கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூக மாற்றத்தில் பண்பாடு

Page 1
கலாநிதி என்.
 

சண்முகலிங்கன்

Page 2


Page 3

சமூக மாற்றத்தில் பண்பாடு
கலாநிதி என். சண்முகலிங்கன் தலைவர், அரசறிவியல் - சமூகவியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இலங்கை.
SOUTH VISION
W
சவுத் விஷன்

Page 4
Samoogamaatrathi Panpaadu Kalanidhi M. Shanmugalingan
First Published: April 2000 Published by
SOUTH VISION
W
6 Thayar Sahib II Lane, Chennai - 600 002.
RS. 35.O.O
சமூகமாற்றத்தில் பண்பாடு கலாநிதி என். சண்முகலிங்கன் முதற் பதிப்பு: ஏப்ரல் 2000
வெளியீடு: சவுத் விஷன்
W
6. தாயார் சாகிப் 2ஆது சந்து சென்னை 600 002
ரூபாய் 35.00
ஒளிஅச்சுக் கோர்வை ஆதவ் கிராபிக் அச்சு மணி ஆப்செட் சென்னை-5

எங்கள்
பண்பாட்டின் மேன்மைக்கான
இசையாய்
வாழ்ந்து கனிந்த
என்
அண்ணன் பராவுக்கு

Page 5
பொருளடக்கம்
பதிப்புரை 5
முகவுரை 12
1. முன்பள்ளி பருவ சமூகமயமாக்கம்........................ 15 2. உறவும் தொடர்பும் 26 3. உளப்பகுப்பாய்வும் சமூகமும் . 29 4. குழுவாழ்வின் அடிப்படைகள். 34 5. கனவுகளிலிருந்து வாழ்வுக்கு . 39 6. உயிரோடு சாதல். 44 7. மாற்றமும் பதட்டமும் 48 8. அர்த்தமுள்ள மனித உரிமை .τα 52 9. முதுமையில் தனிமை 56 10. பால் நிலை உறவுகள் 61 11. பண்பாட்டு அதிர்ச்சி 66 12. உளவியலும் ஆன்மீகமும் 71 13. கலைகளினால் மானுடர்க்கு. 74 14. சமூகத் துணைவளம் 78 15. வல்லமை தாராயோ 82 16. கால மாற்றத்தில் குடும்பம் 86
இணைப்பு 1. ஈழத்தில் இசையும் சமூகமாற்றமும். 92
2. அறிவின் அரசியல் 105

பதிப்புரை
உலகமயமாக்கலுக்கும் தாராளமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைப்பாடு பண்பாட்டின் வழி மிகப் பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில் நாம் இன்று வாழ்கின்றோம்.
பண்பாடு. உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக, அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.
மேலும், இதைப் புரிந்து கொள்வதற்கு பண்பாடு என்பது எந்த அர்த்தத்தில் இங்கே குறிக்கப்படுகிறது. மேலாதிக்கம் என்பதற்கு பொருள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே பண்பாடு என்பதை வெறும் கலை. இலக்கியம் மட்டுமே என்று புரிந்து கொள்ளக்கூடாது. அது மக்கள் சமூகத்தின் வாழ்வுமுறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள். உணவு பழக்கங்கள். நாம் வாழும் வீடு எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள்.
வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றியி நமது கருத்துக்கள் எல்லாமே
பண்பாட்டின் வெளிப்பாடுகள், கலை, இலக்கியம் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது. அவற்றிற்கு உருவகம் கொடுக்கிறது. நல்ல கலை இந்த அர்த்தங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும் பண்பாடு நமது குடும்பங்களில் சமூக குழுக்களில், கல்வி நிலையங்களில் தொடர்பு ஊடகங்களின் மூலமாக ஒரு விமர்சனமற்ற முறையிலும் உணர்வுபூர்வமற்ற முறையிலும் நம்மை வந்து அடைகிறது.
இதை மேலும் புரிந்து கொள்வதற்கு பண்பாட்டிற்கும் அரசின் கொள்கைக்கும் மேலாதிக்கத்திற்கும் உள்ள உறவை புரிந்து கொள்ள வேண்டும்.
கிராம்ஷி அரசைப் பற்றி குறிப்பிடும்பொழுது கூறுகிறார்.

Page 6
"ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விவாதங்களில் செலுத்துகின்றன.
ஒன்று - ஆளும் வர்க்கங்கள். அரசு, மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை, இராணுவம். சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள துணையாகிறது.
இரண்டாவதாக ஆளும் வர்க்கங்களின் இந்த அதிகாரம், ஆளப்படுபவர்களின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது.
முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படையான கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்கான இடைவினையை புரிந்து கொள்வதன் வழிதான் உணரமுடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள். நிறுவனங்களில் பொதிந்துள்ளன. மத நிறுவனங்கள். அரசியல் கட்சிகள். தொழிற்சங்கங்கள். வெகுஜன அமைப்புகள், கல்வி நிறுவனங்கள். சுகாதார அமைப்புகள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் இவை வேர்விட்டுள்ளன.
ஒரு வகையான நிறுவனங்கள் அதன் ஏகபோக பலாத்காரத்தின் மூலமாக காவல்துறை, சட்டம். வரி. நிதி, வர்த்தகம். தொழிற்சாலை சம்பந்தமான நிர்வாக துறைகள் உள்ளடக்குகின்றன. இவை அனைத்தும் இணைந்து அரசு என்றாகிறது. மற்ற அனைத்தையும் கிராம்ஷி 'சிவில் முகாம் என்று அழைக்கிறார். இந்த சிவில் சமூகத்தின் மூலமே மேலாதிக்கம் நிறுவப்படுகிறது.
அரசிற்கும் சிவில் சமூகத்திற்குமான உறவை நாம் எப்படி புரிந்து கொள்வது? செவ்வியல் அரசியல் (classical politics) அதிகாரம் அரசிடம் குவிந்து கிடக்கிறது. எனவே அந்த அதிகாரத்தை கைப்பற்றுவதே மைய நோக்கம் என்பதாகிறது. அதாவது 1917ல் குளிர்கால அரண்மனையை தாக்கி கைப்பற்றுவதும், தொழிலாளி வர்க்கம் இந்த அதிகாரத்தை கைப்பற்றிய பின்பே, சோசலிஸத்தை கட்டமுடியும் என்பதாகிறது.
கிராம்ஷி, அதிகாரம் சிவில் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. கூடவே அது அரசின் கையிலும் உள்ளது என்கிறார். அரசை சுற்றி கட்டப்பட்டுள்ள பலமான கோட்டைகளாக, மதில் சுவர்களாக சிவில் சமூகம் உள்ளது. இந்த கோட்டைகளைத் தகர்காமல் குளிர்கால அரண்மனையை அணுக முடியாது.
குளிர்கால அரண்மனையை கைப்பற்றிய பின்பும் இந்த கோட்டைகளின்
Reserve Army விழுங்கி விடும் ஆபத்து இருக்கிறது. அரசு இந்த சிவில்

7
சமூகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. அரசின் இந்த அரணைத் துளைத்து உள்ளே சென்றாலும் சிவில் சமூகத்தின் Reserves அவற்றை அடைத்து சரிசெய்து விடும்.
நோம் சோம்ஸ்கி. வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள், தொலைக்காட்சியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக எவ்வாறு இந்த ஒப்புதலை தயாரிக்கிறது என்பதை விரிவாக விளக்குகிறார்.
இந்த தத்துவார்த்த பிரச்சினைகள் அடிப்படையில் அதிகார உறவுகளைப் புரிந்து கொள்வதிலேயே அடங்கி இருக்கிறது. இதுகாறும் நாம் உற்பத்தி உறவுகளுக்கு இடையிலான உறவுகளை பற்றிய ஆய்வில் மட்டுமே மையம் கொண்டிருந்தோம்.
உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் அடிப்படையில் அந்நிய மூலதனத்திற்குள்ள சில தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதையே நோக்காக கொண்டவை.
தொழில் முதலாளிகளின் மிக உச்ச லாபத்திற்கு உரிமை அளிப்பதே இதன் அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட சுதந்திரமான சந்தையில் அதிக ஆதாரங்களை உடையவர்களே, குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே பெரும் ஆதாயம் அடைவார்கள், ஏழைகள் பாடோ சொல்ல வேண்டியதில்லை.
இதுதானே காலனியாதிக்கத்தின் அர்த்தமும் பிரிட்டனின் காலனியாக நாம் இருந்தபொழுது நமது சந்தைகள் அவர்களுக்காக திறந்துவிடப்பட்டது. அவர்களுக்கு தேவையான எந்த கச்சா பொருளையும் அவர்களே எடுத்துச் செல்லலாம். அவர்கள் நிர்ணயித்த விலையில் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நினைத்த கம்பெனிகளை திறந்து கொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய எந்த பொருளையும் இங்கே விற்கலாம். காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தை கைப்பற்றியது.
உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னணு (electronic) ஊடகங்களின் மூலமாக தொலைக்காட்சி மூலமாக இது ஊடு பரவுகிறது.
நமது மத்தியதர வர்க்கத்தின் கலாசாரதை புரிந்து கொள்ள முயற்சிப்போம். தங்களுக்கு தேவையான மிக முக்கியமான தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றொரு பொருளை அடைவதற்கான முயற்சியே நுகர்வியம் - consumerism.
ஒரு டெலிவிஷன் அல்லது வாஷிங்மிஷின் வாங்குவது என்பது அடிப்படையில் நுகர்வியம் ஆகிவிடாது.

Page 7
ஆனால், இதைப் பெற்றிடும் முயற்சியின் போது, அதைவிட ஒரு முக்கிய செலவை, தேவையை புறக்கணிக்கும் பொழுது (உதாரணத்திற்கு ஒழுகும் வீட்டை சரி செய்ய அல்லது மகளின் கல்விக்கான செலவை தள்ளிவிடும்போது நுகர்வியம் ஆகிறது.
தேவையற்ற போலித் தேவைகளை உருவாக்கி கொள்வது - தான் வாழும் சமூக குழுக்களிடையே ஒரு பொருளை உபயோகிக்கும் திருப்தியில்தான் நுகர்வியம் அடங்கி உள்ளது.
உலகமயமாக்கல் இப்படிப்பட்ட நுகர்வுப் பொருட்களை பெரும் அளவிலும் தரத்திலும் அதிகரிக்கச் செய்வதும். வரவேற்பதும் இந்த பகுதியினருக்கு அவசியமாகிறது.
உலகமயமாக்கல் இங்கே இவர்களின் தேவையையொட்டி நியாயப்படுத்தப்படுகிறது.
இதைத் தவிர உலகமயமாக்கல் சில குறிப்பிட்ட விழுமிய கட்டமைப்புக்களை (value structures) கொண்டு வருகிறது. ஒருவன் செல்வந்தனாக இருப்பது மிக உன்னதமாக கொள்ளப்படுகிறது.
எப்படியாயினும் செல்வம் சேர்ப்பது - எந்த வகையிலேனும் சேர்ப்பது என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்த விழுமியங்கள் வர்க்கங்களை கடந்து ஆட்டிப்படைக்கிறது. அது சமூகத்தின் எல்ல பிரிவினரையும் சென்று தாக்குகிறது. அவர்களை பாழ்படுத்தி துரிதமாகவும் மிக விரைவிலும் செல்வந்தனாக மாறுவதற்கான போட்டியில் அவர்களை தள் விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியா மாறியுள்ளது.
இந்த மேலாதிக்கத்திற்கு எதிராக எவ்ாறு நாம் போராடுவ்து?
நம்முடைய உணர்வுகளின் நம்முடைய விழுமியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டுள்ள இந்த சக்திகளை எதிர்த்து நாம் எப்படி போரிட போகிறோம்?
ஆளும் வர்க்கங்கள் விழுமியங்களை எல்லோருக்குமானதாக மாற்றிவிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வெகுஜன எழுச்சியே சாதயமாகுமா என்ற கேள்வி உள்ளது.
இந்த கேள்விக்கு கிராம்ஷி கூறுவது என்ன?
இத்தகைய ஒரு நிலைமையை எதிர்த்து நியாயம் - நற்பண்புகள் - அறிவார்ந்த சீர்திருத்தத்திற்கான ஒரு எழுச்சியை - பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட வேண்டும். அப்படி செய்வதின் மூலம் ஆளும் வர்க்கங்களின்

9
மேலாதிக்கத்தின் கட்டுப்பாட்டை தகர்க்க இயலும். இதற்கு எதிரான ஒரு மாற்று மேலாதிக்கத்தை கட்டியமைக்க வேண்டும். உழைக்கும் மக்களின் மற்றும் மாற்றத்தை விரும்பும் பிற பிரிவினரின் மேலாதிக்கமாக இது இருக்கும். இதன் மூலம் மேலாதிக்க தத்துவத்தை வலுவிழக்கச் செய்யவும். அதே நேரத்தில் செயல்பாட்டிற்கான தத்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் வழிபிறக்கும்.
கிராம்ஷியின் இந்த நியாயம், நற்பண்புகள் - அறிவார்ந்த சீர்திருத்தம் என்பதைத்தான் நாம் இன்று பண்பாட்டு இயக்கம்' என்கின்றோம்.
இவ்வியக்கம் மக்களின் பல்வேறு பிரிவினரிடையிலும் விழிப்பூட்டும் பணிகளில் செயல்படும். அது அவர்களின் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்தும்; அதற்கு மாற்றானதை காட்டும்.
பண்பாட்டு இயக்கத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள். திரைப்பட கர்த்தாக்கள் எல்லோருக்கும் விழுமியங்களை கேள்விக்குட் படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு உண்டு.
இன்று இந்த மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒரு அவசரம் உள்ளது.
நமது வாழ்க்கை முறையை நமது விழுமியங்களை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள மேலாதிக்கம் செய்கிற தத்துவங்களை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
பண்பாட்டு இயக்கம் வெறும் கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா பிரிவினரையும் பங்கேற்க செய்யும், சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும் ஒரு இயக்கமாகும்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் ஒரு தத்துவவாதி - ஒரு அறிவு ஜீவி. அதாவது த்னக்கு என ஒரு தத்துவத்தை - ஒரு உலகப்பார்வையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். உணர்வுபூர்வமற்ற வகையில் உலகத்தை காணும் இந்த பார்வையை தான் கிராம்ஷி பொதுப்புலனறிவு common sense என்கிறார்.
இந்த பொதுபுலனறிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது மேலாதிக்க தத்துவத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்களையும் இணைத்து வெகுஜன பண்பாட்டில் ஊடுருவுகிறது.
s எனவே, மக்களின் பொதுப்புலனறிவு என்ற களத்தில்தான் மேலாதிக்க தத்துவத்தின் கருத்துக்களோடு ஒருவரின் தனிப்பட்ட அனுபவ படிப்பினைகள் மோதுகின்றன எனலாம்.

Page 8
1 O
ஆயினும் மேலாதிக்க தத்துவத்தால் என்றைக்கும் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்க முடியாது.
இந்த இடத்தில்தான் நமது பண்பாட்டு இயக்கத்தின் பணி தொடங்குகிறது. இந்த common sense நாம் விமர்சனத்திற்கு உட்படுத்துவதின் மூலமாக அதை good sense 95 d-((5Lost fisposTib.
மேலாதிக்க விழுமியங்களை தோலுரித்துக் காட்டுவதின் மூலம் பொதுப்புலனறிவுக்குள் பொதிந்து கிடக்கும் எதிரான விழுமியங்களை தோலுரித்துக் காட்ட முடிகிறது. அதன்வழி அவர்களுக்குள் இருக்கும் சொந்த அனுபவங்களை வெளிக்கொணர முடிகிறது.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு ஒரு மாற்றுக் கருத்தைக் கட்டி எழுப்பி அதனோடு ஒரு விவாதத்தை நடத்தி புதிய கருத்துக்களை உருவாக்கிவிடலாம்.
இப்படியொரு சூழ்நிலையில் மேலாதிக்கத்திற்கு எதிராக பண்பாட்டு இயக்கத்தின் கடமை என்னவாயிருக்கும்? குறிப்பாக உலகமயமாக்கல் இன்று பண்பாட்டை ஒரு முக்கிய காரணியாக அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திடும் சூழலில் மேலாதிக்கத்திற்கு பண்பாடு ஒரு வாகனமாக பயன்படுத்தப்படுகிறது என்ற இந்தப் புரிதல், பண்பாட்டு ஊழியனுக்கு புதிய கற்பிதங்களையும் நடைமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைத் தருகிறது.
மேலாதிக்க விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவது எப்படி? நமது சிவில் சமூகத்தின் எல்லா நிறுவனங்களிலிருந்தும் இவை செயல்படுகின்றன - நிலைபெறுகின்றன என்பதையும் விளங்குவதன் மூலமே இது சாத்தியமாகிறது.
குடும்பம், சாதி, மத நிறுவனங்கள். அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம், தொழில் உற்பத்தி - இவையெல்லாம் சிவில் சமூகத்தின் நிறுவனங்களில் நிலைபெற்று எப்படி மேலாதிக்க வர்க்கங்களுக்கு - அவர்களின் மேலாதிக்கத்திற்கு உதவி செய்கின்றன. பொதுமைப்படுத்தப்படுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பண்பாட்டு நடவடிக்கையில் ஆதிக்க பிரிவுகள் மற்ற பிரிவினருடன் ஏற்படுத்தக்கூடிய எல்லா உடன்படிக்கைகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த பிரிவு மக்களை நமது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நோம் சோம்ஸ்கி கூறுகிறார்: "ஒரு சர்வாதிகாரத்தில் மக்களின்
நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஜனநாயகத்தில் அவர்களின் சிந்தனைகளை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது."

11
மேற்கண்ட விஷயங்கள் இன்று பண்பாட்டுக் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் துணையாவன. கூடவே இது தொடர்பான அறிவியல் விவாதத் தளத்தை விரிவுபடுத்தவும் பயன்படுவன.
இந்நிலையில் பண்பாட்டினை விஞ்ஞான நோக்கில் கற்கும் சமூகவியல் அறிவு இன்றியமையாதது. தமிழில் சமூகவியல் நூல்கள் அரிதாகவே உள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவரும். நண்பருமான கலாநிதி என். சண்முகலிங்கன் அவர்களின் தொடர்பால், இத்துறையில் ஒரு தொடக்கமாக இந்நூல் உருப்பெற்று வெளிவருகின்றது.
சமூக மாற்றத்திற்கும் பண்பாட்டுக்குமான இடைவினையைப் புரிந்துகொள்ளும் அதே வேளையில், இச்சமூக மாற்றச் செயல் முறையில் பாதிக்கப்படும் மக்களுக்கான வல்லமையைத் தந்து, நீதியான புதிய பண்பாட்டினை உருவாக்கும் சிந்தனைக் கருவூலங்களாக இத் தொகுப்பின் கட்டுரைகள் அமைகின்றன எனலாம்.
சமூகவியல் துறை மாணவர்கள் மட்டுமன்றி, வெகுஜன மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான தொடர்பாடல் மொழியில் இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பண்பாடு பற்றிய அறிவு செயல்படும் அறிவாக இது பெரிதும் துணையாகும். நூலாசிரியரே குறிப்பிடுவதுபோல. ஒரே நூலாகச் சிந்தித்து எழுதப்படாத நிலையில் சில முக்கியமான விவாதப் பொருட்கள் விடுபட்டுள்ளமையை இங்கு குறிப்பிட வேண்டும். தொகுப்பு நூல் என்ற வகையில் இது தவிர்க்க முடியாதது என்பதனையும் வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள்.
இனிவரும் காலங்களில் மேலும் விரிவான் புதிய சமூகவியல் நூல்களை தமிழில் ஆசிரியர் தருவார் என்பது என் நம்பிக்கை.
எம். பாலாஜி
13-4-2000 சென்னை.

Page 9
முகவுரை
சமூகமாற்றத்தில் பண்பாட்டின் இடம் தொடர்பான விழிப்புணர்வு இன்று அதிகரிக்கும். நிலவும் பண்பாட்டில் சமூகமாற்றம் விளைவிக்கும் தாக்கங்கள், சமூகமாற்றத்தில் பண்பாடு விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் என்ற இருநிலைகளில் சமூகமாற்றத்திற்கும் பண்பாட்டுக்குமிடையிலான உறவு, பகுப்பாய்வு செய்யப்படும். சமூகமாற்றச் செயல்முறையில் உழைக்கும் பண்பாட்டு இயக்கங்கள் பலவும், பண்பாட்டின் இப்பரிமாணங்கள் தொடர்பான ஆழமான தரிசனத்தை வேண்டி நிற்கின்றன. கடந்த கால அறிவு - பாரம்பரிய பண்பாடடு அடைவுகளில் நல்லவைகளை இனங்கண்டு பேணவும். அல்லாதவைகைளத் தள்ளவும். இவற்றுக்கு அப்பால் செழுமையானதோர் புதிய பண்பாட்டினைப் படைக்கவும் இத்தரிசனம் இன்றியமையாததாகின்றது.
பண்பாட்டு விழிப்புணர்வு தொடர்பான அறிவும். செயலும் இன்றைய பண்பாட்டு மயமாக்கல் செயல்முறையை கேள்விக்குள்ளாக்குதலின் வழிதான் சாத்தியமாகும். இந்த இடத்தில் தான் கிராம்ஷி (Gramsci) முன்வைக்கும் common sense எனப்படும் பொதுப்புலனறிவு பற்றிய கருத்தாக்கத்தின் முக்கியத்துவம் உணரப்படும். தனியன்கள் ஒவ்வொருவரும் தம்மளவில் அறிஞராய், தத்துவஞானியராய் இருக்கலாம். ஆயினும் அவரவர் தனிப்பட்ட கூட்டு அனுபவங்களின் வழியே தான் பண்பாடு பற்றிய அவர்கள் புரிதலும், பரிமாற்றமும் நிகழ்கின்றது. இவர்களின் புரிதலின் அடிப்படையான பொதுப்புலனறிவை கேள்வி கேட்பதன் மூலமே. நல்லறிவு அல்லது உண்மையான பண்பாட்டறிவும் அதன் வழியான செயலும் கைவசமாகும்.
நிலவும் பண்பாட்டு விழுமியங்களை (Values) நியமங்களை (norms) கேள்விக்குள்ளாக்குதலின் வழி, வேண்டும் மாற்றத்துக்கான திசையை - இலக்குகளை முன்வைக்கும் பணியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமுக பணியாளர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. நல்ல கலை - இலக்கியங்கள்.

13
படைப்புக்கள் என்பன எப்பொழுதும் இதனையே தம் உயிர்மூச்சாக கொண்டுள்ளன. இந்த வகையில் சமூகம் பற்றிய அறிவியலாக எமக்கு வாய்த்துள்ள சமுகவியல் அறிவும் இன்று பெரிதும் கைகொடுக்கின்றது.
விசாரணை என்பது ஒர் இயல்பான மனித செயற்பாடாக அமைவது: தன்னைச் சூழ்ந்த உலக இயற்கையை விளங்கும் மனித ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்கான அவதானங்களின் வழி அவரவர் காணும் ஒழுங்கின்படி அறிதலும் வேறுபடுகின்றது. ஆனால் சமூகவியல் அறிவானது விஞ்ஞான விசாரணையின் வழியானது சாதாரண மனித விசாரணையில் எழக்கூடிய தவறான புரிதல் - அறிதல்களைத் தவிர்த்தற்கான ஏற்பாடுகளைக் கொண்டது. சாதாரண மனித விசாரணையில் காணப்படக்கூடிய,
1. OsbgoLouisD 96 15760TLb (Inaccurate observation) 2. மிகைப் பொதுமையாக்கம் (Over generalization) 3. G5sibQg5(655 -96.57GOTL) (Selective observation) 4. Ji (555JLJ'L g53, Gudi).5GT (Reduced informations) 5. தர்க்கரீதியற்ற நியாயங்கள் (logical reasoning)
போன்ற தவறு நிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சமுகவியலின் விஞ்ஞான விசாரணை எமக்குத் தருகின்றது. சமூகநீதி சார்ந்த கருத்தியலோடு இந்த அறிவு இணைகின்றபோது சமூகப் பயன் விளைகின்றது.
இந்த வகையில் எமது பண்பாட்டு, புலம் தொடர்பான ஒரு சமூகவியல் பகுப்பாய்வாகவே இத்தொகுப்பின் பெரும்பாலான கட்டுரைகள் அமைகின்றன எனலாம். நிலவும் பண்பாட்டின் அங்கத்தினனாக அதன் மேன்மைக்கான பண்பாட்டு இயக்கங்களின் செயல்பாடுகளில் இணைந்த ஒருவன் என்ற வகையிலும். இந்த பண்பாட்டினையே கற்கும் - கற்பிக்கும் ஒரு சமூகவியலாளன் என்ற வகையிலும் அவ்வப்போது கண்ட அனுபவங்களின் இக்கட்டுரைகள் விளைந்தன எனலாம்.
பண்பாட்டின் பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளுதல், அவற்றினை எதிர்கொள்ளுதற்கான அறிவையும் வல்லமையையும் தருதல், புதிய பண்பாட்டு மேன்மைக்கான சிந்தனைகளை விதைத்தல் எனும் பரிமாணங்களைக் கொண்டவையாக இக்கட்டுரைகளை நீங்கள் தரிசிக்க
(Մ)tԳեւլք.

Page 10
14
சமூகமாற்றத்தில் பண்பாடு என்ற பொதுத் தலைப்பில் இன்று தொகுப்பாகும் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை, யாழ்ப்பாணத்தி லிருந்து வெளிவரும் நான் என்கின்ற உளவியல் சஞ்சிகையில் அவ்வப்போது வெளியானவை. ஒரு கட்டுரை மனவெளி எனும் சமூக உள நல ஏட்டில் வெளியானது. இணைப்பாக இடம்பெறும் கட்டுரைகளில் ஒன்று யாழ். பல்கலைக்கழக சமூகவியல் சமூக தொடக்க நாள் கருத்தரங்கில் படிக்கப்பட்டது. மற்றையது தமிழின் முதல் சமூகவியல் ஏடான யாழ். பல்கலைக்கழக மானுடம் -2ல் வெளியானது.
பொதுவான சமூக வாழ்வின் அடிப்படைகளை, பண்பாட்டின் பல்வேறு கூறுகளைத் தெளிவாக்கும் அதேவேளையில், போர்ச் சூழலில் சமூக பண்பாட்டு வாழ்வு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றியே பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. கூடவே இந்த நெருக்கடிகளிலி ருந்து மீளுதற்கான வல்லமையைக் காணும் - காட்டும் திசையிலும் சிந்திக்கின்றன. ஏற்கனவே சுட்டியவாறு அவ்வப்போது பட்டுத் தெறித்த அனுபவப் பொறிகளான இக்கட்டுரைகள் ஒவ்வொன்றுமே, ஆழமான ஆய்வனுபவங்களாக, தனி நூல்களாக எழுதப்படவேண்டியன. இங்கே பேசப்படும் பண்பாட்டுக் கூறுகளுக்கிடையிலான இணைவுகள் - இயங்குவிசைகள் பற்றிய முழுதளாவிய பார்வையும் கூட இன்றியமையாதது. இந்த வகையில் இது ஒரு தொடக்கம்தான்.
இந்தக் கட்டுரைகளை எழுதுதற்கான தூண்டல் விசையாக விளங்கிய நண்பர் யோசப்பாலா மற்றும் சமுகவியல் சமூகத்தினரை அன்புடன் இங்கு பதிந்திட விரும்புகின்றேன்.
முதல் அறிமுகத்திலேயே நெஞ்சோடு நெருங்கிவிட்ட இந்நூலின் பதிப்பாளரான சவுத் விஷன் நண்பர் எம். பாலாஜிக்கு என்றென்றும் என் அன்பு
நூல் தொடர்பான உங்கள் கருத்துக்களைக் காத்திருக்கின்றேன்.
அன்புடன்
என். சண்முகலிங்கன்
“கந்தன் அருள்" அம்பலவாணர் பாதை
திருநெல்வேலி தெற்கு uupÜLJub

1.
முன்பள்ளிப்பருவ சமூகமயமாக்கம்
எல்லாச் சிறுவர்களும் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மட்டும் மேசையிலே தலையை வைத்துப் படுத்திருக்கிறான். விளையாட்டிலே மனம் செல்லவில்லை. அவனை விளையாட்டிலே ஈடுபடுத்த மற்றைய பிள்ளைகளும். ஆசிரியையும் முயன்றும் முடியவில்லை. அந்த வகுப்பின் பிரச்சினைக் குழந்தையாக அவனை எல்லோரும் நோக்குகிறார்கள். இது ஒரு முன்பள்ளியிலே கண்ட காட்சி.
மற்றொரு பள்ளியிலே ஆசிரியையின் ஒவ்வொரு கூற்றுடனும் முரண்படும் நடத்தையுள்ள சில சிறுவரைக் காண முடிகின்றது. "செய்யக்கூடாது' என்று சொல்பவற்றையே செய்கின்ற பிடிவாதம் கொண்ட இந்தப் பிள்ளைகள், அந்த வகுப்பின் பிரச்சினைகளாக அணுகப்படுகிறார்கள்.
இவ்வாறாக பல்வேறு முரண்பாட்டுக் கோலங்கள்.
இந்த நடத்தைகளின் வழியிலேயே பிள்ளைகளின் வளர்ச்சி அமைகின்றது. இந்த வகையிலே பிள்ளைகளின் வளர்ச்சிப் பாதையில் மிக முக்கியமான காலகட்டமான முன் பள்ளிப் பருவத்து நடத்தைகள் மிக முக்கியமாகக் கவனிப்பட வேண்டியன. பிரச்சினைக்குரிய நடத்தைகள், பிரச்சினைக்குரிய பிள்ளைகள்' என்று அவர்களை ஒதுக்குகின்ற நிலையினை விட்டு அவர்களின் பிரச்சினை மூலங்களை அணுகி உரிய முறையிலே அவர்களின் நடத்தைகளை வழிப்படுத்த வேண்டும்.
இத்தகைய ஒரு விழிப்பினை, இன்றைய நடத்தை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் முதலாய அறிவியற்றுறைகளின் வளர்ச்சி தந்திருக்கின்றது. உளவியல் சார்ந்த ஆய்வுகள் பலவும் இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம்

Page 11
16 சமூகமாற்றத்தில் பண்பாடு
கொடுத்துள்ளன. இவ்வனைத்து அறிவியல்களின் சாரத்தினையும் தேர்ந்து தெளிந்து கல்வியியல் பயன்படுத்தத் தொடங்கியது.
பிரச்சினை - குழந்தைகளா?
பிரச்சினைக் குழந்தைகள் தொடர்பாக பல்வேறு வரை விலக்கணங்கள் தரப்பட்டன.
‘எங்கள் பார்வையில், தன்மீதும், தன்னைச் சார்ந்துள்ளவர்கள் மீதும் பிழையான தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் தம்மை வளர்த்துக் கொண்ட பிள்ளைகளையே பிரச்சினைக்குரிய குழந்தைகள் என்கின்றோம். என இப்பிரச்சினை தொடர்பான கல்வி அறிக்கைகள் விவரிக்கின்றன.
உளவியல் ரீதியான குழப்பங்களும், உறுதியின்மைகளுமே பிள்ளைகளின் பிரச்சினை நடத்தைக்கான மூலங்களாகும். பிள்ளைகளின் அக, புற உலகங்களின் வழியாகவே அவர்களின் நடத்தைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அக, புற உலக அனுபவங்களில் விளைகின்ற ஒவ்வொரு தாக்கமும் பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைகளை இனங் கண்டு கொள்ளவும் அதற்கான உரிய நிவாரணத்தினைக் காணவும், அவர்களின் சமூக - உள நிலைமைகளைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளவும் அவசியமாகும்.
மாணவர்களின் கீழ்ப்படியாமை, துடுக்குத்தனம் போன்றவற்றையே மிக முக்கியமான பிரச்சினை நடத்தைகள் என பெரும்பாலான ஆசிரியர்கள் கூறுவார்கள். ஆனால் உளநலவியலாளர்களோ, பிறருடன் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் பிள்ளைகளின் பின்வாங்கும் நடத்தைகளையே முக்கிய பிரச்சினை நடத்தைகளாக நோக்குவர் நேரடியாக வகுப்பிலே தொந்தரவு இன்றித் தனித்திருக்கின்ற இத்தகைய பிள்ளைகளே எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாகின்றமை அனுபவத்தில் உணரப்பட்ட சங்கதியாகும். பாரிய குற்வாளிகளாகவோ அன்றி விரக்தியான வாழ்விலே தினமும் மிதப்பவர்களாகவோ இவர்கள் ஆகிவிடக் காண்கின்றோம். கீழ்ப்படியாமை, துடுக்குத்தனம் போன்ற நடத்தைகளை விட இத்தகு ஒதுங்கு மனப்போக்கின் விளைவுகள் பாரதூரமானவை என்பது இதனாற் புலப்படும். எனவே பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைகளை நோக்கும்போது வெறுமனே ஆசிரியர்கள் பலரும் நோக்கும் நிலையிலே நின்று விடாமல் உளவியலாளர்களின் வழியிலே ஆளுமைப் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் தந்து நோக்குவது இன்றியமையாதது. தூடன் அகஸ்டன்

என். சண்முகலிங்கன் 17
என்ற கல்வி உளவியலாளர் இதனை வெகுவாக வலியுறுத்துவார். பிரச்சினை நடத்தை அணுகுமுறையில் இன்று இது முக்கிய இடம் பெறுகின்றது.
உண்மையில் 'பிரச்சினைக் குழந்தைகள்' என்பதிலும், 'பிரச்சினைகளையுடைய குழந்தைகள்' என்று இவர்களை அழைப்பதே பொருத்தமானது என்பர். இன்றைய உளவியலாளர்.
பிள்ளைகளின் அக உலகப் போராட்டங்களின் விளைவான பொருத்தப்பாடற்ற நடத்தையாகவே பிரச்சினை நடத்தைகளைக் கண்டோம். இந்த உளப் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன?
இங்குதான் மிக்வும் நிதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக விருக்கின்றோம். பிள்ளையொன்றின் நடத்தை முரண்பாட்டிற்கு ஒரு தனிக்காரணந்தான் இருக்க வேண்டுமென்றில்லை. பல்வேறு அக, புற காரணிகளின் மொத்த விளைவாக அவன் நடத்தையிலே ஏற்படுகின்ற முரண்பாடுகளைச் சரியானபடி இனங்கண்டு கொள்வதிலே தான். உண்மையான வெற்றி தங்கியுள்ளது.
பிள்ளைகளின் பிரச்சினை நடத்தைகளுக்கான காரணிகளைப் பலரும் பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கினர். உடல் சார் குறைபாடுகளுக்கு முக்கியத்துவம் தந்தனர் சிலர். உளம் சார் குறைபாடுகளுக்கு முக்கியத்துவம் தந்தனர் சிலர். பிள்ளையை வாழும் சமூகத்தின் உறுப்பினனாக்கும் பயிற்சியும். விளைவுமான சமூகமயமாக்க நிறுவமைப்புகளில்தான் கோளாறு என்றனர் வேறு சிலர் உண்மையில் இவை அனைத்தும், சமவளவான முக்கியத்துவம் பெறுவதனை இன்றைய கல்வி உளவியல் ஏற்றுக் கொள்ளுகின்றது.
பிள்ளைகளின் உடல் சார் பிரச்சினைகளை எடுத்து நோக்குவோமேயாகில், அங்கவீனம் அல்லது உடலியற் பாதிப்பின் விளைவாகப் பிள்ளைகளின் நடத்தையில் விளைகின்ற பிரச்சினைகளைத் தெளிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, மூளை பாதிப்படைந்த பிள்ளை ஒன்றுக்குத் தனது சூழலை உணர்கின்ற தன்மையிலே குறைபாடு ஏற்படுகின்றது. இது பிள்ளையின் தாயுடனான மனவெழுச்சி, சமூக இடைவினை மாற்றங்களைப் பாதிக்கும். அவர்களது பிள்ளைக்கால அனுபவங்கள் முழுமை பெறாத தன் விளைவு, நடத்தையிலே பிரதிபலிக்கும் என்பார் பெளல்பி என்ற உளவியலறிஞர்.

Page 12
18 சமூகமாற்றத்தில் பண்பாடு
உடலியல் ரீதியான பரம்பரையலகுகள் தொடர்பான பாதிப்புகளுடன், பிள்ளையின் மனவெழுச்சி வளர்ச்சியின் அடிப்படை ஆதரவின்மை அல்லது இந்த அடிப்படை ஆதரவு அமைப்பில் ஏற்படும் பாதிப்பு என்பனவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியன. ஆதரவு அமைப்பு என்கையில், நிபந்தனையற்ற மட்டற்ற அன்பினைத்தரும் உறவுநிலை ஆதரவுகளையே குறிக்கின்றோம். உடலியற் தேவை (Physiological need), 5 TüL 5 (3560 GJ (Safety need), s96öTL 2 -D65 (3560 GJ (Love & belongingness), suspooflui) G5606 (Self actualisation need) GT6TUG) libidi) ஏற்படுகின்ற திருப்தியின்மைகளின் விளைவாகவே பிரச்சினை நடத்தைகளைக் காண்பார் மஸ்லோ, பிள்ளைகளின் திருப்தியான மனவெழுச்சி விருத்தி நிலையில் ஏற்படுகின்ற இந்த அமைப்பு உடைவு பற்றிய விளக்கக் கோட்பாடுகளைத் தெளிவாகத் தரிசிப்பது இன்றியமையாதது. சிக்கலான இச்செயல்முறை தொடர்பாக தனியான வரையறுத்த கோட்பாடென்று ஒன்றுமில்லை. இந்நிலையில் இது தொடர்பான முக்கியமான இரு கோட்பாட்டு மூலங்களையும் நோக்குவது அவசியமாகின்றது.
1. உளத்தொழிற்பாட்டுக் கொள்கை, 2. கற்றற் கொள்கை.
உளத் தொழிற்பாட்டுக் கொள்கையானது, நடத்தையினை உளம்சார் விசைகளின் விளைவாகக் காண்கின்றது. எங்கள் உளச்சார்பு இயக்கம் என்பன மனவெழுச்சி விசைகளின் வழிப்பட்டதென்பார் பிறவுண். அத்துடன் மனித ஆளுமையை அறிந்து கொள்ள, அடிக்கடி முரண்படும் இந்த மனவெழுச்சி உந்தல்களை அறிந்து கொள்வது அவசியமாகும். வினிகோற். கெலின் போன்ற உளவியலாளர்கள் இக் கோட்பாட்டினை வெகுவாக வலியுறுத்துவர்.
பெற்றோரின் பங்கு
அன்னையிலே தங்கியிருக்கும் குழந்தைக்காலச் சூழ்நிலையிலே ஏற்படும் தோல்வியின் விளைவே நடத்தை முரண்பாடு என்பார் வினிகோட் அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையிலான உறவில் ஏற்படுகின்ற எத்தகைய முறிவும் பிள்ளைகளின் நடத்தையிலே பாதிப்பினை விளைவிக்கும். இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆரம்பத்திலே வர்ணிக்கப் பட்ட அந்தத் தனித்த குழந்தையின் நடத்தை முரண்பாட்டுக்கும் இதுவே

என். சண்முகலிங்கன் 19
காரணம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சில மாதங்களுக்குமுன், தன் மீது அளவிலா அன்பினைச் செலுத்திய அன்னையை, நிகழும் போரின் கொடுமுகத்தில் இழந்துவிட்டான் அவன். அந்த இழப்பினை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாருடனும் சேர மனமில்லை. 'கவலையுடன் தனிமையை நாடுகின்ற குழந்தைகள் தமது உறவு நிலைகளிற் தோல்வி கண்டவர்கள் என்று வர்ணிக்கும் அண்டவூட் அறிக்கையின் அடிகளை இங்கு நினைவிற் கொள்ளலாம். பிள்ளைகளின் உள்ளார்ந்த திறன் விருத்திக்கும் இந்த உறவுகள் பெரிதும் உதவுவன. பிள்ளையின் உளப் போராட்டத்துக்கு தாயின் இழப்பு மட்டுமல்ல. தாய்க்கும் தந்தைக்குமிடையிலான போராட்டங்களும்கூட காலாகி விடுகின்றன அன்றாடம் சண்டையிடும் பெற்றோரின் மத்தியில் யாரைச் சார்வது என்ற பிரச்சினையில் மனங்கலங்கும் பிள்ளைகளின் நடத்தை பெருஞ் சிக்கலானதாகும்.
பெற்றோரின் இழப்பு அல்லது முரண்பாடு என்பன மட்டுமன்றி அவர்களின் புறக்கணிப்பு என்கின்ற துர்ரதிஷ்டத்திற் குள்ளாகும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். குடும்பத்து வறுமை அல்லது அதிக பிள்ளைகளின் தொல்லை அல்லது தொழில் ரீதியான தோல்வி போன்ற தமது மன முறிவுகளின் விளைவாகப் பிள்ளைகளைப் புறக்கணிக்கின்ற பெற்றோரினாலும் பிள்ளைகளின் நடத்தைகள் பாழாகின்றன. தாய் தந்தையின் அன்புக்காக ஏங்குகின்ற இந்தக் குழந்தைகளின் நடத்தைப் பிரச்சினைகள் போன்றே அதிகம் செல்லம் பெறுகின்ற குழந்தைகளின் நடத்தைப் பிரச்சினைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த இரு நிலைகளுமே பிள்ளைகளுக்குத் தீங்கு வினிளவிப்பன.
பெற்றோரின் சமூக முரண்பாட்டு நடத்தைகள் பிள்ளைகளினாலே
பின்பற்றப்படுகின்றன அல்லது அவர்களது நடத்தைகளிலே தாக்கத்தை விளைவிக்கின்றன. இதனைத்தான் கற்றல் தொடர்பான நடத்தைக் கொள்கையினரான ஸ்கின்னர் போன்றோர் பெரிதும் வலியுறுத்துகின்றனர். கட்டுப்பாடு, சுதந்திரம் ஆகியன பற்றி ஒரு குழந்தை பெற்றுள்ள மனப்பான்மை, முன்பள்ளிக் காலத்து குடும்பத்தில் அது பெறும் பயிற்சியின் தன்மை. அளவு என்பவற்றினைப் பொறுத்ததாகும். நல்ல பயிற்சியினைப் பெற்ற குழந்தையானது மூத்தோரிடமும், பிற நல்ல கட்டுப்பாடுகளிடத்தும் நல்ல இடைவினையைக் காட்டும்.தவறான அனுபவங்களை அல்லது பயிற்சியினைப் பெற்ற குழந்தையோ, இவற்றினைத் தன் சுதந்திரத்துக்கான தடைகளாகவே இனங்காணும். இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலே

Page 13
20 சமூகமாற்றத்தில் பண்பாடு
வர்ணிக்கப்பட்ட பிடிவாதம் கொண்ட பிள்ளைகள் சிலரின் குடும்பப் பின்னணியை நேரிலே அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது இக்கருத்து மேலும் உறுதி பெற்றதனை இங்கு குறிப்பிடலாம்.
பிள்ளைகளின் பிரச்சினை நடத்தையில் குடும்பம் என்கின்ற நிறுவனத்தின் பங்களிப்பு அதிகமானதென்பதால் அதனை மேலும் நுணுகி நோக்குவது இன்றியமையாதது நடத்தை மூலங்களை அறிய இது பெரிதும் உதவும். மேலும் பெற்றோரின் நடத்தைகளை அறிந்தும் அவரது ஒத்துழைப்புடனும்தான் பிள்ளைகளின் நடத்தையிலே சீராக்கம் காணமுடியும். பெற்றோர் தம் குழந்தைகளுடன் பழகும்போது அவர்களின் தன்மயம் தொழிற்படுகின்றது. இங்கு பெற்றோர்களின் தன்மயம் என்பது பல அம்சங்களாலானது. பொறுமையாக இருப்பது விரைவிலேயே பொறுமையை இழப்பது உற்சாகமாகவிருப்பது உற்சாகமிழந்திருப்பது: தீர்மானமுடையவர்களாக இருப்பது கவலையுடையவராகவிருப்பது: குழந்தைகளின் விருப்பத்துக்கு இணங்கும் சுபாவமுடையவராவது இதற்கு மாறாவது என தன்மயக்கூறுகள் பலவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு பெற்றோரும் தமக்கெனத் தனிப்பட்ட முறையிலேயே பிள்ளைகளை ஏற்கின்றனர். குழந்தையின் தேவைகளை எந்தளவுக்குப் பெற்றோர் விளங்கியுள்ளனர் என்பதனைப் பொறுத்தே அவர்களின் நடத்தையும் அமைகின்றது. குழந்தையின்பத்தின் நலங்களைக் காண்கின்ற திறம், பெற்றோருக்கு இருந்தாலே முழுமையான அர்த்தம் காண முடியும். தம் குழந்தைகளின் பிடிவாதம் முதலிய வேண்டாத குணங்களைக் கண்டு பெருமைப்படுகின்ற பெற்றோர்களையும் நாம் காண்கின்றோம். தனக்கென ஒரு தனியியல்பு, விருப்பு என்று குழந்தை கொண்டிருப்பதைப் பெரும்பாலான பெற்றோர் விரும்பிய போதிலும், அதற்கும் ஓர் எல்லை உண்டென்றும் வரையறுக்கிறார்கள். இந்த எல்லையை மீறும் போது தமக்குப் பெருங்கோபம் ஏற்படுவதாகவும் இப் பெற்றோர் கூறுகின்றார்கள். பிள்ளைகளின் பொருத்தமான வளர்ச்சிக்கு உதவுகின்ற பெற்றோரை நாம் இலகுவில் இனங் கண்டு கொள்ளலாம். இவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளுடன் பழகுகின்றார்கள். எல்லா உணர்ச்சிகளையும் வஞ்சகமின்றி வெளிக்காட்டிப் பழகுகின்றனர். தம்மை நல்ல பெற்றோர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இவர்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் குழந்தையின் வயது. ஆற்றல் ஆகியவற்றின்ை மனதிற் கொண்டு பழகும் பெற்றோர் கோபம், கவலை ஆகியவற்றினைக் காட்ட நேரிடும் போது தமக்கு உண்மையில் உண்டாகும் கோபம், கவலை என்பவற்றினைக்

என். சண்முகலிங்கன் 21
குறைத்தே குழந்தையிடம் காட்டுவர். வேண்டுமென்று தம் குழந்தைகளைத் துன்புறுத்த மாட்டார்கள். ஆயினும் எந்த நிலையிலும் அடிக்கவோ, திட்டவோ கூடாது என்ற மனப்பான்மையும் அவர்களுக்கு இருக்காது.
இத்தகைய ஒரு சமநிலைப் பாங்கினைப் பெற்றோர் பெற்றுக் கொள்ளாதவரை பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினை ஒரு தொடர் கதைதான். தமது பொறுப்புகளை உணர்ந்து, தமது விருப்பு குழந்தைகளின் விருப்பு என்பவற்றினைத் தெரிந்து அவற்றின் எல்லைகளைத் தெளிந்து பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். அல்லாத நிலையில் பிள்ளைகளின் பிரச்சினை நடத்தைகளுக்குக் காலாவதுடன் அதனை வளர்த்து நிற்கும் பெரும் பழிக்கும் உள்ளாக வேண்டி நேரிடுகின்றது. அதாவது பிள்ளைகளின் முரண் நடத்தைகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மேலும் மேலும் பிள்ளைகளை வெறுத்தொதுக்கும் பெற்றோரினால் பிள்ளைகளின் நடத்தை முரண்பாடு மேலும் வளர்கின்றது. பெற்றோர் மட்டுமன்றி ஆசிரியரும் பிறரும் கவனத்திற் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் இதுவாகும்.
ஆரம்பகால ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஃபிப்ஸ்சைமன் பெற்றோரின் விலக்கு மனப்பான்மையின் கொடுமையான அறிகுறிகளாக பெற்றோரின் சில இயல்புகளைக் குறிப்பிடுகின்றார். அடிக்கடி பிள்ளைகளின் மேல் குறை கூறுவது வெளியே துரத்திவிடுவதாகப் பயமுறுத்துவது அறையிலே போட்டுப் பூட்டி விடுவது. வேண்டுமென்றே பயம் காட்டுவது என்பன கடுமையானவை. இவற்றினை விடச் சற்றுக் கடுமை குறைந்த நச்சு நச்சென்று எதற்கெடுத்தாலும் குற்றஞ்சாட்டித் திட்டுவது. குழந்தைகள் கேட்கும்போது பணமோ, விளையாட்டுச் சாமான்களோ, இவை போன்ற இன்பப் பொருட்களோ தர மறுப்பது: பிறகுழந்தைகளோடு ஒப்பிட்டுக் குழந்தையைக் குறைத்துச் சொல்வது எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.
இதுவரை நுணுகி நாம் நோக்கிய பிள்ளையின் குடும்பப் பின்னணியில் நிகழ்கின்ற முரண்பாட்டுக் காரணிகள் தொடர்பான அறிவு எமது பிரச்சினைக் குழந்தைகளின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றதை உணர்கின்றோம்.

Page 14
22 சமூகமாற்றத்தில் பண்பாடு
ஆசிரியரின் பணி
பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைகளை அவதானித்து நிவாரணங்களைக் காணக்கூடிய அறிவும். ஆற்றலும் கொண்ட நல்ல ஆசிரியர்களை இன்றைய சமூகம் வேண்டி நிற்கின்றது. மேலை நாடுகளில் இவ்வாறான முரண் நடத்தை கொண்ட பிள்ளைகளைக் கவனிப்பதற்கென உளநலவியலாளர், சமூகப் பணியாளர், மருத்துவர் எனப் பல்வேறு சமூக நல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து தொழிற்படுகிறார்கள். எமது நாடுகளைப் பொறுத்தவரை இத்தகைய ஒரு கருத்து நிலை நாட்டப்படுவதிலே பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம். பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மேலாக போதிய அறிவும் அனுபவமுள்ளவர்களுக்குள்ள பஞ்சத்தினையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் யுனெஸ்கோ போன்ற சர்வதேச சமூக நல நிறுவனங்களின் உதவியுடன் எமது சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து பிள்ளைகளின் உள - உடல் நலம்சார் பிரச்சினைகளுக்கு ஓரளவு நிவாரணமும் காணப்படுகின்றது. ஆயினும் இங்கு உடல் நலம்சார் நடவடிக்கைகளே பெரிதும் கவனிக்கப்படுகின்றன எனலாம். உளநலம் சார் பிரச்சினைகளை நன்கு அணுகுதற்கான வசதிகள் பெரிதுமில்லை. இந்நிலையில் முன்னர் குறிப்பிட்டது போல ஆசிரியரின் பொறுப்பு பெரியதாகின்றது. அவரே உளமருத்துவராகவும். வழிகாட்டல் ஆலோசகராகவும், சமூக சேவையாளராகவும் கூடப் பணியாற்ற வேண்டிய நிலைமையுள்ளது.
சாதாரணமாகப் பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் தண்டனை முறையிலேயே தஞ்சமடைவது வழக்கம் துடுக்குத்தனத்தாலோ அறியாமையினாலோ ஏற்படும் ஒழுக்கமற்ற நடத்தையைப் பொறுத்தவரை தண்டனை சிறிது பயன்தரக்கூடும். எதிர்ப்பு நடத்தைக்குத் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணம் காரணமாகப் பிள்ளைகள் தமது முரண் நடத்தையினைக் கைவிடக்கூடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இத் தண்டனைத் தீர்வானது பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் மேலும் அதிகமாக்கி நிற்பதனையே நாம் அனுபவத்தில் உணர்கின்றோம். தண்டனையின் போது அவர்களது குற்ற உணர்வு நீங்குகின்றது. எனினும் பிள்ளைகளை ஆக்கமுறையிலே திருத்த இது பயன்படாது என்ற கருத்தினையே உளவியல் வலியுறுத்துகின்றது. பொருத்தப்பாடின்மைக்கான காரணங்களைக் கண்டறிவதோடு அவற்றினை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும். தொடர்ந்து அத்தகைய ஒரு நிலை வராமற் பாதுகாப்பதும் இன்றியமையாதது.

என். சண்முகலிங்கன் 23
அண்மையிலே முன்பள்ளி அவதானத்தின்போது பிரச்சினைக் குழந்தையொன்றின் நடத்தையினை அணுகிய ஆசிரியரின் நடத்தை மிக நம்பிக்கை வரட்சியைத் தருவதாக இருந்தமையை இங்கு குறிப்பிட வேண்டும். முழிசிப்பார்த்து பிள்ளையைக் குறித்த அந்தக் கணத்திலே தான் அடக்கிவிட்டதாக அந்த ஆசிரியை திருப்தி கண்டாலும், பிள்ளையின் சோகங்கள் முடிந்துவிடவில்லை. பதிலுக்கு வளர்ந்து சென்றது. தற்செயலாக அந்தப் பிள்ளையின் தாயைச் சந்திக்க நேர்ந்தபோது பிள்ளையின் அந் நிலைமைக்கான அடிப்படைக் காரணங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் குறித்த அவ்வாசிரியர் இத்தகு அறியும் ஆர்வத்தைத் தானும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. இதே வேளையில் மற்றொரு பள்ளி ஆசிரியை பல்வேறு அணுகுமுறைகளையும் கையாண்டு, தன் அறிவு அனுபவங்களின் துணையுடனும் பெற்றோரின் ஒத்துழைப்புடனும் பிள்ளையின் அகப் போராட்டத்திற்கான நாடியைப் பிடித்து மிகக் குறுகிய நாட்களுக்கூடாகவே பிள்ளையின் நடத்தையில்சீரமைப்பினைக் கொண்டு வந்த சந்தர்ப்பங்களையும் இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. இச் சம்பவங்களை இங்கு குறிப்பிடுவது குறைகாணும் நோக்குடனோ அன்றி புகழ்பாடும் எண்ணத்துடனோ அல்ல. ஆசிரியரிடம் ஆர்வமிருந்தால் பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைக்கான தீர்வும் இலகுவாகும் என்பதனைக் காட்டுதற்காகவே.
உண்மையிலே, பிள்ளைகளின் பிரச்சினை நடத்தைகளின் தன்மையைப் பொறுத்தே அவற்றுக்கான தீர்வுகளும் அமைகின்றன. சில நடத்தைகள் மிக இலகுவிற் களையத்தக்கன. இது ஆசிரியரின் அனுபவ அறிவு நிலைகளில் பெரிதும் தங்கியுள்ளது. எடுத்துக்காட்டாகத் தீவிர சின வெளிப்பாட்டினை நோக்குவோம். கூச்சலிட்டுக் கதறியும். கை கால்களை உதைத்தும், கையிலுள்ள பொருட்களை வீசியும். அருகிலுள்ள பொருட்களை உதைத்து உடைத்தும், தன் சினத்தைச் சில பிள்ளைகள் வெளிக்காட்டுகின்றனர். பொதுவாக 2 - 3 வயது வரையிலேயே இந்நடத்தை மிகுந்து காணப்பட்ட போதிலும் சில குழந்தைகளிடம் முன் பள்ளிப் பருவத்தும் இது நீடிக்கின்றது. வகுப்பிலே இவர் சின வெளிப்பாடு தொடர்கின்றது. பெற்றோரின் கவனத்தைத் தம்பால் ஈர்க்கும் நோக்கிலோ அன்றி உடல் நலக் குறைவினாலோ இவர் இவ்வாறு நடக்கலாம். குழந்தையின் நாட்டவழிப்பட்ட நடத்தையொன்றிலே ஏற்படும் குறுக்கீடும் இத்தகு நடத்தைக்கு ஏதுவாகலாம். உண்மையிலே இத்தகு நடத்தையினைப் பிள்ளைகள் மேற்கொள்வது பிறரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்குடன் அல்ல. அவர்களின் கவனத்தைக் கவர்கின்ற எண்ணத்துடனே

Page 15
24 சமூகமாற்றத்தில் பண்பாடு
யாகும். எனவே இந்நடத்தை தோன்றும் வேளைகளில் குழந்தைகளின் பெற்றோரும், ஆசிரியரும் இதனைக் கவனியாது ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் இந்நடத்தை மறைய உதவலாம். ஆனால் பலசந்தர்ப்பங்களிலே. ஆசிரியரும் பெற்றோரும் சரியான மனவெழுச்சிச் சமநிலை பெற்றிராத காரணத்தால் தங்கள் சினத்தையே கட்டுப்படுத்த முடியாதவர்களாகி நிலைமையை மோசமாக்குகின்றனர். இங்கு இவர்களைப் பார்த்துப் பிள்ளைகள் மேலும் மோசமான நடத்தைப் பிரச்சினைக்குள்ளாகின்றனர்.
சில குழந்தைகள் எப்பொழுதும் உடல்நலம் குன்றியவர்கள் போலப்பாவனை செய்கின்றார்கள். இது பிறரது கவனத்தைத் தம்பால் இழுக்க வேண்டுமென்ற நோக்கினாலானது. சில குழந்தைகள் பிற குழந்தைகளைத் தொந்தரவு செய்கின்றன. வீட்டிலே பெற்றோர் தம்மைத் துன்புறுத்துவதன் விளைவாகச் சில குழந்தைகள் பள்ளியிலே பிற பிள்ளைகளைத் துன்புறுத்துகின்றனர். இத்தகைய பிள்ளைகளைத் தம் அன்பான அணுகுமுறையினாலே திருத்தி பிள்ளைகளின் பெற்றோரையும் நல்வழிப்படுத்தி நம்பிக்கை கொண்ட ஒரு எதிர்கால சமூகத்தை அமைக்கும் பணியில் பல முன் பள்ளி ஆசிரியர்கள் நல்மனதோடு செயலாற்றி வருகின்றனர்.
இவ்வாறாக பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சினைகள் பல கோணங்களில் பல கோலங்களில் வெளிப்படலாம். குறிப்பாகப் பிள்ளைகளின் தற்சாதிப்பு அல்லது தன் நிலைநாட்டல் நடத்தையின் போது பெரும்பாலான முரண்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன. முன்பள்ளிப் பருவ நுழைவாயிலில் இந்தப் பண்பு உச்சநிலையடைவதாக ரோனால்டுஸ் கூறுவார். இந்தப் பருவத்திலேதான் பிள்ளைகளிடம் மனவுறுதி உருப்படவும். அமையவும் தொடங்குகின்றது. தற்சாதிப்புடன் பிற காரணிகளும் சேர்ந்து முரண்பாடுகளை வளர்க்கின்றன. -
பெற்றோரும் ஆசிரியரும் ஒழுக்க முன்மாதிரிகளாக நடந்து பிள்ளைகளின் நடத்தைக் கோலங்களை வழிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இவர்களே ஒழுக்கக் கோட்டைகளாகி விடுகின்ற நிலைமையும் ஆபத்தானது. இந்நிலையிலே தவறிழைக்கும் வேளையிலே குழந்தைகளுக்கும் இவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும். அதேவேளையில் பெற்றோரும் ஆசிரியரும் ஒழுக்கமிழப்பதும் ஆபத்தானதே. மிகவும் சமநிலையான ஒரு நடத்தைக் கோலமே உகந்தது.

என். சண்முகலிங்கன் 25
இதுவரை நாம் நோக்கியவற்றிலிருந்து முன்பள்ளிச் சிறுவரின் நடத்தை முரண்பாட்டுப் பிரச்சினைகளின் மூலங்களாயும் அவற்றினைத் தீர்க்க வேண்டிய தீர்க்கக்கூடிய ஞானங்களாயும் பெற்றோரும், ஆசிரியரும் விளங்குவது வெளிக்கின்றது.
பிள்ளைகளின் உளநலனை நன்கு உணர்ந்து கொள்ளும் திறனை ஆசிரியர்கள் பெற வேண்டும். இந்த வகையிலே உளநலவியலாளரின் உதவி வேண்டுமாயின் பெறப்படவேண்டும், உளநலம் போன்றே பிள்ளைகளின் உடல்நலமும் பேணப்பட வேண்டும்.
சில மேலைநாடுகளில், தனியான பள்ளிகள், கலைத்திட்டம் என அறிமுகப்படுத்தப்படும் நிலைமை இன்னும் விவாதத்துக்குரியதாகவேயுளது. இன்றுள்ள அமைப்பினுள்ளே சீராக்கம் பெறுவதே சிறந்தது. இதனை ஒரு சமூகப் பணியாகக் கொண்டு எங்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் தம் அனுபவ அறிவுரைகளை விருத்தி செய்து நமது பிள்ளைகளின் நடத்தை முரண்பாடுகளை நாடி பிடித்து நல்ல சிகிச்சை அளித்து நலம் விளைக்க வேண்டும்.

Page 16
2 உறவும் தொடர்பும்
நல்ல தொடர்பு சுமுகமான குடும்ப வாழ்வின் அடிப்படை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், புரியவைக்கவும் தொடர்பே கைகொடுப்பது. நாம் சொல்வதை அப்படியே மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அது நடக்காதபோது ஏமாற்றமடைகின்றோம்.
'என்னோடு அவர் கதைத்து கனகாலம் 'எனக்கு அவரோடு கதைக்க விருப்பமில்லை' நான் கதைக்கிறதை அவர் கேட்பதாயில்லை
முரண்படும் உறவுகளிடை, ஆளையாள் குற்றஞ்சாட்டும் இத்தகு குரல்களை அடிக்கடி கேட்டுடிகிறது.
ஏன் இந்த அவலம்?
கவனமாகக் கேட்க நாம் தயாராக இல்லாதிருக்கிறோம். எனது கதையைச் சொல்ல இருக்கிற ஆர்வம், அடுத்தவர் கதையைக் கேட்பதில் இருப்பதில்லை.
மாயத்திரைக்குள்
இத்தகு நிலைமைக்கு உரமூட்டும் விதமாக, இன்றைய நவீன வாழ்வும் துணைபோகிறது. காசுதேடும் தொழில் பயணத்தில் ஆளையாள் சந்திக்கும். தொடர்பு கொள்ளும் பொழுதே அருந்தலாகி விடுகிறது.
கிடைக்கின்ற பொழுதும் மாயத்திரைக்குள் தலையை நுழைப்பதில் விழுங்கப்பட்டுவிடுகிறது. மாயத்திரையாக இங்கு குறிப்பிடப்பட்டது. இன்று வீட்டுக்கு வீடு வாசல்படியாக ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி தரிசனத்தைதான்.

என். சண்முகலிங்கன் 27
சக்தி, ராஜ் சன், ஜெயா, விஜய், ரூபவாஹினி என நீளும் காட்சி அலைகள் - வீடியோ திரைக்காட்சிகள் என, கண்டறியாதனவெல்லாம் காட்டும் மாயத்திரைகளுக்குள் விழுங்கப்படுவது நமது நேரம் மட்டுமல்ல; மனங்கள் மட்டுமல்ல, நமது உறவும் தொடர்புகளும்தான்.
திட்டமிட்டு தொடர்பு கொள்வதை விரும்பாது இந்த தப்புதல்களுள் தலையை நுழைப்பது மறுரகம் - எப்படியோ தொடர்பு இல்லாத நிலையில், உடையும் உறவு நிலைமட்டும் அதிகரிக்க வழியேற்படுகிறது.
உறவில் ஆர்வம்
தொடர்பு கொள்ளும் ஆர்வம், தொடர்பை மறுக்கும் தப்புதல் நிலையினின்றும் விடுபடல் என்பனவே முதலில் வ்ேண்டப்படும் - அதன்பின்னரே உரிய தொடர்பு சாத்தியமாகும் - திறனான கேட்டல் சாத்தியமாகும்.
திறனான கேட்டல்
திறனான கேட்டல் என்பது, முழுமையாக உங்கள் கவனத்தை மற்றவரிடம் தருதல். உங்கள் இணைக்கு முழுமையாக உங்கள் காதை தருவது - பெறத்தகும் பரிசாக கருதப்படும். அதுவே இனிய நெருக்கத்தையும் கொண்டுவரும் ஒருவர் உணர்வை - வலியை புரிந்து கொள்ளும் empathy நிலைமட்டும் வாய்த்து விட்டால்.
பின், உறவுப் பிணைப்பை யாராலும், எதனாலும் அசைக்க முடியாது.
empathyás"Got அடிப்படை தேவை. நிபந்தனை அற்ற ஏற்றுக் கொள்ளல் நீ இப்படி இருந்தால், இதனை தந்தால்தான்
நான் அப்படி நடப்பேன்’ என்கின்ற வியாபார பேரம் பேசல் நிலையாக இல்லாமல், இயல்பான - அன்பின் வழியான தொடர்பாக அமையும்போதே உறவும் இயல்பாகிறது.
எங்கள் சமூகத்தில் இந்த விடயம் மிகவும் அருந்தலாக
அமைந்திருப்பது இங்கு நிலவும் பல முரண்பாடுகளின் அடிப்படையாய் இனங்காணப்படுவது.

Page 17
28 சமூகமாற்றத்தில் பண்பாடு
என்ன செய்யலாம்?
இன்றைய உளவியலும், உளவளத்துணை அறிவு - அனுபவங்களும் சொல்லும், தொடர்பு பற்றிய அறிவும், பயிற்சிகளும் இந்த தொடர்புக் கலையில் நாம் தேற நிச்சயம் உதவும்.
அந்த அறிவுச் செல்வத்தை உள்வாங்கவும், நம் காதுகளை மூடாமல் கேட்கும் சித்தம் வேண்டும். மனம்விரும்பி இந்தப் பயிற்சியில் சேரும்போது இனிய தொடர்பும் அதன் வழி சமூகஉறவும் கைவசமாகும்.

3
உளப்பகுப்பாய்வும் சமூகமும்
சமூக மனிதனை விளங்கிக் கொள்ளுதற்கான அறிவியல் கோட்பாடுகளில், உளப்பகுப்பாய்வின் முக்கியத்துவம் இன்று பெரிதும் உணரப்படும். A.
தனித்தனி தீவுகளாய் போகாமல், வேண்டிய இடத்து இணையும் கருத்து நிலைகளை இனங்காண வேண்டியதன் அவசியமும் இன்றைய சமூகவியல், மானுடவியல், உளவியல் ஆகிய துறைகளிடை வெளிப்படும். உண்மையில் இந்த இணைவு, இத்துறைகளின் ஆய்வுப் பொருள்வழி தவிர்க்க முடியாத ஒன்றாவதையும் நாம் அவதானிக்க முடியும்.
இந்த வகையில் புரொய்ட்டை (Freud) தனித்து ஓர் உளவியலாளராக மட்டுப்படுத்திக் காண்பது, பொருத்தமற்ற ஓர் அணுகுமுறை என்பதும் சுட்டப்படும்.
ஆளுமை உருவாக்கம் A
சமூகத்துக்கும் தனியனுக்கும் உள்ள இணைவும் தனியனின் ஆளுமை உருவாக்கத்தில் சமூக புலத்தின் இன்றியமையாமையும் புரொய்டின் உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் அடிநாதமாய் விளங்குகின்றமை இங்கு முக்கிய கவனம் பெறும்.
உளப்பகுப்பாய்வு மூன்று முக்கிய புலங்களை உள்ளடக்கியது:
1. நனவிலியை அறியும் வழிமுறையாயும், சிகிச்சை முறையியலாயும்
அமைகின்றது.
2. ஆளுமையின் கூறுகளையும் விருத்தியையும் விளக்கும் ஒரு
கோட்பாடாகவும் விளங்குகின்றது.

Page 18
30 சமூகமாற்றத்தில் பண்பாடு
3. சமூகம் பற்றியதும் அதன் பிரதான நிறுவனங்களைப் பற்றியதுமான சிலமுக்கிய கூற்றுக்களையும் முன் வைக்கின்றது. உண்மையில் இவை சமூகவியல் சார்ந்தவைதான்.
இந்த மூன்று புலங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக இருப்பதுடன் சமூகவியல் அடிப்படையையும் கொண்டவை என்பதும் வெளிப்படையானது.
மனிதனின் ஆதிநிலை வாழ்வின் விலங்குணர்ச்சி நிலையையே இட் (id) என்று புரொய்ட் குறிப்பிடுவார்.
தனிமனித வாழ்விலிருந்து கூட்டமான வாழ்வு மாற்றம் நிகழ்ந்த போது கூட்டு வாழ்வின் இன்றியமையாமை கருதி அவன் விலங்குணர்ச்சியை சற்றுக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் விளைந்ததுதான் ஈகோ - ego எனப்பட்டது.
ego விலிருந்து உயர்நிலையான வடிவம்தான் super ego எனப்பட்டது. இது பண்பாடு தரும் உயர் விழுமியங்களின் வழியமைவது. தான் வாழும் சமூக - பண்பாட்டிலிருந்து தனியன் வளர்த்து கொள்ளும் பண்பாட்டுணர்ச்சியின் வளர்ச்சி கண்ட பகுதியாக இதனை குறிப்பிடலாம்.
தனியனின் இயல்பூக்க உந்தல் ஆசைகளுக்கும். பண்பாடு தரும் உயர் விழுமியங்களுக்கும் இடையிலான முரண் இயக்கமாகவே புரொய்டின் ஆளுமைவிருத்தி தொடர்பான தரிசனம் அமைவதை நாம் ஆழ நோக்க வேண்டும். இந்த வகையில் ஒருவரின் ஆளுமை விருத்தியை விளக்கும் சமூகவியல் தரிசனமாகவே அவரின் கோட்பாட்டை நாம் சுட்டவேண்டும் என்று றொபேட் போக்கொக் என்ற சமூகவியலாளர் குறிப்பிடுகின்றமையை இங்கு மனதிற் கொள்ள முடியும்.
சமூகவியல் தரிசனத்தில்
ஆரம்பகால சமூகவியலாளர்கள் புரொய்டில் பெரிதும் கவனம் செலுத்தாத போதிலும், தவிர்க்க முடியாதபடி சமூகவியலாளருக்கும் புரொய்டிற்குமிடையிலான ஒரு கருத்துநிலை தொடர்ச்சியும் தொடர்பும் அவதானிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மதத்திற்கும் பாலி யலுக்குமிடையிலான தொடர்புபற்றிய ஆய்வில் சமூகவியலாளர் மக்ஸ் வெபருக்கும் (Max Weber) புரொய்டிற்கும் நிறைய கருத்தொற்றுமை காண முடியும். மனித சமூக வளர்ச்சியில், விழுமியங்களையும் அவை சார்ந்த

என். சண்முகலிங்கன் • 31
உணர்வுகளையும் நிலை பெறச் செய்வதில் மதநிறுவனம் கொள்ளும் முக்கிய இடத்தினை வலியுறுத்துவதிலும் இவர்களிடை ஒற்றுமை காண முடியும். மனித நாகரிக விருத்திக்கான சக்தி, பாலியல் இயல் பூக்கத்தின் வழியே பெறப்படும் என்பதனையும் வெபரும் புரொய்டும் சுட்டி நிற்பர்.
இதுபோலவே சமூகமாற்றத்தில் அறவிழுமியங்கள். சமய நிறுவனம் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான கருத்துக்களில் சமூக வியலாளரான டுர்கைம் உடன் (Durkheim) புரொய்ட் ஒன்றுபடுவார்.
5 elps 2 GT66luQ) IT GT fia, GET T 60T 5 gól (Cooley), L5ú (Mead) ஆகியோரின் அணுகுமுறைகளும், புரொய்டின் கருத்துக்களுடன் பல ஒத்த கூறுகளை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுயத்தின் (self) அகவய கூறாக மீட் குறிப்பிடும் என்பதனை, புரொய்டின்idஉடன் ஒப்பிட முடியும். இது போலவே சுயத்தின் புறவயப் பகுதியாக மீட் குறிப்பிடும் Me, அதியகத்துடன் (Super ego) வுடன் இணைத்து நோக்கக் கூடியது.
புரொய்டின் ஆளுமை விருத்தி தொடர்பான கோட்பாட்டினை (ஏனையவற்றினை கவனியாது போனாலும்) திட்டமிட்ட வகையில் சமூகவியலின் மைய ஓட்டத்துடன் இணைந்திட உழைத்த சமூகவியலாளரில் ரல் கொற் பார்சன்ஸ் (Talcot Parsons) குறிப்பிடத்தக்கவர்.
மார்க் ஸியத்தையும், புரொய்டின் உளப்பகுப்பாய்வையும் தொடர்புபடுத்தி, புரொய்டின் சமூகவியல் தரிசனத்தை மற்றொரு திசையில் முன்னெடுத்த ஆரம்பகால பிராங்போட் குழுமத்தினரில் (FrankfurtSchool), எரிக் புரொம் (Erich Fromm) குறிப்பிடத்தக்கவர் மார்க்ஸியம் பற்றி புரொய்ட் கொண்டிருந்த கருத்தினை இங்கு காண்பதும் பொருத்தமானதே மனிதனின் பண்பாடு, அறிவு கலை உணர்வு என்பவற்றில் பொருளாதார அடிப்படை கொள்ளும் தாக்கம் பற்றிய மார்க்ஸின் தரிசனத்தை புரொய்ட் வியந்து பாராட்டியிருக்கிறார். இதற்கு முன் இந்தளவுக்கு யாரும் இத்துறையில் ஆழ ஆய்ந்ததில்லையென்று கூறும் புரொய்ட், பொருளாதார பிரச்சினை மட்டும் மனித இயல்புகளின் தீர்மான காரணியாகி விடாது என்பதனையும் கூடவே சுட்டி நிற்பார். காலங்காலமாக நிலை பெறும் வழக்கங்களின் வழியான கோட்பாடுகள் மனித மனங்களில் கொள்ளும் தாக்கத்தினையும், பொருளியல் சார் தாக்கங்களுன் இணைத்து விளங்க வேண்டும் என்ற புரொய்டின் கருத்து தொடர்ச்சியே நவ மார்க்ஸிய வாதிகளில் பிரதிபலிக்கும்.

Page 19
32 சமூகமாற்றத்தில் பண்பாடு
புரொய்டின் கோட்பாட்டை பொருத்தமான முறையில் மேலும் முன்னெடுத்து, அவரின் பாலியல் ஊக்கம், சாவூக்கம் என்பவற்றினை விரிவாக ஆராய்ந்தவர்களில் மார்க்கூஸ் (Marcuse) குறிப்பிடத்தக்கவர். நாகரிக நிலைபேற்றுக்கு அடிப்படையான இயல்பூக்க அடக்கல் அவசியம் என்ற புரொய்டின் கருத்தை ஏற்கும் அதேவேளையில், இந்த அடக்கல் அளவு, சமூகத்துக்கு சமூகம், வரலாற்றின் வேறுவேறு காலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்ற கருத்தையும் மார்க்கூஸ் முன் வைப்பார்.
நவீன கைத்தொழில் முதலாளித்துவ அமைப்பில் மத்திய தர வகுப்பும், தொழிலாளர் வகுப்பும் மாற்றங்களுக்குள்ளாகின்றபோது குடும்பம் என்ற நிறுவனம், தனியனின் சமூகமயமாக்கலில் கொள்ளும் முக்கியத்துவம் இழக்கப்பட்டு விடுகின்றது என்பார் மார்க்கூஸ். இதன்வழி குடும்பத்தில், தந்தையின் முக்கியத்துவம் இழக்கப்பட்டு, ஒத்த வயது தோழர்களும். வெகுஜன தொடர்பு சாதனங்களுமே முக்கிய தாக்கம் செலுத்துவன என்றும் மார்க்கூஸ் குறிப்பிடுவார்.
மார்க்கூஸின் இந்த கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாவன. இத்தனை மாற்றங்களிடையேயும் குழந்தையின் ஐந்து வயது வரையான பருவம் அடிப்படையான குடும்ப வளர்ப்பில் அமைவது என்பதும். பின்னரும் கூட தொழினுட்ப மாற்றம் தந்த ஓய்வு நேரம் குடும்பத்தில் ஒருவன் இருக்கும் நேரத்தை அதிகரிக்கத்துள்ளமையும் விமர்சனத்தில் சுட்டிக் காட்டப்படும். மார்க்கூஸின் கருத்துகள் பற்றிய முரண் அபிப்பிராயங்கள் இருந்தாலும், புரொய்டின் உளப்பகுப்பாய்வை, உளப்பகுப்பாய்வு சமூக மெய்யியலாக காணும் திசையில் அவர் முன் வைத்த கருத்துக்கள். குறிப்பாக கலை. இலக்கியங்கள் பற்றிய அவர் எழுத்துக்கள் முக்கிய கவனம் பெறுவன.
மாற்றங்களுக்குள்ளாகி வரும் எங்கள் சமூகங்களை சமூக நிறுவனங்களை விளங்குதலில் புரொய்ட்டின் தரிசனம் இன்றியமையாத ஒன்றாகி வருகின்றமை இன்றைய எங்கள் விலகல் நடத்தைப் பிரச்சினைகள், உளநோய்கள். போன்றவற்றில் பெரிதும் உணரப்படும்.
எனினும் புரொய்டின் அறிவியல் பார்வையின் வழி எங்கள் பிரச்சினைகளை பார்க்கும் தன்மை எங்களிடை வளர்ச்சியடைந்ததாய் இல்லை. சமூக விஞ்ஞானம் பற்றிய எங்கள் தெளிவின்மை ஒரு புறமும், புரொய்ட் சுட்டும் பாலியல் சார்ந்த விடயங்களை ஆய்வுப் பொருளாக

என். சண்முகலிங்கன் 33
காணும் பக்குவமின்மையும் இந்த வளர்ச்சியின்மைக்கான அடிப்படைக் காரணிகளில் முக்கியமானவை. w
புரொய்ட்டைப் பொறுத்தவரை, ஒரு உளமருத்துவர் என்ற நிலையில். தன்னை நாடி வந்த உளநோயாளரின் நோய் தரும் துன்பத்தினின்றும் அவர்களுக்கு விடுதலை தருவது அவர் முதன்மையிலக்காக இருந்திருக்கிறது. கூடவே ஒரு பகுத்தறிவாதியாக, தொழினுட்பத்தின் வழியான தொடர் அபிவிருத்தியை நோக்கி அவர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைப்புரிந்து கொண்டு. இன்றைய சமூகவியல் ஆய்வு முறையியலின் வழி அவர் தரிசனத்தை பொருத்தமான முறையில் சமூகவியல் இணைக்கும் பணியே இன்று வேண்டப்படுவது. இதனை உணரவும், உணர்த்தவும் தடையாகும் நாகரிக' , காரணிகள் களையப்படவேண்டும்.
இவற்றினை பிரதிபலிக்கும் சில நல்ல இலக்கியங்கள் இன்று தமிழிலும் முளை விடுவது நம்பிக்கை தரும். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியின் நூல்கள், சிறுகதைகள் எங்கள் புலங்களில் புரொய்டை உணர்த்தும் குறிகாட்டிகள் என்று சொல்லத் தக்கன. சமூக கண்ணாடியான இந்த இலக்கிங்களுக்கு அப்பால், பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா (Prof. Gananath Obeyesekere) Gu Isr66106uff G 6sfløst & Sup & LDTSOL-GSlu6v ஆய்வுகள் எங்கள் தென்னாசிய புலங்களில் நிகழும் சமுகமாற்றங்களை விளங்குதலில் புரொய்டின் அவசியத்தை எழுதி நிற்பன.
தம் ஆய்வுகளை சிங்கள மொழியில் எழுதுவதில் எழக்கூடிய சிக்கல்கள் பற்றி ஒரு தடவை பேராசிரியர் கன்நாத் அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் இங்கு நினைவில் টাে (pub. மிக மோசமான பாலியல் வக்கிரங்களைக் கொண்ட இலக்கியங்களை - கதை வசனங்களை - திரைப்படங்களை - ஏன் வாழ்க்கையை கூட அலட்டிக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், இந்த நிலைமைகளை அறிவு பூர்வமாக அணுக மட்டும் பெரிதும் வெட்கப்படுகின்றோம். உண்மையில் வெட்கப்படுகின்றோமோ அல்லது இதுவும் ஒருவித தப்பிக் கொள்ளும் வழிமுறையா? எப்படியோ பொருத்தமான முறையில் எங்கள் சமூக தரிசனங்களில் புரொய்டின் ஆய்வுகளை பயன்படுத்துவதன் அவசியமும், மனபக்குவமும் இங்கு வளர்க்கப்படவேண்டும். நாம் விரும்பும் நாகரிகத்தை எய்தவும். இன்றைய நாகரிகத்தின் யதார்த்தத்தை உணரவும் இது அவசியம்.

Page 20
4 குழு வாழ்வின் அடிப்படைகள்
உங்கள் பொழுதுகளில் பெருமளவு ஏதேனும் ஒரு குழு உறவில் கழிகின்றதை ஏற்றுக் கொள்வீர்கள். உங்களின் வகுப்பறையாக, நண்பர் குழாமாக, குடும்பமாக அல்லது யாதேனும் ஒரு சமூக நிறுவன அமைப்பாக இருக்கலாம். இந்த குழுக்களிடை உங்கள் உறவு வெற்றிகரமாக 96LDG) 5sbg), (5(Lp Gigs' Liu (p60p60L.D (Group communication) upsi) நீங்கள் கொள்ளும் தெளிவு இன்றியமையாதது.
முதலில் குழு என்றால் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
குழுவின் தன்மை
குழு அளவில் சிறியதாயிருக்கின்றது.
குழுவின் உறுப்பினர்கள் ஓரளவுக்கு ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர்.
குழு தொடர்பாக பல வரைவிலக்கணங்கள் முன்வைக்கப் பட்டாலும், அவற்றிடை பின்வரும் வரைவிலக்கணம் மிகப் பொருத்தமானதாய் அமையும்.
‘ஒரு குறித்த இலக்குடன், அதனை எய்தும் நோக்கில் பெளதீகரீதியிலும், உள ரீதியிலும் ஒன்றுபட்டு இடைவினை (interaction) கொள்ளும், தனியன்களின் தொகுதியாக குழுவை வரையறுக்கலாம்
ஒரு குழுவுக்குள் இடைவினை (interaction) எப்படி நடக்கிறது? குழு தொடர்பு முறைமை பற்றிய ஆய்வு பதில் காணத் துணையாகும்.

என். சண்முகலிங்கன் 35
‘ழு தொடர்பு முறைமை
ஒரு குழுவிலுள்ள தனியன்களின் கூட்டு உறவே குழு தொடர்பு முறை எனலாம், சிறப்பான குழுத் தொடர்பினை ஒரு வில்லைக்கு (lens) ஒப்பிடுவதுண்டு.
குழு உறுப்பினரான தனியன்களது அனுபவங்கள். சிறப்பு தேர்ச்சிகள், தனித்துவங்களையெல்லாம் ஒரு சக்தியாய் திரட்டி குழுவின் குறிப்பான இலக்கினை நோக்கி குவியச் செய்து, இலக்கின் வெற்றிக்கு வழி சமைப்பதாக குழுத் தொடர்பு அமைய வேண்டும்.
இந்த குவிதலின் கூர்மை, குழு உறுப்பினரின் உளச்சார்பிலும் அவர்களிடையிலான இடைவினையிலும் தங்கியுள்ளது.
சிறப்பான குழுத் தொடர்பு முறைமையை ஏற்படுத்த பின்வருவன அவசியமாகின்றது.
O (5(gGsait (596) (Group atmosphere)
O (5(g6Slait UT55 griscit (Group roles)
O தொடர்புக் G5IIGorils, gir (Patterns of communication)
O (5(g LDSLJSG (Group evaluation) குழுவொன்றின் சிறப்பான சூழல் எப்படி இருக்க வேண்டும்?
0 எல்லா உறுப்பினர்களும் திறந்த முனதோடு இணைதல்
0 இடையறாத இடைவினை
முரண்படுதலுக்கான சுதந்திரம் எப்பொழுது பார்த்தாலும் சீரியஸாக இருக்காமை தெளிவான நோக்கு, இலக்கினை கொண்டிருத்தல் ஆக்கச் சிந்தனை
எதையாவது செய்து முடித்தல் என்பன நல்லதொரு குழுச்சூழல் எனப்படலாம்.
இதற்கு எதிரான நிலைமைகள் என எவற்றைக் குறிப்பிடலாம்?

Page 21
36
O
O
O
சமூகமாற்றத்தில் பண்பாடு
கட்டாய அங்கத்துவம்
அர்த்தமில்லாத இடைவினை
ஒன்று அல்லது இரண்டு அதிக பிரசங்க கித்தனமான உறுப்பினரின் மேலாதிக்கம்.
போட்டி
குழுவுக்குள் கிளிக்கான (cigue) குழு சேர்தல் தெளிவற்ற நோக்கு, இலக்கு
இறுக்கமான அமைப்பாக்கம்
என்பன தவிர்க்கப்பட வேண்டிய சூழல்களாக இனங் காணப்படலாம்.
குழு பாத்திரங்கள் (Group roles)
குழு பாத்திரங்களை செம்மையாக உறுப்பினர்கள் புரிந்து கொண்டு, கடமைகளையும் உரிமைகளையும் தெளிவாக அறிந்து அதன்படி ஒழுகும் போதே குழு வாழ்வும் செழுமையாகும். அதுவே சிறந்த குழு தொடர்பின் அடிப்படையுமாகும். தலைமைத்துவ பாத்திரமா, பங்கு பெறும் பாத்திரமா? அனைத்துப் பாத்திரங்களை வகிப்பவர்களும் இதனைத் தெளிந்து நடத்தல்
இன்றியமையாதது.
தலைமைத்துவம்
குழுவாழ்வில் தலைமைத்துவத்தின் இயல்பு எப்படி இருக்க வேண்டும்?
0 குழு உறுப்பினர்களின் கருத்துக்களை திறந்த மனதுடன் கேட்கும்
g56T66)LD.
0 முன்னுதாரணமாக திறந்த மனதுடன், நேர்மையாக, நம்பி
கைக்குரியவராக நடத்தல்.
0 உறுப்பினர் மீது மேலாதிக்கம் செலுத்தாமை 0 கூடியவரை அமைதியாக இருந்து, குழு நிலைமைகளை சிந்தித்து
மேம்படுத்தல்,

என். சண்முகலிங்கன் 37
0 குழுச்செயன் முறை முறிந்து போகாமல், நகைச்சுவை உணர்வுடன் எத்தகு நிலைமைகளையும் சமாளிக்கும் திறன்.
0 குழுவின் சிந்தனையை உரிய வேளையில் சாரமாக தரும்
வல்லமை
என குழுவின் தலைமைத்துவத்தின் சிறப்பியல்புகள் இனங் காணப்படும்.
குழு அங்கத்தினர்
குழுவில் பங்குபெறும் பாத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
0 குழுவின் நோக்கினை தெளிவாக அறிந்து அதற்கென உழைக்க
வேண்டும்.
0 குழுவின் நோக்கினுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகும் தகவல்களை, அபிப்பிராயங்களை, உணர்வுகளை வெளிக்காட்டுவதில், சொல்லுவதில் தயங்கக்கூடாது.
0 குழுவின் ஏனையோர் கருத்துக்களை மதிக்கவும், கேட்கவும்
வேண்டும். 0 குழுப் பொறுப்புணர்ச்சியுடன் தன் நிலையை, நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி சமநிலை காணும் தன்மை வேண்டும்.
M
குழுவின் தொடர்புக் கோலங்கள்
ஒவ்வொரு குழுவும் தமக்கென தனித்துவமான தொடர்பு முறைமைகளை வளர்த்திருக்கும். யாருடன் யார், எவ்வளவு நெருக்கமாய், என்ன என்ன விடையங்களை என்பன எல்லாம் குழு உறுப்பினர் அனைவருக்கும் தெளிவாக தெரியவேண்டும். குழு இட அமைவும், அளவும் கூட இதனை தீர்மானிக்கும் காரணிகளாகலாம். குழு உறுப்பினர் அளவு, சந்திக்கும் இட அளவு என்பன அதிகரிக்க தொடர்பு முறையும் மாறலாம். பத்து பன்னிரண்டு பேரை உறுப்பினராக கொண்ட குழு ஒன்றின் தொடர்பியல் முறைமை எளிதாயும் எல்லா உறுப்பினரின் பெருமளவான பங்களிப்பினைக் கொண்டதாய் அமைதலையும், குடும்பம் என்ற சிறிய குழு வாழ்வில் நாம் அனுபவதரிசனமாய் உணரமுடியும்.

Page 22
38 சமூகமாற்றத்தில் பண்பாடு
குழு மதிப்பீடு
ஒவ்வொரு குழுவும், தனது குழுத் தொடர்பு முறைமையை அவ்வப்போது மதிப்பீடு செய்வதும் இன்றியமையாதது. குழு உறுப்பினர்களின் கருத்தறியும் பின்னுட்டல்களை பெற்றும், குழுவுக்கு வெளியே உள்ளவர்களின் அவதானங்களை பெற்றும் இவற்றினை சீரமைத்தல் வேண்டும். பெரும்பாலான வேளைகளில் குழுவுக்குள்ளேயே பிரச்சனைகளை தீர்க்க முடிந்தாலும், சில பிரச்சனைகள் பாரபட்சமற்ற வெளி அவதானியை வேண்டி நிற்கலாம்.
இப்பொழுது நீங்கள் இணைந்துள்ள குழுக்களில் உங்கள் செயல்பாட்டை ஒரு தரம் மீட்டுப் பாருங்கள். உங்கள் குழு தொடர்பு முறை எப்படியிருக்கிறது? இதிலே மாற்றம் வேண்டுமா என உணர்ந்து உங்களை, உங்கள் குழுவாழ்வை மேம்படுத்த இந்த சமூக தொடர்பியல் ஆய்வு அனுபவ குறிப்புகள் துணையாகலாம்.

5 கனவுகளிலிருந்து வாழ்வுக்கு.
நவீன வாழ்வில் தொலைக்காட்சி ஆழவேர்விட்டுள்ளது. தனியன்களின் அறிகை, நடத்தை, உளச்சார்பு என்பவற்றில் அது மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துவது அறிவியல் தரும் அற்புதமாய், தேசங்களின் எல்லைகளைக் கடந்து, உலக கிராமமாக இன்றை வாழ்வை மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது. எங்கள் தேசத்தின் தொலைக்காட்சி அனுபவம் எப்படி?
மின்சாரக் கனவுகள்
அறிவியல் - சமூக மேம்பாட்டுக்கான ஆக்க சக்தியாக விளங்கவேண்டிய தொலைக்காட்சி, வெறும் மின்சாரக் கனவாகக் கலைந்து போகும் துயரம் மிகமிகக் கொடுமையானது. தொலைக்காட்சியோடு கைகோர்த்தபடி வீடியோவும் இன்று நம் வீட்டுக்குள் - அறைக்குள் குடியேறி விட்டது. கண்டறியாதன. கண்டு,மறந்தனவெல்லாம் வாய்த்த மகிழ்ச்சியில் கனவுப் பயணங்களாகத் தொடர்கின்றன. எங்கள் இருப்பே கேள்வியான அவலங்களைமறந்துபோக, வீடியோ தரும் கனவுகளை யதார்த்தமாய்க் கண்டுகளிக்கும் இந்நிலை எங்களை எங்கே கொண்டுபோய்
விடும்?
தொலைக்காட்சியைப் பார்ப்பதென்பது இன்று ஒரு சடங்காகப் போய்விட்டது. மிக அத்தியாவசியமான ஒன்றாக, எதைப்பார்ப்பது எதைத் தவிர்ப்பது என்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி. எதையாவது பார்த்துக் கொண்டிருத்தல் என்றாகிவிட்டது.
"ஒரு வருஷத்துக்கு மேலாக இடம் பெயர்ந்து ஒழுங்கான படிப்பில்லை. இப்ப ஒரு மாதிரி ஊருக்கு வந்து பள்ளிக்கூடம் நடக்குதென்று

Page 23
40 சமூகமாற்றத்தில் பண்பாடு
சந்தோஷப்பட்டம். ஆனால், பிள்ளை சதா டிவிக்கு முன்னால் தானே இருக்கிறான். டி.வி.யை நிறுத்திப் படியென்றால், சண்டைக்கு வர்றான்."
இது ஒரு பெற்றோரின் அழுகுரல் மட்டுமல்ல.
எத்தனை நாள் படம் பார்த்து லேற்றஸ் படம்வரை பார்த்துவிட வேண்டும். 40 ரூபாவுடன் மின்சாரக் கனவு கைவசமாகிறது. நிரந்தர மின்சாரம் இல்லாது போனாலும் பரவாயில்லை. ஜெனரேற்றர் வசதியுடன் - வீடியோ வாடகைக்கு விடப்படும்.
"சுவிஸிலிருந்து தம்பி ஒரு ஜெனரேற்றர் வாங்கச் சொல்லிக் காசு அனுப்பியிருக்கிறான். வாங்கிவிட்டால் பிறகு வாடகைக்கு எடுக்காமல் எங்கட கறன்றிலையே பார்க்கலாம்"
இது இன்னொரு பெற்றோரின் பெருமிதம்.
அயலவரோடு உறவாட, ஏன் குடும்பத்துள் கலந்துபேசவே நேரங்கிடைப்பதில்லை. வீட்டுக்கு வருபவருக்கும் ஒரு கதிரையை இழுத்து விடுவதுடன் உபசரிப்பு முடிந்து விடுகிறது. எல்லோரும் அந்தப்பெட்டிக்குள் தலையை நுழைத்துவிட வேண்டியதுதான். பின்னர் படம் முடிந்தும் கனவுகள் முடிவதில்லை.
தங்கச்சிக்குச் சோதினையல்லே போய்ப்படி சோதினை முடிந்தபின் பார்க்கலாம்'
இப்படிச் சிறிது விழிப்புணர்வு காட்டும் பெற்றோரும் இருக்கின்றனர். ஆனால் நடு வீட்டில் ‘காதல் கோட்டை உரத்த சத்தத்தில் காட்டப்படுகையில், பிள்ளை எப்படிப்படிக்கப் போகும். - -
படம் முடியப் படிப்பேன் அம்மா பிள்ளையின் திறமையை அங்கீகரிக்க வேண்டிய நிலையில் பெற்றோர்.
படம் பிள்ளைக்குத் தரும் கல்வி.? கனவுகள் கனவுகள் கனவுகள். திரைப்படங்களைக் 'கனவுகளின் தொழிற்சாலை' என்று ஒரு எழுத்தாளர் அழகாக வரையறுத்தார். கற்பனைச் சுகம், Fantacy என்பதே மிச்சமாகிறது. குறைந்த பட்சம். இவனுக்கு முடியாததை அந்த ஹீரோ, ஹீரோயின் அடைவதைக் கண்டுகளிக்கும் வாழ்வாவது கிட்டுகின்றது. இவ்விரக்தி, அந்தத் திரை நாயகர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் வழி. தற்காலிகமாகத் தவிர்க்கப்படும் நிலை -
ஆனாலும் கனவு எத்தனை நாளைக்கு?

என். சண்முகலிங்கன் 4
சிறகுகள் முறியும்
கனவுகளின் சிறகுகள் முறிகின்ற போது, உளநோய் அனுபவம் மட்டுமே மிஞ்சுகின்றது.
எனக்குத் தெரிந்த பையன் ஒருவன். தன்னைக் கமலஹாசனாகப் பாவனை செய்து, அவரது பாணியில் நடை, உடை, பாவனை காட்டி, சக மாணவியரோடு ஹீரோவாகத் தொடர்பு கொள்ள முற்பட்டு, இறுதியில் மன நோயாளியாக முறிந்து போனகதையை எனது தொடர்பியல் வகுப்புகளிலே அடிக்கடி செல்லுவதுண்டு. மிக அண்மையில் தன்னை 'பாட்ஷா" ரஜனியாகப் பாவனை செய்து, மனநோயாளியான மற்றொரு பையனின் தரிசனம் கிடைக்கும்.
எங்கள் சினிமாக்கள் தரும் சுப்பர் மான் super man கனவை உண்மையென நம்பி, அண்மையிற் தென்கிழக்கு ஆசிய நாடொன்றின் சின்னப் பையன்கள் சிலர் மாடி ஒன்றிலிருந்து சூப்பர் மான் ரீ சேட் சகிதம் பாய்ந்து, மாய்ந்த கதை எதனை உணர்த்துகின்றது
gQögš suðUGJġġ66òT SN68T, segjög [bsTG supper man T shirt 35(5S தடைவிதித்து, சினிமா உள்ளடக்கம் பற்றியும் விழிப்புணர்வு கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது.
எமது நிலை.? திறந்த பொருளாதாரக் கொள்கையின் வழி, எல்லாமே திறந்து விடப்பட்ட நிலை. இந்த விதச் சமூகச் சீரழிவு அம்சங்களைப் பொறுத்தவரை மட்டும் தாராள மனித உரிமை கிடைக்கிறது. ஒரு விதத்தில் மக்கள் இவ்வாறான மயக்கங்களுக்குட் கிடப்பது பலருக்கும் விருப்பமான சங்கதியாகவும் அமைகின்றது. சர்வதேச ரீதியில் நவகுடியேற்ற வாதத்தின் செயற் பாட்டிற்கு இந்த ஊடகம் பெரிதும் துணை போகிறது. தேசிய மட்டத்தில் மக்கள் விழிப்புணர்வு மழுங்கப்பட இது மயக்க மருந்தாகிறது.
என்ன செய்யலாம்?
மக்கள் விழிப்புணர்வுக்கான வழிகளைக் கண்டாலன்றி உய்வதற்கு வேறுவழியில்லை. வர்த்தக நோக்கம் ஒன்றையே கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி உற்பத்தியாளர் தொடக்கம், தொலைக்காட்சி நிலையத்தார் வரை, சினிமா உற்பத்தியாளர் முதல் விநியோகத்தர் வரை எமக்க உதவப் போவதில்லை.

Page 24
42 சமூகமாற்றத்தில் பண்பாடு
தனி மனிதரின் குறையாக இதனைச் சொல்லிச் சொல்லி இந்த நோய்க்குச் சமூக அங்கீகாரம் தரும் எமது அவலமே முதலில் உணரப்படவேண்டியது. ஒரு விழிப்புணர்வுள்ள சமூகத்தில் இந்த மாயச் சரக்குகள் விற்பனையாக முடியுமா?
‘உலகில் மிகச் சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பெற்றவர்கள், கணித மூளை கொண்டவர்கள். என்றெல்லாம் பெருமைப்படும் எமது சமூகம் அடிப்படையான பண்பாட்டு உணர்வை இழந்து போனமையை உணர்ந்து கொள்வதில் இனியும் காலந் தாழ்த்துதல் முடியாது. இழந்துபோன மனித முகங்களை மீட்டெடுப்பதில் விழிப்புணர்வு கொண்ட மக்கள் முதலில் ஒன்றிணைந்து கொள்ளவேண்டும். இவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த இழிந்த கனவுக்காட்சிகள் தொடர்பான விமர்சனக் கல்விக்கான ஏற்பாடுகளைக் காணவேண்டும்.
கூட்டாக ஒரு திரைப்படத்தை வீடியோவிற் கண்டு - அதன் உள்ளடக்கம் - அது சொல்லும் செய்தி - சொல்லப்பட்ட விதம் என்பவற்றைப்பற்றி, அடிப்படையான வினாக்களை எழுப்பி, மனித மாண்பும் சமூக விழுமியங்களும் அங்கு எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பது உணரப்படல் வேண்டும். இவ்வாறாகக் கூடிக்காணும் விழிப்புணர்வு நாளடைவில் சமூக முழுமையையும் தொற்றிக் கொள்ளும்போது பண்பாட்டு மேன்மை இயல்பாய்க் கைகூடும். காண்பதில் தாமாக நல்லதை எடுக்கட்டுமே எனும் எல்லாம் திறந்த மேம்பாடு என்பது, வக்கிரமான சமூக உருவாக்கத்திற்கே வழிவகுக்கும்.
அடுத்தது - நாமாக இந்த ஊடகத்தைப் பயன்படுத்தி, நல்லது இது எனக்காட்டும் முயற்சி. இன்று இந்தக் காட்சிச் சாதனங்கள் மட்டுமன்றி, இந்தக் காட்சிகளை ஆக்கும சாதனங்களும் கூட எம் வசம் உண்டு. பூப்புச் சடங்கிலிருந்து செத்த வீடுவரை காட்சிப் படுத்தல்கள் விமரிசையாக நடக்கின்றன. அங்கும் கூட இந்த இழிந்த சினிமா வக்கிரங்களின் பின்னணியின் ஆதிக்கத்தையே காண முடியும்.
"புல்வெளி புல்வெளி என்றும் "பனித்துளி பனித்துளி" என்றும் சினிமாப் பாடற் பின்னணியில் பெரியபிள்ளை புல்லுக்குள் இருந்தபடி பாவனை நடக்கும். திருமண வீடியோவிலும் சினிமாக் காட்சிகளின் விரிவே. வாழ்வைச் சினிமா ஆக்கும் அவலமே மிஞ்சும். கணவன் / மனைவி வீடியோவில் தான் பூஜிக்கும் திரை நாயகன் / நாயகி போல இல்லையே

என். சண்முகலிங்கன் 43
என்ற ஏக்கமே திருமண முறிவுக்கு அடிப்படையாகும். இந்த விதமான பாவனையின்றி, வாழ்வின் யதார்த்தங்களை, சமூக மேம்பாட்டிற்கான வழிவகைகளைச் சொல்லும் நல்ல படைப்புகளை உருவாக்குவதில் சமூக விழிப்புணர்வு கொண்ட கலைஞர்கள் ஒன்றுபட்டு ஈடுபடவேண்டும்.
திட்டமிட்ட வகையில் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்து, தொலைக்காட்சி போன்ற தொடர்புச் சாதனங்களையும் உரியவாறு பயன்படுத்தி மேம்பாடு கண்ட சமூக முன்மாதிரிகள் பலவற்றை நாம் காணமுடியும். அத்தகைய பண்பாட்டுப் புலங்களில் அற்புதமான கலைப்படைப்புகள், காலத்தால் அழியாதனவாய் நிலை பெறுதலும் கண்கூடு. இவையெல்லாம் வழிகாட்ட இனி ஒரு விதி செய்யும் உறுதியைக் கொள்வோம். அதனை எந்நாளும் காத்து எங்கள் வாழ்வும் வளமும் மேம்படக் காண்போம். 4

Page 25
6 உயிரோடு சாதல்
நிலவும் கொடிய யுத்தங்களின் காயங்களில்தான் எத்தனை விதமான அவலச் சீவியங்கள்
உயிர்கள் அழியும் உறவுகள் உடையும் காணாமல் போகும்: வாழ்வே கானல் நீராகும்.
இந்த யுத்தம் ஒட்டுமொத்தமாக எங்களுக்கு தந்துள்ள அவலங்களில் மிகக் கொடுமையானது அங்கவீனம். ஆமாம்! உயிரோடு சாதல்
"அண்டைக்கு அந்த மிதிவெடியிலை அகப்பட்டு காலைதொலைத்து, இப்ப வாழ்நாள் முழுக்க அவலப்படுறன் அண்டைக்கே போயிருக்கவேணும்" அங்கவீனத்தின் துயரத்துடன் ஈனஸ்வரமாய் ஒலித்த குரல் அது. அங்கவீனமாதல், ஒருவரை சமூகத்தின் அவல மனிதராக்கிவிடும். எப்பொழுதும் அங்கவீனமடைந்தவரை, தாழநோக்கும் நிலையை, உலகின் பண்பாடுகள் பலவற்றிலும் காணமுடியும்.
சொத்தியன் முழுவியளத்துக்கு உதவாதவன் எங்கள் பண்பாடும் இதற்கு விதிவிலக்கின்றியே வெளிப்படும். சொத்தி, கொன்னை, குருடு எல்லாம் ஒரு காலத்தில், எங்கள் நாடகங்களின் நகைச்சுவை பாத்திர படைப்புக்களாய் இழிவுபடுத்தப்படுவன. இப்போதும் ஆங்காங்கே இல்லாமலில்லை.
அதிகரிக்கும் அங்கவீனம்
இருந்தாலும் அங்கவீனம் அன்று இயற்கையாய் நேர்ந்தது. அரிதாய் இருந்தது. இன்று வீட்டுக்கு வீடு வாசல் படியானது.

என். சண்முகலிங்கன் 45
வீட்டுக்குள் விழுந்த ஷெல். வளவுக்குள் பிள்ளை விளையாட்டில் வெடித்த ஷெல். விறகு பொறுக்கப் போனவழியில் வெடித்த மிதிவெடி
பள்ளியிலே போட்ட குண்டு.
பாதையிலே வெடித்த குண்டு என
அங்கவீனமாதலுக்கான நிகழ்தகவு இன்று அதிகரிக்கும். விளைவாக இன்று இது ஒரு சமூகப்பிரச்சினையாய், எங்கள் கவனத்திற்குரியதாகின்றது.
‘தரைக் கண்ணிகள் கவனம்' - யுனிசெப் நிறுவன வர்ண சுவரொட்டிகள் அழியாது தப்பிய சுவர்களை நிறைக்கும்.
மனப்பான்மையில் மாற்றம்
அங்கவீனர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் எங்கள் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை வேண்டி நிற்கும். அங்கவீனர்கள் தொடர்பான எங்கள் சமூக மனப்பான்மையில் மாற்றம் வேண்டும். இதற்கான விழிப்புணர்வுக் களங்கள் வேண்டும். இதுவே எமது முதற் பணியுமாதல் வேண்டும்.
ஆண்டு ஒன்றில் படிக்கும் அந்தச்சிறுவன், கண்ணிவெடி தாக்கத்தில் தன் வலது மணிக்கட்டுக்கு கீழ் இழந்தவன் இடது கையால் எழுதப்பழக்கி, இன்று அழகாக விரைவாக எழுதுகினறான். படிப்பிலும் கவனம் செலுத்துகிறான். ஆனாலும் இடையிடை அவனை ஒத்த சிறுவர்களாலேயே ’சொத்தி' என ’பட்டம் தெளிக்கப்படும் பொழுதுகள் அவனால் தாங்கமுடியாதவை.
"சண்டை பிடிக்கிறபோது என்னை சொத்தி எண்டு பகிடி பண்ணிறாங்கள். நான் வளர்ந்து பெரியாளாகிறபோது எனது கையும் வளருமா?" r
கள ஆய்வு ஒன்றில் ஆதங்கத்துடன் கேட்ட குரல் அது. இதுபோல பலப்பல சம்பவங்களை எங்கள் கள ஆய்வு பதிவுகள் பேசும். எல்லாமே மனப்பாங்கு மாற்றத்தையே அறிவுறுத்தும்.
'அங்கவீனர்களை வைச்சே இப்ப பிமைக்கிறாங்கள் மச்சான்" அண்மையில் நண்பர் ஒருவர் தந்த தகவல் இது.

Page 26
46 சமூகமாற்றத்தில் பண்பாடு
கொழும்பில் அங்கவீனர்களை வைத்து பிழைக்கும் பிச்சைக்கார கொம்பனி பற்றிய ஆய்வறிக்கைகளை, அனுபவங்களை அறிவேன். ஆனாலும் இங்கு இன்று அங்கவீனர்களை நிவாரணங்களை திரட்டும் முதலாகப் பயன்படுத்தும் அவலநிலை பற்றிய தகவல் எனக்கு முதலில் அதிர்ச்சி தரும். பின்னால் அப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிக்கும்.
அங்கவீனர்களை, தங்கிநிற்கும் பாத்திரங்களாக அடைத்து வைக்காமல், தமக்கு ஏற்ற திறன்களை வளர்த்து ஏனையோர் போன்று அவர்களும் சுதந்திரப் பிரசைகளாக வாழுதற்கான ஏற்பாடுகளே, உண்மையில் வேண்டப்படுவன.
ஒரே ஒரு கணப்பொழுதில் வந்து விழுந்த ஷெல்லில் தன் அன்புக்குரிய தாயையும் தந்தையையும் தொலைத்த சிறுவன் அவன் அநாதை மட்டுமல்ல திடீரென அங்கவீனமும் அடைந்தவன். அன்பு காட்ட வந்த உறவுகளாலேயே சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டவன்.
"நாங்க அருணா மியூசிக் கோஷ்டி பாக்கப்போறம் உனக்கு கால் ஏலாது தானே.”
"நாங்க அகலத்திரைக்கு போட்டுவாறம், நீ இந்த வெங்காயத்தை உரித்து வை"
வீட்டுக்குள் இருண்டு கிடந்தது அந்தச் சிறுவன் வாழ்வு நம்பிக்கையும் புது வாழ்வும்
ஒரு நாள் அவன் பொழுது விடிந்தது. ஜெய்ப்பூர் செயற்கைக்கால் வழங்கும் தொண்டர் நிறுவனத்தில்.
தன் தாய் தந்தையின் அன்பை - இழந்துபோன தன் வாழ்வை மீளக் கண்ட மகிழ்ச்சி நாள் அது என்பான் அந்தச்சிறுவன்.
வாழ்வில் இவனுக்கு நம்பிக்கை தந்தது ஜெயப்பூர் கால் வழங்கும் திட்டம். இன்று மகிழ்வோடு பள்ளிக்கூடம் போகிறான். இவனைப்போல ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு நம்பிக்கை வலுவினைத் தரும் ஜெயப்பூர் நிறுவனம், உண்மையிலே போர் அவலக் காலத்து வரப்பிரசாதம்தான். இந்த அமைப்பின் சமூக பணியாளர்கள் அனைவருக்கும் சமூகம் கடமைப்பாடுள்ளதாக இருக்கவேண்டும்.

என். சண்முகலிங்கன் 47
ஜெய்ப்பூர் கால் உதவியுடன் இன்று தம் வழமையான கடமைகளுக்குத் திரும்பியவர்கள் பலர் சைக்கிள் ஓடவும், ஆடிப்பாடவும் கூட முடிகிறது.
அனைத்துக்கும் அடிப்படையான மன உறுதியும் வழிகாட்டலும் கிடைக்கும்போது அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ என்பது யதார்த்தமாகிறது.
போரின் கொடுமுகத்தில் கண்ணை, காலை, கையை இழந்து போகும் மனிதர்களின் கண்ணீரை துடைக்கும் தொண்டர் அமைப்புக்களை போற்றுவோம்.
அதேவேளை, இன்னும் இன்னும் பலபேரை அங்கவீனராக்குவோம். என்று கங்கணம் கட்டிநிற்கும் கொடிய போரினை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் உறுதியுடன் இணைந்திடுவோம். போர்வழி சமாதானம் என்ற ஊனமடைந்த வாய்ப்பாட்டின் அர்த்தமின்மையை உணர்த்தி, நீதியானதோர் வாழ்வினை அனைவரும் காண உழைப்போம்.

Page 27
7 மாற்றமும் பதட்டமும்
மாற்றம், சமூக இயக்கத்தின் தவிர்க்கமுடியாத விதியாகிறது. அவ்வாறே மாற்றத்தின் போதான பதட்ட நிலைமையும் தவிர்க்க முடியாததாகின்றது எனலாம்.
அழுத்தம் தரும் ஒரு நிலைமைக்கான எமது மனவெழுச்சி வெளிப்பாடே பதட்டம் அல்லது பதகளிப்பு எனப்படுகின்றது. சமூக நிலைமைகளில் இத்தகு அழுத்தங்களின் அதிகரிப்பு, சிக்கல் தன்மை என்பவற்றிற்கு ஏற்ப பதட்டத்தின் தன்மை, அளவுகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சாதாரண பதட்ட (normal anxiety) நிலைமைகளிலிருந்து நரம்புசார் பதட்ட (neurotic anxiety) நோய் நிலைவரை இதன் எல்லைகளை உளவியலாளர்கள் வகுத்து நோக்குவார்கள். பதட்ட நிலைமையிலிருந்து தனியன்களையும், சமூகத்தையும் மீட்பது இன்றைய சமூகப் பணியாளரின் முக்கிய இலக்காக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பதட்டநிலை என்பது ஒரு உளச் செயற்பாடாக, வெளிப்பாடாக அமைந்தாலும் அதற்கான அழுத்த காரணி சமூகத்திலிருந்தே வருகின்றது. இந்நிலையில்தான் சமூகவியலாளர்கள், மானுடவியலாளரின் கவனமும் கருத்தும் பதட்டநிலை பக்கம் விழுகின்றது. உடலின் சமூக மேம்பாடு தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் பதட்ட நிலையில் சாத்தியமாவதில்லை. இந்நிலையில், மாற்றமும், பதட்டமும் தொடர்பான அறிவும், தெளிவும் இன்றியமையாததாகின்றன.
மாற்றம் ஏன் பதட்டத்தைத் தரவேண்டும்?
மாற்றச் செயல்முறையோடு இணைந்து, இசைந்து செல்கின்றவருக்கு இந்த பதட்ட நிலைமைகள் ஏற்பட வேண்டுமென்றில்லை. எனினும் இந்த

என். சண்முகலிங்கன் 49
இணைவும், இசைவும் எல்லோர்க்கும் முடிவதில்லை. இலகுவாகவும் அது நடப்பதில்லை. மாற்றத்தோடு இசைவு காணும் வரை எப்படி அதனை எய்துவது? என்ற ஆதங்கமே. பதட்டம் ஏற்பட போதுமான காரணியாகிவிடலாம்.
இனி புதிய நிலைமைகளுக்கு பொருத்தப்பாடு காண்பது என்பது, புதிய நியமங்கள் விழுமியங்கள் - உளச்சார்புகளின் ஏற்புடமையின் வழிதானே சாத்தியமாகும். காலம் காலமாக வாழ்ந்து வந்த ஒரு வாழ்க்கை முறையினை, விட்டு புதியதை ஏற்கும் மனநிலையை வளர்த்தற்கான ஒரு திறந்த உளநிலை அல்லது ஆயத்தநிலை, இல்லாதபோது, வெறும் பதட்டமே விளைப்பொருளாவது தவிர்க்க முடியாததாகின்றது.
எத்தகைய மாற்றம்?
இங்குதான் மாற்றம் எப்படி நிகழ்கின்றது? மாற்றம் எத்தன்மையது என்ற அடிப்படையான சிந்தனை வேண்டப்படுகின்றது.
மாற்றச் செயன் முறையில் சம்பந்தப்படுபவர்கள் அதனோடே இணைந்து இசைந்து செல்லுதற்கான தயார் நிலைக்குள்ளாக்கப் பட்டனரா? இல்லையென்றால் புதிய மாற்றீடுகளுக்கான விழிப்புணர்வும், பயிற்சி அனுபவங்களும் அவர்களுக்கு தரப்பட்டு அவர்களை மாற்றச் செயல்முறையில் இணைத்தல் இன்றியமையாததாகின்றது. மேலும் மாற்றம், சம்பந்தப்படுபவருக்கு நலன் விளைவிப்பதாய் அமைவதும் உணரப் படுவதும் கூட சமனான முக்கியத்துவம் உடையன. இங்குதான் பிரச்சினையின் அமைவே இருக்கின்றதெனலாம்.
முரண் விழுமியங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட விழுமியங்கள் மத்தியில், ஒன்றுடன் ஒன்று முரண்படும் விழுமியங்களின் மத்தியில் எதனைத் தெரிவது? எது சரி? யார் சரி? நானா? நீயா?
இந்த முரண் நிலமைகள் பதகளிப்பின் உற்பத்திக்கே வழிசமைப்பன. புதிய மாற்றத்தை ஏற்க முடியாத நிலமை.
மாற்றம், இவர்கள் ஏற்கும்வரை காத்திருக்குமாயின் பிரச்சினையில்லை. ஆனால் அது சாத்தியமாகாத வேளையில், வெறும் பதட்டமே மிச்சமாகிறது.

Page 28
50 சமூகமாற்றத்தில் பண்பாடு
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
மாற்றத்தை ஏற்பது - முரண் விழுமியங்களிடை போராட்டம் என்பது இவ்வாறான பதட்டத்தில் போய் முடிவது ஒருபுறமிருக்க, மாற்றத்தை ஏற்று அவன் வழி செல்பவர்களிடையேயும் மனச் சமநிலைக்கான சூழல் இனிது வாய்க்கின்றதா? என்பதும் கவனத்துக் குரியதாகின்றது.
நவீன வாழ்வில் எத்தனை எத்தனை கனவுகள்? எத்தனை அங்கலாய்ப்புகள். எல்லாமே புதியனவாகலாம். நவீன மாற்ற சிந்தனைகளோடு இசைந்தனவாகலாம். ஏற்கும் தன்மையும் எல்லை கடந்திடலாம். ஆனால் வாய்க்கவேண்டுமே!
ஆமாம்! எல்லோர்க்கும் இந்த கனவுகள் மெய்ப்பட்டு விடுவதில்லையே அருந்தல் வளங்கள் - சமமில்லாத வளப் பகிர்வுகள் - இன்னமும் பச்சையாகச் சொன்னால் சமநீதியில்லாத நிலைமைகள்.
அப்புறம் கெட்டிக்காரர்கள் அல்லது கொஞ்சப் பேர்களுக்கே இலக்குகள் கைவசமாக, மிச்சப்பேர்களுக்கு கனவுகள் மட்டும்தானே மிஞ்சப் போகிறது. கூடவே அதன் வழியான பதட்டநிலையும் அவர்களோடு நிரந்தரமாக தங்கிவிடுகிறது நோயாகவும்.
உள்ளே உள்ள தடை
இத்தனை தடைகள் - அநீதி நிலைகளை தாண்டி புற காரணிகளை வென்று மாற்றத்தை கண்டுவிட்ட நிலைமைகளில் கூட அகத்துள் அடங்கி நனவிலி நினைவுகளின் அழுத்தச்சுமையிலிருந்து விடுபட முடியாமல் பதகளித்து நடப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஒரு விதத்தில் நாம் ஆரம்பத்தில் கண்ட விழுமிய மாற்றங்களை ஏற்பதில் உள்ள தயக்கம் அல்லது ஏற்க நினைத்தாலும் முடியாத தடை என்ற விடயத்தினையும் இணைத்து நோக்க வேண்டும். பண்பாட்டின் பெயரால் எமது நன விலிக்குள் நிறைந்துள்ள காரணிகள் இவ்வாறான புதிய மாற்றுச் செயல்முறைக்கு அகத்தடை காரணிகளாக விளங்குதலை, உளப் பகுப்பாய்வாளர்களின் பதட்டநிலை தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்தும்.
எங்கள் நிலை
இயல்பான சமூகமாற்ற செயல் முறைகளிடை பதட்டநிலை உற்பத்தி இப்படியாயிருக்க, திடீர் திடீரென தாக்கும் எதிர்பாரா இழப்புக்கள் அல்லது

என். சண்முகலிங்கன் 51
இழப்புக்களுக்கான எதிர்பார்ப்பே வாழ்வாகிப் போன எமது இன்றைய புலங்களில் அதன் உற்பத்தி அதிகரித்தே காணப்படுகின்றது.
அன்புக்குரியவரின் திடீர் இழப்பு
ஆசையால் காத்த சொத்தின் இழப்பு
'உறுதியாய் - இயல்பாய் இருந்த வாழ்வில் ஏற்பட்ட திடீர் அலைப்பு
இந்த அலைப்புக்கள் அலைவுகளிடை, நேற்று வரை காத்த விழுமியங்களின் தொலைப்பு
என்றிவ்வாறு அமையும் நெருக்கடிகளே, இன்று எங்கள் பதட்ட நிலைமைகளின் பெருமூலங்களாய் விளங்குகின்றன.
இவ்வாறான சமூக மாற்ற அலைகளிடை அலையும் துரும்பாகும் பதட்ட நிலைகளிடை, எதிர்பாராத இழப்புக்களும் எதிர்பார்ப்புமே வாழ்வாகிப்போன எமது இருப்பு மிகவும் துயரமானது.
அகமும் புறமும் அழுத்த, பதட்ட நோய் நிலையே அதிகமாகும் கொடுமையை இன்றைய எமது வைத்தியசாலைகளில் பதிவுபெறும் நோய்பற்றிய சாதாரணமான ஓர் அவதானமே தெளிவாக்கி விடும்.
“தலைவலி தாங்க முடியவில்லை. நித்திரை வருகுதில்லை. நெஞ்சு படபடக்குதே-"
பதட்டநிலையில் பாடல், உச்ச ஸ்தாயில் கேட்கின்றது.
பலரது பதட்ட நோய் நிலை இப்படித்தான் வெளிப்படுகின்றது. எல்லா வைத்தியர்களுமே உளவள - உளமருத்துவத்துறை தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டிய ஒரு நிலமையின் இன்றியமையாமை எமது வலயங்களில் பெரிதும் இன்று உணரப்படும்.
இந்நிலையில், உளவள பணியாளர்கள், சமூகப்பணியாளர்களின் பணியும் பொறுப்பும் அதிகமாகின்றது.
பதட்டநோய் நிலையில் தவிக்கும் மக்களை, சமூகத்தை வழிப்படுத்தி கரைசேர்க்கும் இந்த பெரும்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமான கடமைகளாகின்றன.

Page 29
8 அர்த்தமுள்ள மனித உரிமை
எங்கெங்கு காணினும் இன்று, மனித உரிமை என்ற பேச்சாகவே இருக்கிறது.
அறிஞர்கள், அரசியல்வாதிகள், தொடர்பியலாளர்கள் அடக்கு பவர்கள், அடக்கப்படுபவர்கள், சமூகபணியாளர்கள் என அனைத்து பேரின் வாய்களிலும் உச்சரிக்கப்படும் மந்திரமாகியிருக்கிறது மனித உரிமை.
எத்தனை அமைப்புக்கள்?
மனித உரிமை லேபலுடன் எண்ணற்ற அமைப்புக்களும் இன்று வெளிப்படுகின்றன.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அவற்றின் உள்ளூர் முகவர்கள், தேசமட்டத்திற்கான மனித உரிமை அமைப்புகள், அவற்றின் பிராந்திய முகவர்கள்.
இவற்றைவிட சிறப்பான சமூக பிரிவுகளை மையமாக கொண்ட அமைப்புகளுக்கும் குறைவில்லை. சிறுவர் உரிமை, பெண் உரிமை, சாதி உரிமை (தலித் உரிமை), நிறஉரிமை, மதஉரிமை என மனித உரிமை அமைப்புகளுக்குள்ளேயே சிறப்புத்துறை அணிகள்.
இதைவிடவும் மனிதர்களுக்குள் புதிய மனிதன், பழையமனிதன் வகைப்பாட்டினடியாக பழங்குடிகள் (tribes) உரிமை என்றும் வகைப்பாடுகள். இன்னமும் நுண்ணியதாய், காணாமல் போனவர்களின் உரிமைக்குஓர் ஆணைக்குழு கண்டபடி பிடிபடுபவர் உரிமைக்கு ஓர் ஆணைக்குழு எனவும் புதியபுதிய மனித உரிமை சார் பெயர்ப்பலகைகள்.

என். சண்முகலிங்கன் 53
ஆயிரம் பூக்கள் மலரட்டும்! என்ற நோக்கில் பெருகும் அமைப்புகளும் இந்தவிடயம் தொடர்பான இன்றைய விழிப்புக்களும் நல்லவிடயம் தான்./
அர்த்தம் இழந்து போதல்
இருந்தபோதிலும் சொல்லும் செயலும் முரண்படுகின்றதான இன்றையகாலத்து நிலமை, மனித உரிமை விவகாரத்திலும் மெய்யாக்கப்படுவதேன்! இதுவே இந்தக்கட்டுரை எழுப்ப விரும்பும் சிந்தனையாகும். அர்த்தமிழந்து போகும் பல பதங்களுடன் மனித உரிமை என்ற பதமும் இன்று அர்த்தமிழந்து போகின்ற நிலைமை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை காட்டும் அவலம். விளைவாக, மனித உரிமையிலும் மனித உரிமை அமைப்புகளிடையேயும், உண்மை அமைப்பு - போலி அமைப்பு என வகைப்படுத்திப் பார்க்க வேண்டிய நிலை.
கருத்தியல் முரண்கள்
அரச சார்பு மனித உரிமை அமைப்புகள், அரசசார்பற்ற மனித உரிமை அமைப்புகள், மக்கள் சார்பு மனித உரிமை அமைப்புகள் என அமைப்புகள் மட்டும் வெவ்வேறல்ல, அவைகளின் மனித உரிமை தொடர்பான கருத்தியல் (Ideology), செயற்பாடு அனைத்திலும் கூட வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
இந்த முரண் நிலைமைகளை புரிந்து கொள்ளாதவரை, இந்த முரண்களை உடைத்து சமநிலை எய்தப்படாதவரை மனித உரிமைகள் என்ற பதமும் பத்தோடு பதினொன்றாக எங்கள் அகராதிகளுக்குள் - ஆணைக் குழுக்களுக்குள் - பெயர்ப்பலகைகளுக்குள் மட்டும் அடக்கப்படுவதே விதியாகும்.
இன்றைய எங்கள் சமூக அமைப்பு, சர்வதேச சமூக அமைப்பு பற்றிய தெளிந்த சமூகவியல் தரிசனம் எமது முதல் தேவையாகும். பல்வேறு தரவேறுபாடுகளை உள்ளடக்கிய சமூக அடுக்கமைவும் அதன்வழியான அதிகார வல்லமையும் அன்றிலிருந்து இன்றுவரை புதிய வடிவங்களை எடுத்தபோதும் மாற்றம் பெரிதாய் இல்லை.
டார்வினிலிருந்து நியட்சேயின் சமூக பார்வை வரை, மார்க்ஸிலிருந்து ஜோன் ஸ்டுவட் மில்ஸ் வரை, விமர்சன - கோட்பாடு

Page 30
54 சமூகமாற்றத்தில் பண்பாடு
முதல் இன்றைய பின்நவீனத்துவம்வரை, survival of the Fittest தக்கன பிழைக்கும் விதியின் நிறுவுதல் மெய்ப்பிக்கப்படுதல் தெளிவுபடுத்தப்படும். அவரவர் சார்ந்த சமூகக்குழு ஆர்வங்கள், விழுமியங்களின் வழியான முரண்பாடுகளே மனித உரிமை பிரச்சனையாகும்.
பாலுக்கு சர்க்கரை இல்லை யென்பானுக்கும் பருக்கையிட்ட கூழுக்கு உப்பில்லை யென்பானுக்கும் மனித உரிமைப் பிரச்சனை வேறுவேறாகவே தெரிகிறது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை. சுதந்திரம், மற்றும் தனியாள் பாதுகாப்பு உரிமைகள் உண்டு
சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் ஒரு வாசகம் பேசும்
சரிதான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைச் சுதந்திரம் உண்டு. உன் சுதந்திரம் மற்றவன் சுதந்திரத்தை பாதிக்காததாக அமையும்போது தானே இப்பிரகடனததிற்கு அர்த்தம் உண்டு.
அர்த்தம் எங்கே?
உனக்கு பாதுகாப்பு உரிமை உண்டு. சரிதான், உன் பாதுகாப்பிற்காக நான் காணாமல் போகவேண்டுமென்றாகும்போது அர்த்தம் எப்படி?
இதுதான் பிரச்சினையின் மையம். மனித உரிமை உனக்கும் எனக்கும் வேறு வேறானதாக அமையமுடியாது.
மனிதர்களிடை நிறங்கள் இருக்கலாம் மனித உரிமையில் நிறங்கள் இருக்க முடியாது மனிதர்களிடை இனங்கள் இருக்கலாம் மனித உரிமையில் இனங்கள் இருக்க முடியாது பேதங்கள் தொலைந்த நீதியான சமூக அமைப்பிலே தான் மனித உரிமைக்கு அர்த்தம் வாய்க்கும்.
பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம் இன்றுள்ள நுகர்வு சமுதாயம் உருவாக்கும் போலித் தேவைகளிலிருந்து சுதந்திரம்
No man can be just who is not free -
சுதந்திரமற்ற மனிதன் நீதிமானாக இருக்கமுடியாது என்பான் வுட்ரோ வில்சன்.

என். சண்முகலிங்கன் 55
உரிமைகளை பெறுவது என்பதற்கு மேல் இழந்தது பற்றிய உணர்வே இல்லாத இருப்பு இருக்கிறதே! அது மிகமிக கொடுமையானது
"கஞ்சி குடிப்பதற்கில்லார் - அதன்
காரணம் யாதென்ற அறிவுமில்லார்"
என்பானே பாரதி
இந்த நிலை மாறியாக வேண்டும்.
மனித உரிமைகள் பற்றிய பாடத்தை இவர்களிடம் தான் தொடங்கவேண்டும். விழிப்பு மட்டும் வந்துவிட்டால், பின்னால் மனித உரிமைக்கென்று காவலர்கள் யாரும் வேண்டியதில்லை.

Page 31
9 முதுமையில் தனிமை
உலக குடும்ப ஆண்டுச் சிந்தனைகளில், பிரிவு எழுதும் துயரங்கள் முதன்மையான கவனத்தை பெறும். பிரிவு என்றதும் தலைவன் - தலைவியிடை நிகழும் பிரிதலே நம் கருத்தின் குவிமையமாகும்.
ஆனால் இந்த தலைவன் தலைவி பிரிவு துயருக்குப் புறம்பாக, பெருந்தலைவராக நம் பண்பாடு பேணிநின்ற குடும்பத்து முதியவர்களை வயதான காரணத்தை வைத்து குடும்பத்திலிருந்து ஒதுக்குதல், தள்ளுதல், பிரித்துவைத்தல் என்பன இன்று அதிகரிக்கும் நிலையும் இன்று நம் கவனத்துக்குரியதாதல் வேண்டும்.
மூப்படைதல் (Aging) மேலைப் பண்பாட்டில் ஒரு பிரச்சனையாக உணரப்பட்ட காலத்து, எங்கள் பண்பாட்டின் முதுமை இனிமைக்காக அவர்கள் ஏங்கியதுண்டு இன்று மேலைமயமாக்க அலைகளிடை எங்கள் குடும்ப வாழ்வும் - குடும்பத்திய முதியவர் தத்தளித்தலும் தவிர்க்க முடியாத சமூக பிரச்சினையாய் ஆய்வாளர்களதும், சமூக பணியாளர்களினதும் கவனத்தை வேண்டிநிற்கும். இதனை உணர்த்தும் சிந்தனையாக இந்தக் கட்டுரைக் குறிப்பு அமையும்.
இருந்ததும் தொலைந்ததும்
குடும்ப அமைப்பில், மதிப்பும் அதிகாரமும் கொண்ட பாத்திரமாய், முதியவர்களுக்கு மதிப்புத் தந்தது நமது பண்பாடு. முதுமையடைதலை, அனுபவ முழுமையாக கண்டு, அந்த அனுபவக் கனிகளை வழி வழி கையளித்தது. கூட்டுக் குடும்ப வாழ்வில் முதுமை இயல்பாக இனிதாய் கழிந்தது. எங்கள் சமூகத்தின் மரபுவழிக் கிராமங்களில் இன்றும் இந்த வாழ்வின் எச்சங்களை காண முடியும். எனினும் நிகழும் சமுக மாற்றங்களிடை - எமது கூட்டுக் குடும்பங்களின் நிலைபேறு கருகத் தொடங்கிய போது, முதியவர்கள் நிலையும் தளரத்தொடங்கியது.

என். சண்முகலிங்கன் 57
நகரமயமாக்கம், நகரை நோக்கிய அசைவுகளிடை முதியவர்கள் தனித்துவிடப் பட்டார்கள். தொழில் சார்ந்த இந்த அசைவு இன்று முன்னைய அசைவினை விட தன்மை ரீதியாகவும் வேறுபடுவது. முன்பு வாரம் ஒரு தடவை, அல்லது மாதம் ஒரு தடவை அல்லது பண்டிகை கால தரிசனமாக, பிள்ளைகளை பெற்றோர் சந்திக்கும் நிலைமைகள் போய். இன்று அசைவு கடல் கடந்த நீண்ட பயணங்களாய் அமைவது. நீண்ட இடைவெளியில் சந்திப்பது அல்லது நிரந்தரமான பிரிவு என்ற நிலை. இந் நிலையில் தனிமையும் உறவுகளுக்கான எதிர்பார்த்தலுமே இந்தக் குடும்பத்து முதியவர்களின் வாழ்வாகி விடுகின்றது. இன்றைய எம் கிராமங்களில் இத்தகு முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தலை புள்ளி விபர ஆதாரமின்றியே நாம் உணர முடியும்.
வெளியே போன உறவுகளால் தனித்த முதியவர்கள் கதை ஒருபுறமாக, மறுபுறத்தில் உள்ளூரிலேயே வெளியே தள்ளப்படுகின்ற முதியவர் சோகமும் இன்று அதிகரித்தல் அவதானிக்கப்படும். 'சீவிய உருத்து காட்டி வீடு எழுதுகிற நடைமுறைக்கு பதில் "உறுதியாக எழுதிவிக்கும் நிர்ப்பந்த கலியாணங்களும் சீவிய உருத்தையே அர்த்தமிழக்க வைப்பதான நடைமுறைகளுமாக கூட்டுக் குடும்ப உடைவுகள் வெளிப்படும். ஒரே வீட்டில் இரண்டு உலை வைப்புகள் அல்லது ஒரே வளவில் இரு குசினி சமையல்களாய் குடும்ப அமைப்பினுள்ளேயே முதுமையின் புகைச்சல்கள் தெரியும் தமிழர்பண்பாடு. தமிழர் மதம் என்றெல்லாம் பெரிதும் பேசப்படும் இன்றைய காலத்து நடைமுறையில் குடும்ப உறவு சார்ந்த நியமங்கள் கேள்விக்குறியாகும்.
தமிழர் மதம்
இயங்கும் உயிர்கள் அனைத்தையும் இப்பிறவிக்கு வந்த காலத்திலேயே தமக்குப் பசியாலும், விடாயாலும், நோயாலும் வந்த துன்பங்களைத் தாமாகவே தீர்த்துக்கொள்ளமாட்டாமல் தம் தாய் தந்தையர் உதவியால் தீர்த்துக்கொண்டு வருவதால் மக்கள் முதன் முதல் தன் தாய் தந்தையரையே தெய்வமாக நினைத்து வணங்கி வருதல் வேண்டுமென்பது தமிழர் தம் முதற் தெய்வக் கொள்கை ና

Page 32
58. சமூகமாற்றத்தில் பண்பாடு
என தமிழர் மதம் பற்றிய மறைமலையடிகளின் அன்றைய குறிப்பு அமையும்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்ற பழமொழியை பின்னடிக்கு இடைஞ்சலாக கருதும் விதமாய் பெற்றோர் - பிள்ளைகள் உறவு காணும் மாற்றங்களினால் முதுமை தனிமையாகும். ஒட்டு மொத்தமாக எல்லாக் குடும்பங்களுமே இந்த விதமாய் போய்விட்டதாக கருதமுடியாதெனினும், இன்றைய போக்கு இத்தகைய தனிக்குடும்ப நிலைபேற்றினையே காட்டுவதெனலாம். குடும்பத்து முதியவர்கள் வருமானமுள்ளவராக, சொத்துகள் கொண்டவராக இருக்கும்வரை அவற்றினை நம்வசப்படுத்தும்வரை கவனிப்பதும், அனைத்தையும் பெற்றபின் தள்ளிவிடுவதும்கூட அவதானிக்கப்படும் அவலங்களில் சில எனலாம். அவ்வாறன்றி குடும்பத்தில் பேரக்குழந்தைகளை பேணுகின்ற பாத்திரத்தில் அல்லது வழமையான வீட்டுக்கடமைகளில் முன்போல சமனான பங்குடன் செயற்படுகின்ற முதியவர்கள் தமது முதுமைப் பருவத்தையும் அர்த்தமுள்ள தாக்குகின்றனர். செயற்படக்கூடிய உடல் உள நிலையில் உள்ள, முதியவர்களின் தேவை உணரப்படுமிடத்து, தள்ளல் நிலைகள் அரிதாகவே காணப்படும்.
செயற்படும் வல்லமையுடனான தொழில் புரியும் முதியவர்களை கட்டாய வயது வரம்பு காட்டி வேலையிலிருந்து ஓய்வு கொடுத்து அவர்களை செயலிழக்க வைக்கின்ற நடைமுறையும் பலமுதியவர்களுக்கு துயர அனுபவம்தான். இவர்கள் சமூக அனுபவங்களை பிறசெயற்பாடு களிலேனும் பயன்படுத்தும் வழிவகைகள் வேண்டும்.
செயற்படமுடியாத நிலையில் - உடல் உள நோய்களினால் ஏனையோரில் தங்கி நிற்கும் முதியவர்கள் நிலையோ மோசமானது. வசதியான குடும்பங்களில் இவர்களைக் கவனிக்கவென தனியான உதவியானவர்களை அமர்த்தும் சாத்தியமுண்டு. ஏனைய குடும்பத்து முதியவர்களைப் பொறுத்தவரை குடும்ப உறவின் பிணைப்பிலே - ஏனைய அங்கத்தினரின் அன்பான கவனிப்பிலேயே இவர்கள் முதுமைத் துயரம் தவிர்க்கப்படலாம்.
முதியோர் இல்லங்கள்
இவ்வாறான கவனிப்பு அற்ற, கவனிக்க முடியாத முதியோர்களை பராமரிக்கவென முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு சமூக நல நோக்கில்

என். சண்முகலிங்கன் 59
அமைக்கப்படுகின்றன. எமது பகுதியில் அரசினர் முதியோர் இல்லம் என்றும் தனியார் முதியோர் இல்லங்கள் சிலவும் முதியோர் நலனுக்கென இயங்குவன.
அநாதரவான முதியவர்களுக்கு ஓரளவு நிழலாக, ஆறுதல் தருவன இந்த நிலையங்கள். எனினும் ஆறாத்துயரங்களை சுமந்தபடி இந்த இல்லங்களில் வாழும் / இருக்கும் முதியவர் கதைகள் ஒவ்வொன்றும் நமது சமுக உறவுகளின் கொடுமைக்கு எடுத்துக் காட்டுகளாவன. உறவுகள் யாருமற்றவர்கள்தான் இவ்வாறான நிலையங்களில் தஞ்சம் புகுகின்றனர் என பொதுவாகக் கருதப்பட்டாலும் யதார்த்தத்தில் உறவுகள் இருந்தும் இல்லாத நிலையில் இங்கு வந்தவர் நிலையே அதிகமெனலாம்.
ஆறுபெண் சகோதரர்களுக்கு அண்ணன் அவர், மரபுவழிக் கலைக் குடும்பம். அன்றாடம் உழைத்து உழைத்து, தன் ஆறு சகோதரிகளுக்கும் வரன் தேடிக் கண்டு கொள்ளும் முயற்சியிடை தனக்கென ஒரு வாழ்க்கையைக் காண முடியவில்லை. இன்று வாழ்வுகண்ட ஒரு சகோதரியின் நிழலும் இன்றி. அரசின் சாந்தி நிலையமான முதியோர் இல்லத்தில் குடும்பத்து நினைவுகளுடன் துயரமாய் கழியும் இந்த அண்ணனின் முதுமைப் பருவம்.
இதுபோலவே பிள்ளையில்லையே என்று. ஒருவனைத் தத்தெடுத்து வளர்த்து சொத்தெல்லாம் அவனுக்கேயாக்கி, இன்று அவனால் துரத்தப்பட்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்த அம்மா, என இவர்கள் வரலாறு நீளும். A
மிக அண்மையில் எங்கள் தேசம்வாழ எழுத்துத் துறைக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு சிந்தனைச் செல்வரை முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கும் நிர்ப்பந்தத்திடை எனது எழுதும் பேனாவையே மரணதண்டனை வழங்கிய நீதிபதியாக முறித்துவிடும் மனநிலைக்கு நான் உள்ளான அந்த அனுபவம். இங்கு எழுதமுடியாத ஒரு முதுமையின் காவியம் எனப்படலாம்.
ஒரு முதியவர் இறக்கின்றபோது ஒரு பெரும் நூலகமே எரிகின்றது என ஆபிரிக்க பண்பாட்டின் முதுமொழி ஒன்று முதுமையின் செழுமையைச் சுட்டும். இங்கே ஒரு பெரும் நூலகத்தை முதியோர் இல்லத்துள் உயிருடன் அடைத்தது எமது இன்றைய பண்பாட்டின் கோலம்.

Page 33
60 சமூகமாற்றத்தில் பண்பாடு
குடும்பச் சூழலே உகந்தது
சில ஆண்டுகளுக்கு முன் வியன்னாவில் கூடிய 120க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்ட ஐ.நா. உலக வயோதிபப் பேரவை மாநாட்டில், வலியுறுத்தியவாறு.
முதியவர்களை இயல்பான குடும்பச் சூழலில், சமூகவாழ்வில் சுதந்திரமாக வாழவிடுதலே சமூகநீதி.
இந்த உலகில் இன, நிற, பால் பேதமின்றி மனித உரிமைகளுடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதுபோல. வயது பேதம், வயது சார்ந்த பாரபட்சம் இன்றியும் அனைவரும் வாழவேண்டும்.

10
பால் நிலை உறவுகள்
பால் நிலை உறவுகள், இன்றைய பண்பாட்டு, சமூக, அரசியல் எழுத்துக்களின் குவிமையமாகி கவனத்தை ஈர்க்கும், எழுத்துக்களாக மட்டுமன்றி செயற்படும் அமைப்புக்களின் வழியும் பால் (sex), பால் நிலை (gender) என்கின்ற எண்ணக்கருக்கள் தெளிவுபடுத்தப்படும். உயிரியல், மானுடவியல், உளவியல், சமூகவியல் என விரியும் சமூக அறிவியல் புலன்களுக்குப் புறம்பாக பெண் நிலை வாதக் கோட்பாடுகளாயும் இவை ஆழ அலசப்படும். இத்தகையதொரு பின்னணியில், நிலவும் சிந்தனைகள் தொடர்பான உள - சமூக - பண்பாட்டுத் தரிசனமாக இக்கட்டுரை அமையும். பால் என்பது இயற்கையான ஆண் - பெண் வேறுபாட்டினைக் குறித்து நிற்பது. பால் நிலை என்பது சமூக மயமாக்க (socialization) செயல்முறை வழி எய்தப்படுவது. இந்த வேறுபாட்டினைப்புரிந்து கொள்ளும்போது பால்நிலை உறவுகள் தொடர்பான இன்றைய விளக்கக் குறைவுகளும். பாரபட்சங்களும் இல்லாது ஒழிந்து விடும். எனினும் இந்தத் தெளிவைப் பெறுதற்கு தடையாக கடந்த காலத்து அறிவுச் செயற்பாடுகளும். பண்பாட்டுப் பெறுமானங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றமை எம் கவனத்திற்குரியதாகும். உயிரியல் நியதியா சமூக ஆற்றலா
பால் நிலை என்பது உயிரியல் நியதியா? சமூக ஆற்றலா? இந்த இரண்டு வினா எல்லைகளுக்குள் தான் பிரச்சினை மையம் கொண்டுள்ளது. பால்நிலை வேறுபாடுகளுக்கு உயிரியல் விளக்கங்களைத் தந்த கடந்த கால அறிவியல் முடிவுகள் பல இன்று கேள்விக்குள்ளாகும்.
எடுத்துக்காட்டாக, பெண்களைவிட ஆண்கள் வன்முறை வெளிப் பாட்டாளர்கள்; ஏனெனில் அதற்கான ஹோமோன் சுரப்பிகள் அதிகளவாக

Page 34
62 சமூகமாற்றத்தில் பண்பாடு
ஆண்களிடமே உள்ளன என்பது முன்பு தரப்பட்ட விளக்கங்களில் ஒன்று. இன்றைய சமூக உயிரியல் ஆய்வுகள் இந்த முடிவுகளை தலைகீழாக்குவன. ஹோமோன்களின் வழி நடத்தை அல்ல நடத்தை வழிதான் ஹோமோன் சுரப்பு என்பதனை இன்றைய ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. சமூக நிலைமைகளில் வன்முறை - கோப வெளிப்பாடுகளினால் தான் ஹோமோன் சுரப்புக்கள் அதிகரிக்கின்றன. வன்முறை உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையும் அதிகாரமும் சமூக வரலாற்றில் ஆண்களுக்கே உரித்தாக்கப்பட்ட விடயமும் இங்கு எங்கள் கவனத்திற்குரியதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பான்மையான உயிரியல் ஆய்வுகள் விலங்குகளிடை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளை அப்படியே மனித உறவுகளில் பிரயோகிப்பன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
உயிரியலா? சமூகமா? என்ற இந்த விவாதத்தில் இடை நடுவில் நிற்கின்ற ஒரு விளக்கமாக (Psychoanalysis) உளப்பகுப்பாய்வு கோட்பாடு தரும் கருத்துக்களை காண முடியும், சிக்மன்ட் புரொய்ட் (Sigmund Freud, 1856-1939) விளக்கம், அடிப்படையிலான பாலியல் உந்தல்களை மையமாகக் கொண்டது.
Freudன் ஆய்வு முடிவுகள் பலவும் 19ம் நூற்றாண்டின் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால தந்தைவழி சமூக குடும்பங்களை மையமாகக் கொண்டவை. அவையும்கூட வியன்னா மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளாக அவரிடம் சிகிச்சை பெற்றவர்களிடமிருந்தே பெறப்பட்டவை என்கின்ற விமர்சனங்கள் இன்று முன்வைக்கப்படும்.
தொழிற்பாட்டியல் (Functionalism) அணுகுமுறையில் பால்நிலைப் பாத்திரங்கள் சமூகமயமாக்கலின் வழி கற்கப்படுகின்றமை விரிவாக விளக்கப்படும். இப்பால் நிலைப் பாத்திரங்கள், உயிரியல் அல்லது உளவியல் உந்தல் சார்ந்தவைகள் அல்ல. ஒவ்வொரு பாலுக்குமென எதிர்பார்க்கப்படும் நடத்தைகள், சமூகமயமாக்க முகவர்களின் வழி வழங்கப்படுகின்றன. பெற்றோர். குடும்பத்தினர். ஆசிரியர். சகபாடி குழுவினர். சமயத் தலைவர்கள், வெகுஜன தொடர்புச் சாதனங்கள் என பல முகவர்கள், ஆண்மை, பெண்மை என வேறுபட்ட மாதிரி பண்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

என். சண்முகலிங்கன் 63
பண்பாட்டின் வழி
இவ்வாறான சமூகமயமாக்க இயல்புகளிடை பண்பாட்டுக்கு பண்பாடு காணப்படும் வேறுபாடுகளை மாகரட் மீடின் (Margaret Mead) ஆரம்ப கால மானுடவியல் ஆய்வுகள் துல்லியமாகவே வெளிப்படுத்துவன. நியூகினி பழங்குடியினரான அரபேஷ் (Arapesh) மக்களின் சமூக மயமாக்கலில் ஆண் - பெண் இருபாலரும் மெல்லியல்புகளுடன் வளர்க்கப்படு கின்றார்கள். கூட்டுவாழ்வும், ஏனையோர் தேவைகளில் துணையாக உதவும் பண்பும் இங்கு இயல்பாய் தரப்படுவன. முண்டுகமூர் (Mundugamore) மக்களிடை ஆண்களும் பெண்களும் வல்லியல்புடன் வளர்க்கப்படுகின்றனர். தஸ் கம்புலி (Tschambuli) பண்பாட்டில், ஆண்களைவிட பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக, ஆண்கள்ைவிட பொறுப்பும் முகாமைத்துவ திறனும் கொண்டவர்களாக சமூகமயப் படுத்தப்படுகிறார்கள்.
மாகரட் மீட்டைத் தொடர்ந்து பல ஆய்வுகள், பண்பாட்டுக் கூறுகளின் வழி பால்நிலையாக்கம் பற்றிய தெளிவான தரிசனங்களைத் தருவன. *
பாகுபாடும் பாரபட்சமும்
இத்தனை அறிவுகளுக்குப் பின்னாலும் ஆண்-பெண் தொடர்பான ஒரேவார்ப்பிலான பிரதிமைகள், பால்நிலையாக்கத்தின் அடிப்படைகளாகத் தொடர்கின்றன. பிள்ளை ஒன்று பிறப்பதற்கு முன்னாலேயே இவ்வாறான பால் நிலை பாத்திர வகைப்பாட்டுக்கான ஏற்பாடுகள் ஆண் பிள்ளை பிறந்தால் 'வசந்தன், பெண் என்றால் 'வசந்தி, ஆணுக்கு நீல நிறம், பெண்ணுக்கு பிங் நிறம் ஆண் உறுதியானவன், பெண் மென்மையானவள் ஆண் குழந்தையின் அறையில் விளையாட்டு உபகரணங்களாக, இராணுவ பொம்மைகள், பல்வேறு வாகனங்கள் என்பன பெண் குழந்தையின் அறையில் பாவைப் பிள்ளைகள், சமையல் விளையாட்டுக்கான பாத்திரங்கள் என பால் நிலை வேறுபாடுகள் தெளிவாகவே வரையறுத்து வழங்கப்படுகின்றன. மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவது முதல் அனைத்து நடத்தைக் கோலங்கள் தொடர்பாகவும் இந்த பால்நிலை பாகுபாடுகள் தொடர்வதையும் காணமுடியும்.

Page 35
64 சமூகமாற்றத்தில் பண்பாடு
ஆண் பிள்ளை அழக்கூடாது; பெண் பிள்ளை சிரிச்சாப் போச்சு என மரபுவழி கருத்தாக்கங்களின்வழி, இவை நிலைபேறாக்கப்படும். பெண்புத்தி பின்புத்தி என்னுமளவிற்கு பாகுபாடு பாரபட்சமாகும்.
பாகுபடுத்தல் பாரபட்சமானதன் விளைவாகவே இன்று பால் நிலை அரசியலாகியுள்ளது. ஆண் - பெண் சமத்துவம் வேண்டி பெண்ணியவாத அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் வேர்விடும்.
மரபுவழி குடும்ப அமைப்புக்குள் சமநிலைதேடும், பண்பாட்டு வழியான பெண்ணிலையமைப்புக்களிலிருந்து, தீவிரமான ஆண் எதிர்ப்பு - ஆண் தவிர்ப்பு கருத்தியல் வரை இன்று பெண்ணிலைவாதக் கருத்துக்களும் அது சார் அமைப்புக்களும்.
எமது பண்பாட்டுப் புலங்களிலும் இன்று இத்தகு அமைப்புக்களின் குரல்களை கேட்க முடிகிறது. உண்மையான உரிமைக் குரல்களோடு, வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் (NGO) காசுக்காக விடுதலை பேசும் போலி (Pseudo) அமைப்புகளும் கூட தாராளம்.
எவ்வாறெனினும் கல்வி - போன்ற சில குறிப்பான துறைகளில் எங்கள் பண்பாட்டில் பெண்கள் தம் உச்சங்களை எட்டுதலும், அவை சனநாயகப்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளமையும் மகிழ்ச்சி தருவன. எனினும் இன்றைய முகாமைத்துவம் தொடர்பான சமூகவியல் ஆய்வுகள் இனங்காணும் 'Glass ceiling Syndrome எனப்படும் உயர்பதவிகளை எட்ட முடியாமல் பெண்களை மட்டுப்படுத்துதல் போன்ற நிலைமைகள் கவலைக்குரியன. இவற்றைவிட திருமணம் என்ற நிறுவன உருவாக்கம், குடும்பத் தீர்மானங்களிடை சீதனம் போன்ற இழிவழக்குகள். பண்பாட்டின் பெயரால் தொடரும் பாரபட்சங்களாய் எங்கள் பண்பாட்டினைத் தலைகுனிய வைப்பன.
கூடவே பால் அடிப்படையிலான கூலிவேறுபாடுகள், பாலியல் வன்முறை என பாரபட்சப் புலங்கள் இன்னமும் தொடர்வன. நவீன அறிவின் தொடர்பியல் களங்களிடை விளம்பரப் பொருளாக பெண்களைச் சிதைக்கும் நடைமுறைகளும்கூட மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை.
மறுபுறம் போராட்ட வாழ்வும், பெண் தலைமைக் குடும்பங்களின்
அதிகரிப்பும். போரின் கொடுங்கரத்தில் இருபதனாயிரத்துக்கும் அதிகமான விதவைகளின் உற்பத்தி. இவர்களின் உள - சமூக - பொருளாதாரப்

என். சண்முகலிங்கன் 65
பிரச்சினைகள், மீள்வாழ்வு தொடர்பான கேள்விகள் என்பன வழமையான பாரபட்சங்களுக்கு மேலதிகமானவை.
அனைத்தும் நீங்கிய ஆண், பெண் சமத்துவம் என்பது உண்மையில் பால் / பால்நிலை என்ற எண்ணக்கருக்களின் தெளிவிலும், ஒட்டுமொத்தமான சமூக நீதியிலும் தங்கியுள்ளது. தெளிவுமட்டுமன்றி, தெளிவின் வழியான செயல் என்பதும் தேவையாக உள்ளது. சமூகநீதிக்கான போராட்டத்தில் சரிநிகர் சமானமாய் இருபாலாரின் ஒன்றிணைந்த செயல் இன்றியமையாதது.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் -பாரதி

Page 36
11 பண்பாட்டு அதிர்ச்சி
என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது? எப்படி நடப்பது? ஏன் நடக்க வேண்டும்? அதிர்ச்சியிடை பல புரிவதில்லை
1
புதியதொரு பண்பாட்டுத் தொடுகையில் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய தாக்கமான ஒரு நிலையினையே, பண்பாட்டு அதிர்ச்சி (Cultural shock) என்ற எண்ணக்கரு குறித்து நிற்கின்றதெனலாம். அந்நிய பண்பாட்டுச் சூழலில் எமக்குப் பழக்கமான தொடர்புக் குறியிடுகளை, முறைமைகளை காணாத போது தவித்துப் போகின்றோம். எங்கள் உளச் சமநிலையும் குலைந்து போய்விடுகின்றது. எத்துணை திறந்த மனத்தினராக, தாராள குணத்தினராக இருந்த போதிலும் புதிய குழலின் பண்பாட்டு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியே நேரிடுகிறது. அதிர்வின் தன்மையில், அளவில் வேறுபாடு காணப்படலாம். எனினும் இந்த அனுபவம் பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக, பாதிக்கின்றதாக அமைந்த நிலையிலேயே அறிவுலகின் கவனத்துக்குரியதானது.
‘ஓபர்க்' என்ற மானுடவியலாளர்தான் முதன் முதலாக இந்த எண்ணக்கருவை முன் வைத்தார்.
1. புதிய சூழலில் இசைவாக்கம் கொள்ள எடுக்கும் முயற்சியின் விளைவான உள அழுத்தம்.
2. அன்புக்குரியவர்களையும், இதுநாள் வரை அனுபவித்திருந்த அந்தஸ்து நிலைகளையும் இழந்து போனதான மன உளைச்சல்.

என். சண்முகலிங்கன் 67
3. புதிய பண்பாட்டின் மக்களால் தாம் நிராகரிக்கப்படுவதான உணர்வு அல்லது புதிய பண்பாட்டை நிராகரிக்கும் உணர்வு.
4. புதிய பண்பாட்டில் விழுமியங்கள். உணர்வுகள், பாத்திர எதிர்பார்ப்புகள், சுயஅடையாளம், போன்றவை தொடர்பான குழப்பநிலை.
5. பண்பாட்டு வேறுபாடுகளை உணரும் நிலையில் எழுகின்ற வியப்பும் பதகளிப்பும்.
6. புதிய சூழலில் இசைய முடியாமையின் விளைவாக எழும் சுய முக்கியத்துவ உந்தல்.
என்றிவ்வாறாக ஆறு பிரதான கூறுகளைப் பண்பாட்டு அதிர்ச்சியில் இனங்காண்பார் ஓபர்க்'
நவீன வாழ்வின் தொடர்பியல் வளர்ச்சிகள். மாற்றங்களின் வழி, பண்பாட்டு அதிர்ச்சி தொடர்பான ஆய்வு ஆர்வங்களும் அதிகரிக்கக் காணலாம்.
புதிய புதிய புலங்களுக்கான அதிகரிக்கும் அசைவுகளை எதிர் கொள்ளும் எங்களைப் பொறுத்தவரை, இதன் முக்கியத்துவம் வெறும் .பூர்வமாக மட்டுமன்றி, சமூக பயனானதாகவும் அமையும் |6 للالچیو> பண்பாட்டு அதிர்ச்சி தொடர்பான ஆய்வுகள் பலவும், அந்நியதேச பயண. இருப்புகள் தொடர்பானவையாக அமைகையில், எங்களுக்கு எங்கள் பண்பாட்டுப் புலங்களுக்குள்ளேயே இத்தகைய அதிர்ச்சி அனுபவங்கள். என்ன நடக்கிறது. எப்படி நடக்கிறது? எப்டி நடப்பது? ஏன் நடக்க வேண்டும்? - அதிர்ச்சியிடை பல புரிவதில்லை.
இந்நிலையில் முன்னெப்போதையையும் விட, இந்த எண்ணக்கரு தொடர்பான அறிவும், தெளிவும் இன்றியமையாததாகின்றன.
2
மானுடவியல், சமூகவியல், உளவியல், தொடர்பியல் என விரியும் பல்வேறு சமூக அறிவியல் துறைகளினதும் கவனத்துக்குரியதாக இன்று இந்த எண்ணக்கரு விளங்குகின்றது. சமூக மானுடவியலின் முழுதளாவிய நோக்கு. அந்நியமாதல், அனோமி என்கின்ற எண்ணக்கருக்களுடன் தொடர்புபடுத்தி பண்பாட்டு அதிர்ச்சியைத் தெளிவு படுத்துகின்றது.

Page 37
68 சமூகமாற்றத்தில் பண்பாடு
அந்நியமாதல்
பண்பாட்டின் இன்றியமையாத கூறுகளான நியமங்களையும், விழுமியங்களையும் சமூகமயமாக்க செயல்முறையினூடாகவே நாம் கற்றுக்
புரிந்தவருக்கு, தெளிந்தவருக்கு அதிர்ச்சி ஏற்படுவதில்லை. இவ்வாறில்லாத நிலையில் தான், அனோமி எனப்படுகின்ற நியமமறுநிலை அல்லது வேரறுநிலை ஏற்படுகின்றது. தன் வல்லமை கெட்டதான உணர்வும், தன் வாழ்வின் அர்த்தங்கள் தொலைந்ததான தவிப்பும் விளைகின்றன.
கூடவே தளம்பல் மனோநிலையும் பதகளிப்பும் தருகின்ற தன்னம்பிக்கையின்மை, மற்றவர் மீதான நம்பிக்கையீனம். இதன் உச்ச முறிவில் உளநோய் விளைவாகும் ஆபத்து பற்றிய தரிசனங்களை, மானுடவியலுடன் இணைந்து உளவியல் வெளிப்படுத்துகின்றது.
சூழ்நிலை மாற்றங்களைப் புரிந்து, சமநிலை காண்பதென்பது பெருமளவுக்கு புதிய பண்பாட்டினை சகிப்புத்தன்மையுடன் விளங்கு தலின் வழிதான் சாத்தியமாகும். இதற்கு, பண்பாடு வேறுபடுந்தன்மை தொடர்பான அறிவும், உணர்வும் இன்றியமையாதவை. இதனைவிட சாதியென்றும், குடியென்றும், இனமென்றும் எல்லைப்படுத்தப்பட்டு, ‘எங்களதே உயர்வானது' எனும் இனமையவாதம் பற்றிய விழிப்புணர்வும் கவனிக்கப்படவேண்டும்.
பெளதிகரீதியான வேறுபாடுகளை ஒரளவுக்கு இலகுவில் சரி செய்யமுடியும் எனப்படுகிறது. குளிருக்கு கம்பளிச்சட்டையும், போர்வையும் கொடுக்கலாம். இவை கூட பாதிப்பனவாகலாம். 'டோல் பணத்துக்காக இங்கிருந்து அழைக்கப்படும் எங்கள் முதியவர்கள் பலருக்கு இந்த சட்டைகளே சுமைகளாய் அழுத்தும் செய்திகளை அறிய முடிகிறது. இந்நிலையில் ஆழமான பண்பாட்டுக் கூறுகள் சம்பந்தப்படுகின்ற அதிர்ச்சிகளின் உலுப்பல் அதிகமானதுதான். இங்குள்ள கொடுமையான சூழ்நிலை விசைகள் மேலைக் கவர்ச்சிகளின் வழி வெளிநாடு செல்லும் எங்கள் மணமகளுக்கு அவர் வெளிநாட்டுப் பெண் ஒருத்தியுடன் ஆடும் சோஷல் ந்டனம் இயல்பாக அமைவதில்லை.
உண்மையில் புதிய பண்பாடு பற்றிய ஒருவரின் முன் அனுபவம். அவரின் ஆளுமை வளர்ச்சி, தன்மையினடியாகவே பண்பாட்டு அதிர்ச்சியின் தன்மையும் அமையும் எனலாம். மிக மெல்லிதான தட்டி லிருந்து, பாரதூரமான அதிர்ச்சி நிலைவரை அனுபவம் விரியும்.

என். சண்முகலிங்கன் 69
1. புதிய பண்பாட்டுடன் கர்ைந்து கலந்து விடுபவர்கள்.
2.புதிய பண்பாட்டுடனும் தனது சுய பண்பாட்டுடனும் சமமான
தொடர்பினைப் பேணுபவர்கள்.
3.பொருத்தப்பாடு காணமுடியாமல், பின்வாங்கி தனித்து
விடுபவர்கள். *
என மூன்று நிலைகளில் பண்பாட்டு அதிர்ச்சியை சந்திப்பவர்களை ஆய்வாளர்கள் வகைப்படுத்தி நோக்குகின்றனர்.
முதல் வகையினர். புதிய பண்பாட்டில் தமது வேர்களை ஆழப்பதிப்பதுடன், தம் சுய பண்பாடுடனான தொடர்புகளை அறவே அறுத்தும் விடுபவர்கள். புதிய பண்பாட்டின் பிரஜைகளாகி விடுபவர்கள். வீட்டிலே பிள்ளைகளுக்கு தமிழ் பேசும் வாய்ப்பைய்ம் பண்பாட்டு அடையாளங்களை பேணும் அனுபவங்களையும் திட்டமிட்டே தவிர்த்து மேலைமயமாக்கும் எம்மவர் அனுபவங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். என்னதான் இருந்தாலும் நிறம், இனம். பிச்சைக்கார நாட்டுக்காரன் எனும் அடையாளங்கள் பின்துரத்த எம்மவர்களின் முயற்சிகள் முறியும் யதார்த்த நிலைமைகளையும் இங்கு கருத்திற்கொண்டாக வேண்டும். தோல்வி இவர்களை 2வது 3வது நிலைமைகளுக்கு இட்டுச் செல்லலாம்.
இரண்டாவது வகையினர். புதிய பண்பாட்டின் அக ஒழுங்குகளைப் புரிந்து கொண்டு அதற்கு வேண்டிய திறன்களையும் வளர்த்துக் கொள்பவர்கள். அனைத்துப் பண்பாடுகளையும் நயக்கும் - மதிக்கும். பொதுமையுள்ளத்தினர். சகிப்புத்தன்மை கொண்ட ஆளுமைகளென அல்போட்' குறிப்பிடுவது இவர்களைத்தான்.
மூன்றாவது வகையினர். இந்தப் பண்பாட்டு நிலையின் பாதிப்பில் உள்ளவர்கள். புதியதை தமக்கு துன்பம் தரும் ஒன்றாக நிராகரித்து விடுவார்கள். தமது இசைவாக்க முயற்சிகளினடியாக இந்த முடிவுக்கு வருபவர்கள். தத்தமது சொந்த பண்பாடுகளுடன் ஒப்பியல் ஆய்வுகளைச் செய்து, தமது சுயபண்பாட்டின் அற்புதங்களை வியந்தும், அந்நிய பண்பாட்டின் சாதகமற்ற நிலைமைகளை விமர்சித்தும் பின் வாங்குபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புதலும், நாளடைவில் தம்மை ஒத்தவருடன் சேர்ந்து கனடாவில் குட்டி யாழ்ப்பாணம், ஜேர்மனியில் குட்டிக் கட்டுவன், என உறைகளுக்குள் ஒடுங்கிப் போகிறவர்களை இந்த

Page 38
70 சமூகமாற்றத்தில் பண்பாடு
வகைக்கு உதாரணமாக குறிப்பிட முடியும். இந்த வாய்ப்பும் கிட்டாதவர்கள், தம்மைத் தனியன் என நினைந்து நினைந்து விரக்தியும் பதகளிப்புமே மிச்சமாக மனநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள், குடி போதைப் பொருள்களுக்குள் மூழ்கிவிடுபவர்களையும் காணமுடியும். பண்பாட்டு அதிர்ச்சியின் அடையாளங்களில் ஒன்றாக மதுபாவனைக்கு அடிமையாதலை குறிப்பிடுவதுவும் இந்தப் பின்னணியில்தான்.
புதிய பண்பாட்டு சூழல் தொடர்பான அறிவு அனுபவப் பயில்வை முன்னதாகவே பெறும் களங்கள் இந்நிலையை தணிக்க உதவுவன. உறுதியான குடும்ப உறவுகளும் இதற்கு உறுதுணையாவன. நண்பர்களை வளர்த்து, சகிப்புத்தன்மை, நகைச்சுவையுணர்வுடன் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும் பக்குவம் நெருக்கடி ஏற்படாமல் பாதுகாக்கும்.
3
அதிர்ச்சியும் அவசியமாகலாம்
உண்மையில் பண்பாட்டு அதிர்ச்சி என்பது ஒரு மாற்று அனுபவம் தான். எப்பொழுதுமே எதிர் விளைவுகளைத் தரும் அனுபவமாகவே அமைய வேண்டுமென்பதில்லை. எங்கள் சுயத்தின் மேம்பாடு, விருத்திநில்ைகளில், அளவான அதிர்ச்சி கூட துணைதான் எனும் அட்லரின் கருத்தை இங்கு மனதிற்கொள்ளலாம். சமூகமாற்றச் செயல் முறைகளில், சமூகமேம்பாட்டுத் திட்டங்களில் இத்தகு அனுபவங்கள் பயனான தூண்டிகளாக முடியும். புதிய அனுபவங்களைக் காணும் விழிப்பை, மனப்பான்மைகளை, நடத்தைக் கோலங்களை இவை நம்வசமாக்குவன.
எங்களைப் பொறுத்தவரை நிலவும் எங்கள் பண்பாட்டுக்குள்ளேயே காணப்படும் பல முரண்நிலைகள், அநீதியான சமமின்மைகள் எங்களுக் அதிர்ச்சி தரவேண்டும். சமூக விழிப்புக் கொண்டவர்கள். இத்தகு பண்பாட்டு அதிர்ச்சியை அடிக்கடி இங்கேயே சந்திக்க வேண்டியுள்ளமையை குறிப்பிடலாம். வேண்டிய இடத்து அதிாச்சியே இல்லாத மரத்துப்போன நிலைமைகள், மாற்றத்துக்குத் துணையாக மாட்டா. அவை தடையாக விளங்கக்கூடியன. இந்நிலையில் பண்பாட்டு அதிர்ச்சியை அளவாகத்தரும் விழிப்புக் களங்களின்வழி, மேம்பாட்டை நோக்கி இதனைத் திசைதிருப்ப முடியும். சமூகச் சிந்தனையாளர்களும், சமூகமேம்பாட்டுப் பணியாளர்களும் இசைந்து இந்தத் திசையில் சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

12 உளவியலும் ஆத்மீகமும்
மனித மேம்பாட்டுக்கான அறிவுத்துறைகளில் இன்றியமையாததாக அமைவது உளவியல். உளம் பற்றிய அல்லது ஆன்மா பற்றிய தேடலாகத் தொடங்கிய அறிவு, பின்னாலே புறவயமானதோர் அறிவியலாக தன்னை மேம்படுத்திக் கொண்டது. பல்வேறு சமூகக் கோட்பாடுகள், ஆய்வுகளினடியாக உளவியல் அறிவும் பரந்தது. உளவியலோடு கைகோர்த்து ஏனைய அறிவியல் துறைகளின் விரிவாக்கமும் நடந்தது.
எனினும் எதிர்பார்த்த நலன்களுக்குப் பதிலாக, பெரிதும் அழிவுகளுக்கே இந்த அறிவுகள் துணை போகும் ஆபத்தே அனுபவமானது. நவீன வாழ்வில் எல்லாமே பொருள்சார் உலகியல் கணக்கு
தலைவாசல் தம்பட்டங்கள் ஒருபுறம், மறுபுறம். வீடேயில்லாத அவலவாழ்வின் கொடுமுகம்.
எங்கே நின்மதி?
எங்கே நிம்மதி ஒலத்துள் பல உள்ளங்கள். இந்த அவலநிலையினின்றும் மனுக்குலத்தை மீட்க என்னவழி? மனித உள்ளத்துக்கு நேர்ந்த இந்தச் சோகத்துக்கு மருந்து என்ன? மானுடத்தின் வல்லமையை அவனுக்கு உணர்த்தி மீண்டும் நல்லதோர் உலகைக் காண ஏது நெறி?
இந்தச் சிந்தனைகளின் விழிப்பில்தான், இன்று ஆத்மீகமும், உளவியலும் நெருங்கி உறவாடும் புதிய வரலாறு எழுதப்படுகின்ற தெனலாம்.

Page 39
72 சமூகமாற்றத்தில் பண்பாடு
மனிதாந்த உளவியல்
அணுவைப் பகுத்தாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து, உளத்தைப் பகுப்பாய்ந்த உளவியலாளர்கள் வரை, நவீன வாழ்வின் துயரம் உணரப்பட்டது. பொருள்சார் நுகர்வுகளுக்காகி, ஆத்மாவையே விற்கும் மனித அவலம் பற்றிய, யுங் (jung) போன்ற நவ உளப்பகுப்பாய்வாளர்களின் எழுத்துக்களிடை இந்த நிலைமை தெளிவாகவே புலப்படும். மனித மேம்பாட்டுக்கான ஆன்மீகத்தை கருத்தில் கொண்ட Transpersonal Psychology எனப்படும் மனிதாந்த உளவியல் தோற்றம் பெறும்.
இத்தகைய சிந்தனைகளினடியாக, கீழைப் பண்பாட்டின் ஆத்மீக செல்வாக்குகளை நோக்கிய மேலை உலகின் ஆத்மீக யாத்திரைகளும் அதிகரித்தலைக் காணமுடியும்.
மானுடத்தன்மையைப் மீளப்பெறுதற்கானவழி மனித உளவியலுக் குள்ளேயே, உளஆக்கநிலையிறுத்தத்துள்ளேயே அமைந்துள்ளமை இன்றைய Integral Psychology எனப்படும் முழுமை உளவியலிலும் ஆழ நோக்கப்படும். மானுடத் தன்மையின் உளவியல், பின்வரும் அடிப்படைகளின் வழியானது என அது பேசும்.
O மனிதனாக இருக்கும் முடிவை, இந்த கணமே எடுத்தாக வேண்டும்.
O இந்த தேர்வு மனிதன் முன்னால் கணந்தோறும் விரிந்து செல்கிறது.
O மனிதனின் மனிதம் என்பது விபத்தாக நேரும் ஒன்றல்ல. ஒவ்வொரு
O மனிதனாக வாழ்வேன் என்ற கடப்பாட்டின் வழிதான் இது நிலைபெற
முடியும் (மனிதத்தன்மையை இழப்பது சுலபமானது என்பதால்)
O மனிதத்தின் பேணல் தொடர வேண்டுமாயின் ஒவ்வொரு கணமும்
அந்த உணர்வு உறுதியாய் தொடர வேண்டும்.
ஆழ்நிலைத்தியானம் (Trancedental Meditation) என்றும் சேவை, தியாகமென்றும் எங்கள் பண்பாடு காட்டும் வழிமுறைகள் இந்த மனித மீட்சியில் பெரிதும் துணையாவன, எங்கள் கீழை ஆன்மீக புலங்களின் தியான, மண்டபங்களை - நிறைக்கும் மேலை உள்ளங்களின் வருகை இந்தப் பயன்பாட்டின் வழியதே.

என். சண்முகலிங்கன் 73
ஆன்மீகம் என்பது சடங்கல்ல
ஆன்மீகம் என்ற பொருள் எம்மவர் பலரிடை வெறும் சடங்கா சாரங்கள் - சாந்தி - நம்பிக்கைகள் என்ற எல்லையை தாண்ட முடியாத நிலைமை காணப்படுவதும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். ஆத்மீகத்தின் பெயராலேயே பல மனித அழிப்புகள், உடைப்புகள் நிகழ்வதும்கூட வரலாறாகும். இந்நிலையில் ஆன்மீகத்தின் ஆழ்ந்த அர்த்தம் தெளிந்திடும் அறிவுப் பணிகளும் எமது முக்கிய கடமையாகும்.
ஆத்மீக உளவியல் - ஆத்மீக விழுமியம் பற்றிய விழிப்புணர்வும், அறிவும் எங்கள் புலங்களில் விரிவாக வேர்விடவேண்டும். இதற்கான பணிகளை சமூக மேம்பாட்டிற்காய் உழைக்கும் அனைவரும் முதன்மையாய் மேற்கொள்வது இன்றைய காலத்தின் தேவையாக பெரிதும் உணர்த்தப்படும்.
போரும், குண்டும், செல் வீச்சுக்களும், சிறை வாழ்க்கைகளும், அலையும் அகதி அழிவுகளுமே இருப்பான எங்களால் ஆழ்நிலைத் தியானமும், ஆத்மீகமும் முடியுமா? என உங்களில் சிலர் கேட்பதை உணரமுடிகிறது.
ஆத்மபலமே வாழ்வு
இத்தகைய சூழ்நிலைகளிடைதான், ஆத்மபலத்தின் அவசியம் மிகமிக மிகமிக இன்றியமையாததாகின்றது.
தளரா மனது, அசையா உறுதி, தன்னை வென்றாளும் சாதனை இன்றைய எம் தேவை. ஆத்ம ஜெயத்தின் ஆளுமையை, அழகாகவே பாடுவான் பாரதி.
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழிவுற்று நிற்போமோ?
மண்களில் தெரியுது வானம்! அது நம் வசப்படலாகாதோ! என்ற அந்த முழுமை உள்ளத்தின் ஆதங்கம், நம் எல்லோரிடத்தும் விளைய வேண்டும். அந்த ஆத்ம உறுதியிலே தான் எங்கள் வாழ்வும் மானுடத்தின் இருப்பும் சிறக்கும்.

Page 40
13
கலைகளினால் மானுடர்க்கு.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?"
எனப்பாடுவான் பாரதிதாசன்.
உங்கள் அனுபவம் எப்படி?
மலையென வருகின்ற துன்பங்களை, பனியென கரைத்துவிடும் கலைகளின் வல்லமை. இன்று பெரிதும் உணரப்படும். சாதாரண மனித அனுபவமாக மட்டுமன்றி. இன்றியமையாததோர் உளச் சிகிச்சை நுட்பமாகவும் கலைகள் இன்று பயன்படும்.
எத்தனை கோடி இன்பம்
நவீன உலகின் நெருக்கீடுகள் - அழுத்தங்கள் அத்தனையையும் மெல்லக் கரையச்செய்து - இனிய கலையனுபவத்தில் மனதை மிதக்க விட முடிகிறது. ஆடுதல். பாடுதல், சித்திரம் என நீளும் கலைப்பரப்பு. மரபுவழிக் கலையனுபவங்களிலிருந்து ஆக்கக்கலை அற்புதங்களென எத்தனை கோடி இன்பங்கள் -
“என் நண்பர்களே, இசை உயிர்களின் மொழி இதன் இனிமை, கேளிக்கை நிறைந்த தென்றல் காதலுடன் வெள்ளி நரம்புகளை மிட்டி விடுவது போன்றது. இசையின் ஆன்மா உயிரின் ஆன்மா இசையின் மனம், உயிரின் மனம்.
என இசையின் ஆன்மாவில் - உயிர் கலந்து பாடுவான், கலீல் ஜிப்ரான்.

என். சண்முகலிங்கன் 75
உணர்வுகளைத் தொட்டு விளையாடும் இந்த இசையின் அர்த்தங்களை மனித இதயம் புரிந்துகொள்ளும்போது எல்லையற்ற இன்பம் எமக்குள் பிரகாசிப்பதனை உணரமுடியும். இசையைப் போலவே எல்லாக் கலையனுபவங்களும். நவீன இலத்திரனியல் தொழினுட்பம் இன்று பல்வேறு கலையனுபவங்களையும் ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்பினைத் தந்திருக்கிறது. வீட்டுக்குள் வந்து, நெஞ்சோடு நெஞ்சம் கலந்து கனியும் கலை அனுபவங்கள்தான் எத்தனை.
கலைகளின் கவலை தீர்க்கும் செயன்முறையில் என்ன நடக்கிறது? நல்லதோர் இசையனுபவத்தை எடுத்துக்கொள்வோம். இசையின் சீரான கனிவு கேட்கும் உங்களின் இதயத்தை வருடும் தன்மையது. மெள்ள மெள்ள தன்வசமாக்கி, மனவெழுச்சிக் கொந்தளிப்புகளை சமநிலைக்கு கொண்டுவருகின்றது. இசையின்மூலம் உணர்ச்சி வேகங்கள் தம்மைத் தாமே மகிழ்வித்துக்கொள்கின்றன. இசை இல்லாவிட்டால் வாழ்க்கை என்பதே ஒரு பிணமாகிவிடும்' என்பான் நியட்ஸே,
LD60)LLDTfbplb (sublimation)
ஆக்க கலைகள் அத்தனையும் மனித மனங்களின் படைப்புகளே தான் என்பதனையும் இங்கு கருத்திற் கொள்ளலாம். பல சந்தர்ப்பங்களில், துன்ப அழுத்தங்களின் மடைமாற்ற செயற்பாடாக கலையாக்கம் அமைந்து விடுவதையும் கூட குறிப்பிடவேண்டும். கலையாக்கத்தின் முடிவில் கலைஞன் பெறும் இன்ப அனுபவம், சொல்லில் விளக்கமுடியாதது. இந்தக் கலைஞன் அனுபவ விளக்கு, எத்தனிை ரசிக மனங்களில் இன்ப விளக்கேற்றுகின்றது!
மாயமான்களில் மயங்குதல் வேண்டாம்!
'கலை இன்பமே நிலையின்பமாம்' என்பதில் சந்தேகமில்லைத்தான். ஆனாலும் கலையென்ற பெயரில் இன்று அதிகமதிகமாக எதிர் கொள்ளப்படும் மாயமான்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும்.
கலைவழி ஜிப்ரான் கண்ட உயிர் அனுபவம், இன்றைய வியாபாரக் கலைகளின் வழி சாத்தியமாகுமா?
இவை வெறும் கனவுகளை மட்டுமே விதைப்பன. வீடியோ சினிமா விளையாட்டுக்களாயும், வேறு பல திருகுதாளங்களாயும் போலிக்கலை

Page 41
76 சமூகமாற்றத்தில் பண்பாடு
வியாபாரங்களின் வலையில், கவலை தீர்ப்பதற்கு பதில் புதிது புதிதாய் வளரும் வாய்ப்புகளே அதிகம். உள்ளதையும் கெடுத்த கதையாய் - உண்மை வாழ்வின் யதார்த்தங்களை மறுக்கும் நிலையாய் - இழிந்த ரசனையை வளர்க்கும் நிலையாய் குறுக வைப்பன, கலைகளே அல்ல.
மனித - சமூக மேம்பாட்டுக்கான கலைகள்
கலை மனித மனத்தை மேம்படுத்துவதாக அமையவேண்டும். கலை மனித சமூகத்தை மேம்படுத்துவதாக பயன்தரவேண்டும். அத்தகு கலைகளினால் கிடைக்கினற் இன்பமே நிரந்தரமானது. நிம்மதியானது.
“ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியிணைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
என பாடுவானே பாரதி. அந்த ஆன்ம எழுச்சி உள்ள கலைஞன் அவனது எழுச்சியின் விளைவாகும் கலை, அதுவே உண்மைக் கலை அனுபவமாகும். ரோம் எரிகிறபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த மன்னவன்போல் இல்லாமல் எரியும் பிரச்சினைகளையெல்லாம் எரிக்கும் வல்லமை கொண்ட கலைஞனே எம் தேவை. இந்த விதமான நல்ல கலைகளை ஆக்கவும், பயிலவும் இன்றியமையாத திறன்களை வளர்த்திடலும் இன்றியமையாதது. * ベ
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மனித குலத்தை மகிழ்ச்சியின் உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடும் என்று நீள உரக்கச் சொல்லப்பட்டது. நம்பப்பட்டது. நடந்தது -----
ஆக்கிரமிப்பும் - அடக்குதலும் - அதற்கு துணையாகும் அறிவு அனுபவங்களுமாய் மனித மனங்களே நசுங்கி அழும். நவீனமயமாக்கம், நகரமயமாக்கம் என்ற பெயரில் மனித உறவுகள் பலியிடப்படும் துயரம் கனக்கும். துயரம் மட்டுமே தேசமெல்லாம் பெரிதாய் உற்பத்தியாகும்.
இந்நிலையில் கலைகள்கூட இந்த நிலைமைக்கு துணைபோகும். ஆனாலும் இன்னமும் நம்பிக்கைதரும் கலைஞர்களும் கலைப் படைப்புகளும் ஒளிவிடுவதையும் காணமுடியும்.

என். சண்முகலிங்கன் 77
சமூகச்சிந்தனையின் புதிய வரவாக இன்று பேசப்படும் பின் நவீனத்துவம் கூட இந்த கலை உள்ளங்களின் வழியான மனப்புரட்சி பற்றியே அதிக நம்பிக்கை கொண்டிருப்பதனை காணலாம்.
"காதலினால் மானுடர்க்கு கவலை தீரும் என்பான் பாரதி. எங்கள் பண்பாட்டுப் புலத்தில் காதலே கவலையாகிப்போகின்ற அவலம். ஆனாலும் 'கலைகளினால் மானுடர்க்கு கவலைதீரும்' என்று சொல்வது எங்களுக்கு மட்டுமல்ல; அனைத்து மானுடத்துக்குமே பொருத்தமானதல்லவா?

Page 42
14
சமூகத் துணைவளம்
உளவளத்துணையை இயல்பான சமூகச் சூழலில், சமூகத் துணையாக வளர்த்தலின் அவசியம் இன்று பெரிதும் உணரப்படும். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உளவளத்துணை சார் எழுத்துக்களிடை முக்கியத்துவம் பெற்ற இவ்வெண்ணக்கருவாக்கம், இன்று செயல்வடிவில் அதன் பயன் கனிகளைக் காணும். எமது புலங்களிலும் இச்சிந்தனை இன்று வேர் விடக் காணலாம். சமூக துணை ஏற்பாடுகள் தொடர்பான சிந்தனையைமேலும் விரிவாக்கி மீள வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
மனித உயிரியின் இருப்பும், வாழ்வும் அதன் சமூகப்புலத்தின் வழியது தனியன் நடத்தை ஆளுமை உருவாக்கம், மேம்பாடு என்பன எல்லாம் தனியனுக்கும் சமூகத்துமிடையிலான இடைவினையில் விளைவனவே. இவ்வாறே நடத்தைக் குழப்பங்கள் ஆளுமைச் சிதைவுகளும் சமூக விளைபொருட்களாகவே மனிதனைச் சேர்வன. இந்நிலையில் தனியனை சீர் செய்தல் என்பது அவன் சமூகசூழலை அவனுக்கு துணையானதாக்குதலின் வழிதானே சாத்தியமாகும். இதுவே சமூகத்துணை என்ற கருத்தியலின் அடிப்படையுமாகும்.
பரஸ்பர உதவி
சமூகத்துணை தொடர்பான கிலிலியாஸ் (Kileas) என்ற உளவளத் துணையாளரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கன, துணை சார் நிபுணர்களுக்குக் காத்திராமல் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவும், ஒருவர் பிரச்சினைத் தீர்வில் மற்றவர் பங்கு கொள்ளும் சமூகப் பரிமாற்றமே இவரது எழுத்துக்களில் மீள மீள வலியுறுத்தப்பட காணலாம்.

என். சண்முகலிங்கன் 79
தொழில் சார் நிபுணர்களைவிட நண்பர்கள் - சகபாடிகளின் உதவி உளநல மேம்பாட்டில், மீட்சியில் பெரிதும் கைகொடுக்கும் என்பது இவரின் அசையாத நம்பிக்கை.
இயல்பான சமூக துணைகளுடன், பரஸ்பர உதவிகளுக்கான குழுக்களை ஒழுங்கமைத்தல் பற்றியும் இவரின் எழுத்துக்களிடை காணலாம்.
வருமுன் காத்தல்
உள நெருக்கீடுகளுக்கான தீர்வுப் புலமாக சமூகதுணைகளை காண்பதற்கு மேலாக, ஆரம்ப காப்புக்கான சூழலாகவே அதனை கண்டு ஊக்குவிக்கவேண்டும் என்ற கருத்தியலும் இங்கு ளம் கவனத்திற் குரியதாகும். சமூகத்துணை தொடர்பான கோலன் (Golan), குறின் (Gurin) போன்றோர் எழுத்துக்களிடை இதனை ஆழத்தரிசிக்க முடியும். வருமுன் காத்தல் இவர்களின் கருத்தியல் குவிமையமாகும். தனியனின் வல்லமை போதாத போது உடன் துணையாவது, அதன் அயலில் நெருக்கமாக இருக்கக் கூடியது சமூகத்துணையே. அதனை செப்பமாகக் கையாளுமிடத்து தனிமனித நெருக்கீடுகளுக்கு வாய்ப்பே இல்லையல்லவா? என்பது இவர்கள் வாதம்.
இத்தகு பின்னணியில் தான். இன்றைய மானுடவியல், சமூகவியல், உளவியல், மருத்துவவியல், கல்வியியல், உயிரியல் போன்ற துறைகளின் கவனம் சமூகத்துணைகளின் பால் செல்கின்றதெனலாம்.
A.
ஒரு தனியனின் அனுபவ உருவாக்கத்தில் பங்கு பெறும் உறவு வலைப்பின்னல் எத்கையது?
தனிப்பட்ட உறவுகளின் வழி கிடைக்கின்ற சமூகதுணை கூறுகள் எவை?
இந்த சமூகதுணை கூறுகளை எவ்வாறு அதிகரிக்கலாம்?
என்கின்ற அடிப்படையிலேயே இன்றைய ஆய்வு ஆர்வமும் அதிகரிக்க காணலாம். தனியனின் சூழல் நிலைமைகளை விளங்குதற்கான ஒரு நுழைவாயிலாகவும் இவ்வாய்வுகளை கருதமுடியும். இதன்வழி ஏற்ற வளமான ஒரு சூழ்நிலை உருவாக்குதலே இலக்காகும்.

Page 43
80 சமூகமாற்றத்தில் பண்பாடு
சமூக துணைக் குழுக்கள்
சமூக மட்டத்தில் துணை அயல் குழுக்களை உருவாக்கல், சமுதாய உளவள பணியாளர்கள் போன்றோரின் துணையுடன் சமூகத் துணை நடவடிக்கைகளை அதிகரித்தல். உதவியாளர்களாக உள்ளூர் மக்களையே பயிற்றுதல் என செயற்பாட்டு நிலையில் சமுகதுணை நடவடிக்கைகளை உறுதி செய்யமுடியும். ஒரு விதத்தில் நவீன வாழ்விடை மனிதன் தொலைத்த விழுமியங்கள். உளசார்புகளின் மீள் தேடுதலாகவும் இதனைக் கருதமுடியும்.
மரபுவழி வாழ்வின் ஒருவருக்கொருவர் உதவும் உறவு வாழ்வும், கூட்டுக் குடும்ப அமைப்பின் உறவு நெருக்கமும் இன்று பழங்கதையாகும். சகபாடிக்கு உதவுதல், அயலவன் குரலுக்கு ஓடி துணையாதல் என்கின்ற விழுமியங்கள் எல்லாம் நகரமயமாக்கம். நவீனமயமாக்கம் என்ற பெயர்களில் தொலைந்துபோகும். அவனவன் பிரச்சினை அவனவன் சொந்தம் என்றாகும். இந்நிலையில் உளவளமும், உளவளத் துணையும், சீர் செய்தலும் கூட ஒரு சிறப்புத் தொழிலாகும். எனினும், இத்தனை மாற்றங்களையும் கடந்து, தனிமனித நலம் என்பது ஒரு சமூக உருவாக்கமே என்ற உண்மை மேலெழுந்து நிற்கக் காணலாம்.
தனியறைக்குள் உளவளத்துணையாளரோ, உளமருத்துவச் சிகிச்சையாளரோ தமது முழுத்திறமையையும் காட்டி குணமாக்கி நெருக்கீடுகளைத் தணித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சன்னதம் தொடர்கின்ற நிலமைகளை சாதாரணமாக நாம் சந்திக்கின்றோம். குடும்பசிகிச்சை முறையின் அவசியம் பற்றி நாம் உரத்துச் சிந்திக்க இத்தகைய சூழலே காரணமாகின்றன. இதன் விரிவாக்கமாகவே இன்று சமூக துணைவளம் என்ற சிந்தனை மலர்கின்றது எனலாம்.
இந்த நிலையில் சமூக மட்டத்தில் உதவக்கூடிய பண்பாட்டுக் கோலங்களை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும். சமூகத் துணை சார் செயற்பாட்டுக்கு தடையான காரணிகள் இனங்காணப்பட வேண்டும். குறிப்பாக தனிமனித நிலையில் ஒதுங்கிப்போகுதல், சமூக வெறுப்பு போன்ற நிலைமைகளின் பாதக விளைவுகளை உணருமாறு செய்தல் இன்றியமையாதது.
உள நெருக்கீடும் அது தரும் துயரங்களும் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற ஞானம் கைகூடவேண்டும். அதுவே வீட்டுக்கு வீடு துணையாதல் என்ற செயற்பாட்டிற்கு தூண்டியாதல் வேண்டும்.

என். சண்முகலிங்கன் 81
வீட்டுக்கு வீடு வாசல்படி என்றாலும் துயர அளவுகளில், நெருக்கீட்டு அளவுகளில் வேறுபாடுகள் உண்டல்லவா? பேணப்படும் துணையின் தன்மைகளிலும் வேறுபாடுகள் உண்டல்லவா? என நீங்கள் கேட்பதை உணரமுடிகிறது.
உண்மையில் பலவேளைகளில் இந்த சமூக வேறுபாடுகளே பல்வேறு நெருக்கடிகளுக்கும் காரணமாகின்ற யதார்த்தமே இங்கு உணர்த்தப் படுகின்றது எனலாம்.
இதன்வழி சமூகத்துணை குழுக்கள் என்ற நிலைமையை தாண்டி சமூக மாற்றத்துக்கான சமூக குழுக்களாக இவை பரிணமித்தலுக்கான தேவையும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும்.
இவ்விலக்கினை நோக்கி மக்கள் பங்கேற்பின் அவசியமும், சமூக மட்டத்தில் உணரப்படவேண்டும்.
1. இன்றைய உளநெருக்கடி நிலைகளை தணித்தல் 2. நாளைய மேம்பாட்டுக்கான சூழலை அமைத்தல் என்ற இரு நிலைகளில் சமூகத்துணைக் குழுக்களின் செயற்பாடுகளும் விரிவு பெறவேண்டும்.

Page 44
15
வல்லமை தாராயோ!
உதவும் மனப்பாங்கு மானுடத்தின் உயர் பண்பாகக் கருதப்படும் இந்த விழுமியத்தின் இன்றியமையாமை மனித வரலாற்றின் அனைத்து முகங்களிலும் உணரப்படும். 'உதவுதலை உணர்ந்த தனியன்கள், குழுக்கள், பண்பாடுகளே பிழைத்துக் கொள்வன என்றுகூட கம்பெல் (Campbell, 1995) என்ற சமூக உளவியலாளர் அறிவுறுத்துவார். இந்தளவிற்கு உதவுதல் தொடர்பான ஆர்வம் வேர்விட்டுள்ளது.
ஒவ்வொரு பண்பாடும், தன் மக்களை பண்பாட்டு மயப்படுத்தும் சாதனங்களை வளர்த்துள்ளது. நாட்டார் இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் என நீளும் பண்பாட்டுச் செல்வங்களிடை உதவுதல் தொடர்பான வித்துக்கள் பலவற்றினைப் பெற முடிகின்றது. சுயநலத்தின் அழிவு, தியாகத்தின் மேன்மை என்பன அனேகமான இவ்விலக்கியங்களின் கருப்பொருள்களாவன.
இந்த பண்பாட்டு இலக்கியங்களும், அவற்றின் விழுமியங்களும் சமூக நிறுவனங்களோடு இயல்பாய் இணைக்கப்படுவன. குறிப்பாக சமய நிறுவனம் தன் அற ஒழுக்க கோட்பாடுகளாகவே இவற்றை முன்வைக்கின்றன.
“உன்னைப்போல் உன் அயலானையும் நேசி"
“உனக்குமற்றவர் எதனைச் செய்ய வேண்டுமென விரும்புவாயோ, அதனையே மற்றவருக்கு செய்”
“மக்கள் சேவையே மகேசன் சேவை"
எல்லாச் சமயங்களுமே இந்த உதவுதல் என்ற எண்ணக்கருவை ஏதோ ஒரு வடிவில் அழுத்தி நிற்பனவே.
உதவுதல் சமூகச் சிந்தனையாளர்களின் கவனத்திற்கும் உரியதானது.

என். சண்முகலிங்கன் 83
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
என்பார் வள்ளுவர்.
கூடவே, அன்பின் வழிதான் நட்பும், சமூக வாழ்வும் என்றும் அழுத்திக் கூறுவர்.
கடமையாவன, தன்னைக் கட்டுதல், பிறர் துயர்தீர்த்தல்,
பிறர் நலம் வேண்டுதல்
என்பான் பாரதி
இத்தனை பண்பாட்டு மரபுகள், சிந்தனைச் செல்வங்களிடை தோய்ந்தும், மனிதரிடை உதவுதல் மனப்பாங்கு எதிர்பார்க்கப்பட்டவாறு வளர்ந்துள்ளதா..? ஆம் இல்லை என்ற இரண்டு பதில்களும் முன்வைக்கப்படலாம்.
ஆம் - எப்படிச் சாத்தியமானது?
இல்லை - ஏன் ஏற்பட்டது?
உதவுதலின் அடிப்படைகள்
உதவுதல் தொடர்பான அறிவியல் ஆர்வம் இங்குதான் பிறந்தது. சமூக உளவியல் இதனை தன் சிறப்பான கற்கைப் பொருளாக கொண்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்து வெளியான ஆரம்பகால சமூக உளவியல் நூல்களில் மக்டுகல் (McDougal) உதவுதலின் பின்னணியான அடிப்படை இயல்பூக்கங்கள், மனவெழுச்சிகள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆளுமை உளவியலாளரின் (Personality Psychologist) சிறப்பார்வத்துறையாக, இத்துறையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உளவியலாளர்களோடு கூடவே மானுடவியலாளர்கள். சமூகவியலாளர்கள். அரசறிவியலாளர்கள். பொருளியலாளர்கள் என அனைத்து சமூக விஞ்ஞான அறிஞரிடையேயும் இந்த கருத்தாக்கம் தொடர்பான தேடல் விரிவானது.
உதவுதல்' என்ற பதத்தை வரையறுப்பதற்கே உதவி தேவையானது. உதவுதல் என்பதன் சார்பளவான தன்மை, அதனை வரையறுப்பதில் சிரமம் தந்தது.
உதவும் நிலைமைகளை வகுத்து பகுப்பாய்வு செய்வதன் இன்றியமையாமை உணரப்பட்டது.

Page 45
84 சமூகமாற்றத்தில் பண்பாடு
அவசரநிலை
உதவி மறை முகமான
உதவி
திட்டமிட்ட நியமமான இயல்பாய் தங்குதடையின்றி
உதவுதல் நியமமற்ற உதவுதல்
நேரடியான
உதவி அவசரமற்ற உதவி
இந்த வகையான ஆய்வுகளின் சாரமாக, பியர்ஸ் & அமாற்றோ (Pearce & Amato) வின் வகைப்பாடு சில தெளிவுகளைத் தருகின்றது.
உதவிகளுக்குள் வகைகள் அளவு ரீதியாக, தன்மை ரீதியாக, சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப என உதவுதலின் அர்த்தமும் விரிவு பெறுகின்றது.
எப்படியோ, "ஒருவர் இன்னொருவர் துணையால் முன்னிருந்த நிலைமையை விட மேம்பட்ட ஒரு நிலையை அடையும்போது அங்கு உதவுதல் நிகழ்ந்தது"
என்ற ஒரு வரைவிலக்கணத்தை மட்டும் எம்மால் வகுக்க முடிகிறது. அதற்கு அப்பால் சூழல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டே உதவுதலின் ஆழ அகலங்களை தரிசிக்க வேண்டியுள்ளது.
தற்கொடை மனப்பாங்கு
உதவுதலுடன் இசைந்த மிக முக்கியமானதொரு எண்ணக்கரு - பொது நலனுக்காக தன் நலன் தரும் தற்கொடை (Altruism). இந்த எண்ணக்கருத்துடன் இணைத்து நோக்கும்போதே சமூக பயனான உதவு தலின் அர்த்தமும் ஆழமும் எமக்குத் தெளிவாகும்.
இந்த தற்கொடை மனோபாவம் பிறர் நிலையை தன்னதாக உணர் தலின் வழி விளைவது empty என்ற ஆங்கில பதத்தினால் உணர்த்தப்படும்.

என். சண்முகலிங்கன் 85
இந்த உணர்வு ஒன்றிய நிலை விளைகின்றபோதே, இயல்பான தங்குதடையற்ற உதவுதல் மனப்பாங்கும் வளர்கின்றது.
தனிப்பட்ட உறவுகள், குழுக்களிடையிலான பரஸ்பர உதவிகள், பல சந்தர்ப்பங்களில் எதிர்பார்ப்புகளுடன் கூடியவை, நான் இன்று தருகிறேன். நீ நாளை தரவேண்டும்' என்கின்ற ரீதியிலான பரிமாற்றங்களாகவே அவற்றில் பெரும்பான்மையானவை அமைந்து விடுகின்றன.
ஆனால் சமூக ரீதியான உதவுதல், கைமாறு கருதாதது. உதவுதலின் வழியாக உதவி பெறுபவர் மேன்மை கண்டு மகிழ்தல் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.
சமூக ரீதியிலான இந்த உதவும் மனப்பாங்கின் தேவை இன்று எங்கள் பண்பாட்டுப் புலங்களிடை சர்வவியாபகமாய் விளங்குகிற்து.
ஒருவேளை உணவுக்கும் வழியில்லாத பொருளாதார நிலைமை களிலிருந்து, ஒரு ஆறுதல் வார்த்தை தானும் சொல்ல ஆளில்லை எனும் உணர்வுத் தேவைகள் வரை விரியும்.
தனி மனிதர்களிலிருந்து, குழுக்கள், பண்பாடுகள், தேசங்கள் வரை இத்தகைய தேவையின் குரல்கள்.
உதவி பெறும் நாடுகள். உதவும் நாடுகள் என்று நாடுகளுக்குள்ளேயே உதவுதல் அடிப்படையில் இன்று வகுப்புகள்.
இந்த உதவுதல் உபத்திரவமாகும் ஒரு நிலையிருக்கிறதே. அதுபற்றிய விழிப்புணர்வும் இங்கு கவனத்திற்கொள்ளப்படுவது அவசியமாகும். உதவுதல் என்ற பெயரில் ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடல், அடிமைப்படுத்தல் என்ற நிலை தனி மனித உறவுகளிலிருந்து சமூக தேச உறவுகள் வரை இன்று எதிர்கொள்ளப்படும் ஓர் ஆபத்து நிலைமையாகும்.
இந் நிலையில்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உதவுதலுக்கு பதிலாக தமது தேவைகளை தாமாகவே பூர்த்திசெய்யும் வல்லமையை பெற துணையாதலே சிறந்தது எனப்படுகின்றது.
Empowerment எனப்படும் இந்த வல்லமையை அனைவருக்கும் தருகின்ற பணியே இன்றைய சமூக பணியமைப்புக்களின் முதற்பணியாதல் வேண்டும். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்த வல்லமை சேர வழிவகைகள் காணப்படுவதும் இன்றியமையாதது.

Page 46
16 கால மாற்றத்தில் குடும்பம்
மனித வாழ்வின் தொடக்க காலமுதல், உலகின் பண்பாடுகள் அனைத்திலும் இன்றியமையாத சமூக நிறுவனமாக குடும்பம் விளங்கி வரக் காணலாம். சமூகத்தின் அடிப்படை அலகாக, ஒரு தனியனின் இருப்பிலும், உருவாக்கத்திலும் பெருஞ் செல்வாக்குச் செலுத்தும் அமைப்பாக குடும்பம் சிறப்பிடம் பெறுகிறது. மனித உயிரியின் உடல், உள, வாழ்வியல் தேவைகளை வழங்குகின்ற தன்மையினால் உலக பண்பாடுகளிலெல்லாம் நிலவும் தனித்துவப் பண்பினைப் பெறுகின்றது.
நவீன வாழ்வில், சமூக மாற்றங்களிடை குடும்பம்' என்ற சமூக நிறுவனம் காணும் மாற்றங்களை, அவற்றின் விளைவுகளை இன்றைய சமூகவியல் ஆய்வுகள் வெளிக்காட்டும்.
அதேவேளை புராதன பண்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மானுடவியல் ஆய்வுகள் குடும்ப நிறுவனத்தின் தோற்ற நிலைமைகளைத் தேடிக் காணும்.
இந்தச் சமூக மானுடவியல் ஆய்வு அறிவுகளுடன், எமது அனுபவங்களையும் இணைத்து குடும்ப நிறுவனத்தின் இன்றியமையாத பண்புகளை சிந்திப்பதன் மூலம் எங்கள் சமூக வாழ்வின் அர்த்தங்களை மேலும் அதிகமாக்க முடியும்.
குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி நிலைமைகளின் பின்னணியில் பல காரணிகள் இனங்காணப்படும்.
பாலியல் உறவிலிருந்து பொருளாதார அலகாகும் இணைவு வரை
பல நோக்கங்கள் பண்பாட்டுக்குப் பண்பாடு இந்த உறவு - இணைவு நியதிகளில், விதிகளில் மாற்றங்கள்.

என். சண்முகலிங்கன் 87
என்றாலும் கணவன் - மனைவி - பிள்ளைகள் - சகோதரர்கள் என விரியும் உறவுப்பிணைப்பால் ஓர் அலகாக குடும்ப இணைவும் அதன் பயன்களும் உலகெங்கணும் உணரப்படும்.
நவீன பண்பாடுகளில், இன்று பெருவழக்காகியுள்ள கணவன் - மனைவி - பிள்ளைகள் என்ற உறுப்பினர்களுக்குள் மட்டுப்படும் குடும்பவகையினை தனிக்குடும்பம் அல்லது மூலக்குடும்பம் (nuclear family) என குறிப்பிடுகின்றோம்.
மூலக்குடும்பத்தின் மூலவர்களாக பெற்றோர்களின் பெற்றோர்களை - அவர்களின் உடன் பிறப்புகளை உள்ளடக்கிய குடும்ப வகையினை கூட்டு குடும்பம் (joint family) என்கின்றோம்.
மேலைமயமாக்க அலைகளின் தாக்கம் வரை, எங்கள் பண்பாட்டுப் புலம் கூட்டுக் குடும்ப வகையின் பயனான கனிகளை நிறையக் கண்டதும், இன்றைய மாற்றங்களிடை இந்த அமைப்பு இழக்கப்படுவதும் குடும்பம் பற்றிய எங்கள் சிந்தனையின் முதல் கருப்பொருளாகலாம்.
குடும்பம் என்ற சமூக நிறுவனம் பண்பாட்டு வேறுபாடுகளினடியாகவும், சமூக மாற்றங்களின் விளைவாகவும் காணும் மாற்றங்களை மதிப்பிடவும். எங்கள் பண்பாட்டு புலத்தில் இந் நிறுவனத்தின் உச்ச பயன்களைக் காணவும் இது துணையாகும்.
குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? கால மாற்றத்தில் அது இல்லாதுபோய்விடும் என்ற கடந்தகால முன்மொழிவுகளைப் பொய்யாக்கி தானே ஒரு சிறு உலகாய் - சமூகத்தின் அடிப்படை அலகாய் குடும்பம் நிலைபெறக் காணலாம்.
குடும்ப அமைப்புச் சரியாக செயற்படாவிட்டால் ஒரு நாகரிகத்தின் பிழைப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். குடும்பத்தை உருவாக்குதல் என்பது மனித இயற்கை அல்லது இயல்பூக்கத்தின் வழியது என்ற கருத்துநிலை இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையா இருக்கின்றது. குடும்பம் தொடர்பான அனைத்து தரிசனங்களுமே மனித இயற்கை - சமூகம் என்ற இந்த இரண்டு அடிப்படைகளையுமே மையமாகக் கொண்டு அமையக்காணலாம்.
தனி மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதில், ஒரு குழந்தையின் ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் அவசியத்தை உளவியலாளர்களும்,

Page 47
88 சமூகமாற்றத்தில் பண்பாடு
உள மருத்துவர்களும் எழுதிநிற்கின்றனர். சமுகவியலாளர்களோ பரந்த சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக குடும்பத்தின் இயல்பினை ஆராய்கின்றனர்.
சமூகத்தின் நிலையான கூறுகளின் இயல்பான ஒருங்கிணைப்பாக காணும் அமைப்பியல் - செயற்பாட்டியல் (structural - functional) கோட்பாட்டினர் சமூகத்தின் நிலைபேற்றிற்கும் சுமுகமான இயக்கத்திற்கும் குடும்ப நிறுவனத்தின் ஒழுங்கமைப்பை வலியுறுத்துகின்றனர். சமூக வாழ்வின் முரண்நிலை யதார்த்தத்தை இந்த செயற்பாட்டியல்வாதிகள் கவனிக்கத் தவறிவிட்டமையை சமூக முரண்பாட்டு (social conflict) கோட்பாட்டாளர்கள் சுட்டுவதுடன் இந்த முரண்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புகளின் ஆர்வங்களையே குடும்பம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களும் சார்ந்துள்ளன என்றும் விளக்கினார்கள். இதற்காக குடும்ப நிறுவனத்தை இல்லாதொழித்திட புரட்சி சிந்தனையாளர்கள் விரும்பியதும் உண்மைதான். எனினும் இதற்கான பிரதியீடும் சகோதரத்துவம் (brotherhood / sisterhood) எனும் குடும்ப உறவின் வழியான மனித உணர்வுத் தடத்தில்தான் அமைந்திருந்தன என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபோலவே மனித இயல்பூக்கங்களை - மனவெழுச்சி நிலைகளை கட்டுப்படுத்துகின்றது எனும் உளப்பகுப்பாய்வாளர்களின் வாதங்களும் சமூகமயமாக்கம் பற்றிய உளவியலாளர்களின் கருத்துக்களினாலேயே மறுதலிக்கப்படக்கூடியன.
இந்த ஆய்வுகள் - விளக்கங்கள் - விமர்சனங்களையெல்லாம் கடந்து குடும்ப நிறுவன்ம் தனது அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. சமூக மாற்றங்களிடை அடிப்படையான பொருளாதார உற்பத்தி முறைமைகளின் மாற்றத்தின்போது தவிர்க்க முடியாதபடி குடும்ப நிறுவனமும் தன்னில் மாற்றங்களை எதிர் நோக்கியபோதும், இவற்றுள் தன்னிலை அழிந்து போகாமல் நிமிருதற்கான வழிவகைகளையும் அது தேடிக்கொள்கின்றது. தனது இந்தத் தேடலின்போது கடந்த காலத்து குடும்பம் தொடர்பான தரிசனங்களிலிருந்து பொருத்தமான அனுபவங்களைப் பயன்படுத்துகின்றது.
குடும்ப நிறுவனம் எதிர் கொண்ட மாற்றங்களை விளக்குதலில் இங்கே தரப்படும் வகைப்பாடு துணையாகலாம். இம்மாற்றங்களிடை முதல் நிலைக் குழுவான குடும்ப உறுப்பினர்களிடையான உறவு நெருக்கம் தளர்வு

என். சண்முகலிங்கன் 89
காண்பதும், உறுப்பினர்கள் மீதான சமூக நியமங்கள் நெறிமுறைகளின் அழுத்தம் பலவீனப்படுவதும் சிறப்பான கவனம் பெற வேண்டியன.
புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், மேலை மயமாக்கம் (westernization), புதிய பண்பாடுகளை நோக்கிய அசைவு என்பவற்றிடை நியமமறு நிலைகளுக்கு தனி உறுப்பினர்கள் உள்ளாவதும், எதிர்கொள்ளும் பண்பாட்டு முரண் நிலைகளை விளக்க முடியாமல் உடைந்து போவதும், உளநோய் வசமாவதும் குடும்பம் பற்றிய இன்றைய விழிப்புணர்வின்
அடிப்படைகளாவன.
குடும்பம் தொடர்பான எங்கள் பணிகளோ இன்னும் அதிகமானவை:
அவசரமானவை.
மரபுவழிச் சமூக அமைப்பிலும், நவீன சமூகங்களிலும் குடும்பத்தின் வடிவம் - செயற்பாடு - கருத்துநிலை என்பன எவ்வாறு வேறுபட்டுக் காணப்படுகின்றன என்பதனை பின்வரும் அட்டவணை வழி குடும்பம் பற்றிய ஆய்வாளர்கள் வகைப்படுத்திக் காட்டுகின்றார்கள்.
மரபுவழிச் சமூகங்களில்
நவீன சமூகங்களில்
1. உறவுநிலையானது சமூகத்தி னடியாகவே அமைகின்றது. ஒருவரின் அனைத்து செயற்பாடு களுமே ஓர் உறவுக் குழுவின் உறுப்பினர் என்ற வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன
2. மகன் தந்தையின் அந்தஸ்தை யும் தொழிலையும் பிறப்புரிமை யாக எய்துகின்றான். 3. புவிசார் - சமூக அசைவு குறைவானது.
4. கூட்டுக்குடும்பமே அடிப்படை அலகாக அமைகிறது.
உறவுநிலையானது பொருளாதார, அரசியல், சமூகவாழ்வினின்றும் தனித்ததாக அமைகின்றது. ஒருவரின் தொழில் தேர்வானது அவரது உறவு நிலைகளுக்கு புறம்பாக நிகழ்கின்றது. சமூக அசைவு திறமையின் அடிப்படையில் அமைகின்றது.
அதிகளவு புவியார் - சமூக அசைவு நிகழ்கிறது.
தொழில் வீட்டிற்கு வெளியே நிகழ்கிறது. வீடு, உற்பத்திக்கு பதில் நுகர்வினையே மேற்
கொள்ளுகிறது.

Page 48
9 O சமூகமாற்றத்தில் பண்பாடு
5. பெரும்பாலான உறுப்பினரின் தனிக் குடும்பமே அடிப்படை தொழில் மையமாய் வீடே அலகாகின்றது. அமைகிறது. வீடே பள்ளிக் கூடமாய், வைத்தியசாலையாக,
முதியோர் இல்லமாய் விளங்கு
கின்றது. 6. பிள்ளைகள் மீது பெற்றோரின் சார்பளவில் சமத்துவமான ஆதிக்கமும், பெண்கள் மீது இலக்குகளும் நடைமுறைகளும ஆண்களின் ஆதிக்க மும் எதிர்பார்க்கப்படுகின்றன. செலுத்தப்படுகிறது.
7. உறவு நிலைப் பிணைப்பானது தனிமனித முன்னேற்றத்தையோ, தனிமனித திறன்களுக்கேற்ப பொருளாதார நலன்களையோ உறவு நயங்களை மட்டுப்படுத்தி, பொது நிலை கடப்பாடுகள் குடும்ப நலனையே அழுத்து l கட்டுப்படுத்துவதில்லை.
கின்றது. 8. கடமை, மரபு அதிகாரத்திற்கு தனிமனிதர் உரிமைகள், சமத்து வம், தனிமனிதர் அடங்கிப்போதல், சுதந்திரம், சுயதிறனியலை எய்தல். விதியென்று வாழாவிருத்தல்.
9. வீட்டுக்கும் சமுதாயத்திற்கு | வீட்டிற்கும் வெளிஉலகிற்கு மிடையில் மிகச்சிறிய வேறு பாடே மிடையில் தெளிவான வரையறை காணப்படும். பெருமளவி லான யுண்டு வெளியுலகம் புறவய நிறுவனங்கள் இல்லை. மானது. போட்டியனாது; அச்
சுறுத்துவது.
எங்களைப் பொறுத்தவரையில் நல்ல குடும்ப வகை எது? என காண்பதும், நமக்கு பொருத்தமானது எது என முடிவு செய்வதும், எங்கள் விழுமியங்களுக்கு ஏற்ப எங்கள் சமூக அமைப்பில் - நாங்கள் காண விரும்பும் சமூக அமைப்பின் வழியேதான் தீர்மானிக்கப்பட வேண்டியன. பண்பாட்டின் தனித்துவம் துலங்கும் அதே வேளையில், கடந்தகால அனுபவங்களினடியாக குடும்ப நிறுவனத்தில் காண விழைகின்ற மாற்றங்களையும் இயல்பாய் இணைத்து, எமது குடும்பத்தை சிறப்பாக அமைத்தல் வேண்டும். குடும்பம் தொடர்பான இன்றைய ஆய்வு அனுபவங்களும் இதனையே உணர்த்தி நிற்கின்றன.
எங்கள் குடும்ப அமைப்பிலே குடும்ப உறுப்பினர்களிடையே பால் ரீதியான அடக்குமுறை பேதங்களை முற்றாக நிராகரித்து, பரஸ்பர

என். சண்முகலிங்கன் 91
அன்புறவாக குடும்பம் அமைதலை உறுதிசெய்வதுடன், மரபுவழி குடும்ப அமைப்பில் கூட்டுக் குடும்ப வாழ்வில் நாம் கண்ட பயன்களை மீட்டெடுக்கும் விதமாக எங்கள் குடும்ப வடிவினை புதுக்கிட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்ப உருவாக்கத்திலேயே நாம் இடறிக் கொள்ளும், குடும்பத்தின் அடிப்படைகளையே தகர்த்து நிற்கின்ற "சீதனம் என்ற வழக்கத்தை ஒழித்தே ஆகவேண்டும்.
உருவாகப் போகின்ற குடும்பத்திற்காக உருக்குலைகின்ற குடும்பங்கள், உருவாக்கும் பணம் தேடி அலைகின்ற பயணங்கள், போகிற போக்கில் நம் விழுமியங்களைத் தொலைத்து விடுகின்ற அவலங்கள், ஈற்றில் 'குடும்பம்' என்ற எலும்புக் கூண்டை அமைத்துவிட்டாலும் அதிலே உயிர் இல்லாது போய்விடும் முடிவுகள் எனத் தொடரும் துயரங்களுக்குப் பின்னால், இந்த சீதனம் போன்று எம் தேசத்து வழமைகள் அமைதலை நாம் உணர்ந்து அழிக்காதவரை, குடும்பத்தின் இனிய கனிகள் எல்லோர்க்கும் கிட்டுவதில்லை.

Page 49
இணைப்பு - 1
ஈழத்தில் இசையும் சமூகமாற்றமும்
anaw )ேn.இnr 0ി) മഞ്ഞ, مه و / ه وی هرک
1
பண்பாட்டின் தனித்துவத்தில் இசையின் இன்றியமையாத இடம் இன்று பெரிதும் உணரப்படும். தனித்துவ வெளிப்பாடாக மட்டுமன்றி, சமூக மாற்றத்துக்கான கருவியாகவும் இசை பயன்படுவது.
இசையின் சமூகவியல் (Sociology of music), இசையின் மானுடவியல் (Anthropology of music), 96015 (5(gLD 960&uSugi) (Ethno musicology) எனக் கிளைவிடும் இசைசார் சமூக அறிவியல் துறைகளின் வழி, இசைக்கும் சமூகத்துக்குமான உறவின் பரிமாணங்கள் இன்று தெளிவு பெறும். இந்த அறிவியல் பின்னணியில் ஈழத்து இசை மரபுகளைப் பகுப்பாய்வு செய்வதுடன், எதிர்கால மாற்றத்துக்கான திசையினை இனங்காண்பதும் இவ்வாய்வுத் தேடலின் இலக்குகளாகும். இந்த வகையில் தூய இசையியல் (Pure musicology), S.JGuJT596)5uSlu6ò (Applied musicology) géluU95 உறுகளையும் இவ்வாய்வு உள்ளடக்கியதாய் அமையும்.
ஈழத்து இசை என்பது, இவ்வாய்வில் நாட்டார் இசை, தமிழிசை ! கர்நாடக இசை, ஆக்க இசை (creative music) ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய எண்ணக்கருவாக்கமாகவே கொள்ளப்படுகின்றது.
ஈழத்து இசை-சமூக வரலாறு தொடர்பாகக் கிடைக்கின்ற ஆதாரங்கள். அவ்வப்போது ஆய்வுக் களங்களிடை பெறப்பட்ட தரவுகள் ஆய்வாளனாக மட்டுமன்றி. ஓர் ஆக்க இசைக்கலைஞனாகக் கண்ட அனுபவங்களும் இவ்வாய்வுத் தேடலின் ஆதாரங்களாகின்றன.

என். சண்முகலிங்கன் 93
பொது மனிதர் பார்வையில் மட்டுமன்றி, ஈழத்து இசைத்துறையினர், இசைபற்றிப் பேசும் அறிவுஜீவிகளிடத்தும் கூட இசைபற்றிய முழுதளாவிய பார்வை இல்லையெனலாம். யாதேனும் ஒரு துறையை அழுத்துவதாகவே இவர்களின் பேச்சும் எழுத்தும் செயலும் அமைவது அனுபவம். பெரும்பாலும் சாஸ்திரிய சங்கீதமே சங்கீதம், ஏனையவை எளிமையானவை அல்லது எளியவை என்ற எண்ணக்கருவாக்கமே ஆதிக்கம் செலுத்துவது எனலாம். இசை முழுமை பற்றிய கருத்து நிலை கொண்டவர்களே இல்லையென்பது இதன் பொருள் அல்ல. இத்தகு முழுமைக்குரல்கள் பலமாய், கேட்கப்படுவதாய், நிலைநாட்டப்படுவதாய் ஒலித்ததில்லை என்ற அர்த்தத்திலேயே கூறப்பட்டது.
1974-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் போதான, "இலங்கைக்கான இசைமரபினை உருவாக்குதல்" (Maheswaran, 1974) என்ற முன்வைப்பிடை இந்த முழுமையை நோக்கிய தேடலின் அடிப்படைகள் தெரிந்ததுண்டு. ஆயினும் அது ஒரு கருத்துநிலையாக வளர்க்கப்படவில்லை. ஆங்காங்கே தனி, குழுநிலை முயற்சிகளாய், சில கலையாக்க முயற்சிகள் நடந்ததுண்டு. எனினும் தொடர்ச்சியானதோர் இசையியக்கமாக இவை வளர முடியவில்லை. இதன் யதார்த்தத்தை மறுத்த அதே வேளையில், இக்கருத்து நிலையினடியாக இயங்கியவர்களையும்கூட ஈழத்தின் சமூக அரசியல் வரலாறு சிதறடித்த தெனலாம்.
2
ஈழத்து கலையியல் - இசை வரலாறு எழுதாமறை எனினும் வரலாற்று அவதானங்களிடை முக்கிய மாற்றங்களை இனங்காண முடியும். ஒழுங்கான ஆய்வுகள், பதிவுகள் இல்லாத நிலையில் இம்மாற்ற மையங்களின் சரியான காலங்களைச் சுட்ட முடியாது போனாலும் பிரதான தன்மை மாற்றப் பகுதிகளைக் குறிப்பிட முடியும்.
அந்நிய ஆதிக்க எதிர்ப்பில், வலிமையான ஆயுதமாக பண்பாட்டுச் சின்னங்களைத் தேடிய காலத்தேவையில் முன்னணிக்கு வந்தது கர்நாடக இசை என்பது, இந்திய இசை வரலாற்றில் புலப்படும். பின்னாலே கர்நாடக / சாஸ்திரிய இசையினுள்ளும் தமிழர் தனித்துவத்துக்கான போராட்டமாய் தமிழிசை இயக்கம் எழுந்தமை, தமிழ்நாட்டு வரலாற்றில் தெரியவரும். இந்தத் தமிழிசையின் மூல வேர்களை, பண்ணிசையில் ஆய்ந்துணர்த்திய தமிழ்நாட்டு, ஈழநாட்டு முயற்சிகளும் இன்று வரலாறாகிப் போகும்.

Page 50
94 சமூகமாற்றத்தில் பண்பாடு
ஈழத்தைப் பொறுத்தவரையில் சாஸ்திரிய இசைமரபான கர்நாடக சங்கீதத்தின் வரவு. பெரும்பாலான பண்பாட்டு அம்சங்களைப் போலவே, இந்திய பண்பாட்டு புலத்தின் செல்வாக்கின் வழியதுதான். ஈழத்தில் இந்த இசைமரபின் வேர்களை ஆலயங்களை மையமாகக் கொண்ட இசைவேளாளர்களிடை காணமுடிகிறது. நாதஸ்வரம், தவில் என்பவற்றின் வழியான பண்பாட்டுச் சேவகமாக, குலத்தொழிலாகவே தொடக்கப் புள்ளியமைதலை இனங்காண முடிகிறது. சேவகமாய், குலத்தொழிலாய் கருதப்பட்ட இசை மகிழ்ச்சிக்குரியதாக சமூகத்தின் 'உயர் மட்டங்களால் கருதப்பட்ட போதிலும், ஆரம்ப காலத்து தொழில் உரிய மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. இந்திய தேசிய எழுச்சியில், தேடலில் முதன்மைகண்ட இசையியல் அலைகள் ஈழத்தையும் தொட்டவேளை எதிர்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நிலைகள் இதற்கான ஆதாரங்களாய் பதிவு பெறுவன.
அந்நாட்களில் தன் மகளின் வீணை அரங்கேற்றம் ஒன்றின்போது தந்தையொருவர் எதிர்கொண்ட கண்டனத் தந்திகள் பற்றிய பதிவுகள் இவ்விடயம் தொடர்பாக இன்றும் பேசப்படும். எனினும் காலப்போக்கில் இசைப்பயில்வு என்பது முக்கியமானதோர் பண்பாட்டுப் பெறுமதியாகும். சமூக நியமங்களின் உருவாக்கத்தில் முக்கிய இடம் பெறும் மத்திய தர வகுப்பு, அந்தஸ்துச் சின்னமாக கர்நாடக இசைப் பயில் வையும், அரங்கேற்றங்களையும் மேற்கொண்ட பின்னணியிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்ததெனலாம். இந்த மாற்றத்தின் வழி, கர்நாடக சங்கீதத்தில் குறிப்பாக வாய்ப்பாட்டில் திறமையுடைய சில ஆளுமைகளை காண முடிந்தபோதும் தஞ்சாவூர் போன்ற பண்பாட்டுப் புலங்களிடை நெஞ்சோடு கலந்த உணர்வு பூர்வமான ஓர் இசைமரபாக வளர முடியாமற் போனமை பற்றிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் கருத்து இங்கு கவனத்திற்குரியதாகலாம். எனினும் தஞ்சாவூர் புலம்போல. தமிழ்நாட்டின் சாதிய அடுக்கமைவுகளுடன் சார்ந்ததாக உயர்சாதி வட்டத்துள் இசைப்பயில்வு பெரிதும் கட்டப்பட்ட நிலைமை ஈழத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய வட்டங்களைத் தாண்டி இசைப்பயில்வும், ஈடுபாடும் இங்கு அனைத்து மட்டங்களுக்கும் சொந்தமானமை தனித்துவமான கவனத்திற்குரியதாகும். ஈழத்து வாய்த்த இசை ஆளுமைகள் தொடர்பான ஒரு நுண் ஆய்வு வழி இதனை உறுதி செய்ய முடியும். இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழக இராமநாதன் நுண் கலைக்கழக இசைத் துறையின் விருத்தியுடன் இசைப்பயில்வின் பரவலாக்கம் மேலும் விருத்திகாண்பதனையும் ஈண்டு குறிப்பிடலாம்.

என். சண்முகலிங்கன் 95
இசைப்பயில்வு என்பது பரவலாக்கப்பட்டபோதும் இசைதொடர்பான முழுதளாவிய நோக்கு பெரிதும் வளரவில்லையென்றே சொல்லவேண்டும். கர்நாடக இசைப்பயில்வு என்பது அந்தஸ்தின் சின்னமாகமட்டுமன்றி, தொழில் வாய்ப்புக்கான வழி முறையாகவும் மாறியபோது சற்றும் நெகிழ்ச்சியில்லாத ஒருவழிக் கலைத்திட்ட நோக்கே மிகுதியானது. பெருமளவில் தமிழ்நாட்டு இசைக்கல்லூரிகளின் கலைத்திட்டக் கருத்தியலே இங்கும் பிரதியானதெனலாம். இந்த வகையில் தமிழ்நாட்டு இசையுலக பிரச்னைகள் ஈழத்திலும் உணரப்படுவது தவிர்க்க முடியாததாகியது.
கர்நாடக இசை, தியாகையர் உள்ளிட்ட அதன் முழுமைகளின் வழி கண்ட செந்நெறிக் கலை உயர்வால் முதன்மை பெறுவது இயல்பானது. எனினும் இது எந்த வகையிலும் தமிழிசையை அல்லது தமிழிசையின் மூலமென ஆய்வாளரினால் காணப்பட்ட பண்ணிசையைத் தள்ளுவதாய் அமைய வேண்டியதில்லை. இந்நிலையில் ஈழத்து இசை மதிப்பீடுகளை விளங்கிக் கொள்வதில் கலையியல் பெறுமதிக்கு மேல் சமூக உளவியல் காரணிகளே முன்னிலை வகிப்பதனைக் காணலாம். எழுபதுகள் வரையிலான தமிழிசை உச்சமாகக் கருதப்பட்ட இசைப்புலவர் என். சண்முகரத்தினம், பின்னாலே இன்றுவரை உச்சமாக உணரப்படும் சங்கீத வித்துவான் ஏ.கே. கருணாகரன் ஆகிய இரு ஆளுமைகளையும் நுணுக நோக்குகையில், ஈழத்து இசையுலகின் மதிப்பீட்டு மையங்களாய் இவர்கள் விளங்கியமை புலப்படும். முன்னையவர் தன் தமிழிசை ஆற்றல்வழி நிலைநாட்டிய தமிழிசை முக்கியத்துவம். பின்னையவரின் கலையியல் பயிற்சி வல்லமையால் தெலுங்கு உருப்படிகளை முதன்மைக்குத் தள்ளும் ஒரு மதிப்பீட்டு உருவாக்கமாக மாறுவதையும். பின்னாலே தமிழ்நாடுபோல வெளித்தெரியாத ஆனால் உள்ளே கனன்று கொண்டிருக்கும் இரு இயக்கங்களாக இவை கூறுபடுவதையும் காணலாம்.
கர்நாடக இசைப் புலமை என்பது ஏனைய இசைக் கூறுகளைப் புறம் தள்ளுகின்றதாய் அமைகின்றமையும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். தமிழிசை மூலமென்றும் பண்பாட்டின் வேரென்றும், முதன்மைப் படுத்தப்படும் பண்ணிசைக் கூறுகளை கர்நாடக இசைக் கலைத்திட்டத்தில் இணைக்கும் அண்மைய முயற்சியின்போது ஈழத்து உயர்கலை நிறுவனமொன்றில் எதிர்கொண்ட பிரச்சினைகள் இம்மனப்பாங்கிற்கு சிறப்பான எடுத்துக்காட்டாகலாம். இந்தப் பிரச்சினை தொடர்பான ஒரு நுண் ஆய்வில் நிலைமையை விளங்குதலில் எம்.என். பூரீநிவாஸின்

Page 51
96 சமூகமாற்றத்தில் பண்பாடு
சம்ஸ்கிருதமயமாக்க கோட்பாடு பெரிதும் துணையானமையும் இங்கு குறிப்பான கவனத்திற்குரியதாகும். இவ்வாறே கர்நாடக இசைத் தூய்மைவாதத்தினடியாக ஆக்க இசை ஈடுபாட்டினைத் தவிர்க்கும் மனோபாவமும் ஈழத்து அனுபவமாகும். ஒருவிதத்தில் இவர்களின் குறுகிய நோக்குமட்டுமன்றி, கலையியல் வல்லமையின்மையும் கூட இந்நிலைக்கான காரணமாக உணரப்படலாம். இந்திய இசைப்புலத்து டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ், டாக்டர் எல். சங்கர், சித்தார் மேதை ரவிசங்கர் என நீளும் உயர்கலை ஆளுமைகளின் ஆக்க இசைப் பின்னணியில் நோக்கும்போது இங்குள்ளவர்களின் பலவீனம் தெளிவாகலாம்.
இத்தகு பலவீனத்தின் அடிப்படையாக அமைவது. இன்றைய இசைக்கல்வி பயில் முறை என்பதனையும் எளிதாய் உய்த்துணர முடியும். கர்நாடக இசையின் தனித்துவமான மனோதர்மமே இங்கு மனன பாடமாகியுள்ள நிலைமை, ஈழத்து இசை நிறுவனமொன்றின் ஆசிரிய அனுபவமாய் வெளிப்படும் (ஜெகதாம்பிகை, 1989), வெறும் பயில்வு திறன் எவரையும் வித்துவான். வித்துவாசினி ஆக்கிவிடுவதில்லை. வித்தை பற்றிய ஆழமான அறிவும் வேண்டும் என ஈழத்து நுண்கலைக் கழக மாணவர் சஞ்சிகை யொன்றிற்கு அதன் தலைவர் தந்த ஆசிச் செய்தியே (சிவத்தம்பி, 1989) நிலவும் நுண்கலைக் கல்வியை அளக்கப் போதுமானது.
கிடைக்கின்ற பயிற்சியைக் கூட, உள்வாங்கும் திறன், ஈடுபாடு என்பன, இன்றைய இசைசார் மதிப்பீட்டு மாற்றங்களிடை முழுமை பெற முடியாமல் போவதும் இங்கே கருத்திற்குரியதாகும். மத்திய வகுப்பினைச் சேர்ந்த பெண் ஒருத்தி, உயர் வகுப்பிலிருந்து கணவனைப் பெறும் வாய்ப்பினை அதிகரிக்கும் ஒருவழிமுறையாக இந்திய இசையியல் ஆய்வுகளிடை வெளிப்பட்ட அவதானங்களை (Joshi, 1982), ஈழத்திலும் காணமுடியும் (சண்முகலிங்கன் 1988) இன்றைய மாறும் திருமண எதிர்பார்ப்புக்களிடை இந்தப் பெறுமதிகூட இழக்கப்படும். இன்று அரசு அங்கீகாரம் பெற்ற பட்டதாரிச் சம்பளம் தரும் படிப்பாக - தொழிற் கல்வியாக இசை ஆகியுள்ளது. பாரம்பரிய இசைப் புலத்துத் தோன்றிய ஈழத்தின் கவிதா ஆளுமையாகிய மகாகவி, இன்றைய இசைப்பயில் நெறிகளை இப்படியே தொடர்வதாயின் தொழில்நுட்ப கல்லூரிக்கே மாற்றிவிடலாம் என ஒருதடவை நேர்முகமாக கூறியவை இங்கு நினைவுப் பதிவாகும். கூடவே இங்குள்ள இசைப்பயில்வு நிறுவமைப்புக்களில் அனுமதி பெறும் அனைத்து மாணவர்களுமே உரிய உளச்சார்பு - ஆர்வம்

என் சண்முகலிங்கன் 97
கொண்டவர்களாக அமையாமையும் கள ஆய்வுத்தரவுகளால் உறுதிப்படுத்தப்படும்.
இசைப் பயில்வு சார்ந்த தளர்நிலை போன்றே. இங்குள்ள இசைரசனையின் தரமும் இந்நிலை தொடர காலாகின்ற தன்மையையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்ப திரும்ப திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள சேதங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்துப்ோய்விட வேண்டும் என்பது என்னுடைய ககூவியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாடவேண்டும் (பாரதியார் கட்டுரைகள், 1977)
அர்த்தம் புரியாத பாடல்களுக்குத் தலையாட்டல் உச்ச ஸ்தாயிக்கு கைதட்டல், முன்வரிசையிலிருந்து தப்புத்தாளம் போடல் என பலரின் ரசனை வெளிப்படுதற்கு ஒரு சராசரி கச்சேரி அவதானம் போதுமானது. தமிழ்நாட்டில் இது ஒரு வர்க்கக் கலையாக, திரளும் ரசிக வட்டத்தால் உணரப்படும். ஈழத்திலோ கல்வி ஜனநாயக விடுதலையடியாக அனைவர்க்கும் எட்டியும் ஆழமில்லாத நிலை தரிசனமாகும்.
3
A
ஈழத்து இசைமரபில் ஆக்க இசையின் சமூக முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அறுபதுகளின் தொடக்கத்திலேயே முளைவிட்டதெனினும் ஏற்கனவே குறித்தவாறு ஒரு சீரான படிமலர்ச்சியை காட்டும் இயக்கமாக அது வளர்ச்சி காண்பதில் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தமை ஈழத்து ஆக்க இசை வரலாறாக பதிவு பெறும் (சண்முகலிங்கன், 1988)
ஈழத்து இசையுலகின் அனைத்துக் கூறுகளையும் அவற்றுக்கேயான தனித்துவத்துடன் ஆக்க இசை அனுபவமாக்கும் முயற்சி'ஈழத்து மெல்லி சை', 'ஈழத்துப் பாடல்கள்' என்ற பெயரில் வானொலியை மையமாகக் கொண்டே பிறந்ததெனலாம். சக்தி வாய்ந்த இயந்திரனியல்
தொடர்பூடகமான வானொலி அனைத்து அறிவு - உணர்வு நிலைகளில்

Page 52
98 சமூகமாற்றத்தில் பண்பாடு
உள்ளவர்களையும் திருப்தி செய்யும் சாதனமாக உணரப்படுவது (Sastry, 1983), கலைகளின் நோக்கம் கடவுளைச் சேவித்தல் (சண்முகசுந்தரம், 1982) என்ற நிலை விரிந்து, மக்களுக்கே இனிச் சேவகம் என்ற நிலை மலரவும் வெகுஜன தொடர்புச் சாதனங்களின் வழி உருவான வெகுஜன கலைஞர் கூட்டமே காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படும். (Joshi, 1982). கவிதை - இசை ஆகிய இரண்டு கூறுகளிலும் ஒரே வண்ணமான முக்கியத்துவம் தரப்படவேண்டும். கடவுளை அல்லது காதலை என்ற பாடுபொருள் வரையறையின்றி மனித வாழ்வின் அனைத்து முகங்களையும் இசைப்பொருளாக்கும் தொடக்கமாக ஈழத்து பாடல் வடிவம் அமைந்தது. புதிய ஊடகத்தின் தன்மைக்கு இசைவாகவும், நவீன வாழ்வின் ரசனை நிலமைகளுக்கு ஏற்பவும் இசைவடிவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்தவகையில் எழுபதுகளில் ஈழத்துக்கான தனித்துவ ஆக்க இசையாக மெல்லிசையை உருவாக்கும் முயற்சி ஆக்க இசைக்கலைஞரான எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின் நாட்டார் பாடல் நவீனப் படுத்துதலுடனேயே தொடங்குவது இங்கு கவுனத்திற்குரியதாகும். இந்தத் தேடலில் காவலூர் ராசதுரை, எம்.கே. ரொக் போன்றோர் பராவுடன் இணைந்திருந்தனர்.
தேசிய பண்பாட்டு எழுச்சியுடன், இசையின் முழுமையான தரிசனத்தை, சமூகப்பயனைக் காணவிளையும் புலங்களிலெல்லாம் நாட்டாரிசை புத்துயிர்ப்பு பெறுவது உலக அனுபவமாகும். பண்பாடு தொடர்பான மானுடவியல் ஆய்வுகளிடை இசை சார் ஆய்வுகள் இன்று முக்கியத்துவம் பெறுவதும் இந்த அடிப்படையில்தான். சமூகங்களின் எளிமை. சிக்கல், அடுக்கமைவு தொடர்பான தன்மைகளை விளங்குதலில் இனக்குழும ஒப்பியல் ஆய்வுகள் பெரிதும் கை கொடுப்பன. 3500க்கும் அதிகமான நாட்டாரிசைப்பாடல் மாதிரிகளிடை லோமக்ஸ் (Lomax) மேற்கொண்ட பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகள், இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. ஈழத்தமிழர் பண்பாட்டில் மிகச்சிறிய அளவிலேயே சில தேடல்கள். தமிழகத்திலும் கூட அண்மைக்காலம் வரை நாட்டார் பாடல்கள் தொடர்பாக நடந்த முயற்சிகள் பெரும்பாலும் பாடல்களை பொருள் வகையாகப் பிரிக்கின்ற, தொகுக்கின்ற வேலைகளாகவே அமைந்திருந்தன. (Shyamala, 1982).
கூட்டுச் சமூக வாழ்வின் உழைப்பு மையங்களிடை குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் மத்தியில் பயிலப்பட்ட நாட்டுப் பாடல்கள்

என். சண்முகலிங்கன் 99.
இசையுலக ஆய்வு ஆர்வத்திற்குட்படாமை இயல்பானதே. எனினும் ஆங்காங்கே தனிப்பட்ட ஆளுமைகள், சமூக இயக்கங்களின் வழி ஆக்க இசையாய், நாட்டார் இசைக் கோலங்கள் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அறுபதுகளில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், நாட்டுக் கூத்து அண்ணாவியார் வந்தாறு மூலை செல்லையாவுடன் இணைத்து தயாரித்த அரங்குகளில் கூத்திசையும் கேட்கப்பட்டது. எனினும் சிங்கள மக்களின் அழகியற் கலைகளில் நாட்டார் இசை மரபும் சாஸ்திரிய மரபும் வெகு நெகிழ்ச்சியாக இணைந்து கொண்டமை போன்ற ஒரு கவி நிலையைத் தமிழ் மக்களின் அழகியற் கலைகளிலே ஒப்பீட்டளவில் காணமுடியாதுள்ளது என்பது அழகியற் கல்வி ஆய்வாளர்களுக்குத் தெற்றனப் புலப்படும். (சபா ஜெயராசா, 1989), இசை சார்ந்த பாரிய வரலாற்றுச் சுமை இல்லாத நிலையும், நல்ல நல்ல மரபுகளைத் தேடி இசைவிக்கும் உளப்பாங்குமே மனமே போன்ற படைப்புக்களின் இசைப்பலத்துக்கான பின்னணி எனலாம்.
இத்தகு முழுமையை எய்தும் வகையிலான சில முயற்சிகள் எழுபதுகளில் வானொலியை மையமாகக் கொண்டு நடந்ததுண்டு. சில நாட்டாரிசைக் கோலங்கள் அவற்றின் தனித்துவம் கெடாத வகையில் சாஸ்திரிய வாத்திய கலப்புடன் இங்கு நவீனப்படுத்தப்பட்டன. அந்நாட்களில் சாஸ்திரிய இசை நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் ஒருமணி நேர முக்கியத்துவத்துடன், முதல் முயற்சியாய் ஒலித்த யாழ்ப்பாணத்து கட்டுவனூர் வீரபத்திர வசந்தன் நாடகம், பின்னர் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்துக்கென உருவாக்கிய ஈழத்துச் சிறுவர் பாடல்கள் என்பன இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. உலக சிறுவர் பாடல் இசைத்தட்டுக்கென. ஈழத்து சிறுவர் பாடலை யுனெஸ்கோ கேட்டவேளை நீண்ட கலந்துரையாடல்கள் தேடல்களினடியாக மட்டக்களப்பு வடமோடி நாட்டுக் கூத்துப் பாடல் ஒன்றையும், யாழ்ப்பாணத்து வசந்தன் நாடக மழைப்பாடலொன்றையுமே தேர்ந்தெடுக்க நேர்ந்தமையும் இங்கு கவனத்திற்குரியதாகும். ஈழத்து தனித்துவ முலங்களை நாட்டாரிசையில்ே காணும் இந்த ஆக்க இசை ஆய்வனுபவத்திலே, ஈழத்து மெல்லிசை மூலவராக புகழ்பெறும் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களுடன் இக்கட்டுரையாசிரியர் உட்பட பல ஆளுமைகள் சங்கமமானமை குறிப்பிடத்தக்கது. ஆலோசனை நிலையில் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் ஈடுபாடு பதிவு பெறவேண்டும்.

Page 53
100 சமூகமாற்றத்தில் பண்பாடு
ஈழத்துப்பாடல்களின் ஆாம்ப கால அறுவடையாக ஈழத்தின் முன்னணிக் கவிஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களின் சங்கமமாய் "கங்கையாளே - என்ற மெல்லிசை திரட்டு எமக்கு வாய்த்துள்ளது. இவ்வாறே எஸ்.கே. பரராஜசிங்கத்தின் ஆரம்பகால பாடற் தொகுப்பாக 'ஒலிஓவியம்' என்ற ஒலிப்பேழையும் ஈழத்துப்பாடல்களின் தொடக்ககால கருத்தியலுக்கு விளக்கமாக இன்று மிஞ்சியுள்ளன.
எழுபதுகளில் தொடக்கத்தில் காணப்பட்ட கருத்தியல் தெளிவுடனான கலையாக்க முயற்சிகளும், பல்துறை கலைஞர்கள், அறிஞர்களின் இணைவும் பிற்கூறில் அருகிச் செல்வதான ஒரு நிலையைக் காண முடியும். நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், வானொலி நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர்களின் மாற்றங்களிடை தொடக்க கால கலைஞர்களின் இணைவு மட்டுமன்றி, இசைசார்ந்த கருத்தியலும் சிதைந்து போனமை, இன்றைய மெல்லிசை வரலாற்றின் ஆய்வுப்பதிவுகளாகும்.
ஈழத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் கூட தொடர்ச்சியான இவ்வாறான ஆய்வு ரீதியான ஆக்க முயற்சிகள் அரிதே. வங்காளத்து ரவீந்திர சங்கீதம் போல, பாரதி சங்கீதத்தை தமிழில் ஏற்படுத்தும் தாக்கத்திலான எம்.பி. பூரீநிவாசஸின் ஆக்க இசை முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. இதற்கு மேல் இந்திய வானொலி நிலைய தயாரிப்பாக ஒலிக்கும் மெல்லிசை சாதாரணமான ஒன்றுதான். காந்தியைப் பற்றி அல்லது காதலைப்பற்றி 10 நிமிட நிகழ்ச்சியாக சில பாடல்களை பாடுதல் என்பதற்கு மேல், ஏனைய ஒலிபரப்பு வேளைகளை கர்நாடக சங்கீதமோ, சினிமா இசையோதான் பிடித்துக் கொள்கின்றன.
வானொலிக்கு வெளியே எண்பதுகளின் புதிய அரசியல் சூழ்நிலையில், அரசியல் தொடர்புச் சாதனமாக மீண்டும் ஈழத்துப் பாடல்கள் உயிர்ப்பு பெற காணலாம். தமிழ்த்தேசிய எழுச்சி, விடுதலை, தியாகம் என்ற கருப்பொருள்களே அடிநாதமாக, உயிர்ப்பான பல பாடல்களை இக் களங்களிடை கேட்க முடிந்தது. ஆக்க இசைக் கலைஞனாக கண்ணனின் புதிய பரிணாமம் இங்கு தரிசனமாகிறது. தேர்ச்சி, பயிற்சி பெற்ற கலைஞர்கள் என்பதற்கு மேல், அர்ப்பணிப்புடனான கலைஞர்களின் சங்கமம் என்பதே இந்த பாடல்களின் வெற்றியின் அடிப்படை எனலாம். எழுபதுகளில் ஒட்டுமொத்தமான சமூக மாற்றக் கருத்தியலுடன் முகிழ்ந்த மெல்லிசை இயக்கம், எண்பதுகளில் தாயகப் பாடல்களாக, போராட்ட அரசியலில் இந்த மண்ணின் சொந்த அனுபவங்களாக அர்த்த்ம் பெறுவதைக் காணலாம்.

என். சண்முகலிங்கன் 1 O1
சமூக யதார்த்தமும், மாற்றங்களும் இசைவடிவ - பாடுபொருள்களிலும் மாற்றங்களை வேண்டி நிற்கும் உலக அனுபவம் இங்கும் நிதர்சனமாகிறது.
போராட்ட களத்து பாடல்களுக்குப் புறம்பாக, அடிப்படையான சமூக மாற்ற கருப்பொருள்களுடன் கலை இலக்கிய பேரவையினரின் சில ஒலிப் பேழைகள் வெளியானமையும் இங்கு கவனத்திற்குரியதாகும். இதே காலப்பகுதியில் தமிழகத்தின் கிராமங்களிலிருந்து அனைத்து மக்களினதும் விடிவுக்காக பாடும் சமூகக் குயில்களின் குரல்களைக் கேட்க முடிந்தது. இந்த வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நெல்லை மாவட்டம் குழுவுடன் இணைந்து சவுத்விஷன் வெளியிட்டுள்ள கரிசல் குயில் பாடல்கள் குறிப்பிடத்தக்கன.
இசைக் கருவிகளின் பேரிரைசலான இடிபாடுகளுக்கிடையே நசுங்கிப்போன வார்த்தைகளும், விரசம் தொனிக்கும் முக்கல் முனகலுமே நம் செவிகளுக்குக் கிடைக்கும் இசை என்றாகிப் போன தமிழ்ச்சூழலில், மண்ணிலிருந்து கிளம்பிவிரும் மக்களின் பாடல்களை வீதியெல்லாம் பாடிவரும்கரிசல் குயில் இசைக்குழுவினரின் பாடல்களைப் பெருமையுடன் தொகுத்து வழங்குகின்றோம். (கரிசல் குயில் பாடல்கள் 1 - அறிமுகம்)
என்ற அறிமுகக் குறிப்புடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல்கள், தமிழக பண்பாட்டுச் சூழலின் புதிய வரவுகளாக வரவேற்பைப் பெறுகின்றன. "மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டுக்கட்டி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்" என்றவாறு வாழ்வின் யதார்த்தங்களை, சமூக அநீதிகளை மனதைத் தொடும்படியாக கரிசல் கிருஷ்ணசாமியின் இந்த பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. எளிமையான இசை, அதேவேளையில் எங்கள் இசைமரபின் செழுமையான கூறுகளின் சங்கமமாய் விளங்குகின்றன. திரையிசைக்கு புறம்பாக, சுயமாய் காலூன்றும் புதிய மரபின் தொடக்கமாக இவை நம் கவனத்துக்குரியனவாகின்றன.
தமிழகத்தில் கரிசல் குயில் பாடல்கள் ஒலிக்கும் இதே காலப்பகுதியில் ஈழத்தில் காலக்குயில் என்ற பெயரில் பாரதி பாடல்களோடு எனது கவிதைகளையும் இணைத்து ஆக்க இசை அரங்காக ஆரம்பித்த என் இசை அனுபவங்கள் நல்ல வரவேற்பை பெற்றமை, இங்கு நினைவுப் பதிவுகளாகும். இதன் தொடர்ச்சியாக உயிரின் குரல், கண்ணீரைத் துடைத்துக்கொள், மானஸி எனும் தலைப்புகளில், எங்கள் சமூக வாழ்வின்

Page 54
1 O2 சமூகமாற்றத்தில் பண்பாடு
அவலங்களை - காண் விரும்பும் சமூக மாற்றத்தின் நம்பிக்கைகளை பாடும் சில ஆக்க இசை அரங்குகளை காண முடிந்திருக்கிறது.
எனினும் இவ்வாறான உதிரியான முயற்சிகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசையும் இயக்கமாய் வளர்ந்த ஒரு நிலைமை இங்கும் தோற்றம் பெறேவண்டும். ஈழத்து ஆக்க இசைப்பாடல்களை ஆரம்பித்த அதே காலப்பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முகிழ்த்த இசை இயக்கம், இன்று நூவா கன்சியன் - Nueva cancion என்ற பெயரில் புதியபாடல் இயக்கமாய் உலக மறுமலர்ச்சி இசை இயக்கங்களுக்குக்கெல்லாம் வழிகாட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. தேசியத்தின் மூலவேர்களைத் தேடுகின்ற பாதையில் நாட்டார் இசைமரபுகளை ஆய்ந்து புதுமை காணல் அங்கு நிகழ்ந்தது. Violeta Parra, MargotLoyolaபோன்ற சிலியின் இசைக் கலைஞர்கள் செய்த ஆய்வு யாத்திரைகளின் பலாபலன்களையே இன்று இயக்கம் அனுபவிக்கின்றது. (சண்முகலிங்கன், 1986)
4.
இவ்வாறான ஆய்வனுபவங்களை ஈழத்து இசையுலகமும் பெறவேண்டும். இதற்குத்தடையான சமூக உளவியல் சிக்கல்கள் களையப்படவேண்டும். இசைபற்றிய முழுதளாவிய தரிசனம் கொண்ட பயில் நெறியாக இன்றைய இசைக்கல்வியமைப்பில் மாற்றம் உடன் வேண்டும்.
இசையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய முழுமையான கலைத்திட்டம் முதல் தேவையெனலாம். சாஸ்திரிய இசையுடன், நாட்டாரிசை, பண்ணிசை, ஆக்க இசை என்பனவும் இசைபயில் நிறுவனங்களில் முதன்மை பெறவேண்டும் பயில் நெறிகளாகவும், ஆய்வுப்புலங்களாகவும் அமையவேண்டும்.
இசையின் சமூக, உளவியல் பரிமாணங்கள் துவங்கும் வண்ணம், இசையின் சமூகவியல், இசையின் மானுடவியல், இசையின் உளவியல், என்பன விரிவாக கற்பிக்கப்படவேண்டும். இத்துறைகள் சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
நவீன இலத்திரனியல் தொழினுட்ப மாற்றங்கள் பற்றிய அறிவும். தொடர்பியல் ஞானமும் புதிய கலைத்திட்ட மாற்றங்களில் உரிய இடம்

என். சண்முகலிங்கன் 103
பெறவேண்டும். நவீன வாழ்வியல் தேவைகள் - நிலைமைகளுக்கு இசைவாக இசையியல் வளர்ச்சியை காண இது இன்றியமையாதது.
தமிழிசையுலகம் கண்ட உச்ச ஆய்வு அனுபவமான சுவாமி விபுலானந்தரின் யாழ்நூல் அடிப்படையான பெளதிக - கணித அறிவியலில் இருந்து, இன்றைய கம்ப்யூட்டர் மியூசிக் வரையிலான அறிவு அனுபவங்கள் எல்லோர்க்கும் வாய்க்கவேண்டும்.
இசைப்பயில்வு நிறுவன அமைப்புகளிலும் மாற்றங்கள் வேண்டும். ஈழத்தில் இதுவரை நோக்கிய இசைப்பயில்வு சார் பிரச்சினைகள் தமிழ்நாட்டு நிறுவனங்களும் எதிர்கொள்பவை. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளியே சாந்தி நிகேதன், மற்றும் உலக இசைக் கழகங்களின் அனுபவ மாதிரிகளிடை பொருத்தமான இசைக் கல்வியமைப்பு இனங்காணப்பட வேண்டும்.
மேலே நோக்கிய மாற்றங்களை இசை சார் கருத்தியலை நிதர்சனமாக்கும் சூழலை வளர்க்கக்கூடிய அரங்க நிகழ்வுகள், தொடர்புச் சாதன படைப்புகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், வெளியீடுகள் என்பன திட்டமிட்ட முறையில் வளர்க்கப்படவேண்டும்.
புதிய தரிசனத்துடனான இசைசார் பண்பாட்டு அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் நிலவும் அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இசையை பண்பாட்டின் சின்னமாக கண்டு, அதனையே பண்பாட்டு மேன்மைக்கு பயன்படுத்தும் உணர்வுள்ள கலைஞர்கள் இவ்வமைப்புகளின் வழி ஒன்றிணைந்து இயக்கமாகவேண்டும்.
முன்வைக்கப்படும் இம்மாற்றங்கள் எல்லாம், ஒருவிதத்தில் பண்பாட்டுப் புரட்சியாக அல்லது அதற்கான அடிப்படைகளாக அமைந்து. வேண்டும் சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக இசையைப் பயன்படுத்துதலின் அவசியத்தை எழுதி நிற்கும்.
உசாத்துணைகள்
Joshi, O.P. The Changing Social Structure of 1982 Music in India, in International
social science Journal, Vo XXXIV, NO. 4, UNESCO.

Page 55
1 O4
Maheswaran, S.K.
1974
Sastry, B.U.K.
1983
Shyamala, B
1980
சண்முக சுந்தரம், த.
1982
சண்முகலிங்கன் என்.
1986
1988
சபா ஜெயராசா
1989
சிவத்தம்பி, கா.
1989
சுப்பிரமணிய பாரதியார்
1977
ஜெகதாம்பிகை. இ.
1989
சமூகமாற்றத்தில் பண்பாடு
The case for a united system of classical music in Srilanka, Seminar paper, The fourth International Conference of Tamil studies, Jaffna Media and Music, Seminar on Indian Music - Insights - Indirakala sangi visva vidyalaya (Music University) Follu Music of Tamil Nad, in Indian Music - A perspective, ed: Gowry Kuppuswamy, M. Hariharan, Sundeep prakashan, Delhi.
யாழ்பாணத்து இசைவேளாளர், அருள் வெளியீட்டகம். தெல்லிப்பளை. லத்தீன் அமெரிக்க புதியபாடல் 9uó5Lb nueva cancion - Derbigo), தொகுதி 14. இல: ஊற்று நிறுவனம். திருநெல்வேலி யாழ்ப்பாணம். ஈழத்து மெல்லிசை இயக்கம் Kailas, Kailasapathy CommemorationVolume, Thirunelvely, Jafna. இலங்கையின் கல்விச் செயற்பாடுகளும் அழகியற் கல்வி வளர்ச்சியும். நாதவாஹினி, கவின்கலை மன்றம் பாழ். பல்கலைக்கழகம்.
நமது பண்பாட்டுச் சூழிலினுட் செந்நெறி இசை, நடனப் பயில்வு நாதவாஹினி, கவின் கலைமன்றம், யாழ். பல்கலைக்கழகம். ஸங்கீத விஷயம். பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பிரசுரம், சென்னை. உயர்நிலை மாணவர்களுக்கான சங்கீத சிட்சை - சில பிரச்சினைகள், நாதவாஹினி, கவின்கலை மன்றம்.
யாழ். பல்கலைக்கழகம்.
Ayo

இணைப்பு - 2
அறிவின் அரசியல்
அரசியலின் ஆதிக்கம் படராத இடமில்லை. அதன் அதிகார விளையாட்டில் அறிவும் அரசியலாகும். கடந்த காலத்து அரசியல் தலையீடுகளை அறிவியலில் அதிகாரம் என்ற தலைப்பில் இன்றைய ஆய்வு முறையியல் வெளிப்படுத்தும் (Babble 1975). தலையீடு என்பதற்கும் அப்பால், அரசியல் இலக்குகளுக்கு இசைவாக, சூழ்ச்சித் திறத்துடன் அறிவைக் கையாளுதல் இன்று அதிகரிக்கும். இதன் விளவைாக அறிவின் அரசியல் (Politics of knowledge) என்பதே இன்று தனித்ததோர் அறிவுப்புலமாகும். அறிவு தொடர்பான சமூகவியல் ஆர்வம் அறிவுக்கும் அதன் இருப்புக்குமிடையிலான உறவு தொடர்பானது (Stark, 1958). சமூக விசைகளுக்கும் கருத்தியல் உருவாக்கத்திற்குமிடையிலான உறவினை GSGTrigg,Ca)9,5656T Sep56Sugi) (Sociology of knowledge)9653, T(5ub. இந்த வகையில் அறிவின் அரசியல் தோடர்பான ஒரு சமூகவியல் பகுப்பாய்வாக இந்தக் கட்டுரை அமைகின்றது.
அறிவின் அரசியல் தொடர்பான இப்பகுப்பாய்வின் மூலங்களாக கடந்தகால சமூக, மானுடவியல் சார் ஆய்வு அனுபவங்களே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவின் அரசியல் என்ற எண்ணக்கருவின் தோற்றத்துக்கும் விழிப்புணர்வுக்கும் தொடக்ககால மானுடவியல் ஆய்வுகள் பலவும் காரணமானவை இங்கு கவனத்திற்குரியதாகும். குடியேற்ற அரசுகளை அமைத்த ஐரோப்பியர்களும் பிற வணிக நிறுவனத்தினரும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த திணைக் குடியினரை (native people) கட்டியாள்வதில் பல சிக்கல்களை எதிர் நோக்கினர். அதனால் அந்தந்த நிலப்பகுதிகளில்

Page 56
106 சமூகமாற்றத்தில் பண்பாடு
வாழ்ந்த திணைக்குடியினரை அறிய வேண்டியவர்களாய் இருந்தனர். கட்டாயத்தின் பேரில் திணைக்குடியினர் பற்றிய இனக்குழுவியல் செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊக்கமளித்தனர். அவ்வகைச் செய்திகள் மூலம் அம்மக்களின் அரசியல் பொருளாதார முறையை நன்கு அறிய முடிந்தது. அதனால் அப்பகுதிகளில் உறுதியுடன் நிலை பெற முடிந்தது. (பக்தவத்சலபாரதி, 1990) இத்தகு உள்நோக்கங்களையும் தாண்டி மானுடவியல் தனித்ததோர் அறிவுத்துறையாய் வளர்ச்சிகண்டமை இன்று வரலாறாகும். மானுடவியல் போன்றே அதன் சகோதரத்துறையான சமூகவியலின் வளர்ச்சியும் அமையும். கால ஓட்டத்தில் அதன் கிளை விரிவுகளாய் புதிய புதிய அறிவுத்துறைகளும் எங்களைச் சேரும். எனினும் புதிய விரிவாக்கங்களிடை மறைகரமாய் அரசியலின் ஊடுருவலும் நிலை பெறுகின்றமை இன்றைய அறிவுலக அனுபவமாகும்.
குடியேற்ற நாட்டாதிக்கம் முடிந்த பின்னரும் அதிகார பரம்பரைகளுக்கு அரசியல் செய்யும் ஆசை விட்டதில்லை. ஆயினும் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக அறிவின் வழியாக அலுவல்கள் திட்டமிடப்படுகின்றன. புதிய பல அறிவுத்துறைகளின் பரம்பல் தொடர்பான நுண் ஆய்வுகளிடையில் அறிவின் அரசியல் கரங்களை தெளிவாகவே காணமுடியும் (Garan, 1987).
ஒரு சமூகப்புலத்தை பரந்த நோக்கில் அறியும் தேடலை பெரும்பாக சமூகவியல் (Macro Sociology) என்போம். அவ்வாறே குறிப்பாக ஆழ ஒரு பகுதியை நோக்கும் ஆய்வை நுண்பாக சமூகவியல் (Micro Sociology) என்போம். இந்த இரண்டுமே அறிவியல் முழுமைக்கு இன்றியமையாதன. இயல்பாய். அறிவியல் தேவையின் வழி வளர்க்கப்படுபவன. ஆனால் இந்த தேவையென்பது திட்டமிட்ட முறையில் அதிகாரத்துக்கும் அரசுக்கும் சேவகம் செய்யும் விதமாய் கையாளப்படுமிடத்து அது அறிவியல் என்ற வரையறை கடந்து அறிவின் அரசியலாகிவிடக் காணலாம்.
உலகமயமாக்கம் (Globalization) என்பது இன்றைய தாரக மந்திரங்களில் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே ஒரு வணிகக் கொள்கையாகவன்றி உலக அரசியல் ஒருமை, தொடர்பியல் வழியான உலக ஒருமை, உலகமயமாக்கப்படும் அறிஞர்களின் ஒருமை எனும் பன்முகங்களைக் கொண்டது. திட்டமிட்ட முறையில் உலகின் போக்கையே மாற்ற முனைவது இயல்பில் அறிவின் உருவாக்கம் என்பது சுதந்திரமான அறிவியல் தொழிற்பாடாக அமைய வேண்டியது. ஆனால் அறிவின்

என். சண்முகலிங்கன் 107
அரசியல் செல்வாக்கிடை அறிவின் உருவாக்கமும் முன் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்குகளை நோக்கிய கருத்தேற்றங்களாகும் ஆபத்து நிலைமைகளை இன்று பெருமளவில் சந்திக்க முடிகிறது.
ஆய்வு நிலையங்களுக்கு நிதி வழங்குதல், ஆய்வுக்கதிரைகளுக்கு அறக்கட்டளைகள் தரல், ஆய்வுத்திட்டங்களுக்கு ஆலோசனைகளும் மாதிரியங்களும் அன்பளிப்புச் செய்தல் என பலவழிகளிலும் இந்த அரசியற்கரம் நீளலாம். ஆய்வாளர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கியும் தமக்கு இதமான ஆய்வு ஏடுகளை பிரசுரம் செய்தும் அங்கீகாரம் வழங்கலாம். இந்நடவடிக்கைகள் எல்லாம் வெகு லாவகமாகவே நிகழும். வாங்கப்படும் அறிஞர் உணராமலே இழக்கப்படுதலும் சாதாரணமாகும்.
உலக அரங்கில் மிக மலிவாக வாங்கப்படக் கூடியவர்களாக அறிவு ஜீவிகள் உள்ளனர் என்ற பேராசிரியர் ஒருவரின் அண்மைய கூற்று இங்கு எம் கவனத்திற்குரியதாகும். (சிவசேகரம். 1999). இன்று அறிவென்பதே ஒரு சந்தைப்பொருளாகி நுகர்வுக் கலாசாரத்தின் முக்கிய பகுதியாகும். அறிவு அரசியல் மயப்படுத்தப்படுவதுடன் பண்டமுமாக்கப்படும். உண்மைபோல செய்திகளும் நோக்கங்களும் தொடர்புவழி சேரவேண்டிய இடங்களைச் சென்றடையும். WR
தனியே அரசியல் ஆதிக்கம் மட்டுமன்றி, அதனோடிணைந்து பொருளாதார, பண்பாட்டு ஆதிக்கங்களும் அறிவுப் போர்வையில் ஊடுருவக்காணலாம். மேம்பாடு (development), நவீனமயமாக்கம் (modernization) என்கின்ற பதங்கள் சமூகமாற்றம் தொடர்பான இன்றைய எழுத்துக்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவன. தேசிய அரசுகளினதும், சர்வதேச முகவர்களினதும் திட்டமிடல்களில் புறவயமாக அமையவேண்டிய இந்த பதங்கள், அரசியல் சார் வலைப்பின்னலுக்குள் அமிழ்ந்து போவதை காண முடியும். குறை விருத்தி நாடுகள், பின்தங்கிய நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள். புதியதாய் மேலெழும் நாடுகள், புதிய சனநாயகங்கள் என்றெல்லாம் சுட்டப்படும் அபிவிருத்தி / மேம்பாடு தொடர்பான விவரணங்கள் தர்க்கரீதியான உண்மை நிலைமைகளை பிரதிபலிப்பனவா என்ற கேள்வியும் எழுப்பப்படும். அபிவிருத்தி என்ற பதபிரயோகமே மார்க்ஸிய அரசியல் நோக்கில் பாரிய விமர்சனங் களுக்குள்ளாகக் காணலாம். லத்தீன் அமெரிக்க புலத்து அபிவிருத்தி / மேம்பாடு என்பது குடியேற்ற நாட்டாதிக்கம், சுரண்டல், தங்கிநிற்றல் என்கின்ற பொருள்களிலேயே விளக்கப்பட காணலாம். (Frank, 1972)

Page 57
108 சமூகமாற்றத்தில் பண்பாடு
நவீனமயமாக்கம் என்ற பதமும் இதே நிலையில் தான் இன்றுபல விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. குடியேற்ற நாட்டாதிக்க காலத்து ஐரோப்பிய மயமாக்கம். ஆங்கில மயமாக்கம், அல்லது அமெரிக்க மயமாக்கம் என்ற பொருள்களிலேயே நவீனமயமாக்கம் என்ற எண்ணங்களின் அரசியல் வெளிப்பட காணலாம். பண்பாட்டு நிலையிலும் நவீன விழுமியங்கள் என்பன மத்தியதர வகுப்பு அமெரிக்க விழுமியங்களாகவே விளங்கப்படுகின்றமை பற்றிய மக்கிலிலாண்ட் (Mc Cleland. 1966) கருத்து இங்கு கவனத்திற்குரியதாகும். மரபு - நவீனத்துவம் என்ற பிரிப்புக்கள் வெறுமனே சந்தையை மையமாகக் கொண்ட சங்கதியாக கருதப்படுவதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். இதன்வழி மேம்பட்ட மனிதனை, நவீன மனிதனைத் தேடும் ஆராய்ச்சி, வெறும் சந்தை ஆராய்ச்சியாக, சந்தையை மையமாகக் கொண்ட நுகர்வோரைத் தேடும் முயற்சியாகவே முடிந்து போனது (சண்முகலிங்கன், 1997). இவ்வாறே அபிவிருத்தியென்பது தொழினுட்ப விருத்தியென்ற பொருளுடன் மட்டுப்படுத்தப்பட்டது. விளைவாக சமூகப் பிரச்சினைகளை தொழில்நுட்ப பிரச்சினைகளாக குறுக நோக்கும் நிலைமையே மிஞ்சியது. கூடவே ஆராய்ச்சிகளுக்கும் தொழில்நுட்பத்துக்கும் மிடையிலான பரஸ்பர சார்பு நிலை அதிகரித்துள்ளமையும் விமர்சன கோட்பாட்டாளரின் எழுத்துக்களிடை துல்லியமாகவே வெளிப்படும் (David Held, 1980) இதன் வழி அறிவாராய்ச்சியும் ஒரு முதன்மை உற்பத்திச் சக்தியாகும். அறிவானது குறுகிய பயன்பாட்டு நோக்கிலான உற்பத்தியாதலுக்கு. உலக இராணுவ மயமாக்கம் தொடர்பான ஆய்வு அனுபவங்கள் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதுடன், அநியாயமான வழிகளில் அவற்றினை தீர்ப்பதற்கான மார்க்கங்களும் அறிவின் பெயரால் முன்வைக்கப்படுவதுண்டு. நிலமானிய அமைப்பில் அரசர்களின் வல்லமை ஆண்டவன் தந்தது என தரப்பட்ட நியாயங்கள். பின்னாளில் போட்டியும் பேராசையும் மனித இயல்பில் உள்ளவை என்றவாறு அடம் சிமித் (Adam Smith) போன்றோரால் நியாயப்படுத்தப்பட்டமை இங்கு கவனத்திற் குரியதாகும். முழுதளாவிய பார்வையும், பல்துறை நெறிகளின் ஒன்றிணைந்த ஆய்வு முறைமையுமே இத்தகு நிலைமைகளில் எமக்கு கைகொடுக்க வல்லது போலி ஆய்வுகளிலிருந்து உண்மை ஆய்வுகளை பிரித்து நோக்கிட சமூகவியலின் பெயர் சுட்டு அணுகுமுறையும் (Labeling perspective) பெரிதும் துணையாகும் எனலாம். ஆய்வின் நோக்கி,

என். சண்முகலிங்கன் 109
ஆய்வாளனை ஆய்வுச்சூழலை, ஆய்வு பதங்களின் பொருண்மையை கேள்விக்குள்ளாக்குதலின் வழி அறிவின் பின்னணியை தெளிந்திட .فالا عاما)
தென்னாசிய ஆய்வுகள், போர்க்கால ஆய்வுகள், சமாதான ஆய்வுகள் என பற்பல பெயர்களில் நிகழ்த்தப்படும் ஆய்வுகள் தொடர்பாக ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்படும். இலங்கை பற்றிய இன்றைய ஆய்வுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று ஆய்வுகளிலிருந்து "உனக்கல்ல ஊருக்கடி என்றவிதமான சர்வதேச - உள்ளூர் மனித உரிமை ஆய்வுகள் வரை அறிவின் அரசியல் விழிப்புடன் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். நிதி உபயகாரர்களுக்கு ஏற்ற விதமாக அறிக்கை எழுதுதல் போன்ற மரியாதைகளுக்கு அப்பால் அறிவுலக நேர்மை காக்கப்படவேண்டும். மெய்ப்பொருள் காணும் அறிவுக் கலாசாரம் வளர்க்கப்பட வேண்டும்.
உசாத்துணைகள்
Babble Earl. R Practice of Social Research, Words Worths
1975 California
Chauble, S.K. Understanding, South Asia
1993 A Superstructural Analysis in
South Asia - Some Reflections (ed). Ramakant, Aalkph Pub. Jaipur
Frank, A.G. Sociology of Development and
1972 Underdevelopment in Dependence
And Underdevelopment (ed), James Cockroft, Andrew Gunder Frank, And Dale Johnson, New York: Double Leday
Held, David An introduction to Critical
1980 Theory: Horkheimer to Herbermas Hutchinson & Co. (Pub) Ltd. London Garan. D.G Our Sciences Ruled by Human Prejudice,
1987 Philosophical Library, New York

Page 58
11 O
MC Clelland
1966
Mahan, Rajan
1991
Mannheim, Karl
1952
Stark. W
1958
சண்முகலிங்கன், என்.
1997
சிவசேகரம், சி.
1999
பக்தவத்சலபாரதி, சீ -
1991
சமூகமாற்றத்தில் பண்பாடு
The Impulse to Modernization, in Modernization: The Dynamics of Growth (ed) Weiner, New York Basic Books
The Nature of South Asian Region: Assonnant Affinities, Dissonant Diversities in India and South Asia (ed.) S.N. Kanshik, Rajan Mahan and Ramakant, New Delhi
ideology and Utopia, Reutledge and Kegan Paul, London
Sociology of Knowledge, Routledge and Kegan Paul, London
மானுட மேம்பாட்டின் சமூகவியல் மானுடம்1 - சமூகவியல் ஏடு சமூகவியல் சமூகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
தினக்குரல் நாளிதழ் 25599 பக். 8 கொழும்பு
பண்பாட்டு மானுடவியல் சென்னை


Page 59
சமூக மாற்றத்தில் பண்பாட்டி விழிப்புணர்வு இன்று அதிகரிக்( சமூக மாற்றம் விளைவிக்கும் தா பண்பாடு விளைவிக்கக்கூடி இருநிலைகளில் சமூக மாற்ற மிடையிலான உறவு பகுப்பாய்:
பண்பாட்டு விழிப்புணர்வு தொட இன்றைய பண்பாட்டுமயமா கேள்விக்குள்ளாக்குதலின் வழி: இடத்தில்தான் கிராம்ஜி (Gr common sense GTəb TüLU(G|Lib QALLI கருத்தாக்கத்தின் முக்கியத்துவம்
பொதுப் புலனறிவுக்குப் ப பண்பாட்டறிவைக் காண்பதி பகுப்பாய்வும், சமூக நீதி சார்ந்த யாதன. இந்த வகையில் நிலவும்
நியமங்கள் தொடர்பான ஒரு வாகவே இத்தொகுப்பின் பெ அமைகின்றன.
பண்பாட்டின் பிரச்சினைகளை அவற்றினை எதிர்கொள்ளு வல்லமையையும் தருதல், புதிய கான சிந்தனைகளை விதைத்தல் கொண்டவையாக இக்கட்டுை
முடியும்,

ன் இடம் தொடர்பான கும். நிலவும் பண்பாட்டில் க்கங்கள். சமூக மாற்றத்தில் டய தாக்கங்கள் என்ற த்துக்கும் பண்பாட்டுக்கு பு செய்யப்படும்.
டர்பான அறிவும், செயலும் க்க செயன்முறைகளை தான் சாத்தியமாகும். இந்த amsci) (pgíT gon alá; (5Lh ாதுப்புலன் அறிவு பற்றிய
உணரப்படும்.
திலான உண்மையான ல் அறிவியல்ரீதியான கருத்தியலும் இன்றியமை பண்பாட்டு விழுமியங்கள். சமூகவியல் பகுப்பாய் ரும்பாலான கட்டுரைகள்
விளங்கிக் கொள்ளுதல், தற்கான அறிவையும், ப பண்பாட்டு மேன்மைக் எனும் பரிமாணங்களைக் ரகளை நீங்கள் தரிசிக்க