கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் - சில அவதானிப்புகள்

Page 1
மலேசிய தமிழ வாழ்வியல் ப
= சில அவத
hoped LD
as ez || . இர. சிவலிங்
அமரா இர. lagbr7 20
 

இர. சிவலிங்கம் அவர்களின் வது நினைவுப் பேருரை
ரின் சமகால LoIGOOTES56i ானிப்புகள்
ம் ஞாபகார்த்தக் குழு O7

Page 2

மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமானங்கள் - சிவ அவதானிப்புக்கள்
லெனின் மதிவானம்
அமரர்.இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு BO2/2மெனிங் டவுன், மங்கள றோட் கொழும்பு -O8

Page 3
நூல் : மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல்
பரிமாணங்கள் - சில அவதானிப்புக்கள்
ஆசிரியர் : லெனின் மதிவானம்
வெளியீடு அமரர்.இரசிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு
BQ2/2மெனிங் டவுன், மங்கள றோட், கொழும்பு - O8
வெளியீட்டுத் திகதி : 22-09-2007
பக்கங்கள் 52
அச்சுப்பதிப்பு : டெக்னோ பிறிண்டர்ஸ்
55, Dr. E.A. குரேமாவத்தை, கொழும்பு - 6. 6lgbnT.G8Lu : O777-3O192O
-2-

அனைவருக்கும் வணக்கம்!
மறைந்த இர.சிவலிங்கம் நினைவாக இவ்வாண்டு நினைவுப் பேருரை ஒன்றினை ஆற்ற வேண்டுமென்று அக்குழுவின் தலைவர் திரு.எம். வாமதேவன் அவர்கள் தொலைபேசி மூலமாக என்னைக் கேட்டுக் கொண்ட போது அப்பொறுப்பினை நான் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
இர.சிவலிங்கம் அவர்கள் மலையக சமூகத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியவர். அத்தகைய மனிதரின் நினைவுத் தினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரையை ஆற்றுவது மனத்திற்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது.
மலேசிய தமிழர் சமூகமானது இன்று பாரதூரமாகப் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்கின்றது. இம்மக்களின் துயர்தோய்ந்த வரலாறு ஏனைய மலேசிய மக்கள் சமூகத்திலிருந்து பல அம்சங்களில் வேறுபட்டு நிற்கின்றது. எனவே இவர்களின் வரலாறு வழிவந்த பிரச்சனைகளும் முரண்பாடுகளும் பல அம்சங்களில் தனித்துவ
OT66)6.
தற்காலத்தில் மலேசிய தமிழர் சமூகமானது சிறப்பான பொருளாதார அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்றும், தோட்டத் தொழிலாளர்கள் கூட காரில் வேலைக்கு செல்கின்றார்கள் எனவும் இதற்கு மலேசிய நாட்டின் பொருளாதார அபிவிருத்தியே காரணம் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கக் காண்கின்றோம். சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிறு குழுவினரின் வளர்ச்சியை மையமாக கொண்டு முழு சமூகத்தின் பொருளாதார நிலைமைகளையும் மதிப்பிட முனைவது எந்தளவு நியாயமானது? இக்கூற்றானது மலேசிய தமிழர்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளை மூடி மறைப்பதுடன் அத்தகைய பொருளாதார கலாசார பண்பாட்டு ஒடுக்கு முறைகளை ஏனைய நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளாகவே காணப்படுகின்றன.
இன்று உலகமயமாதல் என்னும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலின் கீழ் மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார அரசியல் கலாசார துறைகளில் திட்டமிட்டே ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் நவகாலனியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி தமது கரங்களில் வைத்திருப்பதற்கு ஏற்ப அரசியல் பொருளாதார கலாசார பண்பாட்டுக் கூறுகளை சீரழித்து வருகின்றன. இதன் பின்னணியில் சமூக ஆய்வுகளின் கடமைப்பாடு குறித்து பின்வரும்
-3-

Page 4
கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. எழுத்தாளனுக்கு சமூக முரண்பாடுகளை கூர்மையாகப் பார்க்கும் வர்க்கப் போராட்ட பார்வை அவசியமற்றது; எழுத்தாளன் எப்படியும் இருக்கலாம்; அவனுடைய எழுத்தை மட்டும் பார்த்தால் போதுமானது; பிரதி உருவம் பெற்றதும் எழுத்தாளன் இறந்துவிடுகின்றான்; மையக் கட்டவிழ்ப்பு, கட்டுடைப்பு, மறுவாசிப்பு போன்றவற்றின் மூலம் தேசியம், பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றில் காணப்படும் குழப்பகரமான கருத்துக்களை சமூக ஆய்வுகளிலும் நிலை நிறுத்தி வருகின்றது.
சமூக தொண்டர் நிறுவனங்களும் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இவர்கள் சமூக அபிவிருத்தி, சமூக விடுதலை என கூப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகையில் இவர்களின் கூற்றுகளில் நியாயம் இருப்பதாக தெரியும். சற்று ஆழமாக நோக்கினால் தான் இதன் பின்னணியில் அரசியல் பிற்போக்குத் தனமும் ஏகாதிபத்திய நலன்களுக்கு இலகுவாக விலைபோகக் கூடிய இடைத்தரர்களும் இருப்பதைக் காணலாம்.
இந்தப் போக்கு மலேசியாவில் இடம்பெற்ற தமிழர் சமூகம் குறித்த ஆய்வுகளில் மலிந்துகாணப்படுவதை அவதானிக்கலாம். இதற்கு மாறாக திருவாளர்கள் மு.வரதராசு, ஜானகிராமன் முதலானோரின் எழுத்துக்களில் யதார்த்தத்தை காணக் கூடியதாக உள்ளன. இவ்வெழுத்துக்கள் ஒரளவு சமுதாயத்தை புரிந்துக் கொண்டு உண்மையின் பக்கம் நின்று எழுத முனைந்திருப்பதனைக் காணலாம்.
இத்தகைய ஒரு பயங்கரமான சூழலில் மலேசிய தமிழர் மத்தியில் பணிபுரியும் அரசியல் சக்திகள் இம்மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் புரிந்துக் கொண்டு சரியான மக்கள் இயக்கமொன்றினைக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை உள்ளது. அந்தவகையில் மலேசிய தமிழர்களது அரசியல் சமூக பொருளாதார கலாசார பண்பாட்டுக் கூறுகளின் தனித்துவங்களையும் தன்னடையாளங்களையும் அவற்றின் வரலாற்று ரீதியான மரபுகளில் இருந்து கண்டறிதல் அவசியமானதொன்றாகின்றது. நுட்பமான - ஆழமான மாக்ர்ஸிய ஆய்வுகளின் ஊடாகவே இதனை சாதிக்க முடியும். மலேசியாவில் வெளிநாட்டு உறவுகளுக்கான அமைச்சின் கீழ் இயங்குகின்ற இராஜதந்திர மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கான filologo7šjlab (Institute ofDiplomancy & Foreign Relations)g)Jitejšu துறையில் எம்.ஏ பட்ட ஆய்வில் ஈடுப்பட்டிருந்த காலத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.மு.வரதராசு அவர்களுடன் இணைந்து செயற்படக்
-4-

கூடிய வாய்ப்பு கிடைத்தது. மலேசிய தமிழருக்கு மத்தியில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களிடத்தே சென்று சில சமுதாயம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுப்படக்கூடிய வாய்ப்புக் கிடைத்தமை மனதிற்கு பெரும் திருப்தியாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த சில நாட்கள் அவர்களின் தன்மானம் கலந்த நாகரிகம், தோழமை உணர்வுகள் என்னால் மறக்க முடியாத அளவிற்கு என் இதயத்தில் பதிந்து விட்டன.
ஆய்வுத் துறையில் பல்வேறு சிந்தனைகளும் கோட்பாடுகளும் வெளிக்கொணரப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்கால பரம்பரையினர் ஒரு தவறற்ற சமூகவியல் கோட்பாட்டை இனங்காண முடியும் என்ற வகையில் இத்துறையிலான ஆய்வுகளை மேற்கொள்ள என்னை ஊக்குவித்தவர்கள் மு.வரதராசு, கலாநிதி ந.இரவீந்திரன் அவர்களாவர். எனது சிந்தனை வேட்கைக்கு உற்சாகம் தந்து உரமேற்றியவர்கள். ஆய்வுக் கோட்பாடுகளை இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது மட்டுமன்று அவற்றிற்கு உருவம் கொடுக்கவும் கற்றுக் கொண்டேன். இவர்களுக்கெல்லாம் எவ்வாறு நன்றி கூறுவது? உபசாரத்திற்கு அப்பாற்பட்ட உள்ளத்துக்கு நட்பு வார்த்தைகள் ஏது?
இக்கட்டுரையின் கையெழுத்துப் பிரதியை பலமுறை படித்துப் பார்த்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் கூறி எனது ஆய்வு இப்போதைய வடிவினைப் பெற வழிகாட்டிய எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.தை.தனராஜ் அவர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
யாவற்றுக்கும் மேலாக இந்நூலின் அவசியத்தை எனக்கு உணர்த்தியதுடன் இவ்வாண்டுக்கான இர.சிவலிங்கம் நினைவுப் பேருரையை ஆற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவினர் என் நன்றிக்குரியவர்கள்.
-5

Page 5
மலேசlய தமிழர் - யார், எவர்?
மலேசிய தமிழரின் வாழ்க்கை குறித்து நோக்குவதற்கு அம்மக்களின் சமூகப் பின்புலம் பற்றிய தெளிவு அவசியமானதொன்றாகின்றது.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தொடங்கிவிட்டதென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி 2, 3 நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து இந்து, பெளத்த குருமார்களும் வணிகர்களும் வந்து சென்றதாக குறிப்புகள் காணப்படுகின்றன. அதே போன்று மலேசிய வணிகர்களும் வங்கக் கடல் கடந்து இந்தியா சென்றிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. அவ்வகையில் நோக்குகின்ற போது இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவு மிகத் தொன்மையானதாகும்.
மலேசியாவின் பல்வேறு பாகங்களில் கி.பி 2ம் நூற்றாண்டு தொடக்கம் 11ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியுள்ளமை குறித்து “மலேசிய தமிழர்” என்ற நூலில் பின்வரும் குறிப்புகள் காணப்படுகின்றன:
"". இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கிபி 2ம் நூற்றாண்டு
முதல் கெடாவில், மர்பஸ் நதி, பூஜாங் நதி, பேரா நதி, பெர்ணம் நதி, முவார் நதி ஆகியவற்றின் முகத்துவாரக் குடியிருப்புகளில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாக டான் பூரீஉபைதுல்லா என்ற தமிழ்ப் பெரியார் எழுதியிருக்கிறார்". "9ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரையிலும் சோழ மன்னர்கள் மலாயாவில் பல பகுதிகளை ஆண்டார்கள். அப்போது மலாயாவிற்குப் பெயர் கடாரம். இராசராச சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலம் மலாயாவின் வரலாற்றில் விரிவாக இடம் பெற்றுள்ளது. அவர்கள் பெயரைக் குறிக்கும் பட்டயங்களும் சாலைகளும் அரச வம்சாவளிப் பட்டங்களும் பல காணப்படுகின்றன. மலாயர்களைப் போல் குடும்பம் குடும்பமாக மக்களை தமிழகத்திலிருந்து குடியேற்றாததால் சோழப் பேராட்சி மறைந்தது. இராஜராஜ சோழனும் அவன் மகன் இராசேந்திரனும் கிள்ளானை ஆண்டதாக அரசுக் குறிப்பில் காணப்படுகின்றது."
-6-

மேலும் இராஜேந்திர சோழனின் ஆட்சி கங்கை முதல் கடாரம் வரை பரவியிருந்ததை வரலாற்று குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இவனது ஆட்சிக்காலத்தில் நிகோபார், அந்தமான், சாவா, இந்தோனேசியா, வடமலாயா போன்ற நாடுகளை தமது ஆட்சிக்கு கொணர்டு வந்தான். இவ்வாறே பல்லவ மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ஈப்போ, கங்கைகிப்புட் பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மலேசிய பண்பாட்டில் இந்தியப் பண்பாடு என்பது மிகத் தொன்மைக்காலம் தொட்டே இரண்டறக் கலந்து வந்துள்ளது. மலாயர்களின் அரச சபை சடங்குகளில் இந்துமத சடங்குகளின் தாக்கத்தை உணரக் கூடியதாக இருந்தது. நவீன மலாய மொழியின் தந்தையென போற்றப்படும் முன்சி அப்துல்லா அவர்களின் பழைய பெயர் சின்னசாமி உபாத்தியாயர். காலப் போக்கில் ஏற்பட்ட இஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சி அரச சபைகளில் இந்துமத சடங்குகளை முற்றாக தகர்த்தது எனலாம்.
மலேசியாவில் இந்தியர்களின் வருகையானது அவ்வப்போது இடம்பெற்று வந்திருப்பினும் அவை ஒரு சமூகத்தன்மையை ஏற்படுத்தாது இருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வகையில் நோக்குகின்றபோது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் தான் இம்மக்கள் பெருந்தொகையினராக மலேசிய நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர்.
19 நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழில் புரட்சியுடன் உருவாகிய பிரித்தானிய காலனித்துவம் தமது முதலாளித்துவ வயிற்றுப் பசிக்கு உகந்த வகையில் பொருளாதார அரசியல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது.
“எந்தப் பழைய உலகத்திலிருந்து அது தன்னை படைத்துக் கொண்டதோ, அந்தப் பழைய உலகத்தை, தனது தேச எல்லைகளுக்கு அப்பால் கூட வைத்திருக்க அது விரும்பவில்லை. எல்லாத் தேசங்களையும் தனது காலனிய, அரசியல் ஆதிக்க முறைக்கு கொண்டுவர ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இறங்கியது. நவீன துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தியது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது அரசியல் இராணுவ
-7-

Page 6
கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவைக் கொண்டு வந்து சேர்த்தது. "இந்திய மக்கள் தமது பழைய உலகத்தை இழந்தனர். சுயதேவை பொருளாதாரத்தை மிக எளிமையான கருவிகளைக் கொண்டே உற்பத்திச் செயலில் ஈடுபட்டிருந்த இந்திய கிராமங்கள், சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருந்தன. நீர்ப்பாசனம் அரசின் நடவடிக்கையாக இருந்ததனால் ஒவ்வொரு கிராமமும் தமது பொருளுற்பத்திக்கு அரசை சார்ந்தே இருக்க வேண்டி இருந்தது. இவ்விதத்தில் அரசு சமூக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இதனை காலனித்துவ அரசின் வருகை உடைத்தெறிந்தது. விவசாயம் சீர்குலைக்கப்பட்டு விவசாயிகள் நடுத்தெருவிற்கு வர, பிரிட்டன் காரணமாய் இருந்தது”
இவ்வாறாக தென்னிந்திய தமிழ் கிராம மக்கள் வறுமைக்கும் சாதிய அடக்குமுறைக்கும் உட்பட்டு மிகக் கொடூரமான வாழ்க்கையை அனுபவித்தனர். ஒரு புறம் நிலப் பிரபுத்துவ பொருளாதாரச் சுரண்டலும் மறுபுறம் சாதிய அடக்குமுறைகளும் இம்மக்களின் வாழ்க்கையை வேதனைக்குள்ளாக்கின. இச்சூழலில்தான் தொழில் புரட்சியும் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கமும் இம்மக்களின் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்தை உருவாக்கியது. V−
வறுமை, பஞ்சம், பசி இம்மக்களைப் பெரிதும் வாட்டியது. அவர்களை ரொட்டித்துண்டுகளுக்கு முன் மண்டியிட வைத்தது. அவர்கள் பிறந்த மண்ணைத் துறந்து புதுவாழ்வு தேடி வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமது உழைப்புச்சக்தியை குறைந்த விலையில் விற்பதற்குத் தயாரானார்கள்.
பிரித்தானியர்கள் தமது காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஒப்பந்தக் கூலிகளை அழைத்துச் செல்வதற்கு பல்வேறு போலி விளம்பரங்களை பிரசாரப்படுத்தினர். தென்னிந்தியாவில் இருந்து இலங்கை மலையகத்திற்கு அழைத்து வருகின்றபோது தேங்காயும் மாசியும் தேயிலைக்கடியில் இருக்கின்றது என பிரசாரம் செய்யப்பட்டது போன்று, அவர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றபோது "காகத்திற்கு சீனி ஊட்டுவதற்காகவே" அழைத்துச் செல்வதாக பிரசாரங்கள் செய்யப்பட்டன.

இவ்வாறு ஒப்பந்தப் பிணைப்பு செய்து கொண்டு தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து வந்த ஏனைய வர்க்கத்தினரும் "மலேசியத் தமிழர்” என்று அழைக்கப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க ஆரம்பகாலம் தொடக்கம் இறப்பர் தோட்டங்களிலும் ரயில் பாதைகள் அமைக்கும் தொழில்களிலும் துரைமார்களாக (Superintendents) இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்கள் கடமையாற்றி வந்துள்ளனர். யாழ்ப்பாணத் தமிழர்களில் சிலர் காலத்திற்கு காலம் மலேசியாவிற்கான புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலும் இப்புலம் பெயர்வை அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் மலேசிய பிரஜாவுரிமையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவொன்றாகும். "யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம்" என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணத் தமிழரை பிரதிநிதித்துவபடுத்துகின்றது என்பதை விட அங்கு வாழ்கின்ற யாழ்ப்பாண சமூக அமைப்பின் மேட்டு குடியினரையே பிரதிநிதித்துவபடுத்துகின்றதொரு அமைப்பாகவே அமைந்து காணப்படுகின்றது.
மிக அண்மைக்காலங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்கென ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு மலேசியாவிற்கு வருகின்றனர். அவர்களில் இலங்கை இந்திய தமிழ் தொழிலாளர்களும் அடங்குவர்.
மலேசிய தமிழரும் மேற்குறிப்பிட்ட தமிழரும் தமிழர் என்ற அடிப்படையில் ஒற்றுமை கொண்டிருப்பினும் இவர்களிடையே சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பாரிய வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்கலாம். மூன்றாவது தேசிய இனம்
மலேசிய நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை வளப்படுத்து வதில் இம்மக்கள் குழுமத்தினருக்கு முக்கிய பங்குண்டு. இவர்கள் ரயில்பாதை, வீதிகள் அமைக்கும் பணிகளிலும் மற்றும் ஈயம் தோண்டும் பணிகளிலும் இரப்பர், செம்பனைத் தோட்ட தொழில்களிலும் ஈடுபட்டனர்.
-9-

Page 7
அவ்வகையில் ஒரு காலகட்ட சூழலில் மலேசிய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பலமான அடித்தளத்தை இட்டதில் மலேசிய தமிழர் முக்கிய பங்களிப்பு நல்கியுள்ளனர்; இன்றும் நல்கி வருகின்றனர்.
மலேசியத் தமிழர் பொதுவாகத் தென்னாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களின் 56) (T3FIT g பணி பாடு பாரம்பரியமானது. தென்னாட்டுத் தமிழர்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களைக் கொண்டிருப்பினும் அவை மலேசிய சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய பரிணாமம் அடைந்து விளங்குவதைக் காணலாம். மலேசிய பிரதேச உற்பத்தி அமைப்பும், உற்பத்தியைத் தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட சமூகக் கட்டமைப்பும் அவற்றைத் தீர்மானம் செய்கின்ற உற்பத்தி முறை உற்பத்தி உறவுகளும் யதார்த்தமாகியுள்ள வர்க்க முரண்பாடுகளே இப்பண்பாட்டை தோற்றுவிக்கின்றன. இம்மாற்றத்தை மலேசிய நாட்டார் பாடல்களில் நாம் காணக் கூடியதாக உள்ளது.
பார் பார் வெள்ளைக்காரன் பறங்கித்தலை வெள்ளைக்காரன் பறக்கும் கப்பல் ஏறிக்கிட்டு பறந்துமே போவானாம் சீர் சீர் வெள்ளைக்காரன் சீமைத்துரை வெள்ளைக்காரன் சீப்புக் காரில் ஏறிக்கிட்டு சிறியே போவானாம். கார் கார் வெள்ளைக்காரன் காக்கிச் சட்டை வெள்ளைக்காரன் காச்சு மூச்சுன்று பேசிக்கிட்டு கப்பலேறி வந்தானாம்."
எல்லாரும் போனாப் போலே நானும் போனேன் மாங்காய்த்தோப்பு மாங்காயைத் திருடிப்புட்டு மாட்டிக்கிட்டான் பெரியசாமி டோமா எல்லோரும் போனாப் போலே நானும் போனேன் சோளக் கொல்லை
- 10

சோளக் குருத்த திருடிப்புட்டு
சூடுபட்டான் பெரியசாமி டோமா?
போன்ற பாடல்களும் தமிழகத்தில் பாடப்பட்டது போன்று மலேசிய தோட்டப்புறங்களிலும் பாடப்பட்டு வந்தமை அறியக் கூடியதாக உள்ளது. அது தவிர மலேசியத் தமிழரிடையே காணப்படுகின்ற நாட்டார் கதைப்பாடல்களான கோவலன் கண்ணகி, அல்லி அரசாணி, தேசிங்கு ராஜன் கதை, மதுரைவிரன் கதை போன்ற பாடல்கள் தமிழகத்தின் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இப்பாடல்கள் இங்கு செல்வாக்கு செலுத்து வதற்கான காரணங்கள் யாவை? தமிழகத்தில் பாடப்பட்ட பாடல்கள் அப்படியே இங்கு போற்றப்படுகின்றனவா? மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளனவா? அத்தகைய மாற்றங்களின் பின்புலம் என்ன? போன்ற விடயங்கள் குறித்து ஆய்வு செய்வது அறிஞர்
ඒ.5|L-6),
மலேசிய சூழல் இம்மக்களின் வாழ்வில் புதிய சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கோலங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக அமைந்தது. இம்மாற்றத்தை மலேசியாவில் தோற்றம் பெற்ற நாட்டார் பாடல்களில் அவதானிக்க கூடியதாக உள்ளது.
தொட தொடன்று வண்டியிலே s தொரையு வந்திட்டான் கோயிந்தம்மா தொரையும் வந்திட்டான்
கீச்சு மூச்சு வண்டியிலே கிராணி வந்திட்டான் கோயிந்தம்மா கிராணி வந்திட்டான். ஏத்த உளி பட்டைச் சாக்கு எங்கடி வச்சே கோயிந்தம்மா எங்கடி வச்சே? அஞ்ச நம்பர் மேட்டுமேலே அங்கேதான் வச்சேன் மாமா அங்கேதான் வச்சேன் களைத்துப் போனேன் தேடித்தேடி காணலை மாமா அதை
5666) of

Page 8
கரடு முரடு சைக்கிளிலே கங்காணி வந்திட்டான் கோயிந்தம்மா கங்காணி வந்திட்டான் எடுத்து வந்த காண்டா வாளி எங்கடி வச்சே கோயிந்தம்மா எங்கடி வச்சே? ரண்டா நம்பர் மேட்டுமேலே இங்கேதான் வச்சேன் மாமா?
புதியதோர் பொருளாதார அமைப்பில் புதியதொரு வாழ்க்கை உற்பத்தி முறையை உடைய மலேசிய பெருந்தோட்ட துறையில் மலேசிய தமிழரிடையே ஏற்பட்ட புதிய அனுபவங்கள், உணர்வு களை மேற்குறித்த பாடல்களில் தரிசிக்க கூடியதாக உள்ளன.
மலேசியாவில் அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் மலேசிய தமிழர் ஒரு தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மலேசியாவில் வாழ்கின்றன பிறமக்கள் தொகுதியினரான சீனர்கள், மலாயர்கள் மற்றும் ஏனைய இனத்தவரிலிருந்து பிரித்தறியக் கூடிய உடலமைப்பு குணநெறிகளை கொண்டதோர் சமூகமாக விளங்குகின்றனர். இப்பின்னணியில் அம்மக்களின் அரசியல் சமூக பொருளாதார, பணி பாட்டு அம்சங்கள் குறித்து நோக்குகின்ற போது இம்மக்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் நியாயமானதே.
மலேசிய தமிழர்கள் குறிப்பாக அடிநிலை மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்லர். எந்தவொரு நாகரிக சமூகத்தின் மூலத்தைப் போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதோர் பொருளாதார துறையை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் அமைத்த இந்தப் பொருளாதாரத் துறையும் அவை சார்ந்த அமைப்புகளும் இன்று மலேசிய நாட்டின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இம்மண்ணின் மக்களே என்பதை ஆதாரப்படுத்துகின்றன. ஒருபுறமான காலனித்துவ ஆதிக்கமும் மறுபுறமான சமூகவுருவாக்கமும் இணைந்து, தாம் தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம்.
-12

இன்றுவரை இவர்கள் பல்வேறுவிதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன்வைக்கும் ஒரு பிற்போக்கு வாதியின் பார்வையும் ஒரு மார்க்ஸிய வாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பட்ட சிந்தாந்தங்களைக் கொண்டவையாகும். மலேசிய தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும்.
ஆனால் இன்று வரை மலேசிய அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களைக் குறிப்பதற்காக "இந்திய தமிழர்” என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது மலேசிய பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஒர் உறுதியான இன, மத, மொழி, அரசியல், பொருளாதார, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்ற இம் மக்கள் மலேசியத் தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.
மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலேசியத் தமிழருடன் எவ்வித தொடர்பும் இல்லாத இந்திய தமிழரும் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் மலேசிய தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய மலேசிய நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலேசிய தமிழர் சமுதாயத்தில் தோன்றிய தரகு முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு சாதகமாகக் காட்டி அதனுரடாகத் தமக்கு சாதகமான நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே "இந்திய தமிழர்” என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர்.
தேசிய சிறுபான்மை இனத்தரகு முதலாளித்துவ வர்க்கம் பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் போக்கு மலேசியாவிற்கு மட்டும் உரித்தானதொன்றல்ல.
பர்மாவிலே இந்திய நிலவுடைமையாளர்களும் பூர்ஷ்வாக்களும் தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற
- 13

Page 9
நாடுகளில் சீன பூர்ஷவாக்களும், மலேசியாவில் சீன, இந்திய பூர்ஷ்வாக்களும் இவ்வாறே ஆதிக்கம் செலுத்தினர். இதற்கான காரணம் யாதெனில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூலதனத்துவ வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்தபடியால் ஒரளவு வர்த்தக மூலதனத்துவ வளர்ச்சி பெற்ற அண்டை ஆசிய நாடுகளைச் சேர்ந்த பூர்ஷ்வாக்கள் வர்த்தகத்துறையைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பதேயாகும்."
இவ்விடத்தில் மலேசியாவின் சூழலை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானதாக அமையும். "இங்கு நகரத்தை மையமாகக் கொண்ட பெரும் வர்த்தக பூர்ஷ்வாக்கள் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதே சமயம் அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத அதே சமூகத்தை சார்ந்த பெருமளவு மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து கொண்டு தனியான மக்கள் குழுவாக உருவாகிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பூர்ஷ்வாக்கள் தோன்றி வளர ஆரம்பித்த போது இந்த "அந்நிய பூர்ஷ்வாக்களுக்கு" எதிராக தேசியவாதம் கிளப்பப்பட்டது. அத்தேசியவாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராகவும் திசை திரும்பியது. அதை விட முக்கியமான விடயம் யாதெனில் அதுவரை தம் சமூகத்தைப் பற்றி கவலைப்படாத தேசியச் சிறுபான்மை பூர்ஷ்வாக்கள் தமக்குப் பிரச்சினை வந்தபோது தமக்கு எதிராகத் தேசியவாதம் எழுப்பப்பட்டபோது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிலாளரிடம் ஓடினர். அவர்கள் மத்தியில் தேசிய வாதத்தைத் தட்டி எழுப்பி அவர்களை ஸ்தாபனப்படுத்தினர். ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் கொடுத்தனர். தேசிய இயக்கங்களைத் தொடக்கி தலைமை தாங்கினர்."
மறுபுறமாக மலேசியத் தமிழர் என்ற உணர்வும் அதன் வெளிப்பாடான தேசியமும் மலேசிய தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாகும். சாதியம்
மனித சமுதாயத்திலே ஏற்றத் தாழ்வுகள் தோன்றிய பின்னர் மேற்குலகம் வர்க்கங்களாக பிளவுபட்டது போன்று இந்திய சமுதாய அமைப்பானது சாதியத்தால் பிளவுப்பட்டது. மேலைய நாட்டார் வருகையின் காரணமாக இந்திய சமுதாயத்திலே சிற்சில மாற்றங்கள்
- 4

ஏற்பட்ட போதிலும் சாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகவமைப்பே இன்னும் காணப்படுகின்றன. இது குறித்து பேராசிரியர் க.கைலாசபதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"இந்திய சமுதாயம் பல்வேறு சாதிகளின் வலைப்பின்னலாகவே இயங்கி வந்தது. ஏனெனில் தொடக்கத்திலே வைதீக நெறியின் அடிப்படையிலே நால்வருணப்பாகுபாடு நிலவியபோது அது ஒர் இந்து மத நிறுவனமாயிருந்தது" ஆனால் காலப்போக்கில் பெருகிக் கொணி டே போன சாதிய தர்மமானது இந்திய நிறுவனமாயிருந்தது.
தென்னிந்திய சாதிய முறையின் தாக்கத்தை மலேசிய தமிழர் பண்பாட்டிலும் காணக்கூடியதாயிருந்தது. மலேசியாவின் புதிய சூழலுக்கு ஏற்ப அவை பரிணாமம் அடைந்து இருப்பதை உணரலாம். அந்த வகையில் மலேசிய தமிழர் பண்பாட்டில் காணப்பட்ட சாதிய முறையானது தென்னிந்திய சமுதாய அமைப்பு முறையிலிருந்து மாறுபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. மலேசியத் தமிழர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழி. லாளர்களாக இருந்தமையினாலும் தோட்டப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தமையினாலும் சாதியத்தின் இறுக்கமான உறவுகள் படிப்படியாக தளர்ச்சியடைந்துள்ளன.
காலனித்துவம் தொடக்கி வைத்த முதலாளித்துவ வர்க்க அடிப்படையிலான உறவுகள் அடிநிலையில் வாழ்ந்த உழைப்பாளர் கள் யாவரையும் இழிவானவர்களாகவே கருதின. முகாமைத்துவ வர்க்கத்தினரும் ஏனைய இதர வர்க்கத்தினரும் தொழிலாளர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டு இருந்தனர். இப்பின்னணியில் சகல சாதிகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரேவிதமான வாழ்வியல் பின்னணிகளைக் கொண்டிருந்த-மையிலும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் ஒரேமையத்தைக் கொண்டிருந்தமையினாலும் இவர்களிடையே இருந்த சாதிய உணர்வுகள் படிப்படியாகத் தளர்ந்து வர்க்க உணர்வுகள் மேலோங்குவதற்கு ஏதுவாக அமைந்தன. இது இவ்வாறிருக்க தென்னிந்திய சாதிய தாக்கத்தின் விளைவாக அச்சாதிய அமைப்பானது பொருளாதாரத் துறையில் தாக்கம் செலுத்தாத போதிலும் கலாசார பண்பாட்டுத் தளங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

Page 10
சமகாலத்தில் உருவான உலகமயமாதல் சூழலானது மனிதர்களிடையே போட்டி உணர்வை வளர்த்து ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதற்கு எதனையும் செய்யலாம் என்ற தனிமனித முனைப்பை ஏற்படுத்தியது. இச்சூழலானது மானிட விடுதலையை முன்னெடுக்கும் வர்க்க போராட்டத்தைச் சிதைப்பதற்காக இன, மத, மொழி, சாதி, பால், பிரிவினைகளை வளர்த்துத் தீவிரப்படுத்தியது.
இப்பின்னணியில் மலேசியாவில் இன்று சாதிய உணர்வு முனைப்படைந்து வருகின்றது. பல சாதிய சங்கங்கள் உருவாகி வந்துள்ளன. எடுத்துக்காட்டாக வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இச்சங்கங்களை வளர்ப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள் வரவழைக்கப்படுகின்றனர். 2006ஆம் ஆண்டு பல பிரதேசம் சார்ந்த முக்குலத்தோர் சங்கம் நடிகர் திரு.எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களையும், மலேசிய வன்னிய சங்கத்தின் அழைப்பின் பேரில் டாக்டர் இராமதாஸ் அவர்களையும் மலேசியாவிற்கு அழைத்தி ருந்தமை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
மறுபுறமாக மலேசியாவில் கட்சிகளை உருவாக்குகின்ற பொழுதும் அவை சாதிய அடிப்படையிலேயே உருவாகின்றன. குறிப்பாக மலேசிய இந்தியன் காங்கிரஸ் பெரும்பாலான தலித் மக்களைக் கொண்ட ஒரு அமைப்பாகக் காணப்படினும் அதன் தலைமைத்துவம் தாழ்த்தப்பட்டோரைப் புறக்கணிப்பதாகவே அமைந்துக் காணப்படுகின்றது. இவ்வமைப்பின் தலைவரான டத்தோ சாமிவேலு அவர்களின் விசுவாசமான துதிபாடிகளில் ஒருவரான டத்தோ எம்.ஜீபண்டிதன் தமக்கான பதவி பற்றி சிந்தித்த போது ம.இ.க விலிருந்து விலகி அகில மலாய இந்தியர் முன்னேற்ற (up6760760f (All Malaysian Indian Progressive Front) 6T6ip-960LDilaou உருவாக்கினார். தன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்ற அடையாளத்து டன் தலித் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். ஒருவகையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம் என்ற இவர்களின் கோசத்தின் பின்னனியில் பறையர் சமூக மேட்டுக் குடியினரின் மேலாதிக்கமே காணப்படுகின்றது. இவ்வியக்கத்தில் முக்கியமாக பள்ளர்களும் அருந்ததியர்களும் புறக்கணிக்கப்பட்" டனர். ம.இ.கா.போல தமது கட்சியையும் ஆளும் வர்க்கத்துடன் இணைந்தே செயற்பட வேண்டும் என்ற சிந்தனையை முன்
- 16

வைத்தார். அவ்வகையில் பரந்துபட்ட தமிழர் சமுதாயமானது மலேசியத் தமிழர் என்ற அடிப்படையில் அவர்கள் இணைவதைத் தடுத்ததுடன் சாதிய அடிப்படையில் மக்களைப் பிரித்து அவர்களை அதிகார வர்க்கத்திடம் காட்டி அற்ப சலுகைகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர். இது குறித்து மலேசிய எழுத்தாளர் மு.வரதராசு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "பண்டிதனும், ஆளும் கட்சியினருக்கு துதிபாடி பிழைப்பு நடத்தி வருகிறார். ம.இ.கா.போல தமது கட்சியையும் ஆளும் கட்சியுடன் இணைத்து விட வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக முயல்கிறார். ஆளும் கட்சிக் கூட்டணியில் இணைவதை தவிர வேறு எந்த செயல்திட்டமும் அவருக்கு இல்லை. அங்கு தலித்துகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை எல்லாம் கண்டிக்" காமல் துதிபாடுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இவ்வகையில் மலேசிய தமிழர்களின் பண்பாட்டில் சாதியம்" தாக்கம் செலுத்துவதாக அமைந்து காணப்படுகின்றது.
இனவொடுக்கு முறைகள்
இலங்கை மலையகத்தைப் போன்று ஒரு தொழிலாளி ஓய்வு பெற்றபின் தொடர்ச்சியாக அக்குடியிருப்பில் வாழக்கூடிய உரிமை மலேசிய தோட்டத் தொழிலாளிக்கு இல்லை. இதன் காரணமாக ஒய்வு பெறுகின்ற தொழிலாளர்களும் அவர் சார்ந்த குடும்பமும் (குடும்பத்தில் எவரேனும் வேலையற்று இருப்பின்) வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. M
அவ்வகையில் தோட்டத் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் அதி முக்கிய பிரச்சினை, சொந்த வீட்டுப் பிரச்சினைதான். ஒரு தொழிலாளி தன்னுடைய ஆயுட்காலம் முழுவதும் தோட்ட முதலாளிகளுக்கு உழைத்து விட்டுத் தன்னுடைய ஒய்வு காலத்தில் தங்குவதற்கு ஒரு குடிசை கூட இல்லாத நிலையில் உழலுகின்ற ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். ·
ஆண்டாண்டு காலமாக தோட்டத்தில் உழைத்த தொழிலாளர்கள் தங்களுடைய ஓய்வுகாலச் சலுகைகள் பெற வேண்டுமானால் முதலில் தாங்கள் குடியிருந்து வரும் முதலாளிகளுக்குச் சொந்தமான வீட்டை காலி செய்ய வேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
-7-

Page 11
இந்த மாபெரும் மோசடி ஒப்பந்தத்தை முதலாளிகளும் தோட்ட தொழிற்சங்கமும் செய்துள்ளனர்."
இவ்வாறாக, பல்வேறுவிதமான பிரச்சினைகளைத் தொழிலாளர்கள் குடியிருப்பு தொடர்பில் அனுபவித்து வருகின்றனர். இச்சதித்திட்டங்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஆங்காங்கே சில போராட்டங்களை நடத்தி வந்திருப்பினும் அவை ஒரு இயக்கம் சார்ந்த போராட்டமாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மறுபுறமாக இந்நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் மலேசியத் தமிழர் பரந்துபட்ட பிரதேசத்தில் ஒர் இனமாகக் கூடி வாழ்வதைச் சிதைக்கின்றன. அவர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான, தமது இனத்துவ அடையாளத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியாத வகையில் இக்குடியேற்ற திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மலேசியத் தமிழர்களின் கலாசாரப் பணி பாட்டு பாரம்பரியங்கள் நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகின்றன. மலேசிய அரசாங்கமானது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முனைப்பு படுத்தியுள்ளதுடன் ஏனைய மக்கள் குழுமத்தினரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளங்களை நாளுக்குநாள் அழித்து வருகின்றது. மலேசியாவில் பல பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்கள் இடித்து உடைக்கப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் அரசால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வகையில் நோக்குகின்ற போது மலேசிய தமிழர்களின் கலாசார பண்பாட்டுக் கூறுகள் திட்டமிடப்பட்ட வகையில் மலேசிய பெருந்தேசியவாதிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் சிங்கள பெருந்தேசிய வாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக எத்தகைய கலாசார பண்பாட்டு ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றார்களோ அவ்வாறே மலேசியாவில் மலாய பெருந்தேசிய வாதிகள் தமிழர்களுக்கு எதிரான கலாசார பண்பாட்டு ஒடுக்கு முறைகளை நடாத்தி வருகின்றனர்.
உலகமயம் என்பது ஒரு பன்முக நிகழ்ச்சிப் போக்கு. இது பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் முக்கியதாக்கம் செலுத்தி வருகின்றது. இன்று உலகமயமாதல்

என்கின்ற சிந்தனைப் போக்கானது ஏகாதிபத்திய சிந்தனைப் போக்காகவே வெளிப்பட்டு நிற்கின்றது. இதனை முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டம் என்பர்.
ஏகாதிபத்திய நாடுகள் தமது தேச எல்லையைக் கடந்து ஏனைய நாடுகளில் தமது மூலதனத்தை முதலீடு செய்து அந்நாடுகளின் வளங்களை ஈவு இரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். தமது ஏகபோக நலன்களுக்குச் சாதகமாகப் பண்பாட்டு கூறுகளையும் அந்நாடுகளில் உருவாக்க முனைகின்றனர். இப்போக்கை நாம் மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற தொழிற்துறை வளர்ச்சியிலும் காணக்கூடியதாக உள்ளது. இன்று மலேசியாவில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் தனியார் கம்பனிகள் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு நிதி முதலீட்டின் மூலமாக நாட்டை அபிவிருத்தி செய்தல் என்ற திட்டங்களின் மூலம் இந்நாடு கொள்ளையடிக்கப்படுகின்றது. குறிப்பாக இவ் அபிவிருத்தித் திட்டங்களும் தமிழரைப் பெரிதும் பாதித்து வருகின்றன. நகர அபிவிருத்தித் திட்டங்களினூடாகத் தமிழரை ஓர் இனமாகக் கூடி வாழ்ந்த பிரதேசங்கள் சுவீகரிக்கப்பட்டு அவர்கள் வேறு இடங்களுக்குப் பலவந்தமாக அந்நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக கோலாலம்பூர், சாலாம் முதலிய பிரதேசங்கள் தமிழர் ஓர் இனமாக வாழ்ந்த பிரதேசமாகக் காணப்பட்டன.
தொழில்கள் •
மலேசிய தமிழர் மிகக் குறைந்தி தொகையினர் தனியார் கம்பெனிகளிலும், விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஏனைய அரச தொழில்களிலும் ஈடுபடக் கூடியவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலானோர் அடிநிலை உழைப்பவர்களாகவே காணப்படுகின்றனர். ஆரம்ப காலங்களில் மலேசிய தமிழர் பெரும்பாலானோர் இரப்பர் தோட்டங்களிலும் ரயில் பாதை அமைத்தல், ஈயம் தோண்டுதல், ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
ஆரம்ப காலங்களில் சிறு அளவிலாக பயிர்செய்யப்பட்ட செம்பனைப் பயிர்செய்கையானது காலப்போக்கில் அதன் அருமை அதிகரிக்க முக்கிய பெருந்தோட்டப் பயிர் செய்கை முறையாக வளர்ந்து வந்துள்ளது. செம்பனைத் தோட்டங்களில் வேலை
- 9

Page 12
செய்கின்ற தொழிலாளியொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒருசொட்டு இரத்தத்தையாவது சிந்தியே உழைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் இத்தோட்டங்கள் யாவும் தனியாருக்கு விற்கப்பட்டதன் விளைவாக மக்களின் கூலி குறைக்கப்பட்டுள்ளதுடன் வேலைச் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தோட்டங்களை பெருமளவிற்கு வாங்கியவர்கள் சீன முதலாளிகள். சீனர்கள் பொதுவாகவே கடின உழைப்பில் ஈடுபடுகின்றவர்கள் என்றவகையிலும் இன்று அவர்கள் பணம் சம்பாதிப்பதையே முக்கிய இலக்காகக் கொண்டிருக்கின்றமையினாலும் மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் ஆன்மா நசுக்கப்பட்டு அவர்களின் உடலுழைப்புப் பிழிந்து எடுக்கப்படுகின்றது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான வசதிகள் கூட இன்று மறுக்கப்பட்டு வருகின்றன.
மறுபுறமாக இந்நாட்டுத் தொழிலாளர்களுக்கு பதிலாக பிறநாட்டு தொழிலாளர்களை (தற்காலிக தொழிலாளர்கள்) பயன்படுத்துகின்ற சூழல் இன்று மலேசியாவில் உருவாகி வருகின்றது. குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட ரீதியாகவும் சட்ட முரணானதர்கவும் வேலை தேடி மலேசியாவிற்கு வருகின்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் (குறிப்பாக இந்தோனேசியா, மியன்மார், லாவோஸ், இலங்கை, இந்தியா முதலிய நாடுகளிலிருந்து) குறைந்த கூலிக்குத் தமது உழைப்பை விற்பவர்களாகக் காணப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக மலேசிய தொழிலாளர்கள் 25 வெள்ளிகளுக்கு (Rm) வேலை செய்பவர்களாக காணப்பட்டால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 15 வெள்ளிக்கு (Rm) வேலை செய்யத் தயாரானவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே தனியார் கம்பெனிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தவே விரும்புகின்றனர். இவ்வாறு மலேசிய தொழிலாளர்களுக்கு எதிராகப் பிறநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற நிறுவனங்கள் அத் தொழிலாளர்களின் உழைப்பையும் உதிரத்தையும் கசக்கி பிழியவும் தயங்குவதில்லை.
இந்த நிலைமைகள் காரணமாக தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறிச் செல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நகரை ஒட்டி கீழ்நிலை தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். விரல் விட்டு
-20

எண்ணக் கூடியவர்களே சாரதிகளாகவும் மற்றும் தற்காலிகமாக தனியார் கம்பனிகளில் கிடைக்க கூடிய மத்தியதர தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அத்தோட்டங்களிலே கங்காணிகளாகவும், அலுவலகப் பணிகளிலும் மற்றும் செம்பனைப் பயிர்களுக்கு இடையில் வளர்கின்ற களையெடுக்கின்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறிருக்க ஒப்பந்தக்காரர்களின் கீழ் கொத்தடிமை முறையில் வாழ்ந்து வருகின்ற தமிழ் தொழிலாளர்களும் மலேசியாவில் காணப்படுகின்றனர். ஒப்பந்தக்காரர்கள் தம்மிடம் பெற்ற கடன்களுக்காக இவர்களைத் தமது சொந்த அடிமை போல் நடத்துகின்றனர். இவர்களின் அனுமதியின்றி அவர்கள் வெளியில் செல்லுகின்ற உரிமையோ அல்லது வேறு எவருடனும் தொடர்பு கொள்கின்ற உரிமையோ அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் உழைப்பில் ஈடுபடாத போதோ அல்லது தமக்கு வெறுப்பு வருகின்ற போதோ அவர்களைத் தடி கொண்டு அடிக்கின்ற உரிமையையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். தமக்கு அடிமைகளாக இருக்கின்ற பெண்களைப் போகப் பொருளாகவும் பாவித்து வருகின்றனர். பருவம் அடையாத சில பெண்களை இந்த ஒப்பந்தக்காரர்கள் கற்பழிப்பு செய்த சம்பவங்கள் ஏராளம். இவர்கள் அரசு துறை சார்ந்தவர்களையும் பொலிசாரையும் தமக்குச் சாதகமான வகையில் திசை திருப்பிக் கொள்கின்றார்கள்.
இரப்பர், செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்து தமக்கு அடிமையாகக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களை அத்தொழில்களில் ஈடுபடுத்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றார்கள். மிகச் சொற்ப கூலியையே அத்தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். அக் கூலியானது அவர்களின் வயிற்றை நிரப்பிக் கொள்ளக் கூட போதாது. அத்துடன் தேவையேற்படின் தமக்குக் கீழ் இருக்கின்ற தொழிலாள்ர்களை வேறொரு முதலாளிக்கு விற்பனை செய்யக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வடிமை முறையானது இந்தியாவி லிருந்த பண்ணை அடிமை முறையை விடக் கொடூரமானது.
-21

Page 13
கல்வி உரிமைகள்
மலேசியத் தமிழர்கள் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின்படி மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் கொண்ட குடிமக்களாவர். அந்த உரிமைகளில் ஒரு தனிமனிதன் ஒரு சமூகம் விரும்பும் இலக்குகளை அடைவதற்கு, சுதந்திரமாக வாழ்வதற்கு, முன்னேறுவதற்கு, மேம்பாடு அடைவதற்கு, பாதுகாப்புப் பெறுவதற்கு உரிய உரிமைகளும் அடங்கும். அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதற்கு இவ்வுரிமைகள் குடிமக்களுக்கு உரித்தாகும் என அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மொழி மலேசியத் தமிழர்கள் ஒப்பந்தப் பிணைப்பின் அடிப்படையில் கூலிகளாகக் கொண்டு வருவதற்கு முன்னரே வணிகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த படையினர் மூலமாக அந்நாட்டை வந்தடைந்தது.
"முன்சி” அப்துல்லா (1796-1854) தான் தமிழ்க்கல்வி கற்க அனுப்பப்பட்டது பற்றி கூறியிருக்கிறார். தமிழ் மொழி எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வணிக மொழியாக இருந்ததால் அவரின் தந்தை அவரை தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் தமிழ் கற்றிருந்தனர். ஆனால் தாய்மொழியை (மலாய்) கற்க வேண்டிய தேவையில்லாமல் Guittig, lg, 6Taipiti. ("Munshi Abdullah himself is said to have referred to Tamil as a universal language and that there was no necessity for studying the 'mother tongue' meaning Malay”)
மலாக்காவில் மட்டுமன்று ஏனைய கெடா, பேராக், பகாங் முதலிய மாநிலங்களிலும் தமிழ் மொழி சிறப்பு பெற்று விளங்கியதை அறியக் கூடியதாக உள்ளது. அத்துடன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல நிலப்பத்திரங்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தன.
“இத்தகைய தேவையின் பின்னணியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. அவ்வகையில் மலேசியாவில் தோன்றிய முதல் தமிழ்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறித்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் பள்ளிகளின் வரலாறு இருநூறாண்டுகளை
-22

அடையும். முதல் சீனப் பள்ளி 1815ஆம் ஆண்டில் தொடங்கியது. பிரிட்டிஷார் காலத்தில் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் தமிழ் பள்ளிகள் தோன்றின. பொருளாதார வளமற்ற தமிழ்ப்பள்ளிகள் தோட்ட உரிமையாளர்களின் தயவிலும் அரசாங்க உதவியாரும் இன்னும் சில தனியாரின் ஆதரவோடும் வளர்ந்த தமிழ் பள்ளிகள் நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் எண்ணிக்கையில் 888 ஆக இருந்தன. சீனப் பள்ளிகளின் எண்ணிக்கை 1343 ஆகும்". காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் தான் மலேசிய நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின. 1900ங்களில் அந்நாட்டிற்கு அதிகமாக வந்திறங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்காக பிரித்தானிய அரசு 1912 இல் தொழிலாளர் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலமாகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தோட்ட நிருவாகம் தமிழ் பள்ளிகளை உருவாக்கியது."
1930இல் 333 ஆக இருந்த தமிழ் பள்ளிகள் 1938 இல் 547 ஆக அதிகரித்தது. 1947இல் 741 ஆகவும் 1957 இல் 888 ஆகவும் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மலேசியத் தமிழர்களிடையே கல்விக்கான தேவை உணரப்பட்டு வருகின்றது. எனவே கல்வி ஆற்றலில் பங்கு பற்றுகின்ற மலேசியத் தமிழரின் அளவும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறானதோர் சூழலில் தமிழருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டு சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள் தமிழர்களின் கல்வித் துறையையும் பாதிப்பதாக அமைந்தது. இதன் காரணமாகத் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 1963ஆம் ஆண்டு 720 ஆகக் குறைந்தது. தொடர்ந்து 1969ஆம் ஆண்டு 662 ஆகவும் 1973ஆம் ஆண்டு 631ஆகவும், 1998ஆம் ஆண்டு 530 ஆகவும், 2000இல் 526 ஆகவும் 2006 ஆம் ஆண்டு 523 ஆகவும் குறைந்து விட்டன.
இவ்வாறு காலத்திற்கு காலம் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் மலேசியாவில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள எட்டாவது ஒன்பதாவது மலேசியத் திட்டங்களில் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. இது போக தமிழ்ப் பள்ளிகளை இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் மட்டும் தொடர்ந்துள்ளன.
மேலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியின் அளவும் மிகவும் குறைவாகவே உள்ளன. பல பாடசாலை
-23

Page 14
களின் கட்டிடங்கள் கறையான் அரித்த நிலையில் இடிந்து விழுகின்றவையாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மிக பின்தங்கிய பாடசாலையிலேயே கல்வி கற்று வருகின்றனர். எடுத்துக்காட்டாக சிரம்பான் மாநிலத்தில் அமைந்துள்ள ரீஜண்ட் தோட்ட தமிழ் பாடசாலை, லங்காவி, சுங்கை ராயா தோட்ட தமிழ் பாடசாலை
முதலியவற்றினைக் குறிப்பிடலாம்.
“சீன தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைகளும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் குறைவு கண்டுள்ளன. சீனமக்களின் எண்ணிக்கை உயர்ந்து, சீன மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும் புதிய சீனப்பள்ளிக் கூடங்கள் தேவைக்கேற்ற அளவில் கட்டப்படவில்லை. சீனர்களின் இடைநிலைப் பள்ளிகளுக்கு, அதாவது மெண்டரினை போதனை மொழியாகக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு, அரசாங்க நிதி ஒதுக்கீடு கிடையாது. அப்பள்ளிகள் "independent secondary schools" 6Taig), 960.pdisil IG) saipao.T. தமிழர்களுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளிகள் கிடையாது. மேற்குறிப்பிட்ட சீன இடைநிலைப்பள்ளிகள் அனைத்தும் சீன சமூகம் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இயங்குகின்றன. சீன அமைப்புகளின் வலுவான ஆதரவு அவற்றிற்கு உண்டு. ஆனால் தமிழ்ப் பள்ளிகளைச் சீன பள்ளியின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகின்ற போதும் தமிழ்ப் பள்ளிகளின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே ாணப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் வளர்ச்சியில் நன்கொடைகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன.
மலேசிய தேசிய கல்விக் கொள்கையில் காணப்படுகின்ற பிறிதொரு பாரபட்சம் சிறுபான்மையினத்தினருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மொழிக் கொள்கையாகும். 1957 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விச் சட்டமானது (விதி 3ல்) எல்லா இனங்களையும் இணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்க வகை செய்யும் வாசகங்கள் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பினும் நடைமுறையில் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே அமைந்து காணப்பட்டன. அத்தகைய குறைந்தபட்ச வாசகங்கள் கூட 1961 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விச் சட்டத்தில் (விதி 3இல்) நீக்கப்பட்டுள்ளன. இவ்வம்சம் எதனை உணர்த்துகின்றது?
-24

மலாயர்கள் அல்லாதோரின் மொழி, கலாசாரம், கல்வி உரிமைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சதித்திட்டமாகவே மேற்குறித்த கல்வித் திட்டம் அமைந்துள்ளது எனலாம்.
இச்சட்டத்தில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் "விதி21(2) ஆகும். இந்த விதி கல்வி அமைச்சர் விரும்பிய நேரத்தில் தாய்மொழியைப் போதனை மொழியாகக் கொண்ட தமிழ் அல்லது சீன தொடக்கப்பள்ளியை அரசாங்க மலாய்த் தொடக்கப் பள்ளியாக மாற்றுவதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்த் தொடக்கப்பள்ளியை மலாய்த்தொடக்கப்பள்ளியாக மாற்றும் முழு அதிகாரத்தை இச்சட்டத்தின் மூலம் கல்விஅமைச்சர் பெறுகிறார்." மேலும் பல்லின கலாசாரத்தைக் கொண்ட மலேசிய நாட்டில் சகல தேசிய சிறுபான்மையினரதும் மொழி கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை தகர்த்திவிட்டு ஓரின கலாசார கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு மேலும் வகை செய்யப்பட்ட புதிய கல்விச் சட்டம் 1996 இயற்றப்பட்டு 1999 ஜூலை மாதம் அமுல்படுத்தப்பட்டது.
இக்கல்விச் சட்டத்தின்படி தேசிய மாதிரி தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தங்களின் படிப்பைத் தொடர்வதற்காக மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் தமிழ்ப் பள்ளிகளிலேயே போதிக்கப்படுகின்றன. தமிழ் தொடக்கப் பள்ளிகளின் வளர்ச்சிகள், தமிழ்மொழி கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றன. தமிழ் மற்றும் சீன தொடக்கப்பள்ளிகள் ஆறாம் வகுப்புடன் முடிவடைந்து விடுகின்றன. மலாய் தொடக்கப்பள்ளிகள் மாத்திரம் தொடர்ந்து அரசாங்க நிதியில் இயங்கி வருகின்றன.
சில தேசிய பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படினும் அதனால் எவ்விதமான பலன்களையும் எதிர்பார்க்க முடியாது. தமிழ்மொழிப் பாடமானது கட்டாயமான பாடமாக இல்லாமையினாலும், மற்றும் தொழில் வாய்ப்பினைப் பெறுதற்குக் குறித்த மாணவனொருவன் மலாய் ஆங்கிலம் முதலிய மொழி களிலே தேர்ச்சி பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமையினாலும், தமிழ் மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்கும் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
-25

Page 15
தாய்மொழியே சிந்தனைக்கான கருவி. அதன் காரணமாக அது சிறந்த பயிற்று ஊடகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மொழியே சிந்தனைக்கான அடிப்படை எனவும் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் அவற்றின் வேறுபட்ட இயல்புகள் காரணமாகத் தம்மளவில் வெவ்வேறு உலகில் வாழ்கின்றனர் என மொழியியலாளர்கள் கூறுகின்றார்கள். எனவே ஒருவர் தனது உள்ளார்ந்த உணர்வுகளைத் தனது சொந்த மொழியில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்த முடியும்." அந்தவகையில் மலேசியத் தமிழ் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சியும் ஆக்கத்திறன் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுவதுடன் சமுதாய உணர்விலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றனர். ... . . .
அத்துடன் மலேசியத் தமிழர்களின் கல்வியுரிமையானது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையில் வழங்கப்படுகின்ற பூமிபுத்திராக்களுக்கான சலுகை பூமிபுத்திராக்கள் அல்லாத ஏனைய சிறுபான்மை இனத்தவரை அதிகமாக பாதித்து வருகின்றது. பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான நுழைவில் காட்டப்படுகின்ற பாரபட்சத்தின் விளைவாக சிறுபான்மையினர் கல்விக் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். அத்துடன் தமிழ்ப் பாடசாலைகளிலான ஆசிரியர் பற்றாக்குறை, பரீட்சை மதிப்பீடுகளில் காணப்படுகின்ற பாரபட்சம், மற்றும் பட்டங்கள் பெற்ற பின்னரும் அரச தொழில்களைப் பெறுவதில் உள்ள பாரபட்சங்கள் மலேசியத் தமிழ் மாணவர்களை வெகுவாகப் பாதித்ததுடன் அவர்கள் கல்வியில் விரக்தி கொண்டு, அதிலிருந்து விலகிச் செல்கின்ற நிலைமையும் இன்று உருவாகி வந்துள்ளது. தமிழர் ஒருவர் தாம் கல்வித்துறையில் எத்தகைய சிறப்புத் தேர்ச்சிகளையும் பட்டங்களைப் பெற்றிருப்பினும் கூட அவர் ஒரு மாவட்ட அதிகாரியாகக் கூட வர முடியாத சூழல் இன்று மலேசியாவில் காணப்படுகின்றது.
. இவ்வாறிருக்க, மலேசியத் தமிழர்களில் சிலர் பேராசிரியர்களாக, சட்டத்தரணிகளாக, அதிகாரிகளாக மற்றும் இராஜதந்திரிகளாகவும் சமூகப் பெயர்ச்சியை அடைந்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. குறித்த இச்சிறுகுழுவினரின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்தமான சமூகத்தின் வளர்ச்சியையும் மதிப்பிட முடியுமா?
شمہ*
-26

ஒரு நாட்டில் விவசாயி அல்லது தொழிலாளி ஒருவர் பிரதமமந்திரியாகிவிட்டார் என்றதற்காக அச்சமூகத்தினர் அனைவரும் முன்னேறிவிட்டார்கள் எனக் கருத முடியாது. அவ்வாறே பெண் ஒருவர் பிரதமமந்திரியாகிவிட்டார் என்பதற்காக அந்நாட்டின் முழுப் பெண்களும் விடுதலை அடைந்து விட்டார்கள் எனக் கூறமுடியாது. ஒரு சமூகத்திலான சிறு குழுவினரின் வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்கான குறிகாட்டிகளாக அமையாது. இருப்பினும் இச்சிறு தொகையினரின் வளர்ச்சியும் கவனத்திலெடுத்தல் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதுவே முழு வளர்ச்சியாகிவிடாது. <
அந்தவகையில் மலேசியத் தமிழர்களின் கல்வி உரிமையானது பல வழிகளில் மலேசிய அரசாங்கத்தாலும், ஏகபோக சக்திகளாலும், மற்றும் தேசிய பெருந்தேசியவாதிகளாலும் பாதிக்கப்பட்டு வந்துள்ளன; வருகின்றன. எனவே மலேசிய தமிழர்களின் சமூக மாற்றப் போராட்டத்தின் அங்கமாக கல்வியுரிமையும் விளங்குகின்றது.
அரசியல் தொழிற்சங்க அமைப்புகள்
எங்கெல்லாம் ஒடுக்கு முறைகளும் அடக்குமுறைகளும் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் போராட்டங்களும் போராட்ட இயக்கங்களும் அவை சார்ந்த வீரர்களும் தோன்றுவது இயற்கையின் நியதி. அவ்வகையில் ஆரம்ப காலங்களில் (1910 -1920) மலேசியத் தமிழர்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியான போராட்டங்களாக எழுந்த போதிலும் அவை ஒரு இயக்கமாக ஸ்தாபன மயமாக்கப்படவில்லை. ஆரம்பகால போராட்டங்கள் பொதுவாக கங்காணித்துவ மற்றும் நிர்வாக அடக்கு முறைகளை எதிர்த்து எழுந்தவையாகும். ஒரு தொழிலாளிக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராக ஏனைய சக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள். g } };
ஒரு வகையில் தொழிலாளர்களின் ஆரம்ப காலப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் அவற்றினை சிதைப்பதிலும் காலனித்துவவாதிகள் ஒரளவு வெற்றியும் கண்டனர் எனலாம். அத்துடன் இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
, -27

Page 16
இக்காலச் சூழலில் "இந்திய தொழிலாளர்களிடமிருந்து தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி ஏதும் தொடங்கவில்லை. இதற்கு சில காரணங்கள் கூறலாம். ஒன்று இந்தியத் தொழிலாளர்கள் ரப்பர் தோட்டங்கள் போன்ற துண்டித்து தனிமையாக்கப்பட்ட குறுகிய சமூக, பொருளாதார உலகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். மேலும், இந்தியத் தொழிலாளர்கள் ஒருபோதும் அரசியல் சார்பு கொண்டிருக்கவில்லை.
1930 இன் பிற்பகுதியில் தோன்றிய தீவிரமான இந்தியத் தேசியம், தோட்டத் தொழிலாளர்களின் விழிப்புணர்ச்சிக்கும் போராட்ட உணர்விற்கும் வித்துகளை விதைத்தது. தோட்டத் தொழிலாளிகளின் மத்தியில் 1936 இல் அமைக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர் சங்கம் (CIAM) பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுகளைப் பரப்பியது. இந்திய அமைப்பு 1938இல் தனது விடாப்பிடியான போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து பிறர் உதவியுடன் குடியேறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது"
1940களில் இவ்வியக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியது. விலைவாசியின் ஏற்றத்தைக் கருத்திற் கொண்டு சீன மற்றும் மலாய தொழிலாளர்களின் சம்பளம் எவ்வாறு உயர்த்தப்பட்டதோ அவ்வாறே மலேசிய தோட்டத் தமிழ் தொழிலாளர்களினதும் சம்பளம் உயர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியது. வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டமாக மட்டுமன்று, அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாகவும் அது திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும். அவ்வகையில் கிள்ளான் மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்டங்கள் முக்கியமானவையாகும்.
இதன் இன்னொரு வளர்ச்சிக் கட்டமாகவே மலேய தொழிற் Filesius6rflaử FubGLDGITGITšGangs (Pan - Malayan Federation of Trade Unions-PMFTN) குறிப்பிடலாம். 1945க்கும் 1947க்கும் இடையிலான காலப்பகுதியில் மலேசியாவில் உருவான பல தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர்கள் சார்பான உறுதிமிக்க போராட்டங்களை நடாத்தின. குறிப்பாக இவ்வமைப்பானது தொழிற்சங்கம் எனும் விடயத்தை கடந்து பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் சித்தாந்த கோட்பாட்டினைக் கொண்டிருந்தமை இதன் பலமான அம்சமாகக் காணப்பட்டது.
-28

சகல நேசசக்திகளும் ஒன்றிணைந்திருந்தனர். நண்பன் யார்? எதிரி யார் என்பதில் மிகத் தெளிவான பார்வையையே கொண்டிருந்தனர்.
1940களின் பிற்பகுதியில் மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்து ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியது. அவ்வமைப்பானது முதலாளித்துவ முறைமைகளையும் அடக்கு முறைகளையும் மாற்றி அமைப்பதற்காக கடுமையாக போராடியது. குறிப்பாக இறப்பர் தோட்டங்களிலும் நிலக்கரி, ஈய சுரங்கங்களிலும் கடுமையாக சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கையை முன்வைத்து அப்போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
அவை வெறுமனே தொழில் பிரச்சனைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்று அரசியல், பொருளர்தார, சமூக பண்பாட்டு விடுதலையையும் வேண்டி நின்றமை அதன் பலமான அம்சமாகும்.
இச்சூழலானது அ.ம.தொ.ச அமைப்பைப் பலப்படுத்தியது. இதன் வெளிப்பாடாகத் தொழிலாளர்கள் தமது கூலி, உரிமைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்தனர். சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடந்தேறிய போராட்டங்களும் மலேசியாவில் தாக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தன.
மலேசியாவில் இவ்வெழுச்சியானது ஆளும் வர்க்கத்தினரையும் ஏனைய இதர வர்க்கத்தினரையும் அதிர்ச்சிகொள்ளச் செய்திருந்தது. எனவே 2ம் உலகப் போரின்போது மலேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.ம.தொ.க ஆகிய இயக்கங்களும் சட்ட பூர்வமான இயக்கங்கள் அல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்ட திருத்தங்கள் அனைத்தும் அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தை (PMFTU) அழிப்பதற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.
புதிதாக திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் 1946ஆம் ஆண்டு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் 03-11-1946 ஆம் ஆண்டு தன்னை ஒரு சம்மேளனமாக (as federation) பதிவு செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட மனு 12-06-1948 இல் நிராகரிக்கப்பட்டதாகக் காலனித்துவ அரசு பி.எம்.எப். ப் டி.யு (PMFTU) விடம் தெரிவித்தது.
-29

Page 17
அதாவது இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முன்பு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனு. அந்த மனுவை நிராகரிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதியில் "பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்பு" என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட்டால் வர்ணிக்கப்பட்ட அகில மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது"."
இக்காலப்பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பலர் கொன்று குவிக்கப்பட்டனர். சிலர் காடுகளில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தனர். தமிழர்களிடையே பொதுவுடைமைச் சித்தாந்தத்தை கட்டி வளர்த்த S.A.கணபதி தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இரையானார். இது இவ்வாறிருக்க மக்களிடையே கட்டி வளர்க்கப்பட்ட போராட்ட உணர்வுகளும் குணாதிசயங்களும் ஆதிக்க சக்திகளை நிலைதடுமாற வைத்ததுடன் அவர்களைச் சிந்திக்கவும் வைத்தது. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த வர்க்க உணர்வை கூர்மழுங்கச் செய்வதற்காக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் மிக முக்கியமானதோர் சூழ்ச்சியைச் செய்தது.
அதன் முதற் கட்ட அம்சமாக போர்க்குணம் மிக்க தொழிற்சங்கத்திற்கும் அதன் அரசியல் உணர்விற்கும் பதிலாக அடிமையுணர்வை வளர்க்கக் கூடிய தொழிற் சங்கத்தை உருவாக்கியது. 1946 இல் தேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் காலனித்தவ வாதிகளின் அற்ப சலுகைகளுக்கும் அடி வருடியாக இருக்கக் கூடிய PPநாராயணன் என்ற இடைத் தரகரைக் காலனித்துவ அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. இவ்விடைத்தரகரே இவ்வமைப்பின் ஏகபோக செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். ஒரு தொழிற்துறைக்கு ஓர் தொழிற்சங்கமே அமைக்க முடியும் என்ற மலேசிய தொழிற்சங்கச் சட்டத்தைச்" சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களையும் உரிமைகளையும் மழுங்கடிப்பதில் ஆதிக்க வர்க்கமும் இடைத்தரகர்களும் ஓரளவு வெற்றியும் கண்டனர்.
-30

“நாராயணன் போன்றோரின் முயற்சியால் நாட்டின் அரசியலில் அக்கறை ஏதும் கொள்ளாததும், போராட்ட குணம் இல்லாததுமான தொழிற்சங்கத் தலைமையொன்று தோன்றியது. வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்த தொழிற்சங்க இயக்கம் 148-50 இல் வளர்ச்சி பெற்றது. அதன் முக்கிய செயற்பாடு ஒரளவு ஊதிய உயர்வைப் பெறுவதும் வேலை நிலைமைகளை ஒரளவு மேம்படுத்துவதும்தான். 1950 இல் மலாயா தொழிற்சங்க கவுன்சில் (இது பின்னர் மலேசிய்ா தொழிற்சங்க காங்கிரஸ் எனப்பெயர் மாற்றப்பட்டது) உருவாக்கப்பட்டது. ஒரு தேசிய தொழிற்சங்க மையமாகச் செயல்படுவதுதான் இதன் குறிக்கோள். அன்று முதல், தொழிற்சங்க நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. சோறும் கறியும் பற்றிய பிரச்சினைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்ற வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளாகிவிட்டன. தொழிற்சங்கங்களின் அரசியல், சமூகப் பாத்திரங்கள் அரசாங்கத்தால் அன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன."
இவ்வியக்கமானது ஏகாதிபத்திய நலன்களுக்குத் தொழிலாளர்களை தாரை வார்ப்பு செய்கின்ற பணியினையும் ԼOԱ)/ւյ{DւOn 5 அவர்களின் குறைந்தபட்ச உரிமைப் போராட்டங்களைக் கூட சமரசம் செய்துவிடுகின்ற பணியினையும் சிறப்பாகவே செய்து வருகின்றது. இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தமது அடையாளங்களை அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டுத் துறையில் இழந்து நிற்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல.
மறுபுறமாக இம்மக்களிடையே எழுந்த மலேசியன் இந்தியன் காங்கிரசானது மலேசிய தமிழரில் தொகையில் கூடிய தொழிலாள வர்க்கமான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இனத் தனித்துவத்தைச் சிதைப்பதில் ஆளும் வர்க்கத்தினருடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. அவர்களின் வர்க்க இனத் தனித்துவத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற பெருந்தோட்ட தொழிற் துறையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் மிக வேகமாகவே செயற்படுத்தி வருகின்றது. இதற்கு எதிராக மக்களிடையே எழுகின்ற போர் குணங்களை திசை திருப்பி அதனைச் சமரசம் செய்து கொள்வதன் மூலமாக முழு மந்திரி, அரை
-31

Page 18
மந்திரி பதவிகளையும் பெற்றுக் கொள்கின்ற பணியினை ம.இ.க.வும் இது போன்ற அமைப்புகளும் சிறப்பாகவே செய்து வருகின்றன.
பெண் ஒடுக்குமுறைகள்
ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து மலேசிய தோட்டங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆண்களேயாவர். காலப் போக்கில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூலிப் பட்டாளத்தை விருத்தி செய்யும் நோக்கிலும் ஆணிகளை விடப் பெண்களின் உழைப்பை மிகக் குறைந்த விலையில் சுரண்டுவதற்காகவும் பெண்களை மலேசியாவிற்கு இறக்குமதி செய்ய வேண்டிய தேவை பிரித்தானிய காலனித்துவ வாதிகளுக்கு ஏற்பட்டது. 1928ஆம் ஆண்டு மூன்று ஆண்களுக்கு இரண்டு பெண்கள் கட்டாயமாக கொண்டுவரப்பட வேண்டும் என்ற சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பின்னணியில் தமிழ் பெண்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.
மலேசியாவில் பெருந்தோட்டங்களிலும் அதனைச் சூழ்ந்துள்ள நகரங்களிலும் வாழும் பெண்களைக் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து பெருந்தோட்ட பயிர்செய்கைக்காக கொண்டு வரப்பட்ட தமிழ்ப் பெண்களையும் அவர்களுடன் இணைந்து வந்த தமிழ்ப் பெண்களையுமே மலேசியத் தமிழ்ப் பெண்கள் என அழைக்கின்றோம். இன்று மலேசிய தமிழ்ப் பெண்களை பொறுத்தமட்டில் அவர்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி அந்தஸ்து அடிப்படையில் அவர்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.
1. பெருந்தோட்டத் தொழில்களில் ஈடுப்பட்டுள்ள பெண்கள் 2. பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற கல்வியறிவு பெற்ற பெண்கள் 3. பெருந்தோட்ட உத்தியோகத்தர்களை சார்ந்த பெண்கள் 4. நகரங்களில் அடிநிலை தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்கள்
5
நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்கின்ற மத்திய தர வர்க்க பெண்கள்.
-32

மலேசியத் தமிழ்ப் பெண்களை இவ்வகையான வகைப்பாட்டிற்கு கொண்டுவரினும் பெண்கள் என்ற அடிப்படையில் இவர்கள் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்பட்டு வருகின்றனர். “பாட்டாளியின் உழைப்பு சுரண்டப்படுவதிலும் பார்க்க மோசமாகப் பெண்களின் அடிமை உழைப்பு முதலாளிகளாலும் மற்றும் அனைத்து ஆணின வர்க்கங்களாலும் அபகரிக்கப்படுகிறது. பாட்டாளிக் கணவன் கூட பெண் உழைப்பை அத்துமீறிச் சுரண்டும் நிலை இன்றும் நிலவுகிறது. இத்தகைய சமூக அமைப்பை முதலாளித்துவம் தன் வர்க்க நலனுக்காக பலாத்கார அரசு அமைப்பு மூலம் பேணி வருகிறது. பெண்களின் அடிமை உழைப்பு அபகரிக்கப்படும் முறையை நன்கு கிரகிக்கும் வரை பெண்ணடிமையின் அடிப்படைக் காரணங்களை நன்கு புரிந்து கொள்ள முடியாது." இவ்வகையில் நோக்குகின்ற போது மேற்குறிப்பிட்ட பெண்கள் யாவரும் பொதுவான பெண்ணொடுக்கு முறைக்குட்பட்டு வருவதுடன் தேசிய சிறுபான்மை இனத்தவர் என்ற வகையிலான ஒடுக்கு முறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். அத்துடன் பெருந்தோட்டத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களும், நகரில் கீழ்மட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களும் மேற்குறித்த பெண்களிலிருந்து மாறுபட்டு இன, மத, மொழி, பால், சாதி, வர்க்க அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு வருவதனை அவதானிக்கலாம். எனவே மலேசிய தமிழ் பெண்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
ஆரம்ப காலங்களிலே பெருந்தோட்ட் பயிர்ச்செய்கையின் போது களையெடுத்தல், காய்கறிதோட்டம் அமைத்தல் போன்ற தொழில்களிலே பெண்கள் ஈடுபட்டனர். காலப்போக்கில் இவர்கள் இறப்பர் தோட்டங்களிலும் செம்பனைத் தோட்டங்களிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். காலத்திற்கு காலம் மலேசியாவில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் தனியார் முகவர், வணிக நிலையங்களிலும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இங்கு பெண்களின் உழைப்பானது மலிவு விற்பனையில் சுரண்டப்பட்டது. குறிப்பிட்ட வேலைகளுக்கான ஆண் தொழிலாளர்கள் இல்லாத போதும் மற்றும் அதிகமான உழைப்பு தேவைப்பட்ட போதும் பெண் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான ஊதியமானது ஆண் தொழிலாளர்களை விட குறைவாகவே
-33

Page 19
காணப்பட்டது. மறுபுறமாக வீட்டு வேலைப்பழுவும் பொறுப்பும் அவர்களை மேலும் வாட்டியது. தோட்டப்புறப் பெண்கள் தமது தொழில்களில் ஈடுபடுகின்ற போது பல்வேறுபட்ட பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டனர். மேலதிகாரியின் அல்லது முதலாளியின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யாத பெண்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் தமது போகப் பொருளாகவே இப்பெண்களை நோக்கினர். இவ்வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இருப்பினும் இரண்டு நிகழ்வுகளை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
‘ஏழு குழந்தைகளைப் பெற்ற பெண்மணி ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அவரது கணவர் வேறு ஊரில் லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார். அவளது கங்காணி அப்பெண்மணியை ஆள்யாருமற்ற இடத்திற்கு வேலை செய்ய அனுப்பி விட்டு பின்னால் சென்று வம்பு செய்வது வழக்கம். ஒரு நாள் கோபமடைந்த அப்பெண் கங்காணியை அடித்து விட்டார். அப்பெண்மணி தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். கங்காணியிடம் மன்னிப்பு கேட்குமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை அவர் மறுத்ததால் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார். அவரது கணவர் வேறு இடத்தில் வேலை செய்ததால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. குடியிருப்பையும் உடனடியாக அவர் காலி செய்ய வேண்டி இருந்தது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அவர் கொடுத்த விலை இது.
கண்ணம்மா என்கிற பதினாறு வயது மாணவி சிற்றம்மை நோய்க்காக சுங்கைதீங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அன்றிரவு அங்குள்ள ஹெச்.ஏ.அவரிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார். கண்ணம்மாவை உடைகளைக் களைய அவர் கூறியதற்கு, மறுப்பத் தெரிவிக்கவே, பரிசோதனை மேஜைமேல் படுக்குமாறு கூறி, கீழ்த்தரமான சேட்டைகளில் இறங்கியுள்ளார். கணிணம்மாவுடன் வந்த தாயாரும், மாமனும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட ஹெச் ஏ.உடனடியாகப் பிணையில் விடப்பட்டார். போலீஸ் விசாரணை நடைபெறுவதால், தாங்கள் எந்த
-34

நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் கையை விரித்துவிட்டது. இதற்கிடையே தோட்டத்தில் பரிகாசப் பொருளாக ஆகிவிட்டாள் அச்சிறுமி"
இவ்வகையில் பல்வேறு உதாரணங்களைக் காட்டலாம். நவீன சூழலில் புதியதொரு சந்தையாக வளர்ந்துள்ள விபச்சார விடுதிகளும் அதனைச் சார்ந்து தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பாலியல் தொழிலாளர்களினதும் நிலைகள் மிக மோசமானதாகும். சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளிலே விபச்சாரமானது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசியா போன்ற நாடுகளில் அவை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாவிடினும் அச் சந்தை சுதந்திரமாக இயங்குவதற்கான சூழல் காணப்படுகின்றது. பாலியல் தொழிலாளர்களின் உழைப்பு பொலிஸார், குண்டர்படையினர், அறைவாடகைக்காரர்கள், ஹோட்டல் கூலி மற்றும் தரகர் கூலி என பலதரப்பட்டோரால் மிக மோசமாக சுரண்டப்படுகின்றது.
இன்றைய காலத்தில் இச்சந்தையானது நாளுக்கு நாள் பெருகிவருவதுடன் குறுகிய காலத்திலே இத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மிகக்கொடிய நோய்களுக்கு உட்படுவதுடன் குறித்த தொழில் துறையில் அவர்கட்கான தொழில் மதிப்பும் இல்லாமல் செல்கின்றமையினால் அவர்களின் வாழ்க்கை வீதிக்கு கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் பாலியல் பலாத்காரமும் மிக கொடூரமான செயல் முறையாகவே காணப்படுகின்றது. இதனை ஒருவகையில் பாலியல் பயங்கரவாதம் என்றும் கூறலாம். தமது கொத்தடிமைகள் போன்று வாடிக்கையாளர்களால் இப்பெண்கள் நடாத்தப்படுகின்றனர். இத்தகைய கொடிய வாழ்வியலானது இப்பெண்களை மனப்பாதிப்புக்குட்படுத்தி மனநோயாளர்களாக மாறக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது.
இத்தகைய கொடிய தொழில்களில் வறுமைக்குட்பட்ட தமிழ்ப் பெண்கள் சிலரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வேதனைக்குரியதோர் விடயமாகும்.
அந்தவகையில் உலகின் மிகக் கொடூரமான முறையில் உழைப்பு சுரண்டப்படும் பாட்டாளியினம் பெண்களேயாவர்.
நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் முதலியவற்றின் வளர்ச்சிப் போக்கானது பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை
-35

Page 20
தீவிரப்படுத்தியே வந்துள்ளன. இந்த நிலைமையினை மலேசியாவில் உருவாகி வருகின்ற நவீன ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழலிலும் காணக்கூடியதாக உள்ளது.
சயாம் மரண ரயில் பாதையமைப்பு
காலனித்துவவாதிகளால் கொண்டு வரப்பட்ட இந்திய தமிழ் தொழிலாளர்கள் பிரித்தானிய காலனித்துவ வாதிகளாலும் மற்றும் ஏகபோகத் தரகு முதலாளிகளாலும் ஈவிரக்கமற்று சுரண்டப்பட்டது போன்று காலத்திற்குக் காலம் மலேசியாவை ஆக்கிரமிப்புச் செய்த பிற நாட்டினரும் தமது ஏக போக நலன்களுக்காக மலேசியத் தமிழர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஜப்பானின் நட்பு நாடாக மாறிவிட்டதாய்லாந்துடன் ஜப்பான் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிப்ரவரி 1942 இல் ஜப்பானிய மேஜர் ஜெனரல் ஹத்தோரி சிம்பெய், சாஞ்சானாபுரியிலிருந்து பர்மிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று பெளத்த ஆலய கணவாய் வரை ஆய்வு செய்யும் படி ராணுவ பொறியியலாளர்களைப் பணித்தார். இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்ல இந்தத் தரைமார்க்கமே சிறந்தது என ஜப்பானியர் எண்ணினர்.
மார்ச் 1942 இல் ஆய்வு முழுமை பெற்றவுடன் குறுகிய ஒற்றைத் தண்டவாளம் கொண்ட ரயில் பாதையை நிர்மாணிப்பது என்று ஜப்பானியர் முடிவெடுத்தனர். தென்பகுதி ஜப்பானிய கட்டளை உயர் அதிகாரி என்ற அதிகாரத்தைக் கொண்டு மேஜர் ஜெனரல் ஹத்தோரி, தாய்லாந்திலுள்ள றொன்பிளாடோக் (Non Pladuk) என்னுமிடத்திலிருந்து பர்மாவிலுள்ள தான்யூ சாயேட் (Thanbyuzayat) வரை ரயில் பாதை அமைக்கும் படி கட்டளையிட்டார். இத்தனைக்கும் அவர் ஜப்பானிய ராணுவத்தின் உயர் தலைமை பீடத்தின் அனுமதியை அப்போது கோரவில்லை. அவசரமாக இந்தப் பணி மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர் அதிரடியாக இம்முடிவை எடுத்தார்.
ஜப்பானிய ரயில் பொறியியலாளர்கள் 415 கிலோமீட்டர் ரயில் பாதையை அமைக்க 60,000 தொழிலாளர்கள் தேவைப்படுவர் என்றும் இப்பணியை 5 ஆண்டுகளில் செய்துவிடலாம் என்றும் கணக்குப் போட்டனர். இதில் 10,000 போர்க் கைதிகளும்
-36

அடங்குவர். மேலும் மலைப்பிரதேசம், காடுகள் அடங்கிய பகுதிகள், சீதோஷ்ண நிலை, சுகாதாரம் ஆகியவற்றை ஜப்பானிய பொறியியலாளர்கள் கருத்தில் கொள்ளாமல் இல்லை. மிகப்பெரிய அளவில் இயந்திரங்களை இதற்கு உபயோகிக்க முடியாது என்று ஜப்பானிய ராணுவம் கைவிரித்து விட்டது.*
இவ்வகையில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் தாய்லாந்து நாட்டிலிருந்து மியன் மார் வரை ரயில் வேத் தண்டவாளம் அமைப்பதற்காக லட்சக்கணக்கான தோட்டத் தமிழ் தொழிலாளர்களை ஜப்பானியர்கள் கொண்டு சென்றனர். போரின் விளைவாக மலேசியாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சிக்குள்ளாகியிருந்தது. இதன் காரணமாக தோட்டப்புற பொருளாதாரம் சிதைக்கப்பட்டதுடன் பொதுவாகத் தோட்டத் தொழிலாளர்கள் பஞ்சம், பட்டினி என வாடினர். தமது வறுமையைப் போக்கிக் கொள்ளவும் சுகவாழ்வு தேடியும் பெரியோர் முதல் சிறுவர் வரை சயாம் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தாமாகச் சென்றனர் அவர்கள் அனுபவித்த துன்பம் குறிப்பாக குறித்த வேலையைச் செய்யத் தவறுமிடத்து திருக்கை வாலினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். நோய் சுகாதாரமின்மை காரணமாக ஆயிரக்கணக்" கானோர் இறந்துள்ளனர். பல மலேசிய தமிழ் தாய்மார்கள் கணவனின் துணையின்றியே பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளனர். சிலர் மறுமணம் செய்து கொண்ட நிகழ்வுதளும் உள்ளன.
இத்தகைய கொடுமைகள் காரணமாக காலப்போக்கில் இப்பணிகளில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனினும் அவர்கள் கட்டாயத்தின் பேரில் அழைத்து சென்று இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கட்டாய தொழிலாளர்களை ஜப்பானியர்கள் ரோமுஷா (Romusha) என்றும் அழைத்துள்ளனர். -
சயாம் மரண ரயில்வே அமைக்கும் பணியில் சீனர்கள், ஜாவாக்காரர்கள், ஆஸ்திரேலியர்கள் எனப் பல இனத்தவர்கள் பங்கு கொண்டுள்ள போதிலும் இப்பணியில் பங்கு பற்றிய பெரும்பான்மையோர் மலேசியத் தமிழரேயாவர். ஆனால் சயாம் மரண ரயில்வே பணியில் பங்கு கொண்ட பிற சமூகத்தினரது வரலாறுகள், வெளிக் கொணரப்பட்டது போன்று தமிழரின்
-37

Page 21
பங்களிப்பும் வரலாறும் வெளிக் கொணரப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். ஆங்காங்கே சில குறிப்புகளும் இலக்கிய படைப்புகளும் எழுந்துள்ளன என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். இவ்வகையில் திரு.அ.ரெங்கசாமி என்பவர் எழுதிய “நினைவுச் சின்னம்" என்ற நாவல் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பார்வை, வர்க்கச் சார்பு, அழகியல் அக்கறை என்பவற்றில் இந்நாவல் குறைபாடுடையதாக காணப்படினும் சயாம் மரண ரயில்வே அமைக்கும் பணியில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு குறித்துத் தொட்டுக் காட்டியதில் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. இவ்வாறே மலேசிய எழுத்தாளர் ஆகுணநாதன் அவர்களும் இந்த ஆண்டின் முதற் பகுதியில் தாய்லாந்து சென்று சயாம் மரண ரயில்வே குறித்து பல தகவல்களை திரட்டிக் கொண்டு வந்துள்ளதுடன் அது குறித்து கட்டுரை ஒன்றினையும் "மக்கள் ஓசை" பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். சயாம் மரண ரயில்வே அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சில முதியோர்களை நேர்கண்டு அவற்றினைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் திரு.கிள்ளான் அருண் அவர்கள் ஈடுபட்டு வருவதும் பாராட்டத்தக்கது. இவை நிதானித்த பார்வையுடனும் செயற்றிறனுடனும் செய்ய வேண்டியதொன்றாகும். சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு அந்நியமண்ணிலே அநாதைகளாய் ஆதரவின்றி பலியாகிய மலேசிய தமிழரின் வரலாறு எழுதப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நாவலாசிரியர் ஆ.ரெங்கசாமி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
தமிழ் மண்ணில் பிறந்து மலேசிய மண்ணுக்கு வந்து, சயாமியக் காட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அநியாயமாய்ப் புதையுண்டு போன இலட்சோப இலட்சம் தமிழர்களை, நம் முன்னோர்களை நாம் மறந்தே போய் விட்டோம். இது உண்மைதானே?
உலகில் மனித குலத்தைச் சார்ந்தோர் எவராயினும் அவர்கள் போர்க்களத்திலோ அல்லது இதர இடர்பாடுகளினாலோ அகால மரணமடைந்தால் அன்னவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கின்ற வழக்கம் தொன்று தொட்டு நடந்து கொண்டிருக்கின்ற ஒரு மரபாகும். அந்த முறையில்தான் ஜப்பானில் அணுகுண்டுக்குப்
-38

பலியானவர்களுக்கும் மலேசியாவில் பயங்கரவாதிகளால் பலியானோர்க்கும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை நாமறிவோம்.
அந்த வகையில் சயாமியக் காடுகளில் அகாலமாய்ப் புதையுண்டு போன நமது முன்னோர்களுக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய தமிழினம் என்ன செய்திருக்கின்றது என்பதை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! ஏதாவது தென்படுகின்றதா?
அங்கே மடிந்தவர்கள் யாவர்? நமது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா இப்படி அனைவருமே உறவினர்கள் தாமே! அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா - என்ற ஏக்கமும் வேதனையும் நீண்ட நாட்களாக என்னுள்ளே குமுறிக் கொண்டே இருந்தன”.* A.
அந்தவகையில் மலேசியத் தமிழர்களுக்கான சுயநிர்ணயத்திற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவர்களின் நல்வாழ்வுக்கான போராட்ட் இயக்கமொன்றை கட்டியெழுப்புதற்கும் அம் மக்கள் குழுமத்தினரின் முன்னோர்கள் பற்றியும் அவர்களின் தியாகங்கள் குறித்த ஆய்வும் அவசியமானதொன்று. சயாம் மரண ரயில்வே தொடர்பிலான ஆய்வுகள் உண்மையின் பக்கம் நின்று வெளிவர வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
தொலைத் தொடர்பு சாதனங்கள்
தொலைத்தொடர்பு சாதனங்களானி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் இன்றைய ஏகபோக நிறுவனங்களையும், தனிநபர்களையும் நியாயப்படுத்துகின்றனவாகவே காணப்படுகின்றன. மனித குலத்தின் சிந்தனைகளை, ஆற்றல்களை, எந்தெந்த வகையில் சிதைக்க முடியுமோ அந்தந்த வகையில் சிதைத்து வருகின்றன. எடுத்துக்காட்டாக "எஸ்ரோ" (Astro) தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். மாறாகத் தமிழ் தேசிய பத்திரிகை" களான மலேசிய நண்பன், மக்கள் ஓசை முதலிய பத்திரிகைகளும், மலேசிய மண்ணுக்கு உரித்தான பிரச்சினைகளிலிருந்து விலகிச் செல்வதுடன் வாசகர்களின் உணர்வையும் இரசனையையும் மழுங்கடித்து வருகின்றன.
-39

Page 22
ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார மாற்றங்களை அல்லது அவற்றிற்கு எதிரான பார்வையை உருவாக்குவதில் பொதுசன தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்குண்டு. மலேசியாவில் பத்திரிகைத் துறையைப் பொறுத்தமட்டில் அப்பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் யாவும் தமிழகத்தின் பிரச்சினைகளையும் ஈழத்துப் பிரச்சினைகளையும் மேலெழுந்த வாரியாக நோக்கி அவற்றைப் பிரசுரிக்கின்ற முயற்சிகளாவே அமைந்துள்ளன. ஒரு வகையில் மலேசிய மண்ணுக்கு உரித்தான பிரச்சினைகளில் இருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் தப்பியோடுகின்ற பணி பினையே முனைப்பாகக் கொண்டு இப்பொதுசனத் தொடர்பு சாதனங்கள் செயற்பட்டு வருவது அபத்தமானதொன்றாகும். இது குறித்து மலேசிய எழுத்தாளர் மு.வரதராசு அவர்களின் பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகும்.
“இன்று நம் நாட்டில் நமது சமூகம் ஏழைச் சமூகம் அடிமைச் சமூகம் என்று பட்டப்பெயர் வாங்கி வளர்ந்து கொண்டு வருகின்றது. மேலும் நாம் அன்றாடம் நடைமுறை வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். அரசியலில் பிரச்சினைகளோடு சமூகப் பிரச்சினைகள் பொருளாதாரப் பிரச்சினைகள், கலாசாரப் பிரச்சினைகள் ஆகியவையும் பின்னிப் பிணைந்து உள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையைப் பெரிய பட்டியலே போடலாம். முக்கியமாக வீட்டு வசதிகள், சம்பளப் பிரச்சனைகள், தொழிற்பாதுகாப்பு பிரச்சினைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது பத்திரிகை எழுதினால் அது வளரும் தலைமுறையினருக்கு பெரும் நன்மை செய்வதாக இருக்கும்.
தமிழ்நாட்டு பத்திரிகைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது அச்செய்திகளை அப்படியே நம் பத்திரிகையில் பிரசுரம் செய்வதும் நாம் நம் நாட்டு மக்களை வேறு ஒரு நாட்டிற்கு விசுவாசிகளாக மாற்றும் நிலையை மட்டும் தான் உருவாக்கும். மேலும் அதனால் நம் நாட்டில் கிடைக்க வேண்டிய அல்லது போராடிப் பெற வேண்டிய உரிமைகளை நம் மக்கள் காலப் போக்கில் மறந்து விடுவார்கள் என்பதைப் பத்திரிகை நடத்தும் பொறுப்பாளர்கள் உணர வேண்டும். இதை உணராமல் பத்திரிகைப் பொறுப்பாளர்கள்
-40

தாங்கள் செய்வதுதான் நியதி. இதை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலையில் இருப்பார்களேயானால் நமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அத்தனை அநீதிக்கும் பத்திரிகை பொறுப்பாளர்கள் முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும். வருங்கால சமுதாயம் அப்பத்திரிகை பொறுப்பாளர்கள் மீது காறி உமிழப் போவதும் உறுதி”*
மலேசிய வானொலி நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மேற்குறித்த பணி பினையே வெளிப்படுத்தி நிற்கின்றன. குறிப்பாக இந்நிகழ்ச்சிகள் யாவும் தமிழ்நாட்டு திரை உலக விடயங்களையே முனைப்புப்படுத்தி வருகின்றன. அவை இரசிகர்களின் இரசனையையும் சிந்தனைகளையும் சீரழிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. அத்துடன் வணிக நிறுவனங்களின் ஆசீர்வாதத்துடன் அந்நிறுவனங்கள் குறித்தும் அவற்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்கள் குறித்தும் போலித்தன. மான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. மலேசிய தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் குறித்தும் அவற்றின் கடமைகள் குறித்தும் மு.வரதராசு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"மலேசியா வானொலி தமிழ்ப்பிரிவு தமிழ்நாட்டுப் படப்பாடல்களையும் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒளி பரப்புவதை தவிர்த்து தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பேட்டி கண்டு ஒளிபரப்புச் செய்யலாம். மேலும் தொழிலாளர் சட்டத்தில் உள்ள சலுகைகளையும், களைகொல்லி களினால் ஏற்படும் பாதிப்புகளையும் சட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டங்களையும் விளக்கமாய்ச் சொன்னால் அது தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சட்டத்தில் உள்ளவைகளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் சொல்வதை அரசாங்கமும் வரவேற்கும். ஏனெனில் இச்சட்டங்கள் மக்களுக்காக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவையாகும். மலேசியா வானொலி தமிழ்ப் பிரிவு தயாரிப்பாளரும் அதன் பொறுப்பாளர்களும் அரசியல் வாதிகளுக்கு கூஜா தூக்குவதை நிறுத்தி ரசிகர்களுக்குத் தேவையான கருத்துக்களையும் சட்டத்தில் உள்ள விபரங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல முன் வரவேண்டும். அரைத்த மாவை அரைக்கும் வேலையை இனியாவது தொடராமல் இருக்க வேண்டும்."
۔ 41۔

Page 23
இதற்கப்பால் "செம்பருத்தி” போன்ற சிறு பத்திரிகைகளும் சில முற்போக்குச் சிந்தனை கொண்ட இயக்கங்களின் துண்டுப் பிரசுரங்களும் மலேசிய மண்ணுடைய யதார்த்தத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன. இவையும் ஒரு கட்டத்திற்கு மேல் வளர முடியாத நிலையில் உள்ளன. சமகால வாழ்க்கைப் பிரச்சினைகள்
ஆறாவது மலேசியத் திட்டத்தைத் (1990-1995) தவிர ஏனைய மலேசியத் திட்டங்கள் யாவும் தோட்டத் தொழிலாளர்களை வறுமையாளர்கள் என இனம் கண்ட போதிலும் அவர்களின் வாழ்க்கை தரத்தை சீர் செய்வதற்கான எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக மலேசிய அபிவிருத்தி திட்டங்களில் மலேசிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்; வருகின்றனர்.
சமுதாயம் மற்றும் பொருளாதார புறக்கணிப்பின் அடிப்படையில் கடந்த இருபது ஆண்டுகளாக தோட்டங்களில் வாழ்ந்த மலேசிய தமிழர்கள் வேலையில்லாப் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்." பல காரணங்களுக்காகத் தோட்டங்களின் அளவு குறைந்ததால் தோட்டங்களில் வேலை செய்து அங்கேயே வாழ்ந்து வந்த 300,000 இந்திய தொழிலாளர்கள் 1980 ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரையில் வேலை இழந்துள்ளனர். இவ்வளவு பேர் இருந்த எல்லாவற்றையும் இழந்து தோட்ட புறத்திலிருந்து நகர்புறத்திற்கு வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்து வந்தது தெரிந்திருந்தும் அதிகாரத்திலுள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை.*
நகர்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலானோர் கீழ்மட்ட வேலைகளிலே ஈடுபடுகின்றனர் பல தமிழ் இளைஞர்கள் சட்ட விரோத செயற்பாடுகளிலும் குண்டர் படை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரலாயினர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.5% வீதத்தினரே மலேசிய தமிழர்கள். ஆனால் கடுமையான குற்றச் செயல்கள் மற்றும் குண்டர்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகமான தொகையினராக காணப்படுகின்றனர். . தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2005ஆம்
- 42

ஆண்டில் (மார்ச்சு வரை) கைது செய்யப்பட்டு சிம்பாங்ரெங்கம் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 377 பேர் அல்லது 54 விழுக்காடு இந்தியர்கள்*
மலேசிய அரசாங்கமானது இந்த புள்ளி விபரங்களை தமக்கு சாதகமானவகையில் தூக்கி பிடித்து மலேசிய தமிழர்களை குற்றவாளிகளாக காட்ட முனைவது அபத்தமானது. எங்கெல்லாம் சமுதாய உரிமைகளும் நீதியும் மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வாறான குற்றச் செயல்கள் தோன்றுவது இயற்கையின் நியதி. குற்றங்களுக்காக தனி மனிதனை தண்டிப்பதை விட குற்றங்களின் பிறப்பிடங்களை அழித்து விட வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இங்கு குழிதோன்றி புதைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையினை பொறுத்தமட்டில் கல்வியிலிருந்து இடைவிலகி செல்கின்ற மாணவர்களில் அனேகர் மலேசிய தமிழராவர். சிறுபான்மையினருக்கு எதிரான கல்வித்துறையிலும் தொழில் துறையிலும் காணப்படுகின்ற பாராபட்சம் இதற்கு அடிப்படை காரணமாகும். "பூமிபுத்திராக்களுக்கான சலுகை” என்பதன் மறுபுறமாக பூமிபுத்திரா வகைப்பாட்டிற்குள் வராத தமிழரும் சீனரும் அதிகமான பாதிப்புக்குட்பட்டு வருகின்றனர். கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை மலாயர்களே பெற்றுள்ளதுடன் 99% வீதத்தினர் அரச தொழில்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில உயர் பதவிகள் மலாய்காரருக்கு உரியதாகவே இருந்து வருகின்றன.
மலேசியாவில் காலத்திற்கு காலம் “பூமிபுத்திரர்களுக்காக கொண்டு வரப்படுகின்ற சட்டங்கள் பூமிபுத்திரர்கள் அல்லாத ஏனைய சிறுப்பான்மையினரை பெருமளவு பாதித்துள்ளது. ஒன்பதாவது மலேசிய திட்டம் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. காணிகளை கொள்வனவு செய்தல், மற்றும் வங்கியில் கடன் பெறுதல், அதற்கான வட்டி முதலிய துறைகளில் பூமிபுத்திரர்களான மலாயர்களே அதிகமான லாபத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலை மலேசிய தமிழர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் இட்டுச் சென்றுள்ளது.
மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற மக்களில் தமிழர்களே அதிகமான உளவியல் பாதிப்பிற்குட்பட்டவர்களாகவும் தற்கொலை புரிந்துக் கொள்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
-43

Page 24
அண்மைக்கால புள்ளி விபரங்களின் படி 100,000 தமிழர்களில் 21.1 வீதமும் 100,000 சீனர்களில் 8.6 வீதமும் 100,000 மலாயர்களில் 2.6வீதமும் தற்கொலைகள் செய்துக் கொண்டதாக அறியப்பட்டுள்ளன.*
இவ்வகையில் மலேசிய தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர் என்பது யதார்த்தமாகும்.
நாம் செய்ய வேண்டியவை
மலேசிய தமிழரின் பாரம்பரியமான பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் முழு அதிகாரங்களும் கொண்ட பூரணமான சுயாட்சி முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இப்பிரதேச சுய ஆட்சியின் கீழ் அவர்களின் பொருளாதாரம், நிதி நிர்வாகம் மொழி கல்வி போன்ற விடயங்கள் நிர்வகிக்கப்படல் வேண்டும்.
மலேசிய தமிழரின் இனவொடுக்கு முறைகளுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமானது குறுகிய இனவாதமாகவோ ஏனைய இனங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தனிநபர்/குழு போராட்டங்களாகவோ முன்னெடுக்கப்படாமல் பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக அது அமைய வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலேசிய தமிழர்களின் சுபிட்ஷத்திற்கான மக்கள் போராட்டமானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது.
இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுபட்ட அடக்கு முறைகளும் தடைகளும் காணப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங்களில் மலேசிய தமிழர்களிடையே எழுந்த
-44

மக்கள் இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வியக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.
மலேசிய தமிழர் தமது தன்னடையாளங்களையும் கலாசார பணி பாட்டு பாரம்பரிய கூறுகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் அவசியம். இவற்றை பாதுகாத்தல் என்பதன் மறுபுறமாக தமிழர் சமுதாய அமைப் பில் புரையோடிப் போயிருக்கின்ற பிற்போக்கு கலாசாரத்தை முற்றாக மாற்றியமைக்க தமிழர் தமது பண்பாட்டை முன்னோக்கி தள்ள கூடிய நாகரிகமான கலாசார தன்னடையாளங்களை வளர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.
மலேசிய அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் கொண்டு வரப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களில் தமிழரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். தோட்டங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் தோட்டங்களுக்கு அருகாமையிலே குடியிருப்பு திட்டங்களை உருவாக்கி தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக மலேசியதமிழர்கள் அந்நாட்டின் மூன்றாவது தேசிய இனம் என்ற வகையில் அவர்களின் இனத்துவ அடையாளங்களை சிதைக்காத வகையில் அத்திட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.
குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தொழிலாளர்களுக்கான சுகாதார வசதி, வீட்டு வசதி குழந்தை பராமரிப்பு வசதி என்பனவற்றை வழங்குவதற்கு அரசை நிர்பந்தித்தல் வேண்டும்.
மலேசிய தமிழரின் கல்வி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். சகலருக்கும் சமத்துவமான கல்வி என்ற அடிப்படை கோரிக்கையானது கல்விக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதாக மட்டுமன்று கல்வியில் தமது மொழியுரிமையையும் வென்றெடுப்பதாக அமைய வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுபேறு என்பது இன்றைய ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கான கூலி பட்டாளத்தை உருவாக்குகின்ற
-45

Page 25
நோக்கிலிருந்து விடுபட்டு மானுட மேன்மையை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
மலேசிய தமிழருக்கும், சீனருக்கும் மலாயர்களைப் போல அரச தொழில்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை வழங்கு" வதற்கான கோரிக்கைகளை முன்வைத்தல் வேண்டும். சில உயர் பதவிகள் மலாயர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி திறமையின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு நியமனம் செய்யப்படல் வேண்டும்.
மலேசிய தமிழ்ப் பெண்கள் குறித்து விசேட கவனம் செலுத்தல் வேண்டும். உழைப்பு சுரண்டல், போசாக்கின்மை முதலியவற்றில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மற்றும் இன்று மலேசியாவில் புதியதொரு சந்தையாக வளர்ந்து வருகின்ற பாலியல் தொழிலாளர்களின் நிலைமை மிகுந்த வேதனைக்குரியதொரு விடயமாக காணப்படுகின்றது. இந்நிலைமை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
முடிவுரை
மலேசியாவில் நீதிக்கும் சமத்துவத்துக்கமான போராட்டத்தில் மலேசிய தோட்டத் தொழிலாளர்களை இன ரீதியாக தனிமைப்படுத்தி அவர்களின் சமுதாய உணர்வை சிதைக்கின்ற முயற்சியில் மலேசிய அரசாங்கமும் ஏகபோக வர்க்கமும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது எனக் கூறின் தவறாகாது. இந்நிலயிைல் மலேசிய தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்தித்தல் அவசியதமாகும். இவ்வமைப்பானது தமிழரை பிரதிநிதித்துவபடுத்துகின்ற அதே சமயம் அதன் ஜனநாயக சக்திகளை தன்னுள் உள்ளடக்கிய அமைப்பாக வளர வேண்டும். அத்துடன் அவ்வமைப்பானது நீண்ட கால தொழிலாளவர்க்க அரசியலைக் கொண்டு முழுமக்களையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அது முழு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படல் முக்கியமானதொரு விடயமாகும்.
மலேசிய தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைகளால் எதனையும் (தலைவரையும் அவரை
-46

சார்ந்தோரின் குடும்ப நலன்கனை தவிர) சாதிக்க முடியாது என்பதை ம.இ.க.வினதும் அதன் தலைவர் டத்தோ சாமிவேலுவினதும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இது பேரம் பேசும் அரசியலுக்கும் அதன் தலைவருக்கும் கிடைத்த தோல்வியாகும்.
இவ்வாறானதோர் சூழல் புதிய தலைமைத்துவத்திற்கான தேவையை தமிழர் மத்தியில் உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் உருவாகின்ற ஸ்தாபனம் ஒன்றின் மூலம் மலேசிய தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும். அடிக்குறிப்புகள்
1. வரதராசு,மு. (1990) மலேசிய தோட்டத் தொழிலாளர்கள். வரலாறும் பிரச்சனைகளும், தமிழ்ப் பண்பாட்டு, சமுதாய அமைப்பு குழுவினர், சென்னை, பக்.14. 2 மார்க்ஸ் கார்ல், ஏங்கல்ஸ் பிரெடரிக், இந்தியாவைப் பற்றி
நியூசெஞ்சரி புக் ஹவுஸ் சென்னை.
3. முத்தம்மாள் பழனிசாமி. (2006), நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம், கொங்கு இளைஞர் மன்றம், கோயம்புத்தூர் பக்.38
4. அதே நூல் பக்.64
5. அதே நூல் பக்.86
6. மோகன் ராஜ். (1984) இருபதாம் நூற்றாணர்டின் நவீன அடிமைத்தனம், (மலையக மக்களின் வரலாறு), ஈழம் ஆய்வு
நிறுவனம், சென்னை, பக். 70-71.
7. அதே நூல் பக்.71
47

Page 26
8. கைலாசபதிக. (1996), அடியும் முடியும், குமரன் புத்தகசாலை,
சென்னை. பக். 277.
9. வரதராசு.மு. (2004 பெப்) நேர்காணல், தலித் முரசு, சென்னை.
9a. . . . . . . . . . . (1993) எங்கே என் பங்கு - தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சனைகள், மீடியா பிரிண்டர்ஸ். சென்னை, பக்.20.
( w 10.காத்தையா ஜீவி. (2007 பெப்ரவரி) “தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை, "திட்டமிட்டுக் கொல்லப்படுகின்றது. ஆட்சியில் இருப்பவர்களால்" செம்பருத்தி இதழ் (கோலாம்பூர்) பக்.08.
11. அதே கட்டுரை பக்.08
12. அதே கட்டுரை பக்.07
13. அதே கட்டுரை பக்.11
14. Disanayake. J.B. (2002) “A Langnage at the Cross Roads: The Case in Sinhala' - C.W.W. Kanangara memorial lecture, N.I.E. Maharagama p. 11.
15.வரதராசு.மு. எங்கே என் பங்கு - தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சனைகள், மீடியா பிரிண்டர்ஸ். சென்னை, பக். 32.
16. கந்தையா ஜீவி. (2006) 'மலேசிய தொழிற்சங்க போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் - ஒரு கண்ணோட்டம்" செம்பருத்தி இதழ் (பெப்ரவரி) பக். 36.
17. வரதராசு, மு. மேற்படி நூல் பக்.35.
18.கணேசலிங்கம், செ. (1995), பெண்ணடிமை தீர, பாரிநிலையம்,
சென்னை, பக்.03.
19. வரதராசு, மு. மேற்படி நூல் பக்.99
-48

20.குணநாதன், ஆ. (2007), “சயாம் - பர்மா மரண ரயில் - மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு," மக்கள் ஓசை (2007-02-04) கோலாலம்பூர்.
21. ரெங்கசாமி, அ. (2005), நினைவுச்சின்னம், பிந்தாங் அச்சகம்,
&lajm pijai, Lu&.vi, vii.
22.வரதராசு.மு. மேற்படி நூல் பக். 121, 122
23....................." Lië. 122-123
24.கந்தையா ஜீவி. (2006) "பூமிபுத்திராக்களின் நிறுவன பங்குடமை 18.9 விழுக்காடா? அல்லது 45 விழுக்காடா? அல்லது 50 விழுக்காடா அல்லது 36.64 விழுக்காடா? எது சரி” செம்பருத்தி இதழ் (டிசம்பர்), கோலாலம்பூர். பக்.14
25.அதே கட்டுரை பக்.14.
26. அதே கட்டுரை - 15
-49

Page 27
அமரர்.இர.சிவலிங்கம் அவர்கள் ஞாபகார்த்தக் குழு
பெயர் முகவரி தொலைபேசி
திரு.எம்.வாமதேவன் BQ2/2 LDGofri Lajar வீடமைப்புத்திட்டம், மங்களாவீதி, கொழும்பு 8 269,3098 திரு.தை.தனராஜ் 7 அலெக்ஸாண்டராடெரஸ்,
கொழும்பு 6. 2583I5I திரு.செநவரட்ண 416/33Q,திம்பிரிகஸ்யாயவீதி,
கொழும்பு 5. 2599856 திரு.எச்.எச்.விக்கிரமசிங்கI39/21, அல்விஸ் பிளேஸ்,
கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. 2435652 திரு.இ.ஈஸ்வரலிங்கம் 45/15 A, பிரெட்ரிக்கா வீதி,
கொழும்பு 6. 2582Ol கலாநிதி.பி.இராமனுஜம் 12/2, விகார மாவத்தை
கொலன்னாவை 25724.36
திரு.பி.இராதாகிருஷ்ணன் 361, டாம் வீதி,
கொழும்பு 12. 2387896 திரு.ராஜூ சிவராமன் 9A, அமரசேகர மாவத்தை,
கொழும்பு 5. 25O287 திரு.வீ.ஏ.மதுரைவிரன் 92, 2 ஆம் குறுக்குத்தெரு,
கொழும்பு 11. 2556550 திரு.பி.முத்தையா லேக்ஹவுஸ், கொழும்பு 12. திரு.எஸ்.சுப்பையா 5A, சுலைமான் டெரஸ்,
கொழும்பு 5. 2587287 திரு.இரா.இராமலிங்கம் லண்டன் திரு.ஆர்.பரமசிவம் ஹோட்டல் அமராவதி
கொழும்பு 3. 257748
-50

:
d
அமரர்.இர.சிவலிங்கம் அவர்கள் ஞாபகார்த்தக் குழுப்பணிகள்
நினைவுப் பேருரை பேராசிரியர் மு.சின்னத்தம்பி அவர்கள் பெருந்தோட்டத்துறை தமிழ் இளைஞர்கள் - இன்றும் நாளையும் (2000) பேராசிரியர் விசூரியநாராயணன் அவர்கள் இளைய மலையகம் - புதிய வாய்ப்புக்களும் சவால்களும் (2001) கலாநிதி மா.கருணாநிதி அவர்கள் மலையகக் கல்வி (2002) திருமதி.லலிதா நடராஜா அவர்கள் மலையகப் பெண்கள் (2003) திரு.வ.செல்வராஜா அவர்கள் மலையக மக்களும் புத்திஜீவிகளும் (2004) பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் தமிழர் வரலாறும் பண்பாடும் - தெரிந்ததும் தெரியாததும்(2005) திரு. பெ.வேலுசாமி அவர்கள் மலையக இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அம்சங்கள் (2006)
கட்டுரைப் போட்டியும் ஆய்வரங்கும்
இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி (2000) மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி (2001) ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி (2002) ஆய்வரங்கு (2003) A
நூல் வெளியீடு
மலையக பரிசுக்கட்டுரைகள் (2000)
2. சிவலிங்கம் சிந்தனைகள் (2002)
மலையக சமகாலப் பிரச்சினைகள் (2003)
கெளரவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி (2004) செல்வன். நிரோன்காந் மகாலிங்கம் இலக்கியம் : திரு.ஆதமிழோவியன் (2004) கல்வி : திரு.தி.பாரதி இராமசாமி (2004) இலக்கியம் : திரு.P.மரியதாஸ் (2005) நாடகம் : திரு.A.முத்தையா (2005)
-51

Page 28
அமரர்.இர.சிவலிங்கம் அவர்கள் ஞாபகார்த்த விழா 2007
ஹட்டன் ஏற்பாட்டாளர்கள் குழு
திரு.K.மெய்யநாதன்
இணைப்பாளர்
திரு.N.பாலசுந்தரம் திரு.S.விஜயசிங் திரு.VTசெல்வராஜ் திரு.A.அந்தணி திரு.S.சரவணப்பிரகாசம் திரு.A.இராசையா திரு.S.பரமநாதன் திரு.K.சித்ரவேல் திரு.S.நடேசன் திரு.K.குலேந்திரன் திரு.K.இராஜசேகர் திரு.S.ழரீதரன் திரு.R.சங்கரமணிவண்ணன் திரு.விக்டர் ஜேம்ஸ் திரு.Rழரீதர் திரு.P.வேலுசாமி திரு.Sதுரைராஜ் திரு.P.சாந்தகுமார்
திரு.S.கணபதிப்பிள்ளை
-52


Page 29
f எட்டாவது திரு.லெனின் வெளியீட்டு வெளியீட்டு
அட்டனைப் பிறப்பிட ஜோன் பொஸ்கோ கல்லூரி, பழைய மாணவராவர். பேராதன மாணி, முதுகலைமாணி பட்ட கல்வி முகாமைத்துவத்தில் பெற்றுள்ள திரு.லெனின் மதி மலேசியாவின் இராஜதந்திரம், புலமைப் பரிசில் பெற்று ம இராஜதந்திரத்துறையில் முதும
பன்முக ஆளுமை கொ பேச்சாளரும் கட்டுரையாளரு 1990 முதல் பல்வேறு சஞ்சி: கட்டுரைகளை எழுதியுள்ள சர்வதேசரீதியாக நடத்திய கட் 2000ஆம் ஆண்டு அமரர் இ நடத்திய கட்டுரைப் போ, வென்றுள்ளார்.
ஹட்டன் கார்பெக்ஸ் ராகவும் கொட்டகலை ஆசிரிய பணியாற்றியுள்ள திரு.லெனின் நிறுவகத்தில் வருகைதரு விரிவு
 

ரர் இர. சிவலிங்கம் அவர்களின் நினைவுப் பேருரை நிகழ்த்தும் ர் மதிவானம் கல்வியமைச்சின் கல்வி த் திணைக்களத்தில் பிரதிக் கல்வி ஆண்ையாளராகப் பணிபுரிகிறார்.
மாகக் கொண்ட இவர் அட்டன் புனித. ஹைலன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை ங்களையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் வானம் கொழும்புத் திட்டம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் நிலையத்தின் லேசியாப் பல்கலைக்கழகத்தில் ாணிப்பட்டமும் பெற்றவராவர்.
"ண்ட திரு.லெனின் மதிவானம் சிறந்த ம் இலக்கிய திறனாய்வாளருமாவார். கைகளிலும் இருநூறுக்கு மேற்பட்ட ா இவர் 1994 ஆண்டு "சரிநிகர்" டுரைப் போட்டியில் முதற் பரிசையும் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு ட்டியில் இரண்டாம் பரிசையும்
தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரிய பர் கலாசாலை விரிவுரையாளராகவும் ன் மதிவானம் தற்போது தேசிய கல்வி ரையாளராகவும் கடமையாற்றுகிறார்.
■ 鸭