கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சீறிவந்த சூறாவளி - 78

Page 1


Page 2

- செழியன். ஜே. பேரின்பநாயகம்

Page 3
சீரி இந்த சூதாவனி - 78
நூல்:
ஆசிரியர்:
முதலாம் பதிப்பு:
பதிப்புரிமை
வெளியீடு:
Efensu:
BOOk. Ne:
Author:
Fir:St Editi
CopyRight:
Published by:
Design & Print:
PricЕ:
சீறிவந்த சூறாவளி - 78
செழியன். ஜே. பேரின்பநாயகம் எண் 10, முதலியார் வீதி, மட்டக்களப்பு.
GJITGIrfo 1998
திருமதி மனோ பேரின்பநாயகம்
மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 18/13 பூரணவத்தை, கண்டி.
75/=
Seeri Wantha So Ora Wali - 78
Chelliyan J. Perinpanayakam 10, Muda liyar Street, Batticaloa.
Јапшагу 1998
Mrs. Mano Perinpanayakan
Makkal Kazai II lakkiya On riyam 18/13, Pooranawattha, Kantly,
Latha a Impress 302 D. S. Senanayake Weediya, KANDY. 074 - 471508
75W =

. செழியன். ஜே. பேரின்பநாயகம்
ஈன்ற பாசமிகு அன்னைக்கும்
எனை வளர்த்து - மனிதனாக்கிய நேசமிகு தநதைகசூம இந்நூல் சமர்ப்பணம்.

Page 4
சிறி வந்த சூறாவளி - 78
பதிப்புரை
கண்டியில் எனது இலக்கியப் பணிகளை
* உற்று நோக்கி,
என்னோடு தொலைபேசியிலும்; கடித மூலமும் தொடர்பு கொண்டு பலமுறை என்னைப் பாராட்டி வாழ்த்திய பெருமகன் மட்டுநகர்மா முதல்வர் செழியன். ஜே. பேரின்பநாயகம் அவர்கள். அந்தத் தொடர்புதான் 78 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையை கொடுரமாகத் தாக்கி அழித்த சூறாவளியின் கொடுமைகளை அழகு தமிழில், அருமையான நடையில் எழுதி கையெழுத்துப் பிரதிகளைத் தந்து புத்தகமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பென்று என்னிடம் தர வைத்தது. அவர் என் இயல்பான ஈடுபாட்டில் வைத்த நம்பிக்கையும் கூட. உங்கள் கரங்களில்
தவழும்
இந்நூல் அதற்குச் சான்று பகருகின்றது. இதன் மூலம் மட்டுநகருக்கும், கண்டிக்கும் பாலம் அமைத்துள்ளோம்; என்பதோடு எமது மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் பரந்து, விரிந்த ஒரு அமைப்பாகத் திகழ்வதையும்

செழியன். ஜே. பேரின்பநாயகம்
எடுத்துக் காட்டுகின்றது. எமது ஒன்றியத்தின் மூலம் இரண்டு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளோம். முதல் நூல் ரூபராணி ஜோசப் எழுதிய ’ஏணியும் தோணியும்’ சிறுவர் இலக்கியம், இந்நூல் 96 ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்தியப் பரிசு பெற்றது. கவிஞர் இக்பால் அலியின் "முற்றத்திற்கு வாருங்கள்” கவிதைத் தொகுதி (இந்நூல் அரச கரும மொழிகள் திணைக்களம் நடாத்திய "மொழிகள் தின விழாவில் 1997ம் ஆண்டிற்கான விருதும் பாராட்டும் பெற்றது.) இது எமது மூன்றாவது நூலாகும். தொடர்ந்து
எமது இலக்கியப் பணி தொட
வாசகர்கள் எம்மோடு கைகோர்த்து அணிவகுத்துச் செல்ல
வாருங்கள்.
இரா. அ. இராமன்
தலைவர், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 18/13 பூரணவத்தை,
கண்டி

Page 5
றி வந்த சூறாவளி 73 ர
வாழ்த்துரை
"புயற்காற்று' - காத்தது தெய்வவலிமையன்றோ
காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே! தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது பள்ளியிலே வானம் சினந்தது; வையம் நடுங்குது;
து வாழிபராசக்தி காத்திடவே தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி அருள் செய்யவேண்டுகிறோம் நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே இந்த நேரமிருந்தால் என்படுவோம் காற்றென வந்தது கூற்றமிங்கே எம்மைக்
காத்தது தெய்வவலிமையன்றோ!
இது பாரதியார் காலத்தில் அடித்தபுயற்காற்றில் அகப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. இதனை 1978 நவம்பர் 23ல் நாம் நேரிலேயே அனுபவித்தோம். கூற்றமென வந்தடித்த புயற்காற்றிலிருந்து தெய்வத்தின் வலிமையினாலேதான் அன்றும் தப்பிப் பிழைத்தோம்.
மெய்யாய் நிகழ்ந்த இந்த இயற்கை அழிவின் நிகழ்வு இன்று பொய்போலப் பழங்கதையாகி புதிய தலைமுறையொன்றும் உதயமாகி விட்டது. இன்றைய யுத்தச் சூழலின் அகதிவாழ்வுக்கும் நிவராணப் பொருட்களுக்கும் அன்றே நம்மைத் தயாரித்துக் கொண்டது போன்ற ஒரு முன்நிகழ்வாக அதனை இன்று நினைக்கத் தோன்றுகின்றது.
இத்தகைய நினைவுகளை வரலாற்று இலக்கிய ஆவணமாக்கும் வகையில் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், மட்டக்களப்பு மாநகர முதல்வரும், அன்பருமான திரு. செழியன். ஜே. பேரின்பநாயகம் அவர்கள் "சீறிவந்த சூறாவளி’ எனும் தலைப்பில் பல வரலாற்றுத் தகவல்களையும் இருபத்திஐந்துக்கு மேற்பட்ட

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அரிய படங்களையும் தொகுத்து வெளியிடுவதை பாராட்டாதிருக்க முடியாது.
இப்பிரதேசத்தின் இத்தகைய கடந்தகால, சமகால நிகழ்வுகள் ஆவணப்படுத்துதல் எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் நல்லதொரு கைங்கரியமாகும். அந்த வகையில் இவ் அன்பரின் பெறுமதியான பல தகவல்களையும் இதுகால வரை சேகரித்து பாதுகாத்து இலக்கிய ரசனையுடன் நுாலுருக் கொணி டு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
நித்தியகர்மத்தை நீ செய் செயலின்மையைவிடச் செயல் சிறந்தது செயலிலானுக்கு உடலைப் பேணுதல் கூட இயலாது
-கீதை 3 கர்மயோகம் 8
இந்நன்முயற்சியை நான் பெரிதும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
இறைபணியில், d്പേ sz9on/if, (சுவாமி ஜீவனானந்தா) இராமகிருஸ்ணா மிசன் இலங்கைக் கிளை, மட்டக்களப்பு. 9. 11, 1997

Page 6
சிறி வந்த சூறாவளி - 78
இதயம் வாழ்த்துகிறது
மட்டுநகர் மாநகர முதல்வர் செழியன். ஜே. பேரின்பநாயகம்
அவர்களை நீண்ட நெடுங்காலமாக நான் அறிவேன். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் தன்னைப் பின்னிப் பிணைத்தவர். கலை உள்ளம் படைத்தவர், பழகுவதற்கு இனியவர்.
இவர் ஒரு காலத்தில் சைக்கிலோட்டிச் செய்திகளைச் சேகரித்தவர். சந்திக்கும் போதெல்லாம், பயனுள்ள சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்பவர். எதையும் தேடித் தெரிந்து கொள்வதில் இயல்பான ஈடுபாடு உள்ளவர். காலமாற்றத்தின் கதிர்வீச்சுகளில் இருந்து கொஞ்சமும் மாறாத இவர் பேச்சு நடையில் மண்வாசம் வீசும், எந்தவொரு கூட்டத்திலும் இவருடைய ஹாஷ்யம் கேட்போரை வாய்விட்டுச் சிரிக்கவைக்கும். எங்கு எது நடந்தாலும் சமூக நலன் கருதித் தங்குதடையின்றி இவர் குரல் கேட்கும்.
செழியன் அவர்கள் எவ்வளவோ எழுதிக்குவித்தவர். சீறி வந்த சூறாவளியைக் கன்னிப்படைப்பாகத் தருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சீறி வந்த சூறாவளி -
கற்பனைக் கதையல்ல,
அனுபவங்களின் அடிச்சுவடுகள்
நிஜவாழ்வின் நிர்வாணங்கள்
இயற்கையின் கோரத்தாண்டவங்கள்
வழி நெடுகிலும் வந்த அவலங்கள்
வயிறும் பயமும் நடத்திய போராட்டங்கள்
தண்ணீரில் எழுதிய கண்ணிர்க் காவியங்கள்
பரிதாப மரணங்கள்
பலராலும் மறந்து விடப்பட்ட சூறாவளி அனர்த்தங்களைக் காலத்தின்
பதிவாக நமக்குத் தந்த மாநகர முதல்வருக்கு "சபாஷ்' சொல்லலாம்.
-சொல்லின் செல்வி. ரூபராணி ஜோசப்
258, பேராதனை வீதி, கண்டி

செழியன். ஜே. பேரின்பநாயகம்
முன்னுரை
மட்டக் களப்பு மாநகர முதல் வர் திரு. செழியன் . ஜே. பேரின்பநாயகம் தமிழுக்குப் புதியவரல்லர். தமிழால் அவர் வளம் பெற, அவரால் தமிழ் வளம் பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், செழியன் அவர்களை ஒர் அரசியல்வாதியாகப் பார்ப்பதைவிட ஓர் இலக்கிய நெஞ்சங் கொண்டவராகப் பார்ப்பதையே பெரிதும் விரும்புகிறேன். அவரது எழுத்துக்கள் நீண்ட காலமாக என்னை ஆகர்ஷித்து வந்துள்ளன. சுவை ததும்பப் பேசுவதிலும், எழுதுவதிலும் அவர் வல்லவர். இலங்கையின் சிறந்த பத்திரிகையாளர்கள் பற்றி நெஞ்சம் நினைக்கும்போது, செழியன். ஜே. பேரின்பநாயகம் அவர்களின் பெயரும் நிச்சயமாக எனது மனக்கண் முன் தோற்றமளிக்கும். அத்தகைய ஒருவரின் நூலுக்கு முன்னுரையொன்று வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
1978 ஆம் ஆண்டு நவம்பரில் கிழக்கிலங்கையில் வீசிய சூறாவளி, அப்பிரதேசத்தையே ஒரு கலக்குக் கலக்கி ஓய்ந்தது. அக்கட்டத்தில் மக்கள் பட்ட அவலங்கள் சொல்ல முடியாதவை; சொத்து அழிவுகளும் அனந்தம். அந்தத் துன்பகரமான சூழலைத் தாமே நேரில் அனுபவித்த திரு. செழியன். ஜே. பேரின்பநாயகம், அதன் வேதனை கலந்த வாழ்க்கை அனுபவங்களைச் சீறி வந்த சூறாவளி’ என்னும் பெயரில், தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். இப்போது, அக்கட்டுரைத் தொடரை நூல் வடிவிற் கொணர்கிறார். சூறாவளி தொடர்பான அவரது அனுபவங்கள் நூல் வடிவம் பெறுவதனால், இந்நூல் கிழக்கிலங்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் பற்றிய பதிவேடாகவும் அமைகிறது. உண்மையில் இது பயன்தரத்தக்கதும், பாராட்டத்தக்கதுமான ஒரு முயற்சி. நூலைப் படிக்கும்போது, அந்தச் சூறாவளியின் கோர அனுபவங்களை நாமும் நேரிற் பெற்றது போன்ற உணர்வையே பெறுகிறோம். சூறாவளி தொடர்பான சோகங்களை மாத்திரமல்லாமல், சுவையான அனுபவங்களையும் நூலாசிரியர் தமது நூலிற் தந்துள்ளார். செழியன். ஜே. பேரின்பநாயகம் அவர்களுக்கே உரிய தனித்துவமான நடை, நூலை அலுப்புத் தட்டாமல் வாசிக்கச் செய்கிறது.

Page 7
சிறி வந்த சூறாவளி - 78
இத்தகைய ஒரு தரமான நூலைத் தந்த செழியன். ஜே. பேரின் பநாயகம் அவர்கள், எதிர்காலத்தில் தமது பத்திரிகைத்துறை அனுபவங்களையும் நூலாகத் தருவாராயின், அதுவும் பெறுமதி மிக்க பதிவேடாக விளங்கும். அதற்குரிய தகுதி அவரிடம் நிறையவே உண்டு. அத்தகையதோர் ஆக்கத்தை, எதிர்காலத்தில் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கலாநிதி துரை. மனோகரன்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை 1, 12. 1997

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அணிந்துரை
1978 இல் வீசிய சூறாவளி, கிழக்கு மாகாணத்தைச் சின்னாபின்னப் படுத்தியிருந்தது. பெளதீகப் பொருட்களை மாத்திரமன்றி மனித மனங்களையே அது அடித்து வீழ்த்தி விட்டது. செய்வதறியாது மட்டக்களப்பு திகைத்துப் போய் நின்று விட்டது.
எனினும் மனிதரின் இயல்பு இயற்கையை வெற்றி கொள்ளலும், மீண்டும் வாழ்தலும் தானே? மட்டக்களப்பு மீண்டும் உயிர்த்தது!
20 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வு இன்று வரலாறாகி விட்டது. இன்றைய தலைமுறைக்கு அது பெற்றோர், அல்லது பாட்டன் பாட்டி சொல்லும் உப கதையும் ஆகிவிட்டது. செங்கை ஆழியான் அன்று 24 மணிநேரம் என்ற ஒரு நூலை இது சம்பந்தமாக வெளியிட்டிருந்தார்
அன்றைய சூறாவளியின் நேரடிச் சாட்சியாளர் பலர் இன்றும் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் அளவில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவராயுள்ளனர்.
தான் பெற்ற சூறாவளி அனுபவத்தை சீறிவந்த சூறாவளி எனும் இந்நூலிலே தருகிறார் செழியன். ஜே. பேரின்பநாயகம் அவர்கள்.
சூறாவளிக்குள் நூலாசிரியர் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மண்டுருக்குச் செல்கிறார். மண்டுரில் இருக்கும் மனைவியையும் மகளையும் காணவேண்டும் என்ற ஓர்மம் அவரைத் துணிவுடன் செல்ல வைக்கிறது.
களுவாஞ்சிக் குடியில் சூறாவளியின் தாக்கத்தைப் பிரத்தியட்சமாக அனுபவித்த நூலாசிரியர் அழிந்த ஊர்களையும் அவலமுறும் மனிதர்களையும் கண்டபடி வீட்டை அடைகிறார். மனைவி, மகள் உயிரோடு இருப்பது அவருக்கு ஒருவகை ஆறுதல் தருவதாயினும் மற்றோரின் துயரம் அவர் மனதை மிக அலைக்

Page 8
சிறி வந்த சூறாவளி - 78
கழிக்கின்றது. அதன் பின்னர் சூறாவளி அனுபவம் பெற்றவர்கட்கூடாக ஏனைய ஊர்களில் நடந்த அனர்த்தங்களையும் மனித அவலங்களையும் அறிகிறார். அவரது பத்திரிகைத் தொழிலனுபவம் அவற்றை ஆவணமாகப் பதிய அவருக்கு உதவுகிறது.
மட்டக்களப்பில் சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தினை தன்னுணர்வு வெளிப்பாடாகவும்; ஒரு வெட்டுமுகத் தோற்றமாகவும் இந்நூல் தருகிறது.
இவ்வுலகம் இயங்கு நிலையில் உண்மையாய் இருந்தாலும், மனிதரே அதன் இருப்புக்கு அர்த்தம் தருகின்றனர். இல்லாவிடின் உலகம் இருந்தும் இல்லைதான். இம்மனிதக் குழாத்தின் இயங்கு நிலையும், அது கொள்ளும், வாழ்வதற்கான சவால்களும், அதனடியாக எழும் மனித உணர்வுகளும் மிகமிக முக்கியமானவை. இவையே கலை-இலக்கியத்தின் பொருளாகின்றன.
இந்நூலிலே செழியன். ஜே. பேரின்பநாயகம் சூறாவளியால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுடன் சூறாவளிக்குள் தான் சந்தித்த மனித மனம் படும் அவஸ்தைகளையும் மையப் பொருளாக்கியுள்ளார்.
புனைகதையில் வருவதுபோல பல கதாபாத்திரங்களை இந்நூலிலே நாம் சந்திக்கின்றோம்.
நிகழ்ச்சிகளை ஆசிரியர் 'தான்கலந்து’ கூறுவது சுவையும் அழகும் தருகின்றது. பத்திரிகை நடை கைவரப் பெற்ற செழியன். ஜே. பேரின்பநாயகம் விடயங்களைத் தெளிவாகவும், அலங்காரமாகவும் கூறிச் செல்கிறார். மட்டக்களப்பிற்கேயுரிய பேச்சு வழக்குச் சொற்கள் இடைக்கிடை தோன்றி அழகூட்டுகின்றன.
செழியன். ஜே. பேரின்பநாயகம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். மண்டுரிலே பிறந்த இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய

செழியன். ஜே. பேரின்பநாயகம்
கல்லூரியிலும், பணடாரவளை அர்ச். சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். மாணவப் பருவத்திலேயே ஆசிரியர்களான திரு. பிறின்ஸ் காசிநாதர், திரு. எஸ். பொன்னுத்துரை ஆகியோரால் பத்திரிகையுலகுக்குள் இழுக்கப்பட்டவர். 1959/60 களில் மட்டக்களப்பில் மாணவர் இயக்கத் தலைவராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்ட அனுபவம் பெற்றவர். பின்னர் தினகரன் பொரளை நிருபராகவும், செய்திப்பகுதியிலும் பணிபுரிந்தவர்.
1980 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மாகாணச் செய்தியாளராகக் கடமை புரிகிறார். தென்கிழக்கு ஆய்வு மையத்தினால் பத்திரிகைத் துறைப் பணிக்காகக் கெளரவிக்கப்பட்டவர். தற்போது மட்டக்களப்பு மாநகர முதல்வராகப் பணிபுரியும் அவர், சிறப்பாகத் தினகரன் எழுத்துக்கள் மூலம் வாரம் தோறும் வாசகர்களைச் சந்திப்பவர்.
வெள்ளிவிழாக் காணும் வயதிலுள்ள பழைய நண்பர் ஒருவரின் நூலுக்கு அணிந்துரை எழுதும் சந்தர்ப்பம் ஏற்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
பத்திரிகையாளர்கள் பலர் சிறந்த நூலாசிரியர்களாகப் பரிணமித்த வரலாறுகளுண்டு. நண்பர் செழியனின் நூல் இன்று வெளிவருகிறது. செழியன். ஜே. பேரின்பநாயகம்"இன்னும் பல நூல்கள் எழுத என் வாழ்த்துக்கள்.
கலாநிதி சி. மெளனகுரு
கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை. 30376

Page 9
சிறி வந்த சூறாவளி - 78
என்னுரை രീp
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தி எட்டாம் ஆண்டு நவம்பர் திங்கள் இருபத்திமூன்றாம் நாள்.
நம் முன்னே இன்று அகோர இரவாக - பயங்காட்டி நிற்கிறது. சூறாவளி அரக்கன் எம்மை துயர் கொள்ளச் செய்த அன்று.
இயற்கை சீறிய இக்கோர நிகழ்வை - நான் அன்றே தினகரன் வார இதழில் எழுதத் துணிந்தேன். பிரதம ஆசிரியர், கலாசூரி ஆர். சிவகுருநாதன் என் எழுத்துக்குக் களம் அமைத்தார். பத்திரிகை எழுத்துத் துறையில் என் முழு வாழ்வையும் இணைத்துக் கொண்ட எனக்கு இச்சோகக் கீற்று - வரையப்பட வேண்டுமென்ற வாஞ்சையைத் தூண்டிற்று.
அதனால் - சீறிவந்த சூறாவளி’ என மகுடமிட்டு எழுதத் துணிந்தேன். சூறாவளி - சீறிவந்தது என்பது எனது அனுபவம். கற்பனையில் கதாபாத்திரங்களை, உருவாக்கிப் பேச வைப்பதில் நாம் சமர்த்தர். ஆனால் - சூறாவளி அனுபவத்தில் - என் சொந்தக்காரர், கிராமங்களில் தெரிந்தவர்களே பாத்திரத்துள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் உணர்மையாகப் பேசினர். அனுபவித்த துன்பத்துயரங்கள் இவ்வெழுத்துத் தொடருக்கு உரமூட்டின. மட்டக்களப்பு தமிழக மக்கள் பொலிவாகப் பேசும் பேச்சுத் தமிழின் சொல் அடுக்குகளை இணைத்துப் பிணைத்துள்ளேன். இனிமைத் தமிழ் மொழியை கவிதையாக்கிப் பேசுவதில் முதல்வர் அல்லவா இவர்கள். நூலுருவில் தரும் சீறிவந்த சூறாவளி-78’ இளைய தலைமுறையினர் ஆவலுடன் அறிய விரும்புவர் என நினைக்கிறேன். அழிந்த அனுபவச் சுவட்டின் குறிப்பாக இந்நூல் மிளிரும்.
என் எழுத்துக்கள் எதுவுமே நூல் உருப் பெற்றதில்லை. இது என் முதல் முயற்சி. தனி முயற்சி. கன்னி முயற்சி.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாததால் 'மெளனம் என்னை
ஆளுமை கொண்டது.
இலக்கிய இதயம் - கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இரா. அ. இராமன் அவர்களை கண்டியில் சந்தித்தேன்.
நற்கருமமொன்று நிறைவேற தெய்வம் கூட்டிய செயலோ தெரியவில்லை. 'எல்லாமே பார்த்துக் கொள்வேன்' - என்றார். மனநிறைவு தந்தது-மனம் நிறைந்த நன்றி.
எனது வீட்டில் என் எழுத்தை அம்மாவும் அப்பாவும் நிதமும் வாசிப்பர். விமர்சிப்பர். அவர்கள் இன்றில்லை. பெற்றோர் தந்த ஊக்கம் குன்றியதே இல்லை. அதனால் அன்புத் தெய்வங்களுக்கே சமர்ப்பணம்.
பூரீமத் சுவாமி ஜீவனானந்தா - சொல்லின் செல்வி ரூபராணி ஜோசப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னுரை தந்தார் கலாநிதி துரை. மனோகரன். அணிந்துரை அளித்தார்-கலாநிதி சி. மெளனகுரு. கவிஞர் திமிலைத்துமிலன் அறிமுகவுரையைத் தந்து உதவினார். இந்நூலை கண்டி லதா இம்ப்ரஸ் அச்சகத்தினர் அச்சிட்டு தந்தனர். சித்திரக்கலைஞர். பவான் அட்டைப்படத்தை வரைந்து தந்துதவினார். இவர்கள் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த நன்றிகள்.
ற்குஞ்கு பேரிர்தகட்ட
(செழியன். ஜே. பேரின்பநாயகம்)
முதல்வர்,
மட்டுநகர் மாநகரசபை, மட்டக்களப்பு.

Page 10
சிறி வந்த சூறாவளி - 78
சீறி வந்த சூறாவளி
அனுபவம் (1)
எண்ணுக்கடங்கா இனிய ஓசைகள்- பின்னிக் கொண்டு
அசையும் பூங்கொடிகள்- மகிழ்ச்சி மேலீட்டால் முறுவல் செய்யும் மலர்கள் - குதித்தாடும் கோலப் பறவைகள் - காற்றோடு குலவும் மெல்லிய கிளைகள்- எங்கும் ஒரே இன்பம். இயற்கையின் திட்டம் இதுவன்றோ. படைப்பு எல்லாமே ஒரே முழுமை. அதன் பல்வேறு பகுதிகள் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. அன்பே இவற்றைப் பிணிக்கும் கயிறு. இப்படியெழுதி நிமிர்கிறேன். என் தாய்த் தமிழகத்தின் எழில் காட்சி கண்டு நான் கொண்ட எண்ணமிது.
நேற்று வரை என்னால் எழுத முடிந்தது இப்படி இன்றோ முடியவில்லை. ஏன்? மெய் சிலிர்க்கிறது. வாழ்வு கசக்கிறது. என் கரங்களோ நடுங்குகின்றன.
சூறாவளி என்ற அந்த அகங்காரப் பேயின் ஆணவத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். கோர இரவின் பதினொரு மணித்தியால அவஸ்தை நிழலாடுகிறது முன்னே. இரவா அது. அசுரப் பேயொன்று மனிதன் என்ற உயிர் உருவத்தைக் கசக்கிப் பிழிந்து - நெருக்கி நசித்த முதல் இரவு இது. எங்கள் வாழ்வில் பேரிடி விழுந்த பெரிய இரவு ஓங்கி வளர்ந்த - விரிந்து வளர்ந்த விருட்சங்களெல்லாம் திருகி முறிந்து சித்திரவதை செய்த சீரிய இரவு.
மனிதா இயற்கையின் முன்னே நீ எம்மாத்திரம் என்று எக்காளமிடும் தொனி கேட்டது அன்றிரவு. சூறாவளி என்ற அசுரன் அன்றிரவு வந்தான். நாமெல்லாம் அவன் பிடியில் பட்டு மரண அவஸ்தைப் பட்டோமே. ஏனம்மா தாயே-நீ சீறிச் சீற்றமுற்றாய்? சொல். சொல்.நீ சொல்லமாட்டாய். உன் ஆட்டத்தை முடித்துக் கொண்டு - போனாய் நீ போரில் பொசுங்கிய பூமியாயிற்று எங்கள்

செழியன். ஜே. பேரின்பநாயகம் வளம் நிறைந்தபூஞ்சோலை. எழுபத்தொரு ஆண்டுகளுக்கு முன்னர் நீ வந்தாய் புயலாக. அன்றோ நீடிக்கவில்லை- பதினொரு மணி நேரம். வந்தாய்- போனாய் என்றிருந்தோம். அன்றிலிருந்து எழுந்து நிமிர்ந்தோம் நாம். முறித்துவிட்டாய் மனிதனை அடியோடு. சாய்த்து விட்டாய் மரங்களை வேரோடு. எங்கள் கண்ணிருக்குத்தான் முடிவில்லையா?
சூறாவளிப் பேயே! நீ ஏன் எங்களை விட்டு வைத்தாய்? நீ இரவோடு இரவாய்-விடிவதற்குள் துகிலோடுதுகிலாய் நெடுந்துயில் கொள்ளச் செய்தாயே ஆத்துமாக்கள் - அவர்களெல்லாம் புண்ணியாத்துமாக்கள். மிஞ்சியவர்களோ அழுந்தப் பிறந்த பாவப் பிண்டங்கள். d
நான் சீறிக் கொத்தும் நல்ல பாம்பைப் பார்த்திருக்கிறேன். பதுங்கிப் பாயும் புலியைக் கண்டிருக்கிறேன். ஆனால் அதிபராக்கிரமம் மிகுந்த மனிதனையும் மனிதனின் படைப்புக்களையும் நொடிப் பொழுதில் சுக்குநூறாக்கிய சூறாவளியை அனுபவித்ததில்லை.
பேய் அறைந்தவன் போல - சக்தி குன்றிய மனிதனால் நெல் உதறப்பட்ட வைக்கோல் போல - நான் உட்கார்ந்திருக்கிறேன் ஒருபக்கம்.
என் நினைவெல்லாம் - ஒருகணம் சிறகடித்துப் பறக்கிறது. சக்தியற்றவனாக - சூறாவளியின் சீற்றத்தால் துவைக்கப்பட்டவனாக வதைபட்ட நான் எப்படித்தான் சிறகடித்துப் பறக்கமுடியும்?
நினைவலைகள் படர்கின்றன. வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன். எங்கும் ஒரே அந்தகாரம்- சூன்யமயம்- பொலிவிழந்த பூமி. பொருள் இழந்த மனிதர்கள்- உயிர் துறந்த உடல்கள்- எங்கு செல்வதென்றே தெரியவில்லை.
மண்வீடுகளுக்குள் அமர்ந்தவர்கள் அமர்ந்தவர்கள் தான்வீதிக்குள் ஓடியவர்கள் ஓடியவர்கள்தான்.

Page 11
சிறி வந்த சூறாவளி - 78
கோரமான கொடுவதை இரவுக்குள் இன்னொரு தடவை
செல்வோமா? ஹ" ஹ என்ற பேரிரைச்சல், கொடுவாளினை எடடா என்ற கொக்களிப்பு அசுப்பும் இல்லாமல் பெரு விருட்சங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் எல்லாமே காற்றோடு கலந்தன.
இவை என்ன பறக்கும் தட்டுக்களா? இல்லை - இல்லை. கூரைகளில் வேய்ந்த தகரங்கள். அவை அந்த இரவில் சூறாவளி ஹெலிகொப்டர்கள்.
சிறு குடிசையை நம்ப முடியாது. ஒடிச் செல்வோம் ஒதுக்குப்புறமாக என்று வருகிறார்கள்.
அப்பா தம்பி வசந்தனை அம்மாதானே ‘கக்கத்தில் (இடுப்பில்) அணைத்துத் தூக்கி வந்தாள்.
தம்பி எங்கே?' சாந்தன் கேட்கிறான் அம்மாவை,
அம்மா பதில் சொல்லுகிறா.
இந்தக் கரி இருட்டுக்க தம்பியை எங்கடா தேட
கக்கத்தில இருந்தவன புசல் இழுத்திட்டு போயிட்டுடா மகனே' என அலறித் துடிக்கிறாள் தாய்.
சூறாவளி அள்ளிச் சென்ற வசந்தனை விடிந்துதான் தேடிப் பார்க்க வேண்டும். பெற்ற மகனை புயலில் விட்ட அன்னை அன்றிரவு
முழுவதுமே ஒப்பாரி.
அதோ ஒரு குண்டு மனிதர். அவரை அந்தரத்தில் அழைத்துச் செல்லுகிறது பார்த்தீர்களா? விடிந்ததும் தேடுகிறார்கள். மட்டக்களப்பு வாவியில் மிதக்கிறார்.
சேனைக் காவலுக்கு வந்த கந்தப்பு அணிணனைக் காணவில்லை. வாடியில் விரித்த பாயும், தலையணையும் மர இடுக்கில் செருகிக் கிடப்பது தெரிகிறது. தேடிப் பார்ப்போம். கட்டையாலும் கிடைக்குமா என்று.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
புல்புல்லென்று விடிகிறது. கனவுலகொன்றில் சஞ்சரித்தவன் போல் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறேன். பேரழிவைப் பார்க்க முடியவில்லை. கலங்கிய உள்ளத்தோடு என் வீடு நோக்கி நான் நடக்கிறேன். சூறாவளி இரவில் நான் வீட்டில் இல்லை என்பது இப்போது தான் உங்களுக்குத் தெரிகிறது. வீதி எங்கும் ஒரே வெள்ளம் குமுறிப் பாய்கிறது. ஆழம் அறியாது காலை விடுகிறேன். நீரில் மூழ்கித் தவிக்கிறேன். தெய்வாதீனமாக உயிர் தப்புகிறேன். ஊர் போகிறேன். போனதும் போகாததுமாக ஒரு இழவுச் செய்தி நெஞ்சை உலுப்புகிறது. எனது சகோதரர் முறையான குமரையாவின் துணைவி சுவர் விழுந்து காலமானார் என்ற செய்தி. தமிழர் பாரம்பரிய பிரேத அடக்க முறைகள் எதுவும் பேண நேரமில்லை. பாயில் சுருட்டி தட்டியில் தூக்கி வைத்துச் சுமந்து சென்று அடக்கம் செய்கின்றோம்.
சாய்ந்த மரங்கள் கிடக்கட்டும். பிரேத அடக்கத்துக்கே நேரம் போதாது. சுவர் சாய்ந்த வீடுகளைப் பாருங்கள். அலவாங்கு கொண்டு கிண்டுங்கள். ஒரே வீட்டில் பதினைந்து சடலங்கள்.
அடுத்த வீடு. அதோ புற்று மண் நெரிசலில் ஒரு பிஞ்சுக் குழந்தையின் கால் தெரிகிறது. வீட்டுக்காரர் பெயரை அறிந்துக் கொண்டால் போதும். கணக்கை நாமே போட்டுக் கொள்ளலாம். எதற்கும் கிண்டினால் தானே தெரியும். அது வரை பொறுத்திருங்கள். இச்சோக நிகழ்ச்சிகளை அறிந்ததும் எங்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள். அது எங்களை சாந்திப்ப்டுத்தட்டும்
All I

Page 12


Page 13
ليس في التي يت
i
 
 


Page 14
சிறி வந்த சூறாவளி - 78
அனுபவம் (2)
* என் நெஞ்சம் ஒரு வச்சிர நெஞ்சம். இதனால்தானோ என்னமோ நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன். நான் இப்போது எனது கிராமமான மண்டூருக்கு வந்திருக்கிறேன். சூறாவளியின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டு என் ஊர் வந்து சேர எனக்கு நான்கு தினங்கள் பிடித்தன. சூறாவளிப் பேயின் அகங்காரத்தை நான் அனுபவித்த ஊர் களுவாஞ்சிகுடிதான். அவ்வளவு பெரிய துாரமில்லை. குறுமன்வெளி - மண்டூர் துறை கடந்து செல்வதென்றால் மூன்றே மூன்று மைல். சுற்றி வளைத்து பட்டிருப்புவெல்லாவெளி வழியில் வருவதென்றால் ஏழு மைல். ஒரு வழியில் பரந்து விரிந்து கிடக்கும் மட்டக்களப்பு வாவியைக் கடக்க வேண்டும். மறுவழியில் நான்கு தாம்போதிகளைக் கடக்க வேண்டும்.
நான் எனது கிராமத்திற்கு வந்து சேர்ந்ததே பெரிய கதை. அதுவும் ஒரு மரணப் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்ட சோகக் கதை. நான் இறந்தும் முப்பத்தொன்று அனுட்டித்திருப்பார்கள் என் வீட்டார். அந்த அதி பயங்கர அனுபவத்தை நான் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். இன்று மட்டுமா நினைவிருக்கப் போகிறது. என் உடலில் 'உயிர்' என்ற காற்று குடிகொண்டிருக்கும் வரை நினைப்பும் குடியிருக்கும்.
ஆண்டவனே மனிதன் என்ற கூடொன்றில் காற்றை அடைத்து- உயிர் என்ற பெயரில் ஊடாடவிட்டிருக்கிறாயே. பிரமாதம்தான் உன் செயல். ஆனால் ஏன் இந்த உயிரை இப்படி உபத்திரவப்படுத்துகிறாய். நான் நொந்து கொள்கிறேன் ஆண்டவனை இப்படி
நான் சிரிக்கிறேன். சிரிக்க முடியவில்லை. நான் அழுகிறேனா? அழுதவற்கும் முடிவதாக இல்லை. சோகம் என்ற சுமை என் நெஞ்சில் ஒரு பெரும்பாறாங்கல்லாக ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. அதனால் விம்முகிறேன்- வெதும்புகிறேன். ஓவென்று ஒப்பாளி வைக்கட்டுமா? அதற்கும் முடியவில்லையே.
நான் இப்போது என் ஊரில் இருக்கிறேன். வனப்பும் வளமுமிக்க வண்டமிழ்ச் சோலை இது. சிறப்பும் செல்வமுமிக்க சிங்காரத் தோப்பு அது.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
சின்ன கதிர்காமம் என்ற செல்லப்பெயர் பெற்ற பழமுதிர்ச் சோலைக்குள் நான் இன்னும் நுழையவில்லை. முற்றாகக் கிராமம் அழிந்தே போயிற்று.
நான் இப்போது எனது வீட்டில் இருக்கிறேன். எத்தனை முயற்சிகள் எத்துணை எண்ண அலைகளை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு கட்டிய புதிய வீடு. எங்களுக்கு எங்கள் வீட்டைக் கட்டி முடிக்க எழுபத்தையாயிரம் ரூபாய் பிடித்திருக்கிறது. வீட்டை வளைத்து முக்கனி மரங்கள் - அழகுப் பூஞ்சோலை. ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய வீடு. என் வீட்டின் பெயர் 'மனோப்ரியா ’வெள்ளை மாளிகை இது என்று வருவோரும் போவோரும் வியப்புறுவர்.
சுற்றி வளைத்து நிற்கும் தென்னை மரங்களெல்லாம் நெருப்புச் சுள்ளிகள் சிதறுண்டு கிடப்பது போல கன்னா பின்னா என்று சின்னாபின்னப்படுத்தப்பட்ட நிலையில். வீடுகள் வீதிகள் எல்லாம் உருக்குலைந்து மதிப்பம் தெரியாத நிலை. மக்களோ தடுமாற்ற நிலை.
சூறாவளியில் சிதறுண்ட என் வீட்டின் ஒரு அறையில் நான் படுத்திருக்கிறேன். கட்டிலோ, கதிரையோ இதர தளபாடங்களோ எல்லாமே சிதறுண்டு முறிந்து போயிற்று. படுத்திருக்கிறேன் என்று சொன்னேன் தானே - தரையில்தான் படுத்திருக்கிறேன். அமைதியாக மனத்திருப்தி இல்லாதவனாக, எத்தனை நேரம் தான் தரையிலே படுத்துக் கிடப்பது, மெதுவாக எழுந்து இரு கை விரல்களையும் பின்னிக் கொண்டு சோம்பலை முறித்தேன். கைகள் உயரப் போனபோது மூர்க்கத்தோடு என்னை அள்ளிச் சென்ற வெள்ளத்தில் தப்பிய அசதி உணர்வில் படுகிறது.
என் துணைவி மனோ, அருகே எனது பிள்ளை சாயிவிதிஷா அப்பா-அப்பா என்று குழவி மொழி பேசிக்கொண்டு என் அருகே வருகிறார்கள்.
இருபத்தி மூன்றாம் திகதி வியாழன் இரவு. அவர்கள் அனுபவித்த கோர அனுபவத்தைச் சொல்லுகிறார்கள். நமக்குமட்டுமா இந்தத் துன்பம். சூறாவளிப் பேய் தரம் பார்த்து தகர்க்கவில்லை.

Page 15
சிறி வந்த சூறாவளி - 78
உடமைகளையும், உயிர்களையும் ஏகபோக உரிமை கொண்டாடியது அது என முற்றுப்புள்ளி வைக்கிறேன் கதைக்கு.
தரைப்படுக்கையிலிருந்து சோம்பலை முறித்து எழுந்த நான் மெல்ல என் வீட்டின் வீதியோர யன்னலைத் திறக்கிறேன் மெதுவாக. நொறுங்கிப்போன புட்டுவத்தை இழுத்துப்போட்டு என் இருக்கை பட்டதும் படாததுமாக வீட்டின் சுவரில் வெடிப்பு என்ற ஜோடனையில் இழையோடிப் படர்ந்திருக்கும் நெழிவு சுழிவுக் கோடுகளை பார்க்கிறேன்.
வெள்ளைச் சுவரில் எத்தனை வர்ணங்களை விதம் விதமாக கலந்து பூச எண்ணினோம். இயற்கையே இந்த வேலையை பச்சை இலை கொண்டும் தளிர் கொண்டும் இலைகளின் மெல்லிய நரம்புகொண்டும் செய்திருக்கின்றனவே.
சுவரில் வெடிப்பாக படர்ந்திருக்கும் கோடுகளை எப்படி எண்ணிக் கணக்கெடுப்பது. சூறாவளி பற்றிய துயர அனுபவங்களும் சோகச் சுமையும் எண்ணிலடங்காதவையே என எண்ணிக்
கொள்ளுகிறேன்.
வெடிப்பின் நெழிவில் என் எண்ணம் ஒடுகிறது. மட்டுநகர் நோக்கி.
அன்று காலை இருபத்திமூன்றாம் திகதி. கிழமை வியாழன். நான் மட்டுநகருக்கு அவசர அலுவலாகப் போயிருக்கிறேன். என்னோடு எனது சகோதரர்கள் முறையான சிவசம்பு அண்ணனும், குமரையை அண்ணரும் வந்திருந்தார்கள். மட்டுநகரில் வைத்து எனது மூன்றாவது சகோதரர் ராஜேந்திரன் பேரின்பநாயகம் இணைந்து கொண்டார். அவர் கல்லடியில் வசிக்கிறார்.
மட்டுநகருக்குப் போனதும் போகாததுமாக அங்கே என்னை சாயி பக்தர் ஒருவர் சந்தித்தார். இன்று பகவானின் ஜனன தினம் என்றார். சாயி பக்தர்களின் இல்லங்களிலெல்லாம் அன்று பெரும் கொண்டாட்ட ஏற்பாடு. பஜனை நிகழ்ச்சிகள், பிரசாத சாமான்கள் சேகரிப்பு. இப்படி பெரிய தடபுடல். இச்செய்தியை காதில் வாங்கிக் கொண்டு பகவானே பகவானே என வாய்க்குள் உச்சாடம் செய்கிறேன்.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
சரியாக பதினொரு மணியிருக்கும். பெருமழையுடன் சீறிய காற்று வெளுத்து வாங்குகிறது தன் சீற்றத்தை. மத்திய வீதியில் அமைந்துள்ள வூட்லன்ஸ் ஹோட்டலில் சூடாக ஒரு தேநீர் அருந்திவிட்டு வீரகேசரி கிளை அலுவலகத்தின் முன் நான் நிற்கிறேன். மழையின் அகோரம் பெரும் காற்றைக் கொண்டு வந்தது மட்டுமன்றி கொடுமையான குளிரையும் அள்ளி வீசியது. நாங்கள் எல்லோருமே கொடுகிப்போய் நிற்கிறோம்.
ஆனால் ஒன்று- இப்போது நான் புளியந்தீவில்தான் நிற்கிறேன். கோட்டமுனைப் பாலத்தைக் கடந்து போயாக வேண்டும். என் அலுவலை முடிக்க. கோட்டை முனைப் பாலத்தின் பக்கம் நோட்டம் விட்டுப் பார்க்கிறேன்.
அதோ பாருங்கள்! பாலத்தைக் கடந்து போகிறவர்களும் வருகிறவர்களும் காற்றினால் பந்தாடப்படுகிறார்கள். சம சோல்ட் - அதாவது குத்துக்கரணம் போடுகிறார்கள். நான் அவசரமாகப் போய்த்தான் ஆக வேண்டும். என் அருகே நின்றவர்கள் நீங்கள் மெலிந்தவர் போக வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள். ஆலோசனையை நான் கேட்கவில்லை. குடையை மடக்கிக் கையில் பிடித்துக் கொண்டு கால் சட்டையை மடித்து செருகிக் கொண்டு நடக்கிறேன் நனைந்து நனைந்து. பாலத்தை அண்டியதும் பாலத்தின் ஒரப்புறக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அடிமேல் அடிவைத்து நகர்கிறேன். மறுபுறத்தில் என் சகோதரர் எதிரும் புதிருமாக என்னைச் சந்திக்கிறார். சூறாவளி’ என்ற அசுரனின் வருகைக்கு கட்டியம் கூறுவது போல வந்த பேய்க்காற்றின் சுழலுக்குள் ஒரு சந்திப்பு. ஒரே மார்க்கமாக திரும்புகிறோம் இருவரும்.
பொலிஸ் நிலையத்தை அண்மித்து செல்லும் வாவிக்கரை வீதி, சந்தைக் கட்டிடத்தின் மேலாக இமை அசைக்குமுன் மின்னல் வேகத்தில் இரு தகரங்கள் பரந்து புரளுவதைப் பார்க்கிறேன். எங்களுக்கு முன்னே சென்ற எனது சகோதரர்களைக் காணவில்லை. அவர்களின் கழுத்தைச் சீவிக் கொண்டா தகரம் புரளுகிறது?

Page 16


Page 17
レー。
“
 

擂
罩臀

Page 18
சிறி வந்த சூறாவளி - 78 அனுபவம் (3)
கேட்கக் கூடாத கேள்வியொன்றை என் முன்னே நடந்து சென்ற சகோதரர்களிடம் கேட்டேன். அக்கேள்வியை அவர்களிடம் கேட்கத் துணிந்தேனே என்பதை எண்ணிப் பார்க்கும் போது துயரப்படுகிறேன் நான். அவர்கள் அதிர்ச்சியுறவும், நான் துயருறவும் தொடுத்த வினாதான் என்ன? விடைதான் என்னவோ, நாங்கள் தப்பித்து விட்டோம் - மயிரிழையில், நாங்கள் பிடித்துச் சென்ற குடைதான் சிதைந்து முறிந்தது என்றார்கள். அருகில் இருந்து கடையினுள்ளே ஒதுங்கிக் கொண்ட அவர்கள் - என்னிடம் சொன்ன
பதில் இது. அப்படியானால் என் வினா என்னவாக இருந்திருக்குமென யூகித்துக் கொள்ளுங்கள் நீங்கள்.
மட்டுநகர் சந்தைக் கட்டிடத்தின் மேலாக பறந்து வந்த தகரம்
சுருண்டு விழுந்தது. சுற்றிக் கொண்டது. ஆடுகிறது. அசைகிறது
என்று சொன்னேன்தானே முன்னர், ஏன் அசைகிறது அந்தத் தகரம். தகரத்தை - கடையில் காற்றின் சீற்றத்திற்கு ஒதுங்கி நின்றவர்கள் - சற்று நேரம் சென்று பிரித்துப் பார்த்தார்கள். வீதியில் சென்ற ஆட்டுக்குட்டியொன்று அவதிப்பட்டுக் கொண்டிருந்தது அதனுள்ளே. பாவம் உயிர் - தப்பியது, அந்த அப்பாவி ஆட்டுக்குட்டி இது ஒரு கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள். இது போன்று எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். எல்லாமே உண்மைச் சம்பவங்கள். சூறாவளி என்ற அசுரன் ஆடிய ஆட்டத்தின் போது நிகழ்ந்த நிலையான நிகழ்ச்சி.
மட்டக்களப்பு வாவி ஓடிக் கொண்டிருக்கிறது. வாவிக்கு அருகே கண்ணுக்கெட்டிய தூரம் கூர்ந்து பார்க்கிறேன். அங்கே குலைதள்ளிய தென்னைகள் - சாய்ந்து ஆடுகின்றன. அதனூடே வாவிக்குள் கன்னங்கரேர் எனத் தென்படும் யானைக்கல். இந்தச் சுற்று வட்டத்துள்தானாம் பூரண நிலவில் மீன்பாடும். கோரமான காற்று என்பதால் வாவியில் மீன் தோணிகள் எதுவுமே இல்லை. வாவி ஒய்யாரமாக தென்படுகிறது. ஆனால் அலைகள் காற்றின் சீற்றத்தால் சீறிப் பாய்கின்றன. அங்கு அமைதியே இல்லை. நான் பார்த்து மகிழும் அழகுக் காட்சியை நாளை பார்க்க மாட்டேன்

செழியன். ஜே. பேரின்பநாயகம் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் கோட்டமுனையில் அலுவல்களை முடித்துவிட்டு நனைந்து தோய்ந்து மீண்டும் - கோட்டமுனைப் பாலத்தைத் தாணி டி புளியந் தீவுக்குள் பிரவேசிக்கின்றோம். பிரதான பஸ் நிலையம் இங்குதானுண்டு. ஊர் பஸ் ஸைப் பார்த்து நிற்கிறோம். சரியாக நேரம் பிற்பகல் 8 மணியிருக்கும். பஸ் எதுவுமே நிலையத்தில் இல்லாததால் - அந்த நேரத்தை ஆதாயப்படுத்திக் கொண்டு, பத்திரிகை எழுத்தாளரான திருமதி சுகுணம் யோசப் வீட்டிற்கு ஒட்டமும் நடையுமாகப் போகிறேன்.
என் சோகக் கதையையும் - நிலையையும் பார்த்துப் பரிதாபப்பட்ட சுகுணம் அக்கா - ஹார்லிக்ஸ் கரைத்துத் தருகிறார். சூடான செய்தி ஒன்றையும் என் காதில் போட்டார். நான்கு மணிக்குப் பின் கடும் புயல் வீசுமாம் - ஊருக்கு ஒடித் தப்புங்கள் என்பதுதான் அச்செய்தி.
பஸ் நிலையம் வந்து - கல்முனை பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன். சகோதரர் ராஜேந்திரன் அவசர அவசரமாக கல்லடிக்கு விரைகிறார். கடல் பொங்கி வருகிறதாம் - என்ற தகவலும் அவரை அவசரப்படுத்தியிருக்கிறது.
நாங்கள் மட்டக்களப்பு - கல்முனை வழியில் வந்து கொண்டிருக்கிறோம். வெற்றிலைக்குப் பெயர் பெற்ற தேற்றாத்தீவு - களுதாவளை ஊர்களில் சேதம் ஏற்படவில்லை. முருங்கை மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அவ்வளவுதான். அடுத்தநாள் செய்தி என்ன என்று தெரியுமா? முற்றாக அழிவுற்ற கிராமங்கள் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டன தேற்றாத்தீவும் - களுதாவளையும்.
நான் இப்போது களுவாஞ்சிக்குடி வந்திருக்கிறேன். பத்து நிமிடங்கள் தான் வீதி ஒரத்தில் நின்றிருப்பேன்.
சீறி வருகிறது சூறாவளி. நான் தரித்து நிற்கும் தேநீர்ச்சாலை முன் நின்ற பெரிய வேம்புமரம் வேரோடு சாய்கிறது. அதனருகே அமைந்துள்ள முடித்திருத்தகத்தின் கூரைத் தகரங்கள் காற்றில் மிதக்கின்றன. கடையில் மிச்சம் என்ன தெரியுமா? கதிரையும் கண்ணாடியும், 'உட்கார்ந்து முடிவெட்டுவோமா? என்று பரிகாசம் பேசுகிறார்கள் என்னோடு நிற்பவர்கள்.

Page 19
சிறி வந்த சூறாவளி - 78
இப்போது நேரம் சரியாக ஆறுமணி. இலங்கை ஒலிபரப்புக் க்டட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை ஒன்றின் செய்தி. கடைக்காரர் ஒன்று செய்தார். அவர் நன்றே செய்தார். தனது டிரான்ஸிஸ்டர் பெட்டியை கடைமுன்னுள்ள தரையில் வைத்தார் - செய்தியை எல்லோருமே கேட்கட்டும் என்று. AW
செய்தி ஒலிபரப்பாகிற்று - சூறாவளி இலேசாக மேலாகப் போகிறதாம் என்று. ஆனால் கொடுரமாகச் சூறாவளி வீசுகிறது அப்போது.
தரையில் வைக்கப்பட்டிருந்த டிரான்ஸிஸ்டர் பெட்டியை உற்று நோக்குகிறேன். செய்தி ஒலிபரப்பாகிறது. ஆனால் டிரான்ஸிஸ்டர் பெட்டியோ அந்தரத்தில் தொங்குகிறது. வாழ்வில் நடக்க முடியாத, நினைக்கத் தோணாத - நம்பமுடியாத நிகழ்ச்சிதான். என்ன செய்யலாம். இயற்கை நினைத்தால் எதைத் தான் செய்யமுடியாது என நினைக்கிறேன் அக்கணம். அந்தரத்தில் ஒரு வானொலிச் செய்தி என இதனை வருணிக்கலாமா? -
சூறாவளியின் சீற்றம் - அதிகரித்ததும் - கடையினின்றும்
ஒரு அடி தன்னும் நகர முடியாத நிலையில் - நாங்கள் கடைக்குள்ளேயே அடங்கி விடுகிறோம்.
கணேசனின் - தேநீர்ச்சாலைக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் தொகை சுமார் முப்பதிருக்கும். நேரம் செல்லச் செல்ல சூறாவளியின் அகோரம் உக்கிரமடைந்தது. கடையின் முன் கதவுகளை கம்பிகளை
முன்னே கொழுவி இழுத்துப் பூட்டுகிறார்.
சூறாவளி தன் வேகத்தைக் கூட்டிக் கொண்டே போகிறது. கடையின் பின்புறத்தில் நீண்டு வளர்ந்திருந்த பனை முறிந்து தெறிக்கிறது. கடைக்கூரையின் மீது - கூரை தகர்கிறது. ஐயோ - என்ற அலறல் சப்தம், யார் யாரிடம் உதவி கேட்பது, ஒருவருக்கு இன்னொருவர் தான் எப்படி உதவி செய்ய முடியும் இந்த உபத்திரவ வேளையில். மீண்டும் ஒரு பெரிய சப்தம்-தடாரென தென்னை சாய்கிறது. கடையின் சுவரில் அடுக்கியிருந்த சாமிப்படங்களைப் பார்க்கிறேன் எல்லாமே சரிந்தன. தகர்ந்த கூரையினை மேவிய சீலிங்கை பொத்துக் கொண்டு சலார்’ என்று நீர் கொட்டியது சற்று வேளையில் கடை நிரம்பத் தண்ணிர்.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
கடையின் ஒரு மூலைப்புறம் மட்டுமே தஞ்சம் புகக்கூடிய இடம், அங்கு அடைக்கலம் புகுந்த கிறிஸ்தவர்கள் யேசுவே. யேசுவே ஏன் என்னைக் கைவிட்டீர் என ஆர்ப்பரிக்கின்றனர். சைவர்கள் - கந்தா! முருகா காருமையா என கூக்குரல் எழுப்புகின்றனர்.
மனிதனே தன்னில் நம்பிக்கை இழந்த நேரம். முழு நம்பிக்கையும் ஆண்டவன் மீது சுமத்திய அபாய நேரம், நனைந்து - தோய்ந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நாங்கள் கடைத் தளபாடங்கள் மீது ஏறி நிற்கிறோம். முருகன் மீது பாடுங்கள். அவன் அல்லாது நமக்கு யாருமே துணை இல்லை. முருகன் மீது
பாடுங்கள் - என்கிறார்கள் குமரையா அண்ணனைப் பார்த்து. முருக
பக்தரான அவர் பாடுகிறார். ஒரே மூச்சாகப் பாடுகிறார்.
சூறாவளி ஒயும் வரை - அதிகாலை இரண்டு மணி பதினைந்து நிமிடம் வரை பாடிக்கொண்டேயிருக்கிறார் அவர் என் அருகில் நின்று. கடைக் கதவுகளை இறுகப் பிணைத்திருந்த பாரிய குறுக்குக் கம்பி திடீரெனத் தெறிக்கிறது இரண்டாக கதவு பட்டென்று திறக்கிறது. வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸினுள் கைக்குழந்தைகளை ஏந்தியவாறு புயலில் அலைமோதி ஒடி ஏறும் தாய்மார்களைக் காண்கிறேன், பஸ்ஸின் ஒரப்புறக் கண்ணாடிகள் தகர்ந்து சினி னா பின்னமாகின்றன. பஸ் ஸில் ஏறிக்கொண்டவர்களுக்கு-தமது உயிர் தப்பித்துக் கொண்டால் போதுமே என்ற வாஞ்சை,
அதிகாலை இரண்டரை மணிக்கு சூறாவளி ஒருவாறு
தணிந்தது. மெதுவாகக் கடையிலிருந்து வெளிக்கிளம்புகிறேன். எனது மச்சாள் லீலா இராசமாணிக்கத்தின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறேன். வீதியே தெரியவில்லை. எங்கும் ஒரே மரக்கும்பல். மாணிக்கராஜா தனது உழவு இயந்திரத்தின் வெளிச்சத்தை வீதி வழியே செலுத்துகிறார். அந்த வெளிச்சத்தில் மெல்ல நடக்கிறேன். வீதி ஓரத்தில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கட்டிடம் உருக்குலைந்திருக்கிறது. என் உறவினர் கணேசமூர்த்தியின் வீட்டு 'கேற் தொங்குகிறது.
தட்டித் தடவிக் கொண்டு லீலா மச்சாள் வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன். நாலாபுறத்திலும் மரங்கள் வீட்டின் மீது விழுந்து

Page 20
சிறி வந்த சூறாவளி - 78
நொறுங்கியிருந்தது. முன் அறைதான் மிகுதி, அதுவும் கூரை பறந்து சீலிங் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. மச்சாள்,
அண்ணரின் மக்கள் அனைவரும் மேடைமீதும், கதிரைகளினுள்ளும் குந்திக் கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.
காலை வெள்ளிக்கிழமை விடியப் போகிறது. விடிந்ததும் விடியாததுமாக குமரையா அண்ணர் முதுகில் தட்டினார். காட்டு வெள்ளம் வீதிகளை மூடு முன்னர் ஊர் போய்ச் சேருவோம் என்று ஆம் என்று சொல்லி தடைகளைத் தாண்டி பட்டிருப்பு வழியாக வெல்லா வெளிக்கு நடக்கிறோம். வழியில்-போரதீவு முனைத்தீவு கிராமங்களைத் தாண்டியாக வேண்டும். அந்த விடியச் சாமத்தில் எங்குமே மரண ஒலம் தான். ی
வெல்லா வெளிச் சந்தியில் நிற்கிறோம். வெல்லாவெளிப் பொலிசாரோ திக்குத்திசை தெரியாது வீதியில் தவித்து நிற்கிறார்கள். மண்டுருக்கு நாங்கள் போக முடியாது. நான்கு தாம்போதிகளைத் தாண்ட வேண்டும். மூன்று பாலங்களுக்கு மேலாகச் செல்ல வேண்டும். எங்கும் கரை புரண்டோடும் ஏகவெள்ளம். கடல் அலை போல காட்டுவெள்ளம் குமுறிப் பாய்கிறது.
வெல்லாவெளி-அரச நெல் கொள்வனவு குதம் முற்றாக உடைந்து தகர்ந்திருக்கிறது. பொலிஸ் நிலையம் இல்லை. கோயில்கள் எதுவுமே இல்லை. அங்கு எனது உறவினர் வீட்டிற்கு போகிறேன். ஒரு புறம் செத்த கோழிகளின் குவியல், மறுபுறம் குளிர் தாங்க முடியாது உயிர்நீத்த ஆடுகளின் குவியல், மெதுவாக களுவாஞ்சிகுடி நோக்கி மீண்டும் திரும்பவே நாங்கள் விரும்புகிறோம். தெய்வநாயக அண்ணன் - வரம்புக் கட்டில் வெட்டிக் கொண்டு நிற்கிறார். அவர் வாசஞ் செய்த கடையைப் பார்க்கிறோம். பென்னம் பெரிய புளியை மரம் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. 'பிரேதத்தை வைத்துக் கொண்டு ஏன் புதினம் பார்ப்பான் புதைக்கப் போகிறேன். ‘என் மனுஷி போய்விட்டா என ஒப்பாரி வைக்கிறார். அவர் இன்னுமொரு அதிர்ச்சி தரும் சம்பவத்தையும் சொல்லுகிறார்.
வெல்லாவெளி அம்மன் கோயிலில் சூறாவளிக்கு தஞ்சம் புகுந்த ஆறு ஜீவன்கள் கோயில் சுவர் விழுந்து உயிர் நீத்தன என்பதாகும்.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
கைக்குழந்தையொன்றும் தாயின் பிடியிலிருந்து தவறி தென்னை ஒலைக்குள் வீசப்பட்டதாம். தெய்வாதீனமாக குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை.
போரதீவைத் தாண்டி - கட்டிறம் பூச்சி மரத்தடிக்கு வருகிறோம். ஏராளமான கிராமத்து இளைஞர்கள் சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வருகிறார்கள். பிரேதங்கள் பல ஒதுங்கியுள்ளன இங்கு மண்டூர் ஆட்களாம் என்கிறார்கள். என் மனம் பிரேதங்களைப் போய்ப் பார்த்தால் நல்லது என்பது போல பேசுகிறது. ஒடோடிப் போகிறோம். பதின்மூன்று வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை. கையில் தன் நீண்ட கேசத்தைப்பிடித்த வண்ணம் எழும்பாத துயில் கொள்ளுகிறது. வெள்ள அலைகளோ இச்சின்னஞ் சிறுசின் பட்ட உடலைத் தாலாட்டி நிற்கின்றன. அருகில் இக்குடும்பத்தினர் வசித்து வந்த புரையும் கூரையோடு ஒதுங்கி கரை சேர்ந்திருக்கிறது. அருகில் மடக்குக் குடையொன்றும் அதன் துணி பறந்த நிலையில். சூறாவளியில் மனிதனின் உயிருக்கு மதிப்பே இல்லாது போயிற்று அன்று.
சற்று நோட்டம் விடுகிறேன். நாங்கள் நடந்து வந்த பாதை ஒரத்தை-முயல், நாரைக் கொக்கு-விஷப் பாம்புகள்-கிளி-புறாக் கூட்டங்கள் உயிரற்ற சடலமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. ஆனால் - இப்போது நாங்கள் அதிகாலையில் நடந்து வந்த பாதையை கடக்க முடியாது - வெள்ளம் பீறிட்டுப்பாய்கிறது. வீதியின் குறுக்கே வீதியின் மதகுகள் உடைப்பெடுத்து வெள்ளம் சுரக்கிறது - கொப்பளிக்கிறது. நாங்களோ அங்குமில்லை. இங்குமில்லை. அந்தரத்தில் தவிக்கின்றோம். இடை நடுவிலுள்ள சிறுமேட்டில் நின்று.
A LO

Page 21


Page 22
ஆ
ता
T
"
■
R
 


Page 23
சிறி வந்த சூறாவளி - 78
அனுபவம் (4)
அன்று இரவு முழுவதுமே தூக்கம் கண்களை மூடவில்லை. நாளை விடியுமோ விடியாதோ என்ற நம்பிக்கை இழந்த எண்ணம். உபத்திரவவேளை - மரணம் என்கின்ற போராட்டத்தின் முற்றான முடிவை எதிர்பார்த்து ஏங்குகிறது என் இதயம். இருள் அகன்றதும் பகல் விடியும் - உலகம் தோன்றிய காலம் முதல் நிலவி வரும் நம்பிக்கையில் நம்பிக்கை என் அருகே நின்றவருக்கு. ஆண்டவனே அதனைத் தீர்மானிக்கட்டும்- எனது பதில் இப்படியாக இருந்தது அவருக்கு.
விடிவு என்ற வாழ்வை - வழியை விழிமூடாது குளில் நின்று எதிர்பார்ப்போம். ஆனால் ஒளி இழந்த வாழ்வை - விடிந்ததும் நாம் சந்தித்தே ஆனோம். விழி முழித்திருந்துதான் என்ன பயன் - எண்ணுகிறேன் இப்படி நான். வாழ்வில் மனிதனுக்குத்தான் எத்தனை தொந்தரவுகள். எல்லையில்லா தொல்லைகளைச் சுமந்தல்லவா வாழ்வு என்ற குறும் பயணத்தை தொடருகிறான் மனிதன். ஆசை என்ற அலையின் மீது நாமெல்லாம் நீந்தினோமே. ஒரு இரவுப் பொழுதுக்குள் எல்லாமே- நிராசையானதே. நினைக்க முடியாத நினைவல்லவா-நிகழந்து போயிற்று.
பயங்கர அனுபவம் மனித வாழ்வில் குறுக்கிடத்தான் செய்கிறது. குறுக்கீட்டை - எதிர்கொண்டால் எப்படியிருப்பான் மனிதன். உதாரணம்- ஒரு சூறாவளி. குய்யோ முறையோ என்று கத்துவான் - கர்ஜிக்க மாட்டான். கவலை கொள்வான்- கதையான், பிணக்குபடான்- பிதற்றுவான்-அலறுவான். ஒடித்தப்ப இடமில்லாது ததிமிதிப்படுவான்.
வெள்ளம் பீறிட்டுப் பாயும் வெல்லாவெளி-பட்டிருப்பு வழியில் நான் நிற்கிறேன். முன்னர் நான் கட்டியம் சொன்ன மனிதனுக்கான பயங்கர வேளையை நானே அனுபவிக்கிறேன். ஆண்டவனே என் வாழ்வு இவ்வளவுதானா?

செழியன். ஜே. பேரின்பநாயகம்
வெல்லா வெளியில் நான் நின்று மறுதினம் ஊர் போயிருக்கக் கூடாதா, நீந்தத் தெரியாத எனக்கு இப்படியொரு பரீட்சையா? மண்டூர் வழியில் பீறிட்டுப் பாயும் வெள்ளச் சீற்றத்தைக் கண்டு-களுவாஞ்சிகுடி திரும்பி வந்த நான் தவிக்கிறேன்.
வெள்ளம் அலை என்ற வேகம் பாய்ச்சி விரைந்து வருகிறது. வாவிக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ள நீர் எங்களை துரத்தி வருகிறது. ஒடுவது எங்கே. பிதற்றிக் கொண்டு நிற்கத்தான் இடமா? காடு மேடெல்லாம் அள்ளிக் கொண்டு வருகிறது வெள்ளம். அன்று இரவு கொட்டிய பெரு மழையின் விளைவுதான் இந்த வெள்ளம். மழை அன்றிரவு பெய்திருக்காது போனால் தீப்பற்றியிருக்குமென்று சொன்னார்கள். பாலையடி விட்டை, கல்லோயாக் குடியேற்றப் பகுதிகளான - முப்பத்துமூன்று , முப்பத்துநான்கு, முப்பத்தேழு ஆகிய கிராமங்களிலிருந்து உயிர் பிழைத்து வந்தவர்களும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். மகா ஒயா போன்ற தூர இடங்களில் தீமூண்டதாகவும் என் உறவினர் ரவீந்திரன் சொன்னார். நிகழ்ந்திருக்கலாம் நிச்சயமாக-காரணம் அன்றிரவு பெய்த பெருமழைத் துளிகள் உடலில் பட்டுத் தெறித்ததும்-சுட்டெரிக்கும் அகோரம் இருந்தது.
அதோ தெரிகிறதே பட்டிருப்புப் பாலம், அங்கேயும் மண் அரிப்பு-ஒரு உடைப்பு, நாங்கள் நின்று கொண்டிருக்கும் மேட்டை அண்மித்த வீதிக்குக் குறுக்கேயும் பெரிய உடைப்பு ஆறடி மனிதன் ஒருவனின் தலையை மேவிப் பாயக் கூடிய ஆழத்தில் வெள்ளம் பாய்கிறது. நானோ உயரத்தில் சற்று குட்டை என் அருகில் நிற்கும் குமரையா அண்ணரோ- தம்பி சபாபதியோ உயரமானவர்கள். நிச்சயமாக குமரையா அண்ணர் ஆறடி மனிதர்தான்.
வீதியின் பாரிய உடைப்பை மேவி-சுமார் இருநூறு யாருக்கு அப்பால் வளைந்து - பாய்ந்து வருகிறார்கள் பலர் கூட்டமாக. வெள்ளத்தில் உடுதுணிகளை சுழற்றிச் சுருட்டி தலையில் கட்டிக் கொணி டு பாய் கிறார்கள் . இவர்களெல்லாம் மட்டக்களப்பிலிருந்து அதிகாலை கால்நடையாக நடந்து

Page 24
சிறி வந்த சூறாவளி 78
வருகிறார்கள். மேற்கு-படுவான் கரைக் கிராமங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். சூறாவளிக்குத் தப்பித்து தங்கள் இல்லங்கள் போக வருகிறார்கள்.
முன்னே வழிகாட்டி வருபவர் நெடிய நேரிய தடி ஒன்றை கையில் வைத்திருக்கிறார். கால் ஊன்றப் போகும் வழியின் ஆழத்தைஇத்தடியை விட்டுப் பார்க்கிறார். இந்தப் பக்கம் வராதீர்கள். தாழ்பம் அதிகம். வரம்புக்கு அருகில் ஒரு மடு இது இன்னும் ஆழமானது. களி நிரம்பிய மடு. அங்கு காலை வைக்காதீர்கள் என்று குரல் எழுப்புகிறார் ஒருவர். ஆண்டவனே, சோதனை மேல் சோதனையா? பெற்றத்தாயைப் பார்க்க பாசத்தோடு வரும் அன்பு மகன். ஆசையோடு -மனைவி மக்களைப் பார்க்க வரும் குடும்பத் தலைவன்-பேரன் பேத்திமாரைப் பார்த்துப் போக வரும் குடுகுடு கிழவன். எத்தனை பேர். இத்தனை பேரும் விசையாக அள்ளி ஒடும் வெள்ளத்தில் படும்பாடு பெரும்பாடு.
குமரையா அண்ணன் ம். என்று பெருமூச்செறிகிறார். 'தம்பி இந்த உயிர மாந்த வைக்கத்தான் நாம் வந்திருக்கம் என்கிறார் என்னிடம். நீங்கள் தானே என்னையும் அழைத்து வந்தீர்கள் என்று நச்சரிக்கிறேன் நான் அவரை, கதைத்து என்ன பயன். நடக்கிறது நடக்கட்டும். நமது முடிவு இதுவென்றால் நாம் ஏற்போம். நான் சொல்லுகிறேன் இப்படி
குமரையா அணிணன் மீண்டும் ம்..ம். என்று பெருமூச்செறிகிறார். அந்த மேட்டில் குந்திக் கொள்ளுகிறார். வியாழனன்று மட்டுநகரில் வைத்து சூறாவளிக்கு கட்டியம் கூறிய காற்றுக்கு நொறுங்கிய குடையை தன் கையில் வைத்திருக்கிறார். அது ஒரு வெள்ளைக்குடை எனது தந்தையாரின் குடை அவர் நூரளை கிராண்ட் ஹோட்டலில் பிரதம காசாளராக கடமையாற்றிய போது வெள்ளைக்காரர் ஒருவர் அன்பளிப்புச் செய்த நினைவுச் சின்னம். உயிர் போனாலும் குடையை கைபறிய விட்டு விடாதீர்கள். இது என் அன்புக் கட்டளை அவருக்கு.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
எனது கைப்பையை வெல்லாவெளியில் என் உறவினர் வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். நானும் என் கையில் குடை வைத்திருக்கிறேன். அதன் சொந்தக்காரி என் மனைவி மனோ. அது ஒரு மடக்குக் குடை குடை அந்த வேளையிலும் பிடிக்க முடியாத நிலை சூறாவளி வேகம் தணிந்தாலும், காற்றின் வேகம் தணியவில்லை. ஹ.ஹ என்ற இரைச்சல்.
இரவெல்லாம் முருகன் மீது பாடி கடைக்குள் அடைபட்டுக் கிடந்த அத்தனை பேருக்கும் தென்பு தந்தீர்களே ஏன் இந்தச் சோர்வு உங்களுக்கு என்று கேட்கிறேன் நான் அண்ணர் குமரையாவிடம்.
சேனையில் இணக்கமான புரையுமில்ல. பொடியனுகளும் இரண்டு பேர் அங்க. மனுஷியும் மற்றப் பிள்ளையஞம் கொளணி வீட்டில. மனுஷி என்ன பாடோ? பிள்ளைகள் எப்படியோ? சேனைப்பயிரெல்லாம் நாசமாயிற்றோ? இப்படியான கேள்விகளை கேட்டுக் கொள்கிறார் அவர்.
அவர்விட்ட பெருமூச்சுக்கும் எழுப்பிய கேள்விகளுக்கும் நிறையப் பதில்கள் காத்திருந்தன அவர் ஊர் போய்ச் சேர்ந்த போது. வீடு திரும்பியதும் மரண ஒலம். சேனைக்குப் போனதும் பயிர் நாசம். கொளனிக்கு போனதும் இரண்டு கொழுக்கி ஓடுகள் மிச்சம். இப்படியிருந்தது அவர் நிலை.
பீறிட்டுப்பாயும் வெள்ள அலையைத் தாண்டிக் கொண்டு கரை சேர்ந்தார்கள் அவர்கள். நீச்சல் தெரியாதவர்கள் தண்ணிக்குள் கால வைக்காதீர்கள். வெள்ளமோ வேகமாகப் பாய்கிறது. இக்கரை ஊர்களின் நிலைமை பற்றி விசாரித்தார்கள். கிராமங்கள் எல்லாமே சீரழிந்து போயிற்று. படுவான்கரைக் கிராமங்களில் பழுகாமத்திலும் மண்டுரிலும்தான் உயிர்ச்சேதம் அதிகம் என அறிகிறோம் என்கிறோம். என் வீடு என்னானதோ, எம்மவர் என்ன ஆனார்களோ ஒப்பாரியே வைத்துவிட்டார் ஒரு பழுகாமத்து அன்பர். தம்பி-சபாபதி சம்மாந்துறை சுற்றியேனும் ஊர்போய்ச் சேர வேண்டுமென்கிறார். நினைவு உண்டு. ஆனால் போகத்தான் முடியுமா?

Page 25
சிறி வந்த சூறாவளி - 78
கண்ணுக்கெட்டிய தொலைவில் அங்கு பார்க்கிறேன் - முனைத் தீவை நோக்கி - அழகாக காட்சி தந்த - சிக் கன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஐந்து வீடுகள்இருந்தசுவடும் இல்லா அழிந்திருக்கிறது. பாடசாலைக்கட்டிடம், தென்னஞ்சோலை எல்லாமே தரைமட்டம். போரதீவு-முனைத்தீவு போன்ற ஊர்களை நான் குபேரபுரி என்று அழைப்பதுண்டு. கொக்கட்டுச்சோலை, முனைக்காடு கிராமங்களை குவைத் என அழைக்கிறேன். குவைத்துக்கும், குபேரபுரிக்கும் என்ன தொடர்பு. எண்ணெய் வளம்மிக்க குவைத் ஒரு குபேர நாடு. அது போலவே கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் ஒரு நெற்களஞ்சியம். இங்கு எல்லோருமே கொழுத்த போடிமார். நிலபுலன் நிரம்ப உள்ளவர்கள். பெரும் பணக்காரர். நான் குபேரபுரி என்றழைக்கும் முனைத்தீவு மக்கள் எல்லோருமே நகைத் தொழிலாளர். கண்டி, காலி, கொழும்பு போன்ற பெரிய நகரங்களில் தொழில் புரிகிறார்கள். தொகையில் அதிகமானோர் யாழ்ப்பாண நகரில் தொழில் செய்பவர்கள். ஆண்டுக்கொரு தடவை போரதீவு பத்திரகாளி அம்மன் கோயில் உற்சவத்திற்கு இவர்கள் எல்லோருமே வந்து போவதுண்டு. முனைத்தீவுக் கிராமத்தினுள் போனால் நவநாகரீக வளர்ச்சிக்கேற்ப நவீன வசதிகளை அடக்கிய அழகான இல்லங்களை அங்கு காணலாம். ஒன்றை ஒன்று மிஞ்சும் வீடுகள் முனைத்தீவான இந்த குபேரபுரி முனைத்தீவை சூறாவளிதான் சும்மா விடுமா? எங்குமே ஏகபோக அழிவு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலில் தஞ்சம் புகுந்த பலநூறு பேர் தப்பிப் பிழைத்தார்கள். ஈஸ்வரர் அனுக்கிரகம் புரிந்தார் என்ற செய்தியை பின்னர் தான் அறிந்தேன்.
இன்னும் எனக்கு கதை அளந்துகொண்டு நிற்க நேரமில்லை. வானமோ மப்பு மந்தாரமாகவிருக்கிறது. வெளிச்சத்தை இருள் கெளவும் வேளையும் வரப்போகிறது. இப்போது நான் தண்ணினுள் இறங்கப் போகிறேன். என்னோடு இந்த மேட்டில் கூடிய பலபேரும் அக்கரை போகவே அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குலதெய்வங்களை கும்பிட்டு விட்டு கால் வைக்கிறோம். காட்டாற்று வெள்ளத்தை கடந்து வந்தவர்கள். தமக்கு வழிகாட்டின
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
நீண்ட கம்புகளை தருகிறார்கள். நானும் ஒரு கம்பை வாங்கிக் கொள்ளுகிறேன். என் காலில் நிற்கப் பயந்த நான் எனக்கொரு துணை கம்புதான். என் கையில் இருக்கும் கம்புக்கு ஒரு பெரிய கதையே உண்டு. புரண்டோடும் வெள்ளத்தினுள் தரையைத் தட்டிப் பார்க்கும் மந்திரக்கோல் அது. என் நம்பிக்கையில் பலம், உடல் துணை ஊன்றுகோல். ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். நான் ஊன்றிப் பிடிக்கும் கடவுள் நம்பிக்கை என்ற விசுவாசக் கோலின் துணையோடு இறங்குகிறேன். குமரையா அண்ணன் உயரமானவர் ஆனதால் அவர் எங்கள் பயணத்தின் முன்னவராக நடக்கிறார். எனக்கு முன்னே சிலர். பின்னே பலர். வெள்ளம் இழுத்தால் ஒருவரையும் நத்திப் பிடித்துவிடாதீர்கள் போகிறவர்கள். போகிறவர்கள் போவதுதான் மிஞ்சுகிறவர்கள் கரை சேருவோம் என்றொரு குரல். ஆம் நான் சாகப் போகிறேன் என்று கூடவருகிறவரையும் சாகடிக்கக் கூடாதல்லவா? எங்களோடு வருபவர்களில் பலர் துவிச்சக்கர வண்டிகளை தோளில் சுமந்துகொண்டும் சுமைகளை தலையில் வைத்துக்கொண்டும் பாய்கிறார்கள். நானோ நீரில் மூழ்கிப் போகிறேன். என் உயரத்தில் மூக்குவரை நீர் அலை தட்டிப் போகிறது. நான் தட்டிச் செல்லும் நம்பிக்கைக் கம்பு சறுக்கி மேலே மிதக்கிறது நீரில். என்னைத் தொடர்ந்தோ ஒரு பையன். பழுகாமத்திலிருந்து வருகிறான். ஊர் குருக்கள் மடம். ஊருக்குப்போக வருகிறேன் என்றான் என்னிடம். நீரில் மூழ்கி அவனும் தத்தளிக்கிறான். 'பெரிய ஊருக்கு போவதற்குத்தான் நீ என்னையும் ஆய்த்தப்படுத்துகிறாயா? என்று கூச்சலிட்டேன் சினந்து கொண்டு. என்ன செய்வான் அவன். அவனுக்கோ ஊருக்குப் போக வேண்டுமென்ற தணியாத தாகம் அன்றிரவெல்லாம் பழுகாமத்தில் சூறாவளியின் அகங்காரத்தை அனுபவித்தவனாச்சே. பையன் என் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். உதறவும் முடியவில்லை. அவனை இழுக்கவும் இயலவில்லை. இருவரும் நீரில் மூழ்கி மரணம் என்ற அவஸ்தையை அனுபவிக்கின்றோம். வெள்ளம் எங்களை எங்கள் சக்தியை முறியடித்து மடக்கிற்று. அள்ளுண்டு போகிறோம்.
எதிரே அதுவும் சூறாவளியினால் அள்ளுண்டு வந்த பாரிய கிணி ணை வேர். சல்லடை போல் உருண் டு புரணி டு

Page 26
சீரி வந்த சூறாவளி - 78
மோதிக்கிடக்கிறது. தாவிப்பிடித்துக்கொள்ள சக்தி ஏது எனக்கு வேரில் சிக்கிக் கொள்ளுகிறேன். கரை சேர்க்கின்றனர் என்னை, பையனும் உயிர் பிழைத்தான்.
நான் பட்டிருப்புப் பாலம் வழியாக நகர்கிறேன். மனித உயிருக்குத் தான் எத்தனை பயிதவிப்பு பாதுகாப்பு நீரும் நெருப்பும்
வாயுவும் எத்துணை சக்தி வாய்ந்தவை
பட்டிருப்பு தோட்டத்தில் முழுத்தென்னை மரங்களுமே வேரோடு சாய்ந்தன. ஆசைக்கு ஒரு தென்னைதானும் நிமிர்ந்து நிற்கக்கூடாதா. ஒரே திசையில் ஒரே அடுக்கு அதனுள் மூன்று வீடுகள் எனது சகோதரர் சங்கரப்பிள்ளையின் இரண்டு வீடுகள் நொறுங்கி சின்னாபின்னமாகியிருக்கின்றன. வீட்டின் மீது எத்தனை மரங்கள் உயிர் தப்பிப் பிழைத்ததே பெரும் பாக்கியம் என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறார் அண்னர் பட்டிருப்புச் சந்தியில் விதை நெல் களஞ்சியசாலை அத்திவாரம் மட்டுமே மிகுதி. சுளுவாஞ்சிகுடிபிரசவ விடுதி, பட்டிருப்பு மகா வித்தியாலயம் எல்லாமே சின்னாபின்னம் மகா வித்தியாலய நுழைவாசலில் முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் சிலையாக நப்பித்து நிற்கிறார்.
கல்முனைப் பிரதான வீதி முழுமையாக மரங்களால் மூடிக் கிடக்கிறது. பலர் மூட்டையும் முடிச்சமாக நடந்து வருவது தெரிகிறது. எல்லோர் முகத்திலும் சோகக் குறி இழையோடுகிறது. எவர் முகத்திலும் ஈயாடவில்லை. அந்த அல்லோல கல்லோலத்தில் எப்படித்தான் முகமலர்ச்சி வரும் மூவர் மட்டும் ரிவித்துக் கதைத்து வருகிறார்கள் மகிழ்ச்சி குறைச் சலில்லை அவர்களிடத்தில் உடையைப் பார்த்து புரிந்து கொள்ளுகிறேன். இவர்கள் மட்டுநகர் மறியச் சாலையிலிருந்து வரக்கூடுமென்று என் நினைப்புச் சரியானதுதான் போட்ட உடையுடன் புறப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இப்படி சூறாவளி விடுதலை எங்களுக்கு அதுதான் சூறாவளி வேகத்தில் நடக்கிறோம்.
 

瑟

Page 27

■=、 בהר הקו – .
ܕܩ Hiini || | التي
".
曜

Page 28
*
 
 
 
 
 
 
 
 
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அனுபவம் (5)
பகலெல்லாம்- பகலைக் காட்டி உழைத்து களைத்த பகலவன் தொடுவானில் மறைய- இருள் பரவ ஆரம்பிக்கிறது. தப்பிப் பிழைத்த பறவைகள் கீர் - கீர் - என்ற சோக கீதத்துடன் கூடு தேடிப் பறக்கின்றன. கூடு வைத்த வீடுகளெல்லாம் வேரோடு சாய்ந்து போயிற்று. முந்திய இரவு குஞ்சுகளோடு கொஞ்சிக் குலாவிய நெஞ்சகலா நினைவை எண்ணிப் பார்க்கின்றனவோ. ஒய்ச்சலின்றி வட்டமிட்டுப் பறக்கின்றனவே, மனிதனுக்கோ தலைநிமிர நேரமில்லை. பறவைகளுக்கோ தலை சாய்க்க இடமில்லை. முறிந்து தகர்ந்து தப்பிய - மரக்கொப்புகளில் தற்காலிகமாக இரவுப் பொழுதுக்கு குந்தட்டும்.
உடைப்பெடுத்த காற்றாற்று நீரின் ஒலி சலசலவென்று கேட்கிறது - என் நினைப்பில் இயற்கையின் அபகரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு வண்டி வீதியோரத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. துவண்ட மனதோடு கவலையை துடைத்துக் கொள்ளுகிறேன். கால் செருப்பை உதறுகிறேன். நெறுஞ்சி முள்ளுக் குத்திய வேதனையில் கால்கள் ஒரே கடுப்பு.
சிறைக் கைதிகள் - கூண்டுப் பறவைகள் அடைபட்டுக் கிடந்த அவஸ்தையும் அலுப்பும் பறக்க - விடுதலை கீதம் பாடி விரைகின்றனர் வேகமாக ஒருவர் கல்முனை என்கிறார். மற்றவர் பொத்துவில் என்கிறார் - இன்னொருவர் அம்பாறை என்கிறார். இயற்கை சீறிய விளைவில் இவர்களுக்கோ பேரானந்தம்.
நானும் விடுதலை கீதம் பாடுவோமா என எண்ணுகிறேன். கோர வெள்ளத்தில் அச்சுறுத்தலுக்கு - பணிந்து - பதறியவனாக நான் தப்பித்திருக்கிறேன் அல்லவா. ஒரு பெரிய அதிவீர பராக்கிரமச் செயலை செய்து உயிர் பிழைத்துக் கொண்ட உற்சாகம் இப்போது எனக்கு ஆண்டவன் என் ஆயுளுக்கு கெட்டியான முடிச்சை போட்டுவிட்டான் என்ற புதிய தெம்பு
சீறிப் பாயும் வெள்ள அலைகளில் செத்து மிதக்கும் நச்சுப்
பாம்புகள் எந்த புற்றில் எங்கு குடியிருந்ததோ, ஊர் பேர் தான் தெரியுமோ? நீண்ட நிறப்படுத்திய இறுதி யாத்திரை.

Page 29
சிறி வந்த சூறாவளி - 78
காற்று அடைத்துக் கிடக்கும் இந்த மனிதப் பையில் ஒரு நினைவு. நிச்சயமாக வெல்லாவெளி புறப்பட்ட போது - காலையில் எனக்கிருந்த இரட்டிப்பு உற்சாகம் - உறுதி இப்போதில்லை. தளர்ந்திருக்கிறேன். இன்னும் நான் மண் டூருக்குப் போக முடியவில்லை என்ற ஏக்கம். இந்த ஏக்கத்தைப் போக்க எந்தவித மார்க்கமும் பிடிபட்டதாக இல்லை.
நினைவுப் புயலில் நான் இப்போது அலைமோதிக் கொண்டிருக்கிறேன். என் தாய் வீட்டில் - என் பெற்றோர் - சகோதரிகள், புகுந்த வீட்டில் - அன்புத் துணைவி - ஆசை மகள் சாயிவிதிஷா - என் வயோதிப மாமி - உற்றார் - உறவினர் - கூட்டுமொத்தமாக எம் ஊர் - ஊரார் என்ன ஆனார்களோ? யார் பிழைத்தார்களோ? யார் போனார்களோ? நான் மிக நொந்து குழம்பிப் போயிருக்கிறேன்.
அன்றும் - கல்முனைப் பிரதான வீதியில் - ஒந்தாச்சி மடம்கல்லாறு தாம்போதிகளைக் கடக்க முடியாது - கடலும் வாவியும் சங்கமமாகும் பகுதி. ஏகபோகத்திற்கு கடலும் - வாவியும் வெள்ள உரிமைக் கொண்டாடி பரவுகிறது - சூறாவளி இரவில் - ஒந்தாச்சிமடம் - கல்லாறு - கோட்டைக் கல்லாறு மக்களுக்கோ இருமுனைத் தாக்குதல் என்றே சொல்லவேண்டும். ஒருபுறம் கடலின் கொந்தளிப்பு - மறுபுறம் - சூறாவளியின் சீற்றம். பெரும் 'நெருக்குதல் பட்டுப் போனார்கள் மக்கள். 'கல்லாற்றை கடல் அள்ளிற்றாம் - இப்படியும் ஒரு கதை.
வளைந்து நெழிந்தோடும் வற்றாத வாவி சங்கமாகும் கடல் செல்வம் மிக்க பகுதி மீன்பிடித்துறைமுகமொன்றை அமைத்து இளைஞர்கட்கு தொழில் காட்ட ஏற்ற பிரதேசம் அல்லவா. கல்லாற்றை - கல்வியாறு என்பேன். கற்றோர் நிரம்பிய ஊர். புகழ்பெற்ற விஞ்ஞானப் பேராசிரியர் அப்பாப்பிள்ளை அவர்களைத் தந்து மகிழும் நன்னாடு.
உள்நுழைகிறேன் - மதில்கள் எல்லாம் புரண்டுக் கிடக்கின்றன. அழகிய கல் வீடுகள் எல்லாம் நொறுங்கித் தொட்டில் போல் தொங்குகின்றன. கூரைகள் வாவியை அண்மித்து அமைந்துள்ள மெதடிஸ்த தேவாலயம் - சிதறுண்டு கிடக்கிறது. அழகான தேவாலயம் இது.

செழியன். ஜே. பேரின்பநாயகம்
உயிர் சேதம் குறைவு உடைமைகளுக்கோ பேரழிவு. எங்கும் ஏகமாக ஒரே அழிவு.
ஒந்தாச்சிமடம் - தாம்போதிக்கு அண்மையில் நீண்டுயர்ந்து நின்ற பனைமரம் எங்கே? இருநூறு யாருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. மரங்களே இல்லாத இப்பகுதிக்கு இம்மரம் போய்ச் சேர்ந்ததெப்படி எண்ணமுடியவில்லை. இராட்சதமான இப்பனையைப் பற்றியே பலரும் பேசிக் கொள்கிறார்கள். இத்தனை தூரத்திற்கு பனை போக எத்துணை பராக்கிரமம் வேண்டும். சூறாவளியின் இராட்சத சக்தி புரிகிறதல்லவா? மரந்தடி இல்லாத வீட்டின் மீதல்லவா விசிறி எறிந்திருக்கிறது பனை மரத்தை.
சூறாவளி ஒரு அனுக்கிரகம் புரிந்திருக்கிறது. தென்னைகளை ஒரே அடுக்காய் தரையில் அடுக்கி பனைகளை அசையாது நிலையாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஒன்றா இரண்டா பென்னம்பெரிய தோட்டங்கலெல்லாம் வேரோடு சாய்ந்தன. மொத்தம் இருபது லட்சம் தென்னைகள் நாசமாகின. மாவட்டத்திலுள்ள மொத்தத் தென்னையில் பத்து விகித மரங்களே தப்பிப் பிழைத்தன இப்படிக் கூறினார். இங்கு மதிப்பீடு செய்ய வந்த ஐ. நா. மதிப்பீட்டாளர் ஒருவர்.
தப்பிப் பிழைத்தது பனைகளெல்லாம். தன்னந்தனியனாக நின்ற இந்த பனை மட்டும் வகையாக மாட்டிக் கொண்டது. சூறாவளிப் பிடியில் ஐயோ- பாவம்.
வெள்ளம் வெள்ளம் எங்கும் ஒரே வெள்ளக் கொடுமை. இரவுப் புயல் கொடுமை. பகல் வெள்ளக் கொடுமை. மரங்களெல்லாம் விழுந்து முறிந்து - வீதிகளெல்லாம் தடைபட்டுக் கிடக்கின்றன. வெள்ளமும் வீதியை மேவிக் கொண்டால் எப்படியிருக்கும்.
‘விடிந்ததும் ஒரு வேளை வெள்ளம் வடியும் தோணி போட்டு ஆட்களை அக்கரைப்படுத்துவார்கள் என்கிறது ஒரு குரல்.
தம்பி! 'டாகுத்தரை தேடி வந்தோம் - எங்கிருந்து வருகிறீர்கள். ’படாத பாடெல்லாம் பட்டு இந்த கர்மச்சீவன் முப்பத்திநாலிலிருந்து கொண்டு வாரம் இப்படி கூறுகிறார் அந்த ஏழை விவசாயி என் கேள்விக்கு பதில் அவர் அனுபவித்து வரும் அல்லல் அவர் அளித்த பதிலிலிருந்து கண்ணிராக இழையோடுகிறது.

Page 30
சிறி வந்த சூறாவளி - ??
நாங்கள் ஒாந்துதான் ஆகவேண்டும் என வருகிறோம். என்கிறார் கண்ணில் கரை சுட்டிய நீரைத் தடுக்க முடியாமல் உயிரே துடிப்பது போல் நடுங்கிச் சாகப் பார்க்கிறான் அந்த இளைஞன். இளைஞனுக்கு என்னதான் நிகழ்ந்தது.
பாரிய மரமொன்று முறிந்து விழுந்தது வீட்டின் மீது விடே நொறுங்கியது. வயோதிபப் பெற்றோரும், சகோதரிகளும் உயிர்தப்பி ஓடினார்கள். குடும்பத்தையே காக்கும் பொறுப்பு தனக்குரியது என்ற நினைப்பை ஆளும் இந்த இளைஞனின் உயிர்குடிக்கத் தெரித்தது சிராய் ஒன்று மோட்டு வளையில் சிதறி அடித்த சிராய் கூர்ப்பாய்ந்து குரள்வளைக்குக் குறுக்கே பாய்ந்தது. இவர் வீட்டில் இடிமேல் இடி விழுந்தது. பேச முடியாது இவருக்கு கையை மட்டும் -ծ|եծի:I க்கிறார். குரல்வளையை பிய்த்துக்கொண்டு இருபுறங்களிலும் பாய்ந்து நிற்கும் சிராயை யார் பிடுங்குவது. துணிவார் எவருமில்லை, டாக்டர் ஆசுபத்திரி என்கிறார். சைகை மூலம் புரிந்து கொள்கிறார்கள் மற்றவர்கள்.
இரத்தம் பாய்ந்தோடி அவரது வெள்ளை உடைகளை தோம்த்து சிவப் பாக்கியிருக்கிறது. சுளுவாஞ்சிகுடி வைத்தியசாலையும் அழிந்து போயிற்று. அன்றிரவு அங்கு வருத்தப் படுக் கையில் இருந்த நோயாளர்கள் என்ன ஆனார்களோ தெரியவில்லை, வைத்தியசாலைகள் இல்லை, டாக்கடர்களும் இல்லை. இல்லை. எங்கும் அல்லோல கல்லோலம். அவஸ்தையில் துடிக்கும் இளைஞனுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுவும் தெரியவில்லை. இதுபோன்று எத்தனை அனுதாபச் சம்பவங்கள்.
நின்று பேசி ஆலோசனை சொல்லவும் எனக்கு நேரமில்லை. கால் நொறுங்கியவர்கள் - கை இழந்தவர்கள் ஆணி பாய்ந்தவர்கள்மரம் விழுந்தவர்கள் விஷ முள்ளில் மிதித்தவர்கள் எத்தனைஎத்தனை, ஐயோ. பரிதாபம். இவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றால் - இறந்தவர்களை என்ன செய்வது. நேரம் போனால் - செத்த பிணங்கள் நாற்றமெடுக்காதா?
 

亲 喷 - Hi لـ
는
"는
F. "
S
E. *HE.
- '-
궁 크

Page 31
의
"ः ।
ས་ལ་
 

ר,
,"r" 叶
-重 叶
݂ ݂ ݂ ݂
■
*

Page 32

ாபழியன். ஜே. பேரின்பநாயகம்
அனுபவம் (6)
ஏழு ஞாயிறு எழுவானில் எழுந்து படுவானில் படுகிறான். சூறாவளி அரக்கன் அன்றிரவு ஆடிய ஆட்டத்தை முடித்துக் கொண்டு அமைதி பெறுகிறான் மரணப் பிடியிலிருந்து தப்பிய மக்களும் துன்ப சாகரத்தில் தோய்ந்து சாய்ந்திருக்கிறார்கள் ஒவ்வொருவர் அனுபவமும் ஒரு பெரிய தொடர்கதை- ஒரு சோகக் கதை. பெலன் குன்றிப் போய் பேய் அறைந்தவர்கள் போல மயான வெளியில் குந்தியிருக்கிறார்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது சூறாவளிப் பிரதேசம் பார்க்கவே பயபிதி மனதை ஆட்கொள்ளுகிறது. அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும் - ஒரு அபலைப் பெண்ணின் ஒப்பாரிக் குரல் கேட்கிறது ஓவென்று. சூறாலுளியில் தன் ஆரை மகனைப் பலிகொடுத்த அன்புத்தாய்- மார்பில் அடித்துக் கொண்டு ஒலம் விடுகிறார் என்னால் என்னதான் செய்ய முடியும் நானும் கூட மனம் வெதும்பிப் போய் - வேதனையை யாரிடம் விபரிப்பேன் என்று ஏங்கிப் போயிருக்கிறேன்.
சுற்றுப் புறத்தில் வீடுகள் எதுவுமில்லை. சூழல் முழுவதும் முறிந்து விழுந்த மரங்களின் கும்பல் ஒரு சிறு குடிசை சூறாவளியின் தகர்த்தலுக்குப் பின் தற்காலிகமாக அமைத்த ஒலைக்குடிசை நடுவதற்கு நான்கு தடி குறுக்கே போடுவதற்கு மூன்று தடி குறுக்கும் நெடுக்குமாசு - சூறாவளி கசக்கி முகந்து - நெருக்கிப் பிழிந்து- கருகிக் காய்ந்த தென்னை ஒலைகர். வேலியும் இல்லை. வீதியும் இல்லை. பழந்தோப்பும் இல்லை. பான்னாட்டியும் இல்லை. மின்னிக் கொண்டிருக்கிறது 'குப்பி விளக்கொன்று அந்த சின்ன வெளிச்சத்தின் நிழலில் குடிசையின் கோலத்தை நான் பார்க்கிறேன்.
கத்திக் கொண்டிருந்த பட்சிகளும் ஒய்வெடுத்துக் கொண்டன. காரிருளில் மறுவெளிச்சம் துன்பத்தின் சூழலில் அமைதி கிடைப்பது போல அதற்கு முன் எம் சொந்தக்காரர் - நவநாதப்பிள்ளை அண்ணனைச் சந்திக்கிறேன். புதினங்களை அறிந்து சொல்வதில் சமர்த்தர். பொதுத் தொண்டர் பத்திரிகைச் செய்தியாளராக இருந்ததினால் நிறைய அறிமுகம் ஊரில் என்ன பாடு' என்று முன் கூட்டியே கேள்வியை எண் ணிடம் நீட்டுகிறார். போகமுடியவில்லை - ஊருக்கு என்று சொல்லி பட்டென்று நடக்க

Page 33
சிறி வந்த சூறாவளி - 78
ஆரம்பிக்கிறேன். நவநாத அண்ணனும் பதிலைக் கேட்டுக் கொண்டே நடக்கிறார்.
அதோ தென்படுகிறது. அது எந்த வெளிச்சம் நீர் ஊற்றெடுத்து நிலமெல்லாம் ஒரே ‘சளுக்கு புளுக் கென்றிருக்கிறது. என் அண்ணனின் மகன் சிவ ஈஸ்வரன், முத்தம்மா, பெரியம்மா ஆகியோரின் வீடுகளாம். கன்னாபின்னாவென்று விழுந்து நொறுங்கிக் கிடக்கும் மர நெரிசலுக்குள் வீடுகளின் லெக்கை பிடித்துக் கொள்கிறேன். பெரியம்மாவின் திருக்கோயில் வீடு- தென்னந்தோட்டம் எல்லாமே - ஏன் மக்களும் தப் பித்துக் கொண் டனர். அட்டாளைச்சேனைக்கு அந்தப்புறம் புயலால் பாதிக்கப்படவில்லைத் தானே. அப்பகுதி மக்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்களாக்கும். இயற்கையின் கோரத்தாண்டவத்தின் போது - இறைவா தர்ம கைங்கரியம் தலைகாக்குமா? எனக்குள் எண்ணிக் கொள்கிறேன்.
அடக்கமுடியாத துன்பத்தைச் சகித்துக் கொண்டு உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள் மக்கள். நானும் அதிலொருவன். இச் சோக சூழ்நிலையில் இரவுப் பொழுதை நான் களுவாஞ்சிகுடியில் கழித்துத்தான் ஆகவேண்டும். இரவென்று நினைத்து மக்கள் அயர்ந்து தூக்கமா? செய்கிறார்கள். அதுதான் இல்லையே. விடியவிடிய சூறாவளிப் புராணம் தான் வாசிக்கிறார்கள். ஆகையால் இரவை சமாளித்துக் கொள்ளலாம்.
நான் இப்போது ஈஸ்வரனைத் தேடிப் போகிறேன். சிதைந்த வீட்டின் முன்முற்றத்தில் என் அத்தான் குழந்தைவேல்- அவர் மகள் ராணி ஆகியோர் நிற்கிறார்கள்.
சாப்பாட்டு மேசைதான் தஞ்சம் அங்கிள். உயிருக்கு ஆபத்தில்லை தப்பிப் பிழைத்தோம் - என்றார் என்னைக் கண்டு ஓடிவந்த ஈஸ்வரன். விடியவிடிய அவர்கள் சாப்பாட்டு மேசைக்குக் கீழ்தான் இருந்திருக்கிறார்கள். மேசை தலைகாத்தது இவர்களை.
தர்மம் தலைகாக்கும் என்றுதானே சொன்னேன். ஆனால் சூறாவளி இரவில் பல நுாறு பேரை தலையணையும் தலைகாத்திருக்கிறது. நொறுங்கி விழும் கூரை ஒடுகள் தலையைப் பதம் பார்க்காது - பாதுகாக்க - தலையணையை தலைமீது
வைத்துக் கொண்டு குந்தியிருக்கிறார்கள்.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
காரைதீவிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்த என் சித்தப்பா - ஒரு சங்கதி சொன்னார். மிகவும் பாரமான சம்பவம். மண்டூர் போன்று மரந்தடி நிரம்பிய ஊர் காரைதீவு. எல்லாமே வேரோடு சாய்ந்தன. சித்தப்பாவின் வீடு மட்டும் தப்புமா என்ன? மரங்கள் எல்லாம் வீழ்ந்து வீட்டைப் பதம் பார்த்தன. உயிர்தப்பி ஓடவும் முடியாது. எங்குமே மரங்களின் தடை, கதிரைகளுக்குள் உட்கார்ந்தபடியே பொந்த கூரையினால் விழும் மழைநீரை நிரப்பி வீச தலைமீது தலையணையை அடையாக வைத்து - பாரிய பாத்திரங்களையும் பிடித்துக் கொண்டார்களாம். கூரை வழியால் வழியும் நீரையும், உடைந்து சிதறும் ஒடுகளை தலைமீது விழாது பாத்திரத்தில் பிடித்துக் கொள்ளவும் இப்படியொரு யுக்தியைக் கையாண்டதாக அவர் சொன்னார். பெரிய பாவப் பாரத்தை சுமந்து தீர்த்த பரிதாப நிலை - சூறாவளி ஒயும் வரை நீடித்து நின்றது என்பதனை அவர் கதையிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.
தலையையாவது பாதுகாத்துக் கொள்ள சட்டியும் தலையணையும் இப்பிரதேச மனிதர்களுக்குப் பெரிதும் உதவினவே. அன்றிரவு - அதுவே பெரும்பாக்கியம்.
சாய்வு நாற்காலியொன்றில் அன்றிரவு நான் தலைசாய்த்தேன். சூறாவளி அடித்து இரண்டு தினங்கள் கடந்து விட்டன. மூன்றாவது தினத்திலாவது ஊர் போக முடியாதா என்ன? எண்ணுகிறேன் எனக்குள் வாவியில் காற்று இன்னும் தனியாததால் போவது சாத்தியமில்லைதான்.
விடியப்புறம் எழுந்து குறுமண்வெளித்துறைக்கு நடந்தே ஆகவேண்டும். வரும் ஆபத்தெல்லாம் வரட்டும் என்று முணுமுணு முணுத்துக் கொண்டு நடக்கிறேன். நடக்கவா முடிகிறது? எத்தனை ஆயிரம் மரங்கள் முறிந்து தகர்ந்து கிடக்கின்றன. பட்டிருப்பு மகா விதி தியாலயத்திற்குக் குறுக் கே பாரிய மாமரம் , நூற்றுக்கணக்கான மாங்காய்கள் சிதறிக் கிடக்கின்றன. நீண்டுயர்ந்த பனை நீட்டி நிமிர்ந்து படுக்கிறது.
தடைகளைத் தாண்டி தன்னந்தனியனாக நடக்கப் பயமாகத்தானிருக்கிறது. செப்பனிடப்பட்ட வீதிகளெல்லாம் சீரழிந்து

Page 34
சிறி வந்த சூறாவளி - 78
கிடக்கின்றனவே. காட்டுப்பாதையில் போகும் பிரமை. அந்த விடியற் சாமத்தின் சில்லுறுகளும் இரைந்து தள்ளுகின்றன. பயம் இன்னும் என்னைப் பலமாகக் கவ்வ ஆரம்பிக்கிறது.
கூப்பிடு தொலைவில் ஒரு குரல் - 'தம்பி, தம்பி. என்று குமரையா அண்ணர் தான் வருகிறார். விரைவாய் நடந்தால் தான்காத்து எழும்ப முதல் துறையைக் கடக்கலாம்.' விரைவாகத்தான் நடக்கிறோம். எருவில் கிராமத்தைக் கடந்து செல்லுகிறோம். எருவில் கனிஷ்ட மகா வித்தியாலயம் முற்றாக நிர்மூலமாகியிருக்கிறது.
தன் இரு கரங்களையும் தலையில் அடித்துக் கொண்டு - கூக்குரல் இடுகிறாள் - ஒரு வயது முதிர்ந்த தாய். துயர் தாங்க முடியாது அலறித் துடிக்கிறாள் அந்தப் பெண். வீட்டெதிரே பென்னம்பெரிய மரமொன்று புரண்டுக் கிடக்கிறது ஆணிவேர் தெறிக்க, மரத்துக்குள் மகன் பட்டுவிட்டானோ? அவள் ஒப்பாரியின் நாதம் இப்படியொரு நினைப் பைத் தருகிறது எனக்கு. உண்மைதான் - சம்பவம் என்னவென்று வினவலாமா?
குமரையா அண்ணரோ- என்னைக் கொஞ்சமும் சுணங்க விடுபவராக இல்லை. என்ன செய்யலாம். எல்லோருக்கும் அவதிதான். சூறாவளி உக்கிரம் அடைந்ததும் வீட்டின் முன் கதவு திறந்துத்திறந்து மூடுகிறது வேகமாக, கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போடத் துணிவார் யாருமில்லை. அன்புத் தாயின் கட்டளைக்கு ஆசை மகன் துணிந்தான். கதவைச் சாத்த வாசல் படிக்குப் போனதுதான் தெரியும். மகனைத் தாய் பார்த்த கடைசிப் பார்வை அக்கணம் தான். சூறாவளி தணிந்து தினம் மூன்றாகியும் இன்னும் மகனைக் காணவில்லை - அலறுகிறாள் தாய்.
வாசல் எதிரே- மரத்தின் கீழ் நசுங்கிச் சிக்குண்டிருக்கின்றானா இல்லை. சூறாவளி இவனைத் தூக்கிச் சென்றதா? யாருக்குமே எதுவும் புரியவில்லை. என்ன அநியாயம் இது? முருகா, முருகா
என்ர மகன் எங்க காட்டுடா கந்தா
ஊர் நினைபோடு வரும் எனக்கு - என்னோடு ஒரு நினைவு. அதனையும் உங்களுக்குச் சொல்லத்தானே வேண்டும். சூறாவளி
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அகோர இரவில் - பல பிரசவத் தாய்மார் பிரசவ வேதனை வேறு அனுபவித்திருக்கிறார்கள். வாகனம் செல்ல வீதிகளில்லை. பிரசவ விடுதிகள் - வைத்தியசாலைகள் இல்லை - ஏன் டாக்டர்களுமே இல்லை. இந்த நிலையில் பல பிள்ளைப் பேறுகள். குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது உயிருக்குப் போராடிய எத்தனை தாய்மார்கள். பெற்ற மகவுகளுக்கு இப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். புயலவன், சுறாங்கனி, புயலவன் களுவாஞ்சிகுடியில் பிறந்திருக்கிறான். அவன் வளர்ந்து வரும்போது புயலின் கதையை அவனுக்கு சொல்லாமலே புரிந்து கொள்வான் என்று சொல்லுகிறாள் புயலவனைப் பெற்றெடுத்த தாய்- பூரிப்போடு.
பேரழிவைச் சந்தித்திருக்கிறது. குறுமண்வெளிக் கிராமம். உயிர்ச்சேதம் குறைவு. உடைமைகளுக்கோ பெருத்த சேதம். குறுமண்வெளித்துறை - தெரிகிறது. பிரயாணிகள் தங்குமிடம்ஒருபுறச் சுவர்தான் மிகுதி. காற்றின் வேகத்தால் ஆற்றின் அலை சீறி அடிக்கிறது. இயந்திரப் பாதை ஒருபக்கம் சரிந்து நீரில் மூழ்கி இருக்கின்றது. கரை ஒதுங்கிக் கிடக்கும் பாதையின் இயந்திரமும் பழுதடைந்திருக்கிறது. தோணிகள் - சுக்குநூறாகித் தூள்தூள். துறை கடக்கும் ஏதுக்கள் எதுவுமில்லை. குமரையா அண்ணன் அலறித்துடிக்கிறார் - நானும் கையை நாடியில் குத்திக் கொண்டு குந்துகிறேன். மண்டூரில் பெருத்த அழிவு. உடைமைகளுக்கு மட்டுமல்ல. உயிர்களுக்கும் நுாற்றி ஐம்பது பேர் இறந்திருக்கின்றார்கள் என்று காற்று வாக்கில் காதுக்கெட்டுகிறது செய்தி. துறை ஆழமானது. சகதி நிரம்பியது. என் குடும்பத்தின் பிரதிபிம்பத்தை வாவியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழுது புலம்பிய என் கண்கள் சிவந்து போயின. கண்ணுக்கெட்டிய தொலைவில் கறுப்பு உருவமொன்று ஆற்றில் ஊர்ந்து வருகிறது அது என்னவோ.

Page 35
i
 

WW |||||||||||||||||||llllllllllll
; ||||||||||||||||||||||| | سستے کھیW
*
 ി
ரு: "
།
唱
| ".

Page 36
சிறி வந்த சூறாவளி - 78
அனுபவம் (7)
குறுமண் வெளிதுறையில் சிதைந்து - முறிந்து - தகர்ந்து போய்க்கிடக்கிறது பிரயாணிகள் தங்குமிடம், புத்தம்புதிய இக்கட்டிடத்தில் அத்திவாரம்தான் மிச்சம். இடிந்த சுவரின் ஒரப்புறத்தில் இலேசாக முதுகைச் சாய்த்து சாய்ந்திருக்கிறேன். எப்பொழுதோ என் கண்கள் அயர்ந்து போயின - எனக்கே தெரியாது. உடலும் உள்ளமும் ஒரே கடுகடுப்பும், முறுமுறுப்புமாக இருக்கும் வேளை அல்லவா? உடம்பெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி இருக்கிறது. அதுதானாக்கும் இப்படியொரு அயர்ந்த நிலை,
காலை அலை கதிரவனின் விரிதலுக்குள் அடங்கிற்று. என் நினைவு அலையும் இதற்குள் ஒழித்துக் கொண்டது போலும். முன்னரே நான் எனது குடும்ப நினைவால், ஏன், எனது பிஞ்சிக்குழந்தையின் நெஞ்சகலாப் பாசத்தால் நசிந்து போய் வருகிறேன் தானே. எல்லாமே ஒரு அயர்ந்த நிலை. என் தோள் மீது யாரோ தட்டுவது போல ஒரு உணர்வு விழித்துப் பார்க்கிறேன். அழுது புலம்பி அலுத்துப் போயிருக்கும் என் கண்களும் விருவிருக்கின்றன. எழுந்து நடக்கிறேன். ஆற்று நீரில் அள்ளி முகத்தைக் கழுவி சற்று தென்பை ஏற்படுத்துகிறேன்.
மண்டூர் குறும்ன் வெளித்துறையில் காற்று - அலை, என்று பாராது, வந்து கொண்டிருந்த கறுப்பு உருவம் என்னவென்று இப்போதுதான் தெரிகிறது. ஒட்டைத் தோணியொன்று கரை சேர்ந்திருக்கிறது. யாரோ ஒரு அனுபவசாலி தோணியில் சுக்கானில் உட்கார்ந்திருந்ததால் காற்று வளம் பார்த்து தோணியைக் கரைக்கு கொண்டு வந்திருக்கிறார். தோணியில் வந்த ஏனைய மூவரும் நீதான் கடவுள்' என்கிறார்கள் இவரைப் பார்த்து. ஊரிலிருந்து வரும் ஊரவர்கள் இவர்கள். ஊர் ஊராய் போய் உற்றார் உறவினரைப் பார்த்து வரப் புறப்பட்டிருக்கிறார்கள். சூறாவளி ஓய்ந்த பின் நான் முதலில் சந்திக்கும் ஊரவர்கள். அவர்களும் அவசர அவசரமாகப் போகப் போகிறார்கள். "எழுவான் கரைப்பாடுகள் என்ன?’ அவர்கள்
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
கேட்டார்கள். ’படுவான் கரையாடுகள் என்ன? நான் கேட்டேன் பதிலுக்கு 'மண்டூர் ஒரே சவக்காடாய் கிடக்கிறது என்றார் ஒருவர். இன்னொருவரோ குமரையா அணி னனைத் தானி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மூடி மறைத்துச் சொல்லும் இந்த விபரத்தைக் கேட்ட குமரையா அண்ணன் - போட்டிருந்த சால்வைத் தலைப்பை முகத்தில் போட்டு மூடிக் கொண்டு ஒப்பாரி வைத்தார். பதினான்காம் குடியேற்றக் கிராமத்தில் அவரின் மனைவி கொளனி வீடு விழுந்து இறந்த செய்தியை இப்போதுதான் விரிவாக என் காதில் போட்டார் அவர். 'என் குடிக்கு நவில் விழுந்திட்டுடா தம்பி 'அந்தச் சீவன் என்னென்ன நினைச்சி போச்சிதோ விழுந்த சிவரையாலும் கிண்டி அந்தச் சீவன தூக்கிச் சுமக்க எனக்கு கொடுத்து வைக்கல்லயே என்று தலையில் அடித்துக் கொண்டு கூக்குரலிடுகிறார். இரண்டு பகலும் இரண்டு இரவும் பயமும், கொடுமையும் நிறைந்த அனுபவத்தைச் சுமந்து கொண்டு வரும் எங்களுக்குக் கிடைத்த இந்த இழவுச் செய்தியால் மனம் இன்னும் ஒடிந்து போனோம்.
இக்கரையில் - சூறாவளிப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த பெருங்கூட்டமே திரண்டு விட்டது. எல்லோருக்குமே அவசரமாக போக வேண்டுமென்ற ஆவல். பெற்றார்-உற்றாரை பார்க்க வேண்டுமென்ற ஆசை. ஆவலும் ஆசையும் அமிழ்ந்து நிற்கும் மனிதர் கூட்டம் அங்கே நிற்கிறது. என் நெருங்கிய உறவினர் பலரும் இன்னும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பூபாலப்பிள்ளை. மீன்பிடி இலாகாவில் - நன்னீர் மீன்வளர்ப்புத் திட்ட அதிகாரியாக அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிகிறார். நன்னீர் மீன்வளர்ப்புப் பற்றி - சீனாசென்று சிறப்புப் பயிற்சி பெற்று வந்தவர் சமீபத்தில் சூறாவளி இரவில் அவர் நிந்தவூர்ப் பகுதியில் வைத்து பட்ட அல்லல்களை விபரித்துக் கொண்டார். பக்கத்தில் அவர் மகள் கெளரி கல்முனையில் பயில்கிறாள். எல்லோருமே எப்படித்துறை கடப்பது என்ற நினைப்பில் மூழ்கியிருக்கிறோம்.

Page 37
சிறி வந்த குறாவளி - 78
இயந்திரப் படகோ கரை தட்டிக் கிடக்கிறது. விசைக்கருவி இல்லை. பாதையின் அடித்தளத்தினூடே நீர் கொப்பளிக்கிறது உள்ளே. நாங்களோ கண்ணிர் சிந்தும் வேளை - பாதையினுள்ளோ நீர் பெருகும் வேளை, நீர்க்குமிழியின் முன்னே என் நினைவு படர்கிறது.
மண்டூர் ராஜமணியின் மகள் -ராணி. அவர் கணவர் எருவிலைச் சேர்ந்தவர். களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் குடியிருக்கிறார்கள். சூறாவளி இரவில் தங்கள் ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு பாதுகாப்புத் தேடி ஒடுகிறார்கள். கணவர் பொடியனைத் தூக்கிக் கொண்டு முன்னே. ராணி பின்னே. நெஞ்சோடு கெட்டியாக அனைத்துப் பிடித்துக் கொண்டோடும் தகப்பனுக்கோ திடீரென ஒரு பிரமிப்பு அவரது பிடியிலிருந்து மகன் அள்ளப்பட்டான். 'கழுகு இறாஞ்சினது போல் இருந்ததாம். உள்ளத்தில் எழுந்த துன்பவேக்காடு தாங்காது, காயான் பற்றைக்குள் குறுக்கறுத்து ஓடியபோது - இருவரும் இருதிசை ஆனார்கள். போனவர் போனபக்கமாக பற்றை மறைப்பில் குந்திக் கொண்டார்கள். ராணி காயான் கட்டையில் இடறி விழுந்து தன் பல்லை இழந்து போனாள். ராணிக்கு பல்லும் இல்லை. பிள்ளையும் இல்லை. கணவரும் எங்கேயோ?.
இயற்கை - மின்னல் என்ற போர்வையில் வெளிச்சத்தைக் காட்டிற்று. மின்ஒளியில் ராணிக்கு வழி பிறந்தது. பால் மனம் மாறா அந்த பச்சைக் குழந்தை - பால் மணலில் சுருண்டு கிடப்பது தெரிகிறது. அள்ளிக் கொஞ்சுகிறாள் தன் அன்பு மைந்தனை. கணவரும் - சூறாவளி - மழை - இந்த புதிய அனுபவத்துள் சேர்ந்து கொள்ளுகிறார் குடும்பமாக பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?
எங்கும் பால் வார்த்த மணல் - ஆங்காங்கே குட்டிக் காயான் பற்றைகள். தவழ்ந்தாகிலும் களுவாஞ்சி ஆஸ்பத்திரிக்குள் போய்ச் சேருவோம்’ என்கிறார் கணவர். போகிறார்கள் அங்கேயோ நினைப்புக்கு மாறான நிலை - ஆஸ்பத்திரியோ இடிந்து நொருங்கித் தொங்குகிறது எலும்புக்கூடுபோல்.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
படுக்கையிலிருந்த நோயாளிகள் எவரும் இல்லை. பிள்ளைப் பேற்றுக்காக அங்கிருந்த நிறைமாத கர்ப்பிணிகள் என்ன ஆனார்களோ, ஓடினார்களோ? விழுந்து புரண்டு உயிர் நீத்தார்களோ தெரியவில்லை. விடிந்து பார்த்தால் வெறிச்சோடிக் கிடக்கிறது ஆஸ்பத்திரி. யார் யாரைத் தேடுவது. எப்படித்தான் தேடுதல் செய்யமுடியும்.
ராஜமணி மகளின் கதை நிழலாடுகிறது என்முன்னே. நான் இன்னமும் இயந்திரப் படகைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒட்டைத் தோணியிலாவது போய்ச் சேரலாமா? ஐந்து சதம் கொடுத்து கடக்கும் துறைக்கு - தோணிக்காரனோ ஐந்து ரூபாய் கேட்கிறான். மரத்தால விழுந்தவன மாடு மிதித்த மாதிரி நிலை. உள்ளதோ ஒரு தோணி அதுவும் ஒட்டைத் தோணி எப்படியும் அழுது புலம்பித் தவிக்கும் குமரையா அண்ணனைத்தான் அக்கரைப்படுத்தியாக வேண்டும். சரி அவரே முதல் போகட்டும் என்கிறேன் நான். இல்லை - நீயும் வந்து என்னை ஊட்ட கொண்டு போய்ச் சேரடா தம்பி’ என்கிறார் அவர் என்னைக் கட்டிப் பிடித்து அழுது ஆறாத்துயரில் அமிழ்கிறார் குமாரையா அண்ணன்.
துறைகடக்கக் காத்திருப்போர் - அனைவரதும் ஏகபோக ஒப்புதல், நீங்க ரெண்டு பேரும் போங்க ஒருவர் சொல்லுகிறார். இப்போது இருவரும் ஏறிக் கொள்ளுகிறோம் தோணியில், இரண்டு சவள் இன்னும் இருந்தால் கெதியா பேரீயிடலாம். காத்தும் புசுபுசுக்குது என்கிறார் பச்சை நோட்டை வாங்கப் போகும் தோணிக்காரர்.
இன்னும் கதைக்கிறார் அவர் - "அண்ணேய் மாச்சலப்பாராம தோணிக்க கிடக்கிற சிரட்டய எடுத்து ஊறுற தண்ணிய அள்ளி எறிங்க' - காத்து வாங்கலில தோணிக்க தண்ணிவீசினா, பெரும் சிறுமானியப்பட்டுப் போவம்' என்கிறார்.
ஊர் சேருகிறோம் என்ற உற்சாகத்தில் குனிந்து நிமிந்து அள்ளிக் கொட்டுகிறேன் சிரட்டையால் தண்ணீரை, ஆத்தில உவட்டும் சரியாயிருக்கு என்று முணுமுணுக்கிறேன் நான்.

Page 38
சிறி வந்த சூறாவளி - 78
கைதடுக்கிறத பார்த்தாயெண்டா போய்ச்சேர மாட்டோம். என மீண்டும் அச்சுறுத்துகிறார் என்னை இப்படி அந்த தோணிக்காரர். நீங்கள் நம்பினாலும் நம்புங்கள், என் கரங்கள் சோர்ந்தே போயின. மண்டுர் - குறுமன்வெளித்துறை நீங்கள் நினைப்பது போல கூப்பிடு தூரத்தில் இல்லை. துறை கடப்பதென்பது பெரிய பயணம் ஒன்றரை மைல் நீளம் மண்டூர் மக்கள் செய்த புண்ணியமோ என்னமோ - வேண்டாத இடத்திலெல்லாம் குறுகிக் கிடக்கும் வாவி - துறை அமைந்த இடத்தில் மட்டும் பரந்து - விரிந்திருக்கிறது. ஆழம் காண முடியாத சகதி வேறு. மண்டூரைச் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விளை நிலம் பரந்து கிடப்பதால் - போக்குவரத்தில் 'பிஸியான துறையாக மிளிர்கிறது - குறுமன்வெளி - மண்டூர்த்துறை, நானறிந்த காலம் முதல் - இன்றும் எனக்கு நினைவிருக்கிறது - தோணிகள் கவுண்டு பலர் மூழ்கி இறந்திருக்கிறார்கள். துறையின் போக்குவரத்து சீராக இல்லாததும், நிர்வாகச் சீர்கேடுந்தான் இதற்கான காரணமாக அமையலாம். வெள்ள காலத்தில் எங்கள் ஊர் ஒரு தீவாகவே காட்சிதரும். இந்த வேளையில் போக்குவரத்து கஷ்டம் இரட்டிப்பாகும். மக்கள் படும் துன்பம் சொல்லில் வடிக்க முடியாததொன்று.
நாங்கள் இப்பொழுது ஏறிவரும் 'ஒட்டைத்தோணி மண்டூர் - கோட்டமுனைத் துறை தட்டப் போகிறது. எதிரில் நான் சந்திப்பது கோவில்தான். அதுவும் மாரியம்மன் கோவில். முன்னே நின்ற அரச மரத்தின் பெரிய கிளையொன்று முறிந்து கிடக்கிறது. கோயில் கூரையின் ஒரு பகுதி சிதறுண்டு சின்னாபின்னம். கோயிலின் மூலஸ்தானம் அமைந்த கூரை படுமோசமாக அலசோலிப் பட்டிருக்கிறது.
மட்டுநகர் வாவியின் நீளம் முப்பத்தாறு மைல். அது வளைந்து நெளிந்தோடும் பகுதியை அண்டியுள்ள கிராமங்களெல்லாம் பொன்விளையும் செழிப்புப்பூமி படுவான்கரைக் கிராமங்களோ இன்னும் விசேடம்.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
இயற்கை வளம் நிரம்பிய சிங்காரத்தோப்பு மண்டூர். மரங்களெல்லாம் என்றும் சிரித்து நிற்கும். மக்களெல்லாம்.மனம் மகிழ்ந்து பூரிப்பர். முருகன் குடி கொண்டிருக்கும் திருச்செந்தூர். செந்தமிழ் அறிஞர் பலரைத் தந்திட்ட தங்கத்தமிழ்ப்பூமி. மயில் ஆடும் பாறை. மாங்குயில் கூவிடும் மாந்தோப்பு. மான்துள்ளிடும் மரகதச்சோலை.
வனப்பும் - வளமும் - சிறப்பும் - செம்மையும் மிக்க என் கிராமம் சிதறுண்டு சீரழிந்து போயிற்று. ஆற்றோரமெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கிறது. என் செய்வோம் ஏது செய்வோம் என்ற ஏக்கத்துடன் இறங்கி நடக்கிறோம்.
இந்தப் பட்டப்பகலில் நான் முட்டி - மோதித் தடுக்கி விழுந்த மரங்கள் தான் எத்தனை. ஊர்மக்கள் வேறு பிச்சிப்பிடுங்குகிறார்கள் கேள்விக்கு மேல் கேள்விகேட்டு எங்க கிடந்து வாறயள், அங்காலப்பக்கம் எப்படி இதுதான் கேள்வி. பதில் சொல்லி அலுத்தே போனேன். என்னசெய்யலாம். என் அலுப்பைப் பார்த்தால் அவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளுவார்கள் தலைக்கணம் பிடித்தவன் என்று திட்டுவார்கள். என் வாய்க்குத்தான் கட்டுப்பாடா என்ன? மண்டூர் வீதிகள் எதுவுமே தெரியவில்லை. பென்னம்பெரிய மரங்களெல்லாம் வேரோடு புரண்டு கிடக்கின்றன. கன்னாபின்னா என்று கிடக்கும் மரக்கும்பலுக்குள் விரசாகத்தான் என்னால் எப்படிப் போகமுடியும். முழுக் கிராமமே அழிவுக்கோலம் பூண்டிருக்கிறது. ஏன் 1907ம் ஆண்டுக்குப் பின் - அரை நூற்றாண்டு காலத்தில் வளர்ந்து பருத்த மரங்கள் அல்லவா இவை. மண்டுரே புதுக்கோலம் - வெறிச்சோடிக் கிடக்கிறது எனலாம். இத்தங்கு தடைகளையெல்லாம் இன்னும்தான் கடந்தாக வேண்டும். ஒருவாறு குனிந்து - புகுந்து - துள்ளிப்பாய்ந்து எட்டிக்கடந்து போகிறேன். ஒரு சின்னப்பொடியன் குறுக்கு வழிகளைக் காட்ட முயலுகிறான் எனக்கு குறுக்கு வழிபோக விரும்பாத நான் - நேர்வழியையே நாடி விரைகிறேன். என் வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் தான் எத்தனை தடைகள்.

Page 39
சிறி வந்த சூறாவளி - 78
சாய்ந்த மரங்களெல்லாம் சாய்ந்தவாறே தொம்மென்று கிடக்கிறது. வீட்டுக்குரியவர் போய் இன்றோடு மூன்று நாளாகிறது. யாரையாவது மன்றாடித்தன்னும் விழுந்த மரங்களை வெட்டி வெளியாக்க மனம்தான் வருமா? எதிர்ப்புறத்தில் நிற்கும் ஆகப்பெரிய மரம் - விளாமரம். இலைக்கு ஒரு காய் காய்க்கும். வேர் தெறிக்கப் பறந்திருக்கிறது விளா. சோமசுந்தர அண்ணனின் வீட்டுத் தென்னை மரம்தான் என்வீட்டுப் பக்கம் வளைந்து நின்ற நினைவு. இந்த தென்னையைப் பற்றி நான் என்றும் நினைத்துக் கதைப்பதுண்டு. வயது முதிர்ந்த தென்னை வளைந்துமிருக்கிறது. தென்னையோ - சூறாவளிக்குத் தப்பவில்லை. என் வீட்டை நோக்கி வரும் எனக்கு நன்கு படுகிறது கண்ணில். வேரோடு சாய்ந்த தென்னை என் வீட்டுக் கூரையைத் தாவிபட்டிருக்கிறது. ஆனால் நாசம் செய்யவில்லை. நாசம் செய்ய என்னதானிருக்கிறது. வீட்டுக்கூரைதான் இல்லையே. கொழுக்கி ஓடுகள் தான் காற்றாய் - காற்றில் நொருங்கிப் பறந்திருக்கின்றனவே.
என் வீட்டின் பெயர் 'மனோப்ரியா. மனோன் என்னையும் நான் மனோனையும் பிரியமாக ஏற்று மணந்து கொண்டதால் மனோப்ரியா என்ற பெயரையும் நிலைபெறச் செய்திருக்கிறோம். பெயரைத் தெரிவு செய்த காலம் - ஒரே ப்ரியா சீசனும் கூட. வீட்டுக் கேற்றைத் திறந்து உள் நுழைகிறேன். எண் பிரிய துணைவிக்குப் பக்கத்தில் மகள் விதிஷா மண் அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அப்பா. அப்பா என்று கூட ஏதோ சொல்லுகிறாள் - என் காதில் நன்கு கேட்கிறது அவள் குரல்.
இறந்த பிணம் தானி நாண் என்ற நினைப் போடு உட்கார்ந்திருக்கும் என் வீட்டவருக்கு - சாட்சாத் நானேதான் என்று சொல்லிக் கொண்டு உயிர் உடல் நின்று பேசினால் எப்படியிருக்கும். பிரமித்துப் போனார்கள். ஆனந்தப் பெருக்கால் என்னையே மறந்தேன் நான். மனைவியையும், மகளையும் ஆரத் தழுவி அள்ளிக் கொஞ்சினேன். இப்படியொரு வேளை இனி எப்போது என் வாழ்வில் காணப் போகிறேன். ஏங்கியிருந்த எனக்கு மறுவாழ்வில் கிடைத்த

செழியன். ஜே. பேரின்பநாயகம்
மகிழ்ச்சி இது ஏங்கிய மூன்று உள்ளங்கள் பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கி - மகிழ்ச்சி என்ற அலையில் கூத்தாடுகின்றன.
உடமைகள் நாசமானாலும் - உயிர்தப்பினோமே - அதுவே போதும் என்ற கீதத்தை உச்சரிக்கிறார் என் துணைவி. மகளோ - அப்பா பிச்சி' - அப்பா பிச்சி' என்கிறாள். பிச்சி என்றால் என் மகளின் மழலை மொழியில் "ரொபி என்று அர்த்தமாம்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் நாங்கள் - மற்றோரையும் மனத்திரையில் வைத்து நினைக்கிறோம். நம்மவர் பலர் குடும்பத்தோடு உயிரிழந்திருக்கிறார்களே என்று நினைக்கும் போது என் உற்சாகம் தளர்கிறது.
இன்னுமேன் தாமதம். தாமதிக்கத்தான் நேரமா? எத்திசை நோக்கினும் கூக்குரல் - மரணஒலம். ஒரு இரவுக்குள் நடந்த புதினம்தானே இது. என்னைப் பெற்று வளர்த்த இரு சீவன்களும் - உடன் பிறந்த இரு சகோதரிகளும் இருக்கிறார்கள். அம்மாவின் வீட்டையும் எட்டிப் பார்ப்போம். வழிதான் இல்லை போவதற்கு அம்மா, அப்பா - தங்கச்சிமார் சுகமே இருக்கிறார்கள். மகள் விதிஷா - சூறாவளி இரவு அப்பம்மாவோடுதான் இருந்ததாக அறிந்தேன்.
எனது வீட்டிலிருந்து என் தாய் வீடு சுமார் இருபது யார் தொலைவில்தான் இருக்கிறது. சூறாவளி வியாழனன்று பின்னேரம் அப்பப்பாவோடு - அப்பம்மாவைப் பார்க்க போன மகள் வீடு திரும்பவில்லை. சூறாவளி இரவில் அம்மாதான் ஆபத்துவராமல் பாதுகாத்து வைத்திருக்கிறார். குளிர்தாவாமல் பெரிய கம்பிளியால் மூடி கெட்டியாக நெஞ்சோடு அணைத்த மாதிரி விடியும் வரை தூங்காமல் இருந்திருக்கிறார்கள். அம்மாவைக் கேட்டு அன்றிரவு அழாதது கடவுள் செய்த புண்ணியம் என்று சொன்னார்கள்.
அம்மாவின் வீடோ - அதோ தெரிகிறது. தென்னை மரங்களும் - கமுகு மரங்களும் கூரை மீது விழுந்து பின் நொறுங்கிக் கிடக்கிறது வீடு. மண்டபத்தகடுகள் இல்லை. எத்தனை மைல்

Page 40
சிறி வந்த சூறாவளி - 78
தூரம் பவனி செய்தமோ தெரியவில்லை. யார் யாரின் கூரைகளை அலங்கரிக்க உதவினவோ அதுவும் தெரியவில்லை.
குமரையா அண்ணன் - வாழ்வே முறிந்து விழுந்த மனிதனாக நெடுமரமாய் நிற்கிறார். சூறாவளி எமனால் உயிர் சூறையாடப்பட்ட அவர் துணைவி இனி எழும்பாத்துயில் கொள்ளுகிறாள். ஆசையோடு பெற்று வளர்த்த ஒன்பது பிள்ளைகளும் துயரம் பொறுக்காது - ஓவென்று புலம்பி - வெதும்பி நிற்கிறார்கள். வரக்கூடியவர்கள் இனி எவரும் இல்லை - முறிந்து கிடக்கும் பூவரசம் கம்புகளை வெட்டி - தட்டி ஒன்று கட்டுங்கள். சமயாசார - இறுதிக்கிரியைகள் எதுவுமே செய்ய முடியாது என்கிறது ஒரு முதியவர் குரல். பிணத்தைத் தட்டியின் மேல் வைத்து சுமந்து செல்லுகிறோம் - மயானக்கரைக்கு எத்தனை தட்டிகள் - எத்தனை பிணங்கள். ஒன்றா இரண்டா கணக்கெடுக்க, மண்டூர்க்கிராமத்து மக்கள் நூற்றைம்பது பிணங்களை புதைக்க வேண்டாமா?

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அனுபவம் (8)
பழைய நினைவுகள் மக்கி மடியட்டும். நான் வாழ்வதற்காகவே இந்த பேராபத்திலிருந்து தப்பித்திருக்கிறேன். இப்படி உறுதி பெறுகிறேன் நான். சூறாவளியன்று என் பெரியப்பா ஒருவரும் இறந்து போனார். அன்று பின்னேரம் செத்த வீட்டிற்கு திரும்பி விடலாமென்றுதானே நான் மட்டக்களப்புக்குப் போனேன். வரத்தான் முடியவில்லையே. பெரியப்பாவின் செத்த வீட்டுக்குப் போகிறேன். அவர் பெயர் காசுபதி. சோதிடம் பார்ப்பதில் சமர்த்தர். ‘நான் கண்ணை மூடுகிற அன்று இந்த உலகமே அழிந்து போகுமல்லவா’ என்று பேச்சுவாக்கில் அவர் முன்னொரு நாள் சொன்ன சொல் என் எண்ணத்தில் நிழலாடுகிறது. பகிடி பகிடியாக அவர் சொன்ன குறிப்பின்படி நிகழ்ந்தது அழிவு. சில மனிதர்கள் சில வேளைகளில் தம்மைச் சுற்றியிருப்பதுதான் உலகம் என்றே எண்ணியிருக்கிறார்கள். உலகம் என்று அவர் அன்று குறித்ததும் தான் வாழுகின்ற மண்ணைத்தானாக்கும். சோதிடராச்சே அவர். பாலமுனையில் நாங்கள் வாழ்ந்த பழைய வீடு - முற்றாகவே அழிந்து போயிற்று. என் மனைவியின் தாயதி வீடு. சுமார் நூறு வருடத்திற்கு மேலான ஆலமரம். பென்னம் பெரிய விழுது விட்டு அகன்று விரிந்திருந்த ஆலமரம் அது. வேரொடு "கெள்ளாந்து வீட்டின் மீதே விழுந்தது. வீட்டில் எடுப்பதற்கு எதுவுமே இல்லை. எல்லாமே சுக்குநூறு. இந்த ஆலமரம் இருக்கும் வரைதான் இந்த வீட்டுக்குச் சிறப்பு என்று காசுபதி பெரியப்பா ஆரூடம் சொன்னதை சூறாவளிக்குப் பின் நினைத்துப்பார்க்கிறேன். இப்போது மரமுமில்லை - வீடுமில்லை - அவருமில்லை. நீண்ட தூரம் நடந்து வியர்த்து - விருவிருத்து வரும் பாதசாரிகளுக்கு தங்குவதற்கு நிழலும் இல்லை. எங்கும் ஒரே அந்தகார வெட்டை வெறிச்சோடிக்கிடக்கிறது. நீங்கள் தூங்கவேண்டாமா? என்று எனது துணைவி கேட்கிறா. தூக்கமே வரமாட்டேனென்கிறது. இரவு - பகல் என்று பாராமல் இருபத்தினான்கு மணித்தியாலங்களும் பேசிக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது.

Page 41
சிறி வந்த சூறாவளி - 78
மனதிலே கேள்விகளோ அனர்த்தம். எழுகின்ற கேள்விகளே
பிஞ்சாகி - காயாகி - பழுத்து நிறம் பிடித்து நிற்கிறது. விரிந்து கிடக்கும் பகலினூடே விரைவாய் நடக்கிறேன் நான்.
நாமெல்லாம் அமிழ்ந்து - கவிழ்ந்து போக வேண்டியதுதானா - இராமையா அண்ணன் உழைப்பால் உயர்ந்த ஒருவர். கேரளத்தைச் சேர்ந்தவர். இங்கேயே குடியாகி வாழ்வை அமைத்துக் கொண்டவர். பழகுதற்கு இனியவர். பரந்த உள்ளத்தினன் - பண்பாளர். எங்களில் ஒருவர். இப்போது எங்களுரவராகவே மாறிவிட்டார். சிறுமுதலுடன் சிறு வியாபாரம். இன்றோ ஒரு குட்டி முதலாளி இவர்.
சூறாவளி யாரைத்தான் விட்டு வைத்தது. நல்ல மனிதரையும் - தகர்த்தது. கெட்ட மனிதரையும் நசுக்கியது. இந்த ஆபத்துக்குள் சிக்கி பெரும் சீரழிவுக்குள்ளானார் இராமையா. அவரது கடை சுவர் இடிந்து விழுந்தது. விழுந்தது மட்டுமன்றி இடிந்த சுவருக்குள் எழுவர் அகப்பட்டனர். அனைவரும் அரைகுறை உயிருடன் இழுத்து எடுக்கப்பட்டனர். மூர்த்தி என்றொரு இளைஞர் இன்னுமே நடக்கமுடியாதிருக்கிறார். தியாகராஜா என்ற இளைஞர், இராமையாவின் மூத்த மகன் தர்மலிங்கம் எல்லோருமே மரணப்பிடியிலிருந்து தப்பியவர்கள். பேராபத்தை நினைத்து - இன்னும் பெருமூச்செறிகிறார்கள்.
இராமையா அண்ணனின் இரண்டாவது மகள் அஞசலி தேவி. அஞ்சலி என்று செல்லமாக அழைப்பர். பதினொரு வயது. மண்டூர் மகாவித்தியாலயத்தில் நான்காம் வகுப்பில் படித்து வந்தார். அஞ்சலி - பெயருக்கேற்ற அழகி. தன் கொவ்வை உதடு விரித்து அவள் சிரித்தாள் - சொக்கையில் விழும் இரு பொக்கும் அழகைச் சொரிந்து நிற்கும். சிரித்த முகம், கள்ளமில்லா இந்தச் சின்னஞ் சிறுசுதான் காலனுக்கு என்ன கொடுமை செய்தாள். இடிந்து விழுந்த கடைச் சுவருக்குள் நசுங்குண்டு கிடந்தாள் இந்தப் பிஞ்சுள்ளம். பொருள் சேதமும் - உயிர் சேதமும் இராமையா அண்ணனுக்கு. ஏன், இப்படியொரு அவஸ்தை எனக்கு என்று பெருமூச்செறிந்து - கண்ணிர் வடிக்கிறார் அவர்.
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அதோ - தெரிகிறதே - அதுதான் தீவுக்காடு. எங்களுரில் ஒரு பகுதி. வாவியை அண்டியிருக்கும் ஒரு சிறு குடியிருப்பு. அலங்கோலமான அந்த பரிதாபத்தை என்னால் கண்கொண்டு பார்க்க முடியாதிருக்கிறது. பிறந்த மேனியாக ஒரு பெண்ணின் சடலம் முட்கம்பி வேலியில் தொங்குகிறது. சூறாவளி இரவில் அள்ளிப்போன உடல் இது. முட்கம்பியில் அந்த அழகு அணங்கின் நீண்ட கேசம் சிக்கிக் கொண்டதால் - அலறித் துடித்திருக்கிறாள் அவள். அன்றிரவெல்லாம் மரண அவஸ்தை அனுபவித்து - கண்ணை மூடியிருக்கிறாள். உதவி யாரால் தான் செய்ய முடியும் என்ன பரிதாபம் இது. இப்படி எத்தனை பெண்களை - ஏன் ஆண்களைக் கூட அசுரப்புயல் தூக்கி பந்தாடியிருக்கிறது.
தீவுக்காட்டில் - தாமோதரம் - இருபத்தைந்து வயது நிரம்பிய இளைஞன் - ஒரு வயது மகன் - முருகமூர்த்தி பெயர், இவரது மாமி செல்லம்மா, ஆறு வயது மகள் சிவபாக்கியம் - இந்தக் குடும்பம் முற்றும் முழுதாக அழிந்தது என்ற செய்தியை தம்பிராசா அண்ணன் சொன்னார். குடும்பத்தோடு சூறாவளி அள்ளி வீசியது பக்கத்து வாவியில். தம்பியன் அண்ணன் - அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர். நல்ல பலசாலி. இவரும் சுமார் பத்து அடி உயரத்தில் நின்று ஊஞ்சலாடினாராம்.
என்ன ஒரே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார் தம்பியண்ணன். யோசிப்பது ஒரு கலை. அந்த யோசனைக்கு யோசனையைத் தருவது மற்றொரு கலை என்று அவருக்கு விளக்கம் கொடுக்கிறேன் நான் செல்வராசாவின் பிள்ளைகளையும் காத்து தூக்கித்துப் போயிற்றாம் உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் தம்பியர் தொப்பென்று.
தும்பங்கேணி - குடியேற்ற வீட்டிலிருந்து வாடிக்கு ஓடிவந்த போது இந்தக் கொடுரம் நிகழ்ந்ததாம். மூன்று பிள்ளைகளில் ஒண்டு தப்பித்ததாம். ரெண்டு செத்துப் போயித்தாம்'. 'அனுகி அனுகி அரை உயிரில் கிடந்த மற்றப் பிள்ளையை நாய்தானாம் காட்டிக் குடுத்த

Page 42
சிறி வந்த சூறாவளி - 78 - இப்படிக் கதையை நீட்டிக் கொண்டு போகிறார். ஆம் - உண்மைதான். குடியேற்றவாசி செல்வராசாவின் பிள்ளைகள் இரண்டு இறந்து போயின. தன் செல்வங்களின் உயிர் காக்க அவர் வாடிக்கு கொண்டோடி வந்திருக்கிறார். சூறாவளி அரக்கன் அந்தச் சின்னஞ் சிறுசுகளை தகப்பனின் பிடியிலிருந்து பறித்து குளமொன்றுக்குள் வீசியிருக்கிறான். இருள் பிரிகிறது - அடுத்த நாள் - பகல் வருகிறது. செல்வராசாவின் வீட்டு நாய் ஒரு கிழிந்த சட்டைத் துண்டுடன் வாடியை நோக்கி ஓடிவருகிறது. நன்றியுள்ள மிருகமல்லவா அது. புயல் கொண்டுபோன பிள்ளைகளைக் காணவில்லையெனத் துடிக்கும் பெற்றோருக்கு - செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது நாய், வாயில் ஒரு பிள்ளை அணிந்திருந்த சட்டையின் கிழிந்த துண்டு வந்த வழியே மோப்பம் பிடித்து ஒடுகிறது. எஜமானும் பின்னே விரைகிறார். ஒரு ஆழமான குட்டை அதனைச் சுற்றி மொய்யென்று வளர்ந்து நிற்கிறது புல். கால்வைக்கவே பயமாகவிருக்கிறது. இரண்டு குழந்தைகள் செத்து மிதக்கின்றன. தப்பிய குழந்தை - ஆண். நாய் உறுமுகிறது. குரைக்கிறது. நீண்டு வளர்ந்த புல்லை அப்பிப் பிடித்தவண்ணம் குற்றுயிராய் அணுகி அணுகிக் கிடக்கிறான். எஜமானுக்கு தன் நன்றியுணர்வைக் காட்டிக்கொண்ட நாய் - விலகிக் கொள்கிறது. ஆசையோடு தன் செல்வமகனை அவர் தூக்கி அணைக்கிறார். துணைக்குச் சென்றவர்கள் மற்றிரு சடலங்களையும் இழுத்துப் போடுகிறார்கள் கரையில்.
I
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
அனுபவம் (9)
சோக உணர்வை மனதுக்குள் நிரப்பி மக்கள் கதி கலங்கிப் போனார்கள். காலமோ சுறுசுறுப்பாக மனித அனுபவங்களை சுமந்து கொண்டு ஒடுகிறது. நானும் பொழுதை எனதாக்கிக் கொண்டு பயன்படுத்தத் துணிகிறேன்-வேளையை.
காத்தான்குடிப் பிரதேசத்தைப் போய்ப் பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் முழுதாக வாழும் பகுதி. மார்க்க சிந்தனையுடன் வாழும் மக்கள். என்றுமே வழி பிசகிப் போகாமல் காத்தமாநகரை கட்டி ஆண்டு வருகிறார்கள். வணிகத்தில் வல்லவர்கள். நாட்டின் நாற்புறத்திலும் - இவர்கள் வணிக நிலையம் வைத்து - வாழ்க்கைச் சுபீட்சத்தை பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
மெல்ல நகர்கிறேன். புதுக்காத்தான்குடிப்பக்கம் தெரிகிறது. மக்களை அங்கு காணவே இல்லை. உடைந்து - தகர்ந்த கட்டிடங்கள். வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்கள் சூறாவளி அச்சத்தால், அடங்கிப் போனார்கள்.
இயற்கையின் சீற்றத்தை யாரால் வெல்ல முடியும். உடமைகள் அழிந்தே போயின.
ஆண்டாண்டு - தோறும் - அழுது புரண்டாலும் மாண்டார் நம் எதிரே கதை பேச வரமாட்டார். என்னருகே வந்த பெரியவர் - சொல்லுகிறார். கடல் சீறி எழுந்தது. பத்து அடிக்கு மேல் - நீர் ஓங்கி அடித்தது. கடலோர மீனவர் குடிசைகள் எல்லாம் மணல் மேடாகின. உடமைகள் எல்லாமே மணலுக்குள் மூழ்கிப் போயின.
ராபியத்தும்மா என்னைச் சந்திக்கிறார். ஒட்டிப் போன முகம். உற்சாகமே இல்லாத கதை பேச்சு. மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். சூறாவளியின் கோரச் சீற்றத்தை விபரிக்கத் துணிகிறார் - . ராபியத்தும்மா. ஒப்பாரி விட்டு அழுகிறார். ஆறுதல் சொல்லாமல் என்னால் நின்று கொள்ள முடியவில்லை. ராபியத்தும்மா - கந்தளாயைச் சேர்ந்தவர்.

Page 43
சிறி வந்த சூறாவளி - 78
எனது கணவர் கடற்றொழில் செய்பவர். பத்து வருடத்துக்கு மேல் அனுபவம். புதுக்காத்தான்குடிக்கு வந்ததே - இரண்டு வருடமாகிறது. காலத்துக்குக்காலம் ஊருக்குப் போய் வருவோம். ஆறு மாதமாக போகவில்லை.
'ரெண்டு வருஷமா புதுக்காத்தான்குடியில - ஆ. மு. ஹாஜியாரிர தென்னந் தோட்டத்திலதான் தங்கி வர்றம்' பென்னம் பெரிய தோட்டம் - இரண்டாயிரம் தென்ன மரங்களுக்கு குறையாமல் இருக்கும் - கடற்கரைப் பிரதேசத்திலிருக்கும் அருமையான தோட்டம் என்கிறார் ராபியத்தும்மா.
ராபியத்தும்மாவின் கணவர் பெயர். பி. தாவூத். மண்டூர் வரை போய் வியாபாரத்துக்காக போய் வருவேன் என்று ராபியத்தும்மா சொன்னதும் - என்னுார் பற்று எனக்குள் நிமிர்ந்தது. கடலில் பிடிக்கும் மீனை - பகிர்ந்து கொள்ளுவீர்களா? 'மூன்று பேர் பங்கு'. ஆண்டவன் அளக்கிற மாதிரி கிடைக்கும் அதுவும் எந்த நாளும் லாபம் கிடைக்காது. நட்டத்திலயும் போறது தான் - என்றார் ராபியத்.
ஒன்பது நாட்களா? அடுப்பு எரியவே இல்ல? ஏன் சட்டி பானை வாங்குவதே - முடியாத வேலையாப் போச்சு. குடிநீர்க் கிணறு இருந்த இடமே தெரியவில்லை. தோண்டிப் பார்த்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் - சைக்கிளும் - மணலுக்கதான் புதஞ்சி கிடக்கு. இப்படியும் ஒரு குரல்.
ராபியத்தும்மா - எவ்வளவுக்கு மனச் சோர்வுடன் இருந்தாரோ அவ்வளவுக்கு வைராக்கியமுள்ளவர்.
‘எல்லாமே அழிஞ்சி போச்சி. உடுத்த துணி மட்டுந்தான் மிச்சம் பரவாயில்ல - ஆண்டவன் இந்த உயிர பறிக்கல்ல என்று நன்றிப் பெருக்குடன் பேசினார்.
சும்மா சொல்லவில்லை. கடல் பொங்கி - நூற்றி ஐம்பது அடி உயரத்தில் - ஓங்கி உயர்ந்ததென்றால் - தப்புவதுதான் எப்படி?
 

செழியன். ஜே. பேரின்பநாயகம்
கடல் எங்களைத் துரத்தி வந்தது. காத்தான்குடி பிரதான வீதிக்கே ஓடிவந்தோம். - ராபியத்தும்மா கண்ணை குளமாக்கிக் கொண்டார். தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோது கடல் கொந்தளிப்பு வரும் என்ற றேடியோ அறிவிப்பு அறிந்தோம். நல்ல வேளையாக கடலில் தோணி தள்ளல்ல.
கடற்கரையில் அடுக்கிக் கிடந்த மீன்பிடித் தோணிகள்தான் எங்கே. ஒன்றுமே இல்லை. ஒழிந்து கொண்டனவா என்ன? மணல் முகட்டுக்குள் மூழ்கிப் போயின.
கடலைக் கண்டாலே பயமாக இருக்கிறது - என
பேசத்துணிகிறார். - தாவூத்
காத்தான்குடி - மத்திய கல்லூரிக் கட்டிடங்களும் - உடைந்து தகர்ந்து சிதறுண்டு கிடக்கின்றன. கரிசனையோடு கட்டி எடுத்த கட்டிடங்கள் - சூறாவளிச் சீற்றத்தின் இரையாகின. மக்கள் பெருமளவில் குவிந்து பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
மட்டக்களப்பு - கல்முனை வீதிப்பக்கம் - என் கண்கள் சாய்கின்றன. சனங்கள் சாரிசாரியாக வருகிறார்களே - ஏன்? வாகனப் போக்குவரத்துத்தானே இல்லை. வீதியின் இருமருங்கிலும் தகர்ந்து விழுந்து குறுக்காகக் கிடக்கும் மரந்தடிகளை உடன் அகற்றிவிடத்தான் முடியுமா? அதனால்தான் பழைய காலம் போல் மக்கள் தத் தமது ஊருக்கு கால் நடையாகவே செல்லத் துணிந்துள்ளனர்- அவ்வளவுதான்.
இந்த இறைவனுக்குத்தான் மானிடன் மீது எத்துணை கோபம். எத்தனை துன்பங்களைத்தான் நாம் சுமக்கிறோம். இறைவா - இன்னும் ஒரு தடவை - இயற்கையின் சீற்றத்தை கொட்டித் தீர்த்து - எம்மை வதைக்காது - இரக்கங்காட்டு - என் மனதுக்குள் இறைவனை இறைஞ்சி மெதுவாக நடக்கிறேன். சூறாவளியின் கோர இரவை நம்வாழ்வில் சந்திக்காமல் இருப்போம். நினைவு மீட்டுப் பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது. கொடுரத்தின் கோலாட்டம் தெரிகிறது.

Page 44
『「 ே * ।
■ 量
■ / T', グ
F. 町高s- * t
リ轄!-一rリ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هيكلة الليالي

Page 45


Page 46


Page 47
செழிய
இனிய
Lis. LII
o 530 IJ
மட்டுந
பிரமுக
கண்ணியவான். மட்டுநகர்த
தனிமுதல்வனாய் விளங்கும் சடு சார் துறையின் அமோக வ
கொண்டிருப்போன். தேனாடு ெ
கரையின் ஏடுகளில் செய்திகை பல்துறைசார் சான்றோர், அறி வாசகர்க்கு அள்ளி வழங்குவ
வல்லோன், பன்ைனார்ந்த நற்
திறனாய்வில் ஈடுபட்டோன். எங் ஆக்கங்கள் தமிழ்த்தாய் மடி
எதிர்பார்ப்போம் மேலும் இவை
 

ன் ஜே. பேரின்பநாயகம்; ஆம், ஓர்
பழகு தமிழ் க் கலைஞள் ாளன் ; பைந்தமிழில் அழகாய் யாற்றும் ஆற்றலுள்ளோன் ; கர்க்கழகம் - தமிழ்க்கலா மன்றப்
னாய் கலைத்தொண்டில் ஈடுபட்ட
க் தலைமகனாய் - மாநகரத்
முகப் பணியாளன். தமிழ் எழுத்துச் ளைச் சலுக் காய் ஆர்வமிகக் பற்ற செய்தித் துறையாளன், ஏரிக் |ள வாரி வழங்குவது மட்டுமின்றி, ஞர்களைத் தானாக நேர்கண்டு தில் வள்ளலிவன். படைப்பாற்றல்
கவிதை, சிறுகதை, கட்டுரைகள், பகள் செழியனது எழில் கொஞ்சும் யில் தவழட்டும்; நூல் வடிவில்
- -'திமிலைத்துமிலன்"- -