கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்

Page 1
G5 TFTU, 9FLID LI II அது முஸ்லிம் சமய, கலாசார
இல
 
 


Page 2

MUSLIMS OF AMPARADISTRICT
HISTORY AND HERITAGE
Editor: S. H. M. JAMEEL
A Presentation of the
Ministry of Cultural & Religious Affairs
Department of Muslim Religious & Cultural Affairs, 34, Malay Street, Colombo 02, Sri Lanka 1997

Page 3
Title
Editor
Publishcr
Printer
First Edition
CopyRight,
MUSLIMS OF AMPARADISTRICT History & Heritage
S. H. M. JAMEEL B.A. (sp.) Dip. Ed; M. A. Advisor Ministry of Cultural & Rcligious Affairs
Ministry of Cultural & Religious Affairs
Department of Muslim Religious & Cultural Affairs
34, Malay Street
Colombo 02
Sri Lanka
State Printing Corporation, Panaluwa, Padukka Sri Lanka
July 1997
C) Publishers
ii

அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்
வரலாறும் பாரம்பரியமும்
பதிப்பாசிரியர்: எஸ். எச். எம். ஜெமீல்
வெளியீடு:
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு
முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 34, மலே வீதி, கொழும்பு 02, இலங்கை 1997
iii

Page 4
PUBLICATION ADVISORY COMMITTEE:
M. A. M. Hussain Advocate, Retired District Judge
* Pulavarmani Alhaj A. M. Sheriffudeen
Retired Education Officer
* Alhaj M. I. M. Meeralebbe
Retired Chief Education Officer
* A. S. Abdus Samath B. A. (Hons.)
Retired Lecturer - Teachers' Training College
* Dr. M. A. Nuhuman
B. A. (Hons.); M. A.; Ph. D. Senior Lecturer - Peradeniya University
iv

ܓܠ
This Book is Published on the occasion of the
National Meelad-un-Nabi Celebrations - 1997
held at Addalaichenai on July 18, 1997
A.H. 1418 Rabiyyul Awwal 12
and
Presented to
Her Excellency Chandrika Bandaranaike Kumaratunga President of the Democratic Socialist Republic of Sri Lanka
by
Hon. Lakshman Jayakody Minister of Buddha Sasana, Cultural & Religious Affairs
(ر

Page 5

பொருளடக்கம்
பக்கம் පෙරවදන: ගරු ලක්ෂ්මන් ජයකොඩි ix
බුද්ධ ශාසන, සංස්කෘතික හා ආගමික කටයුතු අමාත්‍ය முன்னுரை: மாண்புமிகு லக்ஷ்மன் ஜயகொடி Χ
புத்த சாஸன, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் Foreword: Hon. Lakshman Jayakody Χii
Minister of Buddha Sasana, Cultural & Religious Affairs அணிந்துரை: மாண்புமிகு எம். எச். எம். அஷ்ரஃப் xiii
துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர், தலைவர், பூனிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறப்புரை: ஏ. ஸி. எம். ராளிக் ΧΥ வெளியீட்டுரை: யூ. எல். எம். ஹால்தீன் xvii
அத்தியாயம்:
1. வரலாற்றுப் பாரம்பரியம் - எம். எல். ஏ. காதர் Ol 2. குடியிருப்புக்களின் பரம்பல் - மன்சூர் ஏ. காதிர் 67 3. மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், ஸியாரங்கள் -
யூ. எல். அலியார் 93 4. வாழ்வியலும் பண்பாடும் - ஜே. எம், ஷம்சுத்தீன்
மவ்லானா 59
5. அரசியல் வதனம் - கே. எம். எச். காலிதீன் 199 6. இனங்களுக்கிடையிலான நல்லுறவுகள் -
றமீஸ் அப்துல்லாஹ் 237 7. கல்வி - மருதூர் ஏ. மஜீத் 253 8. இலக்கியப் பங்களிப்பு - மருதூர்க்கொத்தன்
வீ. எம். இஸ்மாயில் 283 9. அறபுத்தமிழ் இலக்கியம் -
எஸ். ஏ. ஆர். எம்.செய்யத் ஹஸன் மெளலானா 317 10. நாட்டார் பாடல்கள் - எஸ். முத்துமீரான் 355 11. பொருளியல் அமைப்பும், பிரச்சினைகளும்,
எதிர்காலமும் - எஸ். எல். எம். பளில் 393
vii

Page 6
இணைப்புக்கள்
i.
iii.
ίν.
vi.
அம்பாரை மாவட்ட முஸ்லிம் ஊர்களும், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர்களும் பள்ளிவாசல்கள், ஸியாரங்கள் அறபுக் கலாசாலைகள்
பாடசாலைகள், ஏனைய முக்கிய கல்வி நிறுவனங்கள்
. கட்டுரைகள் வழங்கியோர்
மாவட்ட வரைபடம்
viii
பக்கம்
419
422
442
443
448
456

පෙරවදන
අඩ්ඩලයිවේනයේ පැවැත්වෙන ජාතික මිලද් උන්නබි උළෙල නිමිත්තෙන් පළකරනු ලබන “අම්පාර දිස්ත්‍රික්කයේ මුස්ලිම් වරුන්ගේ ඉතිහාසය සහ උරුමය” නමින් යුත් මෙම පොතට පෙරවදනක් සැපයීමට ලැබීම ගැන ප්‍රීති වෙමි.
මෙරට මුස්ලිම්වරුන්ගේ ඉතිහාසය ලේඛනගත කිරීමේ කාර්යය, මගේ අධීක්ෂණය යටතේ ඇති මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් අනලස්ව ඉටුකර තිබේ. මේ පුකාශන මාලාවේ හයවැනි පුකාශනය වශයෙන් එළිදක්වනු ලබන මේ පොතට පෙරාතුව කළුතර, අනුරාධපුර, මාතලේ, මාතර සහ මහනුවර යන දිස්ත්‍රික්කවලට අදාල මෙවැනි පොත් පළකර ඇත.
අනාගත පරම්පරාවට තම ජීවන රටාව නිවැරදි ආකාරයෙන් , හැඩගැසීමට හැකිවනුවස්, මනා ලෙස ලේඛන ගත කරන ලද සහ සනාථ කරන ලද ඉතිහාසයක් සෑම සමාජයක් සතුව තිබීම ඉතා වැදගත් වන්නේය. ශ්‍රී ලංකාවේ මුස්ලිම්වරුන්, මෙරට සිටින අනෙක් ජනවර්ග සමඟ සියවස්. ගණනක් තිස්සේ ඉතා සාමකාමී සහ සමගි සමිපන්න ලෙස ජීවත් වී ඇති අතර එකී සුහදශීලි පැවැත්ම වාර්තාගත කිරීම, එවැනි සාමකාමී සහජීවනය පිළිබඳව අනාගත පරපුර දැනුවත් කිරීම තුළින් තවදුරටත් සාමකාමී සහජීවනය පවත්වා ගැනීමට ආධාර වනු ඇත.
මෙම ස්ථිරසාර වාර්තාව සකස් කිරීම සඳහා මීලද් උන්නබි උළෙල උපයෝගී කර ගැනීම මගේ සතුටට හේතු වේ. මෙහිලා, සංස්කෘතික සහ ආගමික කටයුතු අමාතාපාංශයේ උපදේශක’අල්හාජ් එස්. එච්. එම්. ජමීල් මහතා විසින් කැපකරන ලද කාලය හා ශුමය ගැනත්, අතිරේක ලේකම්, අධායකෂ සහ අනෙකුත් කාර්ය මණඩලය විසින් දෙන ලද සහයෝගය ගැනත් මම දනිමි.
මෙහි සතුව, බෙහෙවින් පර්යේෂණාත්මක තත්ත්වයේ ලිපි සම්පාදනය කර ඇත්තේ විශිෂ්ඨ ගණයේ විද්වතුන් විසිනි. ඒ සියලු දෙනා වෙත මගේ ස්තුතිය පුදකරනු කැමැත්තෙමි.
ලකෂමන් ජයකොඩි බුද්ධ ශාසන, සංස්කෘතික සහ ආගමික කටයුතු අමාතාස

Page 7
முன்னுரை
அட்டாளைச்சேனையில் நடைபெறும் தேசிய மீலாதுந் நபி விழாவையொட்டி “அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் - வரலாறும் பாரம்பரியமும்” எனும் பெயரில் வெளியிடப்படும் இந்நூலுக்கான முன்னுரையை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தனது சிறப்பான பணியை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. இத்தொடரில் ஆறாவது வெளியீடு இந்நூலாகும். ஏற்கனவே களுத்துறை, அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்ட முஸ்லிம்களின் வரலாறுகள் இத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சமுதாயமும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட முறையான வரலாற்றினைக் கொண்டிருக்க வேண்டியது மிக அவசியமாகும். அதனை வழிகாட்டியாகக் கொண்டு வருங்காலச் சந்ததியினர் தமது வாழ்வுப் பாதையினை முறையான வழியில் அமைத்துக்கொள்ள முடியும். இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஏனைய சமூகங்களோடு சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் . அவர்கள் வழிவருவோரும் இவ்வாறான சமாதான, சமரச வாழ்வில் தம் வாழ்க்கையைத் தொடருவதற்கான அறிவைப் பெறுவதற்கு இத்தகைய ஆவணங்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
இன்றும், இனிவருங்காலத்திலும் மிகவும் பிரயோசனப்படக் கூடிய இந்நிரந்தரப் பதிவினை வெளியிடுவதற்குத் தேசிய மீலாதுந் நபி பிரயோசனப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சிய டைகிறேன். இந்நூலை வெளியிடுவதில் கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் ஆலோசகரான அல்ஹாஜ் எஸ். எச். எம் . ஜெமீல் செலவிடும் நேரம் , திட்டமிடல், சிரத்தை என்பனவற்றை நான் நன்கு அறிவேன். அத்துடன் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான மேலதிகச் செயலாளர் , பணிப்பாளர் , ஏனைய உத்தியோகத் தர்கள் வழங்கும் ஒத்துழைப்பினையும் நான் பாராட்டுகின்றேன்.

இந்நூலில் இடம்பெறும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியோர் அவ்வத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற கல்விமான்கள் ஆவர். அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லக்ஷ்மன் ஜயகொடி புத்த சாஸன, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர்

Page 8
FOREWORD
Iam delighted to write the Foreword to this book "Muslims of Ampara District - History & Heritage" that is being published on the occasion of the National Meelad Un Nabi Celebrations at Addalaichenai.
The Department of Muslim Religious & Cultural Affairs, which comes under my purview has diligently pursued its efforts to chronicle the history of the Muslims of this country; and this book is the sixth in the series of publications, the previous ones being those of Kalutara, Anuradhapura, Matale, Matara and Kandy.
It is very important that every society should have a well documented and authenticated history, so that the future generation could mould its pattern of living in the correct perspective. Muslims of Sri Lanka have for centuries lived in perfect peace and harmony with other communities in this country and the recording of such harmonious existance is very vital to educate the future generation in such peaceful co-existance.
I am happy that the occasion of Meelad Un Nabi Celebration is being utilised to produce this permanent record. I am also aware of the time, devotion and planning devoted by Alhaj S. H. M. Jameel, Advisor, Ministry of Cultural & Religious Affairs and the co-operation extended by the Additional Secretary, Director and other members of the Staff.
The well-researched articles in this book have been contributed by eminent scholars and I extend my thanks to all of them.
Lakshman Jayakody Minister of Buddha Sasana, Cultural & Religious Affairs
xii

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹிம் அணிந்துரை
அல்ஹம்துலில்லாஹ்
1997ஆம் ஆண்டு நடைபெறும் மீலாதுன்நபி விழாவையொட்டி முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிடும் 'அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்’ எனும் வரலாற்று நூலுக்கு
இந்த அணிந்துரையை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த கால வரலாறு பற்றிய தெளிவற்ற ஒரு சமுகம் தனக்கென்று ஒரு தெளிவுள்ள எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியாது. இலக்குகளோடு கூடிய எதிர்காலத்தை நோக்கிய பாதையில் நடைபோடவும் முடியாது.
இலங்கையின் இருபத்தி ஐந்து மாவட்டங்களுள் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துள்ள மாவட்டம் அம்பாரையாகும் . தொகையினால் குறைந்தாலும் செறிவினால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாகாணமாக கிழக்கு மாகாணம் பொதுவாகவும், அம்பாரை மாவட்டம் சிறப்பாகவும் திகழ்கிறது. சமகாலத்திலும் எதிர்காலத்திலும், இன்ஷா அல்லாஹ்! அம்பாரை மாவட்டம்தான் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக அமைய வேண்டியுள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டத்தின் வரலாறு என்றோ எழுதப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் கூட, காலம் தாழ்த்தியாவது நிறைவு செய்யப்பட்ட இப்பணி வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பு - இம்மாவட்டத்து மக்களும், பிறரும் இப்பிரதேசத்தின் சமுக, பொருளாதார, கலாசார, அரசியல் அம்சங்களையின்னும் புரிந்து கொள்வதற்கு இந்நூல் மூலம் பெரிதும் உதவியுள்ளது.
இந்நூலை வெற்றிகரமாகக்கொண்டுவர முயற்சிகளைச் செய்த 'வரலாற்று நூல் வெளியீட்டுக் குழுவிற்கும், அதற்குத் தலைமைதாங்கி உழைத்தது மட்டுமின்றி இந்நூலை சிறப்பாகப் பதிப்பித்த அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக்கும், இதற்குள் அடங்கியுள்ள கட்டுரைகளை ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஆசிரியர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக.
xiii

Page 9
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மாரி அவர்கள் மீதும் இந்நூலை வாசித்துப் பயன் பெறும் ஒவ்வொருவர் மீதும் பொழியுமாக
எம். எச். எம். அஷ்ரஃப், ஜனாதிபதி சட்டத்தரணி துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர், தலைவர், பூணூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
xiv

சிறப்புரை
களுத்துறை, அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, பாரம்பரியம் என்பனவற்றை ஆராய்ந்து, தொகுத்து நூலுருவாக்கிய வரிசையில் இம்முறை “அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்” ஒருபடி சிறப்பாகவே வெளிவருகிறது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை அம்மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்று நூல்கள் மூலம் ஆழமாகவும், சிறப்பாகவும் எடுத்துக்காட்ட முடிகின்றது. வரலாற்றுப் பாரம்பரியம், குடியிருப்புக்களின் பரம்பல், மஸ்ஜித், மத்ரஸா, ஸியாரங்கள், வாழ்வியலும் பண்பாடும், அரசியல் வரலாறு, இனங்களின் நல்லுறவு, கல்வி, இலக்கியம், அறபுத் தமிழ் இலக்கியம், நாட்டார் பாடல்கள், பொருளியல் அமைப்பும் பிரச்சினைகளும் எதிர்காலமும் போன்ற தலைப்புக்களில் மிகவும் சிறப்பான முறையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐந்து மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றினைத் திணைக்களம் வெளிக்கொணர்ந்துள்ளதோடு இத்துறைகளில் ஈடுபாடு காட்டும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் இதன் மூலம் உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இப்பணி தொடர்வதன் மூலம் இன்ஷா அல்லாஹ் விரைவில் முழு மாவட்டங்களினதும் முஸ்லிம்களின் வரலாறு எம்கைவசம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. A
சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மையினரோடும் , இன்னொரு சிறுபான்மையினரோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் பண்டைக்காலந்தொட்டு இற்றைவரை வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இந்நூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் இராஜாங்கச் செயலாளராகவும் , பின்னர் மேலதிகச் செயலாளராகவும் கடமையாற்றித் தற்போது அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றும் அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களின் அனுபவம், திறமை என்பன இவ்வாக்கங்கள் முழுவுருவம் பெற்று புத்தக வடிவில் வெளிவரக் காரணமாய் அமைந்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
XV

Page 10
கலாசார, சமய அலுவல்களுக்குப் பொறுப்பான எமது அமைச்சர் கெளரவ லக்ஷ்மன் ஜயகொடி மாவட்ட ரீதியாக முஸ்லிம்களின் வரலாறு வெளிவருவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் ஏ. வீ. சுரவீர அவர்களும் இத்தகைய பணிகளுக்குத் தரும் உற்சாகமும் எமக்கு ஆர்வமூட்டுகின்றன.
இத்தகைய சிறப்பான அமைச்சரின் தலைமையில் தொடர்ந்தும் பல வெளியீடுகள் வெளிவர வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
ஏ. ஸி. எம். ராஸிக் மேலதிகச் செயலாளர் கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு
Xνi

வெளியீட்டுரை
இலங்கைத் திருநாட்டின் தேசிய இனங்களுள் ஒன்றான முஸ்லிம் மக்கள், தமக்கெனத் தனித்தன்மையுள்ள - விஞ்ஞான பூர்வமான ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க வாரிசுகளாவர். இவ்வரலாற்றுப் பாரம்பரியமானது, அவ்வக் காலங்களில் சமூகத்திற்கென வாழ்ந்து, சமூக - சமய - கல்வி மற்றும் அரசியல் சார்ந்த துறைகளில் புகழ்பூத்த முஸ்லிம் முன்னோடிகளினால் வழிப்படுத்தப்பட்டும், வளமாக்கப்பட்டும் வந்துள்ளது. எனவே, இலங்கை முஸ்லிம்கள் தமக்கே உரித்தான தேசிய வாழ்நிலைத் தன்மைகளோடும், இஸ்லாமிய உயர் விழுமியங்களடங்கிய சர்வதேசியப் பார்வையோடும் ஏனைய சகோதர சமுகங்களோடு இணைந்தும் - பிணைத்தும் வாழும் பெரும் பேறு கொண்டவர்களாக உள்ளனர்.
இத்தாய்த் திருநாட்டின் வாழ்வுக்கும் , வளத்திற்கும் காலாதிகாலமாகத் தொண்டாற்றி, இம்மண்ணோடும் - அதன் செழுமையோடும் - ஒன்றித்துவிட்ட இவர்கள், இலங்கையின் சகல பாகங்களிலும் செறிந்தும் பரந்தும் தமது இருப்பை நிலை நாட்டி வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க முஸ்லிம் இனம், தேசிய ரீதியில் தனது வரலாற்றுப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஆக்கபூர்வமான கைங்கரியத்தை தீர்க்க தரிசனத்தோடு கடந்த சில ஆண்டுகளாக காரியப்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், எமது திணைக்களத்தின் முயற்சியினால் முஸ்லிம்களின் வரலாறும், கலாசார வாழ்வியல் நடைமுறைகளும் நவீன மானுடவியல் அணுகுமுறையில், அவ்வப் பிராந்தியத்தைச் சேர்ந்த துறைபோந்த அறிஞர் பெருமக்களின் துணையோடு நூலுருவில் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
எமது திணைக்களத்தின் இத்தகைய அரிய முயற்சி, எதிர்கால சமுகத்தின் மேலதிக ஆய்வுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய பொருளாக மாறுவதோடு, மேலும் பல பொருள் பொதிந்த உண்மைகளை வெளிக்கொணரும் வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கும் என்றும் திடமாக நம்பலாம்.
எனவே நமது மக்களின் இலட்சியங்களும், ஆசாபாசங்களும், மனவெழுச்சிகளும் அவற்றை நிதர்சனமாக்க அவர்கள்
XVii
2. 3ஜகி.ை 9742

Page 11
கைக்கொள்ளும் தார்மீக நடவடிக்கைகளுமான அனைத்தும், நமது வரலாற்றில் நியாயமுள்ள உண்மையான போக்கினைத் தேசிய வாழ்வில் நிலை நிறுத்தும் ஆதாரங்களாகும். இந்த வகையில் இத்தகைய வெளியீடுகள், முஸ்லிம்களின் அரும் பெரும் பொக்கிஷங்களாகின்றன.
இவ்வாறான ஒரு சிந்தனைத்தளத்தில் ஒரு புதிய தேடுதலாக, தென்கிழக்கு - அம்பாரை மாவட்டமுஸ்லிம் மக்களின் வரலாறும், பண்பாட்டுக் கோலங்களும் நூலுருப் பெற்றுள்ளன. இலங்கை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இம் மாவட்டம் , தனக்கென பல விசேட தன்மைகளைக் கொண்டுள்ளது. இவ்விசேட தன்மைகள், மற்றும் பண்பாட்டு - வரலாற்று-சமுகவியல் உண்மைகள் என்பன இம்மாவட்டத்தைச் சேர்ந்த தகைமை சான்ற அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டுள்ளன. இப்பாரிய சிரம சாத்தியம்மிக்க பணியை மிகச் சிறப்பாகச் செய்து முடித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம். எல். ஏ. காதர், கலைப்பீடாதிபதி கலாநிதி கே. எம். எச். காலிதீன், விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். எல். எம். பளில், கல்விக் கல்லூரி விரிவுரையாளர் மன்சூர் ஏ. காதிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான மருதூர் ஏ. மஜீத், யூ. எல். அலியார், சட்டத்தரணி எஸ். முத்துமீரான், குவாஸி ஜே. எம். ஷம்சுத்தீன் மவ்லானா, ஒய்வுபெற்ற அதிபர்களான வீ. எம். இஸ்மாயில், எஸ். ஏ. ஆர். எம். செய்யத் ஹஸன் மெளலானா ஆகியோர் எமது அன்புக்கும், நன்றிக்கும் உடையவர்களாவர்.
இந்நூலின் ஆக்கத்திற்கு ஆலோசனைகள் நல்கிய ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, எம். ஏ. எம். ஹமஸைன், புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன், ஓய்வு பெற்ற பிரதம கல்வியதிகாரி எம். ஐ. எம். மீராலெப்பை, எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ்ஸமது, கலாநிதி எம். ஏ. நுஃமான் ஆகியோருக்கும் எமது நன்றிகள் என்றும் உரியனவாகும். அத்துடன் கட்டுரைகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்கிய கலாநிதி நுஃமான், எம். ஐ. எம். மீரா லெவ்வை ஆகியோருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
}
துறைமுக அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனரமைப்பு அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி
xviii

சட்டத்தரணியும், பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான கெளரவ அல்-ஹாஜ் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்கள் அட்டாளைச்சேனையில் நடைபெறும் தேசிய மீலாதுன் நபிவிழாவுக்குப் பொறுப்பாகவுள்ளார். அன்னாரது ஆலோசனைகளும், வழிகாட்டலும் இந்நூல் சிறப்பாக அமைவதற்குப்பெரிதும் உதவியுள்ளன. இந்நூலின் ஆக்கத்திற்கு பல்வகைகளிலும் துணைபுரிந்த அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியதோடு தோன்றாத்துணையாக விளங்கிய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
யூ. எல். எம். ஹால்தீன் பணிப்பாளர் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
xix

Page 12

1
வரலாற்றுப் பாரம்பரியம்
எம். எல். ஏ. காதர்
இலங்கையில் பரந்ததொரு நிலப்பரப்பை தமதாக்கி பெரும்பான்மை சமூகம்போல் முஸ்லிம்கள் வாழும் ஒரேயொரு மாவட்டம் அம்பாரை மாவட்டமேயாகும். தனியொரு நிர்வாகப் பிரிவை உருவாக்குவதற்குத் தேவையான நிலப்பரப்பொன்று முஸ்லிம்களுக்கு இங்குதான் உண்டு. ஏறத்தாழ ஐம்பது மைல் நீளமும், தென்கிழக்கிலே கடலிலிருந்து பத்துமைல் அகலங் கொண்டதொரு நிலப்பரப்பினுள் முஸ்லிம் மக்கள் தனித்து வாழத்தக்க நீர்வள, நிலவளங்களும், பொருளாதார வசதிகளும் இப்பிரதேசத்தில் இவர்களுக்குண்டு. தங்களது சுயமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும், பல்வேறு நோய், பிணி என்பவற்றிக்கு மத்தியில் தங்களை ஓரிணைப்பாக்கி ஒரு குலமக்கள் போல் வாழுமிடமாக முஸ்லிம்கள் இப்பிரதேசத்தை உருவாக்கியுள்ளார்கள், பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்துவாழ மட்டக்களப்புவாசிகள் விரும்பமாட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியதிற்கேற்ப, இவர்கள் தாங்கள் வாழ்ந்த மண்ணைவிட்டு பிரிந்துவாழும் நோக்கங் கொண்டதில்லை. பிரிந்துபோகவேண்டும் என்று கடுமையான அச்சுறுத்தல்கள் பலமுறை விடுக்கப்பட்ட போதிலும் இப்பிரதேசத்திற்குள் நிலைத்துநின்று வாழ்பவர்களாக அம்பாறை மாவட்டமுஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மன்னார் மாவட்ட முஸ்லிம்களும் , யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களும் தாங்கள் காலாகாலம் வாழ்ந்து வந்த இடங்களை விட்டு விலகவேண்டிய துர்பார்க்கிய நிலைமை அவர்களுக்கு உருவானது. மட்டக்களப்பு, திருகோணமலை முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் “பெரும்பான்மைச் சூழல்’ ஒன்று முஸ்லிம் மக்களுக்கிருப்பதாலும், அம்மக்களை ஒன்றுபடுத்தி நெறிப்படுத்தத்தக்க சமூக ஒழுக்கமுறையொன்று நெடுங்காலமாக அவர்கள் மத்தியில் நிலவுவதாலும் இவ்வாறு எழுந்த

Page 13
சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகாண அவர்களால் முடிந்தது.
"நாசரிஸ்த்தான்” என்று இப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்கள் தொகையையும் , அவர்கள் வாழ்ந்த பின்னணியையும் , அவர்களுக்கிருந்த நிலப்பரப்பையும் , சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் அவதானித்த இந்திய தேசியவாதியான றகுமத் அலி செளதிரி என்பவர் 1946ல் இந்திய முஸ்லிம் உலகின் ஒரு அங்கமாக இப்பிரதேசம் கணிக்கப்படவேண்டும் என்று இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே எண்ணினார். அந்த அளவுக்கு இப்பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான பண்புகளும், அம்சங்களும் பெற்றிருந்தனர். இலங்கை பற்றி எழுதிய பிரித்தானிய நிர்வாக உத்தியோகத்தர்களும், முக்கிய வரலாற்று ஆசிரியர்களும் மட்டக்களப்பு முஸ்லிம்களை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். மட்டக்களப்பை வளமாக்கியவர்கள் என்றும் கடின உழைப்பாளிகள் என்றும் புகழாரம் சூட்டினர். "வியாபார - வர்த்தக நோக்குக் கொண்டு முஸ்லிம்கள் இங்கு வந்திருக்கிறார்களேயன்றி, ஐரோப்பியர்களைப் போல் நாட்டைப் பிடிக்கும் நோக்கம் அவர்களிடம் என்றும் இருந்ததில்லை” என்று கண்டி மன்னனிடம் ரோபர்ட் நொக்ஸ் (Robert Knox) கூறிய ஏற்றுமதி வர்த்தகம், உள்ளூர் வர்த்தகம், நாட்டு வர்த்தகம் என்பவற்றை நோக்காகக் கொண்டு முஸ்லிம்கள் கிழக்கிலங்கைக்கு வந்திருக்கிறார்கள். அவ்வியாபாரம் கிழக்கிலங்கை துறைமுகங்களிலும், நாட்டுப்புறங்களிலும் இடம் பெற்ற காலமுழுவதும் முஸ்லிம்களே முக்கிய பங்கு கொண்டிருக்கிறார்கள். இவ்வியாபாரம் சீர்குலைந்த போது, இப் பிரதேசத்தைவிட்டு வெளியேற முடியாதவாறு பிணைக்கப்பட்டமுஸ்லிம்கள் தங்களை வேறுதொழில்முறைகளில் ஈடுபடுத்தி வருமானம் தேடமுற்பட்டனர்.
தமிழன்றி வேறெந்த மொழியும் பேசமுடியாதவர்களாகவுள்ள மட்டக்களப்பு முஸ்லிம்களை, "முஸ்லிம் தமிழர்கள்” என்று ஏன் அழைக்கக்கூடாது என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. முஸ்லிம்கள் தமிழர்கள்தான் என்று கூறுகின்றவர்கள் உண்மையில் முஸ்லிம்களின் பூர்வீகம், வரலாறு பற்றியும், முஸ்லிம்கள் இப்பிரதேச வாழ்க்கையோடுஒன்றிணைய வந்த காலச்சூழலையும் அதற்கான பின்னணியையும் விளங்காதவர்களே. தமிழர்களின் பசுமையான நிலங்களை, கபடமாக கவர்ந்து தம்மை அவற்றில்
2

இருக்கச்செய்து கொண்டவர்களே இப்பிராந்தியத்தில் வாழும் பெருந்தொகை முஸ்லிம்கள் என்ற பழிச்சொல் இவர்கள்மீது சுமத்தப்பட்டு வருகிறது. இப்பிரதேச வரலாற்றில், முஸ்லிம் மக்களின் பூர்வீகம் தெளிவாகக் கூறப்படாது போனதே இதற்குக் காரணமாகும். இப்பிராந்தியம் பற்றி எழுதப்பட்ட நூல்களும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான அனுமானங்களை பெறுவதற்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும், அவர்களது வரலாறு பற்றிய தெளிவையும் அவை கொடுக்கவில்லை. உதாரணத்திற்கு 1921ல் முதலியார் S.O. கனகரத்தினம் அவர்கள் "மட்டக்களப்பு மாவட்டம்" பற்றிய தகவல்களைத் திரட்ட வந்தபோது முஸ்லிம்கள் இம்மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பது (40%) சத விகிதத்தினராக இருந்தனர். ஆனால் அவர்கள் பூர்வீகம், வாழ்க்கை முறைபற்றி விளங்கிக் கொள்ளக்கூடியளவு குறிப்புக்கள் அங்கில்லாது போனமை பெருங்குறைபாடேயாகும். இவ்வாறு மட்டு முஸ்லிம்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்த போதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் மிகநெருக்கமாக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். முஸ்லிம் மக்கள் பேசும் மொழி, பேசும்முறை, அவர்கள் பேணும் சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள் என்பனவும், விவசாய தொழில்முறை ஒழுங்குகள், போடிமுறை, குடிமுறை, என்பனவும் மரைக் கார் முறை கொண்ட பள்ளிவாசல் நிர்வாகமுறை என்பன தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்திருக்கின்றன. பல நூறு வருடங்கள் கானகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருபிள்ளைகள் ஒட்டிவாழ்ந்தது போல் முஸ்லிம்களும் , தமிழர்களும் மட்டக்களப்பில் இணைந்து வாழ்ந்தனர். முஸ்லிம் மக்கள் வரலாற்றைத் தமிழ் மக்கள் வரலாற்றிலிருந்து பிரித்தறிய முடியாதபடி போனமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஆயினும் இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாறு தனித்துவமான பல அம்சங்களை கொண்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை. இதனால் இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியங்களை முடிந்தளவு கோர்வை பண்ணுவது இன்று அவசியமாகின்றது. இக்கோர்வையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதற்கு இடமுண்டு. ஏனெனில் இப்பிரதேச முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங்கள் அனுமானமாகவே எழுதப்
3.

Page 14
படவேண்டியனவாக இருக்கின்றன. யுத்தத்திற்கு வந்தவர்களைக் குறிப்பதுபோல் வரலாற்று ஏடுகள் வர்த்தகத்திற்கு வந்தவர்களைப்பற்றி குறிப்பதில்லை. இதனால் பல்வேறு “தேடுதல்கள்”, “அனுமானங்கள்”, “சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகள்”, “வரலாற்றுஞானம்" என்பனவற்றின் துணையோடுதான் மட்டக்களப்பு முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றிய கருத்துக்கள் எழுதப்படமுடியும். இவற்றில் காண்பவற்றிற்கு முறையான சான்றுகள் தேடி, திருத்தி, மாற்றி எழுதுவதற்கான அவகாசம் பிறிதொருகாலத்தில் ஏற்படும். ஆயினும் மட்டக்களப்பு முஸ்லிம்களைப் பற்றி தெரிந்தவற்றை ஒன்றுபடுத்தி, கூறத்தக் கவற்றை ஒன்று கூட்டுவதுதான் தென்கிழக்கு மட்டக்களப்பு முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் என்ற இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இவ்விடத்தில் மட்டக்களப்பு என்ற பெயர் பற்றியும் அதன் வழக்காறுபற்றியும் முதலில் கூறுவது பொருத்தமாகும். ஏனெனில் மட்டக்களப்பு என்ற பெயர்ப்பதம் தென் கிழக்கிலுள்ள சம் மாந்துறையைச் சார்ந்துள்ள களப்புப் பகுதியையே நீண்டகாலமாக குறித்து வந்திருக்கின்றது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பே மிகப்பிரசித்திபெற்ற கப்பல்கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாவும் போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பிருந்தே வந்திருக்கின்றது. போர்த்துக்கேயர் புளியந்தீவில் தமது கோட்டையை (1628) அமைத்து அதனை மட்டக்களப்பு என்று அழைத்ததன் பின்பே மட்டக்களப்பு என்ற பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கேயிருந்த பிரதேசத்தை குறிப்பதாக மாறியது.
போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பும், பின்பும் இடம்பெற்ற மட்டக்களப்புத் துறைமுகவர்த்தகம் என்பது தென்கிழக்குப் பிரதேசத்திலேயே இடம் பெற்றிருக்கின்றது என்பது இதனால் தெளிவாகின்றது. மட்டக்களப்புத் துறைமுகம் என்று வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்லுவதும் , யாத்திரிகர்களின் நினைவுக் குறிப்புக்கள் சொல்லுவதும் உண்மையில் தென்கிழக்கைச் சார்ந்த சம்மாந்துறைப் பகுதியேயையேயாகும். அராபியர்களும், இந்திய முஸ்லிம்களும், ஐரோப்பியர்களும் மட்டக்களப்புத்துறையில் (Matccalou) வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொன்னபோது
4.

தென்கிழக்குச்சார்ந்த மட்டக்களப்புத் துறையையே அது
பெருமளவு குறித்து நிற்கின்றது என்பது இங்கு விசேடமாகக் கண்டுகொள்ளப்பட வேண்டிய விபரமாகும்.
தென்கிழக்கு முஸ்லிம்கள் வாழும் நிலப்பரப்பு
அம்பாறை மாவட்டத்தின் கடற்கரையோடு அண்மித்துள்ள இப்பிரதேசம் சிங்கள மக்களோடு ஒட்டிச்சேர்க்க முடியாதபடியும், தமிழ்ப் பிரதேசத்தோடு இணைத்துப்பார்க்க முடியாதபடியும் அண்மைக்காலங்களில் எல்லைப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்தினை வட எல்லையாக மருதமுனை என்போமாயின் பொத்துவிலை தென் எல்லையாகவும், அம்பாறை நகர்ப்புறத்தை மேற்கெல்லையாகவும் கொள்ளலாம். அதன் கிழக்கெல்லையாக வங்காளவிரிகுடாவும் உண்டு. எனவே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்தப்படும் முஸ்லிம்கள் தென்கிழக்கின் கரையோரப் பகுதிசார்ந்து வாழ்வதால் இம்முஸ்லிம்களை தென்கிழக்கு முஸ்லிம்கள் என்றழைப்பது ஏற்புடையதாகும்.
இலங்கை முஸ்லிம் மக்களில் மிகக் கணிசமான தொகையினர் இந்நிலத்துண்டில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது இப்பிரதேசத்திற்கு மகத்துவத்தையும், முதன்மையையும் வழங்குகின்றது. (See Appendix - 1) இருப்பினும் "தென்கிழக்கு முஸ்லிம்கள் நாம்” என்ற வகையிலான ஓர் சிந்தனைப் போக்கு இங்குவாழ் மக்கள் மத்தியில் இல்லை எனிலாம். அவர்கள் மத்தியில் உள்ள பொருளாதார அமைப்பு, சமூகஒழுங்கு என்பன ஏறத்தாழ ஒத்ததன்மை உடையனவாக இருப்பினும், மக்களின் உளரீதியான சிந்தனை என்பது “ஊர்’ப் பற்று உடையதாக இருக்கின்றது. அதாவது பிரதேசம் சார்ந்த பெறுமானங்களையும் அபிலாசைகளையும் அவர்கள் மனதிற் கொள்ளாது ஊர்ப் பற்ன்றயே முக்கியமாகக் கொள்கின்றனர். பொத்துவில் முஸ்லிம்கள், சம்மாந்துறை முஸ்லிம்கள், கரவாகு முஸ்லிம்கள், அக்கரைப்பற்று முஸ்லிம்கள் என்பதே இன்னும் நடைமுறைப் போக்காக எல்லாவகையான செயற்பாடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இப்பிராந்திய முஸ்லிம் மக்களின் குணாதிசயங்களையும், பண்புகளையும் வெளிப்படுத்தும் அலகுகளாகவும் இவ்வூர்கள் உள்ளன.

Page 15
习日后闇气 m)
瞿 W****r國劇社』「道g 'ኒ
~~~~ 여름며』페國自動的)·「A_%;"反日昌r道學),「날1長日重兵副司g
■*... , + + + + . , * * „ “ ('ultizio
y^
| –量 11m「日本國理的日子日m』==::= ajas
晚***
则.A’
LÀ Đì đTross –|==mudy、
■日)*_* ! #
Huhu!-n-ı-ı sos, 母的可岁目
\,\!
Isikool: Essssss : ■町활「년民國家的.
No Tō--ılae
疊 #t學性理필TTE역
-''); Fe=***, -)---- usų, o 1 1-ig Noso,,,,,
டிகள் விழான் தி ஓடிரரி soU19 og spogubdī) (??đilsoņae)
 
 
 

தென்கிழக்குப் பிராந்திய முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் என்ற சமூக உணர்வு மேம்பட்டுக் காணப்படுவதற்கு இப்பிரதேசத்தில் உருவான முஸ்லிம் கிராமங்கள் ஒன்றை யொன்று அடுத்தடுத்து இருந்ததும் அக்கிராமங்கள் தமது சுயதேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளக் கூடியனவாகவும், பெரியனவாகவும் இருந்ததும் காரணங்களாகும். மேலும் முஸ்லிம் மயமான ஒரு பிராந்திய உணர்வை இப்பிரதேச முஸ்லிம்கள் பெறுவதற்கு கிராமங்கள் நெருக்கமாகவும் பிற இனத்தவர்களது கலப்பு குறைந்திருந்ததும் காரணமாகும்.
தென்கிழக்கு முஸ்லிம்களை மட்டக்களப்பு முஸ்லிம்களாகவே அடையாளம் கண்டு கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் தென் கிழக்கை 1960 ன் அம்பாறை மாவட்டிம் இன்று உள்ளடக்கினாலும் , மட்டக் களப்பு முஸ்லிம்கள் என்ற பெயருடனேயே இங்கு வாழ் முஸ்லிம்கள் அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மட்டக்களப்பு முஸ்லிம்கள் என்ற மகுடத்திற்குள் தென்கிழக்கு முஸ்லிம்களை அணுகுவதே தென்கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியங்களை எடுத்துக்கூற சிறந்த வழிமுறையாகும்.
வரலாற்றுப் பின்னணி
தென்கிழக்குப் பிராந்திய, மட்டக்களப்பு முஸ்லிம் மக்களின் வரலாறானது, ஒரே மூச்சிற் சொல்ல முடியாதவாறு பல பரிமானங்களை உட்கொண்டிருக்கின்றது. இப்பிராந்தியத்தில் இவர்கள் எவ்வாறு நிலைகொண்டார்கள் என்பதும், ஏனைய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களிலிருந்து பிரித்தறிந்து கொள்ளக் கூடியளவு தனித்துவமானதோர் சூழலை இவர்கள் தங்கள் வாழ்க்கை அமைப்பிலும், கலாசாரப் பிணைப்பிலும் எவ்வாறு பெற்றுவந்தார்கள் என்பதும் அவதானித்து ஆராயப்பட வேண்டிய விபரங்களாகும்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும், பட்டாணிககளும் வந்துபோன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரம் கூறும் மட்டக்களப்பு மான்மியம் என்ற நூல் தெளிவாக்குகிறது. "காட்டான், பட்டாணி, சுல்த்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகஞ் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர்."
7

Page 16
(ம. மா-59) என்று இந்நூல் கூறுகிறது. மேலும் இந்நூலிலுள்ள குலவிருதுகளில் ஒன்று முஸ்லிம்கள் அணியும் தொப்பியைச் சொல்லிப்பாடுவதும் (ம. மா - 58) மட்டக்களப்பு முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் நீண்ட வரலாறு உடையவர்கள் என்பதையே குறித்துக் காட்டுகின்றது. அத்தோடு இப்பிரதேச இந்துக்கோயில்களில் இடம்பெறும் பூசைகளுள் ஒன்று “பட்டாணிப் பூசை” என அழைக்கப்படுவதும் , மேலும் குறுமன்வெளி இந்துக் கோயிலில் தொப்பி அணிந்த சிலை ஒன்று பல வருடங்களாக காட்சிதந்ததும் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதையே கோடிட்டுக் காட்டுகின்றது. துலுக்கர், பட்டாணிகள் என அடையாளப் படுத்தப்பட்ட முஸ்லிம்கள் உருதுமொழியில் ஒரளவு பரீட்சயமான தென்னிந்திய முஸ்லிம்களாகவோ அல்லது அரேபியர்களாகவோ இருந்திருக்கக்கூடும்.
இங்கு துலுக்கர்களும், பட்டாணிகளும் எனக் கண்டுகொள்ளப்பட்ட முஸ்லிம்களின் உதவியுடன் முக்குவர் அவர்களின் எதிரிகளான திமிலர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் (ம. மா - 7). அதற்கு சன்மானமாக முக்குவப் பெண்களை தமக்கு உதவிய முஸ்லிம்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தனர். இது இப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்கள் வரலாறு பற்றிப் பேசப்படும்போது எல்லோராலும் பொதுவாக எடுத்துக் கூறப்படும் விளக்கக்கதையாகும். முஸ்லிம் - தமிழ் மக்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பு நிலவியதற்கு இதனையே காரணமாக கற்பிப்பர். ஆயின் அரசியல் உதவிக்காகவோ வேறு சில உபகாரங்களுக்காகவோ பெண்களை மணமுடித்துக் கொடுப்பது என்பது ஒரு கர்ணபரம்பரைக் கதையாகும். இது அக்கு ரணையிலும் நிலவுகிறது. ஆயினும் மக்கள் மயமற்ற சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் வருகையும் அவர்கள் தம்மோடு கொண்டு வந்த அனுபவமும் திறமையும் தொழில் முறையும் வர்த்தக தொடர்புகளும் எழுச்சியான வாழ்க்கைக்கு தொண்டாற்ற முடியும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் குடியமர்வு இப்பிரதேசத்தில் வேண்டப்படுவதற்கு வழிசமைத்திருக்கும்.
இலங்கையின் கிழக்குக் கரையோரப்பகுதியில் விளைந்த நெல்லை அக்கரைப்பற்றிக்கு அண்மித்த பகுதியிலுள்ள துறைமுகங்களிலிருந்து அராபியர் ஏற்றிச் சென்றதாக
8

தொலமியின் வரைபடமும் (கி. பி - 140) குறிப்புக்களும் கூறுகின்றன. இதேகாலப்பகுதியில் மிகமுக்கிய துறைமுகமாக si gas 5 (5 lt 6T situs Lithus Magnus 6T6i p Guu flas விளங்கியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இத் துறை முகத்திலிருந்து காட்டுமரம் பெருமளவு ஏற்றப்பட்டிருக்கின்றது. மேலும் பாணமை, திருக்கோயில், கோமாரி, காரைதீவு, கல்லாறு, கல்முனை, மட்டக்களப்பு போன்றனவும் மிகப்பிரதான கடலோரத் துறைமுகங்களாக அக்காலத்தில் விளங்கின. முக்கியமாக இத் துறைமுகங்களை அறிந்தவர்களாக அராபியர்களே இருந்திருக்கின்றனர். ஏனெனில் இவர்களே இத்துறைமுகங்கள பற்றிய தகவல்களையும் , தரவுகளையும் தொலமிக்கு s pršáluíl(5šálsýr psori (Emerson Tennent) sysů-3šff, அல்-பூர்பானி, அபூ-செய்யது என்ற புகழ்மிக்க அராபிய புவியிலாளர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டளவிலே தென் கிழக்கின் முக்கிய துறைமுகங்களைத தமது வரைபடங்களிலும், குறிப்புக்களிலும் குறித்துள்ளனர். எனவே தென் கிழக்கின் கடலோரப் பிரதேசம் என்பது புராதன வர்த்தகத்தில் மிகப் பிரபல்யமான பகுதியாக இருந்து வந்திருக்கின்றது. அராபியரும், பாரசீகரும், துலுக்கர்களும், பட்டாணிகளும் இப்பிரதேசத்தை வந்தடைந்திருக்கின்றார்கள் என்பதற்கு இவை ஆதாரங்களாகும் . இவ் வர்த்தகர்கள் மட்டக்களப்பு பகுதிக்கு வருவதற்கு மட்டக்களப்பு ஆறு ஏதுவாக அமைந்திருந்தது. Af
மட்டக்களப்பு முஸ்லிம்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான இடத்தை மட்டக்களப்பு ஆறு பெற்றிருந்தது. ஏனெனிற் ஆதிகால வர்த்தகர்களான அராபியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர் என்போரும் பிந்திய காலத்தில் இந்திய முஸ்லிம்களும் மட்டக்களப்பு துறைமுகத்தை நோக்கி வருவதற்கு, மட்டக்களப்பு புவியியற் சூழலில் ஐம்பது மைல் நீளமுள்ள மட்டக்களப்பு ஆறு இருந்தது முக்கிய காரணமாகும். அராபிய, இந்திய கடல் யாத்திரிகர்கள் வழங்கிய அனுபவக்குறிப்புக்களிலிருந்து இதனை விளங்கிக்கொள்கின்றோம். உதாரணத்திற்கு அராபியக் கப்பல்கள் தங்கியதையும், பழுதுபார்த்ததையும், பின்னர்தாம் திரும்புவதற்கு ஏற்ற பருவப்பெயற்சிக் காற்று வீசத் தொடங்கும் வரை இந்நீர்த் தேக்கங்களையே (Gobbs) தம் வசிப்பிடங்களாக்கிய விபரங்களையும் சுலைமான், அபூசெய்யது என்ற இரு முஸ்லிம்
9

Page 17
LJ Tå fiflag frassi (Voyages of Two Mohamadans) வழங்கிய விபரங்களிலிருந்து தெரிந்து கொள்கின்றோம் , இத்துறைமுகங்களில் உணவு, குடிநீர், வியாபாரப் பொருள் பண்டம் பெறுவதும் இலகுவானதாக இருந்தமையினால் காலித் துறைமுகத்தை அண்மித்து கடல் மார்க்கமாக வந்தவர்களுக்கும் இம் மட்டக்களப்பு:ஆறு மிகஉகந்த இடமாகியது. மேலும் வளமான மண்ணும், மிகுந்த விளைபொருள்களும், பாரிய சனத்தொகையும் மட்டக்களப்பு ஆற்றை சூழ்ந்திருந்தமையினாலும் , இப்பிரதேசத்தில் வர்த்தகம் மிகத்தீவிரமாக இடம்பெற்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அரசரத்தினம் குறிப்பிடுகின்றார். மட்டக்களப்பு ஆற்றை நோக்கி வர்த்தகர்கள் வந்ததிற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பலத்த காற்று வீசும் சூழ்நிலையிலும் தோணிகள், சம்பன்கள் போன்றவை பாதுகாப்பாக தங்கிநிற்கும் இடமாக மட்டக்களப்பு ஆறு காணப்பட்டது. ஏனெனில் கடலுக்கும் மட்டக்களப்பு ஆற்றுக்கும் இடையே "மண்மலைகள்" (Sand bars) உயர்ந்து நின்றமை இப்படகுகள், தோணிகள் பாதுகாப்பாக நிற்பதற்கு வழிசமைத்தன. இதனால்சோழ மண்டலத்திலிருந்து (Coromandel Coast) கிழக்குநோக்கிவந்த எல்லாக்தோணிகளும், சம்பன்களும், சிறிய படகுகளும், கட்டுமரங்களும் மட்டக்களப்பு துறையில் தங்கி தரித்தன. வேறு எத்துறைகளிலும் இந்தளவு பாதுகாப்பு இருக்கவில்லை. எனவே மட்டக்களப்பு ஆற்றில் தோணிகள், படகுகள், சம்பன்கள் என்றும் நிறைந்து காணப்பட்டன என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (எமசன் டெனன்ட்). ஆரம்ப காலத்தில் சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாக விளங்கியதாகவும் இங்கு வரும் வர்த்தகக் கப்பலில் வரியை அதிகாரிகள் அறவிட்டனர் எனவும் இவ் வாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே பூர்வீக காலமுதல் இப்பிரதேசத்திற்கு தோணிகள், படகுகள் வந்துபோயின. தென்கிழக்கு பிரதேசத்தில் தோற்றம் பெற்ற பல்வேறு குடியிருப்புக்களுக்கும் அடிப்படையாக இக்கடல் மார்க்க வர்த்தகத் தொடர்பும் அதற்கு மையமாக மட்டக்களப்பு ஆறும் இருந்திருக்கிறது. அராபிய வர்த்தகம் தென்கிழக்கு நிலப்பரப்பில் இடம் பெற்றதிற்கு கல்வெட்டுக்களும், நாணயங்களும் சான்று பகிர்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
O
 

유니F書門■■■■■■T: n) Wm년T불교발빅틀TTE
疊 Įsisihs; Nofss= !國司ng司法事
日昌門學的)-TT**패學原理g 疊疊„“.和++++
啤有自己日)玉
►►stris대구f후書朝„o ser sonrassos!ȚA ±
■社家山 a1n日月星配唱目)རྣET國 sluitiistori概腺苷当啡r)
불교變宮南國同時日
司國記다m國日구름则豐 漫|--每 T•••••••••
si
sssssssss =
|-
=