்படுகிறது. பெளத்தர்களைப் பற்றி அவரது குறிப்பில் எவ்வித பிரஸ்தாபமுமில்லை. சிவனொளிபாதமலை பெளத்தர்களின் வணக்கஸ்தலமாகியது என்று நம்புவதற்கு ஏதுவாக, “கீர்த்தி சிறிராஜசிம்மன் (1747 - 1782) காலத்தில், சிவனொளிபாதமலை பெளத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது” என்ற கூற்றைக் கொள்ளலாம். இதன் மூலம், அதுவரையிலும் மற்ற மதத்தினரே சிவனொளிபாத மலைக்குச் சென்று வந்துள்ளனர் என்பதும், இப்னுபதுாதாவின் கூற்றுக்கு தனி அர்த்தம் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இதே காலப்பகுதியில் கரையோர மாகாணங்கள் டச்சுக்கார ஆட்சியில் இருந்தது. 1765ல் டச்சு தேசாதிபதியாக இருந்தவர் டாக்டர். இமாஸ் விலேம் பால்க் (1765 - 1783) என்பவராவார்.
இவர் கோப்பி, ஏலம், மிளகு என்று கிருவழிகத்தில் அதிக கவனம் காட்டியவர். இவர் கறுவாப்பட்டைச் செய்கையிலும் அதிக கவனம் காட்டினார் என்று தன்னுடைய யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நுாலில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து முதன் முதலாக பத்தாயிரம் தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது இந்த காலப்பகுதியில்தான் என்று சிலர் நம்புகிறார்கள். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். அதன் எச்சமாக இன்றிருப்பது கொழும்பு ‘சினமன் கார்டின்ஸ்' என்ற இடப்பெயர் LDt" (6Libğ5T6öT.
STT0M0LDTT STTMTSSSiSSSSSSiSS00SSAAA AAAA SS SAAA AAhueSDTTLTTS
 

--- 7s in isohye
கண்டி ராஜியத்தைக் காட்டும் இலங்கை படம்
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 9
-- - - Kandyar Kingdom
• • • • • • Kotte Kingdom
/~ --
V
V VM i A9 "ا - a
a b. 'Oh ... e • • له • M
ه*
A. ". . Y مصر .' محمیہ !
۹۔ صے سے۔ " : "" حصے ح* "*" هي : Mată
. . . . " . *
V f ع V r V
ur-. : 4. Alutkurus 1 Four V
ア Korg
Hrða Three
} Kons - u Hewagann O
კოr" s, sab=r=oaულუს Ae y o es e ve AY
Pasdun M. ال سے
h هسه سي های ۲۹ " مهمی W uma a anno 4A ص V محم۔ MYalalawita коааса. : هace"
Ge Motywa ".
Gäsku st Karale " .
wo Welabodas
ge O கோட்டை, கண்டி இராச்சியங்கள்
கண்டிராசன் கதை -
 
 
 

நாயக்கர் வம்சம்
தமிழ் நாட்டில் விஜயநகர சாம்ராஜ்யம் என்றறியப்பட்டதுதான் இந்து இந்தியாவின் கடைசி ஆட்சி. கிபி. 1336ல் அமையப்பெற்றது. சேர,சோழ,பாண்டியர் என்று வெவ்வேறாக அழைக்கப்பட்ட ராஜ்யங்கள் ஒன்றாக விஜயநகரசாம்ராஜ்யம் என்றறியப்படலாயிற்று. தமிழ்நாட்டில் அமையப்பெற்ற அந்த விஜயநகர ஆட்சியில் இருந்தவர்கள் நாயக்க வம்சத்தினர். அவர்கள் ஆரம்பத்தில் தெலுங்கு மாத்திரமே பேசினர். தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் இவர்கள் வடுகர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களத்தில் காணப்படும் குறிப்புகள் இவர்களை மலபார் வடுகர்கள் என்று கூறுகின்றன.
மேலும், கண்டியில் மன்னராக அரசு கட்டிலேறிய நாயக்கமன்னர்கள் நால்வரும் ராஜசிம்மன் " என்றே அறியப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. எந்த மன்னனை - கண்டி ராஜசிம்மன் என்று தான் பாடிய வெருகல் சித்திரவேலாயுதர் காதல் நூலில் தம்பலகாமத்து வீரக்கோன் முதலியார் பாடினார் என்று கணி டுகொள்ள முடியாதிருக்கிறதென பேராசிரியர். எஸ். பத்மநாதன் குறிப்பிடுகிறார். கிழக்கிலங்கையிலே கண்டி மன்னர்கள் சைவசமயத் தினதும் , அதன் நிறுவனங்களினதும் பாதுகாவலர்களாகவும் ஆதரவாளர்களாகவும் விளக்கியமைக்கு,
“கண்டி நகராளுங் கனக முடிராசசிங்கன்” என்ற வரிகள் ஆதாரம் காட்டுகின்றன. சிங்கள வம்சத்தின் முதல்வராக கருதப்படுகின்ற விஜயன் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தாரென்றும், இளவரசியுடன் வேறு நுாறு தமிழ்ப் பெண்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் பொதுவாக நாம் அறிந்திருக்கின்றோம். இவ்விதம் காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவிலிந்து மன்னர்களுக்குப் பெண்ணெடுக்கும் பழக்கம் தொடர்ந்து வந்திருக்கிறதென்பதை இலங்கையின் வரலாறு நமக்கு எடுத்தியம்புகின்றதென்றாலும்
சாரல்நாடன் 13 கண்டிராசன் கதை
YA

Page 10
பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மதுரையிலிருந்து பெண் ணெடுப்பதை மன்னர்கள் வழக்கமாகவே க் கொண்டிருந்தனர் என்பதை வரலாற்றில் நாம் காணுகிறோம். இந்த வழக்கம் உருவானதற்கான காரணத்தை நம்மால் ஊகிக்க முடியும். உள்ளுர் அரசியலில் நாட்டின் பிரதானிகள் செலுத்திய அளவுக்கதிகமான செல்வாக்கைக் குறைப்பதற்கு மன்னர்கள் கையாண்ட ஒரு மார்க்கமே அது. இப்படி கூறுகிற சிங்களப் பாடல்கள் இருக்கின்றன. நாயக்கர்களிடையே வழக்கிலிருந்த மருமக்கள் தாயம் வழக்கமும் சிங்களவர்களிடையே அறிமுகமானது. அவ்விதம் அறிமுகமாகி ஏற்றுக் கொள்ளப்பட்டதாலேயே, கடைசி மன்னனான சிறிவிக்கிரமராஜசிம்மன் அரச கட்டிலேறும் வாய்ப்பு உண்டானது.
மன்னனின் காமக் கிழத்திக்குப் பிறந்த மகன் உணம்புபண்டாரவுக்குத் தான் பதவி பிரமாணம் செய்ய வேண்டுமென்று பிரதானிகளில் ஒரு சிலர் கோரத் தொடங்கினர். சில பிக்குகளும் அதனை ஆதரிக்கத் தொடங்கினர். மாளிகையில் வசித்த பிரெஞ்சு தகப்பனுக்கும் போர்த்துக்கேய தாயாருக்கும் பிறந்த பெட்ரேடி காஸ்கன் என்பவனைப் பிரதானியாக்கியதும், அவன் மன்னனின் காமக்கிழத்திகளில் ஒருத்திக்கு காதற் கடிதம் எழுதிப் பிடிபட்டதால் துாக்கில் இடப்பட்டதும் இன்னும் நிலைமையை மோசமாக்கியது. அவன் ஜோசப் வாஸிடம் மாளிகையில் போர்த்துக்கேய மொழி படித்து தேர்ந்தவன் . மன்னன் இயல் பாகவே கிறித்துவமதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டான். கிறித்தவர்களும் நாயக்கர்களும் அரண்மனையில் செல்வாக்குடன் நடக்க ஆரம்பித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக உடரட்டையில் அமைந்த கபடகத்துக்கு பொறுப்பாகவும் ஒரு வடுகர் நியமிக்கப்பட்டிருந்தார். உடுநுவர, யடிநுவர, டம்பார, ஹேவாஹெட்ட, ஹரிஸ்பதுவ, மாத்தளை ஆகிய இடங்களெல்லாம் அந்த கபடகத்துக்குள்ளேயே
கண்டிராசன் கதை 14هم به مداوم به سمتهایی بهمن . . . . . . . . . g|TJ6bpfTL66ش
 

9|Libl&sluit(55.9560T.
இவைகளால் ஆத்திரமுற்ற சிங்கள பிரதானிகள் நரேந்திரசிம்மனுக்கு எதிராக ஒன்று திரண்டனர். இந்த நிலைமையைச் சமாளித்து, அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதத்தில் தமக்குப் பின்னர் விஜயராஜசிம்மனை மன்னராக்கினார்.
விஜயராஜசிம்மன் முப்பது ஆண்டுகள் கண்டியிலேயே தொடர்ந்து வாழ்ந்து - 1708ல் தமது தமக்கையுடன் மதுரையிலிருந்து வந்தது முதல், கண்டிய வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அறிந்து வைத்திருந்தார். பிரதானிகளைப் பிரித்து வைப்பதன் மூலமே தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமென்பதை அறிந்து வைத்திருந்தார். தென்னிந்திய நாயக்க வம்சம் இலங்கையில் ஓர் அந்நிய வம்சமே. எவ்வளவுதான் சிங்கள பெயர் சூடினாலும், பெளத்த சமயத்தைப் பொதுவாழ்வில் ஏற்றுக் கொண்டாலும் பிரதானிகள் விஷயத்தில் கவனம் வேண்டும். சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில் இந்த வேறுபாடுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. மன்னனாக ஒருவரை ஏற்றுக் கொண்ட பின்னர் அவனுக்கு விசுவாசங்காட்டுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. இவர்களின் இந்த மன்னர் விசுவாசங்குறித்து ரொபர்ட் நொக்ஸ் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏழுகோறளையில் அமைந்த மட்டக்களப்பு, தம்பலகமுவ பகுதிகள் முக்கியமானவைகள். ஏழுகோறளையின் தலை நகரம் புத்தளம். தம்பலகமுவிலிருந்து தென்னிந்தியாவுக்குச் செல்லும் வழிகளை டச் சுக் காரர்கள் தங்கள் ஆட்சிக்குட்படுத்தியிருந்தாலும் புத்தளத்திலிருந்து அவை தொடர்ந்து நடைபெற்றன. பாக்குகள் கண்டியிலிருந்து தென் இந்தியாவுக்கு ஏற்றுமதியாவதும், உடு புடவைகள் தென்னிந்தியாவிலிருந்து கண்டிக்கு இறக்குமதியாவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. முஸ்லிம்களும்,
சாரல்நாடன் . கண்டிராசன் கதை

Page 11
செட்டிகளும் இவ்வணிகத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாகத். தொழில் செய்தனர். முதல் பிரதானி எகலப்பொலை தனக்குக் கிடைத்த புதிய எல்லைகளால் செல்வமும், செல்வாக்கும் பெற்றான். பிலிமத்தலாவை, எகலப்பொலை என்பது கண்டி அரசியலில் பிரபல்யமிக்க செல்வந்தர்களின் 6) bef பெயர்கள். இந்தப் பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.
விஜயராஜசிம்மனுக்குப் பிறகு
விஜயராஜசிம்மனுக்குப்பிறகு அரசு கட்டிலேறியவர் கீர்த்திசிறிராஜசிம்மன். அவருக்குப்பின் அரசுகட்டிலேறும் வாய்ப்பு அவரின் சகோதரரான சிறிராஜாதிராஜசிம்மனுக்கு கிடைத்தது. கீர்த்தி சிறி ராஜசிம்மனது ஆட்சியின் ஆரம்பகாலத்தில் கண்டிமுழுவதும் பரக்க நாயக்கர்களின் செல்வாக்கு படர்ந்திருந்தது. அதற்குக் காரணம் அவரது தந்தையான நரேனப்பநாயக்கர்தான்.
நரேனப்பநாயக்கர், மதுரை திருமலை நாயக்கரின் பெண் வழி உறவினளான கனக வள்ளியம் மாளின் சொந்தக்காரர். அவரும், அவரது மனைவியும், இரண்டு மகன்மாரும் (கீர்த்திசிறிராஜசிம்மன், சிறிராஜாதிராஜசிம்மன் ஒரு மகளும்(சிறி விஜயராஜசிம்மனுக்கு மனைவியானவள்) இரண்டு சகோதரர்களும், ஒரு மைத்துனரும் 1708லிருந்து கண்டியிலேயே வாழத்தொடங்கினர். கீர்த்திசிறிராஜசிம்மனுக்கு ராஜத் திருமணம் 1749ல் நடத்தி வைக்கப்பட்டது. நடுக்காட்டுச் சாமியார் என்றழைக்கப்பட்ட வடுகரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். மணப்பெண்ணும், அவரது தந்தை நடுக்காட்டுச் சாமியாரும், இரண்டு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும், யாழ்ப்பாணத்து வழியாக டச்சுக் கப்பலில் புத்தளத்துக்கு வந்து பின் கண்டிக்கு கொண்டு வரப்பட்டனர். நாயக்கர்களின் தொகை இந்த நாற்பத்தொரு ஆண்டுகளில் கணிசமாகக் கூடியது. அவர்களுக்கென்று அமைந்ததுதான் கண்டிராசன் கதை 16ல்: சாரல்நாடன்
 
 
 

குமரப்பா வீதி என்றழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் கண்டியைக் கைப்பற்றிய பிறகு இது மலபார் வீதி என்று பெயர் மாற்றம் பெற்றது. நரேனப்பநாயக்கர், விஜயராஜசிம்மன் காலத்தில் மன்னனின் மாமன் என்ற முறையிலும், கீர்த்திசிறிராஜசிம்மன் காலத்தில் மன்னனின் தந்தை என்ற முறையிலும் கண்டிராஜ்ய அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார். அரண்மனையில் எல்லா இடங்களிலும் அவரின் செல்வாக்கு பரவியிருந்தது. பிரதானிகள் அவரை கைக்குள் வைத்துக் கொண்டு பல காரியங்களைச் சாதித்தனர். அவரிடமிருந்து கடன்வாங்கிய பிரதானிகள் பலர் இருந்தனர். அவர்மூலமே கண்டியில் மீண்டும் கிறித்தவர்களின் நடமாட்டம் அதிகரித்தது.
இதற்கெல்லாம் காரணம் தம்மிடையே உள்ள சிறுசிறு சச்சரவுகள்தான் என்றுணர்ந்த அரண்மனை பிரதானிகள் தமக்குள் ஒன்றுபட்டு மன்னரிடம் துாதுசென்றனர், தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர், எதிர்ப்பைக் காட்டினர். அவரை ஆட்சி கவிழ்க்கவும் முனைந்தனர். கீர்த்திசிறிராஜசிம்மன் தமது ஆட்சியைப் பலப்படுத்தவேண்டியதை உணர்ந்து கொண்டார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புத்தமத புனருத்தானத்தை மேற்கொண்டார். சியாம் திகாவைத் தோற்றுவித்தார். சங்கராஜா, உப சங்கராஜா என்ற பதவிகளை விகாரைகளில் அறிமுகம் செய்தார். மல்வத்தை, அஸ்கிரியாவில் அதன் பிரிவுகள் அமைந்தன. நாயக்கதேரோ என்று அதன்பிரிவுத்தலைவர்கள் அழைக்கப்பட ஆரம்பித்தது இவரது காலத்திலே தான். அநுராதபுரம், பொலனறுவையிலுள்ள பெளத்த ஆலயங்களில் அந்த முறை இன்றும் பேணப்படுகின்றது. தம்புள்ளை விகாரையைப் புதுப்பித்தார். அது சமயமே(1780) அவரது உருவச்சிலை அங்கு வைக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாம் ராஜசிம்மன் காலத்திலிருந்து (1593) சைவர்கள் மயமாகியிருந்த சிவனொளிபாதமலை, சிங்கள பெளத் தர்களின் வணக்கஸ்தலமாக்கப்பட்டது கீர்த்தி சிறி ராஜசிம்மன்
சாரல்நாடன் ۷ :2 .۲۰۰٬۰۰۰: ۰شد % கண்டிராசன் கதை

Page 12
காலத்திலேயே.
டச்சு ஆளுக்ைகுட்பட்ட பிரதேசங்களில் வாழும் சிங்கள பெளத்தர்களுக்கும் தானே தலைவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் கீர்த்தி சிறி ராஜசிம்மன் பல பணிகள் செய்தார். 1781ல் களனி விகாரையில் சுவரோவியங்களை வரைவித்தார். மன்னரின் புகழ் ஓங்குவதை பொறுக்காத பிரதானிகள் சியாமிலிருந்து மதகுரு என்ற பெயரில் ஒருவரை அழைத்துவந்து அவரை கீர்த்தி சிறிராஜசிம்மனுக்குப் பதிலாக அரசனாக்க முயன்றனர். ஆண்டு கணக்கில் வளர்ந்து வந்த சிங்களப்பிரதானிகளின் சதிமுயற்சியின் வெளிப்பாடு இது. மதம் வளர்க்கும் மடாலயங்கள் சதிக்கூடாரங்களாக இருந்துள்ளதை வரலாறு அன்றே கண்டுள்ளது.
மன்னர் புத்த மதத்தைப் பேணினாலும் தொடர்ந்து விபூதி அணியும் பழக்கத்தை விடாது கைகொண்டு வந்தார். இதனைத்தமது வெறுப்புக்கு பிரதான காரணமாக்கி அவரை புத்த ஆலயத்தில் வைத்துக் கொல்வதற்கு சதிமுயற்சிகளை சில பிரதானிகள் மேற்கொண்டிருந்தனர். ஆலயத்துக்கு வரும் மன்னர் அமருவதற்கு அமைக்கப்பட்ட நாற்காலியின் அடியில் சுரங்கம் வெட்டப்பட்டு, பயங்கர ஈட்டிகள் வைக்கப்பட்டு, அது வெளியே தெரியாதவாறு நாற்காலியைச் சுற்றி துணியால் மூடிவிட்டிருந்தனர். இதைச் செய்து முடிக்கும் வரை பார்த்திருந்த ராஜவிசுவாசியான கலகொட என்ற மதகுரு, தன்னுடைய மஞ்சள் அங்கியை அகற்றிவிட்டு சாதாரண உடையில் அரண்மனைக்குள் பிரவேசித்து மன்னரிடம் இதை வெளிப்படுத்திவிடுகிறார். ஆலயத்துக்கு வந்த கீர்த்தி சிறிராஜசிம்மன் எதையும் அறியாததைப் போல நேரத்தைக்கடத்தி பாவணை செய்துவிட்டு நாற்காலியில் அமரவேண்டிய கடைசிநேரத்தில் நாற்காலியை மூடியிருக்கும் துணியைத்தன் கைப்பட அகற்றிவிடுகிறார். சதிகாரர்களின் செயலி அம்பலத் துக் கு வருகின்றது. ஆலயம்
கண்டிராசன் கதை 18 சாரல்நாடன்

அல்லோலகல்லோப்படுகின்றது. போலி மேடையில் அரங்கேற இருந்த சதி நாடகம் நிறுத்தப்பட்டு நான்கு பிரதானிகள்சமனக்கொடி அதிகாரி, மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப் பொல திசாவ, என்பவர்கள் சிரச் சேதம் செய்யப்படுகின்றனர். சதிக்கு உடந்தையாக இருந்த சியாம்நாட்டு மதகுருவும், சங்கராஜாவும் மன்னிக்கப்பட்டு உயிர்பிழைக்க அநுமதிக்கப்படுகின்றனர். i. s.
இரண்டாம் ராஜசிம்மன் காலத்தில் (1635 - 1687) சதி செய்தவர்கள் அத்தனைப்பேரும் சிரச்சேதம் செய்யப்படடனர். கீர்த்தி சிறிராஜசிம்மனின் (1747 - 1782) இச்செயல் குறிப்பாக பகிரங்கமாக சதித் திட்டம் அம்பலமாக்கப்பட்டதன் பின்னால் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து உயிர்பிச்சை கொடுப்பதை மக்கள் மிக உயர்வாக மதித்தனர். நுாற்றாண்டு இடைவெளியில் வளர்ந்த மானுட நாகரீகமென இதைக் கொள்ளலாமா? இதற்கு பிறகு அரண்மனையை விட்டு வெளியே நடமாடுவதை மன்னர் குறைத்துக்கொண்டார். நரேனப்ப நாயக்கர் தரும் உணவை மாத்திரமே உட்கொண்டார் இது நரேனப்ப நாயக்கர்களுக்குள் பூசலைத் தருவித்தது. நரேனப்ப நாயக்கருக்கும் நடுக்காட்டுச் சாமியாருக்கும் போட்டி எழுந்தது. ஆத்திரமுற்ற நடுக்காட்டுச் சாமியார் அரசனை (தம் மருமகனை) கொல்வதற்கு முயற்சித்தார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. கீர்த்தி சிறி ராஜசிம்மன் நடுக் காட்டுச் சாமியாரை இந்தியாவுக்கு நாடு கடத்தினார். இவ்விதம் பிரதானிகளினதும், தம் சொந்த மாமனாரினதும் கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்த கீர்த்தி சிறி ராஜசிம்மன் டச்சுக்காரர்களின் போர் முயற்சிகளையும் இரண்டுமுறை தம் ஆட்சிக் காலத்தில் சந்திக்க நேர்ந்தது. m
இதனால் தான் 1760க்கு பிற்பட்ட கண்டிய சரித்திரம் உள் நாட்டுச் சரித்திரமாக இல்லாது, கரையோர மாகாணத்து
சாரல்நாடன் 9 கண்டிராசன் கதை

Page 13
சரித்திரமாகவும் இல்லாது, வெளிநாட்டுடனான சரித்திரமாக அமைந்திருக்கிறதென்று லெனோரா தேவராஜா குறிப்பிடுகிறார். தன் படைகளுடன் டச்சுப்பகுதிகள் சிலவற்றை கைப்பற்றினாலும் அவற்றைத் தொடர்ந்து தம் வசம் வைத்திருக்கக் கண்டியர்களால் முடியாதுபோனது. முஸ்லிம் வியாபாரிகளுக்கூடாக சென்னை சென். ஜோர்ஜ் கோட்டையிலிருந்த ஆங்கிலேயர்களுடன் தொடர்புகொண்டு டச்சுக்காரர்களை கரையோர மாகாணங்களினின்றும் அகற்ற முயன்றார். பைபஸ் என்ற ஆங்கிலேயன் துாதுவனாக கண்டிக்கு வந்து போனான். எவ்வளவு தான் இரகசியமாக இந்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பிரதானிகளில் சிலர் டச்சுக்காரர்களிடம் இவைகளைக் காட்டிக் கொடுத்தனர். இதனால் ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் கண்டி மீது படையெடுத்தனர். வானென் என்பவரின் தலைமையில் 1764ல் ஒருமுறையும் 1765ல் மறுமுறையும் படையெடுத்தனர். இரண்டாவது படையெடுப்பின் போது அவர்கள் குருநாகல் வரை வந்து விட்டனர். கீர்த்திசிறி ராஜசிம்மன் அவர்களுடன் சமாதானம் பேசினார். வெற்றியின் வாயிலில் தானிருப்பதாக எண்ணிய வானெக் அதை ஏற்கவில்லை.
இன்னும் "எட்டு நாட்களில் நான் கண்டியில் இருப்பேன். அப்போது பேசி கொள்ளலாம்’ என்று ஆணவமாக பதிலளித்தான். நூற்று அறுபது ஆண்டுகளாக மேலைத்தேச தாக்குதலை சமாளித்திருக்கும் கண்டி இராஜதானியின் வீரர்களை இந்தப்பதில் கொம்பு சீவிவிட்டது.
பெப்ரவரி பன்னிரென்டாம் தேதி டச்சுப்படை கட்டுகாஸல்தொட்டைக்கு வந்தது. மன்னரின் உல்லாச மாளிகை அவர்கள் வசமானது. செய்தி அறிந்த மன்னர் கண்டியிலிருந்து தலைமறைவானார். தலதா மாளிகையின் தந்தபல்லைக் காக்கும் பொறுப்பை மதகுருமார்கள் ஏற்றனர். கீர்த்தி சிறி விக்கிரமராஜசிம்மன் மாளிகையிலிருந்து மறைவிடம் தேடிப்போனபோது கண்ணிர் வடித்த காட்சியை நேரில் பார்த்த
கண்டிராசன் கதை 2O சாரல்நாடன்

ஒருவர் வர்ணித்திருந்தார். கண்டியைக் கைப்பற்றிய டச்சுப்படை மன்னர் மாளிகையில் கிடைத்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கண்டு வியந்தது. கறுப்பின மன்னரிடம் இத்தனைப் பொருட்களா? என்று மலைத்தது.
மன்னர் ஹங் குராங் கட்டை மாளிகையரிலி ஒளிந்திருப்பதாக அறிந்து அங்கு போன போது மாளிகை வெறிச்சோடியிருந்தது. மாளிகைக்குத் தீயிட்டனர். ஆத்திரத்தை இப்படி தீர்த்துக் கொண்டனர். மன்னரை. எங்கேவென்று தேடுவது?
கண்டியின் மலைகள் சூழ்ந்த பகுதிகளுக்கு வந்த டச்சுக்காரர்களை இயற்கை சீண்டியது. ஆறுகள் பெருக்கெடுத்தோடியது, வெள்ளம் கரைபுரண்டோடியது. கூடவே காட்டு மலேரியா நோயும் பரவத் தொடங்கியது. பெருகிவரும் மழையும், பரவிவரும் காட்டுக் காய்ச்சலும் அவர்களைப் பின்வாங்க செய்தது. காட்டுக்காய்ச்சலுக்கு கண்டிய வீரர்கள் பழகிப்போயிருந்தனர், கறைந்தடிப் போர் முறையிலும் வல்லவராயிருந்தனர். எஞ்சியிருப்பவர்களை மலை உச்சியிலிருந்து உருணி டு வரும் பாறைகளும் , உடைந்திருக்கும் மரங்களிடையே மறைந்திருந்து தாக்கும் வீரர்களும் பழிவாங்கினர். வானெக்கின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. பொறியில் அகப்பட்டு விழித்தான். கொரில்லா படைத்தாக்குதலுக்குப் பேர்போன கண்டிய நாட்டு வீரர்கள் ஒரு சரித்திரம் படைத்தனர், இருசாராருக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. 1766 ஒப்பந்தம் என்று குறிக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் படி இருசாராரும் - ஒருவர் எல்லையை இன்னொருவர் தாண்டாதிருக்க - ஒத்துக்கொண்டனர்.
கர்த் தி சிறி ராஜசிம் மண் ஆட்சியரிலி முப்பத்தைந்தாண்டுகள் தொடர்ந்தார். நாயக்கர் வம்சத்தில் இவரது ஆட்சியே நீடித்த வரலாற்றைக் கொண்டது. அவரது மரணத்தின் பின்னர் அவரது சகோதரன் இராஜாதி ராஜசிம்மன் என்ற பெயரில் அரசு கட்டிலேறினார். அவரது ஆட்சி பதினாறு
சாரல்நாடன் *? 』、 கண்டிராசன் கதை

Page 14
வருடங்கள் தொடர்ந்தது. அவரும் தன் சிறுவயது முதல் கண்டியில் வாழ்ந்திருந்ததால் கண்டியச்சிங்களச் சூழலை அறிந்தும், புரிந்தும், வைத்திருந்தார். அவரது காலத்தில் டச்சுக்காரரின் பலம் குறைந்து காணப்பட்டது. ஆங்கிலேயரின் பலமும் குறைந்து காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் கடலில் பலம் பெற்றுவந்தனர். 1795ல் திருகோணமலை துறைமுகத்தை அவர்கள் கைப்பற்றியிருந்தனர். கண்டிய இராஜதானியில் அவர்கள் கவனம் விழ ஆரம்பித்தது. கண்டி அரசனின் ஆதரவைப் பெற முனைந்தனர். வர்த்தகத்தில் பல சலுகைகள் தரவும் முயன்றனர். இவைகளை நம்பலாமா? இதுவும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போன்றச் செயலாகுமா? என்ற யோசனைகள் நடந்து கொண்டிருக்கும் போதே மன்னரின் மரணம் நேர்ந்தது (1798), அவருக்கு வாரிசாக பிள்ளைகள் எவருமிருக்கவில்லை.
மேற்படி பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆங்கிலேயருடன் தொடர்பு கொண்டிருந்தவன் பிலிமத்தலாவை என்கிற முதன் மந்திரி. இவன் சிங்கள பிரதானிகளுக்குத் தலைமை வகித்தான். இவனுக்கு போட்டியாக நாயக்க பிரதானிகள் இருந்தனர். பிலிமத்தலாவை ஆட்சியைத் தானே கைப்பற்றுவதற்கு முயற் சிகளெடுப்பதை அவர்கள் எதிர்த்தனர். பிலிமத்தலாவையின் உறவினர்கள் பலர் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். இரண்டாவது திசாவையாக இருந்த எகலப்பொல அவனுக்கு மைத்துனன் முறையாவான். மாத்தளை, ஊவா பகுதகளில் தரிசா வையாக இருந்தவர்களும் பிலிமத்தலாவையின் உறவினர்களே. இவ் விதம் பிலிமத்தலாவையின் செல்வாக்கு இருந்த போதும் அவன் ஆணவம் பிடித்தவனாகவே மற்றவர்களின் கண்களுக்குத் தெரியலானான். அதை விரும்பாத சில சிங்கள பிரதானிகள் நாயக்க பிரதானிகளுடன் இணைந்து ஓர் எதிர்ப்பியக்கத்தை நடத்த ஆரம்பித்தனர். அரசனாகும் பிலிமத்தலாவையின்
கண்டிராசன் கதை . சாரல்நாடன்
 
 
 

திட்டத்துக்கு அவர்கள் எதிராக இருந்தனர். பொது மக்களும் அரசவம்சத்தை சேர்ந்த ஒருவரே அடுத்து ஆட்சிக்கு வருவதைவிரும்பினர். சூழ்நிலை இன்னும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்து கொண்ட பிலிமத்தலாவை தன்னுடைய விருப்பப்படி நடக்கக் கூடிய ஒரு பொம்மை மன்னனை உருவாக்கத்தீர்மானித்தான்.
இராஜாதிராஜசிம்மனுக்கு இரண்டு நாயக்க மனைவிகளிருந்தனர். அவர்களின் சகோதர்கள் எண்மர் இருந்தனர். முத்துசாமி, புத்தசாமி, சின்னசாமி, அப்புசாமி, அய்யாசாமி, ரங்கசாமி, கந்தசாமி, கண்ணுச்சாமி என்ற அவர்களில் முறையாக ஆட்சிக்கு வரவேண்டியவர் முத்துசாமி என்பவரே. பிலிமத்தலாவை தன்னுடைய திட்டத்துக்கு ஒத்து வருபவராக வயதில் இளையவரான கண்ணுச்சாமியை தேர்ந்தெடுத்தான். அவரையே அரசராக ஆட்சி பீடத்தில் அமர்த்தினான். முத்துசாமி அரசுரிமைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதை உணர்ந்திருந்த பிலிமத்தலாவை அவரைக் கொல்லுவதற்கான காரியங்களில் ஈடுபடலானான். இதை அறிந்த முத்துசாமி ஆங்கிலேயரின் நோர்த் தேசாதிபதியிடம் தஞ்சம் புகுந்தார். அவருக்கு அபயங்கொடுத்து, மெய்காப்பின் பொருட்டு ஒரு சிறு தளமுங் கொடுத்து, யாழ்ப்பாணத்து கோட்டைக்குள்ளேயிருக்கும் இராசமாளிகையில் அவரைத்தங்கச் செய்தான்.
முத்துசாமிக்கு இவ் விதம் நோர்த் தேசாதிபதி ஆதரவளித்தது, சமயம் வரும் போது அவரைப்பாவித்து கண்டியுடன் பகைமைப் பாராட்டலாம் என்ற உள்நோக்கிலேயே. கண்ணுச்சாமி, விக்கிரமராஜசிம்மன் என்ற பெயரில் ஆளத் தொடங்கினார். அவரது ஆட்சி பதினேழு ஆண்டுகள் (1798 - 1815) நீடித்தது. அவரே கண்டியின் கடைசி மன்னராக விளங்கினார். அவரது கதை சுவைமிகுந்த நாடக பண்பில் அமைந்த வரலாறு.
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 15
விக்கிரம ராஜசிம்மன் 1798-1815 கண்டியை ஆண்ட கடைசி மன்னர்
| CBGBOTISUTCTGAT.
 
 

ானி
னி ரெ
见
h
5 DDT6

Page 16
விக்கிரம ராஜசிம்மனின் ஆட்சி
சிறிராஜாதி ராஜ சிம்மனுக்குப் பிறகு அரசுகட்டிலில் யாரை அமர்த்துவதென்பதை தீர்மானிக்க மூடிய கதவுகளுக்குப் பின்னால் மந்திராலோசனை நடந்தது. பிலிமத்தலாவை தன் திட்டத்தை மல்வத்தை மகாநாயக்க தேரோவிடம் கூறினான். “நீ நினைப்பது போல உன் பேச்சை இன்று கேட்பவன் நாளை கேட்காமல் அடம் பிடித்தால் என்ன செய்யப்போகிறாய்” என்று அவர் கேட்டப் பொழுது அவனால் பதில் கூற முடியவில்லை. பாகனின் அங்குசத்துக்கு கட்டுப்படாத யானையைப் போல அப்போது சர்வநாசம் ஏற்படும் என்று கூறினார். சற்று யோசித்த பிலிமத்தலாவை “அப்படி நேராது. நேர்ந்துவிட்டால் ஆங்கிலேயரின் துணையைப் பயன்படுத்த வேண்டியது தான்’ என்று தீர்மானமாகக் கூறினான். கண்ணுச்சாமியை மன்னனாக அறிவித்தான். அவனது அறிவித்தல் நாயக்கர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் அரசி (ராஜதிராச சிம்மனின் முதல் மனைவி) கைது செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். கம்பளை நாயக் கரும் சிறைவைக்கப்பட்டார். அரவாவளை என்ற இரண்டாவது அதிகாரி கொலைசெய்யப்பட்டார். இதனால் பீதியுற்ற மன்னரின் உறவினர் பலரும் ப்ரிட்டிஷ் ஆட்சியினரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னால் தமக்கு உதவும் என்று அறிந்துவைத்த பிரடரிக் நோர்த் (ஆங்கிலத் தேசாதிபதி) அவர்களுக்கு தஞ்சம் கொடுத்தான்.
ரன்சிங் மகாராஜ் என்றறியப்பட்ட தஞ்சாவூர் நாயக்கர் ஒருவர் கண்டிக்கு அரசனாவதற்கு பிரட்ரிக் நோர்த் மூலம் முயற்சிகள் மேற்கொண்டதைக் கூறும் ஒரு குறிப்பும் உள்ளது. விக்கிரம ராஜசிம்மன் மன்னனான சில நாட்களிலே தானே முடிவுகள் மேற்கொள்ள முயன்றார். அவரது வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. விக்கிரம ராஜ சிம்மன் இலங்கையில் கண்டிராசன் கதை 26 சாரல்நாடன்

பிறந்தவர், வேட்டைப்பிரியர், கேளிக்கைகளில் அதிக நாட்டம் மிகுந்தவர். மிகவும் திடகாத்திரமான உடல் கட்டமைப்பும் பார்வைக்கு எடுப்பான தோற்றமும் கொண்டவர். s
மூன்று மொழி பெயர்ப்பாளர்கள் புடைசூழ, ஏழுதிரைகளுக்குப் பின்னால் அவர் மன்னனாக வீற்றிருந்த அற்புதக் காட்சியை ஆங்கிலேய மேஜர்கள் அழகுற வர்ணித்துள்ளனர். அவர்கள் அப்படி எழுதுவதற்கு காரணமிருந்தது. கரையோர மாகாணங்களில் ஆட்சி செய்யும் பொறுப்பேற்றிருந்த அவர்களால் மலைகள் சூழ்ந்த கண்டிராஜ்யத்தைப்பற்றி கனவுகள் காண மட்டுமே முடிந்தது. மன்னனின் அநுமதிபெற்று பண்டமாற்று வியாபாரத்துக்குச் செல்வதைத் தவிர அவர்களால் ஆவது வேறென்ன இருக்கமுடியும் என்ற நிலையில் போர்த்தளமாக விளக்ககூடிய இயற்கை அரண்மிக்க சூழலில் மன்னனின் தோற்றம் அவர்களுக்கு தங்களின் மன்னனாயிருந்த எட்டாம் ஹென்றியை நினைவு படுத்தியது. அதை எழுத்தில் வடித்துவிட்டனர்.
தனது பதவிக்கு நாயக்கர் வம்சத்திடமிருந்தும், சிங்கள வம்சத்திடமிருந்தும் போட்டிகள் இருப்பதை அவர் அறிவார். போதாதற்கு ஆங்கிலேயர்கள் தமது இராஜதானியின் மீது கண்வைத்திருப்பதையும் அறிவார். தமது எதிரிகளை ஒவ்வொருவராக கறுவறுக்கும் பணியில் ஈடுபட்டார். பதிலுக்கு, ! டரிலி மத்தலாவை தன் உள கதிடைக் கைகளை செயல்படுத்துவதில் ஈடுபட்டான். பிரட்ரிக் நோர்த்திடம் தொடர்புகளை இரகசியமாக பேணத் தொடங்கினான். 1800ல் பிரிட்டிஷ்காரர் கண்டியைப் பிடிப்பதற்கு உதவினால் தான் மன்னனைக் கொலை செய்வதாகக் கூறினான். அவனது திட்டத்தின் பாரதுாரமான விளைவுகளை எண்ணி நோர்த் தேசாதிபதி அதற்கு உடன்படவில்லை. அவர் ஒரு ராஜ்யத்தின் பிரதிநிதி. இன்னொரு ராஜ்யத்துடன் மோதுவதற்கு ஒரு வலுவான காரணமிருக்க வேண்டும் என்பதை அவர் அறிவார். கண்டி ராஜ்யத்தின் மீது போர் தொடுப்பதற்கு ஒரு
சாரல்நாடன் டிஐடிடி 27 கி. கண்டிராசன் க்தை

Page 17
வெளிப்படையான காரணத்தை அவர் காண விரும்பினார். பிரதானிகளின் இரகசியத்தகவல்கள் மாத்திரமே அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்தன. தகவல்கள் வர,வர கண்டியின் மீது அவரது ஆசை அதிகரிக்கத் தொடங்கியது. பிரட்ரிக் நோர்த் பிரித்தானிய ராணுவத்தில் “மலே ரெஜிமண்ட்” ஒன்றைத் தோற்றுவித்திருந்தார். அது உண்மையில் கண்டிமீது படையெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி என்பதை உணர்ந்த பிலிமத்தலாவை அதற்கு கண்ணும் காதும் வைத்து கண்டியில் வதந்திகளைப் பரப்பிவிட்டான். இருசாராருக்கும் பகை மூண்டது. பகை மூண்டு போர் சூழ்ந்தாலும் பிலிமத்தலாவைக்கு நோர்த் தேசாதிபதியின் உறுதிமொழி கிடைக்கவில்லை எனவே மன்னனுக்கு ஆதராவாயிருந்து நோர்த்தின் படையெடுப்பை எதிர்ப்பதென்று தன் முடிவை மாற்றிக்கொண்டான்.
கண்டியை நோக்கிய பிரிட்டிஷாரின் முதல் படைஎடுப்பு மக்டவெல் தலைமையில் நடந்தது. கண்டியின் இயற்கைத் தன்மையை படித்து வைத்திருந்த, பிலிமத்தலாவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு போர் நீடிக்கவேண்டும். இயற்கையின் சீற்றம் தொடங்கிவிட்டால் பிரிட்டிஷாரை எதிர்கொள்ள இலகுவாய் முடியும் என்பதை உணர்ந்து உள்ளுர் வாசஸ்தலத்துக்கு - ஹங்குரன் கட்டைக்கு மன்னனை குடிபெயரச் செய்தான். பிலிமத்தலாவையின் வார்த்தைகளால் துாண்டப்பட்ட பிரடரிக் நோர்த் - பிலிமத்தலாவைக்கு உறுதி மொழியைக் கொடுக்காத பிரட்ரிக் நோர்த் கண்டியில் அதிக எதிர்ப்பில்லாத சூழ்நிலையில் கண்டியை கைப்பற்றினார். கண்டியின் ஆட்சி பொறுப்பை முத்துசாமியிடம் வழங்குவதென்று முடிவெடுத்தார். அதன் படி யாழ்ப்பாணத் தரிலிருந்த முத்துசாமி கணி டிக் கு வரவழைக்கப்பட்டு 1803 மார்ச் மாதம் 22ம் நாள் மன்னனாக்கப்பட்டான். முத்துசாமியின் நெடுநாளைய கனவு நிறைவேறியது. ஆனால் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் விக்கிரமராஜசிம்மனின்
கண்டிராசன் கதை சாரல்நாடன்
 

விசுவாசிகளாகவே இருந்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் அவரின் ஆட்சியில் மலர்ந்த பெளத்தமத நடவடிக்கைகளையும், கலை, கலாசார மேம்பாடுகளையும் அவர்கள் விரும்பினர். மக்கள் ஆதரவில்லாமல் எத்தனை நாட்களுக்கு மன்னனாக இருக்க முடியும்? மறுபக்கம் பிலிமத்தலாவை இயற்கையின் காலமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். இயற்கையின் சீற்றம் ஆரம்பமானது, காற்றும் மழையும் கண்டியை குலுக்கின. கூடவே காட்டு மலேரியாவும் பரவத் தொடங்கிற்று. பிலிமத்தலாவை தன் படைகளுடன் ஆங்கில படைகளைத் தாக்கி நிர்மூலமாக்கினான். ஆங்கிலேயபடை நிலைகுலைந்தது. அவர்களுக்குத் தலைமை வகித்த மேஜர் டேவி சரணாகதி அடைந்தான். ஆங்கில தளபதிகளில் தன்மானம் மிகுந்தவாகள் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு மாண்டனர். மலே ரெஜிமண்டைச் சேர்ந்த பல வீரர்கள் கண்டிய படைகளுடன் சேர்ந்து கொண்டனர். ஜூன் 24ம் திகதி கண்டி பழையபடி விக்கிரம ராஜ சிம்மனை மன்னாக ஏற்றுக்கொண்டது. வெறும் தொன்னுாற்று நான்கு நாட்கள் மன்னனாக இருந்த முத்துசாமி விக்கிரம ராஜசிம்மனால் சிரச்சேதம் செய்யப்பட்டார். முத்துசாமியைக் காவு கொடுத்து தன்னைக்காத்துக் கொண்டார் நோர்த் தேசாதிபதி. அதன்பிறகு கண்டியுை, நினைப்பதற்கு அவர்கள் பயந்தனர்.
பிரடரிக் நோர்த்துக்குப் பிறகு 1805ல் மெயிட்லாந்து, 1812ல் பிரவுண்ட்ரிக் என்று தேசாதிபதிகளின் மாற்றம் ஆங்கில ஆட்சியில் நடந்தது. கண்டி தனி இராஜதானியாக முன்பிருந்ததைவிட ஆங்கிலேயர்களின் கனவுகளைத் துாண்டிவிடும் முறையில் நடந்து கொண்டிருந்தது. படைபலத்தையும், நிதிவசதியையும் பெருக்குவதில் ஆங்கிலேய அரசு கவனம் செலுத்தியது. மீண்டும் அரச கட்டிலேறிய விக்கிரமராஜ சிம்மன் பிலிமத்தலாவையை எண் ணி அச் சமுற்றார். அவனது ஒவ்வொரு நடவடிக்கையைப்பற்றிய துல்லியமானச் செய்திகளை அறிந்து
R M % கண்டிராசன் கதை 8 ۳. ۰ تا هم به جهان، با تا ۵۰۰،۰۰۰ ه . آ66-gFITJ6lopITL

Page 18
கொள்வதில் நாட்டம் செலுத்தினார் அதற்கு வழி? அவனது மகள் மெனிக்கேயை தன் மனைவிகளில் ஒருத்தியாக்கிக் கொள்வதுதான். மன்னனின் இந்த ஆசைக்கு பிலிமத்தலாவை சம்மதம் தெரிவித்தான். அவனுக்கு என்ன விலை கொடுத்தேனும் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதுதான் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டித் தீர்ப்பதற்கு உரிய நேரத்தை எதிர்பார்த்திருந்தனர்.
வெறுமனே பெளத்த ஆலயங்களுக்குச் செல்லுவதும் அதற்கு நிலம் கொடுப்பதுமாக தனது நாட்களைச் செலவழிப்பதில் விக்கிரமராஜசிம்மனுக்கு விருப்பமில்லை. ஆண்டுக்கொருமுறை தந்தகோயிலின் புனித சின்னத்தை கையிலேந்தி மக்கள் முன் நடந்து காட்டி மக்களிடம் அங்கீகாரம் பெறும் வைபவத்தை விழாவாக நடத்த விரும்பினார் சூளவம்சம் இந்த வைபவம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது என்று கூறுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் மன்னர் எட்டுவெண்குதிரைகள் சூழ பவனி வந்துகொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும். 1805க்கு பிறகு இந்த விழாதொடர்ந்து ஐந்தாண்டுகள் நடந்தது என்று டி.பி.கப்பகொட தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இந்தவிழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலம் வரும்போது கண்டிப்பிரதேசத்தில் பல கோரளைகலிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தவிரவும் அவர்களின் தகுதியைப் பறைசாற்றும் கொடிகளை ஏந்தி ஆலவட்டம், விருதுகள், சூழ கலந்து கொள்வதும் வழக்கமாக இருந்தது. தலதா மாளிகையரின் சூழலை இன்னும் வனப்புள்ளதாக்குவதற்கு அதைச்சுற்றி தெப்பக் குளம் கட்டினால் என்ன என்ற யோசனை மன்னனுக்குத் தோன்றியது. சுற்றிலும் இருக்கும் வயல்கள் அழிந்துவிடும் மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என்று பிலிமத்தலாவை அதை எதிர்த்தான்.
கண்டிராசன் கதை 30 சாரல்நாடன்

மக்களின் மனங்கவரும் மன்னனாக விக்கிரம ராஜசிம்மன் உருவாகிவருவதை பிலிமத்தலாவையால் பொறுத்துக்கொள்ள மடியவில்லை. மூன்று முறை மன்னரைக் கொலை செய்ய முயன்றும் முடியாது போயிற்று. நான்காவது முயற்சியில் ஈடுபட்டபோது, மெனிக்கே தந்த தகவலால்,(தந்தைக்கு எதிராக மகள்) கையோடு பிடிபட்டான். பதின்மூன்று ஆண்டுகள் பொறுமைக்காத்த மன்னனால் இம்முறை பொறுத்தக்கொள்ள முடியவில்லை. மேலும் தன்னுடைய கனவாக இருந்த நுவரவாவி உருவாகி வருகையில் தனக்கெதிராக வேறெதையும் எவராலும் தன்னால் செய்யமுடியாது என்று நினைத்து, பிலிமத்தலாவையைச் சிரச்சேதம் செய்விக்க கட்டளையிட்டார். அவன் 1811 ஜூன் மாதம் கொல்லப்பட்டான்.
மன்னன் தன் தீர்மானத்தைச் செயற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார். கண்டிய விவசாயிகள் இராசகாரிய முறையில் அதைக் கட்டுவிக்கப்பணிக்கப்பட்டனர். தெப்பக்குளம் அழகிய வடிவில் உருவானது. 18-10-1812ல் தெப்பக்குளம் கட்டிமுடிக்கப்பட்டது என்று ஜோன் டொய்லியின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
பிலிமத் தலா வையரின் மரணம் 96). 60Tg5 உறவினர்களிடையே மனக் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிலிமத்தலாவையின் தனிமனித செல்வாக்கால் வெறுப்புற்றிருந்த பிரதானிகளும், பொதுமக்களும் அதிக அளவில் இருந்தனர். அவனது சதிமுயற்சிகளால் அவர்கள் வெறுப்படைந்நிருந்தனர். அவனது இடத்துக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த எகலப்பொலை நியமிக்கப்பட்டான். அவன் பிலிமத்தலாவைக்கு மருமகன் முறையாவான். அவனும் பேராசைப்பிடித்தவன். அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசை மிகுந்தவன்.
சிங்கள மக்கள் நிறைந்துள்ள கண்டி மண்ணில் தமது ஆட்சியைக் கொண்டு நடாத்திய நாயக்க மன்னர்கள் சிங்கள பிரதானிகளை முற்றாக ஒதுக்க முயலவில்லை. அவர்களை
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 19
முன்னிறுத்தியே தமது காரியங்களை செய்து வந்துள்ளனர். அவர்களுக்குள் சிண்டு முடியவிட்டு அவர்கள் மேற்கொள்ளும் சதி முயற்சிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, அவர்களை தண்டிக்க முடிந்தது அவர்களுக்கிருந்த ஒரே வழி அதுதான். நாயக்கர்களின் சபா நடவடிக்கைகளில் அதிகளவு மதுரையின் செல்வாக்கு காணப்படுகிறது. அங்குள்ள கலாசாரம், பண்பாடு, நாட்டியம் அகியவைகளில் அது தெட்டெனப் புலனாகிறது. மதுரையிலிருந்து நடனப் பெண்கள் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மன்னனைக் கையால் தொட நேர்வது மரணதன்டனைக்கான குற்றம் என்ற நம்பிக்கை மக்களிடமிருந்தது.
மன்னரை தெய்யோ என்றும் அவரது உறவினர்களை நாயக்க தெய்யோ என்றும் மக்கள் அழைத்தனர். மன்னருக்கு பரிசுப் பொருட்களாக அராபிய குதிரைகளையும், நாய்களையும் கொண்டுவந்தாலும் அவைகளுடன் இணைத்திருந்த துணிகளை தண்ணிரில் கழுவிய பின்னரே டச்சுத் துாதுவர்கள் கண்டி மன்னன் அரண்மனைக்குள் அநுமதிக்கப்பட்டனர். மகாவாசல் என்பது மன்னரைக் குறிக்கும் ஒரு சொல்லாக அரண்மனை வட்டாரத்தில் வழக்கிலிருந்தது. அரண்மனையின் பேச்சு வழக்கு பரிபாஷையில் அமைந்திருந்தது. குறிப்பாக மன்னரைப் பற்றி குறிப்பிடும் போதும், அவரது சாப்பிடுவது, துாங்குவது, நடப்பது போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பதற்கும் பரிபாஷைகள் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் அரண்மனை ரகசியங்கள் பேணப்பட்டன. பொதுவாக நடுச் சாமத்துக்குப் பிறகே வெளிநாட்டுத்துாதுவர்கள் மன்னரைக் காண்பதற்கு அநுமதிக்கப்பட்டனர். ஜோன் பைபஸ், ஹியூஜ் பொய்ட் என்பவர்கள் மன்னரை இரவு 1.30இலிருந்து 5.30 வரையிலுமான நேரங்களிலேயே சந்திக்க அநுமதிக்கப்பட்டனர் என்று குறிப்புகள் கூறுகின்றன.
கண்டியில் நாயக்க மன்னர்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதிகளைத் தெரிவிக்கும் கடிதங்கள்
கண்டிராசன் கதை சாரல்நாடன்
 

ஆங்கிலத்தில் ஏராளமாக உள்ளன. தம்மிடம் அடைக்கலம் தேடியும், உதவி கோரியும் வந்தவர்களைப் பற்றி ஆங்கில தேசாதிபதிகள் மேஜர் ஜெனரல்கள், லெப்டினர்கள் மேலதிகாரியின் கவனத்துக்கு எழுதிய கடிதங்கள் இவைகளில் கவனத்துக் குரியவைகள். அவ்விதம் எழுதப்பட்ட இருநுாற்று எட்டு கடிதங்களைத் தொகுத்து “சிறிவிக்கிரமவும் பிரெளன்றிக்கும் எகலப்பொலயம்’ என்ற தலைப்பில் தென்னக்கூன் விமலானந்த ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். 1811 ஜூன் மாதம் பிலிமத்தலாவை சிரச்சேதம் செய்யப்பட்டதை அடுத்து, அவனுக்கு விசுவாசமாக இருந்த அறுபது மலே வீராகள் தம்மிடம் வந்து தஞ்சம் புகுந்ததையும், அவர்களில் அரண்மனை நடவடிக்கைகளை நன்கு அறிந்த, முகாந்திரமாக அரண்மனையில் பணியாற்றிய அசனாக்கப்டன் என்பவனும் இருந்தான். தென்னிந்தியா நாகபட்டினத்திலிருந்து தமிழ் பேசும் மலபார்கள் 900 பேர் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விலை மதிப்புள்ள இலங்கை காலனியை ஒரு போதும் நாம் விடக்கூடாது. மத்திய மலை நாட்டில் இருக்கும் கண்டி மன்னனை எப்படியும்நாம் அடக்கவேண்டும் என்று லிவர்பூல் பிரபுவுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து மேஜர் ஜெனரல் வில்சன் எழுதுகிறார். (கடிதம் எழுதிய திகதி 11-09-1811.)
1812இல் பிரவுண்றிக் தேசாதிபதியாக இலங்கையில் பதவி ஏற்றார். கண்டி இராச்சியத்துடன் நேசஉறவு இருக்க வேண்டும். அதை சுதந்திர இராச்சியமாக வைத்திருக்க வேண்டும் என் பிரித்தானிய அரசாங்கம் ஆலோசனை வழங்கியது. அவருக்கும் ஆரம்பத்தில் இலங்கையில் வர்த்தகத்தை முன்னேற்றமடையச் செய்வதே நோக்கமாக இருந்துள்ளது. கண்டியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மேஜர் டேவியைப் பற்றிய தகவல்கள் 1803 இருந்து 1813 வரைக்கும் வெளிவராமலேயே இருந்தது.
கண்டியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மேஜர் டேவி
சாரல்நாடன் 33. கண்டிராசன் கதை

Page 20
என்பவரை பற்றிய தகவல்களைப் பெறும் வரையிலாயினும் தாம் மன்னருடன் பகை பாராட்ட விரும்பவில்லை என்றும் தமக்கு மேலும் மேலதிகமாக இந்திய வீரர்கள் தேவைப்படுகிறார்களென்றும் தற்போது தம்மிடம் 2300 ஆங்கில வீரர்களும் 3900 உள்ளுர் வீரர்களும் இருப்பதாகவும் கொழும்பிலிருந்து ரொபர்ட் பிரவுண்றிக் எழதுகிறார். (கடிதம் எழுதிய திகதி 3-11-1812)
எகலப் பொல மாத்தளையைச் சேர்ந்த செல்வ குடும்பத்தில் பிறந்தவன். ஆங்கிலம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்துவம் மிக்கவன், ஹக்கர்ட், டிஒய்லி, டொனால்ட் ஜேம்ஸ் ஆகியோர்களின் குறிப்புகளின்படி அவனது காலம் அரசமாளிகையில் ஏராளமான காதல்லீலைகளுடன் கழிந்ததுள்ளது. ஒரு நாள் மன்னரிடம் அகப்பட்டுக் கொண்டான், மன்னனின் அந்தபுரத்து பெண்ணான அளுத்கம பிசா மெனிக்கேயிடம் காதல் லீலை செய்யப் போய். (இவனைப்பற்றி மிரண்டோ ஒபய சேகர ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்). எகலப் பொல(மதன் மந்திரி), பலகம்ப்பளை (மகா அதிகாரம்) தேவமெய்ய திசாவ, இலங்கக்கோன், ராலஹாமி, திசாவைகள் ஆகியோர் தம்மிடம் உதவிகள் கோரி ஒலைகள் அனுப்பியிருப்பதாகக்கூறும் பல கடிதங்கள் ரொபர்ட் பிரவண்றிக்கால் எழுதப்பட்டுள்ளன. கண்டியில் படை திரட்டுவதாகவும், களுத்துறை ஆற்றின் வழியாக தானமைத்த ஒற்றையடிப்பாதையிலிருந்து அதைத் தம்மால் பார்க்க முடிவதாகவும் அவர் எழுதியுள்ளார்.
எகலப் பொலயின் அநுமதிபெற்று எகனெயிலி கொடிதுவக்கு என்ற சவ்வரக கோறளையின் திசாவை தன்னை வந்து 4-3-1814ல் சந்தித்ததைக் கூறி “என்ன தீங்கு நடந்துவிட்டது?’ என்று தான் கேட்டதற்கு, "என்ன தீங்கு நடக்கவேண்டும்? மன்னனே திருடினால், கொலை செய்தால் வேறென்ன தீமை வேண்டும்?” என்று தன்னைக் கேட்டதாகவும்
கண்டிராசன் கதை சாரல்நாடன்
 

மீண்டும் அடுத்த நாள் இரவு ஒன்பது மணிக்கு வந்து “பிரிட்டிஷார் கண்டி மக்களை காத்தருள வேண்டும். நாங்கள் அந்த சமயத்துக்காக காத்துக்கொண்டிருருக்கிறோம்” என்று கூறியதாகவும், எகனெயிலி கொடிதுவக்கிடம் “மன்னருக்கு மக்கள் தமது ஆதரவை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதை வெளிப்படுத்த வேண்டும்" என்று ஜோன் டி ஒய்லியின் குறிப்புகள் கூறுகின்றன. (கொழும்பிலிருந்து குறிப்புக்கள் எழுதிய திகதி 5-3-1814)
எகலப்பொல தன்னை மீறிச் செயல்படுவதையும், உள்ளுரில் இரகசியமாக மக்களைத் துாண்டி விடுவதையும் கேட்டு மன்னர் அதிர்ந்து போனார்.
சமீப காலங்களில் மக்கள் தம்மீது அதிருப்தி அடைந்தள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. மாளிகையில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவர்களின் ஆத்திரத்துக்கு சிங்கள பிரதானிகள் துாபமிடுகின்றனர்.
பரந்தர உனான்சே, சூரிய கொட உனான்சே மொரதொட குட உனான்ச என்ற பிக்குகளுக்கு வேறு வழியில்லாமல்தான் மரணதன்டனை வழங்கின்ேன். இந்த ராஜிய நடவடிக்கைகளைத் தனக்கு எதிராக பாவிக்க முயன்ற புஸ்வெள திசாவையின் கண்களைத் தோண்டி எடுத்து கொலை செய்வித்தேன். இவை எல்லாம் சிங்கள நாட்டு சமூக அமைப்பிலி மன்னருக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்குள்ளாக செய்யப்பட்டவைகள். இதில் மக்கள் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை என்று மன்னன் திடமாக நம்பினார்.
மலிவத்தை, அஸ் கிரிய, தேவாலயங்களை பேராதனைக்கு மாற்றியதில் சிலருக்கு மனத்தாங்கல்கள் இருக்கலாம். நாயக்கர் பிரதானிகள் தலதா மாளிகையைச் சுற்றி ஆடுகளை வெட்டுவதை இனி நான் அநுமதிக்கக் கூடாது என்று மன்னர் தீர்மானித்துக் கொண்டார்.
சாரல்நாடன்க். 35 ல். கண்டிராசன் கதை

Page 21
மன்னர் குகையில் ராணிகளுடன் ஒழிந்திருந்து பிடிப்பட்டபோது
கண்டிராசன் கதை
36இ சாரல்நாடன்
 
 
 
 

E.
இருக்கும் ஜெனரல் பிரவுண்றிக்கிடம்
ப்பாட்டில்
இராச்சா
கைபற்றப்பட்ட செய்தி கூறப்படுகிறது.
毋 丽 虽 则 年y E= E=, 旧学 s. No. |-
சாரல்நாடன்

Page 22
தன் தேசத்தின் எல்லையில் கண்டிமீது போர் தொடுக்க காத்திருக்கும் ஆங்கில அரசைப்பற்றிய அவருக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் தீவிர கண்பார்வை கொஞ்ச நாட்களாக கண்டி மீது இருப்பதை அறிந்து வைத்திருந்த மன்னர் எகலப்பொலயை நேரடியாக தண்டிக்க விரும்பவில்லை. சப் பிரகமுவவில் அரசு வரிகள் வரவேண்டியிருக்கிறதென்றும் அதைச் சேகரித்து வரும்படியும் பணித்தார். எகலப் பொல போனவன் போனவன்தான். அவனிடமிருந்து எவ்வித தகவல்களுமில்லை. மன்னருக்குச் சந்தேகம் எழ ஆரம்பித்தது. எகலப் பொலக்கு எதிரான பிரதானிகள் எகலப் பொலயையும் , அவனது குடும்பத்தாரையும் சிரச்சேதம் செய்ய அவருக்கு ஆலோசனை நல்கினர். மன்னர் எகலப்பொலயின் மனைவியையும் அவனின் பிள்ளைகளையும் சிறையிலடைத்தார். எகலப் பொலயை பதவி நீக்கம் செய்து. அந்த இடத்துக்கு மொலிகொடை என்பவனை நியமித்தார். மொலி கொட இரத்னபுரிக்குச் சென்று வரி வசூலித்து வந்ததுமல்லாமல் வரிகொடாதவர்கள் 40 பேரை கண்டிக்குள் கொண்டு வந்து கொல்லுவித்தான். கூடவே எகலப்பொல பிரிட்டிஷாரிடம் தஞ்சம் புகுந்துவிட்டதையும் மன்னருக்கு அறிவித் தான் . வெகுணி டெழுந்த விக்கிரமராஜசிம்மன் எகலப்பொலயின் குடும்பத்தை சிறையிலிருந்து தருவித்தான்.
1803ல் நமக்குத்துரோகமிழைத்த பிலிமத்தலாவையின் முடிவு குறித்து நாம் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது எகலப்பொலக்கும் அதே நிலமைதான் வந்திருக்கிறது. அவரது குடும்பத்தைப்பற்றிய பயம் தான் அவருக் கு. எகலப் பொலக் கு முழு அதகாரம் வழங்கப்படவில்லை. நாயக்கர்களின் வார்த்தைக்கு எகலப் பொல யரின் வார்த் தையை விட மதிப் பு அதிகம்கொடுக்கப்படுகிறது. கண்டி அரண்மனையில் இருந்து என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கும் தம்பிமுதலியார்
கண்டிராசன் கதை
, சாரல்நாடன்
 
 
 

கூறுவதைப்பார்த்தால் உடனே போர் தொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். மன்னன் வேறு நாட்டுக்குத் தப்பி போவதற்கு வழியில்லை. முந்நுாறு பேர்கள் தான் தென்னிந்தியாவிலிருந்து மன்னருக்கு உதவிவழங்க வந்திருக்கிறாாகள். வலைக்குள் மாட்டிய மீனைப் போன்ற நிலமையில் கண்டி மன்னன் இருக்கிறான் என்று பிரவுண்ரிக் இங்கிலாந்துக்கு எழுதுகிறார் - (கடிதம் எழுதிய திகதி 5-5- 1814).
இதற்கிடையில் 1814ல் கரையோரப்பகுதியிலிருந்து கண்டிக்குச் சென்ற வியாபாரக் குழுவினர்கள் ஒற்றர்கள் என்று ஐயமுற்று இம்புல்கம என்ற கிராமத்தில் உள்ள துணி வெளுக்கும் சிங்களவர்களால் கொள்ளையடிக்கப்பட்டனர். மஹரவை சேர்ந்த பத்து வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு கண்டி அரசவைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். குற்றவாளியாகக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாறுகை மாறுகால் வாங்கப்பட்டன. வெட்டப்பட்ட அவயங்கள் அவர்களின் கழுத்திலேயே தொங்க விடப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். “கொழும்புக்குச் சென்று எகலப் பொல திசாவையிடம் உங்கள் இரகசிய ஒற்றர் வேலைக்குக் கிடைத்த பரிசைக் காட்டுங்கள்” என்றும் அவர்களுக்கு சொல்லப்பட்டது.
கொழும்பில் அவர்களை அந்த நிலையில் பாாத்த பிரவுண்றிக் மனம் கொதித்தார், வேண்டுமென்றே, தன்னிச்சையாக செய்யப்பட்ட கொடுரச் செயலாக அதைக்கருதினார். கழுத்தைச் சுற்றி தொங்கவிடப்பட்டிருந்த வெட்டப்பட்ட கைகள் அவரது ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்தன. மேலும் கண்டிய இராஜ்யத்திலிருந்து தப்பி ஓடி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்த கிளர்ச்சிக்காரர்களை பின் தொடர்ந்த கண்டிய படையினர் சிலர் பிரித்தானியருக்கு சொந்தமாக இருந்த நிலங்களில் இருந்த குடியேற்றங்களுக்கு தீ வைத்தனர். இச் செயல் பிரித்தானிய அதிகாரத்துக்கு
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 23
ஏற்பட்ட களங்கமாக பிரித்தானிய அரசு கருதியது. கண்டிய இராஜதானியோடு இனியும் நல்லுறவு பேணுவதில் அர்த்தமில்லை. 1803ல் கண்டி படையெடுப்பை நடத்தியபோது இருந்த நிலவரம் இன்று இல்லை. கண்டி மக்களிடையே மன்னருக்கு ஆதரவு குறைந்திருக்கிறது. மூன்று கோறளையிலும் நான்கு கோறளையிலும் நிலைமை மோசமானதாகவே இருக்கிறது. திரிகோணமலையும், மட்டக்களப்பும் கண்டிக்கு விரோதமாகக் காணப்படுகிறது.
தமிழ்ப் பிரதானிகள் மாத்திரமே கண்டிராஜாவுக்கு விசுவாசமாகக் காணப்பட்டார்கள். அவர்களில் பலர் கிழக்கிந்தியக் கம்பெனியில் தங்கள் குடும்பத்தை வைத்திருந்தனர். எனவே அவர்களின் விசுவாசம் மாறக்கு ՑուգԱ 15l.
இது நல்ல ஒரு நிலமையென பிரவுண்றிக் உணர்ந்தார். மன்னன் விக்கிரமராஜசிங்கமும் தனக்கெதிரான சூழ்நிலைகள் கரையோர மாகாணங்களில் வேர் விடுவதைக் கண்டார். கண்டிய இராஜ்யத்துக்கு எதிராக போர் பிரகடனத்தை பிரித்தானிய அரசு செய்தது.
சிறையிலிருந்து எகலப்பொலயின் குடும்பம் ராணி மாளிகைக்கு கொண்டுவரப்பட்டது. அவர்கள் அத்தனை பேரையும் சிரச் சேதம் செய்யும்படி மன்னன் ஆணை பிறப்பித்தான். சிங்கராஜதானியின் சட்டப்படி இராஜதுரோகம் இழைப்பவர்கள் குடும்பத்தோடு சங்காரம் செய்யப்படுவதற்கு இடமிருக்கிறது என்று அரசனை நம்பவைத்ததில் மொல்லிகொடைக்கு பிரதான பங்கு இருக்கிறது.
ராணி மாளிகைக்கு முன்னால் நாத, விஷ்ணு தேவாலயத்துக்கு மத்தியில் எகலப்பொலயின் குடும்பம் நிறுத்தப்பட்டிருக்கிறது. குமாரிஹாமி(எகலைப்பொலயின் மனைவி) பிள்ளைகளுடன் காணப்படுகிறாள். கொலைஞர்கள் உருவியவாளுடன் தண் டனையை நிறைவேற்றத் தயாராகிறார்கள். பின்னாட்களில் கண்டி ராசன் கதையை
கண்டிராசன் கதை 40 * சாரல்நாடன்
 

தயாரித்த பலரும் இந்தக் காட்சிக்கே அழுத்தங் கொடுத்திருந்தனர்.
ஏகை. சிவசண்முகம்பிள்ளை எழுதிய கண்டி ராஜ நாடகத்தில் குமாரிஹாமிப் பாடுவதாக முகாரி இராகத்தில் அமைந்த பாடல்.
என்றன் தவத்துதித்த பாலரே உம்மை
இடிக்கத்துணிந்தனனே பாலரே
சிந்தை கலங்குதடா பாலரே 9) Ltb60)LD
சிதைக்க துணிந்தனடா பாலரே
பத்துமாதஞ் சுமந்தேன் பாலரே 2 b60)LD பதைக்க விடிக்கலானென் பாலரே
முத்தமிட்டு வளர்த்தேன் பாலரே S-L6)
முறியவிடிக்கலானேன் பாலரே
என்று எழுதப்பட்டுள்ளது.
அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பதினொரு வயதுப் பாலகன் லொக்குபண்டா முதலில் கொலைஞர்களைக் கண்டு அஞ்சி கதறி அழுகிறான். ஒன்பது வயது நிரம்பிய மதுமபண்டா தைரியமாக முன்னே வந்து “அழுவதால் பிரயோஜனமில்லை. நமது வம்சத்துக்கே இழுக்கு தரும் செயலாகும் என் தலையை வெட்டுங்கள்” என்று கூறியதாக குறிப்புகள் கூறுகின்றன. அவர்களுடன் மூன்றாவதாக டிங் கிரி மெனிக்கேயும் சிரச் சேதம் செய்யப்படுகிறாள்.
தாயிடம் பால் குடித்தக் கொண்டிருந்த நான்காவது குழந்தையும் இழுத்தெடுத்து பலியிடப்படுகிறது. அப்போதும் மன்னருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அந்த வம்சத்தை அடையாளம் தெரியாமல் சிதைக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றார். சிரச்சேதம் செய்யப்பட்டபின் இத்தலைகளை
1. கண்டிராசன் கதை

Page 24
உரலில் இட்டு உருக்குலையச் செய்வதற்கு குமாறிஹாமி பணிக்கப்பட்டது தான் கொடுமையின் உச்சம். இப்படி ஒரு சம்பவம் எந்த நாட்டிலும் நடந்தது இல்லை. பகிரங்கமாக இப்படிச் செய்வித்ததே விக்கிரமராஜசிம்மனின் அழிவுக்கு காரணமாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
குமாறிஹாமியும், உடனிருந்த இரண்டு பெண்களும் கைகால் கட்டப்பட்டு இடுப்பில் பாரமான ஒரு கல்லும் இணைக்கப்பட்டு நுவரவாவியில் துாக்கி எறியப்பட்டனர். குமாரிஹாமி “தங்களுடைய மரணத்தின் மூலம் தன்னுடைய கணவன் காக்கப்படுவார்’ என்று இறுதியாக கூறினாள். மே 1814ல் இது நடந்தது.
இந்த சம்பவங்களைப் பார்த்திருந்த மக்களுக்கு பேச்சு வரவில்லை. மூச்சுவிடவும் அவர்கள் மறந்து போயினர். அன்றிரவு அவர்கள் எவரும் அடுப்பு பற்றவைக்கவில்லை. மாறாக அவர்களின் மனது பற்றி எரிந்தது. இந்த கொடுங்கோல் ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு நீடிப்பது என்று அவர்கள் ஒவ்வொருவரும் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.
எகலப்பொல தன் குடும்பத்துக்கு பாதுகாப்பில்லை என்பதை அறிந்து வைத்திருந்தான். ஆனால் இத்தனை விரைவாக இந்தக் கொடுரம் நிறைவேறும் என்று எதிர்பாாக்கவில்லை. தான் பிரவுண்றிக்குடன் இணைந்து அவர்களைக் காத்திடமுடியும் என்று அவன் நம்பிக் கொண்டிருந்தான். எகலப்பொலயின் குடும்ப சங்காரம் கொழும்பில் மூழு அளவில் பிரசாரம் செய்யப்பட்டது. கண்டி இராஜ்யம் கொடுமைகள் நிறைந்தது என்று மக்கள் பேச ஆரம்பித்தனர். பிரவுன்றிக் கண்டியின் மீது போர் தொடுப்பதற்கு காரணம் கிடைத்தாயிற்று.
கண்டி மக்களை கொடுங்கோல் அரசனிடமிருந்து மீட்பதற்கே போர்.
கண்டியைப்பற்றிய எல்லாவிதமான தகவல்களையும் பிரவுண்றிக் தேசாதிபதி பெற்றிருந்தார் என்பதை கீழ்க்காணும்
கண்டிராசன் கதை 42 : சாரல்நாடன்
 

குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களைப்
பெற்றிருக்கும் தேசாதரிபத கணி டியைக்
கைப்பற்றாதிருப்பாரானால் அது அவரது பதவிக்கு ஏற்பட்ட
அவமானமாக கருதப்படல் வேண்டும்.
1.
கண்டிராசதானியில் நிரந்தரமாக படைவீரர்கள் எத்தனை அவர்களின் தலைவன் யார்? ஒவ்வொரு திசாவையிலும் இருந்து எத்தனை வீரர்கள் பெறப்படுகின்றனர்? அவர்களிடையே இருக்கும் ஆயுதங்கள் எத்தகையன? வெளிநாட்டு ஆயுதங்கள் எவ்வளவு? மன்னருக்குக் கிடைக்கும் வருடாந்த வருமானம் எவ்வளவு? A. மன்னனின் செல்வங்கள் எங்கெங்கே குவிக்கப்பட்டிருக்கிறன? மன்னனின் அதி நம்பிக்கைக்குரிய பிரதானி யார்? போர் நடத்தக்கூடிய வல்லமை பெற்ற பிரதானி யார்? போர் நடந்தால் மன்னன் தப்பிச் செல்லக்கூடிய இடம் எது? படை எந்த வழிகளில் கண்டிக்கு வருதல் வேண்டும்?
இவைகளுக்கான பதில்களும், கண்டியின் படை
வலிமையை எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் தகவல்களும் இவைகளுள் அடங்கியிருந்தன.
போர் நடக்கும் பட்சத்தில் மன்னன் தன் படையை
எவ்வாறெல்லாம் திரட்டுவான் என்பதறகு அளிக்கப்பட்டிருக்கும் பதில்கள், உள்நாட்டு போர் ரகசியத்தை மாற்றானுக்கு வெளிப்படுத்துவன.
நிரந்தர படை வீரர்கள் மன்னனின் தலைவாசலில் - அரண்மனையில் 300 முஸ்லிம்கள் காவலிலிருக்கின்றனர்.
சாரல்நாடன் 4 கண்டிராசன் கதை

Page 25
100 சிங்களவர்கள் காவலிலிருக்கின்றனர் 300 மலபார்கள் காவலில் அமர்த்தப்படாது சுதந்திரமாகத் திரிகின்றனர்.
திரட்டப்பட்ட போர் வீரர்கள் 25 போர் வீரர்கள் உடபலத்தயிலிருந்து 50 போர் வீரர்கள் உடுநுவரையிலிருந்து 50 போர் வீரர்கள் யடிநுவரையிலிருந்து 70 போர் வீரர்கள் தும்பறையிலிருந்து 300 போர் வீரர்கள் ஹரிஸ்பத்துவயிலிருந்து 300 போர் வீரர்கள் டன்பாரயிலிருந்து 80 போர் வீரர்கள் ஹேவாஹெட்டையிலிருந்து 40 போர் வீரர்கள் வலப்பனையிலிருந்து
சம்பளம் பெறாது, தம் நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பெற்றுக் கொள்ளும் வீரர்கள் (நிலச்சொந்தக்காரர்கள்). இக்குறிப்பில் மலபார்கள் என்ற குறிப்பிடப்படுவது தமிழர்களே
32 மலபார்கள் ஊவா திசாவையிலிருந்து 14 மலபார்கள் சப்பிரகமுவ திசாவையிலிருந்து 36 மலபார்கள் நுவர திசாவையிலிருந்து
(தகவல் தென்னக்கோன் விமலானந்த) மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விதத்தில் பிரவுண்றிக்கின் பிரசாரம் அமைந்திருந்தன. சிங்களவர்களையும் அவர்களது புத்தமதத்தையும் அந்நிய மன்னனின் ஆட்சியிலிருந்து காப்பதற்காகவே இந்த படையெடுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறதென்று கொழும்பில் பிரசாரம் செய்யப்பட்டது. சிங்கள மக்களின் ஏக விருப்பத்தின் பேரில் இது நிகழ்வதாகக் கூறப்பட்டது. பிரசாரம் அத்தனையும் உண்மையல்ல. பிரசாரம் செய்யப்பட்டது போல் மன்னன் அத்தனைக் கொடியவனல்ல. மன்னனை எதிர்த்தவர்கள் தந்த
கண்டிராசன் கதை O சாரல்நாடன்
 

தகவல்களை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மிகை படுத்தப்ப்பட்ட பிரசாரங்கள் அவை.
ஒருசில தலைவர்களின் பேச்சை நம்பி பிரவுண்றிக் தேசாதிபதி படையெடுத்து வந்தது எந்த நியாயத்தைச் சேர்ந்தது? கண்டி ராஜதானிக்கும், பிரித்தானிய ராஜதானிக்கும் இதற்கு முன் ராஜிய உறவில் எதுவும் முறிவு நேர்ந்ததா? கண்டிய மன்னனையும், அவனது எதிரிகளையும் பிரித்தானியர்கள் நடாத்திய முறைகளில் அந்த வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
கிழக்கிந்தியக் கம்பெனிக்குள்ள நல்லுறவை நினைவு படுத்தி கண்டியில் உள்ள தமிழர்கள் எச்சரிக்கப்பட்டனர். கண்டியில் உள்ள தமிழர்களின் பெயர் விபரங்கள் தம் மிடமிருப்பதாகக் கூறி அவர்கள் பின்னால் வருந்தவேண்டியிருக்கும் என்று பிரவுன்றிக் அவர்களை எச்சரித்திருந்தார்.
நிலமை தான் எதிாபார்த்ததை விட மோசமாக இருப்பதை உணர்ந்த மன்னன் விக்கிரமசிம்மன்தனக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு சிறு படையுடன் தப்பிச் சென்றார்.
கண்டிக்கு வந்த ஆங்கிலேய படை அரசன் தப்பிச் சென்றதை அறிந்தது. ஆனால் நிச்சயமாக அவரால் தென்னிந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்க முடியாது. உள்ளுரில் தான் எங்காவது மறைந்திருக்க வேண்டும். அவரைத் தேடும் மனித வேட்டை ஆரம்பமானது. ஏகலப்பொல அவரை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தான். நான்கு திசைகளிலும் அவரைத் தேடி படைகள் பறந்தன. எகலப்பொலயின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்த திசாவைகளும் இருந்தனர். அப்படி இறுதிவரை மன்னருக்கு விசுவாசமாக இருந்தவர், நுவரக்களயவின் திசாவையான சூரியகுமார வனசிங்க என்று எழுதுகிறார் பத்மாஎதிரிசிங்க. (12-09-1999 ஒப்சவர்)
வழியில் வயல்வெளியில் ஒரு சிறு பையன் தலை தெறிக்க ஓடுவதை கண்ட எகனிலிகொட தலைமையில் சென்ற
gTJólobst L6 is . . . கண்டிரசன் கதை

Page 26
படை அவனைப்பிடித்து அதட்டவே அவன் உயிருக்கு மன்றாடி ஒரு குகைக்குள் மகா வாசல் ஒளிந்திருப்பதைக் காட்டிக் கொடுத்தான். ஒரு வீட்டின் வாசலில் ஈட்டியுடன் ஒருவன் காவலிருந்தான். எகனிலி கொடையைக் கண்டவுடன்.
“ஹா எகனிலிகொட ராலா, எங்கே போகிறீர்கள்” “ஆமாம் நாங்களும் இங்கேயே வந்துவிட்டோம்”, பதில் சொன்ன எகனிலிகொட வாசலுக்குச் சென்று அது உள்ளே தாளிடப்பட்ருப்பதைக் கண்டு திறக்கும்படி கட்டளையிடுகிறான். கதவு திறக் கப்படவில்லை. உள்ளேயிருந்து பேச்சுக்குரல் மாத்திரம் கேட்டது.
“யாரு நம்ம சொந்தக்காரர் எகனிலிகொடயா? யாரு வெளியே” அரசனின் கேள்வி.
“ஆமாம் நான்தான் வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்’ கதவு திறக்கப்படாமலிருக்கவே எகனிலிகொடவின் வீரர்கள் உடைத்துத் திறந்தனர். உள்ளே அரசனும் அவனுடன் நான்கு மனைவியரும் மாத்திரமே இருந்தனர். அவர்களைக் கண்டதும் அவர்கள் மீது ஆத்திரத்துடன் வீரர்கள் பாய்ந்தனர். அவர்கள் மீது பாய்ந்து அவர்களது உடையைக் கிழித்தனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் ஆபரணங்களையும் அபகரித்தனர். சென்றிருந்த படையில் 500 பேர் இருந்தனர். அவர்களை எதிர்த்து சண்டையிடும் நிலையில் மன்னரில்லை. ராணியர் இருவர் அவர்களுடன் சென்ற டயஸின் காலைப் பிடித்துக் கதறினர். அப்போது அவர்கள் அரை நிர்வாணமாக்கப்பட்டிருந்தனர். இராணி ஒருவரின் காதுகள் கிழிக்கப்பட்டு அதில் இரத்தம் வடிந்தது.
பொன் வில்லியம் அதிரான்டயஸ் பண்டாரநாயக்க என்று அறியப்பட்ட கீழ் நாட்டுச் சிங்கள பிரபு ஆங்கிலப் படையுடன் மொழி பெயர்ப்பாளராகச் சென்றவர். பின்னாட்களில் 1819ல் அவருக்கு தங்கப்பதக்கமும் மாலையும் அணிவித்து பிரவுண்றிக் தேசாதிபதி மகிழ்கிறார். அவர் மூலம் பெற்ற அதிகாரப் பூர்வதகவல்கள் அடங்கிய நூலொன்றையே
கண்டிராசன் கதை 46 சாரல்நாடன்
 

1896ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்டனர்.
டொய்லிக்கு அவசரத் தகவல் அனுப்பினான். அரைமணிநேரத்தக்குள் எட்டு பல்லக்குகளும் ஐம்பது போர் வீரர்களும் நூறு ஆங்கிலேய சிப்பாய்களும் அந்த இடத்தில் குவிந்தனர். கெர்னல் ஹாடியும் கெர்னல் ஹக்கும் அவர்களுக்குத் தலைமை தாங்கினர். சிறைபட்ட மன்னர் அருகிலிருந்த ஒடையில் சற்று துாரத்தில் வீழ்ந்து கிடக்கக் காணப்பட்டார். கெர்னல்கள் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து தம் குதிரைச்சவுக்கால் கூடியிருந்தவர்களை அடித்துவிரட்டத் தொடங்கினர். கூட்டம் கலைந்தது. தம் குதிரைகளினின்றும் கீழிறங்கினர் தலையில் அணிந்திருந்த தொப்பியை அகற்றினர் ஒடையில் கிடந்த மன்னனைத் துாக்கியெடுத்து அவரது கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். அப்போது மன்னர் களைப்புடன் காணப்பட்டார் ஆனால் அவரிடம் பயம் என்பதையே அவர்களால் காணமுடியாதிருந்தது. எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் நெஞ்சுறுதிகலையாத வீரனின் அழகு.
“ஒரு மன்னரை இவ்விதம் தான் நடத்துவதா?, என்று அவர் ஆத்திரத்துடன் கேட்டார்.
அவருக்கு பசியெடுக்கிறதா? தாகமெடுக்கிறதா? என்று கேட்டதற்கு “குடிப்பதற்கு கொஞ்சம் மது மாத்திரமே போதும்" என்றார். அவருக்கு மெடெய்ரா மது கொடுக்கப்பட்டது. இராணிகளுக்கு தண்ணிர் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு வெள்ளை நிறத்தில் உடைமாற்றப்பட்டது. அனைவரும் பல்லக்கில் ஏற்றப்பட்டனர்.
பல்லக்கைச் சுற்றி இரண்டு கெர்னல்கள் உருவிய வாளுடன் ஆளுக்கொரு பக்கமாய் நின்றிருந்தனர். வந்திருந்த வீரர்கள் அவர்களை புடைசூழ்ந்தனர். மூன்று ஆங்கில வீரர்களும், டயஸ்ஸம் மன்னனின் பல்லக்குடன் வந்தனர். கண்டிச்சிங்களவரோ மலேவீரர்களோ அவர்களுடன் வருவது முற்றாக தடைசெய்யப்பட்டது. தங்களுடைய பாசறைக்கு
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 27
வரும் போது இரவாகியிருந்தது. மேலும் பாசறைகள் சில தயாரிக்கப்பட்டன. இரவுக் காவல்கள் அதிகரிக்கப்பட்டது. கண்டிச்சிங்களவர்கள் இரவில் மன்னரை தாக்கக் கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை.
பெப்ரவரி 19ம் தேதி இரவுச் சாப்பாட்டில் அமர்ந்திருந்த பிரவுண்றிக் தேசாதிபதிக்கு கண்டி மன்னன் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது, அவன் ஆனந்தத்தால் மகிழ்ந்தான். அவன் கண்களில் ஆனந்த மிகுதியால் கண்ணிர் சொறிந்தது. எத்தனை நாள் கண்ட கனவு, இப்படி நிறைவேறுகிறது. மன்னர் சிறிவிக்கிரமராஜசிம்மவுக்கு நான்கு பட்டத்து மகரிஷிகள் இருந்தனர். வெங்கடரங்கம்மாள், வெங்கடஜம்மாள் என்ற இரு சகோதரிகளும் கம்பளை சாமியின் புதல்விகள். முத்துக் கண்ணம்மா, வெங்கடம்மா இருவரும் டெகார் சாமியின் புதல்விகள். பிலிமத்தலாவையின் புதல்வி உட்பட ஏராளமான அந்தப்புர மனைவியரும் இருந்தனர். மன்னர் சிறைப்பட்டு வேலுாருக்கு அனுப்பப்பட்டபோது இவர்கள் நால்வருடனும் மன்னனின் தாய், மன்னனின் மாமி உட்பட அறுபது பேர்களை ஏற்றிக் கொண்டு 24-1-1816ல் கோர்ஸ்வலிஸ் கப்பல் முதலில் சென்னைக்குச் சென்றது. அங்கிருந்து அவர்கள் வேலுாருக்கு மாற்றப்பட்டனர்.
சிறையில் தனியாக ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டார். சிறையில் வெங்கடம்மாளுக்கு ராஜநாச்சியார் தேவி, ராஜலட்சுமிதேவி என்ற இரு குழந்தைகள் பிறந்தன. ராஜாதி என்றொரு மகனும் பிறந்தான்.
ராஜலட்சுமி தேவியின் மகன் ஜனவரி 1890ல் இலங்கைக்கு வந்து போனார். ராமானுஜம், சடகோபன் என்ற இருவரும் புதுடில் லியில் பத்திரிகையாளர்களாக கடமையாற்றின. கொள்ளுப் பேரன்கள். இலங்கை அரசாங்கத்தின் பண உதவியால் பல்கலைக்கழக படிப்பு படித்தவர்கள். அவரைப்பற்றிய பேட்டி ஒன்றை டென்சில்
கண்டிராசன் கதை 48 சாரல்நாடன்

பீறிஸ் எழுதியிருந்தார். அவரது இன்னொரு கொள்ளுப்பேரன் ராஜசிங்கம் என்பது பெயர். சர்ஜோன் கொத்தலாவலைக் காலத்தில் 1954ம் ஆண்டு இலங்கை மத்தியவங்கியில் பொறுப்பான பதவியரில் அமர்த் தப் பட்டார். சிக்குகுட்டிராஜசிங்கம் என்ற அவரது வழித்தோன்றல் (1953 - 1973) லேக் ஹவுஸ்ஸில் கடமையாற்றினார்.
1929ம் வருடம் செஸன்ஸ் பேப்பரில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கண்டி மன்னன் வாரிசுகளுக்கு பென்ஷன் கொடுப்பது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி. பிரெய்ன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு அடங்கிய “கண்டியமன்னர்கள் பென்சன் கமிட்டியில்’ கோதண்டராம நடேசய்யரும் ஒருவராவார்.
1964ல் இந்த பென்ஷன் நிறுத்தப்பட்டது என்று தன் கட்டுரையில் பத்மா எதிரிசிங்க எழுதியுள்ளார்.
கண்டி மன்னனின் கைத விக்கிரமராஜசிம்மன் 1815 பெப்ரவரி 15ல் கைது செய்யப்பட்டார் 1816 ஜனவரி 24ல் வேலுாருக்கு கொண்டு செல்லப்பட்டார். 1832 ஜனவரி 30ல் இறந்து போனார்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் - 349 நாட்கள் கொழும்பிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறார். வேலுார் சிறையில் 16 வருடங்கள் இருந்திருக்கிறார், மன்னராக ஆட்சி செய்தது பதினேழு ஆண்டுகள். அதை விட ஒரு வருடம் குறைவாக பதினாறு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அவரை ஒரு கொடுங்கோல் மன்னனாக உண்மையிலேயே பிரித்தானியர் எண்ணியிருந்தால் “என்னைக் கொல்வதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இவர்களை காப்பாற்றுங்கள்” என்று தன் மனைவியரைக் கரம்பிடித்து டயஸ்ஸிடம் கூறியதை நம்பி நுாற்றுமுப்பத்திரெண்டு ஆண்டுகள் (1832 - 1964) அவர்களின் வாரிசுகளுக்கும் பென்ஷன் பணம் கொடுத்து வந்திருப்பார்களா? இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகே இது
சாரல்நாடன் : : 49 கண்டிராசன் கதை

Page 28
நிறுத்தப்பட்டுள்ளது.
வேலுாரில் திப்பு சுல்தான் மகன் ஹைதர் அலி இருந்த அரண்மனைதான் இப்போது சிறையாக மாற்றப்பட்டள்ளது. இந்த அரண்மனையில் தான் விக்கிரமராஜசிம்மன் இருந்தார். தனிமையில் அல்ல, குடும்பத்துடன் கண்டியின் கடைசி மன்னன் என்ற பெருமை இறக்கும் வரையில் அவருக்கிருந்தது. அவர் அதீத குடியால் இறந்ததாக அவரைக் கவனித்துவந்த டாக்டர். ஹென்றி மார்சல் கூறிஇருக்கிறார். அவரது அஸ்தி அருகிலிருந்த பாலாற்றில் கரைக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் அவரின் நினைவாக ஒரு முத்து மண்டபம் கட்டப்பட்டு, 1990 ஜூலை மாதம் திறந்து வைக்கப்பட்டது.
மன்னன் கைப்பற்றப்பட்ட பின்னால் கொழும்பில் 349 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்த வேளையில் கண்டியில் தன் னை நோக் கசி வீசப் பட்ட தரங் குறைந்த வார்த்தைகளையிட்டு மனம் வருந்தினாரே தவிர, தன்னுடைய மன்னர்வாழ்க்கையில் தான் மேற்கொண்ட செயல்கள் குறித்து அவர் வருத்தமடையவில்லை. தன்னுடைய மன்னர் பதவி பறிபோனது குறித்துக் கூட அவர் வருத்தமடைந்ததாக கூற முடியாது. மறைத்து வைத்த தன் செல்வங்களைப் பற்றிய தகவல்களை டொய்லிக்கு அறிவித்தார்.
அவருடைய உருவத்தையும், அவரது பட்டத்து ராணி வெங்கடரங்கம்மாளின் படத்தையும் ஆங்கிலேயனான வில்லியம் டேனியல் வரைந்ததாகக் கூறப்படுகிறது. ராணி வெங்கடரங்கம்மாளின் படம் இங்கிலாந்தில் 1834ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் காட்சிகள் என்ற தொகுதியில் முதன் முதலாக வெளியானது.
கண்டியைக் காப்பாற்றியதற்கு பிரவுண்றிக் தேசாதிபதி கூறிய காரணத்தை கொழும்பில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ளவில்லை. மனித சுதந்திரத்தைக் காப்பதாகக் கூறி ஒரு நாட்டின் அரசாண்மையில் தலையிட்டு
கண்டிராசன் கதை Տ() சாரல்நாடன்

அந்த நாட்டை அடிமைப்படுத்துவதை மார்சல் தன் புத்தகத்தில் கண்டித்துள்ளார். 1815ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் அதற்கு பின்னால் கண்டிய அதிகாரிகளும், திசாவைகளும் நடத்தப்பட்ட முறைமைகளையும் பார்க்கையில் அதுசரியென்று தான் படுகிறது. டொய்லியும், பிரவுண்றிக்கும் உள் நோக்கம் வைத்தே கண்டியை கைப்பற்றினர் என்கிறார்.
கண்டி மன்னனை அகற்றியாகிவிட்டது. நீங்கள் எப்போது போகப்போகிறீர்கள் என்று ஆங்கிலேயர்களைப்.பார்த்து கண்டிச் சிங்களவர் முணுமுணுக்க ஆரம்பித்தனர். மன்னனை அகற்றிய கையோடு எகலப்பொல தனக்கு அப்பதவிகிட்டும் என்று நம்பினான். முன்பொருமுறை கண்ணுச்சாமியை அகற்றி விட்டு முத்துசாமியை கண்டிக்கு மன்னனாக பிரட்ரிக் நோர்த் நியமித்தது போல் இம்முறை தான் மன்னனாக நியமனம் செய்யப்படுவதை எகலப்பொல எதிர்பார்த்தான். ஆனால் அது நடைபெறுவதாக இல்லை. அப்படி ஒரு உத்தரவாதத்தை அவனுக்கு பிரவுண்றிக் கொடுக்கவும் இல்லை. உண்மையில், எகலப்பொல செய்திருக்கும் பணிக்கு அப்படி ஒரு பதவியை அவன் எதிர்பார்த்ததும் தப்பில்லை தான். கண்டியின் உள்நாட்டு ரகசியங்கள் அத்தனையையும், அரண்மன்ை ரகசியங்கள் அனைத்தையும், போர்தந்திரங்கள் எல்லாவற்றையும் அவன் மூலமே பிரவுண்றிக் அறிய முடிந்தது எகலப்பொலயின் ஆசைக் கனவுகள் பிசுபிசுத்துப் போயின. தன்னுடைய அன்புக்குடும்பத்தை இழந்து தவிக்கும் தனக்கு மன்னன் பதவி கிடைக்காவிட்டால் பரவாயில்லை, கடைசியாக கொழும்பில் மகாபிரதானியாக இருக்கும் ஜோன் டொய்லிக்குச் சமமாக தன்னை நடத்தும்படி கேட்டான். அதற்கும். பிரவுண்றிக் சம்மதம் காட்டவில்லை. எகலப்பொலயின் விருப்பத்தை எழுத்தில் கேட்டார். இங்கிலாந்துக்கு அதை அனுப்பி அங்கிருந்து பதில் பெறுவோம் என்று தட்டிக் கழித்தார்.
மனைவியை இழந்த எகலப்பொல கணவனை
சாரல்நாடன் 5 கண்டிராசன் கதை

Page 29
இழந்திருந்த மீகஸ்தென்னை திசாவையின் மனைவியை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டான். அதற்கான செலவைத் தரும்படி கேட்டதற்கு அதனையும் தட்டிக் கழித்தார் பிரவுண்றிக். தன்னுடைய நெடுநாள் கனவுகள் கொஞ்சங் கொஞ்சமாகத் தன்னை விட்டுப்பிரிவதை எகலப்பொலயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவன் ஆசை நிராசையாகவே முடிந்தது.
மன்னர்கள் ஆற்றிய பணிகள் (1747 - 1782) கீர்த்தி சிறிராஜசிம்மன் காலத்தில்
17536)- போர்த்துக்கேயர் ஆட்சி வீழ்ந்த கையோடு
புத்தளத்தையும் சிலாபத்தையும் கண்டியுடன் இணைத்தார். முன்னேஸ்வரத்தை மீள நிர்மாணித்து கும்பாபிஷேகம் செய்வித்தார். 17666)- சிவனொளிபாதமலை பெளத்தர்களுக்கும்
திறந்துவிடப்பட்டது.
ஆதாரம் (குடாபிடிய சன்னாசன). 17756ზ- முன்னேஸ்வர கோயிலுக்கு 32 அமனம் நிலம்
வழங்கினார்.
ஆதாரம். செப்பேடு.
17816) தம்மகாந்தர் என்ற பிராமணர் மல்வத்தை
விகாரையில் பெளத்த பணிகள் புரிதல்
(1782 - 1798)
சிறி ராஜாதி ராஜசிம்மன் சிங்கள மொழியில் கவி இயற்றும் ஆற்றல் படைத்தவர். அவர் படைத்த ஜாதக கவிகள் சிங்கள மொழியில் காணப்படுகின்றன.
கண்டிராசன் கதை 52 சாரல்நாடன்

லங்காதிலக விகாரைக்கு நிலம் வழங்கியதை
17876)-
கூறும் கல்வெட்டுக்கள் உள. (1798 - 1815)
சிறிவிக்கிரம ராஜ சிம்மன் காலத்தில்
18016)-
18036)-
18126)-
18156ზ
சாரல்நாடன் : :53: கண்டிராசன்கதை
மன்னன் தன்மனைவியருடன் வருகைதந்ததை
கூறும் அஸ்கிரிய விகாரை கல்வெட்டு காணப்படுகிறது.
மேஜர் டேவி கண்டிக்கு படையெடுத்த போது தலதாமாளிகையின் தந்தபல்லை முதலில் ஹங்குராங்கட்டையில் அமைந்த கித்துல்ப விகாரைக்கும், பின்னர் மெதமஹாநுவரைக்கும், இறுதியாக மகியங்கனை விகாரைக்கும் எடுத்துச் சென்று ஆங்கிலேயர் வசம் அகப்படாதவாறு காத்தல். ஒரு பிரதம அதிகாரியிருந்த இடத்தில் இரண்டாம் ராஜசிம்மன் காலத்தில் இரண்டு பிரதம அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். விக்கிரமராஜசிம்மன் அதை மூன்றாக அதிகரித்து அவர்களின் தனி அதிகாரத்தைக் குறைத்தார். கண்டி தலதா மாளிகையின் பார்த்திருப்பு மண்டபத்தை கட்டுவித்தல். இது இன்று பட்டிருப்பு மண்டபமாகிவிட்டது.
அக்டோபர் பதினெட்டில் தெப்பக்குளம் கட்டி முடிக்கப்பட்டது. தெப்பக்குளத்தில் ஐம்பது சிறு
படகுகள் விடப்பட்டிருந்தன அவை மன்னரின்
பாவனைக்கு உபயோகிக்கப்பட்டன.
பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றிய பொழுது

Page 30
ஏராளமான தமிழ்க் கடிதங்கள் - கண்டி மன்னரால் தென்னிந்தியர்களுக்கு எழுதப்பட்டவைகள் இருந்தன என்கிறார் லெனோரா தேவராஜா. இவைகளை முதலியார் (ராஜநாயகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒரு கடிதத்தில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு மட்டக்களப்பையும் திரிகோணமலையையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பது கூறப்படுகிறது.
18156)- சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னால் கொழும்பில்
மகா முதலியார் வணிகரட்ன ராஜபக்சவின் பண்ணையில் குடும்பத்தோடு வைக்கப்பட்டிருந்தார்.
1832-1-30 வேலுாரில் மரணம்.
தமிழ் நாட்டில் கதைவடிவில்
1798ல் தான் கயத்தாற்றில் கட்டபொம்மன் துாக்கிலிடப்பட்டார். அதே ஆண்டில்தான் கண்டிக்கு கண்ணுச் சாமி மன்னனாகிறார். இருவருமே நாயக்க வம்சத்தினர்தான். இரண்டு நாயக்க மன்னர்களும் வீரதீரச் செயல்களைச் செய்தவர்கள் தாம்.
கடலுக் கப்பாற்பட்ட தலைத் தமிழகத்துக்கும் இலங்கைத்தமிழகத்துக்கும் இடையே சங்க கால உறவு, பெரும்பாலும் சோழர் படையெடுப்பாகவும், சேரநாட்டவர் தொடர்பு குடியேற்றமாகவும், பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர் மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் மட்டுமே இருந்தது என்று கா.அப்பாதுரை எழுதியது இதனைக் குறித்துதான்.
கண்டிராசன் கதை 54 சாரல்நாடன்
 
 

விக்கிரமராஜசிம்மனது (கண்ணுச் சாமி) ஆட்சி விறுவிறுப்பான நாடகப் பண்புகளடங்கிய கதையைப் போல அமைந்தது என்பதால் தான், அது பல நாடகங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
சிங்கள நாடகம் முதன்முதலாக கொழும்பில் அரங்கேறியது 1824ல். அவ்விதம் அரங்கேறியது எகலப்பொல நாடகம் என்று கலாசூரி வில்பர்ட், எம். குணசேகர எழுதுகிறார். பிலிப்பு சிங்கோ என்ற பெயருடைய படிப்பறிவற்ற ஒரு கம்மாளன் அந்த நாடகத்தை இயற்றியதாகவும் அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இனவேற்றுமைகளை அகற்றவும், மத சகிப்புத்தன்மையை உண்டுபண்ணவும் அந்த நாடகம் உதவியது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தஞ் சாவு, ரிலி கணி டி நாடகம் மக்களைக் கவர்ந்தபடியால் 1960வரையிலும் மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மன்னரைப் பிரதான பாத்திரமாக்கி நாடகம் பின்னப்பட்டிருந்தது. நல்லத்தங்காள், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களைப் போல - சோகரசம் ததும்பும் தென்னிந்திய புராதன நாடகங்களைப் போல இந்த நாடகமும் மக்களைக் கவர்ந்து விட்டது என கண்டி வம்சத்துப் பத்திரிக்கையாளர் ஆர். சடகோபன் கூறுகிறார் என்று தினகரன் கூறுகிறது (1-10-50) கண்டிராஜன் அரண்மனையென்று தங்களது முகவரியை இட்டுக் கொள்ளும் பரம்பரை இன்னும் தஞ்சாவூரில் இருக்கிறதென்று கட்டுரையாசிரியர் டென்சில் பீரிஸ் கூறுகிறார்.
இந்தியாவில் ஒரு படக்கம்பனி இதைப் படமாக எடுக்க முனைந்ததையும், கண்டி வம்சத்து பத்திரிகையாளரான சடகோபனின் குடும்பம் சர்க்காரிடம் செய்து கொண்ட முறைப்பாட்டால் இது தடுத்து நிறுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.
இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க முனைந்த வேளையில் எம்.எஸ்.நாயகம் கண்டிராஜன் கதையைத்
FrobbTL66 O 55 கண்டிராசன் கதை

Page 31
தெரிந்தெடுத்ததாகவும் பின்னர் கைவிடநேர்ந்தது என்றும் பலர் கூறியுள்ளனர்.
கண்டி அரசன் மகனான அழகர்சாமி என்பவரின் பேரில் அழகர்சாமி மடல் எனும் பிரபந்தத்தை, அளவெட்டி கனகசபை புலவர் பாடி, அவர் சிறை இருந்த வேலுாருக்குப் போய் அவர் முன்னிலையில் அரங்கேற்றினார் என்கிறார் மயிலை fool (36),35LaFITLs.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருப்பவைகளுள் நாட்டுக்கூத்துக்களுக்கு முக்கிய இடமுண்டு. நாட்டுக்கூத்து வகையில் வட மோடியில் ஆடப்படும் கண்டி நாடகம் கருத்துக்கள் பெருவிருந்தாகும். தாளக்கட்டு மீறாத இசையுடன் கூடிய ஆட்டமும், சுவைமிக்க பாடல்களும் இந்நாடகத்தின் சிறப்பம்சமாகும். இந்நாடகம் மட்டக்களப்பைச் சேர்ந்த சிற்றாண்டி, வந்தாறுமூலை, கதிர்வெளி, காரைதீவு, களுதாவளை ஆகிய இடங்களில் நடாத்தப்படுகின்றன என்றெழுதியுள்ளார் வசீகரன் தன் கட்டுரையில்.
வட இலங்கை முழுவது மாடப்பட்ட இந்து மதச்சார்புடைய கூத்துக்கள் நாற்பத்தெட்டிலும், வரலாற்றுக் கதைகளிருந்து தோன்றியது கண்டி அரசன் நாடகம் ஒன்றே என்றும் இது வடமோடியிலும் தென் மோடியிலும் ஆடப்பட்டது என்றும் காரை சுந்தரம்பிள்ளை கூறுகிறார்.
மேடை நாடகத்துக்குப் பெயர் போன ஏகை. சிவ.சண்முகம்பிள்ளை, கண்டிராசாநாடகத்தை எழுதி சென்னை ஆனந்த போதினி அச்சகத்தில் 1928ல் புத்தகமாக வெளியிட்டார். சென்னை கிருஷ்ண விநோதசபை மூலம் மேடையேற்றினார். கொழும்பிலும், சென்னையிலும் உள்ள பிரமுகர்களின் துாண்டுதலாலேயே இந்நாடகத்தை எழுதியதாக இந்த நுாலில் குறிப்பிடுகின்றார். தமிழகத்தின் புகழ்பெற்ற நாடக நடிகர்களான எல்.ஜி.கிட்டப்பா சி.வி. பந்துலு போன்றோர் அதில் முக்கிய பாகம் ஏற்றனர். அந்நாடகம் தமிழகத்தின்
கண்டிராசன் கதை 56 சாரல்நாடன்

மூலைமுடுக்கெல்லாம் நடாத்தப்படடது. தங்கள் மன்னனைக் கொடுங்கோலனாகக் காட்டும் இந்த நாடகத்தை தடை செய்ய வேண்டுமென்று சிங்களவர்கள் ஆங்கில அரசை கேட்டுக் கொண்டனர் என்கிறார் முனைவர் .மு.தங்கராசு.
கண்டிராசன் நாடகத்தில் அருணகிரி நாதரின் திருப்புகழ் சந்தங்களில் அமைந்த பாடல்களின் அமைப்பும் பதங்களின் அழகும் கேட்போரை ஈர்க்கும் தன்மையன. அதற்கு இணையான வேறு ஒரு நாடகமும் இல்லைஎன்கிறார் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.
கண்டி நுாதனச் சாலையில் காணப்படும் பூரீ விக்கிரம இராஜசிம்மனின் உருவச்சிலை படம் உதவி செனரத் பணவத்த கண்டி நூதனச் சாலை காப்பாளர்
சாரல்நாடன். . 57 டில் கண்டிராசன் கதை

Page 32
10.
கண்டிராசன் எழுத்தவடிவில்
1887ல் திரிகோணமலையில் வசித்த வே.அகிலேசம் பிள்ளை எழுதிய ‘கண்டி நாடகம்'.
1908ல் பருத்தித்துறையில் இவர் எழுதிய ‘கண்டிராசன் கதை’.
யாழ்ப்பாணத்து சிற்றம்பப்புலவர்பாடிய “கிள்ளை விடு
Tg5.
ஆறுமுகநாவலரின் தந்தை நல்லுார் ப.கந்தப்பிள்ளை பாடிய "கண்டி மன்னன் பாடல்கள்’.
1910ல் எம்.என்.பாவா எழுதிய ‘கடைசிக் கண்டி மன்னன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்' நூல்
தம்பலகாமம் வீரக்கோன் பாடிய வெருகல் சித்திரவேலாயுதர் காதல்
1928ல் ஏகை. சிவ. சண்முகம்பிள்ளை எழுதிய ‘கண்டி ராஜா நாடகம்'.
1934ல் பி.கே.எம். ஹசன் எழுதிய ‘கண்ணச்சாமி அல்லது சிறிவிக்கிரமராஜசிங்கம்” நூல்
1950ல் கே.பி.நாதன் நாவலாக எழுதிய ‘கண்டியின் கபட நாடகம்’. தினகரனில் தொடராக வந்தது.
திருவருள் என்பவர் எழுதிய பூசணியாள் பாடல்கள் தினகரனில் தொடராக வந்தது.
கண்டிராசன் கதை 58 சாரல்நாடன்
 
 
 

நிறைவாக
இந்த வரலாற்றை ஊன்றி கவனிக்கையில் இரண்டாம் ராஜசிம்மனுக்குப் பிறகு மன்னர்களின் பிடி, படிப்படியாகத் தளர ஆரம்பித்தது, அது நாயக்கர் காலத்தில் உச்சகட்டத்தை அடைந்திருந்ததை அவதானிக்கலாம். சம பலமுடைய அதிகாரிகள் மூவரை அமைத்ததன் மூலம் அதை அவர்கள் வெற்றி காண முனைந்திருந்தாலும் முழுவதாக அதை அவர்களால் செய்யமுடியாததால், கண்டி 1815 மார்ச்சு 2 ஆங்கிலேயர் வசமாவதை தடுக்க முடியவில்லை.
விஜயன் காலத்திலிருந்து விக்கிரமராஜசிம்மன் காலம்வரை தொடர்ந்திருந்த சிங்கக்கொடி அகற்றப்பட்டு யூனியன் ஜாக் கொடி பறக்கவிடப்பட்டது.
கண்டி மன்னர் வெறும் அரசியல் தலைவராக மாத்திரம் இருக்கவில்லை. மாறாக சமய விழாக்களிலும் பங்கெடுத்தார். ஆலய பூசைகளிலும் பங்கெடுத்தார். பெளத்த குருமார்களை நியமித்தார், இங்கிலாந்து அரசர் அங்கிலிக்கன் திருச்சபை தலைவர். அவர் எவ்விதம் பெளத்த மதகுருமாரை நியமித்தலிலும், பெளத்த சமயவிழாக்களிலும் கலந்து கொள்வதையும் ஏற்றுக்கொள்ள முடியும்?
விக்கிரமராஜசிம்மன் பல வழிகளில் கண்டி நகருக:குச் சேவையாற்றியிருந்திருக்கிறார். எனினும் தீரமுடன் தன் அரண்மனை பிரதானிகளை எதிர்த்தமையும், அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பகிரங்க சங்காரம் செய்தமையும் தான் அவரைக் குரூர மன்னராக மக்கள் முன் காட்டுகிறது. ஒரு நுாற்றாண்டுக்காலம் கண்டி அரசியலில் செல்வாக்கு செலுத்திய பிலிமத்தலாவை, எகலப் பொல என்ற குடும்பங்களின் தலையீடு இல்லாமலிருந்து இருந்தால் - மன்னனாகும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் எத்தனை சதி முயற்சிகளை மேற்கொண்டனர், கண்டியின் வரலாறு வேறு வகையில் அமைந்திருக்கும்.
சாரல்நாடன் 59 கண்டிராசன் கதை

Page 33
சிங்கள ராஜ்யங்கள் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்க கண்டி இன்றும் இராஜ்ய சிறப்பு மங்காமலிருக்க அங்கு அமைந்த தலதாமாளிகையும், விக்கிரமராஜசிம்மன் முன்னெடுத்த பத்திருப்பு மண்டபமும் கிரிமுட என்ற வாவியும் இன்றும் சிறப்போடு விளங்குகின்றன.
மன்னரின் ஆட்சி கண்டியில் வீழ்ந்ததன் பின்னாலும் இறுதிவரை தன்னையும், தன்னை நம்பியவர்களையும் தனது வாரிசுகளையும் அவர் முறையாக கவனித்திருக்கிறார். அவரது எதிரிகள் எல்லோரும் அந்நியப்பட்ட மொரிஷியவிழ் தீவில் மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதற்கு ஊழைக் காரணமாகக் கொள்ளலாமா? பாலசுந்தரி என்ற பெயரில் கதிர்காமத்தில் இருந்த சந்தியாசினியின் அழகும், வனப்பும் பலரையும் கவர்ந்தது என்றும், சிறிவிக்கிரமராஜசிம்மன் அவளை மனைவியாக்கிக் கொள்வதற்காக தனது படைகளை அனுப்பி அவளைப் பயமுறுத்தியதாகவம், அதனால் ஆத்திரமுற்று அவளிட்ட சாபத்தால்தான் கண்டி வீழ்ந்துபட்டது என்று கூறுகிற சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் கூற்று உண்மையாக இருக்குமோ? யாரறிவார்? w
சேர். முத்துக் குமாரசுவாமியின் தந்தையார் குமாரசுவாமி என்பவர் ஆவார். அவர்தான் கண்டிராசனுக்கும் ஆங்கிலேயருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்து கண்டி ஒப்பந்தத்தை 1815 இல் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார்.
கண்டிராசன் கதை சாரல்நாடன்
 

'கண்டி ஒப்பந்தம் விக்கிரம ராஜசிம்மன் கைதான பின்னர், பிரிட்டிஸ் அதிகாரிகள் முக்கிய தலைவர்களுடன் கையெழுத்துப் போடும் காட்சி பிரதம சாட்சியாக ஜெனரல் ரொபர்ட் பிரவுன்றிக் இருக்கிறார். பட உதவி ஐ.என்.எம். சறிப்
சாரல்நாடன் 6 கண்டிராசன் கதை

Page 34
இலங்கையின் கடைசி மன்னருக்கு இந்தியாவில் கலைஞர் கருணாநிதியால் கட்டப்பட்ட முத்து மண்டபம் 1990 ஜூலை திறக்கப்பட்டது.
கண்டிராசன் கதை
 
 
 

2.
10.
ll.
12.
நால் எழுத பயண்பட்ட
கட்டுரைகள் புலியூரான் - கண்டிகடைசிமன்னன்
- தினகரன் 7-5-1950 (சிங்கள சங்கிராவையை அடியொட்டியது) டென்சில் பீரிஸ் - இலங்கை மன்னர்
- தினகரன் 1-10-1950 மிரண்டோ ஒபயசேகர - எகலப்பொல
- ஐலண்ட் 20-9-1998 பத்மா எதிரிசிங்க - சிங்கள தமிழ் உறவு
- ஒப்சர்வர் 10-12-1995 பத்மா எதிரிசிங்க - நுவரகளவிய நாடகம்
- ஒப்சர்வர் 12-9-1999 பத்மா எதிரிசிங்க - கண்டி மன்னனின் வாரிசுகள்
- ஒப்சர்வர் 2-12-2001 டி.பி.கப்பகொட - கண்டிகைப்பற்றுகை
- ஒப்சர்வர் 1-12-1998 வசீகரன் - கண்டி ராஜன் நாடகம்
- வீரகேசரி 12-5-1963 எஸ். ஆர். எஸ். நாதன் - இந்தியாவில் முத்துமண்டபம்
தினக்குரல் 12.10.2003 டி.பி. ஜயதிலக்க - சிங்கள ராஜதானியின் எழுச்சியும்
வீழ்ச்சியும்
தினமின 2-3-1915 ஆரியதாஸ் ரட்னசிங்க - கண்டியின் நாயக்க
மன்னர்கள்
-ஒப்சர்வர் 4-2-2001 செயலாளர், கந்துரட்ட எழுத்தாளர் சங்கம்,
கண்டிராஜதானியின் வீழ்ச்சி'
-ஐலண்ட் 4-3-2003
சாரல்நாடன் கண்டிராசன் கதை

Page 35
நால் எழுத பயன்பட்ட நால்கள்
1.
2.
10.
11.
12.
13.
14.
Francois Martin-India in the 17th Century-1983 Tennakoon Wimalananda-Sri Wickrema, Brownrigg
& Ehelepola- 1984 The Rebels outlaws & Enemies to the British. M.A.D.Appuhamy சி.பத்மநாதன் - இலங்கையில்
இந்துக் கோயில்கள் 1994 மயிலை சீனி வேங்கடசாமி - 19ம் நூற்றாண்டில்
தமிழ் இலக்கியம் 1962.
கா.அப்பாத்துரை - தென்னாட்டுப் போர்க்களங்கள் Nihal Karunaratne - Kandy Past & Present L.S. Devaraja-The Kandyan s
Kingdom ofSriLanka. 1972 கு.பகவதி - தமிழ் மேடை நாடக வரலாறு மு.தங்கராசு - தமிழ் மேடை
நாடக வரலாறு - 1989 Brenton Gooneratne &Yasmine Goonaratne This Inserutable. Englishmen- 1999 Sir Ponnambalam Arunachalam-Studies &
Translation- 1937 ஏகை - சிவசண்முகம்பிள்ளை -
கண்டிராஜா நாடகம்- 1928 காரை.செ. சுந்தரம்பிள்ளை -
வடஇலங்கை நாட்டார்.அரங்கு 2000
கண்டிராசன் கதை சாரல்நாடன்
 


Page 36


Page 37

inted by SNPRINTS07635662