கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர் நோக்கும் சவால்கள்

Page 1
பம் மெயைகiஆண் சமூகதுவ எருச்சி வி
Il lui
FINITFIELLIF DETAME
嗣 ܬܐ
 

ரே Syrir OU69y
தீதே
GAMASA
-
ச. கீத Oona aaa.

Page 2

இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
ச.கீத பொன்கலன்
லியோ மார்கா ஆஸ்ரம்

Page 3
இருபத்தோராம்நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் ச. கீத பொன்கலன்
The Challenges faced by the Plantation Tamils in the 21st Century
Author : Fr. S. Guy de Fontgalland B.PH. B.THM.A(Soc) Belgium
C) ஆசிரியர்
முதற்பதிப்பு: பெப்ரவரி 2004 பக்கம் : 352
பிரதிகள் :1200 மொழி : தமிழ் அளவு ; டெமி 1x 8
பதிப்பாளர் : லியோ மார்கா ஆஸ்ரம் 121/1, புனித தோமையார் வீதி, பண்டாரவளை.
L6ait 607(655-gi): leomarga(d)eureka.lk.
வடிவமைப்பு: வே. கருணாநிதி
அச்சிட்டோர்:
தி பார்க்கர் 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 60004 தொலைபேசி 28353983,38353983

சமர்ப்பணம்
இருட்டுத் தீபாவளியாய் தடம் பதித்த, 2000ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி, பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில், அரசாங்கப் பாதுகாப்பில், தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு பாவமும் அறியா 29 இளைஞர்கள், இன வெறி கொண்ட, மனிதத் தன்மை அற்றவர்களால் ஈவிரக்கமின்றி, மிகவும் கொடூரமாக கொன்று குவிக்கப் பட்டார்கள். கீழ்க் குறிப்பிட்ட அந்த இளைஞர்களுக்காக கனத்த உணர்வுடன் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது.
சந்தனம் செல்வராஜ், (தலவாக்கலை), முனுசாமி விஜயகுமார் (மஸ்கெலியா), விஸ்வலிங்கம் விஜேசுந்தரம், வினாயகமூர்த்தி செந்தூரன், மாரிமுத்து பாலகுமார், பேரின்பநாயகம் நிமல்ராஜ், சிவன் குபேந்திரன், சோமசுந்தரம் செல்வராஜ், கோகிலமணி சஜீவன், கதிர்காமத் தம்பி மதியழகன், கணபதிப்பிள்ளை இரவீந்திரன்-மேட்டக்களப்பு); சின்னதுரை மோகன், புண்ணியமூர்த்தி மதியழகன்(திருகோணமலை);
விஸ்வபுரன் ருபேஸ்குமார், இராமசாமி கருணாகரன், (வவுனியா);
குணபாலன் ஜெயவர்த்தனம் (மன்னார்) செல்வராஜா துரைராஜா, சிவஞான சுந்தரம் சிவரூபன், திருச்சிற்றம்பலம் முகுந்தன் - (யாழ்ப்பாணம்);
சிற்றம்பலம் முகுந்தன், சிவயோகராஜா விபுலானந்தராஜா (அம்பாறை)

Page 4
கீத பொன்கலன்
r தெரிந்தோ தெரியாமலோ N
விரும்பி நாம் அணிந்து கொண்டிருக்கும் எண்ணற்ற விலங்குகளிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டிய விழிப் புணர்வைப் பெறுதல் வேண்டும்;
அதுவே உண்மையான விடுதலையாகும்.
சுயத்தை அழிக்கும் கண்ணிவெடிகள் பலவும் நம்மால் நமக்குள்ளேயே பதிக்கப்பட்டிருக்கின்றன. நமது அறியாமை பெற்றெடுத்த விபரீதங்கள் அவை ! அவற்றை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து- அகற்றுதலே நமதுவிடுதலைக்கு வழிகோலுவதாகும்.
நாம் எந்தப் புதிய முகமூடிகளையும் அணிந்து கொள்ளத் தேவையில்லை. இதுவரை நாம் விரும்பிச் சுமந்திருந்த சில அற்பச் சிந்தைகளை, அழிவுச் சின்னங்களை அகற்றிவிட்டாலே போதுமானது.
-ம. திருவள்ளுவர்

முன்னுரை - வாசகர் கருத்து
வண பிதா கீத பொன்கலன் அவர்களின் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்த போது ஆர்வமுடன் வாசித்த பல வாசகர்களில் நானும் ஒருவன். அன்னாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு நூலுருவாக்கும் முயற்சியில் முன்னணி ஆர்வலர்கள் சிலர் முன்வந்து அந்நூலுக்கு வாசகனான என்னை முன்னுரை எழுத வேண்டுமென்று கேட்டபோது கரும்புதின்ன கைக் கூலியா என மனமகிழ்வுடன் என் கருத்துக்களைக் கூற மனமுவந்தேன். மலையகத்தில் அரசியல், தொழிற் சங்கத் தலைமைகளை தொழிலாளர்களே ஏற்று நடத்த வேண்டும் என்ற எண்ணக் கருத்தினை என்றும் வலியுறுத்தும் பிதா கீத பொன்கலன் அவர்கள் இதனை உளமார ஏற்பார் என்பது என் மகிழ்ச்சியை இரட்டிப் பாக்கியது.
அருட்தந்தை கீதபொன்கலன் அவர்கள் நீண்ட காலமாக மலையகத்தில் வாழ்ந்து, மலையக தமிழ் மக்களின் சமூக மேம்பாட்டிற்கான வழிவகைகளைப் பற்றி சதா சிந்தித்து, பல திட்டங்களை உருவாக்கி அடி நிலை மக்களுடன் நெருங்கித் தொடர்புகொண்டு செயல்படுபவர். மலையகத் தமிழர் பிரச்சனைகள் பற்றி பல ஆய்வுகள், செயல் அமர்வுகள் கருத்தரங்குகள் நடத்தி மலையகத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்து வதே தனது புனிதத் தொண்டாக வரிந்து கொண்டவர். மேல் நாட்டு பல்கலைக்கழகங்களில் சமூகவியல் பட்டங்கள் பெற்ற அருட்தந்தையவர்கள் மலையக தமிழ் மக்களின் கடந்த கால தற்கால அரசியல், சமூக வாழ்வினை விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து பல
கட்டுரைகள் எழுதியுள்ளார். மலையகப் பிரச்சனை

Page 5
கீத பொன்கலன்
களின் ஆணிவேரை இனங்கண்டு, மலையகத்தின் பல்வகைப்பட்ட வளர்ச்சிக்கான பின்னடைவுகளை நுணுகி ஆய்வு செய்து புள்ளி விபரங்களுடன் யதார்த்தமாக வெளிப் படுத்தியுள்ளார். இவரது கள ஆய்வுகளில் பங்குகொண்டவன், கருத்தரங்குகளில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இக்கட்டுரை களை வாசிக்கும் போது அவற்றின் பண்புகளையும் பயன்களையும் நிதர்சனமாகப் புரிந்து மலையகமே படித்து பயன்பெற வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
மலையக தமிழ் மக்களாகிய நாம் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள், முகம் கொடுக்கும் சவால்கள் ஏராளம். இன்றும் அரை அடிமைகளாக வாழ்ந்துவருகிறோம். இவற்றையெல்லாம் தனது கட்டுரைகளில் அலசி ஆராய்ந்துள்ளார் அடிகளார், குடியுரிமை, வீட்டுரிமை இன்னும் நாம் பெறவில்லை. பேரினவாதத்தால் நசுக்கப் பட்டு வருகிறோம். எமது சமூக பிரச்சினைகளை மிக்க ஆழமாக நோக்கி அருமையான கட்டுரைகளாகத் தந்துள்ளார்.
மலையகத்தமிழ் மக்கள் இன்றும் மலையக அரசியல் வாதிகளால் ஏமாற்றப்படுவதை கட்டுரைகளில் புட்டுக் காட்டியுள்ளார். தோட்டத் தொழிலாளிக்கு உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படும் வர லாற்றை, சம்பள கூட்டு ஒப்பந்தங்களில் ஏமாற்றப் பட்டு வருவதை சொந்தமில்லாத காணியில் கடன் பட்டு வீடுகட்டும் அவல நிலையை, முன்பள்ளி மலையக சிறார்களுக்கு இருக்க வேண்டிய அவசியத்தை, அதை உருவாக்குவதற்கு எதிராக உள்ள முட்டுக்கட்டை களை, விடிவே காணாத மலையகத் தமிழ் பெண்களின் அடிமை வாழ்வினை, குடும்பக்கட்டுப்பாடு என்ற போர்வையில் மலையகத்தில் உருவாகியுள்ள மலட்டுக் கலாச்சாரத்தை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார்.
பிரஜாவுரிமைப் பிரச்சனை தீர்ந்து விட்டதாக சிலர் ஏமாற்றுகிறார்கள். அது இன்னும் முற்றாகத் தீர வில்லை. இரு நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நாம் இன்னும் தொடர்ந்து சத்தியக் கடுதாசிகள் சமர்ப்

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பித்துத் தான் பிரஜாவுரிமையைப் பெறவேண்டுமா? இப்பிரச்சனை முற்றாகத் தீர ஒரே வழி 1947ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தை நீக்கி விடுவதே என்ற இவரது கருத்து எத்துணை சிறந்தது உகந்தது என்பது ஆழ்ந்து ந்ோக்கினால் புலப்படும். மேற்கொத் மலைத் திட்டம் பற்றி அடிகளார் கூறும் கருத்துக்கள் தீர்க்க தரிசன மானவை. நமது அரசியல் தலைவர்கள் விடப்போகும் வரலாற்றுத் தவறினை சூகசமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
அருட்தந்தை மலையகத் தமிழ் மக்களின் முன்னேற் றத்தை மனதில்கொண்டே கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளை முழுதாக வாசிக்கும் போது இது தெரிகிறது. மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இன்னும் வெளியுலகத்திற்கு சரியாகத் தெரியாது. இந்நூல் இப் பணியினை ஏற்கனவே மலையகப் பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்ட நூல்களை விட சிறப்பாக நேர்த்தியாகச் செய்துள்ளது. மலையக மக்களின் அவல நிலை பற்றிய பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குகிறது. மலை யக மக்களின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவர் களுக்கு, ஆய்வு செய்ய விரும்புவர்களுக்கு, கொள்கை வகுப்பவர்களுக்கு அருமையான வழிகாட்டி நூலாகும். இளைய தலைமுறையினர் படித்துப் பயன்பெறு வதுடன் எமது மலையக எதிர்காலச் சந்ததியினரின் மேம்பாட்டிற்கு சிந்தித்துச் செயல்பட வழிவகுக்கிறது. அடிகளார் மலையகம் எதிர்காலத்தில் எப்படி அமையப்போகிறது என்பதை தனது அறிவு ஆற்றலால், ஆய்வுத்திறனால் எதிர்வு கூறுவதுடன், வீறுகொண்ட மலையகம் உருவாகுவதற்கான வழிவகைகளை சுட்டிக் காட்டுகிறார் அருட்தந்தை கூறும் சில கருத்துக்கள் நாம் தலைவர்கள் எனக் கொண்டாடுபவர்களைச் சுடும். உண்மை சுடத்தான் செய்யும்.
அருட்தந்தையின் அரசியல் ஆய்வுகள் அற்புத மானவை. மலையக தமிழ் மக்கள் தனி இனமாகக் கணிக்கப்பட வேண்டும் என்பதையும், மலையகம்

Page 6
கீத பொன்கலன்
அரசியல் ரீதியாக பிளவுபட்டு பலத்தையும் தனித் துவத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதையும் ஏனைய சிறுபான்மை இனத்துடன் இணைந்து பேரின வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும் என்ப தனை யும் பல கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.
இந்நூலை ஒவ்வொரு மலையக தமிழ் மக்களும் படிக்க வேண்டும். நம் இனம் பின்தங்கியிருப்பதற் கான காரணங்களில் ஒன்று உண்மைத் தாற்பரியங் களை நம் மக்கள் நன்கு புரிந்து கொள்ளாமையாகும். இக்காரணங்களைப் புரிந்து விளங்கிக் கொள்ளும் போது விழிப்புணர்வுக் கொண்டு இந்நிலையிலிருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வும் எண்ணமும் பிறக்கும். மன வைராக்கியம் கொள்ளும். மலையகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதே அருட் தந்தையின் தாரக மந்திரம். இப்பணியினை அடிகளார் இந்நூலின் இனிது நிறைவேற்றியுள்ளார்.
பொன்னான கருத்துக் கருவூலங்களைக் கொண்ட இந்நூல் மலையகத்தின் பொதுச்சொத்து. அடிமை நிலை அகன்று விழிப் புணர்வுக் கொண்ட, புதிய மலை யகம் உருவாக உந்துசக்தியினை ஊட்டும். இந்நூலைப் படித்து, பயனுற்று பொக்கிஷமாகப் பாதுகாப்போம்.
அடிகளாரின் பணிகள் சிறப்புற வாழ்த்துகிறோம்.
அந்தோனி
(தொழிலாளி) தொ.மு.க. - தலைவர்
நீதியைக் காக்க தங்களின் விலைமதிக்க முடியாத உயிரையும் கொடுக்க முன்வரும் நபர்களே நமக்கு வேண்டும்
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ

என்னுரை
தொழில்நுட்பவளர்ச்சிகள், வளர்ச்சிப் பாதையில் முன் னோக்கி அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டில் வெகுசன தொடர் பாடல்கள் பல விதமான முன்னேற்றங்களை கண்டுள்ளன. தகவல்துறை புரட்சிகளில், தொன்ல நகல், மின்தபால், சர்வதேச வலையமைப்பு என பல்வேறு எழுத்துரு மாற்றங்கள் நிகழ்ந்த போதும், பாரம்பரிய நூலாக்க முறைமைகள் இன்றும் தனது முத்திரையினை முத்தாகவே பதித்து முன் நிற்கிறது. காரணம். பலதரப்பட்ட மக்களை சென்றடைய கூடிய வகையில், இலகுவான முறையிலும் மலிவானதாகவு மிருக்கின்றது. அத்தோடு எழுத்து வடிவத்தில் பதிக்கப் பட்டு தொகுக்கப்பட்டிருப்பதால், கருத்தில் ஊன்றி பதிய கூடியதாக இருப்பதோடும் ஆவணமாக பாது காக்க கூடியதாகவுமிருக்கின்றது. a
அபிவிருத்தியில் பின்தங்கிய ஒர் சமூகத்தில், அச்சமூகம் பற்றிய ஆய்வை, புதிய சிந்தனைகளை, விழிப்புணர் வினை ஊட்டக்கூடிய ஆயுதம் பத்திரிகைகள் என்றால் அதுமிகையாகாது. இக்கண்ணோட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் இன்று எதிர் கொள்ளும் பல சவால் களை பத்திரிகைகள் மூலமாக வெளிக்கொணர்ந்த போது மலையகத்தமிழர்களின் மத்தியில் பாரியத் தாக்கத்தினை எற்படுத்தியது. பத்திரிகைகளை தேடி வாங்கி வாசித்ததோடு மட்டுமல்லாமல், கட்டுரை களை நிழற்பிரதிகளை எடுத்து தமது சகாக்களோடு பகிர்ந்து கொண்டதோடு, பொது இடங்களில் ஒட்டி அனைத்து மக்களுக்கும் அக்கருத்துக்கள் சென்றடைய

Page 7
கீத பொன்கலன்
செய்ததை, கேட்க கூடியதாக பார்க்க் கூடியதாகவு மிருந்தது. இன்னும் கட்டுரைகள் வெளியான சூட் டோடு தொலைபேசிகளில் பலர் கருத்துக்களை கூறி உற்சாகமளித்த வண்ணமிருப்பர். மலையகம் சாராத தமிழர்கள் பலரும் மலையகம் பற்றிய கருத்துக்களில் அதிக கவனம் செலுத்துவதையும் காணக்கூடியதாக வுள்ளது. வெளிவரும் கட்டுரைகளில் புள்ளிவிவரங் களுடன் ஆய்வு செய்து பிரசுரிக்கப்படுவதால், பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும், இக் கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டால் சிறந்ததாக இருக்குமென கருத்து பகர்ந்தனர்.
எனவே, இக்கட்டுரைகளில் கருத்துக்கள், செய்திகள் பரவலான ரீதியில் பல தரப்பட்டவர்களையும் சென்றடைந்து பேசாப் பொருளாக இருக்கும் பல விடயங்கள் பேசப்பட வேண்டும். அவை மலையகத் தமிழர் வாழ்வில் புதிய எழுச்சி பாதையினை வகுக்க வேண்டுமென கருதியும், மாற்றுக்கருத்துக்கள், சீரிய சிந்தனை வித்துக்கள் விதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்நூலை தொகுக்க முன் வந்தோம்.
இத்தொகுப்பிற்கு, “இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர்கள் எதிர் நோக்கும் சவால்கள்” என தலைப்பிட்டிருக்கின்றோம். மலையகத் தமிழர்கள் எதிர் நோக்கும் சவால்கள் எண்ணில் அடங்கா. பல சந்தர்ப்பங்களில் அவற்றின் பல பகுதிகளை கட்டுரை வடிவில் பத்திரிகைகளினூடாக வெளிக் கொணர்ந்திருந் தாலும், அனைத்தையும் எம்மால் இந்நூல் தொகுப்பில் இடம்பெற செய்ய முடியாது போனது நூலின் விரிவஞ்சியே. அநேக கட்டுரைகள் சமகாலத்தில் பத்திரிகைகளிலும், பிரசுரிக்கப்பட்டவையே. அவற் றிலும் மிக முக்கியமானவற்றையே இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. அதே நேரம், ஒரே கருத்துக்கள் பல இடங்களில் இடம் பெற்றிருப்பது நோக்கத்தக்கதே. அக்கருத்துக்கள் மேலும் மேலும் வலுப்படுத்தப்படு வதற்காகவே அவை இடம் பிடித்துள்ளன என்பதையும் தெரிவித்து கொள்ளுகிறோம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
மிக முக்கியமான மலையகத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் சவாலாக பூதாகரமாக எழுந்து நிற்பது மேல் கொத்மலை நீர் மின்வலுதேக்கத் திட்டமே. இத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன. அத்தோடு இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவோமென சில சக்திகள் உறுதியாக உள்ளன. இத்திட்டத்தைப் பற்றி முழுமையான ஆய்வு செய்து உண்மை நிலையினை எடுத்துக் கூறவேண் டியது சமூக பொறுப்புள்ள அனைவரின் கடமை யாகும். இத்திட்டம் பற்றிய ஆரம்ப ஆய்வு இத்தொகுப் பில் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் இங்கே தொகுக் கப்பட்டிருக்கும் கட்டுரைகள் வீரகேசரி, தினக்குரல், சரிநிகர் சுடர் ஒளி, நவமலையகம் போன்ற பத்திரிகைகளில் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டவையே. அவை, இங்கே செம்மைபடுத்தப் பட்டுள்ளதோடு, பத்திரிகைகளில் வராத சில பாகங் களும் முழுமையாக இணைத்துக் கொள்ளப்பட் டிருக்கின்றது. இக்கட்டுரைகளை பிரசுரித்த பத்திரிகைகளின் ஆசிரியர்கள், பத்திரிகை நிறுவனங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளு கிறோம். அத்தோடு இந்நூல் தொகுப்பு வெளிவர
உழைத்த திரு. புலோலியூர் சதாசிவம், செல்வி தேவகி
ராஜகோபால், செல்வி மேகலாசண்முகம் திரு. ரஞ்சித் ஜெய்கர் மற்றும் லியோ மார்கா ஆசிரம பணியாளர்
களுக்கும், அவர்கள் அளித்த பங்களிப்பை நேயத்துடன்
நினைவில் கொண்டு நன்றி கூறுகின்றோம்.
- ச. கீத பொன்கலன்
13

Page 8
l4
O1.
O2.
O3.
04.
OS.
O6.
O7.
O8.
O9.
1O.
11.
12.
13.
14.
15.
நூலாசிரியரின் ஏனைய படைப்புகள்
The Role of the Christian Religious Agents in the Diocese of Uva in Sri Lanka - Awakening
Class Consciousness.
Sri Lankans in Exile.
Noble Son of Sri Lanka - Bishop Leo
மே தினமும் தொழிலாளரும்
வீடு, காணி சொந்தம்
மலைகத் தமிழர் ஒரு தேசிய இனமே
மலையக மக்களும் அரசியலும் 1920-1994
2000ம் ஆண்டில் மலையகம்
மலையகப் பெண்கள் பட்டயம்
முன்பள்ளி ஆசிரியர் கையேடு பகுதி 2,3,4
பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
The Church Response to Human Suffering
Integral Development of North-East Region.
Social Development & Poverty in the Plantations in Sri Lanka.
The impact of Globalisation on the Plantation
sector in Sri Lanka.
SO 8). O 20. KO o • 8X- 0. *

AAFLI
AMP
CMS
CHP
CA
CWSSP
CIDA
CBO
DGS
ESDP
EMA
EPF
EWHCS
சுருக்கக் குறியீடுகள் - Abbreviations
Asian Development Bank ஆசிய அபிவிருத்தி வங்கி Asian American Free Labour Institute ஆசிய அமெரிக்க சுதந்திர தொழிலாளர் நிறுவனம் Assistant Medical Practitioner உதவி மருத்துவ தொழில் புரிபவர் Construction Monitoring System கட்டுமான கண்காணிப்புமுறை
Cluster Health Plan
கொத்தணி சுகாதார திட்டம்
Creche Attendant
பிள்ளைக் காப்பாளர்
Community Water Supply & Sanitation Project சமூக நீர் விநியோகம் மற்றும் ஆரோக்கிய நலத்திட்டம் Canadian International Development Authority கனடா சர்வதேச அபிவிருத்தி அதிகாரச் சபை Cunnmunity Based Organization A. சமூக மட்டத்திலான அமைப்புகள்
Government of Netherlands நெதர்லாந்து அரசாங்கம் Estate Social DevelopmentProject தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம்
Estate Medical Assistant தோட்ட மருத்துவ உதவியாளர் Employees Provident Fund தொழிலாளர் சேமலாப நிதி
Estate Workers Housing Cooperative Soceity தோட்டத் தொழிலாளர் குடிமனை கூட்டுறவு சங்கம்

Page 9
கீத பொன்கலன்
ESD
SIDA
SWP - 1
SWP - 2
TRI
TAT
TCRP
TRAD
TA
UNFPA
UNICEF
WSS
CWC
இதொ.கா.
NWU தே.தொ.ச.
UWC ஐ.தொ.கா.
ACUVC
Estate Social Development Index தோட்ட சமூக அபிவிருத்தி சுட்டெண். Sweeden International Development Authority சுவீடன் சர்வதேச அபிவிருத்தி அதிகாரச் சபை
Social Welfare Programme 1 சமூக அபிவிருத்தித் திட்டம்1
Social Welfare Programme 2 சமூக அபிவிருத்தித் திட்டம்2
Tea Research Institute தேயிலை ஆராய்ச்சி நிறுவனம்
Technical Assistant Team தொழில்நுட்ப உதவிக்குழு Tree Crop Rehabilitation project மரப்பயிர் மறுசீரமைப்புத் திட்டம் Tree Rehabilitation and Diversification Project மர மறுசீரமைப்பு மாற்று பயிர் திட்டம்
Technical Assistant தொழில்நுட்ப உதவி United Nations Fund for Population Activity மக்கள் செயற்பாட்டிற்கான ஐக்கிய நாட்டு நிதியம்
United Nations International Education Fund ஐக்கிய நாட்டு சர்வதேச கல்விநிதியம்
Water Supply Scheme நீர் விநியோக திட்டம்
Ceylon Workers Congress இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
National Workers Union தேசிய தொழிலாளர் சங்கம்
United Workers Congress ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்
All Ceylon United Workers Congress
அஇஐதொகா. அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்
LGSU
Lanka General Service Union
ல.பொ.சே.ச லங்கா பொதுச் சேவை சங்கம்
6

UWANIAC
இருபத்தோராம் நூற்றாண்டில் .
Uva Workers Aid Centre
ஊ.தொ.உநி ஊவா தொழிலாளர் உதவிநிதியம்
CWF
Christian Workers Fellowship
கி.தொ.சகோ. கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம்
PIO
PNIP
PIMLA
PHSWT
PDSP
PA
PSG
PRP
PSSPB
PSEDP
RCF
SMB
SSPC
SIDD
SDS
Project Implementation Officer திட்ட அமலாக்க அலுவலர் Plantation Nutrition Information Programme பெருந்தோட்ட சத்துணவு தகவல் திட்டம் Plantation Management Agent பெருந்தோட்ட முகாமைத்துவ முகவர் Plantation Housing & Social Welfare Trust (TRUST) பெருந்தோட்ட வீடமைப்புச் சமூக நலநிதியம் Plantation Development Support Programme பெருந்தோட்ட அபிவிருத்தி உதவித்திட்டம் , Planters Association of Ceylon இலங்கை தோட்டத்துரைமார் சம்மேளனம் Programme Support Group
திட்ட உதவிக்குழு
Plantation Reform Project பெருந்தோட்டமறுசீரமைப்பு திட்டம் Plantation Sector Statistical Pocket Book பெருந்தோட்டத்துறை புள்ளிவிபர கையேடு Plantation School Educational DevelopmentProgramme பெருந்தோட்ட பாடசாலை கல்வி அபிவிருத்தி திட்டம் Revolving Capital Fund A.
சுழல்நிலைமுதல் நிதி
Regional Plantation Company பிராந்திய பெருந்தோட்டகம்பெனி State Mortgage & Investment Bank அரசு ஈட்டு முதலீட்டு வங்கி Sri Lanka State Plantation Corporation இலங்கை அரச பெருந்தோட்டத்துறை கூட்டுத்தாபனம் Social Development Division சமூக அபிவிருத்தி பிரிவு School Development Society பாடசாலை அபிவிருத்திச் சபை
7

Page 10
கீத பொன்கலன்
FORUT
GOSL.
GITF
ΟTZ
HRID
HVP
ICTAD
IRDP
JEDE
MP
MTP
MW
NHDA
NEDA
NORAD
NIPM
PFWS
Campaign for Development & Solidarity அபிவிருத்திக்கும் கூட்டொருமைப்பாட்டிற்குமான எழுச்சிபணி
Government of Sri Lanka
இலங்கை அரசாங்கம் Gender Incorparation Task Force பாலின கூட்டிணைவு அதிரடிப்படை German Ministry of Education ஜர்மன் கல்வி அமைச்சு
Human Resource Development மனிதவள அபிவிருத்தி
Health Volunteer Programme சுகாதார தன்னார்வ தொண்டர் திட்டம் Institute for Construction Training & Development கட்டுமான பயிற்சியும் அபிவிருத்திக்குமான திட்டம் Intergrated Rural Development Programme ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம் Janatha Estate Development Board . ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை Ministry of Plantation Industries பெருந்தோட்டத்துறை அமைச்சு Medium Term Investment Programme நடுத்தவணை முதலீட்டுத்திட்டம்
Midwife
பேறுகால பணிமகள் National Housing Development Authority தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச்சபை Netherland's Development Assistance நெதர்லாந்து அபிவிருத்தி உதவி Norway Devedlpment Aid நோர்வே அரசாங்க அபிவிருத்திஉதவி National Institute of Plantation Management பெருந்தோட்டத்துறைமுகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனம் Plantation Family Welfare Supervisor பெருந்தோட்டகுடும்ப நல கண்காணிப்பாளர்

UNP ஐதேக
PA பொஐமு
TULF தவிசு
SLMC பூணூரீமுகா
JVP ம.வி.மு.
NUF தேஐமு
NCP புஇக
சிஉ
WPF உசநி
SLIPS
இசசே
SLVSC
PSL
SLDHS
DHIS
ASFR
TFR
இருபத்தோராம் நூற்றாண்டில் .
United National Party ஐக்கிய தேசிய கட்சி People's Allience பொதுஜன ஐக்கிய முன்னணி
Tamil United Liberation Front தமிழர் விடுதலைக் கூட்டணி Sri Lanka Muslim Congress பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் Janatha Vimukthi Peranuna மக்கள் விடுதலை முன்னணி
National United Front தேசிய ஐக்கிய முன்னணி New Left Party புதிய இடதுசாரி கட்சி Sihala Urumaya சிஹல உறுமய World Population Fund
உலக சனத்தொகை நிதியம்
Sri Lanka Population Service இலங்கை சனத்தொகை சேவை
Sri Lanka Voluntary Surgical Contraception சுயமான கருத்தடை சிகிச்சைக்கான இலங்கை அமைப்பு
Population Service Lanka M
இலங்கை சனத்தொகை சேவை Sri Lanka Demographic Health Survey இலங்கை மக்கள் சுகாதார ஆய்வு Annual Health Return வருடாந்த சுகாதார அறிக்கை District Health Survey மாவட்ட சுகாதார ஆய்வு Age Specific Fertility Rate கருவள வயதெல்லை விகிதம்
Total Fertility Rate மொத்த கருவள விகிதம்
19

Page 11
1.1
2
2.1
22.
2.3.
24.
25.
3.1.
32.
3.3.
3.4.
35.
20
உள்ளடக்கம்
மக்கள் இயக்கங்கள் 25 ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளுக்காகமக்கள் இயக்கங்கள் 27 மக்கள் இயக்கங்களின் இன்றைய நிலைமை 30 பெருந்தோட்டத்துறையும் தனியார் மயமும் 33 தொழிலாளரை நசுக்கும் புதிய யுத்திகள் 35 அடிப்படைச் சேவைகள் குறைக்கப்படுகின்றன 39 உழைப்புக்கேற்ற ஊதியமில்லை 43
பெருந்தோட்டத்துறை சமூக மேம்பாட்டின் அவல நிலை 49 நிறுவனமயமாக்கப்பட்டத்தோட்டங்கள்
கிராமமயமாவது எப்போது? 60 மலையகமும் அரசியலும் 67 மலையக தேர்தல் களம் உணர்த்தும் உண்மைகள் 69 மலையகமும் மயிலும் 76
பத்தாவதும் பதினொராவதும் பொதுத்தேர்தல் பெறுபேறுகளிலிருந்து தமிழ் மக்கள் கற்க வேண்டியவை 83 பெரும்பான்மைக் கட்சிகளின் வியூகத்துக்குள் சிக்கி மலையகத்தின் தமிழ் சமூகத்திற்கு துரோகம் இழைக்கும் செயல் தொடரக்கூடாது. 91 மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை நுவரெலியாவில் மாத்திரம்
அக்கறை காட்டுவது உகந்ததல்ல. 102 தீராத பிரஜாவுரிமையும் தீர்க்காத சட்டங்களும் 107 புதிய பிரஜாவுரிமைச் சட்டம் பிரஜாவுரிமை பிரச்சினையை முற்றாக தீர்க்கப்போவதில்லை 109 சுதந்திர நாட்டின் அந்நிய மனிதர்களாய் 116 சொந்த இனத்தின் துரோகமும் மாற்று இனத்தவரின் பாரபட்சமும் 128 காணி வீட்டு உரிமையின் மீதான சவால்கள் 133
காணிக்குசொந்தமில்லாதவீடுகளுக்குகடனையும் வட்டியையும் கட்டும் தோட்டத் தொழிலாளரின் பரிதாபநிலை 135

S.2.
53.
6.1.
62.
6.3.
6.4.
65.
7.
7.1.
入 2.
8.1.
82.
91.
92.
93.
94.
95.
10.
101.
இருபத்தோராம் நூற்றாண்டில் .
இருபத்தொராம் நூற்றாண்டிலும் மலையகத் தமிழரின் காணிஉரிமை ஓர் கனவா?
மலையகத்தமிழருக்குகாணி வீடுசொந்தமாவது எப்போது? பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களும் சம்பள உடன்படிக்கைகளும் பெருந்தோட்டத்துறையில் அமலாக்கப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தங்கள் கூட்டு ஒப்பந்தமும் சமூக மேம்பாடும் தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சி ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இருநூறு ரூபா சம்பள உயர்வு சாத்தியமே இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள கூட்டு ஒப்பந்தம் As ஒப்பந்தத்தைப் பற்றிய மக்களின் கருத்துச் சேர்க்கை. மலையகத் தமிழ் பெண்களின் அரசியல் வலுவூட்டல் அரசியல் அதிகாரத்தின் ஊடாகவே பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். உலகமயமாதலும் பெருந்தோட்டத்துறை பெண்களும்
மலையகத்தை மலடாக்கும் குடும்பக் கட்டுப்பாடு மலையகத்தில் குடும்பக்கட்டுப்பாடும், இனக்குறைப்பும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையே என்ற மாயைக்குள் தள்ளப்படும் மலையகத் தமிழ் சமூகம் மலையகத் தமிழ் சிறுவர்களுக்கு எட்டாத உரிமைகளும் கிட்டாத முன்பள்ளிக் கல்வியும் முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவம் அறியப்படவேண்டும்
மலையக பெருந்தோட்டங்களில் முன் பள்ளிகள் ஏன் அவசியம்? மலையகத்தின் முன்பள்ளிகொள்கைக்கான ஆலோசனைகள் அறிவும் அகமும் வளர குழந்தைகள் ஓடி விளையாட வேண்டும். சிறாரிடமிருந்தே சமுதாய மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும் மலையகத்தில் முதியோர் எதிர்கொள்ளும் சவால்கள் தள்ளாத வயதில் பெற்றோருக்கு வரும் நியாயமான ஆசை.
141
147
153
155
163
171
77
185
191
193
200
205
207
224
233
235
239
243
246
253
259
26
2

Page 12
கீத பொன்கலன்
102. மலையகத்தோட்டப் பகுதியில் முதியோர்
நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம். 266
11. தொழிலாளர் உரிமையும் தென்னிலங்கைத் தமிழரின்
சுயநிர்ணய உரிமையும் 269
11. உரிமைகள் குறித்து தொழிலாளருக்கு உணர்வூட்டும்
பணியே மேதினக் கொண்டாட்டங்களின் தொனிப்பொருளாக வேண்டும். 27
12. தென்னிலங்கைத் தமிழரின் உள்ளக சுயநிர்ணய உரிமை 277
12. மலையகத் தமிழ் மக்களுக்கு சவாலாக உள்ள மேல்
கொத்மலைத் திட்டம் 287 121. நடைமுறையில் உள்ள மின் வலுத்திட்டங்கள். 289 122. மேல் கொத்மலை நீர்மின் வலுத்தேக்கத்திட்டம் 293
13. சர்வதேச அரங்கில் மலையகம் M 301 131. வெளிநாட்டிலுள்ள தமிழ் அகதிகள் 303 132. மலையகத் தொழிலாளர்களுக்கு மலேசியாவில்
வேலை வாய்ப்பு 307 133. இலங்கை மலையகத் தமிழ் மக்கள்
அரசியல் அநாதைகள் 313 134. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் மீள்குடியேற்ற
நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயக்கம் 320 135. தொழிலாளர்களே தோட்டங்களை நிர்வகிக்கும்
நிலை தோன்ற வேண்டும் 323
14. உலக சமூக மாமன்றம் 327 141. பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் 329
142. உலக சமூக மாமன்ற மாநாட்டின் ஊடாகத்
தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்த ஏற்பாடு 332
14.3. மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு
ஒன்றுபட்ட அணுகுமுறையே சிறந்ததென்பது கண்கூடு. 334
144 மக்கள் இயக்கங்கள் 336
பின்னுரை 339 பின்னிணைப்பு 1 ஒரு குடும்பத்தின் பிரஜாவுரிமைப் பத்திரம் 341
2. உலக சமூகமாமன்றத்தின் கொள்கைகள் 343
துணைநூற்பட்டியல் 346
22

21
22
2.3
3.1
3.4.1
3.42
3.43
34.4
34.5
35.1
3.52
4.1.1.
4.1.2
41.3
4.2.1
4.2.2
5.1.1
6.1.1
61.2
6.13
6.2.1
641
71.
அட்டவணைகள் - பொருளடக்கம்
சம்பளம் சாரா கொடுப்பனவுகள் முகாமைத்துவ செலவுகள் முகாமை முகவர் கட்டணம்-1999-2000 16 ஆசனங்கள் பதுளை மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம் பதுளை மாவட்டத்தின் தேர்தல் பெறுபேறுகள் நுவரெலியா மாவட்டத்தின் இன விகிதாசாரம் நுவரொலியா மாவட்டத்தின் தேர்தல் பெறுபேறுகள் மலையகப் பிரதிநிதிகள் 2001ஆம் ஆண்டு மாவட்ட சனத்தொகை மலையகப் பிரதிநிதிகள் 2001 பிரஜாவுரிமைச் சட்டங்களும் நடவடிக்கைகளும் 1986ம் ஆண்டில் 5ம் இலக்க நாடற்றவர்களுக்கு
பிரஜாவுரிமை வழங்குச் சட்டம் 1988ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில்
கொடுக்கப்பட்ட எண்ணிக்கை மலையகத் தமிழ் பிரதிநிதிகள் 1947 இந்தியா சென்றவர்களின் தொகை அடிப்படை புள்ளிவிபரம் 21 கம்பெனிகளும், அரச தோட்டங்களும் தேயிலை தோட்ட சம்பளம் இறப்பர் தோட்ட சம்பளம் தொழிலாளர் வேலை செய்ய வேண்டிய நாட்கள் சமூகமளிப்பதற்கான ஊதியம் இரண்டு சம்பள ஒப்பந்தங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்கள்
பிரதிநிதித்துவம் (1947-2001)
42
47
47
88
93
95
96
96
98
103
104
10
111
111
120
125
140
156
156
158
165
180
197

Page 13
கீத பொன்கலன்
87.
87.2
8.1.3
814
8.75
87.6
817
8.21
822
8.23
9.3.1
95.7
11.27
1122
112.3
12.1.1
121.2
13.3.
24
சனத்தொகை தென் ஆசியா (மில்லியன்களில் இலங்கை (1992) பெருந்தோட்டத்துறை (1982,1992) முக்கிய தரவுகளின் ஒப்பீட்டு
உயிர் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையால் வெளிப்படும் குடும்பக் கட்டுப்பாடு திட்ட முறைகள் -1990 சத்திர சிகிச்சைக்கு பின்னர் கருவுற்றவர்கள் 1982,1986 நவீன கருத்தடை முறைகளை கடைபிடிக்கும் தகுதிவாய்ந்த தம்பதியினர் உயிர்வாழும் குழந்தைகளின் அடிப்படையில் 1993 கருத்தடை செயற்பாடு
கருவள விகிதம் நிர்வாக செலவு விபரம்-தோட்டத்தில் பிறக்கும்
ஒரு குழந்தை அடிப்படையில் நேரடிச் செலவுகள் மறைமுக செலவுகள்
சமூகநல சேவையாளர் குறைப்பு சனத்தொகைக்கேற்ற சேவையாளர் தொகை இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொகை-2001 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கிழக்கு மாகாணம் - சனத்தொகை (1827-1981) தென்னிலங்கைத் தமிழரும் தமிழ் பேசுவோரும் 2001 தென்னிலங்கையில் தமிழரும், தமிழ் பேசுவோரும் (10% இற்கு குறைவானோர் 2001) நீர்மின்வலு உற்பத்திப் பொறிகள் 1989-1998 காலப் பிரிவின் போது மின் உற்பத்தி நிலையங்களில் பயன்பாட்டு வீதம்
தமிழர் குடிப்பெயர்வு
8 8, 8. 0X- 0x8 •X
208
214
216
218
219
220
222
227
228
229
244
254
279
281
283
290
292
318

அத்தியாயம் - 1
மக்கள் இயக்கங்கள்
1.1. ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளுக்காக மக்கள் இயக்கங்கள்
1.2. மக்கள் இயக்கங்களின்
இன்றைய நிலைமை
25

Page 14
26
அத்தியாயம் - 1
மக்கள் இயக்கங்கள்
குழுமங்களாக வாழத் தொடங்கிய நாள் முதலாக இன்று வரையிலும், பலவிதமான தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும், கொள்கைரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், இன, மத, சாதி அடிப்படை யிலும் மக்களால் உருவாக்கப்படுவதுதான் மக்கள் இயக்கங்கள், முற்போக்குச் சிந்தனை யுள்ள மக்கள் இயக்கங்கள் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருவதையும் நாம் அறிவோம். மலையகத் தமிழ் மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முதலாளித்துவ கொள்கையுடைய அரசியல் வாதிகளை தொழிற்சங்க வாதிகளை அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களையே எதிர்பார்த் திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் இந்த மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க வில்லை. இன்று மக்களுக்கு குரல் கொடுப்பதற் காக அடிமட்ட மக்கள் மத்தியிலிருந்தே இயக் கங்கள் உருவாகிவருகின்றன.

1. 1. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை வாழ்வுக்கு மக்கள் இயக்கங்கள்
பதுளை மேற்றிராசனத்தின் முதல் ஆயரான லியோ நாணயக்கார ஆண்டகை எம்மை விட்டுப் பிரிந்து நேற்றுடன் (மே 28) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருச்சபை வட்டாரத்தில் அந்நாளை சிரத்தையுடன் நினைவுகூரும் இந்த வேளையில் சமூக மாற்றத்தின் பால் அவர் கொண்டிருந்த தீவிர ஈடுபாட்டை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மாற்றம் காண வேண்டும் என்ற வேட்கையுடன் திருச்சபைக்குள்ளே உலவிய ஒரு முற்போக்கு வாதியான அவர் சமூகப் பணியிலே நூற்றுக் கணக்கானவர்களை ஈடுபடுத்தியுள்ளார். சமய சார்பான 10 சமூக அமைப்புகளை உருவாக்கியதுடன் சமய சார்பற்ற ஐந்து அமைப்புகள் உருவாக வித்திட்டும் உள்ளார். ஒடுக்கப்பட் டோரின் உரிமை வாழ்வுக்கு மக்கள் இயக்கங்கள் மலர வேண் டும் என அவர் உறுதியாக நம்பினார். அதற்காகவே இந்த சமூக அமைப்புகளை உருவாக்கினார். ஆனால் அவரது அந்த தொலை நோக்குப் பார்வையின் பொருளை இந்த அமைப்புகள் உணர்ந்து செயற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, உரிமையற்ற (மலையக,
விவசாய, மீனவ, புலம் பெயர்ந்த) 50 வீதத்திற்கும் மேற்பட்ட வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு ஒரு மாற்று சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே அவரது தொலைநோக்கு சிந்தனையாக இருந்தது.
இன்றைய சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழலும் அதைச் சார்ந்த பொருளியல் நிலைமையும் ஒடுக்கப்பட்ட மக்களை
27

Page 15
கீத பொன்கலன்
நிலைகுலையச் செய்கின்றது. உலகமயமாக்கல், நவீனமய மாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கவர்ச்சி மிகு முழக்கங்களை முன்னிறுத்தி மனிதம், மனித சமுதாயம் அதன் ஆன்மாவை சீர்குலைப்பதோடு சாதாரண மக்களின் உழைப்பாளிகளின் பொருளியல், பண்பாட்டு வாழ்க்கையையும் பேரழிவுக்கு உள்ளாக்கிக் கொண்டிருப்
பதைக் காண்கிறோம்.
இத்தகைய நச்சுச் சூழலில் உழைக்கும் எளிய மக்களின் ஒடுக்கப்பட்ட மலையக, விவசாய, மீனவ, புலம்பெயர்ந்த மக்களின் விடியலை நோக்கி மக்கள் இயக்கங்கள் திரண்டு, சமுதாயம் மாற வேண்டும் என்பதே ஆயர் லியோவின் அவா வாக இருந்தது.
‘உழைப்பாளரே உலகை ஆள வேண்டும்’ என்பது உலக நியதி. ஆனால் உழைப்பையே தமது உயிர் மூச்சாக கொண்ட மலையக மக்களின் யதார்த்த நிலை என்ன? தமது உழைப்பின் மூலம் வளமாக்கிவரும் நிலத்தின் மீதே அவர்களுக்கு எதுவித உரிமையோ, அதிகாரமோ இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நாம் வாழுகின்ற இந்த சமுதாய அமைப்புத்தான். மேற்கத்திய முதலாளித்துவ கருத்தியலை நமதாக்கி செயல்பட்டு சுதந்திரமற்ற சுரண்டல் சமுதாய அமைப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதனால் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டி னரின் வாழ்க்கை வசதிகளை மட்டுமே பெருக்கியுள்ளோம். இந்த 10 விழுக்காட்டினர்தான் தங்களது செல்வாக்கைப் பயன் படுத்தி தங்களுக்குச் சாதகமான அரசியலை அமைத்து அதற் கேற்ப கல்வி, சமயம் மற்றும் சமூக நிறுவனங்களை திசை திருப்பி சுரண்டல் ஆட்சி செய்கின்றனர். பெரும்பான்மையான அடித்தட்டு மக்களை தங்கள் காலடியில் கிடத்தி மிதித்து அறியாமை, வறுமை மற்றும் இயலாமையில் மூழ்கிக் கிடப்
பதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். *A.
விடுதலை வாழ்வு நமதாக வேண்டுமானால் இன்றைய சமுதாயத்தின் அவலங்களையும் அவற்றுக்கான காரணங் களையும் அறிந்தாக வேண்டும். இத்தகைய சமுதாய தெளிவு எல்லாத் தரப்பினரையும் சிறப்பாக ஒடுக்கப்பட்ட மக்களை
28

இருபத்தோராம் நூற்றாண்டில் .
யும் சென்றடைய வேண்டும். அடித்தட்டு மக்கள் (பெண்கள், குழந்தைகள், உழைக்கும் மக்கள்) ஒன்று சேர்ந்து ‘மக்கள் இயக்கமாக’ செயற்பட்டால் தான் இவர்கள் “விடுதலை வாழ் வினை” அடைய முடியும்.
இங்கே “மாசேதுங்’ கூறியதை எடுத்தாள்வது சிறப்பாக இருக்கும். மேல் தட்டில் வசிப்பவர்களால் சமுதாயத்தில் மாற்றங்கள் வரப்போவதில்லை. அவர்களால் சமுதாயத்தில் அநீதிகளே முறைமையாக்கப்படும். அடித்தட்டு மக்கள் தங்களது சக்தியை மகத்தானதாக இனங்கண்டு கொள்ளும் போதுதான் ஒரு புரட்சி கருவெடுக்கும்.
‘நமது செயற்பாடுகளை நாமே தீர்மானிக்கும் முறையே உண்மையான விடுதலை. அந்த விடுதலையை நோக்கி அமை யாத கல்வி உண்மையான கல்வி ஆகாது’ என்பது ஆயர் லியோவின் அனுபவ மொழியாகும். அத்தகைய கல்வியை பாமர மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலம் அடித்தள மக்களின் உரிமை வாழ்விற்கு வழி வகுக்க முடியும். பழிச்சொல் ஏற்றாலும் தனது உறுதியான கொள்கைக்காக ஊக்கமிழக்காது அஞ்சா நெஞ்சத்துடன் நிலைத்து நின்ற ஆயரின் கனவான மக்கள் இயக்கங்களை உருவாக்கி விடுதலை வாழ்வை அடிம்ைப் படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஆயருடன் தொடர்பு கொண்ட அனைவரும் முன்வந்து உழைக்க வேண்டும். உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைக்கும் அந்த மாற்றமே ஆயரின் ஆன்மாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலிய்ாக அமையும்.
தினக்குரல் 29.5.1999
நம்பிக்கையோடு நாம் ஒரு மார்க்கத்தில் நடைபோடுகையில் வெற்றியின் இலக்கை (இழப்புக்கள் அதிகமின்றி) அடைந்தே தீருவோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை
- ம. திருவள்ளுவர்

Page 16
1.2 மக்கள் இயக்கங்களின் இன்றைய நிலைமை
அநேகமான மக்கள் இயக்கங்கள் அவை உருவாக்கப் பட்டப் பொழுது முற்போக்கு சிந்தனையும் போராட்டக் குணமும் கொண்டவையாகவே இருந்துள்ளன. இன்று அதிலும் விசேடமாக உலகமயமாக்களுக்குப் பின் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நன்குணர்ந்தும், அதனை எதிர்க்காமலும், அவர்களுக்காக பேரம் பேசிக்கொண்டும், முதலாளித்துவ கொள்கைக்கு அடிபணியும் நிலைப்பாட்டைக் கொண்டவையாக மாறியுள்ளன.
இந்த அமைப்புகள் மக்களது சக்தியையும் அவர்களது பணத்தையும் அவர்களது பெயரால் நிதி உதவிகளையும் பெற்று இன்று நிறுவனமயப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் அடக்கப் பட்ட மக்களின் ஜனநாயக கருத்துகளுக்கும், அவர்களுடைய உரிமைகளுக்கும், சரியாக தெளிவாக குரல் கொடுக்க முடி யாமல் அந்த மக்களின் சக்தியையும், பணத்தையும் வீண் விரய மாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக மயமாக்கலின் தாக்கங்களை எதிர் கொள்ள முடி யாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் அகிம்சா முறையில் போராட சுயமாகவே முன் வந்தனர். தங்களை ஒடுக்கும் பாரிய சக்தி களுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராடி வெற்றிகளையும் கண்டுள்ளனர். உதாரணமாக 1986ல் பிலிபீன்ஸ் நாட்டில் எஸ்ராட் புரட்சி, 1999 நவம்பரில் சியாட்டில், 2000ம் ஆண்டில் வாஷிங்டனில் இடம் பெற்ற போராட்டங்களைக் கூறலாம்.
இவை மக்கள் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாகும். இந்த முற்போக்கு மக்கள் இயக்கங் களால் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்பட்டவைதான் சமூக மாமன்றங்கள். இந்த மாமன்றங்களை ஒன்றிணைப்பதற்காக அகில உலக கூட்டுக்குழு (International Council) உருவானது.
30

இருபத்தோராம் நூற்றாண்டில் DOO
உலக, சமூக மாமன்றம் ஒரு மக்கள் இயக்கமல்ல. ஒரு incubatorஐ போன்று ஒரு மாற்று உலகத்தை உருவாக்குவதற் கான புதிய செயற்பாடுகளை பிரசவிக்கும் சாதனமாகவே உலக சமூக மாமன்றம் இயங்குகின்றது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மலையகத்தில் பாரம்பரிய கொள்கைகளினால் ஊறிப் போன மக்கள் இயக்கங்கள் தங்களது கொள்கைகளை யும், செயற்பாடுகளையும் மாற்றாமல் தங்களை மக்கள் இயக்கங் களாக இனங்காட்ட இயலாது என்பது தெளிவாகின்றது. அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்பட்டிருக்கும் மலையக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தாங்களாகவே முன்வந்து, பாரம்பரிய தலைமைகளை தூக்கி எறிந்து, விழிப் புணர்வு பெற்று வீதியில் இறங்கி துணிந்து போராட முனையும் போது தான், அது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்கின்றது. இந்த மக்களுக்கு மற்றவர்களது உதவிகளும் அவசியமாகின்றது. அதாவது முற்போக்கு சிந்தனையுள்ள புத்தி ஜீவிகள் (Organic intellectuals), ஆசிரியர்கள், படைப்பாளிகள் சரியான சிந்தனை களை ஆய்வுகளின் அடிப்படையில் இம்மக்கள் மத்தியில் வைப்பதோடு அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் இந்த மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த முடியும். அதற்காக இவர்கள்தான் முன்னிலை வகிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. அடக்கப்பட்ட மக்களே தலைமை ஏற்று தங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராடும் போது தான் இந்த இயக்கங்கள் வெற்றியடைய முடியும்.
இன்று முதலாளித்துவ தொழிற் கழகங்கள் (Corporate Bodies) அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் என பலதரப்பட்டவர் களையும் வலைவீசி தம்வசப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தனியார்மய - தாராளமய கொள்கையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளரை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக் கொண்ட அரசியல், தொழிற்சங்க முன்னணியாளர்களை, இயக்கங்களை திசை திருப்பவும் இவர்களையே பயன்படுத்துகிறார்கள்.
இந்த நவீன முதலாளித்துவ உலகத்தில் மனிதனை ஒரு நுகர் பொருளாகவும், இயற்கையை ஒரு சுரங்கமாகவும் தான் உலகமயமாக்கல் கணிக்கின்றது. ஆனால் எந்தவொரு மேம் பாட்டிலும் மனிதத்தை முன்னிருத்தி கூடவே இயற்கையை
31

Page 17
கீத பொன்கலன்
வலுப்படுத்தி வாழும் போதுதான் நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் உரிமைகளையும் பேணிப் பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் ஒரு நீதியான உலகை உருவாக்கவும், உரிமையோடும், நீதியோடும் வாழக்கூடிய மாற்று வழிகளைத் தேடி மலையக மக்கள் போராடும் போது உறு துணையாக இருந்து பெருந்தோட்ட கட்டமைப்பு மாற்றப் படவும், புதிய பார்வையில், புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற் கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய வலிமையான மக்கள் இயக்கங்கள் உருவாக வேண்டும்.
to Xo
K0, 4) 4. Y * Yy
0. ex
எல்சால்வதோரில் (மலையகத்தில்) நடப்பதென்ன?
மனிதம் பல விதங்களில் சிதைக்கப்படுகிறது.
கூலிக்கு வேலை செய்வோரையும்
நிலங்களற்ற விவசாயிகளையும்
ஆளுவோர் கொன்று குவிக்கின்றனர்.
தொழிலாளர்களை
எவ்வித ஊதியமும் கொடுக்காது
வேலையிலிருந்து நீக்கிவிடுகின்றனர்.
வயதானோர்
தாழ்த்தப்பட்டவர்கள்
குடிசைவாழ் மக்கள்
குழந்தைகள்
இவர்களனைவரும்
கொடுரமான கொடுமைகளை
அனுபவிக்கிறார்கள்.
இவர்களுக்கு
ஆரம்பப் பள்ளி, உயர்நிலை
மேல்நிலைப் பள்ளி மற்றும்
பட்டப்படிப்பு என்பதே இல்லை.
மொத்தத்தில் எதிர்காலம் என்பதே இவர்களுக்கு இல்லை
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ ノ
32

அத்தியாயம் - 2
பெருந்தோட்டத்துறையும் தனியார் மயமும்
2. 1 தொழிலாளரை நசுக்கும்
புதிய யுத்திகள்
2.2 அடிப்படைச் சேவைகள்
2.3
2.4
2.5
குறைக்கப்படுகின்றன
உழைப்புக்கேற்ற ஊதியமில்லை
பெருந்தோட்டத்துறை சமூக
மேம்பாட்டின் அவல நிலை
நிறுவன மயமாக்கப்பட்டத் தோட்டங்கள் கிராமமயமாவது
எப்போது?

Page 18
34
அத்தியாயம் - 2
பெருந்தோட்டத்துறையும் தனியார்மயமும்
தோட்டங்கள் தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்த பின்பு கடந்த பத்து வருடங்களாக (1992-2002) கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட் டுள்ளார்கள் அத்தோடு இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சமயாசமய ஊழியர்களாக எவ்வித சட்ட பூர்வ மான கொடுப்பனவுகளும் இல்லாமல் வேலைக் கமர்த்தப்படுகின்றனர். மேலும் நிரந்தர வேலை யாளர்களுக்குவேலைப்பளு கூட்டப்படுகின்றது.

தொழிலாளரை நசுக்கும்
புதிய யுக்திகள்
பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள மலையக மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலையகத்தின் 175 ஆண்டு வரலாறு - இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு அடி யெடுத்து வைத்த நாள்தொட்டு சோதனையும் வேதனையும் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆங்கிலேய கம்பெனிகள் தோட்டச் சொந்தக்காரர்களாக நிர்வகித்த காலத்தில் முழு அடிமைகளாக வாழ்ந்து வந்த மலையக மக்கள். தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றபோது அரசின் பங்காளிகள், அரசு ஊழியர்கள், நமக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது என ஆர்ப்பரித்தனர். அரசும், அரசு சார்பான தொழிற்சங்கங்களும் நம்பிக்கையூட்டி னார்கள். ஆனால் நடந்ததோ மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோட்டங்களை அண்டி வாழ்ந்த மக்கள் பெற்றுக் கொண்டனர். தோட்ட உத்தியுோகத்தர் பதவிகளை பெரும்பான்மையினர் அபகரித்துக் கொண்டனர். தோட்ட நிலங்கள் கூட துண்டாடப்பட்டு தோட்ட மக்கள் சிலர் வதி விடமின்றி பரதேசிகளாக்கப்பட்டனர். மீண்டும் தோட்டங்கள் தனியார் கம்பெனிகளின் முகாமைத்துவத்துக்குக் கொடுக்கப் பட்டது. மீண்டும் மலையக மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப் பட்டன. ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினர் அரசினரும், அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்களும். இலாபத்தில் பத்தில் ஒரு பங்கு தருவதாகவும், நிர்வாகத்தில் பங்காளிகள் எனவும், லயத்தின் சொந்தக்காரர்கள் எனவும் எத்தனையோ நம்பிக்கைகள் ஊட்டப்பட்டன. ஆனால் இன்று நடப்பதோ எதிர் மாறானது. இன்று மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், அனுபவித்து வரும் வேதனைகள் சொல்லில் அடங்கா.
35

Page 19
கீத பொன்கலன்
2.1.1 அருகி வரும் வேலை வாய்ப்பும் - அதிகரித்த வேலைப்பளுவும்
கடந்த 175 வருடகாலமாக ஆங்கிலேய கம்பெனிகளுக்கு சொந்தமாகத் தோட்டம் இருந்த காலத்திலும் சரி தோட்டங்கள் தேசிய மயமாக இருந்த காலத்திலும் சரி அவர்களுக்கு தோட்டங் களிலிருந்த ஒரேயொரு உரிமை தொழில் வாய்ப்பாகும். இதுவே அவர்களது உண்மைச் செல்வமும், பொருளாதார மேம்பாட்டின் ஊன்று கோலு மாகும். உ+ம் 1965 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் ஐந்து பேரும் வேலை செய்துள்ளார்கள். இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு முன்பு 1990ஆம் ஆண்டு சராசரி ஒரு குடும்பத்தில் 3 தொழிலாளிகளாக இருந்தது இன்று 15 ஆகிவிட்டது. கிட்டத் தட்ட 2 இலட்சம் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர்.
வேலை ஆட்கள் குறைக்கப்பட்டிருக்கும் அதே வேளை யில் வேலைப்பளு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கொழுந்து பறிப்பவர்கள் அந்தக் காலத்திலேயே ஒரு நாள் பேருக்கு 16 - 18 இறாத்தல் எடுக்க வேண்டும். இன்று இறாத்தல் கிலோ ஆகிவிட்டது. ஆனால் தொகையின் இலக்கத்தில் மாற்றம் இல்லை. (1 கிலோ = 2.25 இறாத்தல்) மலையகத் தொழிலாளர் களை வஞ்சித்து, ஏமாற்றி வேலைப்பளுவை அதிகரித்துள் ளமைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா? கவ்வாத்து வெட்டுவதிலும் இது போன்ற வேலைச் சுமைதான். முன்பு 140 மரங்கள் வெட்ட வேண்டும். இன்று 350 மரங்கள் வெட்டப் பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். புல்லுவெட்டு, மருந்தடிப்பு, கான்வெட்டு இன்னும் ஏனைய வேலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஒரு நாட் பேருக்கு செய்ய வேண்டிய வேலையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தோட்டப் பராமரிப்பு தனியார் கம்பெனிகளுக்கு கையளித்த பின்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. தோட்டப்பயிர்களுக்குப் போடும் உரங்கள், பூச்சி மருந்துகள், வைட்டமின்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மலையில் புல்லு வெட்டுதல் புறக்கணிக்கப்பட்டு, கொழுந்தெடுக்கும் மலைகள் காடுகளாகி பாம்புகள் குடிகொண்டுள்ளன. கம்பெனி களின் ஒரே நோக்கம் இலாபம். குறுகிய காலத்தில் எந்தளவு சம்பாதிக்க முடியும் என்பது தான் அவர்களது குறிக்கோள். எரியும் வீட்டில் இலாபத்தைப் பிடுங்குகிறார்கள். தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்டி இலாபமாக எடுத்து விட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி கொடுக்கும் மரம் நடும் மானியங்களைப்
36

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பெற்று, சில மலைகளை ஒதுக்கி அவற்றில் மரங்கள் நடுகிறார்கள். இன்னும் ஒதுக்கப்பட்ட சில மலைகள் வெளியாருக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. இவற்றினால் தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு வசதி பாதிக்கப்படுகிறது.
தோட்டங்களில் கெடுபிடிகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கம்பெனிகள் அரசாங்கத் திடம் வரிவிலக்கும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, தோட்டத் துரைமாரின் சம்பளத்தைக் கூட்டிக் கொண்டும், புதிய உபாயங்களை கையாண்டு தொழிலாளர்களை கசக்கிப்பிழி கிறார்கள். கங்காணிமாருக்கும், தோட்டத் தலைவர்மாருக்கும் எலும்பைக் காட்டி நாயை தன் வசப்படுத்துவதுபோல் சலுகை களைக் காட்டி தன் வசப்படுத்துகிறார்கள். அநேக தோட்டங் களில் தொழிலாளர் ஒரு நாளைக்கு மூன்று முறை பச்சைக் கொழுந்து நிறுக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிலோவுக்கு மேல் வெட்டப்பட்டு, இது சாக்குக்காறன், தராசுக் காறன், றைவர் டீசலுக்காக வெட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த வெட்டப்பட்ட தேயிலைக் கொழுந்து கங்காணி மார், சுப்பவைசர், கணக்குப்பிள்ளை இவர்களுக்கு சலுகை பண்ணுகிறவர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் வீட்டில் வேலை செய்வோருக்கும் போடப்படுகின்றது. உதாரணமாக 100 பேர் வேலை செய்கிற மலையில் 80 பேர் வேலை செய்கிறார்கள். 100 பேர் பெயர் பதியப்படுகிறது. இந்த 20 பேருடைய கொழுந்தும் மற்றைய 80 பேருடைய கொழுந்தில் வெட்டப்பட்டு பெயர் போடப்படுகிறது. A
ஒரு நாளைக்கு எவ்வளவு கொழுந்து எடுக்கப்பட வேண்டு மென்பதை முன்னைய வருட கொழுந்து கணக்கிலிருந்தும், மலையைப் பொறுத்தும் கணிக்கப்பட வேண்டும். ஆனால் நிர்வாகம் இன்று 100 பேர் வேலை செய்கிற இடத்தில் ஆகக் கூடுதலாக எடுக்கின்ற 10 பேருடைய தொகையைப் பார்த்து அந்தத் தொகையை மற்றவர்களும் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அந்தக் கிலோ கொழுந்தை எடுக்காவிட்டால் அரை பேர் தான் போடப்படுகிறது. உதாரணமாக 16 கிலோ கொழுந்து எடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டால் தொழிலாளர்கள் 10 -15 கிலோ எடுத்தால் அவர்களுக்கு அரை பேர் பதியப்பட்டு நிர்வாகம் அவர்களுடைய நாட் சம்பளத்தைக் குறைத்து கொள்ளை இலாபம் ஈட்டுகிறது.
37

Page 20
கீத பொன்கலன்
இவற்றையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர முடி யாதவாறு துரைமாரிடம் சலுகைகளைப் பெற்ற தோட்டத் தலைவர்கள் நக்குண்டான் நாவிழந்தவனாக இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் ஏழைத் தொழிலாளர்கள் வாயில்லாப் பூச்சிகளாக வதைக்கப்படுகிறார்கள். தோட்டத்தில் வேலை செய்ய முடியாது பலர் வயது வருவதற்கு முன்பே பென்சனுக்கு எழுதுகிறார்கள். கூடுதலாக பெண்களுக்கு அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நிருவாகத்திலிருந்து கட்டாயமாக பென்சன் எடுக்கும்படி கடித மூலமாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் உண்மையாக அவர்களின் வயது பென்சன் எடுக்கும் வயதல்ல. இதற்கு காரணம் ஆங்கிலேயர் காலத்தில் பதினாறு வயதுக்கு பின்னர்தான் பெயர் பதியபட வேண்டுமென சட்டம் உருவாக்கப் பட்ட பொழுது பத்து வயது பிள்ளையை பதினாறு வயது என பதிந்து வேலைக் கமர்த்தப்பட்டார்கள்.
சிலர் வேறிடங்களுக்கு வேலைக்குச் செல்லுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை தோட்டத்தில் பேர் பதிய தயக்கம் காட்டு கிறார்கள். ஒரு சில தொழிலாளர்கள் இந்த கெடுபிடிகள் செய்த தாகக் குரல் எழுப்பும் பொழுது அவர்களை பழைய மலைக்கு அல்லது நிரை மாற்றிக் கொடுப்பார்கள். சில்லறை வேலைகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றது. புதுக் கொழுந்து எடுக்கிறவர் களுக்கு ஒரு மாத பயிற்சி என்ற பெயரில் 1 கிலோவுக்கு ரூ3.50 தான் கொடுக்கப்படுகின்றது. சில தோட்டங்களில் கர்ப்பிணிப் பெண்கள் கிளினிக் போவதற்கு ஒரு மணி நேர விடுப்பு மறுக்கப் படுகின்றது. வேலை முடித்துவிட்டுப் போனால் டாக்டர்மார்கள் தங்களுக்கு கவனிக்க நேரமில்லை என்று தள்ளிவிடுகிறார்கள்.
முன்பு சம்பளம் கொடுக்கின்ற தினத்தில் அரை நாள் லீவு கொடுக்கப்பட்டது. இப்போது இந்த லீவுகள் மறுக்கப்படு கின்றன. இப்படியான கெடுபிடிகள் நிமித்தம் நிர்வாகத்தின் கீழ் வேலை செய்வதைப் படிப்படியாக மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் பென்சன் எடுத்தவர்களை கொண்டு கிலோவுக்கு 5 ரூபா படி வேலை செய்விக்கிறார்கள். அல்லது சாதாரண / சமயா சமய (Normal / casual) தொழிலாளர் களுக்கும் 1 கிலோ கொழுந்துக்கு 5 ரூபாய்படி வேலை வாங்கு கிறார்கள். இவர்க ளுக்கு மற்றைய எல்லாக் கொடுப்பனவுகளும் மறுக்கப்படு கின்றன. இந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்கக்கூடிய தலைவர்கள் எப்பொழுது உருவாகப் போகிறார்கள்?
வீரகேசரி 20, 04, 2003
38

2.2 அடிப்படை சேவைகள் குறைக்கப்படுகின்றன
தோட்டங்கள் ஆரம்பித்த காலம்தொட்டு தொழி லாளர் நன்மை கருதி, ஒரு சில கொடுப்பனவு கள் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோதும், இன்னும் விஷேடமாக தோட்டங்களை தனி யார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்த பின்பு இக்கொடுப்பனவுகள் படிப்படியாக குறைக்கப் பட்டுவருகிறது.அல்லதுஅவர்களின் சம்பளத்தில் பணம் பறிக்கப்படுகிறது.
தோட்டத்துறையில் தொழிலாளர்கள் தங்களது அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெரிய பெரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் படிப்படியாக பல வசதி களைப் பெற்றுவந்தனர். ஆனால் இன்று இவைகள் மறைக்கப் பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றது.
தோட்டத் தொழிலாளர்கள் எதற்கும் மற்றவர்களில் தங்கி யிருக்கிறார்கள். ஆனால் சொந்தக் காலில் நிற்கும் பக்குவத்தை, பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்ளும் நிலையைக் காட்டும். மாயையை உருவாக்கி, நிருவாகம் தங்கள் இலாபத்தை பெருக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
பாரம்பரியமாகத் தோட்டங்களில் வீட்டின் சுற்றாடலை, வீட்டு வாசல்களின் ஊடாகச் செல்லும் கான்களைச் சுத்தம் செய்வதற்கு தினமும் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டார்கள். தற்போது இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு பூரண மாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வாசல் கூட்டுபவர் களை தனியார் மயமாக்கலுக்கு பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இது லயன் காம்பரா முறை உள்ள இடங்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனால் துரைமாரின் பங்களாவிற்கும் தோட்ட உத்தியோகத்தரின் பங்களாவிற்கும் தொடர்ந்து இவ்வேலை செய்வதற்கு ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள்.
39

Page 21
கீத பொன்கலன்
தோட்டங்களில் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை 2 பக்கட் குழந்தை பால் மா கொடுக்கப்பட்டு வந்தது. அது பின்பு ஒரு பக்கட்டாக (400 கிராம்) குறைக்கப்பட்டு தற்போது முற்றாகவே, அதிகமாக எல்லாத் தோட்டங்களிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. சில தோட்டங்களில் குழந்தை மாவுக்குப் பதிலாக விலை குறைந்த சாதாரணமான பால் மாவைக் கொடுக்கிறார்கள். இது பிள்ளைகளின் உடல் நிலையைப் பாதிக்கின்றது. உதாரணமாக 'றத்தி’ (பால்மா). பிள்ளைகளின் தேவைக்கான மிகுதிப் பால் மா பெற்றோர்களே வாங்கி பிள்ளைக் காம்பராவுக்குக் கொடுக்க வேண்டும். இந்நடைமுறை தோட்டத் திலிருக்கும் பாரம்பரிய தொழிற்சங்க தலைவர் மார்களுக்கே தெரியாத விடயமாக விருக்கிறது.
தோட்டங்களில் காலம் காலமாக இரண்டு வயதிலிருந்து 10 வயது வரை ஒரு குழந்தைக்கு 1% கிலோ மா கொடுக்கப் பட்டு வந்தது. இது இன்று சில தோட்டங்களில் நிற்பாட்டப் பட்டுவிட்டது. சில இடங்களில் தொழிலாளர்களின் கோரிக்கைக் குரலுக்குப்பின் ரூபா 20/= சம்பளத்துடன் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு கிலோ மாவின் விலை இருபத்தைந்து ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
லயன் காம்பிராக்களை நிர்வாகம் பராமரிக்க வேண்டு மெனச் சட்டம் சொல்கிறது. சம்பள நிர்ணய சபையின் சம்பள மதிப்பீட்டிலும் பத்து வீதம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று லயன் கட்டிடங்கள் பராமரிப்பு, வாசல் கான்கள் திருத்துவது எல்லாம் பல தோட்டங்களில் முற்றாகவே நிறுத்தப் பட்டுவிட்டது. புதிய வீடுகளில் எவ்வித திருத்தமும் செய்யப் படமாட்டாது எனத் திட்டவட்டமாகக் கூறப்படுகிறது. ஆனால் துரை பங்களாக்கள் அடிக்கடி திருத்தப்படுகிறது. பளபளப் பாக வைத்திருக்கப்படுகிறது. பச்சை நிறம் கொண்ட துரையின் பங்களா கூரைத் தகரத்துக்கு காலம் தவறாது ஒழுங்காக பெயின்ட் அடிக்கப்படுகிறது. சிவத்த நிறம் உள்ள உத்தியோகத் தர்கள் பங்களா கூரைக்கு இடைக்கிடை பெயின்ட் அடிக்கப் படுகிறது. ஆனால் தொழிலாளியின் கறுத்தப் பெயின்ட் உள்ள கூரையோ பல்லாண்டுகளாக “கீல்’ அடிக்கப்படாது வெளிறிக் கிடக்கிறது. அவ்வாறே பங்களாவுக்குப் போகும் பாதை பளபளப் பாக இருக்கிறது. லயனுக்குப் போகும் வழிகளும் பாதைகளும் படிகளும் நாதியற்றுக்கிடக்கின்றன. படிக்கட்டுக்கள் உடைந்து கிடக்கின்றன. பாதைகள் குன்றும் குழியுமாகக் கிடக்கின்றன.
40

இருபத்தோராம் நூற்றாண்டில் .
2.2.1 குடிக்கும் தேயிலையோ “லேபர்டஸ்ட்”
வெள்ளைக்காரர்களும், வேற்று நாட்டவரும் இலங்கைத் தேயிலையை தரமான தேயிலை என டொலர் கணக்கில் விலை கொடுத்து வாங்கி ரசித்துக் குடிக்கிறார்கள். ஆனால் அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளியோ குடிப்பது தூசித் தேயிலை (dust). தேயிலை உற்பத்தி செய்யப்படும் போது கடைசிக்குக் கடைசியாக வரும் ரகம் அதற்குப் பெயர் “லேபர் டஸ்ட்” வெள்ளைக்காரர்கள் பூமரங்களுக்குப் பசளையாகப் போட்ட தூள்களையே அதுவும் அரைக் கிலோவே இன்று தொழி லாளர்கள் பெறுகிறார்கள். அதற்கு செக்றோலில் காசும் கழிக்கப் படுகிறது. ஆனால் பாரபட்சமான முறையில் கிராமத்தைச் சேர்ந்த சிறு தேயிலை உற்பத்தியாளருக்கு ஒரு கிலோப்படி தரமான தேயிலை - டஸ்ட் நம்பர் 1 இலவசமாகக் கொடுக்கப் படுகிறது. இதுவும் கூட தோட்டத்தில் ஐம்பது வருடமாக வேலை செய்து பென்சன் பெற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது. 2.2.2 ஆதாய போனஸ் கூட்டப்படாமல் அப்படியே இருக்கிறது
முதலாளி ஒருவர் ஒரு தொழிலாளிக்கு ஒரு வருடத்தில் 75% தொடக்கம் 84% வரை வேலைக்கு சமூகமளித்தால் ரூபா 850 வழங்க வேண்டும். இக்கணக்கீடு இச்சரத்து உருவாக்கிய காலத்தில் பத்து நாட் சம்பளத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது. ஆனால் இன்னும் இதே தொகையே கொடுக்கப்படு கிறது. ஆரம்பத்தில் ஒரு மாதச் சம்பளம் 75% மேல் வேலை செய்பவர்களுக்கும் அரை மாதச் சம்பளம் 75%க்குக் குறைய வேலை செய்பவர்களுக்குமாக இருந்தது.
2.2.3 சம்பளம் சாரா கொடுப்பனவுகள்
தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் சாராத கொடுப் பனவுகள் என்ற வகையில் தோட்டக் கணக்கு பட்டியலில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில், ஒரு நாளைக்கு ஒரு தொழி லாளிக்கு ஒதுக்கப்படும்"தொகை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
உலகத்திலுள்ள பெருந்தோட்டத்துறையில் இப்படியான. கொடுப்பனவுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் சம்பளம் சாரா கொடுப்பனவுகள் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. உதாரணமாக வீடு பராமரிப்பு தங்கள் பொறுப் பில்லை எனத்தட்டிக் கழிக்கிறார்கள். மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் தோட்டங்களில் பயிற்றப்பட்ட மருத்துவ
4.

Page 22
கீத பொன்கலன்
அட்டவணை - 2.1 சம்பளம் சாரா கொடுப்பனவுகள்
இலவச கொடுப்பனவுகள் 1996 1998
|- ரூபா ரூபா வீடு 1.16 1.76 மருத்துவம் 2-56 3.85 பிள்ளை பராமரிப்பு நிலையம் 1.10 173 சமூக மேம்பாடு OS2 1.37 தேயிலை 2.03 2.81. முற்பணத்திற்கு வட்டி 1.45 1.87
உத்தியோகத்தர் அருகிவருகிறார்கள். தோட்ட வைத்திய சாலை களில் மருந்து இல்லை. தொழிலாளர்கள் தோட்ட வைத்திய உதவியாளர்களிடம் (EMA) கைக்காசு கொடுத்தே மருந்து வாங்க வேண்டியுள்ளது. கம்பெனிகள் மருந்துக்கு ஒதுக்கிவந்த பண ஒதுக்கீடு வருடா வருடம் குறைந்து கொண்டே போகிறது.
பிள்ளைப் பராமரிப்பு நிலையத்திற்கு ஒவ்வொரு தொழி லாளிக்கும் பணம் கணக்கிடப்படுகிறது. ஆனால் 30%க்கு மேல் பிள்ளைகள் பிள்ளைக் காம்பராவில் பராமரிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளம் கணிக்கப்படும் போது, சமூக மேம்பாட்டுக்கென சம்பளத்தில் பத்து வீதம் ஒதுக்கப் படுகிறது. ஆனால் இன்று தொழிலாளர் சம்பளத்திலிருந்து சமூக மேம்பாட்டுக்காக பல தோட்டங்களில் ரூபா இருபது முதல் நாற்பது வரை கழிக்கப்படுகிறது. அதே தேயிலைக்கு அரை கிலோவிற்கு இரண்டு ரூபாய் கழிக்கப்படுகிறது. மாதத்தில் முற்பணமாகவும், பெருநாள், திருவிழா ஆகிய வற்றுக்கும் கொடுக்கும் முற்பண கொடுப்பனவுக்கு வட்டி கணக்கிடப்பட்டு அதுவும் சம்பளம் சாரா கொடுப்பனவாக கணக்கிடப்படுகிறது. மாதாந்தம் சம்பளம் பெறாது நாட் சம்பளத்தை மறுமாதம் பத்தாம் திகதியே பெறும் தொழி லாளருக்கு மாதக் கொடுப்பனவுக்கு வட்டி அறவிடுவது நியாய மானதா? ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு சம்பளம் குறைவு எனச்சுட்டிக் காட்டி உரிமைக் குரல் எழுப்பும் போது தொழிலாளர்கள் பெறும் கொடுப்பனவுகளையே முதலாளி மார் சம்மேளனம் கூறுகிறது. ஆனால் இன்று பெற்று வரும் கொடுப்பனவுகளோ பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்
டிருக்கிறது. வறுமைப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
வீரகேசரி 27. 04. 2003
42

2.3 உழைப்புக்கேற்ற ஊதியமில்லை
தோட்டக் கம்பெனிகளின் முக்கிய நோக்கம் தொழிலாளர்களுடைய சமூக மேம்பாடல்ல - ஆனால் கூடிய இலாபத்தை பெறுவதே.இதற் காக தொழிலாளர்களை எந்த விதத்தில் சுரண்ட முடியுமோ. அதற்கேற்றவாறு, நாளாந்தம் புதிய புதிய யுக்திகளை கையாண்டுஉற்பத்தியைகூட்டு கிறார்களே தவிர, தொழிலாளர்கள் வாழ்க்கைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள். இது தொழிலாளர்கள் மட்டுமல்ல காலப் போக்கில் பெருந்தோட்டத் துறையையே பாதிக்கும் இந்த பாதிப்புக்கு அரசாங்கமும், பாரம்பரிய தொழிற் சங்கங்களும் உடன் போகின்றன.
பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெறு கின்ற சம்பளமானது உற்பத்தியுடன் இணைந்துள்ளதாக இருக் கிறதே அன்றி அவர்களது சமூக பொருளாதார மேம்பாட்டை நோக்காகக் கொண்டதாக இல்லை. அவர்கள் பெறுகின்ற சம்பளம் மனித வாழ்க்கைக் கேற்ற சம்பளமாக இல்லை. உயர்ந்து செல்லும் விலைவாசிகளை சமாளிக்கக்கூடியதாக, நலவாழ்வினை அனுபவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உரு வாக்கக் கூடியதாக இல்லை. உண்மையில் இவர்களை அரைப் பட்டினிக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது. அந்நிய செலா வணியை தேடித்தந்து ஏனைய மக்களின் நலம்காக்கும் பெருந் தோட்டத் தொழிலாளர்கள்தான் இந்நாட்டில் மிகக்குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்கள். இந்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின் (ILO) படி பெருந்தோட்டத்தைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள இருபத் தொன்பது நாடுகளில் இலங்கை நாட்டில் தான் தொழிலாளர்
43

Page 23
கீத பொன்கலன்
களின் வாழ்க்கை நிலை - பொருளாதார மேம்பாடு மோசமாக உள்ளது. 1996ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் நடத்திய மதிப் பீட்டில் இலங்கையில் ஒரு தொழிலாளி இரண்டு மணித் தியாலம் உழைத்தால் தான் ஒரு கிலோ அரிசியை வாங்க முடியும். ஆனால் பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளில் இரு கிலோ அரிசியைப் பெற நாற்பத்து மூன்று நிமிடங்கள் உழைத்தால் போதும். மலேசியாவில் உதாரணத்திற்கு முப்பது நிமிடங்கள் உழைத்தால் ஒரு கிலோ அரிசியை பெறக் கூடிய நிலை உள்ளது.
2.3.1 வாழ்க்கைச் செலவு புள்ளி
உண்மையில் உயர்ந்து கொண்டு போகும் விலைவாசி களைச் சமாளிப்பதற்கு சம்பளம் அமைய வேண்டுமாயின் வாழ்க்கைச் செலவுப் புள்ளி கொடுப்பனவு 'சம்பளத்துடன் சம்மந்தப்படுத்தப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர் களுக்கு 1939ம் ஆண்டு முதல் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. 1984 முதல் 1992 வரை ஒரு புள்ளிக்கு 4 சதமாகவும் கணக்கிடப்பட்டது. ஆனால் 1992ம் ஆண்டு தோட்டம் தனி யார் மயமாக்கப்பட்டபின் இது நிறுத்தப்பட்டது. தொழில் கொடுக்கும் முதலாளிகளே சம்பளத்தை தீர்மானிக்கின்ற பரிதாப நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டார்கள். இதற்கு முற் போக்கு சிந்தனையுள்ள சில தொழிற் சங்கங்களும். அரசு சார் பற்ற நிறுவனங்களைச் சார்ந்த புத்தி ஜீவிகள் எதிர்ப்புத் தெரி வித்தும் அரசு சார்புடைய 2 பாரம்பரிய தொழில் சங்கங்களின் சம்மதத் துடன் இது காலவரை சம்பள நிர்ணய சபையால் தீர் மானிக்கப்பட்ட தொழிலாளர் சம்பள முறை நிறுத்தப்பட்டது.
வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக உயர்ந்து கொண்டே போகிறது. தொடர்ந்து வாழ்க்கைச் செலவுக்கேற்ப கொடுப்பனவு கொடுக்கப் பட்டிருந்தால் தோட்டத் தொழிலாளியின் சம்பளம் ரூபா 200/க்கு மேல் வந்திருக்கும். ஒரு வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஆகக் குறைந்தது ரூபா 3. 50 ஆக அரசாங்கத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் கொடுக்கின்றன. தொழி லாளர்களுக்கு மீண்டும் வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு கொடுக்கப்பட வேண்டும். ரூபா 3. 50 கொடுக்காவிட்டாலும் ஒரு ரூபாயாவது கொடுத்தால் இன்று பெறும் சம்பளத்திலும் கூடுதலான சம்பளத்தைப் பெற
44

இருபத்தோராம் நூற்றாண்டில் .
முடியும். மேலும் இது கொடுக்கப்பட்டால் இரண்டு வருடத் திற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்து தொழிலாளர் சம்பளத்தை முகாமையாளர் நிர்ணயிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படாது.
இன்று சம்பள உயர்வு மலையக மக்களுக்கு சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்படாமல், முதலாளிமார் சம்மேளனமும், முதலாளிமார் சார்பான தொழிற்சங்கங்களும் தீர்மானிக்கின்றன. திஸ்ஸதேவானந்த நிர்ணயக் குழு அறிக்கை யின்படி அடிப்படைச் சம்பளமாக ரூபா 6000/- சிபாரிசு செய்யப் பட்டுள்ளது. ஆனால் 05.09.2002 சம்பள கூட்டு ஒப்பந்தம் அடிப்படைச் சம்பளமாக தேயிலைக்கு ரூபா 121/- இறப் பருக்கு ரூபா 109/- இதைவிட ஏனைய கொடுப்பனவுகளைச் சேர்த்தால் ஆகக் கூடிய சம்பளமாக தேயிலைக்கு ரூபா 141/- இறப்பருக்கு 131/- கிடைக்குமென கூறப்பட்டது. ஆனால் இத்தொகை எல்லாத் தொழிலாளருக்கும் கிடைக்க முடியாது. தொழிலாளர் எதிர்பார்த்த சம்பளம் ரூபா 180/- கூட பெற முடியாமல் போய் விட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வாழ்க்கைச் செலவு புள்ளி எண் எவ்வளவு கூடினாலும் இரண்டு வருடத் துக்கு சம்பள உயர்வு கேட்கக் கூடாதென்று நிபந்தனையும், அப்படிக் கேட்டு போராடினால் சட்ட நடவடிக்கை எடுக்க முதலாளிமார் சம்மேளனத்துக்கு முடியும் என்ற ஒப்பந்தத்தில் 2 தொழிற் சங்கங்களும் ஒரு கூட்டு தொழிற் சங்கமும் கைசாத்திட்டுள்ளன. ஜனவரி 2003ம் ஆண்டு மாவின் விலை கூட்டப்பட்டபொழுது தொழிலாளர் கூடுதலாகப் பாதிக்கப் பட்டார்கள். இன்று இவர்கள் பெறும் ஊதியம் குடும்பத்திற்குத் தேவையான போசாக்கான உணவு உண்பதற்கு போதாமை யால் சிரமப் படுகின்றனர்.
தோட்டத்தில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் இந்தக் குறைந்த சம்பளத்தையும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை காத்திருந்து பெறும் போது, அவர் களுக்குக் கொடுக்கப்படும் சம்பள விபரப் பட்டியல் வியப் பையும் வேதனையும் தருகிறது. முதலில் அந்த மாதத்துக்கு எத்தனை நாள் வேலை கொடுக்கப்பட்டது என்று பதியப்படு வதில்லை. சம்பள விபரப்பட்டியல் தயாரிப்பதற்கு ரூபா 250 அறவிடப்படுகிறது. தான் தோன்றித் தனமாக கழிப்பனவுகள் காட்டப்படுகின்றன. சில கழிப்பனவுகள் அப்பட்டமான கப்பம் போல இருக்கிறது. தொழிலாளர்கள் ஒப்புதல் இன்றி கிராமத்
45

Page 24
கீத பொன்கலன்
தில் அமைந்திருக்கும் புத்த விகாரைகளுக்கு சம்பளத்திலிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. முத்திரை வரி அறவிடப்படுகிறது.
இது எதற்கு என்று புரிவதில்லை. தொழிற்சங்கங்கள் சந்தா கூட்டியதும் தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி அவர்களுக்குத் தெரியாமலே அத்தொகை கழிக்கப்படுகிறது. ஏனைய கழிவுகள் என சாம்பாராக சில கழிவுகள் விபரம் தெரியப்படுத்தப்படுவ தில்லை. மேலும் தொழிலாளர்களின் சம்பள செக்றோல் கொடுப்பனவு முறையை சாதகமாக பாவித்து ‘அபான்ஸ்’ போன்ற வர்த்தக ஸ்தாபனங்கள் வங்கியுடனும், தோட்டத் துரையுடனும் இரகசிய பேச்சு வார்த்தை நடத்தி இவர்களை தரகராக்கி ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி தங்களது விற்பனைப் பொருள்களை தலையில் கட்டி செக்றோலுக்கு வெளியாக, சம்பளப் பட்டியலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சம்பள விபரப் பட்டியலும் கழிப்பனவு களும் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்ற கதையைக் கூறுகிறது.
2.3.2 அரசாங்கம் கம்பெனிக்கு கொடுக்கும் இலாபம்
தனியார் கம்பெனிகள் தொழிலாளர்களது சம்பளம் கூட்டப்படவேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்படும் போதெல்லாம் தேயிலை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள தாகவும், தாங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் பாட்டாகப் பாடுகிறார்கள். இக்காரணத்தை அரசாங்கத்திடம் கூறிப்பல சலுகைகள் பெற்றுள்ளனர். வாழ்க்கைச் செலவுப் புள்ளி முறை நிறுத்தப்பட்டதும், ஏற்றுமதி வரி, பெறுமதிக்கு கொடுக்கப் பட்ட வரி ஆகியவை நிறுத்தப்பட்டதும் அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்ட பெரும் சலுகைகளே. இவற்றினால் தங்கள் இலாபத்தை பெருக்கிக் கொண்டார்களே தவிர உழைக்கும் தொழிலாளிக்கு இதன் பயன்பாடு எந்த விதத்திலும் சென் றடையவில்லை.
பல வித காரணங்களால் கம்பெனிகள் இலாபம் சிறிது குறைவாக இருக்கலாம். இன்று வர்த்தக உலகழ் எதிர்நோக்கும் பொதுப்பிரச்சனையை காரணம் காட்டி, தோட்டங்கள் நஷ்டத்தில் போவதாகக் கூறி பூச்சாண்டி காட்டி மாடாக உழைத்து ஓடாகத் தேயும் மலையக தொழிலாளர்கள் பெற்று வந்த அற்ப சலுகைகளையும் குறைத்து அவர்களது வயிற்றில்
46

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அடிக்கிறார்கள். சில தோட்டங்களில் சிரமதான முறையில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
2.3.3 முகாமைத்துவ செலவுகள் குறைக்கப்படலாகாதா?
முகாமை முகவர்களின் கட்டணங்களில் பின்வரும்
தலைப்புக்களின் கீழ், கம்பெனிக்கு கம்பெனி மாறுபட்ட
விகிதாசார முறைகளில் செலவுகள் கணக்கிடப்படுகின்றன.
அட்டவணை - 2.2 முகாமைத்துவ செலவுகள்
1. செயல்பாட்டு இலாபம் 10% தொடக்கம் 3.5% வரை 2. கைமாற்று வீதம் 5% தொடக்கம் 3.5% வரை 3. உள்ளீட்டு / விநியோகம் 5% தொடக்கம் 2% வரை 4. வெளி. - ஒரு கிலோ தேயிலை, தேயிலை ரூபா 250 சத்ம்.
இறப்பர் உற்பத்திச் செலவு. இறப்பர் ரூபா 150 சதம்.
மேலே குறிப்பிட்ட கணக்கின்படி முகாமை முகவர் கட்டணம் பின்வருமாறு:-
அட்டவணை - 23 முகாமை முகவர் கட்டணம் - 1999 - 2000
8 கம்பெனிகள் (மில்லியன் ரூபா)
1. மல்வத்தை வலி பிளான்டேசன் 98.8
2. அக்கரைப்பத்தனை A. 六09 3. பலாங்கொடை (31.12.99) 62.8
4. நமுனுக்குல 59.0 5. எல்பிட்டி 41.3 6. உடப்புசல்லாவ (31.12.99) 28.1 7. மடுல் சீமை (31.12.99) 24.6 8. கேகாலை 219
இவ்வளவு பணத்தை முகாமைத்துவ முகவர்கள் பணமாகக் கொடுத்தும் கம்பெனிகள் இலாபம் ஈட்டியிருக்கிறார்கள். சராசரி 1996ம் ஆண்டு 6 கம்பெனிகள் மாதம் 10 மில்லியன் இலாபம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று தோட்டங்கள் நஷ்டத்தில் போவதாகக் கூறி தொழிலாளர் பெற்று
47

Page 25
கீத பொன்கலன்
வந்த அற்ப சலுகைகளைக் குறைத்து அவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். சில தோட்டங்களில் சிரமதான அடிப் படையில் வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். அதுவுமில்லாமல் சில தோட்ட முதலாளிமார் வங்கி நிலுவை வரி 0.1% வங்கிகளில் காசோலை கொடுப்பனவுக்கு கழிக்கப் பட்டு வருமான வரி இலாகாவிற்கு அனுப்புகின்றனர். இவ்வரியை காசோலை கொடுப்பவரே செலுத்த வேண்டும். ஆனால் ரூபா 20,000த்திற்கு குறைவான கொடுப்பனவுக்கு சலுகை வழங்கப் பட்டுள்ளது. இன்று சில தோட்டங்களில் இவ்வரியை தொழி லாள சம்பள பணத்திலிருந்து அறவிடுகிறார்கள். இது அநியாய மான செயலாகும்.
கம்பெனிகளின் முகாமையாளர்களே பெரிய பங்குதாரர் களாக இருப்பதால் கூடிய பங்கு இவர்களைச் சென்றடை கிறது. இவர்கள் உற்பத்தி செலவைச் கூட்டிக்காட்டி இலாபப் பங்கை குறைக்கின்றார்கள். இதனால் இவர்களே பங்கு களையும் வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் இவர்கள் தேயிலை / இறப்பர் தவிர்ந்த பல கம்பெனிகளில் முகாமைத்துவ பதவி களையும் வகிக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் இலங்கை முகவர்களாகவும் செயல்படுகிறார்கள். இதனால் வாணிபத்தின் நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தங்களது இலாபப் பங்கை திடப்படுத்திக் கொள்கிறார்கள்.
வீரகேசரி 04.05.2003, 11.05.2003
d
O
O
0.
&
0.
0.
முதல் நான்கு உலக சமூக மாமன்றத்தில் பங்கேற்றவர்கள்
ஆண்டு நடந்த இடம் பதிவு | பங்கேற்றவர்கள்
செய்தவர்கள்
ஜன. 2001 போர்ட்டோ அலகிரா 4, 700 20, 000 ஜன. 2002 போர்ட்டோ அலகிரா 12,000 50,000 ஜன. 2003 போர்ட்டோ அலகிரா 27,000 100,000 ஜன. 2004 பாம்பாய் - இந்தியா 75,000 + 1,00,000
48

2.4 பெருந் தோட்டத்துறை சமூகமேம்பாட்டின் அவல நிலை
பெருந்தோட்டத்துறை ஆரம்ப காலந்தொட்டு தேசிய நீரோட்டுத்துடன்இன்றுவரைஇணைக்கப் படாமல், ஒரு தனிப்பிரிவாகவே கணிக்கப்படு கிறது. இதனால், தேசிய சமூக மேம்பாட்டு திட்டங்கள் எவையும் இம்மக்களை சென்றடை வதில்லை. ஆனால் பெருந்தோட்டத்துறை மக்களுக்காக செயற்படுத்தப்படும் சமூக மேம் பாட்டுத் திட்டங்கள் பூரணமான, மக்களோடு சேர்ந்து உருவாக்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அதிகாரவர்க்கங்களின், தன்னிச்சையானதிட்டங் களே. இதனால் இத்திட்டங்கள் நடைமுறை படுத்தும் போது ஏனோ தானோ என்ற எண்ணங்களுடனும் ஒரு சில திட்டங்கள் தொழிலாளர்களின் கடன் சுமையினை கூட்டி, மேலும் நிரந்தர கடனாளியாக்குவதே நோக்கங்
களாகக் கொண்டுள்ளன. M
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழிலாளர் களின் சமூக மேம்பாடு மந்த கதியாகவே இருந்தது. தோட்டச் சொந்தக்காரர்களே பராமரிப்பு. நீர், சுகாதாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தார்கள். தோட்டம் தேசிய மயமாக்கப் பட்டதும் 1972ல் இருந்து 1975 வரை நன்கொடை வழங்கும் வெளிநாட்டு முகவர்களதும் அரசாங்கத்தின் உதவியுடனும் சமூகமேம்பாட்டு நிகழ்வுகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. 1974ம் ஆண்டிலிருந்து பலதரப்பட்ட வெளிநாட்டு உதவி வழங்கும் முகவர்களதும், பன்நாட்டு முகவர்களாகிய UNICEF UNDP ILO, ADB, NEDA, UNFPA D GUS, Gy iš 6 s6uu GM GJuqub. சர்வதேசிய அரசு சார்பற்ற நிறுவனங்களான CARE, FORUT
49

Page 26
கீத பொன்கலன்
இன்னும் சிலவும் நன்கொடைகள் நல்கின. 1978 - 1998 ஆண்டு காலகட்டத்தில் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெருந்தோட்டத்துறைக்கு செலவு செய்யப்பட்டன. இவற்றில் 1/3 பங்கு நெதர்லாந்தின் பங்களிப்பாகும். 1975 - 1992 வரையும் பெருந்தோட்ட சமூகமேம்பாட்டு நிகழ்வுகளை JEDB, SLSPC ஆகியவற்றின் சமூக அபிவிருத்தி பிரிவே நடத்தி வந்தது. தோட்டம் தனியார் மயமாக்கப்பட்டபின் பெருந்தோட்டத் துறை வீடமைப்பு சமூக நலன்புரி நிதியத்திடம் (டிரஸ்ட்) கையளிக்கப்பட்டது.
2.4.1 பெருந்தோட்டத்துறை வீடமைப்பு சமூக நலன்புரிநிதியம்
பெருந்தோட்டத்துறை வீடமைப்பு சமூக நலன்புரி நிதியம் (டிரஸ்ட்) பதினொரு சபை உறுப்பினர்களைக் கொண்டது. அவற்றில் ஐவர் கம்பெனியிலிருந்தும் நால்வர் அமைச்சர்களி லிருந்தும், இருவர் தொழிற்சங்கங்களிலிருந்தும் அங்கத்துவம் வகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சுகளாவன, வீடமைப்பு பொதுச் சொத்து அமைச்சு, நிதி அமைச்சு, மகளிர் விவகார சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட தொழில் அமைச்சு ஆகியவையாகும். 2002ம் ஆண்டு தோட்டக் கட்டமைப்பு அமைச்சு உருவாகிய பின்பு தோட்ட வீடமைப்பு இந்த அமைச்சின் கீழ் வந்தது. இவ் அமைச்சிலிருந்தும் ஒரு அங்கத் தவர் நியமிக்கப்பட்டார். டிரஸ்டின் தலைமைக் காரியாலய பலமாடிக் கட்டிடம் கொழும்பு - பத்திரமுல்லையிலுள்ளது. காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, ஹட்டன் பதுளை, நுவரெலியா ஆகிய ஏழு பிரதேச அலுவலகங்கள் எல்லா வசதி களுடனும் இருக்கின்றன. ஒவ்வொரு பிரதேச அலுவலகமும் ஐந்து தொடக்கம் ஒன்பது கம்பெனிகளுக்கு உட்பட்ட அறுபத் திரண்டிலிருந்து எழுபத்தெட்டு வரையிலான பெருந்தோட்டங் களின் கருமங்களைக் கவனிக்கின்றன.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின் சமூக மேம்பாட்டு செயல்பாடுகளை டிரஸ்ட் பொறுப்பேற்றதும் கம்பெனிகள் படிப்படியாகத் தங்கள் பங்களிப்புக்களைக் குறைத்துக் கொண்டன. தோட்டங்கள் தனியார் மயமாக்கப் படுவதற்கு முன்பு சமூக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணம் 8%மாக இருந்து. இப்போது அது 4% குறைந்து விட்டது. இப் போது சமூகநல உத்தியோகத்தர்களை வேலைக்கு அமர்த்துவது
SO

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கம்பெனிகளே. தோட்டத் துரைமாரின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் சமூக நலன் வேலைகளைவிட ஏனைய வேலைகளுக்கும் அமர்த்தப்படுகிறார்கள். கம்பெனிகள் டிரஸ்ட்டுக்கு ஒரு தொழி லாளிக்கு ரூபா 97 வீதம் ஒவ்வொரு வருடமும் கொடுக்கிறது. டிரஸ்ட் ஒரு வெள்ளை யானை போலாகி விட்டது. இந்தக் கொடுப்பனவு போதாமல் இயக்குனர்கள், பணியாளர்கள் ஆகியோரின் அதிஉயர் சம்பளம், கட்டமைப்பினைப் பேணுதல், சொகுசு வாகனங்கள் இவற்றுக்கெல்லாம் தங்களது மேலதிகச் செலவுக்கென வெளிநாட்டு நன்கொடை முகவர்களிட மிருந்தும் நிதி பெற்றுக்கொள்கிறார்கள். டிரஸ்ட் நிறுவனம் கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கம்பெனிகளின் அனுமதி இன்றி தன்னிச்சையாக இயங்க முடியாது. உதாரண மாக ஒரு வீடு கட்டுவதற்கு நிலம் கொடுப்பதற்கு தோட்டத் நிர்வாகத்திடம் நிலம் கேட்கும் போது அது மறுக்கப்பட்டால் டிரஸ்டுக்கு வேறுவழியில்லை. கம்பெனிகளின் தீர்மானத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். டிரஸ்ட் இன்று சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளை தோட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு சட்ட ரீதியான அமைப்பு அல்ல. இது அரசாங்க அதி காரத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபைபோல பெருந் தோட்ட மக்களின் சமூகமேம்பாட்டின் உண்மையான அக்கறை யுள்ள, 90% தமிழ் பேசும் மக்கள் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். பெருந்தோட்டத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள், அரச சார்பற்ற தாபன அங்கத்தவர்கள் கொண்ட ஒரு கண் காணிப்புக் குழு ஆண்டு தோறும் இவர்களது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் வாழும் லயத்தை சுயமாக விஸ்தரிப்பதற்கு தோட்ட நிர்வாகம் இடம் கொடுப்ப தில்லை. அவ்வாறு செய்தால் அதனை உடைத்தோ அல்லது நிறுத்தும் படியோ கட்டளையிடுகிறார்கள். டிரஸ்ட் மூலமாக கடன் பெற்று வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். உண்மையில் சுய உதவி உணர்வு கருவள ஊட்டல் நடைமுறைப் படுத்தப்படவில்லை. டிரஸ்ட் அவர்களைப் பலவந்தப்படுத்தி தீராத கடனாளியாக்கி வீடு கட்ட நிர்ப்பந்திக்கும் போக்ே காணப்படுகிறது.
டிரஸ்ட், PSG ஆகியவற்றின் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. அவை டிரஸ்ட் கொடுக்கும்
5

Page 27
கீத பொன்கலன்
புள்ளி விபரங்களிலிருந்தே பெறப்படுகிறது. சமூகமேம்பாட்டு நடவடிக்கைகளை மதிப்பிட பெருந்தோட்ட சமுதாயத்தில் அக்கறையும், அச்சமுதாயத்துடன் இணைந்து வாழ்கின்ற அங்கத் தவர்கள் கொண்ட ஒரு சுதந்திர அமைப்பும் அமைக்கப் பட வேண்டும். டிரஸ்ட் கொடுக்கும் புள்ளி விபரங்கள் பல முன் பின் முரணானதாக இருக்கிறது. டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடும் "Social Welfare Update" Golgifu'l' ig gigg,606513, stador Gustib.
2.4.2 டிரஸ்ட் பத்தாண்டு பூர்த்திக் கொண்டாட்டம்
2002ம் ஆண்டு டிரஸ்ட் பத்தாண்டு பூர்த்திக் கொண் டாட்டம் வெகுகோலாகலமாக சமூக உத்தியோகத்தர்களின் உதவியுடன் ஏழு பிராந்தியங்களிலும் கொண்டாடப்பட்டது. தோட்டத்துரைமார்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இரவு விருந்துகள், களியாட்ட விழாக்களும் நடந்தன. தொழிலாளர்கள் முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. ஆனால் இதன் செலவுக்கு சில பிராந் தியங்களில் ரிக்கற் விற்று தொழிலாளர்களிடம் காசு சேர்க்கப் பட்டுள்ளது புதினமூட்டும் அனுபவமாக அவர்களுக்கு இருந்தது, றின்ரி கல்லூரி மண்டபத்தில் டிரஸ்ட் பத்தாவது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியே 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குழுமி டிரஸ்டின் சில நட வடிக்கைகளைக் கண்டித்து எதிர்ப்புப் பேரணி ஒன்று நடத் தினர். சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டு களாக பொதுக்கூட்டங்கள், பயிற்சிப் பாசறைகள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மூலம் தொழிலாளர்களின் குறைபாடு களை எடுத்துக் கூறி வருகிறார்கள். ஆனால் டிரஸ்ட் நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.
2.4.3 சமூக மேம்பாட்டு திட்டங்கள்
தொழில்நுட்ப உதவிக்குழு (TAT) தனது பணியை பெருந் தோட்டப் பகுதியில் 1985ம் ஆண்டு ஆரம்பித்தது. இது ஒருங் கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பெருந்தோட்டத் துறைக்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெருந் தோட்ட மேம்பாட்டிற்கு நெதர்லாந்து, நோர்வே நாடுகள் நிதி உதவிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கின. தொழில்நுட்பக் குழுத் தலைவராக நெதர்லாந்தை சேர்ந்த
52

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஒருவரே நியமிக்கப் பட்டிருந்தார். இவர் EDB, SLSPC ஆகிய வற்றுடன் இணைந்து SWP - 1 என்ற சமூக நலத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு பொறுப்பாக இருந்தார். இதன் முதற் செயற்பாடு தோட்ட மக்களின் சுகாதார நிலையிலும், சமூக நலத்திலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக, சுகாதாரம், சிறுவர் பராமரிப்பு வசதிகள், குடிநீர் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், சுற்றாடல் சுகாதாரம் மலசலகூட வசதிகள், பயிற்சிகள், நிறுவன அபிவிருத்தி போன்றவற்றுக்கு முதலீடு செய்வதாக அமைந்தது.
2.4.3.1 சமூகநலதிட்டம் -1
SWP - 1 (1985 -1992) செயல் திட்டங்கள் மூலம் பல சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், பிரசவ மனைகள், வைத்தியசாலைகள் உத்தியோகத்தர்களின் வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டன அல்லது தரம் உயர்த்தப்பட்டன. நீர் விநியோகத் திட்டம், மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப் பட்டன. தொழிலாளர்களின் வீடுகளுக்கு கூரைகள் மாற்றப் பட்டன. SWP - 11 (1992 - 1998) இச்செயல் திட்டத்தின் கீழ் மேற் குறிப்பிட்ட வேலைகளுடன் சுய உதவி வேலைத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள், மலசல கூடங்கள் அமைக்கப்பட்டன.
2.4.3.2 பெருந்தோட்ட அபிவிருத்திக்கு உதவும் திட்டம் PDSP (1998 – 2005)
SWP-111998 முடிவடைந்ததும், பெருந்தோட்ட அபிவிருத்தி 2563 571 Lib (Plantation Development Support Programme - PDSP) என்ற புதிய திட்டம் ஆரம்பித்து இன்றும் நடைமுறை யில் உள்ளது. நெதர்லாந்து, நோர்வே அரசுகளின் உதவியுடன் கம்பெனிகள், தனியார் வங்கிகள், தோட்ட சமூகம் ஆகியவை இதற்கு உள்ளீடு செய்கின்றன. கம்பெனி தனது பங்களிப்பை தோட்டத்தில் உள்ள மரத்தை பலகையாக்கி கொடுப்பதன் மூலம் ஒரு பகுதி பங்களிப்பைச் செய்கிறது. ஆனால் தொழி லாளர்கள் மரங்களை வெட்டுவதற்கும், அரிந்து எடுப்பதற்கு மான செலவைக் கொடுக்க வேண்டும். மிகுதிப் பங்களிப்பாக கம்பெனி தோட்டத்தின் சுகநல சேவைக்கும், சிறுவர் பரா மரிப்புக்கும் கொடுக்கின்றது. வங்கிகளின் பங்களிப்பானது வீடமைப்புக்கு பணத்தை தொழிலாளரிடம் வட்டி பெறும்
53

Page 28
கீத பொன்கலன்
வகையில் கடனாகக் கொடுப்பதாகும். தொழிலாளர்களின் பங்களிப்பு வீடமைப்புக்கு எடுத்த கடன்களை வட்டிகளுடன் திருப்பிக் கொடுப்பதுடன் தேவையான மிகுதிப் பணத்தை தாமாகவே தேடி வீட்டை கட்டி முடிப்பதாகும். கடன்களை தொழிலாளர்கள் 5 தொடக்கம் 15 வருட கால எல்லைக்குள் கட்டி முடிக்க வேண்டியுள்ளது. நன்கொடை முகவர்களால் வழங்கப்பட்ட வீட்டுக்கடனுக்கு அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
2.4.4 வீடமைப்புத் திட்டங்களின் யதார்த்த நிலை
இலங்கை அரசாங்கம் 1953ம் ஆண்டு தேசிய வீடமைப்பு இலாகாவை உருவாக்கியது. ஆனால் 1979இல் தேசிய வீடமைப்பு சபை உருவாகிய பின்னரே பல வீடமைப்புத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் சென்றது. அவற்றில் பத்து உப திட்டங்களில் ஒன்றாக பெருந்தோட்ட வீடமைப்பு இருந்தது. இது பத்து இலட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தை JEDB, SLSPC ஆகியவற்றால் 1992 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. 1992ல் 228 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் தோட்ட வீடமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
வீட்டுப் பிரச்சினை இன்றும் தொழிலாளர்களின் பாரிய பிரச்சினையாக உள்ளது. 1960 இருந்து இது பல தடவைகளில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது. 1975 வரை வெளி நாட்டுக் கம்பெனிகளுக்கு தோட்டங்கள் சொந்தமாக இருந்த காலத்தில் வெளியார் உதவி எதுவுமின்றி தோட்டக் குடி யிருப்புகளை திருத்தியும், புதிய சில இரட்டை குடியிருப்பு வீடுகள் கட்டியும் வந்தார்கள். அரசாங்கம் தோட்டங்களை கைபேற்கப் போகிறார்கள் என்ற வதந்தி ஆரம்பித்ததும் அவர்கள் அதனைக் கைவிட்டு விட்டார்கள். தோட்டம் தேசிய மயமாக்கப்பட்டபின் SDD வேலைத் திட்டங்களில் 1975 - 1986, வரை 15 ஆயிரம் இரட்டை குடியிருப்பு வீடுகள் நெதர்லாந்து அரசாங்க நிதி உதவியுடன் கட்டப்பட்டன. 1978 - 1992ல் உலக வங்கியின் உதவியுடனும் லயங்கள் இரட்டை குடியிருப்புகளாக மாற்றியும் புதிய இரட்டைக் குடியிருப்புகளும் கட்டப்பட்டன. (1993 - 1997). SWP - 11 வேலைத் திட்டத்திற்கு 1079 மில்லியன்
54

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ரூபாவை நெதர்லாந்து அரசாங்கமும், நோராட்டும் வழங்கின. இத்திட்டத்தை டிரஸ்ட்டே செயல்படுத்தியது. 1995ம் ஆண்டு பெருந்தோட்ட அமைச்சர் தோட்டங்களில் சுய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது ‘2000 ஆண்டில் தொழி லாளர்களுக்கு இரண்டு இலட்சம் வீடுகள்’ என்று தலைப் பிட்டார். ஆனால் இன்று வரை அது நிறைவேறவில்லை. தொழிலாளர்கள் வசதிகள் அற்ற லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள். 1996ல் வீடமைப்பு அமைச்சர் துரித வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்த பின் ஆறு ஆண்டுகளில் “483 தோட்டக் கிராமங்கள்” “வீடமைப்புத் திட்டத்தால் உருவாக்குவதாகவும், வீடமைப்புடன் சம்மந்தமாக்கி, புதிய சமூக உறவுகளை உண்டாக்கும் வகையில், வாழும் சூழல் அமைப்பினை மாற்றி, அரச பொது நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டு வரும் முயற்சி எடுக்கப்படும் எனவும், இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இன்று கெளரவ வீடமைப்பு அமைச்சரால் மேல்மாடி வீடமைப்புத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த வீடமைப்பு திருப்தி தருவதாக இல்லை யெனவும் இது ஒரு இரட்டை மாடி லயம் போன்றே இருப்ப தாக பலரும் கருதுகிறார்கள். மீண்டும் காணிச் சொந்த மற்ற வீடுகளா என விசனப்படுகிறார்கள்.
2.4.5 தோட்ட சுகாதார நிலை
தோட்ட சுகாதார சேவை குடியேற்ற ஆட்சிக் காலத்தில் தோட்ட முகாமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. T926r மருத்துவ சட்டத்தின் ஆளுகைக்குள் அடங்கியிருந்தது. இன்றும் இது நடைமுறையில் இருக்கின்றது. சுகாதார வைத்திய அதிகாரி (M.O.H.) பெருந்தோட்ட சுகாதாரத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். அன்றுதொட்டு இன்று வரை இந்நாட்டு சுகாதார சேவையில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. தோட்ட மருத்துவ சேவையை அரசாங்கம் கையேற்பதாகக் கூறப் பட்டது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய சாலை களே அதுவும் கிராம மக்களுக்கு கூடிய பயனை பெறும் விதத்தில் அரசாங்கம் கையேற்றது. ஏனைய வைத்தியசாலைகள் படிப்படியாக கையேற்கப்படும் எனக்கூறப்பட்டது. ஆனால் அரசாங்க நிதிப் பற்றாக்குறையால் இன்று இது கைவிடப் பட்ட நிலையில் உள்ளது. கம்பெனிகளே தோட்ட மருத்துவ
55

Page 29
கீத பொன்கலன்
ஊழியர்களை நியமிக்கிறார்கள். இன்று போதிய மருத்துவ தராதரம் உள்ள வைத்தியர்களின் தொகை தோட்டங்களில் குறைந்து கொண்டே போகிறது. பல தோட்டங்களில் எவ்வித வைத்திய தராதரமும் அற்ற வைத்தியர்களே கடமையாற்று கிறார்கள். தோட்ட வைத்தியசாலைகளில் மருந்துத்தட்டுப் பாடு நிலவுகிறது. கம்பெனிகள் வருடாவருடம் மருந்துக்கு என ஒதுக்கி வந்த தொகையும் தோட்டங்கள் நட்டத்தில் போகின்றன என்ற காரணத்தைக் காட்டிக் குறைத்துக் கொண்டே போகி றார்கள். மருந்து விலையோ கூடிக் கொண்டே போகிறது. மருத்துவ கட்டிடங்கள் அமைப்பதாயின் அல்லது திருத்தம் செய்வதாயின் ஒரு பகுதிச் செலவைக் கம்பெனி ஏற்றுக் கொண்டால்தான் உதவி வழங்கும் முகவர்கள் உதவுவார்கள். கம்பெனி தனது சிறிய பங்கைக் கொடுக்க முன்வராததால் முன்னேற்றம் தடைப்படுகிறது. கம்பெனியே சுகாதார சேவைக்குப் பொறுப்பாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நலத்தை விட தங்கள் வருமானத்தையே கண்ணும் கருத்துமாகக் கொண்டு, நிரந்தர கருத்தடை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கண்துடைப்பாக வைக்கும் சுகாதார சமூக நல நடவடிக்கைகளில் உடல் உழைப்பையும் வருமானம் தரும் வாய்ப்புகளையுமே வலியுறுத்துகிறார்கள். இதற்கு கம்பெனி களின் கைப்பொம்மையாக உள்ள டிரஸ்டும் ஊதுகுழலாக ஒத்து ஊதுகிறார்கள்.
டிரஸ்ட் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு நடவடிக்கைக்கு சுகாதாரத் துறையின் பெயரால் ஏராளமான உதவிகளை பல வெளிநாட்டு நிதி உதவும் அமைப்புகளிடமிருந்து பெறுகிறது. மருந்துகள், உபகரணங்கள் கிடைக்கின்றன. இவைகள் எல்லாம் யாருக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டதோ அவர்களைச் சென்று அடைகின்றதா? பிரயோசனப்படுத்தும் முறையில் கொடுக்கப் படுகின்றதா என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என விசனம் தெரிவிக்கப்படுகின்றது. தோட்டங்களுக்கு வழங்கப் பட்ட அம்புலன்ஸ்கள் தொழிலாளர்களது அவசர தேவைக்கு உபயோகப்படுத்தப்படுவதில்லை. தோட்ட நிர்வாகத்தின் தனிப்பட்ட வேலைகளுக்கு வங்கியிலிருந்து சம்பளம் எடுத்து வருவதற்கு, பொலிஸ் நிலையத்திற்கு போய்வருவதற்கு பயன் படுத்தப்படுகிறது. கொழுந்து கூட சில வேளைகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது என எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டன.
56

இருபத்தோராம் நூற்றாண்டில் .
2.4.6 பிள்ளை பராமரிப்புநிலையங்கள்
தோட்ட நிர்வாகத்தின் கீழ், டிரஸ்டின் வழி காட்டலோடு இயங்கும் பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 5 வயதுக்கு உட்பட்ட முன்பள்ளி பயிலவேண்டிய பிள்ளைகளும் ஒன்றாகவே கவனிக்கப்படு கிறார்கள். இதனால் முன்பள்ளிக் கல்வி சீரிய முறையில் தோட்டங்களில் புகட்டப்படுவதில்லை. இதன் பாதிப்பு மலையகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியின் மந்த நிலைக்குக் காரணமென பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டு, கல்வி மான்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தோட்டத்து பிள்ளை பராமரிப்பு கடமை தங்கள் ஏகபோகப் பொறுப்பு என அடம் பிடிக்கும் டிரஸ்டுக்கு, சிறு குழந்தைகளின் பராமரிப்பும், முன்பள்ளிக் கல்வியும் ஒரே கூரையில் நடத்த முடியாது என எடுத்துக் காட்டினால் அதனைக் கருத்தில் கொள்ளாது, தோட்டங்களில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன்பள்ளி ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புக் காட்டி நிர்வாகத்திற்கும், ஏழைத்தொழிலாளிகளுக்கும் முன்பள்ளி நாம் நடத்துகிறோம் என ஏமாற்றுகிறார்கள். முன்பள்ளிக்கு அனுப்பும் சிறுவர்களின் தாய்க்கு வேறு சிறு வயது குழந்தைகளும் இருந்தால் அக் குழந்தைகளைக் கவனிக்காது பழிதீர்க்கும் மனப்பான்மையில் பிள்ளை பராமரிக்கும் தாதிமார்கள் நடந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் வரவு குறைந்துவிட்டால் தங்களது தொழிலுக்கு பங்கம் வந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. உண்மையில் தொழில் வாய்ப்புக்காக இவர்கள் தொழிலை செய்கிறார்கள். பிள்ளை பராமரிப்பு தம் கையிலிருந்தால் வெளி நாட்டு நன்கொடைகளைக் பெறலாம் என எண்ணுகிறது டிரஸ்ட் முன்பள்ளி வந்துவிட்டால் புதுத் தொல்லை GT 6öT நினைக்கிறது நிர்வாகம், பாதிக்கப்படுவது ஏழைத் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி வளர்ச்சியே.
2.47 தோட்டத் தொழிலாளர் குடிமனை கூட்டுறவு சங்கம்
இது 1993ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோட்டங் களில் நிலம், ஏனைய சேவைகள் தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்காது காலப்போக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் கெளரவ தொண்டமான் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல பயிற்சி
57

Page 30
கீத பொன்கலன்
நிலையங்கள் தாபிக்கப்பட்டன. பலருக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. பெருந்தோட்ட வீடமைப்பு திட்டங்கள் இதன் மூலம் செய்யப்பட வேண்டுமென சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால் தோட்டங்களில் பலதரப்பட்ட காரணங்களால் இக்கூட்டுறவுச் சங்கம் நல்ல முறையில் இயங்கவில்லை. உத்தியோகத்தர்களுக்கு மட்டும் பெரும் பணம் செலவு செய்து பயிற்சி அளிக்கப் பட்டது. தொழிலாளர்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதற்காகப் பணியாளர்களை நியமித்து அதன் நோக்கம் செயல்பாடு பற்றி விளக்கம் போதியளவு கொடுக்கப்படவில்லை. தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே அங்கத்தவர்களாக இருப்பதால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆவணங்களைப் பேணுவதில் மொழி ஒரு தடையாக இருக்கிறது. தோட்ட நிர்வாகத்திற்கே கூட்டுறவுச் சங்க உயர் பதவிகள் கொடுக்கப் படுவதால் கம்பெனியின் கட்டுப்பாடுக்கு உட்படுகிறது. தோட்ட கட்டிட வேலைகள் வெளியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் (கொந்தரப்பு) கொடுக்கப்படாது கூட்டுறவுச் சங்கத்திற்கே கொடுக்கப்பட வேண்டும்.
அபிவிருத்திக்கு சமூகத்தின் பங்களிப்பு முக்கியம். சமூகத்தின் அங்கத்தவர்கள் வலுவூட்டப்பட வேண்டும். அறிவும், ஆற்றலும் மேம்படுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புக்கு ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்து உழைக்கும் வர்க்கமாக அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே இவர்களை தங்கி நிற்கும் மனநிலைக்குத் தள்ளியது. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. கல்வி அறிவும் அரசியல் உணர்வும் இன்றைய யதார்த்த நிலையை இவர்களுக்கு உணர்த்தக் கூடிய தாக உள்ளது. இப்பொழுது இவர்கள் தோட்டத்தின் 1ங்காளிகள். தோட்டத்தை நிர்வகிப்பதில் பங்குகொள்ள வேண்டியவர்கள். தோட்ட நிர்வாகத்திடம் உரிமையைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள். டிரஸ்ட் பல சமூகப்பங்களிக்கும் வேலைத் திட்டங்களை பெருமளவு நன்கொடை நிறுவனங்களின் உதவி யுடன் நடைமுறைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் போதிய பலன் கிடைக்கவில்லை. காரணம் நடைமுறைப்படுத்து வதில் உள்ள தவறான அணுகுமுறையும், சமூகத்தின் மொழியை
58

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சரிவர அறியாத பணியாளர்களின் அசமந்தப் போக்கும், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பங்கினை உதாசீனம் செய்யும் டிரஸ்ட்டின் தான் தோன்றித்தனமான போக்குகளாகும்.
2.4.8 சமூக மேம்பாட்டிற்கு இடப்பட்ட முதலிட்டின் பலன் வறுமையா?
வெளிநாட்டு உதவி வழங்கும் முகவர்களின் முதலீடு 1978 - 1998 வரை 21 ஆண்டுகளில் 10 மில்லியன் அமெரிக்க டொல ராகும். இவற்றை விட சர்வதேச தேசிய உள்நாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள், தோட்ட சமூகத்தின் பங்களிப்பு. கம்பெனி களின் பங்கு சேர்கிறது. ஆனால் தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்ததாக இல்லை. வறுமையை நோக்கிய பயணமாக இருக்கிறது. காரணம் என்ன? சமூக மேம்பாட்டை வழிநடத்து வதில் உள்ள குறைபாடே இத்தனை செயல் திட்டங்கள் இருந்தும் ஒரு முழுமையான தெளிவான கொள்கைத் திட்டம் வகுக்கப்படவில்லை. சமூக மேம்பாட்டுக்கான ஒரு தேசிய திட்டம் இல்லை. தோட்டக் கம்பெனிகள் இலாபத்தில் தான் கண்ணும் கருத்துமாக உள்ளன. அரசாங்கம் தேயிலை உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக அளிக்கும் சலுகையை தங்கள் இலாபத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் - தொழிலாளர் களுக்கு இதனை சேரவிடாது சமூக மேம்பாட்டு செயல்பாடு களின் தொழிலாளர்களின் உழைப்பையும், தங்கள் இலாபத் தையும் தான் தேடுகிறார்கள். சமூக மேம்பாட்டிற்கு பொறுப் பான டிரஸ்ட் கம்பெனியின் கைப்பொம்ைேமயாக இருக்கிறது. தோட்டத் தொழிலையும், தொழிலாளியையும் பிணைத்துப் பார்க்கும், அடிமை கொள்ளும் மனநிலை மாற்றப்பட வேண்டும். சமூக நேயத்துடன் சிந்தித்துச் செயல்படுபவர்கள் சமூக மேம் பாட்டின் பணியாளராக இருக்க வேண்டும்.
பெருந்தோட்டத்துறையில் நேர்மையான ஈடுபாட்டுடன் அரசாங்கம், கம்பெனிகள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் சமூக மேம்பாட்டினை வழிநடத்திச் செல்ல வேண்டும். அது தேசியத் திட்டமாக உருவாக வேண்டும்.
வீரகேசரி 18. 05. 2003, 01. 06. 2003
XX XX K0 09 0. 0x- {
Κ &P
Ο

Page 31
2.5 நிறுவனமயமாக்கப்பட்ட தோட்டங்கள் கிராமமயமாவது எப்போது?
பெருந்தோட்டத்துறை எப்பொழுது தேசிய நீரோட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றதோ அன்றுதான் தோட்டத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கெடுபிடிகளிலிருந்து, விடுபட்டு சுதந்திரமாக ஏனைய சமூகத்தினரை போல், சமத்துவமாக வாழ முடியும். ஆனால் இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவர்கள், தோட்ட நிருவாகம், டிரஸ்ட், ஒரு சில பாரம்பரிய தொழிற் சங்கங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், பாரம் பரிய புத்தி ஜீவிகள். இவர்கள், தொழிலாளர் நன்மைகளுக்காக குரல் கொடுக்காமல்,தங்களின் சுய நலன்களுக்காகவும், தொழிலாளர்களை தொடர்ந்தும் சுரண்டி, அவர்களுடையபணத்தில், சுகபோகம் அனுபவிப்பதற்காகவும் இப்பெருந் தோட்ட துறை கட்டமைப்பை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மேலும் இந்த மக்கள் இந்த அமைப்புக்களில் தங்கி நிற்கின்ற மனப் பான்மையினை உருவாக்க எத்தனிக்கின்றார்கள். ஆனால் இன்றைய இளைய சமூகம், இதற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பது வரவேற்புக்குரிய அம்சமாகும்.
உழைப்பவர்களை பலாத்காரமாக கட்டுப்படுத்துகின்ற உற்பத்தி உறவு மனித உரிமைகளை மறுக்கும் உறவாகும். இன்று பெருந்தோட்ட முகாமையின் மூலதனம் உழைப்பின் மீதான சுரண்டல் மூலமாக தொழிலாளர்கள் மீது கட்டுப்பாடுடைய நிறுவனமாக்கப்பட்டுள்ளது. உழைப்பு மனித வாழ்வுக்கு இன்றி
60

இருபத்தோராம் நூற்றாண்டில் .
யமையாததாகும். ஆனால் உழைப்பினால் நிர்ணயிக்கப்படும் சமூக உறவு சுரண்டல் அற்றதாக சுதந்திரத்தைப் பேணுவதாக இருக்க வேண்டும். மூலதனத்துக்கும், உழைப்புக்கும் உள்ள உறவில் ஒற்றுமை இருந்தால் தான் சுதந்திரம் பிறக்க முடியும். ஆனால் பெருந்தோட்டத்துறை ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை ஒரு மாற்றமும் அடையவில்லை. அதன் அமைப்பு செயல்பாடு யாவுமே உழைப்பவர்களை பலாத்காரமாக கட்டுப்படுத்துகின்ற உற்பத்தி உறவின் களமாகவே உள்ளது. இந்தக் கட்டமைப்பில் மாற்றத்தை உருவாக்க முனையும் போது விட்டுக் கொடுக்காமல், தொழிலாளர்களுடன் சம்பந்தமான சகல ஈடுபாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத் திருக்க வேண்டுமென்பது இந்த அமைப்பினை பேணிக்காப் பவர்களின் எண்ணமாகும். இதனால்தான் நிர்வாகத்தால் கருவிலிருந்து கல்லறைவரை பெருந்தோட்ட வாழ்மக்கள் முகாமையாளர் (துரை) கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அணுகு முறையில் மாற்றம் 1975ஆம் ஆண்டு தோட்டங்கள் தேசிய மயமாக்கப்படும் போது ஏற்படப் போகிறது, ஒவ்வொரு தோட்டமும் ஒவ்வொரு கிராமமாகப் போகிறது என பல மட்டங்களிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தக் கட்டமைப்பு இப்படி இருப்பதை விரும்பும் நிர்வாகம், இதனை நடைமுறைப் படுத்துவதற்கு என்றுமே தடையாக இருக்கிறது. காரணம் இப்போது உள்ள முகாமைத் துவ முறை அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. உதாரணமாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட போது அந்த உத்தியோகத்தர்கள் தங்கள் மூலமாக வேலை செய்ய வேண்டு மென்றே விரும்பினர்.
இந்தத் துரைத்தனத்தை வலுப்படுத்துவதற்கு ஒரு மலையக தொழிற்சங்கவாதியும், அரசியல் வாதியுமான ஒருவர் தோட்டத் துரைமாருக்கு சமாதான நீதவான் பதவியை வாங்கித்தர ஆவன செய்வதாக கூறியுள்ளார். 99% வீதமான சிங்கள துரைமாரிடம் தோட்டத் தொழிலாளர் சத்தியக் கடுதாசி வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மலையகத்தில் படித்த இளைஞர் யுவதி களுக்கு இந்த பதவி கிடைக்க வழி செய்யாது துரைத்தனத்தை மேலும் வலுப்படுத்த முனைவது எதற்காக என்று புரியவில்லை.
6

Page 32
கீத பொன்கலன்
2.5.1 கிராமசேவகர் நியமனம் பூரண வெற்றியளிக்காமைக்கு உரிய காரணம்
எத்தனையோ வருட போராட்டத்திற்குப் பின்பு 10 தமிழ் கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் தன்னிச்சை யாக எதனையும் செய்ய முடியாமல் இருப்பதற்கு உள்ள காரணங்களில் முக்கியமானதொன்று இவர்கள் பல விடயங் களுக்கு துரையில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்ப தாகும். மாறாக பெருந்தோட்ட அமைச்சு நாட்டில் உள்ள எல்லா அமைச்சின் செயல்பாடுகள் பெருந்தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் இன்றும் முகாமைத்துவ சிந்தனையுடைய டிரஸ்ட் பிராந்திய இயக்குனர் sco Giff Plantation industry is such that you can't divide the industry and workers. 915ITG) g/ GL ICD55G5ITL Lad fibuggg துறையில் பெருந்தோட்டத் தொழிலையும், தொழிலாளியையும் பிரிக்க முடியாது எனக் கூறுவது இந்தக் கட்டமைப்பு உடையக் கூடாது என்ற சிந்தனை பெருந்தோட்ட சமூக மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் எனக் கூறிக்கொள்ளும் - முகாமைத்துவத்தின் அடிவருடியாக உள்ளவர்களது நெஞ்சில் குடி கொண்டிருப் பதைக் காட்டுகிறது. இக்கருத்து நிலைப்பாடுகள் தோட்டங்கள் கிராம மயமாக்கப்படுவதற்கு முதல் எதிரியாக இருப்பது முகாமைத்துவம் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. இதி லிருந்து விடுபட வேண்டுமாயின் அரசியல்வாதிகள் - பாராளு மன்ற உறுப்பினர்கள் இந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவு செய்ய ஆவன செய்ய வேண்டும்.
பிராந்திய இயக்குனர் கூறுவது உண்மையானால் கிட்டத் தட்ட 2 இலட்சத்து ஐம்பதினாயிரம் சிறு தேயிலை உற்பத்தி யாளர்கள் எந்த கட்டமைப்புக்குள் வருகிறார்கள்? இவர்கள் கம்பெனியிலும் பார்க்க குறைந்த ஹெக்டயரில் கூடிய உற்பத்தியை உருவாக்குகிறார்கள். ஆகவே பெருந்தோட்டத் துறை வேறு தொழிலாளர் வேறு என்று நிருபிக்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தின் நிதி உதவியில் வாழுகின்ற டிரஸ்ட் நிறுவனம் கம்பெனிகளின் அடிமைகளாக தொடர்ந்து செயல்படுவதற்கு கம்பெனிகளுக்கு சார்பாக தங்கள் கருத்துக்களை முன் வைப்பார்களே தவிர தொழிலாளர்களுக் காக அல்ல. டிரஸ்டின் பிராந்திய இயக்குனர் ஒருவர் மலை யகத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆரோக்கியமான வாழ்வின் திறவு
62

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கோல் என வீரகேசரியில் 26.10.2002ць ஆண்டு கூறியிருக்கிறார். இவர் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் அல்ல. இவர் நுவரெலியா டிரஸ்ட் நிறுவனத்தின் பணிப்பாளர். இவர் Daily News 27.02.2003 பத்திரிகையில் தொழிலாள குடும்ப சமூக நலத்துக் காக டிரஸ்ட் நிறுவனத்தால் ரூபா 212 மில்லியன் செலவிடப் படுவதாகக் கூறியுள்ளார். அத்தோடு ஒரு சில அரசு சரர்பற்றை நிறுவனங்கள் தங்களுக்கு தனித்துவம் இல்லாமல் / வில்லங்க மாக (enCroached) உட்புகுந்து வேறு நோக்கத்தோடு தமிழ் பத்திரிகைகளில் கீழ்த்தரமான முக்கியத்துவம் (Cheap publicity) பெறுவதற்கு பாடுபடுகிறார்கள் எனவும் 1978ம் ஆண்டு தொடக்கம் பலவித முன்னேற்றமான சமூகநலத் திட்டங்களோடு ஈடுபடுவது பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். அத்தோடு துரைமாரிடம் தாங்கள் செய்கிற வேலையை பகிரங்கப்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் டிரஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது 1992. அது செயல்படுத்தப்பட்டது 1993 நடுப்பகுதியில். இந்த டிரஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது தொடக்கம் இன்று மட்டும் ஒரே ஒரு தமிழர் என்ற வகையில் இவர் மட்டுமே ஒரு பிராந்தியப் பகுதியில் முக்கிய பதவியை வகிக்கின்றார். மற்றைய எல்லோரும் பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்தவர்கள். ஏன் இவர் மட்டும் டிரஸ்ட் நிறுவனம் சார்பாக பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிடவேண்டும். இதற் காக தனிப்பட்ட பலாபலன்கள் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. டிரஸ்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது. பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வேலை வாய்புக்கள் வழங்கவா? ஒரு பிராந்தியத்தில் இவருக்கு பதவி கொடுக்கப் பட்டது டிரஸ்டின் செயற்பாடுகளை சப்பைகட்டு கட்டுவதற்கா?
2.5.2 சமூக மேம்பாடுகளுக்கான மாற்று முறைமைகள்
1. ஒவ்வொரு தோட்டத்திலும் ஆயிரம் குடும்பங்கள் கொண்ட ஒரு மலையகத் தமிழ் கிராமம் உருவாக வேண்டும். அங்கே அடிப்படைத் தேவைகளான சுகாதாரம். மருத்துவம், நீர் விநியோகம் அனைத்தும் பெற வழிகாண வேண்டும். அவைதோட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அதிகார சபைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றைப் பதிவு செய்ய உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் நியமிக்க படவேண்டும்.

Page 33
கீத பொன்கலன்
3. இந்த புதிய கிராமங்களில் நேரடி தபால் சேவை நடை
பெற வேண்டும்.
4. பல்வேறு அமைச்சுக்களால் காலத்துக்கு காலம் உருவாக்கப் பட்டுள்ள சமூகநலத்திட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், வரட்சி நிவாரணங்கள் ஆகியவை இவர்களுக்கு நேரடி யாக வந்தடையவேண்டும்.
5. சமூர்த்தித் திட்டம் பெருந்தோட்ட மக்களுக்கு தனியாக
ஏற்படுத்தப்படவேண்டும். 6. ஏனைய தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் கூட்டப்படும் போது பெருந்தோட்டமக்களுக்கும் கூட்டப்படவேண்டும். 7. தோட்டங்களில் உள்ளதரிசு நிலங்களை வெளியார்களுக்குக் கொடுக்காமல் தோட்டத்து வாழ் மக்கள் சுயதொழில் செய்வதற்குக் கொடுக்கப்பட வேண்டும். 8. பெருந்தோட்டத்துறையின் தொழில்நலம் கருதி குறைக்கப் பட்ட வரியினால் ஏற்பட்ட பயன் தொழிலாளர்களின் சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். 9. சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் அனைவரும் அரசாங்க
அமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். 10. பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு அதிகார சபை (Estate Social Development Authority) 676örp g-60) u?6ör 6yp தோட்ட கூட்டுறவு வீடமைப்பு திட்டங்கள் விஸ்தரிக்கப் பட வேண்டும். வீதிகள், மின்சார விநியோகம், தண்ணிர் விநியோகம், ஏனைய எல்லா சமூக நலப்பணிகளும் இச் சபையின் கீழ் வரவேண்டும். 11. புதிய கிராமங்கள் சமூக சேவை நிறுவனங்கள். விளை யாட்டரங்கம் முன்பள்ளி, வாசிகசாலைச் சந்தை கட்டிட தொகுதி, சமூக பொது நிலையங்கள், மற்றும் மக்களின் நுகர்வுகளுக்கான நிலையங்கள் அமைப்பதற்கு காணி ஒதுக்கப்படவேண்டும். 12. தொழிலாளர்களுக்கு அடிப்படை மாதச்சம்பளமாக
ஆகக் குறைந்தது ஆறாயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். இன்று பெருந்தோட்டங்களில் தோட்டத்துரையே, அரசனாக - நாட்டின் தலைவர் - ஜனாதிபதியாக இருக்கும் கட்டமைப்பே உள்ளது. 1971ம் ஆண்டுகளுக்கு முன் தோட்டத் துரையின் எழுத்து மூல அனுமதியுடனேயே தொழிற்சங்க வாதிகள் செல்ல
64

இருபத்தோராம் நூற்றாண்டில் .
முடியும். இன்று கூட சமூக சேவையாளர்கள் தோட்டத்துக் குள் சென்றால் எழுத்து மூலம் அனுமதி பெறாவிட்டாலும், அறிவித்துவிட்டு வரவில்லையே என அச்சுறுத்துகிறார்கள். இருபத்தொராம் நூற்றாண்டிலும் தோட்ட நிருவாகம் தென்னாபிரிக்காவிலிருந்த இன ஒதுக்கக் கொள்கை (Aparthcid) என்னும் அணுகு முறையையே எமது துரைமார் கையாளும் போது, மலையகத்தில் புதிய நெல்சன் மண்டேலா பிறப்பாரா? தேவை ஏற்படும் போது பொதுவிடுமுறை நாட்களில் திடீரென அறிவித்து அடிமை போல வேலைக்கு அழைக்கிறார்கள். ஆகவே இந்த திறந்த சிறைச்சாலையிலிருந்து விடுபட, தொழில் அடிமை விலங்கு அறுபட, நிறுவனமாக்கப்பட்ட தோட்ட சமூக கட்டமைப்பு உடைந்து தோட்டங்கள் கிராம மயமாக்கப்பட வேண்டும். அந்நாளே தோட்டத் தொழிலாளியின், மலையக சமூகத்தின் பொன்னாளாகும்.
இந்த அத்தியாயம் “மலையகம் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பின் கீழ் வீரகேசரி வார வெளியீடுகளில், 20.4.2003, 27.4.2003, 4.5.2003, 11.5.2003, 18.5.2003, 1.6.2003, 8.6.2003 ஆகிய தினங்களில் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில பகுதிகள் வெளிவரவில்லை. அவைகள் இக்கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன.
AV 9 8 0 8, 8. %e Qe o* *Ye Qe
உணரப்பட்ட தேவையோடும் உந்து சக்தியோடும் செலுத்தப்படும் அம்பே - எட்ட வேண்டிய இலக்கை எட்டும்.
- ம. திருவள்ளுவர்
65

Page 34
கீத பொன்கலன்
66
கலாச்சார அடிப்படையில்
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் - கருத்தியலின் நோக்கம் இலாபம் சம்பாதிப்பது மட்டுமல்ல. வலு விழந்தோரின் எண்ணங்களை வெற்றி கொள்வதே (Conquest of the conciousness of the oppressed). எண்ணங்களைக் கொள்ளையிடுவது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தாராளமயம், தனியார்மயம், உலகமயம் - கருத்தியலைப் பிரபலப் படுத்துவோர் மிக நன்றாக உணர்ந்துள்ளனர். முதலாளித் துவ கலாச்சார மேலாண்மையை, ஆதிக்கத்தை நிலை நிறத்த பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
கலாச்சாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் போது அந்தோனியோ கிராம்சி இவ்வாறு குறிப்பிடுகிறார், *Common sense is the uncritical and largely unconscious way in which a person perceives the world” (James David and John Desrochers, “Dimensions of Globalization”,பக்.1-12) தனிநபரின் சமூக அரசியல் செயல்பாடுகள் இத்தகைய பொது அறிவின் தாக்கத் தின் வெளிப்பாடே இந்த பொதுஅறிவு உலகைக் கைப்பற்றி பொய்மையான வேறோர் உலகை அறிமுகம் செய்வதே உலகமயமாக்கலின் நோக்கம். இதன் வெளிப்பாடாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
நுகர்வுக் கலாச்சாரம் கலாச்சாரத்தை சந்தைப் பொருளாக்குவது
தொடர்பு சாதனக் கட்டுப்பாடு
அறநெறியற்ற உலகை உருவாக்குவது
- ஜோ சேவியர், உலகமயமாக்கல் - நிழலும் நிஜமும், பக். 56.

அத்தியாயம் - 3
மலையகமும் அரசியலும்
3. 1
3. 2
3.3
3.4
3.5
மலையக தேர்தல் களம் உணர்த்தும் உண்மைகள்
மலையகமும் மயிலும்
பத்தாவதும் பதினொராவதும் பொதுத்தேர்தல் பெறுபேறு களிலிருந்து தமிழ்மக்கள் கற்க வேண்டியவை. பெரும்பான்மைக் கட்சிக்ளின் வியூகத்திற்குள் சிக்கி மலையகத்தின் தமிழ் சமூகத்திற்கு துரோகம் இழைக்கும் செயல் தொடரக்கூடாது.
மலையகத் தமிழரின் பிரதி நிதித்துவத்தைப் பொறுத்தவரை நுவரெலியாவில் மாத்திரம் அக்கறைக் காட்டுவது உகந்ததல்ல.

Page 35
68
அத்தியாயம் - 3
மலையகமும் அரசியலும்
1994ம் ஆண்டு நடந்த பத்தாவது பொதுத் தேர்தல் பதினேழு வருட கால ஐ.தே. கட்சி ஆட்சிக்கு எதிராக ஒரு மக்கள் அலை உருவாக்கப் பட்டது. சந்திரிகா அம்மையார் சமாதானத்திற்கும், இலங்கை பொருளாதாரத்திற்கும் புதிய முகம் கொடுப்போம் என்ற வாக்குறுதியுடன் தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.இத்தேர்தலில் பெருந் தோட்ட மக்களின் வாக்குகள் பல வகையிலும் சிதறடிக்கப்பட்டதால் சனத்தொகைக்கேற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை. அத்தோடு மலையக அரசியல்வாதிகள் பேரம் பேசிதங்கள் பதவிகளை பெற்றுகொண்டார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளோ தூக்கி எறியப்பட்டது.

3.1 மலையக தேர்தல் களம் உணர்த்தும் உண்மைகள்
நடந்து முடிந்த 10 ஆவது பொதுத்தேர்தலில் அநேக மானோர் இலங்கையின் அரசியல் நடப்புகளில் பல முக்கிய திருப்புமுனைகளை எதிர்பார்த்திருந்தனர். சிறுபான்மையினர் குறித்த நிலைப்பாடும் இதில் மிகவும் முக்கியத்துவம் பெற் றிருந்தது. Ab
தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கிளம்பிய அரசியல் சர்ச்சைகள் இலங்கை அரசியலில் சிறுபான்மையினரின் முக்கியத்துவம் எள்ளி நகையாடப்பட்டும், பின் தள்ளப்பட்டு விடும் என்ற சந்தேகத்தைக்கூட தோற்றுவித்திருந்தது.
ஆனால் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள், தேர்தலில் சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்து விட்டன.
இந்நிலையில் மலையகத்தை பொறுத்தவரை சிறுபான்மை இன வாக்குகள் எவ்விதத்தில் வழிநடத்தப்பட்டன, எவ்வித பலனை இறுதியாக அளித்துள்ளன என்பன குறித்த தெளி வான விளக்கம், மலையக மக்களின் எதிர்கால நடவடிக்கை களுக்கு ஆதாரமாக விளங்கும்.
இந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் குறித்து தொகுதி வாரியான கண்ணோட்டம் அவசியமாகிறது. பல அமைப்புகளின் சார்பாக 32 தமிழ் வேட்பாளர்கள் அத்தேர்தல் களத்தில் இறங்கினர்.
3.1.1 நுவரெலியா மாவட்டம்
இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்
தொகை 3,86,669 ஆகும். இதில் வாக்களித்தவர்களின் தொகை
的

Page 36
கீத பொன்கலன்
3,17,644 ஆகவும், நிராகரிக்கப்பட்ட வாக்குகள், 21,498 ஆகவும் இருந்தன. இதிலும், குறிப்பாக நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதிகளில் 13,368 வாக்குகள் நிராகரிக்கப் பட்டிருந்தன. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட 55 வேட்பாளர்களில் 17 பேர் தமிழ் வேட்பாளராவர். இந்த 17 பேரில் 11 பேர் சுயேச்சையாகவும், 3 பேர் பொது ஜன ஐக்கிய முன்னணியிலும், 3 பேர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் போட்டி யிட்டனர். இதில் சுயேச்சைக்குழு (1) இன் சார்பில் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மூவரும் வெற்றிபெற்றனர்.
மலையக மக்களின் மொத்த வாக்குகள் 1,80,000 ஆகும். ஒருவருக்கு மூன்று விருப்பு வாக்குகள் என்ற கணக்கின்படி மொத்த வாக்குகள் 5,40,000 ஆகும். ஆனால் வேட்பாளர்கள் பெற்ற மொத்த விருப்பு வாக்குகள் 3,37,897 ஆகும்.
எனவே மீதி, நிராகரிக்கப்பட்டவையாக அளிக்கப்படாத வையாக, தமிழ் வேட்பாளரை தவிர்த்து மற்றவர்களுக்கு சென்றடைந்தவையாக கருதவேண்டியுள்ளது.
1947ஆம் ஆண்டு 5 பேரை தெரிவு செய்த அனுப்பிய இதே தேர்தல் தொகுதி இம்முறை 4 பேரை தெரிவு செய்யும் நிலைக்கு வந்துள்ளது. மலையக மக்கள் அதிகமாக செறிந்து வாழும் இம்மாவட்டத்தில், இப்போதுள்ள தேர்தல் முறையின்படி 5 அல்லது 6 பேரை தெரிந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் 4 பேரை மட்டும் தெரிந்தெடுக்க முடிந்ததற்கு. மலையக மக்களின் வாக்குகள் மூன்று கூறாக பிரிபட்டதே காரணமாகும். தமிழ் வேட்பாளர்கள் ஒரு தனிக்கட்சியின் கீழ் தேர்தலை சந்தித்திருந்தால் அவர்களின் பலம் அதிகரிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.
அத்துடன் இத்தேர்தல் மாவட்டத்தில் எல்லாத் தொகுதி களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதலான வாக்குகளை பெறுவதற்கு தமிழ் வாக்குகள் உதவியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
3.1.2 பதுளை மாவட்டம்
இம்மாவட்டம் 8 ஆசனங்களைக் கொண்டது. இங்கே போட்டியிட்ட 6 அமைப்புகளில், மூன்று அமைப்புகள் சார்
70

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பாக, அதாவது ஐக்கிய தேசியக் கட்சியில் இருவரும், சிறீலங்கா முற்போக்கு முன்னணியில் ஒருவரும் சுயேச்சைகுழு (1) இல் இருவருமாக 5 தமிழர்கள் போட்டியிட்டனர்.
இந்த மாவட்டத்தில் உத்தேச தமிழ் வாக்குகள் 85,000 ஆகும். ஒருவருக்கு 3 விருப்பு வாக்குகள் என்ற ரீதியில் மொத்த வாக்குகள் 2,25,000 ஆகும். ஆனால் 5 தமிழ் வேட்பாளர்களும் பெற்ற மொத்த விருப்பு வாக்குகள் 81,394 ஆகும்.
இம்மாவட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியே 5 ஆசனங் களைப் பெற்று முன்னணியில் நிற்கிறது. மீதி 3 ஆசனங்களும் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு சென்றன. மகியங்கனை தேர்தல் தொகுதியில் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. பதுளை மாவட்டத்தில் பொ.ஜ.ஐ.மு. ஒரு தமிழ் வேட்பாளரையும் நிறுத்தவில்லை என்பது குறிப் பிடப்பட வேண்டியதொன்று.
அதே வேளையில் பெருந்தொகையான தமிழ் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன், அநேக வாக்குகள் பொ.ஜ.ஐ. முன் னணிக்கு போடப்பட்டதும். இன்னும் பல தமிழ் மக்கள் தேர்த லில் கலந்து கொள்ளவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1989 ஆம் ஆண்டு தேர்தலில் இம்மாவட்டத்தில் ஒருவரும் தெரிவாகவில்லை. ஆனால் ஐ.தே. கட்சி பிளவுபட்ட காரணத் தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஒரு தமிழர் நியமிக்கப் பட்டார். 1947இல் நடந்த தேர்தலில் இம்மாவட்டத்தில் இரண்டு அங்கத்தினர் தெரிந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த நிலை கூட இதுவரை ஏற்படுத்த முடியாததற்கு தமிழ் வாக்குகள் பிரிவுபட்டதே காரணமாகும். இம்மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் ஒரு தனியான ஏற்பாட்டின் கீழ் ஒன்றுபட்டு போட்டியிட்டிருந்தால் மலையக மக்களின் முழுப்பலத்தையும் பிரதிபலித்திருக்க முடியும்.
3.1.3 கண்டி மாவட்டம்
மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மூன்றாவது
இடத்தை வகிக்கும் கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 6 அமைப்புகள் தேர்தல் போட்டியில்
T

Page 37
கீத பொன்கலன்
ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஐ.தே.க. சார்பில் ஒரு தமிழரும் பொ.ஜ.மு. சார்பில் ஒரு தமிழரும், சுயேச்சைகுழு (2) இல் ஒரு தமிழருமாக மூவர் போட்டியிட்டனர்.
இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 72,000 தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை விருப்பு வாக்கு முறையின்படி 2,16,000 ஆக உயர்கின்றது.
ஆனால் தமிழ் வேட்பாளர் மூவரும் பெற்ற மொத்த வாக்குகள் 42,744 ஆகும். மீதிவாக்குகள் அளிக்கப்படாதவை யாகவும், நிராகரிக்கப்பட்டவையாகவும், தமிழரல்லாத மற்ற அங்கத்தவர்களுக்கு அளிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.
இம்மாவட்டத்தில் தமிழ் வாக்காளர் அதிகமாக இருந்தும், 12 அங்கத்தினரில் ஒரே ஒரு தமிழரே தெரிவு செய்யப் பட்டுள்ளமை ஒவ்வொரு மலையக தமிழ் வாக்காளரையும் சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சியாகும்.
இம்மாவட்டத்தில் 11 பிரிவுகளில் ஐ.தே. கட்சியும், இரண்டு பிரிவில் பொ.ஜ. முன்னணியும் வெற்றியீட்டியுள்ளதுடன் ஐ.தே. கட்சி 7 ஆசனங்களையும் பொ.ஜ. முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளின் வெற்றிக்கு மலையக தமிழ் மக்களது வாக்குகள் பெரிதும் உதவியுள்ளன.
தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல், ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்டிருந்தால் மூன்று தமிழ் அங்கத் தினரை மலையகத்தமிழ் மக்களின் நலனை கவனிப்பவர்களாக, தங்கள் தனித்தன்மையை இழக்காமல் தெரிவு செய்திருக்கலாம்.
3.1.4இரத்தினபுரி மாவட்டம்
தமிழ் மக்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் அடுத்து குறிப்பிடத்தக்கது இரத்தினபுரியாகும். இந்த மாவட்டத் தின் தீர்ப்புகள் ஏனைய மலையக மக்கள் வாழும் மாவட்டங் களுடன் ஒப்பிடும் போது ஒரு திருப்புமுனையாக தெரிகின்றது. இங்கு 30,000 தமிழ் வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள் ளனர். விருப்பு வாக்குகள் என்பதன் அடிப்படையில் 90,000 வாக்குகள் இருக்கின்றன. ஏழு அரசியல் அமைப்புகள் போட்டி யிட்ட போதிலும் ஒரு தமிழ் வேட்பாளரே ஐ.தே. கட்சியின்
72

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சார்பில் போட்டியிட்டார். இவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 19924 மாத்திரமே.
இம்மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 10 ஆசனங்களில் 6 பொ.ஐ.ஐ. முன்னணிக்கும் 4 ஐ.தே. கட்சிக்கும் கிடைத்தன. இங்குள்ள 8 பிரிவுகளில் ஐ.தே.க. 3 பிரிவுகளில் முன்னின்றாலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியவில்லை.
பொ.ஜ. முன்னணி சார்பில் நின்று போட்டியிட்ட வேட் பாளர்களில் வாசுதேவ நாணயக்கார 62,989 வாக்குகளைப் பெற்று மிகக்கூடுதலான வாக்குகளைப் பெற்றவராகிறார். அவர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தமை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு திருப்புமுனை என்றே கொள்ளலாம்.
இந்த மாவட்டத்தில் மலையக தமிழ் மக்களின் சார்பில் ஒருவருமே தெரிவு செய்யப்படாமைக்கு காரணமாக தமிழ் மக்களின் வாக்குகள் பிளவுபட்டதையே குறிப்பிடலாம்.
அதே சமயம் பலர் வாக்களிப்பில் பங்கு பற்றாமையும், பலவாக்குகள் செல்லுபடியாகாமல் போனதையும் காரண மாக கூறலாம். தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு, ஒரு குறிக் கோளுடன் போட்டியிட முன் வராததன் காரணமாக மலையக மக்களுக்கு வந்திருக்கக்கூடிய இரண்டு தமிழ் அங்கத்தினர் இழப்பிற்கு காரணமாகின்றனர் என்றே கூறிவேண்டும்.
3.1.5 மாத்தளை மாவட்டம்
இந்த மாவட்டத்தில் 4 தேர்தல் பிரிவுகள் உள்ளன. இதில் இரண்டு பிரிவுகளில் பொ.ஐ.ஐ முன்னணியும், இரண்டு பிரிவு களில் ஐ.தே. கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாவட்டத் திற்கென ஒதுக்கப்பட்ட 5 அங்கத்தவர்களில் 3 பேர் பொ.ஜ. முன்னணியையும், 2 பேர் ஐ.தே.கட்சியையும் சேர்ந்தவராவர்.
இந்த மாவட்டத்தில் 4 அமைப்புகள் போட்டியிட்டன. இங்கே மலையக தமிழ் வாக்காளரின் தொகை 25,000 ஆகும். மூன்று விருப்பு வாக்குகளின்படி இதன் முழு எண்ணிக்கை 75,000 ஆகும். பொ.ஜ.மு. ஐ.தே.க, பூணூல.மு.கா. சார்பாக தலா ஒருவர் வீதம் 3 தமிழ் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டனர்.
73

Page 38
கீத பொன்கலன்
இவர்களில் ஒருவர் பெண் (பூg.ல.மு.கா) என்பதும் குறிப் பிடத்தக்கது. இவர்களுக்கு மொத்தம் 14,447 வாக்குகளே கிடைத்துள்ளன. எனினும் ஒருவர் தானும் வெற்றி பெறவில்லை. இந்த மாவட்டத்தில் ஒரு தமிழர் தெரிவாகும் சந்தர்ப்பம் இருந்தும் தமிழ் மக்களது அறிவீனத்தினால் அது கைநழுவிப் போயுள்ளது.
3.1.6 கேகாலை மாவட்டம்
கேகாலை மாவட்டத்தில் 30,000 பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். விருப்பு வாக்குகளின் அடிப் படையில் இது 90,000 ஆக அதிகரிக்கிறது. இதன் பிரகாரம் கேகாலை மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் பலம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு சமனாக இருக்கிறது.
ஒன்பது பிரிவுகளைக் கொண்ட கேகாலை மாவட்டத்தில் பொ.ஜ.ஐ.மு. 6 இடங்களையும், ஐ.தே.க. 4 இடங்களையும் கைப் பற்றியுள்ளன. இரண்டு அரசியற் கட்சிகள் சார்பிலும் தலா ஒரு தமிழ் அபேட்சகர் போட்டியிட்டபோது, ஒருவர் தானும் தெரிவு செய்யப்படவில்லை. தமிழ் மக்களின் அநேகமான வாக்குகள் ஐ.தே. கட்சியை சேர்ந்த ஏனைய வேட்பாளருக்கு போடப் பட்டதே இதற்கு பிரதான காரணமாகும்.
கம்பஹா மாவட்டத்தில் ஒருவரும், கொழும்பில் மூவரும் மலைக மக்கள் சார்பாக போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெறமுடியவில்லை.
3.1.7 களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டம் 8 தேர்தல் பிரிவுகளை கொண் டுள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாக்காளர் தொகை 30,000 ஐ தொட்டு நிற்கிறது. இதன் பிரகாரம் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 90,000 ஆகும். மொத்தத்தில் 10 ஆசனங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் பொ.ஜ.ஐ. முன்னணி சார்பில் 6 பேரும் ஐ.தே. கட்சி சார்பில் 4 பேரும் தெரிவாகியுள்ளனர். ஆனால் இந்த இரு அமைப்பின் சார்பிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் ஒருவர் தானும் தெரிவு செய்யப்படவில்லை. சரியான திட்டமின்மையால் தமிழ்
74

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வாக்காளர்களின் வாக்குகள் சிதறிப் போனமையும், அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு வரக்கூடிய நன்மைகள் நழுவிப் போனதையுமே இது எடுத்துக்காட்டுகிறது.
3.1.8 ஏன் இந்த பின்னடைவு?
1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மலையகத்தில் இருந்து தமிழர் எவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஒருவரும், தேசியப்பட்டியலில் இருவருமாக மூவர் மட்டுமே அங்கத்துவம் வகித்தனர். ஐ.தே.க. இரண்டாகப் பிளவுபட்டதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடத்தை மேலும் இரு தமிழர்கள் மலையகத் திலிருந்து நிரப்பினார்கள்.
தற்போது நடந்து முடிந்துள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் மலையகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் எவரும் இடம்பெறவில்லை. நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்டங்களில் இருந்து ஐ.தே.க. சார்பில் 5 அங்கத்தவரும், சுயேச்சை அங்கத்தினர் ஒருவரும் தேசிய பட்டியலில் இருவரும் மொத்தம் 8 பேர் தேர்தல் மூலம் மலையகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒட்டு மொத்தத்தில் இத்தேர்தல் முடிவுகள் மலையகத்திற்கு ஒரு பின்னடைவாகவும், படிப்பினையாகவும் அமைந்துவிட்டது.
வீரகேசரி 28. 08. 1994
75

Page 39
3.2 மலையகமும் மயிலும்
மலையகத்தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அரசியல் அநாதைகளாக இருந்து படிப்படியாக அரசியலில் பங்குபெற, சூழல் மாறுபட்ட காரணங்களினால், மலையகத்தில் அரசியல் ஒரு முக்கியத்துவத்தை அடைகிறது. ஆனால் தொலை நோக்கற்ற எங்களுடைய பாரம்பரிய அரசியல், தொழிற்சங்க வாதிகளால் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டது மல்லாமல் இந்த வாக்குகளை இவர்கள், ‘வாக்கு வங்கி’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தார்களே யன்றி இந்த மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்று ஒரு நேர்மையான அணியின் கீழ் ஒன்று சேர்ந்தால்தான், மலையகத்தமிழ் மக்களுடைய அரசியல் வலுப்படுத்தப்படும் என்பதைப் புரிந்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இந்திய வம்சாவளி பேரணி அமைக்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.
நடந்து முடிந்த மாகாண சபைத்தேர்தல் பலருக்கும் பல விதமான அரசியல் பாடங்களை கற்றுத் தந்துள்ளது. “தென் னிலங்கை வாழ் தமிழ் மக்கள் தன்மானத்துடனும், தனித்துவத் துடனும் வாழவேண்டும் என்பதற்காகவே ஓரணியில் திரண் டுள்ளோம்” என தோகை விரித்தமயில் கற்ற பாடம் தான் என்ன? எதிர்காலத்தில் எப்படித் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளப் போகிறது? இந்த நோக்கில் எமது கண்ணோட்டத்தை இங்கே முன் வைக்கின்றோம்.
கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி மாகாண சபைத்தேர்தல் நடை பெறுவதாக இருந்ததை அறிந்ததுமே இ.தொ.கா. ஒரு மாற்று வழியை நாடும் நிலைக்கும் தள்ளப்பட்டது.
76

இருபத்தோராம் நூற்றாண்டில் .
O ஐ.தே. கவுடனான பிளவின் காரணமாக தேர்தலுக்காக
அவர்களுடன் இணையமுடியாத நிலை.
O பொஐமுவுக்கு மலையக மக்களின் பூரண ஆதரவு கிடைக் குமா என்ற சந்தேகத்தின் மீது அதனுடன் இணைவதில் ஏற்பட்டதயக்கம்.
O தனித்து போட்டியிடுவதென்றால் அது ஒரு விஷப்பரீட்சை
யாகிவிடாதா என்ற சலனம்.
இந்த மாற்றுவழி தான் “பேரணி’. இ.தொ.காவின் முக்கிய மான ஒரு நபரே பேரணியின் பிறப்புக்கு காரணமாவார். இதற்கு முன்பு தேர்தலின் போது பல தொழிற்சங்கங்கள் இ.தொ. காவை சந்தித்து ஒரு கூட்டுக்கட்சியை அமைக்க முயற்சித்த போது உடன்பட மறுத்த அதே இ.தொ.கா தான் இந்தப்பேரிணிக்குள் தன்னை அடக்கிக்கொண்டது. இந்தப் பேரணி நடத்திய முதற் கூட்டத்தில் 16 தொழிற்சங்கங்களும் இரண்டு அமைப்புகளும் கலந்துக்கொண்டன. பொதுவானதொரு செயற்திட்டத்தை இக்கட்டத்தில் முன்வைக்கத் தவறியமையால் பல தொழிற் சங்கங்கள் இதிலிருந்து விலகிக் கொண்டன. அக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவைத் தேடிய போது அவை மறுதலித்தன. நாமறிந்த வரையில் இப்பேரணி யின் அங்கத்தவர்கள் வருமாறு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செங்கொடிச் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், லங்கா பொதுச் சேவை யாளர் சங்கம், அகில இலங்கை ஐக்கியத் தொழிலாளர் காங்கிரஸ், ஊவா தொழிலாளர் உதவி நிலையம், கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் (பதுளை, அட்டன்). இவற்றைத் தவிர பதிவு செய்யப்பட்ட எந்தவொரு தொழிற்சங்கமோ அரசு சார்பற்ற நிறுவனமோ இந்தப் பேரணியில் அங்கம் வகிப்பதாக தெரிய வில்லை. இந்த அமைப்புகளில் கிங் மேக்கர்’ இ.தொ.கா. தான் என்பது வெள்ளிடை மலை, இவர்கள் உருவாக்கிய இந்த “இந்திய வம்சாவளி மக்கள் பேரணி” என்ற பெயர் பலதரப்பட்ட
விமர்சனங்களுக்கு உள்ளானது.
இயக்கர், நாகர் போன்ற பூர்வீகக் குடிகளைத் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே. அதனால் தான் 1948இல் எழுதப்பட்ட யாப்பில் மலையகத்
77

Page 40
கீத பொன்கலன்
தமிழரை “அண்மைக்கால இந்திய வம்சாவளி மக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழுகின்ற தமிழர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணக் கருவை வளர்க்கவே பல வருடங்களாயின. தோட்டத் தமிழர் என்ற பெயர் மருவி மலையகத் தமிழர் என்ற சொற்பதம் 1970, 1980 காலப்பகுதியில் தலைதூக்கலாயிற்று. இவர்கள் எப்படி அழைக்கப்படவேண்டும் என்பது குறித்த பல்வேறுபட்ட கருத்துக்கள் அண்மைக் காலங்களில்கூட பத்திரிகைகளில் பிரசுரமாயின. எது எவ்வாறாயினும் ‘மலையகத் தமிழர்’ என்ற பதமே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்திய வம்சாவளி’ என்ற பெயரில் தீவிர பற்றுக்கொண்ட சில பாரம்பரிய தொழிற்சங்க வாதிகளையும், சில புத்தி ஜீவிகளையும் ஊன்றிப் பார்ப்போமானால் அவர்களது முழுமையான ஈடுபாடு இந்தியா விலேயே நிலை கொண்டுள்ளதைக் காணலாம் (குடும்பம், பிள்ளைகளின் கல்வி, பொருள், வளம்.) எனவே இவர்கள் அடிக்கடி இந்தியப் பிரயாணத்தை மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர். மலையகத்தில் வாழுகின்ற 95 வீத மானவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்திய மண்ணை மிதித்தவர்கள் அல்ல என்பதோடு இந்திய வம்சாவளி’ என்ற அடைமொழி யிலும் கூட நாட்டமில்லாதவர்கள். குறிஞ்சி மண்ணில் மலர்ந்த இவர்கள் அதன் பெயராலேயே தங்களை ஒரு ‘தேசிய இனமாக” அங்கீகரிக்க வேண்டும் என்றே குரலெழுப்புவார்கள்.
இந்தப் பேரணியின் பெயர் உருவாக்கத்தில் தொடர்புடைய சிலரிடம் பகிரங்கமாக இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது கிடைத்த பதிலை குறிப்பிடுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். ஆரம்பத்தில் இலங்கை - இந்திய காங்கிரசாக இருந்து பெயர் மாற்றம் பெற்ற இ.தொ.காவை போன்றே தேவை ஏற்படின் பேரணியின் பெயரையும் காலப் போக்கில் மாற்றிக் கொள்ளலாம் என்பதே கிடைத்த பதிலாகும்.
இவர்கள் தூரநோக்குடன் இப்பெயரை உருவாக்கவில்லை என்பதையே இது குறிக்கின்றது. மேலும் தேர்தலுக்கென்றே அவசரமாக உருவாக்கப்பட்ட பெயர் என்பதையும் தெளிவுப் படுத்துகின்றது. இந்தப் பெயரானது இலங்கையின் எந்தச் சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்படவில்லை. இதற்கென பிரத்தியேகமான ஒரு சின்னமும் குறிக்கப்படவில்லை. அதன்

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கொள்கை என்ன என்பதும் மக்களுக்குப் புரியவில்லை. ஆனால், எப்படியாவது தேர்தல் களத்தில் குதித்தேயாக வேண்டும் என்ற நிலை. இதனால், கொள்கை அடிப்படையில் வெள்ளையன் உருவாக்கிய தொழிற்சங்கத்தின் பெயரையும், சின்னத்தையும் இரவலாகப் பெற்றுக் கொண்டது.
மாகாண சபைத் தேர்தல்கள் நடந்த 12 மாவட்டங்களுள் 9 மாவட்டங்களில் மாத்திரமே ‘மயில் சின்னம் போட்டியிட்டது. பேரணி இந்த மாவட்டங்களில் 40 வீதமான மக்களைக் கூட கொண்டிருக்கவில்லை. மலையகத்தில் 68க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தும் பல முக்கியமான தொழிற் சங்கங்கள் “பேரணியில் இணையாததே இதற்குக் காரண மாகும். எடுத்துக்காட்டாக கூறுவதாயின் பதுளை மாவட்டத் தில் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம் பேரணியில் சேர வில்லை. நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன் னணியும் இதில் இணையவில்லை. பேரணியில் அங்கத்துவம் பெற்ற 3 தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் அந்தந்தப் பகுதிகளில் அவரவர் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு குழு எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற் கென்றே நபர்களை சேர்த்துக் கொண்டுள்ளார்கள்.
3.2.1 அரச சார்பற்ற நிறுவனங்கள்
இந்தப் பேரணியில் போட்டியிட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நால்வரும் வெற்றி பெறவில்லை அரசு சார்பற்ற நிறுவனங்களில் அரசியல் பிரதேசத்தைப் பற்றிய சர்ச்சைகளை பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இந்தக் கண்டனங்களை எல்லாம் பொருட்படுத்தாது அவற்றின் தலை வர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட்டமையானது ஏனைய அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டாகத்தான் வேண்டும்.
கடந்த ஆண்டு மாகாண சபைத்தேர்தலைப் பற்றிய அறிவிப்பு வெளியானதும் சில அனுபவம் மிக்க உறுப்பினர்கள் இது நடக்கக்கூடிய காரியமல்ல என வாளாவிருந்தனர் ஆனால். இந்த அரசு சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களோ தேர்தல் பின் போடக்கூடுமா என்பதைப் பற்றியெல்லாம் யோசியாது உடனடியாக சுவரொட்டிகளை அச்சடித்து விட்டனர்.

Page 41
கீத பொன்கலன்
நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் தேர்தலில் போட்டி யிடுவதற்கான உரிமையுண்டு என்பதில் ஐயமில்லை அதைத் தடுப்பதற்கான அதிகாரமும் எவருக்கும் இல்லை. அரசு சார் பற்ற நிறுவனங்களில் தாம் வகித்த பதவிகளைத் துறந்து அடுத்த வரிடம் அந்தப் பொறுப்பைக் கையளித்துவிட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிருந்தால் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். மக்கள் அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் கொள்கையாக இருக்கவேண்டுமே யன்றி அரசியலாகி விடுவது சிறப்பல்ல. மக்கள் தமது உரிமை களைப் பெறுவதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை நெருக் கடிக்கு உள்ளாக்குவது இவர்களது ஒரு சமூகக் கடமையாகக் கருதப்படும். மக்களுக்காக பெற்ற வளங்கள் சுயநலன்களுக்காக அழிந்திருப்பது கண்கூடு.
3.2.2 தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில் அவர்களது அங்கத்தவர்களே முழுமையாக பேரணிக்கு ஆதரவளிக்க வில்லை யென்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. காரணங்கள் L 6),
யானைக்கு மக்களைப் பழக்கப்படுத்திய இவர்களே திடீரென மயிலை மக்கள் முன் நிறுத்தியமை.
பேரணியைப் பற்றிய போதுமான விளக்கத்தை மக்களுக்கு கொடுக்காமை.
பேரணியின் தலைவர் தேர்தல் சமயங்களில் அளிக்கும் வாக்குறுதிகள் நடைபெறாதவை என்பதை மக்கள் புரிந்துக் கொண்டுள்ளமை (உதாரணம்) கிராம சேவகர் நியமனம்,
பெப்ரவரி 13ம் திகதி நுவரெலியா, பதுளை மாவட்டங் களில் நடைபெற்ற, தமிழ் கிராம சேவகர்களுக்கான போட்டி பரீட்சை தொடர்பாகவும் மக்கள் மிகுந்த அதிருப்தியைக் கொண்டுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர் களுள் தமது அங்கத்தவர்களுக்காக மட்டுமே ஒரு தொழிற் சங்கம் ஆயத்தப் பயிற்சி பாசறை ஒன்றை நடத்தியிருந்ததும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது.
சரியாக கூறப்போனால் தேசிய பரீட்சைத் திணைக்களம் தான் இந்தப் பரீட்சையை நடத்தவேண்டும். ஏனெனில், கிராம
80

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சேவகர் நியமனம் மத்திய அரசால் வழங்கப்படுகிறதேயன்றி மாகாண சபையால் அல்ல. ஆக, இது வெறும் தேர்தல் புரட்டு என்பதை பாமரர்கள் கூட சரியாக புரிந்துகொண்டிருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. பத்து வருட காலமாக இந்த நியமனம் வழங்கப்படாது இருப்பதற்கான காரணங்களில் ஒன்று தொழிற் சங்கங்களுக்கிடையேயான பலப்பரீட்சை தான்.
தேர்தலுக்கு முன்பே பேரணியின் முக்கிய தலைவர்கள் பொ.ஐ.முன்னணியுடன் இணைந்துவிட்டனர் என்ற கருத்து பரவியமை கூட பேரணியின் பின்னடைவுக்குக் காரணமாகி யுள்ளது. ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று குறியாக இருந்த பொ.ஐ.முவுக்கு இது ஓரளவு வெற்றி என்றாலும் பேரணிக்கு இது ஒரு இழப்பே. 丛
பேரணி வெற்றி பெறாவிட்டால் எமது மக்களுக்கு அவமானம் எனக்கூறிய பேரணித்தலைவர் தேர்தலுக்குப் பின் கொழும்பு மாவட்டத்தில் பேரினவாத சக்திகளையே தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் எனக் குற்றம் சாட்டுகிறார். குறை களை தம் பக்கத்தில் வைத்துக் கொண்டு மக்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர் தொகையை இவர்கள் அறியாது இருந்திருக்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் எத்தனை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கணித் திருக்கமுடியும். அதற்கேற்ப பேரணியின் மத்திய குழு உறுப் பினர்கைைள தெரிவுசெய்து குழுவின் அனைத்து அங்கத்தவர் களுக்கும் அது தொடர்பான சரியான விளக்கங்களை அளித்து அவர்களை கூட்டாக இயங்கச் செய்திருந்தால் சின்னத்துக் கான ஆதரவை நிச்சயம் திரட்டியிருக்க முடியும். மாகாண சபைத்தேர்தல் முறை சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. ஆனால், கூட்டு மனப்பான்மை இவைகளிடம் இல்லாவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.
பொ.ஐ.முன்னணிக்கு அல்லது ஐ.தே.கட்சிக்கு சிறு கட்சி களின் ஆதரவு இன்றி ஆட்சி செய்யும் நிலையை இந்தத் தேர்தல் முடிவுகள் தந்திருந்தால் ‘மயில்’ சின்னத்தில் தெரிவான 9 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமரும் நிலை ஏற்பட்டிருக்கும்.

Page 42
கீத பொன்கலன்
ஆனால் இப்போது அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம். என நம்பப்பட்டாலும் இது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
மேலே கூறிய எந்தக் கருத்தும் தனிப்பட்ட நபர்களையோ, கட்சிகளையோ தாக்கவேண்டும் என்பதற்காக முன்வைக்கப் படவில்லை. மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கு வலுவான தொரு அரசியல் கட்சி தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள் ளார்கள். தொழிற்சங்கங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் அனைவரும் பேதங்களைக் கடந்து அதனை உருவாக்க முன்வரவேண்டும் தேர்தலுக்காக மட்டும் அமைக்காது மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரே குறிக்கோளுடன் இது அமைக்கப்பட வேண்டும். புதிய பெயரும் சின்னமும் கொடுக்கப்படவேண்டும்.
அரசியலில் நேரிடையாக ஈடுபடாத சமூகப்பற்றுள்ள, தூர நோக்குள்ள நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப் படுவது அவசியம். மலையகத் தமிழர்களுக்கென உருவாக்கும் பிரத்தியேக கட்சியை நெறிப்படுத்துவதே இக்குழுவின் பணி யாக இருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொது வான செயற்திட்டத்தை முன்வைத்து ஏனைய சிறுபான்மை யினத்தவரையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ கொள்கையின்கீழ் நசுக்கப்படும் அனைத்து தொழிலாளரும் சிறுபான்மையினர் தான். அந்த அடிப்படை யில் ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாள ரையும் இணைத்துக் கொண்டு சுயலாபம் கருதாது உழைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மலையக மக்களுக்கு அத்தியாவசியமானதாகும்.
சரிநிகர் 10 - 23. 06. 1999
82

3.3 பத்தாவதும் பதினொராவதும் பொதுத்தேர்தல் பெறுபேறுகளிலிருந்து தமிழ் மக்கள் கற்க வேண்டியவை
தமிழ் மக்களுடைய சனத்தொகைக்கேற்ப பிரதி நிதிகளை கடந்தகால தேர்தல்களில் தெரிவு செய்யாததற்கு முக்கிய காரணம் தமிழ் அரசியல்வாதிகள் ஒரனியின்கீழ் செயற் படாமல் பல்வேறு கட்சிகளினூடாக போட்டி யிடுவதினாலேயேஇந்த துர்ப்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு பத்தாவதும் பதினொராவதும் தேர்தல் பெறுபேறுகள் சாட்சி பகருகின்றன.
“பிரிட்டனை மீண்டும் செயற்படுத்துவோம்” (Put Britain Back to Work) என்ற கோஷத்துடன் 1977இல் திருமதி மார்கிரட் தட்சர் தேர்தல் களத்தில் இறங்கினார். இலங்கை அரசியல், பொருளாதாரம், வன்முறை, யுத்தம், வறுமை, சமத்துவமின்மை போன்ற பல்வேறு காரணிகளால் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் 49 அரசியற் கட்சிகள் “எங்களை ஆதரியுங்கள்” என்ற ஒரே கோஷத்துடன் தேர்தல் களத்தில் தங்கள் பலத்தைப் பரீட்சிக்க தயாராகின்றன.
“பிளாட்பாரம் ஏராளமான வேட்பாளர்களால் நிரம்பி யுள்ளது. ஆனால், அவர்கள் எடுத்துச் செல்வதற்கான போதிய வாக்குறுதிகள் தான் இல்லை” என ஜனாதிபதி ரொனால்ட் றேகன் 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி விவாதத்தின் போது குறிப்பிட்டதை இங்கு நினைக்காமலிருக்க முடியவில்லை.
நமது அரசியல்வாதிகள், செயற்படுத்த முடியாத, விந்தை யான பல வாக்குறுதிகளை புனைந்துருவாக்கி தேர்தல் களம் காணவிழைகின்றனர். இரக்கமின்மை, ஊழல், வரம்புமீறிய அதிகாரம், ஊடக நீதித்துறைத் துஷ்பிரயோகம், கொள்ளை,
83

Page 43
கீத பொன்கலன்
பணம் இவை யாவுமே அரசியல்வாதிகளின் கட்டளைச் சட்டமாகிவிட்டது. 1978இல் உருவாக்கப்பட்ட யாப்பானது ஜனநாயகம் என்ற பெயரால் முழுமையான சுரண்டலுக்கு வழிகோலுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த யாப்பு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளுக்குச் சார் பாகவே வரையப்பட்டிருப்பதால், அந்த குறிப்பிடத்தக்க சிலர் மாறும்போது, யாப்பினை நடைமுறைப்படுத்துவது கஷ்ட மான காரியமாக இருக்கின்றது.
நமது நாட்டின் அரசியலானது தனிமனிதருக்கும், அதிகாரத் திற்கும் இடையேயான ஒரு போட்டியாக மாறியுள்ளதே தவிர மக்களுக்கும், அவர்களது பிரச்சனைகளுக்கும் எதுவித தொடர்பும் அற்றதாகவே உள்ளது.
சட்டமும், ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டு, கடின உழைப்பும், தொழில்நெறி சார்ந்த பூரணத்துவமும் மட்டுமே இதுவரை பிறக்காத சந்ததியினரின் எதிர்காலத்தை உறுதி செய்யக்கூடியது என்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்வது காலத்தின் அவசியமாகிறது.
இலங்கையில் இரண்டு விதமான தேர்தல் முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. வெஸ்ட் மினிஸ்டர் முறை, விகிதாசார பிரதிநிதித்துவமுறை.இந்த இரண்டு முறைகளிலும் 7 விழுக் காட்டைக் கொண்ட சோனக மக்கள் கடந்த தேர்தலில் 23 பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது மொத்தப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தொகையில் 10.2 விழுக்காடாகும்.
வட - கிழக்கில் 12. 5 விழுக்காட்டை உடைய தமிழர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளார்கள். இது மொத்தப் பாராளுமன்ற அங்கத்தவர் தொகையில் 8 விழுக்காடாக இருக்கின்றது.
மலையக மக்கள் சார்பாகக் கடந்த தேர்தலில் 9 பேர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களின் சனத்தொகையை 7 விழுக்காடாக எடுத்துக் கொண்டால் கூட மொத்தப் பாராளுமன்ற அங்கத்தவர் தொகையில் அது 4.5 விழுக்காடாவே இருக்கின்றது.
இதனடிப்படையில் பார்க்கும்போது சோனகர்களை தவிர, இதுவரை நடைபெற்றுவந்த தேர்தல்களில் ஏனைய சிறுபான்மை
84

இருபத்தோராம் நூற்றாண்டில் .
மக்கள் தங்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவத்தைப் பெற வில்லை என்பது தெளிவாகிறது.
இந்தக் குறைபாட்டை நீங்குவதானால் எமது யாப்பில் அதற்கான சட்ட நிரூபணம் (Legislative enactment) இருக்க வேண்டும். இந்தச் சட்ட நிரூபணம் யாப்பில் இல்லாவிடத்து தமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய
புதிய உபாயங்களை உருவாக்கி அதன் மூலமாக முழுமையான
பிரதிநிதித்துவத்தைப் பெற உழைக்க வேண்டும்.
ஆனால், சிறுபான்மை மக்களின் துரதிர்ஷ்டம் மக்கள் நேய அரசியல்வாதிகள் அருகிக் கொண்டே வருகின்றனர். தலைமைத்துவ போட்டியும், உயிருள்ளவரை அரசியல் என்ற பதவி மோகமும், மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் தாங்களே என்ற எண்ணமும் கொண்ட சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பலியிட்டுவரும் பெரும்பாலான அரசியல்வாதிகள் துடிப்பும், இளமையும் மிக்க புத்திஜீவிகளுக்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை (அரசியல் சாக்கடையில் நல்லவர்கள் விழலாமோ என்ற உயர்ந்த எண்ணமாக இருக்கலாம்). இந்த ஆய்வோடுதான் சிறுபான்மை அரசியல்வாதிகள் 12 ஆவது பொதுத்தேர்தலை எப்படிச் சந்திக்கப் போகின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
3.3.1 மலையகத் தமிழர்
1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலையக தமிழ் மக்கள் சார்பாக போட்டியிட்டவர்களில் 8 பேர் வெற்றி பெற்றனர். இருவர் தேசிய பட்டியலில் திெரிவாயினர். ஆனால், 2000ஆம் ஆண்டில் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். யானைச் சின்னத்தின் கீழ் 1994இல் போட்டியிட்ட இ.தொ.கா., நுவரெலியாவில் 3 ஆசனங்களையும், கொழும்பில் 2 ஆசனங் களையும், கண்டியில் 1 ஆசனத்தையும், பதுளையில் 1 ஆசனத்தை யும் வென்றெடுத்தது. ம.ம.மு. சுயேச்சையாகப் போட்டியிட்டு நுவரெலியாவில் 1 ஆசனத்தைக் கைப்பற்றியது.
பதினொராவது பாராளுமன்றத் தேர்தலின் போது இ.தொ.கா. இரண்டாக பிளவுண்டது. ஒரு பிரிவினர் ஆறுமுகம் w தொண்டமானின் தலைமையில் பொ.ஐ.மு. உடன் இணைந்து சில மாவட்டங்களில் தனித்தும், வேறு சில மாவட்டங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்தும் போட்டி யிட்டனர். மற்றப் பிரிவினர் தேவராஜ் தலைமையில் ஐ.தே.கட்சி
85

Page 44
கீத பொன்கலன்
யுடன் இணைந்து போட்டியிட்டனர். அதேசமயம் சந்திர சேகரன், மனோகணேசன், எம்.எஸ். செல்லசாமி ஆகியோரும் ஐ.தே.கட்சியுடன் இணைந்துகொண்டனர். இதில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் இணைந்த இ.தொ.கா. சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம், கிருஷ்ணன் ஜெகதீசன் ஆகியோர் தெரிவாயினர். போட்டியிட்ட ஏனைய எல்லா இடங்களிலும் இ.தொ.கா. வெற்றி பெறவில்லை இதே மாவட்டத்தில் ஐ.தே.ககட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சந்திரசேகரனும், சதாசிவமும் வெற்றிபெற்றனர். செல்லசாமி, தேவராஜ், கனகராஜ் ஆகியோர் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றனர். பொது ஜன ஐக்கிய முன்னணி தனது தேசியப் பட்டியலில் மாரிமுத்து விற்கு இடமளித்தது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மலையக தமிழ் மக்கள் சார்பாக தெரிவான 9 பேரில் நால்வர் அரசாங்கத் திலும், ஐவர் எதிர்க்கட்சிகளிலும் இடம்பிடித்தனர். மலையகத் தமிழரின் வாக்குகள் இந்த இரண்டு பிரதான தேசியக்கட்சி களுக்கும் பிரிக்கப்பட்டதால் பதுளையிலும், கொழும்பிலும் மலையக தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவ நேர்ந்தது. பதுளையை பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் சார்பாக 50,000க்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தும் ஒரு தமிழருக்கும் நியமனம் கிடைக்கவில்லை. இதனை ஒரு இன வாத கண்ணோட்டத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது. அதே போன்று கொழும்பில் 37,798 வாக்குகளைப் பெற்று, 96 வாக்குகளால் மட்டுமே தோல்வியுற்ற மனோ கணேசனுக்கும் நியமனம் கிடைக்கவில்லை. இந்த வாக்குகள் ஐ.தே.க. வாக்குப் பலத்தை அதிகரிக்கவே உதவியுள்ளன.
ஆகவே, மலையக அரசியல்வாதிகள், இரண்டு தேசியக் கட்சிகளையும் பங்குபோட்டுக் கொள்வதால் பாராளுமன்றத்தில் மலையகத் தமிழ் மக்களுக்குப் பலத்தை ஏற்படுத்த முடியாது என்பது தெளிவு. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை - இந்திய காங்கிரஸின் கீழே போட்டி யிட்டு 95 உறுப்பினருள் 8 உறுப்பினரை மலையக தமிழ் மக்கள் தெரிவுசெய்யக் கூடியதாக இருந்தது. அதேசமயம் அவர்கள் 14 இடதுசாரி வேட்பாளரை ஆதரிக்கவும் செய்தனர்.
86

இருபத்தோராம் நூற்றாண்டில் .
1952 -1977 வரையும் ஆட்சி பீடம் அமைத்தவர்கள் மலையக தமிழ் மக்கள் சார்பாக ஒருவருக்கு நியமனம் வழங்கி வந்தனர். மூன்று அங்கத்தவர் தொகுதியாக இருந்த நுவரெலியா மாவட்டத்தில் 1977இல் மலையகப் பிரதிநிதியால் மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது. அதன்பின்பு தான் ஓரளவிற்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்தபின் இன்று வரையும் தேசியக் கட்சி களுடன் இணைந்து கொள்வது மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை. மாறாக மலையக மக்களுக்கென ஒரு தனிக்கட்சி அமைவதன் மூலமே அவர் களது நலனும், பலமும் பேணப்படும் என்பதை நாம் உறுதி யாக நம்ப வேண்டும். மலையகத் தமிழ் மக்களின் தனித்துவ மானது, இனத்துவக்குழு என்ற அடிப்படையில், தமது பாது காப்பு, கலாச்சார தனித்துவம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன தனிக்கட்சியின் மூலமே நிலை நாட்டப்படும்.
கடந்த தேர்தலில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமான வர்த்தக அமைச்சை பெற்றிருந்தது அவர்களது சமூகத்திற்கு உதவக்கூடியதாக இருந்தது. ஆனால் இ.தொ.கா. பெற்ற அமைச் சினால் மலையக தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கவில்லை. பெருந்தோட்டத்துறை அல்லது தொழில் அமைச்சு போன்ற ஏதாவதொரு அமைச்சு கொடுக்கப்பட்டிருக்கமானால் அது பெருந்தோட்டத்துறையை பலப்படுத்த உதவியிருக்கும். கடந்த பொதுத்தேர்தலில் பாராளு மன்றம் சென்ற 9 உறுப்பினர்களால் மலையக தமிழ் மக்கள் மீது எந்தவொரு தாக்கத்தையும் / ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது என்றே கூற வேண்டும்.
இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் மலையகத்தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூட்டியுள்ளதே அன்றி தீர்க்க வில்லை. எமது கோரிக்கைகளை பலத்தோடு முன்வைக்கக் கூடிய நிலையில், பேரம் பேசும் சக்தியோடு, அரசமைக்கும் கட்சிகளோடு இணைய வேண்டுமே அன்றி முன்பு குறிப்பிட்டது போல் அவர்களது வாக்குப்பலத்தை அதிகரிப்பதற்காக மட்டும் இணைந்து மலையகத்தமிழ் பிரதிநிதிகள் காணாமல் போகும் நிலையை உருவாக்குவது, மலையகத் தமிழ் மக்களை மேலும் பின்னடையச் செய்யும் என்பதைச் சிந்திக்க வேண்டும். மலையகத் தமிழ் ஜனத்தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் பெறுவதானால் இன்று 16 ஆசன்ங்கள் கிடைக்க வேண்டும்.
87

Page 45
கீத பொன்கலன்
அட்டவணை 3.1 16 ஆசனங்கள்
மாவட்டம் வாக்காளர் ஆசனங்கள்
(கிட்டத்தட்ட)
நுவரெலியா 200,000 OS பதுளை 90,000 O2 கண்டி 85,000 O2 கேகாலை 35,000 O1 மாத்தளை 35,000 O1 களுத்துறை 35, 000 O1 இரத்தினபுரி 40,000 O1 மொனறாகலை 20,000 O1 கொழும்பு O2
ஆனால், இன்றைய அரசியல் சூழலை அவதானிக்கும் பொழுது கூடுதலான அரசியல்வாதிகள் ஒரு தேசியக் கட்சிக்குச் சார்பாக இருப்பதையே காட்டுகிறது. அந்தக்கட்சி எல்லோ ருடைய அபிலாஷைகளையும் நிறைவேற்றும் வண்ணம் வேட்பாளரை தெரிவு செய்யமுடியாது. ஏனெனில் அந்தக் கட்சியின் முக்கியமானவர்களுக்கு முதலிடம் கொடுத்தேயாக வேண்டும். இதனால், மலையக வேட்பாளர்கள் ஏனைய தேசியக் கட்சிகளுடன் இணைய வேண்டிய இக்கட்டான நிலை மைக்குத் தள்ளப்படுவார்கள். இது தமிழ் வாக்காளர் மத்தியில் குழப்பத்தையே உண்டாக்கும் என்பது உறுதி. அவர்களது வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கும், சிதறிப் போவதற்கும் இது ஏதுவாக அமைந்துவிடும். கடந்த காலங்களில் நிராகரிக்கப் பட்ட வாக்குவீதம் அதிகம் என்பதை மறக்கக்கூடாது. மயிலுக்கும், கதிரைக்கும் வாக்களித்த நிலைமையே மீண்டும் ஏற்படும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இன்று பெருந்தோட்டத்துறையில் 10 வீதமானோர் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். மலையகத் தொழிற்சங்கங்களிலும் இவர்களுடைய ஆதிக்கம் இருக்கின்றது. டிரஸ்ட், சம்பள நிர்ணய சபை, தொழிற்சங்க நிர்வாகக்குழு ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர்களே வகித்து வருகின்றார்கள். மலையக அரசியல் ஒரு தனிக்குடை யின் கீழ் வருமானால் ஏன் இந்த பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைப் பெறமுடியாது?
88

இருபத்தோராம் நூற்றாண்டில் .
தனித்துப் போட்டியிட்டால் வாக்கு வீதத்தின் அடிப் படையில் தேசியப் பட்டியலில் கூடச்சிலர் தெரிவாகும் வாய்ப் புண்டு. எடுத்துக்காட்டாக 1.5 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெறாமல் போன சிஹல உறுமய கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஒரு இடம் கிடைத்திருக்கின்றது.
அடி மட்டத்திலிருந்து எழுகின்ற புதிய தலைமைத்துவமும், புதிய திட்டங்களைக் கொண்ட நல்ல அமைப்புமே இன்று மலையகத் தமிழ்மக்களுக்குத் தேவைப்படுகின்றது. மனித உரிமை மீறல்களுக்குப் போராடவும், அடிப்படை உரிமை களுக்காக (காணி, வீடு, கல்வி, சுகாதாரம், நியாயமான ஊதியம்) வாதாடவும் மலையகத் தமிழ் மக்களின் நலனை மட்டுமே கருதுகின்ற நல்ல தலைவர்களை மக்கள் பாராளுமன்றத்தில் பார்க்கத் துடிக்கிறார்கள்.
3.3.1இலங்கைத்தமிழர்
வட, கிழக்கு மாகாணத்தில் 31 ஆசனங்கள் உள்ளன. அதில் 15 வடக்கிலும், 16 ஆசனங்கள் கிழக்கிலும் இருக்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் வடக்கில் 12 தமிழர்களும் 2 சிங்களவர், 1 சோனகர் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கில் 4 தமிழர்களும், 4 சிங்களவர்களும், 8 முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டனர். இங்கும் கூடுதலானவர்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டனர்.
இலங்கைச் சரித்திரத்திலேயே முதல் தடவையாக 1977 ஆம் ஆண்டு ஒரு சிறுபான்மை இனத்தவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பாராளுமன்றத்தில் பிரசன்னமானார். இந்தச் சாதனைக்கு தமிழர்களின் ஒருமித்த உணர்வே காரணம். கடந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் திருகோணமலையில் தனித்தனியே போட்டியிட்டதால் ஒருவராகிலும் தெரிவாகவில்லை. கடந்த கால அனுபவத்தின் துணைகொண்டு தமிழ்க் கட்சிகள் தங்களது வேற்றுமைகளைக் களைந்து, ஒன்றிணைந்து, தனிக்கட்சியாக தேர்தல் களம்காணுவதே அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் பேருபகாரமாகும்.
இன்று கொழும்பு மாவட்டத்தில் தமிழரின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களது பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்த இவர்கள் தனித்துப் போட்டியிடாவிட்டாலும் முற்போக்குக் கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலமாகத் தங்களது அரசியல் பலத்தைப் பெற வழி செய்ய வேண்டும்.
89

Page 46
கீத பொன்கலன்
இந்தத்தேர்தலில் ஒரளவிற்குக் கூட்டுச்சேர்ந்து போட்டி யிடும் நிலை ஏற்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது. இது தொடர் பாக மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வது மிக அவசியம். சுயநலன்களுக்காகச் செயற்படாமல் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புதிய இளம் புத்திஜீவிகளை இதில் இடம்பெறச் செய்து எதிர் கால தமிழரின் அரசியல் சக்தியை, தமிழரின் நிலையை வலுப் படுத்த வேண்டும். مح۔
3.3.3 சோனகர்கள்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 23 சோனக பிரதிநிதிகள் தெரிவாயினர். இவர்களில் 11 பேர் தான் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தெரிவானவர்கள். ஏனைய 12 பேரும் தேசியக் கட்சிகளுடன் இணைந்துள்ளனர். கடந்த பாராளு மன்றத் தேர்தலில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அத்துடன் முக்கிய அமைச்சர் பதவிகளையும், துணை அமைச்சர் பதவிகளையும், கூட்டுத்தாபன தலைமை பதவிகளையும் வகித்தனர்.
ஆனால், இன்று பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவு பட்டிருப்பதால் அவர்கள் தனித்துச் செயற்படமுடியாது. தேசியக் கட்சிகளுடன் இணையும் சாத்தியக்கூறுகள் அதிக மாக உள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸின் பலம் குறையக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனாலும் அவர்களது பகுதிகளில் சோனகர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களது பிரதிநிதி களை வலுப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
வரப்போகின்ற தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடாமல், புரிந் துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் கிட்டத்தட்ட 53 ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது. அப்படியாயின் எந்தவொரு அரசாங்கமும் இவர்களது ஆதரவின்றி ஆட்சி யமைக்க முடியாது.
இந்த நிலை உருவாகாவிட்டால் இரண்டு தேசியக் கட்சி களும் இணைந்து ஒரு தேசிய அரசை உருவாக்கினால் சிறு பான்மை இனத்தவர் அரசியல் அநாதைகளாக்கப்படுவது உறுதி என்பதை கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது.
தினக்குரல் 19. 10. 2001
90

3.4 பெரும்பான்மைக் கட்சிகளின் வியூகத்துக்குள் சிக்கி மலையகத்தின் தமிழ் சமூகத்துக்கு துரோகம் இழைக்கும் செயல் தொடரக்கூடாது
பன்னிரண்டாவது பொதுத்தேர்தலில் மலையகத் தமிழர் சார்பாக பத்துபேர் பாராளுமன்றம் சென்றிருந்தாலும் இதில் ஐந்து பேர் மட்டுமே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மற்ற ஐந்து பேர்களும் தேசியபட்டியல் மூலமாக தெரிவு செய்யப்படடவர்களாவர். இந்த பத்து பேரும் ஏழு கட்சிகள் சார்பானவர்கள். இவர்கள் முழுமை யாக ஒருமித்துக் குரல் கொடுப்பது ஒரு கேள்விக் குறியே. இவர்கள் மத்தியில் இன்று நீயா நானா என்ற போட்டி மனப்பாங்கும், மற்றவர் மத்தியில் எதிர்ப்பு பிரச்சாரங்களுமே நடைபெறுகின்றன. இந்தச்சூழல் மலையகத் தமிழ் மக்களின் முழுமை யான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு தடை களாகவேஇருந்து வருகின்றது.
M
இலங்கையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 2001 டிசம்பர் ஐந்தாம் திகதி நடைபெற்ற 12 ஆவது பொதுத் தேர்தலானது தேர்தல் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாய மாக இடம்பெறுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் நீதியற்ற, நேர்மையற்ற ஒரு தேர்தலை இலங்கை அரசு நடத்தியுள்ளது என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. அமெரிக்கா இதனை மிகவும் அருவருப்போடு கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளது. சர்வதேச அரங்கில் ஒரு தலைகுனிவையே இத்தேர்தல் எமக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.
வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்ற நாள் வரையான 35 நாட்களுக்குள் 2,200க்கும் அதிகமான
91

Page 47
கீத பொன்கலன்
வன்முறைச் சம்பவங்களும், 50க்கும் மேற்பட்ட கொலைகளும் இடம்பெற்றுள்ளன. அசம்பாவிதங்களைத் தடுக்கச் சென்ற சமூக உணர்வுமிக்க பலரும்கூட படுகொலை செய்யப்பட் டுள்ளனர். மக்களாட்சிக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய, மக்கள் சடலங்களின் மீது இரத்தச் சேற்றிலேயே நடந்து சென்றார்கள்.
கட்டுமீறிப்போன வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாமல் போனதும் பின் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்து அறிந்தபின்பே தேர்தல் முடிவுகளை வெளியிட்டதுமான சம்பவம் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பிடித்துக் கொண்டுள்ளது.
பெரும்பான்மை மக்களின் இன உணர்வைத் தூண்டும் வகையில் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி யானை - புலி ஒப்பந்தத்தைப் பற்றி மிகவும் உக்கிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்கு அவசியமான செயல்படுத்தக்கூடிய திட்டங்களைப் பற்றிக் கூறாமல் எதிராளியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் பச்சையாக இனவெறியை வெளிப்படுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வாக்காளர் களுடன் புலிகளும் வந்துவிடுவார்கள் என்ற செய்தி ஐந்து நாட்களுக்கு முன்பே கிடைத்துள்ளதாகக் கூறி, கடைசி நேரம் வரை காத்திருந்து தேர்தல் ஆணையாளரின் அனுமதியைக் கூடப் பெறாமல் பாதைகளை அடைத்ததன் மூலம் மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பறித்துள்ள சம்பவம்கூட இந்தத் தேர்தலில்தான் நடந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாக்காளர்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தங்களது சுய இலாபங்களுக்காக அரசியல்வாதிகள் இம்முறை அதிகமாக கட்சி விட்டுக் கட்சி தாவியுள்ளார்கள். இதன் பின்னணியில் பலகோடிகள் கைமாறியுள்ளன. இவற்றை யெல்லாம் ஆழ்ந்து சிந்திப்போருக்கு, நமது அரசியல், அதிகாரத்துக்காக போராடும் ஒரு சுயநலக் கும்பலின் கைகளில் சிக்கி மலினப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியும்.
92

இருபத்தோராம் நூற்றாண்டில் .
எது எவ்வாறாயினும் மக்களின் தீர்ப்பு சின்னதாக ஒரு நம்பிக்கையை தோற்றுவிப்பதாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் ‘மூளைச் சலவைக்காக” தொடர்ந்து தீவிரமாகக் கொடுக்கப்பட்டு வந்த இனவாதக் கொள்கையை மக்கள் தீர்க்கமாக புறக்கணித்துள்ளார்கள். சமாதானமும், சகோதரத் துவமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அரசியல்வாதி களுக்கு ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள். பெரும்பான்மை மக்களின் இந்த மனமாற்றத்தை அரசியல்வாதிகள் உள்வாங்கிக் கொண்டு செயல்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பேணிக் காப்பதற்காக முழுமையாக இல்லாவிட்டாலும், ஏதோவொரு வகையில் நான்கு தமிழ்க் கட்சிகள் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் 1977இல் போன்ற ஒரு சரித்திர மாற்றத்தையும் இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இத்தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகின்றது. தமிழ் மக்கள் இக் கூட்டமைப்பின் மீது சுமத்தியுள்ள பாரிய பொறுப்பைக் கடமை யுணர்வுடனும், கூடிய கவனத்துடனும் நிறைவேற்றுவதைப் பொறுத்தே இக்கூட்டமைப்பின் ஆயுட்காலம் தங்கியுள்ளது.
3.4.1 மலையகத்தில் தேர்தல் - பதுளை மாவட்டம்
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின் அறிக்கையின்படி பதுளை மாவட்டத்தின்/மொத்த சனத்தொகை 777,555 ஆக இருக்கின்றது.
அட்டவணை 34.1 பதுளை மாவட்டத்தின் இனங்களின் விகிதாசாரம்
சமூகம் 1981 2001 தொகை
சிங்களவர் 69.1% Z2.7% S60, 783
இந்தியத் தமிழர் 20.2% 18.2 141,087
இலங்கைத் தமிழர் 5.9% 4.2% 3223O
சோனகர் 4.2% 5.2% 4O4SS
மொத்த சிறுபான்மையினர் (27.6%) (213,772)
(ஆதாரம்:- குடிசன மதிப்பீடு 2001)

Page 48
கீத பொன்கலன்
பதுளை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தோட்டப் பகுதி மக்களின் தொகை 95,931 என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தரவுகளின் அடிப்படையில் பதுளை மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் தொகை (தோட்டம்/ நகரம்) இலட்சத்தைத் தாண்டி நிற்கிறது. ஆனால், இம்முறை தேர்தலில் கிட்டத்தட்ட 60,000 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.
兹 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் இடாப்பில்
பதியப்படவில்லை.
* வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதற்காகக் கொடுக்கப்
பட்ட படிவங்களை தோட்ட மக்கள் பலரும் தங்களிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
* பலருக்கு இம்முறை வாக்காளர் அட்டைகிடைக்கவில்லை.
责 வாக்களிப்பதற்காக மாலை நேரத்தில் தான் தொழிலாளர்
களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.
பல வாக்குச்சாவடிகள் தொலைவில் அமைந்திருந்தன. மாலையில் பெய்த கடும் மழை காரணமாகவும் பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
鑫 விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர்கள் இடாப்பில்
பதியப்படவில்லை.
பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட எட்டுக் கட்சி களுக்குள் ஐந்து கட்சிகளில் 11 தமிழ் வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களுக்குள் இரண்டில் 22 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஐ.தே.க.வுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றிருக்கும் ஒரே தமிழ்ப் பிரதிநிதிதான் க. வேலாயுதம், பொ.ஐ.மு.வில் போட்டியிட்ட ஒரேயொரு தமிழரான குமரகுருபரனுக்கு 3,257 விருப்பு வாக்குகளும், சுயேச்சைக் குழு மூன்றிற்கு 5085 வாக்குகளும் கிடைத்துள்ளன. ம.வி.மு. வில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளருக்கும், மயில் சின்னத்திற்கும் என, பதுளை மாவட்ட தமிழ் வாக்குகள் ஐந்து திசைகளில் பிரிக்கப்பட்டுள்ளன.
94

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை 3.4.2
பதுளை மாவட்டத்தின் தேர்தல் பெறுபேறுகள் கட்சி 10-10-2000 05-12-2001
ஐ.தே.க 167,357 (ஆச5) 201173 (ஆச5) பொ. ஐ.மு. 154,172 (ஆச3) | 138,433 (ஆச3) ம.வி.மு. 16,414 26,820 இ.தொ.கா. 12,092 3,085 (சுகுழு.3) தேஜ.மு. 5052 352 பு:இட.க. 2022 சி.உ. 1717 1044 மொ. வாக்குகள் 475,558 491,288 பதிவான வாக்குகள் 389,2O3 400,463 (81.51%) செல்லு. வாக்குகள் 361,016 373,837 (93.35%) பழுதான வாக்குகள் 28,187 26626 (6.44%)
ஐ.தே.க. கடந்த தேர்தலிலும் பார்க்க 32,822 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது. பொ.ஐ.மு. கடந்தமுறை பெற்ற வாக்குகளை விடவும் 15,729 வாக்குகள் குறைவாகப் பெற் றுள்ளது. கடைசி நேரத்தில் வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளையும், அரிசி, சீனி, டின்மீன் எனப் பல வழிகளில் மக்களைத் தம் பக்கம் இழுக்க முயன்றும் முழுமையான பலனை அடைய முடியாமல் போய்விட்டது. மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ம.வி.மு. இம்முறை 10/406 அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கணிசமாகவே உள்ளது என்பது வெட்ட வெளிச்சம். ம.வி.மு.யினர் பேசுகின்ற ‘சமதர்ம சமுதாய மாற்றத்தால் தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்களா? அல்லது மலையகத்தின் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளின் கீழ் புத்திஜீவிகளுக்கும், புதிய தலைமுறைக்கும் இடமில்லை என்ப தைப் புரிந்துகொண்டு மாற்று வழிகளைத் தேடினார்களா? எப்படியாயினும் ம.வி.மு.யினரின் கடந்தகாலச் செயற்பாடு களையும், அவர்களது பேரினவாதக் கொள்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்று என்பதை மலை யக இளம் சமுதாயம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
95

Page 49
கீத பொன்கலன்
எப்படியாயினும் கடந்த இரு தேர்தல்களிலும் கிடைக்காத பிரதிநிதித்துவம் பதுளைக்கு இம்முறை ஒரு நூலிழையில் கிடைத் திருப்பதையிட்டு மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது. நுவரெலியா மாவட்டம்
2001ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் அறிக்கையின்படி இந்த மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 700,083 ஆகும்.
அட்டவணை 34.3
நுவரெலியா மாவட்டத்தின் இன விகிதாசாரம்
சமூகம் 1981 2001 தொகை
சிங்களவர் 42.7% 40.1% 281,695 (40.24%) இந்தமிழர் 42.7% 51.33% 359,386 இலதமிழர் 12.7% 5.92% 41,445 சோனகர் 2.0% 2.51% 17,557
ஆதாரம்:- குடிசனமதிப்பீடு 2001
இந்த மாவட்டத்தின் சிறுபான்மையினரின் கூட்டுத்தொகை 418, 388 (59.7%) தமிழ் வாக்காளர்கள் மட்டும் 210,000க்கும் மேல் இருக்கிறார்கள். இதனடிப்படையில் 60வீதமாக இருக் கின்ற சிறுபான்மை இனத்தவர் தங்கள் சார்பாக மூன்று பிரதி நிதிகளைத் தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 40, விழுக்
அட்டவணை 3.4.4
நுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் பெறுபேறுகள்
கட்சி 10-10-2000 O1-12-2001
ஐதேக 126485 (ஆச4)| 215,157 (ஆச5) | 6828% பொஐமு. 158,018 (ஆச3)| 77,733 (ஆச2)| 2466% மவிமு. 6399 11,080 (3.51%) . தேஐ.மு. 4671 6600 s சிஉ 1161. 642
மொவாக்குகள் 405,414 4.17,763 செல்லுபடி வாக்குகள் | 300,806 315,099 (91.75%) பழுதான வாக்குகள் 35,149 28,373 (8.24%) பதிவான வாக்குகள் 335,955 343,472 (82.33%)
96

இருபத்தோராம் நூற்றாண்டில் .
காடாக இருக்கும் பெரும்பான்மை மக்களோ நாலு பிரதிநிதி களைத் தெரிவு செய்துள்ளனர். இம்மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளின் ஊடாக 40 தமிழ் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கினர். அதே சமயம் ஆறு சுயேச்சைக் குழுக்களிலும் 24 தமிழ் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஐ.தே.க. இத்தேர்தலில் கடந்த தேர்தலிலும் பார்க்க 88,671 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்றுள்ளது. பொஐமு. முன்னைய தேர்தலிலும் பார்க்க 80.235 வாக்குகளைக் குறைவாகப்பெற் றுள்ளது. ம.வி.மு. 478 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது. மயில் சின்னத்தில் போட்டியிட்டவர்களால் இரண்டு தேர்தல் களிலும் ஒரு ஆசனத்தையும் பெறமுடியாமல் போயுள்ளது.
தமிழ் பிரதிநிதிகள் பெற்ற விருப்பு வாக்குகள்
ஆறுமுகம் தொண்டமான் 121, 542 பெ. சந்திரசேகரன் 121, 421 முத்துசிவலிங்கம் 107,339
வரலாறு காணாத விருப்பு வாக்குகளைப் பெற்றுவிட் டோம் என்ற வெற்றிக் களிப்பில் ஆரவாரம் செய்யும் இவர்கள் ஒன்றைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். 1994ஆம் ஆண்டில் வெறும் 10 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தவரும், யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றார். ஆகவே தேர்தலில் முக்கியத்துவம் பெறுவது வாக்குகளின் அளவு அல்ல, தெரிவாகும் பிரதிநிதிகளின் எண்ணிக்கைதான். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க பாராளு மன்றத்தில் வாதாட தேவைப்படுவது வாக்குகள் அல்ல. அங்கத் தவர்களின் எண்ணிக்கையே என்பதை வாக்காளர்களும் கவனிக்க வேண்டும். ம.வி.மு. விருப்பு வாக்குகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற் காக அங்கத்தவர்களின் எண்ணிக்கையைத்தான் அதிகரிக்கப் பாடுபடுகிறார்கள் என்பதைப் பற்றியும் சிறுபான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மூன்று தமிழ்ப் பிரதிநிதி களும் பெற்ற மொத்த வாக்குகளும் பகிர்ந் தளிக்கப்பட்டிருந் தால் இம்மாவட்டத்தில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்ட ஐந்து வேட்பாளர்களுமே வெற்றி பெற்றிருக்கலாம்.
97

Page 50
கீத பொன்கலன்
அட்டவணை 3.4.5 மலையகப் பிரதிநிதிகள்
மாவட்டம் 1994 2000 2001
நுவரெலியா 4. S 3
பதுளை - - 1
கண்டி 1. - - இரத்தினபுரி 1. - - கொழும்பு 2 1 தேசியப்பட்டியல் 2 4. 5
மொத்தம் 10 09 10
ஆகவே மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவம் பாராளு மன்றத்தில் படிப்படியாக குறைந்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை. இம்முறை தேசியப் பட்டியலுக்காக மலையகத் தமிழர் சார்பாக, ஐ.தே. கட்சியில் ஐவரின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருவர் வர்த்தகப் பிரமுகர்கள். இவர்கள் மலையக மக்கள் தொடர்பான செயற்பாடுகளில் எவ்வகையில் பங்கு கொண்டுள்ளார்கள் என்பது புரியவில்லை. பொ.ஜ.மு. பட்டியலில் நால்வரின் பெயர்களைக் கொடுத்துள் ளார்கள்.
மலையகம், இந்திய வம்சாவளித் தமிழர்களின் பாரம் பரிய பிரதேசம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தப் பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் நன்கு பிரதி பலிக்கப்படுவதில்லை. ஆகவே இந்தப் பிரதேசத்தின் மக்கள் ஒரு தனிக்கட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு சரித்திரத் தேவையாக அமைகிறது.
இது இப்படியிருக்க இ.தொ.கா., ம.ம.மு., இ.தே.தொ.கா. ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்று கூறினாலும் செல்லசாமி என்ற தனிநபர்தான் இந்த இணைவில் இடம்பெற்றுள்ளாரே தவிர அவர் சார்ந்த இ.தே.தொ.கா. அல்ல. மலையக மக்களின் நலனுக்காக இவர்கள் இணைந் துள்ளதாகக் கூறுகின்ற போதிலும் தேர்தல் சமயத்தில் இவர் களது செயற்பாடுகள் வேறுவிதமாகவே இருந்தன. ஐ.தே.க. பட்டியலில் பலர் இடம்பெற முடியாமல் போனதற்கும்
98.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பின்னணிக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தான். கட்சி தாவாமல் இருந்த புத்திரசிகாமணி ஐ.தே. கட்டிசியிலிருந்து வெளியேறும்படி ஆனதும் இதனால்தான். சென்னனுக்கும் இதே நிலைதான். ஒற்றுமையின் பெயரால் பலரை ஒரங்கட்டி தமக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரமே சேர்த்துக்கொண்டிருப் பது எவ்வகையில் ஒற்றுமையாகும்? மலையகப் பிரதிநிதிகளை உண்மையிலேயே அதிகரிக்க வேண்டும் என்று எண்ணியிருந் தால் நுவரெலியா மாவட்டத்தைப் போலவே ஏனைய மலையக மாவட்டங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். ஒற்றுமையை பறைசாற்ற ஊர்வலங்கள், கூட்டங்கள் தேவை யில்லை. உண்மையான செயற்பாடே அவசியம். அந்தச் செயற் பாடு மட்டும் இருந்திருந்தால் தொழிலாளர்கள் இருநூறு ரூபா
சம்பள உயர்வை இழந்திருக்க மாட்டார்கள்.
அண்மையில் நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின்போது மலையகத் தமிழரின் தனித்துவத்தைப் பேணுவதாகக் கூறி அவர்களை இந்திய வம்சாவளித் தமிழராகவே பதியப்பட வேண்டும் என்று மலையகத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், மக்கள் அதனை முழுமையாக ஏற்கவில்லை என்பது தெளிவாகின்றது. கொழும்பில் பதிவான இந்தியத் தமிழரின் தொகை 26,036 ஆக இருக்க இலங்கைத் தமிழராக 230,558 பேர் பதிவாகியுள்ளதே இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக அமை கின்றது. இந்த இனத்துவக் கொள்கையை ஏன் அரசியலில் உருவாக்க முடியாது? m
எடுத்துக்காட்டாக முஸ்லிம் காங்கிரிஸ் தங்களது சமூகம் கூடுதலாக வாழும் பகுதிகளில் தனித்தும், ஏனையபகுதிகளில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிட்டுத் தங்களது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். இதுபோல் மலையக அரசியல்வாதிகள் தங்களது சமூகத்தைப் பற்றித் தீர்க்கதரிசனமான சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால் நுவரெலியாவில் ஐவரைப் பெற்றிருப்பது திண்ணம்.
பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்தே போட்டி யிடும்போது தமிழரின் வாக்குகள் சிதறுண்டு போவதும், அந்தப் பெரும்பான்மைக் கட்சிகள் பலப்படுவதும், அனைத்துத் தமிழ் வேட்பாளர்களுக்கும் அக்கட்சிகளில் இடம் கிடைக்காமல் பல கூறுகளாக, குழுக்களாக பிரிந்துபோவதும் தவிர்க்கப்பட முடியாததாகும்.
99.

Page 51
கீத பொன்கலன்
தனிக்கட்சியாக போட்டியிடும்போது தேசியப் பட்டிய லிலும் அங்கத்தவர்களைக் கூட்டிக் கொள்ளமுடியும் என்பது இவர்கள் அறியாத ஒன்றல்ல. ஆனால், தமது சமூகத்தின் எதிர் கால நலன்கருதி ஏன் இவர்கள் ஒன்றிணையை மறுக்கிறார் கள்? என்ன நிர்ப்பந்தம் இவர்களைத் தடுக்கின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இவர்களது இந்தக்கூட்டு எத்தனை காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்ற சந்தேகம் இயல்பாகவே பலருக்கும் ஏற்பட் டுள்ளது. ஆறுமுகம் தொண்டமானுக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே 121 வாக்கு வித்தியாசம் உள்ளது. இவர்களில் ஒரு வருக்கு மட்டுமே அமைச்சொன்றைக் கொடுத்தால் மற்றவரின் நிலைப்பாடு என்ன? வருங்காலத்தில் இவர்கள் தங்களது சின்னங்களின் கீழ் இணைந்து போட்டியிடுவார்களா? அல்லது எப்போதும் ஒரு பெரும்பான்மைக் கட்சியுடனேயே இணைந் திருப்பார்களா? இனவாத அரசென பொ.ஐ.மு.யை இப்போது வருணிக்கும் இவர்கள் அப்போது அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு கை உயர்த்தி ஆதரவு வழங்கியது போன்றே எதிர் காலத்திலும் நடந்துகொள்வார்களா? இப்படி பல கேள்விகள் தமிழ் மக்களது மனங்களில் எழாமல் இல்லை. எனினும் இம் முறை தேர்தலில் தமிழரின் ஒற்றுமையை உணர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதே யதார்த்தம். ஆகவே அந்த ஒற்றுமைக்கு மதிப்பளித்து இந்த சமூகத்தின் உரிமைகளை மீட்டுக்கொடுக்கவும், காத்துக் கொள்ளவும் இவர்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
சிந்திப்பார்களா?
தொழிற்சங்க தலைமைத்துவத்தை இளைய தலைமுறை யினரிடம் கையளித்துவிட்டு இவர்கள் அரசியலில் முழுமை யாக தீவிரமாக ஈடுபட்டுத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தனிக் கட்சியை ஏனைய மலையகத் திலுள்ள கட்சிகளையும் இணைத்து உருவாக்குவதே இன்றைய தேவையாகும். சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிப்ப தற்காக, பெரும்பான்மைக் கட்சிகள் அமைக்கும் வியூகத்துக் குள் சிக்கி, மலையகத் தமிழ் சமூகத்துக்கு இழைத்துவருகின்ற துரோகச் செயற்பாட்டைத் தமிழ் அரசியல்வாதிகள் இனியும் தொடரக்கூடாது.
OO

இருபத்தோராம் நூற்றாண்டில் .
முஸ்லிம் காங்கிரஸ் 105,346 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியலிலும் ஒருவரைப் பெற்று மொத்தம் ஐந்து பிரதிநிதி களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றது. இவர்கள் பெற்ற இந்த மொத்த வாக்குகளும் முத்துசிவலிங்கத்தின் வாக்குகளை விடவும் குறைவானதே. மலையக ம்க்களிடம் 16 அங்கத்தவர் களைத் தெரிவு செய்யக்கூடிய சக்தி இருக்கின்றது. அந்தச் சக்தியைப் பணத்திற்காகவும், பதவிக்காகவும் பாழாக்குவதை அரசியல்வாதிகள் நிறுத்தாவிட்டால் பெரும்பான்மைக் கட்சி களுடன் இணைந்ததால் தனித்துவத்தை இழந்துவிட்ட இடது சாரிக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற துர்பாக்கியமான சரி வைத்தான் மலையகக் கட்சிகளும் சந்திக்க வேண்டிவரும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அபிவிருத் திக்கு முறையான திட்டங்களைக் கொண்டிராததால் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளத் தேவை யில்லை. எனினும் சிறுபான்மைப் பிரதிநிதிகள் அனைவரும் ஒற்றுமையாக நின்று, செயல்வடிவம் கொடுக்கப்படாத, அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை அமல்படுத்தத் தீவிர கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை (சலுகைகள் அல்ல) பெற்றுத்தர வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
னக்குரல் 12, 12. 2001, 13, 12. 2001
(5
முடியும் என்பதைப் போலவே, நம்மால் முடியாததையும் உணர்ந்து தெளிவதே வாழ்வின் இன்னொரு சூத்திரம்.
ம. திருவள்ளுவர்
Ol

Page 52
3.5 மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை நுவரெலியாவில் மாத்திரம் அக்கறைகாட்டுவது உகந்ததல்ல
இன்று மலையகத் தமிழ் மக்கள் மலையகப் பகுதிகளில் பதினாலு மாவட்டங்களில் வாழ் கின்றனர். இதில் ஒரு சில மாவட்டங்களில் செறிந்தும் ஏனைய மாவட்டங்களில் குறைந்தும் வாழ்கின்றார்கள். எனவே, இம்மக்களுக்காக தனிகட்சி ஒன்று உருவாக்கப்பட்டால் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்யகூடிய வாய்ப்பு இருப்பதோடு, தேசிய பட்டியலிலும்கூடிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், யதார்த்த நிலை என்னவெனில், நுவரெலியா, கொழும்பு, பதுளை போன்ற மாவட்டங்களே
பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன.
மலையகத் தமிழர் வாழ்வது நுவரெலியாவில் மாத்திரமா?
மலையக மக்கள் வாழும் ஏனைய மாவட்டங்களில் சிறு பான்மை இனத் தமிழ் வேட்பாளர்களால் ஏன் இத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது என்பதைப் பற்றி இப் போதிருந்தே தமிழ்மக்கள் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
மலையக மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டுப் புள்ளி விபரங் களைப் பார்க்கும்போது மொனராகலை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மலையக மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு அங்கத்தவரையாவது பெறுகின்ற வாய்ப்புள்ளது என்பது நன்றாகப் புரியும்.
O2

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை 3.5.1 2001ஆம் ஆண்டு மாவட்ட சனத்தொகை
மாவட்டம் இந்திதமி. இலதமி. மொத்தம்
பதுளை 359,386 41,445 400,831
கண்டி 141,087 32,230 173,317 இரத்தினபுரி 78,581 34,339 112,920 கேகாலை 45,647 14,103 59,810
களுத்துறை 28,769 13,527 42,296
மாத்தளை 23,329 23982 47,311 மொனராகலை 7,060 5,579 13,139
கண்டி மாவட்டத்தில் இந்தத்தேர்தலில் 13 அரசியல் கட்சி களும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன. அவற்றின் சார்பாகப் போட்டியிட்ட 285 வேட்பாளர்களுள் 50 சோனகர் களும் 21 தமிழர்களும் அடங்குவர். இதில் சோனகர்கள் சார் பாக 2 பேர் தெரிவாகியுள்ளனர். தமிழர் சார்பாக ஒருவரும் வெற்றி பெறவில்லை.
ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்ட துரைசாமி மதியுக ராஜா 28,936 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்ட சிவசாமி ராஜரத்தினம் 9130 வாக்குகளைப் பெற்றுள்ளார். இம்மாவட்டத்தில் மொத்தம் 85,000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
மாத்தளை மாவட்டத்தில் வாழும் 47311 தமிழர்களுள் 33000 பேர் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருந்தனர். ஐ.தே.க. சார்பாக போட்டியிட்ட பெருமாள் வடிவேல் 8,321 வாக்கு களையும், பொஐ.மு. சார்பாகப் போட்டியிட்ட அ. ரெங்கசாமி 1954 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 112,920 தமிழர்கள் வாழ் கின்றனர். ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்ட கணபதி இராமச் சந்திரன் 8,321 வாக்குகளையும் ஏ.எம்.டி.ராஜன் 4,785 வாக்கு களையும் பெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் பாவாடை மதகாணி என்பவர் 6,033 வாக்குகளை ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்டு பெற்றுக் கொண்டுள்ளார். இங்கே 42,296 சிறுபான்மைத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
O3

Page 53
கீத பொன்கலன்
கேகாலை மாவட்டத்தில் 58,810 சிறுபான்மைத் தமிழர்கள் வாழ்கின்ற போதும் போட்டியில் இறங்கக்கூட ஒரு தமிழரும் கிடைக்கவில்லை.
இம்மாவட்டங்களில் செறிந்து வாழும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் இனவாதக் கொள்கையின் தாக்கத்தை அதிகளவில் சந்திப்பவர்கள். நாளுக்கு நாள் இத்தாக்கம் இவர்களை ஒடுக்கிக் கொண்டு வருகின்றது. ஆகவே இங்கு இவர்களின்அரசியல் சக்தி கட்டியெழுப்பப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால் தேர்தல் முடிவுகளும், தேசியப்பட்டியல் தெரிவுகளும், அமைச்சரவைப் பதவிகளை யும் கவனிக்குமிடத்து, மலையகத் தமிழரென்போர் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே வாழ்கின்றனர் என்ற எண்ணத்தைத் தான் கொடுக்கின்றது.
அட்டவணை 3.5.2
மலையகப் பிரதிநிதிகள் 2001 மாவட்டம் தேர்தல்தெரிவு தேசியப்பட்டியல் நுவரெலியா ஆறுமுகம் இராதாகிருஷ்ணன்
தொண்டமான்
பெ. சந்திரசேகரன் எஸ். சதாசிவம் முத்து சிவலிங்கம் வி.புத்திரசிகாமணி
கொழும்பு மனோகணேசன் ராமலிங்கம்
சந்திசேகரன் ஆ. யோகராஜன்
பதுளை க. வேலாயுதம் ------
தெரிவான 10 பாராளுமன்ற அங்கத்தவர்களில் 6 பேர் நுவரெலியா மாவட்டத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பதுளையில் ஒருவரும், கொழும்பில் 3 பேரும் இடம்பெறுகின் றனர். கொழும்பில் பெரும்பாலும் வர்த்தகப் பிரிவினரைத் தான் இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்களேயன்றி தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களையல்ல. தேசியப்பட்டியலில் சிறுபான்மையினர் *
தேசியப் பட்டியலிலாவது ஏனைய மலையக மாவட்டங் களில் ஒரு தமிழருக்குஇடமளித்திருக்கலாம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. தேசியப் பட்டியலில் 3 தமிழர்கள் இடம்பெற்றனர். இம்முறை
04

இருபத்தோராம் நூற்றாண்டில் .
2 பேர் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தேசியப் பட்டியலில் இம்முறை, சரிபாதி இடங்கள் சோனகர்களால் நிரப்பப்பட்டுள்ளன.
அதேசமயம், பொ.ஐ.மு. சென்ற முறை 1 தமிழருக்கும், இம்முறை 2க்கும் தேசியப் பட்டியலில் இடமளித்துள்ளது. ஆட்சியில் இருக்கும்போது தேசியப் பட்டியலுக்காகக் கிடைத்த 13 இடங்களில் 1 இடத்தை மட்டுமே தமிழருக்கு ஒதுக்கியவர்கள், இம்முறை 11 இடங்களில் 2 இடங்களைத் தமிழருக்காய் வழங்கி யுள்ளார். ல.ச.ச. கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்க வேண்டும். அதன்படி, பட்டி வீரக் கோனுக்கு கிடைத்திருக்க வேண்டிய இடம் கொடுக்கப்பட வில்லை. அதேபோன்று அலவி மெளலானாவும் தேசியப்பட்டி யலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் தேசியப் பட்டியலில் இடம்பெறாதிருந்த புத்திரசிகாமணிக்குத் தேசியப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ம.வி.மு. சார்பாக கொழும்பைச் சேர்ந்த ஒருவர் தேசிய பட்டியலில் இடம்பெறுகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, சிறுபான்மையினரை வளைத்துப் போடுவதற்கான பெரும்பான்மைக் கட்சிகளின் தந்திரோபாயமாகவும் இது இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அமைச்சரவையில் சிறுபான்மைத் தமிழர்கள்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 3 பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
A.
அமைச்சர்கள் 25 கருத்திட்ட அமைச்சர்கள் 28 பிரதியமைச்சர்கள் 9 (தற்போதைக்கு)
முதல் பிரிவில் 3 சோனகர்களும், ஆறுமுகம் தொண்ட மானும் (வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு (Housing & Plantation Intrastructure) இடம்பெறுகின்றனர். இரண் டாம் பிரிவில் 4 சோனகர்களை பெ. சந்திர சேகரனும் சமூக -gy 96í9(5áj5) gy60l páját (Ministry of Community Development) இடம்பெறுகின்றனர். மூன்றாம் பிரிவில் 2 சோனகர்களும் முத்து சிவலிங்கமும் (விவசாய, கால்நடை அபிவிருத்தி (Agriculture & LiveStock) இடம்பெறுகின்றனர்.
வடபகுதி மக்கள் சார்பாக ஐ.தே.கட்சியில் போட்டி யிட்டுத் தெரிவான மகேஸ்வரன் இந்து விவகார கருத்திட்ட
05

Page 54
கீத பொன்கலன்
அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். த.வி.கூ. அமைச்சரவைப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்க முன்வரவில்லை.
அமைச்சரவையில் இடம்பெறுகின்ற 9 முஸ்லிம் அங்கத் தவர்களும் அவர்கள் செறிந்து வாழும் பல பகுதிகளிலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மலையகத்தைப் பொறுத்த வரை, அமைச்சரவையில் இடம்பெறுகின்ற மூவரும் நுவரெலியா மாவட்டத்தையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.
கவே, மலையக தமிழ் மக்கள் ஏனைய மாவட்டங் களிலும் இருக்கிறார்கள். அவர்களது குரலும் பாராளுமன்றத் தில் ஒலிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அதற்கான செயற்றிட்டங்களை இப்போதிருந்தே வகுத்து மலையகத் தமிழ் மக்களின் நலன்விரும்பிகள் செயற்பட வேண்டியது மிக அவசியம். அப்படிச் செய்யாது விடுவார்களேயானால் மலையக மாவட்டங்களில் பிரதிநிதிகள் அருகக் கூடிய அபாயத்தை நெருங்கிச் செல்வதாகவேயிருக்கும்.
பொ.ஐ.மு.யை ஆட்சியிலிருந்து இறக்குவதானால் ஐ.தே.க. யைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் மக்க ளுக்கு இருப்பதால்தான், இந்த முடிவு என்பதை யாரும் மறக்கக் கூடாது. அதனால், மலையகத் தலைவர்கள் நடைமுறைப் படுத்த வேண்டிய சில முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டு வது பொருத்தமாக இருக்கும். O 3இலட்சம் பேருக்குப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும். O பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள 12 பிரதேச செயலகங் களில் தமிழ்மொழி அமலாக்கத்தை அரச வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை நடைமுறைப் படுத்த வேண்டும். O ஏனைய அரசு, தனியார் துறையினருக்குக் கூட்டிய சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதனடிப்படையில் இவர்கள் நாளாந்தம் ரூபா 185 பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். O தோட்டத்துறை சார்ந்த 60,000 குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின்மூலம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கதேசிய வீடமைப்பு அதிகாரசபை6ஆண்டுநடவடிக்கைத்திட்டம் ஒன்றை இவ்வருடம் முன்னெடுக்கவுள்ளது.(20.04.99 வீரகேசரி) இது எப்போது? O இரண்டு தசாப்தங்களாகக் கூறிவருகின்ற வீடு - காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா? மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப் படவேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆகவே அவர்கள் விழிப்போடு இருக்கிறார்கள்.
தினக்குரல் 22, 01. 2002
06

அத்தியாயம் - 4
தீராத பிரஜாவுரிமையும் தீர்க்காத சட்டங்களும்
4.1 புதிய பிரஜாவுரிமைச்சட்டம் மலையகப் பிரஜாவுரிமைப் பிரச்சினையை முற்றாக தீர்க்கப் போவதில்லை.
4.2 சுதந்திர நாட்டின் அந்நிய
மனிதர்களாய்.
4.3 சொந்த இனத்தின் துரோகமும்
மாற்று இனத்தவரின் பாரபட்சமும்
107

Page 55
அத்தியாயம் 4
தீராத பிரஜாவுரிமையும் தீர்க்காத சட்டங்களும்
1948ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் ஆறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு, மலையகத் தமிழ் மக்களுடைய பிரஜா உரிமைப் பிரச் சினையை முழுமையாக தீர்க்காமல் படிப்படி யாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மக்கள் 1931, 1936ம் ஆண்டுகளில் நடை பெற்ற சட்டசபை தேர்தல்களிலும், முதலாவது பொதுத் தேர்தலிலும், முழுமையாக பங்கு பற்றி, தங்களின் அரசியல்பலத்தைதக்கவைத்தார்கள். இந்த மக்களுடைய பிரஜா உரிமை பறிக்கப் பட்டது இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட பார தூரமான, அநீதியான செயலாகும்.

4.1 புதிய பிராஜாவுரிமைச் சட்டம் மலையகப் பிரஜாவுரிமைப் பிரச்சினையை முற்றாகத் தீர்க்கப் போவதில்லை
2002ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கை குடிவரவு குடிய கல்வுத் திணைக்கள அதிகாரி பொன்சேகா இந்திய கடவுச் சீட்டுப் பெற்ற 150,000 பேர்கள் அவசியம் நாடுகடத்தப்படுவார்கள் என்று பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்ட செய்தி முழு மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சுறுத்தலையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் பிரஜாவுரிமை சம்பந்தமாக உருவாக்கப்பட்ட பல ஒப்பந்தங்களும், சட்டங் களும் சாகாவரம் பெற்று உயிரோடு இருக்கும் வரை, நாடு கடத்தப் படலாம் என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் வாழும் சகலரும் சமத்துவமாகப் பாவிக்கப்பட்டு குடியுரிமையும், வாக்குரிமை யும் பெற்றார்கள். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த பின் அன்றைய அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட முதற்சட்டம், 1948ஆம் ஆண்டு 18ம் இலக்கப் பிராஜாவுரிமைச் சட்டம் உலக மனித வரலாற்றில் சகித்துக் கொள்ள முடியாத, மிகவும் அநீதி யான ஓர் சட்டமாகும். இதற்குப் பின் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங் களும், சட்டங்களும் மலையகத் தமிழ் மக்களின் தொகைக் கணக்கென்னும் (Number Game) திருகு தாளத்தினால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இதனால் தான் இன்று பலரும் 2 இலட்சத்திற்கும் 3 இலட்சத்திற்கும் இடையில் இன்னும் நாடற்றவர்கள் உள்ளனர் என்று கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே பிரஜாவுரிமைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 6 சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடைசியில் ஏற்படுத்தப்பட்டதே 2003ம் ஆண்டின் 35ம் இலக்க இலங்கை இந்திய வம்சாவளியின ரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சட்டமாகும்.
09

Page 56
அட்டவணை 4.1.1.
பிரஜாவுரிமைச் சட்டங்களும் நடவடிக்கைகளும்
சட்டம் இலங்கைப்பிரசை இந்தியப்பிரசை
*1948ம் ஆண்டில் 18ம் வம்சாவழி பிரஜைகள் இந்திய வம்சாவழி மக்கள் இலக்க பிரஜாவுரிமைச் சிங்களவர், இல. தமிழர், - 10 இலட்சத்துக்கு சட்டத்தின் படி முஸ்லிம் ஏனையோர் மேற்பட்டவர்களை நாடற்ற
வர்களாக்கினார்கள்.
(குறிப்பு:- அனைத்துலக மனித உரிமை உறுப்புரை 15 மறுக்கப்பட்டது)
*1949ம் ஆண்டில் 48வது வாக்குரிமை வாக்குரிமை இலக்க இலங்கை கொடுக்கப்பட்டது மறுக்கப்பட்டது. (பாராளுமன்றத் தேர்தல்) திருத்தச் சட்டம்
*1949ம் ஆண்டில் 3ம் இலக்க 1951 தொடக்கம் 1962 இந்திய-பாகிஸ்தானியர் வரையும்1இலட்சத்து இந்தியா சென்றார்கள். (பிரஜாவுரிமை) 35 ஆயிரம் பேர் (1954 - 1967) வதிவிடச் சட்டம் பெற்றுக்கொண்டனர்.
*1964ஒக்டோபர் 30ம் திகதி 300,000 525,000 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (குறிப்பு:- ஏறக்குறைய
975000 பேர். மிகுதி 150,000 ? முடிவு 30 செப்டம்பர் 1979
"1967ம் ஆண்டில் 14ம் இலக்க 625,000 400,000 இலங்கை-இந்திய உடன் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பித்தார்கள். படிக்கை (அமல்படுத்துதல்) ச | 4 பேர் 7 Gliń.
"1971ம் ஆண்டில் 43ம் இலக்க | 4 பேர் 7 பேர், இந்தியா செல்ல
இலங்கை - இந்திய ஆணையாளர் தீர்மானம் பதிவு செய்யப்பட்டயின்
அமல்படுத்தும் ஒப்பந்தம் நீதிமன்றம் தாக்கல் 4 பேருக்கு இல.பிரஜை
(திருத்த) சட்டம் செய்ய முடியாது)
*1974ம் ஆண்டில் சிறிமா- 75,000 75,000
இந்திரா ஒப்பந்தம் (1981ம் ஆண்டு முடிவு)
O

இருபத்தோராம் நூற்றாண்டில் .
1986ம் ஆண்டில் 5ம் இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குச் சட்டம்
அட்டவணை 4.1.2
(அன்றைய நிலமை)
ஒப்பந்தங்கள் முடிவு இலங்கைப்பிரசை இந்தியப்பிரசை
1964+1974ஒப்பந்தங்கள் 375000 (ஏ) + இயற்கை 600,000 (அ) + இஅ) அதிகரிப்பு (இஅ) விண்ணப்பித்தவர்கள்
506,000(ஆ)
கொடுக்கப்பட்டவர்கள் 197535 421.207 (இ) (1992-422.24)
கொடுக்கப்பட 177,465 நாடு கடத்தப்பட்டவர்கள் வேண்டியவர்கள் 337,066 (ஈ) (1986 பெப்ரவரி)
(1992-337,679)
இந்தியா செல்ல β) - R = 84,141 (Φ.) வேண்டியவர்கள் இந்திய கடவுச்சீட்டுப்
பெற்றவர்கள்.
விண்ணப்பித்தவர்களில் ஆ-இ=84793(ஊ) இன்னும் கொடுக்கப்பட இந்தியாவுக்கு வேண்டியவர்கள் விண்ணப்பித்தவர்கள்
1986ம் ஆண்டு சட்டத்தின் படி அ-ஆ (600,000-306,000) = 94,000 பி இவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குதல். இதன்படி இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள். மொத்தம் (1964 தொடக்கம் 1986 வரையும்) ஏ+பி (375,000+ 94,000) = 469,000 (சி) பேர். 18 மாதத்திற்குள். இந்தச் சட்டம் 1987 ஆகஸ்ட் 18ம் திகதியுடன்
முடிவடைகிறது.
1988ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில்
கொடுக்கப்பட்ட எண்ணிக்கை
அட்டவணை 4.1.3
1.1.1986 தொடக்கம் இலங்கைப் பிரசை இந்தியப் பிரசை 31.10.1988 வரையும்
39,276 568 1964 தொடக்கம் 1988 337,066+568 (197535+ 39276) =337,634 =236,81 (டி)
l

Page 57
கீத பொன்கலன்
முதல் கட்டமான இந்தியா-பாகிஸ்தானியர் (பிரஜாவுரிமைச்) பதிவு சட்டத்தின் கீழ் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டு மென்று இ.தொ.கா. கூறிய காரணத்தால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது. இறுதி நேரத்தில் இவ்வேண்டுகோள் விடப் பட்ட காரணத்தினால் 8 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுள் 237034 விண்ணப்பங்களே அனுப்பப்பட்டன. இக்கட்டான இச்சட்டத்தினால் 1952 - 1962 வரை 1 இலட்சத்து 35 பேர் இலங்கைப் பிரஜாவுரிமையும் 1954 - 1967 வரையும் 129,120 பேர் இந்தியா பிரஜாவுரிமையும் பெற்றனர். இதற்குப் பின் நீண்ட காலம் இப்பிரச்சனை தீராது நீடித்தது. இதற்குக் காரணம் அன்றைய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு இந்த மக்கள் இலங்கையில் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்கள், இந்நாட்டிற்கே உரியவர்கள், அவர்களை என்ன காரணம் கொண்டும் இந்தியா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்க் கூறியமையே. நேரு மறைந்த பின்பு சிறிது காலம் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் அன்றைய பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவின் பொறுப்புப் பற்றி வலியுறுத்தினார். அதே காலத்தில் இந்தியா-சீன தகராறு உச்சகட்டம் அடைந்திருந்தது. எனவே இந்நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையும், இலங்கையுடன் தன் பாதுகாப்பு கருதி நட்புணர்வை வளர்த்துக் கொள்ள இந்தியாவும் இந்த (கொடிய) ஒப்பந்தத்தை செய்துக் கொண்டன.
1988ம் ஆண்டின் 39ஆம் இலக்க நாடற்ற ஆட்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம். இந்த சட்டத்தின் மூலம் 469,000 பேர்களில் இன்னும் இலங்கை பிரஜாவுரிமை பெறாதவர்களுக்கு, இலங்கை பிரஜாவுரிமை கொடுக்கப்படும். 469,000 - 236,811 = 232,189 பேர். இந்தியா பிரஜாவுரிமை 506,000 - 421,207 = 84,993 பேர். இந்த சட்டத்தின்படி 506,000 இந்தியாவுக்கு விண்ணப்பித்தவர்களும் அவர்களுடைய வம்சாவழியினரும் இலங்கை பிரஜாவுரிமை பெற முடியாது. படிவம் ‘ஏ’ முழுமையாக நிரப்பி அனுப்பினால் படிவம் ‘பி’ மூலம் அவர்களுக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்தியா சென்றவர்கள் மிகவும் சொற்பப் பேரே. பொய்த் தகவல் கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்த 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூ. 5,000 அபராதம் விதிப்பதுடன் சான்றிதழும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
2

இருபத்தோராம் நூற்றாண்டில் .
2003ம் ஆண்டின் 35ஆம் இலக்க இந்திய வம்சாவழியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்.
இந்தச் சட்டம் மந்திரி சபை அங்கீகாரம் பெற்று பாராளு மன்றத்தில் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது - அதாவது ஆகஸ்ட் 2003 ஆண்டு சட்டம் 1964ம் ஆண்டு சட்டத்திற்குள் அடக்கி இலங்கையின் நிரந்தர வாசியாக இருப்பவர்களை உள்ளடக்குகின்றது. இலங்கையின் நிரந்தர பிரஜையாக இருந் தவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் இந்திய வம்சாவழி யிலான ஆட்களையும் குறிக்கிறது. 1964 அக்டோபர் 30ம் திகதி தொடக்கம் இலங்கை பிரஜையின் அந்தஸ்து வழக்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இன்னும் விசேஷமாக இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் இந்திய கடவுச்சீட்டு அல்லது அதனை ஒத்த வேறு ஆவணங்கள் வைத்திருக்கின்ற நிரந்தர வாசி ஒருவருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அட்டவணையில் தரப்பட்டுள்ள விசேட வெளிப்படுத்தும் பத்திரம் மூலம் தமது இந்திய பிரஜா உரிமையைத் துறந்து அத்துடன் இலங்கை பிரஜா உரிமையை தன்னிச்சையாக பெறுவதற்கு ஆணையாளருக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய வெளிப்படுத்தல் பெற்றுள்ளதாக ஆணையாள ரால் எழுத்தில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.
இந்தச் சட்டத்தின் விதி எண் 4 பிரிவு (3) இன் படி - ‘ஆணை யாளர் 1967ஆம் ஆண்டின் 14ஆம் இலங்கை இந்திய உடன் படிக்கை (அமல்படுத்தும்) சட்டத்தின் கீழும், 1988ம் ஆண்டின் 39ஆம் இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குதல். (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழும் சான்றிதழ் வழங்கப் பட்டிராதவர்களுக்கு மாத்திரம். இப்பிரிவின் கீழ் சான்றிதழ் வழங்குதல் வேண்டும்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் பழையபடி பிரஜாவுரிமை அற்றவர்களின் எண்ணிக்கைக்கும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்ட விதிகளுக்கும் உட்படுகின்ற - (506,000 - 421,207) = 84,993 பேர்களின் கதி என்ன?
இந்தச் சட்டத்தின் விதி எண் 3 பிரிவு (அ) இன் படி பிரஜா வுரிமை பறிக்கப்படும் என்று கூறும் பொழுது இது பதிவு செய்யப் பட்ட பிரசைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். அவ்வாறாயின் இவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்படுமா?
13

Page 58
கீத பொன்கலன்
விதி எண் 3 (ஆ) இன்படி கணவன் மூலம் நாட்டின் வலுவில் இருக்கும் சட்டத்தின்படி கணவனுக்கே முன்னுரிமை என்ற சட்டம் நிராகரிக்கப்பட்டு, ஆண் - பெண் சமத்துவம் என்ற சட்டம் அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய வம்சாவழியினருக்கு பழைய சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் ஊன்றிச் சிந்திக்க வேண்டும்.
விதி எண் 4 பிரிவு (1) இன்படி இலங்கை பிரசையாக ஒருவர் வர விரும்பினால் பொது வெளிப்படுத்தும் படிவத்துடன் ஏனைய 2 படிவங்களும் நிரப்பி அனுப்ப வேண்டும். ஆனால் இவர்கள் முன்பு வந்த எந்தச் சட்டங்களில் அடக்கப்படுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. விதி எண் 4 பிரிவின் படி இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட (காணி, வியாபாரம், பதிவு ஏனையவை) இவர்கள் இந்நாட்டின் பிரசைகள் என சத்தியக் கடதாசி அல்லது பிரஜா வுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ஆனால் இன்றைய யதார்த்த நிலை பல்வேறு சட்டங்களின் படி பிரஜா உரிமை பெற்றிருந்தாலும் அவர்களது சந்ததிகளிடம் நிரூபிக்கக் கூடிய ஆவணங்கள் ஒன்றும் தற்போது கையில் இல்லை. அப்படி யானால் ஏனைய மக்களுக்கு இருக்கிற உரிமை மறுக்கப்படு கிறது என்பது வெள்ளிடமலை. உதாரணமாக அண்மையில் ஒரு தோட்டத்தில் காணிப்பங்கீடு செய்து பெரும்பான்மை இனத்துக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் 35 மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமைச் சான்றிதழ்கள் இல்லாத காரணத் தால் மறுக்கப்பட்டது.
இன்று அநேக இந்திய வம்சாவழியினரின் சிந்தனை என்ன வென்றால் “நாம் வாக்காளராக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளோம் நாம் இந்நாட்டுப் பிரசைகளே” என்பதே. இது கனவுலகச் சிந்தனையே. ஆனால் சட்டங்களின் படி பிரஜா வுரிமை வேறு வாக்குரிமை வேறு என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இன்னும் சிலர் தேசிய அட்டைகள் இருப்பதால் நாம் இந்நாட்டின் பிரசைகள் என்ற பூரிப்பில் வாழ்கிறார்கள்.
தொழிலாளர்கள் முன்வைக்கும் யோசனைகள்
கடந்த காலங்களில் 6 விதமான சட்டங்களின் கீழ் பல்வேறு படிவங்கள் நிரப்பப்பட்டு நாடற்ற பிரசைகள் என்ற நிலமையை
14

இருபத்தோராம் நூற்றாண்டில .
உருவாக்கி 55 ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையை மீண்டும் படிவங்கள் நிரப்பப்படுவதால் தீர்க்க முடியுமா?
இந்தப் பிரச்சனைக்கு இன்று ஆளும் கட்சியும், எதிர்
கட்சிகளும் இனவாத கட்சிகளான ஜே.வி.பி. மலையக மக்களின்
பிரஜாவுரிமைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை இதய
சுத்தியுடன் ஏற்கவில்லை. இதற்கு ஒரே மாற்று வழி 1948ம்
ஆண்டில் உருவாக்கப்பட்டதும் அதற்குப் பின் இயற்றப்பட்டது மான சட்டங்களை ரத்துச் செய்து, 1948ம் ஆண்டிலிருந்து
இந்நாட்டை நிரந்தரமான வதிவிடமாகக் கொண்ட அனை
வரையும் இந்நாட்டின் பிரசையாக ஏற்றுக் கொள்வது என்ற
சட்டத்தை உருவாக்குவதே. ஏனைய மக்களைப் போல பார பட்சம் இன்றி சமத்துவமாக மலையக மக்கள் கணிக்கப்பட வேண்டும். அன்று இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இன்று இந்தியா போக விரும்பினால் இந்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்து அவ்வாறு செய்யலாம். ஆனால் அப்படி யாரும் போக விரும்புவர் என்பது கேள்விக் குறியே.
இன்று உள்துறை அமைச்சர் இந்தியக் கடவுச் சீட்டை பெற்ற 160,000 பேர் இலங்கை பிரஜாவுரிமை பெறுவார்கள் என்றும், இதே அளவு எண்ணிக்கையை கொண்ட ஏனையோரும் பிரஜாவுரிமை பெறுவார்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தத் தொகை எப்படி வந்தது என்று கூறப்படவில்லை. (இன்னும் பிரஜாவுரிமை அற்றவர்கள் 84,141 (உ) இயற்கை அதிகரிப்பு, 84,793 (ஊ) இ.அ. மற்றும் ஒரு ஒப்பந்தத்துக்கும் உட்படாதவர்கள். இது தான் ஒப்பந்தங்களில் கூறப்பட்ட கணக்கின்படி முன்வைக்கப்பட்டுள்ளது). ஆகை யினால் சட்டங்கள் இயற்றி படிவங்கள் நிரப்பும் கைங்கரியங் களைக் கைவிட்டு எல்லோருக்கும் ஒரே புதிய சட்டத்தை உரு வாக்கி பதிவுப் பிரசைகள், வம்சாவழிப் பிரசைகள் என்ற வித்தியாசங்களை நீக்கி வர்த்தமானியில் பிரசுரித்து, 150 வருடங் களாக இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக செயல்படும் மலையக மக்கள் இந்நாட்டின் பிரசைகளாக்கப் பட வேண்டும். 21ம் நூற்றாண்டிலாவது பிரஜாவுரிமைத் துண்டு சமர்ப்பிக்க வேண்டும் என்ற அணுகுமுறை நிறுத்தப்பட வேண்டும்.
தினக்குரல் 06. 09. 2003
0.
O
0
O
4.
O
0.
Ο
O
Ό
15

Page 59
4.2 சுதந்திர நாட்டின் அந்நிய மனிதர்களாய்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் யாவும்இந்த மக்களுக்கு பிரஜா உரிமை கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடல்லாமல், நாடு கடத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டத் திற்குபின்பும் காலக்கெடு விதித்தும், அச்சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு மக்கள் மட்டுமல்ல திணைக்களமும் பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு, ஒரேயடியாக இந்த மக்களை அனுப்பினால் பெருந்தோட்டத்துறை பாதிக்கப்படும் என்ற நோக்கத்தினால் தான் இவை பின் போடப்பட்டது.
உலகிலேயே கடந்த 55 வருடங்களாக இலங்கையில் மட்டும் இரண்டு விதமான பிரஜாவுரிமை முறைகளும் அத்தோடு ஆறு சட்டங்களும் உருவாக்கி 21ம் நூற்றாண்டிலும் நாடற்றவர்கள் பிரச்சனை தீர்க்காமலிருக்கிறது. கடந்த காலங்களில் தெற்கு ஆப்பிரிக்காவில் இருந்த இன ஒதுக்கக் கொள்கை முறையில் உள்ள பாஸ் சட்டத்தின் (Pass Law) படி வெள்ளையர் அற்ற ஏனைய மக்கள் எங்கு சென்றாலும் பாஸ் கொண்டு செல்ல வேண்டும். அதே போல மலையக தமிழ் மக்களும் தங்களுடைய உரிமைகளையும், தேவ்ைகளையும் பெறுவதற்கு அதாவது காணி சொந்தமாகப் பெற, வியாபாரம் பதிவு செய்ய, பல்கலைக்கழகம் செல்ல, மீன்பிடிக்க, வாக்களிக்க இவை எல்லாவற்றிற்கும் பிரஜா வுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றனர்.
. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் சகல மக்களும் இந்நாட்டுப் பிரசைகளாக கணிக்கப்பட்டார்கள். ஆனால்
6

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சுதந்திரம் அடைந்த பொழுது அமலில் இருந்த சோல்பரி யாப்பில் பிரஜாவுரிமையைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. அன்றிருந்த சிங்கள அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்த பின்பு நாங்கள் தீர்ப்போம் என்று கூறினார்கள். சுதந்திரம் அடைவதற்கு முன் கிராமசபைத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் பங்களிக்க முடியாதென கூறப்பட்டது. ஏனென்றால் பெருந்தோட்டத்துறை அமைப்பு ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதற்கும் தேசிய அமைப்பு முறைக்கும் தொடர்பு இல்லையென கூறப்பட்டது. இது அன்று தொட்டு இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் உழைப் பினால் வரும் இலாபத்தையும், அந்நிய செலாவணியையும் ஏனைய மக்கள் முழுமையாக அனுபவித்துள்ளார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு முதன் முதலாக பிரஜாவுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது அண்மைக் கால இந்திய வம்சாவளி மக்கள் என பெயர் சூட்டப்பட்டு இவர்களை ஏனைய பிரசைகள் போல் ஏற்றுக் கொள்ளாமல் (பிரிட்டிஸ் பிரசைகள்) மலையக தமிழ் மக்கள் நடைமுறையில் அந்நியராகவே கருதப்பட்டனர். 1948லும் 1949லும் உருவாக்கப் பட்ட மூன்று சட்டங்களும் இவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட்டதே. இதற்கு முன்னோடியாக 1930ம் ஆண்டு உலகில் பொருளாதார தாக்கம் ஏற்பட்ட பொழுது இந்திய மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம்
இந்தச் சட்டத்தின்படி மலையகத் தமிழ் மக்களிடம் மட்டும் தான் அவர்களுடைய தகப்பனுடைய பிறப்பு சான்றிதழ் நிருபித் தால் இந்த நாட்டின் பிரசைகளாக ஏற்றுக் கொள்ளப்படு வார்கள் என சொல்லப்பட்டது. பிறப்பு சான்றிதழ் பதிவு இலங்கையிலேயே 1895ம் ஆண்டிற்குப் பின்பே உருவாக்கப் பட்டது. இதற்காக படிப்படியாக நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தோட்டப் புறங்களில் இதற்காக ஒருவர் நியமிக்கப்படாமல் தோட்டத் துரையே பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் படி இந்த மக்களுக்கு இரண்டு விதமான பதிவுகள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த முறையின் காரணமாக
17

Page 60
கீத பொன்கலன்
இன்று கூட 40% மான மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லா திருக்கின்றது. இதற்கு மூல கர்த்தா மக்கள் அல்ல தோட்ட நிர்வாகத்தின் அசமத்தனமே. இன்று இந்த நிலையாய் இருந்தால் 1948ம் ஆண்டு மலையக தமிழ் மக்கள் மட்டும் அல்ல ஏனைய மக்களுக்கும் அன்று தகப்பனுடைய பிறப்பு சான்றிதழ் சமர்ப் பிப்பது ஒரு கடினமான காரியமே. சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால் இந்த சட்டத்தின்படி நாடற்றவர்கள் ஆனார்கள். உதாரணமாக அன்று இருந்த பிரதம மந்திரியான டி.எஸ். சேனாயக்கா கூற்றுப்படி தனக்கே தன்னுடைய தகப்பனா ருடைய பிறப்பு சான்றிதழ் நிருபிப்பது மிகவும் கடினமான காரியம். இதைவிட தன்னுடைய இரண்டாம், மூன்றாம் தலை முறையின் பிறப்பு சான்றிதழ் நிருபிப்பது முடியாத காரியமே.
இவர்கள் இந்த நாட்டிலேயே பிறந்து நிரந்தர வாசிகளாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய, பிறப்புச்சான்றிதழ் அல்லாத வேறு எந்தவொரு அத்தாட்சியையும் ஏற்றுக்கொள் ளாதது, இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரதூரமான அநீதியாகும். தோட்டங்களில் பிறப்பு பதிவேடுகள் சரியான முறையில் செய்யப்படாமலும், விசேஷமாக சிறிய தனியார் தோட்டங்களில் தொழிலாளர்களின் பிறப்பு ஒரிடத்திலும் பதியப்படாததால் பல தோட்டத் தொழிலாளர்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தோட்டங் களில் பிள்ளைகளுக்கான சுகாதார பதிவேடுகள் உதாரணமாக ஊசிக்காட்தானும் இல்லை. இந்தப் பிரஜா உரிமைச் சட்டத்தில் மலையக தமிழ் மக்கள் பதிவு மூலமாக பிரஜாவுரிமை பெறலாம் என்று கூறப்படவில்லை. அத்தோடு அன்று 1948ம் ஆண்டு 15% மான மலையகத் தமிழர் தங்களுடைய தகப்பனுடைய பிறப்பு சான்றிதழ் வைத்திருந்தும் இந்தப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் படி வம்சாவளி பிரசைகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் ஏனைய மக்கள் வம்சாவளி பிரசைகள் என்று நிருபிக்கப்படாமலேயே இந்த நாட்டுப் பிரசைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். శీ,
அநேக நாடுகளில், அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின்படியும், அதற்குப் பின்பு வந்த சமவாயங்கள் படியும், ஒருவருடைய தேசிய இனத்துவத்திற்கான உரிமையை மனம் போன போக்கில் பறிக்கப்படுவதோ, அல்லது மறுக்கப்
118

இருபத்தோராம் நூற்றாண்டில் .
படுவதோ மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது. இதனால் ஒருவர் ஒரு நாட்டுப் பிரசையாவதற்கு பல நாடுகள் ஏற்றுக் கொண்ட பொதுத்தராதரம் என்னவென்றால் ஒருவர் அந்த நாட்டில் பிறந்திருக்க வேண்டும். அந்த நாட்டில் நிரந்தரமாக வசிக்கின்றார் என்பதற்கு ஒரு அளவு போதுமான காரணங்கள் இருப்பின் அவர்களுக்கு அந்த நாட்டு பிரஜாவுரிமை வழங்கப் பட வேண்டும். அண்மைக்கால இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்த வரையில், 1946ம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி 80% மான மக்கள் இலங்கையிலேயே பிறந்து நிரந்தரமாக வசிப்பவர்கள் எனக் கூறப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. ஆகையினால் இந்தப் பிரஜா வுரிமைச் சட்டம் அமலில் இருக்கும் வரை அண்மைக்கால இந்திய வம்சாவளி மக்களை பாதிப்பதுமல்லாமல் இருவிதமான பிரஜாவுரிமைகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
4.2.2 1949ம் ஆண்டு 48வது இலக்க இலங்கை (பாராளுமன்ற தேர்தல்) திருத்தச்சட்டம்
இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கை பிரசைகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறப்பட்டது. இதன் மூலமாக இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு சகல மலையக தமிழ் மக்களுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட மலையக மக்கள் வாக்களித்தார்கள். 1936ம் ஆண்டு இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் 145,000 பேர் வாக்களித்துள்ளார்கள். 1941ம் ஆண்டு நடைபெற இருந்த சட்ட சபைத் தேர்தலில் 225,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தினால் தேர்தல் நடைபெறவில்லை. முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக 6 பேரும், சுயேட்சை சார்பாக ஒருவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அப்புத்தளை பகுதியில் தேர்தலில் போட்டியிட்ட நடேசன் 373 வாக்குகளால் தேர்தலில் தோல்வியடைந்தார். 8
இதைவிட 14 தேர்தல் தொகுதிகளில் மலையக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானித்தது. 17 தொகுதிகளில் இவர் களின் வாக்குகள் மூலம் இடதுசாரி அங்கத்தவரை தெரிவு செய்தார்கள். ஆனால் 1952 - 1977 வரையில் ஒரு மலையகத்
9

Page 61
கீத பொன்கலன்
அட்டவணை 4.2.1
மலையகத் தமிழ் பிரதிநிதிகள் 1947
அபேட்சகர் தொகுதி தமிழ் வாக். அ.படிவா.
எஸ்.எம்.சுப்பையா பதுளை 56% 11.467
குமாரவேலு கொட்டகலை 73.3% 3.643
சி.ஆர்.மேத்தா மஸ்கெலியா 73.4% 5.1.37
ஆர்.இராஜலிங்கம் நாவலப்பிட்டி 65% 1.442
எஸ்.தொண்டமான் நூரளை 68.3% 6.136
சி.வி.வேலுப்பிள்ளை தலவாக்கலை 88.7% 91.70 சேவிநடராஜா (சுயேட்சை) பண்டாரவளை 35% 2.195.
நடேசன் அப்புத்தளை 63.8%
(373) வாக்குகளால் தோல்வி
(அபடிவா. - அதிகப்படியான வாக்குகள்)
தமிழரும் இப்பகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை. இந்தப் பகுதிகளில் வாக்காளர்கள் குறைக்கப்பட்டிருந்த பொழுதும் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்களின் தொகையைக் குறைக்காமல் மலையகப் பகுதியில், தமிழ் அங்கத்துவ தொகுதிகளில் சிங்கள அங்கத் தவர்களே தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதனால் 1947ம் ஆண்டுக்குப் பின் நடைபெற்ற எல்லா பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மை இனமக்கள் 80%க்கு மேற்பட்ட அங்கத்தவர்களை தெரிவு செய்ய முடிந்த காரணம் பிரஜாவுரிமைக்குப் பின் வந்த வாக்குரிமைச் சட்டமே. ஒரு ஜனநாயக நாட்டினுடைய அடிப்படைக் கொள்கை என்னவென்றால் அந்த நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் வாக்குரிமையைப் பாவித்து வாக்கு அளிப்பதே. இந்திய மலையக தமிழ் மக்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது ஜனநாயகத் திற்கு எதிரான செயலே. இதன் மூலமாக இந்த மக்கள் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டார்கள். நாட்டின் அரசியலில் கூட சிறுபான்மை மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
120

இருபத்தோராம் நூற்றாண்டில் .
4.2.3 1949ம் ஆண்டில் 3ம் இலக்க இந்திய-பாகிஸ்தானியர் (பிரஜாவுரிமை) வதிவிட சட்டம்
பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்றவர்களாக்கப் பட்டவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்காக ஏற்படுத்தப் பட்டது. இங்கு பாகிஸ்தானியர் என்ற சொல் பாவிக்கப்பட்ட தற்குக் காரணம் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த பொழுது 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததும் பாகிஸ்தான் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பாவித்து தனி நாடானது. இதற்கு முதல் இரு நாடுகளும் பிரித்தானிய பிரசை களாகவே இருந்தனர். இந்தியாவின் ஒரு பகுதியான பாகிஸ் தானில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்கு மக்கள் வந்தார்கள்.
இந்தச் சட்டத்தின்படி இரண்டு வருடத்திற்குள் பிரஜா வுரிமைக்கு விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இலங்கை, இந்திய காங்கிரஸ் மக்களிடம் விண்ணப் பிக்க வேண்டாம் என்று தடை செய்தது. ஆனால் எட்டு மாதங் களுக்குப் பின்பு மக்களை விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளது. அரசாங்கம் 28ம் திகதி நவம்பர் 1952க்குப் பின் எந்த விண்ணப் பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறியது. அந்தக் குறுகிய காலத்தில் 825,000 பேர் சார்பாக 237,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் 134,188 பேரும் அவர்களுடைய வம்சாவளியினருக்கும் இலங்கை பிரஜாவுரிமையும் 129,120 பேருக்கு இந்தியப் பிரசையும் படிப் படியாக 1967ம் ஆண்டு வரையும் கொடுக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் 162% வீதமானவர்களே பிரஜாவுரிமை பெற்றனர். ஏனையோர் நாடற்றவர்கள் என்ற நிலையிலேயே இருந்தார்கள். இந்தச் சட்டத்தின்படி விண்ணப்பித்த அநேகம் பேர் நிராகரிக்கப்பட்டார்கள். இன்னும் தோட்டத் தொழி லாளர்கள் அநேகம் பேர் படிவங்கள் நிரப்பி விண்ணப்பிக்க வில்லை. விண்ணப்பிக்க தராதரம் பெற்றவர்கள் 1946ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதிக்கு முன் (திருமணம் முடித்திருந்தால்) தொடர்ந்து ஏழு வருடம் வசிப்பவராக இருக்க வேண்டும். திருமணம் செய்யாதவர் தொடர்ந்து 10 வருடம் இந்த நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் முழுக்குடும்பத்திற்கும் ஒரு பிரஜா வுரிமை சான்றிதழ் பத்திரமே வழங்கப்பட்டது. மிகவும் முக்கிய
12

Page 62
கீத பொன்கலன்
மான இந்த பிரஜாவுரிமைப் பத்திரம் ஒரு பிரதி மட்டுமே கொடுக்கப்பட்டு. ஏனைய பிரதிகள் கொடுக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ் எத்தனை பிரதிகளையும் சிறிய பணத்தைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சான்றிதழ் 9 பேர் சார்பாக கொடுக்கப் பட்டுள்ளது. (இணைப்பு - 1) இந்தச் சான்றிதழ் ஒருவர் மட்டும் தான் வைத்திருக்க முடியும். மற்றவர் இந்த நாட்டுப் பிரசைகள் என்பதற்கு இவரில் தங்கியிருக்க வேண்டும். குடும்பப் பிரச்சனை காரணமாக பெற முடியாமல் போகலாம். தற்செயலாக இந்த சான்றிதழ் தொலைந்து, எரிந்து, களவாடப்பட்டால் அந்தக் குடும்பம் முழுவதும் திரும்பவும் நாடற்ற நிலைக்கே தள்ளப் படுகின்றது. இது ஒரு பெரிய அநீதியான செயலாகும். உதாரண மாக எடுத்துக் கொண்டால் சின்னக்கருப்பனுடைய மகன் பொன்னான் மேரியன் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள். அந்த மூத்த பிள்ளையாகிய சிவக்குமாரன் வியாபாரம் செய் வதற்கு பதிவு செய்ய சென்ற போது அவரது பிரஜாவுரிமை சான்றிதழ் கேட்கப்பட்டது. இவர் தன்னிடம் இல்லை என்றும் தன்னுடைய தகப்பன் இந்த நாட்டுப் பிரசை என்று கூறினார். அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்று கூறப்பட்டது. நடைமுறையில் இருக்கின்ற சட்டப்படி சிவக்குமாரன் தன் னுடைய பிறப்பு சான்றிதழோடு தன்னுடைய தகப்பனுடைய பிரஜாவுரிமைச் சான்றிதழையும் காட்டி கிராம சேவகரிடம் சென்று அவர் ஒரு பத்திரத்தில் நிரப்பி அந்தப் பத்திரத்தை குடிவரவு குடியகல்வு ஆணையாளருக்கு அனுப்பி அவரிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படியானால் பிரஜா வுரிமை பெற்ற குடும்பங்களின் வம்சாவளியினர் தொடர்ந்து இந்த சான்றிதழுக்காக விண்ணப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டுமா? இது ஒரு சமூகத்துரோகம். அதாவது பிரஜாவுரிமை பெற்றும் அவர்களுடைய வம்சாவளியினர் எக்காலத்திலும் நிருபிக்க வேண்டும் என்பது மனித அபிமானமற்ற செயலே.
4.2.4 1952 தொடக்கம் 1964 வரை ஏற்றுக் கொள்ளப்படாத ஒப்பந்தம்
இந்த கால கட்டத்தில் இருந்த இலங்கை பிரதமர்கள் இந்திய பிரதமரான நேருவோடு ஒப்பந்தங்கள் செய்ய முனைந் தார்கள். ஆனால் ஜவர்கலால் நேரு இறக்கும் மட்டும் அவருடைய
22

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. அதாவது “நான் எக்காரணம் கொண்டும் ஒப்பந்தங்கள் மூலமாக இன்னொரு நாட்டில் இருக்கின்றவரை ஏற்றுக் கொள்ளமாட்டேன். நாடற்ற பிரச்சனையை உருவாக்கியது இலங்கை அரசாங்கமே இந்திய அரசாங்கம் அல்ல. ஆனால் அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தாங்களாகவே திரும்பி வர விரும்பினால் இந்தியா ஏற்றுக் கொள்ளும்” என்ற நிலைப் பாட்டில் உறுதியாக இருந்தார். ஆனால் நேரு இறந்த பின்பு பிரதமராக வந்த லால் பகதூர் சாஸ்திரி இந்தக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார்.
4.2.5 சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் 1964, சிறிமா-இந்திரா ஒப்பந்தம் 1974 4.
ஒரு உத்தேச தொகை அடிப்படையில் இலங்கை அரசாங் கத்தின் அழுத்தம் காரணமாக இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இலங்கை அரசாங்கம் இந்தக் கணக்குத் தொகையில் 60%க்கு மேலானவர்களை நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் உடனடியாக அனுப்பினால் தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போகும் என்ற நிலையில் 17 வருடத்தில் இந்த ஒப்பந்தம் முடிவடையும் என தீர்மானித்தது. அதாவது 1964 தொடக்கம் 1981 வரை. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் முழுமையாக பூர்த்தியடை யாமல் போனதற்குக் காரணம் எல்லோரும் விண்ணப்பிக் காததே. இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுள் கூடுதலானோர் நிராகரிக்கப்பட்டார்கள். இலங்கை பிராசா வுரிமை கொடுக்கப்பட வேண்டிய தொகையினர் கூட கொடுக்கப் படாதற்குக் காரணம், 1971ம் ஆண்டு பிரஜாவுரிமை அமல் படுத்தும் சட்டமூலம், 7 பேர் நாடு கடத்தப்பட்டால் தான் 4 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை கிடைக்குமென கூறுகிறது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அசமந்தப்போக்கும் இதற்கு முக்கிய காரணம். இந்த ஒப்பந்தம் காலவதியான போதும் இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் இன்னும் அமலில் இருக்கின்றது.
4.2.6 1986ம் ஆண்டு 5ம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம்
இலங்கை அரசாங்கம் இவர்களை நாடு கடத்த வேண்டு
மென திட்டம் போட்ட அதே வேளை 1956ம் ஆண்டு தொடக்கம் நாட்டில் நடைபெற்ற இன வன்செயல் மூலமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சஞ்சலம் ஏற்பட்டது.
123

Page 63
கீத பொன்கலன்
அதாவது இந்த நாட்டில் உரிமையும் இல்லை, உயிருக்கான பாதுகாப்பும் இல்லை. அப்படியானால் எப்படி நாம் வாழப் போகிறோம் என்ற நிலையில் இருந்தார்கள். இதனால் பாதிக்கப் பட்டவர்கள் கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கு பகுதிகளுக்குச் சென்று குடியேறியுள்ளார்கள். மேலும் சிலர் இந்தியா சென்றார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் சுபிட்சமாக இருக்கவில்லை. 1985ம் ஆண்டு திம்பு மகாநாட்டில் முன் வைக்கப்பட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்கள் எல்லோருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முதல் முதலாக இந்தப் பிரச்சனை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்குப் பின்பு இந்திய அரசாங் கத்தின் வற்புறுத்தலின் காரணமாக 1986ம் ஆண்டு இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் முன்னையை சட்டத்தின்படி இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய தொகை யினர் விண்ணப்பிக்காதபடியால், அந்தக் குறையான 94,000 பேருக்கும், இன்னும் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப் படாதவர்களுக்கும் 18 மாதத்தில் கொடுக்கப்படும் எனக் கூறப் பட்டது. அத்தோடு இந்தியா செல்பவர்கள் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது முழுமையாக அமல்படுத்தப் படவில்லை. இதன் கீழ் 39,276 பேருக்கு இலங்கை பிரஜா
வுரிமையும் 568 பேர் இந்தியாவிற்கும் சென்றுள்ளனர்.
4.27 1988ம் ஆண்டு 39ம் இலக்க சட்டம்
இந்த சட்டத்தின்படி இலங்கை பிரஜாவுரிமை பெற வேண்டியவர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதே நேரத்தில் இந்த சட்டத்தின்படி எவரும் பிரஜாவுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை எனவும் அதற்குப் பதிலாக சத்தியக் கடதாசி மட்டும் காண்பித்தால் போதும் என்றும் கூறப்பட்டது. இதனால் இந்த சட்டமும் 1964, 1974 ஒப்பந்தங்களின்படி இலங்கை பிரஜாவுரிமைக்கு தகுதிபெற்ற 469,000 பேரில் இன்னும் இலங்கைப் பிரஜாவுரிமை பெறா தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது சத்திய பிரமாணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் 506,000 பேரில் இந்தியா செல்லாது இருக்கின்ற எவரும் விண்ணப்பிக்கவோ, சத்தியபிரமாணம் செய்யவோ முடியாது. அப்படி யாரும் பொய்த்தகவல் கொடுத்தால் ஒரு
124

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வருட சிறைத்தண்டனை அல்லது ரூபா 5000 அபராதமும், சான்றிதழும் பறிமுதல் செய்யப்படும் எனக்கூறப்பட்டது. இந்த சட்டத்தின்படி கிட்டத்தட்ட 350,000 பேர் சத்தியக் கடதாசி பெற்று தேர்தல் இடாப்பில் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் இவர்கள் தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது தேர்தல் உத்தியோகத்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்த சட்டத்தின்படி யார் சத்தியப்பிரமாணம் செய்து கொள் ளலாம் என்பது மக்களுக்குத் தெரியாது. அதே போல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இந்தச் சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளபடியால் அவர்களும் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார் கள். இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்பு இந்தியா சென் றோரின் தொகை மிகவும் சொற்பமே. அதாவது 1988ம் ஆண்டு 16 பேரும், 1989ம் ஆண்டு 7 பேரும், 1990ம் ஆண்டு 101 பேரும், 1991ம் ஆண்டு 95 பேரும், 1992ம் ஆண்டு 50 பேரும் ஆகும்.
அட்டவணை 4.2.2
இந்தியா சென்றவர்களின் தொகை
அ وہ அ " ஆ
31.1292 31.12.1984 வரையும் வரையும்
இந்திய கடவுச்சீட்டுப் பெற்ற வயது வந்தவர் 422,124 419,943 2181
இவர்களில் நாடு கடத்தப்பட்டவர்கள் 337,679 336,980 699
31.1290 31.1284 வரையும் வரையும்
அ அ " ஆ
30.10.64க்குப் பின் பிறந்த கடவுச் சீட்டுப் 172275 168,600 3675 பெற்ற பிள்ளைகள்
நாடு கடத்தப்பட்ட 123,993 123,823 170 பிள்ளைகள்
(ஆதாரம் - இலங்கை மத்திய வங்கி பொருளாதார சமூகபுள்ளி விபரம் - 1988-1989, 1993)
125

Page 64
கீத பொன்கலன்
இந்த ஐந்து சட்டங்களும் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. 1964ம் ஆண்டுக்குப் பின் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி இந்தியா சென்றவர்களின் தொகை. (அட்டவணை 422)
1967ம் ஆண்டு தொடக்கம் 31.10.88 வரை இலங்கை பிரஜா வுரிமை பெற்ற வயது வந்தவர்களின் முழுத்தொகை 236,811 ஆகும். இவர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள் என்ற தகவல் எம்மிடம் இல்லை. அதே நேரத்தில் 350,000 பேர் சத்தியப் பிரமாணத்துண்டு மூலமாக வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதாக இன்னொரு g5 56 gi) 5, p15657 pg51, epaulb (The right to vote and the law relating to election petitions (February 2000 p.25)
4.2.82003ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்ட நகல்
கடந்த கால சட்டங்கள் இப்பிரச்சனையைத் தீர்க்காத தினால் இன்றைய சமாதான சூழலில் இந்த சட்டம் திருத்தங் களின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. இது இந்திய கடவுச்சீட்டுப் பெற்ற 84,141 பேர் இலங்கைப் பிரசைக்கு விண்ணப்பிக்கலாமெனவும் முன் கூறிய சட்டங்களின்படி சான்றிதழ்கள் வழங்கப்படாதவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் இந்தியாவுக்கு விண்ணப் பித்து கடவுச்சீட்டு பெறாத 84,793 பேர் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை. ஆகையால் இந்த சட்டமும் பிரஜாவுரிமை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை. இந்தச் சட்டத்தில் சத்தியக்கடதாசி பெற்றவர்களைப் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை சத்தியக் கடதாசி பெற்றவர்கள் இந்த சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமை சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழும்புகிறது.
4.2.9 மலையக தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் முன் வைக்கும் தீர்வுகள்
நாங்கள் இந்த நாட்டில் 150 வருட காலமாக வாழ்ந்து இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துள் ளோம். 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தை ரத்துச் செய்து இன்று ஏனைய நாடுகளில் வசிக்கும் மக்கள் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சமத்துவ்மாக வாழ்வது
26

இருபத்தோராம் நூற்றாண்டில் .
போல் இலங்கையில் உள்ள ஏனைய மக்களைப்போல் நாங் களும் சமமாக வாழ எங்களுக்கு உரிமை உண்டு. இது மறுக்கப் பட்டால் எமது சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுவதற்கு சமம். ஆகையினால் இந்த மக்களிடம் பிரஜாவுரிமை நிருபிக்கப்பட வேண்டும் என்று கேட்பதோ, திரும்பவும் விண்ணப்பப் படிவங்கள் நிரப்ப வேண்டும் என்று கூறுவதோ, இவர்கள் இரண்டாம் தர பிரசைகளாக கணிக்கப்படுவதற்கு சமம். இன்றைய சமாதான சூழலில் ஏனைய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு மாற்றுவழியைக் கையாளும் நிலையில் மலையக தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட அநீதியான சட்டங்களை எல்லாம் தூக்கியெறியப்பட்டு இந்த மக்கள் அனைவரையும் இந்த நாட்டுப் பிரசைகளாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நகலை (சட்டம்) உருவாக்கி இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லா விட்டால் இது மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, 21ம் நூற்றாண்டில் பிரஜாவுரிமை அற்ற ஒரு சமூகம் ஒரு நாட்டில் வாழ்வதென்றால், அது இலங்கையிலுள்ள எல்லா மக்களையும் இழிவுபடுத்தும் ஒரு செயலாகும். இதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பின்வாங்குமானால் கடந்த 55 வருடங்களாக பாதிக்கப்பட்ட இந்த மக்கள் வீதியில் இறங்கி தங்கள் உரிமைக் காக போராட வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்குத் தள்ளப் படுவார்கள். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டின் யாப்பின் சரத்து 26 (2) படி மலையகத் தமிழ் மக்கள் எல்லோரும் இலங்கைப் பிரசை என்று பிரகடனப்படுத்தப் பட்டு, எக்காரணம் கொண்டும் இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தைப் பறித்தலாகாது என உறுதிப்படுத்தப்பட வேண்டும். (சரத்து 26 (4)
வீரகேசரி 26. 10. 2003, 02, 11. 2003, 09. 11. 2003.
KO 10 20 oKo • • 0. •
27

Page 65
4.3 சொந்த இனத்தின் துரோகமும் மாற்று இனத்தவரின் பாரபட்சமும்
2003ம் ஆண்டு சட்டம் மலையக தமிழ் மக்கள் மத்தியில் ஓர் சிந்தனை புரட்சியை உருவாக்கி, நாங்கள் விண்ணப்பித்துத்தானா இலங்கைபிரஜை யாக வேண்டுமென்ற கேள்வி எழுப்பப்பட் டுள்ளது. அதுவுமல்லாமல் ஏனைய சட்டங் களிலும் பார்க்க இந்தச் சட்டம் தான் ஒரு சமூகத் தாக்கத்தினை ஏற்படுத்தி, விண்ணப்பங்கள் செய்யும் செயலுக்கு எதிராக குரல் கொடுக்கவும், ஏனைய மக்களைப்போல் சமஉரிமையுடன், சமத்துவமாக வாழ வேண்டிய உரிமை மலை யகத்தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கி உள்ளது. அத்தோடு இந்தியகடவுச்சீட்டுபெற்றவர்களின்பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழி லாளர்கள், அரசியல், பொருளாதார சமூக விடயங்களில் ஞானமற்றவர்கள் என்ற அடிப்படையில் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். தன் சொந்த இனத்தினரும், தாம் சார்ந்த அமைப்புகளுமே இவர்களை ஏமாற்றி வருவது இவர் களின் சாபக்கேடு.
அண்மையில் இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கும் வாய்ப்பும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. அரசியல், தொழிற்சங்க, அரசியல் சார்பற்ற அமைப்புகள் மட்டுமன்றி இடைத்தரகர்களும் இவ்விடயத்தில் இலாபம் கண்டுள்ளனர்.
28

இருபத்தோராம் நூற்றாண்டில் .
2003ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இந்திய வம்சாவளி யினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கல் சட்டம் கடந்த நவம்பர் 11ஆம் திகதி அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1964ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அனைவரும் இலங்கைப் பிரஜை களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்தியக் கடவுச்சீட்டு பெற்றவர்கள் மாத்திரமே பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டும். ஏனையோர் மேற்படி சட்டம் அமலுக்கு வந்த நாள்தொட்டு இலங்கை பிரஜைகளாக அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியக் கடவுச்சீட்டு பெற்றோர் மற்றும் பெறாதவர்கள் மட்டுமன்றி ஏற்கனவே இலங்கைப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டோரும் கூட பிரஜாவுரிமை விண்ணப்பங்களைத் தேடி அலைவதையும், அதற்காக பணவிரயம் செய்வதையும் இன்று காணமுடிகிறது.
அரசியல் தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புகளும் இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்காதது மட்டுமன்றி சுயலாபத் திற்காக இம்மக்கள் மத்தியில் இதுபற்றி குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
பிரஜாவுரிமை விண்ணப்பம் பெற முயன்ற, பிரஜையொரு வரின் கருத்துக்கள் வருமாறு:
பிரஜாவுரிமைக்கான விண்ணப்பப் படிவங்களை, நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 7ஆம் திகதி வரை பிரபல தொழிற்சங்கம் ஒன்றின் காரியாலயத்தில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாள் சம்பளத்தையும் இழந்து போக்குவரத்திற்கு பணம் செலவழித்து இந்தக் காரியாலயங்களுக்கு சென்று, இந்தக் காரியாலயத்திலும் பணம் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றதுடன் உத்தியோகபூர்வம் இல்லாமல் பிரஜாவுரிமைச் சான்றிதழ் எனக் கூறி கொடுக்கப்பட்ட சத்தியக் கடதாசியைப் பணம் செலவழித்து லமினேற் செய்து வீட்டில் வைத்துள்ளார்கள். அத்தோடு இந்திய கடவுச்சீட்டை அல்லது அதை ஒத்த ஆவணத்தை கொண்டவர்களுக்கு விசேட வெளிப்படுத்துகை படிவத்தை நிரப்பி அதை இந்திய வம்சாவளியினரான ஆட்களை பதிவு செய்வதற்கான ஆணையாளருக்கு அனுப்புதல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
29

Page 66
கீத பொன்கலன்
அதே வேளை இந்த சட்டத்தில் கால எல்லை குறிப்பிடாத பட்சத்திலும் திணைக்களத்திற்கு ஜனவரி மாத இறுதிக்குள் இந்த விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கச் செய்தல் சிறந்தது என பத்திரிகைகள் வாயிலாக ஒரு சிலரால் செய்திகள் முன் வைக்கப்பட்டது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் நவம்பர் 19ஆம் திகதி திணைக்களத்திற்கு சென்ற பொழுது தங்களுக்கு புதிய சட்டத் தைப் பற்றி ஒரு அறிவித்தலும் கிடைக்கவில்லை என்றும் 1988ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க நாடற்ற ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேடு) சட்டத்தின் விண்ணப்ப படிவத்தை கொடுத்து இதனை நிரப்பி அனுப்புமாறு கூறப் பட்டது. பின்பு விண்ணப்பப் படிவங்களை திணைக்களத்தில் பெற முடியும் என்பதை பத்திரிகை மூலமாக அறிந்து டிசம்பர் 04ஆம் திகதி திணைக்களத்திற்கு சென்றபோது, விண்ணப்பப் படிவங்கள் தொகையாக இன்னும் தங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றும், தங்களிடம் தற்பொழுது சொற்ப விண்ணப்பப் படிவங்கள் இருக்கிறது என்றும் கூறி அதில் 10 படிவங்களை கொடுத்தார்கள்.
அந்த படிவம் பொது வெளிப்படுத்துகை படிவம், அதாவது இந்திய கடவுச்சீட்டை அல்லது அதை ஒத்த ஆவணத்தை கொண்டிராத ஆட்களுக்கு ஏற்புடையது. அதே நேரத்தில் இந்த திணைக்களத்திற்கு இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒருவர் விண்ணப்பப் படிவம் கேட்ட பொழுது இந்த விண்ணப்பப் படிவத்தையே கொடுத்துள்ளார். அதன்பின் டிசம்பர் 5ஆம் திகதி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது தற்பொழுது தங்களிடம் தொகையான விண்ணப்பப் படிவங்கள் இல்லை, ஆனால் டிசம்பர் 11-12ஆம் திகதிகளில் வந்து பெறலாம் என கூறப்பட்டது. பின்னர் அங்கு சென்ற போது முதல் கொடுத்த விண்ணப்பப் படிவங்கள் தான் இருக்கின்றது. ஆனாலும் எங்களுக்கு இது தொடர்பான ஜனாதிபதியிடம் இருந்து எவ்வித அறிவித்தலும் இல்லாத படி யால் ஒரு விண்ணப்பப் படிவங்களும் தற்பொழுது கொடுக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விண்ணப்பப் படிவங்கள் தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் டிசம்பர் 4ஆம் 5ஆம் திகதிகளில் வெளியாகியிருந்தது.
இந்த சூழலில் தங்களுக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் தேவை என்ற அவாவுடன் மலையக தொழிற் சங்க காரியாலயங்களுக்கு
30

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சென்று ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியக் கடதாசியை நிரப்பு கின்றார்கள். இது செல்லுபடியாகுமா? இதில் ஒர் முக்கியமான அம்சம் என்னவென்றால் பழைய சட்டங்களுக்கு கீழ் பிரஜா வுரிமை பெற்ற பலரும் தங்கள் கையில் பிரஜாவுரிமை இல்லாமல் இந்த விண்ணப்பப் படிவங்களை நிரப்பி இருக்கின்றார்கள். ஒரு சிலர் சத்தியக் கடதாசியை பெற்றுள்ளார்கள். அப்படி யானால் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த விண்ணப்பப் படிவங்களை நிரப்ப வேண்டி இருக்கும்.
திணைக்களம் இன்னும் ஒர் நிலையான முடிவு எடுப்பதற்கு முன் அவசர அவசரமாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங் களும், கொடுக்கப்பட்ட சத்தியக் கடதாசிகளும், தொழிலாளர் களை இன்னும் ஏமாற்றி அவர்களுடைய பணத்தை வீண்விரய மாக்குவதாகவுள்ளன. A.
பத்திரிகைகளில் வெளியான விண்ணப்பப் படிவங்களில் சத்தியக் கடதாசி பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆனால் இந்த சட்டத்தின் 4ஆம் பிரிவில் 4ஆம் பகுதியில் சத்தியக் கடதாசி பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தகுதி வாய்ந்த நியாய ஆதிக்கமுள்ள நீதிமன்றத்தினால் கேள்விக் குறியாக்கப்படலாம். அப்படியானால் இந்த சத்தியக் கடதாசி வைத்திருக்கின்றவர்கள் 3ஆம் பிரிவில் (இ) பகுதியிலுள்ள சரத்தான (அந்தஸ்து, ஆள்சார் உரிமைகள், கடமைகள் மற்றும் இலங்கையில் ஆதனம் வைத்திருத்தல் என்பது தொடர்பான அல்லது தொடர்புடைய எல்லாக் கருமங்களிலும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைந்தவராக இருத்தல் வேண்டும்) இந்த சரத்திற்கு சத்தியக் கடதாசி செல்லுபடியாகுமா?
இச்சட்டத்தின் படி எல்லோரும் (அ) என்று தரப்பட்ட படிவம் நிரப்ப வேண்டும் அதற்கு பின் இந்திய கடவுச் சீட்டு பெறாதவர்கள் பொது வெளிப்படுத்துகை படிவம் நிரப்ப வேண்டும். பின்பு இதனைப் பெற்றுக் கொண்டதாக ஆணை யாளரிட இருந்து அறிவித்தல் தெரிவிக்கப்படும். இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்கள் (அ) என்னும் விண்ணப்பப் படிவமும் விசேட பொது வெளிப்படுத்துகை படிவமும் நிரப்புதல் வேண்டும். இதற்கும் ஆணையாளரிடம் இருந்து இதனை பெற்றுக் கொண்டதற்கான அறிவித்தல் தெரிவிக்கப்படும்.
ஆனால் தற்ப்ொழுது நிரப்பப்பட்ட படிவங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை. அவசர அவசரமாக
3.

Page 67
கீத பொன்கலன்
திணைக்களம் சரியான தீர்வு எடுக்க முன்னர் இந்த காரியாலயங் களில் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டதன் நோக்கம் பொதுவாக பலர் கூறுவது போல் தொழிற்சங்கங்கள் அங்கத் தவர்களை சேர்க்கும் காலம் என்றபடியுால் தங்கள் அங்கத் தவர்களை தக்க வைக்கவும், புதிய அங்கத்தவர்களை சேர்ப் பதற்காகவுமான ஒரு சூழ்ச்சியே ஒழிய உண்மையாக தொழி லாளர் மீது வைத்த பாசத்தால் அல்ல.
ஆனால் இப்படியான சட்டங்கள் வரும் பொழுது தொழிற் சங்கங்கள், அரசியல்வாதிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் இச்சட்டங்களை விளக்கி சரியான முறை யில் பணியில் ஈடுபடுவது விரும்பத்தக்கது. இதை திணைக்களம் செய்யும் என்று காத்திருப்பது முழுமையாக நிறைவேற்றப் படாதது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. திணைக் களத்தின் பணியாளர்கள் மலையக தமிழ் மக்களின் மொழியை அறிந்தவர் களாகவும் சட்டங்களை சரியான முறையில் புரிந்தவர்களாக வும் இருக்க வேண்டியது மிக முக்கியமானது என்பதை அரசாங்கம் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பிரஜாவுரிமை பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக இருந்தால் இலங்கையிலுள்ள ஏனைய மக்கள் போல் மலையக தமிழ் மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கு 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தை இரத்து செய்து அன்று தொட்டு இலங்கையில் நிரந்தரமாக வாழ்கின்ற எல்லோரும் இந்த நாட்டு பிரஜை என்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் நிரப்பு வதும் இந்த மக்கள் இந்த நாட்டு பிரஜை என நிரூபிப்பதற்கு பிரஜாவுரிமை சான்றிதழை சமர்ப்பிப்பதும், இவர்களை இரண்டாம் தர பிரஜை என ஏற்றுக் கொள்வதற்கும் சமம் ஆகும். இன்று யாராவது சொந்த விருப்பின்படி இந்தியா செல்ல வேண்டு மானால் அவர்களுடைய தேவை பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
கடந்த 55 வருடங்களாக விண்ணப்பப் படிவங்கள் நிரப்பு கின்ற தொடர் கதை இருக்குமானால் நாடற்றோர் பிரச்சினை ஒரு காலமும் முடிவிற்கு வராது. உதாரணமாக பழைய சட்டத்தின் கீழ் பிரஜாவுரிமை பெற்றவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டு பிரஜைகள் என்று நிரூபிப்பதற்கு ஆவணங்கள் இல்லை.
வீரகேசரி 08, 12, 2003
0 0 8, 8, 8. 0x 8X- 08 ex
32

அத்தியாயம் - 5
காணி வீட்டு உரிமையின் மீதான சவால்கள்
5.1 காணிக்கு சொந்தமில்லாத
5.2
5.3
வீடுகளுக்கு கடனையும், வட்டியையும் கட்டும் தோட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலை.
இருபத்தொராம் நூற்றாண்டிலும் மலையகத் தமிழரின் காணி உரிமை
ஒர்கனவா?
மலையகத் தமிழருக்கு காணி வீடு சொந்தமாவது எப்போது?
33

Page 68
அத்தியாயம் - 5
காணி வீட்டு உரிமையின் மீதான சவால்கள்
ஒர் இனத்தின் தனித்துவ அடையாளத்திற்கு அவர்களுடைய மொழி, கலாச்சாரங்களோடு, நிலமும், அதன்சார்ந்த புவியியல் தொடர்ச்சியும் அவசியமானவையாகும். ஆனால் இந்த மக்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள்தான் காணி, வீடு, சுய தொழில் வாய்ப்புக்களற்ற நிலை. இதற்காககடந்த மூன்றுதசாப்தங்களாகதொடர்ந்து வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டும் இன்னும் இவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்பட்டும், இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என ஏற்றுகொள்ளாமல் அந்நியர்களாகவும் அரை அடிமைகளாகவும் நடத்தப்படுவது, இலங்கை நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு ஒர் வெட்க கேடான செயலாகும்.
134

5.1 காணிக்கு சொந்தமில்லாத வீடுகளுக்கு கடனையும், வட்டியையும் கட்டும் தோட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலை
1950களின் பிற்பகுதியிலிருந்து மலையகத் தமிழ் மக்களுடைய காணி வீடுகள் பற்றி பலராலும் பல மட்டத்திலும் மனித மாண் போடு வாழ்வதற்கு உகந்ததல்ல எனக் கூறப்பட்டு வந்தது. ஒரு வீடு கட்டுவதற்கு முதலில் முக்கியமாக வேண்டப்படுவது காணியாகும். ஆகவேதான் காணி நிலம் வேண்டும் எனக் கூறினான் பாரதி.
1956ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் பெருந்தோட்டத் துறை மேட்டுநிலக் குடியேற்றத் திட்டத்தினை சிங்கள விவசாயி களுக்கு உருவாக்கியது. இதன் நோக்கம் சிங்கள மக்களை பெருந்தோட்த்துறைக் காணிகளில் குடியேற்றுவதாகும். இதன் முதல் திட்டம் 1956 - 1965 வரை அமலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் இரண்டு ஏக்கர் காணிகள் சிங்களக் குடியேற்ற வாசிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அன்று தொட்டு இன்று வரை பெருந்தோட்டத்துறைக் காணிகள் கிராம மயமாக்குதல், குடியேற்றம், வதிவிடத்தேவை, கிராம நகர விஸ்தரிப்பு ஆகிய வற்றுக்காக ஏறத்தாழ 2 இலட்சம் ஏக்க்ர் காணிகள் கொடுக்கப் ul-L-607.
ஆனால், இலங்கையின் வருமானத்தின் முதுகெலும்பாக 175 வருடங்களுக்கு மேல் உழைக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்தம் என்று சொல்லக் கூடிய காணித்துண்டு ஒன்றுமே இல்லை. 1950 களிலிருந்து பலதரப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் 2000ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் 3 சதவீதமானவர்கள் அதுவும் காணிக்குச் சொந்தமில்லாத வீடுகளுக்கு இன்றும் வட்டியும் கடனும் கட்டுகிறார்கள்.
1972ஆம் ஆண்டு தொடக்கம் காணிச்சீர்திருத்த ஆணைக்
குழுவினால் தோட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்ட காணி
35

Page 69
கீத பொன்கலன்
களுக்கு இன்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. எடுத்துக் காட்டாக இரத்தோட்டை, பண்டார பொலத் தோட்டம். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் விக்டோரியா நீர்மின் விநியோகத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த் அநேக தோட்டங்களில் வாழ்ந்த 570 தொழிலாளர் குடும்பங்களில் 327 குடும்பங்களுக்கு காணி வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இந்தக் காணிகளுக்கு இப்போது பணம் கொடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.
கடந்த ஒரு தசாப்தமாக பலவித வீடமைப்புத் திட்டங்கள் பெருந்தோட்டங் ல் நடைமுறையிலிருப்பதைக் காண்கிறோம். கூரை மாற்றம், ஒற்றை / இரட்டை வீட்டுத் திட்டம் (குவாட்டர் லயன்), லயன் அறை விஸ்தரிப்பு அதாவது இருக்கும் லயன்களை முன்பின் விஸ்தரித்து, புனரமைப்பது தனிவீடு, மற்றையது சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ள தொடர்மாடி (மாடி லயன்) வீடமைப்பு. இந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது வீடுகளுக்குரிய காணிகள் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக ஒதுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத காணியில் கடனுக்குப் பணம் பெற்று வீடு கட்டத் திணிக்கப்படுகிறார்கள். அதுவும் கட்ட முடியாத நிலையில் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்திலும் தோட்டங்கள் தேசிய மயமாக்கப் பட்டபொழுதும் பல ஒற்றை / இரட்டை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட பொழுது எவ்விதமான பணமும் தொழி லாளரிடம் இருந்து அறவிடப்படவில்லை. ஆனால், 1992இல் இருந்து தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின் “டிரஸ்ட்” நிறுவனம் உருவாக்கிய திட்டத்தின் படி வட்டிக்கு கடன் வாங்கித் தொழிலாளர் வீடு கட்டத் திணிக்கப்படுகிறார்கள். இவர்களால் உருவாக்கப்படுகின்ற வீட்டுக் கடன் பத்திரத்தில் ஒரு தொழிலாளி வீடு தேவையானால் அப்பத்திரத்தில் முத்திரை ஒட்டி கையொப்பம் இடல் வேண்டும். அத்தோடு இந்த வீட்டுக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு தொழிலாளி தனது ஊழியர் சேமலாப நிதி இருப்பினை ஈடாக வைக்கும் இரு விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிட வேண்டும்.
வீட்டுக் கடன் பத்திரத்தில் இவர்களுக்கு இந்தக் காணி சொந்தமாக்கப்படுமெனக் கூறப்படவில்லை. ஆனால், இந்தக்
136

இருபத்தோராம் நூற்றாண்டில் .
காணி குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறதென்றும், அரசாங்க விலை மதிப்பீட்டுக்கு ஏற்ப காணியின் பெறுமதி கொடுக்கப் பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் இப்பொழுது டிரஸ்ட்’ நிறுவனம் பத்திரிகை வாயிலாகவும், வாய் மொழியாகவும் 15 வருடங்களுக்குப் பின் உங்களுக்குக் காணிகள் சொந்தமாக்கப்படுமென்று சொல்லும் பொழுது அதற்குப் பணம் கட்ட வேண்டும், ஆனால், அத்தொகை எவ்வளவு என்று சொல்லப்படவில்லை என கூறி வருகிறார்கள். ஆனால், பெருந் தோட்ட அபிவிருத்தி ஆதரவுத் திட்டத்தில் (PDSP 1998-2005) அரசாங்கம் இந்தக் காணியை இலவசமாகக் கொடுக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இப்பத்திரங்கள் தொழிலாளர் படித்து விளங்க முடியாத நிலையில் உள்ளன.
கடன், வட்டியுடன் சம்பளத்திலிருந்து மாதாமாதம் அறவிடப்படுகிறது. அல்லது மாடி வீடு அமைப்பில் உள்ளது போல் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளுக்கு வட்டியும் முதலுமாக தொழிலாளர்களின் மாத வருமானத்திலிருந்து 60 வருடங்களுக்குக் கழிக்கப்படுகிறது. இதனால், வறுமையில் வாடும் தொழிலாளர்கள் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்தப் பரிதாபகரமான நிலைமை பற்றி பெருந் தோட்ட சமூக மேம்பாட்டில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் அரசு, நிர்வாகம், டிரஸ்ட், அரசியல் வாதிகள் தொழிற்சங்க வாதிகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நன் கொடை நிறுவனங்கள் எல்லோருமே அக்கறை கொள்வதில்லை. சிந்திப்பதில்லை. வெளியிலிருந்து உருவாக்கப்படும் திட்டங்கள் மக்களின் வறுமைச் சுமையைக் குறைப்பதாக இல்லை. அது மென்மேலும் அதிகரிக்கும் செயல்பாடாகவே அமைந்துள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து சொல்லப்படும் போது அரசாங்கமும், நிர்வாகமும் பிச்சைக்காரத்தனமாக நடப்பதுவும், அது நுண்ணிய தாக நோக்கப்பட வேண்டியது எனக் கூறுவதும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டபோது தோட்டக் காணிகள் அரசாங்கத்துக்குச் சொந்தமென்றும் 5% தொடக்கம் 7% வரை அரசாங்கத்தின் தேவையான குடியேற்றத் திட்டம், நகர அபிவிருத்தி என்ப வற்றுக்கென ஒதுக்கப்பட்டது.
37

Page 70
கீத பொன்கலன்
இந்த நிலங்களில் கூட பலவிதமான சிங்களக் குடியேற்றங் களை ஏற்படுத்தி அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்து அவர் களிடமிருந்து சிறு தொகை பணத்தை மாதாமாதம் பெற்றது. புதிய கிராமங்கள் கூட உருவாயின. இத்திட்டத்தின் கீழ் 250, 000 கிராம மக்களுக்கு சிறு தேயிலை உற்பத்திக்கென காணி கொடுக்கப்பட்டது. இதைவிட ஒவ்வொரு தோட்டத்திலும் சராசரியாக 50 ஹெக்டயருக்கு மேல் உற்பத்தி இல்லாத நிலங்கள் உள்ளன.ஆனால், மலையகத் தோட்ட மக்களுக்கு தனி வீடு கட்டும் திட்டத்தில் காணி ஒதுக்கப்படும் போது 5 பேர்ச் அல்லது 7 பேர்ச் நிலம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் இவர்கள் விசாலமாக, சுதந்திரமான வீடு ஒன்றைக் கட்ட இயலாது.
பெருந்தோட்ட நிலங்களை நிர்வாகம் குத்தகைக்குக் கொடுக்க ஆவன செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கிராம மக்கள் தோட்டங்களுக்குள் அத்துமீறிக் குடி யேறும் போது நிர்வாகமோ, அரசோ எதிர்ப்புத் தெரிவிப் பதில்லை. மாறாக உற்சாகமும், உதவியுமே அளிக்கப்படுகிறது.
5.1.1 தொழிலாளர்கள் கேட்பது
தொழிலாளர்கள் கேட்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டுவதற்குப் போதுமான உறுதி பத்திரத்துடன் கூடிய இலவசமான காணித்துண்டே அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைந்த ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு குடும்பத்திற்கு ஆகக் குறைந்தது 20 பேர்ச் நிலம் கொடுக்கலாம். எதிர்காலத் தேவைகள் பெருகும்போது, அந்நிலத்தில் அவர்கள் இன்னும் சில வீடு களை அமைக்கலாம். ஒருவருக்கு 20 பேர்ச் நிலம் கொடுப்ப தாயின் 2 இலட்சம் குடும்பங்களும் 25,000 ஏக்கர் நிலம் மட்டும் போதும். சராசரி ஒரு தோட்டத்திற்கு 5 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டிவரும். இதனால் யாருக்குமே எவ்வித நட்டமும் ஏற்படப்போவதில்லை. ஒரு சமூக மேம்பாட்டிற்கு அவசியமான காணியை கொடுப்பது அரசின் கடமையாகும்.
ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒற்றை/ இரட்டை வீட்டுத் திட்டம்போல் அரசாங்கமும், கம்பெனியும் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். இன்று அநேக கிராம மக்களுக்கு, அகதிகளுக்கு இலவச வீட்டுத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாய் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏன் வறுமையில் வாழும் மலையகத் தமிழ் மக்களை வட்டியுடன் கடன்
138

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வாங்கியும் வீடு கட்டி முடிக்காத நிலைக்குத் தள்ளுகிறார்கள். வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்கள் தற்போதைய உதவியை நிறுத்தினால் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் இல்லாமல் போகுமா?
இன்று நடைமுறையில் உள்ள வீடமைப்புத் திட்டங்கள் உகந்ததாக இல்லை. நன்கொடை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான பணத்தை தொழிலாளர்களின் வீடமைப்புக்குக் கொடுத்து உதவுகின்றன. இது டிரஸ்ட் மூலமாக இன்று வழங்கப்படுகிறது. ஆனால், தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு குடிமனைச் சங்கம் பலதரப்பட்ட காரணங்களால் சிறந்த முறையில் செயல்படுவதில்லை. பெருந்தோட்டத்திற்கு ஒரு பொது வீடமைப்பு அதிகார சபை ஏற்படுத்தி இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாங்கமும், நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு ஒரு தொகைப் பணத்தை இனாமாகக் கொடுத்து உதவலாம்.
இன்று தொழிலாளர்கள் சொந்தமில்லாத காணியில் வட்டிக்கு கடன் எடுத்து வீடு கட்டுகிறார்கள். அவர்களது ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொடுக்கிறார்கள். மாதாமாதம் வட்டி கட்டுவதால் அவர்களது மாத வருமானம் பாதிக்கப்படுகிறது. கடன் அறவிடப்படுவதால் பட்டினியால் வாடவேண்டிய பரிதாப நிலை. இதற்கு மாற்றுத் திட்டமாக மலேசிய நாட்டிலே நடைமுறையில் இருப்பது போல தொழி லாளர்களுக்கு இலவச காணியும், சேமலாப நிதியில் ஒரு பகுதியை - மூன்றில் ஒன்று எனலாம். (மலேசியாவில் தோட்டத் துறையில் 35% பெறுகிறார்கள்) முன்கூட்டியே பெற்று வீட்டினை தன் சொந்த விருப்பத்திற்கு அமைய அழகாகக் கட்டலாம். முன்கூட்டியே சேமலாப நிதியைப் பெறுவதால் தொழிலாளர் கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சிலர் வாதிடலாம். ஆனால், பணவீக்கத்தை கருத்தில் கொள்ளும்போது சேமலாப நிதியில் உள்ள பணம் வீட்டிற்கு முதலிடும் போது வேலையிலிருந்து ஒய்வு பெறும் போது கிடைக்கும் தொகையை விட பெறுமதி கூடியதாக இருக்கும்.
மலேசியாவில் ஒரு தோட்டத் தொழிலாளி புதிய வீட்டில் குடியேறிய பின் வீட்டு உதவித்தொகை ஆக (Housing Allowance) 80 வெள்ளி கொடுக்கப்படும். பணம் அந்த மக்களின் நான்கு நாள் சம்பளத்துக்கு சமன்.
39

Page 71
கீத பொன்கலன்
இம்மாற்றுத் திட்டத்தை மலையக அரசியல்வாதிகள்,
நலன் விரும்பிகள் சிந்தித்து புதிய ஓர் கொள்கையைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.
அட்டவனை 5.1.1 அடிப்படை புள்ளிவிபரம் 21 கம்பெனிகளும், அரச தோட்டங்களும்
காணிகள் - ஹெக்டயர் 1990 2001
மொத்த தோட்டங்கள் SO9 448
நிர்வகிக்கப்படுகின்ற அளவு 275,126 260,251
பயிரிடப்பட்ட அளவு 183,868 193563 உற்பத்தி தரும் அளவு 149,795 141,406
பணியாளர் 21,136 14,852 தொழிலாளர் நிரந்தர /
FOf F0 If 384,768 273,513
பயிரிடப்படாத காணிகள் 91,258 66,688
மொத்த தேயிலை உற்பத்தி 138.80 (மி.கி) 155.84
g5 (TTh:- Plantation Sector Statistical Pocket Book - 2002, 2003.
தினக்குரல் 20. 08, 2003,
வீரகேசரி 16. 11. 2003
02. 20. O. M. KO «X» �X» «X» «X» «X»
ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி ஒரு வரிகூடப் படிக்காவிடினும் சரி நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையாது.
- ஸிட்னி ஸ்மித்
140

5.2 இருபத்தொராம் நூற்றாண்டிலும் மலையகத் தமிழ் மக்களின் காணியுரிமை கனவா?
இலங்கையில் பன்னிரண்டு இலட்ச மக்களுக்கு இரத்தினபூமிதிட்டத்தின் கீழ்காணிஉறுதிபத்திரம் வழங்குவதற்காக காணியற்ற மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால், மலையகத் தமிழ் மக்கள் இதற்கு விண்ணப் பிக்கும் போது, சம்பந்தப்பட்ட காணி அதிகாரி களிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாதது மலையகத் தமிழர் இத்திட்டத்தில் உள்ளடக்கப் பட மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்து கின்றது. இதற்காக மலையகத் தமிழ்ச்சமூகம் ஒன்றிணைந்து போராடி இந்த உரிமையை பெற்றுக்கொள்ள ஆவன செய்யவேண்டும்.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட காணிச் சட்டங்கள் அன்றைய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல சுதந்திர மடைந்த பின்பும் அதே சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டன. இன்று இலங்கையில் உள்ள காணிகளில் 80% அரசுக்குச் சொந்தமாக உள்ளது. 1972-1975ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்ட காணி சீர்திருத்தச் சட்டங்களின் கீழ் பெருந்தோட்டக் காணிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இதனுடைய உள் நோக்கம் பெரும்பான்மை இன மக்களுக்கு இந்தக் காணி களைப் பகிர்ந்தளிப்பதுவே. 1935ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் ஏறத்தாழ 9 இலட்சம் ஏக்கர் காணிகள் பல்வேறு குடியேற்றத் திட்டங்கள், கிராம விரிவாக்கம், மகாவலி, கல்ஒயா ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள், அத்துமீறிய குடியேற்றக் காணிகளை ஒழுங்குபடுத்தும் திட்டம் எனப் பல்வேறு திட்டங் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
14

Page 72
கீத பொன்கலன்
மலையக மாவட்டங்களைப் பொறுத்தவரை தோட்டங்கள், தோட்டத்திற்கு அருகில் உள்ள சிறு நகரங்களுக்குரிய காணிகள் யாவும் அரசாங்கத்திற்கே சொந்தமானவை. இப்பிரதேச நகரங்கள் 21ஆம் நூற்றாண்டிலும் வளர்ச்சியடையாது இன்னும் எவ்வித மாற்றமும் அடையாது பழைய தோற்றத்துடன் இன்றைய நாகரிக போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன. உதாரணமாக தலவாக்கலை, ஹட்டன், L 1 Ꮿ6ᏡᏰ0, ஹாலிஎல ஆகிய நகரங்களைக் குறிப்பிடலாம்.
ஆனால், பெருந்தோட்ட வருவாய் மூலம் பெறப்பட்ட அந்நியச் செலாவணியும் அதனால் பெற்ற இலாபமும், அரசாங்கம் தலைநகரை வலுப்படுத்துவதற்கும், தெற்கினைக் கட்டியெழுப்புவதற்கும் ஏனைய அரசாங்கத் திணைக்களங் களின் நிதிக்கும் குறிப்பாக சரியான முகாமைத்துவம் இல்லாது நட்டத்தில் இயங்கும் திணைக்களங்களுக்கும் உதவியதே ஒழிய 150 வருடங்களுக்கு மேலாக இரத்தம் சிந்தி உழைக்கும் தொழி லாளர்களான மலையகத் தமிழ் மக்களுக்கு, அம்மக்கள் வாழ் கின்ற பிரதேச, நகர முன்னேற்றத்திற்கு அல்லது மலையகத் தமிழ் மக்களுக்கான தொழில் வாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்து வதற்கு உதவவில்லை. இன்று மலையகத் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கூலி வேலைகளைத் தேடி வீட்டுப் பணிப்பெண்கள் வேலைக்கும், கடைச் சிப்பந்தி வேலைகளுக்கும் தலைநகரை நோக்கிப் படையெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர். உதாரணமாக மலையகத்தில் படித்து, தொழில் செய் வோரின் தொகை எவ்வளவு என்பது எல்லோரும் அறிந்ததே.
காணியற்றோருக்கு காணி வழங்கும் குடியேற்றத் திட்டம் 1935ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் இன்றுவரை மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்று சொல்லக்கூடிய ஒரு காணித்துண்டாவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக் குரியதே.
1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் அரசாங்கம், எவருக்கும் காணியின் பெறுமதியைப் பெறாமல் காணி கொடுக்க முடியாது. ஆகவே, அரசாங்கம் அதன் பெறு மதியை காணி சீர்திருத்த ஆணையிடம் கொடுத்தால் முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த யதார்த்த நிலையில் இன்று
42

இருபத்தோராம் நூற்றாண்டில் .
தோட்டங்கள் 20 தனியார் கம்பெனிகளுக்கு 90 வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள் தனியார் மயமாக்கப் பட்ட போது 7% காணிகள் அரசு பொதுச் சேவைகளுக்கும் கிராம அபிவிருத்திக்கும் ஒதுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
ஆனால், தோட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை கொடுக்க மறுக்கிறது எனக் கூறு வதற்கும் அரசாங்கமே இந்தக் காணிகளுக்குச் சொந்தம் என்று கூறவதற்கும் ஒரு பெரிய முரண்பாடு இருக்கிறது. ஆனால், தோட்டம் தனியார் மயமாக்கப்பட்ட பின் தோட்டக் குடி யிருப்புகள், விவசாயத்துக்குட்பட்ட நிலங்கள், கோயில் நிலங்கள், பொது நிலங்கள் இவை யாவும் நிர்வாகத்தின் கீழ் இல்லை என்று கூறப்பட்டது. 总
அதற்குப் பின் 10 பேர்ச் காணி தோட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 பேர்ச் காணி ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இன்று டிரஸ்ட் நடைமுறைப்படுத்தும் புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கு 7 பேர்ச் அல்லது அதற்குக் குறைந்த் காணிகளே ஒதுக்கப்பட்டன. அதுவும் 15 வருட குத்தகை என்ற அடிப்படையில் கொடுத்து, அதற்கு வருடம் 1 பர்ச்சுக்கு ரூபா 425 சதம் அறவிடப்படும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் 15 வருடங்களுக்குப் பின் அதன் பெறுமானம் ஒரு பேர்ச்சுக்குரூபா 6,500 படி 7 பேர்ச்சுக்கு ரூபா 45,500 பெறுமதி இருக்குமெனவும் கூறப் பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் அமல்படுத்தப்படும் போது அரசு காணியை இலவசமாக கொடுப்பதாகவே சொல்லப்பட்டது. அண்மையில் உருவாகியுள்ள மேல் மாடி லயன் வீடமைப்புக் குடியேற்றத்திட்டம் உருவாவதற்கு தோட்ட நிர்வாகம் காணி கொடுக்க மறுத்ததே முக்கிய காரணங்களில் ஒன்று என்பது
குறிப்பிடப்பட வேண்டியது.
மேலும், 30 ஆண்டுகளுக்குப் பின் சொந்தமாகப் போகும் இந்த மேல் மாடி வீட்டுக் காணியின் அளவோ 1, 26 பேர்ச் மட்டுமே. இந்த நடைமுறைகளைக் கணக்கில் எடுக்கும் போது 2006ஆம் ஆண்டுகள் அல்ல 30 வருடங்களுக்குப் பின் கூட
43

Page 73
கீத பொன்கலன்
காணி சொந்தமாகுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே. அத்தோடு டிரஸ்ட் அமல்படுத்தும் இந்த வீடமைப்புத் திட்டங்கள் எல்லாம் மலையகத் தமிழ் மக்களில் 60% மாத்திரமே பெறக் கூடியவர்கள். தோட்டத்தில் 5 வருடங்கள் தொடர்ந்து வேலை செய்யாதவர்கள். 45 வயதுக்கு மேற் பட்டவர்கள், தோட்டத்தில் வேலை செய்யாது வேறு இடங் களில் வேலை செய்பவர்கள், படித்து வேறு தொழில் செய் பவர்கள் ஓய்வூதியம் பெற்றவர்கள் அடங்கிய 40%க்கு மேலான மலையகத் தமிழ் மக்கள் பயனடையப் போவதில்லை. அத்தோடு இத்திட்டம் 20 கம்பெனிகள் நடத்தும் தோட்டங்களிலே நடை முறைப்படுத்தப்படுகின்றன. இதில் சொந்தமில்லாத காணியில் வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்ட திணிக்கப்படுகிறார்கள். 15 வருடங்களுக்குப் பின்தான் காணியின் பெறுமதியைக் கொடுத்து சொந்தமாக்க முடியும். அதுவும் ஒரு கேள்வி குறியே.
பெருந்தோட்டத்துறையில் காணி வழங்கும் திட்டம் 1956ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அது பெரும்பான்மை இன மக்களுக்கான மேட்டு நிலக் குடியேற்றத் திட்டமாக உரு வெடுத்தது. இதன்நோக்கம் பெரும்பான்மை இன மக்களை பெருந்தோட்ட நிலங்களில் குடியேற்றுவதாகும்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரை யிலான கால கட்டத்தில் 2 ஏக்கர் காணி வீதம் பெரும் பான்மையினரின் குடியேற்றத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. பெருந்தோட்ட நிலக் காணிகள் காணியற்றோ ருக்கும், குடியமர வதிவிடம் தேடியோருக்கும் கிராம, நகர விஸ்தீரணம் ஆகிய வற்றுக்கு ஏறத்தாழ 2 இலட்சம் காணிகள் கொடுக்கப்பட்டன.
1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காணி சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் சிறு தேயிலை, இறப்பர் உற்பத்தித் திட்டத்தின் கீழ் 250,000 பேருக்கு காணிகள் பகிர்ந்தளி - ப்பட்டன. 99% பெரும்பான்மை இன மக்களுக்கே இது :ங்கப்பட்டது. ஆனால், பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் 1ந்த இடத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். விக்டோரியா, மகாவலி திட்டங் களினால் மக்கள் ஆண்டாண்டு காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நகர்த்தப்பட்டார்கள். இவர்களுக்கு நிலம் கொடுக்கப் படும் என்று உறுதி அளிக்கப்பட்டது, இன்னும் அது நிறை வேறவில்லை.
44

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இன்று 12 இலட்சம் குடும்பங்களுக்கு இரத்தினபூமித் திட்டத்தின் கீழ் காணி வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைத் திட்டத்தின் கீழ் பிரதேச சபை உட்பட்ட பிரதேசத்தில் 20 பேர்ச் காணியும் நகர சபை உட்பட்ட பிரதேசத்தில் 10 பேர்ச் காணியும் மாநகர சபை உட்பட்ட பிரதேசத்தில் 6 பேர்ச் காணியும் தனியார்களுக்கு கொடுக்கப்படும் எனவும் அத்துடன் விவசாயம் செய்வதற்கு விவசாயக் காணிகள் 2 ஏக்கர் வழங்கப்படும் எனவும் மேலும் தொழில் புரிய ஆரம்பிக்கும் தனி நபருக்கு 30 வருட குத்தகைக்கும், கம்பெனிகள் 50 வருட குத்தகைக்கும் காணிகள் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் 2006ஆம் ஆண்டுக்குள் காணி அற்றவர்களுக்கு இனாமாகக் காணி கொடுப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதாவது இரத்தின பூமி சான்றிதழ்கள். காணியற்றவர்களுக்கு இரத்தினபூமி காணிப்பத்திரம் வழங்கப் படும். மேலும் தனியாருக்கு வழங்கப்படும் காணிகளை அவர்கள் விரும்பினால் விற்கும் அதிகாரமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமை கிடைக்குமா என்பது மீண்டும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
இரத்தின பூமித் திட்டம் பற்றி தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் பேச்சு நடத்துவதாகவும் தோட்டங்கள் காணி சீர்திருத்த ஆணையில் இருப்பதால் இவை பிரதேச செயலாளர் களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலம் இக்காணிகள் இனாமாகக் கொடுக்கப்படும் எனவும், இதற்காக ஆரம்பப் பேச்சுவார்த்தைகள் காணி அமைச்சுக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குமிடையில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. ஆனால், இந்த 12 இலட்சம் பேருக்கு காணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உருவாகுவதற்கு வேறு சில காரணிகளும் உண்டு. வட, கிழக்கு இடைக்கால நிர்வாக சபையின் கீழ் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் போது காணி வழங்கப்படும் பொறுப்பு மாகாண மட்டத்திற்குப் போகும். இதற்குமுன் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை இன மக்களுக்கு காணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடாகும்.
45

Page 74
கீத பொன்கலன்
மற்றது பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விஸ்தரிப் பதும் வேறாக்குவதும் இதனுடன் சம்பந்தப்பட்டதே. மேலும் கடன் வழங்க உள்ள நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் நிபந்தனையாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை அமலாக்கும் போது காணி இல்லாதவர்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.
இப்படியான நோக்கத்தில் செயல்படும் பின்னணியில் காணி உரிமையற்றுள்ள மலையகத் தமிழ் மக்கள் பயனடை வர் என்பது கேள்விக்குறியே. ஆகவே, மலையகத் தமிழ் மக்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான (20 பேர்ச்) காணியைப் பெற ஒன்று கூடி குரல் எழுப்பி போராடியே தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
தினக்குரல் 27. 08. 2003
0 0 8, 0, 0. ex & oxo 0x8
வெற்றியாளர்
சாதனையாளர்
விரும்புவதையெல்லாம் சரியாக அடைய விரும்புபவர். இவரின் இலக்கு - விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பிறர் மீதான வெறுப்பின் அடிப்படை யிலும் அமையலாம். வியக்க வைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தித் திகைக்கச் செய்ய வல்லவர்,
அழிவும் கூட இவரின் நோக்கம் ஆகலாம் வெற்றியாளர் எல்லோருமே சாதனையாளராக மாட்டார்கள்
வெற்றியாளர்கள் - தோல்வி காணும் இடத்து துவண்டு போக நேரிடலாம்
இவர்கள் வில் லர்களாகவும் இருக்கக் கூடும்.
சரியானதை மட்டுமே விரும்பி அடையவர்.
இலக்கு - விருப்பத்தின் அடிப்படை யில் மட்டுமே அமையும்
வியக்க வைக்கும் அதே பொழுதில் நன்மை - பயப்பவராகவும் திகழத் தவறாத நல்லவர்.
ஆக்கம் மட்டுமே - இவர் விழைவது
சாதனையாள ரெல்லோருமே வெற்றியாளர்கள் தாம்!
சாதனையாளர்கள் தோல்விகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் என்றென்றம் நாயகர்களே!
கதா
146
- ம. திருவள்ளுவர்

5.3 மலையக மக்களுக்கு காணி வீடு சொந்தமாவது எப்போது?
தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் கொடுப்பதற்கு எதிராக பாரிய தொழிற்சங்க வாதிகள் முன்வைத்த காரணம், இவர்களுக்கு உறுதிபத்திரம் கொடுத்தால், விற்றுவிடுவார்கள் என்பதற்காக தோட்ட குடிமனை கூட்டுறவு சங்கத்தினை உருவாக்கி அதற்கு இந்தக் காணி உரிமைகள் மாற்றப்படுமென்றுபொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இரத்தின பூமி காணித் திட்டத்தில் உறுதிப்பத்திரம் பெறுகின்றவர்கள், அந்தக் காணியை விற்பதற்கு முழு அதிகாரமும் கொடுக்கப்படுகிறது. தோட்ட மக்களுக்கு காணி உரிமை கொடுப்பதை இன்னும் ஐம்பது வருடங் களாகஇழுத்தடிப்பதேஇதன் உள்நோக்கமாகும்.
ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படைத்தேவைகளில் உணவுக்கு அடுத்ததாக இருப்பது அவனது குடியிருப்பே. இதற் காக 20ஆம் நூற்றாண்டில் அனைவருக்கும் புகலிடம்’ என்ற மையக் கருவோடு இலங்கையில் பல இடங்களில் அறிவித்தல் போடப்பட்டிருந்தது. 1986ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் ஒரு முக்கிய கருப்பொருளை மையமாகக் கொண்டு அக்டோபர் மாதம் வருகின்ற முதல் திங்கட்கிழமையை "சர்வதேச வீடமைப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2002ம் வருடம் அக்டோபர் மாதம் 7ம் திகதி இத்தினம் இலங்கை யிலும் அனுசரிக்கப்படுகின்றது.
இலங்கையில் 1978ம் ஆண்டு தொடக்கம், இன்றுவரையும் பல்வேறு திட்டங்களின் கீழ் காணிகள் வழங்கப்பட்டு, வீடு களும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. பல பாரிய குடியேற்ற
147

Page 75
கீத பொன்கலன்
திட்டங்களை, உருவாக்கி 1935 தொடக்கம் 1985 வரையும் 2,52, 987 ஏக்கர் காணியை அரசாங்கம் கொடுத்துள்ளது. (மூலம் பொருளியல் நோக்கு 1990. ப. 31) தொடர்ந்து காணி சம்பந்த மாக ஜனாதிபதி ஆணைப் பணியகம் 10 இலட்சம் ஏக்கர் காணியை பகிர்ந்து அளிப்பதற்குரிய திட்டத்தைப் போட்டது. இதில் 1994ம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை 3,37,500 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறை படுத்தப்படுகின்றது.
5.3.1 தோட்டத் தொழிலாளருக்கு காணி உரிமையாவது எப்போது?
1981ம் ஆண்டிலிருந்து இன்று வரையும், தோட்டத் தொழி லாளருக்கு காணியோ, வீடோ இன்னும் சொந்தமாக்கப்பட வில்லை. ஆனால் 1981ல் இருந்து இன்று வரை காணிகள் சொந்தமாக்கப்படுமென பல மேடைகளில் முழக்கம் செய் தாலும், அப்படி ஒன்றும் இதுவரை சொந்தமாக்கப்படவில்லை. எமது நாட்டில் 90 வீதமான மக்களுக்குச் சொந்த காணி, வீடு இருக்கும்போது, மலையகத்தைப் பொறுத்தமட்டில் 2 வீதமான மக்களே சொந்தக் காணி, வீடுகளில் இருக்கிறார்கள்.
மக்கள் இயற்கையாக வாழப் பழக்கப்பட்டதே நிலம், இதை கருத்தில் கொண்டு முக்கியமாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு, சமூக பொருளாதார அபிவிருத்திக்காக மனித ஜீவியத்திற்கு, நிலம் மிக முக்கியமானது. வீடு, விவசாயம் அல்லது சுயதொழிலுக்காக, அபிவிருத்தி அதிகரிப்பிற்கு காணி சொந்தமாவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். காணி உரித் தில்லாமல் கட்டுக் கோப்பான அபிவிருத்தி இல்லை. நீண்ட காலமாக, நிலம் மனிதனின் சமுதாய நிலையை வலியுறுத்தி வந்துள்ளது. 1864ல் உறுதிப் பத்திரப் பதிவு அறிமுகமானது. இது ஒருவருடைய உரிமையை சட்ட பூர்வமாக அத்தாட்சிப் படுத்தும் ஆவணமாகும்.
மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் காணி, வீடு ஒருவருக்குச் சொந்தமாவதற்குச் சட்ட பூர்வம்ாக எதுவும் அமல் படுத்தப்படவில்லை. இன்று தோட்டக் கூட்டுறவு குடிமனைச் சங்கத்திற்கு காணி சொந்தமாக்கப்பட்டு, அதன் அங்கத்தவர்களுக்குப் பதினைந்து வருடங்களுக்குப்பின், அல்லது அவர்கள் பெற்ற கடனுக்கு, வட்டியும், முதலும் திருப்பிச் செலுத்திய பின், அவர்களுக்குச் சொந்தமாக்கப்படும் எனக்
48

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கூறப்பட்டாலும், அவை சட்டப் பூர்வமானதல்ல. 2000ம் ஆண்டு வரையும் 20 கம்பெனிகளைச் சேர்ந்த 389 தோட்டங்களில், 325 கூட்டுறவு குடிமனைச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சங்கங்கள், 1993ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டு இன்று வரையும், இதில் 62,609 அங்கத்தவர்கள் உள்ளனர். இன்னும் எந்த ஒரு கூட்டுறவுச் சங்கத்திற்கோ, எந்த ஒரு அங்கத்தவருக்கோ குடிமனைக் காணிக்கான உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லை. ஆனால் தொழிலாளர்கள், தங்க ளுக்குச் சொந்தமில்லாத காணியில், வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமென கட்டாயப் படுத்தப்படுகின்றார்கள்.
அவர்களது திட்டத்தின்படி 400 சதுர அடி வீடு ஒன்றை கட்டி முடிப்பதற்கு ரூபா 1,50,000 தேவைப்படுகின்றது. இதற் காக தளம் வெட்டுவதற்கு, மலசல கூடம் அமைப்பதற்கு, கூரைத் தகடுகளுக்கு, கூரைமரங்களுக்கு, காணி அளவை வரைப்படம் செய்வதற்கு பொருட்களாகவோ, பணமாகவோ கிட்டத்தட்ட ரூபா 34,000ம் இலவசமாகக் கொடுக்கப்படுமென கூறப்படுகின்றது. இதைவிட ரூபா 30,000ம் 16 வீத வட்டியுடன், 15 வருடங்களில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடனாக வழங்கப் படுகின்றது. இவர்கள் கடன்பத்திரத்தில் கைசாத்திட்ட உடனேயே, மாதாந்தம் அவர்களது சம்பளத்தில் இருந்து இந்தக் கடன் கழிக்கப்படுகின்றது. இவர்கள் வீடு கட்டி முடித்தாலும் முடிக்காவிட்டாலும், புது வீட்டில் குடியேறா விட்டாலும் இப்பணம் சம்பளத்தில் இருந்து கழிபடுகிறது.
இதைவிட இவர்கள் ரூபா ஒரு இலட்சம் சொந்த முயற்சி யில் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இத்திட்டத்தின் படி 10 வீதமான தொழிலாளர்களேயே புது வீட்டைப் பூர்த்தி செய்து குடிபோக முடிகிறது. அனேகமானோர் புது வீட்டுக்குப் போக முடியாமலும், சிலர் அரை குறையான வீடுகளிலும் வாழ் கின்றனர். 1995 தொடக்கம் 2000ம் ஆண்டு வரையும், 5,884 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று புள்ளி விபரம் கூறுகிறது. (மூலம் இலங்கை மத்திய வங்கி அறிக்கை) இதில் எத்தனை
வீடுகளில் மக்கள் குடியிருக்கிறார்கள்? இன்று மலையகத்தில்
கிட்டத்தட்ட 206,000ம் வீடுகள் தேவையாக இருக்கிறது. இவை எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது மேலும் ஒரு கேள்விக் குறியே.
49

Page 76
கீத பொன்கலன்
1950ல் இருந்து இன்று வரையும் பல விதமான வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்த போதும், இதற்கென வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைத்துள்ள போதும், தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதியாக தனி வீட்டில் வாழும் நிலை ஏற்படுமா என்பது விடை காண முடியாத விடயமாகவே இருக் கிறது. 1992ம் ஆண்டு வரையும் நிர்வாகமே லைன் அறைகள் திருத்தவும், புதிய வீடுகளை கட்டவும் பொறுப்பாக இருந்தது. தோட்டங்கள் தனியாருக்குக் கொடுக்கப்பட்டபின் நிர்வாகம் இப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது.
5.3.2 இன்று நான்குவிதமான வீடமைப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன
* கூரை மாற்றம்
இது முன்பு நிர்வாகத்தினால் செய்யப்பட்டது. 1992ம் ஆண்டுக்குப் பிறகு, வெளி நாட்டு உதவியுடன், தொழிலாள ருக்குக் கொடுக்கப்படுகின்ற கடன் ஊடாகவும், இக் கூரைகள் மாற்றப்பட்டன. 2000ம் ஆண்டு வரை ஏறக்குறைய 30,000ம் லைன் அறைகளுக்கு கூரைகள் மாற்றப்பட்டுள்ளன. இக்கூரை கள் 18 வருடங்களுக்குப் பின் மீண்டும் மாற்றப்படவேண்டும். இது அவர்களது பழைய லயின் முறையை மேலும் வலுப்படுத்தும்,
* தரம் உயர்த்தப்பட்ட வீடுகள்
இருக்கின்ற லயின் அறைகளுடன் சேர்த்து முன் பின்னாக விஸ்தரிப்பது. இதற்கு புதிய வீடமைப்புத் திட்டத்தைப் போன்றே கடன் உதவி வழங்கப்படுகின்றது. ஆனால் உரிய தொகை போதாமல் தொழிலாளர்கள் மேலும் ஒரு இலட்சம் ரூபா செலவழிக்க வேண்டியுள்ளது. இது திரும்பவும் லயின் அறை முறையை பின் பற்றுவதாகவே இருக்கும். 1995 முதல் 2000ம் ஆண்டு வரை 1,498 வீடுகள் இவ்வாறு தரம் உயர்த்தப் பட்டுள்ளதாக டிரஸ்ட் புள்ளி விபரங்கள் கூறுகின்றது.
* புதிய வீடுகள்
ஆரம்பத்தில் ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச் காணி வழங்கு வதென கம்பெனிகள் பெயரளவில் ஏற்றுக் கொண்டன. ஆனால் நடைமுறையில் 5 முதல் 7 பேர்ச் வரையிலான காணி மட்டுமே வழங்கப்படுகின்றது. சில கம்பெனிகள் அதனைக்கூட வழங்க மறுக்கின்றன. புதிய வீடமைப்புத் திட்டம் மலையக மக்களுக்கு
50

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் குறைந்தது 10 பேர்ச் காணியாவது ஒதுக்கப்படவேண்டும். இக்காணி இலவச மாக வழங்கப்படுவதுடன் அதற்கான உறுதிப்பத்திரமும் கொடுக்கப்படவேண்டும். தற்போது கொடுக்கப்படுகின்ற ரூபா 34,000ம் ரூபா 60,000 மாக கூட்டப்பட வேண்டும்.
தொழிலாளருடைய சேமலாப நிதியில், இருந்து எவ்வித நிபந்தனைகளும் இன்றி 50 வீதமான பணத்தைப் புதிய வீடு களை கட்டுவதற்காக கொடுக்க வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பெருந்தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஒன்று உருவாக்கப்பட்டு, தோட்டத் தொழி லாளர்களும் அந்தந்தப் பகுதிகளில் இத்திட்டத்தை நிறை வேற்ற ஏனையவர்களையும் ஒன்று சேர்த்து நடைமுறைப் படுத்தவேண்டும். இதில் தோட்ட நிர்வாகம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக் கூடாது. ஒரு வீடமைப்புத் திட்டத்திற்கு ஏதுவான ஏனைய அம்சங்கள், பாதை, தண்ணிர், வாசிகசாலை, சிறுவர் பூங்கா, நவீன கடைகள் ஏனையவை களையும் உள்ளடக்கப்பட வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு தோட்டமும் ஒரு கிராமமாக மாற்றப்பட வேண்டும். இது தான், சர்வதேச வீடமைப்புத் தினமான 7ம் திகதி மலையகத் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் தொனிப் பொருள் கோரிக்கையாகும்,
* லயின் இருமாடி வீடுகள்
இத் திட்டம் கேட்பதற்கும், கற்பினைக் காட்சிக்கும் மிக அழகாக இருக்கின்றது. இத்திட்டத்தின்படி கட்டுவதற்கு பாதிச் செலவு இலவசமாகவும் மிகுதி வட்டியுடன் கூடிய கடனாகவும் கொடுக்கப்படுகின்றது. மாதம் ஒன்றுக்கு ரூபா 350 வீதம் 60 வருடங்களுக்கு அக்கடன் அறவிடப்படுகின்றது. மொத்தமாக ரூபா 2,52,000/= (350 x 12 X 60) தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே இக்கடன் இரண்டு சந்ததி யினரை, பிறக்கப் போகும் குழந்தையையும் கடனாளியாக்கு கின்றது. முற்றாக கடனை செலுத்திய பின்பே வீடு சொந்த மாக்கப்படும். 50 சதுர அடி கொண்ட இந்த இரட்டை மாடிக்கு, இன்று குடியிருக்கும் லயின் அறையை இடித்து, 1, 26 பேர்ச் காணித் துண்டில் வடிமைக்கப்படுகிறது. இதனால், இவர்கள் பெற வேண்டிய தனி வீடுகளும் 10 பேர்ச் காணியும் இல்லாமல்
15

Page 77
கீத பொன்கலன்
போகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். அத்துடன் இப்புதிய திட்டம் பல பிரச்சினைகளை உருவாக்கும். இத் திட்டம் நிரந்தர கடனில் வாழும் தொழிலாளிக்கு, “மரத்திலிருந்து விழுந்த வனை மாடு மிதிப்பது” போன்று தாங்கொணா சுமைகளை தொடர்ந்தும் கொடுப்பதாக அமையும்.
முன் கூறியது போன்ற, வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, ஏனைய சமூக அபிவிருத்திப் பணிகளுக்கும் காணி மிகவும் அவசியமான தொன்று. ஆகவே, தோட்ட மக்களின் நலனில் இதய சுத்தியுடன் அக்கரை கொண்டவர்கள், அரசாங்கமோ, ஏனையவையோ, ஏனைய வறிய மக்களுக்கு இலட்சக் கணக்கில் காணி ஒதுக்கிக் கொடுப்பது போல் முதலில் அம்மக்களுக்கும் 5000ம் ஹெக்டாயர், அதாவது ஒரு டிவிசனுக்கு 2.5 ஹெக்டயார் (ஒரு வீட்டுக்கு 10 பேர்ச் என்ற கணக்குப்படி ஒரு ஹெக்டயார் 400 பேர்ச் என்றால் 2 இலட்சம் வீடுகளுக்கு (200,000 X 10) / 400 = 5000 ஹெக்டயர் இன்று தோட்டங்களில் கிட்டத்தட்ட 2000ம் டிவிஷன்கள் உள்ளன. ஆகவே ஒரு டிவிஷனுக்கு (5000/ 2000) = 2.5 ஹெக்டயர்) நிலத்தை ஒதுக்கி கொடுக்க அரசியல் திட்டம் (lack of political Will) இல்லை என்றால், இவர்களை அரசாங்கமும், நிர்வாகமும் தொடர்ந்து அரை அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. தவிர வாய்ப்பேச்சில் மட்டும் இவர்களை பங்குதாரர்கள் என்று கூறிப் பெருமைப்படுவதில் அர்த்தம் தான் என்னவோ?
2000ம் ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு என்ற சுலோகம், வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் சகலரும் ஒன்றுபட்டு ஓர் ஆக்க பூர்வமான கொள்கைத் திட்டத்தை நேர்மையுடன் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதே இந்த மலை பூகத் தமிழ் மக்களின் பேரவாவாகும்.
துண்டு பிரகரம்
> 0, 8 o 0. o exe 8.
5.

அத்தியாயம் - 6
பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களும் சம்பள உடன்படிக்கைகளும்
6, 1 பெரு ந் தோட்டத் துறையில் அமலாக்கப்பட்ட சம்பள கட்டு
ஒப்பந்தங்கள்
6.2 கட்டு ஒப்பந்தமும் சமூக மேம்பாடும்
6.3 தொழிற்சங்கங்களின் கட்டு முயற்சி ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இரு நூறு ருபா சம்பள உயர்வு சாத்தியமே!
6.4 இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு பெருந்தோட்ட தொழிலாளரின் சம்பள கட்டு ஒப்பந்தம்
6.5 ஒப்பந்தத்தை பற்றிய மக்களின்
கருத்துச் சேர்க்கை
53

Page 78
அத்தியாயம் - 6
பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களும் சம்பள உடன்படிக்கைகளும்
தோட்டங்களை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதற்கு முதல் தொழிலாளர்களுடைய சம்பளம், சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, தோட்ட முதலாளிமார் சம்மேளனமும்,பாரம்பரியதொழிற் சங்க வாதிகளும் இணைந்தே தீர்மானிக்கப் படுகின்றது. இங்கே தோட்டத் தொழிலாளர் களுடைய வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்படாமல் முதலாளிமார்களின் குரலே எதிரொலிக்கின்றது. அவர்களின் குரலுக்கு தொழிற்சங்கங்கள் அடிபணிந்து போகின்றன.
154

6.1 பெருந்தோட்டத்துறையில் அமலாக்கப்பட்ட சம்பள கட்டு ஒப்பந்தங்கள்
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தின் மீதான இரண்டு ஒப்பந்தங்களில் முதலாவது சம்பள கூட்டு ஒப்பந்தம் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதியிலும் இரண்டாவது ஒப்பந்தம் முதலாவது ஒப்பந்தத்திற்கு ஒரு திருத்தமாக 2001ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதியிலும் கைசாத்திடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதியில் அமலாகப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ஆராயும் பட்சத்தில் அடிப்படை சம்பளமான ரூபா 107லும் ஆகக்கூடிய சம்பளமான ரூபா 121லும் எதுவித மாற்றமும் இல்லை என்பது தெளிவா கின்றது. இது தொழிலாளருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. முதலாவது ஒப்பந்தத்தின்போது இரண்டு வருடங்களுக்கு சம்பள உயர்வு கோரவோ, அதற்காக வேலை நிறுத்த போராட்டங் களில் ஈடுபடவோ முடியாதென முடிவெடுக்கப்பட்டது. 2000 ஆண்டு செப்டெம்பர் மாதம் தொழிலாளர்கள் 10 நாள் வேலை நிறுத்தம் செய்து, இந்த ஒப்பந்தத்தை மீறியதால் முதலாளிமார் சம்மேளனம் தொழிற் சங்கங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. தொழிலாளர்களுக்கோ இந்த வேலை நிறுத்தத்தால் எதுவித பயனும் ஏற்படவில்லை. மாறாக 10 நாள் ஊதியமான ரூபா 1210 இழந்துள்ளார்கள். ஆனால் ஒட்டு மொத்த மலையகத் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இ.தொ.கா. இதனை ஒரு தேர்தல் உத்தியாக பயன்படுத்தியுள்ளதாக பரவலாக தொழிலாளர் நம்பியதே இதற்கான காரணமாக இருந்துள்ளது. அடுத்து 2001ம் ஆண்டு பெப்ரவரி மாதக் கடைசியில் சத்தியாகிரகத்தின் வடிவில் சம்பள உயர்வு கோரி போராடினார்கள். 23 நாட்களுக்குப் மேல் நீடித்த இப்போராட்டம் முதல் ஒப்பந்தத்திற்கு சில திருத்தங் களை இணைத்ததன் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
155

Page 79
கீத பொன்கலன்
அட்டவணை 6.1.1
தேயிலை தோட்ட சம்பளம்
தேயிலைத் தோட்டங்கள் 2O-O6-2OOO 15-03-2001
1ஆவது 2ஆவது ஒப்பந்தம் ஒப்பந்தம்
அடிப்படை சம்பளம் ரூபா 101 ரூபா 101
விலைக்கேற்ற கொடுப்பனவு SIbList 6 ரூபா 15 ஊக்குவிப்பு கொடுப்பனவு 90 வீதத்திற்கு மேல் ரூபா 14 ar அல்லது 85 - 90 வீதம் ரூபா 8 75 வீதத்திற்கு மேல் ரூபா 5 ஆகக் கூடிய சம்பளம் ரூபா 121 ரூபா 121
அட்டவணை 6.1.2 இறப்பர் தோட்ட சம்பளம்
இறப்பர் தோட்டம் 2O-O6-2OOO 15-03-2OO1
1ஆவது 2ஆவது ஒப்பந்தம் ஒப்பந்தம்
அடிப்படை சம்பளம் ரூபா 98 ரூபா 98
விலைக்கேற்ற கொடுப்பனவு «r a
ஊக்குவிப்பு கொடுப்பனவு 90 வீதத்திற்கு மேல் ரூபா 14 அல்லது 85-90 வீதம் ரூபா 8 70 வீதத்திற்கு மேல் ரூபா 14 ஆகக் கூடிய சம்பளம் ரூபா112 ரூபா 112
இதிலிருந்து தேயிலைத்தோட்டத் தொழிலாளர் ஆகக் கூடிய சம்பளமாக நாளொன்றுக்கு ரூபா 121யும் இறப்பர் தோட்டத் தொழிலாளர் ஆகக் கூடிய சம்பளமாக நாளொன்றுக்கு ரூபா 112யும் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது, தொழிலாளர் எதிர்பார்த்த ஆகக் குறைந்த சம்பளமான ரூபா 135ஐ பெற முடியாமல் போயுள்ளது. 150 ரூபாவை பெற்றுத் தருவோமென
156

இருபத்தோராம் நூற்றாண்டில் .
புறப்பட்டதொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனம் முன் வைத்த கூற்றுகளை ஏற்றுத் திரும்பிவிட்டன. உதாரணமாக கூறுவதாக இருந்தால் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த தொழிலாளரின் உபரி வருமானமான பால் உற்பத்தியை கூறலாம்.
6.1.1 கால்நடை வளர்ப்பு
1975க்கு முன் தோட்டங்களில் பொது கால்நடை வளர்ப்பு பட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. புல் வெட்டும் வசதிகள் இருந்தன. ஆனால் இப்போது பொதுப் பட்டிகள் இல்லை. இருக்கும் ஒரு சில இடங்களிலும் அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நச்சு மருந்துகளின் மூலம் புற்கள் அழிக்கப்படுவதால் போது மான தீவன வசதி இல்லை. ஒரு தோட்டத்தில் கால்நடை களுக்கென வெட்டும் புல்லை உறைக்குள் இட்டு அதன் வாயை நன்றாக கட்டி எடுத்துச்செல்ல வேண்டும் என்பது நிர்வாகத் தின் கட்டளையாக இருந்துள்ளது. பால் விற்பதில் பல சிரமங்கள் உள்ளன. பால் சேகரிப்பவர்கள் முறையாக பணம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் பால் பழுதடைந்து விட்ட தாக கூறி அதற்கான பணத்தை கொடுக்காமலே இருந்து விடுகின்றனர். கொழுப்பு சத்தை பரிசோதிக்கும் வாய்ப்பு தொழிலாளர்களுக்கு இல்லாததால் குறைந்த விலையே அவர் களுக்கு கொடுக்கப்படுகின்றது. இது போன்ற பல காரணங் களால் தோட்டங்களில் இன்று கால்நடை வளர்ப்பு 1சத வீதமாகவே இருக்கின்றது. நாவலபிட்டியில் இயங்கிவந்த பால் சேகரிக்கும் நிலையம் மூடப்பட்டதே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆகவே கால்நடை வளர்ப்பு தொழிலாளர் களுக்கு நஷ்டமே அன்றி இலாபம் தரக்கூடியது அல்ல. வறுமையின் காரணமாக பசுக் கன்றோடு பசுக்களையும் இறைச்சிக்காக விற்கும் நிலையும் அதிகரித்து வருவதையும் பரவலாக காணமுடிகின்றது.
6.1.2 காய்கறி பயிர் செய்கை
காய்கறி பயிர் செய்கையும் எல்லோரும் மேற்கொள்வ தில்லை. அதையும் கூட அநேகமானோர் வியாபாரிகளிடம் கடன் உதவி பெற்றே செய்கின்றனர். பெரிய அளவில் பயிர் செய்பவர்கள் தோட்டங்களில் தொழில் செய்வதில்லை. இதை
157

Page 80
கீத பொன்கலன்
விட இவர்கள் கூறிய காரணங்கள் வீட்டு வாடகைக் கட்டணமோ தண்ணிர் கட்டணமோ இல்லையென்பது. லயின் அறைகளுக்கு வாடகை அறவிட்டிருப்பார்களானால் ரூபா 100க்கும் எவரும் குடியிருக்க வந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
ஆகவே முதலாளிமார் சம்மேளனம் முன் வைத்த காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தோட்டத் தொழிலாளர் நன்கு அறிவார்கள்.
இரண்டாவது ஒப்பந்தத்தின்படி ஊக்குவிப்பு கொடுப் பனவான ரூபா 5ஐ பெறவேண்டுமானால் ஒரு மாதத்தில் ஞாயிறு தினங்களும் பொது விடுமுறை தினங்களையும் தவிர்த்து வேலை வழங்கிய ஏனைய நாட்களில் 75 வீதம் தொழிலாளி வேலைக்கு சமூகமளித்திருக்க வேண்டும். பின்வரும் அட்டவணை இதை தெளிவாக்குகிறது.
அட்டவணை 6.1.3
தொழிலாளர் வேலை செய்ய வேண்டிய நாட்கள்
2001ம் ஆண்டு விடுமுறை ஆகக்கூடிய ஆகக்குறைந்தளவு
நாட்கள் வேலை வேலை
நாட்கள் நாட்கள் - 75%
(தேயிலை)
ஏப்ரல் O8 22 16.5
மே O7. 24 18
ஜூன் OS 25 1875 ஜூலை O6 25 18.75
ஆகஸ்ட் 05 26 19.5
செப்டெம்பர் OS 25 1875
அக்டோபர் 06 25 1875
நவம்பர் 06 24 r 18
டிசம்பர் O7 24 18
உதாரணமாக - ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலைக்கு சமூகமளித்தவர்கள் ரூபா 80ஐ இழ்க்கின்றனர். ஆனால் 17 நாட்கள் வேலைக்கு சமூகமளித்தவர்கள் 85 ரூபாவை மேலதிகமாக பெற்றுக்கொள்கின்றனர். ஆகவே மேலே உள்ள
158

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணையில் காணப்படும் குறைந்தளவு வேலை வீதத்தை பூர்த்தி செய்யாதவர்கள் இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற தகுதியற்றவர்களாகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி அடிப்படை சம்பளம் 101 ரூபா வாகவே இருக்கின்றது. கொடுப்பனவுகளால் பெறப்படுகின்ற மேலதிகமான 20 ரூபாவிற்கு ஊழியர் சேமலாப நிதி கொடுக்கப்படுவதில்லை என்பதால் ஒரு தொழிலாளி ஒரு மாதத்தில் சராசரி 60 ரூபா சேமிப்பை இழக்க நேரிடுகிறது. தொழிலாளரின் இந்த ஒரே ஒரு சேமிப்பிலும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதனால் கம்பெனிகளுக்கே ஆதாயம் அதிகரிக்கின்றது. உதாரணமாக 270,000ம் தொழி லாளர்கள் மாதம் ஒன்றுக்கு இழக்கும் ரூபா 16மில்லியன் கம்பெனிகள் ஆதாயமாக பெறுகின்றன.
இரண்டாவது சம்பள கூட்டு ஒப்பந்தம் 30.06.2002 வரை சம்பள உயர்வு கோருவதை தடைச் செய்கின்றது.
முதலாவது சம்பள கூட்டு தொடர்பாக பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்தியில் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை தினங்களை தவிர்ந்த ஏனைய வேலை வழங்கும் நாட்களுக்கே விகிதாசாரம் கணிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தத்தின்படி மாதத்தில் வேலை வழங்கும் நாட்களின் மீதே விகிதாசாரம் கணக்கிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளதே அன்றி விடுமுறை நாட்கள் தவிர்த்த ஏனைய வேலை வழங்கும் நாட்களில் என குறிப்பிடப்படவில்லை. இந்த முதலாவது ஒப்பந்தத்தின்படி தொழிலாளர் முழுமையான சம்பளத்தைப் பெற முடியவில்லை.
6.13 சம்பள விபரப்பட்டியல்
தொழிலாளருக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பள விபர பட்டியல் தோட்டத்திற்கு தோட்டம் வேறுபாட்டுள்ளது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியப்ோது நம் கவனத்தில் பட்டவை களை இங்கே தருகிறோம்.
O வேலை வழங்கிய நாட்களை இந்தப் பட்டியலில் குறிப் பிடப்பட்டிருக்கவில்லை.வேலைக்கு சமூகமளித்த நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
59

Page 81
கீத பொன்கலன்
O அநேகமான பட்டியல்களில் விலைக்கேற்ற கொடுப்பனவு
கள் பதியப்படவில்லை.
O ஊக்குவிப்பு கொடுப்பனவும் முறையாக பதியப்படவில்லை.
O இந்தச் சம்பள விபரப்பட்டியலுக்காக ரூபா 280 தொழி லாளரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகின்றது. பட்டி யலை தயார் செய்வதற்கு நிர்வாகம் பொறுப்பா அல்லது தொழிலாளர் பொறுப்பா என்பது புரியவில்லை.
O 2000ம் ரூபாவிற்கு குறைவான ஊதியத்தை பெறுபவர்களிட மிருந்து முத்திரை வரியாக ரூபா 1.75 வசூலிக்கப்படுகின்றது. இதற்கு கூடுதலாக பெறுபவர்களிடமிருந்து ரூபா 4, 75 வசூலிக்கப்படுகின்றது. ஆனால் அந்த முத்திரையின் மீது தாம் கைசாத்திடுவதில்லையென தொழிலாளர் கூறுகின் றனர். அப்படியெனில் இந்த முத்திரை எதற்காக பயன்படு கிறது? சில தோட்டங்களில் இது 650 ஆகவும் சில தோட்டங் களில் தொகை எதுவாக இருந்தாலும் அறவிடும் முத்திரைப் பணம் 175 அல்லது 475ஆக இருக்கின்றது.
O சில தோட்டங்களில் சந்தாப் பணம், உணவுப் பொருள், நலன்புரி போன்றவற்றை கழிவுகள் என்ற பெயரால் ஒட்டு மொத்தமாக கழிக்கப்பட்டிருப்பதால் எது எதற்கு எவ்வளவு கழிக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடியா திருக்கின்றது.
இவற்றையெல்லாம் தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ளக் கூடிய ஒரு தெளிவான சம்பளப் பட்டியலை பெற முயல வேண்டும். விபரப்பட்டியலா விபரமில்லா பட்டியலா என்ற தடுமாற்றம் பார்பவர்களுக்கு ஏற்படக்கூடாது. ஆகவே அனைத்து தோட்டங்களிலும் ஒரே மாதிரியான சம்பளப் பட்டியல் தயாரிப் பது அவசியம். தேவையற்ற கழிவுகள் நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஒரு தொழிலாளி ஒவ்வொரு மாதமும் ரூபா 15-25 வரையிலான பணத்தை வீனே இழக்க வேண்டியுள்ளது.
சம்பளத்துடன் விடுமுறை
இலங்கை அரச வாத்தமானி (12.09.2000) இல. 149/2 இன் படி தேசிய தினமான பெப்ரவரி 4ம் திகதியை தோட்டத் தொழி லாளருக்கு சம்பளத்துடன் கூடியவிடுமுறைத் தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. ஆனால் 2001 பெப்ரவரி 4ம் திகதிக்கு அது சில தோட்டங்களில் வழங்கப்பட்டிருக்கவில்லை. சில தோட்டங் களில் இந்தப் பணத்தை போராடியே பெற்றுக் கொண்டார்கள்.
160

இருபத்தோராம் நூற்றாண்டில் .
மேலதிகத் தேயிலை
மேலதிகமாக எடுக்கப்படும் 1கிலோ தேயிலைக்கு கொடுக்கப் படும் ரூ. 375ல் மாற்றம் செய்யப்படவில்லை. இது ரூ. 6,75 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சில இடங்களில் இதற்கு 475 கிடைக் கிறதென்று சில தோட்ட உத்தியோகத்தர்கள் கூறியதாக பெண் தொழிலாளர்களிடமிருந்து அறியக்கூடியதாக இருந்தது.
இலாபம்
தோட்டங்களில் கிடைக்கும் இலாபத்தில் 10 வீத பங்கை
தொழிலாளர்களுக்கு கொடுப்பதாக கூறியிருந்தது 97/98க்கும்
பின் அது கொடுக்கப்படாமலே இருக்கின்றது.
6.1.4 கூட்டு ஒப்பந்தம் 1998 a
தொழில் பிணக்கு சட்டத்தோடு இணைந்து செயல்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 1998ம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி அமலாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2001 நவம்பர் மாதம் முடிவடைகின்றது. இந்த ஒப்பந்தத்தில் பல விடயங்கள் தொழிலாளருக்கு பாதகமாக அமைந்துள்ளன. இதில் மாற்றம் கொண்டு வருவதாக இருந்தால் இந்த ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன் இதனைச் செய்தவர் களில் ஒரு சாரார் எழுத்து மூலம் அறிவித்தல் கொடுத்து மாற்ற லாம். இல்லாவிடில் இந்த ஒப்பந்தம் திரும்பவும் நடைமுறைக்கு வரும். இந்த ஒப்பந்தம் பற்றிய முழு விபரமும் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் பத்திரிகைகளுக்கும் இது முழுமை யாக கொடுக்கப்படவில்லை. ஒரு சில சரத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சரத்து 7 நிர்வாகம் கோருமிடத்து தொழிலாளர்கள் நியாய மான நேர அளவுக்கு மேலதிக வேலை செய்ய வேண்டும்.
சரத்து 8, 2, முதலாளி 8.1க்கு உட்பட்டு ஒரு தொழிலாளிக்கு மாதம் 25 நாள் வேலை வழங்க வேண்டும். சில்லறை தொழி லாளர்க்கு இது பொருந்தாது. இருந்த போதும் 81ல் குறிப் பிட்டிருக்கும் 300 நாள் வேலை வழங்க வேண்டும். இதனால் ஆண்களுக்கு இந்த சலுகை மறுக்கப்படுகின்றது.
சரத்து 12, முதலாளி ஒருவர் ஒரு தொழிலாளி ஒரு வருடத்தில் 75% தொடக்கம் 84% வரை வேலைக்கு சமூக மளித்திருந்தால் ஊதியமாக 750, 85%க்கு மேல் சமூகமளித்
6

Page 82
கீத பொன்கலன்
திருந்தால் 850யும் வழங்க வேண்டும். இது 1999ம் ஆண்டி லிருந்து அமலுக்கு வரும். முன்னிருந்த நடைமுறைப்படி 1 மாத சம்பளம் 1/2 மாத சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். புதிய முறைப்படி முறையே ரூ 468, 1212 இழக்கிறார்கள்.
தொடர்ந்தும் தொழிலாளர்கள் உரிமைகளை இழந்து, வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்களானால் 1995/1996 மஸ்கெலியா பகுதியில் தொழிலாளர் உருவாக்கிய போராட்டம் போல் திரும்பவும் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்படாது தாங்களே தங்களுக்காக போராடும் நிலைமைக்கு உள்ளாவார்கள்.
வீரகேசரி 25. 08, 2001,
9 8 00 0. 0x8 & ex &
எகிப்திய நாட்டு சமூகவியலார் சமீர் அமின் அவர்களின் ༄༽ புரிதல் வித்தியாசமானது. இவர் வளர்ச்சி மாதிரிகளை 3 வகைகளாகப் பிரிக்கிறார்.
1. Gay Ts65s Lomérfi (Socialist Model) 2. gyari LOTf6f (Statist Model) 3. (pg. Gum Sifu Longrf (Capitalist Model)
சோசலிச மாதிரிக்கு உதாரணமாக சைனாவையும், வடகொரியா மற்றும் அம்பானிய நாட்டின் சில நடவடிக்கைகளையும் குறிப் பிடுகிறார். இதற்கு காரணமாக இவர் சொல்வது தொழி லாளி - விவசாயிகளின் கூட்டுவர்க்க அடித்தளமே. அரசு மாதிரிக்கு உதாரணமாக சோவித் யூனியனைக் குறிப்பிடு கிறார். காரணம் தொழிலாளி - விவசாயி வர்க்க அடிப்படை அரசு பூர்ஷ்வாக்களால் (Statist Bourgeoisie) எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசே தொழிலாளி - விவசாயி வர்க்கத்தை அடக்கி ஆண்டது. முதலாளிய மாதிரிக்கு உதாரணமாக பிரேசில், மெக்சிகோ, தென் கொரியா போன்ற நாடுகளைக் குறிப்பிடுகிறார். ‘புதுமை', 'புலி’ என்று வர்ணிக்கப்பட்ட இந்நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. முதலாளிய மாதிரி வளர்ச்சியை ஊனப்படுத்துமே தவிர துரிதப்படுத்தாது என்பது இவருடைய கருத்து.
(Samir Amin, "The future of Maoism”)
62
 

6.2 கட்டு ஒப்பந்தமும் தொழிலாளர் சமூக மேம்பாடும்
கூட்டு ஒப்பந்தங்கள் செய்யும் பொழுது தொழிலாளர்களுடையநன்மையை முன் வைக்க வேண்டுமே ஒழிய நிர்வாகம் தங்களின் இலா பத்தை கூட்டுவதற்காக பேரம் பேசுவதில் அர்த்தமில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் தொழில் சார்ந்த பிணக்குகள் மட்டுமல்லாமல், தொழி லாளர்களுடைய சமூக மேம்பாடும் உள்ளடக்கப் படவேண்டியது மிகவும் அவசியமானதொன்று. ஏனென்றால் இன்னும் பெருந்தோட்டத்துறை தேசிய மட்டத்திற்கு உள்வாங்கப்படவில்லை.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்பு, எமது அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனைக்கு அமைய, தோட்ட நிர்வாகம் மட்டுமல்ல, தோட்ட மக்கள் சார்பான சகல விடயங்களையும் கம்பெனிகளுக்கே தாரை வார்த்து விட்டு, அரசாங்கம் படிப்படியாக பின் வாங்கியது.
2002ம் ஆண்டு அமலாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கூடிய சீக்கிரத்தில் புதிய கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது (சரத்து - 04) ஆனால் இது முக்கூட்டு ஒப்பந்தமாக அமைக்கப்பட வேண்டும். அதாவது பெருந்தோட்டத் துறை அமைச்சும், இதில் பங்கு பற்றி, இந்த ஒப்பந்தங்களில் உள்ள ஏதாவது ஓர் சரத்தை நடைமுறை படுத்தாவிட்டால் அரசாங்கம் கம்பெனி மூலமாக நடை முறைப் படுத்த தேவையான சட்ட ரீதியான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் கம்பெனிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக் குழுவிடம் சிபாரிசுகள் செய்ய முடியாது. அத்தோடு இந்த புதிய கூட்டு ஒப்பந்தம், தொழில் பிணக்கு
163

Page 83
கீத பொன்கலன்
சட்டத்திற்கு மட்டுமல்லாமல், இன்று தொழிலாளர்கள் 24 மணி நேரமும் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற படியால், தொழி லாளருடைய பொருளாதார, சமூக, குடும்ப மேம்பாட்டையும் இவ் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திடுகின்றவர்கள், ஒருவராவது தொழிலாளராக இல்லாதபடியால், தொழிலாளர்களுடைய கருத்துக்களையும், எண்ணங்களையும் அறிந்த பின்பே, இதில் கைசாத்திட வேண்டும்.
6.2.1 1998 கூட்டு ஒப்பந்தம்-மாற்றங்கள்
சரத்து-07 மேலதிக வேலை;
நிர்வாகம் கோருமிடத்து, தொழிலாளர் நியாயமான நேரம்
வேலை செய்யப்பட வேண்டும் என்பது நீக்கப்பட வேண்டும்.
சரத்து- 8.2, 25நாட்களுக்கு குறைவான வேலை.
இச்சரத்தின் படி மாதத்தில் 25 நாட்களுக்கு குறைவாக வேலை வழங்கப் பட்டிருந்தால், ஏனைய நாட்களுக்குச் சம்பளம் வழங்கப் படவேண்டும். இது ஒரு சில தோட்டங்களில் நடை முறைப் படுத்தப்படுவது இல்லை. சில்லறை (சமயா சமய) தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர் போன்று கணிப் பிடப்பட வேண்டும்.
சரத்து-87 வாகன வசதி
ஏனைய தோட்ட பிரிவுகளில், அல்லது கம்பெனிகளுக்குச் சொந்தமான வேறு தோட்டங்களில் வேலை வழங்கும் போது, போக்குவரத்து வாகன வசதி வழங்கப்படுவதுடன், வேலை நேரமும் குறைக்கப்படவேண்டும்.
சரத்து-10 பணியாளர் வெற்றிடங்கள்
தோட்ட வேலைகளுக்கு மட்டுமில்லாமல், நிர்வாகத்தில் இருக்கின்ற பணியாளர் வெற்றிடங்களுக்கு, படித்த இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும். உதாரண மாக, சாரதிகள், மேற்பார்வையாளர்கள் குமாஸ்தாக்கள், பிள்ளை பராமரிப்பு தாதியர், சமூக நல உத்தியோகத்தர்கள் போன்ற ஏனையவும்.
சரத்து- 10.4 சமயா சமய ஊழியர்கள்
இச்சரத்து நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. ஏனெனில் தொடர்ந்து 12 மாதங்கள் வேலை செய்த சமயா சமய ஊழியர்கள்
64

இருபத்தோராம் நூற்றாண்டில் .
நிரந்தரமாக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, இடையிடையே வேலை நிறுத்தப்பட்டு, நிரந்தரமாக்கப்படு வதை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்புச் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.
சரத்து 11 - மேலதிகக் கொடுப்பனவு
இது இன்றுவரையும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. 1978ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்பட்ட தொகையில் கணிச மான அளவு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே, குறிப் பிட்ட தொழிலாளர்களுக்கும், இச்சரத்தின்படி 1997 ஜனவரி யில் இருந்து கூட்டப்பட வேண்டிய மேலதிகக் கொடுப்பனவு இன்னும் அதிகரிக்கவில்லை. ஆகவே, இக்குறிப்பிட்ட தொழி லாளர்களுக்கு, பாகுபாடின்றி நாளொன்றுக்கு மேலதிகக் கொடுப்பனவு ரூபா 10/= ஆல் அதிகரிக்கப்பட வேண்டும். அத்தோடு மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கு ரூபா 10/= ஆக
கூட்டப்பட வேண்டும்.
சரத்து- 12 சமூகமளிப்பதற்கான ஊதியம்
இச்சரத்து முழுமையாக மாற்றப்பட்டு இதற்கு முன் நடைமுறையில் இருந்த சமூகமளிப்பதற்கான ஊதியம் வழங்கப் பட வேண்டும்.
அட்டவணை 6.2.1
சமூகமளிப்பதற்கான ஊதியம்
வேலைசெய்த வருடாந்த ரூபா/121 தொகை நாட்கள் விடுமுறைகள் நா. சம்பளம்
72-143 O4 121Χ4 484,
14.4-215 08 121x8 968,
216-287 2 121Χ12 1452,
288க்கு மேல் 17 121Χ17 2057s
சரத்து-13 சுகயின விடுமுறைகள்
சகல தாபனங்களிலும், கூட்டுத்தாபனங்களிலும், அரச திணைக் களங்களிலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படு கின்ற சுகயின விடுமுறைகள் எவ்வித நிபந்தனையும் இன்றி 21 நாட்கள் எல்லாத் தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப் பட வேண்டும். .-
6S

Page 84
கீத பொன்கலன்
சரத்து- 15பேறுகால கொடுப்பனவுகள்
இவை வெவ்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, துரை மாரால் கொடுப்பனவு குறைக்கப் படுகின்றது. முழுமையாகக் கொடுக்கப்படுவதில்லை. முதலாம், மூன்றாம் குழந்தைகளுக் கிடையில், கொடுப்பனவு ஏற்றத் தாழ்வு இருப்பதால், குழந்தை களின் உரிமை இங்கே, மறுக்கப் படுகின்றது. ஆகவே, முதல் குழந்தையைப் போல் எல்லாக் குழந்தைகளுக்கும், கொடுப் பனவில் சம உரிமை பேணப்பட வேண்டும்.
சரத்து- 16 பெண்கள் குழுத் தலைவர்கள்
இதில் குறிப்பிட்டபடி பெண்கள் குழுத் தலைவர்களு டனோ, இளைஞர் குழுத்தலைவர்களுடனோ அன்றி, தோட்டக் குழு தலைவர்களுடன் மட்டும் கலந்துரையாடி, தன்னிச்சை யாக முடிவு எடுக்கப் படுகின்றது.
சரத்து- 17 தோட்டக் குழு அறிக்கை
தோட்டக் குழு அறிக்கைப் பதிவேட்டை தொழிலாளர் தமிழில் சமர்ப்பிக்கும் பொழுது, அதை முழுமையாக ஏற்பதும் இல்லை.நிர்வாகம் தமிழில் பதில் கொடுப்பதுமில்லை. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு தொழிற் சங்க நாள் ஒதுக்கித் தரும்படி கேட்டாலும் அதற்குப் பதில் கொடுக்கப்படுவதில்லை.
சரத்து- 20 வேலை நிறுத்தம்
தொழிலாளருடைய வெற்றிக்கு ஆயுதமான வேலை நிறுத்தம், (தொழிற்சங்க நடவடிக்கை) சில, பல, நிபந்தனைகளின் அடிப் படையில் முறியடிக்கப் பட்டுள்ளது. இவை முற்றாக அகற்றப் பட வேண்டும்.
ஆ. புதிய ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட வேண்டியவை - 2002
O நியதி சட்ட முறையான லீவு நாட்கள் (Statutory Holidays) ஏனைய தொழிலாளர்களுக்கு 8 நாட்கள், தென்னந்தோட் டத்தில் வேலை செய்பவர்களுக்கு 4 நாட்கள், தேயிலை, இறப்பர்தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு,3நாட்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது.ஆகவே, தேயிலை, இறப்பர் தொழிலாளர்களுக்கும் 8 நாட்களாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அத்தியாவசிய சேவையாகக் கணிக்கப்பட்ட,பின்வருவோர் களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். காவல்
தொழிலாளி, மருந்துக்கங்காணி, தபால்காரர்,நாற்றுமேடை
தொழிலாளி (தவறணைக்கங்காணி), பிள்ளை பராமரிக்கும் தாதிமார் பங்களா, சேவையாளர் போன்றவர்கள் மாதச் சம்பளத்திற்கு உரித்துடையவர்கள்.
தோட்ட மக்களுக்கு கொடுக்கின்ற சம்பளத் துண்டுக்கு கழிக்கும் பணம் நிறுத்தப்பட வேண்டும். ஏனைய கழிவு
களும், முத்திரை, பெயர் அட்டை போன்றவை நிற்பாட்டப்
படவேண்டும். ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் வேலை நாட்கள் சம்பளத் துண்டில் குறிப்பிடப்பட வேண்டும். ஊக்குவிப்பு கொடுப்பனவிற்கு (75%) மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப் பிடப்படவேண்டும்.
தொழிலாளர் சம்பளத் துண்டில் அதிகாரம் பெற்ற கழிவு களைத் தவிர்ந்த வேறேந்தக் கழிவும் விசேஷடமாக சம்பளத் துண்டில் பதியாமல் சம்பளத்தில் கழிப்பது, தொழில்
ஆணையாளர். உத்தரவின்றி செய்யப்படும் கழிவுகள்
அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். நுகர்வோர் விலைச் சுட்டெண் மாதா மாதம் சராசரி 25 புள்ளிகளால் கூடுகிறது. ஆனால் தொழிலாளர் தமக்குக் கிடைக்கின்ற நாளாந்தச் சம்பளத்தைக் கொண்டு சந்தையில் நிலவும் சில்லறை விலைக்கேற்ப, தேவையான பொருட் களை கொள்வனவு செய்வது கடினமான காரியம். ஆகை யால் அவர்கள் வருமானத்தைக் கூட்டக்கூடிய சுயதொழில் வாய்ப்புகளுக்கு தேவையான காணி, பயிற்சிகள் மற்றும் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையான, வீடமைப்புத் திட்டத்துக்குக் கம்பெனிகள் 10 பர்ச் காணி கொடுக்க வேண்டும். ஏனைய கிராமிய வீடமைப்புத் திட்டம் போல் இவர்களுக்கும், வீடமைப்புத் திட்டக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். தோட்டங்களில் கூரை மாற்றுதல், நிர்வாகமே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.இதற்காக தோட்ட மக்களுக்கு வட்டியுடன் கடன் கொடுப்பது தேவையற்ற ஒன்றாகும். ஒவ்வொரு தோட்டத்திலும், பிறப்பு இறப்புப் பதிவாளர் ஒருவர் தனியாக நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையில் உள்ள,இரட்டை பதிவுமுறை மாற்றப்பட்டு,
67

Page 85
கீத பொன்கலன்
6.
பதிவு செய்யப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் அவர்கள் சொந்த மொழியில் இருக்க வேண்டும்.
மூன்று வயதுக்குமேல், ஆரம்பப்பாடசாலைக்குச் செல்லும் வயது வரையிலான பிள்ளைகளின் எண்ணிக்கை 15க்கு மேல் இருந்தால் அந்தப் பிரிவுகளில் முன் பள்ளி நடத்து வதற்காக இடம் ஒதுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்படவேண்டும்.
சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன் பள்ளி பணியாளர்களை நியமிக்கும் போது, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்.
இன்று தோட்டங்களில் படிப்படியாக முதியோரின் எண்ணிக்கை கூடிவருவதனால் 60 வயதுக்கு மேற்பட் டோருக்காக, சமூக நலத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
தோட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களை இனங் கண்டு அவர்களுக்கு அதைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்ய வேண்டும். இன்று தோட்டங்களில் 70 வீதத்திற்கும் மேலானவர்கள், நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஊக்குவிக்கப்படுகி றார்கள். அதைத் தவிர்த்து, இன்றுள்ள பல நவீன முறை களைக் கையாண்டு, அதாவது, லூப் முறை பாவனை. இதனை ஒரு தகுதி வாய்ந்த பெண் டாக்டர் மூலமாகவே செய்ய வேண்டும்.இதனால் 10 வருடங்களுக்கு குழந்தைப் பேற்றை பின் தள்ளிப் போட முடியும், குடும்பக் கட்டுப் பாட்டை பொறுத்த வரை குடும்ப சுகாதார அலுவலகம் விடுத்த அறிக்கை இல. 1586 முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
தோட்டங்களை கம்பெனிகளுக்குக் கையளித்த போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்.
அரசாங்கத்தின் பங்கு அனைத்து தோட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். •”፡
ஒவ்வொரு தோட்டத்தினதும் செயற்பாடுகளை முழுமை யாக அவதானிக்க, சட்டபூர்வமான ஓர் அதிகாரி நியமிக்கப் படவேண்டும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
டிரஸ்ட் நிறுவனம் கம்பெனிகளின் அதிகார வரம்புக்குள் அடக்கப்பட்டுள்ளது.இது கம்பெனி சார்பாக இல்லாமல் தொழிலாளர் பிரதிநிதிகளை கூடுதலாக கொண்டிருக்க வேண்டும்.
தொழிலாளர் என்ற சொல் மாற்றப்பட்டு, இவர்களை பங்கு தாரர்கள், அல்லது உற்பத்தியாளரெனக் கணிக்க வேண்டும்.
இவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி வழங்கப்படுவதை மாற்றி மாத முடிவில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலாளருக்கு உறுதியான நியமனப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.
சீருடைகள், அவரவர் தொழிலுக்கு ஏற்ப நிர்வாகத்தினால் முழுமையாக வழங்கப்படவேண்டும். Ab பெருநாள் முற்பணம் ரூபா 5000/= ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
பிரேதப் பெட்டிக்குத் தற்போது கொடுக்கின்ற ரூபா 300/=, ரூபா 3000/=ஆக அதிகரிக்கப்படவேண்டும்.
மருந்துக்காக, அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கப் படும் பணம் ஐந்து மடங்காக உயர்த்தப்படவேண்டும். அரசாங்கத்தினால் ஏனைய மக்களுக்குக் கொடுக்கின்ற நிவாரண உதவிகளும், வறுமை ஒழிப்புத் திட்டங்களும் தோட்ட மக்களுக்கும் வழங்கப்படவேண்டும். ஒவ்வொரு தோட்டமும், ஒவ்வொரு கிராமமாக மாற்றப் பட்டு நிர்வாகப் பிடியில் இருந்து அகற்றப்பட்டு, ஒவ்வொரு 500 குடும்பங்களுக்கும் ஒர் கிராம சேவகர் நியமிக்கப்பட வேண்டும். தோட்டக் கூட்டுறவு குடிமனைச் சங்கத்திற்கு சட்டப்பூர்வ மான காணி வழங்குவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளதா? அல்லது இது ஒரு ஏமாற்று வித்தையா?1993 இருந்து ஒரு துண்டு காணியும் இச் சங்கத்துக்கு சட்ட பூர்வமாக கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்களிடமிருந்து கூரை மாற்றுவதற்கு வீடுகளை திருத்தி அமைப்பதற்கு, புதிய வீடு கட்டுவதற்குக் கொடுக்கப் படும் கடனுக்கு வட்டியும் முதலும் அறவிடப்படுகின்றது. இதில் வட்டியாவது நிறுத்தப்படவேண்டும்.
69

Page 86
கீத பொன்கலன்
O இவர்களது வீடமைப்புத் திட்டத்தைப் பற்றி ஒரு தெளி வான கொள்கை உருவாக்கப்படவில்லை.இதனால் தொழி லாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். எனவே பாரம்பரிய லயின் முறையே தொடர்கிறது.
O தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, பணத்தை ஈடாக வைக்காமல், அப்பணத்தில் 50 வீதத்தை, எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்கும்படி செய்ய வேண்டும்,
O கம்பெனிகள், சரியான முறையில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சம்பளம், கொடுக்க முடியாமல் அல்லது நஷ்டத்தில் போனால் அந்தத் தோட்டங்களை தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி என்ற அடிப்படையில் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும்.
இந்த ஒப்பந்தம் 21 கம்பெனிகள் சார்பாகவும், 3 தொழிற் சங்கங்கள் சார்பாகவும் மட்டுமன்றி, மக்கள் தோட்ட அபி விருத்திச் சபை, அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம், 50 ஏக்கருக்கு மேலுள்ள 169 பதிவு செய்யப்பட்ட முதலாளிமார் சார்பாகவும், ஏனைய தொழிற்சங்கங்கள் சார்பாகவும் ஒட்டு மொத்தமாக கைசாத்திட வேண்டும். இன்று மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் இடையிலான உறவை சந்தைமட்டுமே நெறிப் படுத்துவது என்பது, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை களை பாதிக்கிறது. அத்தோடு வட அமெரிக்காவில் இருந்து இலங்கை வரை சுய போட்டிச் சந்தையை காட்டி தொழி லாளர்கள் ஊதிய உயர்வு, போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் நசுக்கப்படுவதைக் காணலாம். இதனால் பெரிதும் பாதிக்கப் படுவோர் உடல் உழைப்பாளர்களே. எனவே, மலையக தமிழ் மக்கள் மீது அக்கறைக் கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் நல்வாழ்விற்காக குரல் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
தினக்குரல் 11, 10, 2002
Ol 29l 40. Ada 40
• ex t 0x8 ox
70

6.3 தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சி ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு இருநூறு ருபா சம்பள உயர்வு சாத்தியமே!
சம்பள ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச் சாத்திடப்படுகிறது. வாழ்க்கைச் செலவுபுள்ளி யினை கருத்தில் கொள்ளாது தன்னிச்சையாக தீர்மானிக்கப்படுகின்றது.இந்தச் சம்பளஒப்பந்தத் திற்கு முன் பலரும், தொழிலாளருக்கு இருநூறு ரூபாய் கிடைக்குமென எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் தொழிற் சங்கங்கள் மத்தியில் ஒற்றுமை யில்லாக் காரணங்களினால் இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு ஏமாற்றமாக அமைந்து விட்டது.
இம்முறை தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை வரவேற்கத் தக்க ஒரு மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. தொழிற் சங்கங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், மக்கள் அமைப்புக்கள் மட்டு மல்லாமல் தொழிலாளரும் கூட கூடிய அக்கறை கொண்டுள்ள துடன் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இரண்டு மாத காலமாக நடைப்பெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் ஒரு தீர்வையும் எடுக்காமல் காலம் தாழ்த்து வது தொழிலாளரை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே தொழி லாளர் கருதுகின்றனர். தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை யானது தலைவர்களிடையே பலப்பரீட்சையாக மாறி வருவதை பத்திரிக்கை செய்திகள் பறை சாற்றுகின்றன. இது கவலைக் குரிய விடயமாகும்.
71

Page 87
கீத பொன்கலன்
இதே வேளை முதலாளிமார் சம்மேளனமோ ரூபா. 142.00 மட்டுமே கொடுக்க முடியுமென உறுதியாக கூறுகிறது. (அடிப் படைச் சம்பளம் ரூபா. 121.00 ஏனைய கொடுப்பனவுகள் ரூபா, 2100) கடந்த முறை சம்பளம் அதிகரித்த பின்னர் கம்பெனி களுக்கு ரூபா. 164 மில்லியன் மட்டுமே இலாபமாகக் கிடைத் துள்ளதாகவும், தற்போது மேலும் ரூபா 2100 கூட்டினால் அதாவது ரூபா. 142.00 கொடுப்பதாக இருந்தால் வருடத்துக்கு ரூபா, 1.6 பில்லியனை கம்பெனிகள் மேலதிகமாக கொடுக்க வேண்டி உள்ளதாகவும், இதனால் நட்டமே ஏற்படுவதாக கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால் 2000ம் ஆண்டில் களனி வெலி பிளாண்டேஷன் மட்டும் பெற்ற இலாபம் ரூபா. 105.2 மில்லியனாக இருந்தது. இது கம்பெனிகளின் மேற்கண்ட கூற்றை பொய்ப்பித்துள்ளது.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டப்பின் (தோட்டங் களில்) நடைப் பெற்று வரும் மாற்றங்களை உற்று நோக்கின் நிர்வாகம் விரும்பினால் நாட் சம்பளமாக தொழிலாளருக்கு ரூபா, 200.00 மிகச் சுலபமாக கொடுக்க முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
6.3.1 வரிகள்
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன் அரசாங்கத்திற்கு அதிக வரி செலுத்தும் ஒரு துறையாக பெருந் தோட்டத்துறை விளங்கியது. 1992 டிசம்பர் 2. 1 இல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும், ஏற்றுமதி வரியும் நீக்கப்பட்டது கம்பெனிகளுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். இந்த வரிகள் மூலம் 1990ம் ஆண்டு அரசாங்கத்திற்கு தேயிலை உற்பத்தி தொடர்பாக ரூபா. 1536.1 மில்லியனும், இறப்பருக்கு ரூபா,747 மில்லியனுமாக மொத்தம் ரூபா.2283.1 மில்லியன் கிடைத்துள்ளது. இந்த வரிகள் நீக்கப் படாதிருந்தால் 2002 இல் அரசாங்கத்திற்கு ரூபா. 5 பில்லியனுக்கு மேல் வருமானம் கிடைத்திருக்கும்.
தற்போது தேயிலைக்கு “செஸ்” வரி மாத்திரமே விதிக்கப் படுகிறது. 08.05.1998இல் இறப்பர் மீதான "செஸ்” வரி அகற்றப் பட்டு விட்டது. 1997 இல் இறப்பர் மூலம் ரூபா. 3442 மில்லியன் அரசாங்கத்திற்கு “செஸ்” வரியாக கிடைத்துள்ளது. இந்த வரி தொடர்ந்தும் செலுத்தப்பட்டு வந்திருந்தால் 2002 இல்
172

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அரசாங்கத்திற்கு ஏறக்குறைய ரூபா. 500 மில்லியன் வருமான மாக கிடைத்திருக்கும். இவ்வரிகள் நீக்கப்பட்டதால் இம்முழுத் தொகையும் கம்பெனிகளுக்கு இலாபமாக மிகுதிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தேயிலை இறப்பர் வர்த்தகம் மீதான G.S.T./N.S.I. வரிகள் அகற்றப்பட்டுள்ளன. 2000ம் ஆண்டில் கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ரூபா 50 பில்லியன் பெறுமதியான தேயிலை வாங்கப்பட்டுள்ளது. இதற்கு 10 வீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி செலுத்தப்பட வேண்டும். இத்தொகை 3 மாதங்களுக்குப் பின் திருப்பிக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் இவ்வாறு கிடைக்கும் ரூபா 5 பில்லியன் தொழிலாளரின் நாளாந்த சம்பளத்தை ரூபா 200.00 ஆக உயர்த்த போதுமானதாக இருக்கும். இதனால் கம்பெனிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படப் போவதில்லை,
6.32ஆட்குறைப்பு
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின் ஆட் குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளரினதும் உத்தியோகத் தினரதும் எண்ணிக்கை 194,000 ஆகும். தொழிற்சாலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் உற்பத்தி அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக 1992இல் 178.9 மில்லியன் கிலோவிலிருந்து 2000ம் ஆண்டில் 308.8 மில்லியன் கிலோ வாக அதிகரித்துள்ளது. 194,000 தொழிலாளருக்கு ரூபா 121 வீதம் வருடத்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணம் 7 பில்லியன் ரூபாய்கள் கம்பெனி களுக்கு மீதமாகியுள்ளது. இவர்களுக்கான சேமலாப நிதி கொடுப்பனவுகளையும் கணக்கிலிட்டால் மேலும் ஒரு பில்லியன் மீதமாகிறது. இதன்படி குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கம்பெனி களுக்கு 8 பில்லியன் ரூபாய் மீதமாகியுள்ளது. இது இலாபமே.
6.3.3 கம்பெனிகளுக்கு இலாபம்
அடிப்படைச் சம்பளமான ரூபா 101.00க்கு மட்டுமே தொழிலாளர் சகாயநிதியும், தொழிலளர் சேமலாப நிதியும் கொடுக்கப்படுகின்றது. எஞ்சிய ரூபா 20,00ற்கு தொழிலாளர் சகாயநிதி, தொழிலாளர் சேமலாப நிதியும் கொடுக்கப்படுவ தில்லை. இதனாலும் கம்பெனிகளுக்கு இலாபமே (வருடத்திற்கு ரூபா 800,000ற்கு மேல் மீதமாகிறது).
1996இல் 5 கம்பெனிகள் 6 மாதத்தில் வரி நீக்கலாக ரூபா 29484 மில்லியனை நிகர இலாபமாக பெற்றிருக்கின்றன. இதன்
173

Page 88
கீத பொன்கலன்
அடிப்படையில் பார்த்தால் ஒரு கம்பெனி ஒரு வருடத்தில் சராசரி ரூபா 20 மில்லியனுக்கும் அதிகமாக இலாபம் அடைகிறது.
6.3.4 முகாமைத்துவ முகவர் கட்டணம்
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு முன் முகாமைத்துவ முகவர் கட்டணமாக ஒரு கிலோ தேயிலைக்கு ரூபா 3.50 அறவிடப்பட்டது. ஆனால் தனியார் மயமாக்கப் பட்டப்பின் ஒரு கிலோவுக்கு ரூ. 3750 ஆக உயர்த்தப்பட்டு அதனை உற்பத்தி செலவில் கணக்கு காட்டுகிறார்கள். 2000ம் ஆண்டில் ஒரு கம்பெனி ரூபா 98.8 மில்லியனை முகாமைத்துவ கட்டணமாக பெற்றுள்ளது. மற்றுமொரு கம்பெனி ரூபா 70.9 மில்லியனையும், வேறுமொன்று ரூபா 27.3 மில்லியனையும் பெற்றுள்ளது. இந்த 21 கம்பெனிகளும் முகாமைத்துவ முகவர் கட்டணத்தை குறைக்குமானால் உற்பத்தி செலவை குறைக்க முடியும். கம்பெனிகளின் பெரிய பங்குதாரர்களாக இருப்பவர் களே முகாமைத்துவ முகவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் இலாபத்திலும் இவர்களுக்கு கூடிய பங்கு கிடைக்கிறது. மேலும் இவர்கள் தோட்டத்துறையில் மட்டுமல்லாமல் ஏனைய வர்த்தகத் துறைகளிலும் முகாமைத்துவ முகவர்களாக பதவி வகிக்கின்றார்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்ன னியில் முகாமைத்துவ முகவர் கட்டணம் குறைக்கப்பட்டால் சம்பள அதிகரிப்பு கம்பெனிகளின் இலாபத்தில் பெரிய பாதிப் பினை ஏற்படுத்த மாட்டாது.
6.3.5 சம்பளப்பட்டியல்
தொழிலாளருக்கு வழங்கப்படும் சம்பளப் பட்டியலில் வழங்கப்பட்ட வேலை நாட்களை குறிப்பிடுவதில்லை. இதனால் தொழிலாளருக்கு கொடுக்கப்படும் ஊக்குவிப்புப் பணம் முறை யாக கணிப்பிட முடியாது. பெயர் காட், விபரப் பட்டியல் தயாரிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்கென கழிக்கப்படும் பணம் கம்பெனிகளுக்கு கிடைக்கும் மேலதிக இலாபமாகும். (ஆகக் குறைந்தது ரூபா. 10.00க்கு மேல் ஒவ்வொரு தொழிலாள ரிடமிருந்தும் கழிப்படுகின்றது.) i.
6.3.6 உபரி வருமானம்
இன்று பெருந்தோட்டத்துறை தேயிலை, இறப்பர் உற்பத்தியில் மட்டுமல்ல ஏனைய வழிகளிலும் வருமானத்தை ஈட்டுகின்றது. (மரம் வளர்ப்பு, மாற்றுப் பயிர்ச் செய்கை,
74

இருபத்தோராம் நூற்றாண்டில் .
காணிக் குத்தகை) இதனால் கூடிய இலாபத்தைப் பெறுகின்றனர். சம்பள உயர்வு கணிப்பில் இத்தொகைகள் கணக்கில் எடுக்கப் படுவதில்லை.
1991இல் தேயிலை ஏல விற்பனையின் மூலமாக ரூபா. 19, 797 மில்லியன் பெறப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் ரூபா. 50, 9887 மில்லியனாக அதிகரித்தது. இது வருமான அதிகரிப் பினையும் காட்டுகின்றது. இந்த அதிகரிப்பு மூலமாக தொழி லாளரின் சம்பளத்தை கூட்ட முடியாதது ஏன்?
6.3.7 சம்பள அதிகரிப்பு - 11 வீதம்
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தொழிலாளருக்கு 11 வீதம் சம்பளம் அதிகரிக்கப்படும் என கம்பெனிகள் தமது ஆண்டறிக்கையில் கூறியுள்ளன. அதனடிப்படையில் முறை யாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் திடீரென பெருந் தொகை பணத்தை செலவிடும் நிலை ஏற்பட்டிருக்காது. 2000ம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ஒப்பந்தத்தின் போது கம்பெனிகள் ரூபா. 135.00 கொடுக்கத் தயாராக இருந்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தகுந்த ஆதாரங்களுடன் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்தாததால் அது கிடைக்காமல் போய் விட்டதாகவே தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய சம்பளத்துடன் ரூபா. 6000 கூட்டுவதாக இருந்தால் (சுமார் 260,000 x ரூபாய் 60 x 12 மாதங்கள் x 25
e o گھ நாட்கள்) கம்பெனிகளுக்கு ரூபா 47 பில்லியன் மேலதிகமாக தேவைப்படும். மேற் கூறிய வழிகளில் கம்பெனிகள் பெறுகின்ற வருமானத்தில் இத் தொகையை ஈடு செய்யலாம்.
6.3.8தொழிலாளர்களுக்கு ரூபா 200 - நாட் சம்பளம்
04-05-2002இல் அட்டன் மாவட்ட தொழிற் காரியாலயத்தில் தொழில் அமைச்சர் உரையாற்றும் போது தற்போது கிடைக்கும் சம்பளத்தில் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நடத்துவது கடினம் என்பதை தானும் பிரதமரும் அறிந்திருப்பதாக கூறி உள்ளார். அனைவரும் அறிந்திருந்தாலும் அதனை சீர்ப்படுத்து வதற்கான முயற்சிகளில் உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தொழிலாளரின் வாழ்க்கையை வலுப்படுத்த கம்பெனிகள் முன்வராவிட்டால் கூடிய சீக்கிரத்தில் தொழி லாளர் மேலும் வறுமை நிலைக்கே தள்ளப்படுவர்.
75

Page 89
கீத பொன்கலன்
இந்த அடிப்படையில் பார்க்கும் போது கம்பெனிகள் கூறும் ரூபா. 142.00 எவ்கையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தொழிலாளரின் நாட் சம்பளம் பின்வரும் அடிப் படையில் அமைய வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
0 தொழிலாளருக்கு நாட் சம்பளம் ரூபா. 200.00 என்பது
நியாயமானதும், கொடுக்கக் கூடியதுமாகும்.
அல்லது
O ரூபா. 12100 அடிப்படைச் சம்பளமும், ஒவ்வொரு வாழ்க்கைச் செலவு பள்ளி ஏற்றத்திற்கும் ரூபா. 3.50 வீதமும் (தற்போது எந்த ஒரு தொழில்தருநரும் வழங்கும் ஆகக் குறைந்த வாழ்க்கை செலவு கொடுப்பனவு) வழங்கப்பட வேண்டும்.(தற்போது பெருந்தோட்டக்கம்பெனிகள் அங்கம் வகிக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் அங்கத்தவர் களான வேறு சில கம்பெனிகள் தமது தொழிலாளருக்கு வாழ்க்கைச் செலவு புள்ளி கொடுப்பனவை வழங்குகின்றன என்பதை இங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இதற்கு மாறாக எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானமும் தொழிலாளருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஏற்படும் தோல்வி யாகவும், முதலாளிமாரின் வெற்றியாகவும் அமையும் என்பது தெளிவாகும்.
ஆயினும் புள்ளிவிபரங்கள் தரவுகள் மூலமாக சம்பள உயர்வை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் அனைத்து தொழிற் சங்கங்களில் ஒரு மனப்பட்ட கூட்டு முயற்சியின்றி சம்பள உயர்வு கோரிக்கை வெற்றித்தர போவதில்லையென்பதை தொழிற்சங்கங்களுக்கு தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.
சுடர் ஒளி 17. 08, 2002,
விரகேசரி 18, 08, 2002
8 - Xo o o: • Xo
I6

6.4. 2002ம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளக் கூட்டு ஒப்பந்தம்
இரண்டு வருடங்களுக்கு கொருமுறை சம்பளம் கூட்டுவது தோட்ட முதலாளி மார்களின் கரங் களில் இருக்கும் வரையிலும், ஒரு நீதியான, நேர்மையான சம்பளம் ஒருநாளும் தொழிலாளர் களுக்கு கிடைக்கப் போவதில்லை. அத்தோடு, தொழிற்சங்க வாதிகள் மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம். என்ற எண்ணத்தை செயற் படுத்துவதற்கு தொழிற் சங்கங்களும் தோட்டங் களில் இருப்பதாக காட்டுவதற்கு இந்த ஒப் பந்தங்கள் சான்று பகரும் சாட்சிகளே. ஆகை யால் இதற்கொரு முற்று புள்ளி வைப்பதாக விருந்தால் முன் வழங்கப்பட்ட வாழ்க்கைச் செலவு புள்ளியை கொடுப்பதே தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தக் கூடியதாகவிருக்கும். A.
இல385, ஜே3, பழைய கோட்டைத் தெரு, இராஜ கிரியா வில் தங்களது காரியாலயத்தை வைத்திருக்கும் இலங்கை தொழில் கொள்வோர் சம்மேளனத்திற்கும் (இதன்பின் முதலாம் பங்குதாரர் என அழைக்கப்படுவர். இதில் இணைக்கப்பட் டிருக்கும் பட்டியலில் உள்ள அங்கத்துவ கம்பெனிகளைக் குறிக்கும்); 72, ஆனந்தகுமார சுவாமி மாவத்தை கொழும்பு - 7 இல் தமது காரியாலயத்தை வைத்திருக்கும் இலங்கை தொழி லாளர் காங்கிரசுக்கும்; இல 60, பண்டார நாயக்காபுர பூரீஐய வர்த்தனபுர மாவத்தை, இராஜகிரியாவில் தமது காரியாலயத்தை வைத்திருக்கும் லங்கா ஜாதிக்க தோட்ட தொழிலாளர் சங்கம், இல. 618-1/2-காலி வீதி, கொழும்பு - 3ல் காரியாலயத்தை
77

Page 90
கீத பொன்கலன்
வைத்திருக்கும் கூட்டு பெருந்தோட்டத் துறை தொழிற் சங்கங் களின் நிலையம் (இதன்பின் இவை இரண்டாம் பகுதியின் பங்குதாரர் என அழைக்கப்படுவர்) ஆகிய்வற்றிக்கிடையில் செய்து, கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது இணைப்பில் குறிப் பிடப்பட்டிருக்கும் தேயிலை, இறப்பர் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளரைக் கட்டுப்படுத்தும்,
இதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி திருத்திய கூட்டு ஒப்பந்தத்தில் மேலே குறிப்பிட்ட இரு பிரிவுக்கு மிடையில் ஓர் சமரச உடன்பாடு ஏற்பட்டது. (1998ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் இல50). மேற்படி கம்பெனிகளின் நிர்வாகத் தின் கீழ் இயங்குகின்ற தேயிலை, இறப்பர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமான இணக்கப் பாட்டுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட 21 கம்பெனிகளின் சார்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் பின் வருமாறு;
1. பெருந்தோட்டத்தில் நாளாந்த சம்பளத்துக்கு தனது உடல் உழைப்பினால் வேலை செய்யும் தொழிலாளி, 2002ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி அன்று அமலில் வரும், கீழ்க் குறிப் பிடும் புதுப்பித்த வேதனத்தைப் பெறுவர்.
6.4.1 தேயிலை O நாளாந்த வேதனம் ரூபா 121/- இதில் தொழிலாளர் சேமலாப நிதி, தொழிலாளர் நம்பிக்கை நிதி போன்றவை வழங்கப்படும்.(தொசேநிதி, தொநநிதி) O நாளாந்த விலை பங்குகொடுப்பனவாக ரூபா 14=கொடுக்கப் படும். இதற்கு தொ. சேநிதி, தொநநிதி கொடுக்கப்பட மாட்டாது. O மாதத்தில் வேலை வழங்கப்பட்ட நாட்களில் 75 வீதம் வேலைக்கு சமூகமளித்திருந்தால் ஊக்குவிப்பு கொடுப்பன வாக ரூபா 12/- வழங்கப்படும்.
6.4.2 இறப்பர் 1. நாளாந்த அடிப்படைச் சம்பளம் ரூபா 109/-தொசேநிதி,
தொநநிதி) உண்டு. 2. மாதத்தில் வேலை வழங்கப்பட்ட நாட்களில் 75 வீதம் வேலைக்கு சமூகமளித்திருந்தால் ஊக்குவிப்பு கொடுப்பன வாக ரூபா 22/-கொடுக்கப்படும்.
178

இருபத்தோராம் நூற்றாண்டில் .
6.4.3
3.
இவ் உடன்படிக்கை பொதியில் தீர்மானித்து, ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்குறிப்பிட்ட பந்தியில் உள்வாங்கப் பட்ட (அ) -1ம், (ஆ) விலும் குறிப்பிட்ட விடயங்கள் 2004ம் ஆண்டு ஜூன் 30ம் திகதிவரை அமலில் இருக்கும்.அதுவரை எந்த ஒரு பகுதியினரும் எந்த வகையிலும் இந்த சம்பளத் திரட்டை மாற்றவோ, திருத்தவோ முனையக் கூடாது என்பதையும் இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஜூன் 2002ல் சராசரி தேசிய மொத்த தேயிலை விற்பனை யுடன் ஒப்பிடுகையில் தேயிலைச் சபையினால் வெளியிடப் படும் சராசரி தேசிய மொத்த விற்பனையில் ஜூலை 2003ல் அல்லது அதற்குப்பின் 25வீதம் அதிகரித்திருந்தால் தேயிலை தொழிலாளர் தொடர்பாக இந்த உடன்படிக்கை பொதியை மீளாய்வு செய்வதற்கு இரு சாராரும் உடன்படுகின்றனர்.
இரண்டு பங்குதாரர்களும் 4-12-1998 அன்று கைசாத்திட்ட இல,50,1998 கூட்டு ஒப்பந்தத்தின் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலை நன் நம்பிக்கையின் அடிப்படையில் துரிதப்படுத்துவதற்கும் உடன்படுகின்றனர். புதிய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் புனராய்வு செய்யும் வரை மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் சரத்துக்கள் அமலில் இருக்கும், தேயிலை, இறப்பர் உற்பத்தி துறையின் சம்பளச் சபையால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது எனவும் புதிய ஒப்பந்தத்தின் சம்பள தொகையே அமல் படுத்தப்புடும் எனவும் இரு சாராரும் உடன்படுகின்றனர்.
சரத்து 1ன் கீழ் குறிப்பிட்டுள்ளபடி 2002ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி முதல் அமலுக்கு வரும் சம்பள அதிகரிப் பினால் தொழிலாளருக்கு சேரவேண்டிய நிலுவைப்பணம் தீபாவளிப்பண்டிகைக்குமுன் வழங்கப்படும்,
தோட்டத்தின் உற்பத்தியையும், செயற் திறமையை அதி கரிக்கவும் ஒத்துழைப்பு நல்குவதெனவும், தோட்ட மட்டத் திலான நடைமுறைப்பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின்
அடிப்படையில் அமைதியாக தீர்ப்பதை ஊக்குவிப்பதற்கும்
இருசாராரும் மீண்டும் உடன்படுகின்றனர்.
இந்த ஒப்பந்தம் பின்வரும் அமைப்புகளின் சார்பாக கை சாத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது - 5-9-2002.
79

Page 91
கீத பொன்கலன்
21 கம்பெனிகள் - தொழில் கொள்வோர் சம்மேளனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், கூட்டு பெருந்தோட்டதுறை தொழிற்சங்கங்களின் நிலையம்
6.4.4 தொழிலாளர் கருத்து
அநேகமான தொழிலாளர்கள் தங்களது உடல் உழைப்பு மூலமாக தங்கள் உயிரை தற்காத்துக் கொண்டு போசாக்கற்ற உணவு மூலமாக, முதிர்ச்சி அடையமுன் இறக்கின்றனர். அவர் களுடைய பிள்ளைகளும், தேவையான அளவு போஷாக் கின்மையால், உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பெறுகின்ற நாட் சம்பளம் மூன்று வாரங்களுக்கு மாத்திரமே, மிகவும் எளிமையான உணவை பெற்றுக் கொள்ள போதுமானதாக இருக்கும். இதனால் நூற்றுக்கு எண்பது வீதமான மக்கள், வறுமைக் கோட்டுக்குள் வாழ்வதற்கு முதலாளிமாரால் தள்ளப்படுகிறார்கள்.
அட்டவணை 6.4.1
இரண்டு சம்பள ஒப்பந்தங்கள்
ஒப்பந்தம் - 1 ஒப்பந்தம் - 2 1S-O3-O1 OS-O9-2002
தேயிலை இறப்பர் தேயிலை இறப்பர்
அடிப்படைச் சம்பளம் ரூபா 101 98 ரூபா 121 109
விலைக்கேற்ற ரூபா 15 -- ரூபா 14 -- கொடுப்பனவு
ஊக்குவிப்பு ரூபா 5= 14/s ரூபா 12/= 22/= கொடுப்பனவு (75%)
ஆகக் கூடிய சம்பளம் ரூபா 121 112 punt 147 131
இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ஆராயும் போது இறப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் மக்களின் சம்பளம் 11. 2 வீதம் கூட்டப்பட்டுள்ளது. தேயிலை தொழிலாளருக்கு 19, 8 வீதம் கூட்டப்பட்டுள்ளது. இரண்டாவது ஒப்பந்தம் செய்வதற்கு

இருபத்தோராம் நூற்றாண்டில் .
முதல் இம்முறை சம்பளம் 10-20 வீதம் வரைதான் கூட்டப்படு மென முன்கூட்டியே கூறப்பட்டுள்ளது. இதற்கமையவே இது நடைபெற்றிருக்கின்றது.
6.4.4.1 ஒப்பந்தங்களிளுள்ள வேறுபாடுகள்
O
முதலாவது ஒப்பந்தத்திலும் பார்க்க இரண்டாவது ஒப்பந் தத்தில் விலைக்கேற்ற கொடுப்பனவு ரூபா ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளது.இறப்பர் தொழிலாளருக்கு விலைக் கேற்ற கொடுப்பனவு நிறுத்தப்பட்டது அநீதியாகும், இப்பொழுது இறப்பரின் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. இறப்பர் தோட்ட முதலாளிமார்கள் சார்பாக செஸ் வரி நீக்கப்பட்டது. இதனை தொழிலாளருக்கு சம்பளமாக கொடுக்கப்படவேண்டும்.
முதலாவது ஒப்பந்தத்தில் ஊக்குவிப்பு கொடுப்புனவு ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களைத் தவிர
ஏனைய வேலை வழங்கும் நாட்களுக்கே விகிதாசாரம்
கணிப்பிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது ஒப்பந்தத்தில் மாதமொன்றுக்கு கொடுக் கின்ற வேலை நாட்களில் 75% வேலைக்குச் சமூகமளிக்கும் பட்சத்தில்தான் இவ் ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைக்கும். இதனால் விடுமுறை நாட்களில் தொழிலாளருக்கு வேலை கொடுக்கப்பட்டால் அந்த நாட்களுக்கும் கட்டாயமாக வேலைக்குப் போக வேண்டும். முதலாவது ஒப்பந்தத்தின் படி 18 நாட்கள் வேலைக்குப் போனால் ஊக்குவிப்பு பணத்தைப் பெற முடியும். இரண்டாவது ஒப்பந்தத்தின்படி 23 நாட்கள் வேலைக்குச் சென்றால்தான் ஊக்குவிப்பு பணத்தைப் பெற முடியும்.ஆகவே 22 நாட்கள் வேலைக்குச் செல்லும் ஒரு தொழிலாளி, சுகவீனம் அல்லது அவசர தேவைக் காரணமாக வேலைக்குப் போகா விட்டால் அவர் அந்த ஊக்குவிப்பு பணத்தை பெறத் தகுதியற்றவராகிறார். கிட்டத்தட்ட 50 வீதமான தொழிலாளர் இதனை இழக்க நேரிடும். ஆகையால் ஒரு தேயிலைத் தொழிலாளி பெறக் கூடிய சம்பளம் ரூபா 135/ ஆகும்.
இரண்டாவது ஒப்பந்தம் செய்வதற்கு முன் தொழிற்சங்க வாதிகள் எக்காரணம் கொண்டும் 2 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என சூளுரைத்தார்கள். ஆனால் இவ் ஒப்பந்தம் 2004 ஜூன் 1ம் திகதி வரையும் சம்பளம் கூட்டப்பட மாட்டாதெனக் கைசாத்திடப்பட்
8

Page 92
கீத பொன்கலன்
182
டுள்ளது. ஆனால் சராசரி மொத்த தேசிய விற்பனை, தேயிலைச் சபையின் அறிக்கையின்படி 2002, ஜூன் மாதத் திற்குப் பிறகு 25 வீதமாகக் கூடினால் தேயிலை விலைக் கேற்ற கொடுப்பனவு மீளாய்வு செய்யப்படும். ஆனால் கடந்த வருட புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது எந்த ஒரு வருடத்திலும் 25வீதம் கூட்டப்படவில்லை. உதாரண மாக 1999ம் ஆண்டு ரூபா 109.77 ஆக இருந்த சராசரி தேசிய மொத்த விற்பனை (NSA) 2000ம் ஆண்டு 1794 ஆக கூடியது. அந்த ஒரு வருடம் மட்டுமே 7.4 வீதம் கூடியது.ஆகையால் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் சரத்து 3 சேர்க்கப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பே அன்றி வேறெதுவுமில்லை. இதில் இறப்பர் தொழிலாளரைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
சரத்து 4, புதிய கூட்டு ஒப்பந்தம் விரைவில் கைசாத்திடப் படும் என்றும், அதில் சம்பள விடயம் பற்றி எவ்வித மாற்ற மும் செய்யப்பட மாட்டாதென்றும், ஏனைய விடயங்கள் மாத்திரமே ஆராயப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நாள் குறிப்பிடப்படவில்லை.4-12-1998ல் செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2001ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வராவிட்டால் இதே ஒப்பந்தம் நடை முறைக்கு வருமென அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதன்படி பார்த்தால் தொழிலாளருக்கு பாதகமான ஒப்பந் தங்களே தொடர்ந்தும் செயற்படுத்தப்படுகின்றன.
சரத்து 6, தொழிலாளருக்குச் சேர வேண்டிய நிலுவைப் பணம் தீபாவளி பண்டிகைக்குமுன் வழங்கப்படுமென கூறப் பட்டுள்ளது. இதன்படி 4 மாதப் பணத்தை முதலாளிமார் சம்மேளனம் தங்கள் வசம் வைத்திருப்பதனால் அவர்களுக்கு அது இலாபமாகவும் தொழிலாளருக்கு நஷ்டமாகவும் அமைகின்றது. அத்துடன் தீபாவளி பண்டிகைக்கு கொடுக் கின்ற முற்பணத்தை குறைப்பதற்கும் இது சாதகமாக அமைகின்றது.
சரத்து7, தோட்டத்தின் உற்பத்தியையும் செயல்திறனையும் அதிகரிக்க ஒத்தாசை வழங்க வேண்டும் என கைசாத்திடப் பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர் சம்பளம் போதாது என்பதால் வெளியில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள், விரக்தியடைந்த மன நிலையில் வாழும் அவர்களால்தோட்டஉற்பத்திபாதிப்படையக்கூடும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
6.4.4 தொழிலாளர் ஏமாற்றப்பட்டார்கள்
இந்தப் புதிய ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர் எதிர் பார்த்த அளவு சம்பளத்தை பெறுவதற்கு வழி செய்யவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இந்த ஒப்பந் தத்தில் அரசாங்கம் நேரடியாக முதலாளிமார் சம்மேளனத் துடன் உரையாடி சம்பளத்தை அதிகரிக்காதது கவலைக்குரிய விடயமாகும். தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட போட்டி மனப்பான்மைகள், ஒத்துழையாமை, நிர்வாகத்துக்கும், அரசாங்கத்திற்கும் சார்பாக செயற்பட்டமை போன்ற தீர்க்க தரிசனமற்ற நடத்தையின் மூலம் தொழிலாளருக்கு பெரும் தீங்கிழைத்துள்ளார்கள்.
O
பேச்சு வார்த்தையின் போது தொழிற்சங்கங்கள் தொழி லாளர் சார்பாகவும் தயார் நிலையிலும், ஒருமித்த கருத்து டனும், முதலாளிமாரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் காணக்கூடியது, முதலாளிமார்கள் தயார் நிலையில் இருந்து தங்கள் கருத்துக்களை முன் வைத்து நியாயப்படுத்தும் போது, தொழிற்சங்க வாதிகள் அவர்களுடைய நியாய படுத்தல்களை முறியடிக்க முடியாதிருக்கின்றனர். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால், சம்பளம் உயர்த்தமுடியாது என்ற கருத்திற்கு அவர்கள் காட்டும் கணக்கு வழக்குகளை மேலோட்டமாகவே ஏற்று, அவர் களுடன் உடன்போவது மட்டுமல்லாமல், எவ்வித கேள்வி களுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதால் தொழிலாளர் களுக்குச் சம்பள உயர்வு கிடைப்பதில்லை.
மற்றையநாடுகளிலுள்ள தோட்டத் தொழிலாளர்களைவிட இவர்களுக்கு சம்பளம் அதிகமென முதலாளிமார் முன் வைக்கும் கருத்தை எதிர்த்து உண்மையான யதார்த்த நிலை யினை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல தொழிற் சங்கங்கள் தவறுகின்றன.
நிர்வாக கொடுப்பனவை பத்து மடங்காக கூட்டி, அதை உற்பத்தி செலவில் சேர்க்கும் பொழுது, தோட்டங்கள்
நட்டத்தில் இயங்குவதாக விளக்கம் கூறப்படுகிறது.இதனை
முற்றாக முறியடிக்க வேண்டும் அல்லது நிருவாகச் செலவை கணிசமான அளவு குறைத்தல் வேண்டும். முதலாளி மார்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகைகளில் தொழிலாளர்களுக்கு எவ்விதமான நன்மைகளும் இல்லை.
183

Page 93
கீத பொன்கலன்
O இவ்வொப்பந்தத்திற்குமுன் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே ஒரு நாட் சம்பளமாக முதல் வருடத்திற்கு ரூபா 146 வழங்குவதாகவும் இரண்டாவது வருடத்திற்கு ரூபா 147 எனவும் முடிவு செய்திருந்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் ஒரு நாளைக்கு ரூபா 151 முதல் ரூபா 200 வரை நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டன. ஆனால், தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டா போட்டிகள் காரணமாக தொழிலாளர்களுக்கு முழுமை யான சம்பளம் மறுக்கப்பட்டு ஐம்பது சதம் மட்டுமே தொழிற்சங்கங்களால் பெறுமுடிந்தது. அப்பாவித் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர். இறுதி நேரத்தில் அவசர அவசரமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட தன் உள் நோக்கு ஒரு சில முக்கிய தொழிற் சங்க வாதிகள் முதலாளிமார் சம்மேளத்தினரிடம் விலை போய்விட்டனரா என்ற சந்தேகம் தொழிலாளர் மத்தியில் எழுந்தது.
துண்டுப் பிரசுரம் - 10-10-2002
8. «0. «0. 0- 8 to X x X x•
84

6.5 ஒப்பந்தத்தை பற்றிய மக்களின் கருத்துச் சேர்க்கை
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாக மக்கள் அமைப்புக்கள் முகம் கொடுக்கும் போது அவர்களுடைய கருத்துக் களுக்கு அமைய அதாவது, இம்முறை எமக்கு நாட் சம்பளம் இருநூறு ரூபாய் கிடைத்தால்தான் வாழ்க்கை செலவினை சமாளிக்க முடியுமென தொழிலாளர்களின் கருத்துக்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து ஒரு சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆய்வு செய்து ஒப்பந்தத்திற்கு முன்னும் பின்னும் வலியுறுத்தி கூறப்பட்ட கருத்து சேர்க்கைகள்.
6.5.1 'கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளரின் நாட் சம்பளம் இருநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்"
"தோட்டத் தொழிற்சங்கங்களும் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் செய்து கொள்ளவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சம்பளம் 200 ரூபாவாக உயர்த்தப்படக் கூடியதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று பண்டாரவளை லியோ மார்கா ஆசிரமத்தைச் சேர்ந்த வண.பிதா. கீத பொன்கலன், சத்தியோதய சமூக ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த வண.பிதா போல் கஸ்பர்ஸ், பிரிடோ நிறுவனத்தைச் சேர்ந்த பெனடிக் குரூஸ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளனர். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள 2001-03-13ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் படி ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளி பெறக்கூடிய ஆகக் கூடிய நாள் சம்பளம் ரூபாய் 12, இறப்பர் தோட்டத் தொழிலாளி பெறக்கூடிய ஆகக் கூடிய நாள் சம்பளம் ரூபா 12 ஆகும். இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பளம் எதுவிதத்திலும் போதுமானதாக இல்லை.
85

Page 94
கீத பொன்கலன்
ஆகவே, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளியின் சம்பளம் ஆகக் குறைந்தது 200 ரூபாவாகவாவது உயர்த்தப்படக் கூடியதாகத் தீர்மானம் மேற் கொள்ளப்பட வேண்டும்.
அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி 5 குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பமொன்றிற்கு நாள் செலவாக ஆகக் குறைந்தது 270 ரூபாய் அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இப்போது கோரப்படும் 200 ரூபாய் நாட் சம்பளம் அதைவிடக் குறைந்ததாகும். ஆயினும், கோரப்படும் தொகை சம்பள நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளக்கூடிய தொகையாக இருக்க வேண்டும் என்பதையும் ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை செய்யும் தொழிலாளர்கள் இருக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டே இந்த தொகை கோரப்படு கிறது. மேலும் கிராம விவசாய தொழிலாளரும் கட்டிடத் தொழிலாளரும் நாளொன்றுக்கு உணவு தேநீர் என்பவற்றோடு 250 ரூபாவுக்குக் குறையாமல் நாட் சம்பளம் பெறுகின்றனர்.
மேலும், இந்தத் தொகையை செலுத்தக் கூடிய நிலையில் தோட்டக் கம்பெனிகள் உள்ளன என்ற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. நாளுக்கு ரூபா 200 நாட் சம்பளம் செலுத்த முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகத் தோட்டக் கம்பெனிகள் தெரிவிக்குமாயின் ஒரு தோட்ட அதிகாரிக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நாளொன்றுக்குச் செலுத்தப்படும் தொகை எவ்வளவு என்பதையும் முகாமைத்துல் கட்டணமாக எவ்வளவு செலுத்தப்படுகிறது என்பதையும் பெனிகளின் பங்கு தாரருக்கு இலாபப் பங்கீடாக எவ்வள3! செலுத்தப்படு கிறது என்பதையும் பகிரங்கப் படுத்த வேண்டும்.
இந்த அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளியின் நாட் சம்பளம் ஆகக் குறைந்தது 200 ரூபாவாக இருக்க வேண்டும்.
அத்தோடு, அவர்களுக்கு வாழ்க்கை செலவுப்புள்ளிக் கொடுப்பனவு இத்தொகைக்கான ஊழியர், சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, வரவுக்கான ஊக்குவிப்புத் தொகை என்பனவும் வழங்கப்படுதலே நியாயமான நாட் சம்பளமாக அமையும். எனவே, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்தத் தொகை யைப் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட வேண்டுமென
வலியுறுத்தப்படுகிறது.
தினக்குரல் 24. 04. 2002
86

இருபத்தோராம் நூற்றாண்டில் .
6.5.2தயார் நிலையிலும், ஒருமித்த கருத்துடனும் முதலாளிமார்களை எதிர்கொள்ள வேண்டும் சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக அரசுசார்பற்ற நிறுவனங்கள் ஆலோசனை
ஜூன் மாதத்தில் தோட்டத்தொழிலாளர்களின் புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு வார்த்தைக்குச் செல்லும் தொழிற்சங்கங்கள் பூரண தயார் நிலையிலும் ஒருமித்த கருத்துடனும் செல்வது மிகவும் அவசிய மானதாகும். பொதுவாக பேச்சுவார்த்தைக்கு வரும் முதலாளி மார் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் பொதுக் கருத்தை கொண்டவர்களாக இருப்பதும், அவர்கள் தொழி லாளரின் கோரிக்கைகளை முறியடிக்க கூடிய தயார் நிலையில் இருப்பதும், அவர்களை ஒரு சக்தி மிக்க நிலையில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. இந்த நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய தயார் நிலையில் தொழி லாளர் சார்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் இருப் பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும், சமூக அபிவிருத்தி அமைச்சரும் நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சரு மான பெ. சந்திரசேகரனை தலவாக்கலையில் சந்தித்து பேசிய அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வேண்டு கோளை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளின் போது முதலில் தமது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதிாகவும் அந்த வாதம் கேள்விக்குறியாக்கப்பட்ட போது தொழிலாளர்கள் சம்பளங் களை உயர்த்தும் அளவுக்கு தாம் இலாபத்தை பெறவில்லை எனவும் மற்றைய நாடுகளில் தோட்டத் துறையில் உள்ள தொழி லாளர்களை விட இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கூடிய சம்பளம் பெறுவதாகவும் தொழிலாளரின் சம்பளத்தை கூட்டி னால் தொழிற் துறையையே மூடிவிடும் ஆபத்து ஏற்படப் போவதாகவும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூறியது.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வாழ்க்கைத் தரம் நாணயங் களின் மதிப்பு ஆகிய எதனையும் கணக்கில் எடுத்துக் கொள் ளாமல் வெறுமனே சம்பளத்தை ரூபாய்களில் ஒப்பீடு செய்து தொழிலாளர் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது, நியாய மற்றது எனக் காட்டுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்
87

Page 95
கீத பொன்கலன்
பட்டன. ஆயினும் இப்போது உற்பத்தி செலவாக காட்டப் படும் பல மில்லியன் ரூபாய்களை நிருவாகச் செலவு என்ற வகையில் அவர்களின் அறிக்கையிடப்படாத இலாபக் கணக்கில் சேர்வதை தற்போது நிரூபிக்க கூடிய நிலை உள்ளது.
இன்னும் பல்வேறு வழிகளில் தோட்டங்கள் வருமானம் ஈட்டினாலும் அவை இலாபக் கணக்கில் காட்டப்படுவதில்லை. மேலும் முன்பு பெருந்தோட்டங்கள், அரசு நிறுவனங்களுக்கு கீழ் இருந்து போது செலுத்திய வரிகளில் இருந்து விலக் களிக்கப்பட்டுள்ளதால் அவை பல மில்லியன் ரூபாய்களை சேமிக்கக் கூடியதாக உள்ளது. அது தொடர்பான அனைத்து தகவல்களுடனும் சான்றுகளுடனும் முதலாளிமார் சம்மேளனம் முன் வைக்கும் வாதங்களை முறியடிக்க கூடிய தயார் நிலையில் தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
அவ்வாறே வழங்கப்பட வேண்டிய நாட் சம்பள உயர்வு எவ்வளவாக இருத்தல் வேண்டும் என்பது குறித்து பேச்சு வார்த்தைக்கு செல்லும் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் தர்க்க ரீதியான ஒரு மித்த கருத்து இருப்பது மிகவும் முக்கியமான ஒரு முன் நிபந்தனையாகும். இவ்வாறான ஒரு மித்த கருத்து இல்லாமல் பேச்சுவார்த்தைகளுக்கு செல்வது பாதகமான விடயமாகும் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர் சம்பள விடயம் தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வுகள், புள்ளி விபரங்கள், தகவல்கள் புத்திஜீவிகளிடம் உள்ளன. இந்த தகவல்களை அறிக்கை வடிவில் தந்துதவுதற்கு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்தப் பின்னணியில் இந்த விடயம் தொடர்பாக ஒரு மித்த கருத்தை ஏற்படுத்து வதில் அமைச்சர் தம்மாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் லியோ மார்க்கா ஆசிரம தலைவர் பிதா கீத பொன்கலன், சத்தியோதய நிலையத்தை சார்ந்த பிதா, போல் கஸ்பஸ், பிரிடோ நிறுவனத்தை சார்ந்த ஜே மைக்கல், முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயசுந்தர ஆகியோர் அரசு சார்பற்ற நிருவனங்கள் சார்பில் கலந்து கொண்டனர்.
வீரகேசரி 15. 05, 2002
B8

இருபத்தோராம் நூற்றாண்டில் .
6.53"தோட்டத்தொழிலாளருக்கு மேலதிக கொழுந்துக்கு பத்து ரூபா வழங்கப்படுவதே நியாயமாகும்"
“எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்வு கிடைக்காததால் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள் ளனர். இந்த நிலையில் மேலதிக கொழுந்துக்குத் தற்போது வழங்கப்படும் 3 ரூபா 75 சதம் பத்து ரூபாவாக உயர்த்தப் பட்டால் மட்டுமே தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும்” என்று அப்பெக்ட் கூட்டமைப்பின் இணைப்பாளரும் லியோ மார்கா ஆச்சிரமத்தின் தலைவருமான பிதா கீத பொன்கலன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர் பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற் காக அப்பெக்ட் கூட்டமைப்பு நோர்வூட் தமிழ் மகாவித்தி யாலயத்திலும், அக்கரப்பத்தனை ஹோல்புரூக் தமிழ்மகா வித்தியாலயத்திலும் நடத்திய கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
“எதிர்பார்க்கப்பட்ட சம்பள உயர்வு கிடைக்காததால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றமடைந் துள்ளனர். நாட் சம்பளம் 147 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந் தாலும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன அடிப்படைச் சம்பளமான 121 ரூபாவுக்கு மட்டுமே வழங்கப் படுமென ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகிறது. ஆகவே, 147 ரூபாவுக்கு சேமலாப நிதி வழங்குமாறு எவரும் கூறுவது அர்த்தமில்லை. மேலும் வேலை வழங்கப்படும் நாட்களில் 75 வீத நாட்களில் சமுகமளித்தால் மாத்திரமே ஊக்குவிப்புத் தொகையாக 12 ரூபா வழங்கப்படும். இந்த அடிப்படையில் 75 வீதத்திற்கும் ஒரு நாள் குறைவாகச் சென்றாலும் தொழிலாளி 135 ரூபா மட்டுமே பெறமுடியும், ஒராண்டு முடிவில் தேசிய மொத்த விற்பனை சராசரியில் 25 வீதம் அதிகரித்தால் மட்டுமே சம்பள ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் என ஒப்பந்தம் கூறு கிறது. இந்த அடிப்படையில் ஓராண்டுக்குப் பின்னரும் தற் போதைய சம்பளத்தில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை.
தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே காலாவதியான 1998-12-04ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்
189

Page 96
கீத பொன்கலன்
மற்றைய அம்சங்கள் விரைவில் மீளாய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்திலாவது அதிக நன்மைகளை பெறுவதற்கு தொழிலாளர்கள் தமது தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.
இந்தக் கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள் தாம் சம்பளம் குறித்து திருப்தியடையவில்லை எனவும் ஒப்பந்தம் செய்து கொள்வதில் இத்தனை அவசரம் காட்டாமல் தொழிற் சங்கங்கள் தொழிலாளர் நலன் கருதி ஒற்றுமைப்பட்டிருந்தால் நிச்சயமாக இதைவிட அதிகமான சம்பளவுயர்வு கிடைத்திருக்கு மெனவும், அதுவரை காத்திருக்கத் தாம் தயாராகவிருந்த தாகவும் கூறினார்கள். எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் மற்றைய அம்சங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் போது தற்போது மேலதிக கொழுந்துக்காக வழங்கப்படும் கிலோவுக்கான கொடுப்பனவு 3 ரூபா 75 சதத்தை 10 ரூபாவாக அதிகரிப்பது அவசியம் எனவும் இந்தவிடயத்திலாவது தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் நலன்கருதி செயற்படுமென எதிர்பார்ப்ப தாகவும் கூறினர்.
அப்பெக்ட் கூட்டமைப்பு, நோர்வூட், அப்ஸெக் நிறுவனம். நோர்வூட் நல்வழி மன்றம், பிரிடோ நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்தக் கலந்துரையாடலை நடத்தியது.
தினக்குரல் 26, 09. 2002
SO ZO ZO ZO. 20 ex- ox °
190

அத்தியாயம் - 7
மலையகத்தமிழ் பெண்களின் அரசியல் வலுவூட்டல்
7. 1 அரசியல் அதிகாரத்தின் ஊடாகவே
பெண்களின் உரிமைகள்
வென்றெடுக்க முடியும்.
7.2 உலகமயமாதலும் பெருந்தோட்டத்
துறை பெண்களும்.
19

Page 97
92
அத்தியாயம் - 7
மலையகத்தமிழ் பெண்களின் அரசியல்வலுவூட்டல்
மலையகத் தமிழ் பெண்கள், இலங்கை பொரு ளாதாரத்திலும், மலையகச் சமூகத்தினை கட்டி எழுப்புவதிலும் முக்கியபங்கினைவகிக்கின்றனர். ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த பெருந்தோட்டத் துறையும், ஆணாதிக்க கருத்தியல் கொண்டு வளர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறைசமூகமும், பெண்களை கடமை செய்யும் ஒரு இயந்திர மாகவே கணிக்கப்பட்டு காலங்காலமாக சுதந்திர மற்ற உரிமையற்ற ஜடமாகவே இருத்தி வைத் துள்ளனர். இவர்கள் இந்த நிலையிலிருந்து வெளிவர வேண்டுமாயின், பெண்களே இயக்க மாக திரண்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடினாலேயே விடிவு பிறக்கும்.

7.1 அரசியல் அதிகாரத்தின் ஊடாகவே பெண்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட முடியும்
ஒடுக்கு முறைகளிலிருந்து விடுபட அன்று தொட்டு இன்று வரையும் போராடிக் கொண்டிருக்கும் பெண் சமூகத்தால் இன்னும் முழுமையான விடுதலை பெறமுடியாமல் உள்ளது. அரசியல் பலத்தால் இந்நிலையைத் தகர்க்கலாம் என்ற தீவிர மான எண்ணம் இன்றைய பெண்ணிலைவாதிகளிடையே தலை தூக்கியுள்ளதைக் காணமுடிகின்றது. அதற்குத் தகுந்தாற்போல் இம்முறை சர்வதேச பெண்கள் தினத்தின் மையக் கருவும் “பெண்களை அரசியலில் வலுவூட்டல்” என்பதாக அமைந் திருந்தது.
பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு வாக் குரிமை இன்றியமையாதது என்ற கருத்தை 1869ஆம் ஆண்டின் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பரப்ப தலைப்பட்டனர். பிரிட்டனில் 1858ஆம் ஆண்டு தேசிய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நியூசிலாந்துப் பெண்கள் 1893இல் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். அமெரிக்கா வில் மஸாசூசெட் இராச்சியத்தில் 1691இலேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தும் 1780ஆம் ஆண்டு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2001) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது பெண்ணுரிமைகளைப் பாதுகாக்கும் மகளிர் கொள்கை யொன்றை சட்டமாக்குவோம், பெண்களின் விசேட தேவை களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் அரச கொள்கை உரு வாக்கத்தின் போது முக்கியத்துவம் கொடுப்போம் என்றெல் லாம் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் 1993இல் உருவாக்கப்பட்ட பெண்கள் சாசனத்தைலேயே இன்னும் அமலாக்கவில்லை.
193

Page 98
கீத பொன்கலன்
71.1 பெண்களின் பிரதிநிதித்துவம் 5 சதவீதமும் இல்லை
கடந்த காலங்களில் இலங்கை இடதுசாரிகள் பெண் களின் உரிமைகள் குறித்த அடிப்படை அம்சங்களை தொட்டுக் காட்டி அவற்றுக்கான மாற்று வழிகளை முன் வைத்தன. ஆனால், இன்று வரை எந்தவொரு கட்சியும் புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பெண்களை அணிதிரட்டும் ஓர் அமைப்பை உருவாக்கவில்லை. அதே போல், எந்தவொரு கட்சியும் பெண் களின் தொழிற்சங்க, அரசியல் பிரதிநிதித்துவத்தை சமப்படுத்து வதற்கான ஆதரவை வழங்கவும் இல்லை. குறைந்த பட்சம் தமது கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கும் பெண்களின் விகிதா சாரத்திற்கேற்ப பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தக் கூட அக்கட்சிகள் தயாராக இல்லை என்பது கண்கூடு, இலங்கையில் 1929 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட போதும் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றுவரை ஐந்து விழுக் காட்டையும் கூடத் தாண்டவில்லை.
இந்த 5 விழுக்காடு பெண் பிரதிநிதித்துவம் கூட ஆண் உறவு முறை செல்வாக்கை அதிகளவு பயன்படுத்தி ஏற்பட்டது தான். இவர்களில் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விதவைகள் போராட்டமென வர்ணிக்கப்பட்டது. அடிமட்டத் திலிருந்து அரசியல் வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்டவர்கள் எவருமில்லை. தேசியக் கட்சிகளும், தமது கட்சிகளைச் சார்ந்த இறந்து போன செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவுமுறைப் பெண்களை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கச் செய்துள்ளன. இதனால், இந்தப் பெண் உறுப்பினர்கள் தேசிய அரசியலில் இழுபட்டுச் செல்கின்றனரே அன்றி பெண்களின் நலனுக்கான உறுதியான செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக காணப்படவில்லை.
2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் முதன் முதலாக முஸ்லிம் பெண் பாராளு மன்றத்திற்குள் பிரவேசித்தார். அஷ்ரப்பின் மறைவுக்குப் பின் அவரது துணைவியாரான பேரியல் அஷ்ரப் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சராக இலங்கை அரசியல் வரலாற்றில் தடம் பதித்தார்.
மூன்றாம் உலக நாடுகளில் காணப்படுகின்ற பொதுவான தோர் அம்சம் என்னவென்றால், கட்சி முறைமையில் காணப்
94

இருபத்தோராம் நூற்றாண்டில் .
படுகின்ற தனிநபர் வழிபாட்டு முறைமை. தனிநபரைச் சுற்றி மையப்படுத்திய கட்சிகளின் அதிகாரக் கூட்டமைப்பானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த தனிநபருக்குப் பின் அவரது நெருங்கிய உறவினருக்கு கட்சியின் தலைமையை அல்லது அவர் வகித்த பதவியை வழங்குவதாக உள்ளது.
7.12மலையகத் தமிழ் பெண்கள் பாராளுமன்றத்தில் இல்லை
இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல் களில் ஏறத்தாழ 50 பெண்களே பாராளுமன்றப் பிரதிநிதித் துவத்தைப் பெற்றுள்ளனர். இனரீதியாக எடுத்துக் கொண்டால் மூன்று தமிழ்ப் பெண்களும், 2 முஸ்லிம் பெண்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மலையகத் தமிழ் பெண்களின் சார் பாக எந்தப் பெண்ணும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. un
இதற்கு முக்கிய காரணம் இலங்கையின் ஆணாதிக்கம் சார்ந்த கட்டமைப்புகளின் வெளிப்பாடாகும். இன்று மக்கள் தொகையில் அரைக்கரைவாசியாக பெண்கள் இருந்த போதிலும் சம உரிமை பெற்றவர்களாக இல்லாமல் முதலாளித்துவக் கூட்டமைப்பிற்குள் அடிமைகளாகவும், இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களாக ஒலிக்கும் ஒசைகளாகும். இவை பெண்களின் யதார்த்த நிலை மையை மூடி மறைக்கின்றன. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே வாக்குரிமை தான் உள்ளதென சமப்படுத்துவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் சமனான வாக்குரிமை உண்டு என சமப் படுத்துவதைப் போலாகும்.
இலங்கையிலிருக்கும் சமூகக் கட்டமைப்பு அரசியலில் ஆண்களைப் போல் பெண்களால் பங்குபெற முடியாதவாறு அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக மலையக தமிழ் பெண்கள் உற்பத்தித் துறையிலும், குடும்பத்திற்கான உழைப்பிலும் முழு சக்தியையும் செலவிட நேரிடுவதால் இவர்களால் தொழிற்சங்க, அரசியல் நடவடிக்கைகளில் தம்மை இணைத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் சுதந்திரமாக இயங்கமுடியாதவர்களாகவும், சொத்துரிமை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். சுரண்டலே பிரதான
95

Page 99
கீத பொன்கலன்
நோக்கமாகக் கொண்ட இந்த சமூகத்தின் பாதுகாவலனாகவே எமது அரசியல் கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த சமுதாய அமைப்பு நிலைப்பதற்காகவே குடும்ப அமைப்பு, பெண் அடக்குமுறை என்பன உறுதியாக நிலை நிறுத்தப்படுகின்றன. எனவே, இத்தகைய சமூகக் கட்டமைப்புகள் உடைத்தெறியப் பட வேண்டும். இல்லையெனில், முதலாளித்துவ அரசியலில் பெண்களுக்கு என்றும் விடிவு கிடைக்காது.
இன்று சாதி, இனம், நிறம், காலனித்துவ வர்க்கம் என பலவிதமான அடக்கு முறைகளுக்கும் இருபாலாரும் உட்படு கின்றனர்.
அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் அதிகார மையங்கள் அனைத்தும் ஆணாதிக்க கட்டுப்பாட்டின் கீழேயே இருக் கின்றன. ஆனால், இவர்கள் பெண்கள் மீதான தனித்துவமான அடக்கு முறைகளையும், அவற்றுக்கெதிரான போராட்டங் களின் அவசியத்தையும் இனங்காணத் தவறிவிட்டனர்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் முதலாளித்துவம் எத்தனையோ இடங்களில் பெண்களை அடக்கியே வைத்துள்ளது. பெண்களை பகடைக்காய்களாக சந்தர்ப்பவாத ரீதியில் தேர்தலில் பயன்படுத்தி வருவதை முறிய டிக்க வேண்டுமானால், பெண்களே பெண்களது பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக்கு தலைமையேற்க வேண்டும்.
இலங்கைப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று 72 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் 54 வருடங்களாகிவிட்டன. ஆனால், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஐந்து விழுக்காட்டையும் தாண்ட வில்லை. அதேசமயம், தெற்காசிய நாடுகளை நோக்குமிடத்து சராசரி ஏழு விழுக்காடு பெண்கள் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற அட்டவணையை நோக்கும் பொழுது நடந்து முடிந்த 12 பாராளுமன்றத் தேர்தல் புள்ளி விபரங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கீழ் நிலையில் உள்ளது. அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற பெண் அமைச்சர்களை பெரும்பாலும் மகளிர் அமைச்சுத் தவிர்ந்த வேறு அமைச்சுகள் பொதுவாக வழங்கப்படுவதில்லை. இந்த அமைச்சரவையில் இருக்கின்ற
196

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பெண்களும் கூட பெண்கள் பிரச்சினைகள் குறித்த விடயங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கும் பொழுது கூட பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் நேரங்களில் அதனை எதிர்க்க வலுவற்றவர்களாக இருந்து வந்தனர்.
அட்டவணை 7.1.1
இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் (1947 - 2001)
வேட்பாளர்கள் தெளிவுசெய்ய அமைச்சர்கள்
வருடம் ஆண் பெண் | வீதம் ஆண் பெண் வீதம் ஆண் பெண் வீதம்
1947 338 O3 1.1 93 O2 2.1 13 OO OO
1952 294 O9 29 93 O2 21 13 OO OO
1955 244 05 2.1 92 O3 32 14 01 8,3
1960 333 16 17 148 O3 19 O7 OO OC)
1960 383 OS 13 149 O2 1.3 10 01 9.0
1965 | 478 | 14 | 2.3 | 147 | 04 | 2ይ | 16 OO OO 1970 425 | 14 |32 || 145 || 06 39 19 01 |50 1977 742 14 18 160 O8 4.8 22 Of 45
1989 1636 52 3.0 213 12 5.3 21 Of 47
1994 1640 SS 3.6 213 12 5.3 23 O3 13.1
2000 5049 417 23 215 09 4.3 45 O4 3.3 2007 4000 115 - 215 10 144 38 O2 -
இலங்கையின் சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்கள். இவர்களில் 83 வீதமானவர்கள் எழுத்தறிவு பெற் றவர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயில் பவர்களில் 49 சதவீதமானோர் பெண்கள், சர்வதேச ரீதியில் மனித மேம்பாட்டு வரிசைக்கிரமத்தில் இலங்கை 81 ஆம் இடத்தை வகிக்கின்றது. இது தெற்காசிய நாடுகளைப் பொறுத்த மட்டில் முன்னணியைப் பெறுகின்றது. இருந்தும் எமது பெண்கள் அரசியல் உரிமையும், அதிகாரமும் அற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.
ஆகவே, புதிய யுத்திகளை கையாள்வதன் மூலமே பெண் களின் அரசியல் வளர்ச்சிக்கு வழிகோலமுடியும். 1989 இல்
197

Page 100
கீத பொன்கலன்
இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் 35 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கு கொள்ள சட்டதிருத்தம் செய்யப்பட்டது. இளைஞர் என்று இருபாலரையும் குறிப்பிட்டிருந்தாலும் கூட இது ஆண்களையே குறிக்கும் பதமாக பொருள் கொள்ளப்பட்டது போல் ஆண்களுக்கே இடமளிக்கப்பட்டது.
ஆகவே, பெண்ணிலைவாதிகள் 30 வீதமான பிரதிநிதித்து
வத்தையாவது உறுதி செய்து கொள்ளும் வகையில் சட்டத்
திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள உறுதிபூண வேண்டும்.
71.3 இது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காக பெண்கள் போராட்ட முயற்சிகளில் இறங்க வேண்டிய காலம்
அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள், பெண்கள் மத்தியில் அரசியல் அறிவு, விழிப்புணர்வூட்ட வேண்டும். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் பட்டி யலைப் பார்க்கும் போது முந்திய தேர்தலிலும் பார்க்க கூடுத லான பெண்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் பெண்களில் அநேகமானோர் ஆணாதிக் கத்தை விரும்பி இன்றும் ஆண்களுக்கே வாக்களிக்கும் நிலையில் உள்ளனர், பெண் வாக்காளர் யாவரும் பெண்களுக்கே வாக் களிக்க வேண்டும் என்ற மனோநிலை உருவாக்கப்பட்டால், ஆண்களிலும் பார்க்கப் பெண்களும் அரசியலில் முழுமை யான பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி 1977ஆம் ஆண்டு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்கள் தொடர்பான சில கருத்துக்களை உள்ளடக்கியது.
அதன் பிரகாரம் 1982இல் “பெண்கள் பணியகம்” என்ற அமைப்பை அமைத்து 1983இல் பெண்கள் விவகாரத்திற்கென தனி அமைச்சொன்றையும் உருவாக்கியது. பின்னர் பெண்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.
கிராமியப் பெண்களை நிறுவன மயப்படுத்தும் முகமாக பெண்கள் செயற்பாட்டு சமூகக் குழுக்கள் நிறுவப்பட்டன.
198

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஐ.தே.க. 1994இல் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்கள் குறித்த பல விடயங்களை உள்ளடக்கியதுடன், 1993இல் அமைச்சரவையினால் வெளியிடப்பட்ட “பெண்கள் சாசனத்தை” அமல்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டது. பொ.ஐ.மு.வும் இதுபோன்ற வாக்குறுதிகளையே அளித்திருந்தது. 2000ஆம் ஆண்டிலும் அதே வாக்குறுதிகளை மீண்டும் அளித்தது. எனினும், இதுவரை பெண்கள் தொடர்பாகக் கொடுக்கப் பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
2000ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் 12 மகளிர் குழுக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தன. இவற்றில் அரசியலில் பங்கு, ஒய்வு, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், இனப்பிரச் சினை மற்றும் சட்ட சீராக்கம் போன்றவை முக்கிய இடத் தைப் பெறுகின்றன. இவை மும்மொழிகளிலும் அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டு எல்லா அரசியல்வாதி களுக்கும் அதன் பிரதிகள் அனுப்பப்பட்டன.
2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களுக்காக உள்ளடக்கிய பல விடயங்களில் முக்கியமான சிலவற்றை சுட்டிக் காட்டலாம்.
25 வீதமான பெண்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தல் வேட்ப்ாளர்களில் 25 வீதம் பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
பெண்கள் தொடர்பான சட்டவாக்கங்களை ஊக்கு விப்பதற்காக 50 பெண்களைக் கொண்ட ஆலோசனைச் சபை ஒன்று நிறுவப்படல் வேண்டும்.
எனினும், இதுவரை இவைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன.
தினக்குரல் 01. 04. 2002, 02. 04. 2002
. . . .0, 8 09 • 0. 8. oKo
199

Page 101
7.2 உலகமயமாதலும் பெருந்தோட்டத்துறை பெண்களும்
உலகமயமாக்கல் கொள்கையினால் கூடுதலாக பாதிக்கப்படுவது, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள வறிய மக்களே. அதிலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்களே. இவர்கள் பொரு ளாதார தொழில்ரீதியாக, சமூக, அரசியல், கலாச் சார, சமயரீதியாக அடக்கப்பட்டுவாழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலிருந்து விடுபட பெண்கள் சர்வதேச, தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க முன் வர வேண்டும்.
இன்று வேகமாக பல துறைகளிலும் ஊடுருவி பன்முகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது “உலகமயமாதல்" ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற அதே வேளை, இதனால் பெண்களும், குழந்தைகளுமே பெரிதும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது விசனத்துக்குரியது.
7.2.1 உலக அரங்கில் பெண்களைப் பற்றிய தரவுகள்
உலக அரங்கிலே பெண்கள் பல்வேறு நிலைகளிலும் பின்தள்ளப்பட்டு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகியிருப்பதைப் பின்வரும் தரவுகள் உணர்த்தி நிற்கின்றன.
O எந்தவொரு நாட்டிலும் ஆண்களுடன், பெண்களும்
சமத்துவநிலையை அடையவில்லை, *。。
O 120 கோடி உலக ஏழைகளில்70 சதவீதமானோர் பெண்கள்
(1.2 பில்லியன்)
O 290 இலட்சம் உலக ஏழைகளில் அதிக வீதத்தினர் பெண்கள்.

இருபத்தோராம் நூற்றாண்டில .
56 கோடி வறியவர்கள் கொண்ட தெற்காசியாவில் ஏறத்தாழ பாதிப்பேர் பெண்களே, நாட்டின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், இராஜ தந்திரிகள், மத்தியில் பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். 100 கோடி உலக எழுத்தறிவற்ற வளர்ந்தோரில் 2/3 பங்கினர் பெண்கள்.(1 பில்லியன்) 13 கோடி பாடசாலை செல்லாத சிறார்களில் 2/3 பங்கினர் பெண்கள். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஆண்களை விட ஏறத்தாழ இருமடங்கு அதிகமாக பெண்கள் வேதனமற்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் 31 சதவீதம் அலுவலக தொழிலாளியாகவுள்ள அதே சமயம் உலக ரீதியில் 46.7 வீதமாகவும் உள்ளனர். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கிராமிய பெண் களில் 55 சதவீதமானவர்கள் உணவு உற்பத்திசெய்கிறார்கள். 1993ஆம் ஆண்டு பெண்களின் வீட்டு சமூகப் பணியின் பெறுமதி 10 ஆயிரம் கோடி டொலர் இது உலகத்திலுள்ள மொத்த உற்பத்தியில் 20-23 வீதத்திற்கு மேலாகும். 41 என்ற விகிதத்தில் உலகத்தில் பெண்கள் குடும்பத் தலைவி யாக உள்ளனர், கர்ப்பத்தினாலும், மகப்பேற்றினாலும் ஏற்படும் வியாதி களில் நாளொன்றுக்கு இறக்கின்ற1,600 பெண்களில் 99 சத வீதமானோர் வளர்முக நாடுகளைச் சேர்ந்துவர்கள். ஒவ்வொரு வருடமும் 70,000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கிறார்கள். மேலும் பலர் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர். 31 வீதமான கர்ப்பவதிகள் இரும்புச்சத்து போஷாக் கின்மை, இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1/3 தொடங்கி 1/2 வரையிலான பெண்கள் தெற்காசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 20 வயது அடையும் முன்பு தாயாகிவிடுகிறார்கள். கருப்பை புற்றுநோய் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொதுவான புற்றுநோயாகக் காணப்படுகிறது. குடும்ப வன்முறை, பலாத்கார உடலுறவு, பாலியல் துஷ்பிரயோகம் என்பனவற்றுக்கு பெண்களின் இயலாமை காரணமென இனங்காணப்பட்டுள்ளது.
20

Page 102
கீத பொன்கலன்
O யுத்தம் நிலவும் நாடுகளில் சாதாரண பெண்களும், குழந்தை களும் தான் முதன் முதலில் பலியாகிறார்கள். பாலியல் பலாத்காரம் ஒர் யுத்த ஆயுதமாக உருவாக்கப்பட்டிருக் கிறது. ருவான்டா நாட்டில் 1994 - 1995 ஒரு வருடத்தில் பல்லாயிரக்கணக்கான யுவதிகள் பாலியல் கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
O அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 7இலட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கோ அல்லது பாலியல் கொடுமை களுக்கோ உள்ளாக்கப்படுகிறார்கள்.
O உலகத்தில் 40 சதவீதமான பெண்கள் தொழிற்சங்க அங்கத் தவர்கள். ஆனால், 1 வீதமான பெண்களே தொழிற்சங்கத் தலைவர்கள்.
உலகமயமாக்குதலால் பெண்கள் அடையும் பாதிப்பு இவ்வாண்டு சர்வதேச மகளிர் தின தொனிப் பொருள்களில் ஒன்றாக விளங்கும் இவ்வேளையில், ஏற்கனவே நலிந்து, உரிமை இழந்து வாழ்கின்ற மலையகத் தமிழ் பெண்கள் உலகமய மாக்குதலின் பாதிப்பில் உருவாகியுள்ள சவால்களைப் பற்றிச் சற்றுச் சிந்திப்பது மிகப் பொருத்தமானதாகும்.
7.2.2 மலையகப் பெண்கள்
பெருந்தோட்டத்தில் வாழ்கின்ற பெரும்பான்மையான வர்கள் ஊதியத்தைப் பெறும் உழைப்பாளிகளே. பெருந் தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களில் 53 சதவீத மானவர்கள் பெண்கள். தோட்டத்தை விட பிற இடங்களில் கணிசமான தொகையினர் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்கிறார்கள். ஒரு சிறு தொகையினர் ஆடைத் தொழிற்சாலை களிலும், வேறு தாபனங்களிலும் வேலை செய்கிறார்கள். இன்று குறிப்பிட்டுக் கூறக்கூடிய 0.3 வீதமான தொகையினர் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கிறார்கள். பெருந்தோட்டங்களில் உத்தியோக வேலை வாய்ப்புக்கள், மலையக பெருந்தோட்டத்திலுள்ள பெண்களுக்கு மறுக்கப் படுகிறது. தொழிலாளர் மட்டத்திலே வைத்து நசுக்குவதே நிர்வாகத்தின் எண்ணமாகவும், செயல்பாடாகவும் உள்ளது. தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் நிலையோ, இன்று தோட்டங்கள் தனியார் கம்பெனிகளுக்குக் கையளித்த பின் மிகப் பரிதாபகரமான, அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
202

இருபத்தோராம் நூற்றாண்டில் .
7.2.2.1 பெண்களின் அனுபவங்கள்
இத்தகைய அவலநிலை தொடர்பில் பெருந்தோட்டத் துறை பெண்கள் சிலரின் அனுபவங்களிலிருந்து சிலதுளிகள் வருமாறு:
மலையில் கொழுந்து பறிக்கும் அம்பிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த பி. விஜயராணி கூறுகிறார்:
“மலையில் வேலை பார்க்கிற கங்காணி கெட்ட வார்த் தையில் தான் பேசிக்கிட்டிருப்பான். வேலைக்காட்டில் பாகு பாடான முறையில்தான் வேலை பார்க்கிறாங்க நாம எடுக்கிற கொழுந்தினை கிலோ பிடிக்கிறாங்க. அதை அவங்களுக்கு 'சப்போட்' பன்றவங்களுக்கு போடுறாங்க. தலைவர்மாருக்கு மதுசாராயம் வாங்கிக் கொடுக்காட்டா இந்த அநியாயத்தை கேக்க மாட்டாங்க. நான் கொழுந்துக் காட்டில் நடக்கிற பிரச் சினையைப் பேசிப்புட்டேன் எண்டு நான் எடுத்த நிறையையே மாத்திப் போட்டுட்டாங்க. தோட்டத்தில் இலாபத்தை காம்பிக் கிறதுக்கு கங்காணிமாருக்கு தொரைமார் சப்போட்டு, சலுகைகள் கொடுக்கிறாங்க, கங்காணிமார் நம்மளை வதைக்கிறாங்க"
அப்புத்தளை தம்பேதன்னை தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தலைவி பி. கதிராயி கூறும் கருத்துக்கள்:
நான் மலையில் கொழுந்து பறிக்கும் தொழிலாளி. 16 வயதில் பெயர் பதிந்து வேலை செய்கிறேன். 6ஆம் வகுப்பு வரை படித் தேன். அப்புத்தளைத் தோட்டத்தில் பிறந்து தம்ப தென்னியா தோட்டத்தில் திருமணம் முடித்து எனக்கு பிள்ளைகள் இருக் கிறார்கள். எல்லோரும் தோட்டத்தில் விேலை செய்கிறார்கள். 1964ஆம் ஆண்டு தொடக்கம் தொழிற் சங்க அனுபவம் எனக் குண்டு. பெண் தொழிலாளர்கள் எதிர் நோக்கிய பல பிரச் சினைகளுக்கு முகம் கொடுத்து உரிமைக்காகப் போராட்டங் களில் பங்கு பற்றியுள்ளேன். இன்று தோட்ட நிர்வாகம் பல இக்கட்டான நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையில் மாடாக உழைத்துப் பெறுகின்ற சம்பளத்தைக் கூட சரியான நேரத்தில் கொடுப்பதில்லை, மாலை 6 மணிக்குப் பிறகு கூட கால் உழைய காத்திருந்து பெறுகின்ற நிலையிலிருக்கிறோம்.
உண்மையில் பெருந்தோட்டங்களில் நடைபெறும் ஊழல் களும், அடக்குமுறைகளும், அட்டூழியங்களும் எண்ணிலடங்கா. எடுத்துச் சொல்ல முடியாதவாறு, வெளி உலகம் அறிய விடாது அடக்குகின்ற கட்டமைப்பே உள்ளது. தொழிலாளர் வாயில்லாப்
203

Page 103
கீத பொன்கலன்
பூச்சிகளாக வாழ்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளைத் தோட்டத்தில் வேலைக்கு அனுப்ப விரும்புவ தில்லை. முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 5 அங்கத்தவர்கள் வேலை செய்தார்கள். இது 3 ஆகக் குறைந்தது. இன்று 15 ஆகி விட்டது. தோட்டத் தொழிலாளர்களின் செல்வமாக நிரந்தர வருமானம் தரும் சாதனமாக இருந்து வந்த தொழில் வாய்ப்புக் குறையும் போது அவர்களது பொருளாதார நிலையில் பாரிய அதிர்வு ஏற்படுகிறது. சுயதொழில் செய்யும் வாய்ப்பும் தோட்டங் களில் இல்லை. வெளியார் வர்த்தகர்களுக்கு ஏன் வெளி நாட்டவர்களுக்குக் கூட தோட்ட நிலம் விற்கப்படுகிறது. தொழில்களை ஆரம்பிப்பதற்கு தோட்டத் தொழிலாளி ஒரு துண்டுக் காணி பெறமுடியாத அவல நிலை.
இதே தம்பேதன்னை தோட்டத்தைச் சேர்ந்த மாரியாய் தன் அனுபவத்தைக் கூறுகிறார்.
என் மகள் புஷ்பராணி 9 ஆம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது நான் கடும் சுகயினம் காரணத்தால் பதுளை வைத்தியசாலையில் 16 நாள் இருந்தேன். அந்த நேரத்தில் எந்த உதவியும் இல்லை. சாப்பாட்டிற்குக் கூட வசதியில்லாமல் பட்டினி கிடந்தேன். இதனைப் பார்த்து விட்டு எனது பிள்ளை படிப்பை நிறுத்திவிட்டு கொழும்புக்கு வீட்டு வேலைக்குப் போனது ஒரு வருடத்திற்கு 5,000 ரூபா மட்டும் சம்பளமாகக் கொடுத்தார்கள். கொழும்பிலிருந்து கூட்டிக் கொண்டு வந்து வீட்டில் நிற்பாட்டி விட்டேன் என் பிள்ளையை தோட்டத்தில் பேர் பதிந்து வேலைக்கு அனுப்ப துரையிடம் கேட்க விரும்பி னேன். தோட்டத் தலைவர்மார் 500 ரூபா பணம் கொடுத்தால் துரையிடம் இது பற்றிக் கதைப்பதாகச் சொல்கிறார்கள். தோட்டத்தில் வேலைக்காட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்க்கும்போது எனக்குப் பிள்ளையை வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. துரைமாரின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கங்காணிமார் தொழிலாளி சட்டங்களை தட்டிக் கேட்டால் கத்தியைத் தூக்குகிறார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள். பெரிய கஷ்டம், கூப்பன் இல்லை. வசதியுள்ள சில தலைவர்மார், கங்காணிமார்களுக்குக் கூட கூப்பன் கிடைக்கிறது. மகளுக்கு வேறு தொழில் செய்ய வாய்ப்பில்லை. இந்த அநியாயங்களை யாரிடம் சொல்வது?
தினக்குரல் 08. 03, 2003
204

அத்தியாயம் - 8
மலையகத்தை மலடாக்கும்
குடும்பக் கட்டுப்பாடு
8. 1. மலையகத்தில் குடும்பக்
கட்டுப்பாடும், இனக் குறைப்பும்
8.2. குடும்பக்கட்டுப்பாடு
அறுவைச் சிகிச்சையே என்ற மாயைக்குள் தள்ளப்படும்
மலையகத்தமிழ் சமூகம்.
205

Page 104
அத்தியாயம் - 8
மலையகத்தை மலடாக்கும் குடும்பக் கட்டுப்பாடு
இக் கட்டுரையின் மையக்கரு பல காரணங்" களால் சனத்தொகை குறைக்கப்பட்டதையும், விசேடமாய் மலையகத் தமிழ் மக்களின் சனத் தொகை குறைப்பிற்கு காரணிகளாய் அமைந்த மூன்று முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.
வலுக்கட்டாயமான நாடுகடத்தல் இன வன்செயல்களால் ஏற்பட்டஇடம்பெயர்வு (அகதிகளாக்கப்பட்டமை)
நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு இக்கட்டுரை மலையகமக்களின் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடும் அதன் மூலம் ஏற்பட்ட இன ஒழிப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
206

8.1 மலையகத்தில் குடும்ப கட்டுப்பாடும், இனக்குறைப்பும்
மலையக சமூகத்தில் அக்கரைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக பற்றுள்ள நபர்கள், நகைச்சுவை சித்திர கலைஞர்கள் எனப் பலரும் மலையகத்தில் நடை பெறும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டின் தாக்கத்தை எடுத்துக் கூறி வருகிறார்கள். ஆனால், டிரஸ்ட் நிறுவனமும் அவர்கள் சார்பான ஒரு சில சமூகநல உத்தியோக்கத்தர்கள் மட்டுமே இதனை ஆதரிக்கின்றனர். இச் செயற்பாட்டினால் ஒரு இனமே படிப்படியாக அருகி வருவதை பற்றி இந்த சமூகம் ஆழமாக சிந்தித்து பார்த்து மாற்று நடவடிக்கைகளை கையாளா விட்டால் இந்த இனத்தின் அழிவை மெளனமாக சகித்துக் கொள்கின்ற கோழைகளாக, குற்றவாளிகளாக வரலாற்றில் வர்ணிக்கப்படுவார்கள்.
8.1.1 உலக சனத்தொகை
19ம் நூற்றாண்டின் இறுதி காலப் பகுதியில் உலக சனத் தொகை வளர்ச்சி படிப்படியாய் கூடிக் கொண்டே வந்தது. சில காலப் பகுதியில் மாறுதலையாயும், சில கட்டங்களில் குறைந் தும், பின் கூடியும் காணப்பட்டது. (High Stationary Stage). இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாய் பிறப்பு விகிதத்திற்கு சமனாக அல்லது இறப்பு விகிதம் கூடுதலாகவும் இருந்தமை, நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்காமை. இயற்கை அனர்த்தங்களும், சீற்றங்களும், வன விலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அத்தோடு மனிதனால் தோற்றுவித்த அழிவுகள் என்பனவே முன்கூறியுள்ள சனத்தொகை வளர்ச்சி குன்றியமைக்கு ஏதுவாய் அமைந்துள்ளன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் படிப்படியான விஞ்ஞான மறுமலர்ச்சி, மருத்துவ தொழில் வளர்ச்சிக்கு துணையாய் அமைந்தமை, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தமை போன்றவை மனிதனின் ஆயுள்காலம் கூடியதுமன்றி, இறப்பு வீதம் குறைந்ததற்கும்
2O7

Page 105
கீத பொன்கலன்
சான்று பகர்கின்றன. இதன்பால் மனித சனத்தொகை அதிகரிக்கத் தொடங்கின. இதனை ஆய்வாளர் (Early Expanding State) சனத் தொகை விரிவாக்கலின் முந்திய அல்லது முதன்மை படி என்பர்.
இச் சனத்தொகை அதிகரிப்பு கூடுதலாக வளர்முக நாடு
களில் காணப்படுவதால் ஒரு சில வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களுக்கு சவாலாக அமையலாம் என்னும் ஆதங்கத்தில் 3ம் உலக நாடுகளின் சனத்தொகை குறைப்பிற்கு திட்டமிட்டு செயற் பட ஆரம்பித்தன. இதனை நடைமுறைப்படுத்த 1950ல் ஐக்கிய நாடுகள் குடும்ப திட்ட அமைப்பு (UNFPA) ஆரம்பித்தது. இதனை பின்பற்றி நெதர்லாந்து உலக சனத்தொகை ஒன்றியத்தை (WPF) உண்டுபண்ணி இந்நிதியத்தின் உதவியுடன் சனத்தொகை குறைப்பு திட்டத்தை கூடுதலாய் 3ம் உலக நாடுகளில் செயற் படுத்தியது எனலாம். ஆரம்பத்தில் இந்நிதியம் குடும்ப நல திட்டம் என்ற போர்வையில் சனத்தொகை குறைப்பிற்கு முக்கியத் துவம் கொடுத்தது. இவ்அமைப்புகள் உலக சனத்தொகை 1990 களில் அறுநூறு கோடியாக வளர்ந்துவிடும் என்ற ஆதங்கத்தை, பீதியை வெளிப்படுத்தி நின்றன.
மாறாக 2001ம் ஆண்டின் முடிவிலேயே உலக சனத்தொகை 6001 கோடியாய் இருந்தது. இதனை உலக சனத்தொகை குறிப்பு (World Population Report) Gí? GMT36) fpb696šīpg|1. g)j, Shibpóțb5 அமைவாக 2015ம் ஆண்டில் உலக சனத்தொகை 700.2 கோடி யாய் கணிக்கப்படுகிறது.
அட்டவணை - 8.1.1 சனத்தொகை தென் ஆசியா (மில்லியன்களில்)
நாடு 2001 2015 வளர்ச்சி விகிதம்
ஆண்டு ஆண்டு
இந்தியா 1033.4 12464 13 பாகிஸ்தான் 1464 204.5 24 பங்களாதேசம் 1409 1814 1.8 நேபாளம் 24.1 32.0 2O பூட்டான் 2.1 J.0 シ 2.6 இலங்கை 18.8 20.6 O7 மாலைதீவு O3 O4 29 தென் ஆசியா 14.SS.1 1805.3 1.6
ggst Tib: Sunday Island 02 November 2003.
208

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இவ் அட்டவணையின் படி 1975 - 2001 இதற்கான கால கட்டத்தில் சனத்தொகை அதிகரிப்பு 13% இல் இருந்து 2001 - 2015 உள்ள காலத்தில் 0.07% மாக குறையுமென கணக்கிடப்பட் டுள்ளது. அதாவது ஒரு பெண்ணின் கருவள வீதம் (Fertility Rate) 1970 - 1975இல் 41% ஆக இருந்தது 2001 - 2015களில் 2.0% மாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 15 வருட காலத்தில் சனத்தொகை வளர்ச்சியானது. தென் ஆசியா வில் இலங்கையில்தான் குறைந்த கணிப்பீட்டை கொண்டுள்ளது. கண்கூடு. சனத்தொகை வளர்ச்சியை கணிக்குமிடத்து, 15 வயது எல்லைக்கான வளர்ச்சி 25.5% மாக இருந்து 21.3% மாக குறுகு வதையும், மாறாக 65 வயதிற்கும் அதற்கு மேற்பட்ட வயதினர் 6.8% மாக இருந்து 9.3% பெருகுவதையும் அறிய முடிகிறது. மலையகத் தமிழர்களின் சனத்தொகை குறைப்பிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று அரசினால் திட்டமிட்டு இம் மக்களை வலுக்கட்டாயத்தின் நிமித்தம் இந்தியா அனுப் பியது, இரண்டாவது குடும்ப நல திட்டமிடல் எனும் போர்வை யில் நிரந்தர மலட்டுத் தன்மையை ஆண்/பெண் இரு சாரா ருக்கும் ஏற்படுத்தியமை, 1956ல் இலங்கையில் உருவாக்கப் பட்ட தனி சிங்கள சட்டம் இலங்கையரை வெளிநாடுகளில் குடியேற வைத்தமை மூன்றாவது காரணியாய் சனத்தொகை குறைப்புக்கு அமைந்துள்ளது. நான்காவதாய் இலங்கையில் காலத்துக்கு காலம் நடந்தேறிய இனக்கலவரம் அது ஏற்படுத்திய போர்ச்சூழல் என்பன சான்று பகர்கின்றன. இவர்கள் தாமாக வும், அகதிகளாகவும் பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இக் கட்டுரையின் முக்கிய ஆய்வாக குடும்பக் கட்டுப்பாடும் அதன் தாக்கமும் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இதன் இன்றைய யதார்த்த நிலை என்பன விளக்கப்படுகிறது.
8.1.2இலங்கையில் குடும்பத் திட்டம்
இலங்கையில் முதன்முதலாக 1953ம் ஆண்டு குடும்பத் திட்ட பணிகள், இலங்கை குடும்பத் திட்ட அமைப்பு என்ற பெயரில் அரசு சார்பற்ற நிறுவனமாக சுவீடன் அரசின் உதவி யுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1965ம் ஆண்டு குடும்பத் திட்ட மிடல் அரச கொள்கையாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் 1968ல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் கீழ் குடும்ப சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்டது. இன்று அரசு துறை மட்டுமின்றி அரச சார்பற்ற (NGO) நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.
209

Page 106
கீத பொன்கலன்
இவற்றில் சில முக்கியமானவை 1. இலங்கை குடும்பத் திட்ட அமைப்பு(SLFPA). 2. சுயமான கருத்தடை சிகிச்சைக்கான இலங்கை அமைப்பு(SLVSC). 3. இலங்கை சனத்தொகை சேவை (SLPS).
இதைத் தொடர்ந்து:
ஆடி மாதம் 1970ம் ஆண்டு அரசு தனது கொள்கையை வெளியிட்டது. குடும்ப நல வசதிகள் பெற்றோருக்கு கிடைக் கவும், அதன் பயனாக தாய் சேய் நலன், பாதுகாக்கப்பட வேண் டும் என்பதே. இந் நலன்கள் விரைவாக தோட்டங்களையும் கிராமங்களையும் சென்றடைய வேண்டும் எனக் கூறப்பட்டது.
1973ம் ஆண்டு ஐநா பிரதிநிதி சனத்தொகை செயற்பாடுகள் அமைப்புடன் அரசு ஒரு உடன்படிக்கையில் கைசாத்திட்டது. இந்நிதியம் வெற்றிகரமாக தேசிய குடும்ப திட்டத்தை அமல் படுத்துவதாய் அமைந்தது.
1978ம் ஆண்டு அரசின் பொருளாதார கொள்கைக்கு அமைவாக உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் ஆகிய வங்கி களிடம் கடன் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சனத் தொகை வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற நிபந்தனை யுடன் வங்கிகள் உதவி வழங்கின. 1980ல் சனத்தொகை குடும்ப திட்ட கொள்கையை அரசின் சார்பாக திட்டமிடல் செயற் பாட்டு அமைச்சு வெளிப்படுத்தியது.
இதன்படி முதலாவதாக சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை குறைக்க அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதும், இரண்டாவ: தாக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்குடன் குடும்பத் திட்டமிடல் சேவையை விஸ்தரித்து, திட்டத்தை செயற்படுத்தும் தனிநபர்களுக்கு பண ஊக்குவிப்பு வழங்க அரசு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதெனவும் மூன்றாவது குடும்பத் திட்ட சேவைகள் மூலம் தம்பதிகள் ஊக்குவிக்கப்பட்டு இதன் ஊடாக தன்னிச்சையாக மலட்டுத் தன்மைக்கு உட்படுத்துதல்,
இதன் மூலம் கருவளத்தில் மாற்றங்களை ஏற்படுத்து வதுடன் மொத்த கருவள விகிதத்தை 2.1% மாக குறைப்பதுவே நோக்காக இருந்தது. இதன் நிமித்தம் கருவளத்தன்மையில், மாற்றங்களை தோற்றுவிப்பதில் வெற்றி காண்பதும், 2001ம் ஆண்டளவில் கருவளத்தன்மையை 21% மாக குறைப்பதும் அரசின் கொள்கையாய் அமைந்தது. இதன் மூலம் இலங்கை
20

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கருத்தடை நிலையம் 1982ம் ஆண்டு செய்த அளவீட்டின்படி இலங்கையில் 99% மான திருமணமான பெண்கள் ஒருவகை யான கருத்தடையை நன்கு அறிந்துள்ளனர் என்றும், அதே அளவீட்டிலேயே இந் நிலை உள்ளதை 1987இல் இலங்கை சுகாதார அளவீடு (S.L.D.H.S. 1987) வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் மலையகத்தில், கருவள வீதம் 17 ஆக குறைந்துள்ளது.
81.3 குடும்பத் திட்டம் என்றால் என்ன?
உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கு தம்பதியருக்கு (பெற் றோருக்கு) தேவையான நேரத்தில் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும், தேவையற்ற நேரத்தில் மனைவி கர்ப்பமாவதை தவிர்த்துக் கொள்ளவும், பிரசவங்களுக்கு இடையிலான இடைவெளியை நெறிப்படுத்திக் கொள்ளவும், குடும்பத்தின் பிள்ளைகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க கையாளப்படும் நடைமுறைகள் குடும்ப நல திட்டம் எனப்படும்.
8.1.4 குடும்பத் திட்டம் ஏன் அவசியம்?
O முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமிடையில் 2 வருட வித்தியாசம் இருக்க வேண்டும். 2 வருடத்திற்கு குறைவான இடைவெளி இருப்பின் இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ஆரோக்கியம் குன்றியதாகவும், பிறப்பு நிறை குறைந்ததாக இருக்கும் வாய்ப்பு அதிகம், காரணம் முதல் பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கும் தாய்தன் தேகத் திலுள்ள (சத்தை) போஷணப் பொருட்களை இழந்து (நொடிந்து) போஷாக்குகுன்றியவளாகவே காணப்படுவார். தாயின் உடலில் இரத்தம் ஊறிதேறுவதற்கு, முதல் குழந்தை பிறந்து குறைந்தது 2 வருடமாவது இடைவெளி வேண்டும், ஒரு குழந்தைக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு கட்டாய மாக தாய்ப்பால் அவசியம். அக்காலப் பகுதியில் கர்ப்பம் தரித்தலாகாது. ஏனெனில் தாய் தான் உண்ணும் உணவு பால் கொடுப்பதற்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் செல்வதால், இரண்டு குழந்தைகளும் ஒழுங்காக வளராது. இதனால் குழந்தை நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு.
O ஒரு குழந்தைப் பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கு இடை யிலான காலம் 2 வருடத்திற்கு குறைவாயிருப்பின் தாய் இரத்த சோகையால் வாடுவதற்குஇடமுண்டு. எனவே இரண்டாவது குழந்தை பிறக்கும்போது, சிறிதளவு இரத்தம் போனால் கூட அது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய
2

Page 107
கீத பொன்கலன்
22
தாக அமையலாம். எனவே தாய் ஆரோக்கியமாக வாழ் வதற்கு, குழந்தைப் பிறப்புகளுக்கு இடையிலான காலம் 2 வருடங்களுக்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.
முதல் குழந்தை குழந்தையாக இருக்கும்போதே, இன்னொரு குழந்தை பிறந்தால், முதல் குழந்தை மீதான கவனிப்பு குறைந்து பின் பிறந்த குழந்தை மீதே அதிக கவனிப்பு உண் டாகும். இதனால் மூத்த குழந்தை தாய்ப்பாசம் கிடைக் காமல் ஏக்கம் அடைவதற்கு இடமுண்டு. அத்துடன் மூத்த குழந்தை, இளைய குழந்தை மீது பாசத்திற்கு பதிலாக பொறாமை கொள்வதற்கும் இடமுண்டு. இரண்டு குழந்தைகளும் பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் அதற்கான பால் வாங்கி கொடுக்க பண வசதி இல்லாதிருத்தல், இரு குழந்தைகளும் நோஞ்சான்களாக அடிக்கடி நோயில் வாடும் குழந்தைகளாகவே காணப்படுவர். அத்தோடு தாயும் தொழில்புரிபவராக இருந்தால், இரண்டு குழந்தைகளும் கைக்குழந்தைகளாக இருப்பார்களானால், தாய் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருக்க நேரிடும். இதனால் வீட்டில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்டு, வீட்டில் கணவன் மனைவியிடையே சமாதானம் குலைய வாய்ப்புண்டு ஆகவே முதல் குழந்தை, பிறந்து 2 வருடங்களுக்கு பின்பு தாய் இன்னொரு குழந்தை பெறுவதற்காக கர்ப்பம் தரிப்பதன் மூலம் ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கலாம்,
பொருளாதார நெருக்கடி இருக்கும்போது மனைவி கருத்தரிப்பதை தற்காலிகமாக பின் போடுதல் நல்லது. பொருளாதார நெருக்கடி நேரத்தில் தாய்க்கான சத்துள்ள உணவை கொடுக்க முடியாமல் போகும். அவசரத்திற்கு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல பணமில்லாமலிருக்கும். மனைவியை பிரசவத்திற்கு பெரியாஸ்பத்திரியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டால் போக்குவரத்து மற்றும் இதர செலவுக்கும் பணமில்லாமல் திண்டாட நேரிடும். அவ்வாறிருக்கும்போது இன்னுமொரு கைக்குழந்தை வீட்டில் இருந்தால் அந்தக் குழந்தையை கவனிப்பதில் பிரச்சினை ஏற்படும். அதே வேளை கணவன் வேலைக்குச் செல்வது தடைப்படும். இதனால் பொருளா தாரப் பிரச்சினை மேலும் மோசமாகும். மனைவியின் உடல் நலம் சாதகமாக இல்லாதபோது கருத்தரிப்பு நல்லதல்ல. மனைவிக்கு நல்ல சுகம் ஏற்படும் வரை கருத்தரிப்பதை பின் போட வேண்டும். ஏனெனில் இது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
8.1.5 மலையகத்தில் குடும்ப நலத் திட்டம்
இத் திட்டமானது 1974ம் ஆண்டில் மலையகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொட்டு இன்று வரையும் இந்த திட்டத்தின்படி உண்மையான நோக்கத்தினை முழுமை யாக செயற்படுத்தாமல், இதனை அமல்படுத்துபவர்களின் ஒரே நோக்கம் குடும்பத்தின் தொகையைக் குறைப்பதாகவே இருந் துள்ளது. இதில் இன்னும் விசேடமாக படிப்படியாக தற்காலிக கருத்தடை முறைகளை தொடர்ந்து அமல்படுத்தாமல் நிரந்தர ஆண்/பெண் அறுவை சிகிச்சைகளை நடைமுறைப்படுத்தியதே யாகும். இது 1978 - 1992ம் ஆண்டு வரையும் மக்கள் தோட்டத் துறை அபிவிருத்தி சபையினாலும் (EDB), இலங்கை அரச பெருந்தோட்டத்துறை கூட்டுத்தாபனத்தினாலும் (SLSPC) நிர்வகிக்கப்பட்ட தோட்டங்களில் சமூக அபிவிருத்தி பிரிவி னால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பிரிவு 1978ம் ஆண்டி லேயே உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டில்தான் பெருந் தோட்ட குடும்ப நல கண்காணிப்பாளர்கள் (PFWS) பயிற்றப் பட்டு நிர்வாகத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு இணைப்பு பணியாளர்களாக கடமை யாற்றினர். எனினும் இவர்கள் அரசியல் செல்வாக்கினாலும் தோட்டங்களை சாராதவர்களாகவும் இருந்ததினால் பொருத்த மானவர்கள் அப்பணிக்கு தெரிவாகவில்லை. அதேபோல் பிள்ளைக் காப்பாளர்களும், சுகாதார பணியாளர்களும் கூட இச் சேவைக்கு பொருத்தமற்றவர்களாக வெறும் தொழில் வாய்ப்பைத் தேடி வந்தவர்களாக இருந்தனர்.
சுகாதார அமைச்சு 1974 - 1988 வரை யு.என்.எவ்.பீ.ஏ, ஐ.நா குடும்ப திட்ட அமைப்பின் திட்டத்தை தோட்டங்களில் அமல் படுத்தியது. வாகனங்கள், உபகரணங்கள், மருந்துகள், கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் ஆகியவை தோட்டங்களில் பரீட் சார்த்தமாக நடத்தப்பட்ட மருத்துவ சேவைகளுக்கு அன்பளிப் பாக UNFPA னால் வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கான நிலையங்கள், பெருந்தோட்டத்துறை குடும்பநலச் சேவையாளர் களுக்கான பயிற்சி, குடும்பத் திட்டக் கல்வி ஆகியவையும் இதற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது. 1989ல் இருந்து மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையும், இலங்கை பெருந்தோட்டத் துறை அரச கூட்டுத்தாபனமும் இத் திட்டத்தை நடைமுறைப் படுத்த தொடங்கின. இத்திட்டத்தினால் மலையகத்தில் ஒரு
23

Page 108
கீத பொன்கலன்
அட்டவணை - 8.1.2 இலங்கை (1992) பெருந்தோட்டத்துறை (1982-1992) முக்கிய தரவுகளின் ஒப்பீட்டு.
விபரங்கள் பெருந்தோட்டத் பெருந்தோட்டத் இலங்கை
துறை துறை
ஆண்டு 1982 (%) 1992 (%) 1992 (%)
சனத்தொகை 7,09,277 8,09,096 17.405
(மில்லியன்)
பிறப்பு விகிதம் ; 29.8 83 20.1
இறப்பு விகிதம் 8.0 6.0 S.6
இயற்கை 2.2 2 1S அதிகரிப்பு குழந்தை இறப்பு விகிதம் 73.6 27.9 19.3 (1990)
இறந்தே பிறக்கும் 66.7 42,6 2O8 (1989) குழந்தைகள் வைத்திய விகிதம் சாலைகளில்
மாத்திரம்
தாய்மார் இறப்பு w விகிதம் ፲.2 2 0.4 (1988)
நிறுவனங்களில் பிறப்பு விகிதம் 49 (SLSPC) 86 80 (1989)
குடும்பக் கட்டுப்பாடு 28 (SLSPC) 60 42 (79.89) விகிதம் (1990 - SLSPC)
திட்டமிட்ட தகுதி வாய்ந்த தம்பதியர் (நவீன முறைகள் மாத்திரம்) 53 (1990 - JEDP)
குறைந்த நிறை 15(1990 - SLSPC) யுடனான பிறப்பு 36 19 (1991 - JEDВ) | 27 (1990)
ggsstub:- R.S. Perera, Living Condition of the Plantation workers சில வளர்ச்சிகள் சுகாதாரத் துறையில் காணப்பட்டாலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதோடு அதனையே முக்கிய செயற்பாடாகக் கொள்ளத் தொடங்கினர்.
214

இருபத்தோராம் நூற்றாண்டில் .
81.6 கருத்தடைக்கான தகுதிகள்
தோட்டங்களில் கூடுதலான நிரந்தரக் கருத்தடை சிகிச்சைக் களை மேற்கொண்ட படியால் அன்றிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர். ஜோ, பெர்னாண்டோ அவர் களினால் இ - 1586, 17ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1998ம் ஆண்டில் அனுப்பட்ட பொது சுற்றறிக்கை.
நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு சத்திர சிகிச்சையை மேற் கொண்ட பெண்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் 25 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது அவதானிக்கப்பட் டுள்ளது. அதிலும் அவதானிக்கக்கூடிய தொகையினர் 20 வயதிற்கும் குறைவானவர்களே, குறைந்த வயதில் நிரந்தர சத்திர சிகிச்சை செய்து கொள்வது கவலைகளுக்கு இட்டுக் செல்லக் கூடும். நிரந்தர சத்திர சிகிச்சையை மேற்கொண்ட ஆண்/பெண் இரு பாலரில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையினருக்கு இரண்டு பிள்ளைகள் மாத்திரமே உள்ளனர். அதிலும் இரண்டாவது பிள்ளை வயதில் ஆகவும் சிறியவர்களாய் இருக்கின்றனர்.
இந்த அவதானிப்புகளின் அடிப்படையில் ஒரு சத்திர சிகிச்சையை செய்ய தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு பொருத்த மான குறைந்தபட்ச தகுதிகள் தேவையென எண்ணப்பட்டது. அதனால் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு சத்திர சிகிச்சைக்கு தெரிவு செய்யப்படுவதற்கான அடிப்படைத் தகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
O 26 வயதிற்கு மேற்பட்டவர்களாக, உயிர்வாழும் 2 பிள்ளை களை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.இரண் டாவது பிள்ளை 2 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும், தாயின் வயது தோட்ட பிறப்பு அத்தாட்சி பத்திரத்தின் மூலம், அடையாள அட்டை அல்லது வேறு ஏதாவது தகுதி வாய்ந்த ஆவணத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும். O மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிர் வாழும் குழந்தை களைக் கொண்ட 26 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் எப்போது வேண்டுமானாலும்சத்திர சிகிச்சைக்கு உட்படலாம் O 26 வயதிற்கு குறைந்த ஒருவருக்கு அவரது துணைவன் அல்லது துணைவி சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தினால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மருத்துவ அதிகாரி சத்திர சிகிச்சை செய்யலாம் ஆனால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 உயிர் வாழும் பிள்ளைகள்
25

Page 109
கீத பொன்கலன்
இருக்க வேண்டும்.இப்படியான சந்தர்ப்பங்களில் மருத்துவ அதிகாரி உயிர் வாழும் பிள்ளைகள் தொடர்பாக தரப் பட்ட தகவல்கள் சரியானவைதானா என்று தனிப்பட்ட முறையில் பரிசீலிக்க வேண்டும்.
O மருத்துவ காரணிகளுக்காக அறுவை சிகிச்சை மேற் கொள்ள தேவைப்பட்டால், அத்துறை சார்ந்த மருத்துவர் களின் இறுதி முடிவுக்கு பின்பே சத்திர சிகிச்சை செய்யப் படவேண்டும்.
அட்டவணை - 8.1.3
உயிர் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையால் வெளிப்படும் குடும்பக் கட்டுப்பாடு திட்ட முறைகள் - 1990
உயிர் காக்கும்
குழந்தைகளின் எண்ணிக்கை கு0 கு! கு2 கு3 கு4 கு5 தொகை
தகுதி பெற்ற சோடிகளின் எண்ணிக்கை 4616 928S 13834 3094 7332 5398 53539
தற்காலிக முறைகள் பாவிப் போர் தொகை 1 177 2737 2964| 1856 731 322 8787
நூற்று வீதம் 38 29.5 21.4 14.2 100 600 16.4
நிரந்தர முறை பாவிப்போர் தொகை 424 2484 6389 7S,81 4672 2489 23979
நூற்று வீதம் 92 26.5 | 462 | 379 629 401 448
பாரம்பரிய முறைகளை பாவிப்போர் 8S 442 SOS 34 203 159 1735
நூற்று வீதம் 1.8 4.8 37 26 2.8 29 32
ஒரு முறை யையும் مما يخ பாவிக்காதோர் தொகை 3930 3622 3976 3316 1786 248 19058
நூற்று வீதம் 851 390 | 287 | 253 243 450 | 356
5ft gub:- Health Bulletin 1987 - 1991 JEDB
216

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சத்திர சிகிச்சைக்கு உட்படும் நபர் மேற்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டவர் சத்திர சிகிச்சைக்கு பொருத்த மானவர் என்ற திருப்தி சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ அதிகாரிக்கு ஏற்படுவது மிகவும் முக்கியமானது ஒன்று. சத்திர சிகிச்சை செய்யும் சகல அரசாங்க/அரசு சார்பற்ற அதிகாரிகளும் மேற்சொன்ன அனைத்து தகுதிகளும் உள்ளனவா என்று உறுதிப் படுத்திக் கொண்ட பின்பே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும்.
81.7 மலையகத்தில் நிரந்தரக் குடும்ப கட்டுப்பாடு
மேற்குறித்த சுற்றறிக்கைக்கு மிக முக்கியமான காரணம்
மலையகத்தில் இத்தகைய நடைமுறை இல்லாமையே. அதனை
அட்டவணை 8.13 உறுதிப்படுத்துகிறது.
குழந்தைகளற்று கணவன் - மனைவியரின் எண்ணிக்கை யில் 149% ஆனோர் பற்பல முறைகளைப் பாவிக்கின்றனர். இவர் களில் 92% ஆனோர் மலடாக்கும் முறைகளைப் பின்பற்றினர்.
எந்த முறையையும் பாவிக்காத (பாரம்பரிய முறைகள் உட்பட) குழந்தைகளற்ற கணவன் - மனைவியரில் 85.1% மாக இருந்து ஒரு குழந்தை உடையவரில் 39.0% வீதமாகவும், 4 குழந்தைகளுள்ள தம்பதியரில் 24.3% வீதமாக குறைந்துள்ளது.
5 பிள்ளைகளையும் அதற்கு மேலும் எண்ணிக்கையுடைய பிள்ளைகளையும் கொண்டுள்ள தம்பதியரில் 45% ஆனவர் எதையும் பாவிக்காதவர்களாவர். இது குடும்பத் திட்டத்திற்கு தெரிவிக்கப்பட்ட ஒரு எதிர்ப்பாகும். A
ஒரு குழந்தையுடன் தம்பதியர் தற்காலிக முறைகளைப் பின் பற்றுவது எண்ணிக்கையில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
நிரந்தர முறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது, 4 பிள்ளைகளையுடைய தம்பதி யரிடையேதான்,
எந்த முறையையும் பின்பற்றாத தம்பதியர் 7530. இவர்கள் 3 அல்லது மேற்பட்ட குழந்தைகளுடையோராவர் (தகமை வாய்ந்த தம்பதியரில் 141% மானோர்) கருத்தடை திட்டங் களை அமல்படுத்தியதன் மூலம் குறிப்பிட்ட வயதுகளில் கருவள வீதம் படிப்படியாக குறைந்துள்ளது. உதாரணமாக இந்த வீதம் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் 3.8% ஆக இருந்தது.
27

Page 110
கீத பொன்கலன்
1988ம் ஆண்டு 27% குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மட்டத் திலும் பார்க்க குறைவானதே (இலங்கை SLDHS அறிக்கை 1987) இந்த நிரந்தர சிகிச்சை செய்த பின்னும்கூட பிள்ளைகள் பிறந்திருக்கின்றன என்பதனை கீழ்வரும் அட்டவணை தெளிவு படுத்துகின்றது.
அட்டவணை - 8.1.4
சத்திர சிகிச்சைக்கு பின்னர் கருவுற்றவர்கள் 1982/1986
வருடம் ஆண் அறுவை ஆண் அறுவை வீதம் பெண் பெண்
சிகிச்சை இது சிகிச்சைக்கு அறுவை அறுவை ! நாள் வரை பின் பிறந்த பின் பிறந்த
குழந்தைகள் குழந்தைகள்
1982 4159 183/2789 6.6
1983 60S8 370 6.1 Տ093 28 1986 9647 578 47 14111 104
(gging th: Health Bulletin (1987-1991) JEDB)
ஆரம்பத்தில் ஆண் அறுவை சிகிச்சையே நடைப்பெற்றது. பின் படிப்படியாக பெண்களுக்கான சத்திர சிகிச்சை அமல் படுத்தப்பட்டது. சனத்தொகை சேவைகள் லங்கா நடமாடும் சேவை மூலமாகவே தோட்டங்களில் அச்செயற்பாடுகள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. தொகையைப் பற்றி மாத்திரம் கவனத்தில் கொள்ளப்படுகின்றதே அன்றி சரியான முறையில் சிகிச்சை செய்யப்படாததே இந்த நிலைமைக்கு காரணம்.
அட்டவணை 815 - படியும் பிள்ளைகள் இல்லாதவர் களும் நிரந்தர சத்திர சிகிச்சை செய்துள்ளது. உறுதிப்படுத்தப் படுகின்றது. தற்காலிக முறைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தர முறைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மூன்று குழந்தைகள் உள்ளவர்களில் 61 வீதமானவர்கள் நிரந்தர முறையை மேற்கொண்டுள்ளனர். முழுமையாக 40.01 ஆனவர் கள் நிரந்தர முறையையே மேற்கொண்டுள்ளனர். டிரஸ்ட் பொறுப்பேற்ற பின் தரவுகளின் விபரங்கள் வெளியிடப்படுள் தில்லை. இத்தரவுகளின் அடிப்படையில் கட்டுரைச் செய்திகள் பத்திரிகைகளுக்கு எழுதப்பட்டதே இதற்கு காரணமாயிருக்கலாம்.
28

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை - 8.1.5
நவீன கருத்தடை முறைகளை கடைபிடிக்கும் தகுதி வாய்ந்த தம்பதியினர் உயிர்வாழும் குழந்தைகளின் அடிப்படையில் 1993
உயிர் வாழும்
குழந்தைகளின் i
எண்ணிக்கை கு 0 கு 1 கு 2 கு 3 கு 4 கு5 |மொத்தம்
தகுதியான
தம்பதிகள் 1439 O785 S647 6243 92.61 6OS9 6.293
39/600 elj -GuntáůCurtif 77 3.32 2,66 1.79 1.63 0.46 2.0
மாத்திரை ጳ உபயோகம் 1.64 975 7.70 6,OO 4.39 86 6.0
ஜபு கருத்தடை
aysasaub 0.04 O.80 OS6 0.36 0.4 0.77 0.4
ஊசி OO8 6.35 557 3.7S 3.06 129 4.
பெண் அறுவை
சிகிச்சை OO4 2.6 26.4Z | 49.38 | 50.67 43.89| 37.3
ஆண் அறுவை
சிகிச்சை 0.70 1.63 79S 11.72 13.58 14.08 8.6
நவீன முறை
களின் பாவனை 3.07 24.0 50.91 73.0 ይ7,8 6.8 52.O.
பாரம்பரிய
முறைகள் S.S. 4.9S 4.53 3.77 4.35 4.70 4.4
புதிதாக
ஏற்றுக் கொண்
டோர் வீதம் 1.72 .09 1752 2.43 10.80 S.99 10.2
(gait Tib: Health Bulletin (1992-1994) PHSWT.)
8.1.8 டிரஸ்டும் குடும்பக் கட்டுப்பாடும்
1992ம் ஆண்டிலிருந்து அரசு தோட்டங்களில் 450 தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டு 21 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பெருந்தோட்டத்துறை சமூக நல பணிகளை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டதே பெருந்தோட்டத்துறை வீடமைப்பு சமூக நல நிதியம் என்பதாகும்.
29

Page 111
கீத பொன்கலன்
இதனையே இன்று நாம் டிரஸ்ட் என அழைக்கின்றோம். இதில் முக்கிய அங்கத்தவர்கள் கம்பெனி சார்பாகவே நியமிக்கப் படுகிறார்கள். இதன் உள்ளக கட்டமைப்பு செலவுகளுக்கு கம்பெனிகள் பொறுப்பெடுத்து அவைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டு இது செயல்படுகின்றது. இதன் உள்ளக கட்டமைப் புக்கு வருடத்திற்கு 50 மில்லியன் செலவிடப்படுகின்றது. இதில் வெளிநாட்டுப் பணமும் அடங்கியுள்ளது. தோட்டத் தொழி லாளரின் சமூக நலனுக்காக 2002ம் ஆண்டு 200 மில்லியன் வெளிநாட்டு நிதி உதவி கொடுக்கப்பட்டுள்ளது. டிரஸ்ட் நிறுவனம் பல்வேறு சமூக நல செயற்பாடுகளில் ஈடுபட்ட பொழுதும் தங்களது முழுச்சக்தியையும் தோட்ட சமூக நல உத்தியோகத்தர் மூலமாக மிகவும் தீவிரமாக செயற்படுத்தப் பட்ட திட்டம்தான் மலையகத்தில் அமல்படுத்தப்படுகின்ற குடும்பக் கட்டுப்பாடாகும்.
8.1.9 குடும்ப திட்டமிடலும் கருவளமும்
1981ல் இருந்து தோட்ட மக்கள் மத்தியில் கருத்தடை பேணுதல் கூடியுள்ளதை அவதானிக்க முடிகிறது. குடும்ப சுகாதார தாக்க அளவீடு 1981/1982ல் குடும்ப சுகாதார பணி யகத்தின் கணிப்பின்படி குடும்ப திட்ட செயற்பாடு 32.2% (தேசிய செயற்பாடு 477%) என்பதே, எனினும் தற்பொழுது இதன் பயன் 545% ஆக 1993ல் நடைமுறையிலுள்ளதாகவும், 1993ல் செயல் வரைவும் சுகாதார வரைவும் வெளிப்படுத்தி யுள்ளது. (தேசிய செயற்பாடு 66.1%)
அட்டவணை - 8.1.6 கருத்தடை செயற்பாடு
முறை 1981 1993 1995 1997
(FHS) (DHS) (AHR) (AHR)
நிரந்தர முறை 29.6% 44.4% 56.1% 56.9% தற்காலிக முறை 1.8% 3.1% 9.7% 10.0%
சம்பிரதாய முறை 0.8% 7.0% 3.6% 3.6%
நவீன முறை 32.2% 54.5% 69.4% ፖ0.5%
(ggrgh: Health Bulletin (1995-1997) PHSWT)
220

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இவ் அட்டவணை வருடாந்த சுகாதார புள்ளி விவர பெறுபேறுகளிலிருந்து பெறப்பட்டது. இதன்படி 1995ல் 69.4% மாகவும் 1997ல் 70.5% மாகவுள்ளது கண்கூடு. AHR மூலம் பெறப்பட்ட புள்ளி விபரம் PHSWT இன் கண்காணிப்பில் உள்ளடக்கிய தோட்டங்களை மையமாகக் கொண்டது. அதே சமயம் DHS முழு தோட்டங்களையும் உள்ளடக்கிய புள்ளி விபரத்தை தருகிறது.
AHR கணிப்பீட்டின்படி பெருமளவிலான கூடிய கருத்தடை புள்ளி விவரம் மிகவும் அவதானத்துடன் பேணுதல் வேண்டும். ஏனெனில் இப் புள்ளி விபரம் பல தரப்பட்ட அமைப்புகளுக் கூடாக பெறப்பட்டன. இத் தகவல் தோட்டங்களில் கருத்தடை முறையை காட்டி நிற்கிறது. எனினும் பிராந்திய சுகாதார முகாமையாளர் தங்கள் கவனத்தை ஈர்த்து, AHRல் தரப்பட்ட தரவுகள் சரியானதும் நம்பகத்தன்மையானதுமாய் தெளிவு படுத்துவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
கருத்தடையை 80% மானவர்கள் வசுக்கட்டோமி, குழாய்
தடுப்பு முறையின் மூலமாய் பின்பற்றுவதை மிகவும் வரவேற்கின்றனர். 1981 - 1987களில் தற்காலிக முறை பாவனை கூடிக் காணப்பட்டாலும், இச் செயற்பாடு தோட்டங்களில் குறைவெனலாம். தற்காலிக நவீன முறைகள் 1981ல் 1.8% மாக இருந்து 10% மாக 1997ல் கூடியுள்ளதை காணமுடிகிறது. அட்டவணையில் காட்டியவாறு சம்பிரதாய முறை 3.6% மாக குறைந்திருப்பதையும் 1995/1997ல் காட்டியுள்ளது. கூடிய ஏற்புடைய முறைகளில் காட்டியபடி கிருவளம் தோட்டங் களில் குறைந்துள்ளது கண்கூடு. மொத்த கருவள விகிதப்படி (TFR) ஒரு பெண்ணின் உயிர் பிறப்பு 1991ல் 2.61% மாகவும், இவ் உயிர் பிறப்பு விகிதம் 1997ல் 19% மாக குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. கடைசியாக கிடைக்கப்பெற்ற 1997ம் ஆண்டின் தேசிய கருவள விகிதம் 2.1% உடன் ஒப்பிடுகையில் தோட்ட பிறப்பு விகிதம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. 1991 முதல் 1997ம் ஆண்டு முடிவில் பெறப்பட்ட குறிப்பிட்ட வயது கருவள விகிதத்தை (ASFR) எல்லா வயதெல்லைக்கும் கணிக்கு மிடத்து, 15 - 19 வயதெல்லை தவிர்ந்த ஏனைய வயதெல்லையில் கருவளம் குன்றியுள்ளதை காணமுடிகிறது. 3 வருட கால எல்லைக்குள் அமைந்த கணிப்பின் படி உச்ச கருவளம் 20 - 24 வயதெல்லையுள் அமைவதையும் இந் நிலை தேசிய மட்டத்தில் 25 - 29 வயதெல்லையுடையதாகவும் அமைந்துள்ளது.
22

Page 112
கீத பொன்கலன்
அட்டவணை - 8.17 கருவள விகிதம்
வயது எல்லை தோட்டங்கள் இலங்கை
வயதுக்கேற்ப கருவள விகிதம்
1991 1993 1997 1993
15-19 34 28 30 3S
20-24 773 158 131 110
25-29 167 150 130 134 30-34 90 74 66 104
35-39 40 34 25 54
40-44 11 O8 04 14
45-49 O7 O2 02 04
மொத்த கருவளம் (%) 2.61 227 1.9 23
(மூலம்: குடும்ப நலத்திட்டம் 1992-1997)
1997ல் மலையகப் பெண்ணின் கருவள விகிதம் (Fertility Rate) 1.9% மாக குறைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இன்றைய புள்ளி விபரங்கள் எம்மிடம் இல்லாததால் அதனை 1.5% மாக கொள்ளலாம். அப்படியானால் ஒரு குடும்பத்தில் 3 பிள்ளை களுக்கு பதிலாக 2 குடும்பங்களில் 3 பிள்ளைகள்தான் இருப் பார்கள். இதன் காரணமாக மலையகத் தமிழ் மக்களது சனத் தொகை பெரிதும் பாதிக்கப்பட்டு பிள்ளை பராமரிப்பு நிலையம், முன்பள்ளிகள், ஆரம்ப பாடசாலைகள் ஆகியவற்றில் பிள்ளை களின் வரவு மிகவும் குறைவாக பதியப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலை அறிவதற்கு ஒரு ஆய்வை செய்தாக வேண்டும். இப்படியான புள்ளி விபரங்கள் டிரஸ்ட் தலைமை அலு வலகத்தில் பதிவாகியுள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டை பற்றியும் தகுதி வாய்ந்த தம்பதியர், குழந்தைகளின் பிறப்பு ஆகியவற்றை பதிவதற்கான படிவங்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் நிரப்பப் படுகிறது. துரதிஷ்டவசமாக இன்னும் 30 விழுக்காடு மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதிருப்பது இந்த நிர்வாகத்தினுடைய அலட்சிய போக்கே காரணமாகின்றது.
222

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இந்த நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டின் தாக்கத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. இதற்கு எதிராக பல அரசு சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் குரல் கொடுத்ததினால் இன்று சில மாற்றங்கள் எடுக்கப்டுவதாக தெரிய வருகின்றது. ஆனாலும் தோட்டங்களில் பெண்கள் கருவுற்றிருந்தால் தோட்ட முகாமையாளர் தொடக்கம் குழந்தை பராமரிப்பாளர் வரை அதனை ஒரு குற்றச் செயலாக கருது கிறார்கள்.
குடும்பத்தில் கணவன் சத்திர சிகிச்சை செய்த பின்பும் மனைவியையும் செய்யும் படி தோட்ட மருத்துவர் வற்புறுத்திய தாகவும், இருந்த ஒரே ஆண் மகன் இறந்து போன பின் மீண்டும் ஒரு மகனை பெற எண்ணி டாக்டரிடம் அந்த முடிச்சை அவிழ்த்துவிட முடியுமா என்று ஆலோசனை கேட்ட்வருக்கு முடியாது என்ற பதில் கிடைத்திருப்பதாயும் எமது சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பெண்களின் அபிப்ராயம் 2 ஆண் 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பின்பே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதாகும்.
அட்டன் கலை கலாச்சார
மன்றத்தில் ஆற்றிய உரை 2O. 12, 2003
223

Page 113
8.2 குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையே என்ற மாயைக்குள் தள்ளப்படும் மலையகத் தமிழ் சமூகம்
இலங்கையிலே மலையகத்தில் மட்டுந்தான் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டுமுறை மிகத்தீவிர மாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், தொழிலாளர் இருபத்தி நான்கு மணி நேரமும் தோட்டமுகாமையாளரின் (துரை) கீழும், சமூகநல பணியாளர்களின் கீழும் இருப்பதால் சுயமாகச் சிந்தித்து வாழ முடியாது நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். கம்பெனிகள் தங்கள் இலாபத்தை கூட்டுவதற்காக செலவைக்குறைப் பதற்கு கையாளப்படும் ஒரு யுக்தியே நிரந்தரக் குடும்பக்கட்டுப்பாடாகும். இதில் தோட்ட நிர்வாகம் விசேட கவனம் செலுத்தி நடை முறைப்படுத்துகிறது.
கடந்த பல ஆண்டு காலமாக மலையகத்தில் நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு அமல் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத் தினால் வரும் பாதிப்புக்களையும், அது அமல் நடத்தப்படும் விதம் குறித்தும், அரசு சார்பற்ற நிறுவனங்களாலும், அரசியல் தொழிற்சங்க வாதிகளாலும், பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டபோதும் இது இன்னும் நடை முறைப்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரிய விடயமாகும்.
8.2.1 அரச குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்
1978ம் ஆண்டு அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரகடனமே, தோட்டப் புறங்களில் அதிகளவு பின்பற்றப்படு வதற்கான ஆரம்பக் காரணியாகும். இந்த பிரகடனத்தின் படி அறுவைச் சிகிச்சை முறைக்கென விசேட சலுகைகள் அறிவிக்கப் Lull 6ð7.
224

இருபத்தோராம் நூற்றாண்டில் .
நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டுக்கான நிதி உதவியை அதிகரிப்பது, இது சார்பாக மருத்துவத் துறை சார்ந்த பயிற்சியை வழங்குதல், ஒவ்வொரு நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு சத்திர சிகிச்சைக்கும், அதற்குப் பொறுப்பான மருத்துவக் குழுவிற் கான விசேட கொடுப்பனவு, இச்சத்திர சிகிச்சையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு பணக் கொடுப்பனவு, விடுமுறைச் சலுகை களும் இவற்றில் அடங்கும்.
நிரந்தர சத்திர சிகிச்சை மாத்திரமே குடும்பக் கட்டுப் பாட்டுக்கான ஒரு வழி முறையல்ல. இதற்கான ஏனைய பல மாற்று வழிமுறைகள் உள்ளன. இலங்கையின் ஏனைய பகுதி களில் தற்காலிக முறைகள் ஊக்குவிக்கப்படும் போது பெருந் தோட்டங்களில் மாத்திரம் நிரந்தர சிகிச்சை முறை கூடுதலாக அமல் நடத்தப்படுகின்றது. 1975இல் 29 வீதமாக இருந்த சத்திர சிகிச்சை முறை 1987இல் 40 வீதமாகவும், 1997இல் 80 வீத மாகவும் அதிகரித்துள்ளது. ஆனால், தற்காலிக முறைகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன.
தற்காலிக நவீன முறைகளைத் தோட்டங்களில் நடை முறைப்படுத்துவதற்குப் போதிய பொருட்களும், அதை நடை முறைப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த மருத்துவர்களும் தோட்டங் களில் இன்று இல்லை. ஊசி மருந்து மற்றும் கர்ப்பப்பை சாதனம் பொருத்தப்படுமாயின், ஒரு பெண் 5 வருடங்களுக்கு மேல், பிள்ளை பெறுவதைத் தடுக்கலாம். ஆனால், இதை நடை முறைப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த பெண் வைத்தியர்கள் அவசியம். அது மலையகத்தில் இல்லாதிது பெரிய குறையாகும்,
கல்வி அறிவும், வெளியுலக அறிவும் குறைந்த பெருந் தோட்ட மக்களின் குறிப்பாக பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு என்ற போர்வையில் கட்டாய நிரந்தர சிகிச்சை முறை அமல்படுத்தப்படுகின்றது.
8.2.2 மலையகத் தமிழ் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு தேவைப்படுவது குடும்பக் கட்டுபாடா?
“மலையக தமிழ் மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான திறவு கோல் நிரந்தர அறுவை சிகிச்சை மூலமான குடும்பக் கட்டுப்பாடு மட்டும்” தான் என பிரசாரம் செய்வதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் ஏனைய சமூக நலன்புரி தேவைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமலும், புறக் கணிக்கப் பட்டும் உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன.
225

Page 114
கீத பொன்கலன்
மலையகத் தமிழ் மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டை சிபாரிசு செய்பவர்களால் முதன்மை கொடுக்க வேண்டிய ஏனைய பல அம்சங்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் பெரும் பாலானவை இன்னும் பாவனைக்கு உதவாத பழைய லயன் முறையிலேயே உள்ளன. பெரும்பாலான தோட்டங்களில் மலசல கூடம், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. 40 வீதமானவர்களுக்கு இன்னும் அடையாள அட்டை இல்லை. கணிசமான வாக்காளர்கள் இருந்தும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பதிய மறுக்கப்படுகின்றது. பெரும் பாலான தோட்டத் தொழிலாளர்கள் இன்று தமது சுகவீனங் களுக்கு தமது சொந்தப் பணத்தில் மருந்து வாங்கக் கட்டாயப் படுத்தப் படுகின்றார்கள்.
கருத்தடை நிரந்தரச் சிகிச்சைக்காக ஒருவருக்கு 500 ரூபாவினைக் கொடுக்க முன்வரும் தோட்ட நிர்வாகம், தோட்ட மருத்துவர்கள், மருந்துகளுக்கான விலைப்பட்டியலை கையளிக்கும் போது மாத்திரம் எவ்வித காரணமும் இன்றி அவற்றைப் பாதியாகக் குறைத்து விடுகின்றனர். எனவே, இந்தத் தேவைகளை சரிவரப்பூர்த்தி செய்வதன் மூலமாகத்தான் மலையக மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
பெருந்தோட்ட கம்பெனிகளின் ஒரே நோக்கம் முடிந்தளவு இலாபம் ஈட்டுவதாகும். அதற்காக எந்தெந்த விதத்தில் தொழி லாளர்களின் சமூக நலனுக்காக செலவுகளைக் குறைக்க முடி யுமோ அந்தளவுக்கு இலாபத்தைக் கூட்ட முடியும், 1990இல் தொழிலாளர் எண்ணிக்கை 3,84,168 ஆக இருந்தது. 2001ம் ஆண்டு 2,73,513 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை யைக் குறைத்து இலாபத்தைக் கூட்டுவது கம்பெனிகளின் இன்னொரு அணுகுமுறையாகும்.
பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் கம்பெனிக்கு ஏற்படும் இலாபம் தோட்டத் தரவு கணக்கீடுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதை அட்டவணை 8.2.1 விளக்கு கின்றது. 1996ஆம் ஆண்டு தரப்பட்ட இந்த அட்டவணையின் தரவுகளின் படி 2003ஆம் ஆண்டு அட்டவணை கணிக்கப்பட் டுள்ளது.
226

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை - 8.2.1 நிர்வாக செலவு விபரம் - தோட்டத்தில் பிறக்கும் ஒரு குழந்தை அடிப்படையில் நேரடிச் செலவுகள்
விபரம் 1996 2003
மருத்துவரைச் சந்தித்தல், உதவிகள் ரூபா ரூபா மகப்பேற்றுக்கு முன் 10 முறை 100 1000 200 2, Out) மகப்பேற்றுக்கு பின் 3 முறை 100 500 200 1, 000
பேறுகால விடுமுறை 72 நாட்கள் 95.45 6, 872 147 10, 584
உணவளித்தல் (வயது - 1) 80 960 150 7, 800 ஒரு பால் பாக்கெட் 12 மாதம்
உணவளித்தல் (வயது 2-10) 17 2, 754 24 3, 888 13கி.கி கோதுமை மா 1 மாதம் A. 12-9 வருடம்
மருத்துவ பராமரிப்பு 13 வருடம் (வயது 2-16 வருடம்) 00 1, 500 200 3,000
மொத்தச் செலவு 13, 586 22, 272
மறைமுக செலவுகள்
பிள்ளை காப்பகத்திற்கான செலவு $205 பி.கா. 12 மாதம் 4,370 52, 440 6,000 72, 000 ஒரு உயிகா. 280 நாட்கள் 115 32, 200 147 41, 160
சராசரி 30 பிள்ளை ஒரு காப்பகம் (52,440 + 32, 200) x 5 Qu(tb5 Lub SS S 14, 106
30
2003
சராசரி 25 பிள்ளை ஒரு காப்பகம் (72, 000 + 41, 106) x 5 வருடம் SSMSSSSSSMMMMCCSSSSSCCCCCCCSCCCCSCSSSMMSSS SS S 22, 632
25
ஒரு குழந்தைக்கான மொத்த செலவு நேரடி + மறைமுக = 13, 386 + 14, 106 27, 692 நேரடி + மறைமுக = 22, 272 + 22, 632 44, 904
(ஆதாரம்: Plantation Management in the New Millenum - B. Sivaram.)
227

Page 115
கீத பொன்கலன்
இந்த அட்டவணையின் படி ஒரு குழந்தை பிறந்தால் 1996ஆம் ஆண்டு கம்பெனி 27,692 ரூபாவும், 2003ஆம் ஆண்டு 44,904 ரூபாவும் நட்டமடைகிறது. இதிலும் பார்க்க நிரந்தர சத்திர சிகிச்சைக்கு வழங்கும் 500 ரூபாவும், 7 நாட்களுக்கான சம்பளத்துடன் விடுமுறையும் பெரிய இலாபத்தைக் கொடுக்கும். இதைவிட வேறு மறைமுக இலாபங்களும் குழந்தைக் குறைப் பால் கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன.
8.2.3 சமுக நல உத்தியோகத்தர் குறைப்பு
தோட்டத் தொழிலாளருக்கான சமூக நலன்புரி உத்தி யோகத்தரும், மற்றும் தோட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை தொகையைக் குறைக்க முடிந்திருக்கின்றது. இதனை அட்ட வணை 8.2.2ல் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை - 8.2.2 சமூகநல சேவையாளர் குறைப்பு
சமூக சேவையாளர் 1990 1993 1995 1996 799Z
சனத்தொகை 806,544 838, 518 849, 646 863, 427 871, 679
உதவி, பதிவு செய்யப் பட்ட மருத்துவ
சேவையாளர்கள் ア3 SS S3 71 76
தோட்ட மருத்துவ
உதவியாளர்கள் 141 119 O 96
மருந்து கலப்பவர்கள் 200 186 178 185 18S
பதிவு செய்யப் பட்ட பேறுகால
பணியாளர்கள் 330 320 3O3 29 297
நலன்புரி சேவையாளர்கள் 09 388 361 375 371
பிள்ளை காப்பாக
சேவையாளர்கள் 1513 1511 1468 1474 1482
(ggrgh: Health Bulletin (1995-1997) PHSWT)
கம்பெனிகள் தோட்டத் தொழிலாளாகளின் வேலைப் பளுவைக் கூட்டியது போல், தோட்ட சமூக சேவையாளர் களுக்கும் வேலைப் பளுவை அதிகரித்திருப்பதை அட்டவணை 8.2.3 தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது.
28

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை - 8.2.3 சனத்தொகைக்கேற்ற சேவையாளர் தொகை
சேவையாளர்கள் 1990 1997
சனத்தொகை 806, 544 867, 084
ஒரு மருத்துவ சேவையாளருக்கான சனத்தொகை 3,769 5,041
ஒரு பேறுகால பணிமகளுக்கான சனத்தொகை 2, 444 2, 919
ஒரு நலன்புரி உத்தியோகத்தருக்கான சனத்தொகை | 1, 972 2, 337
ஒரு பிள்ளைக் காப்பாளருக்கான சனத்தொகை 533 S8S
(ggitutb: Health Bulletin (1995 - 1997) PHSWT)
அறுவை மடத்துக்குக் கூட்டிச் செல்வதற்காக தொழி லாளர்கள் போலியான காரணங்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றப்படுகிறார்கள். சத்திர சிகிச்சை செய்யப்படும் எண் னிக்கைக்கு ஏற்ப வைத்தியர்களுக்கும், சம்பந்தப்பட்டவர் களுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால், தொழி லாளர்கள் மீது நிர்வாகத்தாலும், தோட்ட சமூக நல சேவை யாளராலும், ஒரு சில தலைவர்களாலும் நேரடியாகவும், மறை முகமாகவும் பலவித அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. வேலை நீக்கம் செய்யப்படுதல் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
20 வீதமாக உள்ள தமிழ் தோட்ட சமூக நல சேவையாளர் களில் ஒரு சிலர், இந்த அநீதியான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது அவர்களுக்கு நிர்வாகத்தினால் நேரடி எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில தமிழ் சேவை யாளர்கள் கம்பெனிக்கு ஆதரவாக நிரந்தரக் குடும்பக் கட்டுப் பாடு கட்டாயம் தேவையென்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
உதாரணமாக ஒரு மருத்துவ சேவையாளர் “பெண்கள் துப்புரவாய் இருப்பதற்கு இது தேவை எனப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இன்னொரு மருத்துவர் “ஒரு கை, கால், கண் இல்லாதவர்கள் உயிருடன் வாழவில்லையா? அதே போல் நிரந்தர சத்திர சிகிச்சை செய்பவர்கள் சாகமாட்டார்கள்” என பகிரங்கமாக ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால் வெளிநாட்டுப் பணத்தால் இவர் களுக்குப் பயிற்சி கொடுத்து, இவர்களின் சிந்தனையை கம்பெனி யின் எண்ணத்துக்கு இசைவாக மாற்றியுள்ளனர்.
229

Page 116
கீத பொன்கலன்
8.2.4 குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள்
தொழிலாளரின் நன் மைக்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான அமைப்பு ஒன்றில் 8 காரியலாயங்களின் செலவு ஒரு வருடத்துக்கு 50 மில்லியன் ரூபா. ஆனால், இந்தப் பணத்தில் ஒரு துளிதானும் தொழிலாளருக்குச் செல்வதில்லை.
கம்பெனிகளோடு சேர்ந்து இந்த அநீதியான செயலை வலுப்படுத்த சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் துணைபோவது ஒரு வருந்தத்தக்க செயலாகும். விசேடமாக ஐக்கிய நாடுகள் குடும்பத் திட்டமிடல் சபை, இலங்கை குடும்பத் திட்டமிடல் சபை, மற்றும் இலங்கை சனத்தொகை சேவை என்பன தோட்டங்களில் நடமாடும் சேவை மூலமாக நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை டிரஸ்டின் உதவியோடு நடைமுறைப்படுத்து கின்றன. இவர்களுடைய காரியாலயங்கள் கொழும்பிலே அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய பணிகளுக்குக் கூடுத லாக மலையக மக்களே பலி ஆகின்றனர். ஆனால், ஏனைய சமூக மக்கள் ஏமாறாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின் றார்கள். உதாரணமாக மேல் குறித்த நிறுவனங்கள் வடகிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள அகதிகள் முகாம்களுக்குத் தங்களின் திட்டங்களோடு சென்றபோது, முகாம்களைச் சேர்ந்த மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப நலத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் தாயின் ஆரோக்கியம் கருதி முதலாவது குழந்தைக்கும், அடுத்து குழந் தைக்கும் இடையே போதிய இடைவெளியை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அடுத்தது குழந்தைகள் பெறக் கூடிய தகுதி வாய்ந்த சோடிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் அதை எப்படி நிவர்த்தி செய்வது, மற்றது தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை கொடுப்பதேயாகும். ஆனால், இந்த நோக்கங்கள் பெருந் தோட்டத்துறையில் பின்பற்றப்படுவதில்லை. தற்காலிக நவீன கருத்தடை முறைகளைப்பற்றி அறிவுறுத்தக் கூடிய தமிழ் சமூக சேவையாளர்கள் பெரும்பாலான தோட்டங்களில் இல்லை.
8.2.5நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டால் - பாதிப்புகள்
அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண்களும் ஆண் களும் சில வருடங்களுக்குப் பின் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறப்படுகின்றது. உதாரணமாக கடின வேலைகள், குடும்பக் கட்டுப்பாடு செய்த தாயின், குழந்தைகள்
230

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இறக்கும் பட்சத்தில் குடும்பத்தில் குழந்தைகள் இல்லாமல் போகின்றது. இலங்கையில் நிரந்தர அறுவைச் சிகிச்சை செய்த 27 வீதமானவர்களில் 4 வீதமானவர்களே 30 வயதுக்குட்பட்ட வர்கள் என அறிக்கை கூறுகின்றது. ஆனால், மலையகத்தில் 95 வீதமான 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த நிரந்தர அறுவைச் சிகிச்சை பலவந்தமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த நிரந்தர அறுவை சிகிச்சை திட்டத்தின் மூலம் வருடத்துக்கு சுமார் 3000 - 5000 வரை குழந்தைகளின் பிறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மலையகத்தில் புதிய கல்வித் திட்டத்தின் பிரகாரம் ஆரம்பப் பாடசாலைக்கு சிறு வர்கள் இல்லாததனால், பல பாடசாலைகள் மூடப்பட்டும் இன்னும் சில பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும். ஒரு சில தோட்டங்களில் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களும் இன்னும் ஒரு சில தோட்டங்களில் அரசு சார்பற்ற ஸ்தாபனங்களால் நிர்வகிக்கப்பட்ட முன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலமாக சிறுவர், இளைஞர்கள், யுவதிகள் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதியோர் தொகை கூடிக்கொண்டு போகின்றது. இந்தக் கம்பெனிகளோ, டிரஸ்டோ முதியோருக்கென எந்தவிதமான நலன்புரித் திட்டங் களையும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனென்றால், இவர் கள் நாட்டுக்கும் கம்பெனிகளுக்கும் இரத்தம் சிந்தி மாடாக உழைத்துக் கொடுத்து இன்று செல்லாக் காசாகி விட்டார்கள்.
1959ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கின் படி சிறு பான்மையினர் என்ற பதத்தில் மலையகத் தமிழர்களே முதலிடத் தில் இருந்தனர். இன்று அவர்கள் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் மலையகத் தமிழ் மக்கள் பலவிதமான இலங்கை இந்தியச் சட்டங்களின் கீழ் கணிசமானோர் நாடு கடத்தப்பட்டது. பின்பு பலர் நாட்டில் ஏற்பட்ட இன வன்செயல் மூலமாக படுகொலை செய்யப்பட் டுள்ளனர். ஆனால், 1974இல் இருந்து இன்று வரை நிரந்தர அறுவைச் சிகிச்சை யுத்தமில்லாமல், சத்தமில்லாமல் மலையகத் தமிழ் மக்களின் தொகையை குறைத்துக் கொண்டிருக்கின்றது.
இன்று பல நாடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டு முறையினால் சனத்தொகை குறைக்கப்பட்டு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றீடாக குழந்தைகளின் பிறப்பு வீதத்தைக் கூட்டுவதற்குப் பலவிதமான ஆக்க முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இன்னும்
23

Page 117
கீத பொன்கலன்
விசேடமாகக் கூறுவதென்றால் சீனாவில் பெரும்பான்மை மக்களிடையே குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகக் கடைப் பிடிக்கப்பட்டபோதும் அது சிறுபான்மையினர் மத்தியில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்துபவர்கள் சிந்தித்து தங்கள் செயல் திட்டத்தை மாற்றா விட்டால் மலையகத் தமிழ் இனத்தை அழித்தவர்கள் என்ற வகையில், வரலாறு இவர்களை மலையகத் தமிழ் சமூகத் துரோகிகள் என முத்திரைக் குத்தும்,
இன்று மலையகத்தில் கம்பெனிகளுடைய, டிரஸ்டினுடைய் அதிகார ஆதிக்கத்தாலும், பணப் பலத்தாலும் ஏற்படுத்தப் பட்ட மாயையான குடும்பக் கட்டுப்பாடு என்றால், அறுவைச் சிகிச்சைதான் என்ற மாயைக்கு மலையகத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டு முழுச் சமூகமும் மலட்டுக் கலாச்சாரம் என்ற ஆதிக்கத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தக் கலாசாரம் மாற்றப்படாவிட்டால் மலையகத் தமிழ் சமூகம் ஒரு அபாய நிலைக்கே தள்ளப்படும்.
பெருந்தோட்டத்துறைக்கென ஒரு பிரத்தியேக சமூக மேம்பாட்டு அதிகார சபை நியமிக்கப்பட வேண்டும். இது கம்பெனி, டிரஸ்ட் கட்டுப்பாடு இல்லாமல் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும், தோட்ட சமூக மேம்பாட்டுச் சேவையாளர்களை இச்சபையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
இந்த மாற்றத்தில் முக்கிய பங்காளியான மலையகத் தமிழ் மக்கள், தோட்டத்தில் சத்திர சிகிச்சைக்குப் பேரம் பேசி உழைக்கும் தரகர்கள், அரசு சார்பற்ற அமைப்புகளை இனங் கண்டு, இவர்களை விரட்டி அடிக்கக் கூடிய அளவுக்கு தொழி லாளர்கள் விழிப்புப் பெற வேண்டும். நிரந்தர குடும்பக் கட்டுப் பாட்டுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் இருந்து எழுப்பப்பட வேண்டும். முற்போக்குச் சிந்தனை உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் இதற் கெதிரான எதிர்ப்பை செயல்முறையில் காட்டுவதற்கு தொழி லாளர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மலட்டுக் கலாசாரம் தொடர்ந்து நடைபெறும்.
தினக்குரல் 08. 08, 2003, வீரகேசரி 24, 08, 2003, fly (5 Fif 31. 0.8. 2003
Sła 18. stol -K. S. ox (e. Ko & t
232

அத்தியாயம் - 9
மலையகத் தமிழ் சிறுவர்களுக்கு எட்டாத உரிமைகளும் கிட்டாத முன் பள்ளிக்கல்வியும்
9. 1 முன் பள்ளிக் கல்வியின்
முக்கியத்துவம் அறியப்பட வேண்டும்.
9.2 மலையக பெருந்தோட்டங்களில்
முன் பள்ளிகள் ஏன் அவசியம்,
M 9.3 மலையகத்தின் முன் பள்ளி கொள்கை பத்திரத்திற்கான ஆலோசனைகள்.
9.4 அறிவும் அகமும் வளர குழந்தைகள் ஒடி விளையாட வேண்டும்.
9.5 சிறாரிடமிருந்தே சமுதாய
மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்.
233

Page 118
234
அத்தியாயம் - 9
மலையகத்தமிழ் சிறுவர்களுக்கு எட்டாத உரிமைகளும் கிட்டாத முன்பள்ளிக்கல்வியும்
சிறுவர் உரிமைகளுக்கு இன்று பலநாடுகளிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சர்வதேச அரங்கில் ஒருமுக்கியஇடத்தினை பிடித்துள்ளது.
இலங்கையிலும்,இதற்காக விஷேட அதிகாரசபை
ஏற்படுத்தப்பட்டு, சிறுவர்கள் தங்கள் உரிமை களை அறிவதற்காக,பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதோடு செயற்பாடுகளும் நடைமுறை படுத்தப்படுகின்றன. ஆனால் அதே வேளை யில் மலையகத்தில் அதிகாரத்திலுள்ளவர்கள் 'சிறுவர் உரிமைகளை மீறுகின்றனர். எப்படி மலையகத் தமிழ் சமூகத்தை கட்டுப்படுத்த முடியுமோ, அதேபோல் மலையக தமிழ் சிறுவர் களையும் கட்டுப்படுத்த முனைகின்றனர். சிறுவர்களை, சிறுவர் காப்பகத்தில் அடைத்து வைப்பது, இவர்களின் முன் பள்ளி கல்வி உரிமையை மறுக்கப்படுவது. பாலியல் துஷ்பிர யோகம் பாவிக்கப்படுவது ஆகிய சிறுவர் உரிமை மீறல்களை நாளாந்தம் காணக் கூடிய தாக உள்ளன.

9.1 முன் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் அறியப்பட வேண்டும்
சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கென ஐ.நா. பொதுச் சபையினால் 1989இல் நிறைவேற்றப்பட்ட 'சிறுவர் உரிமைச் சாசனத்தை 1991ஆம் ஆண்டில் இலங்கை உறுதிப் படுத்தியது. 1998ஆம் ஆண்டு “சிறுவர் சாசனம்’ ஒன்றை உரு வாக்கி பாராளுமன்றத்தில் அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான விதி முறைகளும் வர்த்த மானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனங் காண்பதற்காக “சிறுவர் பாதுகாப்பு அதிகாரி” ஒருவர் அரசாங் கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தெற்காசிய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான சிறப்பம்சமாக உள்ளது.
ஆனால் உயர்மட்ட ரீதியிலான உரிமை மறுப்புகளைச் சந்தித்து வரும் மலையகத் தமிழ் சிறுவர்களுக்கு இந்தச் சிறுவர் சாசனத்தைப் பற்றிய அறிவும் அதன் செயற்பாடுகளும் எப்போது கிடைக்கப் போகின்றது என்ற வினாவும் எம்முன் பூதாகர மாகத் தோன்றுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய சிறுவர் களின் நிலைமையை உணர்ந்து எலன் கீ (Ellen Kee) 20ஆம் நூற்றாண்டை சிறுவர்களின் நூற்றாண்டாகப் பிரகடனப் படுத்த வேண்டும் என்று கோரியதுடன் சிறுவர் நூற்றாண்டு (The Century of the Child) 6T657 pupil 606 uuplb Gausful 'll Tit.
இதன் தாக்கத்தின் பயனாகப் பல நாடுகளிலும் இலங்கை யிலும் சிறுவர்களுக்கான ஆரம்பக் கல்விக்கூடங்கள் மொன்டி சோரி, நர்சரி, பாலர் பாடசாலை, முன்பள்ளி போன்ற பல பெயர்களில் தோன்றலாயின.
235

Page 119
கீத பொன்கலன்
9.1.1 மலையகத்தில் முன் பள்ளிகள்
ஆனால் 20 ஆம் நூற்றாண்டு முடிவடைய 27 மாதங்களே மீதமிருக்கும் இந்த நேரத்தில் கூட, மலையக தமிழ்ப் பிள்ளை களுக்கு முன் பள்ளிக் கல்வி முறையாக அமைக்கப்படவில்லை என்பது ஒரு துரதிஷ்டவசமான செயலாக இருப்பது மட்டு மன்றி, மலையக தமிழ் சிறுவர்களின் உரிமையை அவமதிப் பதாகவும் இருக்கின்றது.
மலையக தமிழ் சிறுவர்களின் இந்த உரிமை மதிக்கப்பட வேண்டுமென்றால், நிலை நாட்டப்பட வேண்டுமென்றால், மலையகத்தில் ஏறக்குறைய 2000 முன்பள்ளிகள் அமைத்தாக வேண்டும்,
மலையகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண் னிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சமாக இருக்கின்ற யதார்த்த நிலையில் 2000ஆம் ஆண்டிலாவது இந்த முன்பள்ளிகள் உரு வாக்கப்பட்டேயாக வேண்டும் என்பதை மலையக சிறுவர்கள் மீது அக்கறை கொண்ட, அன்பு கொண்ட எவரும் மறுக்க முடி யாது. ஆனால் இது நடைபெறுமா என்பதுதான் கேள்விக்குறி.
9.1.2 முன்பள்ளிக்கு தடைகள்
முன்பள்ளி பாடசாலைகள் மலையகத்தில் சீராக அமை யாததிற்குத் தடையாக இருப்பவற்றுள் இரண்டு பிரதான காரணிகளை இங்கு மேற்கோளாகக் காட்டலாம்.
ஒன்று முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை உணராத பெற்றோர், மற்றது தோட்டத் துறையின் நலன்புரி சேவைகளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் டிரஸ்ட் அமைப்பின் செயற்பாடுகள்.
ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய “பிள்ளைக் காம்பரா”வில் சில வசதிகளைச் செய்து கொடுத்து பிள்ளை காப்பகம் என்று அழகாக பெயர் சூட்டி அதையே முன்பள்ளி யாகக் காட்டுகின்றது டிரஸ்ட் அமைப்பு.
ஒரு சில இடங்களில் அரசு சார்பற்ற நிறுவனங்கள், சமய தாபனங்கள், நலன்புரி மன்றங்கள் போன்றவை முன்பள்ளி களை நடத்துவதற்கு டிரஸ்ட் அமைப்பு, தடையாகவும் இருந்து வருகின்றது. இதனால் டிரஸ்ட் அமைப்பு மலையக தமிழ்
236

இருபத்தோராம் நூற்றாண்டில் .
சிறுவர்களின் நலனைப் பேணுகின்றதா? அல்லது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றதா என்ற சந்தேகம் மலையக தமிழ் சிறார்கள் மீது அக்கறை கொண்டோர் மத்தியில் பரவலாகத் தோன்ற ஆரம்பித்துள்ளது. பிள்ளைக் காப்பகத் தில் ஒரு முன்பள்ளி நடத்தும் சூழலோ, அல்லது சிறுவர்களின் மொழி, சமயம், கலாசாரம் அறிந்த முழுமையாகப் பயிற்றப் பட்ட ஆசிரியர்களோ இல்லை என்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
அதுமட்டுமல்ல, அதில் கடமையாற்றுபவர்களும், உத்தி யோகஸ்தர்களும் தங்களது பிள்ளைகளை இந்த பிள்ளைக் காப்பகம் முன் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆனால் தங்களது சுயநலத்திற்காக ஒன்றுமறியாத பெற்றோர்களைத் திசை திருப்பி நிருவாக மட்டத்திலிருந்து இவர்கள் நெருக்கடிக்கு உள்ளாவதற்குத் துணை புரிகிறார்கள்.
முன்பள்ளிகளைப் பற்றிச் சரியாக அறிந்திராத பெற்றோர் பல இடங்களில் பிள்ளைக் காப்பகம் முன் பள்ளிகளை மெளன மாக ஏற்றுக் கொண்டாலும் சில இடங்களில் பெற்றோர் வாதாடி தமது பிள்ளைகளின் உரிமையை நிலை நாட்டியுள் ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் 5 வயதுக்குட்பட்ட மலையக தமிழ் பிள்ளைகளுள் 20 சதவீதமானவர்கள் கூட பிள்ளைக் காப்பகத் திற்கு செல்வதில்லை என்பதுதான் உண்மை. பிள்ளைக் காப்பகத்தில் தமது தாய்மொழியைச் சரியாக கற்றுக் கொள்ள முடியாதிருப்பது, தூரம், வேலை, வீட்டிலிருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இதற்குச் சாதகமாக அமைகின்றன.
ஆகவே மலையகத்தில் பிள்ளைக் காப்பகம் யாருக்காக? நிருவாகத்திற்காகவா? பிள்ளைக் காப்பாளர்களுக்காகவா? அல்லது டிரஸ்ட் அமைப்புக்காகவா?
9.1.3 முன்பள்ளிக்கான திட்டம்
இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில்கூட 3 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்காக இன்று மலையகத்தில் 200க்கும் மேற்பட்ட முன் பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன.
237

Page 120
கீத பொன்கலன்
அரசு சார்பற்ற நிறுவனங்களும், மத தாபனங்களும் சில பெற்றோரும் முனைந்து செயல்படுவதே இதற்கு காரணம். ஆனால் முழுமையாக வசதிகளைக் கொண்ட முன் பள்ளிகளை நடத்தக்கூடிய சூழல் இன்னும் உருவாக்கப்படவில்லை.
முழுமையான ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர்களுக்கான சம்பளம், கட்டிட வசதி போன்றவை பூர்த்தி செய்யப்பட வேண்டியதாக உள்ளது.
சிறுவர் சாசனத்தின் சரத்து 30ஐ இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “சிறுபான்மை இனச் சிறுவர்களும் பூர்வீக மக்களின் பிள்ளைகளும் தங்களது மொழி, கலாசாரம், சமயம் ஆகியவற்றை சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய உரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்பதுதான் அது.
1972ஆம் ஆண்டு பாடசாலைக்கு பிரவேசிக்கும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டது. (5இல் இருந்து 6) இதனால் ஆரம்ப பாடசாலைக்குச் செல்வதில் மேலும் ஒரு வருடம் பின் போடப்படுகின்றது. அறிவு வளர்ச்சியைப் பெறுகின்ற இந்தப் பருவம் வீண் விரயமாக்கப்படுகின்றது. இந்தப் பருவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த எவரும் முன் பள்ளிக் கல்விக்குத் தடையாக இருக்க மாட்டார்கள். கோவில் திருவிழாக்களை சிறப்பிக்க பேதங்களைத் துறந்து எப்படி மக்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்களோ அதே உத்வேகத்துடன் முன்பள்ளிகளுக் காகவும் மக்கள் செயற்பட வேண்டும்.
தமக்கு கிடைக்காத வரப்பிரசாதங்களைத் தமது பிள்ளை களுக்கு பெற்றுக் கொடுக்க அயராது உழைக்க வேண்டும். உதவிக் கரங்களைச் சரியாகப் பயன்படுத்தி முன் பள்ளிகளை வளர்த்தெடுக்க வேண்டும். பெற்றோரும், சமூகமும் ஏன் டிரஸ்டும் கூட கல்வி வாய்ப்பு, குழந்தைகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களது உரிமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.
எனவே 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலாவது மலை யகத்தின் முன் பள்ளித் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
தினக்குரல் 02, 03. 1998
238

9.2 மலையக பெருந்தோட்டங்களில் முன் பள்ளிகள் ஏன் அவசியம்?
இன்று மலையகத்தில் பாலர் பாடசாலைகளைப் பற்றி பரவலாக பேசப்படுகின்றது. பாலர் பாடசாலை என்பது (Free School) இலவச பாடசாலை அல்ல. அது பாலர்களுக்குப் பாட சாலைக் கல்வியைப் பெறுவதற்கு முன் அவர்களை அதற்கு தயார் படுத்தும் முன் கல்வி ஆகும். எனவே இந்தக் கல்வியை வழங்கும் பள்ளிகள் “முன் பள்ளிகள்” என அழைக்கப்படுகின்றன.
இன்று நமது நகரங்களிலும், கிராமங்களிலும், அநேக முன் பள்ளிகள் நடத்தப்படுகின்றன, ஆனால் மலையகத்தில் அநேகமான தோட்டங்களில் முன் பள்ளிகள் இல்லை. மலை யக தமிழ் மக்கள் மத்தியில் முன் பள்ளிகளின் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
9.2.1முன் பள்ளிகள் அமைக்க வேண்டியது ஏன்?
மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஆழுமை வளர்ச்சி அதாவது அதன் உடல், உள வளர்ச்சி இக்கால கட்டத்திலேயே மிகவும் இலகுவாக வளர்ச்சி பெறுகின்றது. இந்த வளர்ச் சியைப் பெறக்கூடிய வசதிகள் நாம் வாழும் லயன் அறைகளில் குழந்தைகளுக்குக் கிடைப்பது இல்லை. பிள்ளைக் காப்பகங் களிலும் (சிறுவர் நிலையத்திலும்) கிடைப்பது இல்லை.
O ஒரு பிள்ளை இந்த வளர்ச்சியைப் பெறுவது அதன் உரிமை
ஆகும்.
O நமது மலையக சமூகம் எல்லாத் துறைகளிலும் பின்தங்கி, முன்னேற முடியாத நிலையில் உள்ளது.இதன் காரணமாக நமது பிள்ளைகளின் அபிவிருத்தியும், கல்வி வளர்ச்சியும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் லயன் அறைகள் ஒரு பிள்ளையின் உண்மையான உடல், உள வளர்ச்சிக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இல்லை.
239

Page 121
கீத பொன்கலன்
O
240
நமது மலையகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிள்ளைக் காப்பகங்களில் முடங்கிக் கிடக்கின்றார்கள். பெருந்தொகையான பிள்ளைகளை ஒருவரே பராமரிக்க வேண்டி இருப்பதால் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு அங்கு எதுவித வாய்ப்பும் கிடைப்பதில்லை.
ஆரம்பகாலத்தில் பகல் நேரத்தில் தேயிலைச்செடிகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பிள்ளை மடுவங் களும், பள்ளிக்கூடங்களும் ஆரம்பிக்கப்பட்டு,பிள்ளைகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். இதன் காரணமாகவே முன்பள்ளி செல்ல வேண்டிய வயதுள்ள பிள்ளைகளும் இன்னும் பிள்ளை மடுவங்களில் இருக்கும் நிலை தொடர் கின்றது. சிறுவர் நிலையத் தாதிகளில் 80 சதவீதமானவர் களுக்கு நமது பிள்ளைகளின் தாய் மொழியான தமிழ் முறையாக தெரியாதபடியால், நமது பிள்ளைகளின் மொழி வளர்ச்சியும், ஆளுமை வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப் படுகின்றன.
மலையகத்தில் தாய் தந்தையரின் கல்வி, அறிவுக் குறை வினாலும், குறிப்பாகத் தங்கள் பிள்ளைகளுக்காக தாயினால் போதிய நேரம் செலவிட முடியாது இருப்பதனாலும் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.
குடும்பத்தில் அல்லது சுற்றாடலில் நடைபெறும் சண்டை சச்சரவுகளும், பேசப்படும் மோசமான வார்த்தைகளும் குழந்தைகளிடம் பயந்த சுபாவத்தை ஏற்படுத்தி பிள்ளையின் மூளை வளர்ச்சியையும் உள வளர்ச்சியையும் பாதிக்கின்றன.
குழந்தைகளுக்கு இயற்கையாகவே பல ஆற்றல்கள் உள்ளன. திறமைகள் குவிந்துள்ளன. அவற்றை வளர்ப்பதற்கு அவர் களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படுவதில்லை.
பெரியவர்கள் போலவே சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் கொடுப்பதால் சிறுவர்கள் உattதியாக பாதிக்கப்படுகின்றார்கள்.
குழந்தையின் 3 வயதுக்கு உட்பட்ட காலம் அதன் வாழ்க்கை யின் மிக முக்கியமானது என தத்துவஞானிகள் சொல் கிறார்கள். அதனால்தான் நமது குழந்தைகள் பணம், பொருள், தங்கம், இரத்தினம் என்பவற்றை விட பெறு மதியுடையவர்கள்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
9.2.2 குழந்தைகளுக்கு முன் பள்ளி ஏன்?
O
O
O
பிள்ளைகள் மலரா மொட்டுக்கள். அந்த மொட்டுக்கள் முழுமையாக மலர பிள்ளைகள் விளையாட வேண்டும்.
ஆடவும் பாடவும் வேண்டும்/அனுபவம் பெற வேண் இயல்பாகவே அறிவுகளைப் பெற வேண்டும்.
தாங்களாகவே சுதந்திரமாக உலகினைப் பற்றி அறியவேண்டும்.
இந்த வாய்ப்பை முன் பள்ளிகள் கொடுக்கின்றன. நாங்களும் மனிதர்கள் என்ற உணர்வைக் கொடுக்கின்றது.
தன்நம்பிக்கையை வளர்கின்றது.
நல்ல பழக்கங்களை கற்க உதவுகின்றது.
சமூக பண்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.
தன்னை மதிக்கவும் மற்றவர்களை மதிக்கவும் தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது.
தெளிவாகப் பேசத் தெரிந்து கொள்ள உதவுகின்றது.
மொழிகளைக் கற்க உதவுகின்றது.
கூடி வாழும் நல்ல பண்பை குழந்தை கற்க உதவுகின்றது.
குழந்தையின் பயந்த சுபாவத்தை நீக்குகின்றது.
இறுதியாக இவை எல்லாவற்றின் மூலமாகவும் குழந்தையின் எதிர்காலக் கல்விக்கு அடித்தளமிடப்பிடுகின்றது.
9.2.3 தோட்டங்களில் முன்பள்ளி அமைய அவசியமானவை எவை?
O
O
O
தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர்களின் உண்மையான ஆர்வம்.
முன்பள்ளிநடத்த ஓர் இடம். முன்பள்ளியைநிர்வகிக்கபெற்றோரால் அமைக்கப்பட்ட குழு. முழுமையான விஞ்ஞான ரீதியில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியை.
ஆசிரியருக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம். முன் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், தளபாடங்கள்.
24

Page 122
கீத பொன்கலன்
9.2.4 முன் பள்ளிகளின் வசதிகளை அதிகரிக்க பெறக்கூடிய வேறு வளங்கள்
O
பாராளுமன்ற /மாகாணசபை/பிரதேசசபை உறுப்பினர் களின் நிதி டிரஸ்ட் நிறுவனத்தில் உள்ள நிதியும் வளங்களும், அரசு சார்பற்ற நிறுவனங்களிடமுள்ள வளங்கள் நிதி, தோட்டகோயில் நிதி. தோட்டமன்றங்கள் /அமைப்புகளின் நிதி. தொழிற்சங்கங்களின் நிதி.
சமய நிறுவனங்களின் நிதி,
நன் கொடைகளினால் ஆன பொது நிதி / தோட்ட நிர்வாகங்களின் வளங்கள் நிதி
9.2.5 முன் பள்ளிகளை நடத்தும் பொறுப்பை யார் யார் ஏற்கலாம்?
242
பெருந்தோட்ட மக்கள். தோட்டமன்றங்கள்/அமைப்புகள். கோயில் சங்கங்கள்/தோட்ட குழுக்கள். அரசு சார்பற்ற நிறுவனங்கள். பெண்கள் அமைப்புகள்/இளைஞர் அமைப்புகள். பிரதேச ரீதியான சமய அமைப்புகள். அகில இலங்கை ரீதியான சமய அமைப்புகள்,
துண்டு பிரசுரம் 8-8-1998
0 0 1 0 8. ox oxo 0x (X
“இறையரசு எனும் புதிய வரலாற்றை உருவாக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் போராட வேண்டும் என்பது நற்செய்திகள் எதிர்பார்ப்பாகும்.”
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ

9.3 மலையகத்தில் முன்பள்ளிகான கொள்கைக்கான ஆலோசனைகள்
மலையகத்தில் முன் பள்ளிக்கான எண்ணக்கரு இரு தசாப்தங்களுக்கு முன்பே உதயமாக்கப் பட்டது. ஆனால் இதை நடைமுறைப் படுத்து வது ஏனைய சமூகங்களிலும் பார்க்க மிகக் கடின மானதும், அதிகார மட்டத்திலிருந்து, பலவித மான எதிர்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ஒரு சில நிர்வாகங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் 1992ல் இருந்து பெருந்தோட்ட சமூகநலத் திட்டங்கள், டிரஸ்ட் மூலமாகவேநடைமுறைப்படுத்தியதால், ஏனைய அமைப்புகள் முன் பள்ளிநடத்துவதற்கு எதிராகச் செயற்படுகின்றது.
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஒரு சில நிர்வாகங்களின் உதவியோடு கிட்டத்தட்ட 200 முன் பள்ளிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
டிரஸ்டின் கொள்கையின்படி பிள்ளைப் பராமரிப்பு நிலையமும், முன் பள்ளியும் ஒன்று, ஒரே கட்டிடத்தில் நடத்தப் பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில், செயலில் ஈடு படுத்தப்படுகின்றது. அதாவது 3 மாதக் குழந்தையும் 5 வயதுக் குழந்தையும் ஒரே இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது முடியாத காரியம்.
இதை நடத்துகின்றவர்கள் பெரும்பாலும் நூற்றுக்கு எண்பது வீதமான மக்கள், தமிழ் மொழியையோ, தமிழ் கலாச்சாரத்தையோ அல்லது பிள்ளைகளின் சமயத்தையோ அறியாதவர்கள். இவர்களது கடமை வெறும் அறிக்கை எழுது வது மட்டுமே.
243

Page 123
கீத பொன்கலன்
சிறு பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற "திரிபோஷா” பிள்ளைக் காம்பிராக்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது. ஏனைய பராமரிப்பு நிலையங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்று 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுள் 25 வீதத்திற்கு குறைவானவர்களே பிள்ளைப் பராமரிப்பு நிலையத்திற்கு செல்கிறார்கள்.
இன்று பெற்றோர்கள் ஒரளவேனும் விழிப்புணர்ச்சி பெற்Աl, முன் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணருகின்றார்கள். ஆனால் முன் பள்ளி ஆரம்பிப்பது மலையகத்தில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
ஒரு டிவிஷனுக்கு ஒரு முன் பள்ளி என்ற மட்டத்தில், இன்று 2000க்கு மேற்பட்ட முன் பள்ளிகள் தேவையாக இருக்கிறது.
முன் பள்ளிகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவை
முன் பள்ளி நடத்துவதற்கு நிர்வாகம் தேவையான இடத்தை ஒதுக்கித் தர வேண்டும்.
அந்தப் பகுதியில் இருந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியர்களின் சம்பளத்தை நிர்வாகமும், பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும்.
பெற்றோர்கள் முன் பள்ளியின் அவசியம் பற்றி முழுமை யாக விழிப்புணர்வு பெற வேண்டும்.
அட்டவணை 9.3.1 இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொகை - 2001
நகரம் கிராமம் தேர்ட்டம்
723, 711 4, 488, 770 339, 408
(மூலம்; குடிசன மதிப்பீடு 2001)
இதில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1990 ஆண்டுவன கிட்டத்தட்ட 18,022 (அதாவது அரச பெருந்தோட்ட கூட்( தாபனத்தின் (SLSPC) கீழுள்ள 236 தோட்டமும், மக்கள் பெரு
244

இருபத்தோராம் நூற்றாண்டில் .
தோட்ட அபிவிருத்திச் சபைக்கு (JEDB) 267 தோட்டங்களும் சேர்த்து). ஆனால் 1992ம் ஆண்டு 83,136 ஆகவும் 1993ல் 78,832 ஆகவும் குறைந்துள்ளது. இந்தச் சிறுவர்கள் குறைவதற்குக் காரணம் 1974ம் ஆண்டிலிருந்து, இன்று வரையும் தோட்டங் களில் நடைபெறும் நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு என்பது தெளிவாகும். உதாரணமாக அரச பெருந்தோட்டக் கூட்டுத் தாபனத்தைச் சேர்ந்த தோட்டத்தில் 1982ம் ஆண்டு 12,159 (3.4%) ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள். அதே கூட்டுத் தாபனத்தில் 1987ம் ஆண்டு 8,832 (2.3%). இந்த 6 வருடங்களில் 3,421 குழந்தைகள் குறைந்து இருக்கின்றன,
அதே போல் ஒரு வயதுக்கும் 4 வயதுக்கும் உட்பட்ட பிள்ளைகள் 1982ல் 43,179 (12.1%) இல் இருந்து 1987ல் 38,313 (10.2%) ஆகக் குறைந்து இருக்கின்றது. இந்நிலை இன்னமும் தொடர்ந்து நீடிக்கின்றது.
(ஆதாரம் - அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபன சமூக அபிவிருத்தி பிரிவு, புள்ளி விபர அறிக்கை, மார்ச் 1991, மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை சுகாதார அறிக்கை 1987 - 1991).
அக்டோபர் மாதம் 24ம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான கொச்சைத் தமிழில் குழந்தைகள் பேசும் அவலம், என்ற கட்டுரை எமது மொழி, கலை, கலாசாரம், சமயம், பண்பாட்டு பாரம்பரியங்களை, சிறுவர் பராமரிப்பு நிலையங் களில் வாழும், மலையக தமிழ் சிறார்கள் இழந்து வரும் அபாயத்தை கோடிட்டு காட்டுகின்றது. அந்த உரிமைகளை நிலை நாட்ட நாம் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்டுரை வலியுறுத்துகின்றது. ஆகவே முன் பள்ளிக் கூடங்கள் அவசியம், அதுவும் தமிழ் மொழி மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியைகளாலேயே அது நடத்தப்பட வேண்டும். இதற்காக முன் பள்ளி கல்வியில் ஆர்வம் உள்ள அனைவரும் ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்து ஆக்கப் பூர்வ முயற்சி களில் ஈடுபட வேண்டும்.
துண்டு பிரசுரம் - 10-8-2001
K. KM. K). 0. K Xo «Xo oKo oXo •e
245

Page 124
9.4 அறிவும் அகமும் வளர குழந்தைகள் ஒடி விளையாட வேண்டும்
பெருந்தோட்டத்துறை கட்டமைப்பின் கீழ் முன் பள்ளி நடத்துவது, பெருஞ்சிரமான காரியம். ஆனால் பெற்றோர்களும் மலையகத் தமிழ் சமூகமும் விழிப்பு பெற்றால் தங்கள் சிறுவர் களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் வெற்றி கொள்ள முடியும். ஏனைய சமூகத்திலுள்ள பெற்றோர்கள் சிறுவர்களின் முன் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் மலையகத் தமிழ் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின், உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். முன் பள்ளி என்பது புத்தகப் படிப்பல்ல. அது சின்னஞ்சிறுவர்களின் நந்தவனம்.
அண்மைக் காலமாக மலையகத் தமிழ் குழந்தைகளுக்கும் முன்பள்ளி வசதிகள், அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பல சமூக நிறுவனங்கள் கோரி வருகின்றன.
மலையகத்தில் 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாகச் சில தோட்டங்களில் முன் பள்ளிகள் ஆரம்பிக் கப்பட்டன. இன்றைக்கு கிட்டத்தட்ட 200 முன் பள்ளிகளுக்கு மேலாக தோட்டங்களில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சில முன் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் மூடப்பட்டு விட்டன.
9.4.1 முன் பள்ளியின் முக்கிய நோக்கம்
முன் பள்ளியின் 2 1/2 - 3 வயது தொடக்கம் 5 வயது வரையுள்ள குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர் இந்த வயதெல்லை ஒரு குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான
246

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பருவமாகும். இக்கால கட்டத்தில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சியடைகிறது. அத்துடன் குழந்தையின் உடல் வளர்ச்சி யுடன் உளவளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெறும் காலமாகவும் இருக்கின்றது. இந்தப் பருவத்தில் தான் குழந்தையின் உருவாக்கம் முறையா. அமைய வேண்டும். அரசாங்க பாடசாலைகளில் சேரும் குழந்தைகளை அதற்கென ஆயத்தப்படுத்தும் தளமாக வும் முன் பள்ளிகள் அமைகின்றன. முன் பள்ளிகள் குழந்தை களின் பூரண வளர்ச்சிக்கு வித்திடும் நிலையங்களாக விளங்கு கின்றன. ஆகவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முன் பள்ளிகள், சிறப்பாக, மலையக முன்பள்ளிகள் எவ்வாறு எந்த வகையில் செயற்படுகின்றன என்பதை ஆராய்வது பயன்படும்.
இன்று எமது நாட்டில் இரண்டு விதமான முன் பள்ளிக் கல்வி முறைகள் இருக்கின்றன. அவையாவன: 1. மொன்ரிசூரி (ypGOip (Maria Montessori) 2. (up6ð7 LuGiraf (yp 6Np (Proebel).
முன்பள்ளிமுறை குழந்தையை மையமாகக் கொண்ட கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றது. அதாவது பிள்ளை வாழும் சூழல் சாதாரணமாக பிள்ளை காணும் பொருள்கள், அது அடையும் அநுபவங்கள், அது விளையாடும் விளையாட் டுக்கள் மூலமாக குழந்தையின் உடல், உள அறிவு வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அதாவது முன்பள்ளி முறையில் புத்தகங்களின் பாவனை பெரிதும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இயற்கையின் வழியாக இயற்கையில் காணப்படும் பூமிருகங்கள், பறவைகள், மரங்கள் வழியான அறிவும் சமூக ஒழுக்கங்களும், மனித விழுமியங்களும் உணர்த்தப்படுகின்றன.
ஒரு குழந்தையை முன் பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர் களில் பலர் கேட்கும் முதல் கேள்வி என்னென்ன புத்தகங்கள் வேண்டும் என்பதேயாகும். புத்தகங்களை வாசிப்பதும் அவற்றி லுள்ளவற்றை மனப்பாடம் செய்வதும் பழைய முறையாகும். இன்றைய முன்பள்ளி முறையில் பார்த்தல், கேட்டல், செய்தல் மூலம் பார்த்தல், செய்யப்படுவதால் பிள்ளை கற்றுக் கொள் கிறது. புத்தகக் கல்வியை திணிப்பதால் கல்வியில் ஒரு வித சலிப்பையே ஏற்படுத்துகிறோம். இதன் காரணமாகக் கல்வியில் வெறுப்பை வளர்க்கின்றோம். இத்தகைய முறையினால் ஆரம் பத்தில் பிள்ளை ஒரு சிலவற்றை மனப்பாடம் செய்யும் என்பது
247

Page 125
கீத பொன்கலன்
உண்மை. ஆனால் படிப்படியாக அந்த ஆர்வம் குன்றிவிடும். ஆனால் சில செய்கைகளால் ஏற்படும் அறிவு மனதில் ஆழமாகப் பதியும். உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
O பழைய முறையில் வண்ணத்துப் பூச்சியைப் பற்றிப் படிக்க ஆசிரியர் அதைப்பற்றி 5 அல்லது 10 வசனங்களை கரும் பலகையில் எழுதி பல தடவை வாசித்துக் காட்டி அதை எழுத வைத்துப் பாடமாக்க வைத்தனர்.
புதிய முறையில் இன்று வண்ணத்துப்பூச்சியையே வகுப் பறைக்குக் கொண்டு வந்து அல்லது பிள்ளைகளை அவை யுள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அவற்றை அவதானிக்குமாறு விடுகின்றனர். பின் சில கேள்விகளைக் கேட்டுபிள்ளைகள் பதில் சொல்வதன் மூலம் மனதில் பதிய வைக்கின்றனர். விளையாட்டாகவும் இருக்கின்றது. பாட
மாகவும் அமைகின்றது. \
O கணக்குப் பாடத்தில் பழைய முறை பெருக்கல் வாய்ப்பாடு
பாடமாக்க வேண்டும்.
புதிய முறையில் பிள்ளைகளை வீட்டிலிருந்து சில புளியங் கொட்டைகளைக் கொண்டு வருமாறு பணிக்கின்றனர். அவற்றை இரண்டு இரண்டாக வைத்து அல்லது மூன்று மூன்றாக வைத்து வாய்ப்பாடுகளைப் படிப்பிக்கின்றனர். இந்த முறையை பிள்ளை வீட்டிலும் பின்பற்றும். இவை போன்று பிள்ளையும் ஆசிரியரும் சேர்ந்தே பிள்ளைக்கு அறிவு கொடுக்கின்றனர்.
9.4.2 முன்பள்ளியும் மலையகமும்
இன்று எமது நாட்டில் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப தனியாரால் அல்லது சமயம் சார்ந்தோரால் முன் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நகரங்கள், பட்டினங்கள், கிராமங்கள் தோறும் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஏறக்குறைய 50% மான பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.
மலையகத்தைப் பொறுத்த வரையில் இது மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றது. மலையகத்தில் வாழும் 84,000 பிள்ளைகளுக்கு முன்பள்ளி வாய்ப்பு இல்லை. இதற்குக் காரணம் மலையக தமிழ்ச் சமூகமும், பெற்றோரும், தொழிற் சங்கங்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஆகியனவும் முன் பள்ளி களின் முக்கியத்துவத்தை உணராமலிப்பதுதான். முன்பள்ளி
248

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஒரு பிள்ளையின் பிறப்புரிமை இதை அதிகமானவர்கள் இன்னும் உணரவில்லை. முன்பள்ளி இல்லாமையினால் தான் எமது பிள்ளைகள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். மூளை வளர்ச்சி பெறும் பருவம் வீணடிக்கப்படுகின்றது. மலையக தமிழ் இளைஞர், யுவதிகளில் 90% ஆனோர் க.பொ.த. (சா/த) பரீட்சை யில் கணித பாடத்தில் சித்திபெற முடியாது கஷ்டப்படுகின்றனர். இதன் காரணம் சிறுபருவத்தில் மூளை வளர்ச்சியடைய வேண்டிய பருவத்தில் பிள்ளைக் காப்பகத்தில் அடைபட்டுக் கிடப்பது அல்லது வீட்டுச் சூழலில் நேரத்தை வீணடிப்பதுமே ஆகும். ஏனைய பாடங்களில் சித்தியடையும் எம் பிள்ளைகள் ஏன் கணித பாடத்தில் சித்தியடைவதில்லை என்பது நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
94.3 குழந்தைகளும் பெற்றோரும்
குழந்தைகளின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும்
மனதில் கொண்டு பெற்றோர்கள் பின்வரும் விடயங்களில் நன்கு
கவனம் செலுத்த வேண்டும்.
O சிறுவர்களுக்கு முழு வளர்ச்சியைக் கொடுக்கும் உணவுகள் கொடுக்கப்படல் வேண்டும். போஷாக்கின்மையால் அவர்கள் பாதிக்கப்படுவது கட்டாயமாக தவிர்க்கப்படல் வேண்டும்.
O குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஒருநாளில் ஒரு சில மணி நேரமாவது இருக்க வேண்டும். அவர்களுடன் விளை யாடவோ அல்லது உறவாடவோ நேரம் ஒதுக்கப்பட வேண்டும். எமது தாய்மார்கள் விடுமுறை நாட்களில் கூட 1 1/2 நாள் சம்பளத்திற்காக வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் பணம் வருவது உண்மைதான்.ஆனால் குழந்தை கள் வளர்ச்சி குன்றியே வளருவார்கள்.
O பிள்ளைகள் ஆயத்த நிலையை அடையுமுன்னர் புத்தகப் படிப்பையோ அல்லது வேறு பயிற்சிகளையோ பெறும் படி கட்டாயப்படுத்தலாகாது.
O பெற்றோர் தங்களிடையே எழும் பிரச்சினைகளையும் கோபங்களையும் குழந்தைகள் மீது காட்டக் கூடாது.
O குடும்பத்தில் பல பிள்ளைகள் இருக்குமாயின் அவர்களுக்கு சொல்லாலோ, செயலாலோ வித்தியாசம் காட்டக்கூடாது.
249

Page 126
கீத பொன்கலன்
O பெற்றோர் வாழ்ந்த காலமும் தற்போது குழந்தைகள் வாழும் காலமும் வெகு வித்தியாசமானது என்பதை
உணர வேண்டும்.
O ஆரம்பத்திலிருந்தே பிள்ளைகள் உடல், உள அறிவு வளர்ச் சியை முறை சாரா முறையில் பெற்றுக் கொள்ளத் தேவை யான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
O குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சியடையும் வரை ஒரு மனித ஆளின் வளர்ச்சியில் வீடு, முன்பள்ளி, பாடசாலை, அயலவர், நண்பர்கள் போன்றவை செல்வாக்கைச் செலுத்துகின்ற படியால் பெற்றோர்கள் ஒரு நல்ல சூழலை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
O மலையக லயன் அறை சூழல் மலையக தமிழ் பிள்ளை களின் உடல், உள வளர்ச்சியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை சகலரும் உணர வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு முன் பள்ளியாகுதல் அமைத்து அவசியமான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
9.44 மலையக தமிழ் சிறுவர் பாதுகாக்கப்படல் வேண்டும்
இன்று மலையக தமிழ் சிறுவர்கள் சமூகத்தின் பலவீன மானவர்கள். இவர்கள் பற்பல காரணிகளால் பாதிப்படை கின்றனர். போஷாக்கின்மையால், சுகாதாரக் குறைபாட்டினால் பலவிதமான நோய்களுக்குள்ளாகின்றனர். சிறுவர்களின் உயிர் குடிக்கும் பாதக நோய்களிலிருந்து இவர்கள் பாதுகாக்கப் படவேண்டும். இளம்பிள்ளை வாதம், வயிற்றோட்டம், தொண்டைக் கரப்பான், டெங்குக் காய்ச்சல், மூளை வளர்ச்சி யற்ற குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றிலிருந்து பிள்ளைகள் காப்பற்றப்பட வேண்டும்.
முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி ஏனைய பயிற்சிகளை விட மிகவும் நுணுக்கமானது. ஏனெனில் இது குழந்தையின் மனோ தத்துவத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு பிள்ளைகளின் உடல், உள, அறிவுத் திறனை தனித் தனியாக மதிப்பீடு செய்யும் திறமை இருக்க வேண்டும்.
25C

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பிள்ளைகளில் உள்ள திறமைகளை இனம் கண்டு அவற்றை வெளிக்கொணர்ந்து செயலுருவம் கொடுக்கும் திறன் ஆசிரி யருக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும்.
இதனால்தான் இன்று முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கு சர்வதேச மட்டத்திலும், இலங்கையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் எமது மலையகம் பரிதாப நிலையில் உள்ளது. மலையகத்தில் உள்ள முன்பள்ளிகளில் படிப்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் முழுமை யான பயிற்சி இல்லாதவர்களாய் காணப்படுகின்றனர். இதற்குக் காரணம்,
O முன் பள்ளியை ஆரம்பிப்போர் அதைப் பற்றிச் சரியாக
அறிந்திராமை. O எவரும் முன் பள்ளியை நடத்தலாம் என்ற எண்ணம், O மலையக தமிழ் சமூகம் முழுமையாக முன்னேற வேண்டும்
என்ற எண்ணம், நோக்கு இல்லாமை, O விஞ்ஞான ரீதியான பயிற்சி தேவையில்லை என்ற எண்ணம். O மலையக சூழல், மொழி, பண்பாடு தெரியாது முன்பள்ளி நடத்தலாம் என்ற எண்ணம், இப்படியான எண்ணங் களோடு முன்பள்ளி ஆரம்பித்தால் அது நன்மைக்குப் பதிலாக கேடுகளையே உண்டு பண்ணும்
9.4.5 சில முன் பள்ளிகள் மலையகத்தில் மூடப்பட்டமைக்கான காரணங்கள்
மலையகத்தில் சில அரசு சார்பற்ற நிறுவனங்களும் சமய சார்புள்ள நிறுவனங்களும் முன் பள்ளிகளை ஆரம்பித்தன. சில காலத்தின் பின்னர் அதற்கு மூடுவிழாவும் வைத்தனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன அவற்றுள் சில,
1. பெற்றோர்கள் சரியாக ஈடுபடுத்தப்படாமையும், ஆயத்தப்
படுத்தப்படாமையும். 2. ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படாமை. 3. ஆசிரியர்களில் அர்ப்பணம் இல்லாமை,
4. சரியான நோக்கு இல்லாமை.
25

Page 127
கீத பொன்கலன்
5. ஆசிரியர்களுக்கான வேதனம் கொடுக்கச் சரியான
ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாமை. 6. பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுங்காக அனுப்பாமை.
அரசாங்கம் - நிர்வாகம் - பெற்றோர்
முன் பள்ளி முக்கியம் என்பது போல அதனை நடத்து வதற்கு ஒரு முறையான கட்டிடம் தேவை. அத்துடன் பிள்ளை களின் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இடமும் தேவை. இன்று நிலம் அரசின் உடமை. அதை நிர்வகிப்பது நிர்வாகம். இந்த நிலையில் முன் பள்ளிக்காக நிலம் எடுப்பது மிகவும் கஷ்ட மான காரியமாக இருக்கின்றது. அரசாங்கமும், நிர்வாகமும் இது தங்களது கடமை என உணர வேண்டும். பெற்றோரும் தங்களது உரிமை என உணர வேண்டும். அரசாங்கம், நிர்வாகம், பெற்றோர் ஆகிய மூவித சக்திகளும் ஒன்றிணைந்து இதைச் செயற்படுத்த முன்வர வேண்டும்.
தினக்குரல் 02, 03. 1998
0 0 & 0 &
w • we KXd
நாம் புதிய மனிதராவது எப்படி?
நாம் பழைய மனிதர்களே என்றாலும், புதிய உணர்வு கொள்வதாலும், புதிய பொலிவு காண்பதாலும் புதிய பார்வை பார்ப்பதாலும்தான் - நாம் நம்மைப் புதிய மனிதராய் பூமிக்குப் பலப்படுத்த முடியும்.
- ம. திருவள்ளுவர்
252

9.5 சிறாரிடமிருந்தே சமுதாய மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்
சிறுவர்கள் தான் ஒரு நாட்டின் செல்வங்கள். இவர்கள் தகுந்த முறையில் சாதாரண வசதி வாய்ப்புக்களோடு வளர்க்கப்பட்டால் இவர்கள் தான், சமூகத் தலைவர்களாக உருவாகுகின் றார்கள். ஆகவே இளம் வயதிலேயே, மனித விழுமியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சமூக நடப்புக்களின்நன்மை தீமைகளை பகுப்பாய்ந்து புதிய சமூகத்தை உருவாக்குவது இவர்கள் கரங் களில் தான் தங்கியுள்ளது. எனவே, சிறுவர் களின் பிஞ்சு உள்ளங்களில் சீரிய கருத்துக்கள் விதைக்கப்படவேண்டும்.
சர்வதேச சிறுவர் தினம் அக்டோபர் முதலாம் திகதி மட்டும் அல்ல. எப்பொதும் எந்நாளும் நினைவு கூறப்பட வேண்டிய தொன்று. அநேக வளர்முக நாடுகளில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள், சிறுவர் தேவைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்பட்டு, இதற்காக விசேட சட்டங்களும் உருவாக்கப் பட்டு, விசேட ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒரு சமூகம் எந்தளவுக்கு வளர்ந்தவர்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றதோ, அந்தளவிற்கு சிறுவர்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். தங்களது உரிமைகளுக்காக சிறுவர்கள் குரல் எழுப்ப முடியாது. வளர்ந்தவர்களும், சமூகமும் தான் அவர் களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். சர்வதேச ஆவணங்கள் அடிக்கடி மனித மான்புகளைப் பற்றி எடுத்துரைக்கின்றன. ஒரு பிள்ளை மனிதன் என்ற அடிப்படையில், கெளவரவத் திற்கும், மதிப்பிற்கும் உரித்துடையவர் ஆகின்றார். பிள்ளை என்பது ஒரு விளையாட்டுப் பொருளோ அல்லது களிப்புத்
253

Page 128
கீத பொன்கலன்
தரும் பொருளோ அல்லது எடுபிடி வேலை செய்யும் ஒரு இயந்திரமோ அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.
நாம் சமுதாயத்தை மாற்ற அல்லது சீர்படுத்த வேண்டு மானால் அதனை பிள்ளைகளிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் இன்று அனை வருமே ஆண் / பெண் சமத்துவக் கொள்கையை பரவலாக ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியானால் அதனை சிறு வயதி னரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையே மனிதனின் தகப்பன் (Child is the Father of Man) என ஒரு ஆங்கிலப் புலவர் கூறியுள்ளார். தற்கால உளவியல் ஆசிரியர்களின் கருத்துப்படி ஒருவரின் நடத்தை, அவர் தனது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதைப் பொறுத்தே அமைகிறது என்பது தெளிவாகிறது. ஆகவே குழந்தைப் பருவம் மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு சமுதாய சீர் திருத்தங்களை நாம் அப்பருவத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
9.5.1 மலையகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
இவ்வாண்டு (2002) சர்வதேச சிறுவர் தினத்தின் கருப் பொருள் "சிறுவர்களும் விஞ்ஞானமும்” என்பதாகும். “கடோஸ்" ஆங்கில அறிக்கையின்படி எந்தவொரு சமூகம், பொருளாதார ரீதியாய் பின் தள்ளப்பட்டும், குடும்பமாக வாழ இல்லிடம் முறையாக இல்லாமலும் இருக்கிறதோ அங்குள்ள குழந்தை களுக்கு விசேட கவனிப்பு கொடுப்பதற்கான உள் கட்டமைப் புக்கள் அந்தச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் மலையக குழந்தைகளுக்கு அத்தகைய உள்கட்டமைப்புக்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பிள்ளைக் காப்பகம், லயன் அறைகளிலும் முதல் 5 ஆண்டுகளையும் கழிப்பதால், இவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகவே கேக்கப்படுகின்றது.
அட்டவணை 9.5.1 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்
4 வயது 4 வயது 5 வயது
1992 1993 1996
83, 136 78,832 82,291
(மூலம்:பெருந்தோட்ட சுகாதார அறிக்கை; 92/94-95/97)
254

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இதன்படி பார்த்தால் மலையக தமிழ் குழந்தைகளின் எண்ணிக்கை வருடா வருடம் கூடுவதற்குப் பதிலாக குறைந்து கொண்டு போகின்றது என்பது தெளிவாகிறது. இதற்கு முக்கிய காரணமாக குழந்தைப் பெறத் தகுதி உள்ள 60 வீதமான தம்பதியர் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப் பட்டிருப்பதேயாகும். இந்தப் பிள்ளைகளுள் 30 வீதத்திற்கு குறைவானவர்கள் பிள்ளைக் காப்பகத்திலும், 3 வீதமான வர்கள் முன்பள்ளிகளிலும் ஏனையோர் லயன் அறைகளிலும் வாழ்கிறார்கள். 2001ம் ஆண்டில் 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளை களின் தொகை சராசரி 80,000 ஆக கணிக்கலாம்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒரு ஆய்வறிக்கை (International Programme on the Elimination of Child Labour) 14 வயதுக்கு உட்பட்ட 475,531 சிறுவர்கள் இலங்கையில் வேலைக் கமர்த்தப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த வயதுக்கு உட்பட்டவர் களை வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒழுங்காகும். இதனை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது.
9.5.2 மலையகத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்கள்
1994ம் ஆண்டு 199374 சிறுவர்கள் பாடசாலைகளில் பதிவு
செய்ப்பட்டுள்ளார்கள். (மூலம்; பெருந்தோட்ட பாடசாலைக்
கல்வி அபிவிருத்தித் திட்டம் - 1994).
1996/1997 ஆண்டுகளில் பாடசாலை சிெல்லாதவர்களினதும் இடை நிறுத்தம் செய்தவர்களினதும் தொகை பெருந்தோட்ட பாடசாலைகளில் 12.7 வீதமாகவும் ஏனைய பாடசாலைகளில் 8.8 ஆகவும் இருக்கின்றது.
1997/ 1998ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி இலங்கையில் 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 61,000ம் சிறுவர்கள் பாட சாலை செல்வதில்லை என கணிக்கப்பட்டுள்ளது. இது அவ் வயது சிறுவர்களில் 14 வீதமாகும்.
2001ம் ஆண்டில் பாடசாலை செல்லும் மலையக தமிழ்ச் சிறுவர்கள் 200,000ம் எனக் கொண்டால் அதில் 10 வீதப்படி பார்ப்போமானால் மொத்தம் 20,000ம் சிறுவர்கள் இடை நிறுத்தம் செத்யவர்களாக இருக்கிறார்கள். இதைவிட உடல்,
255

Page 129
கீத பொன்கலன்
உள ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தொகை 4.5 வீத மாகக் கணிக்கப்படும் பொழுது, அவர்களின் எண்ணிக்கை, 15,273 ஆகின்றது.
2001ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி மலையகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 339,408 ஆகும். இதில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தொகை 80,000ம். பாட சாலை செல்லும் சிறுவர்கள் 180,000ம், வலது குறைந்த சிறுவர் களின் தொகை 15,000ம் என்றால் மொத்தம் 275,000ம் சிறுவர் தோட்டங்களில் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. மிகுதி 64,408 சிறுவர்களில் இத்தொகையில் 50 வீதமான வர்கள் வெளியில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக எடுத்துக் கொண்டால் கூட அவர்களின் தொகை 32,204 ஆகத்தான் இருக்கும். ஆகவே 18 வயதுக்கு உட்பட்ட 230,000ம் மலையகச் சிறுவர்கள் வேலைக் கமர்த்தப் பட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் மொத்தம் 4 வீதமானவர்களே வேலைக்கமர்த்தப் பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் காரணமாக இவ்வருடம் முதல் மலையக சிறுவர்கள் வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித் துள்ளார்கள்.
மலையக சிறுவர்களைப் பாதிக்கும் இரு முக்கிய விடயங்கள்: 1. சிறுவர்களை வேலைக்கமர்த்துவது 2. சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகம் வீட்டிலும், பாடசாலையிலும், வேலைத் தலங்களிலும் இடம் பெறலாம். எங்காவது சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதாக அறிந்தால் உடனடியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையுடன் தொடர்புக் கொள் ளலாம்.
(தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இல,330,
தலவத்து கொட வீதி, மெதிவெல, தொலைபேசி எண்: 01-77891,778912, 778913 தொலை நகல்: 01-778915)
9.5.3 சிறுவர் தொடர்பான முக்கிய அம்சங்கள்
1939ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் சட்டம்.
256

இருபத்தோராம் நூற்றாண்டில் .
1995ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 22ம் இலக்கத் திருத்தச் சட்டம் சிறுவர்களுக்கு எதிரான பல குற்றங்களுக்கு கூடுதலான தண்டனையும், இன்னும் சிலவற்றைத் தண்டனைக் குரிய குற்றமாகவும் ஆக்கியுள்ளனர். O சிறுவரைப் பற்றிய ஆபாச வெளியீடுகள் குற்றமாக்கப்
பட்டுள்ளன.(286அ) O பாலியல் ரீதியாகச் சிறுவர்களைப் பாவித்தல், குற்றமாக
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (360ஆ). O பிள்ளைகளைக் கொடுமைப் படுத்தல் என்னும் தவறை
இழைப்பவர் குற்றவாளியாகக் கணிக்கப்படுவார். O இந்தச் சட்டத்துக்கு 1997ம் ஆண்டு திருத்தச் சட்டம் உரு வாக்கப்பட்டது. இதில் குற்றவாளியை சிறைக்கு அனுப்ப வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. O ஒரு ஆசிரியர் மாணவ, மாணவிக்கு காயம் விழைவிப்பதும்
குற்றமாக கருதப்படும். 1989ம் ஆண்டு ஐக்கிய நாட்டு பொதுச் சபையினால் நிறை வேற்றப்பட்ட சிறுவர் உரிமை சமவாயத்தை, 1991ம் யூலை 12ல் இலங்கை உறுதிப்படுத்தியது.
1991ம் ஆண்டு சிறுவர் பட்டயம் உருவாக்கப் பட்டது. 1998ம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பிள்ளைகளை மிக மோசமான வேலைக் கமர்த்தும் சமவாயம் 1999ம் ஆண்டு யூன் மாதம் 17ம் திகதி சர்வதேச தொழில் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமவாயம் 182ன் குறிக்கோள்; சிறுவர் அடிமை, பலவந்த மான தொழில், வியாபாரம் செய்தல், சிறுவர் துர்ப்பிரயோகம், பாலியல் இப்படி பல வித ஆள்வினைகளை அடியோடு அகற்றுவதாகும். ஆனால் இதில் வீடுகளில், கடைகளில் வேலை செய்வதைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. இன்னும் இலங்கை அரசாங்கத்தால் இது ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
சார்க் நாடுகளில் சிறுவர் வேலைக்கு அமர்த்துவது 2010ம் ஆண்டுக்கு முன் ஒழிக்கப் படுமெனத் தீர்மானிக்கப் பட்டது.
தினக்குரல் 19. 10. 2002,
257

Page 130
258
சாதிக்க .
சரியானதே சவால் நிறைந்தது
அதுவே
சாதனைக்கான இலக்கு.
தேவையை உணர்
திறமையைக் குவி
இரண்டையும் இணைத்து இலக்காக்கு!
ஈடுபடு பாடுபடு கோடுதொடு
கொண்டாடு
சுயம் அறி! சுடர்விடு!
நீ விழைவதே விளையும்!
அறிக, புரிக, உணர்க, தெளிக
வெற்றி உனதே!
- ம. திருவள்ளவர்

அத்தியாயம் - 10
மலையகத்தமிழ் முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
10. 1 தள்ளாத வயதில் பெற்றோருக்கு
வரும் நியாயமான ஆசை
10.2 மலையகத் தோட்டப் பகுதியில் முதியோர் நலத் திட்டங்கள் மேற் கொள்ளப்படுவது அவசியம்
259

Page 131
260
அத்தியாயம் - 10
மலையகத்தமிழ் முதியோர்
எதிர்க்கொள்ளும் சவால்கள்
இன்று எல்லா நாடுகளிலும் முதியோர் தொகை படிப்படியாக கூடிக்கொண்டு போவதை காணக் கூடியதாக உள்ளது.இலங்கையும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் மலையகத்தில் முதியோர் களின் நிலைமை மிக பரிதாபகரமாகவே இருக் கின்றது. இதில் கூடுதலாக பாதிக்கப்படுவது மலையகத்தமிழ் பெண்கள். இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 89தாக இருந்தும் கூட மலையகத்தில் அது 65 ஆகவே உள்ளது. மலையகத்தில் 55 வயதில் அல்லது அதற்கு முன்னரே அநேகமானவர் முதியோர்களாகிவிடு கின்றனர்.இதற்குக்காரணம் இளம்வயதிலிருந்தே கடின உழைப்பு, போசாக்கின்மை, போதிய சுகா தார வசதிகள் தோட்டங்களில் இல்லாமை என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத் தமிழ்ச் சமூகம் இவர்களை மரியாதையுடனும் மாண் புடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த முன் வரவேண்டும். அத்தோடு 60 வயதுக்கு மேற் பட்ட முதியோருக்கு முதியோர் அடையாள அட்டைய எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும்.

10. 1 தள்ளாத வயதில் பெற்றோருக்கு வரும் நியாயமான ஆசை!
ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலாக 1982ஆம் ஆண்டை முதியோர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. அதன்பின் வருடா வருடம் ஐப்பசி மாதம் முதல் திகதியன்று முதியோர் தினத்தை உலக நாடுகள் தொடர்ந்து அனுஷ்டித்து வருகின்றன.
இந்த முதியோரின் உரிமைகள், தேவைகள் கடந்த காலங் களில் மறுக்கப்பட்டதனால், மக்கள் மத்தியில் ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் சிந்தனையில் மாற்றத்தை உரு வாக்கி, அதன் மூலம் முதியோரின் நலன் பேண பல திட்டங் களை செயல்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது.
கடுமையாக உழைத்தோர், அனுபவம் பெற்றோர், நாட்டை வளர்த்தோர் என முதியோர் என்ற சொல்லிற்கு பொருள் கூற லாம். இவர்கள் இளம் சமூகத்திற்கு பாதுகாப்பையும், நம்பிக்கை யையும், நல்லதோர் எதிர்காலத்தையும் கொடுத்தவர்கள், பல சிறந்த நாகரிகங்கள் இவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிதன் மூலம் ஒவ்வொரு சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வந்தவர்கள் இவர்களே. பொதுவாக 60 வயதைக் கடந்தவர்கள் முதியோர் களாக கணிக்கப்படுகிறார்கள். உடல், உள ரீதியாக சக்தி குறைந்துவரும் இப்பருவத்தில் தொடர்ந்தும் செயலாற்றும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இன்றைய உலக சனத்தொகையை எடுத்துக் கொண்டால், சனத்தொகை வளர்ச்சியிலும் பார்க்க முதியோரின் தொகை படிப்படியாக கூடுவதைக் காண்கின்றோம். உதாரணமாக 1975ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை சனத்தொகை அதிகரிப்பு 16 வீதமாக அதிகரித்தால் முதியோரின் தொகை 63 வீதம் அதிகரிக்கின்றது. இதில் கூடுதலானோர் வளர்முக நாடு களில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
26

Page 132
கீத பொன்கலன்
இலங்கையின் அண்மையில் உள்ள மற்ற ஆசிய நாடு களுடன் ஒப்பிடும் போது இது அதிகளவில் இருப்பினும் நமது முதியோரின் நன்மைக்காக மகிழ்ச்சிக்காக என்ன செய்திருக் கிறோம் என்பது தான் கேள்விக்குறியாகவுள்ளது.
‘வயோதிபம்’ ஒரு அருவருப்பான சொல் அல்ல. ஆனால் சமுதாயம் இகழ்ச்சியோடு அதனை நோக்குகின்றது என்பதை சில அடைமொழிகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றது. ‘கிழடு" ‘கட்டைகள்’ ‘சாவுக்கிராக்கி’ இது போன்ற இன்னும் எத்தனையோ சொற்கள், அந்த முதுமை நமக்கல்ல என்ற ரீதியில் முதியோரை நோக்கி வீசப்படும் இத்தகைய சொற்கள் அவர்கள் மனதை எவ்வளவு தூரம் புண்படுத்தும் என்பதை எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை.
அதுமட்டுமல்ல இதுவரை உயிருள்ள ஜீவன்களாக இருந் தவர்கள் முதுமை காரணமாக சடப்பொருளாகி விடுகின்றனர். அது ‘இது கிடக்குது போன்ற அஃறிணை சொற்களைக் கொண்டு அவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். மூத்த தலை முறைக்கும் இளந் தலைமுறைக்கும் இடைவெளி ஏற்படுவதை எப்படி தடுக்க முடியாதோ அப்படித்தான் மூத்த தலைமுறை யினரின் மனோபாவமும், அதனை இளம் சமுதாயத்தினர் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய சந்தோஷத்திற்காக, திருப்திக்காக விட்டுக்கொடுக்கும் மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,
அவர்களுக்கு செய்யும் தொண்டுகளை கடமைக்காக செய்யாது மனப்பூர்வமாக செய்ய வேண்டும். அவர்களுடைய தேவைகளை முழுமையாக முடியாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்ற முன் வர வேண்டும். குடும்ப பிரச்சினைகளில் அவர் களையும் கலந்தாலோசிக்க வேண்டும். உண்மையாக அவர் களை நேசிக்க வேண்டும். நீங்கள் காட்டும் அந்த உண்மை அன்பிற்கு அவர்கள் கட்டுப்படும் போது, அவர்கள் உங்களை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு போதும் நடக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். ...
புனர்வாழ்வு, புனர்நிர்மாண சமூக நலத்துறை அமைச் சினால் சமர்ப்பிக்கப்பட்ட ‘முதியோர் உதவித்திட்ட பிரேரணை 1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் திகதி அமைச்சரவை
262

இருபத்தோராம் நூற்றாண்டில் .
யினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அமைச்சும். திணைக்களமும் அவற்றின் வரையறைக்கு உட் பட்ட வகையில் முதியோர் பிரச்சினைகளை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
10.1.1 மலையகத்தில் முதியோர்
மலையகத்தில் 55 வயது அல்லது அதற்கு முன்னரே அநேக மானோர் முதியோர்களாகி விடுகின்றனர், கடின உழைப்பும், போஷாக்கற்ற உணவும், உணவுப் பற்றாக்குறையும், இளவயது திருமணமும் இதற்கு காரணமாகின்றன. அதுமட்டுமல்ல, சுகாதார வசதிகளுடன் கூடிய வதிவிடம் இல்லாதிருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமென்று கூறலாம். குறிப்பாக பெண்களே இதனால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். இளவயது மரணங்கள் மலையக மக்கள் மத்தியில் அதிகமாக இடம் பெறுவதற்கும் அதே காரணங்களைக் கூறலாம். ஓய்வூதியம் பெற்றபின் இவர்கள் ஒரு செல்லாத காசாகிவிடுகின்றனர்.
தொழில் நிலையத்தால், சமூகத்தால், பெற்ற பிள்ளை களால் இவர்கள் திடீரென கைவிடப்படும் போது இவர்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தம்மை தாமே நொந்து கொள்ளும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனா லேயே தங்களின் ஆதங்கத்தை அவர்கள் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமோ, நிர்வாகமீோ, தொழிற்சங்கங்களோ அல்லது அரசு சார்பற்ற சமூக தாபனங்களோ ஒரு முறையான நீடித்ததிட்டத்தை முன் வைப்பதாக தெரியவில்லை.
10.1.2 முதியோரின் நலன்கள்
முதியோருக்கு உதவும் முகமாக ஒரு சில இடங்களில் விசேடமாக நகர்ப்புறங்களில் ‘முதியோர்' இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்டு வருகின்றன. சில சமய நிறுவனங்கள் பண வசதி படைத்தோரின் வசதிக்காகவும் முதியோர் இல்லங்களை நடத் துகின்றன. எப்படியான இல்லமாக இருந்தால் கூட அங்கு அந்த முதியோர் எதிர்பார்க்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் இடமிருக் காது. தமது வயோதிப காலத்தில் பிள்ளைகளிடம் எதிர்பார்க்
263

Page 133
கீத பொன்கலன்
கும் பரிவையும் அரவணைப்பையும் பிள்ளைகளால் கொடுக்க முடிவதில்லை. இந்த இல்லங்களில் வாழும் முதியோர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். கிராமங்களிலோ தோட்டப்புறங்களிலோ இவ்வாறான இல்லங்கள் இதுவரை தோன்றவில்லை. அமைக்கப்பட்டுள்ள இல்லங்களால் இலங்கை யிலுள்ள மொத்த முதியோர்களும் பயனடைய முடியாது. இத்தகைய ஒரு நிலையில் வயோதிபர்கள் வீதிக்கு இறங்கி பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
முதியோர்கள் அநேகமாக தள்ளாத வயதில் தங்கள் பிள்ளைகளுடனேயே இருக்க விரும்புகிறார்கள். தாம் பெற்ற மக்கட் செல்வம் தம்மை சூழ்ந்திருக்கும் போதே தம் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறார்கள், உடலால், உள்ளத்தால் பலவீனப்பட்ட நிலையில் தம்மால் தனித்து நிற்க முடியாத ஒரு கட்டத்தில் தாம் வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளை அவர்கள் ஒரு நம்பிக்கையுடனேயே நோக்குகிறார்கள். தம்மை ஒரு பொருட்டாக மதித்து தம்மை கெளரவமாக அன்பாக நடத்தவேண்டும் என்றே ஒவ்வொரு முதியவரும் தம் குடும்பத் தாரிடம் எதிர் பார்க்கிறார்கள்.
முதியோரை பராமரிப்பதில் எம் போன்ற நாடுகளில் பொருளாதாரம் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. வெளிநாடுகள் சில திட்டங்களை அமல்படுத்துகின்றன. முதியோரை குடும்பத்தாருடனேயே இருக்கச் செய்வதை ஊக்கு விக்கும் நோக்குடன் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் முதியோர்களுக்காக அவர்களுக்கே நேரிடையாக பண உதவி செய்து வருகின்றன. இதன் மூலம் முதியவர்கள் குடும்பங்களில் இருந்து அந்நியப்படுத்தப்படுவதை தடுத்து அன்போடும், பாசத்தோடும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கடைசி வரையும் அவர்களது சேவை சமுதாயத்திற்கு கிடைக்க வழி செய்யப்படுகிறது.
இதேவேளை முதியோர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்காக இவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி புத்தகங்கள். பத்திரிகைகள் வாசிப்பதற்கும், சிறு கைவேலை களை செய்வதற்கும், பொழுது போக்கு விளையாட்டுகளில் ஈடுபடவும், சமய அறிஞர்களின் கருத்துக்களை செவிமடுக்கவும்
264

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்விடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். இது அவர்கள் பெறும் சலுகையாக அல்ல அவர்களுக் கிருக்கும் உரிமை என்பதை நாளைய முதியோர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்,
இந்த உரிமைகள் பல வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. ஹொங்கொங் நாட்டில் இதனை நாம் நேரிடை யாகவே அவதானிக்க முடிந்தது. போக்குவரத்து சலுகை கட்டணம் கூட உண்டு. இவர்கள் வாழ்கின்ற இல்லங்களை இனங்கண்டு இவர்களுடைய தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதற்காக தோட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் ஒரு வரை பொறுப்பாக நியமிக்க வேண்டும்.
இவர்கள் முதியோரது சுகாதாரத் தேவைகள், பேர்ஷாக்கு உணவு, உடை போன்ற விடயங்களை கவனிக்க வேண்டும். திருவிழா காலங்களில் இவர்களை மகிழ்விப்பதற்கான பல நல்ல திட்டங்களை அமல்படுத்தலாம். மாதா மாதம் ஒரு வைத்தியரை அழைத்து அவர்களது தேக சுகத்தைக் கவனிப் பதை ஒரு உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். இது போன்ற நல்ல பல திட்டங்களை அரசாங்கம் நேரடியாகவோ அல்லது சமய நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது அரசுசார்பற்ற சமூக நிறுவனங்கள் மூலமாகவோ நிறைவேற்றலாம்.
மலையகத்தில் வாழும் முதியோர்களின் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் சேமலாப நிதியை4 முழுவதுமாக ஒரே நேரத்தில் பெற்று, இருப்பதற்கு வீடின்றி பிள்ளைகளின் தயவை எதிர்பாக்கும் இந்த நிலைமாற வேண்டும். அரசாங்க சேவையாளர்களைப்போல் அவர்களும் சாகும் வரை மாதா மாதம் ஓய்வூதியம் பெறவேண்டும்.
“முதியோர் வாக்கும், முதிர்ந்த நெல்லிக்கனியும் முதலில் கசந்தாலும் பின்னர் இனிக்கும்” என்ற அடிப்படையில் முதியோரின் சொல்லுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
of J. G85&Ff 04. 10. 1994
265

Page 134
10.2 மலையக தோட்டப்பகுதிகளில் முதியோர் நல திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம்
(முதியோர் தினவிழா உரை)
"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற சொல் லுக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது. முதியோர் களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பிள்ளைகளுக்கும், சமுதாயத்திற்கும், அரசுக்கும் உள்ளது. எனினும், மலையக பெருந்தோட்ட முதியவர்கள் ஊழியர் சேமலாப நிதியை வாங்கும் வரை கெளரவமிக்கவர்களாகவும், அது வாங்கி முடிந்து செலவழித்த பின்னர் செல்லாக்காசாகவும் மதிக்கப்படுவது பெரும் சாபக்கேடாகும்."
இவ்வாறு, லியோ மார்கா ஆச்சிரமத்தின் இயக்குநரான அருட்தந்தை கீதபொன்கலன் அடிகளார் பண்டாரவளையில் இடம்பெற்ற முதியோர் தின வைபவத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இந்த முதியோர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டனர். அதிகமானோர் பெருந் தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
அருட்பிதா பொன்கலன் தொடர்ந்து பேசுகையில் கூறிய தாவது;
“இன்று மலையகத்தில் 15 இலட்சம் மக்கள் தொகையில் ஒன்றரை இலட்சம் முதியோர்கள் உள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 13 சதவீத முதியோர்கள் உள்ளனர். ஆனால், மலையகத்தில் 15 சதவீதமாக அத்தொகை கணிக்கப்படுகிறது. இன்று நிரந்தரமான குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் மலை யகத்தில் அமலாவதால் சனத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இலங்கையில் பிறப்புச் சதவீதம் 25 ஆக
266

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இருக்கும்போது, மலையகத்தில் அது 1, 9 சதவீதமாகவுள்ளது. இதனை ஒரு இனக் குறைப்பு என மக்கள் நம்புகின்றனர். ஆனால், முதியோர்கள் தொகை படிப்படியாக உயர்ந்து வரு கின்றது. மலையகத் தொழிலாளர்கள் உழைக்கும் போதே சேமித்திருந்தால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட் டார்கள். உழைத்துக் களைத்த அவர்களது ஊழியர் சேமலாப நிதிப் பணத்தை வங்கியில் வைப்பிட்டிருந்தால் மூலையில் முடங்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது. பிள்ளைகளால் புறக் கணிக்கப்பட்ட பல பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ள சம்பவங்கள் அதிகமுள்ளன.
இலங்கையில் 158 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று அரசுக்குரியவை. 58 எல்ப்பேஜ் (Help Age) நிறுவனத்துக்குரியது. ஏனையவை தனியார் தாபன்ங்களுக் குரியது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கென ஒரு முதியோர் நிலையம் கூட இல்லை.
தோட்டத் தொழிலாளர்களது நலனுக்கென தொழிலாளர் நல நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதியோர் சம்பந்தமாக அவ்வமைப்பிடம் ஒரு திட்டமும் இல்லை. பொது வாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓரிடத்தில் அமர்ந்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சமூக மண்டபங்கள் கூட இல்லை. ஒவ்வொரு தோட்டங்களிலும் முதியோர் நல நிலை யங்கள் அமைக்கப்படுவது அவசியமாகும். தொழிற்சங்கங்கள் கூட முதியோர் குறித்த நலத்திட்டங்களை அமல்படுத்த மறந்தமை துரதிர்ஷ்டவசமானது.
முதியோருக்கான விசேட சத்துணவு திட்டமும், ஆயுர்வேத மருத்துவ முறையும் மலையகத்தில் அவசியமாகும். இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் 89 ஆக இருந்தும் கூட மலையகத்தில் அது 65 ஆகவுள்ளது. எனவே, மலையகத் தமிழ் முதியோரின் வளர்ச்சிக்கு வலுவான திட்டமும் நலம் பேணலும் அவசிய மாகும். ஓய்வூதியம் பெற்ற ஏனைய துறையினருக்கு ஓய்வூதியர் சங்கமும் ஏனைய கொடுப்பனவுமுள்ளது. ஆனால், தோட்டத் தொழிலாளிக்கு அத்தகைய அமைப்பு இல்லை” என்றார்.
தினக்குரல் 05. 10. 2001
(X X X X X
267

Page 135
26
s
நற்செய்தியானது பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்காகத்தான் அறிவிக்கப்பட்டது.
அப்படி அறிவிக்கப்பட்ட நற்செய்தியை இச்சமுதாயத்திலிருந்து பிரித்துப் பார்த்தால் அது கண்டிப்பாக கடவுளின் வார்த்தையாக இருக்காது.
மாறாக நூலகத்திலே வைத்துப் பார்க்கப்படும்
ஒரு வரலாற்று நூலாகவே கருதப்படும்.
இது கடவுளின் வாக்கு.
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ J
ܚܠ
/ー SN
எவ்வித எதிர்ப்பு வந்தாலும்
என் மனசாட்சிப்படி
என் கடமையென நான் கருதுவது
துன்புறும் எல்சால்வதோர்
மக்களின் விடுதலைக்குக்
குரல் கொடுப்பதே.
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ VS 多/

அத்தியாயம் - 11
தொழிலாளர் உரிமையும் தென்னிலங்கைத் தமிழரின் சுயநிர்ணய உரிமையும்
11.1 உரிமைகள் குறித்து
தொழிலாளருக்கு உணர்வூட்டும் பணியே மே தினக் கொண்டாட்டங்களின் தொனிப்பொருளாக வுேண்டும்.
11.2 தென்னிலங்கைத் தமிழரின்
உள்ளக சுயநிர்ணய உரிமை.
269

Page 136
தொழிலாளர் உரிமையும் தென்னிலங்கைத்தமிழரின்
270
அத்தியாயம் - 11
சுயநிர்ணய உரிமையும்
உழைப்பாளரே உலகை ஆளவேண்டும் என்பது உலகநியதி. ஆனால் உழைப்பையே தமது உயிர் மூச்சாக கொண்ட மலையகத் தமிழ் மக்கள் இன்னும் பலராலும் அடக்கப்பட்டு, ஒடுக்கப் பட்டுவைக்கப்பட்டுள்ளதை காணக் கூடியதாக வுள்ளது. இதற்கு பாரம்பரிய தொழிற்சங்க, அரசியல்வாதிகள் முதலாளிகளாகவும், முதலாளி மார்களோடு உடன் போகின்றவர்களாகவும் இருப்பதே காரணம். பாரம்பரிய அமைப்புக் களின் மேதினக் கூட்டங்களில் தொழிலாளருக் கும், அவர்தம் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தலைவர்களுக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக களியாட்ட நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மேதினத்தின் மேன்மையை கொச்சைப்படுத்தும் செயல்களாகும்.

11. 1உரிமைகள் குறித்து தொழிலாளருக்கு உணர்வூட்டும் பணியே மே தினக் கொண்டாட்டங்களின் தொனிப்பொருளாக வேண்டும்
மே மாதம் முதலாம் திகதியை தொழிலாளர் தினமாக நினைவுகூருவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. ஆனால், எமது நாட்டில் மே தினத்தின் இலட்சியம், நோக்கம் ஆகியன சிதைவுற்று அதன் புனிதத் தன்மை மறக்கப்பட்டுள்ளது. இதனால் மே தினத்தின் சரித்திர வரலாற்றை ஆராய்வதும், பின்னோக்கிப் பார்ப்பதும் முக்கியத்துவத்திற்கு உரியதாகும்.
11.1.1 உலகில் மேதினம்
உலகில் அநேக நாடுகளில் தொழில் புரட்சி ஆரம்பமான காலகட்டத்தில் முதலாளித்துவ அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புக்கள் தொழிலாளர்களை அடிமைகளாக, தங்கள் சுயநலத்திற்காக பல வழிகளிலும் பயன்படுத்தினார்கள். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக தொழிலாளர்கள் கையாண்ட வழிகளை முதலாளித்துவ அமைப்புகள் அரசியல் கட்சிகளோடும், காவல் துறையினரோடும் சேர்ந்து அடக்கி னார்கள்.
தொழிலாளர்கள் ஒன்று சேர்வதையோ, கூட்டங்கள் கூடுவதையோ, வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதையோ, கூட்டுப் பேரம் பேசுவதையோ இவர்கள் அனுமதிக்கவில்லை. ஆயினும் தொழிலாளர்கள் உலகில் பல்வேறு இடங்களில் தங்களுடைய உரிமைக்காகக் குரல் எழுப்பினார்கள். அதிகார அடக்குமுறைகள் மத்தியிலும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி உயிர்த்தியாகங்கள் செய்தார்கள்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவதற்கான பயணத்தின் சில நல்ல அம்சங்களைப் பெற்றனர். பிரிட்டனில் 1832இல் தொழிலாளர் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்
27

Page 137
கீத பொன்கலன்
பட்டது. 1834இல் நாடு தழுவிய தொழிலாளர் ஐக்கியம் உருவாகியது. 1871இல் தொழிற் சங்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவில் 1886 இல் சிக்காக்கோ நகரில் “மேர்கார்மின் ஹார் வெஸ்டர் வேர்க்ஸ்” தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. பிரான்ஸில் 1848இல் தொழி லாளர் புரட்சி தோன்றியது. ரஷ்யாவில் 1917இல் அக்டோபர் புரட்சி ஏற்பட்டது.
ஆரம்ப காலங்களில் மக்கள் மே மாதம் முதலாம் திகதியை மேதினமாக அமைத்து இந்த நாளை சந்தோஷமாகக் கொண் டாடினர். மே தினத்தன்று இளைஞர்கள் வயல் வெளியில் கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
உலக தொழிலாளர் உரிமைப் போராட்டங்களில் 1886 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டில் சிக்காக்கோ நகரில் நடை பெற்ற "மேர்கார்மின் ஹார் வெஸ்டர் வேர்க்ஸ்" தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது பொலிஸாரின் தாக்கு தலினால் ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்தனர், சிலர் இறந்தனர்.
இந்த இரத்தம் சிந்திய போராட்டத்தின் வெற்றியாக அவர்களது நியாயமான கோரிக்கையான ‘எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு' என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டது. இச்சம்பவத்தை நினைவுகூரும் முகமாகவும், “உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற கோரிக்கையை பலப் படுத்தும் முகமாகவும் 1889இல் பாரிஸ் நகரில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்று புழக்கத்தில் இருந்த குதூகல கொண்டாட்டங்கள் நிறைந்த மே மாதம் முதலாம் திகதியை தொழிலாளர் மகிழ்ச்சி தான் உலக சுபீட்சத்திற்கு வழிகோலும் என்ற சிந்தனையோடு அன்றைய தினத்தைத் தொழிலாளர் தினமாகப் பிரகடனப் படுத்தினார்கள். இதிலிருந்து பல நாடுகள் படி : டியாக இத் தினத்தைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடத் தொடங்கினர்.
11.1.2இலங்கையில் மே தினம்
இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கோப்பி பயிர்ச் செய்கை பணப்பயிராக ஆரம்பிக்கப்பட்டது.
272

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அதைத் தொடர்ந்து பெருந்தெரு, புகையிரத பாதைகள் கட்டு மானப்பணி ஆரம்பமான கட்டத்தில் இருந்து பிரித்தானிய முதலாளித்துவக் கொள்கை இலங்கையிலும் படிப்படியாக வளர்க்கப்பட்டது. இதன் மூலம் முதன் முதலாக இலங்கையில் தொழிலாளர் வர்க்கம் தோன்றியது. ஆனால், இவர்கள் தாங்கள் தொழிலாளர்கள் என்ற உணர்வு அற்றவர்களாக அடிமைகளாக வாழ்ந்தனர்.
இலங்கையின் தலைநகரம் கொழும்பில் பல தொழிலாளர் இயக்கங்கள் 1893 இற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 1893இல் இலங்கை அச்சு தொழிலாளர் சங்கம் இலங்கையில் முதல் தொழிற் சங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின் பல தொழிற் சங்கங்கள் உருவாக்கப்பட்டு, வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1912இல் புகையிரதப் பகுதி தொழிலாளரின் வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1929இல் டிராம் கார் தொழி லாளர் வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இந்த வேலை நிறுத்தத் தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை களின் காரணமாக 1930ஆம் ஆண்டு தொடங்கியே நகர்ப் புறங்களில் வேலை செய்த சிங்கள, தமிழ், இந்திய, மலையாளத் தொழிலாளர் மத்தியில் தொழிலாளர் வர்க்க உணர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்காக இயற்றப்பட்டன. ஆனால், இவை முற்று முழுதாக அமல் செய்யப்படவில்லை.
இலங்கையில் மிகப்பெரிய தொழிலாளர் வர்க்கம் மலை யகத்தில் இருப்பினும் அவர்களது தொழிற்சங்க வரலாறு வேறுபட்ட தன்மையைக் கொண்டது. இவர்களுக்காக பல தரப்பட்ட தொழிற்சங்க சட்டங்களும் இயற்றப்பட்டன. இவர் களது சமூக கட்டமைப்பு, அரசியல், பொருளாதார பின்னணி காரணமாக தொழிற் சங்கங்கள் அவர்களது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
1931இல் நடேச ஐயர் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். 1940ஆம் ஆண்டு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் பதியப்பட்டது. அதே ஆண்டில் இலங்கை - இந்திய தொழிலாளர் காங்கிரஸ் பதிவு செய்யப்பட்டது. 1953 இல் இலங்கை - இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர்
273

Page 138
கீத பொன்கலன்
காங்கிரஸாக மாறியது. இது பிளவுபட்டமையால் 1955இல் அஸிஸ் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இப்படியாக சங்கங்கள் பல தோன்றின. இன்று மலையக தமிழ்த் தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்த ஏறக்குறைய 60 தொழிற்சங்கங்கள் உருவாகியுள்ளன. மலையகத் தொழி லாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்களின் விளைவாக பல உயிர்த்தியாகங்கள் புரிந்துள்ளார்கள். 1939இல் கொட்டியாக் கலையில் நடைபெற்ற வேலைநிறுத்தம் நினைவுகூரப்பட வேண்டிய போராட்டமாகும் அவ்வாண்டு 18 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 'வேலை நிறுத்தக் காய்ச்சல்' என வர்ணிக்கப்பட்டு தோட்ட முதலாளி மார்களை பயங்கொள்ள வைத்தது. ஹேவா ஹெட்ட எனுமிடத்தில் முல்லோயா தோட்டத்தில் நடைபெற்ற 1400 சிங்களத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கலந்துக் கொண்ட, கோவிந்தன் உயிர்த் தியாகம் செய்த வேலை நிறுத்தம் குறிப்பிடக்கூடிய தொன் றாகும். இதனைத் தொடர்ந்து நடந்த பல போராட்டங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் உயிர்த்தியாகம் செய் துள்ளனர். இதில் 40இற்கும் மேற்பட்டவர்களை வெளியுலகம் அறியும். ஆனால், பலர் தங்கள் முகவரியை விட்டுச் செல்லாமல் தொழிலாளர் உரிமைக்கு உயிர் நீத்து மலையக மண்ணில் மறைந்துள்ளனர். 1971ஆம் ஆண்டு டெவன் தோட்டத்தில் பலி யான சிவன் லெட்சுமணன் என்றும் தொழிற்சங்க வரலாற்றில் நெஞ்சை விட்டு நீங்காதவர். இவர்கள் எல்லோரும் மேதின விழாக்களில் நினைவு கூரப்பட வேண்டும்.
இலங்கையில் முதன் முதலாக 1930ஆம் ஆண்டு கொழும்பில் ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் மே தினம் கொண்டாடப் பட்டது. ஆனால், 1955ஆம் ஆண்டு தான் மேதினம் ஒரு பொது விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்னர்தான் ஒழுங்காக பல அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மே தினம் கொண்டாடத் தொடங்கின.
11.1.3 மலையகத்தில் மே தினம்
மலையகத் தமிழ் மக்களுக்கு 1965ஆம் ஆண்டு மே தினம் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
274

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இதனைத் தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளிலும் மேதினம் ஊர்வலங்களுடனும், கூட்டங்களுடனும் கொண்டாடப்படு கின்றது. பெரும்பாலும் தொழிற் சங்கங்கள் ரீதியாகவே மே தினக் கொண்டாட்டங்கள் அமைகின்றன. மேதினத்தின் புனித மான நோக்கங்கள் வெளிக்கொணராத கொண்டாட்டங் களாகவே பெரும்பாலும் அமைந்து விடுகின்றன. இக்கொண் டாட்டங்கள் மேதினக் கொண்டாட்டங்கள் என்பதைவிட தொழிற்சங்கங்கள் தங்கள் இருப்பையும், சிறப்பையும் வெளிச் சத்திற்குக் கொண்டு வரும் சந்தர்ப்பமாகவும் தொழிற்சங்க தலைவர்களைக் கொளரவிக்கும் வைபவமாகவுமே அமை கின்றன. அரசியல் இலாபங்கருதி கொண்டாடும் இத்தினவிழா களியாட்ட விழாவாகவே காணப்படுகிறது.
“உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்” என்ற் கோஷத்
தோடு ஆரம்பமான மே தினம், 100 ஆண்டுகளைக் கடந்து வந்துவிட்டது. ஆனால், இன்று அது தனது ஆரம்ப நோக்கத்தை இழந்துவிட்டது. தொழிலாளர்கள் இன்று ஒன்று சேருவதற்குப் பதிலாக பல கூறுகளாப் பிரிந்து மே தினத்தைக் கொண்டாடு கின்றார்கள், அரசியல் கட்சிகள் ஒரு புறமும், தொழிற் சங்கங்கள் மறுபுறமுமாக தொழிலாளர்களைக் கூறு போட்டுள்ளனர். பல தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்திருந்து அரசின் ஊதுகுழலாக இருப்பதுவும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்றாகும்.
மே தினக் கூட்டங்களில் தொழிலாளர்களின் பிரச்சினை கள் ஆழமாக நோக்கப்படுதில்லை; பேசப்படுவதில்லை; அரசியல் கட்சிகளின் பிரசாரமும், தொழிற்சங்கங்களின் பிரசாரமுமே நடைபெறுகின்றன. இது மட்டுமல்ல. இக்கூட்டங்களின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் தொழிலாளரின் கவனத்தை திசை திருப்புகின்றன.
உண்மையில் மே தினம் தொழிலாளரை ஒன்றுபடுத்தும் தினமாக உரிமைக்குரல் எழுப்பும் தினமாக, தொழிலாளர் உரிமைப்போராட்டத்தில் உயிர்துறந்த தியாகிகளை நினைவு கூரும் தினமாக அமைய வேண்டும்.
தொழிலாளருக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணி மே
தினத்தின் மையப் பொருளாக அமைய வேண்டும். இன்று
275

Page 139
கீத பொன்கலன்
உலகளாவிய ரீதியில் பூகோளமயமாக்கப்படுவதால் தொழி லாளர்கள் பெரும் பாதிப்புக்குட்பட்டுள்ளனர். பூகோளமயம் முதலாளிமார்களுக்கு சாதகமாகவே உள்ளது. இன்று ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்கள், மலையகப் பெண் தொழி லாளர்கள் படும் அவலம் நல்லதோர் எடுத்துக் காட்டு. தொழி லாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டுள்ளது. ‘உழைப்பு முதலீட்டை விட உயர்ந்தது' என்பது உணர்த்தப்பட வேண்டும். “உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீனில் உண்டு கொழுத்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றார் பாரதி,
"உழைக்கமனமில்லாதவன் எவனும் உண்னலாகாது”
என்பது இறைவாக்கு,
தினக்குரல் 01. 05, 2003
S, 8. o. o. Č ex- & 8X- 0. ex
/ வழியில் ஒரு பெண்ணை இடைமறிப்பதோ, cܗܘܘ `\ செய்வதோ அல்லது மானபங்கம் செய்வதோ நம் பலத்தைக் காட்டுகிறதா? அல்லது பலவீனத்தைக் காட்டுகிறதா?
நிச்சயமாக அதுகாட்டவது பெண்களின்பலவீனத்தை அல்ல. ஆண்களின் மனபலவினத்தைத்தான்.
ஆணவமும், ஆதிக்கமும் அறிவினத்தின்அடையாளமே அன்றி ஆண்மையின் அடையாளமன்று. அரணா
யிருத்தல், ஆதரவளித்தல், ஆதரித்தல் போன்றவை யல்லவா ஆண்மையின் மெய்ப் பொருளைக்
குறிப்பனவாகும்? - ம. திருவள்ளுவர்レ - ܢܠ
216

11.2 தென்னிலங்கைத் தமிழரின் உள்ளக சுயநிர்ணய உரிமை
பேரினவாதிகள், அண்மைக்காலங்களில் வட கிழக்கிலும் பார்க்க தென்னிலங்கையில்தான் கூடுதலான தமிழ் பேசுவோர் வாழ்கின்றார்கள். இவர்கள் இங்கு ஏனைய சமூகங்களோடு சுமுகமாக சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றஒர் மாயையை பரப்புகின்றனர். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்தது தொட்டு தென்னிலங்கை தமிழர்கள் பலர்கொல்லப்பட்டும் அவர்களுடைய உடைமைகள், தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டும் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குள்ளாக்கப்பட்டும் திரும்பவும் அவ்விடங்களில் சென்று குடியேற முடியாது தடைசெய்யப்பட்டுள்ளது, தென் னிலங்கையில்தமிழர்காணிவிடுவாங்குவதற்கும் மறைமுக எதிர்ப்பு, சூழ்ச்சிகள் செய்யப்படு கின்றன. தமிழ் மொழியை நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்களில், அமல் படுத்தாமலும் தென்னிலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக ஒர் கட்சியினை ஆரம்பித்தால், எதிர்ப்போம் என பகிரங்கமாக மிரட்டுவதும் தொடர்ந்த வண்ணமுள்ளன.இந்த சூழ்நிலையில் தென்னிலங்கைதமிழ் பேசுவோர். தூரநோக்குடன் சிந்தித்து சுய நிர்ணய உரிமை களை வென்றிட ஆவன செய்ய வேண்டும்.
இன்று இலங்கை எதிர்கொள்கின்ற இரு பாரிய பிரச்சினை களாக சமத்துவமற்ற ஆட்சியும் வறுமையும் கணிக்கப்பட் டுள்ளன. இவ்விரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்
וו?

Page 140
கீத பொன்கலன்
திருக்கின்றன. 1920ஆம் ஆண்டு தொடக்கம் படிப்படியாக உருவாக்கப்பட்ட பேரினவாதக் கொள்கையின் தாக்கமே இன்றைய சீரழிவிற்கு வித்திட்டுள்ளது. இதன் இறுதிக் கட்ட மாக இன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள சமாதானச் சூழலில் தேசிய இனத்துவ உரிமைகளை உறுதிப்படுத்த பலரும் பல வழிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் வட - கிழக்கு மக்களது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் தென் னிலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள், தமிழ்பேசுவோருடைய உரிமைகளும் நிலைநாட்டப்பட்டால் தான் முழு இலங்கை யிலும் நல்லாட்சியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
11.2.1 தேசிய இனம்
மனித உறவுகளில் கருத்துப் பரிமாற்றம் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, தென்னிலங்கை தமிழ் சமூகத்தை இணைக்கும் தொடர்சங்கிலியாகத் தமிழ் மொழி அமைந் துள்ளது. இவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பிரிவு களையும் மீறி கலாசார ஒற்றுமை மூலமாக ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர். இந்தச் சமூகம் தொடர்ச்சியாக ஒரு பிரதேசத்தில் வாழாததினால் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களுடைய சமுதாய பரிமாற்றல் இல்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கை முறையுடன் காலப் போக்கில் மொழியும்கூட வேறு படலாம். இவை அனைத்துக்கும் முக்கியமானது இச் சமுதாயத் திற்குத் தேவையான அரசியல் பரிமாணமாகும்.
தென்னிலங்கை தமிழ் மக்களை ஒரே அமைப்பாகப் பேணும் தேவை அச்சமுதாயத்தின் மீது அதிக ஆளுமையுடைய சமுதாயப் பிரிவுக்குள்ளது. அச்சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு களும் அதன் பொதுவான சிந்தனை முறையும் ஒருமித்திருப் பதும் அச்சமுதாயத்தின் ஒருமைப்பாட்டிற்கு அவசியமாகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் தென்னிலங்கை தமிழரின் உள்ளக சுய நிர்ணய உரிமையை அமைப்பு ரீதியாக வகுத்து அதற்குகந்த செயற்பாடுகள் மூலமாக அவர்களது உரிமையைப் பாதுகாத்து அவர்களது அபிவிருத்தியை வளர்ப்பதாகும். தென்னிலங்கைத் தமிழரின் உரிமைகளும், நலன்களும் உத்தரவாதம் செய்யப் பட்டு பெரும்பான்மை இனத்தின் மத்தியிலுள்ள பேரினவாத
278

இருபத்தோராம் நூற்றாண்டில் .
போக்குகளை களைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை களை எடுப்பதன் மூலம் தேசிய இனங்களுக்கிடையேயான நல்லுறவை வளர்த்தெடுக்கவேண்டும்.
ஒரு சமூகம் தேசிய இனமாக அமைவதற்கு சில நடைமுறை சாத்தியமான தேவைகள் உள்ளன. அதற்குத் தொடர்ச்சியாக வாழும் பிரதேசம் பிரதான இடத்தை பெறுகின்றது. இதனை முறியடிக்கவே வட, கிழக்குப் பிரதேசங்களில் 1930 தொடக்கம் இன்று வரையும் சிங்களக் குடியேற்றங்கள் பல எதிர்ப்பு களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டன. இதன் தாக்கத்தை அட்டவனை 1.2.1 தெளிவுபடுத்துகின்றது. 1927ஆம் ஆண்டு 75.65% ஆக இருந்த தமிழர் 1981இல் 419 ஆக குறைக்கப்பட்டுள் ளனர். ஒரு சமூகம் தேசிய இனமாகக் கணிக்கப்படுவதற்கு தொடர்ச்சியான பிரதேசம் ஒன்று எப்போதுமே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்ததில்லை. உதாரணம் இந்தியாவின் அந்தமான் தீவு, 1971ஆம் ஆண்டு வரையும் கிழக்கு
அட்டவணை 11.2.1 கிழக்கு மாகாணம் - சனத்தொகை (1827 - 1981)
வருடம் | சனத்தொகை | சிங்களவர் % தமிழர் % முஸ்லிம்கள் %
1827 46,641 250 13 34, 758 75.65 11,533 23.55
1881 1,27.555 5,947 45 75,498 67.35 43,007 30.65
1897. 1,48,444 7,572 475 87,701 61.55 57,206 30.75
1901 1,73,602 8,778 47 96.926 57.5 62,448 3375
1911 1,83,698 6,909 375 - 101,181 56.2 70,409 360 1921 1,92,821 8,744 45 1,035s. 53.5 75,992 394 1946 2.79,712 23,456 84 146,059 $2.3 109,024 39.1
1953 3,54,470 46,470 13.7 167,898 I 47.3 135,322 38.7
1963 5,46,730 1,09,690 20.7 2,46,120 45.1 1,85,750 34.0
1971 7,17,571 1,48,572 207 3,15,560 439 2,48,567 34.6 1981 9.76479 2,43,358 249 4,09,451 419 3,15,207 322
ஆதாரம்:-பெளத்த சிங்களவரும் சிறுபான்மையவரும்
279

Page 141
கீத பொன்கலன்
பாகிஸ்தான். (இன்று பங்களாதேஷ்) ஆகவே, தென்னிலங்கைத் தமிழர்கள் தங்களது உள்ளக சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டக் கூடிய அரசியல் பரிணாமத்தைஉருவாக்க வேண்டும்.
11.2.2 குடியேற்றங்கள்
இந்தக் குடியேற்றங்களின் மூலமாக ஏற்பட்ட சனத் தொகை அதிகரிப்பின் காரணமாகவே அம்பலைஏரி என்ற பிரதேசம் அம்பாறையாகி இன்று திகாமடுல்ல என்ற சிங்களப் பெயராக மாறியுள்ளது. இது 1963இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சிங்கள மக்களின் தொகை கூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப் பும் பெரும்பான்மை இனத்திற்கே கொடுக்கப்பட்டது. மட்டக் களப்பு மாவட்டத்தின் பரப்பளவில் 64.8% நிலம் பிரித் தெடுக்கப்பட்டது. பரம்பரை தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இதனால் சிங்கள நிர்வாகத்திற்கு உட்படுத்தப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி 415% முஸ்லிம்களும், 37.6% சிங்களவர்களும், 19.9% தமிழர்களும் இருந்திருக்கின்றனர் வட, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்டபோது இங்கே இருக்கின்ற சிங்களவர்கள் தாங்கள் சிறுபான்மையின ராகக் கூடும் என்ற பயத்தினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்படியானால் அட்டவணை 2இல் கூறப்பட்டது போல நுவரெலியா மாவட்டத்தில் 60% ஆன தமிழ் பேசுவோருடைய நிலைமை எந்தவித உரிமைகளுமின்றி முழுமையாக சிங்களப் பேரினவாத ஆதிக்கத்தின் கீழ் அடக்கப்பட்டுள்ளது எவ்வளவு அநியாயமான செயல் என்பதும் அதே போல் அட்டவணையில் கொடுக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள தமிழ் பேசுவோரின் தமது உரிமைகளை நிலை நாட்டமுடியாமலேயே வாழ்கின் றார்கள். இதேபோல், மலையகத்தில் நுவரெலியா மாவட்டத் திலும், பல குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல் கொத்மலை திட்டத்தை அமலாக்குவதன் நோக்கமும் தலவாக்கலைப் பிரதேசத்தின் தமிழரின் செறிவைக் குறைப்பதற்கே என்பதில் ஐயமில்லை. இத்திட்டம் 1962இல் இருந்து இன்று வரையும் பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போதும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஓர் முக்கிய காரணம். சேவையாளர்கள் என்ற பாணியில் சிங்கள
280

இருபத்தோராம் நூற்றாண்டில் .
அட்டவணை 11.2.2
தென்னிலங்கைத் தமிழரும் தமிழ் பேசுவோரும் 2001
மாவட்டம் இல. இந் இல, தென்இல | தென்இல | சிங்களவர்
தமிழர் தமிழர் I சோனகர் | தமிழ் தமிழர்
s s இ பேசுவோர்
9test 9ts
நுவரெலியா | 41,445 | 359,386 17,557 418,388 400,831 280,236
% 5.9 S13 2.5 S9.76. 57.2 4000
Lugis067 32,230 141,087 40,455 213,772 173,317 558,218
% 4.2 182 S.2 2760 22.4 Z2.7
கண்டி 49,205 106,347 169,029 324,575 155,546 946,038
% 39 8.4 13.3 2S.6 12.3 740
இரத்தினபுரி | 34,335 178,581 20,877 133,787 172,916 873,265
% 34 7.8 2. 733 ፲፱.2 866
கேகாலை 14,763 45,647 51,699, 111,509 59,810 667,56
% 7.8 5.9 66 14.3 771 85.2
மாத்தளை 23,982 23,329 38,867 86,778 47,311 354,985
% S.4 S3 8.8 1977 10.7 80.8
புத்தளம் 48,689 2,761 131,864 182,714 Af 50,850 520,330
% 6.9 03 18.7 25.9 7.2 738
கொழும்பு 244,864 25,957 205,078 485,899 270,821 1,771,133
% O 12 92 21.4 12.2 766
களுத்தறை 13,527 28,769 92,775 135,071 42,296 923,893
% 7.3 27 8.8 12.80 4.0 871
ஆதாரம்:- குடிசன மதிப்பீடு 2001 குடியேற்றத்தை உருவாக்கி இதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தைக் குறைத்து படிப்படியாக சிங்கள மக்களின் தொகையை அதிகரிப்பதற்கு சென். கிளேயர் தோட்டத்தில் 200 ஏக்கர் காணி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவரு
281

Page 142
கீத பொன்கலன்
கின்றது. ஆகையால் இத்திட்டம் மூலம் சுற்றாடல் மட்டும் பாதிக்கப்படுவதுமல்லாமல், ஆறு பெரிய இராணுவ முகாம்கள் உருவாக்கப்படுவதற்கும் சிங்கள குடியேற்றத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் இது தொடர்பான சிங்கள அமைச்சர்கள் முன்னின்று இத்திட்டத்தை 2004ஆம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்போவதாக சவால் விட்டுள்ளார்கள்.
இந்த அட்டவணையின்படி, வட - கிழக்கைத் தவிர்ந்த தென்னிலங்கையில் உள்ள 9 மாவட்டங்களில் 10% கூடுதலாக வாழ்கின்ற தமிழரையும் தமிழ் பேசுவோரையும் இனங்காண் கின்றது. இதில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் 60% மானவர்கள் தென்னிலங்கைத் தமிழரே. இந்தத் தமிழர் மத்தியில் ஒரு அந்நியோன்ய உறவு அடிமட்டத்தில் காணப்படுகின்றது. உதாரணமாக அட்டன், டிக்கோயா நகரசபை சனத் தொகை சிங்களவர் 3752, இலங்கைத் தமிழர் - 3278. இந்தியத் தமிழர் 4713, இலங்கைச்சோனகர் - 2309 ஆனால் இந்த நகரசபையின் தவிசாளர் இலங்கைச் சோனகராவார். பல வருடங்களாக இவரே இப்பதவியை வகிக்கின்றார். இங்கே 3 சிறுபான்மை இனத் தவரின் ஐக்கியம் காணப்படுகின்றது. இதேபோல் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம்.
பதுளை, புத்தளம், நுவரவியா, கொழும்பு ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள 20 பிரதேசசபை செயலகப் பிரிவு களில் மாத்திரம் தான் தமிழ் - சிங்களம் ஆகிய 2 மொழிகளும் நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வட - கிழக்கைத் தவிர்ந்த 60 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இரு மொழி நிர்வாகத்திற்கான மக்கள் பிரிவுகளும் உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிறுபான்மை மக்களது ஒத்துழைப்பு மூலமே இந்த உரிமைக்கு செயல் வடிவம் கொடுக்கமுடியும்.
11.2.3 சிறுபான்மையரின் ஒன்றிணைப்பு
இன்று பேரினவாதிகளின் எதிர்ப்புக்கு முகம் கொடுப்ப தாக இருந்தால் 3 சிறுபான்மைக் குழுவினரும் ஒன்றிணைந்து தமது உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பை பலப்படுத்துவதன் மூலம் பேரின வாத கொள்கைக்கு அடிமைப்படாமல் உள்ளக சுயநிர்ணய
282

இருபத்தோராம் நூற்றாண்டில் .
உரிமையோடு வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது இவர் களின் அரசியல் பரிணாமத்தில் தங்கியுள்ளது.
இலங்கையில் 25 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் வட/ கிழக்கிலும், தென் இலங்கையிலுள்ள 17 மாவட்டங்களுல் 9 மாவட்டங்களில் தமிழர் 10%க்கும் கூடுதலாக வாழ்கின்றார்கள். இதைவிட 8 மாவட்டங்களில் 10%இற்கு குறைவாக உள்ளனர். இங்கு வாழ்கின்ற தமிழர்களின் உரிமைகளும் பேணப்பட வேண்டும். இவர்களுக்கு இந்தப் பகுதிகளில் தமிழ் மொழிப் பாட சாலைகள் அரை குறை நிலையில் இருக்கின்றன. இதை விட தங்களுடைய மொழி, கலாசாரம், அரசியல், பொருளா தார உரிமைகளை நிலைநாட்ட எதுவித வழியுமின்றி அரசியல் அநாதைகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். இவைகளில் முக்கிய மாக கம்பகா, மாத்தறை, காலி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை காட்டுகின்றது.
அட்டவணை 11.2.3 தென்னிலங்கையில் தமிழரும், தமிழ் பேசுவோரும் (10% இற்கு குறைவானோர் 2001)
6
மாவட்டம் இலத % இந்த 1% இசோ % |அ+ஆ+இ|?
(அ) (-鹦) (g))
பொலனறுவை 7.185 2.0 147 0.04 27 272 75934,604 9.63
அநுராதபுரம் 5,064 0.68 577 0.07 எ5ல் 8.24 67,084 899
குருநாகல் 16,991 117 2,732 0.19 97,778 673 11750 8.00
கம்பகா 64,450 312 7,388 0.36, 80,320 389 152,158 737
மாத்தறை 4,791 0.63 16,983 223 22,378 2.94 44,752 5.80
காலி 11,596 1.77 8,553 0.86 35,346 3.57 55,495 5.60
மொனறாகலை 5,579 | 1.41 | 7,660 | 193 | 8,047 | 203 | 21,286 537
அம்பாந்தோட்டை 1,957 0.37 243 0.05, 5,506 1.05 7,706 1.47
ஆதாரம்:- குடிசன மதிப்பீடு 2001
இந்த அட்டவணை 2ஐயும் 3ஐயும் பார்க்கும் பொழுது கூடுதலான மலையகத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர் என பதிவு செய்யப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும். இதிலிருந்து
283

Page 143
கீத பொன்கலன்
இவர்கள் இந்தியா என்ற அடைமொழியை பாவிக்க விரும் பாததனாலும், பிரஜாவுரிமை பெற்றவர்கள் தங்களை இலங்கைப் பிரஜை என்று பதிவு செய்ததனாலும் அவர்களுடைய வம்சா வளியினர், இலங்கைத் தமிழராக பதிவு செய்யதுள்ளனர். இதனால் இவர்கள் பிரஜாவுரிமை சான்றிதழ் எதற்கும் சமர்ப் பிக்கத் தேவையில்லை. இவர்கள் இலங்கைத் தமிழரோடு ஒன்றாகக் கலந்து விட்டார்கள். ஆகையால் தென் இலங்கைத் தமிழர் என்ற பதம் வட/கிழக்கிற்கு வெளியே உள்ள எல்லாத் தமிழர்களையும் குறிக்கின்றது.
மேலும் தென் இலங்கையில் இருந்து வட/கிழக்கிற்கு குடியேறிய தமிழர்கள் அங்குள்ள தமிழர்களோடு சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக படிப்படியாக கலந்துவிட் டார்கள். இந்தச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கூடுலாக அடக்கப்பட்டிருக்கும் மலையகத் தமிழ் மக்கள் தமது தனித்துவ உரிமைகளை நிலை நாட்டுவது இன்றைய சமாதானச் சூழலில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்பட்டு, அவைகளை நடைமுறைப் படுத்த ஏனைய சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வட/கிழக்கு தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற தீரா பழி வர லாற்றில் மாறாத வடுவாக இடம்பெற்றுவிடும் என்பது திண்ணம்.
11.2.4 சிறுபாண்மையினர் - பாதுகாப்பு அற்ற நிலை
ஆனால் இன்றைய யதார்த்த நிலை என்னவென்றால், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு இன்று வரையும் கூடுதலாக தென்னிலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், சொத்துக்களும் பொருளாதாரமும் அழிக்கப் பட்டு அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் சென்று குடியேற முடியாதளவிற்கு பேரினவாத சக்திகள் செயற்பட்டன. உ+ம்: - அளவை, நித்தம்புவ, வியாங்கொட, பதுளை, நுவரெலியா இது போன்ற பல நகரங்களில் தமிழருடைய கடைகள், தொழிற் சாலைகளும் நாசமாக்கப்பட்டு அவர்கள் மீண்டும் இந்த இடங்களில் குடியேற தடை செய்யப்பட்டுள்ளனர்.
விசேடமாக 1983ஆம் ஆண்டிற்குப் பின் தென் இலங்கையில் இனக் கலவரங்களாலும் வட/கிழக்கில் யுத்தத்தாலும் இன்னும் சுபீட்சமாக தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவரோடு வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று கடந்த 25
284

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக முழு இலங்கையின் அரசியல் ஸ்திர நிலையும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலிகளின் ஆயுத பலத்தினாலும், சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்டதாலும், அந்த யுத்த நிலை மாறி ஒரு சமாதானச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அங்கத்தவர்களாக அரசும், விடுதலைப்புலிகளும், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் செயற்பட்டு வருகின்றனர். ஆகையால், முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நிரந்தர சமாதனத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு தென் இலங்கைத் தமிழரின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு இவர்கள் ஆக்க பூர்வமான முயற்சியில் இறங்குவது இவர்களுடைய அடுத்த செயற்பாடாக இருக்கும். 11.25 மலையகத் தமிழரின் உள்ளக சுயநிர்ணய உரிமை
இதேவேளை, மலையக தமிழ் சமூகம் சுதந்திரத்தோடும், உரிமையோடும் வாழ்வதாக இருந்தால் இன்றைய சமாதானச் சூழலின் பின்வரும் அம்சங்களை அவதானத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பெருந் தோட்டத்துறை கட்டமைப்பில் இருந்து மலையகத் தமிழ் மக்கள் விடுபட்டு ஏனைய சமூகத்தைப் போல் இவர்கள் வாழு கின்ற இடங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிராமமாக உருவாக்கப் பட்டு ஏனைய கிராமத்து மக்களைப் போல் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
1972பின் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் பெருவாரியான பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டன. மலையகத் தமிழ் மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு ஆரோக்கியமாக வாழக்கூடிய தனிவீடுகளும் சொந்தமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டத்துறையில் வாழுகின்ற தொழிலாளர் வர்க்கத்தின் இளைய தலைமுறைகள் பெருந்தோட்டத்துறை சூழலை ஏற்றுக் கொள்ளாமல் மாற்று வழிகளைத் தேடித் திரிகின்ற வேளையில் இவர்களின் தேவைகளைத் பூர்த்தி செய்யக் கூடிய சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும்.
அட்டவணை 11.22இல் நுவரெலியா மாவட்டத்தில் 60% தமிழர்கள் வாழ்வதால் இந்தப் பகுதியில் இவர்களின் உள்ளக
285

Page 144
கீத பொன்கலன்
சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் வாழ்வதற்குத் தேவை யான அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு ஏனைய மாவட்டங் களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
வட - கிழக்கில் வாழுகின்ற சிறுபான்மையினர் அனுப விக்கின்ற அதே உரிமைகளை தென்னிலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையினரும் பெற வேண்டும்.
மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுவிட்டது என பலரும் கூறுகிறார்கள். அப்படி யாயின் நிர்வாகம் தொடர்பான விடயங்களில் பிரஜாவுரிமை சான்றிதழை சமர்ப்பிக்கும் படி இவர்களை நிர்ப்பந்திக்காமல் ஏனைய மக்களைப் போல் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். உதாரணம் வாக்களிப்பு, கடவுச் சீட்டு, காணி போன்றவை
நலிவுற்ற மலையக தமிழ் மக்களது கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், கலாசாரம், அபிவிருத்தியில் அவர்கள் ஏனைய மக்களது வளர்ச்சி மட்டத்தை எட்டும் வரை இவர்களுக்கு பிரத்தியேக விசேட செயற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்,
சனத்தொகைக்கு ஏற்ற அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் வகையில் தேர்தல் முறையில் மட்டுமல்ல, சட்டவாக்கம் அமல்படுத்தப்பட்டு 9 மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் அமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளாது இன்றுள்ள பெளத்த சிங்கள பேரினவாத யாப்பு முற்றும் முழுவதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் வெறும் பேச்சாக, எழுத்தாக இல்லாமல் முழுமையான, உண்மையான செயல் வடிவமாகக் கொண்டு வந்தால் மட்டுமே இலங்கையின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழி சமைக்கும். உண்மையான சமாதானம் ஏற்பட முடியும். கடந்த கால தவறுகளை நீக்கி உண்மையான சமாதானத்தின் மூலம் நாடு எதிர்கொள்ளும் வறுமை, சமத்துவமின்மை என்ற இரு பெரும் சவால்களை எதிர் கொள்ள முடியும். இந்தக்கருத்துக்கள் பெரும்பான்மை மக்களிடையே பரப்பப்பட்டு விளக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம், மனதாலும் செயலாலும் தெரிவு செய்யப்படுவதே சமாதானமாகும்.
தினக்குரல் 05. 12, 2002
286

அத்தியாயம் - 12
மலையகதமிழ் மக்களுக்கு சவாலாக உள்ள மேல் கொத்மலைத்திட்டம்
12. 1 இலங்கையில் உள்ள நீர் மின்
வலுத் திட்டங்கள்
12.2 மேல் கொத்மலை நீர் மின் வலுத்
தேக்கத் திட்டம்
287

Page 145
288
அத்தியாயம் - 12
மலையகதமிழ் மக்களுக்கு சவாலாக உள்ள மேல்
கொத்மலைத்திட்டம்
இலங்கை அரசாங்கம் இன்று உலக வங்கியினு டைய உலகமயமாக்கல் என்ற கொள்கையை ஏற்று நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மூல மாக வறுமைக் குறைப்பு என்ற பெயரில் முதலாளித்துவ வர்த்தகக் கழகங்களுக்கு முழு நாட்டையும் அனைத்து வளங்களையும் வாரி வழங்குவதிலும், சட்டப்பூவர்மாக விற்றுவிடு வதிலும், சாதகமான சட்டங்களை அவசர அவசர மாக உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்தக் கெள்கையின்படி வறுமையில் வாழும் மக்கள் செல்வந்தர்களுக்குதமது வளங்களையும், கடின உழைப்பையும் வட்டியும், முதலுமாக கடன் செலுத்துவதன் மூலமாக மானியமாகக்கொடுத்து பட்டினிச் சாவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த செல்வந்தர்களின் சர்வதேச நிறுவனங் களின் செயற்பாட்டின் வசதிக்காக அதிவேக நெடுஞ்சாலைகள்,துறைமுகம்,விமானநிலையம், அணைக்கட்டு, மின்உற்பத்தி போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக பாரிய அளவிலான கடன் நிதித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் எமது நாட்டின் சூழல் பாதிப்பு அடையவும், மக்களை இடம் பெயரச் செய்யவும் கடன் சுமையை அவர்கள் மேல் சுமத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இன்று எமது நாடு பெற்ற கடன்களுக்கு எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிநபரும்1இலட்சம் ரூபாவுக்குமேல் கடனாளி யாக்கப்பட்டுள்ளனர்.

12. 1 இலங்கையில் உள்ள நீர் மின்வலுத் திட்டங்கள்
இந்தத் திட்டத்தில் ஒன்றுதான் மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தித் திட்டம். ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் கொத்மலை நீர் மின் உற்பத்தித் திட்டத்திற்கு மேலாக புதிய நீர் மின் தேக்கம் தலவாக்கலை நகரத்திற்கு அருகில் அமைக்கப் படவுள்ளதால் இது மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தித் திட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் இத்திட்டத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, இதன் உண்மையை மக்களின் முன் கொணர்ந்து விழிப்புண்ர்வு பெற செய்வதற்காகவே என்பது குறிப்பிட தக்கது.
12.1.1நடைமுறையில் உள்ள மின்வலுத் திட்டங்கள்
இலங்கையில் கூடுதலாக நீர் மின் வலுத்திட்டம் நடை முறையில் உள்ளது. உயர்மட்ட உயரத்தில் தேக்கிவைக்கப் பட்டிருக்கும் நீர் வலுவை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீர் மேலே இருந்து கீழே நீண்ட தண்டு ஒன்றின் ஊடாக செங்குத்தாக அனுப்பப்படும் போது உள்ளார்ந்த வலு இயக்காற்றல் வலுவாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்த வலுவை மின்சார கடத்தி ஒன்றுடன் இணைப்பதன் மூலம் மின்சாரம் பெறப்படுகின்றது. நீர் மின்சார பொறி ஒன்றினால் உற்பத்தி செய்யப்படும் வலு விடுவிக்கப்படும் நீரின் அளவில் தங்கியுள்ளது. நீர் தேக்கங்களில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சாரத்துக்கு மட்டுமல்லாமல் நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நகர, கிராம நீர் விநியோகம் போன்ற வேறுபல நோக்கங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. இன்று உலகளாவிய ரீதியில் நீர் மின்வலு உற்பத்தி மூலம் மொத்த மின்சாரத்தில் 20%த்தைப் பெறுகின்றது. அண்மைக் காலத்தில் இலங்கை அனுபவித்ததைப் போல உலக நாடுகளிலும் மழை வீழ்ச்சி குறைவாக இடம் பெறும் காலங்களில் பெருமளவுக்கு மின்சார பற்றாக்குறைகளை எதிர் கொண்டு வருகிறது.
289

Page 146
கீத பொன்கலன்
அட்டவணை - 12.1.1
நீர்மின்வலு உற்பத்திப் பொறிகள்
உற்பத்திப் ஆரம்பிக்கப் நிறுவப் 1999வலு 1999இல் வருடாந்த பொறிபாரிய பட்ட பட்ட உற்பத்தி | பொறித்த சராசரி நீர் மின்வலு வருடம் கொள்திறன் gwh/ தொகுதி உபயோக
மெகாவாட் வருடம் உபயோக %
MW %
லக்சபான தொகுதி 1950 33S 7.663,O 56.7 41.2
பழையலக்சபான 1950, $8 SO 277.5 62.0 SS.
விமலசு ரேந்திர 96S SO 104.3 23.8 24.3
பொல்பிட்டிய 1969 76 481.0 73.2 56.ズ
புதிய லக்சபான 1974 700 626.8 71.5 47.3
கென்யன் 1982, 88 60 7794 34. 22.8
மகாவலித்தொகுதி 1984 660 2,714.9 36.6 32.4
உக்குவெல 1976 38 1859 55.8 480
போவதன்னை 1981 40 59.5 17.0 11.6
விக்டோரியா 84,85,86 210 8417 45.8 34.2
கொத்மலை 8S,85,86 207 4S40 25.8 26.1
ரந்தெனிகல 1986 122 381.8 35.7 37.7 ரந்தம்பே 1990 49 1979 447 42s வளவே தொகுதி 720 32O.O 30.4 14.5
சமனலவெவ 1993 120 32O.O 30.4 14.S.
சிறியதீர்மின்வலு 20 54.7 30.6 21.4
இங்கினியாகல 1963 11 34.3 3S,6 22.7 DL6/6trGas 7969 6 O.O 790 2.5
நிலம்பே 1988 3. 9.8 37. 38.0
மொத்தம் 1,735 4,752.0
(ஆதாரம்: பொருளியல் நோக்கு, ஆகஸ்டு 1995)
12.12இலங்கையின் நிர்மின்வலுக் கட்டமைப்புகள்
1940களின் பிற்பகுதிகளில் நோட்டன் பிரிட்ஜில் நிர் மாணிக்கப்பட்ட 25 மெகாவாட்மின்வலு உற்பத்திப் பொறியை தொடர்ந்து இலங்கையில் பாரிய நீர் மின்வலு உற்பத்தியும்
290

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஆரம்பிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 1077 மீற்றர் உயரத்திலும் 1200 மீற்றர் உயரத்திலும் அமைந்திருந்த இடங் களில் களனி கங்கையின் உப நதிகளான கெடுகெல்கழுவ ஒயா மற்றும் மஸ்கெலியாஒயா என்பவற்றின் நீரைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் பல தசாப்தகாலமாக நிறுவப்பட்டு வந்துள்ள பல மின் உற்பத்தி பொறிகளுக்கு ஊடகமாக மின்சாரத்தை வழங்குகின்றது. பாரிய நீர் மின்வலு உற்பத்தி மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. லக்சபான, மகாவலி, வலவே தொகுதிகளாகும் இவை நீர்வீழ்ச்சிகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கிடைக்கும் நீரின் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சிறிய நீர்மின்வலு நிலை
யங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலுள்ள அட்டவணை12.1.1 யின் படி பொறித்தொகுதி காரணி வீதம் குறிப்பிட்ட காலப்பிரிவின் போது பயன்பாட்டு வீதத்தை சுட்டிக்காட்டுகிறது. அதாவது நிறுவப்பட்டுள்ள உச்சமட்ட கொள்திறனில் நாளொன்றுக்கு தொடர்ச்சியாக 24 மணிநேரம் 365நாட்களுக்கு இயங்கிவரும்ஒருபொறித்தொகுதி 100சதவீத பொறித்தொகுதிக் காரணியைக் கொண்டிருக்கும். 1999ஆம் வருடம் தொடர்பான பொறித் தொகுதிக் காரணிகள் 17 சதவீதம் தொடக்கம் 73.2 சதவீதம் வரையான வீச்சுகளில் வேறுபட்ட அளவுகளில் இருந்து வந்துள்ளதை எடுத்துக் காட்டு கின்றது. அதே வேளையில் முன்னைய வருடங்கள் தொடர் பான சராசரிகள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் நிலவி வந்திருப்பதுடன் அதன் ஆகக் கூடிய அளவு 57 சதவீதமாகும். இந்நிலமைக்கு பல காரணங்கள் உள்ளன. முழு அளவுக் கொள் திறனில் பொறித்தொகுதியை இயக்குவதற்கு போதிய அளவில் நீர் இல்லாமை குறைந்த உற்பத்தியை அவசியப்படுத்தும் குறைந்த அளவிலான கேள்வி மற்றும் பராமரிப்புக்கென பொறித் தொகுதிகளை மூடிவிடல் என்பன இவற்றிற் சிலவாகும். இந்த அட்டவணையின்படி ஒரு சில திட்டங்களில் இரண்டு அல்லது மூன்று புதிய திட்டங்கள் வெவ்வேறு வருடங்களில் நிறுவப் பட்டன. உதாரணம் பழைய லக்சபான நீர்மின் திட்டத்தில் 1950, 1958 ஆண்டும் இரண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன, இதைவிட 1991ம் ஆண்டுவரை நீர்மின்வலு மூலமாக நிறுவப் பட்ட கொள்திறன் 1017-25 மெகாவாட் ஆகும். இதே கால கட்டத்தில் அனல் மின் உற்பத்தி மூலமாக நிறுவப்பட்ட கொள்திறன் 27220 மெகாவாட் ஆகும்.
29

Page 147
கீத பொன்கலன்
அட்டவணை 12.1.2
1989 - 1998 காலப் பிரிவின் போது மின் உற்பத்தி நிலையங்களில் பயன்பாட்டு வீதம்
வருடம் 1989 1990 1991 1992 1993 1994 | 1995 1996 1997 1998
மெகாவாட் 1968 | 1017 | 1017 | 1137 | 1137 1137 | 1137 | 1137 | 1137 | 1137 MW
Gwh / 2858 3745 3166 29003796 || 4089 4514 3249 3443 3909 வருடம்
பொறித் தொகுதி காரணி % 337 35.3 35.5 29.1 38.1 41.0 45.3 32.6 34.6 392
நீர்மின் வலு"% 98.0 99.8 92.3 81.9 95.4 932 94.0 71.8 67,068.9
(ஆதாரம்:- பொருளியல் நோக்கு, ஆகஸ்டு 1995)
நாட்டின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி கட்டமைப் பினதும் பொறித் தொகுதி காரணியான பயன்பாட்டு வீதங் களை எடுத்துக் கூறுகின்றது. 1992ம் ஆண்டு ஆகக் குறைந்த மட்டமான 29.1 சதவீதத்திலிருந்து 1995ம் ஆண்டு 45.3 சதவீதம் உச்ச மட்டம் நிலவியது. இதன் சராசரி அளவு 36 சதவீதமாகும். இது நீர்மின் வலு வளங்கள் தொடர்பாக வருடா வருடம் நிலவி வந்துள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றது. 1992, 1996, 2000 ஆண்டுகளில் வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டுத் தாக்கத்தை பொறித் தொகுதி பயன்பாட்டு வீதம் எடுத்துக் காட்டுகிறது. நீர்மின் வலு சதவீதமானது பொறித் தொகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் சதவீதத்தினைக் காட்டுகிறது. மிகுதி மின்சாரம் அனல்மின் உற்பத்தி நிலயங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நீர் மின்வலு உற்பத்திப்பொறி தொகுதிகள் நீண்ட காலம் செயலாற்றுகையின் 50 சதவீதத்துக்கு குறைவாக இருந்து வந்துள்ளது. இதன் காரணம் நீர்மின்வலு உருவாக்கப்பட்ட கட்டங்களின் போது அதனுடைய தாக்கங்களை முன்கூட்டியே கவனத்தில் எடுக்காமை.
292

12.2 மேல் கொத்மலை நீர்மின் வலுத்தேக்கத் திட்டம்
மேல் கொத்மலை நீர்மின் வலுத்தேக்கத்திட்டமானது. இலங்கையின் எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்வதற் காக ஓர் நீர்த்தேக்கத்தை கட்டுவதேயாகும். இத்திட்டமானது நுவரெலியா மலைச்சாரலின் மேற்புறச் சரிவில் கட்டப்பட வுள்ளது. இத்திட்டம் அமைக்கப்படவுள்ள இடம் தலவாக் கலை நகரமும் அதன் சூழவுள்ள பகுதிகளுமாகும். மகாவலி கங்கையின் உற்பத்திக்கு ஒரு மூலகாரணமான கொத்மலை ஆறு (ஒயா) மேல் மட்டத்திலேயே திசைத்திருப்பப்பட்டு தலவாக்கலையில் தேக்கி, புதிதாக கட்டப்படவுள்ள நீர்த்தேக் கத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்நீர்த் தேக்கமானது, இலங்கை யிலுள்ள ஆறு பிரபலமான நீர் வீழ்ச்சிகளிலிருந்து தண்ணீர் பெற்றுக் கொள்ளவுள்ளது.
இத்தண்ணிரினை திசைத்திருப்பி நீர்த்தேக்கத்திற்கு அனுப்புவதன்மூலம், இவ் ஆறு நீர் வீழ்ச்சிகளான, டெவோன், செண்கிளயார்ஸ், பூனா, ரம்பொடை, சென் என்றுாஸ், பூண்டு லோயா போன்ற நீர் வீழ்ச்சிகளுடைய இயற்கை வடிவும், மலை குன்றுகளிலிருந்து விழும்போது, கண்களை கவர்ந்து, மனதை மகிழ்விக்கும் இனிமை நிறைந்த காட்சிகள் இல்லாதுபோய் விடும். இந்நீர் வீழ்ச்சிகளிலிருந்தும் ஏனைய சிறுநீர் வீழ்ச்சிகளி லிருந்தும் பெறும் நீரை இருபத்துமூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு சீமெந்து (கொன்கிறிட்) குழாய்கள் மூலம் மின் வலு a fibl gig. Gaftiupubg) g5pg (Hydro Power Plant - underground) அதாவது நிலத்திற்கு அடியிலுள்ள இந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதிலிருந்து 150 மெகாவாட்ஸ் உள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இவ் மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமானது நியான் கந்த கொட என்ற இடத்திற்கு அருகில் வலப்பக்கத்திலுள்ள கொத்மலை ஆறு (ஒயா) தேக்கத்தில் நிறுவப்படவுள்ளது.
293

Page 148
கீத பொன்கலன்
12.2.1 இத்திட்டத்தின் நோக்கம்
நீர்மின் வலுமின்சாரம் முதன் முதலில் மலையகத் தமிழர் வாழும் பகுதிகளிலேயே 1950ம் ஆண்டு தொட்டு உருவாக்கப் பட்டது. ஆனால், இந்தப் பகுதிகளில் உருவாக்கப்படும் மின் சாரம், கடந்த நாற்பது வருடங்களுக்கு மேல், இந்த மக்களுக்கு கொடுக்கப்படாமல் இந்த மக்கள் வசிக்கும் தோட்டபுற, தோட்ட முகாமையாளர்கள் துரை மற்றும் உத்தியோகஸ்த்தர்களின் வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஏனைய மின்சார சக்தி இலங்கையிலுள்ள ஏனைய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வழங்கப்பட்டது.
கடந்த பதினைந்து வருடங்களாக மலையகத்தமிழ் மக்க ளுடைய உரிமைக்கோரிக்கைகளின் பின் 25% மானவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று எமது நாட்டில் 79% மான வர்கள் மின்சார வசதி பெற்றுள்ளார்கள் இத்திட்டம் மூலமாக நாமறிந்த மட்டில், மலையகத்தமிழ் மக்களின் மின்சாரத் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்யப் போவதில்லை என்பது உண்மை, ஜப்பானிய கம்பெனிகள் சார்ந்த பன்னாட்டு நிறுவனம் இப்பகுதிகளில் பாரிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, அதற்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்காகவே இந்த திட்டத்தினை அமல்படுத்துவதன் முக்கிய நோக்கமாக இருப்பது நோக்கத்தக்கது.
இன்னொரு மறைமுகமான நோக்கமானது, பேரினவாதக் கட்சிகள், இந்த பகுதிகளில் மலையகத் தமிழர்கள் பெரும் பான்மையினராக வாழ்வதாலும் இவர்களுக்கு வாக்குரிமைகள் படிப்படியாக கிடைத்துக் கொண்டிருப்பதாலும், இரண்டா வது பொதுதேர்தல் தொடங்கி (1952) அண்மைக்காலம் வரை, மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சிங்கள மக்களே பாராளுமன்றத்திற்கு சென்றார்கள், ஆனால் இப்போது இந் நிலைப்படிப்படியாக மாறி வருகின்றபடியினால் இத்திட்டத்தின் மூலமாக பல சிங்கள குடியேற்றங்களை பல்வேறு முறைகளில் அமல்படுத்த எத்தனிக்கின்றார்கள். உதாரணமாக இத்திட்டத் திற்கு உதவுமுகமாக இயந்திரவியலாளர்கள் மின்சாரசபை உத்தியோகஸ்த்தர்கள், இலிகிதர்கள், முக்கிய கருமங்களை ஆற்றுவதற்கும், ஏனைய தொழில் வாய்ப்புக்களுக்கும் சுமார் முப்பதாயிரம் சிங்கள குடும்பங்களை, இரண்டாயிரம் ஏக்கரில் குடி அமர்த்தப்பட விருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்காக இப்பகுதிகளிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் இத் திட்டத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தியே தீருவது
294

இருபத்தோராம் நூற்றாண்டில் .
என பிடிவாதமாக உள்ளனர். இதற்கு எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் ஆளும், எதிர்கட்சிகளுங்கூட ஒன்றிணைந்து, நடைமுறைப்படுத்தும் செயலை வலியுறுத்தி நிற்கின்றன.
கடந்த காலங்களில் இலங்கையின் பல இடங்களில் தமிழினப்படுகொலை வன்முறைகள், நடைபெற்றபோது இப்பகுதிகளிலுள்ள மக்கள் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்து, தங்களை ஒரளவிற்கு பாதுகாத்து கொண்டவர்கள், உதாரண மாக 2000ம் ஆண்டில் பண்டாரவளையிலுள்ள பிந்துனு ஒயா திறந்தவெளி புனர்வாழ்வு மையத்தில், நடந்த இனப்படு கொலைகளின் போது கொல்லப்பட்டவர்களில் இருவர் மலையக பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதால், இக்கொலை களுக்கு எதிராக அகிம்சை முறையில், எதிர்ப்பு தெரிவித்த மக்களை இங்கிருந்த சிங்கள பேரினவாத சிறுகுழுக்கள் அரச படைகளின் துணை கொண்டு, படுகொலைகள் செய்தனர் தமிழர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு, தீயிட்டு நாசம் செய்தனர். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
இத்திட்டமும் நிறைவேற்றப்பட்டால் இன்னும் ஏழு பாரிய சிங்கள இராணுவ முகாம்கள், நீர்த்தேக்க பாதுகாப்பு என்ற போர்வையில் அமைக்கப்படவுள்ளன என்ற நிலைப் பாடானது, சிங்கள குடியேற்றத்தை ஊக்குகிவிப்பதோடு, தமிழ் மக்களை பயப்பீதியுடன், நடைபிணமாக அடக்கி ஒடுக்கி வைக்கும் எண்ணங்கள் ஈடேறப்போவது திண்ணம்.
இதற்கு முன்னர் மலையகப் பகுதிகளில் நீர்த்தேக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டு பாதுகாப்பரண்கள் போடப் பட்டிருப்பதால், அங்கு தமிழ் மக்களின், நடமாடும், தொழில் புரியும் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. தேயிலை கொழுந்து பறித்து செல்லும் தொழி லாளப்பெண்கள் இடைமறிக்கப்பட்டு, அரச படையான இராணுவ குண்டு பரிசோதனைக்கு கொழுந்து கூடை உட் படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படும் அவலம் நடைமுறையில் இருப்பதும் இங்கு தொட்டு காட்டப்பட வேண்டியுள்ளது. w
இத்திட்டத்திற்கு மலையகத் தமிழரை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சில அரசியல்வாதிகள் தொழிற்சங்க தலைவர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதோ அல்லது இத்திட்டத்திற்கு எதிராக பகிரங்க
295

Page 149
கீத பொன்கலன்
எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதோ, இத்திட்டத்தின் தாக்கங் களை தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பது மறைமுகமாக இத்திட்டத்திற்கு ஒத்து போகும் நிலைப்பாட்டுக்கு ஒப்பானதாகவே பொதுமக்கள் கருது கிறார்கள். தவிர, இத்திட்டத்தினால் இவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஏதாவது இலாபம் அடைகிறார்களா என்ற வினாவும் சந்தேகமும் வலுவாக இம்மக்கள் மத்தியிலிருந்து கிளப்பப்படு கிறது. இவர்கள் இத்திட்டத்திற்கு உடன் போனால், முழு மலையகத் தமிழரையும் காட்டி கொடுப்பதோடு எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்லும், துரோக, நாசகார வேலைகளாகும் என விசனமடை கின்ற நிலை பரவலாக காணப்படுகிறது.
12.2.2யப்பான் நாட்டின் செயற்திட்டம்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேல், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த பல அமைப்புக்கள் முன்வந்தன. ஆனால் பல காரணங்களால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இன்று யப்பானிய அரசும், அவர்களுடைய பன்னாட்டு நிதி நிறுவனமும் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த முழுப்பணச் செலவையும், இலங்கையரசுக்கு கடனாக கொடுத்து வட்டியுடன் இலங்கை மக்களால் திருப்பி செலுத்து வதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு பாவிக்கப்படும் இயந்திரங்கள், பொருட்கள் (சீமெந்து, கம்பிகள்) போன்ற ஆக்கப் பொருட்கள் யாவும் யப்பான் நிறுவனத்தி னாலேயே கொடுக்கப்படவுள்ளது. உதாரணமாக இலங்கையில் சீமெந்து உற்பத்தி செய்யும் யப்பான் நிறுவனத்திலிருந்து சீமெந்து பெற்றுக் கொள்ளப்படும் எனும்போது, இது யப்பான் நாட்டு வருவாயை வளப்படுத்தும் ஒரு உபாயமாகும்.
அதைவிட, இத்திட்டத்தின் பணிகளில் ஈடுபடும் சகல உயர்மட்ட அடிமட்ட ஊழியர்களின் 82% மானவர்கள் யப்பானி யர்களே. யப்பான் நாட்டில், இத்துறையில் பயிலும் பயிற்சி மாணவர், ஐந்து வருட இத்திட்டத்தின் பணிகளில் ஈடுபடுத்தப் படவிருக்கிறார்கள். இத்திட்டத்தின் பணிகளில் 18 வீதமானவர் களே எம்நாட்டு பணியாளர்களாகவிருப்பர் இவர்களுள் எத்தனை பேர் மலையகத் தமிழர் என்பது கேள்விக் குறியாகும். இத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து பெரிய அளவில் மணலும், கற்களும் பெறப்படவுள்ளதால், பாரிய முறையில் மக்களும் சூழல் பாதிப்புகளுக்குள்ளாகும் நிலையும் தோன்ற வுள்ளது. இத்திட்டமானது முற்று முழுவதுமாக யப்பான்
296

இருபத்தோராம் நூற்றாண்டில் .
நாட்டுக்கே நன்மை பயக்கும். அத்தோடு இலங்கையில் தற்போது, ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சூழலில், நிகழும் பேச்சு வார்த்தைகளின் போது, விசேடமாக டோக்கியோவில், நடந்த நிதிவழங்கும் மாநாட்டில் பல நாடுகளும் சேர்ந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்குவதாக ஒத்துக் கொண்டன. இதில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை யப்பான் அரசு கொடுப்பதாக ஏற்றுக்கொண்டது. ஆனால், தற்போது நாம் அறிய கூடிய விடயம் யாதெனில், மேல்க் கொத்மலை திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு செயற் படுத்தப்பட்டால்தான், மாநாட்டில் ஒத்துக்கொண்ட பணத்தின் அரைப்பகுதியை யப்பான் அரசு கொடுக்கும் என்பதே.
இலங்கையில் உலக மயமாக்கல் என்ற கொள்கையை அமல்படுத்துவதற்கு, அதை அமல்படுத்த முயலும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாரிய, முக்கிய பிரச்சினைகள் இரண்டு. அவை பொருளாதாரமும், நீடித்த சமாதானம் என்ற இரண்டுமே. இவை இரண்டையும் ஒன்றாக உட்புகுத்துவதன் மூலம், பொருளாதார இரீதியாக மக்களை இன்னும் வறிய நிலைக்குத் தள்ளும் உலகமயமாக்கள் திட்டத்தினை சூட்சக மாக அமல்படுத்த நடவடிக்கைகளை தொடர்கிறார்கள். இதனால், பொருளாதார அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில், இவர்கள் புகுத்தும் உலகமயமாக்கும் நச்சு திட்டங்களை எதிர்க்கும் மக்களை சமாதான விரோதிகள் என கணிப்புக் குள்ளாக்கப்படுகின்றனர். ஏனையோர் இந்த மாயையை உணராது, இத்திட்டங்கள் சமாதான சகவாழ்வுக் கொண்ட அபிவிருத்தி திட்டமென ஏற்று கொள்ளுமளவிற்கு, குயுக்தி யான உபாயங்களுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார்கள். இத்திட்டங்களுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பினையும் நல்குகிறது. உதாரணமாக இலங்கை யிலுள்ள தண்ணிர் வளங்களை பொதுச்சொத்திலிருந்து தனிச் சொத்தாக மாற்றி தனியார் நிறுவனங்களுக்கு (உள்நாட்டு, வெளிநாட்டு) விற்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் எடுத்துக் காட்டாக காணப்படுகிறது. இதே போல் இன்னும் பலச் சட்டங் களை உலக மயமாக்கல் கொள்கையினை வலுப்படுத்துவதற் காக, பழையச் சட்டங்களை புதிதாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 12.2.3 இத்திட்டத்தினால் வெளியேற்றப்படும் மக்கள்
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் 600 குடும்பங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேற்றப்படவுள்ளனர். இவர்கள்
297

Page 150
கீத பொன்கலன்
வாழுகின்ற பகுதி தண்ணிருக்குள் மூழ்கிவிடும். இதைவிட பல கடைத்தொகுதிகள், பொதுக்கட்டிடங்கள் வழிப்பாட்டுத் தலங்கள் பாதைகள் என்பன பாதிப்புக்குள்ளாகின்றன. இம்மக்களை தம் வசப்படுத்துவதற்கு மின்சார சபையினாலும், திட்டத்தினை ஆதரிக்கும் தரப்பினராலும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது தற்போது வாழும் இடங்களி லிருந்து ஏழு கிலோ மீற்றர் தூரத்தில் இப்போது வைத்திருக்கும் காணியின் அளவிலும், கட்டிடங்கள் வீடுகள் போன்றவற்றின் அளவுகளிலும் இரண்டு மடங்கான காணி தரப்படும் எனவும் வீடுகள், கட்டிடங்கள் கட்டி இலவசமாக கையளிக்கப்படு மெனவும், அவ்வாக்குறுதிகளில் கூறப்படப்பட்டுள்ளது. இப் போது இவர்கள் இப்பகுதிகளில் தங்களின் வீடுகளை பெரு பிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய தோட்ட வீடமைப்புத் திட்டங்களின் கீழ், இம்மக்கள் வீடு கட்ட முயற்சித்தபோது, தோட்ட நிருவாகம் வீடுகளை கட்ட முடியாது என கடந்த பத்து வருடங்களாக தடை செய்து வருகிறது.
வெளியேற்றப்படும் ஒரு சிலர் தங்களுக்கு இலவசமாக எல்லாம் கிடைக்கப் போகிறது என்ற எண்ணங்களுடன் இத் திட்டத்தின் சமூக, சூழல், தாக்கங்களை அறியாது வாளா ஏற்று கொள்ளுகின்றார்கள். ஆனால் அதே நேரத்தில் ஏனையவர்கள் அவர்களின் பரம்பரைத் தொழில் (கூடை பின்னும் பணி யாளர்கள்) பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர், தங்களின் தொழிற் சங்க அரசியல் தலைமை எப்பக்க கருத்தினை கொள்கின்றதோ அக்கருத்தினை கிஞ்சித்தும் பரிசீலிக்காது ஏற்று கொள் கிறார்கள். ஆதரவும், பாரிய எதிர்ப்பும் கொண்ட தலைவர்கள் உள்ளனர். ஆகையால் இம்மக்கள் பல பக்கங்களையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே அவர்கள் விழிப்புணர்வு அடையவேண்டும். அதன் பின்னர் அவர்கள் தீர்மானம் எடுப்பது வரவேற்புக்குரியது.
12.2.4இத்திட்டத்தினால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள்
இத்திட்டம் அமல்படுத்தப்படும் இடங்களில் மக்கள் மட்டுமல்ல அந்த பகுதிகளில் இருக்கின்ற இயற்கை தாவரங் களான செடி கொடிகள் மருத்துவக் குணங்கள் கொண்ட புல் பூண்டுகள், நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. நீர் அற்றுப் போவ தால் மட்டுமின்றி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளி கொணரும் கம்பிகளின் வெப்பத்தினால் அந்தப்பகுதியின் வெப்பநிலை அதிகரித்து சூழல் பாதிக்கப்படும்போது மனிதர்
298

இருபத்தோராம் நூற்றாண்டில் .
களுடன் இந்நுண்ணுயிர்களும், புல் பூண்டுகளும் பாதிக்கப் பட போகின்றன. இத்திட்டத்தினூடாக வருடத்திற்கு 15 விகித மான வண்டல் மண் சேறும். இதை அகற்றி அப்பகுதியிலேயே குவிக்கும் போது அங்கு பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்படும்.
இத்திட்டத்திற்காக கட்டப்படும் கட்டிடங்கள் மூல மாகவும், குழாய்கள் மூலமாகவும் மலைகள் குடையப்படும் பொழுது, தற்போது மண்சரிவு அபாயங்கள் இருக்கும் இடங் களில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிய மண்சரிவுகள் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலமாக எடுத்துக் கூறப்படுகின்றன.
இந்த பகுதிகளில் இருநூறு ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகள் உள்ள தேயிலைச் செடிகளும், காட்டு மரங்களும் தண்ணிருக்குள் உள்வாங்கப்படுவதால் அழியவிருக்கின்றன. இந்த பகுதிகளில் கீழ்மட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு தண்ணிர் போதாமையினால் தங்கள் விவசாயத்தை விட்டுவிட்டு இன்னும் வறுமை நிலைமைக்கு தள்ளப்படும் அவலத்தை எதிர்கொள்ளவிருக்கின்றனர்,
இலங்கையின் வெளிநாட்டு செலாவணியை பெறுவதற்கு இரண்டு முக்கியமான வருமான வழிகளான தேயிலை உற்பத்தி யும், உல்லாச பயணத்துறையும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் தோன்றவுள்ளது. இலங்கை நாட்டு அனைத்து குடி மக்களும் வட்டியும் முதலுமாக இத்திட்டத்திற்கான செலவுப் பணத்தினை திருப்பிச் செலுத்தும்போது, கடனாளிகளாக ஆக்கப்படுவது மட்டுமின்றி, இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும் கூடிய பணத்தினை கட்டும் நிலைமைக்கு தள்ளப்படுவர்.
இத்திட்டத்திற்காக இடம், வளம், பொருள், சிரமம் என அனைத்தையும் முதலிட்டு, கடன் பெற்று, வட்டியும் முதலுமாக திருப்பியளித்தும், பெறப்போகும் பிரதிபலன்களை பார்க்கும் போது, 50% தான் பெறக்கூடிய நன்மைகளாக இருக்கப் போகிறது. உதாரணமாக 150 மெகா வாட்ஸ் மின்சாரத்தினை பெறமுடியும் எனக் கூறப்பட்டாலும், 60 மெகாவாட்ஸ் மின் சாரமே கிடைக்குமென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஏழு எட்டு வருடங்களில் இந்த வண்டல் மண் சேர்வையின் மூலமாக இத்திட்டம் மூடப்படும் அபாயமும் உள்ளது.இவ்வளவு இழப்பு களின் மத்தியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது ஒரு மிக முக்கியமான வினாவாகும்.
299

Page 151
கீத பொன்கலன்
12.25 மாற்று திட்டங்கள்
தற்போது நடைமுறையில் இருக்கின்ற நீர்மின் வலுத் திட்டங்கள் 65 விகித அளவிற்காவது வெற்றியாக செயற்படுவ தில்லை. இது முதலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தற்போது உற்பத்தி செய்யப்படும் மின் வலுவை எடுத்துச் செல்லும் பாரிய sibl 56fgSofig51 (High Tension Cable) | 16576 fugit G5 Ggill dish பதினேழு வரையான மின்சாரம், வீணே இழக்கப்படுகிறது. இதற்கு தகுந்த மாற்று வழியினை கையாண்டால் மின்சாரம் சேமிக்கப்படலாம். மின்சாரத்தை சேமிக்க உதவக்கூடிய நவீன மின்குமிழ்கள் சந்தையில் இருக்கின்றன. பாரம்பரியமாக பாவித்து வந்த மின்குமிழ்களை மாற்றி மேற்சொன்ன புதிய மின் குமிழ்களை பாவித்தால், இப்போது புதிய திட்டத்தால் உற்பத்தி செய்வதாக கூறப்படும் அளவிலும் பார்க்க அதிக மின்சக்தியை மிகவும் குறைந்த செலவிலும் நாடு, மக்கள், சூழல் என்பனவற்றினை பாதிப்பு அடையச் செய்யாமலும் சேமிக்கலாம்.
ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டத்துறையில் ஒவ்வொரு சிறிய நீர் வீழ்ச்சிகளிலுமிருந்து ஒவ்வொரு தோட்டமும் தங்களுக்கு தேவையான மின்வலுவை பெற்றுகொண்டன.
இத்திட்டங்கள் அநேக இடங்களில் இப்போது கைவிடப் பட்டுவிட்டன. இத்திட்டங்கள், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு தேவையான முழு மின் வலுவையும் பெற்று கொள்ளமுடியும்.
இன்று சர்வதேச மட்டத்தில் பாரிய அணைக்கட்டுக்கள் மூலமாக மின் உற்பத்தி செய்வது பல நாடுகளில் தவிர்க்கப் பட்டு வருவதைக் காணலாம். அதற்கு பதிலாக சிறிய சிறிய மின் வலுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதால், அவை நாட்டுக்கோ, சூழலுக்கோ, மக்களுக்கோ எவ்வித பாதிப்புகளுமின்றி உற்பத்தி செய்ய கூடியதாக இருக்கின்றது. இதே நீர் வீழ்ச்சிகளை கொண்டு குறைந்த செலவில் நம்நாட்டு இயந்திரவியலாளர்கள் மூலமாக பல மின் வலுத்திட்டங்களை உருவாக்க கூடிய வளங்கள் யாவுமுள்ளன. ஆகையால் நாட்டுபற்று, சமூகப்பற்று உள்ள மக்கள் யாவரும் இந்த மாற்றுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த நாசகார அழிவான திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க முன் வரவேண்டும். ஒன்று திரண்டு ஒரேயணியாக மக்கள் வீதிக்கு இறங்கி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
80. O. O. KL. 20. wo • o ox
300

அத்தியாயம் - 13
சர்வதேச அரங்கில் மலையகம்
13. 1
13.2
13.3
13.4
13.5
வெளிநாட்டிலுள்ள தமிழ் ஏதிலியர்
மலையகத் தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு
இலங்கை மலையகத் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகள்
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயக்கம்
தொழிலாளர்களே தோட்டங்களை நிர்வகிக்கும் நிலை தோன்ற
வேண்டும்.
30

Page 152
அத்தியாயம் - 13
சர்வதேச அரங்கில் மலையகம்
இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத் திட்ட பின்பு, நிலவும் தற்காலிக சமாதான சூழலில், பல நாடுகளில் இருக்கின்ற இலங்கை அகதிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டுமென திட்டமிட்டுள்ளனர். ஆனால் இத்திட்டம் அகதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அதற்கான காரணங்கள் இக்கட்டுரை யில் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் வாழுகின்ற ஏதிலியர்களில் 35% மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களே. இவர்கள் எதிர் நோக்கும் பாரியபிரச்சினைஇவர்களின் பிள்ளை களுடைய பிறப்புசான்றிதழ்கள்.பதின் மூவாயிரம் பேர் பிறப்பு சான்றிதழ்களின்றி உள்ளார்கள். மற்றும் இருபதினாயிரம் பேர் மட்டில் இலங்கை பிரஜா உரிமையற்றவர்களாக இருக்கிறார்கள்.

13.1 வெளி நாட்டிலுள்ள தமிழ் ஏதிலியர்
இன்று இலங்கையின் யுத்தம் நிறுத்தப்பட்டு ஒரு வருட காலமாக சமாதான சூழல் காணப்படுகிறது. இதைக் காரணம் காட்டி மேற்கத்திய நாடுகள் இலங்கையிலிருந்து சென்ற அகதி களை திருப்பி அனுப்புவதற்கு முன்நிற்கிறார்கள்.
இதனால் பொருளாதார சுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளன. தங்கியுள்ள அகதிகளை அழைப்பதற்கு அண்மையில் புனர் வாழ்வு புனர் அமைப்பு அமைச்சர், ஜெயலத் ஜெயவர்த்தனா இந்தியா சென்றார். அங்குள்ள சில அகதி முகாம்களை பார்வையிட்டு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றியும் இதற் காக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தினூடாக இவர் களைத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டு, இவர்களைத் திருப்பி அழைத்து அவர்களை சொந்த இடத்தில் குடியேற்று வது என்ற போர்வையில் பல்நாட்டு நிதியைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயல்கிறது. அதாவது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனர் அமைப்பதற்கு சர்வதேச நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான நல்ல சூழலைப் பெறுவதற்கு இது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்,
ஆனால் இந்த மக்களுடைய எதிர்கால வாழ்வு எப்படி அமையப் போகிறது என்பது பற்றி யாராவது சிந்திக்கிறார் களா? இந்த, அகதிகள் என்றைக்கும் நாடு திரும்பத் தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடை கொடுக்கப்பட்டு சாதகமான நிலை ஏற்படின் மிக மகிழ்ச்சியோடு சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள்.
அகதிகளின் கருத்து
இன்று ஏறத்தாழ அறுபதினாயிரம் பேர் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். சமீபத்தில் ஐக்கிய
303

Page 153
கீத பொன்கலன்
நாடுகளில் அகதி முகாம்களின் பொறுப்பாளர் ஒரு முகாமிற்கு விஜயம் செய்து உடனடியாக நாடு திரும்ப விரும்புபவர்களின் தொகையை மதிப்பிட்டபோது 600 பேர் வாழும் ஒரு முகாமில் 7 பேர் மட்டுமே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தார்கள்.
ஏனையோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்க முடியாது திண்டாடித் திரும்பி விட்டார்.
1992 - 1993ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து தமது சொந்த இடத்திற்கு போகலாமென வந்தவர்கள் இன்னும் அகதி முகாம்களிலே இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டி லிருந்து வரும் எந்தவொரு அகதியும் இனிமேலும் இலங்கை முகாமுக்கு வந்து குடியேற தயாராயில்லை.
இந்திய அகதிமுகாமிலிருந்தாலும் சரி இலங்கை அகதி முகாமிலிருந்தாலும் சரி மனிதர்கள் மனித மாண்போடு வாழக் கூடிய நிலை இல்லை.
ஆனால் இந்த முகாம்களின் வாழ்க்கையை ஒப்பிடும் போது இந்திய முகாமின் வாழ்க்கை மேலானது எனக்கருத இடமுண்டு. உதாரணமாக இலங்கையில் கொடுக்கப்படும் உலர் உணவு இந்தியாவிலும் கிடைக்கிறது.
இதைவிட குறைந்த விலையில் இவர்கள் வெளியில் பொருட் களை வாங்கமுடிகிறது. மேலும் அகதிகள் இந்தியாவிலிருப் பதினால் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற மனஉணர்வு ஏற்படுகிறது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் தான் உயர் கல்வியில் இலங்கை அகதி மாணவர்களுக்கும் உள்நாட்டு மாணவர்களுக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாத வகையில் மேலதிக இடம் ஒதுக்கப்பட்டு மேலதிக சலுகையும் அளிக்கப்படுகிறது.
இதன் மூலமாக மிகவும் நலிந்த பகுதியினரான அகதிகளிட மிருந்து வைத்தியர்கள். பொறியியலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உருவாகும் வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்கனவே உருவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவேண்டியது. இது இவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் இலங்கை அகதி முகாம்களில் இருப்பவர்களோ எந்த ஒரு வசதியும் இல்லாமல் அடக்கப்பட்டு சொந்த நாட்டில் அகதி களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
304

இருபத்தோராம் நூற்றாண்டில் .
ஒப்பீட்டளவில் இந்திய அகதி முகாம் வாழ்வு எவ்வளவோ மேலானது. ஆகவே இந்தியாவிலுள்ள அகதிமுகாம்களில் வாழ்பவர்கள் மீண்டும் இலங்கையிலுள்ள அகதி முகாமுக்கு திரும்பி வரமாட்டார்கள் என்பது திண்ணம்.
13.1.1உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்கள்
உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் இன்று ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இன்னும் உள்ளூர் அகதி முகாம்களில் இருக்கிறார்கள்.
இவர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையிருப்பதால் ஒரு சிலர் புதிய இடங்களில் குடி யேற்றப்படுகிறார்கள். ۔۔۔۔
இதற்குரிய காரணம் இராணுவத்தினரால் புதிைக்கப்பட்ட 90% கண்ணிவெடிகளே. இவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான பணம் செலவழித்து அகற்றும் பணிக்கு பல்லாண்டுகள் எடுக்குமென கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதிநிதியும் அமைச்சருமான மகேஸ்வரன் உள்ளூர் அகதிகளின் குடியேற்றத்துக்கு அரசு ஒரு சதமேனும் செலவு செய்யவில்லை எனப் பகிரங்கமாக நாடாளு மன்றத்தில் கூறியுள்ளார்.
இதிலிருந்து புரிவது என்னவெனில் வெளி நாடுகளி லிருந்து அகதிகள் வந்தால் தான் மேற்கத்திய நாடுகளிலிருந்து புனர்வாழ்வு புனர் அமைப்புக்கான புணத்தை பெறமுடியும் எனச் சிந்திக்கிறார்கள், இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் திரும்புவார்களா?.
13.12 சமஷ்டி ஆட்சிமுறைக்கான எதிர்ப்பும் பேரின வாதமும்
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை நமது நாட்டில் ஒரு அகில இலங்கை ரீதியான தேசப் பற்றுள்ள தலைமை உருவாகவில்லை. தேர்தல் என்று வந்ததும் சமயத்தையும் மொழியையும் ஆயுதமாக பாவித்து மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சி அமைக் கிறார்கள்.
இலங்கையின் அரசியல் அமைப்பு ஒரு ஆண்டு இதழ் வெளியீடு போல மலர்ந்து அடிக்கடி மறு உருப்பெற்று ஆட்சி
305

Page 154
கீத பொன்கலன்
யாளர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மாற்றப்படுகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்தபின் வந்த முதலாவது தேர்தலைத்தவிர மற்றைய தேர்தல்கள் பிரித்தானியா வெஸ்ட் முறையாக இருந்தாலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையாக இருந்தாலும் 2/3 பங்கு, அதாவது 80% மேற்பட்ட பெரும் பான்மை இனத்தவர்களே தெரிவுசெய்யப்பட்டனர். ஆகை யால் இப்பொழுது கோரப்படுகின்ற சமஷ்டி முறையில் தமிழர் களுக்கு சுயாட்சி பிரதேசம் கிடைப்பது தீர்வு என யாப்பில் கூறப்பட்டாலும் என்ன உத்தரவாதம் இருக்கிறது.
இதை தலை கீழாக மாற்றமுடியாதா? உதாரணமாக சோல்பரி யாப்பிலிருந்து 29ஆவது சரத்தில் சிறுபான்மை இன மக்களின் நலத்திற்கு என ஏற்படுத்திய சரத்து பல தடவைகள் மீறப் பட்டதும் 72ஆம் ஆண்டு எழுதப்பட்ட யாப்பில் தூக்கி எறியப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இதே கதி இனியும் ஏற்பட முடியாது. என்பதற்கு என்ன உத்தரவாதம். இதனையும் வெளி நாட்டில் உள்ள அகதிகள் கேள்விகளாக எழுப்புகிறார்கள்.
தமிழக முதல்வர் இலங்கையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட்டு நிலையான அமைதி திரும்பிய பின்பு இந்தியாவிலுள்ள அகதிகள் நாடு திரும்புவதுதான் சரியாக இருக்குமென்ற கருத்தினை ஜெயலத் ஜெயவர்த்தனா முன்னிலையில் தெளிவாக சொல்லியுள்ளார்.
ஆகவே இந்த சூழ்நிலையில் புனர்வாழ்வு புனரமைப்பின் பேரால் சர்வதேச நிவாரண நிதியை கணிசமாகப் பெறுவதற்கு அகதிகள் நாடு திரும்புவது உதவியாக இருக்குமென்ற எண்ணம் இதனை எதிர்பார்ப்பவர்கள் காணும் ஒரு கனவாகவே இருக்கும்.
ஆகவே அகதிகள் நாடு திரும்பவைப்பது ஒரு யுக்தியாக அகதிகளைப் பகடைக்காயாக வைத்து பல்நாட்டு நிறுவன உதவிபெறுவதில் முக்கியம் என்றால் இலங்கையில் ஒரு காலமும் நீடித்த முழுமையான சமாதானம் உருவாகப் போவதில்லை.
இந்த சூழ்நிலையில் திரும்பவும் யுத்தம் வெடிக்காது என்ப தற்கு என்ன அத்தாட்சி. இந்தச் சூழ் நிலையில் வெளிநாட்டி லிருந்து அகதிகளை உடனடியாக அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டியது மனிதபிமான நோக்கில் அணுகப்படவேண்டிய தொன்றாகும்.
வீரகேசரி 09. 03, 2003
306

13.2 மலையக தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு
இந்நூலின் ஆசிரியர் கடந்த வருடம் (2003) ஒரு மாத காலமாக மலேசியாவிலுள்ள பெருந் தோட்டங்களில் வாழும் மக்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து அவர்களுடைய உண்மையான வாழ்வின் முறைமைகளை அறிந்து எமது மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை களையும்அவர்களுக்குஎடுத்துக்கூறிபெற்றஅனுப வங்கள் மூலமாக, மலேசியாவிற்கு வேலைக்கு போவதனால் ஏற்படும், விளைவுகளை இக் கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு தனது நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்காமல் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டுகிறது.
இன்று கிட்டத்த 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் (80% வீதமானவர்கள்) வீட்டுப் பணிப் பெண்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூலமாக அரசு தனது நாட்டுக்குக் கிடைக்கின்ற அந்நிய செலாவணியை மட்டும் கருத்தில் கொள்கிறது.
ஆனால் இதன் மூலமாக அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் தாக்கங்கள், சமய, கலாசார சீர்கேடுகள் பற்றி ஒரு விதமான சிந்தனையும் அரசுக்கு இல்லை.
அண்மையில் தோட்டப்பகுதியில் நடைபெற்ற சிறுவர் உரிமைக்கான கருத்தரங்கில் ஒரு சிறுவன் தனது தாய் வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்றதால் பல வழிகளிலும் தான்
307

Page 155
கீத பொன்கலன்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தன் அம்மாவை உடனடி யாக வரச்சொல்லும்படியும் பகிரங்கமாக கூறினார்.
இன்று எமது அரசாங்கம் மலேசிய அரசுடன் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளது. கடந்த காலங்களில் மலேசிய அரசாங்கம், பொது வேலைவாய்ப்பை இலங்கையருக்கு மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 4 லட்சம் வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதில் 40,000 தொடக்கம் 50,000 வரையிலான இலங்கை யருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அரசு மட்டத்தில் ஆவன செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 3000 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் வேலை செய்வதாகக் கூறுகின்றனர்.
சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்பு மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனங்களும் பன்நாட்டு நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பிக்க திட்டமிட்டு அதற் கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக எமது நாட்டுப் பிரதமர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி சென்றிருந்தார் (2003),
கடந்த காலங்களில் இலங்கையர் பொது வேலைகளில் ஈடுபடத் தடையாக இருந்த மலேசிய அரசு அதற்கான பாதையை தற்போது திறந்து விட்டதன் காரணம் என்ன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மலேசியாவில் முதன்முதலாக அண்மைக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் பெருந்தோட்டத் துறையில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள் ளார்கள். இன்று கிட்டத்தட்ட 70% வீதமான வெளிநாட்ட வர்கள் பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் பங்களாதேஷ் நாட்டினருக்கே வாய்ப்பளிக்கப் பட்டது. இவர்கள் வேலைப்பளு தாங்காமலும், நாட்கூலி போதாமையாலும் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட் டனர். தற்பொழுது இந்தோனேஷிய தொழிலாளர்கள் அங்கு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தமது நாட்டிலேயே இரப்பர் தோட்டத்திலும்,
303

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கிராமங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் உள்ள பெரும்பான்மை இன மக்களின் சமயத்தோடு ஒன்றிணைந்தவர்கள்.
ஆனால் இவர்களும் அங்கே பாரிய சவால்களுக்கு மத்தியில் வேலை செய்து விரக்தி அடைந்த நிலையில் உள்ளனர்,
13.2.1 நெருக்கடிநிலை
அங்கு செல்லும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப்பிரிந்து, போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் கடன்பட்டு செலவு செய்கின்றனர். அதைத் திருப்பிக் கட்டக்கூடியளவு போதிய பணத்தை அங்கு சேமிக்க முடியாததாலும், சட்டத்தை நிலைநாட்டுகின்ற அதிகாரிகளின் தொந்தரவுகளாலும், தொழில் வழங்குவோர் இவர்களுடைய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாலும் பெரு மளவு பாதிக்கப்பட்டு உடல், உள நோய்களைத் தாங்க முடியாது அவதிப்படுகின்றார்கள்.
முன்பு ஒரு குடும்பம் வாழ்ந்த வீட்டில் அதாவது, 2 பேர் வயது வந்தவர்கள், 3 பிள்ளைகள் இப்போது 5-15 ஆண் வேலை ஆட்களை குடி வைக்கிறார்கள். இவர்கள் தொழில் ஒப்பந்தக் காரர்கள் மூலமாக தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படு கிறார்கள் அல்லது தோட்டத்திற்கு அருகில் உள்ள பட்டணங் களில் இருக்கும் சிறிய வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஆரோக்கியமான சூழலில் வாழக் கூடிய நிலை இல்லை. இந்த வீடுகளில் முழுமையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
13.2.2 போசாக்கின்மை
இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்பு வதற்காக போசாக்கான உணவு வகைகளை உண்ணாமல் சேமிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவர்கள் அங்குள்ள உணவு வகைகளை என்னவென்று தெரி யாமல் வாங்குகின்றனர். அதேவேளையில் விலை குறைந்த உணவுப் பொருட்களையே அதிகம் வாங்குகின்றனர். அத்தோடு நகரங்களுக்குச் சென்று உணவு வகைகளை வாங்குவதற்கும் முழுமையான உணவைத் தயாரித்து உண்பதற்கும் இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை,
309

Page 156
கீத பொன்கலன்
மலேசியாவில் இன்று பெருந்தோட்டத்துறையில் செம்ப னைத் தோட்டங்களே கூடுதலாக உள்ளன. இதில் பெண் களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் அரிது. இந்த செம்பனை பழங்களை வெட்டி எடுக்கும் போது பலவிதமான ஆபத்துக் களுக்கு தொழிலாளர்கள் உள்ளாகிறார்கள்,
இதில் 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே 40 அடி உயரமுள்ள பனையிலிருந்து பழக்குலைகளை வெட்ட வேண்டியிருக்கிறது.
இரண்டு வருட ஒப்பந்தத்தின்படி இவர்கள் வேலை செய்யவேண்டும். இவர்கள் சங்கம் அமைக்க முடியாது. இவர் களுக்குத் தங்கள் உரிமை எது என்று தெரியாததால் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நோய், விபத்து, ஆபத்துக்கள் ஏற்படும் பொழுது அரசாங்க ஆஸ்பத் திரிக்குச் செல்வதாக இருந்தாலும் வெளிநாட்டவர் என்ற ரீதியில் கூடுதலான பணத்தைக் கட்டித்தான் சேர்க்க முடியும். இதை வேலை தருநர் விரும்புவதில்லை. எனவே தங்களது சொந்த பணத்தையே ஆஸ்பத்திரிக்குச் செலுத்த வேண்டியுமுள்ளது.
13.2.3 தொழிலாளர் தட்டுப்பாடு
ஆரம்பத்தில் ஆங்கிலேயர், பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்காக இந்திய மக்களையே வரவழைத்தனர். ஆனால் மலேசியா சுதந்திரமடைந்த பின்பு பல மாற்றங்கள் நடைபெற்று, படிப்படியாக கைத்தொழிலுக்கும், கட்டுமானத் துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்தது.
தோட்டத்தில் வேலை செய்த இந்தியத் தமிழர்களில் 80 வீதமானவர்கள், படிப்படியாக தோட்டத்தை விட்டு வெளி யேறினர். நகர்ப்புறங்களில் 40 வீதமானவர்கள் உரிமையின்றி பொது நிலத்தில் வீடு கட்டித் தங்கியிருக்கின்றார்கள்.
இவர்கள் இன்று பாரிய பிரச்சினையை எதிர் கொள் கின்றார்கள், இன்னும் 20 வீதமான மக்களில், சொற்பப் பேர் செம்பனை தோட்டத்தில் கடினமான வேலை காரணமாக வேலை செய்ய மறுக்கிறார்கள். இவர்களை தனியார் தோட்டங் களிலுள்ள வீடுகளில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்து கின்றார்கள். ஆனால் இவர்கள் வேறு இடங்களில் காணியும்,
30

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வீடும் கட்டித் தந்தால்தான் போவோம் என்று போராட்டிடத்தில் இறங்கியுள்ளார்கள்.
மலேசியாவில் பெருந்தோட்டங்கள் தனி உரிமைச் சொத் தாக இருப்பதனால் அரசாங்கத்தின் திட்டங்கள் தோட்டத்தை பொறுத்தமட்டில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இன்று தோட்டங்களில் போதிய அளவு தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு இலாபமும் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் முதல் வந்த பங்களாதேஷ், இந்தோனேஷியா தொழிலாளர்கள் படிப்படியாக விலகும் போது இன்னும் வெற்றிடம் கூடிக்கொண்டே போகின்றது. இந்த நிலையில் இலங்கை தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. தோட்டத்தில் கிடைக்கின்ற ஆகக் கூடிய நாட் சம்பளம் மலேசியாவில் 25 வெள்ளியாகும்.
இது இலங்கை பணத்துக்கு 625 ரூபாவுக்கு சமம். ஆனால் அந்த நாட்டின் வாழ்க்கைச் செலவு இலங்கையிலும் பார்க்க 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதனால் இவர்கள் பணம் மிச்சம் பிடிப்பது என்பது கடினமான காரியமே.
இதைவிட தோட்டத்திற்கு வெளியே வீட்டுப் பணிப் பெண், கட்டுமானத்துறை போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு உள்ளது. அங்கும் இவர்கள் தனி உரிமையாளரின் கீழ்தான் கூலி வேலை செய்ய அமர்த்தப்படுகின்றார்கள். இங்கேயும் முன் கூறப் பட்ட பிரச்சினைகளையே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் இருந்து 30 வயதுக்குட்பட்ட 25 பேர் சட்ட பூர்வமாக இரு நாட்டிலுமுள்ள முகவர் நிலையங்கள் மூலமாக ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஆனால் இவர்கள் சென்ற இரு மாதத்தில் இந்தத் தொழிற் சாலை மூடப்பட்டுவிட்டது. மாற்று வேலைவாய்ப்பு கிடைக் காததினால் உணவிற்கே கஷ்டப்பட்டு அலைந்து திரிகிறார்கள்.
மலேசியா 1957ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பொழுது இலங்கையிலும் பார்க்க சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பின் அடைந்த நிலையிலேயே இருந்தது. ஆனால் பல்லின மக்கள் வாழும் மலேசியா இன்று இலங்கையை விட பன்மடங்கு
3.

Page 157
கீத பொன்கலன்
வளர்ச்சியடைந்திருக்கிறது. வெளிநாட்டவருக்கு வேலை கொடுக்கவும், வெளிநாடுகளுக்குச் சென்று அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடவும் வளர்ச்சியடைந்தமைக்கு அந்நாடு கடைப்பிடித்த சமூகப் பொருளாதாரக் கொள்கையே காரணம்.
இலங்கையிலிருந்து தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவதாக சில அரசியல்வாதிகள் ஆசை வார்த்தை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் எதிர்காலத்தில் பல மலையக தமிழ் மக்கள் கவரப்படுவார்கள்.
இவர்கள் போகு முன் மலேசியா நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்து தீர்மானிப்பதே சாலச் சிறந்தது. அங்கு செல்வதற்கு செலவழிக்கின்ற பணத்தில் கால்வாசி பணத்தின் மூலமாக தொழில்நுட்பக் கல்வியில் பயிற்சி பெறலாம். அதன் மூலமாக இலங்கையில் மலேசியா நிறுவனங்களால் நடை முறைப்படுத்தும் செயற்திட்டங்களில் ஈடுபடுவது இவர் களுக்கும் இவர்கள் குடும்பங்களுக்கும் ஏற்றதாக அமையும்.
தொழிலாளரே ஆசை வார்த்தையினால் மயங்காது சிந்தித்து செயற்படுங்கள்.
y Cesaff 21. 12. 2003
M. M. ZO ZM. ? 0. e ex ex t
இன்றைக்குப் பலர் திருச்சபையை விட்டு விலகி வெகு தொலைவில் இருப்பதற்குக் காரணம் திருச் சபை மக்களை விட்டு விலகி இருப்பதாலேயே.
இந்த உண்மையை திருச்சபை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ
312

13.3 இலங்கை மலையகத் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகள்
2003ம் ஆண்டு இந்தியாவின் ஐதாராபாத்தில் நடைபெற்ற ஆசிய சமூக மாமன்றத்தில் பங்கு பற்றி சென்னை வந்திருந்த போது, தாய்மொழி ஆசிரியர் உமா பாஸ்கரனுடனான செவ்வியின் , போது, இந்நூலாசிரியரால் வழங்கப்பட்ட கருத்துக்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தமிழகத்தை விட்டு பல லட்சம் தமிழர்கள் கூலிகளாக பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந் தனர். அவர்களில் 1843 - 1947 வரை இலங்கைக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை மாத்திரம் பல ஆயிரங்கள். அடர் காடுகளாய்க் கிடந்த இலங்கையின் பனி மலைப்பகுதிகளை தம் உழைப்பால் கோப்பி, தேயிலை ரப்பர்த் தோட்டங்களாக்கி அந்நாட்டை வளங்கொழிக்கச் செய்த தமிழர்கள் இன்று இரண்டாந்தரக் குடிமக்களாக மலையகத்தமிழர் என்ற பெயர் தாங்கி அடிப்படை உரிமைகளுக்கே அல்லாடுகின்ற நிலை,
இம்மக்கள் மத்தியில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பல வருடங்களாக முனைந்து பாடுபட்டு வரும் அருட் தந்தை கீதபொன்கலன் அவர்கள் அண்மையில் சென்னை வந்த போது தாய்மொழி இதழுக்கு “மலையகத்தமிழர் நிலை பற்றி” கூறியவை;
மலையகத் தமிழ் மக்களின் எதிர் காலம் என்கின்ற போது மூன்று வீதமான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. முதலாவ தாக சில தொழிற்சங்கவாதிகளும், அரசியல் வாதிகளும் மற்றும்
33

Page 158
கீத பொன்கலன்
சில புத்திஜீவிகளும் முன்வைப்பது; இரண்டாவதாக வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் வாதிகள் முன்வைப்பது; மூன்றாவ தாக மலையகத்தமிழ் மக்கள் முன் வைப்பது.
முதலாவது கருத்தை நாம் உற்று நோக்குவோமாயின்; இதில் அரசியல் வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் மற்றும் புத்திஜீவிகளும் என்ன சொல்கிறார்களென்றால், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு இன்றைய பேச்சு வார்த்தையின் போது என்ன தீர்வைக் கொடுக்கின்றார்களோ அதே மாதிரியான அம்சங்களைக் கொண்ட ஒரு தீர்வு மலையகத் தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதேயாகும்.
மலையகத் தமிழ் மக்கள் 1956ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியை நோக்கி இடம் பெயரத் தொடங்கினார்கள். இவர்கள் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட இனப் பிரச்சினை காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு அகதி முகாம்களில் வாழ வேண்டிய பரிதாபநிலைக்குத் தள்ளப் பட்டிகிறார்கள்.
குறிப்பாக அவர்கள் இன்று திருகோணமலை அலக்ஸ் கார்டன், வவுனியா பூந்தோட்டம் போன்ற அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள். இவர்களது கருத்து என்னவென்றால்; வடக்கு கிழக்கில் தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் திரும்பவும் குடியமர்த்தப்பட வேண்டுமென்பதேயாகும். இந்த முகாம் களுக்கு அண்மையில் நான் சென்று வந்திருக்கிறேன்.
குறுக்கீடு, வவுனியா, திருகோணமலை முகாம்களில் உள்ள மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் திரும்பவும் மலையகம் நோக்கிச் செல்ல விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்களா?
பதில்: இல்லை; தாம் வாழும் பகுதிகளில் வேலை வாய்ப்பு இல்லாதபடியால் நாளாந்த வருவாய் இல்லாத நிலை. இது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்களிடத்தில் கல்வியறிவு கூடியிருக்கிறது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைக்கு உயர்ந்துள்ளார்கள். இவர்களுடைய கலாசார நடை முறை பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்துள்ளது. இவர்கள் மீன் பிடிக்கிறார்கள்; விவசாயம் செய்கிறார்கள் முதலில் சிரமப்
34

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பட்டாலும் வேலை செய்து முன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறது. இப்பொழுது சொந்தக்காணி, வீடு வசதிகளைப் பெற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் வடக்கு கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் ஈழம் கேட்டபோது மலையகத்தையும் சேர்த்தே கேட்டார்கள். ஆனால் இப்போது மலையகம் கைவிடப்பட்டுள்ளது. இப்போதைய கண்ணோட்டத்தில் நான் நினைக்கிறேன், ஈழம் என்று சொல்லப்படுவது வடக்கு கிழக்கு மட்டும்தான். அந்தக் கண்ணோட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்களின் கொள்கை என்னவென்றால் மலையகத் தமிழ் மக்கள் அனை வரும் வடக்கு கிழக்குப் பகுதிக்கு வந்தாலும் சந்தோசமாக உள்வாங்குவது அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
மலையகத்தில் இருக்கும் சில புத்திஜீவிகள் மற்றும் மலையகத்தமிழ் மக்களின் கருத்துக்கள்கூட மலையகத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு இடம் பெயர்வதையே ஆதரிப்பதாக அமைகிறது.
முன்னர் மலையகத்துக்கு வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கெதிராக குரல் கொடுத்தவர் காலம் சென்ற திரு. இரா. சிவலிங்கம் அவரின் அண்மைக்கால கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதில்கூட இக்கருத்தை வலி யுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
மயைலகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். ஒன்று இன்றைய சூழ்நிலை; மற்றது அவர்களது சீவியம். மலையகம் என்று சொல்லும்போது தமிழர்கள் 7% மாக இருக்கிறார்கள். எனினும் அவர்களது வாழ்விடம், அரசியல் தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது மலையகத் தமிழ் மக்களின் நிரந்தர எதிர்காலம் மலையகத்தில் இருக்கும் என்பதற்கு எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை.
175 வருடங்களாக (ஏழு தலைமுறைகளாக) இங்கு வாழ்ந்த போதும் அவர்களுக்கு சொந்தம் என்று சொல்லக் கூடிய காணித்துண்டோ, வீடோ கிடையாது. வேலைவாய்ப்பும் போதியளவு கிடையாது.
குறுக்கீடு: ஏன்? இன்று தேயிலைத் தோட்டங்களில் உள்ள வேலை வாய்ப்புக்களை சிங்கள மக்களுக்கு வழங்குகிறார்களா?
35

Page 159
கீத பொன்கலன்
பதில்: ஆம்; இன்று வரை பெரும் தேயிலைத் தோட்டங் களை சிறுசிறு தேயிலைத் தோட்டங்களாகப் பிரித்து 2 லட்சத்து 6 ஆயிரம் சிங்கள மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இச்சிறு தேயிலைத் தோட்டச் செய்கையாளர்களின் உற்பத்திகளுக்கு முன்னுரிமையும், ஊக்கமும் அரசு கொடுத்து வருகிறது.
450 தனியார் கம்பெனித் தோட்டங்களும், 50 அரச கூட்டுத் தாபன கம்பெனித் தோட்டங்களும் இருக்கிறது. 3 லட்சம் மலையகத் தமிழர் தொழிலாளர்களாகப் பணிபுரியும் இத் தோட்டங்களின் அபிவிருத்தியில் எவ்வித அக்கறையும் அரசு காட்டுவதில்லை. ஏன்னென்றால் இந்தத் தோட்டங்களையும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு; சிறு தேயிலைத் தோட்டங்களாகப் பிரித்துச் சிங்கள மக்களுக்குக் கொடுக்க இலங்கை அரசு முயற்சி செய்கிறது. அங்கு சிங்களக் கிராமங் களை உருவாக்குவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.
ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் அல்லது வறுமையைக் குறைக்க வேண்டுமாயின் அச்சமுதாயத்தில் சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். ஆனால், மலையகத் தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் இது கிடையாது. யாழ்ப்பாணச் சமுதாயம் போன்று காணியோ அல்லது வீடோ அல்லது பணமாகவோ சேமிப்பதில்லை. இம்மக்கள் வறுமை யோடு சீவியம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
கடந்த 10 வருடங்களில் 2 லட்சம் தோட்டத் தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளார்கள். பென்ஷன் எடுத்துக் கொண்டவர்களுக்குப் பதிலாக நியமனம் எதுவும் கிடையாது. தொழிலாளர்கள் தாம் விரும்பின் ஊழியர் சேமலாப நிதி (EPF) பணத்தைப் பெற்றுக் கொண்டு பணியில் இருந்து விடுபடக் கூடிய இலகுவான வழிமுறை ஒன்றை அரசு அறிமுகம் செய் துள்ளமையால் பணச்சிரமம் வரும் தொழிலாளர்கள் வேறு வழியின்றி EPF பணத்துக்காக பணி ஓய்வு பெற்று வேலை யின்றி அவதியுறுகின்றனர்.
மலையகத் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள படித்த இளை ஞர்கள், யுவதிகள் தோட்ட வேலைகளில் ஈடுபட விரும்ப வில்லை. காரணம்; வேலைத் தளங்களில் நடத்தப்படும் அரை அடிமைத்தன முறைகள், அதைவிட அந்த வேலைக்கு மதிப்புக்
36

இருபத்தோராம் நூற்றாண்டில் .
கிடையாதென்பதால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தேயிலைத் தோட்ட வேலைகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. பெற்றோர்கள் தாம் பட்ட சிரமம் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், தோட்டங்களில் நிலவும் பாலியல் நெருக்குதல்களைக் கருத்தில் கொண்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களது கல்வி, சுகாதாரம் போன்றவை கூட ஏனைய சமூகத்தினரின் நிலைக்கு ஏற்ப மாற்றமடைய வில்லை. இப்போதைக்கு மாற்றம் வரும் என்று சொல்வதற்கு மில்லை. கல்வியில் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அந்த மாற்றம்கூட வெளிநாட்டு உதவியினால் செய்யப்பட்டதே தவிர அரசினாலோ அல்லது தோட்டக்கம்பெனிகளாலோ செய்யப்படவில்லை. இன்றும் மலையகத்தில் 276 தோட்டப் பாடசாலைகள் மாட்டுக் கொட்டகைகளாகத்தான் இருக்கின்றன.
குறுக்கீடு: மலைகயத் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு காணிகளை வழங்கி வீடுகட்டி கொடுத்திருப்பதாகக் கூறப்படு கிறதே?
பதில்: 1981ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருப் பவர்கள் இதைச்சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். முதலில் 20 பேர்ச் காணி வீடு கட்டுவதற்கு கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால், இன்று 7 பேர்ச் காணி கொடுப்பதற்கே சண்டை பிடிக்கிறார்கள்.
இலங்கை அரசினால் வெளிநாட்டு நிதி உதவியைக் கொண்டு 4000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவை யான வீடுகள் 2 லட்சத்துக்கு மேல். வீட்டுக்காக அரசு 30 ஆயிரம் ரூபா கடன் 15 வீதவட்டிக்கு கொடுத்தது. 15 வருடத்தில் வட்டி யுடன் திருப்பிச் செலுத்தி முடிக்க வேண்டிய தொகை 75640 ரூபாவாகும். இது அரசின் வியாபாரமே தவிர மக்களுக்கான உதவியல்ல.
மலையகத்தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு டச்சு
(நெதர்லாந்து), நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்கின்றன. இந்நாடுகள் கொடுத்த காசுக்குக்கூட டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் அரசு மறைமுகமாக வட்டி வாங்குகிறது என்பதே வேதனை.
37

Page 160
கீத பொன்கலன்
இப்போது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர் களால் இன்னுமொரு வீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது. இது ஒரு மாடி வீட்டுத் தொகுதி. இப்போது குடி யிருக்கும் லயன் அறைகளை உடைத்துவிட்டு; அந்த காணியில் இந்த வீடுகள் கட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதனைக் கட்டக்கூட இடம் கிடைக்காத நிலை. அரசோ அல்லது கம்பெனிகளோ வீடு கட்ட காணி தர மறுக்கின்றன என்பதுதான் அமைச்சரால் கூறப்பட்ட காரணம். ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு அரசு காணி தர மறுக்கிறதென்று சொல்லும்போது இவருடைய அதிகாரம் எந்தளவு என்பதே கேள்விக்குறி.
மாடி வீட்டுத் தொகுதிகூட இம்மக்களுக்கு விமோசனம் அளிப்பதாக இல்லை. லைன் அறைகளுக்கு ஒரு மாற்றுருவமே இது, கம்பறாவுக்குள்ள சகல பிரச்சினைகளும் இங்கும் தொடர் கதையாக இருக்கும்.
அட்டவணை - 13.3.1 தமிழர் குடிப்பெயர்வு
அ | 1883 - 1890 வரை 14, 026 பேர் பிரிட்டிஷ் கயனாவுக்கு
1843 - 1867 வரை | 46, 407 பேர் இலங்கைக்கு
<莎·
இ | 1842 - 1870 வரை 53, 339 பேர் @upmfiສົuວກັບ
தென்னாபிரிக்கா மேற்கத்திய தீவுகளும்
ஈ. 1875 - 1885 வரை 95, 442 பேர் | பர்மாவுக்கு
இந்த மாடி வீடுகூட அம்மக்களுக்கு கடன் அடிப்படை யில் தான் கொடுக்கப்படும். அதுவும் 60 வருடம். மாதம் 330 ரூபா கட்ட வேண்டும். 60 வருடமென்றால் வரும் மூன்று தலை முறைகள் கடனாளியாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகின்றது. கடனாளியாக - அடிமைகளாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இம்மக்கள் தொடர்ந்தும் கடனாளியாகச் சாக வேண்டுமென்ற கொள்கைதானே அரசுக்கும். தேயிலைத் தோட்ட கம்பெனிகளுக்கும்.
38

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இச்சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது, அரசோ அல்லது கம்பெனிகளோ முன்வைக்கும் திட்டங்கள் எல்லாம் இம்மக்களைத் தொடர்ந்தும் அரை அடிமைகளாக வைத்திருப் பதற்கான திட்டமே தவிர இச்சமூகம் முன்னேற வேண்டும், இலங்கையிலுள்ள மற்றைய சமூகங்களைப்போல் சுதந்திரமாக - சமத்துவமாக - அரசியல் உரிமைகளோடு வாழ வேண்டும் என்ற கொள்கைகளை என்றும் கொண்டிருப்பதில்லை.
மலையகத்தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறி 175 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் இன்றுவரை இவர்கள் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக இணைக்கப்படவில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் இருந்து தேசிய அடையாள அட்டை பெறுவது வரை தோட்ட நிர்வாகத்தின் தயவையே எதிர்பார்க்கும் அவலம் தொடர்கின்றது. Λ
கடுமையான காலநிலை உள்ளிட்ட இன்னோரன்ன சவால்களை எல்லாம் எதிர்கொண்டு தமது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய மலையகத்தமிழர், தேயிலைச் செடிகளுக்கு உரமானவர்களின் சந்ததி, ஏன்? தேயிலையின் வருவாயில் உண்டு கொழுத்தவர் களின் தயவில், அவர்களிடம் இரந்து வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பரந்து வாழும் 8 தோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் 21ஆம் நூற்றாண்டுகளிலும் அடிமைத்தழை அறு படாமல் துயருறும் தம் இரத்த உறவுகள் இலங்கையின் மலையகத்தமிழர்களைப் பற்றி அறியாதவர்களாக அறிந்தும் அவர்தம் அடிமைத்தழை அறுக்க உதவாதவர்களாக இருப் பதை எண்ணி மனம் வெதும்புகிறேன்.
தாய்மொழி சென்னை, சுவடி 13 - மாத இதழ் - மாசி 2003.
39

Page 161
13. 4 புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயக்கம்
2003ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கியநகரங்களான பிர்ஸ்பன்,மெல்பன், சிட்னி ஆகிய இடங்களுக்குசென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் இன்றைய இலங்கையின் யதார்த்த நிலையையும், விஷேடமாக மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப் பட்டது. அத்தோடு, இந்நூலாசிரியரால் எழுதப் பட்ட, "பெருந்தோட்டத்துறை சமூகமேம்பாடும் 6 gigol Dub' (Estate Social Development and Poverty in Sri Lanka) 6T6ip grgh Gahuafu La பட்டது. அச்சமயத்தில் பல்வேறு பிராந்திய தொடர்பூடகங்களுக்கு, மலையகத்தமிழ் மக்களு டைய யதார்த்த நிலை கூறப்பட்டது. இங்கு இரண்டுபத்திரிகைகளில்வெளியானசெவ்விகள்
சேர்க்கப்பட்டுள்ளன.
இரு தசாப்தகால போரின் விளைவாகஇடம் பெயர்ந்து அகதி முகாம்களிலிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கிவருவ தாக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு வெளியீட்டின் ஆசிரியரும் கத்தோலிக்க மதகுருவுமான வண பிதா, கீத, பொன்கலன் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் மெல்பர்னுக்கான விஜயமொன்றை மேற் கொண்டிருந்த வண.பிதா, கீதபொன்கலன் அங்கு கிறீன்லெவ்ட்
320

இருபத்தோராம் நூற்றாண்டில் .
(CREEN LEFT) சஞ்சிகைக்கு இலங்கையின் நிலவரம் குறித்து பேட்டியொன்றை அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் சமாதானம் ஏற்பட்டிருப்பதால் உயிரிழப் புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகள் நீக்கப் பட்டுள்ளன. சில தொழில்களை மேற்கொள்வதற்கு விதிக்கப் பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும் யாழ்ப் பாணக் குடாநாட்டில் இன்னமும் 40 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதுடன் 52 பாடசாலைகளையும் அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். குடா நாட்டிலுள்ள அதி உயர் பாது காப்பு வலயங்கள் இராணுவத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட் டுள்ளதால் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது வீடு களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இடம் பெயர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தற்போதும் அகதிமுகாம்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படைகளை வெளியேற்றுவதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் சில அம்சங்களை நிறைவேற்ற அரசு கவனியாமல் இருக்கிறது. இராணுவத்தினர் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதை விரும்பாமல் உள்ளனர். இராணுவ வீரர்களின் ஊதியம் குறைவாக இருப்பதே இதற்குப் பிரதான காரணமாகும்.
பெளத்த மதகுருமார் சமூகம் இலங்கையில் பல பிரிவு களாக பிரிந்து நிற்கின்றது. சிலர் சமாதானத்திற்கு ஆதரவாகவும், வேறு பலர் போருக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கின்றனர். கத்தோலிக்க சமூகமும் பிரிந்திருக்கிறது. பெரும்பாலான சிங்கள கத்தோலிக்கர்கள் போர் தொடர்பான நிலைப்பாட்டில் அரசாங்கத்தையே ஆதரிக்கின்றனர். ஜே.வி. பி.யும் உரித்தான ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறது.
13.4.1இலங்கை பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமை
இலங்கையின் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களும் சொல்லொணா பிரச்சினைகளின் மத்தியில் இருக்கின்றனர். பிரிட்டிஷாரின் ஆட்சியின் போதான 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களாக இலங்கை வந்த இந்திய வம்சாவளியின ருக்கு இன்னும் கூட பிரஜாவுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
321

Page 162
கீத பொன்கலன்
பெருந்தோட்ட மக்களுக்காக செயற்படும் சுமார் 68 தோட்டத் தொழிற்சங்கங்களில் அனேகமானவை போலியானவை களாகவும் ஊழல்மிக்கவைகளாகவும் உள்ளன.
பெரும்பாலான தோட்ட மக்கள் தற்போதும் லயன்’ அறை களிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்குப் புதிய வசதிகளைக் கொண்ட வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த வீடு களுக்காக தோட்டத்தொழிலாளர்கள் மாதாந்தம் 350 ரூபா வீதம் 60 வருடங்களுக்குச் செலுத்துமாறு பணிககப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் இந்தக் கடனைச் செலுத்த வேண்டிய நிலைமையே ஏற்படும்.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை இன்னும் மறுக்கப்பட்டே வருகிறது. சிங்கள இனவாதக் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடே இதற்குக் காரண மென பொன்கலன் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு வெளியீட்டை பண்டாரவளை லியோ மார்கா ஆசிரமம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினக்குரல் 28. 05. 2003
அடிமையாக உழல்வதற்கென்று எவ்வுயிரையும் இந்த இயற்கை படைத்தெடுக்கவில்லை.
ஒன்றினை ஒன்று ஒடுக்கும் சூழலென்பது நமது விழிப் புணர்வு மங்கிய நிலையில் நிகழ்ந்து விடும் விபத்துக் களாகவே தோன்றுகின்றன.
ஆதிக்கவெறியோ அல்லது அடிமை மயக்கமோ, எதுவாயினும் அது நமக்குத் தருவதெல்லாம் தற்காலிக வெகுமதியே.
- ம. திருவள்ளுவர்

13.5 தொழிலாளர்களே தோட்டங்களை நிர்வகிக்கும் நிலை தோன்ற வேண்டும்
வண.பிதா. கீதபொன்கலன் உதயத்திற்கு சிறப்புப்பேட்டி.
இலங்கைப் ப்ொருளாதாரத்திற்கு 60 சதவீதமான வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் மலை யகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வைஏற்படுத்தும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்திசெயற் படுத்திவரும் - லியோ மார்கா ஆசிரமத்தின் இயக்குனர் வண. பிதா கீத பொன்கலன் அவர்கள் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்தார்.
பலதுறைகளிலும் பின்தங்கி வாழ்ந்து கொண்டு தேசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய இன மக்களைப் போன்று சரிநிகர் சமானமாக வாழ்வதற்கு வழிவகை செய்து வரும் லியோ மார்கா ஆச்சிரமம் குறித்து உதயத்திற்கு வண. பிதா கீத பொன்கலன் அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டதாவது:
இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் தோட்டங்களை நிர்மாணிக்க உதவினர். ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. இயலாமை, வறுமை, மூட நம்பிக்கைகளினால் அவர்களின் வாழ்க்கைத் தரம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்கும் சகல உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும்
323

Page 163
கீத பொன்கலன்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஊவா மாகாணத்தில் பண்டாரவகையில் இந்த ஆச்சிரமம் அமைக்கப்பட்டது.
பெண்கள் சகலதுறைகளிலும் மேம்படவேண்டும். அவர் களுக்கும் அரசியல், தொழிற்சங்க,பெண்ணுரிமைகள் தொடர் பான அறிவு கிடைக்க வேண்டும். மலையகத் தொழிற்சங்கங் களுக்கும்.அரசுக்கும் - தோட்ட நிருவாகங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் சிங்கள, அல்லது ஆங்கில மொழிகளில் வெளியாகின்றன. இவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. எமது ஆச்சிரமம் அவற்றை தமிழில் மொழி பெயர்த்து வழங்குகிறது. பல முன்பள்ளிகளை அமைத்துள்ளது. அங்கு போதிக்கும் ஆசிரியைகளுக்கு பயிற்சிகளை வழங்குகிறது.
தவிர - கவலைக்குரிய விடயம் யாதெனில் - தோட்டப் புறங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். இவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே - பெற் றோர் ஆசிரியர்கள் சிறுவர்கள் பங்குகொள்ளும் சந்திப்பு களையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றோம்.
வருடாந்தம் - சர்வதேச பெண்கள் தினம், தொழிலாளர் தினம், சிறுவர் தினங்களில் மலையகத் தமிழர் மத்தியில்அவை தொடர்பான விளக்கக் கூட்டங்களை நடத்துகிறோம்.
மக்களிடம் நீடிக்கும் வறுமையை போக்குவதற்காக சுயதொழில்வாய்ப்புத் திட்டங்களை அண்மைக்காலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பாரம்பரிய தொழிற்சங்கங்களின தும் பெரும்பான்மையினர் அங்கம் வகிக்கும் டிரஸ்ட் போன்ற அமைப்புகளிடமிருந்தும் பல முட்டுக் கட்டைகள் எமக்குண்டு. எனினும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் நாம் தொடர்ந்து ஈடுபடுகின்றோம்.
இலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந் தால் இந்த மக்களுக்கு பூரணமான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்புகின்றோம்.
கேள்வி: இந்தப் பணிகளை பாரம்பரிய தொழிற்சங்கம் மேற்கொள்ளவில்லை என்பதைத் தான் உங்கள் கருத்துகள் தொனிக்கின்றன.?.
324

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பதில்: ஆமாம். ஒருகாலத்தில் தொழிற்சங்கங்கள் வலிமை மிக்க இயக்கங்களாக விளங்கின. 1948 இற்குப் பின்பு - மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்ற பிரஜைகளாக்கப்பட்ட பின்பு - படிப்படியாக அவர்கள் தமது உரிமைகளை இழந்தனர். தொழிற்சங்க தலைமைகளும் அரசிய லுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர் களின் உரிமைகள், நலன்கள், அவர்களின் வாழ்விடம், சுகாதாரம், கல்வி என்பன இரண்டாம் பட்சமாயின. பெண்களுக்கு நிரு வாகங்களில் புறக்கணிப்பு நீடித்தது. குறிப்பிட்ட சில முற்போக்கு தொழிற்சங்கங்களால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. அனைத்து தொழிற்சங்கங்களும் மாற்றங்களை உள்வாங்க வேண்டும். தொழிலாளர்களின் சந்தாப்பணம்அவர்களின் ம்ேபாட்டுக்கு உதவவேண்டும். தோட்டப்பகுதிகளில் இளை ஞர்கள், யுவதிகள் படித்தும் வேலைவாய்ப்பு இன்றி அவதிப் படுகின்றனர். அவர்களுக்கு விவசாய பயிற்சியோ, தொழில் நுட்ப பயிற்சியோ வழங்கப்பட வேண்டும். தோட்டத் தொழி லாளர்களின் சந்தாப்பணத்தில் 75 சதவீதமவது.அவர்களுக்குப் பிரயோசனப்படவேண்டும். இல்லையேல் - இந்தப்பணம் தொழிற்சங்கத் தலைமைகளுக்கும் அவர்களைச் சுற்றி இருப் பவர்களுக்குமே பயன்படுகின்றது என்ற நிலைமைதான் நீடிக்கும். தொழிற்சங்கங்கள் மாற்று அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உலகமயமாதலுக்கு ஏற்ப தொழிற்சங்கங்களும் சிந்திக்க வேண்டியுள்ளது.
கேள்வி: சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மெல்பர்னுக்கு வருகை தீந்த சமயம் சந்தித்தோம். அவரது அமைச்சும் பல அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பதாக சொல்லியிருக்கிறாரே.
அவர்கள் ஆரம்பிப்பதற்குமுன்பே பல்வேறு நிறுவனங்கள் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் இவர்களின் திட்டங்களால் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட அட்டனில் ஒரு தொழில் நுட்ப கல்லூரி அதிகார போட்டிக்காரணமாக மூடப்பட்டு கிடக்கிறது.
பதில்: தோட்டப்புறங்களில் சுமார் 800 பாடசாலைகள் இருக்கின்றன. இதில் 500 பாடசாலைகள் சீடா நிறுவனத்தால் பராமரிக்கப்படுகின்றன. கண்டியில் 1965லும் பதுளையில்
375

Page 164
கீத பொன்கலன்
உஸ்கொட் என்ற நிறுவனம் 1974லும் தொழில்நுட்பக் கல்லூரி களை ஏற்கனவே தாபித்துவிட்டன. இங்கு இயந்திர தொழில் நுட்பவியல் உட்பட பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கேள்வி: தற்பொழுது மலையகத்தமிழ் மக்களுக்கு வாக் குரிமை வழங்கப்பட்ட பின்பு தேர்தல்களின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பலர் பாராளுமன்றம் சென்றுள்ளனர். இவர்களின் சேவை எப்படி இருக்கிறது? தோட்டப்புற மக்களி னால் இவர்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனரா?
பதில்: மலையகத்தைப் பொறுத்தமட்டில் 14 மாவட்டங் களில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் 2 மாவட்டங்களி லிருந்து தான் பத்துப் பேர் பாராளுமன்றம் சென்றுள்ளனர். அதிலும் 5 பேர் தேசியப்பட்டியலில் தெரிவானவர்கள். இந்தப் பத்துப்பேரும் 7 கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தற்போதைய அரசுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டிய நிர்ப்பந்தம் இருப் பதனால் - இவர்களினால் தன்னிச்சையாக செயற்பட்டு மலை யகத் தமிழ் மக்களின் நலன்களை பேண முடியாத நிலைமை தோன்றியுள்ளது. மக்கள் இவர்களுக்கு வாக்குவங்கிகளாக மாறியுள்ளனர். இந்த தொழிற்சங்கங்களிடம் ஒற்றுமை இருந் திருப்பின் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும்,
பெருந்தோட்டங்கள் பெரும்பாலும் தோட்ட நிருவாகக் கட்டமைப்புக்குள்தான் இன்னமும் இருக்கின்றன. மக்கள் அரசியல் அனாதைகளாகியுள்ளனர். இன்னமும் சுமார் 3 இலட்சம் பேர் நாடற்றவர்களாகத்தான் இருக்கின்றனர்.
மலேசியாவை எடுத்துக் கொள்வோம். அங்கு அரசியல் வாதிகள் தூர நோக்குடன் சிந்தித்து செயல்படுகிறார்கள். கூட்டுறவு முறையில் தோட்டத் தொழிலாளர்களே தோட்டங்களை நிருவகிக்கின்றனர். அங்கு மாதச் சம்பளம் பெறுகிறார்கள். 26 மாடிக் கட்டிடங்கள் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இருக்கின்றன. அவர்கள் பங்குதாரர்களாகியுள்ளனர்.
இத்தகைய உன்னதமான நிலை இலங்கையில் மலையகத் திலும் தோன்ற வேண்டும். அதற்கு மலையகத் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். ...
உதயம் ஜூலை 2003, அவுஸ்திரேலியா
SO LO SO. O ZO × « % *X •
326

அத்தியாயம் 14
உலக சமூக மாமன்றம்
14. 1. பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம்
14.2. உலக சமூக மாமன்ற மாநாட்டின் ஊடாக தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த ஏற்பாடு
14.3. மலையக மக்களின் ,
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒன்றுபட்ட அணுகுமுறையே சிறந்ததென்பது கண்கடு.
14.4 மக்கள் இயக்கங்கள்
327

Page 165
328
அத்தியாயம் 14
உலக சமூக மாமன்றம்
இந்த மாமன்றம் ஆரம்பமாகி இன்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.இதுஆரம்பிப்பதற்கு முன் பல நாடுகளிலும் உலகமயமாக்கல் என்ற கொள்கையினால் பாதிப்படைந்த வறிய மக்க ளுக்கு குரல் கொடுப்பதற்காக 1999இலிருந்து 2000ஆண்டுவரையில் பலஇடங்களில் விசேஷ மாக சியாட்டில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் இயக்கங்கள் சார்பாக பல நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டு இந்த மாநாடு நடக்கும் இடத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் செய்து இந்த மாநாடு நடத்த முடியாத அளவுக்கு செயற் பட்டு வெற்றி அடைந்தார்கள். முதல் உலகசமூக மாமன்றம் முடிவில் அகில உலக கூட்டுக்குழு (International Council) d (56 u IT di 35' ugi. இக்குழுவே சமூக மாமன்றத்தின் தொடர் செயற் பாடுகளுக்கு அடித்தளமாக இருந்து செயல்படு கிறது. அகில உலக கூட்டுக்குழுவில் 56 அங்கத் தவர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 136 நாடுகள் ஒன்றுசேர்ந்து உலக மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.

14. 1. பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம்
பேண்தகு அபிவிருத்திக்கும் சமூக பொருளாதார நீதிக்கு மான பாதை புதிய தாராளமய உலக மயமாக்கலில் அல்ல மக்களை மையமாகக் கொண்ட தன்னிறைவு பெறக்கூடிய மாற்று மாதிரி அமைப்புகளின் மீதே உள்ளது என்பதை செயலில் காட்டுவதற்காக இன்று உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் இயக்கங்கள் போராடி வருகின்றன. A.
14.1.1. உலக சமூக மாமன்றம்
மேற்குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் உரு வானதுதான் உலக சமூக மாமன்றம். இதன் முதலாவது மாநாடு 2001ம் ஆண்டு பிரேசிலில், போர்ட்டோ அலகிரா (Porto Alegre) என்ற நகரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 24 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் உள்ள உலகமய தாக்கங்களான சுதந்திர சந்தையின் வெப்பக் காற்று ஜன நாயகத்தையும் மனித உரிமைகளையும் பொசுக்கிக் கொண் டிருக்கின்றது. நிதி, மூலதனத்தில் தறிகெட்ட வேகம் பல நாடு களின் பொருளாதாரத்தை சீர் குலைத்து வறுமையை வளர்க் கின்றது. இதனால் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒவ் வொரு நாட்டிலும் உள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடு வதற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் நம்பிக்கையற்ற ஒரு உலகில் நாம் வாழவில்லை. உலகமயமாக்கலின் விளைவுகளை எதிர்த்து போராட்டங்கள், இயக்கங்கள் பல வடிவங்களில் எழுகின்றன.
சியாட்டில் தொடங்கி ரோம், பார்சிலோனா வரை உலகம் பூராகவும் மக்களின் எதிர்ப்பு அலைகள் பரவிச் சென்றது நமக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள், உலக மயமாக்கல் தவிர்க்க முடியாத தொன்று என்ற வாதம் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது. மாற்று அமைப்பினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டிருக்கின்றது.
39

Page 166
கீத பொன்கலன்
இதனடிப்படையில் மாற்று உலகம் சாத்தியமானதே என்ற sgyu9-5/1555/L–65 (Another world is possible) (5/76öl 5TG)/g/ உலக சமூக மாமன்றம் முதன் முதலாக ஆசியாக் கண்டத்தில் அதுவும் இந்திய நாட்டில் மும்பாய் நகரத்தில் (ஜனவரி 16-21/ 2004ம் ஆண்டு) நடைபெறவுள்ளது.
இது முற்போக்கு சிந்தனையுள்ள மாற்று வழிகளை கையாள விரும்பும் சமூக இயக்கங்களான அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் குழுக்கள், சிந்தனை யாளர்கள், கலைஞர்கள், ஒன்றுகூடி ஜனநாயக கருத்து பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும், செயற்பாட்டிற்குமான சுதந்திரமான திறந்த அரங்கமாகும்.
இம் மாமன்றமானது மூலதனத்தையும், சுதந்திர நிதிச் சந்தைகளையும் அடிப்படையாக கொண்ட உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கையுடனும் அதனோடு ஒத்த உலக அடக்குமுறைகளையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து அடிமட்ட மக்களை மையமாக கொண்டு உருவாக்கப்படு கின்ற உலகத்தை நோக்கிய செயற்பாட்டைக் குறிக்கின்றது.
உலகமயமாக்கலினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் சிந்தனையோடு ஒவ்வொரு நாடுகளிலும் சமூக மாமன்றங்கள் உருவாக்கப்பட்டு அதில் பல்வேறு துறை களைச் சேர்ந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப் பதற்கும், பேண்தகு அபிவிருத்தியை நிலைநாட்டுவதற்கும் செயற் பட்டு வருகிறார்கள். இதன் அடிப்படையில் பெருந்தோட்டத் துறை சமூக மாமன்றம் 14-10-2003 அன்று அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்டத்துறை மக்களுடன் நேரடி தொடர்புள்ளவர்கள். அமைப்புகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், பெண்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் ஆகியோரை ஒன்று சேர்த்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் உலகமயமாக்கலினால் பாதிக்கப் பட்ட எமது மலையக மக்களின் அவலங்களுக்கு மாற்று நட வடிக்கைகளை அந்த மக்களுடன் சேர்ந்து மேற்கொள்வதற் காக உருவாக்கப்பட்டுள்ளது.
14.1.2. மலையகத்தை ஆட்டுவிக்கும் நாசகார நடவடிக்கைகள்
O சுதந்திர சந்தையில் சுதந்திர மற்ற தொழிலாளர்களின் அரை அடிமை நிலை பெருந்தோட்டத்துறை கட்டமைப்பு
30

இருபத்தோராம் நூற்றாண்டில் .
O அந்நியர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் காணி பெற இருக்கும் உரிமை மலையக மக்களுக்கு இல்லை. O இலாப வேட்டை ஒன்றையே பிரதானமாக கொண்டு செயற்படும் உலகமயமாக்கல் கொள்கையின் பிரதான அம்சமான நவீன மயமாக்கலும் ஆட் குறைப்பும் நடை பெறுகிறது. O 175 வருட காலமாக வாழும் மலையக மக்களுக்கு சொந்த
மென்று சொல்ல ஒரு வீடு இல்லை. O தோட்டங்களிலிருந்து தொழிலாளர் குடும்பங்கள்
பலாத்காரமாக வெளியேற்றப்படுதல். O தொழிற்துறை சட்ட திருத்தங்கள் மூலம் சமூக பாது காப்பிற்கான சட்டங்களை அகற்றி உழைப்பை சுரண்டும் சூழ்ச்சிகள். O நாட்டின் வளங்களை விற்று அன்னியரின் அபிவிருத்தியை
வளப்படுத்தல். O வறுமையை குறைப்பதற்காக என்ற போர்வையில் நடை
பெறும் (கட்டாய கருத்தடை) இன அழிப்பு O மேல் கொத்மலை மின்வலு திட்டம் மூலம் மலையக சுற்றாடல், 7 பெரிய நீர் வீழ்ச்சிகள், பல்லுயிரினத்தன்மை, மக்கள் இடமாற்றம், தேயிலை பயிர்ச்செய்கை, மண்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்படவுள்ளது. O மலையக சமூகம் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் ஏதும் அற்றவர்களாக இருக்கிறார்கள். (உதாரணம் பிரஜா
வுரிமை, மொழியுரிமை) M
O மலையக மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை அற்றவர்
களாக இருக்கிறார்கள். (தனித்துவ அடையாளம்)
O வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப போதிய ஊதியம் இல்லாமை.
இன்று இலங்கையில் வறுமையை இல்லாதொழித்தல் எனும் போர்வையில் உலகமய வர்த்தகம் நடைமுறைப்படுத்தப் படுவதால் முழு நாடும் அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மலையக மக்கள் உள்ளடக்கப்படு கின்றனர். ஆகவே மலையக மக்களே விழித்தெழுந்து மாற்று அமைப்புக்கள் மூலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள். இதற்காக பிராந்திய, தேசிய, சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்,
நவ மலையகம் டிசம்பர் 2003.
33

Page 167
14.2. உலக சமூக மாமன்ற மாநாட்டின் ஊடாக தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த ஏற்பாடு
உலகமயமாக்கலின் பின் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட் டுள்ள தாக்கம் என்ற தலைப்பில் இந்தியாவின் மும்பாய் நகரில் ஜனவரி மாதம் உலக சமூக மாமன்றத்தின் மாநாடு நடை பெறவுள்ளது.
இம்மாநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்து சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பெருந்தோட்ட சமூக மாமன்றம் நட வடிக்கை எடுத்துள்ளது. இம் மாமன்றம் சார்பாக இம் மாநாட்டில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வுள்ளனர். இவ்விடயம் தொடர்பான கூட்டம் அண்மையில் அட்டன் செட்டிக் மண்டபத்தில், பிதா கீத பொன்கலன் தலைமையில் நடை பெற்ற போது பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப் புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி சமூக மாமன்றம் தனது வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தி, அமைப்பு தொடர் பாக விளக்கமும் தெளிவும் ஏற்படுத்துவதற்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு முன்பு நுவரெலியா, பதுளை, மொனறாகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இது வரை காலமும் உலக சமூக மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.
332

இருபத்தோராம் நூற்றாண்டில் .
இப்பிரச்சினைகள் பெருந்தோட்ட சமூகு மன்றத்தின் மூலமாக தற்போது உலக சமூக மாமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்படவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர் களின் வரலாறு. தனியார்
மயப்படுத்தலின் பின் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அரசியல் உரிமைகள், தாய்மொழி, காணி மற்றும் குடியிருப்பு உரிமை, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியன தொடர்பான பிரச்சினைகள் இம்மா நாட்டில் முன் வைக்கப்
படவுள்ளன.
வீரகேசரி 19.11.2003
/
தற்காலிக அரசியல் பொருளாதார விடுதலையையும் திருச்சபை விரும்பவில்லை.
இம்மண்ணில்
துன்புறுவோரைக் கண்டு படிப்பற் பில்லாதோரைக் கண்டு அடிப்படை வசதிகளான மின்சாரம் இல்லாத வீடுகளைக் கண்டு கூரையில்லா வீடுகளில் வசிப்போரைக் கண்டு வீடுகளே இல்லாமல் தவிப்போரின் துயரம் கண்டு
* திருச்சபை மிகுந்த வேதனைப்படுகிறது.
அதற்கும் மேலாக இவர்களைக் கட்டிப்போட்டிருக்கும் அடிமைத்தலைகளைக் கண்டு திருச்சபை துயருறுகிறது.
- பேராயர் ஆஸ்கர் ரெமேரோ
333

Page 168
14.3. மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒன்றுபட்ட அணுகுமுறையே சிறந்ததென்பது கண்கடு
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினரதும் ஒன்றுபட்ட அணுகுமுறையே பயனளிக்கும் என்பது படிப்படியாக நிரூபணமாகி வருகிறது என்று அப்எக்ட் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிதா கீத பொன்கலன் தெரிவித்தார்.
அட்டன் செட்டிக் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அப்எக்ட் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.கே. சந்திரசேகரனால் வடிவமைக்கப்பட்ட கடந்த ஓராண்டின் அப்எக்ட்டின் பணிகள் தொடர்பான கண்காட்சியொன்றும் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் யுனிவல்லோ, அட்டன் சீஎஸ்சீ, பிரிடோ, அப்செக், செட்டிக் லியோ மார்கா ஆஸ்ரம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து பிதா கீதா பொன்கலன் பேசுகையில்:
‘மலையக பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினை களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே போராடி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டியவர்களாகவுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் உலக மயமாக்கல் இந்த மக்கள் மத்தியில் மேலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. குடியிருப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் தொடர்பில் இம்மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முரண்பாடான அணுகுமுறைகளால் வெவ்வேறு
334

இருபத்தோராம் நூற்றாண்டில் .
தீர்வுகளே கிடைத்தன. ஆனால் கூட்டு முயற்சியினால் அவற்றை தீர்க்க முயன்ற போது சிறப்பான விளைவுகள் கிடைத்துள்ளன. அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமை சட்டம் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
இந்தச் சட்டப் பிரச்சினையை முழுமையாக தீர்க்கா விட்டாலும் இந்த விடயம் தொடர்பான கூட்டு முயற்சிகள் எதிர்காலத்தில் முழுமையான தீர்வை காணுவதற்கான அடித் தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்தப் பின்னணியில் அப்எக்ட் கூட்டமைப்பு பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் என்பவற்றின் ஒத்துழைப்போடு கடந்த ஒரு வருடமாக மேற் கொண்ட பல முயற்சிகள் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. உலக சமூகமாமன்றத்திற்கு மலையக மக்களின் பிரச்சினைகளை தனிநபர்கள் எடுத்துச் சென்ற நிலையே இதுவரை காணப்பட்டது. ஆனால் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக தற்போது பெருந்தோட்ட சமூக மாமன்றம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ் அமைப்பு மூலமாக மலையக மக்களின் பிரச்சினைகள் உலக சமூக மாமன்றத்தில் கூட்டாக முன்வைக்கப்படவுள்ளன.
இந்த விடயத்தில் பங்களிப்பு செய்யக்கூடிய சகல தரப் பினரதும் கருத்தொற்றுமை காணும் நிலை உருவாக்கப்பட் டுள்ளது. இவை அனைத்தும் மலையக மக்களின் பிரச் சினைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரதும் ஒன்றுபட்ட அணுகுமுறையினால் ஏற்பட்ட பயனாகும்.
எனவே எதிர்காலத்தில் கூட்டு நடவடிக்கைகளை முன் னெடுப்பதுடன் நல்லெண்ணத்தோடு கூடிய கூட்டு முயற்சியே வெற்றிபெறும் என்பது உணரப்பட வேண்டும் என்றார்.
வீரகேசரி 21.11.2003
335

Page 169
14.4 மக்கள் இயக்கங்கள்
மக்கள் இயக்கங்கள் நீதியான உலகத்தை உருவாக்க
பின்வரும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
336
அரசியல் தெளிவுடைய குடிமக்களை உருவாக்கல்
மக்கள் மைய அரசியல் செயல்பாடுகள்
தோட்ட மைய அரசியல் செயல்பாடுகள் ஆளுகையில் மக்கள் முடிவுகளுக்கு முக்கிய இடம்
நீர், நிலம், சுற்றுச்சூழல், காடு இவற்றைக் குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குள் பொதுவள ஆதாரங்களாகக் கொண்டு வருதல்,
நிலம், வீடு, வேலை, கல்வி, நலம் இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தல்
தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர் களின் வாழ்வுரிமைகளைக் காத்தல்,
மனித உரிமை பேணல்
மக்கள் அமைப்புகளைக் கட்டி எழுப்புதல்
மக்கள் கலாச்சாரத்தைப் பேணிக்காத்தல்
இவைகளைச் செயல்படுத்த மக்கள் சமூகத்தை (Civil Society) விரிவுபடுத்துதல்.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
வலுவான மக்கள் சமூக உருவாக்கமே இன்றைய தேவை. இச்சமூகம் ஒருங்கிணைவு, மோதல் என்ற இருவகை தலையீடுகள் வழியாக நீதியான உலகை உருவாக்க முடியும்.
ஒருங்கிணைவு
தனிநபர்
தான் சார்ந்த அமைப்பு தனது பகுதி எதார்த்தம்
<-—>
AM
தொழிற்சங்கங்கள் தன்னார்வத் தொண்டு
நிறுவனங்கள்
மனித உரிமை குழுக்கள் பெண்கள் இயக்கங்கள் இளைஞர் இயக்கங்கள் பிராந்திய / தேசிய உலகளாவிய அமைப்புகள்
வேரோட்டமான மக்கள் அமைப்பு/சமூகம் உருவாக்கம்
எதிர்ப்பு
A
சமமற்ற பகிர்வு, ஆணாதிக்கம் தங்கிநிற்கும் மனப்பான்மை
அடிப்படை வாதம், அடக்குமுறை
தாராளமயம், தனியார்மயம் உலகமயம்
337

Page 170
மோதல்/தேடல்
மக்கள் சமூகம் |* PI அரசு அமைப்புகள் (State) (Civil Society) N
மனிதம் மதிப்பீடுகள்
மனித உரிமைகள் பொதுநலன்
பகிர்வு நீதி
சந்தை (Market)
மக்கள் சமூகம் / அமைப்புகள், அரசு, சந்தை ஆகிய மூன்றும் இணைந்த தேடலே மாற்று உலகிற்கு வழிவகுக்கும். இவை மூன்றிற்கும் அடித்தளமாக இருக்க வேண்டியவை மனிதம், மதிப்பீடுகள் - மனித உரிமைகள், பொதுநலன், பகிர்வு நீதி.
 
 
 
 
 

பின்னுரை
பெருந்தோட்டப் பகுதியான இரத்தினபுரியில் கலoபாட என்னும் தோட்டத்தில் கள அனுபவம் பெறுவதற்காக மக்களுடன் சேர்ந்து லயத்தில் இரண்டு மாத காலம் வாழும் சந்தர்ப்பம், 1968ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்தது. அது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து திட்டமிட்டு அடக்கப்பட்டு, ஒடுக்கப்படும் இந்த மக்களின் விடிய்லுக்காய் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை என்னுள் விதைத்தது. அதுவே பின்னாளில் (1974ல்) பதுளையில் ‘உஸ்கொட்” நிறுவனத்தை அமைத்து பலவிதமான விழிப்புணர்வு செயற் பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுத்தது. அங்குப் பெற்றுக் கொண்ட அனுபவ அறிவோடு, லியோ மார்கா ஆஸ்ரத்தின் ஊடாக தொடர்ச்சியாக நாம் நடத்தும் கருத்தரங் குகள், மேற்கொண்ட ஆய்வுகள், தோட்டங்களில் பெற்றுக் கொள்ளும் நேரடி அனுபவங்கள் ஆகியவையே என்னை இக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பிட்ட போது அதனால் ஏற்பட்டத் தாக்கங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அக்கொள்கை மலையகத் தமிழ்க் கல்வியின் மீது ஏற்படுத்தப் போகும் விளைவுகள் பற்றி எழுதிய கட்டுரைகளும் இத் தொகுப்பில் இடம்பெறச் செய்ய முடியாமல் போனது ஒரு பெருங் குறையே.
மலையகக் கல்வி தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விடயம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதே வேளை மலையகத்திற்கென ஒரு பிரத்தியேகமான பத்திரிகை இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் என்னுள் தீவிரமடைகிறது. அதன் மூலம் இருட்டில் மறைந்துக் கிடக்கும்

Page 171
கீத பொன்கலன்
பிரச்சினைகளையும், அடி மட்டத்தில் கவனிப்பாரற்று இருக்கும் படிக்காத மேதைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்.
இக்கட்டுரைத் தொகுப்பை நூலுருவாக்கும் பணியில் ஈடுபட்டப் போது அவைகளை ஒரு வாசகனாகப் படிக்கும் அனுபவம் மிகவும் உன்னதமாக இருந்தது. சிலந்தியின் வலை யாக எத்தனை பிரச்சனைகள் அவர்களைச் சுற்றி பின்னப் பட்டு இம்மக்களை மூச்சுத்தினற வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மிகவும் கனத்த இதயத்தோடு சிந்தித்துப் பார்க்கிறேன்.
இதே சிந்தனை இந்த நூலை வாசிப்போருக்கும் ஏற்படு மானால் அது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகும். நான் எழுதுவதன் நோக்கமே மலையக மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுதலையைத் தேட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். மலையக மக்கள் அந்த உணர்வு பெற்று மக்கள் இயக்கங்களின் ஊடாக, தங்கள் செயற்பாடுகளை, தடைகளை உடைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தங்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளைப் பிடுங்கி எறியும் விடுதலைப் பணிக்கு எனது இந்த முயற்சி உறுதுணை புரியும் என்று நம்புகின்றேன்.
Ο
/ N தெய்வம் நின்று கொல்லும் என்று இனியும் நாம் சொல்வோமேயானால் நாம் தான் ஏமாளிகள்.
ஆதலின் தூங்கியது போதும் விழித்தெழுங்கள் விழித்தே இருங்கள் இல்லையென்றால் உங்கள் படுக்கையையும் பாடையாக்கிவிடுவார்கள் இன்றைய அரசியல்வாதிகள் எனும் மருதகாசியின் எச்சரிக்கை நம்மை விழித்தெழச் செய்யட்டும்.
போராட்டத்தில் தோல்வி என்பது அவரது மரணமே எனும் தந்தை பெரியாரின் அறைகூவலுக்கேற்ப தன்மானச் சிங்கங்களாக சிகரமேறுவோம். d
- திண்டுக்கல் லூமி

பின்னிணைப்பு-1
ஒரு குடும்பத்தின் பிரஜாவுரிமைப் பத்திரம்
THE INDAN AND PAKSTAN RESİDENTS (CITIZENSHIP)
ACT No.3 OF 1949
CERTIFICATE OF REGISTRATION ISSUED UNDER
SECTION 1641)(b) OF THE ACT
By virtue of the power invested in me by sec 16 (1).............. of the Indian and Pakistani Residents (Citizenship) Act No.3 of 1949, I, Deputy, Commissioner for the Registratibn of Indian and Pakistani Residents, do hereby certify that the persons specified in column I and column II of the Schedule hereto were, on the date specified in column III of that Schedule, registered as citizens of Ceylon in the register of citizens kept under section 16(1)(a) of the Act.
Deputy Commissioner for the Registration of Indian and Pakistani Residents Colombo: 31st July 1957.
34

Page 172
கீத பொன்கலன்
Name and address of the person registered as a citizen of Ceylon on application made
Name, address and relationship to person specified in column I of this Schedule of each person registered as a citizen
Nanny Sinniah,
All of : Allagolla Estate, Udaipussellawa
by that person of Ceylon at the request of and simultanously with, the first mentioned person
Sinn acarupan Carupaie (wife)
Nanny Rajasundaram (son) Nanny Selvarajah (son) Nanny Saradamony (daughter) Nanny Sathasivam (son) Nanny Mylvaganam (son) Nanny Ponnarmeniyan (son) Ammany Kandamayake (daughter)
Date of Registration
6th March, 1957
The oath / affirmations of citizenship were / has been taken before the Deputy Commissioner for the Registration of Indian and Pakistani Residents, Bandarawela on the 27th day of June 1957.
Deputy Commissioner
Signature and designation of
Officer verifying that
oath / affirmation has been taken

பின்னிணைப்பு-2
உலக சமூக மாமன்றத்தின் கொள்கைகள்
உலக சமூக மாமன்றம் ஒரு திறந்தவெளி அரங்கம், மனிதத்தை மையப்படுத்திய உலகை உருவாக்குவதே இதன் நோக்கம். புதிய தாராளமயமாக்கல் கருத்தியலை எதிர்க்கும் தனி நபர், தன்னார்வக் குழுக்கள், மக்கள் இயக்கங்கள், தொழிற் சங்கங்கள் மத்தியில் மாற்றத்துக்கான சிந்தனையை, கருத்துப் பரிமாற்றத்தை, அனுபவப் பகிர்வை, மாற்று அணுகுமுறைகளை வளர்த்தெடுக்கும் விவாதிக்கும் வெளியை உருவாக்குவதே இதன் பணி.
போர்ட்டோ அலகிராவில் நடந்த உலக சமூக மாமன்றம் காலத்தாலும் இடத்தாலும் வரையறுக்கப்பட்டாலும் “மாற்று உலகைத் தேடும் பணி தொடர்ந்து எல்லா நிலை களிலும் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இப்பணியை உலக சமூக மாமன்றத்திற்குள் முடக்கிவிட முடியாது. A.
உலக சமூக மாமன்றம் ஓர் உலக நடைமுறை (Process). இந்நடைமுறையைக் கடைப்பிடிக்கப்படும் எல்லாக் கூட்டங் களிலும் அகில உலகப் பரிமாணம் இடம்பெற வேண்டும்.
உலக சமூக மாமன்றத்திலிருந்து புறப்படும் மாற்றுகள் முதலாளிய உலக மயமாக்கலுக்கும், அதற்கு துணை போகும் எலலா நிறுவனங்களுக்கும், அவற்றின் நோக்கங்களுக்கும் எதிரானவை. மாற்று உலகச் சிந்தனைகள் கூட்டொருமைப் பாட்டை வளர்ப்பதாகவும், புதிய உலக வரலாற்றைப் படைப்பதாகவும் அமையும். இங்கு மனித உரிமைகள் மதிக்கப்படும்; ஆண் - பெண் வேறுபாடற்ற குடிமக்கள் சமூகம் உருவாக்கப்படும்; சுற்றுச்சூழல் பேணப்படும்; இவற்றை வளப்படுத்த சமூக நீதி, சமத்துவம், மனித மாண்பு போன்ற மதிப்பீடுகளைக் காக்கும் அகில உலக சுதந்திர அமைப்புகளும் நிறுவனங்களும் உருவாக்கப்படும்.
343

Page 173
கீத பொன்கலன்
O
344
உலக சமூக மாமன்றம் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்வேறு அமைப்புகளையும், மக்கள் இயக்கங்களையும், சமூகக் குழுக்களையும் ஒன்றிணைத்தாலும், இது உலக சமூகக் குழுமத்தின் பிரதிநிதியாகவோ, மாற்றுக்கான விவா தங்களிலிருந்து யாரையும் அந்நியப்படுத்துவதாகவோ செயல்படாது.
உலக சமூக மாமன்றக் கூட்டம், உலக மாமன்றக் குழுவின் பிரதிநிதியாக செயல்படாது. ஆகவே எந்தக் கூட்டத்திலும் கூட்டத்தின் சார்பாக அறிக்கைகள் விடுவதோ அதிகாரப் பூர்வ முடிவுகள் அறிவிப்பதோ நடைபெறாது. யாரும் யார் சார்பாகவும் அறிக்கைகளைப் பிரகடனம் செய்யலாகாது. ஓட்டெடுப்பும் நடைபெறாது. இது ஒரு திறந்தவெளி அமைப்பே முடிவெடுக்கும் அமைப்பல்ல. இருப்பினும் அமைப்புகளோ, சில அமைப்புகள் அடங்கிய குழுக்களோ அவைகள் சார்பாக முடிவுகள் மேற்கொள்ள லாம். அத்தகைய முடிவுகள் அனைத்தையும் உலக சமூக மாமன்றம் மற்றவர்களுக்கும் அறிவிக்கும்; பிறர் தெரிந்து கொள்ள வழி செய்யும். யாருடையதும் முக்கியமான தாகவோ முதலானதாகவோ கருதப்படமாட்டாது. மேற் குறிப்பிட்ட முடிவுகள் அந்தந்த குழுக்களின் முடிவுகளே யன்றி உலக சமூக மாமன்றத்தின் முடிவுகளாக அமையாது. உலக சமூக மாமன்றம் பன்முகப்பட்டது. கட்சியோ, அரசோ சார்ந்ததல்ல. பரந்துபட்ட அளவில் குழுக்களையும் இயக்கங்களையும் மாற்ற உலகை நோக்கிய பாதையில் வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டாலும் இத்தகு பணியில் உலக மாமன்றம் மட்டுமே உண்டு என்ற குறுகிய வட்டத்திற்குள் செயல்படாது.
சமூக பிரச்சனைகளுக்கு ‘மக்கள் மைய தீர்வு காண்பதே உலக சமூக மாமன்றத்தின் கருத்து. ஆகவே உலக சமூக மாமன்றம் பல்வேறு இன, மொழி, கலாச்சாரத்தைச் சார்ந்த அத்தனை மக்கள் குழுமத்தின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பிரதிபலிக்கும் பன்முக மக்கள் அமைப்பாகவே திகழும்.
வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதையும், சமூக பாதுகாப்பின் பெயரில் அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையையும், உலக சமூக மாமன்றம் அனுமதிக்காது. மனித உரிமை, சமத்துவம், ஒற்றுமை, சமாதானம் போன்ற மதிப்பீடுகளையும், இன, மொழி,

இருபத்தோராம் நூற்றாண்டில் .
பால் வேறுபாடின்றி எல்லா மக்களையும் பாதுகாக்கும். அடிமைத்தனங்கள் அனைத்தையும் கண்டனம் செய்யும். O உலக சமூக மாமன்றத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களைத் தவிர யார் வேண்டு மானாலும் இம்மாமன்றத்தில் பங்கேற்கலாம். O முதலாளியத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்வதும் wa இதற்கு எதிரான கருத்துக்களை வளர்ப்பதும் அதனை பலரோடு பகிர்ந்துகொள்வதும் விவாதிப்பதும் மாற்று உலகைப் படைக்க முயற்சி மேற்கொள்வதும் நோக்கங் களாக இருப்பதால் எல்லா முயற்சிகளும் ஒளிவு மறை வின்றி நடத்தப்படும். O இயற்கையை மதிப்பது, பிறரை மதிப்பது அவசியம். இந்நிலையே பிறரோடு உறவு கொள்வதையும் கூட்டுத் தேடலையும் அர்த்தப்படுத்தும். O மனிதத்தை அழிக்கும் அத்தனை சக்திகளையும் எதிர்க்க, எதிர்ப்பு சக்தி அமைப்பை உருவாக்கும் எண்ணத்தில் நாட்டளவில், உலக அளவில் உறவுகளை வளப்படுத்தும் அமைப்பாக உலக மாமன்றம் திகழும். O மாற்று உலகை அமைக்கும் பணியில் மாற்று யுக்திகளைச் சோதிக்கும் தளங்களுக்கு ஆதரவளிப்பதாக உலக சமூக மாமன்றம் அமையும். இத்தகைய கொள்கைகளோடு ஒர் உலக மன்றம் செயல்பட முடியுமா என்பது ஆச்சரியமாகவே உள்ளது. கட்டுப்பாடு களுக்கு, அமைப்பு முறைகளுக்கு, ஆளுனிகக்கு பழக்கப்பட்ட பலர் இப்புதிய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள மறுக்கின் றனர். உலக சமூக மாமன்றத்திற்கு யாரும் யாரையும் அழைப்ப தில்லை. நாமே நம்மை அழைக்கிறோம் என்பது கேலிக்குரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது. யார் இப்பெரும் மாமன்றத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்ற கேள்வி சரியான கேள்வி அல்ல என்று சொன்னால், அது எப்படி முடியும் என்பதே பதிலாக உள்ளது. இப்படியும் முடியும் என்னும் மாறுபட்ட அணுகு முறையே உலக சமூக மாமன்றத்தின் தற்போதைய அணுகுமுறை
உலக மாமன்றத்திற்கும் பல்வேறு எதிர்ப்புகள் உண்டு. வலதுசாரிகள் மட்டுமல்ல இடதுசாரிகளும்தான்; அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. சில மக்கள் இயக்கங்களும் தான். காரணங்கள் பலவாகினும் உலக சமூக மாமன்றத்திற்கு எதிர் அமைப்புகள் உண்டு என்பதையும் நாம் உணரவேண்டும்.
ஜோ சேவியர் - உலகமயமாக்கல் நிழலும் - நிஜமும், பக்கம் 116.
345

Page 174
துணைநூற்பட்டியல்
Bibliography
Arunatilaka Risha
Effectiveness of Welfare Programmes in Improving Estate Performance in Sri Lanka, Institute of Policy Studies, Sri Lanka., 2000.
Bastian Sunil
The Tea Industry since Nationalization, Centre for Society and Religion, Ouest 67, Sri Lanka 1981.
Bond Edith M
The State of Tea, War on Want, London 1974.
Caspersz Paul and Others
The Privatization of the Plantation, Satyodaya Centre- 1995, Sri Lanka.
Dunham David and Others
R The labour situation on Sri Lanka Tea Estates - A view to 2005, Institute of Policy Studies, Srí Lanka, 1997.
Gun avvardena Lalitha, Ed
Time use Studies, In Plantation, Agriculture, For Norad 1993. که...
Fr.Guy de Fontgalland
bb Plantation Workers Owenership of House and Property, Leo Marga Ashram, Sri Lanka, 1994 (Tamil)
346

இருபத்தோராம் நூற்றாண்டில் .
Social Development and Poverty in the Plantation in Sri Lanka, Leo Marga Ashram, Sri Lanka, 2003.
The impact of Globalisation on the Plantation sector in Sri Lanka, Leo Marga Ashram, Sri Lanka, 2004.
பெளத்த சிங்களவரும், சிறுபான்மையினயரும் نے
Leo Marga Ashram, Sri Lanka, 1987.
stb. மலையகத் தமிழரும், அரசியலும்
Leo Marga Ashram, Sri Lanka, 1995.
ம. திருவள்ளுவர்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை, திருச்சி, 2003,
திண்டுக்கல்லூமி (தமிழாக்கம்)
எடுத்துச்சொல் எதிர்த்துநில், (பேராயர் ஆஸ்கார் ரொமேரோவின் உரைவீச்சு, திண்டுக்கல், 2002
செபமாலை ராசா, சே.ச.
நிச்சயமா(க) நீங்களும் - சாதனை/மகளிர், மதுரை, 2000,
ஜோ சேவியர்
-- உலக மயமாக்கல் நிழலும் நிஜமும், திண்டுக்கல், 2004
Walden Bello,
"The meaning of Cancun", Frontline, Oct 10, 2003.
Vandana Shiva
"World Bank, W.T.O and Corporate Control over Water", USA Sounth Ends Press, 2002.
Sukumar Muralidaran,
"Globalising Resistance", Frontline, Jan 31, 2003.
347

Page 175
கீத பொன்கலன்
Kamphuis H.E.B And Sivaram B. Ed
As Human Perspectives in The Plantation Sector, Programme Support Group, Sri Lanka, 2001.
Lakshman W.D
Income Distribution and Poverty, Samurdhi Authority Sri Lanka, 2000.
Lancaster Osbert
The story of Tea, Tea Centre Publications, London S.W.I., 1947.
Nayar Nina and Gunatilaka, R. Ed
Sri Lanka's Micro finance Sector, Environment Policies and Practices, Ministry of Samurdhi Youth Affairs and Sports, Sri Lanka, 2000.
Perera R.S.
a. Living Condition of the Plantation Workers 1995.
Unpublished.
Sachithanandam
Shanthi A.
Needs Analysis of Women in the Plantation Sector in Sri Lanka, Phase I, 1992.Technical Assistance Team, Sri Lanka, 1992.
Maunaguru, S.
Phase III. 1993.
Shanmugaratnam N.
d Privatization of Tea Plantation, Social Scientists
Association, 1997 Sri Lanka,
Tudawe Indra
Review of Poverty Related DATA and Data Sources in Sri Lanka, Institute of Policy Studies, v. Sri Lanka, 2000.
348

இருபத்தோராம் நூற்றாண்டில் .
Sivaram B. Ed
Plantation Management in the new millennium, National Institute of Management, 2000 Sri Lanka.
Sivaram, B and Herath D.P.B.
Labour Economics in Tea, Tea Research Institute of Sri Lanka, 1996.
Dr. Weeramunda J.
Report on Sample survey on Non-Governmental Organisations Progeamme Support Group, Sri Lanka, 2001.
Tea, Marga Institute Ouarterly Journal
Vol 3, NO4, 1976 Sri Lanka
Ceremonial Inauguration of the Self Help Housing Programme for Plantation Workers, 1995 Sri Lanka.
Status of Worker Housing in Privatized Plantations, Programme Support Group, 2001 Sri Lanka.
t Tea Bulletin, The Tea Research Institute Vol. 16 1999, Sri Lanka. (a
Social Investment of Options Plantation Housing and Social welfare Trust,2000
Voice of The Voiceless - CSPA
Report on the Survey of the Female Workers in Estates and Garments Factories in a selected Region, Programme Support Group, 2001, SriLanka.
349.

Page 176
கீத பொன்கலன்
350
Report on Pilot Settlement Development Projects Programme Support Group 2001, Sri Lanka.
Plantation Development Support Programme, Ministry of public Administration Home Affairs and Plantation Industries 1998-2000, Sri Lanka.
Economic and Social Impact of Privatization of Plantations, Programme Support Group, 2000, Sri Lanka.
Samurdhi, National Programme for Poverty Alleviation, Sumurdhi Authority Sri Lanka, 1998.
Statistical Report and Analysis of Social Develop ment. Sri Lanka State Plantation Corporation, 1991.
κωμως αυ
Tea Review, Mercantile Produce Brokers (Pvt) Ltd. 2000, Sri Lanka.
Sri Lankan demographic and health survey 2000 ministry of Finance and planning 2001 Sri Lanka.
Human Development Report 2001, United National Development programme, 2001, England.
Report on consumer Finances and socioeconomic survey Sri Lanka, Central Bank of Sri Lanka 1999.
Plantation Management in transition, The Nation 1975, Sri Lanka.

இருபத்தோராம் நூற்றாண்டில் .
Selected Regional Level Socio Economic Indication, Programme Support Group 2001, Sri Lanka.
Nuwara Eliya District, Tea Development Plan, Tea Research Institute of Sri Lanka 1997.
Sri Lanka Tea Estates, Her Majesty's Stationery Office, London, 1975.
Plantation sector statistical pocket Book, Planning & Development Division Ministry of Public Administration, Home Affairs and Plantation Industries 2000 and 2001, Sri Lanka.
Annual Report 2000, Tea Research Institute of Sri Lanka.
The Role of Women in the Plantation Economy, Sri Lanka Foundation Institute, 1979, Sri Lanka.
Social Welfare Programme 11, 1993-1998 Plantation Housing and Social Welfare Trust and PSG-1999 Sri Lanka.
Health Bulletin, Estate sector 1995-1997 Plantation Housing and Social Welfare Trust Sri Lanka.
Health Bulletin of the Estate Sector 1992-1994 Plantation Housing and Social Welfare Trust, Sri Lanka.
Health Bulletin 1987 to 1991 Janatha Estato Development Board, Sri Lanka
3S

Page 177
கீத பொன்கலன்
A Bitter Taste of Tea, Sri Lanka Estate and Plantation workers Educational Trust, Sri Lanka.
Socio-econd mic Profile of Estate House Holders, Programme Support Group, 2000. Sri Lanka
Hand Book on Contraceptive Technology, Family Health Bureau. Ministry of Health, 1962 SriLanka.
Managing Social Change in Plantation 's National Institute of Plantation Management 1995, SriLanka.
Estate Social Development Index, Programme Support Group - 2001, Sri Lanka.
LabourForce Survey, Lanka Jathika Estate Workers Union, Sri Lanka.
Social Welfare Update -PHSWT. Vol. 8, 2002
35
Education of Plantation Children ISD, Kandy, 1997
Journal of the National Institute of Plantation Management Vol 172001
Plantation Sector Statistical Pocket Book by the Ministry of Plantation Industries, 2001, 2002, 2003.
Sri Lanka Labour Gazette, Ministry of Labour, Sri Lanka, Vol 52, 2001.
O ZO ZO ZO & w w X- 令


Page 178


Page 179
தும் பர்
புடன்ங்களில் தமது எ பு
உத்வேகத்தை எழுதி Gųsi siri, sir i sl.
தன் நஎா
ன் வெம்பை த
அவனங்களைப் பொறுக்காது, தம் 3
ԱTնն է: Հիլյո
ஆவூர் என்ற தேடவில் வருடங்களின் பின் அவரின்
பெற்றேன்
அனைத்தையும் லும் அவரின் பேச்சு
ாண்டில் மலையகத் தமிழர் எதி கும் சவால்கள் என்ற இந்நூல் வெ
3. I si ஒள்ளொ
கட்டுரை ஆளுர் ர்ெக்கத்தி அதிகாரக் கரங்
க்குக் து போராடு என உற்சாகத்தை கிறது. இது ஒன்னொரு லை தழு
ரும் நுழைய வேன்
மேகலாசண்முக
E.s. I tal El Li.