கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி

Page 1
J. A.
 

ஐரோப்பாவின் wf手G
3-1939)
திகியோன்
R மரியற்று
மதுவென்
962 ளத்து வெளியிட்டுப் பிரிவுப் பிரசுரம் சாங்க அச்சகப் பதிப்பு

Page 2


Page 3

இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி (1453-1939)
ஆக்கியோன் சேர் T. A. R. மரியற்று
மொழிபெயர்த்தோன் க. கிருட்டினபிள்ளை B.A.
மெதுவென் கம்பனி (வரைவுளது) 36, எசெட்சு வீதி, திராண்டு, இலண்டன் W.C. 2

Page 4
TH EVOLUTION OF MODERN EUROPE
(1453-1939)
by SIR J. A. R. MARRIOT
Translated and Published by
the Government of Ceylon
by arrangement with Methuen and Co. Ltd., 36, Essex Street, Strand, London W.C. 2
இலண்டன் மெதுவென் கம்பனியாரின் இசைவு பெற்று இலங்கை அர சாங்கத்தார் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது.
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே. முதற்பதிப்பு 1962.

முன்னுரை
இலங்கைப் பாடசாலைகளிலே பயன்படுத்தும்பொருட்டு, அரசகருமமொழித் திணைக்களத்தார் மொழிபெய்ர்த்து வெளியிடும் வரலாற்று நூல்கள் பலவற்றுள், இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி " எனும் இந்நூலும் ஒன்றகும். இதை ஆங்கிலத்தில் எழுதினர் சேர் சே. ஏ. ஆர். மரியற்று என்க. பல்கலைக் கழகப் புகுமுறைத் தேர்விற்கும், உயர்நிலைப் பாடசாலைப் பத்திரத்தேர்விற்கும், பொ. க. த. ப. தேர்விற்கும் வரலாற்றை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்க்கு இந்நூல் பயன்படுத்தத்தக்கது.
இந்நூலை மொழிபெயர்க்க எமக்கு உரிமையளித்த மெதுவென் கம்பனி யார்க்கு இத்திணைக்களம் பெரிதும் கடப்பாடுடையது.
இந்நூலைத் திருத்தமுறச் செய்தற்கு ஏற்றயோசனைகள் கூறப்படின், அவற்றை நாம் உவந்தேற்போம்.
நந்ததேவ விசயசேகரா, ஆணையாளர், அரசகருமமொழி அலுவல்கள். அரசகரும மொழித்திணைக்களம், (வெளியீட்டுப் பிரிவு), புல்லர் வீதி, கொழும்பு 7, 196.62.
-B 24178-1,526 (5.160)

Page 5

முகவுரை
இக்கால ஐரோப்பிய் வரலாற்றைப் பருவரையாக நுதலும் நோக்கொடு ஒரு புதிய நூலே எழுதப் புகுங்கால், அந்நூல் அவ்விடயத்தைப் புதிய கோணத்திலிருந்து, சிறப்பான ஒரு நோக்கொடு ஆராய்வதாய் அமைகதல் வேண்டும், அப்போதே அந்நூல் பயனுடைத்தாகும். இச்சிறு நூல் மேற் போந்த நிபந்தனையைப் பூர்த்தி செயும் என்பது எனது நம்பிக்கை. கிரெசம் கழகத்தில், இலண்டன் பல்கலைக் கழகத்தின் ஆதரவிலே, 1931-2 ஆம் வருடத்து மாரிக்கண்ணே, தொடராக யான் ஆற்றிய விரிவுரைகளின் வழி பிறந்தது இந்நூல். அவ்விரிவுரைகளிற் பெரும்பாலானவை அவ்வப் போதே எழுந்தவாக்கில் நிகழ்த்தப்பட்டவை ; பிறகில, அரைகுறையான குறிப்புக்கள் கொண்டு ஆற்றப்பட்டவை. அவ்விரிவுரைகளைச் சொல்லுக்குச் சொல்லாக அப்படியே இந்நூலிற் கொடுத்திட யான் முயன்றேனல்லேன். ஆயினும் அவற்றையே இந்நூல் தழுவியெழுந்தது எனுமாற்றல், இதன் வடிவமும், மற்று, ஓரளவிற்கு இதன் உள்ளுறையும் கற்போர்க்குத் தெளிவாகும். கிரெசம் கழகத்தில் எனது விரிவுரை கேட்ட குழாமோ தனித்தன்மையது-தொழிற்றுறை வணிகத்துறைகளில் ஈடுபட்டோர் ஆட வர் பெண்டிர் ஆகியரோடு, ஆசிரியன்மாரும் விரவியிருந்த அக்குழாம் முற்றிலும் முதிர்ந்தோரையே உடைத்தாய் இருந்தது. அக்குழாத்திடை உரையாற்றும்போது, ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் என் உளத்தில் எழுந்தது ; ஐரோப்பிய வரலாறு பற்றிச் சாதாரண குடிமகன் அறிய விழைவது யாது ?" என்பதே அக்கேள்வி./' இற்றை நாள் ஐரோப்பாவிற் காணக்கிடக்கின்ற சிக்கன் மிக்க பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணையே அவன் அறிய விழைவது ' என்பதே யான் கண்ட விடை. இந்நூலை யாத்தலில் யான் மேற்கொண்ட முறை மையினை விளங்கவைக்குந் திறவுகோலை அவ்விடையிற் காணலாம். இந் நூல் ஒரு பொழிப்பாக எழுதப்பட்டதன்று ; பருவரையாகவே பன்னப் பட்டது. இன்னும் யான் முனர்ச் சுட்டிய அந்நோக்கிற்கு இன்றியமையாச் சேதிகளுக்கே யான் இந்நூலில் இடமளித்துள்ளேன்.
இந்நூலை யான் வெளியிடுதற்கு இரு காரணங்கள் ஊக்கமளித்தன : இவ்விரிவுரைகள் எவர் பொருட்டாக நிகழ்த்தப்பட்டவோ, அவர் பிறவிடத் துக் காணக்கிடையா யாதோவொன்றை அவற்றிற் கண்டனராகத் தோன்றி
v,

Page 6
யமை ஒருபுடை என்னை ஊக்கிற்று. மற்றது, (உளத்தைத் திறந்து சொல்லப்புகின்) இந்நூற்கண் நுதலிய விடயம் யாவும் ஒட்சுபோட்டிலே பல்லாண்டு காலமாய் யான் எடுத்தாண்ட விடயங்களாயினும், கிரெசம் கழகத்தில் என் விரிவுரை கேட்ட குழாத்தினர் ஊட்டிய உற்சாகங் காரணமாக, இவ்விரிவுரைகளை ஆயத்தஞ் செய்வதில் மேலும் மேலும் ஊக்கங்கொள்ளுமாறு உந்தப்பட்டேன். அதன் விளைவாகப் பெற்ற பயனை இங்குத் திரட்டிக் கொடுக்க விரும்பினேன்-ஒர்ந்துணர்வார் இதை அறிவர்.
இனி, பிறிதொரு நியாயமும் உண்டே பல்கலைக் கழகங்களிலும் பாட சாலைகளிலும் ஐரோப்பிய வரலாற்றைக் கற்கத் தொடங்குவார் அனைவர்க் கும் ஏற்ற பெற்றித்தாய் இந்நூல் விளங்குமென எதிர்பார்க்கின்றேன். சிறுவர் கற்றற்கு இந்நூல் உரியதன்று என்பது தெளிவு. ஆயின், வரலாற்றை முறைமையாய்க் கற்றல், இளந்தலைப் பருவத்தோடே தொடங் கல் வேண்டுமென்பது யான் கண்ட முடிபு. எதுகைமோனையொடு கூடிச் செய்யுள் வடிவிலியன்ற சிந்தைகவர் வரலாற்றுச் சரிதைகள், வனப் பான புவியியற் சேதிகள், புகழ்டடைத்த ஆடவர் பெண்டிரின் வாழ்க் கைச் சரிதங்கள், என்றிவையே சாதாரண குழந்தைகட்கு உவந்த பாடங்க ளாம். வரலாற்றைக் கற்க வேண்டியாங்கு முறைமையாகக் கற்றல், இளந் தலைப் பருவத்துக்கே உரியது. அப்பருவத்தே ஒரு திட்டந் தழுவிப் பாடங் களை ஒழுங்குபடுத்துவதே வேண்டுவதல்லால், யாவற்றையும் " எழுத்திற் பொறித்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இஃதே என் அனுபவத்தில்-நீடிக்கின்ற எனது அனுபவத்தில்-யான் கண்ட உண்மை. முதிர்ந்தோர்க்குத் தக்கது, இளந்தலைப் பருவத்தோர்க்கும் தகும். இவ் வழி, தொடக்க நிலையில் உள்ளார்-பதினைந்து முதல் ஐம்பது வரையான அகவையினர்-யாவர்க்கும் இந்நூல் இத்தால் வழங்கப்படுகிறது.
அறிவியன்முறை கருதியும் பயன்பாடு கருதியும் இந்நூல் மூன்று பாகங்களாக வகுக்கப்பட்டுளது : இவ்வொழுங்கின் வழி, முத்தவணைக்கோ மூவாண்டு காலத்துக்கோ எற்றவாங்கு இந்நூலை வகுத்துப் பயிலலும் பயிற்றலும் ஒல்லும். பின்னை முறையைத் தழுவுவதாயின், ஒவ்வோர் அதிகாரத்தையடுத்தும், அல்லது பலவதிகாரத்தையடுத்தும் தரப்பட்டுள்ள உசாவுநூல்கள் பற்றிய குறிப்புக்களைத் தக்கவாறு பயன்படுத்தல் வேண். டும். இந்நூலில், சிறப்பாக 3 ஆம் பாகத்திற் காணக்கிடக்குஞ் செறிவுப் பாட்டை ஈடு செய்தற் பொருட்டு, விரிவாக விடயங்களை யான் எடுத்தாண்டுள்ள பிற நூல்கள் பற்றிச் சற்று விரிவாக யான் ஈண்டு குறிப்பிடுதற்கு முற்
பட்டேன்.
Y7i

முதலாம் பாகத்துப் படியிதழ்களைக் கவனமாகத் திருத்தியுதவிய பேரா சிரியர் A. 3. கிராந்துக்கும், அவ்வாறே இரண்டாம் பாகத்தைப் பொறுத்த வரை அத்தகு உதவியளித்த சேர் இரிச்சட்டு உலொட்சுக்கும் பெரிதும் கடப்பாடுடையேன். மேதகவுடைய இவ்வரலாற்றறிஞர் இருவரும் எனக்கு எடுத்தோதிய அருமையான யோசனைகளை யான் பெரும்பாலும் தழுவி யொழுகினேனுயினும், கருத்திலும் பொருளிலும் யான் வழுவி நின் றேனயின், அவருள் ஒருவரும் அதற்கு எத்துணையேனும் பொறுப்புடைய
TT5ITIT.
பிறவாசிரியர்க்கு எனது பெருங் கடமைப்பாட்டினை, (மிகச்சிலவான) அடிக் குறிப்புக்களிலேனும், நூற்பட்டியலிலேனும் யான் தவறது தெரி வித்துள்ளேன் என்பது எனது நம்பிக்கை.
J. A. R. LDfusibg. நவெம்பர், 1932.

Page 7

அத்தியாயம் முதலாம் பாகம்
1. முன்னுரை-இற்றையூழியின உதயம் . . g 2. பெளதிகவியலும் அரசியலும் s 8. பிரான்சின் ஆக்கம் . .. 4. இசுப்பானிய முடியாட்சி Vé «O 5. இத்தாலியப் போர்கள் 0 e 6. சேர்மனியும் பேரரசும் a v 7. புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம் . . 8. கத்தோலிக்க மதச் சீர்திருத்தம் O. O. O. 9. ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 0 10. பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 4 A 11. முப்பதாண்டுப் போர் . . e
இரண்டாம் பாகம்
12. இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 13. பதினன்காம் உலூயியின் ஆட்சி 14. பிரான்சும் ஐரோப்பாவும் (1660-1715) 15. போற்றிக்கு நாடுகள் (1648-1721)
இரசியாவின் எழுச்சி 16. கிழக்குப் பிரச்சினை (1453-1792)
ஒற்ருேமன் துருக்கர் 17. பதினெட்டாம் நூற்ருண்டு (1715-89) . . 18. உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும் (1718-40) 19. பிரசியாவின் எழுச்சி 20. ஏழாண்டுப் போர் (1756-63) 21. போலந்தின் பிரிவினைகள் (1783-95) . . 22. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம் . 0 23. பழைய ஆட்சியின் முடிவு-தண்ணளித்தனியாட்சி
மூன்றம் பாகம்
24. பிரான்சிய புரட்சி 25. நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி (1795-1807) 26. நெப்போலியனின் வீழ்ச்சி-வீயன்னப் பேரவை ; 8 w
பொருளடக்கம்
1815 ஆம் வருட இணக்கம்
usth
19
83
55
69
83
99
107
113
125
14
1.59
177
193
205
215
229
233
243
253
261
273
283
297
311
325

Page 8
அத்தியாயம்
27. மீட்பு, எதிர்விளைவு, புரட்சி (1815-1830) 28. பெல்சியத்தின் தோற்றம் . . . . :29, கிழக்குப் பிரச்சினை (1800-1878) ,
30. இத்தாலி ஐக்கியம் பூண்டமை (1815-11) 3. சேர்மனி ஐக்கியம் பூண்டமை (1815-11) 32. இரண்டாம் G8 uglysrub மூன்றம் (8ւգամՑուհ 33. ஐரோப்பாவின் அகற்சி (1871-) 0 34 சூழியற்புரட்சி (1890-1911)
மூவர் நட்புறவும் மூவர் உடன்பாடும் 嵩 மாபெரும் உலகப்போரின் எல்லையில் (1914) 36. உலகப் போர் (1914-18) 37. அமைதிப் பொருத்தனைகள் o o 38. அமைதியின்மையும் அபிவிருத்தியும் (1919-1931) 39. படுகுழிக்குள் இறங்கல் (1931-39)
வமிச வழிப் பட்டியல் அபிசுபேக்குக் குடும்பம்
கைசுக் குடும்பம் O'
பூபன் குடும்பம் to
நாட்டுப்படங்கள்
1491 இலும் 1560 இலும் இசுப்பெயின் 1559 இல் ஐரோப்பா
592 இல் வட ஐரோப்பா a
நெதலந்து
16 ஆம் நூற்றண்டிற் பிரான்சு 1659 இல் ஐரோப்பா a w 0 v பிரான்சு, 1843-1789 1580 இல் கிழக்கு ஐரோப்பா .
போலந்து
1815 இல் ஐரோப்பா
1810 இல் மத்திய ஐரோப்பா இத்தாலி, 1789-1871
பிரசியாவின் வளர்ச்சி to s ஆபிரிக்கா, 1893
தூரகிழக்கு போருக்குப் பின் ஐரோப்பா
x:
иš sto
341
35
355
365
389 401
47
43.
443
457
473
483
57
139
90
54
83 ஆம் பக்கத்துக்கு எதிரில்
98
106 140
158
176
204 310
88ሽ ஆம். பக்கத்துக்கு எதிரில்
O
340
364
378
416
430
473 ஆம் பக்கத்துக்கு எதிரில்

இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி 1453-1939 முதலாம் பாகம் அத்தியாயம் 1 முன்னுரை இற்றை ஊழியின் உதயம்
சில முக்கியமான திகதிகள்
1436 அச்சடித்தலைப் புதிது காண்டல். 1453 கொன்சுதாந்திநோப்பிளைத் துருக்கியர் கைப்பற்றல். 1453 நூற்றண்டுப் போர் முடிவெய்தியது. 1464 புளோரஞ்சில் பிளேற்முேவின் கொள்கை பற்றிய கலைமன்றம் கொசு
மோதி மெடிக்கியால் நிறுவப்பட்டது. 1492 மேற்கிந்தியத் தீவுகளைக் கொலம்பசு என்பான் கண்டுபிடித்தல். 1492 கிானதா என்னுமிடத்தை இசுப்பானியர் கைப்பற்றல். 1493 போப்பாண்டவர் ஆமும் அலச்சாந்தரின் கட்டளை. 1494 எட்டாம் சாள்சு இத்தாலி மீது படையெடுத்துச் செல்லல்; , , 1496 ஒட்சுபோட்டுப் பல்கலைக்கழகத்திற் கொலற்று விரிவுரையாற்றல், s (1466-1519). 1497 நியூபண்ணிலாந்து முதலிய இடங்களை யோன் கப்ற்று என்பான்
கண்டுபிடித்தல். AW 1498 இந்தியா செல்வதற்கு முனைப்பாதையை வசுகோடிகாமா கண்டு
பிடித்தான்.
1516 கொலற்று என்னும் சமயவட்டத் துணைததலைவர் சென்போல் பள்ளிக்
கூடத்திற்கு அடிகோலினர். 1516 இராசுமசு என்பான் புதிய ஏற்பாட்டின் தன் பதிப்பை வெளி
யிட்டான். ༥ W . ," 1516 சேர் தோமசு மூர் என்பான் (1473-1835) யூற்றேபியா (இலட்சியபுரி)
என்னும் நூலை வெளியிட்டான். , , ,- 1517 உலிற்றன்பேக்கு என்னுமிடத்தில் உலூதர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள். w 1565 நெதலந்தின் எதிர்க்கிளர்ச்சி. 1577-80 திரேக்கு என்பான் உலகத்தைச் சுற்றிக் கப்பலிற் பிரயாணஞ் செய்தல். .

Page 9
2. இற்றையூழியின் உதயம்
நூலின் எல்லை
சாதாரணமான வாசகர் ஒருவர் ஐரோப்பிய வரலாற்றில் அறிய விரும்புவது ஏது ? விவேகமுள்ள தேர்வாளர் ஒருவர் ஒரு மாணுக்கனிடமிருந்து உரிமை யுடன் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன? நிரந்தா விளைவு அற்ற குழியலின் சுற்றி வளைத்த முழு விபரங்களையாவது, படைத்தொடரிகல்களின் முழு விபரங் களேயாவது, குலத்தொடர்புகள் பல கிளைகளாகப் பிரிவதையாவது, வயது வந் தோன் அறிய விரும்புவதில்லை. அவற்றை ஓர் இளம் மாணுக்கன் படிப்பானென எதிர்பார்த்திருக்கவும் இயலாது. இவை வரலாற்று முக்கியம் அற்றனவெனக் கொள்வதற்கும் இல்லை. இதற்கு முழு மாமுக, அரசியற் போக்கை நோக்கி, * பேரிகை, ஊதுகொம்பு ஆகியவற்றின் வரலாறு' என வெறுப்புடன் கூறப்படு வதை ஏளனஞ் செய்வோரும், குழியற் பணியின் முக்கியத்தைக் குறைவாக மதிப்பிடுபவரும், தனியாள், குடும்பத்தார் ஆகியோரின் அன்பினதோ பகைமை யினதோ பின்விளைவைப் புறக்கணிப்போரும், அறிவிலிகளே. நாடுகளின் வரலாற்றை உருவாக்குவதிலும், மனித இனத்தினது ஊழை உறுதி செய்வதி லும், போர், அரசன், இராணி, அரசறிஞன் ஆகியோரின் பேராசைகள், மன வெழுச்சிகள், மனம்போன போக்குக்கள் தாமும் மிக முக்கியமான பங்கை மேற்கொண்டிருக்கின்றன. குழியல் நடவடிக்கைகளும் அப்படியே. எனவே, ஒரு வரலாற்றுச் சுருக்கம் தானும், குழியல், போர், என்பனவற்றின் பின்விளை வுகளை நிலையாகப் பதிவு செய்ய வேண்டும். எப்படியாயினும், படைத்தலைமைத் திறம், போர்ச்சுளுகு என்பனவற்றைப்பற்றிய முழு விவரமான ஆராய்ச்சி, தனிப்பயிற்சியடைந்த படை வரலாற்று நூலாசிரியரின் பொருத்தமான அலுவலாகும். அதேமாதிரி, குழியல் சார்ந்த இணக்கப் பேச்சுக்கள் தனித் திறமை பெற்றவரின் ஆராய்ச்சிக்குத் தகுதிவாய்ந்த பொருளாக இருந்த போதும், எழுத்து மூலமாகப் பதியப்பட்டு முறைமையாகக் குறித்து வைக்கக் கூடிய தெளிவான பலன்களை உண்டுபண்ணிய அளவுக்கு மாத்திரமே அவை செயல்வகையில் முக்கியமுடையன.
ஆகையால், இந்நூலின் பிரதானமான குறிக்கோள், இன்றைய ஐரோப்பா இன்றைய நிலையை எப்படி எய்தியது என்பதை விளக்கிக் கூறுவதாகும். இப்போது ஐரோப்பா, சில பெரியனவும் சில சிறியனவுமான முப்பத்தைந்து முழு அரசியற் கூறுகளை-சுயாதீனமான நாடுகளை-அடக்கியிருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் அதனதன் சொந்த அரசாங்கம் உண்டு. உதாரணமாக, இந் நிகழ்ச்சியுரையில் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் இங்கே குறிப் பிடப்படும் மொனக்கோ, சன் மரினே, இலிற்றன்சுதைன் தாமும், என்ன காரணங்களைக்கொண்டு தொடர்ந்து தனி அரசுகளாக இருந்திருக்கின்றன வென்பது முக்கியமன்று. இந்நிலை உலகின் இறை என்ற தோரணையிற் போப் பாண்டவரின் ஆள்புலப்பரப்பு இன்று 109 ஏக்கர் மாத்திரமேயாயினும், வற்றிக்கன் என்னும் அவர் நாட்டைப்பற்றி அறிதல் முக்கியமானதென்பது வெளிப்படை. பிரான்சும் இசுப்பெயினும் பதினமும் நூற்முண்டிலும், இங்கிலந்து

இற்றையூழியின் உதயம் 3
பதினுேசாம் நூற்முண்டிலும் தனித்தனி ஐக்கியம் பூண்ட இராச்சியங்களாக உருவாகியபோதும், இத்தாலி அந்நிலையை அடைய 1871 வரையும் காலம் பிந்திய காரணத்தை அறிவது இன்னும் கூடிய முக்கியமானது. அதேமாதிரி இலிற்றன்சுதைனதோ, இலட்சம் பேக்கினதோ அரசியற் படித்தாம் மிக முக்கிய மானதன்று. ஆணுல் இத்தாலிய மக்கள் போன்று, சேர்மனிய மக்கள் ஐக்கியம் பூண்டமை பத்தொன்பதாம் நூற்முண்டின் இறுதிவரையும் காலதாமதப் பட்டதின் காரணத்தை அறிவது இன்றியமையாத முக்கியத்துவமுடையது. மேலும், வெளித்தோற்றத்தில் மனித இன வேறுபாட்டு நூல், புவியியல், என்பன வற்றின் எந்த அரசியலாகமத்திற்கும் முரணுக அந்நாட்டு மக்களுள் நிலவும் இனம், மதம், மொழி வேறுபாடுகள் இருந்தும், நேர்மாமுகச் சுவிற்சலந்து தொடர்ந்து ஒருநாடாக இருப்பதன் காரணமென்ன? ஒல்லந்தும் பெல்சியமும் ஒன்முகச் சேர்ந்திருக்கக்கூடிய பல காரணங்கள் இருந்தும், நேர்மாமுக இரு நாடுகளாகப் பிரிந்து அமைந்திருப்பதேன் ? போற்கன் தீபகற்பத்தில் ஆறு தனியான நாடுகளிருப்பதேன் ? கந்தினேவியாவில் மூன்று இராச்சியங்களிருப் பதேன்? இருபது ஆண்டுகளின் முன் ஐரோப்பிய நாடுகளின் அட்டவணையில் இருபத்தேழு உருப்படிகள் அடங்கியிருந்தன. நூற்றைம்பது ஆண்டுகளின் முன் சேர்மனியில் மாத்திரம் முன்னூறு நாடுகளுக்கதிகமானவை இருந்தன.
அக்காரணத்தினுல் இக்கால ஐரோப்பாவின் அரசியற் போக்கை, பல சேர்ந்து ஒன்முதலும் ஒன்று சிதைந்து பலவாதலுமென விவரித்துக் கூறலாம். இது நூதனமாகத் தோற்றினும் இரு போக்குக்களிலும் நாட்டினம் என்னும் ஒரே சத்தியே பெரும் அளவிற்கு முனைப்பாக அமைந்திருந்தது. நாட்டினம் என்ப தின் நுட்பமான கருத்து என்னவென்ற வின முக்கியமானதெனினும், அதற்கு விடைகூறுவது பின் போடப்படவேண்டியிருக்கிறது. அண்மையிற் சேர்மனியிலும் இத்தாலியிலும் நிறைவேறியதுபோல், ஒரு காலத்தில் பிரிந்து சுயாதீனமாகவிருந்த நாடுகளை ஒர் அரசாங்கத்தின் கீழ் ஒன்று சேர்க்கவும் ஒருபோது ஒன்ருயிருந்த அபிசுபேக்கு, அல்லது ஒற்ருேமன் பேராசைப் போன்ற நாடுகளைப் பிரிவுறச் செய்து பல சுயாதீனமான நாடுகளாக அமைக்க வும் இச்சத்தி செயலாற்றியதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நூல் ஐரோப்பிய வரலாறு முழுவதையும் தொகுத்துக் கூற முயற்சி செய்யாது. இது இக்கால ஐரோப்பாவுடன் மாத்திரமே ஈடுபட்டிருக்கின்றது. வரலாற்றைப் பண்டைய காலம், இடைக்காலம், இக்காலம் என்பது இய்ற்கை யானதன்று செயற்கையானதென்பது வெளிப்படை. இக்காலங்களினெல்லைகள் மங்கலாயிருப்பது தவிர்க்க முடியாதது. ஆனல், இம்முறைக்கு நீண்டகால வழக்கின் ஆணை உண்டு. இன்னும், கூடிய முக்கியமான காரணம், இம்முறை, செயல் வகையில் மிகவும் வசதியானது. ஆயினும், பிரிக்கும் எல்லையை வரையறுத்துக் கூறுவது எளிதன்று.

Page 10
4. இற்றையூழியின் உதயம்
ஆயின், இக்கால ஐரோப்பிய வரலாற்றிற்கு அறிவியற்சார்புடைய பொருத்த மான தொடங்குங்காலமென்ன? இக்காலம் பதினைந்தாம் நூற்முண்டில் தொடங்குகின்றதென வரலாற்றுசிரியர்கள் ஒருமனதுடன் ஒப்புக்கொண்டிருக் கின்றனர். விவேகமில்லாத முறையில், ஒரு தெளிவான திகதியைக் கூறும்படி நெருக்கினல், அவர்கள் விருப்பமின்றி 1453 ஆம் ஆண்டைக் குறிப்பிடுவர்.
ஒரு புதிய ஊழி
பதினைந்தாவது நூற்முண்டு ஒரு புதிய வரலாற்று ஊழியைக் குறிக்கின்ற தென்பதை மறுக்க முடியாது. உண்மையாக எக்காலப் பகுதியும் 'நிலைமை மாறும் காலமாகும். பழைய நிலைமையிலிருந்து புதிய நிலைமைக்கு மாறுதல் ஏற்படுவதைச் சில காலப்பகுதிகள் வேறு காலப்பகுதிகளிலிருந்து கூடிய தெளி வாகக் குறிக்கின்றன. அப்படிப்பட்ட காலப்பகுதிகளிற் பதினைந்தாம் நூற்றண்டு தலைசிறந்ததாக விளங்குகின்றது. அதையேனும் அல்லது வேறு எந்த வரலாற்று நூற்ருண்டையேனும் அளவுக்கு மிஞ்சிய குறுகிய நோக்குடன் வரையறுத்தல் தகாது. பல்வூர் என்பான் ஒருமுறை சொல் நயத்துடன் குறிப்பிட்டதுபோல, ‘இயற்கை தன் ஒருசீர்த்தன்மையைத் தசம முறையை ஒட்டிய ஒரு கட்டாய மான ஒழுங்கு விதிப்படி காட்டுவதில்லை. ஆகையால், தாந்தே (1265-1321), பெற்றுக்கு (1804-1374) என்பாரின் நூல்களை மாத்திரமன்றி, கொப்பேணிக்கசு, கலிலியோ, நியூற்றன் என்பாரின் நூல்களையும், கொலம்பசு (1492), யோன் கபற்று (1497), வசுகோடகாமா என்பாரின் வரலாற்றுப் பெருமை பெற்ற கடற் பயணங்களையும் மாத்திரமன்றி, கிரேக்கினதும் (1577) இலிசபெத்துக்கால மற் றைக் கடல் மறவர்களின் கடற்பயணங்களையும் உள்ளடக்கக்கூடிய அளவிற்கு எங்கள் நூற்ருண்டை நாங்கள் விரித்தல் வேண்டும்.
இப்பூமியின் உருவமும் தோற்றமும் உண்மையாக மாறுதலடைந்துகொண் டிருக்காவிடினும், அதைப்பற்றிய மனிதனின் உளநோக்கு மாறிக்கொண்டே யிருக்கின்றதென்பதை இப்பெயர்கள் தவிர்க்க முடியாதபடி குறிப்பாலுணர்த்து கின்றன. எனவே, இக்காலப் பகுதிக்கு வரலாற்முசிரியர்கள் ஒரு வசதியான பெயரிட்டிருக்கிருரர்கள். அதை அவர்கள் 'மறுமலர்ச்சிக்காலம் ' என அழைக் கின்றனர். 'மறுமலர்ச்சி' என்ற பதம் ஒரு வகையில் வரலாற்று வளர்ச்சியின் ஒரு காலப்பகுதியையும் (கட்டத்தையும்), மற்ருெரு வகையில் மனிதனின் அறிவாராய்ச்சி வளர்ச்சியின் ஒரு பருவத்தையும் (இயக்கத்தையும்) குறிக்க உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையில் அது வேறு வேறு உளங் களுக்கு நேர்மையாகவே வேறு வேறு கருத்துடையதாகப் படலாம். அது வெளிப்படையாகும்பொழுது வெவ்வேறன தோற்றமளிப்பினும், அவைகளின் அடிப்படையில் ஒன்றுந் தன்மையான உளப்பாங்கு உண்டு. இதையே கூர்ந்துணர நாம் முயற்சி செய்யவேண்டும். மறுமலர்ச்சியைக் கலைப்புத்துயிர்ப்பு எனக்கூறுதல், முழு இயக்கத்தின் ஒரு மிக முக்கியமான, ஆனல், அதன் ஒரு கூாரகவுள்ள அமிசத்தில் எங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாகும். வேறு,

இற்றையூழியின் உதயம் 5
அதை இக்கால நாட்டினங்களின் புத்துயிர்ப்பைக் குறிப்பதாகக் கொள்வது ஒரு பொது இயக்கத்தின் மிக முக்கியமான வேருேர் அமிசத்தை நினைவூட்டுவதாகும். மேலும், அதை நாங்கள் குழைமம், சிற்பம், ஒவியம், எனும் பல்வேறு உருக் களில் அமைந்த கலையின் புத்துயிர்ப்பெனக் கருதலும் முறையே. புது இடங்களைக் கண்டுபிடித்தல், புத்தாக்கங்கள், என்பனவற்றின் புத்துயிர்ப்பைக் குறிக்க அப் பதத்தை நாம் உபயோகிக்கலாம். இவை யாவும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. இக்காலப் பொருத்தமானது, இவைகளின் தோற்றுவாய் பொதுவானதாயிாா விடினும் இவைகளைத் தூண்டிய ஏதுக்கள் பொதுவானவென்பதைத் தெளி வாகக் குறிப்பிடுகின்றது. அவ்வேதுக்களைக் கண்டுபிடிக்க எங்களால் இயலுமா? மறுமலர்ச்சியென்பது ஒரு புதிய வானுலகத்தினதும் ஒரு புதிய மண்ணுலகத்தி னதும் தோற்றமெனக் கூறலாம். சொற்பொருளளவிலும் உருவகத்தளவிலும் இக் கூற்று உண்மையே. கிறித்தோவர் கொலம்பசு, பகோலமியூசு, வசுகோடகாமா, கபற்றியர் ஆகியோர் இப்பூவுலகிற் புதிய இடங்களைக் கண்டுபிடித்தமைக்கு வான நூல் ஆசிரியர்களான கொப்பேணிக்கசு, தைக்கோப்பிசர்கே, கெப்பிலர், கலிலியோ என்போரின் மிகச் சிறந்த விஞ்ஞான நூல்கள் ஆதாரமாய் அமைந்தன.
இதனிலும் மேலாக மறுமலர்ச்சி, இப்பூவுலகில் ஒரு புதிய வானுலகம் மலர்ந்ததாகப் பொருள்பட்டது. மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கையைப் பற்றி மாத்திரம் தனியே சிந்தித்துக் கொண்டிருந்த மனிதனை இப்பூவுலக வாழ்க்கை யின் பலதிறப்பட்ட அழகுகளையும் வாழ்க்கையின் எல்லையற்ற சாத்தியங்களையும் உற்றுநோக்கும்படி அது ஏவியது. அந்த இயக்கத்தின் இத்தோற்றம் 'அஞ்ஞான எதிர்விளைவென விவரித்துக் கூறப்பட்டது. மறுமலர்ச்சி என்பது அஞ்ஞான நிலையைப் பழையபடி அடைவது, உளம், மனவெழுச்சி, தன்னிச்சை என்பனவற் றைக் கட்டுப்பாடு செய்யும் எவற்றிற்கும் எதிரான கிளர்ச்சி, கட்டற்ற விடுதலை யை உறுதியாய் மேற்கொள்ளல் எனப் பலவ#று பண்பிலார்க்குப் பொருள் பட்டது என்பது உண்மையே. ஆனல், சேர் தோமசு மூர் போன்ற கூடிய தூய உளத்தினர்க்கு மறுமலர்ச்சியால் ஒரு புதிய விண்ணுலகம் மனிதகட்புலனுக் குப் புலனுயது என்பது, உண்மையாகக் கடவுள் பூமியின் மேல் காட்சியளித் தான் எனப் பொருள்பட்டது. தேவனின் இராச்சியம் பூமியிலே தோன்றுமாறு உழை என்ற தெளிவான வற்புறுத்தலான அழைப்பே மறுமலர்ச்சி எனக் கருதப்
- - -
இந்தச் செய்தி தூய உளப்பான்மையுடையோருக்கே என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். பொதுப்படையான மனிதனுக்கோ மறுமலர்ச்சியென்பது வெளி அதிகாரத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மனித உளமும் இச்சையும் விடுதலை படைதல் எனவும், மிகச்சிறந்த, ஆனல் உண்மையான உலகியற் பொருள்களை அனுபவிக்கும்படி விடுத்த அழைப்பெனவும் பொருள்பட்டது. தனி யொருவ அனுடைய சுதந்திரம், தன்னையறிதல், என்பன புதிய நற்செய்தியின் கொள்கை ஆகும். மறுமலர்ச்சிப் பெருக்கின் அடிப்படையான பொதுக் கருத்து இதுவே.

Page 11
6 இற்றையூழியின் உதயம்
புவியியற் கண்டுபிடிப்புக்கள்
இப்புதிய உளப்பான்மையின் சில முக்கியமான தோற்றங்களை மிகவும் விவா மாக ஆய்வோமாக. அரசியல் வரலாற்று நோக்கின்படி, மிக முக்கியமானது நாங்கள் வாழும் உலகத்தைப் பற்றிப் புதுப்பிக்கப்பட்ட ஆர்வமாகும். இதன் விளைவாகவே பதினைந்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் அரிய முறையிற் புதிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பதினரும் நூற்முண்டில் மனிதர்க்குக் காட்சி யளித்த உலகம் பதினைந்தாம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் அவர்கள் தம்முன் கண்ட உலகத்திலிருந்து முற்றிலும் வேறனது. பதினைந்தாம் நூற்முண்டின் கடைசிப் பத்தாண்டு வரையும் மனிதன் கண்டுகொண்ட உலகம் ஐரோப்பா, ஆசியா, தெற்கே சமாேகை வரையுமுள்ள ஆபிரிக்கக் கடற்கரைகள் என்பன வற்றை எல்லையாகக் கொண்ட பாகமாகும். அந்நூற்ருண்டு முடிவு எய்திய பொழுது ஆபிரிக்காக் கண்டம் நன்னம்பிக்கை முனைக்கப்பால் நீண்டிருக்கவில்லை யென்றும், தொடர்ந்து கடற்பிரயாணஞ் செய்தால் இந்தியாவை அடையலா மென்றும், கொலம்பசு, தான் மேற்கிந்திய தீவுகளெனப் பெயரிட்ட ஒரு தீவுக் கூட்டத்தைப் போய்ச் சேர்ந்தானென்றும், கபற்று என்பான் பின்னர் அமெரிக் காக் கண்டத்தின் கடற்கரைகளென யாவருமறிந்த கரைகட்குக் கப்பலிற் சென்ருனென்றும் அவர்கள் அறிந்து கொண்டனர். எனவே அடுத்த சந்ததியா கப் பிறப்பவர்கள் காண்பது, ஒரு புதிய உலகம் என்பது தெளிவு.
இது தொடர்பாகத் திகதிகள் முக்கியமானவை. கொலம்பசு புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கு 1492 இல் முதன் முதற் கப்பற்பிரயாணஞ் செய்தான். போப்பாண்டவர் ஆரும் அலச்சாந்தர் புதிய உலகத்தை இசுப்பெயினுக்கும் போத்துக்கலுக்கும் ஒதுக்கிவிட்டும், அவரவர்கள் பாகத்தை வரையறுத்தும் 1493 இல், எல்லாருமறிந்த தன்கட்டளையை வெளியிட்டார். 1497 இல் யோன் கபற்று பிறித்தலிலிருந்து கப்பலிற் புறப்பட்டு நியூபண்ணிலந்தை அடைந்தான். 1498 இல் போத்துக்கேயரின் தொடர்ச்சியான கண்டுபிடிப்புக்களுக்கு மணிமுடி யாக வசுகோடகாமா என்பான் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கப்பற் பயணஞ் செய்து இந்தியாவை அடைந்தான்.
அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் கரைப் பகுதியிலுள்ள (போத்துக்கலேத் தவிர்ந்த) மூன்று நாடுகளில் ஒரே காலத்திற் சடுதியாகத் தோன்றிய கப்ப லோடு முயற்சியின் வெளிப்பாட்டை நாம் எப்படிக் காரணங்காட்டி விளக்க லாம் ? வெனிசு-செனேவாவிலிருந்த கடற்படை வீரர்களதும் வணிகர்களதும் குறிக்கோள் தான் என்ன ? இவ்வினவிற்கு இன்னெரு திகதி அரைகுறையான விடையளிக்கலாம். போற்கன் தீபகற்பத்தை முற்முய் வென்று கைப்பற்றும் நோக்கத்துடன் ஒரு நூற்ருண்டு காலம் இடைவிடாது முன்னேறிக் கொண்ட ஒற்முேமன் துருக்கியர் 1453 இல் கீழ்த்திசைக்குரிய (அல்லது பைசாந்தியன்) பேராசின் கடைசியாக எஞ்சியுள்ள பாகத்தை ஈற்றில் அழித்து, அதன் தலைநக ாாகிய கொன்சுதாந்திநோப்பிளேத் தமது ஆட்சிக்குட்படுத்தினர். இன்னுமொரு

இற்றையூழியின் உதயம் 7
நூற்முண்டு முடிவெய்துமுன் ஏறத்தாழ இலவாந்து முழுவதும், அதன் தீவுகளும் கடற்கரைகளும் வடமெசப்பொத்தேமியா, சீரியா, பலத்தீன், எகித்து, அரேபியா ஆகிய யாவும் ஒற்முேமரின் ஆட்சிக்குட்பட்டன. அவர்கள் பேரரசு, புடாவி விருந்து பசிமு வரையும் பரந்திருந்தது. சுலைமான் சுலுத்தான் (1520-1566) 'அனேக இராச்சியங்களின் அரசனும் மூன்று கண்டங்களை ஆள்வோனும் இரு கடல்களின் தலைவனும்' என மிகைபடாது தன்னைப் புகழக்கூடியவனுயிருந்
தான்.
Li6Opt வர்த்தகவழிகள் தடைப்படல்
ஒற்றேமரின் வெற்றிகள் உலகவரலாற்றை எவ்விதம் பாதித்தன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நடை பெற்ற வாணிகம் மூன்று பிரதானமான வழியே சென்றது. பழைய ஏற்பாட்டு மாணவர் நன்கு அறிந்த சீரியா நாட்டு வழியே இவைகளுள் மிகப் பழைமை யானதாகும். பற்பல நூற்ருண்டுகளாக, இந்தியா, தூர கீழைத்தேசங்கள் ஆகிய வற்றின் சரக்குக்கள் பேசியன்விரிகுடா வழி வனந்தரத்துக்குக் குறுக்காகப் பினிசியாக் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஐரோப்பிய நாடுகளை அடைந்தன. மொங்கோலியர், துருக்கியர் ஆகியோரின் வெற்றிகள் பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழியைத் தடைசெய்தன. 1516 இல் சீரியாவைத் துருக்கி வென்றதோடு இப்பாதை மூடப்பட்டது என்றே சொல்லலாம்.
மத்திய ஆசியாவிலிருந்து ஒட்சசு நதி, கசுப்பியன் கடல், கருங்கடல் ஆகிய வற்றின் வழியாக வந்த இன்னும் தொலை வடக்கேயுள்ள பாதை கொன்சுதாந்தி நோப்பிளின் ஆதிக்கத்தின் கீழ்ப்பட்டிருந்தது. கொன்சுதாந்திநோப்பிள் 1453 இல், வாணிகத்தில் அக்கறையில்லாத துருக்கியர் வசமாயது. மூன்ரும் வழியாக, கடல்மார்க்கமாக எகித்தை அடைந்த கீழ்நாட்டுச் சரக்குக்கள் நைல் நதி வழி பாக அலச்சாந்திரியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐரோப்பிய நீர்ப்பரப்புக்களை அடைந்தன. முதலாம் சலீம் சுலுத்தான் (1512-20) எகித்தின் தலைவனுகினன்.
கொன்சுதாந்திநோப்பிள், அலச்சாந்திரியா, பினீசியக் கடற்கரை, ஆகிய இடங் களிலிருந்து சரக்குக்கள் வெனிசுக்கூடாகவும் செனுேவாவுக்கூடாகவும் ஐரோப் பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. பல நூற்முண்டுகளாக வெனிசே ஐரோப் பிய வியாபாரத்தின் மிக முக்கியமான அங்காடியாயிருந்தது. துருக்கியரின் வெற்றிகளாலும் அவற்றின் விளைவாகப் பழைய வியாபார வழிகள் தடைப்பட்ட மையாலும் வெனிசினதும் செனேவாவினதும் வியாபார நிலை கெட்டுப்போனது. அவ்வளவு காலமாக ஐரோப்பிய வியாபாரத்தின் பிரதான நிலைக்களமாயிருந்த மக்கியதரைக்கடல், அது காரணமாக ஒரு குன்றிய நிலையை எய்தியது.
இவ்வாருக இரு மாற்று வழிகள் ஐரோப்பாவை நோக்கி நின்றன. ஒன்று, வாசனைத் திரவியங்கள், மணிக்கற்கள், பொன், பட்டுக்கள் ஆகிய கீழைத்தேச

Page 12
8 இற்றையூழியின் உதயம்
இன்பப் பொருட்களையும், அச்சரக்குக்களை வியாபாரஞ் செய்வதால் அடையும் எல்லா ஊதியங்களையும் இழப்பது ; மற்றையது, துருக்கியர் தடைசெய்ய முடி யாத புதிய கடற்பாதைகளைக் கண்டுபிடிப்பது.
எப்படியாயினும் இசுப்பானியரையும் போத்துக்கேயரையும் கடலோடு முயற் சியில் தூண்டிவிட்டவை வியாபார செல்வ ஆசைகளாகிய பொருளாதார நோக் கங்கள் மாத்திரமல்ல. அவர்களுடைய கீர்த்திவாய்ந்த கடலோ டி' இளவரசன் என்றி (1394-1460) என்பால்ை ஊக்கப்பட்ட போத்துக்கேயர் ஏறத்தாழ ஒரு நூற்ருண்டாக வானசாத்திரத்தில் புத்தாராய்ச்சி செய்வதிலும், கப்பலோட்டும் கலையில் ஓயாது பரிசோதனை செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். அறிவின் எல்லையை அகலிப்பதில் ஓரளவும். வியாபார ஆதாயத்தினல் ஓரளவும் தூண்டப்பட்டார்க ளென்பது உண்மையெனினும், பிறை இசிலாம்) மீது அவர்களுக்கிருந்த உலகியல் சார்ந்த பகைமையாலும், சிலுவை மாட்டு அவர்களுக்கிருந்த ஆர்வத் தாலுமே அவர்கள் மிகுதியாக உந்தப்பட்டனர். மதமாற்றஞ் செய்வதும், சமய ஊழிய ஆவலுமே போத்துக்கேயர் இந்தியாவுக்குச் சென்றதின் பிரதானமான நோக்கமாகும். கிறித்தவரையும் வாசனைத் திரவியங்களையும் தேடவே நாங்கள் வருகிருேம் ' என வசுகோடகாமாவின் கப்பலோட்டிகளுள் முதலாவதாக இந்திய நிலத்திற் கால் வைத்தவன் கூறினன். அவர்கள் அங்கே கிறித்தவரைக் காணுவிடின் அவர்களை ஆக்கச் சித்தமாயிருந்தனர். போத்துக்கலைப்போல் இசுப் பெயினும் ஓர் ஊழி காலமாக முசிலிம்களுக்கு விரோதமாகச் சமயப்போர் புரிந்து வந்திருக்கின்றது. போத்துக்கலைப் போல் இசுப்பெயினும் புறச்சமயத் தாரிடை கிறித்த சமய அறிவைப் பரப்பும் அவாவால் உந்தப்பட்டது.
மனிதன் வதிந்த இப்பூமியைப் பற்றிய அறிவை இத்தகைய சத்திகளே இக்காலப் பகுதியில் முற்றிலும் மாறும்படி செயலாற்றின.
விஞ்ஞானமும் புத்தாக்கமும்
வானத்தைப் பற்றிய மனிதனின் அகன்ற அறிவு, அவனுக்குப் பூவுலகு சார்ந்த துணிகரச் செயல்களிற் பெரிதும் உதவியாயிருந்தது. வானசாத்திரம் கப்பலோட் ம்ெ கலைக்குத் திறமையான உதவிப் பொருளாயிற்று. இனப்பகைகள், மதஞ் சார்ந்த ஆர்வம், வியாபாரப் போவா, ஆகியவை தூண்டுகோலாக, விஞ்ஞானம் வேண்டிய சாதனத்தை அளித்தது. திசையறிகருவி புதிதாகச் செய்யப்பட்ட மையால் அக்காலத்திலிருந்த சிறந்த கடலோடிகள் தங்கள் பயணங்களை இலகு வாகச் செய்ய முடிந்தது. இவ்வண்ணம் எளிதாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கள் புவியியல் சார்ந்தவை மாத்திரமல்ல.
'இதுவரையும் இவ்வியற்கையுலகின் ஒரு சிறிய மூலைக்குள் மாத்திரம் மனித பார்வையை எல்லைப் படுத்திய இருட்டிரைகள் கிழிக்கப்பட்டன; பூத சம்பந்த மான உயிரினத்தினதும் இயற்கையினதும் ஓர் உலகென இதுவரையும் கருதப்

இற்றையூழியின் உதயம் 9
பட்டது எதுவோ, அது உண்மையாக முன் ஒருபோதும் கருத்திற்முேன்முத ஒரு பிரமாண்டமான அண்டத்தொகுதியின் ஒரு சிறு துண்டு மாத்திரமே எனும் வியக்கத்தக்க உண்மை வெளியாகியது. கடலோடிக் கண்டுபிடித்தவைகள் புதிய அகண்ட தரைப் பாகங்களையும் கடற்பாகங்களையும் வெளிப்படுத்தி, இதுவரை மனிதர் பழகியிருந்த பூமியினதும் வானத்தினதும் பாகங்களை மிகச் சிறுமைப் படுத்திவிட்டன. அவ்வாறன கண்டுபிடிப்புக்கள் புவியியற்கு ஒரு கூமுக உதவுவ தோடு மாத்திரம் அமையவில்லை. எதிர்பாராத உச்சத்திற்கு மனிதனின் உளத்தை உயர்த்தும் நெம்புகோலாயும் அமைந்தன, எனச் சேர் சிட்டினி இலி
என்பான் எழுதினன்.
கல்வியின் புத்துயிர்ப்பு
மறுமலர்ச்சியின் எழுச்சி, வியாபாரம் கடல் எனுமிவற்றைச் சார்ந்த துணி கரச் செயல்களில் மட்டுமன்றி வேறு பல துறைகளிலும் செயலாற்றிய தென் பதை நினைவூட்ட மேற்கூறிய வார்த்தைகள் உதவும். கல்வி, கலை, இலக்கியம், எனும் துறைகளிலேயே அதன் மிகச் சிறப்பான தனி இயல்பு வெளிப்பட்டது போலும், உண்மையாகவே அனேகர் மறுமலர்ச்சியென்ருல் மக்கட்பண்பு சார்ந்த கல்வியின் புத்துயிர்ப்பு, பண்டைய உலகின் கருவூலத்தை மீண்டும் கண்டுபிடித்
தல் ஆகியவை எனப் பொருள் கொள்வர்.
இடைக்காலம் (அல்லது சிலர் கூறுவதுபோல் இருட்டுக்காலம்) முழுவதும் பண்டைய கல்விக் கருவூலங்கள் ஒரு சில புலவர்களின் தனியுரிமைச் சொத்தாக இருந்தன. ஆனல், இவைகளிற் சில பெரிய மடங்களிற் காணக்கூடியனவாயிருந் தன. எனினும், அவைகளிற் பல கொன்சுதாந்திநோப்பிளில் திரட்டி வைக்கப் பட்டிருந்தன. அந்நகர் துருக்கியராற் கைப்பற்றப்பட்டதின் விளைவாகப் புவியி யல் மறுமலர்ச்சிக்கு எவ்வளவு வேகம் கிடைத்ததோ அவ்வளவு பலமான வேகம் இலக்கிய மறுமலர்ச்சிக்கும் கிடைத்தது. பைசாந்தியத்திற் பழைய கீழ்த் கிசைப் பேரரசின் நிழலுருவம் தானும் எவ்வளவு காலம் பிழைத்து வாழ்ந்ததோ அவ்வளவு காலமும் புலவர்கள் பொசுப்பரசுக் கடற்கரைகளை ஒட்டிக் கொண்டே யிருந்தனர். அங்கே துருக்கியர் வந்ததும் தங்கள் ஏடுகளைத் தங்களுடன் எடுத் துக் கொண்டு இத்தாலியிலுள்ள பல்கலைக்கழக நகரங்களுக்கு ஓடினர். இத்தாலி யும் பெருமகிழ்வுடன் மனிதப்பற்றுக்கோட்பாட்டு உளப்பான்மைக்கு தன்னை ஒப்புக் கொடுத்தது. கல்வி என்னும் பெருஞ்சுடர் இத்தாலியிலிருந்து பிரான்சுக் கும் பிரான்சிலிருந்து இங்கிலந்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பாரிசும் ஒட்சுபோட்டும், போலோனியா, பீசா, புளோரஞ்சு என்னுமிடங்களுடன் போட்டியிடத் தொடங்கின. மேற்கு ஐரோப்பா முழுவதும் புதிய கல்வியின் பேரொளியில் மூழ்கியிருந்தது.
1. 16 ஆம் நூற்றண்டுப் பெரும் ஆங்கிலேயர்” எனும் நூலின் 8-10 பக்கங்கள். இவ்வாறு பொதுப் படையாகக் கூறுவதில் சேர் சிட்டினி இலி தாந்தேயைத் தகாதமுறையில் கவனியாது விடவில்லையா ? s

Page 13
10 இற்றையூழியின் உதயம்
இலக்கியத்திற்கும் கல்விக்கும் இதன் பயன் என்னவென்பதைக் கூறுவது இலக்கிய வரலாற்ருசிரியனின் கடமையாகும். அந்த ஊழியிற் கீர்த்திபெற்றவர் கள் சிலரின் பெயர்களை நினைவூட்டுவதனுல் அதைப்பற்றி ஒரளவு ஊகித் தறியலாம். புதிய கல்வி, இங்கிலந்துக்கு, குரோசின் (1446-1519), இலினுக்கர் (1460-1524), யோன் கொலற்று (1447-1519), தற்காலிகமாக ஓர் ஆங்கிலேய னென நாம் உரிமை பாராட்டத்தக்க இராசுமசு (1489 இல் இங்கிலந்தை முதலாம் முறை தரிசித்தான்), சேர் தோமசு மூர் (பிறந்தது 1478 இல்), என்பார் போன்ருேரை அளித்தது. சற்றுப் பின்னர் சேர் உவாற்றர் இசாலி (பிறந்தது 1552), சேர் பிலிப்பு சிட்டினி (பிறந்தது 1554), இசுப்பென்சர் (பிறந்தது 1552), பேக்கன் (பிறந்தது 1561), மாளோ (பிறந்தது 1564), செகப்பிரியர் (பிறந்தது 1564), ஆகியோர் இலிசபெத்துக் காலத்தே கீர்த்திபெற்ற நாடக ஆசிரியராகத் தோன்றினர். அறிஞன் உரொன்சா (பிறந்தது 1524), அவனின் ஏழு நண்பர்கள், மொண்டேன் (பிறந்தது 1533), இாபெலே (இறந்தது 1533) என்போர் பிரான்சிற் முேன்றினர். இக்கல்வி மக்கியவலி (பிறந்தது 1489), பந்த லோ (பிறந்தது 1480), தாசோ (பிறந்தது 1544) என்பாரையும் மறுமலர்ச்சிக் கவிதையின் இன்றும் உளதான எடுத்துக்காட்டுக்களில் 'மிகத் தூயதும் பரி பூரணமானது மென ஒரு பெரிய புலவனல் தெரிந்தெடுக்கப்பட்ட "ஓலாந்தோ புயூரியோசோ' என்னும் நூலை இயற்றிய அரியசுற்ருேவையும் இத்தாலிக்கு அளித்தது. இதே காலப்பகுதியில் யோகான் உருேக்கிளின், ஊல்றிக்கு உவொன் அற்றன், மெதாஞ்சுதன், மாட்டின் உலூதர் என்போரைச் சேர்மனி பெருமை யுடன் எடுத்துக்காட்டக்கூடும். சேர்மனியிற் புதிய கல்வி நிறைவேற்றிய மிக முதன்மையான வேலை, விவிலிய வேதத்தைத் தெளிவாக்கியதேயெனச் சேர் இரிச் சாட்டு இயெப்பு கொண்ட முடிவை இப்பெயர்கள் தவிர்க்க முடியாதபடி குறிப் பாலுணர்த்துகின்றன. போத்துக்கல், கமியோன்சு என்பானைப் பற்றியும், இசுப் பெயின், கால்டறன், சேவாந்தசு என்போரைப் பற்றியும் பெருமையடையலாம்.
சீர்திருத்தம்
இந்த ஒழுங்கின்மையான பட்டியலிற் குறிக்கப்பட்ட பெயர்களில், சேர்மனி யில் அதிகமானேரும் ஆங்கிலேயரிற் பலரும் மறுமலர்ச்சி இயக்கத்திலும் பார்க்க மதச் சீர்திருத்த இயக்கத்திலேயே பெரிதும் ஈடுபட்டனர். ஆனல், சேர்மனியில் இருந்தவாறு இங்கிலந்திலும் இவ்வீர் இயக்கங்களும், சிறப்பாக ஆரம்ப கட்டங் களில் விடுவிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருந்தன. எங்கும் இப்படி இருக்க வில்லை.
மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும்
ஏலவே குறிப்பிட்டதுபோல, இப் புதிய மக்கட் பண்பு உளப்பான்மை வேறு
வேறு இடங்களில் வேறு வேறு உருவுடன் தோற்றமளித்தது. இத்தாலியில் அது
வெளிப்படையாகப் புற மதத்தைச் சார்ந்ததாயிருந்தது. சிறிதுகாலம், அதன்

இற்றையூழியின் உதயம் 11
வழி ஏற்பட்ட ஒழுக்கவிளைவுகள் தீயன வாயிருந்தன. சேர்மனியிலும் இங்கிலந் திலும் அவ்விளைவுகள் வேருெரு வகையாயிருந்தன. இருபெரிய தியூத்தொனிக்கு நாடுகளிலும் கல்வியின் புத்துயிர்ப்பு, தொடக்கத்திலிருந்தே புது முறையான விவிலிய வேத விளக்க உரையுடனும், புதிய ஆன்மிக இலட்சியங்களுடனும், புதிய ஒழுக்க நெறி ஆர்வுடனும் நெருங்கிய தொடர்புற்றிருந்தது.
சீர்திருத்தம் (அ) இங்கிலந்தில்
கல்விப் புத்துயிர்ப்புக்கும் நெறிச் சீர்திருத்தத்திற்கும் உள்ள தொடர்பிற்கு
யோன் கொலற்றையும் அவன் கூட்டாளிகளான இராசுமசு, சேர் தோமசு மூர் என்போர்களையும் பார்க்கச் சிறந்த, அல்லது நல்லுதாரணமாகக் கொள்ளத்தக்க பிறர் கிடையார். இப்படிப்பட்டவர்கள் ஆங்கில மதச் சீர்திருத்தத்தின் மிக முந்திய பகுதிக்கும், சிலவகையில் மிக விழுமிய தோற்றத்திற்கும் மாத்திரமே எடுத்துக்காட்டாக அமைந்திருந்தனர். திருச்சபையைப் பொறுத்த அளவில் அவர்களின் இலட்சியம் புரட்சியின்றிச் சீர்திருத்தம் ஏற்படுத்துவதேயாகும். அறிவியற்பான்மையில், அவர்கள் தங்கள் காலத்து 'உயரிய விமரிசத்தைப்" பற்றி விளக்கிக் கூறுபவர்களாயிருந்தனர். சுவைத்திறமற்ற ஒழுங்கு முறையான கண்டிப்பும் குறுகிய மனப்பான்மையும் கல்விச் செருக்கும் மலிந்த இடைக் காலக் கல்விமான்களின் முறைக்குப் பதிலாக, அவர்கள் முதற்றரமான வரலாற்று முறைகளை ஆதாரமாகக்கொண்டு விவிலிய வேதத்திற்குப் பயன் சொல்லும் முறையைத் தொடக்கி வைக்க அவாவினர். இக்கால "உயர்தரமான விமரிசத்தின் ' முறையில் அதிகப் பகுதியையும் முடிபுகளிற் பலவற்றையும் கொலற்று என்பான் ஒட்சுபோட்டில் நிகழ்த்திய விரிவுரைகளில் எதிர்நோக்கிக் கூறியிருக்கிருன். மோசேசு கொண்ட கருத்துக்கள்' பற்றி இரதால்வசு விற்கு எழுதிய கடிதங்களில் 'பொருந்தச் செய்தல் கோட்பாட்டையும் இக்கால விமரி சருக்குப் பழக்கமான 'படிப்படியான பிரசன்னம்’ எனும் கொள்கையையும்
தெளிவாக விளக்கியிருக்கின்றன்.
இவையல்லாமலும், கொலற்று ஒழுக்கத்தில் ஆர்வங்கொண்ட ஒரு சீர்திருத்த வாகி, போப்பாட்சியின் அதிகாரத்தை முற்முய் மறுதலித்து, அரசனின் தனி ஆதிக்கத்தை வற்புறுத்தி எட்டாம் என்றியும் தோமசு குசம்வலும் செய்து முடித்த அரசியற்றிருத்தத்தில் கொலற்றுக்கும் அவன் உடன் உழைப்பாளர் களுக்கும் பரிவு கிடையாது. எட்டுவேட்டுக்காலத்துத் தீவிர ஆர்வமுடையோரின் கோட்பாடு, வழிபாடு என்பவற்றின் கிருத்தங்களிடத்து அவர்களின் அனுதாபம் இன்னும் குறைவாக இருக்கலாம். ஆனல், இவ்விடயங்களுடன் இங்கே நாங்கள் தாமதிக்க வேண்டியதில்லை. w
மோசேசின் சிருட்டிபற்றிய விவரத்தைக் கொண்டு கொலற்று எழுதிய கடிதங் களையும், மரியற்று, யோன் கொலற்றின் வாழ்க்கை பற்றி எழுதிய நூலையும் நோக்குக. முதற் கூறிய நூலைப்பதிப்பித்தவர் யே. எச்சு. இலத்தனவார்.

Page 14
12 இற்றையூழியின் உதயம்
(ஆ) சேர்மனியில்
இதற்கிடையில், இங்கிலந்திலும் சேர்மனியிலும் பிரான்சிலும் சீர்திருத்த இயக்கம் சென்ற வெவ்வேறு வழிகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். இங்கிலந்தில், குறைந்தது தியூடர் ஆட்சிக்காலத்திலாகுதல் இந்த இயக்கம் சட்டத்திற்கும் யாப்புக்கும் முடியாட்சிக்கும் பெரிதும் அமைந்ததாயிருந்தது. திருச்சபை சார்ந்த மாற்றங்கள், அரசியற் சமூகப் புரட்சியின்றி நிறைவேற்றப் பட்டன. சேர்மானியிலோ இரு சிக்கல்களும் ஏற்பட்டன. குடியானவர்கள் போர், பயனற்றதாய் முடிந்தது உண்மை. ஆனல், ஒரு நூற்முண்டுப் போரின் ஒலியும் புழுதியும் முடிவில் அடங்கியபின், சேர்மனி, அரசியலில் மாறுதலடைந்திருக்கக் காண்கிருேம். பேரரசர் ஒரு வலிமை படைத்த பெயரின் வெறும் நிழலுருவமே யானுர், ஆள்புலப் பகுதிகளின் சிற்றரசர் உண்மையான சுயாதீனம் எய்தியிருந் தனர். ஒரு மரபு வழிவந்த தலைவனின் பெயரளவினதான அதிகாரத்தில், சேர்மனியானது தேரகங்கள், கோமகவுரிமைகள், விசுப்பாண்டவர் பற்றுக்கள்,
நகர்கள் ஆகியன சேர்ந்த ஒரு தளர்வான கூட்டிணைப்பு ஆயது.
(இ) பிரான்சில் பிரான்சிலும் புரட்டெசுத்தாந்திசம் அரசியலைத் தகர்த்தெறியும் சத்திகளுடன் ஒன்று சேர்ந்து இயங்கியது. ஆனல், மையப்படுத்தும் முடியாட்சி தனது வேலையை ஏலவே தொடங்கிவிட்டது. பதினேராம் உலூயியினதும் எட்டாம் சாள்சினதும் முதலாம் பிரான்சினதும் சேவை விண்போகவில்லை. ஆகவே பிரான்சில் மையநாட்டக் கொள்கை மையநீக்கக் கொள்கையை வென்றது. கொந்தேயர், உரோகானியர், கோலினியர் போன்ற வலிமை படைத்த விழுமி யோர் இயூசனர் குறிக்கோளுக்குத் துணையளிக்கலாம். நன்சுக்கற்பனையையும் வலிந்து பெற்றுக்கொள்ளலாம். குழப்புவோரின் வெற்றி மிகப் பெருமை வாய்ந்த தெனினும் நீடிக்கவில்லை. மதஞ் சார்ந்த பொறுதியை மானியப் பிற்போக்காளர் களோ, பற்றற்ற மாவட்ட வாசிகளோ தங்களுடைய சூழ்ச்சிகளை மறைப்பதற்கு உபயோகிக்க முடியாதென்பதை இரிசிலூ தெளிவாக்கினன். அண்மையில் சாலத் திட்பமுற வலுப்படுத்தப்பட்ட பிரான்சிய முடியாட்சிக்கு விசுவாசமாய் இருக் கும் வரையும் இயூசனர் தாங்கள் விரும்பியபடி தங்கள் வழிபாட்டைச்
செய்து கொள்ளலாம்.
இயல்பான நிலைமை மாறலால், நாங்கள் பரிசீலனை செய்யுங் காலப்பகுதியின் ஓர் ஒப்பற்ற சிறப்புக் கூற்றைப்பற்றி ஆயவேண்டியுள்ளது. நாட்டினம் ஒன்று சேர்ந்து வலு வடைதலும் இக்கால அரசு முறைமை உருவாதலும் அது என்க.
". வழிபாட்டு அனுமதிதானும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்வரும் பத்தாம் அத்தியாயத்தை நோக்குக.

இற்றையூழியின் உதயம் 3
நாட்டினவாக்கம்
இடைக்காலத்தில் ஐரோப்பிய அரசு முறை, பிரதானமாக ஐக்கியம் பூண்ட தன்மையது. இம்முறை புனித உரோமப் பேரரசு, புனித கத்தோலிக்கச் சபை இரண்டினதும் ஐக்கியத்தை ஆதாரமாகக் கொண்டது. இக்கால ஐரோப்பாவோ நாட்டினத் தனித்தன்மைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இடைக்கால முறைமையின் பிணைக்கும் சத்தி பொதுவான ஒரு தலைவனுக்குப் பொதுவாக மேன்முறையீடு செய்வதிலிருந்து உதயமாயது. இக்கால முறை மையோ கட்டற்ற, சுயேச்சையான, ஒருங்கமைந்த, ஓரினத்தன்மையான, தன்னுளடங்கிய, பேரளவில் ஒப்பான நாடுகளுக்கிடையில் ஓர் சமவலுநிலை வேண்டுமெனக் குறிப்பாகக் கொள்வதை ஆதாரமாக உடையது. நாட்டின உணர்ச்சி என்ற எண்ணம் சிறிது சிறிதாக மறைகிறதா என்பதும், இக்கால ஒழுங்கோ, ஒழுங்கின்மையோ சர்வதேசியம் என்னும் தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்ட ஒரு புது ஒழுங்கிற்கு ஏலவே இடம்விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றதோ என்பதும், ஒரு வெறும் வரலாற்ருசிரியன் விடை கூற வேண்டிய வினவன்று. இப்பக்கங்களில் எடுத்துக் கூறப்பட்ட நாட்டின உணர்ச்சியின் ஊழியை ஐரோப்பா கடந்து சென்றிராதுவிட்டால் இந்த வின எழுந்திருக்க முடியாது.
எவ்வகையிலும் பதினரும் நூற்முண்டு பழைய முறைமையிலிருந்து புதிய முறைமைக்கு மாறிய காலப்பகுதியைக் குறிக்கின்றது. ஆகவே 1453 இல் நிகழ்ந்த ஒப்பற்ற இரு நிகழ்ச்சிகளைக் காரண காரியத் தொடர்பு படுத்துகிருேம். அந்த நிகழ்ச்சிகளாவன : கொன்சுதாந்திநோப்பிளின் வீழ்ச்சியும் பிரான்சி லிருந்து ஆங்கிலேயர் முடிவாக வெளியே துரத்தப்பட்டமையுமாகும். அப்பெரிய தன்மை மாற்றத்திற்கு இவையிரண்டும் நெருங்கிய துணைபுரிந்தன. துருக்கியர் கொன்சுதாந்திநோப்பிளைக் கைப்பற்றியதன் விளைவாகப் பைசாந்தியப் பேரரசு மறைந்தது மாத்திரமன்றி, உண்மையாகவே ஐரோப்பிய முறைமைக்குள் ஒரு புதிய நாட்டினம் புதிதாகப் புகுந்தது. நூற்ருண்டுப் போர் முடிவு, இங்கிலந்தில் நாட்டின உறுதிப்படுத்தல் வேலையைப் பூரணமாக்கி, பிரான்சிலும் அவ்வேலையை நிறைவேற்றப் பெரிதும் துணை புரிந்தது. பேகண்டியருக்கும் ஆமக்குநாகருக் கும் இடையே நடந்துகொண்டிருந்த உள்நாட்டுக் கலகம் ஈற்றில் அடக்கப் பட்டது. புறநாட்டுப் படைகள் வெளியே அகற்றப்பட்டன. மிகவும் வெளிக் கோடியிலுள்ள கோமக உரிமைகளும் பெருமகவுரிமைகளும், சில திருமணத் தாலும், சில வெற்றியினுலும், முடியினல் ஒன்று சேர்க்கப்பட்டன. ஈற்றிற் பழைய மானிய உயர் குடியாட்சியின் அழிவின்மேல், வலிமை படைத்த ஒரு முடியாட்சியின் பொறுப்பின் கீழ், ஒருங்கமைந்த ஓரினத்தன்மையான நாடு அமைக்கப்பட்டது.

Page 15
14 இற்றையூழியின் உதயம்
இசுப்பெயின்
அதே காலத்தில் இசுப்பெயினும் அதே போன்ற வேலையில் ஈடுபட்டிருந்தது. பிரான்சிலிருந்து ஆங்கிலேயர் வெளியே துரத்தப்பட்டனர். அதேவிதமாகச் சோனகர் இசுப்பெயினினின்றும் துரத்தப்பட்டனர். 1492 இல் கிரனடா நாடு கைப்பற்றப்பட்டதோடு சோனகருக்கெதிராக இசுப்பானியர் நடத்திய ஆர்வு செறிந்த கடும்போர் ஈற்றில் முடிவெய்தியது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அப்பெரு வெற்றி, இசுப்பானிய நாட்டின வலுப்படுத்தலின் முதற்பலனும் உறுதிப்பாடுமெனக் கருதலாம். இசுப்பெயினும் பிரான்சும், ஒவ்வொன்றும், மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட முடியாட்சியின் கீழ் பலமுடைய, ஒருங்கமைந்த, ஒன்று சேர்ந்து வலுப்படுத்தப்பட்ட நாடுகள் ஆயின. இந்நிலையை எய்துவதற் குச் சேர்மனியும் இத்தாலியும் 1870 வரை காத்திருக்க வேண்டியவையா யிருந்தன.
நாட்டினவாக்கம் நாட்டிடைப்போட்டிக்கும் போருக்கும் அடிகோவியது.
பிரான்சுக்கும் இசுப்பெயினுக்குமிடையே போட்டி
எட்டாம் சாள்சு, 1494 இல் இத்தாலி மீது மேற்கொண்ட படையெடுப்பு சருவ தேச அரசியலில் ஒரு புதிய ஊழியின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. இடைக் காலப் பகுதியில் நாட்டினம் இல்லாமையால் நாட்டினரிடையே போர்களில்லை. பிரான்சிற் போல, மானிய மேலாட்சியாளனுக்கு எல்லாரும் கீழ்ப்படிய வேண்டு மென்ற பந்தத்தால், தளர்ச்சியாகப் பிணைக்கப்பட்ட சிற்றரசுகளின் தொகுதி மாத்திரமே காணப்பட்டது. இத்தாலியில் இருந்தவாறு நகரக் குடியரசுகளிருந் தன ; இசுப்பெயினில் இருந்தவாறு குறுநிலவரசுகள் இருந்தன. ஆனல், இங்கிலந்தையும் அங்கேரியையும் தவிர, நாட்டின வரசுகள் இருக்கவில்லை. பல எம நாடுகளின் கூட்டமென ஐரோப்பாவைக் கூறலாம். இவைகளெல்லாவற்றை யும் பதினரும் நூற்ருண்டு மாற்றிவிட்டது. நாட்டின உறுதிப்பாட்டுடன் நாட்டின் புற எல்லைகள் வரையறுக்கப்பட்டன. ஆள்புல வரையறுத்தலின் விளை வாக நாட்டிடைச் சச்சரவுகள் ஏற்பட்டன. பதினரும் நூற்முண்டு அரசியற் சிக்கலை விளக்கக்கூடிய இன்னுமொரு விடயத்தை நாம் ஆராயவேண்டும். அதாவது, பிரான்சுக்கும் ஒத்திரிய-இசுப்பானிய ஆபிசுபேக்கருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியாகும். 9.
முழு விவரங்களையும் நுணுகி ஆய்வது இம் முன்னுரை அத்தியாயத்தின் எல்லையை மீறுவதாகும். அவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது போதுமானது. இதற்கிடையில் வேறு இரண்டு சிக்கல்களைக் கவனத்திற்கொள்ள வேண்டும். முதலாவது, திருச்சபை சார்ந்தது; இரண்டாவது, பொருளாதாரம் சார்ந்தது.

இற்றையூழியின் உதயம் 15
இருபெருங் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கைகள் பின் கட்டப்பட்ட படியே சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். பிரான்சுக்கு அதன் இயூசனர்களின் தொல்லையிருந்தது. சேர்மனிக்கு அதன் உலூதர் கொள்கையினரின் தொல்லை யிருந்தது. இசுப்பெயின், இடச்சுக் கல்வின் கொள்கையினரின் மனவுறுதி கொண்ட கிளர்ச்சியை எதிர்த்து நிற்கவேண்டியிருந்தது. இதன் விளைவாகக் கட்சிகளில் இனக்கலப்பு ஏற்பட்டது; அல்லது ஏற்பட வழிதிறக்கப்பட்டது. அரசியற் சார்பில் பிரான்சிய அரசர்களுக்கும் ஒத்திரிய-இசுப்பானிய குலத் தலைவர்களுக்குமிடையே கடுமையான போட்டி இன்னுமிருந்தது. திருச்சபை யைப் பொறுத்த அளவில் தங்கள் நாட்டெல்லைக்குள்ளிருந்து கொள்ளை நோய் போற் பரவும் புரட்டசுத்தாந்த முரண்கோட்பாட்டை நசிப்பதில் அவர்களுள் ஒருமைப்பாடு இருந்தது. இவை போன்ற இனக்கலப்பு ஒழுங்குகள் மக்களிடை யேயும் காணப்பட்டன. மதம் நாட்டின உணர்ச்சியிலும் கூடிய வலிமையுள்ள தாய் வந்துகொண்டிருக்கிறது ' என ஆமித்துரோங்கு கூறினன். மண்டில நாயகன் இலொப்பித்தல் என்பான் குடித்திணைமன்றத்தில் நிகழ்த்திய தன் பேச்சின் ஆரம்பத்தில், வழிபாட்டு வேறுபாடுள்ள இரு பிரான்சியருக்கிடை காணப்படும் பற்றிலும் ஒரே மத வழிபாடுடைய ஓர் ஆங்கிலேயனுக்கும் ஒரு பிரான்சியனுக்குமிடையிற் கூடிய பற்று காணப்படுவதாகக் கூறினன். இயூசனர் ஆங்கிலேயரை ஆவருக்குக் கொண்டுவந்து கலே நகரைக் கொடுப்பதாக வாக்குறுதி செய்தார்கள். இாைற்றர்களாலும் இலங்குநெக்காாலும் பிரான்சை நிரப்பினர்கள். பலற்றினெற்றுச் சிற்றரசனுக்கு என்றியினுட்சியில் எய்திய ஒரேயொரு பெரிய வெற்றியும் உலொரேனின் இராணுவத் திறவுகோலுமாகிய மூன்று விசுப்பாண்டவர் பற்றுக்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர். கத்தோ விக்கப் பெருமக்கள் ஆரம்பத்திலிருந்தே இசுப்பெயினுடன் சேர்ந்து சதிசெய்து முடிவிற் பிரான்சைப் பெரும்பாலும் பிரிவினைசெய்யும் தறுவாயை அடைந்தனர். அண்மையில் ஒன்று சேர்த்து வலுப்படுத்தப்பட்ட அந்நாட்டிற்குவந்த அபாயம் இடர் நிரம்பியதாயிருந்தது என்பது உண்மையே.எனினும், அது அடக்கப்பட்ட தென்பதை நாங்கள் காண்போம். எதிர்ச்சீர்திருத்த இயக்கத்தின் வெற்றி (இதைக் கத்தோலிக்கர் எதிர்த்தாக்கல் என்பர்) குறித்த நூற்ருண்டின் பின் அாைப்பகுதியில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த நிகழ்ச்சியாகும். பிரான்சியஇசுப்பானிய அரசியற் போட்டியும், ஒல்லந்தரின் விடாப்பிடியான எதிர்ப்பும் இலிசபெத்து இராணியின் மிகத் திறமான குழியற்றிறமையும் இல்லாவிடின் அந்த இயக்கம் இன்னுங் கூடிய சித்கி எய்திருக்கும். எப்படியாயினும், நாளா வட்டத்தில் அரசியற் பகைமைகள் திருச்சபை சார்ந்த உறவிலும் பார்க்க மிக வலுவடைந்தன. ஐக்கிய மாகாணங்கள் பிழைத்து வாழ்வதற்கும், இலிச பெத்துக் கால இங்கிலந்து தப்பிப் பிழைப்பதற்கும் இந்த உண்மையே காரண ԼՃfrԱ 151.
ஆனல், ஒருபால், இசுப்பெயினுக்கும் நெதலந்துக்குமிடைப் போராட்டமும், மறுபால் இங்கிலந்துக்கும் இசுப்பெயினுக்குமிடைச் சண்டையும் ஒரு புதிய
* " பிரான்சிய சமயப் போர்கள்” 1 ஆம் பதிப்பு ப. 85.

Page 16
16 இற்றையூழியின் உதயம்
முக்கியமான ஐரோப்பிய நாட்டினம் தோன்றுதற்கு அடி கோலியதுமல்லாமல், ஐரோப்பிய அரசியல் அடிவானத்தையும் விசாவிக்கச் செய்தன. மலர்ச்சியின் கட்டங்களை நாங்கள் தெளிவாகக் குறிக்கலாம். அாகன் குலமுறையினருக்கும் அஞ்குக் குலமுறையினருக்குமிடை நடந்த மரபுரிமைப் போட்டிருக்கு இத்தாலி யில் மேல் ஆதிக்கமே பரிசாயமைந்தது. பின்னர், பிரான்சுக்கும் இசுப் பெயினுக்குமிடை போட்டியாக விரிந்தது. ஐரோப்பிய ஆதிக்கத்தைப் பரிசாகக் கொண்டது. ஐரோப்பிய போட்டியில் இங்கிலந்து அவ்வப்பொழுது இடை யிடையே குறுக்கிட்டுக்கொண்டது. ஆனல், இப்போராட்டத்தின் ஒரு புதிய பருவம் புலனக ஆரம்பித்தது. பொருவோரின் பொருள் வலியும் வளமும் இன்னும் பெரிதும் சமநிலையற்றனவாயிருந்தன. பிரான்சுக்கோ இசுப்பெயி னுக்கோ இங்கிலந்து இணையில்லை. எங்களுக்கெதிராக அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தார்களானல், அவர்கள் எங்களைத் தங்கள் நாட்டுடன் ஒன்முகச் சேர்ப்பதையோ, எங்களையழிப்பதையோ நாம் தவிர்த்திருக்க முடியாது. ஆனல், ஒல்லந்த குடியரசின் எழுச்சி, பிரச்சினைக்குள் ஒரு புதிய காரணியைக் கொண்டு வந்து அரசியல் அரங்கத்தை அகட்டியது. அரங்கம் இத்தாலிக்குள்ளோ, ஐரோப்பாவுக்குள்ளோ எல்லைப்படுத்தப்படவில்லை; உலகமெங்கும் பரவியது.
இதனுல் புதிய ஊழியின் பிறிகோர் ஒப்பற்ற சிறப்பியல்பு தலைகாட்டியது. பொருளியல், அரசியல் என்பன ஒன்றிலொன்று செயற்பட்டு, குடியேற்ற,
வியாபார ஆதிக்கப் போராட்டம் ஆரம்பமாயது.
பொருளியலும் அரசியலும்
இடைக்காலப் பகுதியில் அரசியற் பொருளாதாரம்பற்றிய நூல் யாதும் இருக்கவில்லையென்பது யாவரும் அறிந்ததாகும். இதற்குக் காரணம் ஓரளவிற்கு நாட்டினமின்மையாகும். பிறிதோர் காரணம், மனிதனுக்கும் மனிதனுக்கு மிடையேயுள்ள பொருளாதாரத் தொடர்புகள் ஒப்பந்தத்தினுலன்றி, அவர்களின் நிலைமையினலேயே தீர்மானிக்கப்பட்டமை. யோன் சிமிது என்பான் என்றி தி போகன் என்பானின் நிலத்திற் பயிர் செய்தான். அவனுக்கு அவ்வாய்ப்புக் கிடைத்தது, ஒரு நாளைக்கு ஒரு பென்னி கொடுப்பதாகப் போகன் ஒப்பந்தஞ் செய்தபடியாலன்று; யோன் சிமிது ஒரு பண்ணை வேலையாளன் உவிலியம் என்பானின் மகன். போகன் அவன் தகப்பனை உவிலியம் பிரபுவின் மகன். ஆதலாற்ருன் என்றி தி போகனின் நிலத்திற் பயிர் செய்தான். எப்படியாயினும், அரசியல் வரையறுக்கப்பட்டபின் தீவிரமாகப் பொருளாதாரமும் வரையறுக்கப் பட்டது. இன்றியமையாத தேவையைப் பின்பற்றியே அறிவியல் சார்ந்த ஆராய்வு நெருங்கிச் சென்றது. வாணிகவியற் கொள்கை நாட்டின வாக்கத்தின் இயற்கையான நிறைவுறுப்பாகும். நாட்டிடைப் போர்கள் நாம் கண்டுகொண்ட படி நாட்டினங்களின் அபிவிருத்தியிலிருந்து நேரடியாக விளைந்தன. ஆனல், போருக்குப் பணந் தேவை; அரசறிஞர் வியாபாரத்தின் முக்கியத்தை உயர்வாக மதிக்கத்தொடங்கினர்கள். அரசர்கள் வியாபாரிகளுடன் கூட்டுறவு ஒப்பந்தம் நிறைவேற்றினர்கள். இதற்கும் மேலாக, மக்கள் நாட்டினச் செழிப்பின்

இற்றையூழியின் உதயம் 17
காரணத்தை ஆராயத் தொடங்கினர்கள். இவ்விசாரணைக்குக் கிடைத்த முதல் விடைகள் ஓரளவிற் பிழையாயிருந்தன. இதை நாம் எதிர்பார்க்க வேண்டியதே. இசுப்பெயினின் மலைக்க வைக்கும் ஆற்றல் மிகுதியையும், புதிய உலகத்தின் சுரங்கக் குழிகள் அதன் ஆதிக்கத்தில் இருந்தன என்ற உண்மையையும் கொண்டு, விலையுயர்ந்த உலோகப் பொருட்களே செல்வமென மனிதர் எண்ணினர். நெதலந்திலுள்ள நெசவுத்தறிகளும் இசுப்பெயினின் ஆதிக்கத்திற்குட்பட் டிருந்தன என்ற கூடிய உட்கருத்துடைய உண்மை அப்போது புறக்கணிக்கப் பட்டது. அரசியல் பொருளியல் என்பவற்றின் செயலினதும் எதிர்ச் செயலின ஆம் ஆரம்பத்தையும் அவற்றின் விளைவாகப் போர் அரங்கம் விசாலிக்கப்பட்ட மையையும் நாம் பெரிதாக மதிக்க வேண்டுமென்ருலும், வணிகவியலின் போலிக் கொள்கைகள் பற்றியோ, அரை உண்மைகள் பற்றியோ, நாம் அக்கறை கொள்ள
வேண்டியதில்லை.
இசுப்பெயினும் போத்துக்கலும் ஏறத்தாழ ஒரு நூற்றண்டாகப் புதிய உலகத்தினதும் இந்தியத் தீவுகளினதும் வியாபாரத்தில், செயலஸ்வில், பெரும் பாலும் சிறப்புரிமை அனுபவித்துக்கொண்டிருந்தன. இசுப்பெயின் போத்துக் கலைத் தன்னுடன் சேர்த்து ஒன்முக்கியதும், இங்கிலந்துக்கும் இசுப்பெயினுக்கு மிடை நடந்த போரும் இசுப்பெயினுக்கும் நெதலந்துக்குமிடை நடந்த போரும் மோசமான கட்டத்தை அடைந்தமையும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. இதனல் இசுப்பெயினுடைய வியாபாரம், கப்பற் சாக்கேற்றம், குடியேற்ற நாடுகள் ஆகியன வற்றேடு, போத்துக்கலின் வியாபாரம், கப்பற்சாக்கேற்றம், குடி யேற்ற நாடுகள் ஆகிய யாவும் துணிகரமான பகைவர்களால் தாக்கப்படக் கூடியனவாயின. அரசியல் மதப்பகைகளுக்கு மேலதிகமாகக் குடியேற்ற வியாபாரப் போட்டிகளும் சேர்ந்தன. ஐரோப்பாவிலிருந்து தூரகிழக்குக் தேசங்களுக்கும் தூரமேற்குத் தேசங்களுக்கும் போராட்டம் பரவியது. ஒல்லந் கர் ஆச்சரியப்படத்தக்க தீவிரத்துடன் கிழக்கிந்திய தீவுகளிற் போத்துக்கலின் வியாபார ஆதிக்க பீடத்தைக் கைப்பற்றினர். இசுமீபெயினின் கடலாதிக்கத்தை முற்முக அழிப்பதில் இங்கிலந்து முன்னணியில் நின்றது :
'திரேக்கு என்பான் பிசாசையோ இசுப்பானியரையோ அஞ்சினனல்லன். அவர்களின் நகரங்களைத் தாக்கிக் கொள்ளையடித்தான். மாட்சிமை தங்கிய கத் தோலிக்க அரசனின் தாடியைப் பொசுக்கினன். அவனுடைய கப்பல்களைக் கொள்ளையிட்டுப் பாழாக்கினன். '
குடியேற்ற, வியாபார ஆதிக்கத்திற்கான கடைசிப் போட்டியைப் பற்றிஇங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையில் நிகழ்ந்தது பற்றி-பின்னர் கூறப்படும். பந்தய விளையாட்டின் முதல் நிலைகள் முடிந்திருந்தன. ஒல்லந்தை, போத்துக் கல் எதிருற்றது. இங்கிலந்தை இசுப்பெயின் எதிருற்றது. மற்றைத் தடவையில் இங்கிலந்து ஒல்லந்தை எதிர்த்து நிற்கும். இறுதிப் போட்டி பிரான்சுக்கும் இங்கிலந்துக்குமிடையேதான். ஆனல் இவைகள் எதிர்காலத்தவை.
இந்நூலின் பிற்பகுதிகள் அந்த எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும்.

Page 17

அத்தியாயம் 2
பெளதிகவியலும் அரசியலும்
அரசியல் வரலாற்றையும்- அதாவது, ஐரோப்பிய அரசுகளின் வரலாற்றை யும்-அவைகளிலொவ்வொன்றிற்கும் மற்றவற்றிற்குமிடையமைந்த தொடர் பையும் பற்றி இந்நூல் நுதலும். ஆயின் அரசியலோ பெளதிகவியலுடன் நெருங் கிய தொடர்புடையது. புவியியல், வரலாற்றின் அடிப்படை. ஆகவே, சென்ற நான்கு நூற்முண்டுகளாக ஐரோப்பிய அரசியல் வளர்ச்சிக்குப் பெரிதும் காரண மாயிருந்த தலைசிறந்த இயற்கைத் தோற்றங்களிற் சிலவற்றைப் பொதுப் படை யாகக் குறிப்பிடுவது நன்மை பயக்கலாம்.
நாங்கள் கண்டுகொண்டபடி அக்காலப் பகுதியில் தனிப்பட்ட இயல்பானதும் அலக்கமானதுமான சாதனை, நாட்டின அரசு என்னும் கருத்தின் வளர்ச்சியே ; ஒன்றுக்கொன்று கட்டுப்படாதவையாய், நாட்டினம் என்பதை ஆக்குபவையான இனம், மதம், மொழி, மரபு எனப்படும் வேறுபாடுகளுடன் பெரும்பாலும் இசைந் திருந்தவையுமான ஒரு தொகை நாடுகளாக ஐரோப்பா முழுவதும் பிரிக்கப் பட்டமையே அது. ஆகவே, நாட்டினம் என்பது இக்கால அரசுகளின் அடிப் படையாகும். ஆனல் நாட்டினமும் பெரிதும் பூமியின் இயற்கைத் தோற்றத்தின் சிருட்டியாகும்.
இங்கிலந்தும் பெரிய பிரித்தானியாவும்
இக்கால ஐரோப்பாவின் பெரிய நாடுகளில், நாட்டின ஐக்கியத்தையும் நாட் டின உணர்வையும் முதல் எய்தியது இங்கிலந்தாகும். பிரான்சியர் கூறும் அதன் ஏற்றகாலத்திற்கு முன்பான வளர்ச்சிக்கான பல காரணங்களில் அதன் புவி யியலே மிகவும் வலிமை படைத்ததெனலாம். அதன் அரசியல் வளர்ச்சியில் அதன் தீவுநிலை யளித்த பலன்களைக் கட்டுரை எழுதும் ஒவ்வொரு மாணவனும் உண்மையில் அறிவான். ஆகையால், அவற்றைப் பற்றி இங்கே கூறவேண்டிய தில்லை. தங்களுக்கு முன்னிருந்த நோமர், அஞ்சிவின் குலமுறையோர் ஐரோப் பாக் கண்டப் பகுதியில் கொண்டிருந்த சொத்துக்களைத் தங்கள் பிடியில் தளராது பிலாண்டேசனற்று, இலங்காதிரியக் குலமுறையினரும் வைத்திருப்பார் களாகில்-அவற்றை மீட்கத் தவமுதிருந்தால்-பிரித்தானியாவின் தீவான நிலை மையின் பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் பிரான்சிய ஆள்புலங்களை விசாலித்து, இங்கிலந்தின் உறுதியான அரசர்களாக இருந்தது போல் பிரான்சின் அரசர்களாகவுமிருந்திருப்பார்களேயாகில், இங்கிலந்து ஒரு பெரிய கண்டப் பேரரசின் ஒரு வெறும் பின்னிணைப்புத் தீவாக (ஒப்பு நோக்கின் பெரும்பான்மையும் அயலந்தைப் போல் முக்கியமற்றதாக) மாத்திரம் அமைந் திருக்கும்.
3-B 2478 (5.160)

Page 18
20 பெளதிகவியலும் அரசியலும்
உண்மையில், அதன் தீவாயமைந்துள்ள நிலைமை, அதன் நாட்டின வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாயது. ஆனல் அது அரசியற் போக்கிற் காலத்திற்கு முந்திய முதிர்ச்சியடையத் துணைபுரிந்ததெனினும், அது நாட்டின் பொருளா தாரம் வணிகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்குப் பெரிதும் தடையாயது முந்திய அத்தியாயத்திற் பதினைந்தாம் நூற்ருண்டின் புவியியற்குரிய மறு மலர்ச்சி வற்புறுத்தப்பட்டது. அது உலகத்திற்கும், பொதுவாக ஐரோப்பாவிற் கும் முக்கியமாயிருந்த பொழுதும், எங்கள் சொந்தத் தீவிற்கு மிகவும் முக்கிய முடையதாக இருந்தது. கடல் ஊழியும் சமுத்திர ஊழியும்
பதினைந்தாம் நூற்முண்டு முடியும்வரை, இங்கிலந்தை மேற்கு நாடுகளின் மிகத் தொலைவிலுள்ள மூலை' என அழைப்பது பொருத்தமாயிருக்கலாம். செவ் வையாக வரையறுக்கப்பட்ட எல்லைகளாலாய நற்பயனை இசுப்பெயினைப்போல, இங்கிலந்தும் அனுபவித்தது. அரசியல் ஐக்கியம் எய்துவதில் தீவிர முன்னேற் றம் அடைதற்கு வேண்டிய அளவு பாதுகாப்பை, அதன் தீவான நிலைமை அதற் களித்தது ; மற்றைச் குழல்கள் சாதகமாயிருந்தமையால் இக்காப்பு கைகூடி யது. ஆனல் இங்கிலந்து வாணிபத்திலும் அறிவு ஆராய்ச்சியிலும் பெரிதும் பின் னிடைந்த நாடாயிருந்தது. இலக்கியம், கலை, வாணிபம் என்னும் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அனைத்துக்கும் மத்தியதரைக் கடலின் எல்லையிலுள்ள நாடுகளே இயற்கையான மையமாக அமைந்திருந்தன. அவ்விடங்களிலேயே நாகரிகத்தின் இதயதானமிருந்தது. இரத்த ஓட்டம் வடமேல் திசைகளின் எல்லை களை அடையுமுன் சிறிது மந்தமாகினல் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
பதினைந்தாம் நூற்றண்டின் பிற்பகுதியில் புதிய இடங்கள் கண்டு பிடிக்கப் பட்டமை மேற்கூறிய நிலைமையை மாற்றிவிட்டது. ஏலவே குறிப்பிடப்பட்ட குழ்நிலைகளுடன் சேர்ந்து அது மத்திய தரைக்கடலைச் சார்ந்த நகரங்களைப் பாழாக்கிவிட்டது. அரசியல் ஈர்ப்பின் மையம் உள்நாட்டுக் கடலிலிருந்து இடம் பெயர்ந்து அத்திலாந்திக்குச் சமுத்திரத்தை அடைந்தது. கொன்சுதாந்தி நோப்பிள், அலச்சாந்திரியா, வெனிசு, செனேவா என்பன வளர்ச்சி குன்ற, இலிசுபன், போடோ, பிறித்தல், இலண்டன் அமித்தடாம் ஆகியன வளர்ந் தோங்கின. இதுவரையும் நாகரிகமடைந்த உலகின் அதிக தொலைவிலுள்ள மூலை யாக விளங்கிய இங்கிலந்து நேரான புவியியற் சொற் பொருளிலேயே அதன் மையமாயமைந்தது.
இங்கிலந்தின் நிலை
இந்தப் புவியியல் சார்ந்த புரட்சியின்பின், இயற்கையே இங்கிலந்துக்கென
ஒதுக்கி வைக்க அவாவியதாகத்தோற்றிய புதிய கடமையை ஏற்றுச் செயலாற்ற இங்கிலந்து தயாராயிருக்கவில்லையெனத் தோன்றியது. 1485 இல் பொசுவோத்து

பெளதிகவியலும் அரசியலும் V− 2.
சண்டையின் பயணுக என்றி தியூடர் இங்கிலந்தின் அரசனுக முடிசூட்டப்பட்ட பொழுது, இங்கிலந்து அரசியலில் அளவுக்கு மீறிய முதிர்ச்சியடைதிருந்த பொழுதிலும், சமூகத்துறையிலும் பொருளாதாரத்திலும் சோர்வுற்றிருந்தது. பதினன்காம் நூற்றண்டில் தாண்டவமாடிய கொள்ளை நோயின் அல்லல்களி னின்றும் இன்னும் பூரணமாக நலம் பெருத குடித்தொகை, குறைவாயும் சிதறி யும் காணப்பட்டது. கொள்ளை நோய் காரணமாக ஏற்பட்ட தொழிலாளர் குறைபாடு, உண்மையாகவே, ஆடு வளர்த்தல், பயிரிடுதல் என்பவற்றின் விருத்தியைத் தூண்டிவிட்டது. சேர் தோமசு மூர், இலற்றிமார் போன்றரும் மற்றும் சமூகச் சீர்திருத்த வாதிகளும் நாட்டுப்புறங்களின் சிதைவையும் நாட்டுப்புறத்தார் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்படுதலையும் பற்றிப் புலம்பினர் எனினும், விவசாயிகள் நெதலந்திலுள்ள கைத்தொழில் நகரங்களுக் குக் கம்பளியை விற்று ஏராளமான செல்வம் சம்பாதித்துக்கெர்ண்டிருந்தனர். ஆனல், அந்நாட்களில் வெளி நாடுகளில் விற்பனை செய்ய இங்கிலந்திற் கம்பளியை விட வேறு பொருட்கள் இல்லையெனலாம். அதன் பிறநாட்டு வியா பாரம் சிறிய அளவிலேயே நடைபெற்றது. அதன் மக்களுக்கு இயல்பாகவே கடலோடும் ஆர்வம் இருந்தது. கடற்கரைக்கு அண்மையில் மீன்பிடிப்பது அந் நாட்டுக் கைத்தொழிலாயிருந்தது. ஆனல், ஒழுங்கு முறையான கப்பற்படை அதற்கு இல்லை; வியாபாரக் கப்பல்கள் மிகக் குறைவு. ஆண்டுக்கு ஒரு முறை போடோவுக்கு மது வாங்கச் செல்லுதல், ஐசுலந்துக்குக் கொட்டு மீன் பிடிக்கச் செல்லுதல் ஆகியவைதாம் அதன் கடல் சார்ந்த தொழிலின் எல்லையாகும். அது இறக்குமதி செய்த இன்பப் பொருட்கள் வெனிசியக் கப்பலிலோ அல்லது கண்டத்திலுள்ள பிரதானமான வியாபாரப் பாதைகளின் மிகக்கிட்டிய முடி வெல்லைகளாகிய புருசெசு, கென்று என்னுமிடங்களுக்கூடாகவோ அதனை வந்தடைந்தன. ,
வியாபாரம் பின்னிடைந்ததற்கு வேறு காரணங்களும் துணைபுரிந்தன. பொரு ளாதார முன்னேற்றத்திற்கு வலிமை பொருந்திய நிருவாகம் இன்றியம்ை யாதது. இலங்காத்திரிய அரசரின் ஆட்சியிலும் குறைந்த ஆற்றல் படைத்த மத்திய அரசாங்கம் இங்கிலந்தில் எப்பொழுதாவது இருந்ததில்லை. இத்தாலியில் ஐக்கியம் பூண்ட காலத்தைப் பின் தொடர்ந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்தது போலப் பதினைந்தாம் நூற்முண்டு இங்கிலந்திலும் யாப்புமுறை அளவிற்கு மீறிய தீவிரத்துடன் விருத்தியடைந்ததென்பது வெளிப்படை. பாராளுமன்ற அரசாங் கம், மக்கள் அதனை இயக்கத் தயாராய் இருந்தாலல்லது மிகவும் மோசமான அரசாங்க முறையாகும். ஒரு சிறந்த வரலாற்ருசிரியன் குறிப்பிட்டதுபோல, ஆங்கிலேயப் பாராளுமன்றம் தான் போராடி வென்ற சுதந்திரங்களைச் செயற்றிறத்துடன் பயன்படுத்த அக்கணத்தில் ஆயத்தமாயிருக்கவில்லை. அதன்

Page 19
22 பெளதிகவியலும் அரசியலும்
யாப்பினது வளர்ச்சி அதன் பாலன ஒழுங்கை மிஞ்சிவிட்டது”.* பான்கள் நடாத்திய சில்லோராட்சியின் சீர்குலைவிலும் உரோசா மலர்ப் போர்களை அறிகுறியாகக் கொண்ட சமூகக் குழப்பத்திலும் அதன் விளைவைக் காணக் கூடியதாயிருந்தது.
இப்படியான சூழல்களில் வியாபாசஞ் செழித்தோங்க முடியாது. ஆனல், பதினரும் நூற்முண்டிலேயோ அந்நிலைமைகள் பிரமாதமான மாறுதல்களை அடைந்தன. தியூடர்களைப்பற்றி வேறு யாது கூறினும், அவர்கள் நாட்டுக்கு உறுதியான அரசாங்கத்தையும், அரசியல், சமூக நிலைமைகள் வலிமை அடை வதற்கு இன்றியமையாத கட்டுப்பாட்டையும், ஓய்வையும், அளித்தார்களென் பது மறுக்க முடியாத உண்மையாகும். இலிசபெத்து காலத்தின் மீது ஒளி வீசிய நாட்டின மலர்ச்சியில் இதன் விளைவைக் காணலாம்.
ஐபீரியன் தீபகற்பம்
இதற்கிடையிற் புவியியல் சார்ந்த துணிகரச் செயல்களிலும் தங்கள் பேராசை விரிவடையச் செய்வதிலும் ஐபீரியன் தீபகற்பத்திலுள்ள அரசுகள் தலைமை யிடத்தைப் பெற்றன. தலைமை வகித்தற்கு அவைகளின் உரிமையைப் புவியியலே சுட்டிக்காட்டியது. அதை உறுதிப்படுத்துவது ஒன்றனையே போப்பாட்சியின் கட்டளை நிறைவேற்றியது. போத்துக்கல், 'புவியியல் நோக்கில் ஒரு நிலையான 'விதிமுரண்' எனுங் கூற்று உண்மையே. ஆனல், போத்துக்கல் ஒரு நூற்ருண் டாக மகிழ்ச்சியுடன் அனுபவித்த உன்னத நிலைக்கு நன்முகத் தகுதிபெற்றதா யினும், அந்நிலை அதிக காலம் நீடிக்கவில்லை. அதன் நிலைமையையும் குழல்களை யும் உற்று நோக்கின், வேறு விதமான முடிபு இருந்திருக்க முடியாது. கூடிய விவேகமான பூட்கையைப் பயன்படுத்தியிருந்தால், போத்துக்கலின் நலிவைத் தவிர்க்க முடியாவிட்டாலும், கடத்திப்போட்டிருக்கலாம். ஐபீரியன் தீப கற்பத்தை முழுமையாக நோக்கின் அது சுதந்திரத்தை அனுபவிக்கவும், ஓர் அரசியல் உருப்படியாக ஐரோப்பிய நாடுகளுள் தனக்குரிய இடத்தை வகிக்க வும், இயற்கையாலேயே கருதப்பட்டதென்பது புலப்படும். ஆனல் (1580-1640) அறுபதாண்டுக் காலப் பகுதியில் மட்டும்-அதுவும் பலவந்தத்தாற் கட்டாயப் படுத்தப்பட்டபடியால் மாத்திரமே-அது ஒரு தனி நாடாக உருவாயிற்று; வெளிமட்டமான ஒற்றுமைக்கு மேலான ஒரு நிலையை அது எக்காலத்தும் எய்த வில்லை. ஓரளவு புவியியலும் வரலாறும் இதற்குப் பொறுப்பாகும். ஓர் உறுதியான விடாப்பிடியான மாவட்டப்பற்று, இசுப்பெயினின் தலையாய அரசியற் சிறப்பியல்பாகும். இம்மாவட்டப்பற்று முழுத் தீபகற்பமும் வரிசை வரிசையான மலைத்தொடர்களால் துண்டிக்கப்பட்ட காரணத்தின் விளைவாகும். சோனகருடன் நெடுங்காலம் போர் புரிந்தமையால் இப்பற்று வலிதாக்கப் பட்டது. துண்டு துண்டாக மாத்திரமே இசுப்பானிய நிலம் பழையபடி கிறித்து
1. சிதப்பு எழுதிய "யாப்பு வரலாறு".

பெளதிகவியலும் அரசியலும் 23
மதத்திற்கு மீட்கப்பட்டது. புறச் சமயிகளினின்றும் விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு துண்டும் தன்னைச் சுதந்திரமாக மாத்திரமன்றி, தனிப்படுத்தித் தாபிக்கவும் நாடி நின்றது. சோனகருக்கெதிராக நிகழ்த்திய மதப்போரே இசுப்பானிய கத்தோலிக்க மதத்தின் உணர்ச்சி வேகத்திற்குக் காரணமென நாம் கொள்ள வேண்டும். ஆனல், விரைவில் அதைப்பற்றி இன்னும் பல விடயங்கள் கூற வேண்டும்.
இசுப்பெயினின் ஆதிக்கவெல்லை
ஓர் இயற்கைத் தோற்றப் படத்தைப் பார்ப்போமாகில், அரசியல் வளர்ச்சி புவியியலாற் பாதிக்கப்படுவதை நாம் தவிர்க்கமுடியாதபடி குறிப்பால் உணர லாம். பிசுக்கே விரிகுடாவின் தெற்குக் கரையோரமாகப் பிரனிசு மலைகள் நீண்டிருப்பதால் ஆசுத்தூரியாசும் கலீசியாவும் இசுப்பெயினின் எஞ்சிய பாகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சியேரா குவாடாாமா என்னும் நீண்ட மலைத்தொடர் உடோறு நதிப் பள்ளத்தாக்கினல் தேகசு நதிப் பள்ளத்தாக்கி லிருந்து பிரிக்கப்பட்டுத் தீபகற்பத்திற்கு நேர் குறுக்காகச் செல்கின்றது. தேகசு நதிக்குத் தெற்கே சியேரா தொலேடோ என்னும் குறுகிய மலைத்தொடர் செல்கின்றது. மேலும், தெற்கே மிக உயரமான சியேரா மொருளு, அண்டலூசி யாவை அதற்கு வடக்கேயுள்ள மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ முற்முகத் துண்டித்துக்கொண்டு செல்கின்றது. இவ்வண்ணம் இயற்கையால் வேறு பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அரசறிவால் ஒன்முகச் சேர்க்கப்படக் கூடுமாயின் அது ஓர் அரசியல் அற்புதமென்றே கூறவேண்டும். அரசறிவில் இசுப்பெயின் வளமுள்ள நாடன்று.
இந்நிகழ்வுரையின் பிற்பகுதி, புவியியல் வரலாற்றுச் சத்திகள் அரசியலை விடாப் பிடியாகப் பாதிக்கின்றனவென்பதை எடுத்துக்காட்டும். பேடினந்துக் கும் இசபெலாவுக்குமிடையே நடந்தேறிய திருமிணம், இசுப்பெயினின் இரு பிரதானமான அரசுகளை முதலாம் சாள்சின் ஆளுகையிற் ஐக்கியம் பூண முன் னேற்பாடு செய்தபோதும், கசுதைல் மக்களையும் அரகன் மக்களையும் ஐக்கியப் படுத்தத்தவறியது. அரசியற் பகைமைகளைக் குணப்படுத்தும் காலப்போக்குத் தானும், இசுப்பெயினைப் பொறுத்த அளவில், அந்த அற்புதத்தைச் செய்ய முடி யவில்லையென்பதற்கு இரு நூற்முண்டின் பின் நிகழ்ந்த இசுப்பானிய அரசுரி மைப் போர் சான்று பகரும். அந்தப் போரிற் கசுதைல், பிரான்சிலிருந்து வந்து உரிமை நாடிய அஞ்குவைச் சேர்ந்த பிலிப்பு என்பவனுக்கு ஆதரவளித்தது. அாகன், கற்றலோனியா, வலன்சியா ஆகிய மாவட்டங்கள் முற்ருயில்லாவிடினும் பெரிதும் அக்காரணத்திற்காகவே அபிசுபேக்குக் குலத்தைச் சேர்ந்த பெருங் கோமகன் சாள்சின் கட்சியைச் சேர்ந்தன.
ஒரு நூற்முண்டின் பின் தீபகற்பத்துப் போரில், இசுப்பெயினை வெல்ல
நெப்போலியன் தவறியதற்கு ஒரு காரணம் உவெலிந்தனின் பேராற்றலும் பிரித் தானிய துப்பாக்கி முனை ஈட்டிகளும் இசுப்பானியருக்கு அளித்த உதவி

Page 20
24 பெளதிகவியலும் அரசியலும்
யெனினும், அவன் போர்புரிந்து நின்ற இசுப்பானிய நாட்டின் இயற்கையமைப் பும் ஒரு முக்கிய காரணமாகும். கோல் நாட்டுத் தொடரிகலைப்பற்றிய சீசரின் விளக்கவுரை வெளியிடப்பட்ட நாட்டொடக்கம் ஒரு நாகரிகமுள்ள நாட்டை வெற்றி கொள்வதிலும் ஒரு நாகரிகமற்ற நாட்டை வெற்றி கொள்ளல் கூடிய கடினமானதென்னும் படையியற்கூற்று பலருமறிந்தது. நோமனியர் ஏறத்தாழ ஒரே அடியில் இங்கிலந்தை வெற்றிகொண்டனர். ஆணுல், அயலந்தை அவர்கள் ஒருபொழுதும் வெற்றி கொள்ளவில்லை. அயலந்தரின் இனஞ்சார் கட்டுக்கோப்பு, தோல்வியைத் தவிர்த்துவிட்டபோதிலும், எதிர்க்குந் திறனைப் பலவீனப் படுத்தியது. ஒரு சொறி முட்டையைக் கொல்வதிலும் ஒரு மனிதனைக் கொல் வது எளிதானது. ஆனல், ஒரு சொறி முட்டையைக் காட்டிலும் ஒரு மனிதன் கூடிய திறமையுடன் தாக்குதலை எதிர்த்து நிற்க இயலும். ஓர் அரசியல் அமைவு எவ்வளவு கீழ்த்தரமானதோ, அந்த அளவிற்கு எதிர்த்து நிற்கும் ஆற்றல் அதற் கில்லை. ஆனல், அதை வெல்வது அதே அளவிற்குக் கடினம். ஆங்கில-நோமர், அயலந்தின் ஒரு பகுதியான பேலை வென்றர்களாகில், அயலந்தை வென்முர் என்று கொள்ள முடியாது. உரொபட்டு பிரபு பிரித்தோரியாவை வென்று அங்கே தம் படையை அமர்த்தியதாற் போயர்களை அடிபணியச் செய்தார் எனக் கொள்ள முடியாது. அவ்வாறே நெப்போலியன் மதிரித்தைக் கைப்பற்றி அங்கே தன் படையை அமர்த்தியதால் இசுப்பெயினை வென்றுவிட்டான் என நாம் கருதமுடியாது. முடிவில் கிற்சினர் பிரபு போயரின் எதிர்ப்பைக் குறைத்தது உண்மை. ஆணுல், சமவலியில்லாதவர்களுக்கிடை நிகழ்ந்த போர் அவ்வளவு காலம் நீடித்ததே ஆச்சரியத்திற்குரியதாகும். அரசியலமைப்பின் தளர்ச்சியும் நாட்டின் புவியியலுமே போர் நீடித்ததற்கு முக்கிய காரணங்களாகும்.
ஆனல், நாம் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியை எதிர்பார்ப்பவராயிருக்கிருேம். முன்பு விட்ட பழையகாலப் பகுதிக்குச் செல்லுமுன் இன்னுமொரு குறிப்புக் கூறவேண்டியிருக்கின்றது. இசுப்பெயினின் மிகச் சிறந்த கடற்கரை-மத்திய தரைக்கடலை நோக்கிய அதன் ஒதுங்கிய தோற்றமும், அத்திலாந்திக்குச் சமுத் திரத்தை நோக்கிய அதன் திறந்த வெளியான தோற்றமும்-வியாபாரத்திற்கும் கப்பற்முெழிலுக்கும் அந்நாட்டுக்குச் சாதகமான நிலைமையை அளிக்குமென எதிர்பார்க்கலாம். சிறிது கால்ம் அந்நிலைமை நிலவியது உண்மையே. பதினைந் தாம் நூற்ருண்டு முடியும் வரையும் எந்த இசுப்பானியத் துறைமுகமாவது, உண்மையில், வெனிசு, செனேவா ஆகியவற்றுடனே அல்லது பிரிந்திசுடனே நிலையளவிற் போட்டியிடக்கூடியதாயிருக்கவில்லை. இத்தாலிக்கு மாத்திரமன்றி உரோன் நதிப் பள்ளத்தாக்குக்கும், உண்மையாகவே பிரான்சு முழுவதற்கும் செனேவா அங்காடியாயிருந்தது. சேர்மனி முழுவதற்கும் ஒசுத்திரியாவிற்கும் போலந்திற்கும் வெனிசே இயற்கையான வாயிலாயிருந்தது. அவ்விடமிருந்து இசையின் நதிப் பாதையால் அன்சியாற்றிற்கு நகரங்களுக்கும் நெதலந்துக்கும், அவ்விடமிருந்து பிரித்தானியாவுக்கும் கந்தினேவியாவுக்கும் அப்பாதை சென்றது. பிரனிசு மலைகளின் தடை காரணமாக, ஓர் இசுப்பானிய துறைமுகம் இசுப்பெயினுக்கு மாத்திரமே பயன்படக்கூடும்.

பெளதிகவியலும் அரசியலும். 25
அமெரிக்காவும் கீழைத் தேசங்களுக்குச் செல்லும் முனைவழியும் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், இசுப்பெயினுக்கு ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. ஏறத்தாழ ஒரு நூற்முண்டாக அவ்வாய்ப்பை அது பயன்படுத்தியது. ஆனல், பதினமும் நூற்றண்டு முடிந்தபின், இசுப்பெயின், பேரரசு அமைக்கும் தன் உன்னத நிலையைக் கூடிய தைரியமுள்ள எதிரிகளுக்குக் கைவிட்டது. குடியேற்ற வல்லரசாக அது இருக்கத் தவறியது, புவியியல் காரணமாக அன்று ; பொரு ளாதாரம், இனம், திருச்சபை, அரசியல் ஆகியவற்றிற்குரிய காரணங்களின் கூட்டுச் சேர்க்கையாலேயே ஆகும். ஆகவே, இக்காரணங்கள் பின்னைய அத்தியாயமொன்றில் நுணுகி ஆராயப்படவேண்டும்.
இத்தாலி
புவியியலிலும் அண்மைக் காலம்வரை அதன் வரலாற்றிலும் இத்தாலி பலவற்றில் இசுப்பெயினை ஒத்திருக்கின்றது. இசுப்பெயினைப் பேர்ல இத்தாவி யும் தசையை நோக்கியிருக்கும் திசையிற் பிறநாட்டுத் தாக்குதல்களிலிருந்து ஒரு பெரிய மலைத்தடையாற் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இசுப் பெயினைப் போல் பூரணமாகவன்று. ஏனெனிற் பிரனிசு மலைகளிலும் பார்க்க அல்பிசு மலைகளை எளிதாக ஊடுருவிச் செல்லலாம். ஆனல், கிழக்கு அல்பிசிலும் கோணிசுப் பாதையிலும் கணவாய்கள் இருந்திராவிடின், வெனிசும் செனேவா வும் எக்காலமாவது மிகச் சிறந்த வியாபார அங்காடிகளாக வந்திருக்க முடியாது. அல்பிசு மலைகள் தெற்கு நோக்கி நீண்டு, அப்பினைன்சு மலைகளுட் சென்று, இத்தாலியை அதன் ஒடுங்கிய நீண்ட பக்கமாக இரு பாதிகளாகத் துண்டிக்கின்றன. எனினும், இத்தாலிய நகரங்களின் முந்திய மலர்ச்சிக்குக் காரணம் மத்தியதரைக் கடலில் அந்த நீண்ட தீபகற்பத்தின் முக்கியமேயாகும். இத்தாலியின் புவியியல் மாத்திரமே அதன் செல்வத்தையும் கதியையும் தீர்மானிப்பதென அழுத்திக் கூறுவது அபாயகரமானுலும், அதன் வரலாற்றிற் புவியியல் ஒரு முக்கியமான பங்குடையதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பல நூற்ருண்டுகளாக இத்தாலிய நகரங்களுள் நிலவிய தனித் தன்மைக்கும் பகைமைக்கும் அதன் புவியியலே ஓரளவிற்காவது பொறுப் பாகும். பொரும் பிரான்சியப் படைகளுக்கும் ஒசுத்திரிய அபிசுபேக்கர் படை களுக்கும் அதுவே உலொம்பாடிச் சமவெளியைப் போர் புரியும் களமாக்கியது. அதுவே நெப்போலியனின் முதற் பெரிய தொடரிகலில் அவனை அதே போர் அசங்கத்திற்கு ஈர்த்தது. சாதாரணப் பழமொழிப்படி அதுவே சவோய்க் குலத் தினரை நேர்மையுள்ள மனிதர்களாக நடந்துகொள்ளச் சாத்தியமாக்காது விட்டாலும், அவர்களுக்கு மேற்கு அல்பிசு மலைப் பிரதேசத்தில் தலையான நிலையை அளித்து, முடிவில் அவர்களை இத்தாலியின் சுதந்திரக் குறிக்கோளை ஆதரிக்கும்படி செய்து, ஐக்கியம் பூண்ட இத்தாலியின் அரசு கட்டிலேறவும் உதவி செய்தது.

Page 21
26 பெளதிகவியலும் அரசியலும்
இன்னுமொரு முரண்பாடு இருந்தது. இத்தாலி ஐக்கியம் பூணக் காலதாமதம் ஏற்பட்ட குற்றத்திற்கு, அல்லது குற்றத்தின் பெரும்பகுதிக்கு, புவியியலே பொறுப்பெனக்கொண்டால், இத்தாலி நெடுங்காலமாக ஆசைப்பட்ட "மீட்கப் படா இத்தாலியை 1919 இல் இத்தாலியொடு சேர்த்தமைக்கு அதற்கு மதிப்புக் கொடுப்பது ஏற்புடையதாகும்.
போற்கன் தீபகற்பம்
மத்தியதரைக்கடலைச் சார்ந்த தீபகற்பத்தில் மூன்முவதான போற்கன் தீப கற்பத்தின் கதியை உருவாக்குவதிற் புவியியலுக்குரிய பங்கு முன்னையவையிலும் குறைந்த புகழுடையதன்று. பண்டைய கிரீசின் அரசிலமைப்பு மீது அந்நாட்டு வெளியுருவத்தின் விளைவு-தனித்தனியான நகர அரசுகள் ஐக்கியம் பூணு வதற்கு அது இட்ட தடைகள்-வரலாற்றில் எல்லாருமறிந்தவையாதலால், இங்கே அவை பற்றிக் கூறிக் காலத்தை வீணுக்க வேண்டியதில்லை. இப்போது ஆராயும் விடயத்திற்கு அது தொடர்புடையதுமன்று.
அத்தீபகற்பத்தின் இக்கால வரலாற்றிற் புவியியலின் செல்வாக்குக் குறைந்த தன்று. இத்தாலியினதும் இசுப்பெயினினதும் வரலாற்றுடன் ஒப்பு நோக்கின் அதன் செல்வாக்கை இங்குக் கூர்ந்துணர்வது இலகுவன்று. போற்கன் தீபகற்பத் தின் புவிப்பெளதிகவுறுப்பியலை முதன்முறை பார்க்கும்பொழுது, உண்மை யாகவே, தாறுமாமுகத் தோற்றும். பெரும்பான்மையும் தீபகற்பம் எங்ங்ணும் மலைத்தொடர்கள் தாங்கள் விரும்பியபடி ஓர் ஒழுங்குக்கும் அமையாது பரந் திருப்பதைக் காணலாம். இவை எங்கே தொடங்குகின்றன, எங்கே முடிகின்றன வென்பதைத் தெளிவாகக் கூற முடியாது. சில இடங்களில் வடக்குத் தெற்காக வும், சில இடங்களிற் கிழக்கு மேற்காகவும் ஒரு தெளிவான காரணமின்றியும், ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட திசைத்திருப்பமில்லாமலும் இவை செல்லு கின்றன.
அதேபோல, முதன்முறை பார்க்கும்பொழுது, அத்தீபகற்பத்தின் ஆற்றுத் தொகுதியும் மலைகளைப்போல விரும்பியபடியும் தாறுமாமுகவும் இருப்பதாகத் தோற்றுகின்றது. உதாரணமாக, தானியூப்பு நதி பெல்கிறேட்டிலிருந்து சிவித் திரியாவுக்கப்பால் ஓடிச் சென்று நீண்ட தூரம் ஒழுங்காகவும் நூன் முறை தவருமலும் மேற்குக் கிழக்காக ஓடியபின், சடுதியாகக் காலாற்சுவரையும் நேர் வடக்கே ஒரு புறமாகச் சாய்ந்து சென்று மரியாதையான நதிபோலக் கருங் கடலில் திருத்தியுடன் விழுவதேன் ? அதன் ஒரேயொரு குறிக்கோள் தொபுருசா என்னும் சதுப்பு நிலத்தைப்பற்றி உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்குமிடை யிற் சச்சரவு ஏற்படுத்தும் தீய நோக்கம் போலும். தானியூப்பு இன்னும் சிறிது தூரம் மாத்திரம் தொடர்ந்து கிழக்குத்திசை நோக்கிச் சென்று-பியூக்கரெசி லிருந்து இருப்புப்பாதை செல்வது போல-கொன்சுதான்சாத் துறைமுகத்திற் கடலைச் சேர்ந்திருக்குமாகில், அயல் நாடுகளாகிய உருமேனியாவுக்கும் பல்கேரி யாவுக்குமிடையில் இடைவிடாத நட்பு, தடையொன்றுமின்றி நிலவியிருக்கும்.

பெளதிகவியலும் அரசியலும் 27
ஆனல், அப்படியான நிலைமை போற்கன் தீபகற்பத்தின் ஒவ்வொரு தத்துவத் திற்கும் மரபிற்கும் முரணுயிருந்திருக்கும். எனவே, தானியூப்பு நதி வேண்டு மென்றே தவருன வழியிற் செல்லுவது போல் தோற்றினும், அது தன் அரசியற் சூழ்நிலையுடன் தான் ஒத்து இயங்குவதைக் காப்பாற்ற முயற்சி செய்வதாய் இருக்கலாம்.
அதி தெற்கே மரிற்சா நதி பெரும்பான்மையும் இதே குறும்பு செய்கிறபடியால் அரசியல் விளைவுகளினல் தொல்லைகளுக்குக் குறைவில்லை. இப்பெரிய ஆறு போற்கன் தீபகற்பத்திற்கும் மத்திய பீடபூமியாகிய உருடோப்புக்குமிடையே புள்ள பள்ளத்தாக்கின் வடிகாலாய் அமைந்திருக்கின்றது. பிலிப்பொப்பொலி யிலிருந்து அதிரியாநோப்பிள் வரையும் தென்கிழக்காக ஓடி, பின் நூன் முறை தவமுத தன் பாதையில் தொடர்ந்து சென்று கருங்கடலுள் அல்லது மாமோராக் கடலுள் தானும் விழாது சடுதியில் தென்றிசை திரும்பி, முடிவில் தெளிவாகத் தென்மேற்றிசையாக ஓடி, ஈனேசு என்னுமிடத்தில் ஈசியன் கடலில் விழுகின்றது. செல்லவேண்டிய பாதையிலிருந்து வேறு திசை திரும்பி, இப் பெரிய ஆற்றுத்தொகுதி செல்லுதற்குக் காரணம் ஆற்றுச்சிறை எனக் கூறப் படும் புவிச்சரிதவியல் முறையாகும். இப்போது இருக்கும் ஈசியன் கடலின் மேற்பாப்பின் கீழே தரை அமிழ்ந்துகொண்டிருக்கின்றது. இம்முறையானது, முற்றுப் பெறவில்லையென்பதை ஈசியன் தீவுக்கூட்டம் எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இது தெற்கே ஒடும் சிறு ஆறுகளின் வேகத்தையும், அவ்வழி அவை களின் அரிமானச் சத்தியையும், நீர்பிரிநிலம் வடக்கே தள்ளுப்படக்கூடிய அளவிற்கு அதிகரிக்கச் செய்தமையால், ஈசியன் சிற்றறுகள் தங்களுக்கு ஆசம் பத்தில் உரிமையில்லாத ஆற்றுத்தொகுதியின் தலைவாய் நீரைக் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாருக, புவிச்சரிதவியற்படி, ஈசியன் பகுதி மிகவும் பலமான ஒரு கவர்ச்சிச் சத்தியைத் தூண்டிவிட்டது. மறிற்சா, மிற்சா நதி, துருமா நதி, களும் வாதா, விரிற்சா நதிகள் தாமும் ஈசியன் கடAலில் விழுகின்றன. பெளதிக வியலின் தலைமையைப் பின்பற்றி அரசியல் சென்றிருக்கின்றது. சிற்றறுகளைப் போல மனிதரும் ஈசியன் கரைப்பகுதிக்குக் கவரப்பட்டிருக்கின்றனர். இவ்வாறே மசிடோனியா முழுத் தீபகற்பத்தின் வரலாற்றுக்கும் உயிர் நாடியாயிற்று. புவி யியல், தெற்கேயுள்ள மக்கள் வடக்கே செல்வதிலும் பார்க்க வடக்கேயுள்ளவர் கள் தெற்கே செல்வதை எளிதாக்கியது. 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இரண்டாம் போற்கன் போரின் காரணத்தை மேற்கூறியதிலிருந்து தெளிவாக அறியலாம். ஆனல், இவ்விடயத்தில், இயற்கையின் எச்சரிக்கைகளுக்குச் குழிய லின் தூண்டுதல்கள் பலமான துணைபுரிந்தன." இக்குறித்த எடுத்துக்காட்டை விட, தீபகற்பத்தின் வேறு வேருன மக்களையும் ஈசியன் கடற்கரைப்பகுதி தொடர்ந்து கவர்கின்றதென்பதை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.
1. குறித்த விடயத்திற்கும் போற்கன் புவியியலுக்கும் செல்வி நியூபிகின் எழுதியுள்ள * போற்கன் பிரச்சினைகள் பற்றிய புவியியற் சார்புகள்” எனும் நூலை ஆராய்க.
* பின்வரும் 35 ஆம் அத்தியாயத்தைப் பார்க்க.

Page 22
28 பெளதிகவியலும் அரசியலும்
மேலும் ஒருபுறம் தினரிக்கு அல்பிசு மலைகளின் தெற்கெல்லைக்கும் அல்பேனி யன் மலைகளின் வடக்கெல்லைக்குமிடையிலுள்ள அல்பேனியன் இடைவெளியா அலும், மறுபுறம் மேற்குக் கரை மலைத் தொகுதிக்கும் மத்திய பீட பூமிக்குமிடை யிலுள்ள ஊடுவழியாலும் தென்சிலாவியரின் வரலாறு பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளது. இந்த ஊடுவழி அதன் வட எல்லையில் அங்கேரிய சமவெளிக்கு வழி காட்டுகின்றது. தெற்கெல்லையில் வாடார் நதியின் கீழ்ப் பள்ளத்தாக்கு வழி திறந்து, பெல்கிறேட்டைச் சலோனிக்காவுடன் இணைத்து, அதனல் தென்சிலா வியரை ஈசியன் திசையை நோக்கி ஈர்த்து கிரேக்கருடன் போரில் மாட்டிவிடு கின்றது.
போற்கன் தீபகற்பத்தின் வரலாற்றை புவிப்பெளதிகவுறுப்பியல் பாதித் தமைக்கு இன்னும் எடுத்துக் காட்டுக்கள் தேவையானல் அவற்றை வேறிடத் தில் தேடிக் கொள்ளல் வேண்டும். அப்படியான நாட்டில் இங்கிலந்திலும், அதனினும் தெளிவாகப் பிரான்சிலும் நிகழ்ந்ததுபோல் வலிமையுடைய ஒரு முகப்படுத்தப்பட்ட அரசைத் தாபிக்கலாமென எதிர் பார்ப்பது வீணேயாகு மெனக் கூறுவது போதுமானது. உண்மையாகவே அப்படியான அரசு போற் கனில் எப்போதேனும் இருந்ததில்லை. கிரேக்க நகர அரசுகள் ஒருமுகப்படுத்தப் பட்ட அரசுக்கு நேர் முரணுனவை. மசிடோனே, உசோமோ, செய்ய முடியாத ஒன்றைச் செய்ய எத்தனிக்குமளவுக்கு அறிவற்றிருக்கவில்லை. ஒற்முேமன் பேரரசு ஒரளவில் வல்லாட்சியாயிருந்ததெனினும் ஒருமுகப்படுத்தியதாக அது இருந்ததில்லை. ஒருமுகப்படுத்துதல் உண்மையாகவே இயற்கையால் முற்ருகத் தடுக்கப்பட்ட ஒன்ருகும். சிறியனவெனக் கூறக்கூடிய நாடுகளின் கூட்டத்தையே புவியியல் சுட்டிக் காட்டுகின்றது. புவியியலின் செல்வாக்குக்கள் மக்கட்பாம்பலி யலின் தத்துவங்களால் உறுதி செய்யப்படுகின்றன.
பிரித்தானிய தீவுகளையும் மத்தியதரைக்கடல் சார்ந்த மூன்று தீபகற்பங்களை யும் விலக்கினல், ஐரோப்பாவின் வரலாறு சார்ந்த புவியியல் பின்வரும் கூறு களில் மையங்கொள்கின்றது. அவையாவன : இரைன் நதிப் பள்ளத்தாக்கு; உரோன் நதிப்பள்ளத்தாக்கு இரைன் ஆற்றுமூலம், கழிமுகம் என்பன வற்றை முறையே காவல் புரியும் சுவிற்சலந்தும் நெதலந்தும் ; பொகீமியாவின் நாலு கோணங்களிலிருந்தும் வட்டாகாசமாகப் பரவும் மத்திய ஐரோப்பா ; இாைன் நதிக் கழிமுகத்திலிருந்து ஊறல் மலைகள் வரையும் நீண்டிருக்கும் பெரிய வட சமவெளி ; கந்தினேவியாவும் அதை அடுத்துள்ள போற்றிற்கு நாடு களும் என்க.
செல்வி நியூபிகின் எழுதிய நூலில் அல்லது மரியற்று எழுதிய "கீழைத்தேசப் பிரச்
சினை’ எனும் நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் இதற்கு உதாரணத்தைக் காணலாம்.

பெளதிகவியலும் அரசியலும் 29
கந்தினேவியாவும் போற்றிக்குப் பிரதேசமும்
உரோன், இாைன் நதிப் பிரதேசங்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்திற் கூறுவது கூடிய வசதியாயிருக்கும். அபிசுபேக்கு, ஒகன்சொலேன் குலமுறை யினரைப் பற்றிக் கூறும் பிந்திய அத்தியாயங்களில் முறையே மத்திய ஐரோப் பாவைப் பற்றியும் வட சமவெளியைப் பற்றியும் கூறப்படும். நெதலந்து கலகத் தொடர்பில் நெதலந்தைப் பற்றிக் கூறப்படும். இங்கே கூறுவதற்குப் போற்றிக் குப் பிரதேசமும் சுவிற்சலந்துமே எஞ்சியிருக்கின்றன.
போற்றிக்குப் பிரதேசம், மூன்று நோசு இராச்சியங்களையும், அண்மையில் இாசியாவுடன் ஒன்று சேர்க்கப்பட்டனவும் ஆனல் 1919 தொடக்கம் விடுதலை பெற்றவையுமான பின்னிலந்து போன்ற நாடுகளையும் உள்ளடக்கியுள்ளதாகக் கொள்ளப்பட வேண்டும். புவியியல் ஆதரவாய் இருந்தாலும், போற்றிக்குப் பிர
தேசம் பிரசியாவை உள்ளடக்கவில்லை.
வட இராச்சியங்கள், தம்மிடை நிலவிய பொருமைகளைக் கைவிட்டு ஒற்றை யாப்புக்குக் கீழ் இல்லாவிடினும், கூட்டாட்சியாப்புக்குக் கீழாயினும் ஒன்று சேர்ந்திருந்தால், அவை வரலாற்றிற் கூடிய பங்கு எடுத்திருக்கலாம். இன்று சுவிற்சலந்து ஒரு தனிக் கூட்டாட்சி அரசாயிருக்கக் கந்தினேவியா என் மூன்று இராச்சியங்களாகப் பிரிந்திருக்கின்றது என்பது இக்கால வரலாற்றில் இன்னும் விடை கிடையாத வினவாகும். கந்தினேவியா, ஐக்கியம் பூணுவதற்கு எவ் வித தடையும் கிடையாது. புவியியல், மக்கட்பரம்பலியல், மதமரபு உறவுகள் இவையாவும் ஐக்கியம் பூணுதலையே சுட்டிக்காட்டுகின்றன. இன்று நோவேயைச் சுவீடினிலிருந்து பிரிக்கும் முதுகெலும்புபோன்ற மலைத் தொடர், ஓர் எல்லை தேவைப்பட்டால் ஒரு வசதியான எல்லையாகக் கொள்ளற்கு ஏற்றதாயினும், அரசியலொற்றுமைக்கு அப்பினைன் மலைகளிலும் கூடிய தடையாக இருக்க முடியாது. நோவே, தென்மாக்குடனும் (1450-1814) சுவிடினுடனும் (18411905) ஒன்முக இணைக்கப்பட்டிருந்திருக்கின்றது. ஆனல், அந்நாடுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு முறை மாத்திரம் மூன்று நாடுகளும் ஒரு முடிக்கீழ் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. தேர்வு செய்யப்பட்ட தனியொரு முடியாட்சி யில், புகழ்பெற்ற தேனிசு இராணி மாகறற்றின் கீழ் அவை ஒன்று சேர்ந்தன. அதில் அடங்கியுள்ள ஒவ்வோர் நாட்டுக்கும் தலத் தன்னட்சியிருந்தது. காப் புக்கு எல்லாரும் சேர்ந்த ஒரு படை இருந்தது. கல்மார் ஐக்கியம் என்னும் ஏற் பாட்டின் அடிப்படையில் இந்த ஐக்கியம் ஐம்பது ஆண்டுகள் மாத்திரம் நிலைத் தது. தேனியர் 1449 இல் தனியான ஓர் அரசனைத் தெரிவு செய்தார்கள். 1449 இல் நோவேக்கும் சுவீடினுக்கும் இருந்த ஐக்கியம் குலைக்கப்பட்டது. இது ஆள் வழி ஐக்கியமாயிருந்தது. கல்மார் ஐக்கிய ஏற்பாடு 1483 இலும் மீண்டும் 1513 இலும் புதுப்பிக்கப்பட்ட தெனினும், ஓர் அரசனே இன்னேர் அரசனே விழுமிய சில்லோராட்சிக்கு எதிராகத் தன் அதிகாரத்தை நிலைநாட்டி மூன்று நாடுகளி

Page 23
30 பெளதிகவியலும் அரசியலும்
லும் உண்மையான ஆதிக்கத்தைச் செலுத்திய காலங்களில் மாத்திரமே அவ்வேற் பாடு அவ்வப்போது பயனுடையதாயிருந்தது. அவ்வாட்சி ஈற்றில் 1523 இல் முடிவெய்தியது.
இக்காலத்தில், சிதைவு ஏற்படுத்தப் போகிற அமிசம் ஒன்று கந்தினேவிய வரலாற்றிற் புகுந்தது. ஒதன்பேக்கின் கோமகனன கிறித்தியன் என்னும் அாசன்-மூன்று வட இராச்சியங்களையும் ஆண்ட கடைசி அரசன் இவனேசெல்சுவிக்கு, ஒல்சுதைன் என்னும் மாவட்டங்களுக்குக் கோமகனுக அம் மாவட்டங்களின் குடிமக்களால் தெரிவு செய்யப்பட்டான். பெரிய பிரித்தானி யாவும் அனுேவரும் இருந்தவாறு, ஒல்சுதைன் தனியான சார்பில் தென்மாக்கு முடியாட்சியுடன் 1460 தொடக்கம் 1863 வரையும் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்த தெனினும், அந்நாடு எக்காலத்தும் சேர்மனியர் வசிக்கும் சேர்மன் கோமக வுரிமையாகவும், சேர்மனியக் கூட்டத்தினின்றும் பிரிக்க முடியாத ஒரு பாகமாக வும் அமைந்து வந்திருக்கின்றது. 1920 குடியொப்பத்தின்படி ஒரு பகுதி சேர் மானிய மயமாகவும் மற்றப் பகுதி தேனியமயமாகவுமிருந்தது. ஆனல், ஒல்சு தைனைப் போலல்லாது அஆறு சட்டப்படி தேனிய முடியின் மானிய நாடா யிருந்தது. இந்தச் சேர்மனிய கோமகவுரிமைகள் தேனிய முடியுடன் ஐக்கியம் பூண்டமை கந்தினேவிய ஐக்கியத்திற்கு உதவியாயிருக்கவில்லை.
1523 இல் தென்மாக்கில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அதன் விளைவாகக் கசுத்தாவசு எரிச்சன் என்னும் சுவீடிசுப் பிரபு வாசா வமிசத்தினரின் கீழ் தன் நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டினன். அந்த வமிசமானது பதின்மூன்ரும் சாள்சு 1818 இல் இறக்கும் வரையும் நிலைத்திருந்தது. இவன் தன் உரிமையாள ஞகவும், பின் பட்டம் பெறுவோணுகவும், நெப்போலியனின் மார்சலிலொருவ ஞன மாசல் பேணடொற்று என்பானை ஏற்றுக்கொண்டான். 1818 இற் பேண டொற்று அரசு கட்டிலேறிஞன். இன்னும் அவன் மரபினர் அப்பதவியை வகித்து வருகின்றனர்.
நெப்போலியப் போர்களின் முடிவில் குழியலறிஞர்களால் நிறைவேற்றப் பட்ட பொது ஏற்பாட்டின்படி நோவே, சுவீடினுக்கு வழங்கப்பட்டது. சுவீடின் ஒரு நூற்முண்டுக்கு முன்னர் பின்னிலந்தையும் போற்றிக்குக் கடலைச் சார்ந்த மாகாணங்களையும் இரசியாவுக்கு இழந்துவிட்டது. சுவீடினும் நோவேயும் பூண்ட ஐக்கியம், இரு நாடுகளும் ஒரு முடியாட்சியின் கீழ்ப்பட்ட வாற்றையே குறித்தது. கலைமுறைக்குரிய மொழியில் 'இது ஆள்வழி ஐக்கியமாகும். ' அப் படியான ஐக்கியங்கள் எப்பொழுதும் நிலையற்றவை. பிரான்சியக் குடியானவர் மரபிலுகித்தவனெனினும், அக்காலத்து அரசருள் அரசனுக்கேற்ற நடத்தை யிலும், கலை இலக்கியம் என்பனவற்றில் எய்திய உன்னத நிலையிலும், அன்பான தனிமனிதப் பண்பிலும், மிகச் சிறப்புற்ருேங்கிய இரண்டாம் ஒசுகார் (18721907) அரசன் எவ்வளவு முயற்சி செய்தும், 1905 இல் அந்த ஐக்கியம் குலைக்கப் பட்ட்து. பிரிந்துத்ணியாகும் ஒரு கிளர்ச்சி பல ஆண்டுகளாகச் செயல் முறை

பெளதிகவியலும் அரசியலும் 31
யில் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆண்டில் நோவீசியப் பாராளுமன்றம், சுவீடிசு அரசனின் நோவிசிய ஆட்சி நிறுத்தப்பட்டதெனப் பிரகடனஞ் செய்தது. நோவே ஒரு தேனிய இளவரசனின் கீழ் ஒரு தனி இராச்சியமாக நிலைநாட்டப்பட்டது.
சுவிற்சலந்து
இயற்கையை எதிர்ப்போரை உருத்துவரும் தீவினைப் பயனுக்கு கந்தினேவிய நாடுகள் அளிப்பதிலும் கூடிய சிறந்த எடுத்துக்காட்டுக் கிடையாது. இதற்கு மிகவும் நேர்மாமுன முறையில், சுவிற்சலந்தைப் பொறுத்த அளவில், ஒவ்வோர் இயற்கைத் தடையையும் மனிதன் வென்றதனுலாய மகிழ்ச்சிகரமான பயன்
களைக் காணலாம்.
ஐரோப்பாவின் பொது அரசாற்றில், சுவிசு நாடுகளின் கூட்டிஃணப்பு மிகவும் முரண்பாடானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான ஒரு வியக்கத்தக்க தோற்றப்பாடாகும். அரசியல் நூலிலுள்ள எல்லாக் கோட்பாடுகளுக்கும் தோற்றத்தளவில் நேர் முரணுக அது இருக்கின்றது. சுவிற்சலந்துக் கூட்டாட் சிக் குடியரசு இன்று உள்ளடக்கியிருக்கும் அந்த இருபத்தைந்து நாடுகள், அல்லது கோட்டங்களிடை அரசியல் ஐக்கியம் ஏற்படுவதற்கு எதிராகப் புவி யியலும் மனித இன நூலுமன்றி, மொழியும் மதமும் வரலாறும் மரபுமே தடை யுரை கூறுமெனத் தோற்றும்.
நூணுகி ஆராயின், இம் முரண்பாடு இன்னும் தெளிவாகின்றது. இருபத்தைந்து கோட்டங்களில், பதினெட்டு, சேர்மனியரையே மாத்திரங் கொண்டவை ; இவை பெரிதும் புரட்டசுத்தாந்த வழிபாடுடையவை. ஐந்து கோட்டங்கள் தனியே பிரான்சியரைக் கொண்டவை ; இவை பெரிதும் கத்தோவிக்க வழிபாட்டினரைக் கொண்டவை. ஒன்று தனியே இத்தாலியரைக் கொண்டது; ஒன்றின் மக்களில் (குரோபந்தன் அல்லது கிரிசனர்) மூன்றிலொரு பகுதியோர் உரோமன்சு மொழி பேசுபவர். அபிசுபேக்குப் பேரரசர் ஆட்சியின் கீழ் பல நூற்ருண்டு களாகச் சேர்க்கப்பட்ட பலவின மூலங்களுடன் இன்னுமொன்முக என் கிரிசனர் சேர்க்கப்படவில்லை? திசினே இனிதே ஐக்கியம் பூண்ட இத்தாலியின் ஒரு பாக மாக ஏன் இருக்கக்கூடாதென இத்தாலியர் வினவலாம். அது சுவிற்சலந்தோடு ஐக்கியப் படுவதைப் புவியியல் முற்முகத் தடுப்பது போலத் தோன்றுகிறது. இனமும் மொழியும், இத்தாலியுடன் சேர்க்கப்படவேண்டுமெனச் சுட்டிக்காட்டு கின்றன. இாைன் நதித் திசையை நோக்கும் பழைய உயர் சேர்மானியக் கூட்டிணைப்பு ஆட்சி, உரோன் பள்ளத்தாக்கிலுள்ள பிரான்சியக் கோட்டங் களுடன் ஒரு கூட்டாட்சியில் ஒன்று சேர்ந்தது எவ்வாறு? ஒரு காலத்தில் உள்நாட்டளவில் ஓரினமும் வெளிநாட்டளவிற் பலவினமுமான புவியியற் கூறு களைப் பலவந்தமாய் ஒன்று சேர்த்த சத்தி யாது? இவ்வித வினக்கள் வரலாற்று
நூலாசிரியனை மலைக்கச் செய்கின்றன. இகள்முஜ்ஷதவிழ்ச்சங்ம்ேமன்

Page 24
32 பெளதிகவியலும் அரசியலும்
மொழி பேசுவோரைக்கொண்டும், பிரான்சியரைக்கொண்டும், உரோமன்சு மொழி பேசுவோரைக்கொண்டும் சிறிதாயினும் சிறப்புடைய ஒரு வல்லாசு படிப்படியாக அமைக்கப்பட்டது. இந்த நாட்டின் தொடர்ச்சியான சுதந்திரம் ஐரோப்பாவிலுள்ள வேறெந்த நாட்டினது போலவும் உறுதியானது. சுவிற்ச லந்து ஓர் அரசுமாத்திரமன்று; சேர்த்து ஆக்கப்பட்ட கும்பலெனினும் ஒரு நாட்டினமுமாகும்’
' வரலாற்று ஆசிரியன் ஒரு விளக்கம்-அதுவும் ஓரளவுக்கு மாத்திரம்-அளிக்க லாம். 1648 தொடக்கம் சுவிசுக் குடியரசின் நடுவு நிலைமை, ஐரோப்பாவின் அதி முக்கியமான எல்லா வல்லரசுகளும் உறுப்பினராகச் சேர்ந்து நிறைவேற்றிய பொருத்தனைகளால் உத்தரவாதமளிக்கப்பட்டது. ஆனல், இது சுவிசு நாடு, தொடர்ந்து சுயாதீனமாயிருப்பதற்குக் காரணமாகுமன்றி, ஓர் இணைக்கப்பட்ட சுவிசு நாட்டின வுணர்ச்சியின் மலர்ச்சியை விளக்க முடியாது. அரசியல் வாய்ப் போடு பொருந்தும் அளவிற்குப் பொருத்தனைகள் பாதுகாப்பானவை எனக் குறைகாணி ஒருவர் கூறலாம். சுவிற்சலந்து ஓர் அரசியல் வாய்ப்பாகியதென் பதை மறுக்க முடியாது. அது அவ்வளவு வாய்ப்புடையதாயிருக்கிறபடியாற்ருன் மனிதன் இயற்கைக்கு நேர்மாமுகத்தானும் அதைப் பேண ஒப்புக்கொண்டான். இந்த ஒரு தடவையில் அரசியல், பெளதிகவியலை வெற்றிகொண்டுள்ளது.
* பதங்களை விளக்க மரியற்று எழுதியுள்ள "இக்கால அரசின் இயங்கும் முறை” என்னும் நூலின் முதலாம் நான்காம் அத்தியாயங்களை நோக்குக. குறிப்பிட்டுள்ள நூலிலிருந்து நர்ன்சில வரிகளை இரவல் வாங்கியுள்ளேன்."

அத்தியாயம் 3
பிரான்சின் ஆக்கம்
முக்கியமான திகதிகள் V,
481 ஆம் ஆண்டளவில் பிரான்சைத் தியூத்தோனியல் பெற்றி
கொள்ளல்.
768-814 பிராங்கியரின் அரசனுன சாளிமேன்.
&43 வேடன் பொருத்தன.
987-1828 காபெற்றுக்குலமுறையினர் பிரான்சை ஆட்சிசெய்தல்.
1096 முதலாம் சிலுவைப்போர்-எட்டாவது, 1270.
1302 பாரிசுப் பாராளுமன்றம் பிலிப்பு இலே பெல் என்பவனல் கட்டுக்
கோக்கப்பட்டது.
1302 குடித்திணைமன்றத்தை பிலிப்பு இலே பெல் என்பவன் கட்டுக்
கோத்தான்.
1337-1453 நூற்றண்டுப் போர்.
卫49龙 பிரித்தனியைச் சேர்ந்த கோமகள் ஆன் என்பாளுக்கும் எட்டாம்
சாள்சுக்கும் திருமணம் நடந்தது. .
1562-94 நான்காம் என்றி அரசெய்தல்-1610.
五 598 நான்சுக் கற்பனை.
1624-42 காடினல் இரிசிலூவின் அமைச்சு.
கண்டத்திற்குரிய ஐரோப்பிய வரலாற்றிற் பிரான்சைப்போற்முெடர்ந்து முக்கியமான பங்கு பற்றிய நாடு பிறிதில்லை. பதினரும் நூற்ருண்டு வரலாறு, பிரான்சிய அரசர்களுக்கும் இசுப்பெயின், ஒசுத்திரியா, நெதலந்து ஆகிய நாடு களை ஆண்ட அபிசுபேக்குப் பேரரசர்களுக்குமிடையே நிலவிய சச்சரவுகளை மையமாகக் கொண்டது. பதினேழாம் நூற்ருண்டை (1648-1714) பதினன்காம் உலூயியின் காலமெனக் கூறுவது பொருத்தமாகும். பதினெட்டாம் நூற்ருண் டில், பிரான்சு நலிவடைவதின் வெளிப்படையான அறிகுறிகள் தோன்றினவா யினும், 1789 தொடங்கி 1815 வரையும் பிரான்சே ஐரோப்பிய அரசியலின் குவிமையமாயிருந்தது. அங்கே அடிக்கடி எழுந்த புரட்சிகளால் 1815 தொடங்கி 1878 வரையும் பிரான்சு, கண்டத்திற்குரிய ஐரோப்பாவின் பெரும்பாலான அரசு களில் ஒரேகாலத்திற் குழப்பம் உண்டாவதற்கு ஊக்கங்கொடுத்தது. 1870 ஆம் ஆண்டிலிருந்து 1918 வரையும் கண்டத்தின் முதலாண்மை பாரிசைவிட்டு விலகிப் பேளினை அடைந்தது. ஆனல் 1918 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சுடன் போட்டியாக நிற்கக்கூடிய அரசாகக் கண்டத்திலுள்ள வல்லரசுகளில் எதுவு
மிருக்கவில்லை.

Page 25
34 பிரான்சின் ஆக்கம்
இது ஒரு மகத்தான சாதனையாகும். ஐரோப்பாவில் முதன்மையிடம் வகித்தற் பொருட்டுப் பிரான்சு அதிகம் இழக்க வேண்டியிருந்ததென்பதைப் பின்வரும் நிகழ்ச்சியுரை எடுத்துக்காட்டும். அந்நிலையைப் பேணும் பொருட்டு அது எடுத்துக்கொண்ட முயற்சிகள், பதினெட்டாம் நூற்றண்டில் அது உலகமளாவிய ஆதிக்கநிலையைப் பெரிய பிரித்தானியாவுக்கு ஒப்படைத்தற்கு ஓரளவு காரண மாயின. கண்டத்திற்குரிய ஐரோப்பாவிற் பிரான்சின் முதன்மையை மறுக்க முடியாது.
பிரான்சின் புவியியல்
இவ்வத்தியாயத்தின் நோக்கம், பிரான்சு உன்னத நிலை எய்தியமையைக் கட்டம் கட்டமாக விவரித்து விளக்கி, அந்நிலை எய்துவதற்குத் துணைபுரிந்த காரணங்களிற் சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவதாகும்.
இயற்கை பிரான்சிற்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவளித்துள்ளது. 1918 ஆம் ஆண்டுக்கு முன்னரே இங்கிலந்திலும் பார்க்கப் பிரான்சிற் கணிப் பொருட் செல்வம் மிகக் குறைவாயிருந்ததாயினும், அங்கே அச்செல்வம் இல்லாமவில்லை. அந்நாட்டின் வானிலை மிகச்சிறந்ததாயும் அதன் நிலம் மிகு வளம்பொருந்தியதாயுமிருந்தது ; இக்கால உலகத்தொடு ஒப்பிட்டு நோக்கின் அதன் புவியியல் நிலைமை, இங்கிலந்துக்கும் ஒருவேளை இசுப்பெயினுக்கும், குறைந்ததாயிருக்கலாம். ஆங்கிலேய கால்வாய், அத்திலாந்திக்குச் சமுத்திரம், மத்தியதரைக்கடல் என்பனவற்றை நோக்கி அதன் கடற்கரைப் பகுதியிருந்த மையால், தற்காப்புக்கும் வியாபாரத்திற்கும் அதன் நிலைமை ஏற்புடையதாகும். அதன் துறைமுகங்கள் எங்கள் துறைமுகங்களை விட எண்ணிக்கையில் மிகக் குறைந்தனவுமல்ல ; கேடானவையுமல்ல. அங்கே கப்பற் போக்குவரத்திற்குரிய நதிகள் உண்டு. உள்நாட்டுக் கப்பற் போக்குவரத்துச் செயற்கை வசதிகளில், கொல்பேட்டின் முயற்சிகள் காரணமாக, இங்கிலந்திலும் பிரான்சு அதிக முன்னேற்றமடைந்திருந்தது. பிானிசு மலைகள், பெரும்பாலும் அசைக்க முடியாத தடையாயிருக்கின்றன. தென்கிழக்கிலுள்ள அல்பிசு அத்துணை பெரிய தடையாகத் தோற்முவிடினும் ஓர் எல்லைப்புறமாக அமைந்துள்ளது. இவ்விடயம் வாதத்திற்குரியது. பெரும் வாதத்திற்குரியதும், உண்மையாகவே ஓயாது வாதிக்கப்படுவதும் பிரான்சின் கிழக்கு எல்லைப்புறமே.
பண்டையகோலும் இக்காலப் பிரான்சும்
செவன்சு மலைகளின் உச்சிக்கும், அல்பிசு யூராமலைகளின் உச்சிகளுக்கு மிடையேயிருப்பது ஆள்சு அல்லது பேகண்டி எனும் மத்திய இராச்சியமாக நீண்டகாலம் அமைந்திருந்த உரோனிலந்து ஆகும். உரோன் நதிப் பள்ளத் தாக்கைப்பற்றிக் கூறியபின்னர் இாைன் நதிப் பள்ளத்தாக்கைக் கூற ஆரம் பித்து, கிழக்கிலும் வடகிழக்கிலும் உள்ள பிரான்சினது இயற்கையான எல்லை

பிரான்சின் ஆக்கம் 35
களே அல்லது புவியியல் எல்லைகளை வரையறுக்கும்பொழுது, கடினமானதும் விவாதத்துக்கு இடமானதுமான பிரச்சினை எழுகின்றது. உண்மையாகவும் புவியியலின்படியும் இசைன் நதிப்பள்ளத்தாக்கு யாருக்குரியது ?
அந்த உரிமையைக் கோரப் பிரான்சியருக்கு மிகவும் இயற்கையான அவா வுண்டு. இக்காலப் பிரான்சின் எல்லைப்புறங்களைப் பண்டைய கோல் மாகாணத் தின் எல்லைகளுடன் இசையச் செய்வது காடினல் இரிசிலூவின் மனவெழுச்சி மிகுந்த போவாவும் அவர் பிரகடனஞ் செய்த பூட்கையுமாகும். ‘கோலுக்கென இயற்கை வகுத்த எல்லைப்புறங்களை மீட்டும் அதற்கு அளித்தலும், ஒரு கோலிய அரசனை மீண்டும் முடிசூட்டலும், கோலைப் பிரான்சுடன் ஒருங்கு வைதெண்ண லும், பண்டைய கோல் நாட்டுக்குரிய எல்லா நிலப்பகுதிகளிலும் புதிய கோல் நாட்டைத் திரும்ப அமைப்பதும் எனது அமைச்சுப் பணி நெறியின் முதன்மை யான நோக்கங்களாகும் ' என அவர் எழுதினர்.
பழைய வரலாற்றைப்போற்றி அதை அடிப்படையாகக்கொண்ட கோரிக்கை, உண்மையில், அபாயமானதாயும் மயங்கவைப்பதாயும் இருந்தது. பண்டைய கோலின் எல்லைப்புறங்கள் உண்மையாகவே எக்காலத்திலும் திட்டமாக வரை யறுக்கப்படவில்லை. அவை பெரிதும் வேறுபட்டனவாயிருந்தன. இரிசிலூவும் வேறு பிரான்சியரும் (பண்டையகோல் ' சமுத்திரத்தாலும் பிானிசு மலை களாலும் மத்தியதரைக் கடலாலும் அல்பிசு மலைகளாலும் இாைன் நதியாலும், எல்லைப்படுத்தப்பட்ட ஆள்புலப்பகுதியாகும் எனக்கொண்டனர். அதாவது, இக்காலப் பிரான்சு முழுவதையும், பெல்சியம் முழுவதையும், இலட்சம்பேக்கை யும், ஒல்லந்தின் ஒரு கீற்றையும், இாைன் நதியைச் சார்ந்த பிரசியாவின் பெரும்பகுதியையும், அல்சேசையும், பலற்றினேற்றையும், உள்ளடக்கிய பகுதியே பண்டைய கோலாகும். 1813 இலையுதிர் காலத்தில் மெற்றேணிக்கு விதித்த உடன்படிக்கை நியதிகளை நெப்போலியன் ஒப்புக்கொண்டிருந்தானகில், மேற்கூறிய பகுதியைப் பிரான்சின் சார்பில் நெப்போலியன் வைத்திருந்திருக்க லாம். நெப்போலியன் அவ்வுடன்படிக்கை நியதிகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அது ஐரோப்பாவுக்கோ பிரான்சுக்கோ நன்மை அளித்திருக்குமா என்ற பிரச்சினை பற்றி இங்கே வாதிக்க வேண்டியதுமில்லை; முடிவுசெய்யவேண்டியது மில்லை. இந்த எல்லைப்புறத்தை நெப்போலியன் ஏற்றுக்கொண்டிருந்தானகில், காடினல் இரிசிலூவின் போவா நிறைவேறியிருக்கும் ; தாயகப்பற்றுள்ள பிரான் சியரின் உள்ளத்திலிருந்து ஒரு காலத்தும் முற்முய் நீங்காத கனவு நனவாகி யிருக்கும். அவர்கள் கண்ட கனவு இக்காலப் பிரான்சைப் பண்டைய கோல் நாடாகக் காண்பதேயாகும். ஆனல் நெப்போலியனின் ஆட்சிக்கீழ் அல்லாது, வேறு எக்காலத்தும் இசைன் நதியை, அதன் ஆற்றுமூலத்திலிருது கழிமுகம் வரையும், தனது ஆட்சிப்பகுதியின் கிழக்கு எல்லையாக்குவதில் பிராத்சு குறிப் பிடக்கூடியவளவு முன்னேற்றமடையவில்லை.

Page 26
36 பிரான்சின் ஆக்கம்
அந்நிலையைப் பிரான்சு எய்தல், இயற்கையின் நோக்கமென உறுதியுடன் கூறு வதற்கில்லை. இயற்கையின்படி, யூராமலையும் வோசுமலையும் அல்லது செவன்சு மலையும், ஆகோன் மேட்டுநிலமும் பிரான்சின் எல்லைகளெனச் சேர்மானியன் ஒருவன் சாதிக்கலாம். இதை ஆதாரமாகக்கொண்டு 1814 ஆம் ஆண்டில் ஆடன் பேக்கு என்பான் இவையே பிரான்சின் எல்லைகள் என வற்புறுத்தியது காண்க. வோசுமலைகளுக்கு வடக்கேயோ ஆகோன் நதிக்கு வடக்கேயோ, இயற்கை இவ் வெல்லைபற்றி தனது நோக்கத்தைத் திட்டமாகச் சுட்டிக்காட்டவில்லையென்பது ஒத்துக்கொள்ளவேண்டியதொன்முகும். ஆகையால் இாைனிலந்து எப்பொழு தும் விவாதத்திற்குரிய இடமாக இருந்திருக்கின்றது. பிரான்சுக்கும் சேர் மனிக்குமிடையில் போரையும், கலகத்தையும் ஏற்படாது தடுக்கும்வண்ணம் இந் நாடுகளுக்கிடையில் ஒரு இடைநாட்டை ஏம நாடாக அமைத்து, அந்த இடர்ப் பாட்டைச் சிக்கறுக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இடையூழி யில் வலோய்குலமுறையினரின் கோமகவுரிமையான பேகண்டி சிறிதுகாலம் நிலைத்திருந்தது. 1815 ஆம் ஆண்டில் காசிலிறிப் பிரபுவாலும் வீயன்னுவிற் கூடிய சூழியல் வல்லோராலும் ஆக்கப்பட்ட நெதலந்து இராச்சியம் இதனிலும் குறைந்த காலமே நிலைத்திருந்தது.
சாளிமேன்
உரோமானிய கோவின் மரபைவிட, பிரான்சிய வரலாற்றுப் பகுதியில், மிகுத்து விளங்கிய இன்னுமொரு மரபு அதேபோல் நிலைத்திருந்திருக்கிறது. அது மகா சாளிசின் ஆளுமையும் அவனின் அருஞ்செயல்களும் அடங்கிய,
கரோலிங்கன் பேரரசின் மரபாகும்.
பிரான்சிய அரசியல், புவியியற் சார்பில் அமைந்ததென்க. அரசு முறைக் காரணங்கள் அதை அறிவுறுத்து முன்னரே நாட்டின் இயல்புணர்ச்சி அதைத் தெரிவித்தது. அது சாளிமேனின் பேரரசு என்னும் ஒரு தனிக் காரணியிலேயே எழுப்பப்பட்டிருந்தது. பிரான்சின் வரலாறு முழுவதிலும் இடங்கொண்ட இப் பெரும் பிரச்சினை பேரரசுரிமை பற்றிய தீர்விலாவழக்காட்டாகும். இந்நாள் மன்னன் தன் போவாவை வளர்க்க ஒரு வழி காண்பான். ஒருநாள் சட்ட நூலறிஞர் உரிமைகளைப்பெற முனைவர். மன்னரைப் பேறுகள் வேண் டவும், சட்டவறிஞரை உரிமைகள் விழையவும் செய்யும் மக்கள் மரபு ஒன்று அவ் வியக்கங்களிலிருந்தே முதன் முதல் தோன்றியது. காலச் செலவில் பெரும் பேரரசனின் படிவம் பிலிப்பு ஒகத்தசிடமிருந்து நெப்போலியன் அளவிற்கு மாபெரும் அளவினதாய் உயர்ந்து வளர்ந்து விடுகிறது. அது (பெரும் பேரரச னின் படிவம்) பிரான்சிய வரலாற்றில் மீதூர்ந்துள்ளது.”*
இவை, பிரான்சிய வரலாற்று ஆசிரியர்களுள், தத்துவத்துறையில் அதிக மேம்பாடுடைய ஒருவனின்" வார்த்தைகளாகும். எம். சோசல் கூறுவது
* ஐரோப்பாவும் பிரான்சியப் புரட்சியும்-அல்பேட்டு சோரல்.

பிரான்சின் ஆக்கம் 37
விவாதத்திற்கிடமற்ற உண்மை. தியூத்தோனிக்குக் கோட்பாட்டுப் புலவர்கள் சாளிமெனப்பற்றிக் கூற இகழ்ச்சியாக மறுக்கலாம். பேரரசனின் பெயரை 'கா' என்ற எழுத்துடன் எழுத்துக்கூட்டுமுறுதியுடையராக இருக்கலாம். ஆனல் இவை சோாலினது கூற்றின் உண்மையைச் சிறிதளவும் பாதிக்கமுடியாது. அம் மரபு, வரலாற்றைப் பொறுத்தவளவில் பயனற்றதாயிருக்கலாம். ஆனல் அரசிய லில் அதன் முக்கியமும் தகுதியும் குறையமாட்டா. ஒடர் நதிமுதல் அத்திலாந் திக்குச் சமுத்திரம்வரையும், பிானிசு மலைமுதல் தானியூப்பு நதிவரையும், தைபர் நதிக்கப்பாலிருந்து ஆங்கிலேய கால்வாய்வரையும் ஆட்சிசெய்த மகா சாள்சு தியூத்தோனிக்குப் பேரரசனயிருந்திருக்கக்கூடும். இது சிக்கலான, விவாதத்துக்கிடமான, ஒரு பிரச்சினையாகும். பிரான்சிய மக்கள் பல ஊழிகளாக இப்பெரும் பேரரசனைப் பிராங்கியரின் அரசனுக மாத்திரமன்றி தங்களின் அரச ணுகவும் கொண்டனர் என்பதே போதுமானது. உரோனிலந்திலும் இரைனிலந் கிலும் குடியிருந்த மக்களினது நிலைமாருத உடைமைப் பொருளாக இருந்தது போல, சீன் நதிப்பள்ளத்தாக்கிலும் இலுவார் நதிப் பள்ளத்தாக்கிலும் கரொன் நதிப்பள்ளத்தாக்கிலும் குடியிருந்த மக்களினது நிலை மாருத உடைமைப் பொருளாக, கணக்கற்ற சந்ததிகாலம் அவன் பேரரசின் மரபு இருந்திருக்கிறது. இவ்வகையான மரபுபற்றி நாம் விரும்பியபடி சண்டையிடலாம். அது பயனற்ற தாகும். மரபு நிலைத்திருந்திருக்கிறது; பூட்கைக்கு உயிர்ப்பு ஊட்டியிருக்கிறது ; அது பேராசையை எழுப்பி, வலிமையளித்திருக்கிறது. அதை எமக்களித்த இறந்தகாலம், மங்கலானதும் வாதத்திற்கிடமானதாயுமிருக்கலாம்; எனினும், அது சுட்டிக்காட்டும் எதிர்காலம் எய்தக்கூடியதாயிருக்கலாம். 1810 ஆம் ஆண்டில் நெப்போலியன் செயலளவில் அதை உண்மையாகவே ஈட்டினன். அவன் தன் கருத்திலும் பிரான்சியர் கருத்திலும் புதிய சாளிமேனுனன். உண்மையாகவே அவன் மேலைப்புலப் பேரரசனுயிருந்தான்.
முதலாம் நெப்போலியனுக்கு முன்னரோ பின்னரோ பிரான்சை ஆட்சி செய்த வன் எவனும், சாளிமேனின் மரபைப் பின்பற்றவோ, இக்காலப் பிரான்சின் எல்லைகளைத் தானியூப்பு நதிவரையாயினும் ஒடர் நதிவரையாயினும் விசாவிக் கவோ, முயற்சி செய்யவில்லை. இாைன் எல்லைப்புறமோ பிறிதொரு அலுவலா கும். அது ஒவ்வொரு அரசனதும் தெளிவான பேராசையாயிருந்தது. அப் பேராசை ஒவ்வாததொன்றன்று. பிரான்சை ஆட்சிசெய்தவர் எவரும் அக்குறிக் கோளைக் கைவிட்டிருக்க முடியாது.
எனினும், சாளிமேன் இறந்தபின்னர் பல நூற்ருண்டுகளாகப் பாரிசுத் தலைவர் கள், உண்மையாகவே, பிரான்சின் அரசர்களாகத்தானும் உரிமை கொண்டாட முடியவில்லை. அந்த உரிமையை முற்முக மெய்ப்பிக்க முடியுமுன்னர், பிரான்சின் பெயரளவினனை அரசனுக்கும் கரோலிங்கியன் பேரரசின் மேற்குப் பாகத்தைத் தங்களுக்குட் பங்கிட்டுக்கொண்ட, வல்லமையுள்ள மானியக்காரர்களுக்குமிடை யில், ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் நிலைத்த போராட்டம், நடைபெற, வேண்டியதாயிற்று.

Page 27
38 பிரான்சின் ஆக்கம்
அந்தப் போராட்டத்தின் வரலாறு இடைக்காலப் பிரான்சின் வரலாருகும். எனவே இந்நூலின் எல்லைக்குப் புறம்பானதாகும். ஆனல், பிரான்சு என்னும் பெயரால் அமைவாக அழைக்கத்தக்க, புவியியல்-அரசியல் Զ-Ժ5ւնւյգ- ஐரோப்பா விலே தோன்றிய கட்டங்களைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுவது ஏற்புடைய தாகும்.
உரோமானிய கோல்
உரோமர் காலத்திற் கோல் என்ற பெயரால் வழங்கப்பட்ட பகுதிபற்றி நாம் இங்கு கருதவேண்டியதில்லை. கோல் பண்டைய உரோம வரலாற்றிற்குரியதே யன்றி, இக்காலப் பிரான்சிற்குரியதன்று. கோல் நான்கு நூற்முண்டுகளுக்கதிக மாக உரோமப்பேரரசின் ஆதிக்கத்தின் கீழிருந்ததென்று கூறுவதே போது மானது. உண்மையிற் பிரித்தானியாவும் சில நூற்றண்டுகளே உரோமப் பேரரசின் ஆதிக்கத்திலிருந்தது. இரு நாடுகளுக்கும் உரோம் வலிமையுள்ள அரசாங்கத்தையும் ஒழுங்கான பாலணத்தையும் அளித்தது. ஆனல், பிரித் தானியா ஒருபோதும் முற்முகவோ அடிப்படையிலோ உரோமானிய மயமாக வில்லை. ஆனல் கோல் உரோமானியமயமாயிற்று. வடமேற்குக் கோடியிற்றவிர, கெல்திக்கு நாகரிகம் முற்முய் அழிக்கப்பட்டது. உரோமானிய ஆட்சி, நலஞ் செய்கிறதாகவும் அமைதிவாய்ந்ததாயுமிருந்தது. கோல்வாசிகள் தலத்தன்னுண் மையைப் பெரும்பான்மையும் கைவிடவில்லை. கோல்மக்களுள் விழுமியோர் உரோ மானிய மூப்பவையில் இடம்பெற முயலவும் சில வேளைகளில் இடம்பெறவும் அனு மதிக்கப்பட்டனர். நாட்டுப்போாளர் மன்றங்கள், ஒகத்தசு என்பவனல் இலையன் சிற் கூட்டப்பட்டன. எனினும் மொழியிலும், சட்டத்திலும், அரசியல் நிறுவனங் களிலும், சமூகவழக்குக்களிலும், நிலவாட்சியிலும், விவசாய முறைகளிலும், கைத்தொழில் அமைப்பிலும், கல்வியிலும், வரிமுறையிலும், வியாபாாத்திலும்சுருங்கக்கூறின், நாகரிகச் சாதனங்கள் எல்லாவற்றிலும்-கோல் உரோமின் கருத்துக்களையும் செயல்முறைகளையும் ஏற்றுக்கொண்டது. ஒரு பொதுவான இறையின் கீழும் ஒருமுகப்படுத்திய பாலனத்தின் கீழும் கெல்திக்கு குலத்தவர் முதன்முறையாக ஐக்கியம் பூண்டு, முதன்முறையாக அரசாங்கம், சட்டம் என்பனவற்றின் கருத்தை உயர்வாக மதித்தார்கள். மாசேல்சு, நாபொன், இலை யன்சு, நீம், ஆவின்யோன், காக்காசோன் இன்னபிற தெற்கேயுள்ள பெரிய நகரங்கள் வியாபார மையங்களாயின. பள்ளிக்கூடங்கள் தாபிக்கப்பட்டன : நூல்நிலையங்கள் நிறுவப்பட்டன; சிறந்த நினைவுச்சின்னங்கள் கட்டியெழுப்பப் பட்டன. கோவில்கள், மாளிகைகள், மிதிவட்ட அரங்கங்கள், கட்டுக்கால்வாய் கள் ஆகியன இப்பெரிய உரோமானிய மாகாணத்தினது பொருள் வளத்திற்கும் கலைஞானத்திற்கும் சான்று பகர்ந்தன. கிரேக்கப் பண்பாண்டின் மையமாக அதென்சின் இடத்தை மாசேல்சு அடைந்தது. உரோமானிய ஆள்வோரையும் உரோமானிய வியாபாரிகளையும் பின்பற்றிக் கிறித்த மதத் தூதுவர் வந்தனர். உரோமப் பேரரசின் கட்டுக்கோப்பிலும் பார்க்க, உரோமன் திருச்சபையின் கட்டுக்கோப்பு நிறைவு குன்றியதன்று. கோல்நாட்டினர் உரோமானியராக

பிரான்சின் ஆக்கம் 39
மாறிய தோடமையாது கிறித்தவர்களாகவும் மாற்றப்பட்டனர். உரோமானியப் பேரரசு சகல செழிப்புடனும் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளாகக் கோல்நாட் டில் நிலைத்திருந்தது (கி. மு. 50-கி. பி. 250). அக்காலப்பகுதியில் நாட்டில் அமைதி நிலவியது.
தியூத்தோனியரின் வெற்றி (481 ஆம் ஆண்டளவில்)
அடுத்த கட்டத்திற் குறிப்பிடத்தகுந்தது தியூத்தோனியரின் வெற்றியாகும். இரண்டாம் நூற்றண்டின் நடுப்பகுதிவரையில் மிலேச்சர்களின் நெருக்கத்தைக் கோல் நாட்டினர் உணரத்தொடங்கினர். ஆனல், ஒருநூறு ஆண்டுகளாகப் படை யெடுக்கும் தியூத்தோனியர் எதிர்த்து நிறுத்தப்பட்டனர். மூன்மும் நூற்முண் டின் நடுப்பகுதியிலிருந்து உரோமப் பேரரசு தீவிரமாக நலிவடையத் தொடங் கியது. ஐந்தாம் நூற்முண்டினிறுதிக்கு முன்னர் அதன் அதிகாரம் முடிவெய்தி யது. உரோமானியப் பேராசின் பின்னர் தியூத்தோனியர் பேரரசு கோலில் தோன்றிற்று. இங்கிலந்திலும் இதே நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனல் அதன் விளைவுகளோ பெரிதும் வேறுபட்டிருந்தன. தியூத்தோனியரின் படையெடுப்புக்கு இருநூற்றண்டுகளின் பின்னர் பிரித்தானியா இங்கிலந்து எனும் பெயரைப் பெற்றது. அதே போன்ற ஆனல் குறுகிய முறையின்பின்னர் கோல் உரோமானிய மயமாகவே நிலைத்திருந்தது. சட்சனியரும் ஆங்கிலரும் உரோம நாகரிகத்தைத் துடைத்தெறிந்துவிட்டனர். குளோவிசு என்பான் மீதும் அவனைப் பின்பற்றிய பிராங்கியர்மீதும் கோல் குடியினர், உரோமிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கங்களையும், பண்பாட்டையும், மொழியையும் வழிபாட்டையும் திணித்தார் கள். இவ்வேறுபாடான விளைவை விளக்க ஒரேயொரு எடுத்துக்காட்டை எடுப் போம். தென் பிரான்சிலுள்ள பெரு நகர்கள் உரோமர் காலந் தொடக்கம் தொடர்ந்த வரலாறும், இடைவிடாத பதிவேழிம், தடைப்படாத நாகரிகமும் உடையன. ஓர் ஆங்கில நகரைப் பற்றித் தானும் இவ்வாறு நிச்சயமாகக் கூற முடியாது. யோக்கு பாது, கொல்செற்றர், செற்றர் எனுமிடங்களிலும் வேறிடங் களிலும் உரோமானிய பண்டை நாட் சின்னங்கள் உண்டு. இந்நகரங்களில் ஒன்றி லேனும் உரோமானிய ஆட்சியாளர் திணித்த குடிமை அமைப்பு இன்று இல்லை. கெல்திக்கு இனத்தைச் சேர்ந்த பிரித்தானியர் முற்முக அழிக்கப்பட்டனர்; அல்லது, தங்களை வென்ற சட்சனியரிடமிருந்து ஆங்கிலரிடமிருந்தும் தாய் நாட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்த பழக்கவழக்கங்களேயும் மொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
சாளிமேன் குலமுறையினரின் வீழ்ச்சியிலிருந்து உரோமப்பேரரசின் வீழ்ச் சியை வேறு பிரிக்கும் ஐந்நூறு ஆண்டுகளைப்பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை. எனினும் இக்காலப்பகுதியில் நிரந்தா முக்கியத்துவமுடையனவும் புறக்கணிக்க முடியாதனவுமான இரண்டொரு முக்கிய நிகழ்ச்சிகளிருக்கின்றன.

Page 28
40 பிரான்சின் ஆக்கம்
வேடன் பொருத்தண்
இவைகளில் முதலாவது வேடன் பொருத்தனையாகும். இப்பொருத்தனை நியதி
களின்படி பிராங்கிய பேரரசு, மகா சாள்சின் வழித்தோன்றலாகிய பத்திமான் உலூயியின் புதல்வர்களுக்கிடையில், இறுதியாகப் பிரிவினை செய்யப்பட்டது. இந்த ஒழுங்கின்படி, பிானிசுக்கப்பாலிருந்து இக்காலப் பிலாண்டேசு வரையும் நீண்டிருக்கும் மேற்குத்துண்டைச் சாள்சும், தைபர் நதியிலிருந்து இாைன் (உவேசர்நதி வரையும் என்றும் கூறலாம்) ஆற்றுமுகம் வரையும் பரந்துள்ள ஒடுக்கமான நெடும்பகுதி உலதயருக்கும், இாைன் நதிக்கும் ஒடர்நதிக்குமிடை யேயுள்ள கிழக்குப் பாகம் உலூயியிக்கும் சேரவேண்டியனவாயின. இக்காலப் பிரான்சையும் இக்காலச் சேர்மனியையும் பெரும்பாலும் ஒத்த-ஆனல் உரோனி லந்து இரைனிலந்து எனும் இடை இராச்சியத்தால் பிரித்துப் புறம்பாக்கப் பட்ட-இரு இராச்சியங்களை இங்கே முதன் முறையாகக் காண்கிருேம்.
870 ஆம் ஆண்டில் நிறைவேறிய இடைக்காலப் பிரிவினையை நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஆனல் 887 ஆம் ஆண்டில் நிறைவேறிய பிரிவினையின் விளைவாக இத்தாலி எனும் நான்காம் இராச்சியம் தோன்றியது. மேற்கு இராச்சியமாகிய கரோலிங்கியா, முன்னிருந்ததுபோலவே தொடர்ந்து இருந்தது. ஆனல் கீழைத் திசை இராச்சியமாகிய தியூத்தோனிய இராச்சியம் உலதாாங்கியா எனப்படும் இாைனிலந்தை ஈட்டியமையாற் பெரிதாக்கப்பட்டது. இப்போது இத்தாலி யின் மேற்கெல்லை அல்பிசுமலையாகும். ஆனல் கீழ்த்திசையில் அதுஎத்திரியாற் றிற்குக் கடற்கரையின் வட கீழ்ப் பாகத்தை உள்ளடக்கியிருக்கின்றது. பேகண்டி இராச்சியம் உரோனிலந்தை எல்லையாகக் கொண்டு குறைக்கப்
•[تی ہ-LLلL
பெரிதாக்கப்பட்ட தியூத்தோனிக்கு இராச்சியத்திலிருந்து மேற்கிராச்சிய மாகிய கலோலிங்கியா தெளிவாக வேருகியிருக்கின்றது. இக்கட்டத்தில் அதைப் பிரான்சென்று கூறத்தொடங்குவோமா?
நாம் அப்பெயரை வழங்கலாம். ஆனல் அப்பதம் ஓர் இராச்சியத்தையன்றி ஒர் கோமகவுரிமையையே குறிக்கின்றதென்பதையும், உண்மையில் இலுவார் நதிக்கும் சீன் நதிக்குமிடைப்பட்ட ஒரு நிலக்கீற்றையே அப்பதம் குறிக்கின்ற தென்பதையும் நாங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
பத்தாம் நூற்முண்டின் முடிவுக்கும் பதினைந்தாம் நூற்முண்டின் முடிவுக்கு மிடைப்பட்ட காலத்தில் பிரான்சு என்னும் இக் கோமகவுரிமை படிப்படியாக
இக்கால இராச்சியத்தின் அளவிற்கு விரிவடைந்தது.

பிரான்சின் ஆக்கம் 41
காபெற்றியரின் முடியாட்சி (987-1828)
சாளிமேனின் நேரடியான வழித்தோன்றலாகிய ஐந்தாம் உலூயி 987 ஆம் ஆண்டில் மரணமாக, உயர்தர விழுமியோர் பிராங்கியக் கோமகனன இயூ காபெற்று என்பானைத் தங்கள் அரசனகத் தெரிவு செய்தார்கள். பின்னைய கரோலிங்கரின் வலிமையற்ற ஆட்சியின் கீழ் அதிகாரம் பெற்ற பல உயர்தர விழுமியோரில் இயூ காபெற்றே ஒருவனவான். வேடன் பிரிவினையின் காலந் தொடங்கிப் பிரான்சு நாடானது நிலமானிய ஆட்சியறவுக்கு இசையானது. நாட்டின் பலவீனத்தை வாய்ப்பாகக்கொண்டு, கந்தினேவியக் கடற்கொள்ளைக் காரர் இங்கிலந்துக்குள் நுழைந்தது போலப் பிரான்சினுள்ளும் பலமுறையும் புகுந்து, முடிவிற் பிரான்சிய நிலத்திலே அவர்கள் நிரந்தரமாக நிலையூன்றினர். இதன் பயணுக நோமண்டி எனும் கோமகவுரிமைக்கு அடிகோலினர்கள். சீன் நதியின் கீழ்ப் பள்ளத்தாக்கில் வடநாட்டார் குடியேறினமையால், இயூ என்பானைப் பிரபுவாகக்கொண்ட ஆட்சிப்பகுதி பெரிதும் அளவிற்குன்றியது. ஏனெனில் பிரான்சுக் கோமகவுரிமையிலிருந்தே நோமண்டிக் கோமகவுரிமை வகிர்ந்தெடுக்கப்பட்டது. அக்கோமகவுரிமையிலிருந்தே, அஞ்கு, மேன், சம்பெ யின் என்னும் மாகாணங்களும் வகிர்ந்தெடுக்கப்பட்டன. ஆனல் இயூவுக்கு நட்டஈடு கிடைத்தது. இனிமேல் அவன் ஓர் அரசன். யாருக்கும் கீழ்ப்பட்டவன் அல்லன். வரையறுக்கப்பட்ட பிரான்சியக் கோமகவுரிமையின் நேரடியான தலைவனுக மட்டுமே இருந்தாலும் பிலாண்டேசிலிருந்து பிரனிசுமலைக்கப்பாலும், அத்திலாந்துக்குச் சமுத்திரத்திலிருந்து யூராமலைவரையும் அகன்றிருந்த நிலப் பகுதிகளின் மானியமேலாட்சிக் காரனுமாயிருந்தான். அவனும் அவன் வழித் தோன்றலரும் பிரித்தனிக்கோமகவுரிமைமீது மிக ஐயப்பாடான மேலாண்மை மாத்திரமே செலுத்தினர். பிரித்தனியின் கோமக்கள் நோமண்டியிலிருக்கும் வலிமைபொருந்திய அயலார்களின் மேலுரிமைக்குப் பத்திமை செலுத்தவேண்டி யிருந்தனராதலால் அதனைச் செலுத்தியும் வந்தனர். பிரான்சிய முடிக்கு நோடி ԱյIr&#; கீழ்ப்பட்டவர்களுள் மிகவும் வலிமை படைத்தோர், பேகண்டி, நோமண்டி, அக்குவித்தேன் என்னும் மாகாணங்களின் கோமக்களும், அஞ்கு, பிலாண்டேசு, தூலூசு, சம்பெயின் என்னும் பகுதிகளின் பெருமக்களுமாவர்.
அடுத்த ஐந்நூறு ஆண்டுப் பிரான்சிய வரலாறு, வலிமை படைத்த இம்மானிய சிற்றரசுகள் பிரான்சிய அரசாங்கத்துடன் ஒன்ருய்ச் சேர்க்கப்பட்டதைப்பற்றிய வரலாறுகும். பிரான்சின் ஐக்கியத்திற்கும் பெருமைக்கும் இன்றியமையாத இவ் வருஞ் செயலானது முடியின் அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தின் காரணமும் விளைவுமாகும். முடியாட்சியே பிரான்சுக்கு ஆக்கந்தேடிற்று. நெருக்கமாக அமைக்கப்பட்ட மானியக் கோமகவுரிமைகள், மாகாணங்கள் ஆகியவற்றி லிருந்து தன்னுள் ஒன்றுபட்ட, ஒருமுகப்படுத்திய அரசை முடியாட்சி ஆக்கி யமைத்தது. அது ஒரு ஐக்கியம் பூண்ட நாட்டை ஆக்கியதோடமையாது, பிரான்சிய நாட்டினத்தையே தோற்றுவித்தது.

Page 29
42 பிரான்சின் ஆக்கம்
முடியாட்சி வலிமைப்படுத்தப்பட்டமை காரணமாகப் பிரான்சு ஆக்கப்பட்ட தாயின், பிரான்சு ஆக்கப்பட்டமையால் முடியாட்சியின் அதிகாரம் அதிகரித்து உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரு முறைகளும், ஒன்றையொன்று தழுவி, ஒன்றுக்கொன்று வலியூட்டின. இப்போது பிரான்சிய முடியாட்சியின்
வளர்ச்சியைப்பற்றி ஆராய்வாம்.
மானியமுறைமையும் முடியும்
பிரான்சிய வரலாற்றைப் படிக்கும் ஓர் ஆங்கில மாணவன் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாட்டை அவதானிக்கத்தவறமாட்டான். நோமன் அரசர்களும், அஞ்சிவன் அரசர்களும் ஆங்கில மக்களுக்கு ஆற்றிய சேவைகளை நேர்மையான குறைநிறையாய்வாளன் எவனும் பாராட்டத் தவறமாட்டான். நோமன் வெற்றி யின் குழ்நிலைகள், வென்றவரின் சிறப்பியல்பு, முந்திய பிளந்தாசனரின் பாலனச் சீர்மை ஆகியவற்றினல், எங்கள் அரசியல் மலர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே, அதிக வலிமை படைத்த முடியாட்சி நிலைநாட்டப்பட்டது. பதின்மூன்ரும் நூற்முண்டு அரசியலமைப்பில் நாட்டின் ஐக்கிய உணர்ச்சி வெளியானமைக்கு நாங்கள் முடியாட்சியின் அதிகாரத்திற்கே கடப்பாடுடையேம்.
இந்த வெளிப்படையான கடனிருந்தபோதும், இங்கிலந்தை ஆக்குவதில் முடியே முக்கியமான காரணியாயிருந்ததென எவரும் கனவிலும் நினைக்க மாட்டார்கள். அம்முறையைத் தீவிரப்படுத்தி உறுதிப்படுத்த வேறு பல விடயங் கள் துணைபுரிந்தன. இதற்கெதிர்மாருக, பிரான்சில் முடியே நிச்சயமாக முக்கிய காரணியாயிற்று. அரசனுக்கும் மக்களுக்கும் மானியப் பிரபுவே பொதுவான பகைவனைன். இங்கிலந்திலோ எல்லாவகுப்பினரும் முடிக்கெதிராக ஐக்கியப் பட்டனர். இங்கிலந்திற் பாராளுமன்றம் மூலமும், பிரான்சில் தங்கள் முடி மன்னன் மூலமும் நாட்டுமக்கள் தங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தினர். பிற நாட்டுத் தலையீடுகளிலிருந்து இங்கிலந்து விடுபட்டிருந்மையினல் இவ்வேறுபாடு மேலும் வலியுறுத்தப்பட்டது. அரசியல் ஒழுங்கின்மை தலைகாட்டுங் காலங்களில், ஆங்கிலேய மக்கள் முடிக்கெதிராகத் தங்கள் சுதந்திரங்களை வற்புறுத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். பிரான்சில் அப்படியான வாய்ப்பைப் பயன்படுத் தினல், நாட்டின் சுயவாட்சியை இழக்கவேண்டி நேரிடும். சுயவாட்சியைப்பேண, அரசியற் சுதந்திரம் என்னும் இன்பப் பொருளை அவர்கள் விடவேண்டிய தாயிற்று. ஆகவே முடியின் நலன்களும் நாட்டின் நலன்களும் ஒன்ருகவே கருதப்பட்டன.
முடியின் வெற்றிக்கு வேறும் முக்கியமான காரணங்கள் உண்டு. காபெற்றுக் குலம் திறனுடைய ஆள்வோரை ஒருவர் பின் ஒருவராக நாட்டுக்கு ஈந்ததென்ற உண்மை மிக முக்கியமானது. அவர்களில் பிலிப்பு ஒகத்தசு (1180-1223), ஒன்ப தாம் உலூயி (உலூயி 'அடிகளார்') (1223-70), * அழகனன' நான்காம் பிலிப்பு (1285-1914), ஆகிய மூவரும் இடையூழியில் தோன்றிய, மிகவும் அறிவுக்கூர்மை

பிரான்சின் ஆக்கம் 43
யும் சாதுரியமுமுடையவர்களுள் வைத்து மதிப்பிட வேண்டியவர்களாவர். முந்திய வமிசத்தினரிலும் பார்க்க அளவிட முடியாத வாய்ப்புக்கள் இந்த அரசர் களுக்கு இருந்தன. பிரான்சிய முடி இறுதியில் நிச்சயமாக மரபுரிமை உடைய தாயிற்று. தடியன் சாள்சின் முடிநீக்கற் காலம் தொடக்கம் (1887) இயூ கா பெற்று அரசெய்திய காலம்வரையும், கொள்கை முறையிலும் செயல்முறை யிலும், அரசு, தேர்வுரிமை சார்ந்ததாயிருந்தது. கரோலிங்கிய அரசர்களில் ஒரு வஞன உலொதயர் என்பான் (1354-86) கடைசியாசனுவான். இவன் ஒருவருக் குப் பின் பட்டம் பெறுவோனை அவன் முன்னேன் உயிரோடிருக்கும் காலத் கிலேயே தெரிவு செய்து முடிசூட்டும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தான். இவ் வழக்கத்தைக் காபெற்றியர் பின்பற்றினர். ஆனல் மரபுரிமைத் தத்துவம் தேர் வுரிமைத் தத்துவத்திலும் தீவிரமாக வலுவடைய, பிலிப்பு ஒகத்தசு அரசெய்து முன்பே (1180) அவ்வழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுவது அளவிற்கு மீறிய தெனக் கருதப்பட்டது. அக்காலப் பகுதியில் முடியாட்சியானது தெளிவாகவும் முடிவாகவும் மரபுரிமை சார்ந்ததாயிற்று.
சிலுவைப்போர்கள்
திருச்சபையுடன் நட்புறவு செய்தமையால் முடியாட்சியின் வலிமை மேலும் பலமடைந்தது. இந்நட்புறவு பல்வேறு வழிகளிற் செயலாற்றியது. ‘தெய்வசமா தானம்' என்பது நிறுவப்பட்டமையால், தனியாரின் போர்கள் பரவுவதும் நிலை நிற்பதும் ஓரளவிற்குக் குறைந்துவிட்டன. பல அருள்வீரச் சபைகளின் தாபனத்தினதும் அபிவிருத்தியினதும் விளைவாக மானிய சமூகத்தின் பழக்க வழக்கங்களில் மிக நிதானமான சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டன. ஆனல் சிலுவைப்போர்களோ மானியவிழுமியோர்களின் பலத்தை வற்றச் செய்தன. ஒருபுறம் சிலுவைப்போர்கள், வலிமையுள்ள மானியச் சிற்றரசர்களின் சத்தி களைத் தூர நாட்டுப் போர்த் தொழிலுக்குத் திருப்பி, அவர்களின் உயிரையும் செல்வத்தையும் மொத்தமாகத் தியாகஞ் செய்யுத் தூண்டின. மற்ருெருபுறம், அவை, மிக நுட்பமான முறையிலே மானியமுறையின் முழு மேற்கட்டுமானத் தையுந் தாங்கும் அக்திவாரங்களை அரித்துவிட்டன. அவைகள் புதிய, பெரும் பாலும் புரட்சிகரமான கருத்துக்களைப் புகுத்தின; அவை வியாபாரத்துக்கும் கல்விக்கும் ஊக்கம் அளித்தன; வரிமுறையிற் புதிய முறைகளை அவசியமாக்கிப் புதிய வகுப்பினரை முக்கியமானவர்களாக்கின. சுருங்கக் கூறின் அவை LDTao?u முறை நிறுவனத்திற்கும் மானியக்காரருக்கும் அவர்களின் செல்வத்திற்கும் சாவு மணி அடித்தன. மானியமுறை, சிலுவைப்போரின் பின்னர், முறிந்து தேய்ந்த, அடிப்படை தகர்ந்த தோற்றத்துடன் காட்சியளித்தது; முடியாட்சியோ மிகுந்த அதிகாரத்துடனும், மிகுகிப்படுத்தப்பட்ட தன்மதிப்புடனும் தோன்றி யது. புதிய வகுப்பினர் தங்கள் தற்காப்பிற்கும் தங்களை ஊக்கப்படுத்தற்கும் முடியை எதிர்பார்த்தனர். புலவர்களும் வியாபாரிகளும் ஒருங்கே அரசனின் சகாயத்தைக் கோரினர். இவ்வண்ணம் முடியாட்சி மானிய விழுமியோருக்கு எதிராக, வியாபார அபிவிருத்தியிலும் நகர்களின் வளர்ச்சியிலும் புதிய நட்
பாளரைக் கண்டுகொண்டது.

Page 30
44 பிரான்சின் ஆக்கம்
உரோமன் சட்டம்
இன்னும் வேமுெருவழியில் வேத்தியல் அதிகாரம் பெருகுவதற்குச் சிலுவைப் போர் துணைபுரிந்தது. இயசுத்தினியனின் கோவையை மதிக்கும் புத்துணர்ச்சி யுடனும், உரோமானியரின் சட்ட மூதுரைகளை ஒப்புக் கொள்ள மிகுந்த ஆயக் தத்துடனும், சிலுவைப் போர்வீரர்கள் கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து தங்கள் நாடு திரும்பினர். பிரான்சிய அரசர்கள் கிடைத்த வாய்ப்பை விரைவிற் பயன் படுத்தினர். சென் உலூயி சட்டத்தொகுப்பைப் பிரான்சிய மொழியில் மொழி பெயர்ப்பித்தான். உரோமானியரின் சட்டமூதுரைகளைப் பயன்படுத்தியும் திருந்திய சட்ட நடைமுறைகளை ஆதரித்தும், மானியத் தத்துவங்களுக்கும் முறைகளுக்கும் தொடர்ந்து, ஒன்றன்பின் ஒன்முக, மிகு இடர் விளைவித்தான். தனியார் போர்செய்யும் உரிமையைக் கட்டுப்படுத்தினுன் , தனியார் நாணயங் களை வெளியிடும் சிறப்புரிமையை ஒழித்தான். சில நிலமானிய முறைக்குட்ப டாத வரிமுறைகளை விதித்தான் ; மானிய முறையிலடங்காத படைகளைத் கிாட்டினன். அது முதற்கொண்டு பிரான்சிய அரசன் வெறுமனே ஒப்பாருள் முதல்வோனக இருக்கவில்லை; மானியமுறைக்கு உட்பட்டோரின் மேலாண்மை யாளன் மாத்திரமல்லன் ; ஆளெல்லே, வரிமுறை, சட்டம் ஆகியவற்றில் அவன்
ஒருண்மையான இறையாவான்.
இப்புதிய இறைமைக்கு இரு புதிய நிறுவனங்கள் மிகு வலிமையுடன் துணை புரிந்தன. பாரிசுப் பாராளுமன்றமும், குடித்திணைமன்றமுமே இந்நிறுவனங் களாகும்.
பாரிசுப்பாராளுமன்றம்
பாரிசுப் பாராளுமன்றமெனக் கூறுவது ஆங்கிலேயருக்கு ஒரு தவமுன கருத் தைக் கொடுக்கும் ஒரு பட்டமாகும். அது தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்ட ஒரு மன்றம் அன்று. அதன் கடமைகள் ஆங்கிலப் பாராளுமன்றத்தின் கடமைகளுக்கு ஒத்தவையுமன்று. ஆரம்பத்தில் அரசமன்றத்தினின்றும் தோன்றி, இங்கிலந்திலுள்ள அரசமன்றத்தைப்போல், வரி, பாலனம், நீதிமுறை ஆகியவற்றிற்குரிய கடமைகளை நிறைவேற்றியது. ஆங்கிலமன்றத்தைப்போல், அது அரச ஆட்சிப்பகுதியிலுள்ள மானியச் சிற்றரசர்களையும் மதத்தவரையும், அரசின் உயர்ந்த அதிகாரிகளையும் கொண்டிருந்தது. எப்படியாயினும், பிலிப்பு இலெபெல் என்பான் 1302 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு ஓர் ஒழுங்கான யாப்பை அளித்து, அதை ஓர் உச்ச நீதி மன்றமாக அமைத்தான். அதன் நிதி, பாலனம் ஆகியவற்றிற்குரிய கடமைகள் தெளிவாக வேறு குழுவினர்களுக்குக் கொடுக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் கடமைகள் கண்டிப்பாக நீதிமுறைச் சார்பான அலுவல்களுக்குள் மாத்திரம் எல்லைப்படுத்தப்பட்டன. சிறப்பான சிற்றரசர்கள் இம்மன்றில் சமூகமளிப்பது நிறுத்தப்பட்டது. இவர்களின் இடங் களைப் பயிற்றப்பட்ட சட்ட வல்லுநர்கள் நிரப்பினர். இவர்களும், மாபுரிமை

பிரான்சின் ஆக்கம் 45
யான குழுவினராகி, அங்கிதரித்த விழுமியோர்களென, சமூகபாலனத்திற்குரிய பதவணியில் ஒரு முக்கிய அமிசமாக அமைந்தனர். இடையூழியில் சட்டவாணர், பான்களினதும் திருச்சபையினதும் வலிமையை அடக்க முடிக்குத் துணைபுரிந் தனர். பதினேழாம் நூற்முண்டில் அவர்கள் அரசியற் கடமைகளிற் பங்குபெற விரும்பி, முடியின் இணையில் ஆற்றல் மீது தடை ஏற்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள்முயற்சி தோல்வியடைந்தது. என்ருலும் அங்கிதரித்த விழுமியோர் தங்கள் சிறப்புரிமைகளைப்பற்றி விடாப்பிடியோடும், மிகுந்த பழைமை பேணும் மனநிலையோடும், அமைச்சர்களதும் அரசர்களதும் சீர்திருத்த முயற்சிகளுக்கு இடர் நிரம்பிய தடைகளை ஏற்படுத்தினர்.
குடித்திணைமன்றம்
மற்ற நிறுவனம் குடித்திணைமன்றமாகும். அழகன் பிலிப்பு 1. காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பாரிசுப் பாராளுமன்றமன்றி குடித்திணை மன்றமே உண்மை யில் ஆங்கிலப் பாராளுமன்றத்துக்கு ஒப்பானதாயிருந்தது. அது பதினன்காம் பதினைந்தாம் நூற்ருண்டுகளில், இங்கிலந்திலுள்ள பாராளுமன்றத்திற்குச் சற்றுங் குறையாத ஒரு நிலையைப் பிரான்சிய வரலாற்றில் எய்தியிருந்தது போலத் தோன்றிற்று. ஆனல் அந்நிலையை அது ஒருபோதும் உண்மையில் எய்த வில்லை. ஒரு மத்திய பிரதிநிதித்துவக் குழுவானது ஒரு முகப்படுத்தப்பட்ட முடி யாட்சியைக் கட்டியெழுப்புதற்கு எவ்வாறு உதவிற்று என்பதைக் காட்டுதற்கே குடித்திணைமன்றம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஆங்கிலேயருக்கு இக்கூற்று முன்பின் முரணுகத் தொனிக்கலாம். இங்கிலந்தில் விழுமியோரும் குரிசில்களும் (நகர மூப்பர்களும்) கோட்டங்களின் வீரப் பெருந்தகைகளாற் சேர்த்து இணைக் கப்பட்டு, யாவரும் ஐக்கியமாக முன்வந்து அரசனை எதிர்த்து நின்றமையால், ஆங்கிலப் பாராளுமன்றம் முடியாட்சியின் அதிகாரத்தைத் தடைசெய்வதிற் சித்திபெற்றதென்பதை, அவர்கள் மறந்து விடுவதே அதற்குக் காரணமாகும். ஆங்கில தனக்காரர் வகுப்புக்கு இணையான வகுப்பொன்றும் பிரான்சிலில்லே. குரிசில்கள், மரபாலும் இயல்பு உணர்ச்சியாலும் முடியாட்சியின் நட்பாளராவர். தகர்த்தெறியும் படை மானிய சில்லோராட்சியின் ஆதிக்கத்தை அழிக்கும் வண்ணம் முடியாட்சி தங்களைச் சாதனங்களாகப் பயன்படுத்துவதை இவர்கள்
ஒப்புக்கொண்டனர்.
ஆள்புலத்திாட்சி
மானிய முறையின் தகர்த்தெறியும் தன்மை தவிர்க்கமுடியாதது. முடியின் போக்கோ மையம் நாடுவதாயிற்று. மானியத்தத்துவம் வென்றிருக்குமாகில், சேர்மனியைப்போலப் பிரான்சும் செயலளவில் சுயாதீனமான ஒரு தொகை அரசுகளை உள்ளடக்கியிருந்திருக்கும். ஒருமுகப்படுத்தப்பட்ட, ஐக்கியம் பூண்ட நாட்டை அமைத்தலே முடியின் வெற்றி என்பதன் கருத்தாகும். அக்குறிக் கோளை எய்த, பதினன்காம் பதினைந்தாம் நூற்முண்டுகளில் கைவரப் பெற்ற

Page 31
46 பிரான்சின் ஆக்கம்
ஆள்புல வல்லிணைப்புக்கள்போலத் துணை புரிந்தது பிறிதொன்றில்லை. இவ்வகை யில், பிலிப்பு ஒகத்தசின் ஆட்சியைப் போலப் (1180-1223) பயனளித்த வேறு ஆட்சியுமில்லை. எமியேன், வேமண்டோய் ஆகிய மாகாணங்கள் 1183 ஆம் ஆண்டிலும், வலோய் மாகாணம் 1185 ஆம் ஆண்டிலும் ஆட்சிப் பகுதியுடன் சேர்க்கப்பட்டன. இன்னும் மிக முக்கியமானவை, குறித்த ஆட்சியின் பிந்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வல்லிணைப்புக்களாகும். 1152 ஆம் ஆண்டில் என்றி பிளந்தாசனற்று, பிரான்சைச் சேர்ந்த ஏழாம் உலூயி திருமணம் விலக்கிய, அகுவிதேனைச் சேர்ந்த எலியனரைத் திருமணஞ் செய்திருந்தான். அத் திருமணத்தினுல் பிரான்சிய அரசு இரு கூறுகளாகி, பிரான்சிய அரசனின் உண்மையான ஆட்சிப் பகுதி ஒடுங்கிய வசதியற்ற ஒரு கீற்று நிலமாக இழிந் தது. தன் சொந்த உரிமையால், அரசனுன இரண்டாம் என்றி நோமண்டியின் கோமகனும், அஞ்கு, மேன் ஆகிய மாகாணங்களின் பெருமகனுமாயிருந்தான். எவியனரைத் திருமணஞ் செய்ததின் பயணுக அகுவிதேன் பெருங் கோமகவுரி மைக்கும், தூலூசு மீது ஓரளவு எதிர்க்கப்பட்ட உரிமைக்கும், அடுத்த உரிமை யாளனுஞன். அவன் மகன் இயெபிரிக்கும் பிரித்தனியின் உரிமையாளிக்குமிடை யில் நடந்த திருமணத்தினல் அக்கோமகவுரிமையும் அவன் அதிகாரத்திற்குட் பட்டது. கிராம்பியன் மலைகளிலிருந்து பிானிசு மலைகள்வரை அவன் தொடர்ந்து ஆட்சி செலுத்தினன். சோல்வேக்குடாவிலிருந்து பிசுக்கேவிரி குடா வரையுமுள்ள கடற்கரைப் பகுதி அவனிடமே இருந்தது. பெயரளவில் மாத்திரம் மேலாட்சியாளனை பிரான்சிய அரசனின் அதிகாரம் ஒரு நிழலுரு வத்திற்குக் குறைக்கப்பட்டது.
எப்படியாயினும் பிலிப்பு ஒகத்தசினுட்சியின்கீழ் நாடு மீண்டும் நன்னிலை யடைந்தது. அவனுடைய வடகீழ்த்திசை ஈட்டங்கள் ஏலவே குறிப்பிடப் பட்டன. யோன் இலாக்கிலந்து ஆட்சிசெய்த பாளையங்களும் (1202-5) உரிமை யாளசற்றவாயின. இவ்வழியில் நோமண்டியும், மேனும், அஞ்குவும், துரே னும் பிரான்சிய முடியுடன் சேர்க்கப்பட்டன. ஐம்பது ஆண்டுகளின் பின்னர் (1258) ஆங்கில அரசனை மூன்ரும் என்றி இந்த ஆள்புலங்களை ஒன்பதாம் உலூயியிக்கு முறைப்படி ஒப்படைத்தான். தெற்குப் பாகத்திலும் சில பிரதான மான ஈட்டங்களை அடைந்த தனிச் சிறப்பும் ஒன்பதாம் உலூயியிக்கு உரியது (1226-70). 1229 ஆம் ஆண்டில் நாபொனும், 1270 ஆம் ஆண்டில் அளலுTசு எனும் மாகாணமும் முடியைச் சேர்ந்தடைந்தன. ஏறத்தாழ ஒரு நூற்முண் டின் பின்னர் (1361) சம்பானும் இவைகளோடு ஒன்று சேர்க்கப்படவே, பிரான் சிய முடிக்குரிய நாடு முதன் முறையாக உலொரேன் வரை அகன்றிருந்தது.
நூற்றண்டுப்போர்
பதின்மூன்ரும் நூற்முண்டிற் பிரான்சிய இராச்சியம் மிகு விரைவாக வளர்ச்சி
யடைந்தது. ஆனல் பயங்கரமான சோதனைக் காலம் இப்போது நெருங்கியது.
1828 ஆம் ஆண்டில் காபெற்றியரின் நேரடியான வழிமரபு அடியோடற்றுப்

பிரான்சின் ஆக்கம் 47
போனது. ஒன்பது ஆண்டுகளின் பின்னர் பிரான்சிய, ஆங்கிலேய வரலாற்றில் * நூற்முண்டுப்போர் ' எனக் கூறப்படும் குருதி வெறியுள்ள, வெற்றி தோல்வி தெளிவில்லாத, நீடித்த போர் ஆரம்பமாயது. ap
அந்தப் போரின் முதல் விளைவு, முந்திய ஒன்றரை நூற்முண்டுகளாக இயங்கிவந்தனவாக நாம் கண்டு கொண்ட இரு முறைகளையும் மொத்தமாகத் தடுப்பதேயாகும். 1180 இற்கும் 1328 இற்கும் இடையிற் பிரான்சு, நாம் கண்டு கொண்டபடி, மானியச் சிற்றரசுகளின் கூட்டுத்தொகுதி நிலைமையிலிருந்து நெருங்கிய, ஓரினமான நாட்டின முடியாட்சியாக மாறியது. வலுப்பெற்ற பிரித்தனிக் கோமகவுரிமை இன்னும் செயலிற் சுயேச்சையாகவே யிருந்தது ; இதனினும் கூடிய வலிமையான அக்குவிதேன் கோமகவுரிமை இன்னும் இங்கி லந்து முடியுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனல் பிரான்சிய அரசன் தன் அரச அதிகாரத்தை நிரந்தரமான அரசியல் தாபனங்களின் பரந்த அடிப்படைமீது நிலைநாட்டியபின்னர், பிரான்சிய இராச்சியம் ஆள்புலத்தைப் பொறுத்தவள வில் மிகப் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தது. அழகன் பிலிப்பின் முடி யாட்சிக்கும் பதினன்காம் உலூயியின் முடியாட்சிக்குமிடையில், முறைப்படி ஒரு படி மாத்திரம் இருப்பதாகத் தோற்றியது. மூன்றரை நூற்ருண்டுகள் இடைக் காலம் இருந்தது. வலோய் அரசர் அரசெய்தியமை (1328) பிற்போக்கைத் தொடங்கியது. ஒரு நூற்முண்டுவரை மாத்திரமன்றி, ஏழாம் சாள்சு அரசெய் தும் வரையும் (1422-61) நாட்டின அபிவிருத்தியின் அறுந்த இழைகளை நாம் பொறுக்கியெடுக்கக் கூடியதாயிருக்கவில்லை.
இதற்கிடையில் நூற்ருண்டுப் போரின் ஒரு சிறப்புக்கூறு நம்முடைய கவனத் தை ஈர்க்கின்றது. அதை இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையே நடந்த நாட் டினப் போர் எனக் கொள்ளாது, ஓர் உள்நாட்டுப் போரெனவே கொள்ளவேண் டும்; முந்திய மானிய ஆட்சிமுறையில் மிகவும் தெளிவாகத் தெரிந்த சிறப் புக்கூருகிய 'தனியாரிடை நடந்த போர்களின் தொடர்ச்சியும் விரிவுமாகும் அது. ஒலியன்சுக் குலமுறையினருக்கெதிராக, அக்குவிதேனின் ஆங்கிலக் கோமகன் பேகண்டியின் கோமகனேடு நட்பாயிருந்தபொழுது, மிகச் சிறப்பாக இந்த உண்மையானது புலப்பட்டது. 1860 ஆம் ஆண்டில் முதல் கட்டத் தை முடிவிற்குக் கொண்டுவந்த பிறிற்றினி பொருத்தனைப்படி அக்குவிதேன் கோமகன் இறையடக்கக் கடப்பாடுகள் யாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்டான். மூன்மும் எட்டுவேட்டு இந்தக் கோமகவுரிமையையும், நோமன் மரபுரிமையிற் கடைசியில் எஞ்சியிருந்த கலேயையும் கிசுநெசையும் பொந்தியூவையும் முழு இறைமையுடன் தன்னிடத்தே வைத்திருந்தான். ஆனல் அவன் வெற்றி அதிக காலம் நிலைத்திருக்கவில்லை. சில ஆண்டுகளிற் கலே, போடா, பெயோன் என் ணும் கடற் கரை நகரங்களைத் தவிர, அவன் பிரான்சிலுள்ள தன் ஆங்கில ஆட் சிப் பகுதிகள் யாவற்றையும் இழந்து விட்டான். பின்னர் நற்காலம் கிரும்ப, ஐந்தாம் என்றி என்பான், இழந்த இடங்களைவிட அதிகமான இடங்களை மீண் ம்ெ அடைந்தான். துருவாப் பொருத்தனையின்படி (1420) நோமண்டி, அக்குவி

Page 32
48 பிரான்சின் ஆக்கம்
தேன் கோமகவுரிமைகள் மாத்திரமன்றிப் பிரான்சிய முடியும் ஆங்கில அரசன தாயின. ஐந்தாம் என்றியின் முடிசூட்டலும் மங்கலவிழாவும் பாரிசில் கொண்டாடப்பட்டமை, பிரான்சினது தாழ்வின் அகட்டைக் குறித்தது. இத் தாழ்வுக்குக் காரணம் பிறநாட்டினர் எய்திய வெற்றி மாத்திரமன்று; உண்ணுட் டுப் பிளவுகளும் இதற்குக்காரணமாகும். திரும்பவும் ஆங்கிலேயரின் வெற்றி நீடிக்கவில்லை. ஆரும் என்றியின் ஆட்சியில், கலே தவிர, பிரான்சிலுள்ள எல்லா ஆங்கில ஆட்சிப் பகுதிகளும் பறிபோயின.
நூற்ருண்டுப்போர் பிரான்சிய வளர்ச்சியின்மீது மிகுதியானதும் நிரந்தச
மானதுமான விளைவை உண்டாக்கியது.
ஆணிலத்தளவில், பிரான்சிய இராச்சியம், அக்குவிதேன் என்னும் பெரிய
கோமகவுரிமையைத் தன்னுடன் நிலையாக இணைத்தமையாற் பெரிதாகியது. அரசியலமைப்பளவில், மானிய உரிமை கொண்டாடுதல் இறுதியாக அழிக்கப் பட்டது , ஈற்றில் முடியாட்சி வெற்றியடைந்தது.
அந்த நீண்ட போர்க்காலத்தின் பொழுது பிரான்சு, உண்மையாகவே மிகத் துன்புற்றது. நிலம் பாழாக்கப்பட்டது; விழுமியோன் விழுமியோனுடனும், மாகாணங்கள் மாகாணங்களுடனும், நகர் நகருடனும், கோட்டை கோட்டை யுடனும் போர் செய்தன. ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு தனி நலத்தின் நற் பேறும் புகழும் சிதைக்கப்பட்டன. கிரேசி, புவட்டியே, அசன்கூர் என்னும் இடங்களில் ஆங்கிலேய வீரவேளாண்படையினர் பிரான்சிய அறவீரரைத் தாக்கியதிலிருந்து பிரான்சிய விழுமியோர் எக்காலமாவது மீண்டும் உய்வு பெற வில்லை. நகர்கள் அரசியற் சுதந்திரத்திலும் வியாபாரத்திலும் நட்டமடைந்தன. திருச்சபை, பாராளுமன்ற நீதிபதிகள், பாரிசுப்பல்கலைக்கழகம், வியாபாரிகள், வழக்கறிஞர், புலவர், குடியானவர் உட்பட்ட எல்லோரும் ஒரு பொது அழிவிற் சிக்குண்டனர். உள்நாட்டு எதிரிகளின் அழிவால் அரசியலில் வலுவடைந்தும், பல பாளையங்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டமையாலும் வெளிநாட்டார் மீது வெற்றியடைந்தமையாலும் ஆள்புலம் பெரிதாக்கப்பட்டும், முடியாட்சி மாத்திரமே அப்பாழ்நிலையிலிருந்தும் குழப்பத்திலிருந்தும் தப்பிப் பிழைத்தது.
எப்படியாயினும், வெற்றிமுறையும், தன்மயமாக்கல் முறையும் இன்னும் நிறை வாகவில்லை. இருபெரும் கோமகப்பிரிவுகளான பேகண்டியும் பிரித்தனியும் எஞ்சி யிருந்தன.
பேகண்டி இராச்சியங்கள்
"பேகண்டி ' எனும் பதத்தை, ஒருமலைவு பற்றிக் கொண்டிருக்கின்றது.
அதைத் தெளிவாக்குவது முக்கியமாகும். பேகண்டி என்னும் இராச்சியத்தி
லிருந்து பேகண்டி என்னும் கோமகவுரிமையை வேறுபடுத்தி அறிந்துகொள்ள

பிரான்சின் ஆக்கம் 49
வேண்டும். ஆள்சு அல்லது பேகண்டி இராச்சியம், அதன் எல்லைகள் ஓயாது மாறிக்கொண்டிருந்தபோதிலும், உரோனிலந்துடன் ஒத்திருந்தது. உசோனி லந்து என்பது உரோன்நதி, சோன்நதி, அல்பிசு மலைகள், மத்தியதரைக்கடல், என்பவற்றிற்கிடையேயுள்ள தரைப்பாகமாகும். இந்த இராச்சியம் மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பண்டைய உரோம மாகாணம் அல்லது புரொ வான்சு ஆகிய தென் பேகண்டியும் இலையன் நகரத்திற்கு வடக்கேயுள்ள யூசாப் பிரதேசமாகிய வட பேகண்டியும் அப்பிரிவுகளாகும்.
பிரான்சிய பேகண்டி மாகாணத்தோடு ஒத்திருந்த கோதடியோர், யோன், இலுவார், அன் ஆகிய மாகாணங்கள் உட்பட்ட பழைய பேகண்டிக் கோமகவுரிமை தொல்பழைமையான காலத்திலிருந்து பிரான்சின் பாளையமாக இருந்துவந்திருக்கிறது.
பழைய இராச்சியத்தின் தென்பாகமாகிய புரொவான்சை, பதினன்காம் பதினைந்தாம் நூற்முண்டுகளிற் பிரான்சு, படிப்படியாக, தன்னுடன் ஒன்ருக்கிக் கொண்டது. இவ்வண்ணம் இலையன் என்னும் பெருநகர் 1310 ஆம் ஆண்டில் அழகன் பிலிப்பினுற் வலிந்திணைக்கப்பட்டது. வியன் என்னும் இளவரசுரிமை 1343 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கி ஒன்றுசேர்க்கப்பட்டது; 1448 ஆம் ஆண் டில் வியன் நகரமும், 1446 ஆம் ஆண்டில் வலஞ்சு என்னும் மாகாணமும், கடைசி யாக 1481 ஆம் ஆண்டில் புரொவான்சு எனும் மாகாணமும் வலிந்திணைக்கப் பட்டன. ஒரு காலத்தில் சுயாதீனமாயிருந்த உரோமன் மாகாணத்தில் எஞ்சிய பாகங்களாகிய ஆவின்யோன் நகர், வேனன் மாகாணம், ஒரேஞ்சுச் சிற்றரசுரி மை ஆகியன இன்னும் எஞ்சியிருந்தன. இவைகள் புரட்சி ஆரம்பமானபின்னரே (1791) பிரான்சுடன் ஒன்முக்கப்பட்டன. இவ்வளவும் இராச்சியத்தின் தென்பாக
மாகிய புரொவான்சைப் பற்றியனவாகும்.
பேகண்டிப் பலத்தீன் கோட்டம், பிரான்சிய கொந்தே, மேற்கு சுவிற்சலந்தும் வடசவோயும் உட்பட்ட சிறிய பேகண்டி ஆகிய இவ்வுட்பிரிவுகளாக வடபகுதி பிரிக்கப்பட்டுள்ளது. மூன்ரும் நெப்போலியன் சவோயை ஈட்டியபின் (1860) பின்னையது சுவிற்சலந்துக்கும் பிரான்சுக்குமிடையிற் பிரிவினை செய்யப்பட்டது. இதைப்பற்றி இனிமேல் அக்கறை எடுக்கவேண்டியதில்லை.
பலத்தீன் கோட்டமெனுஞ் சுயாதீனக்கோட்டம் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, பலர் கைக்கு மாறி, ஈற்றில் (1674) அபிசுபேக்கர்களிடமிருந்து பதினன்காம் உலூயியால் வெற்றிகொள்ளப்பட்டது. அது பிரான்சிய மாகாண வரிசையில் யூசா என்னும் பெயருடன் ஓரிடம் வகித்தது. அது முதன்முறையாகப் பிரான்சின் கிழக்கெல்லைப்புறமாயது.
எப்படியாயினும், சுயாதீனமாகாணத்தைக் கைப்பற்றல் விரும்பத்தக்கதா யினும் அப்போது அநாவசியமாயிருந்தது. இது பிறநாட்டினரிடமிருந்து வென் றெடுக்கப்பட்டது. பிரான்சிய அரசன் தன் நாட்டிலே எப்போதாவது தலை

Page 33
50 பிரான்சின் ஆக்கம்
வணுயிருக்க வேண்டுமானுல் இந்தக் கோமகவுரிமையைத் தன்னுடையதாக்கு வது உள்நாட்டுத் தேவையாகும். 1861 ஆம் ஆண்டில் நல்வாய்ப்பாக உரிமை யற்று முடியையடைந்த இந்த முக்கியமான பாளையம், 1363 இல் யோன் அரச னல் அவன் மகனுகிய வீரன் பிலிப்பிற்கு மீண்டும் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக, பிலிப்பு பேகண்டியின் வலோய் மரபைச் சேர்ந்த முதற் கோமகனுனன். வலோய் மரபினரின் அதிகாரம் பேகண்டியிற் பதினன் காம் பதினைந்தாம் நூற்றண்டுகளில் வியக்கத்தக்க தீவிரமான வேகத்துடன் அதிகரித்தது. அது ஒரு காலத்தில் பிரான்சிய அரசுகட்டிலிலிருந்த ஆதியான மரபினர்மேல் அதிகாரஞ் செலுத்த முடியாவிட்டாலும் போட்டியிடவா வது பயமுறுத்தியது. 1469 ஆம் ஆண்டில் துணிகர விரன் பிலிப்பு பிலாண்டே சைச் சேர்ந்த மாகாற்றைத் திருமணஞ் செய்தான். அவளுடன் பிலாண்டேசு, ஆட்டுவா, இரெதல், ஒசர், நெவேர் என்னும் மாகாணங்களையும் பெற்றன். இவை யாவும் பிரான்சிய முடியின் நிலமானியங்களாகும். அவன் மேலும் பேகண்டி யைச் சேர்ந்த சுயாதீனமான மாகாணத்தையும் பெற்ருன். இம்மாகாணம் பேரா சின் பாளையமாகும். குறித்த நூற்முண்டுப் போரின் பிற்பகுதியில் இங்கிலந்தின் கட்சியைச் சேர்ந்த பிரதியுபகாரமாக அறகப்பொருத்தனையினல் முக்கிய நக ாங்களாகிய பூலோனி, பொந்தியூ, எமியேன், வேமாந்தோய் என்பனவற்றைப் பெற்றன். பிலிப்பின் மகஞன தடியன் சாள்சு சிறிது காலம் பேகண்டியை ஐரோப்பிய வல்லரசுகளிலொன்முக்கினன். அவன் இறக்கக் (1477) கோமகவுரி மை வட கிழக்குப் பிரான்சில் அண்மையில் பிலிப்பு ஈட்டிய பாகங்களுடன் மீண்டும் பிரான்சைச் சேர்ந்தது. இவ்வண்ணம் பேகண்டியக் கோமகவுரிமை மீண்டும் எக்காலத்தும் வேமுகாதபடி பிரான்சுடன் திரும்பவும் ஐக்கியப்படுத் தப்பட்டது.
பிரித்தனி
பேகண்டிக் கோமகவுரிமை மீண்டும் வெற்றிகொள்ளப்பட்டபின்னர் பெரிய மானிய வேளிர் நாடுகளில் ஒன்று மாத்திரம் வெற்றி கொள்ளப்படவிருந்தது. பிரித்தனிக் கோமகவுரிமையின் சுதந்திரத்தைப்பேணத் தனியான முறையிலும் அரசியற் சார்பிலும் அரகனைச் சேர்ந்த பேடினந்தும் இங்கிலந்தின் அரசனன ஏழாம் என்றியும் சிறப்புக் கடப்பாட்டுக்கு உட்பட்டவர்களாயிருந்தனர். 1488 செத்தெம்பர் மாதத்தில் அவன் மரபின் கடைசி ஆணுன பிரித்தனியின் கோமகன் பிரான்சிசு, தான் இறக்கும்பொழுது அக்கோமகவுரிமையைத் தன் மகள் ஆன் என்பவளுக்கு விட்டுச் சென்ருன். 1490 ஆம் ஆண்டில் கோமகள் அபிசு பேக்குக் குலமுறையினனை மாச்சிமிலியனை உரிமைச்சாட்டு மூலம் திருமணஞ் செய் தாள். அவ்வாண்டிலேயே மாச்சிமிலியன் தன் மனைவியின் மரபுரிமையைப் பாது காக்கும் வண்ணம் இங்கிலந்தினாசன் என்றியுடனும் அரகனின் அரசன் பேடி னந்துடனும் ஓர் உடன்படிக்கையை நிறைவேற்றினன். ஆனல், 1491 ஆம் ஆண் டில் அந்த இளங் கோமகள் பிரான்சின் அரசனன எட்டாம் சாள்சைத் திரு

பிரான்சின் ஆக்கம் 5
மணஞ் செய்து, சுயநலம் பெரிதுங்கொண்ட தன் பாதுகாப்பாளர்களை மலைக்க வைத்தாள். இவ்வண்ணம் கடைசிப் பெரிய மானிய சிற்றரசு திட்டமாக
வும் இறுதியாகவும் முடியுடன் வலிந்திணைக்கப்பட்டது.*
பிரித்தனியின் வல்லிணைப்புடன் பிரான்சிய ஆள்புலங்கள் செயலளவில் ஐக்கி யம் பூண்டதைப் பற்றிய நீண்ட வரலாறு ஈற்றில் முடிவுற்றது. பிானிசு மலையின் எல்லைப்புறத்தைச் சற்றுச் சீர்ப்படுத்த வேண்டியிருந்தது. பாண் இராச்சியத்தை அல்லது நாவாரின் வடபாதியைப் பிரான்சிய முடியுடன் சேர்த்த ரான்காம் என்றியாலும், பிரனிசுப் பொருத்தனையின்படி உறுாசிலோன், சேர்தானி என்னும் பகுதிகளை ஈட்டிய பதினன்காம் உலூயியினலும் ஓரளவு அது செய்து முடிக்கப்பட்டது. இரு நூற்ருண்டுகளின் பின்னர் (1859) மூன்ரும் நெப்போலி யன் இத்தாலியின் காத்திலிருந்து ஒசுத்திரிய விலங்கை நீக்கும் முயற்சியில் விற்றர் எமானுவேலுக்கு வேண்டிய காலத்தில் உதவி புரிந்தான். அவ்வுக விக்காகச் சவோயையும் நீசையும் பெற்றன். பிரான்சின் ஈட்டங்களைப் பற்றி-பிரதானமாக அல்சேசையும் உலொரேனையும் பற்றி-பின்வரும் அத்தி
யாயங்களிற் கூறவேண்டும்.
மதச் சீர்திருத்தம்
பதினைந்தாம் நூற்ருண்டின் முடிவில்-முக்கியமாகப் பிரான்சிய அரசர்களால் -மானிய சில்லோராட்சியினல் வெளிப்படையாகின்ற மையம் நீங்குந் தன்மையையும் தகர்த்தெறியும் தன்மையையும் முடியாட்சியைப் பிரதிநிதியாக வுடைய மையம் நாடும் தத்துவம் வென்றமையால், பிரான்சிய நாடு ஆக்கப் பட்டது. ஆனல் மானியமுறை எளிதில் மடியவில்லை. பதினரும் நூற்முண்டுத் திருச்சபைக்குரிய சச்சரவில் விழுமியோருக்குத் தங்கள் உரிமைகளிற் சிலவற் றை முயற்சி செய்து பெறும் வாய்ப்புக்கிடைத்தது. அவர்கள் அவ்வாய்ப்பைப் பொருட்படுத்தாது விடவில்லை. பிரான்சிய மானியமுறையைப்போல, பிரான்சிய புரட்டெசுத்தாந்தமும் தகர்த்தெறியும் தன்மையை முக்கியமாகவுடையது. புரட்டெசுத்தாந்தர்களிலும் கத்தோலிக்க விழுமியோர் 'தாயகப்பற்றுடையோ சாவர். புரட்டெசுத்தாந்தரும் கத்தோலிக்கரும் தங்கள் நாட்டைவிடத் தங்கள்
1. இவ்வதிகாரத்தின் இறுதிக் குறிப்பைப் பார்க்க.
4-B 24178 (5.160)

Page 34
52 பிரான்சின் ஆக்கம்
வகுப்புச் சிறப்புரிமைகளைப் பற்றியே கூடச்சிந்தித்தார்கள். கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் அந்நிய வல்லரசுகளுடன் இணக்கப்பேச்சுக்கள் நடத்தி னர். அதிற் சித்தியடைந்திருந்தால், பெருமுயற்சியாற் புதிதாகத் தாம் பெற்ற பிரான்சிய ஐக்கியத்தைக் குலைத்திருப்பார்கள். இவ்வாருக, முடியாட்சி சார் பிலும் கத்தோலிக்க மதம் சார்பிலும் மாத்திரமன்றிப் பிரான்சிய நாடு சார்பி லூம் முடியரசு போராடியது. நன்சுக் கற்பனை (1598) இயூசனருக்கு அளித்த சிறப்புரிமைகள் மதச் சுதந்திரத்தைப் பொறுத்தவளவில் மட்டுமீறியன வென்பது வெளிப்படை. இதனல் அவர்கள் அரசுக்குள் அரசாக நிலைநாட்டப் பட்டனர். இராச்சியத்தின் அரசியல் ஐக்கியம் இவ்வழி பெரிதும் பாதிக்கப்
பட்டது.
காடினல் இரிசிலூ இயூசனரின் அரசியல் வெற்றியிலிருந்து எழக்கூடிய ஆபத்துக்களைத் தீவிரமாக உய்த்துணர்ந்தான். இாக்கமற்ற கடுமையுடன் அவர் களின் பிரிப்புளப் பேராசையை நசித்தான்; அவர்களின் மதக் கருத்துக்களுக்கு நன்மதிப்பளித்தான்; அவர்களின் குடியுரிமைகளைச் சிற்றிழையளவும் நெறிதவ முது பாதுகாத்தான். ஒரு சுதந்திரமான அரசியல் அமைப்பை நிலைநாட்ட
அவர்கள் கோரிய உரிமையை மாத்திரமே பலமாய்க் கண்டித்தான்.
இயூசனருடன் நடந்துகொண்ட முறைப்படியே, கட்டுமீறும் தன்மையுடைய மானிய சில்லோராட்சிக் குழுவினருள் எஞ்சியோரோடும் நடந்து கொண்டான். விழுமியோரின் சமூக சிறப்புரிமைகளில் அவன் தலையிடவில்லை. அவர்களின் உரி மைகள், விலக்குக்கள் யாவற்றையும் நன்கு மதித்தான். ஆனல் பிரான்சைப் பிரித்துக் கூறுகளாக்க வாய்ப்பு இனி எக்காலமும் அவர்களுக்குக் கொடுப்ப தில்லையெனத் தீர்மானித்தான். மாகாணங்களின் ஆள்பதிகளாகக் கடமைபுரிய அதன்பின்னர் அவர்களுக்கு உத்தரவளிக்கப்படவில்லை. அாண் செய்யப்பட்ட அவர்களுடைய கோட்டைகள் அழிக்கப்பட்டன. தனியாரின் போர்களும் நேரிரு வர் அமரும் தடுக்கப்பட்டன. பாலனத்திற்குரிய சகல அதிகாரமும் முடியினதும் வேத்தியல் அலுவலரினதும் கையில் விடப்பட்டது. மத்தியவரசாங்கத்தின் முக வாான (இந்தெண்டன்கள்' என்போர் நீக்கப்பட்ட உயர்குடியாளருக்குப்
பதிலாகத் தலபாலனத்தை மேற்பார்வை செய்ய அனுப்பப்பட்டார்கள்.

பிரான்சின் ஆக்கம் 53
இவ்விடயங்கள் யாவற்றையும் பற்றி விரிவாய் உரைப்பதைப் பிற்போட வேண்டும். எங்களுடைய இப்போதைய நோக்கத்தை நிறைவேற்றப் பிரான்சிய மலர்ச்சியின் பிரதான கட்டங்களைக் குறிப்பிட்டதே போதுமானது. பதினன் காம் உலூயி அரசு கட்டில் ஏறியபோது ஆள்புலவளர்ச்சி நிறைவாயிருந்தது. ஒரு வரிசையான சிறந்த அரசர்கள் ஒருவர்பின் ஒருவராகத் திரட்டி வைத்த செல்வம் நிரம்பிய உரிமைக்குப் பதினன்காம் உலூயி உரிமையாளனனன். அவன் ஆட்சிக்காலத்தில் (1642-1715) பிரான்சு தன் பெருமையின் உச்சநிலையை
அடைந்தது.
குறிப்பு-பிரித்தனியின் கோமகள் ஆனுக்கும் பன்னிரண்டாம் உலூயிக்கும் பிறந்த மூத்த மகளை மணந்த முதலாம் பிரான்சிசால் ஒழுங்கு முறைப்படி 1523 ஆம் ஆண்டில் வலிந்திணைக்கப்படும் வரையும், பிரித்தனி பிரான்சிய முடியுடன் சேர்க்கப்படவில்லை.

Page 35
- “No ----- ~--*-_
ıspırı,Esē, qıloğ 09şI qırĒĢĒ IEĦ I
!39%;sılışılstīs, Lūiss, qıfsırrı) g ፶፯ *** –"騎橙 シሽ‛ 'îዥሄጄy ጌ'፲፫ ዜ፡[ışısraes心斗 *...m) IsūE!]每 력m愿疯目1###fíH3יי лц4+u+пшwaerys:娇 -ș*片“七* Non青藏m'so ış şiir Œņïsẽ/o loもJQB* w*彈 高*) 疆*월m: 확-uqi,-s+&學院 - 5.熙 ġE|非翡和suae:"대구 |-"。シ隠ョ轄****rgu부slig)| 편』■鳞。 5 - *******■ 없- wቭ-nii, 赵sūto o so m 5 h短%"|\^ șoș曹)穆沁”河 爵*就噪而<Ú 闇探R!Ð AÐ驾\s+ sɔn ɑ-\s)与 シ』 km+必心 | , !密|- 唱会 h?-패書員會: 日: **,*영화...E-�� Ďaelaeae,+ış** ÜHT和=e-+e肃此 F& |- |-laes』 『벨 *■ ■ 불!-- |-*: 日n:Tw主神島 |-kmほ|*/)|×以) „o“ZĽ品赏|- *페셜 *****シ应肴。|issae, Laert, 國子5子。+旺)4)!piv
·ī£1ę91] [15] ı sı哈勒峰)嗜碱和확 岛型Īies åŋƐhƐ ***(NoF| 불+J宁威)********,
 
 

அத்தியாயம் ಫ್ರೆ
இசுப்பானிய முடியாட்சி
முக்கியமான திகதிகள்
-
常置直一、
置置凸潭
| ::: ()
置、
芷*壶
『
置盛岛垩
I፥፶...?
Iሳያ',ጃ
直盛岛品一置点罩亭
| երի
W5ü፥
I.5. j.
I£j፬ስኛ
直岛置墅
直品卫、
卫岳直配
置蔷置苗
五品置皇
r
芷鸟
효
置蔷巽
இசுப்பெயினில் விசிகொத்தர். இwப்பெயினேச் சோனகர் வெற்றிகொள்ளல்.
கசனதல் பாராளுமன்றத்திப் பிரதிநிதித்துவம் பெற்ற நகரங்கள். கசுனகலும் இலியோலும் ஐக்கியம் பூணல், பேடினக்கினதும் இசபெலரவினதும் திருமணம். கதைல் இராணியரசு இசபெலா தெரிவுசெய்யப்படல். பேடினந்து அரகனின் முடியைப்பெற்றன். கிரணுடா கைப்பற்றப்படுவதுடன் இசுப்பெயினின் மறுவெற்றி
sopa Torá, (711-1493). பலேரசு என்னுமிடத்திலிருந்து கொலம்பசு தன் முதற் கடற்
பிரயாணத்தை ஆரம்பித்தல். போப்பாண்டவர் ஆரும் அலச்சாத்தரின் கட்டளே. உரசிலோனேயும் சேர்தானியையும் இசுப்பெயின் #ட்டல். காடினல் இமேனேசு கள்கைளின் முதலமைச்சணுதல். கபுசால் பிரேசில்க் கண்டுபிடித்தல். நேப்பின் அரகலுடன் வவிற்கிணேக்கப்பட்டது. இசபெலாவின் மரணம். ஆபிசுபேக்குக் குலமுறையினனை மாபெரும் கோமகன் பிலிப்பின்
II. 5:Tr: இனிப்பானிய நிவார் மாகாணத்தைப் பேடினந்து வெற்றிகொள்னல். பனுமாப் பூசந்தியைப் பல்போaே என்பரன் கடத்தல். பேடினந்தின் மாணம் முதலாம் சாள்சு அரசு எய்தியமையால் இசுப்பெயின் ஐக்கியப்
-أليكس العلا கோட்டெசு என்பரன் மெச்சிக்கோவை வெற்றி கொள்ளல். இசுப்பெயினின் அாசனு ைமுதலாம் சான்சு ஐந்தாம் சான்சு
என்னும் பெயருடன் பேராசனுகத் தெரிவுசெய்யப்படல். மகெலன் என்பான் புதிய இடங்களேக் கண்டுபிடிக்கக் கப்பற்
பிரயாணஞ் செய்தல். மகெலன் பிலிப்பியன் தீவுகளே வலிந்திண்ணத்தல். பேரு எலும் நாட்டைப் பிசாசோ வெர்ஜி கொள்ளல்.

Page 36
56 இசுப்பானிய முடியாட்சி
இசுப்பெயினின் உன்னதகாலம்
பதினமும் நூற்முண்டு, இசுப்பெயினின் உன்னத காலமென அடிக்கடி குறிக் கப்படுவது. இவ்வுரை ஒரளவே ஏற்புடையதாகும். அக்காலப் பகுதியில் ஒரு குறித்த வகையான சிறப்பை இசுப்பெயின் ஈட்டிக் கொண்டமையை மறுக்க முடியாது. ஆயினும், அச் சிறப்பு பெரிதும் தற்செயலாக நிகழ்ந்ததும் அறவே நிலையில்லாததுமாகும். எனின் ஒரளவு மெச்சிக்கோவிலும் பேருவிலும் கோட் டெசு, பிசாரோ என்பார்கள் ஆற்றிய வீரச் செயல்களாலும், ஓரளவு அந்நாடு களின் சுரங்கங்களிலிருந்து அதன் அரசர்களின் களஞ்சியங்களுட் சேர்ந்த ஏராளமான பொன் வெள்ளிச் சரக்குக்களாலும், ஓரளவு இசுப்பானிய படை வீரர்களின் சிறந்த ஒழுங்குப் பயிற்சியினுலும், ஆனல் எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ந்த பல விவாகங்களாலும், ஐந்தாம் சாள்சு என்னும் ஒரு தனி இறையின் செங்கோலின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்ட ஆட்சிப் பகுதிகளின் பிச மாண்டமான சேர்க்கையாலும் இசுப்பெயின் இச்சிறப்பைப் பெற்றது. இவன், தன் தந்தை வழியில் அபிச்பேக்குக் குலமுறையின் முதல்வனன முதலாம் மாச்சிமிலியன் பேரரசனுக்கும் பேகண்டியின் கோமகனும், நெதலந்தின் தலை வனும், துணிகர வீரனுமான சாள்சின் மகளும் உரிமையாளியுமான மேரிக்கும் போன் ஆவான்; தாய் வழியில், அரகனின் அரசன் பேடினந்து, கசுதைலின் இராணி இசபெலா எனும் இரு கத்தோலிக்க இறைகளுக்கும் போனவான் ; மேலும் அவன் ஐக்கியம் பூண்ட இசுப்பெயினின் முதல் அரசனுமாவான்; இரு சிசிலிகளதும் சாடினியாவினதும் அரசனுமாவான்; புனித பேரரசுக் குரிய மும் முடியை, தெரிவுசெய்யப்பட்டபின் அணிபவனனன்; சாளிமேன் தானும் வகித்ததிலும் கூடிய விறமைந்த நிலைமையைச் சாள்சு எய்தினன். இவ் வாருக இசுப்பெயினின் சிறப்புப் பெருமளவிற்கு அதன் அரசனின் சிறப்பி லிருந்து தோற்றியது. எனினும் அவனுடைய பிரமாண்டமான ஆட்சிப் பகுதி கள் யாவற்றிலும் இசுப்பெயினிடமே சாள்சு மிகக் குறைந்த அளவிற்குப் பற்று அறுதியும் பரிவும் கொண்டவனுவான். அவனுக்குச் சொந்தமான நாட்டினமுண் டானல், ஐந்தாம் சாள்சு ஒரு பிளெமிங்கு ஆவன்; பிலாண்டேசு நாட்டிலேயே அவன் கல்வி கற்ருரன். அவன் பழகிய மொழி பிளெமிங்கு ஆகும். ஆனல், சேர் மனியிலேயே அவன் அரசியற் கவனம் முழுவதுஞ் சென்றது. எவ்வாருயினும் செல்வத் தோற்றுவாயாக அன்றி இசுப்பெயின் அவனுக்கு முக்கியமில்லா விடினும், ஒரு கருத்தில், இசுப்பெயினுக்கு அவன் எல்லாமாயிருந்தான். அவனதும் அவன் மகன் பிலிப்பினதும் ஆட்சி (1516-1598) இசுப்பெயினது சிறப் பின் உச்சநிலையைக் குறித்தது.

57.
199uoqfaff roug9ggő, guous
-Hņ951 qaf, gFurā 8.LgI-LggI 199m@@zon@o(o) **ミggs (*)- - soon@figolo 1ņoglgo unsı (g)86.gI-9gg\| govoq'a'ē, ựGIỜ 199ếgsdogsố (z) | Hņķos go zgọề} + g6 I HITŲessi qi??- « (y070 gossoso??? ung) (I) = igoņposmnosiçõj@199 umg) ==**19ழ9ராகுரசிஞ் =** || *9ggI–6IgI olygu? Igo uogfaț¢ © ® 00gr o ugongojqif( g 199 od sing) ‘soygu?1ņoyooLggI-IggI 199 umg) qif} gwuo u sĩ sự, gør og rỡ ươn19qif? I 199ųoosmn(o)rī£§ = unørı(g) &&199Ųo umlyg soo = 199 utng) qif} g ||||-| 4/69ფედ9ჟ019 ựsousog)? 1993ụ91/?sugerito) (prog)q? g为圆• 199 uogfasố f@ ugi 19Igo usqsafoj1991, ogíasēs 1994,ndrag) (z) | Izg I-g6#I1ņ9ų29 gøỗ IGĦI FUQ9 1ĝosĝo?| 69ế ggg I09$ 90.gI yang) igogogrég)&nn@ 9@七194岭崎4日 ***lygio = = ??? urīg) = (z) ugouroes (1) Qigourno ),HT|9,957 smrītosiosẽj (I) = rsē un 19 (z) = rigē) = logjigo urī@s@so |||| டிெதய1991) ogía;õ}| 恒9999岛opě s LȚI #0.gI-s lḥI 9Țg I-61, †I ĝurīg) (g)sou@909$ ugo un(o)gỗ = ?ąfloorbing) கg):44949) ulloŲa 199Ųựrā Ģiņ919 Litto ugf(I) = - qisão g因心迫U195 1991/09Ųi (z) ugon(c) số@șỰ19919 | †g#I–90řI ựơng) igolon-g6#I-IɛɣI Isosso??șurig) = 1çourno quo z @ış»ump = igourng) qisở z filogosong, (t) = \gam gegn gọuan go t199 umg) qiso « 安城洞中心19994可ஜொனுகeருள்qosițioșurip
ựeúmbif® işogiqûremosử qosoqosoqğırış) olęs nntorise@

Page 37
58 இசுப்பானிய முடியாட்சி
இசுப்பெயினின் மலர்ச்சி
உண்மையிற் சாள்சு, முதலாம் சாள்சு எனும் பெயருடன் அரசெய்தும் வரை யும் (1516) இசுப்பெயின் ஓர் ஐக்கியப்படுத்தப்பட்ட அரசாகவில்லை. இசுப் பெயினில் நாட்டின ஐக்கியம் ஏற்படுவதைப் புவியியலின் செல்வாக்குத் தடுத் தமை பற்றி ஏலவே ஓரளவு கூறப்பட்டாயிற்று. அடுத்தடுத்த படையெடுப்பின் விளைவுகளைப் பற்றி இப்பொழுது ஓரளவு கூறுதல் வேண்டும்.
ஆதியிற் படையெடுத்த பினிசியரும் கிரேக்கரும் தென்கிழக்கு, கிழக்குக் கடற்கரைகளிற் குடியேறினர். ஆனல், அவர்கள் இசுப்பெயினின் உட்பகுதிக்குள் நுழையவில்லை. காத்திசினியர், பாசலோன, காத்திசின எனும் இரு பெரிய நகரங் களுக்கு அடிகோவினர்கள். ஆனற் காத்திசினியரின் ஆகிக்கம், மிக்க குறுகிய காலம் மட்டும்-ஏறத்தாழ 30 ஆண்டுகள் மட்டும்-நிலைத்தது. இவர்களின் பின் னர் உரோமரின் ஆதிக்கம் நிலவியது, (கி. மு. 200-கி. பி. 476). படையைப் பொறுத்த அளவில் உரோமர் முற்றன வெற்றி பெற்றனர்; ஆனற் பண்பாடு சார்ந்தவளவில், உரோமிலிருந்து இசுப்பெயின் அடைந்ததிலும் பார்க்க இசுப் பெயினிலிருந்து உரோம் அடைந்தனவே அதிகமாகும். விசிகொத்தர் உரோ மின் பலத்தை அழித்தனர். ஆனல், விசிகொத்தர் காலத்திலேயே இசுப்பெயின் (ஏறத்தாழ 600) கிறித்து மதத்தைத் தழுவிய தெனினும் அவர்களின் இருப் பாட்சி (ஏறத்தாழ 521-710) இசுப்பானிய நிலத்திலோ, மக்களிடத்திலோ சிறி தளவு அடையாளந்தானும் விடவில்லை.
கிறித்து மதத்தைத் தழுவினமையைத் தவிர, எந்த மக்களினது வரலாற் றிலும் சிறப்பானதாகக் கருதற்பாலதும், இடைக்கால இசுப்பெயினின் வரலாற் றில் தீர்க்கமானதுமாய நிகழ்ச்சி யாதெனில், வட ஆபிரிக்காவிலிருந்து வந்த சோனகர் (711-14) இசுப்பெயினை வெற்றி கொண்டமையாகும்.
சோனகரின் வெற்றி
முகமதியரின் இருப்பாட்சி இந்நூலின் எல்லைக்குப் புறம்பானதாகும். இசுப் பானிய வரலாற்றில்அது விட்டுச் சென்ற எதார்த்தமானதும் எதார்த்தமின்றி யதுமான இருவகைச் செல்வாக்கும் மிக்கதாதலின், உயர்ந்த தராதரமுடைய இசுப்பானிய எழுத்தாளன் ஒருவன் கூறியதன் ஒரு சுருக்கமான மேற்கோளை எடுத்துக் காட்டுதல் ஏற்புடையதாகும். “ஒன்பதாம் நூற்முண்டிலிருந்து பதி னோாம் நூற்ருண்டுவரையும், எங்கள் உலக நாகரிகம் இசிலாம் மயமானதாயி ருந்தது. பாத்தாதிலும் கோடாபாவிலும் விஞ்ஞானம், கலை, அரசியல், பண்பாடு, சீர்திருத்தம் எனும் பல்வகை ஒளியுடனும் இசிலாம் பிரகாசித்துக் கொண்டிருக் கையில், கிறித்த உலகம் இருளில் அமிழ்ந்தியிருந்தது. வடஇசுப்பெயின் சிறிய நாகரிக மற்ற இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பிரான்சிய குடியரசுக் குடிப்பதி மொமுெக்கோவிலுள்ள மக்களை இழிவாகக் கருதுவது போல, இவ்

இசுப்பானிய முடியாட்சி 59
விராச்சியங்களையும் கோடாபாவிலுள்ள, வலிமை வாய்ந்த, பண்பாடு பொருந்திய கலிபும் கருதினன். இசுலாமிய இசுப்பெயினில், தத்துவஞானிகள், வானநூல் வல் லுநர், கணக்கியல் வல்லோர், மெய்மையாளர்கள், கவிஞர்கள் வரலாற்ருசிரியர் தோன்றி உலகத்திற்கு உதவினர். ”
இவ்வளவும் முசிலிங்களின் எதார்த்தமான செல்வாக்காகும். அவர்களின் எதார்த்தமின்றிய செல்வாக்கும் முக்கியத்திற் குறைந்ததன்று.
மறு வெற்றி
எட்டாம் நூற்ருண்டிலிருந்து பதினைந்தாம் நூற்முண்டுவரையும், அழையாது நுழைந்த முசிலிங்களிடமிருந்து நாட்டைத் திருப்பி வென்றெடுத்தமை, இசுப் பானிய வரலாற்று மையத்தினூடே செல்லும் இணைப்புத்தொடர்பாகும். அது இசுப்பானிய மக்களின் குணவியல்பு மீது அழிக்க முடியாத ஓர் அடையாளத்தை விட்டுச் சென்றது. பெரும்பான்மையான உழவோர் சிறிது காலத்தின் பின்னர் நிலையான குடி வாழ்வை மேற்கொண்டு, சோனக வெற்றியாளரின் பெரும்பாலும் சமரசமான ஆட்சியை ஒப்புக்கொண்டனர். இதற்கு எதிர்மாமுக, விழுமியோர் நாட்டை முற்முகக் கைவிட்டார்கள்; அல்லது பிானிசு மலைகளிலும் ஆசுத் அாரியன் குன்றுகளிலுமுள்ள மலையாண்களிற் புகலிடம் கண்டனர். வறுமை யாலும் இன்னலாலும் வலுவூட்டப்பட்டு, தங்கள் அரண்களிலிருந்தும் வெளி வந்து, புறச் சமயிகளுக்கு விரோதமாக உலகியல் சார்ந்த சிலுவைப்போர் புரிந்தனர். சிறிது சிறிதாக அவர்களின் முன்னைய நாடு வெற்றி கொள்ளப் பட்டது. இவ்வெற்றி விரைவாகக் கிடைக்கவில்லை அவர்கள் உடோறா நதியைத் தொடுமுன்னர் ஒன்றரை நூற்முண்டுகள் சென்றன. சிலுவைப்போர்வீரர் தேகசு நதி வரை நுழைய 400 ஆண்டுகள் எடுத்தன. தொலேடோ 1085 இலும், இலிசுபன் 1147 இலும் திருப்பிக் கைப்புற்றப்பட்டன. தீபகற்பத்திற் கடைசி யாகவிருந்த சோனக இராச்சியமாகிய கிரனடா 1492 இல் கத்தோலிக்க இறைகளாகிய பேடினந்தினதும் இசபெலாவினதும் ஆட்சியின் கீழ் வெற்றி கொள்ளப்பட்டதோடு, பல ஊழிகாலமாக நடந்த இந்த அருஞ் செயல் இறுதி யாக நிறைவேறியது.
முசிலிங்களுக்கு விரோதமான சிலுவைப்போர் பல நூற்முண்டுகளாக நீடித்த தாயினும், தீபகற்பத்தின் பெளதிக உருவ அமைப்புடன் ஒன்றுசேர்ந்து, நாட்டின் கதியை எக்காலத்திலும் நிருணயித்தது. நாட்டின் இச்சிறு பகுதியோ அச்சிறு பகுதியோ சோனகரிடமிருந்து மீண்டும் பெறப்பட்டது. இதனல் புதிய, சுயேச்சையான இராச்சியங்கள் தாபிக்கப்பட்டன. சுற்றி எல்லைப்படுத்தப்பட்ட
இந்த இராச்சியங்களின் அரசர்களிடம் அதிமான அதிகாரம் கிடையாது. இவர்
மடரியாகா எழுதிய "இசுப்பெயின், பக்கம் 28,

Page 38
60 இசுப்பானிய முடியாட்சி
கள் விழுமியோராலே தெரியப்பட்டவர்கள். செல்வத்தில் விழுமியோரிலும் அதிகம் மேம்பட்டவர்கள் அல்லர். தங்கள் வாள்வலியால் நாட்டைத் திருப்பி வென்ற விழுமியோர் கையிலும், தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகத் தாங்களே வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்ற நிபந்தனைக்கமைய முக்கியமான சிறப்புரிமைகளைப்பெற்ற நகரங்களிலுமே உண்மையான அதிகாரம் இருந்தது.
பாராளுமன்றம்
கசுதைலிலும் அரகனிலும், இன்னும் வேறு சிறிய இராச்சியங்களிலும், பிரதி நிதித்துவ நிறுவகங்களோடு, நகரவைக்குரியவும் உயர் குடிமைக்குரியவுமான சிறப்புரிமைகளும் முன்னரே அபிவிருத்தி செய்யப்பட்டன. முன் 1020 ஆம் ஆண்டிலேயே ஐந்தாம் அல்பொன்சோ, இலியோன் நகரத்துக்கு ஒரு நகர அவை சார்ந்த பட்டயத்தை அளித்தான். 1265 இல் ஆங்கிலப் பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைச் சைமன் தி மொன்போட்டு அழைத்தற்கு ஏறத்தாழ ஒரு நூற்முண்டுக்கு முன்னரே, நகரங்களின் பிரதிநிதிகள், கசுதைலிற் கூடிய (1169) பாராளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தனர்.
பருவத்துக்கு முந்திய வளர்ச்சி நிலைபேற்றுக்கு ஏற்புடைத்தன்று. பதினரும் நூற்ருண்டின் பின்னர் கசுதைல் பாராளுமன்றமோ, அரகன் பாராளுமன்றமோ செயற்படவில்லை. இசுப்பெயினிலுள்ள பாராளுமன்ற நிறுவகங்களின் இந்நவி வுக்குப் பல காரணங்கள் உள; ஆனல், ஒன்று மிகச் சிறப்பாக விளங்குகின்றது. பாராளுமன்ற அமைப்பு, வகுப்பையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. விழுமியோர்களினதும் நகர்களினதும் அளவுமீறிய சிறப்புரிமைகள் அவர்களுள் ஒற்றுமை ஏற்படுவதைத் தடை செய்தன. இதுவுமல்லாமற் குருவாயம் நகரங் களோடாவது விழுமியோரோடாவது சேரமாட்டாது. சுருங்கக்கூறின், அங்கே பாராளுமன்ற ஒற்றுமை இல்லை. அதன் பயனுக விழுமியோருக்கெதிராக நகர் களுடன் கூட்டுறவு செய்தும், விழுமியோருடனுவது, குருவாயத்துடனுவது நகர் களுக்கெதிராகக் கூட்டுறவு செய்தும் படிப்படியாகத் தனது போதாத அதிகாரங்களை மிகைப்படுத்தவும், கடைசியில், ஒருபோதும் உண்மையாக நாட்டுப் பற்றுக்கொண்டிராத பாராளுமன்றம் வீழ்ந்தபின் வரையறை செய்யப்படாத ஒரு தனியாட்சியைக் கட்டியெழுப்பவும் முடியரசுக்குச் சாத்திய
LDITILighl.
பிரான்சிற் போல இசுப்பெயினிலும் பிரதிநிதிக் குழுவைவிட முடியாட்சி உண்மையாகவே முழு நாட்டின் பிரதிநிதியாயமைந்தது. இவ்விரு வகைகளிலும் முடியாட்சி தான் எய்திய வெற்றிக்குத் தகுதி பெருகிருந்தாலும், தம்தம் சுய நலன்களை விருத்தி செய்வதில் உறுதியாய் நின்ற குடித்திணைமன்றும் பாராளு மன்றமும் தாம் தாம் அடைந்த தோல்விக்குப் பூரணமாகத் தகுதி பெற்றனவா யிருந்தன. நகர மூப்பரைப்போற் கோட்ட நீதிமன்றங்களிலே தெரிவு செய்யப் பட்ட கோட்டப் பிரதிநிதிகளான நைற்றுகள் இருந்திருக்காவிட்டால், ஆங்கிலப்

இசுப்பானிய முடியாட்சி 61
பாராளுமன்றமும் இதே போன்ற கதிக்கு உள்ளாகியிருக்கும். உண்மையாகவே இங்கிலந்தில் இன்னுமொரு காரணி செயலாற்றிக்கொண்டிருந்தது. நாட்டின முறைமையிற் சோக் கீழ்த்தரக் குருவாயம் மறுத்ததும், குருமார் கூட்டத்தில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை அவர்கள் விரும்பியதும், ஐயமில்லாது ஆங்கிலப் பாராளுமன்றத்தினது இருமன்ற அமைப்பு வளர்தற்குத் துணை புரிந்தன. ஆனல், அவ்வளர்ச்சியைத் தீர்மானிப்பதும் வேறுபடுத்திக் காட்டுவது மான அமிசம், கீழ்த்தா விழுமியோராகிய கோட்ட நைற்றுகளும் நகரங்களின் பிரதிநிதிகளாகிய நகர மூப்பர்களும் ஐக்கியப்பட்டமையேயாம். இவர்கள் சேர்ந்தே பாராளுமன்றப் பொதுச் சபையை உருவாக்கினர். பிரான்சிலோ இசுப்பெயினிலோ உள்ள பாராளுமன்ற நிறுவகங்களின் வரலாற்றில் இச் சபையை ஒத்த சபை இல்லை."
இசுப்பெயின் வலுப்படுத்தப்படல்
பிரான்சிய முடியரசு பிரான்சைப் பூரணமாக ஐக்கியப்படுத்தியதுபோல, இசுப் பானிய முடியரசு பாராளுமன்றத்திலும் கூடிய நாட்டினச் சார்புடையதாக இருந்தபொழுதிலும், இசுப்பெயினை ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. இசுப்பெயின் அனுபவித்த சிறிதளவான ஒற்றுமைக்கு முடியாட்சிக்கே இசுப் பெயின் கடப்பாடுடையதாயிருந்தது. பதினைந்தாம் நூற்முண்டின் நடுப்பகுதி வரையில் இசுப்பெயினிலுள்ள பல இராச்சியங்களும் கலப்பு மணங்களாலும் படிப்படியாக அடைந்த வெற்றிகளாலும் நான்காகக் குறைக்கப்பட்டன. அவை யாவன, கசு தைல், அாகன், நவார், கிரனடா என்பனவாம். அப்போது கசு தைல், புதிய கசுதைல் பழைய கசுதைல், இலியோன், பிசுக்கே, அசுத்தூரியா, கலீசியா, எசுதுரமதுரை, மேசியா, அண்டலூசியா என்னுமிடங்களையும் தன்னுடன் சேர்த்து ஒன்முக்கிக்கொண்டது. அாகன், கற்றலோனியாவையும் வலன்சியாவை யும் உள்ளடக்கியது. A
1469 இல் அரகன் இராச்சியத்தின் உரிமையாளனன பேடினந்து கசுதைல் அரசனை இரண்டாம் யோனின் மகள் இசபெலாவைத் திருமணஞ் செய்தான். அவளின் சோதானை ஏழாம் என்றி மக்களால் வெறுக்கப்பட்டவன்; அவன் 1474 இல் மாணமாக, கசுதைல் பாராளுமன்றம் அவன் மகள் யோன்னவின் உரிமையை விலக்கி, அப்பதவிக்கு அவளின் மாமி இசபெலாவையே தெரிந்தெடுத் தது. 1479 இல் பேடினந்து, அவன் சோதரன் இரண்டாம் யோனின் பின்னர் அாகன் அரசனுகப் பட்டமெய்தினன். இவ்வாருகக் கிரனடா, நவார் இராச்சியங் களைத் தவிர, இசுப்பெயின் முழுவதும் ஒரு தனி இறையின் கீழ் ஒன்று சேரா விடினும் ஒரு தனிக் குடும்பத்தின் ஆட்சியின் கீழ் ஒன்று சேர்ந்தது. இப் பங்காட்சி சிறப்பான வெற்றியளித்தது. இசபெலா ஆத்மீக சத்தியளித்தாள் ; பேடினந்து மிகச் சிறந்த அறிவுள்ள அரசியலாளன். அவன் மக்கியவலியின்
1. பத்தொன்பதாம் நூற்றண்டு வரையும். முழு விடயத்திற்கும் “மரியற்றின் இக்கால அரசின் இயங்கும்முறை” என்னும் நூலை நோக்குக.

Page 39
62 இசுப்பானிய முடியாட்சி
நூலிற் கூறப்பட்ட இளவரசனின் மாதிரியானவன் எனலாம். 1481 இற் கத்தோ விக்க இறைகள் கிரனடாவிலுள்ள சோனகருக்கு விரோதமான மதப்போரை மீண்டுந் தொடங்கினர். 1492 இல் நாம் ஏலவே கவனித்தது போல் இசுப்பெயினி லுள்ள கடைசி முசிலிம் இராச்சியத்தைத் தங்கள் இராச்சியத்துடன் ஒன்முகச் சேர்த்தனர். 1493 இல் உறுாசிலோனும் சேர்தானியும் பிரான்சின் அரசனுன எட்டாம் சாள்சிடமிருந்து பெறப்பட்டன. 1504 இல், ஏலவே சாடினியாவையும் சிசிலியையும் தனக்குச் சொந்தமாக வைத்திருந்த பேடினந்து, நேப்பிளையும் அவைகளுடன் சேர்த்து, 1512 இல் இசுப்பானிய நவாரையும் ஈட்டினன். இவ் வாருகப் போத்துக்கல் தவிர்ந்த தீபகற்பம் முழுவதும் ஓர் ஆட்சியின் கீழ் ஐக்கியப்படுத்தப்பட்டது. அந்தக் கத்தோலிக்க இறைகள் போத்துக்கல்தானும் எஞ்சிநிற்பதில் எவ்வகையிலும் விருப்பம் கொள்ளவில்லை. அதை முடிவு செய்ய அசாதாரணமான பிடிவாதமானதும், அளவு மீறிய சிக்கலானதுமான ஒரு பூட்கையைப் பின்பற்றினர். முதலாவதாக்த் தங்கள் மூத்த மகள் இசபெலா வைப் போத்துக்கல் அரசுகட்டிலுக்கு உரிமையாளனை அல்பொன்சோ இள வாசனுக்குத் திருமணஞ் செய்து கொடுத்தனர். சந்ததியின்றி அவன் மரணமாக, அவன் தம்பி எமானுவேலை இசபெலா திருமணஞ் செய்தாள். அவன் போத்துக் கலின் அரசனுக 1495 இலிருந்து 1521 வரையும் ஆண்டான். இசபெலாவும் சந்ததியின்றி இறந்தாள். அவள் மரணமாக, அரசன் எமானுவேல் பேடினந்தி னதும் இசபெலாவினதும் இளைய மகளான மேரியைத் திருமணஞ் செய்தான். இத்திருமணத்தாற் பல பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் ஒரு மகளாகிய இச பெலா பேரரசன் ஐந்தாம் சாள்சைத் திருமணஞ் செய்தாள். இவன் கத்தோலிக்க இறைகளின் பேரனும் உரிமையாளனுமானபடியால், 1516 இல் முதலாம் சாள்சு என்னும் பெயருடன் ஐக்கியப்படுத்தப்பட்ட இசுப்பெயினின் முதல் அரச ஞனன். பேரரசன் ஐந்தாம் சாள்சு தன் பாட்டன் பாட்டியின் பிடிவாதத்துக் குச் சமமான பிடிவாதத்துடன் போத்துக்கலைச் சேர்ந்த யோன் இளவரசனுக் குத் தன் மகள் யோன்னவை திருமணஞ் செய்து கொடுத்தான். முடிவில் போத்துக்கலில் ஆண் சந்ததி அற்றுப்போக, 1580 இல் இரண்டாம் பிலிப்பு தன் தாய்வழி உரிமையாற் போத்துக்கலின் அரசனனதும், இந்தக் குலமுறைத் திருமணங்களின் நற்பயன்கள் கைகூடின. எப்படியாயினும் அறுபது ஆண்டு களின் பின்னர், போத்துக்கல் பிரகன்சாவின் கோமகன் யோனை அரசனுகத் தெளிவு செய்தது. இவ்வண்ணம், இன்றுவரையும் அது பேணிவந்திருக்கும் சுய வாட்சியை அது மீண்டும் வற்புறுத்தியது.
பேடினந்தினதும் இசபெலாவினதும் பூட்கை
ஆள்புலத்தை வலுப்படுத்தல் பேடினந்தும் இசபெலாவும் கையாண்ட பூட்கை யின் ஒரு பாகமாக மட்டுமே அமைந்தது. விழுமியோரும் குருவாயமும் நகர் களும் தங்கள் வகுப்பு வாரி நலன்களுக்காக ஆடிய சுயநலவேட்டையிலும் கூடிய மோசமாக மலைத்தொடர்கள் தாமும் இசுப்பெயினைப் பிரித்துவிடவில்லை. உயர் குடியாட்சியின் அளவுமீறி வளர்ந்த அதிகாரங்களைக் குறைப்பதிலும் அவர்

இசுப்பானிய முடியாட்சி 63
களின் அளவு கடந்த சிறப்புரிமைகளை ஒடுக்குவதிலும் இக்கூட்டு இறைகள் முதற் கவனஞ் செலுத்தினர். பாராளுமன்றம் அருமையாகவே கூட்டப்பட்டது. எவ்வித கட்டுப்பாடுமின்றி வேத்தியற் கட்டளைச் சட்டங்கள் பயன்படுத்தப் பட்டன. அரசவைச் சடங்குகளிற் கூடிய அளவு ஆடம்பரம் புகுத்தப்பட்டது. ஆனல் நியாயமான சிக்கனத்தை மேற்கொள்வதால் இறைகள் பாராளுமன்ற வரிமுறையின் உதவியை நாடாது ‘தங்கள் சொந்த வருமானத்திலேயே வாழல் முடிந்தது’. பாராளுமன்ற வைகல்களை நிறுத்தல் வரிமுறைப்பாதிப்பின்மை யிலும் இலாபகரமானது. இசபெலா இறந்தபோது கசுத்தைல் உயர்குடிகள் தங்களின் யாப்புறு சுதந்திரங்களை மீண்டும் வற்புறுத்தவும், தங்கள் சிறப்புரிமை களிற் சிலவற்றையாயினும் மீண்டும் பெறவும் முயற்சி செய்தனராயினும், பேடினந்தும் அவனின் ஆற்றல் படைத்த இமேனேசு அமைச்சனும் தங்கள் விழிப்பினுல் அம்முயற்சியைத் தடுத்துவிட்டார்கள்.
அரசாங்க ஆதரவு இன்றி வலிகுன்றிய உயர் குடியாட்சியின் சிதைவின் மீது தங்கள் பாலன முறையை அமைக்க, புதிய ஊழியிலே தனியாட்சி புரிந்த மன்னர் பயன்படுத்திய புதுமுறை அமைச்சனுக்கு இமேனேசு (1436-1517) ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவான். ஊல்சியைப் போல இமேனேசும் ஒரு தாழ்ந்த குடும்பத்திற் பிறந்து, பேராற்றல்களை இயற் பண்பாகப் பெற்றிருந்தான். இதனுல் திருச்சபையிலும் அரசிலும் மிக உன்னதமான நிலைமையை எய்தினன். இங்கிலந்திலும் பார்க்க மிக வன்மையாக இசுப்பெயினில் விழுமியோர் பலம் பொருந்தியதும் செவ்வனே ஒருமுகப்படுத்தப்பட்டதுமாகிய ஒரு பாலனமானது நிலைநாட்டப்படுவதற்கு எதிராகத் தகர்த்தெறியும் செல்வாக்கைப் பயன் படுத்தினர்கள். எனவே, மானிய உயர்குடிகளின் ஆற்றலை அழித்தல், வேறிடங் களிற் போல இசுப்பெயினிலும் நாட்டின ஐக்கியத்தை எய்தற்கு இன்றியமை யாத முன்னேற்பாடாயது. முடி மட்டும் அதை அழிக்க முடியும்.
பிரான்சிற் பழைய ஆட்சி முறைமை மிகக் கேடான வகையிற் கவிழ்க்கப்பட்ட பின்னர், தனியாட்சி, ஒராசாங்கம் என்ற முறைமையில் வழக்கொழிந்தது. வரலாற்ருசிரியர் அப்போது வழக்கிலிருந்த முறையைப் பின்பற்றி, தங்கள் நாடுகள் ஒவ்வொன்றும் நாங்கள் ஆராய்ச்சி செய்யும் காலப்பகுதியிலுள்ள தனி யாட்சியாளர்க்கு எத்துணைக் கடமைப்பட்டுள்ளன என்பதை மதிப்பிடத் தவறினர். நாங்கள் கண்டுகொண்டபடி, பிரான்சு ஐயத்துக்கிடமின்றி, வலோய், பூபன் குலமுறையினர்களால் ஆக்கப்பட்டது. இசுப்பெயினே அதன் அரசர்களுக்குக் குறைந்த கடப்பாடுடையது. கத்தோலிக்க இறைகளதும் அவர் களின் வழித்தோன்றலாதும் முயற்சியாலல்லாது, இசுப்பெயின் தான் எய்திய இத்துணை ஐக்கியத்தைத் தானும் எப்பொழுதாவது எய்தியிருக்க முடியாது அம்முயற்சிக்குக் காடினல் இமேனேசு பெரிதும் அஃணபுரிந்தான்.

Page 40
'64 இசுப்பானிய முடியாட்சி
புதிய இசுப்பெயின்
எப்படியாயினும், நாட்டினத்தை வலுப்படுத்தத் தாய்நாட்டில் ஆற்றப்பட்ட வேலை முக்கியமாயிருந்தபோதிலும், கூடிய மாண்புடையவாய் வல்லாண்மை முடியாட்சி அமைத்தற்குத் துணைபுரிந்தவை கொலம்பசு, கோட்டெசு, பிசாரோ எனும் துணிகர வீரரான கப்பலோட்டிகள் ஆற்றிய தீரச் செயல்களே யாம். இசபெலா இராணி கூர்ந்த மதியும் தாராள குணமுள்ள ஆதரவாளியெனக் கொலம்பசு கண்டான். கோட்டெசு, மகெலன், பிசாரோ என்பவர் முதலாம்
சாள்சின் ஆட்சிக்கு ஒரு தனிச்சிறப்பு அளித்தனர்.
கொலம்பசு, பாலனத்துறையிலும் நாடுகாண்பணியிலேயே கூடிய சித்தி பெற் முன். எனினும், இசுப்பெயினுக்கு மேற்கிந்திய தீவுகளை ஈட்டிக்கொடுத்தான். எப்படியாயினும், வேறிடங்களிற் போல அங்கேயும் இசுப்பானியர் குடியேற் றங்கள் அமைப்பதிலே தகுதியற்றவர்களாயினர். வேறும் பலரைப் போல அவர் களும் விலையுயர்ந்த உலோகப் பொருள்களே செல்வம் என மதித்தனர். எனவே, அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் தேடி அடைவதில் தங்கள் முழுப் பலத் தையும் செலுத்தினசேயன்றி, குறைந்த பகட்டான, ஆனல் கூடிய நிலையான வேறு செல்வத் தோற்றுவாய்களைப் பொருட்படுத்தவில்லை. 'பொன் தேடும் புனித அவாவே ஒலியேடோ, நிகுவசா, பல்போவே என்பவர்களைத் தாரியன் பூசந்திக் குக் கொண்டுசென்றது ; கோட்டீசை மெச்சிக்கோவுக்கும், அல்மாகுருே, பிசாரோ என்பாரைச் சிலிக்கும் பேருவுக்கும் கொண்டுசென்றது. அமெரிக்கா வுக்குக் கடற்பிரயாணம் செய்த ஒவ்வோர் இசுப்பானியனும் அங்கே ஒரு பொன்னட்டைக் கண்டடைய எதிர்பார்த்தான்,' என ஆதாம் சிமிது என்பான் புகழ்பெற்ற தனது நூலொன்றிற் கூறுகின்றன். அவைகளில் ஈடுபடும் மக்களிற் பெரும்பான்மையோர் மீது பணமுறிவைக் கொண்டுவரும் செலவு மிக்க உறுதி யற்ற திட்டங்களுள், வெள்ளி பொன் சுரங்கங்களைத் தேடுவது போலப் பூரண வறுமையாக்கும் வழி பிறிதொன்றில்லையெனலாம்,' என மேலும் அவன் கூறு கின்றன். எப்படியாயினும் இக்காலப்பகுதியில் துணிகரச் செயலிலும் வெற்றி யெய்துவதிலும் இசுப்பானியரிலும் மேம்பட்டவர்கள் இல்லையெனலாம். 1513 இல் பல்போவே பனமா பூசந்தியைக் கடந்தான். 1519 இல் ஏராளமான பொற்களஞ் சியம் இருப்பதாக அலர் பிறந்ததின் காரணமாக, ஏனன் கோட்டெசு என்பா னின் தலைமையிற் போர்மேற் செல்லுமாறு ஒரு படை அனுப்பப்பட்டது. 500 படைஞருடன் அவன் வேரா குரூசு என்னுமிடத்தில் இறங்கி, மொந்தேசுமாப் பேரரசனக் கைது செய்து, அரசன் சாள்சின் பெயரில் அரசைக் கைக் கொண்டான். ஈராண்டுகளாக விடாமுயற்சியுடன் போர் செய்து அசுதெக்குப் பேரரசின் தலைவனனன். மெச்சிக்கோவிலிருந்து இசுப்பானிய இறைசேரின்யப் பொன்னும் வெள்ளியும் நிரப்பின.
ஏறத்தாழ ஐந்தாண்டுகளின் பின்னர் (1552) பிரான்சிசுக்கோ பிசாரோ இரு நூறுக்குக் குறைந்த பற்முளருடன் பேருவின் தலைவனனன். போர் வீரரான

இசுப்பானிய முடியாட்சி 65
மெச்சிக்கர் கோட்டெசை எதிர்த்து நின்றிருந்ததுபோல், சாந்தமான இங்கா மக்கள் இவனை அத்துணை எதிர்த்து நிற்கவில்லை. ஆகவே, இசுப்பானிய வெற்றி வீரர்கள் தீமை விளைக்காத குடிமக்களுக்குச் செய்த இரக்கமற்ற செயல்கள் மன்னிக்க முடியாதவையாகும். மதத்தின் பேரில் அவை விளைக்கப்பட்டமையால் அப்பயங்காம் மிகைப்படுத்தப்படுகின்றது. எப்படியாயினும் பேரு மெச்சிக்கோ விலும் கூடிய செல்வம் பொருந்திய நாடாகும். பேருவிலிருந்து இசுப்பானியப் பேரரசு தெற்கே சில்லி வரையும், அவ்விடத்திலிருந்து அந்தீசு மலைகளுக் கப்பால் பிளேற்று நதிப் பள்ளத்தாக்கு வரையும் பாவிற்று. இவ்வாருக ஒல்லாந்தர் பின்னர் கைப்பற்றிய கயானவையும் போத்துக்கேயருக்குக் கிடைத்த பிரேசிலையும் தவிர மக்கிய தென் அமெரிக்கா முழுவதும் இசுப்பெயி னின் ஆகிக்கத்திற்குட்பட்டது.
கொலம்பசைப் போலக் கோட்டெசையும் வறுமையால் வாடி இறக்கவிட்டதே இசுப்பெயின் காட்டிய நன்றியுணர்ச்சியாகும். மனமுறிவுற்று ஒருமுறை ஐந்தாம் சாள்சை நேரிற் காண அவன் முயற்சி செய்தான். 'இந்த மனிதன் யார்' எனப் பேரரசன் வினவினன். 'உங்கள் முன்னேர் உங்களுக்கு விட்டுச் சென்ற நகர்களிலும் கூடிய தொகையான அரசுகளை மாட்சிமை பொருந்திய தங்களுக்கு அளித்திருக்கும் மனிதனே இவன்,' எனக் கோட்டெசு விடைபகர்ந்
ான். அவன் சேவையைப் பேரரசன் பாராட்டவில்லை. ዳb அ
இசுப்பெயினின் குடியேற்றப் பூட்கை
ஆதாம் சிமிது காலம் தொடக்கம் குறைநிறை ஆய்வாளர் யாவரும் அறிந்த காரணங்களது சேர்க்கையின் பயனக, இசுப்பெயின் கடலுக்கப்பாலுள்ள தன் பேரரசிலிருந்து அடைய வேண்டிய பலன்களை அடையவில்லை. இசுப்பானியர் வெற்றி பெறுவதிற் பெரும் ஆற்றல் படைத்த கீர்த்தி வாய்ந்த போர்வீரர்களா யிருந்தனாாயினும் ஆட்சிபுரியும் ஆற்றல் அவர்களுக்கில்லை. தங்கள் சொந்த வழிபாட்டில் வெறிபிடித்த பற்றுறுதி கொண்டவர்களாயிருந்தபோதும் பகிகரை இாக்கமற்ற முறையில் நடத்தினர். ஆகவே, அவர்களுக்கு விரைவாக வும் எளிதாகவும் கிடைத்த பிரமாண்டமான பேரரசை ஆட்சி செய்வதில் அவர் ஒருபொழுதும் சித்தி பெறவில்லை.
இசுப்பானியர் ஒரு கலப்புச் சாதியினர். கடலுக்கப்பாலுள்ள தங்களுடைய பேரரசு எங்கும் ஆங்கிலேயர் நடந்துகொண்டதுபோலல்லாது, தென் அமெரிக்காவிலுள்ள இசுப்பானியர் தாங்கள் வெற்றி கொண்ட மக்களைத் தம் வயப்படுத்தும் உளர்ச்சார்புடையவர்களாகக் காணப்பட்டனர். வெவ்வேறு இனத்தினர் கலப்பதிலுைம் கலப்பு மணத்தினலும் வெற்றி வீரர் தம் தோற்றத் திலும் உளத்திலும் விாைவிற் கேடான நிலையையடைந்தனர். பொன், வெள்ளி ஆகிய சுரங்கங்களில் அவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்திவிட்டதனுலும் அத்தகைய கேடே நகழ்ந்தது. குடியேறிகளின் தவறுகளைச் சரிசெய்யவோ,

Page 41
66 இசுப்பானிய முடியாட்சி
அவர்களின் தீய ஒழுக்கங்களை அடக்கி வைக்கவோ உண்ணுட்டரசாங்கத்தின் பூட்கை துணைபுரியவில்லை. அதற்கு நேர்மாருகப் பழைய இசுப்பெயினிலிருந்த மிகக் கேவலமானவையெல்லாம் புதிய இசுப்பெயினிற் பெருக்கப்பட்டன. தொடக்க முயற்சிக்கு உதவி செய்யவோ ஊக்கவோ அரசு யாதொன்றும் செய் யாதது மாத்திரமன்றி, அம் முயற்சியின் விளைவிற்கும் ஆதாயத்திற்கும் தனி உரி மையையும் கோரியது. பழைய இசுப்பெயினிற் போலப் புதிய இசுப்பெயினிலும் அரசாங்கத்தின் கையோங்கியிருந்தது. அது புதிய பேராசை, முடியின் தனி நல னுக்காக வேலை செய்ய வேண்டிய பண்ணையாகவோ ஒரு சுரங்கமாகவோ மதித்தது.
உண்மையாகவே அது ஒரு செல்வம்மிக்க சுரங்கமாகும் ; ஆணுற் சில ஆண்டு களாக அச்சுரங்கம் ஏராளமான பொன்னையும் வெள்ளியையும் வழங்கிய போதிலும், செல்வத்திற்கு நிரந்தரமற்ற ஒரு தோற்றுவாயாகியது. இதற்கிடை யிற் கண்டிப்பாக நிறைவேற்றப்பட்ட நுணுக்கமான ஒரு தொகைப் பிரமாணங் களால் வணிகம் திக்குமுக்காட வேண்டியதாயிற்று. இலாபத்திலெதுவாயினும் தனிப்பட்டோரைச் சேராதபடி தடுப்பதற்காகக் குடியேற்ற நாட்டு வணிகம் ஒரு குறித்த தொகையான கப்பல்களுக்கும் தாய் நாட்டிலுள்ள ஒரு தனித் துறைமுகத்துக்கும் எல்லைப்படுத்தப்பட்டது. முதற்றுறைமுகம் செவிலும், இரண்டாவது துறைமுகம் காதிசுமாகும்.
பண்டைய இசுப்பெயினின் நிலமுறைமை, அதே உளப்பாங்குடனும் தீய விளேவுகளுடனும், முழுமையாகப் புதிய குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மானியமுறை, தான் தோன்றிய நாட்டுக்கு ஓரளவு ஏற்றதாக இருந்தாலும் புதிய நாட்டிற்கு ஒவ்வாதிருந்தது. களைகள் வளர்வதற்கு ஊக்க மளிக்கவும் பயிரின் எவ்வித நல் வளர்ச்சியையும் திணறவைக்கவும் மட்டுமே உதவி செய்தது. உடைமையை மரபுரிமையாய்க் கட்டுப்படுத்தும் முறை குடி யேற்றச் சூழலுக்கு ஏற்புடையதன்று. எனினும், அது கண்டிப்பாக நிறை வேற்றப்பட்டது. இதன் விளைவாகச் சிறிய உரிமையாளர் ஒழிந்துவர, நில உடைமையான சொத்துக்கள் யாவும் ஒரு சிறு தொகையினரான மாவிழுமி யோரை-அவர்களிற் பெரும் பகுதியினர் அவ்விடமில்லாதிருந்தபோதும்சென்றடைந்தன.
குடியேற்ற நாடுகளைத் திருச்சபை கொடுமைப்படுத்திற்று. அக்கொடுமை அரசு கொடுமைப்படுத்தியதிலும் பார்க்கக் குறைந்ததில்லை. பதிதர் உலகத்தின் வேறு பாகங்களிற் போற் புதிய இசுப்பெயினிலும் இயேசுதர் குழுவைச் சேர்ந்த தூதர் அந்நாட்டு வாசிகளுக்கிடையிற் சிறந்த ஊழியஞ் செய்தனர். புது இசுப் பெயினில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையை அதன் சகல பெருமைகளுட ணும் ஆடம்பரங்களுடனும் நிலைநாட்டுவதும், இன்னும் மேலாக, உயர் வழக்கு உசாவல் மன்றைச் சேர்ந்த எல்லாப் பொறியகங்களையும் கொண்டு அனுப்பு தலும், மானிய நிலமுறைமையைப் புகுத்துவது போன்று, பொருந்தாத பூட்கை

இசுப்பானிய முடியாட்சி 67
யாகும். ஒருபுறம் மானிய நிலக்கிழாருக்கும், மறுபுறம் கத்தோலிக்கத் திருச்
சபைக்குமிடையில் அந்நாட்டின் கடைசி வெள்ளி நாணயம் வரையும் கறந்
தெடுக்கப்பட்டது : மக்கள் தம் பொருள் வளங்குன்றி வறுமை கூர்ந்து
நம்பிக்கையற்று இருந்தவாறே, அடிமை மனப்பான்மையும் மீதுரப்பெற்று இருந்தனர். அந்த இளமையுடைக் குடியேற்ற நாடுகள் தங்களைக் கட்டுப்
படுத்திய பாதகநிலைகளிலிருந்து எக்காலமாவது தப்பவில்லை. ஆகவே, புயலும்
நெருக்கடியான காலமும் வந்தபொழுது, தங்களுக்கு ஒருபொழுதும் ஒரு சுதந்திர வாழ்க்கையளித்திராத தாய் நாட்டிலிருந்தும் விலகிக்கொண்டன.
ஆனல், இது பின்னர் வரவேண்டிய நிகழ்ச்சிகளை முன்னரே எதிர்பார்த்தல் ஆகும்.
பழைய இசுப்பெயினை மீண்டும் ஆய்வோம். பேடினந்து குறுகிய மனப் பான்மையுடையவனும், குதுடையவனும், மோசடிகாரனுமாக இருந்தானுயினும், கத்தோலிக்க இறைகளின் இணைப்பாட்சி இசுப்பெயினினதும், சிறப்பாகக் கசு தைலினதும் அதன் சார்பு நாடுகளினதும் வரலாற்றில் ஒரு கீர்த்தி வாய்ந்த காலப்பகுதியாகும். ஆனல், 1504 ஆம் ஆண்டில் இசபெலா இராணி காலமானுள். மூன்று படைச் சபைகளின் மேன்மையான தலைமைப் பதவியையும் இந்தியத் தீவுகளிலிருந்து கிடைக்கும் வருமானங்களில் அாைப்பங்கையும் அவள் பேடி னத்துக்கு விட்டுச் சென்ருள். தங்களின் போப்பிள்ளை ஏற்ற வயதையடையும் வரையும் பேடினந்தையே கசுதைலின் பதிலாளியாக நியமனஞ் செய்தாள். கத்தோலிக்க இறைகள் ஆட்சி செய்வதை ஒப்புக்கொண்ட எந்த ஆள்புலத்தை யேனும் யோன்னவின் பிற்சந்ததியிலிருந்து, இரண்டாந் திருமணத்தாலோ, வேறு வகையாலோ பறித்து எடுக்க முயலுவதில்லையென முறையாயமைந்த சத்தியத்தினுல் அவனைக் கட்டுப்படுத்தினுள்.
உடனே பேடினந்து கசு தைல் முடியைத் அறந்தி யோன்னவையும் அவள் கணவனுன மாபெருங் கோமகன் பிலிப்பையும் இறைகளாகப் பிரசித்தஞ் செய் தான். ஆனல், அவர்கள் சார்பில் தன்னைப் பதிலாளியாக அங்கீகரிக்கும்படி பாராளுமன்றத்தைத் தூண்டினன். எப்படியாயினும் கசு தைல் மக்கள் அனேகர் இந்த ஒழுங்கைப் பலமாக எதிர்த்தனர். மாபெரும் கோமகன் பிலிப்பு இதற்கு இசையவில்லை. ஆகவே, பேடினந்து தன் சத்தியத்திற்கு மாமுக, இரண்டாந் திருமணஞ் செய்து தன் நிலைமையை உறுதிப்படுத்தத் தீர்மானித்தான். பெண், போத்துக்கலிலுள்ள ஒரு மடத்திற் பூட்டி வைக்கப்பட்டிருந்தாள். அவன் மரு மகனன போத்துக்கலைச் சேர்ந்த எமானுவேல் எதிர்த்து நின்றமையால் மட்டுமே கசுதைலைச் சேர்ந்த நான்காம் என்றியின் மகளான யோன்னுவை அவன் திருமணஞ் செய்வது தடுக்கப்பட்டது.
யோன்னவின் முறைப் பிறப்புரிமையை மறுத்த பிரகடனம் இசபெலா அரசெய் தற்கு வழிவகுத்தது. இதனல் அந்தத்திட்டம் வலுவற்றதொன்முயிற்று.

Page 42
68 இசுப்பானிய முடியாட்சி
எனினும், அத்திட்டத்தினுல் பேடினந்தின் விடாப்பிடியும் போவாவும் புலஞ கின்றன. அப்பகுதியில் ஏமாற்றமடைந்து பேடினந்து பிரான்சின் பக்கம் திரும்பினன். நாபொனைச் சேர்ந்த விக்கோந்தின் மகளும், பிரான்சின் அரசனன பன்னிரண்டாம் உலூயியின் பேத்தியுமான சேர்மெயின் தி புவா எனும் இளமை யும் அழகும் வாய்ந்த மங்கையை 1506 ஆம் ஆண்டில் இவன் திருமணம் புரிந் தான். விரைவில் நாம் விளக்கப்போகும் குழியற் காரணங்களால், பின்னையவன் 1509 ஆம் ஆண்டில் அத்திருமணத்திற்கு இசைந்தான். சேர்மெயின் பேடினந் அரக்கு ஓர் ஆண் மகவைப் பெற்ருள். ஆனல், அப்பிள்ளை குழந்தைப் பருவத்தில் இறந்தது. அப்பிள்ளை தொடர்ந்து உயிரோடிருந்திருக்குமாகில் பதினரும் நூற்ருண்டின் ஒசுத்திரிய-இசுப்பானிய பேரரசு எக்காலமாவது முழுமை யாகவே அமைந்திருக்கமாட்டாது.
இதற்கிடையில், மாபெரும் கோமகனன பிலிப்பு தன் உரிமைகளையும் தன் இராணி யோன்னுவின் உரிமைகளையும் கசுகைலில் வற்புறுத்தியபின்னர் மூன்று மாதம் மட்டும் ஆட்சி செய்து, 1506 செத்தெம்பரில் இறந்தான். எப்பொழுதும் வலிமையற்றிருந்த யோன்ன தன் கணவனின் மரணம் காரணமாக முட்டா ளானள். சாள்சின் மற்றைப் பாட்டனுகிய பேராசன் மாச்சிமிலியன் எதிர்த்து நின்றபோதிலும், பேடினந்து பதிலாண்மையை மீண்டும் பெற்றன். எப்படியா யினும், 1516 ஆம் ஆண்டில் அவன் மரணத் தறுவாயில் அவன் ஆட்சிப்பகுதிகள் முழுவதையும் இளவயதினனன தன் போன் மாபெரும் கோமகன் சாள்சுக்கு மரபுரிமையாகக் கொடுத்தான்.
பேடினந்தின் நேர்மையற்ற குழியல் பற்றியும் கண்டப்பகுதியிலுள்ள அயல் நாடுகளுடன் அவன் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் பின்னைய அத்தியாயத் கில் இன்னும் கூறப்படும்.
இதற்கிடையிற் கத்தோலிக்க இறைகளின் ஆயத்த வேலைகளுக்குப் புகழுரை கூறுதல் வேண்டும். இசபெலா ஒரு நல்ல பெண்ணுவாள் ; பேடினந்து, அவன் சமகாலத்தவனும் எதிரியுமான ஆங்கில அரசன் ஏழாம் என்றியைப் போல் அழ கற்றவன். எனினும், ஒரு சிறந்த ஆட்சியாளன் எனும் பட்டத்தை அவனுக் களிக்க யாரும் மறுக்க மாட்டார். பேடினந்தும் இசபெலாவும் சேர்ந்து இசுப் பெயினை ஆக்கும் வேலையை நிறைவாக்கி, அந்நாட்டின் ஒளிர்கிற மேன்மைக்கு அடிகோலினர். இம்மேன்மை நிலையற்றதாயிற்று.

அத்தியாயம் 8
இத்தாலியப் போர்கள்
அபிசுபேக்கருக்கு எதிராகப் பிரான்சு
முக்கியமான திகதிகள்
1895
1434
I453
14ᏮᏭ-92
1492
卫493
1494
夏498
罩499一星504
1504
互506
1508
1509
1509
1511
芷5芷5
1516
56
யோன் கலியாசோ விசுக்கொந்தி மிலானின் கோமகவுரிமை
பெறுதல். புளோரஞ்சில், மெடிக்கிக் குலத்தினரின் ஆட்சி. அரகனைச் சேர்ந்த ஐந்தாம் அல்பொன்சோ இரு சிசிலிகளிலும்
நிலைநாட்டப்படல். A. புளோாஞ்சை உலொரன்சோ தி மெடிக்கி ஆட்சி செய்தல். ஏத்தப்பிள் பொருத்தனை (எட்டாம் சாள்சுக்கும் ஆங்கிலேய
அரசன் ஏழாம் என்றிக்குமிடையில்). பாசலோனப் பொருத்தனை (இசுப்பெயினுடன் பிரான்சு). இத்தாலியப் போர்கள் (முதற்ருெடர்)-1496. பன்னிரண்டாம் உலூயி அரசெய்தல். இத்தாலி மீது பிரான்சியர் போர் மேற்செல்லல். அாகனுடன் நேப்பிள் வலிந்திணைக்கப்பட்டது. அபிசுபேக்குக் குலமுறையினனன சாள்சு நெதலந்தையும் இன்ன
பிற அரசுகளையும் எய்தினன். M காம்பிரேக் கூட்டவை. அக்கினதல்லோச் சமரிற் பன்னிரண்டாம் உலூயி வெனிசின்
வலிமையை முற்ருயழித்தல். எட்டாம் என்றி அரசெய்தல். போப்பாண்டவர் இரண்டாம் யூலியசு புனிதக் கூட்டவையை
உருவாக்குதல். முதலாம் பிரான்சிசு பிரான்சின் அரசனுதல்-1547. மரிஞானேச் சண்டையில் முதலாம் பிரான்சிசின் வெற்றி. முதலாம் சாள்சு இசுப்பானிய இராச்சியம் முதலியவற்றை
அடைதல். பத்தாம் இலியோவுடன் பிரான்சிசு உடன்படிக்கை செய்து
கொள்ளல்.

Page 43
70 இத்தாலியப் போர்கள்
1516 நிவயோன் பொருத்தன.
罩5芷9 ஐந்தாம் சாள்சு பேராசனகத் தெரிவு செய்யப்படல்.
1520-59 இத்தாலிய போர்கள் (இரண்டாம் தொடர்).
1520 எட்டாம் என்றி, முதலாம். பிரான்சிசு (பொன்னுடைக்களம்),
ஐந்தாம் சாள்சு என்போர் சந்தித்தல்.
1525 பாவியாச்சமர்.
1526 மதிரித்துப் பொருத்தன.
1527 உரோமாபுரி பாழாக்கப்படல்.
互529 காம்பிரேப் பொருத்தன.
1536-38 மூன்ரும் இத்தாலியப் போர்.
1542-44 நான்காம் இத்தாலியப் போர்.
1546 இங்கிலந்தினுல் பூலோன் கைப்பற்றப்பட்டது.
1547 முதலாம் பிரான்சிசின் மரணம். இரண்டாம் என்றி அரசெய்தல், 1552-6 ஐந்தாம் இத்தாலியப் போர். 1556 வொசெல்சுப் பொருத்தன.
1556 ஐந்தாம் சாள்சு முடிதுறத்தல். இரண்டாம் பிலிப்பு அரசெய்தல், 1556-9 ஆமும் இத்தாலியப் போர்.
1557 சென் குவென்றின் சமர்.
15:57 இங்கிலந்திலிருந்து கலே கைப்பற்றப்பட்டது.
1559 காற்ருே-காம்பிரேசிப் பொருத்தன.
இந்நிகழ்ச்சியுரை ஒரு நெருக்கடியான நிலையை அடைந்துள்ளது. முதலாம் அத்தியாயத்திற் கூறப்பட்ட குறிக்கோளையும் முறையையும் கண்டிப்பாகக் கைக் கொண்டால், எங்களுக்குத் தெரிந்த ஐரோப்பாவின் மலர்ச்சிக்குத் துணை புரியா எவ்வுண்மையையும் கூறல்பொருந்தாதே.
அவ்வாருயின் 16 ஆம் நூற்றண்டு ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தைப் பொதுவாகப் பெறுகின்ற இத்தாலியப் போர்களைப் பற்றி என்ன சொல்லலாம் ? அவைகளின் இயல்பான சிறப்புக்கு ஒவ்வாத அளவுக்குப் பொது வாக அவை எடுத்தாளப்படுகின்றன வென்பதை மறுக்க முடியாது. பல காரணங்
களினல் அவற்றைப் புறக்கணித்தலும் முடியாது.
அந்தப் போர்களினதும் அவை புரியப்பட்ட கால இடச் சூழல்களதும் சரித மானது, இத்தாலி, நாட்டின ஒற்றுமை எய்த அத்தனை நூற்றண்டுகளாகத் தாம தம் ஏற்பட்டதன் காரணங்களை விளங்கச் செய்கின்றது. பதினமும் நூற்முண்டுட் போர்களில் இத்தாலி மீது வருவிக்கப்பட்ட காயங்களின் அடையாளங்களை இன்

இத்தாலியப் போர்கள் 71.
அறும் காணலாம். மேலும், ஐரோப்பிய அரசாற்றின் மலர்ச்சியில் மிகவும் முக்கியமான பகுதியாக இயங்கிய அரசு வலுச் சமநிலை எனும் கொள்கையின் விருத்தியைப் பற்றி அப்போர்கள் ஒரு கோரமான விளக்கம் கொடுக்கின்றன. முந்திய காலப் பகுதியில் (1494-1515) இத் தத்துவம் ஒரு சிறு அளவிற்கு மட் டும் தெளிவாக்கப்பட்டது. இத்தாலியிலுள்ள சிறிய அரசுகளுக்கிடையிலேயே சமநிலை பேண வேண்டியிருந்தது. பிந்திய காலப் பகுதியில் (1519-1559) ஐரோப் பாவின் அரசு வலுச் சமநிலையே ஆபத்துக்குள்ளாயது.
குறித்த நீண்ட காலப் போர் 1559 இல் நிறைவேறிய காற்முே-காம்பிரேசிப் பொருத்தனையோடும் முடிவெய்தவில்லை.
இசுப்பெயின் கடைசியில் ஒரு பூபன் அரசனை ஏற்றுக்கொள்ளும் தினம் வரை யும் (1714), பிான்சுக்கும் ஒசுத்திரிய-இசுப்பானிய குலத்தினர்க்குமிடையே தொடர்ந்த போட்டி ஐரோப்பாவில் சர்வதேச அரசியலின் முக்கியமர்ன இணக் கத்தொடர்பை அளித்தது.
இத்தாலி
இத்தாலியிலேயே குறித்த நீடித்த சண்டை நடந்தது. பல காரணங்களைக் கொண்டே போர்க்களம் இத்தாலியில் அமைந்தது. எதிரிகளின் புவியியல் நிலை மையும் இத்தாலியின் புவிப்பெளதிகவுறுப்பியலும் ஒன்று சேர்ந்து, இத்தாலி யைத் தேர்ந்தெடுப்பதே இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமெனச் சுட்டிக் காட்டின. இவ்விடயம் ஏலவே கவனிக்கப்பட்டாயிற்று. ஆனல் வேறு விடயங் களும் இருந்தன. ஐந்தாம் நூற்முண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்ருண்டுப் பிற்பகுதி வரையும் ஒரு தனி அரசியல் உருவாகத் தக்க நிலையில் இத்தாலி இருந் திருக்கவில்லை. மெற்றேணிக்கு உண்மையாக, ஆனல் குறை கூறும் மனத்துடன் குறிப்பிட்டது போல, இத்தாலி என்பது புவியியற் சொல்லளவல்லால் வேமுென் அறுமன்று. உரோமும், புளோரஞ்சும், மிலானும், செனேவாவும், வெனிசும், இத் தாலியிலுள்ள எஞ்சிய நகர அரசுகளும் இடைக்கால வரலாற்று அரங்கில் முக் கியமான கதாபாத்திரங்களாக நடித்தனவென்பது உண்மை. ஆனல் இத்தாலிய நகரங்களின் வரலாற்றுடன் இந்நிகழ்ச்சியுரைக்கு யாதொரு தொடர்புமில்லை. அவற்றில் அனேகமானவை 15 ஆம் நூற்முண்டுக்கப்பாலுந் தப்பிப் பிழைத்திருந் தன. ஆனல், இடைக் காலத்தில் அவைகளுக்குப் புகழீட்டிய யாவும் பிடுங்கி எடுக்கப்பட்டன. நெப்போலியனின் வருகை வரையும் வெனிசும் செனுேவாவும் தங்கள் சுயேச்சையான குடியரசு நிலையைக் கைவிடவில்லை. புனித நகரத்தி லிருந்து இருமுறை (1798 இலும், 1848 இலும்) போப்பாண்டவர் வெளியே துரத்தப்பட்டாராயினும் அவர் 1861 வரையும் தம் நாடுகளில் பெரும்பாலான வற்றைக் கைவிடவில்லை. இன்னும் (1932) வற்றிக்கன் அரசில் அடங்கிய சொற்ப ஏக்கர் நிலத்தின் மீது தமக்குள்ள இறைமையைக் கைவிடவில்லை. பதினைந்தாம் நூற்ருண்டின் நடுப் பகுதிக்கு முன்னரே புளோாஞ்சு, மெடிக்கி என்போரின்

Page 44
72 இத்தாலியப் போர்கள்
ஆட்சியின் கீழாயது. இவர்களின் கதியோடு அந்நகர் பின்வரும் மூன்று நூற் முண்டுகளாக நெருங்கிய தொடர்புடையதாகவிருந்தது. முன்னர் ஓர் அளவு கொந்தளிப்பான குடியரசாயிருந்த பெரிய உலம்பாடிய நகரமான மிலான் 1395 இல் யோன் கலியா சோ விசுக்கொந்தி என்பானல் ஓர் கோமகவுரிமை யாகவும் பேரரசின் பாளையமாகவும் மாற்றப்பட்டது. இவனின் ஆண்வழி மரபு 1447 இல் பிலிப்பு மரியா விசுக்கொந்தியின் மரணத்துடன் முடிவெய்தியது. அவனின் முறைப் பிறப்புரிமையற்ற மகள் பியங்கா என்பாளின் கணவன் பிரான் செசுக்கோ சுபொற்சா என்பான் உரிமையைக் கோரினன். எப்படியாயினும் மிலான் கோமகவுரிமையை நாடியவன், செல்வமும் வெற்றியும் படைத்த போர் வீரனும், நான்காம் இயூசெனியசு போப்பாண்டவரின் ஆதரவிலிருந்தவனும் கொசுமோதி மெடிக்கியின் நண்பனுமான, சுபொற்சா என்னும் ஒருவன் மட்டு மல்லன் அவ்வாறு நாடியவர்களில் அவன் மிக முக்கியமானவனுமல்லன்.
பேரரசன் மூன்மும் பிரதரிக்கு, உரிமையாளரின்மையால் உரிமையழிந்து போன பேரரசுப் பாளையமாக அக் கோமக உரிமையைக் கோரினன். ஒலியன்சின் கோமகனன சாள்சு, தன் தாய் வலந்தீன விசுகொந்தி என்பாள் காலஞ் சென்ற கோமகன் பிலிப்பின் மூத்த சகோதரி என்ற முறையைக் கொண்டு, அந்த உரிமை யைக் கோரினன். நேப்பிளேச் சேர்ந்த முதலாம் அல்பொன்சோ (அரகனின் ஐந் தாம் அல்பொன்சோ) என்பான் காலஞ் சென்ற கோமகளுல் அந்தக் கோமகவுரி மை தனக்கு மரபுரிமையாகக் கொடுக்கப்பட்டதென உரிமை கோரினன். பிரான் சிய அரசர்கள் தாம் ஒலியன்சுக் கோமகன் சாள்சின் மரபினர் என்ற காரணத் தாலும், ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கர் தாம் அல்பொன்சோவின் உரித் தாளர் என்ற காரணத்தாலும் உரிமை கொண்டாடுவதற்குப் பெரிதும் ஆதாரங் களாயிருந்தமையாற் பிந்திய மூன்று கோரிக்கைகளும் முக்கியமானவை.
1454 வரையில் சுபெற்சா, கோமகப்பிரிவில் தன்னை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டான். ஆனல் இந்த இத்தாலிய அரசுகளின் தீவிரமாக மாறும் பேறு களைப் பற்றி நாம் அக்கறை கொள்வது, ஐரோப்பாவில் ஆதிக்கத்திற்காகப் போட்டியிடும் இரு எதிரிகள் மீதும் அப்பேறுகளினல் ஏற்படும் எதிர் விளைவுக்
காக மட்டுமாகும்.
நேப்பிளும் சிசிலியும்
மிலான் கோமகப்பிரிவுபோலத் தெற்கேயுள்ள இராச்சியங்களாகிய நேப்பிளும் சிசிலியும் இக்காலப் பகுதி முழுவதும் பிரான்சிய அரசர்களதும் ஒசுத்திரியஇசுப்பானிய அபிசுபேக்காதும் ஆட்டத்தில் விடுதேங்காயாயின. அரகனைச் சேர்ந்த மூன்ரும் பீதுரு எதிர்த்த பொழுதிலும், பதின்மூன்ரும் நூற்றண்டின் நடுப்பகுதியில் அஞ்சு மரபினர், போப்பாண்டவர் நான்காம் ஏபன் அளித்த நன்கொடையின்படி, முதலில் அவ்விராச்சியத்தில் தங்களை நிலைநாட்டினர். இம் மரபினரிடமிருந்தே பிரான்சிய காபெற்றிய அரசர்கள் நேப்பிளில் தங்களுக்

இத்தாலியப் போர்கள் 73
கிருந்த உரிமைகளைப் பெற்றனர். பீதுரு நேப்பிளைப் பெறத்தவறினன். ஆனல் சிசிலியைப் பெற்று அதைச் சாடினியாவுடன் சேர்த்துத் தன் பிற்சந்ததியின ருக்குக் கொடுத்தான்.
பதினைந்தாம் நூற்ருண்டுவரையும் நேப்பிள் அஞ்கு மரபினர் மீது பெரும்பா லூம் பற்றுறுதி கொண்டிருந்தது. வழியுரிமை பற்றிய விவாதங்கள், திரும்பத் திரும்ப நிகழ்ந்த புரட்சிகள், குழப்பம், அரசறவு ஆகியனவே நூற்ருண்டுகளாக நேப்பிளின் வரலாற்றில் நிரம்பியிருந்தன. ஆனல், 1453 இல் அாகனின் அரசன் ஐந்தாம் அல்பொன்சோ 1435 தொடக்கம் நிலைத்த ஒரு போராட்டத்தின் பின் னர் முதலாம் அல்பொன்சோ என்னும் பெயருடன் நேப்பிளில் தன் பதவியை நிலைநாட்டினன். அக்காலந் தொடக்கம் இசுப்பானிய வழியுரிமைப் போர் முடியும்வரை (1714) நேப்பிளும் சிசிலியும் சாடினியாவும் அாகன் மரபினரிட மிருந்து, அவர்களின் உரிமையாளரான நற்பேறுடைய அபிசுபேக்கரிடம் சென்ற டைந்தன. 4.
பொது ஐரோப்பிய வரலாற்றைக் கொண்டு நோக்கின், இத்தாலிய தீபகற்பத் தின் திருத்தியற்ற நிலையின் முக்கியத்திற்குக் காரணம், இரு ஆதிக்கம் படைத்த வல்லரசுகளின் போவாவுக்கு அது ஒர் அவாவூட்டும் இரையாயமைந்து அவர்கள் போர் புரிய ஒரு போர்க்களத்தை அளித்தமையாகும். எட்டாம் சாள்சு ஆரம் பித்து வைத்த இத்தாலியப் போர்கள் பிரான்சைப் பொறுத்தவரையில் நிரந்தா மான பயன் அடியோடு அற்றனவாகும். அவை வேறுவிதமாயிருக்க முடியாது. அல்பிசு மலைகளுக்குத் தெற்கே பிரான்சுக்கு எந்த அலுவலும் இருந்ததுமில்லை; இருக்கவேண்டியதுமில்லை. பேரரசன் சாள் சின் ஆட்சியில், இசுப்பெயின், நேப் பிள், சிசிலி, சேர்மனி ஆகிய அரசுகள் பேரரசொடு ஒன்று சேர்ந்து, தனியொரு தன்லவன் கீழ் ஐக்கியமாய் இருந்தன. அதே மனிதன் நெதலந்தின் பிரபுவாகவும் ஒசுத்திரியாவின் மாபெரும் கோமகனகவும் ஆணை செலுத்தும் பொழுது, பிரான்சு, அளவுக்கு மீறிய வல்லமை படைத்த அயலானும் எதிரியும் ஆனவனற் குழப்பட்டிருப்பதாக உணர்ந்து அச்சங்கொள்ள நியாயமிருக்கலாம். இங்கிலந் தினதும் வட நெதலந்திலுள்ள துணிவான நகர மூப்பர்களினதும் உதவியைக் கொண்டு, பிரான்சு கடைசியில் அபிசுபேக்கர் ஆதிக்கத்தால் நேர்ந்த அபாயத்தை ஒட்டியது. இரிசிலூவின் காலந் தொடங்கி அரசறிஞரில் மெய்யறிவு படைத் தவர்கள் பிரான்சுக்குப் பாதுகாப்பைப்பெறும் நோக்கத்துடன் திருத்தி அடைந்திருந்தனர்; இவர்களில் மிகவும் போவாவுள்ளவர்கள் தாமும் இரிசிலூ கூறிய இயற்கை எல்லைப் புறங்களான பிரனிசு மலைகள், அல்பிசு மலைகள், இரைன் நதி ஆகியனவற்றைக் கடந்து செல்ல விரும்பவில்லை. எப்படியாயினும், நாங்கள் கண்டுகொண்டபடி இரிசிலூ எல்லைகளைக் கடந்து செல்லாவிட்டாலும், குறைந் தது, அவைகளை அடையவேனும் ஆசைப்பட்டான் கதவைத் திறந்து வைத் திருக்காவிட்டாலும், திறவுகோலையேனும் தன் கையில் வைத்திருக்க விரும்பி ன்ை. ஆகவே, அல்பிசு மலையடிவாரத்திலுள்ள பினரோலொ போன்ற (1630 இல் பெறப்பட்டது) ஒரு கோட்டையைப் பெறவும், மேற்கிலுள்ள கணவாய்களில்

Page 45
74 இத்தாலியப் போர்கள்
ஆதிக்கம் செலுத்திய சவோய்-பீதுமன் ஆகிய இடங்களின் கோமகனுடனும், வற்றலினவின் அகன்ற பள்ளத்தாக்கை ஆட்சி செய்த கிரிசனருடனும் நட்பைப் பேணவும் அவன் இடைவிடாது முயற்சி செய்தான். பிரான்சின் எல்லைப் புறத்தை அல்பிசுக்குத் தெற்காகவோ பிரனிசுக்குத் தெற்காகவோ விரிக்க அவன் விரும்பவில்லை.
எட்டாம் சாள்சினதும் அவன் வழித்தோன்றலர் மூவரினதும் பேராசைகளில் நியாயமும் அடக்கமுங் காணப்படவில்லை. அவர்களின் இரு முக்கியமான குறிக் கோள்கள் நேப்பிள் என்னும் பெரிய இராச்சியத்தை ஈட்டலும், மிலான் கோமக வுரிமை மீது பிரான்சின் உரிமைகளை வற்புறுத்தலுமாகும். மத்தியதரைக்கடலை ஒரு பிரான்சிய வாவியாக மாற்றவல்லாது, பிரான்சிற்கு நேப்பிளிலோ இசிலி யிலோ எந்த வேலையுமில்லை. அது போன்ற ஆசையை நிறைவேற்றவல்லாது உண்மையில் அாகனுக்கும் அங்கே வேலையில்லை.
இத்தாலியப் போர்கள் (1494-1515)
தென் இத்தாலியைத் தாக்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்யும் நோக்கத் துடன் எட்டாம் சாள்சு ஒரு தொடர்ப் பொருத்தனைகளை நிறைவேற்றினன். இரிச்சுமொந்தைச் சேர்ந்த என்றி எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளும் பணத்தி னலும், ஓரளவு பேக்கின் உவாபெக்கு என்னும் போலி அரசனைப் பிரான்சி லிருந்து வெளியேற்றுதலாலும் ஏத்தப்பிள் பொருத்தனைப்படி (1492) இங்கி லந்தின் அரசனுன ஏழாம் என்றியுடன் சமாதானஞ் செய்தான். பாசலோனு, அல்லது நாபொன் பொருத்தனையின் படி (1493, சனவரி) உறுாசிலோனையும் சேர்தானியையும் அரகனைச் சேர்ந்த பேடினந்துக்குக் கையளித்தான். செனிலி சுப் பொருத்தனையின்படி (1493, மே) ஆட்டுவாவையும் பேகண்டி என்னும் சுயா தீனக் கோட்டத்தையும் (பிரான்சிய கொந்தே) மாச்சிமிலியனுக்குத் திருப்பிக் கொடுத்தான். இவ்வாருக, தூர நாடுகளை வெல்லவோ நம்பத் தகாத குடும்ப உரிமைகளை வற்புறுத்தவோ, ஒருவேளை பிரான்சிய முடியாட்சியின் பலத்தையும் ஆடம்பரத்தையும் ஐரோப்பாவிற்குக் காட்டவோ அவன் பிரான்சிற்கு மிகக் கூடிய, உடனடியாக முக்கியமான மாகாணங்களைக் கைவிட்டான். எப்படியென் முலும் அவன் தான் கருதியபடி இத்தாலி மீது போர்மேற் செல்லுதலை எளிதாக் கினன்.
1494, யூன் மாதத்தில் ஒரு சிறந்த படைக்குத் தலைமை வகித்து, மொன் செனிவர் என்னும் கணவாய் வழியாகப் பீதுமனைத் தாக்கினன். இங்கே சவோ யைச் சேர்ந்த கோமகள் பிளாங்கு அவனை வரவேற்ருள். அவன் பெயரில் விழாக் கொண்டாடப்பட்டது; பியரோகி மெடிக்கியின் ஒப்பலுடன் புளோாஞ்
1. எட்டாம் சாள்சு 1482-98 ; பன்னிரண்டாம் உலூயி 1498-1515 ; முதலாம் பிரான்சிசு 1516-47; இரண்டாம் என்றி 1547-59.

இத்தாலியப் போர்கள் 75
சில் நுழைந்து (நவம்பரில்), வரவேற்கப்படாவிட்டாலும், போப்பாட்சிக்குரிய அரசுகளுக்கூடாக எதிர்ப்பின்றி அணிவகுத்துச் சென்முன். 1495, பெப்புருவரி யில் நேப்பிளைக் கைப்பற்றினன். இத்தாலிக் கூடாக அவன் அணிவகுத்துச் சென்றது ஒரு வெறும் ஊர்வலமேயாகும்.
எனினும், இத்தாலியிற் பிரான்சியரின் நிலைமை முற்முக உறுதியற்றிருந்தது. சாள்சு நேப்பிளுள் புகுந்த ஒரு மாதத்தின் பின், வெனிசுக் கூட்டவை எனும் ஒரு கூட்டவை வெனிசுக் குடியரசால் உருவாக்கப்பட்டு, போப்பாண்டவர் ஆரும் அலச்சாந்தராலும் கத்தோலிக்க பேடினந்தாலும் மாச்சிமிலியனலும் மிலான் கோமகனுலும் அமைக்கப்பட்டது. பெயரளவில் துருக்கருக் கெதிராக அமைக் கப்பட்ட தெனினும், உண்மையில் இத்தாலி மீது படையெடுத்த பிரான்சியரைத் தண்டித்தலும் நாட்டிலிருந்து வெளியேற்றலுமே அதன் திட்டமாகும். தென் இத்தாலியிற் சூழ்ச்சியால் ஏமாற்றப்படக்கூடுமென அஞ்சி, சாள்சு வட திசை நோக்கி விரைந்தான். யூலையில் போனேவோ என்னுமிடத்தில் நடந்த் ஒரே சமரைத் தவிர வேருெரு செலவுமின்றிப் பிரான்சுக்குத் திரும்பியமை பற்றிச் சாள்சு நன்றியுணர்ச்சியுடையவனுயிருந்தான். நேப்பிளைக் காவல் செய்யும் பொருட்டுச் சாள்சு பின்னேவிட்டுச் சென்ற பிரான்சியப் படைஞரை இரண்டாம் பேடினந்து அரசன் வெளியே துரத்தினன். இத்தாலிக்குச் சென்ற முதற் படை யெடுப்பு இழிவு அடையாவிடினும் தோல்வியுடன் முடிவெய்தியது.
மிலான்
எனினும், 1498 இல் தன் உறவினனை எட்டாம் சாள்சின் பின் அரசெய்திய பன்னிரண்டாம் உலூயி அம்முயற்சியைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான். அவன் வெனிசு, புளோரஞ்சு ஆகியவற்றின் குடியரசுகளுடனும் போகியா என்பானுட னும், போப்பாண்டவர் ஆரும் அலச்சாந்தருடனும் சிவோய்க் கோமகன் இரண் டாம் பிலிபேட்டுடனும் நட்புறவுகள் நிறைவேற்றினன். இவ்வண்ணம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு மிலானத் தாக்க ஆரம்பித்தான்.
மிலான் குறித்த நிலையின் உயிர்நாடியாகும். உலம்பாடிச் சமவெளியின் மையத் கில் நிலைநாட்டப்பட்டதெனினும் அல்பிசு மலைகளின் மத்திய கணவாய்களி லிருந்து வெளியே போகும் வழியை அடக்கியாளுகின்ற பலமாக அரண் செய் யப்பட்ட கோட்டைகளையுடைய மிலான், சுவிசு அல்லது சேர்மனியப் படைஞர் கள் மத்திய, தென் இத்தாலியைச் சென்றடையும் வழியைத் திறந்து விடவோ அடைக்கவோ முடியும். எனவே, நேப்பிளைவிட மிலானே அவ்வெதிரிகளின் குறிக்கோளாகும். ஆனல், பிரான்சுக்கும் அபிசுபேக்கருக்கும் இடையே முனைப் பான போட்டிக் காலம் இனிமேல் வர இருந்தது (1522-9).
இதற்கிடையில் மலைவுகள் நிரம்பிய ஒரு காலப் பகுதியிருந்தது (1493-1515). இத்தாலியில் ஏதோ ஒரு வகையான சமநிலையைப் பேணுதல், மேலாண்மை ஏற்

Page 46
76 இத்தாலியப் போர்கள்
படுத்தக்கூடிய எவருக்கும் எதிராகவும், சிறப்பாக பிரான்சின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஒன்று கூடுதல் என்பனவே போப்பாட்சியின் தலைமையைப் பொதுவாகப் பின்பற்றும் இத்தாலிய நகர்களினதும் சிற்றரசர்களினதும் பூட்கையாயிற்று எனும் உண்மையை நாம் புரிந்து கொண்டால் மலைவை நாங்கள் நீக்கலாம்.
இவ்வாருக ஐந்தாண்டுப் போரும் இணக்கப் பேச்சும் முடிவடைந்த பின்னர், (1497-1504), பிரான்சியர் மிலான உறுதியாகப் பெற்றுள்ளனர்போலவும் தோற் றியது. கத்தோலிக்கப் பேடினந்து (சேர்மன் தி புவாவுடன் தகுந்தவே%ளயிற் செய்த திருமணத்தினதும், பன்னிரண்டாம், உலூயியுடன் செய்து கொண்ட போத்தினதும் நற்பேருக) நேப்பிள் மீது மறுப்புக்கிடமின்றி தன் உரிமைகளைப் பெற்றன் போலவும் எமக்குத்தோன்றும்.
கம்பிரேக் கூட்டவை
பின், குழியற் சக்கரத்தின் வேருெரு திருப்பம் ஏற்படுகிறது. 1508 இல், பெரி தும் போப்பாண்டவர் இரண்டாம் யூலியசின் தூண்டுதலின் விளைவாக, கண்டத் திற்குரிய மூன்று பெரிய இறைகளாகிய பேடினந்து, மாச்சிமிலியன், பன்னிரண் டாம் உலூயி என்போர் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பொருமைகளைக் 6).5 விட்டு, பெருமை பிடித்த வெனிசுக் குடியரசின் வலிமையை முற்முயழிக்கவும், அதன் ஆள்புலங்களைப் பிரிவினை செய்யவும் ஒன்றுசேர்ந்து கம்பிரேக் கூட்டவை
யை கூட்டினர்.
வெனிசின் உயர்நிலையான காலம் முடிவெய்தியது. இந்த உண்மை வெனிசியர்க்கோ அவர்களின் பகைவர்க்கோ புலப்படாதிருந்தது. அந்தக் குடி யாசு அதன் அயல் நாட்டினர் அதிகமானேருக்குச் சினமூட்டியது ; பெருநிலப் பகுதியில் ஆள்புலம் ஈட்டியதினுல் அது மாச்சிமிலியனதும் மிலான் வாசிகளதும் உரிமைகளைப் பொறுத்தவளவில் எல்லைமீறிற்று. போப்பாண்டவரின் ஆட்சிப் பகுதி, நேப்பிள் ஆகியவற்றிற்கு நட்டம் விளைத்து தன் ஆட்சிப்பகுதியைப் பெருக்கியது. எனினும், 1509 இல் போப்பாண்டவர் இரண்டாம் யூலியசு பயென்சா, இரிமினி, இராவென என்னுமிடங்களை மீண்டும் அடைந்தார். பேடினந்து ஒதிசாந்தோ, பிறிந்திசு ஆகியவற்றையும் வேறு அபூலியன் துறை முகங்களையும் நேப்பிளுடன் வலிந்திணைத்தான்; ஆனல், வட இத்தாலியில் பன் னிரண்டாம் உலூயி அகினதல்லோ என்னுமிடத்தில் வெனிசியர் மீது எய்திய முடிவான வெற்றியின் விளைவாக (1509, மே, பதினன்காம் திகதி) மிலானுக்குத் தன்னை முதல்வனுக்கியதோடமையாது, மின்கோ வரையுமுள்ள வெனிசிய ஆள் புலத்தையும் வலிந்திணைத்தான். மக்கியவெலி எழுதியதுபோல், ‘வெனிசியர் 800 ஆண்டுகளாக இடைவிடாது முயற்சி செய்ததின் பயணுக ஈட்டிய யாவற்றை யும் ஒரு நாளில் இழந்தார்கள்'. இக்கூற்று மிகைப்பட்டதாயினும், பிரான்சியரின் வெற்றி, கம்பிரேக்கூட்டவையைச்சேர்ந்த நாட்டுக் கூட்டிணைப்பாளாரைத் திகிலடையச் செய்யக்கூடிய அளவிற்குப் பூரணமாயது.

இத்தாலியப் போர்கள் 77
பன்னிரண்டாம் உலூயி தன்னை “இத்தாலியின் ஆள்வோனுகவும் உலகத்தின் முடி மன்னனுகவும் ஆக்குவானென அவன் நட்பாளர் அஞ்சினர். குறிப்பாக, போப்பாண்டவர் இரண்டாம் யூலியசு தம்முடைய சொந்த வேலைப்பாட்டின் எதிர்பாரா வெற்றியைப் பற்றித் திகிலடைந்தார். இவர் வெனிசை நசிக்கப் பிரான்சியர், சேர்மானியர், இசுப்பானியர் ஆகிய பிறநாட்டினரை அழைத்த பின்னர், இப்போது வெளிநாட்டினரை வெளியே அகற்ற வெனிசுக்கு உதவி புரிய முன் வந்தார். குடியரசுக்கு மாருகக் கூறிய சமயவிலக்குத் தடையுத்தா விலிருந்து குடியரசை மன்னித்துவிட்டு, கம்பிரேக் கூட்டவையைக் குலைத்து, பிரான்சுக்கெதிராகச் சுவிசு நாட்டுக்கூட்டிணைப்புடன் நட்புறவொன்றை நிறை வேற்றினர். இதற்கு எதிராக்ப் பன்னிரண்டாம் உலூயி ஒரு பொதுக் கழகத்தை யும் போர்ப் பிரியமுள்ள போப்பாண்டவரின் நீக்கலையும் கோரினன். இத்தவருன கோரிக்கை போப்பாண்டவருக்கு அவர் விரைவிற் கைப்பற்றிய வாய்ப்பை அளித்தது. 1511, ஒற்ருேபர் மாதத்தில் அவர் மாச்சிமிலியனையும், பேடினந்தை யும், வெனிசிய குடியரசையும், சுவிசு நாட்டுக்கூட்டிணைப்பையும் தன்னுடன் சேரும்படி தாண்டினர். திருச்சபையைப் பாதுகாத்தல், நேரவிருந்த பேதகத் தைத் தடுத்தல், அழையாது நுழையும் பிரான்சியரை இத்தாலியினின்றும் மூட்டை முடிச்சுக்களுடன் துரத்திவிடுதல் என்பன இப்புனிதக் கூட்டவையின் மூன்று குறிக்கோள்களாகும்.
இளவயதினனும் ஆவல் மிகுந்தவனும் போவாவுள்ளவனுமாகிய எட்டாம் என்றி திறமையான குழியலினல் இக்கூட்டவையிற் சேர்க்கப்பட்டான். தன் தந்தை திரட்டி வைத்த செல்வத்திற் பெரும் பகுதியை கூயென் மீதும் (தந்திர முள்ள அவன் மாமன் பேடினந்தின் முழு நலனுக்காக) பிக்காடி மீதும் படை யெடுப்பதிற் செலவழித்தான். பிக்காடியில் என்றி எய்திய வெற்றிகள் அவன் மாமனைத் திகிலடையச் செய்தன. இவன் நாவாரைப் பெற்றுக்கொண்டபின்னர் பன்னிரண்டாம் உலூயியுடன் சமாதானஞ் செய்துதொண்டான். இந்தச் சூழ்ச்சி யினல் என்றி நியாயத்துடன் ஆக்கிரமடைந்தான். ஆனல், தன் தலைவனின் ஆதரவில் தீவிரமாக அப்போது முன்னேறிக்கொண்டிருந்த ஊல்சி எதிர் நடவடிக்கையை ஒழுங்கு செய்தான். 1514, சனவரியிற் பன்னிரண்டாம் உலூயி யின் இராணி இறக்க, 52 வயதுள்ள அவன், ஒழுக்கம் கெட்டவனுயிருந்த போதிலும் உடனே வேருெரு மனைவியைத் தேடினன். ஊல்சி என்பான், அழகும் துணிகர உளப்பான்மையுமுள்ள பதினேழு வயதினளான, மேரி தியூடர் என்பாளை உடனே மணமகளாகக் கொடுக்க முன்வந்தான். 1514, ஒற்முேபர் மாதத்தில் திருமணம் நடந்தேறியது. அடுத்த சனவரி மாதத்தில் அவ்வாடம்பர மான மணமகன் இறக்க, தான் விரும்பிய மணமகனுன சவொக்குக் கோமகனுன
சாள்சு பிராந்தனைத் திருமணஞ் செய்ய உரிமை உடையவளாயிருந்தாள்.
ஓராண்டின் பின்னர் (1516, சனவரி) கத்தோலிக்க பேடினந்து இறக்க
அவன் பேசன் சாள்சு இசுப்பானிய இராச்சியங்களையும் அவற்றின் சார்பு
நாடுகளையும் பெற்றன். அவன் தந்தை இறந்த காலந்தொடக்கம் (1506)

Page 47
78 இத்தாலியப் போர்கள்
பேகண்டி உரிமைகள் (நெதலந்தும் சுயாதீனக் கோட்டமாகிய பேகண்டியும்) இவனிடமே இருந்தன. 1519 இல் மாச்சிமிலியன் இறக்க, ஒசுத்திரிய மாபெரும் கோமகவுரிமையினதும் அபிசுபேக்கரின் வேறு மரபுரிமையான ஆட்சிப் பகுதி களதும் பட்டம் எய்த அவனுக்கு வழி பிறந்தது. இதல்ை பேரரசின் அரசு கட்டிலும் வெறிதாயிருந்தது. அவனின் ஆள்புல நிலைமை ஏலவே சிறந்ததா யிருந்தது. ஆனல், பேரரசு இன்னும் தெரிவு செய்யப்படும் ஓர் உயர்ந்த பதவியா யிருந்தது. பேரரசு முடியைப் பெறப் பிற அபேட்சகருமிருந்தனர். எனினும் இவர்களுள் இளவயதினன பிரான்சிய அரசன் ஒருவனே மிக முக்கியமான
வனுவான்.
முதலாம் பிரான்சிசு (1515-47)
ஐந்தாம் சாள்சைப் போல் முதலாம் பிரான்சிசும் ஒரு சிறந்த மரபுரிமையை அடைந்தான். அவனுடைய போட்டியாளனது போன்று அது அத்துணை அகன்ற ஆள்புலமன்று. ஆனல், அது திட்பமுடையதாய் நிருவகிக்கக்கூடியதாயிருந்தது. மேலும், அவன் முன் ஆண்ட நான்கு அரசர்களது பூட்கையின் நற்பேறு காரணமாகவும் பாலன ஒருமுகப்பாடு காரணமாகவும் அவர்கள் ஆட்சியில் ஆள் புலம் வலுப்பட்டு இருந்தமை காரணமாகவும், சாள்சுக்கு எட்டாத அளவுக்கு, அவன் இராச்சியத்தின் வளம் யாவற்றிற்கும் முதல்வனுனன்.
அவனுடைய முதற் செய்கை இத்தாலி மீது போர்மேற் சென்று இழந்த மிலா னைத் திரும்பப் பெறுதலாகும். மரிஞானேப் போரில் (1515) அவன் எய்திய சிறந்த வெற்றியினுல் அதைச் செய்து முடித்தான். மூன்ரும் முறையாகப் பிரான்சியர் உலம்பாடியின் தலைவர்களாயினர். சுவிசு மக்களுடன் பிறைபேக்கு என்னுமிடத்தில் தாமதமில்லாது அமைதிப் பொருத்தனை நிறைவேற்றப்பட்டது. மெடிக்கியன் போப்பாண்டவரான பத்தாம் இலியோவுடன் பொலோனியா என்னுமிடத்தில் (1516) ஒரு முக்கியமான பொருத்தனை நிறைவேற்றப்பட்டது. புளோரஞ்சில் உலான்சோ தி மெடிக்கியை ஆதரிப்பதாகப் பிரான்சிசு வாக்குறுதி செய்தான். பாமா, பியாசன்சா என்னுமிடங்கள் மிலானுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. மரிஞானே வெற்றியின் மிக முக்கியமான விளைவு, பிரான்சிய அரசனுக்கும் போப்பாண்டவருக்குமிடையில் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த ஒழுங்கின் கீழ் பூர்சு (1438) என்னுமிடத்தில் நிறை வேற்றப்பட்டதும் பிரான்சிய திருச்சபைக்குச் சுதந்திரம் அளித்ததுமான பேரரசுச் சட்டவுரிமை தள்ளுபடி செய்யப்பட்டது; ஒவ்வொரு மானியப் பணி யிடத்தின் முதலாண்டு வருமானத்தையும் பிரான்சிசு கத்தோலிக்க போப்பாட் சிக்கு மீண்டும் கொடுத்தான். போப்பாண்டவர், சகாயவுரிமைகளை பிரான்சிசுக் குக் கொடுத்தார். எலவே பிரான்சிய நாட்டின் மீது மேலாண்மை படைத்திருந்த முடிக்குக் குருவர்யத்தின் மேலும் மேலாண்மை கைகூடிற்று. சுருங்கக் கூறின் அந்த உடன்படிக்கை வேத்தியற்றணியாட்சியின் மணி முடியாயது.

இத்தாலியப் போர்கள் 79
பிரான்சின் தனித் தலைவனும் வட இத்தாலியில் ஆதிக்கம் படைத்தவனு மான பிரான்சிசு கிறித்த உலகத்திற் பொதுமகன் ஒருவன் எய்தக்கூடிய அதி உச்ச நிலையை அடைய விரும்புவது நியாயந்தானே ?
போப்பாண்டவருடன் செய்த பொருத்தனையுடன் பிரான்சுக்கும் இசுப்பெயி னக்குமிடையே நிறைவேறிய நிவயோன் பொருத்தனை பின் சேர்க்கப்பட்டது. மாச்சிமிலியன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியவனனன்.
இந்தப் பொருத்தனைகளோடு இத்தாலியப் போரின் முதலாம் காலப்பகுதி முடிவடைகின்றது. இந்தப் போர்களின் உண்மையான & ட்கருத்து யாதெனில், அவை இத்தாலிய நாடுகளிடை அரசு வலுச் சமநிலையைப் பேணும் முயற்சியைக் குறிப்பதாகும். பிரான்சுக்கும் ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கருக்கும் இடையே நிகழ்ந்த இரண்டாம் தொடர்ப் போர்கள் (1520-59) இத்தாலியில் உருவர்னவை. ஆயினும் இவை இத்தாலிய நிலத்திற் புரியப்படல்லை. அவற்றின் எல்லையும் சிறப்பும் மிகவும் பரந்தவை. இவற்றின் பணயம் ஐரோப்பிய அரசு வலுச் சமநிலையாகும்.
இரண்டாவதாக ஆறு போர்கள் தொடர்ந்து நடந்தன. முதல் நான்கும் சாள்சுக்கும் பிரான்சிசுக்குமிடையில் நிகழ்ந்தன. ஐந்தாவது, சாள்சுக்கும் இரண்டாம் என்றிக்குமிடையில் நிகழ்ந்தது; கடைசியானது இரண்டாம் பிலிப் புக்கும் இரண்டாம் என்றிக்குமிடையில் நிகழ்ந்தது. அவற்றை உடனடியாகவே சுருக்கிக் கூறுவது பின்வரும் நிகழ்ச்சியுரையை எளிதாக்கும்.
(1) 1520-6
முதலாம் போர், சாள்சு பேரரசனுகத் தெரிவு செய்யப்பட்டதற் பின் தொடர்ந்தது; 1520 தொடக்கம் 1526 வரையும் நிலைத்தது. இதற்கு முன்னர், பொன்னடைக்களத்தில் (1520 யூன்) எட்டாம் என்றியும் பிரான்சிசும், அடுத் துக் கிராவிலினில் எட்டாம் என்றியும் இள வயதினனுன பேரரசனும் யூலை மாதத்திற் சந்தித்தனர். பேரரசனும் பிரான்சிய அரசனும், ஒரு கருத்தில், சம நிலையைப் பேணி நின்ற இங்கிலந்துடன் நட்புறவு செய்ய அவாவினர். என்றி பேரரசுடன் நட்புறவு செய்வதையே பெரிதும் விரும்பினன். எனினும், அவன் போரில் தலையிட்டபோதும் நட்பாளர் எவ்வித உதவியையும் அவனிடமிருந்து பெறவில்லை. பிக்காடி, பேகண்டி எனும் கிழக்கு முன்னணியில் சாள்சு பிரான்சை நோக்கி எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. ஆனல், இத்தாலி யிற் பேரரசுக் கட்சியினரே கூடிய நற்பயனைத் தீர்க்கமாகப் பெற்றனர். பாவியா என்னுமிடத்தில் (1525) பிரான்சிசு வெல்லப்பட்டுக் கைதுசெய்யப்பட்டான். மகிரித்துப் பொருத்தனேப்படி (1526) பேகண்டியக் கோமகவுரிமையைக் கை விட்டு, மிலான், நேப்பிள், பிலாண்டேசு, ஆட்டுவா ஆகியவை மீதும் தனக் கிருந்த உரிமைகள் யாவற்றையும் துறந்து, பதிலுபகாரமாக விடுதலையடைந் தான.

Page 48
80 இத்தாலியப் போர்கள்
(2) 1526-9
பிரான்சிசு சுதந்திரமடைந்தவுடன் பொருத்தனையை மறுத்து, போப்பாண்ட வருடனும் இத்தாலிய சிற்றரசர்களுடனும் கொக்கினுக்குக் கூட்டவையிற் சேர்ந் தான். பாவியாச் சண்டையும் அதன் விளைவான மதிரித்துப் பொருத்தனையும் ஐரோப்பிய சமநிலையை அச்சுறுத்தின. இரண்டாம் போரை நிறுத்திய கம்பிரேப் பொருத்தன (1529), ஓரளவிற்குப் பழைய நிலைமையை மீண்டும் ஏற்படுத்தியது. போரைப் பற்றிய மிக முக்கியமான விடயம் யாதெனில், தாக்க வில் தங்கள் தளபதி இறந்தபின்னர் பேரரசுப் படைஞர் உரோமைத் (1527) தாக்கிக் கொள்ளையடித்தமையாகும். போப்பாண்டவர் ஏழாம் கிளமந்து கைதி யாகச் சாண்புகவேண்டிய கதியேற்பட்டது. புளோரஞ்சு மீண்டும் குடியரசாகத் தாபிக்கப்பட்ட பொழுது அந் நாட்டிலுள்ள அவர் உறவினரின் நலனை அவருக்கேற்பட்ட தாழ்வு பெரிதும் பாதித்தது. கம்பிரேப் பொருத்தனையின் விளைவாகப் பேகண்டியக் கோமகவுரிமையைப் பிரான்சு மீண்டும் பெற்றது.
ஆனல், பேரரசன் பழையபடி இத்தாலியில் ஆதிக்கமுடையவனுயிருந்தான்.
பிரான்சு அபிசுபேக்கராற் பெரிதும் நெருக்கப்பட்டதென்பது வெளிப்படை. இரண்டாம் போரின் முடிவுக்கும் மூன்ரும் இத்தாலியப் போரின் ஆரம்பத்துக்கு மிடைப்பட்ட ஏழாண்டுக் காலம் அரசனுற் பெரிதும் நயம் பெறப் பயன்படுத்தப் பட்டது. அவன் தன் படையை முற்முய்த் திருத்தியமைத்து, தொடர்ச்சியான பொருத்தனைகளாற் பேரரசனுக்கு மாமுக ஒரு பலமுள்ள கூட்டுக்கட்சியை யமைத்தான். பேரரசனுக்கெதிராக (1531) சிமால்கால்திக்குக் கூட்டவையை அமைத்திருந்த சேர்மானிய புரட்டெசுத்தாந்தர், எட்டாம் என்றி (1532), சுவீடிய அரசன் கசுத்தாவசு வாசா, போப்பாண்டவர் எட்டாம் கிளமந்து (1553), துருக்கிய சுலுத்தான் சுலைமான் (1535) ஆகியோருடன் நட்புறவுகள் நிறைவேற்றினன்.
(3) 1536-8 (4) 1542-4
மூன்ரும் போரிற் பிரான்சு சவோயையும் பீதுமனையும் கைப்பற்றியது. ஆனல், 1544 இல் கிறசபிப் பொருத்தனையுடன் முடிவெய்திய நான்காம் போர் முக்கிய மான பயன் எதுவுமற்றதாகவிருந்தது. 1547 இல் முதலாம் பிரான்சிசு இறந்தான். அவன் தன் கடைசியாண்டுகளில் எட்டாம் என்றியுடன் போர் புரிவதில் ஈடுபட்டிருந்தான். ஆனல், இதன் விளைவு இங்கிலந்து பூலோனை இழந்த தொன்றேயாகும்.
(5) 1552-6
இக்காலம்வரை பிரான்சுக்கும் அபிசுபேக்கருக்கும் உண்டான போராட்டம்,
சேர்மனியிலுள்ள கத்தோலிக்கருக்கும் புரட்டெசுத்தாந்தருக்குமிடையில் நிகழ்ந்த போராட்டத்துடன் விடுவிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டிருந்தது.

இத்தாலியப் போர்கள் 81
அடுத்த நூருண்டுகளிற் பிரான்சிய மன்னர்கள் தங்கள் சொந்த நாட்டில் புரட்டெசுத்தாந்தத்தைக் கண்டிப்பாக ஒடுக்கினரெனினும், தம் அயல் நாடு களின் குடிமக்களுள் ‘பாநெறியை ஊக்குவது அரசியலில் தங்களுக்கு நற்பேறு அளிக்குமெனக் கண்டனர். தன் தந்தை காலஞ் சென்றபின்னர் பட்டத்திற்கு வந்த இரண்டாம் என்றி இப்பூட்கையை வெற்றியுடன் பின்பற்றினன். இதன் பயனுக 1556 இல் ஐந்தாம் போரை முடிவு செய்த வோசெல்சுப் படைத் தகை வின்படி மெற்சு, தூல், வேடன் ஆகிய உலொாேனைச் சேர்ந்த, விசுப்பாண்டவருக் குரிய மூன்று உரிமைகளைப் பெற்றன். இவ்வண்ணம் அவ்வெல்லைப் பகுதியை இறுகப் பிடித்துக்கொண்டான். 1871 வரையும் அப்பிடியை அவன் நெகிழ விட வில்லை. ஆனல், 1766 வரையும் உலொரேன் கோமகவுரிமை முழுவதும் பிரான்சிய ஆட்சிக்குட்படவில்லை.
(6) 1556-9
1556 இல் ஐந்தாம் சாள்சு அரசியலிலும் போரிலும் களைப்படைந்து, தன் மகன் இரண்டாம் பிலிப்பின் சார்பில் தன் பதவியைத் துறந்தான். இவனுக்கும் இரண்டாம் என்றிக்குமிடையிலேயே இறுதித் தொடர்ச்சியான போர்கள் நிகழ்ந்தன. பிலிப்பு, இங்கிலந்து இராணியின் கணவனுனமையாற் பிரான்சியருக் கெதிராகத் தன் மனைவியின் குடிகளது இருதயபூர்வமான ஆதரவை நம்பி யிருக்கலாம். 1557 இல் சென் குவென்றின் போரில் சவோய்க் கோமகனன எமானுவேல் பிலிப்பேட்டு என்பானின் தலைமையில் எய்திய வெற்றிக்கு அவர் கள் துணைபுரிந்தார்கள். ஆனல், அந்த வெற்றி, கைசுக் கோமகன் பிரான்சிசாற் கைப்பற்றப்பட்ட கலேக்கு ஈடாக முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறிது ஓய்வுகளுடன் நீடித்த போரில் ஒரேயொரு முக்கியமான நிகழ்ச்சி நிகழ்ந்தது. அது பிரான்சிலுள்ள ஆங்கிலேயரின் அரணைக் கவர்ந்ததாகும்.
M
காற்ருே-காம்பிரேசிப் பொருத்தனை
1559 ஏப்பிரலிற் பெல்சிய எல்லைப்புறத்திற் காற்ருே-காம்பிரேசி என்னுமிடத் தில் அமைதிப் பொருத்தனை ஈற்றில் நிறைவேற்றப்பட்டது. பிரான்சு, எமானு வேல் பிலிப்பேட்டுக்குப் Q?துமனையும் சவோயையும் திருப்பிக்கொடுத்து, எல்லைப் புறத்திலிருந்த ஒரு சில கோட்டைகளைத் தவிர்ந்த இத்தாலியிலுள்ள தன் உரிமைகள் யாவற்றையும் கைவிட்டது. இசுப்பெயின் உலம்பாடியையும் நேப்பிளை யும் தன்னிடமே வைத்திருந்தது. பிரான்சும் உலொரேனிலுள்ள விசுப்பாண்ட வருக்குரிய மூன்று உரிமைகளைக் கைவிடவில்லை. அந்தப் பொருத்தனை இரு விவாகங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. சன் குவென்றின் போரில் வெற்றி யடைந்த எமானுவேல் பிலிப்பேட்டு, இரண்டாம் என்றியின் சகோதரி மாகாற்றை மணஞ் செய்தான். இரண்டாம் முறையும் மனைவியை இழந்தவனும்,
1. நான்காம் என்றி மட்டுமே இவ்வழக்கமான பூட்கையினின்றும் விலகினன்.

Page 49
82 இத்தாலியப் போர்கள்
தன் மைத்துணி எலிசபெத்து இராணியாற் புறக்கணிக்கப்பட்டவனுமாகிய இரண்டாம் பிலிப்பு கதரின் தி மெடிக்கியின் மகள் எலிசபெத்தை மணப்பதோடு திருத்தியடைய வேண்டியவனனன்.
பிரான்சிய மக்கள் அமைதிப் பொருத்தனை நியதிகளைப்பற்றி முறுமுறுத்தனர். ஆனல், உண்மையிற் பிரான்சு தன் ஆள்புலம் சிறிதும் குறையாமலும், போர் முறைத் திறத்தில் வலுவடைந்தும் இந்த நீண்ட போராட்டத்திலிருந்து வெளி யேறியது. அபிசுபேக்கர் இத்தாலி மீது தங்களுக்கிருந்த பிடியைக் கைவிட வில்லை. ஒசுத்திரிய இசுப்பானிய-பேகண்டியப் பேரரசு, தனியொருவனற் கொண்டு நடத்துதற்கு அதிகமானதும் அமைப்பிற் குறைபாடானதுமென்ற உண்மையை ஓரளவிற்கு அனுபவத்தாலறிந்ததைத் தவிர, இந்தப் போர்களி லிருந்து ஐந்தாம் சாள்சு பிறிதொரு நன்மையும் அடையவில்லை. ஆகவே, அவன் முடி அறந்த பொழுது, ஒசுத்திரியாவையும் அதன் அயல் நாடுகளையும் தன் சோதான் பேடினந்துக்குக் கொடுத்தான் , தன் மகன் பிலிப்புக்கு இசுப்பெயினை யும் இத்தாலியையும் நெதலந்தையும் கொடுத்தான். இவற்றிலொன்றிலாவது தொல்லையில்லாமலில்லை ; சேர்மனிய உரிமையே அதிக தொல்லையுடையதாயிருந் தது. ஒசுத்திரிய சேர்மனியருக்கும், பொகீமிய செக்கர்களுக்கும், அங்கேரிய மகியர்களுக்குமிடையிற் பொதுவானதொன்றுமில்லை. புரட்டெசுத்தாந்தபா நெறியினற் பேரரசு குழப்ப மடைந்திருந்தது. முசிலிம் துருக்கர் கத்தோலிக்க பிரான்சுடன் ஆச்சரியப்படும் வகையில் நட்புறவு செய்து அங்கேரியைப் படை யெடுத்தழித்ததுமல்லாமல், வீயன்னுவின் வாயிலையும் குழ்ந்து தாக்கினர் (1529). இசுப்பானிய மரபுரிமை அத்துணை நம்பிக்கையற்றதாயில்லை. ஆனல் வீயன்னுவி லிருந்து ஆட்சி செய்யப்பட்ட பாழான பேரரசு மதிரித்தை மையமாகக் கொண்ட பேரரசிலும் பார்க்கப் பல நூற்முண்டுகள் கூட வாழவேண்டியிருந்தது.
ஐரோப்பாவிற்குப் பொதுவாக, காற்ருே-காம்பிரேசிப் பொருத்தனை முக்கிய நிகழ்ச்சியாயிருந்தது. அபிசுபேக்கு மேலாதிக்கம் பற்றிய அச்சம் தடுக்கப் பட்டது ஆமடாப் போரில் இவ்வச்சம் ஒழிக்கப்பட்டது. மரபுரிமையைக் கொண்டு தோன்றி அரை நூற்றண்டு காலமாக நிகழ்ந்த போர்கள் முடி வெய்தின. அடுத்த நூற்றண்டுகளில் மதமே போரின் முக்கிய காரணமாக வேண்டியிருந்தது.


Page 50
1859 இல் ஐரோப்பா
ஆங்கிஸ் மைல்கள்
enero OELO
- 209 3C 40
டகி-ே டாராரேத் பிகோ-பிராஜ், நோய்து
L. r !
.1 மய்றுளா جيش ħilier - - - IL-qtil li
== உஒாக்ரா
"శ్రీశ్య,
نیلا 翼 I 概 鷺
궁 t " 舌帽 |||
影 5ی يج" ........) පුත්‍රී" |:
韋
– Foo) 巫 ፰ሃ'ቇ
|'ச்ேரீம்
ஆபிாபோக்கு உடன
---.S. 4173 (5)
frt.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேஜ் சுவிசநாட்
பே
ஆவுகள் * öኳ''
தி Ll த
.........ሶሄና፡ሁዥ ̇ "ዛቖ..”
அஸ்சிரியர்
ஒகந்திங்ய இசுப்பாங்பே
Lee
1.59

Page 51
ጕጕ`ዅጕጕダダダメo.o., 丝ククク、クグ% メメメ*ų.
-ダメメ
メ『Bメメメメジメ ダメメ 丝 メメダ『メメメダN名 グ メጕ.. グ%gメメ % グ、* メ综华メメメ ク%グ%/グ% \,学メメメメメメ グ%
நீருே
i
Trio
们邮刊
''N"¥, v. " NNNNNNN SNSSSSSN
''' `ኑ ጕጕ ‰ `.. ጕ`ኣ ‰
"
e
i
GLITI f7"
" NN \, NIN 闪 சாப் * ,
ጕጕዅዅዅ
முகமதிய ஆரசுகள்
பூபங் குவந்தாமசின் முள்ளே டாடிடிமகள்
1559 iki GJITūLT
 

ஆத்தியாயம் f
சேர்மனியும் பேரரசும்
சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
முக்கியமான திகதிகள் (7 ஆம் அத்தியாயத்திற்குமுரியன)
ዳjùù
罩品凸5-烹出
I.??‛ (ና-IጳI ፳”
-
芷萱曾阜-弹皇
置岳直罩
五岳直母
f
교 -
直品、望
I:քի
! ;ቫ,፳ስ!
போப்பாண்டவர் மூன்ரும் இலியோவால் மாபெரும் சான்க முடி
குட்டப்படல். மாபெரும் ஒற்றுே முடிசூடல். ஆபிசுபேக்குக் குலமுறையினனுன உருகோல்பு தெரிவு செய்யப்
--- ஆவின்யோன் என்னுமிடத்திற் போப்பாட்சி பெரும் பேக்கம் திருமாறுபாட்டுக்கோட்பாட்டை உவிக்கினிபு மறுத்தல். புளோாஞ்சில் சவன்'ரோலா என்பவர். பொதுக்கழகங்கள்.
சேர்மனியில் பாவமன்னிப்புக்கள் விற்கப்படல். உலூதரின் தொண்ணூற்றைந்து கோன்கள். ஐந்தாம் சாள்சின் தெரிவு. உலூதர் மதவிலக்கஞ்செய்யப்படல், ! நனோகிசுச்சபை. சேர்மன் மொழியில் உலூதர் புதிய ஏற்பாட்டை வெளியிடுதல். நியூாம்பேக்குச் சபை, உழவோரின் போர்.
சுவிற்சந்தில் மதச்சீர்திருத்தம் :ெ"க"ஆர்மர், இwப்பிரேசில் முதலாம் சட்டசபை. சுவீடினிலும் தென்மாக்கிலும் மதச்சீர்திருத்தம். இசுப்பியேசில் இரண்டாம் சட்டசபை.
குட் டப்படல்,
ஒகக பேக்கு அறிக்கை.
5-2178 (SIGO)
பேரப்பாண்டவராஜ் போலோனியாவில் ஐந்தாம் சான்க முடி

Page 52
84 சேர்மனியும் பேரரசும்
1536 கல்வின் (பிறப்பு 1509) * நிறுவனம்' எனும் தன் நூல் வெளி'
யிடுதல்.
1541-64 செனிவாவிற் கல்வினின் ஆட்சி.
卫5星6 சிமால்கால்திக்குக் கூட்டவை.
互547 மூல்பேக்கு என்னுமிடத்திற் புரட்டெசுத்தாந்தர் தோல்வி.
互552 பிரீதவால்துப் பொருத்தனை (இரண்டாம் என்றியும் சேர்மானிய
புரட்டெசுத்தாந்தரும்).
卫552 அதுருக்கர் அங்கேரிமீது போர்மேற்செல்லுதல்.
1552 பாசோப் பொருத்தன.
重555 ஒகசுபேக்கு அமைதிப் பொருத்தன.
சேர்மனியே சமயப்போருக்குப் பிரதானமான போர்க்களமாயமைந்தது. ஆனற் சேர்மனியைப்பற்றி இதுவரையும் ஒன்றும் கூறப்படவில்லை. இத்தவறு மன்னிக்கத்தக்கதே. ஏனெனில் சேர்மனி 1871 இலேயே ஒரு நாட்டின அரசாகத் தோன்றியது. எனினும், அத்தவறை இப்போது நீக்குவாம்.
சேர்மன் நாட்டின் மலர்ச்சி, இங்கிலந்து, பிரான்சு, இசுப்பெயின் ஆகிய நாடு களினது மலர்ச்சிக்கு அத்துணை காலம் பிந்தியதற்குக் காரணமென்ன? இந்த வினவின் விடையிற் சேர்மானிய வரலாற்றுப் பிரச்சினைக்கு வழிகாட்டும் குறிப்பு இருக்கின்றது. ”
* சேர்மனி ஏன் தாமதித்தது
முதன்மையான காரணம் புவியியற்குரியதாகும். பிரான்சுடனே இன்னும் இசுப்பெயினுடனுே, இங்கிலந்துடனுே ஒப்பிட்டுப் பார்த்தால் சேர்மன் ஆள்புலம் மிகவும் பரந்ததும், தளர்ச்சியாய் நெருங்கியுள்ளதும், இயற்கை எல்லைப்புறங்கள் அற்றதும், உள்நாடு சமதளமற்றதும், நிலக்கிடக்கை துண்டு துண்டானதுமாகத் தோன்றும். அப்படியான நிலம் வலுவுள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட பாலனம் உருவாவதற்கு ஏற்றதன்று. சேர்மனி என அழைக்கப்படும் நிலப்பாகத்தின் தேசப்படத்தைப் பார்ப்பவர் எவராவது, மையம் விட்டோடும் சத்திகளை, அதாவது கூறுபட்ட இறைமை என்ற தத்துவத்தை, வெல்லக்கூடுமானல், ! முடியரசின் ஓயாத, பொறுமையான விடாப்பிடியான பூட்கையினல் மட்டுமே அவ்வாறு செய்யலாமென்பதில் ஐயங்கொள்ளமாட்டார். இரண்டாவதாக, சேர் மனி, நினைவுக்கு அப்பாற்பட்ட காலந்தொட்டே, ஆள்வோர், குடிகள் என்பாரைப் பொறுத்த அளவில் தனிப்பட்ட வரலாறுடைய மாகாணங்களின் திரளையே அடக்கியிருந்தது. மூன்ருவதாக, இங்கிலந்திலும் பிரான்சிலும் நாடு களின் இளமைப் பருவம் நீங்கும்வரையும் முடியின் வலு இடைவிடாது வளர்ந்து கொண்டிருந்தது. சேர்மனியிலோ ஒருகாலம் பகட்டாயும் பயனுறுதியுடையது

சேர்மனியும் பேரரசும் 85.
மாயிருந்த அரசனின் அதிகாரம் வாவாக் குறைந்துகொண்டேயிருந்தது. மத்திய அதிகாரத்தின் வலு வரவாப் பலங் குறைந்தது. ஒருகாலத்தில் அரசன் நியமனஞ் செய்த பதவிகள், செயலளவில் மரபுரிமையாயின. தூரத்தேயிருக்கும் முடிமன்னன் அதிகாரம் செலுத்திய இடங்களைக் கோமகனின் அதிகாரம் செய லளவில் பெற்றது. சுருங்கக்கூறின், சிதைவுறச் செய்யும் சத்திகள் -ஒருமுகப் படுத்தும் சத்திகளை வெற்றிகொண்டன.
பரிசுத்த உரோமப் பேராசு
வேறு காரணங்களும் உண்டு. இவை யாவற்றையும் ஒன்று சேர்த்தாலும், சேர்மனிய கோன்மைக்கும் உரோமப் பேரரசுக்குமிடையேயுள்ள ஆபத்தான தொடர்புடன் ஒப்புநோக்கின், அவை முக்கியமற்றனவாகின்றன. சேர்மன் முடி யாட்சியினது அபிவிருத்தியும் அவ்வழி சேர்மன் நாட்டினத்தின் வளர்ச்சியும், எல்லாம் உள்ளடக்கிய பேரரசு எனும் ஒரு கனவுக்குப் பலியிடப்பட்டன. இக் கனவு, புனித உரோமப் பேரரசு என வரலாறு கூறும், மனத்தைக்கவரும், ஆணுல் புரிந்துகொள்வதற்கியலாத நிறுவனத்தில் ஒரளவு உற்றறியக்கூடிய பொருள் இருப்பதாகப் பாவனை செய்தது.
பிராங்கியரின் அரசனன மாபெரும் சாள்சு போப்பாண்டவர் மூன்ரும் இலி யோவால் முடிசூட்டப்பட்டமை (800), உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்ருகும். சேர்மன் பேரரசனுகிய மாபெரும் ஒற்றே, போப் பாண்டவர் பன்னிரண்டாம் யோனல் (962) முடிசூட்டப்பட்டமையே சேர்மனிக் குக் குறிப்பான சிறப்புடைய நிகழ்ச்சியாகும், இவன் முடிதரித்ததோடு சேர் Ա)Taծքայ கோன்மைக்கும் புனித உரோமப் பேரரசுக்குமுள்ள தொடர்பு இறுதி யாக வலுப்படுத்தப்பட்டது. இவ்வண்ணம் சேர்மனியின் அவலநிலை ஏறத்தாழ 1,000 ஆண்டுகளுக்கு உறுதியாக்கப்பட்டது. பேரரசு உரிமைக்குத் தெரியப் பட்டவருக்கே சேர்மனியினது முடியுரிமையோடு இத்தாலியினதும் பேகண்டி யினதும் முடியுரிமையும் சேர்ந்தது. அதன் பயனகச் சேர்மனிய அரசர்கள் இத்தாலியில் தங்கள் ஆதிக்கத்தை உண்மையாக்கத் தூண்டப்பட்டனர். இவ் வாருக, வேறிடங்களில் முடியாட்சி தன் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண் டிருந்தபொழுது, சேர்மானிய அரசர்கள் உலம்பாடிய சமவெளியிலோ நேப்பிள் சதுப்பு நிலங்களிலோ பயனற்ற போராட்டம் செய்து தங்கள் பலத்தை விண் செலவு செய்தனர்.
மேலும் வேறிடங்களில் அரசபதம், கூடிய தெளிவாக மரபுரிமையை நாடிய பொழுதும், அது சேர்மனியில் தேர்வுரிமை சார்ந்ததாயிருந்தது. தெரிவை உறுதி செய்யவேண்டிய போப்பாண்டவருக்கு மட்டுமன்றி, சேர்மனியிலுள்ள சமயச்

Page 53
86 சேர்மனியும் பேரரசும்
சார்பற்றவரும் திருச்சபைக்குரியவருமான பெரிய சிற்றரசர்களுக்கும், சிறப் பாக, தெளிவுசெய்யும் உரிமையைப் படிப்படியாகப் பெற்ற ஏழு சிற்றரசர்களுக் கும், ஒவ்வொரு தெரிவும் தலையிடுவதற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தது.1
பேரரசர்களுக்கும் போப்பாண்டவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நடந்துகொண்டிருந்த போட்டி, பேரரசர்களின் நிலையை மேலும் பலவீனப் படுத்தி, சேர்மானிய சிற்றரசர்களுக்குத் தத்தம் அதிகாரத்தை உறுதிப்படுத் தும் வாய்ப்பையளித்தது.
அபிசுபேக்கர்
அபிசுபேக்குப் பெருமகனும் அல்சேசின் வேளிருமான உருதோல்பு, பேரரச கைத் தெரிவு செய்யப்பட்டதோடு சேர்மானிய வரலாற்றில் ஒரு புதிய கட்டம் ஆரம்பிக்கின்றது. 1273 இல் பேரரசனுகத் தெரிவு செய்யப்பட்ட உருதோல்பு 1275 இல் போகீமிய அரசனுகிய ஒற்முேகார் என்பானைத் தோற்கடித்துக் கொன்று, நான்கு ஆண்டுகளின் பின்னர் தன் மக்களாகிய அல்பேட்டையும் உரு தோல்பையும் தான் வெற்றிகொண்ட நாடுகளின் ஒரு பாகமாகிய ஒசுத்திரியா, இசுத்திரியா ஆகிய உரிமைகளின் கோமக்கட்பதவியிலமர்த்தினன். இந்தக் கோமகவுரிமைகள் பல நூற்றண்டுகளாக அபிசுபேக்கரின் போாசின் உட்கரு வாயமைந்தன. பதினன்காம் நூற்முண்டில் கரிந்தியாவும் காணியோலாவின் ஒரு பாகமும் (1335), தைரோலும் (1363), ஐத்திரியாவினதும் திரியெத்தினதும் பாகங்களும் இவையோடு சேர்க்கப்பட்டன. பதினைந்தாம் நூற்முண்டில் அங்கேரி யினதும் பொகீமியாவினதும் முடியுரிமைகள், சிகிமந்துப் பேரரசனின் மகள் எலிசபெத்துக்கும் அல்பேட்டுக்குமிடையே நடந்தேறிய திருமணத்தினுல் அபிசு பேக்கருக்குக் கிடைத்தன. அங்கேரியும் பொகீமியாவும் 1547 இல் தற்காலிகமாக இழக்கப்பட்டன. ஆனல், 16 ஆம் நூற்முண்டு முற்பகுதியில் ஒரு நற்பேமுன திரு மணத்தால் இவை மீண்டும் பெறப்பட்டன. பேரரசன் ஐந்தாம் சாள்சின் ஒரே சோதாணுன பேடினந்து 1521 இல் பொகீமியாவினதும் அங்கேரியினதும் அரச னை இலாடிசிலோசு என்பானின் மகள் ஆன் என்பாளை மணம் புரிந்தான். சந்ததியற்ற அவன் மைத்துனனுன உலூயி அரசன் 1526 இல் மொகாசுச் சமரிற் கொல்லப்பட்டான். ஏலவே ஒசுத்திரியா, இசுத்திரியா, கரிந்தியா, காணியோலா எனும் ஆள்புலங்களின் மாபெரும் கோமகனுன பேடினந்து 1526 இல் பொகீமியா வின் அரசனுனன். பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர், அங்கேரியின் ஒரு பாகத் தின்மேல் தனக்கிருந்த உரிமையைப் பெறுவதில் சித்தியடைந்தான்.
இதற்கிடையில், நாங்கள் கண்டுகொண்டபடி மாச்சிமிலியன், துணிகர வீரனுன பேகண்டிச் சாள்சின் உரிமையாளியாகிய மேரியை மணம் புரிந்தான்.
l மென், திரியர், கொன் ஆகிய இடங்களின் அதிமேற்றிராணியாரும், பொகீமிய அரசனும், சட்சணியின் கோமகனும் இசைனின் மாநிலக்கிழானும், பிராந்தன் பேக்கின் பெருமகனும் குறித்த தேர்வுரிமையாளராவர்.

சேர்மனியும் பேரரசும் 87
அவர்களின் மகன், மகா கோமகன் பிலிப்பு, இசுப்பானிய இராச்சியங்களுக்கும் அவைகளின் பரந்த சார்பு நாடுகளுக்கும் மரபுரிமை உடையவளான யோன்ன வை திருமணஞ் செய்தான். பிலிப்பு தன் தகப்பனுக்கு முன்னர் இறந்தான். 1519 இல் மாச்சிமிலியனின் மரணத்தினல் பேரரசுப் பதவி வெறுமையாயிற்று. ஏலவே இசுப்பெயினின் அரசனும், நெதலந்து, மிலான், நேப்பிள், சிசிலி, சாடி னியா என்னும் பகுதிகளின் ஆள்வோனுமாகிய அவன் பேரன் சாள்சு, மாச்சிமி லியனின் ஆட்சிப் பகுதிகளை எவ்விதத்தடையுமின்றி எய்தினன். தன் மரபுரிமை யான முடியரசுகளுடன் பேரரசு முடியரசையும் சேர்ப்பதே அவன் பேரவாவா யிருந்தது. இக்காலம் வரையில் அபிசுபேக்கர் ஒரு பலமான கருத்தளவையுரி மையைத் தாபித்திருந்தனர். ஆனல் முன்னரே கூறியபடி பேரரசு, கொள்கை யளவில் தேர்வுரிமையுடையதாயிருந்தது. மாச்சிமிலியனின் வாணுளின் இறுதிக் காலத்தில், பேரரசுக்கு உரிமைகோரும் விடயத்தில் பலர் தத்தகூமக்கு ஆதரவு தேடினர். பொகீமிய அரசன் உலூயியும் பிரந்தன்பேக்குத் தேர்வுரிமையாளன் சு வக்கீமும் நம்பிக்கையில்லாதிருக்கவில்லை; சட்சணிய பிரதரிக்கும் பலமுடைய அபேட்சகனுக இருந்தான். இங்கிலந்தினாசனன எட்டாம் என்றியின் பெயரும் குறிப்பிடப்பட்டது. சாள்சை உரோமரின் அரசனுகத் தெரிவுசெய்தற்கு மாச்சிமி லியன் பெரு முயற்சிகள் செய்தான். ஆனல் மாச்சிமிலியன் பேரரசனுக எக்காலத்திலும் முடிசூட்டப்படாமையால், இன்னும் அவன் சட்டப்படி உரோம ரின் அரசனுகவேயிருந்தான். ஆனல், ஒரே காலத்தில் ஈராசர்களைக் கருத்திற் கொள்ளவியலாது. ஆகையால் அவன் மரித்தபொழுதும் இப்பிரச்சினை முடிவு செய்யப்படாமலேயிருந்தது.
முதலாம் பிரான்சிசு
சாள்சின் ஒரே முக்கியமான போட்டியாளன், பிரான்சின் அரசனன, முதலாம் பிரான்சிசாவன். அவனுக்குச் சார்பாகப் பல முக்கிய பண்புகளிருந்தன. பிரான் சிசு இளவயசினனும் செல்வனுமாயிருந்தான். (பேரரசைப் பெறுவதற்கு உரொக் கமாக 30,00,000 இலவரே கொடுக்க ஆயத்தமாயிருந்தான்). அவன் ஆட்சிப் பகுதிகள் அவன் எதிரியின் ஆட்சிப்பகுதியளவு விசாலித்திருக்காவிடினும், கூடிய திட்பமுடையனவாக இருந்தன. 1515 இல் மரிஞானுேவில் அவன் எய்திய சிறந்த வெற்றியின் பயணுக அவன் மிலானத் தனக்குச் சொந்தமாக்கினதுமல் லாமல், சுவிசு மக்களுடனும், போப்பாண்டவர் பத்தாம் இலியோவுடனும் (1516, நிவயோன்) முதலாம் சாள்சுடனும் இசுப்பானியருடனும் தனக்குச் சாதகமான பொருத்தனைகளை நிறைவேற்றவும் முடிந்தது. புதிய போப்பாண்டவரான பத் தாம் உலூயி மெடிக்கிக் குலமுறையினருள் ஒருவராவார். அவன் தேர்வுக்கு நிற்றலை இவர் ஆதரிப்பதாகக் கூறப்பட்டது. இாைன் நதிப் பிரதேசத் தேருநர்களுள் இவனுக்கான ஒரு பலம்வாய்ந்த கட்சியிருந்தது. இவர்கள், எதிர்த்து நின்ருல் மறுகட்சி அளிக்கக்கூடிய நிச்சயமான உதவியிலும் அவரின் சீற்றத்திற்கு மிகவும் அஞ்சினர். பிரந்தன்பேக்கைச் சேர்ந்த சுவக்கீமும் மேயின்சு எனும் இடத்தின் மகா அத்தியட்சாாகிய அல்பேட்டும்-இருவரும் ஒகன்

Page 54
88 சேர்மனியும் பேரரசும்
சொலேன் சோதரர்களும், தேர்வுரிமையாளருமாவர்-கூடிய விலை கொடுப்பவர் களுக்குத் தங்கள் வாக்குரிமையை விற்க முன்வந்தனர். எப்படியாயினும் சாள் சின் நிலைமை பலமுடையதாயிருந்தது. தேர்வுரிமையாளர்கள், கைக்கூலிவாங்கும் இயல்புள்ளவர்களாயிருப்பினும், எல்லாரும் சேர்மனியராயிருந்தனர். சேர்மனி யில் மறுமலர்ச்சி இயக்கம் ஆர்வமுள்ள நாட்டின உணர்ச்சியுள்ளதாயிருந்தது. இலக்கியப் புத்துயிர்ப்பு, பொதுமக்களுக்கிடையிலும் படித்தவர்களுக்கிடை யிலும் பலமான தாயகப்பற்று உணர்ச்சிகளை எழுப்பியது. எப்படியாயினும் சாள்சு, பிரான்சிசிலும் பார்க்கக்கூடிய சேர்மனிய உரிமையுடையவன். அவன் அபிசுபேக்கன் என்பதை மறுக்க முடியாது. ஒற்ருேமருக்கெதிராக ஒரு மதப் போரைத் தலைமைவகித்து நடத்துவதாக பிரான்சிசு பேசிக்கொள்ளலாம். ஆனல், ஒசுத்திரிய மாபெரும் கோமகனப்போலத் தலைமைதாங்கிப் படையை நடத்தக்கூடிய தகுதிவாய்ந்தவன் யாவன்? பெருந்தடுமாற்றத்தின்பின், சுவிசுச் சபை தன் செல்வாக்கைச் சாள்சின் சார்பிற் பயன்படுத்தத் தீர்மானித்தது. மெயின்சு, கொலோன், சட்சனி ஆகியவற்றின் தேர்வுரிமையாளர்களும், பலத்தீன் தேர்வுரிமையாளரும், பொகீமிய அரசனும், ஈற்றில் அவர்கள் வசப் படுத்தப்பட்டனர். 1519, யூன் 20 ஆம் திகதி சாள்சு ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டான்.
1520, ஒற்ருேபர் 2 ஆம் திகதி பேரரசன் சகல அரச ஆடம்பரங்களுடனும் எயிச்சு எனுமிடத்தில் முடிசூட்டப்பட்டு, போப்பாண்டவரையும், உரோமன் திருச்சபையையும் பாதுகாப்பதாகவும், உரோமப் பேரரசின் உரிமைகளைப் பேணுவதாகவும் உறுதியளித்தான்.
உவேமிசுச் சபை (1521)
அவன் சொற்களின் உள்ளார்ந்த நேர்மை விரைவிற் கடுஞ்சோதனைக்குள்ளா யது. அவன் முடிசூடிய மூன்று மாதங்களின் பின்னர் பேரரசுச் சபை உவேமிசு எனுமிடத்திற் கூடியது.
சாள்சு தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மிகமுக்கியமான இரு பிரச்சினை களைத் தான் தீர்க்கவேண்டியிருப்பதைக் கண்டான். ஒன்று, சேர்மனியின் எதிர் காலம் ; இரண்டாவது, கிறித்தவ உலகத்தின் எதிர்காலம்.
திருச்சபைக்குரிய அதிகாரிகளுக்கும் ஏனை அதிகாரிகளுக்குமிடையில் நில விய ஓயாத சச்சரவுகளால் குழம்பிய சேர்மனியில் யாப்பும் சமூகமும் குலைவு நிலையிலிருந்தன. செயற்றிறனுள்ள ஒரு மத்திய அதிகாரக் குழு இல்லாமையால், மானியமுறைமை கலவரத்தாண்டவமாடியது. வலிமை படைத்த சிற்றரசர்கள் செயலளவிற் சுயாதீனமான அரசுகளை ஏற்படுத்தினர். மேயின்சு, திரிச், கொலோன் எனுமிடங்களின் அதிமேற்றிராசனத்துக்குரிய தேர்வுரிமையாளரும் முன்சிற்றரின் சிற்றரச-விசுப்பாண்டவர் போன்ற பல சிற்றரச-விசுப்பாண்டவர் களும் தங்கள் பலத்திலும், பேரரசருக்கடங்காமையிலும் முன்னையவரிற் குறைந்தவர்களல்லர். சேர்மனியில் முற்முக 350 அரசுகள் இருந்தன.

சேர்மனியும் பேரரசும் 89
மாச்சிமிலியன் யாப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முயற்சி செய்தான். ஆனல் அதன் பலன் நிலைக்கவில்லை. உவேமிசுச் சபையிற் சாள்சு தன் முயற்சி யை மீண்டுந் தொடங்கினன்.
எப்படியாயினும், உவேமிசுச் சபைக்கு, பேரரசன், சேர்மனியிலுள்ள சிற்றா ‘சர்களையும் தலைமைக் குருமாரையும் மட்டுமன்றி ஏலவே வரலாற்றுப் பிரபல்லி யம் பெற்றவரும் இன்னும் கூடிய புகழ் பெறவேண்டியவருமான ஒருவரையும் அழைத்திருந்தான்.
சாள்சு தெரிவுசெய்யப்படுவதற்கு இரு நாட்களுக்குமுன்னர் மானிட வரலாற் றில் மிக முக்கியமான காலவவதிகளின் ஒன்றினது வருகை பற்றிச் சேர்மனிக் கும் உலகத்துக்கும் சாற்றிய ஒரு பத்திரம் சட்சனியிலுள்ள உவித்தன்பேக்கு நகரின் சகல அர்ச்சகர் தேவாலயத்தின் கதவில் ஒட்டப்பட்டி-அ. அப்பத்திரம் தொண்ணுாற்றைந்து கோள்களை அல்லது முன்னீடுகளைக் கொண்டதாயிருந்தது. இவற்றை ஆக்கியோர் ஒரு பொது விவாதத்தில் அவற்றைச் சாதிக்க ஆயத்த மாயிருந்தார். இந்த அறைகூவலை வெளியிட்டவர் ஓகத்தினின் துறவுக்குழு வைச் சேர்ந்தவரான வணக்கத்திற்குரிய சுவாமி மாட்டின் உலூதராவர். அவர் எம். ஏ. பட்டதாரி ; அவர் மதவியல் தலைவரும் விரிவுரையாளருமாயிருந்தார். வாதத்தில் நேரிற் கலந்துகொள்ள இயலாதவர்களை எழுத்துமூலம் உரையாடும் படி கேட்டிருந்தார். இக்கருத்துப்படவே அப்பத்திரம் தொடங்கிற்று.
உலூகர் சட்சனியில் ஒரு குடியானவன் குடும்பத்தில் 1483 இல் பிறந்தார். ஒகத்தனின் திருக்குழுவில் ஒரு துறைவியாகி, 1508 இல், சட்சனியின் தேர்வுரி மையாளனல் அண்மையில் உவுத்தம் பேக்கில் நிலைநாட்டப்பட்ட பல்கலைக்கழகத் கில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். சென் ஓகத்தீனின் நூல்களை ஆழ்ந்து படித்து அவருடைய "நம்பிக்கையினுல் ஏற்புடைத்தாக்கல்' என்னும் உயரிய கோட்பாட்டால் மிகவும் கவரப்பட்டார். 1510 இல் உரோமிற்குத் தூது நோக்க மாகச் சென்றிருந்தபொழுது, அந்நாட்களில் நிலவிய உரோமமுறைமையின் ஊழல்களைக் கண்கூடாக அறிந்தார். 1517 இல் தெற்சல் பண்டாாம் சேர்மனி யில் தோற்றமளித்த பொழுது இவரை உலூதர் பலமாகக் கண்டித்தார். தெற் சல், போப்பாண்டவர் பத்தாம் இலியோவின் முகவராகவும் பாவமன்னிப்புப்பத் திரங்கள் விலைக்குக் கொடுப்பவராகவும் வந்தார். பாவமன்னிப்புப்பத்திரம் விலைக்கு வாங்குவோர், தங்கள் சொந்தப்பாவங்களுக்கு நிவிர்த்திபெறுவது மன்றி, ஏலவே நடுவுலகு எய்கிய நட்பினர் உறவினர் பாவங்களுக்கும் நிவிர்த்தி பெறல் முடியும். விற்பனையாற் பெற்ற ஊதியம் உரோமிற் கட்டுப்படும் சென் பீற் றர் கோவிலைப்புதுக்கிக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட விருந்தது. உலூதரின் எதிர்ப்பிற்கும் அறை கூவற்கும் இவ்விற்பனையே காரணமாக விருந்தது ; அன்றி யும் அது மதச்சீர்திருத்தத்திற்கு நேரடியான பீடிகையாயுமிருந்தது.

Page 55
90 சேர்மனியும் பேரரசும்
எனினும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இயக்கங்களுக்குரிய ஏதுக்களை, அவ் வியக்கங்கள் நிகழ்ந்த சமயத்தினின்றும் கவனமாக வேறு பிரித்துக் காண்டல் வேண்டும்.
மதச்சீர்திருத்தத்தின் காரணங்கள்
மதச் சீர்திருத்தம் என்று கூறப்படும் இயக்கம் ஓரளவு முழு ஐரோப்பாவிற்கும் பொதுவான காரணங்களினதும், ஓரளவு ஒரு நாட்டுக்கோ பிறிதொரு நாட்டுக் கோ சிறப்பான சூழ்நிலைகளினதும் விளைவாகும். அது ஒருங்கே அரசியற்றன்மை வாய்ந்ததும் அறிவாற்றலுள்ளதும் சமய ஒழுக்கத்திற்குரியதுமாயிருந்தது. ஒரு புறம், அது அறிவாய்வுச் சுதந்திரத்தின்மீது அதிகாரம் விதிக்கும் கட்டுப்பாடு களை எதிர்த்து, மனித அறிவானது செய்யும் கிளர்ச்சியைக் குறித்தது; மறு புறம் தனிநாடுகளின் சுய உணர்ச்சியின் வளர்ச்சி காரணமாக, வெளியாரின் குறுக்கீட்டுக்கெதிரான ஒரரசியற் கிளர்ச்சியைக் குறித்தது. ஆகவே, அது சமய ஒழுக்கத்துறையிலும் உலகியற்றுறையிலும் போப்பாண்டவர் செலுத்தும் அதிகாரத்திற்கு விரோதமான எதிர்ப்பாகும்; கத்தோலிக்க திருச்சபையின் பாலனத்தினுட் புகுந்துகொண்ட ஊழல்களைத் திருத்தும்படியான ஒரு கோரிக்கையாகும்; குறைந்த அளவிற்கு, மனிதரின் உய்விற்கு அவசியமானவை யெனத் திருச்சபை பேணிக் கைக்கொள்ளும் சில கோட்பாடுகளை மாற்றும்படி
யான கோரிக்கையுமாகும்.
போப்பின் அதிகாரத்திற்கெதிராகப் புரட்சி
உரோமுக்கெதிராகப் புரட்சி ஏற்படுவதை இரு விடயங்கள் தவிர்க்கமுடியாத தாக்கின. ஒன்று, போப்பாட்சி ஒரு உலகியல் சார்ந்த வலுவாயிற்று. அது தன் அரசியல், ஆள்புலம் ஆகியன சார்ந்த நலன்களை விருத்திசெய்வதற்காகத் திருச் சபைக்குரிய தன் அதிகாரத்தையும் ஆன்மீக ஆயுதங்களையும் பயன்படுத்த முயற்சி செய்தது; இரண்டாவதாக, உலகியல் சார்ந்த சிற்றரசர்கள் தங்கள் இராச்சியங்களை விசாலிக்கச்செய்து, வலுப்படுத்தி அதே காலத்தில் தங்கள் குடிகளுக்கு நாட்டினவுணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தனர். நாட்டினத் தத்துவம் உறுதியுடன் வெளித் தோன்றிய காலம் தொடக்கம், உண்மையில், அரசியல் சார்ந்த கத்தோலிக்க மதம் அழிவதாயிற்று.
முழுக் கிறித்தவ உலகத்தையும் தமக்குக்கீழ்ப்படியுமாறு செய்ய வல்ல போப் பாண்டவரின் அதிகாரமும், பேரரசனின் அதிகாரமும் ஒருங்கியங்கக்கூடும். ஆனல் நாட்டினவுணர்ச்சியொடு அது முரண்படவேண்டிவரும். போப்பாட்சி, அதன் மிகச் சிறந்தகாலத்திலும்-கில்லபிராந்து, மூன்ரும் இனசந்து, எட்டாம் பொனிபேசு ஆகியோர் காலத்திலும்-உரிய காலத்திற்கு முந்தித் தோன்றிய ஆங்கில நாட்டினவுணர்ச்சியுடன் முரண்பட்டது. அதன் அதிகாரத்திற்கு, ஆவின்யோனில் (1805-1378) எழுபது ஆண்டுச் சிறைவாசம் தீங்கிழைத்தது.

சேர்மனியும் பேரரசும் 9.
இது, நாட்டினத்துக்கு அப்பாற்பட்டதென உரிமைகொண்டாடிய அந்நிறுவகத் தினைப் பெரிதும் பாதித்தது. ஆவின்யோனில் வதியும் ஒரு போப்பாண்டவர் பிரான்சிய பரிவாளராயிருப்பாரென மக்கள் ஐயுறுவதிலிருந்து தப்பிவிட முடியாது.
போப்பாண்டவர் சிறைப்பட்ட காலத்திலேயே உரோமன் கோட்பாட்டைக் கண்டித்த படித்த ஆய்வாளர் தோன்றினர். புகழ்பெற்ற, சமயத்துறைப் பண்டித ஞன, ஒக்காமைச் சேர்ந்த உவிலியமும் போப்பாண்டவர் தவமுமைத் தத்துவ முடையவர் என உரிமை கொண்டாடுவதைப் பற்றி ஐயுற்றவருள் ஒருவனவன். பதுவாவைச் சேர்ந்த மாசிலியோ, உரோமன் குருபீடத்தின் முதன்மையை எதிர்த்தான். யோன் உவிக்கிளிபு, போப்பாட்சியின் செயல்முறை ஊழல்களைத் தாக்க ஆரம்பித்து, கத்தோலிக்க திருச்சபையின் சமய ஆசாரக் கோட்பாடுகளைத் தொடர்ந்து தாக்கினன். ஒட்சுபோட்டு மாணுக்கர் உவிக்கிளிபுக் கோட்பாடு களைப் பிரேக்குக்குக் கொண்டு சென்றனர். இருபது ஆண்டுகளாக அசுக்கட்சி யினரின் போர்களாற் பொகீமியா குழப்பமுற்றிருந்தது (1415-36). 1415 இல் கொன்சுதன்சு என்னுமிடத்தில் பரநெறியாளனென அசு எரித்துக்கொல்லப் பட்டான். அவன் பெயரால் மூண்ட கலகம் உயிர்ச்சேதத்துடன் முற்முக அழிக் 55 lill-ULL-ġ7.
இத்தாலிதானும் சீர்திருத்தம் என்னும் தொற்றுநோயிலிருந்து தப்பவில்லை. புளோரஞ்சிற் சிரோலொமோ சவனசோலா என்னும் (1452-99) ஒரு தொமினிக் கத்துறவி, சென் மாக்கு மடத்தலைவனுகி ஒழுக்கச் சீர்திருத்தத்திற்கும், திருச் சபையைப் புனிதப்படுத்துவதற்குமாக ஒரு பெரிய சமயப் போரைத் தொடக்கி வைத்தான். அவன் கத்தோலிக்கக் கோட்பாட்டையோ போப்பாட்சிக்குரிய அதிகாரத்தையோ தாக்கவில்லை. திருச்சபையிலிருந்தே அதனைச் சீர்படுத்த விரும்பினன். போப்பாண்டவர் ஆரும் அலச்சாந்தரால் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டபின்னரே ஒரு பொது அவையைக் கூட்டும்படி உலகியல் இறை களுக்கு முறையீடு செய்தான். ஆனல் அதிகாரவர்க்கம் அவனுக்கு விஞ்சிய பல முடையதாயிருந்தது. அசு என்பானைப் போல் சவனரோலா என்பானும், பாவங்களிலிருந்து தான் காப்பாற்ற விரும்பிய மக்களுக்காகவும் தான் பற்றுறுதியாயிருந்த திருச்சபைக்காகவும் தன் உயிரைத் தியாகஞ்செய்தான்.
பெரும்பேதகம்
ஆவின்யோன் சிறைவாசத்தின்பின், தொடர்ந்து பெரும் பேதகம் ஏற் பட்டது (1378-1417). இருபோப்பாண்டவரின் உரிமையும்ஐயத்திற்குரியது ; இவர்கள் ஒருவர் மேலொருவர் வழங்கிய வசைமாரிகளும் பழி உரைகளும் ஐரோப்பா முழுவதும் எதிரொலித்தன, ' என மக்கோலே எழுதினன்.

Page 56
92 சேர்மனியும் பேரரசும்
பொதுக்கழகம்
15 ஆம் நூற்ருரண்டிற் கிறித்தவர்களுக்குப் பெரும் மனவருத்தத்தையும் அவச் களுடைய திருச்சபைக்குப் பெரும் அவதூறையும் உண்டாக்கிய அப்பேதகத்தை தீர்க்கப்பலமுறையும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஒரு பொதுக் கழகம் முதலிற் பீசாவிலும் (1409) இரண்டாவதாகக் கொன்சுதன்சிலும் (1415-8) மூன்முவதா கப் பாலிலும் (1431-49) கூடிற்று. இக்கழகங்களின் (பிரதானமாகக் கொன்சு தன்சுக்கழகத்தின்) நோக்கம் குழம்பிய கிறித்த உலகத்தில் ஐக்கியத்தை மீண்டும் ஏற்படுத்துவதும், திருச்சபையின் தலைவரையும் உறுப்பினர்களையும் சீர் திருத்துவதும், திருச்சபையின் தவருண கோட்பாடுகளைப் போக்கித் தூய்மைப் படுத்துவதும் ஆகும். கொன்சுதன்சுக் கழகம் ஐந்தாம் மாட்டினைப் போப் பாண்டவராகத் தெரிந்து பேதகத்தைத் தீர்த்தது. ஆனல் அங்கேயும் பாலிலும் போப்பாண்டவர் கட்சி சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளை விணக்குவதிற் சித்தி எய்திற்று. இவ்வண்ணமே கத்தோலிக்க ஐக்கியத்தின் தகர்வும், பல பகைமை யுடைய கட்சிகளாக ஐரோப்பாவின் பிரிவும் முடிவில் தடுக்கமுடியாதனவாயின.
நாங்கள் கண்டுகொண்டபடி இங்கிலந்திலும் சேர்மனியிலும் கல்வியின் புத்து யிர்ப்பு, மதவியலோடு நெருங்கிய தொடர்புடையதாயிருந்தது. கொலற்று, இராசு மசு போன்றோால், கிராக்க மொழி, புதிய ஏற்பாட்டைத் திறம்பட விளங்குவதற்கு (கடவுளை நன்கு அறிதற்கு) ஏற்ற புதிய வலிமைபொருந்திய ஒரு சாதனமாகக் கருதப்பட்டது. சமய நூற்ருெகுதிகளுக்குப் பயன் சொல்ல வரலாற்று முறையைப் பயன்படுத்துவதின் விளைவாக, கத்தோலிக்கக் கோட் பாட்டினிடத்தே புலவர்களின் நோக்கு மாறுதலடையாது இருக்க முடியாது. ஆனல் கொலற்றே, இராசு மசோ உரோமிலிருந்து பிரிவதை ஒப்புக்கொண் டிருக்க மாட்டார்கள். உலூதர் அதை விரும்பவில்லை. அவர் மனநிலை முக்கியமா கப் பழைமை பேணுவதாகும். அவர் விரும்பியது சீர்திருத்தமேயன்றிப் புரட்சி
யன்று.
உவேமிசுச் சபை (சனவரி, 1521)
போப்பாண்டவர் சீர்திருத்த அலுவலில் இறங்கத் துணிவாசா ? பேரரசனுல் அதை ஊக்கப்படுத்த இயலுமா ? புதிய ஆட்சியின் முதலாம் சபை இந்த வினுக் களுக்கு விடையளிக்க வேண்டியிருந்தது. சென்ற பல ஆண்டுகளாகவும், அண் மையில் மிக அதிகமாகவும், கபடமில்லாத கிறித்த மக்களின் மனச்சாட்சிக்குப் பெரிதும் வெறுப்பூட்டிவந்த மோசமான ஊழல்களுடன் அக்கழகங்கள் போராட வில்லை; போப்பாட்சி மக்களிடமிருந்து பணம்பறித்தல்; சமயவிலக்கம் போன்ற ஆயுதங்களைத் தவருக வழங்குதல் ; குருமாருக்குரிய சிறப்புரிமைகளுடனும் பல விலக்குகளுடனும் தொடர்புபட்ட அவதூறுகள் ; துறவிகளதும் குருமாரதும் கெட்டவாழ்க்கைகள் ; விசுப்பாண்டவரும் கோவிற்குருமாரும் தங்கள் தொழி லிடங்களில் இல்லாமை ; மதத்தலைவரும் பல பதவி வகிப்போரும் பெரும்

சேர்மனியும் பேரரசும் 93
பொருள் ஈட்டியமை-இவ்வூழல்களெல்லாம் போப்பாண்டவரின் அதிகாரத்தை மீமுமலும் சமயக்கோட்பாட்டில் தலையிடாமலும் சீர்ப்படுத்தியிருக்கக்கூடியவை. இவைகளும் இவைபோன்ற ஊழல்களும், பொதுமக்கள் திருச்சபையை வெறுக்க வும், இலிங்கன் விசுப்பாண்டவர், குருேசு, தெற்சு போன்ற குருமார் மனக்கசப்
படையவும் செய்தன.
கத்தோலிக்கக் கோட்பாடு
கோட்பாட்டிற் சீர்திருத்தத்தை விரும்புவது வேருெரு பிரச்சினையாகும். அது மிக ஒடுங்கிய ஒரு வட்டாரத்திற்குள் அடங்கியிருந்தது ; ஆனல் அது வெற்றி பெறின், கத்தோலிக்க அமைப்பின்மீது கூடிய தீங்கிளைக்கும்போற் காணப் பட்டது. ஆழமான எபிரேய புலவனுகிய யோகான் உரோக்கிலீன் (14551522), சிறந்த சமயநூற்பண்டிதனுகிய மிலாந்தன், பெருமாற்றல்படைத்த வசையுரைஞணுகிய ஊல்றிக்கு உவொன் அட்டன் (1488-1523) ஆகியோர் உலூத ருக்கு வலிமையுள்ள நட்பாளராக இருந்தனர். புதிய கல்விக்கும் சமயச்சீர்திருத் தத்திற்கு மிடையேயுள்ள தொடர்பிற்கு இப்பெயர்கள் எடுத்துக்காட்டாயுள்ளன. ஆஞல் உலூதருக்கு உறுதுணையாயிருந்தது, 1435 இல் மெயின்சிற் கட்டன் பேக்கு அமைத்த, புதிய அச்சகமேயாகும். அதன் உதவியால் உலூதர், இராசு மசு, ஆகியோரின் நூல்கள், துண்டு வெளியீடுகள் ஆகியன மட்டுமின்றி, செபத்தி யான் பிராந்து, ஊல்றிக்கு உவொன் அட்டன் போன்றவர்களின் திறமையான வசையுரைகளும் சேர்மனியிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலன்றெனினும் ஒவ் வொரு நகரிலும் ஆயிரக்கணக்கிற் பரவின. ஒரு பெரும் வரலாற்று ஆசிரியன் கூறியதுபோல, இங்குக் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், “அந்நாட்களில் மக்களால் விரும்பப்படுகிற எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவான சிறப் பியல்பு, உரோமன் திருச்சபைமீது அவை காட்டிய பகைமையேயாம். '
AV
உலூதருக்கு, கிடைத்த எல்லா நட்பாளரும் தேவைப்பட்டனர். உரோம் அவரைத் தாக்கத் தன் ஆயுதங்கள் யாவற்றையும் உபயோகிக்க ஆயத்தஞ் செய்தது. ஈற்றில் 1520 இல் சமயவிலக்குக் கட்டளை அவர்மேற் பிரயோகிக்கப் பட்டது. 1520, திசெம்பர் 20 ஆம் திகதி உவிற்றன்பேக்கில் எல்லோர் முன்னிலை யிலும் போப்பாண்டவரின் கட்டளையை அவர் எரித்தது, ஒரளவுக்கு முன் னெச்சரிக்கையுள்ள இராசுமசுக்குக் கிலியூட்டியது. எனினும் சட்சனியின் தேர் வுரிமையாளனுன பிாதரிக்கு உலூதருக்கு ஒரு வலிமைபடைத்த காப்பாளன யிருந்தான்.
1. உதாரணமாக அவர் எழுதிய " முட்டாள்களின் கப்பல்” 1494 : உரோசன்புலுத்தின் * களியாட்ட விளையாட்டு” எனும் நூலையும் நோக்குக, 1498.

Page 57
94 சேர்மனியும் பேரரசும்
உவேமிசுச் சபை
பாதுகாப்பு உத்தரவாதத்துடன் உவேமிசுக்கு அழைக்கப்பட்ட உலூதர் தம் பாநெறிகளை மாற்றிக்கொள்ளும்படி கேட்கப்பட்டார். மறுக்கும்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்தனவாயின. வேதாகமத்தி ஞலோ வெளிப்படையான நியாயத்தினலோ மெய்யெனக் காட்டி நம்பவைத்தா லொழிய என்னுல் எதையாவது மாற்றிக்கொள்ளவும் முடியாது, மாற்றவும் மாட்டேன்; . நான் இங்கு நிற்கிறேன் ; நான் செய்யக்கூடியது பிறி தொன்றில்லை; தேவன் எனக்குத் துணைபுரிவாாாக ; ஆமென்', மானிட அதிகா ாத்தை அவர் எதிர்த்து நின்முர் , சமயமோ மனிதனின் மனச்சாட்சிக்கும் தேவ னுக்குமிடையேயுள்ள ஒரு விடயமாகும்.
பேரரசன் தான் உத்தரவாதஞ் செய்த பாதுகாப்பை மீற மறுத்தான். உலூத ருடைய பாதுகாப்புக்காக, அவர் காப்பாளனுகிய சட்சனியத் தேர்வுரிமை யாளன் பிரதரிக்கால் உவாற்றுபேக்கு என்னும் கோட்டையில் அவர் வைக்கப் பட்டார். ஆனல் பைலற்றும் ஏாட்டும் தங்கள் நட்புறவை நிறைவேற்றினர். மே 26 ஆம் திகதி பேரரசனுல் உலூதருக்கு விரோதமாகக் குறித்த கற்பனை வெளி யிடப்பட்டது. உலூதர் தம் நாட்டவர்க்கு வீரராகத் தோற்றலாம்; ஆனல் சட் டப்படி சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவரே.பேரரசனின் தீர்ப்புக்கு நியாயங் கள் கண்டுபிடிப்பது கடினமன்று. அவனே உண்மையான கத்தோலிக்கன் ;
உலூதரின் மத மறுப்புடனே, சேர்மன் சிற்றசர்கள் பலரும் அவர்களின் குடி மக்களும் உறுதியாக உணர்ந்த, போப்பாண்டவருக்கெதிரான அரசியற் பகை மையுடனே அவனுக்குப் பரிவு கிடையாது. உவேமிசிற் சபை கூடியபின்னர் அவன் சேர்மனியை விட்டுப் போனன். ஒன்பது ஆண்டுகளாக அந்நாட்டிற்கு அவன் மீண்டும் செல்லவில்லை. மேலும் ஐரோப்பாவிலும், சிறப்பாக இத்தாலி யிலும் அரசியல் நிலை போப்பரசுடன் நட்புறவு செய்வதை இன்றியமையாததாக் கியது. இரு சேர்மனிய துறவியைத் தண்டித்தல் அத்துணை முக்கியமல்லவே?
உவாற்றுபேக்கில் தடைமறியலிலிருந்தமையால், உலூதருக்கு விவிலிய வேதத்தை மொழிபெயர்க்க ஒய்வு கிடைத்தது. 1522 இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் புதிய ஏற்பாடு, சேர்மானிய மக்களால், செயலில் இறங்குமாறு அறை கூவும் எக்காளம் என உரிமையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், காள்சுதாத்தினதும் சுவிக்கவுத் தீர்க்கதரிசிகளதும் தலைமையைப் பின்பற்றித் திருத்தம் அன்றிப் புரட்சியைக் கோரிய தீவிரமான தம் சீடரின் பரபரப்பைச் சாந்திசெய்யும் வண்ணம் உலூதர் தம் ஓய்வைத் துறந்து செயலாற்ற முன் வந்தார். அவர் செல்வாக்கால் ஒழுங்கு மீண்டும் தற்காலிகமாக நிலவியது. 1552 இல் நியூரம்பேக்குச் சபை, உலூதருக்கு மாமுன தடை உத்தரவைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்தல் உள்நாட்டுப் போரைத் தூண்டுமெனப் புதிய போப்பாண்டவரான உதிரத்தைச் சேர்ந்த எத்திரியனுக்கு (ஆரும்

சேர்மனியும் பேரரசும் 95
எத்திரியன்) ஒளிவுமறைவின்றி அறிவித்தது. சேர்மனி, உண்மையாகவே, அமை தியற்ற நிலையிலிருந்தது. 1523 இல் ஊல்றிக்கு உவொன் அட்டனதும், பக்க பலம் மிகப்படைத்த பெரிய போர்வீரனன பிரான்சிசு உவொன் சிக்கின்சனதும் தலைமையில், போப்பாண்டவர் வலிந்து பணம் பெறுவதை எதிர்த்து நிற்கவும் பேரரசைக் கட்டாயப்படுத்தவும் நைற்றுக்கள் கூட்டவை ஒன்று அமைக்கப் பட்டது. ஆனல் அவ்வியக்கத்தின் பயனுக ஆட்சியறவு விளையுமோவென அஞ்சப் பட்டது. உலூதர் அதற்கு வெறுப்புக்காட்டினர். சிற்றரசர் அதை ஒடுக்கினர் (1523-4).
உழவோரின் போர்
உழவோர் விளைத்த கலாம் இதனிலும் மிக இடர்நிரம்பியதாயிருந்தது. (1524-55). இது மானியப் பிரபுக்களினல் அவர்கள் மேல் விதிக்கப்பட்ட பளுக் களுக்கு மாமுகவும், உரோமாபுரியின் அறவீடுகளுக்கு மாமுகவும் தொடங்கியது. 1881 இல் குடியானவர்கள் கலகத்தினுல் உலொலாடு இயக்கத்திற்கு நேர்ந்த கடுந்துயர் கண்டு எச்சரிக்கையாயிருந்த உலூதர், விரைவிற் பொது உடைமை வாதிகளின் தன்மையை மேற்கொண்ட அந்த இயக்கத்தை ஒறுத்துரைத்தார். அக்கலகம் ஒடுக்கப்பட்டது. 1,00,000 உழவோர் மாண்டனர். அவர்களின் விடுதலை பத்தொன்பதாம் நூற்முண்டுவரை ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், முதலில் நைற்றுகளினதும் பின்னர் உழவோர்களினதும் கலாம் உலூதருக்கும் சேர்மனிய புரட்டெசுத்தாந்தக் குறிக்கோளுக்கும் பாதகமான விளைவையுண்டாக்கியது. தெளிவான பிரிவுகள் வெளித்தோன்றத் தொடங்கின; ஆனல் அப்பிரிவு எல்லேகள் தெளிவாயிருக்கவில்லை. புரட்டெசுத்தாந்தர்கள் எல்லாரும் பேரரசரை எதிர்த்து நிற்கவில்லை ; சில கத்தோலிக்கர் போப்பாட்சி யை ஆதரிப்பதில் முழுமனதுடையவராயிருக்கவில்லை. (1526) இசுப்பியேசுச் சபை, சேர்மனியைப் பொறுத்தவாையிற் சமய ஐக்கியம் ஒரு பழங்கதையென வும், பொதுக்கழகம் கூடும்வரையும் ஒவ்வொரு நாடும் தேவனுக்கும் பேரரச இனுக்கும் பொறுப்புள்ளவகையாக நடந்துகொள்ளவேண்டுமெனவுந் தீர்மா னித்தது. எவ்வழிபாடும் மற்ற வழிபாட்டின்மீது வெற்றி எய்துவதாயில்லை. ஒவ் வொரு சிற்றரசனும் தன் நாட்டின் சமயத்தைத் தீர்மானிக்க வேண்டுமென்ற கோட்பாடு தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
மூன்று ஆண்டுகளின் பின்னர் இசுப்பியேசிற்கூடிய இரண்டாம் சபை இந்தத் தீர்ப்பை நிராகரித்தது. இதற்கிடையிற் பேரரசன் போப்பாண்டவருடன் அமை திப் பொருத்தனை செய்து, சேர்மனியில் புரட்டெசுத்தாந்தரின் புறநெறியை முற்முக அழிக்க ஒப்புக்கொண்டனன். புரட்டெசுத்தாந்தர் பணிந்து நடக்க மறுத்தனர். வீயன்ன வாயில்வரையில் துருக்கியர் வந்து விட்டனர் என்ற காரணத்தினல் மட்டுமே உண்ணுட்டுப் போர் தடுக்கப்பட்டது. ஆனபடியால் புரட்டெசுத்தாந்தரும் கத்தோலிக்கரும் முகமதியர் முன்னேறுவதை எதிர்த்து நிற்பதற்காக ஒன்றுசேர்ந்தனர்.

Page 58
96 சேர்மனியும் பேரரசும்
1530 இல், போலோனவில் அண்மையிற் போப்பாண்டவரால் முடிசூட்டப் பட்ட பேராசன் சேர்மனிக்கு மீண்டும் சென்று, 1530 இல் ஒகசுபேக்கிற் கூடிய சபையிற் சமூகம் அளித்தான். ஒகசுபேக்கு அறிக்கையிற் புரட்டெசுத்தாந்தர் தங்கள் கோட்பாட்டை முறைப்படுத்திக் கூறினர். மிலாந்தனல் ஆக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணம் உலூதர் கொள்கையின் அடிப்படையை நிறுவியது. இந்த அறிக்கையின் மிதவாதப்போக்கு எல்லாருக் கும் புலப்பட்டது. ஆனல் புரட்டெசுத்தாந்தர் தங்கள் கோட்பாட்டைக் கைவிட வேண்டுமெனப் பேராசன் உத்தரவிட்டான். அதை அவர்கள் மறுத்து இறற்றிசுப் பொன் என்னுமிடத்திற் கத்தோலிக்க சிற்றரசர் கூட்டவையை எதிர்க்கச் சிமால் கால்தேக் கூட்டவையை அமைத்தனர். உள்நாட்டுப் போர் உடனடியாக நிகழப் போவதாகத் தோற்றியது. ஆனல் மீண்டும் துருக்கியரின் முன்னேற்றம் அதைத் தடுத்தது. 1532 இல் பேரரசனுல் நியூசம்பேக்கில் வெளியிடப்பட்ட இடைக் காலக் கற்பனையால், புரட்டெசுத்தாந்தர்களுக்குக் தற்காலிகமான சமயச் சமரசம் அளிக்கப்பட்டது.
அடுத்த பத்தாண்டுகளாகப் புரட்டெசுத்தாந்தம் ஒழுங்காக முன்னேறியது. இந்த இரு சமயக் கோட்பாடுகளுக்கிடையில் இணக்கங் காண ஒரு வரிசையான மாகாநாடுகளில் முயற்சிகள் செய்யப்பட்டன. இறற்றிசுப்பொன் மகாநாட்டில் (1511) நம்பிக்கை இருப்பது போலத் தோற்றியது; ஆனல் மங்கிப்போயிற்று. உண்மையில் அவ்வேறுபாடுகள் இணக்க முடியாதனவாயிருந்தன. 1544 இல் சாள்சுக்கும் பிரான்சிசுக்குமிடையே நிறைவேறிய கிறசபிப் பொருத்தனை இவர் கள் தத்தம் நாட்டிற் புரட்டெசுத்தாந்தத்தை ஒடுக்கக் கூட்டுமுயற்சி செய்ய வேண்டுமென்ற முற்காப்புக்கொண்டதாயிருந்தது. அந்த ஒப்பந்தப்படி தன் பங்கை நிறைவேற்றப் பேரரசன் தீர்மானித்தான்.
உலூதரின் மரணத்தின்பின்னர் (1546) உடனடியாகப் போர் ஆரம்பமாயது. 1547 இல் மூல்பேக்கு என்னுமிட்த்திற் புரட்டெசுத்தாந்தர் படுதோல்வியடைந் தனர். சிமால்கால்தேக்குக் கூட்டவை நசிக்கப்பட்டது. 1548 ஒகசுபேக்கு இடைக்காலக் கற்பனையின்படி பேரரசன் இரு கட்சியினர் மீதும் தன் சொந்த இணக்கமுறையைத் திணிக்க முயற்சி செய்தான். ஆனல் இரு கட்சியினருக்கு மிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடையவில்லை. கத்தோலிக்க மதத்திற் பற்றுடைய பல சேர்மனிய சிற்றரசர்கள், சட்சனியிலிருந்து தேர் வுரிமையாளன் பிரதரிக்கு முரட்டுத்தனமாக வெளியேற்றப்பட்டமையாலும், எசேயைச் சேர்ந்த பிலிப்பு மீதும் மற்றும் புரட்டெசுத்தாந்த சிற்றரசர்கள் மீதும் எடுத்த கொடு நடவடிக்கைகளாலும், பெரிதும் சினமடைந்தனர். சேர் மானிய புரட்டெசுத்தாந்தத்தை நசிக்க உதவிசெய்த இசுப்பானியப் படைஞர் சேர்மனியிலிருப்பதை அந்நாட்டு மக்கள் யாவரும் பெரிதும் வெறுத்தனர். 1847இல் பேரரசர் எய்திய வெற்றிக்குப் பெரிதும் காரணமாயிருந்த சட்சனியக் கோமகன் மொரிசு, பேராசனுக்கெதிரான ஒரு குழப்பத்திற்குத் தலைமைதாங்கி, இரண்டாம் பிரான்சிசுடன் பொருத்தனை செய்து, ஒகசுபேக்கைக் கைப்பற்றி

சேர்மனியும் பேரரசும் 97
AA
<ܐ
அந்தப் பெரிய பேரரசுக்குரிய கத்தோலிக்கக் கோட்டையில் உலூதரின் கோட் பாட்டை மீண்டும் நிலைநாட்டினன். பேரரசன் இத்தாலியிற் சாண்புகுந்தான். மொரிசு பாசோ என்னுமிடத்தில் மாபெரும் கோமகன் பேடினந்துடன் அமைதிப் பொருத்தனை செய்தான். தேர்வுரிமையாளன் பிரதரிக்கிற்கும் சிறை யிடப்பட்ட வேறு சிற்றரசர்களுக்கும் விடுதலையும் பூரண மனச்சாட்சிச் சுதந்திர மும் கொடுக்கப்பட விருந்தன.
ஒகசுபேக்கு அமைதிப் பொருத்தனே (1855)
மூன்று ஆண்டுகளின் பின்னர் ஒரு முடிவான இணக்கம் அடையப்பட்டு 1555 பெப்புருவரியில் ஒகசுபேக்கு அமைதிப்பொருத்தனையில் சேர்த்துக்கொள்ளப் பட்டது. இவ்விணக்கத்தின் அடிப்படை தனிப்பட்டவனின் மனச்சாட்சிச் சுதந்திரமன்று. 'அரசனெவ்வழி, குடிகள் அவ்வழி' என்பதே அடிப்படை யாயிற்று. ஒவ்வொரு சிற்றரசனும் தன் குடிகளின் சமயத்தை விதிக்க வேண்டிய வனவன். ஒகசுபேக்கு அறிக்கையில் வரையறுக்கப்பட்ட உலூதர் கோட்பாடே முறைமையான புரட்டெசுந்தாந்தம் எனப்பட்டது. சுவிங்கிலியரும் கல்வின் கொள்கையினரும் இவ்வுடன்படிக்கையிலிருந்து விலக்கப்பட்டனர். 1552 இற்கு முன் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட திருச்சபைக்குரிய நிலங்களினுரிமை அவற்றின் இக்காலச் சொந்தக்காரருக்கே கொடுக்கப்பட்டது. ஆனல் இது முதற் கொண்டு புரட்டெசுத்தாந்த மதத்திற்கு மாறும் திருச்சபைக்குரிய எந்தச் சிற்றரசரும் தம் நிலங்களை இழப்பர். ' திருச்சபை சார்ந்த ஒதுக்கீடு' எனக் கூறப்படும் இச்சட்டக்கூறு பிந்திய ஆண்டுகளில் பெரும் விவாதத்திற்கு இடன யிற்று. இதுவே முப்பது ஆண்டுப் போரின் முக்கியமான காரணங்களிலொன்ருயு மிருந்தது.
இவ்வுடன்படிக்கை இக்காலக் கருத்துக்களின்படி அமையாவிடினும், சேர்மனி யைப் பொறுத்தவரை முதன்மைவாய்ந்ததாயிருந்தது. புரட்டெசுத்தாந்தம் பழைய சமயத்துக்கொப்பான சட்டவமைதி பெற்றது. புதிய போராட்டத்திற்கு உலூதர் கொள்கை புதிய வித்துக்கள் விதைத்தபோதிலும், நாடு, ஐம்பது ஆண்டுகளுக்கு ஓரளவு அமைதியைத் தாய்த்து மகிழ்ந்தது.

Page 59
|
விரித்டா :
量 மொந்தியா
--
V
፵û
"ද්ය්
IE
葱、
!
O
.設・"リ写 የ‛ (ፌሶ' عادث متمت
I |
O մեկ:
F-LT-s-l-1' IIn
Լhւոն է ت
J博臀 ார்
*詹
التي
* ଝୁ 鷲 트
置 ேெப்
#f ந்தத்
”露臀隔
S. ply ಪಿ. t : ԱTifնդ யூசுபியாநேபா
Li இதுவேனி
காந்நினோபிபா
i.
కి بیمینٹل _______ شائعثہ ITHٹیچہ"۔ ہیجہ டிருபே يا همدې خلکوته
ஆங்ர்ே யகர்
լ: EU lլյԼ1 15ի
13 ஜீன் டிர்
*"" , uqsi, " "aitiä III
நாயேயும்
1592 இல் வட ஐரோப்பா
கொழும்புதல், "கம்
Ամ՜----)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் ?
புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம்
கந்தினேவியாவும் சுவிற்சலந்தும்
உறுTதரும் மிலாந்தலும் புரட்டெசுத்தாந்தம் வேரூன்றிய நாடுகளுட் சேர் மனிக்கு ஓர் உன்னத நிஃயை அளித்திருந்தார்கள். ஆணுல், உரோமுக்கெதிரான கினர்ச்சி சேர்மனியோடு நிற்கவில்.ே இந்நிகழ்ச்சியுரை இங்கிளிற்தைப்பற்றியோ இசுக்கொத்துலங்தைப்பற்றியோ குறிப்பிடுகின்றதெனில், அது கண்செயலாகவே அவற்றைப்பற்றிக் கூறுகின்றது. புசட்டெசுத்தாந்தம் அதிக வெற்றி பெருத நாடாகிய பிரான்சைப் பற்றி இங்குக் கூற வேண்டியதில்.ே அப்புரட்சி கந்தினே வியாவுக்கும் சுவிற்சலந்துக்கும் தெதலந்துக்கும் பரவியது. பின்வரும் அத்தி யாயங்களுளொன்றில் நெதந்தைப் பற்றிக் கூறப்படும். இவ்வத்தியாயம் கற்கினேவியாவைப் பற்றியும் சுவிற்சவிந்தைப் பற்றியுமே நுதல்வது.
சுவீடினில் மதச் சீர்கிருத்தம்
நாங்கள் கண்டுகொண்ட டி. ஒரு பொது இறையின் ஆட்சியில் மூன்று சுந்தி னேவிய நாடுகளேயும் ஒன்று சேர்க்க காமர் ஒற்றுமை உடன்படிக்கை ஆரம்பத் கிவிருந்தே உறுதியற்ற நிஃiயிலிருந்தது. பல இடையறவுகளுடன் அது 1533 ஆம் ஆண்டு வன: ார் தப்பிப் பிழைத்தது. அனவில்லாப் பேசவாவுடையவனும் பேராற்றலுடையவனும், ஆணுல் நம்பிக்கைத் துரோகியுமான இரண்டwம் கிரிக் கியன் 1513 இல் அரசெய்தினுன் முடியை மரபுரிமையாக்குவதும் நாடுகளின் ஐக்கியத்தை உறுதியாக்குவதுமே அவனின் போவாவாகும், ஆணுல் சுவீடிசு விழுமியேWர்களால் ரேனிய ஆட்சியைச் சகிக்" முடியவில்ஃ. அவ்வாட்சியை முடிவு செய்யப் பலமுறை முயற்சிகள் செய்தனர். சுவிடின்மீது கன் அதிகாரத் கைச் செலுத்தப் பன்முறை முயன்ற தோல்வியடைந்தபின், கிறித்தியன் ஓர் அட்நிேயமான இரக்கமற்ற செய்கையால் தன் எகிரிகஃன அடிபணியும்படி அச்சுறுத்த எண்ணினுன் இசுகொக்கோமில் அவன் முடிசூட்டப்பட்ட மறுநாள் (1820, நவம்பர் 4) சுவீடிசு நாட்டினவாகத் தஃவர்களான 100 விழுமியோரும் கஃமைக் குருமாரும் சடுதியாகக் கைது செய்யப்பட்டுப் படுகொஃவி செய்யப் பட்டனர்; அவர்கள் சடலங்களும் எரிக்கப்பன. "வடநாட்டு நீரோவையும்" "இசுகொக்கோம் இரத்தக் குளிப்பாட்டஃl/ம் " சுவீடிசு மக்கள் ஒருபோதும் மறக்கவில்லே. இது கந்தினேவியு ஐக்கியத்தை எக்காலத்திலும் உருவாகாத கொன்றுகச் செய்தது. கிறித்தியனின் கெர்சேச் செய்கையிற் பலியானவர்கனி லொருவன் இசுக்காவசு வாசா என்பவனின் தந்தையாவான். இவன் 1517 இல் தென்மாக்குக்குப் பிணேயாகக் கொண்டு, செல்லப்பட்டவன். ஆனூல், 1520 இல் சுவிடினுக்குக் தப்பியோடிஞ்ன். அவன். ஒரு குடியானவர்கள் படையைக்

Page 60
100 புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம்
திாட்டி உவெற்றமுசு, உப்புசாலா என்னுமிடங்களைக் கைப்பற்றினன். ஆனல், இசு தொக்கோமிலிருந்து தேனிய காவற் படையை நாட்டினின்றும் வெளியே துரத் தத் தவறினன். எனினும், 1523 இல் தென்மாக்கில் எழுந்த ஒரு கலகத்தின் பய கைக் கிறித்தியன் தன் அரியணையினின்றும் துரத்தப்பட்டான். செலுசு விக்கு ஒல்சுதைன் கோமகனும் அவன் மாமனுமாகிய பிரதரிக்கு அரியணை ஏறினன். பின்னர் தேனிய காவற்படை இசுதொக்கோமிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டது. ஏலவே பதிலாளியாயிருந்த கசுத்தாவசு வாசா அரசனுகத் தெளிவு செய்யப்பட்டான். தென்மாக்கின் அரசனுன முதலாம் பிாதரிக்குடன் செய்த பொருத்தனையின்படி சுவீடினின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும், உண்மை அதிகாரம் முழுவதும் குருவாயத்திடமும் உயர் குடியாள ரிடமும் தங்கியிருந்தது. முடி வலிமையற்றதாயிருந்தது. நாட்டின் மீது கடன் பாரம் வலுத்தது. ஆகவே கசுத்தாவசு இரு குறிக்கோள்களுடன் உலூதர் மதத் தைத் தழுவத் தீர்மானித்தான். ஒன்று, அரசனினதிகாரத்தைப் பெருக்குதல் ; இரண்டாவது, குருவாயத்தின் செல்வத்தில் ஒரு பகுதியையேனும் அரசனுடைய இறைசேரிக்கு மாற்றுதல். உலூதர் மதப் போதகரும் ஆசிரியர்களும் நாட்டுக் குள் மெதுவாகக் கொண்டுவரப்பட்டனர். அவ்வாறே அவர்களின் இலக்கியமும் கொண்டுவரப்பட்டது. 1527 இல் உவெற்றமுசில் ஒரு சபை கூடியது. இக் கூட் டத்திற் குடிகள், உழவோரின் பிரதிநிதிகள் விழுமியோருடனும் குருமாருடனும் சரிவர இருந்தனர்.
அச்சபை சுவீடின் ஓர் ஐரோப்பிய வல்லரசான வரலாற்றைக் குறிக்கின்றது. . குருவாயம் விடாப்பிடியாகப் போராடியபின், திருச்சபைக்குரிய எல்லா உடைமைகளும் அரசனிடம் விடப்பட்டன. இவன் திருச்சபை வேலைக்கு ஒரு நியாயமான தொகையை ஒதுக்கி வைத்தபின்னர், எஞ்சியதை விழுமியோருடன் பங்கிட்டுக் கொண்டான். இவ்வாருக, திருச்சபை அரசனை முற்முக நம்பியிருக்க வேண்டியதாயிற்று. திருச்சபை உரோமுக்குக் கீழ்ப்படிய வேண்டிய நிபந்தனை தவிர்க்கப்பட்டது. ஒகசுபேக்கு அறிக்கையானது சமயக் கோட்பாட்டின் அடிப் படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனல், குருவாட்சிமுறை கைவிடப்பட வில்லை. பொது மக்களுக்குப் பழக்கமான வழிபாட்டுச் சுவடியிலும் கிரியையிலும் அதிகம் மாற்றம் செய்யப்படவில்லை. சுவீடினில் ஏற்படுத்தப்பட்ட மதச் சீர் திருத்த உடன்படிக்கை இங்கிலந்தில் ஏற்படுத்தப்பட்டதைப் பெரிதும் ஒத்திருப் பது வெளிப்படையாயிருக்கின்றது. இரு திருச்சபைகளுக்குமிடையேயுள்ள உறவு ஆரம்பத்திலிருந்தே கேண்மை சார்ந்ததாகவும் நெருங்கியதாகவுமிருந் தது. சுவீடிசுக்குருவாட்சி முறையிலிருந்தே அமெரிக்க ஐக்கிய நாட்டு அங்கி
லிக்கன் திருச்சபை தனது சமயக் கொள்கை பாப்பும் உரிமையைப் பெற்றது.
மதச் சீர்திருத்தத்திலிருந்து வேறு விளைவுகளும் உண்டாயின. இது வரையும் சுவீடின் தன். வியாபாரத்திற்கு அன்சியாற்றிக்குக் கூட்டவையில் மீது தங்கி

புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம் 10.
யிருந்தது. குறிப்பாக உலூபெக்கு நகருக்குப் பெரிதும் கடன்கொடுக்க வேண்டிய தாயிருந்தது. திருச்சபையிலிருந்து பறித்த செல்வம் அதன் கடன் தீர்ப்பதற்கும் அன்சியாற்றிக்குச் சங்கத்தின் முழுவுரிமைக்கு முடிவு கட்டுவதற்கும் உதவியது.
இறுதியில் 1540 இலும் 1544 இலும் கூடிய சபைகள் அரசனைத் தெரிவு செய் யும் முறையை ஒழித்துவிட்டு, கசுத்தாவசின் வழித்தோன்றல்களுக்கு அரசுரி மையை வழங்கின. இவ்வாறு போலந்தரை எதிர்நோக்கியிருந்த கதியிலிருந்து சுவீடிசுமக்களைக் காப்பாற்றி, ' வட நாட்டுச் சிங்கத்தின்" ஆட்சியிற் சுவீடின் உன்னத நிலை எய்துவதற்கு வழி வகுத்தது.
தென்மாக்கில் மதச்சீர்திருத்தம்
தென்மாக்கில் மதச் சீர்திருத்தம் முதலாம் பிாதரிக்கினல் ஆரம்பிக்கப்பட்டது. ஒதன்சேச் சபையில் (1527) போப்பாண்டவரின் அதிகாரம் குறைக்கப்பட்டது. மனச்சாட்சிச் சுதந்திரம் விதிக்கப்பட்டது; குருமாருக்குத் திருமணஞ் செய்ய உத்தரவளிக்கப்பட்டது. திருச்சபை முடிக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது.
எனினும், 1533 இல் பிரதரிக்கு காலஞ் செல்ல, மூன்ரும் கிறித்தியன் (1534
59), 1534இல் அரியணை ஏறத் தெரிவு செய்யப்பட்டானெனினும், இடர் குறிக் கும் கூட்டமைப்புக் கெதிராகத் தன் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டியவ னைன். உழவோரும் நகர வாசிகளும் கலகஞ் செய்தனர். நாடுகடத்தப்பட்ட அரசனன இரண்டாம் கிறித்தியனின் உறவினனன ஒல்டன்பேக்குப் பெருமக னின் தலைமையில் அவர்கள் கிரண்டு கிறித்தியனை அரசனுகப் பிரசித்தஞ் செய் தனர். குடியாட்சிக் கட்சி அதிகாரம் வகித்த உலூபேக்கின் ஆதரவுடன் ஏறத் தாழ ஈராண்டுகளாக விட்டுவிட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். ஆளுல் மூன் மும் கிறித்தியன் விழுமியோருடைய உதவியையும் சுவீடிசு அரசன் கசுத்தாவசி இனுடைய உதவியையும் பெற்றுப் படிப்படியாகத் தன் அதிகாரத்தை நிலை? நாட்டினுன்.
மூன்ரும் சாள்சு ஆர்வமுள்ள உலூதர்க்கொள்கையினன். விழுமியோர்களதும் நகரங்களதும் உழவோாதும் பிரதிநிதிகளை ஒரு சபைக்கு அழைத்து, அச்சபை, யிற் குருவாயம் இல்லாமையால் மதச் சீர்திருத்தத்தின் கடைசிக் கட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றினன். விசுப்பாண்டவர்களிடமிருந்து அவர்கள் அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டது. ஆனல் செயலளவிற் கண்காணிப்பாளர் என்னும் புதிய பெயருடன் அவர்களின் ஆன்மீகக் கடமைகள் அவர்களிடமே விடப்பட்டன. திருச்சபை உடைமைகள் அரசன் பொறுப்பில் விடப்பட்டன. இவன் அவை களிற் பெரும் பகுதியை விழுமியோர் தனக்கு அளித்த ஆதரவுக்குப் பிரதியுப காரமாக அவர்க்கு வழங்கினன். உலூதரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருச் சபைக்குரிய ஒரு கட்டளைச் சட்டமானது மதம், ஒழுக்காறு, என்பனவற்றை

Page 61
102 புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம்
ஒழுங்குபடுத்துவதற்காக வெளியிடப்பட்டது. சுவீடினிற் போலத் தென்மாக் கிலும் தேவாராதனைகள் பெரும்பாலும் முன்போலவே நடத்தப்பட்டன. அப் புதிய திருச்சபையமைப்பு பின்னர் நோவே மீதும் ஐசுலந்து மீதும் திணிக்கப்
L--gi.
கந்தினேவியா எங்கும் புரட்டெசுத்தாந்தச் சீர்திருத்தமானது அதன் தோற்றத்திலும் விளைவிலும் முக்கியமாக அரசியல் சார்ந்ததாகவே இருந்தது. சுவீடினில் ஊதியங்கள் அரசனுக்கே பெரிதும் உரித்தாயின. தென்மாக்கில் விழுமியோருக்கு உரித்தாயின. பொது மக்கள் மதச் சீர்திருத்தத்தைப் பெரிதாக மதிக்கவில்லை.
சுவிற்சலந்து
சுவிற்சலந்திலோ கருமம் வேமுயிருந்தது. அங்கே இரு பெரிய மனிதர்களால் தூண்டப்பட்டு இயங்கிய மதச் சீர்திருத்தம் தெளிவாக மதக்கோட்பாடுகளைச் சார்ந்ததாயிருந்தது; இன்னும் தெளிவாக, அறவியலும் சமயமும் சார்ந்ததாயி ருந்தது. சுவிங்கிலியோ கல்வினே குற்றமற்ற கோட்பாட்டின் முதன்மையைக் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனல், நல்வாழ்க்கையிலேயே இருவரும் கூடிய சிரத்தை கொண்டிருந்தனர்.
சுவிற்சலந்தில் இந்த இயக்கம் நாட்டினஞ் சார்ந்ததாயிருக்கவில்லை. சுவிசு மக்கள் இன்னும் ஒரு "நாட்டினம்’ ஆகவில்லை. பதினரும் நூற்முண்டிற் சுவிற் சலந்து, எல்லாரும் ஏற்றுக்கொண்ட தலைவனே, ஒருமுகப் படுத்தப்பட்ட நிறு வனங்களோ அற்ற கோட்டங்களின் தளர்ந்த சங்கமாயிருந்தது. எனவே, சுவிற் சலந்தில் மதச் சீர்திருத்தம் தனித்தனிக் கோட்டத்தைச் சார்ந்ததாயிருந்தது. குரிக்கில் இருந்த பிரதானமான கோவிலில் ஊல்றிக்கு சுவிங்கிலி (1484-1531) மத குருவாயிருந்தான். இவ்விடத்திலேயே அது ஆரம்பமாயது. சுவிங்கிலி மிகவும் படித்த மனிதன் ; பால், பேண், வியன்ன என்னுமிடங்களிற் சமய சித்தாந்தம் கற்றுப் புதிய கல்வியின் எழுச்சியில் அழுந்தித் தோய்ந்த உள்ளமுடையவன யிருந்தான். ஒரு சுவிசுப் படையின் குருக்களாகவிருந்த காலத்து, மரிஞானுேவில் சுவிசு மக்கள் தோல்வியடைந்ததை நேரிற் கண்டிருந்தான். போப்பாட்சியின் பாவமன்னிப்புப் பத்திாவிற்பனையை எவ்வளவு கடுமையாகக் கண்டித்தானே அவ்வளவு கடுமையாகத் தன் நாட்டவர்கள் கூலிப் படை உதவி ஊதியம் பெறு வதைக் கண்டித்தான். அவன் தலைமையில், குரிக்கு நகரம் கொன்சுதன்சின் விசுப்பாண்டவருக்குப் பத்திமை செலுத்த மறுத்து, ஒகசுபேக்கு அறிக்கை யினும் (1524) தீவிரமான புரட்டெசுத்தாந்தத்தைத் தழுவியது. 1527 இல் பேண் என்னுமிடமும் அவ்வழியையே பின்பற்றியது. பால், சென்கோல், சாவெசென், ஆப்பென்சன் எனும் பகுதிகளும் புரட்டெசுத்தாந்த வழிபாட்டையே தழுவின. இதற் கெதிராக, நாகரிகம் குறைந்த காட்டுக் கோட்டங்களாகிய ஊறி, சுவிற்று, உந்தவால்தன் என்பனவும் இலேசேன், சுக்கு, பிரீபூ, சொலதேண் என்னும் பகுதிகளும் கத்தோலிக்க மதத்தையே பற்றிக்கொண்டிருந்தன. உண்ணுட்டுப்

புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம் 103
போர் ஆரம்பித்து, 1531 இல் காப்பல் அமைதிப் பொருத்தனையின் பின்னரே முடிவுற்றது. இப்பொருத்தனையின் படி ஒவ்வொரு கோட்டத்திற்கும் அதன் சொந்த வழிபாட்டு முறையைத் தீர்க்கும் உரிமை விடப்பட்டது. அமைதிக்கு முந்திய சமரிற் சுவிங்கிலி கொல்லப்பட்டான்.
இராசுமசு போன்று மனிதப் பண்பாட்டு வாதியும் உலூதரிலும் பார்க்கக் குறைந்த பிடிவாதக் கொள்கையுடையவனுமான சுவிங்கிலி தன் புரட்டெசுத் தாந்தக் கருத்துக்களில்-பிரதானமாக ஆண்டவரின் இராப்போசனத்தைப் பற்றி-அந்த நூற்முண்டின் மற்றெந்தத் தலை சிறந்த மதச் சீர்திருத்தவாதியிலும் பார்க்கக் கூடிய முற்போக்குடையவனுயிருந்தான். எனினும், இதற்கு விதிவிலக் கானவனும் ஒருவன் இருந்தான் ,
கல்வின் (1509-64)
இதற்கு விலக்கானவன் யோன் கல்வின் ஆவான். இவனே சீர்திருத்தவாதி களில் மிகச் சிறந்தவனெனக் கூறலாம். ஒப்பற்ற செல்வாக்குமுடையவனுவான். உலூதர் ஒரு சேர்மனிய நாட்டின வாதியாவான். சேர்மனியிலும் கந்தினேவியா விலும் தவிர வேறிடங்களில் அவன் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கல்வினின் செல்வாக்கோ செனிவாவிலிருந்து நான்கு திசையும் பரவி, புரட்டெசு த்தாந்தம் பரவிய இடமெங்கணும் பரவியது. பிரான்சிய இயூசனர், ஐக்கிய மாகாணங்கள், இசுக்கொத்துலந்து, புதிய இங்கிலந்தினதும் பழைய இங்கிலந்தி னதும் பியூரித்தன் கொள்கையாளர் ஆகியோர் அவனின் வழிபாட்டு முறையைத் தழுவி, தங்கள் திருச்சபை ஆட்சி முறையின்திட்டத்திற்குச் செனிவாவின் திட்டத்தை மாதிரியாகக் கொண்டனர். メ
கல்வின் பிறப்பாற் பிரான்சியனவான் , உள நோக்கிலும் அறிவாற்றலிலும் அவன் முழுப் பிரான்சியனவான். பரிசுச் சர்வகலாசாலையில் இசபெலே, இராசு மசு என்பவரோடு ஏறத்தாழ ஒரே காலத்தில் வதிந்தவனுவான். உயர் தனிச் செம்மைசேர் இலக்கியப் புலமையின் தாத்தில் அவர்களுக்குக் குறைந்த வனல்லன். அவன் ஓகத்தீனின் கருத்துக்களைக் கொண்டவன் என்பதனுற் சந்தேகிக்கப்பட்டு, பாலிற் சாண்புகுந்து, 1536 இல் 'கிறித்த சமய நிறுவனம்' எனும் நூலைத் தன் பெயரை வெளிப்படுத்தாது இலத்தீன் மொழியிற் பிரசுரஞ் செய்து, பின் பிரான்சிய மொழியில் அதைத் திருப்பியெழுதினன். கல்வினின் 'நிறுவனங்கள்’ எனும் நூல் அவன் இருபத்தாறு வயதினயிைருந்த போதே எழுதப்பட்டதாயினும், அது உலகத்திலுள்ள மிகச் சிறந்த புத்தகங்களிலொன் முகப் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. பல விமரிசகர், கல்வினையும் அவன் கோட்பாடுகளையும் முறைமைகளையும் அறிந்திருப்பதுபோல், ' நிறுவனங்கள் ? என்ற நூலையும் தூண்டுசொல் மூலமும் ஏளனச் செய்யுள்கள் மூலமுமே அறிவார் கள். அந்நூலோ அதன் தெள்ளத் தெளிந்த மொழி நடையாலும், விடய ஒழுங்கமைப்பாலும், செறிந்த தருக்க நெறியாலும், விரும்பத்தக்க வகையிலே

Page 62
104. புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம்
நியாயத்தோடு ஒத்திருக்கும் பண்பாலும், அளவுக்கமைந்த முறையாலும், சிறப் புற்று விளங்குகின்றது. உயரிய மத நூலாகவும், திருச்சபையாட்சிக் கை நூலாக வும் ஒருங்கே விளங்கும் இந்நூலானது, செனிவாவிற் கல்வினின் போதனைகளுக் கும், பிரான்சு, இசுக்கொத்துலந்து, ஐக்கிய மாகாணங்கள் என்பனவற்றிலுள்ள சீர்திருத்த வாதிகளுக்கும், உலக முழுவதிலும் உள்ள கணக்கற்ற திருச்சபை களுக்கும் ஒரு பாடப்புத்தகமாகவும் அமைந்தது. கோட்பாடு, திருச்சபை யமைப்பு, ஒழுக்கம் என்னும் துறைகளைச் சேர்ந்த எவ்வித பொருளும் வேதாகமம் என்னும் உரைகல்லிற் பரிசீலனை செய்யப்பட வேண்டும். “பரிசுத்த வேதத்தின் மூலமே கருத்தராகிய தேவன் அறியப்படுகிருர் . சட்டத்தி னலும், சுவிசேடத்தினுலுமே கிறித்து மனிதருக்கு வெளிப்படுத்தப்படுகிறர். எங்களைக் கிறித்துவுடன் இணைக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையாலேயே மீட்பவராகிய கிறித்துவை நாங்கள் வரவேற்கிமுேம்." ஆனல், திருச்சபையைக் கட்டுக்கோப்பாக அமைத்தல் அவசியம். 'திருச்சபைக்கும் குடியியற்கும் உரிய தான அரசாங்கத்தின் மூலமாகவே கிறித்துவின் தோழமையில் தேவன் எங்களை ஐக்கியப்படுத்தி வைத்திருக்கிருரர். '
செனிவாவில், கல்வினுக்கு அவன் எதிர்பார்த்த வாய்ப்புக்கிடைத்தது. அது சவோய்க் கோமகனின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்ட, ஆனல் விசுப்பாண்ட வரின் அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு நகர அரசாகும். 1527 இல் விசுப்பாண்ட வர் தம் அதிகாரத்தைக் குடிகளிடம் ஒப்புவித்தார். 1535 வரையில், கோமகனின் மேலாண்மையை மக்கள் உதறியெறிந்தனர். இந்த நகர அரசுக்கே கல்வின் தற்செயலாக 1536 இல் வந்தான்.
அங்கேயே தங்கும்படி அவன் தூண்டப்பட்டான். அந்நகர் மீது கடுமையான ஒழுங்கு முறைகளை விதிக்க ஆரம்பித்தான். அவன் பகைவர்கள் அவனை நாடு கடத்திய மூன்றுண்டுகள் தவிர (1538-41) 1564 இல் அவன் இறக்கும் வரை அவனே செனிவாவை ஆண்டான்.
செனிவாவிற் கல்வினின் ஆட்சியே இக்கால உலகம் அறிந்திருக்கும் மதச் சார்பாட்சியை மிகவும் ஒத்திருக்கின்றது. திருச்சபையே அரசாயிருந்தது; அரசே கிருச்சபையாயிருந்தது ; கிருச்சபையின் உறுப்பினரே குடிமை பெறக் கூடியவராயினர். திருச்சபையின் உறுப்பினராக இருப்பது, கோட்பாட்டை ஒப்புக்கொள்ளுதல், திருச்சபையின் கட்டளைச்சட்டங்களுக்கு அமைந்து நடத் தல் என்பனவற்றை ஏற்றுக்கொள்ளுவதைக் குறிக்கும். ஆறு குருமாரையும் பன்னிரு பொதுமக்களையும் கொண்ட ஒரு திருச்சபை மன்றத்திற்கு, மேலாண் மை அதிகாரம் கொடுக்கப்பட்டது. தனியாள் நடத்தையின் மிக நுண்ணிய விவ சங்களும்-உணவு, உடை இன்னபிறவும்-பிரமாணத்திற்குட்பட்டனவாயின. தேவ னின் வார்த்தையை ஆதாரமாகக் கொண்ட சமூக வாழ்க்கைச் சட்டங்கள், ஆன்மிகத் தண்டனைகளாகிய நோன்பு, மன்னிப்புக் கேட்டல், கூட்டுத் தொழுகை யிலிருந்து விலக்கப்படல் என்பவற்ருலும், ஈற்றில், குடியியல் நிருவாகத்தின்

புரட்டெசுத்தாந்த மதச் சீர்திருத்தம் O5
உதவியை நாடுவதாலும் நிறைவேற்றப்பட்டன. பாவமும் குற்றமும் ஒன்ருகவே கருதப்பட்டன. சமயக்கட்டளைகளை மீறுபவன் நாட்டுச் சட்டத்தை மீறுபவ ஞகக் கொள்ளப்பட்டான். பாநெறி இராசத்துசோகமாகும். நகரில் ஓர் உயர்ந்த பதவி வகித்த குரூவற்று என்பான் 1547 இல் கடவுளில் நம்பிக்கையில்லாதபடி யாற் சிரச்சேதஞ் செய்யப்பட்டான். கல்வினின் மதவியலை எதிர்த்து வாதித்த சேவிற்றசு என்னும் இசுப்பானியன் 1553இல் பரநெறியாளனென எரிக்கப்
பட்டான்.
இத்தகைய ஆட்சியைக் கடுங்கோன்மையானதென ஒறுத்துரைத்தல் எளிது. கல்வின் கோட்பாட்டின் இழிவைப்பற்றி நதானியல் ஒதோனின் 'சிவந்த நிருபம்' என்னும் தலைசிறந்த நூலில் விளக்கப்பட்டிருக்கின்றது. கல்வினைத் தாக்குவேகர் கல்வினிசத்தைப்" பற்றி புரூடு என்பான் எழுதிய கட்டுரைகளைப் படிப்பா சாக. பிரித்தானிய பொதுநலவாயம் அமைப்பதற்கும், மனித இன மதமாற்றத்திற்கும், பண்பாட்டுக்கும் இசுகொத்துலந்தியர் ஆற்றியதொண் டைப் பற்றிச் சிந்திப்பாராக. கல்வின் ஒரு புரட்டெசுத்தாந்தப் போப்பாண்ட வாாவன். ' புதிய பிரசு பிற்றர் புதுமெருகுடன் தோன்றிய பழைய, சமய போதகரேயாவர் " அஃதவ்வாறேயாகுக. கல்வின் இல்லாவிட்டால் மிலித்தன் கூறிய 'மனிதரின் முதல்வர்" பாடு என்னவாகும்? கல்வினை விட வேறு யார் ஒல்லாந்தருக்கு இரண்டாம் பிலிப்பையும் மதவிசாரணை மன்றத்தையும் எதிர்த்து நிற்க மனவுறுதி அளித்தவர் ? செனிவாவிலிருந்து பெற்ற நம்பிக்கை யில்லாவிட்டால், யாத்திரைப் பிதாக்கள் மேபிளவர்' எனும் கப்பலில் ւ{{Dւն. பட்டிருப்பார்களா ? பியூரித்தன் கொள்கையாளரின் குடியேற்றங்கள் தோற்றி யிருக்கக்கூடுமா ?
1. “கல்வின் கோட்பாடும்” “இசுகொத்துலாந்தியர் பண்பிற் கல்வின் கோட்பாட்டின் ஆதிக்கமும்” -பெரும் விடயங்கள்பற்றிய சுருக்கமான கட்டுரைகள்.

Page 63
நெதலந்து ஆங்கி பார்கன். EE
:Վ} "B1", F.Ağkil:Tide regida.F, Hir * ஐபிய ததாததின்
jos கிறிதுயாதீன் நிரந்து ஐக்கித்துங்கச் ரத்தியான பாபாங் தெரிந்தி
#±l-okial ಸ್ಕಿಲ್ಲಿ I let og Totest
1. .. "...irz-fai சர்நதாந்து
s வி Fasilië
= تقGRL f קשוחיהם
"-ou"Ti+Flagsdriftig o ==
'இM பிராயன்று
&m(፻፷፰ ఊచిత్తF s "Y "***"ES ஜ் يقع "كاش"
தெரgழி ழ்ப்
தேனது |ப்1 Fஆடிட்ட تمتدة من تدهور
ஒரோதது
=g
రిFఎt
da Tri
T3 ரேபினே بيثة
"  ̈ኻዃor... சென் ஆலோட்"
ஈவிலிருந்தி" பிரான் கடலொரேறுக்கு QN
".
ö I°'ጫJሳ 4 Գ. ಬಿ. o I NSE
நெதலந்து
يقة فيتناسبة لتقت
 
 

அத்தியாயம் 8
கத்தோலிக்க மதச் சீர்திருத்தம்
இயேசுவின் சங்கம் மதவிசாானேமன்று : திசந்துக்கழகம்
முக்கியமான திகதிகள் g இசுப்பெயினில் மதவிசாாணேசன்று திருத்தியமைக்கப்பட்டது. ஏறக்காழ 1537 இல் தெய்வித அருட் கழகம் நிறுவப்பட்டது.
1828 கபுசின் சங்கம் அமைக்கப்பட்டது.
பாண பயிற்றுச்சங்கம் அமைக்கப்பட்டது. இயேசு சங்கம் நிறுவப்பட்டது.
1834-50 பேரப்பாண்டவர் மூன்றும் போல். 1540 இயேசு சங்கத்திற்கு மூன்ரும் போல் பட்டயம் அளித்தல். 直5率直 இநற்றிவிப்பெரன் மாநாடு. 1543 மூன்ரும் போல் உரோமில் மதவிசாாணே மின்னத நிறுவுதல்,
1848 கிரந்துக் கழகம் கூடுதல். 1847 கழகம் போலோனியாவுக்கு இடம் மாறுதல். 1531-3 திசந்துக் கழகத்தின் இரண்டாம் வைகல், 1555-2 போப்பாண்டவர் நான்காம் போன்.
155 இரண்டாம் பிவிப்பு ஆச செய்தல், 直占点盟 நான்காம் பேரால் முதலாம் அட்டவனே வரையப்பட்டது. 1882-83 பேசப்பாண்டவர் நான்காம் பயசு, 152-3ே கழகத்தின் மூன்ரும் வைகள், 1568-70 மொரிசுக்கோவர் ஒடுக்கப்படன் : அவர்கள் இசுப்பெயினிலிருந்து
முடிவாக வெளியேற்றப்படல் (1839). 1585-90 போப்பாண்டவர் ஐந்தாம் சித்தக.
புரட்டெசுக்கWந்தச் சீர்திருத்தவாதிகளின் பெருமையைப் பாராட்டுதற்காக, இடைக்காலக் கத்தோலிக்க திருச்சபையின் வேலேயை இழித்துப் பேசவோ, பதினரும் நூற்ருண்டில் அக்கிருச்சபையினுல் நிறைவேற்றப்பட்ட கிருத்தங் களின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கவோ இனிமேல் அவசியமில்லாமலிருப் பது மகிழ்ச்சிக்குரியதொன்ருகும். சமய வரலாறு முழுவதிலும், உண்மை
யாகவே புரட்டெசுக்காந்த மதச்சீர்திருக்கத்தின் தீவிர முன்னேற்றத்தின் பின்னர் விக்கோவிக்க மதத்தின் நல மீட்பிலும் பார்க்கக் கடிய தனிச்சிறப்புடை

Page 64
108 கத்தோலிக்க மதச் சீர்திருத்தம்
யது வேறெதுவும் கிடையாது. ‘உலூதர் கட்சியினர் பிரிந்து ஐம்பது ஆண்டு களின் பின்னர், கத்தோலிக்க மதம் மத்தியதரைப் பிரதேசத்தில் தன்னைக் காப் பாற்றுவதே அரிதாகிவிட்டது. நூற்முண்டுகளின் பின், போற்றிக்குக்கரையிற் புரட்டெசுத்தாந்தம் தன்னைக் காப்பாற்றுவது அரிதாகிவிட்டது. இப்படிக் கூறியபொழுது மாக்கோலே, முரணணிக்காக உண்மையை விட்டுக்கொடுக்க வில்லை. உவேமிசுச் சபை கூடி ஐம்பது ஆண்டுகளுக்குட் புரட்டெசுத்தாந்தம் சட்சனியிலும் பிரசியாவிலும் எசுவிலும் உவூர்த்தம்பேக்கிலும் பலற்றினெற்றி லும் சுவிற்சலந்திலுமுள்ள பல கோட்டங்களிலும் வட நெதலந்திலும் காந்தி நேவியாவிலும் இங்கிலந்திலும் இசுக்கொத்திலந்திலும் தன்னை நிலைநாட்டிக் கொண்டது. இசுப்பெயின், போத்துக்கல், இத்தாலி என்னும் நாடுகளில் மட்டுமே கத்தோலிக்க மதம் உறுதியாய் நின்றது. ஐரோப்பாவின் எஞ்சிய பாகங்களி லுள்ளவர்களின் பத்திமை தீர்மானிக்கப்படாததாயிருந்தது. பதினரும் நூற் முண்டின் முடிவில், கத்தோலிக்க மதத்தைத் தழுவக்கூடுமா என்ற ஐயத்திற் குரியனவாயிருந்த பிரான்சு, தென் நெதலந்து, போலந்து, பொகீமியா, சேர்மனி யிற் பெரும் பகுதிகள் ஆகிய இடங்கள் கத்தோலிக்க சமயத்தைத் தழுவின. அந்நாள் தொடக்கம் இரு மதங்களின் எல்லைகளும் நிலைப்படுத்தப்பட்டனவா
யுள்ளன.
நலமீட்பின் காரணங்கள்
கத்தோலிக்க மதத்தின் நலமீட்பு, ஒருங்கியைந்த பல காரணங்களால் நிகழ்ந் தது. புதிய சமயச்சங்கங்கள் நிறுவப்பட்டமையும் பழையவற்றின் புத்துயிர்ப் பும் மதவிசாரணைமன்று எனும் வலிமை வாய்ந்த சாதனம் ; ஒழுக்கமுறை யிலும் ஒழுக்காற்றிலும் சீர்திருத்தம் ; கிரந்துக் கழகத்திற் கத்தோலிக்க கோட் பாடு வரையறுக்கப்பட்டமை ; ஒருவர்பின் ஒருவராய் வந்த, சிறந்தவரும் நல்ல வருமான போப்டாண்டவர்களின் செல்வாக்கு, புரட்டெசுத்தாந்தத்தின் அமைப் பிற் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்ட குறைபாடுகள் ஆகியனவே அக்கார ணங்களாகும்.
சமயச் சங்கங்கள்
1520 இற்கு முன்னரே, புதிய கல்வியுணர்ச்சியும்’ சமய ஆர்வமும் மன்னுயி சன்பும் ஒருங்கே அமைந்த மனிதரால் உரோமில் தெய்விக அருட்கழகம் அமைக்கப்பட்டது. 1525 இல் அசீசியைச் சேர்ந்த சென் பிரான்சிசு என்பாரின் பழைய ஒழுக்காற்று முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் கபுசின் சங்கம் நிலைநாட்டப்பட்டது. அதே காலத்தில் காராபா என்பார் (பின்னர் போப்பாண்டவர் நான்காம் போல்) தீயற்றின் சபையைத் துறவிச் சபையாகவன்றி உலகியல் சார்ந்த குருமாருக்கு-உபதேசம் செய்வதற்கும் ஆராதனை செய்வதற்கும் நோயாளிகளைப் பார்வையிடவும்-உதவி செய்வதற்காக நிலை நாட்டினர். 1530 இல் பாணபயிற்றர் மிலானில் தோன்றினர்; பின்னர் உரோமில், முக்கியமாக வறியவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக Ᏹ

கத்தோலிக்க மதச் சீர்திருத்தம் O9
கோயில் வீட்டுக் குருமாரை ஏற்படுத்தினர். ஏசுலீன்களை நிலைநாட்டிய பிறேசி யாவைச் சேர்ந்த சென் அஞ்சலாவும் இசுப்பெயினில் வாழ்ந்த சென் தெரிசாவும் இந்தப் புத்துயிர்ப்பிற் பெண்களும் பங்கெடுக்க முன்வந்தனரென்பதற்குச் சான்முயினர். இசுப்பானிய இளம் போர்வீரனன தொன் இனிகோ உலோபசு தி இசகேல் என்பான் அடிகோலி, ஊக்கி, கட்டுக்கோத்த புகழ் பெற்ற சபையுடன் ஒப்புநோக்கின் முன் கூறிய சபைகள் யாவும் சிறப்பற்றனவேயெனலாம்.
இயேசு சங்கம்
இகினேசியசு உலோயலா (என உலகோரால் அறியப்பட்டவன்) சிபுசுக்கோ வாவிலுள்ள உலோயலா கோட்டையில் 1491 இல் பிறந்து ஐந்தாம் சாள்சின் கீழ்ச் சேவையேற்முன். ஆனல் 1521 இல் பம்பலூன முற்றுகையில் மோசமாகக் காயப்பட்டு வாழ்நாள் முழுவதும் நொண்டியானன். ஆகவே சிலுவைப் படை யிற் சேரத் தீர்மானித்தான். பழைய சேவையில் அவன் மாட்டுச் சிறந்து விளங் கிய அதே துணிகரத்தோடும் ஆர்வத்தோடும் புதிய சேவையிற் செயலாற்றினன். அனுபவமும் படிப்பும் போதாவெனப் பிரான்சிசுக்கரால் தள்ளுபடிசெய்யப் பட்டு, பரிசுப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாகச் (1528-34) சமய சித் தாந்தப் படிப்பிற் கருத்துடையோணுயிருந்தான். இங்கே பிரான்சிசு சவேரிய ரதும் இன்னும் ஐந்து நண்பரதும் உதவியுடன் 1534 இல் இயேசு சங்கத்தை நிலைநாட்டினன். 1540 இல் மூன்ரும் போல் அச்சங்கத்திற்கொரு பட்டயம் அளிக் தார். அந்த நூற்முண்டின் நடுப் பகுதி வரையில் அச்சங்கத்தின் உறுப்பினர் தொகை 1500 இற்குக் குறையவில்லை.
புதிய துறவிக் குழு ஒரு தளபதியின் தலைமையில் ஒரு படையாக அமைக்கப் பட்டது. இத்தளபதி தனி அதிகாரத்துடன் பதவியில் அமர்த்தப்பட்டபொழு திலும், அறிவுரை கூறுவோன் ஒருவனலும் ஆறு பெரிய கத்தோலிக்க மாகாணங் . களின் ஆறு பிரதிநிதிகளைக் கொண்ட கழகத்தாலும் கண்காணிக்கப்பட்டு வந்தான். இயேசு சபையின் வேலை ஒழுங்குசெய்யப்பட்ட ஒவ்வொரு மாகாணத் கிற்கும் துறவிமடத்தலைவர் ஒருவர் தலைமை வகித்தார். அவரின் கீழ் பிதாக்களும் மத உறுப்பினரும் இருந்தனர். இயேசுதர் பதவணியின் கீழ்ப்படிகளில் ஆன்மீ கத் துணையதிகாரிகளும், தங்களைக் கல்விக்கே அர்ப்பணித்த மாணவர்களும், உடலுழைப்பாளர்களான பணியாளர்களுமிருந்தனர். பதினறு ஆண்டுகளுக்குக் குறையாத பயிற்சியுடன் மாத்திரம் (ஆறு ஆண்டுக் கல்விப் பயிற்சி உட்பட) உயர்ந்த பதவிகளை அடையலாம். வறுமை, தூய்மை, பணிவு எனும் மூன்று சாதாரணமான உறுதி உரைகளைத் தவிர இயேசுதர் போப்பாண்டவருக்கு முற் முகக் கீழ்ப்படிவதாகவும் சிறப்பாக வாக்குறுதி செய்தனர்.
இயேசுதரின் முயற்சிகள் பல இனப்பட்டவையும் உலகம் எங்கும் பாவியுள்ள வையுமாயிருந்தன; ஆனல் அவர்கள் சிறப்பாக சமய உரையாற்றுவதற்கும் (சிறப்பாக மதம் பரப்பும் துறையில்) பாவ மன்னிப்புக்கும், எல்லாவற்றிற்கும்

Page 65
10 கத்தோலிக்க மதச் சீர்திருத்தம்
மேலாக இளைஞருக்குக் கல்வி கற்பிப்பதற்கும் தம்மை அர்ப்பணஞ் செய்தனர். 1550 வரையில் முப்பத்தாறுக்குக் குறையாத கல்லூரிகளைத் தாபித்து 6000 மாணவருக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தனர். O
மதவிசாரணைமன்று
இயேசுதருக்குப் பட்டயமளிக்கப்பட்ட ஈராண்டுகளின் பின்னர் போப்பாண்ட வர் மூன்ரும் போல் 'உலகத் திருச்சபையின் புனித அலுவலகத்தை" உரோமில் தாபித்தார். காசாபா உட்பட ஆறு காடினல்கள் விசாரணை மன்றத் தலைவர் களாக நியமிக்கப்பட்டனர். புறச்சமய வழக்குக்களை ஆராயவும், புத்தகங்களைத் தணிக்கை செய்யவும், ஐயத்துக்கிடமானவர்களைச் சிறையில் வைக்கவும், மாண தண்டனை விதிக்கவும், இவர் அமர்த்தப்பட்டனர். இப்பயங்கரமான வலிமை படைத்த விசாரணை மன்றம் இசுப்பெயினில் இயங்கிய மன்றத்தைப் பின்பற்றி யது. இம்மன்றம் 1481 இல் கத்தோலிக்க இறைகளாற் புதுப்பிக்கப்பட்டுப் புதி தாயமைக்கப்பட்டது. இம்மன்றத்தின் முதல் நோக்கம் கத்தோலிக்க மதத்தின ரிடை நிலவிய புறநெறிகளை வேருடன் அழித்துவிடுதலும், கிறித்து மதத்தைத் தழுவிய யூதரும் முசிலிங்களும் பழைய வழிபாட்டுக்கு நழுவுவதைத் தடுத்தலு மாகும். இது மிகத் திறமையுடன் இசுப்பெயினிற் செயலாற்றியமையால், அது வழக்கில் வந்த முதற் பதினைந்து ஆண்டுகளில் 10,000 பேர்க்கு மேற்பட்ட மக்கள் எரிக்கப்பட்டனர். இன்னும் 90,000 மக்கள் மீது தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்திற் பலியானவர்கள் யூதர்களும் முசிலிங்களுமே, இசுப்பெயினிலிருந்து முன்னையவர் 1492 இலும் பின்னையவர் 1499 இலும் வெளியே துரத்தப்பட்டனர். கிறித்த சமயத்துக்கு ஒத்து இணங்கி, இசுப்பெயினில் தங்குதற்கு உத்தரவளிக் கப்பட்ட மொரிசுக்கோவர் என அழைக்கப்படும் சோனகர் 1568-70 காலப் பகுதி யில் ஒடுக்கப்பட்டனர்; எஞ்சியவர்கள் 1609 இல் தீபகற்பத்திலிருந்து ஈற்றில் வெளியே துரத்தப்பட்டனர். மதவிசாரணை மன்றம் தனது வேலையை இசுப்பெயி னிற் செவ்வையாகச் செய்து முடித்தது. எல்லா யூதர்களும் விசுவாசமற்ருே ரும் பாநெறியாளரும் வேரோடும் அழிக்கப்பட்டனர். அம்மன்றம் 1820 வரை யும் முறைப்படியும் முடிவாயும் ஒழிக்கப்படவில்லை. இத்தாலியிலும் அம்மன்றம் வெற்றிகரமாகத் தொழிலாற்றியது. ஆனல் இரண்டாம் பிலிப்பின் ஆட்சியில் நெதலந்திற் சிறிது காலத்திற்கே பயனளிப்பதாயிருந்தது.
கிரந்துக் கழகத்தின் விளைவுகள் மிகவும் வேறுபட்டிருந்தன. தூய்மையாக்கப் பட்டுப் புத்துயிர் கொடுக்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் தொடக்கத்திற்கு இக்கழகமே மூலமாகும்.
திசந்துக் கழகம்
சில காலமாக ஐந்தாம் சாள்சு, மதத்திருத்த இயக்கத்தைப்பற்றி வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப் பொதுக் கழகத்தைக் கூட்டும்படி போப்பாண்டவரை கொக்கிக் கொண்டிருந்தான். ஆனல் 1545 வரையும் எந்தப் போப்பாண்டவரும்

கத்தோலிக்க மதச் சீர்திருத்தம்
அப்படிச் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வாண்டில் மூன்ரும் போல் பொதுக் கழகமொன்றைக் கூட்டினர். புரட்டெசுத்தாந்தருடன் இணக்கம் செய்வதிற் கழகம் முற்ருய்த் தவறியது. சேர்மனியில் மதப்போர்கள் ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் மட்டுமே அக்கழகம் கூடியது. அக்கூட்டத்திற்குச் சமுகம் அளிக் கப் புரட்டெசுத்தாந்தர் மறுத்தனர். எனினும், கத்தோலிக்க திருச்சபையில் நிலவிய பல ஊழல்களைச் சீர்ப்படுத்துவதிலும் அதன் கோட்பாடுகளைப் புதிதாக வரையறுத்துக் கூறுவதிலும் அது பெரும்வெற்றி பெற்றது.
1546 திசெம்பரிலிருந்து 1549 செத்தெம்பர் வரையும் நிலைத்திருந்த முதலாம் வைகல், சேர்மனியில் தொடங்கிய மதப் போர்களினலும் ஐந்தாம் சாள்சின் உள் ளெண்ணத்தைப் பற்றி இத்தாலிய மத குருமார் சந்தேகம் கொண்டமை யாலும், குழப்பம் அடைந்தது. எனவே, 1547 இல் போப்பாண்டவர் கழகத்தைப் போலோனுவிற்கு இடமாற்றினர். இரண்டாம் வைகல், (1551 ம்ே, 1552 ஏப்பி ரில்) திசந்திற் போப்பாண்டவர் மூன்றும் யூலியசு தலைமையிற் கூடியது. அது ஒன்றும் செய்து முடிக்கவில்லை எனலாம். 1553 இல் சட்சனியைச் சேர்ந்த மொரிசு என்பான் இன்சு பிரக்குக் கெதிராக முன்னேறிய காரணத்தாலும் பேரரசர் எதிர்பாராவகையில் இத்தாலிக்குட் பயந்தோடியமையாலும் அவ் வைகல் குலைந்தது. நான்காம் போல் (காராபா) (1555-9) போப்பாண்டவரா யிருந்த காலப் பகுதியில் இக்கூட்டங்கள் முற்முக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனல், நான்காம் பயசு அதன் மூன்மும் வைகற்குத் (1562 சனவரி, 1568 திசெம்பர்) கிரந்தில் கழகத்தைக் கூட்டினர். பேரரசன் முதலாம் பேடினந்து (1556-64) புரட்டெசுக்காந்தருடன் இணக்கஞ் செய்து கொள்வதையே இன்னும் விரும்பி, குருமார் விவாகம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் புனித மேசையில் அப்பமும் மதுவும் பெறவேண்டுமென்றுஞ் சாதித்து, போப்பாண்ட வரின் தனியாட்சியைக் கட்டுப்படுத்தும்படி ஏவிஞ்ன். பிரான்சிய சேர்மனிய விசுப்பாண்டவர்கள் அவனுக்கு ஆதாரவளித்தனர். ஆனல், இத்தாலியர் அவர் களைத் தோற்கடித்தனர். இக்காலப் பகுதியில் மதத்திருத்தம் நிறைவேறியது. கிறித்த உலகத்தில் நிலவிய பேதகம் தீர்க்கப்படக்கூடிய காலம் போய்விட்டது. உரோமன் கத்தோலிக்க மதத்தின் வட்டாரம் கட்டுப்படுத்தப்படினும், வரை யறுக்கப்பட்ட நிலப்பகுதியில் அது முழுமையாகவும் புனிதமாகவும் பேணப்பட வேண்டுமென்று இத்தாலியர் திடசித்தமாய் இருந்தனர்.
ஒழுக்கமும் கட்டுப்பாடும்
அவர்கள் தங்கள் பிடிவாதத்தின் பலனை அடைந்தனர். குருபீடத்தின் வரம் பற்ற அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. போப்பாண்டவர் மாத்திரமே ஒழுக் காற்று விடயங்களிலும் ஆகமப்பிரமாணங்களுக்கு விளக்கங்கூறுவதிலும் தீர்ப் பாளராயிருக்க வேண்டியவரானர். சமயக் கோட்பாடு சார்ந்த அலுவல்களில்
அவர் தவமுமைத்தத்துவம் பூண்டவர். தலத்திலாமை, பல பதவிதாங்கும் முறை
மை என்பன தடைசெய்யப்பட்டன. அரசு திருச்சபைக்குக் கீழ்ப்பட வேண்டிய

Page 66
112 கத்தோலிக்க மதச் சீர்திருத்தம்
தாயிருந்தது. அரசர் போப்பாட்சிக்கு அமைந்து நடக்க வேண்டியிருந்தது. அதே காலத்தில் திருச்சபையின் தலைவரும் உறுப்பினரும் முற்முகச் சீர்ப்படுத் தப்பட வேண்டியிருந்தனர். போப்பாண்டவரும் காடினலும் விசுப்பாண்டவரும் குருமாரும் பாவங்களை ஆணையிட்டுக் கைவிடவேண்டியவராயினர். நோன்பு செய்து பாவ ஒழிப்புப் பெறக்கூடியன எனச் சாதாரண மக்களுக்கு அனுமதிக் கப்பட்டுள்ள சிற்றின்பங்களையும் அவர்கள் கைவிடவேண்டியிருந்தது. இது முதற் கொண்டு அவர்கள் உயர்பதவிக்க ஏற்றவாறு தூய்மையாக வாழ வேண்டியவராயினர்.
羲
கோட்பாடு
கத்தோலிக்க கோட்பாடு முற்முக மீண்டும் உறுதி செய்யப்பட்டது; வேதாக மத்திலிருந்து திருச்சபைக்கு மேன்முறையீடு செய்தல், ஏழு சமயவினைகள், ஆன்மாக்களின் பழி களையப்படும் இடம் பற்றிய கோட்பாடு, திருத்தொண்டர் வணக்க வழிபாடு, உருவச்சிலைகளை வணங்குதல், திருப்பீடத்தின் முதன்மை, இன்ன பிற அதில் அடங்கும்.
சொந்த வாழ்க்கையின் ஒழுக்கத்திலும் சீர்திருத்த ஆர்வத்திலும் சிறந்த வரும் ஒருவர்பின் ஒருவராக வந்தவருமான போப்பாண்டவர்கள் கழகத்தின் ஆஞ்ஞைகளை நடைமுறையிற்கொணர்ந்து, கத்தோலிக்கச் சீர்திருத்த இயக்கத் தைப் பூர்த்தியாக்கினர். முன்னேறிக் கொண்டிருந்த புரட்டெசுத்தாந்தமெனும் பெருக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டது. சீர்ப்படுத்தப்பட்டதும், மாசு போக்கித் தூய்மைப் படுத்தப்பட்டதும், தனியொரு தலைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப் பதால் ஐக்கியம் பூண்டதும், திறமான கட்டுக்கோப்புடையதும், சமயத் தொண்டுபுரிவதில் இயேசுதாதும் வேறு சபையினாதும் ஆர்வத்தினற் பெரிதும் வலுப்படுத்தப்பட்டதுமான கத்தோலிக்க கிருச்சபையானது, ஒற்றுமைகுலைந்து நின்ற பாநெறியாளர் பக்கத்தினை இப்பொழுது தளரா உறுதியுடன் எதிர்த்து நிற்க வல்லதாயிற்று. உலூதர் கொள்கையினர், சுவிங்கிளியின் கட்சியினர், கல் வின் கொள்கையினர், ஆங்கிலத் திருச்சபையினர் ஆகியயாவரும் தம்முள் மாறு பட்டு நின்று மலைந்தனரேனும் ஒரு கால் தாம் முயற்சி செய்து வெற்றி பெற்ற வற்றைக் கைவிடாது காத்திருக்கலாம். ஆனல், வேறு வேருன நாட்டினத் திருச் சபைகள், நாட்டின் எல்லைகளைக் கடந்ததாய், தனியொரு தலைவரிடமிருந்து கட்டளை பெறுவதான கத்தோலிக்க தாபனத்தின் போட்டியை நிருவகிக்கவிய லாது இடர்ப்பட்டன. உலகெங்கும் பிரித்தானிய இனம் பரவியமை மாத்திரமே உரோமின் பூரண வெற்றியைத் தடுத்துவிட்டது. இதற்குக் காந்திநேவியரும் ஒல்லந்தரும் ஓரளவு உதவினர்.

அத்தியாயக் 9
ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
முக்கியமான திகதிகள்
1555
互559
1566
1567
互522
互522
互522
1524
1576
1576
1576
157?
1578
1579
互58 I
互583
1583
1584
1585
互586
翼588
卫593
1604
1609
இரண்டாம் பிலிப்பு நெதலந்தின் ஆட்சியாளனுதல். மாகாற்று, பதிலாளி. மதவிசாரணைமன்றத்தை எதிர்த்து நிற்க நிறுவப்பட்ட கூட்டவை. அல்வாவின் எழுச்சி. "இரவலர்கள் பிறில் என்னுமிடத்தைக் கைப்பற்றுதல். உவிலியம் இசுராற்முேல்டர். உடோடெற்று அறிக்கை. உவிலியம் இலைடனின் முற்றுகையை விடுவித்தல். ஒசுத்திரியாவைச் சேர்ந்த தொன் யோனின் வருகை. அந்துவேப்பு அழிக்கப்படல் (இசுப்பானிய மூர்க்கம்). கெந்து சாந்தப்படுத்தப்படல். குடித்திணைமன்றம் தொன் யோனைப் பதவியினின்றும் நீக்குதல். தொன் யோனின் மரணம். பாமாவைச் சேர்ந்த அலச்சாந்தர் பாணிசு
அவனுக்குப்பின் அரசெய்தல். உதிரத்து ஐக்கியம். வடமாகாணங்கள் சுயவாட்சிப் பிரகடனஞ்செய்தன. ஆஞ்கு என்பான் அந்துவேப்பை அழித்தல். உவிலியம் ஒல்லந்தினதும் சீலந்தினதும் இறைமையை ஏற்றுக்
கொள்ளுதல். உவிலியம் கொலைசெய்யப்படல் , மொரிசு அரசெய்தல். இலெசுத்தரின் தலைமையில் எலிசபெத்து நெதலந்துக்குப் படை
அனுபடதல. சற்பன் சமர். இசுப்பானிய ‘ஆமடா ' தோற்கடிக்கப்பட்டது. பாணவெல் என்போனல் குடித்திணைமன்றம் அமைக்கப்பட்டது. ஒசுதந்து சிபினுேலாவாற் கைப்பற்றப்பட்டது.
பன்னிராண்டுப் போர்த்தகைவு.

Page 67
14 ஐக்கிய நெதலாந்தின் தோற்றம்
திரந்தில் அப்பெருங் கழகம் கூடியிருக்கும் பொழுது ஐரோப்பாவுக்கும் உலகத் திற்கும் மிக முக்கியம் வாய்ந்த ஒரு நெருக்கடியான திசையை நோக்கி, நெத லந்திற் கருமங்கள் நடந்துகொண்டிருந்தன. மனித குலத்தின் கற்பனைச் சத்தி யைக் கவர்ந்த சூழ்நிலையில், புதியவொரு நாட்டினவரசு உருவாகிக் கொண்டிருந் தது. இது மெளனி உலிலியம், இளவரசனுன மொரிசு, இளவரசனை பிரதரிக்கு, என்றிவான் ஒடன் பாணவெல் போன்ற பெருவீரம் வாய்ந்த மனிதரால் உரு வாகியது. மேற்கிந்திய கிழக்கிந்திய தீவுகளிலும், வட, தென் அமெரிக்காவிலும், தென் ஆபிரிக்காவிலும், இலங்கையிலும், மலாய்த்தீவுக்கூட்டங்களிலும் உலக மளாவிய பற்பல சார்புநாடுகளை ஆட்சி செய்ய வேண்டிய ஒரு நாட்டை அவர் கள் பேணி உருவாக்கினர். முதலாவதாக இசுப்பெயினின் ஆதிக்கத்திற்கெதிராக வும் பின்னர் பிரான்சின் ஆதிக்கத்திற்கெதிராகவும் கூட்டுறவாளராகப் போரா டிய காரணத்தாலும், இடைக்காலப் பகுதியில் வாணிகம், கடல்சார் ஆதிக்கம் ஆகியவற்றிற்காகத் தம்மிடை போராடிய காரணத்தாலும், புதிய ஒல்லந்த குடி யாசின் தோற்றம் இங்கிலந்தின் கவனத்தை ஈர்த்தது. இக்கால உலகத்திற் கூட்டாட்சியரசாங்கத்தின் முன்மாதிரியாக அமைந்தது பற்றிப் புதிய இங்கிலந் துக்கும் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அரசியல் நிறுவகங் களைப் பற்றிக் கற்கும் மாணுக்கன், ஒல்லந்தின் பெருமை எவ்வளவு தீவிரமாகப் பெருகியதோ அவ்வளவு தீவிரமாகக் குறைவடைந்ததென்பதை மறக்க முடி யாது. இவ்வரசாகிய சூரியனின் கதிசெறிக்கின்ற உதயம், பகட்டான நடுப்பகல், சடுதியான இருட்கவிவு, அல்லது அந்திஒளி ஆகியவற்றின் காரணங்களை நுணுகி ஆராயாமல் விடவும் முடியாது.
தோற்றங்கள்
ஒல்லந்த குடியரசு பின்வரும் முறையிலே தோன்றியது. செல்டு, மியூசு, இசை யின் நதிகளின் கழிமுகங்களைச் சுற்றியுள்ள பதிந்த நாடுகள், ஆரம்பத்திற் பெரிய மத்திய இராச்சியத்தின் ஒரு பாகமாயமைந்திருந்தன. வடகடலிலிருந்து தைபரின் ஆற்றுமுகம் வரையும் பரந்திருந்த இந்த இராச்சியம், 843 இல் நடந்த காளோவிங்கியப் பேரரசின் பிரிவினையில் உலொத்தர் பேரரசனுக்குக் கிடைத் தது. இவன் பெயர்பற்றியே அந்த ஆள்புலம் உலொதரிங்கியா அல்லது உலொ ரேன் என்னும் பெயரைப் பெற்றது.
காலஞ் செல்லச்செல்ல, கீழ் உலொரேனுனது, பிரபந்துக் கோமகவுரிமை, பிலாண்டேசு, எனே, ஒல்லந்து, கெலுடலந்து, இலிம்பேக்கு, இலட்சம்-பேக்கு என்னும் மாவட்டங்களாகவும், உதிரத்து, இலிசு என்னும் விசுப்பாண்டவர் சிற் றரச உரிமைகளாகவும் பிரிந்தது. ஆனல் பன்னிரண்டாம் நூற்முண்டு தொடங்கி மானியப் பிரபுக்களை, வலிமையிலும் செல்வத்திலும் தீவிரமாக வளர்ந்த கெந்து, புரூசு, உவைப்பெசு போன்ற வியாபார நகரங்கள் எதிர்த்து நின்றன.

ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 15
பேகண்டியுடன் தொடர்பு
நெதலந்துக்கும் பேகண்டிய கோமகவுரிமைக்கும் உள்ள தொடர்பானது, பேகண்டிக் கோமகனுகிய துணிகரவீரன் சாள்சுக்கும் பிலாண்டேசு, ஆட்டுவா மாவட்டங்களின் மரபுரிமையாளியாகிய மாகாற்றுக்குமிடையே நடந்த திருமண காலத்திலிருந்து தொடங்கியது. அவன் போனன சீலன் பிலிப்பின் காலத்தில் (1419-67) பல நாடுகள் இவனிடம் சேர்ந்தன. திருமணத்தாலும், மரபுரிமையா லூம் கொள்வனவாலும் அவன் பிலாண்டேசு, ஆட்டுவா, ஒல்லந்து, சீலந்து, எனே, பிரிசிலந்து, நமூர், இலட்சம்பேக்கு, பிரபந்து, இலிம்பேக்கு என்னுமிடங் களின் ஆள்வோனுயினன். சோர மக்களிலொருவனை உதிரத்தின் விசுப்பாண்டவ சாக்கினன் ; வேருெருமகனை இலீசுக்கு விசுப்பாண்டவர் ஆக்கினன்; ஒருவழிச் சோதானுெருவனைக் காம்பிறேயில் விசுப்பாண்டவர் ஆக்கினன்.
அந்நாட்களிலே தானும் ஓரினமாகச்சேரும் நாட்டம் ஓரளவிற்கு உணர்ந்தறி யக்கூடியதாயிருந்தது. இந்நாட்டம் பதினமும் நூற்முண்டின் நிகழ்ச்சிகளால் வலியுறுத்தப்பட்டதின் விளைவை இக்கால ஒல்லந்து, பெல்சிய இராச்சியங்கள் குறிக்கின்றன. இாைன் கழிமுகத்திலும் பிரீசியன் கடற்கரை ஓரமாகவுமுள்ள வடகீழ்த்திசை அரசுகள் இனத்திலும் மொழியிலும் தியூத்தோனிய வகுப் பைச் சேர்ந்தன. அரசியல் வழி, பேரரசுக்குக் கீழ்ழ்ப்பட்டவை. தென்மேற்குத் திசையிலுள்ள அரசுகளின் மொழி பிரான்சியமொழியாகும். இவைகளில் முதன் மையானவை-பிலாண்டேசு, ஆட்டுவா ஆகிய மாவட்டங்கள்-பிரான்சிய அா சனின் மானியங்களாயிருந்தன. ஆனல், இனம், மொழி ஆகியவற்றிற்குரிய வேறு பாடுகள் வெளிப்படையாகவும், அரசியல் நிறுவனங்கள், சமூகவழக்கங்கள் யாவும் வேறுபாடானவையாயும் சில பேரரசின் இறைமையையும், வேறு சில பிரான்சிய அரசனின் இறைமையையும் ஒப்புக்கொண்டும் இருந்தபோதிலும், இச்சிற்றரசு நாடுகளுக்கும் அவற்றின் அயல்நாடுகளுக்கும் போதிய அளவிற் பொதுத் தன்மைகள் இருந்தமையாலும், இந்நாடுகள் என்றே ஒருநாள் ஒரு தனிப்பட்ட ஆட்சியாளனின் கீழ்த் தனியாசாக ஒன்று சேருமென்ற நம்பிக் கையை ஊட்டிவந்தன. ஆனல் அந்நம்பிக்கை நிறைவேறவில்லை.
குடித்திணைமன்றம்
எனினும் துணிவுடைச் சாள்சு இந்நாடுகளை ஐக்கியப்படுத்த முயற்சி சில செய் தான். இவன் 1465 இல் 'குடித்திணைப்' பிரதிநிதித்துவ நிறுவகங்கள் எல்லாவற் றையும் அழைத்து பிரசலில் ஒரு மத்திய மன்றமாக, அல்லது குடித்திணைமன்ற மாகக் கூடும்படி செய்தான். ஐந்தாம் சாள்சினதும் இரண்டாம் பிலிப்பினதும் ஆட்சிக்காலங்களில் குடித்திணைமன்றம் ஒழுங்காகக் கூடியது. இவ்வழக்கம் வரி விதித்தலை எளிதாக்கியமையால் அவ்விறைகளால் ஊக்கமளிக்கப்பட்டது.
6-24178 (5/60)

Page 68
16 ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
மாபெரும் சிறப்புரிமை
துணிவுடைச் சாள்சு 1477 இற் காலஞ்செல்ல, அவன் மகளும் உரிமையாளியு மாகிய மேரி பட்டத்திற்குவந்தாள். அதே ஆண்டில் அவள் பேரரசன் மாச்சிமிலி யனை மணம்புரிந்தாள். 'மாபெரும் சிறப்புரிமை' என்னும் உரிமைப்பட்டயத்தை அளித்தவள் இவளேயாவள். இப்பட்டயம் எங்கள் மகாபட்டயத்தைப்போல நடைமுறையிலிருந்த உரிமைகளைத் தொகுத்துக்கூறி உறுதிப்படுத்தியதேயல் லாமல், புதிய உரிமைகளை வழங்கவில்லை. மேரி 1482 இல் தற்செயலாகக் கொல்லப் பட்டாள். தனது இளைய மகனுகிய அழகன் பிலிப்புக்குத் தன் உரிமைகளே வழங் கினுள். இவன் 1494 இல் தன் தந்தை மாச்சிமிலியனிடமிருந்து அதிகாரத்தை ஏற்றுக் கொண்டான். 1496 இல், பேடினந்து, இசபெலா ஆகியோரின் மகளான யோன்னவைப் பிலிப்பு மணம் புரிந்தான். ஐந்தாம் சாள்சு அவர்களின்
மகளுவான்.
அழகன் பிலிப்பு நெதலந்தை ඖෂ நாட்டினச் சிற்றரசனக ஆண்டான் ; அவை ஒன்றுபட்டிருப்பதை மீண்டும் அவன் நிலைநாட்டினன் , அந்நாட்டினரையே அதிகாரிகளாக நியமித்தான்; அவன் ஆட்சியில் அம்மாகாணங்கள் முன்னெப் பொழுதேனுமிருந்திராத அளவிற் செழிப்புற்ருேங்கின. வியாபாரக் கவர்ச்சிமை யம் மத்திய தரைக்கடலிலிருந்து அத்திலாந்திக்குச் சமுத்திரத்துக்கு இடம் பெயர்ந்ததின் பயனக, அந்துவேப்பு உலகவியாபாரத்தின் மிகச்சிறந்த இறக் கேற்றத்துறைகளிலொன்முகவும் உலக நிதி ஒழுங்கின் மையமாகவும் விளங் கியது.
பிலிப்பின் அகாலமரணத்தினுல் (1506) நெதலந்து மீண்டும் மலைவுற்றது. மாச் சிமிலியன் மீண்டும் பதிலாண்மை உரிமையைக் கோரினன். ஆனல் உண்மையான அரசாங்கத்தை, இருமுறை விதவையான தன் மகளாகிய மாகாற்றிடம் ஒப்பு வித்தான். ஆட்சி செய்வோளென்றமுறையில் மாகாற்று, முதலாவதாகத் தன் பிதா சார்பிலும் பின் தன் மருமகனன ஐந்தாம் சாள்சு சார்பிலும், 1530 இல் அவள் இறக்கும்வரையும், நாட்டை மிகவும் சாதுரியத்துடனும் வெற்றியுடனும் ஆட்சிசெய்தாள்.
ஐந்தாம் சாள்சு
கெந்து என்னுமிடத்தில் 1500 இற் பிறந்த ஐந்தாம் சாள்சு, பிறப்பினுல் மாத் திரமன்றி, பூட்கையாலும் உள்ளன்பாலும் உண்மையில் ஒரு பேகண்டியனவன். அவனுடைய பேகண்டிய மரபுரிமையோவெனில் உண்மையாகவே விழுமியது. அவன் பிரபந்து, கெலிடலந்து, இலிம்பேக்கு, இலட்சம்பேக்கு ஆகியவற்றின் கோமகன்; பிலாண்டேசு, ஆட்டுவா, ஒல்லந்து, எனே, சீலந்து, சற்பன், நமூர் என்பவற்றின் பெருமகன்; பிரீசிலந்து, மெச்சிலின், உதிரத்து, ஒவரிசல்,

ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 117
குரோனிஞ்சன் என்பனவற்றின் முதல்வன்; அந்துவேப்பின் சிற்றரசன்இப்பதினேழு மாகாணங்களும், மிக வீரம்படைத்த ஊக்கமுள்ள மனிதர்களே யும், உலகத்தில் மிகுதியான செல்வம்படைத்த நகரங்களிற் சிலவற்றையும் கொண்டிருந்தன.
ஏலவே சுட்டிக்காட்டியபடி இந்த நாடுகள் யாவற்றையும் ஐக்கியப்படுத்திய பிணைப்பானது பெரும்பாலும் ஒரு தனியாளேச்சார்ந்ததாகும். ஆனல் ஐந்தாம் சாள்சு, முன்னரே அவன் முழுக்கவனத்தையும் கவர்ந்த பல அலுவல்கள் இருந்த போதிலும், ஒரு புறம் இம்மாகாணங்களுக்கிடை நெருங்கிய ஐக்கியத்தை ஏற் படுத்தி, அவற்றை ஒன்முக இணைக்கவும், மறுபுறம் தான் தலைமைவகித்த போர சுடன் உறவுபடுத்தவும் ஓயாது உழைத்தான். குடித்திணைமன்றம் முன்னிலும் பார்க்க அதிகமாக இப்பொழுது கூடிற்று; மெச்சிலின் என்னுமிடத்தில் ஒரு மத்திய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், நிதிசார்ந்த அலுவல்கள், நீதிபாலனம், அமைதி பேணல் என்பவற்றிற்காக மூன்று மத்திய கழகங்கள் நிறுவப்பட்டன; பெருவலி படைத்த நகரங்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்பட்டன; ஒவ்வொரு மாகாணத்துக்கும், "இசுராற்முேல்டர்’ பேரரசு ஞல் நியமிக்கப்பட்டான்.
கொள்கையளவில் இசுராற்முேல்டர் ஒரு மாகாண அலுவலஞவான் ; அவ் வளவில் அவன் அதிகாரம் நின்றது. ஆனல் அப்பதவி தேர்வின் வழியதான பின், பல மாகாணங்கள் ஒருவனையே தெரியத் தலைப்பட்டன. அவ்வண்ணம், ஒரு இசுராற்முேல்டர் வெளிநாட்டலுவல்களில் ஐக்கிய மாகாணங்களின் பிரதிநிதியா கக் கடமையாற்றவும் குடியரசின் படைகளை அடக்கியாளவும் முடிந்தது.
ஒரேஞ்சுநாட்டு உவிலியம் (1583-84) A.
1477 'மாபெரும் சிறப்புரிமையின்' நியதிகளுக்கு அமையாது சாள்சு ஒரேஞ்சு நாட்டின் சிற்றரசனன, சலோனைச் சேர்ந்த இரனே என்னும் பிறநாட்டு விழுமியோனை ஒல்லந்து, சீலந்து, உகிரத்து என்னும் மாகாணங்களின் அதிபதி யாக அமர்த்தினன். தன் பட்டத்தையும் தன் ஆள்புலங்களையும் இளவயசினனும் மைத்துனனுமான நாசோவைச் சேர்ந்த உவிலியத்திற்கு விட்டு, இானே 1544 இல் இறந்தான். அவன் பெற்றேர் உலூதர் கொள்கையினராயிருந்த போதிலும் அந்த இளவரசன் ஒரு கத்தோலிக்கனுகவே வளர்க்கப்படவேண்டுமெனப் போர சன் வற்புறுத்தினன். உவிலியம் பேரரசனுடைய ஆதரவைப் பெரிதும் பெற்றன். 1555 இல் பேரரசன் முடிதுறத்தலைக் குறித்த விமரிசையான சடங்கில், உவிலியத்தின் தோளிலே பேரரசன் சாய்ந்திருந்தான்.
இாண்டாம் பிலிப்பு (1555-98)
ஐந்தாம் சாள்சு தன் மகன் பிலிப்புக்கு நெதலந்தை அளித்தான். பிலிப்பும் உவிலியத்துக்கு ஆதரவுகாட்டினன். 1559 இல் காற்றே காம்பிரேசிப் பொருத்

Page 69
18 ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
தனையைப் பேசிமுடிக்க அவன் உவிலியத்தையே அனுப்பினன். அவன் பிரான்சி லிருந்து திரும்பிவந்தபொழுது அவனுக்கு 'நைற்றுப்பட்டம் ஈந்து, ஒல்லந்து, சீலந்து, உதிரத்து எனும் மாகாணங்களின் அதிபதியாக அமர்த்தினன். ஆனல் இவர்கள் இருவருக்குமிடையில் இருந்த அன்பு அருகத் தொடங்கியது ; முடிவில் இம்மனமாற்றம் பகைமையாக முற்றியது.
இரண்டாம் பிலிப்பு, தன் பிதாவைப்போல் அல்லாது, நெதலந்துக்கு அன்னிய ணுகவேயிருந்தான்; அவன் முற்முக இசுப்பானிய மனப்பான்மையுடையவன். அவன் தன் மரபுரிமையான பேகண்டி நாட்டை ஓர் இசுப்பானிய மாகாணமாக ஒடுக்கவும், அங்கேவாழ்ந்த விழுமியோர், நகரமூப்பர், குடியானவர்கள் ஆகிய தன் குடிகள் யாவர்மீதும், தான் ஆர்வத்துடன் நம்பிய மதத்தைத் திணிக்கவும் தீர்மானித்தான்.
நெதலந்திற் புரட்டெசுத்தாந்த மதம்
புரட்டெசுத்தாந்தமெனும் களையை வேரோடும் அழித்துவிட அவன் திட்ட மிட்டு, பற்பல கற்பனைகளைத் தொடர்ந்து வெளியிட்டபோதும், சாள்சின் ஆட்சி யில் அப் பாநெறி ஏலவே அதிக முன்னேற்றமடைந்திருந்தது. அவன் பதவியி னின்றும் விலகுமுன்னரே, அவனுற் பெரிதும் ஊக்கப்பட்டுச் செயலாற்றிய மத விசாரணை மன்றமானது 50,000 மக்களைப் பலிவாங்கிற்று. எனினும் சாள்சும் அவன் போப்பாண்டவர் (உதிரத்தைச் சேர்ந்த) ஆரும் எத்திரியனும் தங்க ளால் இயன்றமட்டும் அதன் முன்னேற்றத்தைத் தடுக்கமுயன்றனராயினும், புரட்டெசுத்தாந்த மதத்தைக் கைக்கொள்ளுவோர் தொகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒல்லந்த புரட்டெசுத்தாந்த மதம் பலவினத்தன்மையதா யிருந்தது. உவிக்கிளிபு, அசு என்பாரின் போதனைகள் நெதலந்தில் எளிதாய்ப் பரவின. இராசுமசு, உலூதர், சுவிங்கிளி, கல்வின் ஆகிய யாவருக்கும் அங்கே சீடர்கள் இருந்தனர். 1535 இல் நிகழ்ந்த மறுதீக்கை பெற்றேரின் எழுச்சிக்கு மன்சுதரே மையமாயிருந்தது. ஆனல் இளம் விழுமியோர் கல்விகற்பதற்குச் செனிவாவிற்கே திரளாகச் சென்றனர். 1572 உடோடெற்று அறிக்கையிற் கல்வி னின் கொள்கையே முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பாமாவைச் சேர்ந்த மாகாற்று (1559-67)
இதற்கிடையிற் பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. 1539 இல், தான் ஒருபோதும் பரிவுகொள்ளாக் குடிகளிடமிருந்து இரண்டாம் பிலிப்பு விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான். அவர்களை மீண்டும் ஒருபொழுதும் அவன் காணவில்லை. தன் ஒன்றுவிட்ட சோதரியும் பாமாவைச் சேர்ந்த கோமகளுமான மாகாற்றிடம் ஆட்சியை ஒப்புவித்தான். அவள் நெதலந்தை எட்டு ஆண்டுகளாக (1559-67) ஆண்டாள். ஆனல், அவளுக்கு முன்பு ஆட்சி செய்த பெண்மணிகள் இருவர்க்கும் குடிகளுக்குமிடையே நிலவிய நல்லுறவோ நல்விளக்கமோ அவள் காலத்தில் ஒருபோதும் இருந்ததில்லை.

ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 19
திரண்டெழுந்த அமைதியின்மை பெருகுதற்குப் பற்பல விடயங்கள் துணை புரிந்தன . இவை சட்டத்துக்கமையா வரிகளின் தீவிரமான பெருக்கம் ; நகர சுதந்திரங்களை மீறல் ; உண்ணுட்டுக்குரிய வழமைகளைப் பிடிவாதமாக எதிர்த்து நிற்றல்; உயர்தரமான பதவிகளிலெல்லாம் இசுப்பானியரை அமர்த்தல் ; நாட்டில் இசுப்பானியப் படைஞர் தங்கிநிற்றல்; நாட்டின் தேவைக்கு மிஞ்சிய தாக விசுப்பாண்டவர் உரிமைகளைப் பெருக்கல் , எல்லாவற்றிற்கும் மேலாக, மத விசாரணை மன்றத்தை இாக்கமின்றிப் பயன்படுத்தி மதஞ் சார்ந்த கொடுமை யிழைத்தல் என்பனவாம். 1560 இல், காடினல் கிரவெலா என்பாரைத் தலைமைக் குரு என்னும் பட்டத்துடன், மலின்சு என்னுமிடத்திற்கு மகா அத்தியட்ச ாாகப் பிலிப்பு நியமித்தான். நான்கு ஆண்டுகளாகத் (1560-4) தாங்க முடியாத துன்பங்களை இயற்றி நெதலந்தை ஆண்டான். ஆனல் 1564 இல், மாகாற்றின் அறிவுரையையும் தலை சிறந்த விழுமியோரின் எதிர்ப்பையும் மதித்து கிரவெலாவை அவன் பதவியினின்றும் நீக்கினன். ஒரேஞ்சைச் சேர்ந்த உவிலிய மும், எக்குமந்து, ஒண் என்னும் பெருமக்களுமே இவ்வெதிர்க்கட்சியின்
தன்லவராவர்.
அல்வா
அக்கணநேரம் இரண்டாம் பிலிப்பு விட்டுக்கொடுத்துப் பின் பலமாகத் தாக்கி னன். பாநெறியாளரைத் தன் ஆட்சியில் வைத்திருக்க அவன் விரும்பவில்லை. அதிருத்தி நசிக்கப்படவேண்டும். எனவே அல்வாக் கோமகனின் தலைமையில் ஒரு பெரிய படை நெதலந்துக்கு அனுப்பப்பட்டது. அல்வா அரசறிஞன் அல்லன் ; ஆனல் போர்விானகப் பல யுத்த களங்களில் தனிச்சிறப்புப்பெற்றிருந் தான். இணக்கம் ஏற்படுத்தும் அவாவுடனன்றி வெற்றி பெறும் அவாவுடனேயே (1567 ஒகத்தில்) அவன் பிரசலை அடைந்தான். அவன் காலம் தாழ்த்தவில்லை. ‘குருதிக்கழகம்’ ஒன்று நிறுவப்பட்டது. ஒரு பயங்கர ஆட்சி தொடங்கி வைக்கப்பட்டது. சில மாதங்களுள் 1800 பேர் இதற்கு இசையானர்கள். எக்குமந்தும் ஒணுமே முதலிற் கைதுசெய்யப்பட்டவர்களாவர். இவர்கள் 1568, யூன் மாதத்திற் பிரசவிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர்.
ஒரேஞ்சு உவிலியம் இசுப்பானிய இறைக்குத் தன் பற்றினை இன்னும் உறுதி கூறிக்கொண்டு, வலுக்கட்டாயமாக நெதலந்தை அடிபணியச் செய்தவனும், கொடூரமும் கொடுமையும் நிறைந்தவனுமான அல்வாவுக்கெதிராகப் போருக் கெழுந்தான். யுத்த களத்தில் இவன் அல்வாவுக்கு ஈடில்லை. ஆகவே 1569 இல் நெதலந்திலிருந்து பின்வாங்கவேண்டியவனனன். 'அவன் இறந்துவிட்டா னெனக் கருதலாம்' என அல்வா பிலிப்புக்கு எழுதினன். அல்வாவின் வெற்றி, வெளியே பூரணமாகத் தோற்றியபொழுதிலும் உண்மையிற் போலியாயிற்று.

Page 70
120 ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
"இரவலர்'
தரையில் நசிக்கப்பட்ட நாட்டுக் கூட்டிணைப்பாளர், தமக்கு இகழ்ச்சியுட னளிக்கப்பட்ட "இரவலர் ' என்னும் பெயரைத் தயங்காது ஏற்றுக்கொண்டு. கடலிற்சென்று, 1572 இல் பிரில், பிளசிங்கு என்னுமிடங்களைக் கைப்பற்றினர்; சிறிதுகாலத்தின்பின், இலிசுபன் கப்பற்படையை, அது கொண்டு சென்ற அரிய பொருள்களுடன், உவால்கான் குடாவுக்கப்பாற் பலவந்தமாகக் கைப்பற்றினர். தென்னடுகளில் அல்வாவின் வலிமை உறுதியாகவேயிருந்தது. ஆனல் "இரவலர்' கடலிலே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். பிலிப்பு தானும் அந்நிலைமையைச் சமாளிக்க அரசறிவு, படைப்பலம் ஆகிய இரண்டும் தேவையென உய்த்துணரத் தொடங்கினன். 1573 இல் அல்வா அவன் பதவியினின்றும் நீக்கப்பட, தொன் உலூயி கி இரகுவசன் அப்பதவியில் அமர்த்தப்பட்டான். ஆனல் இரகுவசனே அவன் 60,000 படைஞரோ வட நாடுகளின் உணர்ச்சி வேகத்தை அடக்கமுடிய வில்லை. 1574 இல், இலைடன், ஆறுமாத முற்றுகையை விரத்துடன் நிருவகித்த பின், அணைகள் உடைக்கப்பட்டமையால் வீரத்துடன் காப்பாற்றப்பட்டது. இவ் வருஞ் செயலே, புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகம் இன்றும் நினைவூட்டுகின்றது. ஆலம் நகரின் முற்றுகை (1572 கிசெம்பர், 1573 யூலை), அத்துணை வெற்றிகர மாக முடிவெய்தாவிடினும், வீரப்புகழில் முன்னையதிற் குறைந்ததன்று. 1876 மாச்சு மாதத்தில் இரகுவசன் சடுதியாக இறக்க, அக்காலத்துப் படைத் தலைவர் களில் மிகச் சிறந்தவனும், இலபாந்தோ வெற்றி வீரனும், பிலிப்பிற்கு ஒருவழிச் சோதரனுமாகிய ஒசுத்திரிய தொன் யோன் அவன் பதவியில் அமர்த்தப்
பட்டான்.
இசுப்பானிய மூர்க்கம்
எனினும் அவன் வந்து சேருமுன், அவன் இடர்களை வலுப்படுத்த இரு நிகழ்ச்சிகள் நடந்தேறின. இசுப்பானிய காவற்படையினர்க்குக் கொடுக்க வேண்டிய வேதனம் நெடுங்காலம் கொடுபடாது நிலுவையிலிருந்தபடியால், அரசாங்க சபையின் உத்தரவுக்கமைய மறுத்து, வெளிப்படையாகக் கலகஞ் செய்து, நெதலந்திலுள்ள மிகச் செல்வம் படைத்த நகரங்களிற் சிலவற்றை அக் காவற்படையினர் பாழாக்கிக் கொள்ளையடித்தனர். மூன்று நாட்களாக அந்து வேப்பு நகரம் இசுப்பானிய மூர்க்கத்தனத்துக்குப் பலியாயிற்று. மிகவும் கத்தோலிக்கமயமான அந்நகர், கல்வின் கொள்கையைத் தழுவிய வடபகுதி யுடன் ஒத்துழைக்க இதன்பின்னர் தயங்கவில்லை.
ஒரேஞ்சு உவிலியம் எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கடைசியில் கிடைத்தது.
தெலுத்து ஐக்கியம் (ஏப்பிரில் 1576)
ஒல்லந்து, சீலந்து என்னும் மாகாணங்களின் கூட்டிணைப்பால் (1576 ஏப்பிரில்) அவன் நிலைமை பெரிதும் வலுப்பெற்றது. இந்த தெலுத்து ஐக்கியம், ஐக்கிய

ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 2.
மாகாணங்களின் உட்கருவாயது. கடல் சார்ந்த இவ்விரு மாகாணங்களும் ‘பிரிக்க முடியாத ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு, குடிப்பாலனம், படைப்பாலனம் இரண்டின்மீதும் முழுவதிகாரம் உலிவியத்திற்களித்து, 'இடைக்கால இறையாக' அவனை நியமித்தன. உவிலியமும் தன்னைப் பொறுத்த அளவில், வேறு வழிபாட்டு முறைகளுக்குப் பூரண சுதந்திரம் வாக்குறுகி பண்ணினணுயினும், சீர்திருத்தப் பட்ட மதத்தை ஆதரிப்பதாகப் பொறுப்பளித்துப் புதிய ஐக்கியத்தைச் சேரும் படி மற்றை மாகாணங்களுக்கு உருக்கமான அழைப்புவிடுத்தான்.
கெந்துத் தணிவுடன்படிக்கை (நவம்பர் 1576 )
இவன் விடுத்த வேண்டுகோளின் பயனகக் கெந்து ஐக்கியம் உருவாகியது. பதினேழு மாகாணங்களுமே அதற்கு இணங்கி, பிலிப்பினிடத்துத் தாம் பற்றுடையேமென உறுதிகூறி, தம் ஒற்றுமையைப் பிரசித்தஞ்செய்து, இசுப்பா னிய படைகள் உடனே கிரும்ப எடுத்துக்கொள்ளப்படவேண்டுமெனவும், குடித் திணைமன்றம் உடனே கூட்டப்படவேண்டுமெனவும் வேண்டின. 1577 இல், தொன் யோன் அங்கே போய்ச் சேர்ந்தவுடன் தணிவுடன்படிக்கையை ஒப்புக்கொண்டு, பிலிப்பை அவன்றன் 'நிரந்தரக் கற்பனையில் (17.2.1577) இந்நியதிகளைச் சேர்த்துக்கொள்ளும்படி தூண்டினன். செத்தெம்பர் மாதத்தில், வெற்றிப் பெருமிதத்தோடும் அரசனுக்குரிய சகல மரியாதைகளோடும் உவிலியம் பிரசல் நகரத்துட் பிரவேசித்தான்.
ஆனல் அவன் வெற்றி அதிககாலம் நிலைக்கவில்லை. தென் மாகாணங்களுக்கும் வடமாகாணங்களுக்குமிடையே உண்மையான ஒற்றுமையிருக்கவில்லை. தொன் யோன் அவர்களிடை நிலவிய பொருமையை நன்கு பயன்படுத்தினன். 1579 சனவரி மாதத்தில், தென் மாகாணங்களிற் சிலவும், நகரங்களிற் சிலவும் ஐக்கியத் திலிருந்து விலகி, அறசு ஐக்கியத்தை உருவாக்கின. அந்த ஐக்கியமே இசுப்பா னிய (பின்னர் ஒசுத்திரிய) நெதலந்தினதும் உட்கருவானமையால் பிற்பாடு பெல்சியத்தின் உட்கருவுமாயது.
உதிரத்து ஐக்கியம்
பின்னர் உவிலியம் உதிரத்து ஐக்கிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டான். இதற்கிடையில் பிலிப்பு அவனைச் சமூகத்திலிருந்து விலக்கி, அவன் தலைக்கு விலைகூறிவைத்தான். உகிரத்து ஐக்கிய உடன்படிக்கையின்படி ஐந்து (பின்னர் ஏழு) வடமாகாணங்களும், ‘அன்னிய அடக்குமுறையாளருக்கு எதிராக ஒரு கூட்டாட்சி ஐக்கியத்தைத் தமக்கென அமைத்துக்கொண்டன : அன்றியும் விரிவானதெனினும் செப்பமற்றதான யாப்பையும் வரைந்துகொண்டன." ஈராண்டுகளின் பின் ஒல்லந்தக் குடியரசு என்னும் பெயருடன் தங்கள் விடுதலை யைப் பிரசித்தஞ் செய்தன.
“இக்கால அரசின் இயங்கும்முறை"-மரியற்று, 2 ஆம் பாகம், பக்கம் 397 ஐயும் தொடர்ச்சி யையும் விவரங்களுக்கு நோக்குக.

Page 71
122 ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
இதற்கிடையில் (1578), பாமாவைச் சேர்ந்த மாகாற்றின் மகனுன அலச்சாந் தர் பாணிசைப் பதிலரையனுகப் பிலிப்பு நியமித்தான். இவனே பதிலசையருள் ஆற்றல் மிகப்படைத்தவனுவான். ஆனல் அவன் உறுதியோ, மிதமான மனப் பான்மையோ தென்மாகாணங்களே இசுப்பெயினிலிருந்து பிரியவொட்டாது தடுத்ததல்லால், வேமுென்றும் செய்ய முடியவில்லை. 1580 இல் அஞ்குவின் கோமகனும், கதரீன் தி மெடிக்கியின் மகனும், பிரான்சிய அரசனுகிய மூன்ரும் என்றியின் சகோதரனும் மரபுரிமையாளனுமாகிய பிரான்சிசு வட மாகாணங் களின் அதிபன் எனும் பதவியை ஏற்றுக்கொண்டான் ; 1581 இல் ஒரு பிரான்சிய படைக்குத் தலைமைதாங்கிக் காம்பிரே மீது படையெடுத்தான் ; 1582 இல் வெற்றி ஆடம்பரங்களுடன் அந்துவேப்பில் நுழைந்தான். ஆனல் குறித்த வெற்றி அதிக காலம் நிலைக்கவில்லை. அரசனுக்கும் கத்தோலிக்க மதத்துக்குஞ் சார்பாக ஆட்சியைப் புரட்ட முயன்முன். பிரான்சியர் "கொல்க ! கொல்க ! பொதுமக்கள் வாழ்க!” என ஆரவாரம் செய்து தாக்கியபொழுதும், குடிகள் பிரான்சிய மூர்க்கத்தனத்தை ’ எதிர்த்து நின்றனர். கோமகன் தன் பாது காப்புக்காக பிரான்சுக்கோடினன். 1584 யூன் 10 ஆம் திகதி அவன் இறந்தான். சரியாக ஒரு மாதத்தின் பின்னர் (யூலை 10) உவீலியம், தெலுத்து என்னுமிடத் திற் படுகொலை செய்யப்பட்டான். ஆனல், அவன் வாழ்க்கையின் இலட்சியம் நிறைவேறிவிட்டது. அவன் முயற்சியால் ஒரு புதிய நாட்டினவரசு சுதந்திரம் பெற்றது."
அவன் பின் அவன் மகன் மொரிசு இசுராற்முேல்டாானுன். அந்தப் புதிதான குடியரசின் கதி அதன் அயல் நாடுகளின் கதியோடு மேலும் மேலும் நெருங்கிச் சிக்கலாகிக்கொண்டிருந்தது.
நெதலந்தில் எலிசபெத்து அரசி
ஆங்கில புரட்டெசுத்தாந்தர் நெதலந்தின் கிளர்ச்சியை ஆர்வத்துடன் வர வேற்றனர். அவர்களுடைய இராணியோ அத்துணை ஆர்வங்கொள்ளவில்லை. எலிசபெத்து கல்வின் கொள்கையை வெறுத்தாள். கலகத்தைச் சூனிய வித்தை யின் தீவினையென மதித்தாள். எனினும், பிலிப்பு அவளுடைய பகைவனே. ஆதலின் அவனுக்கு நேர்ந்த இடர்களைப்பற்றி அவள் விசனப்படவில்லை. எனவே கலகம் மிக இலகுவாக அடக்கப்படாதிருக்க அவள் வேண்டியன செய்தாள். இசுப்பானிய கப்பல்களையும் இசுப்பானிய நகரங்களையும் தாக்கும்படி தன் கடல் விரர்களை ஊக்கினுள், நெதலந்தில் தொண்டர்களாகச் சேவை செய்யத் தன் குடிகளுக்கு அனுமதியளித்தாள் ; ஒரேஞ்சு உவிலியத்துக்குக் காசனுப்பினுள்இவை யாவும் மறைமுகமாய் நிகழ்ந்தவையாகும்.
“நெதலந்தின் எதிர்க்கிளர்ச்சி” எனும் நூலை எழுதிய துறை போயவரான கெயிலினல் இக்கருத்து ஆய்வுக்குரிய தொன்றகக் கொள்ளப்படுகின்றது.

ஐக்கிய நெதலந்தின் தோற்றம் 23
உவிலியத்தின் மரணம் எலிசபெத்தை ஓரளவுக்குத் தீர்க்கமான நடவடிக்கை களை எடுக்கச் செய்தது. அளிக்கப்படுவதாயிருந்த நெதலந்தின் இறைமையை அவள் மறுத்தது உண்மையே. ஆனல் பலரறியக் காசும், 1585 இல் அவர்களின் உதவிக்கு அவன் பழைய அன்பனன இலெசுற்றர் என்பானின் தலைமையில் ஒரு படையையும் அனுப்பினுள். மாகாண அதிபதி என்னும் பட்டத்தை ஏற்றுக் கொண்டமையால், இலெசுற்றர் அவளின் கடுஞ் சின்னத்திற்கு ஆளானன். ஆனல் அவன் படையெடுப்பினல் அரசியல் விளைவோ இராணுவப்பயனே ஏற்படா விடினும் சற்பன் சமராலும் சேர் பிலிப்பு சிடினியின் மரணத்தாலும் (1586) அப்போர் நினைவில் வைக்கத் தகுந்ததாயது.
1587 இல் இசுக்கொத்திலந்தின் இராணியாகிய மேரி சிரச்சேதஞ் செய்யப் பட்டாள். 1588 இல், கிரேக்கு என்பானதும் மற்றைய கடற்கொள்ளைக்காரர் களதும் தாக்குதல்களால் சீற்றம் அடைந்த பிலிப்பு இங்கிலந்தைப் பலமாகத் தாக்கத்தொடங்கினன். ஆமடாவின் தோல்வியும் குலைவும் இங்கிலந்தின் வரலாற் றில் மாத்திரமன்றி, ஐரோப்பிய வரலாற்றிலும் ஒல்லந்தக் குடியரசின் வரலாற்றி அலும் ஒரு பெரும் காலவவதியைக் குறித்தன. பாமாவைச் சேர்ந்த அலச்சாந் தரின் மரணத்திற்குமுன், தென் நெதலந்து பழையபடி பூரணமான பணிவு நிலையை அடைந்தது. பிரான்சிய புரட்சிக்காலத்திற் பிரான்சுடன் ஒன்று சேர்க்கப்படும்வரையும், முதலில் 1792 வரை இசுப்பானிய அபிசுபேக்க மரபின சதும், பின்னர் அதேமரபின் ஒசுத்திரிய கிளையினதும் ஆட்சியில் இருந்தது.
ஆமடா ஒல்லந்த குடியரசின் சுதந்திரத்தை உறுதி செய்தது. பிலிப்பு அக் கொடுந்துயர் நிகழ்ச்சியின் பின் பத்து ஆண்டுகள் உயிரோடிருந்தான். ஆனல் 1585 இல் தன் மருமகன் அல்பேட்டை (பேரரசன் இராண்டாம் மாச்சி மிலியனின் மகனை) நெதலந்தின் 'இறை ' யாக்கினன். ஆனல் அல்பேட்டின் இறைமையோ உண்மையில் தென்மாகாணங்கள் அளவில் நின்றது. அங்கும் பூரணமாக இருக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக (1601-4) இசுப்பானியர் ஒசு தெந்தை முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியவில்லை ; போர் பெயரளவில் 1609 வரையும் நீடித்தபோதிலும் 1598 இல் பிலிப்பு மாணமாக, வடமாகாணங்களின்
அச்சம் முழுதும் நீங்கிற்று.
1609 இல் இசுப்பெயினுக்கும் ஒல்லந்துக்குமிடையிற் பன்னிராண்டுப் படைத் தகைவு நிறைவேற்றப்பட்டது. இத்தகைவு செயலளவில் ஒல்லந்துக்குடியரசின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. இது 1648 இல் உவெசுபேலியாப் பொருத்தனை யால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. -
இடச்சு வெற்றிக்குக் காரணங்கள்
'கலகக்காரர் தாம் பெற்ற வெற்றிக்கு எவ்வாற்ருனுந் தகுதியுடையவரே. அவர்களுக்கு ஆதரவாகப் பல காரணிகள் இருந்தன. பிலிப்பு ஓர் இரக்கமற்ற

Page 72
124 ஐக்கிய நெதலந்தின் தோற்றம்
பகைவனுயினும், போராட்டம் நிகழ்ந்த இடத்திற்கு வெகுதொலைவில் இருந்தான். ஆங்கிலக் கடல்வீரராற் போக்குவரத்துப் பாதை அபாயம் மிக்கதா யிற்று. ஆங்கிலக் கப்பற்படையினர் தனிப்பட்ட முறையிலே இடச்சுக்காார்க்கு உதவியது ஒருபுறமிருக்க, அவர்களின் தலைவி, பிலிப்பினல் ஒல்லந்தர் நசிக்கப் படுவதைத் தடுக்கத் தேவையானல் உண்மையான தியாகஞ் செய்திருப்பாள். பிரான்சைப் பொறுத்தவளவிலும் ஒல்லந்தரே அதிட்டமுடையோராயிருந்தனர். இரு பெரிய கத்தோலிக்க வல்லரசுகளுக்கிடையில் இதய பூர்வமான கூட்டுறவு இருந்திருக்குமாயின் ஒல்லந்தரை எவராலும் காப்பாற்றியிருக்க முடியாது; ஆணுல் பிரான்சோ, இயூசனர் பிரச்சினையைத்தவிர, வேறுபல அரசியற் பிரச் சினைகளிலுஞ் சிக்குண்டு கிடந்தது.
எனவே, பிலிப்பை எதிர்த்துவந்த இடர்கள் யாவற்றையும் நீக்க அது ஆவல் கொண்டிருக்கவில்லை. எனினும், உறுதியான, அடக்கற்கரிய உள்ளத்துரனும், தரையில் நிகழ்ந்த போரைக் கடற்போராக மாற்றிய மதி நுட்பமும், சிறந்த வோர் அரசறிஞனின் சீரிய தலைமையும் ஒல்லந்தர்க்கு இல்லாவிட்டால், அரசியற் சிக்கல்கள் மாத்திரம் அவர்க்குப் பயனிலவாய் இருந்திருக்கும்.

அத்தியாயம் 10
பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
மதப்போர்கள்; நான்காம் என்றியும் நன்சுக் கற்பனையும்
முக்கியமான திகதிகள்
1535
1536
fö会が
二f55 f
1559
f559
1560
1560
1561
156፲
1562
1562
பாரிசு வெறியாட்ட விழா.
கல்வினின் 'நிறுவனம்' எனும் நூல். உவோதோய் வதம். இரண்டாம் என்றி சாற்ருேபிறீயான் கற்பனையை வெளியிடுதல்.
பாரிசிற் புரட்டெசுத்தாந்த திருக்கூட்டம். கைசுக் குலமுறையினர் அதிகாரம் பெறல். அம்புவாசு சதி. ஒலியன்சுக் குடித்திணைமன்றம். யூலேக் கற்பனை.
புவாசி மாநாடு.
பொறுமைக் கற்பனை (சனவரி). வசி வதம்.
1562-93 உண்ணுட்டுப் போர்கள்.
互563
1563
1520
- 523
1573
1526
፲5?‛6
i 585-9
互589
Z589
1589
1590
fó93
1594
1 597
1598
I6 fり
1610
கைசுக் கோமகனின் படுகொலை.
அம்புவாசு அமைதிப் பொருத்தனே (மாச்சு).
சென் சேர்மேன் பொருத்தன.
சென் பத்தோலமியூ வதம்.
உரோசற் கற்பனை.
மொன்சீயர் அமைதி,
கத்தோலிக்க சங்கம்.
மூன்று என்றிகளின் போர்.
மூன்ரும் என்றியின் படுகொலையுடன் வலோய்க் குலமுறை முடி
வெய்தியது.
நான்காம் என்றி அரசெய்தல் (பூபன்).
ஆகசுச் சண்டை.
இவிர்ச் சண்டை.
நான்காம் என்றி கத்தோலிக்க மதத்தைத் தழுவல்.
நான்காம் என்றி பாரிசில் நுழைதல்,
சவி, நிதி அமைச்சனுதல்.
நன்சுக் கற்பனை.
மாபெரும் திட்டம்.
நான்காம் என்றி படுகொலை செய்யப்படல்.

Page 73
26 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
இந்நூல் தழுவும் நோக்குமுறைப்படி, சேர்மனி, இங்கிலந்து, சுவிற்சலந்து, இசுக்கொத்துலந்து, நெதலந்து என்பவற்றிலும், காந்தினேவியாவிலுந் தோன்றிய மதச் சீர்திருத்தவியக்கங்களொடு ஒப்பு நோக்கின், பிரான்சில் நிகழ்ந்த மதச் சீர்திருத்த இயக்கம் அதிக முக்கியம் படைத்ததல்லவெனலாம். மேலும், 'மதப் போர்கள்' என அழைக்கப்படுபவற்றின் கதை சிக்கலானதும் சோர்வுறச் செய்வதுமாகும். அவை கூடிய அளவு சுருக்கமாகக் கூறப்படும்.
எனினும், இவ்விடயத்தை முற்முக அலட்சியம் செய்துவிட முடியாது. ஏலவே விளக்கிய காரணங்களால் ஐரோப்பிய வரலாற்றிற் பிரான்சு மிக முக்கியமான பங்கெடுத்திருக்கின்றது. அதன் உண்ணுட்டு ஐக்கியத்தையோ வெளிநாட்டுச் செல்வாக்கையோ பாதிக்கும் எக்கருமத்தையும் சிறு பயனுடையதெனத் தள்ளி விட முடியாது.
பிரான்சிய புரட்டெசுத்தாந்தம்
உரோமன் கத்தோலிக்க மதத்தின் அடிப்படையைத் தகர்க்க நாடிநின்ற பொதுக் காரணங்களில் ஒன்று பிரான்சில் இருக்கவில்லையென்பது வெளிப் படை மற்முென்று அதிகம் வலிமைபடைத்ததாய் இருந்தது. பிரான்சிய புரட்டெசுத்தாந்தத்தில் நாட்டின உணர்ச்சி பற்றிய எவ்வித அமிசமும் இருக்க வில்லை. அதற்கு எதிர்மாமுக, அது முற்றிலும் மாகாண அடிப்படையில் இருந்து நாட்டின ஐக்கியத்திற்குப் பங்கம் விளேக்கும்போலத் தோன்றியது. ஆனல், அது பிரதானமாக அறிவுத்துறைசார்ந்த எழுச்சியாக இருந்தது. பிரான்சிற் குறிப் பாக மறுமலர்ச்சிக்கும் மதச் சீர்திருத்தத்திற்குமுள்ள தொடர்பு மிக நெருங்கிய தாயிருந்தது. இராசுமசு எழுதிய மடமையின் மதிப்பு', செபத்தியான் பிராண் டின் ‘மடையர் கூட்டம்' என்ற இத்தகைய நூல்கள், பிரான்சிய மொழிபெயர்ப் புக்கள் மூலம் பலராலும் வாசிக்கப்பட்டன. யேக்கசு இலவேவர் என்பானுல் 1523 இல் பிரசுரிக்கப்பட்ட (புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு, சமயநூல் படிப்பதற்குத் தூண்டுதலாகவிருந்தது. பதினைந்தாம் நூற்றண்டின் 'இணக்க இயக்கத்தின் முன்னணியிற் பரிசுப் பல்கலைக்கழகம் இருந்தது; ஒழுக்கம் கட்டுப்பாடு என்பவற்றிற் சீர்திருத்தம் வேண்டுமென ஓயாது அவாவியது. ஆனல், முதலாம் பிரான்சிசு பாநெறியாளர் யாவர் மீதும் மரண தண்டனை விதிப்பதென்னும் தன் கருத்தை அறிவித்து, (29.1.1535 இல்) இழிவான பாரிசு வெறியாட்ட விழாவை ஆரம்பித்து வைக்கும் வரையும் பிரான்சிய புரட்டெசுத் தாந்தத்திற் புரட்சிகரமான அமிசம் யாதும் இருக்கவில்லை. இதற்கெதிராக, கத்தோலிக்கத் தொடர்ச்சிக்குப் பங்கம் விளைக்காமலும் உரோமின் ஆன்மீக முதன்மைக்கெதிராகக் கிளர்ச்சி செய்யாமலும் பிரான்சிய திருச்சபை தன்னைத் தானே சீர்திருத்தும் நடவடிக்கைகளெடுக்குமெனப் பெரும்பாலும் தோன்றியது.
*ஆரும் அத்தியாயத்தில் உள்ள சில பந்திகளை நோக்குக.

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 12
உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நிலைமையின் சுழிவு நெளிவுகளுக்கேற்ப ஒருகால் ஒரு திசையிலும் மற்ருெருகால் வேருெரு திசையிலுமாக மாறிக்கொண் டிருந்ததும் முற்றிலும் அரசியற் பயனையே குறிப்பாகக்கொண்டதுமான முடியின் மனுேபாவத்தாலும், சில புரட்டெசுத்தாந்த வெறியரின் பலாற்காாத் தாலும், அந்தப் பலாற்காசம் தூண்டிவிட்ட சமயத் துன்புறுத்தல்களாலும் அந் நம்பிக்கை தவிடுபொடியாயது.
பாரிசு வெறியாட்ட விழாவிற் செய்யப்பட்ட பயங்கரச் செயல்களைக் கண் கூடாகக் கண்டவர்களில் யோன் கல்வின் ஒருவணுவான். முன் குறிப்பிட்டபடி இவன் பிரான்சிலிருந்து ஒழித்தோடி, 1536 இல் 'நிறுவனம்' என்னும் நூலைப் பிரசுரித்தான். அச்சிறந்த நூல், பிரான்சிய புரட்டெசுத்தாந்தர்களுக்கு ஒருங்கே சமயத் தத்துவமும் திருச்சபை ஆட்சியின் திட்டமுமாயது. பிரான்சின் எல்லாப் பகுதியிலுமுள்ள இயூசனர் திருக்கூட்டத்தின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு பொது மன்றம் பரிசிற் கூடியது. அங்கே கல்வினின் கொள்கை முறைமை முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்திருக்கூட்டத்திலிருந்தே பிரான்சிய புரட்டெசுத்தாந்த திருச்சபை கட்டுக்கோப்பான அமைப்புப் பெற்றமைக்குக் காலங் குறிப்பிடவேண்டும். பாரிசில் வரையப்பட்ட சமயத் தத்துவ அறிக்கை, நிறுவனம் என்னும் நூலின் சுருக்கமாகும். வேதாகமமே வாழ்க்கை நெறியின் முதன்மையான சட்டமாகவும், உண்மைக்கு உரைகல்லாகவுங் கொள்ளப்பட வேண்டுமென்பது அதன் அடிப்படையான கூற்முகும். ஒவ்வோர் ஊருக்குமுரிய திருச்சபையின் நிருவாகம் ஆட்சி செய்யும் மூப்பர் குழுவிடம் கொடுக்கப் பட்டிருந்தது. இக்குழு மத குருக்களை நியமித்து, திருச்சபையின் சமயக் கடமைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியதாயிற்று. எனினும், எல்லா நியமனங்களையும் தடைசெய்யும் உரிமை சமயத்திருக்கூட்டத்திற்கென ஒதுக்கி வைக்கப்பட்டது. மதகுருவையும் அந்த மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு திருச் சபையிலிருந்தும் ஒவ்வொரு மூப்பரையும் கொண்ட தல மாநாடுகள் கூடுதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. பதினறு மாகாணங்களொவ்வொன்றிலும் காலத்துக் குக் காலம் மாகாணத் திருக்கூட்டம் கூடவேண்டியிருந்தது. ஆண்டுக்கொரு முறை ஒவ்வொரு மாகாணத் திருக்கூட்டத்தினதும் பிரதிநிதிகளாக இரு மத குருக்களும் இரு மூப்பர்களும் அடங்கிய ஒரு நாட்டினத் திருக்கூட்டம் கூட வேண்டியிருந்தது. கல்வின் விதித்த தத்துவங்களை மிக நெருங்கிப் பின்பற்றிய இத்திட்டம் முற்ருய்க் குடியாட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குருவாயத்தினர் பொதுமக்கள் ஆகியோரின் சமத்துவத்தையும் பொதுமக்களின் இச்சையிலிருந்தே சகல அதிகாரங்களும் பெறப்படுமாற்றையும், சருவசன வாக்குரிமையை அடிப்படையாகக்கொண்ட பிரதிநிதித்துவத்தால் அவ்விச்சை உருவம் பெறும் என்பதையும், அத்திட்டம் வற்புறுத்தியது.
இதற்கிடையிற் பாரிசு வெறியாட்டு விழாவின் பயங்கரச் செய்கைகள் இன்னும்
விரிவான முறையில் புரோவான்சிலுள்ள (1540-5) உவோதோயிற் புரட்டெசுத் தாந்த மக்களிடையில் மீண்டும் இழைக்கப்பட்டன. 1551 இல் சாற்முேபிறீயான்

Page 74
128 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
கற்பனைப்படி, பாநெறியாளர் எல்லோரும் கொல்லப்படவேண்டுமென்றும், பாட சாலைகள், மருத்துவ சாலைகள், இடுகாடுகள் தாமும் வைதீகத் தராதரப் பத்திரம் கொண்டு வருபவர்களுக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்கப்படவேண்டுமென வும் கட்டளை பிறந்தது. பாநெறிக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்றப் பாராளுமன்றங்கள் தொடர்பில், 'பத்திமன்றங்கள்' என்னும் சிறப்புக் குழுக்கள் நிறுவப்பட்டன. 1557 இல் நான்காம் போலின் கட்டளைப்படி மதவிசாரணை மன் மம் பிரான்சிலும் நிறுவப்பட்டது.
ஆட்சியிற் கைசர்
1559 இல் இரண்டாம் என்றி ஒரு பந்தய விளையாட்டில் தற்செயலாகக் கொல்லப்பட்டான். அவனுடைய மூன்று ஆண் மக்களும் ஒருவர் பின் ஒருவ ராகப் பிரான்சின் அரசராயினர். அவரே இரண்டாம் பிரான்சிசு (1559-60), ஒன்பதாம் சாள்சு (1560-74), மூன்ரும் என்றி (1574-89) என்போர். மூன்ரும் என்றியின் (1589) மரணத்துடன் வலோய்க் குலமுறை இழிவான முடிவை எய்தியது. இதற்கிடையில் முப்பது ஆண்டு உண்ணுட்டுப் போராலும் இராணி மாதாவிற்கும் (கதரின் தி மெடிக்கி) வலிமை படைத்த கைசுக் குடும்பத் தினருக்குமிடையில் அரசியல் மேலாண்மை ஈட்டவோ, அதைத் தம்மிடம் வைத் திருக்கவோ நடந்த ஓயாத போராட்டத்தாலும் பிரான்சு குழப்பமடைந்தது.
அம்புவாசுச் சதி 1560
ஓரளவிற்கேனும் அரச வமிசத்தைச் சேர்ந்த, எல்லைப்புறக் குடும்பங்களிற் கைசுக்குடும்பமும் ஒன்முகும். அக்குடும்பத்தினர் உலொரேன் கோமக்களாகப் பல நூற்றண்டுகளாக ஆட்சி செய்து வந்தார்கள். பின்னர், வீயன்னுப் பொருத் தனைப்படி (1735) அவர்கள் உலொாேனைக் கொடுத்துத் தசுக்கனியைப் பெற்ற னர். உலொரேன் பிரான்சிய இராச்சியத்தின் ஒரு பாகமாகியது. பிரான்சிய கை சுக் கோமகவுரிமை இக்குடும்பத்தின் இளைய கிளையின் ஆட்சியில் இருந்தது. இவ் வரலாறு, குறிப்பாக மெற்சு நகரை மிகத் திறம்படக் காவல் செய்தவனும் கலேயைக் கைப்பற்றியவனுமாகிய கைசுக் கோமகன் பிரான்சிசைப் பற்றியும் அவன் சகோதரன் உலொரேன் காடினல் சாள்சைப் பற்றியுமேயாகும். இரண் டாம் பிரான்சிசுக்கும் அவர்கள் மருமகள் மேரி சுதுவாட்டுக்குமிடையே நடந்த திருமணங்காரணமாக ஐரோப்பாவில் அவர்களின் நிலைமை பெரிதும் வலுவடைந் தது. ஆனல், அவர்கள் நாட்டிலேயே அவர்களுக்குப் பகைவர்களும் போட்டி யாளர்களும் இருந்தனர். இவர்களில் மிக முக்கியமானவர்கள் பூபன்குல இளவரசனை நவார் அரசன் அந்தோனியும், அவன் சகோதரனுகிய கொந்தே யின் இளவரசனுமாவர். 1560 இல், அரசனையும் கைசுக் குலத்தினர் இருவரையும், முன்னையவனைப் பின்னையவரின் பிடியிலிருந்து விடுவிக்குமுகமாக, கைது செய்தற்கான திட்டத்திற்குத் தனது நற்பெயரைப் பயன்படுத்தக் கொந்தே இள வாசன் சம்மதித்தான். அம்புவாசுச் சதி என அழைக்கப்படும் இச்சதி மோச

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 29
மாகத் தவறி, கைசுக் குலமுறையினருக்கு இயூசனர் மீது படு பழிவாங்க வாய்ப்பு அளித்தது. இரண்டாம் பிரான்சிசின் சடுதி மரணம் (1560) கைசுக் குலமுறையினரின் திட்டத்தைத் தற்காலிகமாகக் குலைத்துவிட்டது. தனது இளேய மகன் ஒன்பதாம் சாள்சின் பதிலாளியாய கதரின் தி மெடிக்கி தன் புதிய மண்டில நாயகனை மைக்கல் தி இலே ஒபித்தல் என்பானின் அறிவுரையின்படி குடித்திணைமன்றத்தைக் கூட்ட (1560) ஒப்புக்கொண்டான். இக்குழு ஒலியன் சிற் கூடி பொறுதிப் பூட்கையை மேற்கொள்ளும்படி ஏவியது. 1561 இல் கல்வின் கொள்கையினர் பகிரங்கமாக வழிபாடு செய்வதைத் தடுத்தபோதும், தனிப் பட்ட வழிபாட்டிற்கு ஓரளவு சுதந்திரம் அளித்தது. 1561 செத்தெம்பர் மாதத் திற் புவாசி என்னுமிடத்தில் ஒரு மகாசபை கூடி ஓர் இணக்கத்தை அடைய முயற்சி செய்தது. 1562 சனவரியில் நிறைவேற்றிய ஒரு கற்பனை, நகரங்கள் தவிர்ந்த வேறிடங்களிற் பகிரங்கமாக வழிபாடு செய்யும் சுதந்திரத்தை இயூ சனர்க்கு அளித்தது. ஆனல், இந்தச் சலுகைகள் கத்தோலிக்கருக்குச் சின மூட்டவும், கூடிய தீவிரவாதிகளான புரட்டெசுத்தாந்தரைக் கத்தோலிக்கருக்கு இன்னல் விளேக்கத் தூண்டவுமே பயன்பட்டன.
சமயப்போர்கள் (1562-93)
1562 மாச்சு மாதத்தில் வசி என்னுமிடத்தில் ஒரு புரட்டெசுத்தாந்தத்திருக் கூட்டத்தின் வதம், உள்நாட்டுப் போர்கள் தொடங்குவதற்கு உடனடியான பீடி கையாயிற்று. இடையீடுகளுடன் இப்போர்கள் 1593 வரையும் நீடித்தன. வான் முறைக்குறிப்பு எழுதுவோர் எட்டுப் போர்களையும் எட்டுப் பொருத்தனைகளையும் சாதாரணமாக வேறு பிரித்துக் காட்டியிருக்கின்றனர். ஆனல், அவற்றை முழு விபரமாகக் கூறுவது சலிப்பைத் தரும். நாலு போர்களைக் கொண்ட முதலாம் போர் சென் பத்தோலமியூ வதத்துடன் உச்ச நிலையை அடைந்து, உரோசல் பொருத்தனையுடன் முடிவெய்தியது. இக்காலப் பகுதியில் இயூசனர் கட்சியில் தலை சிறந்தவன், புரட்டெசுத்தாந்த மதத்தில் நம்பிக்கையுடையவனும் கீர்த்தி பெற்ற போர்வீரனுமான கடற்றளபதி கசுபாட்டு தி கோலினியி ஆவான். 1572 இல் அவன் படுகொலை செய்யப்பட்டமை அவ்வதத்திற்குக் காரணமாகாவிட் டாலும் அக்கால்நிகழ்ந்த துயரக் கதைகளிலொன்முகும்.
சென் பத்தோலமியூ நாளில் வதம்
அவ்வதம் எந்த அளவுக்கு வேண்டுமென்று திட்டமிடப்பட்டதென்பது பற்றி யும், எவ்வளவிற்கு முன்பே ஆழ்ந்தாராய்ந்து செய்யப்பட்டதென்பது பற்றியும், பலியானேர் தொகை பற்றியும் வரலாற்றரிசிரியர்கள் இன்னும் மும்முரமாய் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். தலைவர்களினதும், குறிப்பாகக் கோலினியி யினதும் வதம் திட்டமிடப்பட்டதெனினும், அப்போது வதத்திற்கு பாரிசியக் கும்பல் கட்டுக்கடங்காமையே உண்மைக்காரணமென இக்கால விமரிசகர் கருது
கின்றனர். இப்படி அக்காலை அக்கும்பல் அடங்காது போனமை முதன் முறையு

Page 75
30 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
மன்று கடைசிமுறையுமன்று. வதம் செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 70,000 எனச் சலி மதிப்பிட்டுள்ளர். அகுத்தன் பிரபுவோ* பாரிசிற் கொலையுண்ட 2,000 மக்கள் உட்பட பிரான்சு முழுவதிலும் மாண்டோர் தொகை 5,000 என்னும் கருத்துடையர். இந்நிகழ்ச்சிகளைக் கொண்டாடி, "தி தியம்” பாடி, பதக்கமும் அடித்துவெளியிட்ட உரோமில் மாண்டோர் தொகை பாரிசில் மாத்திரம் 60,000 எனக் கூறப்பட்டது. இங்கிலந்துக்கு வந்த அகதிகளின் அறிக்கைப்படி மாண் டோர் தொகை 100,000 மாகும். நிச்சயமாகக் கூறக்கூடியது யாதெனில் நவா ரைச் சேர்ந்த என்றிக்கும் அரசனின் சகோதரியான வலோயைச் சேர்ந்த மாக ாற்றுக்கும் நடந்த திருமணத்திற்கெனத் தலைநகருக்குத் திரண்ட இயூசனர் பாரி சிற் கூடியிருந்தனர் என்பதேயாகும். எனவே, கத்தோலிக்கர் தங்கள் கைகளி
லகப்பட்ட யாவரையும் கொன்றனர்.
அரசியல் வாதிகள்
அது மிகவும் வெறுக்கத்தக்க செய்கையாகும். அது ஊழி காலங்களாக எதி ரொலித்துக் கொண்டிருந்தது. ஆனல், அதன் விளைவுகள் பொருண்மையற்றவை. மற்ற நாடுகளில் வசித்த புரட்டெசுத்தாந்தருள் அது கடுங்கோபத்தை எழுப் பியது இயல்பே. ஆனல், எந்தப் புரட்டெசுத்தாந்த ஆட்சியாளனுவது இயூசன ருக்குப் பயன்படக்கூடிய உதவி செய்யக்கூடிய நிலையிலிருக்கவில்லை; அவர்களில் அதிகமானேர் தத்தம் பிரச்சினைகளிலேயே சிக்குண்டிருந்தனர். பிரான்சிய இயூ சனர் அடிபணிந்து அடங்கிவிடவில்லை. இலாஉரோசல் உண்மையாகவே ஓர் அகதி கள் நகரமாயது. அதைக் கைப்பற்ற முயற்சிகள் செய்யப்பட்டபோதும், அஆ விட்டுக் கொடுக்கவில்லை. சென் பத்தோலமியூ வதத்தின் மிகப் பிரதானமான விளைவு, பிரான்சில் உரோமர், செனிவியர், உலூதர்க் கொள்கையினர் அல்லாத, பிரான்சியரைக் கொண்ட நடுநெறிக்கட்சியொன்று பலமடைந்தமையே. கத்தோ விக்க சங்கத்தின் அடிப்படையானதும், வலிமை படைத்த மானியப் பிரபுக்களுக் கும் பாரிசு நகரசபை சார்ந்த குடியாட்சிக்குமிடையே நிலவியதுமான நட்புற வையும், சுயநலவாதிகளான கைசு மரபினரையும், சில புரட்டெசுத்தாந்த வெறி யரின் பலாற்காரத்தையும் இக்கட்சியினர் வெறுத்தனர். பிரான்சின் ஐக்கியத்தை யும் அமைதியையும் விருத்திசெய்ய மாத்திரம் அவர்கள் பெரிதும் அவாவினர். நிலைமையைப் பரிசீலனை செய்தபொழுது இவ்விலட்சியங்களை முடியின் மூலமே எய்தலாமென்பது தெளிவாயது. ஆகவே, மலைக்கப்பாலுள்ள திருச்சபையினதும் மானிய உயர்குடியாட்சியினதும் சிதைக்கும் சத்திகளுக்கு எதிராக அரசியல் வாதிகள் முடியாட்சியை ஆர்வத்துடன் ஆதரித்தார்கள். இந்த நடுநெறிக் கட்சி யினரின் தலைவனும் தலைசிறந்த பிரதிநிதியும் மண்டிலநாயகனை இலேஓபித்தல் ஆவன. Κ.
* “இக்கால வரலாறுபற்றிச் சொற்பொழிவுகள்”, பக்கம் 162.

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 3.
அரசியற் கொள்கை
சமயத்துன்புறுத்தல் காரணமாக ஏற்பட்ட முக்கியமான விளைவுகளுள் ஒன்று யாதெனின், அறிவு ஆராய்ச்சியுள்ள மக்களின் மனத்தில் அரசியல் அதிகாரத் தின் முடிவான அடிப்படையைப் பற்றிய பிரச்சினைகளை எழுப்பியதேயாகும். 'தன் குடிகளின் சமயத்தைக் கட்டுப்படுத்த, ஆட்சி செய்வோனுக்கு என்ன உரி மையுண்டு?’ என்னும் வினவிலிருந்து, ‘என்ன உரிமையைக் கொண்டு ஆட்சியா ளர் ஆட்சி செய்கின்றனர்' என்ற வினவிற்குச் செல்லுதல் ஓர் இலகுவான படி Այո (35ւհ. புரட்சிகாட்டும் பல நூல்களில், இலாங்குவே என்பானின் ‘கொடுங் கோலனுக்கெதிராக உரிமை மெய்ப்பித்தல் ' எனும் நூல் ஒன்ருகும்.
முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம். உண்ணுட்டுப் போர்களின் முதலாம் பகுதி உரோசல் பொருத்தனையுடன் (1573) முடிவெய்தியது. இப் பொருத்தனை மனச்சாட்சிச் சுதந்திரத்தை யாவருக்கும் அளித்தபோதும், புரட் டெசுத்தாந்தருக்கு இலாஉரோசல், நீம், மொண்டோடான் நகர்களிலும் குறித்த சில புரட்டெசுத்தாந்த விழுமியோர் விடுகளிலுமே பகிரங்கமாக வழிபாடு செய்ய உத்தரவளிக்கப்பட்டது. மொன்சியர் பொருத்தனையால் இச்சலுகைகள் மேலும் விசாலிக்கப்பட்டன. இப்பொருத்தனை அடுத்த போரை 1576 இல் முடி வுக்குக் கொண்டுவந்தது. இந்தப் பொருத்தனையின் நியதிகள் நன்சுக் கற்பனை யின் நியதிகளை எதிர்வறிந்தன. பரிசைத் தவிர வேறெங்கும் பகிரங்கமாக வழி பாடு செய்ய இயூசனருக்கு உத்தரவளிக்கப்படவிருந்தது. "புகலிட நகரங்கள்' எட்டிற் காவற்படை வைக்கும் உரிமை அவர்க்கு அளிக்கப்படுவதாயிருந்தது ; நீதிமன்றங்களிற் கத்தோலிக்கரோடு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட விருந்தது. 1576 கிசெம்பரில் பிளவாவில் கூடியதும், எதிர்பாராதவண்ணம் இயூ சனருக்கு விரோதமாக இருந்ததுமான, குடித்திணைமன்றத்தின் கோரிக்கை யின்படி இச்சலுகைகளிற் சில பின்னர் நீக்கப்பட்டன.
வேருெரு பிரச்சினை இப்போது எதிர்நோக்கி வந்தது. ஒன்பதாம் சாள்சு, அவன் தமையனைப் போலச் சந்ததியற்று 1574 இல் இறக்க, அவன்பின் பிரான் சிய அரசருள் மிகவும் இகழப்படவேண்டியவருள் ஒருவனன மூன்ரும் என்றி அரியணை ஏறினன். அவனும் ஆண்சந்ததியற்று இறந்தானுகில், நவாரைச் சேர்ந்த என்றி முடிசூடுவதற்குத் தடையாக, சந்ததியற்ற அஞ்குக் கோமகன் மாத்திரமேயிருந்தான். 1584 இல் அஞ்குவும் இறந்தான். கத்தோலிக்கர் கட்சி பெரிதும் துணுக்குற்றது. அண்மையில் கைசுக் குலமுறையின் இரண்டாஞ் சந்த தியினரால் திருத்தியமைக்கப்பட்ட கத்தோலிக்க சங்கம், நவாரைச் சேர்ந்த என்றியின் மாமனுகிய பூபனின் காடினலை உரித்தாளியெனப் பிரசித்தஞ் செய் தது. 1585 இல் இரண்டாம் பிலிப்பு இச்சங்கத்திற் சேர்ந்தான். போப்பாண்டவர், நவாரைச் சேர்ந்த என்றிக்கும், அவன் மைத்துனனுன கொந்தேயின் சிற்றரசன்

Page 76
32 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
என்றிக்கும் எதிராக ஓர் உத்தரவைப் பிரசித்தஞ் செய்தார். மூன்ரும் என்றி, நவாரைச் சேர்ந்த என்றி, கைசுக் கோமகன் என்றி எனும் மூன்று என்றிகளின் போர் ஆரம்பித்து, 1589 இல் மூன்ரும் என்றி படுகொலை செய்யப்பட்டதோடு முடிவுற்றது. 1588 இல் அவன் கட்டளைப்படி நம்பிக்கைத் துரோகமாகக் கைசுக் குலமுறையினனன என்றியைப் படுகொலை செய்ததிற்காக மூன்ரும் என்றிக்குக் கிடைத்த தீவினைப்பயனே இதுவன்றிப் பிறிதொன்றில்லை. இவ்வண்ணம் வலோய் மரபு குருதி சிந்தலோடும் இகழ்ச்சியோடும் முடிவெய்தியது.
நான்காம் என்றி
முடிசூடிய சிறந்த அரசறிஞருள் நான்காம் என்றியும் ஒருவனவான். உள் நாட்டுப் போர்களில் அவன் எடுத்த பங்கு உண்மையாகவே வீரத்தன்மை வாய்ந்ததன்று. குழப்பம்மிக்க அக்காலத்தில், பலமான, மலைக்கவைக்கின்ற பல அரசியற் சுழிப்புக்களுக்கிடையே வீரத்தன்மையே மிகப் பொருத்தமான, அல்லது பயன்படக்கூடிய பண்பாகுமென்று சொல்லமுடியாது. நவாரைச் சேர்ந்த என்றி (ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களில்) தன் அறிவை இழக்க வில்லை. அந்தச் குழ்நிலையில் அதுவே பெருஞ் சாதனையாகும். ஒரு திவ்விய பூசை யுடன் பாரிசை வாங்கக்கூடிய மனிதன் பலமான சமய நம்பிக்கையுள்ளவனல்லன் என வாகிக்கப்பட்டுள்ளது. சமயமென்பது திருச்சபைக்குரிய முறையைத் தழுவி நிற்பதெனில், அவ்வாதம் உண்மையானதே. நான்காம் என்றி எலிச பெத்து இராணியைப் போல் ஓர் அரசியல் வாதியே. இரண்டாம் பிலிப்பைப் போன்ற ஒருவன் பாநெறியாளரை ஆட்சிசெய்வதிலும் தன் முடியைத் துறத் தலை விரும்பலாம். ஆனல், எலிசபெத்து இராணியோ நான்காம் என்றியோ அப் படிப் பட்டவர்களல்லர். அவர்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து வேண்டுவது நல்ல குடிமையே. கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் முடியில் பற்றுடை யாாயிருந்து நாட்டின் பாதுகாப்புக்கு இடர் விளையாமலிருக்கும் வரையும் அவர் கள் அமைதியாக வாழலாம். கலகம் இரக்கமின்றி நசிக்கப்படவேண்டும்.
1589 இல் நான்காம் என்றி அரசு கட்டிலேறினன். ஆனல் அவன் தலைநகரை அடக்கியாளுமுன் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் சென்றன. கைசு மரபினனை என்றியின் படுகொலைக்கும் (1588) அதே ஆண்டில் கைசுக் காடினலான இரண்டாம் உலூயியின் மரணத்திற்கும் பின்னர், அக்கட்சியின் தலைமையுரிமை அவர்கள் சகோதரனன மாயன் கோமகன் சாள்சை வந்து சேர்ந்தது. இவன் 1589 செத்தெம்பர் மாதத்தில் தியெப்பே நகருக்கண்மையிலுள்ள ஆற்சு என்னு மிடத்தில் அரசனுடைய பாசறையைத் தாக்கினன்; ஆனல் வெற்றிபெறவில்லை. ஏறத்தாழ இரு வாரங்களாகச் சண்டை செய்தபின் சங்கத்தினர் துரத்தப்பட்ட னர். எலிசபெத்து உதவிக்கனுப்பிய 5,000 ஆங்கிலேயராற் படைவலு பெருக்கப் பட்டு, பாரிசைத் தாக்க அரசன் அணிவகுத்துச் சென்றன். ஆனல், பாரிசு அவனை எதிர்க்க ஆயத்தமாயிருந்தது. ஆகவே அவன் வேறு பக்கம் திரும்பி துரோ என்னுமிடத்தை முற்றுகை செய்து, அதை விடுவிக்க (1590, மாச்சு)

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 133
வந்த மாயன் என்பான இவிர் என்னுமிடத்தில் நனி தோற்கடித்தான். திரும்ப வும் என்றி பாரிசைத் தாக்கச் சென்முன். ஆனல், என்றியின் வெற்றியால் அச் சங் கொண்ட இரண்டாம் பிலிப்பு பாரிசு முற்றுகையை விடுவிக்கப் பிலாண்டேசி விருந்து பாமாவைச் சேர்ந்த அலச்சாந்தர் தலைமையில் ஒரு படையை அனுப் பினுன். என்றியின் வெற்றி பறிபோயது. 8,000 இசுப்பானியர் பிரான்சிய தலை
நகருள் கிரண்டனர். பாரிசு காப்பாற்றப்பட்டது.
பாரிசைக் கைப்பற்றத் தவறியதும் என்றி உருவானைக் கைப்பற்ற எண்ணி னன். பாரிசில் நிகழ்ந்தது இங்கேயும் நிகழ்ந்தது. என்றி வெற்றியடையும் தறுவாயிற் பாமாவினல் மீண்டும் தடுக்கப்பட்டான். ஆனல், இதுவே கடைசி முறையாகும். 1592, கிசெம்பர் 2 ஆம் திகதி உருவானுக்கு வெளியே பட்ட காய மொன்ருல் பாமா இறந்தான்.
பிரான்சில் நிலை பயங்கரமானதாயிருந்தது. பிரான்சிய முடியைப் பற்றச் குழ்ச்சி செய்யும் இரண்டாம் பிலிப்பின் உதவியுடன் மாத்திரமே பாரிசைச் சங்கத்தினர் காப்பாற்ற முடியும். அரசனின் படைஞர்கள் பெரும்பாலும் இங்கி லந்து, ஒல்லந்து, சேர்மனி என்னுமிடங்களிலிருந்தே திரட்டப்பட்டனர். அந்த அவப்பேறடைந்த நாட்டை என்னதான் காப்பாற்ற முடியும் ? பிரான்சு முற்ருக ஒரு கத்தோலிக்க நாடு. ஒரு புரட்டெசுத்தாந்தன், எண்ணிக்கை குறைந்த சிறுபான்மைப் பிரான்சியரது அரசனுக மாத்திரமே இருக்க முடியும். எவ்வாற் முனும் பிரான்சை இந்த அவல நிலையிலிருந்து மீட்கவேண்டுமென என்றி தீர்மானித்தான். 1593 யூலை 25 ஆம் திகதி சென் தெனிசு என்னுமிடத்திற் கத் தோலிக்க திருச்சபையிற் சேர்த்துக்கொள்ளப்பட்டான். 1594 பெப்புருவரி மாதத்தில், சாட்டேசு என்னுமிடத்தில் முடிசூட்டப்பட்டான். மாகாணங்களி அலுள்ள பெரிய நகரங்கள் ஒன்றன்பின் ஒன்முக, வாயில் திறந்து அவனை வர வேற்றன. மா விழுமியோர் ஒருவர்பின் ஒருவராக அவன்பக்கஞ் சேர்தனர். 1594 மாச்சில் அவன் பாரிசுட் பிரவேசித்தான்.
வேவின்சுப் பொருத்தனை (1598)
இரண்டாம் பிலிப்பின் மனக்குறை இன்னும் ஆறவில்லை. 1595 இல் என்றி அவன் மீது யுத்தப் பிரகடனஞ் செய்தான். 1598 வரையும் அது நிலைத்தது. அப்போது சோர்வு காரணமாக வேவின்சு என்னுமிடத்தில் அமைதிப் பொருத் தனை நிறைவேறியது. இதன் நியதிகள் காற்ருே காம்பிறேசிப் பொருத்தனையின் நியதிகளை உறுதிப்படுத்தின. கடைசியாக ஐரோப்பாவில் அமைதி நிலவியது.
நன்சுக் கற்பனை
ஐரோப்பாவில் மீண்டும் அமைதி நிலவிய அதே ஆண்டிற் பிரான்சிலும்
மீண்டும் அமைதி நிலவியதென்பது நினைவில் வைக்கத் தகுந்ததாகும். ஒரே
முறைமைக்கமைந்திராவிடினும், ஒரே குறிக்கோளுடனும், தொந்தரையோ

Page 77
134 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
குழப்பமோ விளேக்காத அத்துணை ஒழுங்குடனும் ' பிரான்சிய மக்கள், யாவராலும் கடவுள் போற்றி வந்தனை செய்யப்படுகிருர் என்பதை அங்கீகரித்த அலுடன் நன்சுக் கற்பனை ஆரம்பமாயது. யாவரும் மனச்சாட்சிச் சுதந்திரம் அனுப்பவிக்க வாய்ப்பளிக்கப்படுவதாகவிருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் தெளிவாகக் குறிப்பிட்ட சில நகரங்களிலும் மாவிழுமியோரின் கோட்டைகளி அலும் புரட்டெசுத்தாந்தருக்குப் பகிரங்கமாக வழிபாடு செய்ய உரிமையளிக்கப் படுவதாகவுமிருந்தது. வருடாந்தம் 20,000 தங்கப்பவுண் மதிக்கக்கூடிய அறக் கொடையை அரசாங்கம் அளிக்கவிருந்தது; கத்தோலிக்கருக்குச் சமமான குடி யுரிமைகள்; எப்பதவிக்கும் தெரிவு செய்யப்படும் உரிமை ; பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவ சாலைகள், அறநிறுவனங்கள் என்பனவற்றில் நுழையும் உரிமை ; நாட்டுத் திருக்கூட்டங்களைக் கூட்டும் உரிமை ; பல ஆண்டுகளை அடக்கிய குறித்த ஒருகால எல்லைவரை அரண் செய்யப்பட்ட 200 நகரங்களை முழுவுடைமையாக வைத்திருத்தல் ஆகியயாவுங் கிடைக்கவிருந்தன. இவ் வண்ணமே பிரான்சிய மக்கள் ஐக்கியம் பூண்டு, நாடு தன் பழைய உன்னத நிலைமையை மீண்டும் எய்துவதாயிற்று.
புரட்டெசுத்தாந்தருக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட நியதிகள், என்றி
உயிரோடிருந்தவரையும் பின்பற்றப்பட்டனவெனினும், அவை கத்தோலிக்கருக்
குப் பெரிதும் சினமூட்டின. அவர்கள் மிகப் பெருந்தன்மை காட்டினர்களென
வும், புரட்டெசுத்தாந்தருக்கு அளிக்கப்பட்ட நிலைமை உண்மையாகவே
நாட்டிற்கு ஆபத்தானதெனவும் வாதிக்கலாம். அதுவே இரிசிலூவின் கருத்தென்
பதைப் பின்னர் நாங்கள் காணலாம். எப்படியாயினும், பிரான்சுக்கு மிக
அவசியம் தேவையான உள்நாட்டு வெளிநாட்டு அமைதியை என்றி அளித்தான். 'பிரான்சுக்கும் எனக்கும் ஆறுதல் தேவை' என அவன் கூறினன். அவர்களுக்கு
அது கிடைத்தது.
நான்காம் என்றியினதும் சல்லியினதும் சீர்திருத்தங்கள்
முப்பது ஆண்டு உள்நாட்டுப் போரினற் பிரான்சு இளைத்திருந்தது. நிதி, வியாபாரம், கைத்தொழில், விவசாயம் ஆகிய யாவும் மீண்டும் கட்டுக்கோக்கப் பட வேண்டியிருந்தன. இவ்வேலையைச் செய்து முடிப்பதற்கு என்றி pgIģšas GA ஆற்றலும் படைத்த அமைச்சரைச் சேவைக்கமர்த்தினன். இவர்களில் மிகச் சிறந்தவன் உரசினியின் பானும், வரலாற்று நூல்களிற் சல்லிக் கோமகனெனக் கூறப்படுபவனுமாகிய மாச்சிமிலியன் தி பெதுரன் ஆவான். கீர்த்தி பெற்ற ஒரு போர்விானன சல்லி 1594 இல் அரச கழகத்தில் முதல் இடம் வகிக்க அழைக்கப் பட்டான். இவன் தன் தலைவனைப்போற் பிரான்சை உன்னத நிலையடையச் செய்யவேண்டுமெனும் மாபெரும் வேட்கையால்' உந்தப்பட்டான். செலவு செய்வதிற் கடும் சிக்கனம் பண்ணியும், மாவிழுமியோரிடமிருந்து பராதீனப் படுத்திய வருவாய்களை அறவிட்டும், பொலற்று (பாராளுமன்றத்து மரபுரிமை யுடைய வழக்கறிஞர் மீது விதிக்கப்பட்ட வரி) போன்ற புதிய வரிகளை

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 35
விதித்தும், பொது நிதிகளைப் துர்ப்பிரயோகஞ் செய்வோரைத் தண்டித்தும், எல்லாவற்றிற்கும் மேலாக வியாபாரத்திற்கும் கைத்தொழிலிற்கும் (பிரதான மாகப் பட்டு, கண்ணுடிக் கைத்தொழில்களுக்கு) ஊக்கமளித்தும் செல்வ நிலை யினைச் சீராக்கி, பிரான்சின் வளத்தைப் பெருமளவிற்கு விருத்தி செய்தான். விதிகள் திருத்தியமைக்கப்பட்டன. வாய்க்கால் வெட்டுதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனல், விவசாயத்தைச் சீர்படுத்துவதிலேயே சல்லி மிகவும் கண்ணுங் கருத்து மாயிருந்தான். மேய்ச்சனிலம் அமைத்தல், உழவுத்தொழில் என்பனவே பிரான்சின் பொற்கனிகளாகும்; பிரான்சிற்கு ஊட்டமளிப்பனவும் அவையே. இதுவே சல்லியின் போதனை. அதை அவன் சாதனையிற் பயன்படுத்தினன். பிரான்சு அவன் முயற்சிக்கு ஆதரவளித்தது. இங்கிலந்துடனும் துருக்கியுடனும் வியாபாரப் பொருத்தனைகள் நிறைவேற்றப்பட்டன. குவிபேக்கு என்னுமிடத் தில் சாம்பிலேன் என்பவனல் ஒரு பிரான்சியக் குடியேற்றம் தாபிக்கப்பட்டது. சல்லியின் மாபெருந் திட்டத்தை நிறைவேற்ற ஒன்றுக்கு மேற்பட்ட சந்ததி காலம் தேவைப்பட்டது. பதினன்காம் உலூயி சல்லியைப்போற் பேராற்ற அலுடைய கொல்பேட்டைத் தன் அமைச்சனகப் பெருதிருப்பின், ஒரு சந்ததி காலம் தானும் போதுமானதாயிருந்திராது.
தனி முதன்மை
எப்படியாயினும், தனி அதிகாரம் படைத்த ஓர் அரசனலன்றி அத்தகைய திட்டத்தை ஆரம்பிக்கவோ நிறைவேற்றவோ முடியாது. பிரான்சிய அரசியல் ஐக்கியம் அண்மையில் நிறைவேறுவதொன்முயில்லை. உயர் குடிக்கும், திருச் சபைக்குமுரிய ஆயிரக்கணக்கான குடியரசுகளை அது அடக்கியதாயிருந்தது. எந்த அரசறிஞனும் மானிய விழுமியோரின் சமூகச் சிறப்புரிமைகளைத் தனக்கு இடர் ஏற்படுத்தாது தொட்டிருக்கவும் முடியாது. விழுமியோரோ குருமாரோ சமமான வரி விதித்தற் கொள்கையைப் பொறுத்திருக்க மாட்டார்கள். ஆனல், தல பாலனத்தைத் திருத்தியமைப்பதில் ஆரம்ப முயற்சி செய்யப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் கை மாகாணங்களிலும் ஓங்கியது. பாலனத்தை ஒரு சீர்மைப்படுத்தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனல், இவை யாவும் தற்காலிகமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செய்யப்பட்டன.
பிறநாட்டுப் பூட்கை
இம் முன்னேற்றம் முன்னெச்சரிக்கையுடன் நிறைவேற்றப்பட்ட போதிலும், சில விழுமியோரினுடைய ஐயத்தையும் பகையையும் எழுப்பப் போதுமானதா யிருந்தது. இவர்கள் தியூக்கு தி பூலன், மரேகல் தி பிரோன் என்பவர்கள் தலைமையில் 1602 இல் பிரான்சைப் பிரிவினை செய்ய இசுப்பெயினுடனும் சவோ யுடனும் துரோகமான இணக்கப் பேச்சுக்கள் நடத்த ஆரம்பித்தனர். சதி யாலோசனை செய்பவர்களின் தலைவர்களை என்றி கடுமையாகத் தண்டித்தான்.
பீரோன் சிரச்சேதஞ் செய்யப்பட்டான். எஞ்சியவர்கள் பிறநாடுகளுக்

Page 78
136 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
கொளித்தோடினர்; அல்லது பிரான்சிற் சிறைவைக்கப்பட்டனர். 1606 இல் என்றி, அண்மையிலே திருத்தியமைக்கப்பட்ட படைக்குத் தலைமைதாங்கித் தென்மேற்குத் திசையிலுள்ள, பற்றறவுகொண்ட மாவட்டங்களுக்கூடாகச் சென்று, கோட்டைகளை அழித்து, சிறப்பான முறை மன்றுகளில் விளங்கியபின், அண்மையில் நடந்த சதித் தலைவர்களைக் கொன்ருன்.
சவோய்
ஏலவே சவோயைப்பற்றி வேண்டிய நடவடிக்கைகள் எடுத்திருந்தான். முன்னர் குறிப்பிட்டபடி பிரான்சுக்கும் ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கர் களுக்குமிடையில் நடந்தேறிய நீண்ட போராட்டத்தில், சவோய் பீதுன் கோமக்கள் முதன்மையான நிலையிலிருந்தார்கள். அடிக்கடி கட்சி மாறித் தங்கள் நிலைமையைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் ஐந்தாம் சாள்சை அண்டிக்கொண்டமையால் முதலாம் பிரான்சிசு சவோயைக் கைப்பற்றி அவர்களைத் துன்புறுத்தினன். ஆனல், காற்றே காம்பிரேசிப் பொருத்தனையின் படி, பிரான்சு கைவிடாத சில கோட்டைகளைத் தவிர, தன் கோமகவுரிமையை சாள்சு எமானுவேல் திரும்பப் பெற்றன். இக்கோட்டைகளிலொன்முகிய சலு சோவைச் சவோய் கிரும்பக் கைப்பற்றி, வேவின்சுப் பொருத்தனையின் நியதி களுக்கு விரோதமாயிருந்தபோதும், அதைக் கைவிடவில்லை. 1600 இல் என்றி தன் முதல் மனைவியாகிய, சந்ததியற்ற வலோய் மாகாற்றை விவாக நீக்கஞ் செய்து, மேரி தி மெடிக்கியைத் திருமணஞ் செய்து தன் நிலைமையைப் பலப் படுத்தினன். மேரி தசுகனியின் மாபெரும் கோமகனின் மகளாவாள். மேரி அவன் அவாவிய உரித்தாளனையும் வேறு பிள்ளைகளையும் பெற்ருள். ஒரு வருடத்தின் பின்னர் சவோயைத் தாக்கி அடிப்படுத்திய பின்னர், 1601 இல் இளம் கோமக னுடன் ஓர் அமைதிப் பொருத்தனையை நிறைவேற்றினன். இதன்படி சலுசோ சவோய்க்கும், பிரெசு, பியூகே எனும் இரு சிறு கோமகப் பிரிவுகள் பிரான்சுக் கும் கையளிக்கப்பட்டன. இதன் பயனக செனிவாவிலிருந்து ஆற்றுமுகம் வரை யும் உள்ள அந்நதியின் இரு கரைகளின் ஆட்சியும் பிரான்சை அடைந்தது.
சில ஆண்டுகளின் பின்னர் (1609) இாைனின் கீழ்ப்பிரதேசத்தின் எல்லைப் புறத்திலுள்ள கிளிவிசு, யூலிக்கு, பேக்கு என்னும் கோமகவுரிமைகளின் வழி யுரிமை பற்றி விவாதம் நடந்தபொழுது, என்றி அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உருதோல்புப் பேராசனுக்கு எதிராக ஒரு வலிமையுடைய சங்கத்தை உருவாக்கி,

பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் 137
இங்கிலந்தும் ஒல்லந்த புரட்டெசுத்தாந்தரும் அளித்த துணைப்படையுடன் மூன்று கோமகப் பிரிவுகளையும் கைப்பற்றினன். எனினும், அக்கணத்தில் இரவ யக்கு என்பானல் என்றி (1610) படுகொலை செய்யப்பட்டான். ஐரோப்பாவின் கதியை, வரவிருக்கும் பல சந்ததி காலத்திற்குத் தீர்த்து வைக்கும் பெரிய போராட்டத்தின் ஆரம்பம் ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப் LJIL-47.
பெருந்திட்டம்
சல்லியின் வாழ்க்கைக் குறிப்புக்களின் படி, ஐரோப்பாவில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும், எல்லா நாடுகளையும் பிரிக்க முடியாதபடி நட்புப் பிணைப்பினுல் ஐக்கியப்படுத்தவும் என்றி ஒரு திட்டம் விட்டுச் சென்றிருந்தான். இத்திட்டத்தை உருவாக்கியவன் என்றி தானே, அல்லது சல்லியோ, எலிச பெத்து இராணியோ, என்பதை நாங்கள் அறியேர்ம். என்றியோ சல்லியோ அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்களோ என்பதும் தெரியாது. எனினும், நிரந்தர அமைதியைப் பேணுதற்குச் செய்யப்பட்ட முயற்சிகளுள் முதலாவதா யும், அதன்பொருட்டுப் பின்னர் ஆயத்தஞ் செய்த திட்டங்கள் யாவுக்கும் அடிப் படையாயும் இருந்ததாலேயே அது சிறப்புடைத்து. மதச் சீர்திருத்தக் காலம் வரையும் போப்பாட்சியானது ஐரோப்பாவிற்கு அரைகுறையான ஒற்றுமை அளித்து, வேறு வேறன நாடுகளின் அரசர்களுக்கு மேன்முறையீட்டு மன்றமு மாயது. இப்போது ஐரோப்பாவிற்கு ஒரு தலைவன் இல்லை. ஒரு நூற்ருண்டுக் கதிகமாக நாடுகள் பெரும்பாலும் ஓயாது போர்புரிந்துகொண்டிருந்தன. இது முதற்கொண்டு போர் புரிதலே உலகத்தின் பொது நிலைமையாயிருப்பதா? ஐரோப்பிய கூட்டாட்சியமைப்பொன்று நிலையாய அமைதிக்குப் பொறுப்பளிக்க முடியாதா? A
இம்மாபெரும் திட்டத்தின்படி, ஐரோப்பாவானது ஒரு கிறித்துவப் பொதுநல வாயமாக அமைக்கப்படும். அதில், கத்தோலிக்க நாடுகள், புரட்டெசுத்தாந்த நாடுகள், முடியாட்சி நாடுகள், குடியரசு நாடுகள் ஆகிய யாவும் அடங்கிய பதி னேந்து நாடுகள் இடம்பெறும். மூன்று ஆண்டுகளுக்கொருமுறை புதுப்பிக்க வேண்டியதும் பேரரசரை அவைத் தலைவராகக் கொண்டதுமான ஒரு செனெற்று பொதுநலவாயத்தின் அலுவல்களைப் பாலனஞ் செய்யும். அச்செனெற்று, கூட்டு நாடுகளின் பிரதிநிதிகளும் முழு அதிகாரம் பெற்றவருமான அரசியல் தூதர்கள் அறுபத்தினன்கு பேரைக் கொண்டதாயிருக்கும். இவைகளுக்கிடையில் எழும் பிணக்குக்கள் யாவற்றையும் தீர்த்து வைக்கவும் பொதுவான பிரச்சினைகளைத் தீர்க்கவும் அது தகுதிவாய்ந்ததாயிருக்கும். இவ்வண்ணமே ஐரோப்பிய அரசியற் கும், திருச்சபைக்குமுரிய சமநிலை காப்பாற்றப்பட்டுப் போர் வேரோடு களையப்
படலாம்.

Page 79
138 பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
இத்திட்டத்தை உருவாக்கியவர் யாவர் ஆயினும் இதிலிருந்து கணக்கற்ற பிற திட்டங்கள் தோன்றியிருக்கின்றன. கடைசியாகத் தோற்றியது இன்னும் பக்குவ மடையவில்லை. என்றியின் மூளையிலேயே இத்திட்டம் உருவாயது என நம்புவது மனத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏனெனில், சம காலத்தாசர்களில் அவன் தனிச்சிறப்புடையவன். சமய சமத்துவத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அமைதியை அவன் பிரான்சுக்களித்தான். அவன் வாழ்வு இன்னும் நீடித்திருக்குமானல் ஐரோப்பாவுக்கே அப்படியான ஒரு கொடையை ஈந் திருப்பான்.

139
பிரான்சிற் கத்தோலிக்கரும் புரட்டெசுத்தாந்தரும்
1ņ9șJiuog) ș*?(o ‘olpu?
oglgo udŪT ?f即,z 49g 1991. úsı (I) =88.gI ég nhẹ·1990-T-Trısımrmolo) 时逾499烟的圆09109-57 uso
199șJTusog)seguo@@rī 1993’Unusog)
‘ựơng)șięș09 osnuß--1ņ9Ųn Luī ozolį9uoșosogoos@199.19
||
| —
£9gI 199ưTinsimmo(g) 胡氏P9Q9oŲī£g) qif} gseguo@@rī 1993?Uluog) ‘smu@za ogsgøgsuotoșaeổ= yang)1990g)ưso(g)’a ‘olpu? ???09 og 199 udsı
|||
Oggi Hrafēj 1993?Ulusog)?-gowo o@lllog)?)
o,
Q9109-57 uso
1993?UT Log)
†ነ፭9I-8091 199æUmuog) 1990g)ugo@ow @figo 19
GFფ)uuთg)ტ Iყ9$pUn 1ņosynsfuĝ919 qifầ- «
1996-1991) düşı =809 I-gŤgI
1993?UT uog) igong) ug9(9): ‘‘P19 U ?
g#gs-ffyg I 1993?Jiljoog) 1990g)u(90’a ‘oglgo udŲı
††g I-90.gI 1993?Uluog) 1990g)u(90), ospoluosog)ąffar
sss I hụ(số “işooơnuos) ış9/1911,9(9): ‘işoyễ
uļoņIriqi@@ șigotes 1996911090-a

Page 80
பிரான்சு
ஆங்லே வழங்கள்
15
i
וFLL היה: 368ש דנילו lului di பூண் தாறுகள் III
IE3 m, mrk zu
"السويسرق ثالث .
ந்ேது காங்
சுவாசிய கதர்
நாங்கத
பிரதாடடர் I
10 ம்ே இருந்த
...
FI- Elgin
Li'l
I EFF புரா போயொங்
"", تاFFع تھEi =ہے۔
قلاع 4 م جمعت 'S i i"-" புங்ட்டு புயபடி.ே ଐ
| Eki NE trier Lil' ' E Hill ଶ: l ຈັi + اللغ gmar
ዽ..÷ዂዛኵ.. |Ա: $ካ!‛ of A 35= リ。
- - A. کافی حق
罗莲
岛 புரொசுகள்
பிங்' S2.
மத்தியதரைக் கடல்
மேகங்காடிெ -
நக தயா!
16 ஆம் நூற்றுண்டிற் பிரான்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாய
முப்பதாண்டுப் போர்
முக்கியமான திகதிகள் :
S
I ስI](]
I {jሰሁሇ
芷门盟
I Éኛ I ዕ]
置茵直置
卫凸直岛
置品置盟
置凸置岛
芷萱
சமயம் பாப்புவோர் ஐக்கிய சங்கம் உருவாயது.
கிளிவெசு-யூலிக்கு பற்றிய வழியுரிமைப்பிணக்கு.
சேர்மானியக் கத்தோவிக்கச் சங்கம்.
பொகிேபன் அாசபட்டயம்.
நான்காம் என்றியின் மரணம்.
இரண்டாம் பேடினந்து பொமிேயாவின் அரசனுதல்,
பிராக்கு நகரிற் கலாம்.
மூப்பதாண்டுப் போரின் ஆரம்பம்.
இரண்டாம் பேடினந்து பேராசணுதல்.
பலற்றினேற்றுப் பேரரசுத் தேர்வுரிமையாளன் பொமிேயாவின் அரச
ஞகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
பொெேயாப் போர் ', அல்லது பலற்றினேற்றில் நடந்த போரின்
(Fೇ-ಛಿ-
இரிசிலுர பிரான்சின் முல்தமைச்சனுதல்.
1828-8 உரோசல் முற்றுகையிடப்படன்.
置茵要品
置茵曼品
Iዕና፨!፮ኛ
直配恩潭
உவாலந்தீன் படைகிசட்டல்
தென்மாக்கின் அரசன் நான்காம் கிறித்திபன் தஃப்பிடுதல்.
நில்லியினுல் நான்காம் கிறித்தியன் உலூட்டரில் தோற்கடிக்கப்
பட்டான்.
மெக்கிலன்பேக்கு உவாலத்தீன் கைப்பற்றுதல்.
1828-8 இத்தாவியிற் பேTர்.
고
քն:
Iስ..8ü
直醇、卫
直醇、
I (3ቃ
ஈடுசெய்தற் கற்பனே வெளியிடப்பட்டது. உலூபெக்குப் பொருத்தனேயுடன் “தேனியப் போர் முடிவெய்தல், கசுத்தரவச அகோல்வசு தஃப்யிடுதல். பரவால்தப் பொருத்தனே (பிரான்சும் சுவிடினும்). பிறைற்றன்பெல்வில் கசுத்தாவசு கில்வியைத் தோற்கடித்தல். இலெக்கு நகியைக் கடந்து செல்லுகையில் கில்வி தோற்கடிக்கப்
பட்டுக் கொல்லப்பட்டான் (எப்பிரில் ").

Page 81
142 முப்பதாண்டுப் போர்
1632 உலூட்சனிற் கசுத்தாவசு கொல்லப்பட்டான் (நவம்பர் 16). 1634 உவாலந்தீன் படுகொலை செய்யப்பட்டான் (பெப்புருவரி 25). 1635 பிராக்கு அமைதிப் பொருத்தன. 1635 இசுப்பெயினுக்கெதிராகப் பிரான்சு போர்ப் பிரகடனஞ் செய்தல். 1637 இரண்டாம் பேடினந்தின் மரணம். மூன்மும் பேடினந்து அரசெய்தல். 1640 கற்றலோனியக் கலாம்.
1640 போத்துக்கலின் சுயவாட்சி.
1642 இரிசிலூவின் மரணம். 1643 உருெக்கிறுவாவில் தாஞ்சன் வெற்றி. 1644 பிரைபேக்குப் போர். 1645 நோடுலிங்கன் போர் (இரண்டாவது). 1648 உவெசுபேலியாப் பொருத்தனைகள். 1657 மசரின், குரொம்வெல் என்போரின் நட்புறவு. 1657 கியூன்சுப் போரில் வெற்றி. தங்கேக்கு இங்கிலந்துக்காயது. 1659 பிானிசுப் பொருத்தன.
இரவயக்கு என்பான் தன் குத்துவாளினல் பெரும்போர் ஆரம்பிப்பதை எட்டு வருடங்களுக்கு மாத்திரமே பின்போட்டான். அப்போர் 1618 ஆம் ஆண்டிலே தொடங்கி முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இப்போரின் காரணங்களிலும் விளைவுகளிலும் முந்திய நூற்ருண்டின் அரசியல், திருச்சபை ஆகியவை சார்ந்த வரலாற்றின் சுருக்கத்தைக் காணலாம். உவெசுபேலியாப் பொருத்தனையும் அsன் பிற்சேர்க்கையான பிரனிசுப் பொருத்தனையும் மறுமலர்ச்சி மதச்சீர்திருத் தக் காலங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தன. பிரான்சுக்கும் ஒசுத்திரியஇசுப்பானிஷ் அபிசுபேக்கருக்குமிடையில் நிலவிய நீடித்த போரின் ஒரு முக்கிய மான கட்டத்லதயும் அவை குறிக்கின்றன.
பொதுவான காரணங்கள்
வேறு பெரிய போர்களிற் போல் இப்போரிலும் போரின் அடிப்படையான காரணங்களுக்கும் போரை உடனடியாகத் துண்டியவற்றிற்கும் உள்ள வேறு பாட்டைப் பிரித்தறிதல் முக்கியம். பொதுக் காரணங்கள் முன்னைய சரிதத்திற் பிரத்தியட்சமாகக் கூறப்பட்டன. பேரரசினதும் சேர்மனியினதும் அரசியல் நிலைமையிலும் ஒகசுபேக்கு அமைதிப் பொருத்தனையின் திருத்தியற்ற தன்மை யிலும், உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை பதினமும் நூற்றண்டின் பிற்பகுதி யில் ஆச்சரியப்படத்தக்க விதமாகத் தன் பழைய நன்னிலையை எய்தியதிலும், அதனும் கத்தோலிக்கர் மனத்தில் எழுந்த வேணவாக்களிலும், எதிர்காலம்

முப்பதாண்டுப் போர் 43
பற்றி அவர்கள் கொண்ட நம்பிக்கைகளிலும் அக்காரணங்களைக் காணலாம். பாவ மன்னிப்புக்கெதிராக உலூதர் தன் மறுப்பைப் பலரறிய எடுத்துக்கூறிய பொழுது, பிரான்சிலிருந்த வலோய் முடியாட்சியைப்போலவும் இங்கிலந் திலிருந்த தியூடர் முடியாட்சியைப் போலவும் பலம் வாய்ந்த பிரதிநிதித்துவம் வாய்ந்த மத்திய ஆட்சி சேர்மனியில் இருந்திருந்தால், மதச்சீர்திருத்தம் வேறு வழியிற் சென்றிருக்கும். ஆனல், நாங்கள் கண்டுகொண்டபடி ஐந்தாம் சாள்சு எக்கருத்திலும் சேர்மனியில் நாட்டினவரசன் ஆகான். உண்மையில், ஒரு சேர் மானிய நாட்டினமே அக்காலத்து இருக்கவில்லை. வேறு விதமாக அதன் போக்கு மாறியிருந்தால், மதச்சீர்திருத்தமானது ஒரு நாட்டினத்தை அங்குத் தோற்று விக்கப் பெரிதும் துணைபுரிந்திருக்கும்.
ஒகசுபேக்குப் பொருத்தனையில் அடங்கியிருந்த திருச்சபை பற்றிய ஒத்து மேவலிணக்கமானது சேர்மனியின் அரசியல் நிலைமையைப் பிர்திபலித்தது. சமயஞ்சார்ந்த அந்த இணக்கம் நாட்டினச் சார்பு உடையதன்று ; தனிப்பற்றுச் சார்ந்ததாகும். சேர்மனியிலுள்ள முந்நூற்றைம்பதிற்கு மேற்பட்ட ஆட்சி யாளர் ஒவ்வொருவரும் தத்தம் குடிகளின் மதக் கோட்பாடு எது என்பதைத் நிச்சயிக்க வேண்டியவராயினர். ஆனல், உலூதர் கோட்பாட்டையோ, கத்தோ விக்க கோட்பாட்டையோ தான் அவர்கள் தெரிந்தெடுக்கலாம். கல்வின் கொள்கை புறக்கணிக்கப்பட்டது. எதிர்காலத்தில் நிகழக் கூடிய மாறுதல்களுக் கேற்ற ஏற்பாடொன்றுஞ் செய்யப்படவில்லை. 1552 இல் நிலவிய நிலைமையை மாற்ற முடியாததாகச் செய்ய வேண்டியிருந்தது. இவ்வுடன்படிக்கை எதிர்கா லத்தே சச்சரவுகள் நிகழ்தற்கு ஏதுவாயிருந்ததென்பது தெளிபு.
இடர்ப்பாடுகள் வெளித் தோன்ற அதிக காலம் செல்லவில்லை. கொலோனின் கத்தோலிக்கத் தலைமைக் குரு புரட்டெசுத்தாந்த மதத்திற்கு மாறி, திருமணஞ் செய்தார். ‘திருச்சபைக்குரிய ஒதுக்கீட்டின் படி அது காரணமாகத் தம் பதவி யுரிமையையிழந்தார். அப்படி இழந்தமை இயல்பானதே. ஒரு புரட்டெசுத்தாந்த சபையினர் குருபீடத்திற்கு ஒரு புரட்டெசுத்தாந்த விசுப்பாண்டவரைத் தெரிவு செய்யுமிடத்து அந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்துதல் இயலாது. அது oil சேர் மனியில் எட்டுமுறை நிகழ்ந்தது. புரட்டெசுத்தாந்த அரசுகளில் திருச்சபைக் குரிய காணிகளை உலகியற்படுத்துவதைத் தடுக்கவும் முடியவில்லை. பலற்றினேற் அறுப் பகுதியில் மாத்திரம், நூற்றுக்குக் குறையாத துறவு மடங்களின் காணிகள் உலகியற்படுத்தப்பட்டன. வட சேர்மனியிலும் இடைவிடாது இதே விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒகசுபேக்கு அமைதிப் பொருத்தனை, ஒரு நிலையான இணக்கத்திற்கு அடிப் படையாக முடியாதென்பது தெளிவு.

Page 82
144 முப்பதாண்டுப் போர்
உடன் காரணங்கள்
போரின் உடன் காரணங்களிற் பல முக்கியமானவை ஒரு பகிரங்க ஊர்வலத் தின் விளைவாக தோனுேவேட்டு என்னும் புரட்டெசுத்தாந்த நகரில் துறவிகள் தாக்கப்பட்டனர். இந் நகருக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கும் உரிமை, 1607 ஆம் ஆண்டில் பவேரியாவைச் சேர்ந்த மாச்சிமிலியனுக்கு வழங்கப் பட்டது. கத்தோலிக்க அரசர்களுள் மிகவும் ஆற்றல் படைத்தவனும் ஊக்க முள்ளவனும் இவனே. அவன் அங்கே பலவந்தமாக மீண்டும் கத்தோலிக்க மதத் தைப் பரப்பியமையால் தென்சேர்மனியிலுள்ள புரட்டெசுத்தாந்தர் எல்லாரும் அச்சமும் சினமும் கொண்டனர். 1608 ஆம் ஆண்டில், பலற்றினேற்றுத் தேர் வுரிமையாளன், நான்காம் பிரதரிக்கு, ஆனேலைச் சேர்ந்த கிறித்தியன், கல்வின் கொள்கையினரான வேறும் பல சிற்றரசர்கள் ஆகியோரின் தலைமையிற் சமயம் பாப்புவோரின் ஐக்கிய சங்கம் உருவாகியது. அது கல்வியினின் கொள்கையில் மேம்பட்டிருந்தமையாலும், பேரரசுக்கு விரோதமாக அதைத் தாக்குவதையே வெளிப்படையான நோக்கமாகக் கொண்டமையாலும், நாட்டை ஆளும் சிற்றர சர்களின் பூரண சுதந்திரத்தை ஆதரித்தமையாலும் சட்சனியின் தேர்வுரிமை யாளனும் உலூதர் கொள்கையினரின் தலைவர் பிறரும் இவ்வைக்கிய சங்கத்தி னின்றும் விலகி நின்முர்கள்.
1609 ஆம் ஆண்டில், பெரும்பாலும் திருச்சபைக்குரிய கத்தோலிக்க சிற்றரசர் பலர் பவேரியாவைச் சேர்ந்த மாச்சிமிலியனின் தலைமையில் ஐக்கியப்பட்டு ஒரு கத்தோலிக்க சங்கத்தை உருவாக்கினர். கல்வின் கொள்கையினர் பிரான்சுடனும் ஒல்லந்துடனும் நட்புப் பூணுங் குறிப்புடையராய் இருந்தனர். கத்தோலிக்கரோT இசுப்பெயினை நாடி நின்றனர்.
சேர்மனியிலே தலைதூக்கிய பிணக்குக்கள், அந்நாட்டளவில் நில்லாது, பல நாட்டுத் தொடர்பு பெற்றமை இவ்வளவிற்றெளிவாகும்.
கிளிவெசு-யூலிக்கு பற்றிய வழியுரிமைப் பிணக்கு
1609 ஆம் ஆண்டில் கோமகன் உவிலியத்தின் மாணத்தின் போது, அவனு டைய கோமகவுரிமைகளாய கிளிவெசு, யூலிக்கு, பேக்கு என்பவற்றினது வழி யுரிமை பற்றிய பிணக்கு இன்னும் நேரடியான சர்வதேசச் சார்பு வாய்ந்ததா யிருந்தது. இக்கோமகவுரிமைகளின் புவியியல் நிலைமையினல், அவை தம் பாப் பளவுக்கு விஞ்சிய முக்கியத்துவத்தைப் பெற்றன. அதன் பயனக உரிமைகோரு வோர் பலர் பிறநாட்டவரின் ஆதரவை இலகுவாகப் பெறக் கூடியவராயிருந்த னர். இவ்வண்ணம் பிாந்தன் பேக்குத் தேர்வுரிமையாளனை யோன் சிகிசு மந்து, பிரான்சின் அரசனை நான்காம் என்றியாலும் ஒல்லந்த குடியரசாலும் ஆதரிக்கப்பட்டான். இவனே உரிமைகோருவோருள் உரித்துமிகவுடையவன் போலும். நியூ பேக்கின் கோமகனன இளவரசன் உலூயியை இசுப்பானியர்

முப்பதாண்டுப் போர் 145
ஆதரித்தனர். சட்சனியைச் சேர்ந்த தேர்வுரிமையாளன் இரண்டாம் கிறித்தி யன் உலூதர்க் கொள்கையினனுக இருந்த போதும், பேரரசு மாட்டுப் பற்றுடைய வனுயிருந்தமையின், உருதோல்பு பேரரசன் அவனது உரிமைக்கோரிக்கையை ஆதரித்தான். புரட்டெசுத்தாந்தரையும் கத்தோலிக்கரையும் ஒன்று கூட்டிப் பேடினந்திடமிருந்து பேரரசைப் பலவந்தமாகப் பறித்து கத்தோலிக்கணு யினும், அபிசுபேக்கனல்லாத பவேரியாவைச் சேர்ந்த மாச்சிமிலியனை தேர்ந் தெடுக்க, நான்காம் என்றி ஏற்பாடு செய்த மாபெருந் திட்டத்தின்படியே ஒகன் சொலேன் மரபினனுன அபேட்சகனைப் பிரான்சியர் ஆதரித்தனர். என்றி கொலை செய்யப்பட இத்திட்டம் அழிந்தது. 1614 ஆம் ஆண்டில் இசுப்பானியர் நியூ பேக்கினர் சார்பிலே கோமகவுரிமைகளின் ஒரு பாகத்தைக் கைப்பற்றினர். ஒல் லந்தர் யோன் சிகிசுமந்து என்பான் பேரில் ஏஞ்சில் பாகத்தைக் கைப்பற்றினர். 1621 ஆம் ஆண்டில் பன்னிராண்டுப் பேரோய்வுக் காலம் முடியும் வரை, இவ் வலுவல்கள் மாறுபடாதிருந்தன. இவ்வாண்டில் உள்நாட்டுக் குழப்பம் பொதுப் போருடன் கலந்து பெரும் விடயமாயிற்று.
அபிசுபேக்கு ஆணிலங்கள்
ஒசுத்திரிய அபிசுபேக்கரின் மரபுரிமையான ஆணிலங்களில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போர் விரைவில் மூண்டது. இப்பொழுது அபிசுபேக்கரின் பூட்கையை இரண்டாம் பேடினந்து ஆற்றுப்படுத்தினன். 1617 வரையும் அவன் பொகீமியாவின் அரசனுகவுமில்லை; 1619 வரையும் பேரரசனுகவுமில்லை. பேடின ந்து, இயேசுதாால் கல்வி கற்பிக்கப்பட்ட ஆர்வமுள்ள ஒரு கத்தோலிக்களுவான். அவர்கள் கற்பனைக்கிணங்க தன் அபிசுபேக்கு ஆணிலங்களிலும், இயலுமானுற் பேசாசு நாடுகள் எங்கனும், புரட்டெசுத்தாந்தப் புறநெறியை வேரோடறுத்து விடத் தீர்மானித்தான். அவன் ஒரு சேர்மனிய இரண்டாம் பிலிப்பு' எனவும் ஒழுக்கத்திற் பிலிப்பிலும் கட்டுப்பாடானவனென்றும் சாந்தமான தோற்ற முடையவனென்றும், விரும்பத்தகு நடத்தையுடையவன் என்றும் வருணிக்கப் பட்டுள்ளான். பிலிப்பைப் போற் பேரவாவுடையவனுயிருந்தான். கத்தோலிக்க மதத்தின் இலட்சியத்திற் பிலிப்பைப்போற் பற்றுடையனயிருந்தான். அபிசு பேக்கர் ஆணிலங்களிற் புரட்டெசுத்தாந்தம் அண்மையில் அவ்வளவு தீவிர மாகப் பரவியமை ஆர்வம் படைத்த இக்கத்தோலிக்கனுக்கு வெறுப்புக்குரிய நஞ்சுபோன்றிருந்தது. அங்கேரி கல்வின் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற் றியது. ஒசுத்திரியாவோ பெரிதும் உலூதர் கொள்கையையே பின்பற்றியது. பொகீமியாவின் குடிமக்களில் ஐந்தில் நான்கு பங்கினர் உலூதர் கொள்கையின ராவர். 1609 ஆம் ஆண்டில் செக்கர் உருதோல்பு பேரரசனிடமிருந்து “பொகீமிய பட்டயத்தை” வலிந்து பெற்றனர். இப்பட்டயம் பொகீமியருக்குத் தங்கள் சம யத்தைப் பயிற்சி செய்யும் சுதந்திரத்தை உறுதியாகவளித்தது. அதன் ஆதரவில் பொகீமியன் சட்டசபையானது முடி தேர்வுரிமையானதென இன்னும் சாதித்த
* 9 ஆம் அத்தியாயத்தைப் பார்க்க.

Page 83
146 முப்பதாண்டுப் போர்
போதும், இரண்டாம் பேடினந்தை அரசனுக ஏற்றுக்கொள்ளும்படி (1617) தூண்டப்பட்டது. பொகீமியப் பட்டயத்தை நிராகரிக்கவும் செக்கு மக்க ளிடைப் புரட்டெசுத்தாந்தத்தை நசிக்கவும் செய்த முயற்சியே, சேர்மனியில் உள்நாட்டுப் போர் என்னும் தீயை மூட்டிவைத்த, வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிறு நிகழ்ச்சிக்கு ஏதுவாயிற்று.
1618 மே மாதம் 23 ம் திகதி பொகீமிய புரட்டெசுத்தாந்தர் படைபூண்டு, ஒசுத்திரியப் பேரரசனை எதிர்த்து நிற்கத் தீர்மானித்தனர். தேண் என்னும் கோமகனின் தலைமையில் அவர்களில் ஒரு பகுதியினர் பிராக்கிலுள்ள ஒரு LDIrøfi கைக்குட் பலவந்தமாகப் புகுந்து, பேடினந்தின் இரு பதிலாளிகளான மாற்றி நிற்க, சிலாவதா என்போரையும், செயலாளர் பாபிரிசியசையும் சாளரத்தின் வழியாக வெளியே வீசியெறிந்தார்கள். அவர்கள் ஐம்பது அடி கீழே விழுந்தும் பலத்த காயமடையவில்லை. சதிகாரர் பின்னர் தற்காலிக அரசாங்கமொன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு, 1619 ஆம் ஆண்டில் பலற்றினேற்றுத் தேர்வுரிமை யாளனும், சமயம் பாப்புவோர் ஐக்கிய சங்கத்தின் தலைவனும், இங்கிலந்தின் அரசனை முதலாம் யேமிசின் மருமகனும், தங்கள் அரச பரம்பரையில் நேரடி யான முன்னேனுமான ஐந்தாம் பிரதரிக்கைத் தங்கள் அரசனுகத் தெரிவு செய் தார்கள். பொகீமிய முடியைப் பிரதரிக்கு ஏற்றுக் கொண்டமை தவறேயென்பது கண்கூடு. இதனுற் சேர்மன் பிரச்சினை குழம்பிற்று ; கத்தோலிக்கர் புரட்டெசுத் தாந்தரைப் பேரரசின் பகைவர்களாகவும், முறையினமைந்த அதிகார வர்க்கத் துக்கு மாமுகக் கலகஞ் செய்வோராகவும் காட்ட முடிந்தது. இன்னும், இவ்வழி, பேரரசிற் பற்றுறுதியுள்ள அனேக புரட்டெசுத்தாந்தச் சிற்றரசர்களின் ஆதா வைப் பேடினந்து பெறக்கூடியதாயிருந்தது. இவ்வண்ணம் பொகீமியப் புரட்சி யுடன் ஆரம்பித்த போர் பின்வரும் காலப் பகுதிகளில் அமையும் : (1) 1619-23, பொகீமிய, அல்லது பலற்றினேற்றுப் போர் ; (2) 1625-9, தேனியக் கட்டம் ; (3) 1630-65, சுவீடிசுக் கட்டம் , (4) 1635-48, இக்காலப் பகுதியில் பிரான்சுக்கும் ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கருக்குமிடையிற் போர் மூண்டது.
பொகீமியப் போர், அல்லது பலற்றினேற்றுப் போர்
ஐரோப்பிய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் முதலாம் பருவமே சிறப்பு மிகக் குறைந்ததாகும். அது அபிசுபேக்கரின் மத்திய ஆட்சிக்கும் கத்தோ லிக்க ஆதிக்கத்திற்கும் எதிராக, சேர்மனிய தனிப்பற்றுடைமையினதும் புரட் டெசுத்தாந்தத்தினதும் சார்பில் நடந்த போராட்டமாகும். செக்கு மக்கள் தமது சமயத்திற்காக மாத்திரமன்றி, தமது நாட்டினத் தனியாண்மைக்காகவும் போராடினர். ஆனல், அவர்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஐந்தாம் பிரதரிக்கு 1619 நவம்பர் 4 ஆம் திகதி பிராக்கில் முடிசூட்டப்பட்டானுயினும், 'பொகீமியாவில் மாரிகால அரசனக மட்டும் ஆட்சி செய்தான். அவன் பொகீ மியாவிலிருந்து வெளியே துரத்தப்பட்டதுமல்லாமல், வெற்றியடைந்த தில்லித் தளபதியாற் பலற்றினேற்றிலுள்ள அவன் மரபுரிமையான ஆணிலங்களிலிருந்

முப்பதாண்டுப் போர் 4.
தும் பின்னர்த் துரத்தப்பட்டான். தில்லி என்பான் இசுப்பானிய நெதலந்திற் பிறந்து, இசுப்பானிய இராணுவ மரபின்படி பயிற்றப்பட்டு, ஏலவே போர் அனு பவம் அதிகம் பெற்றவனுயிருந்தான். கத்தோலிக்க படைத் தலைவனகிய இவன், சேர்மனியில் எங்கும் வெற்றி பெற்ருரன். பொகீமியக் கலாம் முற்முக நசுக்கப் பட்டது. அவர்களின் பட்டயம் பறிமுதல் செய்யப்பட்டது. செல்வாக்குள்ள புரட்டெசுத்தாந்தர் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். அல்லது நாடுகடத்தப்பட்ட னர். இடைவிடாத உடற்றலினுற் குடித்தொகை ஏறத்தாழ நாற்பது இலட்சத்தி லிருந்து ஏழோ, எட்டு இலட்சத்திற்குக் குறைந்தது. இன்னும் 1621 ஆம் ஆண் டில் சமயம் பரப்புவோர் சங்கம் குலைக்கப்பட்டு, பிரதரிக்கின் தேர்வுரிமைப் பகுதி பவேரியாவைச் சேர்ந்த மாச்சிமிலியனுக்குக் கைமாறிற்று. அபிசுபேக் கரும் கத்தோலிக்கரும் முழு வெற்றியெய்தினர்.
தேனியப் போர்
இரண்டாம் கட்டத்தில் (1625-9) போரின் களப்பரப்பும் முக்கியத்துவமும் பெரிதும் விரிந்தன. பொகீமியாவின் கதியைப் பற்றி வட சேர்மனிய புரட்டெசுத் தாந்தர் அக்கறை கொள்ளாதிருந்தனர். ஆயின், பேடினந்தின் போவா அவன் ஆணிலங்களின் எல்லைக்குமப்பால் விரிந்திருப்பதை அவர்கள் விளங்கிக் கொண்டபொழுது அவர்கள் மனப்பான்மை பெரிதும் மாறுதலடைந்தது. பலற்றினேற்று தாக்கப்பட்டமையாலும் சேர்மனிய கத்தோலிக்க மதத்தின் தலை வனுக்கு அது கைமாறியமையாலும், குறிப்பாக, சட்சனியைச் சேர்ந்த யோன் யோட்சு என்பான் அச்சமடைந்தான். வடபகுதி வல்லரசுகளான தென்மாக் கும் சுவிடினும் இயேசுதர் கொள்கையுடைய பேரரசனதும் கத்தோலிக்கச் சங் கத்தினதும் வெற்றிகள் கண்டு திகிலடைந்தன. தென்மாக்கைச் சேர்ந்த நான் காம் கிறித்தியன் ஒல்சுதைனின் கோமகனுமாவான். அவன் மகன், விசுப்பாண்ட வர் உரிமையான வேடனெனும் பகுதியையும் தலைமைக் குருவின் உரிமையாகிய பிரமனையும் பெற்றிருந்தான். விசுப்பாண்டவரின் இவ்வுரிமைகளினல், தென் மாக்கு எல்பு, உவெசர் ஆகிய நதிகளின் பொங்குமுகங்களை ஆட்சி செய்தது. கத்தோலிக்கரின் வெற்றிகள் தென் சேர்மனியிலிருந்து வட சேர்மனிக்குப் பர வின், திருச்சபை தொடர்பாக மாத்திரமன்றி, வணிகத்திலும் தென்மாக்கின் நிலைமைக்கு அபாய மேற்பட்டிருக்கும். புவியியல் நிலையாலும் வரலாற்று ld/rust அலும் தென்மாக்கு போற்றிக்குக் கடலின் வாயில் காப்போனுக இருந்து வந்தது. அன்றியும் இதுவரையில் அன்சியாற்றிக்குக் கூட்டவையைச் சேர்ந்த நகர்கள் அனுபவித்த வடஐரோப்பிய வணிக ஆதிக்கத்தைக் கைப்பற்ற ஆவலுள்ள போட்டி நாடுமாயது.
உவாலந்தீன்
நாடகத்தின் இரண்டாம் காட்சியில் நான்காம் கிறித்தியனைத் தவிர வேறு புதிய நடிகர்களும் மேடையிலே தோன்றினர். இவர்களில் தலையாயவன் உவாலந் தீனைச் சேர்ந்த அல்பேட்டாவான். உவாலந்தீன் ஒரு தொல் பெருங் குடியைச் சேர்ந்த பொகீமிய விழுமியோன் ; ஆயினும், சிறுபண்ணையே உடையவன்.
7- B 2478 (5.160)

Page 84
48 முப்பதாண்டுப் போர்
எனினும், நிலப் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டமையாலும் ஒன்றின்பின் ஒன்முக நடந்த இரு கிருமணங்களாலும் பெருஞ் செல்வத்தை ஈட்டியிருந்தான். அவன் அரசியலிலேயே முதலிற் பெரும் அவாக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய போர் விசனுமாவான். 1625 ஆம் ஆண்டில் தன் சொந்தக் செலவிற் கூலிப் படை யாட்களைக் கொண்ட ஒரு சேனையைத் திரட்டிப் பேரரசனுக்குச் சேவை செய்ய முன்வந்தான். ஏறத்தாழ ஒரிலட்சம் பேரைக் கொண்ட அவன் படை l. 3) இனத்தினரையும் மதத்தினரையும் கொண்ட இரு கதம்பமாகும். செக்கர், மகியார், சேர்மனியர், ஒல்லந்தர், இசுப்பானியர், பிரான்சியர், இசுக்கொற்றர், ஐரியர், கத்தோலிக்கர், உலூதர் கொள்கையினர், கல்வின் கொள்கையினர் ஆகி யோர் அப்படையில் இருந்தனர். இவர்கள் யாவரும் தங்கள் பெருஞ் சேனபதி மீது தாங்கொண்ட ஒருமுகப்பட்ட பற்றுறுதியினல் மட்டும் ஐக்கியம் பூண்ட னர். அவனுடைய அலுவலரிற் சிலர் இசுப்பானியராயும், சிலர் இத்தாலியராயும், சிலர் பிரான்சியராயும் இருந்தனர். உவாலந்தின் பேரரசனுக்கு உதவத் தீர்மா னித்த ‘போர்க்கருவி' இத்தகையதாகும். அதனேக் கொண்டே அவன் அபிசு பேக்கரின் தலைமையிற் சேர்மனியை ஐக்கியப்படுத்த எண்ணியிருந்தான். பிற சமயத்தவர்மாட்டுத் தான் கொண்டிருந்த பொறுதியான பூட்கையைப் பேரரச ணும் ஏற்றுக் கொள்ளும்படி அவன் செய்திருந்தால், பிசுமாக்கு மொற்கு என் போரின் வேலையை இரு நூற்முண்டுக்கு அதிகமான காலத்திற்கு முன்னரே செய்திருப்பான். எனினும், உண்மையில் உவாலந்தீனுக்கும் கத்தோலிக்க சங்கத் துக்குமிடையிற் பூட்கை பற்றி ஆழ்ந்த வேறுபாடுகள் இருந்தன. கத்தோலிக்க மதத்தை மீண்டும் பழைய நன்னிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாத சாதனமாய் அமையும்வரை மாத்திரமே மாச்சிமிலியனும் அவன் இணை வரும் பேரரசுக் கட்சியினரின் வெற்றியை விரும்பினர். அரசியலைப் பொறுத்த அளவிற் புரட்டெசுத்தாந்த சிற்றரசர்களைப் போல அவர்களுந் தனிப்பற்றுடை யவராயிருந்தனர். இதற்கு எதிர்மாமுக, உவாலந்தீனின் கருத்துப்படி, கத்தோ லிக்க மதம் பேரரசு வாதத்துக்கு அடுத்தபடியான தரத்ததாயிற்று.
உவாலந்தீன், கில்லி ஆகியோர் போன்ற இரு சேனபதிகளுடன் தென்மாக்கின் தலையீட்டைப் பேரரசன் மன உறுதியுடன் எதிர்த்துநிற்க முடியும். 1636 ஆம் ஆண்டில் உலூற்றர் என்னுமிடத்தில் நான்காம் கிறித்தியனைத் தில்லி தோற்கடித் தான். 1627 இல் உவாலந்தீன் சைலிசியாவிலிருந்து தேனியரைத் துரத்தி, சிலெ சுவிக்கு ஒல்சுதைனிலும் அவர்களைத் தாக்கி 1627 ஆம் ஆண்டு முடியுமுன்னர் அவர்களே முற்ருய் அடக்கி வைத்தான். மெக்கிலன்பேக்குக் கோமகவுரிமை யையும் உவாலந்தீன் கைப்பற்றினன். அது பின்னர் அவனுக்கு ஒரு சிற்றரசாக அளிக்கப்பட்டது. ஆனல், சிாாலந்து குளுக்குசுடாட்டு என்னும் பலம் பொருந் திய கோட்டைகளை உவாலந்தீன், கில்லி என்பார் தாக்கியமை விணுயிற்று. ஆகவே, 1629 ஆம் ஆண்டில் பேராசன், உலூபெக்குப் பொருத்தனையை நிறை வேற்றி, போரின் இரண்டாம் கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இணங்கினன். நான்காம் கிறித்தியன் தன் சொந்த மரபுரிமையான ஆள்புலங்களை மீண்டும் பெற்றன். ஆனல் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சேர்மனிய விசுப்பாண்டவர்

முப்பதாண்டுப் போர் 149:
உரிமைகளைத் துறந்து, சேர்மனிய அலுவல்களில் இனிமேல் தலையிடுவதில்லை யென வாக்குறுதி செய்தான்.
ஈடுசெய்தற் கற்பனை
சேர்மனியில் பேரரசன் இப்போது பூரணமான ஆதிக்கம் பெற்றிருந்தான். 1629 மாச்சு மாதத்தில் ஈடு செய்தற் கற்பனையை' மன்றுபடுத்தத் தனக்குப் போதிய பலமிருப்பதாக உணர்ந்தான். இந்தக் கற்பனைப்படி பாசோப் பொருத் தனக்கு (1552) முன்னரிருந்த நிலைவரம் மீண்டும் ஏற்பட்டது. உலூதர் கொள் கையினரைத் தவிரப் பிற புரட்டெசுத்தாந்தரெவரையும் பொறுதியுடன் நடத்த முடியாது என்பதே இதன் கருத்தாகும். தலைமைக்குருவின் உரிமைகளா கிய மகிடபேக்கையும், பிரமனையும், மிண்டென், கயின், வேடன், உலூபெக்கு என்பவற்றை உள்ளடக்கிய பன்னிரு முக்கியமான விசுப்பாண்டவர் உரிமைகளை யும், இன்னும் நூற்றுக்கதிகமான மடங்களையும் திருச்சபைக்குரிய வேறு தாப னங்களையும் உலூதர் கொள்கையினர் கைவிட வேண்டியவராயினர். ஈடு செய்தற். கற்பனை உவாலந்தீனுக்குப் பெரும் வெறுப்பை உண்டாக்கியது. அதன் நோக்க த்தை அவன் வெளிப்படையாக எதிர்த்தான். எனவே, 1630 ஆம் ஆண்டில், அரச கழகங்களிலிருந்து அந்தச் சிறந்த அரசறிஞனை நீக்கும்படி பேடினந்தைக் கத்தோலிக்க சங்கம் தூண்டியது. மீண்டும் கத்தோலிக்க மதம் வெற்றி யடைந்தது.
கசுத்தாவசு அதோல்வசு
அதன் வெற்றியினல், 1611 ஆம் ஆண்டிற் பதினேழு வயதினனுக இருந்த பொழுதே தன் தகப்பனுக்குப்பின் அரியணை ஏறிய கசுத்தாவசு அதோல்வசு கிகி லடைந்தான். உள்நாட்டலுவல்களிலே உயர் குடியினர் முடியினை எதிர்த்துநின்ற மையாலும், வெளிநாட்டலுவல்களிலே அதன் அயல் நாடுகளாகிய தென்மாக்கு, போலந்து, இரசியா என்பன அச்சுறுத்தியமையுரலும் தன் இராச்சியம் கலங்கி யிருப்பதைக் கண்டான். அவன் அரசெய்திய காலந்தொடக்கம் விழுமியோருடன் நல்லுறவை வளர்த்து, கன் குடிகளின் பொருளாதார வளத்தை வகுப்பு வேற் அறுமை காட்டாது விருத்தி செய்தான். வெளிநாட்டுப் பகைவர்களை வெற்றி கொண்டமையால், சுவீடினை வட ஐரோப்பாவில் முதன்மை சான்ற வல்லரசாக நிலைநாட்டினன். கசுத்தாவசு தன் சுவீடிசு அரசின் படைபலம் யாவற்றிற்கும் எசமானனய், போலந்து, தென்மாக்கு, இரசியா என்னும் நாடுகளைப் புறங் கண்டு, 1630 இல் சேர்மன் போராட்டத்திலே தீர்க்கமான பங்கு கொள்ளும் நிலை யிலிருந்தான். வட சேர்மனியிற் கத்தோலிக்க பிற்போக்கின் வேகத்தைத் தடுப் பது இன்றியமையாததெனக் கருதினுனெனினும், அவன் உட்கோள் தனியே சமயச் சார்புடையதாக இருக்கவில்லை. அவன் புரட்டெசுத்தாந்த மதத்தில் நிலைத்த ஆர்வத்தோடு, கடவுட் பற்றுமுடையவனென்பதில் ஐயமில்லை. ஆனல் உவாலந்தீனைப் போலவே அவனும் பொறுதியுள்ளவன். தன் சொந்த நாட்டிலோ சேர்மனியிலோ கத்தோலிக்க சமயத்தை வேரோடும் அறுக்க வேண்டுமென்று அவன் முயற்சி செய்யவில்லை. எனினும், போற்றிற்குப் பிரதேசத்திற் சுவிடினின்

Page 85
50 முப்பதாண்டுப் போர்
ஆதிக்கத்தைத் திண்ணமாக நிலைநாட்டவும், சேர்மனியிலுள்ள புரட்டெசுத்தாந் தருக்குத் துணை புரியவும், ஒருவேளை தெறகிலுள்ள அபிசுபேக்கரின் போாசை ஒப்ப, வடபகுதியில் ஒரு பேரரசைத் தனக்கென நிலைநாட்டவும் அவன் தீர்மா னித்தான்.
1628 இல், தென்மாக்குடனும் 1629 இல் போலந்துடனும் அமைதிப் பொருத் தன செய்து கொண்டபின்னர், 1630 செத்தெம்பர் மாதத்திற் கசுத்தாவசு அதோல்வசு 36,000 வீரரைக் கொண்ட படைக்குத் தலைமைதாங்கி பொம ரேனியாவுட்புகுந்தான். அப்படை திறமான போர்ச்சாதனங்கள் உடையதாய் சிறப்பாகப் பயிற்றப்பட்டதாயிருந்தது. பாசறையிலிருக்கும் பொழுது படை விரர் ஒவ்வொரு நாளும் இருமுறை தேவாராதனைக்குச் செல்வார்கள் ; கொள்ளை யடிப்பது தடுக்கப்பட்டது; எல்லா உணவுப் பொருள்களுக்கும் உடனே காசு கொடுக்கப்பட்டது. தில்லி, மான்சுபெல், உவாலந்தீன் போன்றவர்களுடன் சென்ற நாடோடி விசாரின் மூர்க்கமான செயல்களால் பல ஆண்டுகளாகத் துன் புற்றிருந்த சேர்மனியருக்கு, கசுத்தாவசும் அவன் வீரரும் தேவலோகத்தி லிருந்துவந்த தேவதூதர்கள் போற் காணப்பட்டார்கள்.
கசுத்தாவசு தன் படைஞரிடைப் பேணிய ஒழுக்காறு கண்டிப்பாக இருந்த வாங்கு, அவன் போர் விாகும் ஒப்பரிய சிறப்புடைத்தாய், செவ்விநோக்கி எளி தின் மாறுவதாய் விளங்கிற்று. அதனல் அவனுக்கு வெற்றிக்குமேல் வெற்றி கிட்டியது. ஆனற் சேர்மனியில் அவன் பணிநெறி மிகச் சிறந்ததாயினும் அதிக காலம் நீடிக்கவில்லை. அவன் பிாந்தன்பேக்கின் தேர்வுரிமையாளனும் ஒகன்சொ லேன் குலமுறையினரில் வலிமை மிகக் குறைந்தவனுமான யோட்சு உவிலியம் என்பான நெருக்கி 1631இல் தன்பாற் சேரும்படி செய்தான். ஓராண்டின் பின் னர், பேரரசனின் பொறுதியின்மையால் ஈற்றில் அவனை எதிர்த்து நின்ற, சட்ச னியைச் சேர்ந்த யோன் யோட்சு என்பானுடன் ஒரு பொருத்தனையை நிறைவேற்றினன். செத்தெம்பர் 17ஆம் திகதி கசுத்தாவசு பிறைற்றன்பெல் என்னுமிடத்திற் பெரு வெற்றியடைந்து, அவ்விடத்திலிருந்து வெற்றி ஆடம்ப ரங்களுடன் தென் சேர்மனிக்கூடாக அணிவகுத்துச் சென்று, மென் என்னு மிடத்தில் நத்தாரைக் கொண்டாடினன். புதுவருடத்தில் (1632) இலே எனு மிடத்தில் நடந்த போரில் வெற்றியடைந்து (இங்கே கில்லி கொல்லப்பட்டான்) மியூனிக்கைக் கைப்பற்றினன். பேரரசன் பீதியடைந்து உவாலந்தீனத் திருப்பி யழைத்தான். நவம்பர் 16 ஆம் திகதி அந்தக் கீர்த்திபெற்ற சேனபதி இலைச் சிக்கு என்னுமிடத்திற்கு அண்மையில், உலூட்சன் என்னுமிடத்திற் சுவீடிசு விர ரோடு போர் புரிந்தான். அப்போரிலே புகழ் சுவிடியரைச் சார்ந்திருந்தது ; ஆயின் அதன் பயன்கள் உவாலந்தீனை அடைந்தன. சுவீடிசு மக்கள் தங்களா சனை இழந்தனர். * ஒருமுகமான வீரத்துடனும் ஒருமுகமான உள்ளத்துடனும், புரட்டெசுந்தாந்த சேர்மனி வெட்கமடையும் வண்ணம், தனித்து நின்று, தன் அறிவாற்றல் படைத்த நுண் புலத்தாலும், உயர்தரமான பற்றுறுதியாலும் தன் எதிரிகளின் ஒரு முகப்படுத்தப்பட்ட சத்திகளையும் நண்பர்களின் இழிவான கோழைத்தன்மையையும் வெற்றிகொண்டான். ' பேரறிஞர் பிறிச்சு இவ்வாறு

முப்பதாண்டுப் போர் 151.
கசுத்தாவசு அதோல்பு பற்றி நேர்த்தியான நுண் அறிவுடன் புகழுரை கூறி ஞர். இப்புகழுரை பெற அவன் தகுதிவாய்ந்தவனே.
உலூட்சன் போரின் பின்னர் உவாலந்தீன் ஏன் வாளாவிருந்தானென்பதை விளக்கிக் கூற முடியாது. அதற்குக் காரணம் நம்பிக்கைத் துரோகமெனப் பேசா சன் எண்ணியது சரியாயிருக்கலாம். ஈடுசெய்தற் கற்பனையைப் பிறக்கீடு செய் யும்படியும், போற்றிக்குப் பிரதேசத்திற் சுவீடிசு மக்களுக்குச் சலுகை காட்டும் படியும், தனக்குப் பெரிய நட்டஈடு கொடுக்கும்படியும் உவாலந்தீன் நெருக்கினன் என்பதில் ஐயமில்லை. அவன் கோரிய இந்நட்டஈடு பொகீமியாவின் முடியாயு மிருக்கலாம். இசுப்பானிய சேர்மானிய கத்தோலிக்கரின் கோரிக்கையின்படி அவன் மீண்டும் சேனுபதிப் பதவியினின்றும் நீங்கப்பட்டு, 1634, பெப்புருவரி 25 ஆம் திகதி அவனும் அவன் ஆதரவாளரும் நம்பிக்கைத் துரோகமாகப் படு கொலை செய்யப்பட்டனர். உலூம் என்னுமிடத்திற்குக் கிட்டவுள்ள நோடுலிங்க னிற் பேரரசுக் கட்சியினர் எய்திய சிறந்த வெற்றி, தென் சேர்மனியிலுள்ள கத் தோலிக்கருக்குப் பாதுகாப்பாயதுமன்றி, 1635, மே மாதத்தில் பிராக்கு என்னு மிடத்திற் சட்சனியைச் சேர்ந்த யோன் யோட்சுடன் மூன்ரும் முறையும் அமைதிப் பொருத்தனை செய்யப் பேரரசனுக்கு உதவியது. பிராக்குப் பொருத் 5àT உலூதர்களுக்குச் சாதகமான நியதிகளைக் கொண்டதாயினும், கல்வின் கொள்கையினரின் பாதுகாப்புக்கு எவ்வித முன்னெழுங்கும் செய்யவில்லை. அத் தகைய அடிப்படையிற் சேர்மனியிலோ ஐரோப்பாவிலோ நிரந்தரமான அமைதி நிலவ முடியாது.
பிரான்சிய காலம்
கசுத்தாவசினதும் உவாந்தீனதும் மரணத்தாலும் பிராக்குப் பொருத்தனை யாலும் முதன்முறையாகப் பிரான்சு, போரில் ஒரு முக்கிய பங்கு எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கருடன் கடைசி முடிவு காணுந் தருணம் வந்துவிட்டதீென இரிசிலூ கண்டான்.
பிறப்பால் தகுதி குறைந்த விழுமியோர் குலத்தைச் சேர்ந்தவனுன ஆமந்து கியூப்பிளேசி தி இரிசிலு என்பான் 1585 இல் பாரிசிற் பிறந்தான். இராணுவத் திற் சேசக் கல்வி பயின்ருனுயினும், 1605 இல் அத்தொழிலைக் கைவிட்டு உலூக் கன் விசுப்பாண்டவருரிமையை ஒப்புக்கொண்டான். 1608-14 காலப் பகுதியில் தன் சமய ஆட்சிப் பகுதியில் வசித்து, அதன் பாலனத்திற் பற்றுறுதி கொண்டி ருந்தான். 1614 இல் குடித்திணைமன்றத்திற் குருவாயத்தின் பிரதிநிதியாகத் தெரியப்பட்டான். சிறிது காலத்துக்குப் பின்னர் (1616) அரச அமைச்சனுக அமர்த்தப்பட்டான். 1662 இல் போப்பாண்டவர் காடினலின் பதவியை அவனுக்கு வழங்கினர். 1624இல் அவன் பதின்மூன்ரும் உலூயியின் முதலமைச் சனுன்ை.
அவன் அமைச்சுக் காலத்துப் பிரான்சின் உள்நாட்டலுவல்களைப் பற்றிப் பின்னைய அதிகாரமொன்றிற் கூறப்படும். அவன் அமைச்சின் தொடக்க காலத் கில் விழுமியோரதும் இயூசனரதும் பூட்கை அவனுக்கு இடையூருயிருந்தது.

Page 86
52 முப்பதாண்டுப் போர்
இவர்கள் பிரான்சின் நாட்டின ஒற்றுமைக்கு வரும் கேட்டைப் பொருட்படுத் தாது, தங்கள் சுயநலங்களையே ஆவலுடன் நாடினர்கள். எனினும், உள்நாட் டிலே பிரான்சுக்கு மாமுனவரை நசிப்பதிற் பிரதானமாக ஈடுபட்டிருந்தானுயி னும், ஐரோப்பிய நிலைமை காரணமாகப் பிறநாடுகளாற் பிரான்சுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றிக் கவனமற்றிருக்கவில்லை. நான்காம் என்றியைப் போல் அவனும் சமய சமரசத் தத்துத்தை அடிப்படையாகக் கொண்ட ஐரோப் பிய சமரச நிலையைக் காணப் பெரிதும் அவாக்கொண்டிருந்தான்.
அபிசு பேக்கரின் ஆதிக்கத்தால் அச்சமரச நிலை குழம்பியது. பிரான்சு, தன் னைப் பகை நாடுகள் வட்டமாகச் சூழலாமென அஞ்சியது. ஒசுத்திரியரையும் இசுப்பானியரையும் இணைக்கும் சங்கிலியை முறிக்கும் பொருட்டு இரிசிலூ சுவிசு நாட்டுக் கூட்டிணைப்பிலுள்ள ஒரு கோட்டமாகிய வற்றலினவைக் கிரிசனருக்குப் பெற்றுக்கொடுத்தான். இசுப்பானியரின் வழியுரிமை, மொன்சன் பொருத்தனை யாற் குறிப்பாகத் தடுக்கப்பட்டது (1621). செராசுக்கோப் பொருத்தனைப்படி (1630), பிரான்சின் ஆதரவிலிருந்த சாள்சு கியூகு தி நெவேசு என்பானுக்கு மாந்துவாக் கோமகவுரிமையைப் பெற்றுக் கொடுத்தான். இவ்வண்ணம் அபிசு பேக்கர் தைரோலுக்குச் செல்லும் பாதையைச் செயலளவில் அடைத்தான். பிரான்சுக்கும் பீதுமனுக்குமிடையேயிருந்த எல்லைப்புறக் கோட்டையாகிய பினரோலோவைக் கைப்பற்றிச் சவோயை அடக்கி வைத்தான். இவ்வண்ணம், இத்தாலிக்குப் போக்கு வரவு செய்தற்கான வாயில்களின் ஆட்சி அவன் கைப் பட்டது. இவ்வளவும் பிரான்சின் பாதுகாப்புக்கு இன்றியமையாதவெனக் கருதி னன். அதே வேளையில், எட்டாம் சாள்சும் முதலாம் பிரான்சிசும் செய்த தவறு களைத் தவிர்த்தான். இத்தாலியிலுள்ள பிரான்சிய ஆட்சிப்பகுதிகள் பிரான்சின் பலத்திற்கன்றி, அதன் பலவீனத்திற்கே ஏதுவாயிருந்தன. தென் கிழக்கில் அல் பிசு மலைகள் பிரான்சின் இயற்கையான எல்லைப்புறமாயிருந்தன. அவ்வெல்லை யைக் கடக்க இரிசிலூ விரும்பவில்லை.
சேர்மனியில் தலையீடு
1635 வரையும் சேர்மனியிற் பிரான்சின் மரபு வழக்கான பூட்கையைப் பின் பற்றுவதில் அவன் திருத்திப்பட்டிருந்தான். அதாவது, அபிசுபேக்குப் பேராசரை எதிர்த்து நிற்கப் புரட்டெசுத்தாந்தச் சிற்றரசர்களுக்கு ஆதர வளிப்பதாகும். 1631இல் கசுத்தாவசுடன் பாவால்தேப் பொருத்தனையை நிறை வேற்றியிருந்தான். இவனையும் சேர்மனியிலே தலையிடும்படி ஊக்கப்படுத்தினன். கசுத்தாவசு தேவையான ஆட்களையும், இரிசிலூ தேவையான காசையும் உதவ வேண்டியிருந்தது. போற்றிக்குக் கடற்கரைகளிற் சுவீடினின் நலவுரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும். புரட்டெசுத்தாந்தச் சிற்றரசர்களுக்குப் பேரா சிலுள்ள அவர்கள் உரிமைகள் கிருப்பிக் கொடுபடல் வேண்டும் ; பேரரசின் ஒருமுகப்படுத்தும் பூட்கை எதிர்க்கப்படவிருந்தது.
கசுத்தாவசின் மரணம், நோடுலிங்கனிற் சுவீடிசு மக்களின் தோல்வி, பேராசன் மும்முறை பெற்ற வெற்றி, ஆகிய இவை இரிசிலுவை நேரடியாகத்

முப்பதாண்டுப் போர் 153
தலையிடும்படி தூண்டின. அரசனின் மரணத்தின் பின், சுவீடிசு அலுவல்களில் மேல் அதிகாரம் பெற்ற மண்டிலநாயகனகிய ஒச்சந்தியேனுடன் பொருத்தன நிறைவேற்றினன். யுத்தகளத்திற் கசுத்தாவசுக்கொப்பான பேராற்றலுடைய வனும் சாச்சே-உவைமாரைச் சேர்ந்தவனுமான பேணுட்டுடனும், சேர்மனி யிலுள்ள வேறு புரட்டெசுத்தாந்தச் சிற்றரசர்களுடனும், அண்மையிலே திருத்தப்பட்டு, புதிதமைக்கப்பட்ட சமய ஆர்வலர் சங்கத்துடனும், ஒல்லந்த ருடனும் (இவர்களுடன் இசுப்பானிய நெதலந்தைப் பங்கிட முன்வந்தான்), சவோய்க் கோமகனுடனும் (இவன் சவோயைப் பிரான்சுக்கு அளித்து அதற் குப் பதிலாக உலம்பாடியைப் பெறவேண்டியவனனன்), மாந்துவா, பாமா எனும் பகுதிகளின் கோமக்களுடனும், சுவிசு மக்களுடனும் உடன்படிக்கைகளை விரை வாக நிறைவேற்றினன். இவ்வண்ணமே பிரான்சின் இயற்கை எல்லைப்புறங்கள் காப்பாற்றப்பட்டன. ஒசுத்திரிய-இசுப்பானிய அபிசுபேக்கர் பிரான்சைச் சூழ் வதும் இவ்வழி தடுக்கப்பட்டது.
1635 யூன் மாதத்தில் இசுப்பெயின் மீது முறைப்படி யுத்தப்பிரகடனஞ் செய்யப்பட்டது. பிரான்சியர் இடையீடின்றி வெற்றிபெறவில்லை. ஆனல், 1637 இற்கும் 1642 இற்குமிடையில் எல்லைப்புற மாகாணங்களாகிய ஆட்டுவா, அறசு, (வடகிழக்கில்), அல்சேசு (தென்மேற்கில்) உரூசியோன் என்பனவற்றை வென்று கொள்வதற்கு இடைவிடாது அவர்கள் முன்னேறினர். கற்றலோனியாவிற் கலகம் நிகழ்ந்தமையாலும் போத்துக்கேயர் தம் சுதந்திரத்தை மீண்டும் சாதித்தமை யாலும் இசுப்பெயினின் பலங் குறைந்து பிரான்சின் வேலை எளிதாயது.
இதற்கிடையில் அந்தப் பெரிய நாடகத்தின் கதர்பாத்திரங்கள் மாறினர். இரண்டாம் பேடினந்து 1637இல் இறந்தான் ; இரிசிலுTவும் 1642 இல் இறந்தான். புதிய நடிகர்கள் முக்கியமான பாகங்களை மேற்கொண்டனர். காடினல் மசரின் இரிசிலூவின் பதவியில் அமர்த்தப்பட்டான். யுத்த களரியில் அக்காலத்தில் மிக வும் திறமை படைத்த போர் வீரர் இருவர் அவனுக்குத் துணை புரிந்தனர். அவர்கள் கொந்தேயின் சிற்றரசனின் மூத்த மகனும் இளவயதினனுமான தியூக்கு இடாஞ்சனும், மரேசல் அாான் என்பானும் ஆவர். கொந்தே உருெக் கிறுவாவில் (1643) அடைந்த சிறந்த வெற்றி இசுப்பெயினின் படைப்பலத்தைத் துடைத்து, பிரான்சுக்கு நெதலந்தில் ஆதிக்கம் அளித்தது. பிறைபேக்கிலும் (1644) நோடுலிங்கனிலும் (1645) அவர்கள் அடைந்த வெற்றிகள் மேல் இாைனிலந்தில் தலையாய நிலையை அளித்தன. தோச்சென்சன், இராங்கல் என்போரின் தலைமையிற் சுவீடியர் போற்றிக்குப் பிரதேசத்திலிருந்து பிராக் கின் வாயில் வரையும், ஏறத்தாழ வியன்ன வரையும், சேர்மனிக்கு நேர் ஊடாக அணிவகுத்துச் சென்று, தாசனுடன் ஒன்று சேர்ந்து, பவேரியாவைப் பாழாக்கினர். சேர்மனியிலும் அல்சேசிலும் நெதலந்திலும் தசுக்கனியிலும் முற்முக முறியடிக்கப்பட்டு, நேப்பிளில் கலகம் நிலவ, போத்துக்கல் சுதந்திரம் அடைய, ஆபிசுபேக்கர் ஈற்றில் சமாதானஞ் செய்ய ஆயத்தரானர்கள். •

Page 87
154 முப்பதாண்டுப் போர்
மன்சிாரிலும் ஒசுனுபுறாக்கிலும் இணக்கப் பேச்சுக்கள் சில ஆண்டுகளாக நடந்தேறியபின், 1648, ஒற்ருேபர் 24 ஆம் திகதி அமைதிப் பொருத்தனை
கைச்சாத்திடப்பட்டது.
உவெசுபேலியாப் பொருத்தனைகள்
நீண்ட தொடர்ச்சியான போர்களின் விளைவுகளும், அமைதியில் அவ்விளைவு களின் பிரதிபலிப்பும் சேர்மனிக்கும் பிரான்சுக்கும் போற்றிக்குப் பிரதேச வல்லரசுகளுக்கும் ஐரோப்பா முழுவதற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை யாயிருந்தன.
(1) இந்தப் பொருத்தனை, ஒரு நூற்முண்டாகச் சேர்மனியில் நிகழ்ந்த சச்சுரவுகளுக்கு முடிவு கண்டது. கத்தோலிக்கருக்கும் புரட்டெசுத்தாந்தருக்கு மிடையில் நிரந்தரமான ஓர் எல்லைக்கோட்டை வரைய முயற்சி செய்தது. இவர் கள் 1524 இல் முறையே ஆட்சி செய்த பகுதிகளை வைத்திருக்கவேண்டி யிருந்தது. உலூதர் கொள்கையினர் அனுபவிக்கும் சிறப்புரிமைகள் யாவும் கல்வின் கொள்கையினருக்கும் அளிக்கப்பட்டன. இதுமுதற்கொண்டு கத்தோ லிக்கரும் புரட்டெசுத்தாந்தரும் பேரரசுக் கழகத்திற் சம உரிமையுடன்
சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
(2) அரசியற்றுறையில், புனித உரோமப் பேரரசு ஆவி உருவாக 1806 வரை யும் கடந்து நிலைத்ததெனினும், இந்தப் பொருத்தனை செயலளவில் அதன் முடிவைக் குறித்தது. இது முதற்கொண்டு பேரரசன் செயலளவிற் சுதந்திரமான நாடுகளின் ஒரு தளர்ந்த கூட்டிணைப்பின் தலைவனேயாவான் ; மேலாண்மை அவனுக்கு வேறு கிடையாது. சேர்மனியின் உண்மையான இறைகள் வெளி நாட்டு அரசவைகளுக்குத் தங்கள் சொந்தப் பிரதிநிதிகளை அனுப்பவும், பேரரசின் உரிமைகளைப் பாதிக்காவகையிற் போர்புரியவும் பொருத்தனைகள் செய்யவும் உரிமைபெற்ற ஆள்புலச் சிற்றரசர்களாயினர். இதுவரையும் குடித்திணை மன்றமாயிருந்த சட்டசபை இப்போது செயலளவிலே தூதமைச்ச ரின் கழகமாயது.
(3) சேர்மனியில் ஏற்பட்ட ஆள்புல மாற்றங்களும் முக்கியமானவை. பவேரி யாவைச் சேர்ந்த மாச்சிமிலியன் மேற் பலற்றினேற்றையும் தேர்வுரிமைப் பதவி யையுங் கைவிடவில்லை. ஆனல் தேர்வுரிமையாளஞன ஐந்தாம் பிாதரிக்கின் மகன் சாள்சு உலூயி, கீழ்ப்பலற்றினேற்றைத் திரும்பப் பெற்று, எட்டாம் தேர் வுரிமையாளனுக்கப்பட்டான். கீர்த்திவாய்ந்த தேர்வுரிமையாளனன பிரதரிக்கு உவிலியம் (1640 இல்), உரிமைபெற்றதனுல், பிரந்தன்பேக்கு போரிலிருந்து வெற்றியுடன் வெளியேறியது.1 அது மேற்குப் பொமரேனியாவைச் சுவீடினுக்கு ஒப்படைக்கவேண்டியதாயிற்று. ஆனல், கிழக்குப் பொமரேனியாவைத் தன்
19 ஆம் அத்தியாயத்தைப் பார்க்க.

முப்பதாண்டுப் போர் 55
னிடம் வைத்திருந்தது ; அன்றியும், அல்பசுTாற்று, கமின், மிண்டென் என்னும் விசுப்பாண்டவ உரிமைகளையும் மகிடபேக்கின் பெரும் பாகத்தையும் ஈட்டியது.
சிறிய பகுதி சட்சனிக்கு உரியதாயிற்று.
சுவீடின்
போரில் எடுத்துக்கொண்ட சிறந்த முயற்சி காரணமாகச் சுவிடினனது போதுமான அளவு நட்ட ஈட்டை அமைவாகப் பெற்றது. மேற் பொமரேனியா வைத் தவிர சித்தெற்றின், உரூசன் தீவு, மெக்கிலன்பேக்கிலுள்ள உவிசுமார் என்னும் சிறந்த துறைமுகம், வேடன், பிரமன் என்னும் விசுப்பாண்டவ உரிமை கள் என்பனவற்றை அது பெற்றுக்கொண்டது. பேரரசுச் சபையில் மூன்று வாக்குரிமை பெற்றதோடு எல்பு, உவேசர், ஒடர் என்னும் மூன்று பெரிய சேர்மன் நதிகளின் ஆட்சியையும் பெற்றது.
இரைன் ஆற்றுமுதலிலுள்ள சுவிற்சலந்தும், அந்நதியின் பொங்கு முகத் கிலுள்ள ஐக்கிய மாகாணங்களும் சுயாதீனமான குடியரசுகளாக அங்கீகரிக்கப்
பட்டன.
பிரான்சு
எல்லா நாடுகளிலும் பார்க்கப் பிரான்சே விழுப்பயன் பெற்றது. அது பிரை சாக்கையும் ஒசுத்திரிய அல்சேசையும் பெற்றது (1861 வரையும், சுயாதீன நகர மான திராசுபேக்கு தவிர்த்து விடப்பட்டது) ; மெற்சு, தூல், வேடன் என்னும் மூன்று விசுப்பாண்டவ உரிமைகளும் அதன் பொறுப்பில் முறைப்படி விடப் பட்டன; பிலிப்பிசுபேக்கு என்னுமிடத்திற் காவற்படை வைத்திருக்க உத்தர வளிக்கப்பட்டது. கோட்டைக்கும் பாலிற்குமினிடயில் நதியின் கிழக்குக்கரை யில் அரண்கள் அமைத்தல் தடுக்கப்பட்டது. இசைன் நதிப் போக்குவரத் துரிமை எவ்வித கட்டுப்பாடும் இலதாகவேண்டியது. சுருங்கக் கூறின், இாைன் நதி இரு கோடியிலும் பலமுள்ள சுயாதீனமான அரண்களாற் காவல் செய்யப் பட்டு, அதன் நடுநீளம் நெடுகிலும் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரட் பட்டு, சேர்மனுக்குரியதன்முயிற்று. 1871 வரையும் சேர்மனி பிரான்சின் தயவிலேயே தங்கியிருக்கவேண்டியதாயிற்று. சவோய்க் கோமகனிடமிருந்து, இத்தாலிக்குள் நுழைய ஒரு வாயில் போன்ற பினரோலாவைப் பிரான்க பெற்றுக்கொண்டது.
ஒசுத்திரியா
முப்பது ஆண்டுப் போரினல் பேரரசு அழிந்ததெனினும், இக்கால ஒசுத்திரிய தோன்றியது. அல்சேசையும் உலொரேனையும் இழந்தமையாற் சேர்மனியும்

Page 88
156 முப்பதாண்டுப் போர்
பேரரசும் பெரிதும் பாதிக்கப்பட்டவெனினும், ஒசுத்திரியா, அங்கேரி, பொகீ மியா, இசுத்திரியா, கரிந்தியா, காணியோலா, தைரோல் என்னுமிடங்களே வைத்திருந்த பேரரசனுக்கு அது பெரு நட்டமாகப் படவில்லை. (பிசு மாக்கு கூறியது போல) புடாபெசுற்றை நோக்கிய அபிசுபேக்கு நாட்டம்' ஆசம் பித்துவிட்டது.
இசுப்பெயின் பிரனிசுப் பொருத்தனை
உவெசுபேலியாப் பொருத்தனையில் இசுப்பெயின் இடம்பெறவில்லை. பிரான் சுடன் நிகழ்த்திய அதன் போர் 1659 வரை இழுபட்டது. பிரான்சில் புரொந்தேப் போர் ஆரம்பித்த படியாலும், கொந்தேயின் இராச துரோகத் தாலும், அது முற்முய் அழிக்கப்படாது காப்பாற்றப்பட்டது. ஆனல், 1657 இல் மசரினுக்கும் குரொம்வெலுக்கும் இடையில் நிறைவேறிய நட்புறவாலும் துரானுக்கு 6,000 ஆங்கில இருப்புப் படைஞர் இரவலாகக் கொடுக்கப்பட்டமை யாலும் அப் பெரும் சேனபதி மாடைக்கையும் தங்கேக்கையும் கைப்பற்றி, இசுப் பெயின் மீது அமைதிக்குரிய நியதிகளை விதிக்கும் வல்லமை பெற்ருரன். பிரனிசுப் பொருத்தனையின்படி (1659) தெற்கே உரூசியோன், சேர்தானி என்னுமிடங்களையும், வடக்கே ஆட்டுவாவையும் பிலாண்டேசிலுள்ள ஒரு தொகையான அரண்களையும் எயினே, இலட்சம்பேக்கு என்னுமிடங்களையும் இசுப்பெயின் பிரான்சுக்கு அளித்தது. பேகண்டியை ஆளும் உரிமை, கொந்தேக் குத் திரும்பக் கொடுக்கப்பட்டது. பதினுன்கரம் உலூயியிக்கும் இசுப்பானிய அரசன் நான்காம் பிலிப்பின் மூத்த மகள் மரியா தெரிசாவுக்குமிடையில் நடந் தேறிய திருமணம் காரணமாக அமைதி மேலும் வலுப்பெற்றது. 50,0000 கிர வுண் சீதனத்தைப் பெற்றதன் மேல் மணமகள் தன் சார்பிலும் தன் பிள்ளைகள் சார்பிலும் இசுப்பானிய அரியணை மீதிருக்கும் சகல உரிமைகளையும் கைவிட வேண்டியிருந்தது. சீதனம் எக்காலமும் கொடுக்கப்படவில்லை. இது காரணமாகப் பின்னர் சிக்கலான பிரச்சினைகள் எழுந்தன. அவற்றை நாம் பின்னர்க் காண்போம்.
உவெசுபேலியாப் பொருத்தனையானது சேர்மனி, பிரான்சு ஆயவற்றின் வரலாற்றிலும் தனிப்பட்ட பிற நாடுகளின் வரலாற்றிலும் புதிய ஒரு காலவதி யைக் குறிப்பதால் முக்கியமாயிருந்தாலும், ஐரோப்பா முழுவதன் வரலாற் றிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கூடிய சிறப்புப் பெறுகின்றது. மதப் போர் கள் முடிந்துவிட்டன. உரோமன் கத்தோலிக்க மதத்தினதும் புரட்டெசுத்தாந் தத்தினதும் எல்லைகள் முடிவாகக் குறிக்கப்பட்டன. பதினரும் நூற்ருண்டின் முன்னரைப்பகுதியில் அழிந்துவிடக் கூடுமெனத் தோன்றிய உரோம திருச்சபை யானது பதினேழாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் இசுப்பெயினிலும் இத்தாலி

முப்பதாண்டுப் போர் 157
யிலும் மாத்திரமன்றி, (இவையே அதன் கடுந்துயர் காலம் முழுவதிலும் அதன் கோட்டைகளாயிருந்தவை), ஒசுத்திரியாவிலும் அதன் சார்பு நாடுகளிலும் பவேரியாவிலும் பிற தென் சேர்மானிய நாடுகளிலும் பிரான்சிலும் பெல்சியத் திலும் ஆட்சி செய்துகொண்டிருந்தது. சேர்மனியிற் பாதியும் சுவிற்சலந்திற் பாதியும் நெதலந்திற் பாதியும், இங்கிலந்து, இசுக்கொத்துலந்து, இசுக்காந்தி னேவியா என்னுமிடங்களும் புரட்டெசுத்தாந்தத்தைத் தழுவி, அவ்வண் ணமே நிலைத்துள. திருச்சபை நிலை மாறவில்லை. கிறித்துவ உலகம் நிரந்தரமாக
இரண்டாகப் பிளவுபட்டது.
போப்பாட்சியானது கிறித்துவ உலகில் வகித்துவந்த சிறப்பு நிலையினின்றும் வழுவியமையாலும் சருவதேச அலுவல்களில் வேருெரு முக்கியமான விளைவுண் டாயது. உரோமன் பேரரசால் உலகத்திற்கு வழங்கப்பட்ட ஒற்றுமையென்னும் மரபுரிமை இப்போது முடிவாகச் சிதறுண்டது. ஐரோப்பா தலைவனற்றிருந்தது. வேறுபாடுகளை இணக்குவதற்கான மேன்முறையீட்டுமன்று போன்ற மேலதி காரச்சபை ஒன்றும் இருக்கவில்லை. இது முதற்கொண்டு சருவதேசப் பூசல்களை வாளினலேயே தீர்த்துவைக்க முடிந்தது. 1648 இன் பின், பூசல்களுக்கு ஒரேது வாக மதம் இருக்கவில்லை. ஆனல், அடுத்த 150 ஆண்டுகளாக நாடுகள் அரசுவ லுச்சமநிலையைப் பற்றியும், வியாபாரத்தைப் பற்றியும், குடியேற்ற நாடுகளைப் பற்றியும், வெவ்வேறு ஆளும் குலத்தினரின் சொந்த நலன்களைப் பற்றியும் எதிர்த்துப் போர் செய்ய வேண்டியனவாயின. பதினெட்டாம் நூற்முண்டின் முடிவில் பிரான்சிய குடியரசினர் பழைய ஒழுங்கு முறைக்கு எதிராக ஒர் அறப் போர் ஆரம்பித்து, நாடுகள் போரா. ஒரு புதிய நோக்கத்தை அளித்தனர்.
A.
போர்களின் காரணங்கள் மாறலாம். ஆனல், போரோ நிலைத்திருந்தது. இரு வயினுெத்த ஒப்பந்தத்தால் (பழைய தத்துவ நூலாசிரியர்கள் கற்பித்ததுபோல) சமூகம் எந்த இயற்கை நிலையிலிருந்து மீட்கப்பட்டதோ அந்த நிலைக்கு மீண்டும் நழுவிப் போவது போலத் தோன்றியது. ஒப்பந்தம் சட்டத்தின் ஆதிக்கத்தைக் குறிப்பாலுணர்த்துவதாகும். இணங்கி வாழும் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டு பிடிக்கப் புதிய நாடுகளுக்கு முடியாதா? அதைச் சருவதேசச் சட்டத்திற் காண லாமென இயூகோ குரோற்றிசு கருதினர். ஆனற் சட்டமோ சட்டவுரிமையைக் குறிப்பதாகும். இறையரசுகளுக்கிடையில் நியாயம் தீர்ப்பவர் யார்? வாளை விட வேறெவ்வித சட்டவுரிமை இருந்திருக்க முடியும் ? இத்தகைய கேள்விகள் முதலில் தற்காலிகமாக மொழியப்பட்டும், வரவர அதிகமாக வற்புறுத்தப் பட்டும் வெளியில் தோன்றியமை, ஐரோப்பாவில் ஒரு புது ஊழியின் தொடக் கத்திற்குச் சான்ருகும். இப்புதிய ஊழியைப்பற்றி இனிக் கூறுவோம்.

Page 89
முப்பதாண்டுப் போர்
158
- - - - - -
* = = = = = = === : * P )
■■■重事 +→. +→. No = *
*司事事r더:
Ilusiusios
因卡卡当日上自母舅
因诅P■
|원] 七星다**그皇國현 目上)
제원 }}ılmış, kılae 孪。
***argāto:) ...
|-
*_**
**
s.**
፴፬ \K\km
zość艋)|-
!”电气 ‘)
„”
%%As !”,전**ዖጂኒ Qぶ
- 科學년t :
_ S S
 
 
 
 
 
 

I
I
1
1 [jጛ፥
1
1曲艺曲
1
1
1 ե:8
1G
1 Էյֆել]
15:11
15:1
1 :
1543
1j辑器
1 է:48,
I
1 tii:T
ItEi::
ItE:
f
G
இரண்டாம் பாகம்
அத்தியாயம் 12
இரிசிலூ, மசரின் என்பார்
காலத்துப் பிரான்சு
பிரான்சிய முடியாட்சி
முக்கியமான திகதிகள் (13ஆம் 14ஆம் அதீதியாயங்களுக்கு மூரியன)
நான்காம் என்றியின், மா:ைம். மாரி தி மெடிக்கியின் பதிவாண்மை. குடித்தினேமன்றம் கூடுதல். மேலும் 1789 வரையும் கூடவிர்ே. இரா உசோசலில் இயூசனர் மன்றம்.
மொரன்பீஜியர்ப் பொருத்த&ன. இரிசிலுா முதல் அமைச்சஐதல்-1642.
இயூசனர் எழச்சி.
இர உரோசர் :மைதி,
இET உரோஜ் முற்றுகையிடப்படல்.
ஆங்கிலேயரின் தஃபீடு, இலா உரோசல் நிபந்தwேமீது சாண்அடைதல்,
அவிாய் Eேதி.
மன்றுவா வழிபுரிமைப் போர்.
" எமாற்றப்பட்டோ நாள்."
பாவாஃப் போருத்தனே.
சொசுக்கோப் பொருத்தனே,
1633-48 முப்பதாண்டுப் போரிற் பிரானசியத் த&யீடு.
இரிசிலூவின் கானம்,
பதிஜன்காம் உலுயி அரசெய்தல்,
மசரின் முதல் அமைச்சமூஜஸ்,
உவேசுபேலியாப் பொருத்தனே,
முதற்புரொந்தேப் போப், உறுவே அமைதிப் போருத்தனேயுடன் பழைய புரொந்தேப் போர் முடிவெய்தியது.
1650-1 புதிய புரோத்தேப் போா.
தாம்வெல்லுடன் பிரான்சியப் போருத்த&ன.
தான்சுச் சமர்.
இனான் கூட்டவை.
பிரணிகப் பொருத்தனே, இசுப்பானிய இன்பந்தாவுடன் பநிஜன்&ாம் உgாயியின் திருமணம், மாரினின் மரணம்.
கொஸ்பேட்டு அமைச்சணுதல்,
235 & 5

Page 90
60
இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
1666
1667
1668
1668
670
இயூசனர் துன்புறுத்தப்படல்.
உரிமைப்போர். பேரரசனுக்கும் பதினன்காம் உலூயியிக்குமிடையிற் பிரிவினைப் பொருத்தனை. எயிச்சிலா சப்பல் அமைதிப் பொருத்தனை.
தோவர்ப் பொருத்தனை.
1672-8 இடச்சுப் போர்.
1674
1678
1680
1681
1681
1682
1683
1684
1685
1686
1688
1690
1690
690
695
1697
1698
1700
1700
101
170
1701
பிரான்சே கொந்தே திரும்பக் கைப்பற்றப்படல். நைமேசன் பொருத்தனை. போப்பாண்டவருடன் பதினன்காம் உலூயி பிணங்குதல். இயூசனர் அயல் நாடு போதல்: சிராசுபேக்கு பிரான்சுடன் வலிந்திணைக்கப்படல். கலிக்கன் தேவாலய நிபந்தனை. கொல்பேட்டின் மரணம். தி மெயிந்தனன் அம்மையைப் பதினன்காம் உலூயி மணஞ்செய்தல். நன்சுக் கற்பனை மாற்றம்.
ஒகசுபேக்குக் கூட்டவை. ஒகசுபேக்குக் கூட்டவையின் யுத்தம். அயலந்திற்குப் பிரான்சியப் படையெடுப்பு. பொயின் சமர்.
பிரான்சில் இரண்டாம் சேமிசு.
குவெசுனலின் “நல்லொழுக்கச் சிந்தனை” இறைசிக்குப் பொருத்தனை. முதற் பிரிவினைப் பொருத்தனை. இரண்டாம் பிரிவினைப் பொருத்தனை. இசுப்பெயினின் அரசனன இரண்டாம் சாள்சு மரணம், பெல்சியன் அரண்களைப் பிரான்சியர் கைப்பற்றுதல். இரண்டாம் சேமிசின் மரணம். ஐந்தாம் பிலிப்பு மதிரித்தை அடைதல்.
1702-13 இசுப்பானிய வழியுரிமைப் போர்.
1702
1704
1706
1706
1708
1709
1710
1713
1713
1714
1714.
1715
இரண்டாம் உலிலியத்தின் மரணம்.
t$ìQ)on Göfth ởrunữ.
இரtய் சமர். மூன்ரும் சாள்சு மதிரித்தில் அரசனகப் பிரசித்தஞ் செய்யப்படல். ஒளதனுட்டுச் சமர்.
மல்பிளக்கேச் சமர்.
போட்டு உரோயலின் அழிவு.
உதிரத்துப் பொருத்தனை.
“இயுனிசெனிற்றசு’ என்னும் கட்டளையை பதினேராம் கிளமந்து வெளியிடல். முதலாம் யோட்சு அரசெய்தல்.
இராத்தாட்டுப் பொருத்தனை.
பதினன்காம் உலூயியின் மரணம்.

இரிசிலுர, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 161
150 ஆண்டுகளாகப் பெரும்பாலும் இடைவிடாது நிகழ்ந்த யுத்தத்தின் விளை வாக, பிரான்சு ஐரோப்பாவில் முதன்மை எய்தாவிடினும் தலைசிறந்த நாடாக விளங்கியது. அதன் சிறந்த நிலை காரணமாகப் பதினேழாம் நூற்றண்டைப் பதினன்காம் உலூயியின் காலமெனக் கூறுதல் சரியே. இம்மகா மன்னன் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் பிரான்சு தன் உன்னத நிலையின் உச்சத்தை எய்தியது. அவன் ஆட்சியிற் பிரான்சிய அரசு தன் அதிகாரத்தின் சிகரத்தை அடைந்தது. இரிசிலூவின் பூட்கை
பதினன்காம் உலூயி முன்னைய ஊழிகளின் பெறுபேறுகளுக்கு உரித்தாளன யினன். முடிதரித்தவர்களும் முடிதரியாதவர்களுமாய, ஒருவர் பின் ஒருவராக வந்த மாபெரும் ஆட்சியாளர்கள் அவன் பின்பற்ற வேண்டிய பாதையை ஆயத் தஞ் செய்திருந்தனர். இவ்வாட்சியாளர்கள் வரிசையிற்முேன்றிய கடைசியிருவர் காடினல்களான இரிசிலூவும் மசரினுமாவர். நாங்கள் முன் கண்டு கொண்டபடி இரிசிலூ 1616 இல் அரசவையில் உறுப்பினனுகச் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஆனல் அவன் இப்பதவியை வகித்த முதலாம் காலப்பகுதி ஐந்து மாதங்களுக்கு மாத்திரம் நிலைத்தது. 1624இல் மாத்திரமே அவன் அரசவையில் தலைமையிடம் பெற்முன். அம்முதன்மையை 1642 இல் அவன் காலமாகும் வரை அவன் கைவிட
அவனை எதிர் நோக்கிய நிலைமையோ, ஆபத்தானதன்றெனினும் இடர் நிரம் பியதாக விருந்தது. அவனுடைய 'அரசியல் ஏற்பாடு' என்னும் நூலின் முக வுரையில் இந்நிலைமை வருமாறு கூறப்பட்டிருக்கின்றது : “ மாட்சிமை கங்கிய நீங்கள் உங்கள் அவையில் எனக்கு ஓர் இடத்தை அளிக்கமாத்திரமன்றி உங்கள் அலுவல்களை நடத்துவதிற் பெரியவொரு பங்கை ஈயத் திருவுளங் கொண்டபொழுது, அரசில் ஆட்சியினெருபங்கு இயூசனர் கையிலிருந்ததென் பது உண்மையாகும். வலிமை படைத்த விழுமியோர் உங்கள் குடியாட்கள் போலல்லாது சுயாதீனமான இறைவர்போல் நடந்துகொண்டனர்; வெளிநாட் டலுவல்களும் நட்புறவுகளும் கவனியாது விடப்பட்டன; பொதுநலன்களுக்கு மேலாகத் தனியாரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது ; சுருங்கச் சொல்லின் அச்சமயத்தில் உங்கள் அதிகாரம் சின்னுபின்னப் பட்டிருந்தது. இந்தத் தாறுமாமுன நிலையில் அரச அதிகாரத்தின் உண்மையான அறிகுறிகளைக் கண்டு பிடிப்பது இயலாததொன்முயிருந்தது . இயூசனரின் கட்சியை அழிக்கவும், விழுமியோரின் கர்வத்தை அடக்கவும், குடியாட்களை முடியின் அகி காரத்திற்கு உட்படுத்தவும், உலக நாடுகளுள் பிரான்சை அதற்குண்மையாயுரிய உன்னத நிலையில் அமர்த்தவும், நான் என் முழுப் பலத்தையும், நீங்கள் எனக் களிக்கத் திருவுளங் கொள்ளும் முழு அதிகாரத்தையும் உபயோகிக்கப் பொறுப் பெற்றேன்".
* இந்நூலை ஆக்கியோர்பற்றி ஐயப்பாடு இருந்த பொழுதும் அதன் வரலாறுபற்றிய பொருண் மையைப் பொறுத்தவளவில் யாதொரு ஐயமுமிருக்கவில்லை. இதன் முன்னுரை இரிசிலூ வினுடையதே. W 3

Page 91
162 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
பிரான்சின் நிலைமையைப்பற்றி இரிசிலூ வகுத்துக் கூறியவை சரியே. அவ னளித்த உறுதிமொழி தெளிவாக நிறைவேற்றப்பட்டது. அவன் பார்வையில் முடியின் அதிகாரமும், பிரான்சின் ஐக்கியமும் மேன்மையும் வெவ்வேருகப் பிரித் தெடுக்க முடியாதனவாயிருந்தன. முடியாட்சியை உயர்த்துவதனல் மாத்திரமே இராச்சியத்தின் சிறப்பைமாத்திரமன்றி அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். இவ்விதம் மாத்திரமே மக்களின் மகிழ்ச்சியும் அபிவிருத்தியும் மேம்பட முடியும். அரசனே மக்களின் தலையாய நலன். அவன் நுண்ணிய அறி வுடன் கூடிய அஞ்சா நெஞ்சுடனும், அசையாத் தீர்மானத்துடனும் தன் அரச லுக்குச் சேவை புரிந்தான்.
இயூசனர்
விழுமியோரினதும் இயூசனரினதும் வலியைக் குன்றச் செய்வதே அவனது உடனடியான வேலையாகும். நாங்கள் கண்டுகொண்டபடி பிரான்சிய புரட்டெசுத் தாந்தம் பெரிதும் உயர் குடிமை சார்ந்தது. ஆகவே வலிமை படைத்த பிரபுக் களையும் இயூசனரையும் பொறுத்தவரையில் இரிசிலூவின் பூட்கை ஒரே தன்மை யதாகும். ஆனல் இவ்விருபகுதியினரையும் பற்றி வெவ்வேருகக் கூறுவதும், முதலாவதாக இயூசனரைப்பற்றிக் கூறுவதும் பொருளைத் தெளிவாக்க உதவியா யிருக்கும்.
நன்சுக் கற்பனை இவர்களுக்குப் பெற்றுக்கொடுத்த நிலைமை நாட்டின் பாது காப்புக்கு ஒவ்வாதெனக் கொள்ளாவிடினும், நாட்டின் ஐக்கியத்திற்கு முரண் பாடாமென்பது இரிசிலூவின் கருத்தாகும். ஆமிசிதுருேங்கு என்பான் 'பிரான் சில் மத யுத்தங்கள்' என்னும் நூலிற் கூறியிருந்ததுபோல, புகழ்ந்து கூறப்படும் அப்பொருத்தனை பொறையுடைமையைப் பொதுவாகச் சட்டவமைதி பெற்ற ஒரு அமிசமாகக் கொண்டிருக்கவில்லை. ஒரு குடியானவனின் வழிபாட்டு முறை யைப் பற்றி அரசாங்கம் கவலை கொள்வதற்கில்லை என்னும் தத்துவத்தை அது ஒப்புக் கொள்ளவில்லை. ஏறத்தாழச் சமமான இரு வல்லரசுகளுக்கிடையே நிறைவேறிய ஒரு சிறிய பொருத்தனைபோன்றே அது இருந்தது. பொதுவாக ஒரு குறித்த வகுப்பினருக்கும், தனித் தனியே குறித்த இடங்களுக்கும் சலுகை கள் அளிக்கப்பட்டன. அரசு அமைப்பினுள் இயூசன வர்க்கத்தார் ஒன்முகச் சேர்க்கப்படவில்லை. அவர்களின் சுதந்திரம் வற்புறுத்தப்பட்டது. இயூசனர் பெற்ற உடன்படிக்கை நியதிகள், ஒருகருத்தில், பெரிதும் சாதகமாயிருந்தன. அவர்கள் பெற்றிருந்த நிலைமை, அவர்கள் நலனையே நோக்கினும், அளவுமீறிய வலிமையானதாகவிருந்தது. பெரும்பான்மையும் பிரான்சின் தென்னகர்வாசிகளா யும், பாரிசிலிருந்து ஆட்சி செய்யும் அரசனைப்பற்றி எப்போதும் ஐயமுடையவர் களாயும், சுதந்திரமடைய வாய்ப்புக்களை எப்போதும் தேடும் உயர் குடிமையாள ரின் நெருங்கிய கூட்டுறவாளர்களாயும், பிரான்சின் வெளிநாட்டுப் பகைவர் களால் முகப்புகழ்ச்சி செய்யப்பட்டு அன்பு காட்டப்பட்டவர்களாயுமிருந்த இயூ சனர் செயலளவிலே தன்னுட்சி புரியும் சமுதாயங்களின் வரிசையினைச் சேர்ந்த னர். எவ்வகையிலும் அவர்கள் முடிக்குக் கட்டுப்படவில்லை. கத்தோலிக்க

இரிசிலுர, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 163
இசுப்பெயினுடனே, புரட்டெசுத்தாந்த இங்கிலந்துடனே, தங்களுக்கு உதவி செய்ய விரும்பும் வேறெந்த வெளிநாட்டு வல்லரசுடனே நட்புறவு கொண்டு, ஐக்கிய மாகாணங்களின் மாதிரியில் ஒரு குடியாசைப் பிரான்சிலே நிறுவ விரும் ! qତotif.
1620 இல் உரோசல் என்னுமிடத்திற் கூடிய இயூசனர் கூட்டம் ‘பிரான்சி னதும் பாணினதும் திருத்தப்பட்ட திருச்சபைகளின் குடியரசினது அடிப் படைச் சட்டம்' எனும் யாப்பை மன்றுபடுத்தியது. இத்திட்டத்தின்படி, குடியி եւյն பாலனத்துக்கும் படையியற் பாலனத்துக்கும் பொறுப்புடைய ஆளுநரைக் கொண்ட எட்டு வேறு வட்டாரங்களாகப் பிரான்சு பிரிக்கப்பட்டது. எங்கெங்கே புரட்டெசுத்தாந்தச் செல்வாக்கு மேம்பட்டிருந்ததோ அங்கெல்லாம் கத்தோலிக் கரின் சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டது. இயூசனர் தங்கள் திட்டத்தைப் பயன்விளைக்கத்தக்கதாகச் செய்ய இங்கிலாந்திலிருந்தும், ஒல்லந்திலிருந்தும் சேர்மானியப் புரட்டெசுத்தாந்தரிடமிருந்தும் உதவிகோரி நின்றனர்.
இவ்வித உரிமை கொண்டாடுதலைக் கண்டு, பிரான்சிய அரச்ாட்சியில், அரச அனுடன் இயூசனரும் பங்கு எடுத்துக்கொண்டனரென இரிசிலூ உரைத்தாலோ, அவர்கள் அத்துணைக் கேவலமாகத் துர்ப்பிரயோகஞ்செய்த சிறப்புரிமைகளை அவன் பறித்தெடுக்கத் தீர்மானித்தான் என்பதாலோ யார்தான் ஆச்சரியப் படக்கூடும் ?
அவன் தேடிய வாய்ப்பை இயூசனர் 1625 இல் தாமே அவனுக்களித்தனர். கோமக்கள் உரோகான், சூபிசு என்னும் இரு சோதரர்களின் தலைமையில் அவர் கள் கலகக் கொடியை உயர்த்தினர்கள். அவர்கள் தெரிந்தெடுத்த தருணம் ஏற்றதே. அரசமாளிகையில் ஒற்றர்களாலும் சதியாலோசனை செய்வோராலும் குழப்பட்டவனும் வற்றலின் பள்ளத்தாக்கலுவலில் மிகுதியும் ஈடுபட்டவனுமான இரிசிலூ இன்னும் தன் பதவியில் உறுதியான நிலையை அடையவில்லை. 1625 முற் பகுதியில் குபிசு பிரித்தனியிலுள்ள பிளவற்று என்னும் சிறு துறையை வேகமாகத் தாக்கிக் கப்பற் படையின் கருவாக இரிசிலூ நம்பியிருந்த நான்கு போர்க் கப்பல்களைக் கவர்ந்து சென்முன். அவன் செய்கை துணிகரமா னதும் வெற்றிகரமானதுமாயிருந்ததெனினும் அவன் வெற்றி அதிக காலம் நிலைக்கவில்லை. இரிசிலூ ஒல்லந்திடமிருந்து இருபது கப்பல்களும் ஆங்கிலேயரிட மிருந்து எட்டுக் கப்பல்களும் கடன் வாங்கி, சில பிரான்சிய யுத்தக் கப்பல்க ளுடன் இறேதிவுக்கண்மையிற் குபிசைத் தோற்கடித்தான். சூபிசு இங்கிலந்துக் குப் பயந்தோடினன். இரிசிலூ 1626 இல், உரோசல் பொருத்தனைப்படி, கத்தோ விக்கர் மலைப்படையும் வண்ணம், தோற்ற புரட்டெசுத்தாந்தர்களுக்கு இலகு வான உடன்படிக்கை நியதிகளை அளித்தான். அவன் காலம் இன்னும் வாவில்லை. மற்றவர்களிலும் பார்க்கப் பொறுமையுடன் அற்றம் நோக்கியிருக்க அவனுக்குத் தெரிந்திருந்தது.
எப்படியாயினும் பதினெட்டு மாதத்திற்குள், போராட்டம் மீண்டும் ஆரம்ப மாயது. இதற்குள் இரிசிலூவின் சொந்த நிலை பெரிதும் உறுதியாயிற்று. மொன்

Page 92
164 இரிசிலுர, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
சுப் பொருத்தனையால் அவன் இசுப்பெயினுடன் இணக்கஞ் செய்து கொண்டான். அரசமாளிகையின் கண்ணே பல சதியாலோசனைகளை நசித்து ஒழித்தான். வலிமை பொருந்திய பிரபுக்களுக்கெதிராகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தான். முதலாம் சாள்சின் அன்பிற்குரியவனும், இறுமாப்புடையவனும், ஆற்றலற்றவனுமான கோமகன் பக்கிங்காம் இவன் கையிற் சிக்குண்டான், ஆங்கிலேயப் பியூரித்தன் வாதிகளின் சிறிதுகால மதிப்பைப் பெறப் பக்கிங்காம் பெரிதும் அவாக் கொண்டான். அதனுல் பக்கிங்காம் உரோசல் முற்றுகையை விடுவிக்கும் நோக்கத்துடன் ஒருவலிமை பொருந்திய கடற் படையைத் திரட்டித் தானே தலைமை வகித்தான். உரோகான் அதே காலத்தில் இலாங்குடொக்கிற் கலகக் கொடியை உயர்த்தினன்.
பக்கிங்காம் தலையீட்டினும் பார்க்க வேளைதப்பிய, கெடுதியான நடவடிக்கை எதுவும் இயூசனர்க்கு நிகழ்ந்திருக்க முடியாயது. அவன் 1627 யூலை மாதத்தில் இறேத் தீவைக் கைப்பற்றியது உண்மையாயினும் சென் மாட்டின் கோட்டை யைக் கைப்பற்றத் தவறிவிட்டான். இதற்கிடையில் இரிசிலூ இந் நெருக்கடியின் முக்கியத்துவத்தைக் கண்டு மனித எல்லைக்கு விஞ்சிய ஊக்கத்துடன் முயற்சி செய்தான். மாட்டின் கூறுவதாவது “காடினல் எங்குங் காணப்பட்டார், எல்லா முமானுர்-தரைப்படைத் தளபதி, கடற்படைத்தலைவர், பொறியியலாளர் தலைவர், படை உணவுத்துறைத் தலைவர், நாட்டுக் காவலர் எனப் பலவாறு செயலாற்றி னர். தம்முடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவர் உள்ளத்திலும் தம் உணர்ச் சித் துடிப்பை ஓர் அளவுக்குச் செறியச் செய்தார். " நவம்பர் மாதத்திற் படை வலுவைப் பெருக்கும் நோக்கத்துடன் பக்கிங்காம் இங்கிலந்துக்குத் திரும்ப வேண்டிய அவசியமேற்பட்டது. இரிசிலூ, துறைமுகத்தின் வாயிலுக்குக் குறுக்கே ஒரு பெரிய அலேதாங்கு கரையைக் கட்டி முடித்து, பக்கிங்காம் அவ் விடமில்லாத வாய்ப்பைப் பயன்படுத்தினன். ' அவன், காலத்தோடு போட்டியிட வேண்டியிருந்தது. ஆங்கிலக் கப்பற்படை மீண்டும் தோன்றுமுன்னர் அலே, தாங்கு கரையைக் கட்டிமுடிக்கும் பிரச்சினையிலேயே யாவும் தங்கியிருந்தன. பல தவறுகளும் சில இடையூறுகளும் ஏற்பட்டபோதும் அப்பாரிய கட்டடம் இரவு பகலாக வளர்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்தது முடியுமுன் ஆங்கி லக் கப்பற்படை தென்பட்டது. ஆங்கிலேயர் பகினைந்து நாட்களாக மீண்டும் ஆவேசங்கொண்ட வீரத்துடன் அரண்களை மும்முரமாகத் தாக்கினர். ஆனல் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இலாஉரோசலைப் பட்டினியால் வருந்த விட்டு அவர்கள் மே 18 ஆம் திகதி தம் நாடு திரும்பினர்.' ஒற்ருேபர் வரையில், பற்றுறுதியுடைய அந்நகர மாந்தர் நாற்பதினயிரவரில் 15,000 பேர் பட்டினி யால் மடிந்தோ, கொல்லப்பட்டோ ஒழிந்தனர். 28 ஆம் திகதி அந்நகர் சரணடைந்தது. இயூசனரின் கட்சி, ஓர் அரசியற் சத்தி என்ற முறையில் (1p/5 முயழிந்தது. செவன்சுப்பகுதியில் உரோகானின் தலைமையிலெழுந்த கலகம் விரைவில் நசிக்கப்பட்டது. 1629 இல் இரிசிலூ அலாய் அமைதிப் பொருத்தனை யின் நியதிகளைப் புரட்டெசுத்தாந்தர் மீது விதித்தான் புரட்டெசுத்தாந்தரிட மிருந்து அன்னருக்குரிய அரசியலமைப்புக்களும், திருச்சபைக்குரிய அமைப்புக்

இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 165
களும், அவர்கள் திருக்கூட்டங்கள் கூட்டும் உரிமையும், அவர் தம் காவற்படை நிறுத்தப்பட்ட நகர்களும் கவர்ந்து கொள்ளப்பட்டன. ஆனல் இன்னும் அவர் களின் வழிபாட்டுச் சுதந்திரம் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட வில்லை. மனச்சாட்சி சுதந்திரம் நன்கு மதிக்கப்பட்டது. பரநெறியாளரைப் பொறுத்துக் கொள்ள இரிசிலூ சித்தமாயிருந்தான். கலகஞ் செய்வோர் நசிக்கப் பட வேண்டும். அரசியலைப் பொறுத்தவளவில் இயூசனரை வெல்ல முடியாத காலம் முடிவடைந்தது. அவர்கள் தீங்கற்றவொரு சமயக் கட்சியராயினர். விழுமியோர்
இயூசனரின் பின் விழுமியோரைப்பற்றிக் கவனிப்போம். நாங்கள் கண்டு கொண்டபடி பிரான்சு ஆள்புல ஈட்டத்தை எய்தப் பல நூற்ருண்டுகள் எடுத் தன. இறுதியிற் பிரான்சு முழுவதையும் ஓர் அரசன் ஆட்சி புரிந்த போதும், வலிமை படைத்த மானியப் பிரபுக்கள் இன்னும் நாட்டின் பெரும் பகுதியை ஆண்டனர். புரட்சியின் பின்பே பிரான்சு அரசியல், நீதிபரிபாலனம், வாரியம் ஆகிய முறைகளுக்கிணங்க ஐக்கியப்பட்டது. இரிசிலூவின் குறிக்கோள் ஐக்கிய மாகும். ஆனல் பிரபுக்கள் மாகாணங்களின் ஆளுநர்களாகவும், தங்கள் சொந்த மாவட்டங்களில் அவர்கள் வாரியம் நீதி ஆகியவற்றின் அதிகாரிகளாகவும், ஒரு மாகாணம் மற்ற மாகாணத்திலிருந்து இறைமுறைத் தடைகளால் துண்டிக்கப் பட்டும் இருக்கும் வரையும் நாட்டில் உண்மையான ஐக்கியமோ பாலனத் திற மையோ விளங்கமுடியாது. எல்லாவிதத் திருத்தங்களுக்கும் மானிய முறைமை தடையாயிருந்தது. ஆகவே மானிய முறைமை முற்முயழிக்கப்படல் வேண்டும்.
அப்பாரிய வேலையை ஆரம்பிக்குமுன், இரிசிலூ, தன்னைக் கொல்ல அரசமாளி கையில் நடைபெறும் சகியாலோசனை பற்றி ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. பதிமூன்றும் உலூயியின் வெறுக்கப்பட வேண்டிய சகோ தான் கசுதன் தி ஒலியன்சு, இரிசிலூவை இசுப்பெயினின் பகைவனென மதித்து அவனை மிக வெறுத்தவளும் தன் கணவன் மீது 4அன்பற்றவளுமான ஒசுத்திரிய இராணி ஆன், தன்கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் இரிசிலூவை அதிகார பீடத்திற்கு உயர்த்தியவளும், ஆளுவதே அவன் கருத்தென உய்த்துணர்ந்த பொழுது அவன்பால் வெறுப்புக்கொண்டவளுமான இராணி மாதா மேரி கி மெடிக்கி ஆகியோர் இச்சூழ்ச்சிக்குழுவின் தலைவராவர். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் : காசுதனின் ஆளுநன் ஒனேனே, வான்டோமியர் இருவர், அரச னின் அரண்மனை முகவர் கொந்தி தி சாலோ என்போர் ஆவர். இரிசிலூவின் ஒரேயொரு நண்பன் அரசன் மாத்திரமே. தன் தகப்பனினதும் மகனினதும் மேன்மையினல் மறைக்கப்பட்டமையால் பதின்மூன்ரும் உலூயியின் ஆற்றல் குறைவாக மதிக்கப்பட்டது. உயர்ந்த கடமையுணர்ச்சியும் நுண்ணிய அறிவும் அவனிடம் ஒருங்கே விளங்கின. ஆனல் அவன் சோம்பேறியாயும் திடசித்தமற் றவனயும் சோர்வுடைய நினைவில் ஆழ்ந்திருப்பவனயும் காணப்பட்டான். என்ரு அலும் அவனிடம் ஒரு பெரிய திறமையிருந்தது. அதிவிவேகத்தைக் கூர்ந்துணர வும் அதன் கட்டளைக்குப் பணிந்து நடக்கவும் அவனுல் இயலும். இரிசிலூ

Page 93
166 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
அண்மையிலிருக்கையில் அவன் பூட்கைக்குப் பலமான ஆதரவளித்தான். அமைச்சன் இல்லாத வேளையில் அவன் பகைவர்களை ஊக்கப்படுத்தும் உளச் சார்பு உடையவனுயிருந்தான்.
அாசமாளிகைச் சதியாலோசனைக் காரர்களின் குறிக்கோள், காடினலைப் படுகொலை செய்து, அரசனை முடிதுறக்கச்செய்து, காசுதனை அரசுகட்டிலில் அமர்த்துவதேயாகும். இந்தச் சூழ்ச்சி மிகவும் பரந்ததாயும், செல்வாக்குப் படைத்தவர்களின் ஆதரவைப் பெற்றதாயுமிருந்தது. ஆனல் இரிசிலூ இச்சூழ்ச் சியைக் கண்டு பிடித்தவுடன் தன் முழுப்பலத்துடனும் தண்டனை விதித்தான். சலே என்பான் தான் செய்த பல சதிச்செயல்களுக்காகத் தூக்குமேடையிற் பிராயச்சித்தம் செய்தான். ஒனேனே வின்செனிலுள்ள சிறையிற் காலமானன். இரு வாண்டோமியரும் தி செவுரேசு சீமாட்டியும் இன்னும் சிலரும் நாடு கடத் தப்பட்டனர். காசுதன் தாழ்மையுடனடிபணிய, இகழ்ச்சியுடன் மன்னிக்கப்
t fl-f f"6ði".
நாட்டிலுள்ள மிகப் பெரியோர்கள் மீது விதிக்கப்பட்ட இத்தகைய all-60Tigயான தண்டனை விழுமியோரின் உள்ளத்திற் பேரச்சத்தை உண்டாக்கியது இரிசிலூதன் முதல் வெற்றியைத் தொடர்ந்து மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு
நடவடிக்கையை மேற்கொண்டான்.
கோட்டைகள் அழிக்கப்படல்
1626 இல், படையெடுப்புக்கு எதிராகவோ உள்நாட்டுப் பகைவர்களிட மிருந்தோ இராச்சியத்தைக் காப்பாற்றத் தேவையற்ற எல்லா அரண்களும், அவை கோட்டைகளிலிருந்தாலும்சரி நகர்களிலிருந்தாலும்சரி, இடித்து அழிக் கப்பட வேண்டுமெனக் கட்டளை விடுத்தான். குடித்திணை மன்றம் அண்மையிற் கூடிய ஞான்று மும்முறை மூன்ரும் குடித்திணை இந் நடவடிக்கையை வேண்டி மனுச்செய்திருந்தது. அரண்செய்யப்பட்ட கோட்டைகளே மானிய முறைக் குக் கேந்திரமான நிலையங்களெனவும், அரண்செய்யப்பட்ட நகர்களே இயூசன் ரின் புகலிடமெனவும் உய்த்துணர்ந்து மிகுமகிழ்ச்சியுடன் அவர்கள் விருப்பங் களை நிறைவேற்றினன்.
நேரிருவர் வாட்போர்
தனியாரின் கோட்டைகளை அழித்தபின் இரிசிலூவின் அடுத்த நடவடிக்கை தனியாரின் சண்டைகளைத் தடுப்பதேயாகும். போற்றி வளர்க்கப்பட்ட இவ்வுரி மையில் நேரிருவர் வாட்போரே கடைசியாக எஞ்சியிருந்த சின்னமாகும். ஒரு வர் பின் ஒருவராய் வந்த அரசர் பலர் இவ் வழக்கத்தை ஒழிக்குமுயற்சியிற் சித்தி எய்தவில்லை. 1627 இல் இரிசிலூ இப்பழக்கத்தைத் தடைசெய்தான். கொந்தி பியூற்றுவில் என்பான் இத்தடைக் கற்பனையை முதலில் மீறியவனு வான். உடனே கைது செய்யப்பட்டு, வலிமை படைத்த உற்ருர் பரிந்து பேசிய போதும் அாக்கு மேடைக்கு அனுப்பப்பட்டான்.

இரிசிலு மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 167
* ஏமாற்றப்பட்டோர் தினம் 1630
சட்டங்கள் ஆக்கப்படுவது அவைக்கு அமைந்து நடப்பதற்கே. காடினலைக் சொல்லுங் குறிப்புடைய அரசமாளிகைச் சதிகளுட் கடைசியதிலீடுபட்ட மன்ன ருழையர் குழுவினர்க்குக் கிடைத்த தீவிரமான தண்டனை அதே அறிவுரையை வற்புறுத்தியது. 1630 செத்தெம்பரில் அரசனைப் பீடித்த கடும்நோய், இரிசிலுர வின் பகைவர்களின் நம்பிக்கைகளை மீண்டும் எழுப்பியது. ஆனல் ‘ஏமாற்றப் பட்டோர் தினம்’ எனக் கூறப்படும் குழ்ச்சியிலிடுபட்ட சதிகாாருள் இராணி கள் இருவரும் ஒலியன்சைச் சேர்ந்த காசுத்தனும், உயர் பதவிகள் வகித்த பல விழுமியோரும், மன்னருழையருஞ் சிலராவர். இவர்களிலொருவரேனும் தண்ட னையிலிருந்து தப்பவில்லை. மண்டிலநாயகனுகிய மாபெரும் தளபதி தி மாரிலாக்கு சிரச்சேதஞ் செய்யப்பட்டான். அரண்மனைச் சீமாட்டிகளிற் பலர் நாடுகடத்தப் பட்டனர். ஒசுத்திரியாவைச் சேர்ந்த ஆன் என்பாள், இசுப்பானிய அரசியற் அறாதருடன் இனிமேல் எவ்விதப் பேச்சும் வைத்திருக்கப்படாதெனத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேரி தி மெடிக்கி பிலாண்டேசுக்கு ஒழித்தோடி, நாடுகடத்தப்பட்டவளாகப் பதினேராண்டு துன்பமணுபவித்து 1643 இற் கொலோனிற் காலமானுள். பிரான்சு அவளைத் திரும்ப எக்காலமும் கண்டதில்லை. ஒலியன்சைச் சேர்ந்த காசுதன், காடினலுக்கு மாமுக மாகாணங்களைக் கிளப்பி விட முயற்சித்துச் சித்தியடையாமல், உலொரேனுக்கு ஒளித்தோடி அங்கே பிரான்சின் கடும் பகைவனை கோமகன் மூன்றும் சாள் சின் சகோதரியை இரக சியமாகத் திருமணஞ் செய்தான்.
தன் மைத்துனனதும், இசுப்பெயினதும், இலாங்குடொக்கின் ஆள்பதியான மொன்மொறென்சி போன்ற மாவிழுமியோர்களினதும் உதவியுடன் காசுத்தன் 1632 இல் வெளிப்படையான ஒரு புரட்சிக்கு ஏற்பாடு செய்தான். இரிசிலூவின் அமைச்சின் எஞ்சிய 10 ஆண்டு முழுவதும் இம்மாதிரியான கலகங்கள் காலத் துக்குக் காலம் நிகழ்ந்தேவந்தன. ஆனல் அவைகிளிலெவையும் சிறிதுகாலத்திற் குத்தானும் வெற்றிபெறவில்லை. 1632 கலகத்தில் மொன்மொறென்சி கைது செய்யப்பட்டு, அவன் சகாக்களான பிரபுக்களும் இன்னும் மற்றப் பிரான்சிய மக்களும் மலைக்கும் வண்ணம், இராசதுரோகியென மரணதண்டனை பெற்ருரன். இரிசிலூவுக்கு இரையானவர்களின் பட்டியலில் இரு கோமக்களும் நான்கு இறை மக்களும், பிரான்சின் மாதளபதி யொருவனும் இடம்பெற்றனர். ' சிறிய மனிதரை ஏன் தாக்கவேண்டும்? சிறுமரங்கள் நிழல் கொடுப்பதில்லை. பெரிய மனிதரையே அறுக்கைப்படுத்தி வைத்திருக்கவேண்டும்,' என்பனவே காடினல் இத்தொடர்பிற் கூறியவையென்க. ஆங்கிலேய தியூடர்களும் இதே போக்கான பூட்கையைக் கையாண்டனர். உயர் குடிமையாளர்களின் ஒழுங்கீனங்களை அடக் குதல், முடியின் அதிகாரத்தை மேற்படுத்துதல் ஆகியவையே அவர்கள் குறிக் கோளுமாகும். மொன்மொறென்சியினது போன்ற தலைகள் விழும் பொழுது, மாவிழுமியோர் அரசாங்கத்துடனும் சட்டத்துடனும் சேட்டை விடுதல் கூடா தென்பதை விளங்க ஆரம்பித்தார்கள் ' என மீசிலே என்பான் எழுதியுள்ளான்.

Page 94
168 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
இரிசிலூவின் சர்வாதிகாரம்
ஆங்கிலேய தியூடர்களைப்போல் இரிசிலூ உண்மையாகவே சர்வாதிகாரத்தை நிலைநாட்டினன். ஆனல் அவர்களைப்போலல்லாமல் அவன் யாப்புறு சட்டசபை யைச் சர்வாதிகாரத்தின் சட்டக் கருவியாக உபயோகிக்கவில்லை. குடித்திணை மன்றம் 1615 இற் கலைந்தபின் 1789 வரையும் மீண்டும் கூட்டப்படவில்லை. பாரிசுப் பாராளுமன்றத்தின் அரசியற் போவாக்கள் அவ்விதமே கண்டிப்பாக அடக்கப்பட்டன. பாராளுமன்றம் கோரிய உரிமைகளின் தகவு நாம் பின்னர் காணப்போகிறபடி, ஐயத்திற்குரியது. அவ்வுரிமைக் கோரிக்கைகளின் தகவு எவ்வாறிருப்பினும், இரிசிலூ, 1641 இற் பிறப்பித்த கற்பனையால் பாராளு மன்றத்தை அரசியலிலும் நிதியியலிலும் தலையிடா வண்ணம் தடை செய்து, காலதாமதமின்றியும் விவாதமின்றியும் அரச கற்பனைகளைப் பதிவு செய்யுமாறு கட்டளை விடுத்தான். இதுவரையும் மறுக்கப்படாதிருந்த, பாராளுமன்றத்தின் நீதி நிருவாகக் கடமைகளும் அவனற் குறைக்கப்பட்டன. வெளிநாட்டிலும் உள்நாட்டிலுமுள்ள தன் பகைவர்களுக்கெதிராகத் தன் அதிகாரத்தை வலி யுறுத்த 1626 இலும் 1627 இலும் பேராளர் மன்றுகளைக் கூட்டினனென்பது உண்மையே. ஆனல் அப்படி அழைக்கப்பட்ட 55 பேராளர்களுள் ஒரு பிரபுவோ, ஒரு மாகாண ஆள்பகியோ சேர்க்கப்படவில்லை. முசோலினியின் பாராளுமன்றங்களின் உறுப்பினர்களைப்போல அவர்கள் நியமிக்கப்பட்டவர்களே யன்றி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்லர். அவர்கள் சபைக்கு வருவது விமரிசனம் செய்தற்கன்று ; சர்வாதிகாரியின் பூட்கையை உறுதிப்படுத்தற்கேயாகும். தலவாட்சி
இரிசிலூ மாகாண ஆள்பதிகளதும், மாகாணக் குடித்திணைகளதும் சிறப் புரிமைகளையுந் தப்பவிடவில்லை. பத்தொன்பது மாகாணங்களில் சில அரசுடை நாடுகள் என்று அழைக்கப்பட்டன. அதிகமானவை தேர்வுடைய நாடு என்று அழைக்கப்பட்டன. பின்னவைகளில் வரிவிதிப்பு வரிதிரட்டல் உரிமைகள் எலுசு எனப் பெயர்படைத்த அரசாங்க அதிகாரிகள் கையிலிருந்தன. இலாங்கு டொக்கு, புரொவென்சு, தோபின், பேகண்டி, நோமண்டி, பிரித்தனி ஆகிய மிகவும் அண்மையில் ஈட்டப்பட்ட மாகாணங்கள், அரசுடை நாட்டின் பகுதி களாக அமைந்தன. இவை குடித்திணைகள் எனப்படும் பிரதிநிதித்துவ நிறுவனங் களையும் பெருமளவு தலத்தன்னுட்சியையும் வரி உரிமைகளையும் இன்னும் கைவிட வில்லை. இவைகள் யாவற்றையும் தேர்வுடைநாடு எனும் வகையில் சேர்க்க இரிசிலூ எடுத்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. ஆனல் பிரான்சு முழுவதை யும் 32 செனரால்களாக அல்லது மாவட்டங்களாகப் பிரித்து, இங்கிலந்தில் மாநகர்மணியம் கடமையாற்றுவதுபோல, ஒவ்வொரு மாவட்டத்துக்குந் தலை வராக மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான மணியகாரன் எனும் அரசாங்க அதிகாரியை இரிசிலூ நியமித்தான். 1624இல் அதிகார பீடத்திலிருந்த, பிரபுக் கள் வகுப்பைச் சேர்ந்த பத்தொன்பது ஆளுநர்களில், இரிசிலூ 15 பேரைப் பதவியினின்றும் நீக்கி, அவர்க்குப் பதிலாகத் தனக்குப் பொறுப்புள்ள அதிகாரி

இரிசிலுர, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 169
களை நியமித்தான். பழைய முறையை முற்முகத் துடைத்தெறியும் வேலை இரிசி அலுரவுக்குத் தானும் இயலாததாயிற்று. அந்தச் சிறு முன்னேற்றத்திற்கும் பிரான்சு புரட்சி வரையும் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனல் உண்மையான முழு அதிகாரமும் மணியகாரன் என்பார் கையிலேயேயிருந்தது. இவர்களே யோன்உலோ என்பான் பின்னர் 130 பிரான்சிய அரசர்கள் ' என அழைத்தான். மத்திய, தல அரசாங்கச் சீர்திருத்தங்களுக்கு முத்தாய்ப்பிடுவதுபோல அரசவை திருத்தியமைக்கப்பட்டது. இவ்வவையின் மீது, கியூடர் அரசர்கள் கோமறைக்கழகமீது சுமத்தியவாங்கு, இரிசிலூ கடமையின் மேற் கடமையைச் சுமத்தினன். ஆணுல் இங்கிலந்திற் பெரிதாக்கப்பட்ட கோமறைக் கழகத்தி லிருந்து படிப்படியாக நிருவாக மந்திரம் தோற்றியதுபோல், பிரான்சிலும் அரசுக்கழகம் அல்லது பிரிவே எனும் சிறிய அந்தாங்கக் குழு வளர்ந்தது.
தசைப்படையும் கடற்படையும்
இரிசிலூ காவற் பிரச்சினையையும் அசட்டை செய்யவில்லை. அவன் தரைப் படையைத் திருத்தியமைத்து, கடற்படையையும், வியாபாரக் கப்பற்ருெகுதி களையும் கட்டுவித்தான். இயூசனரை அடக்குவதற்காக, நாங்கள் கண்டு கொண்டபடி, இரிசிலூ இங்கிலந்திடமும் ஒல்லந்திடமும் கப்பல்கள் கடன் எடுக்கவேண்டியவனுயினன். தான் காலமாகுமுன் 32 யுத்தக் கப்பல்களைக் கொண்ட மத்தியதரைக் கப்பற்படையையும், 24 யுத்தக் கப்பல்களைக்கொண்ட அத்திலாந்திக்குக் கப்பற்படையையும் உருவாக்கினன். தூலோன், இலேகவர் என்னுமிடங்களிலுள்ள அரண்கள் பலப்படுத்தப்பட்டன. பிறகது என்னுமிடத் தில் அவன் மூன்றும் கடற்படைத்தளத்தை நிறுவினன். வெளிநாட்டு வணிகம் ஊக்கப்படுத்தப்பட்டது. குடியேறுதலை விருத்தியாக்கக் கூட்டுக்குழுக்களுக்குப் பட்டயங்கள் அளிக்கப்பட்டன. இரிசிலூவின் ஆட்சியில் தொடக்கி வைக்கப் பட்ட பொழுதிலும், பின்னைய முயற்சிகளின் உண்மையான அபிவிருத்திக்குக் கொல்பேட்டையே காரணகைக் குறிப்பிடவேண்டும். இரிசிலூ ஆற்றல் படைத்த பொருளியல் வல்லுநனல்லன். நிதி நிர்வாகத்தில் அவன் அளவு மீறிச் செலவு செய்பவனுயிருந்தான். நாட்டை அவன் பெரிதும் கடனில் வீழ்த்தினன். இதற்கு அவன் அதிகம் கூடியவிலை கூறுவோனுக்கு விற்கும் ஒரேயொரு நோக்கத்துடன் எண்ணிறந்த, தேவைக்கு மேற்பட்ட பதவிகளைத் தோற்றுவித்தமையும், மானியச் சிறப்புரிமைகள், வாரியவிலக்குக்கள் எனும் அடிப்படைப் பிரச்சினை களைத் தீர்க்க அவன் ஊக்கத்துடன் முயற்சி செய்யாமையும் ஓரளவிற்குக் காரணங்களாகும்.
ஆட்சிமுறையென்றவகையிலே மானிய முறையானது இரிசிலூவால் அழிக்கப் பட்டது. மாவிழுமியோரின் அரசியற் கடமைகளை இவ்வண்ணம் முடி தனதாக்கிய பொழுதும், அவர்களுடைய சமுதாய, வாரியச்சிறப்பு உரிமை கள், புரட்சி வரையும் சற்றேனும் பாதிக்கப்படவில்லை. நேரடியான எல்லா வரிகளிலிருந்தும் அவர்கள் விலக்கப்பட்டார்கள். பண்டைய காலத்திற்
போல் இன்னும் மானிய ஆயங்களுக்கும் வரிகளுக்கும் உரிமை கோரினர்

Page 95
170 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
கள். குடியானவர்கள் இன்னும் தத்தம் நிலக்கிழாரின் மாவாலையில் தங்கள் தானியங்களை அரைக்கவும், அவருடைய உவைன் அழுத்தகத்திலே தங்கள் முந்திரிப்பழங்களின் சாற்றைப் பிழியவும் கட்டாயம் பண்ணப்பட்ட னர். அன்றியும், விழுமியோரைச் சார்ந்து வாழ்ந்த ஊழியர் பலர், தாம் பயிர்ச் செய்து வந்த காணிகளுக்குச் சொந்தக்காரரான பின்னரும் அவ்விழுமியோர்க் குப் பளுவான சேவை பல இன்னுஞ் செய்யவேண்டியவராயினர். இந்த முறை கேடுகளும் இவைபோன்றனவும் இரிசிலூவால் விடப்பட்டு, பழைய ஆட்சிமுறை யின் வீழ்ச்சியை விரைவுபடுத்தின.
மானிய முறை அது சேதமுமுதிருந்த காலம்வரையும் பொறுக்கக்கூடியதா யிருந்தது. சிறப்பு உரிமைகளை ஏற்புடைத்தாக்கிய கடமைகள் மறைந்தபின், உரிமைகளை எஞ்சியிருக்க அனுமதித்தல் புரட்சியை வலியவழைப்பதேயாகும்.
போர்வீரனும், குழியல்வல்லுநனும், சீர்திருத்தவாதியுமான இரிசிலூ வாளி லும் எழுதுகோல் வல்லமை வாய்ந்ததென்பதை மறந்துவிடவில்லை. இலக்கியத் திற்கு ஆதரவளித்தான் ; கல்வியை ஊக்கினன் ; பிரான்சியக் கல்விக் கழகத்தை நிறுவினன். பிரான்சிய அரசியற் செய்திமடலைத் தொடக்கி வைத்தான். இவ் வண்ணமே, ஒரு பிரான்சிய வரலாற்ருசிரியர் கூறியதுபோல் இவன் தற்கால உலகத்தில் எங்கணும் முரண்படுகின்ற சத்திகளாய தனியாட்சி, பத்திரிகை எனு மிரண்டிற்குந் தந்தையாவன்.'"
பிரான்சியத் தனி முதன்மைக்கு அடிகோலிய ஆதிச்சிற்பி இரிசிலூ அல்லன் ; ஆனல் அவனே அக்கட்டடத்தின் முகட்டுக்கல்லே இட்டவனுவான். வலிமை பொருந்திய முடியாட்சி மாத்திரமே பிரான்சுக்கு உள்நாட்டில் ஐக்கியமும், வெளிநாடுகளைப் பொறுத்தளவிற் பாதுகாப்பும் அளிக்கக்கூடுமென்று அவன் பூரணமாக நம்பினன். அவன் எண்ணியது சரியே. குறைநிறையாய்வாளர்பிரதானமாக இங்கிலந்திலுள்ளவர்கள்-இக்கொள்கையைக்கொண்டு, இரிசிலூ நேர்மையற்றவனென எண்ணினர். பிரதிநிதித்துவ நிறுவகங்களை விருத்தி செய்யாததற்கும், தன்னுட்சிமுறையிற் பிரான்சிய மக்களுக்குப் பயிற்சியளிக்கா ததற்கும் அவனைக் குறைகூறியிருக்கின்றனர். ஒரு நாட்டினர் ஓட முயலுமுன் நடக்கப்பழக வேண்டும் என்பதைச் சில குறைநிறையாய்வாளர் மறந்துவிடுகின் றனர். தன்னுட்சி நாட்டினங்களின் பண்பு ஆகும். பிரான்சு உருவாகிக்கொண் டிருந்த ஒரு நாட்டினமாகும். இரிசிலூவின் சர்வாதிகாரம் அந்நாட்டினரின் அரசியற்றுறைப்பயிற்சியின் பிந்திய கட்டங்களிலொன்ருகும். அவன் பதி ஞன்காம் உலூயியிக்கு உரிமையாக விட்டுப்போன நாடு ஒரு பூரண நாட்டினமா யிருக்கவில்லை. உலூயி இழைத்த ஆபத்தான பெருந்தவறு ‘அரசு நானே' எனக் கொண்டு பிரான்சை ஓர் அரசாக மட்டும் நடத்தி அரசையும் முடியாட்சியையும் ஒன்றெனக் கருதியதேயாகும்.
என்றி மாட்டின்

இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 17.
மசரின் (1602-61)
இரிசிலூ 1642 இற் காலஞ்சென்றன். பன்னிரண்டு மாதங்களுக்குள், பெருந் தன்மை பொருந்திய தன் அமைச்சனைப் பின்தொடர்ந்து பதின்மூன்ரும் உலூயி காலமானன். தன் தகப்பனின் பின் அரசனனபொழுது பதினன்காம் உலூயி ஐந்து வயதுக் குழந்தை. ஆகவே அவன் தாய்,-ஒசுத்திரியாவைச் சேர்ந்த ஆன் -பதிலாளியானுள். ஆனல், நற்பேருக இரிசிலூ தன் பதவிக்கு மாத்திரமன்றித் தன் பூட்கைக்கும் ஒரு பின்றேன்றலை விட்டுச் சென்றிருந்தான். குருவும் சீடனும் என்ருலும், இருவரும் பெரும் வேறுபாடுடையவராவர். இரிசிலூ, மாதிரியாக அமைந்த பிரான்சிய உயர் குடிமகன் , ஆணவம் பிடித்தவன் ; விருப்புடையவன். கியூலோ மசரின் மாதிரியான இத்தாலியனவான் ; உரோமிலுள்ள இயேசுதர் கல்லூரி மாணவன் ; பயிற்றப்பட்ட வழக்கறிஞன் ; போப்பாட்சியின் சேவையில் சூழியற்றெழில் கற்றுக்கொண்டவன் , தன் குறிக்கோள்களைப் பின்தொடர்தலில் இரிசிலூவைப்போல மனவுறுதி கொண்டவன்; ஆனல் நடைமுறைகளில் அவனிலும் பார்க்க நெகிழ்வும் சூழ்ச்சித்திறனுமுடையவன்; சிறு குணமும் பெருங்குணமும் நூதனமாகக் கலந்துள்ளவன் ; 'தன்னளவிற் பெரியவனல்ல னெனினும் பெருங்காரியங்களைச் செய்து முடிக்கும் மனிதர்களிலொருவன்.
1630 ஆம் ஆண்டில் மாந்துவாவைப்பற்றிய இணக்கப்பேச்சின்பொழுது இரி சிலூவின் கவனம் மசரின் பால் ஈர்க்கப்பட்டது , 1636 இல், போப்பாண்டவர் தூதனுகப் பிரான்சுக்கு வந்தான் ; மூன்முண்டுகளின் பின்னர் நாட்டுரிமை பெற்ற பிரான்சியக் குடிமகனுகி அரச சேவையிற் சேர்க்கப்பட்டான். அவனை அமைச்சனுக்குமாறு இரிசிலூ பதின்மூன்ரும் உலூயியிக்கு யோசனைகூறிச் சென்முன். உலூயி தன் முறை வந்தபொழுது ஒசுத்திரியாவைச் சேர்ந்த ஆனுக்கு அவனை அமைச்சனக அளித்துவிட்டுச் சென்றன். இவ்வுரிமையைப் பதிலாளி ஏற்றுக்கொண்டது பொதுவாக எவர்க்கும் ஆச்சரியமளித்தது.
முக்கியமானேர் A.
பதின்மூன்ரும் உலூயி மரணமாக, அரண்மனைச் சூழ்ச்சிக்குழுவில் இரிசிலூ வால் அழிக்கப்பட்டவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களும் போக எஞ்சியவர்கள், நம்பிக்கையுடன் பாரிசுக்கு மீண்டும் திரண்டு வந்தனர். இந்த இழிவான அரண் மன அலுவலாளர் தங்களைப்பற்றித் தாங்களே அதிகமாக எண்ணியபடியால் "முக்கியமானேர் ' எனப் பட்டப்பெயர் பெற்றனர். இராணியின் (அன்பைப் பெருவிடினும்) ஆதரவை மசரின் பெற்றிருப்பது கண்டு ஏமாற்றமடைந்து, அவனைப் படுகொலை செய்யச் சகியாலோசனை செய்தனர். அச்சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுச் சதிகாரர் வின்செனுக்கு அனுப்பப்பட்டனர்.
புரொந்தேப்போர் (1648-53) -
மசரினின் அமைச்சின் முதலைந்தாண்டுகளிலும் அவன் சத்தி முழுவதும் யுத்தத்திலேயே பதிந்திருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளும் ' புசொந்தே இயக்கத்தாரின் புரட்சியினல் எழுந்த உள்நாட்டுக் குழப்பத்தில் அவன் ஈடு
பட்டான்.

Page 96
72 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
அந்த ஆண்டுகளிற் பரிசில் ஆடப்பெற்ற, விளையாட்டும் வினையும் கலந்த மிகையான களிநாடகம், புளோரஞ்சிய சோக நாடகம், வெறும் கேலி நாடகம் இவை யாவும் கலந்த நூதனமான கலவையை-பிரான்சிய வரலாற்றிற்ருனும் காண்பதரிது. புரொந்தே இயக்கம் பிரான்சின் அரசியல் வரலாற்றிற்கு உரிய தென்பதிலும் அது இலக்கிய வரலாற்றிற்கே உரியதெனலாம். மக்களைத் தூண்டி விடும் காடினல் தி இரெற்சு, திட்ப உரைகள் புனையும் இலாருேசவுகோல், உயர் தா சமூகத்து வீரமாதுவான தி மொன்பான்சியேச் சீமாட்டி, இராணியின் ஆதரவு பெற்றவர்கள், தி மோதவில்லுச் சீமாட்டி ஆகியோரின் சிறந்த இலக்கி யத்திறனும், அந்த நூதனக் கதைக் கூற்றில் நடிகர்களாகவோ காட்சி காண்பா ராகவோ உதவி புரிந்த பிறரும் இன்றேல், இந்த இயக்கம் பிரான்சிய வரலாற்று அரங்கில் இன்று வகிக்குஞ் சிறப்பிடத்தை வகித்திருக்கமாட்டாது.
என்ருலும், புரொந்தே இயக்கம் ஓரளவிற்கே சிறப்புடைத்தெனினும் உண்மை யான உட்கருத்து வாய்ந்தது. ஆகவே அதனை அரசியற் சரித்திரவாசிரியர்களாற் புறக்கணிக்க முடியாது. குழப்பமடையச் செய்யுந் திரளான விபரங்களுக்கிடை யே, மூன்று முக்கியமான கட்சிகளை உய்த்துணரலாம். அவைகளுள் முதலாவதும் மிகப் பொறுப்பானதும் மிக முக்கியமானதுமான கட்சி பாரிசுப் பாராளுமன்றத் தையும் அதன் கூட்டுறவான மற்றைய மூன்று இறைமன்றங்களையும் கொண்டது. இரண்டாவது கட்சி குருதிவழி இளவரசர்கள், அரசமாளிகை மாபெருஞ் சீமாட்டிகள், வலிமை பொருந்திய மானியப் பிரபுக்கள் ஆகியோரைக் கொண்டது. மூன்றுவது பாரிசுச் சமுதாயமாகும். புரொந்தே இயக்கத்தின் எதிர் ஒலிகள் சில மாகாணப் பாராளுமன்றங்களில், முக்கியமாகப் போடோ நகர மன்றத்திற் கேட்டன. ஆனல் பிரான்சிய புரட்சிகளுளே தானும் புரொந்தே
இயக்கம் பிரதானமாகப் பாரிசைச் சார்ந்ததாகும்.
முதலாவதும் இடர் நிரம்பியதுமான புரொந்தேப் போரிற் ('பழைய புரொந் தேப் போர் ) பாரிசுப் பாராளுமன்றமே தலைமை வகித்தது. இளவரசர்களும், அரண்மனை அலுவலாளர்களும், விழுமியோரும் துணையாளர்களாகவே சேர்ந்த னர். இக்கட்டம் 1648 மே மாதத்திலிருந்து உறுவே பொருத்தன (24.1649) வரையும் நிலைத்தது. பாரிசில் நிகழ்ந்த இக்கட்டத்திற்கு இங்கிலந்தில் அதே காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் அளித்தன. 1648 இல் முதலாம் சாள்சு கரிசுபுறாக்கிற் கைதியாயிருந்தான். ஒகத்து மாதத்திற் குரம்வெல் இசுக்கொத்துலந்திய ஒப்பந்தக்காரர்களை இலங்காசியரிலே தோற்கடித்தான் ; 1649 சனவரி 30 ஆம் திகதி முதலாம் சாள்சு சிாச்சேதஞ் செய்யப்பட்டான்.
வரலாறு உண்மையை நோக்குங்கால், பாரிசுப் பாராளுமன்றமும் ஆங்கி லேயப் பாராளுமன்றமும், அரசமன்றத்தின் வழிவந்தவை எனும் பழைய மர பாலும் தம் பெயராலும் ஒற்றுமையுடையனவே தவிர, அவற்றுக்கிடையே பொதுவியல்புகள் வேறெவையும் கிடையா. இவ்விருமன்றங்களுக்கிடையில், உவொற்றயர் என்பான் நகைத் திறமையுடன் கூறியதுபோல், ஓர் உரோமானிய

இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 173
ஆட்சித் தலைவனுக்கும், சிமேனுவிலோ அலெப்போவிலோ உள்ள ஒரு ஆங்கிலக் காவற் அாதனுக்கும் எவ்வளவு வேற்றுமையுண்டோ, அவ்வளவு வேற்றுமை யுண்டு. அரச மன்றம்போல் ஆரம்பத்தில் மாவிழுமியோரையும், உயர்ந்த அலு வலசையும் கொண்ட பாரிசுப் பாராளுமன்றம் இப்போது வழக்கறிஞர்களை மாத் திரம் கொண்டதாயிருந்தது. முதலில் வரியளவைத் திட்டஞ் செய்வோராகவும், செயலாளர்களாகவும் பாராளுமன்றத்திற் சேர்க்கப்பட்ட வழக்கறிஞர், படிப்படி யாக விழுமியோரை நீக்கினர். அத்துடன் தங்கள் பதவிகளை வகித்தும், மாற்றி யும், போலற்று எனும் ஆட்டை வரியைக் கொடுப்பவர்களுக்கு விற்றும், மர புரிமையான கூட்டுத்தாபனமாக, அல்லது சாதியாகத் தங்களை மாற்றிக்கொண்ட னர். அவர்களின் தெளிவான தரத்தையும், கடமைகளையும் பற்றி ஏதோ விவாதங் கள் நடந்தன. பாராளுமன்றத்தின் மூலம் தன் கற்பனைகளைப் பதிவு செய்வது அரசனின் நெடுங்கால வழக்கமாக இருந்தது. அதன் உறுப்பினர்களின் கடமை முதலாவதாக நீதிசார்ந்தது. என்ருலும் அவர்கள் கற்பனைகளைப்பற்றி உரை யாடவும், எதிர்ப்புரை கூறவும், வீட்டுச் செய்யவும் படிப்படியாகத் தம் உரிமையை வற்புறுத்தினர்.
குடித்திணைமன்றம் தாழ்நிலையடையவே, முடியாட்சியின் நலனுக்காக முன்னர்ப் பிரயோகிக்கப்பட்ட எதிர்ப்புரையுரிமை, தள்ளுபடி செய்யும் உரிமை ஆகியவற்றை இப்போது முடியின் செயல்களுக்குத் தடையாகப் பிரயோகஞ் செய்ய முனைந்து நின்றது பாராளுமன்றம். இவ்வுரிமையை அரசியலமைப்பின் படி ஒத்துக்கொள்ள முடியாத போதிலும், பாராளுமன்ற உறுப்பினரான வழக் கறிஞர்கள், பிரான்சுக்கும் வரம்பிலாத் தனியாட்சிக்கும் இடையே தடையாக, அக்காலச் சூழலில், தாம் மாத்திரமே நிற்பதாகத் தாங்களே நம்பியிருக்கலாம் ; மற்றவர்களையும் நம்பும்படி செய்திருக்கலாம்.
உரிமை மனு A.
1648 யூன் மாதத்தில் அவர்கள் ஆங்கிலேய மாதிரியைப் பின்பற்றி அரசனுக்கு உரிமை மனு ஒன்று சமர்ப்பித்தார்கள். மணியகாரர், வருமானம் குத்தகைக்கு எடுப்போர் ஆகியவர் ஒழிக்கப்படல்வேண்டும் ; தால் என்னும் யுத்தவரி 25 சத வீதம் குறைக்கப்படல் வேண்டும்; இறை மன்றங்களின் உடன்பாடின்றிப் புது வரிகள் விதிக்கப்படாது ; விரும்பியபடி சிறைவைத்தல் ஒழிக்கப்படல் வேண்டும்; ஆளுரிமைத்தத்துவம் தொடங்கி வைக்கப்படல் வேண்டும்; தனி யாரின் சுதந்திரம் காப்பாற்றப்படல் வேண்டும். இவைகள் அவர்களின் கோரிக்கைகளிற் சிலவேயாம்.
இக்கோரிக்கைகள் உண்மையாக அரசியலமைப்பில் ஒரு புரட்சியைக் குறிப் பவை. ஆனல் மசரினின் அறிவுரையின் பேரில் அரசி காலத்திற்கேற்ப நடக்க ஒப்புக்கொண்டாள். ஆனலும் ஒரு மாதம் சென்றபின் ஒரு சடுதியான தாக்க லிற்ை கோரிக்கைகளுக்கு விடையிறுத்தாள். ஒகத்து 23 ஆம் திகதி இலன்சு என்னுமிடத்திற் கொந்தே என்பான் எய்திய பெரிய வெற்றி அரசாங்கத்துக்கு

Page 97
74 இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
நற்பயனளித்தது. 26 ஆம் திகதி நோத்திரதேம் கோவிலில் 'தி தியம்' என்னும் அதிப்பாடலுடன் வெற்றிகொண்டாடப்பட்டது. வழிபாடு நடந்து கொண்டிருக் கையிற் பாராளுமன்றத் தலைவன் பிரவுசல் என்பானும் அவன் இரு இணைவரும் கைதுசெய்யப்பட்டனர். பாரிசு வெகுண்டு எதிர்த்தது. சில மணி நேரத்தில் நகரத்தில் 200 தெருமறிப்புக்கள் அமைக்கப்பட்டன. பாராளுமன்றத் தலைவர் களை விடுதலை செய்யும்படி நானுபக்கங்களிலும் கூக்குரல் எழுந்தது. மசரின் தன் தைரியத்தை இழந்து, விட்டுக்கொடுத்தான். அரசவை செத்தெம்பர் மாதத்தில் உறுாவே என்னுமிடத்திற்கு மாறிற்று. ஒற்ருேபர் மாதத்திற் பாராளுமன்றத் துடன் ஓர் இணக்கம் செய்யப்பட்டது. மீண்டும் அரசவை பாரிசிற் கூடியது. மசரின் வாய்ப்பான காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். 1648 ஒற்ருே பர் 22ஆம் திகதி ஒப்பமிடப்பட்ட உவெசுபேலியாப் பொருத்தனையினுல் அவன் ‘ஒரு தரைப்படையையும் ஒரு தளபதியையும் பெற்றன். சனவரி 6 ஆம் திகதி அரசரும் உழையர் குழுவும் பாரிசிலிருந்து சென்சேமன்சு என்ற இடத்திற்கு வெளியேறினர். மூன்று மாதகாலமாகக் கொந்தேயின் தலைமையிலிருந்த படை யாற் பாரிசு முற்றுகையிடப்பட்டது. ‘அங்காடி மன்னனன’ போபேட்டுக் கோமகனும், காடினல் இரெற்சும், கொந்தியைச் சேர்ந்த இளவரசனும், மற்றும் விழுமியோரும் இளவரசர்களும் எதிர்த்து நிற்குமாறு பாராளுமன்றத்திற்கு ஊக்கமளித்தனர். அவர்கள் இசுப்பானியரை உதவிக்கழைத்திருப்பார்கள். ஆனல் வழக்கறிஞர்கள் கூடிய மதியுள்ளவர்களும் நாட்டுப்பற்றுள்ளவர்களுமா யிருந்தார்கள். ஏப்பிரில் 2 ஆம் திகதி இரு பகுதியும் இணங்கி, உறூவே என்னும் அமைதிப் பொருத்தனை நிறைவேறியது.
புதிய புரொந்தேப் போர் (1650-8)
இந்த உடன்படிக்கையுடன் முதலாம் புரொந்தேப் போர் முடிவெய்தியது. ஆனல் இந்த அமைதி எதையும் தீர்த்துவைக்கவுமில்லை; நிலைத்திருக்கவுமில்லை. கொந்தேயின் செருக்கு எல்லாக் கட்சியினரும் அவனை வெறுத்தற்குக் காரணமா யிற்று. அவனும் அவன் மைத்துனன் உலோங்குவால் கோமகனும் 1650 சனவரி யிற் கைது செய்யப்பட்டு வின்செனிற் சிறையிடப்பட்டனர். 'சிறு அதிகாரிகள்' எனப்படுவோரின் புரொந்தே இயக்கத்திற்கு இது அறிகுறியாயிற்று. இந்தக் கிளர்ச்சி முழுதும் வீண் தன்மையது. தோன் என்பானின் இராசதுரோகம் இடம்பெருவிடின், இக்கிளர்ச்சி முக்கியத்துவம் எதுவும் இல்லாததாகும். தோன் தன் சொந்தப் படையாலேயே இறெத்தல் என்னுமிடத்திலே தோற்கடிக்கப் பட்டான். 1650 ஆம் ஆண்டு முடிவில் இளவரசர்களின் புரொந்தே இயக்கம் வீழ்ச்சியடைந்தது.
மசரின் மீது பகைமை பூணுவதில் எல்லாக் கட்சியினருள்ளும் உடன்பாடு இருந்தது. 1851 இல் அவனுக்கு விரோதமாக ஒரு புதிய கூட்டுக்குழு உருவா யது. மசரின் இப்புதிய கிளர்ச்சியை எதிர்த்து நிற்காது கொலோனுக்கு அண்மை யிலுள்ள பூறுால் என்னுமிடத்திற்குப் பின்வாங்கினன். தி இரெற்சு என்பான் பின்னர் அரண்மனைக் கட்சியைச் சேர்ந்தான். கொந்தே அவர்களுக்கெதிராக

இரிசிலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு 175
மாகாணங்களை எழுப்பிட முயன்முன் ; ஓரளவு வெற்றியுங் கண்டான். ஆனல் தோன், திரும்பவும் கட்சிமாறி, கொந்தேயை விஞ்சியவனுக விளங்கினன். என்ருலும், கொந்தே பாரிசிற்குள் ஒருவாறு புகுந்துகொண்டான். இங்கே வில்லா எனும் விடுதியைத் தாக்கும்படியும், ஏறத்தாழ ஐம்பது தலையாய குடி களை வதஞ் செய்யவும் நகரக் கும்பலைத் தூண்டினன். இளவரசர்களின் கொடிய வெற்றி கண நேரமே நிலைத்தது. அவர்களுடைய பொறுப்பற்ற தன்மையையும் இராசத் துரோகத்தையும் எல்லாக் கட்சியினரும் வெறுத்தனர். 1652 ஒற்முேபர் மாதத்தில் அரசன் பாரிசுக்குத் திரும்பக்கூடியதாயிருந்தது. கொந்தேமிது மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனல் அவன் தப்பியோடி இசுப்பெயினுக்கு யுத்த சேவை செய்வதற்கு முன்வந்தான். அவன் சேவையை இசுப்பெயின் ஏற் அறுக் கொண்டது. நாட்டுப்பற்றைப் பொறுத்தவளவில், தேர்ந்தெடுப்பதற்கு ஒன்றுமில்லை. கொந்தேயுந் தோனும் ஒரே தன்மையராவர்.
புரொந்தேப் போரின் விளைவுகள்
புரொந்தே இயக்கத்தினர், தனித்தும் ஒருமித்தும், முற்முக வீழ்ச்சி அடைந்த னர். இவர்களாற் பாராளுமன்றத்துக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அது திரும்பவும் ஒரு வெறுஞ் சட்டமன்முயது. இளவரசர்களும் விழுமியோரும் எவ் வித பயனும் அடையவில்லை. அதிகாரத்தைப்பெற அவர்கள் செய்த கடைசி முயற்சியும் படுதோல்வியுற்றது. அரசியல் முக்கியத்துவத்தில் உரிமை கொண் டாடுதலை முற்ருய்க் கைவிட்டனர். தங்கள் வருமானங்களைத் திரட்டத் தங்கள் மேற்பார்வையாளரை நியமித்துவிட்டு, வேர்சையில் தாங்களே அரண்மனை அலுவலாளர்களாயினர். பிரான்சைப்பொறுத்தவளவில், வெளிநாட்டுப் பகைவர் களுடன் செய்யும் போரிலிருந்து தப்பாது விளைகின்ற துன்பங்களை உள்நாட்டுப் போர் மிகைப்படுத்தியது.
புரொந்தே யுத்தத்தால் ஏதும் பலன் விளைந்ததானுல், அரசனே அதனுற் பய னடைந்தான். இரிசிலூவின் சேவை நிலைத்துநின்றது. மசரினின் நெகிழுந் தன்மை அதைக் காப்பாற்றியது. அரசன் அவன் எதிரிகள் எல்லோரையும் வெற்றி கொண்டான். இயூசனர் இப்போது வெறும் சமயப் பிரிவினர் ஆயினர். வலிமை படைத்த விழுமியோர் வெறும் அரண்மனை அலுவலாளர்களாயினர். வெளிநாட்டுப் பகைவர்களிலிருந்து பிரான்சைக் காப்பாற்றவும் பிரான்சை அரசியலைக்கியம் பூண்ட நாடாக்கவும் சிறந்த அரசர்களும், மிகத் திறமையான அமைச்சர்களும் தலைமுறை தலைமுறையாக உழைத்தனர். அவர் தம் முயற்சி களின் விளைவை அனுபவிக்க பதினன்காம் உலூயி அரசனைன்.

Page 98
176 இரிசிலுர, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு
படி இழ் பிரன்சு
తరీఖాల్డ్ర
Lyra, 1 ÉG-3 - 1739
 

ஆத்தியாயம் 13
பதினுன்காம் உலூயியின் ஆட்சி
பதினுன்காம் உலுயி 1838 இற் பிறந்து, 1843 இல் அரசு கட்டில் ஏறிஞன். 1851 இல் ஆட்சி செ ய்விற்கு வேண்டிய பிராயமடைந்துவிட்டானெனப் பிரசிக் தஞ் செய்யப்பட்டது. 1861 இல் பசரின் இறக்க, உலூயியிலுடைய சொந்த ஆட்சி ஆரம்பமாயிற்று அவ்வாட்சி 1718 இல் அவன் மானக்கோடு முடிவெய்
தியது.
தன் பெரும் ஆற்றலேயும் அரசாங்கத்தைப்பற்றிய திட்டமான கொள்கையை பும் அா சபதத்தின் பொறுப்புக்கனேப் பற்றிய உயர்தரமான உணர்ச்சியையும் கொண்டு, பதினுள்காம் உலூயி செவ்வனே பணி செய்ய முயன்மூன். "இக்காலத் நில் ஆசியனே எறும் வாய்ப்புடன் பிறந்த யாவருள்ளும் உலூயியே ஆற்றல் மிக் கோன்' என அகுத்தன் பிரபு இவனேப் பற்றிக் கூறியுள்ளார். " பதினுன்காம் உலூயி அரசர் யாவருள்ளும் மிகச்சிறந்தோன் அல்லணுயிலும், எக்காலத்தும் ஆாக கட்டில் எறியவருள் அவனே அரசனுக நடிப்பதில் மாட்விமைப்பட்டோன்' எனப் பொலிம்புருக்கு கூறிஞன். இக்கூற்று மறுக்க முடியாத உண்மையாகும். உலுயி " எவ்வாற்றுணுக் தகைமைசான்ற அரசனுயிருந்தான் ". . yatgali litr செம்மையான ஒழுக்கம், பீடுறு நிஃப், மரியாதையான நீர்மை, நெருங்கிப் பழகு வகாற் சீர்கெடாத அன்பான தன்மை ஆகியவற்றை அவன் காலத்தவர் ஒவ் னொருவரும் குறிப்பிட்டுன்னனர். மகா பிாதரிக்கைப் போன்று, முயன்ற பணி யாற்றுவதில் அவனுக்குப் போவT. பணியாற்றியே ஒருவன் ஆட்சிசெய்கிமூன் பணிசெய்தற்காகவே ஒருவன் ஆட்சிசெய்கிருன் அரசனுயிருக்க விரும்பும் ஒருவன் வருந்தி உழைக்க மறுப்பது கடவுளுக்கு சீமாஞன நன்றியற்ற தன்மை பும் மனிதறுக்கு விரோதமான கடுங்கோன்மையொடு கூடிய அறிகியுமாகும் " என அவன் கூறினுன் பல ஆண்டுகளாக அரசியற் பாஸ்னத்தின் ஒவ்வொரு விவாக்கையும் தானே பார்வையிட்டான். அரசாங்க அலுவலே ஒப்பேற்றுவதில் ஆயரா முயற்சி உடையணுயிருந்தபோதும் அவனுடைய பாலனத்திலோ, சட்டங் G.R.Gast சிறப்புத்திறமையின் அறிகுறி காணப்படவில்ஃ. கர்த்த மதியுடைய விமரிசகர் ஒருவர் கூறியங்கு, அவனிடத்துக் காணப்பட்ட குணவியல்புகள் யாவும் இசுப்பானிய பாவணியின் வழியும் பிரான்சிய பாவணியின் வழியும் வந்தவையேயாம். ஆழ்ந்தடங்கிய கற்பெருமைக் குணத்தை அவன் ஒசுத்திரிய நாட்டு ஆணிடமிருந்து பெற்றுன் இசுப்பானிய பெருமிக உணர்ச்சியானது, ஒசுத்திரிய நாட்டு அமைதிப் பண்பின் சேர்க்கையால், அவனிடத்துக் கல்தூக்கி நின்றது. செந்தண்மையான உயர்ந்த பண்புகளே அவன் தன் பிரெஞ்சுப் பாட்ட னரிடமிருந்து பெற்றுன் நவார் நாட்டு என்றியின் கசுக்கன் புத்தியும் அவனிடத் துக் காணப்பட்டது. என்றியிற் காணப்பட்ட விரிந்த நோக்கும் உண்மையான நாட்டுப் பற்றும் அவனிடத்தும் ஓரளவு விரவி நின்றன. இவ்வழி உண்ணுட்டிலே

Page 99
178 பதினன்காம் உலூயியின் ஆட்சி
செல்வமும் மகிழ்வும் வாய்க்கப்பெற்று, வெளியுலகிற் பெருவலியும் மதிப்புமெய்தி, ஐரோப்பிய அரசுகளிடையே நடுநாயகமாய், ஐரோப்பிய அறிவாராய்ச்சி இயக் கத்தின் தலைவியாய்ப் பிரான்சு விளங்கல் வேண்டுமென்ற உயரிய கருத்தை அவன் நவார் என்றியிடமிருந்து பெற்றன்.
அவனுடைய ஆட்சி தற்பவ ஆட்சியாகும். முடி, தனிமுதன்மை வாய்ந்த தாகும். அரசின் அதிகாரங்கள் யாவும் முடியிற் சென்று அடங்கின. குடித்திணை மன்றம் அடக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் அரசியல் வலி முற்ருய் ஒழிக்கப் பட்டது. மாகாணச் சுதந்திரங்கள் கண்டிப்பாய்க் குறைக்கப்பட்டன. விழுமி யோர் மாகாண ஆளுநர்கள் என்ற பட்டப்பெயர்களைத் தொடர்ந்து வகித்த போதும், முடியின் கைப்படைப்பான மணியகாரர்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்ட னர். 1516 ஆம் ஆண்டுச் சமயவிணக்கத்தின்படி திருச்சபையானது முடிக்குக் கட்டுப்பட்டிருந்தது. பதினுன்காம் உலூயி " அரசு நானே' என இறுமாந்து கூறலாம். அக்கூற்று முற்றிலும் உண்மையே. -
டிசரினுக்குப்பின் அவன் பதவிக்கு உடனடியாக ஒருவரும் அமர்த்தப்பட்டிலர். காடினல் இறந்துவிட்டபடியால் இனி யாருடன் பேச்சு நடத்துவதென்று உரூவன் நகர் மேற்றிராணியார் கேட்டபோது, ‘ என்னெடு' என உலூயி விடை பகர்ந்தான். தற்பவ ஆட்சிக்காலத்தின் வாய்பாடு ' என்னெடு' என்முயிற்று என ஆசிரியரொருவர் கூறுகின்றர்.
கொல்பேட்டு
1653 இல் நிக்கலசு பூக்கே என்பான் நிதி மேற்பார்வையாளனஞன். மசரின் இறக்க, அவன் தானே முதலமைச்சனதற்கு எண்ணியிருந்தான். எனினும், அப் பதவியை அரசனே வகித்தான். அன்றியும், விழிப்பான குடியியற் சேவையாளன் ஒருவனுடைய உதவியோடு, வணக்க இணக்கமான சமூகத்தின் அன்புக்குரிய பூக்கே ஒரு நேர்மையற்ற போக்கிரி என்பதை அரசன் கண்டுபிடித்திருந்தான். 1661 இல் பூக்கே சடுதியாகக் கைது செய்யப்பட்டான். அதன்பின்னர், சிறப்பு ஆணைக்குழுவால் விசாரணை செய்யப்பட்டு, 1860 இல் அவன் மரணம்வரை சிறையிலிடப்பட்டிருந்தான். இவனின் கைக்கூலி ஊழல்களைக் கண்டுபிடித்து வெளிபபடுத்தியவன் கொல்பேட்டு ஆவான். ஈன் பற்றிற்று கொல்பேட்டு, இf மிசில் வாழ்ந்த, செல்வம்படைத்த ஒரு வணிகனின் மகன். இவன் பிறப்பிடம் இசுகொத்துலந்தாயிருக்கலாம். 1619 இல் பிறந்து இலையணிலுள்ள ஒரு வங்கி யிலும், பாரிசிலுள்ள நொத்தாரிசு அலுவலகத்திலும் கடமையாற்றி, 1651 இல் மசரினுடைய பெரிய தாபனத்தின் மேற்பார்வையாளனனன். அந்தப்பதவி யிலிருக்கும்பொழுது, பொது நிதியியல் பற்றியும் தனி நிதி முறைபற்றியும் அறியத்தக்கனவெல்லாம் அறிதற்கு அவனுக்கு வாய்ப்புக்கிடைத்தது. இவ் விரண்டுக்குமிடையில் தெளிவான வேறுபாடெதுவும் கிடைய்ாது. 50,00,000

பதினன்காம் உலூயியின் ஆட்சி 179
தங்கப் பவுணை விட்டு மடிந்த மசரின் கொல்பேட்டின் நாணயமான தன்மையை யும் ஆற்றலையும்பற்றி பாரபட்சமின்றி மதிப்பிட நன்கு தகுதிவாய்ந்தவனுயிருந் தான். கொல்பேட்டை அவன் பதினன்காம் உலூயியிக்குச் சேவைசெய்ய விட்டுச் சென்றன். நிதிக்கழகத்தின் முதல் எழுத்துவினைஞன் என்னும் அடக்கமான பட்டப்பெயருடன் கொல்பேட்டு 1661 இல் பூக்கேயின் பின் அவன் பதவியில் அமர்த்தப்பட்டான். 1665 இல் நிதிக் கட்டுப்பாட்டாளர் நாயகமாகவும், 1669இல் கடற்படைத் தலைமையும் குடியேற்ற நாடுகளும் என்ற பகுதியின் செயலாளனுக வும் அமர்த்தப்பட்டான். 1683 இல் இறக்கும்வரையும், நம்பிக்கையிழந்தும் மன முடைந்துமிருந்த இவன் எல்லா அரசாங்கப்பகுதிகளுக்கும் தலைவனுயிருந்தான். உண்மையில் தலைவனென்ற பேரைப்பெருததொன்றேயொழிய, மற்றெவ்விதத் திலும் அவன் பிரான்சின் முதலமைச்சனுயிருந்தான்.
நிதித்தொழிலிலும் பெருவணிகத்திலும் பிரான்சியருட் கொல்பேட்டுக்கு மேம் பட்டவர்கள் இல்லை. தோற்றத்தில் ஓரளவு சிறப்பற்றவனும், வாழ்க்கையில் இன்பந் துறந்தவனுமாயினும், அவன் தன் சிறந்த திறமைகளையும் இடைவிடாத முயற்சியையும் அரச சேவைக்கும், நாட்டின் செழிப்புக்கும், மேன்மைக்கும், எல்லா வகுப்பு மக்களினதும் நல்வாழ்வுக்கும் அர்ப்பணஞ் செய்தான். விழுமி யோரின் தனி உரிமைகளை ஒழிக்க இரிசிலூவாலும் முடியவில்லை. அதை நிறை வேற்றக் கொல்பேட்டாலும் முடியவில்லை. அவ்வுரிமைகள் சேதமுமுதிருக்கும் வரையும் பிரான்சிய நிதி சம்பந்தமாக முக்கியமான சீர்திருத்தங்கள் ஏற்பட முடியாது. விதிக்கப்பட்ட இந்த எல்லைக்குட் கொல்பேட்டு வியக்கத்தக்க அருமை யான கருமங்களைச் செய்துமுடித்தான். முதலாவதாக நிதி நிர்வாகத்தில் ஒழுங்கு ஏற்படுத்தினன். இரண்டாவதாக வருமான வருவாய்களை வளர்த்துத் தன்னுலியன்றமட்டும் பிரான்சைச் செழிப்படையச்செய்தான்.
பதவி ஏற்றுக்கொண்டபோது, நாட்டு நிதி நிலை மிக மோசமாக இருப்பதைக் கண்டான். இதற்கு ஒரளவு காரணம் பூக்கே போன்ற திருடர்களின் ஊழல்கள். இரண்டாவதாக ஒரு நூற்முண்டு யுத்தங்களால் வருவித்துக்கொண்ட அளவிட முடியாத செலவுகள்; ஆனல் இவையெல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பழைய மாதிரியான வாரிய ஒழுங்குகளும், விரயத்துக்கிடமானதும் சிக்கன மற்றதுமான வரி விதிக்கும் முறையுமாகும்.
வாரிய முறைமையானது பாலன முறைபற்றி ஏற்றுக்கொள்ளத்தக்க தொன் றன்று எனினும், பிரான்சின் அரசியல் மலர்ச்சியின் அடையாளத்தைக் கொண் டிருந்தமையால் வரலாற்றுச் சிறப்புடையதாகும். நாடு இன்னும் மூன்று பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. (1) ‘ஐந்து பெரும்பண்ணைகள்' அல்லது முன்னைய பிரான்சிய இராச்சியத்தையே அடக்கியிருந்த அரச ஆட்சிப்பகுதி, (2) பேகண்டி, பிரித்தனி ஆகியவையைப்போல் அண்மையிற் சேர்த்துக் கொள்ளப்பட்ட புகழுடை அயல் மாகாணங்கள்', (3) இன்னும் மிகீவும் அண் மையில் வலிந்திணைக்கப்பட்ட அல்சேசு, உலொரேன், எனும் விசுப்பாண்டவர்
8-B 24178 (5.160)

Page 100
80 பதினன்காம் உலூயியின் ஆட்சி
பகுதிகள் போன்ற 'உண்மையான அயல் மாகாணங்கள் அப்பிரிவுகளாம். இவைகள் ஒவ்வொன்றுக்குமிடையில் இறைமுறைப் பாதுகாப்புக்களோடு, ஒரு கூட்டம் சுங்க அதிகாரிகளும் இருந்தனர். இரிசிலுர அரசியல் முறையாகப் பிரான்சை ஐக்கியப்படுத்தியதுபோல் வாரிய முறையிற் பிரான்சை ஐக்கியப் படுத்துவதே கொல்பேட்டின் முயற்சியாயிருந்தது. இரு நூற்றண்டின்பின் சேர்மனியிற் பிரதரிக்கு இலித்து இருந்தது போல, கொல்பேட்டும் ஒரு பொரு ளாதார நாட்டினவாதி உள்நாட்டளவில் தடைகளற்ற வியாபாரத்தைப் போற்றுபவன்; அவன் ஏனைய உலக நாடுகளைப் பொறுத்தளவில் அயற் சரக்கு களுக்கு வரி விதிப்பதை ஆர்வத்துடன் ஆதரிக்கும் கோட்பாட்டினன்.
நாட்டு வருமானம் பெரும்பான்மையும் ஐம் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. அரசனுக்குரிய நிலமானிய வருமதிகள் ஒருவகையின. நோல் வரிகளான சுங்க வரியும் உள்நாட்டுப் பொருள்வரியும் இன்னுெருவகையின-இவை பாராளு மன்றத்துடன் நெருங்கிய தொடர்புள்ள குத்தகைக்காரத் தலைவர்களின் கூட்ட வைக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. அடுத்து ‘வான்றியம் என்னுந் தலைவரி: விழுமியோர், சட்டப்படி இவ் வரிக்குட்பட்டபோதும் பொதுவாக அதைக் கொடுக்காது தப்பி விடுவார்கள். சபெலா" என்பது ஒவ்வொரு குடிமகனும் ஒரு குறித்த அளவு உப்பு வாங்கவேண்டிய கடப்பாடாகும். உப்பு வாணிகம் அரசாங் கத்தின் தனி உரிமையானபடியாற் கொள்ளை விலைக்கு உப்பு விற்கப்பட்டது; நேரடியான வரிகளில் 1439 இல் ஒலியன்சிலுள்ள குடித்திணைமன்றம் ஏழாம் சாள்சுக்கு வாக்குரிமையளித்த 'தால் ' என்னும் யுத்தவரி அரசனுக்கு ஒப்பற்ற பலன் தாக்கூடியதும் குடிகளுக்கு ஒப்பற்ற வருத்தத்தை உண்டாக்கக் கூடியது மாயிருந்தது. தால் ஒரு யுத்தவரியானமையால் தங்களுடைய தனிப்பட்ட சேவை காரணமாக, குருமாரைப் போன்று விழுமியோரும் இவ்வரிக்கு விலக்கா யிருந்தனர். இங்கிலந்தில் வருமான வரியைப் போல், ஆரம்பத்தில் யுத்தநிதிக்குத் தால் என்னும் வரி தற்காலிகமான உதவிச் சாதனமாக விதிக்கப்பட்டதாயினும், பின் பிரான்சிய இறைசேரியின் முக்கிய ஆதாரமாயது. என்ருலும் தால் என்னும் வரிக்கும் வருமான வரிக்கும் வேறுபாடு உண்டு. வருமானவரி கொடுப்பவர்கள் பெரும்பாலுஞ் செல்வந்தர்களே. தால் வரி கொடுப்பவர்கள் வறியவர்கள் மாத் திரமேயாவர்.
பிரான்சிய வரி முறை அறக்கொடியது. வரித்தாக்கம் சமமில்லாதிருந்தது. வரி திரட்டும் முறை விரயத்துக்கிடமானதாய், தகுதியான காரணத்துடன் மக் களாற் பெரிதும் வெறுக்கப்பட்டதாயிருந்தது.
கொல்பேட்டு வரிமுறையின் அடிப்படையையே மாற்றியமைத்தான். ஒப் படைத்த பொருளேக் கைக்கொள்வோரைத் தண்டிக்க சேம்பர் ஆடெந்தே" எனும் மன்றத்தைச் சிறப்பாய் நிறுவியும், “படுகடன் மாற்றம்' எனும் முறை

பதினன்காம் உலூயியின் ஆட்சி 18.
யாலும், தால் வரிவிலக்கல் உரிமையை நாடித் தவருக வகித்த பிரபுக்கள் பட்டங் களை நிராகரித்தும், இந்த வரியின் வருவாயைச் செலவு போக 3,20,00,000 இல வேயினை 7,70,00,000 இலவேயாகப் பெருக்கினன். (140 சதவீதம்). மொத்த வருவாய் 84,000 இலிருந்து 104,000 ஆகப் பெருகியது. இவ்வாறு 23 சதவீதம் மாத்திரமே பெருகியது.
வர்த்தகத்தை ஊக்குவதற்காக அவன் எடுத்த நடவடிக்கைகள் இன்னும் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்குறிப்பிட்டதுபோல உண்ணுட்டு வர்த்தகத் தடைகளிற் பெரும்பாலானவற்றை அகற்றினன். அதே காலத்தில், தானியவகை ஏற்றுமதியின் மீதும் உற்பத்திசெய்த இறக்குமதிப் பொருட்கள் மீதும் அதிக வரிகளை விதித்தும், மூலப் பொருட்களின் இறக்குமதி வரியையும் உண்ணுட்டில் உற்பத்தியாக்கபட்ட கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதி வரியையும் நீக்கியும் அன்றிக் குறைத்தும் காப்பு வ்ரிச் சீர்திருத்தத் திட்டத்தை நிறை வேற்றினன். சாலைகளைத் திருத்தி, கால்வாய்களை வெட்டினன்; புதிய கைத்தொழில்களைத் தொடங்குவதற்கும், கப்பல் கட்டும் தொழிலுக்கும் கொடைகள் வழங்கினன் ; கிழக்கு மேற்கு இந்தியத் தீவுகளுடன் வர்த்தகஞ் செய்யக் கூட்டுக்குழுக்களைத் தாபித்தான் ; குடியேறலை விருத்தி செய்தான்; பிரான்சியக் கடற்படை, வியாபாரக்கப்பற்ருெகுதி ஆகியவற்றின் விருத்திக்குப் பெரிதும் ஊக்கமளித்தான் ; இலவசமான துறைகளைத் தாபித்தும் இடப் பெயர்விலுள்ள பொருட்களின் வரியைக் குறைத்தும் பிரான்சின் கூட்டு வர்த்த கத்தை ஊக்குவித்தான்.
பலதுமடங்கிய கொல்பேட்டின் திட்டத்தில் உள்ள ஏதாவதொன்றைப்பற்றித் தூய்மைவாதிகள் குறை கூறலாம். இவன் திட்டம் பொருளாதார நாட்டினப் பாங்கிலமைக்கப்பட்டதென்பதும் விவசாய நலனிலும் கைத்தொழில் நலனுக்கு மேம்பாடு அளித்ததென்பதும் வெளிப்படை. ஆனல் உடனடியாக நிகழவிருந்த பணமுறிவிலிருந்து பிரான்சை நன்னிலையடையச் செய்தது. அது பதினன்காம் உலூயியிற்கு யுத்தற்கு வேண்டிய வலிமை கொடுக்கும் சாதனங்களை அளித்ததுமல்லாமல், அவன் அரசமாளிகைகள் மீதும், பொதுப்பணிகளிலும் மற்றும் செலவேறிய இன்பப் பொருள்களிலும் மட்டுமிஞ்சிச் செலவு செய்ய வளம் அளித்தது. அது பிரான்சுக்கு இருபது ஆண்டுகளாக முன்னெருபோதுமில்லாத செழிப்பைக் கொடுத்தது. இவையாவும் மறுக்கொணு உண்மைகளாகும்.
கொல்பேட்டு என்பான் அரசியற் பாலனஞ் செய்த ஆண்டுகள், பிரான்சின் முடியாட்சிக்கால வரலாற்றில் ஒப்பற்று விளங்கிய காலமாகும். தலைநகர வாழ்க்கை இத்துணை நிறைவாகவும், உயிர்ப்புடனும் மகிழ்ச்சிகரமாகவும் ஒரு பொழுதும் இருக்கவில்லை. பதினன்காம் உலூயியின் மாளிகையே இந்த இன்ப கரமான வாழ்க்கையின் மையமாயிருந்தது. அவ்வாழ்க்கையில் உச்ச நிலை வகித்
தோன் மாபெரும் அரசனே.

Page 101
182 பதினன்காம் உலூயியின் ஆட்சி
நன்றிகெட்ட எசமானனின் கழிவிரக்கமின்றி-இவனுடைய வீண் செலவைத் தடுக்க அவன் முயற்சி செய்தான்-விண் செலவுப்பாாத்தைத் தாங்கிநின்ற மக்களாற் பழித்துரைக்கப்பட்டு, 1683 இல் கொல்பேட்டுக் காலமானன்.
நினைப்பினும் வெறுப்பை அளிக்கும் மண்டில நாயகனன இலே தெலியேயும் அவன் மகன் உலுவேயும் அரசனின் அமைச்சருள் முதன்மையான அறிவுரை கூறுவோராயினர். ஆயின் தி மெயிந்தினன் என்னும் சீமாட்டியை நெருங்கிய நட் புடைய மன்றத்தவளாக அரசன் கொண்டான். அதே ஆண்டில் தன் இரண்டாம் மனைவியாக அவளைத் திருமணம் புரிந்தான். ஆனல் அவளே ஒருபோதும் தன் இராணியாகப் பலரறிய ஒப்புக்கொள்ளவில்லை.
பிரன்சே தோபீனியே என்பாள் புகழ்பற்ெற இயூசனரான அகிரிப்பா தோபீ னியேயின் பேர்த்தியாவள். பதினருட்டைப் பிராயத்தில் அவள் கத்தோலிக்க சம யத்தைத் தழுவி, நகைச்சுவையுள்ள கவிபாடும் சிகசோனைச் சிறிதுகாலத்துள் வதுவை செய்து அவன் வீட்டை மிகச்சிறந்த ஒரு இலக்கியக் குழுவின் மைய மாக்கினுள். அவன் காலஞ் சென்றபின்னர் மிக வறுமையடைந்தாள். அவள் சினேகிதியும் அரசனுடைய காமக்கிழத்தியுமான தி மொந்தசுப்பான் சீமாட்டி தன் பிள்ளைகளின் ஆசிரியையாக அரச மாளிகையில் அவளே அமர்த்தினுள். அவள் அழகும் மெல்லியல்பும் உலூயியின் மனத்தைக் கவர்ந்தன. ஆனல் அச் சாந்தமான தன்மை அவளுடைய அசைக்கமுடியாத ஆணவத்தை மறைத்து நின்றது. அவள் அரசனின் காதலைத் தள்ளிவிட்டு, மதிப்பான ஒழுக்கமுடையவ னக அவனை மாற்றி, தன் ஆதரவாளியான ஆட்சிபுரியும் காமக்கிழத்தியை நாடு கடத்துவித்து, அரசனுக்கும் அவன் கெடுதியாகவும் தவமுகவும் நடத்திய மனே விக்கும் இடையிலே நட்புண்டாக்கினுள். அவள் இறந்தபின் இவள் அவன் மனைவி யானுள். முப்பத்திரண்டு ஆண்டுகளாக அரசனையும் இராச்சியத்தையும் இவள் ஆண்டாள். இது பற்றி உலூயி ஒருபோதும் ஐயுறவில்லை.
பதினலாம் உலூயியின் ஆட்சிக்காலத்தில் முதலிருபது ஆண்டுகளும் மாட்சி மைப்பட்டு விளங்கா நிற்ப, அவ்வாட்சியின் பிற்கூருே திகைப்பூட்டும் அளவிற் குத் தெளிவாக மாறுபட்டதாகி, இடுக்கண்மலிந்து காணப்பட்டமைக்கு அச் சீமாட்டியே பொறுப்பாளியெனக் கொள்ளல் பெரும் அநீதியாகும். அவள் அடக்கியாளும் போக்குடையளாயினும் பெருந்தன்மையும் பற்றுறுதியும் வாய்ந்த வள். எப்படியென்ருலும் அவன் இரண்டாந் திருமணம் நடந்த ஆண்டு, மிகப் பிரகாசமான நண்பகலையும், முடிவில்லாமல் அதிகரித்து வரும் இருளையும் பிரிக் கும் எல்லையைக் குறிப்பதாகும். 1683 இல், செல்வம் என்னுஞ் சூரியன் தீவிர மாகக் கீழ் நோக்கிச் சாய்ந்து இறுதியிற் பிரான்சின் மகிழ்ச்சிக்கும் ஐரோப் பாவின் அமைதிக்கும் முன்னரே கேட்டைக் குறிக்கும் முகில்களுக்கிடையே மறைந்தது. *

பதினன்காம் உலூயியின் ஆட்சி 83
அரசனுள்ளத்தில் வளர்ந்த நாட்டாசை பற்றியும், இவ்விடயத்தில் அவன் முன் ஆண்டவர்கள் காட்டிய கட்டுப்பாட்டை அவன் புறக்கணித்தமை பற்றியும் அடுத்த அத்தியாயத்திற் கூறப்படும்.
அவனுள்ளத்தில் ஊன்றிவளர்ந்த மூட நம்பிக்கையும் தன் குடிகளின் 2 L-6), பொருளாகியவற்றை ஆட்சி செய்வதோடமையாது, அவர் மனச்சாட்சி, ஆன்மா என்பவற்றையும் ஆட்சி செய்தல்வேண்டுமென்னும் அவன் பேரவாவும் பெருந் தீங்கு விளைப்பனவாயிருந்தன.
பதினுன்காம் உலூயியும் இயூசனரும்
இரிசிலூவும் மசரினும் பிரான்சின் அரசியல் ஐக்கியத்தையும், கொல்பேட்டு அந்நாட்டுப் பொருளாதார ஐக்கியத்தையும் நிறைவேற்றி முடித்தார்கள். உலூயி நாட்டின் ஆன்மீகத்திற்கும் திருச்சபைக்கும் உரிய ஐக்கியத்தைத் தாபிக்கத் தீர்மானஞ் செய்தான். ஒப்புக்கோட்குரவர் பதினன்காம் உலூயியிற்குக் கற்பித்த படி சமயம் இரு பிரமாணங்களுளடங்கும் எனச் சிசுமந்தி குறிப்பிடுகிறர். அவை பிறர் மனை நயத்தலை விலக்க வேண்டும்; புறநெறியை வேரோடு அறுத்து விடல் வேண்டும்' என்பனவாகும். 'அரசன் இக்கடமைகளில் முதலாவதிலிருந்து சற்றுத் தவறினலும், இரண்டாவதிற் கடமைக்கு மேலாகப் பணியாற்றினன்' என்பது, குறைகாணுமியல்புள்ள விமரிசகர் ஒருவரின் கூற்றாகும். என்ருலும், அவனுடைய ஒப்புக்கோட்குரவர் அவனைப் படிப்படியாக முன்செல்லும்படி அறி வுரை கூறினர். புரட்டெசுத்தாந்தர்களைப்பற்றிய அவன் பூட்கை 1683 ஆம் ஆண் டுடன் இரு காலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
தெருட்டல்
முன்னைய காலப்பகுதியில், நயமாக வற்புறுத்திபும் தெருட்டியும் மக்களை மனந்
திருப்புதற்கு எல்லா வழிவகையும் கையாளப்பட்டன. போசுவே என்பான் எழுதிய ‘நம்பிக்கை விளக்கம்' என்னும் நூல் அதன் தெருட்டும் பண்பாலும், நியாயங்களின் உறைப்பாலும் கல்வின் கொள்கையினர் பலரைப் பழைய வழி பாட்டு முறைக்குக் கவர்ந்தது. மதம் மாறினவர்களில் தோனுமொருவனனன். பகுத்துணர்வுடன் அளிக்கப்பட்ட அரண்மனை ஆதரவு, நன்சுக்கற்பனையினுற் கையளிக்கப்பட்ட சிறப்புரிமைகள் பலவற்றை அமைதியாகத் திரும்ப எடுத்துக் கொள்ளல், மதமாறுவோர் உபகார வங்கி (1677), ஆகியவை மதமாற்றத்திற்கு உதவிபுரிந்தன. கடைசியானது மிகக் கூடிய பலன் விளைத்தது. ஆளில்லாத மானிய ஆதாயங்களின் மூன்றிலொன்று, மதம் மாறுவோரை விலைக்குவாங்க வழங்கும் நிதியை உருவாக்க ஒதுக்கிவைக்கப்பட்டது. கல்வின் கொள்கையுடை யோனுயிருந்து மதம் மாறிய பெலிசன் என்பான் வங்கியின் பணிப்பாளனுக அமர்த்தப்பட்டான். பிரான்சில் எங்கும் கிளைகள் தாபிக்கப்பட்டன. விலை இறை முறைப்படி 100 இலவேயிக்கும் 500 இலவேயிக்குமிடையில் இறை பெறப்

Page 102
184 பதினன்காம் உலூயியின் ஆட்சி AM
பட்டது. ஆச்சரியமாக மதம் மாறிய இவர்களின் பட்டியல் அரசாங்கச் செய்தி மடலில் ஒழுங்காக வெளியிடப்பட்டது. 1577 இற்கும் 1583 இற்கும் இடையில் 58,000 பட்டியல்கள் பிரசுரிக்கப்பட்டன. கல்வின் கொள்கையினளாயிருந்து மதம் மாறிய தி மெயிந்தினன் சீமாட்டி ‘திரு. பெலிசன் அரிய செயல்கள் செய் கின்றர். போசுவே இவரிலும் பார்க்க கற்றறிந்தவர்; ஆனல், தெருட்டுந்திறனில் இவரிலும் வல்லமை குறைந்தவர். மதமாற்றம் இவ்வளவு இலகுவாயிருக்குமென எதிர்பார்க்க யார்தான் துணிந்திருக்க முடியும் ?’ என எழுதியுள்ளாள்.
உடற்றல்
இவ்வண்ணம் ஊக்கப்பட்டு, உலூயியும் அவன் மனைவியும் மிகவும் கண்டிப் பான நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தனர். தொடர்ச்சியாகக் கற்பனைகளைப் பிறப்பித்து, தீவிரமான உடற்றற் காலப்பகுதியை ஆரம்பித்தார்கள். அரசாங்கப் பதவி வகிக்கவோ உத்தியோகத்திற் சேரவோ, பிள்ளைகளின் (தன் சொந்தப் பிள்ளையாயிருந்தாலும்) ஆசிரியராகவேனும் பாதுகாவலராகவேனும் இருக்கவோ -ஒரு புரட்டெசுத்தாந்தனுக்கு உரிமையில்லாதிருந்தது. ஏழு வயது நிரம்பிய எந்தப் பிள்ளையும் புரட்டெசுத்தாந்த மதத்தைச் சட்டப்படி கைவிடலாம். புரட் டெசுத்தாந்தனுக மதம் மாறியவனை ஒரு சமயத் திருக்கூட்டத்திற் சேரவிட்டால், அந்த மதகுரு நாடு கடத்தப்படலாம். ஆனல் கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர் கள் எல்லோரும் இரு ஆண்டுகளுக்குத் ‘தால் ' என்னும் வரியிலிருந்து விலக்கப் பட்டனர்; அன்றியும், கடன் கொடுத்தவர்களிலிருந்து மூன்முண்டுகளுக்கு அவர் கள் காப்பற்றப்பட்டனர். 1684 இல் உலுவேய் என்பானின் கூரிய அறிவுரையின் படி, புரட்டெசுத்தாந்தரே படைவீரருடைய செலவிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென ஆஞ்ஞை பிறப்பிக்கப்பட்டது. இப்படைவீரர்-பிரதானமாகத் துப்பாக்கி தாங்கிய குதிரை வீரர்கள்-தங்களுக்கு விருந்தளிப்பவர்கள் மேல் அன்பாதாவுடையவர்களாயிருக்கவில்லை.
ஆகவே இம்முறைமை புரட்டெசுத்தாந்தக் குடும்பங்களைச் சொல்லொணுக் கொடுமைகளுக்கு உட்படுத்தியது. ஒரு படைப்பகுதியினர் தென் பிரான்சுக்கு மதம் பரப்பும் துTதுவராக அனுப்பப்பட்டனர். அவர்கள் பணி பெரும் வெற்றி யாய் முடிந்தபடியால், போடோ மாவட்டத்திற் புரட்டெசுத்தாந்தர் தொகை 1,50,000 இலிருந்து 10,000 இற்குச் குறைந்துவிட்டதாக உலுவேய் அறிக்கை அனுப்பினன். அநேகர் மாண்டனர். கூடிய தொகையினர் ஒடித்தப்பினர். புரட் டெசுத்தாந்தர் குடியகல்தல் கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது. ஆனல் 3,00,000 இற்கு அதிகமானேர் தப்பியோட முடிந்தது. இவர்களுட் பெரும்பாலோர் திறமை யான கப்பலோட்டிகள்; பலர் மிக்க சிக்கனமும், ஒழுக்கமும், முயற்சியுமுள்ள குடிகள் ; பிறர் சிறந்த ஆற்றல் படைத்த தொழிலாளிகள்; எஞ்சியோர் பிரான்சி லுள்ள மிகச் சிறந்த விவசாயிகள், இலண்டனிலும், அமித்தடாமிலும் இவர்கள் இருதய பூர்வமாக வரவேற்கப்பட்டனர். இவர்கள் பிரந்தன்பேக்கு-பிரசியா வின் பொருளாதாரச் செழிப்பிற்கு அத்திவாரம் இட்டு, அந்நாட்டுப்படைவலியை

பதினன்காம் உலூயியின் ஆட்சி 85
யும் பலப்படுத்தினர்கள். ஈற்றில் 1685 இல் நான்சுக் கற்பனை மாற்றுத்தரவு செய்யப்பட்டது. புரட்டெசுத்தாந்த வழிபாடு தடுக்கப்பட்டது. இரண்டு வாரத் திற் பிரான்சை விட்டு வெளியேருது தொடர்ந்து சமய உரையாற்றும் மத குருமார் வாணுள்முழுவதும் சிறைக் கப்பல்களில் வேலைசெய்ய அனுப்பப்பட்ட னர். கத்தோலிக்க மதத்துக்கு உடன்பட்டோருக்குச் சிறப்பான இளேப்பாறற் சம்பளம் அளிக்கப்பட்டது. புறக்குடியேறிகள் நான்கு மாதத்திற்குட் பிரான்சுக் குத் திரும்பவேண்டுமென்று கட்டளை பிறந்தது. திரும்பத் தவறினல் அவர்கள் உடைமைகள் யாவும் பறிமுதல் செய்யப்படும் என விதிக்கப்பட்டது. 1685 இன் பின் புறக்குடியேற முயன்றவர்கள் தூக்குமேடைக்கோ சிறைக்கப்பலுக்கோ
அனுப்பப்பட்டனர்.
விளைவுகள்
இந்த மிருகத்தனமான தடையுத்தரவுக்குக் காரணமொன்றுமிருக்கவில்லை.
‘ என்னுடைய பாட்டன் இயூசனரை நேசித்தார்; அவர்களுக்குப் பயப்பட வில்லை. என் தந்தை அவர்களுக்குப் பயந்தார்; அவர்களை நேசிக்கவில்லை. என் னைப்பொறுத்த அளவில் நான் அவர்களை நேசிக்கவுமில்லை; அவர்களுக்குப் பயப் படவுமில்லை' என உலூயி கூறினன். பதினுன்காம் உலூயி அவர்களுக்குப் பயப் படக் காரணமில்லை. இரிசிலூ அவர்களின் நகங்களைக் கழற்றியிருந்தான். நல்ல புரட்டெசுத்தாந்தராயினும் கூடாத குடிகளாயிருந்தோருக்கெதிராகவே இரிசிலூ நடவடிக்கை எடுத்தான். அது நல்ல பயனை அளித்தது. புரொந்தேக் கிளர்ச்சியில், அரிய வாய்ப்புக்கிடைத்தபோதிலும், புரட்டெசுத்தாந்தர் பங்கெடுக்கவில்லை. உலூயி துன்புறுத்திய ஆண்களும் பெண்களும் மிகச் சிறந்த குடிகளாவர். அவர்கள் அயலவர்களுக்குச் சினமூட்டுவதும் அரசாங்கத்தை அச்சுறுத்துவதும் தவிர்ந்திருந்தனர். t
இயூசனரை உலூயி தாக்கியதற்குக் காரணம் யாதும் கிடையாது. அவன் விரைவிலே தீவினைப்பயனை அடைந்தான். சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றிற்குரிய பயன்கள் கடுந்தீங்கு விளைத்தன. பெரிய கடலாதிக்கம் படைத்த ஒரு அரசாவதற்கோ கடல் கடந்த பேரரசுக்கு அடிகோலுவதற்கோ இருந்த வாய்ப்பைப் பிரான்சு முற்ருயிழந்தது. உண்ணுட்டு ஐக்கியத்திற்காக ஐரோப்பிய முதன்மையும் உலக ஆட்சியும் தியாகஞ் செய்யப்பட்டன. புரட்டெ சுத்தாந்தர் மீது விடுத்த தடை உத்தரவைத் தொடர்ந்து ஒகசுபேக்குச் சங்கம் தீவிரமாக உருவாயது (1686). இது சம்பந்தமாகப் பின்னர் உரைக்கப்படும்.
யான்சன் கொள்கையினர்
அரசனின் அக்கிாமங்கள் இயூசனரோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. யான்
சன் கொள்கையினர் மீது அவன் கொண்ட வெறுப்பு புரட்டெசுத்தாந்தர்
மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிற் குறைந்ததன்று. யான்சன் கொள்கை

Page 103
186 பதினன்காம் உலூயியின் ஆட்சி
யினர் கத்தோலிக்க மதத்தினருட் கல்வின் கொள்கையினராவர். ஈப்பரின் விசுப்பாண்டவர் (1635-1638) கோனிலியசு யான்சன் என்பாரிடமிருந்து, ஒகசு தீனின் 'முன்விதிப்புக் கோட்பாட்டை' ஏற்றுக்கொண்டு, அவர்கள், நல்லொழுக் கம், கோட்பாடு எனும் இரு காரணங்களுக்காக இயேசு தரைப் பலமாக எதிர்த்து நின்றனர். இயேசுதர் ‘உலகியலிலாழ்ந்தவராவர்'. யான்சன் கொள்கையினர் சமூகத்திற்கு ஒவ்வாத, இன்பமற்ற வாழ்க்கையை நடத்துபவர். அவர்கள் வேறு பாட்டுக்கு வேறு ஆதாரங்களுமிருந்தன. இயேசுதர் முடியின் அதிகாரத்தை மேம் படுத்தி, போப்பாண்டவருக்குத் தாழ்மையாய் அமைந்து நடப்பதைப் போதித் தனர். யான்சன் கொள்கையினர் போப்பாண்டவர் தவறு செய்யாதவர் என்ற கோட்பாட்டை மறுத்து, புரட்டெசுத்தாந்தக் கல்வின் கொள்கையினரைப் போல், திருச்சபையும் அரசாங்கமும் பிரிந்திருக்கவேண்டுமென்றும், முடியின் அதிகாரங்களுக்கு வரம்பிருக்க வேண்டுமென்றும் விரும்பினர். புரொந்தேக் கிளர்ச்சியின்போது யான்சன் கொள்கையினர் தி இரெற்சு என்பானின் கட்சி யிற் சேர்ந்தனர். இக்காரணங்கள்பற்றிப் பதினன்காம் உலூயி யான்சன் கொள்கையினரிலும் யேசு தரை விரும்பியதில் ஆச்சரியமில்லை.
போட்டு உரோயல்
பதின்மூன்றும் உலூயியின் ஆட்சிப்பகுதியின் முடிவுக் காலத்தில், யான்சன் கொள்கையினர் வேர்சையின் அண்மையிலுள்ள போட்டு உரோயலிலுள்ள வெறுமையான கன்னியர் மடத்தில் ஒரு சமுதாயத்தைத் தாபித்தனர். இங்கே தோழர், அற உதவி, கல்வி கற்பித்தல், உண்மையை நாடி ஆராய்ச்சி செய்தல் ஆகிய வேலைகளிலீடுபட்டனர். விழுமியோர், புலவர்கள், குருமார்கள், இளைப் பாறிய படை வீரர்கள் ஆகிய பலதிறப்பட்ட மனிதரை இச்சமுதாயம் தன்பா வீர்த்தது. இரசீன் அவர்கள் மாணவனுவான். பாசுக்கல் அவர்களின் மிகச்சிறந்த சீடனவான். 1653 இல் இயேசுதர் யான்சன் கோட்பாட்டை கண்டித்துப் போப் பாண்டவர் பத்தாம் இனசந்திடமிருந்து ஒரு ஆஞ்ஞை பெற்றனர். 1656 இல் அவர்களுடைய ஆதரவாளனை ஆனே எப்பானைச் சோபனிலிருந்து வெளியே துரத்துவித்தனர். 1657 இல் பாசுக்கல், ‘இயேசுதர் மீது தாக்கம் ' என்னும் நூலே எழுதித் திறமையான விடையளித்தான். இந்நூல் இயேசுதரின் குற்றங் குறைகளைப் பெரிதும் அம்பலமாக்கியது. இத்தாக்குதலிலிருந்து இயேசுதர் எக் காலத்தும் பழைய நிலைக்கு மீண்டதில்லை. பின்னர் இரு பாலார்க்குமிடையில் ஒன்பதாம் கிளமந்து சமாதானம் செய்தார்.
கலிக்கன் திருச்சபை
ஆனல் இயூசனரையோ யான்சன் கொள்கையினரையோ சகிக்க முடியாத அரசன் உரோமன் போப்பாட்சியின் ஆதரவாளனுமல்லன். அவன் பிரான்சின் போப்பாண்டவராதற்கு விரும்பினன். போப்பாண்டவருடன் அவன் இரிகாலைப் பற்றியே முதலிற் சச்சரவு செய்தான். இரிகாலை என்பது வெறுமையான விசுப்

பதினன்காம் உலூயியின் ஆட்சி 187
பாண்டவருக்குரிய இடங்களினதும், மானியங்களினதும் வருவாய்களுக்கு அரசன் கோரிய உரிமையாகும். அபிசுபேக்குக் குலத்தினர்க்குச் சார்பாகவிருந்த பதினேராம் இனசந்து, அரசனின் இவ்வுரிமையை எதிர்த்து நின்ற பிரெஞ்சுக் கட்சிக்கு ஆதரவளித்தான். உலூயி இதற்கெதிராகப் பிரான்சிய குருவாயத்தின் பொது மன்றமொன்றைக் கூட்டினன். போசுவேயின் தலைமையைப் பின்பற்றி, பிரான்சிய திருச்சபையானது புகழ்பெற்ற கலிக்கன் திருச்சபைப் பிரகடனத்தை முறைப்படுத்திக் கூறியது.
அஆதி போப்பின் தவருமைக் கோட்பாட்டைப் பலமாக மறுத்து, பிரான்சிய திருச்சபையின் சுதந்திரத்தையும், திருச்சபை மன்றங்கள் போப்பாண்டவரிலும் மேலானவையென்பதையும் வற்புறுத்திக் கூறியது. இப்பிரகடனம் பிரான்சின் சட்டத்திற் சேர்க்கப்பட்டு, பிரான்சிய குருவாயத்தின்மேல் விதிக்கப்பட்டது. எட்டாம் என்றி இங்கிலந்திலிருந்ததுபோலப் பதினன்காம் உலூயியும் பெரும் பாலும் பிரான்சின் போப்பாண்டவராயிருந்தான். 4.
இந்த ஒழுங்கைப் பதினேராம் இனசந்து போப்பாண்டவர் எதிர்த்தார். உரோமிலுள்ள பிரான்சிய தூதமைச்சனின் பாதிப்பின்மை பற்றியும், பிரான் சியப் படைக்கல ஆதரவுடன், கொலோனின் மேற்றிராணியார் பதவிக்குப் பிரான் சிய அபேட்சகன் தெரியப்பட்டமையாலும் உண்டாகிய சச்சரவுகள் அரசனுக் கும் போப்பாண்டவருக்குமிடையே இருந்த உறவில் இன்னும் கூடிய மனத்தாங் கலை உண்டாக்கின. ஆகவே பதினேராம் இனசந்து பிரான்சுக்கு விரோதமாக ஒகசுபேக்குச் சங்கத்திற் சேர்ந்துகொண்டார். ஆனல் இவ்விடயங்கள் அடுத்த அத்தியாயத்தில் நன்கு கவனிக்கப்படும்.
அரசனின் ஆட்சிக்கால முடிவில் யான்சன் கோட்பாட்டினர் மீண்டும் ஊக்கம் காட்டினர். அவன் மனைவியும் ஒப்புக்கோட்குரவரான இலே தெவியேயும், அமைதியின்மைக்கு மையமாகிய போட்டு உரோயல் இருக்கும் வரையில், அவனுக்கு அமைதி கிடையாதென உலூயியை நம்பும்படி செய்தனர். 1705 இல் யான்சன் கோட்பாடுகளைக் கண்டித்துப் பதினேராம் கிளமந்து கட்டளை விடுத் தார். 1709 இல் போட்டு உரோயலைத் தரைமட்டமாக்கும்படியும் அங்கே குடி யிருப்போரைக் கலைத்தோ சிறையில் வைத்தோ அகற்றும்படியும் உலூயி கட்டளையிட்டான். இக்கொடூரமான, தன்னெண்ணப்படியான நடவடிக்கைகள், யான்சன் கோட்பாட்டின் வலிமைபொருந்திய ஆதரவாளருக்கிடையிற் பெரும் கோபத்தை மூட்டின. இவ்வுணர்ச்சி போப்பாண்டவரின் செய்கையால் அதிகரித் தது. 1713 இல், பதினேராம் கிளமந்து, 1682 ஆம் ஆண்டுப் பிரகடனத்திற்கு மாறுத்தரவு பிறப்பிக்கும் நம்பிக்கையுடன் இயுனிசெனிற்றசு ' என்னும் கட்டளையை வெளியிட்டார். இக் கட்டளை குவசநல் என்பான் எழுதிய ‘புதிய ஏற்பாட்டைப்பற்றிய ஒழுக்காற்றுச் சிந்தனைக் கட்டுரைகள்' என்னும் நூலிலிருந்து 101 கருத்துரைகளைப் பொறுக்கி, வெளிப்படையாகக் கண்டித் தது. இந்நூல் பிரான்சிய மக்களின் பெருமதிப்பைப் பெற்றிருந்தது. அன்றியும்,

Page 104
188 பதினன்காம் உலூயியின் ஆட்சி
மாசற்ற வைதிகப்பாங்கு உடையதெனவும் அவர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டது. காடினல் நோவாலிசு எனப் பெயருடைய பாரிசின் மேற்றிராணியாரும் வேறு பல விசுப்பாண்டவரும் இக்கட்டளையை ஒறுத்துரைத்தனர். பாரிசுப் பாராளுமன்றம் அக்கட்டளையைப் பதிவு செய்ய மறுத்துவிட்டது.
இச்செய்கை உரோமன் போப்பாண்டவருக்கு மாமுனது மாத்திரமன்றி, முடிக் கும்-அதாவது 'பிரான்சின் போப்பாண்டவருக்கும் '-விரோதமானதென உலூயி மதித்தான். பாராளுமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிரபுக்கள், நீதிபதிகள், குருவாயத்தினர் ஆகியோர் உட்பட்ட 30,000 பேர் அரசனது இலச்சினை இடப்பட்ட கட்டளைப்படி சிறையிலிடப்பட்டனர். பிரான் சின் மிக மதிப்புக்குரிய குடிகளிற் சிலராகிய யான்சன் கோட்பாட்டினரை இவ் விதம் அடர்த்தியமை, அவன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளே இருள் மூடுதற்கு இன்னுமொரு காரணமாயது. இடைவிடாத அழிவு நிரம்பிய யுத்தம்; அண்மையில் நேரவிருந்த பண முறிவு; பஞ்சம் ; கொள்ளை நோய் , இளவரச னும் (1711) பேகண்டிக்கோமகன், கோமகள் ஆகியவரும் இவரின் மூத்த மக னும் சடுதி மரணம் எய்தியமை ஆகிய இவைகளெல்லாம் சேர்ந்து இருளே அதி கரிக்கச்செய்தன. பேனிலோனின் மாணவனும், தலமாக்கின் வீரனுமான பேகண்டி மீதும் அவன் இளம் மனைவி மீதும் பிரான்சின் நம்பிக்கைகள் தங்கி பருநதன. மூன்று மாத கால எல்லையில் மூன்று இளவரசர்கள் ஒருவர்பின் ஒருவ ாாகக் காலஞ் செல்ல, முடி உரிமைக்கு இரண்டு வயசுக் குழந்தையொன்றே எஞ்சி யிருந்தது. அக்குழந்தை அவப்பேருகத் தொடர்ந்து வாழ்ந்து பதினைந்தாம் உலூயி ஆக ஆண்டது. பதினன்காம் உலூயியின் மூன்மும் பேரன் தி பெரிக்கோ மகன் 1714 இல் கொல்லப்பட்டான். அவன் தமையன் ஐந்தாம் பிலிப்பு என்னும் பெயருடன் இசுப்பானிய அரசனுயபின் பிரான்சிய அரசு கட்டிலிற்குத் தனக் குள்ள உரிமையைத் துறந்தான். கொண்டீசு, ஒலியன்சு ஆகியவற்றின் கோமக னும் அரசனின் மருமகனுமான பிலிப்பும் தி மொந்திசுப்பான் சீமாட்டியின்அண்மையிற் சட்டமுறைப்படியான பிள்ளைகளாக்கப்பட்ட-இரு புத்திரர்களும் எஞ்சி இருந்தனர். இந்த வமிசத்தின் எதிர்கால நிலைமை இருள்கவிந்ததாயிருந் தது. உலூயி தன் இறுதி முறியில், ஒலியன்சைப் பேரளவிலே தலைமையாகக் கொண்ட ஒரு பதிலாளர் கழகத்தை நியமித்தான். ஆனல் உண்மை அதிகாரம் யாவும் மெயினிடமும் மெயிந்தினன் கட்சியினரிடமும் நிலைத்திருந்தது. தன் பூட் கையை நிலைநாட்ட அவன் செய்த முயற்சிகள் யாவும் விஞயின.
இவ்வயதானவரசன் 1715 செத்தெம்பர் 1 ஆம் திகதி காலமானன். பிரான்சின் அதிக நீண்ட கால ஆட்சி முடிவெய்தியது. இவ்வாட்சி 1672 இல் அல்லது 1683 இல் தானும் முடிந்திருந்தால் இது மிகவும் சிறந்த காலமென மதிக்கப்பட்டிருக் கலாம். 1683 வரையில் அதன் மேன்மை மங்கிற்று. பதினன்காம் உலூயி காலத்
1 மெயின் கோமகனும் தூலூசு மானிலக்கிழானும். 190 ஆம் பக்கத்து அட்டவணையைப் unfais.

பதினன்காம் உலூயியின் ஆட்சி 189
திற்குப் புகழளித்தவர்களில் அநேகர் காலமாய்விட்டனர். 1650 இற் பல்சக்கும், 1650 இலே தேக்காட்டும், 1662 இற் பாசுக்கலும், 1665 இற் பூசினும், 1673 இல் மொலியாவும், 1679 இலே தி இரெற்சும், 1680 இல் உரூசுபோகால்தும், 1682 இற் குளோட்டு உலொரேனுங் காலமாயினர். இவர்கள் எல்லோரும் 1683 இற்கு முன்னேயே காலமாய்விட்டனர். கோனில் 1684 இற் காலமானன். இலாபொண் டேன் 1695 இலும், இரசின் 1699 இலும் காலமானர்கள். பூசோ 1704 வரையும் உயிரோடிருந்தான் ; போயிலோ 1711 வரையும் பேனிலோன் 1715 வரையும் உயிரோடிருந்தனர். இத்தகையோர் அக்கால ஆட்சியை அலங்கரித்திருக்க (அன் னருட் சிலரே இங்குக் குறிப்பிடப்பட்டுளனர்) பதினன்காம் உலூயியின் காலம் மேன்மை படைத்தது என்பதை மறுக்கமுடியாது.
உலூயி, தன்னளவில் மேன்மைபடைத்தவன ? வாசகர் தாமே இதற்கு விடை யளிக்க வேண்டும். பொலிம்புருக்கு கூறியவாறு 'பதினன்காம் உலூயியே அரசு கட்டிலிலேறியவருள் அரசனுக நடிப்பதிற் சிறந்தவனவன்'.

Page 105
1ņ9ųogíaĵō メ メ 1įgoon 1998 UQ28)-gọố ZILI gąsuolo sgorino g | gología, goð g8Lr出窍949、占领Lī£ 1, I-91 || L.199ÐUnuog)
qopsigoro-lossnusso-s =rig), (9957சூhபதே głąoung, sựJig)=Ųnuổo go gI将它喻姆g59与回目 メ||
1991, ogíaĵoj
suggggő)Hırılgos
yupusē Ģy-e qāf, g 192029 |golygografoj 199ștnuog, ș@ mfąjuollo opě) s ILIsmrtorioễ1993, solongeg)1993?Umuog)
!onuđềos quo s gogo oặng) o golo goreløē)opếj zgılgougno u osmissoo 1999anuog)01499想喝 ti可407&ș-hungosong) OTrórsi3 == 0u작的日Ego-Trigo=gnae-a aeg igsumsiais, e umųon=olyno osobo@hothrilgos 1995m ureg)? =gmu(高여 |||||| 占9%占与1çou@gsaffoopglgf 1193)1999 JT9Drı(g)9949 კლდ9riც)(gốj gz LIடி9றப9றrượugog)\s?1ņøs?qiuog),1995monto)@ło umụUTqfaff gesê) I ILI f@sgo,f)yougo@rı Hıfıīgos =smuog)Ęiud[57„qoqjugęąeso symusow oog)sooĝisnuffoigogournyregon = 1995 usponuos &G的) 역t한너TucT3portos@@@sujan(G) (§| ugodn49的cT igotonomio-a soipue soortejo polo (z) govoofosfēj 10ltgeçiņķos. qif} + mg@oniogILI-[ umựan aðąjįğış919 1995 giug95.g.š. (s)=HỊgolynugoggovýmri@sioổ Josyolo)umụơi=Çmisso, qıfÈ #1
|
upoștnugog) șolgomsø&
Agaor A宮gr&9연 역** 8., 	I-0I9 I
ng@spla ggennens@“台中=与高到玛武,8L
|
gobĩaT(o) @ syutii (z) 0I9 I-6891 mugsore og sữąsajouen (1) = @jigo 19 gif* †
bi@ 1ņšrifi
90

9.
199şơnafoo$ . 1999ơnajobě osyuri soung)ąī£ osgoogiaeg) șu-ig)ưng) rīg)Ęīņ95ı sons@o.Ự199 so -199æUTUog) 199uoq'a'oj长nn99ஒழாகு doğj zř9 I sogfloorbing) 1ņølgøudgjo=odong) uso | 199uoqfaț¢) (96) 0ggT 19șul 199@gf009:5īng)9TrTr그9%(9(정3 q? I too@poło§§76)ụog ș-ışı uosyolo) quouoosoɛɛg @logo dễ| sig sẽ gặg I-ogg I urmựơi
ng)ņķos (smu@-@ 199ūnųftog)?=
|
limų gate) so umựan =
199@Luolį9@ șloog-ilogo sẽ sẵneguoto)
09ế g6 LI
reg)ốąjung)(rō’ąjungosolo) ég ựuun olymusgo =rīg)ņķo ķīlsmissoos
|
Igou?qsafoj sugegos suo uosly-ø ogỗ g6 LI (영:M(5·예 g法部, 2m) 与与固动电949
|
1ņøuoqfa'oj rougeggaej 494岭崎g司 @@691 Hņog) umg) Çmim@-æ
19æUı 1995 (3199 unţi q? I good drig)
os@ąjuq96)gjigo so syuan =
1991-TITTI@soloog-Tlogo? saoguo@ a9ố g6 LI Igou-Izırısıoogolgo 岛母P99岭了555寸型 ‘Z6LI-† 1. LI (smu@-æ qi gq
|
1ņ9șUTliog)levo(ae qigo@liog)gilo sougong sở ụuguogų: osnu G-3=Logo(o) umựơn
|| 088 I-Ť,8 s199 usqsafoj (oyou? ßougeopēj ựuoussurs qīf( o I) gọổ †zęI-† Ig I (smu@-æ Igogoanafoo$quí?, 9 I) 199șUnusog) Inu-ig), s-șolgøre(o)un(o)fn *にGに*synuo-æ
|| uosmu@-a umựơn
uri og) urng) urmựơn A909.9g「R3 rmg法學.
§@faoung) ‘gao ozī£ = 1995 uopsynimo:
|

Page 106

அத்தியாயம் 14
பிரான்சும் ஐரோப்பாவும் (1660-1715)
பதினுன்காம் உலூயியின் உண்ணுட்டுப் பூட்கையைப்பற்றி எவ்வித தீர்ப்பளித் தாலும், அவன் ஆட்சியிற் பிரான்சு ஐரோப்பாவில் ஆதிக்கம் எய்தவில்லை யெனினும், முதன்மை அடைந்ததென்பதை மறுக்கமுடியாது.
குறிக்கோள் A.
குழியல் விளையாட்டில் அரசியல்வாதி அடுத்தபடியையே காண்கிருரன்; பல படிகளை முன்னற் காண்பதே பதினன்காம் உலூயி, பிசுமாக்கு, கவூர் போன்ற அரசறிஞரின் அடையாளமாகும். உலூயியது தற்பவவாட்சியின் ஆரம்பத்தி லிருந்தே சில குறித்த தெளிவான குறிக்கோள்கள் அவனுக்கிருந்தன. பிரான் சின் பரம்பரையான போவாவைப் பூர்த்தி செய்ய இரிசிலூவும் மசரினும் பெரு முயற்சி செய்தனர். பழைய கோல் மாகாண எல்லைகளுடன் இக்காலப் பிரான்சின் எல்லைகளை ஒன்ருக்குவதும், இரையின் நதி, அல்பிசு மலைகள், பிரனிசு மலைகள் வரையும் பிரான்சிய ஆள்புலத்தை வித்தரிப்பதுமே அவ்வவாக்களாகும். ஆனல் இந்தப் பணியை முற்முக முடிக்க இன்னும் அதிக வேலை செய்யவேண்டி யிருந்தது. பெல்சியத்திலும் இலச்சம்பேக்கிலும் இசுப்பானியர் இன்னுமிருந்தார் கள். அப்பக்கத்திலுள்ள பிரான்சிய எல்லைப் பிரதேசம் பூரணமாகக் காவல் செய்யப்படவில்லை. 'இசுப்பானியர் சோம்பள்ளத்தாக்கில் இருக்கும் வரையில் ஒரு பகைப்படை நான்கு நாட்களில் பாரிசை அடையக்கூடுமெனத் தோன் தன் அரசனுக்கு எச்சரிக்கை செய்திருந்தான். பாரிசுக்கு மிக அண்மையிலுள்ள பிரான்சிய கொந்தே என்னும் மாகாணம் இன்னும் இசுப்பானியர் ஆட்சியிலேயே இருந்தது. வட அல்சேசும், மெற்சு, துரல், வீேடன் ஆகிய மூன்று கோட்டை களும் தவிர்ந்த உலொரேன் மாகாணம் முழுவதும் பேரரசினெரு பகுதியாக இன்னும் இருந்தது. வீயன்னவிலிருந்து பாரிசுக்குச் செல்லும் சாலையை ஆட்சி செய்த கிராசுபேக்கும் பேரரசின் ஒரு பகுதியாயிருந்தது. ஆகவே பிரான்சின் கிழக்கு எல்லைப்புறத்தைப் பாதுகாக்க இன்னும் அதிக வேலை செய்யவேண்டி யிருந்தது. பீதுமனுடன் ஐக்கியப்பட்டிருக்கையில், நேபொத்தின் திராட்சைக் கொல்லை போன்று பிரான்சு இச்சித்த சவோயானது, மூன்றும் நெப்போலிய லுக்கும் கவூருக்குமிடையில் ஒப்பந்தம் நிறைவேறும் வரையும் பிரான்சுடன் முடிவாக ஒன்றுசேர்க்கப்படவில்லை.
ஆனல் உலூயியின் போவா இயற்கை எல்லைகளை அடைவதற்கும் வெகு தூரம் அப்பாற்சென்றது. இசுப்பெயினைச்சேர்ந்த மரியா தெரிசா என்னும் இளவரசி யைத் திருமணஞ்செய்தது முதற்கொண்டு முழு இசுப்பானிய மரபுரிமையையும் பெறுவதற்கு உலூயி நாட்டங்கொண்டான். 1659 இன் பின்னர் இசுப்பெயின்

Page 107
194 பிரான்சும் ஐரோப்பாவும்
வலிமை குன்றியது என்பது வெளிப்படை. இசுப்பெயினினாசனன இரண்டாம் சாள்சு 1665 இல் முடிசூட்டப்பட்டபொழுது நாலு வயதான, நோய்வாய்ப்பட்ட குழந்தையாயிருந்தான். பிரான்சிய இராணி திருமணஞ் செய்தபொழுது இசுப் பானியப் பேரரசு உரிமையைத் துறந்தாளென்பது உண்மை. ஆனல் அவளுக்கு ஒரு பெரிய சீர்வரிசை கிடைக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பெயரிலேயே உரிமையைத் துறந்தாள். மேலும் இச்சீதனம் எக்காலமும் கொடுபடவில்லை.
பதினன்காம் உலூயி தனக்குமுன் ஆண்ட மிக மேன்மையான அரசர்களைப் போலவும் தனக்குப்பின் ஆண்ட பெரிய கோசிக்கனைப்போலவும், சாளிமேன் பேராசனை இலட்சிய புருடனக உளத்துக்கொண்டான். மேற்கு ஐரோப்பா முழு வதையும் ஆட்சி செய்பவனுக்குப் பேரரசு மதிப்பு வழங்கப்படுவதிலும் கூடிய பொருத்தமானதெது ?
சேர்மானியருள் மிகப்படித்த ஒருவனை உவொன் தேலிஞ்சர் கருத்தின்படி, உலூயியின் பூட்கை காரணமாகப் பிரான்சுக் கெதிராக ஐரோப்பா முழுவதும் ஒன்றுசேருமுன், இலியோபோல் இறந்திருப்பானேல், பதினன்காம் உலூயி நிச்சயமாகப் பேரரசனுகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பான்.
மசரின் கட்டளைப்படி இலியோன் என்பால்ை 1658 இல் ஒப்பேற்றப்பட்டு 1661 இலும் 1664 இலும் புதுப்பித்துப் பெரிதாக்கப்பட்ட இரைன் பிரதேசக் கூட்டவையை, மூன்று இாைன் பிரதேசப் பேரரசுத் தேர்வுரிமையாளரும் பவேரியத் தேர்வுரிமையாளரும் வேறு சேர்மானிய சிற்றரசர்களும் சேர்ந்தனர். ஆதலின், ஏலவே உலூயி ஒரளவிற்குப் பேராசனயிருந்தான்.
1664 இல் துருக்கிக் கெதிராக அனுப்பப்பட்ட படையெடுப்பு பேரரசின் நல னைக் கருதியதேயன்றிப் பிரான்சின் நலனைக்கருதவில்லை. இந்நடவடிக்கை பிரான் சின் மரபிற்கு ஒவ்வாதது. வேர்சையிற் பேரரசரின் அரண்மனை கட்டுவதாகத்
திட்டமிடப்பட்டது.
'உரிமை அடைதற் போர்
இசுப்பானிய மரபுரிமை முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ பெறு தலே தொடக்கம் முதல் இறுதிவரை உலூயியின் பூட்கையது அச்சாணியாக இருந்தது. நான்காம் பிலிப்பு காலமாக உலூயி, உரிமை சேர் சட்டத்தின்படி நெதலந்தின் பெரும் பகுதியையும், பிரான்சிய கொந்தே மாகாணத்தையும் இலச்சம்பேக்கையும் தன்னுரிமையாகக் கோரினன். ஏனெனில் பிராபந்து ஊர் வழமைப்படி, உடைமை இரண்டாம் தார மகனைச் சேராது, முதலாம் தாரத்து மகளையே சேருமாதலின். வெளிப்படையான ஆக்கிரமிப்புப் போரை மூடி மறைப்பதற்கான வெறுஞ் சாட்டாகும் அது. யுத்தமே (1667-8) ஒரு பவனியா யமைந்தது. பிரான்சிய கொந்தே மாகாணத்தைக் கொந்தே என்பான் மூன்று வாரங்களில் வென்முன். தோன் மூன்று மாதத்திற்குட் பிலாண்டேசு மாகா

பிரான்சும் ஐரோப்பாவும் 195
ணத்தை அடிப்படுத்தினன். பெல்சியத்திற் பிரான்சியர் முன்னேறுவதைக் கண்டு ஒல்லந்து பெரிதும் திகிலடைந்தது. 1667 இல் அது இங்கிலந்துடன் அமைதிப் பொருத்தனை செய்து கொண்டது. உலூயியிடமிருந்து அவன் வெற்றிகளின் பலன்களைப் பறிக்க 1668 இல் இந்த இரு வல்லரசுகளும் சுவீடினுடன் சேர்ந்தன. எயிச்சிலா சாப்பல் அமைதிப் பொருத்தனையின்படி கோட்டைகளின் அரண்களை அகற்றியபின் பிரான்சிய கொந்தேயை இசுப்பெயினுக்கு மீண்டும் கொடுக்க உலூயி ஒப்புக்கொண்டான். பிலாண்டேசில் ஏலவே தான் வென்ற கோட்டை களையே தன்னிடம் வைத்துக்கொண்டான். அதே ஆண்டில் (1668) அவன் இலியோ போல் பேரரசனுடன் ஒரு பொருத்தனை நிறைவேற்றினன். இதன்படி உத்தேச வுரிமையாளனுயிருந்த இலியோபோல் இசுப்பானியப் பேரரசைப் பிரான்சுடன் பங்கீடுசெய்ய ஒப்புக்கொண்டான். எயிச்சிலாசாப்பல் அமைதிப் பொருத்தனையை ஒரு படைத்தகைவாக மாத்திரமே உலூயி கருதினன். பிரான் சிய அரசனின் பேரவாவைக் குறுக்கிட்டுக் கெடுப்பதனுல் உண்டாகும் விளைவு யாது என்பதைத் துடுக்குள்ள அமிக்கடாம் வணிகர் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய மாகாணங்கள் விடுதலைபெற்றபின் ஆச்சரியப்படத்தக்க முறையிற் செழிப்படைந்திருந்தன. இங்கிலந்தின் உள்நாட்டுச் சச்சரவுகள் (1640-1660) ஒல்லந்துக்கு நல்ல வாய்ப்பை அளித்தன. அவர்கள் வளர்த்த மீன்பிடித் தொழில், கைத்தொழில்கள், (ஓரளவு போத்துக்கலை மீக்கொண்டு ஈட்டப்பட்ட) அவர் களுடைய குடியேற்றப் பேரரசு ஆகியன அவர்களுக்கு ஏராளமான செல் வத்தை அளித்தன. புகழ்படைத்த வங்கியை உடைய அமித்தடாம் நகர் உலக நிதிக்குத் தலைநகராயது. என்ருலும் அரசியலலுவலில் விழுமியோர், குருமார், உழவோர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட ஒரேஞ்சு வமிசத்தினருக்கும், சீலந்து தவிர்ந்த பிராதன நகர்களில் ஆதிக்கம் படைத்த நகர்வாசிகளின் சில்லோ ராட்சிக்கு மிடையிற் பெரும் பகை நிலவியது. 1610 இல் மெளனி உவிலியத்தின் மூத்த மகனன நாசோவைச் சேர்ந்த மொரிசு என்பான் குடியரசுக் கொள்கை யுடையவர்களின் தலைவனை யோன் ஒடன் பானவெற்று என்பானின் கொலையை திட்டமிட்டு நீதிமன்றம் மூலம் முடித்தான். இப்பழிச்செயல் வெற்றிகரமாய் நிறைவேறியது. நாற்பது ஆண்டுகளாக ஒரேஞ்சுக் குலத்தைச் சேர்ந்த இசுராற் முேல்டர் எதிர்ப்பின்றி அதிகாரஞ் செலுத்தினர். 1656 இல், இங்கிலந்தைச் சேர்ந்த மேரி இளவரசியின் கணவனுன இரண்டாம் உவிலியம் எனப்பெயரிய இசுராற்முேல்டர் மரபுரிமையான முடியாட்சியைத் தாபிக்கத் தீர்மானித்தான். ஆனல் அந்நோக்கத்தை எய்துமுன் அவன் சடுதியாகக் காலமானன். இசுராற் ருேல்டர்கள் ஆட்சி சிறிது காலம் நிறுத்திவைக்கப்பட்டு, (1658-1672 வரை) ஒல்லந்தின் முதலமைச்சனயிருந்த யோன் தி உவிற்று எனும் மேன்மையுடைய அரசறிஞன் தலைமையில் நகர்வாசிகளின் சில்லோராட்சி ஆகிக்கம் பெற்றது. குடியரசினர் தரைப்படையிற் பலம் குறைந்தவர்களாயினும் கடலிற் பலமுடைய வர்களாயிருந்தனர். இங்கிலந்துடன் அவர்கள் புரிந்த கடல்யுத்தமானது வெற்றி யுந் தோல்வியுமாக 1652 தொடக்கம், 1667 இல் பிரடாப் பொருத்தனை நிறை வேற்றப்படும்வரை விட்டுவிட்டு நடந்து கொண்டேயிருந்தது. முன் குறிப்பிட்ட

Page 108
96 பிரான்சும் ஐரோப்பாவும்
படி இரு நாடுகளும் பிரான்சின் போவாவை அடக்க 1668 இல் ஒன்று சேர்ந்தன. பதினன்காம் உலூயியிற்கும் சாள்சிற்குமிடையில் நிறைவேறிய இரகசிய தோவர் பொருத்தனை (1670) ஆங்கில ஒல்லந்த கூட்டுறவைக் குலைத்துவிட்டது. 1672 இல் இங்கிலந்து பிரான்சின் கட்சியிலிருந்தது. ஆனல் 1674 இல் இரண்டாம் சாள்சு ஒல்லந்துடன் அமைதிப் பொருத்தனை செய்ய வேண்டியதாயிற்று.
ஒல்லந்திற்கெதிராகப் பிரான்சியப் போர் (1672-8
ஒல்லந்தக் குடியரசைத் தாக்கியது பதினன்காம் உலூயியின் பூட்கையிலும் பணிநெறியிலும் ஒரு திருப்பத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இந்நெருக் கடியை 1683 இலிருந்து கொள்வதற்கு, முன் அதிகாரத்தில் நியாயங்கள் காட்டப் பட்டன. என்ருலும் 1672 இல் உலூயியின் நடத்தை, ஈற்றில் வெற்றியளித்திருக் கக்கூடிய வாய்ப்புகளுக்குப் பேராபத்தை விளைத்தது. அதனுல் மூன்ரும் உவிலி யம் முன்னணிக்கு வந்தான்.
புரட்சி, வெள்ளப் பெருக்கு, கூட்டிணைப்பு ஆகிய இம்மூன்றும் ஒல்லந்தைக் காப்பாற்றினவென்று ஒரு பிரான்சிய எழுத்தாளர் கூறியுள்ளார்.
இது உண்மையே. 1,20,000 வீரர்களைக்கொண்ட படைக்குத் தலைவனுக உலூயி இாைன் நதியைக் கடந்தான். ஒல்லந்தர் திகிலடைந்தனர். எண்பதுக்கு மேற் பட்ட கோட்டைகள் பிரான்சியர் நுழைய வாயில்களைத் திறந்துவிட்டன. ஏக்கு என்னுமிடத்திற் பொதுமக்கள், குடியரசை நகர்வாசிகளின் சில்லோராட்சி யானது வஞ்சித்துவிட்டதென நம்பி, யோன் தி உவிற்றையும் புகழ்பெற்ற கப்ப லோட்டியும் அவன் சகோதரனுமான கோனீலியசையும் கீறியெறிந்தனர். சடுதி யில் அதிகாரம் பெற்ற மூன்ரும் உவிலியம் பிரான்சியரின் படையெடுப்பைத் தடுக்கச் செய்யக்கூடியது சிறிதே. ஒல்லந்தர் கடல்மதில்களைத் திறந்துவிட்ட னர். படைவீரர் சாதிக்கமுடியாததை, மேவிப் பாய்ந்த கடல் சாதித்தது. இவ் வாறு ஒல்லந்துட் பிரான்சியரின் முன்னேற்றந் தடைப்பட்டது கண்டு, உலூயி தோனப் பிரான்சியக் கொந்தேயைக் கைப்பற்றும்படி அனுப்பினன். இதற் கிடையிற் போரிலும் பார்க்கச் சூழியலிற் கூடிய ஆற்றல் படைத்த உவிலியம் பிரான்சுக்கெதிராக ஒரு பலம் பொருந்திய கூட்டிணைப்பை உருவாக்கினன். 1674 இல் இங்கிலந்து பிரான்சைக் கைவிட்டது. 1677 இல் உலிலியம், மேரி இளவரசி யைத் திருமணம் புரிந்தான் ; 1678 இல் இங்கிலந்து பிரான்சின் மீது போர் தொடுக்க முனைந்தது. இாைன் பிரதேசக் கூட்டவை குலைந்தது. 1678 இல் நைமேசன் பொருத்தனை நிறைவேறுமுன், ஒல்லந்தோடு மாத்திரமன்றி, பேரா சுடனும் பிரசியாவுடனும் இாைன் பேரரசுத் தேர்வுரிமைத் தொகுதிகள் உட் பட வேறுபல சேர்மானிய நாடுகளுடனும் இசுப்பெயினுடனும் உலூயி யுத்தத் தில் ஈடுபட்டிருந்தான். சுவீடின் மாத்திரமே அவன் கட்சியிலிருந்தது. சுவீடின் பிரசியாவுக்குப் போமரேனியாவை இழந்தது. ஆனல் அமைதிப் பொருத்தனை யில், பிரான்சின் தலையீட்டால் மீண்டும் அதைப் பெற்றுக்கொண்டது.

பிரான்சும் ஐரோப்பாவும் 97
உண்மையில் ஒல்லந்து யுத்தத்திலிருந்து தீங்குருது வெளியேறியது; இசுப் பெயினே பெரிதும் நட்டமடைந்தது. அது பிரான்சுடன் முடிவாக ஒன்ருக்கப் பட்ட பிரான்சியக் கொந்தேயையும், வலன்சியன், கம்பிரே, சென் ஓமர், ஈப்பர் ஆகியவை உட்படத் தங்கேக்கிலிருந்து மியூசுவரையும் இருந்த தொடர்ச்சியான பல கோட்டைகளையும் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. பிரான்சின் கிழக்கெல் லைப்புறம் இவ்வண்ணம் பெரிதும் பலப்படுத்தப்பட்டது.
சிறப்புமுறை மன்று
திராசுபேக்கு என்னும் ' சுதந்திர நகரை ஈட்டியதால் அவ்வெல்லைப்புறம் மேலும் பலப்படுத்தப்பட்டது. உவெசுபேலியாப் பொருத்தனை இந்நகரின் நிலை மையைத் தெளிவாக நிர்ணயிக்கவில்லை. இதையும் இதைப்போன்ற பிணக்கமான பிற பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கச் சிறப்பு முறைமன்றுகளை உலூயி நிறுவி னன். பிரான்சு சேர்மனிக்குள் நுழைவதற்கு இருநூறு ஆண்டுகளாகப் பின்வாயி லாக உபயோகிக்கப்பட்ட திராசுபேக்கே, அவை அளித்த தீர்ப்புக்களின் வழி பெற்ற சிறந்த பயனுகும். 1681 செத்தெம்பர் 30 ஆம் திகதி திராசுபேக்கைப் பிரான்சியர் கைப்பற்றினர். தூரினுக்கும் மிலானுக்குமிடையேயுள்ள வழியைக் காத்துநின்ற காசாலே என்னும் கோட்டையை, அந்தத் தினத்தன்றே பிரான் சியர் தி மொன்பெரா கோமகனிடமிருந்து விலைக்குப் பெற்றுக்கொண்டனர். இக் கொடுக்கல்வாங்கல் 1684 இல் செனேவா கைப்பற்றப்பட்டமையாற் கூடிய அச்ச மளிப்பதாயிற்று. ‘இயற்கை எல்லைகளை அடையும் பூட்கையைக் கைவிட்டுப் பதி னன்காம் உலூயி முதலாம் பிரான்சிசின் மடமையைப் பின்பற்றத் தலைப்பட் டான ? 1683 இல் கைப்பற்றப்பட்ட இலச்சம் பேக்கு, கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததெனினும் அதிக அச்சத்தை விளைக்கும் சட்டமாயிருக்கவில்லை.
ஒகசுபேக்குக் கூட்டவை
இவ்வண்ணம் யுத்த காலமும் அமைதி காலமும் உலூயியின் போவாவுக்குச் சம மாகப் பயன்பட்டன. இடையீடின்றித் தொடர்ந்த, இவனுடைய வல்லிணைப்புக் களினல் ஐரோப்பா பெரிதும் அச்சமுற்றது.1686 இல் மூன்ரும் உவிலியம் ஒகசு பேக்குக் கூட்டவையை உருவாக்க முடிந்தது. நிகழ்வு நிலைமையைப் பேணு வதற்காக உருவாக்கப்பட்ட இக் கூட்டவையானது ஒல்லந்தக் குடியரசோடு, பேராசரையும், இசுப்பெயின் சுவீடின் ஆகியநாடுகளின் அரசர்களையும், சட்சனி, பலற்றினேற்று எனுமிரண்டின் தேர்வுரிமையாளர்களையும், வேறு சேர்மானிய சிற்றரசர்களையும் கொண்டதாயமைந்தது. முன்கூறிய காரணங்களுக்காகப் போப்பாண்டவர் பதினேராம் கிளமந்தும் சவோய்-பீதுமன் கோமகனும்
பின்னர் இக்கூட்டவையிற் சேர்ந்துகொண்டனர்.

Page 109
198 பிரான்சும் ஐரோப்பாவும்
ஆங்கிலேயப் புரட்சி
இக்கூட்டவை உருவாயகிலும் பார்க்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச் சிகள் இரண்டாம் சேமிசு அரசு கட்டிலிருந்து நீக்கப்பட்டமையும் மேரியும் உவிலி யமும் அரசு கட்டிலேறியமையுமாகும். மக்கோலியின் ‘உலிக்குப்பெருங்காப் பியம்' ஆங்கிலேயப் புரட்சியின் ஐரோப்பிய முக்கியத்துவத்தை மறைப்பதற்குச் சார்பாக இருந்தது. ஆங்கிலேயப் பாராளுமன்றத்துக்கும் சுதுவாட்டுக் குல முறையினருக்குமிடையே நிகழ்ந்த போராட்டத்தின் யாப்புறவில் உலிலியம் அதிக அக்கறை எடுக்கவில்லை. அவன் தன் ஆங்கிலேயப் பாட்டனுரைப் போன்றே பாராளுமன்றத்தில் விருப்புடையவனல்லன். பதினன்காம் உலூயி யிக்கு எதிராக யுத்தஞ்செய்ய ஆங்கிலக் கப்பல்களினதும் ஆங்கில நிதியினதும் துணையே அவனுக்குத் தேவையாக விருந்தது. இவைகள், மிகச் சிறந்த ஆங்கி லேயப் போர்வீசனைத் தலைவனுகக் கொண்ட ஒரு படையினுதவியால் ஈற்றிலே
தீர்க்கமான பலனை அளித்தன.
இப்போராட்டம் மிகச்சிறுகால இடைவேளையுடன் 1689 தொடக்கம் 1713 வரையும் நீடித்தது. 1689 வரையும் நிலைத்த முதலாம் கட்டம் ஒகசுபேக்குக் கூட்டவை யுத்தமென அழைக்கப்படுகிறது. இரண்டாவது கட்டம் (1702-13) இசுப்பானிய உரிமைவழிக்கொள்ளல் யுத்தமென வழங்கப்படுகிறது. இவை இப்போர்களுக்கேற்ற பெயர்களாகும். பிரான்சு ஐரோப்பா மீது ஆதிக்கம் செலுத்துவதா என்பதே உண்மையான பிரச்சினையாயிருந்தது. பிரான்சோ வேறெந்த வல்லாசோ அந்நிலையை எய்தக்கூடாதென்பதும், சிறப்பாக, பிரான்சு பெல்சியத்தை கவரக்கூடாதென்பதும் இங்கிலந்தின் உறுதியாயின. தாழ்நாடு களையே கண்டத்திலமைந்த தன் எல்லைப்புறமாக இங்கிலாந்து பன்னெடுங்காலம் கருதி வந்துள்ளது. அவைகளின் சுதந்திரம் எப்போதும்அதன் முதன்மையான அக்கறையாயிருந்தது. அவற்றை அடக்கி ஆட்சிபுரிய முயற்சி செய்த மூன்று வல்லரசுகளுள், இசுப்பெயின் தொலைவில் உள்ளமையால் அதிக அச்சம் விளேப்பதாயிருக்கவில்லை. ஆனல் கிரேக்கும் எலிசபெத்தின் கப்பலோட்டிகளும் இரண்டாம் பிலிப்புக்கு முதலாண்மை செலுத்த இடங்கொடுக்கவில்லை. நெப்போ லியனும் இரண்டாம் கயிசர் உவிலியமுஞ் செய்த முயற்சிகளைப் பற்றிப் பிந்திய அத்தியாயங்களிற் கூறப்படும். உடனடியாக நாங்கள் கவனிக்க வேண்டியது
உலூயியைப்பற்றியாகும்.
வட இத்தாலியிற் சவோய்-பீதுமனுக்கெதிராகக் காதினத்து எனப்பெயரிய மாபெரும் சேனபதி ஒரு தொடரிகலை வெற்றிகரமாக நடத்தினன். எனினும் பலற்றினேற்று மாகாணத்தை எக்காரணமுமின்றி மிருகத்தனமாகத் தாக்கிப் பாழாக்கியபின், உலூயி ஒல்லந்தையும் இங்கிலந்தையும் மும்முரமாகத் தாக்கி

பிரான்சும் ஐரோப்பாவும் 199
னன். நெதலந்திற் பிரான்சியருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. இசுதேன் கேக்கிலும் (1692) நீருவிந்தனிலும் (1693) மூன்ரும் உவிலியம் படுதோல்வி யடைந்தான். அவன் நமூரை 1695 இல் திருப்பிக் கைப்பற்றிய பின்னரே பிரான்
சியர் முன்னேற்றம் உண்மையாகத் தடுக்கப்பட்டது.
ஐரிசுத் தொடரிகல்
எப்படியாயினும், அயலந்தே உவிலியத்துக்கும் உலூயியிக்குமிடை நடந்த போருக்கு முதலாம் போர்க்களரியாயமைந்தது. இரண்டாம் சேமிசு பிரான்சி லிருந்து புறப்பட்டு 1689 மாச்சு 12 ஆம் திகதி கின்சேல் என்னுமிடத்திலிறங்கி ன்ை. உரோமன் கத்தோலிக்க அரசைெருவனுக்கு ஆதரவளிப்பதில் அயலந்து பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தது இயல்பே. திகிலடைந்த புரட்டெசுத்தாந்தர் இலண்டண்டரியிற் சரண் புகுந்தனர். என்ன நட்டம் வந்தாலும் முற்றுகையை விடுவிக்கும்படி அனுப்பப்பட்ட ஆங்கிலக் கப்பற்படை போயில் நதியின் மேல் போடப்பட்ட மாத் தடைகளை யூலை 30 ஆம் திகதி உடைத்தெறியும் வரையும், அன்னர் மூன்று மாதமாக அந்நகரில் முற்றுகையிடப்பட்டனர். தெரி நகரம் காப்பாற்றப்பட்டது; நியூசவுண்-பற்றிலர் என்னுமிடத்தில் படுதோல்வி யடைந்த கத்தோலிக்கப் படை தென்திசை நோக்கித் துரத்தப்பட்டது. 1690 யூன் மாதத்தில் உவிலியம் தானே இறங்கி, சேமிசுக்குப் பிரான்சிய படைவலுப் பெருக்குக்கிடைத்த போதிலும், பொயின் நதிக்கரையில் அவனை முறியடித்தான். இதற்குப்பின் சேமிசு அரசனை அயலந்து ஒருபொழுதும் காணவில்லை. இலி மறிக்கு நகரம் சரணடைய (3. 10. 1691) ஒரேஞ்சுக் குலத்தவரின் வெற்றியும் முற்றயது.
கடற் போர்
பீச்சிகெட்டுக்கப்பால் ஆங்கிலக் கப்பற்படை அடைந்த இழிவான தோல்வி காரணமாக (10, 7. 1690), ஆங்கிலேயர் பார்வையில், போயின் நதியில் உலிலியம் எய்திய மகத்தான வெற்றியின்மாட்சி குறைந்தது. தூவில் என்பானின் வெற்றியினுல், பிரான்சியர் கால்வாயின் ஆதிக்கத்தை ஈராண்டுகட்குப் பெற்றி ருந்தனர். ஆனல் 1692 மே மாதத்தில் இலாகோக்கு என்னுமிடத்தில் இரசல் என் பானின் மகத்தான வெற்றி முந்திய தோல்விக்காகப் பழி வாங்குவதுபோல் அமைந்தது. 1694 இல் பிறத்தைத் தாக்கும்படி அனுப்பப்பட்ட ஆங்கிலப்படை பெருஞ் சேதத்துடன் துரத்தப்பட்டது. ஆனல் இச்செய்கைக்கு எதிராக ஆங்கிலக் கப்பற்படை கால்வாய்த் துறைமுகங்களாகிய தங்கேக்கு, கலே, தியப்பு, ஆவர் எனுமிடங்களைப் பீரங்கிகளால் தாக்கியது. 1797 இல் உலூயி இறைசிக்கு என்னுமிடத்தில் அமைதிப் பொருத்தனை செய்தான். 1678 இற்குப்

Page 110
200 பிரான்சும் ஐரோப்பாவும்
பின் ஈட்டிய வெற்றிகளுள் திராசுபேக்குத் தவிர்ந்த ஏனைய இடங்களை இருசாரா ரும் பரிமாறிக் கொண்டதாற் பழைய நிலைமை மீண்டும் ஏற்பட்டது. உலூயி, உவிலியத்தை இங்கிலந்தினாசனுகவும் இளவரசியான ஆனை "வனுக்கடுத்த உரித்தாளியாகவும் அங்கீகரித்தான்.
இசுப்பானிய வழியுரிமை
கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் எதிர்நோக்கியிருந்தன. இசுப் பெயினைச் சேர்ந்த இரண்டாம் சாள்சு மரணத்தறுவாயிலிருந்தான். வேறு பிரச் சினைகளின்றி இக்கருமத்தை ஒரே முகமாகக் கவனிக்க உலூயி கருதினன். 1698 இல் இசுப்பானிய மரபுரிமைகளைப் பிரிவினை செய்தற்கு ஒப்புக்கொண்டான். இந்தப் பிரிவினையின்படி பெரும்பகுதியைப் பவேரியாவின் தேர்வுரிமையாளனும் இலியோபோல் பேரரசனின் பேரனுமாகிய யோசேப்பு பேடினந்து பெற வேண் டியவனுயிருந்தான். ஆனல் 1669 இல் இளவரசன் மாணமாக, 1700 இல் நடந்த இரண்டாம் பிரிவினைப் பொருத்தனையின்படி பேரரசனுடைய இரண்டாம் மகன கிய மாபெரும் கோமகன் சாள்சுக்குப் பெரும் பகுதி சேரவேண்டியிருந்தது ; உலம்பாடியும் இரு சிசிலிகளும் பிரான்சு நாட்டு இளவரசனைச் சேரவேண்டுமென
நிச்சயிக்கப்பட்டது.
பெல்சியத்திலிருந்து பிரான்சை அகற்றியது இங்கிலந்திற்கு ஆறுதலளித்த பொழுதிலும் மத்திய தரைப் பகுதியிற் பிரான்சு நாடுபெறுதல், இங்கிலந்திற்குக் கவலையளித்தது. ஆனல் பதினன்காம் உலூயி அஞ்குக்கோமகனும் தன் போனு மாகிய பிலிப்புக்கு முழு உரிமையையும் பெற்றுக்கொடுக்க விரும்பினமையால், அது ஆராய்ச்சிக்கு மாத்திரமே அமைந்த விடயமாகும். ஆகவே அயர் மிகுந்த இசுப்பானிய அரசன், மரணப்படுக்கையில், போட்டியிடும் குழியலறிஞர்களின் சதியாலோசனைகளாலும் போட்டியிடும் ஒப்புக்கோட்குரவரின் ஒன்றுக்கொன்று முரணுன அறிவுரைகளாலும் வேதனையடைந்தான். ஈற்றில், சிறப்பான தன் மரபு ரிமையைப் பிரிக்காதிருக்க இணங்கினன். தன் மரணசாதனத்திலே தன் உரிமை கள் யாவற்றையும் பிலிப்புக்குக் கொடுத்துக் காலஞ்சென்றன்.
1700 நவம்பர் 1 ஆம் திகதி சாள்சு காலஞ்சென்றன். பதினன்காம் உலூயி தயங்குவதுபோல் எல்லாருமறியப் பாசாங்கு செய்து, பின் தன் போன் சார்பாக முழு உரிமையையும் ஏற்றுக்கொண்டான். உலூயியின் வஞ்சகத்தினுல் ஏமாற்ற மடைந்த மூன்ரும் உலிலியம், பிரிவினைப் பொருத்தனையிலும் மரண சாதனத் தையே ஆங்கில மக்கள் விரும்புவதைக் கண்டபொழுது இன்னுமதிகம் ஏமாற்ற மடைந்து வருந்தினன். எப்படியாயினும், இந்த நெருக்கடியில் உலூயி இழைத்த இரண்டு பெரிய தவறுகளினல், உவிலியத்தின் நிலைமை காக்கப்பட்டது. உலூயி பெல்சியத்திலுள்ள தடைக் கோட்டைகளிலிருந்து ஒல்லந்துக் காவற்படைகளை வெளியே துரத்தி, பிரான்சியப் படையினை அங்கே நாட்டினன். இரண்டாம் சேமிசு (16, 9. 1701 இல்) காலஞ்செல்ல, உவேல்சு இளவரசனைச் சட்டப்படி யான ஆங்கில அரசனென அங்கீகரித்தமை இதனிலும் மோசமான தவருகும்.

பிரான்சும் ஐரோப்பாவும் 20.
இது வெறும் கருத்தியலான அங்கீகரிப்பேயாகும். ஆனல் பெல்சியக் கோட்டை களைக் கைப்பற்றியமையுடன் சேர்த்துப்பார்த்த பொழுது, இங்கிலந்தில் மிகுந்த ஆத்திரத்தை அது கிளப்பியது. பிரான்சுக்கெதிரான கூட்டிணைப்பின் தலைமையை இங்கிலந்து ஒப்புக்கொண்டதை அறிந்து, மகிழ்ச்சியுடன் 1702 மாச்சு மாதத்தில் உலிவியம் காலஞ்சென்ருரன்.
இசுப்பானிய வழியுரிமைப் போர்
பின்தொடர்ந்த (1702-13) நீண்டகால யுத்தத்தில், இசுப்பானிய முடியைப் பற்றிய பிரச்சினை முக்கியமில்லாததாயிற்று; உண்மையான பிரச்சினை ஐரோப் பிய சமநிலையேயாகும். மாள்பருேக் கோமகன் யோன் சேச்சில் என்பானின் மிகச்சிறந்த வெற்றிகளாலும் இங்கிலந்தின் கடலாதிக்கத்தாலும் இந்தப் பிரச் சினை முடிவுற்றது.
கடலில் தவிர, நெதலந்திலும் உலம்பாடியிலும் இசுப்பெயினிலும் போர் நடை பெற்றது. இசுப்பெயினில் மாபெருங்கோமகன் சாள்சு, பீற்றம்பருேவைச் சேன பதியாகக்கொண்ட ஒரு ஆங்கிலப் படையின் உதவியுடன், கற்றலோனியாவை மாத்திரம் கைப்பற்றியிருந்தான். கசுதைல் பிலிப்பின் ஆட்சியைச் சேர்வதெனப் பிரகடனஞ்செய்தது. நெதலந்தில் நடைபெற்ற தொடரிகல், யுத்தத்தின் முடிவைத் தீர்மானிப்பதாகவிருந்தது. ஆகவே அந்த் முன்னணியில் தன் முயற்சிகளெல்லாவற்றையும் மாள்பருே ஒருமுகப்படுத்தியது பொருத்தமானதே. எனினும் மிகப்பெரிய போர் தான்யூப்பு நதியின் மேற்பகுதியிற் புரியப்பட்டது. இங்கே (13. 8. 1704 இல்) பிளெனின் என்னுமிடத்தில், தல்லாடு என்பான் மீது எய்திய சிறந்த வெற்றியால், வீயன்னுவை அடையப் பிரான்சியர் செய்த முயற்சியை மாள்பருே தோற்கடித்தான். ஒரு வாரத்துக்கு முன் கடற்றளபதி உரூக்கு சிபுரோத்தரைக் கைப்பற்றியிருந்தான். பீற்றபருே இசுப்பெயினில் (1705-1706) நடத்திய சிறந்த தொடரிகளின் விளைவாக, 1706 யூனில் மாபெருஞ் கோமகனன சாள்சு தற்காலிகமாக மதிரித்தின் ஆட்சியைப்பெற்றன். அதே ஆண்டு கோடைக்காலத்தில் (மே, 12) இாமீய் என்னுமிடத்தில் மாள்பருே உலில்லருேரயைத் தோற்கடித்தான். உலூயி தோல்வியுற்று, இத்தாலியைத் தவிர மற்றைய இடங்களை ஒப்புவிக்க முன் வந்தான். ஆனல் நட்பாளர் அவனுடைய நியதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 1707 இல் பாராளுமன்றத்தில் அப்போது அதிகாரம் பெற்றிருந்த உவிக்குக் கட்சியினர், இசுப்பானியப் பேரரசின் எப்பகுதியாயினும் பூபன் குலமுறையினர் கைவசம் இருக்கும் வரையில் அமைதிப் பொருத்தனைக்கிணங்குவதில்லையெனத் தீர்மானித்தனர்.
அவர்கள் எல்லையை மீறிச் சென்றனர். 1707 இல் யுத்தம் நட்பாளருக்குப் பாதகமாக முடிந்தது. ஆனல் 1708 இல் மினுேக்கா ஆங்கிலேயராற் பிடிக்கப் பட்டது. இயூசின் இளவரசனைச் சேஞதிபதியாகக் கொண்ட பேரரசுக் கட்சியினர் உதவியுடன் மாள்பருே, வாண்டோம் என்பான ஒளதனடிலே தோற்கடித்து

Page 111
2O2 பிரான்சும் ஐரோப்பாவும
இலிலி, துரனே என்னுமிடங்களைக் கைப்பற்றினன். உலூயி பின்னரும் உடன் படிக்கை செய்ய முன்வந்தான். ஆனல் அவன் உடன்படிக்கையின் நியதிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1709 செத்தெம்பரில் மல்பிளக்கே என்னுமிடத்தில் நடந்த, இரத்தக்களரியான போரிற் பிரான்சியர் மீண்டும் படுதோல்வியடைந்த
னர். மாள்பருே மொன்சு எனும் பெரிய கோட்டையைக் கைப்பற்றினன்.
பிரான்சின் நிலைமை இரங்கத்தக்கதாக விருந்தது. எனினும் 1711 இல் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. 1710 இல் அதிகாரம் பெற்ற தோரிகள், ஒப்படைத்த பொருளைக் கைக்கொண்டானென மாள்பருே மீது குற்றஞ் சாட்டி அவனைப் படைத்தலைமைப்பதவியினின்றும் விலக்கினர். யோசேப்பு காலமாக, அபிசு பேக்குக் குலமுறையினரின் ஆணிலங்களும், பேரரசு உரிமையும் மாபெரும் கோமகனன சாள்சை வந்தடைந்தன. இசுப்பானிய சிம்மாசனத்தைப் பேராச னுக்குப் பெற்றுக்கொடுக்க நட்பாளர் தொடர்ந்து சண்டைசெய்வதா? அமைதிக் கான இணக்கப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்தன. 1713 இல் உதிரத்து எனு மிடத்திற் பிரான்சும் இசுப்பெயினும் ஒரு பகுதிக்கும், இங்கிலந்தும் ஒல்லந்தும் சவோயும் மறுபகுதிக்குமாக அமைதிப் பொருத்தனையில் ஒப்பமிட்டன. 1714 இல் ஒசுத்திரியாவும் பிரான்சும் இராசு தாட்டிற் சமாதானஞ் செய்து கொண்டன.
உதிரத்துப் பொருத்தனைகள்
ஐந்தாம் பிலிப்பு இசுப்பெயினின் அரசனுக இருந்து கொண்டு பிரான்சிய முடிக்குரிய உரிமைகள் யாவற்றையும் துறந்தான். பிரான்சும் இசுப்பெயினும் ஒரு முடிக்கீழ் இணைக்கப்படுதல் விலக்கப்பட்டது. பெரி, ஒலியன்சு ஆகிய வற் றின் கோமக்கள் இசுப்பெயின் மீது தங்களுக்குரிய உரிமைகள் யாவற்றையும் துறந்தனர். இங்கிலந்தும் சில நயங்களைப் பிரான்சிடமிருந்து பெற்றது : இங்கி லந்திற் புரட்டெசுத்தாந்த அனேவேரியரின் வழியுரிமையைப் பிரான்சு அங்கீ கரித்தது ; தங்கேக்கு அரண்களை அகற்றப் பிரான்சு ஒப்புக்கொண்டது ; இன்னும், நியூபண்ணிலாந்து, நோவாகோசியா, அட்சன்குடாப் பிரதேசம் ஆகியவற்றையும் இங்கிலந்து பெற்றது. பிரித்தானிய கனடாவுக்கு அத்திவாரம் இடப்பட்டது. இசுப்பெயின் சிபுரோத்தரையும் மினுேக்காவையும் இங்கிலந் துக்குக் கையளித்தது. மத்தியதரைக் கடலில் இங்கிலந்தின் ஆதிக்கம் உறுதி யாக்கப்பட்டது. இசுப்பானிய அமெரிக்காவிற்கு அடிமைகளாக நீகிரோவரை விற்கும் ஆகாயமான (ஆல்ை இழிவான) சிறப்புரிமையையும் வேறு வாணிப உரிமைகளையும், இசுப்பெயினுக்கும் பெரிய பிரித்தானியாவுக்குமிடையே ஒப் பேறிய அசியெந்தோ எனும் ஒப்பந்தத்தின்படி, இங்கிலந்து பெற்றுக்
கொண்டது.
பேரரசன் 1705-11.

பிரான்சும் ஐரோப்பாவும் 203
ஒசுத்திரியா இசுப்பானிய நெதலந்தைப் பெற்றுக் கொண்டது. எனினும், பிரானசின் படையெடுப்பைத் தடுக்குமுகமாக அமைக்கப்பட்ட, நெடுந்தொட ாாயமைந்த பல பலமான கோட்டைகளிற் காவற்படையாக அமர்த்தப்பட்ட ஒல்லந்து வீரர்களுக்கு வேதனமளிக்கும் பொறுப்பு ஒசுத்திரியா மீது சுமத்தப் பட்டது. ஒசுத்திரியா, உலம்பாடியின் பெரும் பகுதியையும் நேப்பிளேயும் சாடினி யாவையும் பெற்றது. சிசிலியும் உலம்பாடியின் ஒரு சிறு பகுதியும் சவோய்க் குல முறையினருக்குக் கிடைத்தன. ஒகன்சொலேன் மரபினர் பிரசியாவின் அரசர் களாக அங்கீகரிக்கப்பட்டனர். மேல்கெலுடலந்து அவர்களுக்கு அளிக்கப் பட்டது. பிரான்சு திராசுபேக்கையும் அல்சேசின் எஞ்சிய பகுதியையும் தனக்கு வைத்துக் கொண்டது. ஆனல் இாைன் நதியின் வடபாலுள்ள, தான் கைப்பற்றிய புறூபேக்கையும் வேறு கோட்டைகளையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று.
உண்மையாகவே இவ்விணக்கம் முக்கியமானது. எனினும் இங்கிலந்து மக்கள் உட்பட ஏனைய மக்களாலும் கண்டிக்கப்பட்டது. இவ்விணக்கத்தை உருவாக்கி யோரை இங்கிலந்திற் பழிமாட்டறைந்தனர். எனினும் மத்திய தரைக்கடலிலும், வட அமெரிக்காவிலும் தென்னமெரிக்க வாணிபத்திலும் எங்களுக்கு இத்துணை நற்பயன் அளித்த அமைதிப் பொருத்தனையைப் பிற்காலத்தவர் கண்டித்தற்கு இடமில்லை. பிரான்சியப் படையெடுப்பினின்றும் ஒசுத்திரியாவின் செலவில் ஒல்லந்தர் பாதுகாக்கப்பட்டனர். ஒசுத்திரியர் இத்தாலியில் ஆதிக்கமடைந் தனர்; பூபன் குலமுறையினர் இசுப்பானிய அரசகட்டிலில் நிலைநாட்டப் பட்டனர்; இத்தாலிக்கு, விடுதலையும் ஐக்கியமும் பெற்றுக் கொடுக்க வேண்டிய வமிசத்தினர் 1713 இல் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்தனர். ஒகன்சொ லேன் மரபினர் தனிச்சிறப்பு வாய்ந்த அரசர் குழாத்துள் உதன்முதலாக வைத் தெண்ணப்பட்டனர். நீண்ட தொடர்ச்சியான யுத்தங்களிலிருந்து, பிரான்சு உள் நாட்டளவிற் சோர்வடைந்த பொழுதிலும், ஐரோப்பாவில் முதன்மையான நிலை பெற்றுத் தோன்றியது.

Page 112
■ - - - - - : 露陀 YYYKYySS0SLSYYSLyyyyyYyyyyyyuE000LYSLyTeKSKK 等| 萬エリエリ.“ 『 [ܘܗ7] |
*T* ტუი କାଁ CG::::::: * sei::::::::: | స్టోను నొక్లె :FEGHT9"ြဋ္ဌိဋ္ဌိနှီဋ္ဌိ | [ ̊28 °cኦy°? SeaSa::::
۔ R = == : 笠距
- :::::::::::
:
. ኞ(Iና፡ III и II 11 | - = ""---- পী - ニ
R - - -
=;
(Tዶ
a**** ਅ |బ్తో *西面 高L品 اهدان و ان""
昂、° *ళ్కీ A. 盛 'g' - ی
أTېسم "ائي-ي | 雷° 卑 雷 .محمد حيد in
. * sin 别
电影 甲,
臀 if usir t EBD ఫ్లో بہاؤ| i கிழக் ாோப்பா
R ೩à p 5 ஐரோப t arts
البته ی * B# -L நாமங்கள்
EE H IF i التي ார் F جستي .
தரைக் ? HEL si*
4ழ்
Irri LL LL LL LL LSS LL LLL S LLLL TL LLLL SSS LLLLLL LS ... . . . is a 때 நு :::::::::::::::::::::: 欧翼 H :****= I* i * i :ביולי
s . . . . . . . .
- ry - - - - - - - - -
THI பு: .
::::::::::::::::::::::::::::::::::::::::::: :d ሀ)bj 臀、 :: ಒan لـ |
- . . . . * P :::::::Ema ITSEF.
LSSLSLLSSS SSLL LLLSL LLLLS STTqS LSL0L SLLLLL CLLLLLSSLS LS LLLLLLLE SLL LSLSLL LLLL LLSS LL SLSLS SSLSSL SLS LLLL qL LqLLLL LLLL LLL LLLL L LL L LLLS SLLSSS
1580 இல் கிழக்கு ஐரோப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 18
போற்றிக்கு நாடுகள் (1648-1721)
இரசியாவின் எழுச்சி
மூக்கியமான திகதிகள் : (16 ஆம் 31 ஆம் ஆத்தியாயங்களுக்குமூரியன)
G1 ஒற்றுேமண் துருக்கியர் அநீரியாநோப்பிளேப் பிடித்த:
1፵8{] கோசவோச் சமr,
1,1ñጛ கொன்சுந்தாந்திநோப்பின் கைப்பற்றப்பட்டது. 1520-நீர் மாண்புள்ளோன் சோவிமானின் ஆட்சிக் காலும்,
1岳型的 ിITEF FIf,
3. முதலாம் பிரான்சிசினதும் சோவிமான் சலுத்தானதும் பொருத்தனே. 1571 இ:ேபாந்தோ என்னுமிடத்தி: துருக்கியர் تیږه rغycرسمerته قوم-لام
| իէյ d சுவீடினேச்சேர்ந்த விரித்தீனு, பத்தாம் சாள்சு சார்பாக முடிதுநதீம். 1枋一卤 பத்தாம் சாள் போவிந்தேதி தோற்கடித்த.ே
ltiել) பத்தாம் சான்சின் மாணம்,
Itilit) ஒவியோ, ஒப்ப:ேள் போருத்தனேகள்.
I fit:1 காடிப் பொருத்தளே.
1岐虫 செங் கொதட்டு என்றுமிடத்தில் துருக்கியூரின் தோல்வி.
I யோன்சோபியக்கி போர்த்தினாரணுகத் தேரின் செய்யப்படஃப்.
IS1 பதிஐேராம் சான்சின் தனி முடியாட்சி,
S. யோன் சோபியக்கி வீயன்ஒ?வக் காப்பாற்றுதல்.
I liBii ©acier Confurtiz Claudi:
1689-1725 மகா பீற்றர் இரசியாவின் பேராசஐதt.
IIIT துருக்கிய சேந்தா என்துமிடத்தில் தோற்கடிக்கப்படஃ.
1. பதினுேராம் சான்சின் மரணம். பன்னிரண்டாம் சான்சு அரசகுதல்.
சட்சEயைச் சேர்ந்த ஒகந்தது போலந்தினாசஜகத் தெரிவு செய்யப்படம்.
O பன்னிரண்டாம் சாவ்து தார்: என்றுமிடத்தி: இரசியசைத் தோற்கடிதீத
ITII: HKS aaMTLTT LHuTTTTu LuuuL S TTT LLL LLttLLS
1 TK).3 பீற்றஈபேக்கு நிலநாட்டப்பட.ே
1. தானிசுஜாசு இலெசின்சுகி போrந்தின் அரசஜகத் தெரிவு செய்யப்படல்,
போஸ்தாவா என்னுமிடத்தில் பன்னிரண்டாம் சாளசின் தோல்வி.
III புகுத்துப் பொருத்தனே (இரசியாவும் துருக்கியும்).
II பரrரிரண்டாம் தாங்கிக் மரணம்.
11B அவிடிவில் உயர்குடியா: புரட்சி.

Page 113
206 போற்றிக்கு நாடுகள்
19 அனேவர், சுவீடினிடமிருந்து பிறேமன், வேடன் என்னுமிடங்களைப் பெறல்.
721 நிசுதாட்டுப் பொருத்தனை.
1722 இரசியா பாகு என்னும் பட்டினத்தைப் பிடித்தல்.
725 மகா பீற்றரின் மரணம்.
1733 சட்சனியைச் சேர்ந்த மூன்றும் ஒகத்தசு போலந்தின் அரசனுகத் தெரிவு
செய்யப்படல்.
736 ஒசுத்திரியாவுக்கும்#இரசியாவுக்கும் எதிராகத் துருக்கியயுத்தம்.
1739 பெல்கிறேட்டுப் பொருத்தனே.
743 அபோப் பொருத்தனை (இரசியாவும் சுவீடினும்).
757 பீற்றசுபேக்குக் கூட்டம்.
762 மூன்ரும் பீற்றரின் பின் இரண்டாம் கதரின் முடிதரித்தல்.
762 எலிசபெத்து சாரினவின் மரணம்.
1764 தானிசுலாசு பொனிய தொவிசுகி போலந்தின் அரசனகத்தெரிவு செய்யப்படல்.
1768 பார் நாட்டுக் கூட்டிணைப்பு.
1768 இரசியாமீது துருக்கி யுத்தப்பிரகடனஞ் செய்தல்.
772 மூன்றம் கசுத்தாவசு (1761-92) சுவீடினில் ஆட்சிப்புரட்டு நிறைவேற்றல்.
1772 போலந்தின் முதலாம் பிரிவினை.
1774 கச்சுக்கயினுட்சிப் பொருத்தன.
1775 புக்கோவினு ஒசுத்திரியாவுக்குக் கையளிக்கப்பட்டது.
78 ஒசுத்திரிய-இரசிய நட்புறவு.
1783 இரண்டாம் கதரின் கிரைமியாவை வலிந்திணைத்தல்.
1784. இரசிய-துருக்கிய பொருத்தனை.
1787 இரண்டாம் கதரினும் இரண்டாம் யோசேப்பும் கிரைமியாவுக்குப் பயணஞ்
செய்தல்.
787 துருக்கி இரசியாமீது யுத்தப்பிரகடனஞ் செய்தல்.
788 சுவீடின் இரசியா மீது யுத்தப்பிரகடனஞ் செய்தல்.
789 சுவீடினில் மூன்றம் கசுத்தாவசின் தனி முடியாட்சி.
1790 உவெரலாப் பொருத்தனை (இரசியாவும் சுவீடினும்).
179 போலந்தில் முடியாட்சிப் புரட்சி.
1792 யாசிப் பொருத்தனை (இரசியாவும் துருக்கியும்).
1792 மூன்றம் கசுத்தாவசு கொலை செய்யப்படல்.
1792 தாகோவிற்சின் போலந்து நாட்டுக் கூட்டிணைப்பு.
1792 இரண்டாம் கதரின் போலந்தின் மீது படையெடுத்தல்.
793 போலந்தின் இரண்டாம் பிரிவினை.
794 கொசிக்கோ என்பானின் தலைமையிற் போலந்திய எழுச்சி.
795 போலந்தின் கடைசிப் பிரிவினை.
796 இரண்டாம் கதரினின் மரணம்.

போற்றிக்கு நாடுகள் 207
மகா பீற்றரின் (1689-1725) ஆட்சியில் இரசியா உயர்வடையும் வரையும், ஒகன்சொலேன் குலமுறையினர் மேற்கு நோக்கித் தங்கள் ஆதிக்கத்தைப் பாவச் செய்ய ஆரம்பிக்கும் வரையும், போற்றிக்கு நாடுகள் ஐரோப்பிய வரலாற்றின் போக்கிற்குத் துணைபுரியவில்லை யெனலாம். மத்திய காலத்திற் போலந்து பெரிய தொரு வல்லரசாயிருந்தது. ஆன்சிப்பட்டினங்கள் வாணிபத்தில் முக்கியமான வையாயிருந்தன. ஆனல் எஞ்சிய விடயங்களில் வட ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கைரோப்பிய நாடுகளுக்கும் தொடர்பு அதிகம் இருந்ததில்லை. கசுத்தாவசு அதல்வசின் பணிநெறி திடீரென உயர்ந்து திடீரெனத் தாழ்ந்த தன்மையதா யினும், நாம் கண்டுகொண்டபடி, முப்பது ஆண்டு யுத்தத்தில் அவன் மிகச் சிறப் பாகச் செயலாற்றினன். அந்த யுத்தத்தின் விளைவாகச் சுவீடினின் மதிப்பு வளர்ந்திருந்தது ; கணிசமான அளவிற்கு ஆள்புலங்களையுஞ் சுவீடின் பெற்றது. 1932 இல் கசுத்தாவசு, உலூட்சன் எனுமிடத்தில் இறக்க, சுவீடின் முடியுரிமை அவன் இளம் மகள் கிரித்தீனுவிற்குரிதாயிற்று. இருபத்திரண்டாண்டு ஆட்சி செய்த பின், அவள் தன் அத்தை மகனின் சார்பாகத் தன் பதவியைத் துறந்தாள். அவள் ஆட்சிக்காலத்தில் இசுத்தொக்கோம் மிகச் சிறப்பான அறிஞர் குழாத்தின் மையமாயிருந்தது. தேக்காட்டும் குரோதியசும் இதைச்சேர்ந்த
வராவர்.
கிரித்தீவிைன் பெரிய அன்னையின் மகனும், போலந்தினரசனுமான யோன் கசிமீர் பத்தாம் சாள்சின் முடியுரிமையை எதிர்த்தான். பத்தாம் சாள்சு தன் குறுகிய ஆட்சிக்காலம் முழுவதும் (1654-1660) அயல்நாடுகளுடன் போர் புரிந்து கொண்டேயிருந்தான். மூன்று முழுநாள் நிலைத்த, இரத்தக்களரியான சமரின் பின், உவாசோ நகரை அவன் கைப்பற்றிப் போலந்தை அடிப்படுத்தினன். பேரர சனும், போலந்தைச் சேர்ந்த யோன் கசிமீரும், பிரந்தன்பேக்கும் தென்மாக்கும் இரசியாவும் ஒன்றுகூடி எதிர்த்தபோதும் தீானன இத்துணிகர விரனின் முன் னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. ஒல்சுதையின், செல்சுவிக்கு, யத்துலந்து மாகாணங்களை அவன் அடிப்படுத்தினன். பின் பெலிட்டுச் சலசந்தியைப் பனிக் கட்டிமேல் நடந்து கடந்து, ஒப்பனேகனப் பயமுறுத்தினன். ஆச்சரியப்படத் தக்க இந்த வெற்றிகளை அவன் அடைந்த போதிலும், நானுபக்கங்களிலும் பகை வர்களாற் குழப்பட்டிருந்தமையால், அவன் நிலை உண்மையில் இடையூறுடைய தாயிருந்தது. 1660 இல் அவன் மரணத்தின் பின் அவன் மகன் பதினோாம் சாள்சு (பெரிதும் பிரான்சிய ஆதரவுடன்) தனக்குச் சாதகமான ஒரு தொடர்ச் சியான பொருத்தனைகளை நிறைவேற்றினன்.
ஒலிவா, ஒப்பனேகன், காடிசு பொருத்தனைகள்
யோன் கசிமீர் சுவீடிய முடிக்குத் தனக்கிருந்த உரிமைகள் யாவற்றையும்
துறந்தான். உவெசுபேலியா உடன்படிக்கைவாயிலாகச் சுவீடின் தான் பெற்ற
வைகளை இழக்காது வைத்திருந்தது மன்றி, தென்மாக்கிலிருந்து இசுகானியா
155 ஆம் பக்கம் பார்க்க

Page 114
208 போற்றிக்கு நாடுகள்
வையும் (இவ்வண்ணம் தேனியர் சவுண்டு சல சந்தியின் கீழ்க் கரையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்) இரசியாவிடமிருந்து இங்கிரியாவையும் கரீலியாவையும் எசுதோனியாவையும் இலிவோனியாவையும் பெற்றது. இவ்வண்ணம் சுவீடின் தன் ஆழ்புலப் பெருமையின் உச்சத்தை அடைந்தது. செயலளவிற் போற்றிக்குக் கடல் சுவீடிசு வாவி ஆயது.
பிரான்சின் உதவியின்றிச் சுவிடின் அத்தகைய நிலையை அடைந்திருக்க முடி யாது. அரை நூற்முண்டுக்குமேற் பிரான்சிய நட்புறவே சுவீடினது பூட்கையின் அச்சாணியாக இருந்தது. 1668 இல் உருவாய மூவர் நட்புறவிற் சுவீடின் சேர்ந்த மையால், பிரான்சிய நட்புச் சிறிது காலம் தடைப்பட்டது. ஆனல் பதினன் காம் உலூயி 1672 இல் தென்மாக்கைத் தாக்கிய பொழுது சுவீடின் பழையபடி பிரான்சுடன் நட்புப் பூண்டது. ஒல்லந்துக்கு ஆதரவளித்த பிரந்தன்பேக்கைத் தாக்கும்படி சுவிடினுக்குப் பிரான்சு கட்டளையிட்டது. ஆனல் அப்பேரரசுத் தேர்வாளன் பதினேராம் சாள்சைப் பிரந்தன்பேக்கு மெக்கிளன்பேக்கு ஆகிய வற்றின் எல்லைப்புறத்திலிருந்த பேபெலினில் முறியடித்துச் சுவிடியரைப் பொமரேனியாவினின்றும் வெளியே துரத்தினன்.
சுவீடியரின் தோல்வி, இசுகானியாவை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்பிய தென்மாக்கைச் சுவீடின் மீது யுத்தப்பிரகடனஞ் செய்யும்படி தூண்டியது. வான்திரம்பு என்பானின் துணையுடன் சுவிடியரைத் தேனியர் போற்றிக்குக் கடலிலிருந்து வெளியேற்றினர். எனினும், அவர்களே இசுகானியாவிலிருந்து அகற்ற முடியவில்லை. பதினன்காம் உலூயியும் சுவீடியரைத் துன்புறவிடவில்லை. சென் சேர்மேன் என் இலே (1679) நகர்ப் பொருத்தனையின்படி பிரந்தன் பேக்கு, ஒடர் நதியின் வலக்கரையிலுள்ள ஒரு கீறு நிலப்பகுதியைத் தவிரத் தான் வென்ற எல்லாவற்றையும் திருப்பிக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டது. சுவீடின் தன் மதிப்பை யன்றி வேறென்றையும் இழக்கவில்லை.
என்றலும் பதினேராம் சாள்சின் நிலைமை இடையூறுடையதாயிருந்தது. ஒன்றன்பின் ஒன்முக நிகழ்ந்த யுத்தங்கள் சுவிடினின் பணத்தை வற்றச் செய்தன; நிதிநிலை குலைவுற்றிருந்தது; வாணிபம் சிதைந்துகொண்டிருந்தது ; விழுமியோர் பேராசையுள்ளவராய், ஊழற்பழக்கமுள்ளோராய், வருத்துபவர் களாயிருந்தனர் ; உழவோர் இத்துன்பங்களைப் பொறுத்து வாழும் ஊமையாா யிருக்கவில்லை. 1681 82 இல் பதினுேராம் சாள்சு, நகரத்தார் உழவோர், குருமார் ஆகியோரின் ஆதாவுடன் விழுமியோர் தவருண முறையிற் கவர்ந்த செல்வத் தைத் திருப்பிக்கொடுக்கும்படி கட்டாயம்பண்ணி, அவர்கள் அரசியலாதிக்கத் தைப் பறித்தெடுத்து, முடியைச் செயலளவிலே தனி முதன்மையானதாக்கினன்.
199 ஆம் பக்கம் பார்க்க.

போற்றிக்கு நாடுகள் 209
மகா பீற்றர்
மகா பீற்றரின் ஆட்சிக்காலம்வரை இரசியா ஐரோப்பிய அரசியலாங்கில் இடம்பெறவில்லை. பின்னரும் ஓரளவுக்கு மட்டுமே இடம் பெற்றது. இாைன் கழிமுகத்திலிருந்து யூரல் மலைகள்வரை இயற்கைத் தடைகளொன்றுமில்லை. இந்தப் பிரமாண்டமான சமவெளியிற் கூடிய பகுதி இரசியாவுக்குரியது. போற் றிக்குக் கடலில் விழும் நீவா, கசுப்பியன் கடலில் விழும் வொல்கா, கருங்கட லில் விழும் திரீப்பர் ஆகிய மூன்று பெரிய நதிகளின் பள்ளத்தாக்குக்களைத் தவிர்த்தால், இரசியா உருவற்றதும் உறுப்பற்றதுமாகும். ஆனல் எவ்வகை யினும் அது பாழ்வெளியன்று. புவியியற்படி இரசியாவில் (இசுப்பெயினில் போல்) மாகாண மனப்பான்மையை ஊக்கவோ, ஐக்கியம் பூணலைத்தடுக்கவோ ஒன்றுமில்லை. இனி, பெரிய பிரித்தானியாவிலும் பிரான்சிலும்போல் நாட்டின் ஒற்றுமையைத் தூண்டத் தெளிவான எல்லைப்புறங்களும் அங்கேயில்லை. வெளி மட்டமான அரசியற் கருத்திலல்லாது இரசியா ஒருபொழுதும் ஐக்கியப் பட்டிருக்கவில்லை. என்ருலும் உரோமானேவுசாரின் ஆட்சியில் இருநூறு ஆண்டுகளாக, ஐரோப்பிய வரலாற்றிலும் உலகவரலாற்றிலும் ஒரு பெரிய இடம் வகித்தது. இரசியா அந்நிலையை மீண்டும் பெறலாம்.
1689 இல் முதலாம் பீற்றர் தனிஆட்சி செய்தபொழுது அந்நாடு மேல்நாடு களுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதன் ஒரேயொரு சமுத்திரத்துறை முகமாகிய ஆக்கேஞ்சல் அரை ஆண்டிற்குமேற் பனிக்கட்டியினல் அடைப்புண் டிருந்தது; எக்காலமாவது சென்றடையக்கூடியதாக இருந்ததில்லை. சுவீடின லும் போலந்தாலும் போற்றிக்குக் கடலிலிருந்தும், ஒற்முேமன் துருக்கியராற் கருங் கடலிலிருந்தும் இரசியா துண்டிக்கப்பட்டிருந்தது. பீற்றரின் பூட்கையின் முதன்மையான குறிக்கோள், புவியியல் அரசியல் சமூகவியல் ஆகியவற்றில் இரசியாவை ஐரோப்பிய மயம் ஆக்குவதாகும். '
அவன்கொண்ட புவியியற் குறிக்கோள் முன்னர் கூறிய மூன்று வல்லரசுகளுட ணும் இரசியாவை தவிர்க்கமுடியாத சச்சரவுக்குளாக்கியது. அவை மூன்றும் நலிந்துகொண்டிருந்தது பீற்றரின் நற்பேறே.
1696 இல் அசோவுப் பகுதியைக் கைப்பற்றியதனுற் பீற்றர் தெற்கிலொரு வாயில் திறந்தான். ஆயின் அவ்வாயிலோ சிறிதாய் இருந்தது. 1771 இல் இவ் வாயில் மீண்டும் அடைக்கப்பட்டது. 1739 இன் பின்னரே நிரந்தரமாக மீண்டும் அது திறக்கப்பட்டது. ஆனல், அசோவைக் கைப்பற்றியமை, ஒரு கப்பற்படை தேவையென்பதைக் குறிப்பாலுணர்த்தி, அதைத் தோற்றுவிப்பதை எளிதாக்கி யது. ஒல்லந்திலும் இங்கிலந்திலும் கப்பல் கட்டும் தொழிலையும், கடற்படை சார்ந்த அலுவல்களையும் படிக்க ஐம்பது இளம் விழுமியோர் அனுப்பப்பட்டனர். தொழினுட்ப நிபுணர்கள் வெளிநாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டனர்; 26,000 தொழிலாளர் தொன் நதியில் வேலை செய்யும்படி அமர்த்தப்பட்டனர். ஒரு கப்பற்படை ஆர்வத்துடிப்புடன் விரைவில் ஆக்கப்பட்டது.

Page 115
210 போற்றிக்கு நாடுகள்
ஓர் ஆண்டின்பின் (1679), பீற்றர், புகழ்பெற்ற தன் மேற்கைரோப்பிய சுற்றுப் பயணத்திற்காகப் புறப்பட்டான். செல்லும் வழியில் அனேவர், பேளின், அமித் தடாம், இலண்டன், வீயன்ன ஆகிய இடங்களுக்குச் சென்ருரன். அறிவுக்கூர்மை யுடைய இம் மிலேச்சன் தன்னை வந்து காணுவகை பதினன்காம் உலூயி சாட்டுச் சொல்லித் தடுத்துவிட்டான். இந்தப் பெரிய மன்னன் பழக்கவழக்கத் தில் நாகரிகமற்றவனே . ஆனல் மனதைப் பொறுத்தவளவில் தனிச்சிறப் புடைய கூரிய புத்தியும் கருத்துகளை எளிதிற் புரிந்துகொள்கிற ஆற்றலும் படைத்தவன். மேற்குநாடுகள் கற்பிக்கக்கூடிய யாவற்றையும் அவன் கற்றுக் கொண்டான். அவன் சென்று கண்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நிபுணர்களை வருவித்தான்-படைவீரர், கப்பலோட்டிகள், பொறியியலாளர், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சுரங்கம் தோண்டுவோர், உலோகத் தொழிலாளர், பல்வேறு தொழில் புரியுங் கம்மியர் ஆகியோர் இவ்வாறு இரசியாவிற்குச் சென்றனர்.
இரசியாவில் எதிர்ப்பு
பழைய இரசிய நாட்டுப்படையிற் கலகம் கிளம்பியதாகச் செய்தி கிடைத்த தும் பீற்றர் வீயன்னுவிலிருந்து தன்னுடு திரும்பினுன். அந்தக் கலகம் பின் நிகழ்ந்தவற்றிற்கு முன் அறிகுறியாக அமைந்தது. சீர்திருத்தம் ஏற்படுத்தும் சாரை மக்கள் விரும்பவில்லை. திருச்சபை பீற்றரை இயேசுவின் சத்துருவெனக் கருதியது. அவன் உண்மையாக ஒரு சேர்மானிய வைத்தியனின் மகனென்றும், இரசியன் அல்லனென்றும் விழுமியோர் பிரசித்தஞ் செய்தனர். அரசர்க் கொவ்வா அவன் வாழ்க்கைமுறை கண்டு மக்கள் நாணினர். அவனுடைய சீர் திருத்த முயற்சிகளுக்கு இன்றியமையாதனவாகவமைந்த உயர்ந்த வரிகளால் மக்கள் துன்புறுத்தப்பட்டனர். ஆனல், திரெல்சியின் கலகம் இரக்கமற்ற கண்டிப்புடன் நசிக்கப்பட்டது. பின்னர் கிளம்பிய கொசாக்கரின் கலகங்களும் அதே கதியை யடைந்தன. 1709 வரையில் நாட்டின் இராணுவ பலம் முழுவதற் கும் அவனே அதிகாரியானன்.
பன்னிரண்டாம் சாள்சு
அப்படை பலத்தை அவன் உபயோகிக்காமல் விடவில்லை. 1697 இல் பதினே ராம் சாள்சு இறந்தபின்னர், பதினைந்து வயதுள்ள அவன் மகன் சுவீடினின் அரசனனன். அவன் 18 ஆம் நூற்றண்டில் தவறிப்பிறந்த ஓர் இடைக்கால நைற்று எனக் கருதத்தக்கவன். போர் புரிதலே அவன் பொழுது போக்காகும். ஆனல் அதில் அவன் ஈடுபட்டதன் விளைவாக சுவீடின் எக்காலத்திலும் பழைய நிலையை அடைந்ததில்லை.
1 1717 ஆம் ஆண்டில் பீற்றர் பரிசிற்குச் சென்றிருந்தான்.

போற்றிக்கு நாடுகள் 2.
அவன் அரசெய்திய இரண்டு ஆண்டுகளின் பின், இரசியா, போலந்து, தென் மாக்கு ஆகிய நாடுகளுக்கிடையில்-அவனெடுமாறுபட்டுநின்ற இலிவோனிய விழுமியோன் இாேனல் பாற்குல் என்பவன் திட்டமிட்டு முடித்த-ஒரு கூட்டிணைப்புத் தன்னை எதிர்த்து நிற்பதைச் சாள்சு கண்டான். மூன்று மாதத் தொடரிகல் ஒன்று (1780 மே மாதத்திலிருந்து ஒகத்து வரையும்) தென்மாக்கை முறியடிக்க அவனுக்குப் போதுமாயிருந்தது. பின் சாள்சு இரசியாமீது நட வடிக்கை எடுத்தான். 1700 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி, 8,000 பேரைக் கொண்ட ஒரு சுவீடிசுப்படையுடன் அவன் பினிலாந்துக் குடாவிலுள்ள நெரொவா என்னுமிடத்தில் 80,000 இரசியசை முறியடித்தான். போலந்து எஞ் சியிருந்தது. இலிவோனியாவிலிருந்து சாள்சு மத்திய போலந்தினுள் அணி வகுத்துச் சென்றன். உவாசோவைக் கைப்பற்றி, கிருக்கோவையும் வென்முன். 1703 இல் தான்சிக்கையும் தோணையும் கைப்பற்றி, போலந்தின் சட்சனிய அரசனன இரண்டாம் ஒகத்தசை அரசபதவியினின்றும் நீக்கி, அவனுக்குப் பதிலாக ஒரு போலியப் பிரபுவாகிய தானிசுலாசு இலெக்கின்சியைத் தேர்ந்தெடுக் கும்படி செய்தான். பின் சாள்சு இலிதுவேனியாவை வென்று, இலிதுவேனியா விலிருந்து சட்சனிக்குள் முன்னேறிச் சென்று, அங்கே இலைச்சிக்கு நகருக் கண்மையிலுள்ள அல்திரான்சு தாட்டு என்னுமிடத்தில் நிலேயூன்றினன்.
அப்போது இசுப்பானிய வழியுரிமை புத்தம் அதன் மிக நெருக்கடியான நிலையை அணுகிக் கொண்டிருந்தது.
அப்போது, மத்திய சேர்மனியிற் பாசறையிலே தங்கியிருந்த இளம் சுவீடிய வெற்றிவிான் கையில், ஐரோப்பாவின் வருங்காலநிலைமை அடங்கியிருந்தது போல் ஒருகால் தோன்றியது. அப்போது போர் புரிந்து கொண்டிருந்த இரு கட்சியினரும் போவாவுடன் அவன் உதவியை நாடிநின்றனர். பதினன்காம் உலூயி அவனைக் கசுத்தாவசு அதோல்வசு என்பான் முன்னர்ச் சென்ற நெறியிற் செல்லுமாறு தூண்டினன். ஆனல் சூழ்வல்லோரில் மிக ஆற்றல் படைத்த மாள் பருே தானகவே 1706-7 மாரிகாலத்தில் அல்கிரான்சு தாட்டு என்னுமிடத்திற்குச் சென்றன். அங்கு அபிமானமிக்க புரட்டெசுத்தாந்த சமயத்தணுகிய சாள்சிற்கு, இயூசனரை வருத்தியவனுக்குத் துணைபுரிதல் வெட்கமான காரியமென்றும் உண்மையான புகழடைதற்கு வழி மேற்கேயன்றிக் கிழக்கே உளதென்றும், எடுத்துக்காட்டினன்.
சாள்சு இரசியாமீது மீண்டும் படையெடுத்தான். இது அவன் அழிவிற்குக் காரணமாயது. 1702 இல் பீற்றர் இலிவோனியாவிற் சிறிது வெற்றி அடைந்த பின், பீற்றசுபேக்கிலே தன் புதிய தலைநகரை அமைத்தான்; சாள்சு போலந் திலும் சட்சனியிலும் தன் காலத்தை வீணே போக்கிக்கொண்டிருக்க, பீற்றரோ தன் பலமெல்லாம் பெருக்கி, தன் படையைத் திருத்தியமைத்துக் கொண்டிருந் தான். சாள்சு, அவனுக்குப்பின் நெப்போலியன் செய்ததுபோல், மொசுக் கோவை அடையும் நோக்கத்துடன் இரசியா மீது படையெடுப்பதிலிறங்கினன்.
9-Ᏼ 2Ꮞ178 (51Ꮾ0)

Page 116
212 போற்றிக்கு நாடுகள்
இவன் நீமனிலுள்ள கிருேனேவிலும், பொசினுவிலும், திநீப்பர் நதியிலுள்ள சிமோலன்சு நகரிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றமையால் இவனுக்குச் சாதகமான உடன்படிக்கையொன்றை நிறைவேற்றப் பீற்றர் முன்வந்தான். சாள்சு மொசுக்கோ நகரிலிருந்து உடன்படிக்கையைப்பற்றிப் பேசலாமென்முன். உக்கிரேனிலுள்ள கொசாக்கரின் சேனபதி சசெப்பா என்பானுல் எவப்பட்டு, முன் கொண்ட நோக்கத்தைக் கைவிட்டு உக்கிரேனை நோக்கிச் சென்ருன். கிநீ ப்பர் நதியின் கிளை யொன்றில் அமைந்துள்ள பொல்தாவாவில், பீற்றர் திருத்தி யமைக்கப்பட்ட தன் படையுடன் அவனை எதிர்த்து அவன் படையைப் பாழா க்கி வென்முன்.
பொல்தாவாப் போர் உண்மையாகவே தீர்ப்பான ஒரு போராகவமைந்தது. ஒரே பாய்ச்சலில் இரசியா ஒரு பெரிய வல்லரசின் நிலைமைக்கு முன்னேறியது. சுவீடின் இரண்டாம் நிலைக்கு இழிந்தது. இந்நிலையிலிருந்து அது ஒருகாலும் எழவில்லை. சாள்சு துருக்கிக்குத் தப்பியோடி, நான்கு ஆண்டுகளாகப் பெந்தர் என்னுமிடத்திற் பூரண ஒய்வெடுத்தான். இரண்டாம் ஒகத்தசு மீண்டும் போலந்துக்கு அரசனுயினன். பீற்றர் போற்றிக்குக் கடலைச் சார்ந்த சுவீடிய மாகாணங்களைக் கைப்பற்றி, கூலந்துக் கோமகனுக்குத் தன் மருமகள் அணுவைத் திருமணஞ் செய்து கொடுத்தான்.
புரூத்து நிபந்தனைச்சாண்
இது இவ்வாருக, சாள்சு பதினன்காம் உலூயியின் ஆதரவுடன், சாரைத் தாக் கும்படி துருக்கியரைத் தூண்டினன். சார் சாவதானமின்றிப் புரூத்தை நோக்கி முன்னேறினன். துருக்கியராற் குழப்பட்டு, 1711 இல் புரூத்தை ஒப்படைக்கும்படி அவன் கட்டாயம் செய்யப்பட்டான். அசோவு திருப்பிக் கொடுக்கப்பட்டது; துருக்கிய நிலத்திலுள்ள அரண்கள் அகற்றப்பட்டன; இரசியக் கடற்படை கருங் கடலிலிருந்து அகற்றப்பட்டது.
துருக்கிக்கும் இாசியாவுக்குமிடையே நிறைவேறிய அமைதிப் பொருத்தனை பன்னிரண்டாம் சாள்சு எதிர்பார்த்த நன்மைகளுக்குச் சாவுமனியடித்தது. பிரசியா பொமரேனியாவைக் கைப்பற்றியது. அனேவர், பிறேமனையும் வேடனை யும் கைப்பற்றிக் கொண்டது. தென்மாக்கு உவிசுமாரைப் பிடித்துக் கொண்டது. போற்றிக்குக் கடலில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொக்கோம் நகரையும் பயமுறுத்தினன் பீற்றர். ஈற்றில், செயலாற்றுமாறு தூண்டப்பட்ட சாள்சு, நோவேயை வெல்வதனற் பழைய நன்னிலையைப் பெறுதற்கு முயன்ருன். ஆனல் 1718 இல் பிறீடிரிச்சால் கோட்டையின் முற்புறமாக, அகழியொன்றிற் கொல்லப்
பட்டான்.
அவனைக் கொன்ற குண்டு அவன் பக்கத்துப் பாசறையிலிருந்த ஒரு துரோகி யினுற் சுடப்பட்டிருக்கலாம். விழுமியோரும் அவனைத் தொலைத்துவிட விரும் பினர் என்பது உண்மை. அவன் இறந்தபின், உண்மையான உரித்தாளியாகிய

போற்றிக்கு நாடுகள் 23
ஒல்சுதைனைச் சேர்ந்த பிரதரிக்கைத் தவிர்த்துவிட்டு, சாள்சின் இளைய சகோ தரியான ஊல்றிக்கு எலானரை அரசகட்டிலேற்றினர்கள். ஆனல், 1772 இல் மூன்ரும் கசுத்தாவசு தனி முடியாட்சியை மீண்டும் தாபித்து, போலந்துக்கு அண்மையில் நிகழவிருக்கும் கதியிலிருந்து சுவீடினைக் காப்பாற்றினன். முடி யுரிமை தேர்தலின் வழியதாக, செயலளவிற் சுவீடின் உயர் குடியோர் ஆட்சி செயுங் குடியரசாயது.
பன்னிரண்டாம் சாள்சின் மரணம், சுவீடினில் உடனே அமைதியை நிலவச் செய்யவில்லை. பீற்றர் தனக்குப் போட்டியாயமைந்த இராச்சியத்தை முற்ரு யழிக்கும் வேலையை முடிவு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தான். ஆனல் 1721 இல் நியூசுதாட்டுப் பொருத்தனைக்கு உடன்பட்டான். ஒரு ஆண்டுக்கு முன்னரே மற்றைப் பகைவர்களுடன் சுவீடின் இணக்கஞ் செய்து கொண்டது.
தொக்கோம், நியூசுதாட்டுப் பொருத்தனைகள்
சுவீடினின் வளம்யாவும் அடியோடு சுரண்டப்பட்டன. அனேவரைச் சேர்ந்த யோட்சு (அக்கால் இங்கிலந்தின் அரசன்) பிறேமனயும் வேடனையும் கைவிட வில்லை. ஆனல் இவைகளுக்காகப் பத்து இலட்சம் இறைசால் கொடுத்தான் ; பின் சியா அதே நிபந்தனையிற் சித்தெத்தின், உவலின் யூசுடம் தீவுகள், பொமரேனி யாவின் இன்னுமொரு பகுதி ஆகியவற்றைத் தன்பால் வைத்துக்கொண்டது. தென்மாக்கு செலுசு விக்கிற் பெரும்பாகத்தைப் பெற்றது; ஆனல் சுவீடின் திருல் சண்டு, உவிசுமார், உறுாகென் தீவு ஆகியவற்றை விலைக்கு வாங்கிக்கொண் டது. நியூசுதாட்டுப் பொருத்தனையின்படி, இலிவோனியா, எசுத்தோனியா, இங்கிரியா, கரிலியா, பினிலந்தின் ஒரு பாகம்,அவ்வழி போற்றிக்குக் கடல் மீது உறுதியான ஆதிக்கம் ஆகியனவற்றை இரசியா பெற்றுக்கொண்டது.
மத்திய, மேற்கு ஐரோப்பாவிற்கு உதிரத்து உடன்படிக்கை எவ்வாறு அமைந் ததோ, அவ்வாறே விரிவான இந்த உடன்படிக்கை வடஐரோப்பாவிற்கும் அமைந்தது. அது இரசியாவின் சடுதியான உயர்ச்சி, பிரசியாவின் உறுதியான முன்னேற்றம், கசுத்தாவசு அதோல்வசு, ஒச்சுசென்தீன் ஆகியோரின் ஆட்சி யிற் சுவீடின் எய்திய உன்னத நிலையினின்றும் அந்நாடு வீழ்ந்தமை ஆகியவற் றைக் குறித்தது. இரசியாவும் பிரசியாவும் முன்னேறியமையால், சுவிடின் அவ் வுன்னத நிலையைப் பேணியிருக்க முடியாது. சுவீடினின் மூலவளம் இதற்கு ஏற்ற தாயிருக்கவில்லை. பன்னிரண்டாம் சாள்சின் பகட்டும் மடைமையும் போற்றிக் குக் கடலின் ஆகிக்கத்தை, மகா பீற்றர் புதிதாயமைத்த அரசுக்கு விரைவாக மாற்றிவிட்டன. சமாதானஞ் செய்த நான்கு ஆண்டுகளின் பின் பீற்றர் இறந் தான் (1725). அவன் மகன் அலெச்சிசு 1718 இல் காலஞ் சென்று விட்டான். அவன் தன் தகப்பனுற் கொலை செய்யப்பட்டிருக்கலாம். குருமார், விழுமியோர், பழைய படைஞர் ஆகியோர் எதிர்த்து நின்றபோதிலும் உண்மையாகவே தான் உருவாக்கிய நாட்டைத் தன் கைம்பெண் கதரினுக்குப் பீற்றர் உரிமையாக விட்டுச் சென்முன்.

Page 117

அத்தியாயம் 16
கிழக்குப் பிரச்சினை (1453-1792)
ஒற்முேமன் துருக்கர்
வடகிழக்கு ஐரோப்பாவைப்பற்றிக் கூறியாயிற்று. இப்போது தென்கிழக்கு ஐரோப்பாவைப்பற்றிக் கூறுவாம். இவ்விரு பகுதிகளையும் இணைப்பது இரசியா வாகும். இரசியா, போற்றிக்குக் கடலிற் சுவீடினின் எதிரியாகும்; கருங்கடலில் அது துருக்கியின் எதிரியாகும்.
கிழக்குப்பிரச்சினை" என்பது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கருத்துக் களை உடையதாயிருந்தது. இப்போது ஆராயும் காலப்பகுதியில் அதன் கருத்து : -ஐரோப்பாவின் உயிருள்ள தசையிற் புறப்பொருளொன்று அழுந்திக் கிடத் தல்; அது அவ்விடமிருப்பதனுல் விளையும் பயன்கள்; அதை அவ்விடத்திலிருந்து நீக்கச் செய்யப்படும் முயற்சியின்வழி தோற்றும் பிரச்சினைகள். அப்புறப் பொருள் ஒற்முேமன் அருக்கரைக் குறிக்கும்.
ஒற்ருேமர், ஆசியாவைச்சேர்ந்த ஒரு நாடோடிக் குலத்தினர். இவர்கள் பதினன்காம் நூற்றண்டில் நீரிணைக்குத் தெற்கேயுள்ள பைசாந்தியப்பேரரசின் பெரும்பகுதியை வென்று சின்ன ஆசியாவின் கடற் கரையை அடுத்த பின் னணி நிலத்தில் ஆதிக்கமுள்ள ஆட்சியாளர்களாகத் தங்களை நிலைநாட்டிக் கொண்டனர். 1353 இல் இவர்கள் பைசாந்திய பேரரசனல், அவன் தலைநகரைச் சேபியரின் தாக்குதலினின்றும் காப்பாற்றும்படி,அழைக்கப்பட்டனர். தங்கள் உடனடியான வேலையை நிறைவேற்றியதும், அவர்கள் உதவிப்படையாகவன்றித் தலைமைப்படையாகச் சண்டைசெய்யத் தீர்மானித்தனர். அவர்கள் கலிப்பொலி யைக் கைப்பற்றி, அதனல் தாதனல்சின் ஐரோப்பியக் கடற்கரை மீது பின் எக்காலத்தும் தளராத பிடியைப் பெற்றனர்.
போற்கன் தீபகற்பம்
கிரேக்கப்பேரரசு அப்போது தன் வலிமைகுன்றி அழிவின் கடைசிக் கட்டத்தை அடைந்தது. ஐரோப்பாவிற் கொன்சுதாந்திநோப்பிளையும் திறேசை யுந் தவிர, மசிடோனியன் கடற்கரையும், சலோனிக்கா நகரமும் கிழக்குப் பெலப்பொனீசசுமே கிரீசின் ஆட்சியிலிருந்தன. அங்கேரியும், திரான்சில்வேனி யாவும், உவொலேக்கியாவும், குரோசியாவும் பொசினியாவும் -பியின் ஆட்சியை ஏற்றன; சேபியன் பேரரசு, பெல்கிறேட்டிலிருந்து வரையும், எத்திரியாற்றிற்குக் கடலிலிருந்து ஈசியன் கட6, திருந்தது ; பல்கேரியா, இப்பொழுது எமக்குத்தெரிந்த பல்கே.

Page 118
216 கிழக்குப் பிரச்சினை (1453-1792)
கிழக்கு உறுாமீலியாவையும் ஆட்சிசெய்தது ; தால்மேசியா, கோபு, கிறீற்று, யூபியா என்னுமிடங்கள் வெனிசின் ஆட்சியிலிருந்தன. சென் யோன் நைற் அறுக்கள் உரோட்சுத் தீவுகளை ஆட்சிசெய்தனர் ; பிராங்கியர் சைப்பிரசு இராச்சி யத்தையும், அகேயா சிற்றரசையும், அதென்சு, நாச்சோசு, செபலோனியா எனுங் கோமகவுரிமைகளையும் பல ஈசியன்தீவுகளையும் ஆட்சி செய்தனர். ஆகவே சீசர் என்போரின் பின் கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து ஆட்சிசெய்தோர்க்கு மிகச் சிறு ஆள்புலமே எஞ்சியிருந்தது. இன்றுபோல் 13 ஆம் நூற்ருண்டிலும், அல் பேனியாவிலுள்ள மலைவாழ்நர்களே, கி. மு. நான்காம் நூற்ருண்டில் எபைரசு இராச்சியத்தைத் தாபித்த இல்லிரியரின் பிரதிநிதிகளாயிருந்தனர். இவர்கள், உரோமரும் பைசந்தியரும் சிலாவியரும் தங்களைத் தம்வயப்படுத்தச் செய்த முயற்சிகளை முன்னர் எதிர்த்துநின்றதுபோல், இப்போதும் துருக்கரின் தம்வயப் படுத்தும் முயற்சிகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர். மசிடோனிய மேலா ண்மைக் காலத்தில் ஆதிக்கம் படைத்திருந்த திறேசியர், தேசியாவிலுள்ள திரா சன் குடியேறிகளுடன் கலந்தனர். இக்கலப்பினுல் இக்கால உரூமேனியவினம் உரு வாயது. பதின்மூன்ரும் நூற்முண்டின் பிற்பகுதியில், இக்காலத்தில் உரூமே னியா எனப்படுவதன் தென்பகுதி, உவொலேக்கியா சிற்றரசு நாடாகத் தோற்ற மளித்தது. அதன் வடபகுதி, ஒரு நூற்றண்டின் பின்னர், மொல்தேவியச்சிற்றா சென அழைக்கப்பட்டது.
ஒற்முேமர் தென்கிழக்கு ஐரோப்பாவிலே தங்கள் வெற்றி நெறியை ஆரம்பித்த பொழுது போற்கன் தீபகற்பத்தின் நிலைமை இத்தகையதே. அவர்கள் தாக்குதல் எதிர்த்து வெல்லமுடியாததாயிருந்தது. இருநூறு ஆண்டுகளுள், மேலே எடுத் துரைக்கப்பட்ட விசாலித்துப் பாம்பியிருந்த பல்வேறு ஆணிலங்களுட் பெரும் பாலானவை எல்லாம், ஒற்ருேமன் பேரரசு வலைக்குள் அகப்பட்டன. 1861 இல் பைசாந்தியப் பேரரசனின் தளர்ந்த பிடியிலிருந்து அதிரியாநோப்பிள் பறித் தெடுக்கப்பட்டது. அக்காலத்திலிருந்து 1453 வரையும் அது துருக்கிய எமீரின் ஐரோப்பியத் தலைநகராயிருந்தது. 1363 இல் பிலிபொலிசையும், 1382 இல் சேபி யாவையும் பல்கேரியர் விட்டுக்கொடுக்கவேண்டியவராயினர். 1893 இல் திருநோ வோ அழிவடைதலொடு, ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பல்கேரியாவின் சுதந்திரம் மறைந்தொழிந்தது. இதற்கிடையில், சிலாவியரின் பெரியவொரு கூட்டிணைப்பொன்று முறியடிக்கப்பட்டது. 1889 இல், கொசொவோ சமவெளி யில் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் விளைவு சேபியப் பேரரசின் வீழ்ச்சியோடு நின்றுவிடவில்லை. அது தென்சிலாவியரின் அரசியல் நிலையைப் பல ஆண்டுகளுக்கு முற்முக அழித்தது. சேபியா 1459 இலும், பொசினியா 1465 இலும் ஒற்ருேமன் பேரரசுடன் ஒன்றுசேர்க்கப்பட்டன. மகமது என்பானற்ருக்கப்பட்டு, 1453 இல் பேரரசுத்தலைநகர் வீழ்ச்சி யடைந்தது ; அத்தொடு கிரேக்கப் பேரரசும் முடிவுற்றது. வரலாற்றுணர்ச்சி யைக் கருத்திற் கொள்ளினும், பொருளாதார, நுண்புல, ஆன்மிக, அரசியல் விளை வுகளைக் கருத்திற் கொள்ளினும், ஒற்முேமாாற் கொன்சுதாந்திநோப்பிள் கைப்பற் றப்பட்டமை, உலக வரலாற்றிற் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளிலொன்முக கருதத்

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 27
தக்கது.* பழைய உரோமன் பேரரசின் இறுதி அழிவு; பண்டைக் காலப்பெரு வணிகப் பாதைகள் தடைப்படல்; வணிகமும் வணிகத்துடன் அரசியல் முக்கி யத்துவமும் மத்திய தரைக்கடல் சார்ந்த நாடுகளிலிருந்து வேறுவழியிற் செலுத்தப்படல்; அமெரிக்காவையும் கீழைத்தேசங்களுக்கு முனைப்பாதையை யும் கண்டுபிடித்தமை ; மத்தியகாலப் பொருளாதாரச் சோம்பலிலிருந்தும் தெளிவற்ற நிலையிலிருந்தும் இங்கிலந்து வெளியேறல் மக்கட்பண்புக்கோட் பாட்டின் புத்துயிர்ப்பு ; சமயவாராய்ச்சியில் ஊக்கம்; நாட்டின அரசுகளும், நாட்டினத்திருச்சபைகளுந் தோன்றிவளர்ந்தமை ஆகிய இவ்விளைவுகள் யாவற் றிற்கும் பிறவற்றிற்கும் மறைமுகமாகவும், இவற்றிற் பல்வற்றுக்கு நேரடியாக வும், துருக்கியர் கொன்சுதாந்திநோப்பிளை வெற்றிகொண்டமையே காரண
மெனக் கூறலாம்.
துருக்கிய ஆதிக்கத்தின் உச்சநிலை
கொன்சுதாந்திநோப்பிளைக் கைப்பற்றியபின், 250 ஆண்டுகளாகத் துருக்கர் ஐரோப்பாவிற் பீதியை உண்டாக்கினர். 16 ஆம் நூற்ருண்டின் முற்பகுதியில், சீரியா, எகித்து, அரேபியா, வடமெசப்பொத்தேமியா ஆகிய நாடுகளை அவர்கள் ஆட்சிசெய்தனர். 1522 இல் உரோட்சு தீவுகள் கைப்பற்றப்பட்டன. சென்யோன் நைற்றுக்கள் கிறீற்றிற் சிறிது காலம் தங்கியபின், 1530 இல் மோற்ரு தீவைத் தங்கள் நிலையான புகலிடமாக்கிக்கொண்டனர். ஐரோப்பிய சமகாலத்தவரால் * மாண்புள்ளோன்' என்றும், தன் மக்களால் 'சட்டம்வகுத்தோன்' என்றும் அழைக்கப்பட்ட பெரிய சுலுத்தான் சொலிமானின் ஆட்சியில் (1526-66) துருக்கிய ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது. பாலனத்திலும் போரிலும் சொலி மான் மிகச் சிறந்தவன்.
1521 இல் துருக்கர் பெல்கிறேட்டைக் கைப்பற்றினர். இந்தப் பெரிய எல்லைப் புறக் கோட்டையை ஈட்டியதன் பயனுக, அங்கேரியை வெல்வதற்கு வழிபிறந் தது. 1526 ஒகத்து 28 ஆம் திகதி மகியார் குல விழுமியோருட் சிறந்த பகுதி யினரை மொகாசு என்னுமிடத்திற் சொலிமான் போரிலேதோற்கடித்தான். செத் தெம்பர் 20 ஆம் திகதி அவர்கள் தலைநகரான புடாவைக் கைப்பற்றி, 1529 இல், அபிசுபேக்கு வமிசத்தினர் வசமிருந்த சிறு ஆள்புலத்தைத்தவிர, அங்கேரி முழு வதையும் புடாபாசாவின் ஆணிலமாகத் துருக்கியப் பேரரசுடன் சேர்த்துக் கொண்டான்.
அங்கேரியிலிருந்து சொலிமான் வியன்னுவை நோக்கி முன்னேறிச் சென்றன். ஆனல் கிறித்தமதத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்னிட்டு உலூதர் களும் கத்தோலிக்கர்களும் ஒன்று கிரண்டனர். பெரும்படைத்துணை வீயன்ன விற்கு விரைந்தது. இருபத்திநான்கு நாட்கள் பயனின்றி முற்றுகையிட்டபின்,
17 ஆம் பக்கம் பார்க்க.

Page 119
218 கிழக்குப் பிரச்சினை (1453-1792) இதுவரையில் வெல்லற்கரியவனுன சொலிமான், திகைத்துப் பின்வாங்கினன். வியன்னவிலிருந்த தீரமான காவற்படையானது ஒற்முேமருக்கும் மேற் கைரோப்பாவுக்குமிடையே திட்டமானதும், முடிவானதுமான ஒரு தடையை ஏற்படுத்தியது. வியன்ன மீண்டும் 1683 இல் முற்றுகையிடப்பட்டதாயினும், ஒருபொழுதும் கைப்பற்றப்படவில்லை.
வியன்னு தவிர்ந்த தானியூப்பு நதிப்பிரதேசம் முழுவதும் சொலிமானின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. திரான்சில்வேனியா, மொல்தேலியா உவொலேக்கியாப் பகுதிகள் ஆகியவிடங்களிலுள்ள உரூமேனியர் அடிமை நிலைக்குத் தாழ்த்தப் பட்டனர். சொலிமானுக்கு முன் ஆண்ட சுலுத்தான், தன் சுலுத்தான் பதவி யுடன் கலிபுப் பதவியையும் சேர்த்துக்கொண்டான். நபிநாயகத்தின் வழியுரி மையாளனும் உலகத்தின் ஆன்மிகத் தந்தையுமாகிய சொலிமான் உலகியலதிபதி யாகப் புடாவிலிருந்து பசிசாவரையும், தனியூப்புநதியிலிருந்து பாரசீகக்குடா வரையும் பரந்துள்ள பகுதியை ஆட்சிசெய்தான்.
ஒற்முேமன் வெற்றிவீரர் ஈட்டிய வியத்தகு வெற்றிகளுக்கு அவர்களுக்குப் புறம்பேயுள்ள சூழ்நிலைமையும் அவர்களுடைய சொந்தச் சிறப்பியல்புகளும் நிறு வகங்களும் காரணங்களாகும். கிரேக்கப் பேரரசின் மீட்சியில்லாத் தளர்ந்த நிலை; சிலாவிய மக்களிடை பெரிதுங் காணப்பட்ட அரசியலிணக்கமின்மை ; கிறித்தவ வல்லரசுகளுக்குள் நிலவிய பொருமையும் பகைமையும் ; முன்னைய சுலுத்தான்களிற் காணப்பட்ட இராணுவவீரமும், அறிவுக்கூர்மை நிரம்பிய அரசறிவும் ஆகிய இவைகள் யாவும் ஒற்முேமர் தென்கிழக்கு ஐரோப்பாமீது படையெடுத்து ஆச்சரியப்படத்தக்க விரைவில் அதை அடிப்படுத்தத் துணை புரிந்தன. ஆனல் அவர்கள் வெற்றிக்கு ஏதுவான வலுமிக்க கருவி, ' கிறித்தவ பிள்ளைத்திறை என்னும் முறையின் வழிஉருவாய, புகழ்பெற்ற சனிசரிப்' படையாகும்.
16 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதிக்குப்பின் சனிசரிப்படைஞர், ஆரம்பத்தில் அவர்களிடம் காணப்பட்ட சில சுயவியல்புகளை இழந்துவிட்டனர். 1566 இல் இப்படைப்பிரிவு உறுப்பினர் திருமணஞ் செய்யவும், காலஞ் செல்லத் தங்கள் ஆண் பிள்ளைகளை அப்படையின் உறுப்பினராகச் சேர்க்கவும் அனுமதியளிக்கப் பட்டனர். ஆகவே திறைப்பிள்ளைகள் உறுப்பினராகச் சேர்க்கப்படுவதில் இப் படையினர் பொருமைகொள்ள ஆரம்பித்தனர். 17 ஆம் நூற்முண்டு முடியுமுன் திறை அறவிடுவது நிறுத்தப்பட்டது. தலைநகரிலும் மாகாணங்களிலும் ஒற்ருே மன் அரசாங்கத்தின் உயிர்நிலையான உறுப்புக்களை ஊழல்கள் அழிக்க ஆரம்பித் தன. இசுலாமியப் படைவீரர் தொடர்ந்து போர்புரிந்த போதும், அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. 1566 ஆம் ஆண்டின்பின் துருக்கர் எய்திய நிலையான வெற்றிகள் சைப்பிரசையும் கிறீற்றையும் கைப்பற்றியமையே. முன்னேறத் தவறிய துருக்கரின் ஆதிக்கம் தீவிரமாகப் பின்னிடைந்தது. போரில் வெற்றி பெறுதல் உள்நாட்டுப் பாலனத்தின் வலிமைக்கு இன்றியமையாதது. இவை இரண்டும் ஆட்சி செய்பவர்களின் பண்புகளைப் பொறுத்தவைகளேயாம்.

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 29
கியூபிறிலிசு
சொலிமானின் பின், 1808 இல் இரண்டாம் மகமது சுலுத்தான் அரசெய்தும் வரை ஆண்ட சுலுத்தான்களில், சிறந்த ஆற்றல்படைத்தவனெருவனுமில்லை யெனலாம். தனிமுதன்மை திறமையுடையதாயிருக்கத் தவறுமாயில், நலிவு தவிர்க்க முடியாததாகும். துருக்கரைப் பொறுத்தவரையில், கியூபிறிலிசு என்னும் சிறப்பான அல்பேனியக் குடும்பம் முன்வந்து உதவியமையால் இந் நலிவு தற்காலிகமாகத் தடைப்பட்டது. இக்குடும்பம் 17 ஆம் நூற்ருரண்டின் பின்னரைப்பகுதியில், துருக்க அரசாங்கத்துக்கு ‘விசியர் ’ எனப் பெயரிய முதல் அமைச்சர்களை ஒருவர்பின்னுெருவராக அளித்துவந்தது. நூற்முண்டின் முற் பகுதியில், முப்பதாண்டு யுத்தம், மேற்குக் கிறித்தவ உலகின் கடைசி அரணை அழிக்க ஒற்முேமருக்குச் சிறந்தவொரு வாய்ப்பளித்தது. ஆனல் வந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள். அப்படியான வாய்ப்பு ஒருபோதும் மீண்டுங் கிடைப்பதில்லை. 1683 இல் காரா முசுத்தாபா என்னும் முதலமைச்சன் துருக் கிக்கு வெற்றி மேல் வெற்றியளித்த படைகளுடன் வீயன்ன நகர்வாயில்வரைக் கும் சென்ருன். ஆனல் அபிசுபேக்கர் போலந்தைச் சேர்ந்த யோன் சோபியக்கி என்பாற்ை காப்பாற்றப்பட்டனர். அந்த நூற்றண்டின் கடைசியாண்டில் அவர் கள் துருக்கரைப் பன்முறை முறியடித்தனர்.
துருக்கரின் எழுச்சிக்காலம் மாறிற்று. இலெபாந்தோ கடல்யுத்தத்தில் (1571) துருக்கர் அடைந்ததோல்வி முன்னறிகுறியாகும். சென் கோதாட்டில் (1664) மொண்டேக்குக்குலி என்பானின் வெற்றிக்கும் செந்தாவில் (1697) யூசின் இளவரசனின் வெற்றிற்கும் பின்னர், மக்களால் இதனை ஐயுறமுடியவில்லை. துருக்கரின் சூழியல் முறைமையும் தளரத் தொடங்கிற்று. 1535 இல் பிரான்சின் அரசனன முதலாம் பிரான்சிசு, சொலிமான் சுலுத்தானுடன் ஒரு பொருத்தனை நிறைவேற்றியிருந்தான். அதுவே மூன்று நூற்றண்டுகளாகப் பிரான்சிய குழிய லில் இன்றியமையாத அமிசமாகத் தொடர்ந்திருந்த நட்புறவிற்கு அடிப்படை யாக அமைந்திருந்தது. அருக்கர் தங்கள் நட்பாளரிடம் கொண்டிருந்த பற்று அறுதி பிரான்சியரின் பற்றுறுதியைக் காட்டிலும் நிலையானதும் இடையருதது மாகும். அபிசுபேக்கருக்கு மாமுகவோ வேறு பகைவர்களுக்கெதிராகவோ, தங்கள் உடனடியான தேவைக்கு அவசியமானவிடத்து, துருக்கரின் உதவியை உவப்பொடு பயன்படுத்தினர் பிரான்சியர். என்ருலும், தங்கள் சொந்த நலன் களுக்கேற்ற தெனத் தோன்றும்போது, துருக்கரின் பகைவர்களுடன் இணக்கஞ் செய்யவும் பிரான்சியர் தயங்கவில்லை. இவ்வாறே, 1664 இல் சென் கொதாட் டிலே ஒற்ருேமன் துருக்கருக்கெதிராகப் பிரான்சியர் போர்புரிந்தனர். அன்றி யும் 1669 இல் பதினன்காம் உலூயி வெனிசுக்கு உதவியனுப்பினன். துருக்கர் நலிவுற்றிருந்தும்-அல்லது அவர்கள் நலிவுற்றமையே காரணமாக-பிரான்சு தன் மரப்புப்படியான பூட்கையை மீண்டும் விரைவிற் கடைப்பிடித்தது. ஏறக் குறையப் பத்தொன்பதாம் நூற்முண்டு முடியும்வரை, பிரான்சியச் சூழியலின் முக்கியமான மையங்களிலொன்முகக் கொன்சுதாந்திநோப்பின் தொடர்ந்து

Page 120
220 கிழக்குப் பிரச்சினை (1453-1792)
இயங்கியது. இதற்கிடையில், மொறியாவை வெனிசு வென்று கைப்பற்றியமை (1684-99), எங்கும் புகழொலிபரப்பிய அபிசுபேக்கரின் வெற்றிகள், இவையெல்லா வற்றினும் மேலாக ஐரோப்பிய அரசியலாங்கில் இரசியா தோன்றியமை ஆகி யன கிழக்குப் பிரச்சினையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம் பித்து வைத்தன.
கிழக்குப்பிரச்சினையானது இரண்டாம் பருவத்தில் (1702-1820) இரசியா துருக்கி எனுமிரண்டின் தொடர்புகளையும் மையமாகக் கொண்டது. அபிசு பேக்கர் அரசியலாங்கிலே பல்காலுந் தோன்றினரெனினும், முதலிடம் வகித்தது அருமை. 18 ஆம் நூற்முண்டில் அவர்களேற்ற பாகம் நிச்சயமாகவே முக்கிய மற்றதாக அமைந்தது. மகாபீற்றரின் ஆட்சிக்காலம் தொடக்கம் முதலாம் அலச் சாந்தரின் ஆட்சிக் காலம்வரையும்-பிரான்சு இடையிடையே கண்டித்த போதும்-கிழக்குப் பிரச்சினையை இணக்கி வைப்பதில் முக்கியமான அக்கறை இரசியாவிற்கே உண்டு எனுங் கருத்தை ஐரோப்பா பொதுவாக ஏற்று வந்தது. ஐரோப்பிய அரசியல் அரங்கில் மிகக் காலந்தாழ்த்தியே இரசியா தோற்றமளித்த காரணத்தால், ஐரோப்பாவின் இவ்வுளப்போக்கு பிந்திய சந்ததியாருக்கு விந்தையாகத் தோன்றல் கூடும். ஐரோப்பிய அரசியலில் இரசியா காலந் தாழ்த்திப் புகுந்தமையே ஐரோப்பாவின் மனப்பான்மைக்கு ரதுவா யிருக்கலாம். மேற்கு ஐரோப்பா இரசியாவை ஒரு நாடாகக் கருதுமுன்னரே, அந்நாடு கருங்கடலை நோக்கித் தன் ஆதிக்கத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது.
1696 இல் அசோவைக் கைப்பற்றியதனல், ‘தென்திசைக்கு ஒரு வாயிலை' மகா பீற்றர் திறந்துவைத்தான். 1771 இல் புரூதில் ஒப்பேறிய நிபந்தனைச் சரணடை வுடன் அவ்வாயிலடைக்கப்பட்டது. ஆனல் இப்பின்னடைவு தற்காலிகமானதா யிருந்தது. 1739இல் பெல்கிறேட்டுப் பொருத்தனையின்படி அசோவு இரசியா வுக்கு நிரந்தாமாகத் திருப்பிக்கொடுக்கப்பட்டது.
கருங்கடற்கரையைச் சூழ்ந்திருந்த ஒற்ருேமன் ஆள்புலத்தின் தொடர்ச்சியில், அசோவைக் கைப்பற்றியமையோடு, முதற் பிளவு ஏற்பட்டது. இதுவரையும் அக்கடல் ஒரு துருக்கவாவியாயிருந்தது. ஆனல் இரசியா அதன் கரையைத் தொட்ட போதிலும், 1774 இல் கச்சுக்கயினுட்சிப் பொருத்தனையால் முடிவெய் திய யுத்தம் வரையும் அதற்கு ஆங்கு உறுதியான பிடி கிடைக்கவில்லை.
இரண்டாம் கதரின்
புகழ்பெற்ற அப்பொருத்தனையே எஞ்ஞான்றும் ஆட்சிசெய்த ஆற்றல் மிக்க பெண்களில் ஒருத்தியான இரண்டாம் கதரினின் மிகக்குறிப்பிடத்தக்க வெற்றி எனலாம். மகாபீற்றர் இறந்தது முதல் (1725) 1796 இல் போல் ஆட்சியெய்தும் வரை, நான்காண்டுகள் தவிர எஞ்சிய காலங்களில் இரசியாவைப் பெண்களே ஆட்சிசெய்தனர். இந்தப் பேராசிகளில் இரண்டாம் கதரினே ஒப்புயர்வற்றவளா
6)IIITSII.

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 221
பிரசியப்படையில் அலுவலனுயிருந்தவனும் அனற்று-சேபிற்று எனும் பகுதியைச் சேர்ந்தவனுமான கிறித்தியன் என்னும் இளவரசனின் மகளான கதரின், அவன் சிற்றன்ன எலிசபெத்து சாரினவின்பின் (1741-61) 1761 இல் இரசியப் பேரரசனன மாபெரும் கோமகன் பீற்றரைத் தனது பதினமும் வயதிலே திருமணஞ் செய்தாள். மகாபீற்றரின் இளைய மகளான சாரின எலிச பெத்து, தன்னிலும் மேன்மை படைத்த ஆங்கிலவாசி எலிசபெத்தைப்போல், திருமணஞ் செய்யப் பிடிவாதமாக மறுத்து, தன் மருமகனைத் தனக்கடுத்த உரித்தாளியாக்கினுள். முற்றிலும் அசேர்மானிய அறிவுணர்ச்சியுடையவனும் குறும்புமிக்க பொம்மைபோன்றவனுமாகிய மூன்றும் பீற்றர் கதரினின் கணவ ஞக மாத்திரமன்றி வேறெந்தப் பெண்ணின் கணவனுகவுமிருக்கச் சற்றும் தகுதியற்றவன். இாசியாவின் பூட்கையிலே திடீர் மாற்றம் ஏற்பட்டமையே இவனட்சியிற் குறிப்பிடத்தக்கது. இதனல் அவன் மகா பிரதரிக்கின் நெருக்கடி காலத்தில் அவனை அழிவினின்றும் காப்பாற்றினன். பிரசியாவுக்குச் சார்பாக விருந்த பீற்றரின் பிரமையால் விழுமியோர், குருமார், பொதுமக்கள் யாவரும் அவனிடம் வெறுப்படைந்தனர். ஏழு மாதங்கள் ஆட்சி செய்தபின் (1762 சனவரி-யூலை) இரசிய காவலர்களால் இவன் அரசு கட்டிலிலிருந்து நீக்கப்பட் டான். மற்றும் உரிமைகோரியவர்கள் யாவரையும் விலக்கி, அவர்கள் கதரினை
அரசு கட்டிலிலேற்றினர்கள்.
அரசெய்திய பொழுது இரண்டாம் கதரின் 33 வயதினளாயிருந்தாள்; 34 ஆண்டுகள் அவள் ஆட்சிபுரிந்தாள். மகாபீற்றரின் ஆட்சியைத் தவிர இவளின் ஆட்சியே இரசிய வரலாற்றில் மிக முக்கியமானது. அவளுடைய உள்நாட்டுப் பூட்கையானது மெய்விளக்கத்துறைபோய அரசர்களின் நெறியை-எனின் அந் நூற்ருரண்டுக்குரிய ஒள்ளிய வல்லாளரின் நெறியை-ஒத்ததாக இருந்தது. போலந்தைக் கூறுசெய்து, முடிவில் அழித்து, இரசியாவின் ஆதிக்கத்தை மத்திய ஐரோப்பா வரையும் பரவச் செய்தாள். துருக்கியுடன் புரிந்த இரு யுத்தங்களின் விளைவாகக் கருங்கடலில் இரசிய ஆதிக்கத்தைத் தாபித்து, கொன்சுதாந்தி நோப்பிளில் நிரந்தரமான குழியல் நிலையையும் பெற்ருள்.
கிழக்குப் பிரச்சினைக்கும் கதரினுக்குமுள்ள தொடர்பைப் பற்றியே இவ்வத்தி யாயம் கூறும். ஆனல், போலந்தைப்பற்றிய அத்தியாயத்துடன் இதனை நன்கு தொடர்புறுத்திக் கற்றல் வேண்டும்.
ஒல்சுதைன்-கொட்டோபுக் கோமகனுன நியூபிகின் என்பவனுக்கும் ஆன் என்பவளுக் கும் (மகாபீற்றரின் மகள்) பிறந்தவன்.
* 262 ஆம் பக்கம் பார்க்க.

Page 121
222 கிழக்குப் பிரச்சினை (1453-1792)
துருக்கியப் போர் (1768-74)
பிரசியப் பிரதரிக்கோடு 1764 இல் கதரின் நிறைவேற்றிய ஒப்பந்தப்படி போலந்திலே துருக்கி தலையிடாதபடி தடுப்பதற்கு, இருவரும் கொன்சுதாந்தி நோப்பிளில் ஒருங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஏற்பாடு ஒன்று இருந்தது. துருக்கரை அவர்தம் நாட்டிலேயே அதிக வேலையில் ஈடுபடுத்தலே இந்நோக்கத்தை நிறைவேற்ற இலகுவான வழியாகும். ஆகவே 1765-7 வரையான ஆண்டுகள் முழுவதும் கிரீசு, கிறீற்று, பொசினியா, மொந்திநீகிரோ என்னும் பகுதிகளில் இரகசிய முகவர் இரசியாவின் சார்பாக இடைவிடாது செயலாற்றிக்கொண்டிருந்தனர். விடுதலைக்காலம் சமீபித்துவிட்டதெனவும், ‘துருக்கப் பேரரசு செம்மயிரினையுடைய மக்களால் ஒருகாலம் அழிக்கப்படும்’ என்ற பழைய தீர்க்கதரிசனம் ஈற்றில் நிறைவேறப்போகும் காலம் சமீபித்து விட்டதெனவும், கிரேக்கரும் சிலாவியரும் நம்பும்படி தூண்டப்பட்டனர். கொன்சுதாந்திநோப்பிளிற் பிரான்சிய தூதமைச்சனுயிருந்த வேசன் என்பான் துருக்கரின் ஆட்சிச்குப்பட்ட மக்களுக்கிடையிற் காணப்படும் கிளர்ச்சியின் உட் கருத்தை வற்புறுத்திக் கூறி எதிர்த்தாக்கல் செய்வது அவசியமெனத் துருக்கரை ஏவிஞன்.
தப்பியோடும் சில போலந்தரைத் தாத்தரிப்பகுதிக்குள் இரசியப் படைஞர் கள் துரத்திச் சென்றமையால் துருக்கிய ஆள்புலவெல்லை மீறப்பட்டமை இங்குச் சாட்டாக அமைந்தது. அதற்கிணங்க 1768 இல் இரசியப்படைஞர் உடனே போலந்திலிருந்து வெளியேற வேண்டுமெனத் துருக்கி கோரியது. இதற்கு இணங்க இரசியா தயங்கியது. ஒற்ருேபர் 6 ஆம் திகதி அருக்கி யுத்தப் பிரகட னஞ் செய்தது.
பிரான்சியச் சூழியல் குறிக்கோளை எய்தத்தவறியது. அது போலந்தைக் காப்பாற்றவில்லை; ஆனல் துருக்கியின் அழிவிற்கு ஏதுவாயிற்று.
இரசிய-துருக்கப்போர் (1769-74)
ஆரம்பத்திலிருந்தே நிகழ்ச்சிகள் துருக்கிக்குப் பாதகமாக நிகழ்ந்தன. 1769 இல் திரீத்தர் நதிக்கரையிற் சடுதியாகத் தாக்கப்பட்ட ஒரு துருக்கப்படை திகிலடைந்து இரிந்தோடியது. இரசியர் யாசி, புகாறற்று என்னுமிடங்களைக் கைப்பற்றினர். 1770 இல் இரண்டாம் கதரின் சுலுத்தானுக்கு விரோதமாகக் கிரேக்கரைக் கிளப்பிவிடப் பெரு முயற்சி செய்தாள். போற்றிக்குக் கடலி லிருந்து புறப்பட்ட ஓர் இரசியக் கடற்படை மத்தியதரைக்கடலை அடைந்து மொறியாக் கடற்கரையைத் தாக்கியது. ஆனல் அத்திட்டம் குறி தவறியது. இரசியர் திரிபொலிற்சாவைத் தாக்கி, கிரேக்கரின் உதவி செவ்வனே கிடையா

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 223
மையால், துருக்கரை எதிர்த்து நிற்கவியலாது பின்வாங்கினர். மொரியாவிலும் தீவுக் கூட்டங்களிலுமிருந்த ஆதரவற்ற கிரேக்கரைப் பயங்கரமாகக் கொடுமைப் படுத்தித் துருக்கர் பழி வாங்கினர். நம்பிக்கையிழந்து, ஏமாற்றமடைந்த கிரேக்கர், கலகஞ் செய்யும்படி தூண்டிவிட்டுப்பின் பரிதவிக்கவிட்ட, உறுதியற்ற தம் நட்பாளரைச் சபித்தனர். V
இதற்கிடையில், இரசியக் கடற்றளபதி ஓலோவு என்பான், அதிட்டமும் அவன் தலைமைக்கீழ்ப் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளுந் துணையாக, கடற் போரிற் சிறப்பான ஒரு வெற்றி யீட்டினன். அவன் கையசு என்னுமிடத் திற்கு அண்மையில் துருக்கியக் கப்பற்படையைத் தாக்கிப் பெருஞ்சேதத் துடன் அவர்களை முறியடித்து, செசுமியேத் துறைமுகத்திலே தஞ்சமடையும் படி செய்தான்.
கடலிலே துருக்கர் அடைந்த பேரிழப்புக்கு ஈடாகத் தரையிலும் வெற்றி கிட்டவில்லை. இரசியா கிாைமியல்வக் கைப்பற்றியது. இரசியத்தாக்குதல்களின் விளைவாகத் கிநீத்தர் தான்யூப்பு நதிகளின் கரையிற் கட்டப்பட்டிருந்த அரண் கள் ஒன்றன்பின் ஒன்முக விழுந்தன. 1771 ஆம் ஆண்டு முடியுமுன் மொல்தே வியா, உவொலேக்கியா மாகாணங்கள் எவ்வித எதிர்ப்புமின்றிக் கதரினின் ஆட்சிக்குட்பட்டன.
ஆனல் யுத்தகளத்திற் கதரின் தொடர்ந்து வெற்றிகள் பெற்றபோதும், துருக்கர் சார்பில் ஒசுத்திரியா தலையிடக்கூடுமென்ற பயத்தாலும், தொன் நதிப் பிரதேசத்திலுள்ள கொசாக்கரின் தீவிரமான கலாம் காரணமாகவும், அமைதி யையே நாடினள். 1774 யூலை மாதத்தில் கச்சுக்கயினட்சிப் பொருத்தனைக்குக் கைச்சாத்திடப்பட்டது.
AV
கச்சுக்கயினுட்சிப் பொருத்தன (1774 யூலை 15)
கடந்த இருநூற்றண்டுக்காலத்தில் இரசியாவுக்கும் அருக்கிக்குமிடையே நிறைவேறிய பல பொருத்தனைகளுள் இதுவே அடிப்படைச் சிறப்பும் நெடுங் காலப் பயனும் மிக்குடையதாகும். இரசியா அண்மையிலே தான் கைப்பற்றிய பெசரேபியா, மொல்தேவியா, உவொலேக்கியா, தீவுக்கூட்டங்கள் ஆகிய ஆள் புலங்களைத் துருக்கிக்குத் திருப்பிக் கொடுத்தது; மக்களை முன்னிலும் பார்க்கச் செவ்வனே நடத்தல் வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரிலேயே இந்நிலப் பரப்புக்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அசோவு, செனிக்கேல், கேற்சு ஆகிய இடங்களையும் அவைகளை அடுத்துள்ள பகுதிகளையும் இரசியா தன்வசமே வைத்துக்கொண்டது; இன்னும், கிநீப்பர் ஆற்று முகத்திலுளள கின்பேணையும், {தாத்தரி நாட்டுக் கான் எனுந் தலைவனின் இசைவொடு) இரு காபாடாப்பகுதி களையும் வைத்திருந்தது. இவ்விட்டங்களினல் முதன்முறையாக இரசியா கருங் கடலின் வடகரையில் ஓர் உறுதியான பிடியைப் பெற்றது ; அசோவு கடலுக்

Page 122
224 கிழக்குப் பிரச்சினை (1453-1792)
கும் கருங்கடலுக்குமிடையேயுள்ள தொடுகடல்களை ஆட்சிசெய்தது. இரு காபாடாப் பகுதிகளைத் தனக்குச் சொந்தமாக்கியமையாற் கிழக்குக் கடற்கரை யில் ஓர் உறுதியான நிலையைப் பெற்றது. அதேகாலத்தில், புக்கு நதிக்குக் கிழக்கே வசித்த தாட்டர்கள், திருச்சபைக்குரியவிடங்களிற்றவிர, துருக்கி யிலிருந்து விடுதலையளிக்கப்பட்டனர். இதனல் யூச்சைன் பகுதியில் துருக்கரின் நிலைமை இன்னும் பாதிக்கப்பட்டது. இதுவரை கருங்கடலைச் சுற்றியிருந்த துருக்கிய ஆள்புலம் இதுமுதற்கொண்டு புக்குநதியை வடகிழக்கு எல்லையாகக் கொள்ளவேண்டியதாயிற்று. இரசியா, தன் வாணிகத்தை வளர்க்கக் காவற் றாதரையும் துணைக்காவற்றுாதரையும் வேண்டிய விடத்து நியமிக்க அனுமதி பெற்றது ; கருங்டலிற் கட்டின்றிக் கப்பல் மார்க்கமாக வாணிகஞ் செய்யும் உரி மையும் அதற்கு அளிக்கப்பட்டது; சாரினவின் குடிமக்களுக்கு ஒற்முேமன் ஆட்சிப் பகுதிகளில் தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் தான்யூப்பு நதியிலும் தங்கள் சொந்தக் கப்பல்களில் வாணிகஞ் செய்ய அனுமதியும் வழங்கபபடடது.
இரசியா கொன்சுதாந்திநோப்பிளிலே தன் குழியற்கு உறுதியான ஒரு நிலை பெற்றமை, முக்கியத்தில் முன்னையவற்றிற்குக் குறைந்ததன்று. இது முதற் கொண்டு, இரசியாவின் தூதராலயமொன்று துருக்கியிலே தொழிலாற்றியது. தன் துரதமைச்சரின் சொந்தக் கோவிலை யன்றி, இரசிய சமய குரு ஒருவரின் காப்பிற் கிரேக்கச்சடங்கு முறைப்படி நடத்தப்படும் ஒரு பொதுக் கோவிலையும் அமைக்கும் உரிமை இரசியாவுக்குக் கிடைப்பதாக விருந்தது. மேலும் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் சோாத பாமரருமான இரசியக் குடிமக்கள் யெருசலேமுக்கும் வேறு புனித தலங்களுக்கும் யாத்திரை செய்ய உத்தரவு அளிக்கவும், கிறித்த மதத்தையும் அதன் கோவில்களையும் எப்போதும் காக்க வும் துருக்கிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
அண்மையில் இரசியாவாற் கைப்பற்றப்பட்டு இப்போது துருக்கியப் பேரரசுக் குத் திருப்பிக்கொடுக்கப்பட்ட ஆள்புலங்கள் சம்பந்தமான நிபந்தனைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்பட்டன. தான்யூப்பு நகிப்பிரதேசச் சிற்றரசு கள், ஈசியன்தீவுக் கூட்டம், யோட்சியா மிங்கிரீலியா மாகாணங்கள் ஆகியன சில நிபந்தனைகளின் பேரில் துருக்கிக்குத் திருப்பியளிக்கப்பட்டன : நன்முறை யிலே ஆங்கு ஆட்சி நடத்தல்; பணவரி, குழியற் பிரதிநிதித்துவம், மதம் எனு மிவை சம்பந்தமாகக் குறித்த சில சிறப்புரிமைகள் வழங்கல் என்பவையே அந் நிபந்தனைகளாம்.
இந்நிபந்தனைகளிலிருந்து, ஒற்றேமன் பேராசின் உள்நாட்டு அலுவல்களிற் குறுக்கிட ஒரு பொதுவான உரிமை இாசியாவுக்கு உண்டென இரசிய சட்ட வல்லுநர் அனுமானிப்பர்.

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 225
பூக்கோவினு
இரசியாவன்றி, ஒசுத்திரியாவே ஒற்முேமன் பேரரசைக் கூறு செய்தற்கு அடுத்த நடவடிக்கை எடுத்தது. கயினுட்சிப் பொருத்தனை நிறைவேறியவுடனும், பூக்கோவினு மாகாணத்தை ஒசுத்திரியா கவர்ந்துகொண்டது. இரசியாவொடு பொருது வலிமையிழந்த துருக்கர் இச்செய்கைக்கு இணங்கவேண்டியவர" யினர். 1775 மே மாதம் ஏழாந்திகதி கையளித்தற் பொருத்தனை முறைப்படி ஒப்பமிடப்பட்டது. நெடிது நிகழ்ந்த தீவிரமான போரினல் இரசியா ஈட்டி பதைக்காட்டிலும் பாரிய பிரதேசத்தை, ஒசுத்திரியா எளிதிற் குறையாடிற்று. ஒசுத்திரியா ஆள்புலத்தை மாத்திரம் ஆதாயமாகப் பெறவில்லை. ஒசுத்திரியா பூக்கோவினவைப் பெற்றதனல் வீயன்னவுக்கும் சென் பீற்றசுபேக்குக்குமிடை யுள்ள நட்பெனும் பிணைப்பு மேலும் வலுப்பெற்றது.
இரண்டாம் கதரினும் இரண்டாம் யோசேப்பும்
1780 இல் மரியா தெரிசா மரித்தபின் இந்நட்பு மிக நெருங்கியதாயிற்று. வசீகரமும் அடக்கியாளும் பெற்றியும் வாய்ந்த ஆண்மையுடையள் கதரின் ; அத்தகையாளுக்குக் கட்டுப்பட்டு ஒழுகினன் பேரரசன் இரண்டாம் யோசேப்பு. சமீப கிழக்கைப்பொறுத்தவளவில், பேரவாநிறைந்த அவளுடைய பூட்கைக்கு இதயபூர்வமான ஆதரவளித்தான் அவன்.
1782 செத்தெம்பர் மாதத்தில், போற்கன் தீபகற்பத்தினதும், அதனை அடுத் துள்ள ஆள்புலங்கள், கடல்கள், தீவுகள் ஆகியவற்றினதும் படத்தை முற்முகத் திருத்தியமைக்கத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தைச் சாரின தன் நட்பாளனுக்குச் சமர்ப்பித்தாள். A
கிரைமியாவை வலிந்திணைத்தல்
1782 ஆம் ஆண்டுக்குரிய இம்மாபெருந் திட்டம் நிறைவேறவில்லை. ஆனல் அடுத்த ஆண்டில், கிரைமியாவிலே தொல்லைவிளைத்த ஒரு நிலைமைக்குக் கதரின் உடனே முற்றுப்புள்ளியிடத் தீர்மானித்தாள். கயினுட்சிப் பொருத்தனைப்படி, அரசியல் அலுவல்களில் தாத்தாரியர்மீது துருக்கிய அரசாங்கத்திற்கு இருந்த மேலாண்மை கவர்ந்துகொள்ளப்பட்டது. ஆனல், சுலுத்தானின் கலிபேத்து அதிகாரம் மீறப்படாதிருந்தது. இந்த முரணுன ஒழுங்கிலிருந்து இயல்பாகவே இடர்கள் தோன்றின. 1783 இல், கதரின் கிரைமியாவைக் கைப்பற்றி எல்லா ஐயங்களையும் போக்கினுள். இரசியப்பொறியியலாளராலும், வேளாளராலும் இந்தப் புதிய இரசிய மாகாணத்தின் தோற்றம் தீவிரமாக மாற்றமடைந்தது. அத்துடன் அரண்களும் படைக்கலத் தொழிற்சாலைகளும் ஆங்குப் பல்கிப் பெருகின; விவசாய விளைபொருட்களும் ஏராளமாக ஆங்குப்பெறப்பட்டன.

Page 123
226 கிழக்குப் பிரச்சினை (1453-1792)
கருங்கடலில் ஆதிக்கமடைவதில் இரசியா எய்திவரும் தீவிரமுன்னேற்றங் கண்டு, துருக்கி மனங்கவன்றமை யாம் எதிர்பார்க்கத்தக்கதே; தாத்தாரியை வலிந்திணைத்தமை ; கிரைமியாவை அாண்செய்தமை ; தென் மாகாணங்களில் பொருளாதார அபிவிருக்கி ; எல்லாவற்றிலும் மேலாக, இரசியக் கடல்வலிமை தீவிரமாக வளர்ந்தமை ஆகிய இவையாவும் இரசியமுன்னேற்றத்தின் படிகளா யமைந்தன. மேலும், இரசிய ஒற்றர் அண்மையிற் கிரேக்கர், சிலாவியர், உரூ மேனியர் ஆகியோரிடை அதிருத்தியைக் கிளறிவிடுவதிற் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருந்தனர்; இவர்கள் தங்கள் சதியை எகித்திலும் செய்தனர். ஆகவே சுலுத்தான் அத்துல்அமீது கலக்கம் அடையப்போதிய நியாயமிருந்தது. கதரின் மேன்மேலும் கோரிக்கைகளை விடுத்தபொழுது இக்கலக்கம் ஆத்திரமாக மூண்டது. யோட்சியாமீது அவனுக்குள்ள இறைமையைத் துறக்கும்படியும், பெசரேபியாவை இாசியாவுக்கு ஒப்படைக்கும் படியும், மொல்தேவியாவிலும் உவொலேக்கியாவிலும் மரபுரிமைவழியான ஆள்பதிகளை ஏற்படுத்த அனுமதி கொடுக்கும்படியும் கதரின் அவனுக்குக் கோரிக்கைவிடுத்தாள். இதற்கு Ln2 மொழியாக அத்துல் அமீது கிரைமியாவை உடனே திருப்பிக்கொடுக்கும்படி கோரி, இக்கோரிக்கையைத் தொடர்ந்து 1787 ஒகத்தில் இரசியாவுக்கு விரோத மாக யுத்தப்பிரகடனஞ் செய்தான்.
தன் நட்புறவின்படி இரண்டாம் யோசேப்பு 1788 பெப்புருவரி மாதத்திற் சுலுத்தானுக்கு மாருக யுத்தப்பிரகடனஞ் செய்தான். ஆனல் இத்தொடரிகலின் வெற்றிக்கு ஒசுத்திரியர் சிறிதே உதவினர். துருக்கரும் அதனுற் பெரும்பயன் எய்தியதில்லை.
1788 ஆம் ஆண்டு முடியுமுன், பொதெங்கின் என்பான் ஒச்சாகோவு என்னும் பெருங்கோட்டையையும் குழ்ந்திருக்கும் பகுதியையும் ஆட்சிப்படுத்தினன். 1789 இல் ஒசுத்திரியர் பெல்கிறேட்டையும் செமந்திரியாவையும் கைப்பற்றியபின்னர், பொசினியாவுக்குட் புகுந்தனர்.
பற்பல நிகழ்ச்சிகள் ஒன்றுசேர்ந்து பொரும்நாடுகளை அமைதியை நாடும்படி செய்தன. 1788 இல், பிற்று என்பான் இங்கிலந்து, ஒல்லந்து, பிரசியா என்னும் நாடுகளுக்கிடையில் மூவர் நட்புறவை உருவாக்கினன். அதன் நோக்கங்களி லொன்று சமீப கிழக்கில் இரசியாவும் ஒசுத்திரியாவும் முன்னேறுவதைத் தடுப்ப தேயாகும். 1789 ஏப்பிரிவில் அத்துல் அமீது இறக்க அவன்பின் மூன்றம் செலீம் சுலுத்தானைன். முன்னையவன் எவ்வளவிற்குத் தீசனயும் அறிவாளியா யும் இருந்தானே பின்னையவன் அவ்வளவிற்கு ஆற்றல் குறைந்தவனயும் பிற் போக்காளனயும் இருந்தான். 1799 பெப்புருவரி 28 ஆம் திகதி பேராசனன யோ சேப்பு இறக்க, அவன் சகோதரனும் சாதுரியவானுமாகிய இலியோபோல் அா
جمہ:... ؟ -ہم “
S.
"மரியற்றின் "கீழைந்தேசப் பிரச்சின்ை”யின் மூன்றம் பதிப்பில் 161 ஆம் பக்கத்தைப் பார்க்க.

கிழக்குப் பிரச்சினை (1453-1792) 227
செய்தினன், இவன் ஒசுத்திரியப் பூட்கையை ஒருபுதிய திசையிற்றிருப்பினன். எல்லாவற்றிலும் மேலாக, பிரான்சில் உருவாகிவந்த புரட்சியியக்கமானது ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு முடிமன்னனின் கவனத்தையும் ஒவ்வொரு அரசாங்கத்தின் கவனத்தையும் வலிந்தீர்க்கத்தலைப்பட்டது.
சுவித்தோவு, யாசிப் பொருத்தனகள்
அதற்கிணங்க, 1791 ஒகத்தில், ஒசுத்திரியா சுவித்தோவு என்னுமிடத்திலே அருக்கிய அரசாங்கத்துடன் சமாதானஞ் செய்தது. துருக்கிக்குச் சேபியா மீண்டும் கொடுக்கப்பட்டது; முன்னைய நிலைமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 1792 சனவரி 9 ஆம் திகதி யாசி என்னுமிடத்தில் “ என்றும் நிலவும் அமைதிப் பொருத்தனை” இரசியாவாலும் துருக்கியாலும் ஒப்பமிடப்பட்டது. கயினுட்சிப் பொருத்தனையும் 1783 ஆம் ஆண்டுப் பொருத்தனையும் உறுதிசெய்யப்பட்டன; முன்னைய பொருத்தனைகளில் விதித்த கட்டுப்பாடுகள் நிறைவேற்றப்படவேண் ம்ெ என்ற நிபந்தனையின் பேரில் மாத்திரமே மொல்தேவியா துருக்கிக்குத் திருப்பிக்கொடுக்கப்பட்டது. இரசிய எல்லை (ஒச்சாகோவு உட்பட) திரீத்தர் நதி வரை விசாலிக்கப்பட்டது. துருக்கிய அரசாங்கம் கிரைமியா இரசியாவொடு இணைக்கப்பட்டமையை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது.
யாசிப்பொருத்தனையானது கிழக்குப் பிரச்சினையின் வரலாற்றில் முக்கிய மான ஒரு கட்டத்தை முடிவுறுத்தியது. இப்பிரச்சினை தொடங்கியபொழுது இரசியா ஐரோப்பிய வல்லரசாகச் செவ்வனே இயங்கத் தொடங்கவில்லை; கருங் கடல் ஒரு துருக்கியவாவியாயிருந்தது. குறித்த கட்டம் முடிகிறபொழுது இரசியா யூச்சின் கடற்கரையில் உறுதியாகத் தன்னைத் தாபித்துக்கொண்டு அதற்கு அப்பாலும் தன் பார்வையைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. கேசனும் சபாத்தப்பூலும் பெரிய கடற்படைத் தொழிற் சாலைகளாக மாற்றப் பட்டன. கின்பேண், ஒச்சாகோவு, தகன்ருெக்கு, அசோவு, இரு காபாடாக்கள் ஆகியவை இரசியாவின் உறுதியான ஆட்சிக்கு உட்பட்டன. திரீத்தருக்கும் கான்யூபுக்குமிடையிலுள்ள எல்லைப்புற மாகாணங்கள், இரசியா இணங்கியமை யால், துருக்கர் வசமிருந்தன. யூசீனுக்குத் தெற்கேயுள்ள நிலங்களிலே துருக்கி யின் ஆட்சி தளர்ந்துகொண்டிருந்தது. சிறுமைப்பட்ட ஒரு பெண்பிள்ளையாக நான் இரசியாவுக்கு வந்தேன். இாசியா எனக்குச் சீதனம் ஏராளமாகக் கொடுத்தது. அதற்குப் பதிலாக நான் அசோவையும், கிரைமியாவையும், யுக்கி றேனையும் கொடுத்திருக்கிறேன் , எனக் கதரின் கூறினுள். பெருமையாக இது கூறப்பட்டதாயினும் உண்மையைக் குறைத்தே அது உணர்த்துவதாம்.

Page 124

அத்தியாயம் ፤ሃ
பதினெட்டாம் நூற்றண்டு (1715-89)
முந்திய இரு அத்தியாயங்களும் இடைச் செருகல் போன்றவை. இனி மீண்டும் மேற்கு ஐரோப்பாவைப்பறறி ஆராய்வாம். மாபெரும் முடிமன்னன் இறப்பதற் குச் சற்றுமுன் நிறைவேறிய உதிரத்துப் பொருத்தனை இக்கால ஐரோப்பிய வரலாற்றின் ‘நீர்பிரிநிலங்களில் ஒன்முக அமையும். இப்பிரிநிலத்தைக் கடந் தோமாகில், நாம் ஒரு புதிய நாட்டில் இறங்கி, பிரான்சியப் புரட்சி என்னும் * படுகுழிக்குச் செல்லும் பாதையை அடைகின்ருேம்.
நாம் துருவி நோக்கும் நிலக் காட்சியின் தலையாய அமிசங்களெவை ?
(1) பிரான்சின் வெளிப்படையான நவிவே அவற்றுள் முதலாவதாகும். பதினன்காம் உலூயியின் நீண்ட ஆட்சிக்காலம் முழுவதும், பிரான்சு தலைசிறந்த நாடாயிருந்தது. இவ்வண்ணம் ஈட்டிய செல்வாக்குப் படிப்படியாகவே அவனே யடுத்து அரசெய்கியோரால் அழிக்கப்பட்டது. ஆனல் அந்நூற்ருரண்டின் நடுப் பகுதிக்குப்பின் நாடு விரைவில் இழிவுற்றது. கண்டத்திலே பிரான்சு பிரசியா வால் தோற்கடிக்கப்பட்டதுடன், உலக ஆதிக்கத்திற்கான பெரும் போட்டியில் இங்கிலந்தின் கையிற் பெருந் தோல்வி அடைந்தது.
(2) இரண்டாவது, பிரான்சிய பூபன் குலத்தவடுக்கும் இசுப்பானிய பூபன் குலத்தவருக்குமிடையே நிலவிய கூட்டுறவாகும். பதினன்காம் உலூயி தன் போன இசுப்பானிய அரசுகட்டிலிலேற்றியமை விழலுக்கன்று. அவர்களிடை வளர்ந்த 'குடும்ப ஒப்பந்தத்தாலும் பழைய உலகத்திலும் புதிய உலகத்திலும் இங்கிலந்துக்கெதிராகப் பிரான்சும் இசுப்பெயினும் செய்துகொண்ட கூட்டுற வாலும், ஆங்கிலேய உலிக்குக்கட்சியினரின் அச்சமும், உதிரத்துப்பொருத் தனக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பும் ஓரளவிற்கு நியாயமானவையென்பது தெளிவாயிற்று. எனினும் 1731 இன் பின்னரே அவற்றின் கூட்டுறவு புலனுயது. அப்பொழுதும் ஆர்வமற்ற கூட்டுறவாகவே அது காணப்பட்டது. 1743 இல் புதுக்கப்பட்ட இக்கூட்டுறவு 1748 இலிருந்து 1761 வரையும் நிறுத்திவைக்கப் பட்டது. பொதுவாக இக்கூட்டுறவு எதிர்பார்த்த அளவிற்குச் சர்வதேச நிலைமை யைப் பாதிக்கவில்லை.

Page 125
230 பதினெட்டாம் நூற்றண்டு
(3) ஐரோப்பாவில் அரசியல் ஈர்ப்பு கிழக்குநோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருந்தது. சேர்மனியில் ஆதிக்கத்திற்காக ஒகன்சொலேன் குலத்தினரும் அபிசுபேக்குக் குலத்தினரும் போட்டியிடுதலையும், போலந்தின் அயல் நாடுகள் மூன்றும் அந்நாட்டை அடுத்தடுத்துப் பிரிவினை செய்தலையும், தென் கிழக்கு ஐரோப்பாவில் இரசியாவின் முன்னேற்றத்தையும் நாம் காண்கிருேம்.
(4) சுவீடினையும் போலந்தையும் ஒற்முேமன் பேரரசையும் ஒவ்வோரளவிற்கு மீக்கொண்டே இரசியா முன்னேறியது. 17 ஆம் நூற்றண்டில் ஒற்முேமன் பேரரசிற் புலணுகிய நலிவு பதினெட்டாம் நூற்றண்டில் விரைவுற்றது.
(5) சுவிடினும் ஒல்லந்தும், 18 ஆம் நூற்ருண்டில் நலிவுற்றன என்பது வெளிப் படை. இவை 17 ஆம் நூற்றண்டில் ஐரோப்பிய அரசியலில் முனைப்பான முக்கியமான பங்கெடுத்துக்கொண்டன. எனினும், 1713 இல் இசுப்பானிய அபிசு பேக்கரிடமிருந்து ஒசுத்திரிய அபிசுபேக்கரைச் சென்றடைந்த தென் நெதலந்து தான் இழந்துவிட்ட கைத்ததொழிற் செழிப்பை மரியா தெரிசாவின் (1740-80) ஆட்சியில் ஓரளவிற்கு மீண்டும் அடைந்தது.
(6) ஆணுல், பதினெட்டாம் நூற்ருண்டு வரலாற்றின் தலைசிறந்த அமிசம் பிரதானமாக ஐரோப்பாவைச் சார்ந்ததன்று. ஆதிக்கத்திற்காக இந்தியாவிலும் வடஅமெரிக்காவிலும், இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையே நடைபெற்ற பெரிய போட்டியே தலைசிறந்த அமிசமாகும். 1763 வரையில் இந்தியாவிலிருந்து பிரான்சியரைப் புறப்படுத்தியபின், இங்கிலந்து அடுத்த ஐம்பது ஆண்டுகளாக அந்நாட்டின் முதன்மையான தனியாசுகளுடன் போரிற் சிக்கியது. இவ்வரசுகள், ஆங்கிலேய வர்த்தக சங்கத்தைப்போல், முகலாயப்பேரரசு அழிந்தமை காரண மாக முதன்மை பெற்றவைகளேயாகும். ஆனல் இந்தியாவிற் பிரான்சிய ஆதிக்கத்தின் உண்மையான அழிவைக்கண்ட ஏழாண்டு யுத்தம் (1756-63) வட அமெரிக்காவில் ஒரு பெரிய பிரான்சியப் பேரரசைத் தாபிக்கும் நம்பிக்கைக்கும் சாவடி அடித்தது.
பிரான்சுக்குச் செய்த குற்றத்திற்காக இங்கிலந்து விரைவிற் பழிவாங்கப் பட்டது. பிரான்சு கனடாவை இங்கிலந்துக்குக் கையளித்த பத்து ஆண்டுகளுக் குள் வடஅமெரிக்காவிலுள்ள பதின்மூன்று ஆங்கிலக் குடியேற்ற நாடுகளும் எதிர்க்கிளர்ச்சி செய்தன. 1783 இல் அவற்றின் சுயவாட்சியை நாங்கள் அங்கீகரித்தோம். என்ருலும் வடஅமெரிக்காக் கண்டம் முழுவதும் பெரிதும் ஆங்கிலேயமயமாகவே நிலைத்திருப்பதாயிற்று. A ت

பதினெட்டாம் நூற்ருண்டு 23.
(7) இந்தியாவிலும் வடஅமெரிக்காவிலும் பிரான்சு தோல்வி அடைந்தபின், புரட்சியெனும் செங்குத்தான பாறையை நோக்கி நெருங்கிச் சென்றுகொண் டிருந்தது. 1792 வரையிற் பிரான்சு படுகுழியில் விழுந்தது. பின் ஒரு சிறந்த போர்வீரனற் காப்பாற்றப்பட்டது. இவன் வருகையை ஆரம்பத்திலிருந்தே பேக்கு என்பான் எதிர்வு கூறியிருந்தான்.
(8) ஐரோப்பாவைப் பொதுவாக நோக்குங்கால், புரட்சிக்கு முந்திய ஊழி யின் பின்னைநாட்களில் மிகவும் முக்கியமாகத் தோற்றுவது சீர்திருத்த முயற்சி எங்கும் வியாபித்திருந்ததேயாகும். பிரான்சு தவிர்ந்த ஏனைநாடுகளிற் பழைய முடியாட்சிகள் தத்தம் நிலையைச் சீர்ப்படுத்தப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனல் அம்முயற்சிகளைக் குடிமக்கள் பொதுவாக நன்கு மதிக்கவில்லை. பிரான்சியப்புரட்சி இம்முயற்சிகளைப் பலவந்தமாகத் தடை பண்ணியது.
இவ்விடயங்களைப்பற்றிப் பின்வரும் அத்தியாயங்களிற் கூறல் வேண்டும்.

Page 126

அத்தியாயம் 18
உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும்
(1715-40)
முக்கியமான திகதிகள் :
1715
1715
1717
1717
1717
177
178
718
1718
1719
720
1720
1720
172
723
1725
726
727
727
729
731
733
1733
1733
1735
1736
738
739
740
1740
பிரான்சின் பதிலாளி, ஒலியன்சு.
இங்கிலந்தில் யாக்கோபியரின் தோல்வி.
மூவர் நட்புறவு-இங்கிலந்து, பிரான்சு, ஒல்லந்து.
உலோ என்பானின் மிசிசிப்பித்திட்டம்.
அல்பருேணி, இசுப்பெயினின் முதலமைச்சனுகவிருத்தல்
இசுப்பானியர் சாடினியாவை வெல்லல்.
இசுப்பானியர் சிசிலியை வென்றும் தமதாகவைத்துக்கொள்ளத் தவறினர்.
நால்வர் நட்புறவு.
இங்கிலந்து இசுப்பெயின்மீது யுத்தப்பிரகடனஞ் செய்தல்.
இசுப்பெயின் மீது பிரான்சு யுத்தப்பிரகடனஞ் செய்தல்.
ஆறம் சாள்சு சாடினியாவுக்குப் பதிலாகச் சிசிலியைப்பெறுதல்,
சவோய் சாடினியாவைப் பெறுதல்,
தென்கடற்குமிழி வெடித்தல்.
உவால்போல் அதிகாரம் பெறல்-1742.
பதினைந்தாம் உலூயி முற்றகவையணுதல் ; 1725 இல் மேரி இலச்சின்கியைத்
திருமணஞ் செய்தல்.
ஆனேவர்ப் பொருத்தனை.
புளூரி அதிகாரம் பெறல்-1743,
இங்கிலந்து இசுப்பெயினுடன் யுத்தத்திலீடுபடல்.
சிபுரோத்தர் முற்றுகையிடப்படல்-1728.
செவில் பொருத்தனை.
வீயன்னப் பொருத்தன.
தூரின் பொருத்தனை (பிரான்சும் சாடினியாவும்).
எசுகூரியல் பொருத்தனை (குடும்ப ஒப்பந்தம்).
போலந்து வழியுரிமைப் போர்.
ஆரம்ப வீயன்ன அமைதிப்பொருத்தனை (பிரான்சும் ஒசுத்திரியாவும்).
மரியாதெரிசா உலொரேன் கோமகன் பிரான்சிசைத் திருமணஞ்செய்தல்.
வீயன்னப் பொருத்தனை.
* யென்தின் செவிப்போர் ”.
மகாபிரதரிக்கு அரசெய்தல்.
பேரரசன் சாள்கின் மரணம்.

Page 127
234 உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும்
1715-40 வரையான ஆண்டுப்பகுதி, 14 ஆம் உலூயியின் காலத்திற்கும் மகா பிரதரிக்கின் காலத்திற்குமிடையே சிறப்புக் குறைந்த காலமாகவுளது. ஐரோப் பியச் சூழியலாங்கிற் கதாநாயகரெவருமில்லை. அப்பாத்திரத்திற்கு ஒப்பானவள் தலைமைவாய்ந்த சீமாட்டியும், பாமாவைச்சேர்ந்த இளவரசியுமான, எலிச பெத்து பாணிசாவாள். இவள் 1714 இல் இசுப்பானிய அரசன் ஐந்தாம் பிலிப் பின் இரண்டாம் மனைவியானுள். வரலாற்ருசிரியர் அருளாண்மையின்றி 'இசுப் பானிய பிடாரி' என இவளை அழைப்பர். இவளைத்தவிர, மன்னரும் அரசறிஞ ருங் கூடிய கும்பலொன்று அரசியலாங்கிற் காட்சியளித்தது. இவர்களுள் எலிச பெத்தையும் அவள் அமைச்சர்களான அல்பரோனியையும் இரிப்பேதாவையுந் தவிர மிகவும் சிறப்புடையோர் துபோயும், இசுத்தானுேப்பும், (இவர்கள் ஆற் றிய அருஞ் செயல்களுக்கு அக்காலத்தே உரிய மதிப்புக் கொடுக்கப்படவில்லை) , காடினல் புளூரியும், சேர் உாபேட்டு உவால்போலும், பேராசச் சட்டவனுமதி மூலம் தன் மரபுரிமையான ஆட்சிப்பகுதிகளைத் தனக்குப்பின் ஆட்சி செய்யும் உரிமை தன் மகள் மரியாதெரிசாவுக்குப் பெற்றுக்கொடுக்கக் கண்ணும் கருத்து மாயிருந்த பேரரசன் ஆரும் சாள்சும், பிரசியப் பயிற்சிப்படைத்தலைவன் முத லாம் பிரதரிக்கு உவிலியமும் ஆவர்.
உதிரத்து இணக்கம்
ஐரோபபியச் சூழியலில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் நாடுகள் தம்முள் மாறு பட்டுக் கூட்டுக் கூட்டாகக் கட்சி பிரிந்தமைக்கும் விளக்கம் காணவேண்டு மெனின், உதிரத்து இணக்கத்தை ஆராய்தல் வேண்டும். சில வல்லரசுகள் அதைப்பேணக் கவலைகொண்டன. மற்றையவை அதனை நிறைவேற வொட்டாது தடுக்க விரும்பின.
உதிரத்து இணக்கப்படி இசுப்பெயினினதும் இந்தியத்தீவுகளினதும் ஆட்சி பதினன்காம் உலூயியின் போனன ஐந்தாம் பிலிப்பினதாயது. அவ்வளவிற்குப் பதினன்காம் உலூயி தன் முதன்மையான போவாவை எய்தின்ை. பிரனிசுமலை பிரான்சையும் இசுப்பெயினையும் பிரிக்குந் தன்நிலையிற்றிரியாதிருந்த போதும், அவற்றை இணைக்கும் பாலமாக அக்கால் விளங்கிற்றெனலாம். ஆனல் பூபன் குலத்தினரைப் பொறுத்தவளவிற் பலதடைகளிருந்தன. பிரான்சும் இசுப் பெயினும் ஒரு முடிக்கீழ் இணைக்கப்படுதல் விலக்கப்பட்டது; இங்கிலந்திற் புரட்டெசுந்தாந்த மரபினர்க்கே அரசுரிமை உண்டென்று உத்தரவாதமளிக்கப் பட்டது; கத்தோலிக்க சுதுவாட்டுக்குலத்தினரின் உரிமை பற்றிய எண்ணம் கைவிடப்பட்டது; இசுப்பானிய நெதலந்து இசுப்பெயினிலிருந்து பிரித்தெடுக் கப்பட்டு, பிரான்சொடு இணைக்கப்படாது ஒசுத்தியாவினதாயது. ஆங்கிலே யரின் உணர்ச்சியை மதித்துத் தங்கேக்கு அரண்கள் அகற்றப்பட்டன. மேலும்
திரு பசில் உலிலியத்தின் “இசுத்தானுேப்பு” என்னும் நூல் வெளியாகும்வரை யென்க.
(1932).

உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும் 235
இங்கிலந்து சிபுரோத்தரையும் மினேக்காவையும் தன்னிடம் வைத்திருந்தமை யால், மத்தியதரைக்கடல் மீது ஒரு பலமான பிடியைப் பெற்றுக்கொண்டது. அன்றியும், நியூபண்ணிலந்திலும், நோவாசுகோசியாவிலும் அட்சன்குடாவிலும் பிரான்சுக்கிருந்த உரிமைகளைப்பெற்றமையால் வட அமெரிக்காவிற் பிரான் சுக் கெதிராகத் தன் நிலைமையை இங்கிலந்து உறுதிப்படுத்தியது ; ‘அசியந்தோ ஒப்பந்தத்தின்படி, இழுக்குடையதாயினும் ஊதியம் மிக்குடைய அடிமை வியாபாரத்தில் ஒரு பெரிய பங்கையும், போடோ பெல்லோவுக்கு வருடம் ஒருமுறை ஒரு கப்பல் அனுப்பும் உரிமையையும் பெற்றுக்கொண்டது.
இங்கிலந்தும் பிரான்சும்
ஆங்கிலேய உலிக்குக்கள் தோரிகள் செய்த அமைதிப் பொருத்தனையைப் பற்றி முனங்கக்கூடும்; ஆனல் முதலாம் யோட்சு அரசெய்தியதும் அவனும் அவர்களும் உதிரத்து இணக்கத்தைப் பேணுவதே தங்கள் வெளிநாட்டுப் نائي கையின் முதன்மையான நோக்கமாதல் வேண்டுமெனத் தீர்மானஞ் செய்தனர்.
1715 இல் பதினன்காம் உலூயி இறந்தபோது, ஐந்துவயதானவனும் நோயா ளியும் அதிக காலம் உயிருடனிருக்கானெனக் கருதப்பட்டவனுமான அவன் முப் பாட்டனன பதினைந்தாம் உலூயியிக்கு முடிசூட்டப்பட்டது. ஒலியன்சுக் கோமகனும் பதினைந்தாம் உலூயியின் பாட்டனுமான பிலிப்பு பதிலாளியானன். உதிரத்து உடன்படிக்கை நியதிகள் மதிக்கப்பட்டு, பிரான்சிய முடிக்கு இயற்கையாகவே உரிமைபடைத்த ஐந்தாம் பிலிப்புக்கு அது அளிக்கப்படா விட்டால், அம்முடி தனக்குக் கிடைக்குமென அவன் முற்முக நம்பியே பதிலாளி யான்ை. அரசவமிசத்திடையும் ஐரோப்பியச் சூழியலிலும் ஏற்பட்ட இந்நிலை வரத்தின் இயற்கை விளைவாகப் பதிலாளி ஒலியன்சுக்கும் ஆங்கிலேய ஆனே வரியருக்கிடையிலும், தூபோய்க்கும் இசுத்தானுேப்புக்கிடையிலும் காடினல் புளூறிக்கும் சேர் உசபேட்டு உவால்போலுக்கிடையிலும் ஒரு சந்துபாடு ஏற் படலாயிற்று. பிரான்சும் இங்கிலந்தும் அண்மையில் நிறைவேறிய இணக்கத் தைக் கேருெது பேணுவதில் ஊக்கம் எடுத்தன.
அபிசுபேக்கர்
ஆனல் ஒசுத்திரியாவும் இசுப்பெயினும் இதைக் கவிழ்த்துவிட ஊக்கம் கொண்டன. சாள்சுப்பேரரசன் இன்னும் இசுப்பானிய முடியைப்பெறுவதிலேயே மிக்க ஆவல்கொண்டிருந்தான். இத்தாலியிற் பெற்றவற்றேடு அவன் திருத்தி யடையவில்லை. மிலான் மந்துவா கோமகப் பகுதிகளையும், தசுக்கனித் துறைகளே யும், நேப்பிளையும் சாடினியாவையும் அவன் பெற்றன். சிசிலிக்குச் சாடினியா ஈடாகாதபடியால், சவோய்க் குலத்தினர்க்குச் சிசிலியை ஒப்புவித்தது அவனுக்

Page 128
236 உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும்
குக் கோபத்தை மூட்டியது. இசுப்பானிய நெதலந்தை அவன் பெரிதாக மதிக்க வில்லை. ஒல்லந்துக்குக் காப்புத்தடை ஆகுமாறு பிரான்சு கொடுத்த கோட்டை களைக் காவல்புரியும் ஒல்லந்தப் படைகளுக்கு வேதனங் கொடுக்கவேண்டியிருப் பதை அவன் பெரிதும் வெறுத்தான்.
அல்பமுேனி
இசுப்பெயின் முடியைப்பெறப் போாசன் ஆவற்பட்டதினும் கூடிய அளவிற் குப் பிரான்சிய முடியைப் பெற ஐந்தாம் பிலிப்பு ஆசைப்பட்டான். இத்தாலி யிலுள்ள இசுப்பானியப்பகுதிகளை இழந்ததால் அவனுக்கு உண்டான மனவருத் தத்தை மதிரித்திலுள்ள இரு இத்தாலியர்கள்-அவன் இரண்டாம் மனைவியும் பாமாவைச் சேர்ந்தவளுமான எலிசபெத்தும், பியசென்சாவில் வாழ்ந்த ஒரு தோட்டத்தாகனின் மகன் காடினல் அல்பமுேனியும்-பெரிதும் அதிகரிக்கச் செய்தனர். அல்பருேனி சிறுவனுயிருந்தபோது ஒரு கோவிற்குருவின் கவனத்தை ஈர்த்தான். இவனை அக்குரு குருப்பட்டம் பெறும்படி ஊக்கப்படுத்தி ன்ை. வழியுரிமை யுத்தம் நடந்தபொழுது இத்தாலியிலுள்ள பிரான்சியப்படை யின் சேனபதியான வாண்டோம் என்பான் அவன் ஆற்றலைக் கண்டுவியந்து தன் விதப்புரையோடு அவனைப் பாமாக் கோமகனிடம் அனுப்பினன். கோமகன் அவ ઢઝr மதிரித்துக்குத் தூதமைச்சனய் அனுப்பினன் 1714 தொடக்கம் 1719 வரை யும் இவனே இசுப்பெயினின் உண்மையான ஆட்சியாளனக இருந்தான். இசுப் பெயினே அதன் பண்டைய உன்னத நிலைக்கு மீட்பது, குறிப்பாக இத்தாலி யிலிருந்து ஒசுத்திரியரை வெளியே துரத்தி, குழப்பமடைந்திருந்த அந்நாட்டில் இசுப்பானிய ஆதிக்கத்தை மீண்டும் நாட்டுவது என்பனவே அவனுடைய பூட்கையின் குறிக்கோளாகும்.
'எனக்கு நான்கு ஆண்டுகள் அமைதி அளியுங்கள். நான் இசுப்பெயினை ஐரோப்பாவின் முதல் வல்லரசாக்குவேன்' என அல்பமுேனி கூறினன். அவன் கோரிய காலப்பகுதி மிகக் குறுகியது. ஆனல் அக்காலப்பகுதி முடியுமுன் இசுப் பெயின் யுத்தத்தில் ஈடுபட்டுவிட்டது. இதற்கிடையில், ஒலிவர் என்பான் உண்மையொடு கூறியதுபோல் 'அவனுடைய பாலனத்தின் வெற்றி அற்புத மானது; நாட்டின் மூலவளங்கள், குடியேற்ற நாட்டுச்செல்வம், இசுப்பானிய மக்களின் மனப்பான்மை ஆகிய யாவற்றையும் நன்கு பயன்படுத்தினன். நலிந்துபோகும் முடியாட்சிக்கு உயிரும் நம்பிக்கையும் ஊட்டினன். அரசாங்க சேவையில் ஊழல்களையும் விழல்களையும் அகற்றி நேர்மையையும் வினைத்திறனை யும் நிலைநாட்டினன். வணிகம், கப்பற்றெழில், விவசாயம் என்பன அவனல் ஊக்கப்படுத்தப்பட்டுச் செழித்தோங்க ஆரம்பித்தன. படைக்கலச்சாலைகள் நிசம்பின நாள்முழுவதும், கலவேலைத்தலங்களிற் சம்மட்டியால் அடிக்கும் ஓசை

உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும் 237
எதிரொலித்தது; தரைப்படையும் கடற்படையும் ஒழுக்காற்றுப்படுத்தப்பட்டு, அவற்றின் தேவைகள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன; இன்னற்காலத்தும் தலை நிமிர்ந்து நடக்கும் இசுப்பானியர் தங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நம்பிக்கை அடைந்தனர். 1
பாமாவைச்சேர்ந்த ஓர் இளவரசியை ஐந்தாம் பிலிப்புக்குத் திருமணஞ் செய்து வைத்தபடியால் வலிமையுடைய ஒரு நட்பாளரையும் பெற்றன். அவன் இங்கிலந்தின் நட்புறவையும் அடைய விழைந்து வாய்ப்பான சலுகைகள் பல கொடுக்க முன்வந்தான் : பிரான்சும் இசுப்பெயினும் ஒருபொழுதும் ஒரு முடிக் கீழ் ஒன்ருக்கப்படுவதில்லையென்பதற்கு உத்தரவாதம்; உதிரத்துப் பொருத்தனை யிற் பொலிம்புரூக்கு பெற்றவற்றினும் அதிக்மான வர்த்தகச் சலுகைகள் ; போ லியுரித்தாளனுக்கு எவ்வித உதவியும் செய்வது விலக்கல் ஆகியவையே அவன் கொடுக்க முன்வந்த சலுகைகளாம். ஆனல் இங்கிலந்து பிரான்சுடன் நட்புறவு செய்வதையே விரும்பியது. போலியுரித்தாளியை ஆவினனிலிருந்து வெளியேற்ற வும், பிரான்சிய இசுப்பானிய முடிகளின் தொடர்பு அறுக்கவும் முன்வந்ததோடு தங்கேக்கிற்குப் பதிலாக மாடயிக்கில் அமைத்த அரண்களை அழிக்கவும் பிரான்சு முன்வந்தது (1716). இந்த ஆங்கில-பிரான்சிய நட்புறவு ஒல்லந்தும் சேர்ந்தமை யால் மூவர் நட்புறவாக மாறியது. 1717 இல் ஐந்தாம் பிலிப்பு சாடினியாவில் ஒசுத்திரியரைத் தாக்கியபொழுது, பேரரசனன ஆரும் சாள்சு மூவர் நட்புற வைச் சேர, இசுப்பெயினுக்கு எதிரான நால்வர் நட்புறவாக அது மாறியது. பேரரசரைத் தாக்கும்படி துருக்கியை ஏவியும், பிரான்சிற் பதிலாளி ஒலியன்சுக் கெதிரான சதியாலோசனைக்கு ஊக்கமளித்தும், போலியுரித்தாளியின் சார்பாகச் சுவீடினையும் இரசியாவையும் இங்கிலந்துக்கெதிராக ஒன்றுசேர்த்து படை யெடுக்கும்படி தாண்டியும் அல்பமுேனி எதிர்ப்பழி செய்தான். ஆனல் எங்கும் அல்பமுேனியின் திட்டங்கள் குறிதவறின. பீற்றவாதேன் (1716), பெல்கிறேட்டு (1717) என்னுமிடங்களில் யூசின் இளவரசன் எய்தியூ வெற்றிகளால், துருக்காாற் பேரரசுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து அணுகாது தடுக்கப்பட்டது. பிரதநிச் சோலைத்தாக்கியபொழுது சுவீடின் அரசனுன பன்னிரண்டாம் சாள்சு கொல்லப் பட்டான். ஆங்கிலேய அரசுகட்டிலைப் போலியுரித்தாளிக்கு மீட்டுக்கொடுக்கச் சென்ற போர்க்கப்பற்படை ஒரு புயலினற் சிதறடிக்கப்பட்டது. சிசிலியை வெற்றிகொள்வதற்காக அனுப்பப்பட்ட இரண்டாவது கப்பற்படை கடற்படைத் தலைவனன பிங்கு என்பால்ை பசரோ முனைக்கு அப்பால் அழிக்கப்பட்டது. பதிலாளி ஒலியன்சை அகற்றச் செய்யப்பட்ட குழ்ச்சி தோல்வியடைந்தது. அடுத்தடுத்தேற்பட்ட தோல்விகள் காரணமாக அல்பமுேனியும் அவமானத் துடன் பதவியினின்றும் நீக்கப்பட்டான். அவன் இத்தாலிக்குத் திரும்பி, இயேசு தரின் ஆதரவுடன் தன் சதியாலோசனைகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தினமை யால் 1724 ஆம்ஆண்டிற் போப்பின் தேர்தலில் அவனுக்குப் பத்து வாக்குக்கள் கிடைத்தன. அவன் 1725 இல் இறந்தான்.
"முடிவிலா அருஞ்செயல்’-1 ஆம் அத்தியாயம் 220 ஆம் பக்கம்.

Page 129
238 உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும்
இச்சமயத்தில் ஐந்தாம் பிலிப்பு, நால்வர் நட்புறவினல் 1720இல் விதிக்கப் பட்ட நியதிகளை ஏற்றுக்கொண்டான். பேராசன் ஆரும் சாள்சு சாடினியாவைச் சவோய் மரபினர்க்குக் கொடுத்து அதற்குப் பதிலாகச் சிசிலியைப் பெற்றன். இவர்களே இதுமுதற்கொண்டு சாடினியாவின் அரசர் என்ற பட்டம் தாங்கு பவராயினர். ‘பிடாரியின் மகன் தொன் காலோசுக்கு தசுகனி, பாமா ஆகிய கோமகப்பகுதிகளும், பியசென்சாவும் உரிமையாய் வந்தடைந்தன. உதிரத்து இணக்கம் கணிசமான அளவிற்குப் பேணப்பட்டது. பிந்திய ஓர் உடன்படிக்கை யின்படி தொன் உலூயி என்னும் குழந்தை, பதிலாளி ஒலியன்சின் மகளைத் திரு மணஞ் செய்யவிருந்தான் ; பதினைந்தாம் உலூயி ஐந்தாம் பிலிப்பின் மூத்த மகளே-ஐந்து வயதினளை-திருமணஞ் செய்யவேண்டியிருந்தது.
ஒசுத்திரிய இசுப்பானிய நட்புறவு
1725 இல் இணக்கம் அபாயகரமான நிலையை அடைந்தது. யுத்தம் எந்நேரமும் மூளக்கூடுமெனத் தோற்றியது. அரசியலரங்கிலே இப்போது புதிய நடிகர்கள் காட்சியளித்தனர். 1723 ஒகத்தில் துபோய் இறந்துவிட்டான். பதிலாளி ஒலி யன்சு அதே ஆண்டு திசெம்பர் மாதத்திற் காலமானன். 1724 இல் இசுப்பானிய பூட்கையை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை, அல்பமுேனியின் ஆதரவிலிருப்ப வனும், அவனைப்போல் மதிரித்து அரசவையில் வெளிநாட்டுத் தூதனுயிருந்த வனுமான இரிப்பேதாக் கோமகன் பெற்றன். இவன் இசுப்பெயினிலே தனக் கிருந்த வாய்ப்பை உணர்ந்து இசுப்பானிய நாட்டுரிமை பெற்றன். இவன் அல்ப முேனியோடு சச்சரவு செய்து, மதிரித்திலிருந்து விகுனவுக்குப் பின்வாங்கினன். இங்கே யூசீன் இளவரசனிடமிருந்து உபகாரச் சம்பளம் பெற்றன். அல்பமுேனி யின் அவமானத்தின் பின் அவன் இசுப்பெயினுக்குத் திரும்பி வந்து, இறைக்கு முதன்மையான ஆயுரையாளனுக 1724 தொடக்கம் 1726 வரையும் பணி புரிந்தான்.
இசுப்பெயினுக்கும் பேராசனுக்குமிடையில் நட்பை ஏற்படுத்துவதே இரிப் பேதாவின் பூட்கைக்கு அச்சாணியாக இருந்தது. ஆரும் சாள்சு இன்னும் இசுப் பானிய முடியைப் பெற விண் ஆசைகொண்டவனுகவே இருந்தான். ஆனல் அவனுக்கு ஆண் உரிமையாளன் இல்லாமையால், பாந்த பலதிறப்பட்ட தன் ஆணிலங்களின் அரசுரிமையைத் தன் மகள் மரியாதெரிசாவுக்குப் பெற்றுக் கொடுப்பதே அவன் பெருங் கவலையாயிற்று. இதைப் பேரரசின் சட்டவனுமதி' என்னும் முறைமையான பத்திரத்தினுல் நிறைவேற்ற விரும்பினன். ஒசுத்திரியா, அங்கேரி, பிறபல முடியாட்சி மாகாணங்கள் ஆகியவற்றின் குடித்திணை மன்றங் களின் உறுதிப்பாடு பெற்றபின், சர்வதேச உத்தரவாதங்களும் பெற்று அதற்குக் கூடிய பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்தான். வலிமை பொருந்திய படையும் நிரம்பிய இறைசேரியுமே உறுதிபயப்பனவென யூசின் இளவரசன் பேரரச னுக்கு எச்சரிக்கை செய்தான். யூசீன் கூறியதே சரியாயது. ஆனல் ஆரும் சாள்சு 1740 இல் இறக்கும் வரையும் சட்டவனுமதியைத் தன் குழியலின் அச்சாணி யாக்கினன்.

உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும் 239
வீயன்னப் பொருத்தனை
இதுவே 1725 இல் இசுப்பெயினுக்கும் ஒசுத்திரியாவுக்குமிடையில் இரிப்பேகா செய்த பொருத்தனையின் அடிப்படையாயிற்று. பேரரசுச்சட்டவனுமதிக்குப் பொறுப்பளிப்பதற்கும் ஒசுதெந்துச் சங்கத்தை அங்கீகரிப்பதற்கும் பிலிப்பு இசைதற்கு ஈடாக, இத்தாலிய கோமகப்பகுதிகளின் உரிமையை மீண்டும் தொன் காலோசு பெறுவதற்கும், சிபுரோத்தசையும் மினுேக்காவையும் இசுப்பெயின் மீண்டு பெற்றுக்கொள்ளுதற்கும் உதவியளிக்கப் பேரரசன் வாக்குறுதி செய் தான். பதினைந்தாம் உலூயி தனக்கு மணப்பெண்ணுக வரவிருக்கும் இசுப்பானிய இன்பந்தாவை மதிரித்துக்குத் திருப்பியனுப்பிப் போலந்தின் முன்னைநாள் அரசனுடைய மகளான மேரி இலச்சின்கியைத் திருமணஞ் செய்து கொண்டமை யால், இசுப்பெயினிலுண்டான ஆத்திரமே குழியல் நிலையில் ஏற்பட்ட இச்சடுதி மாற்றத்திற்குக் காரணமாகும்.
பிானிசு மலைகள் கிரும்பவும் தடையாயின. மீண்டும் இங்கிலந்தும் பிரான்சும் அனேவர் பொருத்தனையால் ஒன்றுசேர்ந்தன. இவர்களுடன் பிரசியாவும், பின் ஒல்லந்து, சுவீடின், தென்மாக்கு ஆகிய நாடுகளும் ஒன்றுசேர்ந்தன. பிரசியா வின் இசைன் நதிப்பிரதேச மாகாணங்களான கிளிவிசும் யூலிக்கும் அதற்குக் கொடுக்கப்படவிருந்தன; ஆங்கிலேய, ஒல்லந்த கிழக்கிந்திய சங்கங்களின் நலனிற்காக ஒசுத்தெந்துச் சங்கம் நிறுத்தப்படவேண்டியிருந்தது.
புளூரியும் உவால்போலும்
இக்காலப்பகுதியில் பிரான்சினதும் இங்கிலந்தினதும் பூட்கை, காடினல் புளூரி (1726-43) சேர் உாபேட்டு உவால்போல் (1721-42) என்னும் இரு ஆற்றல் படைத்த அமைச்சர்கள் கையில் இருந்தது. இவர்களிருவரும் ஐரோப்பாவில் அமைதியைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.
1727 இல் இசுப்பெயின் சிபுரோத்தரை முற்றுகையிட்டது உண்மை எனினும் ஒசுத்திரியா உதவியளிக்கவில்லை. இதற்கு எதிராக உவால்போலின் கட்டளைப்படி ஆங்கிலக் கடற்படை பற்பல இடங்களில் ஆர்பாட்டங்கள் மாத்திரமே செய்தது. ஒரு கடற்படை இசுப்பானிய கடற்கரைக்கனுப்பப்பட்டது. இரண்டாவது, போட்டோ பெல்லோவை முற்றுகையிட்டு, ஆங்குத்திரவியமேற்றிச்சென்ற கப்பற்படையைத் தடைசெய்ய அனுப்பப்பட்டது. மூன்முவது, போற்றிக்குக் கடலுக்குச் சென்று இங்கிலந்தின் கந்தினேவிய நட்பாளருக்குத் தொல்லை விளைக்கக்கூடாதென்று இரசியாவுக்கு எச்சரிக்கை செய்ய அனுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டங்களே போதுமாயின. பெருஞ் சூழியல் முயற்சிகளுக்கும் பல ஆரம்ப பொருத்தனைகளுக்கும் பின்னர் ஒப்பேறிய (1731) வீயன்னு அமைதிப் பொருத்தனையானது ஈற்றில் ஐரோப்பிய அமைதியை உறுதிப்படுத்தும்போற் முேன்றியது. கடல் வல்லரசுகள் தாங்கள் விரும்பியதைப் பெற்றன-ஒசுத்தெந்

Page 130
240 உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும்
துச் சங்கம் முடிவாக ஒழிக்கப்பட்டது. இது அந்நாடுகள் தன் பேரரசுச் சட்ட வனுமதியை அங்கீகரித்தமைக்கு ஈடாகப் பேரரசனல் ஒப்புக்கொள்ளப்பட்டது. எலிசபெத்து பாணிசு, தன் மகனன தொன் காளோசு பாமாவிற் பதவியி லமர்த்தப்பெற்றதைக்கண்டு திருத்தியடைந்தாள்.
போலிசு வழியுரிமைப் போர் (1783-8 )
என்ருலும் அமைதி நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1733 இல் போலந்தின் அரசனும் சட்சனியின் தேர்வாளனுமாகிய இரண்டாம் பிரதரிக்கு ஒகத்தசின் மரணம் மீண்டும் ஐரோப்பாவைக் குழப்பத்திலாழ்த்தியது. 1732 இல் ஒசுத்திரி யாவும், இரசியாவும் பிரசியாவும் அரசுரிமையை ஒரு போத்துக்கேய இளவரச லுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் போலந்திற் பிரான்சின் செல்வாக்கை எதிர்ப் பதற்கும் ஓர் இரகசியப் பொருத்தனையை நிறைவேற்றின. இவ்விணைப்பு போலந்தில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தீய முன்னறிகுறியாகும். பதி னேழாம் நூற்முண்டு முழுவதிலும் பதினெட்டாம் நூற்றண்டின் பெரும்பகுதி யிலும் போலந்து பிரான்சிய குழியலின் பிரதான களங்களிலொன்முயிருந்தது. இசுத்தொக்கோம், உவாசோ, கொன்சுதாந்திநோப்பிள் ஆகிய இடங்களில் தங் கள் செல்வாக்கைப் பேணுவதனல், பிரான்சியர் தங்கள் எதிரிகளான அபிசு பேக்கருக்குத் தொந்தரை செய்யவும், ஒகன் சொலேன், உரோமானேவு குலத் தினரின் வளர்ந்துகொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மீது ஒரு கண் வைத்திருக் கவும் இயலும். ஒரு சுயாதீனமான போலந்து முன்னும் இப்பொழுதும், 1917 இலிருந்து உலகம் முழுவதும் அறிந்தவாறு, பிரான்சியப் பூட்கையின் அச்சாணி யன்ன அமிசமாக விளங்கிவருகிறது.
1733 இல் பதினைந்தாம் உலூயியின் மாமனன சிதானிசுலோசு இலச்சின்கி என்பானைப் போலிசு அரசுகட்டிலுக்குச் (செத்தெம்பர்) பிரான்சு தெரிந்தெடுத் தது. ஒரு மாதத்தின்பின் ஒசுத்திரியாவும் இரசியாவும்-சட்சனியும் போலந் தும் ஐக்கியப்படுவதைப் பிரசியா பெரிதும் வெறுத்த போதிலும்-காலஞ் சென்ற அரசனின் மகன் மூன்ரும் ஓகத்தசின் தெரிவை ஆதரித்துப் பிரசியா வுக்கு ஆத்திரத்தை உண்டாக்கின. ஒரு பொதுயுத்தம் ஆரம்பமாகிப் பெயரள வில் 1738 வரையும் நிலைத்தது. என்ருலும் இருகட்சிக்கும் தலைவர்களான பிரான்சும் ஒசுத்திரியாவும் 1735 இல் இணக்கத்திற்கு ஓர் அடிப்படை கண்ட பின் சண்டை நடக்கவில்லை. ஈற்றில் பேரரசுச் சட்டவனுமதிக்குப் பிரான்சு உத்தரவாதமளித்தது. ஒகத்தசு போலந்தை வைத்திருக்கவும், இலச்சின்கி இழப்பீடாக உலொரேன் கோமகப் பகுதியைப் பெறவும் ஏற்பாடாயிற்று. பேராசின் சட்டவனுமதிப்படி சேரவேண்டிய ஆட்சிப்பகுதிகளுக்கு உரிமை யாளியான மரியாதெரிசாவை 1736 இல் திருமணஞ் செய்த உலொரேன் கோமக னை பிரான்சிசு சிதீபன், மெடிக்கிக் குலத்தின் கடைசிக் கோமகன் இறந்த உடனும், தன் கோமகப்பகுதியைக் கொடுத்து அதற்குப்பதிலாகத் தசுகனிக் கோமகப்பகுதியைப் பெற நிச்சயிக்கப்பட்டது. மாபெரும் கோமகன் 1737 இல்

உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும் 24
காலஞ்சென்றன். சிதானிசுலோசு காலஞ் செல்லப், பிரான்சு உலொரேனைப் பெறவிருந்தது. இது 1766 இல் அவ்வாறே நடந்தேறியது. அல்சேசுடன் பிரான்சு உலொசேனையும் சேர்த்துக்கொண்டது. இப்பொது 'ஒழுங்கு இத்தா லிக்கும் பரவியது. இருசிசிலிகளும் தொன் காலோசைச் சேரவேண்டியிருந்தன. இத்தீவுகள் (நெப்போலியனின் ஆட்சிக் காலத்தவிர) 1861 வரையும் இசுப்பானிய பூபன்குலத்தினர்வசமே இருந்தன. பாமாவும் பியசென்சாவும் பேரரசைச் சேர வேண்டியிருந்தன. தசுகனி அவன் மருமகனுக்குச் சேரவேண்டியிருந்தது. சவோய்க் குலமுறையினர் 'உலம்பாடி ஆட்டிச்சோக்குக் கீரையில் இன்னும் இரு இலைகளை விழுங்கினர். இத்தாலிய நாட்டில் மேலாண்மை பெறுதற்கு அவர்கள் முன்னேறியமை தாமதப்படினும் உறுதியாயிருந்தது.
பதினன்காம் உலூயியின் மரணத்தின் பின் வரும் குழப்பமான காலப்பகுதி, போலிசு வழியுரிமைப் போருடன் முடிவெய்துகிறது. இக்குழப்பத்தினின்றும் இரண்டொரு குறிப்புக்கள் தோன்றுகின்றன. வமிசப்பற்றுக்களின் ஆதிக்கம் ஒன்றே மிகவும் வெளிப்படையானது; குழியல், அரசர்களின் விளையாட்டாகும். பொதுமக்களுக்கு அதில் இடமேயில்லை. அரசரின் சொந்தப் போவாக்களுக்குப் பயன்படும்வண்ணம் அரசுகள் ஒருவனிடமிருந்து வேருெருவனுக்கு மாற்றப் பட்டன. இம் மாற்றத்திற்குச் சிறந்த காரணமெனக் கொள்ளப்படுவது ஐரோப் பிய சமநிலையைப் பேணுதலாகும். ஆனல் குடிமக்களின் விருப்பங்களோ நலன்களோ பொருட்படுத்தப்படுவதில்லை. போப்பாட்சியிலிருந்த அரசுகளும் சவோயும் தவிர, இத்தாலியானது அபிசுபேக்கர், இசுப்பானிய பூபன்குலத்தினர் ஆகியோர் பிடியிலேயே இருந்தது. அபிசுபேக்கர், சேர்மனிய நலன்களைப் பற்றிய கவனமின்றித் தங்கள் வமிசத்தின் பேரவாக்களை விருத்திசெய்வதில் பெரிதுங் கவனமுடையராகக் காணப்பட்டனர். பிரசியாவின் உன்னத காலம் நெருங்கிவிட்டபோதும், இன்னும் வந்தடையவில்லை. அறிவுக்கூர்மையுடைய உவால்போலின் ஆதரவில் இங்கிலந்து மீண்டும் வலிமை அடைந்தது. இந்த ஆண்டில் ஐரோப்பாவில் 50,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனல் ஓர் ஆங்கிலே யனும் கொல்லப்படவில்லை, என 1734-5 இல் உவால்போல் பெருமையுடன் கூறி ஞன். சாத்துவிகமான அவனுடைய பூட்கையிற் சிறப்பற்ற அமிசமும் இருந் தது. இங்கிலந்தும் பிரான்சும் உதிரத்து உடன்படிக்கையைப்பேண ஒத்துழைக் கும் வரையும் மாத்திரமே அது உருப்படியாயிருந்தது. 1731 இல் உவால்போல் ஆங்கில பிரான்சிய கேண்மையை நிறுத்தியபொழுது, ‘குடும்ப ஒப்பந்தத்திற்கு ' இதுவரையும் தேவைப்பட்ட பொருண்மை கொடுத்தான். இவ்வண்ணமே உதிரத்து இணக்கம் முடிவெய்தியது. ஆனல் உண்மையில் உவால்போலோ வேறெந்த அரசறிஞனே கட்டி ஆளமுடியாத சத்திகள் தொழிற்பட்டுக்கொண் டிருந்தன. இங்கிலந்துக்கும் பூபன் குலத்தினருக்குமிடையில், உலக ஆதிக்கத் தைக் கருதிய யுத்தம் நெருங்கி வந்துவிட்டது. ஓர் ஆங்கில வியாபாரக் கப்பற் றஃலவனுக்கு இசுப்பானியர் இழைத்த பெரும்பழியொன்று அப்போர் நெருங்கி விட்டதை அறிவித்தது.

Page 131

அத்தியாயம் 19
பிரசியாவின் எழுச்சி (1618-1748)
முக்கியமான திகதிகள் :
1410
1415
1466
1525
1609
168
1640
1648
1657
1675
1701
1713
1720
740
74.1
742
且744
744
1745
1748
தனன்பேக்கில் தியூத்தோனிக்கு நைற்றுக்கள் தோல்வியுறல். பிரந்தன்பேக்கில் ஒகன்சொலேன் குலத்தினர். தோண் அமைதிப் பொருத்தனை. கிழக்கிப்பிரசியாவின் கோமகன், ஒகன்சொலேன் அல்பேட்டு. பிரந்தன்பேக்கும் கிளிவிசும் ஐக்கியம் பூணல். பிசந்தன்பேக்கும் கிழக்குப்பிரசியாவும் ஐக்கியம் பூணல். மாபெரும் தேர்வாளன் அரசெய்தல்-1688. உவெசுபேலியாப் பொருத்தனை.
வேலுப் பொருத்தனை.
பேபலின் அமர்.
பிரசிய இராச்சியம்.
முதலாம் பிரதரிக்கு உவிலியம்-1740. சுவீடினிலிருந்து இசுத்தெதின் ஈட்டப்படல். ஒசுத்திரிய வழியுரிமைப்போர்-1748. கிளேன்-செலனந்தோவுச் சமவாயம். பேளின் பொருத்தனை முதலாம் சைலீசிய யுத்தத்தை முடிவு செய்தல். பிராங்குபோட்டு ஐக்கிய சங்கம். இரணடாம சைலீசிய யுத்தம்.
திரசுதன் பொருத்தனை.
எயிச்சிலாசப்பல் பொருத்தனை.
பிரந்தன்பேக்கில் ஒகன்சொலேன்மரபினர்
இக்காலப் பகுதியில், இப்போது நாம் பிரசியா என அழைக்கும் நாட்டின் வளர்ச்சியே அரசியல் நிகழ்ச்சிகளுள் ஒப்பிலா முக்கியத்துவமுடையதாகும். ஒகன்சொலேன் மரபினரின் வளர்ச்சி என்று இதைக் கூறுவது கூடிய பொருத்த மாகவிருக்கும். ஏனென்முல் இக்காலப் பிரசியா வென்பது முற்றிலும் படைத் துருவாக்கப்பட்ட செயற்கைப் பொருளாமாதலின், அதனை உருவாக்கியவர் ஒகன்சொலேன் மரபினர் ஆவர். பிாந்தன்பேக்கு பிரசியாவுக்குப் புவியமைப்புப் படி இயற்கையான எல்லைப்புறம் யாதொன்றும் இல்லை. எனினும் அந்நாட்டை ஆட்சி செய்தவர்களின் பேராற்றலாலும், அவர்கள் தோற்றுவித்த படையாலும் குடியியற் சேவையாலும் இன்னும் அவர்கள் அமைத்த கல்வி முறையாலும் இவ்
10-B 24178 (5.160)

Page 132
244 பிரசியாவின் எழுச்சி
வியற்கைக் குறைகள் நிறைவாக்கப்பட்டன. “எங்கள் யுத்தங்களிலே வெற்றி விரன் பள்ளிக்கூட ஆசிரியன்' என மோற்கே கூறினன். வியக்கத்தக்க இக்குடும் 'பத்தின் தாயகம் சுவேபியன் அல்பிசு மலையிலுள்ள ஒரு கோட்டையாகும். பேரச சஞன பிரதரிக்கு பாபரோசா ஒகன்சொலேன் ஏளொருவன் தனக்குச் செய்த சேவைகளுக்குப் பரிசாக அவனை 1192 இல் நியூரம்பேக்கு நகரின் ஏளாக்கி னன். இரு நூற்ருண்டுகளின் பின் (1415) பேரரசன் சிகிசுமந்து பிரந்தன்பேக்குத் தேர்வகத்தை ஒகன்சொலேன் மரபினனுன வேருெரு பிரதரிக்கிற்கு அளித்தான். அதுவே இக்காலப் பிரசியாவிற்கும் இக்காலச் சேர்மனியப் பேரரசிற்கும் வித் தாயிற்று. 15 ஆம் நூற்றண்டில் ஒகன்சொலேன் மரபினர் தங்கள் வட சேர் மானியத் தோகத்தில் உறுதியாக நிலையூன்றினர். 16 ஆம் நூற்றண்டில், தேர்வுரி மையாளனை மூன்ரும் யோக்கீம் புரட்டெசுத்தாந்தக் கட்சியை ஆதரித்தானுயி னும், சிமால்கால்திக்குச் சங்கத்தைச் சேர மறுத்து, பேரரசுமாட்டுத்தான் கொண்ட பற்றுறுதியைப் பிரசித்தஞ் செய்தான். இதுவே ஒகன்சொலேன் மா பினர் பூண்டுவந்த பூட்கையின் பரம்பரையான சிறப்பியல்பாயிற்று. ஒகன்சொ லேன் மன்னர், இடையிடையே பேரரசரின் கட்சியாளராகாவிடினும் பேரரசுக்கு எப்பொழுதும் விசுவாசமாயிருந்தனர்.
பிரசியா
இதற்கிடையிற் பிரசியாவைத் தியூத்தொனிக்கு நைற்றுக்கள் 13 ஆம் நூற் முண்டில் வெற்றிகொண்டு ஆங்குக் குடியேறினர். 200 ஆண்டுகளாக அந்தப் புகழ்பெற்ற குழுவால் அந்நாடு வெற்றியுடன் ஆளப்பட்டது. ஆனல், 15 ஆம் நூற்ருண்டில் இத் தியூத்தொனிக்கு நைற்றுக்கள், வேறுபல இடைக்காலச் குழுக்களைப்போலத் தீவிரமாகச் சீர்கெட்டு, 1410 இல், வரலாற்றுப் பெருமை வாய்ந்த தனன்பேக்குப் போர்க்களத்திற் போலந்து மக்களால் முறியடிக்கப் பட்டனர். பின்னர் நிறைவேறிய (1466) தோண் அமைதிப் பொருத்தனைப்படி போலந்து மேற்குப் பிரசியாவைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, நைற்றுக் களுக்குக் கிழக்குப் பிரசியாவைப் பாளையமாக ஆட்சி செய்யும்படி திருப்பிக் கொடுத்தது. 1511 இல் ஒகன்சொலேன் மரபினனை அல்பேட்டு தியூத்தொ னிக்கு நைற்றுக்களின் உயர்திருத் தலைவனகத் தெரிந்தெடுக்கப்பட்டு, 1525 இல் அக்குழு குலைய, அவன் கிழக்குப் பிரசியாவின் முதலாம் மரபுரிமைக் கோமகனனன். இக்கோமகப் பகுதியைப் போலந்தின் சார்பு நாடாக ஆட்சி செய்தான். 1568 இல் பிாந்தன்பேக்குத் தேர்வுரிமையாளன், கிழக்குப் பிரசியா வின் பெருமகனன தன் உறவினனுடன் இரு பகுதியினருக்கும் பயன்விளைக்கும் அரசுரிமை ஒப்பந்தத்தை நிறைவேற்றினன். இவ்வொப்பந்தங்கள் நேரடியான உரித்தாளர் இல்லாவிடத்து ஆள்புலங்கள் பேரரசைச் சேர்ந்தடைவதைத் தடுக்கு முகமாகக் கையாளப்படும் ஒரு சாதாரணமான உத்தியேயாகும். 1618 இல் கிழக்குப் பிரசியாவின் ஒகன்சொலேன் கோமக்களின் ஆண்வழி அற்றுப் போக, இக்கோமகப் பகுதி பிரந்தன்பேக்குத் தோகத்துடன் ஐக்கியப் படுத்தப்
.g7ئے-LLلL

பிரசியாவின் எழுச்சி 245
கிளிவிசு
ஒன்பது ஆண்டுகளின்முன், கீழ் இாைன் பகுதியிலுள்ள கிளிவிசு கோமகப் பகுதியைத் திருமணத்தின் பயனக ஒகன்சொலேன் மரபினர் பெற்றனர். உரு தோல்புப் பேரரசன், ஆள்புல ஆட்சியைப் பேரரசைச் சார்ந்த சிற்றரசன் ஒருவன் இவ்வண்ணம் எய்தலை எதிர்த்தான். வீயன்னவுக்கும் பேளினுக்குமிடை யிற் பிணக்கு எழுந்தது. 1815 இல் மாத்திரமே ஒகன்சொலேன் மரபினருக்குச் சாதகமாக ஈற்றில் இப்பிணக்குத் தீர்க்கப்பட்டது.
1618 இல் முப்பதாண்டு யுத்தம் ஆரம்பமானபோது, ஒகன்சொலேன் மரபி னர் பிரந்தன்பேக்கிலும் கிழக்குப் பிரசிய கோமகப் பகுதியிலும் நிலையூன்றிய தோடு, ஈற்றில் ஒத்துக்கொள்ளப்பட்ட பலமான உரிமைகளுடன் இாைன் நதிப் பிரதேசத்திலுள்ள ஒரு பிரதானமான கோமகப் பகுதியிலும் உறுதியாக நிலையூன்றினர். அவர்கள் ஆண்ட ஆள்புலங்கள் திட்டமாக அல்மைந்திருக்கவு மில்லை; இடையறவின்றித் தொடர்ச்சியாகவுமிருக்கவில்லை யென்பதை ஒரு தேசப்படத்தைப் பார்த்தாற் காணலாம். பிரந்தன்பேக்கும் கிழக்குப் பிரசியா வும் மேற்குப் பிரசியாவாற் பிரிக்கப்பட்டிருந்தன. பிரந்தன்பேக்கிற்கும் இரை யின் கோமகப் பகுதிக்குமிடையிற் பலநாடுகள் இடையிட்டிருந்தன. என்ருலும், ஒகன்சொலேன் மரபினர் எய்திய நிலை போதுமான அளவு பீடுடையதாயிருந் தது. பிரந்தன்பேக்கு வெறுந் தரிசு நிலமாயும், கடலுக்குச் செல்லும் பாதை பற்றதாயுமிருந்த போதிலும், வட சேர்மனியின் இருபிரதானமான நீர்வழிக ளான ஒடர், எல்பு ஆகிய நதிகளுக்கிடையில் ஒரு முக்கியமான இடம் பெற்றி ருந்தது; இன்னும் ஆன்சியாற்றிற்குச் சங்கத்தின் பெருவணிகம் காரணமாக, வணிகச் சிறப்பும் அது பெற்றிருந்தது. இக்காலச் சேர்மானிய வரலாற்ருசிரி யன் துரோயிசன் என்பான் பிரசிய பூட்கையினதும் பிரசிய அரசினதும் வளர்ச் சியில் நான்கு கட்டங்களைக் குறிப்பிட்டிருக்கின்முன்-(1) ஆள்புலம் உருவாகிய காலம் (1415-1618); (2) ஒள்ளிய வல்லாட்சியின் காலம் (1618-1786) ; (3) புரட்சி, வீழ்ச்சி, மீட்சி, ஆகியவை நிகழ்ந்த காலம் (1786-1815); (4) மறுமலர்ச் சியும் ஐக்கியம் பூணலும் நிகழ்ந்த காலம் (1815-1871). இவற்றேடு உன்னத நிலையும் வீழ்ச்சியும் நிகழ்ந்த (1871-1919) இக்காலப் பகுதியையுஞ் சேர்க்க லாம். ஆள்புலம் உருவாகிய காலத்தைப் பற்றிப் போதுமான அளவு ஏலவே
கூறப்பட்டது.
முப்பதாண்டு யுத்தம்
முப்பதாண்டு யுத்தத்தின் முற்பகுதியில் பிரந்தன்பேக்கு திறமையாகச் செய லாற்றவில்லை. நற்பேருக 1640 இல் பிரதரிக்கு உவிலியம் தேர்வுரிமையாளனுன்ை. மாபெருந்தேர்வுரிமையாளன் என்னும் பட்டம் இவனுக்குப் பொருத்தமானதே. பிரந்தன்பேக்கில் ஆட்சி செலுத்திய சுவீடியரை நாட்டினின்றும் துரத்தினுன். படிபபடியாக 24,000 படைஞரைக் கொண்ட நன்முகப் பயிற்றப்பட்ட ஒரு படை

Page 133
246 பிரசியாவின் எழுச்சி
யை அமைத்து, அதை மிகத் திறமையுடன் பயன்படுத்தியமையால் உவெசுபேலி யாப் பொ ருத்தனையிற் பிரந்தன்பேக்கு, ஒப்பீட்டடிப்படையில், வலிமையான நிலையை வகித்தது. பொமரேனியாவிற் சுவீடியரின் பிடி அதிக வலிமையுடைய தாயிருந்தமையின் பிரதரிக்கு உவிலியம்தானும் அவர்களை வெளியேற்ற இயலா மற் போயிற்று. ஆனல், இசுத்தெத்தினையும் கீழ்ப்பொமரேனியாவையும் சுவிடின் பெற்ற பொழுதும், எஞ்சியபாகம் பிாந்தன்பேக்குத் தேரகத்துடன் வலிந்திணைக் கப்பட்டது. பிரந்தன்பேக்கு இன்னும் ஆல்பசுத்தாட்டு, கமின், மிண்டென் ஆகிய விசுப்பாண்டவர் பகுதிகளையும் கிடபேக்கின் ஒரு பகுதியையும் பெற்றது.
மாபெரும் தேர்வுரிமையாளனன பிரதரிக்கு உவிலியம்
இம்மாபெரும் தேர்வுரிமையாளன் இரு குறிக்கோள்களை எய்தத் தீர்மானித் தான். முப்பது ஆண்டுப் போரின்பொழுது சேர்மனியைத் திக்குமுக்காடச் செய்த அன்னியரின் செல்வாக்குக்களை அகற்றலும், தனக்குப் பாம்பரையாக வந்த தன் சொந்த ஆணிலங்களை வலுப்படுத்தி, சேர்மனிய வரலாற்றிற் பிசந்தன் பேக்கு-பிரசியா ஏற்றுநடக்க வேண்டுமென அவன் கருதிய பாகத்திற்கு அந் நாட்டினை ஏற்புடைத்தாக்குதலும் இக்குறிக்கோள்களாகும். போலந்துக்கும் சுவிடினுக்கும் (1654-60) நிகழ்ந்த வடதிசை யுத்தத்தில் முதலாவதாகச் சுவீடிசு அரசனுன பன்னிரண்டாம் சாள்சுடனும், பின்னர் போலந்துடனும் நட்புறவு செய்து இருகட்சியினரிடமிருந்தும் அடையக்கூடிய பலன்கள் யாவற்றையும் பெற்றன். 1657 ஆம் வருட வேலுப் பொருத்தனையின்படி கிழக்குப் பிரசியக் கோமகப்பகுதி|மீது போலந்து இதுவரை செலுத்திய மேலாண்மையைக் கைவிட இணங்கும்படி செய்தான். 1672 இல் பதினன்காம் உலூயி ஒல்லந்தைத் தாக்க ஆயத்தமாயிருந்த பொழுது, பிரதரிக்கு உவிலியம் தன்னுடன் நட்புறவு உடன்படிக்கை நிறைவேற்றினல், அதற்குப் பிரதியுபகாரமாகத் தான் அடையும் தெறுபொருளில் ஒரு முக்கியமான பகுதியை அவனுக்குக் கொடுக்க முன்வந்தான். இப்படிச் செய்வது பேரரசுக்குப் பேராபத்தாக முடியுமென்பத ல்ை கவர்ச்சிகரமான இவ்வழைப்பு நிராகரிக்கப்பட்டது. ஆகவே பதினன்காம் உலூயி பிரந்தன்பேக்கைத் தாக்கும்படி சுவிடியரைத் தூண்டினன். இத்தாக்கு தல் முறியடிக்கப்பட்டதுமல்லாமல், சுவீடியர் (1675) பேபலின் எனுமிடத்திற் படுதோல்வியடைந்து, உண்மையாகவே பொமரேனியாவிலிருந்து வெளியே அசத்தப்பட்டனர். என்ருலும் 1679 இல் அமைதிப் பொருத்தனைக்கு ஒப்பம் இட்டபொழுது பதின்ைகாம் உலூயி தன் நட்பாளர்களுக்குப் பொமரேனியா திருப்பிக்கொடுக்கப்படவேண்டுமென உறுதியாய் நின்றன். இந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒகன்சொலேன் குலத்தினர் உரிமை கோரிய சைவீசியக் கோமகப் பகுதிகள் வசப்படும்போலத் தோன்றின. ஆனல் பேரரசன் அக் கோமகப் பகுதிகளைக் கைப்பற்றி, மாபெருந் தேர்வுரிமையாளன் எதிர்த்த பொழுதும் அவ்வெதிர்ப்பைப் பொருட்படுத்தாது அப்பகுதிகள்மீது தான் கொண்ட பிடியைத் தளர்த்த மறுத்தான். 1688 இற்குமுன் மாபெரும் தேர்வுரி மையாளன் காலஞ் சென்றுவிட்டான். பிரதரிக்கு உவிலியம் சிதறிக்கிடந்த தன்

பிரசியாவின் எழுச்சி 247
ஆணிலங்களை வலுப்படுத்தியும் இறையின் கையிற் சகல அதிகாரங்களையும் மையப்படுத்தியும், மாகாண நிறுவகங்களின் அதிகாரத்தைக் குறைத்தும் மிகவும் முக்கியமான பணியினைச் செய்து முடித்தான். பிரசியாவை உருவாக்கு வதில் முதலிலிருந்து கடைசிவரை பிரதானமான காரணியாயிருந்த பெரும் குடியியற் சேவையை முதன்முறையாகக் கட்டுக்கோத்தவன் இவனே ; வலிமை யுள்ள ஒரு நிலைப்படையைத் தாபித்து அதைத் தாபரிக்கத் தேவையான நிதி முறையைத் திட்டமிட்டவனும் இவனே. தன் ஆள்புலமெங்கும் மலியவிருந்த சதுப்பு நிலங்களை அவன் வற்றச்செய்தான் , தரிசு நிலத்தைப் பயிர்செய் நில மாக்கினன் , கால்வாய்களை வெட்டிப் போக்குவரத்தைத் திருத்தினன்; எல்லா வற்றிற்கும் மேலாக, வெளிநாட்டுப் புரட்டெசுத்தாந்த அகதிகள் வந்து குடி யேறுமாறு ஊக்கப்படுத்தினன். இந்த அறிவாளியான ஒகன்சொலேன் மன்ன னின் ஆணிலங்களில் 20,000 பிரான்சிய இயூசனர் புகலிடம் கண்டனர். அவர்க ளுக்குக் குடியிருக்க நிலம் கொடுத்து விடுகளும் அமைத்துக்கொடுத்ததுமல்லா மல், அவன் உண்மையாகவே அவர்களின் பிரயாணச் செலவிற்கு உதவி செய்து, பத்து ஆண்டுகளுக்கு எல்லாவித வரிகளிலிருந்தும் அவர்களே விலக்கினன். இவ் வாறு கடம்பட்ட அம்மக்களால் நாட்டுக்கு விளைந்த நலனே மிகப்பெரிது. பேளி னைத் திருத்தி அமைத்தார்கள். பின்னடைந்த பிரந்தன்பேக்கரைத் தாங்கள் கைதேர்ந்த கைத்தொழில்களிற் பயிற்றினர்கள். எதிர்காலத்திற் பெரும் பலனை அளித்த பண்பாட்டு வகையை, தாங்கள் தமதாக்கிக்கொண்ட தாய்நாட்டின் சமூக வாழ்க்கையில் அவர்கள் புகுத்தினர்கள்.
பிரசியாவின் முதலாம் பிரதரிக்கு உவிலியம்
1688 இல் மாபெருந் தேர்வுரிமையாளன் பின் அவன் மகனுகிய பிரதரிக்கு அப் பட்டத்தைப் பெற்றன். இசுப்பானிய அரசுரிமைப் போரில் இலியோபோல் பேரரசனின் குறிக்கோளை ஆதரித்தமையால் அப்பேரரசனிடமிருந்து ஓர் அரச முடி பெற்று, வரலாற்றிற் பிரசியாவின் முதல் அரசனக விளங்கினன். இதுவொன்றே அவனை வரலாற்றில் ஞாபகத்திற்குரியதாக்கும். அவன் அப்பட் டத்தைத் தன் ஆணிலத்திற் சேர்மானியருக்குரித்தாகாப் பகுதியிலிருந்தே பெற் முன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மகனும் பின் பட்டம் பெற்றேனுமாகிய முதலாம் பிரதரிக்கு உவிலியம் (1713-40) காளையிலாலும் மற்றேராலும் இரக்க மற்ற முறையிலே வசையுசை மூலம் தாக்கப்பட்டான். ஆனல், சேர்மனியில் ஒகன் சொலேன் குலத்தினரின் அதிகாரத்தை உருவாக்குவதற்கு அவன் செய்த தொண்டு வேண்டியாங்கு பாராட்டப்படவில்லை. அவன் தோற்றத்திற் கவர்ச்சி கரமானவனல்லன். ஆரம்ப ஆக்கவேலை அவன் ஆற்றியிருக்காவிடின் அவனுட்ைய புகழ்படைத்த மகன் அரும்பெருஞ் செயல்களை நிறைவேற்றியிருக்கமாட்டான் என்பது திண்ணம். மிகச்சிறப்பாய் ஒழுங்குமுறை செய்யப்பட்டுப் பயிற்சி யளிக்கப்பட்ட 83,000 விாாைக்கொண்ட படையை மாத்திரமன்றி, ஐரோப்பா வில் மிகச்சிறந்த பாலன முறைமையையும், நிரம்பி வழியும் இறைசேரியையும் அவன் தன் மகனுக்கு விட்டுச்சென்றன். அவன் ஆட்சியில் ஒகன்சொலேன்

Page 134
248 பிரசியாவின் எழுச்சி
ஆணிலங்கள் யாவும் எவ்வித நெருக்கடி நிலையையும் நிருவகிக்கக்கூடிய தனிக் காவல் நகரொப்ப விளங்கின. பிறநாட்டுப் பூட்கையைப் பொறுத்தவரையில் அவன் ஆட்சி சிறப்பு நிகழ்ச்சி எதுவும் அற்றிருந்தது. அவன் சேர்த்துத் திரட் டிப் பயிற்றிய சிறந்த படையை அருமை மிக்க கருவியாக அவன் மதித்தமை யால் அதை யுத்த இடர்களுக்குட்படுத்துவதை அவன் விரும்பவில்லை. அவன் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரேயொரு முக்கியமான ஆள்புல ஈட்டம், 1720 இல் சுவீடினிலிருந்து அவன் பெற்றுக்கொண்ட இசுத்தெத்தின் நகரமாகும்.
மகாபிாதரிக்கு (1740-86)
தகப்பனுற் சேகரிக்கப்பட்ட செல்வமும் அயராத ஊக்கமொடு அவனல் திரட்டப்பட்டுப் பயிற்றப்பட்ட வலிமை படைத்த படையும் அவனுக்குப் பின் பட்டம் பெற்றேனும் அவன் மகனுமாகிய மகாபிரதரிக்கு (1740-86) என்பானின் கையிற் சத்திவாய்ந்த கருவிகளாயின. ஒகன்சொலேன் குலத்தவரின் வரலாற் றில், பிறிதோர் ஆட்சியைத் தவிர்ப்பின், இரண்டாம் பிரதரிக்கின் ஆட்சியே மிக உன்னதமான ஆட்சியாகும். அகுத்தன் பிரபு, அவனை அண்மைக்காலத்தில் அரசு கட்டில் ஏறியவர்களுள் மிகச்சிறந்த பேராற்றல் படைத்த வினைத்திறனுடையா னென வருணித்துள்ளார். அவன் தகப்பன் அவனை ஆண்மையில்லாத, பிரான்சிய பண்பாடுடைய அழகியற் கலைஞன் என இகழ்ந்தான். அவன் கருத்து நிறைவற்ற கவிதைகளை பிரெஞ்சுமொழியிலியற்றினன் என்பது உண்மை ; இசையிலும் ஓரளவு தேர்ச்சியுடையவன் அவன் ; வொற்றயருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தான் ; ஆணுல் அவன் அரசியலிலும் யுத்தத்திலுமே உண்மையான பற்றுடையவனுயிருந்தான். நீண்டகாலப் பயிற்சியினல், தான் ஆற்ற வேண்டி வரும் கடைமைக்கு முழுக்கருத்துடன் தன்னை ஆயத்தஞ் செய்தான். பதி னெட்டாம் நூற்றண்டில் ஆட்சிபுரிந்த ஒள்ளிய வல்லாட்சியாளர்க்கு இலக்கிய fits விளங்கினன். நாட்டின் பணியாளனுயிருந்தாலும், தன் குடிமக்களை ஆளவும், அரசாங்க அலுவலைச் செவ்வனே நடாத்தவுந் தீர்மானங்கொண்டான். அவன் சோர்வில்லாத உழைப்பாளன் ; கோடைகாலத்திற் காலை மூன்று மணிக்கு எழுவான். குளிர்காலத்தில் இரண்டொரு மணி நேரம் மாத்திரம் பிந்தி எழுவான். அவன் படையின் சேனபதியாயிருந்தும், உள்நாட்டுப் பாலனத்தின் ஒவ்வொரு பகுதியையும் தானே நுணுக்கமாகக் கண்காணித்து வந்தான். நாட்டு நலனைப் பொறுத்த அளவில் அவனுக்கு நன்மை தீமை பார்க்கும் அச்சத்தயக்கம் கிடையாது. தன்னளவில் அவன் மற்றவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்காதவ னல்லன். நேர்மைகடவா வழிவகைகளாலே தன் குறிக்கோளை எய்தக் கூடுமானல், தன் குழியலில் நம்பிக்கைக்கு மாறு செய்யமாட்டான். தன்முன் ஆட்சிசெய்தோரைப்போலக் கொள்கையளவிற் பேரரசுக்குப் பற்றுறுதி உள்ள வனுயிருந்தான். என்ருலும், அவன் பேரரசர்களுக்கெதிராகப் பெரும்பான்மை யும் இடைவிடாது போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நேரிட்டது.

பிரசியாவின் எழுச்சி 249
ஒசுத்திரிய வழியுரிமைப்போர்
இரண்டாம் பிரதரிக்கு அரசெய்தியமையும் அபிசுபேக்குப் பேரரசன் ஆமும் சாள்சின் மரணமும் ஏறக்குறைய ஒரேகாலத்திலே நிகழ்ந்தன. ஆரும் சாள்சு ‘பேரரசின் சட்டவனுமதி' என்னும் சாதனத்திற்குத் தன் சொந்த ஆணிலங் களினதும் ஐரோப்பிய வல்லரசுகளினதும் உடன்பாட்டைப் பெறுவதில் தன் பிந்திய காலத்தின் பெரும் பகுதியைச் செலவழித்தானென முன்பு கண்டோம். அபிசுபேக்குக் குலத்தவரின் மரபுரிமையான பரந்த ஆணிலங்களை அவன் மகளும் உரிமையாளியுமாகிய மரியா தெரிசாவுக்குப் பெற்றுக்கொடுப்பதே அப் பத்திரத்தின் நோக்கமாகும். அவளுடைய கணவன் உலொரேன் கோமகனன பிரான்சிசு, தனக்குப்பின் பேராசணுதல் வேண்டும் என்றும் அவன் விரும்பினன். பவேரியக் கோமகனன ஏழாம் சாள்சின் குறுகிய கால ஆட்சியின் பின் அவ்வாறே பிரான்சிசு பேரரசனுைன் (1745-65). எஞ்சிய வல்லரசுகளைப்போலப் பிரசியா வும் பேரரசின் சட்டவனுமதியிற் சம்பந்தப்பட்ட நாடாகும். ஆனல், பேராச னின் மரணத்தைப் பற்றிக் கேட்ட உடனே பிரதரிக்கு, ஒகன்சொலேன் குலத்த வர்க்கு ஒரு சிறிது உரிமையுள்ள சைலீசிய நாட்டினுட் தன்படையுடன் புகுந் தான். சைலீசியாவென்பது ஒடர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியாகும். கீழ்ப் பகுதி ஏலவே பிாசியாவிடம் இருந்தது. சைலீசியா வியன்னவுக்குச் செல்லும் மாபெரும் சாலையும் பொகீமியாவுக்குட் புகும் பின்புற வாயிலுமாகும். சைலீசியா சட்சனியைப் போலந்திலிருந்து பிரித்தது. இவ்விரு நாடுகளின் மீதும் பிரதரிக் குத் திட்டம் போட்டிருந்தான். சைலீசியாவை ஒரு பெரிய, விவசாய கைத் தொழிற் பகுதியாக உருவாக்க முடியும். அதற்கிணங்கச் சைலீசியாவை அவன் வைத்திருக்கவேண்டும். மரியாதெரிசா சைலீசியக் கோமகப்பகுதியின் உரிமையைக் கைவிட்டால் மாத்திரம், எஞ்சிய ஆணிலங்கள்மீது அவள் கோரிய உரிமைக்கு ஆதரவளிக்க அவன் முன்வந்தான். இத்திருட்டும் வெருட்டுங் கலந்த அவன் கோரிக்கை வெறுத்தொதுக்கப்பட்டது. இதன் விளைவு முதலாம் சைலீசிய யுத்தம் ஆகும். இதனை ஒசுத்திரிய வழியுரிமைப்போரெனப் பொதுவாக அழைப்பர். ஈற்றில், ஐரோப்பாவிற் பெரும்பகுதி இப்போரில் ஈடு பட்டது. பேரரசின் சட்டவனுமதி பயனற்றதாயிற்று. இங்கிலந்தும் ஒல்லந் அம் மாத்திரம் தாம் தாம் ஏற்ற கடப்பாடுகளை நிறைவேற்றச் சித்தமாயிருந்தன. எஞ்சிய ஐரோப்பிய வல்லரசுகள் தத்தம் சுய நலன்களுக்கு ஏற்றபடியே நடந்து கொண்டன.
இங்கிலந்தும் இசுப்பெயினும் யென்கின் செவிப் போர் எனுங் கடல் யுத்தத் கிலே ஏலவே (1739) ஈடுபட்டிருந்தன. முறையே பவேரியா, ஒசுத்திரியா எனும் நாடுகளின் நட்பாளர் என்ற முறையில் 1743 இல் தெற்றிஞ்சன் என்னுமிடத்திற் பிரான்சியப்படையும் ஆங்கிலப்படையும் நேருக்கு நேர் ஏலவே சந்தித்ததுண்டு.
யே. எம். தொம்சனல் எழுதப்பட்ட முன்னர் குறிப்பிட்டநூலின் 338 ஆம் பக்கத்தைப் LfféAS.

Page 135
250 பிரசியாவின் எழுச்சி
என்ருலும், 1744 வரையும் பிரான்சு இங்கிலந்து மீது முறைமைப்படி யுத்தப் பிரகடனஞ் செய்யவில்லை. பவேரியாவின் கோமகன் பிரான்சினுதவியுடன் போாசைப் பெறலாமென எதிர்பார்த்தான். எனவே பவேரியா பிரான்சிற்கும் பிரசியாவிற்கும் உதவியளித்தது. உலம்பாடியிற் பங்கொன்று பெறுதற்குப் பிரதி யுபகாரமாகச் சாடினிய அரசன் மரியாதெரிசாவிற்கு ஆதரவாக இங்கிலந்தோடு சேர்ந்தான்.
இந்த யுத்தத்தின் விவரங்களைப்பற்றி இவ்வரலாறு அக்கறைகொள்ள வேண்டியதில்லை. இந்த யுத்தத்தில் மகா பிரதரிக்கின் போக்கே நாம் கருதற் பாலது. இவ்வெட்டு ஆண்டுகளுள் (1740-1748) பிரதரிக்கு பல பொருத்தனைகளை நிறைவேற்றினன். பொரு நிலையிலிருந்து நடுநிலைக்கும், நடுநிலையிலிருந்து பொரு நிலைக்கும் அவன் மாறி மாறித் தாவினன். எனினும், அவன் பூட்கை அவன் நடத்தையைப்போல் அடிக்கடி மாறவில்லை. சைலீசியக் கோமகப் பகுதி களைப் பெற்று வைத்திருக்கத் தீர்மானித்தான். நட்புமுறையில் இதை மரியா தெரிசாவுடன் ஒழுங்கு செய்யக்கூடுமானல் அதுவே சிறந்ததாகும். அது முடியாது போனல், பிரான்சுடனும் ஒசுத்திரியாவின் பகைவர்களுடனும் அவன் நட்புறவு செய்ய வேண்டும். பிரசிய அரசனுடன் இணக்கஞ் செய்துகொள்ளும் படி இங்கிலந்து மரியா தெரிசாவுக்கு அறிவுரை கூறியது. ஆனல் அவள் அதற்கு மறுத்தாள். ஆகவே பிரதரிக்கு பிரான்சுடன் சேர்ந்தான். மேற்சைலீசியாவிலும் மொரேவியாவிலும் கிடைக்கும் கொள்ளையில் தன்பங்கைப்பெற இருந்த, சட்ச னியைச் சேர்ந்த மூன்றும் ஒகத்தசும் அவர்களோடு சேர்ந்துகொண்டமையால், மரியாதெரிசாவுக்கு விரோதமான கூட்டவை மேலும் வலுவடைந்தது. இந்த அபாயமான கூட்டிணைப்பை எதிர்த்து நிற்கவேண்டி வந்தபொழுது, மரியா தெரிசா பிரதரிக்குடன் ஒத்து இணங்கிக் கிளைன் செனலந்தோவுப் பொருத் தனையை நிறைவேற்றினுளாதலின், எஞ்சிய தன் பகைவர்களுக்கெதிராக அவள் தீவிரமான நடவடிக்கை எடுக்கமுடிந்தது. இதன் பயனுக, 1742 இல் ஏழாம் சாள்சு என்னும் பெயருடன் பேரரசுப் பதவிக்குத் தெரியப்பட்டவனும் பவேரியாவைச் சேர்ந்தவனுமான சாள்சு அல்பேட்டு அவன் தலைநகரான மியூனிக்கிலிருந்து வெளியே துரத்தப்பட்டான். மரியா தெரிசாவின் வெற்றி பிரதரிக்கைப் பெரிதும் திகிலடையச் செய்தமையால், அவன் அவளுடன் நிறை வேற்றிய பொருத்தனையை நிராகரித்து, யுத்தத்தில் இறங்கி, மிக வெற்றிகரமாக அதை நடத்தினுன். ஆதலால் 1742 யூன் மாதத்தில் ஒசுத்திரியா பிரசிலோ என்னுமிடத்தில் அவனுடன் அமைதிப்பொருத்தனையை மகிழ்ச்சியுடன் நிறை வேற்றியது. இவ்வண்ணமே சைலீசியா முடிவாயும் திண்ணமாயும் ஒகன் சொலேன் மரபினரைச் சேர்ந்தடைந்தது. அடுத்த இரு ஆண்டுகளாகப் (1742-44) பிரசியா நடுநிலைமை வகித்தது. ஆனல் மரியா தெரிசாவுக்கும் அவளுடைய பகைவர்களுக்குமிடையில் யுத்தம் நடந்துகொண்டேயிருந்தது.

பிரசியாவின் எழுச்சி 251
1743 இல், ஓரளவு முக்கியமான இரு பொருத்தனைகள் ஒப்பேறின. இத்தாலி யில் ஒசுத்திரியாவிற்கு இருந்த பேரவாவைக் காட்டிலும், மிலான் மீது இசுப் பெயின் கொண்டிருந்த திட்டங்களைப்பற்றி அஞ்சிய சாடினிய அரசனுடன் இங்கிலந்தும் ஒசுத்திரியாவும் உவேமிசுப் பொருத்தனையை நிறைவேற்றின. பிரான்சும் இசுப்பெயினும் பொந்தன்புளோ பொருத்தனையை நிறைவேற்றித் தங்கள் குடும்ப ஒப்பந்தத்தைப் புதுப்பித்தன. சிபுரோத்தரும் மினுேக்காவும் இசுப்பெயினுக்குத் திருப்பிக் கிடைக்கும் வரையும், எலிசபெத்து பாணிசின் இரண்டாம் மகன் தொன் பிலிப்பு இத்தாலியிற் போதுமான அளவு ஆணிலம் பெறும் வரையும், அமைதிப் பொருத்தனை செய்வதில்லையெனப் பிரான்சு வாக்களித்தது.
பிரான்சுக்கும் பவேரியாவுக்குமெதிராக மிகவும் வெற்றிகரமாக மரியா தெரிசா யுத்தஞ் செய்தமையால், பிாதரிக்கு, சைலீசியாவைப்பற்றி அச்சம் கொண்டு, பவேரியாவுடனும் பலற்றினெற்றுத் தேர்வுரிமையாளனுடனும், எசேப் பெருமக னுடனும் 1744 இல் பிராங்குபோட்டு ஐக்கிய சங்கத்தை உருவாக்கிப் பிரான் சொடு நட்புறவு மீண்டும் பூண்டான். பேரரசைச் சேர்ந்த இளவரசர், பிரசியா வின் தலைமையிலே ஒசுத்திரியாவுக்கெதிராக முதன்முதலாய் ஒன்றுபட்டெழுந்த மையைக் குறிப்பதனுற் பிராங்குபோட்டு ஐக்கிய சங்கம் வரலாற்றுச் சிறப் புடையது.
இரண்டாம் சைலீசிய யுத்தம் மூண்டது. சட்சனி ஒசுத்திரியாவுடன் சேர்ந்தது. ஆனல் அது பிரதரிக்குடன் செய்த போரிற் படுதோல்வியடையவே, 1745 ஆம் ஆண்டின் முடிவில் திரசுதனில் திரும்பவும் அமைதிப் பொருத்தனை ஒப்பமிடப்பட்டது. ஏழாம் சாள்சு காலஞ் செல்லச் செத்தம்பரில் அவன் பதவிக்குத் தெரிந்தெடுக்கப்பட்டவனும் உலொரேனைச் சேர்ந்தவனுமான பிரான்சிசைப் பேராசணுக அங்கீகரிக்கப் பிரதரிக்கு ஒப்புக்கொண்டான். இதற்குப் பிரதியுபகாரமாக, பிரதானமாக இங்கிலந்தின் வேண்டுகோட்கிணங்க, சைலீசியாவைக் கைவிடுதற்கு, மெத்தத் தயக்கத்தொடு மரியாதெரிசா உடன்
பட்டாள்.
இந்நியதிகளே முடிவில் எயிச்சிலா சப்பல் என்னுமிடத்தில் நிறைவேற்றப் பட்ட பொருத்தனைக்கு அடிப்படையாயின. மற்றைய நியதிகள் வருமாறு : சாடினியா நீசையும் சவோயையும் திரும்பப் பெற்றதுடன் உலம்பாடியில் ஒரு கீற்றையும் பெற்றது. தொன் பிலிப்புக்குப் பாமா, பியசன்சா ஆகிய கோமகப் பகுதிகள் கிடைத்தன. இங்கிலந்துக்கும் பூபன் குலத்தினருக்குமிடையில் ஐரோப்பாவிற்குப் புறம்பே பிறவிடத்து நிகழ்ந்த யுத்தத்தைப் பொறுத்த அளவில், இந்தப் பொருத்தனை சிறுகாலப் போரோய்வையே குறிப்பதாயிற்று. இந்தியாவிற் பிரான்சு ஆங்கில சங்கத்திற்குச் சென்னையையும், வடஅமெரிக்கா

Page 136
252 பிரசியாவின் எழுச்சி
வில் இங்கிலந்து பிரெத்தென் முனையைப் பிரான்சிற்குந் திருப்பிக்கொடுத்தன. ஆனல் இம்மீட்டளிப்புக்களால் இணக்கம் ஏற்பட்டதாகக் கொள்வதற்கில்லை. உலக ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட பெரிய யுத்தம் ஒத்திவைக்கப்
.[gئے-L-Lل
பிரான்சு தலையிடாதிருந்தால், ஐரோப்பியப் பொதுபுத்தம் நிகழ்ந்திராது. பிரசியாவுக்கும் ஒசுத்திரியாவுக்குமிடையில் ஏற்பட்ட போர் சேர்மனிக்கு வெளியே பரவியிருக்கமாட்டாது. இங்கிலந்துக்கும் இசுப்பெயினுக்குமிடையே நிகழ்ந்துகொண்டிருந்த போர் கடற்போராயே நடந்திருக்கக்கூடும். ஆகவே சட்சே தளபதி சிறந்த வெற்றிகளடைந்தானுயினும், வெறுங் கையோடு பிரான்சு வறிதே நின்றது. பெருகிய கடனுேடும் குன்றிய புகழுடனும் புரட்சி எனும் பெருங்கேட்டை நோக்கிப் பிரான்சு ஒரு படி முன்னேறியது. போரின் விளைவாய்ப் பெரும் பயன் பெற்றேன் பிரசிய மன்னன் பிரதரிக்கேயாம். அவனு டைய இராச்சியத்துடன் 15,000 சதுர மைலும் 1,250,000 குடிமக்களுமுடைய ஒரு கோமகப்பகுதி சேர்க்கப்பட்டது. இப்பகுதி சிறந்த கைத்தொழிலுக்கும் விவசாயத்திற்கும் பேர்படைத்ததாயிருந்ததுமல்லாமல், சட்சனிக்கு எதிராகவும் போலந்துக்கெதிராகவும், அபிசுபேக்கரின் பொகீமியாவுக்கும் மற்றும் ஆணிலங் களுக்கும் எதிராகவும் வாய்ப்பாயமைந்த போர்த்தளமுமாயது. எதிர்காலத்தே போட்டியாளராகக் கூடியோரை-குறிப்பாக அனுேவரை-முந்துதற்கு வேண் டிய நடவடிக்கை எடுத்துக் கிழக்குப் பிறீசிலந்தையும் அதன் வளர்ந்து கொண்டிருக்கும் எமிடன் துறைமுகத்தையும் வலிந்திணைத்தான். ஆனல் சைலிசியாவைப் பெற்றமையும், பிராங்குபோட்டு ஐக்கிய சங்கமும், 1871 இல் அடைந்த குறிக்கோளை நோக்கிய முதலிருபடிகளானமையே இன்னும் முக்கிய loita07.g.

அத்தியாயம் 20
ஏழாண்டுப் போர் (1756-1763)
முக்கியமான திகதிகள் :
1751 வேர்சைக்குக் கோனிற்சின் தூது. 1754 வட அமெரிக்காவிற் பகைமூளல் (இங்கிலந்தும் பிரான்சும்). 1755 பீற்றசுபேக்குப் பொருத்தனை (இங்கிலந்தும் இரசியாவும்). 1756 உவெசுமினித்தர்ப் பொருத்தனை (இங்கிலந்தும் இரசியாவும்). 1756 முதலாம் வேர்சைப் பொருத்தனை (இங்கிலந்தும் ஒசுத்திரியாவும்). 1756 ஏழாண்டுப் போர்-1763. 1756 இரண்டாம் வேர்சைப் பொருத்தனை. 1757 பிற்று இங்கிலந்தின் அமைச்சனதல்-1761. 1757 குளசுற்றர் செவின் சமவாயம். 1757 உரோசுபாக்கிற் பிரதரிக்கின் வெற்றி ; பிளாசியிற் கிளைவின் வெற்றி. 1759 மிண்டென்.
1759 இங்கிலந்தின் கடல் வெற்றிகள். 1759 குவிபெக்கு கைப்பற்றப்படல். 1761 பிற்று தன் பதவியினின்றும் விலகல், 1782 இங்கிலந்துக்கும் இசுப்பெயினுக்குமிடையிற் போர். 1762 மூன்றம் பீற்றர் பிரசியாவுடன் நட்புறவு செய்தல், 1763 இரண்டாம் கதரீன் அரசெய்தல். 1763 பரிசுப் பொருத்தனை. 1763 இயூபேட்சுபுர்க்குப் பொருத்தனை.
குழியற் புரட்சி (1748-56)
ஒசுத்திரிய வழியுரிமைப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவந்த எயிச் சிலாசப்பற் பொருத்தனையானது இன்னல் விளைக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றைத்தானும் உண்மையாகத் தீர்த்து வைக்கவில்லை. அபிசுபேக்கு நாடுகளின் பெரும்பாகத்தை மரியா தெரிசாவிடம் அது விடுத்தது ; அவளுடைய கணவனுக் குப் பேரரசைப் பெற்றுக்கொடுத்தது ; ஆனல் அப்பொருத்தனை, ஒசுத்திரியாவோ பிரசியாவோ சேர்மனிக்குத் தலைமை வகிப்பது எனும் பிரச்சினையைத் தீர்க்க வில்லை; இங்கிலந்தோ பிரான்சோ வட அமெரிக்காவில் ஆதிக்கஞ் செய்வது எனும் பிரச்சினையும், இந்தியாவில் ஆங்கிலேயக் கம்பெனியோ பிரான்சியக் கம்பெனியோ ஆதிக்கஞ் செலுத்துவதென்னும் பிரச்சினையும் அதனல் தீர்க்கப்படவில்லை. பின்னைய இரு பிரச்சினைகளையும் ஏழாண்டு யுத்தம் தீர்த்து

Page 137
254 ஏழாண்டுப் போர்
வைத்தது. பிரசியா தன் எதிரியான ஒசுத்திரியாவைச் சடோவாவிலே தோற் கடித்து நலித்தபின், 1866 இல் பிராக்குப் பொருத்தனையைப் பிசுமாக்கு ஒசுத் திரியாமீது விதித்த பின்னரே முதலாம் பிரச்சினை இறுதியாக முடிவுற்றது.
ஒசுத்திரியா
பின்னைய யுத்தத்தின் முடிவுக்கும் (1748) அடுத்த யுத்தத்தின் ஆரம்பத்திற்கு மிடையில் (1756) குழியல் நிலையிற் குறிப்பிடத்தக்க ஒரு புரட்சி நிகழ்ந்தது. ஒசுத்திரியாவுக்கும் பிரசியாவுக்குமிடையிலோ, பிரான்சுக்கும் இங்கிலந்துக்கும் இடையிலோ நிலவிய தவிர்க்க முடியாப் பகைமையை எதுவும் மாற்றமுடியாது. ஆனல் இங்கிலந்துக்கும் பிரசியாவுக்குமிடையிலோ, ஒசுத்திரியாவுக்கும் பிரான் சுக்குமிடையிலோ உண்மையான நலன்பற்றிய எதிர்ப்புக் கிடையாது. பிரான்சும் அபிசுபேக்குக் குலத்தினரும் 互50 ஆண்டுகளாக முனைப்பான எதிரிகளா யிருந்தது உண்மை. இரு நாடுகளின் அரசறிஞர்களும் இருநாடுகளிற்குமிடையே யிருந்த பகைமையைச் சூழியலின் நிலையான விதியென இன்னும் மதித்தனர். ஆனல், சூழியலில் மாற்ற முடியாத விதிகள் கிடையா. நிலைமைகள் மாறுந் தன்மையுடையன. நிலைமைகளின் மாற்றத்திற்கேற்பச் குழியலும் இசைவாக மாறல் வேண்டும்.
இவ்வண்ணமே, சைலீசியாவைத் திரும்பவும் பெற அவாக்கொண்ட ஒசுத் திரியா பிரான்சுடன் தன் நட்பை வளர்த்தது. புதிய பூட்கையின் 'மூளையென அந்தன் உவொன் கோனிற்சு என்பானை அழைக்கலாம். எயிச்சிலா சப்பலில் நடந்த இணக்கப்பேச்சுகளில் இவன் ஒசுத்திரியாவின் பிரதிநிதியாகக் கடமை யாற்றினன். 1749 இல் இவன் பிற நாட்டமைச்சனஞன். அடுத்த நாற்பது ஆண்டுகளாகப் பேரரசின் பிறநாட்டுப் பூட்கையை இயக்கினன். 1750 இற் பரி சுக்குத் தூதமைச்சனக அனுப்பப்பட்டான் ; ஆனல், பிரான்சிய அமைச்சர் ஒத்துழைக்க நாணினர். அவர்களில் அனேகரின் கருத்தின்படி ஒசுத்திரியா அவர்
களின் இயற்கையான பகைநாடாகும்.
இங்கிலந்தும் பிரான்சும்
இதற்கிடையில், வட அமெரிக்காவில் இங்கிலந்தும் பிரான்சும் யுத்தத்தில் இறங்கிக்கொண்டிருந்தன. இக்காலமளவில், அமெரிக்காவின் அத்திலாந்திக்குச் சமுத்திரக் கரைப்பகுதியில் இங்கிலந்து தன் பதின்மூன்று குடியேற்ற நாடுகளை யும் தாபித்துவிட்டது. ஓர் ஒடுங்கிய கீமுக இருந்த பொழுதிலும் இவை வடக்கே மெயினிலிருந்து தெற்கே யோட்சியா வரையும் நீண்டிருந்தன. பிரான்சு, கனடா அதன் வசமிருந்தமையால் சென் உலோரன்சு நதிப் பிரதே சத்திலும், உலூசியான அதன் வசமிருந்தமையால் மிசிசிப்பி நதி பிரதேசத் திலும் உறுதியாக நிலையூன்றிக்கொண்டது. புளோறிடா இசுப்பெயினிட மிருந்தது.

ஏழாண்டுப் போர் 255
ஒகயோ மிசிசிப்பி நதிகளின் பள்ளத்தாக்குக்களில் தொடர்ச்சியாகப் பல அரண்களையமைத்து, வடக்கிலும் தெற்கிலுமுள்ள தன் ஆள்புலங்களை ஒன்ருக்கி, அலிகினிசு மலைகளுக்கும் அத்திலாந்திக்குச் சமுத்திரத்திற்குமிடையில் ஆங்கி லேயரை ஒடுக்கிவைத்து, ஒருகாலும் அவர்கள் மேற்றிசை நோக்கிப் பரவாது தடுத்தலே பிரான்சிய பூட்கையின் குறிக்கோளாகும். கனடாவின் பிரான்சிய ஆள்பதி துக்கேன் என்பான் (இப்போது பிற்சுபேக்கு எனப்படும்) தைகொண்டரோகா, துக்கேன், கிரவுன்போயிண்டு எனும் கோட்டைகளைக்கட்டி அவ்வேலையை ஆரம்பித்தான். 1754 இல் பிரான்சியரைத் தடுக்கும்படி யோட்சு உவாசிந்தன் தலைமையில் வேசீனியப்படை அனுப்பப்பட்டது. ஆனல் அவன் சித்தியடையவில்லை. 1755 இல் தாய்நாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட முறையான படைக்குத் தலைமைதாங்கிச்சென்ற சேனுபதி பிரடக்கு, துக்கேன் கோட்டைக் கண்மையில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். இன்னும், இங்கிலந்தும் பிரான்சும் முறையாக யுத்தத்திலீடுபடவில்லை. ஆனல் யுத்தத்தை இன்னும் அதிக காலம் ஒத்திவைக்க முடியாதென்பது தெளிவாயிருந்தது. இரண்டாம் யோட்சு பிரான்சியர் அனேவரைத் தாக்குவரென அச்சங்கொண்டு, 1755 செத்தெம்பரில் இரசிய சாரின எலிசபெத்துடன் ஒரு பொருத்தனையை ஒப்பேற்றினன். இதன் படி யோட்சு 100,000 தங்கப்பவுன் பண உதவி அளித்தான். அதற்கீடாக, அனேவர் தாக்கப்பட்டால் அதன் காப்புக்கு 55,000 படைஞரை அனுப்புதற்கு எலிசபெத்து பொறுப்பேற்ருள்.
இங்கிலந்தும் ஒசுத்திரியாவும்
எனினும், அனேவர்மீது பிரான்சு படையெடுத்துச் சென்ருல் அதைத் தடுப் பதற்கு ஒரு படையை நெதலந்துக்கனுப்ப ஒசுத்திரியா மறுத்தது. பழைய நட்புறவாளரின் கேண்மை, அண்மையில் நலிந்துகொண்டிருந்தது. மரியா தெரிசா, பிாதரிக்குக்கெதிராகத் தான் புரிந்தபோரில் இங்கிலந்து அரை மனதாகவே தனக்கு ஆதரவு அளித்ததாகக் குறைகூறினள். இங்கிலந்தினதும் ஒல்லந்தினதும் வணிகப் பொருமையைத் திருத்தி செய்யும் முகமாக, ஒசு தெந்து சங்கத்தை ஒடுக்கி, அவளுடைய பெல்சியக் குடிமக்களின் நலனை ஒசுத் திரியா தியாகஞ் செய்யவேண்டி நேரிட்டதேயென மரியா தெரிசா மனவருத்தப் பட்டாள். ஆகவே ஒசுத்திரியாவுக்கும் இங்கிலந்துக்குமிடையில் நிலவிய பழைய நட்புறவு முறிந்தது. பிரதானமாய் அனுேவரின் நலனுக்காக, இங்கிலந்து பிரசியா பக்கம் திரும்பியது.
19æglur
என்ன நட்டம் வந்தபோதிலும் சைலீசியாவைக் கைவிடுவதில்லையென்று மகா பிரதரிக்கு தீர்மானஞ் செய்திருந்தாலும், அவன் போரை விரும்பவில்லை. பிரான் சுடன் தன் நட்புறவு முறிவதையும் அவன் விரும்பவில்லை. ஆனல், சேர்மனி யினுள்ளே ஒரு பிரான்சியப் படையோ, இரசியப் படையோ புகுவதை அவன்

Page 138
256 ஏழாண்டுப் போர்
விரும்பவில்லை. இறுதியாக நடந்து முடிந்த போரிற் பிரதரிக்கு பிரான்சைத் தன் சொந்த நலத்திற்கே பயன்படுத்திக்கொண்டான் என்பதையும், குறிக்கோளை எய்தியதாகத் தோன்றும் சமயத்தில் இருமுறை கைவிட்டான் என்பதையும், பிரான்சு அறிந்திருந்தும் தன்னைப் பொறுத்தவளவிற் பிரசியாவுடன் போர்புரிய விரும்பவில்லை. ஆயின், கடலிலும் பார்க்க அனேவரில் இங்கிலந்தைத் தாக்கு வது பிரான்சிற்கு எளிதான கருமமாகும். இதைப் பிரதரிக்கு உய்த்துணர்ந்து, 1756 சனவரி மாதம் 16 ஆம் திகதி இங்கிலந்துடன் உவெசுமினித்தர் ஒப்பத் தத்தை நிறைவேற்றினன். இவ்வொப்பந்தத்தின் சாரம் இரசியாவையும் பிரான் சையும் சேர்மனிக்குட் புகாமற் றடுத்தலேயாம். பிரான்சு அனேவரைத் தாக்கு மாயின் பிாதரிக்கு அத்தாக்குதலை எதிர்த்து நிற்க ஒப்புக்கொண்டான். மற்றப் படி, ஆங்கில-பிரான்சிய சச்சாவில் அவன் நடுநிலைமை வகிக்க எண்ணி யிருந்தான்.
ஒசுத்திரிய-பிரான்சிய நட்புறவு
இவ்வண்ணம் பிரான்சு ஒசுத்திரியாவின் நட்புறவை நாட வேண்டியதாயிற்று. இங்கிலந்து பிரசியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினற் சினமுற்ற இரசியா வும் ஒசுத்திரியாவுடன் சேர்ந்தது. சுவீடின், சட்சனி, போலந்து ஆகிய நாடு களும் இக்கூட்டிணைப்பிற் சேர்ந்தன. ஒசுத்திரியா சைலீசியாவை மீண்டும் பெறு வதாகவிருந்தது. சட்சனி, போலந்து, சுவீடின் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒகன்சொலேன் ஆணிலங்களில் ஒவ்வொரு கீற்றைப் பெறுதற்கிருந்தன. புதிதாக உயர்வுற்ற பிரசியா அண்மையில் அது வகித்த மூன்ரும் தர நிலைக்குக் குறைக்கப் பட இருந்தது.
கண்டத்துப் போர்
நாற்புறமும் பகைவர்களாற் குழப்பட்ட பிாதரிக்கு, தானே முந்தித் தாக்கத் தொடங்கினன். சட்சனி மீது படையெடுத்து, அதனுதவிக்கு முன்வந்த ஒசுக் திரியப் படையை உலபோசிற்சு எனுமிடத்திலே தோற்கடித்தான். சட்சனி, தோற்கடிக்கப்பட்டுச் சரணடையும்படியாயிற்று. அதன் படை பிரசியப் படை யுடன் ஒன்று சேர்க்கப்பட்டது. 1757 இல், பிரதரிக்கு பிரான்சியரை உரோசு பாக்கிலும் ஒசுத்திரியரை உலூதனிலும் தீர்க்கமாகத் தோற்கடித்தான். ஆணுல் கம்பலந்துக் கோமகனைத் தலைவனுகக் கொண்ட அனேவேரியப்படை யொன்று ஏசன்பெக்கு எனுமிடத்தில் அனேவரைத் தாக்கிய பிரான்சியரால் தோற்கடிக்கப்பட்டது. குளசுற்றர்-செவின் ஒப்பந்தத்தைக் கம்பலந்து நிறை வேற்றினன். இதன்படி அனேவரும் பிரன்சுவிக்கும் பிரான்சியருக்கு ஒப்படைக்கப்பட்டன. பிரந்தன்பேக்குமீது முன்னேறிச் சென்ற இரசியப் படை யைப் பிாதரிக்கு சொண்டோபு எனுமிடத்திற் பின்னடையச் செய்தானுயினும், அன்னன் ஒச்சுகேக்கு எனுமிடத்தில் ஒசுத்திரியரால் தோற்கடிக்கப்பட் டான். 1759, 1760, 1761 ஆகிய ஆண்டுகளில் நடந்த தொடரிகல்கள் பிரசியா

ஏழாண்டுப் போர் 257
வுக்கு மிகவும் பாதகமாக அமைந்தமையாற் பேளின் ஒசுத்திரிய-இரசியப் படையொன்முல் அடிப்படுத்தப்பட்டது. பிரதரிக்கு தற்கொலை புரியப் பன் முறையும் யோசித்ததுண்டு.
பிரன்சுவிக்கைச் சேர்ந்த பேடினந்து என்பான் 1759 இல் மிண்டென் எனு மிடத்திற் பிரான்சியசைப் புறங்கண்டு எய்திய வியத்தகு வெற்றியும், கடலிலும் வட அமெரிக்காவிலும் ஆங்கிலேயர் அடைந்த வெற்றிகளும் பிரசியாவுக்கு நேர்ந்த அனர்த்தங்களே ஒரளவிற்கு ஈடுசெய்தன. யுத்த ஆரம்பத்தில் இங்கிலந்துக்கு அவலமே விளைந்தது. 1755 இல் மினுேக்காவைச் சாணவிக்க வேண்டியதாயிற்று. அதே காலத்திற் சுராசுதவுலா என்பான் கல்கத்தா மீது படையெடுத்தமை பற்றியும். 'இருளறைத் துயர நிகழ்ச்சி பற்றியும் இந்தியா விலிருந்து செய்திகள் கிடைத்தன. குளசுற்றர்-செவின் ஒப்பந்தம் இச்சோகக் கதையை நிறைவாக்கியது. மூன்று கண்டங்களில் இங்கிலந்தின் கதி நிருணயிக்கப்பட்டதுபோலத் தோற்றியது. ஆனல், புலர் காலைக்குச் சற்று முன்னரே பேரிருள் காணப்படும். ‘நியூக்காசில் கோமகனின் பாராளுமன்றப் பெரும்பான்மையை அரசாங்கம் நடாத்துதற்குப் பெற்முேனகி, 1757 இல் பிற்று இங்கிலந்தில் ஆட்சிக்கு வந்தனன். சோர்வுற்ற மனமுடைய மக்களுக்குத் துணி கரமான தன் மனநிலையை ஒரளவு செறியச் செய்தான். அவன் அறைகூவலை நாடு முழுவதும் ஏற்றது. நல்ல காலமும் உடனும் பிறந்தது. குளசுற்றர்-செவின் ஒப்பந்தம் ஒறுத்தொதுக்கப்பட்டது. கம்பலந்தின் இடத்தில் அமர்த்தப்பட்ட பிரன்சுவிக்குப் பேடினந்து, மிண்டென் எனுமிடத்திற் பிரான்சைப் புறங்கண்டு புகழொலிபரப்பி வெற்றி பெற்றன். கிளைவு என்பான் கல்கத்தாவில் ஏற்பட்ட கடும் துயர் நிலைமையை விரைவிற் சீர்திருத்தினன். 1757 இல், பிளாசி என்னும் வரலாற்றுப் பெருமைவாய்ந்த யுத்தகளத்தில் ஒரு சிறந்த வெற்றியடைந்தான். இதன்பலனுக ஆங்கிலேயர் வங்காளத்தில் ஆதிக்கம் பெற்றனர். சில ஆண்டு களின்பின் கூற்று என்பான் உவாந்தவாசு என்னுமிடத்திற் பிரான்சியரைத் தோற்கடித்துச் சென்னபட்டணத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நிலைநாட்டி ஞன். 1763 இல் அமைதிப் பொருத்தனை நிறைவேறியபோது, இந்தியாவில் எல்லா ஐரோப்பிய எதிரிகளையும் வென்முேராய்த் திகழ்ந்தனர் ஆங்கிலேயர். இப்போது இந்திய நாட்டினவரசுகளே எஞ்சி எதிர் நின்றன. பிரான்சியர் பாண் டிச்சேரியை மாத்திரம் கைவிடவில்லை. அதை ஒரு வர்த்தகக் குடியேற்ற நாடாக வைத்திருந்தனர். பிரான்சியரின் அரசியற் சிறப்பு இந்திய நாட்டில் அற்றுப்போயது.
இத்தகைய பூரணமான வெற்றி வட அமெரிக்காவிலும் கிட்டியது. உலூயிபேக் கும் அக்கேன் கோட்டையுங் கைப்பற்றப்பட்டபின் (1758), குவிபெக்கும் (1759) மொந்திரிலும் (1760) கைப்பற்றப்பட்டன. தரையில் உல்பும் அமெற்சும் செய்த தீரச்செயல்களைப் போலக் கடலிற் பொசுகோவனும் ஒக்கும் அருஞ்செயல் புரிந்தனர் : முன்னவன் 1759 இல் தூலோனை அழித்தான். குவிபரோன் குடா விற் பிறசது கப்பற்படையை ஒக்கு வெற்றிகொண்டான். 1761 இல் இசுப்பெயின்

Page 139
258 ஏழாண்டுப் போர்
பிரான்சுடன் ஒரு குடும்ப ஒப்பந்தஞ் செய்து கொண்டது. ஆகவே இங்கிலந்து இசுப்பெயின்மீதும் யுத்தப் பிரகடனஞ் செய்து ஆவணுவையும் மணிலாவையும் கைப்பற்றியது. ஆனல் யுத்தத்தின் முடிவும் நெருங்கிக்கொண்டிருந்தது. எலிச பெத்து சாரினவின் மரணத்தாலும் (5.1.1762) அவளின்பின் மூன்ரும் பீற்றர் அரசெய்தியமையாலும் பிரதரிக்கிற்கிருந்த நெருக்கிடை தணிந்தது. மூன்ரும் பீற்றர் அரசெய்தியதும் ஒசுத்திரிய நட்புறவிலிருந்து விலகினன். இரசியா விலகச் சேர்மனியிலே தான் இழந்த சில இடங்களைப் பிரதரிக்கு பெறல் இயல் வதாயிற்று. இங்கிலந்துக்கும் பூபன் குலத்தினருக்குமிடையிற் பரிசுப் பொருத் தனை நிறைவேறியபின் (15.2.1763) அவன் விரைவில் ஒசுத்திரியாவுடன் இணக் கஞ் செய்தான். இயூபேட்சு புர்க்குப்பொருத்தனையால், சேர்மனியில் யுத்தத் திற்குமுன் இருந்த நிலைமை மீண்டது. பிரதரிக்கு சட்சனியிருலிந்து வெளியேறி ஞன். ஆனல் சைலீசியாவையும் கிளாற்சையுங் கைவிடவில்லை. இவ்வண்ணம் ஓரங்குல ஆள்புலமும் இழக்காமலும், தனக்கு எதிராகத் திரண்டெழுந்த வலிய கூட்டிணைப்பை மிகத் திறமையுடன் எதிர்த்து நின்றமையாற் கிடைத்த மாபெரும் மதிப்புடனும் இப்பயங்கரமான கடுஞ்சோதனையினின்று பிரதரிக்கு வெளியேறினன். பெரிய வல்லரசுகளிடை வைத்தெண்ணப்படுதற்குப் பிரசியா வின் உரிமை பற்றி இதுமுதற்கொண்டு ஐயப்படுவதற்கில்லை.
பெரிய பிரித்தானியாவைப் பொறுத்தவளவில் 1763 ஆம் ஆண்டானது அதன் குடியேற்றப் பேரரசின் உச்சநிலையைக் குறித்தது. அப்போது நிறைவேறிய அமைதிப்பொருத்தனை அதன் வரலாற்றில் மிகச் சிறந்ததெனக்கொள்ளினுங் கொள்ளலாம். 1761 இல் பிற்று தன் பதவியினின்றும் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிராவிடில், இன்னும் கூடிய சிறப்பாயிருந்திருக்கும். பிரான்சு இங்கிலந் துக்குக் கனடாவையும் நோவாகோசியாவையும் பிறெற்றன் முனையையுங் கையளித்தது; நியூபண்ணிலந்துக்கண்மையில் மீன்பிடிக்கும் உரிமைகளைத் தான் வைத்துக்கொண்டது. இந்த உரிமையால் 1904 வரையும் இங்கிலந்துக்கும் பிரான் சுக்குமிடையில் ஓயாத சச்சரவுகள் ஏற்பட்டன. பிரான்சு மினுேக்காவை . மீட்டளித்ததொடு, இந்தியாவிலே தன் அரசியற் செல்வாக்கையும் இழந்தது. என்ருலும், மாற்றினிக்கு பிரான்சிற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆவன வும் பிலிப்பைன் தீவுகளும் இசுப்பெயினுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இசுப்பெயின், புளொரிடாவை இங்கிலந்துக்குக் கொடுத்து, நட்ட ஈடாகப் பிரான்சிடமிருந்து உலூசியானவைப் பெற்றது. பூபன் வல்லரசுகளைக் கடுமை யில்லாது நடத்தியதற்காகப் பியூற்று கடினமாகக் குற்றங்கூறப்பட்டிருக்கின்றன். அதற்கு, அந்நாடுகள் நன்றி காட்டவில்லையென்பதும் உண்மை. ஆனல்,

ஏழாண்டுப் போர் 259
பிரதரிக்கோ இங்கிலந்து தன்னைக் கைவிட்டதாக எண்ணிப் பெரிதும் மனம் வருந்தினன். இங்கிலந்தின் குற்றம், செய்த வகையிலே அமைந்ததன்றிச் செய்த உதவியிலன்று. எப்படியென்ருலும், அந்தச் செய்கை அணுவசியமான அறிவற்ற
செய்கையாகும்.
எனினும், யாது கூறப்பட்ட போதிலும், அமைதி இங்கிலந்துக்குச் சிறந்த ஒரு வெற்றிக்கறிகுறியாயிற்று. முதற்றரமான நிதியும் எதிர்க்க முடியாத கடலாதிக்கமும் இவற்றிலும் பார்க்க கிளைவு, கூற்று, அமெசுற்று, உல்பு, கோக்கு, பொசுகோவன், இன்னும் தன் துணிவாலும் ஆர்வத்தாலும் இவர்களெல்லாருக் கும் ஊக்கமளித்த பிற்று ஆகிய ஆங்கில மக்களும் இவ்வெற்றிக்குக்
காரணமாவர்.

Page 140

அத்தியாயம் 21
போலந்தின் பிரிவினைகள் (1763-95)
ஏழாண்டுப் போர்க் குழப்பத்தின் பின் மேற்கு ஐரோப்பிய அலுவல்களில் அமைதி நிலவியது. ஆனல், மேற்கே அதி தொலைவில், அத்திலாந்திக்குச் சமுத் திரத்திற்கு அப்பால், பெரிய பிரித்தானியாவுக்கும் பிரித்தானிய குடியேறி களுக்குமிடையில் உடன்பிறந்தோர் கொலைப் போராட்டம் தொடங்கியது. இதைப்பற்றி மேலே விவரமாகக் கூறப்படும். ஐரோப்பிய நாடகத்தில் அடுத்த காட்சிக்களம் போலந்தாகும். சாரினவாகிய இரண்டாங் கதரினே பழிக்கஞ்சாக்
கதாநாயகியாக அக்காட்சியிலே திகழ்ந்தாள்.
கதரினின் பூட்கை பிரதானமான இரு குறிக்கோள்களைக் கொண்டதா
யிருந்தது. கருங்கடலிலும் இயலுமானுற் கொன்சுதாந்தினேப்பிளிலும் இரசியா வின் ஆதிக்கத்தை நிலைநாட்டலும், போலந்தை இரசியாவுடன் ஒன்றுசேர்த்த அலுமே இக்குறிக்கோள்களாகும். ஒற்முேமன் பேரரசினதும் போலந்து இராச் சியத்தினதும் சீர்கெட்ட நிலைமை, அவற்றைத் தாக்கும்படி அயல் நாடுகளை வலிந்து அழைப்பதுபோற் காணப்பட்டது. இத்தூண்டுதலை எதிர்த்திருந்தால் கதரின் மனிதத் தன்மைக்கு விஞ்சியவளாயோ குறைந்தவளாயோ இருந்திருப் பாள். ஆனல், அவள் இவ்விருவகையுள் எதிலும் சேர்ந்தவளல்லள். அண்மைக் கிழக்கில் எழுந்த பிரச்சினைகளுக்கும் இரசியாவுக்குமுள்ள தொடர்புபற்றி ஏலவே கூறப்பட்டது. நாம் ஈண்டுக் கவனிக்கற்பாலது போலந்தைப் பற்றிய பிரச்சினையாகும். A -
எவ்விரு பிரச்சினைகளும் இவைபோன்று ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர் மாமுக இருக்கவியலாது. போலந்தரொடு ஒப்பிடும்பொழுது துருக்கியர் அண்மை யில் ஐரோப்பாவில் நுழைந்தவராவர். ஐரோப்பிய அரசமைப்பிற் போலந்தின் நிலைமை பழைமையானது மாத்திரமன்றித் தனித்தன்மை வாய்ந்ததுமாகும். அது ஒரு சுதந்திர நாடாதலை இயற்கையன்னை கருதினுளல்லள் போலும். இன ஒற்றுமைகளை நோக்கின், அந்நாடு இரசியப் பேரரசில் இணையத்தக்கது. ஆனல், பத்தாம் நூற்றண்டின் பிற்பகுதியிற் போலந்தர் கிறித்துவ மதத்தைத் தழுவிய போது, இரசியாவைப் போல் அல்லாமல் அதன் மேற்கத்திய, அல்லது உரோமன் முறையையே தழுவினர். ஆகவே, சமயக் கோட்பாட்டில் அவர்கள் உலூதர்க் கொள்கையுடைய பிரசியாவிலிருந்து வேறுபட்டவாறே, வைதிக இாசியாவிலிருந் தும் வேறுபட்டார்கள். பல இரசியப் பகுதிகள் ஐக்கியத்தின் சாயலைத்தானுங் காணுமுன்பே, பிரசியாவிலும் பிாந்தன்பேக்கிலும் ஒகன்சொலேன் குலத்தினர் காலெடுத்து வைப்பதற்குமுன்பே, அபிசுபேக்கர் பொகீமியாவையோ அங்கேரி யையோ ஈட்டுதற்குமுன்பே, அல்லது அவர்கள் சேர்மனியிலேதானும் உறுதியாக

Page 141
262 போலந்தின் பிரிவினைகள்
நிலையூன்றுதற்கு முன்பே போலந்து ஐரோப்பாவிலுள்ள தலை சிறந்த வல்லாசு களுள் ஒன்முக விளங்கிற்று. இயற்கை எல்லைப்புறங்கள் அற்று, உருவற்று, மிகச் சிறந்த அதன் ஆற்றுத்தொகுதி தவிரச் சிறந்த இயற்கைத் தோற்றமெதுவுமற்று, ஒரு காலத்திற் போலந்து போற்றிக்குக் கடலிலிருந்து கருங்கடல்வரை ஒரு பெரிய சமவெளியாகப் பரந்திருந்தது. ஆனல், போலந்தின் முக்கிய பகுதி எப்போதும் விசுத்தூலா நதியின் வடிநிலமேயாம். பொகீமியா, மொறேவியா, சைலீசியா, பொமரேனியா ஆகிய பகுதிகளை ஒரு காலத்திற் கொண்டிருந்த போலந்து, மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளிலொன்முக இடம்பெறத் தகவுடைய தாயிருந்தது. ஆனல் 12 ஆம் 14 ஆம் நூற்றண்டுகளுக்கிடையில் போலந்து மேற்குப்புறத்திலுள்ள அதன் ஆள்புலங்களிற் பெரும்பகுதியை இழந்தது. அது இலிதுவேனியாவுடன் (1386) ஐக்கியம் பூண்டமையால், அதன் நாட்டம் வட கிழக்குத் திசையிற் சென்றது. அங்கே போலந்து கியூத்தனிக்கு நைற்றுக் களுடன் போரில் ஈடுபட்ட வாற்றை முன்னர்க் கண்டோம். நைற்றுக்கள் தோல்வியுற்றனர். போலந்து விசுத்தூலா ஆற்று முகத்தில் ஆதிக்கம் மீண்டும் பெற்று, தான்சிக்கு, தோண், மாரியன் புர்க்கு நகரங்களையும் மேற்குப் பிரசியா வையும் வலிந்திணைத்துக்கொண்டது. அந்நைற்றுக்களும், அவர்கள் சபை குலைந்தபின், பிரந்தன்பேக்கின் ஒகன்சொலேன் பெருமக்களும் போலந்தின் கீழ்ப் பாளையமாக ஆட்சிசெய்த கிழக்குப் பிரசியா மீதும் போலந்து மேலாண்மை செலுத்தியது.
யாகெலோ குடும்பத்தில் ஆண் சந்ததி 1572 இல் முடிவுற்றது. (இக்குடும்பத்த வரின் ஆட்சியிலேயே போலந்தும் இலிதுவேனியாவும் ஐக்கியம்பூண்டு வலிமை யான நிலையை அடைந்திருந்தன). இது முதற்கொண்டு போலந்தானது உண்மை யிலும் பெயரளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைக்கொண்ட, உயர்குடி யாட்சிக் குடியரசாயது. இந்த யாப்பு ஒழுங்கே அக்குடியரசின் இழிவுக்கும் ஈற்றில் அழிவுக்கும் பெரிதும் காரணமாயது. அரசபதவிக்குத் தேர்தல் நடக்கும் போதெல்லாம், போலந்தை உண்மையில் ஆண்ட சில்லோராட்சிக் குழுவினர் முடியை ஏலம் கூறுதல் வழக்காயிருந்தது. கடைசி யாகெலோவின் மரணத் திற்கும் முதலாம் பிரிவினைக்குமிடையிற் கழிந்த இரு நூற்ருண்டுகளிற் போலந் தின் முடி தரிக்கும் கெளரவத்தை ஒரு பிரான்சியனுக்கும், ஒர் அங்கேரியனுக் கும், மூன்று சுவீடியருக்கும், பிரெஞ்சபிமானம் மிக்க இரண்டொரு போலந்தருக்கும், ஒசுத்திரியாவால் அமர்த்தப்பட்ட இரு சட்சனியருக்கும், ஈற்றில், இரசிய சாரினுவான இரண்டாம் கதரினுற் புறக்கணிக்கப்பட்ட காதல னுக்கும் அளித்தனர் விழுமியோர். போலந்தின் உயர்குடிகள் தங்கள் அரசர் களேத் தெரிந்தெடுத்ததுமல்லாமல், ஒவ்வொரு தெரிவிலும் அரசனின் செயல்களை மிகக் குறுக வரையறுக்கும் ஓர் ஒப்பந்தத்தையும் அவ்வரசர் மேற்றிணித்தனர். மேலும் முற்றுவிட்டு என்னும் வாக்குரிமையானது எந்த முன்னீட்டையும் வீட்டும் உரிமையை ஒவ்வொரு விழுமியோனுக்கும் அளித்தது. இவ்வண்ணம் சீர்திருத்தஞ் செய்யும் எந்த முயற்சிக்கும் இடமில்லாது போயிற்று.

போலந்தின் பிரிவினைகள் 263
அங்கு பாலன முறையென ஒன்றிருக்கவில்லை; மத்திய நிருவாகம் இல்லை. சட்சணிய அரசர்கள் குடியரசைச் சென்று பார்வையிட்டது அருமை, சட்ட சபை காலாகாலங்களில் உவாசோவிலோ, குரோடுனேவிலோ கூடிச் சிற்சில சமயங்களில் யாதானுமொரு சட்டத்தை நிறைவேற்றியது ; ஆனல், வீட்டும் உரிமைகாரணமாகப் பெரும்பாலும் சட்டமியற்றல் இயலாதாயிற்று. தான் நன் றெனக் கருதியதையே ஒவ்வொரு விழுமியோனுஞ் செய்தான்; தன் ஊழியர் களைத் தான் விரும்பியபடி நடத்தினன்.
அரசியலிற் போல் சமூக வாழ்க்கையிலும் நாடு பின்னடைந்ததாக இருந்தது. நாடு 1,50,000 உயர் குடிக் குடும்பங்களைக் கொண்டதாயிருந்தது. மக்களிற் பெரும்பான்மையோர் விவசாயத்திலீடுபட்ட ஊழியராவர். நாட்டுக்கேயுரிய நடு வகுப்பினர் கிடையார். ஆங்கிருந்த அற்ப சொற்ப வணிகமும் சேர்மானியர் கையிலோ யூதர் கையிலோ இருந்தது ; ஆங்கிருந்த ஒரு சில நகரங்களும் விழுமி யோரின் ஆதிக்கத்திற்கு எதிரீடு செய்வனவாய் இருக்கவில்லை; குடியானவர் களின் முன்னேற்றத்துக்கு வாய்ப்பு அளிப்பனவாகவும் இருக்கவில்லை.
அகத்தே சீர்குலைந்திருந்த போலந்தால் புறத்திலிருந்து வரும் தாக்குதல்களைச் செவ்வனே எதிர்த்து நிற்க இயலவில்லை. அதன் அயல்நாடுகளின் வலிமைக் குறைவும், அதன் சுதந்திரத்தைப் பெயரளவிலேனும் மதித்து நடப்பது அந் நாடுகட்கு வசதியாயிருந்தமையுமே அது தன் பழைய ஆள்புலத்திற் பெரும் பகுதியை உருப்படியாக வைத்திருந்தமைக்குக் காரணங்களாகும். ஆனல், மூன்ரும் ஓகத்தசை அரியணை ஏற்றிய காலந்தொடங்கி (1733), இரசியா போலந்தை ஒரு சார்நாடாகவே நடத்தியது. ஒகத்தசு இறந்தபின் சாரினவான இரண்டாம் கதரின் கூடிய தீவிரமான பூட்கையை அனுசரிக்கத் தீர்மானித்தாள். அதேசமயத்திற் கதரின் துருக்கிக்கெதிராகத் தான் சூழ்ந்த திட்டங்களை நிறை வேற்றுவதற்கு முயற்சி செய்யாமற் போலந்தின் மீது கண்ணும் 3-GjëjLOT யிருந்தாளேயாயின், போலந்து இரசியாவொடு ஒன்று சேர்க்கப்பட்டிருக்கு மெனினும், பிரிவினையினின்றும் தப்பியிருக்கலாம். ஆனல் நடந்ததென்னவெனில், பிரிவினைசெய்யுங்கருத்தை (1769) மகா பிரதரிக்கே வெளியிட்டான்.
ஏழாண்டு யுத்தத்திற் பிரசியாவுக்குப் பேராபத்தை விளைவித்த இரசிய ஒசுத்திரிய பிரான்சிய நட்புறவு புதுப்பிக்கப்படுதலைப் பிரதரிக்கு மிக அஞ்சி னன். இரு பேராசிகளுக்கும் அவனுக்குமிடையில் நட்பை ஏற்படுத்துவதற்குப் போலந்தைப் பிரிவினை செய்தல் ஒர் அடிப்படையாக அமையுமன்ருே ? இக் கருத்து பல காலத்திற்கு முன், குறிப்பாக மகா பீற்றராலும் முதலாம் பிாதரிக் காலும் 1710 இல் ஆலோசிக்கப்பட்டதே. 1764 இல் கதரினும் இரண்டாம் பிரதரிக்கும் ஓர் உடன்படிக்கை செய்தனர். மனவுறுதியில்லாத குணவியல்பு படைத்த போலிசு விழுமியோனும், கதரின் புறக்கணித்த காதலர்களிலொருவனு மான சிதானிசுலாசு பொனியற்முேசுக்கி என்பானை அரச பதவிக்குத் தெரிந் தெடுக்க முயற்சிசெய்தல் , சாட்டோரிசிகிசு என்பானின் தலைமையில், நாட்டுப்

Page 142
264 போலந்தின் பிரிவினைகள்
பற்றுள்ள போலிசுக் குழுவொன்று ஆதரிக்கும் யாப்புத் திருத்தங்களை ஒப்பேற வொட்டாது தடுத்தல் ; போலந்தில் வதிந்த, கத்தோலிக்கால்லாத சமயக் கட்சி யினரான “பினுக்கருக்குச்" சமய சமரசம் பெற்றுக்கொடுத்து, அங்குச் சமயப் பகையை நீடித்திருக்கச் செய்தல்-ஆகிய இவற்றில் ஒத்துழைப்பதற்கு அவர் கள் உடன்பட்டனர். 1764 இல் பொனியற்முேசுக்கி அவ்வாறே தெரிவுசெய்யப் பட்டான் ; 1768 இல், போலந்திலே ஆட்சிகொண்டிருந்த இரசியப் படையின் கண்காணிப்பிற் சட்டசபையானது 'பினுக்கருக்கு மாறயிருந்த சட்டங்க ளெல்லாவற்றையும் விலக்கிற்று ; முற்று வீட்டையும் தேர்வு முடியாட்சியையும் பிற குறைபாடுகளையும் போலந்தின் அரசியல் யாப்பின் இன்றியமையா அமிசங் களென அது பிரகடனஞ்செய்தது; இவ்வரசியல் யாப்பை நிலைபெறுத்தற்கு இரசியா உத்தரவாதம் அளித்தது.
போலந்து நாட்டுத் தாயகப்பற்றுடையோர் இயல்பாகவே திகிலடைந்து, இரசிய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியிடும் நோக்கத்துடனும் உரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் ஆகிக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துட னும் பார் கூட்டிணைப்பை உருவாக்கினர். போலந்தில் நிகழ்ந்த, அதிர்ச்சி தரும் சம்பவங்களால் திகிலடைந்த பிரான்சு பார் கூட்டிணைப்பாளர்களை ஊக்கப் படுத்தி, அவருக்கியரை இரசியா மீது யுத்தப் பிரகடனஞ் செய்யும்படி தூண்டி யது (1768). துருக்கியர் தங்கள் மீதே பெருங் கேட்டை வருவித்தார்களே யன்றிப் போலந்தைக் காப்பாற்றவில்லை. இரண்டாம் கதரின், போலந்தைப் பிரிவினை செய்வதிலும் அதனை ஆண்டிருந்தவாறே இரசியப் புரப்பகமாக வைத்திருத்தலைப் பெரிதும் விரும்பியிருப்பாள். துருக்கிய யுத்தத்தாலேற்பட்ட குழப்பம் காரணமாக, அவளைத் தூண்டிவந்த பிரதரிக்கின் அறிவுரைக்குச் செவிமடுக்க நாட்டங் கொண்டாள் கதரின்.
தன் எல்லைப்புறத்தில் நடக்கும் இரசிய-துருக்கிய யுத்தத்தால் ஒசுத்திரியா திகிலடைந்து, 1412இல் போலந்துக்கு அங்கேரி ஈடுவைத்த சிபிசு என்னும் பகுதியை 1769 இல் மீண்டுங் கைப்பற்றிக்கொண்டது. 1771 இல் மரியா தெரிசா தான் போலந்துடன் நட்பாயிருப்பேனென உறுதியாகச் சொன்ன பொழுதும், பிரிவினை எண்ணம் தனக்கில்லையென மறுதலித்தபொழுதும் அவள் மனதில் அணுவளவேனும் கபடம் இருக்கவில்லை. எனினும், 1772 இல் பிரிவினைக் கோரிக்கை உண்மையாக ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, அவள் அமைச்சன் கோனிற்சும், எப்பொழுதும் நாட்டாசை கொண்டவனும் இரண்டாம் பிரதரிக்கின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவனும் அவள் மகனுமான யோசேப்பும் வற்புறுத்தவே, அவள் ஒருவாறு தயக்கந் தீர்ந்த பிரிவினைக்கு ஒருப்பட்டாள்.
1772 இல் முதலாம் பிரிவினை நிறைவேறியது. இந்த இழிசெயலின் விபரங்கள் இத்துடனிணைக்கப்பட்டிருக்கும் தேசப் படத்தைப் பார்த்தால் மாத்திரமே தெளிவாகும். (படம் 9) போலந்து தன் ஆள்புலத்தில் ஏறத்தாழ மூன்றி

போலந்தின் பிரிவினைகள் 265
லொன்றையும் குடிகளில் மூன்றிலொன்றுக்கு அதிகப்பட்டோரையும் இழந்தது. ஆள்புலத்தைப் பொறுத்தவளவில் ஒசுத்திரியாவே கூடிய பயனடைந்தது. உயர் வாக மதிக்கப்படும் தான்சிக்கு கிடைக்கவில்லை யெனினும், பிரசியா மேற்குப் பிரசியாவை ஈட்டியது மிகவும் முக்கியமானது.
முதலாம் இரண்டாம் பிரிவினைகளுக்கிடைக் காலத்திலே தாயகப்பற்றுடைய போலந்து மக்கள் உள்நாட்டலுவல்களைச் சீர்ப்படுத்த உறுதியான முயற்சி செய் தனர். உண்மையாகவே 1790 இல் ஒரு புதிய யாப்பு மன்றுபடுத்தப்பட்டு அங்கீ கரிக்கப்பட்டது. பரம்பரையான வரையறுக்கப்பட்ட முடியாட்சி, பொறுப் புடைய அமைச்சு, இரண்டு மன்றங்களைக் கொண்ட ஒரு சட்டசபை ஆகியவற் றைக் கொண்ட ஆங்கிலேய யாப்பு முறை நெருங்கிப் பின்பற்றப்பட்டது. எனி னும், அதிருத்திகொண்ட சிறுபான்மைக் கட்சியொன்று தம் சுதந்திரங்களைப் பேணுவதற்கு உதவிபுரியுமாறு 1792 இல் இரசியாவை வேண்டியது. இரு சேர் மானிய வல்லரசுகளும் ஏலவே பிரான்சுடன் யுத்தத்திற் சிக்கியிருந்தன. போலந்தில் வேண்டிய நடவடிக்கை எடுக்கக் கதரினுக்கு ஒரு தடையுமிருக்க வில்லை. ஓர் இரசியப் படை போலந்தைக் கைப்பற்றி அங்கே தங்கியது. 1793 சனவரியில் இரண்டாம் பிரிவினை நிறைவேற்றப்பட்டது. பிரசியா, கொள்ளைப் பங்கில் பெரிய போலந்து எனும் பிரிவையும் நீண்டகாலமாகத் தான் பெறவிரும் பிய கான்சிக்கு, தோண் ஆகிய கோட்டைகளையும் பெற்றது. வடக்கே திவின நதியிலிருந்து தெற்கே பெசரேபியா எல்லை வரையும் பரந்திருந்ததும், பிரசியா பெற்றதைப் போல நான்குமடங்கு கூடியதுமான ஒரு பெரிய நிலப்பகுதியை இாசியா பெற்றது. மேற்கு ஐரோப்பாவில் ஈடுபட்டிருந்த ஒசுத்திரியாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
இந்தத் துன்பியல் நாடகத்தின் கடைசிக் காட்சி நிகழ்தற்கு நீண்டகாலம் செல்லவில்லை. உவாசோவிலுள்ள இரசிய அமைச்சனின் அக்கிரமமான கொடுங் கோன்மையைப் பொறுக்கலாற்றது போலந்து மக்கள் 1794 இல், கொசியிசுகோ என்னும் தீரனின் தலைமையிற் கலகம் விளைத்து, ஒன்றன்பின் ஒன்முகக் கிராக் கோ, உவாசோ, உவில்ை நகரங்களிலிருந்து இரசியக் காவற் படைகளை வெளியே துரத்தினர். ஆனல், அவர்கள் வெற்றி அதிக காலம் நீடிக்கவில்லை. பிரசியர், பிரான்சியக் குடியரசினர் கையிலே இசைன் நதிப்பிரதேசத்தைத் தவிக்கவிட்டுப் போலந்துட் படையெடுத்துச் சென்றனர். சுவோாவு எனும் கீர்த்திவாய்ந்த சேனபதியின் கீழ் இரசியா ஒரு பலமான படையை அனுப்பியது. போலந்து நசித்துத் தோற்கடிக்கப்பட்டு, 1795 இல் ஐரோப்பிய தேசப்படத்திலிருந்து அழிக்கப்பட்டது. நீமன், பக்கு நதிவரையுமுள்ள பிரதேசம் முழுவதையும் கதரின் அபகரித்துக் கொண்டு, எஞ்சிய பாகத்திற்காகப் பிரசியாவையும் ஒசுத் திரியாவையும் சண்டைபிடிக்க விட்டாள். ஈற்றிற் பிரசியா, பின்னர் தென் பிர சியா என்றழைக்கப்பட்ட மாகாணங்களையும் உவாசோ உட்படப் புதிய கிழக் குப் பிரசியாவையும் பெற்றுக்கொண்டது. கிராக்கோவும் மேற்குக் கலீசியாவும் ஒசுத்திரியாவுக்குக் கிடைத்தன. போலந்து ஓர் அரசாக இருந்த காலம் முடி

Page 143
266 போலந்தின் பிரிவினைகள்
வெய்தியது. ஆயின், போலந்து நாட்டினம் என்பது அழியாதிருந்து, 120 ஆண்டுகளின் பின் சுதந்திரமான நாட்டினவாசாதற்கு தனது உரிமைகோரி நின்றது ; அக்கால ஐரோப்பாவும் நாட்டின உரிமைக்கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் நீர்மையுடையதாய் இருந்தது. 1919 இல் பரிசிற் கூடிய அமைதி மாநாட்டின் முதற் செயல்களிலொன்று, போலந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியதேயாகும்.
பிரிவினையாளர்கள் போலந்தை ஒழித்த செயலைப் பற்றி மிகவும் வேறுபா டான தீர்ப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன. 18 ஆம் நூற்முண்டின் கடைசிப் பத் தாண்டுகளில் இக் கடுந்துயரைத் தவிர்க்கப் போதிய வலிமையற்ற பிரான்சு, தனக்கு இசைவாயிருந்த நட்பு நாட்டின் மறைவைப் பற்றி எப்போதும் வருந் தியது. பலவந்தமே பாதுகாப்பிற்கமைந்த ஒரேயொரு உறுதியீடாகும். அத் தகைய இயற்கை நிலைக்கு ஐரோப்பிய அரசியல்முறைமையைப் பிரிவினை எடுத் துச் சென்றமையால் அது ஒரு தீச்செயலென 1772 இல் எட்டுமண்டுபேக்கு கருதி ஞன். போலந்திற் காணப்பட்ட ஆட்சியறவு தீராத தொடு நோய் போன்றதென வும், போலந்தைப் பிரிவினை செய்தல், எப்பொழுதும் அடிமை நாடாக வைத் திருத்தல் ஆகிய வற்றிலொன்றைச் செய்வது தவிர அயல் நாடுகளுக்கு வேறு வழி இருக்கவில்லையென்றும் போலந்து நாட்டினம் என்பது இல்பொருளென் றும், ஏறத்தாழ ஒரு நூற்ருண்டின் பின் சோல்சுபெரிப் பிரபு பிரிவினை சார்பாக வாதித்தான்* திரிசுகே என்பான் கூறியது சரியானதென்றல், பலவீனம் 'அரசி யற் பரிசுத்த ஆவிக்கு மாறன பாதகமென்முல்' போலந்துக்கு நேர்ந்தகதி அந் நாட்டுக்கு வேண்டுவதே. போலந்து எனும் அரசு அதன் தலைவர்களால் வஞ்சிக் கப்பட்ட போதிலும், போலந்து நாட்டினம் அழிந்துவிடவில்லை என்பதற்குப் பின்னைய நிகழ்ச்சிகள் ஐயந்திரிபறச்சான்று பகர்ந்தன.
மாபெரும் உவாசோ கோமகப் பகுதி
போலந்து அழிக்கப்பட்டபின் அனேக போலந்தர் பிரான்சில் அடைக்கலம் புகுந்தனர். ஒரு போலந்துப் படைப் பகுதி குடியரசுக் கொடியின் கீழ்ப் போர் புரிந்தது. நெப்போலியன் பிரசியரைச் சேனவிலே தோற்கடித்தபின் உவாசோ வுக்குப் படைகொண்டு சென்றபொழுது (1806) அந்நாட்டை விடுதலை செய்ய வந்தோனென ஆர்வத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் வரவேற்கப்பட்டான். இச் செய்கை அவசரச் செய்கைபோற் காணப்பட்டது. ஏனென்றல், திலிசித்துப் பொருத்தனையின் பின் சார் அலச்சாந்தருக்குப் போலிசுப் பிரசியாவைக் கொடுக்க நெப்போலியன் முன் வந்தான் ஆதலின். ஆனல், சார்மன்னனே
11772 ஆம் ஆண்டிற்குரிய ஆட்டை வெளியீட்டை நோக்குக. குறிக்கப்பட்ட கட்டுரை பேக்கின் கருத்துக்களையே உணர்த்துகின்றது. பேக்கே இதை எழுதியிருக்க வேண்டும்.
*1863 ஆம் ஆண்டு முத்திங்கள் வெளியீடு. கட்டுரைகளாக 1905 இல் மீண்டும் வெளியிடப் பட்டது.

போலந்தின் பிரிவினைகள் 267
சாதுரியமாக ஏற்கமறுத்தான். ஆகையால், இரண்டாம் மூன்ரும் பிரிவினைகளிற் பிரசியா ஈட்டிய முழுப்பாகமும் உவாசோ மாபெரும் கோமகப் பகுதியாக அமைக்கப்பட்டு, நெப்போலியனின் கையாளாகிய சட்சனி அரசனுக்குக் கொடுக்கப்பட்டது. ஒசுத்திரியாவிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட கலீசியா 1809 இல் உவாசோக் கோமகப் பகுதியுடன் சேர்க்கப்பட்டது.
உவாசோ மாபெரும் கோமகப் பகுதி இருந்த சிறு காலத்திற் போலந்தர் அணு பவித்த சிறந்த அரசாட்சிபோல் முன் ஒருபொழுதும் அவர்கள் அனுபவிக்க வில்லை. அடிமை முறை ஒழிக்கப்பட்டது. நெப்போலியனின் சட்டக் கோவை ஆங்குப் புகுத்தப்பட்டது; பள்ளிகள் தாபிக்கப்பட்டன. சட்டத்தின் முன் ' குடிமக்கள் யாவரும் சமமே ' எனுந் தத்துவம் பிரசித்தஞ் செய்யப்பட்டது. தரைப்படை கிருத்தி அமைக்கப்பட்டது. 1812 இல் நெப்போலியன் தலைமையில் இரசியா மீது படையெடுத்த மாபெரும் படைக்குப் போலந்தர் 80,000 படைஞர் களே உதவினர். மொசுக்கோவை நோக்கி முன்னேறிச் செல்லாது போலந்தரின் பழைய இராச்சியத்தை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வரும்படி கோரிய அவர்தம் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்து, அந்நாட்டைப் புதிதாக அமைப்பதற்கு அவன் முயன்றிருந்தானகில் நெப்போலியன் பின் தனக்கு நிகழ்ந்த இடர்களை எல்லாம் தவிர்த்திருப்பான். ஆனல், தன் வாலிபப் பிராயத் அத் தாராண்மை நிறைந்த சுலோகங்களுக்கு அக்காலத்தே வாய்ச்சொல்லள விற்ருனும் அவன் மரியாதை செலுத்தமுடியவில்லை.
நிகழ்ந்தது என்னவென்றல், உவாசோ மாபெரும் கோமகப் பகுதி 'இரசியப் பனிமழையில் அழிவுற்றதென்க', பேரரசன் அலச்சாந்தர் நெப்போலியனைப் பின் அசந்தபொழுது (1813 பெப்புருவரியில்) உவாசோல்வக் கைப்பற்றி மாபெரும் கோமகப் பகுதியைப் படையெடுத்தழித்தான். வீயன்னுவில் அமைதி மாசபை கூடியபொழுது உவாசோ அவனிடமேயிருந்தது. பழைய போலந்து இராச்சியத் தைத் திருப்பியமைத்துத் தானே அரசனுக முடி குடுவதென்ற உறுதியான தீர் மானத்துடன் அவன் மாசபைக்கு வந்தான். பிரசியா எதிர்த்து நின்றதும் பயன்படவில்லை. போலந்து மீண்டும் சுதந்திரமடைந்தால் இங்கிலந்து மகிழ்ச்சியடைந்திருக்கும். ஈற்றில், தான்சிக்கும் தோணும் உட்படப் போசன், நேசன் எனும் மாகாணங்களையும் பிரசியாவே வைத்துக்கொண்டது. ஒசுத்திரியா கலிசியாவைப் பெற்றுக்கொண்டது. கிராக்கோ ஒரு சுயாதீனமான குடியரசாக அமைக்கப்பெற்று, 1846 இல் ஒசுத்திரியா கைப்பற்றும் வரை நிலைத்திருந்தது. மாபெரும் கோமகப் பகுதியின் எஞ்சிய பாகம் இதுமுதற்கொண்டு 'பேரவை இராச்சியமென்னும் பெயருடன் போலந்தினரசன் என்ற முறையிற் சார்மன் னனை அடைந்தது. முன்னைய பிரிவினைகளில் இரசியாவுக்குக் கிடைத்த பங்கு அதனுடன் ஒன்று சேர்க்கப்பட்டவாறே இருந்தது.

Page 144
268 போலந்தின் பிரிவினைகள்
போலந்து (1815-1919)
நெப்போலிய யுத்தங்களின் முடிவுக்கும் உலகயுத்தத்திற்கும் இடையே கழிந்த நூற்றுண்டிற் போலந்தரின் கதி உண்மையாகவே துன்பமானதாயிருந்தது. 'பேரவை இராச்சியத்திற்குச் சுயவாட்சி அளிப்பதாக வாக்குறுகி செய்த பொழுது சார் மன்னன் உள்ளார்ந்த உண்மையே கூறினன். 1814 ஆம் வருடப் பிரான்சியப் பட்டயத்தை முன்மாதிரியாகக் கொண்டதும், 1791 இல் அவகதி யடைந்த போலிசு யாப்பிலிருந்து அதிகம் வேறுபடாததுமான புதிய யாப்பு, தன்னுட்சியுடைய மாகாணமொன்று விரும்பக்கூடிய யாவற்றையும் பெயரளவில், அடக்கியிருந்தது. ஆனல், ஓர் இரசிய சார் போலந்தின் அரசனுயிருந்தான். ஒருவரிலொருவர் பொருமை கொண்டிருந்த போலிய விழுமியோர் இரசிய ஆட்சியை எதிர்ப்பதில் மாத்திரம் ஐக்கியப்பட்டிருந்தனர். 1815 இல் அளிக்கப் பட்ட சுதந்திரங்கள் 1820 இற் பெரிதும் குறைக்கப்பட்டன.
பிரான்சும் போலந்தும் ஒத்த நிலைமையிலவாயினும், 1830 இல் நிகழ்ந்த பிரான்சியப் புரட்சி, போலந்து மக்களையும் அவ்வாறே புரட்சி செய்யத் தூண்டி யது. நவம்பர் மாதத்தில் உவாசோவிற் கலகம் மூண்டது. துருக்கிய யுத்தத்தில் அண்மையில் வாகை மாலை குடிய தீபிச்சு எனும் மாபெரும் சேனபதி அக்கலகக் தை அடக்கும்படி 1,10,000 வீரரைக்கொண்ட ஒரு படையுடன் அனுப்பப் பட்டான். துருக்கியிலும் பார்க்கப் போலந்திலே தன் வேலை கூடிய கடினமா யிருப்பதாகக் கண்டான். போலந்தர் சிறந்த தீரத்துடனும் ஒரளவு வெற்றியுட னும் போர் புரிந்தனர். ஆனல், அவர்கள் தலைவர்களோ வழக்கம் போல ஒருவரி லொருவர் பொருமை கொண்டவர்களாயிருந்தனர். பூட்கையிலோ தலைமை தாங்கிப் போரை நடாத்துவதிலோ அவர்களுள் ஐக்கியமிருக்கவில்லை. ஆகவே கலாம் வீழ்ச்சியுற்றது.
புரட்சி பூரணமாக விழ்ச்சியுற்றதின் பின், இரசிய மயமாக்கும் பூட்கை கையாளப்பட்டது. "பேரவை இராச்சியம் ஓர் இரசிய மாகாணமாக மாறியது. போலந்துப் படை ஒழிக்கப்பட்டது. உவாசோ, உவில் ைஆகிய இடங் களிலிருந்த பல்கலைக்கழகங்கள் ஒழிக்கப்பட்டன. போலிசு மொழியை உப யோகித்தல் தடுக்கப்பட்டது. நிக்கலசுப் பேராசனின் ஆட்சி, மக்களின் நாட்டுரிமை நிலையை நீக்க ஒரு முடிமன்னனின் நீண்டகாலச் சதி யென ஆங்கில விமரிசகர் ஒருவர் கூறினர். இரண்டாம் அலச்சாந்தர் (1855-81) தன் ஆட்சியை ஆரம்பித்ததும் தன் தகப்பனின் பூட்கையை மாற்றினன். சமயத் தொடர்பான உடற்றல் தளர்த்தப்பட்டது. பல்கலைக் கழகங்கள் மீண்டும் தாபிக்கப்பட்டன. அடிமைகள் விடுதலை பெற்றனர். பெருமளவிற்குத் தன்னுட்சி அளிக்கப்பட்டது. ஆனல் இச்சலுகைகள் இணக்கஞ் செய்யத் தவறின. ஒரு பொழுதும் முற்முக அணைக்கப்படாது கனன்றுகொண்டிருந்த அமைதியின்மை 1863 இற் சுவாலைவிட்டு எரியத்தொடங்கிற்று. அந்தக்காலம், ஆரம்பத்தி லிருந்தே நம்பிக்கையற்றதாயிருந்தது. அதன் ஒரேயொரு விளைவு ஆயிரக்

போலந்தின் பிரிவினைகள் 269
கணக்கான உயர்தரப் போலிய மக்களை நாடு புறம்போக்கியமையும் எஞ்சியவர் கள் மீது பூரண இரசிய மயமாக்குதலைத் திணிப்பதற்கு இரசியாவுக்கு நல்ல சாட்டாக அமைந்ததுமேயாம். என்ருலும், இரசிய ஆட்சி கடுமையாக இருந்த தாயினும் போலந்தின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாயிருந்தது. தென்மாக்கிற் சிறந்த சித்தியுடன் கையாளப்பட்டன போன்ற கூட்டுறவு முறை களைப் போலந்திலுள்ள குடியான நிலக்கிழார் கையாண்டனர். யூதர் முதல் கொடுத்தமையால், கைத்தொழிலும் விவசாயம்போல் அபிவிருத்தியடைந்தது.
பிரசியப் போலந்து
‘பேரவை இராச்சியத்தின் முடிவு அத்தகையதாயிற்று. பிரசியப்போலந்தின் வரலாறும் அதே போக்கான நெறியிற் சென்றது. இரண்டாம் மூன்மும் பிரிவினை களிற் போலந்தில் ஈட்டியவற்றிற் பெரும்பகுதியை 1815 இல் பிரசியா கைவிட வேண்டியதாயிற்று. எனினும், 1772 ஆம் ஆண்டுப் பிரிவினையிலே தான் பெற்ற பங்கொடு போசனையும் நேசனையும், தோண், தான்சிக்கு எனும் பெரிய கோட்டை களையும் அது ஒருவாறு பெற்றுக்கொண்டது.
சார் அலச்சாந்தரைப் போல மூன்ரும் பிரதரிக்கு உவிலியமும் 1815 இல் தன் புதிய குடிகளுக்குத் தாராளமான வாக்குறுதிகள் அளித்தான். அவர்களுக்கு ஒரு யாப்பு அளிக்கவும், அவர்களுடைய நாட்டினத்தனிப்பண்பையும் மதத்தை யும் மதித்து நடக்கவும், போலிசு மொழியை உபயோகிக்க அனுமதி அளிக்கவும், ஆளுரிமைக்கும் உடைமையுரிமைக்கும் உத்தரவாதமளிக்கவும் போலந்தரை
அரசாங்க பதவிகளுக்குச் சேர்த்துக்கொள்ளவும் உடன்பட்டான்.
எவ்வளவிற்கு இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்பதைப் பின்னர் நிகழ்ந்தவற்ருல் அறியலாம்.
பதினைந்து ஆண்டுகளாகப் பிரசியப் போலந்தர் மனங்கவலுதற்கு ஒரு காரணமுமிருக்கவில்லை. மூன்ரும் பிரதரிக்கு உவிலியம் அவர்களை இணக்க உண்மையான விருப்புடையனென்பதைத் தெளிவாகக் காட்டினன். அந்தோனி இராட்சிவில் எனும் ஒரு பெரும் போலிசு விழுமியோன் போசன் எனும் மாபெ ரும் கோமகப் பகுதிக்குப் பதிலரையனுக நியமிக்கப்பட்டான். தலபாலனத்திற் பெரும்பகுதி அவ்வூர் உயர் குடியாட்சியினரிடமே விடப்பட்டது. பிரந்தன்பேக் கிலும் பிரசியாவிலுமுள்ள அடிமைகளைக் குடியான நிலக்கிழார்களாக மாற்றிய சிதைன், ஆடன்பேக்கு என்பாரின் தாராண்மையான பூட்கை 1823 இல் போச னுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1837 வரையில் 21,834 உழவர்களின் மானிய நிலங்கள் உண்டுபண்ணப்பட்டிருந்தன. ஈற்றில், போசனில் தலவாட்சிச் சபை யொன்றும் (தயற்று) தாபிக்கப்பட்டது.

Page 145
270 போலந்தின் பிரிவினைகள்
1830 ஆம் ஆண்டிற் கிளர்ந்து அவகதியடைந்த கலகங்களின் விளைவுகள் இரசியப் போலந்தாை எத்துணை கடுமையாகப் பாதித்தனவோ, அத்துணை கடுமையாகப் பிரசிய போலந்தரையும் பாதித்தன. பதிலரையர் பதவி ஒழிக்கப் பட்டது. அறவே பிரசிய மயமாக்கும் பூட்கை ஆரம்பிக்கப்பட்டது. தல பாலனத்தின் முழுப் பங்கும் நாட்டு விழுமியோரிடமிருந்து கவர்ந்துகொள்ளப் பட்டது. பிரந்தன்பேக்கருக்கு அருமையான பணிக்குழு ஆட்சி முறைமை புதி தாக எங்கும் புகுத்தப்பட்டது. அதுறவிகள் மடங்களும் கன்னியர் மடங்களும் நிறுத்தப்பட்டு, அவைகளின் உடைமைகள் சமயச் சார்பற்றனவாக்கப்பட்டன. பாதிப்புள்ள உடைமைகளிற் பெரும்பகுதி அரசாங்கத்தினுல் விலைக்கு வாங்கப் பட்டது. சொத்துப்பறித்தல் எனும் முடிவான பூட்கை தொடக்கப்பட்டது. s
1840 இல் நான்காம் பிரதரிக்கு உவிலியம் அரசெய்தியமை பிரசியப் போலந்த ருக்கு ஓரளவு ஆறுதலளித்தது. ஆனல் புதிய ஆட்சியின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் 1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் பின் நிலைத்திருக்க வில்லே. நாட்டினத் தத்துவத்திற்குக் கவர்ச்சியுடையதாயிருந்த 1848 ஆம் ஆண்டு உணர்ச்சியானது போலந்து மக்களைப் பாதிக்காமல் விடவில்லை. பேளி னில் மூண்ட புரட்சி, போசனிற் புரட்சி இயக்கந்தொடங்குதற்கு அறிகுறியா யது. 25,000 பேரைக் கொண்ட ஒரு நாட்டினப் படை ஒழுங்கு செய்யப்பட்டது. ஒரு தற்காலிக அரசாங்கம் நிறுவப்பட்டது. மூன்ரும் பிரதரிக்கு உவிலியம் தெளிவாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
போலியரின் பிரச்சினை சேர்மானிய தாராண்மைக்கொள்கையினருக்கிடை
யிலும் பிரசியாவிலுமே பெரும் அனுதாபத்தை உண்டுபண்ணியது.
ஆகவே, போசன் கலகத்தை அடக்குவதற்குப் பிாசிய அதிகாரிகள் அவசரப் பட்டதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. பிசுமாக்கு தன் அரசியல் வாழ்க்கை யின் முெடக்கத்திலிருந்தே போலந்தை விழிப்புடன் கவனித்து வந்தானென்ப தைப் பற்றியும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. * ஒரு சுயாதீனமான போலந்து, பிரசியாவின் இணக்க வியலாப் பகை நாடென்பது பற்றி எவரும் ஐயப்பட முடியாது. அவர்கள் விசுத்தூலா ஆற்றுமுகத்தையும் மேற்குக் கிழக்குப் பிரசியா விலுள்ள போலிசு மொழி பேசும் ஒவ்வொரு கிராமத்தையும், பொசினனியாவை யும், சைலிசியாவையும், வென்று முடிக்கும் வரையும் அம்மனப்பான்மையுடைய தாகவே அந்நாடு இருக்கும்’-இவ்வண்ணம் 1848 இலேயே பிசுமாக்கு எழுதி யிருந்தான். 1863 இல் ‘பேரவை இராச்சியத்தில் எழுந்த பயனற்ற கலகத்தினு லும் அவன் ஓர்ப்புக் குன்றவில்லை. 'போலிசுப் பிரச்சினை எங்களுக்கு வாழ்வதா, மடிவதா எனும் பிரச்சினை போன்றதாகும்,' என அவ்வாண்டிற் பிசுமாக்குக் கூறினன். இரசியப் போலந்தர் அடக்கி ஒடுக்கப்படுவது பிசுமாக்கிற்கு அத்தியா

போலந்தின் பிரிவினைகள் 27.
வசியமாக இருந்ததுபோன்றே, இரசியா, பிரசியாவுக்குக் கடப்பாடுடையதா யிருப்பதும் அத்தியாவசியமாயிற்று. அப்போது ஏற்படுத்தப்பட்ட நட்பின் நல் விளைவு செலிசுவிக்கு-ஒல்சுதைன், சடோவா, சேடான் என்னுமிடங்களிற் பலித்த
வாற்றைப் பின்னர் காண்போம்.
இப்பயன்களைப் பாதுகாப்பாய் உறுதிப்படுத்திய பின்னரே பிரசியப் போலந் தர் மீது வேண்டிய நடவடிக்கை எடுக்கப் பிசுமாக்கிற்கு ஓய்வு கிடைத்தது. அவனுடைய இறுதி நோக்கம் போலந்தின் உயிர்நாடியையே பிாசிய மயமாக்கு வதும், புரட்டெசுத்தாந்த மயமாக்குவதுமாகும். தனது கைங்கரியத்தைப் ' பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்தான். பாடசாலைச் சோதனைகள் குருமாரிட மிருந்து எடுக்கப்பட்டு அரசாங்க அதிகாரிகளிடம் விடப்பட்டன. சேர்மன் மொழி மாத்திரமே கல்வி கற்பிக்கும் மொழியாக்கப்பட்டது. சேர்மானிய மய மாக்கும் பொருட்டுப் பள்ளிக்கூடங்களைக் கைப்பற்றச் செய்த முயற்சி நகைப்
பிற்குரிய தவருக முடிந்தது.
போலந்திற் கல்வியிற் செய்த பரிசோதனையைப் போன்றே பொருளாதாரப் பரிசோதனையும் வெற்றி பெறவில்லை. 1886 இற்கும் 1914 இற்கும் இடையிற் போலந்து மண்ணிற் சேர்மானியரை நிலைநாட்டும் முயற்சியிற் பிரசியா ஏறத் தாழ 60,000,000 தங்கப்பவுணைச் செலவு செய்தது. ஆனல், போலந்தரின் தாயகப்பற்றைப் பிரசியா பவுண் கொடுத்து வாங்க முடியவில்லை. குடியேற்றப் பூட்கைக்கு எதிராகப் போலந்தர் சங்கங்களை அமைத்தனர். விவசாய ஐக்கிய சங்கங்கள், விளை நில வங்கிகள், கூட்டுறவு நாணயச் சங்கங்கள் ஆகியன நிறுவப் பட்டன. இச்சங்கங்களினுதவியாற் போலந்தர் பிரசியாவிலும் பார்க்கப் போட்டிக்கு விலையை உயர்த்தக் கூடியவராயினர். போலந்தரிடமிருந்து அதிக நிலம் சேர்மனியரை அடைந்ததாயினும், 100,000 எதற்றர் மேலதிகமான நிலம் சேர்மனியரிடமிருந்து போலந்தரை அடைந்தது. இவ்வண்ணம் பிரசியப் போலந்தர் தங்களுக்குச் சுதந்திரம் மீண்டும் கிடைக்கும் நன்னுளிற்குத் தம்மை ஆயத்தஞ் செய்தனர்.
ஒசுத்திரிய போலந்து
1815 இற்கும் 1848 இற்கும் இடைப்பட்ட காலத்தில், மெற்றேணிக்கு மற்ற ஒசுத்திரிய மாகாணங்களைப் பெரிதும் வருத்தியது போலப் போலந்தையும் வருத்தினன். எங்கும் கலாமும் அடக்குமுறையும் ஒன்றன்பின் ஒன்முக நிகழ்ந் தன. கிராக்கோ குடியரசின் அழிவும் (1846) அது கலீசியாவுடன் ஒன்றுகச் சேர்க்கப்பட்டமையும் போலந்தருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதுபோலா யின; அன்றியும் அவர்கள் தன்மான உணர்ச்சிக்குப் பங்கம் விளைக்குஞ் செயலுமாயிற்று. இத்தாலியர், பிரசியர் என்பார் கையில் அபிசுபேக்கர் பட்ட பாட்டின் பயணுகப் போலந்தில் அவர்கள் கடைப்பிடித்துவந்த பூட்கையில் நன் மாற்றம் ஏற்பட்டது. ஒசுத்திரியாவின் ஆட்சியிலிருந்த போலந்தருக்குத் தன்

Page 146
272 போலந்தின் பிரிவினைகள்
ஞட்சியுரிமையும் சட்டசபையொன்றைத் தெரிவு செய்யும் உரிமையும் வழங்கப் பட்டன. அவர்கள் தம் மொழியை உபயோகிக்க அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப் பட்டது. கல்வியும் நிருவாகமும் அந்நாட்டிற் பிறந்தவருக்கே வழங்கப்பட்டன. ஆள்வோரும் ஆளப்படுவோரும் ஒரே மதத்தவராயிருந்தமையால், மதத்திற்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒசுத்திரி யரின் ஆட்சி கடுமையில்லாதபோதும் போலந்தரின் நாட்டின உணர்ச்சியை முற்முக அழிக்க முடியவில்லை. இரசியாவும் ஒசுத்திரியா காட்டிய வழியைப் பின் பற்றியிருந்தால், அண்மைக்கால நிகழ்ச்சிகள் வேறு வழியிற் சென்றிருக்கும்.

அத்தியாயம் 22
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
முக்கியமான திகதிகள்.
1607
607
1620
620
1630
1634
1636
638
1639
1643
1651
663-70
1664-74
1664
681
73 1733
1739
744
748
丑754
1755
1756-63
1759
1763
五764
1765
1766
1766
1767
70
வேசீனியாச் சங்கங்களுக்குப் பட்டயங்கள் அளிக்கப்படல். சேமிசுரவுண் தாபிக்கப்படல்.
* மேபிளவர்” கடலிற் செல்லல், யாத்திரைப் பிதாக்களால் நியூபிளிமது தாபிக்கப்பட்டது. மசச்சுசெற்றுக் குடியேற்றம்.
மேரிலாந்துக் குடியேற்றம்.
உரோடுதீவு தாபிக்கப்பட்டது.
நியூ எவின் தாபிக்கப்பட்டது.
கொனற்றிக்கட்டு தாபிக்கப்பட்டது. நியூஇங்கிலந்து நாட்டுக் கூட்டிணைப்பு. கப்பற்போக்குவரத்து விதி (1660 உம்).
கரோலினப்பிரிவுகள். புதியநெதலந்து (நியூயோக்கு) இங்கிலந்துக்குக் கையளிக்கப்பட்டது. புதிய இயேசி.
பென்சில்வேனியா.
உதிரத்துப் பொருத்தனை.
யோட்சியா.
இங்கிலந்துக்கும் இசுப்பெயினுக்குமிடையிற் போர்/ அமெரிக்காவிற் பிரான்சுடன் யுத்தம். எயிச்சிலா சப்பற் பொருத்தனை.
மேல் ஒகையோப் பிரதேசத்தில் யுத்தம். பிரடக்கு என்பானின் தோல்வி.
எழாண்டு யுத்தம்.
குவிபெக்கு கைப்பற்றப்படல்.
பரிசு அமைதிப் பொருத்தனை
கிரன்வில் என்பானின்
முத்திரை விதி. முத்திரை விதி தள்ளுபடி செய்யப்பட்டது பிரகடன விதி. தவுண்செந்தின் வருவாய் வரிகள்.
* கள்ளக் கடத்தல்விதி ’.
நோத்துப்பிரபுவின் அமைச்சு.

Page 147
274 அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
1774 மசச்சுசெற்றுக்கு மாறகத் தண்ட நடவடிக்கைகள். 1775-83 அமெரிக்க தன்னிங்கல் யுத்தம்.
1775 இலெச்சிந்தனில் சமர்.
1776 சுதந்திரப்பிரகடனம்.
777 குடியேறியோருடன் பிரான்சு சேருதல்.
1777 நாட்டுக் கூட்டிணைப்பின் உறுப்புரைகள்.
1777 சரதோகாவிற் பேகோயின் சரணடைதல்.
779 இசுப்பெயின், இங்கிலந்து மீது யுத்தப் பிரகடனஞ் செய்தல். 1779 சிபுரோத்தர் முற்றுகையிடப்படல்.
1780 மைசூர் ஐதர் ஆலி கருநாடகப் பகுதி|மீது படையெடுத்தல். 1780 ஒல்லந்துமீது இங்கிலந்து யுத்தப்பிரகடனஞ்செய்தல்.
1780 வடதிசை வல்லரசுகளின் படைபூண்ட நடுநிலைமை.
178 கோண்வாலிசு யோக்குரவுணிற் சரணடைதல்.
1782 இசுப்பானியரால் மினுேக்கா கைப்பற்றப்படல்.
1782 மேற்கிந்தியத் தீவுகளில் உரொட்டினியின் வெற்றிகள். 1783 வேர்சைப் பொருத்தனைகள்.
1787 பிலதெல்பியாச் சமவாயம்.
ஐரோப்பிய நாட்டின-அரசுகளின் எழுச்சி பற்றியே இப்புத்தகம் பெரிதும் நுதல்வது. ஆகவே, அமெரிக்காக் கண்டத்தில் முதன்முதலாக நாட்டின அர சொன்று தோன்றியமையைப் புறக்கணித்தலாகாது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் தோற்றம் இத்தகையதே.
ஆங்கிலக்குடியேற்றங்கள்
1607 இற்கும் 1732 இற்கும் இடைப்பட்டகாலத்தில் அலிகினி மலைகளுக்கும் வட அமெரிக்க கீழ்த்திசைக் கடற்கரைப் பகுகிக்குமிடையேயுள்ள ஒடுங்கிய பிரதேசத்தில் இங்கிலந்து பதின்மூன்று குடியேற்ற நாடுகளைத் தாபித்தது. இவை களிற் பத்துக் குடியேற்றங்கள் ஆரம்பத்தில் ஆங்கிலேயராற் குடியேற்றப் பட்டன. நியூயோக்கு, தெலாவர், நியூயேசி எனும் மூன்றும் ஒல்லாந்திடமிருந்து வென்றுகொள்ளப்பட்டன. வடக்கே மெயினிலிருந்து தெற்கே யோட்சியாவரை யும் நீண்டிருந்த இந்தக் குடியேற்ற நாடுகள் தோற்றத்தில் மிக வேறுபாடுடை யனவாயும், காலநிலையிலும் பொருளாதார சமூக வாழ்க்கையிலும் அரசியலிலும் மாறுபட்டனவாயும் இருந்தன. வேசினியா, மேரிலந்து, இருகரோலினப் பகுதி கள், யோட்சியா ஆகிய தென்மாகாணங்களில் மக்கள், நெல், புகையிலை, பருத்தி என்பனவற்றைப் பயிர்செய்து வாழ்ந்தனர். உடலுழைப்பு வேலைக்கு அடிமை களைப் பெரிதும் பயன்படுத்தினர். ஒகிழ்தோப்புச் சேனபதி எனும் மக்கட் பற்றுடைய பாராளுமன்ற உறுப்பினனல், கடன்பட்டோருக்கும் வேறு துயருற் முேர்க்கும் புகலிடமாக 1732இல் யோட்சியா தாபிக்கப்பட்டது. இத்திட்டத்தின்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம் 275
செலவிற்காகப் பாராளுமன்றம் 10,000 தங்கப் பவுணை அளித்தது. பத்துக் குடி யேற்ற நாடுகளில் எவற்றையேனும் தாபிப்பதற்கு அரசாங்கம் அளித்த ஒரே யொரு நேர் உதவி இதுமட்டுமே யாகும். தெற்குத்தொகுதியில் எஞ்சியவை தோற்றத்திலும் சமூக அமைப்பிலும், பொதுவாக அரசியற் சார்பிலும் ஆங்கில மன்னர்க்குச் சாதகமான 'கவலியர்' எனுங் கட்சியைச் சேர்தனவாயிருந்தன.
மசச்சுசெற்று என்பதை முக்கிய மாகாணமாகக் கொண்ட புதிய இங்கிலந்துத் தொகுதியோ தோற்றத்திலும் நாட்டத்திலும் பியூரித்தன் கொள்கையினதா யிருந்தது. மக்களின் தொழில் பெரும்பான்மையும் விவசாயமாகும். மத்திய தொகுதியில் மிக முக்கியமான பென்சில்வேனியா, 1655 இல் சமேக்காவை வெற்றிகொண்ட கடற்றளபதியின் மகன் உவிலியம் பென் என்பானுல், அவனு டைய சமயத்தவரான குவேக்கர்களுக்குப் புகலிடமாக 1682 இல் தாபிக்கப் பட்டது. பெரும் தொகையான சேர்மானியப் புறக்குடியேறிகளுக்கும் இந்நாடு வசிப்பிடம் அளித்தது. ஆரம்பத்திற் புதிய நெதலந்து என அழைக்கப்பட்ட நியூ யோக்கிற் பெரும்பான்மையோர் ஒல்லந்தராவர். தெலாவர் பொங்குமுகத்திற் குடியேற்றப்பட்ட பகுதியிற் சுவீடியரும் இருந்தனர். ஆனல் முழுமையாக நோக்கின் அக்குடியேற்ற நாடுகள் முற்ருக ஆங்கில மயமாகவே இருந்தன. எல்லா வகுப்புக்களையும், நலன்களையுங் குறிக்கும் மக்கள் அங்கே காணப்பட்ட னர். அவர்கள் நற்குணங்கள் குறைபாடுகள் ஆகிய சிலவற்றில் 'ஆங்கிலேயரை விஞ்சிய ஆங்கிலேயராயிருந்தனர்'
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஆரம்பத்திலிருந்து தாய்நாடு தளர்ச்சி யாகவே ஆணை செலுத்தியது. அரசனின் இறைமை ஒருபொழுதும் எதிர்த்து வாதிடப்படவில்லை. ஆட்சியிடையறவுக் காலத்திலும் பொதுநலவாட்சியானது சுதுவாட்டு அரசர்களைப்போன்றே அத்தத்துவத்தை உறுதியாகக் கடைப்பிடிக் தது. பாராளுமன்றத்தின் இறைமை, மறுக்கப்படாவிட்டாலும் எக்காலத்தும் தெளிவாக அங்கீகரிக்கப்படவில்லை. கலகந் தொடங்கியபின் அது திட்டமாக மறுக்கப்பட்டது. குடியேற்ற நாடுகளில், ஒவ்வோரிடத்துஞ் சில வேறுபாடுகளி ருந்தனவாயினும், அரசாங்கம் ஒரேமாதிரியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்ற நாட்டிலும் முடிக்குப் பதிலாகவொரு ஆள்பதியும், பாதி சட்டமியற் அறும் கடமைகளையும் பாதி நீதி செலுத்துங் கடமைகளையுமுடைய ஒரு கழகமும், தேர்வு செய்யப்பட்ட ஒரு மன்றமும் இருந்தன. குடியேற்ற நாடுகளுட் பெரும் பாலானவற்றில் ஆள்பதியும் கழகமும் முடியினல் நியமிக்கப்பட்டனர்; எஞ்சிய வைகளில் அவ்வப்பகுதிச் சொந்தக்காரரால் நியமிக்கப்பட்டனர். சிலவிடத்துத் தேர்தல் முறையும் வழக்காற்றில் இருந்தது. என்ருலும், எல்லாக் குடியேற்ற நாடுகளும் பெருமளவு தலத்தன்ணுண்மை பெற்றிருந்தன. அக்கால ஆங்கிலேயர் களின் மரபுகளையும் பயிற்சியையும் அவர்கள் தத்தம் ஆட்சிக்குப் பயன்படுத்தி னர். மசச்சுசெற்றுக்கு அடிகோலியவர்கள், முதலாம் சாள்சை எதிர்த்து நின்ற வர்களின் தலைவர்களான-வழக்கறிஞரும் ஊர்ப் பெரும் தனக்காரருமான-பிம், எலியற்று, அமிடன் போன்றவர்களின் வகுப்பையும் வகையையும் சேர்ந்தவர்
11-B 24178 (5.160)

Page 148
276 அமெரிக்க ஐககிய நாட்டின் தோற்றம்
களே. பியூரித்தானியர் குடியேறிய பகுதிகள், பலகாலஞ் செல்லுமுன் தாய்நாட் டின் ஆட்சியிலிருந்து விலகி, ஒரு புதிய இங்கிலந்தை அடிகோலுவதில் மற்றைப் பகுதிகளிலும் பார்க்க கண்ணும் கருத்துமாயிருந்தன என்பதில் ஐயமில்லை.
வர்த்தகச் சட்டங்கள்
ஆட்சி பொதுவாகத் தளர்வாயிருந்தபோதும் கொள்கையளவில் ஒரு புறநடை யும் இருந்தது. ஆனல் நடைமுறையில் அதுவும் அரைகுறையானதாகவேயிருந் தது. அந்நாட்களிற் குடியேற்ற நாடுகள், அவைகளைத் தாபித்த நாடுகளின் ஊதி யத்திற்காக அமைந்த பண்ணைகளாகவே எல்லாராலும் எண்ணப்பட்டன. மத மாற்றுங் கருத்தும் ஆங்குக் கலந்து காணப்பட்டது. வாசுகோடி காமா இந்தியா விலிறங்கியபொழுது ‘நாங்கள் கிறித்தவரை ஆக்க வருகிமுேம்' என விளம்பி னன். இசுப்பானிய போத்துக்கேய அமெரிக்காவிலும் வெற்றிவிாசைப் பின்பற்றி இயேசுதர் சென்றமையைக் காண்க. கனடாவை அவர்களே முதற் சேர்ந்தடைந் தார்கள். அத்திலாந்திக்குச் சமுத்திரத்திற்கு அப்பால், துணிகரச் செயலாளர் களைப் பெரிதும் கவர்ந்தது பொன்னகும். பதினேழாம் நூற்றண்டிற் பட்டயம் பெற்ற சங்கங்களைத் தூண்டிய குறிக்கோள் வணிக இலாபமாகும்.
இப்பூட்கைக்குச் சட்ட உருவம் அளித்தவை, பொதுநலவாட்சியின்போதும் இரண்டாம் சாள்சின் ஆட்சியின்போதும் நிறைவேற்றப்பட்ட கப்பற் போக்கு வாத்துச் சட்டங்களாகும். ஆங்கிலேயக் கடற்படையானது பெருவணிகத்திற் கும் குடியேற்ற நாடுகளின் கடற்கரைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது. இதற் குப் பிரதியுபகாரமாக இங்கிலந்து வியாபார முழுவுரிமையைக் கோரியது. இத ற்கு விலக்குக்களும் சில இருந்தன. ஆணுல், பொதுவாகக் குடியேற்ற நாடுகள் இங்கிலந்திலிருந்தல்லாது எப்பொருள்களையும் இறக்குமதி செய்யலாகாது; இங் கிலந்துக்கு மாத்திரமே தங்கள் விளைபொருள்களை ஏற்றுமதி செய்யலாம். சில விளை பொருள்களை (உதாரணமாக, தானியம் போன்றவற்றை) அவைகள் ஏற்று மதி செய்யலாகாது. ஆரம்ப நிலையிலுள்ள சில கைத்தொழிற் பொருள்கள், இங் கிலந்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுடன் போட்டி இடக் கூடுமெனும் அச்சத்தால், ஆரம்பத்திலேயே நலிக்கப்பட்டன. இக்காலத்தினர் க்கு இச்சட்டங்கள் யாவும் கொடூரமானவையாகவும் சுயநலங்கருதியவை யாகவுந் தோற்றும். ஆனல் அக்காலத்தே அவை பெருங்கோபமூட்டவில்லை. அவை அக்காலக் கருத்துக்களுக்குப் பொருத்தமாயிருந்தன. அவை ஒரு தலைச்சார்பானவை அல்ல. குடியேற்ற நாடுகள் குறைந்த தீர்வைச் சலுகைகள் அனுபவித்தன. அவைகள் சில பொருட்களிற் பூரணமான முழுவுரிமையைத் தாய்நாட்டுச் சந்தையிற் பெற்றிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டங்கள் கடுமையாகக் கையாளப்படவில்லை. கள்ளக்கடத்தல் சில குடியேற்ற நாடுகளின் பொதுத் தொழிலாயிருந்தது. வியாபாரக் கட்டுப்பாடுகளை விரும்பாத அதாம்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம் 277.
சிமிதுதானும், 'பெரிய பிரித்தானியாவின் பூட்கை அதன் குடியேற்ற நாடுகளைப் பொறுத்த அளவில், மற்ற நாட்டினரது பூட்கைபோலவே வியாபாரக் குறிப்பை உடையதாயினும், பொதுவாக மற்றெந்த நாட்டுப் பூட்கையினும் அது தாாாள மானதாய், கொடுமை குறைந்ததாய் உளது? என ஒப்புக்கொள்ளுகிறர்.
மேலும், பிரான்சியர் கனடாவிலும் உலூசியானுவிலும், இசுப்பானியர் புளோ றிடாவிலும் இருந்த காலமளவும், ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகள் தங்களுக்குப் பாதுகாப்பு அளித்த தாய் நாட்டுடன் சச்சரவு செய்ய இயலவில்லை.
நாம் முன்பு கண்டவாறு 1763 பரிசு அமைதிப் பொருத்தனையின் பயணுகக் குடியேற்றங்கள் தற்காப்புப்பற்றிய எவ்வித பயத்தினின்றும் விடுவிக்கப்பட்டன. கனடாவிலிருந்து பிரான்சியரை வெளியேற்றியது ஒரு தவரு ? அக்காலத்தி விருந்த அறிவுக் கூர்மை படைத்த குழ்வல்லோனை வேசன் என்பான் அதைப் பற்றி ஒரு சிறிதும் ஜயுறவில்லை. 'அதன் குடியேற்ற நாடுகளை அச்சுறுத்திவந்த ஒரேயொரு தடையை நீக்கியதற்காக விரைவில் இங்கிலந்து வருந்தும். அதன் பாதுகாப்பு அவைகளுக்கு இனித் தேவையில்லை. அக்குடியேற்றங்களின் பொருட் டுத் தான் ஏற்ற பொறுப்புக்களைத் தாங்குவதற்குப் பொருளுதவி அளிக்கும்படி இங்கிலந்து தன் குடியேற்ற நாடுகளைக் கோரும். அதற்கு மாறுத்தரமாக அவை கள் தம் படிவு நிலை துறக்கும்' என அவன் கூறினன். இந்த அறிவுக் கூர்மை படைத்த பிரான்சியனின் கருத்துக்களைச் சில ஆங்கிலேயருங் கொண்டிருந் தனர். ஆயின் அவற்ருற் பயனிலாது போயிற்று.
உண்மையாகவே 1763 இல், தன்னிங்கவியக்கம் எதுவும் நிகழக் கூடியதாகத் தோற்றவில்லை. இந்நாடகத்தில் முக்கியமான பங்கு கொண்ட ஒருவனை பெஞ்ச மின் பிராங்கிலின் இவ்வெண்ணத்தைப் பரிகசித்தான். “குருதித் தொடர்பாலும் நலவொற்றுகையாலும் அன்புப்பிணைப்பாலும் தாய் நாட்டொடு பற்பல உறவுகள் கொண்டவை இக்குடியேற்றங்கள். அன்றியும், அவை தாம் ஒன்றையொன்று நேசிப்பதினும் கூடிய அளவிற்கு அந்நாட்டை நேசிப்பது யாவரும் அறிந்ததே ; எனின், அவை அத்தாய் நாட்டிற்கு மாமுக ஒன்றுபடக் கூடுமெனும் ஆபத்து இருப்பதாக எண்ணுவது ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்ரு ? அப்படியான நோக் கத்திற்காக அவைகள் ஐக்கியம் பூணுவதென்பது நிகழ்தற்கரியதொன்முக இருப் பதொடு, நிகழமுடியாததுமாகும்’ என அவன் கூறினுன்.
கிான்வில்லின் பூட்கை
அரசியலில் வருவது கூறுதல் எவ்வளவு முன் யோசனையற்ற செய்கையாகும் ! 1763 இல், பியூற்று பிரபுவின் பின், யோட்சு கிரன்வில் முதலமைச்சனனுன். கிரன்வில் ' பொதுமக்களுக்கு உதவி செய்ய இதய பூர்வமாக விரும்பினன்? என்பதைப் பேக்கும் ஒப்புக்கொள்ளுகிறன். அவன் ஓர் அரசறிஞனுக்குரிய மனப்
பான்மையின்றி சட்டவாணர்க்குரிய மனப்பான்மையுடையவன். அவன் பதவி

Page 149
278 அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
யேற்றபொழுது இங்கிலந்து தன் குடியேற்ற நாடுகளின் பாதுகாப்பிற்காகப் பட்ட கடனில் அமிழ்ந்திருப்பதைக் கண்டான். இந்தியரின் தாக்குதல்களி லிருந்து குடியேற்றப் பாதுகாப்பை உறுதியாக்க அமெரிக்காவிற் சில ஆங்கிலப் படைத் தொகுதிகளை நிலைநிறுத்துவது இன்றியமையாதென அவனுக்கு அறிவுரை கூறப்பட்டது. அப்படிச் செய்ய ஏற்படும் செலவிற்காகத் தாங்களே விரும்பி உதவிப்பணம் கொடுக்கும் திட்டத்தைக் குடியேற்ற நாடுகளின் மன்றங் கள் நிராகரித்தமையையும் அவன் அறிந்தான். இன்னும் கள்ளக் கடத்தல் பெரிதும் பரவி நிலவியமையால் ஓர் ஆண்டில் 2,000 தங்கப்பவுண் வருவாய் சேர்க்க 8,000 தங்கப்பவுண் செலவாகிறதென்பதையுங் கண்டுபிடித்தான்.
இந்தச் சூழலில், நடைமுறையிலிருக்கும் வியாபாரச் சட்டங்களைக் கண்டிப் பாகக் கடைப்பிடிப்பதென்றும், அமெரிக்காவில் 7,500 ஒழுங்கான படைஞரை யும் மேற்கிந்தியத் தீவுகளில் 2,500 படைஞர்களையும் நிறுத்தி வைப்பதென்றும் அவன் தீர்மானஞ் செய்தான். 1764 இல் வர்த்தகச் சட்டங்களைத் திருத்தி உறு திப்படுத்த ஒரு விதியை நிறைவேற்றி, படைத்தாபனச் செலவின் மூன்றிலொன் முகிய 1,00,000 தங்கப்பவுணை, குடியேற்ற நாடுகளின் ஆவணங்கள் மீது விதிக் கப்படும் முத்திரை வரி மூலம் சேர்க்கத் தான் எண்ணியிருப்பதாக அறிவித்தல் கொடுத்தான். 1765 இல் முத்திரை விதி நிறைவேற்றப்பட்டது. இங்கிலந்தில் இதை எவரும் கவனிக்கவில்லையெனலாம்.
குடியேற்றங்களின் எதிர்ப்பு
இதற்கு எதிர்மாமுக அமெரிக்காவிலோ இந்த முத்திசைவிதிக்கு மிகவும் பல மான எதிர்ப்பு உண்டாகினமையால், 1766 இல் கிரன்வில்லுக்குப் பின் முதல மைச்சனன உரக்கிங்காம் பிரபுவினல், அது விலக்கப்பட்டது. சட்டமாக்கல், வரி விதித்தல் ஆகிய இரண்டையும்பற்றி, முடியாட்சிக்குட்பட்ட எல்லா உடைமை கள் மீதும் பாராளுமன்றத்தின் இறைமையை உறுதிப்படுத்தும் நோக்கமாகப் பிரகடன விதி நிறைவேற்றப்பட்டது. இதனல், பிரித்தானியப் பாராளுமன்றத் தின் கோபவுணர்ச்சி தணிந்தது. உரக்கிங்காம் பூட்கைக்கு உண்மையான கருத் தாவாகிய பேக்கு, குடியேற்ற நாடுகள் பூரணமான மனத்திருத்தி அடைந்ததாக விளம்பினுன்
ஆயின் உண்மை அதுவன்று. வெறுக்கப்பட்ட முத்திசை வரி விலக்கப்பட்டது உண்மையே. ஆனல் வர்த்தகச் சட்டங்கள் எஞ்சியிருந்தன. அன்றியும், அரசனு டைய இறைமை மாத்திரமன்றி, பிரித்தானியப் பாராளுமன்றத்தின் இறைமை யும் விபரமாகவும் தெளிவாகவும் திருப்பி உறுதிப்படுத்தப்பட்டது. முத்திரை விதியையே குடியேறிகள் எதிர்த்து நின்றனரென்பது உண்மை. குறிப்பாக அதனை எதிர்த்தமை சாதுரியமான செயலே. அது ஓர் புது மாற்றமாதலால் அதை எதிர்ப்பதற்கு ஓரளவு நியாயமுண்டு. அவர்கள் உண்மையில் வெறுத்தது வர்த்தகச் சட்டங்களையேயாம். அவ்வாறு செய்தற்கு அவர்களுக்கு நியாயம் ஒன்றுமில்லை.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம் 279
உள்நாட்டு வரிக்கும் வெளிநாட்டு வரிக்கும், முத்திரை வரிக்கும் சுங்கத் தீர்வை களுக்குமிடையிற் குடியேறிகள் வேறுபாடு காட்டினர். 1767 இல் செதம் அர சாங்கம், ஆண்டொன்றுக்கு 40,000 தங்கப்பவுண் வருவாய் பெறுதற்கெண்ணி, சில சிறிய சுங்கத் தீர்வைகளை விதித்த பொழுது அவர்களுடைய வாதத்திற் பொருளில்லையென்பது புலனுயிற்று. மசச்சுசெற்று உடனே எதிர்த்தது. பொசுத னிற் கலம்பகம் நிகழ்ந்தது. 1776 இல் நோத்து பிரபு, வரியிடும் உரிமையை உறு திப்படுத்துவதற்காகத் தேயிலை வரியை மாத்திரம் வைத்துக் கொண்டு செதம் விகித்த ஏனைய வரிகள் யாவற்றையும் ஒழித்தான். ஆங்கிலப் பொருட்களை ஒன்றி யொதுக்க ஒரு கூட்டவை உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற இறைமையெனும் சட்டக் கோட்பாட்டை மாத்திரம் கைவிடாது, நோத்து பிரபு குடியேற்றக் கிளர்ச்சியாளர்களைத் திருத்தி செய்யத் தன்னுலியன்றது செய்தான். ஆனல் இவையாவும் வீணயின. குடியேற்ற நாடுகளின் சட்டவாணர் அக் கோட்பாட்டை ஒழிக்கத் தீர்மானங் கொண்டிருந்தனர். வணிகர்களும் பொதுமக்களும் வர்த்தகக்
கட்டுப்பாடுகளை நீக்கத் தீர்மானங்கொண்டனர்.
இச்சச்சரவை மசச்சுசெற்றுக்கு வெளியே பாவாதபடி செய்ய நோத்து முயற்சி செய்தான். ஆனல் அதில் வெற்றி பெறவில்லை. யோட்சியா தவிர்ந்த எல்லாக் குடியேற்ற நாடுகளின் பிரதிநிதிகளையுங்கொண்ட ஒரு போவை 1774 இல் கூடி மசச்சுசெற்றின் எதிர்ப்பை ஆதரித்தது.
வழியுரிமைப் போர் (1775-83)
1775 இல் பிரித்தானியப் படைகளுக்கும் குடிப்படைகளுக்குமிடையில் இலெச் சிந்தனில் ஒரு மோதுதல் நடைபெற்றது. அதே ஆண்டிற் பதின்மூன்று குடி யேற்ற நாடுகளின் பிரதிநிதிகளையுங்கொண்ட இரண்டாம் பேரவை நாணய வுண்டியல் வெளியிடவும், ஒரு படையைத்திாட்டவும், அதை யோட்சு உவாசிந் தனின் தலைமையில் விடவும் தீர்மானித்தது. *
பின் நிகழ்ந்த யுத்தத்தில், குறிப்பிடத்தக்க இரு பருவங்கள் உள்ளன. 1775 இலிருந்து 1777 வரை பெரிய பிரித்தானியாவுக்கும் கலகஞ் செய்யும் அதன் பிள்ளைகளுக்குமிடையில் நேர்முகமான சண்டை நிகழ்ந்தது. இக்காலப்பகுதியில், தாய்நாட்டுக்கு வெற்றி கிட்டியதுபோலப் பன்முறை தோற்றியது. ஒரு புறம், சேர் உவிலியம் கவு போன்ற அதன் சொந்த ஏவுநர்களின் வியக்கத்தக்க திறக் குறைவாலும், மறுபுறம், மோசமான நிலைமைகளையும் ஒருவாறு மேற்கொண்ட யோட்சு உவாசிந்தனின் மிகச் சிறந்த தலைமையினலும் வெற்றி கிடைக்கவில்லை.
சுதந்திரப்பிரகடனம் (1776)
எப்படியென்ருலும், வெளிநாட்டுதவி கிடைத்தாலன்றிக் குடியேற்ற நாடு
களின் தோல்வி நிச்சயமெனத் தோன்றியது. அண்மையில் இந்தியாவிலும் வட
அமெரிக்காவிலும் தான் அடைந்த தோல்விகளுக்குப் பழிவாங்கு முகமாகப்

Page 150
280 அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
பிரான்சு அவர்களுக்கு உதவிசெய்ய அவாக்கொண்டது. ஆனல், குடியேற்ற நாடு கள் தம் சுதந்திரத்தை முதலாவதாக முறைப்படி பிரசித்தஞ் செய்ய வேண்டு மென்ற நிபந்தனையை அது விதித்தது. அதற்கிணங்க அந்த மாற்றமுடியாத நடவடிக்கை, 1776 யூலை 4 ஆம் திகதி சுதந்திரப்பிரகடனம் மூலம் நிறைவேறி
tip.
அந்தப்பிரகடனம் உலக வரலாற்றில் ஒரு புதிய சகாத்தத்தைக் குறிக்கும் ஆவணங்களிலொன்ருகும். மனிதனின் பாாதீனப்படுத்த முடியாத உரிமைகளை உறுதிப்படுத்தலிற் பிரான்சிய செல்வாக்கின் அமிசங்கள் இவ்வாவணத்திற் காணப்படுகின்றன. ஆனல் அண்மையில் துயருண்டாக்கிய குறைகளை அமைதி யாக வரிசைப்படுத்திக் கூறுவதில் அது ஆங்கில உரிமை முறியைப்போல் ஒழுங்கானதாயிருக்கிறது. முடிவான பந்தியின் தொடக்கம், ‘ஆகையால், பொதுப் பேரவையிற் கூடிய ஐக்கிய அரசுகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், உலகத்திலுள்ளோர் யாவருக்கும் மேலான நடுவருக்கு, எங்கள் நேர்மையான நோக்கங்களைப்பற்றி மேன்முறையீடு செய்து, இந்தக் குடியேற்ற நாடுகளின் நன் மக்களின் பெயரிலும் அவர்கள் அதிகாரப்படியும், ஆசாரப்படி வெளியிட்டு விளம்பல் செய்வதாவது, இந்த ஐக்கியக் குடியேற்ற நாடுகள் சுதந்திரமான சுயேச்சையரசுகளாக இருக்கின்றன, இருக்கவேண்டியன, என்பதே.
'உலகத்தில் ஒரு புதிய நாடு தோற்றிவிட்டது . . . . . . ஆங்கில குலத்தின் அரசியல் ஐக்கியத்திற்கு மாற்றமுடியாதபடி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. * ஆனல் இந்தப் புதிய நாட்டினம், கட்டுக்கோப்புடைய ஒர் அரசாகத் தன்னை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்பணியை ஆற்றச் செல்லுமுன் அது யுத்தத்தை ஒரு வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இங்கிலந் துக் கெதிராக ஏற்பட்ட உலகக் கூட்டிணைப்பால் அது நிறைவேற்றப்பட்டது. இலபயற்று என்பான் தொண்டர்களுடன் ஏலவே அமெரிக்காவுக்குச் சென்றிருந் தான். 1777 இல் சாதோகாவில் பேகொயின் என்பான் சரணடைந்தபின், பிரான்சு முறைப்படி யுத்தப்பிரகடனஞ் செய்தது (1778). 1779 இல் இசுப் பெயின் அதனுடன் சேர்ந்தது. பிரான்சு, இசுப்பெயின் எனுமிவற்றின் கப்பற் படைகள் ஒன்று சேர்ந்து சிறிது காலம் ஆங்கிலேயக் கால்வாயில் ஆதிக்கத் தைப் பெற்றிருந்தன. இந்தியாவில் ஆங்கிலரின் வைரித்த எதிரியும் பிரான்சின் இதயபூர்வமான நட்பாளனுமான மைசூர் ஐதர் ஆவி, 1780 இல், கருநாடகப் பகுதி|மீது படையெடுத்தான். அவ்வாண்டிலேயே பிரசிய அரசன் மகா பிரதரிக்கு, நடுநிலைமை நாடுகளுக்கெதிராக இங்கிலந்து நிறைவேற்றிய முற்று கையைக் கண்டிக்குமுகத்தாற் படைபூண்ட நடுநிலைமைக் கூட்டவையை உரு வாக்கி, 1761 இல் இங்கிலந்து தன்னைக் கைவிட்டதற்காகப் பழிவாங்கினன். இக்கூட்டவையை இரசியா, சுவீடன், தென்மாக்கு, ஒசுத்திரியா, நேப்பிள்,
*இலெக்கி எழுதிய “18 ஆம் நூற்றண்டு இங்கிலந்து’ எனும் நூலின் 3 ஆம் அதிகாரம், 460 ஆம் பக்கம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம் 281
போத்துக்கல் ஆகிய நாடுகள் சேர்ந்தன. ஒல்லந்து இக்கூட்டவையைச் சேர்ந்த பொழுது இங்கிலந்து அதன் மீது யுத்தப்பிரகடனஞ் செய்தது. இங்கிலந்து உலகத்தையே எதிர்த்துப் போர் செய்ய வேண்டி இருந்தது. சிபுரோத்தாைப் பிரான்சும் இசுப்பெயினும் விடாது தாக்கியும் அது மிகவும் தீரத்துடனும் வெற்றி யுடனும் எதிர்த்து நின்றது. ஆனல், தலைமைப் பதவியை 1776 இல் ஏற்றுக் கொண்ட கோன்வாலிசுப் பிரபு, 1781 ஒற்ருேபர் 19 ஆம் திகதி யோக்குரவுண் எனுமிடத்தில் அமெரிக்கத் தரைப்படையும் பிரான்சிய கப்பற்படையும் ஒன்று சேர்ந்து நடத்திய தாக்குதலுக்கு எதிர் நிற்கவியலாது சரணடைய வேண்டிய தாயிற்று. 1782 இல், அயலந்து சட்டமியற்றுஞ் சுதந்திரத்தைப் பிடுங்கிற்று. இங்கிலந்து பகைவர்களாற் குழப்பட்டுத் தோல்வியடைந்தது. 1783 இல், பரி சிலும் வேர்சையிலும் அமைதிப் பொருத்தனைகளுக்கு இங்கிலந்து ஒப்பமிட்டது. முதற் பொருத்தனையின்படி பதின்மூன்று குடியேற்ற நாடுகளினதும் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இரண்டாம் பொருத்தனையின்படி, இந்தியாவிற் பாண்டிச்சேரியையும் வேறு நான்கு நகரங்களையும், வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையிற் குறித்த சில மீன்பிடிக்கும் உரிமைகளுடன் சென்பியர், மிக்கேலன் தீவுகளையும் மீண்டும் பெற்று, தொபாகோ, சென்லூசியா என்னு மிடங்களையும் பிரான்சு ஈட்டியது. இசுப்பெயின் பகமாதீவுகளைத் திருப்பிக் கொடுத்து, மினுேக்காவையும் புளோறிடாப் பகுதிகளையும் திருப்பிப் பெற்றுக் கொண்டது. இங்கிலந்து தோல்வியடைந்ததுமல்லாமல் அவமானமும் அடைந் தது. பிரான்சு பழிவாங்கிக்கொண்டது; ஆனல் நிதிமுறிவும் அரசியல் முறிவும் நோக்கி ஒருபடி முன்னேறியது.
மாற்ற யாப்பு
ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகள் சுதந்தி#மடைந்தன. ஆனல் அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கும் பணி எஞ்சி நின்றது. யுத்தங்காரணமாக ஓரளவு ஐக்கியம் தேவைப்பட்டது. 1771 இல் பேரவையால் ஒப்புக்கொள்ளப்பட்ட நாட்டுக் கூட்டிணைப்புக் கூறுகள் 1781 மாச்சு 7 ஆம் திகதி நாடுகளால் முறைப் படி ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனல் அலச்சாந்தர் அமிற்றன் கூறியவாறு ‘இக் கூட்டிணைப்பு யுத்தத்திற்கோ அமைதிக்கோ ஏற்றதன்று. அது பதின்மூன்று சுயாதீனமான குடியரசுகளுக்கிடையில் நிறைவேறிய தற்காலிகக் கூட்டிணைப்பே யன்றிப் பிறிதொன்றன்று. யுத்தம் நிலைத்த காலம்வரையும் கூட்டிணைப்பு உறுதி யாயிருந்தது; ஆனல் இவ்வமைப்பு எவ்வளவு கேவலமாக இயங்கிற்று என்ப தைப்பற்றி, உவாசிந்தன் நம்பிக்கையிழந்து செய்த வேண்டுகோள்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அமைதி நிறைவேறியபின் நாட்டுக் கூட்டிணைப்பின் எல்லாக் கேடுகளும் குறைபாடுகளும் வெளித்தோற்றின. ஒரு சிறந்த அமெரிக் கன் கூறியதுபோல் நாடு முழுமையும் நிச்சயமாகவும் தீவிரமாகவும் ஆட்சியறவு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நிதியிலும் நாடுகளிடை வணிகத்திலும் பிற

Page 151
282 அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம்
நாட்டலுவல்களிலும் ஏற்பட்ட குழப்பம், கடினமான மனமுள்ள பிரிப்புளப் பான்மையோரின் எதிர்ப்பையும் ஈற்றில் முறித்தது. 1787 மே மாதத்தில் பிலதெல்பியாவில், உவாசிந்தன் தலைமையில் ஒரு யாப்பமைக்கும் சமவாயம் கூடி, ஒரு யாப்பை வரைந்தது. ஈற்றில் இந்த யாப்புமுறை ஏற்கப்பட்டு, 1788 இல் செயற்பட்டது.
கூட்டாட்சியரசு
செயலளவில் இந்த யாப்பு பதின்மூன்று சுயாதீனமான குடியரசுகளுக்கிடை யில் நிறைவேறிய ஓர் பொருத்தனையாகும். அரசுகளுள் (இப்போது இருப்பன வற்றின் எண்ணிக்கை 48) நாலில் மூன்று பங்கானவை இசைந்தாலன்றி, யாப் பின் ஒரு சொல்லேத்தானும் மாற்ற முடியாது. புதிய கூட்டாட்சி அரசாங்கத் துக்கு, யாப்பினுல் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட்டுள. எஞ்சிய அதிகாரங்கள் யாவும் அரசுகள் கையிலும் மக்கள் கையிலுந் தங்கியுள. இந்தக் கூட்டாட்சிச் சாதனம் அரசியல் நிறுவகங்களைப் பெரிதும் விவரிப்பதாய் அமைந் அளது. நோல்முறைப்படி தெரியப்படவேண்டிய குடிப்பதிக்கு நிருவாக உரிமை கள் அளிக்கப்பட்டுள. நிருவாகம், நீதி பரிபாலனம் ஆகியவற்றிலிருந்து செவ்வனே வேருக்கப்பட்டுள்ள சட்டவாக்கவதிகாரம், மூப்பவை, பிரதிநிதிகள் சபை எனும் இரு சபைகளைக்கொண்ட பேரவையிடம் விடப்பட்டுளது. ஒவ்வோர் அரசிலிருந்தும் இரு பிரதிநிதிகளைக்கொண்ட முன்னையது பொருத்தனை செய்யும் அதிகாரத்திலும் குறித்த சகாய உரிமைகளிலும் குடிப்பதியுடன் பங் கெடுத்துக்கொள்ளுகின்றது. பின்னையதற்கு நிருவாகத்தைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அதனுடன் முறையான பற்றிணைப்புமிருக்கவில்லை. யாப்பை விளக்கிப் பொருள் கூறுதல் உட்பட மிகப் பரந்த அதிகாரம் நீதித்துறைக்கு அளிக்கப்
பட்டது. அதன் சுயேச்சை கண்டிப்பாகக் காக்கப்பட்டது.
ஐ. அ. அரசுகளின் கூட்டாட்சி யாப்பு, அதற்கு நிறைவுறுப்பாயிருக்கும். அரசுகளின் யாப்புக்களுடன் சேர்த்துப் படித்தால் மாத்திரம் தெளிவாக விளங் கும். அமெரிக்கா முற்றிலும் புதிய வகையான ஒரு குடியாட்சியை அளித்து வள மூட்டியதெனக் கூறுவது இந்த இடத்திற் போதுமானது. இங்கிலந்தின் முடி யாட்சியுடைய, பாராளுமன்றத்திற்குரிய, ஒற்றையாட்சிக்குரிய குடியாட்சியைப் போலிராது அமெரிக்கக் குடியாட்சி, குடிப்பதி, நெகிழா யாப்பு, கூட்டாசு ஆகியவற்றையுடையதாயமைந்தது. அது தான் தொழில் செய்யும் சூழலுக்கு மெத்தவும் பொருத்தமானது என்பதைத் தெளிவாக்கிவிட்டது.

அத்தியாயம் 23
பழைய ஆட்சியின் முடிவு
தண்ணளித் தனியாட்சி
முக்கியமான திகதிகள் :
1715
1720
1734
735-87
743
750-77
1754
759-88
763-88
1765-90
1765-90
1765-90
1771-92
1771
1774
1774-6
இயேசுதர் சிசிலியிலிருந்தும் போத்துக்கலிலிருந்தும் (1768) பிரான்சிலிருந்தும் (1763), நேப்பிளிலிருந்தும் (1768), நாடுகடத்தப்படல். பதினன்காம் கிளமந் தால் அச்சபை ஒழிக்கப்பட்டது (1773). பரிசுப்பாராளுமன்றம் போந்துவாசுவுக்குக் கடத்தப்பட்டது. வொற்றயரின் “ ஆங்கிலநாடு பற்றியநிருபங்கள்.” இரு சிசிலிகளில் தனுக்கியின் சீர்திருத்தம்.
மொந்தெசிக்கியூவின் “ சட்டங்களின்சாரம்.” போத்துக்கலிற் போபால் என்பானின் சீர்திருத்தங்கள்.
சமூக ஒப்பந்தம்” என்னும்
* சமத்துவமின்மையின் தோற்றம்பற்றிய பேருரை ” “
நூல்களை உரூசோ பிரசுரித்தல். இசுப்பெயினிற் சீர்திருத்தங்கள். பிரசியாவிற் பிரதரிக்கின் சீர்திருத்தங்கள். இலியோபோல் தசுக்கனியைச் சீர்திருத்துதல். தென்மாக்கிற் சீர்திருத்தங்கள். இரண்டாம் யோசேப்பின் சீர்திருத்தங்கள். மூன்றம் கசுத்தாவசு சுவீடினைச் சீர்திருத்துதல். பிரான்சிற் பாராளுமன்றங்களின் வீழ்ச்சி. பிரான்சில் பாராளுமன்றங்கள் மீண்டும் தாபிக்கப்படல்.
தேகோ என்பானின் அமைச்சு,
புதிய உலகத்திற் பிறந்த குழவியிளம் நாட்டைப்பற்றிக் கூறுவதைவிட்டு, ஐரோப்பாவிலே பழைய ஆட்சியின் வீழ்ச்சியைப்பற்றிக் கூறுவாம். என்ருலும், பழைய அரசாங்கங்கள் தங்களுடைய இறுதிக் காலத்திற்போன்று வேறெக் காலத்திலாவது கூடிய அறிவுடைய செயல்களில் ஈடுபட்டதுமில்லை; அவ்வாறே, தங்கள் குடிகளின் நல்வாழ்வை விருத்தியாக்க வேறெக்காலத்தினும் அத்துணை கவலை கொண்டதுமில்லை.
தண்ணளித் தனியாட்சி
பிரான்சியப் புரட்சியே ஐரோப்பாவின் சீர்திருத்த காலத்தைத் தொடக்கிற்
றெனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. இக்கொள்கை உண்மையான ஒழுங்
குக்கு நேர்மாமுனது. சீர்திருத்தமே புரட்சியைத் தொடங்கிற்று. விரைவில்

Page 152
284 பழைய ஆட்சியின் முடிவு
முடிவடைந்துகொண்டிருந்த அச்சகாத்தத்தின் கடைசி ஆண்டுகளை விளங்க வைக்குஞ் சிறப்பியல்பு யாதெனின், பாலனத்தைச் சீர்திருத்துவதில் எங்குங் காணப்பட்ட ஆர்வமேயாம். இக்காரணத்தாற் பதினெட்டாம் நூற்றண்டைத் 'தண்ணளிவல்லாட்சிக் காலம்' என்பர். ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா அரசாங்கங்களும் அக்காலத்தே உண்மையாகத் தனியாட்சி படைத்தவாயிருந் தன. இவ்வத்தியாயம் கூறுவது போல, அவைகளிற் பெரும்பாலானவை அரசாங் கத்தின் வினைத்திறனை விருத்தி செய்யவும் மக்களின் நிலைமையைச் சீர்ப்படுத்த வும் அவாவின. பிரான்சிய மக்களின் துன்பங்களைத் தணிக்கவும் அவர்களுடைய பொருளாதார சமூக நிலைமைகளைச் சீர்ப்படுத்தவும் கையாண்ட வழிவகைகளே அவர்களைக் கலகஞ் செய்யும்படி தாண்டினவெனத் தி தொக்குவில் என்பான் வாதிக்கிமுன். அது எப்படியானுலும், சீர்திருத்த காலம் புரட்சிக் காலத்திற்கு முந்தியதென்பதே உண்மையாகும்.
இத்தகைய பொதுவான இயக்கத்திற்கு ஒரு பொதுப்படையான காரணத்தை நாடிக் காணவேண்டும். ஐரோப்பா முழுவதும் (இரசியாவிலும்) உள்ள படித்த மக்கள் எல்லோரின் உளத்திலும் பிரான்சிய தத்துவ ஞானம் செலுத்திய செல் வாக்கே காரணமாயிருக்கலாம். எல்லா அரசவைகளிலும் எல்லாச் சூழியலிலும் பயன்படுத்தப்பட்ட மொழி பிரான்சிய மொழியாகும். பிரான்சிய தத்துவ அறிஞர் வெளிப்படுத்திய கருத்துக்கள், பதினேழாம் நூற்றண்டில் உலொக்கு என்பானுலும் வேறு ஆங்கில நூலாசிரியர்களாலும் தூண்டப்பெற்றனவே யாகும். மொந்தெசிக்கியூ என்பான் (1689-1755) இங்கிலந்தையும் அதன் அரசியல் நிறுவனங்களையும் ஆர்வத்துடன் மெச்சுவோனுயிருந்தான். ஓர் அமெரிக்கப் பத்திரிகைத் தொழிலாளன், "மகா காவியத்தைப்பற்றிக் கற்பிக்கக் கருதும் எழுத்தாளர்களுக்கு ஒமர் எப்படியோ, அப்படியே மொந்தெசிக்கியூவுக் குப் பிரித்தானிய யாப்பு இருந்தது' எனக் கூறினன். அவன் கூறியது முழுவதும் உண்மையே. அவன் பார்வையில், அவன் கூறியபடி இங்கிலந்து 'அரசியற் சுதந்திரத்தை எடுத்துக்காட்டும் பளிங்கு போன்றது. மொந்தெசிக் கியூ இங்கிலந்திலே தான் கற்றதை ஐரோப்பாக் கண்டத்திற்குப் போதித்தான்.
வொற்றயரும் (1694-1774) ஆங்கில அரசியன் முறையினை உள்ளவாறுணர்ந்து போற்றினன். பரிசுப் பாராளுமன்றத்தின் ஆணைப்படி பகிரங்கமாக எரிக்கப் பட்ட 'ஆங்கில நாடுபற்றிய நிருபங்கள்' எனும் அவன் நூலே (1734) அவன் பாராட்டுக்குச் சான்றுபகரும். மொன்தெசுக்கியூ, வொற்றயர் என்பார் மூலமாகவே ஆங்கில தத்துவ ஞானம் ஐரோப்பிய மக்களின் சிந்தனை வளர்ச் சிக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. வொற்றயர் திருச்சபையையே குறிப் பாகத் தாக்கினன். அவன் நசிக்கவிரும்பிய இழி பொருள் கிறித்தமதமன்று; அறிவாராய்ச்சி, பேச்சு ஆகிய சுதந்திரங்கள் மீது கிருச்சபை செலுத்திய வல்லாட்சியையே அவன் அழிக்கவிரும்பினன். ஆங்கிலக்குவேக்கர் எனும் சமயக்கட்சியினரை அவன் பெரிதும் போற்றினன். அவன் காலத்திற் பிரான் சிலே தோன்றிய சிறப்புடைய நூல்களிற் பெரும்பாலானவற்றை எரித்தோ ஒடுக்கியோ விட்ட திருச்சபையை அவன் மிகவும் வெறுத்து இகழ்ந்தான்.

பழைய ஆட்சியின் முடிவு 285
திருச்சபையைப் பகைத்தானெனினும், வொற்றயருக்கு முடியாட்சியிற் பூரண நம்பிக்கையிருந்தது. சுதந்திரமெனும் நொய்தான பூண்டைக்காப்பாற்றுதலும், தகவான சீர்திருத்த முறைகளை அனுசரித்துக் குடிமக்களின் நிலைமையைச் சீர்ப் படுத்தலும் அறிவுபடைத்த அரசர் செய்யவேண்டிய கடமைகளென்பது அவன் கருத்து.
அவன் எதிர்பார்த்தது விணகவில்லை. சீர்திருத்தமே பதினெட்டாம் நூற் முண்டு ஆட்சியாளரின் மூலமந்திரமாக இருந்தது. ஆயின், அச்சீர்திருத்தம் மேலிடத்தோர் வகுத்த சீர்திருத்தமாகும். அதாவது, ஆட்சிசெய்வோர் மக்களுக்கு அளிக்கும் நன்கொடையாகும்; அது ஏறக்குறைய எங்கும் நடை பெற்றது. 1750 இற்கும் 1777 இற்குமிடையில் போம்பால் கோமகன் போத்துக் கலிலே தொடரான பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினன். மூன்ரும் சாள்சு, தன் அமைச்சன் தனுக்கி (1735-77) என்பானின் உதவியுடன் நேப்பிளிலும் சிசிலியிலும் சீர்திருத்த வேலையைத் தொடங்கி, காம்போமானேசு, புளோரிடாபிளாங்கா, ஆராண்டா என்பாரின் உதவியுடன் இசுப்பெயினிற் சீர்திருத்தத்தை ஒப்பேற்றினன். தன் தகப்பனன முதலாம் பிரான்சிசுப் பேரரசனின் பின் 1765 இல் தசுக்கனியின் மாபெரும் கோமகனன இலியோபோல், பெக்கேரியா வின் மனிதப் பண்புவாய்ந்த தத்துவங்களைத் திரட்டி ஒரு கோவையாக வெளி யிட்டான். அக்கோவை இலியோபோல் பெயரால் வழங்கிற்று. இத்தகைய இ?ர் திருத்தப் பணி அவன் தாய் மரியா தெரிசாவின் ஆணைப்படி மிலானில் நடந் தேறியது. இரண்டாம் கதரின் சேர்மன் இளவரசியாயும் இரசிய சாரினவாகவும் இருந்தாளாயினும், தைத்தரோவின் முற்போக்கான கருத்துக்களையும் (1712-84) பிரான்சிய கலைக்களஞ்சியத் தொகுப்பாளரின் முற்போக்குக் கொள்கைகளையும் இாசியாவிலும் நடைமுறைக்குக் கொணர்ந்தாள். தென்மாக்கிற் சிரூவென்சே, பென்சுடோபு என்பார், பித்துப்பிடித்த கங்கள் அரசன் ஏழாம் சாள்சு (17861808) பெயரிற் பல நன்மை பயக்கும் சீர்திருத்தங்களை நிறைவேற்றினர். அவர் கள் விழுமியோரின் அளவு மீறிய சிறப்புரிமைகளைக் குறைத்தனர். சமயசமரசத் தையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் நிலைநாட்டினர். கல்வியை விருத்தி செய்தனர். வரிமுறை, நிதிமுறை என்பவற்றையும் திருத்தியமைத்தனர்.
சுவீடினில் மூன்ரும் கசுத்தாவசு
மூன்ரும் கசுத்தாவசு எனும் பெரிய அரசன் (ஏலவே கூறப்பட்டவாறு) போலந்திற்கு ஏற்பட்ட கதியிலிருந்தும் சுவீடினக் காப்பாற்றினன். அவன் அரசெய்தற்கு அரை நூற்றுண்டுக்கு முன் சுவீடினில் ஆட்சியறவு நிலவியது. முடிவலிமையற்றதாயிருந்தது. உண்மையான அதிகாரம் யாவுங் கைக்கூலிவாங் கும் இயல்புள்ள உயர் குடியினரிடம் இருந்தது. ஆனல் விழுமியோர் கன்னை களாகப் பிரிந்திருந்தனர்; கூடிய மதிப்புக்குரிய தொப்பிக்காரர்? என்போர் பிரான்சுடன் பழைய நட்புறவைப் பேணவிரும்பினர்; ' இராக்குல்லாக்காரர்? என்போர் உதவிக்கு இரசியாவை எதிர் பார்த்தனர். சுவீடினில் இரசியாவின்

Page 153
286 பழைய ஆட்சியின் முடிவு
ஒரேயொரு நோக்கம் யாதெனின், போலந்திற் போன்று, ஆட்சியறவை நீடிக்கச் செய்து சுவீடினே வலுவற்றதாக வைத்திருப்பதே. 1764 இல் இரண்டாம் கதரின் தீமையான தனது நோக்கத்தை நிறைவேற்றப் பிரசிய அரசன் இரண்டாம் பிரதரிக்குடன் ஓர் இரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றினன்.
1772 இல் மூன்மும் கசுத்தாவசு நிறைவேற்றிய அரசியற்றிடீர்ப் புரட்சியால் அவள் நோக்கம் தோல்வியடைந்தது. முடியின் அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டிய பின், ஒரு பெரிய சீர்திருத்தத்திட்டத்தை நிறைவேற்ற அதைப் பயன் படுத்தினன். அவன் அரசாங்க சேவையைப் புனிதப்படுத்தி, கைக்கூலி வழக்கத் திற்கு முற்றுப்புள்ளியிட்டு, சுரங்கம் தோண்டுதல், விவசாயம், கைத்தொழில் என்பவற்றை ஊக்கப்படுத்தி, வெளிநாட்டு வணிகத்தை விருத்தி செய்து, கல்வி யைச் சீர்ப்படுத்தி, கலைகளை வளர்த்து, சமயப்பொறைத்தத்துவத்தைப் பிரசித் தம் செய்து, பத்திரிகைகளுக்குச் சுதந்திரமளித்து, நீதிபரிபாலனத்தைத் திருத்தியமைத்து, சித்திரவதை செய்வதை ஒழித்தான். 1789 இல் இரண்டாம் அரசியற்றிடீர்ப் புரட்சியால் விழுமியோர்க்கு மாருக இடைவகுப்பினரதும் உழ வோரினதும் வலிமையைப் பெருக்க முயற்சி செய்தான். ஆனல் விழுமியோர் அவனைப் படுகொலை செய்யச் சதி செய்து, 1792 இல் வெற்றிகரமாக அதைச் செய்து முடித்தார்கள்.
இரண்டாம் யோசேப்பு
பிரசியாவில் இரண்டாம் பிரதரிக்கின் சீர்திருத்த முயற்சிபற்றிச் சில ஏலவே கூறப்பட்டன. ஆனல் அவனும் இரண்டாம் யோசேப்புப் பேரரசனிலும் குறைந்த அளவிற்கே தண்ணளித் தனியாட்சியாளர்க்கு எடுத்துக் காட்டாக விளங்கினன். அபிசுபேக்கரின் ஆணிலப்பகுதிகள், பல சேர்ந்து அமைந்த தன் மையினவாதலின், சீர்திருத்தும் வேலை ஆங்குப் பெரிதும் கடினமாகியது. யோ சேப்பு ஆற்றிய முயற்சிகளில், வெற்றியிலும் பார்க்கத் துணிவும், செயலாற்றுந் திறனிலும் பார்க்க ஆர்வமும் கூடிய அளவிற் காணப்பட்டன. அரசசீர்திருத்தக் காரர்களில் அறிவுக் கூர்மைமிக்காருள் ஒருவணுகிய அவன் சோதரனும் பின்பட் டம் பெற்றேனுமாகிய தசுக்கனி இலியோபோல், அவன் அன்னை மரியா தெரிசா ஆகியோரின் சீர்திருத்த முறைகளினின்றும் அவன் முறைகள் வியக்கத்தக்க அளவுக்கு வேறுபாடுள்ளனவாயிருந்தன.
இயேசுதர் வீழ்ச்சி
அப்பெரிய இராணி கிருச்சபையைச் சீர்திருத்தும் நோக்கமாக ஒரு பெரிய திட்டத்தை ஒப்பேற்றினுள். அவள் கடுமைவாய்ந்த மதவிசாரணை மன்றத்தை ஒழித்து விட்டு, குருவாயத்திற்குரிய சிறப்புரிமைகளைப் பெரிதும் கட்டுப்படுத்தி, திருத்தொண்டர் திருநாள்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இயேசு தரை வெளியேற்றினள். இயேசுதர் திருச்சபை தீவிரமாகச் சீர்கெட்டுவந்தது. அதன்

பழைய ஆட்சியின் முடிவு 28
உறுப்பினர்களைப் பெரும்பான்மையான சீர்திருத்தக்காரர் ஐயத்தோடு கவனித்து வந்தனர். சவோய்க்கோமகனல் 1715 இல் சிசிலியிலிருந்தும், 1759 இல் போத்துக்கலிலிருந்தும், 1763 இல் பிரான்சிலிருந்தும், 1767 இல் இசுப்பெயினி லிருந்தும், 1768 இல் நேப்பிளிலிருந்தும் அவர்கள் நாட்டுக்கு வெளியே துரத் தப்பட்டனர். வேறெங்காயினும் அவர்களுக்குப் புகலிடம் கிடைக்குமானல் அவர்களை இந்நாட்டிலிருந்தோ அந்நாட்டிலிருந்தோ வெளியே துரத்துவதிற் பயனின்று. எனவே கத்தோலிக்க வல்லரசுகள் அச்சபையை முற்றுக் நிறுத்திக் கொள்ளும்படி போப்பாண்டவரை நெருக்கின. கத்தோலிக்க வல்லரசு களின் தலைமையைப் பின்பற்றி தனது ஆணிலத்திலே இயேசுதர்க்கெதிராக நடவடிக்கையெடுத்த பாமாக் கோமகனை மதவிலக்குச் செய்வதன்மூலம் பதின் மூன்மும் கிளமந்து குருவாயத்திற்கு விரோதமான அக்கத்தோலிக்க வல்லரசு களின் பூட்கையை எதிர்க்க விரும்பினன். ஒரு பூபன் இளவரசனை இவ்வாறு அவமதித்தற்குப் பழிவாங்கப் பிரான்சு ஆவின்யோன் என்னுமிடத்தைப் பிடித் தது. நேப்பிள் பெனவெந்தோ என்னுமிடத்தைக் கைப்பற்றியது. இவ்விரு நாடுகளும் இசுப்பெயினுடன் சேர்ந்து, இயேசுதர் சபையை ஒடுக்கும்படி மூன் மும் கிளமந்தை வேண்டிநின்றன. 1769 இல் பதின்மூன்ரும் கிளமந்து காலஞ் செல்ல, அவர் பின் போப்பாண்டவர் பதவியை பெற்றவர் பதினன்காம் கிளமந் தாவர். இவர், இந்த அலுவலிற் பெரிய கத்தோலிக்க இறைவர்களுக்குத் திருத்தி அளிப்பதாகத் தேர்தலுக்கு முன்பே வாக்குறுதி செய்திருந்தார். நான்கு ஆண்டு கால தாமதத்தின் பின் அந்த உறுதிவாக்கு நிறைவேற்றப்பட்டது. இயேசுதர் F6) ஒழிக்கப்பட்டது. போப்பாட்சி, ஆவின்யோனையும் பெனவெந்தோவையும் திருப்பிப் பெற்றுக் கொண்டது. ஆச்சரியப்படத்தக்கதாக, இயேசுதர் பிரசியா விலும் இரசியாவிலும் புகலிடம் பெற்று, தங்களுக்கு உதவினேர்களின் ஆதரவிற் குப் பிரதியுபகாரமாக, கல்வின் கொள்கையினனை ஓர் அரசனுக்கும் ஒரு வைதிகப் பேராசிக்கும் கீழ்படிந்து நடக்கும்படி ஆங்கு வாழ்ந்த கத்தோலிக்க போலந்தருக்குப் போதித்தனர். யோசேப்பின் திருச்சபைப் பூட்கை அவன் காலத்தே வாழ்ந்த பிற மன்னர் கொள்கையிலும் முற்போக்குடையதாயிருந்தது. விவிலிய வேதத்தைப் புதிதாக மொழிபெயர்க்கும்படி அவன் உத்தரவு விடுத் தான். பூரண பொறையுடைமைக் கற்பனையைப் பிறப்பித்தான் ; புரட்டெசுத் தாந்தர்களையும் யூதரையும் அரசாங்க சேவையில் அவன் சேர்த்தான். குடியியற் சட்டப்படியான திருமணமுறையை நிலைநாட்டி, கிருமணவிலக்கைச் சட்ட வமைதிப்படுத்தினன். அவன் 700 கன்னியர் மடங்களை ஒழித்து அவைகளைப் படைவீடுகளாகவும் மருத்துவசாலைகளாகவும் மாற்றிவைத்தான். துறவிக ளதும் சந்நியாசினிகளதும் எண்ணிக்கையை 50 சத வீதத்திற்கு அதிகமாகக் குறைத்தான். யோசேப்பு குருமாரின் சிறப்புரிமைகளை மட்டுமல்லாமல் நில மானிய விழுமியோரின் சிறப்புரிமைகளையும் துணிவுடன் தாக்கினன். மானிய முறை இன்னும் உருப்படியாக நிலைத்திருந்தது. ஆனல் யோசேப்பு அடிமைகளை விடுதலை செய்தான். பலவந்த வேலை கொள்ளலை ஒழித்தான். மானியப் பிரபுக் களிடமிருந்து அவர்களுடைய சகல சமூக வாரிய படைச் சிறப்புரிமைகளையும் பிடுங்கி எடுத்தான். வரி விதித்தலை ஒப்புரவாக்கினன். எல்லாவகுப்பினர்க்கும்

Page 154
288 பழைய ஆட்சியின் முடிவு
சட்டத்தின் முன் சமத்துவம் அளித்தான். இவையாவும் அவன் காலத்துப் பொதுவழக்கோடு பொருந்தாவிடினும், அக்காலத்துச் சிந்தனைப் போக்கிற்கு இணங்க அமைந்தன.
ஆயினும், பல்வேறினங்களாலாய அவன் பேரரசில் எல்லாப் பகுதிகளிலும் வசித்த குடிகளுக்குக் குறிப்பாகச் சினம் மூட்டியது, பாலனத்தை ஒருமுனைப் படுத்துவதாகிய அவன் பூட்கையேயாகும். அப்பேரரசு பதின்மூன்று அரசாட்சிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அரசாட்சிக்கும் சிறப்பான முறையும் படையமைப்பும் நீதிபாலனமுறையும் இருந்தன. சேர்மானியர், மகி யார், செக்கர், இத்தாலியர், பெல்சியர், போலந்தர் ஆகியோர் மீது ஒரே மாதிரி யான முறையைத் திணிக்க யோசேப்பு முயற்சி செய்தான். சேர்மன் மொழி மாத்திரமே அரசாங்க மொழியாகவும் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசின் தலை நகர் வீயன்னவாகவும் இருக்கவேண்டியிருந்தது. அவன் செய்த முயற்சி படு தோல்வியடைந்தது. பெல்சியர் வெற்றிகரமாக எதிர்த்து நின்றது பற்றிப் பின் வரும் அதிகாரமொன்றிற் கூறப்படும். அங்கேரியரும் எதிர்த்து நிற்பதிற் சற்றே னும் சளைத்தாால்லர். சென் இசுத்தீபனின் முடி வீயன்னவுக்கு அனுப்பப்பட்டு, பின் புடாபெசுத்துக்கு திருப்பப்பட்டது. அங்கேரியின் வேருன சிறப்புரிமைகள் மீண்டும் அதற்கு அளிக்கப்பட்டன. தான் முற்ருய்த் தோல்வியடைந்ததைப் பற்றி இரண்டாம் யோசேப்பிற்கு ஐயம் எட்டுணையும் இருக்கவில்லை. எதிலும் எஞ்ஞான்றும் வெற்றி பெருத ஒருவன் இங்கே கிடக்கிருரன்' என அவன் தன்
கல்லறைக்காக இயற்றிய வாசகம் அவன் உளப்பான்மையைக் காட்டும்.
பிரான்சு
பதினெட்டாம் நூற்முண்டுச் சீர்திருத்த இயக்கம், ஏலவே கூறப்பட்டது போல், பிரான்சியதத்துவ அறிஞராற் பெரிதும் ஊக்கப்படுத்தப்பட்டது. எனி லும், ஐரோப்பா வெங்கணும் சீர்திருத்தமே பொது நியதியாக இருப்ப, பிரான்சு அதற்குப் புறநடையாய் இருந்தமை விசித்திரமே. இம்முரண்பாட் டிற்கு இரு விளக்கங்கள் புலனுகின்றன. முதலாவது, சீர்திருத்தும் நோக் குடைய தனியாட்சியாளர் தயங்கிச் சென்ற சீர்திருத்தப்பாதையிலே பிரான்சு ஏலவே வெகு தூரம் சென்றுவிட்டதென்பதாம். இரண்டாவதாக, வேறிடங் களிற் சீர்திருத்தத்திற்கு வலிமையான வேகம் அளித்த நூல்களை இயற்றிய முற் போக்குச் சிந்தனையாளர்களுக்குச் சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தபோதிலும், அவர் தம் சொந்த அரசாங்கத்தின் மீது அவர்களுக்குச் செல்வாக்கு எதுவும் இருக்கவில்லை என்பதாம்.
பிரான்சிற் சீர்திருத்தத்தைத் தொடக்கி வைத்த இரிசிலூவே புரட்சிக்கும் பொறுப்பாளியானன் என்பர். ஒரு வகையில் இக்குற்றச் சாட்டு ஏற்புடையதே. மானிய ஆட்சிமுறையின் அரண்களில் முதற் பெரும் பிளவை உண்டாக்கியவன் அவனே. அவன் மாவிழுமியோரிடமிருந்து அவர்கள் ஆற்றிவந்த அரசியற் கட

பழைய ஆட்சியின் முடிவு 289
மைகளைப் பிடுங்கி எடுத்துவிட்டான் ; ஆனல் அவன் தன் வேலையை முற்முகச் செய்து முடிக்கவில்லை. விழுமியோர் மாகாணங்களின் ஆள்பதிகளாயிருத்தல் நிறுத்தப்பட்டது. அவர்கள் நிலக்கிழாராயிருத்தலும் நிறுத்தப்பட்டது. ஆனல் அவர்களுடைய சமூகச் சிறப்புரிமைகள் அவர்களிடமேயிருந்தன. மானியத் தலைவர்கள் வலியிழந்து உழையர் நிலைக்கு இழிந்த பின்னரும், உழவோர் பிரான் சின் பல பகுதிகளிலே தாம்தாம் பயிரிட்ட நிலங்களுக்குச் சொந்தக் காரரான பின்னரும், மானியவாட்சிமுறையின் தீயவியல்புகள் மறையாது எஞ்சி நின்றமை அவ்வுழவோர்க்குக் கூடிய துயரத்தையும் கோபத்தையும் உண்டாக்கிற்று. ஆகவே, புரட்சி பிரான்சில் முதற்முேன்றியதாயின் அதற்குக் காரணம் ஐரோப்பாவிலுள்ள மற்ற நாடுகளிலும் பார்க்கப் பிரான்சில் மானிய முறை கூடிய அளவுக்கு நிலவியமை அன்று. எனின் மானியமுறை குறைந்திருந் தமையே அதற்குக் ast Taotl Dirgilis. அறிவுக் கூர்மையுடன் கையாளப்படும் அதி காரத்தைக் கொண்டே சிறப்புரிமை நியாயமானதென விளக்கலாம். பிரான்சிய உயர் குடிமக்களின் அதிகாரம் பிடுங்கியெடுக்கப்பட்டது. ஆனல் அவர்களின்
சிறப்புரிமைகள் அவர்களிடமே விடப்பட்டன.
இரிசிலுTவும் பதினன்காம் உலூயியும் பிரான்சிலே தனிமுதன்மை எனும் அமைப்பை யாத்து முடித்தனர். சட்டமியற்றல், பாலனம் செய்தல் ஆகிய அரசின் அதிகாரங்கள் யாவற்றையும் முடி தன்னுடையதாக்கிக்கொண்டது. நாம் முன்பு கண்டவாறு குடித்திணைமன்று முற்ருய் ஒடுக்கப்பட்டது. பாராளு மன்றத்திலிருந்து, எதிர்வாதஞ் செய்யும் எல்லா அதிகாரமும் எடுக்கப்பட்டன.
பதினைந்தாம் உலூயி
வினைத்திறனுல் மட்டுமே தனிமுதன்மை நியாயமானதென விளக்கலாம். பதி னைந்தாம் உலூயியினட்சியில் முடியாட்சி வினைத்திறமுடையதாயிருக்கவில்லை. நாடுகளுக்கிடையிற் பிரான்சின் முதனிலையைப் பேணி வைத்திருக்க முடியாட்சி தவறினமை பற்றிப் போதுமான அளவு கூறியாயிற்று. அது உள்நாட்டலுவல் களிலும் சற்றேனும் திறமையுடையதாயிருக்கவில்லை. ஒலியன்சின் பதிலாண்மைக் காலத்திற் (1715-23) பதினன்காம உலூயியின் முறைமைக்கு மாருக எதிரியக்க மொன்று தோன்றிச் சிறிதுகாலம் நிலைத்து மறைந்தது. பதினன்காம் உலூயியின் ஊதாரித்தனத்தினல் ஏற்பட்ட பணமுறிவு நிலையிலிருந்து பிரான்சை மீட்க, இசுக்கொத்துலந்திய பொருளியல்வல்லுநன் யோன் உலோ என்பான் செய்த முயற்சிகள் காரணமாகவே இக்காலப் பகுதியைப் பிரதானமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலோவைப்பற்றி அவன் காலத்தவர் கடுமையான தீர்ப் பளித்தனர். ஐரோப்பாவின் பொருளாதாரக் குலைவை நேரே அறிந்தவர்கள் அவனைப்பற்றித் தயையுடன் தீர்ப்புக் கூறக் கூடும். அவன் தத்துவங்கள் முற்ரு கத் தவருனவையல்ல. அவன் அவற்றைப் பயன்படுத்திய முறையே கேடுவிளைத் தது ; பிரான்சு பரிதாபகரமான நிலைமையிலிருந்தது. கடன் பாாத்தால் நசிக்கப் பட்டு, ஆண்டுவருவாயைப் போல் இருமடங்கான ஆண்டுச் செலவிற் சிக்கிக்

Page 155
290 பழைய ஆட்சியின் முடிவு
கொண்டு, நாடு பணமுறிவு நிலைமையை அடைந்தது. வணிகம் சோர்வுற்றது. மக்கள் மிகக் கடுமையான வறுமைக்குள்ளாயினர். காசொதுக்கத்தை அடிப் படையாகக் கொள்ளாது, நாட்டின் நாணயத்தையே அடிப்படையாகக் கொண்டு ஏராளமாகப் பத்திர நாணயத்தை வெளியிட்டுக் கடனை மீட்கவும், வரவுசெலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்தவும், வாணிபத்தைப் பழையபடி செழிப்புறச் செய் யவும் உலோ என்பான் முன் வந்தான். ' பணமே செல்வம்' எனும் அக் காலக் கருத்தை அவன் நம்புவானுயினன். பொன்னும் வெள்ளியும் செல்வமாகும். பத் திர நாணயத்தைப் புழங்கவிடுவதற்குப் பொறுப்பாளிகளாயிருப்போரின் நாண யத்தில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரையில், பத்திரம் நாணயமாகவே வழங்கப்படலாம். ஆனல், பத்திரநாணயம் தன் மட்டில் மாத்திரம் செல்வமா காது. அது பயனற்றதாகலாம்.
அரசாங்கத்தின் சட்டவனுமதியுடன் 1716 இல் உலோ தனி மனிதருக்குரிய வங்கியொன்றைத் தாபித்தான். இது பெரும் சித்தியெய்தியது. விரைவில் அது ஒரு அரசவங்கியாக மாற்றப்பட்டு, பெருந்தொகையாகத் தாட்காசை வெளி யிடத் தொடங்கிற்று. பணவீக்கம், வழக்கம் போல் வாணிபத்தைப் பெரிதும் ஊக்கிற்று. உத்தேச வியாபாரம் இன்னும் கூடிய ஊக்கம் பெற்றது. இப்படி உண்டான திடீர்ச் செழிப்பினின்றும் வரக்கூடிய இலாபத்தை அரசாங்கத்திற் குப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு மிசிசிப்பிச் சங்கத்தை, அண்மையில் ஈட்டிய உலூசியானு என்னும் ஆள்புலத்தைப் பயன்படுத்துமுகமாக, உலோ ஆரம்பித் தான். பின், ஆபிரிக்காவோடும் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் வணிகஞ் செய்யும் பல சங்கங்களை விலைக்கு வாங்கி, இந்தியத் தீவுகட் சங்கமெனும் ஒரு சங்கத்தை உருவாக்கி வலுப்படுத்தினன். உத்தேச வியாபாசஞ் செய்யும் பைத்தியம் நாடு முழுவதும் பரவியது. மேலும் மேலும் பத்திர நாணயம் வெளியிடப்பட்டது. பங்குகளின் பெறுமானம் மிகுதிப்படியான தொகைக்கு ஏறியது. பின் தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஏற்பட்டது. இங்கிலந்திலே தென்கடற் சங்கத்திற்கு நடந்தது போற் குமிழி உடைந்து சிதறியது. நாணயம் விழுந்தது ; பங்காளிகள் வறுமை யடைந்தனர். வாணிக முறையில் அந்த வங்கி நடத்தப்பட்டிருந்தால், சங்கங்கள் அடக்கமான ஆதாயத்துடன் திருத்திப்பட்டிருந்தால், எல்லாம் நன்மையாய் முடிந்திருக்கும். உலோ உண்மையை ஓரளவிற்கு அறிந்திருந்தானுயினும் அவன் அறியாமையே அவன் வீழ்ச்சிக்கும் நாட்டின் வீழ்ச்சிக்கும் ஏதுவாயது. இக் கேட்டினற் பிரான்சு படித்த பாடம் மிகச் சிறந்த பாடமாகும். அன்று தொடக் கம் இன்று வரையும் மக்கள், பொதுவாகச் சேமவங்கியிலும் பார்க்கப் பழைய தம் உண்டியற் பெட்டியையே பெரிதும் விரும்புகின்றனர். நிலத்தில் முதலீடு செய் வதைத் தவிர, ஏனையவற்றை மக்கள் பொருட்படுத்தவில்லை.
புளூரி
பதினைந்தாம் உலூயி பதின்மூன்று வயதினனுயிருந்தபொழுதிலும், ஆட்சி செய்தற்கு உரிய பிராயம் அடைந்துவிட்டானென அறிக்கை செய்யப்பட்டது.

பழைய ஆட்சியின் முடிவு 29.
அடுத்த இருபது ஆண்டுகளாகப் புளூரி என்பான் முதலில் அரசனின் ஆசிரிய ணுகவும் பின் அவன் அமைச்சனுகவும் பிரான்சை ஆண்டான். இங்கிலந்திற்கு உவால்போல் தோன்றியதுபோலப் பிரான்சிற்குப் புளூரி தோன்றினன். அவன் ஒரு சிக்கனமான, ஒழுங்கான நிருவாகி ; அமைதியை நாடுபவன். அவனுற் பிரான்சு நலம் பெறப் பேணி வளர்க்கப்பட்டது. 1743 இல் அவன் இறந்த பின் அரசனுடைய காமக்கிழத்தியும் ஆற்றல் மிகக் குறைந்தவளுமான பொம்பர்ே சீமாட்டி 1764 வரை பிரான்சை ஆட்சி செய்தாள். அவள் ஆட்சி பிரான்சின் வலிமைக்கும் மதிப்புக்கும் எவ்வளவு தீங்கு இழைத்ததென்பதைப் பற்றி ஏலவே கண்டுகொண்டோம். உள்நாட்டைப் பொறுத்தவளவில், (அறிவுத்துறையில் ஏற் பட்ட புத்துயிர்ப்பைத் தவிர) முடிக்கும் பாராளுமன்றங்களுக்குமிடையில் இடைவிடாது நிகழ்ந்த போராட்டமே கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அப் போராட்டம் நிதி, மதம், பாராளுமன்றங்களின் அரசியல் நிலையும் கடமைகளும் ஆகியவை பற்றியதாகும். புளூரி இறந்த பின் யுத்தத்தினல் மாத்திரமன்றி, அரசனதும் அவனுடைய காமக்கிழத்தியினதும் ஊதாரித்தனத்தினுலும் நிதிநிலை மீண்டும் குழப்பமான நிலையை அடைந்துவிட்டது. பரிசுப் பாராளுமன்றத்திற்கு நிதி மீது எவ்வித அதிகாரமும் கிடையாது : நாடு கடனிறுக்க முடியாமை என்னும் சேற்றில் ஆழமாக அமிழ்ந்து போவதைத் தடுக்க வலியற்றுப் பார்த்துக்கொண்டிருக்கவே முடிந்தது.
மதப்பிரச்சினை பற்றியே ஐம்பது ஆண்டுகளாக அரசனுக்கும் பாராளுமன்றத் கிற்குமிடையில் மிக மூர்க்கமான பிணக்கு ஏற்பட்டது. யான்சன் கொள்கை 1713 இல் 'யூனிசெனிற்றசு ' என்னும் கட்டளைமூலம் போப்பாட்சியினுற் கண்டிக்கப்பட்டு, முடியினல் அடர்த்தப்பட்டபோதும், அதை வன்பொடு பாது காக்கப் பாராளுமன்ற நீதிபதிகளுட் பலர் இருந்தனர். இவ்வாறு அவர்கள் அக் கோட்பாட்டை ஆதரித்தமைக்கு மத சம்பந்தமான காரணங்களோடு அரசியற் காரணங்களும் இருந்தன. இதன் பயனக யான்சன் கொள்கை தனியாட்சிக்கு எதிரான கொள்கையெனக் கொள்ளப்பட்டதோடு, பாராளுமன்றத்திலுள்ள அக்கட்சியினர் அரசியல் யாப்பில் ஒரளவு சிறப்பிடமும் பெற்றனர். 1730-3 வரையான காலப்பகுதியில் இக்கிளர்ச்சி மிகப் பரவிற்று. பரிசிலுள்ள சட்ட வாணரால் வரையப்பட்ட 'கருத்துரை' பிரான்சிய அரசர் பழக்கப்பட்டிராத போக்கைக் கொண்டதாயிருந்தது. “இந்த இராச்சிய யாப்பின்படி பாராளு மன்றங்கள் இந்நாட்டின் மூதவையாகும். நாட்டுச் சட்டங்களை ஆக்கும் உயர் மன்றங்கள் அவைகளே. சட்டங்கள் உண்மையாக ஆளுவோருக்கும் ஆளப்படு வோருக்குமிடையுள்ள மரபொழுங்குகளே ஆகும்’. சட்டமியற்றும் ' மூதவை' எனப் பிரான்சிய பாராளுமன்றங்களைக்கொள்ளல் பொருந்தாது. அரசாங்கக் சபை இந்தக் கோட்பாடுகளை யாப்பிற்கு மாமுனவையென்று தள்ளுபடி செய்த பொழுது, அவ்வாறு செய்தற்குப் போதிய நியாயமிருந்தது. சட்டவாணர் விடாப்பிடியாகத் தங் கொள்கையில் ஊன்றிநின்றனர். முடிக்கும் பாராளு மன்றத்துக்குமிடையே இத்தகைய போராட்டம் 1771 வரையும் தொடர்ந்து நடந்தது. பதினைந்தாம் உலூயியைப் பொறுத்தவரையில், 1771 இல் ஒரு

Page 156
292 பழைய ஆட்சியின் முடிவு
அரசியற் றிடீர்ப் புரட்சியால் அது முடிவெய்தியது. நீதிபதிகள் தங்கள் கடமை களை ஆற்ற மறுத்தனர். இதனல் நீதிபாலனம் தடைப்பட்டது. எதிர் நடவடிக்கையாக அரசன், பரிசிலும் மாகாணங்களிலுமுள்ள எல்லாப் பாராளு மன்றங்களையும் ஒழித்துவிட்டுப் புதிய நீதிமன்றங்களைத் தாபித்தான். பிரான் சியப் பாராளுமன்றங்களைப் பேக்கு பெரிதும் மதித்தான். 'சட்டங்களுக் கெல்லாம் களஞ்சியம் போன்றதும் மக்கள்தம் தொல்லுரிமைகளை நினைவுபடுத்து வதுமான பரிசுப் பாராளுமன்றமானது சுதந்திரத்திற்காகவும் மனிதவினத்திற் காகவும் ஆற்றிய பெருமுயற்சிகள், அம்மன்றத்தின் இறுதியழிவோடு முடி வுற்றன’ என 1771 இல் அவன் எழுதினன். இக்கூற்று மிகைப்படுத்தப்பட்ட தாக இருக்கலாம். ஆனல் அது அக்காலத்தில் இங்கிலந்தில் நிலவிய கருத்தைப் பிரதிபலிக்கிறது. இன்னும் பரிசுப் பாராளுமன்றம், சில்லோராட்சித்தன்மைய தாகவும் மக்களின் பிரதிநிதிகள் இல்லதாகவும் இருந்தபோதும், பிரான்சு தனி யாட்சியைப் பெறுதற்கு அது ஒன்றே தடையாயிருந்தது.
பதினரும் உலூயி
பதினரும் உலூயி தன் முதற் செய்கைகளிலொன்முகப் பாராளுமன்றங்களை மீண்டும் நிறுவினன். அதன் பயன்கள் விரைவில் இங்கு ஆராயப்படும். பதினமும் உலூயி அரசெய்திய பொழுது இருபது வயதான வாலிபன் எனினும், பேரரசி யான மரியாதெரிசாவின் மகளான மேரி அன்றனற்றின் கணவனுக நான்கு ஆண்டுகளாக இருந்திருக்கிருன். இராணி கணவனிலும் ஒர் ஆண்டு இளையஸ். புதிய அரசன் இனிய பண்பும், நன்னுேக்கமுடைய வாலிபன். அக்காலத்துச் சிறப்பியல்பாகவிருந்த சீர்திருத்த ஆர்வம் அவனுக்கும் பூரணமாக இருந்தது. தன் குடிகளின் நலனை எவ்வழியிலும் விருத்திசெய்ய அவன் போவாக் கொண்டான். ஆனல் அவனிடம் மானவுணர்ச்சி இருக்கவில்லை. மன வுறுதியற்ற குணவியல்பு உடையவனுயிருந்தான். விருப்பு உவப்புக்களில் அவன் எளிய வனயும் சொந்த வாழ்க்கையிற் குற்றமற்றவனயுமிருந்தபோதிலும் உளவுரனும் அரசியல் முனைப்பும் அவனிடமிருக்கவில்லை. அவனுடைய இளமையான Lo&Tas கிட்டமான குணவியல்புடையவளாயிருந்தாள். ஆனல் அவள் எவ்வளவு பிடி வாதமுடையவளாக இருந்தாளோ அவ்வளவு அறியாமை உடையவளாயிருந் தாள். அவளுக்கு உலூயி மீது இருந்த செல்வாக்கு இருவருக்கும் பெருந்தீங்கு விளைவித்தது.
தேகோ
எனினும், அவன் ஆட்சி தொடங்கிய காலத்தில் எல்லாம் நம்பிக்கையளிப்பன வாயிருந்தன. வெளிநாட்டு அலுவல்களை நடத்தும் பொறுப்பு, பிரான்சிய குழி யல் வல்லோரில் மிகப் பெரும் ஆற்றலுடையவனும் மிகவும் அனுபவமுடையவனு மான வேசனசு என்பானிடம் விடப்பட்டது. உள்நாட்டலுவல்களும் நிதியும் தேகோ என்பான் பொறுப்பில் விடப்பட்டன.

பழைய ஆட்சியின் முடிவு 293
தேகோ பேக்கனின் மூளையும் இலகோபிதலின் இருதயமும் படைத்தவன், எனத் தேகோவின் இணைவனை மேல்பேசு கூறினன். 'நல்ல ஆட்சிமுறையை ஒரு வாழ்க்கைக் கோட்பாடாகக் கொண்டவன் அவன்' என யோன் மோளி கூறினன். வொற்றயரின் சீடனன இவன், சீர்திருத்தங்கள் செய்தற்குத் தனி யாட்சியே மிகச் சிறந்த சாதனமென நம்பினன். ஆயினும், அவன் குவெசுனே
என்பானதும் இயற்கையாளர்களதும் கொள்கைகளிலும் நம்பிக்கை உடையவன்.
இயற்கையாளர்களது சித்தாந்தத்திலேயே அதாம் சிமிதும் தேர்ச்சிபெற்ற வனவன். சிந்தனைச் சுதந்திரத்தை வொற்றயர் போதித்தார்; வணிகச் சுதந் திரத்தை இயற்கையாளர் போதித்தனர். அவர்கள் கொள்கை வருமாறு : எல்லாச் செல்வமும் நிலத்திலிருந்தே தருவிக்கப்படுகின்றன. ஆகவே எல்லா வரிகளும் விவசாயத்தின் மீதே விதிக்கப்படவேண்டும். துணைக்கைத்தொழிலோ பங்கீடு செய்யும் முறைகளோ செல்வத்தை ஆக்குவதில்லை. ஆகவே உண்ணுட்டுப் பொருள் வரியோ சுங்கவரியோ விதித்தல் பயனற்ற, தவருன செயலாகும். கட்டற்ற வாணிகம் மீது எத்தடையும் விதிக்கக் கூடாது. “தற்செய்கை, தற் போக்கு' என்பதே அவர்கள் வாய்பாடாகும். தேகோ இக்கோட்பாடுகளைப் பூரணமாய் ஒப்புக்கொண்டான். 1721 இல் பிறந்த இவன் 1761 இல் இலிமோ செசுப் பகுதிக்கு அதிகாரியானன். மிக வறிய மாகாணங்களிலொன்முகிய இலி மவுசின் மாகாணத்தை மிகச் செல்வம் படைத்த மாகாணங்களிலொன்முக மாற்றினன். 1774 இல் கட்டுப்பாட்டதிகாரி நாயகமாக நியமிக்கப்பட்டான்.
உயர் குடியினர், உயர் குருமார், வழக்கறிஞர் ஆகியோர் எதிர்த்து நின்ற மையால், தேகோ முயன்று தீட்டிய விரிவான தன் திட்டத்தை நிறைவேற்ற வலியற்றவனுயினன். எனினும், வரிப்பளுவைச் சமனுக்க உண்மையாகவே ஒாள வுக்கு முயற்சி செய்தான் ; நாட்டின் நாணயத்தை மீண்டும் பலப்படுத்தினன்; உள்நாட்டு வர்த்தகத் தடைகளிற் பலவற்றை தீட்டைத்தெறிந்தான்; இடைக் காலத் தளைகளிலிருந்து கைத்தொழிலை விடுதலை செய்தான், பலவந்தமாக வேலை கொள்ளலே ஒழித்தான் ; வர்த்தக முழுவுரிமைச் சலுகைகளைத் திருத்தியமைத் தான். ஆயின் விரிவான ஒரு திட்டத்தில் ஒரு பகுதியை மட்டும் நிறைவேற்றவே அவனல் முடிந்தது. அந்தத் திட்டத்தின் நோக்கம் சிறப்புரிமைகளையும் விலக்குக்களையும் குறைப்பதேயாம். சிறப்புரிமை பெற்ற வகுப்பினர், அவன் நிரு வகிக்க முடியாத அளவிற்கு வலிமையுடையோராயிருந்தனர். சீர்திருத்தங்களை ஒப்புக்கொள்ளுவதற்குப் பதிலாக அவர்கள் புரட்சியைத் தூண்டிவிட்டனர். இரு ஆண்டுகள் (1774-6) கட்டுப்பாட்டு அதிகாரி நாயகனகக் கடமையாற்றிய பின், பிரான்சின் பழைய முடியாட்சியைக் காப்பாற்றக்கூடிய ஒரேயொரு அமைச்சன் பதினரும் உலூயியினற் பதவியினின்றும் நீக்கப்பட்டான். அரசன் தயக்கத்துடனேயே அவனைப் பதவியினின்றும் நீக்கினன். ‘நான் நிலத்தில் மோதுண்டவன் போலானேன்; பொற்காலம் தோன்றி மறையக் கண்டதுயர் எக்காலத்தும் ஆறது. தேகோ போய்விட்டபடியால், என்முன் மாணத்தையே நான் காண்கிறேன்' என வொற்றயர் எழுதினன்.

Page 157
294 பழைய ஆட்சியின் முடிவு
பழைய ஆட்சி முறையின் அழிவு உண்மையாகவே எந்நேரமும் நிகழக்கூடு மெனத் தோற்றியது. தேகோ விலக, சீர்திருத்தவாதிகளின் கடைசி வாய்ப்புந் தவறிற்று. புரட்சித்தினம் புலர்ந்தது.
உரூசோ
புரட்சி போதித்தோன் உரூசோவாவன். இவன் 1712 இல் செனிவாவிற் பிறந் தான். அச்சுதந்திர நகரில் அடைக்கலம் புகுந்த ஓர் இயூசனர் குடும்பத்தைச் சேர்ந்த கடிகாரஞ் செய்வோன் ஒருவனின் மகளுவான். செனிவா பழைய கிரேக்க மாதிரியான நேர்க்குடியாட்சி முறைப்படி ஆட்சி செய்யப்பட்ட ஒரு சிறிய நகரக் குடியரசாகும். அந்நகர் உரூசோமீதும் அவன் அரசியற் கருத்துக் கள் மீதும் ஆழமான செல்வாக்குச் செலுத்தியது. சுவிற்சலந்தில் அவன் கழித்த இளம் பிராயக்காலம் துயர் நிறைந்ததாய் இருந்ததெனினும், பரிசுக்கு வந்த பின் இலக்கியத்துறையில் அவன் விரைவில் ஈட்டிய புகழ் அவனுக்கு ஆறுதல் அளித்திருக்கலாம். ஆனல் உரூசோ மனித இனத்தை வெறுப்பவன். வெற்றி யினுற் பக்குவமடைந்து மென்மையாகுபவனல்லன். அவன் 1754 இல் வெளியிட்ட மனிதவினத்திடை சமத்துவமின்மை தோன்றிய வரலாறு' எனும் அறிவுரை நூலுட்ன் சம உடைமைக் கொள்கை தோன்றியது. 1762 இல் வெளியிடப்பட்ட சமூக ஒப்பந்தம்' எனும் அவன் நூல் இக்காலக் குடியாட்சி முறைக்கு வேதம் போன்றது. அதுவே"1789 ஆம் ஆண்டுப் புரட்சிக்கும் கல்வி ஏடாயது. உரூசோ வின் கோட்பாடுகளை 'ஆட்சியறவுக்கோவை' என வொற்றயர் வருணித்தது சரியேயாகும். எனினும், அவன் போதனைகள் மக்கள் சிந்தனையைப் பெரிதும் தூண்டின. அநியாயமான்தும் அர்த்தமற்றதுமான மானிய முறையிற் சிக்குண்ட மையாற் சமூகத்திலே தாழ்வடைந்து, பொருளாதாரமிடியின் வாய்ப்பட்டுழன்ற சாதாரண மக்களுக்கு-எண்ணித்துணியுந் திறனும் அனுபவமுஞ் சற்றேனும் இல்லா ஏழை மாந்தர்க்கு-சமத்துவம், சுதந்திரம் எனுங் கோட்பாடுகளை ஒதி னன் உரூசோ. அரசியல் ஊழல்களாலும் சமூகக் குறைபாடுகளாலும் பொரு ளாதாரக் கட்டுப்பாடுகளாலும் பண்படுத்தப்பட்ட விளை நிலத்தில், உரூசோ தத்துவஞான விசாரம் எனும் விதையைப் பாக்க விசினன். அவ்வழி விளைந்த பயிர் உவப்பிலதாயினும் ஏராளமாயிருந்தது.
பிரான்சியப் புரட்சியின் பொதுக்காரணங்கள்
1789 இல் தோன்றிய புரட்சியின் பொதுக்காரணங்களை முன்னைப் பந்திகள் போதுமான அளவு புலப்படுத்தியிருக்க வேண்டும் செய்திறன் தவறிய தனி முடியாட்சி; அரசியல் அதிகாரத்தையிழந்த பின்னும் தம் சமூக வாரிய சிறப் புரிமைகளை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த உயர்குடி மக்கள் , தத்துவ போதனைகள் காரணமாக உயர்வகுப்பாரின் வெறுப்பையும், உயர் குருமார் நடாத்திய இறுமாந்த போக வாழ்க்கை காரணமாக, ஏழை மக்களின் வெறுப் பையும் ஒருங்கே பெற்ற திருச்சபை ; வறியவர்கள் மீது தாங்க முடியாத பாாங்

பழைய ஆட்சியின் முடிவு 295
களைச் சுமத்தி, செல்வரை விலக்கி, அரசாங்கத்தைப் பணமுறிவுக் குழியில் விழுத்தும் நிதி முறை ; ஈற்றில், முடியாட்சியிலும் திருச்சபையிலும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அழிக்க முயல்வதாய், அவைகளுக்குப் பதிலாகத் தக்கவோர் ஆட்சிமுறையையோ அமைப்பையோ தாாதொழிந்த தத்துவ ஞானம் ஆகிய இவையே காரணங்களாம்.
18 ஆம் நூற்றண்டிற் பிரான்சிற் குறிப்பிடக்கூடிய பொதுவான போக்குக்கள் இத்தகையன. இவைகளே புரட்சிக்கு வழிகோலின.

Page 158

மூன்றம் பாகம்
அத்தியாயம் 24
பிரான்சியப் புரட்சி
முக்கிய தேதிகள் :
1776-81 நெக்கரின் முதலமைச்சு.
1783-?
178?
1789
1789
1789
1289
1791
1291
1291
五29互
1792
1792
1792
1792
1292
1792
1793
1795
1793
1293
1793
2293
1794
1794
1294
1294
1795
I295
1795
1797
1799
கலோனினமைச்சு.
பேராளர் மன்றம். குடித்திணை மன்றங் கூடல் (மே. 5). பசிரீல் கைப்பற்றப்படல் (யூலை, 14). தனியுடைமையின் வதம் ' (ஒகத்து, 4). மீனுட்டர் பவனி (ஒற்ருேபர், 5-6). வாறென்சுக்கு ஓடி ஒளித்தல் (யூன், 20). பின்னிற்சுப் பிரகடனம் (ஒகத்து, 27).
புதிய யாப்பு அரசனல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டசபை கூடுதல் (ஒற்ருேபர், 1) கிரொண்டிசரின் அமைச்சு (மாச்சு-யூன்). ஒசுத்திரியாவுக்கு எதிராகப் போர் (ஏப்பிரில், 20). பிறன்சிக்கு என்பவனின் வெளிப்பகர்ப்பு (யூலை, 25). பிரசியா பிரான்சுக்கெதிராகப் போர் பிரகடனஞ் செய்தல். முடியாட்சியின் வீழ்ச்சி (ஒகத்து, 10). செத்தெம்பர் வதங்கள். A. பதினரும் உலூயியின் சிரச்சேதம் (சனவரி, 21). இங்கிலந்துடனும் ஒல்லந்துடனும் போாாரம்பம் (பெப்புருவரி, )ே. இயக்கோபினர் அதிகாரம் பெறல் (யூன்). பயங்கர ஆட்சி (செத்தெம்பர்-1794 யூலை). மாரி அன்றேயினற்றின் சிாச்சேதம் (ஒற்ருேபர், 16). கிரொண்டிசரின் சிரச்சேதம் (ஒற்ருேபர், 31).
ஏபேட்டு முதலியோரின் சிரச்சேதம் (மாச்சு, 24). தாந்தன் முதலியோரின் சிரச்சேதம் (ஏப்பிரில், 5). உாபசுப்பியரின் வீழ்ச்சி (யூலை, 27). தேமிடோறியன் எதிர்விளைவு. பணிப்பாளர் குழு-1799.
பால் பொருத்தனை 13 ஆம் வெண்டிமீயேயர் (ஒற்முேபர், 5). கம்போ-போமியோப் பொருத்தன. 18 ஆம் புருமயர் ஆட்சிப்புரட்டு.

Page 159
父98 பிரான்சியப் புரட்சி
مسسيس
'அரசியலிற் பெரிய மாற்றங்களும் புரட்சிகளும் ஏற்படுவதற்கு முன்னர், வரலாற்றிற் காணப்படும் அறிகுறிகள் யாவும் இன்று பிரான்சில் உள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என 1753 இல் செசுற்றர்பீல் பிரபு எழுதினர். இவ்வெதிர்வுக் கூற்றைக் கூறியவர் இவர் மட்டுமல்லர். யோன் உவில்கிசு என்பவர் 1764 இல் பாரிசு நகரத்திலிருந்து தெம்பிள் பிரபுவிற்கு "இங்கேயுள்ள அறிவுடையோருட் பலர் இந்நாடு ஒரு மகத்தான புரட்சியின் ஆரம்பத்தில் நிற்பதாகக் கருதுகின்றனர்' என அறிவித்தார். அடுத்த வருடம் பிரான்சிய குருவாயத்தின் பொதுச்சபையானது உரூசோ, வொற்றயர், தைத ரொற்று என்பார் எழுதியவற்றையெல்லாங் கண்டித்து அறிக்கைவெளியிட்டது. ' குறித்த நூற்முண்டின் மனேநிலை காரணமாகப் பொது அழிவையும் சேதத்தை யும் விளைவிக்கக் கூடிய புரட்சி யொன்று அரசுக்குமாருக நிகழுமெனத் தோன்றி யது' எனவும் அக்குருவாயத்தினர் பிரகடனஞ் செய்தனர்.
அத்தகைய புரட்சி தப்பாது நிகழ்ந்தது. ஆனல், பதினமும் உலூயி, பிற்போக் காளர்களின் நெருக்கத்தை எதிர்த்துத் தேகோ என்பவனுக்கு அதிகாரம் அளிக் கும் ஆற்றல் படைத்தவனுயிருந்தால், ஒரு தலைமுறைக்குப் பின்போடப்பட்ட கரேமான புரட்சியை நிகழாமற் செய்திருக்கலாம். அல்லது அதன் வேகத்தை யாவது குறைத்திருக்கலாம். தேகோ அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டபின்னர், (1776) பழைய ஆட்சியும் முடியரசும் அழிவை எதிர்பார்க்க வேண்டியவை யாயின.
உடனடியான காரணங்கள்
புரட்சிக்குக் காரணமான நிகழ்ச்சிகள் தனித்தனி அப்புரட்சியை உண்டாக் கும் வலிமையற்றவையாயினும், அவற்றின் சேர்க்கை புரட்சிக்கு உண்மையான காரணமாயது. முதலாவது, அமெரிக்காவிலுள்ள ஆங்கிலக் குடியேற்ற நாடு களில் உண்டான எதிர்க்கிளர்ச்சியாகும். இது இரு வகையிற் பிரான்சைப் பாதித்தது. அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், பிரான்சிய தத்துவ நூலோர் முன்னரே எழுப்பிய உணர்ச்சியை எரியுந் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் வளர்த்தது; இங்கிலந்துக்கு மாமுக நிகழ்ந்த போரிற் கலந்து கொண்டமை, பிரான்சைப்பணமுறிவிற் கொண்டு போய்விட்ட கடை நிகழ்ச்சியாகும். (பன்னிரண்டாம் அத்தியாயத்தைப் பார்க்க).
நெக்கர்
தேகோ நீக்கப்பட்டதும் அரசன் நெக்கரென்பவனை நிதிப் பாதுகாவலனுக நியமித்தான். திசிற்றேல் சீமாட்டியின் பிதாவெனப் புகழ் பெற்றவனன நெக்கர் ஒரு சுவிசு வங்கி முதலாளியும் கல்வின் கொள்கையினனும் பொருளாதார நிபுணனுமாவான். ஆனல் அவன் ஓர் அச்சறிஞனல்லன். தேகோ என்பானுடைய் இயற்கையோடியைந்த அரசியற் கோட்பாட்டைப் புறக்கணித்து, கோல்பேட்டு,

பிரான்சியப் புரட்சி 299
உலோ \ என்பாருடைய கோட்பாட்டைத் தழுவினன். அமெரிக்கப் போரிற் கலந்தமையால் ஏற்பட்ட செலவுகளை ஈடு செய்ய முடியாது, இராச மாளிகையி லும் பொது நிருவாகத்திலும் சிக்கனத்தை வலிந்து கடைப்பிடித்தான். சிக் கனம், கொள்கையளவில் வரவேற்கக்கூடியதாயினும் செயலளவில் விரும்பி ஏற் கப்படுவதொன்றன்று. 1781 இல் நெக்கர் முதன்முதலாக நாட்டின் நிதியைப் பற் றிய அறிக்கையொன்றை வெளியிட்டான். நாட்டின் பொருளாதார அத்திபார நிலை திருத்தியான தெனினும், சிக்கனம் அத்தியாவசியம் என்றும்/அதற்காக இராசமாளிகை அலுவலாளர்க்கும் பரத்தையர்க்கும் அளிக்கப்படும் இளைப்பா றற் சம்பளம் நிறுத்தப்பட வேண்டுமென்றும் நாட்டிற்கு அறிவிப்பதே அவ் வறிக்கையின் நோக்கமாகும். இந்நோக்கம் மெச்சத்தக்கது. ஆனல், பொது மக்கள் வழக்கப்படி நிதி வரவு செலவுகளைக் கருத்திற் கொள்ளாது, வீணுன் முறையில் நிதி விரயமாவதையே பிரசாரஞ் செய்து கலாம் விளைத்தனர். இதன் விளைவாக நெக்கர் தன் பதவியைத் துறந்தான்.
நெக்கருக்குப் பின்னர் அப்பதவியை வகித்த கலோன், ஒரு சாதாரண இராச மாளிகை அலுவலாளன். குதாட்டக் காரனின் முறைகளைப் பயன்படுத்தி மித மிஞ்சிய செலவுகளை, அதிக வட்டிக்குப் பெற்ற கடன் பணத்தால் ஈடுசெய்து நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்கலாம்) அப்படிச் செய்ய முடியா விடின் ஒற்றிப் போடலாம் என எண்ணினன். 1786 அளவில் தன் முறைகள் சாத்தியமாகாவெனக் கண்ட கலோன், அரசனுக்கு உண்மையைச் சொல்லி, தேகோவின் முறையை மீண்டும் அனுசரித்து வரி விலக்குக்களை ஒழித்து, பேராளர் சபையைக் கூட்டி அவர்களின் சிறப்புரிமைகளைக் குறைக்க அவர்
களின் இசைவைப் பெறுவதே ஒரேயொரு வழியென அறிவுரை கூறினன்)
போாளர்சபையும் பாராளுமன்றமும்
1787 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் பேராளர் சபை கூடியது. அவர்கள் தங்கள் சிறப்புரிமைகளைக் கைவிட முற்முக மறுத்ததுமன்றி, கலோனுக்கு மாமுகத் திறமையாகப் பிரசாரம் செய்து, மக்களால் வீரர்களெனப் போற்றப் பட்டார்கள். கலோன் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். எதிர்க் கட்சித் தலைவ ாான தூலூசின் மேற்றிராணியார், உலோமெனி தி பிறயன், அவ்விடத்திற்கு நியமிக்கப் பட்டார். கலோனின் புதுத் திட்டத்தை விதிப்பதன்றிப் பிறிதொன் நும் செய்ய இவரால் முடியவில்லை.
பாரிசுப் பாராாளுமன்றம் தேகோத் திட்டத்தின் பெரும்பகுதியை யடக்கி யுள்ள ஒரு தொகுதி ஆஞ்ஞைகளைப் பதிவு செய்தது. ஆனல், சமத்துவவரி விதிப்பை மறுத்துப் புதிய வரிவிகித்தற்குக் குடித்திணை மன்றிற்கே உரிமை உண்டு எனவும், அதனல் அதனைக் கூட்ட வேண்டுமென்றும் தீர்மானித்தது. நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் அரசன் ஒருவாறு இணங்கி குடித்திணை மன்றத்தை 1789 மே மாதம் கூடுமாறு அழைத்தான். இதற்கு ஒரு கிழமைக்

Page 160
300 பிரான்சியப் புரட்சி
குப் பின்னர் அரசு, பண முறிவு நிலையைப் பிரகடனஞ் செய்தது. பிறயன் தம் பதவியினின்றும் நீங்க, நெக்கர் மீண்டும் அப்பதவியை ஏற்குமாறு அழைக்கப்
பட்டான்.
*ஆன்மிகத் துறையில் நாட்டின் முறிவு நெடுநாளாகப் பொறுத்துக் கொள்ளப் இப்பொழுது பொருளாதார முறிவு அணுகுவதாற் பொறுக்க முடியாத .[دقیے۔--JL-L நிலைமை ஏற்பட்டுவிட்டது ' என இந்நிலையைக் காளையில் சுருக்கிக் கூறியுள் ளார். அவர் கூற்று உண்மையே. ஆனல் இம்மலைவு நிலையிலும் இதைத் தெளிவு படுத்த வேண்டும் : சிறப்புரிமையுடையோர் அனுபவித்த வரிவிலக்குக்களே யெல்லாம் அழிக்க வல்ல மாற்றங்களை ஒப்புக்கொள்ளாது விளைவுகளையும் நோக் காது பாாாமன்றங்கள் புரட்சியைத் தொடக்கி வைத்தன. பாதீட்டைச் சமன் செய்வதற்கு ஏற்ற ஒரேயொரு வழி சமத்துவ வரி விதித்தல் ஒன்றே என்று உறுதியாக எண்ணிய அரசன், அவ்வெண்ணத்தைச் சட்ட சபைகளிலும் திணிக்க முயற்சி செய்தான். அவன் அம்முயற்சியில் தோல்வியடைந்தான்.
பொதுத் தேர்தல்
175 வருட காலமாகப் பிரான்சிற் பொதுத் தேர்தல் நடை பெறவில்லை. குடித் திணைமன்றம் கூட்டப்படும் செய்தி மக்களிடையே மிகுந்த பரபரப்பையும் திகைப்பையும் உண்டாக்கியது. 1788-89 மாரிகாலத்தில் நாட்டிலேற்பட்ட பஞ்ச மும் துயரமும் இவற்றை இன்னும் அதிகரிக்கச் செய்தன. இலையன் நகரத்தில் 40,000 பட்டு நெசவுத் தொழிலாளர் பட்டினியால் வருந்தினர். பாரிசு நகரத்தில் மட்டும் 1,20,000 பேர் வறுமையுற்றும் வேலையில்லாதும் இருந்தமையே, புரட்சி யைத் தொடர்ந்து நிகழ்ந்த இமிசைகளில் அதிகமானவற்றுக்குக் காரணமாகும்.
குடித்திணைமன்றம்
1789 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி வேர்சையில் குடித்திணைமன்றம் அரசனல் ஆரம்பிக்கப்பட்டது. இது 1,136 பிரதியாளர்களைக் கொண்டதாகும். இவருள் 270 பேர் விழுமியோரின் பிரதிநிதிகளாவர். 290 பேர் குருவாயத்தின் பிரதிநிதிகள். மூன்றும் குடித்திணையோராகிய பொதுமக்களுக்கு, அரச ஆஞ் ஞைப்படி இருமடங்கு பிரதிநிதித்துவங் கொடுக்கப்பட்டபடியால் அவர்களின் பிரதிநிதிகள் தொகை 576 ஆயது. இம்மூன்று குடித்திணையின் பிரதிநிதிகளும் தத்தம் தேருநர் வரைந்த குறைப் பத்திரங்களோடு வேர்சைக்கு வந்திருந்தனர். இன்றுமுள்ள இக்குறைப் பத்திரங்கள் தனியாட்சியும் சிறப்புரிமைகளும் ஆரம் பத்திலேயே அழிந்துவிடும் என்பதை நன்கு விளக்கின. ஆகவே குடித்திணை மன்றம் அன்று தொடக்கம் ஒழுங்காகக் கூடவேண்டுமென்றும், வரிவிதிப்புத் திருத்தி அமைக்கப்படல் வேண்டுமென்றும், எல்லாச் சிறப்புரிமைகளும் வரி விலக்குக்களும் ஒழிக்கப்படல் வேண்டுமென்றும், மானியப் பாரங்கள் அகற்றப் படல் வேண்டுமென்றும், தனியாரின் சுதந்திரம் ப்ாதுகாக்கப்படல் வேண்டு

பிரான்சியப் புரட்சி 30
மென்றும், எல்லாவகுப்பினருக்கும் உத்தியோகவுரிமை இருத்தல் வேண்டுமென் அறும், மூன்ருங்குடித்திணைச்சபை கோரியது. இக்கோரிக்கையை விழுமியோரோ குருமாரோ, வெளிப்படையாக எவ்விதமேனும் எதிர்க்கவில்லை.
பிரான்சியப் புரட்சி சென்ற வழியின் விரிவான வாலாற்றைப் பல பாடப் புத்தகங்களிற் படிக்கலாம். இங்கே சுருக்கமாகச் சொல்லுதல் போதுமானது. குடித்திணைமன்றம் தனது வேலையைத் தொடங்கும் பொழுதே மூன்ருங்குடித் திணையோர் அரசனையும் விழுமியோரையும் குருவாயத்தையும் எதிர்த்துத் தங் களுடைய சபையையே பிரான்சின் நாட்டின மன்றம்' எனப் பிரகடனஞ் செய்தனர். (யூன் 17). உடனே கீழ்த்தரக் குருவாயத்தினர் இந்த உரிமையற்ற இயக்கத்திற் பொது மக்களோடு சேர்ந்தனர். அதன்பின்னர் அரசனுடைய ஏவு தலின் பேரில் விழுமியோரும் உயர்தரத் திருச்சபையினரும் பொதுமக்களோடு சேர்ந்தனர்.
பசிரீல் வீழ்ச்சி
யூலை 14 ஆம் திகதி பாரிசு நகரத்துக் கலகக்காரர் தலைப் பட்டினத்தைத் தம தாக்கிக்கொண்டு, அந்நகரத்துள்ள பசிரீல் என்னும் கோட்டையைக் கைப்பற்றி அங்கே சிறையில் வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். இக்கோட்டை யைக் கைப்பற்றியது முக்கியமில்லாவிடினும், பழைய அரசியலமைப்பும், நியாய மின்றி மக்களை சிறை செய்யும் முறையும், தனியார்க்குச் சுதந்திரம் மறுத் தலும் அழிவுற்றமைக்கு அடையாளமானதால் அது சிறப்புடையதாகும்.
கோட்டையின் வீழ்ச்சி உலக நிகழ்ச்சிகளில் எத்துணை உயர்ந்தது, எத் துணை சிறந்தது' எனச் சாள்சு பொக்கிசு மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இக் கருத்துக்கு மாமுக 'இன்றுவரையும் உலகத்தில் இருந்த அழிப்புச் சிற்பிகளில் தாங்களே மிகச் சிறந்தவர்களென்று பிரான்சியர் தங்களைக் காட்டிவிட்டார்கள் ', எனப் பேக்கு என்பவர் தம் கருத்தை வெளியிட்டார். ‘இது ஓர் அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சி' எனப் பதினரும் உலூயி நாட்டு நிலையைப் பற்றி கோமகன் இலியன்கூர் என்பவனுக்குக் குறிப்பிட்டான். அப்படியன்று. இது ஒரு புரட்சி’ யென அந்தக் கோமகன் பதிலிறுத்தான்.
அது புரட்சியேயாம். பசிரில் கோட்டையின் வீழ்ச்சி பாரிசு நகரில் கலகக் காரரின் ஆட்சியினரம்பத்தைக்குறித்தது. இக்கலகம் ஒரு தொற்று நோயைப் போல் தலைப்பட்டினத்திலிருந்து மாகாணங்களுக்கும் விரைவாகப் பரவியது. பிரபுக்களுடைய மாளிகைகள் எரிக்கப்பட்டன; குருமாருடைய மடங்கள்
பாழாக்கப்பட்டன; நாட்டில் அரசறவின் ஆதிக்கம் தொடங்கியது.
மரியற்றின் “இக்கால ஐரோப்பாவின் மறுஆக்கம்” என்னும் நூலின், (21 ஆம் பதிப்பு) (மெதுவன் 1933) 2-7 அத்தியாயங்கள் கூறும் வரலாற்றில் எனக்கு ஒரு தனிப் பற்றுண்டு.

Page 161
302 பிரான்சியப் புரட்சி
ஒகத்து மாதம் 4 ஆம் திகதி
ஒகத்து 4 ஆம் திகதி வேர்சை நகரிற் கூடிய நாட்டின மன்றமானது கிளர்ச்சி, தன்னலங்கருதாமை என்னும் உணர்ச்சிகளின் வேகத்தில், மானிய முறையை நினைப்பூட்டும் சின்னங்களை அழிக்குந் தீர்மானங்களை ஒன்றன்பின் ஒன்முகத் தொடர்ச்சியாக அங்கீகரித்தது ; அன்று முதல் எல்லா மக்களுக்கும் சட்டத் தின் முன் சமத்துவமும், யாவருக்கும் உத்தியோகம் வகிக்க உரிமையும், நீதி பட்சபாதமின்றி இலவசமாக வழங்கப்படுதலும் உறுதி செய்யப்பட்டன. அடிமைநிலை, கட்டாயவுழைப்பு, வழமைச்சேவைகள் முதலாய நிலமானிய அமிசங்களும், தசமபாகவரி, தலைப்பலன், (குருமாரின்) பல மானியம் முதலியன வும் ஒழிக்கப்பட்டன. குழுமங்கள், வாரியங்கள் ஆகியன குலைக்கப்பட்டன. இந்தத்தினமே தனி உடைமையின் வதத்தினம்’ ஆகும் 'நிலமானியத்தின் கடைசித் தினம்’ என்ற அலங்காரமான சொற்ருெடாாற் காளையில் குறிப்பிட் டார். பல நூற்ருண்டுகளாக நிலைத்திருந்த பிரான்சிய சமூக அமைப்பு ஓரிரவு நிகழ்ந்த கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்களால் முற்முயழிக்கப்பட்டது.
மனிதனின் உரிமைகள்
ஒகத்து மாதம் 27 ஆம் திகதி நாட்டின மன்றம் மனிதனுடைய இயற்கை யான, பசாதீனப்படுத்த இயலாத உரிமைகளைக் கொண்ட பிரகடனத்தை வெளி யிட்டது. ' சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு ", மனச்சாட்சிச் சுதந்திரம், தனியாட் சுதந்திரம், உடைமைப் பாதுகாப்பு என்பன கூறப்பட்ட உரிமைகளி லடங்கியவை.
புதிய யாப்பு
கருத்தியற்றத்துவங்களே முறைப்படுத்திக் கூறுவது, முக்கியமாகப் பிரான் சிய மக்களுக்குக் கடினமானதொன்றன்று. அழிப்பதும் இலகுவானதே. மிரு போ சொல்லியது போல, சிறியவர்க்கு அழிப்பது சுலபம். ஆக்கவேலைகள் பெரிய வர்களாலேயே சாத்தியமாகும். ஆனல் நாட்டின மன்றம் நாட்டினை மீண்டும் சீராக்க வேண்டியிருந்தது. மிருபோ ஒருவனே உண்மையான அரசறிஞனயிருந் தான். மற்றையவர்கள் அநுபவமற்ற, கனவு காண்கிற அபிமானிகளே ஆவர். * சுழல் காற்றின் மேற் சவாரி செய்து புயலை இயக்க அவனே (மிருபோ) மற்ற வர்களிலும் பார்க்க ஏற்றவனுயிருந்தான் ' என்பது மோளியின் தீர்ப்பு. * மிருபோ பின்னும் உயிரோடிருந்தால் உலக வரலாறும் பிரான்சிய வரலாறும் வேறு வகையில் அமைந்திருக்கும் ' எனக் காளையில் சொல்லுகிருர்,
இவர் கூற்றுத் தீர்க்கமானதொன்றன்று. எனினும், 'நான் காலஞ் சென்றவுடன் என்னல் தடுக்கப்பட்டிருந்த இடுக்கண்களெல்லாம் பிரான்சில் நானுதிசைகளி லிருந்தும் கிளர்ந்தெழும். பிரான்சிய முடியாட்சியின் மாண கீதத்தை என்

பிரான்சியப் புரட்சி 303
இருதயத்திற் கொண்டு போகிறேன். அவர்கள் அதன் சவத்தின் மேற் சண்டை செய்வார்கள்' எனும் மிருபோவின் எதிர்வுக்கூற்று உண்மையானதென்பதை ஒருவரும் ஆட்சேபிக்க முடியாது. 1791 ஏப்பிரில் மாதம் 2 ஆம் திகதி மிருபோ
காலமானுன்.
இதற்கிடையிற் பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. மன்றம் புதிய யாப்பு ஒன்றை ஆக்கியது. ஆதர் யங்கு என்பார் பேக்கைப் போலவே இந்த வேலையை இகழ்ந்தார். 'ஆக்குவது என்ற பதத்தின் கருத்தென்ன? ஒரு பாகமுறையிலிரு ந்து களி ஆக்குவது போல் ஓர் அரசியற் திட்டமும் ஆக்கப்படுவதா? சாதாரண ஆங்கிலேயனெருவனுக்கு ஆக்கிய உணவில் உள்ள அவநம்பிக்கை போல * ஆக்கிய யாப்பிலும் அவநம்பிக்கை உண்டு. இங்கிலந்தைப் பின்பற்றி, சட்ட சபைக்குப் பொறுப்பான அமைச்சரின் அறிவுரைக்கமையும் யாப்புறு முடி யாட்சியைப் பிரான்சில் தாபிப்பதைக் காண மிருபோ விரும்பினன். ஆனல் அர சியல் தத்துவத்தின்படி-சிறப்பாக மொந்தெசிக்கியூ என்பவனின் தத்துவத்தின் படி-சட்ட நிருவாகமும் சட்ட ஆக்கமும் முற்முகப் பிரிந்திருக்க வேண்டும். இதற்கிணங்க, சட்டம் ஆக்குமுரிமை 745 பிரதியாளரைக் கொண்ட தனி யான மன்றத்திற்கே இருக்க வேண்டும் என்றும், அமைச்சர் இந்த மன்றத்தி னின்றும் விலக்கப்படல் வேண்டுமெனவும் மன்றம் முடிவு செய்தது. நீதிமுறை முற்முகத்திருத்தியமைக்கப்பட்டது. பழைய பாரிசுப் பாராளுமன்றமும் அதோ டியைந்த பல ஊழல்களும் ஒழிக்கப்பட்டன. குற்ற நீதி, குடியுரிமை நீதி ஆகிய வற்றை வழங்கும் முறைகள் திருத்தியமைக்கப்பட்டனவாயினும், நீதிபதிகளைத் தெரிவு செய்யும் முறை ஏற்படுத்தியதால், செய்த திருத்தம் சீர்குலைக்கப்பட்டது. தலபானம் முற்ருய்ச் சீர்திருத்தப்பட்டது. மாகாணப் பிரிவுகள் ஒழிக்கப் பட்டன. அவற்றேடு பிரான்சிய வரலாற்றின் பெரும்பகுதியும் மறைந்தது. நாடு முழுவதும் சமமாக எண்பத்திமூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப் பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றும் மாகாணங்கள், கோட்டங்கள் (கன்றன் கள்), நகரசபைப் பிரிவுகள் (கொம்மியூன்கள்) என மீண்டும் பிரிக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் தேர்வுரிமை சார்ந்த சபை தாபிக்கப்படவேண்டும். திருச்சபை, அரசியலின் ஒரு பெரும் பிரிவாயது; திருச்சபையார்க்குத் தசமபாக வரி கொடுக்கும் முறை ஒழிக்கப்பட்டது. சமயச் சார்பாக மக்கள் கூடுமிடங்கள் ஒடுக்கப்பட்டன. திருச்சபையின் சொந்தச் சொத்தெல்லாம் நாட்டுரிமையாக்கப் பட்டது. புதிய ஆட்சிக்குப் பத்திமைச் சத்தியம் செய்யும்படி குருவாயத்தினர் வற்புறுத்தப்பட்டனர். பாதித்தொகையோர் அதை மறுத்து, பேதகம் விளைத் தனா.
பாரிசு, புரட்சியியக்கத்திற்குத் தலைமை தாங்குதல்
இப்புதிய மாற்றங்களிற் பல, பாரிசு நகர மக்களினதும் குழாங்களினதும்
நெருக்கல் காரணமாக ஏற்பட்டன. 1789 ஒற்றுேபர் 5 ஆம் திகதி ஒரு பெரிய
கலகக் கூட்டத்தினர், வீறுகொண்ட பெண்கள் ("மீனுட்டரின் செல்லுகை')

Page 162
304 பிரான்சியப் புரட்சி
தலைமை வகித்து நடக்க, வேர்சை நகருக்குச் சென்று அரசனையும் அரச குடும் பத்தாரையும் கைதிகளாக்கி, வலோற்காரமாகப் பாரிசுக்குக் கொண்டு வந்தனர். நாட்டின மன்றம் அரசனைப் பின்பற்றிய படியாற் புரட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பாரிசு நகரத்துக் கயவர் கூட்டத்துக்குக் கைமாறியது. 1791 யூன் 20 ஆம் திகதி அரசனும் அவனுடைய குடும்பமும் மெற்சு நகரத்துக்குத் தப்பி யோட முயன்றபோது, வாறென்சு என்னுமிடத்தில் தடுக்கப்பட்டு மீண்டும்
பாரிசுக்கக் கொண்டு வரப்பட்டனர்.
கு
குடியரசினர், தாந்தன் உரபெசுப்பீயர் ஆகியவர்களுடைய தலைமையில், அரசனை நீக்கும்படி வேண்டினர். ஆனல் சிறிது காலம் நீக்கிவைக்கப்பட்ட பின், புதிய அரசியல் யாப்புக்கமைய ஆள்வதற்குச் சத்தியஞ் செய்த தன் பேரில் (செத்தெம்பர் 21) அவன் மீண்டும் அரசனுக அனுமதிக்கப்பட் டான். செத்தெம்பர் 30 ஆம் திகதி, அக்காலை உறுப்பினராயிருந்த ஒருவராவது மீண்டும் தேர்தலுக்கு நிற்கலாகாது என்னும் ஆஞ்ஞை தீர்மானமான பின்னர் நாட்டின, (அல்லது யாப்பமை) மன்றம் கலைந்தது.
சட்டமன்றம்
புதிய மன்றம், சட்டசபை என்ற பெயருடன் ஒற்ருேபர் 1 ஆம் திகதி கூடியது. முந்திய சபையினரின் ‘தம்மை ஒறுக்கும் புத்தியினத்தால் ' பிரான்சை ஆளும் பொறுப்பு மீண்டும் அடியோடு அனுபவமில்லாதவர்கள் (அனேகர் வயது குறை ந்த நியாயவாதிகள்) கையில் விடப்பட்டது. புதுமன்றத்திலுள்ள பல்வேறுபட்ட குழுவினருள், தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரொண்டே என்னும் பிரிவிலிருந்து வந்த காரணத்தாற் கிரொண்டிசர் என அழைக்கப்பட்ட குழுவினரே ஆதிக்க முள்ளவராயினர். இவர்கள் உலக அனுபவமற்றவர்கள் ; சீரிய குடியரசு முறை யையே தங்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டவர்கள். ஆனல் இவர்கள் இயற் கைத் திறம் மிகவும் படைத்தவர்கள்; சிறப்பான வாக்கு வன்மையுடையவர் கள். 1792 மாச்சு மாதம் அரசன் கிரொண்டிசர் அமைச்சை அமைத்தான். இவர் கள் 'கொடுங்கோன்மை செய்யும் யாவரையும் அவர்கள் அரசு கட்டில்களில் நடுங்கச் செய்யவேண்டுமென்ற தீர்மானத்துடன் பதவியை ஏற்று, முதற்படி யாக ஒசுத்திரியாவுக்கு மாமுக அரசனைப் போர்ப்பிரகடனஞ் செய்ய ஏவி
ஞர்கள்.
ஐரோப்பாவும் புரட்சியும்
ஐரோப்பிய வல்லரசுகளுக்குப் பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கருத் திற் கொள்ளாதிருக்க முடியவில்லை. பதினரும் உலூயி ஓர் அரசன் மாத்திாமல் லன். பேரரசன் இரண்டாம் இலியோபோலின் மைத்துனனுமாவான். நாட்டின மன்றம் பிரான்சியரின் உரிமைகளை மாத்திரமன்றி, மனித இனத்தின் உரிமைகளை யும் வற்புறுத்தியது. ஆவல் மிகுந்த குடியரசினர் தங்கள் கொள்கையை உல

பிரான்சியப் புரட்சி 305
கெங்கும் வலியுறுத்தும் ஆர்வமுடையவராயிருந்தனர். எல்லைப் புற நாடுகளிலும் -சிறப்பாய் ஒசுக்கிரிய நெதலந்தில்-இரையின் நதிப் பிரதேசத்திலுள்ள திருச்சபைக்குரிய தேர்வகங்களிலும் புரட்சி விதை விதைக்க நிலம் செவ்வனே பண்படுத்தப்பட்டிருந்தது. இது மாத்திரமன்று. பிரான்சிலிருந்து தப்பியோடிய விழுமியோர் சேர்மானிய மன்னரை அணுகிப் பிரான்சிய அரசன் சார்பாக மட்டு மன்றி, முடியாட்சிமுறை சார்பாகவும் தலையிடும்படி தூண்டினர். பின்னிற்சு என்னுமிடத்திலிருந்து வெளியிட்ட பிரகடனத்தின் படி (1791, ஓகத்து) பேரா சன் இலியோபோலும் இரண்டாம் பிரதரிக்கு உவிலியமும் விழுமியோர்கள் தூண்டியவாறு தலையிடமறுத்து, பிரான்சுக்கு மாருகத் தாம் ஒன்று சேர்ந்து வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கத் தீர்மானித்தனர். 1792 ஏப்பிரில் மாதத்தில் கிரொண்டிசர் ஒசுத்திரிய நெதலந்துப் பிரதேசத்தைத் தாக்கினர். பிரான்சியப் படைகள் திகிலடைந்து ஒடித் தம் தலைவர்களைக் கொலை செய்தன. துமோறி யசு என்பவன் ஆத்திரங்கொண்டு, ‘நீங்கள் பைத்தியக் காரரைப் போலச் சென் மீகள் ; மடையாைப்போல விட்டுக்கோடினிர்கள் ' என எழுதினன். பாரிசுக் கும்பல் அத் தோல்வியைக் கண்டு சினங்கொண்டு துயிலெறிசுக்குட் பலவந்த மாகப் புகுந்து (யூன் 20), அரசனை அணுகி விடுதலைச் சின்னமாகிய சிவப்புத் தொப்பியை அணியும்படி கட்டாயப்படுத்திற்று. இவ்வேளையில், இலபாயெற்று இறை மகனைத் தலைவனுகக் கொண்ட மிதவாதிகள் அரசனையும் இராணியையும் காப்பாற்ற முற்பட்டனர். எனினும் கலகக் காரர் மீட்டும் தாக்கவே, ஒகத்து 10 ஆம் திகதி நாட்டின மன்றம் பயந்து முடியாட்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
தாந்தன்
யூன் 25 ஆம் திகதி பிரசியா, ஒசுத்திரியாவுடன் சேர்ந்தது. நட்பாளர் படை கள் இரையின் நதியைக் கடந்து, வேடன் நகரைக் கைப்பற்றிய பின்னர், பாரிசு நகரை நோக்கிச் சென்றன. பிரான்சிற் பாதிப்பேராயினும் படையெடுத்து வந் தவர்களின் நோக்கத்தை ஆதரித்தனர். ஒகத்து 10 ஆம் திகதிக்குப் பின் தாந் தன் செயலளவிற் சருவாதிகாரியாகி, செத்தெம்பர் வதத்தினுல் தன் எதிரி களைத் திகிலடையச் செய்து, தேசப் பாதுகாப்பு முயற்சிகளைத் துரிதமாக்கினன். வல்மி என்னுமிடத்தில், நாட்பாளர் படைகள் செத்தெம்பர் 20 ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டன. பிரான்சு போரில் மற்ற நாடுகள்மேற் சென்று தாக்கு தலை ஆரம்பித்தது. 1792-3 மாரி முடியுமுன்னர் பிரான்சிய குடியரசுப் படைகள் பெல்சியம், சவோய், நீசு ஆகிய இடங்களைக் கைப்பற்றியதுமல்லாமல், மத்திய இசையின் நாடுகளிலும் பலமான ஆதிக்கத்தை நிலைநாட்டின.
பதிஞரும் உலூயியின் சிாச்சேதம்
இதற்கிடையிற் சட்டசபை கல்ந்து, ஒரு புதிய நாட்டினச் சமவாயமொன் றைக் கூட்டியது. இது செத்தெம்பர் 21 ஆம் திகதி கூடி, நாட்டைக் குடியரசாக

Page 163
306 பிரான்சியப் புரட்சி
மாற்றி அரசனை நியாய விசாரணைக்கு ஆளாக்கத் தீர்மானித்தது. அரசனுடைய முடிவைப் பற்றிக் குடியொப்பம் எடுக்குமுகத்தாற் கிரொண்டிசர் கால தாமதம் செய்திருப்பார்கள். ஆனல், திசெம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணை தொடங் கியது. சனவரி மாத நடுப்பகுதியிற் கலகக்காரர் பொறுமையை இழந்து ‘கொடுங்கோன் மன்னனின் சாவைக் கோரினர். உலூயி சனவரி 18 ஆம் திகதி குற்றவாளியெனக் கண்டு, 21 ஆம் திகதி சிரச்சேதஞ் செய்யப்பட்டான். அவன் உண்மையிற் கொடுங்கோலனல்லன். நன்னுேக்கமுடையவனெனினும் தைரிய மாக ஒரு காரியம் ஆரம்பிக்கும் குணம் சற்றுமில்லாதவன். நாட்டில் உண்டான நெருக்கடியை ஏற்றவாறு ஈடுசெய்யும் வன்மையற்றிருந்தான். யாக்கோபினர் தலைமைக்குத் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்த உரபெசுப்பியர், ' பிரான்சு வாழ்வதற்காக உலூயி சாகவேண்டு மென, அரசனைச் சிரச்சேதஞ் செய்த மைக்குக் காரணம் காட்டி விளக்கினன். இவ்விருதலைக்கொள்ளிநிலை, கற் பனையே. ‘மிகக் கொடிய, அநீதியான, வெறுக்கத்தக்க செயல்', எனும் சாள்க சேமிசு பொக்கிசு என்பவனுடைய தீர்ப்பு சரியான தீர்ப்பெனப் பின்னுளில் ஆதரிக்கப்பட்டது.
ஐரோப்பாவிற்கெதிராகப் பிரான்சு
1793 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 1 ஆம் திகதி பிரான்சியக் குடியரசானது இங்கிலந்து, ஒல்லந்து ஆகிய நாடுகளுக்கு மாமுகப் போர் தொடுத்தது. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் இசுப்பெயினுடனும் போர் தொடுத்தது. இயலுமா ஞல், பிற்று இங்கிலந்தை இந்தப் போரிற் சேராது தடுத்திருப்பான். ஆனல், 1792 இல் பிரான்சியக் குடியரசு முடியரசினை ஒழிக்க மறுத்த எல்லாத் தேசங் களுக்கும் தான் பகையெனவும், ஐரோப்பாவின் பொதுச் சட்டத்திற்கு விரோத மாகச் சிகெற்று நதியில் யாரும் கப்பற் போக்கு வாத்துச் செய்யலாம் என்றும் பிரகடனஞ் செய்தது. அன்றியும், பெல்சியத்தைக் கைப்பற்றியதனல் இங்கிலந் தின் மிக நொய்தான இடத்தைப் பிரான்சு புண்படுத்தியது. நெதலந்தை எந்தப் பெரிய ஐரோப்பிய வல்லரசாவது தாக்குவதை இங்கிலந்து எக்காலமும் பரா முகமாய் விட்டதில்லை. பதினமும் உலூயியின் கொலை இங்கிலந்து தலையிடுவதற் குப் போதிய தலைக்கீடாயமையாது விட்டாலும், அனேக ஆங்கிலேயர் அபிப் பிராயப்படி அச் செய்கை பிரான்சியக் கொடுமையை எல்லை மீறச் செய்தது.
இங்கிலந்து இப்போரில் தலையிட்டதற்கு உண்மையான நியாயத்தைப் பேக்கு என்பவர் கூறியிருக்கிருர் : “ இந்த விசித்திரமான, பெயர் கூறமுடியாத, பொல் லாத உணர்ச்சிப்பிழம்பான பொருள் ஐரோப்பாவின் மத்தியில் நிலைநாட்டப்பட் டிருக்கும் வரை, வரம்புடைய அல்லது வரம்பற்ற எந்த முடியரசும், அல்லது பழைய குடியரசுகளிலெவையேனும் சேமமாயிருக்க முடியாது. படை பூண்ட ஒரு கோட்பாட்டை எதிர்த்தே நாம் போர் செய்கிழுேம்".

பிரான்சியப் புரட்சி 307
இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையே தொடர்பாக 1793 தொடக்கம் 1801 வரையும், மீண்டு 1803 இலும் போர் நடைபெற்றது. தீபகற்பத்துக்குரிய போர் 1808 இல் ஆரம்பமாகும் வரையும் இங்கிலந்து ஐரோப்பாக் கண்டத்தில் கடுமை யாகவோ தொடர்ச்சியாகவோ போர் செய்யவில்லை. ஆனல், போர், பிரான்சுடன் மேற்கிந்திய தீவுகளிலும் கிழக்கிந்திய தீவுகளிலும் எகித்திலும் சிரியாவிலும் தென்னபிரிக்காவிலும் தொடர்பாக நடந்தது. ஐரோப்பாக் கண்டத்திற் பிரான் சுக்கெதிராகக் கூட்டிணைப்புக்கள் உருவாக்கப்பட்டன; முறிவெய்தின; மீட்டும் அமைக்கப்பட்டன. சமர் புரிந்தன. வெற்றிகள் ஈட்டப்பட்டன; பொருத்தனை கள் நிறைவேறின. இந்நிகழ்ச்சிகளை விரிவாய்க் கூறுவது இராணுவ வரலாற் முசிரியர் தவிர்ந்த ஏனையோரைப் பொறுமையிழக்கச் செய்யும் ; இப்புத்தகத் கின் நோக்கத்திற்குப் பயனற்றதுமாகும். 1795 இல் பிரான்சியக் குடியரசு பால் நகரத்தில் தசுகனி, பிரசியா, இசுப்பெயின் ஆகிய நாடுகளுடன் ஒரு கோவை யாகப் பல பொருத்தனைகளைச் செய்தது. இதன் பயனுக இசுப்பெயின் சன் தோமிங்கோவைப் பிரான்சுக்குக் கையளித்தது. பிரசியா இசையின் நதிக்கு மேற்கேயுள்ள தன் நாடுகளைப் பிரான்சுக்குக் கொடுத்துப் பின் பத்து வருடங் களாகப் போரில் பங்குபற்றவில்லை. பிரான்சு தனக்குக் கிடைத்த இசையின் எல்லைப்புற நாடுகளுக்காக ஈடு செய்ய, சேர்மானிய இளவரசர்களுக்கு நட்டம் விளைப்பதாயினும், ஆற்றின் கிழக்கேயுள்ள நாடுகளை பிரசியா சேர்த்துக் கொள் வதற்கு இணங்கிற்று.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1797 இல் பிரான்சியக் குடியரசும் ஒசுத்திரி யாவும் கம்போ-போமியோப் பொருத்தனையை நிறைவேற்றின. ஒசுத்திரியா இரையின் நதியின் எல்லைப்புறத்தைப் பிரான்சுக்குக் கொடுத்தது. பிரான்சிற்குப் பெல்சியத்தையும் கையளித்தது. சாள்சுபேக்கையும், பவேரியாவின் ஒரு கீற்றை யும், வெனிசுக் குடியரசின் அடிசே ஆற்றின் கிழக்குப் பகுதியிலுள்ள நாட்டை யும், இத்திரியா, தால்மேசியா ஆகிய மாகாணங்களையும் ஒசுத்திரியா நட்ட ஈடாகப் பெற்றது. அடிசே ஆற்றின் மேற்கேயுள்ளி வெனிசிய நாடு சிதல்பைன் குடியரசுக்குக் கொடுக்கப்பட்டது. வட இத்தாலியிலிருந்து நெப்போலியனல் பிரித்துப் புதிதாக ஆக்கப்பட்ட இக்குடியரசானது வல்தெலின, உலொம்பாடி, மொடினு, போப்பாட்சிக்குரிய அரசுகளின் வட பகுதி ஆகியவை அடங்கியதா கும். பிரான்சு அயோனியன் தீவுகளையும் அல்பேனியாக் கரையிலுள்ள வெனி சின் குடியேற்ற பகுதிகளையும் பின் கூறப்படும் நோக்கங்களிற்காகத் தானே வைத்திருந்தது.
பயங்கர ஆட்சி
இதற்கிடையிற் பிரான்சிற் பல நிகழ்ச்சிகள் நடந்தேறிவிட்டன. பிரான்சிய
குடியரசு தன் சொந்தப் பிள்ளைகளை ஒருவர் பின் ஒருவராக விழுங்கியது. காளே
யில் கூறுவது போல், 'மறுவிடயங்கள் வேகமாக நடைபெற, கிலற்றின் என்ற
தலை கொய்தறியும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது . 1793 மாச்சு மாதத்
திற் புரட்சிகரமான தீர்ப்புரிமை மன்றமும், ஏப்பிரில் மாதத்திற் பொதுப் பாது
12-B 24178 (5.160)

Page 164
308 பிரான்சியப் புரட்சி
காப்புக் குழுவும் நிறுவப்பட்டன. இக்குழுவின் முக்கியமான உறுப்பினர் உரப சுப்பியர், அவர் இணைவர்கள் கூதனும் சன் இயசு துவும் ஆவர்; யுத்த ஒழுங் கமைப் போன் காணுே ; பயங்கர ஆட்சியை கட்டுக்கோப்போர் பில்லோ
வறென்சும் கொலோ த ஏபோயும் ஆவர்.
1793 செத்தெம்பர் தொடக்கம் 1794 செத்தெம்பர் வரையும் பிரான்சிற் பயங்கர ஆட்சி தாண்டவமாடியது. இதற்கு முதலிற் பலியானேர் ஒற்ருேபர் 16 ஆம் திகதி சிரச்சேதஞ் செய்யப்பட்ட இராணி மாரி அன்முேயினற்றும், ஒற்ருேபர் 31 ஆம் திகதி சிரச்சேதஞ் செய்யப்பட்ட பயனற்ற இலட்சியவாதிகளான கிரொண்டிசரின் தலைவருமாவர். 1793 இலையுதிர் காலத்தில் இலாவன்தே என்னு மிடத்தில் அரசன் சார்பாக எழுந்த கலகம் படுகொலைகளினுல் துடைத்தழிக்கப் பட்டது. பின்னர் பயங்கர ஆட்சியின் பற்பல கட்சிகளின் முறை வந்தது. தாந் தன் கட்சியினுதவியுடன் உரபிசுப்பியர், தீவிரவாதிகள் தலைவன் ஏபேட்டை யும் 1794 மாச்சு மாதத்தில் கிலற்றினுக்கு இரையாக அனுப்பினன். இவ்வண் ணம், வெறித்த இடதுசாரிக் கட்சியினரை ஒழித்துக் கட்டியபின்னர் உாபிசுப் பியர் தாந்தன் கொள்கையினரிலும் மிதவாதிகளிலும் தன் கவனத்தைச் செலுத் தினன். ஏப்பிரில் மாதத்தில் ஏபேட்டின் கதியையே இவர்களும் அடைந்தனர். பின்னர் இறுதியில் எல்லாக் கட்சியினரும் அடுத்து யாருடைய தலை விழுமென அறியாது அழித்தவனை அழிக்க ஒன்று சேர்ந்தனர். யூலை முடிவில் உாபிசுப்பிய ரும் அவன் தோழர்களும் தாங்களே ஏவிய அரக்கனுக்கு இரையானர்கள். நவம் பர் மாதத்திற் பாரிசிலுள்ள இயக்கோபினர் குழாம் கலைக்கப்பட்டது. பயங்கர ஆட்சி முடிவாயது. ஒழுங்கான கட்டுக்கோப்பற்ற சிறுபான்மையோர் இக் துணை நீண்ட காலத்திற்கு நாடு முழுவதையும் எங்ங்னம் தங்கள் ஆதிக்கத்தில் வைத்தாட்டினர்கள் என்பது வரலாற்றிலே பெரிய புதிராகும். இவர்களின் வீழ் ச் ெ பிரான்சிய மக்களின் பெரும் பகுதியினருக்கு மகிழ்ச்சியளித்தது. பணிப்பாளர் குழு
1795 இல் பிரான்சு, பிரசியாவுடனும் இசுப்பெயினுடனும் தனக்கு மிகவும் சாதகமான அமைதிப் பொருத்தனை செய்தது. தன்னிருமருங்கும் உள்ள பகைவர் களை வெற்றிகொண்டபின், உள் நாட்டிலும் நிலையான அரசினை நாட்டும் நோக்கத் துடன் மூன்றும் வருட யாப்பை வெளிப்படுத்தியது. நிருவாகம் ஐவரைக் கொண்ட பணிப்பாளர் குழுவின் கையில் விடப்பட்டது. பழைய பிழைகளினும் படித்தவற்றைப் பயன்படுத்தி இருமன்றச் சட்டசபை நிறுவப்பட்டது. ஆனல், பணிப்பாளரைக்கொண்ட இந்த அரசியலமைப்பிலும் குறைவுகள் இருந்தன. பிற்போக்காளர்களும் தீவிரவாதிகளும் ஒன்றுசேர்ந்து கிளப்பிய 13 ஆம்

பிரான்சியப் புரட்சி 309
வெந்தேமியர்க் (5.10.1795) கலாத்தைப் பிரான்சியக் குடியரசு ஓர் இளம் கோசிக்கப் பீரங்கிப் படைவீரனதும் அவனுடையதெறிகுண்டு வீச்சினதும் உதவியால் வெற்றிகரமாக அடக்கியது. ஆனல், 1795 இல் தங்களைக் காப்பாற்றிய பீரங்கி விரன் நிறைவேற்றிய திடீர் நடவடிக்கைக்கு 1799 இல் பணிப்பாளர் (35(1Բ அடிபணிந்தது. புரட்சியின் விசித்திரக்கதை முடிந்தது. இப்போது அதன் வரலாற்றை ஆரம்பிப்போமாக ' என நெப்போலியன் கூறினன்.

Page 165
Ti Ti
ாந்து விரிசூடி ق
கத்தே
φ" 副
ಕ್ಲಿ_ಹ್ಲಿ TTE ፮*" نئی بھیج
శ్రీ تماعی
பீற்றகபேக்ரு
მუზ
函
யோபோதிந்
ம் נפדו 1772 ஆண்டுபரில் நடந்த பி
பங்ாக்காட்டும் படம்
hirt arri
த்ர கந்தகா ஆகத
இம் மதுகோடிாாடி
Hilir:
போலந்து
 

முக்கிய
17:1t:
| || 17
ITI
| 1
| 1
| 1
| TII
| T!!!!
| TII
Rh
| Eլի]]
|ԷլիII
|Hլի 1
| E[]]
| Fill:
| Eù፵
1 EI}ጃ
|Eլիl
| Hi):
| Eù!!
| Իլիի
RI.
|Eլիք:
|Eլիի
I Fili
| ՎIII:
IեIII:
|Hլյի
| HԱ7
| Hլ]]
| HIIT
1 EüT
அத்தியாயம் 25
நெப்போலியன் போனப்பாட்டின்
எழுச்சி (1795-1807)
: திகதிகள் :
இத்தாவியத் தொடர்க: கம்போ-போமியோப் பொருத்தனே, ாகித்தி மீது படையெடுப்பு. நைi நெல்சனின் வெற்றி (ஒகத்து 1. உரோப் குடியரசு, பதிதுேபிய53 குடியரசு, 18 ஆம் புருமிய மாத ஆட்சிப் புரட்டு நவம்பர் 9, கொள்: ஆட்சி. இரண்டாம் கூட்டமைப்பு. |LTL: ||ll. ஒகணிவிதன் "பர் (ெேசம்பர், 3). படைபூண்ட நடுநிவேன: (திசெம்பர்). 3.ஒாவிற் பொருத்தனே, பு: டேன்படிக்கை-திருச்சன் பு: கரீகம், ாமியேன்சுப் பொருத்தன. இங்கிந்துக்கு பிரான்சுக்குமிடையில் மீண்டும் போர்.
ேேஆம் போட்டியராற் கைப்பற்றப்பட்டது. நெப்போவியன் பிரான்சியரின் போாசணுதல், التي நெப்போவியன் இத்தாலியின் அரசகுதல், முன்தும் கூட்டமைப்பு நாற்களின் போர். மாக்கு என்பான் நடனும் ஒப்பந்தத்தின் மேன் சரனானடதல் (ஒற்றுேபர் 20, நிாபகார் சண்டை (ஒற்றுேபா, 21). ஒளிர்நீர் சண்டை (நீரெய்பர், 3, சோன்றேன், பிறெசுப்டேக்குப் பொருத்தனேகள் (திசேம்பர். யோசேப்பு போனட்பாட்டு நேப்பிளின் அரசனுதல், உலுயி போனப்பாட்டு ஒல்விநிதிகள்
:ஒதர், இாைன் நாட்டுக் கூட்டினேப்பு (பூன்). இயேனு, ஒவஈராத்துச் சமர்கள் ஒற்றுேபா). பேபிளில் நேப்போலியன். டேனின் ஆகுனரு (ந:பேர்}. உண்சோபி: நெப்போரiயன நிசெம்பர்). எமினோ (பெப்புரவரி 8, பிறீதிEந்து ஆகிய இடங்களில் நடந்த சமர்கள் (யூன் 14). திவ்வித்துப் போருத்தனேகள் (யூ&). போத்துக்க பூணுேவாற் கைப்பற்றப்பட்டது (நவம்'. மிான் ஆஞ்குேகன் (திசெம்பர்).

Page 166
32 நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
புரூமயர் மாதம் 18 ஆம் திகதி (நவம்பர், 9)
நவம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று நடந்த ஆட்சிப்புரட்டு பிரான்சிற் பொது அங்கீகாரத்துடன் வரவேற்கப்பட்டது. அவ்வழி, பணிப்பாளர் குழு வீழ்ச்சி யடைந்ததெனினும், அதன் மறைவையிட்டு எவரும் துயரப்படவில்லை. இன்னும், குடியரசின் வீழ்ச்சியும் அவ்வழி விளைந்தது. ஆனல், பிரான்சியர் உண்மையாகக் குடியரசு உணர்ச்சி படைத்தவர்களாயிருக்கவில்லை. இதன் வேருெரு விளைவு பேரரசு வாதத்தின் தோற்றமாகும். ஆனல், இது மக்களுக்கு இன்னும் புலப்பட ៨៨). இவ்வாட்சிப்புரட்டு தங்களுடைய பல நலன்களுக்கும் தங்களுடைய வேறுபட்ட இலக்குக்களை அடைவதற்கான நம்பிக்கைக்கும் ஏற்ற ஒரு புதிய ஊழியைத் தொடங்குமென்று நம்புதற்குப் பெரும்பாலும் எல்லாக் கட்சிக்கும் ஆதாரமிருந்தது. முந்திய பத்தாண்டில் ஆட்சிக்கு வந்த கட்சி ஒவ்வொன்றும் தான் அளிப்பதாகக் கூறிய-ஆனல் நடைமுறையில் இன்னும் அடையாதிருந்த --சுதந்திரத்தை இந்தப் புரட்சி தங்களுக்கு அளிக்குமெனக் குடியரசுக் கொள்கையினரில் மிதவாதிகள் அக்கறையுடன் எண்ணினர்கள். முடியரசு வாதிகள் போனப்பாட்டை இரண்டாம் மங்கு எனவும், பூபன் வமிசத்தவரை மீண்டும் அரசாக்குதற்கு இவ்வாட்சிப்புரட்டு ஒரு படியெனவும் கருதினர்கள். இதனுற் கலகமும் குழப்பமும் நிறைந்த காலம் முடியக்கூடுமென்றும், அமைதியும் ஒழுங்கும் கலக்கமுற்ற ஒரு நாட்டில் மீண்டும் நிலவக்கூடுமென்றும் பிரான்சியக் குடிகளிற் பெரும்பாலோர் நம்பினர்கள். இந்த நம்பிக்கைகளிற் பல பின் தொடர்ந்த மாதங்களில் தகர்க்கப்பட்டன. முழுப் பலன்களும் வெற்றிபெற்ற சேனுபதியையே சேர்ந்தன. இச்சேனுபதியின் தோற்றத்தை 1790 ஆம் ஆண்டி லேயே பேக்கு மிகச் சிறந்த அறிவு நுட்பத்துடன் மேல்வருமாறு எதிர்வு கூறி யிருந்தான் போாண்மைக்குரிய உண்மையான மனுேபாவமும் உணர்ச்சி வேக மும் உடையவனே எல்லோருடைய கவனத்தையும் தன்னிடத்தே ஈர்ப்பான். அந் நிகழ்ச்சி நிகழும் கணத்திலே படையின் உண்மையான ஏவுநனே உங்களுடைய தலைவனுவான். அவனே உங்களாசனுக்கும் உங்கள் மன்றத்துக்கும், உங்க ளுடைய குடியரசு முழுவதற்கும் அதிகாரியாவான்' அதே காலத்திற் பேக்கு எதிர்வு கூறிய வேருெரு கூற்று அதே சிறப்புடையது : ' இற்றை ஞான்றுக் குடி யரசுத்திட்டம் வெற்றியடையாதாயின், மிதமான சுதந்திரத்திற்குரிய எல்லாப் பாதுகாப்புக்களும் அத்துடன் தோல்வியடையும். வல்லாட்சியைத் தணிக்கும் மறைமுகக் கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டன. எனவே, அந்தக் குலமுறை முடியரசு, அல்லது வேறு குலமுறை முடியரசு பிரான்சில் இன்னுமொரு முறை பூரண ஆதிக்க நிலையைப் பெறுமானல், அது அவ்வரசனின் கூசறிவுடன் கூடிய தூய்மையான ஆலோசனைகளாற் சுயவிருப்புடன் ஆரம்பத்திலே பக்குவப்படுத் தப்படாவிட்டால், இம்மாநிலத்தில் எக்காலத்திலும் தோன்ருத, பரிபூரணமாகத் தன்னெண்ணப்படி நடக்கும் ஒரு சத்தி ஆகும். '

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 33
பிரான்சியக் குடியரசில் இவ்வண்ணம் தலைவனுகிய இவ்விளம் போர்வீரனின் புகழெழுச்சி வியக்கக் கூடிய வேகம் பொருந்தியதாயிருந்தது. கோசிக்காவிலே அயாக்கியோ என்னுமிடத்தில் 1769 ஆம் ஆண்டு பிறந்து, பிறியெனிலும் பாரிசி லும் உள்ள இராணுவப் பள்ளிக்கூடங்களிற் கல்வி கற்றன். பீரங்கி வீரர்களைப் பிரான்சிற்காட்டிலும் உயர்வாக மதிக்கும் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கத்தின் சேவையிற் சேர ஒருகாலம் எண்ணினன். ஆனல், கோசிக்காத்தீவு பிரான்சிய குடியரசிடமிருந்து விலகிச் சுதந்திரப் பிரகடனஞ் செய்யும்வரை (1793) அவன் அத்தீவிலேயே இருந்தான். பிரான்சையடைந்து, யக்கோபின் கட்சியாளனெனப் பாசாங்கு பண்ணிப் பின் தூலோன் முற்றுகையிற் சிறந்த பீரங்கி வீரனுக விளங்கினன். ஆதலால், போர் அலுவலகத்தில் அவனுக்கு ஒரு பதவியளிக்கப் பட்டது. ஒற்ருேபர் 5 ஆம் திகதிக் கலகத்திற் குடியரசுக்கு அவனளித்த குறிப் பிடத்தகுந்த சேவைக்காக இத்தாலியிலிருந்த படைக்குச் சேனபதியாக நியமிக்கப்பட்டான். இந்தச் சடுதியான பதவி உயர்ச்சியும், இவனுக்கும் யோச பின் போகனைக்கும் நடந்த திருமணமும் உடன் நிகழ்ந்தன. ஆனல், அத்திரு மணத்தாலாய சமூகச் செல்வாக்கைக்காட்டிலும், வியப்புக்குரிய அவன் படைத் திறமையைக் காணுே என்பான் புரிந்துகொண்டதே நெப்போலியனின் உயர்ச்
சிக்குக் காரணமாயிருந்தது.
1796 ஆம் ஆண்டு மாச்சு மாதம், போனப்பாடு சேனபதிப் பதவியேற்க நீசு என்னுமிடத்திற்கு வந்துசேர்ந்தான். விடுதலையளித்தல் ? என்ற எண்ணமே மனத்திலில்லாவிட்டாலும், வழக்கமான குடியரசுச் சுலோகங்கள் நாவி லொலிக்க இத்தாலியை அடைந்தான். உலொம்பாடி நகரங்களைக் கொள்ளையடித் துப் பரிசின் குன்றிய இறைசேரியை நிசப்பலும், ஒசுத்திரியா மீது தொடுக்கும் போரிற் பிரான்சின் நிலைமையை வலியுறுத்தலும், தன்வீரரைத் தன்மாட்டுப் பற்றுக்கொள்ளச் செய்தலுமே அவன் நோக்கமாகும். ‘வீரரே ! நீவிர்பசியுடை யிர் ; கந்தையுடுத்துள்ளீர்; அரசாங்கம் இன்னும் உங்கள் கூலியைத் தரவில்லை ; தாவுமொன்றுமில்லை . . . . உலகத்திலே மிகச் செழிப்பான சமவெளிக்கு உங்களே அழைத்துச்செல்ல இருக்கின்றேன். வளமுள்ள மாகாணங்களும் பெரிய நகரங் களும் விரைவில் உங்கள் காலடியிற் பணிந்து கிடக்கும். நீங்கள் அவ்விடத்திற் புகழ், பொருள் ஆகியவற்றைக் காண்பீர்கள் . . . . இவற்றை அடையத் தேவை யான துணிகரமும் விடாமுயற்சியும் உங்களிடமுண்டா ?' என வெறுங்காலுட ம்ை, அரைப்பசியுடனும் நல்லாயுதமின்றி நடந்து செல்லும் படைஞர்களுக்குக் கவர்ச்சியான நம்பிக்கைகளை எடுத்துரைத்தான்.
அவர்களும் ஆற்றல் மிக்க சேனபதியின் தலைமையில், அக்கிறன் தங்களிட முண்டென விரைவில் நிரூபித்தார்கள். மிகுந்த வெற்றியளித்த தொடரிகலினல் அவர்களின் ஏவுஞன், சாடினியாவின் அரசனுடனும் (1796, மே), மொடின, பாமா ஆகிய இடங்களின் கோமக்களுடனும், இரு சிசிலிகளின் அரசனை பேடி னந்துடனும், போப்பாண்டவர் 6 ஆவது பயசுடனும் (யூன்), கடைசியாக (மேற்கண்டவாறு) கம்போ-ப்ோமியோவில் 1797 ஒற்ருேபர் மாதத்தில் ஒசுத் திரியாவுடனும் தொடர்ச்சியாகப் பொருத்தனைகளை நிறைவேற்றினன்.

Page 167
314 நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
இத்தாலியின் நிலைமை
1796 இல் போனப்பாட்டு இத்தாலிமேற் படையெடுத்துச் சென்றபொழுது, அந்நாடு பொதுத் தொடர்பு அற்றனவும், சில வேளைகளில், சிறிதே பொதுத் தொடர்பு உடையனவுமான பன்னிரண்டு வெவ்வேறு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். வட இத்தாலியில் ஒசுத்திரியாவின் செல் வாக்குப் பலமாயிருந்தது. அபிசுபேக்குக் குலமுறையினர் உலொம்பாடியிலும் (மிலனிசு) தசுக்கனி, மொடின, மன்றுவா ஆகிய கோமகப் பிரிவுகளிலும் ஆட்சி செய்தார்கள். இசுப்பானிய பூபன் குலமுறையினர் கையில் இரு சிசிலிகளும் பாமா கோமகப் பிரிவும் இருந்தன. வெனிசு, செனேவா, உலூக்கா, சன்மரீனே ஆகியன குடியரசுகளாகத் தொடர்ந்திருந்தன. சவோய்க் குலமுறையினர் சாடி னியா அரசர்களாகச் சாடினியாத்தீவு, சவோய், பீதுமன் என்னுமிடங்களே ஆட்சி செய்தனர். மத்திய இத்தாலி முழுவதும் போப்பாட்சியின் பிடியிலே இருந்தது. இத்தாலியைப் பற்றி நெப்போலியனுக்கு உண்மையான பரிவுணர்ச்சி இருந்தது. ஐக்கியப்பட்ட இத்தாலி பற்றிய கருத்து முதன்முதல் அவனுள்ளத் திலேயே உதித்தது, முதலாம் தொடரிகள் முடியுமுன், பிரான்சைச் சார்ந்த குடி யரசுகளை நிறுவி, கலக்கமுற்ற இத்தாலிய நாட்டைத் திருத்தி அமைக்க ஆரம் பித்தான். உவாட்டலூவில் அவன் பணிநெறி முடியுமுன் அங்கே ஒரு பெரும் வேலையை நிறைவேற்றினன். இவன் காலத்திலிருந்த இத்தாலியர்கள் இவனே ஓர் அக்கிரமக்காரனென மதித்திருக்கலாம். ஆனல், கொடுங்கோன் மன்னரை மிகவும் வெறுத்த மசினி தானும் அவனை ஒரு நன்மை பயக்கும் அக்கிரமக்கார னெனக் கண்டான். நெப்போலியன் தாக்கிய ஊழல் மலிந்த அரச அவைகளைப் பற்றியும், கவிழ்த்துவிட்ட சிறு இளவரசுப் பகுதிகளைப் பற்றியும் நாம் இரக்கப் படவோ கவலைப்படவோ வேண்டியதில்லை. எப்படியாயினும் இக்காலிக்கு நெப் போலியன் புரிந்த சேவைபற்றி விரைவில் ஆராய்வோம்.?
கம்போ-போமியோப் பொருத்தனை பற்றி மீண்டுமா ராய்வோம். இந்தப் பொருத்தனை அதன் ஏற்பாடுகளால் முதன்மை படைத்திருப்பதுமன்றி, அரசிய லாங்கில் நெப்போலியன் முதல் தோற்றியதைக் குறிப்பதாலும் முதன்மையு.ை யதாகின்றது. அவன் தள்ளாடும் ஒரு குடியரசின் பணியாளகைவன்றி, ஒரு சுயேச்சையான வெற்றியாளனுகச் செயல்புரியத் தொடங்கினன். "நான் இத்தா லியில் வெற்றிகள் எய்துவது பணிப்பாளர் குழுவைச் சேர்ந்த சட்டவாணர்க் கோ, காணுேவிற்கோ, பாரா சிற்கோ புகழை ஈட்டவென்று எண்ணுகிமீரா? ஒரு குடியரசை உருவாக்குவதே என் கருத்தென்றெண்ணுகிறீரா? என்ன புதுமை யான கருத்து 1 மூன்று கோடி மக்களைக்கொண்ட குடியரசு 1 எங்கள் நடத்தை
1 இடைக்கட்டங்களின் விபரத்தை மரியற்றின் “ இக்கால இத்தாலியின் பிரச்சினைகள்” என்ற நூலின் (ஒட்சுபோட்டு 1931) இரண்டாம் அத்தியாயத்தையும் திரியற்று எழுதிய "நெப் போலியனும் இத்தாலியும்” (பாசு, 1906) எனும் நூலையும் பார்க்க.
பின்வரும் முப்பதாம் அத்தியாயத்தைப் பார்க்க.

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 315
களுடனும் பழிச்செயல்களுடனும் இத்தகைய குடியரசொன்றை எப்படி உரு வாக்க முடியும்? நாட்டுக்குத் தேவைப்படுவது மிகு புகழ் படைத்த ஒரு தலை வனே ; நாட்டுக்குத் தேவைப்படுவது அரசியற் கொள்கைகளுமல்ல ; சொற்ருெ டர்களுமல்ல ; பிரான்சிய மக்களுக்குப் புரியாத கருத்தியற் கட்டுரைகளுமல்ல. அவர்களுக்கு வேண்டியன சில விளையாட்டுப் பொருள்களே ; அவையே போதும்; அவர்கள் விளையாட்டுப் பொருள்களுடன் விளையாடுவார்கள். மற்றவர் கள் காட்டுமல்வழியே நடந்துகொள்வார்கள். ஆனல், அவர்கள் எந்த இலக்கை நோக்கிச் செல்கிருர்களென்பதை அவர்கள் காணுதபடி தடுக்க வேண்டும்’ என 1797 ஆம் ஆண்டு மே மாதத்தில் அவன் மியோ என்பவனுக்கெழுதினன்.
புரூமயர் மாதம்
பாரிசிலே நிலைமை இன்னும் நெப்போலியனுக்கு வாய்ப்பாகவில்லை. உறுங் காலம் வரும்வரையும் எப்படிக் காத்திருக்க வேண்டுமென்பது போனப்பாட்டுக் குத் தெரியும். 1797 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சிப் புரட்சியின் முக்கிய கருத்தா நெப்போலியன் தானேவென்று சொல்ல வியலாது. ஆனல், புரட்சிக்கு ஒப்புதலளித்து, முன்னேற உதவி செய்து, ஈற்றிற் கிடைத்த பயனில் மிகப்பெரிய பங்கை அடைந்தானென்பதில் ஐயமில்லை. இந் தப் புரட்சி நவம்பர் 9 ஆம் திகதி நிகழ்ந்த புரட்சிக்கு வழி கோவியது. புரூமய மாதப் புரட்சி இவனை ஆட்சித் தலைவர்கள் மூவரிலொருவனுக்கியது. சியேசு என்பான் அமைத்த விசித்திரமான ஆட்சி முறைமையை இதய பூர்வமாக இவன் வெறுத்தான். 'சியேசு ஒவ்வொரு பக்கத்திலும் நிழலுருவங்களை நிறுவினன். சட்ட அதிகாரம், நீதித்துறை, ஆட்சியமைப்பு ஆகியவை அந்நிழலுருவங்களா கும். ஏதோ ஓரிடத்தில் அதற்குப் பொருண்மை அளிக்கவேண்டிய அவசியமேற் பட்டது. நான் அதைச் சிரத்தையுடன் பூர்த்திசெய்தேன்,' எனக் கூறினன். நெப்போலியன் கூற்று உண்மையே. சியேசின் திட்டத்திற் குறிக்கப்பட்ட 'பெரும் பேரரசுத் தேர்வுரிமையாளன்', சட்டத்துறை, நிருவாகத்துறை ஆகிய வற்றின் மேல் அதிகாரம் படைத்த, "முதற் கொன்சலாக மாற்றப்பட்டாணுத லால், அவன் அரசின் பூரண தலைவனைன். 1820 இல் நெப்போலியன், தன் பின்னர் ஆள்பவனை நியமிக்கும் உரிமையுடன், வாணுள்முழுவதிற்கும் கொன்ச லாக நியமிக்கப்பட்டான். 1804 இல் பேரரசனுக முடிகுட்டப்பட்டான்.
பேரரசு ஏற்படுவதற்கு முன்னர் பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால் அனேக நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சிகளைப் பற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். y
கம்போ-போமியோப் பொருத்தனை நிறைவேறிய ஒரு மாதத்திற்குள், நெப்போலியன் ‘இங்கிலந்துப் படையின் சேனபதியாகச் செய்திமடலிற் குறிப் பிடப்பட்டான். கிடைத்த அந்தப் பதவியைத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண் டான். இங்கிலந்தே தான் போர்புரிய வேண்டிய பகை என்பதைப்பற்றி அவன்

Page 168
316 நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
ஐயப்படவில்லை. ஆனல், வெற்றி பெறும் நம்பிக்கையோடு இங்கிலந்தைத் தாக்கும் முறையைப் பற்றி அவனுக்குச் சொந்த அபிப்பிராயங்களிருந்தன. இந்தச் சிறிய ஐரோப்பா ஒரு குறுகிய போர்க்களமாகும். அதிகாரமும் புகழும் அடைய வேண்டுவோன் கீழ்த்திசை நோக்கிச் செல்ல வேண்டும். என்ன செய்ய லாம் என்று அறியப் பிரான்சின் வட கரையைப் பார்வையிடுவது எனக்கும் விருப்பமே. இங்கிலந்தில் இறங்கும் முயற்சியில், நான் அஞ்சுவது போல, வெற்றி கிடைப்பது ஐயத்திற்குரியதாகத் தோற்றினல், இங்கிலந்தைத் தாக்க இருக்கும் என் படையைக் கீழைத் தேசங்களைத் தாக்கும் படையாகக் கொண்டு எகித்திற் குச் செல்வேன், ' எனப் பூரியென் என்பானுக்குக் கூறினன்.
வடகரையைப் பார்வையிட்டபின்னர், இங்கிலந்தைத் தகர்த்தற்கு எகித்தைத் தாக்க வேண்டுமென்ற அவன் கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரைக்கும் இங்கிலந்து ஒருபொழுதும் எகித்தைப்பற்றி அற்ப கவலையும் காட்டவில்லை. ஆனல், நெப்போலியனே ஆரம்பத்திலிருந்து எகித்தைப் பிரித்தானியப் பேரர சின் முதன்மையான இடமெனக் கருதினன். 'உண்மையில் இங்கிலந்தை அழிக்க வேண்டுமானுல் எகித்தில் நம் ஆதிக்கத்தைத் தாபிக்க வேண்டும், என 1797 ஒகத்தில் அவன் எழுதியிருந்தான். இதேைலயே அயோனியன் தீவுகளை அடிப் படுத்த வேண்டுமென அவன் வற்புறுத்தினன். ' கோபு, சாந்தே, கெவலோனியா ஆகிய இடங்கள் இத்தாலி முழுவதிலும் பார்க்க எங்களுக்குக் கூடிய சிறப்புடை யவை. இவை அதிரியாற்றிக்குக் கடலிலும் இலவாந்துக் கடலிலும் எங்களுக்கு முதன்மையான ஆதிக்கத்தை அளிக்கின்றன. இவை எகித்துக்குப் போக வழி செய்தமையாற் சிறப்புடையவாயின. எகித்து இந்தியாவுக்குச் செல்வதற்கேற்ற ஒரு படியாயது.
1798 ஏப்பிரில் மாதத்திற் கீழ்த்திசை போகும் படைக்குச் சேனபதியாக நெப் போலியன் நியமிக்கப்பட்டான். நீங்கள் இங்கிலந்துப்படையின் ஒரு சிறை ஆவீர், எனத் தூலோனில் அவன் படை கப்பலேறியபோது விளித்துரைத்தான். அப்படையெடுப்பை அவன் அவ்வண்ணமே கருதினன்.
எகித்தியப் படையெடுப்பு
1798 யூன் 10 ஆம் திகதி மோற்ரு தீவு அதன் சொந்தக்காரர்களாகிய சென் யோன் நைற்றுகளிடமிருந்து எவ்வித எதிர்ப்புமின்றிக் கைப்பற்றப்பட்டது. யூலை 1 ஆம் திகதி நெப்போலியன் தன் படையை எகித்தில் இறக்கினன். மாதம் முடியுமுன் அவன் எகித்தின் அதிபனுன்ை. ஆனல், நெல்சனும் ஆங்கில்க் கப்பற்படையும் அவன் அடிச்சுவடு பற்றிச் சென்றனர். ஒகத்து 1 ஆம் திகதி பிரான்சியக் கப்பற்படை நைல் சமரில் அழிக்கப்பட்டது. நெப்போலியனின் நிலைமை ஆபத்திற்குள்ளாயிற்று. அவன் அதிவிவேகத்தோடு சீரியா மீது படை யெடுத்துத் துருக்கரைப் பல போர்களிலே தோல்வியுறச் செய்தானுயினும், இங்கி லந்தின் கடலாதிக்கம் தன் வெற்றிகளைப் பயனிலவாக்குவதை விரைவிற் புரிந்து

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 317
கொண்டான். மேலும், பாரிசிலிருந்து கிடைத்த செய்திகள், வேளை ஏற்றதென அவனுக்கு அறிவுறுத்தின. ஆகவே 1799 ஒகத்து 25 ஆம் திகதி எகித்தைக் கிளே பர் என்பவன் கையில் ஒப்படைத்துவிட்டு, மத்தியதரைக் கடலிலுள்ள பிரித்தா னியக் கப்பற் படையை விலக்கி, ஒற்ருேபர் மாதம் 16 ஆம் திகதி பாரிசை அடைந்தான். நவம்பர் 9 ஆம் திகதி நிகழ்ந்த புரட்சியின் பயனக அவன் பிரான் சின் தலைவனுன்ை.
இரண்டாம் கூட்டமைப்பு
இதற்கிடையில், நெப்போலியன் எகித்திலிருந்த பொழுது பிற்று என்பான் பிரான்சுக்கெதிராக இரண்டாம் கூட்டமைப்பை நிறைவேற்றினன். அதன் முக் கிய உறுப்பினர் இங்கிலந்து, ஒசுத்திரியா, இரசியா ஆகிய நாடுகளாகும். ஆனல் துருக்கியும் இரு சிசிலிகளும் போத்துக்கலும் அவற்றுடன் சேர்ந்தன. பிரசியா தனியே விலகி நின்றது. 1798 இல் பணிப்பாளர் குழு, நெப்பேர்லியன் அவ்விட மில்லாத வேளையிலும், தென் இத்தாலியில் தன் பிடியைத் தளரவிடவில்லை. பாதி னுேபியன் குடியரசாக நேப்பிள் அமைக்கப்பட்டது. உரோமன் குடியரசு மீண்டும் தாபிக்கப்பட்டது. எப்படியாயினும், 1799 இல் ஒசுத்திரிய-இரசியப் படைகள் தாக்கியமையால் செனேவா தவிர்ந்த ஏனைய இத்தாலியப் பகுதிகளில் இருந்து பிரான்சியர் வெளியேற நேர்ந்தது. அத்துடன் மேல் இரைன் நதிப் பிரதேசத்தில் ஒசுத்திரியரும் அதே விதம் வெற்றி அடைந்தனர். ஆனல், 1799 செத்தெம்பர் மாதத்தில் மசேன என்பான் அடைந்த பெரும் வெற்றியொன்றின் பயனுக இரசியா போரிலிருந்து விலகியது. 1800 இல் மாரெங்கோ என்னுமிடத் தில் நெப்போலியன் எய்திய பெரும் வெற்றியின் (யூன் 14) விளைவாகப் பிரான்சு தன் பழைய ஆதிக்கத்தை இத்தாலியில் மீண்டும் முற்ருயடைந்தது. மேலும் மோருே என்பான் ஒகனிலிந்தனில் அடைந்த வெற்றி ஒசுத்திரியாவை மறுபடி யும் அடிபணியச் செய்தது. 1801 பெப்புருவரியில் நெப்போலியன் விதித்த உலு னவிற் பொருத்தனையை ஒசுத்திரியா பணிந்தேற்றுக் கொண்டது. அப்பொழுது சிசிலித் தீவுகளையே ஆட்சிபுரிந்த நேப்பிள் அரசன் பேடினந்தும் நெப்போலிய னுடன் சமாதானம் செய்துகொண்டான். பிரித்தானியக் கப்பல்களைத் தன்னு டைய துறைமுகங்களுக்குட் புக விடுவதில்லையென்றும், வருங்கால எதூரியா இராச்சியத்தின் வளர்ச்சிக்காகத் தசுகனியின் கடல் சார்ந்த பிரிவுகளை நெப் போலியனுக்குக் கையளிப்பதென்றும் ஒத்துக்கொண்டான்.
பெரிய பிரித்தானியாவுக்குத் திரும்பவும் நெப்போலியனைத் தனியாக எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேலும், நெப்போலியனை ஆர்வத்துடன் பாராட்டும் இரசிய சாராகிய போல் என்பான் படைபூண்ட நடு நிலைமையை மீண்டும் உயிர்ப்பித்தான். இது இங்கிலந்தின் கடலாதிக்கத்திற்கு எதிராக இாசியா, பிரசியா, சுவீடன், தென்மாக்கு ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்த கூட்டாகும் (1800, திசெம்பர்). ஆனல், சாரின் படுகொலையும் 1801 ஏப்பிரில் இரண்டாம் திகதி ஒப்பனேகனில் நெல்சன் எய்திய மிகச்சிறந்த வெற்றியும்

Page 169
318 நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
இப்பயங்கரமான கூட்டமைப்பைக் குலைக்க ஒன்று சேர்ந்தன. 1801 செத்தெம் பரில் பிரான்சியர் எகித்திலிருந்து வெளியேற உடன்பட்டனர். 1802 இல் இங்கி லந்தும் பிரான்சும் எமியேன்சுப் பொருத்தனையை நிறைவேற்றின. 1793 தொடக் கம் 1814 வரையும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கிடையில் போர் நிகழ்ந்த காலத் கில் நிறைவேறிய அமைதிப் பொருத்தனை இது ஒன்றேயாகும். இப்பொருத்தனை யின் நிபந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால், அவை இங்கிலந்துக்கே மிகவும் சாதகமானவை. ஆனல், அமைதிப் பொருத்தனை சிறிது காலப் போசோய்வாக மட்டும் முடிந்தபடியால், அதன் நிபந்தனைகளை வகுத்துக் கூறல் பயனற்றதாகும். 1803 மே மாதத்தில் ஐரோப்பாவின் நலனுக்காகவும் தன் சொந்த நலத்திற்காக வும் இங்கிலந்து விடுத்த கோரிக்கைகளை ஏற்க நெப்போலியன் மறுத்தபடியால் இங்கிலந்து மீண்டும் போர்ப் பிரகடனஞ் செய்தது.
நெப்போலியனின் சட்டக்கோவைகள்
இதற்கிடையில் நெப்போலியன் பிரான்சிய நிறுவனங்களைத் திருத்தியமைத் தல், சமூக ஒழுங்கின் அமைப்பைப் புதிதாக அமைத்தல் ஆகிய மகத்தான வேலைகளிலீடுபட்டான். பிரான்சு புதிதாய் அமைக்கப்பட்ட முறைகள், பேக்கின் எதிர்வுக்கூற்று எவ்வளவு உண்மையென்பதற்கு மேலும் சான்றுபகரும். பேக்கு மட்டுமே இந்த அறிவுக் கூர்மை படைத்தவனல்லன். அரச அதிகாரத்திற்காகப் புரட்சியானது ஒராண்டிற் செய்த சேவையைப் பல வருடத் தனியாட்சி செய் கிருக்க முடியாது. சமூகத்தின் இச்சமநிலை அதிகாரஞ் செலுத்துவதை எளிதாக் குவது என மிருபோ என்பானும் கூறியிருக்கிருரன். மிருபோ குறிப்பிட்ட வசதி களெல்லாவற்றையும் நெப்போலியன் பெரிதும் பயன்படுத்தினன். அதிகாரம் எல்லாம் அவன் கையிலேயே செறிந்திருந்தது. தேர்தல் தத்துவம் முழுமை யாகவே பிரயோகிக்கப்பட்டபடியாற் பிரான்சு குலைவுநிலைக்குள்ளாயது. இப் பொழுது அத்தத்துவம் கைவிடப்பட்டது. தலவாட்சி, கல்வி, அச்சுலகு ஆகியன வற்றின் கட்டுப்பாட்டுரிமை மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்தினிடம் பொறுப் பிக்கப்பட்டிருந்தது. 1801 ஆம் ஆண்டுப் புனித இணக்கத்தின்படி நெப்போலி யன் திருச்சபையுடன் சமாதானஞ் செய்து கொண்டான் ; அத்திருச்சபை யானது போப்பாண்டவரின் நல்லாசியொடு, நெப்போலியன் வகுத்த வல்லாட்சி யில் இடம் பெற்றது. எல்லா வரிகளும் பாரிசிலிருந்து நியமிக்கப்பட்ட கட்டுப் பாட்டதிகாரிகளிடம் இறுக்கப்பட்டன. இந்த ஏற்பாடு வரியிறுப்போனுக்கும் இறைசேரிக்கும் முக்கியமான பலன் அளித்தது. பிரான்சிய வங்கி நிறுவப்பட்ட தும், நாட்டின் நிதி நிலையைப் பற்றிய நம்பிக்கை மீண்டது. புதிய பிரான்சியப் பல்கலைக் கழகம் கல்விமுறைக்கு இன்றும் அதன் சிறப்புத்தன்மைகளாகக் காணப்படும் சீரையும் நெகிழாக் தன்மையையும் அளித்தது. நீதித்துறையும் சட்டத் துறைபோல் நிருவாகத்துறைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது. புரட்சிக்கு முந்திய சீர்திருத்தக்காரர்களின் மிகச் சீரிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே வரிசையான கோவைகளாகப் பிரான்சியச் சட்டங்கள் உருவாக்கப்
பட்டன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு இச்சட்டங்களே மாதிரியாயிருந்

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 39
தன. இவ்வண்ணம் பிரான்சு நாடு தான் குடியரசாக அனுபவித்த சுதந்திரக் தைப் பறிகொடுத்து, இப்போது பேரரசாகிப் பல துறைகளிலும் செயற்றிறமை பெற்றது. சமத்துவம் என்ற தத்துவத்துக்கு நெப்போலியன் மாறக இருக்க வில்லை. சமத்துவக் கொள்கையினரும் விருதுகள் பெறுவதை வெறுக்கமாட்டார் களென உணர்ந்து, "நன்மதிப்பு அணி ' என்னும் விருதை ஏற்படுத்தினன். ' சம வாய்ப்பு' அளிப்பதில் உறுதியாக நின்று, ஆற்றல் படைத்தோர் எப்பதவியு
மடைய வாய்ப்பளித்து, அவ்வண்ணம் அரச சேவைக்கு மிகச் சிறந்த அறிவுக் கூர்மை படைத்தவர்களைச் சேர்ப்பதில் அவன் இம்மியளவும் விலகவில்லை.
திாபல்கார்
இதற்கிடையில், போர் மீண்டும் ஆரம்பித்தபடியால் அவன் தன் ஆற்றல் முழு வதையும் ஒரு முகப்படுத்தி இங்கிலந்தை அடிபணியச் செய்ய முடிவான முயற்சி செய்ய வேண்டியவனுஞன். அவன் இந் நோக்கத்தை இருவழிகளில் எய்த எண்ணின்ை. முதலாவதாக, இங்கிலந்தின் மீது படையெடுத்தும், இரண்டாவ தாக, இங்கிலந்தின் வாணிகத்தை நாசமாக்கியும் தன் நோக்கத்தை நிறை வேற்றுவதே அவன் கருத்தாகும். முந்திய நோக்கத்தை நிறைவேற்ற 1804-5 குளிர் காலத்தில் பூலோன் என்னுமிடத்தில் ஒரு பெரிய படையைத் திரட்டி, அப் படையை இங்கிலந்தின் கரைக்குக் கொண்டுபோகச் சம வடித்தளமுடைய ஒடத்தொகுதி யொன்றைக் கட்டுவித்தான். ஆனல் அந்நோக்கத்தை நிறை வேற்றத் தற்காலிகமாகவேனும் ஆங்கிலக் கால்வாயின் ஆட்சியைப் பெற வேண்டியிருந்தது. 1805 ஆம் ஆண்டுப் பெருங் கடற்றெடரிகல் இந்த நோக் கத்திற்காகவே கிட்டம் செய்யப்பட்டது. ஆனல், 1805 யூலை மாதம் 22 ஆம் திகதி பினிசிற்றர் முனைக்கப்பால் வில்லனுவு மீது சேர் உரபெட்டு கால்தர் எய்திய வெற்றி நெப்போலியனது நம்பிக்கை முழுவதையும் சிதறச் செய்தது. விரிவாகத் திட்டமிடப்பட்ட இத் தொடரிகல் ஒற்ருேபர் 21 ஆம் திகதி கிரபல்கார் என்னு மிடத்தில் நெல்சன் எய்திய பெரு வெற்றியுடன் முடிவாயது. இந்த வெற்றி கடைசித் தீர்ப்பாயது. பிரான்சிய இசுப்பானிய கப்பற்படைகள் அழிக்கப்பட் டன. கடலிற் பெரிய பிரித்தானியாவின் பூரண ஆதிக்கத்தையும் அது நிலைநாட் டியது. எல்லாவற்றினும் மேலாக, ஐரோப்பா முழுவதையும் அவனுக்கு விரோத மாக இறுதியில் ஒன்ருக்கி, அவன் இறுதித் தோல்விக்கும் காரணமாய பூட்கை யை மறுபடியும் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நெப்போலியனுக்கு நேர்ந்தது.
மூன்ரும் கூட்டமைப்பு
நெப்போலியன் 1804 திசெம்பரில் பிரான்சியப் பேரரசனுக முடிதரித்தமை யும், இன்னும், 1805 மே மாதத்தில் இத்தாலியின் அரசனுக முடிதரித்தமையும் வியன்னுவிலும் சென் பீற்றசுப்பேக்கிலும் கடும் கோபத்தை மூட்டின. ஆகவே பிற்று என்பானுக்கு, ஒசுத்திரியாவையும் இரசியாவையும் இங்கிலந்துடன் சேர்த்து, மூன்றும் கூட்டமைப்பை 1805 இல் அமைப்பது சாத்தியமாயிருந்தது.

Page 170
320 நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
சுவீடின் அரசனுன நான்காம் கசுத்தாவசு இக் கூட்டமைப்பிற் சேர்ந்தான். ஆனல், அவ்வாண்டு முடிவதற்குள் இக் கூட்டமைப்பை நெப்போலியன் துண்டு துண்டாக்கினன். கால்தரினது வெற்றியின் உட்கருத்தை அவன் உடனே தெரிந்து கொண்டான். இங்கிலந்து மீது படையெடுக்கும் கருத்தை முற்முகக் கை விட்டான். ஒகத்து மாதம் முடியுமுன்னரே பூலோனில் இருந்த படை வீயன்னுவை நோக்கிச் சென்றது. திசெம்பர் மாதம் 2 ஆம் திகதி மொரேவியா விலுள்ள ஒசுதலிற்சு என்னுமிடத்தில் ஒசுத்திரியாவினதும் இரசியாவினதும் கூட்டுப் படையைத் தோற்கடித்தான். 28 ஆம் திகதி பிறெசுபேக்குப் பொருத்தனை யின் நியதிகளை விதித்தான்.
இதுவரை நெப்போலியன் ஒசுத்திரியாவைத் தாக்கவில்லை. இப்போது அந் நாட்டைச் சிதைக்கத் தீர்மானஞ் செய்தான். நெப்போலியனை இத்தாலியினரச ணுக ஒப்புக்கொள்ளவும், வெனிசியாவையும் எத்திரியாற்றிக்குக் கடலைச் சார்ந்த இத்திரியா, தல்மேசியா மாகாணங்களையும் அவனுக்குக் கையளிக்கவும் ஒசுத் திரியா கட்டாயப்படுத்தப்பட்டது. நெப்போலியனுல் இாாச்சியங்கள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட நட்புறவுநாடுகளாகிய பவேரியாவிற்கும் உவூர்தெம் பேக்கிற்கும் பேடின் மாபெரும் கோமகவாட்சிப் பகுதிக்கும் விசாலித்த ஆள் புலப் பகுதிகள் சலுகைகளாகக் கொடுக்கப்பட்டன. ஒசுத்திரியா மொத்தமாக 30 இலட்சம் குடியாட்களை இழந்ததுடன், புவியியல் முறையாக இத்தாலி, சுவிற் சலந்து ஆகிய இடங்களுடன் அதற்கிருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், ஒசுத்திரியா இாைன் நதிக்குச் செல்லும் வழியுரிமையையும் இழந்தது.
நெப்போலியனும் சேர்மனியும்
இத்துடன் நெப்போலியன் ஓயவில்லை. சேர்மனியைத் திருத்தியமைக்கும் வேலையை நிறைவேற்றி முடிக்கவேண்டுமென்று அவன் இப்போது தீர்மானித் தான். இச்செயல் ஏலவே செய்யப்பட்டிருக்கவேண்டும். புரட்சிக்காலமும் நெப் போலியன் காலமும் இக்காலச் சேர்மனியின் மலர்ச்சியில் ஒரு கட்டமாய் அமைந் தன. இக்காலச் சேர்மனியே இக்கால இத்தாலியிலும் பார்க்க நெப்போலியனின்
நேர்ப்படைப்பாகும்.
1792 இல் ‘அங்கேரி, பொகீமியா ஆகிய நாடுகளின் அரசன் ” மீது பிரான்சு போர்ப் பிரகடனஞ் செய்த பொழுது சேர்மனி 360 அரசுகளைக் கொண்டிருந் தது. அவையாவன இராச்சியங்கள், கோமகப் பகுதிகள், தேர்வகங்கள், மேற்றி ாாணியாருக்குரிய வட்டாரங்கள், விசுப்பாண்டவருக்குரிய வட்டாரங்கள், சுதந் திர நகர்கள் முதலியவையாகும். பால், கம்போ-போமியோ, உலுனவில் ஆகிய இடங்களில் நிறைவேறிய பொருத்தனைகள் இந்நாடுகளின் சிதைவுற்ற நிலைமை பின் உண்மையை மறைக்காது வெளிப்படுத்தின. இரு தலையாய வல்லரசரான, அபிசுபேக்கரும் ஒகன்சோலேனரும் ஒருவரிலொருவர் மிகவும் பொருமை

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 321
படைத்தவர்களாவர். முழுச் சேர்மனியினதும் கதியைப்பற்றி இவர்கள் ஒரே முகமாக அக்கறை எதுவும் காட்டவில்லை. இந்த அரசுகள் ஒவ்வொன்றும் தத் தம் சொந்த ஆள்புல நலனையும் குலமுறை நலனையும் மேம்படச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். பிரான்சு இரைன் நதிப்பிரதேசத்தில் தன் எல்லைப்புற நாடுகளைப் பெற்றல், ஒசுத்திரியா பிரசியா ஆகிய நாடுகளின் அரசர் சிறிய நாடுகளினதும் சிற்றரசர்களினதும் ஆணிலத்திலிருந்து நட்டவீடு பெற வேண்டும். பவேரியா, பேடின் போன்ற இரண்டாந்தர வல்லரசுகள் முன் கூறிய நாடுகளைப்போல் நாடு பிடிக்கும் ஆசையுடையவாய், ஒசுத்திரிய பேரரசனின் மேலாண்மைக்குப் பதிலாகப் பிரான்சின் மேலாண்மையை ஒப்புக்கொள்ளவும், பிரான்சினுதவியுடன் தம் நாட்டாசை தீர்க்கவும் ஆவலாயிருந்தன. நெப்போலிய னின் பூட்கை, முதன்மை பெற்ற வல்லரசுகளுக்கிடையிற் பொருமையை வளர்ப் பதும், சிற்றரசர்களின் ஆதரவாளனென நடிப்பதும், பிரான்சுக்கு விஞ்ஞான முறைக்கியைந்த எல்லைப் புறங்களைப் பெற்று, போப்பாண்டவர் மூன்மும் இலியோவால் அடி கோலப்பட்ட கற்பனைப் பேரரசுக்கு முடிவான அடி கொடுத்து, தான் இரண்டாம் சாளிமேன் ஆக விளங்குவதுமேயாகும்.
1803 இல் நிறைவேறிய “நடுக்கூறல் விதி' இம் முறையின் முதலாம் கட்டத் தைக் குறிக்கும். இவ்விதியின்படி பேரரசில் அடங்கிய அரசுகளின் எண்ணி க்கை பாதிக்கு மேற் குறைக்கப்பட்டது. பேரரசு நகர்கள் ஐம்பத்தொன்றிலிரு ந்து ஆருகக் குறைக்கப்பட்டன. திருச் சபைக்குரிய அரசுகளில் ஒன்று தவிர ஏனையவை ஒடுக்கப்பட்டன. பிரசியா கட்டாயத்தின் பேரில் இரைன் நதியின் மேற்குப் பிரதேசத்தில் 1,000 சதுர மைல் ஆள்புலத்தைக் கைவிட்டு, கிழக்குப் பிரதேசத்தில் முக்கியமாக மன்சுதர், இலிதசிம், படபோண் ஆகிய பிசப்பாண்ட வர் வட்டாரங்களிலிருந்தும் பல சுயாதீனமான நகர்களிலிருந்தும் ஏறக்குறைய 5,000 சதுர மைல்களைப் பெற்றது. அவ்வண்ணமே பவேரியாவும் இாைனின் மேற்குப் பிரதேசத்தில் 4,000 சதுர மைல் பரப்4ள்ள பிரதேசத்தைக் கைவிட் டுத் தென் சேர்மனியின் நடுப்பகுதியில் 6,000 சதுர மைல் ஆள்புலத்தைப் பெற்றது. இவற்றிற் பெரும்பாகம் கிருச்சபைக்குரியது. இவ்வாறே பிறமாற்றங் களுஞ் செய்யப்பட்டன.
இாைன் நாட்டுக் கூட்டிணைப்பு
பிறெசுபேக்குப் பொருத்தனையில் ஒசுத்திரியா மீது விதிக்கப்பட்ட நியதி களும், சோன்பிறன் பொருத்தனையிற் பிரசியா மீது விதிக்கப்பட்ட நியதிகளும் சேர்மனியின் வளர்ச்சியில் இரண்டாம் கட்டமாகும். சேர்மனியைத் திருத்தி யமைப்பதின் முடிவான சிறப்பாயமைந்த செயலுக்கு உகந்த காலம் இப்
பிசர் எழுதிய “ நெப்போலியன் அரசறிவு” " சேர்மனி” (ஒட்சுபோட்டு, 1903) என்னும் நூல்களின் இரண்டாம் மூன்ரும் அத்தியாயங்களிலும் மரியற்றும் உரோபேட்சனும் எழுதிய " பிரசிய மலர்ச்சி” (ஒட்சுபோட்டு, 1915) எனும் நூலின் ஆரும் அத்தியாயத்திலும் விபரம் & T 600m LGib.

Page 171
322. நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி
பொழுது வந்துவிட்டது. யூலை 17 ஆம் திகதி இாைன் நாட்டுக் கூட்டிணைப்புப் பொருத்தனை பாரிசில் ஒப்பமிடப்பட்டது. நெப்போலியன் அருளால் பவேரியா, உவுத்தெம்பேக்கு ஆகிய நாடுகளின் அரசர்கள், பேடின் தேர்வாளர், இறீசன் பேக்கு மேற்றிராணி, எசுதாமிசு ராட்டுப் பெருமகன், இன்னும் ஒன்பது சிற்றா சர்கள் ஆகியோர் ஒசுத்திரியப் பேரரசின் மேற்றமக்கிருந்தவிசுவாசத்தைத் திடமாகத் துறந்தனர். இசைன் நாட்டுக் கூட்டிணைப்புத் தலைவனென்ற முறை யில் நெப்போலியனின் புரப்பை ஒப்புக்கொண்டார்கள். பிரான்சிய அலுவலராற் பயிற்றப்பட்ட 63,000 படைஞர்களை அவனுக்கு ஆதரவுக்கனுப்புவதாக உறுதி மொழி கூறினர்கள். செயலளவில் நெப்போலியன் சேர்மனியின் பேரரசனுனன்.
கடைசிக் கட்டம் மட்டும் எஞ்சியிருந்தது. ஒகத்து மாதம் 1 ஆம் திகதி பிரான் சியப் பேரரசன் சேர்மானிய சிற்றரசர்கள் ஒவ்வொருவரினதும் தனியிறைமை யைத் தான் ஒப்புக்கொண்ட போதும், சேர்மனிய யாப்பைத் தான் இனிமேல் முறையாகக் கணிக்க முடியாதென அறிவித்தான். ஓகத்து 6 ஆம் திகதி பிரான் சிசுப் பேரரசன் முறைப்படி புனித உரோமப் பேரரசு என்ற பட்டத்தை நீத் தான். இவ்வண்ணம் 1,006 ஆண்டுகளாக நிலைத்தபின், இப்பழைய காலவழு ஈற்றில் அவமானமான ஒரு முடிவெய்தியது. பிரான்சிசு, வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து, 1804 இல் புத்தம் புதியதும் பொருத்தமானதுமான "ஒசுத்திரியப்
பேரரசன்’ எனும் பட்டத்தைக் கொண்டான்.
பிரசியாவின் வீழ்ச்சி
பின்னர் பிரசியாவின் முறை வந்தது. பத்தாண்டுகளாக அவமானத்திற்குரிய நடு நிலைமைவகித்தபின் பிரசியாவானது நெப்போலியன் இழைத்த அவமானங் களினுல் நொந்து, மிகவும் தவமுன வேளையில் விடுதலை ஆர்ப்பாட்டஞ் செய்து, ஒசுதலிற்சுப் போர் நிகழும் தறுவாயில் நெப்போலியனுக்கு இறுதிக் கூற்று விடுத்தது. ஆனல் போர் புரியப் பிந்தியது. பிறெசுபேக்குப் பொருத்தனையை ஒசுத்திரியா மீது விதித்தபின்னர் நெப்போலியன் சோன்பிறன் பொருத்தனை யைப் பிரசியா மீது திணித்தான். பவேரியாவுக்கு அன்சபாக்கு என்னும் பகுதி யைக் கையளிக்கும்படியும் அனுேவரை நெப்போலியனிடமிருந்து ஏற்றுக்கொள் ளும்படியும், வட சேர்மானியத் துறைகளை ஆங்கிலக் கப்பல்களுக்கும் வாணிகத் துக்கும் மூடும்படியும் பிரசியா கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு நெப்போ லியன் பிரசிய அரசன் பிரதரிக்கு உவிலியம் என்பானை, களவுப் பொருட்களை விருப்பத்திற்கு மாமுகவாயினும் ஏற்றுக்கொள்ள வேண்டிய இழிவான நிலையை அடையச் செய்தான்.
பின்னர் பிரசியாவுக்கு ஒரு வார்தையும் பேசாமல் நெப்போலியன் அனே வரின் உரிமையை இங்கிலந்துக்குக் கொடுத்தான். இப்பெரும் அவமானத்தை அரசன் பிரதரிக்கு உவிலியத்தினுலும் தாங்க முடியவில்லை. 1807 ஒற்ருேபர் மாதம் 1 ஆம் திகதி பிரான்சின் மீது அவன் போர்ப் பிரகடனஞ் செய்தான்.

நெப்போலியன் போனப்பாட்டின் எழுச்சி 323
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் (ஒற்ருேபர், 14) நெப்போலியன் இயேனு என்னுமிடத்தில் ஒரு பிரசியப் படையைத் தோற்கடித்தான். தவுசுது என்பான் வேருெரு படையை ஒசுவராத்தில் வென்முன். ஒரே தாக்கலில் பிரசியாவின் களப்படை அறவழிக்கப்பட்டது. பலமாகக் காவல் செய்யப்பட்ட கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்முக, பிரான்சியருடன் போர் செய்யாமலே, சரணடைந்தன. ஒற்முேபர் 27 ஆம் திகதி நெப்போலியன் வெற்றிக்குரிய ஆடம்பரங்களுடன் பேளினுட் புகுந்தான்.
பேளின் ஆஞ்ஞைகள்
இங்கிலந்தை அடிபணியச் செய்யத் திட்டமிட்ட சூழ்ச்சியாகிய முற்றுகையை நிலைநிறுத்தும் முகமாக நெப்போலியன் பேளினிலிருந்து, ஒற்ருேபர் 21 ஆம் கிகதி, ஒரு தொடர்ச்சியான ஆஞ்ஞைகளில் முதலாவதை வெளியிட்டான். அவன் பேளினிலிருந்து போலந்துக்கு அணிவகுத்துச் கென்முன். அங்கே அவனைக் கண்டு அந்நாட்டின் விடுதலைத் தலைவனென மக்கள் ஆர்வத்துடன் ஆர வாரித்தார்கள். உவாசோவிலிருந்து, ஒசுதலிற்சுப் போருக்குப் பின்னரும் படை பூண்டிருந்த இரசியாவை ஒழித்துக் கட்ட அவன் இரசியாவுக்குப் படையெடுத் தான். யூன் 14 ஆம் திகதி பிரிதிலந்துப் போரிற் படுதோல்வியடைந்த சார் அலச்சாந்தர், படைத்தகைவு கோரினர். நெப்போலியன் அதற்கு ஒப்புக்கொண் டான். யூன் 25 ஆம் திகதி இரு பேரரசரும் நீமன் நதி மத்தியில் நங்கூரம் பாய்ச் சப்பட்ட மிதக்கும் படாமாடமொன்றிற் சந்தித்தனர். அங்கே உடன்படிக்கை செய்யப்பட்டது. பிரசியாவைப் பிரிக்கவும், இங்கிலந்தைச் சிதைத்துப் பாழாக்க வும், பிரான்சும் இரசியாவும் உலகத்தைத் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ள வும் திட்டமிடப்பட்டது. யூலை 7 ஆம் திகதி நிறைவேறிய தில்சித்துப் பொருத் தனையில் முழு விபரங்களும் சேர்க்கப்பட்டன. இதன்படி நெப்போலிய இராச்சி யங்களான நேப்பிள், ஒல்லந்து, உவெசுபேலியா, இாைன் நாட்டுக் கூட்டிணைப்பு, சட்சனி அரசன் தலைமையின் கீழுள்ள உவாசோக்கோமகப் பகுதி ஆகியவற்றை அங்கீகரிக்க இரசியா இணங்கிற்று. இந்தப் பொருத்தனையிற் சேராத பிரசியா, 1772 தொடக்கம் ஈட்டிய போலந்தின் பகுதியையும் எல்பு நதிக்கு மேற்கேயுள்ள அதன் மாகாணங்களெல்லாவற்றையும் இழப்பதாயிருந்தது. பினிலாந்தும் (சுவீடனிலிருந்து) மொழ்தேவியா, உவாலாசியா மாகாணங் களும் (துருக்கியிலிருந்து) இரசியாவுக்குக் கொடுக்கப்படுமென இரகசியமாக வாக்குறுதி பண்ணப்பட்டது. தென்மாக்கையும் சுவீடனையும் போத்துக்கலையும் இங்கிலந்துடன் போர் புரியும்படி கட்டாயப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
பிரசியா அதன் செருக்கு அடக்கப்பட்டுத் துண்டாடப்படவிருந்தது. ஆனல், போராட்டம் இங்கிலந்துக்கு எதிராகவே நடக்கவிருந்தது. அந்தப்
போரின் முடிவு அடுத்த அத்தியாயத்தின் பொருளாயமையவேண்டும்.
சீவ மரணப்

Page 172

அத்தியாயம் 26
நெப்போலியனின் வீழ்ச்சி
வீயன்னப் போவை; 1815 ஆம் வருட இணக்கம்
முக்கியமான திகதிகள் :
1807 தில் சித்துப் பொருத்தன. 1807-10 பிரசியாவிற் சீர்திருத்தங்கள். 1808-14 தீபகற்பத்திற்குரிய போர். 1809 வியன்னப் பொருத்தன. 1812 மொசுக்கோத் தொடரிகல். 1813 சேர்மானிய விடுதலேப் போர். I&i全 நெப்போலியன் முடி துறத்தல்.
1814 முதலாம் பாரிசுப் பொருத்தன. 1814 வியன்னப் போவை.
1815 நூறு நாட்கள் '. 1815 உவாட்டலூத் தொடரிகல். 1815 இரண்டாம் பாரிசுப் பொருத்தன. 1815 வியன்னப் பொருத்தனைகள்.
էվகிய சாளிமேன்
தில்சித்துப் பொருத்தனை நெப்போலியனது மேம்பாட்டின் உச்ச நிலையைக் குறித்தது. அவன் இப்போது பிரான்சின் பேரரசன் , இத்தாலியினாசன் ; செயலளவில் சேர்மனியின் பேரரசனுயு மிருந்தான். அவன் உண்மையில் மேற்கு நாடுகளின் பேராசனுயிருந்தாணுதலின், இரண்டாம் சாளிமேன் எனத்தக்கவன். தன்னைச் சுற்றிச் சார்பு இராச்சியங்களையும் உபவாசுகளையும் வைத்திருக்க அவன் தவறவில்லை. அவன் சோதரன் யோசேப்பு போனப்பாட்டு நேப்பிளில் ஆட்சி புரிந்தான் ; இன்னுமொரு சோதரன், உலூயி என்பானுக்காகப் பத்தேவியன் குடியரசு (1806) ஒல்லந்து இராச்சியமாக மாற்றப்பட்டது. மூன்ரும் சோதர ஞன செரோமிற்காகப் பிரசியா, அனேவர், எசெ, பிரன்சிக்கு என்னும் பகுதி களிலிருந்து (1807 இல்) உவெசுபேலியா என்னும் ஒரு புதிய வடசேர்மன் இராச்சியம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. பெல்சியம், மேற்கு இசைன் நதிப் பிரதேசங்கள், சவோய், நீசு ஆகியன நெடுங்காலத்துக்கு முன்னரேயே பிரான்

Page 173
326 நெப்போலியனின் வீழ்ச்சி
சுடன் இணைக்கப் பெற்றிருந்தன. ஈற்றிற் பிரான்சின் எல்லைப் புறங்கள்,இரி சிலூ கற்பனையிற் கண்ட எல்லைப் புறங்களை ஒத்திருந்தன. நெப்போலியன் விசுற் றுலா நதியைப் பிரான்சிய இரசியப் பேரரசுகளைப் பிரிக்கும் எல்லையாக்கியிருப் பான். ஆனல், சார் விவேகியானபடியால், தனக்குந் தன் நட்பாளர்க்குமிடையில் ஒரு தடை நாடு இருப்பதை விரும்பினன்.
ஐரோப்பிய முற்றுகை
தில் சித்துப் பொருத்தனையில், நெப்போலியன் எய்திய உச்சநிலை அவனுக்குப் பொல்லாங்காய் முடிந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் நெப்போலியன் முதன்மை அடைந்திருந்தான். என்ருலும், இங்கிலந்து, அதன் நட்பாளர்கள் தோல்வியுற்று அதனைக் கைவிட்ட போது குழப்பமடைந்தேனும் வருந்தவில்லை. மேலும், கிர பல்கார்ப் போரின் பின்னர், தன்னையே கிருப்பித் தாக்குஞ் சாதனங்களைத் தவிர, இங்கிலந்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சாதனங்கள் ஒன்றும் நெப்போலிய னிடமிருக்கவில்லை. ஒன்றன்பின் ஒன்முக ஆஞ்ஞைகளைப் பிறப்பித்து 'ஐரோப் பிய பொருளாதாரத் திட்டத்தை' உருவாக்கி முடித்தான். கண்டம் முழுவதும் பிரித்தானிய பொருட்கள் ஒன்றியொதுக்கப்படவேண்டுமென்று அவன் பிர கடனஞ் செய்தான். போற்றிக்குக் கடலிலிருந்து கருங்கடல் வரையுமுள்ள ஐரோப்பியத் துறைகள் யாவும் ஆங்கிலப் பொருட்கள் இறக்குமதியாகா வண்ணம் அடைபடவிருந்தன. இந்த முற்றுகையைப் பயன்படுத்த, இப்போது 'நடுநிலைமை பேணும் சில அரசுகளின் கடற்படையைத் தன்னிடம் வைத்திருத் தல் நெப்போலியனுக்கு இன்றியமையாததாயிற்று. கில்சித்து உடன்படிக்கையிற் குறித்தபடி தென்மாக்கே முதல் இசையாயது. ஆனல், அப்போது இங்கிலந்திற் பிறநாட்டு அமைச்சனுயிருந்த கன்னிங்கு என்பான் இந்த இரகசிய உடன்படிக் கைகளைப்பற்றி மோப்பத்தாலறிந்து, நெப்போலியனுக்குமுன்னரே செயலாற்றி ஞன். போர் நடைபெறும் காலமளவும் தேனிய கப்பற் படையை இங்கிலந்திடம் ஒப்படைக்கும்படி வேண்ட, ஒப்பனேகனுக்கு ஆங்கிலக் கப்பற் படையொன்று அனுப்பப்பட்டது. கப்பல்களின் காப்பிற்கு நெப்போலியனிலும் பார்க்க இங்கி லந்து கூடிய ஏமம் அளிக்கக்கூடியதாயிருந்த பொழுதிலும், இங்கிலந்தின் கோரிக்கை தென்மாக்குக்கு இயற்கையாகவே சினத்தை மூட்டியது. இங்கிலந்து மன வருத்தத்துடன் ஒப்பனேகனப் பீரங்கிக்குண்டுகளாற்றுக்கித் தன்னிடம் ஒப்புவிக்க மறுத்த கப்பல்களைப் பலவந்த முறையைப் பயன்படுத்திக் கைப்பற்ற வேண்டியிருந்தது. இங்கிலந்தின் தான்தோன்றித் தனமான இந்நடவடிக்கையை, நெருக்கடியான அந்நாளைய நிலைவரத்தையல்லது, வேறெக்காரணம் காட்டியும் விளக்க முடியாது. ஆனல், நெப்போலியன், இனிமேல் தான் நடுநிலையாளரெ வரையும் அனுமதிக்க முடியாதென்று பிரகடனஞ் செய்கிருந்தான். அவன் யூனே விற்கு எழுகியதுபோல், 'இது இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையில் யார் வாழ்வது, யார் மாழ்வது என்பதைத் தீர்க்கும் ஒரு போட்டி யாகும்'. 'உன் நாட்டின் கடற்கரையை அணுகும் ஆங்கிலக் கப்பல்களைப் பீரங்கிக் குண்டுகளாற் முக்கி, அவைகளிற் காணப்படும் வியாபாரப் பொருட்களைப் பறிமுதல் செய்ய

நெப்போலியனின் வீழ்ச்சி 327
விருப்பமில்லையேல், பிரான்சுடன் உடனே போர் செய்’ இத்தகையதே அவன் சுவீடனுக்கனுப்பிய துடுக்கு மிக்க செய்தியாகும். ஆனபடியால், தென்மாக்கின் மீது கன்னிங்கு என்பான் பலவந்தத்தைப் பயன்படுத்தி நெப்போலியனுக்கு முன்பே செயலாற்றினன் என்பது வெளிப்படை.
போத்துக்கல் இன்னுமொரு நடுநிலைமை நாடாகும். தில்சித்துப் பொருத்தனை நிறைவேறியபின், தான் வகுத்த கண்டத்திற்குரிய பொருளாதாரத் திட்டத் கிற்கு அமைந்து நடக்குமாறும், எல்லா ஆங்கிலக் குடிமக்களையுஞ் சிறையிடு மாறும், போத்துக்கவிலுள்ள ஆங்கிலச் சொத்துக்களெல்லாவற்றையும் பறிக்கு மாறும், இங்கிலந்தின் மீது போர் தொடுக்குமாறும், இந்நாட்டை நெப்போலி யன் உரிமையோடு கேட்டான். இதற்கு இணங்கப் போத்துக்கல் தயங்கிய காரணத்தால், நெப்போலியனின் கட்டளையை நிறைவேற்ற ஒரு, பெரிய படை யூனே சேனபதியின் கீழ் அனுப்பப்பட்டது. அரச குடும்பம் (30. 11, 1807) ஆங்கிலக் கப்பற்படையின் பாதுகாப்பிற் பிறேசிலுக்குத் தப்பியோடியது. அடுத்தநாள் யூனே இலிசு பனிற் புகுந்து 'பிரகன்சாக் குலமுறையின் ஆட்சி நிறுத்தப்பட்டது ' என அறிவித்தான்.
ஆணுல் தென்மாக்கிற் செய்தாற்போன்று போத்துக்கவிலும் இங்கிலந்து தன் கடலாதிக்கத்தின் மாட்சியால் நெப்போலியனின் குறிக்கோளைத் தோற்கடித்தது. நெப்போலியன் தனக்கு இயல்பான கர்வத்துடன் காரணமின்றிப் போத்துக் கலைத் தாக்கி நெப்போலிய யுத்தத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம் பித்தான்.
தீபகற்பத்திற்குரிய போர்
இசுப்பெயின், பிரசியா செய்தது போல 1795 இல் முதலாம் கூட்டமைப்பி லிருந்து விலகியது. இசுப்பெயின் அதன் பலவீனனை அரசன் நான்காம் சாள் சினதும், ஊழற்பழக்கமும் துரோகத்தன்மையுமுடைய அமைச்சன் கோடோய் என்பானினதும் ஆட்சியில் பிரான்சின் அடிமை நாடு போன்று பன்னிரண்டு ஆண்டுகளாக இருந்தது. பாரிசிலிருந்து வரும் கட்டளைகளைப் பதிவு செய்வ துடன் திருத்தியடைந்தது. தில்சித்தின் பின் நெப்போலியன் அதிதீவிரமான நட வடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தான். நான்காம் சாள்சை முடிநீக்கி அரசு கட்டிலில் தன் சோதரன் யோசேப்பை ஏற்றினன். நேப்பிள் அரசனை யோசேப்புக்குப் பின் தன் மைத்துனனுன சுவாக்கீம் மியூறற்றை அந்த நாட் டிற்கு அரசனுக நியமித்தான்.
ஆனல் இசுப்பெயின் இத்தாலியையோ சேர்மனியையோ போன்றதன்று. உக் கிரமானதும் மிக உறுதிப்பட்டதுமான மாகாண மனப்பான்மை பல நூற்ருண்டு களாக இசுப்பானியரின் சிறப்பான பண்பாக இருந்த போதும், இப்போது அவர் கள் கதித்த நாட்டினவுணர்ச்சியால் மிக உந்தப்பட்டார்கள். யோசேப்பு மதிரி த்து மீது உறுதியற்ற ஆட்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனல் அது அவனை இசுப் பெயின் நாடு முழுவதற்கும் ஆட்சியாளனுக்கவில்லை. ஒவ்வொரு மாகாணத்தி

Page 174
328 நெப்போலியனின் வீழ்ச்சி
லும் இசுப்பானியர் கோபத்துடன் எதிர்த்தனர். போத்துக்கேயத் துறைமுகங் கள் இங்கிலந்தின் ஆட்சியிலிருந்தபடியால், இசுப்பெயினுக்கு உதவியளிக்க முடிந் தது. சேர்மனிக்கு உதவி செய்யாமல் விட்டதின் காரணம் துறைமுக வசதி யின்மையாகும். இத்தாலிக்கு உதவியளிக்க, அதை ஏற்க இரு சிசிலிகளினதும் சாடினியாவினதும் அரசர்களைவிட வேருெருவருமில்லை. இவ்வீர் அரசர்களும் முறையே அவ்விடத்தில் ஆங்கிலேய கப்பற்படை இருந்தமையால் தங்கள் ஆள் புலங்களை இழக்கவில்லை.
எப்படியாயினும் இசுப்பெயின் பிரித்தானிய தரைப் படைக்கு ஒரு வாய்ப் பளித்தது. அந்த வாய்ப்பைப் பிரித்தானியப் படை நழுவவிடவில்லை. சேர் அரி புராட்டு, சேர் யோன் மூர் ஆகியோரின் தலைமையில் தீபகற்பத்திற்குரிய போர் நன்மையாகத் தொடங்கவில்லை. ஆனல் 1809 இலேதுளிர் காலத்தில் சேர் ஆதர் உவெலசிலி சேனபதியாக நியமிக்கப்பட்டான். ஆறு நீண்ட ஆண்டுகளாக நெப் போலியனை அவன் எதிர்த்து நின்றன். நல்ல காலத்திலும் அல்லாக் காலத்திலும் கலகத் தீயை அவன் தணியவிடவில்லை. துடுக்கும் வீரமும் பொருந்திய போத்துக் கேய, இசுப்பானிய மக்களின் முயற்சிகளுக்கு, நன்முகப் பயிற்றப்பட்ட தன்னு டைய படைஞர்களின் ஆதரவை அளித்தான்.
உவெலசிலியின் திறனையும் பிரித்தானிய படையின் மகத்தான மனப்பான்மை யையும் எடுத்துக்காட்டும் களமாகமட்டும் தீபகற்பம் இருக்கவில்லை. இப்போர் " தன் பலத்தை ஈற்றில் உறிஞ்சியெடுத்த புண்ணென்று ” நெப்போலியனே ஒப் புக் கொண்டான். இந்தப் போர், தரையிற்ருனும் நெப்போலியன் வெல்ல முடியா தவனல்லனென்று ஐரோப்பாவுக்கு எடுத்துக்காட்டிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பாவிற் புதிய நாட்டின உணர்ச்சிக்குத் தாண்டுதலளித்தது. நாடுகளின் சுதந்திரத்திற்குமாமுன பெரும் பகைவன் நெப்போலியனே எனவும் ஐரோப்பிய மக்களுக்கு அது அறிவுறுத்திற்று, காலகதியில் நெப்போலியனின் அழித்தற்ருெழில், முக்கியமாக இத்தாலியிலும் சேர்மனியிலும், ஒருக்கத்தினைச் சார்ந்து இயங்கி, நாட்டின ஐக்கியத்திற்குப் பெரும் தூண்டுதலளித்தது என்பது உண்மையே. ஆயின், இவையெல்லாம் அவன் கருதாத, காலத்தாற் பிந்தி விளைந்த பேறுகளே. இத்தாலியும் சேர்மனியும் நெப்போலியப் பேரரசின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருந்திருப்பின், இந்த நாட்டின ஐக்கியம் நிறைவேறியிராது. ஆன படியால் புதிய நாடுகள் எழுமுன் புதிய சாளிமேனை வீழ்த்த வேண்டியிருந்தது. இசுப்பானிய எழுச்சியே நாட்டினக்கிளர்ச்சிக்கு முதல் அறிகுறியாயிற்று சதே என்பான் கூறியபடி 'இசுப்பெயினிலிருந்து உயிர்ப் பொறி பறந்தது. தீப்பற்றி யது ; சுவாலே எங்கும் பரவியது. இதோ பாருங்கள் விழித்தெழுந்த மொசுக்கோ வீரன் வல்லமை படைத்த கொடுங்கோலனை எதிர்த்து நிற்கின்றன். பிராண்டன் பேக்கு வீரன் சுதந்திரத்தின் அழைப்பால் தன் வீழ்ச்சியிலிருந்து கூடிய புகழுடன் எழுகின்றன். ஒசுத்திரியாவைப் பாருங்கள் : தன் நொந்த மெய்மறந்த நிலையிலிருந்து எழும்பி விட்டது. கடவுளின் மூச்சு விசுகின்றது. காய்ந்த எலும் புகள் குலுங்குகின்றன.”

நெப்போலியனின் வீழ்ச்சி 329
ஒசுத்திரியா
புரட்சித் தீ முதலில் ஒசுத்திரியாவை அடைந்தது. பிரசுபேக்குப் பொருத்தனை யில் நெப்போலியன் பன்முறை அவமானப்படுத்திய காலந்தொடக்கம், ஒசுத் திரியா பழிவாங்கும் வாய்ப்பை எதிர்பார்த்து அதைப் பயன்விளையத் தக்கதாகச் செய்ய முன்னேற்பாடு செய்து கொண்டிருந்தது. இசுப்பெயினில் 3,00,000 பிரெஞ்சுப் படைஞர் கட்டுண்டு நிற்க எந்த முனையிலும் உதவி செய்ய இங்கி லந்து ஆயத்தமாயிருக்க வட சேர்மனியில் ஒரு புதிய நாட்டின உணர்ச்சி உரு வெடுக்க, 1809 இல் ஏற்ற வேளை வாய்த்த தெனத் தோன்றியது. 1809 ஏப்பிரி லில் மக்களின் தாயகப் பற்றைத் தட்டியெழுப்ப, ஒரு புத்தம்புதிய உணர்ச்சி யால் உந்தப்பெற்ற ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ‘போர் வீரர்களே ! ஐரோப்பாவின் விடுதலை உங்கள் கொடிக்கீழ்ச் சரணடைந்துளது. உங்கள் வெற்றிகள் ஐரோப்பாவின் தளைகளைத் தளர்த்தும். உங்கள் சேர்மானிய சோத ார், பகைவனின் படை வரிசையில் இன்னும் இருந்து கொண்டு, உங்களால் மீட் கப்படுவதை எதிர்பார்க்கின்றனர். '
வீயன்னுப் பொருத்தனை (1809)
1809 ஆம் ஆண்டு ஏப்பிரில் 15 ஆம் திகதி ஒசுத்திரியா போர்ப் பிரகடனஞ் செய்தது. தைரோல் உழவர் சிறந்த தைரியத்தோடு போர் புரிந்தனர். எனினும் ஒசுத்திரியச் சேனுபதிகளின் விாகு நெப்போலியன் விரகிற்கு ஈடற்ற தாயிருந்தது. ஒரு மாதத்திற்குள் நெப்போலியன் திரும்பவும் வீயன்னவுட் புகுந்தான். எனினும், வீயன்னுவுக்குத் தெற்கே தானியூப்பு நதிக் கரையோரத் தில் அசுபேண் என்னுமிடத்திற் கடினமானதாக்குதலாற் பின்னிடைந்த அவன் நிலைமை ஆறு கிழமைகளாக மிகவும் நெருக்கடியாயிருந்தது. ஆனல் யூலை 5 ஆம் 6 ஆம் திகதிகளில் உவாகிராம் என்னுமிடத்தில் ஒசுத்திரியாவைத் தீர்க்கமாகத் தோற்கடித்தான். மீண்டுமொருமுறை அபிசுபேக்குப் பேரரசன் இழிவான நியதி களைக் கொண்ட அமைதிப் பொருத்தனையை ஏற்க வேண்டியவனைன். சட்சனி அரசன் ஆட்சிக்குட்பட்ட உவாசோக் கோமகப் பகுதிக்கு மேற்குக் கலிசி யாவை அவன் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. கிழக்குக் கவிசியா இரசியாவுக் கும், கிறியெசு, இலிரியன் மாகாணங்களாகியவை நெப்போலியனுக்கும், தை ரோல் உட்பட ஆள்புலத்தின் பெரிய துண்டுகள் அவன்கீழ் ஆளும் பவேரிய மன்னனுக்கும் அவன் கொடுக்க வேண்டியதாயிற்று. மொத்தமாக ஒசுத்திரியா 4,500,000 குடிகளை இழந்தது. பெருந்தொகையான தெறு பொருளே ஒசுத்திரியா கட்டவேண்டியதாயிற்று. அத்துடன் கண்டத்திற்குரிய முற்றுகையைக் கண்டிப் பாகக் கைக்கொள்ள வாக்குறுதி பண்ணவும் வேண்டியதாயிற்று.
இத்தொடரிகலில் ஒசுத்திரியா தன் நட்புறவாளரிடமிருந்து எவ்வித உதவியும் பெறவில்லை. செல்து நதிக்குச் சென்ற ஆங்கிலப் படையெடுப்பு மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்தும், படுதோல்வியடைந்தது (யூலை). வட சேர்மனியிற் கிளம்பிய எழுச்சிகள் பயனிலவாயின.

Page 175
330 நெப்போலியனின் வீழ்ச்சி
தோற்றமளவில், ஐரோப்பாவிலே நெப்போலியனின் அதிகாரம் முறியடிக்கப் படவில்லை. ஆனல் இங்கிலந்தை இன்னும் அவன் வெற்றி கொள்ளவில்லை. இசுப் பெயினிற் கிளம்பிய கலகத் தீயைத் தணிய விடாது இங்கிலந்து வைத்திருந்தது. ஆகவே, ஐரோப்பிய முற்றுகையைப் பிரான்சு பலப்படுத்த வேண்டியதாயிற்று. அம்முற்றுகை எவ்வளவுக்கு இறுக்கப்பட்டதோ, அவ்வளவிற்கு ஐரோப்பிய அரசர் மீது சுமத்தப்பட்ட அவமானமும் அதிகரித்தது. இங்கிலந்து வழங்கும் பொருட்கள் கிடைக்காதபடியால் மக்களின் துன்பங்களும் அதிகரித்தன. எப் படியாயினும், நெப்போலியனுக்குத் தன் முறைமையை நிறைவேற்றுவதைவிட வேறு வழியில்லை. அதைக் கைவிடுவது, இங்கிலந்தின் கையில் தோல்வி யடைந்தமையை ஒப்புக்கொள்வதுபோலாகும். இனி, அரைமனத்தோடு ஒத்து ழைக்கும் நட்பாளரையும் அவனுற் பொறுக்கமுடியவில்லை. 1809 இல், போப் பாண்டவர் 7 ஆம் பயசு தம்முடைய துறைமுகங்களுள் ஆங்கிலக் கப்பல்கள் பிர வேசிப்பதைத் தடுக்க மறுத்தார். உடனே போப்பாட்சி அரசுகள் இத்தாலி இராச் சியத்துடன் வலிந்திணைக்கப்பட்டன. பிசப்பாண்டவர் நிலைக்கு இழிந்த போப் பாண்டவர்,சவோனவிற் கைதியாக வாழ்ந்தார். உலூயி போனப்பாட்டு ஆட்சித் தளையைப் பொறுக்கவியலாது தன் முடியைத் துறக்க, 1810 இல் ஒல்லந்து பிரான்சுடன் இணைக்கப்பட்டது. அம்பேக்கு நகரைக் கிழக்கெல்லையாகக் கொண்ட சேர்மானிய கடற்கரை முழுவதும் அதே கதியை அடைந்தது.
இப்பொழுது செயலளவில் நெப்போலியனின் பிரிய மாசல்களிலொருவனுன பேணதொற்றின் ஆட்சியின் கீழிருந்த சுவீடினில் அமைதியற்ற நிலை ஆரம்பித் தது. ஆகவே, “பிரான்சுடன் இணங்கியிருக்க விரும்புகிறீரெனச் சொல்லுகின் நீர். இந்த மன நிலைக்குச் சான்றுகள் அளிக்கும்படி நான் கேட்கிறேன். வெளி நாட்டு வணிகமே எல்லா நாடுகளுக்கும் இக்காலப் போர்களிற் பரிவலுப் போன்றது. தென்மாக்கையும் இரசியாவையும் உடனே உம்மைத் தாக்கும்படி செய்ய என்னல் முடியும். பதினைந்து நாட்களுக்குள் இங்கிலந்துடன் நீர் போர் தொடுக்காவிட்டால் நான் சொல்லியபடி உடனே செய்வேன். நீண்ட காலமாகச் சுவிடினும் பிரசியாவும் என்னை ஏமாற்றிவிட்டன. ஒல்லந்துக்கு நேர்ந்த பெரும் கேட்டிலிருந்து ஒரு தீர்க்கமான வழியிற் செல்வது இன்றியமையாத தென்ப தைப் பிரசியா ஈற்றில் கற்றுக்கொண்டது. இரசியாவுடன் செய்துகொண்ட நட் புறவை எப்போதும் என்னுல் நம்ப முடியாது. ஒல்லந்தினாசனை நான் விரும்பி னேன். ஆனல் அவன் என்னுடைய விருப்பத்தை மீறினபொழுது அவனுடைய நாட்டைப் ப்றிமுதல் செய்தேன். சுவிசு மக்களுடனும் அவ்விதமே நடந்து கொண்டேன். ஆங்கிலேயப் பொருட்களைப் பறிமுதல் செய்ய அவர்கள் தயங் கினர்கள். அவர்களுடைய நாட்டுக்குள் என் படைகளோடு சென்றேன். உடனே எனக்குக் கீழ்ப் படிந்தார்கள். இன்றையிலிருந்து பதினைந்தாம் நாள் போர்ப் பிரகடனஞ் செய்யப்பட வேண்டும். இல்லையேல் என்னுடைய தூதமைச்சர் தன் கடவுச் சீட்டைக் கோரும்படி கட்டளை விடுத்திருக்கிறேன். நான் வேண்டுவது கபடமில்லாத போர் அல்லது நேர்மையான நட்புறவு. இவையே என் கடைசி எச்சரிக்கை மொழிகள்' எனப் பேணதொற்றுக்கு 11.11.1810 இல் நெப்போ

நெப்போலியனின் வீழ்ச்சி 33
வியனெழுதினன். பேணதொற்று செய்யக் கூடியது பிறிதொன்றில்லை யென்பது வெளிப்படை. அவன் விருப்பத்திற்கு மாருக இங்கிலந்துடன் போர் தொடுக்க வேண்டியதாயிற்று. உண்மை நிலையை அறிந்த இங்கிலந்து அவன்பாற் சினங் கொள்ளவில்லை. போர் பெயரளவில் மட்டுமே நடந்தது. 1812 யூலையில் சுவிடின் இங்கிலந்துடன் அமைதிப் பொருத்தனை செய்து, ஆங்கிலேயப் பொருட்களுக்குத் தன் துறைமுகங்களைத் திறந்தது. வட சேர்மனியிற் சுவீடியப் படை ஒத்துழைத் தால், அதற்குக் கைமாருகப் பொது உடன்படிக்கை நிறைவேறும் பொழுது, சுவிடினுக்கு நோவே சேரவேண்டியதென்று ஏப்பிரில் மாதத்திற் பேணதொற்று இரசியாவுடன் ஒரு பொருத்தனை நிறைவேற்றினன்.
இவ்வாறு இரசியா தன் வலப்பக்க அணியைக் காப்பாற்றிக் கொண்டது. சார் இடது பக்கத்தையும் காப்பாற்ற விரும்பி, அதே காலத்தில் (1812 இல்) துருக்கி யுடன் புகாரத்துப் பொருத்தனையை நிறைவேற்றினன். இதன்படி அவன் மொழ் தேவியா, உவாலாசியா ஆகிய சிற்றரசுகளைக் கைவிட்டு, தன் உடனுரிமைகளுக் காகப் பெசரேபியா மாகாணத்தைப் பூரண திருத்தியுடன் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டான். ஏனென்ருல் இரசியாவும் கண்டத்திற்குரிய பொருளாதாரத் திட்டத்தின் பிடியிற் சிக்கி, நொந்து, அதைத் தற்காலிகமாகக் கைவிட ஆரம் பித்துவிட்டது. ஆனல், நெப்போலியனுே தன் பிடியைச் சிறிதளவேனும் தளர விட மறுத்துவிட்டான். உண்மையாக, அவனல் தன் பிடியைத் தளர விடவும் முடியாது. ஏதாவது ஒரு முனையில் ஒரு சிறு பொத்தல் ஏற்படுமானல், அவன் சோதனை முழுவதும் இடிந்து விழுந்துபோகும், ' என்று கலாநிதி உரோசு அழ
காகக் கூறியுள்ளார்.
எனவே, இரசியாவுடன் போர் தொடுத்தல் தவிர்க்க முடியாததொன்முயிற்று. நெப்போலியன் இதை உணர்ந்திருந்தான். "நான் இாசியாவுடன் போர் செய்வ தன் காரணங்கள் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் அவை அப் போதைய நிலைமையிலேயே வேரூன்றி நிற்கின்றன. இரசியாவைப் போல அவனும் தன் பக்கபலத்தைக் காப்பாற்றிப் போரிற்கு வேண்டிய முன்னேற்பாடு களைச் செய்து கொண்டிருந்தான். 1810 ஏப்பிரிலில் நெப்போலியன் தன் மேல் பற்றுறுதி கொண்ட யோசபினை மணவிலக்குச் செய்து, ஒசுத்திரிய மகா கோம கள் மாரி உலூயிசைத் திருமணம் செய்தான். இதுவரைக்கும் புதிய சாளி மேனுக்கு உரிமையாளன் இல்லை. ஆணுல், 1811 இல் புதிய பேரரசி ஒரு மகனை ஈன்முள். அவன் பின்னர் உரோமின் அரசனுணுன் நெப்போலியனின் மாமன் கலிசியாவைப் பெற்று, அதற்குப் பதிலாக நெப்போலியன் இரசியாமீது படை யெடுத்துச் செல்லும்பொழுது, அவனுடைய வலப்பக்க அணியைக் காக்கும் பொறுப்பை ஏற்றன். பிரசியாவோடு செய்த பொருத்தனையின்படி அவன் இடது பக்கத்தைப் பாதுகாப்பதற்குப் பிரசியா ஒருப்பட்டது.

Page 176
332 நெப்போலியனின் வீழ்ச்சி
மொசுக்கோத் தொடரிகல்
இரசியாவைத் தாக்க எல்லா ஏற்பாடுகளும் ஆயத்தமாயிருந்தன. 1812 ஏப் பிரில் மாதம் 12 ஆம் திகதி நெப்போலியன் போர்ப் பிரகடனஞ் செய்து, யூன் 24 ஆம் திகதி 6,80,000 படைஞர்களைக்கொண்ட படைக்குத் தலைமை தாங்கி நீமென் நதியைக் கடந்தான். இரசியர் நாட்டுப் புறத்தை அழித்துக் கொண்டும் நகர்ப்புறத்தை எரித்துக்கொண்டும் பின்வாங்கினர். பொரதினேவிற் பெருஞ் சமர் விளைத்து மொசுக்கோவை அடைந்தபோது, அந்நகர் தீவாய்ப்பட்டிருப்பது கண்டான். என்ருலும் அங்கே ஒரு மாதத்திற்கு மேல் (செத்தெம்பர் 15 தொடக் கம் ஒற்முேபர் 19 வரையும்) தங்கினன். ஒற்முேபர் மாத நடுப்பகுதியில் நிலைமை தாங்க முடியாததாயிற்று. இரசியாவின் அப்போதைய இராணுவ நிலை நெப் போலியன் நீமென் நதியைக் கடந்தபோதிருந்த நிலையிலேயேயிருந்தது. நோ யால் அவன் படையிலொருபகுதி அழிந்துவிட்டது. எஞ்சியோர் பட்டினியால் வருந்தினர். 19 ஆம் தேதி அவன் படை பின்வாங்கத் தொடங்கிற்று. குடுசோவு என்பான் தலைமையில், இரசியர், பின்னிடும் பிரான்சியரை ஓயாது தாக்கினர். பெரசின எனுமிடத்தை அடைந்த பின் (26-28 நவம்பர்) பிரெஞ்சுப்படை சிதைவுற்றது. திசெம்பர் 5 ஆம் தேதி நெப்போலியன் தன் படை கைவிட்டுப் பாரிசு க்கு ஏகினன். அவன் படையில் எஞ்சிய 1,00,000 வீரர், அல்லல் பலவற்றுக் காளாகி, 13 ஆம் தேதியன்று நீமென் நதி கடந்து மீண்டார்கள்.
இரசியாவில் நெப்போலியன் அடைந்த அவலம் அவனுக்குப் பேராபத்தை உண்டாக்கியதா ? இந்தக் கேள்விக்குத் திடமான விடை கூற முடியாது. ஒரு பெரிய படையை இழந்ததால் அவன் நிலைமை வலி குன்றவில்லை. மூன்று மாதத் திற்குள் அவன் ஒரு புதுப்படையைத் திரட்டினன். பிரான்சும் இசையின் நாட் டுக் கூட்டிணைப்பும் அவனுக்கு விசுவாசமாயிருந்தன. சாரும் பிரசிய அரசனும் அவனுக்கெதிராகப் போர்மேற்சென்று அவனைத் தாக்கத் தயங்கினர்கள். ஒசுத் திரியா வாளாவிருந்தது. இசுப்பெயினில் உவெலிந்தன் மகிரித்தைக் கைப்பற்ற முடிந்தது. ஆனல், கைப்பற்றியதைக் காப்பாற்ற முடியவில்லை. ஆணுல், சனவரி 13 ஆம் திகதியன்று , நெப்போலியன் நீமென் நதியைக் கடந்து சரியாக ஒரு மாதத்தின் பின், சார் அந் நதிகைக் கடந்து, பெப்புருவரி 28 ஆம் திகதி, மறக்க முடியாத காலிசுப் பொருத்தனையைப் பிரசியாவுடன் நிறைவேற்றினன். இதன் படி, பிரசியா தில்சித்து உடன் படிக்கைக்குமுன் நிலப்பரப்பிலும் குடித் தொகையிலும் அனுபவித்த நிலையை மீண்டும் பெறும் வரையும், தான் எடுத்த ஆயுதம் கீழேவைப்பதில்லையென வாக்குறுதி செய்தது.
இந்தப் பொருத்தனையே நெப்போலியனை அழித்ததும் பிரசியாவை ஆக்கியது மாகும். இப்பொருத்தனைக்குக் காரணமாயிருந்தவன் சேர்மன் அரசறிஞனும் சாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனுமாகிய உவொன் இசுதெயின் என்பவ ஞவான்.

நெப்போலியனின் வீழ்ச்சி 333
பிரசியாவிற் சீர்திருத்தங்கள்
இயேன, ஒவசுராத்துப் போர்களில் அடைந்த தோல்விகளும், தில்சித்து உடன்படிக்கையினுற் பெற்ற அவமானமும் பிரசியாவின் பேரிழிவு நிலையைக் குறித்ததுமல்லாமல், அது புத்துயிர் பெறுவதினசம்பத்தையும் குறித்தன. * பிரசியர் மகா பிரதரிக்கின் வாகைமாலையை நினைந்தே அயர்ந்துவிட்டார்கள்', என உலூயிசு அரசி கூறியது உண்மையே. அவர்கள் நெப்போலியனல் தட்டி எழுப்பப்பட்டார்கள். விழித்து எழும்பிய பொழுது, ஆற்றல் வாய்ந்த தலைவர் சிலர் புதிய வழிகளிலவர்களைக் கொண்டு நடத்த ஆயத்தமாகவும் ஆர்வத்தோடு மிருக்கக் கண்டார்கள். இசுதெயினும், ஆடன்பேக்கும், பைற்றும், அம்போற்றும், சான்கோசும், நைசுனேவும் செய்து முடித்த அரிய சாதனைகளை இங்கே விரித் ஆரக் கூற முடியாது. இங்கே சுருக்கிக் கூறுவதே கடினம். ஆயின், அச்சரி தையோ உளங்கவரும் மாண்புடையது. இவ்வுயரிய பணியில் எத்தகைய மனே பாவத்தோடு அத்தலைவர்கள் ஈடுபட்டார்களென்பதை இசுதெயின் வருமாறு குறிக்கின்றர். நாட்டுமக்களிடையே ஒழுக்கவுணர்ச்சியையும் மதாபிமானத்தை யுந் தாயகப்பற்றையுந் தூண்டுவதும், நாட்டின் சுதந்திரத்தையும் மானத்தை யுங் காப்பாற்ற எத்தகைய தியாகத்தையுஞ் செய்யச் சித்தமாயிருக்கும் பான் மையையும் அணிவையும் தன்னம்பிக்கையையும் அவர்களிடையே கிளரச்
செய்வதும் எமது அடிப்படை நோக்கமாய் அமைந்தன' என்பதாம்.
சேர்மானிய மக்களுக்குச் சில விளிப்புரை ' எனுந் தலைப்பொடு பைற்று என் பார் ஆற்றிய சொற்பொழிவுகள், சேர்மன் மக்களை அறை கூவியழைக்கும் எக் காளம்போன்றவை. 1807-8 குளிர் காலத்தில் பிரான்சியப் படைகள் நகரை உண்மையாகக் கைப்பற்றிக் கொண்டிருந்த பொழுது, பேளினில் ஆற்றப்பட்ட இச்சொற்பொழிவுகள் மனத்தில் ஆழ்ந்து பதிந்தன. 'கல்வியல்லாது வேமுென் அறும் எங்களை நசிக்கும் இடுக்கண்களிலிருந்து மீட்க முடியாது. ' அச்சொற் பொழிவுகளின் ஆதார சுருதி இதுவே. ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரையும் பிரசியக் கல்வித்திட்டம் முழுவதையுந் திருத்தியமைத்த அம்போற் றின் சீர்திருத்தங்கள், முன் குறிப்பிட்ட பைற்று என்பவனின் கொள்கைகளை உள்ளடக்கியிருந்தன. பைற்றும் அம்போற்றும் கல்விக்காக என்ன செய்தார் களோ அதைச் சான்கோசும் நைசுனேவும் பிரசியபடைக்காகவும், இசுதெயினும் ஆடன் பேக்கும் நிதி பாலனத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் செய்தார்கள். நில முறைமை முற்முகக் கிருத்தியமைக்கப்பட்டது. அடிமைகள் விடுதலே செய் யப்பட்டு உழவோராயினர். இந்த ஆறு மேதைகளின் முயற்சியாற் பிரசியா
சீராக்கப்பட்டது.
மரியற்றும் உரோபட்சனும் எழுதிய் 'பிரசியாவின் மலர்ச்சி” (ஒட்சுபோட்டு கிளரந் ன் அச்சகம், 1915) எனும் நூலின் எழாம் அத்தியாயத்தை ஒப்பிடுக.

Page 177
334 நெப்போலியனின் வீழ்ச்சி
சேர்மானிய விடுதலைப் போர்
இவ்வாறு புதிதாயமைக்கப்பட்ட பிரசியா, இரசியாவினுதவியுடனும், பிற் பகுதிகளில் ஒசுத்திரியாவினுதவியுடனும் நெப்போலியனைச் சேர்மனியினின்றும் துரத்திவிட்டு, ஈற்றில் அவனை ஐரோப்பாவினின்றும் துரத்திவிட இங்கிலாந் துக்கு உதவி செய்தது.
சேர்மானிய விடுதலைப் போரின் வரலாறு தெளிவாக வரையறுக்கப்பட்ட இரு கட்டங்களிலமையும். முதலாவது கட்டம் (1813 மாச்சு 17 ஆம் திகதி) பிரசியா போர்ப் பிரகடனஞ் செய்த காலந் தொடங்கி, யூன் மாத ஆரம்பத்தில் நெப் போலியனல் கோரப்பட்ட படைத்தகைவுவரை நிலைத்தது. இந்தக் கட்டத்தில், இசுதெயின் பிரசித்தஞ் செய்த தத்துவங்களுக்கு அமைந்து, பிரசியாவின் தலைமையில், சேர்மானிய மக்கள் போர் புரிந்தனர்.
இரண்டாம் கட்டம், 1813 ஒகத்து தொடக்கம் 1814 மாச்சு 31 ஆம் திகதி நட் புறவாளர் பாரிசிற் புகும் வசையும் நிலைத்தது. ஒசுத்திரியா நட்புறவு நாடுகளு டன் சேர்ந்து கொண்டமை, போரின் இக்கட்டத்திற்கும் இன்னுமதிகமாக போரின் பின் நிறைவேறிய உடன்படிக்கைக்கும் தெளிவான வமிசத்திற்குரிய தன்மையை அளித்தது. தலைமை இசுதெயினிலிருந்து மெற்றேணிக்குக்கு மாறியது.
மெற்றேணிக்கு
ஆரம்பத்தில் ஒசுத்திரியா பிரசியாவுடனும் இரசியாவுடனும் சேரவில்லை. தன் மருமகன் நெப்போலியனுக்கு நட்டம் விளைத்துத் தன் எதிரிகளான இரசியாவை யும் பிரசியாவையும் மேன்மைப் படுத்தப் பேரரசன் பிரான்சிசு விரும்பவில்லை. ஆணுல், ஒசுத்திரியா விடுத்த நியதிகளை, குறிக்த கால எல்லையுள் அறிவின்மை யால் நெப்போலியன் ஏற்றுக்கொள்ளத் தவறியபடியால், ஒகத்து 12 ஆம் திகதி ஒசுத்திரியா போர்ப் பிரகடனஞ் செய்தது. முன்மொழியப்பட்ட நியதிகளின்படி நெப்போலியன் பிரான்சிய முடியை மட்டுமன்றி இசையின் நாட்டுக் கூட்டிணைப் பினதும் பெல்சியத்தினதும் குடிப்பதிப் பதவியையும் பெற்றிருப்பான். இல்லிரிய மாகாணங்கள் ஒசுத்திரியாவுக்கு மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உவாசோக் கோமகவாட்சி ஒடுக்கப்படவும், வடசேர்மனி கில்சித்துப் பொருத் தனக்கு முன்பிருந்த நிலைக்கு மீளவும் ஏற்பாடாகியிருந்தது. நெப்போலியன் தன் முடிக்கு அபாயமில்லாமல் இந்நியதிகளைக் கொண்ட அமைதிப் பொருத் தனையை ஏற்க முடிந்திருக்குமோவென்பது இகலாட்டுக்குரிய விடயமாகும். சமரில் எல்லாவற்றையும் பணயம் வைப்பதையே அவன் விரும்பினன். ஈற்றில் எதிர்காலம் அவனுக்கு விரோதமாயிற்று. அந்த மகத்தான இலைச்சிக்குசமர் (ஒற்ருேபர் 16-19 வரை) அவன் படை வலிமையைத் தகர்த்தது. அவன் சேர்மனியில் கட்டியெழுப்பிய கட்டிடம் மண்ணுற் செய்த வீடுபோல் இடிந்து விழுந்தது. என்றுலும் இலைச்சிக்குப்பின்னரும் பிரான்சிய முடியையும், இயற்கை

நெப்போலியனின் வீழ்ச்சி 335
எல்லைகளாகிய இரையின் நதி, அல்பிசு மலைகள், பிரனிசு மலைகள் ஆகியவை வரையும் விசாலித்த பிரான் சையும் அவனுக்கு விட்டுவைக்கும் நியதிகளைக் கொண்ட அமைதிப் பொருத்தனையை அவன் நிறைவேற்றியிருக்கலாம். அவன் அதற்கிணங்க மறுத்தான். கிசெம்பர் முடிவில் நட்புறவாளர் பிரான்சிற் புகுந்த னர். ஒன்பது வாரங்களாக மிகச் சிறந்த விரகினல் அவர்களை அவன் எதிர்த்து நின்முன். ஆனல் மாச்சு 30 ஆம் திகதி பாரிசு நகரம் பகைவர்கள் உட்செல்ல வாயில்களைத் திறந்துவிட்டது. சற்றுத் தயங்கிய பின்னரும், பல்வேறு மாற்று வழிகளை ஆராய்ச்சி செய்த பின்னருமே, பூபன் குலமுறையினரைத் திருப்பி யழைக்க நட்புறவாளர் தீர்மானித்தனர். மே மாதம் 3 ஆம் திகதி பதினெட்டாம் உலூயி மீண்டும் பாரிசில், 23 ஆண்டுகளின் பின்னர், பிரவேசித்தான். மே 30 ஆம் திகதி முதலாம் பாரிசுப் பொருத்தனை ஒப்பமிடப்பட்டது.
நெப்போலியன் ஏப்பிரில் 13 ஆம் திகதி முடியை நீத்துத் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பெரிய இளைப்பாறற் சம்பளம் பெற்றதோடு, தன் மனையாளாகிய ஒசுத்திரிய பேரரசிக்கு மூன்று இத்தாலியக் கோமகப் பகுதிகளைக் கொடுக்கும் g) றுதிவாக்கும் பெற்று எல்பாவுக்குச் சென்றன். நட்புறவாளரால் பிரான்சு பெருந் தன்மையுடன் நடத்தப்படாவிட்டாலும் அதிக கண்டிப்பின்றி நடத்தப் பட்டது. போப்பாண்டவருக்கு உரோம் மீண்டும் கொடுக்கப்பட்டது. அரசுரிமை யுள்ள மன்னர்கள் தத்தம் நாடுகளைப் பெற்றனர். நவம்பர் மாதத்தில் முதன்மை வாய்ந்த ஐரோப்பியமன்னரும் அமைச்சரும் ஐரோப்பாவின் புதிய நிருணய நியதிகளை வரைய வீயன்னுவிற் கூடினர்கள். இந்த நீண்ட, சிக்கலான அலுவல் முடிவடையுமுன்னர், எல்பாவிலே தன் சுருங்கிய “அரசாட்சியில் ' களைப் படைந்து, நெப்போலியன் (1815 மாச்சு 1 ஆம் திகதி). பிரான்சில் மீண்டும் தோன்றிப் பாரிசின் மீது படையெடுத்தான். அவன் நகரை அணுகியதும் பூபன் குலமுறையினர் பயந்தோடினர். மாச்சு மாதம் முடிவடையுமுன்னர் நெப்போலி யன் திரும்பவும் தலைநகரின் தலைவனும் பிரான்சியரின் பேரரசனுமாயினன்.
மீண்டுமொருமுறை ஐரோப்பா தீவிரமாகப் படை பூண்டது. நூறு நாட்' போர் தொடங்கியது. ஈற்றில் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த உவாட்டலூக்களத் கில் யூன் 18 ஆம் திகதி நெப்போலியன் உவெலிந்தன் கையில் தன் முடிவை எய்தினன். பிரான்சின் தோல்வி நிச்சயமாயிருந்த வேளையிற் புரூசரும் அவன் பிரசியப் படையும் போரிற் சேர்ந்து அத்தோல்வியைப் படுதோல்வியாக்கினர். யூலை 7 ஆம் திகதி நட்புறவாளர் இரண்டாம் முறையும் பிரான்சியத் தலைநகருட் புகுந்தனர். 15 ஆம் திகதி நெப்போலியன் அமெரிக்காவிற்குத் தப்பியோட வீணே முயற்சி செய்து, மாட்சிமைதங்கிய மன்னனின் பெலரோவன் போர்க் கப்பலின் தளபதி ஒதாம் என்பானிடம் சரணடைந்தான். பின்னர் சென் எலன
வுக்கு நாடுகடத்தப்பட்டு, 1821இல் கைதியாக அங்கேயே இறந்தான்.

Page 178
8፵ü நெப்போலியனின் வீழ்ச்சி
I81 3507
வீயன்னுவில் நடைபெற்றுக்கொண் டிருக்க ஆலோசஃனகள் இந்த நூறு நாட் கனினுல் தடைப்படவில்& ஆலோசஃனயின் முடிவுகள் வியன்னுளில் நிறைவே றிய இருபத்தியேட்டுப் பொருத்தனேசுனிலும், பாரிசிலும் மற்றைய இடங்கனி லும் ஒப்பமிடப்பட்ட இருபக்கிண்டு பொருத்தனேகளிலும் உருவாயின. முக்கி செய்திகளின் கீருக்கம் இங்கே தரப்படும்.
பிரான்சு
நுாறு நாட் குழப்டம் நிகழ்ந்த போதிலும், பிரான்சு & ாைமாக நடத்தப்பட வின்ஃ உாைட்டலூப் போரின் பின்னர், இரண்டாம் முன?யும் தன் முடினே: மீண்டும் பெர்குன் பதினெட்டாம் உலூயி அரசுரிமைக் கொள்ை கயின் பிரதிநிதி பாக அவன் பதிக்கப்பட்டமையாலேயே, அவ்வுரிமைத் தக்துவக்கை நிநோட் நிம் பொருட்டாக, பிரான்சிய முடியாக ஆணுைக்கு அளிக்கப்பட்டது. பிரான்சின் நிலப்பரப்பு 1790ஆம் ஆண்டு இருந்த எல்லேப்புறங்களின் அளவிற்குக் குறைக்கப் பட்டது. கண்டத்திலுள்ள எல்லாத் தஃநகர்களிலிருந்தும் நெப்போலியன் wiர்ந்த, கஃக் nus: Lt. ப்ய்ந்த பொருட்குவியல்களேத் கிரும் க் கொடுக்கும் !! yli 700.00,000 பிராங்குகளேத் தெஐடொருளாகக் கொடுக்கும்வரை ரோன்சின் கோட்டைகளிப் பதினெட்டை தட்புறவாளரின் படையாட்சியில் விடும்படியும் பிரான்டி கட்ட பப்படுத்தப்பட்டது. பிரீன்சு, அல்சேசு உலோ ாேன் மாகாணங் கஃன வைத்திருக்க விடப்பட்டமை சேர்மனிக்கு முக்கியமாகப் பிரசியாவுக்கு, ஏமாற்றத்தை அளிக்கது.
இரசியாவும் போலந்தும்
உவாரே மாபெரும் கோமகப் பகுதி, போலந்தினான் என் முறையின் சாருக்குக் கொடுக்கப்பட்டுப் பேரவை இராச்சியமாகக் கிருக்கியமைக்கப் பட்டது. இந்த ஒழுங்குக்கு "மூக அவனைட4 பிரசிய நட்புறவாளரும் ஒசுக் கிசிய நட்புறவாணரும் வினே ஸ்ாதாடினர். ஆனல் ### அனிச்சாந்தர் அகில் o-pola. E Lr:G3 r. வைத்திருத்தான். அவன் நீர்மானார் ஆa:ன் படையினரல் ஆகரிக்கப்பட்டமையால் வென்றது. ஒகத்திரிய கவிசியாவில் ஒரு பகுதியைக் திரும்பவும் பெற்றுக்கொண்டது. பிரசியா, பேTசன் மாகானத்தையும், தான் சிக்கு, தோன் என்ற பெரிய கேரட்டைகஃபம் வைத்துக்கொண்டது. &r3 g r aß; 13,w ir 3py antal,ñ,5?" J / T5ir (35ʻrq- M. I y J " «Si: ஆமைக்கப்பட்டது. என்ருஜிம் 1846 இல் ஒசுத்திரியாவுடன் கலிசியா ஒன்குக்கப்பட்டது. இ சிபா, போலந்தைச் செயலளவில் #ட்டியதுமல்லாமல் பினிவித்தையும் பெசரேபியாவையும் வைத்துக்
தொண்டது.

BC. It IIT, BT5
ஆங்கில மைல்கள் L-----H D 50 100 2.0D 30D 4DD TITI பிரசியா E. 3) ஒசுத்திரியப் பேரரசு ஒற்ருேமன் பேரரசு E சாடினிபா இராச்சியம்
சேர்மன் நாட்டுக்
நடிட்டினோப்பின் எல்
ஐக்கிய" - - - - -
ராச்சியம்g
frr:A. தெ
l
-էին ČTC) :போலந்து
சித்
(3)
1۔ ع۔ بی ------- + *堕 ஆஷ்லக் கால்வி
பாசலோனு tly
JU As
kui 67 Mashun
المية a.
தி காடுக விேரளுட த
ெ କଁ ஆாஞ்சியர் புேரோந்தக் ஆர்யபடி خ آئمہ" کی–
அஸ்சீரியா
E-B 21785)
To face раве 337,

Page 179
r illuidi"گیت "=" = "="== "۔ ".ஆ ". i سيينا" ت ്', 毛※梦 Tந்த்ரபூேர்''' | స్టేశీడjN్క
"........" ፴፩ኋ
ப. в я
TEESTTSSaSSSSSSEJhAheAJJSASA ". H
= ایلیچ கொள் °。°)_甲 ፳፰
" . " ዳኞ÷ኾሩይ (5)
". ". " = "بیق r
'ဇံ # متقیم ஆே . قي
FRA 2ڑاؤ 须 ്!!! క్ల్లో కథ ഗ്ഗ
تمي "تي سميت "لمبي تسميتهم 须鬣罗
22 يقة
须
β.
ទាំ២
አታ'
நா
*
ഗ്ഗ
عليه
" " +
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெப்போலியனின் வீழ்ச்சி ፵፰፻፲
பிரசியாவும் ஒசுத்திரியாவும்
பிரசியா, பவேரியாவுக்குப் பைதுெயிர்' ஆன் டாக்கு என்னுமிடங்கஃசாம், ஆணுேவருக்கு in it in ஆள்புலங்கனோம் கைவிட்டு, பேரத்தைப் பொறுக் அளவில் ஏமாற்றமடைந்து, வேருேளிடத்தில் நட்டஈடு தேடவேண்டியதாயிற்று. சட்சணியில் விட பாதி, கீழ்ப் (I fir Lr:G'):fy rir, F:: Ayer fr','r' 'TA இன ரயின் தகியினிருமருங்குமுன்னர் உவெசுபேலியா, கிளிசுெ, கொலோன், எச்சி' பி ப்பல், பொண், கொனென் , திரீனிசு ஆகிய பகுகின ங்கிw) ஒரு பெரிய மாகாணம் எனுமிவற்றை ஈட்டியது. இப்பகுதிகள் பிரந்தன்பேக்கு-பிரசியாவிலிருந்து புவியியலின் படி வேருகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒன்சொலேன் குலமுன,
ਤਕ எதிர் 'ಸಿ' -ಶ್ಯ' சியலுக்கும் Eக்களின் கைத்தொழில், பொருளாதாரம்
ஆகியவற்றின் னேர்ச்சிக்கும் மிக முக்கியமானவைகளாயின.
ஒசுக்கிரியர yக்கும் திருக்கி" ைவிட்ட ஈடு I, IT sffr, , ' -1,7, -ry,ଣ୍ଣ மகிழ்ச்சி புடன் பெல்சியத்தைக் கைவிட்டது. பென்சியம் ஒல்லத்துடனிஃணக்கப்பட்டு, ஒறேஞ்சுக் குலத்தினரின் ஆட்சியின் கீழ் நெதலந்து இராச்சியமாயிற்று, ஐரோப் பிய குழியஃக் கொண்டு நோக்குமிடத்து இந்த ஒழுங்கு விசுந்துாைக்கக் கூடிய காயிருப்பினும், நல்ல பயன் வினேவிக்கவில்லே. 1830 ஆம் ஆண்டில் டென்சியம் வேரு ைநாடக நிறுவப்படும்வரை மட்டுமே அது நிஃத்தது. பென்சியத்தைக் கொர்ெதுப் பனேரியாவைப் பெற விரும்பிய ஒத்திரியர, 1813 இல் எய்திய தட்ட சீட்பிக்கு மேலாக, உலோம்படியுடன் சேர்க்கப்பட்ட வெனிசியாவையும் எத்திரியாற்றிக் கடலின் ர்ேக்கரையிலுள்ள திரியெத்தையும் வெனிசியன் சார் நாடுகனேயும் பெற்றது. இவ்வண்ணம் ஒகத்திரியர வட இக்க"ளின் "ட்சேன்ஜி,
பாக்ரிெயாற்றிக்குக் கடளிலும் ஆகிக்கம் Οι όρο αυ
இத்தாவி
நெப்போவினுல் ஆன குறையாக ஒன்றுகப்பட்ட இத்தானி திரும்பவும் பன்னிரு சிறு அரசுகளாகப் பிரிக்கப்பட்டது. பூபன் அரசன் பேடினத்து மீண்டும் நேப்பினேயும் சிசிலியையும் ஆண்டான் : பேரப்பரண் இருக்குக் திருச்சண்ட ஆ'கள் கிருப்பிக் கொடுக்கப்பட்டன : சாடினிய அரசன் விற்றர் எமானுவேல் வே"யையும் பீதர்மனேயும் இன்னும் பிறப்பு பூச் செனுேவா வையும் திரும்ப பெண்ருன் இப்படியாகச் செனுேவாவின் குடியாகக் காலம் இறுதியில் முடி Буйурдун LS TTTk k S TTT C TTLH HO TTTS T GTSLSS LLLLLL LT SuCL LGSLLSS பகுதிக் குக் கஃவியாக நியமிக்கப்பட்டாள்; மொடினுவிலும் கசகனியிலும் இருந்த ஒகத்திரிய பயிற்சி' Lř13 př. நீக்கப்பட்டு, வேறு படைஞர் நியமிக்கப்பட்ட னர். செயலளவில் மெற்றேணிக்கு இக்காலியின் தஃவனுயின்ை.

Page 180
338 நெப்போலியனின் வீழ்ச்சி
சேர்மனி
சேர்மனியின் எதிர்கால அமைப்பைப்பற்றி வியன்னுவில் அதிகம் உரையாட்டு நடந்தது. ஈற்றில் ஒசுத்திரியாவின் பரம்பரைத் தலைமையின் கீழ் அதன் முப்பத்தியொன்பது அரசுகளும் தளர்ந்த கூட்டிணைப்பு ஆட்சியில் ஐக்கியப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. ஒசுத்திரியாவுக்கும் பிரசியாவுக்குமிடை யில் நிலவிய பொருமையும், நெப்போலியனின் ஆதிக்கத்தின் கீழ் தாங்கள் பெயரளவில் அனுபவித்த இறைமையின் அடையாளத்தையாகுதல் வைத்திருக் கப் பவேரியா, சட்சனி, பேடன் ஆகிய மத்திய நாடுகளின் விருப்பமும், இசு தெயின் போன்ற சேர்மனியத் தாயகப்பற்றுள்ளவர்களின் விருப்பத்துக்கமைந்த எவ்வித இணக்கத்தையும் செய்வதினின்று தடுத்தன.
பெரிய பிரித்தானியாவும் வட ஐரோப்பாவும்
வியன்னு மாசபையிற் பிரித்தானியப் பிரதிநிதிகளான காசிலிறி பிரபுவும். உவெலிந்தன் பிரபுவும் நிலையான அமைதியளிக்கும் நடுநிலையான இணக்கத்தை ஐரோப்பாவுக்குப் பெற்றுக்கொடுக்க விரும்பினர். அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கு மிகுதியான ஆதரவைப் பெற்ருரர்கள். ஆனல் எலிகோலந்தும் அயோனியன் தீவுப் புரப்பகமுமே ஐரோப்பாவில் இங்கிலந்து ஈட்டியவையாகும். பிரித்தானியா பெற்ற உண்மையான நயங்கள் ஐரோப்பாவிற்குப் புறம்பே ஈட்டப்பட்டன. பிரான்சு, இசுப்பெயின், ஒல்லந்து ஆகிய நாடுகளின் குடியேற்ற நாடுகள் இங்கிலந்தின் தயவிலேயே தங்கியிருந்தன. இந்நாடுகள் 1815 வரையில் பெரும்பாலும் பிரித்தானியாவின் கையிலேயே இருந்தன. ஆனல், இலங்கையை மட்டும் இங்கிலந்து வைத்திருந்தது. இருமுறை வென்று 1815 இல் ஒல்லந்தரிட மிருந்து விலைகொடுத்து வாங்கிய கேப்பு கொலனியையும் (முனைக்குடியேற்ற நாடு), இசுப்பெயினிலிருந்து பெற்ற திரினிடாட்டையும் பிரான்சிலிருந்து பெற்ற மொரிசசு, சென் உலூயா, தொபாகோ ஆகியவற்றையும் பிரித்தானியா வைத் திருந்தது.
காந்திநேவியாவில், நோவே தென்மாக்கிலிருந்து பிரிக்கப்பட்டுச் சுவிடினுடன் இணைக்கப்பட்டது. சுவிடின் இரசியாவுக்குப் பினிலந்தையும் பிரசியாவுக்கு மேற்குப் பொமறேனியாவையும் ஒப்படைத்தது. மூன்று பிரான்சிய கோட்டங் கள் சேர்க்கப்பட்டதனுற் பெரிதாய சுவிற்சலந்து, வல்லரசுகளின் பொறுப்பின் கீழ் நடுநிலைமை நாடாக்கப்பட்டது.
1815 இல் நிறைவேறிய இணக்கம் இத்தகையதே. இவ்விணக்கம் அந்தக் காலத் கிலேயே பலமாகக் கண்டிக்கப்பட்டது. வரலாற்று விமர்சகரும் கண்டனஞ் செய்திருக்கின்றனர். ஆனல், குழ்வல்லோரின் வேலையோ மிகவும் கடினமானது. ஐரோப்பா என்ற பாழான கட்டிடத்தைத் திருத்தியமைக்கும்படி அவர்கள் வேண்டப்பட்டனர். ஆனல் அவர்கள் தங்கள் கட்டிடங்களைப் பழைய இடங்

நெப்போலியனின் வீழ்ச்சி 339
களிலேயே அமைக்க வேண்டியிருந்தது. அதுவுமல்லாமல், போரின் கடைசிக் கட்டத்தின் முன்னர் வல்லரசுகள் தங்களுள் ஒருவரோடொருவர் செய்த பொருத்தனைகளினலும் ஒருவருக்கொருவர் கொடுத்த சிறப்பு வாக்குறுதிகளா அலும் கட்டுண்டிருந்தனர். புரட்சிக் கால, நெப்போலியன் கால அழிப்பு முயற்சி களிலிருந்து உதித்து, ஐரோப்பாவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய ஆக்கச் சத்திகளை வல்லரசுகள் வேண்டியாங்கு கருத்திற்கொள்ளாது விட்டிருக்க லாம். வீயன்னவிற் கூடிய குழ்வல்லோர் மக்களின் நலனையும் உருத்தெழுந்த நாட்டினத் தத்துவத்தையும் மதித்ததிலும் பார்க்க வமிச நலன்களையும் ஆள் வோரின் வசதியையும் கவனித்தார்கள். ஆனல் எப்போதும் அமைதியற்றதாய போற்கன் தீபகற்பத்தைத் தவிர ஐரோப்பா 1815 இணக்கத்தால் நீண்டகால அமைதியைப் பெற்று இழந்த வலிமையைத் திரும்பவும் பெற்றது. 1648 ஆம் 1919 ஆம் ஆண்டுகளில் நிறைவேறிய பெரும் இணங்கங்களே இவ்விணக்கத்திற் குச் சமனன மேன்மையுடையவை. பலனளவில் இது மற்றவையிற் குறைந்த தனணு.
13-B 24178 (5/60)

Page 181
ஒகந்திரியன்
போது
பிரிய ஜார்யேந்ே Hirsu Satriunity) agrees i TrøLEG CrgLuTI gList graph இத்தார் இய்ேதி Fர்: இராமியம்
1810 இல் மத்திய ஐரோப்பா
 
 
 

அத்தியாயம் 27
மீட்பு, எதிர் விளைவு, புரட்சி (1815-1830)
முக்கியமான திகதிகள் (28 ஆம் அத்தியாயத்திற்குமுரியன)
1818 புனித நட்புறவு அமைக்கப்படல். 1818 18 ஆம் உலூயி பிரான்சினாசனுக மீண்டுமமர்த்தப்பட்டான். 1818 பிசான்சு, இசுப்பெயின், இக்காவி முதலிய நாடுகளில் எதிர்விளேவு. 1818 ஏச்சிலா சப்பல் போவை, அன்னியப் படைகள் பிரான்சிலிருந்து
வெளியேறல். 1819 சேர்மன் புரட்சியை அடக்கக் கான்சு பாத்து ஆஞ்ஞைகள். 1820 இசுப்பெயின், போத்துக்கல், நேப்பின் ஆகிய நாடுகளிற் புரட்சி. 1820 துறப்போப் பேரவை. 1821 பிதுமனிற் கலாம், 1821 இலபாக்குப் போவை. 1821 இசுப்பெயினினின்றும் சுதந்திரம் பெற்றமையைப் பேரு பிரகடனஞ்
செய்தல், 1822 வெரோணுப் பேரவை. 1822 சிவிநாட்டின் சுயவாட்சியைப் போத்துக்கல் அங்கீகரித்தல், 1822 கிரேக்க கலாம். 1823 இசுப்பெயினில் பிரான்சின் தஸ்பீடு. 1833 அமெரிக்கப் பேரவைக்குக் குடிப்பதி மொன்ருேவின் செய்தி. 1824 பத்தாம் சான்சு பதினெட்டாம் உலூயியின்பின் அரசனுதல். 1838 இங்கிலந்து, மெச்சிக்கோவுடனும் கெர்லம்பியாவுடனும் வியாபாரப்
பொருத்தனேயை நிறைவேற்றல், 1839 சேர்மன் சொல்வரீன்-சுங்கச் சங்கம், 1830 பிரான்சு, பெல்சியம், சேர்மனி, இத்தானி ஆகிய நாடுகளிற் புரட்சி. 1830 உலூயி பிலிப்பு பிரான்சிய மக்களின் அரசனுதல். 1831 இலண்டன் பொருத்தனே (பென்சிய சுதந்திரம்). 1832 சீர்திருத்தவிதி (இங்கிலந்து). 1832 பெல்சிய இலியோப்ோலுக்கும் ஒலியன்சு மேரி உலூயிசுக்கும்
திருமணம், 1846 இசுப்பானிய திருமணங்கள். 1848 சோன்சு, அபிசுபேக்குப் பேரரசு, சேர்மனி, இத்தாலி ஆகிய நாடு
களிற் புரட்சி. 1848 இரண்டாம் பிரான்சியக் குடியரசு. 1848 உலூயி நெப்போலியன் குடிப்பதியாகத் தேர்ந்தெடுக்கப்படல்.

Page 182
342 மீட்பு, எதிர்விளைவு, புரட்சி
1815 இல் இருந்த குழ்வல்லோர், பின்னர் 1918 ஆம் ஆண்டிலிருந்தவர்களைப் போல, சீரழிந்த ஐரோப்பிய அரசமைப்பைத் திருத்தி அமைக்கும் தங்கள் முயற்சிக்கு அடிப்படையாக ஒரு குறிக்கோளைத் தேடினர்கள். வீயன்னுவிற் கூடிய பேரவை ‘முறைப்பிறப்புரிமை' என்னும் கோட்பாட்டிலே தங்கள் குறிக் கோளைக் கண்டனர். பாரிசிற் கூடிய மாநாட்டினர் நாட்டினம், சுயநிருணயம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தங்கள் புதிய (அரசியல்) கட்டிடத்தைக் கட்டினர்கள். முறைப் பிறப்புரிமையென்னும் தத்துவம் வியன்ன மாசபையினர் அமைத்த கட்டிடத்திற்குப் பலமான ஆதாரமாகவில்லை. பாரிசு மாநாட்டினர் இட்ட அத்திவாாம் கூடிய பலமுடையதோவென்பது வருங்கால வரலாற்றசிரியர்கள் கூறவேண்டியதொன்முகும்.
மீட்பும் எதிர்விளைவும்
1814-15 இல் பிறப்புரிமையுள்ள இறைகள் இடர்ப்பாடின்றி மீண்டும் அரசெய் தினர்கள். இவர்களைக் குடிகள் அவரவர் தலைநகருக்குப் பெரும் ஆரவாரத்துட னும் ஆர்வத்துடனும் வரவேற்றனர். இந்நிகழ்ச்சி அவப்பேருக அரசர்கள் மன தில், தங்கள் குடிகள் 1789 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த நிலைமையை மீண்டும் விரும்புவரென்ற ஒரு தவமுன எண்ணத்தை உண்டாக்கியது. ஆகவே, பிற் போக்கு வெறியாட்டிலிறங்கினர் அவர்கள்.
புனித நட்புறவு
ஐரோப்பிய அரசுகளுக்குப் பொதுவாயமைந்த பிற்போக்கான இயக்கத்திற் குப் புனித நட்புறவின் செல்வாக்கே காரணமெனப் பல முறையும் கூறப்பட்டது. இக்கூற்று ஒசுத்திரிய பேரரசனின் அமைச்சஞன இளவரசன் மெற்றேணிக்கு, புனித நட்புறவில் முதன்மைபெற்றிருந்த பிந்திய காலத்தைப்பற்றிய அளவில் உண்மையே. ஆனல் தொடக்கத்திற் புனித நட்புறவு, நாட்டுக் கூட்டவை போலத் தண்ணளியுடையதாயிருந்தது.
சென்ற மூன்று நூற்ருண்டுகளாக, எந்தப் பெரிய போரும், முறைப்படி அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் போரை ஒழிக்கும் முயற்சியோடுதான் முடி வெய்தியது. உவாட்டலூவின் பின்னர் பாரிசில் இணக்கப் பேச்சு நடைபெறுங் காலத்தில், இரசியா, பிரசியா, ஒசுத்திரியா ஆகிய நாடுகளின் இறைகள் தங்கள் உள்நாட்டு அரசாங்கத்திலும் பிறநாட்டலுவல்களிலும் பின்வரும் நிபந்தனை களுக்கமைவதென 1815 செத்தெம்பர் இருபத்தாரும் திகதி ஒரு திடமான இணக்கத்திற்குக் கைச்சாத்திட்டனர். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட “புனித சமயத்தின் விதிகளைத் தங்கள் ஒரேயொரு வழிகாட்டியாகக் கொள்ளல்,
இம்முயற்சிகளுக்கு மரியற்றின் “ஐரோப்பிய பொதுநலவாயம்” எனும் நூலின் (ஒட்ச போட்டு, 1918) 1 ஆம் 2 ஆம் 15 ஆம் அத்தியாயங்களை நோக்குக.

மீட்பு, எதிர்விளைவு, புரட்சி 343
‘சமயம், அமைதி, நீதி ஆகியவற்றைப் பாதுகாத்தல், ‘தெய்வத்தன்மை யுடைய இரட்சகர் மனித இனத்துக்குக் கற்பித்த கடமைகள் தத்துவங்களின் வழி ஒழுகுவதன் மூலம் ஆன்மிகப் பலமடையுமாறு குடிமக்களுக்கு எடுத் துாைத்தல்' ஆகியவையே இந் நிபந்தனைகளாகும்.
இந்த நட்புறவின் கருத்தா, சார் அலச்சாந்தராவான். இவனிடம், உயர்ந்த இலட்சியமும் மெய்மை சார்ந்த கடவுட் பற்றும், மொசுக்கோவைச் சார்ந்தோ ருக்குள்ள வஞ்சனேயும் திட்டமிடும் புத்தியும் கலந்து காணப்பட்டன. ஆரம்பத் தில் இப்புனித நட்புறவின் உண்மையான நோக்கம் ஐரோப்பாவுக்கு இடைவி டாத அமைதி பெறுவதேயென்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆனல் விரைவில் இந் நட்புறவு, புரட்சி எப்போது தோன்றினுலும் எவ்விடத்துத் தோற்றினுலும் அதை ஒடுக்கும் தனியாட்சியாளரின் கூட்டுறவாகச் சீர்கெட்டது.
பிரான்சு
1815 இன் பின்னர் பிற்போக்கு சருவசாதாரணமாய்விட்டதென்று சொல்ல லாம். பிரான்சில், மிதவாதியும் நிதான புத்தியுடையவனுமான பதினெட்டாம் உலூயி அதைத் தடுக்கப் பெரு முயற்சி செய்தான் 1814 ஆம் ஆண்டு யூன் நாலாம் திகதி முதல் முறையாக அவனுக்கு அரசு திருப்பிக் கொடுக்கப்பட்ட பொழுது, அவன் வெளியிட்ட தாராளக் கொள்கையுடைய பட்டயத்தில் வை யறுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட யாப்புறு ' முடியாட்சியையும், முறைப் பிறப்புரிமையையும் இசைவுறுத்த முயன்முன். ஆனல் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய விழுமியோரும் குருவாயத்திலுள்ள தீவிர வாதிகளும் அவன் சோதா ஞன ஆட்டோய் இறைமகனும் அவனை அவன் எண்ணப்படி நடக்கவிடவில்லை. அதன் பயன் யாதெனில் இரண்டாம் மீட்பை அலங்கோலஞ் செய்த 'வெள்ளைப் பயங்கரம்' பிரான்சிற்றண்டவமாடியமை என்க. நெப்போலியனின் மாசல் களுள் மக்களால் நயக்கப்பட்டவர்களிலொருவனன மாசல் நே என்பான் சுடப் பட்டான். அண்மையில் முடிந்த ஆட்சியைப் பின்பற்றுவோர் சிலர் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். ஏனையோர் கொலைசெய்யப்பட்டனர். 7,000 பேர் போன பாட்டுக் கட்சியினர் சிறைத்தண்டனை பெற்றனர்; அல்லது நாடுகடத்தப்பட்ட னர். பதினெட்டாம் உலூயி உயிருள்ளவரையும் தான் வெளியிட்ட பட்டயத்தின் நியதிகளெவற்றையும் மீறவில்லை. 1824 இல் அவன் காலஞ் சென்ற பின்னர் ஆட்டோய் இறைமகன் பத்தாம் சாள்க் என்னும் பெயருடன் அரசனுகித் தன் தோழர்களின் கோப வெறிக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தான். 1830 இல் பேரளவில் இல்லாவிட்டாலும் உண்மையில் அரசன் ஆட்சிப் புரட்சி செய்ய முயன்முன். பட்டயத்தை ஒதுக்கிவைத்து அதற்குப் பதிலாகச் சென்கிளவுடு என்னுமிடத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்முகத் தொடர்ந்து பல கட்டளைச் சட்டங்களை வெளியிட்டான். பாரிசு வெகுண்டெழுந்தது. தியேசு, கீசோ என்பவர்

Page 183
3 44 மீட்பு, எதிர்விளைவு, புரட்சி
களின் தலைமையில் தாராள மனப்பான்மையுடைய பத்திரிகையாசிரியர்கள் கூட்ட மொன்று இலாவாயே என்னும் தேர்ச்சி மிகுந்த குடியரசுவாதியின்கீழ் ஒன்று சேர்ந்தது. பத்தாம் சாள்சு அரசுகட்டிலிலிருந்து நீக்கப்பட்டான். வேத்தியற் குலத்தின் இளைய கிளையைச் சேர்ந்த ஒளியன்சுக் கோமகன் அரசனுனன்.
1830 யூலைப் புரட்சி இத்தகையதே. முறைப்பிறப்புரிமைப் பரிசோதனை அகால முடிவெய்தியது. பின்னர் 18 ஆண்டுகளாகப் பிரான்சு வேருெரு அரசுமுறையைப் பரிசோதனை செய்து பார்த்தது. "யாப்புறு முடியாட்சி', அல்லது பிரான்சியர் அழைத்தபடி 'குடி முடியாட்சியே இப்பரிசோதனை முறையாகும். கீசோ, தியேசு போன்ற அரசறிஞரின் தலைமையிலேயே இப்பரிசோதனை நடந்தது.
யாப்புறு முடியாட்சி சிறப்பான ஓர் ஆங்கில விளைபொருளாகும். அது பிரான் சின் பிறப்பியல்பிற்கு ஏற்றதன்று. முறைப்பிறப்புரிமை, குடியரசுவாதம் என்ப வற்றைப் பிரான்சு அறியும். அரசியல்யாப்பிற்கு அமைந்த மன்னன், தியேசு கூறியவாங்கு, அரசோச்சுபவனேயன்றி, அரசாள்பவனல்லன்-தருக்க நுணுக்கம் பார்க்கும் பிரான்சியர்க்கு இக்கருத்து ஏற்புடைத்தன்று. யூலை முடியாட்சியின் வீழ்ச்சிக்கு இன்னுமிரு காரணிகள் துணைபுரிந்தன. பிறநாட்டலுவல்களிற் பாமேசுதன், பெரும்பாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனக்கெதிராக உழைப் பதை உலூயி பிலிப்பு கண்டான். இசுப்பானிய திருமணங்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களிற் பிலிப்பின் பூட்கை இழிவும் பெருமைகுன்றியதுமாயிருந்தது. பிரான்சிற் பொறித்தொகுதிகள் புகுத்தப்பட்டன. அதன் விளைவாக நெசவுகாார் களுக்குள் திருத்தியின்மை ஏற்பட்டது. அவர்கள் உலூயி பிளாங்கு என்பவனின் சமூகவுடைமைக் கொள்கை சார்ந்த போதனைகளை இலகுவில் ஏற்றுக்கொண்ட னர். 1848 இல் ஒளியன்சு முடியாட்சி விழப் பிரான்சு இரண்டாம் முறையாகக் குடியரசினை நிறுவப் பரிசோதனை நடத்தியது.
சேர்மனி (1815-48)
சேர்மனியிலும் இத்தாலியிலும் பிற்போக்குச் சத்திகள் வாளாவிருக்கவில்லை. ஆணுல் இந்நாடுகளில் பிற்போக்கின் பாதை பிரான்சிற் பின்பற்றப்பட்ட பாதை யிலும் வேறுபட்டிருந்தது. சேர்மனியிலும் இத்தாலியிலும், பிரான்சியப் புரட்சி யும் நெப்போலியனின் ஆட்சியும் பல சிறு நாடுகளிற் சுதந்திர உணர்ச்சியையும் நாடு முழுவதும் நாட்டின உணர்ச்சியையும் தட்டியெழுப்பின : 1815 இல் நடை பெற்ற மீட்புக்கள் இந்த இரு சத்திகளுக்கும் தடையாயின. சேர்மனியில் நிலை நாட்டப்பட்ட நாட்டுக் கூட்டிணைப்பு, சேர்மனியை ஒன்முக்க விரும்பிய ஆர்வம் மிகுந்த நாட்டினவாதிகளுக்கு மனநிறைவெளிக்கவில்லை. பெரும்பாலான அரசு களிலே, சிற்றரசர்கள் வீயன்னுவில் தாங்கள் அளித்த உறுதி மொழிகளைக் காக்காது தங்கள் குடிமக்களுக்குப் புதிய யாப்பளிக்கக் காலதாமதஞ் செய்தார் கள். இதன் விளைவாக 1830 இல், பாரிசுப் புரட்சியின் எதிரொலி சிறிய அரசுகளி அலும் ஒலித்தது. ஆனல் மெற்றேணிக்கின் ஆதிக்கம் இன்னும் வலிமை வாய்ந்த

மீட்பு, எதிர்விளைவு, புரட்சி 345
தாக இருந்தமையால், அவன் தன் பொறுப்பிலிருந்த நாட்டுக் கூட்டிணைப்புச் சாதனத்தை, ஒவ்வொரு தாராண்மை இயக்கத்தையும் அடக்குவதற்கும், உருப் படியான சலுகைகளைக் குடிகளுக்கு அளிக்காவாறு ஆளுஞ் சிற்றரசர்களைத் தட்டிவிடுதற்கும் நன்கு கையாண்டான்.
சொல்வறின்
நாட்டின உணர்ச்சியைப்பற்றிக் கூறின், அதனுல் உருவாகிய ஒரேயொரு இயக்கம் சுங்கச் சங்கமாகும் (சொல்வறின்). சேர்மானிய-ஒசுத்திரியா தவிர்ந்த ஏனைய சேர்மானிய அரசுகளை இச்சங்கம் உள்ளடக்கியிருந்தது. இச்சங்கம் நாலு வகையில் முக்கியமானதாயிருந்தது. இச்சங்கம், இரு வல்லரசுகளுக்கு இடையே யுள்ள சுங்கத் தடைகளைத் தகர்த்தெறிந்து, சேர்மானிய வாணிகத்திற்குப் பெரிதும் தேவைப்பட்ட ஊக்கத்தைக் கொடுத்தது ; பிரசியாவின் தலைமையில் எல்லா அரசுகளுக்குமிடையிற் சிநேகத்தொடர்பை அது உண்டாக்கியது ; இனி மேல் நாடுகள் தலைமைக்கு வீயன்னுவை அன்றிப் பேளினையே நோக்கவேண்டு மெனக் கற்பித்தது ; சேர்மானியத் தொகுதியிலிருந்து ஒசுத்திரியாவை நீக்கும் முதற் கட்டத்தைக் குறித்தது. எப்படியாயினும், சேர்மனியில் வளர்ந்து கொண்டிருந்த அமைதியின்மை, 1848 வரையும் மூர்க்கமான புரட்சியாக உருத் தெழவில்லை. புரட்சி ஆண்டுகளின் நிகழ்ச்சிகளை இப்போது விரிவாக உரைத்தல் வேண்டும்.
இத்தாலி
சேர்மனியிற் செய்ததுபோல் இத்தாலியிலும் நெப்போலியன் ஒற்றுமையின் வித்தை விதைத்தான். ஆனல் அந்த இளம் பூண்டு, வீயன்னவிற் கூடிய சூழ் வல்லோராற் பிடுங்கப்பட்டது. நாட்டுக்கூட்டிணைப்பு சேர்மனிக்கு அளித்த ஐக்கியத்தின் தோற்றத்தினையாவது இத்தாலி அடையவில்லை. இங்கே சுதந்திரக் கருத்து நாட்டினவுணர்ச்சியிலும் பார்க்கக் கூடிய சத்திபெற்றதுமில்லை. மெற்றே ணிக்கின் ஆதிக்கம் சேர்மனியிலும் பார்க்க இங்கே மிக ஊடுருவி நின்றது. ஆனல் இத்தாலிய அரசுகளின் குடிகள் சேர்மானியக் குடிகளிலும் மிகவும் அமைதியற்ற நிலையிலிருந்தார்கள்.
இசுப்பெயின்
இசுப்பெயினிலிருந்து புரட்சியென்ற தொற்றுநோய் நேப்பிளுக்குப் பசவியது. இங்கே குழ்நிலை மிகவும் கேடானதாயிருந்தது. இசுப்பெயினிற் பிற்போக்கு இழி தக்க நிலையிற் காணப்பட்டது. இசுப்பெயினை ஆண்ட பூபன் குலத்தோர் எவரினும் ஏழாம் பேடினந்தே மிகவும் வெறுக்கத்தக்கவனெனக் கூறலாம். புல னுணர்ச்சியும் மூட நம்பிக்கைகளும் மத வெறியும் கொசேச் செய்கைகளும் இழி வான முறையில் ஒன்றுசேர்ந்து அவனிற் காணப்பட்டன. அவன் அரசுக்கு

Page 184
346 மீட்பு, எதிர்விளைவு, புரட்சி
மீண்டபின், இசுப்பானியப் பாராளுமன்றம் 1812 இல் ஏற்றுக்கொண்ட யாப் பைக் கிழித்தெறிந்துவிட்டு, விழுமியோரையும் குருவாயத்தையும் எல்லாச் சிறப்புரிமைகளுடனும் திரும்பவும் அமர்த்தினன். நாடுகடத்தப்பட்ட இயேசு தரைப் பழைய நிலைக்கு மீட்டான். பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுப் போட்டான். போனப்பாட்டுக் கட்சியினரை உடற்றினன். இப்பிற்போக்கு, புரட்சியைத் தூண்டியெழுப்பிற்று. பேடினந்து இழிவான சரணடைந்தான். 1812 ஆம் ஆண்டு யாப்பு மீண்டும் 1820 இல் நிலைநாட்டப்பட்டது. முடியி னதிகாரம் ஒரு நிழலுருவாக ஒடுக்கப்பட்டது.
துறப்போப் பேரவை
கடந்த சிலகாலமாகத் தென் ஐரோப்பாவில் நடைபெறும் கலக இயக்கங்களைப் புனித நட்பாளர் வளரும் மனக்குழப்பத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். 1820 ஒற்முேபர் மாதத்தில் இரசியா, பிரசியா, ஒசுத்திரியா ஆகிய நாடுகளின் மன்னர்கள் துறப்போ என்னுமிடத்திற் போவை கூட்டினர். அவ்விடத்திலிருந்து, வியத்தகு தெளிவுடன் புனித நட்புறவின் கோட்பாட்டை விளக்கிக்கூறும் தாயேட்டை வெளியிட்டார்கள். "புரட்சி காரணமாக அரசாங்க மாற்றம் அடைந்த நாடுகள், அதன் விளைவாக ஏனைய நாடுகளை அச்சுறுத்துவனவாகில், அதுகாரணமாகவே ஐரோப்பிய நட்புறவின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப் படும். அப்படி நீக்கப்பட்ட நாடுகள் அவைகளின் நிலைமை, சட்டப்படியான ஒழுங்கு, உறுதி நிலை என்பவற்றிற்குப் பொறுப்பளித்தபின்பே அந்நட்புறவில் மீண்டும் சேர்க்கப்படும் . இத்தகைய மாற்றங்களால் ஏனைய அரசுகளுக்கு உடனடியான ஆபத்து வருமென்ற பயம் ஏற்பட்டால், வல்லரசுகள், அமைதிச் சாதனங்களாலேனும், தேவையானுற் போர்க்கருவிகளாலேனும் குற்றஞ்செய்த நாட்டைப் பெரும் நட்புறவில் சேர்த்துக்கொள்ளத் தங்களை இத்தாற் கட்டுப் படுத்துகின்றன.”
பிரான்சு இந்தப் பிரகடனத்துக்குப் பொதுவாய் இணங்கியது. ஆனல் காசி லிறி இந்தத் தத்துவம் ஐக்கிய இராச்சியத்தின் அடிப்படைச் சட்டங்களுக்கு நேர்விரோதமானது என்று எதிர்த்தான். என்ருலும் இத்தாலியில் நடைபெறும் கலக இயக்கங்களை ஒடுக்க ஒசுத்திரியாவுக்குச் செயலுரிமை அதிகாரம் கொடுக்கப் பட்டது. நாம் காணப்போவது போல் இந்தச் செயலுரிமை அதிகாரத்தை ஒசுத் திரியா தனக்கும் தன் நட்புறவாளர்களுக்கும் முழுக்கிருத்தி கொடுக்கும்வகை யில் நிறைவேற்றியது.
பிரான்சும் இசுப்பெயினும்
ஒசுத்திரியாவுக்கு அதற்குகந்த வேலை இத்தாலியிற் கிடைத்தபொழுது,
பிரான்சு, இசுப்பெயினிற் பூபன் குலமுறையின் வல்லாட்சிக்கு உதவிசெய்ய ஆவலோடிருந்தது. பிரான்சின் குறுக்கீட்டைப் பெரிய பிரித்தானியா பலமாய்

மீட்பு, எதிர்விளைவு, புரட்சி 347
எதிர்த்தது. காசிலிறியின் மரணத்தின் பின்னர் பிறநாட்டலுவலகத்திற் பொறுப் பேற்ற கன்னிங்கு என்பான், தன் எண்ணத்தை வல்லரசுகளுக்குத் தாமதமின்றி அறிவித்தான். இங்கிலந்து புரட்சியை விரும்பவில்லை. ஆனல் நாடுகளுக்குக் தாந்தாம் உத்தமமென்றெண்ணிய அரசியல் முறையை ஏற்படுத்த உரிமையுண் டென்பதை அழுத்தந்திருத்தமாக இங்கிலந்து வற்புறுத்துகிறது. அயல்நாடுகள் தம் அரசியல் நடத்துவதில் தலையிடாமல் இருக்கும் வசை இவைகள் தங்கள் சொந்த அலுவல்களை நடத்தச் சுதந்திரமிருக்கவேண்டும், ' எனப் பிரசித்தஞ் செய்யும்படி வெரோனப் பேரவையிற் (1822) பிரித்தானியாவின் பிரதிநிதியா யிருந்த உவெலிந்தன் பிரபுவுக்குக் கட்டளை கிடைத்தது. இசுப்பெயினிற் சடுதி யாகத் தோற்றிய மஞ்சட் காய்ச்சலைச் சாட்டாகக் கொண்டு பிரான்சு 'சுகாதாரப் பாதுகாப்புக்காக 1,00,000 ஆட்கள் கொண்ட படையை நாட்டெல்லையில் ஒன்றுசேர்த்தது. கன்னிங்கு என்பானின் எதிர்ப்பு காலந் தாமதித்தபடியால், பிரான்சின் குறுக்கீட்டைத் தடுக்க முடியாமற் போயிற்று. 1823 ஏப்பிரிவில் பிரான்சியர் அங்குலேம் என்னும் கோமகனின் கீழ் இரு படையை இசுப்பெயி ணுக்குள் அனுப்பிப் பேடினந்து அரசனின் தனி அதிகாரத்தை மீண்டும் நாட்டி னர்கள். 1827 வரையும் இசுப்பெயின் பிரான்சியப் படையாட்சியின் கீழ் இருக்க வேண்டியதாயிற்று.
புதிய இசுப்பெயின்
பழைய இசுப்பெயினிற் பிரான்சின் படையிருப்பைத் தடுக்க வல்லமையில்லா திருந்தபோதும், தென்னமெரிக்காவிலுள்ள இசுப்பானிய குடியேற்ற நாடுகளிற் பிரான்சின் குறுக்கீட்டைத் தடுக்கவேண்டுமென்று கன்னிங்கு உறுதியா யிருந்தான்.
மொன்ருேக் கோட்பாடு
சில ஆண்டுகளாக இசுப்பெயின் தன் அமெரிக்கச் சார்நாடுகளை ஆட்சிசெய் வதில் மிக்க இடர்ப்பட்டது. 1817 இல் புளோரிடா நாட்டை 50 இலட்சம் தொலருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விற்று/அந்நாட்டுடன் அது சமா தானஞ் செய்துகொண்டது. இவ்வண்ணம் ??? பொது நிலைமையில் ஏற்பட்ட நன்மாற்றம் அதிக காலம் நீடிக்கவில்லை. இதற்கிடையிலே, தென்னமெ ரிக்காவில் நிலவிய ஆட்சியறவு காரணமாகப் பிரித்தானிய வர்த்தக நலன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பிரித்தானியக் கப்பல்களுக்குச் செய்த எண்ணிறந்த அட்டூழியங்களுக்கு இசுப்பெயினிலிருந்து எவ்வித நட்டஈடும் பெற முடியவில்லை. 1823 இல் பிரித்தானிய வாணிகத்தைக் காப்பாற்றுவதற்காகக் கன்னிங்கு இசுப் பானிய குடியேற்ற நாடுகளுக்குக் காவற்றுாதர்களை நியமித்தான். அப்பொழுது, இசுப்பெயின் இயலுமானுல் கலகம் செய்யும் நாடுகளை அடக்கலாமெனினும், அந்த வேலையை இசுப்பெயினுக்காக, வேருெரு வல்லரசும் செய்யக்கூடாதென்று ஒழிவுமறைவின்றிப் பிரான்சுக்கு அறிவிக்கப்பட்டது. ஈற்றில் 1825 சனவரி முத

Page 185
348 மீட்பு, எதிர்விளைவு, புரட்சி
லாந் திகதி புவெனசு அயறிசு, கொலம்பியா, மெச்சிக்கோ ஆகிய நாடுகளின் சுயவாட்சியைப் பெரிய பிரித்தானியா, அங்கீகரித்துவிட்டதென்று, வல்லரசுகள் அறிந்தன. வல்லரசுகள் அதை எதிர்த்தன. ஆனல் அவ்வெதிர்ப்புப் பயனடைய வில்லை. புனித நட்புறவாளரைப் பொருட்படுத்தாது கன்னிங்கு தான் gif Loir னித்தபடி நடந்துகொண்டான். ஐக்கிய அமெரிக்க நாடு அவனுக்கு வலிமை பொருந்திய நட்புறவுநாடு ஆயது. ‘தங்கள் சுயவாட்சியைப் பிரசித்தஞ் செய்த இசுப்பானிய அமெரிக்க அரசுகளை வருத்தும் நோக்கமாக அல்லது அவைகளின் எதிர்காலத்தைக் கட்டுப்பாடு செய்யும் நோக்கமாக ஐரோப்பாவின் மகத்தான வல்லரசுகள் குறுக்கிட்டால், அச்செய்கை ஐக்கிய அமெரிக்க நாட்டின் அமை கிக்கும் காப்புக்கும் பங்கம் விளைக்கும். இது அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு மாறன நட்பற்ற மன நிலையின் தோற்றப்பாடாகவுங் கருதப்படும்' என 1823 கிசெம்பர் இரண்டாம் திகதி குடிப்பதி மொன்ருே என்பான் பிரசித்தஞ் செய் தான். புகழ்பெற்ற மொன்ருேக் கோட்பாட்டின் தோற்றம் இத்தகையதே. பெரிய பிரித்தானியாவினதும் ஐக்கிய அரசுகளினதும் நடவடிக்கை முடிவான தாயிற்று. 1830 வரையில், தென்னமெரிக்காவிலுள்ள இசுப்பானியப் பேரரசு ஒழிந்தது. மெச்சிக்கோ, குவாதமாலா, கொலம்பியா, பேரு, சிலி, பொலிவியா, பாகுவே இரயோ தி லாபிளாதா அல்லது புவெனசு அயறிசு ஆகிய சுயேச்சைக் குடியரசுகள் புதிதாகத் தோன்றின.
போத்துக்கல்
தென்னமெரிக்காவிற் போலப் போத்துக்கலிலும் கன்னிங்கின் நடவடிக்கை முடிவான பயனைக் கொடுத்தது. முன்னர்க் கூறியபடி 1801 இல் போத்துக்கேய அரச குடும்பம் தன்னாசிருக்கையைப் பிறேசிலுக்கு மாற்றிக்கொண்டது. மீட்சி யின் பின்னர் பிறேசில் நாட்டின் முன்னைநாட் பதிலாளியான ஆரும் யோன், புத்தியுடன் பிறேசிலிலேயே தங்க விரும்பினன். அவன் போத்துக்கலிலிருந்த ஆங்கிலப் படையின் முன்னைநாள் ஏவுநனன பெரெசுபோட்டுப் பிரபுவைப் பதிலாளியாக நியமித்துப் போத்துக்கேய ஆட்சிப்பகுதிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் போத்துக்கல், பிறேசில், அல்காவுசு ஆகியவை அடங்கிய ஐக்கிய இராச்சியம்' என்ற ஐக்கியத்தினைப் பிரசித்தஞ்செய்தான். இவ்வண்ணம் போத்துக்கல் பெயரளவிற் பிறேசிலின் சார்நாடு என்ற நிலைக்கு இழிந்தது. இந்த நிலை இலிசுபனில் ஆத்திரத்தை உண்டுபண்ணியது இசுப்பெயினல் தூண்டப் பட்டு இங்கே கலாம் ஆரம்பமானது. பதிலாளி தன் பதவியினின்றும் நீக்கப் பட்டான். ஆரும் யோன் மனமில்லாமல், தூண்டுதலின் நிமித்தம், ஐரோப்பாவிற் குத் திரும்பினன். அவன் மகன் தொன் பீதுரு பிறேசிலின் பதிலாளியாக விடப் பட்டான். ஆனல் பிறேசில் மக்கள் இதன்பின் போத்துக்கேயப் பாராளுமன்றத் தின் கட்டளைகளை ஒப்புக்கொள்ள மறுத்துத் தங்கள் நாட்டின் சுதந்திரத்தைப்

மீட்பு, எதிர்விளைவு, புரட்சி 349
பிரகடனஞ் செய்து, தொன் பீதுருவை யாப்புறு பேராசனகப் பிரசித்தஞ் செய் தார்கள். போத்துக்கலில் அரசியல் நிலைமை தீவிரமாக ஊசலாடிக்கொண்டிருத் தது. 1821 இல் ஆரும் யோன் ஒரு தாராளமான யாப்பை அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டான். ஆனல் 1823 இல் இசுப்பெயினும் அவனுடைய இசுப்பானிய இராணியும், இரண்டாவது மகனன தொன் மிகால் என்பானும் நெருக்கியதனல், ஆர்வமில்லாது, ஒரு பிற்போக்கான அமைச்சை ஏற்றுக்கொண்டான்.
இதற்குப்பின்னர் வல்லரசுகளுக்கிடையில் நடந்த சூழியற்போரில், போத்துக் கல் ஒரு விடுதேங்காய் என்ற அளவிலேயே முதன்மையுடையதாயிருந்தது. மிகால் கட்சியினர், பிரான்சினதும் புனித நட்பாளரதும் ஆதரவை எதிர் நோக்கினர். தாராளக்கட்சி பெரிய பிரித்தானியாவின் ஆதரவை எதிர்நோக்கி யது. கன்னிங்கு, புனித நட்பாளரை மறைமுகமாகத் தாக்கக்கிடைத்த வாய்ப்பை வரவேற்று, ' இரண்டு முடிகளுக்கும் (இங்கிலந்தும் போத்துக்கலும்) இடையில் நிலவும் நெருங்கிய நட்பையும் நல்லெண்ணத்தையும் உறுதிப்படுத்தும் முகமாக தேகசு நதிக்கு ஒரு பிரித்தானிய கடற்படைப்பகுதியை அனுப்பினன். இதைத் தலைக்கீடாக்கொண்டு மிகால் அரசகட்டிலேறினன். ஒரு ஆங்கிலேய போர்க்கப்பலின் மேல் தளத்திலிருந்து ஆரும் யோன் தன் அதிகாரத்தை வற் புறுத்தத் தலைப்பட்டான். மகன் தொன் பீதுருவின் ஆட்சியின் கீழ் பிரேசிலின் விடுதலையை அங்கீகரிக்கும்படி கன்னிங்கு அவனைத் தூண்டினன். 'பழைய உலகு விட்ட குறையை நிவிர்த்திசெய்து ஒரு புதிய உலகத்தை உண்டாக்குவதற்கு கன்னிங்கு கைக்கொண்ட பூட்கையில் இது இன்னுமொருபடியாகும். உண்மை யாகவே அவன் பழைய போத்துக்கலிலும் புதிய போத்துக்கலிலும் புனித நட் பாளரைத் தோற்கடித்தான். 1826 இல் ஆரும் யோன் காலஞ்செல்ல, போத்துக் கேயர் மீண்டும் கன்னைகளாகப் பிரிந்தனர். இசிப்பெயினும் பிரான்சும் மிகால் கட்சியின் சார்பாகத் தலையிட அவாவின. ஆனல் திரும்பவும் கன்னிங்கு உடனுக் குடன் எடுத்த நடவடிக்கையால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கன்னிங்கின் உதவியாற் போத்துக்கலின் தாராள யாப்புக் காப்பாற்றப்பட்டிது.
கன்னிங்கு ஒன்றன்பின் ஒன்முகக் கொடுத்த போடிகள் புனித நட்புறவுக்குக் குழிதோண்டின. இந்நட்புறவினை ஆக்கியோனன சார் அலெச்சாந்தர் 1825 இல் காலமானன். நட்புறவு என்ற உயிருக்கு உடல் அளித்த மெற்றேணிக்கு, 1830 புரட்சிகளால் அதிகம் தடைப்படாது, தொடர்ச்சியாக 1848 வரையும் வெற்றி கரமாக ஒசுத்திரியப் பூட்கையை இயக்கினன். அலெச்சாந்தரின் இலட்சியங்கள் முன்னரே விணுயின. வெறும் அடக்கு முறையே மெற்றேணிக்கின் பூட்கை யாகும். காசிலிறி, கன்னிங்கு ஆகியோரின் மாற்றுவழி அந்நேரம் அரைகுறை யான வெற்றியை மாத்திரம் பெற்றதெனினும், இறுதியில் முழு வெற்றி பெற்றது.

Page 186
350 மீட்பு, எதிர்விளைவு, புரட்சி
நாட்டினவாதம், தாராண்மை என்னும் தத்துவங்கள், 1815 இல் அரசர்களின் மீட்சிக் காலத்திலே தற்காலிகமாகப் பின்னடைந்தாலும் ஒழுங்காக முன்னேறிக் கொண்டே வந்தன. இந்தத் தத்துவங்களைப் பிரித்தானியா எப்பொழுதும் கைக் கொண்டது. 1830 ஆம் ஆண்டுக்குப்பின் பிரான்சும் அவற்றைத் தழுவிக் கொண்டது. 1848 ஆம் ஆண்டின்பின்னர் அவைகளின் வெற்றி உறுதிப் படுத்தப்
llt - -ël.
சமீப கிழக்கு நாடுகளிலும் இத்தாலியிலும் இவ்வெண்ணங்கள் விளைத்த பயன் பின் விளக்கப்படும். பெல்சியம் மிகவும் அண்மையிலுள்ள உதாரணமாகும்.

அத்தியாயம் 28
பெல்சியத்தின் தோற்றம்
இசுப்பானிய நெதலந்து
இசுப்பானிய நெதலந்து
தாராண்மை, நாட்டின வாதம் எனும் புதிய தத்துவங்களின் செயற்படு மாற்றை விளக்கப் பெல்சியம் சிறந்த உதாரணமாகும். ஆகவே இந்நாட்டின் தோற்றத்தைப்பற்றிக் கூறச் சில பக்கங்களை ஒதுக்கிவிடல் அமையும். பிற்காலத் தில் ஐக்கிய மாகாணங்களென்றும், பெரும்பாலும் ஒல்லந்தெனவும் அழைக்கப் பட்ட வடநெதலந்து தன் சுயவாட்சியை இசுப்பெயினிடமிருந்து பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட பின்னர், தென்மாகாணங்கள் 1713 வரையும் இசுப்பானிய முடியாட்சியின் ஒரு பாகமாகவே இருந்து வந்தன. முன்னர் நாம் கண்டுகொண்ட படி, ஒசுத்திரிய அபிசுபேக்குக் குலமுறையினர் மூலம் இசுப்பெயினுக்குக் கிடைத்த பெல்சியம், உதிரத்துப் பொருத்தனையின்படி, ஒசுத்திரிய அபிசுபேக் கருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ஆகவே இச்செயல் குடிமக்களின் மன உணர்ச்சியைத் தாக்கவில்லை. உதிரத் துப் பொருத்தனையை ஒப்பேற்றியோர் பெல்சியத்தை ஒல்லந்துடன் ஐக்கியப் படுத்தியிருந்தால், அது கூடியவளவு இயற்கையான செயலாகத் தோன்றி யிருக்கக் கூடும். ஆனல் வடமாகாணங்களுக்கும் தென்மாகாணங்களுக்கும் இடையேயுள்ள சமயம், இனம், வழமை ஆகியவைபற்றிய தெளிவான வேறு பாடுகள், ஐக்கிய மாகாணங்களாக உருவாகியசின், கூடுதலாகவிருந்தன. பெல் சியர் கத்தோலிக்க சமயத்தையும் இடச்சுக்காரர் கல்வின் த்ொள்கையையும் கைக்கொண்டனர். இடச்சுக்காரர் தோற்றத்திலும் தியூத்தோ னிக்கு இனத்தினராயிருந்தனர். பெல்சியர் இரு வகைகளிலும் குறைந்த அள விற்கே ஓரினத்தினராவர்; அவர்கள் பெரும்பாலும் பிளமிங்கு அல்லது உவ அான்சு இனத்தினாாயிருந்தனர். ஒல்லாந்து முக்கியமாக வாணிகத்திலும், பெல் சியம் கைத்தொழிலிலும் கைப்பணியிலும் அக்கறை கொண்டிருந்தன. மேலும் 1648 இல் உவெசுபேலியாப் பொருத்தனையின்படி இடச்சுக்காரரின் உறுதியான நிலை காரணமாகச் செல்துநதி கப்பல் போக்குவரத்துக்கு மூடப்பட, தென் நெதலந்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வர்த்தக ஆதிக்கம் அந்து வேப்பிலிருந்து அமித்தடாமுக்கு மாறியது.
இக்காரணங்களாற் பெல்சியருக்கும் இடச்சுக்காரருக்குமிடையில் நட்புக் குன்றியது. இவ்விரண்டு நாடுகளையுமைக்கியப்படுத்தும் பிரச்சினை 1713 இல் வாதிக்கப்படவுமில்லை. உதிரத்துப் பொருத்தனை பெல்சியத்தின் மீது சுமத்திய

Page 187
352 பெல்சியத்தின் தோற்றம்
கடப்பாடுகள், அவ்விரு நாடுகளுக்குமிடைத் தொடர்பைச் சீர்ப்படுத்தவில்லை. பிரான்சிலிருந்து ஒல்லாந்தைக் காக்கும் பொருட்டு பிரான்சிய-பெல்சிய எல்லை யில் உள்ள நீண்ட வரிசையான கோட்டைகள் இடச்சுப்படைகளாற் காவல் செய்யப்படவேண்டியிருந்தன. ஆனல் படைகளின் தாபரிப்போ பெல்சியத்தின் பொறுப்பில் விடப்படவிருந்தது.
ஒசுத்திரிய நெதலந்து
ஒசுத்திரிய அபிசுபேக்கரின் ஆட்சியானது இசுப்பானிய அபிசுபேக்கரின் ஆட்சியிலும் பார்க்கப் பெல்சிய மக்கள் அதிகம் நயக்கக்கூடியதாயிருக்கவில்லை. ஒசுத்திரியாவைப்போன்ற பல்லினமான பேரரசிலும் பெல்சியம் ஒரு புறம்பான நாடாகக் கருதப்பட்டது. அபிசுபேக்கு மன்னர்கள், தொலைவான மாகாணமா கிய பெல்சியத்தைக் கொடுத்து அதற்குப் பதிலாகப் பவேரியாவை, அல்லது இலகுவாகச் சென்றடையக்கூடிய வேருெரு நாட்டைப் பெறுவதற்குப் பலமுறை முயன்முர்கள். எனினும், பேரரசன் ஆரும் சாள்சு கிழக்கிந்திய சங்கத்தை ஒக தெந்தில் நிறுவி (1722), பிளெமிங்குகளின் வணிகத்திற்குப் புத்துயிர் அளிக்க
முயற்சி செய்தான்.
భ. இச்செயல் இட்ச்சு, ஆங்கிலேய கிழக்கிந்திய சங்கங்களின் பொருமையைத் தூண்டியது. பேராசன், கடலாதிக்கமுள்ள வல்லரசுகளின் நட்பைப் பெறுவதற் ககாக ஈற்றில் ஒசுதெந்துச் சங்கத்தை ஒடுக்கவேண்டியவனனன்.
இரண்டாம் யோசேப்பு . . . . . .
மரியாதெரிசாவின் ஆட்சியில் (1740-80) நாடு திரும்பவும் கைத்தொழிலிற் சற்று முன்னேற்றமடைந்தது. ஆனல் பேராசன் இரண்டாம் யோசேப்பின் சீர் திருத்த ஆர்வம், எல்லாவற்றையும் மலைவுக்குள்ளாக்கியது.
நெதலந்தின்மீது அவன் திணிக்க முயற்சித்த சீர்திருத்தங்கள், பொகீமியா, அங்கேரி, எஞ்சிய அவன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றுக்கென அவன் வகுத்த திருத்தங்களுக்கிணங்கவேயிருந்தன. இந்தச் சீர்திருத்தங்கள் சிறப்பாகப் பெல் சியத்திற்குக் கோபமூட்டியதற்கும் அங்கு எதிர்ப்பை உண்டாக்கியதற்கும் பல காரணங்கள் உள. பேராசன் பெல்சிய மக்களுக்குப் பெரும்பாலும் ஓர் அந்நிய ணுவான். ஒரு சுமையை நீக்குவதுபோற் பெல்சியத்தைக் கொடுத்துப் பவேரி யாவை வாங்க முயன்றமை, நகர்களையும் மாகாணங்களையும் வெறும் தட்டுமுட்டுப் பொருள்கள் போல நடத்தும் பான்மையைக் காட்டியதால், ஆள்பவன்மீது மக்களுக்கிருந்த அன்பைப் பெருக்குமாறில்லை. மேலும் அவன் தன்னளவிற் கடவுள் பத்தியுடையவனுயிருந்தபோதிலும், அரசுக்கும் திருச்சபைக்கும் இருக்க வேண்டிய தொடர்புபற்றி அவன் இக்காலத்திற்கேற்ற கருத்துக்களையுடையவன யிருந்தான். கல்விமீதும் சமூகவாழ்க்கைமீதும் திருச்சபைக்குரிய கட்டுப்

பெல்சியத்தின் தோற்றம் 353,
பாட்டை அவன் எதிர்த்தான். பெல்சியர் கத்தோலிக்க சமயத்திலும் யாப்புறு உரிமைகளிலும் ஒத்த பற்றுடையாாயிருந்தனர். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு முதன்மையான நகருக்கும் பட்டயங்களினுல் உறுதிப்படுத்தப்பட்ட அதனதன் சிறப்பான வழமைகளும், அதனதன் சிறப்புரிமைகளுமுண்டு. பதி ஞரும் நூற்ருண்டின் முடிவில் இடச்சுப் புரட்டெசுத்தாந்தர் எவ்வாறு இசுப் பானிய கடுங்கோலன் ஒருவனை வெறுத்தார்களோ, அதேபோல பதினெட்டாம் நூற்முண்டின் முடிவிற் பெல்சிய பழைமை பேணுவோர், தத்துவ அடிப்படை யைக் கொண்ட பருமாற்றவாதியான இரண்டாம் யோசேப்பை வெறுத்தார்கள். அவர்களின் சிறப்புரிமைகள், முற்சார்புகள், தொல்பழமையான வழமைகள், பட்டயங்களினல் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் ஆகியவற்றின்மீது, தண் ணளித் தனியாட்சி என்னும் சகடத்தை யோசேப்புச் செலுத்தியிருப்பான்.
பெல்சியருக்கு இந்த ஆட்சி சிறிதும் பிடிக்கவில்லை. மாகாணத்திற்குப்பின், மாகாணமாக வெகுண்டு எதிர்த்தன (1789). 1790 இல் பெல்சிய ஐக்கிய நாடு களாகத் தங்கள் சுயவாட்சியை அவை பிரசித்தஞ் செய்தன. இதே ஆண்டில் யோசேப்பு இறந்தான். இவனுக்குப்பின் முடிசூடிய இரண்டாம் இலியோ போல் முழுநாட்டின் மேலும் வெற்றிகரமாகத் தன் அதிகாரத்தைச் செலுத்தித் தனக்குமுன்னர் ஆண்ட பேராசனின் சீர்திருத்தங்கள் யாவற்றையும் தள்ளுபடி செய்து, மரியாதெரிசா கையாண்ட அரசாங்க முறைமையை மீண்டும் ஏற்படுத்தி ஞன.
பெல்சியமும் பிரான்சியப் புரட்சியும்
எனினும் 1792 இல் இலியோபோல் காலமாக அவன் மகன் இரண்டாம் பிரான் சிசு, முடிதரித்து உடனே புரட்சி மனப்பான்மையுடைய கிற் சிக்கினன். இயற்கையாகவே நெதலந்து பிரதான போர்க் களங்களிலொன் முயது. பிரான்சியப் படைகள் ஆரம்பத்திற் பின்னடைந்து, பின்னர் (நவம்பர், 14 ஆம் திகதி) பிறசல் நகரிற் புகுந்தன. பிரான்சிய கப்பற்படைத்தொகுதி யொன்று அந்துவேப்பு வரையும் சென்றது. பிரான்சு பெல்சியத்தைத் தாக்க, இங்கிலந்து வழமை போலப் படையெடுப்போருக்கு எதிராக யுத்தத்திற்கலந்து கொண்டது. ஒசுத்திரியர் இவர்களின் உதவியுடன் நாட்டைத் திரும்பவும் கைப் பற்றினர். ஆனல் 1794 இல் பிரான்சியர் திரும்பவும் பெல்சியத்தைக் கைப்பற்றி னர். அன்று தொடக்கம் 1814 வரையும் பெல்சியம் பிரான்சின் ஆட்சிக்குட் பட்டிருந்தது.
இரண்டாம் யோசேப்பின் சீர்திருத்தங்களை, சிறப்புரிமை பெற்ற குருமார், விழுமியோர், நகரசபை ஆட்சியாளர், குழுமத்தோர் ஆகியவரே எதிர்த் தனர். நாட்டிலே தொகையிற் கூடிய இன்னுமொரு கட்சியிருந்தது. இவர்களும் பிரான்சிய ஆட்சிக்காரரின் தத்துவங்களை மனத்திற் கொண்டனர். ஆனபடியால் 1794 இல் படையெடுத்த பிரான்சியசை 'ஒருவரும் எதிர்க்கவில்லை. இரண்டாம்

Page 188
354 பெல்சியத்தின் தோற்றம்
யோசேப்பு சீர்திருத்தங்களைத் திணித்தபொழுது கடுஞ் சினங்கொண்ட பெல்சிய பழைமை பேண்கட்சியினர், பிரான்சியர் அவற்றைத் திணித்தபொழுது ஏற்றுக் கொள்ள வேண்டியவராயினர்.
பெல்சியத்தைத் தன்வசமாக்கல் நெப்போலியனுக்கு இன்றியமையாததா யிருந்தது. கடைசிவரையும் அவன் அந்நாட்டின் மீது தன் பிடியை விடவில்லே. நெதலந்தின் முதன்மையை நெப்போலியன் அனுபவத்தால் அறிந்திருந்ததைப் போற் காசிலிறியும் அறிந்திருந்தான். அவன், பிரான்சிலிருந்து பெல்சியத்திற்கு முற்முன சுயவாட்சியளிக்காத எந்த அமைதிப்பொருத்தனையையும் செய்ய மறுத் தான். நெதலந்து சுதந்திரமாக மாத்திரமன்றி வலிமையுடையதாகவும் இருக்க வேண்டுமென்று காசிலிறி விரும்பினுன். முதலாம் பாரிசுப் பொருத்தனைப்படி ஒரேஞ்சு நாசோக் குலமுறையினரின்கீழ், நெதலந்து இராச்சியமாகப் பெல்சியம் ஒல்லாந்துடன் ஐக்கியப்பட்டது.
இச்செய்கையின் நோக்கம் பிரான்சுக்கும் சேர்மனிக்கும் இடையிற் பலமான ஒரு தடைநாட்டை உருவாக்குதலாகும். ஏக்கு நகரின் விவேகமற்ற பூட்கை யினுல் இந்நோக்கம் தோற்கடிக்கப்பட்டது. இடச்சுக்காரர் பெல்சியத்தைத் தாங்கள் போரில் வென்ற நாடுபோன்று நடத்தினர்கள். பெல்சியத்தின்மீது ஒவ்வாத வரிச்சுமைகளைச் சுமத்தினதுமல்லாமல், சம உரிமைகளைக் கொடுக்கவும் மறுத்தார்கள். ஆகவே, பொருத்தமில்லாத இவ்வைக்கியம் விரைவிற் குலைந்தது. 1790 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததுபோல் 1830 ஆம் ஆண்டிலும் பெல்சியக் குரு மாரும் மற்றும் சிறப்புரிமைபெற்ற குழுக்களும் குடியாட்சிவாதிகளுடன் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் கல்வின் கொள்கை நிரம்பிய ஒல்லாந்துடனிணைக்கப் பட்டதை ஒறுத்து உரைத்து, பிரான்சிய அரசன் உலூயி பிலிப்பின் இரண்டாம் மகனுன தி நமுவா கோமகனைத் தங்களரசனுகத் தேர்ந்தனர்.
ஆகவே, 1830 இல் நிகழ்ந்த பெல்சியப் புரட்சி பாரிசில் நிகழ்ந்த யூலைப்புரட் சியின் முக்கியமான பக்கவிளைவாகும். ஆனல் அக்காலததில் பிறநாட்டு அலுவல கத்தில் கடமையாற்றிய பாமேசுதன் பிரபு, பிரான்சு பெல்சியத்தை வலிந்திணைப் பதை விடக் கூடியவனல்லன். அவன் பெல்சிய முடியைப் பிரான்சிய இளவரசன் தரிப்பதை முற்முக எதிர்த்தான். சாட்ச-கோபேக்கின் இளவரசனை இலியோ போல், சற்றுத் தயங்கியபின், இம்முடியை ஏற்க ஒப்புக்கொண்டான். இலியோ போல் பிறப்பாற் சேர்மானியனவான்; உறைவிடத்தாலும் ஒத்துணர்வாலும் ஆங்கிலேயனவான். ஆங்கிலேய அரசுக்கு உத்தேச உரிமையாளியான சாளற்று இளவரசியின் சில காலத் துணைவனும் 1837 இல் உண்மையில் அரசெய்திய விற்முேறியா இளவரசியின் மிக அன்புக்குரிய சிறிய தந்தையுமாவான்.
இவ்வாருக 19 ஆம் நூற்முண்டுக்கு, அதன் வேறுவேருன தனிப்பட்ட இயல்பு களைக் கொடுக்க அமைந்த புதிய நாட்டின அரசுகளுள் முதலாவதான பெல்சியம் ஐரோப்பிய அரசமைப்பிலே தலைதூக்கிற்று.

அத்தியாயம் 29
கிழக்குப் பிரச்சினை (1800-1878)
கிரேக்க இராச்சியம்
முக்கியமான திகதிகள் :
1821
卫824
I&25
1826
182?
1827
1828
1829
1830
1832
1833
卫940-全五
1852
1853
罩85全
1855
1855
1856
1861
1864
1864
f&25
1876
1877
t878
1878
கிரேக்க கலகங்கள். எகித்தியர் கிமீற்றைக் கைப்பற்றுதல். அலச்சாந்தரின் பின்னர் முதலாம் நிக்கலசு இரசியாவின் பேரரச ஞதல்.
மிசலோங்கியின் வீழ்ச்சி.
அதென்சின் வீழ்ச்சி.
நவாரினே (ஒற்ருேபர், 20). இரசியா துருக்கியின்மேற் போர்ப்பிரகடனஞ் செய்தல். அதிரியா நோப்பிள் பொருத்தன. இலண்டன் பொருத்தன. கிரேக்க இராச்சியம். துருக்கிய-எகித்தியப் போர். உங்கியார்-சிகெலசிப் பொருத்தன. இலண்டன் பொருத்தனைகள். பிரான்சிய-துருக்கியப் பொருத்தனை (புனித தலங்கள்). இரசிய-துருக்கியப் போர்.
கிரைமியப்போர்.
செபாத்தபூலின் வீழ்ச்சி.
சாடினியாவின் தலையீடு.
பாரிசுப் பொருத்தன.
மொழ்தேவியா, உவலாசியா ஆகிய இரு மாகாணங்களும்
உரூமேனியாவாக ஐக்கியப்படல்.
தென்மாக்கின் அரசனன யோட்சு, கிரீசின் அரசனுதல்.
இங்கிலந்து அயோனியன் தீவுகளைக் கிரீசுக்குக் கையளித்தல்.
போற்கன் கலாங்கள்.
கொன்சுதாந்திநோப்பிள் மாநாடு.
இரசிய-துருக்கியப் போர்.
சான் சிகிபானுேப் பொருத்தன.
பேளின் பேரவையும் பொருத்தனையும்.

Page 189
356 கிழக்குப் பிரச்சினை
இக்காலக் கிரீசின் தோற்றமும் பெல்சியத்தின் தோற்றமும் ஏறக்குறையச் சம காலத்தன. குழ்வல்லோர் இலேபக்கு என்னுமிடத்திற் கூடியிருந்தனர் (1821). இக்கூட்டத்திலே தென் ஐரோப்பிய புரட்சி இயக்கங்களை அடக்க ஏற்ற சிறந்த வழிவகைகளைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, முன்பு மொழ்தேவியாவினதும் உவலாசியாவினதும் ஆள்பதியாயிருந்த கிரேக்கனுெரு வனின் மகனன அலச்சாந்தர் இச்சிலாந்தி என்பான் கிரேக்க சுயவாட்சிக் கொடியை உயர்த்திவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.
ஒற்ருேமரின் வெற்றி
இச்செய்தி வானிழி இடிபோலிருந்தது. ஒற்முேமன் துருக்கர் ஏறக்குறைய 400 ஆண்டுகளாக ஐரோப்பாவில் நிலைத்திருந்துள்ளார்கள். ஆனல் அவர்கள் ஈட்டிய வெற்றிகள் தொடக்கத்திலிருந்து ஒரு தனிப்பட்ட தன்மை வாய்ந்தவை யாயிருந்தன; வெற்றிபெற்றேர் வெற்றிகொள்ளப்பட்டோரைத் தம் வயப்படுத்த வுமில்லை ; வெற்றி கொள்ளப்பட்டோரால் அவர் வயப்படுத்தப்படவுமில்லை. துருக்கியர் வெற்றிகொள்ளப்பட்டோர் மேற் படையாட்சியைத் திணித்தபோதி லும், மேற்பரப்பின்கீழ் உயிருள்ளவேர்கள் இருந்தன. இவை வளர்ச்சிக்குகந்த சுதந்திரமெனும் வானநீர்பொழிய, மேலோட்டிற்கூடாகத் தளிர்க்கைகளைத் தள்ளின.
சேபியர்
1789 இல் நிகழ்ந்த பிரான்சியப் புரட்சியும் அதைத் தொடர்ந்த எழுச்சிகளும் போற்கன் நாடுகளிலே தெளிவான தொடர் விளைவுகளை உண்டாக்கின. துருக்கி யின் ஆதிக்கத்தின்கீழ் அமுக்கப்பட்டிருந்த நாட்டினங்களிற் சேபியரே முதலில் வெளிப்பட்டனர். 1804 இல் இவர்கள் கலகக் கொடியை உயர்த்தி, 1817 இல் அவ் வூர் ஒபரனேவிச்சு குலத்தின் பரம்பரை இளவரசன் ஒருவனின் கீழ் ஒன்று பட்டு, துருக்கியரிடமிருந்து ஓரளவுதலத் தன்னுட்சியைப் பெறும்வரையும் வீரத்துடன் ஓயாது போர் புரிந்தனர்.
கிரேக்கக் கலாம்
நாலு ஆண்டுகளின் பின்னர் அலச்சாந்தர் இச்சிலாந்தி என்பான் தலைமை யிற் கிரேக்கர் போருக்கெழுந்தனர். கிரேக்க கலாம் ஐரோப்பாவுக்கு வியப்பூட் டியதெனினும், இவ்வெழுச்சியை உருவாக்கிய சத்திகள் சிலகாலமாகத் தொழிற் பட்டுக்கொண்டேவந்தன. துருக்கர் கிரேக்க நாட்டினத்தை ஒடுக்கியிருப்பினும், கிரேக்க தனியாட்களை அரசாட்சியிற் பெரிதும் பயன்படுத்தியிருந்தனர். மேலும், கிரேக்கர் தங்கள் பண்டைப் பெருமையை ஒருபோதும் மறக்கவில்லை. தம்மொழி, சமயம், பண்பாடு என்பனவற்றைப் பேணிவந்தார்கள். கிரேக்க வணி கர் பெருஞ் செல்வத்தை ஈட்டினர்கள். கிரேக்க கப்பலோட்டிகள் துருக்கிய கப் பற் படையிற் சேவை செய்தார்கள். ஆயின் இரகசியக் கழகங்கள் பெருகின. 1820 ஆம் ஆண்டுவரையில், இக்கழகங்களில் மிகவும் புகழ்பெற்ற நட்பினர் ச *கில் 2,00,000 உறுப்பினர் இருந்தனர்.

கிழக்குப் பிரச்சினை 357
ஆனபடியால், 1821 ஆம் வருட எழுச்சி ஆயத்தமில்லாமல் தொடங்கியதன்று. இரசியாவின் உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையினல், அலச்சாந்தரின் வெளி நாட்டமைச்சனின் அணுக்கத் துணைவனன இச்சிலாந்தி மொழ்தேவியாவிற் புரட்சிக் கொடியை உயர்த்தினன். ஆனல் புனித நட்புறவினை நிலைநாட்டியவன கிய சார், தன் பாம்பரைப் பகைவராகிய துருக்கருக்குமாமுக எழுந்த புரட்சியை ஊக்கப்படுத்த முடியவில்லை. இச்சிலாந்தி அவன் கதிக்கே விடப்பட்டான். அத் அடன் வடபகுதிக்கலகம் வீழ்ச்சியடைந்தது.
மொரியாவிலும், கிரேக்கத்தீவுகளிலும் கண்டத்திற்குரிய கிரீசிலும் கலகத்தின் முடிவு, மேற்கூறியதினின்றும் வேறுபட்டதாயிருந்தது. ஏறக்குறைய ஏழு ஆண்டு களாக (1822-29) மூர்க்கத்துடன் இரு கட்சியினரும் போர்புரிந்தனர். கிரேக்கர் தீா மாகப் போராடித்திணறும் நிலைமையை அடைந்தனர். அவ்வேளையில் இங்கிலந்து, பிரான்சு, இரசியா ஆகிய நாடுகள் போரிலோ தலையிட்டுக் கிரீசைக் காப்பாற்றின.
நவாரினே
தன் கீழுள்ள சிற்றரசர்களில் மிகுவலி படைத்தவனுன எகித்தின் சிற்றரசன் மெகமெற்று ஆலியை, சுலுத்தான் தன் உதவிக்கழைத்தான். எகித்திய படைஞர் மெகமெற்று ஆலியின் மகன் இபுரு:கிம் என்பவனின் தலைமையில் மொரியாவை நாசமாக்கிக் குடிகளை வாளுக்கிரையாக்கினர்கள். இலவாந்தில் உள்ள ஆங்கிலப் பிரான்சியக் கப்பற்படையினரின் கண்ணுக்கு முன்னலேயே இவ்வட்டூழியங்கள் இழைக்கப்பட்டன. ஒரு பெரிய துருக்கிய எகித்தியக் கப்பற்படை நவாரினே வில் நங்கூரம்பாய்ச்சியிருந்தது. ஒரு துருக்கிய கப்பல், புத்தி இல்லாது இடா மத்து என்னும் ஆங்கிலக் கப்பலைச் சேர்ந்த வள்ளத்தின்மீது குண்டுப் பிரயோ கம் செய்தபோது, போர் மூண்டது. ஞாயிறடைவு நேரத்தில் ஒருதுருக்கியக் கப்பலேனும் எகித்தியக் கப்பலேனும் கடலிவில்லை. அதிரியாநோப்பிட் பொருத்தனை A
மேனுட்டு வல்லரசுகள் துருக்கியுடன் முறைப்படியான போரில் ஈடுபடவில்லை. ஆனல், இங்கிலந்திலும் பிரான்சிலும் கிரீசின் சார்பில் உளமார்ந்த அனுதர மிருந்தது. பிரித்தானிய அரசாங்கம் நவாரினுேவில் நடந்த அவப்பேருன நிகழ்ச் சிக்காக மன்னிப்புக்கோரியதெனினும், இந்தப் போர் கிரேக்கரைக்காத்தது. 1825 ஆம் ஆண்டில் தன் தகப்பனன அலச்சாந்தருக்குப்பின் அரசனன முதலாம் நிக்கலசு, 1828 ஆம் ஆண்டில் துருக்கி மீது போர்ப் பிரகடனஞ் செய்தான். 1829 ஒகத்து வரையில் இரசியப்படை, சற்று இடருடன் அதிரியா நோப்பிளை அடைந் தது. ஒரு மாதத்தின்பின்னர், அங்கே அமைதிப்பொருத்தனை கைச்சாத்திடப் பட்டது. அதிரியாநோப்பின் பொருத்தனைப்படி துருக்கி, கிரீசின் சுயவாட்சி யைச் செயலளவில் ஒப்புக் கொண்டது. மொழ்தேவியாவும் உவலாசியாவும் இரசியப் பாதுகாப்பிலே தன்னுண்மை பெற்றன. இரசியா துருக்கியிலுள்ள தன் வணிகர்களுக்குச் சில சிறப்புரிமைகள் பெற்றுக்கொடுத்தது. கருங் கடலையும் தானியூப்பு நதியையும் எல்லா நடுநிலைமை நாட்டுக் கப்பல்களுக்கும் திறந்துவிட் முடிவு செய்யப்பட்டது. - . . . .

Page 190
358 கிழக்குப் பிரச்சினை
கிரீசு இராச்சியம்
ஐரோப்பாவிலுள்ள ஒற்முேமன் பேரரசு பல பிரிவுகளாகச் சிதையத் தொடங் கிவிட்டதென்பது வெளிப்படை. கிரேக்க அலுவல்கள் இலண்டனில் தொடர்ச்சி யாக நிறைவேறிய சில பொருத்தனைகளால் நிருணயிக்கப்பட்டன. பெரிய பிரித் தானியா, பிரான்சு, இரசியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற் கிரீசு ஒரு சுயேச் சையான அரசாக நிலைநாட்டப்பட்டது. அதன் அரசாங்கம் ‘யாப்புறு முடி யாட்சி' யாவதாயிருந்தது. ஆனல் இந்நோக்கத்திற்கு “யாப்புறு முடிமன்னனைக்” கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. ஒரு சேர்மானிய இளவரசனை முதலில் தெரிவு செய்தனர். பவேரியாவின் இளவரசனுன ஒற்ருே, 1845 ஆம் ஆண்டிற் கலாம் நிகழ்ந்தும் தன்னுடைய பதவியை இழக்காது, 1862 வரையும் ஒருவாருகப் பதவி வகித்தான். 1862 இல் நிகழ்ந்த இரண்டாம் கலாத்தின் விளைவாகப் பதவியை இழந்தான். கிரேக்கர் இங்கிலந்திலிருந்து ஓர் அரசனை வருவிக்க அவாவினர். ஆனல் விற்றேரியா இராணி தன் இரண்டாம் மகனுன அல்பிரட்டு இளவரசன் ஒரு நிலையற்ற முடியை ஏற்றுக்கொள்வதை விரும்பவில்லை. ஈற்றில், பெரிய பிரித்தானியா ஒரு தேனிய இளவரசனின் சேவையைக் கிரீசுக்குப் பெற்றுக் கொடுத்தது. இவன் 1863 இல் முதலாம் யோட்சு அரசனக கிரேக்க அரசுகட்டி லேறிஞன்.
எகித்திய மெகமெற்று ஆலி
இதற்கிடையில், நல்வாய்ப்பற்றதுருக்கர் இன்னுமொரு ஆபத்தை எதிர்க்க வேண்டியிருந்தது. கிரேக்க சுயவாட்சிப்போர் நிகழ்ந்த காலத்தில், சுலுத்தான், முன்னர் கூறியபடி, தன்கீழுள்ளவர்களுள் வலிமையுடைய பணியாளனன எகித் திய மெகமெற்று ஆவியின் துணையை நாடினன். இந்த அல்பேனிய நாடோடி வீரன், பண்பாடற்றவன். ஆனல் சிறப்பான ஆற்றல் படைத்தவன். இவன் 1805 தொடக்கம் 1849 வரையும் எகித்தின் உண்மையான ஆட்சியாளனுயிருந்தான். அவன் தனது நாட்டின்பாலனம் முழுவதையும் சீர்ப்படுத்தி, தரைப்படை, கடற்படை ஆகியவற்றைப் புதியவாயமைத்து, எகித்தின் ஆதிக்கத்தை அரே பியாமீதும் சூடான்மீதும் நிலைநாட்டித் தன் நாட்டைச் செயலளவிற் சுலுத்தா னின் ஆட்சியிலிருந்து விடுத்தான். ஆனல் அவன் பேராசை அவ்வளவில் அடங்கவில்லை. மொரியாவிலே அவன் தன் அரசனுக்குச் செய்த சேவைகளுக் காக 1829 ஆம் ஆண்டில்வழங்கிய கிறீற்றுத்தீவு போதுமான பரிசாக அவனுக் குத் தோன்றவில்லை. ஆகவே 1831 ஆம் ஆண்டிற் சீரியாவுக்கு ஒரு படையை அனுப்பினன். அப்படை ஒன்றன்பின் ஒன்முகத் தொடர்ச்சியாய் மகத்தான வெற்றிகளை அடைந்து, பின் சின்ன ஆசியாவுக் கூடாகச் சென்று கொன்சுதாந் திநோப்பிளையே பயமுறுத்தியது.
சுலுத்தான் திகிலடைந்து தனக்கு உதவியளிக்குமாறு வல்லரசுகளுக்கு முறை யீடு செய்தான். இரசியா மாத்திரம் உதவி யளிக்க இணங்கி, சிகுத்தாரி என்னு மிடத்தில் ஒரு படையை இறக்கி, வலிமைவாய்ந்த கடற்படையொன்றைப்

கிழக்குப் பிரச்சினை 359
பொசுபரசுக்கு அனுப்பியது. இச்செய்கை பிரான்சுக்கும் இங்கிலந்துக்கும் திகிலூட்டியது. இந்நாடுகள் பொருதும் இரு கட்சியினரையும் நெருக்கத்திற் குள்ளாக்கின. மெகமெற்று ஆவிக்குச் சீரியாவையும் மெசப்பொத்தேமியாவின் ஒரு பகுதியையும் கையளிப்பதன் மூலம், யுத்தத்தை நிறுத்தின. ஆனல் இரசியா இவ்வழி பயன்யாதும் எய்தவில்லை.
உங்கியார்-சிகெலசி, இலண்டன் பொருத்தனைகள்
(1833) உங்கியார்-சிகெலசிப் பொருத்தனையின் வழி இரசியா அப்பயனை எய் திற்று. இந்தப் பொருத்தனையாற் கொன்சுதாந்திநோப்பிளில் இரசியாவின் செல் வாக்கு உச்சநிலையை அடைந்தது. இந்தப் பொருத்தனை துருக்கியைச் சாரின் படைப்பாதுகாப்பில் அமர்த்தி, பொசுபரசுத் தொடுகடல் வழியாக இரசியப் போர்க் கப்பல்கள் தங்குதடையின்றிப் போக்குவரவு செய்ய வாய்ப்பளித்தது. ஏனைய வல்லரசுகளுக்கு அவ்வாய்ப்பை மறுத்தது.
இந்த ஆபத்தான பொருத்தனையை முதற் கிடைத்த வாய்ப்பிலேயே கிழித் தெறிய வேண்டுமென்று பாமேசுதன் பிரபு தெளிவாக எடுத்துாைத்தான். 1833 இல் திணிக்கப்பட்ட இந் நியதிகளுக்கமைந்து நடப்பது சுலுத்தானுக்கோ மெக மெற்று ஆலிக்கோ திருத்தியளிக்கவில்லை. துருக்கியப்படை எல்மது உவொன் மொக்கு என்னும் பிரசியப் போர் வீசனல் மீண்டும் கட்டுக்கோக்கப்பட்டது. இவனே பிற்காலத்தில் ஒசுத்திரியாவையும் பிரான்சையும் வென்று புகழீட்டிய வன். 1839 இல் சுலுத்தான் சீரியாவைத் திரும்பப் பெறப் படையெடுப்பொன்றை ஆரம்பித்தான். ஆனல் அப்படையெடுப்பிற் படுதோல்வியடைந்தான். பிரான்சு மெகமெற்று ஆலியை ஊக்கியபொழுதிலும், மற்ற வல்லரசுகள் குறுக்கிட்டுப் பிரித்தானியக் கப்பற்படையின் வலிமை பொருந்திய உதவியுடன் மெகமெற்று ஆவியைத் தங்கள் இட்டப்படி நடக்கக் கட்டாயம் பண்ணினர். அவனுக்கும் அவன் வமிசத்தினருக்கும் எகித்திய சிற்றரசு உறுதிபண்ணப்பட்டது. ஆனல் அரேபியாவையும் சீரியாவையும் துருக்கிக்குத் திருப்பிக்கொடுக்கும்படி அவன் கட்டாயம் பண்ணப்பட்டான். துருக்கி தான் ဒီ့ဗ်ာ காலத்தில் போர்க் கப்பல்கள் யாவும் உட்புகாதபடி பொசுபரசுத் தொடுகடலை அடைப்ப தாகக் கொடுத்த வாக்குறுதியே இவை எல்லாவற்றிலும் முதன்மையானதாகும்.
உங்கியார்-சிகெலசிப் பொருத்தனை கிழித்தெறியப்பட்டது. இரசியா தானே துருக்கியின் காப்புநாடு எனவும் பிரான்சு தானே எகித்தின் ஒரேயொரு நட்பு நாடெனவும் நடிப்பது நிறுத்தப்பட்டது. கீழைத்தேசப் பிரச்சினை முழு ஐரோப் பாவும் தீர்க்க வேண்டிய தொன்முகும்.
கிரைமியப் போர்
பன்னிராண்டுகளாக (1841-53) இப்பிரச்சினை மழுங்கிக் கிடந்தது. மீண்டும். அப்பிரச்சினை மூன்ரும் நெப்போலியனுல் எழுப்பப்பட்டது. இவன் 1848 இல் பிரான்சிய குடியரசின் குடிப்பதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, 1852 இல் இக்

Page 191
360 கிழக்குப் பிரச்சினை
குடிப்பதிப் பதவியைப் பரம்பரைப் பேரரசுப் பதவியாக மாற்றினன். பலத்தை யினிலுள்ள புனித தலங்களின் பாதுகாப்பைப்பற்றிக் கிரேக்க (கீழைப்பகுதி) துறவிகளுக்கும் இலத்தீன் (உரோமன் கத்தோலிக்கத்) துறவிகளுக்கும் இடை யிற் பல ஆண்டுகளாகச் சச்சாவு இருந்து வந்தது. பிரான்சிய குருவாயத்தைத் திருத்தி செய்யும் நோக்கத்துடன் நெப்போலியன் இலத்தீன் கட்சியாரின் குறிக் கோளே ஆர்வத்துடன் ஆதரித்தான். கிரேக்க திருச்சபையை இரசியா பாதுகாத் தது. ஏனைய உரோமன் கத்தோலிக்க வல்லரசுகள், மூன்மும் நெப்போலியனல் இலத்தீன் துறவிகள் சார்பிற் செய்யப்பட்ட கோரிக்கைகளை ஆதரித்தன. இக் கோரிக்கைகள் பலத்தையினுக்குச் சொந்தக்காரணுகிய சுலுத்தானுற் பெரும்
பாலும் லப்புக்கொள்ளப்பட்டன.
t-1
இந்தச் சலுகைகள் இாசியாவிற் பெரிதும் சினமூட்டின. இலத்தீன் துறவிகளு க்கு அளிக்கப்பட்ட சலுகைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், துருக்கியிலுள்ள கிறித்தவக் குடிகள் முறைப்படி தன் பாதுகாப்பிலிருக்க வேண்டுமென்றும் சார் நிக்கலசு கேட்டுக் கொண்டான். இந்தக்கோரிக்கை, சமீப கிழக்கில் இரசிய செல் வாக்குப் பரவுவதைப்பற்றி எப்பொழுதும் பொருமைப்பட்ட பெரிய பிரித்தானி யாவிற்குச் சினமூட்டியது.
சார் நிக்கலசு, இங்கிலந்தும் இரசியாவுமே கீழைத்தேசப் பிரச்சினையில் நெருங்கிய அக்கறையுடையனவாகையால், தங்கள் பிரச்சினைகளைத் தங்களுக் குள்ளேயே தீர்க்கவேண்டுமென்ற கொள்கையுடையவனுயிருந்தான். 'நோயாளி' (துருக்கி பிற்காலத்தில் அப்படியே அழைக்கப்பட்டது) மாணப்படுக்கையி லிருப்பதாகவும் அவனுடைய பண்ணையைப் பங்கீடு செய்தல் காரணமாக ஒரு பொதுப் போர் எழாமல் தடுப்பதற்கு இங்கிலந்தும் இரசியாவும் இணங்கிக் கொள்வதே ஒரேயொருவழி என்றும் அவன் முற்ருக நம்பினுன். அதற்கிணங்க 1853 இல் இங்கிலந்து எகித்தையும் சைப்பிரசையும் கைப்பற்ற, இரசியாவுக்குப் போற்கனில் தங்குதடையற்ற அதிகாரம் இருக்கவேண்டுமென்று குறிப்பாகத் தெரிவித்தான். கீழைத்தேசப் பிரச்சினையிற் பிரித்தானியாவின் ஒரேயொரு இன்றியமையாத கவனம், இந்தியாவுடனும் தூரகிழக்குத் தேசங்களுடனும் தனக்குள்ள போக்குவரத்து வசதிகளைக் காப்பாற்றுவதாகும். எகித்தைச் சொந்தமாக்கினுல் இந்நோக்கம் நிறைவேறும்
உடலிலிருந்து ஆவிபிரியுமுன் நோயாளியின் சொத்தை இந்த விதமாகப் பங்கிடுதல் நெறியன்று என எண்ணிய இங்கிலந்து, சாரின் திட்டத்தைப் பொருட் படுத்த மறுத்தது.
இங்கிலந்து மறுத்தமையாற் கிாைமியப் போர் மூண்டது. இங்கிலந்தும் பிரான் சும், துருக்கிமீது சார் திணித்த கோரிக்கைகள் ஏற்கத்தகாதனவெனக் கருதித் துருக்கியை இணங்க மறுக்கும்படி ஏவின. இரசியா, வாள்முனையில் தன் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவான தீர்மானஞ் செய்து, 1850 இல் முன்கூறிய இரு மேற்கு வல்லரசுகள் ஒப்புவித்த இறுதிக் கூற்றைத் தள்ளுபடி செய்தது, கிரைமியப் போர் தொடங்கியது. י * X ^

கிழக்குப் பிரச்சினை 361
இங்கிலந்து போற்றிக்குக் கடலுக்குக் கப்பற்படையொன்றை அனுப்பியது. இந்தப் படையெடுப்பு போரிலே செயலளவில் எவ்விதப் பயனையும் விளைக்க வில்லை. கிரைமியா முதன்மையான போர்க்களமாயது. இங்கே நட்பாளர் செபாத்தபூல் என்னும் பலமான கோட்டையை முற்றுகையிட்டனர். இத் தொடரிகலுக்காய முன்னேற்பாடுகள், குறிப்பாக பலமான ஒரு கோட்டையை முற்றுகையிடுதற்கு, போதாதனவாயிருந்தன. 'கிரைமியக் குளிர்காலத்தில்* (1845-55) பிரித்தானியப்படைஞர் அடைந்த துன்பங்கள் பலப்பல. இலையுதிர் காலத்தில் ஆல்மா, செபாத்தபூலின் மேலே மேடுகளிலுள்ள பலக்கிளவா, இங்க Libait ஆகிய இடங்களில் மிக மகத்தான வெற்றிகள் கிடைத்தபோதிலும், கோட்டை கைப்பற்றப்படாமையால் அவ்வெற்றிகள் பயனளிக்கவில்லை.
பாரிசுப் பொருத்தனை (1856)
1855 சனவரி மாதத்திற் சாடினியாவின் முதலமைச்சனகிய கவூர் பெருமகன் தன் அதிபனன விற்றர் எமானுவேல் அரசனை மேலை நட்பாளரின் உதவிக்குப் படைப்பகுதியொன்றை அனுப்புமாறு ஏவினன் (15-16. 5. 1855). செனயாவில் அடைந்த வெற்றிக்கு இத்தாலியப் படைகள் உதவின. இந்த வெற்றி செபாத்த பூவின் கதியை உறுதிப் படுத்திற்று. ஆனல் இந்நகர் செத்தெம்பர்வரையும் சரணடையவில்லை. முற்றுகை 349 நாட்களாக நீடித்தது. கடந்த மாச்சு மாதத் தில் சார் நிக்கலசு காலமாக, அவன்பின் பேராசனன இரண்டாம் அலெச்சாந்தர் அமைதியை விரும்பினன். மூன்மும் நெப்போலியனும் போர் செய்வதிற் களைப் படைந்திருந்தான். ஆகவே, 1856 மாச்சு 30 ஆம் திகதி பாரிசில் அமைதிப் பொருத்தனை நிறைவேற்றப்பட்டது. வல்லரசுகள் தாங்கள் துருக்கியப் பேரா சின் சுயவாட்சியையும் நாட்டின் முழுமையையும் பற்றி உறுதிமொழி அளிப்ப தென்றும், அவ்வல்லரசின் உள்நாட்டலுவல்களிலே தலையிடுவதில்லையென்றும் ஒப்புக்கொண்டன. சுலுத்தான் 'சாதிமத பேதமின்றித் தன் குடிகளின் நிலை மையைச் சீர்ப்படுத்துவதாக வாக்குறுதியளித்தான். இரசியாNகிரைமியாவைக் கையளித்தது. அத்துடன் மொழ்தேவியா உவலாசியா ஆகியவற்றின் மீது தனக் கிருந்த மேலாண்மையை நீத்தது. இவ்விரு மாகாணங்களும் சுலுத்தானின் மேலாண்மையின் கீழ்ச் செயலளவிற் சுயேச்சை பெற்ற நாடுகளாயின. ' கருங் கடல் வாசகங்கள் இங்கிலந்தின் தனிப்பட்ட கவலையாயிருந்தன. கருங்கடல் முற்முக நடுநிலைப்படுத்தப்பட்டது. அதன் கரையிலிருந்த படைகள் ஒழிக்கப் பட்டன.போர்க் கப்பல்கள் அதனுட் செல்வது தடுக்கப்பட்டது. இவ்வாசகங்கள் இயல்பாகவே இரசியாவுக்குக் கடுஞ் சினமூட்டின. 1871 இல் பிசுமாக்கின் ஆதா 'வுடன் இந்த ஒப்பந்தத்தை இரசியா கிழித்தெறிந்தது.
இற்றை நாளிற் பெருந் தவறெனக் கண்டிக்கப்பட்டுள்ள இந்தப் போரின் பொது விளைவு என்ன ? இரு நூற்றண்டுகளாக இரசியா குழியலாலும் போரா அலும் தேடிய எல்லாவற்றையும் பறி கொடுத்தது ; கொன்சுதாந்திநோப்பிளி லிருந்து மீண்டும் அப்புறப்படுத்தப்பட்டது. துருக்கிமீது அதற்கிருந்த மேலாண்மை மறுக்கப்பட்டது; தன்நாட்டைச் சீர்ப்படுத்தி, போற்கனில்

Page 192
362 கிழக்குப் பிரச்சினை
மேலெழும் நாட்டினர்களுடன் இணங்கிவாழ இன்னுமொரு வாய்ப்பு, துருக்கிக்கு அளிக்கப்பட்டது. இவையே அவ்விளைவுகளாம்.
மேனுட்டு நட்புறவாளர் பெற்றுக்கொடுத்த ஓய்வைத் துருக்கர் பயன்படுத்த வில்லை. இருபது ஆண்டுகளின் பின்னரும் போற்கன் கிறித்தவ மக்களின் நிலைமை, கிாைமியப் போரின் முடிவில் இருந்ததிலும் பார்க்கச் சிறிதேனும் சீரடையவில்லை.
போற்கன் கலாங்கள்
பொசினியா, ஏசகோவின என்னும் நாடுகளில் வாழ்ந்த தென்சில்ாவிய மக்களிடை எழுந்த கலாம் காரணமாக 1875 இல், கீழைத்தேசப் பிரச்சினை முழுமையும் மீண்டும் உருத்தெழுந்தது. இக்காலம் சேவியா, மொன்றிரீகிரோ ஆகிய நாடுகளில் வாழ்ந்த மக்களிடையும் பரவியது. இனத்தாலும் மதத்தாலும் அந்நாடுகளொடு ஒற்றுமை பூண்டிருந்த இரசியா அவர்கள் சார்பாகத் தலையிட அவாவிற்று. ஆனல் கிாைமியப் போர் நினைவிற்கு வர, ஒசுத்திரியாவுடனும் சேர்மனியுடனும் சேர்ந்து சுலுத்தானிடமிருந்து உடனே சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று கோரிற்று. சுலுத்தான் கொடுத்த வெறும் ஏட்டு வாக்குறுதியை நம்பிப் போரை நிறுத்தக் கிளர்ச்சியாளர் மறுத்ததன் காரணமாகவும், மூன்று பேரரசர்களும் துருக்கிமீது விடுத்த கோரிக்கைகளை ஆதரிக்க இங்கிலந்து மறுத்தமை காரணமாகவும் இந்த முயற்சி பயனளிக்கவில்லை.
போற்கன் கலாம் தென்சிலாவியரிலிருந்து பக்கேரியாவுக்குப் பரவியது. இந்த எழுச்சி, துருக்கிய நிரந்தரப் படையின் உறுப்பினால்லாத பிறவிசரால் அட்பூேழி யங்களுடன் ஒடுக்கப்பட்டது. கிளாசுதனின் பல்கேரிய அட்டூழியங்களைப் பற்றிய கண்டனம், ஐரோப்பா முழுவதும் ஒலித்தது. அப்போது (1877 ஏப்பிரில்) இரசியா துருக்கிமீது போர்ப் பிரகடனஞ் செய்தது. 1859 ஆம் ஆண்டிலிருந்து உருமேனியா என்னும் பெயருடன் ஒரு தனிச் சிற்றரசாக ஐக்கியப்படுத்தப்பட்ட மொழ்தேவியா, உவலாசியா எனும் இரு மாகாணங்களும், இரசியாவுடன் சேர்ந் தன. 1877 யூலையிலிருந்து திசெம்பர் வரையும் பிளெவினுமீது நடந்த தாக்கு தலைத் துருக்கி விரத்துடன் எதிர்த்து நின்ற போதும் இரசியர் துருக்கரைக் கொன்சுதாந்திநோப்பிள் வரையும் புறமுதுகுகாட்டி ஓடச்செய்து, 1878 மாச்சு மாதத்திற் சான் சிதிபானேப் பொருத்தனையைத் துருக்கர் மீது விதித்தார்கள்.
பீக்கன்பீல் பிரபுவின் ஆட்சியிலிருந்த பெரிய பிரித்தானியா தலையிட்டது : ஏனைய வல்லரசுகளின் இசைவின்றி இரசியா தான் விரும்பிய நியதிகளைத் துருக் கிமீது விதிக்கவிடமுடியாதென்று மறுத்து, அப்பொருத்தனையை ஐரோப்பிய பேரவையில் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் கோரியது. இரசியா இதற்கு மறுப்புக் கூறியது. இங்கிலந்து இதனை வற்புறுத்தியது. இரண்டு வல்லரசுகளுக்கு மிடையில் போர் உடனடியாக நிகழப்போவதாகத் தோற்றிய வேளையில், இர சியா விட்டுக்கொடுத்தது.இங்கிலந்து கோரிய பேரவை, பிசுமாக்கின் தலைமை யிற் பேளினில் யூன் மாதத்திற் கூடியது.

கிழக்குப் பிரச்சினை 363
பேளின் பொருத்தனை
பேளின் பொருத்தனையே அதன் விளைவாகும் (1878), இரசியா, அண்மையில் நிகழ்ந்த போரிற் கைப்பற்றிய பாடும், கார்சு, ஆககான் என்னு மிடங்களை வைத்துக்கொண்டு, 1856 இல் திருப்பிக்கொடுத்த பெசரேபியாவின் ஒரு கீற்றை யும் உருமேனியாவிலிருந்து மீண்டும் பெற்றுக்கொண்டது. இங்கிலந்து (துருக்கி யோடு செய்துகொண்ட பிறிதொரு பொருத்தனையின்படி) சைப்பிரசைப் பெற்றது. பொசினியாவும் எசகோவினவும் தனிச் சொந்தமாகவன்றிப் பரிபா லனத்திற்கு மாத்திரம் ஒசுத்திரியாவுக்குக் கொடுக்கப்பட்டன. உருமேனியா, சேபியா, மொன்றிரீகிரோ ஆகிய நாடுகள் தங்கள் ஆள்புலங்களுடன் வேறுசில வற்றையும் அடக்கித் தனிச்சுயவாட்சி நாடுகளாயின. பல்கேரியாவுக்கு இத்துணை நல்வாய்ப்புக் கிட்டவில்லை. இதுமுதற்கொண்டு சுலுத்தானின் மேலாட்சியின்கீழ் ஒரு சுயேச்சை நாடாக இருக்கவேண்டிய பல்கேரியா, சான் சிதிபானுேப் பொருத்தனையில் அதற்கு வாக்களிக்கப்பட்ட பெரிய ஆல்புலத்தை எய்தவில்லை. கிரீசு மிகுதியான உரிமைகளைக் கோரியது. ஆனல், அவைகளைப் பெற அது பொறுத்திருக்க வேண்டியதாயிற்று. எப்படியாயினும் 1881 இல் தெசாலி மாகாணத்தையும் இப்பைாசின் ஒருபகுதியையும் கிரீசு பெற்றது. கிரீசு இதை யிட்டு மகிழ்சியடையவில்லை. ஆனல் சான் சிதிபானுேவில் வரையப்பட்ட "பெரிய பல்கேரியா உருவாகுவதைப் பீக்கன்பீல் பிரபு தடுத்திருக்காவிடின் கிரிசோ, சேபியாவோ இன்றிருக்கும் நிலையில் இருக்கமுடியாது. எப்படியாயினும் 1885 இல் உருமேனியாவை வலிந்திணைக்கப் பல்கேரியா அனுமதிக்கப்பட்டது. பேளின் பொருத்தனையிற் பல்கேரியா பறிகொடுத்தவற்றுக்கு அது பூரணமான நட்டஈடு ஆகாவிட்டாலும், ஓரளவிற்கேனும் அது திருத்திகரமானதே.
பேளின் பேரவையின் மிகவும் குறிப்பிடத்தக்க பயனை இப்போது கவனிப் போம். பிசுமாக்கு 'நேர்மையானதாகன்' என்ற முறையிலே த்ன் கடமையை ஆற்றுவதில், தன் இரு நண்பர்களான ஒசுத்திரியரவுக்கும் இரசியாவுக்குமிடை யில் யாதுமொன்றைத் தன் உண்மை நட்பு நாடாகத் தெரிய வேண்டியவனனன். போற்கனில் இவர்கள் போட்டி படிப்படியாகக் கூடி, நெருக்கடியான நிலையை அடைந்து கொண்டிருந்தது. அவன் ஒசுத்திரியாவையே தெரிந்தெடுத்தான். ஒசுத்திரியாவுடன் மிகவும் நெருங்கிய நட்புறவு பூணலே 1878 முதல் 1914 வரை சேர்மனி கடைப்பிடித்த பூட்கையின் ஆதார சுருதியாகும். இதற்கு எதிர் மாமுகச் சேர்மனிக்கும் இரசியாவுக்கு மிடையிற் பகைமை எப்பொழுதும் அதி கரித்துக்கொண்டேயிருந்தது. இவ்வண்ணமே பேளின் பேரவை உலகப்போரிற்கு முன்னறி குறியாயது. இரசியா சேர்மனியினின்றும் விலகிச் செல்ல, சேர்மனி பிரான்சை நோக்கிச் சென்றது. ஆனல் உலகப்போர் தொடங்குதற்கு நெடுங் காலத்திற்குமுன்னரே, வெகுகாலமாக இழுபட்ட கீழைத்தேசப் பிரச்சினையில் இன்னுமொரு கட்டம் காட்சியளித்தது. பீற்றசுபேக்குக்கும் பேளினுக்கும் இடையில் நட்புறவு தணிய பேளினும் கொன்சுதாந்திநோப்பிளும் அந்நட்பினல் இணைந்துகொண்டன. அந்தக் கட்டத்தைப்பற்றிப் பின் ஒரு அத்தியாயத்திற் கூறுதல் வேண்டும்.

Page 193
ILĘ1-58). I 'lpos:55Ē
IĘ1-s,11 osťNoj
T-T-T-T-13ırılığțitologio 현병rvg%
„|-și eisraeorrotaeraer,***** – „|Profiso wosławowot; &suae *T. I fiini(Not laes
物:UL:2%헬
隔)|
西門日*paeo riorsogo ************(Caen ?--+++.•
E어]与n)
 

அத்தியாயம் 30
இத்தாலி ஐக்கியம் பூண்டமை (1815-71)
முக்கிய திகதிகள்
1736-181 நெப்போவியன் இத்தாலியை வென்று திருத்தியமைத்தல்,
置岛置品 மீட்புக்கள்.
고 நேப்பிளிற் கலாம்.
பீதுமனிற் கலாம்.
卫品恩芷 கரி எரிப்போர் சங்கம்.
置岛、直 ஒசுத்திரியா கலாங்களே ஒடுக்குதல்,
直岛岛直 இத்தாலியிம் கலாங்கள்.
மசினி இளம் இத்தாலி எனுங் கழகத்தை நிறுவுதல்,
置品岛直 ஒசுத்திரியா உரோமாஞப் பகுதியைக் கைப்பற்றுதல்.
E32 பிரான்சு அங்கோனு நகரைக் கைப்பற்துதல்,
IÑፏj நியோகெல்பு இயக்கம்.
ஒன்பதாம் பயசு போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டமை,
இத்தாவியிற் புரட்சிகள்.
IÑ፵፱ மனின் என்பான் த&லமையில் வெனிசியக்குடியரசு உருவாகுதல், 直品盛母 ஒகத்திரிய-சாடினியப் போர். '
உரோமன் குடியாசு.
சாடினிய அரசன் சாள்சு அல்பேட்டின் பின்னர் பீற்றர் எமானு
வேல் அசசெய்தல், 直岛盛盟 ஒகத்திரியா இத்தாலி மீது ஆதிக்கஞ் செலுத்தல்,
83 கவூர் முதலமைச்சணுதல். 置吕品品 கிரைமியப்போரிற் சாடினியாவின் தலையீடு.
புளொம்பியர் என்னுமிடத்தில் நிறைவேறிய விடட்டணி. 555 இத்தாலியின் சுயவாட்சிப்போர்.
효 இத்தாலிய இராச்சியம்,
சவோயும் நீசம் பிரான்சுக்குக் கையளிக்கப்பட்டன.
IÑÑዕ' கரிபோல்தி இரு சிசிலிகளேயும் வெல்லுதல்.

Page 194
366 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
1860 நேப்பிளும் சிசிலியும் இத்தாலிய இராச்சித்தோடு வலிந்திணைக்
கப்பட்டன.
1861 கவூரின் மரணம்.
1862 அசுபுரோ-மொந்தேயில் கரிபோல்தியின் தோல்வி.
1864 தலைநகர் புளோரன்சுக்கு மாற்றப்பட்டது.
1866 ஒசுத்திரிய-பிரசியப் போர்.
1866 வெனிசு இத்தாலியுடன் வலிந்திணைக்கப்பட்டது.
186? கரிபோல்தி உரோமைத் தாக்குதல்.
1867 கரிபோல்கி மெந்தானு என்னுமிடத்திற் பிரான்சியராற் தோற்
கடிககபபடல.
1870 பிரான்சிய-சேர்மானியப் போர்.
1870 இத்தாலியர் உரோமுக்குட் புகுதல். Z8? I உரோம் இத்தாலியின் தலைநகராதல். 1929 இலாதான் பொருத்தனைகள்,
பத்தொன்பதாம் நூற்றண்டிலே தாராண்மை, நாட்டினவுணர்ச்சி ஆகிய இரு பெருஞ் சத்திகள் ஐரோப்பிய அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தின. இச்சத்திகளின் தொழிற்பாடு ஒரே தன்மைத்தன்று. இத்தாலியிலும் சேர்மனியிலும் இவை ஐக்கியத்திற்குக் காரணமாயின. பல சிறிய அரசுகளிருந்த இடத்தில் இரு பெருமாசுகள் தோன்றின. ஆனல், ஒற்ருேமன் பேரரசும் அபிசுபேக்குப் பேரா சும் சிதைந்து பல நாட்டின அரசுகளாயின.
இந் நூற்முண்டிலே தோற்றிய எல்லா நாட்டின இயக்கங்களுள்ளும் இத் தாலிய இயக்கமே உள்ளத்தை ஈர்ப்பது. இலெக்கி என்பான் 1896 இல் எழுதியது போல, “இத்தாலிய இயக்கம் எங்கள் காலத்திலிருந்த வேறெவ்வித இயக்கத்தை யும் போன்றதன்று.பத்தொன்பதாம் நூற்முண்டு வரலாற்றில் இந்த ஒரேயொரு இயக்கத்தில் மட்டுமே அரசியலானது காப்பியத் தன்மையை ஓரளவிற்குக் கொண்டு விளங்கியது. இந்த இயக்கத்தின் வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுவதே இந்த அதிகாரத்தின் நோக்கமாகும்.
உண்மையிலே நெப்போலியன் இத்தாலியை வென்று அந்நாட்டைத் திருத்திய மைத்ததோடு இக்கதை தொடங்கிற்று. சேனுபதி நெப்போலியன் 1796 இல் இத் தாலி மீது படையெடுத்தபொழுது, நாங்கள் முன் படித்ததுபோல, அந்நாடு
நான் இக்கதையை என் “இக்கால ஐரோப்பாவின் மறு ஆக்கம்” என்னும் புத்தகத் தில் விரிவாகக் கூறியுள்ளேன். எனது “ஐரோப்பிய வரலாற்றிலும்”, இப்பொருளை மட்டும் குறித்தெழுதப்பட்ட சிறு நூலாகிய “இக்கால இத்தாலியை ஆக்கியோர்” எனும் நூலிலும் இன்னும் விரிவாகக் கூறியுள்ளேன்.

இத்தாலி ஐக்கியம பூண்டமை 367
பன்னிரு அரசுகளின் வெறும்திரளே எனக் கண்டான். இவைகளில், சில வருடங் களுக்குள், நேப்பிள் தவிர வெருெரு நாடும் எஞ்சியிருக்கவில்லை. நேப்பிளுக்கு முதலாவதாகத் தன் சோதரன் யோசேப்பையும், பின்னர் தன் மைத்துனன் சுவாக்கீம் மியூாற்றையும் அரசர்களாக அனுப்பினன். நாட்டின் எஞ்சிய பாகத் தைப் பிரான்சின் பேரரசன் என்ற முறையிலும் இத்தாலியின் அரசன் என்ற முறையிலுந் தானே ஆட்சி செய்தான். “நிச்சயமாக இத்தாலி ஒரு தனிநாடாக விளங்க வேண்டியது' என்பதை அவன் முன்னரே உணர்ந்து கூறிப் பழைய தடைகளைத் தகர்த்தெறிந்தான். பாலங்களையும் பாதைகளையும் கட்டினன். ஒன்றுக்கொன்று முரணுன அதிகாரவெல்லைகள் நிலவிய இடத்தில் ஒன்றுபட்ட சட்டக் கோவையொன்றைப் புகுத்தினன். நிலமானியத்திற்குரிய சிறப்புரிமை களை ஒழித்து, வரிச் சுமையை எல்லா வகுப்பினரிடையும் பகிர்ந்தான். கல்வி முறையைப் பெரிதும் சீர்ப்படுத்திப் பாலனத்தை மையப்படுத்தினன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தாலியரைத்தாங்கள் இத்தாலியரென நினைத்துப் பெருமையடையவும் ஆண்மையுடன் போர் புரியவும் கற்பித்தான்.
மீட்பும் பிற்போக்கும் (1815-48)
நெப்போலியன் செய்த ஆக்க வேலைகளின் அடையாளங்கள் யாவற்றையும் அடைத்தெறிய 1814-15 காலத்துச் குழ்வல்லோர் தங்களாவியன்ற மட்டும் முயற்சி செய்தார்கள். வெனிசு, செனேவா ஆகிய இரு பண்டைக் குடியரசு நாடு களின் மறைவு தவிர, ஏனைய நாடுகளில் 1796 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த அரசியல் நிலைமை மீட்கப்பட்டது. வெனிசும் எத்திரியாற்றிக்குக் கடலுக்கணித் தான சார்நாடுகளும் உலொம்பாடியுடன் இணைக்கப்பட்டு, உலொம்பாடோவெனிசிய இராச்சியமாக அபிசுபேக்கரின் பல்லினப் பேரரசில் இடம் பெற்றன. செனேவா சவோய்க் குலத்தினர்க்கு அளிக்கப்பட்டது. இவர்கள் சவோயையும் பீதுமனையும் திரும்பப் பெற்று இவைகளைச் சாடினியா இராச்சியத்துடன் மீண்டும் இணைத்தனர். எஞ்சிய நாடுகளில், திருச்சபை அரசுகள் போப்பாட்சி க்கு மீண்டும் உட்பட்டன. இசுப்பானிய பூபன் குலத்தினனன நான்காம் பேடி னந்து தனது சிசிலித் தீவு இராச்சியத்துடன் நேப்பிளைச் சேர்த்துக் கொண் டான். அபிசிபேக்கு-உலொரேன் குலத்தவனன மகா கோமகன் மூன்றம் பேடி னந்து தசுகனி நாட்டை மீண்டும் பெற்றன். அபிசுபேக்கு இளவரசியும் முன்னைய பேராசியுமாய மேரி உலூயிசுக்குப் பாமாவும் பியாகென்சாவும் சீவிய உரித்தாகக் கொடுக்கப்பட்டன. அவள் மரணத்தின் பின்னர் அப்பகுதியைப் பூபன் குலத்தினர் அடைய இருந்தனர். அபிசுபேக்குக் குலத்தினனை நான்காம் பிரான்சிசு, மொடன கோமகவுரிமைக்கு கோமகனக மீண்டும் அமர்த்தப் பட்டான். அடுத்த இருபத்தியைந்து ஆண்டுகளாக மெற்றேணிக்கு இளவரசன் வீயன்னுவிலிருந்து இத்தாலியை ஆட்சிசெய்தான். ஆனல், மெற்றேணிக்கு ஓர் அரசுகட்டிலில் ஓர் அபிசுபேக்குக் குலத்தவனையும் மற்றையதில் ஒரு பூபன் குலத் தவனையும் ஏற்றலாம். முன்னைய அரசர்கள் மீண்டும் அாசராவதன் பயனுக, சிறு அரச மன்றுகள் யாவற்றிலும் முன்னைய நிலைகள் மீண்டும் நிலவலாம். ஆனல்

Page 195
368 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
1815 இன் இத்தாலிய அரசியல் நிலைமை, 1796 ஆம் ஆண்டு அரசியல் நிலைமை யிலும் மிகவும் வேறுபட்டதாகும். பேராசாட்சியை, முக்கியமாக நெப்போலிய னின் பேராசாட்சி முறைகளே, வெறுத்த மசினி என்பான் இத்தாலிய நாட்டினம் முதலாம் நெப்போலியனுக்குப் பெரிதும் கடப்பாடுடையதென ஒப்புக் கொண் டான். நெப்போலியன் விதைத்த வித்து ஈற்றில் வேரூன்றி மிகுந்த பயனை அளித்தது.
எனினும் 1848 வரையும் "அறுவடைக்காலம்' ஆரம்பிக்கவில்லை. 1815 ஆம் ஆண்டு தொடக்கம் "புரட்சி ஆண்டு வரையும் அங்கும் இங்கும் கிளம்பும் கலாங்களால் இடையூறு ஏற்பட்டபோதும் இத்தாலி பொதுவாகப் பிற்போக்கின் தீய ஆதிக்கத்தின் கீழாயது. 1820 இல் புரட்சி மதிரித்திலிருந்து நேப்பிளுக்குப் பரவியது. நான்காம் பேடினந்து, பாராளுமன்றுக்குரிய யாப்பைக் கோரிய கிளர்ச்சியாளர் கேட்ட கோரிக்கைகள் யாவற்றையும் தற்காலிகமாக விட்டுக் கொடுத்தான். 1821 இல் இந்த இயக்கம் பீதுமனுக்குப் பரவியது. இந்த இரு நிகழ்ச்சிகளும் 'கரி எரிப்போர்' என்ற இரகசியக் குழுவினராலேயே பெரும் பாலும் தூண்டப்பட்டன. கரி எரிப்போர் மிலானிலும் இம் முயற்சியிலிடு பட்டனர். ஆனல் மெற்றேணிக்கு விழிப்பாயிருந்தமையாற் குழப்பம் தோல்வி யடைந்தது. நேப்பிளிலும் பீதுமனிலும் ஒசுத்திரிய போர் வீரராற் கலாங்கள்
எளிதாக ஒடுக்கப்பட்டன.
இவையும் இவைபோன்ற பிறகுழப்பங்களும் அறிவுடைய, தாயகப் பற்றுள்ள சிறுபான்மையோரின் முயற்சியாகும். நாட்டினக் கருத்தோ சுதந்திர உணர்ச் சியோ பெரும்பான்மையான மக்களின் உள்ளத்தைச் சிறிதேனும் தொடவில்லை. 1830 இல் நிகழ்ந்த பிரான்சியப் புரட்சியின் தொடர்விளைவு இத்தாலியிலுந் தோன்றியது. போப்பாட்சி அரசுகளான மொடின, பாமா ஆகியவற்றைக் கொண்ட மத்திய இத்தாலியில் மாத்திரம் அமைதியின்மை கலகமாகப் பரிண மித்தது. ஒசுத்திரியப் போர்வீரர் விரைவில் ஒழுங்கை மீண்டும் நிலவச் செய்
தனா.
மசினி (1805-72)
ஆங்காங்கு கிளம்பிய கலகங்களின் பரிதாபமான தோல்வி முக்கியமான ஒரு விளைவிற்கு ஏதுவாயது. இவை இளமைவாய்ந்த, செனேவா மாணவனுன யோசேப்பு மசினியை கரி எரிப்போரின் முறைகளைப் பலமாகக் கண்டிக்கவும் இளம் இத்தாலி எனுங் கழகத்தை நிறுவவுந் தூண்டின. இப்புதிய கழகம் இத் தாலி எங்கும் ஆச்சரியப்படத்தக்க வேகத்துடன் பரவியது. அதன் குறிக்கோள் இத்தாலியின் விடுதலையும் சுயவாட்சியுமாகும். அதன் குறிக்கோளுரை "கல்வி ” என்பதாகும். ஒசுக்கிரி யரை ஆயுத பலத்தால் இத்தாலியிலிருந்து துரத்திவிடுதலே அதன் உடன் நோக் கமாகும். மசினி தன் நாட்டை விட்டுப் புறம்போக வேண்டியவனனன். ஆனல் இங்கிலந்தைத் தன் இரண்டாம் தாயகமாக்கி அங்கிருந்து சங்கத்தின் அலுவல், களே நடத்தினன்.
யும் கலாமும் ஒரேகாலத்தில் ஆதரிக்கப்படவேண்டும்'

இத்தாலி ஐக்கியம் பூண்டமை 369
நியோகெல்புக் கட்சியினர்
மசினியைப்போல் நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வர உழைக் காவிட்டாலும், மசினியின் கட்சியைப் போன்று, இன்னுமிரு இத்தாலியக் கட்சி கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் உழைத்தன. நியோகெல்பு அல்லது புதிய கெல்புக் கட்சியினர் இத்தாலிய இயக்கத்துக்கு வழிகாட்டவும், அரசுகளிலும் யாப்புச் சீர்திருத்தத்தின் முன்னேற்றத்திற்கு உதவவும், எல்லா நாடுகளையும் சேர்த்து ஒரு நாட்டுக் கூட்டிணைப்பை அமைக்கவும் போப்பாண்ட வரை எதிர்நோக்கினர். ஒன்பதாம் பயசு போப்பாண்டவராக 1846 இல் தேர்ந் தெடுக்கப்பட்டமை, சிறிது காலத்திற்கு நியோகெல்புக் கட்சியினரின் நம்பிக்கை களுக்கு ஆதரவளித்தது. ஆனல், 1848-9 கால நிகழ்ச்சிகள் புதிய போப்பாண்ட வரின் சீர்திருத்த ஆர்வத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளியிட்டன.
பீதுமந்தரின் கட்சி
மூன்மும் கட்சியினர், சுயவாட்சிப்போரில் தலைமை தாங்கவும் உள்நாட்டுச் சுதந்திரங்களில் சலுகை பெறவும் இத்தாலிய கூட்டாட்சியொன்றை உருவாக்க வும் சவோய்க் குலத்தினரை எதிர்பாத்தார்கள். இவ்வண்ணம் புரட்சி ஆண்டு ஆரம்பிக்கும் தறுவாயில், சீர்திருத்த இலட்சியத்தைப்பற்றியும் அதை அடை யும் வழியைப் பற்றியும் கருத்து வேறுபாடு இருந்தபொழுதும் மக்களிடையே பொதுவாகப் புதிய கருத்துக்கள் பொங்கியெழுந்தன.
புரட்சியாண்டு (1848-49
ஐரோப்பாக்கண்டத்திற் பல பாகங்களில் 1848 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க புரட்சிகள், பல இடங்களில் மூண்டன. பிரான்சில் யூலை மாதத் தில் ஏற்படுத்தப்பட்ட முடியாட்சி கவிழ்ந்தது. பெப்புருவரி மாதத்தில் இரண் டாம் குடியரசு பிரசித்தஞ் செய்யப்பட்டது. மாச்சு மாதம் பதினைந்தாம் திகதி க்கு முன்னர் அபிசுபேக்குப் பேராசு முழுவதும் குழப்பத்திலிருந்தது. மெற்றே ணிக்கு, வீயன்னவிலிருந்து துரத்தப்பட்டு இங்கிலந்துக்கு அகதியாகச் சென்று கொண்டிருந்தான். போப்பாண்டவரும், இரு சிசிலி தசுகனி பீதுமன் ஆகிய வற்றை ஆட்சி செய்பவர்களும் இத்தாலியில் அரசியல் யாப்புக்களைத் தத்தம் மக்களுக்கு அளித்தனர். வெனிசு தன் சுயவாட்சியைப் பிரகடனஞ் செய்து தானியல் மனின் என்பவனின் தலைமையிலே தன்னை ஒரு குடியரசாகப் பிரசித் தஞ் செய்தது. உலொம்பாடியும் ஒசுத்திரியாவின் அதிகாரத்தினின்றும் தன்னை விடுவித்துக்கொண்டது. பீதுமன் அரசனை சாள்சு அல்பேட்டு ஒசுத்திரியா மீது போர்ப்பிரகடனஞ் செய்தான். தசுகனியர், உரோமர், நேப்பிள் நாட்டினர் ஆகியோர் உடனதாவளித்தனர். ஆனல், ஒசுத்திரியாவின் படைப் பலம் எதிர்க்க முடியாததாகவிருந்தது. சாள்சு அல்பேட்டு அடிபணியும்படி நேரிட்டது. போப்பாண்டவரினதும் மற்றும் ஆட்சியாளாதும் ஆதரவு விரைவில் அருகி

Page 196
370 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
விட்டது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் ஆதரவு அரைகுறையாகவே கிடைத் தது. ஒசுத்திரியாவுக்கு எதிராகப் புரிந்த போர் படுதோல்வியுற்றது. எனினும், வெனிசு போரை நிறுத்தவில்லை. உரோமிலிருந்து போப்பாண்டவர் தப்பியோட, அந்நகரம் ஒரு குடியரசாகப் பிரசித்தஞ் செய்யப்பட்டது. ஆனல், 1849 இல் பிரான்சு போப்பாண்டவருக்கு உதவி செய்தது. மசினி, கரிபோல்தி என்பவர் களின் தூண்டுதலினுல் வீரர் வீராவேசத்துடன் தற்காப்புப் போர் புரிந்தும், உரோம் சரணடைந்து போப்பாண்டவரை மீண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய தாயிற்று. 1849 ஒகத்து மாதத்தில் 146 நாள் முற்றுகையின் பின்னர் வெனிசு, மாசல் இாடற்சிக்கி என்பவனிடம் சரணடைந்தது.
இன்னுமொரு முறை ஒசுத்திரியத் தளை இத்தாலியின் மேற்றிணிக்கப்பட்டது. என்ருலும் 1848-49 போராட்டம் பலனளிக்காமலில்லை. சேர்மானியர், செக்கர், மகியார், சிலாவியர், இத்தாலியர் ஆகியோரிடை ஒற்றுமையில்லாத காரணத் தாலேயே அவர்களை அபிசுபேக்குக் குலத்தினர் வென்றனர். வெளித் தோற்றமள வில் இத்தாலியின் நிலைமை எப்போதும் போல் இழிவானதாகவே இருந்தது. ஆனல் உண்மை அப்படியன்று. கூமுகப் பிரிக்கப்பட்ட இத்தாலி படைத் துறை யில் ஒசுத்திரியாவுக்கு இணையாகாது. ஆனல், கூருக்கப்பட்ட அரசுகளின் மக் கள் சுதந்திரவாடையின் சுகத்தை அனுபவித்திருந்தார்கள். வெனிசும் உரோ மும் ஒசுத்திரியாவின் ஆட்சியை விரத்தோடெதிர்த்தன. சாள்சு அல்பேட்டு முடி துறக்க, அவன் பின்னர் 1849 இல் சாடினியாவில் அரசுகட்டிலேறிய இளை ஞனன விற்றர் எமானுவேல் ஒரு தகுதியான தலைவனென இத்தாலிய மக்கள் கண்டனர். இவன் தன் ஆட்சி முடியுமுன் (1849-79) இத்தாலி முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஐக்கியப்படுத்திய வாற்றை இனிக்காண்போம்.
விற்றர் எமானுவேல்
1848-49 நிகழ்ச்சிகளினல், தாயகப்பற்றுடைய இத்தாலியர் யாவரும் ஒரு முகமாகச் சவோய்க் குலத்தினர்மேல் நம்பிக்கை வைத்தனர். போப்பாண்டவர் ஒன்பதாம் பயசின் செயல்கள், நியோகெல்பு இலட்சியங்களைத் துகளாக்கி விட்டன. மசினியின் குடியரசுவாதமும் அது போலவே பயனற்றதாயது. ஆன படியால், எல்லாக் கட்சியினரும் இத்தாலிய விடுதலையில் ஒரேயொரு தஞ்சமாக இளம் பிராயத்தினனன சாடினிய அரசன் விற்றர் எமானுவேலை எதிர் நோக்கினர்.
கவூர்
இத்தாலிய இயக்கத்தின் தலைமையைத் தாங்குவதற்காகத் தன்னுடைய தென் அல்பிசு இராச்சியத்தை வேண்டியாங்கு பலப்படுத்துவதே விற்றர் எமானுவே வின் முதற் கடமையாயது. நற்பேருக இந்த முயற்சியில், 19 ஆம் நூற்முண்டின் மிகச் சிறந்த அரசறிஞருள் ஒருவனுன கமிலோ தி கவூர் பெருமகனின் உதவியை

இத்தாலி ஐக்கியம் பூண்டமை 371
எமானுவேல் பெற்றன். பீதுமன்நாட்டு விழுமியோர்மரபிற் பிறந்த கவூர் ஆங்கில அரசியல், சமூக பொருளாதாரச் சீர்திருத்தம், எல்லாவற்றிற்கும் மேலாகப் பாராளுமன்றிற்குரிய அரசாங்கம் ஆகியவற்றை நுட்பமாகக் கற்றி ருந்தான். பீதுமனின் முதலமைச்சனுக நியமிக்கப்பட்டதின் மேல், திருச்சபை அரசாட்சி, வரிமுறை, கடற்படை, தரைப்படை ஆகிய நிருவாகக் துறைகள் அத்தனையிலும் தீவிரமான உள்நாட்டுச் சீர்திருத்தங்களை ஒன்றின் பின் ஒன்முகத் தொடர்ச்சியாய் நிறைவேற்றினன்.
பீதுமன் வேண்டியாங்கு அணியடுக்குப் பூண்டபின்னர், 1854 ஆம் ஆண்டில், தன் இறையை ஒரு துணிகரமான செயலில் இறங்கும்படி கவூர் தூண்டினன். அப் போது கிரைமியப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இங்கிலந்தும் பிரான் சும் இரசியாவுக்கெதிராக ஒற்றேமன் பேரரசை ஆதரித்துக் கொண்டிருந்தன. கிரைமியப் போரில் மேனுடுகள் பொறுப்பு ஏற்றவேலை இலகுவானதொன்றில்லை. கீழைத்தேசப் பிரச்சினையில் இத்தாலிக்கு அக்கறையில்லையா ? அப்போது உண்மையில் இத்தாலி என்ற ஒரு தனிநாடு இல்லை. எனினும், கவூர் இத்தாலிய நாட்டை உருவாக்குவதில் உறுதியாயிருந்தான். அவன் உருவாக்கும் இத்தாலி, மத்திய தரைக் கடலைச் சார்ந்த ஒரு பெரிய வல்லராசயிருக்க வேண்டும். இந் நோக்கத்தை நிறைவேற்றுவதன் முதற்படியாக, கிரைமியாவில் ஆங்கிலப் பிரான்சியப் படைஞருடன் தோளொடு தோள்நின்று போர் புரியச் சிறிய சாடி னிய நாடு ஒரு துணைப்படையை அனுப்பவேண்டும்.
கிரைமியாவிற் சாடினியத் துணைப்படை
துணைப்படை அனுப்பப்பட்டது. படைஞர் விரத்துடன் போர் புரிந்தனர். அண்மையில் ஒசுத்திரியாவால் தோற்கடிக்கப்பட்டதன் வழி ஏற்பட்ட களங்கந் துடைத்தெறியப்பட்டது. பிரான்சுடனும் இங்கிலந்துடனும் நட்புறவு நிலை நாட்டப்பட்டது. பாரிசிற் கூடிய அமைதிப் பேரவையிற் கவூர் தனக்குரிய இடத்தைப் பெற்றன். செபாத்தபூல் நகரின் முன்வெட்டப்பட்ட அகழிகளின்
y
களிமண்ணுல் இக்கால இத்தாலி உருவாக்கப்பட்டது. பாரிசுப் பேரவையில் கவூர், இத்தாலியின் பரிதாபகரமான நிலையை ஐரோப்பிய வல்லரசுகளின் முன் விளக்கி, இத்தாலி அனுபவிக்கும் துன்பங்கள் யாவற்றிற்கும் ஒசுத்திரியாவே காரணமென வெளியாகவும் கண்டிப்பாகவும் எடுத்துரைத்தான். நேப்பிள் நாட் டின் பயங்கரக் கொடுங்கோன்மை கிளாசுதன் என்பான், அபடின் பெருமகனுக்கு (1852 இல்) எழுதிய இரு கடிதங்கள் வாயிலாக ஆங்கில மக்களின் கவனத்துக் குக் கொண்டுவரப்பட்டது. இக்கொடுங்கோன்மைக்கு எதிர்ப்புகாட்டுமுகமாக, நேப்பிளிலிருந்த ஆங்கிலத் துரதமைச்சன் திருப்பி அழைக்கப்பட்டான். ஆகவே ஆங்கில அரசாங்கம் கவூரிடத்து இதயபூர்வமான அனுதாபமுடையதாயிருந்தது.
14-B 24178 (5.160)

Page 197
372 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
பேராசனன மூன்ரும் நெப்போலியன், அனுதாபம் தெரிவிப்பதோடு நிற்க வில்லை : குறித்த சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படின், ஒசுத்திரியரை இத்தாலி யினின்றும் வெளியேற்றக் கவூருக்கு உதவியளிப்பதாக உறுதி கூறினன்.
இத்தாலியச் சுயவாட்சிப் போர்
அவ்வாக்குறுதியின் விளைவு இத்தாலிய சுயவாட்சிப் போராகும். 1859 சனவரி மாதம் 30 ஆம் திகதி செரோம் போனப்பாட்டின் மகனுன இளவரசன் நெப்போலியன், விற்றர் எமானுவேலின் மகள் குளோதயில் இளவரசியைத் திருமணஞ் செய்தான். அரசன் தன் அன்பிற்குரிய மகளை மனத்துயரத்துடன் கியாகஞ் செய்தான். மணமகன் இளம்பிராயத்தினனுமல்லன் ; கறையில்லாப் புகழுடையவனுமல்லன். ஆனல், இத்திருமணம், கவூாால் தீர்மானஞ் செய்யப் பட்ட போத்தின் ஒரு பகுதியாகும். மே 13 ஆம் திகதி பேரரசனின் தலைமையிற் பெரிய பிரான்சியப் படையொன்று செனுேவாவில் இறங்கியது. ' அல்பிசு மலையிலிருந்து எத்திரியாற்றிக்குக் கடல் வரையும் பரந்துள்ள இக்காலியை விடுதலையாக்க வந்த பெருந்தன்மைவாய்ந்த நட்புறவாளருக்கு இருதய பூர்வ மான வரவேற்பளிக்கப்பட்டது. வெற்றி கைக்கெட்டியதுபோலத் தோன்றிய வேளையில், மூன்றும் நெப்போலியன் போரை இடையில் நிறுத்தி, பில்லா பிருங்கா என்னுமிடத்தில் ஒசுத்திரியப் பேரரசனுடன் படைத்தகைவு செய்தமை, பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நெப்போலியன் போட்ட இவ்வரசியற் குட்டிக்க ரணக் திற்குக் காரணங்களெவை என்பது பற்றி ஓய்வில்லாது வாதிக்கப்பட்டது. இக் காரணங்கள் இப்போது ஓரளவு தெளிவாயிருக்கின்றன. அவன் இரத்தஞ் சிந்து வதை வெறுத்தான்-போரில் அதிக இரத்தஞ் சிந்தப்பட்டது. அவன் வெற்றி கள் தடைப்படாதிருந்திருப்பின் அவை அவன் குறித்த இடத்திற்குமப்பால், ஒரு வேளை உரோம் வரைதானும், அவனை முன்னேறச் செய்திருக்கும். அவன் உரோமைத் தாக்கினல், அவனை முழு மனதுடனும் ஆதரிப்பவர்களான பிரான் சியக் குருவாயத்தினருக்கும் கத்தோலிக்க சமயத்தில் ஆர்வமுள்ள பேராசிக்கும் அது கடும் துயரை விளைத்திருக்கும். இசையின் நதிப் பிரதேசத்திற் பிரசியா படைதிரட்டுகிறதென்ற தகவலே, போரிடும் இரு பகுதியினரையும் படைத் தகைவு செய்ய நிர்ப்பந்தித்த காரணமாகும். இரு பேரரசர்களுக்கும் மனக் குழப்பம் உண்டாயது. ஆனபடியாற் படைத்தகைவு செய்யப்பட்டது. என்ருலும் இந்தப் போர் இத்தாலி நாடுகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மான கட்டத்தைக் குறிக்கிறது. வெனிசு ஒசுத்திரியாவுக்காயது. ஆனல் உலொம் பாடி பீதுமனுடன் வலிந்திணைக்கப்பட்டது. மத்திய இத்தாலிய அரசுகளான தசுகனி, மொடீனு, பாமா, பியாசென்சா, உரோமானப் பகுதி (போப்பாட்சி அரசுகளின் வடபகுதி) ஆகிய நாடுகள் தங்கள் முன்னைய ஆட்சியாளரைத்

இத்தாலி ஐக்கியம் பூண்டமை 373
துரத்தி, பீதுமனுடன் சேர்ந்து கொண்டன. வட இத்தாலியும் மத்திய இத்தாலி யும் சவோய்க் குலத்தவரின் ஆளுகையில் ஒன்முக இணைக்கப்பட்டன. இத்தாலிய இராச்சியம் இவ்வாறு தோன்றியது. 1860 ஏப்பிரில் 2ஆம் திகதி புதிய இராச் சியத்தின் முதலாம் பாராளுமன்றம் தியூரினிற் கூடியது.
இந்த ஆதாயங்களை அடைய மனவருத்தமான தியாகஞ் செய்யவேண்டியதா யிருந்தது. நெப்போலியன் தான் உறுதிபண்ணிய உதவிக்கு ஈடாகச் சவோய், நீசு என்னுமிடங்களைத் தனக்குக் கையளிக்கும்படி பேரம் செய்திருந்தான். அந்தக் கைம்மாறு மனமில்லாமலே கொடுக்கப்பட்டது.
கரிபோல்தியும் ஆயிரவரும்
வட இத்தாலியும் மத்திய இத்தாலியும் ஐக்கியம் பூண்டமை கவூரின் குழியலின் பயனேயாகும். ஐக்கியத்தின் அடுத்த கட்டம் கரிபோல்தியின் துணிச்சலான தலைமையில் நிறைவேறியது. கரிபோல்தி 1807 ஆம் ஆண்டு நீசு என்னுமிடத்திற் பிறந்தான். மசினி கவூர் என்பார்போல் அவனும் பிறப்பாற் பீதுமன் குடிமக ஞவான். தென் அமெரிக்காவில் அருஞ்செயல் நிரம்பிய வாழ்க்கை நடாத்தி, 1884 இல் புரட்சியாண்டின் நிகழ்ச்சிகளில் தன் பாகத்தை ஏற்றுக்கொள்ள இத்தாலிக்குத் திரும்பினன். உரோமன் குடியரசை அவன் காப்பாற்றியமை முன்னரே குறிப்பிடப்பட்டது. 1859 ஆம் ஆண்டுப் போரிற் கெரிலாப் போர் முறையில் மிகவும் சிறந்த தலைவனுகப் பெரும் புகழ் ஈட்டினன். அந்தப் போர் சடுதியாக முடிவுற்றதும், இத்தாலியின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரைக் கும், மக்கள் அவளைத் தங்கள் நாட்டின் தலைசிறந்த வீரனெனக் கொண்டாடினர் கள்.
M
வட இத்தாலியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிகளின் பெறுபேறுகள் தென் இத்தாலியிலுந் தோன்றின. இந் நிகழ்ச்சிகளைத் தூண்டிய காரணங்கள் ஒரே மாதிரியானவையென்பது இதன் பொருளன்று. வட பகுதி இயக்கம் ஓர் அந்நிய அரசாங்கத்துக்கு மாமுகச் சென்றது. தென் பகுதி இயக்கமோ அந்நிய அரசாங் கத்திற்கு மாமுனதன்று; இழிநிலையுற்ற சொந்த அரசாங்கத்திற்கு எதிராகவே அது கிளர்ந்தது. இரு சிசிலிகளிலும் பூபன் ஆட்சிக்கு மாமுக எழுந்த அமைதி யின்மை, 1860 ஏப்பிரிலில் பிரான்சிசுகோ கிறிசுபி என்பவனல் தூண்டப்பட்ட கலாம் சிசிலியில் உண்டானபொழுது, உச்ச நிலையை அடைந்தது. கரிபோல்கி கலகக்காரருடன் நெடுங்காலமாகத் தொடர்பு வைத்திருந்தான். புகழ்படைத்த 'ஆயிரவர் ' எனும் தொண்டர்குழாத்தைச் சேர்த்துக்கொண்டு, மே மாதம் 6 ஆம் திகதி செனுேவாவிலிருந்து கடல் மார்க்கமாக அவன் புறப்பட்டான். கரிபோல்தி
1 1807 இல் நீசு உண்மையிற் பிரான்சிடத்திருந்தது. ஆனல் 1814 இல் பீதுமன் அதை மீண்டும் பெற்றது.

Page 198
374 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
போர்மேற் செல்லும் நோக்கத்தை எமானுவேலுங் கவூரும் முற்முக ஆதரித்த னர். ஆனல், இயலுமானுல் அப் பயணத்தைப் பின்போட்டிருப்பார்கள். கரி போல்தி யாருடைய உத்தரவைப் பெறுவதற்கும் காத்திருக்கவில்லை. யூலை முடியு முன்னர் சிசிலி முழுவதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினன். அவ்விடத்தைக் கடந்து பெரு நிலப் பகுதிக்குச் சென்று, செத்தெம்பர் மாதம் முதற் கிழமையில் நேப்பிள் மீது படையொடு சென்முன். செத்தெம்பர் 6 ஆம் திகதி, கடந்த ஆண் டில் அரசனை இரண்டாம் பிரான்சிசு ('பொம்பினே') தன்லநகரிலிருந்து ஒளித் தோடினன். 7 ஆம் திகதி கரிபோல்தி நேப்பிளிற் புகுந்து தன்னைச் சருவாதி காரியாகப் பிரகடனஞ் செய்தான். புதுமையானதும் சிக்கலானதுமான ஒரு நிலைமை ஏற்பட்டது. இங்கிலந்து தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய வல்லரசுகளுக்குக் கரிபோல்தியின் கொள்ளைக்கார முயற்சி அச்சத்தையும் அருவருப்பையும் அளித் தது. கவூரும் அவன் அரசனும் வல்லரசுகளைப் புறக்கணிக்கத் துணியவில்லை. ஆனல், இரு சிசிலிகளையும் வட இத்தாலியையும் ஐக்கியப்படுத்துவதில் அவர்கள் ஆர்வமுடையோராயிருந்தனர். எனினும், கரிபோல்தி தன் அரசனை இத்தாலி யின் அரசனென உரோமிலேயே பிரகடனஞ் செய்யும் வரையும் தான் வென்ற நாடுகளை விற்றர் எமானுவேலுக்குக் கையளிக்க மறுத்தான். ஒரு குடைக்கீழ் ஐக்கியப்படுத்தப்பட்ட இத்தாலிக்கு உரோமே தலைநகராக வேண்டுமென்று கரி போல்கி ஆசைப்பட்டதுபோல் கவூரும் ஆசைப்பட்டான். ஆனல், அந்நேரத்தி தில் உரோமைத் தாக்கினல் ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்க வல்லரசுகள் யாவும் புதிய இத்தாலிய இராச்சியத்திற் கெதிராக ஒன்றுசேர்ந்திருக்கும். இதற் கிடையில், போப்பாட்சியாற் போரிற் பயன்படுத்தப்பட்ட ஒசுத்திரிய ஐரிசுப் படைஞர்கள் அம்பிறியாவையும் எல்லை நாடுகளையும் போப்பாண்டவருக்காகக் காவல் செய்துகொண்டு, இத்தாலிய அரசாங்கத்துடன் அண்மையிற் சேர்க்கப் பட்ட உரோமானப் பகுதியையும் அச்சுறுத்தினர். போப்பாண்டவர் திரட்டிய அந்நியப் படைகளை அகற்றுமாறு கவூர் கோரினன். அவர் மறுக்கவே, உரோமா னப் பகுதியைப் போப்பாண்டவரிடமிருந்தும், போப்பாண்டவரைக் கரிபோல் தியிலிருந்துங் காக்கும் நோக்கொடு அவன் ஒரு படையைத் தென்றிசைக்கு அனுப்பினன்.
நேப்பிளின் படை கரிபோல்தியை முன்னேறவிடாமல் இரு வாரங்களாகத் தடுத்தது. இது கவூரின் நற்பேருகும். ஈற்றில் வொற்றேணுே ஆற்றங்கரையில் அவற்றைக் குலைத்தபின்னர், கரிபோல்தி தன் சொந்த அரசனுடன் போர்முகக் தில் நேர்முகமாக நிற்பதைக் கண்டான். உடனே அவன் தன் சருவாதிகாரத்தை அரசனிடம் ஒப்படைத்தான். நவம்பர் 7 ஆம் திகதி அந்த நாடோடி வீரனும் அவன் அரசனும் அக்கம்பக்கமாகச் சவாரி செய்துகொண்டு நேப்பிளை அடைந்
தனா.

இத்தாலி ஐக்கியம் பூண்டமை 375
வடக்குந் தெற்கும் ஐக்கியம் பூணல்
இரு சிசிலித் தீவுகளும் குடியொப்பத்தின்படி வட இராச்சியத்தோடு ஐக்கியமாயின. பெப்புருவரி 18 ஆம் திகதி வெனிசும் உரோமும் தவிர்ந்த ஏனைய இத்தாலிய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பாராளுமன்றம் தியூரி னிற் கூடிய ஒரு மாதத்தின் பின்னர் பூபன் ஆட்சியின் கடைசிக் கோட்டை ' சரணடைந்தது : 2 ஆம் பிரான்சிசு உரோமில் அடைக்கலம் புகுந்தான்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இத்தாலி தன்னுடைய தலைசிறந்த அச சறிஞனை இழந்தது. உரோமன் பிரச்சினையைத் தீர்க்குமுன், கவூர் 1861 யூன் 5 ஆம் திகதி காலமானன். கரிபோல்கி இப்பிரச்சினையைப் படைவலிமையால் திர்க்கத் தீர்மானித்துவிட்டான். ' உரோம், அன்றேற்சாவு", எனும் முழக்கத் தொடு திரும்பவும் பெருநிலப்பகுதியிலே தோன்றி, உரோமை அச்சுறுத்தி ஞன். அரசாங்கம் குறுக்கிட்டது. அசுபுரோமெந்தே என்னுமிடத்திற் செஞ் சட்டைவீரர்’ சிதறடிக்கப்பட்டனர். கரிபோல்தி கைது செய்யப்பட்டான்.
வெனிசு
ஆனல், இத்தாலியின் ஒரு விலாவில் உரோமைத்தவிர இன்னுமொரு வாய் திறந்த புண் இருந்தது. 1865இல் ஒசுத்திரியாவுக்கும் பிரசியாவுக்குமிடையிற் போர் விரைவில் மூழுமென்பது தெளிவாயிருந்தது. விற்றர் எமானுவேல், வெனிசியாவைத் தனக்குக் கையளித்தால் அதற்காகப் போரிலே தான் ஒசுத்திரி யாவுக்கு உதவி செய்வதாக அறிவித்தான். இதற்குப் பிரான்சிசு யோசேப்புப் பேரரசன் இசையவில்லை. பின்னர் இத்தாலி பிரசியாவின் உதவியை ஏற்றுக் கொண்டது. ஏழு கிழமைப் போரில் ’ (1866) இத்தாலி காட்டிய திறமை மிகச் சிறிது. ஆனல் பிரசியா ஒசுத்திரியாவைச் சடிோவா" என்னுமிடத்திலே தோற் கடித்தது. ஆகவே ஒசுக்கிரியா வெனிசை இத்தாலிக்குக் கையளிக்க வேண்டிய தாயிற்று. புதிய எல்லைப்புறம் ஒடுக்கியே வரையப்பட்டது. பிசு மாக்கு, ஒப்பந்தத் திற் குறிக்கப்பட்ட ‘இருத்தல் இறைச்சியை’ மறுக்கமுடியவில்லை. ஆனல் அதற்குமேல் ஓர் அவுன்சாவது கொடுத்திலன்.
உரோம்
மீண்டும் 1866 ஆம் ஆண்டை ஆய்வோம். வெனிசைக் கைப்பற்றிய பின்னர் உரோமைக் கைப்பற்றும் காலம் வந்தே தீரும். கரிபோல்தி 1867 இல் உரோமைக் கைப்பற்றக் கடைசி முறையாக முயன்முன். ஆனல் செஞ்சட்டை வீரருக்கெதி ராக உரோமைக் காக்கும்படி அனுப்பப்பட்ட பிரான்சியப் படையில்ை, அவன் முயற்சி தோல்வியடைந்தது. 1870 இற் பிரான்சிய சேர்மானியப் போர் ஆரம் பமான பொழுது, பிரான்சியப் படை உரோமிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. விற்றர் எமானுவேல் மனமுருகக் கூடிய முறையில்

Page 199
376 இத்தாலி ஐக்கியம் பூண்டமை
வேண்டிய பொழுதும், போப்பாண்டவர் தவிர்க்க முடியாத முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். பெயரளவில் இருந்த எதிர்ப்பைச் சமாளித்த பின், இத்தாலியப் படை நகரைக் கைப்பற்றியது. உரோமை இத்தாலியுடன் இணைப் பதற்கு உண்மையான ஒருமைப்பாடு கிடைத்தமை, குடியொப்பத்தினுற் புலஞ் யிற்று. 1871 யூன் 2 ஆம் திகதி விற்றர் எமானுவேல் நகருக்குள் முறைப்படி பிரவேசித்தான். அன்று தொடக்கம் உரோம், ஒன்ருயிணைக்கப்பட்ட ஐக்கிய இத்தாலியின் தலைநகராயது.
சோதனைகளும் தொல்லைகளும்
இந்தப் புதிய நாட்டைக் கொடுந்துயர் வந்தெதிர்ந்தது. 1919 இல் பாசிச ஆட்சி நிறுவப்பட்ட பின்னரே இத்துயர் உண்மையாக நீங்கியது. 1850 ஆம் ஆண்டுக்கும் 1870 ஆம் ஆண்டுக்குமிடையில் நாடு வேகமாக முன்னேறியது. வடக்கும் தெற்கும் அரசியலளவில் ஐக்கியப்பட்டிருந்தபோதும், சமூக வாழ்க் கையிலும் பொருளாதாரத்திலும் ஐக்கியப்படவில்லை. அல்லாமலும், இங்கிலந் தின் மாதிரியாக இத்தாலியமைத்த பாராளுமன்ற அரசியல் யாப்பு செவ்வனே இயங்கவில்லை. இத்தாலியின் சிறப்பியல்புக்கும் மரபுகளுக்கும் ' பிரதி நிதிக்" குடியாட்சி முறையிலும் ‘நேர்க் குடியாட்சி முறையே சாலச் சிறந்ததாகலாம். இப்புகிய நாடு ஆட்சிக் கலையைப் பயிலும் பருவத்தே, முன் கூறப் பட்டவை களிலும் பார்க்கத் தனியொருவனது ஆட்சியே இன்னும் சிறந்ததாகலாம். எவ் வகையினும் இத்தாலியிற் பாராளுமன்ற முறைமை கேவலமான ஊழல்களால் அலங்கோலப் பட்டது. ஒரு புதிய அரசை இக்கால முறையில் அமைப்பதாயின் பளுவான வரி விதிப்பைத் தவிர்க்க முடியாது. நாட்டிலே பண மோசடி பாக்க இருந்தமையால், வரிச்சுமை இன்னும் கூடிற்று. பாரதூரமான சமூகக் கோளாறு கள் புதிய இராச்சியத்தைப் பயமுறுத்தின. பழைய நாடுகளேப் பார்த்து, ஏற்ற காலத்துக்கு முன்னர் குடியேற்ற நாடுகளைப் பிடிக்க முயன்றமை கடுந் துன் பத்தை விளைத்தது. பிரான்சுக்கும் இத்தாலிக்குமுள்ள தொடர்புகள் எப்பொழு தும் மனத்திற்குத் தொல்லை கொடுப்பனவாகவே இருந்தன. ஆகவே, இத்தாலி இங்கிலந்துடன் நட்பாயிருந்த போதிலும், பிசுமாக்கால் முந்நாட்டு நட்புறவிற் சேர்க்கப்பட்டது. எல்லாவற்றிலும் பார்க்க, இந்த இராச்சியத்துக்கும் போப் பாட்சிக்கும் இடையே நிலவிய நெருக்கடி நிலையே இந்தப் புதிய இராச்சியத் தைச் சீர்கொடுத்தது.
இலாதான் பொருத்தனை
விற்றர் எமானுவேல் உரோமைக் கைப்பற்றியபின்னர், போப்பாண்டவர்கள் தங்களுடைய வற்றிக்கன் மாளிகையில் வாழ்க்கை நடத்தினர். அங்கே அவர்கள் மாளிகை எல்லைக்குள் கைதிகள் போலத் தாமாகவே அடைந்து கிடந்தார்கள். ஒருங்கே நல்ல குடிகளாகவும் நல்ல கத்தோலிக்கராகவும் இருக்கவிரும்பிய இத் தாலியர் இந்த நிலைமையினல் கடுந்துயருற்றனர். அரசிடத்துப் பற்றுறுதி

இத்தாலி ஐக்கியம் பூண்டமை 377
கொள்ளின், திருச்சபைக்குக் கீழ்ப்படிய முடியாதெனும் இக்கட்டு ஏற்பட்டது. போப்பாண்டவருடன் இணக்கஞ் செய்ய இத்தாலிய அரசாங்கம் பன்முறை முயன்றது. ஆனல் 1929 வரையும் இம்முயற்சி பயனளிக்கவில்லை. எப்படியாயி ணும் அவ்வாண்டிற் சீனியர் முசோலினியும் போப்பாண்டவர் பதினுேராம் பய சும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதுவே இலாதரன் பொருத் தனகளில் இடம்பெற்றது. வற்றிக்கன்' என்னும் நனி சிறிய ஆள்புலத்தை இன்னும் போப்பாண்டவர் ஆட்சி செய்வதனல், தமது சருவதேச இறைமை யைப் பேணுகிறர். எனினும் போப்பாண்டவர் இத்தாலிய அரசனின் இத்தாலிய இறைமையை ஒப்புக்கொள்ளுதல் இதுவே முதன் முறையாகும். இலாதான் பொருத்தனையே இத்தாலிய ஐக்கியத்திற்கு மணிமுடி போன்றது.

Page 200
5#ęIlono Isossaeum),si sı
*활』 『
Ilmışsı
 
 

அத்தியாயம்
சேர்மனி ஐக்கியம் பூண்டமை (1815-71)
முக்கியமான திகதிகள் !
சேர்மானிய நாட்டுக் கூட் f;}.ိ13/ r'၊ ၂၊ 'புண்டு). 1818-30 சேர்மனியிங் பிற்போக்கு 1818-11 சொல்லரீன். 置昂主母 அபிடேக்குப் பேராசிப் பு "... IÑi(; அச சுகனிஸ் ty. ' தி, 1848-49 பிராங்குபோட்டு பாராளுமன்றம். 卫岛±量 சேர்மானிய நாட்டுக் கட்டிஃனப்பின் மீட்பு.
I&fi. போலந்திற் களிTம்.
1873- செல்க விக்கு-ஒன் கைன் சிக்கல்.
15 Wና፥ தேனியப் போர். 直占鹉 எழு கிழமைப் போர். 五岛齿苗 சடோனாவிற் பிரசியரின் வெற்றி.
f சேர்மானிய நாட் நிக் கட் டிஃணப்புக் குலேதல்,
f வடசேர்மானிய நாட்டுக் கூட்டிணேப்பு ï(;ያኛü பிரான்சில்-சேர்மானியப் போர்.
IŠ?‛ህ ரெடான்.
置岛帝直 புதிய சேர்மானியப் பேரரசு.
பிசுமாக்கும் கவூரும்
1871 ஆம் ஆண்டிலேயே சேர்மானியும் இத்தாளியும் ஐக்கியமெனும் தங்கள் இலட்சியத்தை அடைந்தன. இவ்விரு நிகழ்ச்சிகளிலும், நெடுங்காளமாக இயங் கிக் கொண்டிருந்த சக்திகளுக்குப் பிரான்சிய சேர்மானியப் போசே இறுதிக் தாக்கத்தை அனித்தது. பிசுமாக்கும் கவூரும் நாட்டினவாகக்கின் தேர்ந்தெடுக் கப்பட்ட கருவிகளாக விணங்கினர். ஆணுல் இவ்விரு இயக்கங்களும் பூரண"க ஒத்திருக்கவில்லே. பிசு மாக்கின் வேலே கவூரின் வேல் போற் கடினமானதன்று. நாட்டின ஐக்கியம் என்ற கருத்தை இத்தாவி மறந்ததுபோலச் சேர்மனி ஒரு போதும் முற்கு மறக்கவில்லே. உண்மையாகப் புனித உரோமப் பேரரசு என்பதை ஒரு நிறுவகமென்று கொள்வதிலும் ஓர் இலட்சியமென்று கொள்வதிே எற்புடையதாகும். அது அழியும் வரை சேர்மனிக்கென ஓர் அரசன்

Page 201
380 சேர்மனி ஐக்கியம் பூண்டமை
இருந்தான். நீண்ட காலத்துக்கு முன்னரே இறைமை, ஆள்புலச் சிற்றரசர் கைக்கு மாறிவிட்டது. எனினும் ஒரு சட்சனே பவேரியனே தான் ஒரு சேர் மணியன் என்பதை உணர்ந்திருந்தான். ஆகவே, ஆக்க முயற்சியை ஆரம்பித் தற்கு நாட்டுநிலை கவூரிலும் பார்க்கப் பிசு மாக்குக்கே கூடிய சாதகமாயிருந்தது. ஆனல், புனித உரோமன் பேரரசு குலைந்தபின்னர் (1806), சேர்மன் இனத்தினர் இருந்தனர் எனக் கொள்ளினும், சேர்மானிய அரசொன்று இருந்ததெனக் கொள்ளல் சாலாது. வியன்னுப் பேரவையில், இரு சேர்மானியவாசை மீண்டும் அமைத்தல் ஒரு சேர்மானியக்குழுவின் பொறுப்பாயிற்று. அதன் உருவம் எப்படி இருக்கவேண்டும்? இசுதெயினும், ஆடன்பேக்கும் பைற்றும் அம்போற்றும், சான் கோசும் நைசுனேவும் முயன்றதன் பயனுய்ப் பிரசியாவில் ஒரு புதிய நாட்டின உணர்ச்சி தோற்றியதுபோல், விடுதலைப்போரும் (1813-14) சேர்மனியில் ஒரு புதிய நாட்டின உணர்ச்சியைத் தோற்றுவித்தது. வீயன்னுவில் கூடிய அரசறிஞர், சேர்மனியின் புத்துயிருக்குப் பொருத்தமான ஒரு மெய்யை அமைக்க முடியுமா?
வியன்னப் பேரவை
பழைய பேரரசுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமென்று ஒருவரும் கூறமுன் வசாதது குறிப்பிடத்தக்கது. வட சேர்மனியைத் தென் சேர்மனியிலிருந்து பிரித்து, முன்னையதைப் பிரசியாவுக்குக் கீழும் பின்னையதை ஒசுத்திரியாவுக்குக் கீழும் கூட்டிணைப்பு நாடுகளாக்குவதை இசுதெயின் ஆதரித்தான். ஆனல் இந்த - முடிவை ஒசுத்திரியா உறுதியாக எதிர்த்தது. ஈற்றில் முப்பத்தியொன்பது அரசு களைக் கொண்ட ஒரு தளர்ச்சியான நாட்டுக் கூட்டிணைப்பு நிறுவப்பட வேண்டு மென்றும், இந்நாடுகளின் பிரதிநிதிகள் ஒசுத்திரியப் பேரரசின் கலைமையிற் பிராங்கு போட்டு நகரில் ஒரு கூட்டாட்சி மன்றத்திற் கூடவேண்டுமென்றும் தீர் மானிக்கப்பட்டது. இம்மன்றத்தின் அதிகாரம் சொல்லளவில் மிகுதியாகவிருந் தாலும், பெரும்பான்மையும் முற்றிலும் பயனிலதாயிற்று. இந்த மன்றம், உண்மை யில், முழு உரிமை பெற்ற அரச தூதரின் போவையாயிருந்தது. அதன் முக்கிய Α ή ΥΕΦΑ தீர்ப்புக்கள் எல்லாவற்றிற்கும், ஒருகாலமும் அடைய முடியாத ஒருமன தான சம்மதம் தேவையாயது. அங்கே உண்மையான கூட்டாட்சி நிருவாகம் உருப்படவில்லை. நீதித்துறைக்கோ தன் தீர்ப்புக்களை நிலைநாட்ட வலியில்லை. ஒவ் வொரு அரசும் பிரதிநிதித்துவ யாப்பை ஏற்றுக் கொள்ளக் கூட்டாட்சி விதி ஏற்பாடு செய்தது.
மெற்றேணிக்கு தான் செய்த கைங்கரியம்' பற்றி மிகவும் மகிழ்ச்சி யடைந் தான், உள்நாட்டு ஒழுங்கைப் பேணப் புண்டு எனும் நாட்டுக் கூட்டிணைப்பு அமைப்பினைப் பயன்படுத்தலாம். அது ஒசுத்திரியாவின் பிற்போக்கு நடவடிக் கைகளைத் தடை செய்ய இயலாது. இரண்டாந்தரச் சிற்றரசர்கள் தாங்கள் முன் அனுபவித்த இறையரிமைகளை மீண்டும் பெற்றது பற்றி மகிழ்ச்சியடைந்தார்கள். சேர்மானிய நலன்களைப் பற்றி ஒசுத்திரியாவைப் போன்றே பிரசியாவும் கவலை யற்றிருந்தது.

சேர்மனி ஐக்கியம் பூண்டமை 38.
பிற்போக்கு
பல அரசுகளிலும் இடையிடையே-முக்கியமாக 1830 இல் பிரான்சியப் புரட்சித் தீயிலிருந்து பொறிகள் பறந்தமையால்-கலாம் மூண்டு முறிவை ஏற் படுத்திய பொழுதிலும், இத்தாலியிற் போலச் சேர்மனியிலும் 1815 ஆம் ஆண்டிற் கும் 1848 இற்கும் இடையேயுள்ள காலப்பகுதி பொதுவாகப் பிற்போக்குக் காலமாகும்.
சொல்வறின்
பொதுவாக இயன்று கொண்டிருந்த பிற்போக்கு முறைக்கு விலக்காக ஒரு முக்கியமான ஆக்கச் சார்பான இயக்கம் தோன்றியது. வாணிகம், வரிமுறை, அரசியல் ஆகிய துறைகளிற் சேர்மனி கேவலமாகப் பிரிந்திருந்தது. ஆனல் 1818-41 காலப்பகுதிக்கிடையில், பிரசியாவின் தலைமையிலே, ஒசுத்திரியா தவிர்ந்த ஏனைய நாடுகள் யாவும் சுங்க ஐக்கியச் சங்கமொன்றில் ஒன்றுபட்டன. நாட்டையும் நாட்டையும் பிரித்து வைத்த சுங்கவரித் தடைகளெல்லாம் நீக்கப் பட்டன. உள்நாட்டுக் கட்டிலா வியாபாரம், பொதுச் சுங்கவரியை அடிப்படை யாகக் கொண்ட வெளிநாட்டுக் காப்புவரிக் கிட்டத்துடன் ஒன்று சேர்க்கப் பட்டது. தெருக்கள், கால்வாய்கள், இருப்புப்பாதைகள் ஆகியன அமைக்கப் பெற்றன. தபாற் போக்குவரத்து, சீர்திருத்தப்பட்டது. இவ்வண்ணம் சேர் மானிய வணிகம் பெரிதும் தூண்டப்பட்டது. இவ்வழி பிறதுறைகளிலும் முன் னேற்றம் ஏற்பட்டது. வணிக ஐக்கியம், அரசியல் ஐக்கியத்திற்கும் முக்கியமான மிதிகல்லாயிற்று. ஒசுத்திரியா மட்டும் சேர்க்கப்படவில்லை. சேர்மனியின் எஞ்சிய பாகங்கள், தலைமைக்குப் பேளினை எதிர் நோக்கத் தொடங்கின.
புரட்சி ஆண்டு
மெற்றேணிக்கு முப்பது ஆண்டுகளாக வெற்றியுடன் அடக்கிவந்த அதிருத்தி யுணர்ச்சி 1848 இல் கட்டுக்கடங்காது வெளிப்பட்டது. இத்தாலியிற் போலச் சேர்மனியிலும் இவ்வியக்கம் இரு குறிக்கோள்களை உடைத்தாயிருந்தது; ஒன்று அரசியல் யாப்பிலே சீர்திருத்தம் புகுத்தல்-இவ்விலட்சியம் பல்வேறு அரசு களிலுங் காணப்பட்டது. மற்றையது சேர்மனி முழுவதையும் ஐக்கியம் பூணச் செய்தல். பேடின், உவூர்த்தம்பேக்கு, பவேரியா, சட்சனி, சிறிய அரசுகளில் அதிக மானவை ஆகியவற்றுக்கு, பொறுப்புவாய்ந்த நிருவாகத்தைக் கொண்ட பாராளு மன்ற யாப்புக்கள் அளிக்கப்பட்டன. ஆனல், அபிசுபேக்கு ஆட்சியிலேயே புரட்சி உணர்ச்சி மிகவும் மூர்க்கமாயிருந்தது. ஒசுத்திரியா, அங்கேரி, பொகி மியா, இத்தாலி ஆகிய நாடுகளிற் கலகத் தீ ஒரே நேரத்திற் கொளுந்து விட் டெரிந்தது. மெற்றேணிக்கு நாடு கடத்தப்பட்டான். பாழ்போய அபிசுபேக்குப் பேரரசு, அதன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட மாகாணங்களிடையே ஒற்றுமையில்லாத படியால் மட்டுமே இறுதியில் தப்பிப் பிழைத்தது. மகியாருக்கும் செக்கருக்கு மிடையிலும், சிலாவியர், சேர்மானியர், இத்தாலியர் ஆகியோர்க் கிடையிலும்

Page 202
382 சேர்மனி ஐக்கியம் பூண்டமை
அபிசுபேக்கு ஆளுகையின் மீது கொண்ட வெறுப்பொன்றே பொதுப்படை யாகக் காணப்பட்டது. 1848 திசெம்பரில், வயதான பேரரசன் இரண்டாம் பிரான் சிசு, இளமைவாய்ந்த தன் மருமகன் பிரான்சிசு யோசேப்புக்குச் சாதகமாகத் தன் பதவியை நீத்தான். யோசேப்பு, பதினெட்டாவது வயதில் இராச்சிய பாரத்தை ஏற்று, 1916 இல் இறக்குந்தனையும் ஆட்சி செய்தான். அரசியல் நெருக்கடி காரணமாக, பீலிச்சு சுவாசன்பேக்கு என்னும் அரசறிஞன் முதன் மை பெற்றன். இவன் செவ்வனே நடாத்தப்பட்ட, திறமான படையொன்றினுத வியுடன் பேரரசு முழுவதையும் படிப்படியாகத் தன் ஆஞ்ஞைக்குக் கீழ்ப்படியச் செய்தான். 1866 இல் இழந்த உலொம்பாடி-வெனிசியா மாகாணத்தைத் தவிர, 1918 இல் ஏற்பட்ட வீழ்ச்சிவரையும் பேரரசு சற்றும் சேதமுமுது தப்பியது.
இவ்வண்ணம் வியன்னுவில் தனியாட்சி மீண்டும் நிறுவப்பட்டது. ஆனல்
பிரசியாவின் அரசனை பிரதரிக்கு உவிலியம் பொறுப்புடைய நிருவாகத்தைப் பிரசியாவுக்கு ஈயாவிட்டாலும், பிரதிநிதித்துவப் பாராளுமன்றத்தை ஒப்புக் கொண்டான். சிறிய அரசுகளிற்முேன்றிய தாராண்மை இயக்கமும் முற்முகப் புகைந்துபோகவில்லை.
பிராங்குபோட்டுப் பாராளுமன்றம்
இனி நாட்டின இயக்கத்தின்-அதாவது சேர்மன் ஐக்கியத்தை இலட்சிய மாகக் கொண்ட இயக்கத்தின்-கதி என்னவாயிற்று என்பதைக் காண்போம். சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பிலுள்ள ஒவ்வொரு அரசும் சருவ வாக்குரிமை அடிப்படையிலே தேர்ந்தெடுத்த 576 பிரதிநிதிகளைக் கொண்ட யாப்பமைமன் றம் ஒன்று, 1848 மே மாதத்திற் பிராங்குபோட்டிற் கூடியது.
இந்தப் பிராங்குபோட்டுப் பாராளுமன்றம்' ஒரு யாப்பை வரைய முற்பட் டது. அபிசுபேக்குப் பேரரசு உட்பட எல்லா மாகாணங்களையும் சேர்க்க வேண்டு மென விரும்பிய பெருஞ் சேர்மனியருக்கும் சேர்மானிய இனத்தைச் சேராத ஒசுத்திரிய மாகாணங்களை விலக்கி, சொல்வறின் எனும் சுங்க ஐக்கிய சங்கத்தைப் பெருப்பிக்க விரும்பிய " சிறிய சேர்மனியருக்குமிடையில் ’ எதிர்ப் பிருந்தது. எனினும் ஈற்றில் இருபாலாரும் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். பிரதி நிதிகளடங்கிய இரண்டு மன்றங்களைக் கொண்ட ஒரு பாராளுமன்றத்துடனும், இதற்குப் பொறுப்பாய நிருவாகத்துடனும் ஆட்சி செய்யும் ஒரு பரம்பரைப் பேரரசரின் கீழ்ச் சேர்மனி ஒரு கூட்டாட்சியரசாதற்குத் திட்டம் வகுக்கப் பட்டது. பிரசிய அரசன் நான்காம் பிரதரிக்கு உவிலியத்தைப் பேரரசு முடியை ஏற்கும்படி வேண்டினர். ஆனல் அவன் ஒசுத்திரியாமீது கொண்ட நன்மதிப் பினலோ பயத்தினலோ, இவற்றிலும் முக்கியமாகப் பிராங்குபோட்டுப் பாராளு மன்றத்திலே நிலவிய குடியாட்சி உணர்ச்சியில் அவநம்பிக்கை கொண்டமை யாலோ, முடியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தற்பெருமையுடைய அந்த ஒகன்சொலேன் மரபினன், தன்னைப் புரட்சியின் ஊழியனுகப் பிரசித்தஞ்

சேர்மனி ஐக்கியம் பூண்டமை 383 .
செய்யச் சித்தமாயிருக்கவில்லை. பிராங்குபோட்டுக் கூட்டவையின் முயற்சிக ளெல்லாம் அவன் மறுத்தமையாற் பயனிலவாயின. 1815 ஆம் ஆண்டு நாட்டுக் கூட்டிணைப்பு மீட்கப்பட்டு, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு நிலைத்தது. பிராங்குபோட்டுப் பாராளுமன்றத்தின் தோல்வி சேர்மனியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் தனிச்சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியாகும். அப்பாராளுமன்றம் வெற்றியடைந்திருந்தால், பிரசியா தனது தனிப்பண்பை இழந்து சேர்மனி யோடு ஒன்முகியிருக்கும். சேர்மானிய ஐக்கியம் பிசுமாக்கின் காலத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே கைகூடியிருக்கலாம். அன்றியும், பிசுமாக்கு கை யாண்ட 'குருதியும் எஃகும் பயன்படுதலின்றி, அமைதியான முறையிலே பாராளுமன்றத்து முயற்சியால் அவ்வைக்கியம் நிறைவேறியிருத்தலுங் கூடும். தென்மாக்கு, ஒசுத்திரியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கெதிராகப் பிசு மாக்கு நிகழ்த்திய போர்கள் நிகழாதிருந்கிருக்கலாம். 1914 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பெருமனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
பிசுமாக்கு
பிராங்குபோட்டுத் தோல்வி ஒசுத்திரியாவுக்கு மகத்தான வெற்றியாயிற்று. ஆயின், அத்தோல்விகண்டு, யாவருள்ளும் பெருமகிழ்வு அடைந்தோன் பிரசியக் குடிமகன் ஒருவனே. அவனே ஒற்ருே உவொன் பிசுமாக்கு ஆவான். சேர்மானிய ஐக்கியத்தை உருவாக்கிப் பின்னர் பெரும்புகழ் எய்தும் பேறு பெற்றன் அவன். பிசுமாக்கு, பிரந்தன்பேக்கில் உள்ள ஒரு பழைய பிரபுக்கள் மரபின் கான்முளை யாவான். அப்போது அவன் முப்பத்துமூன்று வயதுடைய இளவலாய் இருந் தான். பிசுமாக்கு குழியற் பணிக்கு அமைவுள்ளவனுகவே, 1851 இல் உயிர்ப்பிக்கப் பட்ட கூட்டாட்சிப் பாராளுமன்றத்திற்குப் பிரசிய அரசியற்றுாதுவணுக நியமிக்கப்பட்டான். அபிசுபேக்குக் குலத்தினரைப் பெரிதும் மதித்தானெனினும், பிராங்குபோட்டிலே தங்கிய நாட்களில் ஒசுத்திரியா பிரசியாவின் மீது தீராப் பகைகொண்டிருப்பதை உறுதியாக அறிந்தான். ஆனபடியால், சேர்மானிய நாடுகளின் கட்டிணைப்பிலிருந்து பிரசியா விலகவேண்டுமென்றும், சேர்மனியில் முதன்மை பெறுதற்கு ஒசுத்திரியாவுடன் என்றே ஒருநாட் போர் புரியவேண்டு மென்றும் தீர்மானித்தான். 1848-9 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்த காலத்தில் அரசியல் நிலைமை ஒசுத்திரியாவுக்குச் சாதகமாயது. 1852 இல் இறக்கும் வசை யும், சுவாசன்பேக்கு முட்டின்றித் தான் நினைத்தவைகளை நிறைவேற்றினன். ஒல்மசு என்னுமிடத்தில் நடந்த மாநாட்டின்போது பிரசியரும் தாயகப் பற்றுடையோரும் ஒசுத்திரியாவால் அவமானப்படுத்தப்பட்டார்கள். 1848 இல் வழங்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் கிழித்தெறியப்பட்டன. பிற்போக்குத் தலை விரித்தாடியது. எனினும், 1861 இல் முதலாம் உவீலியம் தன் தமையனுக்குப் பின் பிரசியாவின் அரசனுன்ை. அவன் 1862 இல் பிசுமாக்கைத் தன் அமைச்ச ஞக நியமித்தான். இதற்கிடையிற் பிசு மாக்கு பிராங்குபோட்டிற் சேர்மானிய

Page 203
34 சேர்மனி ஐக்கியம் பூண்டமை
அலுவல்களைப் பற்றி அதிக அனுபவம் பெற்றதோடு, சென். பீற்றசுபேக்கில் 1859-62 காலப்பகுதியிலும், பாரிசிற் சில மாதங்களிலும் தூதமைச்சணுக வேலை செய்து, ஐரோப்பியச் சூழியலின் பிரதானமான வழிதுறைகளைப் பற்றி நேரடி யான அறிவும் பெற்றிருந்தான்.
பாரிசில், பேராசனன மூன்றம் நெப்போலியனை நன்கு அளந்தறிந்தான். பிராங்குபோட்டில் அவன் பெற்ற அனுபவத்தின் மூலம் பிரசியாவை ஒசுத்திரியா பெரிதும் வெறுத்ததென்பதை உணர்ந்தான். சென் பீற்றசுபேக்கிலே தங்கியிருந்த மையால் இரசியாவின் நட்பைப் பிரசியா தணிய விடப்படாதென்றும்' இரசியாவின் கவனம் கீழ்த்திசையில் ஊன்றியிருந்தபடியால், இரசியா பிரசியாவின் இயல்பாயமைந்த நட்புநாடு என்றும் முற்முய் நம்பினன்.
1863 இல் ஆரம்பித்த போலந்துக் கலாம், இரசியாமீது அவனுக்கிருக்கும் நட்பை வெளிப்படுத்தவும், போலந்து மக்கள் மீண்டும் விடுதலையடையச்செய்யும் முயற்சிகளைப் பாழாக்கவும் அவனுக்கு வாய்ப்பளித்தது. ' சுயேச்சையான போலந்து பிரசியாவின் வைரித்த விரோதி என்பது ஐயத்திற்குரியதொன்றன்று, என 1848 இற் கூறினன். இந்தத் திடநம்பிக்கை அவன் அரசியல் வாழ்க்கையில் ஊறி, அவன் பூட்கைக்கு இறுதிவரை தூண்டுகோலாயிற்று.
Gதனியக் கோமகவுரிமைகள்
தென்மாக்கின் அரசனும் செல்சுவிக்கு ஒல்சுதைன் மாகாணங்களின் கோமகனுமாகிய ஏழாம் பிரதளிக்கு ஆண் உரிமையாளர் இல்லாது 1863 இல் இறந்தபொழுது, கோமகப்பகுதிகளின் வழியுரிமைப் பிரச்சினை எழுந்தது. அவன் இறந்தபின்னர், கிளக்குபேக்கின் இளவரசன் கிறித்தியன் எவ்வித தடையுமின்றித் தென்மாக்குக்கு அரசனுனன். இங்கிலந்தின் அரசனுக்கு அனேவர் கோமகவுரிமை சொந்தமானதுபோல, ஒல்சுதைன் தென்மாக்கு அரச ளின் கோமகவுரிமையாயிருந்தது. அன்றியும் கோமகவுரிமைகளின் வழியுரிமைச் சட்டம், தேனியச்சட்டம்போன்றதன்று. அது ஒரு சிக்கலான பிாச்சினையாயிருந் தது. இதன் விவரங்களை வேறிடத்திற் காண்க: கீல் என்ற சிறந்த துறை முகத்தை ஈட்டும் முக்கிய நோக்கத்துடனேயே பிசுமாக்கு இந்தக் கோமக வுரிமைகளைப் பிரசியாவுக்குப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்தான். பிசுமாக்கின் நோக்கம் நிறைவேறு தற்கு வேண்டிய சாதனத்தை உவொன் உரூன் செப்பஞ் செய்து வைத்திருந்தான். ‘நான் வரலாற்றிற் காண்பது சத்தியே. செல்சுவிக்கு-ஒல்சுதைன் பிரச்சினை சட்டப்பிரச்சினையுமன்று ; மரபுரிமைப் பிரச்சினையுமன்று. அப்பிரச்சினை சத்தியைப்பற்றியதாகும். அச்சத்தி எங்களிடம் (பிரசியரிடம்) உண்டு' என உவொன் உரூன் சொன்னன். இந்தக் கோமகவுரிமை களைப் பெற மட்டும் பிசு மாக்கு தீர்மானிக்கவில்லை; ஒசுத்திரியாவைப் போர் செய்யத் தூண்டி, தன் காரியம் சாதிக்கவும் அவன் தீர்மானித்தான்.
1 இவை மரியற்றின் “ஐரோப்பிய வரலாற்றிற்” காணப்படும். 1815-1923,

சேர்மனி ஐக்கியம் பூண்டமை 385
எல்லாம் திட்டப்படி நடந்தேறின. ஒன்றுசேர்ந்த ஒசுத்திரியப் பிரசியப் படைகளை எதிர்த்து நிற்கத் தென்மாக்கால் முடியவில்லை. இரசியா தண்ணளி யான நடுநிலைமையைக் கையாண்டு, 1862 இல் தான் பட்ட நன்றிக்கடனில் ஒரு பகுதியைத் தீர்த்தது. தேனிய முடியாட்சியைப் பேணுவதாக (1852) இலண் டன் பொருத்தனையில் உறுதியளித்த இங்கிலந்து, பத்திரத்துண்டுகளின் புனிதத் தன்மையைப்பற்றிப் பிசுமாக்குக்கு அறிவுரை அனுப்பியது. ஆனல், யோன் இறசல் பிரபுவை நன்கு அளந்தறிந்த பிசுமாக்கிற்கு, இவன் வாளிலும் அறிவுரை யையே விரும்புவானெனத் தெரியும். பிரான்சும் இங்கிலந்தைப் போன்றே தென் மாக்கிற்கு உதவக் கட்டுப்பட்டதாயினும், நெப்போலியனுக்கும் அவன் சொந்த இடர்கள் (பிரதானமாக மெச்சிக்கோவில்) இருந்தபடியால், தென்மாக்குக்காகப் போர் புரிய அவனுக்கு மனமில்லை.
இவ்வண்ணம் பிசுமாக்கு தன் எண்ணத்தை நிறைவேற்றினுன். ஒசுத்திரியா மேற் பழியைப் போட்டு ஒரு குழப்பம் உண்டாக்கினன். பியாரிச்சு என்னு மிடத்திற் (1865) பிசுமாக்கு நெப்போலியனுடன் ஓர் உடன்படிக்கை செய்தான். 1866 இல் இத்தாலிய அரசன் விற்றர் எமானுவேலுக்கு வெனிசியாவைக் கொடுப்பு தாக வாக்குறுதி செய்தான்.
ஏழு கிழமைப் போர் (1866)
1866 யூன் மாதத்திற் பிரசியா சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பினின்றும் தானுக விலகியது. பிரசியாவுக்கும், ஒசுத்திரியாவைத் தலைமையாகக் கொண்ட சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்புக்குமிடையிற் போர் தொடங்கியது. உவொன் உரூன் இட்ட கட்டளைப்படி ஊசித்துவக்குக்கள் அணிந்த பிரசியர் பல்காலும் அடுத்தடுத்துத் தாக்கியமையால், ஒசுத்திரியா மட்டுமன்றிச் சேர்மனி முழுவதும் ஆறு வாரங்களுள் முறியடிக்கப்பட்டது. கொனிக்கிருச்சில் (சடோவா) யூன் 3 ஆம் திகதி முழுத்தோல்வி அடைந்தபின்னர், ஒசுத்திரியப் பேரரசன் அமைதி உடன்படிக்கை நியதிகளை ஏற்றுக்கொண்டான். சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்புக் குலைக்கப்பட்டது. ஒசுத்திரியா சேர்மானியக் குழுவிலிருந்து நீக்கப்பட்டது. அது வெனிசியாவை இத்தாலிக்குக்கையளித்தது. அனேவர், எசெ-கசெல், நாசோ, மெயின் நதியிற் கட்டப்பட்ட பிராங்குபோட்டு என்ற அழ கிய நகரம் தேனியக் கோமகவுரிமைகள் ஆகியன பிரசியாவுடன் இணைக்கப் பட்டன. 1867இல் மெயின் நதியின் வடபாகத்தேயுள்ள இருபத்திரண்டு சேர் மானிய அரசுகள், பிரசியாவின் பரம்பரைத் தலைமையின் கீழ் ஒரு வட சேர்மா னிய நாட்டுக் கூட்டிணைப்பாயின. ஆளும் சிற்றரசர்கள், இறை உரிமைகளிற் சிலவற்றைக் கைவிடவில்லை. ஆனல் பிசுமாக்கின் பணியிற் பாதி நிறைவேறியது. வட சேர்மனி செயலளவிற் பிரசியாவுடன் கலந்தது.

Page 204
386 சேர்மனி ஐக்கியம் பூண்டமை
பிரான்சிய-சேர்மானியப் போர்
ஒசுத்திரியாவின் பின்னர் பிரான்சு எஞ்சிநின்றது. சடோவாவிலே தோற் கடிக்கப்பட்டது பிரான்சே ' என மாசல் இாடம் கூறினன். சடோவாவின் பின் பிரான்சுடன் போர் தொடுப்பது வரலாற்று நியதியாகும்,' எனப் பிசுமாக்குக் கூறினன். மூன்ரும் நெப்போலியனுக்குத் தொந்தரையான காலம் வந்துவிட்டது. 1859 இல் நிகழ்ந்த இத்தாலியப் போரிற் பங்குபற்றியபடியால், அவன் பிரான் சிய குருவாயத்தின் நட்பையிழந்தான். இரு சிசிலிகளிலிருந்தும் பூபன் குலத் தவரை வெளியே துரத்தியதைத் தடுக்க இவன் தவறியமையினுல், முறைப்பிறப் புரிமை வாதிகள் பெரும் கவலை கொண்டனர். இவனுல் நியமிக்கப்பெற்ற பேரரசன் மாச்சிமில்லியன் மெச்சிக்கோவிற் கொலை செய்யப்பட்டமையால், அவலத்தில் முடிந்த அத்துணிச்சற் செயலிலிருந்து அவன் பெற எண்ணியிருந்த நன்மதிப்புக்கிட்டாதுபோயிற்று. பிசு மாக்கு, ஒசுத்திரியாவை எளிதாய்த் தோற் கடித்தபின், தான் பெற்ற புதிய நாடுகளுக்கு ஈடாகப் பிரான்சுக்குக் கொடுக்க வேண்டிவரக்கூடியவற்றைப் பற்றிய கதையை வாய்ப்பாக மறந்துவிட்டான். ஆனல் பிரசியாவுக்கு 50,00,000 புதிய குடியாட்களும் 25,000 சதுர மைல் ஆள் புலமும் கிடைத்தவேளையில், நெப்போலியன் தன் குடிகள் முன்னிலையில் வெறுங் கையனுய் நின்முன். •
பிரான்சுடன் போர்செய்து அடையும் வெற்றியின் பயனுக, பிசுமாக்கு அல் சேசையும் உலொரேனையும் மீட்பதோடு, சேர்மானியப் பேரரசு எனும் மாளிகை யைப் பூரணமாக்கி, ஐரோப்பிய முதன்மை பாரிசிலிருந்து பேளினிக்கு LDigi வதையும் எதிர்பார்க்கக்கூடும். ஆனல் பிரான்சே மீச்செல்லும் நாடாயிருக்க வேண்டும். எனின், பிரான்சிற்குச் சினமூட்டுவதெப்படி? இசுப்பானிய சிம்மா சனம் அரசனின்றியிருந்தது. சிகுமறிஞ்சன் மரபிலுள்ள ஒகன்சொலன் குலத் தினன் ஒருவன் அபேட்சகஞனன். அளிக்கப்பட்ட முடியை 1870 யூலை 4 ஆம் திகதி அவன் ஏற்றுக்கொண்டான். பின்னர் அவனுடைய பிரசிய உறவினனின் அறிவுரைப்படி யூலை 13 ஆம் திகதி தான் ஏற்றுக்கொண்ட முடியைத் துறந் தான். 'பிரசியக் கரும்பு' என்று மிக மகிழ்ச்சியுடன் பாரிசிற் கூக்குரலிட்டார் கள். பிசு மாக்கு மனமுறிவுற்முன். ஆனல் பிரான்சு தானகவே அவன் கைக்குட் சிக்கியது. அப்போது ஏமிசில் இருந்த பிரசிய அரசன் உவிலியமிடமிருந்து, பிரான்சு மேலுமொரு மறுப்பை வேண்டியது. அரசன் இந்த அவமதிப்பால் மனந்துணுக்குற்று, அவ்வேண்டுகோளை நிராகரித்தான். இந்தக் கருத்தமையப் பிசுமாக்கிற்குக் தந்தியனுப்பினன். அரசனுடைய குற்றமற்ற தந்தியைப் பிசு மாக்கு, பிரான்சை எதிர்த்துநிற்கும் சாரம் அமைய மாற்றி, மாற்றிய அவ்வரச கத்தை ஐரோப்பா முழுவதும் பிரசித்தப்படுத்தினன். பிரான்சிய மந்திரம் அதிகப்படியான ஒரு வாக்கால் இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித் தது. யூலை 19 ஆம் திகதி போர்ப் பிரகடனஞ் செய்யப்பட்டது.
1 இவற்றின் விவரம் மரியற்றின் “ஐரோப்பிய வரலாறு” எனும் நூலின் 255 ஆம்
பக்கத்தைத் தொடர்ந்த பக்கங்களில் உண்டு.

சேர்மனி ஐக்கியம் பூண்டமை 387
பிரான்சிய-சேர்மானியப் போர்
பிரான்சு போரிற்கு ஆயத்தமில்லையென்று நெப்போலியனுக்கு நன்முய்த் தெரி யும். அவன் தேகசு கம் குறைந்துகொண்டுவந்தது. பெரும்பாலும் இந்தப் போசைப் பிரகடனஞ்செய்ததின் பொறுப்புப் பேரரசியைச் சார்ந்ததாகும். * மிகுபுகழின் சுவையே ’ பேரரசைக் காவல் செய்யக் கூடுமென்று, தன் மகன் அரசனுவதற்கு வாய்ப்பளிக்குமென்றும் உறுதியாக அவள் நம்பினுள். ஆணுல், பிசுமாக்கும் உவோன் உரூனும் மொலிக்கும் ஆயத்தராயிருந்தார்கள். இரசியா வின் நட்பு நிச்சயப்படுத்தப்பட்டது. தென் சேர்மானியருக்கும் பிரசியருக்கு மிடை வர்த்தகத் தொடர்பும் படைத் தொடர்பும் உளமார்ந்தனவாக நெருங்கி வளர்ந்துகொண்டிருந்தன. படையைப் பொறுத்த அளவில் அது எக்கண மும் போருக்கு ஆயத்தமாய் இருந்தது. ஒகத்து 2 ஆம் திகதி 500,000 சேர் மானியர் போர்க்களம் புகுந்தனர். செத்தெம்பர் 2 ஆம் திகதி செடானில் நெப் போலியனும் ஒரு பெரிய பிரான்சியப்படையும் சரணடைந்ததுடன், போரின்
முதலாம் கட்டம் முடிவெய்தியது.
செடான் தோல்வியுடன் இரண்டாம் பேரரசு அழிந்தது. பேரரசன் சேர்மனி யிற் கைதியாக இருந்தான். பேராசியும் இளவரசனும் இங்கிலந்தில் அகதிகளா யிருந்தனர். செத்தெம்பர் 4 ஆம் திகதி குடியரசு பிரசித்தஞ் செய்யப்பட்டது. பிரசிய இளவரசனுல் முற்றுகையிடப்பட்டு, நாலு மாத முற்றுகையின் பின்னர் (28.1.1871), பாரிசு சரணடைந்தது. சிராசுபேக்கும் மெற்சும் முன்னரே வீழ்ச்சி யடைந்தன. எல்லாத்திசைகளிலும் சேர்மானியர் வெற்றிபெற்றனர். அதனல், தாங்கள் விரும்பிய நியதிகளைப் பிரான்சின் மீது திணிக்கவும் முடிந்தது. பிராங்குபோட்டுப் பொருத்தனையின்படி (10.5.1871), பிரான்சு இருபதுகோடி தங்கப்பவுண் நட்ட ஈடு கட்டவேண்டியதாயிற்று. பெல்பா தவிர்ந்த எஞ்சிய அல்சேசு மாகாணம் முழுவதும், கீழ் உலொரேனும், மெற்சும், சிராசுபேக்கும்
பிரசியாவுக்குக் கொடுக்கப்பட்டன.
வெற்றியின் பயன் சேர்மனிக்கு இவை மட்டுமல்ல. பிசுமாக்குத் தன் வாழ் நாட்பணியைப் பூர்த்திசெய்யக் கூடியவனைன். வட தென் சேர்மானிய ஐக்கிய வமைப்பின் நியதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. 1871 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் திகதி பிரசிய அரசன் உவிலியம், பேரரசு முடியைச் சேர்மானியச் சிற்றரசர்களிடமிருந்து ஏற்று, வேர்சையில் முதற் சேர்மானியப் பேரரசனகப் பிரசித்தஞ் செய்யப்பட்டான்.
சேர்மானியப் பேரரசு
வட சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பு, ஒசுத்திரியா தவிர்ந்த ஏனைய சேர்மன் நாடுகளையும் சேர்த்துப் பெரிதாக்கப்பட்டு, பிரசிய அரசனின் பரம்பரைத் தலைமையின் கீழ்க் கூட்டாட்சிப் பேரரசாக மாற்றப்பட்டது. பிசுமாக்கு பேரர சின் மண்டில நாயகனுன்ை. இவ்வண்ணமாக, சேர்மானிய ஐக்கியம் ஈற்றில் வெற்றிகரமாக எய்தப் பெற்றது.

Page 205

அத்தியாயம் 3忍
இரண்டாம் பேரரசும் மூன்ரும் குடியரசும்
முக்கியமான திகதிகள் :
1808
1836
1840
1840
芷84&
互&全&
1848
五848
卫85芷
I&52
உலுயி நெப்போலியனின் பிறப்பு. சிராசுபேக்கைத் தாக்கும் முயற்சி. பூலோன்மீது படையெடுப்பு.
ஆம் ' என்னுமிடத்தில் சிறைவைத்தல். பிரான்சிற் புரட்சி. இரண்டாம் குடியரசு. பாரிசில் நாட்டினத் தொழிற்சாலைகள்.
யூன் தினங்கள்' உலூயி நெப்போலியன் குடிப்பதியாகத் தெரிவு செய்யப்பட்டமை. (திசெம்பர்) முதலாம் ஆட்சிப் புரட்டு. பேரரசாதற்குக் குடியொப்பம்.
1852-9 பிரான்சில் சமூகச் சீர்திருத்தங்கள்.
f&54
1859
கிரைமியப் போர்.
இத்தாலிய சுயவாட்சிப் போர்.
1860-9 பிரான்சில் யாப்புச் சீர்திருத்தங்கள்.
1863
1864
1866
1866
186?
1869
重520
1820
1870
1871
1871
1872
1873
五8??
五 S25
1875
t879
1881
芷882
1888
299り
போலந்தில் கலாம்.
தேனிய கோமகவுரிமைகளிற் போர். ஏழு கிழமைப்போர். சடோவாவிற் பிரசிய வெற்றி. மாச்சிமிலியன் மெச்சிக்கோவிற் சுட்டுக்கொல்லபபட்டான். தாராளமுறையான பேரரசு. பிரான்சிய-சேர்மானியப் போர். பேரரசின் வீழ்ச்சி.
மூன்றம் குடியரசு.
பாரிசுச்சமிதி.
பிராங்குபோட்டுப் பொருத்தன. மூன்று பேரரசர் சங்கம்.
தியேசின் பின்னர் மாகுமாகன் குடிப்பதியானன். மூன்ரும் நெப்போலியனின் இறப்பு. குடியரசுயாப்பு நிறுவப்பட்டது. பிரான்சிய-சேர்மானிய நெருக்கடி. இருமை நட்புறவு (சேர்மனியும் ஒசுத்திரியாவும்). கியூனிசில் பிரான்சிய புரப்பகம். எகித்தை ஆங்கிலேயர் அடிப்படுத்தல். முதலாம் உவிலியத்தின் இறப்பு.
பிசுமாக்கு பதவி நீக்கப்படல்.

Page 206
390 இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும்
அரசியல் யாப்புப் பரிசோதனைகள் (1792-1830)
அரசியல் மாணவன் குறிப்பாக இக்காலப்பிரான்சுக்கு நன்றியுடையவனு யிருக்கக் காரணமுண்டு. பழைய முடியாட்சி 1792 இல் வீழ்ச்சி அடைய, அக் காலந் தொடக்கம் அந்நாடு ஒர் அரசியல் ஆய்வுக்கூடமாக விளங்கி வந்திருக் கிறது. 1792 இல் அமைத்த யாப்பு மூன்முண்டுகளுக்கு மட்டும் நிலைத்திருந்தது. அதற்குப் பதிலாக 1795 இல் பணிப்பாளர் முறைமை தோன்றிற்று. இது 1799 நவம்பர் 9 ஆம் திகதியன்று ஆட்சிப் புரட்சியினுல் வீழ, கொன்சல் ஆட்சியெனும் மறை பெயருடன் படைச்சருவாதிகாரம் முதன்மை பெற்றது. 1804 இல் நெப் போலியன் பேரரசனுக முடிதரித்துக் கொன்சல் ஆட்சியைப் பேரரசாட்சியாக மாற்றினன். முதலாம் பேரரசு பத்தாண்டுகளுக்கு நிலைத்திருந்தது (1804-14). 1814 இல் நெப்போலியன் தன் பதவியினின்றும் விலக, பிரான்சு பூபன் குலமுறை யினஞன பதினெட்டாம் உலூயியைத் திருப்பி அழைத்தது. 1815 இல் நெப்போலி யன் எல்பாவினின்றும் திரும்பிவர, பூபன் குலமுறையினர் ஒளித்தோடினர். நெப்போலியன் “நூறு நாட்கள் ” என்ற அரசியற் பரிசோதனை செய்து பார்த் தான். ஆனல் உவாட்டலூ அதற்கு முற்றுப்புள்ளியிட்டது. வெற்றியடைந்த நட்புறவாளர், பட்டயத்தால் வரையறுக்கப்பட்ட பிறப்புமுறை உரிமையை மீண்டும் புகுத்தினர். பதினெட்டாம் உலூயி அவ்வரையறைகளை மதித்து நடந் தான். ஆயின், பத்தாம் சாள்சு அவ்வாறு நடக்கத்தவறினன். 1830 இல் சென் கிளவுது என்னுமிடத்திலிருந்து அவன் வெளியிட்ட கட்டளைச்சட்டங்கள் ‘யூலைப் புரட்சியைத் துண்டிவிட்டன.
யூலை முடியாட்சி
பதினெட்டு ஆண்டுகளாகப் பிரான்சு யாப்புறுமுடியாட்சியைச் செயல் முறையில் சோதித்துப் பார்த்தது. உலூயி பிலிப்பு தன் வெண்மையான உயர்ந்த தொப்பியுடனும் பசுமையான பட்டுக்குடையுடனும் குடி-அரசகைத் தன்லைான மட்டும் அரசாள முயன்முன். ஆனல் தருக்கநூணுக்கம் பார்ப்பவரான பிரான்சிய மக்கள் குடி-அரசன் என்பதிலுள்ள பதங்கள் ஒன்றுக்கொன்று முரணுயிருப்ப தைக் கண்டார்கள், ஆங்கிலேயன் இணக்கக் கொள்கையிலேயே ஆழ்ந்த பிரிய முடையன். அது ஆங்கிலேய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறன். பிரான்சியனுக்கு இரண்டில் ஒன்றே தேவை-ஒன்றில் முடியாட்சி அல்லது குடியரசு, இரண்டின் கலப்பும் அவனுக்குத் தேவையில்லை.
இலையனிலும் மற்றும் கைத்தொழில் நகர்களிலும் பட்டினியால் வருந்தும் தொழிலாளர்களுக்கு உலூயி பிளாங்கு என்பான் 'தொழிலுரிமை' என்னும் நற் செய்தியை உபயோகித்தான். இப்பெயருடை ய அவன் கட்டுரை 1848 ஆம் ஆண் ப்ெ புரட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

இரண்டாம் பேரரசும் மூன்ரும் குடியரசும் 39
பாராளுமன்றச் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் ஓர் இயக்கம் சில காலமாக முன்னேறிக் கொண்டு வந்தது. சீர்திருத்தக்காரர் 1848 பெப்புருவரி 25 ஆம் திகதியன்று ஒரு விருந்தையும் மிகப் பெரிய ஆர்ப் பாட்டத்தையும் ஊர்வலத் தையும் நடத்தத்திட்டமிட்டிருந்தார்கள். அரசாங்கம், அதனுல் அமைதிக்குப் பங்கம் விளையுமெனப் பயந்து தடைவிதித்ததும், சீர்திருத்தக்காரர் தாங்கள் செய்த ஒழுங்குகளைக் கைவிடத் தீர்மானித்தனர். ஆனல் பொதுமக்கட் கும்பல் கலைய மறுத்துநின்றது. இந்த நிலைமையை அப்போது ஏற்பட்ட அரசியல் நெருக் கடி தணித்துவிட்டது. கீசோவின் அமைச்சு பதவியினின்றும் விலகியது. தியே சும் ஒதிலன் பறற்று என்னும் ஒரு தீவிர பருமாற்றவாதியும் புதியவொரு அமைச் சை அமைத்தனர். ஆனல் பதவிவேட்டையாடும் ஓர் அரசியற் குழுவிற்குப் பதி லாக வேருெரு குழு அமைவதே இம்மாற்றங்களின் பொருள் எனப் பசியால் தவிக் கும் தொழிலாளர் கொண்டனர். பெப்புருவரி 23 ஆம் திகதி கலம்பகம் தொடங் கிற்று. எட்டுப்பேர் கொல்லப்பட்டும் காயப்பட்டுமிருந்தனர். 24 ஆம் திகதி உலூயி பிலிப்பு, கொந்தே தி பரிசு என்ற இளம் பிராயத்தனன தன் பேரனின் சார்பாகத் தன் பதவியை நீத்தான். குடியரசினர் ஆத்திசம் கொண்டனர். கொந்தே தி பரிசு விலக்கப்பட்டுத் தற்காலிகமாக ஒரு குடியரசு அரசாங்கம் நிறுவப்பட்டது. உலூயி பிலிப்பும் அவன் அரசியும் இங்கிலந்துக்குப் பயந்தோடி
னர். இரண்டாம் (gy19. It T. J. ஆரம்பமாயது.
புதிய அரசாங்கத்தில் இருகட்சியினர் இருந்தனர். பேச்சு வன்மையுடைய இலமதினைத் தலைவனுகக் கொண்ட அரசியற் குடியரசு வாதிகளும், உலூயி பிளாங்கைத் தலைவகைக் கொண்ட சமூகவுடைமைவாதிகளும் அக்கட்சியினரா வர். சமூகவுடைமைவாதிகள் இந்நிலைமையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி நாட்டிலே தொழிற் சாலைகளை நிறுவுவதெனவும், /வேலையற்றேருக்கு அவற்றில் வேலை கொடுப்பதெனவும் தீர்மானித்தார்கள். ஆனல், தொழிலுரிமையென்ற கோட்பாட்டைப் பிரசித்தஞ் செய்தல் எளிது; தொழிற்றுறையைக் கட்டுக்
கோப்பாக அமைத்தலோ மிக அரிது.
இரண்டாம் குடியரசு
புதிய அரசாங்கம் நாட்டினத் தொழிற்சாலைகளை நிறுவவேண்டு மென்று ஆஞ்ஞை பிறப்பித்தது. ஆல்ை, தொழிற்சாலைகள் இருக்கவில்லை. உலூயி பிளாங்கு 2,000 தையற்காசருக்கு கிளிச்சியில் வேலை கொடுத்ததும், 6,000 பேரைத் தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக வேலைக்கமர்த்தியதும் உண்மையே. ஆனல் நிவாரணம் கோரினேர் தொகை பத்தாயிரக் கணக்காக அதிகரித்தது. இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வேலைக்குப் பதிலாக அரசாங்கம் அவர் களுக்கு உதவிப்பணம் அளிக்கவேண்டியதாயிற்று.

Page 207
392 இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும்
விரைவில், புதிய அரசாங்கத்தைப் பணமுறிவு எனும் அபாயம் எதிர்ந்து வந்தது. ஆனல் 23, 24 ஆம் திகதிகளில் நடந்தேறிய பொதுத்தேர்தலிற் புதிய பாராளுமன்றத்தில் மிதவாதிகளுக்குப் பெரும்பான்மையான வாக்குக்கள் கிடைத்தன. அரசாங்கம் துணிவுகொண்டு உதவிப் பணம் நிருவாகம் செய்யும் முறையை மீண்டும் கட்டுக்கோக்கவும் பாரிசிற்கு வந்த மாகாண வாசிகளை மீண்டும் வீட்டுக்கனுப்பவும், கூடியவளவு விரைவில் இந்தப்பரிசோதனை முறை யை முடிவுக்குக் கொண்டு வரவும் தீர்மானித்தது. பயங்கரமான கலகங்கள் கிளம்பின. பாரிசு ஒரு இரத்தக்களரிபோலக் காட்சியளித்தது. நாலுநாளாகத் தெருச் சண்டை நடந்தது. மிகுந்த உயிர்ச்சேதம் உண்டாயபின்னர், சருவாகி காரியாக நியமிக்கப்பட்ட கவயினுக்குத் தளபதி ஈற்றிற் கலகத்தை யடக்கி ஞன். குடியரசு சமூகவுடைமைவாதத்தை வென்றது. ஆணுல், சமூகவுடைமைக் கொள்கையை அழிப்பதோடு தன்னையும் " அழித்துக் கொண்டது.
1848 இல் வரையப்பட்ட புதிய யாப்பில், வளர்ந்தோர் வாக்குரிமையை அடிப் படையாகக் கொண்ட நேரடியான தேர்வின்படி குடிப்பதியைத் தெரிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கிசெம்பரில் நடந்த தேர்வில், பெப்புருவரி வீசனகிய இலமதினுக்கு 17,910 வாக்குக்கள் கிடைத்தன. குடியரசைக் காப்பாற்றிய கவ யினுக்கு என்பானுக்கு 14,48,107 வாக்குக்கள் கிடைத்தன. தன்பெயர், "ஒழுங்கு, நாட்டினம், மேன்மை' என்பனவற்றின் அடையாளமெனப் பிரகடனஞ் செய்த மூன்ரும் அபேட்சகன் 54,34,226 வாக்குக்கள் பெற்முன்.
இரண்டாம் பேரரசு
ஒல்லந்தின் அரசனுகிய உலூயி என்பானின் மகனன உலூயி நெப்போலியன் போனப்பாட்டு இளவரசன் 1808 இல் பாரிசிற் பிறந்தான். 1815 இலிருந்து 1848 வரையும் பிரான்சு நாட்டிலிருந்து புறம்போகியாயிருந்தான். 1830-31 காலப் பகுதியில் இத்தாலிய புரட்சியில் ஈடுபட்டிருந்தான். 1832 ஆம் ஆண்டின் பின்னர் பொருளாதாரம், அரசியல், படை ஆகிய விடயங்கள் பற்றித் தொடர்ச்சியான நூல்களை வெளியிட்டு பிரான்சியச் சமுதாயத்திடையே தன் பெயரை நிலைத் கிருக்கச் செய்தான். 1836 ஆம் ஆண்டிலும் 1840ஆம் ஆண்டிலும் குடிஅரச னுக்கு விரோதமாகப் பிரான்சிய மக்களைக் கலகம் செய்யும்படி வறிதே கிளர்ச்சியூட்டித் தன்னைத்தானே விளம்பரஞ் செய்தான். 1840 இல் பூலோனைத் தாக்கி அதன் பயனுக ஆம் என்னும் கோட்டையிற் சிறையிடப்பட்டான். 1846இல் இங்கிலந்துக்கு ஒளித்து ஓடி, ஒலியன்சுக்குலத்தின் வீழ்ச்சியின் பின், பாரிசுக்கு விரைந்து சென்று, பிரான்சுக்காகத் தன் சேவையையும் தன் வாளேயும் உதவி ன்ை. இவை இரண்டையும் பிரான்சு ஏற்கவில்லை. 24 மணி நேரத்திற் பிரான்சை
எல். பிளாங்கின் “தொழில் உரிமை”யையும் ஈ. தோமசின் “நாட்டினத் தொழிற் சாலையை’யும் (சே ஆர். மரியற்றின் முன்னுரையோடு கூடிய பதிப்பு) ஒட்சுபோட்டு 1913) காண்க.

இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும் 393
விட்டு வெளியேறும்படி நெப்போலியனுக்கு உத்தரவு இடப்பட்டது. என்ருலும் 1848 செத்தெம்பரில், அவன் தலத்திலில்லாதிருக்கவும் ஐந்து நாட்டுப் பகுதி களால் தேர்ந்தெடுக்கப்பட்டான். செத்தெம்பர் 26 ஆம் திகதி பதவியை வகிக்க உத்தரவு பெற்றன். திசெம்பரில் மக்களின் நேர்வாக்காற் குடிப்பதியாகத் தேர்ந்
தெடுக்கப்பட்டான்.
1849 இல் தெரிவு செய்யப்பட்ட மன்றத்தில், போனப்பாட்டுக் கட்சியினர் குறைவாகவே இருந்தனர். ஆனல் மன்றம் தன் பிற்போக்குப் பூட்கையினல் அவன் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பளித்தது. 1850 இல் அவன், யாப்பு முற் முகத் திருத்தப்படவேண்டுமென்று பிரகடனஞ் செய்தான். மன்றம் இதை எதிர்த்தது. 1851 ஆம் ஆண்டு கிசெம்பர் மாதம் 1 ஆம் 2 ஆம் திகதிகளில் குடிப் பதி தன் முதல் ஆட்சிப் புரட்சியை நிறைவேற்றினன். பிரான்சு முழுவதும் அப்புரட்சியை ஐயத்துக்கிடமில்லாது ஒப்புக்கொண்டது. குடிப்பதியின் கருத் துப்படி யாப்புத் கிருத்தியமைக்கப்பட்டது. அவன் பதவி நீடிக்கப்பட்டதோடு, அவன் அதிகாரமும் பெரிதும் அதிகரிக்கப்பட்டது . பேரரசு பாம்பரையாக இருக்க வேண்டுமென்பதற்குச் சாதகமாக 1852 நவம்பர் மாதத்திற் குடியொப் பம் தீர்ப்புக்கொடுத்தது. திசெம்பர் 2 ஆம் திகதி இளவரசுக் குடிப்பதி, பேரரசன் மூன்றம் நெப்போலியன் எனப் பிரசித்தம் செய்யப்பட்டான். இரு மாதங்களின் பின்னர், அழகிற் சிறந்தவளெனினும் அரச குடும்பத்தைச் சேராதவளான இசுப் பானியப் பெருமாட்டியாகிய யூசெனி கவுந்தசு கி தேபா என்பாளைத் திருமணஞ் செய்தான். 1856 இல் அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்தான். பேரரசி அறங்கள் செய்வதில் வண்மையுடையளாயிருந்தும், அவள் இதயம் உணர்ச்சியற்றதா யிருந்தது. குருமாரைத் தவிரப் பிரான்சில் அவளுக்கு நண்பர்கள் இல்லையென
லாம்.
f
சமாதானமே இப்பேரரசின் குறிக்கோள் ஆகும். ' குடியொப்பத்தின் வழி அவனுக்குப் பேரரசு வாய்ப்பதற்கு முன்பாக, ஒரு சிறந்த சொற்பொழிவில் இவ் வண்ணம் நெப்போலியன் முதலாம் பேரரசின் மரபையும் இரண்டாம் பேரரசின் பூட்கையையும் அறிவித்தான். இரண்டாம் பேரரசின் வரலாறு, முன்விரித்துக் கூறியபடி கிரைமியா, இத்தாலி, மெச்சிக்கோ, பிரான்சு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாய் நிகழ்ந்த போர்களின் வரலாறேயாகும். ஆனல் பிரான்சின் புதிய ஆட்சியாளனின் முயற்சிகள் போர்புரிவதோடு நின்றுவிடவில்லை. அவன் அர சாட்சி தனியாட்சியாயினும், தண்ணளியுடையதாகவுமிருந்தது. பேரரசின் முதற் பத்தாண்டுகளும், பிரான்சு இழந்தவற்றை மீண்டும் அடைந்து செழித்தோங்கி வளர்ந்த காலமாகும். அரசுக்கும் கிருச்சபைக்குமிடையில் நட்புறவு நிலை நாட்டப்பட்டது. திருச்சபை மீண்டும் கல்வித்துறையில் பெரிதும் ஆதிக்கம் பெற்றது. சமூக ஒழுங்கு மீண்டும் நிறுவப்பட்டது. ஆட்சியறவுச் சத்திகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. கைத்தொழிலுக்கு எல்லாவித ஊக்கமும் அளிக்கப் பட்டது. போக்குவரத்து வசதிகள் கிருத்தியமைக்கப்பட்டன. தெருக்கள், கால்
வாய்கள், துறைமுகங்கள் ஆகியன கட்டப்பட்டன. இதுவரையும் முற்றுப்

Page 208
394 இரண்டாம் பேரரசும் மூன்ரும் குடியரசும்
பெருத பிரான்சின் இருப்புப்பாதை முறைமை வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் கட்டிமுடிக்கப்பட்டது. வணிகம், கைத்தொழில், விவசாயம் ஆகிய வற்றை ஆதரிக்கும் நோக்கமாக நாட்டின் நாணய வளங்கள் ஒன்று திரட்டப் பட்டன. நிலத்தின் மேற் கடன்கொடுக்கும் வங்கி, அசையும் பொருட்குப் பணம் கொடுக்கும் வங்கி என இரு மத்திய வங்கிகள் நிறுவப்பட்டன. பாரிசிலும் மாகாணங்களிலும் நில உடைமை வங்கிகள் தாபிக்கப்பட்டன. வணிகமும் கைத் தொழிலும் இத்தூண்டுதலுக்கு உடன் பிரதிபலனளித்தன. இருபது ஆண்டுகளிற் கைத்தொழில் உற்பத்தி இருமடங்காயது. விவசாயச்சங்கங்களின் தொகை பெரு கியது. குதிரை வளர்த்தலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. சதுப்பு நிலங்கள் வற்றப் பண்ணப்பட்டு, நன்செய் நிலமாக்கப்பட்டன. பாரிசு திருத்தியமைக்கப்பட்டது; கூடிய விசாலமானதாகவும் துப்பாவானதாகவும், மிக அழகானதாக இல்லா விட்டாலும் கூடிய பகட்டானதாகவும் அது அமைக்கப்பட்டது ; தொழிலாளர் களுக்கு வீடுகள் அமைக்கவும், வயதானவர்களுக்கும் எதிர்பாராத இடர்களுக் குட்பட்டவர்களுக்கும் காப்புறுதியளிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன; தொழிலாளர் சங்கங்கள் சட்டவனுமதிக்குள்ளாயின; உதவிசெய் சங்கங்கள், ஐக்கிய சங்கங்கள் ஆகியன அமைத்துச் சிக்கனம் ஊக்கப்படுத்தப்பட்டது ; கைத்தொழிற் பொருட்காட்சிகள் மலைக்கவைக்கக்கூடிய அளவிற்கு ஆதரிக்கப் பட்டன; கொபிடன் பொருத்தனையை நிறைவேற்றி, பிரான்சுக்கும் இங்கிலந் துக்குமிடையில் வணிகத்தொடர்பு தங்குதடையின்றி முன்னேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நடவடிக்கை பிரான்சியக் கைத்தொழிலாளருக்குப் பூரண திருத்தியளிக்கவில்லை. இவைகளொவ்வொன்றையும் பேரரசனே முன்னின்று தூண்டினன். இவையெல்லாம் நன்மையே விளைத்தன. ஆனல் பேரரசனின் வெளி நாட்டுப் பூட்கையின் விளைவுகளோ வாதத்திற்குரியன. கிரைமியப்போரினல் இவன் பெரு மதிப்படைந்தான் என்பதில் ஐயமில்லை. 1856 இன் பின்னர் கண்டத் தில் இவனே முதன்மையானவனுயிருந்தான். அவனுடைய சொந்தக் குடிகளும் அவனை வீரனென மதித்தனர். ஆனல் சாடினியாவுடன் அவன் செய்த நட்புற வில்ை, பிரான்சிலுள்ள குருவாயத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இரு சிசிலிகளி லிருந்தும் பூபன் குலமுறையினர் வெளியே துரத்தப்பட்டமை, பிறப்புரிமை முறையாளர் மன்னிக்கக்கூடிய ஒன்றன்று. மெந்தான என்னுமிடத்தில், கரி போல்தியின் கட்சியினரைத் தடிந்தமை குடியாட்சிவாதிகளுக்குச் சினமூட்டி யது. நீசையும் சவோயையும் ஈட்டியமை பிரான்சின் தற்பெருமைக்குப் புகழா யமைந்ததெனினும், முன்கூறிய தவறுகளுக்கு அவை ஈடாகா.
முன்னிலும் பெருங்கேடு வர இருந்தது. பிரான்சு போலந்தின் பரம்பரை நண்பன். ஆகவே 1863 இல் போலந்தில் நிகழ்ந்த கலாம், பிரான்சு உன்னதநிலை அடைந்திருந்த காலத்தில் உறுதியாகப் பின்பற்றிய பூட்கையைப் புதுப்பிக்க வும், இப்பூட்கைக்கும் பேரரசனுக்கும் ஆதரவாக உள்ளூர்க் கட்சியினானவரை யும் கிரட்டவும் சிறந்த வாய்ப்பளித்தது. அவன் சார் நிக்கலசுக்கு எதிராகக்

இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும் 395
கடுமையான தடையுரை விடுத்தான். ஆனல் சாரோ பிசுமாக்கின் ஆதரவை உறுதியாக நம்பி, ஆங்கிலேயரின் கருத்தை அலட்சியஞ்செய்து, நெப்போலியன் விடுத்த தடையுரையைப் புறக்கணித்தான். போலந்து நடப்பவற்றை அனுபவிக்க வேண்டியிருந்தது.
தேனிய கோமகவுரிமைகள் பிசுமாக்கினுல் 1864 இல் தாக்கப்பட்ட பொழுது, அவற்றின் கதியும் அதேகதியாயது. இந்நாடுகளைத் தக்கவேளையில் இவன் கை விட்டதற்கு நெப்போலியன் இங்கிலந்தின்மீது குற்றங்கூறியமை ஓரளவிற்கு ஏற்புடையதாகும். இக்காரணத்தாற் பிரான்சு அளித்த உறுதிமொழியை அவன் மதித்து நடக்கத் தவறியது, அவன் மாண்பிற்கு இழுக்காயிற்று.
இதன்பின்னர், அனர்த்தமாய் முடிந்த மெச்சிக்கோச் சம்பவம் நிகழ்ந்தது. பிரான்சுக்கு ஏராளமான கடன்கொடுக்க வேண்டிய மெச்சிக்கோவில் ஒழுங்கற்ற நிலையும் உள்நாட்டுக் கலகமும் முற்றிவளர்ந்தன. திருச்சபையையும் முடியாட்சி யையும் சார்ந்த கட்சியினர் ஐரோப்பாவின் பாரிய கத்தோலிக்க வல்லரசு களிடம் உதவிகோரினர். ஒசுத்திரியப் பேரரசனின் மைத்துனதும் பெல்சிய அரசன் இலியோபோலின் மருமகனுமாகிய மாச்சிமிலியன் என்பானையே, அவர் கள் கோரிக்கைக்கு இணங்கி, நெப்போலியன் பேரரசனுக அனுப்பினன். அபிசு பேக்குக் குலமுறையினர், சாட்சே கோபேக்குக் குலமுறையினர், ஒலியன்சுக் குலமுறையினர், பிரான்சியக் குருமார் ஆகியோரைத் திருத்தி செய்வதே அவன் நோக்கமாயிருந்தது. ஆனல் மாச்சிமிலியனைச் சிம்மாசனத்திலேற்ற 40,000 படை ஞர் தேவைப்பட்டனர். இவர்கள் வெளியேறியவுடனும் அவன் கைதி யாக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டான் (1867), நெப்போலியன் மெச்சிக்கோ வில் இவ்வாறு தலையிட்டுப் படுதோல்வியடைந்தமை அவனுடைய மதிப்பைப் பெரிதும் குறைத்தது. அவனுக்கிருந்த எஞ்சிய மதிப்பையும் பிசுமாக்கு அழிக்கத்
M
தலைப்பட்டான்.
தாராள முறைப் பேரரசு
இதற்கிடையில், பிரான்சின் உண்ணுட்டு அரசாங்கத்தில் முக்கியமான மாற்றங் கள் செய்யப்பட்டன. 1852 ஆம் ஆண்டிலிருந்து 1859 ஆம் ஆண்டு வரையும் பேரரசனுக்கு மாமுக இருந்த எதிர்ப்பு யாவும் தணிக்கப்பட்டன. பாலனம் தண்ணளியுடையதாகவிருந்தபோதிலும், ஆட்சி முற்ருன தனியாட்சியாகவே யிருந்தது. தனியாட்சி எல்லையில்லாமல் நீடிக்க முடியாதென்பதை விளங்கும் நுட்ப புத்தி படைத்தவனை நெப்போலியன், தன்மதிப்பு மங்குமுன்னரே அர சியல் யாப்பைத் தாராளப்படுத்தத் தீர்மானித்தான்.
1859 இல் அரசியற் குற்றவாளிகள் யாவர்க்கும் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை அளித்தான். இதனல் பல குடியரசினரும், கூடிய தொகையான ஒலியன்சுக் குலமுறையினரைச் சார்ந்த தாராண்மையாளரும் பிரான்சுக்குத்

Page 209
396 இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும்
திரும்பி வந்தனர். யூலசு பாவர் தன்லமையிலே சட்டசபையிற் சிறிய ஒழுங்கான ஓர் எதிர்க்கட்சி தோன்றியது. அதன் தொகை 1863 ஆம் தேர்தலில் இன்னு மதிகரித்தது. படிப்படியாக 1860 ஆம் ஆண்டிலும், 1861 ஆம் ஆண்டிலும் இன்னு மதிகமாக 1867 ஆம் ஆண்டிலும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் போதியவளவு க்கு அளிக்கப்பட்டன. ஆனல் ஆங்கிலேயர் கருத்துப்படியான பொறுப்பமைச் சினை ஈயப் பேராசன் தயங்கினன். அவன் மக்களால் தெரியப்பட்டவனென்ற காரணத்தால் அரசியல் நிருவாகம் அவன் கையில் மட்டுமே இன்னும் இருக்க வேண்டுமென்பது அவன் கருத்து. 1869 தேர்தலின் பின்னர் தனியாட்சியில் எஞ்சியிருந்த அவ்வதிகாரமும் கைவிடப்பட்டது. நிதிமீதும், சட்டம் மீதும் பூரண அதிகாரமுள்ள, பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான அமைச்சை அமைக்கும்வேலை ஒலிவியரிடம் ஒப்படைக்கப்பட்டது. யாப்புறு முடியாட்சி நிறைவேறியது.
நெப்போலியன் இவ்வளவோடு நிற்கவில்லை. பாலனத்தைப் பன்முகப்படுத்தல், மேற்சபையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல், தல ஆட்சியைக் குடியாட்சிப் படுத்தல் ஆகியனவற்றை எய்தப் பரந்த விரிவான ஒரு திட்டம் பாராளுமன்றத் தால் நிறைவேற்றப்பட்டு, குடியொப்பத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. 1870 மே மாதம் 8 ஆம் திகதி இக்குடியொப்பம் எடுக்கப்பட்டது. நாலு மாதங்களின் பின்னர் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
பிசுமாக்கும் நெப்போலியனும்
'பிரான்சு போரிற் படுதோல்வியடைந்தமையே இத் திடீர் வீழ்ச்சிக்குக் கார ணம். 1870 ஆம் ஆண்டில், பிசுமாக்கு நெப்போலியனை ஏமாற்றிப் போரிற் கிழுத்தான். ஆண்டுக்கணக்காகப் பிசுமாக்கு நெப்போலியனுக்கு விளையாட்டுக் காட்டி வந்துள்ளான். பிரசியா வெற்றியடைந்தால், ஈடாக விசாலமான ஆள் புலத்தைக் கொடுப்பதாகக் கூறி, ஏழு கிழமைப் போரில் அவனை நடுநிலைமை வகிக்கும்படி செய்திருந்தான். அவ்வாள்புலம் பெல்சியம், இலட்சம்பேக்கு பலற்றினெற்று ஆகியவற்றுள் ஒன்ருயிருக்கலாம். சடோவாப் போரின் பின், இவ் வாசைவார்த்தைகளைப் பிசுமாக்கு மெல்ல மறந்துவிட்டான். இவைபற்றிப் பிசு மாக்கிற்குப் பிரான்சு நினைவூட்ட முயன்ற பொழுது, அம்முயற்சிகளைப் பிரான் சுக்கும் இங்கிலந்துக்குமிடையேயுள்ள உறவைக் கசக்கச் செய்யவும், பிரான்சிய சேர்மானியப் போரில் தென் சேர்மானிய நாடுகளைப் பிரசியாவுடன் சேரச் செய்யவும் பிசுமாக்கு சாதுரியமாகப் பயன்படுத்தினன்.
மூன்ரும் குடியரசு
அந்தப் போரின் வரலாறு, அதன் தோற்றம், விளைவுகள், ஆகியன முன்னரே கூறப்பட்டன. பேரரசு விழக் குடியரசு நிறுவப்பட்டது. பிறநாட்டுப் பகைவ
ணுடன் ஒழுங்கு செய்த அமைதி நியதிகளை ஏற்குமுன், பாரிசிற் கிளம்பிய கலாத்

இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும் 397
தைக் குடியரசு நிருவகிக்க வேண்டியதாயிற்று. சேர்மானியர் இன்றும் சென் தெனிசில் நின்றர்கள். நாட்டினப் பாதுகாப்பு அரசாங்கம் வேர்சையில் நிறுவப் பட்டிருந்தது ; சமிகி பாரிசைக் கைப்பற்றியது. பாரிசு, சேர்மானியருக்கெதி ராக 1870 ஆண்டு இலையுதிர்காலத்தில் நாலுமாதம் பொருது நின்று, மூன்று மாதத்திலும் குறைந்த ஓய்வின் பின்னர், மாக்குமாகன் தலைமையின்கீழுள்ள ஒரு பிரான்சியப் படையால் ஆறுகிழமையாக மீண்டும் முற்றுகையிடப்பட்டது. 1871 மே 21 ஆம் திகதி மாக்குமாகன் பலவந்தமாக நகருக்குட் புகுந்து, ஏழு நாட்கள் தெருச்சண்டைக்குப் பின்னரே தலைநகரைக் கைப்பற்றினன். ஒருகட்சி வதம் செய்ய, மறுகட்சி அதற்குப் பழிவாங்கியது. ஏறத்தாழ 20,000 பேர் வாளுக்கிரையாகினர். 40,000 பேர் கைதிகளாயினர். படை மன்றின் வழக்கு விசாரணை 1876 வரையும் முடிவெய்தவில்லை. சேர்மனியால் தோற்கடிக்கப்பட்ட உடனே இவை நிகழ்ந்தன. இது குடியரசுக்குப் பயங்கரமான ஒரு சோதனை யாயிருந்தது. ஆனல் குடியரசு உயிர் பிழைத்தது. பிரான்சு காப்பாற்றப்பட்டது.
பிரான்சு சீரடைதல்
இந்த இரு கடுந்துன்பமான நிகழ்ச்சிகளுக்குப்பின்னும், பிரான்சு ஆச்சரியப் படத்தக்க விரைவில் மீண்டும் நல்ல நிலைமையை அடைந்தது. 1871 பெப்புருவரி யில் நாட்டின நிருவாகத்தின் தலைவனக நியமிக்கப்பட்ட தியேசு என்பான் ஒகத்து மாதத்திற் குடியரசின் குடிப்பதியானன். 74 வயதினனை இந்தத் தேர்ச்சி மிகுந்தவனின் ஆர்வமும் ஆற்றலும் நாட்டினரிடையே பரவின. போரா அலும் சமிதியாலும் பிரான்சிற்கு 61,40,00,000 தங்கப்பவுண் பொருள் செலவா யிற்று. 4,91,000 மக்கள் உயிரிழந்தனர்; 15,97,000 குடிகள் பிரான்சிய ஆட்சி யிலிருந்து சேர்மனிய ஆட்சிக்கீழாயினர். சேர்மனிக்குக் கட்டவேண்டிய நட்ட ஈடு 20,00,00,000 தங்கப்பவுனும் மூன்முண்டுகளிற் கட்டி முடிக்கப்பட்டது. அக் கால முடிவில் சேர்மானியப் படைஞனுெருவனும் 4பிரான்சிய நிலத்தில் இருக்க வில்லை. பிரான்சின் இரத்தத்தை ஒரு சொட்டுமில்லாமல் கறந்தெடுக்கவேண்டு மென்ற தன் எண்ணம் தவறியதைப்பற்றிப் பிசுமாக்கு வெறுப்புக்கொண்டு, மீண்டும் போர் தொடுக்க 1875 இல் உண்மையாக யோசித்தான். விற்றேறியா இராணி பிசுமாக்கின் திட்டத்தைத் தன் மக்கள் மூலம் அறிந்து, பேராசன் உவிலியத்துக்குத் தானுகவே முறையீடு செய்தாள். சார் அலச்சாந்தரும் அவள் வேண்டுகோளை ஆதரித்தான். சேர்மனி இனிமேல் பிரான்சைத் தாக்கினல் இரசிய நடுநிலைமையைச் சேர்மனி எதிர்பார்க்கமுடியாதென்றும் எச்சரிக்கை செய்தான். ஆகவே பிசுமாக்கின் திட்டம் கைகூடவில்லை.
குடியரசு யாப்பு
அதே ஆண்டிலேயே பிரான்சிற் குடியரசு திட்டமாக நிறுவப்பட்டது. 1873இல்,
முடியாட்சியினனை மாக்குமாகன் தியேசின் இடத்திற் குடிப்பதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். பிறப்பு முறை உரிமைக்கட்சியினரும் ஒலியன்சுக் கட்சி

Page 210
398 இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும்
யினரும் தங்கள் வேறுபாடுகளைக் கைவிட்டு இணங்கியிருந்தால், ஐந்தாம் என்றி (கெந்தே திசாம்போட்டு) மீண்டும் சிங்காசனம் ஏறியிருப்பான். சந்ததியில்தா மையால், சிங்காசனம் உலூயி பிலிப்பின் போன் கொந்தே தி பாரிசிற்குச் சென் றிருக்கும். 1873 இல் மூன்ரும் நெப்போலியன் இங்கிலந்திற் காலமானன். அவன் மகனுக்குப் பதவியேற்கும் வயதாகவில்லை. ஐந்தாம் என்றி மூவர்ணக்கொடியை அங்கீகரிக்கச் சற்றும் இணங்காதபடியால், பிறப்புரிமை உரிமையாளரின் வாய்ப்புக்கள் பாழாயின. தொடர்ச்சியாக அரங்கேறிய யாப்புறு சட்டங்கள் பிரான்சியக் குடியரசை இப்போதைய உருவத்தில் நிறுவின. இரு மன்றங்களும் நாட்டின மன்றமாக ஒருங்கமர்ந்து தெரிந்தெடுக்கும் குடிப்பதியே அரசின் 'யாப்புறு தலைவனுவான். நேரடியல்லாத் தேர்தலை அடிப்படையாகக்கொண்ட ஒரு செனற்றையும், பிரதிநிதிகள் மன்றத்தையும் கொண்டுள்ள சட்டசபைக்கு அமைச்சு பொறுப்புள்ளதாயிற்று. இந்தயாப்பு நாட்டின மன்றத்தின் வாக்கால் மட்டுமே திருத்தப்படலாம்.
பிசுமாக்கும் ஐரோப்பாவும்
பிரான்சிய-சேர்மானியப் போரின் பயணுகப் பிசுமாக்குப் பிரசியாவின் தலைவ ஞனன். பிரசியா சேர்மனியிலே தலைநாடாயது. சேர்மனி ஐரோப்பாவின் முதல் ஆதிக்கநாடாயது. 1890 வரையும் பிசுமாக்கு அதிகார பீடத்திலிருந்தான். அவ னுடைய உண்ணுட்டுப் பூட்கை, உயர்ந்த உள்நாட்டுக் கைத்தொழிற் காப்பும், அரசு ச்சமுகவுடைமையும் நுட்பமாகக் கலந்த ஒன்றும். சேர்மனி ஈற்றிற் பிரசி யாவின் தலைமையில் ஐக்கியப்படுத்தப்பட்டு, குடித்தொகையிலும் கைத்தொழி லிலும் தீவிரமாய் முன்னேறியது. விவசாய நாடாயிருந்த அந்நாடு ஆச்சரியப் படத்தக்க விாைவிற் கைத்தொழில் நாடாக மாறியது. குடிக்தொகை பெருகிவர வாழ்க்கை வசதிகள் குறைந்து வர நாட்டு மக்கள் பெருந்தொகையினர் வெளி நாடுகளில்-முக்கியமாக ஐக்கிய நாடுகளிலும் பிறேசிலிலும்-குடியேறினர்கள். அதன் கைத்தொழில் அதிபர்கள் கடல் கடந்த நாடுகளிலிருந்து மூலப்பொருட் களை இறக்குமதி பண்ணவேண்டியிருந்தது. மேலதிகமான உற்பத்திப் பொருட் களை விற்கக் கடல் கடந்த நாடுகளில் சந்தைகளைத் தேடினர். ஆகவே சேர்மனி குடியேற்ற நாடுகளைத் தேட ஆரம்பித்தது. நாங்கள் பின்னர் காணப்போகிற வாறு, அவைகளை ஆபிரிக்காவிலும், பசிபிக்குத் தீவுகளிலும் சேர்மனி அடைந்தது.
தனது நாட்டுக்கு ஆள்புலந் தேடுவதிலன்றி, உள்ளதைக் காப்பதிலேயே பிசுமாக்கு முக்கிய கவனஞ் செலுத்தினன். தான் கட்டியெழுப்பிய மகத்தான கட்டடத்தை எக்காலத்தும் நிலைநிற்கச் செய்வதே அவன் போவாவாகும். இந் நோக்கத்துடன் மூன்று பேரரசுகளுக்கிடையில் (இரசியா, ஒசுத்திரியா, சேர்மனி) ஒரு நட்புறவை உறுதிப்படுத்தினன். சேர்மனிக்கு, வியன்னவுடனே சென் பீற்றசுபேக்குடனே எவ்வித சச்சரவுமில்லாவிட்டாலும், இவ்விரு நட் புறவாளருக்கிடையிற் போற்கன் நாடுகளில் முரண்பாடு இருந்தது. பேளின்

இரண்டாம் பேரரசும் மூன்றம் குடியரசும் 399
பேரவையில், முன்னர் கூறியபடி, பிசுமாக்கு இரு நட்புறவாளருள் ஒருவரைத் தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவன் பேளினுக்கும் பீற்றசுபேக்குக் குமிடையிருந்த தொடர்பைத் துண்டிக்க மறுத்தான். ஆனல் 1878 ஆம் ஆண்டின் பின்னர் சேர்மனிக்கும் இரசியாவுக்குமிருந்த நட்பு நலிவடைந்தது. ஒசுத்திரியா வின் நட்பே மேன்மேலும் சேர்மனியின் குழியலுக்கு முக்கிய ஆதாரமாயது.
பின்னர் பிசுமாக்கு சேர்மனியின் அயல்நாடுகளை ஒன்ருேடொன்று சச்சரவு செய்யத் தூண்டிவிட எத்தனித்தான். ஆகவே, 1818 ஆம் ஆண்டில் தியூ நாட்டை ஒரு புரப்பகமாக்குமாறு பிரான்சை அவன் ஏவினன். இதனுல் பிரான் சுக்கும் இத்தாலிக்குமிடையேயுள்ள நட்புக் குறைந்தது. எனவே, இத்தாலி. சேர்மனிய ஒசுத்திரிய நாடுகளுடன் சேர்ந்து (1882) மூவர் நட்புறவை உருவாக் கிற்று. அந்நட்புறவு 1915 வரையும் நிலைபெற்றது. 1882 ஆம் ஆண்டிலும் பின்னரும், இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமுள்ள நட்பைக் கெடுக்கும் நோக்கொடு எகித்தை அடிப்படுத்தி வைத்திருக்குமாறு இங்கிலந்தைத் தூண்டினன். இங்கிலந் தையும் இரசியாவையும் கலகத்திற் சிக்கவைக்க எண்ணி, இரசியாவினை மத்திய ஆசியாவை நெருங்கச் செய்தான். இந்தப் பூட்கை குறிப்பாக வெற்றிபெற்றது. ஆனல் 1888 ஆம் ஆண்டில், வயது சென்ற பேரரசன் முதலாம் உவிலியம் கால மாக, 1890 ஆம் ஆண்டில் அவன் பின்னர் பேரரசனுன இரண்டாம் உலிலியம் * பழைய வழிகாட்டியைக் கைவிட்டான். பிசுமாக்கின் நீண்ட ஆட்சி முடி வெய்தியது. அவன் வீழ்ச்சியின் பின்னர் ஒரு குழியற் புரட்சி நிகழ்ந்தது. இப் புரட்சி இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் உலகத்தைப் போரிற் சிக்கவைப் பதாயிற்று.

Page 211

அத்தியாயம் 33
ஐரோப்பாவின் அகற்சி (உவெல்
பொலிற்றிக்கு) (1871- I
முக்கியமான திகதிகள்:
互869
芷82五
1871
1873
1825
18? is
1876
1879
1880
1881
芷88芷
1882
1882
1883
i883
i 384
1884
1884
互&84
1885
1888
1888
1890
சுவெசுக்கால்வாய் திறக்கப்படல். பசுத்தோலந்து முனைக்குடியேற்ற நாட்டுடன் வலிந்திணைக்கப்பட்டது. மேற்குக் கிரிக்குவாலந்து வலிந்திணைக்கப்பட்டது.
அசாந்திப் போர். 4. விற்றேரியா இராணி இந்தியாவின் பேராசியாகப் பிரசித்தஞ் செய்
ll it it fl –Gl.
கேடிவு என்பானின் பங்குகளை இங்கிலந்து விலைக்கு வாங்கல். திரான்சு வால் வலிந்திணைக்கப்பட்டது.
குலுப் போர்.
போவர்ப் போர்.
திரான்சு வால் திருப்பிக் கைப்பற்றப்பட்டமை. பிரான்சியர் தியூனிசைக் கைப்பற்றல்.
அரபி பாசாவின் கலகம்.
இங்கிலந்து எகித்தைக் கைப்பற்றல். ஒல்லந்துக் குடியேற்ற நாட்டுச் சங்கம் நிறுவப்பட்டது. சூடான் கலகம்.
காட்டூமிற் கோடன். அவன் மரணம் (1885). ஆபிரிக்காவிற் சேர்மானியர். பேளின் மாநாடு. ஆபிரிக்காவின் பிரிவினை.
பசுபிக்கிற் சேர்மானியர்.
மசோவாவில் இத்தாலியக் குடியேற்றம். பிரித்தானியக் கிழக்கா பிரிக்கச் சங்கம். வட போணியோ, சரவாக்கு என்னும் நாடுகள் மீது பிரித்தானியப்
பரப்பாட்சி.
ஆபிரிக்காவின் இறுதிப் பிரிவினை.

Page 212
402 ஐரோப்பாவின் அகற்சி
1893 மத்தாபிலிப் போர். 1894 உகந்தாப் புரப்பகம். 1895 சேமிசனின் தாக்குதல். 1895 வெனசுவெலாவின் எல்லைப் பிரச்சினை.
1898 பசோடா நெருக்கடி. 1898 இசுப்பானிய-அமெரிக்கப் போர். 1898 கியாச்சோ, போட்டாதர், வேகாவி ஆகியன முறையே சேர்மனி,
இரசியா, இங்கிலந்து ஆகிய நாடுகளாற் கைப்பற்றப்படல். 1898 பசுபிக்குத் தீவுகளின் பிரிவினை. 1899 தென் ஆபிரிக்கப் போர்-1902. 1899 ஆங்கிலேய-பிரான்சிய உடன்படிக்கை (ஆபிரிக்கா). 1899 சீனுவில் பிறநாட்டினருக்கு விரோதமாக எழுச்சி. 1902 ஆங்கிலேய-இத்தாலிய உடன்படிக்கை (வடஆபிரிக்கா). 1902 ஆங்கிலேய-யப்பானியப் பொருத்தன. 1904 இரசிய-யப்பானியப் போர்.
1910 தென்ஆபிரிக்கா ஐக்கியம் பூணல்.
புதிய ஊழி
1870 இனைத் தொடர்ந்த பத்தாண்டுகால வரலாறு முந்திய அதிகாரங்களிற் கூறப்பட்டது. இவைகளில் மூன்று அதிகாரங்கள் உண்மையில் 1871 ஆம் ஆண்டுடன் நின்றுவிட்டன. நாலாவது 1878 உடன் நின்றுவிட்டது. இதற் குக் காரணமும் உண்டே, ஒரு முதன்மையான ஊழி முடிந்து வேருேர் ஊழி ஆரம்பிக்கும் காலமுனையை ஏழாம் பத்தாண்டு குறிக்கின்றது. 1871 ஆம் ஆண் டில் இரு பெரும் வல்லரசுகளான, சேர்மனியும் இத்தாலியும், தங்கள் குறிக் கோளாகிய நாட்டின ஐக்கியத்தை எய்தின. மூன்மும் வல்லரசாகிய பிரான்சு யாப்புச் சார்ந்த நீண்ட தொடர்ச்சியான சோதனைகளை முடித்து, பழைமை பேணும் பாராளுமன்றக் குடியாட்சியை நிறுவியது. இவ்வரசியல் முறைமை, முதலாம் புரட்சியின் பின்நிகழ்ந்த வேறெவ் வாசியல் முறையினும் இரு மடங்கு காலம் நிலைத்திருந்தது. இத்தாலி உரோமில் நுழைந்த அந்த ஆண்டிலேயே-- கிரந்துக் கழகம் கூடிய காலத்திற்குப் பின்னர்-திருச்சபைப் பொதுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. போப்பாட்சியின் முதலாம் ஆஞ்ஞையும் அதே ஆண்டில் வெளிப்பட்டது. “இந்த ஆஞ்ஞை உரோமன் கிருச்சபையானது தான் தோல்வி யுற்ற நேரத்தில் தனக்குத் தானே கொடுத்த, வலியூட்டும் மருந்துபோன்றது ; இக்கால உலகத்தை எதிர்க்குந்தன்மையது; இத்தாலிய நாட்டினப்பற்றென்னும் 'திருப்பழியை 'க் கண்டிப்பது ”, என பிசர் என்னும் பேரறிஞர் அந்த ஆஞ்ஞை

ஐரோப்பாவின் அகற்சி 403
யைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்ருர், இந்தப் பத்தாண்டு முடியுமுன்னர் துருக் கியப் பேரரசு ஐயத்துக்கிடமின்றிச் சிதைவுறத் தொடங்கியதையும் ஐரோப் பாவிலிருந்து துருக்கியர் வெளியே துரத்தப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய போற்கன்நாடுகளின் புத்தெழுச்சியையும் பேளின் பேரவை கண் அணுற்றது.
இவ்வண்ணமாக ஐரோப்பாவிற் பெரும் பாகமானது பல்வேறு அரசுகளாகப் பிரிந்தது : இவ்வரசுகள் தம்மிடையே வேற்றுமையுணர்ச்சி மிக்கனவாயும், தத்தம் நாட்டினப் பண்புகளோடொத்த எல்லைப்புறங்களையுடையனவாயும் இருந்தன. நாட்டினவுணர்ச்சி வரம்பு மீறிக்காணப்பட்டது. இந்த அரசிய லமைப்புக்கள் பெரும்பாலும் முடியுமுன்னர், ஐரோப்பிய அரசுகள் நாட்டின ஐக்கியத்தை எய்தித் தத்தம் தேசியத் தனித்தன்மையைத் தெரியுமுன்னர், ஐரோப்பிய எல்லைகளுக்கு வெளியில் தர்கள் ஆதிக்கத்தைப் பரவச் செய்ய உந் தப்பட்டன. இதன் விளைவாகக் கடல் கடந்த சார் நாடுகளைக் கைப்பற்றுவதில் அவர்களுட் சச்சரவு ஏற்பட்டது.
நாட்டினவுணர்ச்சி இதற்கு வேகத்தை அளித்தது. தொடர்ச்சியான விஞ் ஞானப் புத்தாக்கங்களும் அபிவிருத்திகளும் இதற்கு வாய்ப்பளித்தன. இருப் புப் பாதைகள், புகைக் கப்பல்கள், மின்சாரத் தந்திகள், தொலை பன்னிகள், பெசமரின் புத்தாக்கமான மலிவான உருக்கு, ஆவியை நீராக்கும் பொறிகள், உட்டகன இயந்திரங்கள், வேண்டிய பொருட்களைப் பனிக்கட்டியிலிட்டு வைத் தல், குளிர்ச்சேமிப்புமுறை ஆகியன உலக நிலப் பரப்பைச் சுருக்கி அரசியல் நிலைமையிற் புரட்சி உண்டாக்கிய புத்தாக்கங்களிற் சிலவேயாம். சிமற்சுத் தள பதி வருமாறு கூறினர் : “ இவற்றின் விளைவு, ஒரு நூற்றண்டுக்கு முன்னரோ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரோ ஐரோப்பாவை மட்டும் சார்ந்திருந்த பிரச் சினைகள், இப்போது முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் பிரச்சினைகளாக
மாறியதேயாம். '
பழைய உலக நாடுகளிற் கைத்தொழில் வளர்ந்தமையாலும் முற்கூறிய விளைவே ஏற்பட்டது. ஆச்சரியப்படத்தக்க தொடர்பான பொறித்துறைப் புத்தாக்கம்-குறிப்பாக நீராவி, மின்சாரம் ஆகியவற்றின் உபயோகம்-பொரு ளுற்பத்திக் கலையை ஊக்கிற்று. ஆனல், தனிமனிதர்க்கிடையேயும் நாடுகளுக் கிடையேயும் போட்டி மிகக் கொடூரமாயிருந்ததாற் பொருளுற்பத்தி பெருமள விற் செய்தால் மட்டும் ஊதியம் உண்டு. இச் சூழ்நிலையில் ஆக்கப்பட்ட பொருட் கள் விற்கப்படவேண்டும். ஆகவே, கடல் கடந்த விற்பனையிடங்களைப் பெறப் போட்டி உண்டாயது. இப்போராட்டம் இவ்வளவோடு முடிவடைவதுமில்லை ; தொடங்குவதுமில்லை. இயந்திரங்கள் இயங்க எரிபொருள் வேண்டும். ஆகவே கைத்தொழில் மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்வதிற் போட்டி உண்டாயது.
15-B 24178 (5.160)

Page 213
404 ஐரோப்பாவின் அகற்சி
இவைகளிற் பருத்தி, இறப்பர், சிசல், சணல், தால நெய் ஆகியன அயனமண்டல நாடுகளிலிருந்தும், அயனவயற் பிரதேசங்களிலிருந்துமே பெறத்தக்கன. ஆகவே, கைத்தொழில் விருத்தி பேராசாட்சிக்கு வழிகாட்டியது. வியாபாா அவா, ஆள் புலத்தைத் தேடத் தூண்டியது.
இம்மாற்றங்களுட் பெரும்பாலானவை படிப்படியாகத் தோன்றின. அவை திடீரெனத் தோன்றவில்லை. எனினும், 1870 தொட்டு 1880 வரையுமுள்ள காலப் பகுதி வரலாற்றுப் போக்கிலே ஒரு பெருந் திருப்பத்தைக் காட்டுவதாகும். இத் திருப்பத்தினின்று நோக்கின் புதிய காட்சிகள் எங்கள் கண்முன் தோன்றும்.
ஆபிரிக்காவைப் பெற முயற்சி
முதலாவதாகத் தோன்றும் காட்சி ஆபிரிக்காவாகும். பதினைந்தாம் நூற் முண்டு தொடக்கம், ஆபிரிக்கக் கடற்கரைப் பகுதியிற் சில துறைமுகங்கள் மேற்கு ஐரோப்பாவின் கடல்சார்ந்த நாடுகளாற் கப்பல்கள் வந்து போகவேண் டிக் கைப்பற்றப்பட்டன. ஆயின், இதுகாறும் நுணுகி ஆராய்ந்த சத்திகளின் அாண்டுதலினல் ஆபிரிக்காவைப் பெறும் முயற்சி 19 ஆம் நூற்முண்டின் கடைசிப் பத்தாண்டுகளிலேயே உண்மையில் ஆரம்பித்தது. இத்தொடர்பில், சொற்களிலும் பார்க்கத் தேதிகளே கூடிய விளக்கந்தரும். 1869 ஆம் ஆண்டிற் சுவெசுக் கால் வாய் திறக்கப்பட்டது. பெரும்பாலும் பேடினந்து தி இலெசெப்பு என்பானின் அதி விவேகத்தாலும் விடாமுயற்சியாலுமே அக்கால்வாய் வெட்டியமைக்கப்பட் டது. இங்கிலந்து அறிவையோ காசையோ ஆதரவையோ அளிக்கவில்லை. எனி னும், ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியிலிருந்து பெறும் ஊதியத்திற் பெரும் பகுதியை இங்கிலந்தே அனுபவித்தது. 1875 இல் எகித்தின் கேடிவு இசுமேயிலிட மிருந்து, கால்வாயில் அவனுக்குச் சொந்தமான 1,76,602 பங்குகளை கொடுத்து வாங்கியது. இந்தப் பூட்கையின் திடீர்ப்போக்கிற்கு திசாேலி என்பா னின் கற்பனுசத்தியும் அதிவிவேகமுமே காரணங்களாகும். உரோதுசைலுடன் உறவு இருந்தமையால் அவன் கடன் வாங்குவது இலகுவாயிருந்தது. வேண்டிய தொகையிற் கூடிய பகுதி இவர்களிடமே கடன் எடுக்கப்பட்டது (40,80,000 பவுண்). அரசியல் உலகிலோ பொருளாதார உலகிலோ இதனிலும் சிறந்த முத வீடு எப்போதாவது நடைபெறவில்லை. பங்குகளின் விலை பத்துமடங்குக்கு அதி கமாகப் பெருகியது. வாங்கிய விலையின் பங்கிலாபம் ஏறத்தாழ 40 சதவீதம் கிடைக்கின்றது. ஆனல், பொருளாதார அமிசம் மிக முதன்மையானதன்று. இந்தக் கால்வாய் பிரித்தானியப் பேரரசின் சுழிமுனை நாடியாகும்.
எகித்தில் ஆங்கிலேயர்
பணமுடைகாரணமாகவே எதித்தியக்கேடிவு தன் பங்குகளை விற்றன். அப்பண முடைகாரணமாகவே, அவனுக்குக் கடன் கொடுத்த இங்கிலந்தும் பிரான்சும் எகித்தின் மீது இருமையாட்சியைத் தாபிக்க முடிந்தது (1876). 1878 வரையில்

ஐரோப்பாவின் அகற்சி 405
இசுமெயிலின் ஊதாரித்தனத்தையும் சீர்கேடான ஆட்சிமுறைமையையும் பொறுக்க முடியாமல் வல்லரசுகள் அவனைப் பதவியினின்று நீக்கும்படி அவ லுடைய மேலதிகாரியான சுலுத்தானை வேண்டின. அவனுக்குப் பின் ஆட்சி பெற்றவன் கியூபிக்கு என்பான். அரபி பே என்பான் தலைமையில் எழுந்த படைக் கலகத்தையோ அலச்சாந்திரியாவிலுள்ள ஐரோப்பிய மக்களை அரேபிய மக்களை கொலை செய்ததால் எழுந்த ஒழுங்கீனங்களையோ தியூபிக்கினல் சமாளிக்க முடியவில்லை. அமைதியை நிலவச் செய்யும் முயற்சியிற் பிரித்தானியாவுடன் ஒத்துழைக்கப் பிரான்சியர் மறுத்தபடியாற் பிரித்தானியா தனியாகவே அவ் வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. பிரான்சு விரைவில் தன் தயக்கத்தைப் பற்றி மிகவும் கழிவிரக்கப்பட்டு எங்கள் வேலையைத் தடைசெய்யத் தன்ன வியன்ற முயற்சி செய்தது. ቃ”
இங்கிலந்து தன் மேற் சுமத்தப்பட்ட இவ்வேலையைச் செய்வதில் அதிகம் மகிழ்ச்சி அடையவில்லை. சுவெசுக் கால்வாய் பேரரசிற்கு உயிர் நாடிபோன்றதே. எகித்தின் மீது படை ஆகிக்கம் செலுத்துவது கால்வாயின் பாதுகாப்புக்கு அவசியமோ என்பது வாதத்திற்குரிய விடயமாகும். கால்வாயைத் தவிர இங்கிலந்துக்கு எகித்தில் அதிக அக்கறையொன்றுமில்லை. என்ருலும், 1882 ஆம் ஆண்டிலிருந்து 1922 வரையும் எகித்தில் முறைப்படி ஆட்சி செய்து வந்திருக் கிருேம். இப்போதும் அங்கே எங்கள் படைஞர் இருக்கின்றனர். இதற்கிடையிற் பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. தன்னை ‘மேசாயா' என்று அறிவித்த ஓர் அராபியக் குலத்தவனின் தலைமையில் 1883 ஆம் ஆண்டிற் குடானில் ஒரு கலாம் ஆரம்பமாயது. ஆங்கிலேய அலுவலரின் தலைமையில் அக்கலகத்தை அடக்கும்படி அனுப்பப்பட்ட படை சின்னபின்னமாக்கப்பட்டது. கோடன் தளபதி குடானின் ஆள்பதியாக நியமிக்கப்பட்டான். ஆனல் காட்மிேல் அவன் முற்றுகையிடப் பட்டான். கிளாசுதன் அரசாங்கம் அரிய காலத்தை மாதக் கணக்கில் விணே செலவழித்தது. கோடனை விடுவிக்க ஊல்சிலிப் பிரபு ஈற்றில் காலந்தாழ்த்தியே அனுப்பப்பட்டான். கோடன் கொல்லப்பட்டு இரு நாட்களின் பின்னரே உதவிப்
படை காட்ைேம அடைந்தது.
பின்னர் 1885 ஆம் ஆண்டில், தென் குடான் கைவிடப்பட்டது. 1896 ஆம் ஆண்டில் கிச்சினர் சேனபதி (பின்னர் எள்) எகித்தியப் படையை முற்முய்த் திருத்தியமைத்து, அந்நாட்டை மீண்டும் வெல்லற்குப் போர் மேற் சென்றன். 1898 செத்தெம்பர் 2 ஆம் திகதி ஓந்தேமன் என்னுமிடத்தில் ஒரு பெரும் வெற்றி பெற்று, அராபிய மேசாயாவின் வல்லமையை ஒருகாலும் மீளாவகை முறி படித்தான். காட்ம்ே கைப்பற்றப்பட்டது. கோடனுக்கு நேர்ந்த பழி துடைக்கப்
பட்டது.

Page 214
406 ஐரோப்பாவின் அகற்சி
LuGFTLIT
கிச்சினர் காட்ைேம அடையுமுன்னர், ஒரு பிரான்சியப்படை மேசர் மாச் சந்து என்பான் தலைமையில் மத்திய ஆபிரிக்காவுக்கப்பால் வழிநடத்தப்பட்டு மேல் நைல் நதியிற் பசோடா என்னுமிடத்தை அடைந்தது. மேல் நைலுக்கு அவர்கள் வருவது ஒரு 'நட்பற்ற செய்கையாக மதிக்கப்படுமென்று முன்னரே பிரான்சியர் எச்சரிக்கை பண்ணப்பட்டிருந்தனர். ஆனல், மாச்சந்து விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டான். 1898 இலையுதிர் காலத்தில் இங்கிலந்தும் பிரான்சும் போர் கொடுக்கும் தறுவாயில் இருந்தன. ஆனல், சோல்சுபெரிப் பிரபு உறுதி யும் சாதுரியமும் பொருந்திய முறைகளை உபயோகித்துக் கடைசி நேரத்தில் மாச்சந்தைத் திருப்பி அழைக்கும்படி பிரான்சியரைத் தூண்டினன். 1899 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையில் ஒரு விரிந்த உடன்படிக்கை நிறைவேற்றப் பட்டது. 1882 ஆம் ஆண்டில் இங்கிலந்துடன் சேர்ந்து பொறுப்பிற் பங்கெடுக்கப் பிரான்சு மறுத்த காலத்திலிருந்து, சேர் இ. பேரிங்கின் (பின்னர் குரோமர் பிரபு) தலைமையில் ஆங்கில நிருவாகிகள் எகித்திய அரசாட்சி முறைமையைச் சீர்திருத்தினர்கள். இது எந்த நாடும் பெருமைப்படக்கூடிய செயலாகும். ஈற்றில் (1899 ஆம் ஆண்டில்) பிரான்சு, உண்மை நிலைவாத்தை ஒப்புக்கொண்டு, ஆற்று முதல் தொடங்கி பொங்குமுகம் வரையும் உள்ள வடிநில முழுவதின் மேலும் பிரித்தானியாவிற்கிருந்த உரிமையை அங்கீகரித்தது. பிரான்சுக்கு மேற்காபிரிக் கப் பேரரசு சொந்தமென உறுதிபண்ணப்பட்டது. இவ்வாறு ஈற்றில் இங்கிலந் தும் பிரான்சும் நட்புப்பூண்டன. இக்கூற்று முரணுகத் தோன்றினுலும், பசோடா, 1904 ஆம் ஆண்டில் நிறைவேறிய உடன்பாட்டிற்கு வழி செய்தது.
பிரித்தானியத் தென் ஆபிரிக்கா
ஆபிரிக்காவிற் பிரித்தானியரின் முயற்சிகள் வட பகுதியோடு மட்டும் நின்று விட வில்லை. 1652 முதல் 1796 வரையும் முனைக்குடியேற்ற நாடு ஒல்லந்தரின் ஆட்சியிலிருந்தது. இவர்கள் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் போக்கு வரவு செய் யும் தங்கள் கப்பல்கள் தங்கிச் செல்லுந் துறையாக இப்பகுதியைப் பயன் படுத்தினர்கள். 1795 ஆம் ஆண்டிற் பிரான்சியக் குடியரசு ஒல்லந்தை வலிந் திணைத்தது. இங்கிலந்தில் அகதியாகவிருந்தவனன அந்நாட்டை ஆள்பவன், முனைக்குடா நாட்டினைப் பிரான்சியர் கைப்பற்றுமுன்னர் இங்கிலந்து அதைக் கைப்பற்ற வேண்டும் எனக் குறிப்பாகக் கூறினன். அதற்கிணங்க ஆங்கிலர் அதைக் கைப்பற்றினர். 1802 ஆம் ஆண்டில் அதைத் திருப்பிக் கொடுத்து, நெப்போலியனுடன் மீண்டும் போர் தொடங்கிய பொழுது அதை மீண்டும் வென்றனர். ஈற்றில் 1814 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அமைதிப் பொருத்தனையினுல் ஒல்லந்துக்கு 60,00,000 தங்கப் பவுண் நட்ட ஈடு கொடுத்து, அந்நாட்டை ஆங்கிலரே வைத்திருந்தனர்.

ஐரோப்பாவின் அகற்சி 407
பிரித்தானியரும் போவரும்
எனினும், பிரித்தானிய அரசாங்கத்திற்கும் முனையிற் குடியேறிய ஒல்லந் தருக்குமிடையே தொடர்ந்து சச்சாவு ஏற்பட்டது. 1836 ஆம் 1840 ஆம் ஆண்டு கட்கிடையே ஒல்லந்துக் குடியானவர்கள் (போவர்) முனைக்குடியேற்ற நாட்டை விட்டு நீங்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் வடக்குத் திசையை நோக்கி * வலசை போய்த் திரான்சுவாலிலும் ஒரேஞ்சுபிரீ மாகாணத்திலும் சுயாதீன மான குடியரசுகளைத் தாபித்தார்கள். பெரும்பாலும் பிரித்தானியரையே கொண்டதும் முனைக்குடியேற்ற நாட்டின் கிளையுமான நேத்தால் என்னும் நாடு 1856 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மேலாண்மையை ஒப்புக்கொண்டது. என்ருலும், முனைக்குடியேற்ற நாட்டிலிருந்து பிரிந்து விடுதலைப் பிரகடனஞ் செய்தது. ஆயின் பிரித்தானியர்களும் போவர்களும் மறக்குணம்படைத்த சுதேசிகளால் ஒருங்கே அச்சுறுத்தப்பட்டனர். 1877 ஆம் ஆண்டில், திரான்சு வாற் போவர்கள் அவர்களுடைய அயலவர்களாகிய குலுக் குலத்தினரால் * பட்சிக்கப்படும்’ பேராபத்தில் இருந்தனர். அந்தக் கதியிலிருந்து தப்புவதற் குச் சிறந்த வழியெனக் கருதி, திரான்சுவால் பிரித்தானிய ஆட்சிக்கு உட் படுத்தப்பட்டது. இப்போது பிரித்தானியர் குலுக் குலத்தினருடன் போர் புரிய வேண்டியவர்களானர்கள். ஆனல், பல தோல்விகளுக்குப் பின்னரே அந்தத் தைரியமான குலத்தினரின் வன்மையை முறியடிக்க முடிந்தது. அவர்கள் வலிமை குலைந்ததும், போவர்கள் வாள்முனையில் தங்கள் சுயவாட்சியை மீண்டும் கோரினர்கள். அவர்களுடன் போர் ஆரம்பித்து (1880-1881) மயுபா என்ற இடத் கில் நிகழ்ந்த அழிவின் பின்னர்த் திரான்சுவால் திரும்பவும் போவர்களுக்குக் கையளிக்கப்பட்டது.
அப்போது நிறைவேறிய ஒழுங்கு நிலைத்திருக்குமாறில்லை. ஆபிரிக்காவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் பரவும் காலம் நெருங்கியது. அப்போது இயங்கிய சத்திகளின் வேகத்தை அரசியல் வாதிகள் தடை செய்யலாம். ஆனல் முற்ருகத் தடுக்க முடியாது. தென் ஆபிரிக்காவிலும் வேறு இடங்களிலும் பிரித்தானிய அரசாங்கம் முப்பது ஆண்டுகளாகக் கைக்கொண்ட தற்போக்குக் கொள்கை' இப்போது பத்தாண்டுகளாகக் கைவிடப்பட்டது. 1868 இல், ஒரேஞ்சு நதியைச் சுற்றி வாழ்ந்த போவர்கள், கிழக்கே வாழ்ந்த சுதேசிகளான பசுத்தோக் குலத் தினருடன் ஒரு பிணக்கிற் சிக்கிக்கொண்டனர். பசுத்தோக் குலத்தினரின் தலை வன் தன் குடிகளைக் காப்பாற்றும்படி பெரிய பிரித்தானியாவை மன்ருடினன். 1868 ஆம் ஆண்டில், பசுத்தோலந்தின் மீது பிரித்தானியாவின் இறைமை பிர சித்தஞ் செய்யப்பட்டது. சில காலமாக அந்நாடு முனைக் குடியேற்ற நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனல், 1884 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானிய முடியின் நேர் ஆட்சியின் கீழ் அது ஒரு பிரித்தானியக் குடியேற்ற நாடாயது. 1871 ஆம் ஆண்டில், ஒரேஞ்சுபிரி மாகாணத்திற்கு மேற்கேயுள்ளதும் இரத்தினச் சுரங்கங்கள் மலிந்த கிம்பேளிப்பகுதியை உள்ளடக்கியதுமான மேற்குக் கிறிக்குவாலந்து பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்டது.

Page 215
408 ஐரோப்பாவின் அகற்சி
uliás
போவர்களிடம் திரான்சுவால் திருப்பிக் கொடுக்கப்பட்டபின்னர், அவர்கள் அதற்கு மேற்குப்பக்கத்திலும் கிழக்குப்பக்கத்திலுமுள்ள சுதேசிகளுடன் இடை யமுச் சச்சரவுகளிற் சிக்கினர். இன்னும் வேறு சிக்கல்களைத் தடுப்பதற்காக 1885 ஆம் ஆண்டிற் பெச்சுவனலந்து மீதும், 1886 ஆம் ஆண்டிற் சுலூலந்து மீதும் பிரித்தானிய ஆட்சி திணிக்கப்பட்டது. 1887 ஆம் ஆண்டில், பிரித்தானிய தென்னபிரிக்கக் கம்பெனி அரச பட்டயத்தின்படி கூட்டுத்தாபனமாக்கப்பட்டு, மசோனலந்தின் பாலனத்தை ஒப்புக்கொண்டது. 1894 ஆம் ஆண்டில் அக் கம்பெனி மதாபிலிச் சுதேசிகளுடன் போர் புரிந்தது. மதாபிலிலந்து அவ்வாண் டிலேயே வலிந்திணைக்கப்பட்டது. அந்த விசாலமான பிரதேசம் இப்பொழுது உரோடேசியா எனும் பெயரால் வழங்கும்.
போவர்ப் போர்
இதற்கிடையில், கிரான்சுவாலிலுள்ள உவித்துவாதசிருந்து என்னுமிடத்தில் தங்கம் ஏராளமாக 1886 ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்டது. இது காரண மாக, பணஞ்சுரண்ட முயல்வோர், நிதிபடைத்தோர், எந்திரவியல்வல்லுநர், சுரங்கம் தோண்டுவோர் ஆகியவர்கள் கும்பலாக அங்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் தென் ஆபிரிக்க சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையிற் புதிய தும், சற்றும் வேண்டப்படாததும், மிகவும் ஒவ்வாததுமான ஒரு சார்பினைப் புகுத்தினர். இவர்கள் நுழைவாற் போவர்கள் கடுஞ் சினமடைந்தனர். ஆனல், 1884 ஆம் வருட ஒப்பந்த நியதிகளின்படி அவர்கள் நுழைவதைத் தடுக்க முடிய வில்லை. 1895 வரையிற் புதிய சுரங்கப் பிரிவின் தலைநகராகிய யோகானசுப் பேக்கின் குடித்தொகை 100,000* ஆகவிருந்தது. 1877 ஆம் ஆண்டில் திரான்சு வாலிலுள்ள வெள்ளையர்களின் மொத்தக் குடித்தொகை எண்ணுயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டதில்லை.
ஐரோப்பியக் குடித்தொகையின் தீவிரமான வளர்ச்சியினல், பெரும் நெருக் கடி விரைவில் நேர்ந்தது. அரசாங்கத்தின் வருமானத்திற்கும் சமுதாயத்தின் செழிப்புக்கும் தாங்கள் கொடுக்கும் பங்கிற்குத் தகுந்த அரசியலுரிமைகளைத் தங்களுக்கு வழங்கும்படி புதிதாக வந்தவர்கள் (எயிற்றிலந்தர்கள்) உறுதியாகக் கேட்டனர். போவரின் அரசாங்கம் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மறுக்கவே, 1895 ஆம் ஆண்டில் 'எயிற்றிலந்தர்கள் நியாயங்காட்டிப் பெற முடியாதவற்றைப் பலவந்தத்தினுற் பெற முயன்றனர். பிரித்தானியத் தென்
இப்பொழுது ஐரோப்பிய குடித்தொகை (1933) 1,70,000 இனும் மேற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் அகற்சி 409
ஞபிரிக்கக் கம்பெனியின் ஆட்சியாளனுன கலைநிதி சேமிசன் திரான்சுவாலைத் தாக்கினன். அதீதாக்கல் எளிதில் நசிக்கப்பட்டது. அதன் தலைவர்கள் கைதி களாக்கப்பட்டுப் பிரித்தானிய அரசாங்கத்திடம் ஒப்புவிக்கப்பட்டுத் தண்டிக்கப்
பட்டனர்.
சேமிசனுடைய தாக்குதல் தோல்வியடைந்தமையாற் போவர்க்கும் பிரிக் தானியர்களுக்குமிடையில் நெருக்கடி வலுத்தது. 1899 ஆம் ஆண்டில், திரான்சு வாலில் தங்கியிருந்த 21,000 பிரித்தானியக் குடிகள் தங்கள் குறைகளை விசாரித்து அவற்றுக்கு நிவாரணங் காணும்படி இராணிக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். 1897 ஆம் ஆண்டில் தென்னபிரிக்காவின் உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சேர் அல்பிரெட்டு மிலினர் (பின்னர் வைக்கவுண்டு ஆனவர்) குடிப்பதி குரூகரைச் சந்தித்துப் பேசினர். ஆனல், பேச்சுப் பயனற்றதாய் முடிய, ஒற்ருேபர் மாதத்தில், போவர்க்குடியரசுகள் இரண்டும் பெரிய பிரித் தானியா மீது போர்ப் பிரகடனஞ் செய்தன.
போர், தொடக்கத்திற் பெரிய பிரித்தானியாவுக்குப் பாதகமாகச் சென்றது. ஆனல், 1900 சனவரி மாதத்தில் உரொபேட்சுப் பிரபு, சேர் இரெதுவேசு புல்லர் என்பவனிடமிருந்து படைத்தலைமையை ஏற்றுக்கொண்டு, கிச்சினர் பிரபுவைப் பணியாளர் முதல்வனுகக் கொண்டு, விரைவில் நிலைமையைச் சீர்ப்படுத்தினன். பிறித்தொறியாவைக் கைப்பற்றிய பின்னர் (யூன்), உரொபேட்சு, கிச்சினரிடம் போர் நடத்தும் பொறுப்பைவிட்டான். கிச்சினர் போவர்த் தளபதிகளின் கெரில்லாப் போர் முறையை மடக்கி, 1902 மே மாதத்திற் சமாதானஞ் செய்தான். உரொபேட்சு தாய்நாடு திரும்பி இராணிக்குத் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தான். இராணியின் மேன்மை தங்கிய நீண்ட அறுபத்திமூன்று வருட ஆட்சி 1901 சனவரி இருபத்திரண்டாந் திகதி அவர் மரணத்துடன் முடிவெய்தி di IE7. at
தென்ஆபிரிக்க ஐக்கியம்
போவர்க்குடியரசுகளிாண்டும் பிரித்தானிய ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. ஆனல் அமைதிப்பொருத்தனை நிறைவேறிய பின்னர், விரைவில் நாட்டில் அமைதி நிலவியதாற் பொறுப்புள்ள தன்னுட்சி 1906 ஆம் ஆண்டில் திரான்சுவாலுக்கும், 1907 ஆம் ஆண்டில் ஒரேஞ்சுக் குடியேற்ற நாட்டிற்கும் அளிக்கப்பட்டது. எனினும், பல கடினமான பிரச்சினைகள் தென்னுபிரிக்கக் குடியேற்ற நாடுகளை எதிர்நோக்கியிருந்தன. சுங்கவரி, இருப்புப்பாதைகள் பற்றிய பிரச்சினைகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரு வெள்ளை இனத்தினர்களுக்கும் சுதேசி களுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்புகள் ஆகியனவே இம்முக்கிய மான பிரச்சினைகளாகும். சேர் யோட்சு கிரே (முனைக்குடியேற்றத்தின் ஆள்பதி யாக 1853-61 வரை இருந்தவன்) நான்கு வேறுவேமுன குடியேற்ற நாடுகளும் சேர்ந்து ஒரு கூட்டாட்சி நாடாவதே தென் ஆபிரிக்காவின் பாதுகாப்பான

Page 216
410 ஐரோப்பாவின் அகற்சி
நிலைக்கு ஏற்ற ஒரேயொரு பாதையெனப் பல காலத்திற்கு முன்னரே உணர்ந் திருந்தான். கானவன் பிரபும் (அரசுச் செயலாளன், 1874-1877) அதே அபிப் பிராயம் கொண்டவனுய் இருந்தான். அப்பூட்கையை முன்னேறச் செய்யத் தம்மாலான முயற்சி செய்தான். ஆனல் அவன் அதில் வெற்றிபெறவில்லை. போவர்க் குடியரசுகள் இறுதியாக வலிந்திணைக்கப்பட்டபின்னரும், அவைகளுக் குத் தன்னுட்சி அளிக்கப்பட்டபின்னரும், இந்தப் பிரச்சினை மேலும் அவசரமா யது. ஆனல், நீண்ட காலமாகக் கூடிப் பேசியபின்னர் (1908-1909) இந்த நான்கு குடியேற்ற நாடுகளும் கூட்டாட்சியிலன்றி ஐக்கிய அரசாக ஒன்று சேர வேண் டுமெனத் தீர்மானித்தன. 1909 ஆம் ஆண்டில் பேரரசுப் பாராளுமன்றம் அவர் களுடைய விருப்பத்தைத் தென்னுயிரிக்க விதியில் அமைத்துச் சட்டவுருக் கொடுத்தது. அந்த விதி இரு சபைகளைக்கொண்ட ஒரு பாராளுமன்றத்தையும் அதற்குப் பொறுப்பான நிருவாகத் துறையையுந் தாபித்தது. இவ்வண்ணம், தென் ஆபிரிக்கா பிரித்தானிய தன்னட்சிப் பகுதிகளில் ஒன்முயது.
ஆபிரிக்காவிற் பிரான்சியர்
ஆபிரிக்காவிற் கவனஞ் செலுத்திய ஐரோப்பிய வல்லரசு இங்கிலந்து மாத்திர மன்று. 1830-1847 ஆம் ஆண்டுகளுக்கிடையே பிரான்சு அல்சீரியாவை வென்று அதை ஒரு பிரான்சியக் குடியேற்ற நாடாக்க ஏற்பாடுகள் செய்தது; 1881 ஆம் ஆண்டில் பிசுமாக்கின் தூண்டுதலினுலும் பெரிய பிரித்தானியாவின் இசைவுட லும் பிரான்சு கியூனிசு மீது காப்பாட்சியைத் தாபித்தது. பிரான்சு மொரக்கோ மீதும் மேலாண்மை பெற்றுளது. 1905 ஆம் ஆண்டிலும், அடுத்து 1911 ஆம் ஆண்டிலும் மொரக்கோவின் அமைதியற்ற நிலைமையும் அந்நாட்டிற் கால் வைக்கச் சேர்மனி செய்த முயற்சிகளும் சேர்ந்து ஐரோப்பாவை யுத்த வரம்பில் நிறுத்தின. ஆனல், 1912 ஆம் வருடத்துப் பிரான்சிய-மொரக்கோப் பொருத்தனை யாற் பிரான்சு அந்நாட்டின் மீது பொதுவான காப்பாட்சியைத் தாபித்து, பிற நாட்டு வல்லரசுகளைப் பொறுத்த வரையிற் சுலுத்தானின் பிரதிநிதியாகச் செய லாற்றியது. எனினும், பிரான்சின் அனுமதியொடு செரீபியன் பேரரசு தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இங்கே பிரான்சியச் சிறப்பு வட்டாரத்தைத் தவிர, ஒர் இசுப்பானிய வட்டாரமும் சருவதேச தாஞ்சியர் வட்டாரமும் உண்டு. இசுப்பானிய வட்டாரத்தின் குடித்தொகை ஏழு இலட்சமாயிருந்தது ; ஆனல் பிரான்சிய வட்டாரத்தின் குடித்தொகையோ அறுபது இலட்சமாயிருந்தது. செயலளவில் மொாக்கோ பிரான்சுக்குச் சொந்தமான நாடாகும். 1884, 1890ஆம் ஆண்டுகளின் பிரிவினைப் பொருத்தனைகளின் படியும், 1919 ஆம் வருடத்து அமைதிப் பொருத்தனையின் படியும் பிரான்சுக்கு ஆபிரிக்காவின் மேற்கிலும் மத்தியிலும் ஒரு பெரிய நிலப்பிரதேசம் உண்டு. இது கிழக்குக் கடற்கரை யிலுள்ள பிரான்சியச் சோமாலிலந்துடனும் மடகாசுக்கர்த் தீவுடனும் சேர்க்கப் படுமிடத்துப் பிரான்சிய ஆபிரிக்காவின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ நாற் 4Uğö7 இலட்சஞ் சதுரமைலாகும்.

ஐரோப்பாவின் அகற்சி 4ll
பிரித்தானிய ஆபிரிக்காவின் நிலப்பரப்பு (46,52,000 ச. மைல்) பிரான்சியப், பகுதியிலும் ஏறக்குறைய 6,50,000 ச. மைல் கூடியதாகும். பிரான்சிய ஆபிரிக்கா வின் பெரும் பகுதி பாலை நிலமாகும். சிபுரோத்தர், சியெரா இலியோன், சொக்கோத்திரா (ஏடனின் எதிர்ப்புறத்தில்), சான்சிபார், சென் எலேன, உவால் விசுக்குடா, மொம்பாசா, கேப்புதவுன், தாராசாலம், போட்டுசெட்டு ஆகிய இடங்களைப் பெரிய பிரித்தானியா வைத்திருப்பதால் முதற்றரமான முதன்மை படைத்த பாதைகளையெல்லாம் அடக்கி ஆளுகின்றது. இன்னும், மத்தியதரைக் கடலைச் சார்ந்த பகுதிகள் தவிர, வெள்ளையர் குடியேறத் தகுந்த ஆபிரிக்கப் பிர தேசங்களும் பெரும்பாலும் பிரித்தானியரிடமே இருக்கின்றன.
ஆபிரிக்காவில் போத்துக்கேயர்
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே போத்துக் கல் ஆபிரிக்காவிலே தன் முயற்சிகளை ஆரம்பித்தது. ஐரோப்பிய நாடுகளுட் கடல் மார்க்கமாக இந்தியாவை அடைந்த முதல் நாடாய் இருந்தமையாற் போத்துக்கல் ஆபிரிக்காக் கண்டத்திலே தன்னைத் தாபித்துக்கொள்வதிலும் முதல் நாடாயிருந்தது. தென் மேற்குக் கரையில் மொசாம்பிக்கும், தெலா கோவாக்குடாக் கடலிலுள்ள உலோரன்சோமாக்கு என்னும் துறைமுக மும், மேற்குக் கரையிற் கினியிற் ஒரு பகுதியும், அங்கோலாவும், பெல்சியன் கொங்கோவுக்கும் தமாலந்துக்கும் இடையேயுள்ள மதிப்புக் குறைந்த பெரிய ஆள்புலப் பரப்பும் இப்போதும் போத்துக்கேயரிடம் இருக்கின்றன.
1879 ஆம் ஆண்டிற் பெல்சியர் கொங்கோவை அடிப்படுத்த ஆரம்பித்தனர். பேளின் பேரவை (1884-1885) நிறைவேற்றிய பொதுவிதி கொங்கோ நாட்டை இலியோபோல் அரசனின் அதிகாரத்திற்குட்பட்ட சுயாதீனமான நாடாக அங்கீகரித்தது. 1908 ஆம் ஆண்டிற் பெல்சிய இராச்சியத்துடன் அது சேர்க்கப் பட்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் சேர்மானிய கிழக்காபிரிக்காவின் ஒரு பகுதியைப் பெல்சியம் பெற்று அதைப் பொறுப்பாணை நாடாக ' வைத் திருக்கின்றது.
இத்தாலியக் குடியேற்ற நாடுகள்
இத்தாவி 1871 வரையும் நாட்டின ஐக்கியம் எய்தாமையாற் குடியேற்ற முயற்சிகளில் ஈடுபடப் பிந்தியது இயல்பே. அல்லாமலும், குடியேற்ற நாடுகளைத் தாபிக்கும் வல்லரசு என்ற முறையில் அதன் வரலாறு ஏற்றத்தாழ்வுகள் உடையதாயிருந்தது. அபிசீனியக் கடற்கரையிலுள்ள அசாப்புத் துறை முகத்தை ஒரு தனிப்பட்ட வணிகச் சங்கம் 1870 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கி 1882 ஆம் ஆண்டில் இத்தாலிய அரசாங்கத்திற்குக் கையளித்தது. 1885 ஆம் ஆண்டில் மசோவா என்னும் இடத்தை இத்தாலி கைப்பற்றி எரித்திரியா என்னும் குடியேற்ற நாடாக விருத்திபண்ணியது. நான்கு ஆண்டுகளின் பின்னர்

Page 217
412 ஐரோப்பாவின் அகற்சி
கிழக்காபிரிக்காவிலே தானடைந்த நாடுகளுடன் சோமாலிலந்தின் ஒரு கீற்றை யும் சேர்த்துக்கொண்டது. அபிசீனியாவின் செழிப்பான மேட்டுநிலங்களில் நழைவதற்கு இத்தாலி செய்த முயற்சிகள் அபிசீனியரால் மும்முரமாகவும் வெற்றிகரமாகவும் எதிர்க்கப்பட்டன. இத்தாலி 1900, 1902 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொருத்தனைகளிற் பிரான்சுடன் உடன்படிக்கை செய்து தன் கவ னம் முழுவதையும் கிரிப்போலி மீது செலுத்தியது.
சேர்மானியர் குடியேறல்
இத்தாலியைப் போல அதே நியாயத்திற்காகச் சேர்மனியும் குடியேற்ற நாடு கள் சேர்ப்பதிற் பிந்தியே ஈடுபட்டது. சேர்மனிக்கு 1884 ஆம் ஆண்டிலே தானும் ஐரோப்பாவும் வெளியே ஓர் அடிநிலமும் இல்லை. ஆனல், 1884 ஆம் ஆண்டிற்கும் 1890 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அதன் குடி யேற்றப் படர்ச்சி விரைவாயிற்று. பிசுமாக்கு இறக்கும் வரையும் குடியேற்ற நாடுகளிற் கவனம் செலுத்தவில்லை. ஐரோப்பாவில் தான் கட்டியெழுப்பிய அரசைக் குன்றவிடாது பாதுகாப்பதோடு அவன் திருத்தி அடைந்திருந்தான். அரசியற் சத்திகளை அவனல் அடக்க முடிந்தது. பொருளாதார சத்திகள் அவன் எண்ணங்களை மீறி நடப்பதை அவனுல் தடுக்க முடியவில்லை. விரைவில் அதிகரித்துக்கொண்டிருக்கும் குடிகள் வெளியேறிக் குடியிருக்க இடமும், வேக மாக விரியும் வணிகத்துக்கு இடமும் சேர்மனிக்குத் தேவைப்பட்டன. கைத் தொழிற்படுத்தப்பட்ட ஏனை நாடுகளைப்போலச் சேர்மனிக்குங் கடல்கடந்த நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களும் மூலப் பொருட்களும் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. இப்பொருள்களைத் தருவிப்பதில் தன் ஆட்சியைச் செலுத்த” விரும்பியது. சேர்மனிக்கு அதன் உற்பத்திப் பொருட்களை விற்கக் கடல்கடந்த சந்தைகளுந் தேவைப்பட்டன. சேவைக்கு வேண்டிய மனித பலத்தை அதிகரிக் கச் செய்யவும் சேர்மனி வழி தேடியது. எல்லாவற்றிலும் மேலாக, உலகமெங்கும் பரவியிருந்த பெரிய பிரித்தானியப் பேரரசோடு எப்போதாவது போர்புரிய நேரிடின், தனக்குப் பயனுன படை வசதிகள் படைத்த இடங்கள் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுமிருக்கலாம். அத்தகைய இடங்களை மேற்கு தென் மேற்கு கிழக்கு ஆபிரிக்காவிலும் மொசப்பொத்தேமியாவிலும் இருப்பதைச் சேர் மனி கண்டது. 1882 ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்திற் பிராங்குபோட்டு என்னு மிடத்திற் சேர்மானியக் குடியேற்றச் சங்கம் நிறுவப்பட்டது. பத்திரிகைக்கார ரின் மும்முரமான முயற்சியின் பயணுக மக்களிடை ஆர்வம் தூண்டப்பட்டது. அத்திலாந்திக்குச் சமுத்திரத்திலிருந்து ஆபிரிக்காவின் மத்திய பிரதேசத்தை யும் உள்ளடக்கி, இந்து சமுத்திரம் வரையும் வியாபித்துள்ள ஒரு சேர்மானிய இந்தியாவை ஆபிரிக்காவிலிருந்து வகிர்ந்தெடுக்கச் சேர்மனிக்கு உரிமையுண்டு என்னும் அபிப்பிராயத்தைப் பத்திரிகையாளர் வெளியிடுவராயினர். அப்படி யானுல் பிரான்சு, பெல்சியம், போத்துக்கல், பெரிய பிரித்தானியா ஆகிய நாடு களின் விசாலித்த நிலப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதாய் முடிந்திருக்கும். மாபெரும் போரின்போது ஏமன் ஒங்கன் என்பான் 'நாங்கள் மத்திய ஆபிரிக்கா

ஐரோப்பாவின் அகற்சி 43
வில் ஒரு போரசைத் தாபிக்கப் போர் புரிகிருேம் ' என எழுதினன். எமில் சிம்ம மன் என்பான் 'மத்திய ஆபிரிக்காவில் எங்களுக்கு வன்மை பொருந்திய நிலைமை ஏற்படுமாகிற் கிழக்காசியாவிலும் தென் கடல்களிலும் எங்கள் விருப்பங்களை மதித்து நடக்கும்படி இந்தியாவையும் ஒசுத்திரேலியாவையும் நாம் கட்டாயம் பண்ண இயலும், அவ்வழி, கிழக்காசியாவிலுள்ள எங்கள் பகைவர்களின் நெரும் கிய முன்னணிக்குள் முதல் ஆப்பு வைத்து அடித்தலமாகும்' என எழுதியிருந்
தான.
பல ஆண்டுகளாக ஆபிரிக்காவிற் புதுநிலந் தேடுவதிற் சேர்மானிய கண்டு பிடிப்பாளர் பூரண பங்குபற்றினர். 1880 இனை யடுத்த சில வருடங்களாகத் தென் ஆபிரிக்காவிலுள்ள ஒல்லந்தருக்கிடையே திருத்தியீனமுண்டானமை, சேர் மனியின் நாட்டாசைக்கு வாய்ப்பளிப்பது போலத் தோன்றியது. தெல்கோவாக் குடாவிலும் சென் உலூசியாக் குடாவிலும் பொண்டோலந்திலும் காலூண்டு தற்குச் ச்ேர்மனி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனல், 1884-1885 ஆம் ஆண்டில், முனைக்குடியேற்ற நாட்ட்ை அடுத்திருந்த 3,30,000, சதுர மைல் பாப் புள்ள தமாலந்து, நமக்குவாலந்து ஆகிய பிரிவுகளின் மீது சேர்மனி தன் விடா முயற்சியாற் புரப்பாட்சி ஏற்படுத்தியது. சேர்மானியத் தென்மேற்காபிரிக்கா என்னும் பெயருடைய இந்த ஆள்புலத்தை 1915 ஆம் ஆண்டிற் பிரித்தானியா வெற்றி கொண்டது. 1919 ஆம் ஆண்டில் தென்னுபிரிக்க ஐக்கிய நாட்டிற்குப் பொறுப்பாணைப்படி அது உரிமையாக்கப்பட்டது. ஆயின், ஈண்டுக்கூறியவை பிற் காலத்தே நிகழ்ந்தனவாகும். இதற்கிடையில் மேற்குக் கடற்கரையிலே, தொகோலந்தையும் கமரூனயும் உள்ளடக்கிய இரண்டாவதொரு குடியேற்ற நாடும், கிழக்குக் கடற்கரையில், இவைகள் எல்லாவற்றிலும் முக்கியமான சேர்மா னியக் கிழக்காபிரிக்கா என்னும் குடியேற்ற நாடும் தாபிக்கப்பட்டன. இவ் வண்ணம் ஆறு ஆண்டுகளில் (1884-1890) ஆபிரிக்காவில் நிலம்படைத்த ஐரோப் பிய நாடுகளுள் மூன்ரும் இடத்திற்குச் சேர்மனி முன்னேறியது. 1890 ஆம் ஆண்டில் ஆபிரிக்கப் பிரிவினைப்படி பிரான்சு 40,00,000 சதுரமைல் ஆள்புல முடையதாய் ஆபிரிக்க வல்லரசுகளில் நிலப்பரப்பளவில் மிகக் பெரியதாயிருந் தது. உலகப் போரின் முன்னர் பிரித்தானிய ஆள்புலம் (எகித்தையும் குடானை யும் தவிர்த்து) 30,00,000 சதுர மைலுக்குச் சற்றுக் குறைவாயிருந்தது. சேர்மனி 10,00,000 சதுரமைலுக்கும் குறைந்த நிலப்பரப்புடன் மூன்ருவதாயது.
பசுபிக்குப் பிரச்சினை
சேர்மானியரின் முயற்சிகள் ஆபிரிக்காவோடு நின்றுவிடவில்லை. 1884 ஆம் ஆண்டில் சேர்மனி, நியூகினியில் வட கரையோரத்தையும் "பிசுமாக்கு ஆக்கிப் பலகோ" எனப் பின்னர் அழைக்கப்பட்ட ஒரு கூட்டந் தீவுகளையும் ஈட்டிற்று. 1900 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாட்டொடு சமோவாவைப் பிரித்து எடுத்துக்கொண்டது. பிரித்தானியாவின் முழுச் சம்மதத்துடனேயே சேர்மானி யக் குடியேற்றப் பேரரசு ஆபிரிக்காவிலும் பசுபிக்கிலும் தாபிக்கப்பட்டது. அவ்

Page 218
414 ஐரோப்பாவின் அகற்சி
விடங்களிலுள்ள ஆங்கிலேயர் சேர்மானியர் அவ்விடங்களுக்குள் நுழைவதை எதிர்த்தனர். ஆனல் இவ்வெதிர்ப்பை உண்ணுட்டரசாங்கம் பொருட்படுத்த வில்லை. ‘மன்பதையின் நன்மைக்காகத் தெய்வத்தின் பெரு நோக்கங்களை நிறை வேற்றுவதில் எங்கள் நட்பாளரும் பங்காலியுமாக குடியேற்றத் துறையில் சேர் மனி தோன்றுவதைத் தாங்கள் வரவேற்பாகக் கிளாசுதன் கூறினன். 1890 ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் பிரிவினை அமைதியாக நிறைவேறியதற்கு, அக்கால் இங்கிலந்தின் முதல் அமைச்சரும் பிறநாட்டுச் செயலாளருமாயிருந்த சோல்சு பெரிப் பிரபுவின் திறனும் சாதுரியமுமே காரணமாயிருந்தன. 1914 ஆம் ஆண் டில் சேர்மானிய வல்லரசுகள் உலகத்தைப் போரில் அமிழ்த்தாதிருந்திருப்பின், சேர்மனி இன்றும் தான் ஈட்டிய நாடுகளை வைத்திருந்திருக்கும்.
பசுபிக்குப் பிரச்சினையில் ஆலோசிக்க வேண்டிய வேறு காரணிகளுமிருந்தன. வியத்தகு விசைவொடு யப்பான் வளர்ச்சியுற்றமை அவற்றுள் முதன்மையான தென்பகில் ஐயமில்லை. எனினும், இக்காரணி பற்றி அடுத்த அத்தியாயத்திற்
கூறுவதே வாய்ப்பாகும்.
அமெரிக்க ஐக்கிய அரசு
பசுபிக்குப் பிரச்சினையில் இன்னுமொரு காரணி ஐக்கிய அமெரிக்க அரசால் ஏற்பட்டது. 1801 ஆம் ஆண்டில் இயெபேசனல் விதிக்கப்பட்ட கோட்பாடுகளே ஐக்கிய அமெரிக்க அரசனது 19 ஆம் நூற்றண்டின் கடைசிப் பகுதிவரை கண்டிப்பாகக் கைக்கொண்டுவந்தது : (1) ஐரோப்பிய தகராறுகளில் நாங்கள் ஒருகாலும் ஈடுபடக் கூடாது '; (2) அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் இக்கரை நாடுகளிற் குறுக்கிட ஐரோப்பாவை ஒருகாலும் விடப்படாது; இவையே அக் கோட்பாடுகளாகும். 1823 ஆம் ஆண்டில் மொன்ருேக் குடிப்பதி பேரவைக்கு அனுப்பிய புகழ்பெற்ற செய்தி, இரண்டாங் கோட்பாட்டை இன்னும் வலியுறுத் தியது. அக்காலந் தொடக்கம் மொன்முேக் கோட்பாடு அமெரிக்க குழியற்றந் திரத்தின் இறுதிக்காப்பாயது. 1895 ஆம் ஆண்டில் குடிப்பதி கிளிவிலந்து திடீரென வெனேசுவெலாவுக்கும் பிரித்தானிய கயானுவுக்குமிடையே எழுந்த எல்லைப் பிரச்சினையை, பிரித்தானியாவும் வெனேசுவெலாவும் அமெரிக்காவின் நடுத்தீர்ப்புக்குவிடவேண்டுமென்று கேட்டான். சோல்சுபெரிப் பிரபுவின் தண் ணளி மனப்பான்மை இல்லாவிட்டால், இந்தக் கருவமான கோரிக்கையில்ை ஆங்கிலம் பேசும் இரு நாட்டு மக்களும் போரில் ஈடுபட்டிருப்பர். சோல்சுபெரிப் பிரபு இவ்வுறுத்திக்கேள்வியைப் பாரதூரமாகக் கருத மறுத்துவிட்டார். ஈற்றிற் பிரித்தானிய உரிமை உறுதியாக்கப்பட்டு 1897 ஆம் ஆண்டில் ஒரு பொது நடுத் தீர்வைப் பொருத்தனை பெரிய பிரித்தானியாவுக்கும் ஐக்கிய அமெரிக்க நாட் டுக்குமிடையிற் கைச்சாத்திடப்பட்டது. எனினும் 1914 ஆம் ஆண்டு வரையும் ஐக்கிய அமெரிக்க நாட்டுச் செனற்றல் முறைப்படி அது ஏற்கப்படவில்லை.

ஐரோப்பாவின் அகற்சி 415
வெனேசுேெலா அலுவல் தன்னளவில் அத்துணை முதன்மை இல்லாததெனி னும், அமெரிக்கா கடைப்பிடித்து வந்த மொன்ருேக் கோட்பாட்டுக்கு அது முற்றுப்புள்ளி வைத்தமையால், முதன்மை படைத்ததாகும். இதற்குப் பின்னர் இசுப்பெயினுக்கும் அ. ஐ. நா. இற்குமிடையில் விரைவிற் போர் ஆரம்பித்தது. இப்போரின் விளைவாகக் கியூபா, செயலளவில் அமெரிக்காவின் புரப்பாட்சியின் கீழ்ப்பட்டது. பிலிப்பைன் தீவுகள் நிச்சயமாக அமெரிக்காவிற்குச் சொந்தமா யின. அதே ஆண்டில் (1898), அரை நூற்முண்டாக அமெரிக்கா அக்கறை காட்டிய சாந்திவிச்சுத்தீவுகள் குடியரசோடு சேர்க்கப்பட்டு, முறைப்படி ஆவாய்த் தீவுகள் என்னும் ஆள்புலமாயின. 1899 ஆம் ஆண்டிற் சமோவாத் தீவு கள் சேர்மனிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப் பட்டன. ஒரு நூற்ருண்டுக் காலத்தில் அத்திலாந்திக்கிலிருந்து பசுபிக்குக் கடற் கரைப் பகுதி வரையும், ஒரு கண்டத்திலிருந்து இன்னெரு கண்டத்திற்கும் பா விய ஐக்கிய அமெரிக்க அரசு, உலக அரசியலிலே, ஐரோப்பியப் பெருவல்லரசு களொடு ஒருங்குவைத்தெண்ணத்தக்க உயர் நிலையடைந்தது. உலக மேற்பரப்புச் சுருங்கியமையால், உண்மையாக அந்நாடு செய்யக்கூடியது பிறிதொன்றில்லை.

Page 219
E681 'ısıyısıso
*uo
■■卡遭) -卤
|-*****...*... f5!*력 :|| ~~~ło
frr:To = ∞西-尹恩 -
的*************-归厚 *..*實事門學법 특급월P역半平
臺事實性, 「道實를 『』『r)-地主事中學역
澱劑愛 |9,81 poorw-rw-zsıklubą.
maeșẾso||+ siis susț¢)
역學書Tw년 불구:H
::*: 日高月日記事 上高等學高n
ɛ6sı (şȚā
| ons-0 ||Msportiş sofi,
no unqos冒曾与婷婷
motușĦțurit,Xmœuššggi
_|-S S---- - - _- - -), ±− →--~~~~|-
 
 
 
 
 
 
 
 
 

தீதியாயம்
சூழியற் புரட்சி (1890-1911)
மூவர் நட்புறவும் மூவர் உடன்பாடும்
முக்கியமான திகதிகள் :
1890 பிசுமாக்கின் வீழ்ச்சி. 1890 ஆபிரிக்காவின் இறுதிப் பிரிவினே. 1890 இங்கிலந்து சேர்மனிக்கு எலிகோலந்தைக் கையளித்தல், 1881 பிரான்சிய-இசசிய சத்துபாடு. 1894 ஆமீனியாவில் நடந்த அட்மிேயங்கன்-1896. 18ரத் சின-யப்பானியப் போர். 1898 சிமனுேசெகிப் பொருத்தனே, 1895 ல்ே கால்வாய் திறக்கப்பட்டது. 1896 பிரான்சிய-இாசிய நட்புறவு வெளியிடப்பட்டது. 1827 கிரேக்க-துருக்கியப் போர். 1897 கிரீத்து கிரீசுடன் ஒன்று சேர்க்கப்பட்டது. 1898 பசோடா நெருக்கடி 1898 கைசர் கொன்சுதாந்திநோப்பிளிற்கும் எருசலேமிற்கும் செல்ஸில். 1898 இசுப்பானிய அமெரிக்கப் போர். 1898 சீனத் துறைப்பட்டினங்கன் வல்லரசுதளாற் கைப்பற்றப்பட்டன. 1901 விண்ருேறியர இராணியின் மரணம். 1902 ஆங்கில-யப்பானியப் பொருக்கனே. இது 1905 ஆம் ஆண்டில் புதுப்
பிக்கப்பட்டது. ஆங்கில-பிரான்சிய rs. Leitu, 19ரதி இரசிய-யப்பானியப் போர். 1905 போட்டாதர் சானடைதல். போற்சுமதுப் பொருத்தனே, 1905 தாஞ்சியரிற் கைசர், 1908 அல்செருசு மாநாடு, 1908 துருக்கி இளேஞரின் புரட்சி.
19 08 Luċia Gang fu I ew LauT L' 7.
1908 ஒகத்திரிய-அங்கேரி பொசினியாவையும் ஏசகோவினுவையும் வலிந்

Page 220
418 சூழியற் புரட்சி
மூன்ரும் யோட்சு 1760 ஆம் ஆண்டில் இங்கிலந்தில் அரசுகட்டிலேறியபோது, பிற்று அதிகாரம் பெற்றிருப்பதைக் கண்டான். நான்கு ஆண்டுகளில் இங்கிலந்தை ஆதிக்கத்தின் உச்சியில் வைத்த பிற்று 1761 ஆம் ஆண்டில் பதவி யினின்றும் விலக்கப்பட்டான். யோட்சு செயலளவிலும் அரசனுக இருக்கக் தீர்மானஞ் செய்தான். அரசாட்சியை ஓர் அமைச்சனுடன் பகிர்ந்துகொள்ள அவன் விரும்பவில்லை. 1888 ஆம் ஆண்டில் அவன் போனின் போன் பிரசியா வுக்கும் சேர்மனிக்கும் அரசனனன். பிசுமாக்கு அதிகாரம் பெற்றிருப்பதை அவன் கண்டு, தன் முன்னேன் காட்டிய வழியைப் பின்பற்றி 1890 ஆம் ஆண்டிற் பிசுமாக்கைப் பதவியிலிருந்தும் நீக்கினன்.
இரண்டாம் உவிலியம்
அடுத்த இருபது ஆண்டுகளாக இரண்டாம் கைசர் உவிலியம் ஐரோப்பாவில் முதன்மை படைத்தவனுயிருந்தான். இக்காலப் பகுதிக்குள், பிசுமாக்குக் கவன மாகக் கட்டியெழுப்பிய சூழியல் அமைப்பை அழித்துவிட்டான். அவன் தன் ட்ைடைப் பூரண தனிநிலைமை அடையச் செய்தான் எனலாம். 1890 ஆம் ஆண்டில் ஒசுத்திரியாவும் இத்தாலியும் சேர்மனியுடன் மூவர் நட்புறவில் ஐக்கியப்பட்டன. அப்போது ஏனைய பெருவல்லரசுகள் ஒன்றேடொன்று தொடர்பற்றுத் தனிமையாயிருந்தன. ஏலவே சேர்மனி இரசியாவின் நட்பை இழப்பதாயிற்று. ஆனல், பிரான்சு அந்த நட்பை இன்னும் அடையவில்லை.
இத்தாலி பிரான்சிலிருந்தும், பிரான்சு இங்கிலந்திலிருந்தும், இங்கிலந்து இரசியாவிலிருந்தும் பிணங்கிப் பிரிந்திருந்தன. இருபது ஆண்டுகளுக்குப்பின் னர், மூன்முவது பங்காளியைப் பொறுத்த அளவில் ஏலவே நலிவடைந்து கொண்டிருந்த மூவர் நட்புறவுக்கு எதிராக, இங்கிலந்து, பிரான்சு, இரசியா ஆகியன கூடின. தம்முள் நட்புறவு பூண்ட வல்லரசுகள் தன்னை ' வளைந்திருப் பதைச் சேர்மனி கண்டது. வேறும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. பின்வரும் பந்திகள் அவற்றைத் தெரிவிக்கும்.
சேர்மனியும் இங்கிலந்தும்
1890 ஆம் ஆண்டில், சேர்மனிக்கும் இங்கிலந்துக்குமிடையில் நட்பு அதிகரிக்கு மென நம்பிக்கை தரும் அறிகுறிகள் இருந்தன. அந்த ஆண்டில், சோல்சுபெரிப் பிரபு இரத்தஞ் சிந்தாது ஆபிரிக்காவின் இறுதிப் பிரிவினையை நிறைவேற்றினர். உண்மையாகவே இது தனிச்சிறப்புடைய வெற்றியாகும். சேர்மனி ஒரு பெரிய பங்கைப் பெற்றது. இன்னும், இங்கிலந்திலிருந்து எலிகோலந்தையும் பெற்றது.

சூழியற் புரட்சி 419
எவ்விடத்திலாயினும் சேர்மனியின் நலன்களும் இங்கிலந்தின் நலன்களும் முரண் படவில்லை. ஆனல், இங்கிலந்துக்கும் பிரான்சுக்குமிடையிலும் (குறிப்பாக எகித்தைப் பற்றி), இங்கிலந்திற்கும் இரசியாவுக்குமிடையிலும் (பிரதானமாக மத்தியாசியாவில்) கருத்துவேற்றுமை கடுமையாய் இருந்தது. தன் மேற்கு எல்லைப்புறத்தைப் பற்றிச் சேர்மனி இன்னும் சஞ்சலப்பட்டது. முன்னர்க் கூறப் பட்டதுபோல், இரசியாவுடன் அதன் தொடர்புகள் 1860-1878 காலப்பகுதி யிலிருந்தவாங்கு அத்துணை நேசபான்மையானவையாய் இருக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் இரு பெரிய கியூத்தொனிக்குச் சாதியினருக்குமிடையில் நட்புறவை எதிர்பார்ப்பது இயல்பேயன்முே? ஆங்கிலப் பாராளுமன்ற அரசாங்க முறைமையிற் பிசுமாக்கு பெரும் அவநம்பிக்கையுடைவனுயிருந்தபோதிலும், கூட்டுறவை ஏற்படுத்தப் பலமுறையும் வலிந்துழைத்தான். "அப்பால், இளம் பிராயத்தனன பேரரசன் 1895 இல் அத்துறையில் மீண்டும் முயற்சி செய்தான யினும், ‘கவர்ப்புத்தி உடையவனன இம்மன்னன் தன் பேதைமை காரணமாகக் குடிப்பதி குரூகருக்குப் பாராட்டுச் செய்தி அனுப்பினன்' போவர்ப் போர் ஆரம்பமானபின் சேர்மானியப் பேரரசன் 1899 ஆம் ஆண்டு நவம்பரில் இங்கிலந் திற்குச் சென்று, மீண்டும் நட்புறவைப்பற்றிக் கலந்துரையாடினன். இக்கருத்து அப்போது குடியேற்றச் செயலாளனுயிருந்த சேம்பலேன் என்பவனல் இதய பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூடிய அனுபவமும் விழிப்புமுடைய சோல்சுபெரிப் பிரபு அதைக் கண்டித்தான். ஆனல், 1900 ஆம் ஆண்டிற் பிற நாட்டு அலுவலகத்திற் சோல்சுபெரிப் பிரபுவிற்குப் பின் பொறுப்பேற்ற இலான்சு டவுன் பிரபு, இங்கிலந்தின் ஆபத்தான தனித்த நிலையைப்பற்றிச் சேம்பலேன் கொண்ட கருத்துக்களையே உடையவனுய் இருந்தான். இவனே 1902 ஆம் ஆண் டில் யப்பானுடனும், 1904 ஆம் ஆண்டிற் பிரான்சுடனும் பொருத்தனைகள் நிறை வேற்றியும் இரசியாவுடன் இணக்கப்பேச்சுக்கள் செய்தும் இங்கிலந்தின் தனிமை நிலைமையை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்தான். அக்காலச் குழியல் நிலைமை யில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவென்முல், 1902 ஆம் ஆண்டிலும் இங்கிலந்து சேர்மனி செல்வழியிலேயே நாட்டமாயிருந்தது. என்ருலும், பிற நாட்டலுவல்களிற் சேர்மனி தவமுக நடந்தமையால் இங்கிலந்து சேர்மனிக்கு மாமுன கட்சியிற் புகுந்தது." W−
33 ஆம் அத்தியாயத்தைப் பார்க்க. இதற்குப் பிராந்தன் பேக்கு எழுதிய "பிசுமாக்கின் காலந்தொடக்கம் உலகப் போர் வரையும்” என்னும் நூலைப் பார்க்க.

Page 221
420 சூழியற் புரட்சி
பிரான்சும் இரசியாவும்
சேர்மனி இங்கிலந்தை வசப்படுத்த முயன்றுகொண்டிருந்த பொழுது, பிரான்சு இரசியாவுடன் ஒரு நட்புறவு உடன்படிக்கை நிறைவேற்றியது. பிறகினேயின் மந்திரத்தில், 1886 ஆம் ஆண்டில், போர் அமைச்சனுகப் பதவி யேற்ற சேனபதி பூலாங்கரே இரசியாவுடன் நட்புப் பூணவேண்டியதன் அவசியத்தை முதன்முதற் பிரசித்தஞ் செய்த பிரான்சிய அரசறிஞரில் ஒருவன வன். 1887 ஆம் ஆண்டில், பிரான்சுக்கும் சேர்மனிக்குமிடையில் அண்மையிற் போர் ஆரம்பிக்கும் போலத் தோற்றியது. பெப்புருவரி 20 ஆம் திகதி, இரசிய பிறநாட்டலுவலகம் வெளியிடும் 'நோட்டு' என்னும் பத்திரிகை மேல்வரும் வார்த்தைகளைக்கொண்ட குறிப்பிடத்தக்கவொரு கட்டுரையை வெளியிட்டது:- பிரான்சுக்கும் சேர்மனிக்குமிடையில் இன்னுமொரு போர் நிகழுமாயின், இர சியா முன்னர் கைக்கொண்ட தண்ணளி நடுநிலைமையைக் கவனித்துப் பின்பற்று தல் இரசியாவின் நலன்களுக்குப் பாதகமாக முடியும். எக்காரணம் கொண்டும் பீற்றசுபேக்கு மந்திரம் பிரான்சை இன்னும் வலிமை குன்றவிடப் போதில்லை." 1888 ஆம் ஆண்டிற் பிசுமாக்கு நன்றெனக் கருதிப் பிரசித்தப்படுத்திய மூவர் நட்புறவு நியதிகளால் இரசியா திகிலடைந்தது. பேளின் கடன்கொடுக்க மறுத் தமை இரசியாவிற்குக் கோபத்தை மூட்டியது. பிரான்சு கடன்கொடுக்க முன் வந்தது. 1888 ஆம் ஆண்டு தொடக்கம் இரசியாவுக்குத் தொடர்ச்சியாகக் கடன் கள் சாதாரணமான நியதிகளுடன் கொடுக்கப்பட்டன. பாரிசு இன்றும் தன் தாராள குணத்தைப் பற்றித் துயருறுகிறது. ஆனல், இத்தாராள குணத்தின் பயனக இரசியா, தான் வெளிநாடுகளுக்குக் கொடுக்கவேண்டிய முழுக் கடன் களையும் மாற்றவும், தன் கடற்படை தசைப் படைகளின் உபகரணங்களைச் சீர்ப் படுத்தவும் தன் இருப்புப்பாதை முறைமையை (பிரதானமாகச் சைபீரியாவை நோக்கியும் மத்திய ஆசியாவை நோக்கியும்) வித்தரிக்கவும் சாத்தியமாயிற்று.
1891 ஆம் ஆண்டிற் பிரான்சிய கடற்படை இரசியாவிற்கும் இரசிய கடற்படை பிரான்சிற்கும் சென்றன. இவ்வணக்க இணக்கமான நடவடிக்கைகளின் பின்னர், 1892 ஆம் ஆண்டில் ஒரு படை உடன்படிக்கையும், 1893 ஆம் ஆண்டில் வணிகப் பொருத்தனையும் நிறைவேறின. 1896 ஆம் ஆண்டில், விரிவான ஒரு நட்புறவின் நியதிகள் வெளியிடப்பட்டன. இந்நட்புறவு இயற்கையானதே; இரு நாடுகளும் சேர்மனியைப் பற்றி அச்சங்கொண்டிருந்தன. இரு நாடுகளுக்கும் பிசுமாக்கின் ஏவுதலினல் இங்கிலந்துடன் சச்சரவுகள் இருந்தன.

சூழியற் புரட்சி 421.
இாசியாவின் பிறநாட்டுப் பூட்கை
இரசியாவின் பிறநாட்டுப் பூட்கை குறைந்தது இருநூற்முண்டு காலத்துக்கே
லும், ஆச்சரியப்படத்தக்கவிதமாய் எவ்வித மாற்றமும் இல்லாது பின்பற்றப்
பட்டது. ஐரோப்பிய வல்லரசாகிய அதன் நிலைமைக்கு, தங்குதடையின்றிக் கருங் கடலிலிருந்து கிழக்கு மத்தியதரைக் கடலுக்குச் செல்வது அவசியமாகும். இவ்
வுரிமையில்லாவிட்டால் அது செயலளவில் எப்புறமும் நிலத்தாற் குழப்பட்டிருக்
கும். கொன்சுதாந்திநோப்பிளைப் பெருது தொடுகடல்களில் தன் முழு ஆதிக்
கத்தை இரசியா செலுத்த முடியுமோ என்பது வாதத்திற்குரியவிடயமாகும்.
கொன்சுதாந்திநோப்பிள் இல்லாது இரசியா அதிகாரஞ் செலுத்த முடியா
தெனின், கொன்சுதாந்திநோப்பிளைக் கைப்பற்றுவது அதற்கு அவசியமாகிறது.
19 ஆம் நூற்ருண்டில் மும்முறை கொன்சுதாந்திநோப்பிள் அதன் பிடிக்குள்
அகப்படும்போலிருந்தது. மும்முறை இங்கிலந்து அதை எதிர்த்துத் தடுத்தது.
இங்கிலந்து அதைக் கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து அகற்றினல், அது இங்கி
லந்தை மத்திய ஆசியாவில் அச்சுறுத்திப் பசுபிக்குத் திசையில் முன்னேறிச்
செல்ல முடியும். மத்திய ஆசியாவில் அதன் முன்னேற்றம் தீவிரமாயும் உறுதியா யுமிருந்தது. 1868 ஆம் ஆண்டில் அது சமர்க்கண்டை வலிந்திணைத்தது. 1873 ஆம் ஆண்டில் அது கிவாவையும், 1884 ஆம் ஆண்டில் மேவையும் கைப்
பற்றியது. திரான்சு கசுப்பியன் இருப்புப் பாதையைக் கட்டி முடித்துத் (1880
1899) தன் வெற்றிகளை இரசியா வலுப்படுத்தியது. மேவை வென்றதுடன்
இரசியா எாத்து என்னுமிடத்திலிருந்து 200 மைலுக்குள் வந்துவிட்டது.
இதனல், பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தைப்பற்றி இங்கிலந்து திகிலடைந்தது. மேவிலிருந்து நேர் தெற்கே 100 மைல் தூரத்தி
அலுள்ள பெஞ்சிடே என்னும் கிராமத்தை 1885 ஆம் ஆண்டில் இரசியா கைப்
பற்றியபொழுது, பிரித்தானியா கூடிய கிகில் அடைந்தது. அந்த ஆண்டிற்
இங்கிலந்துக்கும் இரசியாவுக்கும் இடையிற் போர் தொடங்குந் தறுவாயில்,
இணக்கமேற்பட்டது. ஆனல், 1887 ஆம் ஆண்டில் நிறைவேறிய ஒரு பொருத்
தனை இரசியா அபுகானித்தானை நோக்கி முன்னேறுவதைத் தடுத்தது. எப்படி
யாயினும், இரசியா வடக்கு நோக்கியுங் கிழக்கு நோக்கியுந் தொடர்ந்து முன் னேறி 1895 ஆம் ஆண்டில் பமீர்ப் பகுதியை வலிந்திணைத்தது. இவ்வண்ணம்
இரசியாவின் எல்லே கிழக்குப் பகுதியிற் சீனத் துருக்கித்தானையும் தெற்கே பிரித்
தானிய வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தையும் தொட்டது.
இதற்கிடையில், 1839 ஆம் ஆண்டிலிருந்து இரசியா வட பசுபிக்குச் சமுத் திரத்தை நோக்கி உறுதியாகத் தன்னட்டைப் பெருப்பித்துக்கொண்டுவந்தது. 1860 ஆம் ஆண்டு வரையில், தொடரான பல கோட்டைகளாற் காவல் செய்யப் பட்டிருந்த அமூர் ஓர் இரசிய நதியாயது. திரான்சு சைபீரியன் இருப்புப்பாதை 1891 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு ஈற்றில் மஞ்குரியாவுக்கப்பால் விலாடி
வெசுட்டொக்கு என்னும் அதன் கீழ் எல்லைக்கோடி வரையும் அமைக்கப்பட்டது.

Page 222
422 சூழியற் புரட்சி
1860 ஆம் ஆண்டிற் கைப்பற்றப்பட்ட விலாடிவெசுட்டொக்கு வட பசுபிக்கு நாடுகளின்மீது இரசியாவுக்கு உறுதியான பிடியை அளித்தது. இந்நகர் 1902ஆம் ஆண்டில் 5,500 மைல் தூரத்திலுள்ள பீற்றசுபேக்கு நகரத்துடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டது.
யப்பானின் எழுச்சி
இக்காலத்தில், தூரகிழக்கிற் கவனிக்கப்பட வேண்டிய வேருெரு வல்லரசு தோன்றியது. 1868 வரையும் யப்பான் தன் சமூக பொருளாதார அரசியல் அமைப்புக்களில் முற்முய் மத்தியகாலத் தன்மைகள் வாய்ந்ததாயிருந்தது. அந் நாட்டுள் நுழைய அமெரிக்க ஐக்கிய அரசும் வேறு வல்லரசுகளும் முயற்சி செய்தும், யப்பான் பெரும்பாலும் தனிமைக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து வந்தது. உலக அரசியலில் அந்நாடு மதிக்கக்கூடிய நிலையிலில்லே. ஆனல், 19 ஆம் நூற்முண்டின் கடைசிக் காற்பகுதியில் யப்பான் முற்முக மாறிற்று. 1870 ஆம் ஆண்டில் யப்பான் இருப்புப் பாதைகள் அமைக்க ஆரம்பித்தது. இலங்கசயரி லிருந்து யப்பான் நெசவுயந்திரங்களையுந் தொழினுட்பமறிந் தோரையும் வர வழைத்தது. தன் தரைப்படையைப் பயிற்றச் சேர்மானிய படைவீரர்களை நியமனஞ்செய்தது. ஆங்கிலக் கப்பலோட்டிகளின் மேற்பார்வையில் ஒரு வன்மையுடைய கடற் படையை அமைத்தது. 1894-1895 இல், சீனவை எதிர் பாராத முறையிலே தோற்கடித்தபோதே யப்பானின் புனர்அமைப்பின் பலன் கள் உலகத்திற்குத் தெளிவாயின. பிரான்சு, இரசியா, சேர்மனி ஆகிய நாடுகள் அதன் வெற்றியின் பலன்களைக் கொள்ளையடிக்கக் குறுக்கிட்டன. 1896 ஆம் ஆண்டில் இரசியா சீனுவுடன் ஓர் இரகசியப் பொருத்தனை நிறைவேற்றி அதன் படி பெருஞ் சலுகைகளைப் பெற்றது. 1898 ஆம் ஆண்டில், சேர்மனி கியாச் சோவை 99 வருடக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. அடுத்த ஆண்டில் இர சியா, 1895 ஆம் ஆண்டில் யப்பான் கைப்பற்ற முனைந்தபொழுது தான் தடுத்து வைத்திருத்த போட்டாதர், தலியன்வான் என்னும் நகரங்களைத் தானே கைப் பற்றியது. அப்போது யப்பானியர் ஆட்சியிலிருந்த வேகாவே என்னுமிடத்தைக் குத்தகைக்கு எடுக்கும்படி சீன இங்கிலந்தை அழைத்தது. 1898 ஆம் ஆண்டில் இங்கிலந்து, இரசியா போட்டாதரை வைத்திருக்கும் வரையும் தான் வேகாவே யைக் கைப்பற்றியிருப்பதற்கு இணங்கியது. இவ்வண்ணம் மேல்நாட்டு வல்லரசு கள் சீனவின் முழுமையைப் பேணி யப்பானத் தொலையில் வைத்தன.
யப்பான் பழிவாங்க அதிக காலம் காத்திருக்கவேண்டியிருக்கவில்லை. நாம்
முன்னர் கண்டது போல, அமெரிக்க ஐக்கிய அரசு பசுப்பிக்கைச்சேர்த ஒரு பெரும் வல்லரசாயது.

சூழியற் புரட்சி 423
ஆங்கில-யப்பானியப் பொருத்தனை
சீனுவில் இரசியாவின் முன்னேற்றம் கண்டு திகிலடைந்ததுபோலவே, பசுபிக் கில் அமெரிக்காவின் முன்னேற்றத்தினுல் யப்பான் திகிலடைந்தது. யப்பானுக்கு ஒரு நட்புநாடு அவசியம் வேண்டியிருந்தது. யப்பான் அந்நட்பை இங்கிலந்திற் கண்டது. யப்பான் 1902 ஆம் ஆண்டில் அதனுடன் ஒரு பொருத்தனையை நிறை வேற்றியது. இப்பொருத்தனை தற்பாதுகாப்புக்கென அமைந்தபோதிலும் மிகுந்த குழியற் சிறப்பு உடையதாய் இருந்தது. இதுவரையும் இங்கிலந்து தன் ‘சிறப் பான தனி நிலையைப் பற்றிப் பெருமை பாராட்டியது. அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள்-முக்கியமாகத் தென்னுயிரிக்கப் போர்-மாறிக்கொண்டிருக்கும் உலக நிலைமையில், தனிமைக் கொள்கையிற் சிறப்பு யாதும் இல்லையென்பதை இங்கிலந்துக்கு அறிவுறுத்தின. ஆயின், மத்தியகாலப் பிற்போக்கு நிலையிலிருந்து அண்மையில் வெளியேறிய குணபுல வல்லரசொன்றுடன், கூட்டுறவில் இறங்குதற் காக இங்கிலந்து தன் தனிமை நிலையைக் கைவிட்டபோது, உள்நர்ட்டிலும் வெளி நாடுகளிலும் பெரும் பரபரப்பு உண்டாயது. எப்படியாயினும், புதிய கொள் கையை மேற்கொண்டமை ஏற்புடையதாகும். இந்த நட்புறவு 1905 ஆம் ஆண்டி அலும் 1911 ஆம் ஆண்டிலும் புதுப்பிக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டது. இாசியயப்பானிய போரின்போது இந்த நட்புறவின் பயனை யப்பான் கண்டது; உலகப் போரில், பிரித்தானிய பேரரசும் இந்த நட்புறவின் பலனை நன்முக அறிந்தது. யப்பானிய கப்பற்படையின் உதவியின்றி ஒசுத்திாலாசிய படைப் பகுதிகளே ஐரோப்பாவிற்கு ஏற்றிச் செல்லல் கடினமாயிருந்திருக்கும். அமைதிப் பொருத் தனையிற் கியாச்சோவும் புவிமத்திய கோட்டுக்கு வடக்கேயுள்ள, முன்னர் சேர் மனிக்குச் சொந்தமாயிருந்த பசுபிக்குத் தீவுகளும் யப்பானுக்குக் கிடைத்தன. புவிமத்திய கோட்டுக்குத் தெற்கேயுள்ள தீவுகள், வடக்கேயுள்ள தீவுக் கூட்டங் களைப் போல, பெரிய பிரித்தானியா, ஒசுத்திரேலியா, நியூசிலந்து ஆகிய நாடு களின் பொறுப்பாணையின் கீழாயின. A.
அமெரிக்க ஐக்கிய அரசின் உணர்ச்சிகளைத் தணிக்குமுகமாக 1922 ஆம் ஆண் டில் ஆங்கில-யப்பானியப் பொருத்தனை ஒறுத்துரைக்கப்பட்டது. அதனிடத்தில் நால்வர் பொருத்தனை நிறைவேறியது. இப்பொருத்தனை பசுபிக்கில் அமைதியை
நிலவச் செய்யுமென எதிர்பார்க்கப்பட்டது.
இரசிய-யப்பானியப் போர்
இதற்கிடையில், 1895 தொடக்கம் மூண்டுகொண்டிருந்த போர் (1904) யப்பானுக்கும் இரசியாவுக்குமிடையில் ஆரம்பமாயது. உலகம் ஆச்சரியப்படும் படி, 'மண் கால்களை உடைய பெரிய உருவம்’ (இரசியா) தீவுப் பேரரசின் தாக்கல்களுக்கு முன்னிற்க ஆற்ருது இடிந்து விழுந்தது. தரையிலும் கடலிலும் யப்பான் தீர்க்கமான வெற்றிகளைப் பெற்றது. 1905 ஆம் ஆண்டிற் போரை முடி

Page 223
424 சூழியற் புரட்சி
வுக்குக் கொண்டு வந்த போட்சுமதுப் பொருத்தனை யப்பான் அடைந்த வெற்றி களைப் பிரதி பலித்தது. இரசியாவும் யப்பானும் மஞ்சூரியாவிலிருந்து வெளி யேறுவதென இருவயினெத்த உடன்பாட்டிற்கு வந்தனர். கொரியா யப்பானது ஆதிக்க வட்டாரத்திற்குட்படுவதை இரசியா அங்கீகரித்தது. போட்டாதாை யும் இலியோதுங்குத் தீபகற்பத்தையும், 1875 ஆம் ஆண்டில் தான் கைப்பற்றிய சகாலின் தீவையும் யப்பானுக்குக் கையளித்தது. 1910 ஆம் ஆண்டிற் கொரியா
நிச்சயமாக யப்பானுடன் வலிந்திணைக்கப்பட்டது.
இப்போரினல் முதன்மையான விளைவுகள் ஏற்பட்டன. ஆசியா முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில், யப்பானின் வெற்றி அழையாது நுழையும் வெள்ளை யனுக்கு ஒரு பலத்த அடியென வரவேற்கப்பட்டது. யப்பான முன்மாதிரி யாகக் கொண்டு, சீனு தன் நிறுவனங்களை ஐரோப்பிய மயமாக்க விழைந்து, 1912 ஆம் ஆண்டில் தன் பண்டைய அரச வமிசத்தைக் கவிழ்த்துவிட்டது. அன்று தொடக்கம் அந்நாடு பெரும்பாலும் ஆட்சியறவு நிலையிலேயே இருந்தது. இரசியாவிலேயே இந்தத் தோல்வி புரட்சிக் கட்சிக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. இரசிய வல்லாட்சியானது ஒரு பிரதிநிதித்துவச் சட்டசபையை அமைக்கும் அளவிற்கு விட்டுக்கொடுத்தது. சார், நிருவாகத்தின்மேல் தனக் கிருந்த ஆட்சியைக் கைவிடவில்லை. ஆனல், சட்டசபையைப் பல இடர்கள் எதிர்த்து வந்தபோதிலும், பாலனச் சீர்திருத்தங்கள் பலவற்றையும் அடக்கிய திட்டமொன்று அச்சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சீர்திருத்தங்கள் நீண்டகாலமாகத் தாமதஞ் செய்யப்பட்டனவென்பதை மாபெரும் போர் எடுக்
அக் காட்டியது.
மூவர் உடன்பாடு
இரசியாவுக்குத் தொல்லைவிளைத்தற்குக் காரணமாய் இருந்தவற்றில் ஒன்று 1907 ஆம் ஆண்டில் நீங்கியது. 1904 ஆம் ஆண்டில், இங்கிலந்து யப்பானுடன் பொருத்தனை நிறைவேற்றிய பின்னர், தொடர்ந்து பிரான்சுடன் விரிவான ஓர் உடன்படிக்கையை நிறைவேற்றியது. இருபது ஆண்டுகளாகவோ, கூடவோ ஆங்கில-பிரான்சியத் தொடர்புகள் ஒருபோதும் நல்லாயிருக்கவில்லை. ஆனல் நாங்கள் கண்டுகொண்டதுபோல், பசோடா நிகழ்ச்சியின் பின்னர் தொடர்புகள் விரைவிற் சீரடைந்தன. 1904 ஆம் ஆண்டில் விரிவான ஓர் உடன்படிக்கை நிறை வேறியது. உலகத்தின் எப்பகுதியிலும் இவ்விரு நாடுகளுக்குமிடையிற் கருத்து வேற்றுமைக்குக் காரணமாய் இருந்த, தீர்த்துவைக்கப்படாத பல பிரச்சினைகள் இவ்வுடன்படிக்கையால் தீர்ந்தன. அப்பகுதிகள் நியூபண்ணிலந்து (1713 ஆம்

சூழியற் புரட்சி 425
ஆண்டு தொடக்கம் மீன்பிடித்தலைப் பற்றிப் பிணக்குக்கள் இருந்தன), நியூ ஏபிரிது, சீயம், மடகாசுக்கர், மேற்காபிரிக்கா ஆகியனவே. ஆனல் உடன்படிக்கை யில் முதலிடம் பெற்ற பகுதி வட ஆபிரிக்காவாகும். பிரான்சு எகித்தில் இங்கிலந் தின் முதன்மையான நிலையை அங்கீகரித்தது; அவ்வாறே இங்கிலந்தும் மொாக் கோவிற் பிரான்சின் ஆதிக்க நிலையை அங்கீகரித்தது.
இவ்வண்ணம் இங்கிலந்தும் பிரான்சும் நண்பர்களாயின. 1891 ஆம் ஆண்டி லிருந்தே பிரான்சும் இரசியாவும் நண்பர்களாயிருந்தன. 1907 ஆம் ஆண்டில் இங்கிலந்திற்கும் இரசியாவுக்குமிடையில் நிறைவேறிய உடன்படிக்கையினல் மூவர் உடன்பாடு நிறைவேறியது. மத்திய ஆசியாவிலே தீர்த்துவைக்கப்படாத சிக்கல் யாவற்றையும் இவ்வொப்பந்தம் உள்ளடக்கியதாகும். இரு பகுதியினரும் திபேத்தின் ஆள்புல முழுமையை மதித்து நடக்க ஒப்புக் கொண்டனர். வடபகுதி இரசியாவுக்கும் தென்பகுதி பிரித்தானியாவுக்கும் இவ்விரு பகுதிகளுக்குமிடைப் பகுதி நடுநிலைப்பகுதி எனவும் பாரசீகம் மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டது. அபுகானித்தான் இரசிய ஆதிக்க வட்டாரத்துக்குப் புறம்பே உளதென அங்கீகரிக்கப்பட்டது. ஆனற் பெரிய பிரித்தானியா அபுகானித்தானின் சுய வாட்சியை மதித்து நடக்க ஒப்புக்கொண்டது.
சமீப கிழக்கு
மத்திய கிழக்குப் பகுதியில் அலுவல்கள் ஒழுங்குபடுத்தப்படுமுன்னர், சமீப கிழக்கில் முதன்மையான நெருக்கடி யொன்று இடையூமுக நிகழ்ந்தது. 1878 ஆம் ஆண்டு தொடக்கம் போற்கன் குடாநாட்டில் நிலைமைகள் மாறுதலடைந்து விட்டன. பேளின் பொருத்தனையில் அடங்கிய ஏற்பாடுகள் இயற்கையோடு இயைந்தவையல்ல. துருக்கரின் நாட்டங்கள் குறைக்கப்பட்டன. ஆனல், அவர் கள் ஆதிக்கம் குறைந்துகொண்டேயிருந்தது. ஆனற் புதிய நாட்டின அரசு களோ விருத்தியடைந்து கொண்டிருந்தன. 1885 ஆம் ஆண்டில் கிழக்கு உரூமே லியாவிலுள்ள பல்கேரியர், பல்கேரியா நாட்டிலிருந்து பிரிந்து வேருகியிருக்க மாட்டோமென்று தீர்மானித்தார்கள். ஐக்கியப்பட்ட ஒரு பல்கேரியா உரு வாகியது. ஆனற் புதிய பல்கேரியா இரசியாவின் விடுதேங்காயாய் இருக்க விரும்பாமலிருந்ததோடு, இரசியா கொன்சுதாந்திநோப்பிளை நோக்கி முன்னேறு வதைத் தடுக்கும் வன்மையுள்ள அரணுகவும் மிளிர்ந்தது. 1868 ஆம் ஆண்டில் வல்லரசுகள் (குறிப்பாக பிரித்தானியா) நெருக்கியமையால், நடந்து முடிந்த காரியத்தைச் சுலுத்தான் அங்கீகரித்தான். எப்படியாயினும், இரசியா தன் ஆதரவிலிருந்த பற்றன்பேக்கின் இளவரசனன அலச்சாந்தரைப் பதவியி னின்றும் விலகுமாறு கட்டாயம் பண்ணியது. சிறு தாமதத்தின் பின்னர் அவன் இடத்திற்கு ஒரு சேர்மானிய சிற்றரசனன சாட்சே கோபேக்கு-கோதாவின் இளவரசன் பேடினந்து, பல்கேரியச் சோபிமுஞ்சியினுல் தேர்ந்தெடுக்கப்
பட்டான்.

Page 224
426 சூழியற் புரட்சி
பேளினிலிருந்து வெறுங்கையுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிய கிரேக்கர், பல்கேரியா பட்ட அநீதி கண்டு உணர்ச்சி வசப்பட்டனர். கண்டத்திற்குரிய 6ᎯᏛ சுடன் ஐக்கியம் பூணக் கிறீற்று பேரவாக் கொண்டு துருக்கியினின்றும் தான் விலகப் போவதாகப் பிரகடனஞ் செய்தது. 1897 ஆம் ஆண்டில், துருக்கிக்கெதி ராக கிரீசு போரில் இறங்கி 30 நாட்போராற் செயலளவில் அந்தப் பெரிய கிரேக்கத் தீவின் ? சுதந்திரத்தைப் பெற்றது. ஆனல், 1908 வரையும், அந்நாடு கிரீசுடன் ஐக்கியம் பூணுதல் நிறைவேறவில்லை.
சேர்மனியும் துருக்கியும்
இதற்கிடையில், ஏலவே போதிய அளவு சிக்கலாயிருந்த பிரச்சினையில் ஒரு புது அமிசம் புகுந்துகொண்டது. போற்கன் பிரச்சினைகளில் தனக்கு எவ்வித கவர்ச்சியுமில்லையெனப் பிசுமாக்கு எப்போதும் கூறிவந்தான். ஆனல், இரண் டாம் உவிலியமோ, பெரும்பாலும், தான் அரசெய்திய நாட்டொடக்கம் முற்முக மாறுபாடான முறையைப் பின்பற்றினன். 1889 ஆம் ஆண்டில் சுலுத்தான் அப் துல் அமீதைக் கொன்சுதாந்திநோப்பிளில் முறைப்படி அவன் சந்தித்தான். 1898 ஆம் ஆண்டில் மீண்டுமொருமுறை அவ்வாறு சந்தித்தான். கொன்சுதாந்தி நோப்பிளில் ஒரு வல்லரசு புகுந்து ஆதிக்கம் பெறுதற்கு இடமுண்டென்பதைக் கைசர் ஊகித்தான். இங்கிலந்திடமும் பிரான்சிடமும் சுலுத்தானுக்கு நட் பில்லை. இரண்டாம் உவிலியம் அந்த வெற்றிடத்தை நிரப்பத் தீர்மானித்தான். போர்வீரனும் புலவனுமான பான்உவொன்தெகொல்சு சமீபத்தில் பன்னிராண்டு களாகத் துருக்கிய படையைச் சீர்ப்படுத்தினன். அதன் விளைவை 1897 ஆம் ஆண்டிற் கிரீசின் தோல்வி எடுத்துக் காட்டியது. சேர்மானிய படைஞரைப் பின்பற்றிச் சேர்மானிய முதலாளிகளும் வணிகர்களும் சென்முர்கள். கொன்சு தாந்திநோப்பிளிற் சேர்மானிய வங்கியின் ஒருகிளை தாபிக்கப்பட்டது. ஒற்றே மன் பேரரசின் ஒவ்வொரு மூலைமுடுக்குக்களிலும் சேர்மானிய வாணிகப் பிரயா ணிகள் புகுந்தனர். 1902 ஆம் ஆண்டில், கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து பாத் தாத்துக்கு இருப்புப் பாதை அமைக்க உடன்படிக்கையொன்று நிறை வேறியது. இந்த இருப்புப் பாதை ஈற்றில் அம்பேக்கையும் பாரசீகவிரிடா விலுள்ள பசிமு நகரையும் இணைக்கக் கருதிய நீண்ட சங்கிலியின் ஒரு வளைய முமாகும். இப்பெரு முயற்சியாற் சேர்மனி கடலாதிக்கமுடைய ஒரு பேரா சைச் சுற்றிவர எண்ணியது. கைதரின் திட்டங்கள் களிப்பூட்டும் வகையில் அபி விருத்தியடைந்தன.
1908 ஆம் ஆண்டு நெருக்கடி
1908 ஆம் ஆண்டில் சமீப கிழக்கில் போற்கன் நாடுகளுக்கும் ஐரோப்பா முழு மைக்குமே மிகவும் துயரார்ந்த விளைவுகளை உண்டாக்கத்தக்க தொடர்ச்சியான
சம்பவங்கள் பல நிகழ்ந்தன.

சூழியற் புரட்சி 427
முதலாவதாகத் 'துருக்கிய இளைஞரின் புரட்சி நடந்தது. மேனுட்டுக் கல்விச் சார்புடைய துருக்கிய இளைஞரைப் பெரும்பாலும் கொண்ட ஒரு குழு, துருக் கியில் ஒரு பாராளுமன்ற யாப்பை ஏற்படுத்துவதற்கும், ஒற்முேமன் பேராசை இக்கால ஐரோப்பிய மயமாக்கப்பட்ட நாடாக்குவதற்கும் சில காலமாக ஒரு திட்டம் அமைத்து முயற்சி செய்து கொண்டிருந்தது. 1908 ஆம் ஆண்டில் அப் துல் அமீதை அரசு கட்டிவிலிருந்து விலக்கித் தங்கள் யாப்பை நிறுவினர். தாரா ளக் கொள்கையையுடைய ஐரோப்பா-முதன்மையாக இங்கிலந்து-இம் மாற் றத்தைக் கைகொட்டிப்பாராட்டியது. இப்புரட்சி தன் திட்டங்களேத் தடை பண்ணக் கூடுமெனக் கைசர் பயந்தான். ஆனல், என்வர் பாசா என்பான் தலை மையில் உருவாகிய அரசாங்கம் பேளினுடன், முந்திய அரசாங்கத்தைப் போல் நட்பாயிருந்தது.
இப்புரட்சி கொன்சுதாந்திநோப்பிளின் எல்லைகளோடு மட்டும் நின்றுவிட வில்லை. ஒற்முேபர் 5 ஆம் திகதி பல்கேரிய இளவரசனுன பேடினந்து பல்கேரி பாவின் சுயவாட்சியைப் பிரசித்தஞ் செய்து, பல்கேரியாவின் சார் என்னும் பட்டத்தை மேற்கொண்டான். 1909 ஆம் ஆண்டு ஏப்பிரிவில், துருக்கியப் பாரா ஒருமன்றம் பல்கேரியாவின் சுயவாட்சியை முறைப்படி அங்கீகரித்தது. ஒற் ருேபர் 12 ஆம் திகதி கிறீற்றுத் தீவு கிரீசு இராச்சியத்துடன் ஐக்கியம் பூண வாக்களித்தது. இதற்கிடையில், ஒற்ருேபர் 7 ஆம் திகதி பிரான்சிசு யோசேப் புப் பேரரசன் பொசினியாவையும் ஏ சகோவினுவையும் தன்னட்டுடன் சேர்ப்ப நாக அறிவித்தான் ; குழியல் வல்லோர் திடுக்கிட்டனர்.
M
இச்செய்கை ஐரோப்பாவைத் திடுக்கிடச் செய்ததாயினும், உண்மையாகவே ாற்பது ஆண்டுகளாக அபிசுபேக்குக் குலமுறையினர் மாருது பின்பற்றிய பூட் கைக்கு இறுதிக்கட்டமாயிற்று. அது பிசுமாக்காற் சேர்மனியிலிருந்து விலக்கப் பட்டு, இத்தாலியிலிருந்து வெளியே தள்ளப்பட்ட ஒசுத்திரியா, 1849 ஆம் ஆண் டில் இரசியப் பேரரசனன நிக்கலசு வென்றளித்த அங்கேரியருடன் இறுதியில் இணங்கவேண்டியதாயிற்று. ஏற்ற வேளையிற் கிடைத்த இரசிய உதவிக்குக் கைம் மாமுகக் கிாைமிய நெருக்கடிப் பொழுது ஒசுத்திரியா உதவி செய்யவில்லை. உண் மையில், 'ஒசுத்திரியா தன் நன்றி கேட்டால் உலகத்தைத் திடுக்கிடச் செய்யும்' என சுவாசன்பேக்கு பெருமையாகக் கூறினன். பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அவனுடைய துடுக்கான கூற்றை உண்மைப்படுத்தின. 1848-1849 ஆம் ஆண்டு நெருக்கடியின் பின்னர், அபிசுபேக்குக் குலமுறையினரின் பல்லினமான ஆட் சிப் பகுதிகள் யாவற்றிலும் வல்லாட்சியொடுகூடிய ஒருமுகப்படுத்தற் பூட்கை

Page 225
428 சூழியற் புரட்சி
கையாளப்பட்டது. இரண்டாம் யோசேப்பின் மானக்கேடான பூட்கை மீண்டுங் கையாளப்பட்டது. செக்குக்கள், மகியார்கள், குரோற்றுக்கள், மற்றும் சிலாவு இனத்தினர் யாவரும் சேர்மானிய மயமாக்கப்பட வேண்டுமெனத் தீர்மானமா யிற்று. பெருமைவாய்ந்த தொன்மையான அங்கேரிய இராச்சியம் ஓர் ஒசுத் திரிய மாகாணத்தின் தாத்திற்குக் குறைக்கப்படுவதாயிருந்தது. 1866 ஆம் ஆண்டில் ஒசுத்திரியா இழிவடைந்த பின்னர் இக்கேவலமான பூட்கை கைவிடப் பட்டது. 1867 ஆம் ஆண்டு ஐக்கிய நியமங்களின் படி, அங்கேரி தன் சொந்த அரசனையும் யாப்பையுமுடைய இராச்சியமாக அங்கீகரிக்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டு யூன் மாதம் 8ஆம் திகதி பிரான்சிசு யோசேப்புப் புடாபெசுத்தில் முடி
குட்டப்பட்டான்.
இருபுடையாட்சி
அதன்பின்னர் 1914 ஆம் ஆண்டு வரையும் அபிசுபேக்குப் பேரரசு ஏற்றுக் கொண்ட கோட்பாடு இருபுடையாட்சியாகும். 'உங்கள் மிலேச்சர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள். நாங்கள் எங்கள் மிலேச்சர்களைப் பற்றிக் கவனமாக இருப் போம்' என அமைச்சன், போசுது கோமகன் அங்கேரிய இணைவனுக்குக் குறிப் பிட்டான். ஒரு சேர்மனிய-மகியார் வல்லாட்சியானது அபிசுபேக்குப் போாசு எனும் நாட்டினக் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்டது. ஆனல், 'இவ் விருபுடை யாட்சியின் கீழ் 'மிலேச்ச ' இனங்களிலொன்று அமைதியற்றிருந்தது. சேர் மானியரும் மகியாரும் ஒன்றுசேர்ந்த தொகையிலும், சிலாவியர் தொகை கூடுதலாயிருந்தது. சிலாவியரில் 70,00,000 பேர் சேபோகுரோசியன் அல்லது தென்சிலாவியர் கிளையைச் சேர்ந்தவராவர். பொசினியாவையும் ஏசகோவின வையும் வலிந்திணைத்தமையாற் ஏசுகோவினரின் தொகை இன்னும் இருபது இலட்சம் கூடிற்று. ஆதலின், ஏலவே அபிசுபேக்கர் தீர்க்க வேண்டிய கடின மான பிரச்சினை இன்னும் கடினமாயது. 1878 ஆம் ஆண்டு தொடக்கம் இம்மா காணங்கள் ஒசுத்திரியாவின் காப்பாட்சியிலிருந்தன. ஆனல், அதற்குப் பின்னர் நாட்டின உணர்ச்சி போற்கன் நாடுகளிலே தீவிரமாக அபிவிருத்தியடைந்திருந் தது. இவ்வுணர்ச்சி தென் சிலாவியரிடையேயும் தீவிரமாக வளர்ந்தது. இரண்டு சிலாவிய மாகாணங்களை ஒசுத்திரிய-அங்கேரியப் பேரரசுடன் முறைப்படி சேர்த்து ஒன்முக்கியமை, பேளின் பொருத்தனையை மீறுவதாய் இருந்ததொடு சேபிய நம்பிக்கைக்குஞ் சாவுமணியடித்தது. இவ்வல்லிணைப்பைச் சேபியர் கோபத்துடன் எதிர்த்து, இரசியாவின் உதவியைக் கோரினர். இரசியாவின் கோபம் சேபியாவின் கோபத்திற்குக் குறைந்ததன்று. ஆனல், இரசியா யப்பானி
1 விபரத்திற்கு, மரியற்றின் ஐரோப்பா (1815-1923) எனும் நூலின் 13 ஆம் 22 ஆம் அத்தியாயங்களை நோக்குக.

சூழியற் புரட்சி 429
யர் கையில் அடைந்த தோல்வியினின்றும் முற்முக மீளவில்லை. அல்லாமலும், ஒசுத்திரியாவுக்கு வன்மையுடைய நட்பாளனுெருவன் இருந்தான். தன் அனுமதி யில்லாது ஒசுத்திரியா இத்துணை முக்கியமான நடவடிக்கை எடுத்ததனல், சேர் மானியப் பேரரசன் வெறுப்புக் கொண்டான். ஆனல், மூவர் நட்புறவு சேர்மா னிய பிறநாட்டுப் பூட்கையின் பற்றுக்கோடாய் இருந்தது. ஒசுத்திரியாவின் செய்கை இத்தாலியை மிகவும் நிலைதடுமாறச் செய்த”போதிலும், இரசியா சேபி யாவிற்கு உதவி செய்யின், ஒசுத்திரியா சேர்மனியின் உதவியை நம்பியிருக்கலா மென்று 'ஒளிவீசும் போர்க்கவசமணிந்த நைற்று பொத்துடாமிலிருந்து அறி வித்தான். இரசியா சேர்மானியருடன் போர் புரியப் பின்வாங்கியது. ஒசுத்திரி யா தன் எண்ணப்படி நடந்தது. ஆனல், சிறிதுகாலத்திற்கு மட்டுமே அப்படிச் செய்யமுடிந்தது. இவ்விரு நட்பாளரும் தங்கள் வெற்றியால் வெறிகொண்டு, இம் முறையை 1914 ஆம் ஆண்டிலும் மீண்டும் கையாளலாமென்று நினைத்தார்கள். அம் முயற்சி உலகத்தைப் போரிற் சிக்கவைத்தது.

Page 226
ஆரா தேந்த ஒ:படிாமியப்பாருங்குய மீனா - காயத புேகள்
&
N
XA N
N ぷ WR N
N
- a IV
W
* 件牵
گپہلب&
寸一十七 醚、可朽”雄祐、、iguü
: _ 过 گلست = 盘 தரக் "க்" பிரித்தானிய
FFIII 亡 سلطنة التي థ్రెr பிரெஞ்சு ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ இரவிய N 67 {x; L: 须
3. - LDP 称 須。ー午ー
தூர ழேக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம்
மாபெரும் உலகப் போரின் எல்லையில்
(1906-14)
முக்கிய திகதிகள் :
105 தாஞ்சியரிற் கைசர் (மாச்சு. t 1995 தெல்காசி பதவியினின்றும் விலகல். 1906 அல்செருசுமி"நாடு (சனவரி-ஏப்பிரில்). 1907 ஏக்கில் இரண்டாம் அமைதி மாநாடு. 1911 அகதிரில் "பாத்தர்' என்னும் கப்பல் (யூவே 1. 1911 திரிப்போலி மீது இத்தா வியரின் படையெடுப்பு. 1912 போற்கன் கூட்டன: 1912 உலோரேன் பொருத்தனே (இத்தாலியும் துருக்கியும்) ஒற்ருேபர் 18. 1912 முதலாம் போற்கன் போர் (ஒற்குேபர்-கிசெம்பர். 1912 இiண்டங் மாநாடு திசெம்பர்). 1913 போற்கன் போர் மீளத் தொடங்கல் (பெப்புருவரி). 1913 இலண்டன் பொருத்தனே (மே 30). 1913 போற்கள் பிரிவினைப் போர் 'யூன் தொட்டு யூஃ) 1913 புது மெற்றுப் பொருத்தனே "ஒசுக்தி 10). 1914 ல்ே கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது 'பூன் 23). 1914 செரனோனில் மாபெரும் கோமகனின் சீெேகாலே (யூன் 28). 1914 சேபிய' விற்கு ஒகத்திரிய-அங்கேரியின் குறிப்பு 'ழ ធំ 83).
பிசுமரக்கு இறப்பதற்குச் சற்றுமுன்னர் பெரிய போர் சமீப கிழக்கில் ஆரம் பிக்குமென எதிர்வு கூறியிருந்தான். அவன் கூறியது சரியாகும். ஆணுல், போர் கன் மட்டும் அப்போரின் புயல்பையாப் இருக்கவில்லே, போருடன் தொடர் பான முன்னிகழ்ச்சிகளில் மொருேக்கோவின் முக்கியத்துவம் குறைந்ததன்று.
மொ ருேக்கே T
மொருேக்கோப் பிரச்சினேயின் சிறப்பியல்பை அகன் தேசப் படக்கைப் பார்த்தால் மட்டுமே விளங்கும். ஆபிரிக்காவின் வடக்குக்கரையானது, மொருேக்கோவிலிருந்து சிஜய் *fur னை'யும், புவியியலின்படி ாக்கியதன: ப் பிரதேசத்திற்கு உரியதாகும். ஆபிரிக்காவின் இப்பகுதி பற்றிய வரலாறு

Page 227
4.32 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
முக்கியமாக ஐரோப்பாவைச் சார்ந்ததாகும். எகித்தை ஓர் அளவிற்குத் தவிர்த்துவிட்டால், அப்பகுதி இப்போது ஐரோப்பிய வல்லரசுகளால் அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. பார்பெரி நாடுகளில் மிகப் பெரிதாகிய மொருேக்கோ ஆபிரிக்காக் கண்டத்தின் வடமேற்கு மூலையிலிருக்கின்றது. அது உள்நாட்டி விருந்து மலைகளாலும் வனந்தாங்களாலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டையடுத்துக் கிழக்கே இருப்பது அல்சீரியாவாகும். இந்நாடு 1830 தொடக் கம் படிப்படியாகப் பிரான்சிய ஆட்சியின் கீழாயது. பிரான்சிற்கு ஆபிரிக்கா வின் வடக்கிலும் மேற்கிலுமுள்ள ஆணிலங்கள் இப்போது மத்தியதரைக் கடற் பிரதேசத்திலிருந்து கினி விரிகுடாவரையும் தொடர்ந்து படர்ந்திருக்கின்றன. 1847 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அல்சீரியா செயலளவிற் பிரான்சின் ஒரு பகுதி யாகிப் பிரான்சிய மன்றத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பத் தொடங்கிற்று. அல் சீரியாவிற்குக் கிழக்கேயிருப்பது தியூனிசாகும். இந்நாடு முன்னர்க் கூறியபடி 1882 ஆம் ஆண்டிற் பிரான்சின் புரப்பகமாயது. தியூனிசிற்குக் கிழக்கே இருப்பது திரிப்போவியாகும். இந்நாடு இப்போது இத்தாலியின் ஆட்சியிலிருக்கிறது.
மொருேக்கோவை ஆண்ட மிக வல்லமை பொருந்திய சுலுத்தான்களில் ஒரு வனென மதிக்கப்பட்ட முலே அசான் 1894 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், மொ முேக்கோ விரைவில் ஆட்சியறவு நிலையை அடைந்தது. 1895 ஆம் ஆண்டில் மொ முேக்கோவிற் பிரித்தானிய அமைச்சனுக நியமிக்கப்பட்ட சேர் ஆதர் நிக்கல் சன் (கானுெக்குப் பிரபு) கூறியதாவது, அந்த நாடு "கலகம் விளைவிக்கும் குலங் கள், ஊழலில் உழலும் ஆள்பதிகள், எங்கும் வறுமை, பெரும் துயர் எனுமிவை யெல்லாஞ் சேர்ந்த ஈட்டமாக இருக்கின்றது' என்பதாம். பிரான்சுக்குரிய அல் சீரியாவின் தெற்கெல்லை செவ்வனே வரையறுக்கப்படாமையினல், மொமுேக் கோவின் ஆட்சியறவு இயற்கையாகவே பிரான்சியரின் கவனத்திற்குரியதா யிருந்தது. ஆங்கில வணிகர்களும் தங்கள் பண்டங்கள் கடற் கொள்ளைக்காரர் களாற் கொள்ளையடிக்கப்படுவதாக முறையிட்டார்கள். ‘நாடு பின்னேக்கிப் பின்னுேக்கிச் செல்லுகின்றது. வணிகம் ஊக்கம் குறைந்து கொண்டிருக்கின்றது. வணிகர் தங்கள் கடன்களை அறவிடமுடியாது இருக்கிமுர்கள். எங்கும் கொடுங் கொள்ளையிடுதலும் நம்பிக்கைக்கேடும் சதியாலோசனையும் கொடுங்கோலாட்சி யுமே நிலவுகின்றன. நான் பல கீழைத்தேசங்களிலிருந்துள்ளேன். ஆனல், இங்கு பாந்திருக்கும் இருள் போல் வேறு எங்கும் நான் காணவில்லை. நான் அறிவதி லிருந்து இங்கே உள்ள சோனகர் எந்த ஐரோப்பியப் படையெடுப்பாளரையும் வரவேற்பர்,' என நிக்கல்சன் என்பான் பிறநாட்டு அலுவலகத்திற்கு எழுதி யிருந்தான். 'உண்ணுட்டிலிருந்தே இந்நாட்டைச் சீர்ப்படுத்த முடியுமென நான் நம்பவில்லை' என நான்கு ஆண்டுகளின் பின்னர் (1900) அவன் மீண்டும் அறி வித்தான்.

மாபெரும் உலகப் போரின் எல்லையில் 433
1899-1901 வரையான காலப்பகுதியில், ஆங்கிலேய சேர்மானிய சூழியல் வல்லோருக்கிடையில் மொருேக்கோவின் நிலைமைபற்றி முக்கியமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. 1901 ஆம் ஆண்டின் பின்னர், பிரான்சு மீண்டும் மீண்டும் மறுத்தபோதிலும், மொருேக்கோவைப்பற்றி முக்கிய திட்டங்களை அது வகுத்திருந்தமை தெளிவாயது. சோனகப் படையின் சேனபதியாகிய சேர் அரி மக்கிலீன் என்பான் ஓர் இசுக்கொற்று இனத்தவன். இவன் சென்ற பத்து ஆண்டுகள் வரையிற் சுலுத்தானுடைய அவையில் மிகவும் செல்வாக்குடையவ னெனும் உண்மை பிரான்சியரின் உணர்ச்சிகளை ஐயமின்றிக் கிளறிவிட்டது. எப்படியாயினும், மொருேக்கோவைப் பொறுத்த அளவில் இங்கிலந்து எத்த கைய திட்டத்தையும் மனதிற் கொள்ளவில்லை. பிரான்சுக்குக் கோபம் உண்டா தற்கு எவ்வாற்ருனும் இடங்கொடுத்தல் ஆகாதென நிக்கல்சன் சுலுத்தானுக்கு அறிவுரை கூறிவந்தான்.
1902 ஆம் ஆண்டில், மொருேக்கோவின் எதிர்காலப் பிரிவினை பற்றிய திட்டமொன்றைப் பிரான்சு இசுப்பெயினுடன் கலந்தாராயக் கொண்டுவந்தது. இதைப்பற்றி இங்கிலந்துடன் ஆலோசிக்க வேண்டுமென இசுப்பெயின் ஆலோசனை கூறிற்று. ஆனல், இலான்சுடவுன் பிரபு மொருேக்கோவின் 'முடிவைப்பற்றி" உரிய காலத்தின் முன் ஒழுங்குபடுத்தும் முயற்சியைக் கண்டித்தான். எப்படியாயினும், சுலுத்தான் பெருந் திகிலடைந்தான். இங்கிலந்தை மன்ருடிக் கேட்டும் அது தனக்குக் காப்பளிக்கத் தவறினல், தான் பேளினுக்கு மனுச்செய்ய வேண்டிவருமென அறிவித்தான். மொருேக்கோவில் நிலவும் ஆட்சியறவைப் பற்றிப் பாராமுகமாயிருக்கக் கூடாதென்றும் ‘அந் நாட்டைச் சீர்ப்படுத்தும் முயற்சி பிரான்சின் அலுவலேயல்லாது வேருெரு வல்லரசினதன்று என்பதை ஒத்துக்கொள்ளும் படியும் பிரித்தானிய அரசாங் கத்திற்குப் பிரான்சு 1903 ஆம் ஆண்டில் அறிவித்தது.
முன்னர்க் குறிப்பிட்டபடி, இவ்வுரிமைக் கோரிக்கை 1904 ஆம் ஆண்டில் ஆங்கில-பிரான்சிய உடன்படிக்கையில் தெளிவாகவும் முற்முகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வுடன்படிக்கையைச் சேர்மனி எதிர்க்கவில்லை. ஆனல், 1905 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில், கைசர் தாஞ்சியர் நகரிற்குச் செல்ல வேண்டுமென்று இளவரசன் பூலோ விடாப்பிடியாக நின்முன். இந்த நிகழ்ச்சியை யிட்டு ‘நான் கேள்விப்பட்டவைகளில் இதுவே ஒழுங்கற்ற குழியற் செய்கையும் பெருந் தவறுமாகும்,' என்று எட்டுவேட்டு அரசன் எடுத்துக்காட்டியுள்ளான். தான் " சுயாதீனமான ஒரு இறையைச்" சந்திக்கச் சென்றேன் என்று கைசர் அறிவித்தமை இன்னும் பெரிய தவமுயிற்று. இதன்பின்னர் ‘இக் குழப் பத்தை உண்டாக்கிய அமைச்சனைப் பிரான்சு தள்ளவேண்டும் என்றும் ஒரு மாநாடு கூடவேண்டுமென்றும் கோரப்பட்டது. பிரான்சு தான் போரிற்கு ஆயத்தமின்றியிருந்ததை உணர்ந்து அந்தத் துணிகரமான கோரிக்கைகளுக்குச் சம்மதித்தது. 1905 ஆம் ஆண்டு யூன் மாதம் 12 ஆம் திகதி தெல்காசி பதவியி னின்றும் விலகினன்.

Page 228
434 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
அல்செருசு மாநாடு
1906 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், சிபுரோத்தருக்கு அண்மையிலுள்ள அல்செருசு என்னுமிடத்தில் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாடு மொருேக் கோப் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தனக்கிருக்கும் உரிமையைத் தெளிவாக்கு மென்றும் ஆங்கில-பிரான்சிய உடன்பாட்டின் பொள்ளலை உலகிற்கு எடுத்துக் காட்டுமென்றும் சேர்மனி நம்பியது. அதன் உண்மையான விளைவு இதற்கு முற்முக மாமுயிருந்தது. பிரான்சுக்கும் இங்கிலந்திற்குமிடையே இருந்த நட்பு இதனற் பலப்படுத்தப்பட்டு உறுதியாக்கப்பட்டது. இரசியாவுடன் நடைபெறும் ஒப்பந்தவேற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும், மூவர் நட்புறவில் இத்தாலியின் ஈடுபாடு குறைந்தமையும் முக்கியமானதே. அல்செருசிற் முனடைந்த தோல்வியை உணர்ந்து, வேறிடத்தில் சூழியல் நட்டஈடு பெற முற்பட்டது சேர்மனி. 1909 ஆம் ஆண்டில் இரசியா அடைந்த தாழ்வு அதற்கு ஈடாயது. எப்படியாயினும் கைசர் மன அமைகி இல்லாகிருந்தான். 1909 ஆம் ஆண்டிற் பிரான்சுடன் மொருேக்கோவைப் பற்றி ஒரு நட்பு உடன்படிக்கை நிறைவேற்றினன். 1910 ஆம் ஆண்டில் இரசியாவுடன் இணக்கத்திற்கு வந்தான்.
அகதீர்
எனினும், பிரான்சிய சேர்மானிய உடன்படிக்கை மிகவும் தெளிவற்றதாயிருந் தது. "மொருேக்கோவில் ஆட்சியறவு மிகவும் அச்சுறுத்துவதாயும் இருந்தது. ஆதலால் ஏப்பிரில் 11 ஆம் திகதி, பிரான்சியர் மீண்டும் ஒழுங்கை நிலைநாட்ட மொருேக்கோவிற் படைஇறக்கவேண்டியதாயிற்று. மே மாதத்தில் மொமுேக்கோ வின் தலைநகரான பெசு நகரைக் கைப்பற்றினர். பிரான்சியர் சுலுத்தானின் சுய வாட்சியை மறுக்கும் விருப்பம் தங்களுக்கில்லையெனக் கூறி, யூன் மாதத்திற் பெசுவிலிருந்து வெளியேறத் தொடங்கினர். ஆல்ை, யூலை 1 ஆம் திகதி மொருேக் கோவிற் சேர்மானிய நலன்களைப் பாதுகாக்க மொருேக்கோவின் அத்திலாந்திக் குச் சமுத்திரக் கரையிலுள்ள திறந்த வெளியான அகதிர் என்னும் இடத்திற்கு * பாந்தர்' என்னும் சிறு போர்க்கப்பல் அனுப்பப்பட்டதாகச் சேர்மனி பிரான்
சுக்கு அறிவித்தது.
அகதீர் நிகழ்ச்சி இன்றும் மர்மமாகவே இருக்கின்றது. ஆனல், சேர்மனியின் செயலின் நோக்கம் பிரான்சைத் தாழ்வுறுத்துவதே என்பது வெளிப்படை. பிரான்சு, சேர்மனி, இசுப்பெயின், ஆகிய நாடுகளுக்கிடையில் மொருேக்கோ வைப் பிரிவினை செய்வது பற்றி மறைமுகமாக வந்த கோரிக்கைக்கு, மொருேக் கோவில் தானே முதலாகிக்கமுடைய வல்லரசெனவும், இவ்விடயம் முன்பே அங் கீகரிக்கப்பட்டுள்ளதெனவும் பிரான்சு மறுத்துரைத்தது. பெரிய பிரித்தானியா பிரான்சை ஆதரித்தது. போர் விரைவில் ஏற்படக்கூடியதாயிருந்தது. ஆனல், கடைசி நேரத்திற் சேர்மனி விட்டுக்கொடுத்தது. நவம்பர் மாதத்தில் விரிவான பொருத்தனை ஒன்றைப் பிரான்சுடன் நிறைவேற்றியது. இதன்படி சேர்மனி

மாபெரும் உலகப்போரின் எல்லையில் 435
செயலளவில் மொருேக்கோ மீது பிரான்சியப் புரப்பை அங்கீகரித்தது. அத்துடன் பிரான்சு, பிரான்சியக் கொங்கோவிற் பாதியைச் சேர்மனிக்குக் கையளித்தது. சேர்மனியின் கோபம் கணநேரத்திற் பிரான்சிலிருந்து வேறு வழி செலுத்தப்பட்டு, முற்ருய் இங்கிலந்தின் மீது திரும்பியது. நவம்பர் 29ம் திகதி சேர்மானியா ' என்ற பத்திரிகை எக்காலத்திலும் பார்க்க இப்போது போர் மூளக்கூடியதாய் இருக்கின்றது,' எனப் பிரகடனஞ் செய்தது. சமீப கிழக்கு நிகழ்ச்சிகளால் இந்நெருக்கடி சிறிது காலந் தவிர்க்கப்பட்டது.
ஏக்கில் அமைதி மாநாடு
மொருேக்கோவில் நிகழ்ந்த இரு நெருக்கடிகளுக்கிடையில் ஏக்கில் இரண்டாம் அமைதி மாநாடு கூடியமை சிலர் கருத்திற்கு முரணுகத் தோற்றலாம். முதலா வது மாசபை 1899 ஆம் ஆண்டில் சார் இரண்டாம் நிக்கலசின் முயற்சியாற் கூடியது. 1815 தொடக்கம், ஒப்பளவில் அற்பமான சருவதேசப் பிணக்குக்களைத் தீர்க்க நடுத்தீர்ப்பின் உதவியைப் பெரிதும் நாடினர். நடுத்தீர்ப்பென்னும் கொள்கையை மட்டுமன்றிப் படைக்கல மொழித்தலையும் வல்லரசுகளைக் கைக் கொள்ளும்படி செய்ய 1899 ஆம் ஆண்டில் சார் முக்கியமான முயற்சி செய்தான். பெரிய வல்லரசுகள் யாவும் உட்பட இருபத்தாறு அரசுகளின் பிரதிநிதிகள் கூடி னர். படைக்கலம் ஒழித்தல் பற்றி முன்னேற்றம் யாதும் ஏற்படவில்லை. ஆனல், நடுத்தீர்த்தல் மன்ருென்று தாபிக்கப்பட்டது. இம்மன்றின் உதவியை நாடுவதும் நாடாமையும் அவ்வந்நாட்டின் விருப்பைப் பொறுத்தவை. .
1907 ஆம் ஆண்டிற் சார் மீண்டும் முயன்றதன் பயனுக, நாற்பத்தைந்து நாடு கள் அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டன. 1899 ஆம் ஆண்டிலிருந்து படைக் கலங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தன. 1907 ஆம் ஆண்டில் இப்பொருள் பற்றி அக்கறையுடன் வாதிப்பதைச் சேர்மனி4 வெற்றிகரமாய்த் தடுத்தது. எப்படியாயினும், சிலவகைப் பிணக்குக்களைப் பொறுத்தவரை, கட்டாய நடுத்தீர்த்தற் கொள்கையை மாநாடு உறுதிப்படுத்தியது. 1914 ஆம் ஆண்டில் மீண்டும் மாநாடு கூடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டில் மாநாடு கூடவில்லை. ஆனல், அது நடுத்தீர்ப்புப் பொருத்தனைகளை நிறைவேற்றுங் கொள்
கைக்கு உண்மையான ஊக்கம் அளித்தது.
இத்தாலி (1870-1911)
எப்படியாயினும், 1911 தொடக்கம் 1918 வரையும் ஐரோப்பாவில் பெரும் பான்மையும் போர்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. இத்தாலி போரை ஆரம்பித்தது. இத்தாலி, முன்னர்க் குறிப்பிட்டபடி, 1871 ஆம் ஆண்டில் நாட்டின ஐக்கியம் பெற்றது. பெரிய வல்லரசுகளுள் தனக்கோர் இடம் பெற இயற்கையாகவே அது விரும்பிற்று. எனினும், ஐக்கியம் பூண்ட பின்னர் ஐம்பது ஆண்டுகள் அவ்விளம் இராச்சியத்திற்குத் துன்பமும் சோதனையும் நிரம்
16-B 24178 (5.160)

Page 229
436 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
பிய காலமாகும். 1859-1871ஆம் ஆண்டிற்குமிடையில் அதன் முன்னேற்ற வேகம் அளவுக்கு மிஞ்சிய தீவிரமுடையதாயிருந்திருக்கலாம். கவூர் ஆங்கில மாதிரியான பாராளுமன்ற ஆட்சிமுறைமையை இத்தாலியில் ஏற்படுத்தினன். இம்முறைமையை ஏற்பதற்கு இத்தாலி ஆயத்தமாயிருக்கவில்லை என்பது திண்ணம். கவூரின் மரணத்திற்கும் (1861) முசோலினியின் தோற்றத்திற்கும் (1919) இடையில், இத்தாலியிற் பிரான்சிசுக்கோ கிரிசுபியைத் தவிர முதற்றா மான அரசறிஞன் ஒருவனும் தோன்றவில்லை. அவனுடைய அதிவிவேகம் பாராளுமன்ற முறைக்கு உகந்ததன்று. கல்வியிலோ பெரிதும் பின்தங்கிவிட்ட நிலை , மக்களில் அதிகமானேர் எழுத்தறிவு அறவேயில்லாதவர்; வறுமை, கைத் தொழிலுபகரணம் இல்லாமை, மூலப்பொருள்கள் போதாமை எனுமிவை காரண மாய்ச் சீரழிந்துவிட்ட பொருளாதாரம் ; தாங்கவியலா வரிச்சுமை , ஊழல் மலிந்த நிருவாகம்-இத்தகைய சீர்கேடுகளை உடைத்தாயிருந்த இத்தாலி, சுதந் திரமும் ஐக்கியமும் பெற்றதனுல் 1ன்மையன்றித் தீமையை அடைந்ததோவென ஐயுறத்தோன்றும்.
இத்தாலியா ‘இாடெந்தா'
அதன் வெளிநாட்டு நிலைமைதானும் குழப்பமுற்றிருந்தது. ஒருபுறத்தில் எத்திரியாற்றிக்குப் பிரச்சினை இருந்தது. மறுபுறத்தில் மத்திய தரைக்கடற் பிரச்சினை இருந்தது. முதலாவது பிரச்சினை ஒசுத்திரியாவுடன் சண்டை செய்வ தைத் தடுக்க முடியாததாக்கியது. இரண்டாவது பிரச்சினை இத்தாலிக்கும் பிரான்சுக்குமுள்ள தொடர்பைக் கசப்புறச் செய்தது.
'மீட்பளிக்கப்படாத இத்தாலி, ‘இாடெந்துவாதிகள்' எனப்படும் ஆர்வ
முள்ள நாட்டின வாதிகளுக்கு இடைவிடாது கோபமூட்டியது. 1866 ஆம் ஆண்டில் நடந்த போரின் பின்னர் ஒசுத்திரியா பற்றி வைத்திருந்த தென் திரோல் அல்லது கிரந்தினே, கோசு, திரியெத்து, தால்மேசியா ஆகிய பகுதிகள் இல்லாமல் இத்தாலிய ஐக்கியம் பூரணமாய் இருக்க முடியாதென அவர்கள் கருதினர்கள். உண்மையில் அவர்கள் பண்டைக்காலத்தில் வெனிசு இருந்தது போல், இத்தாலி எத்திரியாற்றிக்குக் கடலிற்றலைமைப்பதவி வகிக்கவேண்டுமென விரும்பினர்கள்.
மத்தியதரைக் கடலிற்றலைமைப் பதவி வகிக்க இத்தாலி எதிர்பார்க்க முடியாது. என்ருலும் அந்த நிலையைப் பிரான்சு எய்துவதை இத்தாலி விரும்ப வில்லை. இக்கால இத்தாலி ஐயமின்றி இரு நெப்போலியருக்கும் கடப்பாடுடை யதாயிருந்த போதிலும், அந்நாடு பிரான்சில் முற்முய் அவநம்பிக்கை கொண்டிருந்தது. 1859 ஆம் ஆண்டிற்குப் பிந்திய பிரான்சியப் பூட்கை வெகு தாரம் இந்த ஐயப்பாட்டிற்கு இடங்கொடுத்ததென்பதையும் மறுக்க முடியாது. நாம் முன்னர்க் கண்டுகொண்டபடி இந்த ஐயத்தினைப் பிசுமாக்கு வளர்த்தான். 1881 ஆம் ஆண்டில், தியூனிசைக் கைப்பற்றும்படி பிரான்சை ஊக்கப்படுத்தி

மாபெரும் உலகப்போரின் எல்லையில் 437
னன். தியூனிசைக் கைப்பற்றுவது திரிப்போலியைக் கைப்பற்றுவதில் முடியு மென்றும் பிரான்சு விரைவிலே தன்னை இரும்பு வளையத்தாற் சுற்றிவைத்துக் கொள்ளும் ' என்றும் இத்தாலி பயந்தது. இப்பயத்தினல் 1882 ஆம் ஆண்டில் சேர்மனியோடும் ஒசுத்திரியா-அங்கேரியுடனும் சேர்ந்து மூவர் நட்புறவை உரு வாக்கியது. பிரான்சைப் பொறுத்தவளவில், மூவர் நட்புறவு இத்தாலிக்குச் சாதகமாயது. இதற்கிடையில் இத்தாலி இங்கிலந்துடன் மிகவும் இதயபூர்வமான நட்பை வளர்த்தது. புதுப்பிக்கப்பட மூவர் நட்புறவிற் சேர்மனியுடன் நட்பா யிருப்பினும், அக்காரணம்பற்றி இங்கிலந்துடன் போரிற் சிக்கலாகாதெனும் நியதியை இத்தாலி எப்போதுங் கடைப்பிடித்தது.
பாராளுமன்றத் துறையில் மட்டுமன்றிக் குடியேற்றத் துறையிலும் இத்தாலி பிரித்தானியாவைப் பின்பற்ற விரும்பியது. இத்தாலி, வடகிழக்கு ஆபிரிக்கா விலும் அபிசீனியாவிலும் அப்படிச் செய்த முயற்சிகள் யாவும் வியர்த்தமாயின. 1904 ஆம் ஆண்டு ஆங்கில-பிரான்சிய உடன்படிக்கையிலும், பின்னர் அல்செரு சிலும் திரிப்போலிமேல் இத்தாலிக்குளதாம் உரிமை குறிப்பாக அங்கீகரிக்கப் பட்ட போதும், வட ஆபிரிக்காவிற் பிரான்சின் முன்னேற்றம் அதைத் திகி லடையச் செய்தது.
துருக்க-இத்தாலியப் போர் (1911-12)
எப்படியாயினும், அவ்வுரிமைகள் இன்னெரு திசையிலிருந்தும் பயமுறுத்தப் பட்டன. சென்ற சில ஆண்டுகளாகத் திரிப்போலியின் பொருளாதாரத்தை ஊடுருவி ஆட்சிசெயும் பூட்கையை மாற்றது இத்தாலி பின்பற்றிக்கொண்டு வந்தது. வாய்ப்புக் கிடைத்ததும் நாடு முறைப்படி வலிந்திணைக்கப்படும் எனப் பொதுவாகக் கொள்ளப்பட்டது. ஆனல், 1908 ஆம் ஆண்டில் துருக்கிய இளைஞ ரின் புரட்சியின் பின்னர், திரிப்போலிக்குச் சென்ற இத்தாலிய வணிகர், வங்கி முதலாளிகள், இயந்திர வல்லுநர் ஆகியோர் பல விதமான அவமதிப்புக்கு உள் ளாயினர். எப்பக்கம் திரும்பினும், புதிதாக நியமிக்கப்பட்ட துருக்கிய அலுவலர் கள் தங்களைக் குறுக்கிட்டுக் கெடுப்பதை அவ்வித்தாலியர் கண்டார்கள். அதே காலத்திற் சேர்மானிய தொல்பொருள் வல்லுநரும் புவிச்சரிதவியல் வல்லுநருப திரிப்போலியில் தங்கள் விஞ்ஞான் ஆராய்ச்சிகளிற் கூடிய ஆர்வம் காட்டினர் கள். முசுலிம் அதிகாரிகளின் முயற்சிகளுக்கும் தியூத்தோனியப் பேராசிரியர் களின் முயற்சிகளுக்கும் ஏதும் தொடர்பு இருக்கக் கூடுமா? எப்படியாயினும் இத்தாலி திகிலடைந்தது.
1909 ஒற்ருேபர் மாதத்தில், சார் நிக்கலசு, விற்றர் எமானுவேல் அரசனை முறைப்படி சந்தித்துத் திரிப்போலி மீது இத்தாலி கொண்டுள்ள திட்டத்தைக் தான் தடைபண்ணமாட்டேன் என வாக்குறுதி செய்தான். இத்தாலி 'தொடு கடல்களின் எதிர்காலத்தைப் பற்றி இரசியாவின் கருத்துக்களை ஒப்புக் கொண்டது. இங்கிலந்தும் பிரான்சும் பின்னர் இந்த உடன்படிக்கைகளுக்குத்

Page 230
458 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
தங்கள் இணக்கத்தைத் தெரிவித்தன. இவ்வண்ணம் துருக்கி தனியாயது. 1911 செத்தெம்பரில், திரிப்போலியைத் தான் கைப்பற்றுவதற்குத் துருக்கியின் சம் மதத்தை இத்தாலி கோரி, இரண்டு நாட்களின் பின்னர் போர்ப் பிரகடனஞ் செய்தது.
திரிப்போலியின் கடற்கரைப் பட்டினங்களை அதிக எதிர்ப்பில்லாமல் இத்தாலி கைப்பற்றியது. உரோட்சு, தொடக்கனிசுத் தீவுக் கூட்டம் ஆகியவற்றையும் கைப்பற்றியது. ஆனல், திரிப்போலியின் உள்நாட்டில் துருக்கியரும் அராபி யரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தமையால், அவர்களை வென்று இத்தாலியர் அதிக முன்னேற்றம் அடையவில்லை. ஆனல், துருக்கியரை ஒரு புதிய ஆபத்து நெருங்கி வந்தமையால், சடுதியாக 1912 ஒற்ருேபர் 18 ஆம் திகதி உலோசேனில் இத்தாலி யுடன் அவர்கள் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்கள். நெடிது நடக்கக்கூடியதுபோற் முேன்றிய போரும் நின்றது. இத்தாலி கிரிப்போலியை யும், பிற நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை உரோட்சுத் தீவுகளையும் தானே வைக்திக்கொண்டது.
முதற்போற்கன் போர்
ஒற்முேமன் பேரரசு மிகவும் ஆபத்தான வேருெரு போரில் ஏலவே சிக்கி யிருந்தது. கிரேக்க அரசறிஞரான எம். வெனிசெலோசும் பல்கேரிய அரசறிஞ ரான எம். கெசோவும் தம் பொறுமையாலும் திறமையாலும் தம் இரு நாடுகளை யும் சேபியாவையும் மொந்றெநீகிரோவையும் ஒற்றுமைப்படுத்தி, துருக்கிக் கெதிராக ஒரு கூட்டிணைப்பைத் தாபித்தனர். தீபகற்பத்தில், அந்நாடுகளுக் கிடையேயிருந்து முரண்பாடுகளையும் பண்டைதொட்ட பகைமைகளையும்" பார்க்குமிடத்து, இவ்வொற்றுமை அற்புதமான ஒரு வெற்றியாகும். இதன்வழி, கிடைத்த வெற்றி இதனினும் விழுமியது. 1912 ஒற்ருேபர் 8 ஆம் திகதி மொந்றேநிகிரோ துருக்கி மீது போர்ப் பிரகட்னஞ் செய்தது. 14 ஆம் திகதி பல்கேரியா, சேபியா, கிரீசு ஆகிய நாடுகள் கொன்சுதாந்திநோப்பிளில் தமது இறுதிக் கூற்றைச் சமர்ப்பித்தன. 18 ஆம் தேதி வரையில், துருக்கியானது அக் கூட்டிணைப்பு நாடுகள் நான்குடனும் போரில் ஈடுபட்டது.
ஒரு மாதகாலத்துள் எம். கெசோவு வெற்றி உணர்ச்சியுடன் எழுதியது போல ‘போற்கன் நட்புறவு ஒற்முேமன் பேரரசைத் தகர்த்தது. 1,00,00,000 குடித் தொகையுள்ள நான்கு சிறிய நாடுகள் 2,50,00,000 குடித்தொகையுள்ள ஒரு பெரிய வல்லரசைத் தோற்கடித்துவிட்டன ஐரோப்பிய வல்லரசுகளின் வேண்டு கோட்படி பொரு நாடுகள், திசெம்பர் 3 ஆம் தேதி, படைத்தகைவு செய்ய
விவரத்திற்கு மரியற்றின் “ கீழைத்தேசப் பிரச்சினை” எனும் நூலின் (4 ஆம் பதிப்பு, ஒட்சுபோட்டு 1940) 15 ஆம் 16ம் அத்தியாயங்களை நோக்குக.

மாபெரும் உலகப்போரின் எல்லையில் 439
ஒப்புக்கொண்டன. கிரேக்க கடற்படையின் நடவடிக்கைகளை இப்படைத்தகைவு கட்டுப்படுத்தலாகாதெனவும் விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அக்கடற் படையானது ஈசியன் கடலில் முக்கியமான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்
தமையே.
படைத்தகைவிற்குக் கைச்சாத்திட்ட பத்து நாட்களின் பின்னர், போரிட்ட நாடுகள் எல்லாவற்றின் பேராளர்களும் இலண்டனிற் கூடினர்கள். இங்கே பிரித் தானிய பிறநாட்டு அமைச்சன் சேர் எட்டுவேட்டு கிரே, முதலில் போரைத் தவிர்க்கவும் பின்னர் அதை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான். (1913 சனவரி 23 ஆம் திகதி) அமைதிப் பொருத்தனையின் நியதிகளை ஏற்பாடு செய்து முடித்த பொழுது, துருக்கிய இளைஞர் கொன்சுதாந்திநோப்பிளில் ஒரு திடீர்ப் புரட்சியை நிறைவேற்றினர். இதனுல் இலண்டனில் நடந்துகொண்டிருந்த இணக்கப் பேச்சுக்கள் சடுதியாக முடிவுற்றன.
மீண்டும் போர் தொடங்கல்
போற்கன் போர் பெப்புருவரி 4 ஆம் திகதி மீண்டும் தொடங்கி ஏப்பிரில் பிற்பகுதி வரையிலே தொடர்ந்து நடந்தது. மே மாதத்தில் இணக்கப் பேச்சுக் கள் இலண்டனில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. மே 30 ஆம் திகதி அமைதிப் பொருத்தனை கைச்சாத்திடப்பட்டது. கிறீற்றையும், கருங்கடலிலுள்ள மடியாவி லிருந்து ஈசியன் கடலிலுள்ள ஈனுேசு வரையுமுள்ள ஆள்புலங்களையும் துருக்கி கைவிட்டது. இதனுற் கொன்சுதாந்திநோப்பிளேயும் அதன் சுற்ருடலையும் தவிர, ஐரோப்பியத் துருக்கி மறைந்தொழிந்ததெனலாம்.
A.
பிரிவினைப் போர்
கைப்பற்றிய பிரதேசங்களே வென்றவர்களுக்கிடையில் எப்படிப் பகிர்ந்து கொள்வது ? அதைப் பற்றி இலண்டன் பொருத்தனை ஒன்றும் கூறவில்லை. துருக்கியிலுள்ள ஒற்முேமன் பேரரசின் அலுவல்கள் சம்பந்தமாக முடிவு காணும் உறுதிக்கு அப்பொருத்தனை ஐரோப்பாவின் பொதுமுத்திரையை மட்டும் இட்டது. ஆனல், நயமடைந்தோரிடை அந்நயங்களை எப்படிப் பிரித்துக் கொள்வது ? அவர்களுக்கிடையிற் காரமான விவாதங்கள் விளைந்தன. ஆதலால், 1913 யூன் மாதம் 2 ஆம் திகதி சேபியாவும் கிரீசும் பல்கேரியாவுக்கு விரோத மாகத் தற்காப்பு நட்புறவை நிறைவேற்றின. 29 ஆம் திகதி பல்கேரியர் சேபி யரைத் தாக்கினர். சேபியரும் கிரேக்கரும் பல்கேரியரைப் பின்வாங்கி ஓடச் செய்தனர். நட்புறவாளர்களுக்கிடையில் நடந்த இந்தப் போரில், இரு கட்சி யினரும் கோரமான கொடிய செயல்களைச் செய்தனர். பின்னர் வேருெரு முனை யிற் பல்கேரியாவைத் தாக்கினர். யூலை 9 ஆம் திகதி உருமேனியரும் இப்போரிற் சேர்ந்து, சிலித்திரியாவைக் கைப்பற்றிச் சேபியா மீது அணிவகுத்துச் சென்ற

Page 231
440 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
னர். இந்த நல் வாய்ப்பைத் துருக்கியர் தவறவிடவில்லை. துருக்கியர் யூலை 12 ஆம் திகதி, பெரிதும் நெருக்கப்பட்ட பல்கேரியரைத் தாக்கி எத்திரியாநோப்பிளைத் கிருப்பிக் கைப்பற்றினர். படுதோல்வியடைந்த பல்கேரியர் பரிவுகாட்டும்படி கதறினர். யூலை 3 ஆம் திகதி படைத்தகைவு நிறைவேற்றப்பட்டது. ஒகத்து 10 ஆம் திகதி அமைதிப் பொருத்தனை புகாேட்டிற் கைச்சாத்திடப்பட்டது. சிலித்திரியா என்னும் முக்கியமான கோட்டை உட்படத் தொபரூசாப் பிரிவிற் பெரிய துண்டொன்றையும் பல்கேரியா உருமேனியாவுக்குக் கையளித்தது. ஏறத் தாழ மசிடோனியா முழுவதிலும் பல்கேரியாவிற்கிருந்த உரிமைகளை, அது கைவிட்டது. மசிடோனியாவைச் சேபியாவும் கிரீசும் பங்கிட்டன. கிரீசு எபிாசுப் பகுதியைப் பெற, சேபியாவும் மொந்றெநீகிரோவும் நோவி பசார் என்னும் பகுதியைப் பகிர்ந்தன. துருக்கியர் பல்கேரியாவிலிருந்து எத்திரியா நோப்பிளை மீண்டும் பெற்றனர். மூன்று போர்களிலும் துருக்கி நாற்பது இலட் சம் மக்களை இழந்தது. அதன் 65,350 சதுரமைல் நிலப்பரப்பு 10,882 சதுர மைலாகச் சுருங்கிற்று. சேபியாவின் குடித்தொகை 50 சத விகிதமாய் அதிகரித் தது ; அதன் ஆள்புலம் இதனிலும் கூடிற்று. கிரிசே எல்லா நாடுகளிலும் கூடிய ஆதாயமடைந்தது. மொந்றெநீகிரோ போல் அதன் குடித்தொகையும் ஆள்புல மும் ஏறத்தாழ இரட்டித்தன. இம்புருேசும் தெனதோசும் தவிர்ந்த ஈசியன் தீவு களும் கிறீற்றும் கிரிசுக்கு அளிக்கப்பட்டன. உரோட்சு உட்படத் தோதக் கனீசை இத்தாலி தன்னிடம் வைத்துக்கொண்டது. உருமேனியாவும் சேபியா வும் நற்பயனடைந்தன. ஆனல், சேர்மனிய வல்லரசுகளோ, சேபியா எத்திரி யாற்றிற்குக் கடற்குச் செல்ல வழிதிறக்க இன்னும் மறுத்தன. ஈசியன் கடலுக் குச் சேபியா செல்லும் பாதையைக் கிரீசு அடைத்தது.
எப்படியாயினும், இவ்விணக்கம் நிலைக்கவில்லை. புகாேட்டுப் பொருத்தனை கைச்சாத்திடப்படுவதற்கு முதல் நாள், ஒசுத்திரிய-அங்கேரி தான் சேபியாவுக் கெதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருப்பதைச் சேர்மனிக்கும் இத்தா லிக்கும் அறிவித்தது. தன் நடவடிக்கை பாதுகாப்புக்கானபடியால் மூவர் நட் புறவின் வழி தனக்கு உதவியளிக்கப்படல் வேண்டுமெனச் சாதித்தது. ஆயின், அந்நாடு செய்ய உத்தேசித்த தாக்குதல் மூவர் நட்புறவுக்கு அப்பாற்பட்டதென இத்தாலி சாதித்தது. வீயன்னுவைத் தடுக்குமுகமாகப் பேளின் தன் செல் வாக்கை உபயோகித்தது. ஆகவே அபிசுபேக்கர் சேபியாவைத் தாக்குவதைப் பதினெரு மாதங்களுக்கு மட்டும் ஒத்திவைத்தனர்.
சேபியா மன்னிக்க முடியாத இரு குற்றங்களைச் செய்தது. ஒசுத்திரிய-அங்கே ரிக்கும் சலோனிக்காவுக்கும் இடையே உள்ள தடை நாட்டைப் பலப்படுத்தி யதுமல்லாமல், யூகோசிலாவியர், சிலாவிய ஒற்றுமை உணர்ச்சிவாதிகள் ஆகியோரின் அபிலாட்சைகளின் பிரதிநிதியாகச் சேபியா தன் சுயமதிப்பை யும் பெரிதும் உயர்த்தியது. இதிற் சேபியா தனித்து நிற்கவில்லை. சலோனிக்கா வில் உறுதியாக நிலைநாட்டப்பட்ட கிரிசு, அபிசுபேக்கர் ஈசியன் கடலை அடைவ தைத் தடைசெய்தது. உருமேனியாவும் தடையாய் இருந்தது. அங்கேரிக்கு

மாபெரும் உலகப்போரின் எல்லையில் 441
நட்டம் விளைத்தே மாபெரிய உருமேனியாவை உருவாக்குங் கனவு நனவாக லாம். சேர்மனியும் போற்கன் அலுவல்களில் அக்கறை கொண்டது. பெல்கி ரேட்டு சலோனிக்காவுக்குச் செல்லும் பாதையை மட்டுமன்றி, கொன்சுதாந்தி நோப்பிளுக்குப் போகும் பாதையையும் அடைத்தது. பேளினிலிருந்து பசரா விற்குச் செல்வதற்காகத் திட்டமிடப்பட்ட இருப்புப்பாதையின் வழியிலேயே இந்நகரிலிருந்தது. பெல்கிரேட்டில் ஆட்சி நடத்தும் வல்லரசு நசிக்கப்பட வேண்டும். பிசு மாக்கின் எதிர்வுக்கூற்றுப் பிழைக்கவில்லை : உலக யுத்தம் கிழக் குப் பிரதேசத்திலேயே ஆரம்பிக்கும். 'வாயிற் காவலரை அவ்விடத்திலிருந்தும் அகற்றுவதற்காக ஐரோப்பா முன்னெருபோதும் கண்டிராத மிகப் பெரிய போரிற் சிக்குவதாயிற்று.
1914 ஆம் ஆண்டில் வரலாற்றுப் போக்கு விரைவாக மாறிற்று.
உலக யுத்தம்
1914 ஆம் ஆண்டு யூன் 12 ஆம் திகதி கைசர், சேர்மானிய கடற்படையின் முதல்வனுன கடற்படைத் தலைவன் உவொன் தேப்பிசுடன் அபிசுபேக்குப் பேரரசின் உரிமையாளஞன மாபெரும் கோமகன் பிரான்சு பேடினந்தின் கோட்டையாகிய பொகீமியாவிலுள்ள கொனுேபித்திற்குச் சென்முன், மாபெருங் கோமகன் மகியாருக்குப் பாதகமாகவும் சேபியாவுக்குச் சாதகமாகவும் இருந்தா னெனக் கருதப்பட்டான். அவனுக்கும் கைசருக்குமிடையில் என்ன நிகழ்ந்த தென்பதை இன்னும் பெரும்பாலும் ஊகித்தே அறியவேண்டி இருக்கிறது. யூன் 23 ஆம் திகதி கீல் கால்வாய் திருத்தி வெட்டப்பட்டபின்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. மிகப் பெரிய போர்க் கப்பல்களும் கால்வாயூடே செல்லக் கூடியதாயிருந்தமையாற் சேர்மனியின் கப்பற்பிடைப் பலம் இன்னும் இரட்டித் தது. பிரான்சு பேடினந்து என்பான் யூன் 28 ஆம் திகதி, படையின் பரிசோதகர் நாயகம் என்ற முறையிற் பொசினியப் படை பலத்தைப் பார்வையிட்டபின்னர், தன் மனைவியுடன் பொசினியாவின் தலைநகராய செருேசிவோவுக்குச் சென்றன். அங்கே அவனும் அவன் மனைவியும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் பொசினியக் குடிகளெனினும் பிறப்பாற் சேபியராவர். ஒசுத்திரியா சேபிய மாகாணத்தைக் கவர்ந்தமைக்காக அரசியற் பழிவாங்கும் பொருட்டு அச்செயல் செய்யப்பட்டதென்பதற்குச் சந்தேகமில்லை. அதைத் தவிர இக் குற்றம் நிகழ்ந்த சூழ்நிலைகள் அன்றும் இன்றும் மறைபொருளாகவேயுள்ளன.*
பெல்கிரேட்டில் திட்டமிட்டு, சேபியாால் இழைக்கப்பட்ட இக்குற்றத்திற்கு ஒசுத்திரிய-அங்கேரி சேபியாவையே பொறுப்பாளியாகக் கொண்டது. யூலே
மரியற்றின் “ஐரோப்பா 1815-1939’ (1944) 26 ஆம் அத்தியாயத்தை நோக்குக.

Page 232
442 மாபெரும் உலகப்போரின் எல்லையில்
23 ஆம் திகதி சேபியாவிற்கு இறுதிக்கூற்முென்றை அனுப்பி, மறுமொழி அனுப்ப 48 மணி நேர அவகாசம் கொடுத்தது. சேபியா பணிந்து, முக்கியமான பத்துக் குறிப்புக்களில் உடனே எட்டினை ஒப்புக்கொண்டது. ஆனல், உண்மை யில் எஞ்சிய இரண்டையும் தள்ளிவிடவில்லை. மாபெரும் கோமகனின் படு கொலைக் காலம் தொடக்கம், இங்கிலந்து போரைத் தவிர்க்க மனமார்ந்த முயற்சி கள் செய்தது. யூலை 23 ஆம் திகதிக்குப் பின்னரும் அம்முயற்சிகளை அது கைவிட வில்லை. யூலை 28 ஆம் திகதி ஒசுத்திரியா சேபியா மீது போர்ப் பிரகடனஞ் செய்தது. இரசியா சேபியாவின் உதவியை வேண்டி நின்றது. 29 ஆம் திகதி பெரிய பிரித்தானியா சேர்மனி ஒப்புக்கொள்ளக்கூடிய எந்த முறையான நடுத் தீர்ப்பையும் கைக்கொள்ளும்படி இன்னும் தூண்டிற்று. சேர்மனி பெரிய பிரித்தானியாவின் நிபந்தனையற்ற நடு நிலைமையைக் கோரிப் பதிலளித்தது. அவ்வாறு உறுதிமொழி கொடுத்தல், பிரான்சைக் கைவிடுவதாகும். ஆனபடியால் இங்கிலந்து சேர்மனி கேட்ட வாக்குறுதியைக் கொடுக்க முடியவில்லை. இதற் கிடையில், இரசியா படைதிரட்ட ஆரம்பித்துவிட்டது. அதன் மீது ஒகத்து 1 ஆம் திகதியும், பிரான்சின் மீது 3 ஆம் திகதியும் சேர்மனி போர்ப் பிரகடனஞ் செய்து, 4 ஆம் திகதி பெல்சியத்திற்கு ஒரு படையை அனுப்பியது. அன்று நடு நிசியிற் சேர்மனியும் பெரிய பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டன.
பொறுப்பு
இந்தப் பெருங்கேட்டுக்குப் பொறுப்பு யார்? ஒசுத்திரியா உடன் குற்றவாளி யாகும். ஒசுத்திரியா ஈசியன் கடலை அடைவதற்குத் தடையாயிருக்கும் முதன்மையான தடையை அகற்றுவதற்கு, இப்பாதகத்தை, வீயன்னுவிலுள்ள போர்க் கட்சி ஒரு தலைக்கீடாகப் பயன்படுத்தக் கருதியதென்பது வெளிப்படை. வியன்னுவின் செய்கையைப் பேளின் ஒப்புக்கொண்டிருக்கலாம். அச்செய்கையை ஒப்புக்கொள்ளாதும் விட்டிருக்கலாம். ஆனல், இருபது ஆண்டுகளாகக் கைக் கொண்ட பிசகான குழியல்முறையே தப்பமுடியாத சூழலில் அந்நாட்டைச் சிக்க வைத்தது. இரசியா சேபியாவிற்காதாரமளிக்கும் அளவிற்கு ஒசுத்திரி யாவை ஆதரிக்கச் சேர்மனி கடமைப்பட்டிருந்தது. பிரான்சு போரை விரும்ப வில்லை. ஆனல் இரசியாவிற்குக் கடமைப்பட்டிருந்தது. இங்கிலந்து போரை வெறுத்தது. ஆனல், பிரான்சைச் சேர்மனி அழிக்கவாளாவிருப்பது கெளரவ மன்று. பின் நிகழ்ந்தது கண்ணிருங் கம்பலையுமான சோகக் கதை ; இக் கண்ணீர் வெகு காலமாகத் துடைக்கப்படவில்லை.
மரியற்றின் முதனூலாய * கீழைத்தேசப் பிரச்சினை” (4 ஆம் பதிப்பு) பக்கங்கள் 477-81 இருபத்தியாரும் அத்தியாயம்.
இக்கூற்றின் நிறுவலுக்கு முன்கூறப்பட்ட பிரந்தன் பேக்கின் நூலைப் பார்க்க.

அதீதியாயம் 38
உலகப் போர் (1914-18)
முக்கியமான திகதிகள் :
1914
யூலே 38 ஒகத்து 1.
4.
16
23 செத்தெம்பர் 5 ஒற்ருேபர் 9 நவம்பர்
திசெம்பர் 8
1915 பெப்புருவரி 18 25
எப்பிரில் 25 மே
33 யூலே 9 ஒற்ருேபர் 5 9
12 திசெம்பர் 19
丸9五6 பெப்புருவரி 18 ஏப்பிரில் 29
மே 31 யூன் ஒகத்து 27
திசெம்பர் ? திசெம்பர் 15
20
சேபியாமீது ஒசுத்திரியா போர்ப்பிரகடனஞ் செய்தல்.
இரசியாமீதும், பிரான்சுமீதும் (ஒகத்து 3), பெல்சியத்தின் மீதும் (ஒகத்து 4) சேர்மனி போர்ப்பிரகடனஞ் செய்தல்.
பெரிய பிரித்தானியா சேர்மனி மீது போர்ப்பிரகடனஞ்
செய்தல்.
பிரிட்டிசுப் படை பிரான்சில் இறங்குதல்.
யப்பான் சேர்மனிதுே போர்ப்பிரகடனஞ் செய்தல்.
முதலாம் மாண்சமர் தொடங்கல்.
அந்துவேப்பு வீழ்ச்சி.
பெரிய பிரித்தானியா
செய்தல்.
போக்குலந்து தீவுகளுக்கப்பால், சேர் சிற்றேடியின் வெற்றி.
துருக்கிமீது போர்ப்பிரகடனஞ்
சேர்மன் U-வள்ளங்கள் இங்கிலந்தை முற்றுகையிடல். தாதனெலிசைக் கடற்படை தாக்குதல். நட்புறவுப் படைகள் கலிப்போலியில் இறங்குதல். உலூசிற்றேனியா ' தோப்பிடோ' விற்குப் பலியாதல். இத்தாலி ஒசுத்திரியாமீது டிோர்ப்பிரகடனஞ் செய்தல். தென்மேற்காபிரிக்காவைப் போதா கைப்பற்றல். சலோனிக்காவில் நட்புறவுப் படைகள் இறங்குதல், ஒசுத்திரிய சேர்மானியர் பெல்கிரேட்டை அடிப்படுத்தல், பல்கேரியாவுக்கும் சேபியாவுக்குமிடையே போர். கலிப்போலியிலிருந்து பிறக்கீடு.
கமரூனக் கைப்பற்றல்.
குற்று-எல்-அமாராவின் வீழ்ச்சி.
யத்திலாந்துச் சமர்.
கிச்சினர் பிரபு கடலில் மாளல். உருமேனியா போரிற் கலத்தல். அசுக்குவிது விலக, உலொயிட்டு யோட்சு முதலமைச்சனுதல். வேடனிற் பிரெஞ்சு வெற்றி. குடிப்பதி உவில்சனது அமைதியறிக்கை.

Page 233
444 உலகப் போர்
1917
பெப்புருவரி 1 U-வள்ளப் போர் தொடங்கல்.
լքTd d; 12 இரசியாவிற் புரட்சி.
ஏப்பிரில் 6 சேர்மனிeது அமெரிக்கா போர்ப்பிரகடனஞ் செய்தல்.
1918
பெப்புருவரி 1 பிரெசு-இலிதோவுசுக்குப் பொருத்தன.
լDT *Ց 21 மேற்கிலே சேர்மனி தாக்கத் தொடங்கல்.
ஏப்பிரில் 14 சேனபதி போசு நட்புறவுப் படைகளுக்குத் தலைவனுதல்.
யூலே 18 நட்புறவு அரசுகள் எதிர்த்துத் தாக்கல்.
செத்தெம்பர் 27 இண்டன்பேக்கு அரண் தகர்தல்.
29 பல்கேரியா சரணடைதல் ; பேடினந்து மன்னன் முடிதுறத்தல்
(ஒற்ருேபர் 4). நவம்பர் 4 ஒசுத்திரியா சரணடைதல்.
9 பேளின் புரட்சி ; கைசர் பதவி துறத்தல். 11 படைத்தகைவு நியதிகள் ஏற்கப்படல்.
சேபியாவை ஒசுத்திரியா தாக்கியதோடு ஆரம்பித்த பேரானது விரைவில் உலகு முழுவதையும் உள்ளடக்கிக்கொண்டது. ஏழு முனைகளிலே போர் தீவிர மாக நடைபெற்றது. பரந்து சிதறிக்கிடந்த இப்போசாங்குகள் பற்றிச் சில வார்த்தைகளே நாம் இங்குக் கூற முடியும்.
சேர்மானியரின் போர்த்திட்டமோ தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது : பெல்சியத்தினூடாகப் படையெடுத்துச் சென்று, பாரிசைக் கடிது தாக்கி அடிப் படுத்தியபின், கால்வாய்த்துறைகளையும் (அவசியமாயின்) கைப்பற்றி, பிரான்சு மீது உடன்படிக்கை நியதிகளை விதிப்பதே சேர்மானியரின் திட்டம். வீரதீரத் தொடு பெல்சியர் எதிர்த்து நின்றமையாலும் பிரித்தானிய வெளியெழுச்சிப் படை காலந்தாழ்த்தாது பிரான்சுக்கு அனுப்பப்பட்டமையாலும் சேர்மானிய ரின் திட்டம் தகர்ந்தது. பிரித்தானியப்படை எண்ணிக்கையில் நனிமிகக் குறைந்ததாயினும் திறமையான பயிற்சியும் போர்க்கருவிகளும் படைத்திருந் தது. சேர்மானியப் படை தடையின்றிக் கடந்து செல்லுதற்குப் பெல்சியம் அனுமதியளிக்க மறுத்தமையால் மனங் கொதித்த சேர்மானியர் பெல்சிய மக்க ளுக்குச் சொல்லொணுக் கொடுமை பல இழைத்தனர். இலியேசு ஒகத்து 7 இற் சரணடைந்தது; 20 ஆம் தேதி சேர்மானியர் பிறசலுட் புகுந்தனர்; 24 இல் நாமூரும் ஒற்ருேபர் 9 இல் அந்துவேப்புஞ் சரணடைந்தன. ஒகத்து 16 இற் பிரான்சில் இறங்கிய பிரித்தானியப் படை மொன்சிலிருந்து முதுகிடவேண்டி யதாயிற்று. சேர்மானியர் எயின் நதியைக் கடந்து, ஒகத்து மாதக் கடைசியில், பாரிசைத் தாக்குதற்கு ஆயத்தராயினர். ஆயின் பிரபலமான மாண்நதிச் சமரில் (செத்தெம்பர் 6 தொட்டு 12 வரையில்) நிலைமை சேர்மானியருக்குப் பாதகமா யிற்று; அவர்கள் எயின் நதி வரை விரட்டப்பட்டனர். ஆங்கு, ஆங்கிலக் கால்

\ உலகப்போர் 445
வாய் தொட்டுச் சுவிற்சலந்தின் ஸ்ல்லைப்புறம் வரை தொடர்ச்சியாயிருந்த பல அகழிகளில் இருபாலாரும் நாலாண்டுக் காலம் எதிரூன்றி நின்றனர். இரத்தக் களரியான பெருஞ்சமர்கள் ஆங்காங்கு நிகழ்ந்தன. ஈப்பிறேசில் (1914, ஒற்றே பர்-நவம்பரிலும், 1915 ஏப்பிரில் 22, மே 24 வரையிலும்) இரு பெருஞ் சமர்கள் நடைபெற்றன. வேடன் எனுமிடத்திற் சேர்மானியர் விரத்தொடு தாக்கிய போதும், அந்நகர் வீரத்தொடு அத்தாக்குதல்களையெல்லாம் எதிர்த்து நின்றது (1916 பெப்புருவரி ஒற்ருேபர்). வரலாற்றிலேயே மிகப் பெருமை வாய்ந்த கடும்போர், சோம் நதியில் 1916 யூலை தொட்டு நவம்பர் வரை நிகழ்ந்தது. ஈப்பிறெசில் மூன்றும் முறையாக (1917 ஓகத்து நவம்பர் வரை) நிகழ்ந்த வெஞ்சமரில் 2,50,000 பிரிட்டிசு வீரர் உயிரிழந்தனர்; அத்துணை சேர்மானியரும் அங்கு மாண்டனர் போலும். 1917 ஆம் ஆண்டிலே நட்புறவுப் படைகள் வென் றிருத்தல் கூடுமா அன்ரு வென்பது ஆராய்தற்குரிய விடயமாகும். பிரித்தானியப் படைகளிலிருந்து ஐந்து பிரிவுகள் இத்தாலிக்கு மாற்றப்படாவிடின், இரசியப் புரட்சி காரணமாகச் சேர்மானியர் தம் படைகள் யாவற்றையும் மேற்குப் போர் முனைக்குக் கொண்டு வந்து குவிக்காவிடின், சேர்தக்கிளசு எயிக்கு (சேர்யோன் பிரன்சுக்குப் பின், 1915 திசெம்பர் தொட்டு பிரித்தானியப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் இவரே) 1917 இல் வெற்றி கண்டிருப்பார் என்பதே வாலாற்றுச்சான்றவர் இன்று கொண்டுள்ள கருத்தாகும்.
1917 ஏப்பிரில் அளவில் அமெரிக்கா சேர்மனி மீது போர் தொடுத்தது. போரில் இளைத்த நட்புறவுப்படைகளுக்குத் துணையாக அமெரிக்கப்படைகள் 1918 அளவில் வந்திறங்கலாயின 1918 ஆம் ஆண்டு மாச்சுக்கும் யூலைக்குமிடை யில், பிரான்சிய-பிரித்தானியப் போர் முனையிலே, வெருத்தரும் வகையிலே சேர்மானியர் நான் முறை வந்து வந்து தாக்கினர். அமியென்சு நகரில் வைத்தே அவர்கள் முன்னேற்றந் தடுக்கப்பட்டது. நட்புறவுப்படைகள் யாவற்றுக்குந் தனி முதற் சேனபதியாக மாசல் போசு ஏப்பிரிலில் நியமிக்கப்பட்டான். மாண்; நதியைக் கடந்துவரச் சேர்மானியரைவிட்டு, போசு, யூலை 18 இல் எதிரேறித் தாக்கினன். சேர்மானியர் வெந்நிட்டனர் ; உயிர்ச் சேதம் அவர்களிடை மிக நேரிட்டது . ஒகத்து 8 இல், பிரித்தானியரின் எதிர்த்தாக்கம் தொடங்கிற்று. நவம்பர் 11 இலே நட்புறவு நாடுகள் விதித்த படைத்தகைவு நியதிகளைச் சேர் மானியர் ஏற்கும்வரை, பிரித்தானியரின் முன்னேற்றம் தடைப்பட்டிலது. அக் காலத்தளவில், சேர்மனியிலே புரட்சி தலையெடுத்தது ; நவம்பர் 9 அன்று கைசர் பதவிதுறந்து ஒல்லந்திலே தஞ்சமடைந்தான்.
போரிலே வெற்றி தோல்வி யார்பக்கமென்பது மேற்குப் போர்முனையிலேயே பெரும்பான்மையும் முடிவு செய்யப்பட்டதாயினும் பிற அாங்குகள் ஆறிலே பெருஞ்சமர்கள் நடந்தேறின. விரைவிலே படைதிரட்டிய இரசியாவானது போரின் ஆரம்பத்திலே சில மாதகாலம் நட்புறவு நாடுகளுக்குப் பேருதவி புரிந்தது ; அன்றியும் மாபெரும் கோமகன் நிக்கலசின் தலைமையிலே துருக்கி யரைப் பன்முறை வெற்றி கொண்டதோடு, மெசப்பொத்தேமியாவிலும் உறு

Page 234
446 உலகப் போர்
今ー
துணையளிக்கும் போலத் # இரசியப் படைகள் சீரான போர்ச் சாதனங்கள் அற்றவை; துப்பரகிகியும் வெடிமருந்துப் பொருள்களும் அவற்றுக்கு வேண்டியாங்கு இருக்கவில்லை. சீரற்ற நிருவாகத்தின் காரணமாக (நாட்டின் நலனுக்குத் துரோகமிழைத்தோரின் நடவடிக்கைகளும் ஓரளவிற்குக் காரணமாக), போர்முனையிலே செய்த முயற்சிகள் பெரிதும் வியர்த்தமாயின. இாசியாவின் உதவியை எதிர்நோக்கி, 1916 ஒகத்தில் நட்புறவு நாடுகளைச் சேர்ந்து கொண்ட உருமேனியாவிற்கு எதிர்பார்த்த அவ்வுதவி கிட்டவில்லை. ஈற்றில் 1917 இல், அறவே உளுத்துப் போயிருந்த இரசிய அரசு தகர்ந்து வீழ்ந் தது. சோகமே உருவமான சார் நிக்கலசு மாச்சு 15 இல் முடிதுறந்தான்; அவ ணும் சாரீனுவும் பிள்ளைகளும் பின்னர்ப் படுகொலை செய்யப்பட்டனர். மாச்சு மாதத்திலே புரட்சியை மூட்டிய "மிதவாதிகளை நவம்பரிலே இலெனினும் துரட் சுகியும் பிற பொல்சிவிக்குவாதிகளும் ஒதுக்கிவிட்டனர். இரசிய கடற்படைஞர் கலகம் விளைத்துக் கப்பற்படையதிகாரிகளைக் கொன்றனர். பட்டினியால் வாடிய வரும் அரைகுறையாக ஆயுதம்பூண்டவருமான இரசிய விவசாயிகள், பொல் சிவிக்குவாதிகளின் ஆசை வார்த்தைகள் கேட்டுப் பெருந்தனம் பெறும் வேட்கை யொடு போர்முனைவிட்டுத் தத்தம் ஊர் திரும்பினர். பொல்சிவிக்கு வாதிகள் திசெம்பர்த் திங்களிலே முதலாளிகளின் போரைக் கைவிட்டு 1918 மாச்சிலே மத்திய வல்லரசுகளுடன் பிரெசு-இலிதோவுக்கு எனும் நகரில் வைத்து அமைதி யுடன் படிக்கை செய்துகொண்டனர். இரசியா பாறிவிடவே உருமேனியாவும் சமாதானஞ் செய்யவேண்டியதாயிற்று (1918 மே, புக்காரெத்து).
மூவர் நட்புறவிலே தொடர்ந்து அங்கம் வகிப்பது இத்தாலியருக்குப் பெரும் சங்கடமாயிருந்தது. அந்நட்புறவை முறியவிடாது தடுத்தற்குப் பெரிதும் முயன்ற சேர்மனி, இத்தாலி அவாவிய கோரிக்கைகளை விட்டுக்கொடுக்குமாறு ஒசுத்திரியாவைத் தூண்டியது. ஒசுக்கிரியாவை அடிபணிய முறியடித்தாலன்றி அந்நாடு ஏற்கத்தகா அளவிற்கு இத்தாலியின் கோரிக்கைகள் மிதமிஞ்சியிருந் தன. இவ்வாருக, 1915 மே 24 இல் ஒசுத்திரியாமீதும், அதற்கப்பால் பல்கேரியா துருக்கி எனுமிரண்டின் மீதும், 1916 ஆம் ஆண்டுவரை சேர்மனி மீதும் இத்தாவி
போர்ப் பிரகடனஞ் செய்தது.
ஒசுத்திரியாமீது போர் தொடுத்தற்கு ஒரு வார முன்பாக இத்தாலி பெரிய பிரித்தனெடும் பிரான்சொடும் ஒசுத்திரியாவொடும் (இரகசியமாக) இலண்டன் பொருத்தனையை ஒப்பேற்றியிருந்தது. போரிலே தன் ‘முழுப் பலத்தையும் பிர யோகிக்க இத்தாலி ஒப்புக்கொண்டிருந்தது. அவ்வுதவிக்குப் பதிலாகத் திரெந் தினேவையும், பிறென்னர்க்கணவாய் வரை தென்தைரோலையும், திரியெத்தை யும், இசுத்திரியாவிற் பாதியையும் அதனைச் சார்ந்த தீவுக்கூட்டத்தையும், தல் மேசியாவையும் எத்திரியாற்றிக்குத் தீவுகளிற் பெரும்பாலானவற்றையும் இத்தா

உலகப் போர் 44
விக்கு அளித்தற்கு ஏற்பாடாகியிருந்தது; அன்றியும் வலோனவையும் தொடக்க னிசுத் தீவுகளையும் தொடர்ந்து இத்தாலி வைத்திருப்பதற்கும் ஒழுங்கு செய்யப் பட்டது; ஆபிரிக்காவிலும் நட்ட ஈடாகச்' சில பிரதேசங்களைப் பெறுதற்கும் இத்தாலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இத்தாலி போருக்கு ஆயத்தமாயிருக்கவில்லை; அன்றியும் விரைவிலே தயாராக்கிப் போரிற் பயன்படுத்தற்கு வேண்டிய மூலவளங்களும் அந்நாட்டிற்கு இருக்கவில்லை. 1915-16 வரை நிகழ்ந்த போராட்டங்களிலே, திரெந்தினேவைத் தாக்கிய ஒசுத்திரியப் படைகளை அது முறியடித்ததாயினும், ஐசன் சோ முனை யிலே ஒசுத்திரியருக்கெதிராக அது முன்னேற முடியவில்லை. 1917 இல் இரசியா போரினின்று விலகவே, ஒசுத்திரியா தன் படைபலத்தையெல்லாம் இத்தாலியப் போர் முனையிலே பிரயோகிக்க முடிந்தது. அன்றியும் சேர்மானியப்படைப் பிரிவு ஆறின் உதவியுங் கிடைக்கவே, கப்பொறெற்ருே எனுமிடத்தில் வைத்து இத்தாலியரைப் படுதோல்வியுறச் செய்தனர் ஒசுத்திரியர் (1917 ஒற்ருேபர்-, நவம்பர்). எனினும் பியாவேயில் இத்தாலியர் நிலையூன்றி ஒசுத்திரியரை முன்னேறவொட்டாது தடுக்க முயன்றனர். அவர்க்கு உதவி செய்யும் பொருட்டுப் பிரிட்டிசுப் படைகளும் பிரெஞ்சுப் படைகளும் அனுப்பப்பட்டன. 1918 யூனில் ஒசுத்திரியர் மீண்டுந் தாக்கியபோது அவர்கள் விரட்டப்பட்டனர். அப்பால், விற்றேறியோ வெனிற்முேச்சமர் என விதந்தோதப்படும் போராட்டத்தில் இத்தாலிய பிரித்தானிய படைகள் ஒசுத்திரியரை இத்தாலிய மண்ணினின்றும் விரட்டியடித்தன. நவம்பர் 4 இல் ஒசுத்திரியா படைத்தகைவை வேண்டி நின்றது.
அல்பேனியாவுக்கும் சலோனிக்காவுக்கும் இத்தாலி சில படைகளே அனுப்பி யிருந்தது. நட்பு நாடுகளின் குழியற் கொள்கை சற்றே விவேகமானதாயிருந் தால், அண்மைக் கிழக்கிலும் மத்திய கிழக்கிலும் அந்நாடுகள் போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்குமா அன்ரு என்பது விடுக்கமுடியாத வினவாகும். நட்பு நாடுகளுக்குத் துருக்கி ஓர் அருந்துணையாக இருந்திருக்கும். பிரித்தானியப் பேரரசிற்கு மாமுகச் சேர்மானியர் தீட்டிய போர்த்திட்டம் வெற்றியடைதற்குத் துருக்கியின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. அவ் வொத்துழைப்பைப் பெறுதற்குச் சேர்மனி அரும்பாடுபட்டு ஈற்றில் வெற்றியுங் கண்டது. நவம்பர் 5 இலே, துருக்கியும் பிரித்தனும் முதன்முறையாக மாறு பட்டுப் போரிட்டன. பிரித்தானிய பிரான்சிய கடற்படையொன்று 1915 பெப்புருவரியிலே, தொடுகடலூடாகப் பொருது சென்று கொன்சுதாந்திநோப் பிளேக் கைப்பற்ற முயன்றது. ஆயின் கடற்படை தனித்து அதனைச் சாதிக்க முடியாதென்பது தெளிவாயிற்று. எனவே கோடை காலத்தில், மொத்தம் 3,00,000 பேரைக் கொண்ட சேனையொன்று கலிப்போலிக்குடாநாட்டுள் அனுப்பப்பட்டது. இப்படையில், பிரித்தானிய பிரிவுகளைத் தவிர, ஒசுத்திரே வியா, நியூசிலந்து ஆகிய நாடுகளினின்று வந்த சிறந்த வீரரே பெரும்பாலாரா யிருந்தனர். (இவர்கள் பின்னர் "அன்சாக்குக்கள்' என வரலாற்றிற் புகழிடம்

Page 235
4.48 உலகப் போர்
4
பெற்றனர்). இப்படைஞர் வீரதீரத்தொடு/போர்புரிந்து மகத்தான வெற்றி யீட்டுந் தறுவாயிலும் ஒருகால் இருந்தனர். அத்தகைய வெற்றி கைவசப்பெறின் உலகப் போர் ஈராண்டு காலம் , முன்பாக முடிவெய்தியிருக்கும். ஆயின் நிலைமையோ நட்பு நாடுகளுக்குப்/ பாதகமாய் இருந்தது. எனவே சீமையிற் பலத்த விவாதத்தின் பின்னர் இம்முயற்சி கைவிடப்பட்டது. இக்கட்டான இந் நிலைமையிலிருந்து ஒருவாறு படைகளை வெளியேற்றும் பொறுப்பு சேர் சாள்சு மன்றே என்பாரிடம் விடப்பட்டது. அவர் திசெம்பர் மாதக் கடைசியளவில் தம் அரும் பெருந்திறமையினல், இவ்வரும்பெருஞ் சாதனையை நிறைவேற்றி முடித் தார்-ஈண்டு ஒரேயொரு விரனே உயிர்துறந்தான். துப்பாக்கிகள், பிறபோர்த் தளவாடங்கள், கோவேறு கழுதைகள் ஆகியன பெரும்பாலுங் காப்பாற்றப் பட்டன. இந்தக் கலிப்போலி மோசத்தைப்போலப் பிறிதொரு தோல்வியும் இங்கிலந்திலே இத்துணை மனவருத்தத்தை உண்டாக்கவில்லை எனலாம். உயிர்ச் சேதம் அதிகமாயிருந்தாலும், பிறபோராங்குகளிலே துருக்கியர் முயற்சி தளர் வதற்கு அது காரணமாயிருந்தது. எனவே, உயிர்ச்சேதம் முற்றிலும் பயனில தாயிற்றே எனல் சாலாது.
இஃது இவ்வாருக, இருமுறை தாக்கிய ஒசுத்திரியரைச் சேபியா இருமுறை யும் பின்னிடச் செய்தது. ஆயினும் 1915 ஒற்ருேபர் 19 இதிலே, பீல்-மாசல் மக் கன்சன் தலைமையில் ஒசுத்திரிய சேர்மானியப் பெரும்படை யொன்று சேபியா மீது படையெடுத்துப் பெல்கிரேட்டை அடிப்படுத்தி (1915 ஒற்றேபர் 9) சேபி யரை நைய முறியடித்தது. இவ்வழி போற்கன் போர் முடிவுற்றதெனச் சேர்மனி உத்தியோக பூர்வமாக அறிக்கை செய்தது. சேர்மானிய அரசுகளோடு சேர்ந்து கொண்ட பல்கேரியாவானது பெல்கிரேட்டுச் சரணடைந்து இரு நாட்களுக்குப் பின்னர், நிசு எனுமிடத்திற் சேபியர்மீது விழுந்து தாக்க அவ்விடத்தை நவம் பர் 5 இற் கைவிடவேண்டியதாயிற்று. கிரீசு நடுநிலைமை வகித்ததாயினும், அது சேர்மனிக்கே சார்பாக இருந்தது. ஒற்முேபர்த் தொடக்கத்தில் ஆங்கில-பிரான் சியப் படையொன்று சலோனிக்காவில் இறங்கியது ; சேபியாவைக் காப்பாற்று தற்கு இப்படை பிந்திவிட்டதாயினும், பிரித்தானிய கடற்படையொன்று கிரேக்கதீவுகள் சிலவற்றைக் கைப்பற்றியது. 1916 ஆம் ஆண்டு இலையுதிர்காலத் தில் அரசறிஞன் வெனிசலசு என்போன், கிரேக்கமன்னன் கொன்சுதாந்தைனின் அதிகாரத்தை மறுதலித்து, தற்காலிக அரசாங்கமொன்றைச் சலோனிக்காவில் நிறுவி நட்புநாடுகள் பக்கல் சேர்ந்து கொண்டான்.
1917 யூனில் மன்னன் கொன்சுதாந்தைன் அரசபதவியினின்றும் நீக்கப் பட்டான். கிரீசும் மாபெரும் நட்புறவில் இணைந்து கொண்டது. எனினும் சலோ னிக்காவில் இருந்து தீவிரமான முன்னேற்றம் எதுவும் 1918 ஆம் ஆண்டு செத் தம்பர் மாதம்வரையும் நிகழவில்லை. இருவாரப் போரின் பின்னர் செத்தம்பர் 30 ஆம் தேதியன்று பல்கேரியா நிபந்தனையற்ற சரண் அடைந்தது. ஒற்ருேபர் 12 இல் சேபியர் தம் பழைய தலைநகராகிய நிசுவை மீண்டும் கைப்பற்றினர். அவ்
 

உலகப் போர் 449
வழி, பேளின் கொன்சுதாந்திநோப்பிள் புகையிரதப்பாதையினை உயிர்நிலை போன்ற ஒரு தானத்திலே துண்டித்து விட்டனர். அடுத்து, கொன்தாந்தி நோப்பிளை நோக்கி முன்னேற முயன்றபோது துருக்கியரோடு படைத்தகைவு ஏற்பட (ஒற்ருேபர் 30) இம்முன்னேற்றம் தடுக்கப்பட்டது.
படைத்தகைவு நிகழ்தற்கு நான்கு நாள் முன்பாகப் பிறதொரு போசாங் கத்திலே நட்புறவு நாடுகளுக்குப் பெருவெற்றி ஏற்பட்டது. சுயசுக்கால்வாயா னது பிரித்தானிய பேரரசுக்கு உயிர்நாடி போன்றது. எனவே துருக்கியர் சேர் மணிய அரசுகளின் பக்கம் சார்ந்தமையால், எகித்திய கேடிவாக இருந்த 2 ஆம்
அப்பாசை பதவிநீக்கி, எகித்திய நாட்டைப் பிரித்தானிய புரப்பகமாக மாற்று வது நன்றென்று கருதப்பட்டது. இந்நாட்களிலேயே சைப்பிரசும் பிரித்தானிய அரசோடு இணைக்கப்பட்டது (1914 நவம்பர்-திசெம்பர்). 1915 பெப்புருவரியில் சுயசுக்கால்வாயைக் கைப்பற்றுவதற்கு முதன்முதலாகத் துருக்கியர் முயற்சி செய்தனர். அவ்வாறு பன்முறை முயன்றபோதும் அவர்கள் பலத்த சேதத் தோடு விரட்டப்பட்டனர். அன்றியும் 1916 மாச்சில் சேர் ஆச்சிபால் மறே என் பான் பலத்தீனுள் முன்னேறிச் சென்முன். ஆயினும் காசா என்னும் இடத்தில் 1917 ஏப்பிரிலில் துருக்கியர் மாட்டுப் படுதோல்வியுற்றனர். அதனுல் அவனுக் குப் பதிலாக சேர் எடுமண்டு அலன்பி என்பான் படைத்தலைவனுக அமர்த்தப் பட்டான். இந்தியாவிலிருந்தும் சலோனிக்காவிலிருந்தும் படைத்துணை பெற்ற அலன்பி நிலைமையை விரைவிலே சமாளித்து, திசெம்பர் 9 இல் எருசலத்தைக் கைப்பற்றி வாகை குடினன். அவன் 1918 ஆம் ஆண்டு தொடக்கத்திலே அரா பியரோடும் எட்சாசின் மன்னனேடும் போக்குவரத்துத் தொடர்புகள் உண்டாக் கினன் (இந்த எட்சாசு மன்னனின் ஆதரவு அரேபிய நாட்டு உலோரன்சின் முயற்சியினல் கிடைத்தது என்க). இனி அலன்பி செரிக்கோவைப் பெப்புருவரி 21 இல் அடிப்படுத்தினுன் ; ஆயினும், மேற்குப் போர்முனையிலே சேர்மானியரின் தாக்குதலை நிருவகிக்கும் பொருட்டு அவனுடைய படைஞரிற் சிறந்தோர் பலர் அங்கு மாற்றப்பட்டனர், ஆதலின் அவன் பலத்தீனைக் கைப்பற்றித் தனது போராட்டத்தை முடிவுறுத்த முடியவில்லை. எனினும் செத்தெம்பர் 20 இல் நாச ாத்தை அடிப்படித்தியதோடு விரைவாக அடுத்தடுத்துத் தமாக்கசு, பேரூற்று, சிடன், திரிப்போலி, அலப்போ ஆகியவற்றையும் கைப்பற்றினன். தமாக்கசுவில் அறுபதினுயிரம் பகைவீரர்களை அவன் சிறைப்படுத்தினன் என்பதையும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். இவ்வாருக ஒற்ருேபர்க் கடைசியிற் பலத்தீனும் சிரியாவும் பிரித்தானியர் கைப்பட்டன.
வெற்றியும் தோல்வியுமாகப் பலவாருய்ச் சென்ற மெசப்பொத்தேமியப் போராட்டமானது இறுதியில் வெற்றியில் முடிந்தது. பிரித்தானியக் கப்பல் களுக்கு எண்ணெய் வழங்கும் கிணறுகளைக் காக்கும் பொருட்டாக இந்தியப் படைப் பிரிவொன்று பசிராவை 1914 நவம்பரிற் கைப்பற்றியது. இந்தியாவி லிருந்து பெரும் படைத்துணை பெற்ற இப்பிரிவானது 1916 இல், தைகிரிசு வரை முன்னேறித் துருக்கியரைச் சிலமுறை புறங்கண்டு குற்று என்னும் இடத்தை

Page 236
生50 உலகப் போர்
யும் அடிப்படுத்தியது (1915 செத்தெம்பர் ارکار இப்படைக்குத் தலைமைதாங்கிய சேனபதி தவுன்செண்டு தனது நிதானத்திற்கு மாருகப் பகுதாதுவரை முன் னேறினன். செசிபொன் என்னும் இடத்திலே வீரத்தோடு அவன் பொருதான யினும் (நவெம்பர் 22-25) வெடிமருந்து வகைகள் போதாமையால், தன்படை யில் அரைப்பாகம் இழந்து, குற்று என்னும் இடம்நோக்கிப் பின்னிடவேண்டிவ னைன். ஆங்கு ஐந்துமாத முற்றுகையின் பின் 1916 ஏப்பிரில் 29 இல் சரண் அடைந்தான்.
இப்படுதோல்விகாரணமாய் இந்தியாவிலே பிரித்தானியருக்கு இருந்த மதிப் புப் பெரிதும் பங்கமுற்றது. இப்பாதக நிலையைச் சமாளிக்கும் பொருட்டு நட வடிக்கைகள் தயங்காது எடுக்கப்பட்டன. நன்முறையில் அமைக்கப்பட்டதும் போர்ச் சாதனங்கள் தகவாய்ப் பெற்றதுமான புதிய ஒரு படையொன்று மெசப்பொத்தேமியாவுக்கு சேர் தானிலிமோட்டு என்பான் தலைமையில் அனுப் பப்பட்டது. அவன் திறமையோடு முன்னேறிக் குற்றையும் மீளக் கைப்பற்றி (1917 பெப்புருவரி 24) துருக்கியரை முற்ருகத் தோற்கடித்து மாச்சு 11 இல் பகுதாத்துள் வெற்றியோடு புகுந்தான்.
ஆபிரிக்காவின் பிரிவினைகளின்போது, (1884-1890) பற்பல பிரதேசங்களைப் பெற்ற சேர்மானியானது 1914 இற் போர் தொடங்கிய காலத்தே தென்மேற்கு ஆபிரிக்காவையும் (தமாலந்து, நமாலந்து), கோல்கோசிலே தொகோலந்தையும் கமரூனையும், கிழக்கு ஆபிரிக்காவிலே ஒரு பெரும் பிரதேசத்தையும் தன் ஆட்சி யில் வைத்திருந்தது.
போர் மூண்ட ஒருமாத காலத்துட் பிரான்சிய பிரித்தானிய படை ஒன்று தொகோலந்தைக் கைப்பற்றியது. பின்னர் அமைதிப்பொருத்தனை நிறைவேறிய காலத்தில் இந்நாட்டைப் பிரான்சியரும் பிரித்தானியரும் பங்கிட்டுக் கொண்ட னர். தென்மேற்குப் புலத்திலே தே உவற்று என்பார் மூட்டிய கலகமொன்றை அடக்கிய சேனபதி போதா என்பான் சேர்மானிய தென்மேற்கு ஆபிரிக்காவி னுட் படைகொண்டு சென்று அதன் தலைநகர் உவிந்தக்கை 1915 மே 12 இல் கைப்பற்றினன். யூலைமாதத்தில் சேர்மானியர் நிபந்தனையற்ற சரணடைந்தனர். இத் தென்மேற்குப் பிரதேசம் ஆபிரிக்க ஐக்கியத்தின் கைப்பட்டது. பின்னர் அது அவ்வைக்கியத்தின் பொறுப்பாட்சியில் விடப்பட்டது.
கமரூனை வெற்றிகொள்ளல் கடினமான விடயமாக இருந்தது ; எனினும் 1916 பெப்புருவரி அளவிற் பிரான்சிய பிரித்தானியப் படைகள் அதனையும் கைப்பற் றின. அமைதிப் பொருத்தனை நிறைவேறிய காலத்தே பெரியபிரித்தனும் பிரான் சும் அதனைத் தம்மிடையே பங்கிட்டுத் தத்தம் பொறுப்பாட்சியில் ஏற்றுக் கொண்டன.

உலகப் போர் 451
ஆபிரிக்காவிலே நிகழ்ந்த போராட்டங்கள் எல்லாவற்றிலும் மிகக் கடியதும் மிக நீடித்ததும் எதுவெனில் சேர்மானிய கிழக்கு ஆபிரிக்காவை அடிப்படுத்த நிகழ்ந்த போராட்டமேயாகும். அங்கு வாழும் நாட்டுமக்கள் போருக்கேற்ற தன்மையுடையர். சேர்மானியர் தமக்கே இயல்பான திறமையோடும் செப்பத் தோடும் அவர்களுக்குப் போர்ப்பயிற்சி அளித்தார்கள். 1914 நவம்பரிலே தங்கா வைத் தாக்கிய பிரித்தானியப் படையொன்று முதுகிட வேண்டியதாயிற்று. 1916 இன் தொடக்கத்தில் சேனபதி சிமட்சு படைத் தலைமையேற்கும் வரையில் முன் னேற்றம் முடியாதாயிற்று. தாரசாலும் 1914 செத்தெம்பரிற் கைப்பற்றப்பட்டது. எனினும் 14 மாதங்கள் கடிது போரிட்ட பின்னரே சேர்மானியரை இப்பிரதேசத் திலிருந்து வெளியேற்ற முடிந்தது. வெளியேறிய சேர்மானியர் போர்த்துக்கேய கிழக்காபிரிக்காவிற் புகலிடம் பெற்று, அங்கிருந்து 1918 இலையுதிர்காலத்தில் வட உரோடேசியாவுக்கு வழிக்கொண்டு சென்றனர். பிற்பாடு நடந்தேறிய படைத்தகைவு நியதிப்படி அவர்கள் சரணடைந்தனர். al
ஆபிரிக்காவையடுத்து இந்துசமுத்திரத்தையும் பசுபிக்குச் சமுத்திரத்தையும் எடுத்தாளல் இயல்பேயாம். பெரும்போர் மூண்டபோது ஒசுத்திரேலியாவும் நியூசிலந்தும் ஒருகணமேனும் தயங்கி நிற்கவில்லை. பிரித்தனின் போர் தம் போரே என அவைகள் கருதின. பிரித்தானியப் பேரரசு முழுவதும் இப்போரிற் பங்குபற்றவேண்டிய தவசியமே. போர் முடிவதன் முன்னர் 60 இலட்சம் மக்க ளைக் கொண்ட ஒசுத்திரேலியாவும் நியூசிலந்தும் ஐநூருயிரம் வீரர்களைப் பேரா சுப் படைகளுக்கு உதவின. இந்தியா பத்திலட்சம் பேர்களை உதவிற்று. இப் பெரும் படைகளை எல்லாம் ஆயிரக்கணக்கான மைல்களுக்குப் பாதுகாப்போடு அனுப்புவதற்கு யப்பானின் உதவியும் அவர்கள் கடற்படைக் காப்பும் ஏதுவாய் இருந்தன. போர் தொடங்கிய சில வாரங்களில் எமிடன் என்னும் சேர்மானியப் போர்க்கப்பல் பிரித்தானிய வியாபாரக் கப்பல்கிளுக்குப் பெருஞ்சேதம் விளைத் தது. நவம்பர் 10 ஆம் தேதி வரையிலேயே துணிகரமான இப்பகைக்கப்பல் கொக்கோசுத்தீவுக்கப்பால், சிட்டினி என்னும் ஒசுத்திரேலியப் போர்க்கப்பலால் துரந்து சென்று அழிக்கப்பட்டது. சேர்மானிய பசுபிக்குக் கடற்படையின் பெரும்பகுதியாக அமைந்த சானேசும், நைசுநோவும், இலைச்சிக்கும் நூாம்பேக் கும், திரசு தனும் தளபதி வோன் இசுப்பி என்பான் தலைமையிற் பிரித்தானிய வாணிபத்திற்குப், பெருநட்டம் விளைத்ததோடு (அவைகளுக்கு நிலக்கரி வேண்டி யளவு வழங்கிய) சில்லி நாட்டுக்கரைக்கு அப்பால் குட்டோப்பு, மொன்மது, கிளாசுக்கோ என்னும் கப்பல்களையும் வெற்றிகொண்டன. இவற்றுள் விரைவான சிறியதொரு கப்பலான கிளாசுக்கோ போக்குலந்து தீவுகளை எச்சரிக்கை செய் யும்படி அனுப்பப்பட்டது. மற்றை இரு கப்பல்களும் ஒரு மணிநேரத்திற் குள்ளே ஆழ்த்தப்பட்டன. அவற்றின் தளபதியும் அவரோடு கூடிய ஆயிசத்து நானூறு பேரும் கடலில் மாண்டனர். இதுவே “கொசனல்" கடற்சமரின்
சரிதையாகும்.

Page 237
452 உலகப் போர்
சேர்மானியரின் வெற்றி நீடித்தபொழுது நிலைக்கவில்லை. பலம்பொருந்திய கடற்படை வியூகம் ஒன்று சேர் தவுத்தன் சிற்றேடி என்பான் தலைமையில், போக்குலந்துக்குக் கடிது அனுப்பப்பட்டது. அப்படைவியூகம் விரைந்து சென்று போக்குலந்துத் தீவுகளைத் திசெம்பர் 7 இல் அடைந்தது. அடுத்தநாளே வோன் இசுப்பியை எதிர்கொண்டு தீரத்தோடு பொருது நைசுநோ, சானுேசு இலைச்சிக்கு, நூாம்பேக்கு ஆகிய நான்கும் மூழ்கடிக்கப்பட்டன. பிரித்தனுக்குச் சேதம் ஏழுபேர் கொல்லப்பட்டமையே, திரசுதன் தப்பியோடியதாயினும் மூன்று மாதங்களுக்குப் பின் யுவான் பெனண்டசிற்கு அப்பால் மறித்து மூழ்
கடிக்கப்பட்டது.
இவ்வாறு பகைக்கப்பல்கள் பசுபிக்கிலிருந்து அகற்றப்பட்டன. சேர்மானிய அரசுகளோடு யப்பான் சேர்ந்திருந்தால், அன்றேல் நடுநிலைமைதானும் வகித் திருந்தால் பிரித்தானியரின் கதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து காணுதல் எளிதே.
இதற்கிடையில், போர் தொடங்கிய சில மாதங்களுக்குள்ளேயே பசுபிக்கிலும் தூர கிழக்கிலும் சேர்மானியர்வசமிருந்த நாடுகள் யாவும் கைப்பற்றப்பட்டன. சேர்மானிய சமூவாவை நியூசிலந்துப் படையொன்று ஒகத்து 29 இல் அடிப் படுத்தியது. பிசுமாக்குத் தீவுக்கூட்டமும் சேர்மானிய நியூகினியும் செத்தெம்ப ரிலே ஒசுத்திரேலியர் கைப்பட்டன. மாசல் தீவுகளும் கரோலைன் தீவுகளும் யப் பான் வசமாயின. பிரித்தானிய யப்பான் படைகள் நவம்பர் 17 இலே கியாச்
சோவைத் தாக்கி வெற்றிகொண்டன.
வெளிப்புறப் பேரரசைப் பொறுத்தவரை கடலிலே நிகழ்ந்த போர்கள் வெற் றியில் முடிந்தன. இங்கிலந்துக்கு அண்மையில், வெற்றி அரிதே பெறப்பட் டது. பகைக்கப்பல்களை இடைவிடாது அமைதியாக நெருக்கியும், விளிப்புடன் காவல் செய்தும் வட கடலிலும் ஆங்கிலக்கால்வாயிலும் மத்தியதரைக் கடலிலும் கிழக்கு அத்திலாந்திக்கிலும் வெற்றி ஈட்டப்பட்டது. எனினும் இங்கிலந்து தீவகமாக அமைந்திருப்பது காரணமாகவும் உணவுக்கும் மூலப்பொருள்களுக் கும் பிறநாடுகளையே இங்கிலந்து பெரிதும் நம்பி இருப்பது காரணமாகவும், உள்விடயம் அறிந்தோர் பெரிதும் சஞ்சலப்பட்டனர். 1915 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கடற் போரிற் புதிய ஒரு கட்டம் ஆரம்பமாயது. பெப்புருவரி 15 இல் பிரித்தானிய கடற்கரைகளைச் சேர்மானியர் முற்றுகையிட்டு, தம் நீர்மூழ் கிக் கப்பல்களால் அம்முற்றுகையை ஓரளவுக்கு வலியுறுத்தவும் முடிந்தது. 1915 மே 7 இல் சேர்மனி ஒரு பெரும் பாதகத்தை விளைத்தது. அதுவே அந்நாடு செய்த பெருந் தவறுமாயிற்று. சேர்மானிய நீர்மூழ்கிகள் தோப்பிடோ பிரயோகி த்து உலூசித்தேனியா என்னும் அத்திலாந்திக்குக் கப்பலை மூழ்கடித்தன. போ ரிலே நேராகப் பங்குபெருத ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஆயிரத் துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சேர்மனியின் இறுதிக்கதியை இப்பெரும்

உலகப் போர் 453
பாதகம் அறுதியிட்டு நிருணயித்தது எனலாம். அக்கணம் தொட்டே அமெரிக்க மக்களின் உள்ளம் கொதித்தது. அவர்களுடைய உள்ளக்கொதிப்பு தீவிர நட வடிக்கையாக மாறுவதற்கு நெடும்பொழுது செல்லவில்லை.
போர் தொடங்கி 20 மாதங்களாக ஆங்கிலப் பெருங்கடற்படைபற்றியோ சேர் மானியப் பெருங்கடற்படை பற்றியோ தகவுலொன்றும் எட்டவில்லை. பிரித்தா னியப் பெருங்கடற்படையானது தளபதி செலிக்கோவின் தலைமையிலே இசுக்கா பாபுளோவைத் தளமாகக் கொண்டு வட கடலைக் கண்காணிப்பதில் ஈடுபட் டிருந்தது. சேர்மானியப் படையோ துறைமுகத்திலே பத்திரமாகத் தங்கி நின்றது. இறுதியில், போரில் முடிவு காணும் நோக்கத்தோடு வெளிப்போந்து 1916 ஆம் ஆண்டு மே 31 இல் இருநாட்டுப் படைகளும் மோதிக்கொண்டன. இம் மகத்கான கடற்போர் யத்துலாந்துச் சமர் என வரலாற்றிற் புகழ்பெற்றது. அச் சமரில் 145 பிரித்தானியக் கப்பல்களும் 110 சேர்மன் கப்பல்களும் ஈடுபட்டன. "திரெத்துநோற்றுக் கப்பல்களில் பிரித்தானியாவிடம் 28 உம் சேர்மனியிடம் 16 உம் இருந்தன. 77 நாசகாரிகள் பிரித்தனிடமிருக்க, சேர்மனிடம் 72 இருந்தன. எனினும் சேர்மனியிடம் பழைய போர்க்கப்பல் ஆறும் இருந்தன. இப்பெருஞ் சமரின் முடிவு பற்றி நிபுணர்கள் இன்னும் ஒருமுடிவுக்கு வந்திலர்.
யத்துலாந்துச் சமர் தமக்கு வேண்டிய பலனை அளித்தது என்பதே பிரித்தா னியரின் நம்பிக்கையெனினும், 1917 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நட்பு நாடு களின் நிலைமை சொல்லொணு இடர்ப்பாடுடையதாயிருந்தது. கட்டுப்பாட்டுக்கு அமையாத முறையிலே சேர்மனியினது நீர்மூழ்கிப் போரும் அமைந்தது. படை பூணு வியாபாரக் கப்பல்களும் மருத்துவக் கப்பல்களும் மிதக்கும் பிற கலம் எதுவும் எச்சரிக்கையின்றி மூழ்கடிக்கப்பட்டன. சேர்மனி கையாண்ட இப் புதிய முறை செவ்வையான பலனைச் சேர்மனிக்கு அளித்தது. 1917 ஆம் ஆண்டு ஏப்பிரில் வரையிலே பிரித்தானிய கப்பல்கள் ஒரளவு சேமத்தோடு 80 இலட்சம் படைஞரைக் கடல்கடந்த வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிந்தது ; (பிரான்சிய இத்தாலிய கப்பல்களின் உதவியோடும் சில யப்பானிய கப்பல்களின் துணையோ டும்) ஆங்கிலக் கால்வாயிலும் அத்திலாந்திக்கிலும் மத்தியதரைக்கடலிலும் இவற் ருேடு இந்துசமுத்திரத்திலும் பசுபிக்கிலும் நட்புநாடுகளின் போக்குவரத்துப் பாதைகளைப் பங்கமடையாது பாதுகாத்து வந்தன. நட்பு நாடுகளுக்கு வேண் டிய உணவுப் பொருள்களையும் போர்க்கருவிகளையும் அவை முட்டின்றிக்கொண்டு சென்றன. ஆயினும் இந்த அற்புத சாதனையை நிறைவேற்றுவதற்கு எத் தனையோ உயிர்களும் எத்தனை கப்பல்களும் பலியாயின. அவைகள் பட்ட இடுக் கணுே மிகப்பெரிது. ܖ
1917 ஆம் ஆண்டுக் கோடைத் தொடக்கத்தில் இந்நிலைமை மிக மோசமா யிற்று. சனவரியிற் பெரியபிரித்தானியாவின் நட்பு நாடுகளும் நடுநிலைமை நாடு களும் இழந்த கப்பல்களின் எண்ணிக்கை 181 ஆக இருக்க, ஏப்பிரிலில் அது 423 ஆகப் பெருகிற்று. ஏப்பிரிலில் கிரு. சேர்ச்சில் வருமாறு எழுதினன் : “அய

Page 238
454 உலகப் போர்
லாந்தை அணுகுதற்கான தென்மேற்குப் பெருவாயிலானது பிரித்தானிய கப்பல் களின் இடுகாடு போன்று காணப்படுகிறது. தரைக்கு இருநூறு மைல்களுக்கப் பால் நாள்தோறும் பெருங்கலங்கள் ஆழ்த்தப்பட்டுக் கிடக்கின்றன.” பிரித்தா னியக் கடற்கரையைவிடுத்து ஏகும் கப்பல்களுள் நாலிலொன்று விடுவந்து சேர் வதில்லை. ஆயினும் திரு. சேர்ச்சில் பெருமிதமாய் உண்மையோடு கூறியதுபோல் “பொதுமக்களிடையே மனவுறுதி படைத்த தொண்டர்கள் இன்மையால், கடற் பயணம் ஒன்று தாமதமாயிற்று என்று கூற ஒருநாளும் நேர்ந்ததில்லை." உண் மையான நிலைவாம் சேர்மனிக்குத் தெரிந்திருந்தது. யூலையிலோ அன்றேல் ஒகத்திலோ இறுதி வந்து சேர்தல் வேண்டுமென்று சேர்மனி கருதிற்று. நீர்மூழ் கிக் கப்பல்களின் அபாயத்தைத் துடைத்தாலல்லாது சரண் அடையாது நவம் பருக்கு அப்பாலும் நின்று பிடிக்க முடியாது என்று பிரித்தானிய தளபதிகள் கருத்துக்கொண்டனர்.
கொன்வோய் ' முறைமையெனும் கூட்டுக்காவல் முறையினைக் கைக்கொண்ட தாலும், அமெரிக்க நாசகாரிகளின் உதவி மென்மேலும் பெருகியதாலும் நீர்மூழ் கிகளின் அபாயம் ஒருவாறு துடைக்கப்பட்டது. உலகம் இதனுல் உவகை பூத்தது. நட்புறவு நாடுகளின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆற்றிய பேராதரவு வில்லங்கமான காலத்திலே கிட்டிற்று. அதன் பயனை நாம் அளவிட முடியாது.
எனினும் அமெரிக்காவின் உதவியினை நாம் உள்ளவாறு போற்றினும், கடலிற் பெற்ற பெருவெற்றி பிரித்தானிய கடற்படையினதும் பிரித்தானிய வியாபாரக் கப்பல்களதும் மகத்தான சாதனையே என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. பிற்கூறிய இவை இரண்டு நட்புறவு நாடுகளுக்கு ஆற்றிய பெருந்தொண்டு சொல்லும்தாமன்று. வியாபாரக்கப்பற் சேவைக்கு ஏற்பட்ட சேதம் ஒப்பளவில் போரிலேயே மிக உயர்ந்தது எனலாம். 90,31,000 தொன்னுக்குக் குறையாத பிரித்தானிய வியாபாரக் கப்பல்கள் ஆழ்த்தப்பட்டன. 44,500 பேருக்கு மேற் பட்ட மக்கள் உயிரிழந்தனர்; அல்லது படுகாயமுற்றனர். வியாபாரக் கப்பல் களில் சேவை செய்யும் மக்களிலே பெரும்பாலோர் 5, 6 முறை தோப்பிடோப் பிரயோகத்துக்கு ஆளாயினராயினும் ஒருவனேனும் கப்பலேற மறுத்ததில்லை எனுமாற்றல் அம்மக்களின் விரம் அறியப்படும்.
இப்போரிலே பங்குபற்றிய யாவரும் இவ்வாறு மாண்புமிக்க சேவை செய் துள்ளபோது, தனி ஒருவரின் சாதனைகளையோ குறிப்பிட்ட சில கோட்டிகளின் சாதனைகளையோ புறம்பாக வியந்து கூறல் தக்கதன்று. எனினும் சீபுறக்கு என் னும் இடத்தின்மீது தொடுத்த கடற்படைத்தாக்குதலைப் பிரெஞ்சுத் தளபதி ஒருவர் ஆர்வமோடு வருமாறு வருணித்துள்ளார். கடற்போர் வரலாற்றிலே எக் காலத்தும் எந்நேரத்திலும் இதுபோன்ற சிறந்தவொரு போர்வென்றி நிகழ்ந்த தில்லை. இப்பணியினை ஆற்றியது தோவர்க் காவற் கப்பற்படையே. இது இலே சான கலங்கள் 142 ஐக் கொண்டதாய், சேர் உரோசர் கீசின் தலைமையிலே இயங்கிற்று. துணிகரமான இச்செயலைப் புரிவதற்கு சென்யோட்சு தினத்து

உலகப் போர் 455
இரவே தக்கதெனத் தோப்பட்டது (1918 ஏப்பிரில் 23). இம்முயற்சியின் குறிக் கோள் சேர்மானிய நீர்மூழ்கித் தளங்களுள் மிகவும் முக்கியமானதை அடைத்து வலியழிப்பதே. இக்குறிக்கோள் கைகூடிற்று. இந்நாட்டொட்டு சேர்மானிய நீர் மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்கள் விரைவாக அருகின.
நீர்மூழ்கிகளின் கொட்டத்தை அடக்கியமை மாபெரும் கடற்போரின் ஒருசிறு அமிசமேயாம். தப்பியொட்டி நிகழ்ந்த சிற்சில தாக்குதல்களைத் தவிர, பிரித்த னின் கடற்கரைகளைப் பகைக்கப்பல்களிடமிருந்து பாதுகாத்தமை ; இலட்சக் கணக்கான மக்களை ஆயிரக்கணக்கான மைல் தொலைவுக்குக் கனடா, ஒசுத்திரே லியா, நியூசிலந்து, இந்தியா, தென்னபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்க ஐக்கிய அரசு ஆகியவிடங்களிலிருந்து ஏற்றிப்பறித்தமை ; பல்வேறு போர் முனைகளுக்குப் பெருந்தொகைப் படைவீரர்களை வேண்டியாங்கு கொண்டு சென்றமை ; வர்த்தகப் பாதைகளைப் பாதுகாத்துப் பெரிய பிரித்தானியாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் வேண்டிய உணவுப்பொருட்கள், மூலப்பொருட்கள், போர்ச்சாதனங்கள் ஆகியவற்றை முட்டின்றி வருவித்துக் கொடுத்தமை ; அத்தி லாந்திக்கு பசுபிக்கு இந்து சமுத்திரங்களிலே நெடிதுசெல்லும் போக்கு வாத்துப் பாதைகளைத் தடைப்படாது தொடர்ந்து இயங்கச்செய்தமை ஆகிய இவையெல்லாம் பிரித்தானியக் கடற்படையினதும் வணிகக் கப்பற்சேவை யினதும் அரும்பெரும் சாதனையாகும்.
படைத்தகைவின் பின்னர் சேர்மனியின் கடற்படை முழுவதும் பிரித்தனிடம் சரணடைந்தமை தக்கதேயாகும். சரணடைந்த நீர்மூழ்கிகளுள் முதற் குழாங் கள் நவம்பர் 19 இல் ஆவிச்சை அடைந்தன. இருநாளின் பின் பெருங் கடற் கப்பற்படை உரோசைத்து என்னும் இடத்திற் கையளிக்கப்பட்டது. அத்தினத் தில் (நவம்பர் 25) பின்வருமாறு தளபதி பீற்றி கடற்படைக்குச் சைகை செய் தார் : “ இன்று அத்தமனத்தின்போது சேர்மனியின் கொடி இறக்கப்படும் ; அனு மதி இன்றி மீண்டும் அது உயர்த்தப்படாது. ”

Page 239

அத்தியாயம் 37
அமைதிப் பொருத்தனைகள்
முக்கியமான திகதிகள் :
1919 சனவரி 12
மே 7 யூன்
யூன் 28
28
செத்தெம்பர் 10
நவம்பர் 19
27
1920 சனவரி 16
யூன் 4 நவம்பர்
12
1922
1922
1923 யூலை 24 ஒற்ருேபர் 29 五92全 சனவரி
பாரிசிற் சமாதான மாநாடு கூடுதல்.
செக்கோசிலவாக்கியாவின் சுயவாட்சி அங்கீகரிக்கப் Lull-g).
கிரேக்கர் சிமேனுவைக் கைப்பற்றுதல்.
2 இங்கிலந்தும் பிரான்சும் மூன்று இனத்தவர் ஒன்ருகிய
யூகோசிலாவிய இராச்சியத்தை அங்கீகரித்தன. சேர்மனியுடன் அமைதிப் பொருத்தனை வேர்சையிற்
கைச்சாத்திடப்பட்டது. ஆங்கில-பிரான்சிய-அமெரிக்க நட்புறவு கைச்சாத்திடப்
Lt.--gi. கமால்பாசா துருக்கிய அரசாங்கத்தை அங்கோசாவிற்
ருபித்தல். அமைதிப்பொருத்தனையைச் சேர்மனி முறையேற்றது. ஒசுத்திரியாவுடன் அமைதிப் பொருத்தனை கைச்
சாத்திடப்பட்டது. ஐ. அ. மூப்பவை பொருத்தனையை முறையேற்கத்
தவறுதல். ی۔ பல்கேரியாவுடன் பொருத்தனை நியூவிலி என்னுமிடத்
கிற் கைச்சாத்திடப்பட்டது. நாட்டுக் கூட்டவையின் முதற்கூட்டம் பாரிசிற் கூடியது. அங்கேரியப் பொருத்தனை கைச்சாத்திடப்பட்டது. வெனிசெலோசு தோல்வியடைந்தான். கொன்சுதாந்
தைன் அரசன் திருப்பி அழைக்கப்பட்டான். இராபலோப் பொருத்தனை (இத்தாலியும் யூகோசிலா
வியாவும்). கமால் கட்சியினர் கிரேக்கரைத் தோற்கடித்தல். கொன்சுதாந்தைன் முடிதுறத்தல். (மரணம் 1923). சானுக்கு நெருக்கடி. உலோசேன் பொருத்தன. துருக்கியக் குடியரசு பிரசித்தப்படுத்தப்பட்டது. உரோம் பொருத்தனை (இத்தாலியும் யூகோசிலாவியா
வும்).

Page 240
458 அமைதிப் பொருத்தனைகள்
படைத்தகைவும் அமைதிப் பொருத்தனைகளும்
மாபெரும் போர், தொடர்ந்த பல படைத்தகைவுகளாலும், பின்னர் ஒன்றன் பின்னென்முக நிறைவேறிய நீண்ட அமைதிப் பொருத்தனைகளாலும் முடிவெய்தி யது. சரணடைந்த சாரரசுகளிற் பல்கேரியாவே முதலிற் சரணடைந்தது (செத்தெம்பர் 29). துருக்கி ஒற்ருேபர் 3 ஆம் திகதி முதுரோசிற் படைத்தகை விற்குக் கைச்சாத்திட்டது. நவம்பர் 6 ஆம் திகதி ஒசுத்திரியாவுடன் போர் செய்வதை நிறுத்த இத்தாலி ஒப்புக்கொண்டது. நவம்பர் 11 ஆம் திகதி, மாசல் போசும் கடற்படைத்தலைவன் சேர் உவெத்தர் வேமிசும் விதித்த நியதிகளைச் சேர்மனி ஏற்றுக்கொண்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்நியதிகள் நிபந்தனையற்ற சரணடைதலை உடையனவாயிருந்தன. உவில்சனின் 14 குறிப்புக்களை ஆதாரமாகக்கொண்ட படைத்தகைவைப் பெறச் சேர்மானியர் போராடினர். இதற்குப் போசு சற்றும் இடங்கொடுக்கவில்லை. நவம்பர் 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு ‘போர் நிறுத்தம்' ஒலிபரப்பப்பட்டது. மாபெரும் போர் முடிவடைந்தது.
இருபத்தேழு நாடுகளின் (போர்புரிந்த பகைவர்கள் சேர்க்கப்படவில்லை) பிரதிநிதிகளைக்கொண்ட அமைதி மாநாடு சனவரி 12 ஆம் திகதி பாரிசிற் ருெடங்கியது. சேர்மனியுடன் செய்த அமைதிப் பொருத்தனை வேர்சையில் 1919 ஆம் ஆண்டு யூன் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. பின்னர் ஒசுத்திரியா, பல்கேரியா, அங்கேரி, துருக்கி ஆகிய நாடுகள்மீது பொருத்தனை
கள் விதிக்கப்பட்டன. ܐ
இன்று (1943) இப்பொருத்தனைகளிற் பெரும்பாலானவை கல்விக்கழகங்களில் ஆராய்தற்கே உரியனவாகும். ஆனல் அவற்றின் பொருளடக்கத்தைச் சுருக்க மாகவேனும் அறியாவிடின், 1919 ஆம் ஆண்டிற்கும் 1939 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்து வரலாற்றுப் போக்கைத் தெளிதுகொள்ள முடியாது.
உரிமைவழி அரசுகள்
பாரிசில் நட்பாளர் கூடுமுன்னர், அபிசுபேக்குக் குலமுறையினரின் உருக் குலைந்த பேரரசு ஏலவே சிதைவுற்று அதன் இயல்பான கூறுகளாயது. இப்பேரா சின் சிதைவிலிருந்து, வரலாற்றுப் பெருமைவாய்ந்த பொகீமியா இராச்சியத்தை யும் மோரேவியாவையும் சிலோவாக்கியாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய, முற்முகப் புதியதும் ஓரளவிற்குச் செயற்கையானதுமான செக்கோசிலவாக்கிய நாடு தோன்றியது. பின்னர் அமைதிப் பொருத்தனைகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் புதிய குடியரசில் 1,40,00,000 மக்கள் வாழ்ந்தனர்-இவருள் ஏறத் தாழச் சரிபாதிப்பேர் செக்கு இனத்தினரும் 30,00,000 பேர் சேர்மானியருமாவர். ஒசுக்கிரியாவிலும் அங்கேரியிலும் குடியரசுகள் பிரசித்தஞ்செய்யப்பட்டுப் பின்னர் பொத்தனைகளால் அங்கீகரிக்கப்பட்டன.

அமைதிப் பொருத்தனைகள் 459
ஒசுத்திரியா
ஒசுத்திரியத் தாயகம் இரங்கத்தக்க நிலையில் விடப்பட்டது. ஏறத்தாழ 60,00,000 மக்களை மாத்திரம் கொண்ட இவ்வரசின் மீது, ஒரு காலத்தில் ஐரோப்பாவில் மிக இன்பகரமானதும், எப்போதும் காட்சிக்கினிய இடங்களி லொன்ருனதும், 20,00,000 மக்களை உடையதுமான ஒரு தலைநகரை ஆதரிக்கும் பொறுப்புச் சுமத்தப்பட்டது. அமைதிப் பொருத்தனையினுற் சேர்மனியுடன் ஒன்ருகாது தடுக்கப்பட்டு கடலுக்குச் செல்லும்வழி துண்டிக்கப்பட்டு, தன் னிறைவு வாய்த்தவையும் உயர்ந்த சுங்கவரிக்காப்புடையனவும், நட்பற்றனவு மான சிறுநாடுகளாற் குழப்பட்டு, தேவையான நிலக்கரி, இரும்பு ஆகியவற்றை வருவிக்க வழிவகை இல்லாததாகி, பொகீமியாவிலுள்ள தன் போர்த்தளபாடத் தொழிற்சாலைகளையும் பறிகொடுத்துத் தனக்கு வேண்டிய விவசாயப்பொருட் களை அளித்துவந்த அங்கேரியப் பிரதேசங்களையும் வெளிநாட்டுச் சந்தைகளையும் ஒசுத்திரியா இழந்து நின்றது. உலகப்போர் மூளுதற்கு ஒசுத்திரியா பெரிதும் பொறுப்பாளியாய் இருந்ததென்பது உண்மையே. எனினும், அதன் அவலநிலை கண்ட ஐரோப்பா அக்குற்றத்தை மறக்காவிடினும் மன்னித்து, அதனிடம் பரிவு பூண்டு நிதியுதவியுஞ் செய்ய முன்வந்தது.
அங்கேரி
1918 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அங்கேரி தான் ஒரு சுயேச்சையான குடியாசெனப் பிரசித்தஞ்செய்தது. ஆனல் 1920 ஆம் ஆண்டிலேயே நட்பாளர் யூன் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட திரியானன் பொருத்தனை நியதிகளை விதித்தனர். இப்பொருத்தனையின் பின்னர், வரலாற்றுப் பெருமைவாய்ந்த பேரிசாச்சியமாக விருந்த அங்கேரி குறுகிச் சிறுத்தது. அங்கேரி, செக்கோசில வாக்கியாவுக்கு ஒரு பெரிய மாவட்டத்தையும், உருமேனியாவுக்குத் திருன்சில் வேனியாவையும், யூகோசிலவாக்கியாவுக்கு வேருெரு பெரிய மாவட்டத்தையும் கட்டாயத்தின்பேரிற் கையளித்தது. இவ்வண்ணம் அங்கேரி கூறுகூருக்கப்பட்டு, அதன் மக்கள் தொகை 80,00,000 ஆகவும் ஆள்புலம் 36,000 சதுர மைலாகவும்
குறைக்கப்பட்டது.
இதற்கிடையில், முக்கியமான நிகழ்ச்சிகள் அங்கேரியில் நிகழ்ந்தன. பொது உடைமைப் பிரசாரத்திற்கு ஏற்ற நாடாக அங்கேரி கருதப்பட்டமையால், 1918 இலையுதிர் காலத்தில் அங்கேரிமீதே பொல்சிவிக்குக் கட்சியினர் கவனஞ் செலுத் கினர். பேலாகன் என்னும் மதிப்பற்ற கலீசிய யூதனுெருவன் ஒர் இரகசியப் பணியாற்ற மொசுக்கோவிலிருந்து அங்கேரிக்கு அனுப்பப்பட்டான். அங்கேரிய தாயகப்பற்றுடையோன்போல் அவன் நடித்து அங்கேரிய மாகாணங்களிலிருந்து செக்கோசிலவாக்கியரையும் உருமேனியரையும் வெளியேற்ற ஒரு செஞ்சேனை திரட்டினன். இந்நிகழ்ச்சிகளாற் றிகிலடைந்த நட்பாளர் 1919 ஏப்பிரிவில், இவ் விடர் குறிக்கும் நிலைமையைச் சீராக்கும்படி சிமற்துத் தளபதியைப் பாரிசி

Page 241
460 அமைதிப் பொருத்தனைகள்
னின்றும் புடாபெசுத்துக்கு அனுப்பினுர்கள். 'வேல்சு நாட்டினன் ஓர் அங்கேரி யனை ஓர் உருமேனியனுடன் போர் புரிய வேண்டாமென்று சொல்ல, ஓர் ஒல்லாந் தனை அனுப்புதல்’ ‘புதுமையான தொழிலாகும்' என சேர் என்றி உவில்சன் தன் நாட் குறிப்பில் எழுதியுள்ளான். சிமற்சுத் தளபதியால் எதுவும் செய்ய முடியவில்லை. எப்படியாயினும் உருமேனியர் பேலாகனைத் தோற்கடித்து, வெளி யோட்டி, அங்கேரியிலே தங்கள் கைக்கு அகப்பட்ட எல்லாப் பொருள்களையும் கொள்ளையடித்துப் பயங்கரமான அழிவுண்டாக்கினர். ஆனல், 1919 நவம்பர் மாதத்தில், அந்தக் கொள்ளைக்காரர், மீண்டும் மீண்டும் பாரிசிலிருந்து வெளி யிடப்பட்ட கட்டளைகளுக்கு ஒருவாறு கீழ்ப்படிந்து அங்கேரியினின்றும் பின்
வாங்கினர்.
1920 ஆம் ஆண்டில் அங்கேரி தான் ஒரு முடியாசென முறைப்படி பிரகடனஞ் செய்தது. ஆனல், அங்கேரிய நாட்டினர் தங்கள் சுயேச்சையான விருப்பப்படி ஓர் அரசனைத் தெரியும் உரிமையை வற்புறுத்தி, மாபெரும் கோமகன் சாள்சு முடியைப் பெறுவதற்குச் செய்த முயற்சிகளை இருமுறை தோற்கடித்ததுமன்றி, அபிசுபேக்கு வமிசத்தினரின் உரிமைகளையும் தள்ளுபடி செய்தனர். ஆயின், மன்னனைத் தேரும் உரிமையை அங்கேரி பயன்படுத்தவில்லை. 1921-31 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இறைமகனன சிதீபன் பெதிலன் முதலமைச்சனுயிருந்தான். அவனும் பதிலாளியான கடற்படைத்தளபதி ஒதி என்பானும் ஒத்துழைத்து, சிதைத்து இன்னற்பட்ட அங்கேரி இராச்சியத்திற் படிப்படியாக ஒழுங்கையும் ஓரளவு செல்வத்தையும் மீட்டும் நிலைநாட்டினர்.
வேர்சைப் பொருத்தனை
இதற்கிடையில், மாநாட்டுப் பேராளர்கள் ஓர் உடன்படிக்கையை உருவாக்கப் பாரிசிற் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தனர். உடன்படிக்கை நியதிகளை வகுத்தற்கு நான்கு பெரியவர்களான கிளமென்சோ, உலோயிது யோட்சு, குடிப்பதி உவில்சன், ஒலாந்தோ என்பவர்களே பொறுப்புடையராயிருந்தனர். அவர்களுடைய முயற்சிகளினலாய பரந்த விளைவுகளைச் சுருக்கமாகவே இங்கே கூறமுடியும்.
சேர்மனி
உலகப்போர் உண்டானதற்குப் பொறுப்பேற்கவும் நட்டஈடாகப் பெரிய தொகையைச் (ஈற்றில் 6,600 பவுணுகத் தீர்க்கப்பட்டது) செலுத்தும்படியும் சேர்மனி கட்டாயப்படுத்தப்பட்டது. செயலளவில் அதன் கடல், தரை விமானப் படைகள் குலைக்கப்பட்டன. இசையின் நதியின் வலக்கரையினின்றும் படைகள் நிரந்தரமாக அகற்றப்பட்டன. இடது கரை 15 ஆண்டுகாலம்-பின்னர் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு-நட்பாளரின் இருப்பாட்சியிலிருந்தது. பிரான் சின் நிலக்கரிச் சுரங்கங்களை வேண்டுமென்றே அழித்தபடியால், அந்நட்டத்

அமைதிப் பொருத்தனைகள் 461
கிற்கு ஈடாகச் சார் பள்ளத்தாக்கிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டன. சார் நதிப்பிரதேசம் முழுவதும் பதினைந்து ஆண்டுகாலம் நாட்டுக் கூட்டவையின் பாலனத்தின் கீழிருந்தது. சேர்மனி கடலுக்கப்பாலுள்ள தன் நாடுகள் எல்லாவற்றையும் இழக்கவேண்டியதாயிற்று. சேர்மனியானது அல்சேசு-உலொாேனைப் பிரான்சுக்கும் பிரசிய போலந்தைப் போலந்திற்கும் திருப்பிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஆனல் வெற்றிநாடுகள் 'சுய நிருணயம் என்னும் தத்துவத்தைத் தாம் கைக்கொண்டு நடப்பதற்குக் குறிப்பிடத்தக்க சான்று அளித்தன : கிழக்குப் பிரசியாவும் மேல் சைலீசியாவும் வட செல்சுவிக்கும், ஈற்றில் எந்நாட்டுடன் இணைக்கப்படவேண்டுமென்பதைக் குடி யொப்ப முறையால் தாங்களே தீர்மானிக்கும்படி விடப்பட்டமையே இதற்குச் சான்முகும். குடியொப்பங்களினல், கிழக்குப் பிரசியாவைச் சேர்மனி பெற்றது; மேல் சைலீசியா சேர்மனிக்கும் தென்மாக்கிற்குமிடையிற் பிரிக்கப்பட்டது; ஒல்சுதைனும் தென் செல்சுவிக்கும் சேர்மனிக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
இந்நியதிகள் கடியவை ' என்றுகொள்ளத்தக்கனவா ? ‘போர்க் குற்றத்தைச் சேர்மனிமேற் சுமத்தியமை சேர்மன் மக்களிடை கோபத்தை மூட்டியது. இவ் விடயத்தை உறுத்திக்கூறுவது தேவையோ என்பது ஐயத்திற்குரியது; ஆயின், அது உண்மையென்பதிற் சந்தேகமில்லை. நட்டஈடு கோரமானதென ஒறுக் அரைக்கப்பட்டது. ஆனல், சேர்மனி பெரும்பாலும் நேர்மையற்ற முறையில் மறுப்புக்கள் கூறிக் கடன்செலுத்துவதிலிருந்து தப்பிக்கொண்டது. பிரான்சும் அதன் நட்பாளரும் வலிந்துபெறத் தவறிய முழுப் பணத்தோடு, 1924 ஆம் ஆண்டில் உடோசுத் திட்டப்படி இலண்டனிலும் நியூயோக்கிலும் திரட்டிய 4,00,00,000 பவுண் கடனிற் பெரும்பகுதியையும் சேர்மனி மீண்டும் படைக்கலம் பூணுவதிற் செலவு செய்தது. ஆரம்பத்திற் படைக்கலந்துறத்தல் பொதுவாகப் பூரணமாயிருந்தது. எனினும், அதன் ஒரே இறுதிவிளைவு என்னவெனில், வழக் கிறந்த படைக்கருவிகளை அழித்து, தற்கால விஞ்ஞானத்தால் இயலக்கூடிய புத்தம் புதிய படைக்கருவிகள் பூணும் வாய்ப்பைச் சேர்மனிக்கு அளித்ததே யாகும்-இவ்வாய்ப்பை இற்றிலர் நன்கு பயன்படுத்தினன். 1935 பொருத்தனை யின்படி சார் நதிப் பள்ளத்தாக்கின் கதியைத் தீர்மானிக்கக் குடியொப்பம் எடுக்கப்பட்டது. அதன் பயனக சார்ப் பள்ளத்தாக்கு மீண்டும் சேர்மனிக்குக் கையளிக்கப்பட்டது.
போலந்து
போலந்துப் பிரச்சினை பெரும்பான்மையும் தீர்க்க முடியாததுபோலத் தோற்றியது. ஒரு சுயேச்சையான போலந்தே நெடுங்காலமாகப் பிரான்சிய குழி யலின் அச்சாணியாயிருந்தது. போலந்தை மீண்டும் சுதந்திர நாடாகத் தாபிக் கப் பிரான்சு மன உறுதிகொண்டிருந்தது. நட்பாளர் யாவரும் போலந்தை மீண் டும் உருவாக்கப் பெரிதும் கடமைப்பட்டிருந்தனர். ஆனல், அவர்கள், அந்நாட் டைப் பிரிவினை செய்த கள்வர்களிடமிருந்து, அவர்கள் தவமுன வழியிற் பெற்ற

Page 242
462 அமைதிப் பொருத்தனைகள்
கொள்ளைகளைப் பறித்தெடுத்தால் மாத்திரமே தங்கள் கடமையை நிறைவேற்றக் கூடியதாயிருந்தது. இரசியாவுக்கும் ஒசுத்திரியாவுக்கும் முறையேயுள்ள பங்கு களைப்பற்றி அதிக தொல்லையிருக்கவில்லை. பிரசியாவைப் பெரிதும் புண்படுத்தி இன்னுமொரு போரை ஆரம்பிக்கத் தூண்டாமற் போலந்துக்கு நீதி வழங்குவ தெங்ங்னம் என்பதே கடினமாயிருந்தது. தான்சிக்கு நகரமே இப்பிரச்சினைக்கு மையமாயிருந்தது. தான்சிக்கு பெருமளவிற்குப் பிரசியமயமாயிற்று. தான்சிக்கு இல்லாமற் போலந்துக்குக் கடலைச் சென்றடையும் வழி இல்லை. இப்போக்கு வாத்து வசதி போலந்திற்குக் குடிப்பதி உவில்சனல் வாக்குறுதி செய்யப் பட்டது. தான்சிக்கை ஒரு சுயேச்சையான நகராக்கி அதன் பாலனத்தை நாட்டுக் கூட்டவையிடம் கொடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்ப்புக் காணப்பட்டது. தான்சிக்குக்குச் சென்றடையும் வழியாக, சேர்மானியரால் " ஊடுவழி' என்ற பொருந்தாப் பெயரிடப்பட்ட ஒரு நிலப்பகுதி போலந்துக்கு உரிமையாக்கப் பட்டது. அவப்பேருக அந்த ஊடுவழி கிழக்குப் பிரசியாவை மேற்குப் பிரசியா விலிருந்து பிரித்தது. ஆகவே, இப்பகுதியைப் போலந்துக்கு இழந்தமையாற் சேர்மனி பெரும் ஆத்திரமடைந்தது. தான்சிக்கையும் இந்த 'ஊடு' வழியையுஞ் சேர்மனி இழந்தமை உலகப் போர் மறுபடியும் 1939 இலே தொடங்குதற்குக் காலாயிருந்தது. உலகப்போர்களிாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திற் போலந் தின் நிலைமை எளிதாயிருக்கவில்லை. அதன் பூட்கையும் எப்பொழுதும் விழிப் புள்ளதாயிருக்கவில்லை. தங்கள் சுய முயற்சியாலன்றித் தங்கள் அன்பர்களின் பரிவும் (பிரான்சைப் பொறுத்தவரையில்) சுயநலவுணர்ச்சியும் ஒன்முகச் சேர்ந்து அவர்க்களித்த மீட்பாற் போலந்து மக்கள் வெறி கொண்டனர். 1920 ஆம் ஆண்டிற் போலியர் சோவியத்து இரசியாமீது படையெடுத்தனர். ஆனல் பொல்சிவிக்குக் கொள்கையினர் கொடுக்க முன்வந்த நியதிகளை இரு முறை மறுத்து, முறையே பின்தாக்கப்பட்டு உவாசோ மதில்கள் வரை கலக்க முற்று ஓடும்படி துரத்தப்பட்டனர். போலியர் நம்பிக்கை இழந்து மேல்நாட்டுக் குடியாட்சிகளின் உதவியை வேண்டி நின்றனர். ஆனல் இரசியாமீது கை வையாதே ' என்ற இயக்கம், இங்கிலந்திலும் பிரான்சிலுமுள்ள சமவுடமைக் கட்சியினரிடையே பரவியிருந்தது. தி அபனன் பிரபுவையும், மாசல் போசின் கீழ்க் கடமையாற்றிய சேனபதி உவேகனையுந் தலைவராகக் கொண்ட குடிமக்க ளும் படைஞருமடங்கிய ஒரு தூதுக்குழுவை உவாசோவுக்கு (1920 யூலை) அனுப்புவதே பிரித்தானிய பிரான்சிய அரசாங்கங்கள் செய்யக்கூடியதாயிருந் தது. உவாசோவின் வாயிலிலிருந்து, உவேகன் சேனுபதியின் அரிய உதவியுடன் பொல்சிவிக்குக் கொள்கையினரை ஒட்டிய பின்னர், மாசல் பில்குட்கி இரசியா வுடன் இரிகாப்பொருத்தனையை நிறைவேற்றினன். இதன் நியதிகளின்படி போலந்து 1793 ஆம் ஆண்டு தனக்கிருந்த எல்லையை மீண்டும் பெற்றது.
பில்குட்கி போலந்தைப் பொல்சிவிக்குக் கொள்கையினரிடமிருந்து காப் பாற்றியதோடு நிற்கவில்லை. போலந்தை அதன் மக்களால் ஏற்படக்கூடிய தீமை களிலிருந்தும் காப்பாற்றினன் எனலாம். பிற சர்வாதிகாரிகளைப்போலப் பில் குட்கியும்தன வாழ்க்கையைப் புரட்சிகரமான ஒரு சமூகவுடைமைவாதியாக

அமைதிப் பொருத்தனைகள் 463
ஆரம்பித்தானெனினும், 1921 ஆம் ஆண்டில், போலியரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தீவிரக்குடியாட்சிக்குரிய யாப்பு, பாராளுமன்ற அரசாங்க முறையில் அனுபவமற்ற போலந்து மக்களுக்குச் சற்றும் பொருந்தாதெனக் கண்டறிந்து கொண்டான். ஆகவே, 1921 ஆம் ஆண்டில் நிருவாகத்திலே தான் வகித்த தலை மைப்பதவியினின்றும் விலகினன். ஆனல் 1925 ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றி *ஆட்சிப்புரட்டு' ஒன்றின்மூலம் குழப்பங்களை அடக்கியதொடு தானுஞ் சர்வாதி காரியானன். பில்குட்கி 1935 ஆம் ஆண்டிற் காலமாகும்வரை அதிகாரம்வகித்த தொடு மக்களின் அன்பையும் பெற்றிருந்தான். பலவிடங்களிற் சிதறியிருந்தும் தாம் ஒரே நாட்டினர் என்ற உணர்ச்சி என்றும் குறையாத போலியர் ஒரு சுயேச் சையான நாட்டின அரசாக நிலைநாட்டப்பட்டனர்.
பிரான்சு
அல்சேசு-உலொரேன மீண்டும் அடைந்ததற்காகவும், சார் நிலக்கரிச் சுரங்கங் களை ஈட்டியதற்காகவும் பிரான்சியர் மகிழ்ச்சியடைந்தனர். சேர்மனி கொடுக்க வேண்டிய இழப்பீட்டிலே தனக்குப் பெரும் பங்கு சேருமெனப் பிரான்சு எதிர் பார்த்தது. ஆனல் தன் கிழக்கு எல்லைப்புறத்தின் பாதுகாப்பைப் பற்றி அது அஞ்சிற்று. பிரான்சின் பாதுகாப்பிற்கு இரையின் நதியெல்லைப்புறம் அவசிய மெனப் போசு வற்புறுத்தினன். திரு. உலோயிடு யோட்சும் திரு. உவில்சனும் இக் கோரிக்கையை மறுத்து, அதற்குப் பதிலாகப் பெரிய பிரித்தானியாவும் அ. ஐ. அரசும், பிரான்சின் மீது சேர்மனி படையெடுத்தால், தாம் உதவியளிக்க ஒப்புக் கொண்டன. எனினும், இவ்வுடன்படிக்கையை ஏற்க அமெரிக்க மூதவை மறுத் தது. ஆகவே இக்கூட்டு உடன்படிக்கை வெறிதாயிற்று. அப்போது பிரான்சின் மனநிலை மகிழ்ச்சியும் அச்சமும் கலந்ததாயிருந்தது. இவ்வகை இணக்கம் அதன் சுயபடைப்பலத்துடனும் சேர்மனியின் படைக்கல ஒழிப்புடனும் சேர்ந்து, ஐரோப்பிய நாடுகளிற் பிரான்சுக்குத் தலைமையிடத்தை அளித்தது. ஆனல் அந் நாடு, சேர்மனி தன் பழைய நிலையை மீண்டும் அடைந்து, திரும்பவும் ஐரோப் பாவில் முதலிடம் பெற்று, தனக்கு ஆபத்து விளைக்கக்கூடுமென எப்பொழுதும் பயந்துகொண்டேயிருந்தது. ஆனபடியாற் சேர்மனி 1871 ஆம் ஆண்டில் தன் இரத்தத்தை உறந்தெடுக்க முயற்சி செய்ததுபோல், இப்போது சேர்மனியின் இரத்தத்தை உறந்தெடுக்கப் பிரான்சு பேரவாக்கொண்டது.
இதற்கு மாமுகப் பெரிய பிரித்தானியாவோ தன் வணிகத்திற்கு ஊறு விளைக் காது சேர்மனியானது இளப்பீடு செய்ய முடியாதென்பதை உணர்ந்து, தனது * சிறந்த வாடிக்கைநாட்டின் வாட்டத்தைத் தீர்க்க ஆவலாயிருந்தது. இதன் விளைவாக 1923 வரையில் ஆங்கில-பிரான்சிய இணக்கம் நலிவுற்றது. குடிப்பதி உவில்சன் கைச்சாத்திட்ட அமைதிப் பொருத்தனைகளைக் கனம்பண்ணவும், அவன் பெரிதும் முயன்றமையால் உருவாய நாட்டுக் கூட்டவையைத் தழுவி நடக்கவும் அ. ஐ. அரசு மறுத்தமை, பிரான்சுக்கும் இங்கிலந்துக்கும் கவலை விளைத்தது.

Page 243
464 அமைதிப் பொருத்தனைகள்
பெல்சியம்
பெல்சியம் தன் கிழக்கு எல்லைப்புறத்தைப் பலப்படுத்தத்தக்கவாறு 400 சதுர மைல் ஆள்புலத்தைச் சேர்மனியிடமிருந்து பெற்றுக்கொண்டது. இன்னும் அதன் பேரவாவுக்கிணங்க, அது 'முழுச் சுதந்திரத்தையும் முழு இறைமையை யும்' எய்தியது. 1839 ஆம் ஆண்டில் நிறைவேறிய பொருத்தனைகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது முதற்கொண்டு அது நடுநிலைப்படுத்திய நாடாகவோ, பிற வாசுகளின் பாதுகாப்பைப் பெற்ற நாடாகவோ இருக்கவில்லை. அதே காலத்தில் இலட்சம்பேக்கு சேர்மனியின் பொருளாதாரக் கட்டுப்பாட்டினின்றும் விடுதலை பெற்றுப் பெல்சியத்தைப் போல நடுநிலைமை நீங்கிற்று.
இத்தாலி
அமைதிப் பொருத்தனைகளின் முடிபுகள் இத்தாலிக்கு மனநிறைவு அளிக்க வில்லை. 'வெற்றியின் பலன்களைத் தன் நட்பாளர் தன்னிடமிருந்து திருடியதாக ' வற்புறுத்திக் கூறியது. ஆயின் அது உண்மையன்று. பிறென்னர்க் கணவாய் வரையுமுள்ள தென் தைரோல், திரியெத்து போலா உட்பட்ட இத்திரியன் தீப கற்பம், இத்திரியன் தீவுக்கூட்டம், தால்மேசியாவின் பெரும்பகுதி, எத்திரியாற் றிக்குத் தீவுகளிற் பெரும்பாலானவை ஆகிய இவற்றை அது பெற்றது. வலோன, உரோட்சு, மற்றும் தோதகனிசுத் தீவுகள் ஆகியவற்றைத் தன்னிடமே வைத் துக்கொண்டது. எனினும், இவைகளுக்கு மேலாக, 'ஆபிரிக்காவிலுள்ள தத்தம் குடியேற்ற ஆள்புலங்களைப் பிரான்சும் பிரித்தானியாவும் விசாலிக்க நேர்ந்தால், இத்தாலிய குடியேற்றநாடுகளாகிய எரித்திரியா, சோமாலிலந்து, இலிபியா என்னும் நாடுகளின் எல்லைப்புறத் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிய தீர்ப்பு அதற்குச் சாதகமாகவிருக்கும்படி இத்தாலி கோரலாம்' என உறுதியளிக்கப் பட்டது. ஆபிரிக்காவில் ஓர் இடமும் கிடைக்காமல் விட்டது மாத்திரமன்றி, அதற்குக் கூடிய சினம் மூட்டியது எதுவெனில், சென். சீன். தி மொறின் (1917) பொருத்தனையில் அதற்கென்று தற்காலிகமாக ஒதுக்கிவிடப்பட்ட சிமேனுவும் சின்ன ஆசியாவிலொரு பெரும் பிரிவும் 1918 ஆம் ஆண்டில் கிரீசுக்குக் கொடுக்
கப்பட்டமையேயாகும்.
இத்தாலிக்கு இன்னெரு மனக்குறையும் இருந்தது-பியூம் எனுந்துறையை இத்தாலிக்கும் யூகோசிலாவியாவுக்குமிடையே பிரிவினை செய்தமையால், அக் குறை ஓரளவு தீர்ந்தது. முந்நாடுகளையடக்கிய யூகோசிலாவியாவுக்கு மிக முக் கியமென எவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய துறைமுகத்தைப் பெற அதன் உரிமையை ஆதரித்துக் குடிப்பதி உவில்சன் பேசியிருந்தான். ஆனல், இத்தாலி யும் தன் உரிமைகளை வற்புறுத்தியது. என்ருலும், 1924 இல் மாத்திரமே பியூம் பிரச்சினையானது இரு நாடுகளுக்குமிடையில் நேரடியான போப்பேச்சினல் முடிவிலே தீர்த்து வைக்கப்பட்டது. 1924 உரோம் உடன்படிக்கைப்படி பியூம் பகுதி அந்நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அமைதிப் பொருத்தனைகள் 46)
பியூமைப் பற்றிக் கூறியபின்னர், இத்தாலியை அடுத்துப் போற்கன் தீபகற்பம் தைப் பற்றிக் கூறுவது எளிதாகும்.
போற்கன்நாடுகள்
பல்கேரியா, மத்திய பேரரசுகளைத் தழுவிக் கொண்டமைக்குத் தண்டமாகக்
கிரீசுக்கும் யூகோசிலாவியாவுக்கும் ஆள்புலங்களைக் கையளிக்க வேண்டியிருந் தது. ஆனல் உருமேனியாவுக்கோ, யூகோசிலாவியா பெற்றது போல் விசாலித்த ஆள்புலங்கள் கிடைத்தன. இரசியாவிலிருந்து பெசரேபியாவையும், அங்கேரிய திருன்சில்வேனியாவையும், ஒசுத்திரியாவிலிருந்து புக்கோவினுவையும், இன்னும் மெசுவாரைச் சேர்ந்த பணுத்தியையும் உருமேனியா ஈட்டிக்கொண்டது. ஆகவே அதன் நிலப்பகுதியும் குடித்தொகையும் இரட்டித்தன. 1,70,00,000 குடித் தொகையுடன் (1939) வரையில் 1,90,00,000) முதலாம் உலகப்போரின் பின்னர், போற்கன் நாடுகளில் மிகப்பெரிதும், பல்வேறு இனங்களைக் கொண்டதும் (பின் நிகழ்ச்சிகள் காட்டியதுபோல) மிகவும் சேதப்படுத்தக்கூடியதுமான நாடாக உருவாயது.
பொசினியா, ஏசகோவினு, குரோவேசியா-சிலாவோனியா, சித்திரியாவின் சில பகுதிகள், கரிந்தியா, பனத்து, ஏறத்தாழ முழு தாமேசியா ஆகியவற்றைப் பெற்றதனுல் விசாலிக்கப்பட்ட யூகோசிலாவியா 1,40,00,000 குடிமக்களுடன் பருமனில் உருமேனியாவுக்கு அடுத்ததாயது. முன்பின் பாராது, பெரிய பிரித் தானியாவைப் பின்பற்றி, அனுபவமற்ற யூகோசிலாவியாவானது வரையறுத்த முடியாட்சியின் கீழமைந்த பாராளுமன்ற யாப்பை ஏற்றுக் கொண்டது. மிக்க அண்மைக்காலத்திலேயே ஐக்கியம் பூண்டவர்களும், ஒருமித்துச் செயலாற்றும் இசைவற்றவர்களும், கடினமான இவ்வாட்சிமுறையைச் செவ்வனே நடாத்தற்கு வேண்டிய மரபுகளோ அனுபவமோ அற்றவர்களுமான யூகோசிலாவியர் இவ்வா சியற்பரிசோதனையிலே தோல்வியே அடைவர் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. குரோசியா விலகுவதாக அச்சுறுத்தியது. நாட்டிற் பிரிவினை ஏற்படுவதைத் தவிர்க்க 1928 ஆம் ஆண்டில், அரசனன அலச்சாந்தர் குடியாட்சி யாப்பை நிறுத்தி வேத்தியற் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினுன்.
போற்கன் நாடுகளில் இனக்காழ்ப்பு எப்போதும் உளதே. அலச்சாந்தர் மன் னன் பிரான்சிற்குச் சென்ற காலை, 1934 ஆம் ஆண்டிற் படுகொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து அது வெளிப்பட்டது. இளவரசனன போல் பதிலாளியாயிருந்த பொழுது, உள்நாட்டுக் கலகத்தைத் தணிக்கவும், தன் நாட்டை வெளிநாட்டுத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றவும் தன்னலியன்றமட்டும் முயற்சி செய்த பொழுதிலும், அவன் அதில் ஓரளவு சித்தியே அடைந்தான். 65 இலட்சம் வைதீ கச்சேபியரை 35 இலட்சம் உரோமன் கத்தோலிக்கக் குரோசியர் கடுமையாக எதிர்த்தனர். இந்த முந்நாட்டு அரசு அங்கிருந்த சேர்மானிய, இத்தாலிய மகி யார்ச் சிறுபான்மையோரால் மனக்கலக்கம் அடையவேண்டியிருந்தது. இச்சிறு

Page 244
466 அமைதிப் பொருத்தனைகள்
பான்மையோரின் பற்றுறுதி அவர்களை ஒன்முகச் சேர்த்த நாட்டுக்கு கிடைக்க வில்லை ; அதன் பகைவ்ர்களுக்கே அவர்களின் பற்றுறுதி கிடைத்தது. எனினும் அச்சு வல்லரசுகளுக்கு எதிரான நட்புறவு நாடுகளுள் ஒன்முக யூகோசிலாவியா இருக்கிறது. அன்றியும் வெற்றியின் பயனிலொருபங்கு கிடைக்குமென்று அது நம்பியிருக்கிறது.
துருக்கி
துருக்கியைப்பற்றிய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதிருந்தது. கொன்சு தாந்திநோப்பிளிலுள்ள நோயாளியின் (துருக்கி) கைவிடப்பட்ட ஆதனத்தை ஏற்கும்படி ஐக்கிய அமெரிக்க அரசைத் தூண்டும் வீண் நம்பிக்கையுடன், துருக்கியோடு நிறைவேற்றும் அமைதிப் பொருத்தனையை, நட்பாளர் 1920 வரை யும் ஒத்திப்போட்டனர். அப்போது செவிர்ப் பொருத்தனையை உறுதிபண்ணச் சுலுக்தான் அவசரப்படவில்லை. காலந்தாழ்த்துவதிலுள்ள அபாயத்தை நட்பா ளர் காலம் கடந்தே உணர்ந்தனர். 1920 ஆம் ஆண்டு வரையில் நிலைமைமுற்முக மாறிற்று. 1919 மே 15 ஆம் தேதி பெரிய பிரித்தானியா, பிரான்சு, அ. ஐ. அரசு ஆகியவற்றின் போர்க்கப்பல்களின் உதவியுடன் சிமேனுவைக் கிரேக்கர் கைப் பற்றினர். தாங்கள் இகழ்ந்து வெறுத்த கிரேக்கர் சிமேனுவைக் கைப்பற்றியது துருக்கிய நாட்டினவாதிகளிடையே மிகுந்த ஆத்திரத்தை எழுப்பியது. துருக்கிய நாட்டினவாதிகள் தாதனல் தொடுகடலின் இரட்சகனும், துருக்கி யப்படையில் மிகச் சிறந்த போர் வீரனுமான முசுத்தாபா கமால் பாசா என்பா
னின் வீரியத் தலைமையின்கீழ்த் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.
subtrój utrafir
கமாலின் நற்காலம் தோன்றியது. சிமேனுவிற் கிரேக்கர் இறங்கிய நாலு நாட் களின் பின்னர், கமால், கிழக்கு அனத்தோலியாவிலுள்ள துருக்கியப் படையின் பரிசோதகர்-நாயகமாகக் கடமையேற்கக் கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து புறப்பட்டான். சுலுத்தானின் கட்டளைக்கு அமைந்து நடக்காமையாற் சமூகத்தி லிருந்து தள்ளப்படவே, துருக்கிய நாட்டினவுணர்ச்சியின் புதிய மனப்பா மைக்கு வேண்டுகோள் விடுத்தான். இதற்கிடையில், கமாலால் அமைக்கப்பட்ட நாட்டின மன்றமானது ஏசரூமிற் கூடி, அப்போது அனத்தோலிய பீடபூமியில் உள்ள ஒரு சிறு நகராகிய அங்கோசாவில் நாட்டினவாதிகளின் தலைமையிடத் தைத் தாபித்தது.
1920 ஏப்பிரிலில், பெருநாட்டின மன்றம் அங்கோராவிற் கூடி கமாலைத் தலைவ ஞகத் தெரிவு செய்தது.

அமைதிப் பொருத்தனைகள் 467
கிரேக்க மக்களின் அல்லல்
அப்பொழுது கிரேக்கர் வெற்றிமேல் வெற்றி எய்தினர். யூன் 5 ஆம் தேதி ஒற் முேமருடைய பழைய தலைநகரான புரூசாவைக் கைப்பற்றினர். பின்னர் எதிர்க் கடற்கரையோரத்திலே தங்கள் நிலைமையை உறுதிப்படுத்தி, யூலை 26 ஆம் தேதி, இளம் பராயத்தினனை கிரேக்க அரசனன அலச்சாந்தர் எத்திரியாநோப்பிளுள் வெற்றி ஆடம்பரங்களுடன் புகுந்தான். இரு வாரங்களின் பின்னர், சுலுத்தான் செவிர்ப்பொருத்தனைக்குக் கைச்சாத்திட்டான்.
எனினும் 1921 ஆம் ஆண்டிற் கிரேக்கருக்கு மாமுகக் காலம் மாறியது. இத்தா லியும் பிரான்சும் அங்கோரா அரசாங்கத்துடன் இணக்கஞ் செய்தன. துருக்கி யப் படையின் முதற்றலைவனுகக் கமால் நியமனம் பெற்று, அங்கோராவை நோக் கிச் செல்லும் கிரேக்கரின் முன்னேற்றத்தைத் தடுத்ததுமன்றி, தானே தாக்கத் தொடங்கிக் கடல்வரை கிரேக்கப்படை முழுவதையும் துரத்தினன். சிமேனவில் நெருப்பும் கொள்ளையும் பரவின. கமாலின் கட்சியினர் வெற்றி வெறிகொண்டு தொடுகடல்வரையும் முன்னேறிச் சாணக்கு என்னும் இடத்திற் கூடாரமடித்துத் தங்கித் தாதலின் தென்கடற்கரையை ஆட்சிசெய்த பிரித்தானியக் காவற்படை யை அச்சுறுத்தினர். சாணக்கில் அக்காவற் படையின் நிலைமை ஆபத்தானதா யிருந்தது. பெரிய பிரித்தானியா, பிரான்சியராலும் இத்தாலியராலும் கைவிடப் பட்டுத் துருக்கியரால் எதிர்க்கப்பட்டுத் தனது பொதுநலவாய நாடுகளின் துணையை வேண்டி நின்றது. ஆயின், அந்நாடுகளிடம் உதவிபெறுதல் நிச்சய மற்றதாயிருந்தது. அந்த யுத்தம் விலக்கப்பட்டதற்குக் காரணம் கொன்சுதாந்தி நோப்பிளிலிருந்த நேய நாடுகளின் சேனுபதி சேர் சாள்சு அரிந்தன் என்பானின் உறுதியும் சாதுரியமுமாகும்.
இதற்கிடையில், சின்ன ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒடிய 10,00,000 கிரேக்க அகதிகள் தமது கப்பல்களிலும் நட்பாளரின் கப்பல்களிலும் தப்பியோடினர். ஆனற் கிரேக்கப்படையின் தோல்வி படுதோல்வியாயிற்று. ஒரு அயோனியப் பேரரசை அமைக்கும் அவர்கள் கனவு, தகர்க்கப்பட்டது. 1920 திசெம்பரில், மிகுந்த ஆரவாரத்துடன் அரசு கட்டிலுக்குத் திருப்பியழைக்கப் பட்ட கொன்சுதாந்தைன் அரசன், சின்ன ஆசியாவில் நிகழ்ந்த அழிவின்பின் னர், நாட்டிலிருந்து அசத்தப்பட, அவன் மகனன இரண்டாம் யோட்சு அரசனு ஞன். யோட்சு அரசனும் தன் அமைதியற்ற பதவியை 1924 மட்டும் வகித்தான். பின்னர் நாடு குடியரசாகப் பிரசித்தஞ்செய்யப்பட்டது. வெனிசெலோசு ஓய்வு வாக்கையைத் துறந்து, 1928 ஆம் ஆண்டில் முதலமைச்சர் பதவியை ஏற்று, நான்கு ஆண்டுகளாகப் பெரும் வெற்றியுடன் ஆட்சிசெய்தான்.
ஆனல் கிரேக்க அரசவாதிகள் தமக்குப் பலம்கிரட்டிக்கொண்டேயிருந்தனர்.
வெனிசெலோசு ஒரு புரட்சி இயக்கத்திற் சிக்கி (1933),நாட்டை விட்டோடி,
மரணதண்டனை விதிக்கப்பட்டு, 1936 ஆம் ஆண்டில் பாரிசிற் காலமானன். இரண்
17-B 24178 (5.160)

Page 245
468 அமைதிப் பொருத்தனைகள்
டாம் யோட்சு அரசன் பன்னிரண்டு ஆண்டுகளின்பின்னர் அரசுகட்டிலேறி, யாப்புறு முடியாட்சியை மீண்டும் நிறுவினன். ஆனல், பாராளுமன்ற அரசாங் கம் எக்காலத்திலும் கிரீசில் வேரூன்றவில்லை. அதனிடத்தில் மெத்தாசாசு என் பான் முடியாட்சி சார்ந்த சர்வாதிகாரத்தை 1936 ஆம் ஆண்டில் ஏற்படுத் தினன்.
துருக்கி
இதற்கிடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. நவம்பர் 1 ஆம் தேதி அங்கோாாவிற் கூடிய நாட்டின மன்றம் சுலுத்தான் என்ற பதவியை நீக்க, ஒரு கட்டளையை வெளியிட்டது. 17 ஆந் தேதி, ஒற்றே மன் சுலுத்தான்மாரிற் கடைசிச் சுலுத்தானுன ஆரும் முகம்மது, ஒரு பிரித் தானியப் போர்க்கப்பலிற் கொன்சுதர்ந்திநோப்பிளினின்றும் புறப்பட்டான். 1924 மாச்சு மாதத்தில் நாட்டினமன்றத்தாற் கலிபாப் பதவியும் ஒழிக்கப் பட்டது. முந்திய ஆண்டு ஒற்முேபர் மாதத்திற் முசுத்தாபா கமால் பாசாவை முதற்குடிப்பதியாகவும் அங்கோராவைத் தலை நகராகவும் கொண்டு துருக்கி ஒரு குடியரசெனப் பிரசித்தஞ் செய்யப்பட்டது.
உலோசேன் பொருத்தனை
முசுத்தாபா கமாலின் அதிதிறமையான வெற்றிகள், பயனற்ற செவிர்ப் பொருத்தனைக்கு முற்றுப் புள்ளியிட்டன. நவம்பர் 20 ஆம் தேதி உலோசேனில் உறுதியான ஒரு சமாதான உடன்படிக்கை நிறைவேற்ற மகாநாடொன்று கூடி யது. உலோசேனின் அரசியல்வானிலை இறுக்கமாயிருந்தது. முன்னர் பல முறைகளிலும் தோல்வியின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொண்ட துருக்கன் பூரண வெற்றியடைந்த காலத்தில் அதன் பலன்களைக் கைவிடுவானென்பது நடைபெறுவதொன்றன்று. உலோசேனில் குழ்த்திறத்தாலும் படைத்திறத்தா அலும் வெல்லும் பிடி அவன் கையில் இருந்தது. கிரீசின்மீது பரம்பரையாக இத் தாலிக்கிருந்த பகைமை அவனுக்குச் சாதகமாயிருந்தது. இங்கிலந்திற்கும் பிரான்சுக்குமிடையே அதிகரித்துவந்த மனக்கசப்பும் அவனுக்குச் சாதகமா யிற்று. ஆனபடியால், அவன் மனப்பான்மை கர்வத்தை எட்டியதென்பதில் என்ன ஆச்சரியம்; என்ருலும் அமைதிப் பொருத்தனை 1923 யூலை 24 ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது.
அளவெஞ்சிய அரசியலவாக்காரணமாகவும், போரிலே படுதோல்வியடைந் தமை காரணமாகவுங் கிரேக்கர் பெருநட்டத்துக்கு ஆளாயினர். அவர்கள் எத் திரியாநோப்பிள் உட்படக் கிழக்குத்திரேசையும் முக்கியம்வாய்ந்த இம்புமுேசு தெனதொசு தீவுகளையும் துருக்கிக்குக் கொடுத்தனர். ஆனல், எஞ்சிய துருக்கி யத் தீவுகளும் மறிற்சாவரையுமுள்ள மேற்குத்திரேசும் கிரீசிடமே விடப்

அமைதிப் பொருத்தனைகள் 469
பட்டன. துருக்கியானது சிமேனவையும் அனத்தோலியாத் தீபகற்பத்தின் எஞ் சிய பகுதியையும் வைத்திருந்தது : பிரித்தானியா தன்னிடமே வைத்துக் கொண்ட சைப்பிரசுமீதும், எகித்து, குடான், சீரியா, பலத்தீன், மெசப்பொத்தே மியா, அராபியா ஆகிய நாடுகள்மீதும் துருக்கி தனக்கிருந்த உரிமைகளைக் கை விட்டது. சிறுபான்மையோரைப் பற்றிய பிரச்சினைகள், அவர்களை வேருடன் அழித்தல் என்னும் இலகுவான முறையாற் பெரிதும் தீர்க்கப்பட்டன. தப்பி எஞ்சியவர்களே, அமைதிப் பொருத்தனைகளிற் கூறியவண்ணம் நடத்துவதாகத் துருக்கி ஒப்புக்கொண்டது. கிழக்கு மேற்குத் திரேசு மாகாணங்களுக்கிடையிற் கிரேக்க முசிலிம்களையும் வைதீகத் திருச்சபையைச் சேர்ந்த துருக்கர்களையும் பெருமளவிற் பரிமாற்றஞ் செய்தற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் இரு பிரச்சினைகள் எஞ்சியிருந்தன. துருக்கரின் பெருமைக்கு அவமானம் விளைத்த பொழுதிலும், 6 ஆம் நூற்முண்டு தொடக்கம் புறநாட்டினருக்குக் காப்பளித்த ஒப்பந்தத்தின் மேற் சரணடைதல்' என்னும் நிபந்தனை நீக்கப்பட்டது. கொன்ச காந்திநோப்பிளை ஆட்சி செய்தற்கு உகந்த நாடு பிறிதின்மை காரண மாகக் துருக்கியிடமே அது விடப்பட்டது. துருக்கியர் அந்நகரைத் தலைநகராகக் கொள்ளவில்லை. ஒடுங்கிய தொடுகடலானது நடுநிலைப்படுத்தப்பட்டு, நாட்டுக் கூட்டவையின் பொறுப்பில் விடப்பட்டது.
அமைதி இணக்கத்தை நிலைநிறுத்திய தொடர்ச்சியான பொருத்தனைகளை உலோசேன் பொருத்தனை பூரணமாக்கிற்று. முழுத்திட்டத்தையும் நாட்டுக்கூட் டவையே இணைப்பதாயிருந்தது. ஒவ்வொரு பொருத்தனையொடும் கூட்டவை யின் ஏற்பாடு முன்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டது.
நாட்டுக் கூட்டவை
நான்கு நூற்றுண்டுகளாக, ஒவ்வொரு பெரிய போரின் பின்னரும் அமைதி பேணுதற்கான திட்டமொன்றை வகுப்பது வழக்கமாகிவந்துளது. நான்காம் என்றியின் மாபெருந்திட்டமுட்பட அத்திட்டங்கள் யாவும் ஏட்டளவில் நின்றவையே. 1815 ஆம் வருடத்துப் புனிதநட்புறவைத் தவிர, உண்மையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட முதற்றிட்டம் நாட்டுக் கூட்டவையாகும். அமைதியாகவும் போரைத் தடுப்பதற்காகவும் திட்டம் செய்யப்பட்ட கூட்டவை யை இறுதியில் ஐம்பத்தாறு இறையரசுகள் சேர்ந்தன. கூட்டவையின் ஆட்சி ஒரு சிறிய கழகத்தின் பொறுப்பிலும் எல்லா அரசுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு பொதுமன்றத்தின் பொறுப்பிலும் விடப்பட்டது. நாளாந்த பாலனம் ஒரு நிரந்தசச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல தொழி னுட்பநிறுவகங்களும் அறிவுரைகூறும் ஆணைக்குழுக்களும் மன்றத்தால் நிறுவப் பட்டன. இவற்றுள் மிக முக்கியமான ஆணைக்குழுக்கள் பொறுப்பாணை நாடு
மரியற்றின் “பொது நலவாயம் அல்லது அரசறவு’ எனும் புத்தகத்தையும் அதனும் கூறப்பட்ட ஆதார நூல்களையும் நோக்குக (1940).

Page 246
470 அமைதிப் பொருத்தனைகள்
களையும் படைக்கலம் குறைத்தலையும் பற்றியவை. நிரந்தரமான சர்வதேச நீதி மன்றத்தையுங் கூட்டவை அமைத்தது. இம்மன்று ஆண்டுதோறும் ஏக்குநகரிற் கூடிப் பெரும்பாலும் திருத்தியாகச் செயலாற்றியது.
படைக்கலத்தொகையைக் குறைப்பதனலும், சமாதானமுறையில் பிணக்குக் களைத்தீர்க்க முயற்சி செய்யும்வரை படைக்கலங்கள் எடுப்பதில்லையென நாடுகள் தம்மிடை உடன்படிக்கை செய்து கொள்வதாலும், அரசியற் சுதந்திரத்தையும் நாட்டெல்லைகளையும் மதித்து நடக்க நாடுகள் உறுதியளிப்பதாலும், கூட்டவை யானதுமுக்கியமான தன் கடமைகளை நிறைவேற்ற எண்ணியது. கூட்டவையின் எந்த உறுப்பினரும் தங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை நடுத்தீர்ப்புக்கு விடாமலும், தீர்ப்பு அறிவிக்கப்பட்டபின் மூன்று மாதத் தவணை கழியு முன்னரும், வேருெரு உறுப்பினர்மீது போர் தொடுத்தலாகாது. இவ்வேற்பாட் டின் அச்சாணியன்ன இந்த நிபந்தனையை எந்நாடாவது மீறுமாயின், அந் நாட்டுடன் என நாடுகள் கொண்டுள்ள வணிகத்தொடர்புகளையும் நிதித் தொடர்புகளையும் பிற உறுவுகளையும் அந்நாடுகள் துண்டித்துக்கொள்ளவேண்டு மென்றும், அவசியமாயின் ஆயுத பலத்தையும் பிரயோகிக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. பலத்தை எவ்வண்ணம் பிரயோகிப்பதென்பது தெளிவாகக் குறிப்பிடப்படாமை, ஏற்பாட்டிற் காணப்பட்ட மிகப் பெரிய குறையாகும். குடிப்பதி உவில்சன் கூட்டவையை ஆதரித்துக் கையெழுத்திட்டபோதும் அவன் செயலுக்கு மதிப்புக் கொடுக்க அமெரிக்க ஐக்கியநாடு மறுத்தமையால், அக் கூட்டவை பொன்றுமென்பது தொடக்கத்திலேயே தெள்ளத்தெரிந்தது. கூட்ட வைக்குப் பிதாபோன்முன் தன் குழந்தையை ஐரோப்பாவின் வாயிற் படியிலே தவிக்கவிட்டகன்முன் ' எனச் சிமற்சு கூரிய மொழிகளாற் கூறிப் போந்தார்.
பொறுப்பாணைகள்
ஏற்பாட்டின் துணிகர்மான புதுமாற்றம் யாதெனின், தோல்வியுற்ற வல்லரசு களுக்குச் சொந்தமான குடியேற்றநாடுகளை யாது செய்யவேண்டுமென்பது பற் றிச் சிமற்சுத் தளபதி கூறிய ஆட்சிமுறையாகும். வேர்சைப் பொருத்தனையின் 118 ஆம் 119 ஆம் கூறுகளின்படி சேர்மனி, கடலுக்காப்பாலுள்ள தன் நாடுகளின் உரிமைகள் எல்லாவற்றையும் ‘தலையாய நட்புறவு வல்லரசுகளினதும் அவைக ளோடு சேர்ந்த வல்லரசுகளினதும் சார்பாகத் துறந்தது. இந்நாடுகள் யாருக் குச் சேர வேண்டும்? உவில்சன் வாய்ப்பாட்டுப்படி வலிந்திணைத்தற்கு? ஆங்கு இடமேயில்லை. 22 ஆம் கூற்றின்படி சுய ஆட்சி நிலைமைக்கான தகைமை பெரு மக்கள் வாழுகின்ற, பறிமுதல் செய்யப்பட்ட குடியேற்ற நாடுகளைப் பொறுத்த அளவிற் பிரயோகிக்க வேண்டிய விதியாவது, அப்படியான மக்களின் நல்வாழ் வும் அபிவிருத்தியும் நாகரிகம் படைத்த நாடுகளின் புனிதப்பொறுப்பாயமைதல் வேண்டுமென்பதாகும். அம்மக்களை ஓம்பிக்காக்கும் பொறுப்பு, வசதியான

அமைதிப் பொருத்தனைகள் 47
இடத்திலுள்ளனவும் தத்தம் பொறுப்பை நிறைவேற்றுதற்கு வேண்டிய நல வாய்ப்புக்கள் படைத்தனவும் முன்னேற்றமடைந்தவையுமான நாடுகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். அத்தகைய நம்பிக்கைப் பொறுப்பேற்கும் நாடு கள், கூட்டவையத்திடமிருந்து ஆணை பெற்ற நாடுகளாக இயங்கல் வேண்டும்.
சேர்மானிய தென்மேற்கு ஆபிரிக்காவின் பொறுப்பாணை, மாட்சிமை தங் கிய பிரித்தானிய அரசருக்கு அவர் சார்பிலே தென் ஆபிரிக்க ஐக்கிய அரசினம் பாலனஞ் செய்யும்படி அளிக்கப்பட்டது. சேர்மானிய கிழக்காபிரிக்காவைப் பெரிய பிரித்தானியாவும் பெல்சியமும், சேர்மானிய மேற்காபிரிக்காவைப் பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் பகிர்ந்து பெற்றன. இவையொவ்வொன்றும் பொறுப்பாணையின் கீழ் ஆட்சி செய்தற்குரியன. ஒசுத்திரேலியாவின் முதல மைச்சனன திரு இயூசு என்பான் சேர்மனி ஒப்படைத்த பசுபிக்குத் தீவுகள் யாவற்றையும் ஆட்சி செய்யும் உரிமையை ஒசுத்திரேலியாவுக்குப் பெறுதற்குப் பாரிசிலே பெரிதும் போராடினன். ஆனல் ஈற்றிற் புவிமத்தியகோட்டிற்கு வடக்கேயுள்ள தீவுகளும் கியோசும் யப்பானுக்குக் கிடைத்தன. பிரித்தானியப் பேரரசுக்குக் கொடுக்கப்பட நவுரு தவிர, மத்தியகோட்டுக்குத் தெற்கேயுள்ள தீவுகள் ஒசுத்திரேலியாவுக்கும் நியூசிலந்திற்கும் கிடைத்தன. இவையாவும் பொறுப்பாணைக்கமைய அளிக்கப்பட்டன. 1919 ஆம் ஆண்டில் இயூசின் கோரிக் கைக்குச் செவிசாய்த்திருந்தால் எத்துணை தொல்லைகள் தவிர்த்திருக்கலாம் என ஊகிப்பது இலகு. ஆனல், நிரூபிக்க முடியாது.
துருக்கிய மாகாணங்களான பலத்தைன், மெசப்பொத்தேமியா, சிரியா ஆகி யனவும் ஒப்படைக்கப்பட்டன. ஆனல், ஆபிரிக்க,பசுபிக்குக் குடியேற்ற நாடுகள் போல அவை பின்னடைந்த நாடுகளன்று என்பது வெளிப்படை. ஆகவே முத லிரு நாடுகளின் பொறுப்பாணை பெரிய பிரித்தானியாவுக்கும் சீரியாவின் பொறுப்பானை பிரான்சுக்கும் கொடுக்கப்பட்டன. நெடுங்காலமாகத் துருக்கிய ரால் அடக்கியொடுக்கப்பட்ட இம்மக்களுக்கு இறுதியான பூரணத் தேர்வுரிமை அளிக்கவும் நாட்டின அரசாங்கங்கள் ஏற்படுத்தவுங் கூடியவகையிலேயே அந் நாடுகளுக்குப் பொறுப்பாணை அளிக்கப்பட்டது. சிரியாவிலும் பலத்தைனிலும் பொறுப்பாணை முறை கடினமாகக் காணப்பட்டது. 1919 ஆம் ஆண்டில் எதிர் பார்த்த முடிவு இன்னும் கைகூடவில்லை. மெசப்பொத்தேமியா மீதிருந்த பொறுப்பாணை 1932 இல் முடிவுற, அந்நாடு சுதந்திரமும் இறைமையும் வாய்த்த தனியாசாகக் கூட்டவையில் உறுப்புரிமைபெற்றது.
பல்வேறுபட்ட பொறுப்பா8ணக்குக் கேம்பிரிச்சு 1201, 1202, 1203, 1204, (1921); 1284 1350, ஆகிய பக்கங்களைப் பார்க்க. பொறுப்பாணை முறைமைக்கு உலூகத்துப் பிரபுவின் கீழ் ஆக்கப்பட்ட கலைக் களஞ்சியத்தின் இரண்டாம் பாகத்தை நோக்குக.

Page 247
乳7盛 அமைதிப் பொருத்தனேகள்
வேர்சைப் பொருத்தனே நிறைவேறிய அன்றே, நாட்டுக் கூட்டவையும் முறைப்படி ஆரம்பமாயது. முன்னேயது பின்னேயதிலிருந்து வேருக்கப்படாத ஒருகூறே. கூட்டவை ஆரம்பத்திலிருந்தே தோல்வியடைந்ததா? அல்லது ஆரம்பித்த பக்து ஆண்டுகளாகக் கூட்டவை வெற்றியடைக்கது என்று செசில் பிரபு கூறியது ஏற்புடையதா ? கூட்டவையும் அதன் சிருட்டியான ஏக்கு நீதி மன்றம் அனேக பிணக்குக்கஃனத் தீர்த்தானவத்தன என்பது உண்மையே. ஆணுல், இலைகனில் ஒன்று தவிர ஏனேய வெல்லாம் சிறிய அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குக்களாம். சில சந்தர்ப்பங்களில் இம்மன்று போரையும் தடுத்திருக்கின்றது. சர்ப்பிரிவு சேர்மனியுடன் மீண்டும் ஐக்கியப்படும் பும் அப்பகுதியை வெற்றிகரமாகப் பாவினஞ் செய்தது. பஸ் உதவி அவையங் களின் உதவியுடன்-சிறப்பாகச் செனிவாவிலுள்ள சருவதேச தொழிலானர் அலுவலகத்தின் உதவியுடன்-பொருளாதார அலுவல்களேப் பற்றிய அரிய செய்திகளேச் சேர்த்து வெளியிட்டது. அது பொறுப்பாணேப் பரிசோதனேயை மேற்பார்வையிட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட ஐரோப்பியக் கஃநகர்களிற் குழந்தைகளேப் பட்டினியாற் சாவா மற் காப்பாற்றியது. "வெள்ளேயடிமை வியாபாரம், நீங்கு வினேக்கும் மருத்துவகை விற்பனே போன்றவற்றைத் தடுக் கின்ற சமூக அன்புப் பணி சார்ந்த சட்டங்கள் சருவ நாடுகளிலும் இயற்றப்படு வதை ஊக்கியது, ஏற்பாட்டிலுள்ள சில குறைகள் உலகாணுேப் பொருக்கஃனயா லும் (1825), 1928 ஆம் ஆண்ப்ெ பொதுவிதியாலும் நிவர்த்தி செய்யப்பட்டன. கட்டவையிலிருந்து விலகிகின்ற அமெரிக்க ஐக்கியநாடு பிசான்சொடு சேர்ந்து, பிரபந்துகெலக்குக் கூட்டணி எனப் பொதுவாக வழங்கும் LI Tiffar In r Gżir Irpi கையை உருவாக்கியது. இதன்படி, நாட்டினப் பூட்கையின் ஒரு கருவியாகப் போரைக் கொள்ளல் தவிர்க்கப்பட்டது. இந்தக் கூட்டணியிற் சேர்மனி உட் படப் பதினேந்து அரசுகள் சேர்ந்தன (1988) என்ருலும், கூட்டவை தன் அடிப் படைக் குறிக்கோண் எய்திக் தவறியது. சருவதேச நாகத்துக்குப் போகும் பாதை நல்ல நோக்கங்களே உடையதாயிருக்கக் காண்பதில் எல்லா வல்லாசு களும் கண்ணும் கருத்துமாயிருக்கின்றன" என்பது சினுே தி மதாரியாகாவின் கசப்பான மூதுசையாகும். இம்மூதுரையில் மிகுந்த உண்மையுண்டே
ԶԶ, 5 € 5
 

− HH -ل
длГеЁ5 அளவுத்திட்டம்.
|
స్టీ-t:
* ஆ:ே
-
■ S ... - ܡܖ S. -ඵ්...' "."," F li
, о R
. . . . . . . . . . . .
SLSLS SLS S S SS S S S S S S S S SS S SL SS SS
. . . Kuhusių fili ...'...'...'",&፻ i. AN:స్ట్రో . لحد
{(9_\လျို့ပို်ဇိဇ္ဇိတ္ထိ ́ ́ தெரேசர்க்க හීද්” ශ්‍රී یخ با به پایی هم با
சோங்கு 逸。 ಟ್ವಿov alju
Y. سمير
&q o*
ஒ 204 قامشي ":്
”காந்தியூ
n
Fsist
Lut
மோற்
概盟,
17- 24178 EIGO போருக்குப்பி
Tof:rre pare 478.

Page 248
மேல் சைவீதியா அளவுத்திட்டம்,
FA, gif, JH -
Haar ik === = இடியோபடபகுதி
の ஆசப்பிரரு ற்று . பு:த்தாக்கிப் ஆ 4 L இல்
நிமிடி சே வியந்திக் குடியரசு
|-
༽རྗེ ہے ۔
ஐரோப்பா
அரபநிப்பொருந்தனேகமீள்பபுக்க
1918 - 1924 அள்வுந்திட்டம்
LL S H0L S 0LL S aH 0LLaTTTTTeOiu
எங்ங்கள் 1924 . . . . . .
ாள்வேகள், 1H . . . . . . . . . . மந்திய பேரரடியின் + 1 - - - - - - - - - 1 =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 38
அமைதியின்மையும் அபிவிருத்தியும்
முக்கியமான திகதிகள் :
置岛置凸-恩凸
பெப்புருவரி 6
凸r母* 当 செத்தெம்பர் 27
r r f f i 3F
置岛、凸 తాణrవాణీ
IIg፰፻፱ ஒகத்திலிருந்து
யூன் வரையும்.
நவம்பர் 15
효 சனவரி 17
மே
திசெம்பர் 6
Iሳቃ!፰ j୮ଞitଶif 13
பெப்புருவரி 6 Irti Ii Ij
ரப்பிரிஸ் 1 ஒற்ருேபர் 10
()
d நவம்பர் 14
(1919-1931)
இரசியாவின் உண்ணுட்டுப் போர். உணவமார் மன்றம்.
"கொமிந்தேன்" உருவாயது. பிரித்தானியர் ஆக்கேஞ்சலில் இருந்து வெளியேறி னர். இந்தியாவில் இாட்டையாட்சி, அ. ஐ. அ. செனற்று, அமைதிப்
உறுதிபண்ண மறுத்தது. இங்கிலத்திற்குெழிலாளரிடை அமைதியினம். கிளம்ன்சோ தன் பதவியினின்றும் ஓய்வெடுத்துக்
பொருத்தனேயை
கொள்ளல், இங்கிலத்தில் 'மூவர் நட்புறவு'. சிறிய அரசுகளின் கேண்மையுடன்பாடு உருவாயஆன.
செனிவாவில் நாட்டுக்
கூட்டம்
கூட்டவையின் முகலாம்
பிரபந்து பிரான்சின் முதலமைச்சனுஜன். இரசியாவிற் புதிய பொருளாதாரக் திட்டம், இழப்பீடு நீர்மானிக்கப்பட்டது. சேர்மனியில் உவேத மந்திரம், ஆங்கிளி-ஆ'பலந்துப் பொருக்கண். பிரான்சில் போயின்காரே முதலமைச்சனுஞன். இங்கிலத்தில் ைேஃவில்லாத் திண்டாட்டம், உவாசித்தன் பொருக்கஃன. எகித்து சுயவாட்சிபெறல். இாசிய-சேர்மானியப் பொருத்தனே. இசாக்குப் பொறுப்பாட்சி முடிவெய்கியது. அங்கோசா துருக்கியின் தலேநகராதல். உலோயிது யோட்சு தம் பதவியினின்றும் விலகல்.
கமால் என்பான் துருக்கிய குடியரசின் குடிப்பதி
பாவின். பாசிசக் கொள்கையினர் உரோம் மீது செல்லல். உவேது மந்திரம் பதவிவிலகல்.

Page 249
474 அமைதியின்மையும் அபிவிருத்தியும்
1923 யூலை
24
31
ஒகத்து செத்தெம்பர்
செத்தெம்பர் 28
ஒற்ருேபர் 2
21
2924 சனவரி 21
சன-ஒற்.
மாச்சு
互925
ஒற்ருேபர் 27
1926
1927
芷928 ஒகத்து 27
1929 பெப்புருவரி 五 f
1930 யூன்
உரூர்ப் பகுதியைப் பிரான்சியர் கைப்பற்றல்
(யூலை 1925). உலோசேன் பொருத்தன. இத்தாலியர் கோவு தீவைக் கைப்பற்றல். கிரசுமன் சேர்மானியின் மண்டில நாயகனுதல். பிரிமோ தி இரவேரா இசுப்பெயினின் சர்வாதிகாரி
யாதல். அபிசீனியா நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்படல். நட்பாளர்கள் கொன்சுதாந்திநோப்பிளிலிருந்து வெளி
யேறல். இரையின் குடியரசு . இலெனின் மரணம். இங்கிலந்தில் முதல் தொழிற்கட்சி அரசாங்கம். கிரீசிற் குடியரசுமுறை. எரியோவும் காட்டெல்-த-கோசு ம் பிரான்சில் அதி
காரம் பெறல். பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் ஐ. ச. சோ. கு.
இனை அங்கீகரித்தல். இங்கிலந்தில் வியாபார மந்தம். பிரான்சிய அரசியலிலும் நிதிமுறையிலும் குழப்பம். உலகாணுேப் பொருத்தனைகள்.
சேர்மனி, நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்படல். இரசிய-சேர்மானியப் பொருத்தன. போயின்காரே மீண்டும் தம் பதவியை மேற்கொண்டு
பிராங்கு நாணயத்தை உறுதிப்படுத்தல். பிரயன்-கெலக்குக் கூட்டணி. சொக்கு அல்பேனியாவின் அரசனதல். புனிதக் குருபீடத்தோடு நிறைவேறிய இலாதரன்
பொருத்தனைகள். இரசியாவில் ஐந்தாண்டுத் திட்டம். அ. ஐ. அ. இல் நிதி நெருக்கடி, திரமசுனின் மரணம். துரோட்சுகி இரசியாவிலிருந்து நாடு கடத்தப்படல். இசுத்தாலின் அதிகாரம் பெறல். உருமேனியாவில் வேத்தியற் சர்வாதிகாரம். சேர்மனியிற் படையிருப்பு முடிவெய்தியது.

அமைதியின்மையும் அபிவிருத்தியும் 475
مــــــــــــــــــــ--سی
1931 சேர்மானிய-ஒசுத்திரிய சுங்கவரிச்சங்கம் விட்டுச்
செய்யப்பட்டது. ஏப்பிரில் 14 பதின்மூன்மும் அல்போன்சோ இசுப்பெயினின்றும்
அகலல். மே வியன்ன கடன் நிராகரிப்புத் திட்டத்தின் தோல்வி. யூன் 20 கட்ன்களைச் சிறிது காலம் தாழ்த்திக் கொடுப்பதற்
காக ஊவர் என்பானின் திட்டம். ஒகத்து இங்கிலந்தில் நிதி நெருக்கடி.
உவெசுமினித்தர் நியதிச் சட்டம்.
செத்தெம்பர் 19 யப்பான் மஞ்குரியாவைத் தாக்கல்.
இரண்டுபோர்களுக்கிடையில்
கடந்த பயங்கரமான நான்காண்டு அழிவுகளுக்கும் படுகொலைகளுக்கும் பின்னர், 1919 ஆம் ஆண்டில், படிப்படியான மீட்சியும் நீண்டகால நிம்மதியும் உலகத்தில் நிலவுங் காலம் தொடங்குமென மக்கள் நம்பினர். 'மாபெரும்போர்' உண்மையாகவே போரிற்கு முற்றுப்புள்ளி இடுமென அவர்கள் எதிர்ப்பார்த்த னர். ஆனல், இதற்கு மாமுக அடுத்த இருபதாண்டு காலமும் மக்கள் தாம் கொண்டிருந்த எண்ணங்கள் பிழையென்பதை உணர்ந்தனர். அவர்கள் எதிர் பார்த்த நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. உலகநிலை சீர்குலைந்து கொண்டே போனது. இவை யாவும் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அமைதிப் பொருத்தனைகள்
எனினும், எதிர்காலம் பற்றி மக்கள் கொண்டிருந்த நன்னம்பிக்கைக்குப் போதிய ஆதாரமிருந்தது. ஒரு நூற்றண்டு காலமாக ஐரோப்பாவானது சுதந் திரமெனும் இலட்சியத்தையும் நாட்டினம் எனும் உயரிய தத்துவத்தையும் நோக்கி முன்னேறிக்கொண்டேயிருந்தது. மத்திய ஐரோப்பாவின் eparall பெரிய பேரரசுகளும் இந்தத் தத்துவங்களுக்கு எதிர்மறையான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பது உண்மையே. எனினும் மாபெரும் போரின் விளைவாக அவ்வல்லரசுகள் கவிழ்ந்தன. பாரிசிற் கூடிய அமைதிகாவலர் கள் கூடியவரை நாட்டினத் தத்துவத்திற்கமையவே பழையனவும் புதியனவு மாய ஐரோப்பிய அரசுகளின் எல்லைப்புறங்களைத் திருத்தி அமைத்தார்கள். 1914 ஆம் ஆண்டில் 4,50,00,000 மக்கள் அந்நியத் தளையின் கீழ் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டளவில் இத்தொகை 1,60,00,000 ஆகக் குறைக்கப்பட்டது. இனவாரியாக எல்லைகளை எப்படித் திருத்தியமைத்தாலும் சிற்சில வமுக்களைத் தவிர்க்க முடியாது எனினும், ஒவ்வொரு நாட்டிலும் 68.gy பான்மையினரைப் பாதுகாக்க இயன்றவரை முற்காப்புக்கள் செய்யப்பட்டன. அன்றியும் அப்பணியை நிறைவேற்றும் பொறுப்புச் சிறப்பாக நாட்டுக் கூட்டவை

Page 250
476, அமைதியின்மையும் அபிவிருத்தியும்
யிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலே குடி யாட்சி இடரின்றி நிலவுதற்கு வழிவகுக்க முயற்சி செய்யப்பட்டது. அன்னிய மக்களின் உரிமைகளைக் குடியாட்சி அரசாங்கங்கள், தனியாண்மை நாடுகளிலும்
பார்க்க கூடிய அளவு கூர்ந்து கவனிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் நிகழ்ந்த ஏமாற்றத்திற்குப் பாரிசிற் கூடிய அமைதி காவலர்களே பெரும் பொறுப்பாளிகளாகக் கருதப்பட்டனர். பொதுவாகப் பார்த்தால், அக் கருத்து நியாயமற்றதொன்முகும். ஆனல், அமைதிகாவலருக்கு எதிராகச் சாட் டப்பட்ட இரு குற்றச்சாட்டுக்கள் எளிதிலே தள்ளமுடியாதவை. அவர்கள் தத்துவங்களைக் கைக்கொள்வதில் கண்டிப்பாக இருந்தனர்; அல்லது, ‘சுயநிரு ணயம்' கலப்பிலாக் குடியாட்சிமுறை ' என்பன போன்ற 'சுலோகங்களில் ' அளவுகடந்த நம்பிக்கை வைத்தார்கள் அவர்கள், என்பது முதலாவது குற்ற மாகும். இரண்டாவது, நிறைவேற்ற வழிவகைகள் வகுக்காது அவர்கள் கடுந் தீர்ப்புக்கள் விதித்தமை குற்றமாகும்.
அ. ஐ அ ぷ
அமெரிக்கச் செனற்று, அமைதிப் பொருத்தனைகளில் உலில்சன் இட்ட கைச் சாத்துக்கு நன்மதிப்பு அளித்திருப்பின், நாட்டுக் கூட்டவையில் அந்நாடு சேர்ந் திருப்பின், பிரான்சைத் தாக்கச் சேர்மனியை விடுவதில்லையென்று பொறுப் பளிக்குமுகமாகப் பிரான்சுடனும் பிரித்தானியாவுடனும் செய்த உடன் படிக்கை ஏற்பாடுகளை அச்சபை ஏற்றிருப்பின், வரலாற்றின் போக்கு மாறியிருக் கலாம். அ. ஐ. அ. ஆனது நாட்டுக் கூட்டவையில் ஓர் உறுப்பினராய் இருந்திருந் தால், கோவு அலுவலிலோ, அபிசீனியச் சம்பவத்திலோ இத்தாலி கூட்டவை யை எதிர்த்து நிற்கத் துணிந்திருக்கமாட்டாது. உவாசிந்தன் பொருத்தனைகள் தேவைப்பட்டிரா. இன்னும், இங்கிலந்துடன் நட்பாயிருந்த யப்பான் சீன வைத் தாக்கியிருக்க முடியாது. உலோசேன் பொருத்தனையைக் கமால் திருத்து வித்ததுபோல, சேர்மனியும் இத்தாலியும் தங்களுக்கு அதிகக் தொல்லையின்றி யும், ஐரோப்பிய அமைதியைக் குழப்பாதும், கூட்டவை மூலமாக வேர்சைப்
பொருத்தனையைத் திருத்திவித்திருக்கக்கூடும்.
ஐ. சோ. ச. கு.
பொல்சிவிக்குப் புரட்சியின் பின்னர் இருபது ஆண்டுகளாக நட்புநாடுகள் இரசியாவுடன் நெருங்கிப் பழகாதிருந்தன. 1918-20 காலப் பகுதியிற் பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் இரசியாவில் உண்டாய எதிர்ப்புரட்சியை ஆதரிக்க அரைமனதோடு முயற்சி செய்தன. ஆனல், துரோட்சுகியால் மிகத் திறமையாக அமைக்கப்பட்ட செஞ்சேனைக்கு உயர்குடிவீரரையே பெரிதும் கொண்ட் வெண்சேனை ஈடுகொடுக்க முடியாது போயிற்று. 1919 ஆம் ஆண்டில், பிறநாட் ப்ெ படைகள் வெளியேறவே, பொல்சிவிக்கு மூவாட்சியாளரான இலெனின்,

அமைதியின்மையும் அபிவிருத்தியும் 477
துரோட்சுகி, இசுக்தாலின் ஆகியோர் ஐ. சோ. ச. கு. எனும் பெருநிலப்பாப் பிற்கு எதிர்ப்பில்லாத் தலைவர்களாயினர். ‘முதலாண்மை முறைமையும் பொது வுடைமை முறைமையும் ஒருங்குள்ள உலகத்திற் பொதுவுடைமை வாதத்தைத் தாபித்தல் முடியாதென இலெனினும் துரோட்சுகியும் உறுதியாய் நம்பினர். ஆகவே, முதலாண்மையும் அதனுேடிணைந்த பேரரசு வாதமும் தவிர்க்கப்பட வேண்டும். இக் குறிக்கோளுடன் மூன்ரும் பொதுவுடைமைச் சருவதேச சங்கம் * கொமிந்தேன்’ எனும்பெயரொடு 1919 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே தாபிக் கப்பட்டது.
பொது அமை தியின்மை
உண்மையில் எந்தப் பெரிய வல்லரசிலேயும் பொதுவுடைமைப் புரட்சி பாவக் கூடுமென்ற பயம் அக்கால் இருக்கவில்லை. எனினும், பெரிய பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி, சேர்மனி ஆகிய நாடுகளிலே தொழிலாளர்களிற் 66) பகுதியினரிடையே போரிற்குப் பிந்திய ஆண்டுகளிற்முேன்றிய அமைதியின்மை பெரும்பாலும் கொமிந்தேன் இயக்கத்தின் இரகசிய முயற்சிகளால் விளைந்த தென்பது மறுக்க முடியாக உண்மையாகும். இங்கிலந்திலுள்ள சுரங்கத்தொழி லாளர், இருப்புப்பாதைத் தொழிலாளர், பொதுப்போக்குவரத்துத் தொழிலா ளர் ஆகியோரின் ஐக்கிய சங்கங்கள் ஒன்று கூடியதால் உருவாய நட்புறவு (1920) அரசியற் பற்றற்ற தொழிற்றுறை சார்ந்த இணைப்பாக முதலில் இருந் திருக்கலாம். ஆனல், 1920 ஆம் ஆண்டிலும், இன்னும் கூடிய தெளிவாக 1926 ஆம் ஆண்டுப் பொது வேலைநிறுத்தத்திலும் பாராளுமன்ற முறைகளை அனுசரிப் பதற்குப் பதிலாக * நேரடி நடவடிக்கைகளைக் கையாளவும், அரசாங்கத்தின் கடமைகளைக் கைப்பற்றவுந் திட்டமாக அது முயற்சி செய்தது. பொது வேலை நிறுத்தத்தின் தீர்க்கமான தோல்வி அங்கு நிலவிய ஐயத்தைத் துடைத்தெறிந் தது. அதன்பின்னர் எக்காலத்திலேனும் பாராளுமன்றத்தின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டதில்லை. இத்தாலியிலும் பிரான்சிலும் 'நேரடி நடவடிக்கை யின் வேருேர் அமிசமாகிய சிந்திக்கலியம்' இங்கிலந்திலிருந்ததிலும் பார்க்கக் கூடிய வன்மையுடையதாயிருந்தது. பாசிசமானது 'தொகுதிநிலையரசாக ' உருவெடுத்தபோது சிந்திக்கலியத்தின் ஒரு சாயலைத் தன்னகத்தே கொண் டிருந்தது. பின்னையதைப்போற் பாராளுமன்ற அரசாங்கத்தை ஒதுக்கும் தன்மை வாய்ந்தது என்பது முரணுகத் தோற்றினும், இத்தாலியிற் பாசிசம் வளர்தற்கு அது ஒர் ஏதுவாயிருந்தது. சேர்மனியிற் போற் பிரான்சிலும் சமூக வுடைமைக் கொள்கையானது பொதுவுடைமைக் கொள்கை தொற்றிப் பரவு தற்கு இடமளிக்கவில்லை, என்றலும், 1924 ஆம் ஆண்டில் இசுத்தாலின் துரோட் சு கியை முடிவாகத் தோற்கடிக்கும் வசை, கொமிந்தேனனது சருவதேசப் புரட் சியை விருத்தி செய்வதில் ஓயாது உழைத்தது. 1934 ஆம் ஆண்டில் இச்சங்கம் முறைப்படி கலைக்கப்பட்ட பின்னரே, ஐக்கியச் சோவியத்துக் குடியரசு தனக் கும் மூன்ரும் சருவதேசச் சங்கத்திற்குமுள்ள உறுதியற்ற தொடர்பை நீக் கிற்று.

Page 251
478 அமைதியின்மையும் அபிவிருத்தியும்.
இாசியாவும் ஐரோப்பாவும்
இவ்விருமைக் கொள்கை காரணமாகக் குடியாட்சிக்குரிய நட்பாளர் ஐக்கிய சோவியத்துக் குடியரசைப் பற்றி ஐயப்பட்டனர். இவ்வாறு ஐயப்பட்டமை நன்றல்லாதாயினும் இயற்கையானதே. இப்படியெல்லாமிருந்த போதிலும், ஐக் கிய சோவியத்துக் குடியரசின் சருவதேச நிலைமை 1922 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாகச் சீரடைந்தது. 1922 ஆம் ஆண்டில் சேர்மனி ஐக்கிய சோவியத்துக் குடியரசுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளித்தது. இந்த முன்மாதிரியைப் பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் (1924) இத்தாலியும் ஐரோப்பியச் சிறு அரசுகளில் அதிகமானவையும், ஈற்றில் (1933) அ. ஐ. அரசும் பின்பற்றின. இரசியா 1928 ஆம் ஆண்டில் பிசயந்து-கெலக்கு கூட்டணிக்கு இணங்கி நடந்து, ஈற்றில் 1934 ஆம் ஆண்டில் நாட்டுக் கூட்டவையில் உறுப்புரிமை பெற்றது.
உண்ணுட்டுப் புதிய பொருளாதாரப் பூட்கை
இதற்கிடையில் இரசியாவில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. 1921 ஆம் ஆண்டில் இலெனின் கலப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையின் தோல்வியை உணர்ந்து, தனியாரின் பொருளுரிமை, தனியாரின் தொழின் முயற்சி என்ற தத்துவங்களையும், வெளிநாட்டு மூலதனத்திற்கு ஊதியங் கொடுத்தல், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் எனுமிவற்றையுஞ் செயலளவில் ஓரளவிற்கு ஒப்புக்கொண்டு ஒரு புதிய பொருளாதார முறையைத் தழுவினன். 1924 ஆம் ஆண்டில் இலெனின் காலமாக, 1928 ஆம் ஆண்டில் இசுத்தாலின் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளனனன். இசுத்தாலின் இரசியாவைக் கைத்தொழிற் பாதையில் முன்னேறச் செய்த ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கினன். அதன் முன்னேற்றம் அவ்வளவு தீவிரமானதாயிருந்தபடியால் 1937 வரையில் இரண்டாம் திட்டம் முடிவெய்தியது. மூன்முந் திட்டம் 1938 ஆம் ஆண்டிலே தொடங்குவதாயிருந்தது.
1923 ஆம் ஆண்டில் உழவோரையும் தொழிலாள்ரையும் படைசார்ந்த கழகங் களையும் ஆதாரமாகக் கொண்ட கூம்பகமான அரசியல் யாப்பு யாக்கப்பட்டு, 1937 ஆம் ஆண்டில் 'இசுத்தாலினின் மாபெரும் பட்டயத்தாற்’ குடியாட்சிப் படுத்தப்பட்டது. எனினும், உண்மையில் இந்த யாப்புக்கள் அரசாங்கத்தின் வெறும் வேடமேயாகும். ஆட்சி யதிகாரம் முழுவதும் பொதுவுடைமைக் கட்சி யிடமே தொடர்ந்து விடப்பட்டது. கூட்டுடைமைவாதத்தை ஆதாரமாகக் கொண்டு விவசாய முறைமையும் புரட்சிப்படுத்தப்பட்டது. கூட்டுடைமைவாத மானது நாட்டுடைமையாக்கல், ஒத்துழைப்பு, தனியாண்மை ஆகியன இணைந்து ஒத்து இயங்குவதாகும். இவ்வண்ணம் இரசியா முற்முன மாறுதலடைந்தது. புதிய இரசியாவுக்குக் கடுமையான சோதனைகள் நேர்ந்தபோதும், அது அவற்றையெலாம் வென்று முன்னேறியது.

அமைதியின்மையும் அபிவிருத்தியும் 479
பிரான்சு
1919 ஆம் ஆண்டினை உற்று நோக்குவோருக்கு ஐரோப்பாக் கண்டத்திற் பிரான்சே ஆதிக்கம் பெற்றிருந்தது போலத் தோற்றும். ஆனல், பிரான்சியரின் மனக்கவலை குறையவில்லை. பிரான்சின் பாதுகாப்புக்கு முக்கியமெனப் போசு கருதிய இசையின் எல்லைப் புறத்தைப் பாரிசுக் கூட்டத்திற் பெற அவன் தவறி விட்டான். இரையின் எல்லைப்புறத்திற்குப் பதிலாக, உவில்சனும் உலோயிடு யோட்சும் அளித்த காவற் பொறுப்பு, அ. ஐ. அரசு விலகியமையாற் பயனிலதா யிற்று. இழப்பீட்டைக் கொடுக்கும்படி பிரான்சு கூடிய உறுதியுடன் நெருங்கி யது. 1921 ஆம் ஆண்டில் 66,00,000 தேளிங்குப் பவுண் இழப்பீடாகத் தீர்க்கப் பட்டது. இதில் 58 சத வீதம் பிரான்சிற்குரியதாயிற்று. 1921 ஆம் ஆண்டில், ஏழாம் முறையாக முதலமைச்சனுன பிரயந்து, ஒரு மோசடியானதும் பணம் முற்றிலும் இழந்ததுமான நாட்டிலிருந்து வரவேண்டிய கட்டணத்தைப் பிடுங்கி எடுக்கக்கூடிய ஆளல்லன். சொற்ப காலம் கலைநிதி உவேது, கலைநிதி இாாதனே ஆகியோரின் தலைமையின் கீழ்ச் சேர்மனி தன் கடமையை நிறை வேற்றச் சற்று முயற்சி செய்வதாகத் தோற்றியது. ஆனல், இசாதனே 1922 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டபின்னர் அம் முயற்சிகள் நின்றுவிட்டன.
போயின்காரே
அதே ஆண்டில் இாமந்து போயின்காரே பிரான்சில் அதிகாரம் பெற்றிருந் தான். அவன் சேர்மனியை மிகவும் வெறுத்தான். இங்கிலந்து தன் சிறந்த வாடிக்கை நாடாகிய சேர்மனிக்கு ஆதரவு அளிக்கும் அவாவுடையது என ஐயுற்ருன்.
சேர்மனி ஒழுங்கின்படி கடனைச் செலுத்தக் தவறியபோது, போயின்காரே பெல்சியத்தின் ஆதரவுடன்-இங்கிலந்து எதிர்த்து நின்ற போதிலும்-சேர்மனி யின் கைத்தொழிலுக்கு உயிர்நாடி போன்ற உரூர்ப் பகுதியைக் கைப்பற்றினன். இம்முயற்சி தோல்வியடைந்ததனல் 1925 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. ஒரு சுயேச்சையான 'இரையின் நதிப் பிரதேசக் குடியரசை ஏற்படுத்தச் செய்த திட்டம் தானும் வெற்றிபெறவில்லை.
உலகானேப் பொருத்தனைகள்
1924 மே மாதத்திற் போயின்காசே பதவியினின்றும விலக்கப்பட, 1925 ஆம் ஆண்டில் பிசயந்து மீண்டும் அப்பதவியை வகித்தான். அவன் 1932 ஆம் ஆண்டிற் காலமாகும் வரை பிறநாட்டமைச்சனுகவோ, முதலமைச்சனுகவோ
அதிகாரம் பெற்றிருந்தான். பிரயந்து பிரான்சின் பாதுகாப்பையும் ஐரோப்பா

Page 252
480 அமைதியின்மையும் அபிவிருத்தியும்
வின் அமைதியையும் விருத்திசெய்வதிற் சமமான அவாக் கொண்டிருந்தான். ஆகவே, சேர்மனியில் 1923 ஆம் ஆண்டில் அதிகாரம் பெற்ற கசுத்தாவசு திர சும லுடனும் இங்கிலந்தில் 1924 ஆம் ஆண்டில் பிறநாட்டுச் செயலாளரான ஒசுதன் சேம்பலேனுடனும் ஒன்றுசேர்ந்து 1925 ஆம் ஆண்டில் உலகானேப் பொருத்தனை களை ஒப்பேற்றினன். . . . ..
நாட்டுக் கூட்டவை ஏற்பாடுகளில் அனுபவ வாயிலாகக் கண்ட குறைகளைத் தீர்க்குமுகமாகவே இப் பொருத்தனைகள் நிறைவேற்றப்பட்டன. ஐக்கிய இராச்சியமும், பிரான்சும், இத்தாலியும், பெல்சியமும் வேர்சைப் பொருத்தனை யில் வரையறுக்கப்பட்டபடி பிரான்சு, பெல்சியம், சேர்மனி ஆகிய நாடுகளின் எல்லைப்புறங்களைப் பங்கமுமுது வைத்திருக்க வேண்டிய பொறுப்பை ஒருமித் தும் தனித்தும் ஏற்றுக்கொண்டன. இம்மூன்று வல்லரசுகளும் தத்தமக்குட் போரில் ஈடுபடுவதில்லையெனத் தங்களுக்குள்ளே இணங்கிக்கொண்டன. இரு அமெரிக்க வங்கி முதலாளிகளின் தலைமையில் இழப்பீட்டுக் கணக்காற் கொடுபட வேண்டிய முழுத் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்தச் சேர்மனிக்கு உதவி செய்யும் பொருட்டு 1924 ஆம் ஆண்டிலும் 1930 ஆம் ஆண்டிலும் சில திட்டங்கள் வகுக்கப்பட்டன. தோசு என்பானின் முன்னைய திட்டப்படி அ. ஐ. அரசும் பெரிய பிரித்தானியாவும் சேர்மனிக்குக் கொடுத்த கடன்களிலிருந்தே, செலுத்தப்பட்ட கடன்பகுதியிற் பெரும்பாகம் எடுக்கப்பட்டது. யங்கு என்பானின் இரண்டாவது திட்டம் நடைமுறைக்கு வருமுன்னர், முன்னெரு போதும் நிகழ்ந்திராத கடுமையான பொருளாதாரச் குருவளியொன்று நிதி வணிகத்துறைகளை உலுக்கிவிட்டது. ... ."
உலகானுேப் பொருத்தனைகளுக்கும் இந்தப் புயலுக்குமிடைக்காலத்தில், அரசியற் புகைப்படலத்துக்கிடையில் நீலவானம் மங்கலாகத் தோன்றியது. 1926 ஆம் ஆண்டில் இரசியாவுக்கும் சேர்மனிக்குமிடையில் (உலகானுேப் பொருத்தனையை மாதிரியாகக் கொண்டு) ஒரு பொருத்தனை நிறைவேற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டில் போயின்காரே மீண்டும் அதிகாரம் பெற்று, பிராங்கு நாணய மதிப்பின் பயங்கரமான வீழ்ச்சியைத் தடுத்து, அதன் விலையை ஒரு பவுணுக்கு 124 பிராங்கு விதம் உறுதிப்படுத்தினன். குற்றங் காணும் மனப் பான்மையுடையதும் நம்பிக்கையுறுதியற்றதுமான ஐரோப்பாவுக்கு 1930 மே மாகத்திற் பாரிசுக் கூட்டணி (பிசயந்து-கெலக்கு) தகுந்ததென விதந்துரைக்கப் பட்டது. படைக்கலம் ஒழித்தலை முன்னேற்ற நியமிக்கப்பட்ட முன்னேற்பாட் டாணைக்குழு நீண்ட காலத்தின் பின்னர் உண்மையாகவே கூடியது. 1930 ஆம்
ஆண்டில், படையிருப்புச் சேர்மனியில் முடிவுற்றது.
'ஆனல், அந்தச் சிறிதுநேர வெயில் நிலைக்கவில்லை. 1929 ஆம் ஆண்டில் திரசு மன் காலமானன். அதே ஆண்டில் ஒசுதன் சேம்பலேன் பதவியினின்றும் விலகி ஞன். ஒற்ருேபர் மாதத்தில் நியூயோக்கில் 'முன்னெருபோதுமில்லாத கடின

அமைதியின்மையும் அபிவிருத்தியும் 48
மான நிதி நெருக்கடி நிகழ்ந்தது. சேர்மனிக்கும் ஒசுத்திரியாவுக்குமிடையில் ஒரு சுங்கவரிச் சங்கம் ஏற்படுத்துமாறு கொண்டுவந்த திட்டம் செக்கோசில வாக்கியாவாலும் இத்தாலியாலும், குறிப்பாகப் பிரான்சாலும் உறுதியுடன் எதிர்க்கப்பட்டது. செத்தெம்பர் மாதத்தில் அதன் சட்டவமைதி ஏக்கிலுள்ள சருவதேச நீதிமன்முல் (ஒருவாக்கால் மாத்திரம்) மறுக்கப்பட்டது. பிரான்சி லுள்ள சுயநலப் புலிகளே இத்திட்டத்தின் தோல்விக்குப் பெரிதும் பொறுப்பாளி களாவர். இத்திட்டம் இவ்விரு நாடுகளும் ஐக்கியம் பூணுவதை விரைவுபண்ணி யிருக்கக்கூடும். ஆனல், சேர்மனி ஒசுத்திரியாவைச் சேர்ப்பதையும் தடுத்திருக்க லாம். பிரான்சிய முதலாளிகள் வீயன்னக் கடன் நிராகரிப்புத் திட்டத்தை ஆதரிக்க மறுத்தனர். அத்திட்டம் மே மாதத்திலே தோல்வியடைந்தது. யூன் மாதத்திற் குடிப்பதி ஊவர் அரசுகளுக்கிடை, கடன்களைச் சிறிது காலம் தாழ்த் திக் கொடுப்பதற்குச் சட்டவாயிலான இணக்கத் திட்டமொன்றைச் சமர்பூழித் தார். ஒகத்து மாதத்தில் இலண்டனை உலகத்தின் நிதி முறைக்குத் தலைநகராக்கிய வங்கிக் கோட்பாட்டைப் பிரித்தானியா அடியோடு மாற்றியதோடு, தனது தங்க நாணய நியமத்தையும் கைவிட்டது. காலதாமதமின்றி ஐந்தாம் யோட்சு அரசன் துணிவாக நாட்டின அரசாங்கமொன்றை அமைக்கும்படி உறுதியாக நின்றமை யால், இன்னும் கூடிய ஆபத்தான துயர்கள் தவிர்க்கப்பட்டன.
1931 செத்தெம்பர் மாதம் 19 ஆம் திகதி மஞ்குரியா மீது யப்பான் தன் தாக்கலை ஆரம்பித்தது. ஆறு மாதத்திற்குள் அந்தப் பெரிய மாகாணம் அதன் பலமான பிடியிற் சிக்கியது.
அதுவே அரசியற் பாதாள உலகத்திற்குப் போகும் வழிக்கு முதற்படியாயது.

Page 253

அத்தியாயம் 39
படுகுழிக்குள் இறங்கல்
முக்கியமான திகதிகள் :
芷93五 ஏப்பிரில் 14
செத்தெம்பர் 19
1932 பெப்புருவரி 2 யூலை 18
ஒற்ருேபர்
1933 சனவரி 30
பெப்புருவரி 24
யூன் யூன் 12
ஒற்முேபர் 14
1934 சனவரி
பெப்புருவரி 9
< 30
c
யூலை 29
1934 ஒகத்து
ஒகத்து 19
செத்தெம்பர் 18
ஒற்ருேபர் 9
பதின்மூன்ரும் அல்போன்சோ இசுப்பெயினை விட்டு
வெளியேறுதல். உவெசுமினித்தர் நியதிச் சட்டம். யப்பான் மஞ்குரியாவைத் தாக்குதல். படைக்கலந்துறத்தல் பற்றிய மாநாடு கூடுதல். துருக்கி, நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்பட்டது. இாாக்கு நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்பட்டது. ஒற்ருவாவிற் பொருளாதார பேரரசு மாநாடு. பெரிய பிரித்தானியா வர்த்தகக் காப்ழுைப் பின்பற்றல். இற்றிலர் சேர்மனியின் மண்டில நாயகனுதல். யப்பான், நாட்டுக் கூட்டவையினல் தண்டிக்கப்பட்டு
விலகியது. சேர்மனியின் சாத்தியமாக்கல் ' விதி. உலகப் பொருளாதார மாநாடு இலண்டனிற் கூடியது. படைக்கலந்துறத்தல் பற்றிய மாநாட்டிலிருந்தும்,
நாட்டுக்கூட்டவையிலிருந்தும் சேர்மனி விலகல்.
· t . .م . . பிரான்சில் சிதாவிசுகியைப் பற்றிய அவதூறு.
போற்கன் கூட்டணி. இற்றிலரின் கழிப்புத்திட்டம். ' மண்டிலநாயகன் தோல்வசு கொலைசெய்யப்பட்டான்.
கே. உவொன். சுசினிக்கு மண்டில நாயகனுதல். இந்தன்பேக்குக் குடிப்பதியின் மரணம்.
இற்றிலரின் சருவாதிகாரம் அங்கீகரிக்கப்பட்டது.
ஐ. சோ. ச. கு. நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்
பட்டது.
யூகோசிலவாக்கியாவின் அசசனன அலச்சாந்தரும் எம். பாதுவும் மாசெயில்சிற் படுகொலை செய்யப் பட்டனர். -

Page 254
484 படுகுழிக்குள் இறங்கல்
1935 சனவரி சேர்மனியுடன் மீண்டும் ஐக்கியப்படச் சார் பிரிவு
வாக்களித்தல். மாச்சு மீண்டும் படைக்கலம் பூணப் பெரிய பிரித்தானியாவின்
திட்டம். பிரான்சு கட்டாய இராணுவச் சேவைக் காலத்தை
நீட்டுதல். சேர்மனி மீண்டும் கட்டாய இராணுவச் சேவையைக் தொடங்கி வைத்தல்.
ஏப்பிரில் சிதெரசா முன்னணி.
மே 2 பிரான்சிய சோவியத்துக் கூட்டணி. யூன் இங்கிலந்திற்கும் சேர்மனிக்குமிடையிற் கடற்படை
சார்ந்த உடன்படிக்கை. ஒற்ருேபர் 3 இத்தாலி அபிசீனியாவைத் தாக்குதல்.
நவம்பர் 18 நாட்டுக் கூட்டவை இத்தாலிக்கு மாருகச் சட்ட
வனுமதிகளை வழங்குதல். பெரிய பிரித்தானியாவில் அமைதிக் குடவோலை. திசெம்பர் ஓவர்-இலாவல் அமைதித் திட்டம்.
1936 சனவரி 20 ஐந்தாம் யோட்சு மன்னனின் மரணம்.
மாச்சு 7 படையொழிக்கப்பட்ட இரையின் நதியைச் சேர்மனி
கைப்பற்றுதல். மே 9 இத்தாலி அபிசீனியாவை வலிந்திணைத்தல், யூலை 18 இசுப்பானிய உள்நாட்டுப் போர். யூலை 20 தொடுகடல் ஒப்பந்தம் மொன்றுாவிற் கைச்சாத்திடப்
till-l-gi. ஒற்ருேபர் உரோம்-பேளின் அச்சு. திசெம்பர் 11 எட்டாம் எட்டுவேட்டு முடி துறத்தல். 193? மே போல்வினுக்குப் பின்னர் நெவில் சேம்பலேன் முத
லமைச்சணுதல். செத்தெம்பர் 14 நியோன் உடன்படிக்கை. 1938 மாச்சு 12 சேர்மனி ஒசுத்திரியாவை வலிந்திணைத்தல்.
குடத்தனிலந்திற் கிளர்ச்சி. செத்தெம்பர் 29 மியூனிக்கு உடன்படிக்கை,
ஒற்றேபர் 1-10 சேர்மனி சூடத்தனிலந்தைக் கைப்பற்றுதல்.

படுகுழிக்குள் இறங்கல் 485
-
1939 பெப்புருவரி 27 பிரித்தானியாவும் பிரான்சும் பிராங்கோவை இசுப்
பெயினின் ஆட்சியாளனுக அங்கீகரித்தல். மாச்சு 15 சேர்மனி செக்கோசிலவாக்கியாவைக் கைப்பற்றுதல்.
23 சேர்மனி மெமலைக் கைப்பற்றுதல். 30 போலந்துக்கு ஆங்கில-பிரான்சிய உறுதிமொழி.
கிரீசுக்கும் உருமேனியாவுக்கும் உறுதிமொழி (ஏப்பிரில்
26). ஏப்பிரில் 7 இத்தாலி அல்பேனியாவைக் கைப்பற்றுதல்.
பெரிய பிரித்தானியா கட்டாய இராணுவச் சேை
யைக் கைக்கொள்ளல். ஒகத்து 23 இரசிய-சேர்மானிய கூட்டணி. செத்தெம்பர் 1 சேர்மனி போலந்தின் மீது படையெடுத்தல்.
3 பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் சேர்மனி மீது
போர்ப் பிரகடனஞ் செய்தல்.
சீரிழிவு
யப்பான் மஞ்சூரியாவைத் தாக்கிய பின்னர் சருவதேச நிலைமை தீவிரமாகச் சீரிழிந்தது. என்ருலும் நாட்டுக் கூட்டவை துருக்கியும் (யூலை 1933) ஈராக்கையும் (ஒற்ருேபர்) இரசியாவையும் (செத்தெம்பர் 1934) அங்கத்தினர் களாகச் சேர்த்துக்கொண்டமையால் வலிமைப்படுத்தப்பட்டது. ஆயினும், யப்பானும் சேர்மனியும் வெளியேறியமையும் (1933 இல்) அபிசீனியாவைத் தாக்கியதையிட்டு, கூட்டவை நடவடிக்கையெடுக்க இத்தாலி அதற்குப் பணியாமையும் ஒரளவிற்குக் கூட்டவையைப் புலவீனப்படுத்தின. அதன் வளர்ச் சிக்கு இன்னுமொரு பாதகமான நிகழ்ச்சி 1933 யூன் மாதத்தில் இலண்டனிற் கூடிய சருவதேச பொருளாதார மாசபையின் முயற்சி அனுகூலம் அடையாமை யாகும். ஆரவாரத்தொடு தொடங்கிய இம்மாநாடு சருவதேச நிதி நிலையில் நிலைத்து நின்ற குழப்பத்தைத் தடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாமென நம்பப்பட்டது. ஆனற் குடிப்பதி உரூசுவெற்றின் போக்கினல், மாநாட்டின் முயற்சிகள் வியர்த்தமாயின. ஆகவே, மாநாடு திடீரென முடிவுற்றது. சனவரி யில் அதொல்வு இற்றிலர் சேர்மனியில் அதிகாரம் பெற்றிருந்தான்.
இற்றிலர்
உவேமார் அரசியல் யாப்பு, குடியரசுச் சேர்மனியிற் பாராளுமன்ற அரசாங் கத்தைத் தாபிக்க எடுத்த உண்மையான முயற்சியைக் குறித்தது. ஆனல், அது அனுகூலமடையவில்லை. இத்தோல்விக்குக் காரணங்கள் வெளிப்படையானவை தொடக்கத்திலிருந்தே கூட்டுப் பிரசியப் படையாண்மைக் கட்சி, பொதுவுடை

Page 255
486 படுகுழிக்குள் இறங்கல்
மைக் கட்சியெனும் தீவிரவாதக் கட்சிகள் இரண்டோடும் மாறுபட்டிருந்த மையால் அரசியல் யாப்புத்தானும் வலிந்து கொண்டவொரு கடுநடையில் அமைந்திருந்தது. அது படிப்படியான மலர்ச்சியின் விளைபொருளன்று. கண்டிப் பான கோட்பாட்டாளரின் படைப்பாகும். உண்மையான பாராளுமன்ற அரசாங்கம் அதன் வெற்றிக்குக் கட்சி முறைமையிலேயே தங்கியுள்ளது. அந்த முறை விகித சமப் பிரதிநிதித்துவத்துடன் ஒருங்கிருக்க முடியாது. உவேமாரிற் கையாளப்பட்ட இம்முறையின் விளைவாகத் தேர்தலிலே தெரிந்தனுப்பப்பட்ட குழுக்களிலனேகம் பலமுடைய ஒரு நிருவாகத்தை ஆதரிக்கத்தக்க அளவு ஒன்றுபட்டனவாயிருக்கவில்லை. பாராளுமன்ற அரசாங்கத்திற்குத் தலத்தன் ஞட்சியில் நீண்டகால அனுபவமுடையதும், ஏற்ற அளவு பொருளாதார நிலைத் திறனுடையதும், அரசியலுணர்ச்சி படைத்ததுமான ஒரு நாடே தக்கது. போரிற்குப் பிந்திய காலச் சேர்மனியில் இச்சூழ்நிலைகளிருக்கவில்லை. இச் சூழ் நிலைகளில்லாமையே, பெருந்தனமோ உற்ற நண்பரோ அற்றவனும் கற்பனுசத்தி வாய்ந்தவனும் ஓரளவு கல்வியும் ஆர்வமும் வசீகரமான தோற்றமும் படைத்த இள வயதினனுமான ஓர் ஒசுத்திரிய கொற்றணுக்கு வாய்ப்பைக் கொடுத்தது.
உலகப் போரிற் பவேரியப் படைப்பகுதி ஒன்றிற் சேர்ந்து போர் செய்த பின், அதோல்வு இற்றிலர் வீயன்னவிலிருந்து மியூனிக்கு சென்று குடியேறினன். அங்கு விடுகளை அலங்கரிப்பவனுகத் தொழிலாற்றி, ஏழு உறுப்பினரைக் கொண்ட நாட்டின அபேதவாதத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்து அதையொரு வலிமை படைத்த சங்கமாக மாற்றியமைத்தான்.
இயல்புக்கு முரணுகத் தோற்றினும், உலூதென்தோப்பு சேனபதியுடன் சேர்ந்து இற்றிலர் உவேமார் அரசாங்கத்துக்கு விரோதமாக மியூனிக்கில் எழுந்த கலகத்திற் (1923 இல்) பங்குபற்றினன். அக்கலகம் தோல்வியடைய, ஒரு கோட்டையிற் சிறிது காலம் சிறைவைக்கப்பட்டான். அவன் மறியல் அவனுக்கு அரசியலின் ஒரு தத்துவத்தை ஆழ்ந்து யோசிக்க வாய்ப்பளித்தது. அத்துடன் (1925-1926 இல்) மைன்காம்பு (எனது போராட்டம்) என்ற நூலில் ஒரு திட்டத்தை முறைப்படுத்திக் கூறுதற்கும் வாய்ப்பளித்தது. நிருவாகம் செய்யும் போாற்றலாலும் கும்பல்களைக் கவரும் பேச்சு வன்மையாலும் இறைசு தாக்கில் நாற்சிக்குக் கட்சியினருக்கு ஒரு மேம்பட்ட நிலையைப் பெற்றுக் கொடுத்தான். 1933 சனவரி மாதத்தில் இந்தன்பேக்குக் குடிப்பதியின் சுயவிருப் பம் பெருது மண்டில நாயகனுனன். சேர்மானிய கூட்டாட்சிப் பாராளுமன்றத் துக் கட்டிடங்களை எரித்தழித்த குற்றத்தைப் பொது உடைமைக் கட்சியினர் மீது சுமத்தி, இற்றிலர், கிலியூட்டப்பட்ட கைத்தொழிலாளரின் ஆதரவைப் பெற்ருன். பின்னர் மண்டிலநாயகனிடம் தனி அதிகாரத்தை ஒப்படைக்கவும் உவேமார் யாப்பை அழிக்கவும் தூண்டினன். இலாந்தே என்னும் பழைய அரசு களின் உரிமைகளைச் சேர்மானிய கூட்டாட்சிக்கு மாற்றி, மண்டிலநாயகனுக்கு மாக்திரம் பொறுப்புள்ள ஆள்பதிகளின் அதிகாரத்தில் விட்டான். இவ்

படுகுழிக்குள் இறங்கல் 487
வண்ணமே இற்றிலர் பிசுமாக்கு ஆரம்பித்த வேலையைச் செய்து முடித்தான். அதாவது, பிரசியாவின் ' திருவடிக்கீழ் சேர்மனியை ஐக்கியப்படுத்தினன். யூன் 30 ஆம் திகதி ஒரு தீர்க்கமான கழிப்பினுல், தன்னுடன் போட்டியிடுபவர் களாகவோ எதிரிகளாகவோ வரக்கூடியவர்கள் எல்லார் உளத்திலும் திகில் உண்டுபண்ணினன். ஒகத்து 2 ஆம் திகதி மாசல் உவொன் இந்தன்பேக்கு காலமாக, மண்டிலநாயகன், சேர்மானியக் கூட்டாட்சிக் குடிப்பதி எனும் இரு பதவிகளையும் உடனே அதோல்வு இற்றிலர் ஏற்முன். பின்னர் யோசேப்பு கெபல்சு என்பானின் உதவியுடன் மைன்காம்பு என்ற நூலிற் கூறப்பட்ட திட்டம், முறைமைப்படி நிறைவேற்றப்பட்டது. கெசுத்தாப்பு என்ற இரகசியப் பொலிசு தனியொருவனுக்குரிய சுதந்திரங்களை அறவே அழித்தது. நாற்சிக்குக் கொள்கையினரையுடைய நாட்டினமொன்றை ஆக்கும் வகையிலே கல்வி திருத்தியமைக்கப்பட்டது. வேலையற்ற 60,00,000 பேர், படைச் சேவையிலும் போர்த் தளவாடம் செய்யும் தொழிற்சாலைகளிலும் வேலைபெற்றனர். யூதர்கள் இரக்கமின்றிக் கழிக்கப்பட்டனர். புதிய ஆட்சி முறைக்குத் தங்கள் பற்றுறுதி யைக் காட்ட முடியாத யாவரும் அடர்த்து பாசறையில் அடைக்கப்பட்டனர். சேர்மனி மீண்டும் படைக்கலம் பூண்டது. பக்கம் பக்கமாக வேர்சைப் பொருத்
தனை கிழித்தெறியப்பட்டது.
மீண்டும் படை பூணல்
சேர்மனி போன்று, பிறநாடுகள் சிலவும் மீண்டும் படைக்கலம் பூண்டன. 1934 இல் படைக்கல ஒழிப்பு மாநாடு ஈராண்டுகளாகக் கூடியிருந்தபின், ஈற்றில் தன் முழுத் தோல்வியை ஒப்புக் கொண்டு கூட்டத்தை ஒத்திவைத்தது. 1935இல் மீண்டும் தான் படைபூணும் திட்டத்தைப் பிரித்தானியா அறிவித்தது. பிரான்சு கட்டாயச் சேவைக் காலத்தை நீட்டியது. சேர்மனி கட்டாயச் சேர்ப்பை
மீண்டும் தழுவியது.
ஒசுத்திரியாவை வலிந்திணைத்தல்
ஐரோப்பாவில் வரவிருக்கும் கொந்தளிப்பைப் பற்றி முன்னெச்சரிக்கை கொடுத்த முதல் நாடு ஒசுத்திரியாவாகும். 1932 இல் ஒசுத்திரியாவிலுள்ள கிறித்த சமூக உடைமைவாதிகளின் தலைவனகிய கலாநிதி தோல்பசு என்பான் பழைமைபேணுவோர் யாவரையும் ஒன்று சேர்த்து, ஒசுத்திரிய நாற்சிகளுக்கு எதிராகத் 'தாய்நாட்டு முன்னணி" என்னும் சங்கத்தைத் தாபித்தான். 1932 இல் மண்டிலநாயகப் பதவி வகித்து, 1933 இல் சருவாதிகாரியானன். 1934 பெப்புரு வரி மாதத்தில், அவன் இரத்தம் சிந்தி வியன்னச் சமூகவுடைமைவாதியினரை நசித்துத் தோற்கடித்தான். இக்கடும் தண்டனையைச் சமூகவுடைமை வாதிகள் காங்களே தங்கள் மேல் வருவித்தனரோ, ஒசுத்திரிய பாசிசர் என்று கூறப்படும் வல்லாண்மை ஆட்சியாளரால் கலகஞ் செய்ய அவர்கள் தூண்டப்பட்டனரோ
என உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனல் தோல்வசின் மரணத்திற்குக்

Page 256
488 படுகுழிக்குள் இறங்கல்
காரணமாயிருந்தது அக்கலகமே. 1934 யூலை 29 ஆம் திகதி ஒசுத்திரிய நாற்சி களால் அவன் வஞ்சகமாகக் கொலைசெய்யப்பட்டான். அவர்கள் தங்கள் பாதகச் செயலால் எவ்வித நன்மையும் அடையவில்லை. அக்காலத்தில், ஒசுத்திரியாவின் சுயாதீனத்தில் அக்கறையுடையவனும் தோல்வசின் நண்பனும் ஆதாரவாளனு மாகிய முசோலினி என்பான் பேளின் விடுத்த அச்சுறுத்தலை எதிர்க்கப் பிறன்னர்க்கணவாய் வரையும் மூன்று படை வகுப்புக்களை அனுப்பினுன் ஒசுத் திரியாவை உடனே வலிந்திணைக்க இற்றிலர்க்கு யோசனையாதும் இருந்திருப்பின், அந்த யோசனை கைவிடப்பட்டது. தோல்வசின் நண்பனும் அவன் பூட்கையைத் தொடர்ந்து கைக்கொண்டவனுமாகிய கேட்டு உவொன் சுசினிக்குடன் (1936 யூலை 11) இற்றிலர் உடன்படிக்கை செய்தான். அவ்வழி, ஒசுத்திரியா தான் 'ஒரு சேர்மானிய நாடென’ ஒப்புக்கொண்டது; அன்றியும், சுசினிக்குப் புத்தியின மாக ஒசுத்திரியாவில் நாற்சிசச் சங்கங்கள் இருப்பதற்குச் சட்டவனுமதி கொடுக்க இணங்கினன் ; இந்நிபந்தனைகளுக்கேற்ப இற்றிலர் ஒசுத்திரியாவின் சுயவாட்சிக்குப் பொறுப்பளித்தான்.
இந்தக்காலத்திற் பிரான்சிய அரசியல் வரவரக் குழப்பமான நிலையை அடைந்து கொண்டிருந்தது. 1934 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், நிதி சம்பந்த மான பழிகளிற் சிக்கிய ஓர் இரசிய யூதன் சிறையிலிருந்து தப்புதற்காகத் தற்கொலை செய்து கொண்டான். அந்த 'இசுதாவிசுகி அவதூறு ' பொலிசு, குடியியற்சேவை, சட்டசபை ஆகியவை உட்படப் பிரான்சிய பாலனத்தில் ஊழல் மலிந்திருந்ததென்பதைக் காட்டிற்று. இளைப்பாறியிருந்த காசுதன் துரமேசு (1924-31 குடிப்பதி) நாட்டைக் காப்பாற்றும் வண்ணம் திருப்பிச் சேவைக்கு அழைக்கப்பட்டான். ஆனல், துரமேசுவின் திடமான பூட்கை அவன் ஒரு சருவாதிகாரத்தைத் தாபிக்கக் கருதினனென்ற சந்தேகத்தைக் கிளப்பி யது. ஆறு மாதங்களின் பின்னர், வலிமையற்ற எம். பிளாடின் என்பான்-பிற நாட்டலுவலகத்தில் எம். பாதுவுடன்-அப்பதவியில் அமர்த்தப்பட்டான். 1934 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்தில், பிரான்சியக் குடியரசின் விருந்தாளி யாக வந்த யூகோசிலாவிய அரசன் அலச்சாந்தரும் பாதுவும் மாசெயில்சு என்னுமிடத்திற் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இத்தாலி
உண்மையாக அப்படுகொலையைச் செய்த அங்கேரியச் சதியாளர் அச்செய லுக்கு எத்துணை பொறுப்புடையாாயிருந்தார்களோ அத்துணையாக இத்தாலி யும் அதற்குப் பொறுப்புடைத்து எனலாம். எனினும், எம். இலாவலுக்கும் (பாதூவின் பின் பதவிக்கு வந்தவன் இவன்) முசோலினிக்குமிடையில் முற்றிக் கொண்டிருந்த நட்புக் காரணமாக இத்தாலி கண்டனத்தினின்றும் தப்பியது. இத்தாலி அக்கணத்தில் அபிசீனியாவைத் தாக்க ஆரம்பிக்கும் தறுவாயிலிருந் தது. அபிசீனியாவை நாட்டுக்கூட்டவையிற் சேர்த்தற்கு முன்னின்று முயன்ற

படுகுழிக்குள் இறங்கல் 489
நாடு இத்தாலி-அதே இத்தாலிக்கு எதிராக அக்கூட்டவையின் தயவை அபிசீ னிய மன்னன் எயிலிசெலாசி இப்போது நாடினன். ஆனல், அவ்வேண்டுகோள் பயன்படவில்லை. (1935 மாச்சு), ஏப்பிரிலில் இராமிசே மாக்குதொனலும் சேர் யோன் சைமனும் இலாவலையும் முசோலினியையும் சந்தித்து ஒசுத்திரியசை இற்றிலர் தாக்காது தடுக்கும் வண்ணம் ‘சிதரேசா முன்னணி ' என்னும் ஒப்பந் தத்தை நிறுவினர்கள் (சிதரேசா அவர்கள் கூடிய இடப்பெயர்). பெரிய பிரித் தானியா மற்றைச் சிதரேசா நட்புறவாளர்களுக்கு அறிவிக்காது சேர்மனி யுடன் கடற்படைக் குறைப்புத் தொடர்பாக ஒருடன்படிக்கை நிறைவேற்றியது. யூன் மாதத்தில் அதை அறிந்த பிரான்சு கலக்கமுற்றது. ஒற்ருேபர் மாதத்தில் முசோலினி, சிதரேசாவில் நடந்த உரையாடலிலிருந்து இங்கிலந்தோ பிரான்சோ அபிசீனியாவைப் பற்றிப் பாரதூரமான அக்கறை கொள்ளமாட்டா வெனப் பூரணமாய் நம்பி, செனீவாவில் இரு மேற்குக் குடியாட்சிகளின் கோரிக்கைப்படி இத்தாலிக்கு மாருக உரைக்கப்பட்ட கண்டனத்தைப் பொருட் படுத்தாது, எயிலி செலாசிமீது தன் தாக்கலை ஆரம்பித்தான்.
சட்டவனுமதி
சட்டப்படி இத்தாலியை வெளியேற்ற வேண்டுமென நாட்டுக்கூட்டவை தயங் காது தீர்ப்பளித்தது. என்ருலும், அதை நிறைவேற்றும் பொறுப்பு பெரிய பிரித்தானியாவை மாத்திரம் சாருமென்பது விரைவில் வெளிப்படையாயது. முசோலினியின் கெளரவத்தையும் எயிலிசெலாசியின் முடியையும் காப்பாற்றி விடக்கூடிய ஓர் இணக்கத்தைப் பொருது நாடுகளுக்கு எடுத்துரைப்பதெனத் திசெம்பர் மாதத்தில், இலாவலும் சேர் சாமுவேல் ஒவரும் (பிரித்தானிய வெளி நாட்டு மந்திரி இவர்) ஒப்புக்கொண்டனர். அந்தத் திட்டம் தவறியது. அது உரிய காலத்திற்கு முன் வெளியாயது, இலாவல் வேண்டுமென்றே செய்த மடைச் செய்கையினுலாயிருக்கலாம். ஆனல், இங்கிலந்தில் இது வெளியாயதாற் கிளம் பிய ஆரவாரத்திற்குச் சேர் சாமுவேல் ஒவர் பலியாக்கப்பட்டான். இதனல் நன்மையடைந்தவன் ஒருவனே. அவன் 1936 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 7 ஆம் திகதி படையொழிப்புச் செய்யப்பட்ட இசையினிலந்தைக் கைப்பற்றினன். இங்கிலந்தும் பிரான்சும் இற்றிலரின் வெள்வெருட்டைக் கடிந்திருந்தால், சேர் மனி பின்வாங்கியிருக்குமென இப்போது தெரிகிறது. ஆயின், இற்றிலரின் வெருட்டு அப்போது பலித்தது. உலக்காணுேப் பொருத்தனையை அவன் படுமோசமாக மீறியதை இங்கிலந்தும் பிரான்சும் வாளா ஏற்றன. இற்றிலர் முதற் கட்டத்தில் வெற்றியடைந்தான். மே மாதத்தில் இத்தாலி அபிசீனி யாவை வலிந்திணைத்து யூலை மாதத்தில், இத்தாலிக்கெதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் நீக்கப்பட்டன. ஒற்ருேபரில் இத்தாலி சேர்மனியுடன் சேர்ந்து உரோம்-பேளின் அச்சினை உருவாக்கியது.

Page 257
490 படுகுழிகசூள் இறங்கல்
இசுப்பானிய கொந்தளிப்பு
முந்திய ஆண்டு யூலை மாதத்தில் ஐரோப்பிய துயர் நாடகத்தின் ஒத்திகை இசுப்பெயினில் ஆரம்பமாயது. போத்துக்கலில் 1928இல் சலாசர் என்பான் நிறுவியதும் நலமுடையதும் மீச்செலவற்றதுமான சருவாதிகாரத்தை எடுத்துக் காட்டாகக் கொள்ள இயலாமலோ , விரும்பாமலோ இசுப்பெயின் குழப்பமடைந் தது. ஊழல் நிரம்பியவர்களும் வினைத்திறனற்றவர்களுமான அரசியலாளரின் குழுக்கள் இசுப்பானியப் பாராளுமன்றத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தன. மொருேக்கோ புரையோடிய ஒரு புண்போன்றிருந்தது. 1923 இல் பிரிமோதி இரி வேரா என்பான் படையின் ஆதரவுடன் ஒரு முடி சார்ந்த சருவாதிகாரத்தை ஏற்படுத்தினன். அடுத்த ஆறு ஆண்டுகளாகத் தன் நாட்டைச் சீர்ப்படுத்தினன். பட்டினப் பொதுவுடைமையாளரை நசித்து ஒடுக்கினன்; எப்பொழுதும் குழப்ப முற்றிருந்த பாசிலோனவை மையமாகக் கொண்ட பிரிப்புளமுடையோரின் இயக்கத்தை எதிர்த்தும் நின்றன் ; விவசாயத்தை ஊக்கப்படுத்தினன்; நிதி நிலையிலும் . கைத்தொழிலிலும் சமநிலையை ஏற்படுத்தின்ை ; குழப்பியிருந்த மொருேக்கோவின் நிலைமையைச் சீர்ப்படுத்தினன். ஆயின், சருவாதிகாரப் போக்குடையணுயினும் விசுவாசத்தொடு தொண்டாற்றிய அவ்வமைச்சனை 1930 இல் 13 ஆம் அல்போன்சோ பதவியினின்றும் நீக்கினன். அவன் பதவி நீக்கப்பட்டதற்குக் காரணம் அவனுடைய சீர்திருத்தங்களை வலிமைபடைத்த சேனை எதிர்த்தமையே. பிரிமோ கி இரிவேராவின் பதவிநீக்கம் முடியாட்சியின் முடிவை உறுதிப்படுத்தியது. 1931 இல் அல்போன்சோ அரசன் தனது நாட்டை உள்நாட்டுக் கலகத்தில் அமிழ்த்தவிரும்பாது, இசுப்பெயினினின்றும் வெளியேறி
னன்.
ஆயினும், உள்நாட்டுக் கலகத்தைத் தாமதப்படுத்த மட்டுமே முடிந்தது. அது 1936 தொடக்கம் 1939 வரை மும்முரமாய் நடந்தது. அதன் விளைவு தெளிவற்ற தாயிருந்தது. ஆனல், புகழ்பெற்ற போர் விானன பிரான்சிசுக்கோ பிராங்கோச் சேனபதி 1939 வரையிற் பாராளுமன்றக் குடியாட்சியினரின் எதிர்ப்பைப் படிப் படியாக மேற்கொண்டான். இவன் மொருேக்கோவிலே திறமையாகச் சேவை செய்த பின்னர், 1935 இல் பெருந்தொகையான ஆபிரிக்கச் சோனகப் படை ஞர்களைத் கிரட்டிக்கொண்டு இசுப்பெயினுக்கு மீண்டான். பிராங்கோவின் வெற்றிக்கு முசோலினி பூரணமாகப் படைக்கலம் பூண்ட 1,00,000 இத்தாலியரை யும் ஒரு பெரிய ஆகாய விமானப் படையையும் உதவியதாக உரிமை பாராட்டி னன். சேர்மனியும் இதைப்போன்ற உதவியளித்தது. குடியரசினர்க்குச் சோவியத்து இரசியா இயலுமான ஆதரவளித்தது. பிரித்தானியாவையும் பிரான்சையும் அவ்வந்நாட்டுச் சமூகவுடைமை வாகிகள் நெருக்கிய போதிலும், பிரித்தானியக் கப்பல்களைச் சில நீர்மூழ்கிக் கப்பல்கள் தாக்கியபோதும், அந் நாடுகளிரண்டும் இறுதிவரையும் தலையிடாப் பூட்கையைக் கடைப்பிடித்தன். பழி

படுகுழிக்குள் இறங்கல் 49
செய்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களுடையனவென ஒருவரும் ஏற்றுக்கொள்ளத் துணியாமையினல், நியோன் என்னுமிடத்திற் கைச்சாத்திடப்பட்ட உடன் படிக்கை அந்தத் தாக்கல்களுக்கு முற்றுப்புள்ளியிடப் போதுமாயிருந்தது. பிரான்சும் இங்கிலந்தும் இயன்றவரை பிணக்குக்களைப் பெருக்க விடாது தடுக்க முயன்றனவென்பது உண்மை. ஆனல் சிறிது காலத்துக்கு மாத்திரம் அவைகள் இதில் வெற்றிகண்டன. பித்தேறிய உலகில் நல்லறிவும் உண்டு என்பதற்குச் சில அறிகுறிகள் காணப்பட்டன.
புதிய துருக்கி
1923 ஆம் ஆண்டிற்கும் 1938 நவம்பரில் அவன் மரணத்திற்குமிடைப்பட்ட காலத்தே கமால் புதிய துருக்கியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணியினுக்கு இக் கால வரலாற்றில் ஈடில்லை எனலாம். அவன் ஆட்சியில் துருக்கி உண்மையாக மறுபிறப்பெடுத்தது எனலாம். ஆசிய நிலத்தில் அவன் அமைத்த புதிய நாட்டின் மீது முற்றிலும் புதிய ஒரு பண்பாட்டைத் திணித்தான். அரசாங்கம், விவசாயம், வணிகம், கைத்தொழில், சட்டம், கல்வி, சமூகவழக்கங்கள் (பிரதானமாக பெண்களைப் பாதிக்கும் வழக்கங்கள்) மத்திய நிருவாகம், உள்ளூராட்சி, வாழ்க்கை நல ஏற்பாடுகள், பொதுமக்கள் சுகாதாரம் ஆகிய ஒவ்வொரு துறை யையும் "காசி' என்னும் பட்டமுடைய கமால் முற்முக மாற்றியமைத்தான். அவன் ஆட்சியில், துருக்கிய வெளிநாட்டுப் பூட்கையிற் புதிய ஒரு திருப்ப மேற்பட்டது. துருக்கி 1932 இல் நாட்டுக் கூட்டவையிற் சேர்க்கப்பட்டது; 1934 இல் ஒரு போற்கன் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது ; 1936 இல் ஈரான், அபு கானித்தான், இராக்கு ஆகிய நாடுகளுடன் ஒருடன் படிக்கை செய்தது. ஆனல் 1935 இல் மொன்ருேவிற் செய்த தொடுகடல் ஒப்பந்தமே கமாலின் குழியற் சாதனைகளுக்குச் சிகரமாய் அமைந்தது. சட்டத்துக்கமைந்த ஒரு நடை முறைப்படி அந்தத் தொடுகடலை அரண் செய்யும் உரிமையைத் துருக்கி திரும்பப் பெற்றது. 1833 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாகத் துருக்கி தன் நாட்டில் அதிகாரஞ் செலுத்தியது."
பிரித்தானியப் பேரரசும் பொதுநலவாயமும்
புதிய துருக்கி புதிய உலக நிலைமைக்கு உறுதிப்பாடு அளிக்குமென நாம் எதிர் பார்த்தல் இயல்பே. நீண்ட காலமாக, ஐக்கிய அமெரிக்க நாடும் பிரித்தானியப் பேரரசும் பொது நலவாயமுமே அத்தகைய உறுதிநிலையை அளிக்கும் அமிசங் களாயிருந்துள. முன்னையது பற்றி, ஐரோப்பிய மலர்ச்சியைப் பற்றிய இச் சுருக்க உரையில் அதிகம் சொல்லல் அமையாது. இங்கு எடுத்துக்கொண்ட கட்டுரைப் பொருளுக்குப் பின்னையது பற்றிச் சில கூறல் அமையும.
1 விபரத்திற்கு மரியற்றின் "கீழைத்தேசப் பிரச்சினை” எனும் நூலின் (4 ஆம் பதிப்
1940) 559-575 பக்கங்களை நோக்குக.

Page 258
492 படுகுழிக்குள் இறங்கல்
பாரிசு மாநாட்டைத் தொடர்ந்த ஆண்டுகளில் சுயநிருணயம்' என்னும் ‘இசைவிலாச் சுலோகம் பிரித்தானியப் பேரரசையும் பாதித்தது. 1917 இல் தென் அயலந்திற் கலகம் ஆரம்பமாகி உடனே அடக்கப்பட்ட பொழுதிலும், அதன் பின்னர் எழுந்த குழப்பம், 1919 தொடக்கம் 1921 வரை, உள்நாட்டுப் போர் எனும் படியாய் விரிந்தது. ஒத்திப்போடப்பட்ட சுயவாட்சி விதி 1920இல் நிறைவேற்றப்பட்டது. இவ்விதி பெல்வாத்திலும் தபிளினினும் உபபாராளு மன்றங்கள் அமைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. வட அயலந்திலுள்ள ஆறு புரட்டெசுத்தாந்த மாநிலங்கள் விருப்பமின்றியே அத்திட்டத்தை ஏற்றன. ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தைக் கை விடாது, அத்திட்டத்தை அவை ஓரளவு வெற்றியுடன் செயற்படுத்தின. தென் அயலந்து அத்திட்டத்தை ஏற்காது சுயவாட்சிக்காகத் தொடர்ந்து போர் செய்தது. பிரித்தானியப் பற்றுடையோர் மீதும் அவர்கள் உடைமைகள் மீதும் மற்றையோர் செய்த நாகரிகமற்ற கொடுமைகளுக்காகப் பழிவாங்கப்பட்ட போது பிரித்தானியர் அதிர்ச்சி அடைந்தனர். 60,000 பிரித்தானியப் போர் வீரர்கள்தாமும் தென் அயலந்தை அடிபணியச்செய்ய இயலவில்லை. போரிற் களைத்த பிரித்தானியா எதிர்ப்பைக் கைவிட்டு 1921 இல் அயலந்துக்குப் பூரண 'ஆணிலப்பதம்’ அளிக்கும் ஒரு பொருத்தனையை நிறைவேற்றியது. அல்சிற்றர் மாகாணம் இந்தப் பொருத்தனையிலிருந்து விலகும் விருப்ப உரிமையைப் பயன்படுத்திற்று. தென் அயலந்து பொருத்தனையின் நிபந்தனைகளை மீறி நடந் துளது. இரண்டாம் உலக யுத்தத்தில் நடுநிலைமை பூண்டும் பிற வழிகளாலும் தென் அயலந்து பேரரசினின்றும் விலகி, சேர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களுக்குப் பெரிதும் உதவியது.
எகித்து
எகித்திய நாட்டின வாதிகளும் ‘சுயநிருணயம்' என்னும் கொடியை உயர்த் திப் பிரித்தானியப் புரப்புமுறைக் கெதிராகக் கலாம் விளைவித்தார்கள். கலகம் இலகுவாக ஒடுக்கப்பட்டது. ஆணுல், 1922 இல் பெரிய பிரித்தானியா அம் முறையை வரையறுத்து, குறித்த சில நிபந்தனைகளுக்கமைய எகித்தை அதன் சொந்த அரசனின் கீழ் ஒரு ' சுயேச்சையான இறை அரசு ' எனப் பிரகடனஞ் செய்தது. சுயசுக்கால்வாயைக் காக்குமுகமாகவும் பிறநாட்டுத் தாக்குதலி னின்றும் எகித்தைப் பாதுகாக்குமுகமாகவும் பிரித்தானிய காவற்படையொன்று தொடர்ந்து இருத்தல் வேண்டுமென்பதைப் பொருத்தனைப்படி எகித்து ஏற்றுக் கொண்டது 1938 ஆம் ஆண்டிலேயாம். இப்பொருத்தனையின் பயன் 1943 இற் பெரும் போரின்போது தெளிவாகப் புலப்பட்டது.
இந்தியா
இந்திய நாட்டினவுணர்ச்சி, ஒரு நூற்முண்டாக இந்தியாவிற் பிரித்தானிய
அரசாங்கம் பின்பற்றி வந்த தாராளமான பூட்கைகளின் பெறுபேருகும்.
ஆயினும், பெரும்போரின் போது நிகழ்ந்த சில சம்பவங்களும், அப்போரின் பய

படுகுழிக்குள் இறங்கல் 493
கைச் சுயநிருணயம் வேண்டி எழுந்த கோரிக்கையும் அவ்வியக்கத்திற்கு மேலுங் கிளர்ச்சியூட்டின. போர் ஆரம்பித்த கால முதல் ஆஃணக் குழுக்களாலும் விசாரணைகளாலும் சட்டங்களாலும் (1919-1935) பாலனத்தாலும் இங்கிலந்து இந்திய நாட்டின வாதிகளின் ஒவ்வொரு நியாயமான கோரிக்கையையும் நிறை வேற்றப் பன்முறையும் முயற்சி செய்துளது. தீவிர வாதிகளின் விடாப்பிடியான போக்கினுற்போலும் இம்முயற்சிகள் யாவும் விணுயின. சிக்கல் நிலை தெளி வாகாது தொடர்ந்தது.
ஆட்சிப் பகுதிகள்
பெரிய பிரித்தானியாவுக்கும் அதன் சுய ஆட்சிப் பகுதிகளுக்குமிடையே நிலவிய தொடர்புகளின் வரலாறே மிகவும் வேறுபட்டது. பாரிசு மாநாட்டின் போதும் அதன்பின்னும் நிலவிய சூழ்நிலையால் இந்நாடுகளும் ஒரளவு பாதிக்கப் பட்டனவென்பது உண்மையே. எனினும் நாட்டினப்பதம்’ எனும் உரிமை நிலையை இவ்வாணிலங்கள் கோரி நின்றபோது, 'தாய்நாடு அதற்கு இணங்கிய தோடு, 1926 ஆம் வருடத்துப் பேரறிக்கையிலும் உவெசுமினித்தர் நியதிச் சட்டத்திலும் (1931) அத்தத்துவத்திற்கு உருவங் கொடுத்தது. இந்நியதிச் சட்டங் காரணமாக ஆணிலங்கள் விலகிச் சுதந்திர நாடுகளாகும் என்று பலர் அஞ்சினர். ஆயின் 1936 கிசெம்பரில் முடிதுறப்பு நெருக்கடி நேர்ந்தபோது, அவ் வாணிலங்களையெல்லாம் இறுகப்பிணைக்குங் கருவியாக அது விளங்கிற்று. வரி முறை பற்றி ஆணிலங்கள் கொண்டிருந்த சில கருத்துக்களை ஒரளவிற்கு ஏற்கு முகத்தால், 1932 ஆம் வருடத்துப் பாதீட்டிலும் அவ்வாண்டு இலையுதிர் காலத்தே ஒற்றுவாவில் நடைபெற்ற பேரரசுப் பொருளாதார மாநாட்டிலும் தீவிரமான
முயற்சிகள் செய்யப்பட்டன.
பிரித்தானியப் பேரரசும் அமெரிக்க ஐக்கிய அரசும் இந்த உறுதியற்ற உலகத்தில் உறுதி பயப்பனவாக இருந்தன." அந்தப் பெரிய வல்லரசுகளின் நிலை இன்றுமதுவேயாகும், நாடுகள் புரியும் போர் முடிந்து, நீதியின் அடிப்படை யில் நிலையான அமைதி சிறப்பாயமைந்தபின், எல்லை கடந்த குலைவுநிலை யிலிருந்து ஒழுங்கை மலரச் செய்யும் அவற்றின் முயற்சிக்கு இரசியாவும் விடுதலை அடைந்த சீனுவும் ஆதரவளிக்குமென நம்பப்படுகின்றது.
இதற்கிடையில், அஞ்ஞானச் சத்திகளுக்கும் மெய்ஞ்ஞானச் சத்திகளுக்கு மிடையில் நிகழும் இந்த மாபெரும் போராட்டில் உலகம் இன்னும் சிக்கியிருக் கின்றது. இப்போது அந்தப் போரின் அண்மைக் காரணங்களைப் பற்றிச் சுருக்க மான குறிப்புக்கள் சில கூறல்வேண்டும்.
ஒசுத்திரியாவை வலிந்திணைத்தல்
1936 பெப்புருவரி 12 ஆம் திகதி, இற்றிலர் ஒசுத்திரிய மண்டிலநாயகளுண சுசினிக்கு என்பானைப் பேத்தக்காடினுக்கு அழைத்தான். அவர்கள் சந்திப்பின் போது, நுண்ணுணர்வும் நோதக்க செய்யாப் பண்புமுடைய சுசினிக்கின் உள்ள

Page 259
494 படுகுழிக்குள் இறங்கல்
மும் உயிரும் நைந்திடச் செய்தான் இற்றிலர். இதஞல் இற்றிலர் உன்மத்தனல்ல னயினும் தறுகளுளன் என்பதும் உலுத்தன் என்பதும் வெளிப்பட்டன. இரக்கத்திற்குரிய சுசினிக்கு இற்றிலரின் அக்கிரமத்தினல் முற்முகத் தளர்வு அடையும் நிலையை அடைந்தான். இதனல் ஒசுத்திரிய நாற்சிகளின் தலைவனகிய செயிசு இன்குவாத்து என்பானிடம் உள்நாட்டலுவல் நிருவாகத்தைக் கொடுப்ப தாகவும் வெளிநாட்டலுவல்களை நடத்துவதில் இற்றிலரின் உத்தரவின்படி
நடப்பதாகவும் அவன் ஒப்புக்கொண்டான்.
சுசினிக்கு வீயன்னவுக்குத் திரும்பிய உடனும் ஒசுத்திரிய சுய ஆட்சி சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளையும் பற்றி மாச்சு 13 ஆம் திகதி குடி யொப்பம் எடுக்கும்படி கட்டளையிட்டான். இக்கட்டளை இற்றிலருக்கு அடங்காக் கோபத்தை மூட்டியது. மாச்சு 12ஆம் திகதி ஒசுத்திரியாவுக்கு ஒரு சேர்மா னியப் படையை அனுப்பி, ஓர் இரட்சனுக்கு எத்துணை ஆரவாரத்தொடு வர வேற்பு அளிக்கப்படுமோ அத்துணை ஆரவாரத்தொடு, கொடிகளுயர்த்தப்பட்ட வியன்ன விதிகள் வழியே இற்றிலர் பவனி சென்ருன்’ பத்து ஆண்டுகளுக்கு முன் ஒசுத்திரியா குடியரசு நாடான சேர்மனியுடன் ஐக்கியம் பூணுவதை வர வேற்றிருக்கலாம். ஆனல், ஏப்பிரில் 10 ஆம் திகதி இவ்வைக்கியத்தை ஒப்புக் கொண்ட குடியொப்பம் வெறும் கேலிக் கூத்தாகும். சேர்மனியுடன் சேர்க்கப் பட்ட பின்னர் சேர்மானியக் கூட்டாட்சியில் ஒரு மாகாணமாகத் தானும் ஒசுத் திரியா இருக்கவில்லை. சேர்மனியின் ஏனைய பகுதிகளைப் போல் ஒசுத்திரியாவும்
பல மாகாணங்களாகத் துண்டாடப்பட்டது.
செக்கோசிலவாக்கியா
ஒசுத்திரியாவிற்கடுத்து வருவது செக்கோ சிலவாக்கியாவாகும். ஒசுத்திரியா சரணடைந்தமையால், பொகீமியாவின் ஒரு மருங்கு தாக்குதற்கு எளிதாயது. ஆனல், அதன் வட வெல்லை இயற்கையாகவே தாக்கற்கரிதாய் விஞ்ஞான முறைப்படி அரண் செய்யப்பட்டதாய். மத்திய ஐரோப்பாவில் மிக வலிய காவலரணுய், போற்கனில் இற்றிலரின் ஆதிக்கம் பரவுதற்குப் பெருந் தடையுமா யிருந்தது. பொகீமியாவிலுள்ள செக்கர்களுக்கும் சேர்மானியருக்குமிடையே நெடுங் காலமாக 'அராத்தற்பாடு ' இருந்தது. பொகீமிய சேர்மானியருள் அக்கால் எழுந்த கிளர்ச்சி எவ்வளவிற்குத் தன்னியல்பானதென்பது வாதத்துக் குரிய விடயமாகும். எனினும், அப்பிரதேசத்தைக் கவருதற்குப் பீடிகையாக இற்றிலரே அக்கிளர்ச்சியைத் தூண்டிவிட்டான் என்பது உறுதி. அன்றியும், இற்றிலரின் நோக்கம் யாது என்பதும் ஐயத்துக்கிடமின்றிப் புலனுயிற்று. இரசியாவும் பிரான்சும் செக்கோசிலவாக்கியாவிற்கு உதவி செய்வதாக வாக்குக்
இச்சந்திப்பு பற்றிய உயிர்ப்படு வரைவு ஒன்று சி. ஈ. ஆர். கேயிடு எழுதிய “வீழ்ந்த காவலரண்கள்” எனும் நூலின் 20 ஆம் அத்தியாயத்தில் உளது. *கலைநிதி சுசினிக்கைப் பற்றி அதன்பின்னர் வேருெரு செய்தியும் கிடைத்திலது.

படுகுழிக்குள் இறங்கல் 495
கொடுத்திருந்தன. பெரிய பிரித்தானியா அவ்வாறு வாக்குக் கொடுக்காதிருந்தும், இரசியாவுடன் ஒத்துழைக்க இன்னும் வெறுப்புக்கொண்டிருந்தும், பிரான்சுடன் ஒத்துழைக்குமென்பதைத் தெளிவாக்கியது. ஆனல், பிரான்சோ இங்கிலந்தோ போரிற்கு ஆயத்தமாயிருக்கவில்லை. போரைத் தடுக்கப் பெரு முயற்சிகள் செய்தன. 1938 செத்தெம்பரில் இருமுறை சேம்பலேன் இற்றிலரை நேரே சந்தித்துப் பேசச் சேர்மனிக்கு விமான மூலம் பயணஞ்செய்தான். செத்தெம் பர் 30 ஆம் திகதி போரைத் தவிர்க்க முடியாதென்று தோன்றியபொழுது, சேம்பலேன் பிரான்சிய முதலமைச்சர் தலாதியருடனும் முசோலினியுடனும் மியூனிக்கில் இற்றிலரைச் சந்தித்து அவனெடு முறையாய் அமைந்த உடன் படிக்கையை நிறைவேற்றினன். உலகம் முழுவதும் பிரித்தானிய முதலமைச்ச னைத் தீரமுள்ள ஓர் அமைதி காவலனென மகிழ்ந்து போற்றியது.
ஆனல், அமைதி நிலவவில்லை. விரைவில் இற்றிலர் பூண்ட போலி வேடத்தை முற்முகக் கலைத்தான். ஒசுத்திரியாவின் கதியே செக்கோசிலவாக்கியாவுக்கும் நேர்ந்தது. ஒற்ருேபர் மாதத்திற் சேர்மனி, பொகீமிய குடத்தனிலந்தை அடிப்படுத்திற்று ; போலந்தர் தெச்சன் பகுதியைக் கைப்பற்றினர். மகியாருக் கும் கொள்ளையில் ஒருபங்கு கிடைத்தது. ஆனல், பெரும்பகுதி-பொகீமியாவும் மொரேவியாவும்-சேர்மனியைச் சேர்ந்தடைந்தன. 1939 மாச்சு 15 ஆம் திகதி இற்றிலர் தானே பிராக்கு நகருள் வெற்றிக் கேற்ற ஆடம்பரங்களுடன் பிரவே சித்தனன்.
மெமல் ; போலந்து
செக்கோசிலவாக்கிய இராச்சியம் அழிந்தெரழிந்தது. செக்கோசிலவாக்கியா வின் பின்னர் மாச்சு 23 ஆம் திகதி, இலிதுவேனியாவினின்று எவ்விதமான எதிர்ப்புமின்றி, மெமல் என்னுமிடம் சேர்மனிக்காயது. மெமலுக்குப் பின்னர் போலந்து இடம்பெற்றது. தான்சிக்குப் பகுதியையும் போலிய ஊடு வழியையும் இற்றிலர் கோரிய பொழுது, சேர்மனி போலந்தைத் தாக்கினற் பெரிய பிரித்தா னியா போலந்திற்கு முழு ஆதரவு கொடுக்குமெனச் சேம்பலேன் அறிக்கை விடுத்தான். இத்தகைய உறுதிமொழி கிரீசுக்கும் அளிக்கப்பட்டது. பிரித்தனேடு பிரான்சும் இவற்றிற் சேர்ந்துகொண்டது.
இவ்வித உறுதிமொழிகளின் பயன்தான் என்ன? 1939 ஏப்பிரில் 7 ஆம் திகதி, புது வெள்ளியன்று இத்தாலி அல்பேனியாவைச் சடுதியாகத் தாக்கி 1,00,000 படைஞர்கொண்டு அந்நாட்டைக் கைப்பற்றியது. இது கிரீசின் காப்புக்கு நேரடி ான ஆபத்தாயிற்று. என்ருலும் கிரீசிற்கு எதிரான நடவடிக்கைகள் 1941 வரை
ஒத்திவைக்கப்பட்டன.

Page 260
496 படுகுழிக்குள் இறங்கல்
பெரிய பிரித்தானியாவும் இரசியாவும்
இத்துயர நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்முகத் தீவிரமாக நிகழ்ந்து கொண் டிருந்தபொழுது, இந்தச் சூழ்நிலையின் உயிர்நாடி இரசியாவிடமிருப்பதாகவும் அந்நாட்டுடன் உடன்படிக்கை செய்வதே வாய்ப்பாகுமென்றும் இங்கிலந்து பூரணமாய் நம்பியது. இந்நோக்கத்துடன் 1939 இலையுதிர்காலத்தும் கோடை காலத்தும் மொசுக்கோவில் இணக்கப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆயின், இசுத்தாலினே இங்கிலந்துடன் இணங்குவான் போல் நடித்தானேயன்றி, அவனுக்கு உண்மையில் அத்தகைய எண்ணமெதுவும் இருக்கவில்லை. ஒகத்து 23 ஆம் திகதி ஐக்கிய சோவியத்து அரசு சேர்மனியுடன் மீச்செலவின்மை ஒப்பந்தத்தை நிறைவேற்றியதென்ற செய்தி கேட்டு உலகம் மலைத்தது. பெரிய பிரித்தானியாவையும் பிரான்சையும் இசுத்தாலின் முற்முக ஏமாற்றிவிட்டான். மாசல் இசுத்தாலின் இற்றிலரை ஏமாற்றினன? அல்லது இற்றிலர் இசுத்தாலினை ஏமாற்றினுணு ? இதை உலகம் ஒருநாள் அறியும்.
இவ்வொப்பந்தத்தினுல் ஏற்பட்ட முதல் விளைவு விரைவிற் புலனுயது.
இரு முன்னணிகளில் ஒரே காலத்திற் போர் புரிய வேண்டிய பயமின்றி இற்றிலர் தங்குதடையின்றிப் போலந்தைத் தாக்கக் கூடியதாயிருந்தது. செத்தெம்பர் 1 ஆம் திகதி வைகறைப் பொழுதிற் போலந்தைத் தாக்கினன். செத்தெம்பர் 3 ஆம் திகதி பெரிய பிரித்தானியாவும் பிரான்சும் சேர்மனி மீது போர்ப் பிரகடனஞ் செய்தன. ஆயின், போலந்துக்கு நேரடியான உதவி செய்ய இவ்விரு நாடுகளிலெவற்றிற்கும் முடியவில்லை. செத்தெம்பர் 4 ஆம் திகதி யப்பான் தன் நடுநிலைமையைப் பிரசித்தஞ் செய்தது. படைநடவடிக்கைகளைத் தான் தொடங்கி வைப்பதில்லையென இத்தாலி முன்னரே பிரசித்தஞ் செய்துவிட்டது.
இவ்வண்ணமே இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாயது. இப்பொழுதும் மும் முரமாய் நடக்கிறது (1944). ஆனல் ஏலவே சூழ்நிலைகள் பெரிதும் மாறிவிட்டன. போலந்து விாமான-ஆனற் பலனற்ற-எதிர்ப்பின் பின்னர் முற்ருயழிக்கப் பட்டது. இற்றிலரும் இசுத்தாலினும் போலந்தைப் பகிர்ந்துகொண்டனர். இது சிறிது காலம் மாத்திரம் நிலைத்தது. 1941 இல் பங்காளருக்கிடையில் மனத்தாங் கல் ஏற்பட்டது. இதற்கிடையில் இற்றிலர் தென்மாக்கையும் நோவேயையும் ஒல்லந்தையும் பெல்சியத்தையும் கைப்பற்றிவிட்டான். பிரான்சு (1940 மேயூன்) சேர்மனியின் முதற்முக்கல்களோடு வீழ்ச்சியடைந்தது. பிரித்தானியப் பேரரசு தனியாகப் போர் செய்து இங்கிலந்து மீது நடக்கவிருந்த படையெடுப் பைத் தடுத்ததுமல்லாமல், விமானப் போரிற் சேர்மனியை மீக்கொண்டு மகத்தான வெற்றியும் பெற்றது.
ஆயினும், இரண்டாம் உலகப்போர் முடிவெய்தி, அதன் எதிர்கால விளைவு களுந் தெளிவாய பின்னரே அப்போரின் சரிதையை நாம் விரிவாக எழுதலாம். மனித குலத்தின் எதிர்காலம் முழுவதையும் ஆழமாகப் பாதிக்கக்கூடிய இப் பெரும் போரின் தொடக்கம் பற்றி நுதல்வதுடன் இந்நூல் முடிகின்றது.


Page 261
|-|-|- !|- ---- - ||-||- |- |-||-
|- ! - |- |- . . . . |-|- |-| ||
| ± |- . - |-|- -|- -- -|- |-|-||-+ *-|-|- ----
|-|-
|- ---- |- | |- |-|- |- * | , ، ، |- -| |- |- |- |- |- ,
|- |-|- | __ ___ |