கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்

Page 1


Page 2

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கே.ரீ.கணேசலிங்கம்
முதுநிலை விரிவுரையாளர் அரசறிவியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
GaFLDLDG சேமமடு பதிப்பகம்
2OO8

Page 3
நூற் தலைப்பு நூலாசிரியர் பதிப்பாளர் பதிப்புரிமை பதிப்பாண்டு எழுத்து
859556 Uņ66
விலை அச்சிடல்
வெளியீடு
ISBN - NO
Title
Author
Edition
Price Published by
Printed by
நூற் குறிப்பு தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் கே.ரீ.கணேசலிங்கம் சதபூபத்மசீலன் ஆசிரியருக்கே கார்த்திகை தி.பி.2039 (2008) 11 புள்ளி 192
1000 ரூ.480 சேமமடு பதிப்பகம், கொழும்பு -11 Qgit...CL: O777 345 666. சேமமடு பொத்தகசாலை, யுஜி.50, பீப்பள்ஸ் பார்க், கொழும்பு - 11 தொ.பே:011-2472362,2321905.
66ör6OT65GF6ò : Chemamadu(ayahoo.com
978 - 955 - 1857-25 - 7
THENNASIYAWIN ARASYAL KALASARAM K.T. Kanesalingam C)
2008
RS.480/- Chemamadu Poththakasalai UG.50, People's Park, Colombo -11. T.P.: 011-2472362,2321905. Chemamadu Pathippakam, Colombo -11.
TPO777 345 666. E-mail : ChemamaduCDyahoo.com

முன்னுை
இலங்கையில் தமிழ் பேசும் மக்களது இருப்பு, வாழ்விடம் அரசியலாக்கப்பட்டுள்ளது. தமது எதிர்காலத்துக்கான சிந்தனையும் செயலும் மாற்று அரசியல் முறைமையை வேண்டி நிற்கிறது. குறிப்பாக சனநாயகம் சீராக அமுல்படுத்தப்படாத சமூகங்களில் முரண்பாடான அரசியல் கலாசாரப் பண்புகள் முகிழ்த்து வருவது தவிர்க்க முடியாது. இலங்கையில் காலனித்துவம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இருந்து இந்தப் பண்புகளே - முரண்பாடான அரசியல் கலாசாரமே தலையெடுத்து வந்துள்ளது. இதனால் அரசியல் அமைப்பு ஒழுங்குகளையும், ஆளும் சனநாயக விழுமியங்" களையும் நிராகரித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற மனோபாவங்கள் மக்களிடம் வளர்ச்சியடைவதை அவதானிக்கலாம்.
“மனிதரின் விதி தற்காலத்தில் அரசியல் வாயிலாகத் தன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது" என்று அறிஞர் தாமஸ்மன் குறிப்பிட்டார். இந்தக் கூற்று தமிழ்பேசும் மக்களுக்கு நன்கு பொருத்தமாகவே உள்ளது. சமகால இலங்கையில் உள்ள எதார்த்த அரசியல் முறைமைக்குள் சிறுபான்மையின மக்கள் உள்வாங்கப்படாது அல்லது விலத்தி வைக்கப்படும் அரசியல் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதனால் தமிழ்பேசும் மக்கள் தமது அர்த்தத்தை வெளிப்படுத்த தமக்கான அரசியலை இறுக்கமாகப் பற்றிப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான அரசியல் நடத்தை முதிர்ச்சியாக வெளிப்பட வேண்டும்.
கே.ரீ.கணேசலிங்கம் -3-

Page 4
இன்று எமது பொதுப்புத்தி சார்ந்த உரையாடல்களிலும் கருத்து வெளிப்பாடுகளிலும் “அரசியல்" தூரப்படுத்தப்பட்ட வெற்றுவாத விவாதங்களாகவே நிற்கிறது. எமது விதி அரசியல் வாயிலாகவே தன் அர்த்தத்தை வெளிப்படுத்தும் செயன்முறை, எமது வாழ்வியல் இருப்பாக அதன் அடையாள அரசியலாக தொடர் சுழற்சி பெற முடியாத நெருக்குவாரங்களால் பின்னிப்பிணைந்துள்ளன. இன்னொருபுறம் நாம் அரசியலை பெரும்பாலும் பட்டிமன்றப் பேச்சாகவே நீட்டிக் கொண்டிருக்கிறோம்.
நாம் அரசியலை உரையாடலாக மாற்ற வேண்டுமானால் சமூகம் மற்றும் எதார்த்தம் பற்றிய விமரிசன நோக்கு இன்னும் ஆழமாக எம்மிடையே வெளிப்பட வேண்டும். இதற்கான அறிவு எமக்கு முறையாக கையளிக்கப்பட வேண்டும். அரசியல் கற்கை எங்கும் பரந்து ஒளி பாய்ச்ச வேண்டும்.
குறிப்பாக, எம்மிடையே அரசியல் பிரச்சினைகள் முனைப்புக் கொண்டுள்ள அளவிற்கு அவை பற்றிய பொதுவாசிப்பு நிலைப்பட்ட நூல்கள் மிகக் குறைவு. இதனால் பொதுக் கருத்தாடல் நிலைப்பட்ட முனைப்பு கலாசாரம் எம்மிடையே துளிர்விடவில்லை. அரசியல் நிலைமை பற்றிய பன்முக அலசல்களே பொதுசன அபிப்பிராயத்தை கருத்தாடலை வளர்க்கும். இதற்குத் துணை செய்யும் வகையில் எம்மிடையே புலமை சார்ந்த அரசியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும். இத்தகு வாசிப்புக் கலாசாரம் அரசியல் கலாசார உணர்திறனை மேலும் விருத்திபெறச் செய்யும்.
இந்தப் பின்புலத்தில் தான் நண்பர் கே.ரீ.கணேசலிங்கம் "தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்" என்னும் நூலை எழுதி யுள்ளார். இவர் ஏற்கெனவே “மாறிவரும் புதிய உலக ஒழுங்கு", "சமகால சர்வதேச அரசியல்", "சேதுக்கால்வாய்த்திட்டம்” போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் மற்றும் இவரது தொடர்ந்த கற்றலும் தேடலும் இன்னும் பல்வேறு நூல்களை இவரை எழுதத் தூண்டுகின்றன.
இவற்றைவிட கே.ரீ.கணேசலிங்கம் எண்பதுகளுக்குப் பின்னர் உருப்பெற்ற சமூக அரசியல் விளைவின் பிரதிநிதியாகவும் புலமை" யாளராகவும் உயர்வு பெற்று வருபவர். இதுவே உள்நாட்டு, சர்வதேச அரசியல் பரிமாணங்களை அறிவு பூர்வமாகவும் தருக்க பூர்வமாகவும் இவர் விளங்கிக் கொள்வதற்கான தகுதியை திறனை
一4一 கே.ரீ.கணேசலிங்கம்

ஆளுமையை வளர்த்தெடுக்கிறது. மேலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தொழிற்படக் கூடிய மனப்பாங்கையும் வளர்க்கிறது.
"தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்” பிராந்திய அரசியல் ஒட்டங்களைப் புரிந்துக்கொள்வதற்கான அறிகை மரபை வழங்கு" கிறது. இதன் தருக்க ரீதியான வளர்ச்சியாக பன்னாட்டு அரசியலை விளங்கிக் கொள்வதற்கான ஆய்வு முறையியலையும் முன்வைக்" கிறது. அரசியல் வாயிலாக எம் அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்கான சமூக வெளியை அடையாளம் காட்டுகிறது. சமூக சனநாயகம், சமூக நீதி, சமூக சமத்துவம் பற்றிய உரத்த சிந்தனைக்" கான “வாழ்புலம்" "கலாசார மரபு” யாவற்றையும் எமக்கு கையளிக்கிறது. இதன் தாற்பரியமே அரசியல் கலாசார உணர்திறனை விருத்தியுறச் செய்யும்.
அரசியல் கலாசார மட்டம் குறிப்பிட்ட சமூகத்தின் சனநாயக மரபை அளவிடுவதற்கான கருவியாகவும் விளங்கும். நாம் சனநாயகம் என்பதை வெறுமனே ஆட்சி, அதிகாரம் சம்பந்தப்பட்டதாக மட்டும் நோக்காமல் வாழ்முறையாக அனைத்துக் கூறுகளிலும் இழையோடும் மொத்த பண்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
“தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்” நமக்கு உணர்த்தும் கற்பிக்கும் பாடம் நமக்கான அரசியல், அரசியல் பாதை போன்றவற்றை தெளிவாக்குவதற்கான புலமையை வழங்குதல் என்பதாகும். இதனைச் சாத்தியப்படுத்தும் விதத்தில்தான் கே.ரீ.கணேசலிங்கம் இந்நூலை எழுதியுள்ளார். t
கே.ரீ.கணேசலிங்கம் இது போல் இன்னும் பல நூல்களை எழுத வேண்டும். அவை மூலம் எமது அரசியல் சிந்தனை அரசியல் கலாசாரம் மேலும் உயர்வு பெற்று வளர்ச்சியடைய வேண்டும்.
தெ.மதுசூதனன்
10-11-2008
கே.ரீ.கணேசலிங்கம் -5-

Page 5
ஆசிரியர் உரை
"தென்னாசியாவின் அரசியலி கலாசாரம்” என்ற நூல் நீண்டவாசிப்பும், உரையாடலின் பின்பாக வெளிவரும் பிரசவமாகும். ஏறக்குறைய 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் இந்நூலுக்கான தயார்ப்படுத்தலும் முதுமெய்யியல் மானிக்கான ஆய்வும் ஒரே சமகாலத்தில் நிகழ்ந்ததெனக் கூறலாம். முதுமெய்யியல் மானிக்கான ஆய்வில் தேடியவற்றை அப்படியே ஒப்புவிக்க முடி" யாத மட்டுப்பாட்டினால் எழுந்ததே இந்நூலாகும். மேலும் அக்காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை மாணவர்களுக்கான தென்னாசிய அரசியல் பற்றிய கற்பித்தலை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் பேராசிரியர் என். சண்முகலிங்கத்தினால் (தற்போதைய துணைவேந்தர்) எனக்கு வழங்கப்பட்டது. அதனை தெளிவாகப் புரிந்துகொண்ட நான் அவ்விரிவுரை வகுப்புக்களில் என்னிடம் கேள்விகளையும், அதற்கான தயார்ப்படுத்தலின் இயைபுத் தன்மையையும் ஒழுங்குபடுத்த உதவிய சமூகவியல் துறை மாணவர்களின் பின்னூட்டல் இந்நூலின் உருவாக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனைவிட தென்னாசியாவின் அரசியல் கொதிநிலை தொடர்பாக என்னிடம் இயல்பாகக் காணப்படும் கருத்தியல் மாதிரியும் இதன் படைப்புக்கு வலிமை சேர்த்த காரணியாகக் கொள்ளலாம். இந்நூலினை 2005ஆம் ஆண்டுகளில் வெளியிடுவதென தீர்மானித்த போதே என்னைத் திட்டமிட்டு பழிவாங்க முயன்ற நடவடிக்கை நிகழ்ந்தது. அதனால் இவ்வெளியீட்டை காலம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நூல் கோட்பாட்டு மாதிரிக்குள் நிகழும் நடைமுறை பலத்தையும், பலவீனத்தையும் சம அளவில் பரிசீலிக்க தளைப்
-6- கே.ரீ.கணேசலிங்கம்

பட்டுள்ளது. தென்னாசிய அரசியலை முதன்மைப்படுத்தும் போது அதன் அடிப்படை அரசியல் சமூகத்துக்கும் இடையில் நிகழும் போட்டித் தன்மையின் வெற்றி தோல்வி எவ்வகை பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலை வெறும் நிறுவன வழியாகவும், கோட்பாட்டு வழியாகவும் புலமைப்படுத்துவதை விடுத்து அதன் உயிர்மையத்தையும், தோற்றத்தையும் அகழ்வதன் மூலம் அதன் உண்மை அர்த்தத்தை கண்டுகொள்ள முடியுமென்பதை இந்நூல் அதிகம் கொண்டிருக்கிறது.
இன, மத, மொழி, சாதி, குலமரபுகளுக்குள்ளால் கட்டப் பட்டுள்ள தென்னாசிய அரசியலில் பங்கு எப்படி ஆதிக்க சக்திகளின் வடிவமாக எழுச்சிபெற்றது. அவ்வகை எழுச்சிக்குள் நிகழ்ந்த நவீனத்துவ சிந்தனை மீதான மூழ்கடிப்பின் விளைவு மீளமுடியாத முரண்பாட்டை தோற்றுவித்ததென்பதை தெளிவுற இந்நூல் அளவீடு செய்கிறது.
தென்னாசியாவின் இயல்பான அரசியல் கலாசாரத்திற்குள் மேற்குலக அரசியல் கலாசாரத்தின் ஊடுருவல் நிகழ்ந்த வடிவத்தையும் அதற்கூடாக எழுந்த விளைவுகளை புரிதல் அவசியமானது. அவ்வகை புரிதலே தென்னாசிய அரசியலின் சரியான வழிமுறையை அடையாளம் காண உதவும் குடியேற்ற வாதத்தின் பிற்சேர்க்கை ஒவ்வொன்றும் நிலைத்திருக்க முடியாத அரசியல் உண்மையை தென்னாசியா முழுவதும் ஏற்படுத்தியது. மேலும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற உரையாடல்கள் குழப்பகரமான அரசியல் - சமூக வடிவத்தை உருவாக்கியுள்ளது. இது நிலையற்ற போக்குக்கும் தீர்வற்ற முரணியத்திற்கும் வழிவகுத்ததுடன் அதன் தொடர்ச்சியை இயைபாக்கமிக்கதாக ஆக்க முயலுகின்றது. அவ்வகையில் இந்நூலின் உள்ளடக்கம் அவற்றின் பலவீனங்களை அடையாளப்படுத்துவதன் ஊடாகப் பலப்படுத்த வேண்டிய சுயத்தின் எல்லைகளை முதன்மைப்படுத்துகின்றது.
இறுதியாக இந்நூலை ஆக்கும்போது எனக்கு உதவிய நிறை நட்புகளுக்கு நன்றி கூறுதல் மேன்மையான பணியாகும். முதலில் எனது மாணவர்களுக்கு நன்றி கூறுதல் வேண்டும். என்னை எப்போது குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் அரசறிவியல், சமூகவியல், மற்றும் புவியியல் மாணவர்களின் தூண்டுதலுக்கு நன்றிகள், மேலும் இந்த சந்தர்ப்பத்தை எனக்கு தந்த துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கனுக்கு நன்றிகள் மேலும் எனது
கே.ரீ.கணேசலிங்கம் -7-

Page 6
துறைத் தலைவரும் பேராசிரியருமான ஏ.வி. மணிவாசகர் அவர்களுக்கு நன்றி கூறுவது முதன்மையான கடமையாகும். அவ்வப்போது அமைப்பினை, விடயத்தினை சரிசெய்து ஒழுங்கு" படுத்துவது சில சொற்களை இணைப்பது என பெரும் வழிகாட்டுதலை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது ஆலோசனைக்குள் எனது கருத்துக்கள் செழுமைபெற்றுள்ளது என்றே கூறலாம். இவற்றுடன் இந்நூலை வெளிக்கொண்டுவர அதிக சிரத்தை எடுத்த மதுசூதனனுக்கும், சேமமடுப்பதிப்பகத்துக்கும் நன்றிகள். மேலும் என்னோடு எனது வாழ்வோடு தன்னையும் தனது உயர்ந்த எண்ணத்தையும் எனக்காக தியாகம் செய்யும் எனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் நன்றிகள்.
05-11-2008 ஆசிரியர் கே. ரீ. கணேசலிங்கம்
-8- கே.ரீ.கணேசலிங்கம்

பதிப்புரை
நாம் "தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்" என்னும் நூலை வெளியிடுவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். சமகால அரசியல் விவகாரங்களிலும், தேசியவாத அரசியலிலும், மாறிவரும் புதிய அரசியல் ஒழுங்குமுறை பற்றிய தேடலிலும் நுணுக்கமான ஆய்வுக் கண்ணோட்டமிக்க ஒருவராக கேரீகணேசலிங்கம் விளங்கி வருகின்றார். இவரது நூலொன்றை நாம் வெளியிட சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகின்றோம்.
அரசறிவியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களும் மற்றும் அரசியல் ஆர்வம் மிக்க பொது வாசகர்களுக்கும் பயன்மிகு நூலாக இது அமைந்துள்ளது. "நோத்முதல் கோபல்லாவ வரை” என்னும் நூலை வெளியிட்ட நாம் அதன் தொடர்ச்சியில் "தென்னாசியாவினர் அரசியல் கலாசாரம்” என்னும் நூலையும் வெளியிடுவது மிகப் பொருத்தமான செயலலென்றே கருதுகின்றோம். இந்நூலாசிரியருக்கும் எமது பதிப்பக ஆசிரியர் குழாமிற்கும் எமது நன்றிகள்.
20 -11-2008 அன்புடன் பதிப்பாளர்
கே.ரீ.கணேசலிங்கம் -9-

Page 7
பொருளடக்கம்
பக்கம்
முன்னுரை 03
ஆசிரியர் உரை O6
பதிப்புரை 09
(1) அரசியல் கலாச்சாரம் : ஒர் எண்ணக்கரு
அறிமுகம் எண்ணக்கருவின் தோற்றம் 11
(2) தென்னாசிய அரசியல் கலாசாரத்தின்
மூலங்களை இனம் காணுதல் 31
(3) தென்னாசிய நாடுகளின் அரசியலில்
காலனித்துவமும் தேசியவாதமும் 55
N (4) தென்னாசிய நாடுகளின் அரசியல் முறைமைகள் 10
(5) தென்னாசியாவில் இராணுவ அரசியல் 153
-10- கே.ரீ.கணேசலிங்கம்

அரசியல் கலாசாரம்:
ஒர் எணர்ணக்கரு அறிமுகம் எணர்ணக்கருவின் தோற்றம்
இருபதாம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அமெரிக்க அறிஞர்களால் முன்வைத்த பல்வேறு எண்ணக்கருக்களில் ஒன்றே அரசியல் கலாசாரம் ஆகும். ஓர் அரசியல் முறைமையின் கீழ் உள்ள மக்கள் சமூக மட்டத்தில் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகி றார்கள் என்பதை விளக்குவதே இவ் எண்ணக்கருவின் நோக்கமாகும். இவ்வாறு ஓர் அரசியல் முறைமையின் பரந்த விரிந்த பல பரிமா"ங்கள் தொடர்பாக மக்கள் கொண்டிருக்கும் அரசியல் விழுமியங்ாயே (Political Value) அரசியல் கலாசாரமாக கற்பிதம் செய்யப்கிறது. அரசியல் முறைமைகளின் கட்டமைப்பு அம்சங்களுடன் மாத்திரம் இவ் எண்ணக்கரு கட்டுண்டதல்ல, அவற்றின் செயல்முறை சார்ந்த அம்சங்களிலும் இவ் எண்ணக்கரு செல்வாக்குச் செலுத்துகிறது. A.
இவ் எண்ணக்கருவின் முன்னோடிகளாக அல்மண்ட், உலம், பீர், சிட்னிவேர்ப்பா, பவல் போன்றவர்கள் காணப்படுகின்றனர். அல்மண்ட், பவல் ஆகிய இருவராலும் 1960 களில் வெளியிடப்பட்ட "குடியியல் கலாசாரம்” (The Civic Culture) என்ற நூலின் மூலமே இவ் எண்ணக்கரு அறிமுகமாகியது. ஆனால் 1940களில் ஹசனர் மிர்டல் என்பவர் அமெரிக்க அரசியல் முறைமையை மதிப்பீடு செய்யும்போது அரசியல் கலாசாரம் என்ற சொற்பதத்தை முதன்முத" லாகப் பயன்படுத்தியிருந்தார். அதேவேளை அல்மண்ட் என்பவரே அரசியல் கலாசாரத்தை ஒரு பூரணமான எண்ணக்கருவாக உருவாக்கியவராவார்.
கே.ரீ.கணேசலிங்கம் - 11

Page 8
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இவ் எண்ணக்கரு பெருமளவிற்கு ஆங்கில அமெரிக்க (AngloAmarican) பாணியிலான ஒரு சிந்தனையாகவுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்து நாடுகளில் காணப்படும் அரசியல் முறை" மைகளை மையமாக வைத்தே இவ்வெண்ணக்கரு பின்னப்பட்டுள்ளது. இக்கண்டங்களின் நாடுகளது மக்கள் நாகரீக அடிப்படை யிலும், பொருளாதார அடிப்படையிலும், வளர்ச்சியடைந்தவர்களாகவும் காணப்படுவதனால் அவர்களது அரசியல் கலாசாரமும் அத்த" கைய அபிவிருத்திஅடைந்ததொன்றாகக் கருதப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியும் அதனடிப்படையில் வளமடையும் அரசியல், சமூக, அமைப்பு ஒழுங்குகளும் மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் அரசியல் கலாசாரத்தையும் முன்னெடுக்கும் என்பது பொதுவான எடுகோளாகும். இத்தகைய மும்முனை வளர்ச்சிப்பாங்கு இயல்பாகவே அரசியல் கலாசாரத்தில் முரண்பாட்டு அம்சங்களை மழுங்கச் செய்து உடன்பாட்டு அம்சங்களை கூர்மைப்படுத்துகின்றது. எனவே இந்நாடுகளின் இன, மத, மொழி கூறுகளிடையே பிணக்குகளும், முரண்பாடுகளும் வளர்ந்துள்ளதே தவிர இணக்கமும், இயைபாக்கமும் வலிமைபெற முடியவில்லை. கார்ல்மார்க்ஸ் பிரகடனப்படுத்திய கைத்தொழில் சமூகங்களின் வர்க்க முரண்பாடுகள் கூட இந்நாடுகளில் முனைப்படையக் கூடிய சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் நிலைமைகளிலிருந்து தென்னாசிய நிலை முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலை அரசியல் கலாசாரத்திலும் நிர்ணயமான பாதிப்பை செலுத்தியுள்ளது. இதனால் தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரம் பின்தங்கியதெனக் கருதப்படுகிறது.
எண்ணக்கருவின் அபிவிருத்தி
அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு அரசியல் அபிவிருத்தியில் சமூகவியல் அணுகுமுறையை வெளிக்கொணர்கிறது. அபிவிருத்தியடைந்த மேற்குலகச் சமூகம் உயர்ந்த அல்லது கெளரவமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டுள்ளது என்பது இவ்வெண்ணக்கருவை உருவாக்கியவர்களின் வாதமாகும். மூன்றாம் உலகநாடுகளில் அனேகமானவற்றில் பின்தங்கிய அரசியல் கலாசாரமே வியாபித்துள்ளதாக கூறும் இவர்கள், இந்நாடுகளின் செயற்பாட்டில் முரண்பாடும், மோதலும் புரையோடியுள்ள அம்சங்க" ளாகவுள்ளது. எனவும் கூறுகின்றனர்."
-12- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கருவிற்கு அலமண்ட் வரைவிலக்கணம் கூறும்போது "தனிமனித நடத்தையே அரசியல் கலாசாரம்" என்றார். மேலும் அதனை விபரிக்கும்போது, பல தனிமனிதர்களின் நடத்தையில் அல்லது மனோநிலையில் காணப்படும் உணர்வுகளின் ஒன்றிணைப்பு அரசியல் முறைமையைச் சார்ந்ததாக அமையும்போது அது அரசியல் கலாசாரமாகிறது என்கிறார். இங்கு மனித சமூகம் ஒன்றிணைந்து அரசியல் முறைமைகளைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவது தெளிவாகிறது. இச்சமூகத்திற்கு அத்தகைய கருத்து புலப்பட வேண்டுமாயின், அரசியல் முறைமை பற்றிய தெளிவு, அது தொடர்பான விழிப்புணர்வு, அரசமைப்பு முறைமைகளை ஏற்கும் பாங்கு, ஒற்றுமையாக கருத்தை வெளிப்படுத்துகின்ற போக்கு என்பன ஒத்திசையும் போதே குறிப்பிட்ட விடயத்தின் அரசியல் பிரக்ஞை உருவாகும். இத்தகைய அரசியல் பிரக்ஞையை மேலும் முன்னெடுக்கும் விதத்தில் ஜனநாயக சமூகத்தின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகள் அமைகின்றன. இதனை அல்மண்ட பின்வரும் அம்சங்களூடாக அறிய முனைகின்றார்.
(1) அரசியல் விருத்திக்கான அறிவுசார்ந்த சூழல் அமைவு.
(Cognitive Orientation) இது அரசியல் சமூகத்தின் (Polity) உடன்பாடான, முரண்பாடான அம்சங்கள் பற்றிய தெளிவாக பிரக்ஞையாகவுள்ளது. (2) உணர்ச்சி சார்ந்த சூழல் அமைவு. (Affective
Orientation)
இது அரசியல் முறைமைகளின் உடன்பாடான அமசங்களை ஏற்றுக்கொள்வதும் முரண்பாடான அம்சங்களை நிராகரிப்பதுமான பிரக்ஞையாகவுள்ளது. (3) மதிப்பீடு சார்ந்த சூழல் அமைவு. (Evaluvation
Orientation)
இது அரசியல் சமூகம் பற்றிய ஆரோக்கியமான நோக்கில் உடன்பாடான, முரண்பாடான அம்சங்களை ஒப்பீட்டு அடிப்படையில் மதிப்பீடு செய்யும் பிரக்ஞை
g(35. D.
கே.ரீ.கணேசலிங்கம் -13

Page 9
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மேலே குறிப்பிட்ட மூன்று அம்சங்களையும் அவதானிக்கும் போது ஒரு ஜனநாயக சமூகத்தின் அரசியல் கலாசாரத்தைப் பற்றிய நோக்காக உள்ளது. அல்மண்ட அரசியல் முரண்பாடுகளான தனிமனித இயல்புகளை அரசியல் நடைமுறை ஊடாக விளக்க முற்படுகின்றார் என்பது அதிலிருந்து புலனாகிறது. அரசியல் நடை" முறையில் எழும் உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் சரியாக உய்த்துணர்த்தல் அவசியமாகும். அரசியல் முறைமைகளில் தெளி வையும் புரிந்துகொள்ளாத முடிபு எப்போதும் முரண்பாடானதாகவே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறான நிலைமைகள் காணப்படும் பொழுது அதாவது ஜனநாயகம் சீராக அமுல்படுத்தப்" படாத அரசியல் சமூகங்களில் முரண்பாடான அரசியல் கலாசார பண்புகள் தலையெடுப்பதற்கான சூழல்கள் உருவாகின்றன. இதனால் அரசியல் அமைப்பு ஒழுங்குகளையும் விழுமியங்களையும் நிராகரித்தல், அல்லது எதிர்த்தல் போன்ற மனோபாவங்களையும் மக்களிடம் வளர்ச்சியடைவதை அவதானிக்க முடிகிறது.
றோபோட் ஏ. டால் என்பவர் முறைமை சார்ந்த அல்லது முறைமை சாராத அரசியல் எதிர்ப்புணர்வின் ஊடாக அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு உருவாகி விருத்தி பெற்றுவருவதை காணமுடியும்" எனக் கூறுகின்றார். அதனை பின்வரும் நான்கு அம்சங்களூடாக விபரிக்கின்றார்.
(1) பிரச்சினை தீர்ப்பதற்கான சூழல் அமைவு.
(Orientation of Problem Solv'ing)
(2) கூட்டு நடவடிக்கைக்கான சூழல் அமைவு.
(Orientation of Collective Action)
(3) அரசியல் முறைகளுக்கான சூழல் அமைவு. (Orientation of the Political system)
(4) ஏனைய சக மக்களுடனான சூழல் அமைவு.
(Orientation of Other People)
இவற்றை றொபோட்டால் அரசியல் கலாசாரத்துக்கான உயிர் நாடிகளாக கருதுகின்றார். அவை ஒவ்வொன்றும் ஒரு நாட்டின் அரசியல் கலாசார முறைமைகளை ஏற்படுத்துபவையாக அல்லது அந்நாடுகளின் அரசியல் கலாசாரங்களில் மாற்றங்களை கிரகிக்கக் கூடியவையாக அமையலாம் என மேலும் கருதுகின்றார்.
-14- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் லூசியன் டபிள்யூ பை மூன்றாம் உலக நாடுகளின் (இன்று
புலமைசார் ஆய்வுகளின் பிரயோகத்தில் இல்லாத சொற்பதம்) அரசியல் கலாசாரம் பற்றிக் குறிப்பிடும்போது, "புதிய அரசுகளின் அரசியல் கலாசார அபிவிருத்திப் போக்கின் அடிப்படைகளாக அந்” நாடுகளின் அரசியல் விழுமியங்களையும், வரலாற்று விழுமியங்க" ளையும் உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டு அவற்றைப் பின் வரும் எடுகோள்களினுடாக விளக்க முற்படுகின்றார்.
(அ) அரசியல் பற்றிய வியாபகம்.
(ஆ) அரசியல் செயற்பாட்டுக்கான மதிப்பீட்டு நியமங்கள்.
(இ) அரசியல் செயற்பாட்டுக்கான முக்கிய விழுமியங்கள்.
அரசியல் முறைமைகள் பற்றி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அல்லது அம்மக்களின் இறுக்கமான பற்று அரசியல் கலாசாரம் எனக் கூறலாம். ஆரம்பகாலத்தில் சமூக மாற்றம் அல்லது புரட்சி தொடர்பாக அரசியல் கலாசாரத்தில் அக்கறை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக மக்கள் அரசியல் முறைமைகள் தொடர்பாக கொணடுள்ள மனப்பாங்குகளே அரசியல் கலாசாரமாகக் கொள்ளப்பட்டது. இது பெருமளவுக்கு தனிமனிதனின் நடத்தைவாதத்தின் ஊடாகவே வெளிப்படுத்தப்படுகிறது, "அரசியல் கலாசாரம் அரசியல் நடத்தைவாதத்தின் ஆய்வாகவே அமைந்துள்ளது. அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு உருவாக முன்பே நடத்தைவாதம் ஆய்வுப்பரப்பில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது." பொதுவாக் சமூக மனிதனை அரசியலுடன் ஒன்றிணைந்த அம்சமாக நடத்தைவாதம் அமைந்துள்ளது. சமூக மனிதனோடு பிணைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் விழு” மியங்களையும் அரசியல் முறைமைகளோடு ஒன்றிணைந்த அம்ச. மாக நடத்தைவாதம் நோக்கப்படுகிறது. இது எண்ணக்கருக்களோடு மட்டும் கட்டுண்ணாது உணர்வுகளோடும் ஆய்வுகளுக்கு விடை காண முற்படுகிறது."
ஒரு மக்கள் சமூகத்தை அரசியல் கலாசார ரீதியாக ஆராய்தல் என்பது அவர்களது அரசியல் அறிவை ஒட்டியதாக அமையும்போது செழுமையான முடிபுகளை வெளிக்கொண்டுவரும். இதனாலேயே ஓர் அரசியல் கலாசாரம் தனிமனிதனின் நடத்தையை மட்டும் உள்ளடக்கியதாக அமையாது. அம்மனிதனது அறிவுபூர்வமான அரசியல் எதிர்ப்பினுாடாக எழும் உணர்வுகளினாலும் தோற்றம்
கே.ரீ.கணேசலிங்கம் -15

Page 10
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் பெறலாம்." அதாவது ஒரு தனிமனிதன் உணர்ச்சியால் எழும் எதிர்ப்பினால் துாண்டப்பட்டு முடிபுகளை எடுக்கிறாரா அல்லது அரசியல் விழிப்புணர்வுக் கூடாக எழும் அறிவு பூர்வமான எதிர்ப்பினால் துாண்டப்பட்டு முடிபு எடுக்கிறாரா என்பதை அவதானித்தல் அவசியமானது. ஒரு தனிமனிதனை பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் அவதானிக்க வேண்டுமென அல்மண்ட் கூறுகின்றார்.
(1) அரசியல் முறைமைகளை முழுமையாக ஆராய்கின்ற
அறிவு. (2) நாட்டைப் பற்றிய அறிவும் நாட்டின் மீதுள்ள பற்றும். (3) தமது நாட்டின் வரலாறு, புவியியல் அதிகாரப் பிரயோ
கம் பற்றி அவர் கொண்டுள்ள கருத்து. (4) அரசியல் கட்சிகள், அமுக்கக்குழுக்கள், ஊடகத்துறை தொடர்பான அறிவும், குழுக்கள் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கும். (5) நீதி, நிர்வாகம், பற்றி அந்நபர் கொண்டுள்ள விளக்கம்.
(6) தமது அரசியல் உரிமை, கடமை, அதிகாரம் பற்றிய
பிரக்ஞை ஒர் அரசின் கட்டளைக்கு அவ்வரசின் பிரஜை இயைபாக்கம் அடையும் தன்மையானது அப்பிரஜையின் அரசியல் கலாசாரம் பற்றிய விழுமியங்களை அல்லது மதிப்பீட்டைப் பொறுத்ததாக அமையும். இதனால் மேற்குறித்த அரசின் அரசியல் கலாசாரம் இறுக்கமான தன்மையைப் பேணும் அதே சந்தர்ப்பத்தில் நெகிழ்ச்சி யான போக்கையும் வெளிப்படுத்தக் கூடியதாக அமையும்.
அரசியல் கலாசாரத்தின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு அல்மண்ட் பின்வரும் பாய்ச்சல் கோட்டுப் படத்தின் மூலம் விளக்குகின்றார்.
-16- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நாகரிகமான அரசியல் கலாசாரம்
கலப்பற்ற அரசியல் கலாசாரம்
குறுகிய நோக்கம்
ܕܠ
கலப்பற்ற அரசியல் absorT&FITjh
குறுகிய நோக்கும்
கொண்ட அரசியல் எதிர்ப்புணர்வற்றதுமான
கலாசாரம் அரசியல் கலாசாரம்
எதிர்ப்புணர்வற்ற எதிர்ப்புணர்வற்றதும் அரசியல் கலாசாரம் பங்குபறறலும
கொண்ட அரசியல் கலாசாரம்
குறுகிய நோக்கும் பங்குற்றல் அரசியல் பங்குபற்றலும்
கலாசாரம் கொண்ட அரசியல்
கலாசாரம்
A.
மேற்குறிப்பிட்ட படத்திலிருந்து முழு உலகத்துக்குமான கலாசாரத்தின் இயல்பூக்க வடிவமானது காட்டப்பட்டுள்ளது. பொதுவாக முதன்மையடைந்துள்ள நாகரீகமான அரசியல் கலாசாரத்திலிருந்து (Civic Political Culture) கலப்பின்றிய அரசியல் கலாசாரமும் (Unmixed Political Culture) கலப்புடைய அரசியல் கலாசாரமும் (Mixed Political Culture) வெவ்வேறாக இனங்கண்டு அவை ஒவ்வொன்றுக்கும் பல பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் சுருக்கமாக நோக்குவோம்.
(அ) குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் கலாசாரம்
(Parochial Political Culture)
இது அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் அரசியலில் காணப்படும் விசேடமான
கே.ரீ.கணேசலிங்கம் -17

Page 11
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அம்சமாகும். இக்கலாசாரத்தில் அரசியல், சமூக, இராணுவ, பணிக்குழு போன்ற துறைகளின் தலைமைகளிடம் குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் கலாசாரப் பணி பே அதிகம் பிரதிபலிக்கிறது. இவ்அரசியல் கலாசாரம் அரசியல் அமைப்பு முறைமைக்குள் இயல்பாகவே உட்பட்ட விடயமென கருதுவது பொருத்தப்பாடற்றது, ஏனெனில் ஆட்சியாளரின் மனோபவத்தினால் அரசியல் முறைமைகள் வடிவமைக்கப்பட்டதன் பிரதிபலிப்பாக தோன்றிய அரசியல் கலாசாரமாக கருதுவதேயன்றி முறைசார் அரசியல் கலாசாரமாக கொள்ளமுடியாது.
(ஆ) எதிர்ப்புணர்வற்ற அரசியல் கலாசாரம்
(Subject Political Culture)
இது அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் கலாசாரத்தினை குறிப்பதாகும். உள்ளூர், வெளியூர், அரசியல் எஜமானர்களுக்கு எதிரான எதிர்புணர்வை அதிகம் பிரதிபலிக்காத" தாகவுள்ள அரசியல் கலாசாரத்தை இது சுட்டுவதாக உள்ளது. எதிர்புணர்வற்ற தன்மை என்பது இக்கலாசாரத்தில் உறங்கு நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. இவ்வரசியல் கலாசாரத்தில் சமூகங்களின் அரசியல் முறைமைகளாக காலனித்துவ, ஏகாதிபத்திய, இராணுவ பாரம்பரியங்கள் நிலைபெற்றிருப்பதனைக் காணமுடியும். மக்கள் இவற்றுக்கு அடங்கி நடக்கும் அதேவேளை கணிசமான எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதை இக்கலாசாரம் புலப்படுத்துகிறது. (இ) பங்குபற்றும் அரசியல் கலாசாரம்
(Participation Political Cultuer)
இக்கலாசாரம் அரசியல் பங்களிப்பு வளர்ச்சியடைந்த சமூகத்தில் காணப்படும் அம்சமாகும். மக்களின் அரசியல் பங்கு" பற்றலிலும் அதிகரிப்பு அரசியல் முறைமையிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது. இக்கலாசாரத்தில் மக்களின் அதி கரித்த பங்குபற்றலானது ஜனநாயக விழுமியங்களின் உச்சக்கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமைகின்றது. குறுகிய அடிப்படையில் தனிநபர், குழு, சமூகம் என்ற வேறுபாடில்லாத அரசியல் பங்கு" பற்றல் அமைந்திருப்பது மாத்திரமன்றி பொதுவான நோக்கில் பிரஜைகள் எல்லோரும் அரசியல் முறைமை தொடர்பாக நேர்த்தியான மதிப்பீட்டை வெளிப்படுத்துவதாகவும் இக்கலாசாரம் விளங்குகிறது.
-18- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஆரம்ப காலத்தில் ஜனநாயக விழுமியங்கள் அரசியல் கலாசாரத்தில் அதிக தாக்கத்தைப் பெறவில்லை என்றே மெக்சிக்கன் முறை" மையை (Mexican System) பரிசோதித்தவர்கள் முடிவுக்கு வந்தனர்." 1910-1960க்கு இடையில் மெக்சிக்கன் முறைமையில் குறுகிய அரசியல் கலாசாரம் 90 சதவீதத்தையும், செல்வாக்கையும், எதிர்ப்புணர்வற்ற அரசியல் கலாசாரம் 09 சதவீதத்தையும், பங்குபற்றல் அரசி யல் கலாசாரம் 01 சதவீதத்தையும், கொண்டிருந்தன. இக்கலாசார விகிதாசாரம் 1960ஆம் ஆண்டுக்குப் பின்பு முறையே 25 சதவீதமாகவும் 65 சதவீதமாகவும் 10 சதவீதமாகவும் மாற்றமடைந்தது. இவ் வீதாசாரத்தில் பங்குபற்றல் அரசியல் கலாசாரம் பின்தங்கிய நாடுகளில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ளது."
வளர்ச்சியடைந்த அரசியல் கலாசாரத்தையுடைய பிரித்தானிய, அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக விழு” மியங்களைப் பேணும் அரசியல் நிறுவனங்கள் காரணமெனக் கருதப்படுகின்றது. ஆனால் வறிய நாடுகளின் அரசியல் கலாசாரம் மந்த நிலைக்கு உயர்குழாமினரின் போக்கே முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. அதாவது உயர்குழாமினரின் நோக்கங்களையும் நலன்களையும் நிறைவேற்றுவதற்கான ஊடகமாகவே இந்நாட்டு மக்களின் பங்குபற்றல் அரசியல் கலாசாரம் பெருமளவிற்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் வறிய நாடுகளில் ஆயுதக்குழுக்கள் வன்முறைக்குழுக்கள் என்பவற்றின் அதிகரித்த நடவடிக்கைகளும் அரசியலில் இடம்பெற்றிருக்கின்றன.
எஸ்.ஈ.பைனர் (S.EFINERE) அரசியல் கலாசாரம் என்பது மக்களின் மனோநிலை பற்றி எழுந்த ஒர் எண்ணக்கரு என்றும் அம்மக்களின் அரசியல் உணர்விலும் தேசிய உணர்விலுமிருந்தே அரசியல் கலாசாரம் உருவானது." என்றார் அவர் மேலும் அரசியல் கலாசாரத்தை மூன்று வெவ்வேறு வகைப்பாட்டுக்குள் உள்ளடக்குகின்றார். (அ) முதிர்ச்சியடைந்த அரசியல் கலாசாரம்
(Mature Political Culture)
இவ்வரசியல் கலாசாரம் அரசியல் உடன்பாட்டுக்கான முதிர்ச்சி பெற்றிருக்கும் மக்களைக் கொண்ட நாடுகளில் காணப்படும். இவ் அரசியல் கலாசாரத்தை பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து போன்ற நாடுகள் கொண்டிருப்பதாகக் கருதலாம்.
கே.ரீ.கணேசலிங்கம் -19

Page 12
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
(ஆ) அபிவிருத்தியடைந்துவரும் அரசியல் கலாசாரம்
(Developing Political Culture)
இவ் அரசியல் கலாசாரத்திலும் அரசியல் சித்தாந்தம் தொடர்பான உணர்வுகள் பற்றி ஒத்த இசைவான போக்கை வெளிப்படுத்துவதைக் குறிப்பதாகும். சில நாடுகளில் மக்களும் இராணுவமும் என்ற வேறுபாடின்றி ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருவதனைக் காணலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எடுக்கப்படும் அனேகமான முடிவுகள் அமைதியான சூழலிலேயே மேற்கொள்ளப்படுவதனை அவதானிக்க முடியும். எகிப்து, கியூபா, அல்ஜீரியா, போன்ற நாடுகளில் இவ்வரசியல் கலாசாரத்தை காணமுடியுமென "பைனர்" கூறுகின்றார்.
(இ) கீழான அரசியல் கலாசாரம்
(Low Political Culture)
இது குறுகிய உணர்வுகளையும், பலவீனமான எண்ணங்களையும் வெளிப்படுத்துகின்ற அரசியல் கலாசாரமென கருதப்படுகின்றது. இங்கு அரசியல் தலைமைத்துவங்களின் நலன்களை பூர்த்தி செய்கின்றதும், அதனை இலக்காகக் கொண்டதுமான அரசியல் முறை" களும், நிர்வாக அமைப்புக்களும், மேலோங்கியிருப்பதனை அவதானிக்க முடியும். இங்கு தனிமனித பிரச்சனையாயினும், சமூகத்தின் பிரச்சனையாயினும் அதிகாரத்தினாலேயே தீர்த்து வைக்க முயலுவ தனைக் காணமுடிகின்றது. வியட்னாம், ஈராக், சிரியா, பர்மா (மியான்மார்) இந்தோனேசியா போன்ற நாடுகளில் இக்கலாசாரத்திற் கான பண்புகளைக் காணமுடியும்.
இதே விடயத்தில் முதன்மைப்படுத்தி அல்மண்ட் வேறோர் விதமாகவும் அரசியல் கலாசாரத்தை வகைப்படுத்துகின்றார்.
(அ) அபிவிருத்தி அடைந்துவரும் அரசியல் கலாசாரம் (ஆ) பின்தங்கிய அரசியல் கலாசாரம் (இ) மக்கள் அரசியல் கலாசாரம்.
இதன் மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்கும், முதலாம் உலக நாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்க முயலுகின்றார். குறிப்பாக ஆபிரிக்கா, மற்றும் மேற்காசியாவில் பொரும்பாலான நாடுகள் பின்தங்கிய அரசியல் கலாசார பாரம்பரியத்தை கொண்டவை என அல்மண்ட் குறிப்பிடுகின்றார். மேலும் மேற்கு நாடுகள்
-20- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
எல்லாவற்றையும் அபிவிருத்தி அரசியல் கலாசார நாடுகள் எனவும், ஏனைய ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை மக்கள் அரசியல் கலாசாரத்தின் சாயல்கள் தென்படும் நாடுகள் எனவும் கூறும் அல்மண்ட் மக்கள் எந்தளவுக்கு அரசியல் பங்களிப்பை வழங்குகின்றார்கள் என்பதைப் பொறுத்தே அரசியல் கலாசாரத்தை வரையறுக்க முடியுமெனவும் கூறுகின்றார்."
“ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தை நிர்ணயிப்பதில் அரசியல் சமூக, பொருளாதார, வரலாற்று அம்சங்கள் வகிக்கும் பங்கைப் போன்று புவியியல் காரணிக்கும், தேசிய எல்லை கடந்த காரணிக" ளுக்கும் பங்கு உண்டு" அரசியல் கலாசாரம் நன்கு அபிவிருத்தியடைந்த நாடுகளின் அரசியல் முறைமைகள் அவற்றின் செயல்முறை" கள் நலன்கள் ஏனைய நாடுகள் மீதம் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஏகாதிபத்திய காலத்தில் பிரித்தானிய அரசியல் கலாசாரத்தின் செல்வாக்கு கீழைத்தேச நாடுகளில் அனேகமானவற்றின் அரசியல் கலாசாரத்தை நிர்ணயிப்பதாக அமைந்தது. மேலும் ஓர் அம்சத்தை இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தப்பாடுடையதாக அமையலாம். 1789ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு மக்கள் எதேச்சதிகார அரசியல் முறைகளுக்கு எதிரான உணர்வுகளை புரட்சியாக வெளிப்படுத்தினார். இவ்வரசியல் கலாசாரத்தை இக்காலப்பகுதியில் பிரித்தானிய அரசியல் தலைவரான எட்மண் பேர்க் எத்தகைய ஆரவாரிப்புமின்றி பாராளுமன்றம் ஊடாக பிரித்தானியாவில் அமுல்படுத்த முடியுமென வாதிட்டார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்தி யாவில் ஜனநாயகப் பாரம்பரியம் வளர அல்ஜீரியா, வியட்னாம், மற்றும் பல ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸின் பாணியிலான அரசி, யல் கலாசாரம் விருத்தியடைந்திருந்தது. ஆனால் அமெரிக்க கண்டத்தில் பூர்விக குடிகளை அழித்துவிட்டு குடியேறிய வெளிநாட்ட" வர்கள் இனவுணர்வுகள் வலுப்பெற்ற அரசியல் கலாசாரத்தை அப்பிரதேசத்தில் உருவாக்கினர். இவ்வாறு இந்தியாவிலும் ஏகாதிபத்திய வாதிகளின் ஆதிக்கம் இந்திய மக்களிடையே பிரித்" தாளும் கொள்கையும், உள்ளூர் உயர்குழாமினருடனான சகவாசமும் சமூக வேறுபாடுகளும் வலுவடைந்து முரண்பாடுகள், மோதல்கள் தீவிரப்படக் காரணமாகியது. இம்முரண்பாடுகளும், மோதல்களும் தவிர்க்க முடியாதபடி வன்முறைக் கலாசாரத்தை நோக்கி (Hostile Political Culture) நாடுகளை இட்டுச் செல்கின்றது.* இவ்வன்முறை அரசியல் கலாசாரத்தை ஊட்டி வளர்த்தவர்களாக இராணுவமோ அல்லது அரசியல் குழுக்களோ அல்லது சில
கே.ரீ.கணேசலிங்கம் -21

Page 13
6g5ổŠTøOTITófuJT6SeảŠT SJófuJeổo ab6oTafiTUfò
கட்சித்தலைவர்களோ காணப்படலாம். இத்தகைய தேசிய ஒரு மைப்பாட்டை சீர்குலைக்கும் நோய்க்குறி தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் அதிகம் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தி யாவில் நாகலாந்து, மிசோராம், காஷ்மீர், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் ஆயுதப்போராட்ட அரசியல் கலாசாரம் பெருகிவருகிறது. இவற்றை அடக்குவதற்கு ஆளும் இந்திய அரசும் ஆயுத அரசியல் கலாசாரத்தினால் பதிலளித்து வருவதனைக் காணலாம்.
அரசியல் கலாசாரத்தின் வளர்ச்சி அரசியல் காரணிகளுக்கு அப்பால் சமூக பொருளாதார, காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. நகரப்புறத்தில் கைத்தொழில் வளர்ச்சியுடன் சமீப காலங்களில் அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திலும் புதிய பரிமாணங்கள் உருவாகி வருகின்றன. அரசியல் தீர்மானங்களை எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் நகர்புற நலன்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படுகின்றது. நகரங்களில் வேறுபட்ட மக்கள் பிரிவுகள் வாழ்ந்தாலும் அவர்களின் கலாசார உறவுகளில் முரண்பாடுகள் அதிகமில்லை. அபிவிருத்தி அரசியல் கலாசார நாடுகளின் நகரங்களில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் பிரதானமான காரணியாக அமைந்திருந்த போதும் கிராமப்புறங்களிலும் உடன்பாட்டுவிருத்தி அரசியல் கலாசாரம் காணப்படுவது சிறப்பம்சமாக உள்ளது.
பின்தங்கிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் மரபுவாதமும் வழக்காறும் செல்வாக்குமிக்கதாக அமைந்திருக்கும். இந்நாடுகளில் அனேகமானவை நவீனத்துவ அலைக்குள் செல்ல விரும்பும் அதே" வேளை மரபுகளையும் வழக்காறுகளையும் பூரணமாக கைவிட முடி" யாதவையாகவும் உள்ளன. இவ்வாறான குழப்பம் அரசியல் பொரு ளாதார, சமூக விடயங்களில் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால் இந்நாடுகளில் நவீனத்துவத்தையும், மரபுவாதத்தையும் ஒருங்கே கொண்ட தனித்துவமான அரசியல் கலாசாரமொன்று உருவாகியது." மேலும் ஆளும் வர்க்கங்கள் மரபுவாத சுலோகங்களை எழுப்பி அரசியல் இலக்குகளை சுலபமாக அடையக்கூடிய நிலைமை இருப்பதனாலும் கிராமப்புறங்களில் பழமைவாத சக்திகள் சில நவீனத்துவ மாயைகளைக் காட்டி தமது நலன்களை பாதுகாப்பதனாலும் நவீனத் துவமும், மரபுவாதமும் தமது பரஸ்பர வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்பவையாக காணப்படுகின்றன.
-22- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அபிவிருத்தியடைந்த அரசியல் கலாசாரம் மேற்குலக நாடுகளில் ஸ்திரமாக வேரூன்றியுள்ளது. இந்நாடுகளின் சமூக, வரலாற்று, அரசியல் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த இக்கலாசாரம் வளமான பொருளாதார அபிவிருத்தியினால் மேலும் பலம் பெற்றுள்ளது. தனிமனித சுதந்திரங்களும், சமூக வாழ்க்கைக்" கான நியமங்களும் இக்கலாசாரத்தில் சிறப்பாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன. மாறாக மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் மேற்குறிப்பிட்ட பணி புகள் மிக அருகியே காணப்படுகின்றன.
அரசியல் கலாசாரம் பற்றிய எண்ணக்கருக்களை உருவாக்கிய அறிஞர்கள் வறிய நாடுகளில் காணப்படும் அரசியல் கலாசாரங்களை குறைபாடுகள் நிறைந்தவை என்றே கூறுகின்றனர். இவர்கள் யாவரும் ஆங்கில அமெரிக்க அரசியல் கலாசாரத்தை அளவுகோலாகக் கொண்டே மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் கலாசாரங்களை மதிப்பிட முற்படுகின்றனர். ஆனால் இது அடிப்படையில் முரண்பாடானதொன்றாகும். வறிய நாடுகளின் தனித்துவமான, சிலசமயங்களில் சிறப்பான வரலாற்று, சமூக அரசியல் பாரம்பரியங்களை அவ்வறிஞர்கள் கருத்தில்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் மேற்குலகைப் பார்க்கும் அதே நோக்கில் வறிய உலகையும் அணுக முற்படுகின்றனர். காலனித்துவ சுரண்டல்களினாலும் அடக்குமுறை" களினாலும் வலுவான பொருளாதாரத்தையும் அதனடிப்படையில் வலுவான அரசியல், இராணுவ, கட்டமைப்புக்களையும் உருவாக்கிக் கொண்டுள்ள மேற்குலக நாடுகளின் பொருளாதார சுபீட்சத்தையே பெருமளவுக்கு கருத்தில் கொள்கின்றனர். அரசியல் கலாசார ஆய்வாளர்கள் பல வரலாற்று உண்மைகளை மறைப்போராகவும், பல வரலாற்று அநீதிகளை நியாயப்படுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர். வறிய நாடுகளுக்கு தனித்துவமானதும், சிறப்பானது" மான அரசியல் கலாசாரம் இருந்தது என்பதை ஏற்காத வகையில் மேற்கொள்ளப்படும் அரசியல் கலாசார ஆய்வுகள் உண்மையான அடைவுகளை அடையத்தவறிவிடுகின்றன.
அரசியல் கலாசார எண்ணக்கருவின் பலவீனம் பற்றிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் எஸ்.பி.வர்மா குறிப்பிடும் போது:
'அல்மண்ட், பவல் போன்றவர்கள் அரசியல் கலாசாரத்தின் முற்போக்கான அம்சங்களை இனங்காணத் தவறிவிட்டனர். ஒழுங்கமைப்புகளையும் மீள் ஒழுங்கமைப்புக்களையும் பற்றியே
கே.ரீ.கணேசலிங்கம் -23

Page 14
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அவர்கள் கருத்தில் கொண்டனர். தனிமனித நடத்தையினால் எழும் அரசியல் கலாசாரத்தை சரிவர எடைபோட அவர்கள் தவறிவிட்டனர். கானா நாட்டின் தலைவர்களில் ஒருவரான "நிக்றுாமா” பற்றிய நடத்தைசார் அரசியல் கலாசாரத்தை எண்ணக்கருவுக்குள் உள்வாங்க அவர்களால் முடியவில்லை. நவீன அரசியல் முறைமையில் அரசியல் கலாசாரம் மிதவாதக் கோட்பாடாகவும், ஒப்பீட்டுக் கற்கையாகவுமே பிரயோகப்படுத்தப்படுகின்றது."?
எனவே அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் முறைமைகள் சார்ந்த எண்ணக்கரு” வாகவே அமைந்துள்ளது. அது தென்னாசிய நாடுகளில் பிரயோகிக்" கும் போது முரண்பாட்டையும், பலவீனத்தையும் இனங்காட்டுவது போன்று அமைந்துவிடுகின்றது.
நவீன சிந்தனை
அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு 1960களில் உருவாகியதொன்றாகும். அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் இவ்வெண்ணக்கரு ஏற்புடைமையை இழந்தமையால் விமர்சிக்கப்படலாயிற்று. அவ்விமர்சனங்களை அடுத்து வந்த சிந்தனையில் முதலாம் உலகின் அரசியல் கலாசாரம் ஒருவகையானதெனவும் இரண்டாம் உலகின் அரசியல் கலாசாரம் இன்னோர் வகையானதென்றும் மூன்றாம் உலகின் அரசியல் கலாசாரம் மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையைச் சார்ந்துள்ளதென. வும் விளக்கப்பட்டது. இக்கருத்து மிக நீண்டகாலமாக நிலைபெற்றி ருந்தது. அதற்கு அமைய மூன்றாம் உலகின் பிராந்தியங்களின் ஒன்றான தென்னாசியாவின் அரசியல் கலாசாரமும் அணுகப்பட்டது. தென்னாசிய நாடுகளது அரசியல் அபிவிருத்தி பின்தங்கியிருப்பதே அவற்றின் அரசியல் கலாசாரமும் பின்தங்கியிருப்பதற்கு காரணமென கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் முதலாம் உலக அரசுகளின் ஆதிக்க வரம்புக்குள்ளேயே புதிய அரசுகளின் அரசியல் சமூக பொருளாதார கொள்கைகள் அடங்கியிருந்தன.? முதலாளித்துவ அணி, சோசலிஸ் அணி, அணி சேராமை அணி என்ற பிரிவுகள் காணப்பட்டாலும் புதிய அரசுக" ளின் அணிசேராமை அமைப்பானது தனித்து எதையும் சாதிக்க முடியாத நிலையே தொடர்ந்தும் காணப்பட்டது. முதலாம், இரண்டாம், உலகம் தமக்கிடையிலான போட்டிகளை புதிய அரசுகளை மையமாக வைத்து முடுக்கிவிட்டன. இப்போட்டியில் 1989ஆம்
-24- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் ஆண்டு "பெர்லின் சுவர்" தகர்ப்பு சோசலிஸ அணிக்கு பின்னடைவாக அமைந்தது. சோவியத் யூனியனில் புதிதாகப் பதவிக்கு வந்த ஜனாதிபதி கொர்பச் சேவினால் அறிமுகப்படுத்தப்பட்ட “பெரஸ் ரொய்கா" "கிளாஸ் நொட்ஸ்" ஆகிய சீர்திருத்தங்கள் இறுதியில் சோஸலிஸ அமைப்பொழுங்குகள் மாற்றீடு செய்வதற்கும், இரண்டாம் உலக அணி எனக் கருதப்பட்ட சோசலிச அணி வலுவிழந்து மறைவதற்கும் வழிகோலியது. இது பல புதிய மாற்" றங்களை ஏற்படுத்தியது
"புதிய உலக ஒழுங்கு என்பது அமெரிக்க உலகம் ஒன்று என்ற பழைய ஏகாதிபத்திய போலியுருவே அன்றி வேறொன்றுமில்லை. ஐக்கியநாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு என்பதன் மூலம் போட்டி குறைவான வசதி மிக்க ஓர் உகந்த சூழ்நிலையில் அமெரிக்க முதன்மை நிலையினை சட்டபூர்வமானதாக கட்டியெழுப்பப் போகும் அம்சத்தைக் குறிப்பதாகும்,”*
"கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததையடுத்து மேலைத்தேச தாராளவாதத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கை உள்ளிட்ட பல தவறான எடுகோள்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேசியவாதங்கள் பேரெழுச்சி கண்டமை “இந்த இசங்களின்" இறுதி விளைவிலும் பார்க்க முக்கியத்துவம் கொண்டதாகும். அதியற்புத" மான சக்தியும், வீரியத்தையும் ஒன்றுதிரட்டும் ஒரு மூலமாக தேசியவாதம் எழுச்சிகண்டு வருகிறது. இது ஒரு சக்தியாக உருவாகிவரும் "புதிய உலகினை வடிவமைத்து" வருகின்றது.*
இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தென்னாசிய அரசுகளுக்கும் சமூகங்களுக்குமான உறவு பின்வரும் நான்கு வழிகளின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது.
(அ) பலமாக மேலாதிக்கம் செய்யும் அரசுகளும் பலவீன
மான அமைப்புக்களும். (ஆ) அதிகாரத்திற்காகப் போராடும் அரசியல் அமைப்புக்களும் அவற்றை மட்டுப்படுத்த முற்படும் சமூக மூலகங்களும். (இ) அரைகுறை ஜனநாயக அரசுகளின் தோற்றமும்
அவற்றிலிருந்து அந்நியப்படும் சமூக மூலங்களும். (ஈ) தொடர்ந்து உயிர்வாழும் ஜனநாயகமும் உறுதிமிக்க
சிவில் சமூகங்களும்.*
கே.ரீ.கணேசலிங்கம் -25

Page 15
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பலமாக மேலாதிக்கம் செய்யும் அரசும் பலவீனமான சமூக அமைப்புக்களும் பயனுடைய அரசியல் கலாசாரத்தை விருத்தி செய்வது கடினம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் அரசியல் அமைப்புக்களும் அவற்றை மட்டுப்படுத்த முற்படும் சமூக மூலங்களும் சமூக முரண்பாடுகளுக்கு பரிகாரம் காணுமென எதிர்பார்க்க முடியாது. இந்நாடுகளது அரசுகள் அரசியல் அமைப்புக்களுக்கு ஏற்ப தொழில்பட முயன்றபோது அரசும் சமூகமும் அல்லது அரச ஆதரவுடைய சமூகமும் ஏனைய சமூகங்களும் தமக்கிடையே முரண்பட்டுக் கொள்கின்றன. பொதுவாக தென்னாசிய நாடுகளின் அரசியலில் அரைகுறை ஜனநாயக ஆட்சிப் பண்பே மேலோங்கியிருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. சர்வாதிகார ஆட்சி, தனிக்கட்சி, இராணுவ ஆட்சி என்பன பல வடிவங்கள் ஒரு நாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இது ஆரோக்கியமான அரசியலுக்கு பொருத்தமற்ற அமைப்பாகவே விளங்குகின்றது. இதனால் இந்நாடுகளில் தொடர்ந்து உயிர்வாழும் ஜனநாயகமும், உறுதிமிக்க சிவில் சமூகங்களின் தொழில்பாடுகளும் மறைந்துவிட்டன என்று கருதமுடியாது. ஆட்சி நீடித்து நிலைபெறவேண்டுமாயின் முழுமையான ஜனநாயகமும் உறுதிமிக்க சிவில் சமூகமும் அவசியமானது.
மூன்றாம் உலக நாடுகளைப் போன்றே இரண்டாம் உலக நாடுகளிலும் சமூக - அரசு மட்டத்திலான உறவு பலவீனமானதாக அமைந்துள்ளது.* குறிப்பாக முன்னைய சோவியத் யூனியனின் எதேச்சதிகாரமான அரசியலமைப்பும் அதற்குள் அடங்கிய சமூக அமைப்பும் காணப்பட்டது. அரசியல் கலாசார எண்ணக்கருவின் பிற்பட்ட அபிவிருத்திக்கு விளக்கம் கொடுத்த மேக்ரன் கம்ரவா குறிப்பிடும் போது,
"அரசியல் கலாசாரம் என்பது மக்களின் அல்லது பிரஜைகளின் அரசியல் பற்றிய புரிந்துணர்வு அல்லது மனோநிலை எனக் கருதப்" பட்ட அம்சம் தற்போது அரசுக்கும் சமூகத்திற்குமான உறவாகவும், சமூகத்தில் ஏற்படும் மாற்றமாகவும் அந்த மாற்றத்தால் மக்கள் அடையும் விருத்தி நிலையாகவுமே கொள்ளப்படுகின்ற போக்கு காணப்படுகின்றது.* என்ற முடிவுக்கு வந்தார்.
அவர் தனது கருத்தினை பேக்கர், ஜி.டீப்பல்மா, றொபேட் பிக்னி, லொறிடயிப் மொன், சாமுவேல், கன்ரிங்டன் போன்றவர்களின் கருத்துக்களை அடியொற்றி முன்னெடுத்துள்ளார். அரசியல்
-26- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கலாசாரத்தின் அடிப்படைகளாக தனிமனித நடத்தையும், விழுமியமும், அரசியல் முறைமைகள் சார்ந்ததாக வளர்ச்சியடையும் போதே அவ்வரசியல் கலாசாரம் முழுமைப் பெறுகிறது. மக்களின் அபிப்பிராயத்தை சார்பாகப் பெற்ற பலமான அரசியல் தலைமைகளான கில்-மில்-சாங், சதாம்உஸைன், பிடல்காஸ்ரோ போன்றவர்கள் அடக்குமுறையாளர்களென மேற்குலகம் கருதினாலும் அவர்கள் தமது நாட்டு மக்களின் அரசியல் செல்வாக்கைப் பெற்ற தலைவர்களாக விளங்குகின்றனர். அரசியல் கலாசாரம் என்பது பற்றி லொறி டயிஸ்மன், "ஜனநாயகம் என்ற எண்ணக்கருக்களின் மூலவேர்களிலிருந்தே அரசியல் கலாசாரம் வளர்ச்சி பெற்றது. ஜனநாயக எண்ணக்கருத்துக்கள் வளர்ச்சியடைவதற்கு அரசியல் அணுகுமுறைகள் அணுசரணையாக அமைந்தபோதும் அரசியல் அணுகுமுறைகள் இரண்டாம் பட்சமான பரிமாணங்கள் என்றே குறிப்பிட்டார்.*
அரசியல் கலாசாரத்தின் பிற்பட்ட அபிவிருத்தியை ஏற்படுத்திய ஜி.டீப்பில்மா என்ற அறிஞர் "ஒரு நாட்டின் அரசியல் ஒழுங்க" மைப்பும் நடைமுறையுமே அரசியல் விழுமியங்களையும், கோட்" பாடுகளையும் உருவாக்குகின்ற சாதனங்களாக அமைகின்றன. அவற்றையே அரசியல் கலாசாரம் உள்ளடக்கமாக கொண்டு இயங்குகிறது." என்றார்.
ஒரு அரசின் அரசியல் கலாசாரம் மாற்றமடைய வேண்டுமாயின் சமூகத்தின் கட்டமைப்பிலும், அதன் இயங்குதிறனிலும் மாற்றம் நிகழுதல் வேண்டும். நவீன தலைமுறையினிரே ஒரு நாட்டில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக விளங்குகின்றனர். இவர்களிடம் புதிய அம்சங்களை உள்வாங்குகின்ற சக்தி உயர்வாக உள்ளது. இப்பிரிவினரின் நடத்தை அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அரசியல் கலாசாரத்திற்கு புதிய வரைவிலக்கணத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது."சமூக மாற்றங்கள் ஒவ்வொன்றும் அரசியல் ஒழுங்கை மாற்றமடையச் செய்கிறது இம்மாற்றத்தினால் அரசியல் காலாசாரம் விருத்தியடைகிறது."
நவீன எண்ணக்கருவை விருத்தி செய்த அறிஞர்கள் அரசியல் கலாசாரத்தில் இரண்டு வகைப்பாடுகளே விரும்பத்தக்கது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
(அ) மிக இறுக்கமான அடிப்படைவாத உணர்விலிருந்து விடுபட எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி மாற்றத்தை
கே.ரீ.கணேசலிங்கம் -27

Page 16
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
உருவாக்குதல் இதனால் பல சமூகங்களில் உடன்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தல்.
(ஆ) மாற்றமடையும் சமூகம் எதிர்கொள்ளும் விடயங்கள் விசாலமான சமூக பொருளாதார அரசியல் விருத்தியை ஈட்டக்கூடியதாக அமையும்போது அரசியல் கலாசாரம் விருத்தியடைதல்."
மிக நீண்டகாலமாக அரசியல் கலாசாரம் பாரம்பரியத்தில் இருந்தே உருவாவதாக கருதி வருகின்றனர் குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் முழுக்க முழுக்க பாரம்பரியமே முழுமுதல் காரணியாக அமைகின்றமை மறுக்க முடியாததொன்றாக உள்ளது.
அரசியல் கலாசாரத்தின் உண்மை வடிவம் அதிகார ஆட்சி. யையும், சுதந்திரமான ஆட்சியையும் ஒரே நேரத்தில் வேறுவேறு நாடுகளில் அபிவிருத்தி அடையச் செய்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளான மேற்கு ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஜப்பான், நியுசிலாந்து, அவுஸ்ரேலியா போன்றவற்றின் அரசியல் கலாசாரம் உயர்ந்ததாகவும் உடன்பாடுடையதாகவும், காணப்படுகிறது.* இந்நாடுகளது அரசியல் முறைமைகள் ஏனைய நாடுகளில் முன்மாதிரியாக பின்பற்றப்பட வேண்டுமென கூறப்படுகிறது. ஆனால் மேல்குறித்த கருத்து எந்தளவுக்கு பொருத்தப்பாடானது என்பது கேள்விக்குரியது. காரணம் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற வாதத்தின் முழுமை பொருளாதாரத்திலே அதிகம் தங்கியுள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படையில் சுரண்டல் வளர்ந்த நாடுகளின் சுபீட்சத்துக்கு முதலீடாகிய வரலாறு கடந்த நுாற்றாண்டுகளின் நிதர்சனமாகும். இச்சுரண்டலுக்கான தயார்ப்படுத்தலின் வளர்ந்த நாடுகள் பின்பற்றிய அரசியல் இராணுவ வழிமுறைகள் முரண்பட்ட அரசியல் கலாசாரத்திற்கும் பொருளாதார வறுமைக்கும் வழிசமைத்ததோடு பின்தங்கிய நாடுகள் என்ற பாரம்பரியத்திற்கும் மூலவேராகியது.
-28- கே.ரி.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அடிக்குறிப்புகள்
l.
12.
13.
14.
15.
16.
.7ן
I8.
19,
20.
21.
GA, Almond GB Powell, comparative politics; A Developmental Approch, Amerind publishing Co. pt. Ltd, New Delhi, Bombay, Culcutta, Newyork, 1966m PP-12-72
Samuel Jhonson, The American Political Culture; Dos AND Don'ts of Political Life, Dorsey press, London, 1984. P. 18
J. C. Johari, Comparative Politic's sterling publishers, New Delhi. (Reprint) 1993, P229.
GA, Almond GB Powell op.cit. P42. Ibid,
Ibid,
J.C. Johari, op. cit P225
Ibid.
GA, Almond GB Powell op.cit, P51 Ibid,
Ibid, pp., 5 1-56
Ibid
J.C. Johari, Op. cit, p,226;
Ibid
Ibid, p. 227
Ihid, pp. 227-228
/biչl,
llbil,
Ibid.p, 229
Ihial,
Alehurn Kamrava, Political culture and a new definition of the Third world, THIRD WORLD OUATALY, Vol. 16, No. 04, 1995, μ. 692
கே.ரீ.கணேசலிங்கம் -29

Page 17
22.
23.
24.
25.
26.
27.
28.
29,
30.
31.
32.
-30
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Economic Review, January 1991, p. 11
Henry A. Kissingar; A memo to the next president, News week, September 19, 1998.p, 23-27.
Ibid, p. 69
G. Simon, Political culture in Russia AUSSEN POLITIK, 111/ 95.p, 246.
Mehran kamrava, op.cit.p,694
Ibid,
Ibid,
Ibid,
Cited by mehran Kamrava,p,695
Ibid,
Ibid,
கே.ரீ.கணேசலிங்கம்

s தென்னாசிய அரசியல் கலாசாரத்தின் மூலங்களை இனம்காணுதல்
உலகில் தென்னாசியா பரந்த நிலப்பரப்பையும் (4489517 சதுர கி.மீ) அதிக மக்கள் தொகையும் கொண்ட (1230.41 மில்லியன்) பிராந்தியமாக விளங்குகின்றது. இப்பிராந்தியம் ஐரோப்பியரின் வரு" கைக்கு முன்னர் சுய தனித்துவத்தைப் பேணும் அரசியல் கலாசாரத்” தையும் பின்னர் அதன் தொடர்ச்சியையும் பேண முயலும் அரசியல் கலாசாரத்தைக் கொண்ட பிராந்தியமாகவும் விளங்குகினறது. ஆரம்" பத்தில் இந்திய உபகண்டமென அழைக்கப்பட்ட பிராந்தியம் ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து இறைமையுடைய ஏழு அரசுகளாகப் பிரிந்துள்ளதை அவதானிக்கலாம். பங்காளதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை என்பனவாகும். (வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) இவ்வரசுகள் ஒவ்வொன்றும் பல்தேசிய இன, மத, மொழி, கூறுகளைக் கொண்ட அரசுகளாகக் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகளை அடிப்படை" யாகக் கொண்டு எழுச்சியடைந்து வரும் பல போராட்டங்கள் இப்பிராந்திய அரசுகளை மேலும் கூறுபடுத்தும் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தென்னாசிய நாடுகளது அரசியல் முறைமை வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் முறைமைகளை ஒத்ததல்ல. ஆனால் வளர்ச்சி யடைந்த அரசுகளின் அரசியல் முறைமைகளைப் பின்பற்றியே அவை உருவாக்கப்பட்டன என்பது மறுக்க முடியாததாகும். இத்" தென்னாசிய நாடுகள் அனைத்தும் (நேபாளம் தவிர) பலநுாற்" றாண்டுகள் பிரித்தானியாவின் நேரடி காலனித்துவ ஆட்சிக்குள் சிக்குண்டிருந்தவை.
கே.ரீ.கணேசலிங்கம் -31

Page 18
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அதனால் ஆங்கில முறைமையிலான (Anglo-System) அரசியல் நிறுவனங்களைத் தவிர்க்க முடியாத முன்னுதாரணங்களாக கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஓரளவு ஜனநாயக மரபுக்குட்பட்ட அரசியலமைப்பு ஆட்சி முறைமை காணப்படுவதையும், வங்காளதேஷ், பாகிஸ்தான், என்பனவற்றில் இராணுவ செல்வாக்குடைய பாதிஜனநாயக ஆட்சி முறைமையும் நேபாளம், பூட்டான் என்பனவற்றில் முடியாட்சி முறைமையும் நிலவுவதனைக் காணலாம்.
இவ்வாறு இப்பிராந்தியம் வேறுபட்ட ஆட்சி முறைமையையும் அரசியலமைப்புக்களையும் கொண்டிருந்தபோது இந்தியாவே தென்னாசியாவின் இருதய நிலமாக விளங்குகின்றது. இந்தியாவிலி. ருந்தே இப்பிராந்திய அரசுகள் எல்லாவற்றுக்குமான இன, மத, மொழி கலாசாரக் கூறுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பரவலடைந்ததாக வரலாற்று மூலங்களில் இருந்து தெரிய வருகிறது. இஸ்லாமியக் கலாசாரம் கூட அவ்வாறானதொன்றாகவே பரவலடைந்து மெளகலாயர் ஆட்சியில் இந்துஸ்தானத்துக்குள் புகுந்த பின்னரே இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளையும், தீவுகளையும் நோக்கி இஸ்லாம் விரிவடைந்தது. இலங்கையில் நிலைத்திருக்கும் பெளத்த அரசியல் கலாசார மரபு இந்தியாவிலிருந்தே பரவியது. எனவேதான் தென்னாசிய நாடுகள் பலவற்றில் வாழும் மக்கள் இந்தியாவுடன் பூர்வீகத் தொடர்புகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவை ஏனைய தென்னாசிய நாடுகள் மீது இந்தியா அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் தலையிடக் காரணமாகியுள்ளது. இத்தலையீட்டிலிருந்து எந்த தென்னாசிய நாடும் விடுபட முடியாத நிலையிலுள்ளன.
தென்னாசியா இந்தியாவின் கலாசார விழுமியத்தைக் கொண்ட பிராந்தியமென்பதனை வரலாற்று ஆய்வாளர்களும், நவீன ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏனெனில் ஆரம்ப காலத்திலிருந்து கி.பி 14ம் நூற்றாண்டு வரை இந்திய மாதிரியிலான ஆட்சிமுறைமை தென்னாசியப் பிராந்தியம் முழுவதும் பரவியிருந்தது. இந்திய உபகண்டத்தை ஒத்ததான முடியாட்சி முறைமை இலங்கையிலும் நேபாளத்திலும் காணப்பட்டன. தற்போது தனியரசுகளாக அமைந்” துள்ள பாகிஸ்தான், வங்காளதேஷ், பூட்டான், மாலைதீவு என்பன மிக ஆரம்பகாலத்தில் இந்திய அதிகாரத்தின் கீழும், நிலப்பரப்பின் தொடர்ச்சியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன. இலங்கைத்தீவும் இந்திய மன்னர்களின் (சேனன், குத்திகன், மாகன்) செல்வாக்கு"
-32- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
களும், நேரடி ஆட்சிக்குள்ளும் உட்பட்ட நாடாக விளங்கியது. ஆரம்பகாலப் பகுதியில் மட்டுமல்ல இருபதாம் நுாற்றாண்டிலும் இந்திய சமஷ்டிக்குக்குள் இலங்கையை இணைக்க இலங்கைத் தலைவர்கள் விரும்பியிருந்தனர் என்பது கவனத்திற்குரிய அம்சமாகும். ஜவகர்லால் நேருவிற்கு முகவரியிட்டு இலங்கை தேசிய காங்கிரஸின் சார்பில் இந்திய தேசியகாங்கிரசுக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1940ஆம் ஆண்டு யூலை 20ம் திகதி எழுதிய கடிதத்தில்:
"சுதந்திர, இந்தியாவுடன் சுதந்திர இலங்கையை ஒரு சமஷ்டி ஆட்சி முறையை அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறைமைக்குள் இணைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகின்றோம்."
இதேபோன்ற கருத்தில் இந்தியத் தலைவர்களும் ஆர்வமாக இருந்தனரென தெரிய வருகின்றது. இது இந்தியாவின் இலங்கை மீதான அரசியல் செல்வாக்கின் பரம்பலின் பிரதிபலிப்பாகவே நோக்குதல் வேண்டும். அதிலும் குறிப்பாக தென்னிந்திய அரசியல் கலாசாரமே அதிக செல்வாக்கை செலுத்தி வருகின்றது.
“இலங்கையில் இன்று தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என மூன்று பிரதான கலாசாரப்பிரிவினர் வாழ்கின்றனர். ஆனால் இம்மூன்று பிரிவினரும் ஒரு பொதுமையான திராவிட கலாசார மக்கள் கூட்டத்திலிருந்தே தோன்றி வளர்ந்தவர்கள். பொதுவானதொரு பெருங்காலப் பண்பாடு தென்னிந்தியாவில் எவ்வாறு தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு கலாசாரங்களை தோற்றுவித்ததோ அதே போலவே இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரப் பிரிவுகளின் தோற்றமாகும்."
இதற்கு ஆதாரமாக 1980 டிசம்பரில் யாழ்பாணப் பல்கலைக்" கழகத்தில் தென்னாசியா தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலாநிதி சுசந்த குணதிலக அவர்கள் ஆற்றிய உரையை நோக்குவோம்.
17ம் நுாற்றாண்டில் கண்டி இராச்சியத்தில் கைதியாகவிருந்த றொபேட் நொக்ஸ் என்பவர் தப்பியோடி அனுராதபுரத்தை அடைந்த போது அங்கு வாழ்ந்த ஒருபகுதி மக்கள் சிங்களம் புரியாத மலபார் எனப்படும் தமிழர் என அவர் கூறுகின்றார். எனவே மேற்குறிப்பிட்ட (trண்று அம்சங்களிலிருந்தும் இந்திய பாரம்பரியத்தின் செல்வாக்கே இலங்கையிலும் நிலவுகிறது எனக் கூறமுடியும்.
(Bafet,08amayaShah -33

Page 19
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்தியாவிற்குமான தரைவழித் தொடர்பு, மற்றும் 15000 கிலோமீற்றர் எல்லையை கொண்ட உறவு இந்திய செல்வாக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பை உருவாக்கியது."
தென்னாசியா முழுவதும் இந்தியாவின் இன, மத, மொழி அலகுகள் ஏனைய அம்சங்களைக் காட்டிலும் அதிக பங்கை செலுத்துகின்றன. மிக நீண்ட காலமாக மேற்குறிப்பிட்ட மூலகங்கள் ஒவ்வொன்றும் அரசுகளின் அரசியலை தீர்மானிப்பவையாக அமைந்திருக்கின்றன. இப்பிராந்திய மக்களில் பெரும்பான்மையினர் இன, மத, மொழி சார்ந்த அலகுகளை அரசியல் முறைமைகளின் மூலங்களாக கருதுகின்றனர். ஆனால் நவீன அரசியல் கோட்பாடு உருவாகிய ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தில் அரசியலை ஓர் ஆட்சி முறையாகவும் அதிகாரத்துக்கான போராட்டமாகவுமே நோக்குகின்றனர். ஐரோப்பிய-அமெரிக்க மக்கள் அதிகார மாற்றத்திற்கான கருவியாக ஜனநாயக சாதனங்களை கையாளுவதுடன் மனித வாழ்வுக்கான ஆதாரங்களையும் அக்கோட்பாடுகளிலிருந்தே உருவாக்குகின்றனர். இம்முறைமை ஐரோப்பாவில் பிரான்சியப் புரட்சியை அடுத்தே ஆரம்பமானது. இரண்டாம் உலக யுத்தத்தைக் கூட ஜேர்மனியத் தலைவர் அடேப் ஹிட்லர் ஆரிய இனத்தின் இன. வாத எழுச்சியாகவே உருவாக்கினர். எனவே தென்னாசிய மக்களிடம் காணப்படும் இன, மத, மொழி இயல்புக்குரிய அம்சங்களை ஐரோப்பியரிடம் மிக அண்மைக்காலம் வரை காணமுடிகின்றமை தெளிவாகின்றது. இதனை விளங்கிக்கொள்வற்கு இன்னோர் அம்சத்தை சுருக்கமாக நோக்குவோம்.
அமெரிக்க கண்டத்தில் குடியேறிய ஐரோப்பியர் அங்கு வாழ்ந்த செவ்விந்திய இனத்தவரை அழித்தொழித்துவிட்டு தமது அதிகார ஆட்சியை நிறுவினர். ஆனால் அமெரிக்காவில் குடியேறிய பின்னர் அமெரிக்க ஐரோப்பியர் இன, மத, மொழி ரீதியான பூசல்களை தமக்கிடையே ஏற்படாத விதத்தில் மட்டுப்படுத்திக் கொண்டனர். (விதிவிலக்காக 1860 யுத்தம் வட- தென் மாநில முரண்பாடாக அமைந்திருந்தது) ஏனெனில் அமெரிக்கரின் வரலாறு மிகக் குறுகியது. “ஐக்கிய அமெரிக்கா உலகின் முதல்தர நாடுகளில் ஒன்றாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அறிமுகமாகியது. இவ் அறி முகத்தை அடுத்து உலகத்தின் பிரச்சினைகளுக்கும், நெருக்கடி" களுக்கும் வரலாற்றை ஆதாரமாகக் கருதாது தீர்வுகாண ஐக்கிய அமெரிக்கா விரும்புகின்ற போக்கை அவதானிக்க முடிகிறது.
-34- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
குடியேற்ற நாடாகிய அமெரிக்காவிற்கு பாரம்பரியமான நீண்ட வரலாறு இல்லை அதனால் வரலாற்றை மறைத்து உலகம் முழு" வதும் தீர்வுகளை திணிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் தென்னாசியா உட்பட ஆசிய ஆபிரிக்க இலத்தீனமெரிக்க முழு" வதும் அனைத்து முரண்பாடுகளுக்குமான தீர்வுக்கு வரலாற்றிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.”
இதுவே மேற்குலக அரசியல் கலாசார மூலங்க்ளுக்கும் கீழைத் தேச அரசியல் கலாசார மூலங்களுக்குமான வேறுபாடாகும். அரசி யல் கலாசாரத்துக்கான எண்ணக்கரு அமெரிக்கர்களால் வெளியிடப்பட்டது மட்டுமன்றி அதில் அமெரிக்க அரசியல் முறைமையில் ஆழ" மான செல்வாக்கு வேரூன்றி இருந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. அது மேற்குலக சிந்தனையாகவே மதிப்பீடு செய்யவேண்டியுள்ளது. இதனாலேயே தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசார மூலங்களுக்கும் மேற்குலக மூலங்களுக்குமிடையே அதிக வேறுபாடு எழுகின்றது. அதாவது ஐரோப்பிய அமெரிக்க அரசியல் கலாசாரத்திற்கும் தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்” துக்கும் இடையில் முரண்பாடு அதிகமாகவுள்ளது. தென்னாசிய நாடுகளில் இன, மத, மொழி சார்பான அரசியல் சக்திகள் ஆட்சி செய்வதையும் அதிகாரத்திற்காகப் போட்டி போடுவதையும் காண முடிகின்றது. மரபுவாதத்தினுடாகவே அரசியல் கலாசாரம் பெரு” மளவிற்கு வெளிப்படுத்தப்படுகின்றது. பொதுவாக இந்நாடுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இன, மத, மொழி சார்ந்த அம்சங்களின் பங்கு அதிகமாக உள்ளது. அல்மண்ட், வேப்பா ஆகியோர் கருதுவது போன்றோ அல்லது நவீன கருத்தியலாளர்களான லோறிடய்மெனட், எஸ். கான்ரிங்டன் மற்றும் மேகரான் கம்ரவா போன்றோர் கருதுவது போன்றோ தென்னாசியரின் அரசியல் வெளிப்பாடு அமையமுடியாமைக்கு அதன் இயல்பான மூலக்கூறுகளே காரணமாகும்.
தற்போது தென்னாசிய நாடுகளில் அரசியல் கலாசாரம் அதிக பாதிப்படைய தீவிர இனவாத அமைப்புக்களும் அவை முன்வைக்" கின்ற இனவாத கோஷங்களுமே காரணமாகும். மரபுவாதமும் அதனைப் பின்பற்றும் அதிகார அமைப்பும் நேரடியான அதிகாரத்தை அரசியலில் அனுபவிக்கின்றன. இது பற்றி அல்மண்ட் குறிப்பிடும் போது "அபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களில் கலாசார முரண்பாடுகள் காலனித்துவ நவீனத்துவ அனுபவங்களாலும், சாதி,
கே.ரீ.கணேசலிங்கம் -35

Page 20
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மத, மரபுவாத எண்ணங்களாலும் அதிக பாதிப்பை அடைகின்றது.”* என்கிறார்.
மேலும் இந்தியா பற்றி "இந்திய அரசியல் களத்தில் சாதிப்பிரச்சனையும் இன, மத, மொழி வகுப்பு முரண்பாடுமே அதிகமாகவுள்ளது" என தென்னாசியா பற்றிக்கூறும்போது தெளிவுபடுத்தியிருந்தார். இவையே கீழைத்தேச அரசியல் கலாசாரம் பின்தங்கியது என மேற்கு நாட்டவர் தவறாகக் கருதுவதற்கு காரணம். ஆனால் மேற்கு நாட்டவர் கருதுவது போன்றல்லாமல் இயல்பாகவே தென்னாசிய நாட்டவர் உட்பட கீழைத் தேசத்தவருக்கென தனித்துவமானதும் வளமானதுமான அரசியல் கலாசாரம் உண்டு. அது ஐரோப்பியரின் ஊடுருவலால் குழப்பமடைந்துள்ளது. அத்தகைய தனித்துவம் மிக்க அரசியலுக்கான அடிப்படையினை விரிவாக நோக்குவோம்.
தென்னாசிய அரசியலில் மதத்தின் பங்கு
தென்னாசிய அரசியலில் மதம் அடிப்படை என்பதை நிராகரிக்க முடியாதது மட்டுமன்றி இப்பிராந்திய மக்களின் வாழ்வியலோடும் அதன் இயங்கியலோடும் பின்னிப்பிணைந்ததாக மதம் முதன்மையடைந்துள்ளது. நவீன அரசியல் கோட்பாடுகள் வளர்ச்சி யடைந்தபோதும். தீர்மானமெடுக்கும் சக்திமிக்க இயந்திரமாக மதம் அனைத்துத் துறைகளிலும் செழுமையடைந்துள்ளது. இந்நாடுகளில் மதம் வர்ணத்தின் அடிப்படைகளுக்கூடாக சாதி வர்க்கப் பிரிவுகளை வகைப்படுத்தி அரசியலை மட்டுமன்றி சமூக பொருளாதார மூலக்" கூறுகளை நிர்ணயித்துள்ளது. இதனால் மதத்தைக் கருத்தில் கொள்ளாத தென்னாசியா பற்றிய ஆய்வுகள் அடிப்படைத் தகைமை" களை இழந்துவிடுகின்றன. எனவே இப்பகுதி முழுவதும் மதங்களின் தோற்றம் அதன் பரவல் அது கொண்டிருக்கும் முக்கியத்துவம் என்பனவற்றைச் சார்ந்ததாக அமைந்துள்ளது.
தென்னாசியா முழுவதும மத நல்லிணக்கமும் மதமுரண்பாடும் தளைத்தோங்கிய வரலாற்றைப் புரிவதனுாடாக தென்னாசிய அரசியல் சிந்தனையை அதன் நிறுவன அமைப்பினையும் நவீன அரசியல் மாற்றத்தினையும் விளங்கிக்கொள்ளலாம். இதில் மேற்குகிழக்கு என்ற பரிபாசை யதார்த்தமாகவே விவரிக்கப்படுகிறது. ஹேகலின் கண்டுபிடிப்பாய் போற்றப்படும் இயக்கவியல் கீழைத்தேச ஹகலிய பெளத்த வேதாந்த சிந்தனையில் மிகச் சர்வ
-36- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சாதரணமாக பயிற்றப்படும் ஒன்றாகும். இவை அகப்பண்பாட்டை அழுத்தும் ஆத்மவிசாரமாக இருப்பதேயாகும். ஆத்மவிசாரத்தில் உயிர்த்துவமாக இருப்பது இந்த இயக்கவியல் முறைமையே. சிவம் சக்தி என்று வரும் கருத்துக்கு எதிர்கருத்து அர்த்தநாரீஸ்வரரில் இணைவுறுவதும் நேத்திநேத்தி என எல்லாவற்றையும் நிராகரித்துச் செல்லும் வேதாந்தவிசாரம் இன்றி இன்றி என நிராகரித்த சகலதை" யும் ஏற்றுக்கொண்டு நிர்விகல்பதில் முடிவதும் தீவிர உடல் ஒறுப்பு என்ற கருத்தையும் தீவிர உடல்போகம் என்னும் உயிர்க்கருத்தையும் நடுவழியில் இணைவுறச் செய்யும் பெளத்தமும். இயக்கவியல் என்பது எவ்வளவு அனாயாசமாக பயின்று வருகிறதென்பதை காட்டுவதாயுள்ளது." இதற்கு மேலும் வலுவூட்டுவதாக மகாத்மா காந்தியின் கூற்று அமையும். அரசியலை வெறுத்து ஒதுக்குபவர்களே ஆத்மீகத்துக்கு செல்கிறார்கள் ஆனால் நான் ஆத்மீகத்திலிருந்தே அரசியலுக்கு வருகை தந்தவன். அவ்வாறான ஒரு சிந்தனைக்குள் தென்னாசிய தேசியவாதத்திற்கான அடிப்படைகளை மதநிறுவனங்களும் அவற்றை முன்னிறுத்திய தலைமைகளும் செயல்பட்டதைக் காணலாம். இன்று ஏறக்குறைய இஸ்லாமியத் தேசியவாதம் அவ்வாறனதொன்றேயாகும். இது கீழைத்தேசத்துக்கு பொதுவானதென்று. தென்னாசியாவுக்கு மிக மிகப் பொருத்தமானது. இந்திய கருநிலைத்தேசியவாதம் 1828இல் உருவான பிரம்மசமாஜத்துடன் ஆரம்பமானது.* ராஜராம் மோகன்ராய் அதன் ஆரம்ப கர்த்தாவாக விளங்கியது போல் சிங்களத் தேசியவாதத்திற்கு அநாகரிக தர்மபாலாவும்" தமிழ் தேசியவாதத்திற்கு ஆறுமுகநாவலரும் அவர்கள் சார்ந்திருந்த மதநிறுவனங்களுக்கூடாக குறிப்பிடக்கூடிய அரசியல் பங்களிப்பை செலுத்தி வந்தனர்.4
சமயத்தின் தொகுதியாக விளங்கும் மதம் பற்றிய அறிதல் காற்வெல் ஸ்மித்தின் சிந்தனை அண்மைக்கால அடையாளமாகவுள்ளது"இப்பிரஞ்ஞைக்கு மிக வெற்றிகரமான அணுகுமுறைகளில் நினியன் ஸ்மாட்" மேற்கொண்ட ஆய்வானது இன்னும் சிறப்புடையதாக அமைந்துள்ளது. குறிப்பாக சமயத்தைப் பற்றிய உரையாஸ்கள் அனைத்தும் தத்துவசாரத்தையும் வாழ்வியல் ஒழுங்கையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது. மதத்தினை ஆய்வு செய்யும் புலமை சார்பாளர்களிடம் தத்துவமானதா? நெறிமுறை சார்ந்ததா? போன்ற வாதம் முதன்மைபெற்று வருகிறது. அவ்வகை ஆய்வுமுறைகளிலிருந்தே மதத்தின் அரசியல் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடி"
கே.ரீ.கணேசலிங்கம் -37

Page 21
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
யும். அரசியல் பற்றிய கற்கையும் அரசியல் என்ற முறைமையும் வெறும் பதிவையோ தகவலையோ சார்ந்ததல்ல. இரத்தமும் தசைநார்கள் பொதிந்த உடல் உறுப்பின் இயக்கத்தைப் போன்றது. அரசியல் விஞ்ஞானம் நிறுவனம் சார்ந்த கற்கையாக பயிலப்பட்ட வரலாறு அரைநுாற்றாண்டுக்கு முன்பே மறைந்துவிட்டது. அறிவியலிலும் அரசியலிலும் முடிந்துபோன சரித்திரத்தை அளவிடுவதைவிட அதன் தற்போதைய பரிமாணத்தை அளவீடு செய்தல் இன்றைய சந்ததியினருக்கு அவசியமான கற்கையாகும். வளர்ந்த நாடுக" ளின் அறிவியல் பாய்ச்சலுக்கு பல்துறை சார்ந்த(inter- diciplen) கற்கைநெறியின் பிரயோகம் காரணமாகும். இதனால் தென்னாசியாவின் அரசியலில் மதத்தின் செல்வாக்குப் பற்றி அறிதல் மூன்றாம்தரப் புலமையாளர்களால் மூன்றாம்தர அறிவூட்டலாக பார்க்கப்படுகிறது. இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இதனைத் திருத்திக் கொண்டு மதவடிவங்களுக்கு மறைந்திருந்த அரசியல் - சமூகத்தை புரிதல் அவசியமானது. மதத்தைப் புரிதல் என்பது கீழைத்தேச சமூகத்தைப் புரிதராகவே கொள்ளப்படுகின்றது. அத்தகைய சமூகத்தின் விருத்திக்கு அரசியல் அவசியமாகவுள்ளது. அரசியலை மதத்தின் அடையாளமாகப் புரிந்துகொள்ளும் முயற்சி மதத்தின் பிரமாணக் குறிப்புக்களை விரிவாக நோக்குவோம்.
பெளத்த மதம்
பெளத்த மதத்தைப் பற்றி ஆய்வினை இரண்டு கோணத்தில் நோக்க முடியும். ஒன்று அரசுகள் பெளத்தத்தின் பேரால் ஆளப்படும் அரசியல் நாகரிகத்தைப் பற்றிய விடயம். இரண்டாவது பெளத்தத்தின் உண்மைப் பொருள் சார்ந்த விடயம். இதில் பெளத்தத்தின் உண்மைப் பொருளை விபரிப்பதன் மூலம் அதன் புனிதத் தன்மையையும், செழுமையையும் விளங்கிக்கொள்வதன் மூலம் முதலாவது விடயத்தின் போலித்தன்மை தெளிவாகும். பெளத்தமதத்தின் தோற்றம் தனிமனிதம் சார்ந்ததாக அமைந்திருப்பதனால் புத்தரின் தோற்றம் பற்றிய வரலாற்றுடன் சம்பந்தப்படுவதையும் அதன் உண்மைகளையும் தேடவேண்டியுள்ளது.
புத்தரின் வாழ்நாள் பற்றிய காலத்தை கி.மு 566-486 என கருதப்பட்டாலும் அவரது மரணம் கி.மு 410 என்பது சாத்தியமானதென தெரிய வருகிறது. இமயமலை அடிவாரத்தில் தெராய் பகுதியில் புத்தர் பிறந்ததாக ஆய்வுகளில் தெரிய வருகிறது இது தற்போது
-38- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நேபாளத்தை அண்டிய பகுதியில் அமைந்துள்ளதாக காணப்படுகிறது. புத்தர் சாக்கிய இனம் சார்ந்தவர் என்றும் சத்திரிய சாதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதோடு புத்தரை "சாக்கியமுணி” என்றும் அழைக்கின்றனர். புத்தர் என்பது அவரது சொந்தப் பெயரல்ல என்றும் புத்தர் என்பது "ஞானோதயம்" பெற்ற ஒருவர் என பொருள் கூறப்படுவதாகும். சித்தார்த்த கெளதமர் என்பது அவரது இயற்பெயர் புத்தரின் வரலாற்றில் தெளிவற்ற தன்மைகளும், புனைவுகளும், இலக்கியவாதிகளின் கற்பனைகளும் எல்லையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதென்பதற்கு சாதகமாகவே அவரது வாழ்வு பற்றிய ஆதாரங்கள் அவர் இறந்த ஐந்நுாறு ஆண்டுகள் தேடப்படாது கைவிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது பணிதொடர்பான துண்டு துண்டான ஆதாரங்களும், வாழ்க்கைப் பற்றிய நிகழ்ச்சிகள் சிலவும் உண்டு புத்தர் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்தார். ஒரு மகனை பெற்றெடுத்த பின் முப்பத்தைந்தாவது வயதில் ஞானோதயம் பெற்றதாகவும், வாழ்க்கையில் எஞ்சிய நாற்பத்தைந்து ஆண்டுகள் சமய போதனை வழங்கியதோடு எண்பதாவது வயதில் இறந்தார் எனக் கூறப்படுகிறது." சித்தார்த்தா என்பது “தண்குறிக்கோளை அடைந்துவிட்டவன்" என்று பொருள்படும். கெளதமன் என்பது பழைய இந்திய முனிவர் ஒருவரின் பெயரிலிருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. புத்தரின் இறுதிக் காலப்பகுதி முழுவதும் போதனைகளும், பேருரைகளும் ஈற்றியதாக தெரியவருகிறது அவரது பேருரைகளில் சமயம் மட்டுமல்லாது சமூகம், பொருளாதாரம், வாழ்க்கைநெறி என பல விடயங்கள் காணப்பட்டதாக ஆதாரங்கள் காட்டுகின்றன." அவ்வாறு அவர் பயணஞ்செய்த பகுதியின் பரப்பு 96,000 சதுரமீற்றராகும். மனிதர்களால் வரலாறு படைக்கப்படுவதென்பதற்கு நிகராகவே புத்தரின் செயல்களும் கானமும் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வகை பேருரைகளின் திரட்டாகவே பெளத்தத்தின் தத்துவம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
பெளத்த பிரபஞ்சம் பற்றி குறிப்பிடும் விடயம் அற்புதமானது. பிற மதங்களை போலவல்லாது தெளிவானதும் இயற்கையின் பதிவு களோடு பிரபஞ்சத்தின் பிறப்பினை யதார்த்தமாக ஏற்றுக்கொள்கிறது. பிரபஞ்சத்தினை ஐம்பூதங்கள், உயிரினங்கள் என வகைப்பருத்தும் பெளத்தம் உலக மண்டலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தவை என்றும் வளர்ச்சியும், சரிவும் படிப்படியானவை சுழற்சிக்கு உட்பட்டவை முன்வைப்பதோடு ஒவ்வொரு சுழற்சியும்
GBa.faGaoyashash -39

Page 22
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கோடிக்கணக்கான ஆண்டுக்கு நீடிக்கும் என்ற முடிபுக்கு வருகின்றது. இச்சுழற்சியால் உயிரினங்களும் அவற்றின் செயல்களும் நிகழ்வதோடு பாதிப்புக்குள்ளாகுவதையும் காணலாம். இவ் உயிரினங்களின் தார்மீகத் தகுதிநிலை தான் உலகத்தின் விதியை நிர்ணயிக்கிறது. அறியாமையும், தன்னலமும் கொண்ட மக்கள் வசிக்கும் உலகம் அறிவுநுட்பமும் நல்லபண்பும் கொண்ட மக்கள் வாழும் உலகத்தை விட அதிவிரைவில் சரிந்துவிடும். மனிதவர்க்கம் தொடங்குமிடம் ஆசை என்பதை பெளத்தம் முதன்மைப்படுத்துகிறது. பிரபஞ்சத்தின் மாதிரி ஒவ்வொன்றும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களுக்கு நிகரானதாக பெளத்தமதக் கணிப்பீடு அமைந்துள்ளது. கோபர் நிகஸ்ன்' கோட்பாட்டுக்கு நிகராக பெளத்தமத கருத்து அமைந்துள்ளது. இதுவே அதன் பலத்தை வெளிப்படுத்துவதோடு நீண்டு நிலைத்திருப்பதை கொண்டிருக்க காரணமாகிறது.
பெளத்த மதத்தின் தத்துவத்தில் வாழ்க்கைச் சக்கரம் மனிதவாழ்வின் இயங்கியல் விதிகளை தார்மீக நெறிமுறைக்குட்பட்டதாக உருவாக்கியுள்ளது. அதனூடாக தர்மத்தின் முதன்மை போதிக்கப்படுகிறது. மனித வாழ்வை நெறிமுறைக்குட்படுத்தும் விதத்தில் ஒழுங்குபடுத்தியுள்ளது. இதனை பின்வரும் சக்கர அமைப்பினூடாக விளங்கிக்கொள்ள முடியும். பெளத்த மதத்தின் நெறிமுறையில் தர்மச் சக்கரம் வாழ்வியலுடன், தத்துவத்துடனும், அரசியலுடனும் ஒன்றித்" துள்ளது. இங்கே காட்டப்படும் வாழ்க்கைச் சக்கரம் மறுபிறப்புத் தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இது ஒரு காலப்பகுதிக்குரிய மனித சமூகத்திற்கான போதனை அல்ல காலம் கடந்த விதத்தில் நிகழ்ந்துவரும் உண்மைத் தத்துவமாகும் மனித சமூகம் நிலைக்கும் வரை நிலையாமை என்பதை உணரும்வரை வலிமை அவசியமான போதனையாக அமையும். பெளத்தமத தத்துவத்தில் செயல் மிக முக்கியமானதாகவுள்ளது. கர்மா என்பது இயற்கையின் விதியை சுட்டுவதாகவுள்ளது அத்தகைய செயல் என்பது இயற்கையின் விதியைச் சுட்டுவதாகவுள்ளது. அத்தகைய செயல் என்பது தெரிவைக் குறிப்பதாகும். மனம், வாக்கு, காயம் வழியாக செயல்புரி வதைக் குறிப்பதாகும். பெளத்தத்தில் நான்கு மேன்மையான உண்மைகள் தந்தளிக்கப்பட்டுள்ளது.
-40- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நரகம்
(1) வாழ்க்கை என்பது துக்கம். (2) துக்கத்துக்கு காரணம் விளைவு.
(3) துக்கத்துக்கு ஒரு முடிபு இருக்கமுடியும்.
(4) துக்கத்தின் முடிபுக்கு வழிகாட்டுகிற நெறிமுறை
ஒன்றுண்டு.? நிலையாமை பற்றி பேசும் பெளத்தம் கணவாதத்தை நிலையான கொள்கையாக கொண்டிருக்கிறது. இத்தகைய கணவாதம் மாற்றத்தின் நவீனவாத நிலையை படம்போட்டுக் காட்டுகிறது. குணவாதச் சிந்தனை மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தேசங்களின் அபிவிருத்திக்கும் காலாக அமைந்துவிடுகின்றதென்ற அறிவியல் கண்டுபிடிப்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளை மையப்படுத்தியுள்ளது.
புத்தரின் போதனைகள் பாலிமொழியில் புனிதநூல் திரட்டாக பாதுகாக்கப்படுகிறது. பாலி என்பது உள்நாட்டு மக்களின் பேச்சு மொழி சமஸ்கிருத மொழியுடன் தொடர்புபட்டது. புத்தர் பயன்படுத்திய மொழியுடன் தொடர்புடையது. நெருக்கமானது. பாலி மொழி புனிதநூல் திரட்டு கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் எழுத்துவடிவம் பெற்றதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ஆசியா முழுவதும் பரவலடைந்துள்ள பெளத்தம் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே பரவ ஒரு உத்வேகம் கிடைத்தது. கி.மு 286 அளவில் இந்திய வரலாற்று நாயகர்களில் ஒருவரான அசோகர் .ஆட் ப் பொறுப்புக்கு வந்தார். மெளரியப் பேரரசின் விரிவாக்கத்தில் கணிசமான பங்கெடுத்த அசோகர் இந்தியப் பேரரசுக்கு மூலமாக விளங்கினார். கிழக்குக் கடற்கரையில் (ஒரிசா பகுதியில்) நடந்த
BassfasBanoeseaórtiabh -41

Page 23
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கொடுரமான போர் அவரது அறிவு ஞானம் பெளத்த மதத்தை நாடி சரணடைய அசோகருக்கு வழியாய் அமைந்தது. இதனால் இந்தியாவில் பெளத்தம் நிலைப்படத் தொடங்கியது. அசோகர் தென்கிழக்கு ஆசியா, மேற்கத்தேசம் மற்றும் இலங்கை என எல்லா பிரதேசத்துக்கும் தூதுவர்களை அனுப்பி பெளத்தத்தினை பரவச் செய்தார். இதன் செழிப்பு கி.பி முதலாம் நூற்றாண்டுவரை நீடித்தது. கி.பி 450 அளவில் மத்திய ஆசியாவிலிருந்து எழுந்த வெள்ளை ஹரீனர்கள் என்கின்ற இனம் ஆப்கானிஸ்தான், வடமேற்கு இந்தியா எங்கும் அமைந்திருந்த மடாலயங்களை அழித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது? இதன் பயிற்சி வடஇந்தியாவை படையெடுப்பு மொகாலயரின் ஆட்சியை இஸ்தாபிக்க வழிவகுத்தது.
இஸ்லாமியரின் ஆதிக்கம் இந்தியாவிலிருந்து பெளத்தத்தை அழித்ததோடு பெளத்தம் கூறும் "எழுவது எதுவும் முடிவுலிவும் செய்யும்" என்ற உண்மைப் பொருளுக்கு ஏற்ப இந்தியாவை 1192 இல் கில்லி சுல்தான் ஆட்சி நிறுவப்பட்டதுடன் பெளத்தம் மறைந்து விட்டது. ஆனால் ஆசியாவின் இதரபாகங்களில் இன்றுவரை நிலைத்திருக்கிறது.
பெளத்தத்தில் அடிப்படையில் மகாயானம், தேரவாதம் எனும் இருபிரிவுகள் ஆசியா முழுவதும் பரவலடைந்துள்ளது. புத்தர் வாரிசு எவரையும் விட்டுச் செல்லவில்லை. அவரது மரணத்துக்குப்பின் தர்மாவிற்கான பொருள் விளக்கத்தை சீடர்களே வெளிப்படுத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் மடாலய நடைமுறை பற்றியும் பின் கோட்பாடு பற்றியும் முரண்பாடு எழுந்தது. புத்தரின் மறைவுக்கு பின்பு ஒரு நூற்றாண்டு கழித்து இரு பிரதான குழுக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்து அதில் ஒரு பிரிவினர் பெரியோர் (ஸ்தவிரர்) எனவும் மறுபிரிவினர் பிரபஞ்ச பேரவையினர் (மகா சங்கிகள்) எனவும் அழைக்கப்பட்டனர். ஸ்தவிரர் பின்னர் தொவாத" மாகவும் பல பிரிவுகளாகச் சிதறுண்டு அழிந்துபோன மகாசங்கி களில் ஒரு பிரிவு மகாயானம் என அழைக்கப்பட்டது.
மகாயானம் என்றால் ஒரு மாபெரும் வாகனம் மீட்புக்குரிய பிரபஞ்ச வழியாகத் தன்னைக் கருதும் காரணத்தால் மகாயானம் என அழைக்கப்பட்டது. கி.மு. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் தோற்றியிருக்கலாமென கருதப்படுகின்றது. உலக நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை தான் மிக உயர்ந்த இலட்சியமென மகாயானம் கூறுகின்றது. தனது சொந்த மீட்பைத் தேடுவதை விட பிறரை
–42- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
காப்பாற்றுவதில் மகாயானம் அதிகளவில் வற்புறுத்துகிறது. இதன் இறுதி வடிவம் ஒவ்வொருவரையும் நிர்வாண நிலைக்கு இட்டுச் செல்லும் போதி சத்துவரின் இலட்சியத்தை எட்ட உதவுகிறது. இதனை ஆரம்பத்தில் போதிசத்துவரின் வாகனம் என அழைக்கலாயினர். மகாயானத்தைப் பின்பற்றியவர்கள் புத்தர் போல கருணை வாய்ந்த ஒரு பிறவி மற்றவர்களிடமிருந்து தன் உறவை ஒருபோதும் துண்டிக்கமாட்டார்கள். அதனால் புத்தர் வெளியிலே ஏதோ ஒர் இடத்தில் உலகின் முன்பு செய்ததுபோல இப்போது உயிரினங்களின் முழுமையான நன்மைக்காக தீவிரமாக செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்.* மகாயானம் புதிய பிரிவாக அமைந்ததோடு புத்தர் பற்றிய புதிய கருத்துக்களை வெளியிட்டது. அதன் நற்பண்பு களாக தாராளமனப்பான்மை, ஒழுக்கம், பொறுமை, தைரியம், தியானம், ஞானம், என ஆறு பிரிவுகளாக போதிக்கப்பட்டது.
இவ்வாறே தேரவாதமும் பெளத்த மதப்பிரிவின் முதன்மையின் அடையாளமாக துலங்குகின்றது. அனேகமாக புத்தரின் பின்பற்றலை முழுமையாகக் கொண்ட பிரிவான தேரவாதம் “பெரியோர் கோட்பாடு" என்றும் இந்தியாவின் தெற்கத்தியப்பிரிவு என்றும் அழைக்கப்படுகிறது. ஹினயானப் பிரிவு எனவும் இதனை அழைப்பதுண்டு. இது இலங்கை, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இலங்கையின் அசோக மன்னன் காலத்தில் பரவியதைத் தொடர்ந்து அரசியலோடு பின்னிப் பிணைந்துவிட்டது. மன்னனுக்கும் பெளத்தத்திற்கும் ஏற்பட்ட உறவு படிப்படியாக நவீன ஜனநாயக உறவாடலுக்குள்ளும் புகுந்துள்ளது. ஆரம்பத்தில் இந்திய மன்னர்களின் படையெடுப்பால் நெருக்கடியையும், அழிவையும் இலங்கையில் பெளத்தம் எதிர்கொண்டாலும் காலப்போக்கில் தீவின் புவிசார் இயல்புக்கேற்ப நிலைத்து நிற்கும் அடைவை எட்டிவிட்டது. காரணம் வாழ்வியலுடன் மட்டுப்படாது அரசியல், பொருளாதாரம், சமூகம் என்ற வெவ்வேறு தட்டுக்களில் பரவலடைந்துவிட்டது. . நன் வேகம் மதப் பிரிவான பெளத்தம் தீவிரத் தன்மையை பெற்றதுடன் இனம் சார்ந்த கட்டமைப்புக்குரியதாகவும் மொழி அடையாபாத்தின் அங்கமாகவும் இலங்கைத் தீவில் முனைப்பு பெற்றுவிட்டது. பெளத்த சமய சங்கங்களின் பின்னணியில் துறவிகள் பாராளுமன்ற " துப்புரிமையை பெறுவதற்கான தேர்தல்களில் ஈடுபடுமளவிற்கு பளத்த சங்கங்களும் அரசியலும் ஒன்றித்துவிட்டது பெளத்த துறவிகள் வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் நிகழும் இன மோதல்களுக்" குள் தீர்மானத்தில் பங்கெடுப்பவர்களாக மட்டுமன்றி போரில்
கே.ரீ.கணேசலிங்கம் -43

Page 24
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஈடுபடுபவர்களுக்கு ஆசி வழங்குவதும் போரில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது. இருந்தபோதும் குடியேற்ற கால வரலாற்றிலிருந்து நவீன ஜனநாயக காலத்திலும் பெளத்தக் கோட்பாட்டைத் தீவிர வெறித்தனமான உணர்வுடன் இலங்கைத்தீவு பாதுகாத்து வருகின்றது. சிங்களப் பெரும்பான்மை இனத்துக்குரியதாக போற்றப்படும் பெளத்தத்தின் ஆரம்பகாலம் இலங்கையின் தமிழ் சிறுபான்மை இனத்தோடும் இணைக்கப்பட்டிருந்த பரீட்சியத்தையும் வரலாற்றையும் காண முடிகிறது. மகாத்மாகாந்தியின் அகிம்சை போராட்டத்திற்கு பெளத்தம் பங்காற்றியபோது இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் உணர்வுகளோடு பெளத்தம் செல்வாக்குச் செலுத்தியிருந்ததென்ற வரலாற்றுப் பதிவுகள் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது.* சிங்களவருக்கே பெளத்தம் உரியதென்ற தவறான விளக்கமும் விவரணமும் தமிழ்மக்களிடம் மட்டுமன்றி தமிழ் புத்திஜீவிகளிடமும் உண்டு. புத்தரின் சிலைகளையும், அதன் ஆதாரச் சின்னங்களையும் காணும் இடமெங்கும் சிங்களவருக்குரியதென்ற எண்ணக் கருவாக்கம் இலங்கைத் தீவில் வளர்ந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் புத்த பகவானின் சிலைகளை நாட்டுவதும் புதைப்பதுவும் மீளவும் தோண்டி எடுப்பதுவும் நளாந்த நிகழ்வாக நடைபெறுகிறது. அவ்வாறே தமிழர்கள் தரப்பிலும் அவ்வகை சிலைகளையோ, சின்னங்களையோ கண்டவுடன் அழிப்புச் செய்யும் வரலாற்றுத்துயர் இலங்கைத் தீவின் இரத்த வெள்ளத்தை அதிகப்படுத்தியுள்ளது. அரசியலில் மதத்தின் பங்கென்பது தென்னாசியாவுக்கு பெளத்தம் சார்ந்து இலங்கை செயல்படுகின்ற போக்கு முதன்மையானதாக விளங்கியபோதும் பெளத்தப் போதனைகளுக்கு முற்றிலுமே வேறுபட்ட யதார்த்தம் நிலவுகிறது.
முடிவாக பெளத்தம் தென்னாசிய அரசிலுக்குள் அகிம்சை என்ற கலாசார விம்பத்தை தோற்றுவிப்பதில் பங்கெடுத்துள்ளது. அவ்வகை மாதிரியும் தென்னாசியாவின் புவிசார் அரசியலின் இருப்பில் ஆழமான கட்டமைப்பை வரைந்துள்ளது. அக்கட்ட மைப்புக்குள் இயற்கையுடனும், அதன் பண்பாட்டுத்தளத்துள்ளும் இணைக்கப்பட்ட ஒரு மிதமான அரசியல் கலாசாரம் வளர்ந்துள்ளது. அவ்வகை மாதிரியை இலங்கைத்தீவு கொண்டிருக்காத போதும் அரசியல் லாபத்துக்கான மதமாக பெளத்தத்தை தீவிரப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளது. பேராசிரியர் இந்திரபாலா குறிப்பிடுவது போல் மகாநாமரின் மனக்கிளர்ச்சிக்கும், அரசியல் அபிலாசைக்கும் இறை"
-44- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
போகும் கற்பனைக் கதையான "மகாவம்சம்”* அரசியல் ஏடாக மாற்றமடைந்தமையே இலங்கைத் தீவின் அரசியல் வரலாறாகியது. இந்த வரலாற்றை முன்னிறுத்திய இலங்கைத் தேசியம் சிங்களபெளத்த தேசியமாகியதால் வன்முறை அதன் ஆயுதமாக மாறியது. இந்திய தமிழ் மன்னர்களின் படையெடுப்பினால் இலங்கைப் பெளத்தம் பல சந்தர்ப்பங்களில் சரிவை சந்தித்துள்ளது.*இத்தகைய சரிவை சரிக்கட்டும் முயற்சியில் மகாநாமரின் மகாவம்சத்திற்கு பெரும் பங்குண்டு. அரசனையும் பெளத்தத்தையும் இணைந்த ஆட்சியை உருவாக்கிய மகாவம்சம் படிப்படியாக கடத்தப்பட்டு 21ம் நூற்றாண்டு வரையும் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. அரசியல் அமைப்பிலும், ஆட்சியிலும், யதார்த்த அரசியலிலும் பெளத்தத்தினை பிரிக்க முடியாததாக மாற்றியதுடன் அத்தகைய வரலாறு நிலையானதொன்றாக எழுச்சிகண்டுவிட்டது. நேபாளம், பூட்டான், இந்தியா ஆகிய நாடுகளின் பாரிய பங்கை பெளத்தம் பெறவில்லை எனக் கருதினாலும் அரசியலிலும், சமூக- பொருளாதார நியமங்களிலும் பெளத்தம் நிலையான கொள்கையைக் கொண்டிருக்கிறது. தென்னாசியாவின் அரசியல் கலாசாரத்தில் எஞ்சியிருக்கும் மிதவாத சிந்தனையும், அகிம்சையும், போரும், அரசியல் விருப்புக்களின் பலவீனமும் பெளத்தமதப் போதனைகளாலும் அதன் துறவற சிந்தனையாலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து அரசியலை விடுபடச் செய்வதென்பது தென்னாசியாவின் அடிப்படையை நிராகரிப்பதாக அமையும் அத்தகைய நிராகரிப்பானது முழுமையில்லாத சூழலை ஏற்படுத்துவதுடன் நிலையற்ற குழப்பமிக்க, பொருந்தாத அரசியல் கலாசாரத்தை முன்கொண்டு நிறுத்துவதாக அமையும். இலங்கைத் தீவில் நிலவும் பெளத்தம் சிங்கள மக்களின் போர் வெறியினால் ஆழப்படுவதாக உள்ளது. அவ்வகைத்தன்மை இந்தியா, இந்து, தமிழ் என்ற பெரும்பான்மைக்கு எதிரான தோற்றத்தை சிங்களம், சிங்களபெளத்தம் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர். இது மதத்தின் உண்மையைப் புறந்தள்ளிவிட்டு மதத்தை இனத்தினதும் அரசியலினதும் வடிவமாக அடையாளப்படுத்திக்கொண்டு ஆட்சியை நகர்த்தும் போக்கு இலங்கைத் தீவின் துயர்மிக்க வரலாறாக மாறிக்கொண்டு செல்கின்றது. இலங்கைத்தீவின் பெளத்தத்தைச் சார்ந்து அரசியலையோ அரசியல் கலாசாரத்தையோ இனங்காணப்பட முடியாது. காரணம் இலங்கை சிங்கள மக்களின் சிங்களம் என்ற மொழிவடிவத்தின் தன்மைகளும்,
GBord.sf.nBawo eyaőrňabuh -45

Page 25
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பண்பாட்டின் தன்மைகளும் திராவிட மொழிப்பண்பாட்டை சார்ந்திருக்கின்றது என Mical Roberts குறிப்பிடுவது போல சிங்கள அரசியல் தலைமைகளில் போக்கு அவ்வாறு அமையவில்லை. அவ்வகை பண்பாட்டு இயல்பினை சிங்கள மக்களினதும், அரசியல் தலைமைகளினதும் இருப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று அச்சமடைந்தனர். அதற்கான காரணம் திராவிடப் பண்பாட்டின் அடிப்படையில் ஆறுகோடி இந்தியத் தமிழ் மக்கள் தொகையும் இலங்கைத் தமிழரின் மக்கள் தொகையும் சிங்கள மக்களை சிறுபாணிமையினராக அடையாளப்படுத்தியது." அதனால் 1980களுக்கு பின்னான இலங்கை தீவின் சிங்கள மக்களின் அரசியல் தலைமை தம்மை ஓர் அரிய பண்பாட்டுக்குள் இணைக்க விரும்பி யது. வட இந்தியாவுடன் சிங்கள மக்களின் பண்பாட்டை இணைத்துப் பார்க்க முயன்றனர். இதுவே இலங்கைத் தீவின் பெளத்தப் பண்பாடு பெளத்த மரபுக்கும், அதன் அகிம்சைக்கும் தொடர்பில்லாத ஒன்றாக வளர்ந்துவர ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியே இன்றைய இலங்கைத் தீவின் அரசியல் கலாசாரமாகும்.
இந்துமதம்
ஆதியும் அந்தமும் இல்லாத மதம் இந்துமதம் என்ற வரலாற்றுப் பதிவை நியாயமற்ற விதத்தில் கொண்டிருக்கும் இந்துமதம் தென்னாசிய அரசியலில் ஆழமான பதிவுகளை வெளிப்படுத்தி யுள்ளது. ஆரம்பத்தில் நிலையாமை, மறுபிறப்பு ஆகிய கோட்பாடுகளுக்குள் மூழ்கிப்போன இந்துமதம் 19ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்பே அரசியல் சமூகத்தளத்தின் கட்டமைப்பில் இணைக்கப்படுகிறது. "இந்து" என்ற சொல் முழுமையான வடிவத்தை ஐரோப்பிய அன்னியரின் வருகைக்குப் பின்பே எழுச்சி அடைந்தது." இஸ்லாமியப் படையெடுப்புக்கள் அன்னிய ஆக்கிரமிப்பாக இருந்தபோதும் குறுநில மன்னராதிக்கமும், குலமரபு வழக்குகளும் அவ்வகை ஆட்சியாளர்களிடையே இஸ்லாத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயற்பட முடியவில்லை வெள்ளையரை எதிர்கொள்ளவும் வெள்ளையரின் ஆதிக்கத்தை உடைக்கவும் அவர்கள் பின்பற்றிய நிறுவன மாதிரிக்கட்டமைப்பு இந்தியத் துணைக்கண்டத்தவருக்கு அவசியமானதொன்றாகியது. கிறிஸ்தவ மதப்பரம்பல் நிறுவனம் சார்ந்திருந்த” தனால் "இந்து" மத அடையாளத்தை ஒன்றிணைத்து ஒரு நிறுவன அமைப்புக்குள் இணைப்பதில் இந்திய இந்துக்கள் வெற்றி பெற்றனர்.
-46- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
1825இல் பிரம்மசமாஜம், 1875இல் ஆரிய சமாஜம் முதலானவற்றின் உருவாக்கத்தில் “இந்து" அடையாளம் அரசியல் சார்ந்த” தொன்றாகப் பிரேரிக்கப்படுகின்றது.* இந்தியத் துணைக்கண்டத்து தேசியவாத எழுச்சிகளை அனைத்தும் மதம்சார்ந்ததாகவே காணப்படுகின்றது. அவ்வகையிலான கருநிலைத் தேசியவாத அமைப்பாக பிரம்மசமாஜத்தினை* கருதமுடியும். அவ்வகை மதஅமைப்புக்களு" டாக எழுச்சியடைந்த இந்தியத் தேசியவாதம் அரசியலில் நிலை" யான பதிவினை ஏற்படுத்திக் கொண்டது. தயானந்த சரஸ்வதி, ஆறுமுகநாவலர், அநாகரிக தர்மபாலா போன்றவர்களின் மதத்தலைமையின் கீழ் தென்னாசியத் தேசியவாதம் கருக்கொண்டு சுதேச அரசியல் சமூகவியல் அடையாளங்களை பாதுகாத்தது.
இந்தியாவில் பிரம்மசமாஜம், ஆரியசமாஜம் போன்ற 19ம் நூற்றாண்டு இந்து சீர்திருத்த இயக்கங்களும் அவற்றின் தலைமை" களும் குடியேற்றவாத எதிர்ப்புக்கான பாதையை வகுத்து இந்தியத் தேசியத்தை அதன் இறுதி நிலைக்கு ஊக்கின. இவற்றிற்கு நிகராக இலங்கையிலும் பெளத்த, இந்து (சைவசமய) இயக்கங்கள் இலங்கை தேசியவாதத்தின் முன்னோடிகளாக இருந்தன." காலனித்துவத்தை எதிர்க்கும் ஓர் ஆயுதமாக விளங்கிய இந்துதத்துவம் அதன் தொடர்ச்சியான அரசியலிலும், சமூக பொருளாதார வாழ்வி யலோடும் ஒன்றிணைந்து கொண்டது. மிக ஆரம்பத்தில் மனித விழு” மியங்களையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான பண்பாட்டுத்” தளத்தை பிரதிபலித்த இந்துமதம் ஆறு உபபிரிவுகளைக் கொண்ட மதமாக விளங்கியது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிய இந்துப் பாரம்பரியம் தென்னாசிய மொழியடையாளங்களுக்குள்ளால் செழுமை பெற்றது. இயற்கையோடு பிணைக்கப்பட்டி" ருந்த நதிக்கரையோர நாகரிக வாழ்க்கையுடன் இந்துமத அடை" யாளம் ஆழமான பதிவை தென்னாசிய அரசியல் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொண்டது. இயற்கை, மனிதன், மதம் என்ற ஒருங்கிசைவு வாழ்வியலுக்கான தொடர்ச்சியையும், ஆத்மீகத்தின் எல்லைகளையும் ஒன்றிணைப்பதில் வெற்றிகண்டது. இவ்வகை இசைவுத் தன்மை ஆட்சியாளர்களாலும் சில தனிமனித அடையாளங்களாலும் கடத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டது. அவ்வப்போது பல நெருக்கடிகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்தபோதும் இந்து என்ற அடையாளம் சார்ந்தே தென்னாசிய அரசியல் சமூகத்தின் பிாதியைத் தோற்றம் பெற்றுள்ளது. இந்துமதத்தின் நிகராக அதன் தோல்விகளும், அகமுரண்பாடுகளும், பலவீனமான சிந்தனைகளும்
8e.s.len(Barreraórålebih -47-س

Page 26
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அதன் அமைப்பின் பலவீனத்தை ஏற்படுத்தியது. அதிலும் 19ம் நூற்றாண்டுக்கு பின்னர் "இந்து" என்ற அடையாளம் ஆத்மீகத்தை புறந்தள்ளி அரசியலை அடையாளப்படுத்தும் போது "விரோதி” "எதிரி" என்ற பிறமத அடையாளங்கள் மீது தாக்குதல் செய்ய ஆரம்பித்தது." இது தேசியம் என்ற விழிப்புணர்வுடன் ஆரம்பித்து அரசியல் அதிகாரத்தின் எச்சங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் இயல்புடையதாக மாறியது. இந்தியாவிலும், நேபாளத்திலும் அதிகரித்த செல்வாக்கினை இந்துமதம் பெற்றிருந்தது. அதனோடு இந்துவின் மொழிவடிவம், வர்க்க அடையாளம், சாதிஅடையாளம் என்பன தீவிர உணர்வுடையதாக மாறியது. சாவர்கள்(1923) "இந்து" என்பவர் யார் என்பதற்கு பதிலளிக்கும் போது தனது தந்தையர் நாட்டை (பித்ருபூமி) புண்ணிய பூமியாக யார் கருதுகிறாரோ அவனே இந்து" என்பதையும் கோர்வால்கள் இந்துக் கலாசாரத்திற்கு உரியவர்களே இந்திய தேசியக் குடிமக்கள்? என்றும் இந்துப்பண்பாட்டில் மாறுதல் கலாசாரத்தை இந்தியத் துணைக்கண்டத்தில் பரப்பினார்கள். ராஜாராம் மோன்ராய் வேதத்தில் கூறப்பட்ட பிரம்மமே கடவுள் என்று வணங்கப்பட்டது என்றார். இந்துமதத்தின் வழிபாட்டில் சிலை வணக்கமும், பலகடவுள் வழிபாடும் என்பதை நிராகரித்த பிரம்மசமாஜம் கிறிஸ்தவரோடு கொண்டிருந்த நெருக்கத்தை எதிர்த்து ஆரிய சமாஜத்தை ஆரம்பித்தார். இவர்களும் சிலை வணக்கத்தையும் சாதியத்தையும் மறுத்த போதிலும் வர்ணமுறையையும், அகமணமுறையையும் ஆதரித்தனர்." சர்வர்களும், கேர்வால்லுக்கும் ராஜாராம் மோன்ராயும், தயானந்த சரஸ்வதியும் முன்னோடியாக விளங்கினர். இவ்வகை வளர்ச்சி குடியேற்றவாத காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியது. பல அமைப்புக்கள் நிறுவன வடிவமைப்புகுள்ளால் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது.
பிரம்மசமாஜம்(1828) ஆர்ஜசமாஜம்(1875) இந்துசபை(1907) இந்துமகாசபை(1922) ஆர்.எஸ்.எஸ்(1925) விஸ்வ இந்துபரிவுத்(1964) என்கின்ற பரிமாணமாற்றம் ஒன்றிலிருந்து ஒன்றாக திட்டமிட்டு அவ்வக்கால அரசியற் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது." இதன் தீவிரம் சுதந்திர இந்தியாவின் மகாத்மாகாந்தியை சுட்டபோது அம்பலமானது. அகிம்சாமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களில் ஒருவரான கோட்ஸோயால் கொல்லப்பட்டமையும் வழக்குமன்றத்தில் நிகழ்த்திய கடைசி உரை இந்துமதத்தின் இந்தியாவும், இந்தியா
-48- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வின் இந்துமதமும் எவ்வகை தீவிரப் போக்கை எட்டிவிட்டதென்பதைக் காட்டுகிறது.
காந்தி இல்லாத இந்திய அரசியல் நிச்சயமாக காரிய சித்தி யடையாததாகவும் எதிரடி கொடுக்கக் கூடியதாகவும் ஆயுதப்படை களைக் கொண்டு சக்திமிக்கதாகவும் இருக்கும் என்பதை நான் உணர்கின்றேன்."
எனவே காந்தி இந்துமதம் தீவிர வெறிப்பிடித்த அரசியல் சக்தியாக வளர காரணமாக குடியேற்றவாதம் காணப்பட்டதுடன் தேசியவாத எழுச்சிகள் மதத்தை மறைப்பொருளாகக் கொண்டு இயங்கியது. அதன்வெளிப்பாடு மதபகைமையையும் அதுசார்ந்த மதப்போர்களையும் தென்னாசிய முழுவதும் தூண்டிவிட்டது. மேற்கத்தேச மதப்பரம்பலை எதிர்க்க ஆரம்பித்த மேற்கத்தேச நிறுவன அமைப்பு காலப்போக்கில் அகமுரண்பாடுகளுக்கும் வழிகோலியது. அகமுரண்பாடுகளில் மேலோங்கிய இஸ்லாமிய எதிர்ப்புவாதம் தென்னாசிய அரசியலில் அழியாத பிரதிமைகளை தோற்றுவித்தது. இஸ்லாம் மதம்
இஸ்லாமிய மதம் தென்னாசியாவுக்குள் அரபுகளின் வருகை" யோடு ஆரம்பித்ததாக வரலாற்றுத் தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. வாணிபத்தை உலகம் முழுவதும் முதலீடாக்கிய அரபுக்கள் தங்களின் மத அடையாளத்தை முன்னிறுத்தி ஆசியாம் பிரதேசத்தின் இதரபாகங்களில் ஒன்றான தென்னாசியாவுக்குள் ஆரம்ப உறவை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தியத் துணைக்கண்டத்துடன் தரைத்தொடர்பு கொண்ட அரபு உலகத்தவர் இலங்கைத் தீவையும் வாணிப நோக்குடன் இணைத்து வைத்திருந்தனர். திருக்குரானில் குறிப்பிடுவது போன்று வாணிபமே அரபுக்களின் முதலீடாகும்." அதனடிப்படைக்குள் தென்னாசிய அரசியல் சமூகத்தளத்தில் பதிவை ஏற்படுத்திக் கொண்ட அரபுக்கள் தென்னாசிய சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நிலைபேறான முதலீட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அரபுமொழியை கைவிட்டு பிரதேசம் சார்ந்த விதத்தில் தமது மொழி வழக்குகளை மாற்றியதுடன் கலப்பினப் பரம்பலை தென்னாசியாவுக்குள் அவர்களது பரம்பல் விருத்தியடைந்தது." படிப்படியாக குடிப்பரம்பலை ஏற்படுத்திக் கொண்ட அரபுகள் ஆட்சியிலும் அரசியலிலும் செல்
கே.ரீ.கணேசலிங்கம் -49

Page 27
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வாக்குப்பெற ஆரம்பித்திருந்தனர். பாலைவனத்தில் தமது மூதாதை" களைக் கொண்டிருந்த அரபுக்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அரபு இராச்சிய அமைப்புச் சார்ந்த அரசாட்சி வடிவங்களை நிறுவத் தடைப்பட்டனர். மெளகாலயப் பேரரசின் எழுச்சி இந்தியத் துணைக்கண்டத்தை ஐரோப்பியர் கைப்பற்றும் வரை ஆளுகை செய்யும் வல்லமை உடையவர்களாக விளங்கியது குறிப்பிடக் கூடியதாகும். அக்காலத்தில் தென்னாசியா முழுவதும் அரபுப் பண்பாட்டை பரப்பும் விடயத்தில் மிகத் தீவிரம் காட்டியதுடன் மத அடையாளத்தினை இஸ்லாமியமாக மாற்றுவதிலும் வெற்றிகண்டனர். இந்து பெளத்த மதப்பாரம்பரியத்துக்குள்ளிருந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய பண்பாடு மிக நேர்த்தியாக பரவலடைய ஆட்சி அதிகாரம் உதவியது.
இஸ்லாமிய மதம் "பிறை" வழிபாட்டை மட்டுமே கொண்டிருக்கிறது. எந்த உருவ வழிபாட்டையும் ஏற்காத இஸ்லாம் இறை" வனின் தூதுவனாக நபிகளை நேசிக்கின்றது. “திருகுரானின்” வாக்கி யங்களை இறைவாக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய சமூகம் நபிகள் மீதான அதீத நம்பிக்கையால் தமது அறவாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். ஏகத்துவம் இஸ்லாத்தில் கட்டளை என குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.* மானிட வர்க்கத்திற்கு எக்காலமும் வேண்டப்பட்டதும், வேண்டப்படுவதும், ஒரே தெய்வமான அல்லாஹ் அவர்களே அவனின் படைப்பே உலகம் உலகில் அனைத்தும் இறைவன் படைப்பென இஸ்லாம் கூறுகின்றது. திருக்" குரானை வெறும் மத அறநூலாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு முழுமையான வாழ்வியலைக் கூறும் நெறியாகவும் அறத்தைப் போதிக்கும் அதே வலிமையுடன் திகழுகின்றது.
குரான் போதிக்கும் அரசியல் மேற்கு ஆசியாவுக்கே உரித்தான இயல்புகளைக் கொண்டிருந்தாலும் நபிகளின் பண்புகள் அதில் முதன்மைப் பெற்றிருந்தன. ஜிஹாத் அநீதி செய்யும் ஆட்சியை எதி ரில் நின்று உண்மை புகட்டுவதே புனிதப்போர் எனக் கூறுகின்றது.* தற்காப்புக்காக போர் புரிவதை முதல்பணியாக இஸ்லாம் கருதுகின்றது. மக்களாட்சியை ஏற்கும் குரான் மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைய வேண்டும் என்கிறது. மதவெறி, இனவெறி, சாதிவெறி, அதிகாரவெறியை முற்றாகவே நிராகரிக்கின்றது. இஸ்லாம் ஆணுக்கு பெண்சமமானவர் என்பதனை ஏற்றுக்கொள்கிறது. சொத்துரிமையில் ஆணும் பெண்ணும் ஒன்றாகவே மதிக்கப்படுகின்றனர்.
-50- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
எனவே இஸ்லாத்தின் ஆதிக்கம் தென்னாசியாவில் பரவுவதற்கு அதன் வலிமையான நெறிமுறையும் வாழ்வியலுக்கான வழிகாட்டி" யுமே காரணமாகும். அரபுலகத்தின் முழுமையை தென்னாசியாவில் இழந்த இஸ்லாம் அந்தந்த பிரதேசத்திற்கு ஏற்ப தனது இயல்பினை மாற்றிக்கொண்டாலும் மதம் என்ற அடிப்படையில் வலிமை" படைத்ததொன்றாக உள்ளது.
பாகிஸ்தான், வங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளில் ஆட்சியுரிமைக்குரிய இனமாகவும் மதமாகவும் இஸ்லாம் காணப்படுகிறது. ஏனைய நாடுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் கணிசமான பங்கினைப் பெற்றிருக்கும் இஸ்லாமியர் ஆட்சிக்கு உறுதுணையாகவும், அரசியலில் பங்கெடுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இதுவே தென்னாசியாவின் அரசியல் கலாசாரத்தின் மூலகங்களாகும். இப்பிராந்தியத்தின் இயங்கியல் பரிமாணமும் மதமேயாகும்.
அடிக்குறிப்புகள்
(1) Davinder Kumarmadaan, SAARC, Origin and Development, verinder Grover (Ed.) Government and Politics of Asian Countries, Vol. 5, Deep and Deep Publication PVT. Ltd, 2000 New Delhi, PP 642-643.
(2) L. B Mendis, India's Role in South Asia, Bandaranaike Centre
for international Studies, Colombo, 1992.p, 18.
(3) Mychael Roberts. (Ed), Documents of the Ceylon national Congress in Ceylon 1929-1950, Vol. IV, Department of National Archives, Colombo, 1977, p, 2708 g) is list G.5a5 இந்தியத் தலைவர்களும் அவ் விருப்பையும் ஆவலையும் கொண்டிருந்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் காட்டப் படுகின்றன. மேலும் இது தொடர்பாக மு.திருநாவுக்கரசு இலங்கையின் இனப்பிரச்சியின் அடிப்படை என்ற நூலில் விபரமாக ஆராய்ந்துள்ளார்.
(4) S. K. Sitampalam, The megatithic culture in Sri Lanka, un published PHD, Thesis, University of Poona, 1980, மேற்கோள் பொ. இரகுபதி, பெருங்கற்கால யாழ்ப்பாணம், மகாஜனக் கல்லுாரி தெல்லிப்பழை, 1983 பக் 06
கே.ரீ.கணேசலிங்கம் -51

Page 28
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் மு.திருநாவுக்கரசு, இலங்கையின் இனப்பிரச்சினையின் அடிப்படை தழிழ்தாய்ப் பதிப்பம். யாழ்ப்பாணம் 1990 பக்:78 மூலப்பிரதி கா. இந்திரபாலா, ஆனைக் கோட்டையில் ஒர் ஆதிக்குடியேற்றம், வீரகேசரி, 07.12.1980
Robert Knox, AN Historical Relation of Ceylon, Tisara prakasakaia, dehowala, 1958, p. 268
Robin. J. Mooree, India in 1947 the Limits of Unity. A. J. Wilson and D. Daltion (Ed), the States of South Asia Problems of National Intergration, London, 1982, pp, 45-68
G.A.Almond and G. B. Powell, op.cit.p.63.
Ibid,
மு.பொன்னம்பலம்.மார்க்சியம்-பின் நீனத்துவம் சில முரண்பாடுகள் முரண் நகைகள். மூன்றாவது மனிதன்.ஜனவரி மார்ச் 2001 பக்.50.
ஜவகர்லால் நேரு. சுயசரிதம்,கார்த்திகை பிரசுரம், சென்னை, I978.
அ.மார்க்ஸ்.இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு. அடையாளம் வெளியீடு நவப்பர் 2001 சென்னை,பக்.44-45.
மு.திருநாவுக்கரசு. பக்74 துாமியென் கோவ்ன் (மொழிபெயர்ப்பு) பெளத்தம் மிகச் சுருக்கமமான அறிமுகம் அடையாளம் வெளியீடு, 2005, தமிழ்நாடு. பக்: 26
மே. நூல் பக்:38 மேற்படி நூல்.கேபர் றுகஸ். கி.பி.16ம் நூற்றாண்டு போலந்து நாட்டு வானவில் வல்லுனர் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றிச் சுழல்கிறது என்ற கோட்பாட்டை
வெளியிட்டார்.
பெளத்தம். பக்.45
கே.ரீ.கணேசலிங்கம்

(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
(25)
(26)
(27)
(28)
(29)
(30)
(31)
(32)
(33)
(34)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் மேற்படி நூல் பக்.99-100 மேற்படி நூல் பக் 83
மேற்படி நுால் பக் 102
The followers of lord Buddha, "Beating the war drums for the destruction of Buddhism in Lanka", Sri lanka, 2000.
கலாநிதி. இந்திரபாலா, தமிழரின் தொல்லியல் வரலாறு 2006. அவுஸ்ரேலியா
தாமியென் கோவ்ன். பெளத்தம். பக். 102.
மு.திருநாவுக்கரசு, இலங்கை இனப் பிரச்சனைகளின் அடிப்படைகள், தமிழ்த்தாய் பதிப்பகம், பக். 33
மேற்படி நூல் பக் 43
அ.மார்க்ஸ், இந்துத்துவம், ஒர் பன்முக ஆய்வு அடையாளம் நவம்பர் 2001.பக்.10-11
அ. மார்க்ஸ் பக்.11
பார்க்க மு.திருநாவுக்கரசு. இலங்கையின் இனப்பிரச்சனையின் அடிப்படைகள்
கலாநிதி மு.குணசிங்கம். இலங்கைத் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றியதோர் ஆய்வு, சிட்னி 2003. பக்.50
அ.மார்க்ஸ் பக் 12
மேற்படி நூல்
மேற்படி நூல் பக்.45
மேற்படி நூல் பக்.49
உதயன், விஜயர், இந்துசமூத்திரப்பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சனையும், ரோசாலத்சம்பர் படிப்பு வட்டம் சென்னை.33.1987.
கே.ரீ.கணேசலிங்கம் -53

Page 29
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
(35) Dr. Abdullah Abbas. Holy Ouran, Ahmad Printing
Corporation Karach. 1999. P.390
(36) பார்க்க சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும் குமரன் புத்தக இல்லம், 2002 கொழும்பு சென்னை பக்.286
(37) Dr. Abdullah Abbas. P.379
(38) ஸையித் இப்ராஹீம், முஹம்மத் நபி, வளர்மதி பதிப்பகம்,
திருச்சி. 1973. பக்.564
-54- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியநாடுகளின் அரசியலில் காலனித்துவமும் தேசியவாதமும்
雄眼
வரலாற்றுப் பின்னணி
தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் காலனித்துவத்தின் ஊடுருவல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்” றங்கள் உடன்பாடான அம்சங்களைக் காட்டிலும் முரண்பாடான அம்சங்களையே உருவாக்கியுள்ளன. இம்முரண்பாடுகளினால் தென்னாசிய மக்கள் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இவ்வாறான காலனித்துவத்துக்கு எதிரான உணர்வுகள் இறுதியில் தேசியவாதமாக பரிணமித்தது.
தென்னாசிய நாடுகளில் ஊடுருவிய காலனித்துவ அரசியல் கலாசாரத்தை ஆராய முன்னர் இந்நாடுகளில் இயல்பாகவுள்ள அரசியல் கலாசாரத்தை இனங்காண வேண்டியது அவசியமானது. அதனை மிகச்சுருக்கமாக நோக்குவோம்.
கி.பி. 1453ஆம் ஆண்டு மேற்கு - கிழக்கு (ஐரோப்பியகீழைத்தேச) வர்த்தக நகரமான கொன்சாந்தினோபிள் (தற்போதைய ஸ்தான்புல்) துருக்கிய சாம்ராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டது. இவ்வரலாற்று நிகழ்வினால் மேற்கு - கிழக்கு வர்த்தகம் ஸ்தம்பிதம" டைந்தது. இந்நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பியர் புதிய நாடு" களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை கடல்வழியாக ஆரம்பித்தனர். இக்கடல் வழிப் பயணத்தின் முன்னோடிகளாக போத்துக்கேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் என்போர் காணப்பட்டனர். இத்தகைய முயற்சியின் விளைவாக வஸ்கொடகாமா 1498ஆம் ஆண்டு கடல் பயணத்தை மேற்கொண்டு இறுதியாக இந்திய இறங்குதுறைகளில் ஒன்றான கள்ளிக்கோட்டையை வந்தடைந்தனர். அவரே
கேரீகணேசலிங்கம் -55

Page 30
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தென்னாசிய நாடுகளுக்கான முதலாவது ஐரோப்பிய காலனித்துவ மனிதனாக திகழ்ந்தார். இக்காலனித்துவ பரம்பல் ஏற்கனவே சிதைந்துபோன மேற்கு - கிழக்கு வர்த்தக உறவில் பொருளாதாரப் பரிமாற்றத்துடன் அரசியல், சமூக, கலாசார பரிமாற்றங்களையும் உருவாக்கியது.
இக்காலப் பகுதியில் தென்னாசிய நாடுகளின் அரசியலில் (pLutláf (Monarchial Rule) (paopGold GTCupářsf) GubélcD555. இந்திய மன்னர்களுக்கும் பாரசீகம் மற்றும் ஆப்கான் எல்லையி. லிருந்து படையெடுத்து வந்த மன்னர்களுக்குமிடையில் பெரும் போர்கள் நிகழ்ந்தன. அந்நியநாட்டு மன்னர்கள் படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவதும், மக்களைக் கொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் இயல்பான அம்சமாக காணப்பட்டது. அந்நிய நாட்டுப் படைகளுக்கு எதிராகவும் தென்னாசிய நாட்டு மன்னர்களிடையேயும் பல போர்கள் நிகழ்ந்தன. வட இந்தியர், தென்னிந்தியர்மீதும், தென்னிந்தியர் இலங்கை மீதும் படையெடுத்து ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றினர். இத்தகைய ஏகாதிபத்திய கலாசாரத்தில் பெரும் அழிவுகள் தென்னாசிய நாடுகளில் ஏற்பட்டன. இப்போர்களால் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பாரியளவான வளங்கள் சிதைத்தழிக்" கப்பட்டதாக இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்."
மேலும் அக்காலப் பகுதியில் அரசியல் கலாசாரத்தில் படுகொலை நிர்ணயிக்கப்பட்ட விடயமாக அமைந்திருந்தது. ஆட்" சியை கைப்பற்றுவதற்காக குடும்பங்கள் மீதும் தமது உடன்பிறப்புக்கள் மீதும் இப்படுகொலை அரசியல் கலாசாரத்தை ஆட்சியாளர்கள் பிரயோகித்தனர். முடித்ததை ஆட்சியின் மகுடமாக கருதியதுடன், அரசையும் மதத்தையும் பிணைத்து தமது ஆட்சியை மன்னர்கள் பாதுகாத்தனர். இதனை இலங்கையில் எழுந்த வரலாற்று நுாலான "மகாவம்சத்தில் தெளிவாக காணலாம்” “இந்திய துணைக்கண்டத்தில் சுதேசிகள் இந்துக்களே அவர்கள் ஒரே தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றார்கள். பெளத்தம், சமணம், சீக்கியம் என்பன இந்துமதத்தின் உட்சுவர்கள். பெளத்த மதம் அகிம்சையை போதித்ததன் மூலம் முஸ்லீம்களதும், பிரிட்ஷ்சாரதும், படையெடுப்புக்களிலிருந்து இந்துஸ்தானத்தின் மக்களைக் காப்பற்ற தவறிவிட்" டது." என்ற குற்றச்சாட்டு மதத்தினூடாக முடியாட்சியின் மீது திணிக்கப்பட்டதென்பது வரலாற்றுப் பதிவாகவுள்ளது.
-56- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தென்னாசிய நாடுகளில் நேரடி காலனித்துவ ஆட்சிக்கு உட்படாத நேபாளத்திலும் மதம் முடியாட்சி அரசியல் கலாசாரத்தில் முக்கியம் வகிக்கின்றது. சிறப்பான தலைமையும், உறுதியான ஆட்சியும் அந்நியரை எதிர்க்கும் திறனும் வியக்கத்தக்கதாக இருந்தது. அதுபற்றி வரிட்ணர் குறொஸ் தனது கட்டுரையொன்றில் “உலகத்திலேயே மீயுயர் அதிகாரம் கொண்ட இராச்சியமாகவும், சுதந்திரமான இந்து அரசாகவும், மிக நீண்டகாலம் நிலைபெற்றிருந்த அரசாகவும் நேபாளம் விளங்கியது" எனக் குறிப்பிட்டுள்ளார். குடும்ப ஆதிக்கம், முடியாட்சிமுறைமையில் பலநுாற்றாண்டுகளாக நேபாளத்தில் நிலைத்துள்ளது. தற்போது முடியாட்சியில் காத்திரம் அருகியபோதும் குடும்பச் செல்வாக்கு நிலைபெற்றுள்ளதை காணலாம்.
தென்னாசிய நாடுகளின் முடியாட்சி அரசியல் கலாசாரத்தில் மரபுவாதம் இன்னோரம்சமாக உள்ளது. நம்பிக்கை, விழுமியங்கள், பழக்க வழக்கங்கள் என்பன அரசியலில் தனித்துவமான அம்சமாக விளங்குகின்றது. முடியாட்சி மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை, குடும்ப அரசியலை பேணும்போக்கு என்பன இந்நாட்டு மக்களின் கலாசாரமாக இருந்து வந்தது. அத்தோடு சாதியும் மதமும் உயர்மட்டமாக மதிக்கப்படும் இயல்பினையும் இங்கு காணலாம். சமூக அடையாளமாக சாதியும், மதமும் விளங்குகின்றது. "ஆங்கிலேயர் இந்திய துணைக் கண்டத்துக்குள் நுழைய முன்பு இந்தியச் சமூகமென்று தம்மை அழைத்துக்கொள்ளாத இந்திய மக்கள் தாம் வாழ்ந்த இடங்களில் பேசிய மொழிகளையும் சார்ந்திருந்த குழுக்களையும், மதப் பிரிவுகளையுமே தமது அடையாளங்காளாக கருதி வெளிப்படுத்தினர். இத்தகைய சாதி, மத, பூசல்கள் ஆரம்பகால தென்னாசிய இராச்சியங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தத் தவறவில்லை. சமூகக்கட்டமைப்பில் உயர் சாதியினரது ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. சாதியில் தாழ்ந்தவர்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிலவுடமை" யாளர்களின் ஆதிக்கம் தென்னாசிய நாடுகள் எல்லாவற்றிலும் காணப்பட்டது. இவ்வாறான முரண்பாட்டிலும் இந்திய உபகண்டம் ஐந்நூாறுக்கு மேற்பட்ட இராச்சியப் பிரிப்புக்களாய் துண்டாடப்பட்டிருந்தது. "இலங்கையிலும் நான்கு பிரதான இராச்சியப் பிரிவுகள் காணப்பட்டதாக வரலாற்று தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
கே.ரீ.கணேசலிங்கம் -57

Page 31
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் காலனித்துவவாத அரசியல் கலாசாரம்
மேற்கூறிய சூழல் தென்னாசிய நாடுகளில் நிலவியபோதே இந்நாடுகளை ஐரோப்பியர் கைப்பற்றினர். இந்தியத் துணைக் கண்டத்தின் பண்பாடு துருக்கிய படையெடுப்புக்கும் மொகாலயரின் ஆட்சிக்கும் (அக்பரின்) இடையில் பல்வேறு பண்பாட்டு அமசங்களை ஒன்று சேர்க்கும் கட்டம் பலவீனமடையத் தொடங்கியதனால் தென்னாசியா முழுவதும் சிறுகுழுக் கண்ணோட்டம் எழுச்சியடைந்தது. இத்தகைய வீழ்ச்சிக்கட்டத்தில் ஆங்கிலேயர் இந்தியாவுக்" குள் நுழைந்தனர். பிரித்தானியரே தென்னாசிய நாடுகளின் (நேபாளத்தை மறைமுக செல்வாக்குக்குள் உட்படுத்தியிருந்தனர்) முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள். அவர்கள் தமது பொருளாதார சுரண்டலையும், அரசியல் இலாபத்தையும் அடைவதற்காக அரசியல், சமூக, கலாசார அம்சங்களின் ஊடாக ஏற்படுத்திய ஆதிக்கமே காலனித்துவமாகும் காலனித்துவத்தின் ஆரம்பகால பகுதி வன்முறை அரசியல் கலாசார காலமாக அமைந்” திருந்தது. பிரித்தானியர் ஏற்கனவே தென்னாசிய நாடுகளின் சில பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்த பிரான்ஸ், மற்றும் ஐரோப்பியருடன் போர் புரிந்தமையும், தென்னாசியாவின் சில இராச்சிய அமைப்புக்கள் பிரித்தானியரின் ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்தமையுமே வன்முறை கலாசாரத்துக்கு காரணமாகியது. இவ்வாறு எழுந்த முரண்பாடுகளை கையாள பிரித்தானியர் ஆரம்ப" காலத்தில் பின்வரும் அரசியல் கலாசார அணுகுமுறைகளைப் பின்பற்றினர். (1) தந்திரோபாய அரசியல் கலாசாரம் - Startagic Political culture (2) (puGOil IIT G 9JJaflug) sang ITULib - Conflict Political culture
இந்திய உபகண்டத்தில் பஞ்சாப், மைசூர், பம்பாய் (தற்போது மும்பாய்) போன்ற இராச்சியங்களும், பூட்டானின் முழுப்பகுதியும், இலங்கையில் கண்டி, வன்னி, இராச்சியங்களும், பிரித்தானியரின் ஆதிக்கத்தை எதிர்த்து போர்புரிந்த பிரதேசங்களாக விளங்கின. இவ்வாறு நிகழ்ந்த போர்களில் பிரித்தானியர் சில சந்தர்ப்பங்களில் தோல்விகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தோல்" விகளை தொடர்ந்தே தந்திரமான அணுகுமுறைகளை பின்பற்ற அவர்கள் தொடங்கினர். முதலில் இவ்இராச்சியங்களிலுள்ள மக்" களை தம்வசப்படுத்த முயற்சித்தனர். மேலும் இவ்இராச்சியப் பிரிவுகளில் தளபதிகளுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்."
-58- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இவ்இராச்சியங்களை எதிர்க்கும் மன்னர்களுடன் நட்புறவை பலப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு பல தந்திரோபாய அரசியல் கலாசாரத்தைப் பின்பற்றி இறுதியில் இவ் இராச்சியங்களையும் தமது ஆதிக்கத்துக்குள் உட்படுத்திக் கொண்டனர். இத்தந்திரோபாய அரசியல் கலாசாரம் ஆரம்பகாலத்துடன் முடிந்துவிடவில்லை. முஹித வாத சுதேசிகளில் அரசியல் சீர்திருத்த போராட்டம் இடம்பெற்ற காலம் முழுவதுமே அக்கலாசாரம் தொடர்ந்து காணப்பட்டது.
தென்னாசியப் பிராந்தியம் இன, மத, மொழி,கலாசார ரீதியான வேறுபாடு கொண்ட பிராந்தியமாக காணப்பட்டது. ஆனால் பிரித்தானியர் இப்பிராந்தியத்தை கைப்பற்றியதுடன் இவ்வேறுபாடுகளை முரண்பாடுகளாகவும், பகைமையாகவும் மாற்றினர். ஏனெனில் இவ்வாறு இன, மத, மொழி கலாசார முரண்பாடுகள் முனைப்படையும்போது தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாமெனக் கருதினார். ஏதாவது ஓர் இனத்துக்கு சார்பாக செயற்பட்டு அவ்வினத்தின் ஆதரவுடன் ஆட்சி செய்யலாம். என்ற சிந்தனை அவர்களிடம் மேலோங்கியிருந்தது. "மொகலாயர் ஆட்சிக்காலத்தில் கூட இந்து-முஸ்லிம் முரண்பாடும், மோதலும், வெகு அருமையாகவே இடம்பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியரது ஆட்சிக்காலத்தில் அவர்கள் தமது ஆட்சியை சுமுகமாக்குவதற்கு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்-இந்துக் கலகத்தை தீவிரப்படுத்தினர். இந்த உணர்வு இந்தியா, பாகிஸ்தான் என தனி நாடுகளாகப் பிரிந்த பின்பும் மேலும் தீவிரமடைந்தது." மேலும் இதனை விளக்குவதற்கு பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
"இந்தியாவின் சிறுபான்மை இனத்தவிரான பெளத்தர்களுக்கு, சார்பாக பிரித்தானியர் நடந்து பின்பு பல உள்நோக்கங்களின் அடிப்படையில் பெளத்தர்கள் வாழ்ந்த பர்மியப் பகுதியை (தற்போதைய மியான்மார்) 1935ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரித்து தனியரசாக உருவாகினார். அதேபோல் சிறுபான்மை இஸ்லாமியருக்கு சார்பாக நடந்து இறுதியில் 1947ஆம் ஆண்டு இந்திய உபகண்டத்திலிருந்து பிரித்து பாகிஸ்தானை தனியரசாக உருவாக்கினர்."
இவ்வாறு வேறுபாடுகளை முரண்பாட்டு அரசியல் கலாசார மாக தீவிரப்படுத்தியவர்கள் பிரித்தானியரே. இந்திய உபகண்டத்தில் இந்து, பெளத்தம், இஸ்லாம் என மத அடிப்படையில் பிரிவினைக் கொள்கையை பிரித்தானியர் வளர்த்தனர். இலங்கையில் இன, சாதி, அடிப்படையிலான முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தினர்.
கே.ரீ.கணேசலிங்கம் -59

Page 32
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
“ஏனைய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் பலத்தையும், முக்கியத்துவத்தையும் குறைக்கும் வகையில் கண்டிச் சிங்களவருக்கும், கரையோரச் சிங்களவருக்கும் (சாதியடிப்படையில்) பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது." இவ்வாறு பிரித்தானியர் முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தைக் கூர்மைப்படுத்தி, இன, மத, பிரிவுகளிடையே பகைமையை வளர்த்தனர் எனக் கருதமுடியும். இது பல தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்நாடுகளில் சுதந்திரம் பெற்று அரைநுாற்றாண்டுகள் கடந்த பின்னரும் முரண்பாடும், மோதலும் ஓயவில்லை.
மேலும், பிரித்தானியர் தென்னாசிய நாடுகளிலுள்ள மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கும் விதத்தில் நிர்வாக அரசியல் பிரிவுகளை அமுல்படுத்தியதனையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி பிரித்தானியர் இந்நாடுகள் மீதான சுரண்டலை இலகுபடுத்தினர். இந்நாடுகளில் காணப்பட்ட பொருளாதார வளங்களை அரச இயந்திரங்கள் மூலம் சுரண்டி தமது பொருளாதாரத்தை விருத்தி செய்தனர். இத்தகைய கலானித்துவ சுரண்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக தென்னாசிய நாடுகள் எல்லாவற்றிலும் போராட்டங்கள் அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் நிகழ்ந்தன. “19ம் நூற்றாண்டின் முற்பகுதி முழுவr தும் காலனித்துவ ஆட்சியாளருக்கு எதிரான போராட்டங்கள் தென்னாசிய நாடுகளின் பல்வேறு பிரதேசங்களில் இடையறாது நடைபெற்றன. இப்போரட்டங்கள் விவசாயிகளும் நிலவுடமையாளர்களும் மற்றும் இனக்குழுக்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.”* “1814ஆம் ஆண்டு தாப்பாமனிர் பிரதேச (இந்தியாவின் வாரனாசி) ராஜபுத்திர விவசாயிகள் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்து கிராமத்தை அந்நியருக்கு விற்பதை ரத்து செய்தார்கள்." இப்போராட்டங்களை அடக்குவதற்குப் பிரித்தானியர் ஆரம்பத்தில் இராணுவ ஒடுக்கு" முறைகளைக் கையாண்டனர். இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்தல் சிறையிலடைத்தல், தடுப்புக்காவலில் வைத்திருத்தல், மரணதண்டனை வழங்குதல் போன்ற இராணுவ அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்தினர். நீதிமன்ற நடைமுறைகள் காலனித்துவவாதிகள் சட்ட ஆட்சியை அறிமுகப்படுத்தியிருந்த போதும் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யத் தவறவில்லை. இந்நடைமுறைகளினால் தென்னாசிய நாட்டு மக்களுக்கும் பிரித்” தானியருக்கும் இடையில் மேலும் முரண்பாடு கூர்மையடைந்தது. இதனை எதிர்த்துக்கொண்டு தமது அரசியல் ஆதிக்கத்தை
-60- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நிலைநிறுத்தி இந்நாட்டு மக்களுக்கு அரசியல் யாப்பு சிபாரிசுகளை அறிமுகப்படுத்தினர். அரசியல் யாப்பு சிபார்சுகள்
பிரித்தானியரின ஆட்சிக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதென வெளிப்படையாக பிரித்தானியாவால் கூறப்பட்டது. மேலும் இச்சீர்திருத்தங்கள் தென்னாசிய நாட்டுமக்களை முழுமையான ஜனநாயக அரசியல் கலாசாரத்” துக்குள் உட்படுத்துமென கூறினர். அதிலும் குறிப்பாக உடன்பாட்" டுக்குரிய அரசியல் கலாசாரம் வளர்ச்சியடையுமென கருதப்பட்டது. ஆனால் பிரித்தானியர் ஜனநாயகத்தின் அம்சங்களான அடிப்படை உரிமை, குடியுரிமை, சுதந்திரம், சமத்துவம் என்பவற்றை வழங்க மறுத்ததுடன் இன, மத, மொழி, சாதி முரண்பாடுகளைத் துாண்டி" விட்டு தமது அரசியல் இலாபத்தை அடைய முயற்சித்தனர். இதனால் பிரித்தானியர் நடைமுறைப்படுத்திய மிதவாத அரசியலுக்கும் எதிரான உணர்வு தென்னாசிய நாட்டு மக்களிடையே அவ்வப்போது கூர்மையடைந்ததைக் காணலாம். இத்தகைய எதிர்ப்புணர்வு இன, மத, மொழி அடிப்படையில் வளர்ச்சியடைய தென்னாசிய நாட்டு மக்கள் காலனித்துவத்திற்கு எதிராக போராடுவதைவிடுத்து தமக்கிடையே மோதிக்கொண்டனர். இது தென்னாசிய நாடுகளில் காலனித்துவவாதிகளின் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதார சுரண்டலையும் நீண்ட காலம் நிலைப்படுத்த உதவியது. இதனை விரிவாக நோக்குவது பொருத்தமானதாக அமையும்.
இந்திய உபகண்டம் 1858ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்து வத்தின் சட்டரீதியான நிர்வாக அலகாக பிரித்தானிய பாராளுமன்" றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது." அன்றிலிருந்து இந்திய உபகண்டத்தின் ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் மன்னருக்கு உரித்து" டையதாகியது. காலனி ஆட்சி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தினதும் மன்னரினதும் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளாகியது. 1802ஆம் ஆண்டில் இலங்கையின் அதிகாரம் அவ்வாறே பிரித்தானியரால் கையகப்" படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்தியக் கம்பனியின் கொடுமை" யான சுரண்டலினால் தென்னாசிய நாட்டுமக்கள் பிரித்தானியா மீது வெறுப்படைந்தனர். ஆட்சியில் குழப்பம் நீடித்தது. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே மன்னரின் ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டது.
,参一 f
கே.ரீ.கணேசலிங்கம் -61

Page 33
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பிரித்தானியரின் இந்திய நிர்வாகச் சட்டப்படி ஏற்கனவே காணப்பட்ட அரசியல் அலகுகள் அகற்றப்பட்டன. முழு அதிகார மும் இந்திய விவாகரத்துக்கான செயளாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் கீழ் இந்தியக் கழகம் (Council of India) என்ற ஆலோசனை மன்றம் ஏற்படுத்தப்பட்டது. இக் கவுன்சிலில் இந்தியாவில் பணிபுரிந்த பிரித்தானியர்கள் உறுப்பினரானார்கள். இந்தியாவின் ஆங்கிலக் கவர்னராக ஜெனரல் வைசியராய் நியமிக்கப்பட்டார். இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடிப் பிரதிநிதியாக செயற்பட்டார். கிழக்கிந்தியக் கம்பனியின் உடைமைகள் அனைத்" தும் ஆங்கில அரசு சுவீகரித்துக் கொண்டது. இதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் படிப்படியாக அரசியல் யாப்பு சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது.
பிரித்தானியர் தென்னாசிய நாடுகளில் முன்வைத்த அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் சுதேசிகளைப் பல உபகூறுகளாகப் பிரித்து அவர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. இதனை இந்திய விவகார மந்திரி சார்லஸ்வூட் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும் "உயர் பதவி யிலுள்ள சுதேசிகளை நம்முடைய (பிரித்தானியருடைய) ஆட்சிக்கு விசுவாசமுள்ளவர்களாக ஆக்குவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தங்களைவிட வேறு எதனாலும் முடியாது என்று நான் உறுதியாக நம்புகின்றேன்." இது தென்னாசிய நாடுகளிலுள்ள உயர்குழாப் பிரிவினரை மறைமுகமாக குறிப்பதாகவே அமைகின்றது. பொதுமக்" கள் காலனித்துவ ஆட்சியாளருடன் எதிர்ப்புணர்வைக் கொண்டி" ருக்கும் வேளை உயர்குழாத்தினரோ அவர்களுடன் புரிந்துணர்வுள்ள முரண்பாட்டினை மட்டுமே கொண்டிருக்கின்றனர்."
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிபார்சுகள்
இந்திய உபகண்டத்து மக்களை திருப்திப்படுத்த பிரிட்டிசார் 1909ஆம் ஆண்டு முதலாவது அரசியல் யாப்பு சிபார்சை முன்வைத்தனர். இது மின்டோ-மார்லி சிபார்சு என அழைக்கப்பட்டது. இச்சிபார்சு பேரரசின் மையச் சட்ட நிர்மாணக் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறுத்ததுடன் மாகாண கவர்னர்களின் கவுன்சில்களில் பொரும்பான்மை உறுப்பினர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்க வகை செய்யப்பட்டது. தொகுதிவாரி தேர்தல் முறைமை அறிமுகப்படுத்திய போதும் இன அடிப்படையிலான தேர்தல் தொகுதி
-62- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
முறைமையும் அமுல்படுத்தப்பட்டது. இது பொது தொகுதி நிலச் சொந்தக்காரர் தொகுதி, முஸ்லீம் தொகுதி என இனவர்க்க வேறுபாட்டை தேர்தல் தொகுதி அடிப்படையில் வேறுபடுத்தியது. மேலும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. நிலச்சொந்தக்காரர் தொகுதி, முஸ்லிம் தொகுதி என்பனவற்றுக்கு ஒரே கட்டமாகவும், பொதுத் தொகுதிக்கு இரண்டு- மூன்று கட்டமாகவும் தேர்தல் நடாத்த சீர்திருத்த சட்டவரைபு இடங்கொடுத்தது.
இவ்வரசியல் சீர்திருத்தம் பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் போக்கினை அவதானிக்க முடிகிறது. நிலச்சொந்தக்காரரும், முகமதிய தலைவர்களும் இந்து முதலாளிகளும், முதலாளித்துவ புத்தி ஜீவிகளுடனும் ஒப்பிடும்" போது சலுகையுள்ளவர்களாக காணப்பட்டனர். இதுபற்றி கால்மார்க்ஸ் குறிப்பிடும்போது இந்து முஸ்லிம் மத சமுதாயங்களை ஒன்றுக்கொன்று எதிர்எதிராக நிறுத்துவதென்ற பிரிட்டிஷார் கடைப்பிடித்தாளும் கொள்கைக்கு பின்டோ-மார்லி அரசியல் சிபார்சுமி பொருத்தமான சிபார்சாக அமைகின்றது."
1917ம் ஆண்டு சோவியத் புரட்சியின் எதிரொலி இந்தியா முழுவதும் பரவியது. இதனை கண்டுகொண்ட பிரிட்டிஷார் 1919ஆம் ஆண்டு மண்டேகு-செம்ஸ் போர்டு அரசியல் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இதில் சட்டமன்றங்களின் வாக்காளரின் வீதமும், வாக்குரிமையும் அதிகரிக்கப்பட்டதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 'அதிகரித்தது. மேலும் இச்சிபார்சில் காலனித்துவ நிர்வாகத்தில் இரண்டாம் தர பதவிகளை இந்தியர் ஏற்க வகை செய்யப்பட்டது. பிரிட்டிஷாரின் இந்நடைமுறை நிலச்சொந்தக்கார முதலாளித்துவ வர்க்கத்தை தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து துண்டிப்பதற்கான நடவடிக்கை" யாக அமைந்திருப்பதோடு அவர்கள் பிரித்தானிய காலனித்துவத்தின் விசுவாசிகளாக ஆக்கப்பட்டனர்.
மேலும் மண்டேகு செம்ஸ் போர்டு சிபார்சில் தனித்தொகுதி முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்து-முஸ்லீம் இனங்கள் தனித்தனியே வாக்களிக்க வகை செய்யப்பட்டது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மாகாண சட்டமன்றத்தில் முப்பது சதவீத இடங்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த மாகாணங்களில் ஐம்பது சதவீத இடங்கள்
கே.ரீ.கணேசலிங்கம் -63

Page 34
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் அவர்களுக்கு ஒதுக்குவதென முடிவாகியது. இது இந்து-முஸ்லிம் முரண்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் சிபார்சாகவே அமைந்துள்ளது. காலனித்துவ நிர்வாகத்தில் இந்திய உயர் வர்க்கத்தினருக்கு பங்கு வழங்கியதனால் வர்க்க ரீதியான முரண்பாட்டுக்கும் இவ்வரசியல் யாப்பு சீர்திருத்தம் வழிகோலியது எனக் கூறலாம்.
இச்சைமன் கமிஷன் அறிக்கையின் மரபுவாதிகளை தேசியவாதிகளிலிருந்து வேறுபடுத்துவதற்கான சிபாரிசாக மேலும் 1919ஆம் ஆண்டு ரெளலத் சட்டம் பிரிட்டிஷ் அரசால் அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டத்தில் குடிமக்களை கைது செய்யவும் நீதிமன்ற விசாரணைகள் எதுவுமின்றி அவர்களை சிறையிலடைக்" கவும் வைசிராய்க்கும், மாகாண கவர்ணருக்கும், அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இது தீவிரமடைந்து கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்கான ஏற்பாடாகவே அமைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சாதாரண பொதுமக்" களையும் தேசியப் போராட்டத் தலைவர்களையும் முரண்பாடுடை" யவர்களாக உருவாக்குவதற்கான சட்ட திருத்தமாகவே அதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மீண்டும் 1935ம் ஆண்டு காலனியரசு சைமன் கமிஷன் புதிய அரசியல் சீர்திருத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியது. இதில் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. சொத்துள்ள கீழ்நிலை வர்க்கங்களுக்கும், உழைப்பாளர்களில் சிலகுழுக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சட்டமன்ற சிறப்புரிமை விரிவுபடுத்தப்பட்டது. மாகாண அமைச்சர்கள் கவர்ணர்களின் நிர்வாக நடைமுறைகள் சட்டமன்றங்களால் பொறுப்பேற்கப்படுமென சிபார்சில் குறிப்பிடப்பட்டது.
மரபுவாதிகளாகக் காணப்பட்ட பிரிவினருக்கு அதிக சலுகைகளை இச்சிபார்சு வழங்கியது. இந்து-முஸ்லிம் உறவுகளை உடைப்பது மட்டுமன்றி இந்துக்களிடையேயும் காணப்பட்ட முரண்பாடுகளையும் ஊக்குவிப்பதே காலனித்துவ அரசின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. மேலும் இக்காலப்பகுதியில் தேசிய காங்கிரஸ்க்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் ஏற்படவிருந்த உடன்பாட்டையும் இச்சிபார்சு தடுப்பதற்கான அணுகுமுறைகளை முதன்மைப்படுத்தியது. முஸ்லீம்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் சாதகமான வாய்ப்புக்களை சைமன் கமிஷன் வழங்கியது. தீண்டத்தகாதவர்களைச் சேர்ந்த இந்துக்கள் வசம் எழுபது சதவீத
-64- & கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வாக்குகள் இருந்தபோதும் ஐம்பத்தைந்து சதவீதமான இடங்களை அவர்களுக்கு வழங்கியது. இதனால் சமஸ்தான மன்னர்களின் செல்வாக்கு உயர்ந்தது. சட்டமன்றத்தின் நியமன உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களும் ராஜ்ய சபையில் ஐந்தில் இரண்டு பங்கு இடங்களும் சமஸ்தான மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இச்சிபார்சில் கூட்டாட்சித்திட்டமும் பரிந்துரைக்" கப்பட்டது. இது இந்திய உபகண்டத்தை மேலும்.கூறுபோடுவதற்கான முரண்பாடுகளை உருவாக்குவது போன்றே அமைந்தது. இதனால் இவ்வயரசில் சிபார்சு அடிமை அரசியல் சிபார்சு என சிலரால் விமர்சிக்கப்பட்டது.
1942ஆம் ஆண்டு கிரிப்ஸ் கமிஷன் சிபார்சு முன்மொழியப்பட்டு கைவிடப்பட்டது. இந்திய உபகண்டத்தின் தீவிர போராட்ட நெருக்கடியும், உலக காலனித்துவ வாதத்தின் சரிவும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இம்மாற்றம் ஏற்கனவே காலனி அரசினால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்து-முஸ்லிம் முரண்பாடு இந்திய உபகண்டத்தை இரு கூறுகளாகப் பிரித்தது. தமது அரசியல் இலாபத்தினை அடையும் நோக்கில் இப்பிரிவினைக்குரிய வழிகளை காலனியரசு மேற்கொண்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற மவுண்பேட்டன் புதிய வைசிராய் ஆக நியமிக்கப்பட்டார். மவுண்பேட்டனால் இந்திய சுதந்திரச் சட்டம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர சட்டம் அமுலுக்கு வந்தது. இச்சட்டம் பின்வரும் பிரதான அம்சங்களைக் கொண்டிருந்தது. A.
(1) இந்திய உபகண்டத்தில் இரு டொமினியன்களாக
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைக்கப்படும்.
(2) மத அடிப்படையில் பஞ்சாப் மாநிலமும், வங்காளா மாநிலமும் இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்கா என்பதை அந்தந்த மாநிலங்களிலுள்ள இந்து-முஸ்லிம் பொரும்" பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் தனித்தனி வாக்களிப்பின் படி தீர்மானிக்கப்படும்.
(3) பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலும், சில்ஹட் (அஸாம்) மாவட்டத்திலும் பொதுவாக்கெடுப்பின் படி பிரிவினை தீர்க்கப்படும்.
கேரீகணேசலிங்கம் -65

Page 35
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
(4) சிந்து மாநில சட்டமன்ற வாக்கெடுப்பு மூலம் அதன்
தலைவிதி முடிவு செய்யப்படும்.
(5) சமஸ்தானங்கள் ஏதேனும் ஒரு டொமினியனில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அவற்றில் மன்னர்களின் அதிகாரம் பேணப்படும்.
(6) அரசியல் நிர்ணயசபை இரு டொமினியன்களின் அரசியல் நிர்ணய சபைகளாகப் பிரிக்கப்படும், அவை இரு அரசுகளதும் வருங்கால அந்தஸ்தை தீர்மானிக்கும்.
இவ்வாறு மவுண்ட் போட்டனால் வரையப்பட்ட திட்டம் இந்திய உபகண்டத்தை இருகூறுகளாக பிரித்தது. இப்பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறையில் பல ஆயிரக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும் கொல்லப்பட்டனர். இது காலனியரசு இந்திய உபகண்டத்தில் அமுல்படுத்திய அரசியல் கலாசாரத்தின் வன்முறை வடிவத்தை வெளிப்படுத்தியது. இப்பிரிவினையின் போது காலனியரசு தீர்க்கப்படாத பல முரண்பாடுகளை இரு டொமினியன்கள் மீதும் திணித்தது. காக்ஷமீர் பிணக்குக்கான எல்லை நிர்ணயக் கோடு, நதிநீர் பிணக்கு என இரு டொமினியன்களும் திருப்திப்படாத முரண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் இந்தியாவும், பாகிஸ்தானும் பல யுத்தங்களை எதிர்கொண்டதுடன் மிக நீண்ட காலமாகத் தீர்க்க முடியாத முரண்பாடுகளுடனே போராடியிருக்" கின்றதை அவதானிக்க முடிகின்றது.
காலனியரசு இந்து-முஸ்லிம் முரண்பாட்டை மட்டும் உருவாக்க" வில்லை. இந்துக்களிடையேயும், முஸ்லிம்களிடையேயும் காணப்பட்ட உயர்வர்க்கத்தை தமது ஆட்சிக்கு சேவகர்களாக மாற்றிக்" கொண்டது. இதனால் சாதாரண மக்களுக்கும் உயர்குழாத்தினருக்கு" மிடையில் பாரிய முரண்பாடுகள் சுதந்திரத் தென்னாசிய நாடுகள் அனேகமானவற்றில் எழுந்தது. உயர்குழாமினரை இந்நாடுகளின் ஆட்சியாளர்களாக காலனியரசு உருவாக்கியது. இவர்கள் மரபுவாதிகளாகவும் காணப்பட்டனர். தோற்றத்தால் தென்னாசிய மக்களின் கலாசாரத்தைக் கொண்டிருந்தாலும் காலனித்துவ விசுவாசிகளாகவே அவர்கள் காணப்பட்டனர். இவர்களது வருகை பற்றி லெனின் பின்வருமாறு கூறுகின்றார்.
"உழைக்கும் வெகுஜனங்கள் மட்டுமன்றி தேசிய பூர்ஷ"வாக்களும் இந்நாடுகளின் நிர்வாகத்தில் பங்கு மறுக்கப்பட்ட
-66- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கும் பாகுபாட்டிற்கும் உட்படுத்தப்பட்டனர். அரசியல் சட்ட அதிகாரங்கள் யாவும் ஏகாதிபத்தியவாதி களின் கைகளிலும், அவர்களது விசுவாசிகளான உயர்குழாமினரி டமுமே குவிந்திருந்தது. சாதாரண பொதுமக்களுக்கும் உயர்குழாமினருக்குமிடையிலான முரண்பாட்டை வலுக்கச் செய்தது.”*
இவ்வாறு உயர்குழாமினரை விமர்சிக்கும் லெனின் அந்நாடுகளில் மத்தியதர வர்க்கத்தை சார்ந்த பிரிவினரே த்ேசிய விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியதாக குறிப்பிடுகின்றனர். இருபதாம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னாசிய நாடுகளில் எழுந்த அந்நிய ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிரான சுதந்திரப் போர் மத்தியதர வர்க்கத்தினரால் அவசியமானதொன்றாகக் கருதப்பட்டது. இப்போராட்டத்தின் குரலாக புத்திஜீவிகள் எழுச்சி யடைந்தது குறிப்பிடத்தக்கது." இவ்வமைப்பினரின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு காலனிய மனோநிலையினைக் கொண்டவர்களாக மாறினார்கள். காலனிய சிந்தனையின் முகவர்களாக திகழ்ந்தனர். காலனித்துவ அரசின் அரசியல் சிபார்சுகளால் இந்திய உபகண்டம் இன, மத, மொழி ரீதியான முரண்பாடுகளால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இம்முரண்பாடுகள் மட்டுமனறிவர்க்க முரண்பாடும் புதிய அரசியல் பொருளாதார அமைப்புக்குள் ஊடுருவியது சிறுபான்மை, பெரும்" பான்மை முரண்பாடு போன்ற உயர்வர்க்கம், கீழ்வர்க்கம் என்ற பிரிவும் - காலனித்துவ அரசால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டதெனக் கூறலாம். A.
இலங்கையில் முன்வைத்த அரசியல் சிபார்சுகள்
இந்திய உபகண்டத்தில் ஏற்படுத்திய அரசியல் சிபார்சுகள் போன்று இலங்கையிலும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை பிரித்" தானியர் முன்வைத்தனர். ஆனால் வேறு எங்குமில்லாத அளவுக்கு இலங்கையில் அடிக்கடி யாப்பு சீர்திருத்தங்களை முன்வைத்தனர். அவ்வாறு அவர்கள் அரசியல் சிபார்சுகளை முன்வைத்தமைக்கு பல்இன அலகைக் கொண்ட சிறிய நாடாக விளங்கிய இலங்கையை பிரித்தானியர் ஒர் ஆய்வுகூடமாகவே கருதியிருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏனெனில் பலதடவை அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை முன்வைத்துப் பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள். 1833 - 1947 ஆண்டுக்கிடையில் மிகப் பிரதானமான ஆறு அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்து மாற்றப்பட்டதை அவதானிக்க முடியும்.
கேரீகணேசலிங்கம் -67

Page 36
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இலங்கையின் வரலாற்றுப் போக்கில் மூன்றுக்கு மேற்பட்ட பிரதான இராச்சியப் பிரிவுகள் காணப்பட்டன. அக்காலப்பகுதியில் ஐரோப்பிய இனத்தவர் ஆக்கிரமிப்பு நோக்குடன் இலங்கையை வந்தடைந்தனர். போர்த்துக்கேய இனத்தவர் வருகை தந்தபோது கோட்டை இராச்சியம் சகோதரிடையே எழுந்த முரண்பாட்டினால் மூன்று சிறு இராச்சியங்களாகப் பிளவுபட்டிருந்தது. இம்முரண்பாட் டைப் பயன்படுத்திப் போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்துக்குள் நுழைந்தனர். ஆட்சி உரிமைக்காக 1509ஆம் ஆண்டு தந்தை விஜயபாகுவை கொலை செய்தது போன்று கோட்டை மன்னன் புவனேகபாகு தனது அரசுரிமையைப் பாதுகாக்க போர்த்துக்கேயரிடம் அதனை அடமானம் வைத்தார். அவர் தனது கோட்டை அரசை சகோதரரின் எதிர்ப்பிலிருந்து பாதுகாக்கப் போர்த்துக்கேய படை உதவியைப் பெறுவதற்காக பெளத்த மதத்தை துறந்து கத்தோலிக்க மதத்தில் இணைந்தார். சிம்மாசனத்துக்காக மகாசங்கத்தை நம்பியிருந்த சிங்கள மன்னர் பரம்பரை போர்த்துக்கேயரின் பீரங்கி களுக்கு அடிபணிந்தது. இதனால் புவனேகபாகுவின் பேரன் பெளத்த மதத்தை விட்டு கத்தோலிக்க மதத்துக்கு மாறி டொன்யுவான் தர்மபாலனானார். இதன் பின்னர் போர்த்துக்கேயர் மலையகத்தைத் தவிர கரையோரப் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து ஆட்சி யைக் கைப்பற்றினர். இவ்வாறே டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் செயல்பட்டு இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். ஆனால் ஏனைய ஐரோப்பியரை விட பிரித்தானியர் தமது முரண்பாட்டு அரசியல் தந்திரோபாயத்தினால் நிலையான ஆட்சியை இந்திய உபகண்டத்தைப் போன்று இலங்கையில் விஸ்தரித்தனர்.
1833ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையில் அறிமுகப்படுத்திய முதலாவது அரசியல் யாப்பு சிபார்சாக கோல்புறுாக்" கமரன் சிர்திருத்தம் அமைந்திருந்தது. இச்சீர்திருத்தத்தாலே இலங்கை முதல்முதலாக ஒற்றையாட்சி நிர்வாக அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு ஏனையப் பிரதேசங்களுக்கு நிர்வாகம் பரவலாக்கப்பட்டது. இதன்கீழ் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்கள் ஒரே நிர்வாக அலகின் கீழ் ஆட்சி செய்ய பயிற்றப்பட்டனர். மேலும் இன அடிப்படையி லான தேர்தல் தொகுதிகள் என்ற அம்சமும் இச்சிபார்சில் புகுத்தப்பட்டது. முதலாவது சட்டநிரூபண சபையில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர், முஸ்லீம்கள் ஒவ்வொருவருமாக ஆறு உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையி
-68- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
டையே இன முரண்பாட்டை உருவாக்கும் அம்சமாக அமைந்திருந்” தது. மேலும் சிங்களவர், தமிழர், சமபிரதிநிதித்துவம் சட்டநிரூபண சபையில் பெற்றிருந்தனர். இது தமிழ், சிங்கள இன உறவை முரண்பாடடையச் செய்தது. அதாவது சிறுபான்மை பொரும்பான்மை வேறுபாடின்றி சட்டநிரூபண சபையில் சமபிரதிநிதித்" துவம் வகித்தமையை பெரும்பான்மையினர் வெறுத்தனர். அவர்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்படைந்தனர். பிரித்தானியரின் ஆரம்பகாலப் பிரித்தாளும் கொள்கையின்படி தமிழரை அனைத்து சிங்களவரும் ஓரங்கட்டினர். ஏனைய தென்னாசிய நாடுகளைப் போன்று ஆரம்பத்தில் இலங்கையிலும் சிறுபான்மையினருக்கு "சார்பாக" நடந்து முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தினர். இதனை மேலும் விளங்கிக்கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டுகள் போதுமானவை. ጰ
“பிரித்தானியரால் சேர்(Sir) பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட முதல் இலங்கைத் தமிழரான சேர் முத்துக்குமாரசுவாமி அவர்களாவார்” மேலும் கீழைத்தேச முதல் பரிஸ்டர் (சீமை அப்புக்காத்து) பட்டம் பெற்றவரும் அவரே அதன் பின்பே இந்தியத் தலைவர்கள் அதற்குரித்துடையவர்களானார்கள். இதுபற்றி அப்போது லண்டன் ரைம்ஸ், ஏட்டில்
“இந்துப்பிரபுக்கள் பரம்பரை முன்னேற்றம் அடைவதற்கு அறி குறியாக லிங்கொன் (lingon) கழகத்தில் சேருவதற்கு கீழைத்தேச பெருமகனார் ஒருவர் தெரியப்பெற்றது மகிழ்ச்சிக்குரியதாகும். இப்பெரியார் இலங்கை சட்டசபையில் தமிழ் பிரதிநிதியாய் அங்கம் வகிக்கிறார். இவர் இக்கழகத்தில் சேர்ந்தமையினால் இந்தியர் இனி
மேல் சோம்பேறிகளாய் இருக்கமாட்டார்கள்.
இவ்வாறு பிரித்தானியர் தமிழரை தமது செல்லப்பிள்ளைகளாக மதித்தனர். தமது செல்வாக்குகள் உட்படுத்த பல சலுகைகளையும் வழங்கினர். இது பெரும்பான்மை சிங்கள மக்களைத் தமிழருக்கு எதிராக சீண்டிவிடுவதாக அமைந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் கரையோரச் சிங்களவர், கண்டிச்சிங்களவர் என்ற வேறுபாடுகள் இருப்பதை அவதானித்து பிரித்தானியர் அதனை வளர்த்துவிடுவது தமக்கு சாதகமானது எனக் கருதி னர். இதனைத் துாண்டுவதற்கு பிரித்தானியர் 1889ஆம் ஆண்டுச் சிபார்சைப் பயன்படுத்தினர். இதன் பிரகாரம் சட்டநிரூபண சபையில் கண்டிச் சிங்களவருக்கும் ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
கே.ரீ.கணேசலிங்கம் -69

Page 37
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
எனவே தற்போது கணடியர், கரையோரத்தவர், தமிழர் என மூன்று வேறுபட்ட சமூகப்பிரிவுகள் சட்டநிரூபண சபையில் அமர்த்தப்பட் டனர். சாதியடிப்படையில் தமிழரிடையே வேளாளர் (Valalas) கரையார் (Karayar) ஆகிய சாதியினருமே ஆட்சி அதிகாரத்துக்குப் போட்டியிடுபவர்களாக காணப்படுகின்றனர். இது இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஊறிப்போன ஓர் அம்சமாகும். இலங்கை "கொய்கம” சாதியினரே அதிக காலம் ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்களின் ஆட்சிக்கு உதவியாக தமிழர்களின் வேளாள சாதியினர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பதற்கு சிங்களவரின் கராவ சாதியினரும் தமிழரின் கரையாம் சாதியினரும் போராடி வருவதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய வேறுபாடுகளை அப்போதே கண்டறிந்த பிரித்தானியர் அவர்களிடையே முரண்பாடுகளை சட்டநிரூபண சபையில் ஏற்படுத்திப் பகைமையை வளர்த்தனர்.
இக்கண்டிச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமான முரண்பாட்டை மேலும் துாண்டுவதாக 1910ஆம் ஆண்டு மக்கலம் சிபார்சு அமைந்திருந்தது. அதிலும் தமிழர் மேலும் சலுகையடை" பவர்களாக மதிக்கப்பட்டதையும் அவதானிக்க முடிகின்றது. இது பற்றி ஜி.சி மென்டிஸ் பின்வருமாறு விபரிக்கின்றார்.
"ஏற்கனவே அமைந்திருந்த நிர்வாக (பொருளாதார) ஒருங்கி ணைப்புடன் பிராந்திய ரீதியான தேர்தல் தொகுதிகளை அமைக்குமாறும் சட்டநிரூபண சபையை சீர்ப்படுத்துமாறும் ஆங்கிலக்கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தினர் 1908ஆம் ஆண்டு கோரினர். அன்றி. ருந்த பிரித்தானிய அரசாங்கமோ இக்கோரிக்கைகளுக்கு ஏற்ப பிராந்திய ரீதியான தேர்தல் தொகுதிகளை அமைத்து மக்களை ஒரு தேசத்துக்குள் ஒன்றிணைப்பதற்கு பதிலாக, இலங்கையர் சமூகம் இன்னும் இனரீதியாகப் பிளவுபட்டுள்ளது என்று கூறிக்கொண்டு கோல்புறுாக் சீர்திருத்தத்தின் குறிக்கோள்களை மீறும் வகையில் இன அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளை தொடர்ந்து வந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் அமைத்தது." *
மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தில் தமிழரும் சிங்களவரும் சமபிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். அதாவது சட்டசபையில் இரு” தமிழர் நியமிக்கப்பட்டதும் 1912ஆம் ஆண்டு நிகழ்ந்த படித்த இலங்கையருக்கான தேர்தலில் தமிழரான சேர் பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டதும் மூன்று தமிழர் சட்டமன்றத்தில் மூன்று
-70- W கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கு சமமாக காணப்பட்டனர். படித்த இலங்கையருக்கான தேர்தலில் உயர்சாதி அரசியல் கலாசாரம் எவ்வாறு பின்பற்றப்பட்டது என்பதை நோக்குவோம்.
படித்த இலங்கையருக்கான தேர்தலில் சிங்களவர் பக்கம் மார்க்கஸ் பெர்னாண்டோ நிறுத்தப்பட்டார். இவர் கரைநாட்டுச் சிங்களவரும் கிறிஸ்தவருமாக காணப்பட்டார். தமிழர் தரப்பில் நிறுத்தப்பட்ட உறுப்பினர் சேர் பொன் இராமநாதன் உயர் சாதியுடையவராகவும் செல்வந்தராகவும் காணப்பட்டதுடன் "தமிழ் பெளத்தனாக” விளங்கினார். இதனால் கண்டிச் சிங்கள பெளத்தரின் வாக்குகளும் இராமநாதன் வெற்றிக்கு வழிவகுத்தது. மேலும்" அன்றைய மக்கள் தொகைப்படி ஆறு இலட்சம் தமிழ் மக்களில் 1346 பேருக்கு கல்வித்தகைமையடிப்படையில் வாக்குரிமை கிடைத்தது. ஆனால் இருபத்தெட்டு இலட்சம் சிங்கள மக்களில் 1748 பேருக்கு மட்டுமே வாக்குரிமை கிடைத்தது.”* இது தமிழர்கள் படித்த சொத்துடையவராகவும் அரசியல் செல்வாக்குடையவராகவும் இருந்தனர் என்பதை நிறுவுவதற்கு போதுமானது. அத்துடன் தமிழ் சிங்கள் உயர்வர்க்கப் பிணைப்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். ا
படித்த இலங்கையருக்கான தேர்தலின் பின்னர் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஜனநாயகப் பாரம்பரியம் முனைப்படையத் தொடங்கியது. படிப்படியாகத் தேர்தல் கலாசாரம் பாரளுமன்றக் கலாசாரம் என்பனவற்றிற்குள் இலங்கையர் இணைக்கப்பட்டனர். வெளிப்படையாக நோக்கும்போது பிரித்தால்ரியர் மரபுசாரா அரசி யல் கலாசாரத்தை முதன்மைப்படுத்துவது போல் காட்டிக்கொண்டாலும் இலங்கையைப் போன்று ஏனைய தென்னாசிய நாடுகளும் மரபுவாத அம்சங்களூடாக முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி வந்தனர் என்பதை ஆழமாக அவதானிக்கும்போது மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இந்நாடுகளின் பாரம்பரிய அரசியல் காலசாரத்துக்கும் பிரித்தானியர் புகுத்திய நவீன அரசியல் கலாசாரத்துக்குமான முரண்பாடும் மறுக்க முடியாத" வாறு கூர்மையடைந்து கொண்டிருந்தமையும் இன்னோர் அவதானிப்பாகும்.
பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய காலம் முதல் 1920 கள் வரை சிறுபான்மையினராகிய தமிழருக்கு சாதகமாக செயல்பட்டனர். இலங்கையின் ஆள்பதியாக இருந்த கென்றிமக்கலம்
கே.ரீ.கணேசலிங்கம் -71

Page 38
6öÞósælliðflusseÍeðI G|Jðflu6ð ö6OTðillið
1909ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரியாகவிருந்த குறுாப் பிரபுவுக்கு எழுதிய அறிக்கையில், "இலங்கை மக்களில் ஒரு பகுதியினராகிய தமிழர்கள் காலனித்துவ ஆதிக்கத்தின் நல்வாழ்வுக்கும், பொருளாதார நலனுக்கும் மிகவும் அத்தியாவசியமானவர்கள்”* என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தமிழரை அரவணைத்த பிரித்தானியர் 1920ம் ஆண்டு மனிங் அரசியல் யாப்பு சிபார்சில் அவர்களை நிராகரித்தனர். இலங்கை தமிழருக்கு சட்டசபையில் மூன்று பிரதிநிதித்துவம் மட்டுமே வழங்கப்பட்டது. இச்சட்டசபையின் முழுவிபரம் வறுமாறு.
(1) கரைநாட்டுச் சிங்களவருக்கான பிரதிநிதிகள் 11 பேர்
(2) கண்டிச் சிங்களவருக்கான பிரதிநிதிகள் 02 பேர்
(3) ஐரோப்பியருக்கான பிரதிநிதிகள் 03 பேர் (4) பறங்கியருக்கான பிரதிநிதிகள் 02 பேர்
(5) முஸ்லீம்களுக்கான பிரதிநிதிகள் O1 (3Lui (6) இந்தியத் தமிழருக்கான பிரதிநிதிகள் O1 GB ui (7) இலங்கைத் தமிழருக்கான பிரதிநிதிகள் 03 பேர்
சட்டசபையில் உத்தியோகப்பற்றற்றவர் எண்ணிக்கை 23 G34 uit
இதில் மூன்றுக்கு பதின்மூன்றென (3:13) தமிழ் சிங்களப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் அமைந்திருந்தது. இச்சிபார்சைக் கண்டு தமிழ் தலைமைகள் அதிருப்தி அடைந்தனர். சேர். பொன். அருணாசலம் தலைமையிலான தமிழர்கள் இவ்வரசியல் சீர்திருத்தத்தை நிராகரித்தனர். இவ்வாறு தமிழரை ஒரங்கட்டும் பணியை ஆற்றியவர் ஆளுனர் மன்னிங். இவர் இலங்கையில் கடமையாற்றிய ஆளுனர்களில் தந்திரசாலி, மதிநுட்பம் வாய்ந்தவர். அவர் ஆளுனராக இலங்கைக்கு அனுப்பப்பட்ட சமகாலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மேற்படி அவரின் நடத்தைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. அதனை சற்று விரிவாக நோக்குவோம்.
-72- (885.fab(3600refeShiabh

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இந்திய தேசிய காங்கிரஸ் பூரண சுயராச்சியம் என்ற கோரிக்" கையை முன்வைக்காத காலத்தில் சேர்.பொன்.அருணாசலம் இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கையை விட தீவிரமான கோரிக்" கையுடன் 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரசை ஆரம்பித்" தார்." மேலும் அவரால் 1917ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையர் சீருதிருத்தக் கழகம் (Ceylon Reform Leage) வாயிலாக அரசியல் சீர்திருத்தம் கோரி மிகத் துடிப்புடன் செயல்பட்டு பிரித்தானியருக்குத் தலைவலியைக் கொடுத்தவர். இந்திய சமஷ்டி அமைப்பில் சுதந்திர இலங்கையும் ஓர் அலகாக இணைந்துவிட வேண்டும் என்ற விருப்பத்தை சேர். பொன். அருணாசலம் 1918ஆம் ஆண்டளவில் கொண்டிருந்தார். 1915ம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள - முஸ்லிம் கலவரத்தின் போது தமிழ்த் தலைமை சிங்கள மக்களுக்காக பரிந்துபேசி பாதுகாப்பளித்த பின்னணியிலேயே அருணாசல்ம் தேசிய காங்கிரஸின் தலைவராக சிங்களத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவ்வாறு தமிழ் சிங்கள உடன்பாட்டினால் தமக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என பிரித்தானியர் கணக்குப் போட் டனர். தமிழ் - சிங்கள மக்கள் இணைந்து தமக்கெதிராக தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடலாம் என ஐயப்பட்டனர். இக்காலத்தில் இலங்கை முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் செல்வாக்கு பரவியிருந்தது. இலங்கையர் பிரித்தானியருக்கு எதிராக திரளுவதற்கான கருவளரத் தொடங்கியது. இக்கருவை வளரவிடுவது தமக்கு ஆபத்தானது. என பிரித்தானியர் கருதி அதை சிதைப்பதற்கே தமிழருக்குப் பதிலாக சிங்களவரை "அணைக்கும்” கொள்கையை வகுத்தனர். அதனையே மன்னிங் சிபார்சில் காண முடிந்தது. "பிரித்தானிய குடியேற்ற அரசு ஆரம்பத்தில் தமிழர்களுக்கு சலுகை" களை வழங்கிக் கொண்டுவந்தது. ஆயினும் படிப்படியாக சிங்களவர் சார்பாக செயற்படத் தொடங்கியது. இதற்கான காரணம் முதலாம் உலக யுத்தத்திற்கு பின் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய' விடுதலை இயக்கங்களைப் பின்பற்றி இலங்கைத் தமிழரிடையே தோன்றி தேசிய விடுதலைக்கான உணர்வை பிரிட்டிஷார் விரும்பாமையேயாகும்.”*
தமிழ் - சிங்கள தலைவரிடையே முரண்பாட்டை ஏற்படுத்து வதில் மனிங் முனைப்பாக செயற்பட்டார். அவரது முதலாவது சிபார்சுக்கு பின்பு தமிழர் அதிருப்தி அடைய சிங்களவர் திருப்தியடைந்தனர். சிங்கள - தமிழ் தலைமகளிடையே உறவு விரிசலடைந்தது. சேர். பொன். அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசை
Geb.f. (8goofayeShiabh -73

Page 39
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
விட்டு வெளியே தமிழர் மகாசபை அமைத்தார். இலங்கை தேசிய காங்கிரசை அதன் கருநிலையில் உடைத்தமைக்குரிய பெருமை ஆளுனர் மன்னிங்கைச் சாரும்.?
இதே சாரப்படவே இலங்கையின் வரலாற்று ஆசிரியரான கே.எம்.டி.சில்வாவும் தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். "இலங்கையை ஆண்ட பிரித்தானிய ஆள்பதிகளுள் மன்னிங் மிக மதிநுட்பம் வாய்ந்தவர். இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்துள்ள மிகப்பெரும் சவாலாக இலங்கை தேசிய காங்கிரஸ்ஸை அவர் கருதினார். ஆதலினால் சற்றும் தயவுதாட்சணியம் அற்ற முறையில் அதனை உடைத்தெறிய முற்பட்டார்."
பிரித்தானியர் அமுல்படுத்திய அரசியல் சிபார்சுகள் முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தை கூர்மைப்படுத்தின என்பது இதன் மூலம தெரிய வருகின்றது. 1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தமும் அவ்வாறானதொன்றே. ஏனெனில் இச்சிபார்சு தமிழர்கள் இலங்கை அரசியலில் தலைமை தாங்கும் பலத்தை அடியோடு தகர்த்தது. இதற்கான பிரதான காரணம் தமிழ் தலைமையின் இரண்டாம் கட்ட தேசிய எழுச்சியாகும் குறிப்பாக யாழ்ப்பாண மாணவ காங்கிரஸின் எழுச்சியையே காரணமென கருதுகின்றனர். இதன் ஸ்தாபகரான ஹண்டி பேரின்பநாயகம் இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கையால் கவரப்பட்டவராக விளங்கினார். இவ்வமைப்பு மகாத்மா காந்தியையும் இந்திய தேசிய காங்கிரசையும் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டது. இந்தியப் பாணியில் இலங்கையின் தேசிய விடுதலைப்போரை வகுத்தது. இம்மாணவ காங்கிரஸின் கதர் உடை அணியும் பழக்கம் இந்தியாவிலிருந்து நேரடியாகப் பின்பற்றப்பட்டதாகும். வகுப்பு வாதம், இனவாதம் என்பதை எதிர்த்து தேசிய ஐக்கியம், ஐக்கிய இலங்கை என்பதற்காக குரல் கொடுத்தது. 1925இல் பி.டி.எஸ் குலரத்ன என்ற தென்னிலங்கை சிங்கள இளைஞர் யாழ்ப்பாண மாணவர் காங்கிரசுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1927இல் மகாத்மாகாந்தியும் அவரைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி, கலியாணசுந்தரனார். கமலாதேவி சட்டோபாத்தியாய போன்ற தலைவர்களும் இவ்வமைப்பில் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். இது மீண்டுமொரு தேசிய எழுச்சிக்கு வழிவகுக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. இதனைக் கருத்தில் கொண்ட அன்றைய ஆளுனரான கியூவ் கிளிபேட் பிரித்தானிய முடிக்குரிய
-74- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசிடம் பின்வருமாறு கோரினார். "இலங்கையின் நிலைமையை ஆராய்ந்து இடரைத்தாண்டி வெற்றி கொள்ளக்கூடிய சிறந்த வழிவகை காண ஒரு விசாரணைக் குழுவை அமைக்குக" என்பதே அதுவாகும். இதன் பிரதிபலிப்பாகவே டொனமூர் அரசியல் சிபார்சு அறிமுகமானது எனக் கருத முடியும்.
டொனமூர் பிரபுவின் தலைமையிலான குழுவினர் 1926ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்தனர். நாடு முழுவதும் அவர்கள் பயணம் செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அன்றைய சூழலிலே மகாத்மாகாந்தியும் இலங்கைக்கு வருகை தந்தார் டொனமூர் குழுவிற்கு கறுப்புக்கொடி காட்டிய யாழ்ப்பாண மாணவ காங்கிரஸ் மகாத்மாவை கெளரவமாக வரவேற்றது. தமிழ் சிங்கள தலைவர்கள் பலர் காந்தியை சந்தித்ததுடன் காந்தியின் கதர் இயக்கத்திற்கு ஒரு இலட்சத்துக்கு மேல் நிதியும் சேர்த்தனர். இந்நிதியில் பதினெட்டாயிரம் ரூபா மட்டுமே யாழ்ப்பாணத்தில் திரட்டப்பட்டதுடன் மீதி ஏனைய பிராந்தியங்களிலே சேகரிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் நன்கு அவதானித்த டொனமூர் பெரும்" பான்மை சிங்கள மக்களின் ஆட்சி அதிகாரத்தை வரைந்தார். இச்சீர்திருத்தத்தினால் தமிழர் அதிகாரமற்றவராகவும், சட்டசபையில் பலவீனமானவர்களாகவும் மாறும் நிலை ஏற்பட்டது. இந்தியாவுடன் அல்லது தேசிய ரீதியில் தமிழர் தலைமையால் எழக்கூடிய நெருக்கடியை தடுக்க பிரித்தானியர் சிங்களவர் பக்கம் சார்ந்து முடிவெடுத்திருந்தனர் எனக் கூறலாம். தமிழரை சிறுபான்மையினர் எனக் கருதி அரவணைத்த நிலைமாறி தென் ஆசியாவிற்குள் சிங்களவரை சிறுபான்மையினராக பிரித்தானியர் கருதிக்கொண்டனர். சிங்களவரை தமிழ் தலைமையுடன் சேரவிடாது ஆட்சியுரிமையில் அதிக பங்கு வழங்கியது மட்டுமல்லாது எல்லா வகையிலும் சிங்களவரை திருப்திப்படுத்துவது டொனமூர் குழுவினரின் உள்நோக்கமாய் அமைந்திருந்தது. இந்நடவடிக்கை பற்றி அன்றைய சிங்கள தீவிரவாதிகளில் ஒருவரான பரன் ஜெயத்திலக 1929ஆம் ஆண்டு பொதுகூட்டமொன்றில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறினார்.
"முழு யாழ்ப்பாணத்தவர்களும், இந்தியர்களும், முஸ்லிம்களும் சில பறங்கியர்களும் டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தை எதிர்க்" கின்றனர். சிங்களவர் நாடு சிங்களவரால் ஆளப்பட வேண்டும் என்று “லண்டன் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது." இப்போது ஒரு சந்தர்ப்பம் எம்மை நாடி வந்துள்ளது. ஏன் நாம் அதனை ஏற்க கூடாது.”*
கே.ரீ.கணேசலிங்கம் -75

Page 40
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இவ்வாறே சோல்பரி அரசியல் திட்டமும் காணப்பட்டது யாப்பின் சிறுபான்மையினருக்காக ஏற்படுத்தப்பட்ட 29வது சரத்து மட்டுமே சிறுபான்மையினரை திருப்திப்படுத்த எடுத்த நடவடிக்கையாகும். ஆனால் டொனமூர் யாப்பில் அமைக்கப்பட்ட மந்திரிசபை, நிர்வாகக்குழுமுறை, என்பன தனித்து சிங்களவரை மட்டும் கொண்டிருந்ததினால் சோல்பரியின் சிறுபான்மையினர் காப்பீடு பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. 1920களில் மட்டுமல்ல 1940களில் கூட சிங்களத் தலைவர்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்க விரும்பினர் அதனை அவதானித்த பிரித்தானியரான ஐவர் ஜென்னிங்ஸ் "இந்தியாவுடன் இலங்கை இணைக்கப்பட்டால் அவ்விணைப்பானது சமத்துவ அடிப்படை யில் அமையாது, மாறாக இந்திய சமஷ்டி அமைப்பினுள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அமையும். இத்தகைய போக்கானது ஒர் இயல்பான தலைவிதியென இந்தியத் தலைவர்களை கருதுவார்கள் என எச்சரித்தார். எனவே பிரித்தானியரின் நவீன அரசியல் கோட்பாடுகள் முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தையே தீவிரப்படுத்துவதற்கான திட்டமிடலாகவே அமைந்திருந்தது.
பிரித்தானிய லெப்டினன் கேர்ணல் ஹொக் இந்திய துணைக் கண்டம் பற்றிக் கூறும்போது. “பல்வேறு சமயங்களுக்கும், இனங்க" ளுக்கும் இடையிலான வேற்றுமைகளை முழு விசையுடன் ஆதாரிப்பதே நமது முயற்சியாக அமையவேண்டுமேயன்றி அவற்றை இணைப்பதாக அமையக்கூடாது. நாட்டைப்பிரித்தாள வேண்டுமென்பதே இந்தியா பற்றிய பிரித்தானியரின் கொள்கையாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று இந்திய விவாகரத்திற்கான பிரித்தானிய நிபுணர் சேர்.ஜோன் இஸ்புராக்கி குறிப்பிடும்போது "பகைமை கொண்ட மதப்பிரிவுகள் அடுத்தடுத்து இருப்பது இந்தியாவில் நமது அரசியல் நலனுக்கு (பிரித்தானியரின்) ஒரு வலுவான அம்சம் என்பது தெளிவான உண்மை" என்றார். ... '
தென்னாசியத் தேசியவாதம்
மூன்றாம் உலகின் ஏனைய பிராந்தியங்கள் போலவே தேசியவாதம் தென்னாசிய நாடுகளிலும் காலனித்துவத்திற்கு எதிரான சக்தி களின் எழுச்சியாக அமைந்துள்ளது. இந்நாடுகளில் தேசியவாதம் இன,மத,மொழி,கலாசார அலகுகளினுடாக விழிப்புணர்ச்சியடைந்” ததை இனங்காண முடிகின்றது."ஒரு தேசிய இன ஒருமைப்பாட்டு
-76- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ணர்வாலும், பொதுப்பண்பாட்டாலும், தேசிய பிரக்ஞையாலும் இணைக்கப்பட்டுள்ள மக்கள் திரளாகக் கொண்ட சமூகப் பிரிவாகும்போது அது தேசியவாதமாக வெளிவருகின்றது.”* ஆசிய தேசியவாதத்திற்குள் தென்னாசிய தேசியவாதம் உள்ளடக்கப்பட்டாலும் சில அம்சங்களில் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்தியி ருந்ததை காணமுடிகின்றது.
உலக தேசியவாதத்தின் "மைல்கல்லாக” பிரான்ஸியப் புரட்சியையே சிந்தனையாளர்கள் கொள்கின்றனர். இப்புரட்சியை நவீன தேசியவாதத்தின் கருவென கருதமுடியும். பெரும் திரளான பிரெஞ்சு மக்கள் ஒன்றுதிரண்டு உலகத்திற்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினர். இதனால் இப்புரட்சி அபிவிருத்தியடைந்த ஜனநாயக அரசியல் கலாசாரத்திற்கு வழிகோலியது." பிரெஞ்ப் புரட்சியினால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஐரோப்பிய தேசியவாதத்திற்கு நிகரானதாக தென்னாசிய தேசியவாதம் அமையாத போதும் நிறுவன ரீதியிலும், தனிமனித நிறுவன ரீதியிலும், தலைமைத்துவ ரீதியிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியத் தேசியவாதத்தில் சிப்பாய்க் கலகம் (1857)
இந்தியத் தேசியவாதத்தின் அரசியல் பற்றி ஆராயும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய பிரதான அம்சங்களில் ஒன்று சிப்பாய் கலகமாகும். இக்கலகம் காலனித்துவ அரசின் அடக்கு முறைக்கு எதிராக இந்திய உபகண்டத்து/மக்கள் எழுச்சிபெற்ற முதலாவது புரட்சியாகும். புரட்சி நிகழ்ந்த பிரதேசம் முழுவதும் சாதாரண மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை எல்லோரும் புரட்சி யில் ஈடுபட்டனர். “புரட்சி தொடங்கி ஒருவார காலத்துக்குள்ளேயே வடஇந்தியா முழுவதும் பிரித்தானியரின் கட்டுப்பாடு ஆட்டங்காணத் தொடங்கியது. இந்திய மாநிலங்களில் வங்காளத்துக்கும் பஞ்சாப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆக்ரா மட்டுமே பிரிட்டிஷ் படைப்பிரிவுகளின் கைகளிலிருந்ததாக தெரிய வருகின்றது.”* இவ்வாறு எழுச்சி (முஸ்லிம்கள்) பெற்ற புரட்சியில் மதவேறுபாடுகளை மறந்து பிரித்தானியருக்கு எதிராக முகமதியார்களும், , ஹிந்துஸ்தானியர்களும் ஒன்றிணைந்த அரசியல் சிறப்பம்சமாகவுள்ளது. மிக நெடுங்காலம் நிலவிவந்த சமயப்பகை மறந்து ஒன்றுபட்ட உணர்வு அந்நியரை எதிர்ப்பதற்கான பரிமாணமாக கொள்ளப்படுதல் வேண்டும். இப்புரட்சியாளர்கள் இன்னும் சற்றுமேல்
கே.ரீ.கணேசலிங்கம் -77

Page 41
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சென்று "பகதுார்ஷா" என்ற முகமதியரை ஹிந்துஸ்தானின் பேரரசனாக அறிவித்தார்.
இவ்வாறு இந்திய மக்களிடையே ஏற்பட்ட ஐக்கியத்தையும், தேசிய உணர்வையும் அடக்குவதற்கு பிரித்தானியர் வன்முறை அரசியல் கலாசாரத்தை பிரயோகித்தனர். நேபாள இராணுவ உதவி. யுடன் பிரித்தானியப் படைகள் 1858ஆம் ஆண்டு பெரும் படையெடுப்பை இந்தியாவின் வடக்குப் பகுதியில் மேற்கொண்டனர்.9 ஆனால் கோக்ரா ஆற்றைக்கடந்து அம்பர்பூரை நோக்கி முன்னேற முயன்ற பிரிட்டிஷ் படைகளை இக்கூட்டுப்படை சிப்பாய்களின் தீவிர எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டது. போதியளவு போர் பயிற்சியோ, களப்பயிற்சியோ இல்லாதபோதும் சிப்பாய்கள் இக்கூட்டுப்படைக்கு எதிராக பெரும்போர் புரிந்தனர். "இப்போரில் உத்திரப் பிரதேசத்தின் “லக்னோ” பகுதியை கூட்டுப்படை தாக்கும்போது போராட்டத்துக்கு விசுவாசமான பல பெண்கள் அவர்களிடம் சிக்கினர். போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா என்று அப்பெண்களிடம் படைத்தளபதிகளில் ஒருவர் கேட்டபோது அதற்கு அப்பெண்கள் “நாளடைவில் நீங்கள் தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என நாங்கள் அறிவோம்.”* என்று பதிலளித்தார்களாம். பெரும் போராட்ட நெருக்கடியின் மத்தியிலும் அப்பெண்களின் தன்னம்பிக்கை மனவுறுதி, என்பன இந்திய தேசியவாதத்தின் அளவுகோல்களாக விளங்கின. விருத்தியடைந்த அரசியல் கலாசாரத்தின் ஒரம்சமாக விளங்கும் பெண்களின் பங்களிப்பு இந்திய தேசியத்தின் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்உயர் அரசியல் கலாசாரத்தின் தன்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள பின்வரும் அம்சங்களை நோக்குவோம்.
இப்புரட்சியில் நிகழ்ந்த காலப்பகுதியில் இந்தியாவில் ஆட்சி யாளராக விளங்கியது பிரித்தானியரான தோமஸ் லோவ் தனது உணர்வை குறிப்பிடும்போது, "தற்போது இந்திய உபகண்டத்தில் வாழ்வதென்பது எரிமலையின் உச்சியில் நிற்பதற்கு சமமானதாகும் எழுச்சியடைந்து கொண்டிருக்கும் மக்கள் நமது (பிரித்தானியரின்) அதிகாரத்தை எதிர்த்து வேகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் போக்கு எம்மை அழித்தொழிக்கவும் தயங்காது போல் தெரிகின்றது."
-78- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இதே போன்று இன்னோர் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளரான கேவ் பிரெளன் "தேசிய விடுதலை அல்லது தற்கொலை என்ற தீவிர உணர்வுடன் தமது உயிரையும் மதிக்காது புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிப்பாய்களின் இந்நடவடிக்" கைக்குப் பெருந்திரளான இந்திய மக்கள் கைகொடுத்து வருகின்றனர் என்பதே ஆச்சரியமாக உள்ளது.”*
இப்புரட்சியை தோற்கடிப்பதற்கு பிரித்தர்னியர் இராணுவ அணுகுமுறைகள் பலவற்றை பின்பற்றியது மட்டுமன்றி இந்திய மக்களிடையே முரண்பாட்டு அரசியல் உணர்வுகளை துாண்டுவ" திலும் தீவிர கவனம் செலுத்தினர். குறிப்பாக,
புரட்சி செய்த சிப்பாய்களையும், அவர்கள் குடும்பங்களையும் இராணுவ வன்முறையால் ஒடுக்கியது மட்டும் நிக்ழவில்லை. மேலும் புரட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு எதிராகவும் பெருமளவில் இராணுவத்தை ஏவிவிட்டு கொடுமைப்படுத்தினர். பொதுமக்க" ளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததுடன் குடும்பங்களாக அவர்களை சிறைகளில் அடைத்து துன்பப்படுத்தினர்.
சிப்பாய்களையும் மிதவாதிகளான தேசியவாதிகளையும் வேறு படுத்தி, மிதவாதிகளுக்கு சார்பாக பிரசாரங்களை மேற்கொண்டனர். அக்காலப்பகுதியில் மிதவாதிகளுக்கு சலுகைகளையும், வாய்ப்புக்களையும் பிரித்தானிய ஆளும் வர்க்கம் வழங்கி வந்தது.
இவ்வாறு முரண்பாடுகளை துாண்டி இந்திய மக்களையும் புரட்சியாளர்களையும் குழப்பத்துக்குள்ளாக்கிய பின்னர் அக்குழப்பத்தை உலகத்துக்கு தெரியும்படி பத்திரிகைகளூடாக பிரச்சாரம் செய்ததோடு புரட்சி பற்றி உலக மக்கள் அறியாத வகையில் செய்தி தணிக்கையை அமுல்படுத்திக் கட்டுப்படுத்தினர் தமது உலக ஆதிக்கத்திற்கு ஆபத்தோ, களங்கமோ ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காவே அவ்வாறு நடந்து கொண்டனர். ஏனெனில் பிரித்" தானிய ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவரான கர்ஸான் பிரபு "எமது சாம்ராச்சியத்தின் அச்சு இந்தியாவே. சாம்ராச்சியம் தமது குடியேற்ற நாடுகளில் எதனை இழந்தாலும் நாம் உயிர்பிழைத்து வாழலாம். ஆனால் இந்தியாவை நாம் இழந்தால் சாம்ராச்சியத்தின் சூரியன் அஸ்தமித்துவிடும்" என்று இந்தியாவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தமை கவனத்துக்குரியதாகும்.
Gafas(86x665hâlabıh -79

Page 42
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சிப்பாய்களின் இப்புரட்சியை பெரியளவில் வரவேற்று குரல் கொடுத்தவர்களாக கம்யூனிஸ்டுக்கள் விளங்கினர். அவர்களில் கால்மார்க்ஸ் "புரட்சி செய்த சிப்பாய்கள் தங்கள் அதிகாரிகளை கொன்று கட்டுபாட்டுப்பலத்தை தமதாக்கிக் கொண்டாலும், பெரும் திரளான மக்கள் அடங்கிய புரட்சியை தலைமைதாங்க பொருத்த" மான தலைமையை அவர்கள் தோற்றுவிக்க முடியவில்லை. நீடிக்கும் போராட்டத்தை ஒழுங்கமைக்க அவர்களின் தலைமைக்கு திறன் போதாதிருந்தது" என்றார்.
இவ்வாறு நெருக்கடிக்குள் இப்புரட்சி அகப்பட்டாலும் இந்திய தேசியத்துக்கான வழிகாட்டியாக அமைந்துள்ளதென்பதே இப்புரட்" சியின் உயர்வான அரசியல் கலாசார இயல்பாகும். 1880களிலேயே அனைத்து இந்திய தேசியவாதம் கருக்கொண்ட போதும் 1857இல் எழுச்சியடைந்த சிப்பாய்களின் புரட்சியையே இந்திய தேசியவாதத்துக்கான உந்துசக்தியென பல வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.*
இந்திய தேசியக்காங்கிரஸ்
இந்தியத் தேசிய காங்கிரசின் உதயம் இந்திய தேசியவாதத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கொள்ளப்படுகின்றது. இதனை 1885ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தமது நிர்வாக நலனை கண்காணிப்பதற்காக உருவாக்கினார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் வைசிராய்டப்பரின் பிரபுவின் முயற்சியிலும் ஏ.ஓ.யூம் என்பவரின் ஒத்துழைப்பாலும் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். ஆரம்பத்தில் பிரித்தானியரின் நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காலப்போக்கில் இந்தியதேசியவாத அமைப்பாக மாறியது. இதனால் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் காங்கிரஸ் மீது வெறுப்படைந்தனர். மிகக் குறுகிய காலத்தில் அவ்வமைப்பை தகர்த்துவிட வேண்டுமென விரும்பினர். இந்தியாவில் பணிபுரிந்த பிரிட்டிஷ் அதிகாரியான கார்ஸன் பிரபு "நான் இந்தியாவில் இருக்கும்போதே காங்கிரஸ் அமைதியாக மரணமடை" வதற்கு உதவவேண்டும். என்பதே என் அவாவில் ஒன்று" என்றார். ஆனால் காங்கிரஸ் இந்திய தேசியவாதத்துடன் இணையும் அமைப்பாக பல இந்திய தேசிய தலைவர்களால் உருமாற்றப்பட்டது. திலகரின் தலைமையில் காங்கிரஸ் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. பிற்போக்குதனமான சிந்தனைகளை அவர் கொண்டிருந்தபோதும்,
-80- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தேசிய விடுதலைப் போராட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டார். எதிர்கால இந்தியா பிரித்தானியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக இருக்க வேண்டும் என்ற பிற்போக்கான நோக்கையும் அவர் கொண்டிருந்தாலும் இந்திய தேசத்தில் காணப்பட்ட சாதி, மத, அடக்குமுறையை உடைத்தெறிய போராடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆட்சி உரிமையிலும், அதிகார வரிசையிலும் பிராமணர்களே முதன்மையானவர்கள் அவர்களில் சித்பவன் பார்ப்பன சாதியினரே மிக உயர்ந்தவர்கள். அரசியல் அதிகாரமும், உயர் பதவிகளும் அவர்களுக்கே உரியதாகக் காணப்பட்டது. அவர்களதும் மொழி, பழக்கவழக்கம், பண்பாடே இந்தியாவின் பண்பாட்டின் மூலக்கூறுகளாக அமைந்துள்ளன. அவர்களின் பிற்போககு" தனமான சமூக அடக்குமுறைகளை உடைத்து சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது என்பது கடினமானது. அவ்வடக்கு முறைகளுக்கு எதிரான தீவிர உணர்வைக் கொண்டவராக திலகர் காணப்பட்டார். திலகரையும் அவரது தீவிரவாதிகளையும் கொண்ட காங்கிரஸ் பற்றி ஜவர்கலால் நேரு பின்வருமாறு கூறுகின்றார்.
“பயனுள்ள நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கான அறிகுறி ஒன்றையும் அவரிடம் (திலகரிடம்) காணவில்லை". தற்போது காங்கிரஸ் அமைப்பின் பின்னணி மதச்சார்புடைய தேசியவாதமாகக் காணப்படுகின்றது. அவருடைய செயல் சமகாலத்துக்கு ஒவ்வாததாக இருந்தது. அதுமட்டுமல்ல புராதன காலத்து இந்தியா புத்துயிர் பெறவேண்டும் என்ற நோக்கும் அவரிடம் இருக்கவில்லை. பல பழைய பழக்க வழக்கங்களையும் சாதிமுறைமையையும் அவர் மறுத்தார். அவை பிற்போக்கானவை என்றும் அவர் கருதினார். அவர் மேற்கே நோக்கினார் மேல் நாடுகளின் முன்னேற்றம் அவரை பெரிதும் கவர்ந்தது. இங்கிலாந்துடன் நேசஉறவு கொள்வதனால் இந்தியாவிலும் முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம் என எண்ணி னார். இதனை சமூக ரீதியில் நோக்கினால் இக்காலத்து இந்தியத் தேசியவாதம் பிற்போக்கானது."
காங்கிரஸ் இயக்கமும் பிரித்தானியருக்கு எதிரான போராட்டத்தை ஆரம்ப காலத்தில் தீவிரமாக மேற்கொண்டாலும் காலப்போக்கில் சற்று மெதுவாக போராட்டத்தின் அணுகுமுறையை மாற்” றிக்கொண்டது. போராட்ட உணர்வைவிட காங்கிரசுக்குள் உட்கட்சிப்பூசல்கள் தீவிரமாகத் தலையெடுத்தன. மிதவாத தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நவரோஜி காங்கிளிலிருந்து பிரிந்து சென்று சுயராச்சியம் அல்லது தன்னாட்சி என்ற கோஷத்தைத்
கே.ரீ.கணேசலிங்கம் -81

Page 43
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தாங்கிய திட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து காங்கிரஸ் இயக்கமும் சுயராச்சியத்தை மக்களிடம் முன்வைக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் இயக்கம் பகிஸ்கரிப்பு, சுதேசியம், தேசியக்கல்வி என்ற மூன்று அம்சமும் ஆரம்பத்தில் சுயராச்சியத்துக்கான போராட்டத்தை வழிநடாத்தியது. ஆனால் காங்கிரசிற்குள் இருந்த மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்குமிடையிலான உட்கட்சிப் போர் தேசிய உணர்வை நிலைகுலைய வைத்தது. மிதவாதிக் காங்கிரஸை விட்டுப்பிரிந்து சென்று லிபரல் அமைப்பை (Libaral Federation) ஆரம்பித்தார். இம்முரண்பாடுகள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மந்தமான நிலைக்கு காரணமாக அமைந்தன. தீவிர தேசியவாதிகள் என தம்மை அழைத்துக்கொள்ளும் அரசியல் தலை" வர்கள் அதன் அர்த்தத்தையோ அல்லது தீவிரவாதத்தையோ தேசியவிடுதலைப் போராட்டத்தில் காட்டவில்லை.
காங்கிரஸ் இயக்கத்தின் தலைமை திலகரின் கைகளில் இருந்து மகாத்மாகாந்தியின் கைகளுக்கு மாறியது. காங்கிரஸ் மிகநெருக்கடியான கட்டத்தில் காந்தியின் தலைமைக்கு இடமளித்தது. காந்தி தாழ்த்தப்பட்ட ஹரிஜனங்களை காங்கிரசுடன் இணைப்பதில் பெருவெற்றி கண்டார். காங்கிரஸ் மக்கள் இயக்கமாக மாறியது. கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி இந்திய உபகண்டம் முழுவதும் இவ்வியக்கத்தின் கொள்கைகள் பரவியது. காந்தியின் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டம் அடைந்த தீவிரத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசு எழுச்சி பெற்றுவரும் போராட்ட உணர்வை மழுங்கடிக்க அரசியல் சிபார்சுகளை முன்வைத்தது. அச்சிபார்சுகளிலும் போராட்டத்தில் இணைந்துள்ள மக்களையும், தலைவர்களையும் அடக்குவதற்கான வழிகளையே முதன்மைப்படுத்தியது. குறிப்பாக "ரவுல்ட் சட்டத்தில்” அறிவிப்பின்றிக் கைது செய்வதும் விசாரணையின்றி சிறையிலடைப்பதுவுமே பிரதான அம்சமாக அமைந்திருந்தது. இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்துமென்று காந்தி அறிவித்தார். காந்தியின் அழைப்பை ஏற்று நாடுமுழுவதும் மக்கள் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். ஒருநாள் வேலைநிறுத்தத்தின் வெற்றியைக் கண்டு பிரிட்டிஷ் அரசு திகைப்படைந்தது. இப்போராட்டத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் தம்வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக தமது பங்களிப்புக்களை செலுத்தினர். "மசூதி மேடையிலிருந்து போராட்டம் பற்றி போதனை செய்ய ஹிந்துத் தலைவர்களுக்கு முஸ்லீம்கள் இடமளித்தனர்* அந்நியரை எதிர்க்கும் உணர்வில் உடன்பாடு காணும் இந்த அரசியல்
-82- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கலாசார இயல்பை சிப்பாய்கள் மேற்கொண்ட புரட்சியின் போதும் அவதானிக்க முடிந்தது. அதாவது அந்நியரை எதிர்க்கும் போராட்ட சூழலில் இந்திய உபகண்ட மக்கள் தம்மிடையே எழுந்த முரண்பாட்டை றந்து உடன்பாட்டுக்குரிய அரசியல் கலாசாரத்தை பின்பற்றியிருக்கின்றார்கள். இவ் உடன்பாட்டு அரசியல் கலாசாரம் நிரந்தரமானதா தற்காலிகமானதா என்பதைவிட பெரும் போராட்டங்கள் எழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்து - முஸ்லீம் முரண்பாடுகள் மழுங்கி குறித்த நோக்கத்தை அடைவதற்கான உடன்பாடான போக்கு அவ்வப்போது இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வந்துள்ளது.
காந்தியின் எளிமையான போக்கு, எல்லோரையும் ஒன்றிணைக்கும் கொள்கை என்பன போராட்டத்தின் பால் இந்திய மக்களை நம்பிக்கைக் கொள்ள வைத்தது. காந்தி ஹரிஜனங்களால் கவரப்பட்டாலும் உயர்சாதியினரையும் போராட்டத்துடன் இணைப்பதில் அவரின் தலைமை ஆளுமைமிக்கதாய் விளங்கியது. அதேசமயம் அவர் நவீன முதலாளித்துவநாகரீகத்தையும், இயந்திரத் தொழில் துறையும், நகரமயவாக்கத்தையும் தாக்கி விமர்சிக்க தவறவில்லை இந்திய மக்களின் குடிசைக் கைத்தொழிலை உயிர்பித்து வளர்க்க முயன்றார். கிராமிய பொருளாதாரத்தையும் அதன் வாழ்கை முறைமையையும் மேம்படுத்த திட்டமிட்டார். இவற்றைக் காந்தி தமது கொள்கைநெறியாகப் பின்பற்றினார். இவரது போதனைகள் எழுத வாசிக்க முடியாத மக்களுக்கும் இலகுவில் விளங்கக்" கூடியதாக அமைந்தது. இந்து, இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம் போன்ற வேறுபட்ட மதங்கள் அடக்கிய சர்வமத தத்துவக் கண்ணோட்டம் அவரது பிரச்சாரத்திற்கும், சமத்துவ நோக்கிற்கும் உதவியாக அமைந்தது. சாதாரண மக்களுடன் கலந்து பழகுதல், பயணங்களின் போது சாதாரண மக்கள் பயணம் செய்யும் இருக்கைகளை பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகளால் அவர் காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தார். இந்திய மொழிகளில் பலவற்றை சரளமாக பேசும் பழக்கமுடைய காந்தி மக்களின் உளவியலை நாடிபிடித்துப் பார்க்கும் பக்குவம் உடையவராக விளங்கினார். இவை யாவும் காந்தியின் தலைமையை ஏற்கும் உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்திய தேசியவாதத்தின் தனிப்பெரும் தலைவர் ஒருவனுக்காக எதையும் ஏற்கும் மனோநிலை மக்களுக்கு ஏற்பட்டது. இத்தகைய தனிமனித அரசியல் கலாசாரம் சமகாலத்தில் இந்தியாவில் நிகழ்ந்ததைப் போன்று வேறு எந்த நாட்டிலும்
கே.ரீ.கணேசலிங்கம் -83

Page 44
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தீவிரமாக எழுச்சி பெறவில்லை. "முஸ்லீம்களையும் பிராமணர்களையும் இயக்கத்தில் ஒன்றிணைத்ததில் காந்தியின் தலைமை காங்கிரசுக்கு வெற்றியைக் கொடுத்தது.”* இவ்வாறு காந்தியின் தலைமை காங்கிரஸ் அவரின் காலத்திலேயே பல நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அவரின் தலைமையில் காங்கிரஸ் எதிர்நோக்கிய மிக முக்கிய நெருக்கடி “ஜாலியான் வாலாபாக் படுகொலையாகும். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதியன்று அமிருதசரஸ் நகரில் ஜாலிபான் வாலாபக் என்ற இடத்தில் இப்படுகொலை நிகழ்ந்து முடிந்தது. இது வன்முறையற்ற அரசியல் கலாசாரத்தை பின்பற்ற விளைந்த மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு வன்முறை அரசியல் கலாசார ரீதியாகக் கொடுத்த பதிலடியாகவே கருதுதல் பொருத்தமானதாகும். ஆனால் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் மிக மெதுவாகவே இப்படுகொலைக்குப் பதிலளித்தது. இப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்துவதில் அவர் தீவிரம் காட்டியபோதும் அதன் தொடர்பாக எழுந்த போராட்" டத்தை தடுப்பதாகவே அவரது போக்கு அமைந்திருந்தது. இதனை படுகொலைக்குப் பின்னர் கூடிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத் தொடரில் அவர் ஆற்றிய உரையிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.
"நாம் ஒரு புரட்சிகரமான காலத்தைக் கடக்கிறோம் என்ற உண்மையை கணிமுடித்தனமாய் மறுப்பதால் பயனில்லை. சுபாவத்தாலும், மரபாலும் நாம் புரட்சிகளை விரும்பாதவர்கள் வழி வழியாக நாம் மெதுவாகச் செல்லும் மக்கள் ஆனால் நாம் அடி" யெடுத்து வைத்த தீர்மானித்தால் விரைவாகவும் நீண்டதாகவும் அடியெடுத்து வைப்போம். வாழ்க்கைக் கிரமத்தில் எந்த உயிருள்ள பொருளும் முற்றிலும் புரட்சியிலிருந்து தப்பமுடியாது" என்றார்.
சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, பகிஸ்கரிப்பியக்கம் என இந்தியா எங்கும் மக்கள் எழுச்சியடைந்தனர். 1920 நவம்பரில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தல் பகிஷ்கரிப்பியக்கத்தின் நடவடிக்" கையால் தோல்வியடைந்தது. இது மக்களின் போராட்டத்தின் மீதான உணர்வையும் மக்கள் அரசியல் கலாசாரத்தையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. காந்தியினால் விழிப்புணர்வூட்டப் பட்ட பாரத மக்கள் காலனித்துவ அரசுக்கு எதிராக சட்டமறுப்பு, ஒத்துழையாமை, வரிகொடாமை என போராட்ட பரிமாணத்தை தீவிரப்படுத்தினர். இப்போராட்ட நடவடிக்கையைக் கண்டு திகிலடைந்த பிரித்தானியர் தந்திரோபாயமாக காந்தியைப் போராட்டத் தொண்டர்களிலிருந்து தனிமைப்படுத்தத் தீர்மானித்தனர்.
-84- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
காந்திக்குப் பக்கபலமாக இருந்த தொண்டர்களையும், தலைவர்க" ளையும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் பிரித்" தானிய அரசு அவசரமாக சிறையில் தள்ளியது. பிரித்தானிய ஆளும் வர்க்கம் எதிர்பார்த்தது போன்று காந்தி தனிமைப்படுத்தப்பட்டார். சாதாரணமட்டத் தலைவர்களுக்கும் காந்திக்கும் இடையில் முரண்பாடு வெடித்தது. ஏனெனில் முப்பதாயிரம் பேரை கைதுசெய்து சிறையிலடைத்த போதும் காந்தி எந்த கருத்தையும் வெளியிடாது மெளனம் சாதித்தது தொடர்பாக பல பத்திரிகையாளர்கள் காந்தி பிரித்தானியருடன் இரகசியமான புரிந்துணர்வு கொண்டுள்ளார் என்றும் கூறுமளவிற்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் 1922இல் பர்தோலியில் கூடிய அவசர காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்தியின் அறிக்கை அமைந்திருந்தது. "செளரி செளராவில் மக்கள் கூட்டம் மனிதத் தன்மையற்ற முறையில் ஒழுகியதற்காக மக்களின் சட்டமறுப்பு இயக்" கத்தை மட்டுமல்ல தொண்டர் படையின் ஊர்வலம் வாயிலாக சடட மறுப்புப் போராட்டத்தையும் நிறுத்துமாறு உத்தரவிடுகின்றேன்" உத்திரப் பிரதேசத்தில் செளரி செளராவில் ஒரு பொலிஸ் நிலையமொன்றை விவசாயிகள் தாக்கியதில் காவல்துறையினர் அனைவரும் தீயில் கருகி இறந்துவிட்டனர். இச்செய்திக்கு பதிலாகவே காந்தியின் மேற்படி நடவடிக்கை அமைந்திருந்தது. காந்தியின் அறிவிப்பால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் குழப்பமடைந்தனர் அவர்க" ளிடையே காங்கிரஸ் மீதும் காந்தியம் பற்றியும் நம்பிக்கையீனம் வலுத்தது. சிறையிலிருந்த தலைவர்கள் காந்தியுடன் முரண்பட்டனர். இவ்வாறான நிகழ்வு ஒயும் தருணத்தில் காந்திக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பிரித்தானிய அரசால் விதிக்கப்பட்டது. இச்சந்” தர்ப்பத்தில் மக்கள் காந்தியன் கைதுக்கு எதிராக எந்த கிளர்ச்சியையும் செய்ய முன்வரவில்லை. காந்தி இரண்டு வருடங்களுக்குள் விடுதலை செய்யப்பட்டார். பிரித்தானியர் எதிர்பார்த்த முரண்பாடு காங்கிரசுக்குள் தீவிரமடைந்துவிட்டது. மக்களும் காங்கிரஸ் அமைப்பையோ தலைமையையோ நிராகரிக்கும் அளவுக்கு நிலைவரை கட்டுப்பாட்டை இழந்திருந்தது. ஒருநாட்டின் தேசிய விடு" தலைப் போராட்டத்தில் இத்தகைய கட்டம் சரிவுக்கே வழிவகுக்கும் அதனையே இச்சம்பவம் எடுத்துக்காட்டியது. இவ்வாறு காந்தி செயல்பட்டமைக்கு புதிய கோணத்தில் காரணமொன்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பார்ப்பானிய உயர்சாதி இந்துத் தலைவர்களின் கொள்கைகளுக்கு காந்தி கட்டுப்பட்டு பலமுறை செயற்பட்டார்? என்பது சற்று நியாயபூர்வமான கருத்தாக அமைந்”
கே.ரீ.கணேசலிங்கம் -85

Page 45
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
துள்ளது. இவ்வாறு இந்திய மக்களின் அரசியல் கலாசாரத்தை தீர்மானிக்கும் பலம் உயர்சாதிப் பிரிவுக்கு உண்டு என்பது கவனிக்கத்தக்கது. அது தேசிய விடுதலைப் போராட்டத்தின் போதுகூட விதிவிலக்கானதொன்றாக அமையவில்லை என்பதை மேற்குறிப்பிட்ட காரணம் தெளிவுபடுத்துகின்றது. சித்பவன் பார்ப்பான சாதியினர் பிரித்தானியரின் ஆட்சியின்போது தமக்கிருந்த செல்வாக்கும் சலுகைகளும் எனைய சாதிப்பிரிவுகளிடம் பறிபோய்விடும் என்ற அச்ச உணர்வில் பிரித்தானியருடன் எச்சரிக்கையாக முரண்பட்டனர். பிரித்தானியர் தமது ஆட்சியினை இலகுபடுத்துவதற்காக ஆரம்பித்த நிர்வாகப் பதவிகளை பிற சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள பார்ப்பான சாதியினர் மறுத்தனர். எத்தகைய வேறுபாடுமின்றி கல்வி கற்க முன்வந்த போதும் பிரித்தானியரின் நடவடிக்கை பார்ப்பான சாதியினர் எதிர்த்தனர்.”* எனவே இத்தகைய சாதி வேறுபாட்டிற்குள் காந்தியின் தலைமை சிக்குண்டிருக்க வாய்ப்புக்கள் அதிகமுண்டு.
காந்தி போராட்டத்தை நிறுத்தியது பற்றி ஜவகர்லால் நேரு விபரிக்கும் போது:
“ஒருவகை ஒழுக்கக் கோட்டினை அவர் (காந்தி) உண்டாக்கி விட்டார். பெரும் இயக்கத்தின் போராட்டம் திடீரென துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் போராட்டத்தின் பயனற்ற வன்முறைப்போக்கு தடுத்து நிறுத்தப்பட்டதென்பது உண்மையே. ஆனால் அடக்கப்பட்ட வன்முறை உணர்ச்சிகளுக்கு வெளியேற்ற வழியொன்று தேவைப்படும் அடுத்துவரும் ஆண்டுகளில் அதன் வழியாக வகுப்புவாதம் வலுக்க வாய்ப்பு உண்டு"
இதே நேரம் பிரித்தானியரான பம்பாய் கவர்னர் லாயிட் பிரபு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியது உண்மை நிலையை அம்பலப்படுத்தியது எனலாம்.
“காந்தியின் போராட்டம் எங்களுக்கு பெரும் திகிலை உண்டாக்கிவிட்ட அவரது வேலைத்திட்டத்தில் எங்கள் சிறைகள் நிரம்பி வழிந்தன. மூன்று லட்சம் பேரை சிறையில் அடைத்தோம். அவர் அடுத்தபடியேறி வரிகொடுக்க மறுத்திருந்தால் எங்கள் கதி என்ன ஆயிருக்குமென்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். உலக வரலாற்றில் காந்தியின் போராட்டம் ஆபத்தான ஒன்றாகும். அவரது போராட்டம் விடுதலைக்கு ஓரங்குல தூரத்திற்கு வந்துவிட்டது. ஆனால் இந்திய மக்களின் வன்முறை (செளரி செளராவில்)
-86- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசியல் கலாசாரத்தால் காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். நாங்கள் தப்பிப் பிளைத்தோம்”*
இவ்வாறான நிகழ்வுகளால் இந்திய தேசியவாதத்தின் எழுச்சி யானது பரிபூரணமானதாக அமையத்தவறியது. காந்தியின் நடவடிக்" கையால் காங்கிரஸ் மேலும் பல கூறுகளாக உடைவது தவிர்க்க முடியாது போனது. ஆனாலும் மக்களை போராட்டத்துக்கு தயார்ப்படுத்தும் வரலாற்றுப் பொறுப்பு காங்கிரசுக்குரியதாகவே இருந்தது. சைமன் கமிஷன் சிபார்சை எதிர்த்து மக்களை மீண்டும் காங்கிரஸ் போராட்டத்துக்கு அழைத்தது. தொழிலாளர், மாணவர், இடதுசாரி கள் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தீவிரமான போராட்ட அலையை எழுச்சியடையவிடாது தடுப்பதென்றும் ஏகாதிபத்தியத்திற்கு ஓராண்டு அவகாசம் கொடுப்பதென்றும் காந்தி தீர்மானித்தார். இதனை மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார். இக்காலப் பகுதியிலே சுபாஸ் சந்திரபோசும், ஜவர்கலால் நேருவும் காங்கிரசின் இணைச் செயலாளராக தெரிவாகினர். மீண்டும் தீவிர போராட்டத்தை காந்தி தடுத்தார் என்ற விமர்சனம் மேலேழுந்து நின்றது. "காலம் கடந்து கல்கத்தா காங்கிரஸ் தீர்மானம் அருமையான காலத்தை வீணடித்துள்ளது" என சுபாஸ் சந்திரபோஸ் குறைப்பட்டுக் கொண்டார்.
பிரித்தானியரின் உத்தரவாதங்கள் பொய்த்துப் போக காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார். இதில் முழு இந்திய மக்க" ளும் போராட்டத்தில் இணைந்தனர். பிரிட்டிஷாரது காவல் நிலையங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் தீர்மானப்படி 1930 ஜனவரி*இல் இந்திய தேசியக்கொடி நாடு முழுவதும் பறக்கவிடப்பட்டது. தேசிய எழுச்சிக்கும், சுதந்திற்குமான இறுதிப்போர் என காங்கிரஸ் அறிவித்தது. மீண்டும் போராட்ட அலை கிளம்பியது. காந்தியை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தனர். "1931 மார்ச் 04இல் ஒப்பந்தமொன்றில் காந்தி சிறையிலிருந்தவாறே கையெழுத்திட்டார். போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்தது."
இவ்வாறு மீண்டும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் நெருக்கடியை எதிர்கொண்டது. போராடும் மக்கள் கூட்டம் போராட்டத்தை நடாத்தும் தலைவர்களின் முடிவுக்காய் காத்தி ருக்கும் நிலைக் காணப்பட்டது. இது தென்னாசிய நாடுகளின் தேசியவாத அரசியல் கலாசாரத்தின் குறைபாடாக அமைந்திருந்தது.
கே.ரீ.கணேசலிங்கம் -87.

Page 46
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஒருவாறு பல இடர்களைத் தாண்டி 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலை சாத்தியமானது. இந்திய விடுதலை "அகிம்சை"யால் மட்டுமன்றி ஆயுதமும் இணைந்தே சாத்தியப்பட்டது. சுபாஸ் சந்திரபோஸின் ஆயுதம் தாங்கிய தேசியவாதப் போராட்டம் அரசியல் கலாசாரத்தில் ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்தியது. இது அகிம்சையிலும், அதன் தலைமையிலும் நம்பிக்கையற்ற சூழலில் ஏற்பட்ட புதிய திருப்பமாகும். சுபாஸின் தலைமையில் பல ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் ஆயுதப் போருக்காக அணிதிரண்டனர். மிக நேர்த்தியான சுபீட்சமான இந்தியாவை கட்டி வளர்ப்பதே சுபாஸின் சிந்தனையாக இருந்தது. ஆனால் காலனித்துவ அரசுகளின் கூட்டுச்சதியால் அப்போராட்ட வடிவம் பயனற்றுப் போனது. இருந்தபோதும் அதன் தாக்கம் இந்திய உபகண்டத்திலும், ஏனைய தென்னாசிய நாடுகளிலும் அரசியல் கலாசாரத்தில் காணப்படுகின்றது. வன்முறை அரசியல் கலாசாரம் வளர்ந்தது போல் பிரிவினைவாத அரசியல் கலாசாரம் இந்தியாவில் வளர்ச்சியடைந்தது. அனைத்து இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தானை தனிநாடாக்குவதில் தீவிரம் காட்டியது. முஸ்லீம்கள் ஒன்றுதிரண்டு தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தனர். இவ் இந்து இஸ்லாமிய முரண்பாட்டை வளர்க்கும் விதத்தில் பிரித்தானிய அரசும் அக்கோரிக்" கையை ஆதரித்தது. 1947இல் இரு அரசுகளாக இந்திய உபகண்டம் துண்டாக்கப்படுவதற்கு பிரிட்டிஷார் கூர்மைப்படுத்திய இந்துமுஸ்லிம் முரண்பாடு வழிவகுத்தது. பிரித்தானியரின் பிரிவினைத் திட்டத்திற்கு இந்து-ஹிந்திய ஆளும் வர்க்கம் துணைபோனது பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு முஸ்லிம் முதலாளிகளும், நிலச்சொந்” தக்காரர்களும் எந்தளவுக்கு காரணமாக இருந்தார்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் சுயாட்சி வழங்குதல் போன்றவற்றை இந்து-ஹிந்திய முதலாளிகள் மறுத்தனர்." இதனை நியாயப்படுத்துவது போன்றே பாகிஸ்தானின் ஸ்தாபகரான அலிஜின்னாவின் கருத்து அமைகின்றது. "இந்தியாவில் உள்ள முரண்பாட்டு நிலைமை இந்தியாவுக்கும் பிரிட்டிஷ்க்கும் இடையில் எழுந்ததல்ல. அது இந்து காங்கிரசுக்கும் இஸ்லாமிய முஸ்லீம்" களுக்கும் இடையில் எழுந்தது. பாகிஸ்தான் உருவாகும் வரை இம்முரண்பாட்டையும் தீர்க்க முடியாது." என்றார்.
"இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு நேருவின் கொள்கை" யால் பாகிஸ்தான் பிரிந்து செல்வது தவிர்க்க முடியாதது. என அப்துல்கலாம் நபிஅஸாத் தனது நாட்குறிப்பில் எழுதியிருந்ததாக
-88- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மிக அண்மைக் காலத்தில் பரபரப்பான செய்திகள் வெளியாகின." அசாத் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இறுதிவரைக்கும் காங்கிரஸ் அமைப்பிலிருந்து முஸ்லிம்களில் ஒருவராகவும் காணப்பட்டனர். நேருவின் கருத்தை இரும்பு மனிதன் வல்லபாய்பட்டேல் ஏற்றிருந்ததாகவும் அவரது நாட்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைத் தேசியவாதம் -
தென்னாசியாவில் இலங்கை பிரித்தானியரது கொள்கை வகுப்பில் தனியரசாக விளங்கியதனால் தென்னாசியாவிற்குரியதான பொதுமையான பண்புகளையும், தனித்துவமான பண்புகளையும் கொண்டிருந்தது. தென்னாசிய நாடுகளைப் போன்று சாதியம், மதவாதம், மொழிவாதம், இனவாதம் என்பன இல்ங்கையின் தேசியவாதத்தின் பதிவுகளாக காணப்பட்டன. அதனால் இலங்கைத் தேசியவாதத்தினை இனத் தேசியவாதமாகவும் மதத் தேசியவாத" மாகவும் ஆராயும் ஆய்வாளர்களே அதிகம் உண்டு.
பிரித்தானியரின் நிர்வாக அலகுக் கூடாகவோ அல்லது அரசியல், சமூக, பொருளாதார மாற்றமூடாகவோ இனங்களுக்" கிடையே பிரித்தானியரால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் தேசியவாதத்திற்கான போராட்டமும் தனித்தனி இனக்" கூறுகளையும், பிரதேசங்களையும் சார்ந்ததாக அமைந்தது. 1815ஆம் ஆண்டு பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதும் சிங்கள அரச அதிகாரம் அவர்கள் வசமானது. அவ்வாறே 1795ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியமும், 1832ஆம் ஆண்டு வன்னி இராச்சியமும் பிரித்தானியர் அதிகாரத்தின் கீழ்கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து பிரித்தானியருக்கு எதிராக சிறு சிறு கலகங்கள் வெடித்தன. 1815ஆம் ஆண்டே மொனறவல கெபிற்றிப்பொல என்ப" வர் தலைமையில் எதிர்க்கிளர்ச்சி ஊவாப் பகுதியில் ஆரம்பமானது. அவர் பிரித்தானியரை வெளியேற்றி மீண்டும் சுதந்திர இலங்கையை உருவாக்கப் போவதாக சூளுரைத்தார். ஆனால் பிரித்தானியர் அக்கிளர்ச்சியை பெருமெடுப்பில் எதிர்கொண்டு தோற்கடித்தனர். இதற்கு முக்கிய காரணம் பிரித்தானியரின் ஆட்சியை விசுவாசிக்கும் மக்கள் இலங்கையில் காணப்பட்டமையே ஆகும். இது ஏனைய நாடுகளை விட இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் மிக நீண்ட காலமாக காணப்படும் அம்சமாகும். இலங்கையில் கெபிற்றிப்பொல முதல் இறுதியாக வீழ்ச்சியடைந்த வன்னி இராச்சியத்தின் மன்னன்
கே.ரீ.கணேசலிங்கம் -89

Page 47
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பண்டாரவன்னியன் வரை இத்தகைய அரசியல் கலாசாரம் தொடர்ந்” துள்ள நிகழ்வாக உள்ளது." பிரித்தானியர் வழங்கும் சலுகைகளுக்" காக தமது தேசியவாதப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒரு வர்க்கம் வளர்ச்சியடைந்துள்ளதையும் அவதானிக்க முடிந்தது. பிரித்தானியரின் சலுகைகள் முழுவீச்சிலான தேசியவாதத்தை எழுச்சியடையாது தடுத்ததில் வெற்றி கண்டது என்றே கூறலாம். 1848ஆம் ஆண்டு பிரித்தானியரின் வரிமுறைக்கு எதிரான விவசாயி கள் கிளர்ச்சிச் சலுகைகளால் அடங்கிப்போனது.
அந்நியர்களுக்கு எதிரான போராட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலேயே தொடங்கிவிட்டது. அது ஆயுதம் தாங்கிய போராட்டங்களினதும் கிளர்ச்சிகளினதும் வடிவத்தைக் கூட எடுத்திருக்கின்றது. அக்கிளர்ச்சிகளில் பெளத்தபிக்குகள் தலைமை தாங்கியதுடன் பங்கு கொண்டும் உள்ளனர். இதனாலேயே அந்நியருக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் மறுமலர்ச்சி என்ற வடிவத்தை எடுத்தது எனக் கூறப்படுகின்றது. இதுபற்றி அமில்கார் காப்றல் பின்வருமாறு கூறுகின்றார்.
“இலங்கையின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான வரலாறு பொதுவாக அடக்கு முறையாளர்களின் கலாசாரத்தை நிராகரிக்கும் வகையிலுள்ளது. அடக்கப்படுவோரின் கலாசார ஆளுகையை நிலைநிறுத்தும் வகையில் முற்போக்கு ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட கலாசார வெளிப்பாடுகளை முன்னோடியாக கொண்டிருப்பதை காட்டுகிறது. பொதுவாக இக்கலாசாரத்துக்குள்ளேயே விடுதலைப் போராட்டத்தை வடிவமைப்பதற்கும், வளர்த்துச் செல்வதற்குமுரிய எதிர்ப்பின் விதைகளை நாம் காண்" கின்றோம். எனினும் இலங்கையில் அடக்கப்பட்ட மக்களின் கலாசார ஆளுமையை நிலைநாட்டுவதுடன் ஊடாக உருவாகிய "எதிர்ப்பு விதை" தேசியவாதமாக அல்லது முழுஅளவிலான விடுதலை இயக்கமாகவோ மாறவில்லை அது பெரும்பான்மை சமூகத்தின் மதக்கலாசார எதிர்ப்பின் எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டது. இது மட்டுமன்றி பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமாகவும் சீரழிந்தது."
பெளத்தர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமான முரண்பாடுகள் காலனித்துவ காலத்தில் தீவிரமடைந்தன. 1863 இல் "படிகம" என்ற இடத்தில் கத்தோலிக்க பாதிரிமாருடன் பகிரங்க விவாதத்தில் "மெஹிட்டிவத்த குணானந்த தேரோ" ஈடுபட்டார். இதில் ஐம்பதுக்கு
-90- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மேற்பட்ட பிக்குமாரும் இரண்டாயிரம் பெளத்த மதவாதிகளும் கலந்துகொண்டனர். 1873ஆம் ஆண்டு பகிரங்க விவாதமொன்று இருமதப்பிரிவினருக்கும் இடையில் நடைபெற்றது. இதிலும் குணானந்த தேரோவே ஈடுபட்டார். இக்காலப் பகுதியில் கேர்ணல் ஒல்கொற், ஹெலனா பிலவற்ஸ்கி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்களது வருகை பெளத்த மதத்திற்கும், பெளத்த கல்விக்கும் மறுமலர்ச்சியாக அமைந்தது. பிரித்தானியர் மிசனறிக் கல்வி மூலமே மதமாற்றத்தை மேற்கொள்கின்றார்கள் என்ற பெளத்தர்களின் குற்றச்சாட்டுக்கு அமைவாக பெளத்தக் கல்விக்கும் ஊக்கமளித்தது. அத்தகைய உந்துதல்கள் அனைத்தும் மத வன்முறைக்கான அடித்தளங்களையே ஏற்படுத்தியது. சேன்பீற்றர்ஸ், சென்யோசப், சென்தோமஸ் போன்ற கல்லுாரிகள் ஸ்தாபிக்கப்பட்டன." இத்தகைய வன்முறை சார்ந்த மத எதிர்ப்புணர்வால் 1883இல் கொட்டாஞ்சேனையில் பெளத்த" கத்தோலிக்க கலகம் ஒன்று வெடித்தது. இக்கலவரத்தில் பெளத்தர் ஒருவரும், ஒரு கத்தோலிக்கரும் கொல்லப்பட்டு, முப்பதுக்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்." இவ்வாறு இலங்கையில் 19ஆம் நூற்றாண்டிலேயே மத வன்முறை நவீன தேசியவாதத்தில் அரசியல் கலாசார அம்சமாக விளங்க ஆரம்பித்தது.
இத்தகைய மதம் சார்ந்த தேசியவாதமாக உணர்வு இந்து மதவாதிகளையும் பீடிக்க தவறவில்லை 1822-1870 காலப்பகுதியில் ஆறுமுகநாவலரின் தமிழும் சைவமும் என்ற தேசிய பிரக்ஞை கத்தோலிக்கத்துக்கு எதிரான உணர்வை வளர்த்த சைவம் மேலோங்கியிருந்த வட இலங்கையில் கத்தோலிக்கப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் நிகராக சைவப் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இத்தகைய கருநிலை தேசியவாதத்தை (Proto Nationalism) இலங்கையில் முதலில் உருவாக்கியுள்ளவர்கள் இந்துக்களே. இதிலும் குறிப்பாக ஆறுமுகநாவலரே இத்தேசிய உணர்வை எழுச்சியடையச் செய்தார். நாவலரைத் தொடர்ந்தே அநாகரிகதர்மபாலா (1880களுக்குப் பின்பு) சிங்கள-பெளத்த தேசியவாதத்தின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கினார். அவர் பெரும்" பான்மை சிங்கள-பெளத்த தேசியவாதத்தின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கினார். அவர் பெரும்பான்மை சிங்கள - பெளத்த தேசியவாதத்தை முதன்மைப்படுத்தினார். ஏனைய சிறுபான்மையினரை நிராகரித்து சிங்கள - பெளத்த மறுமலர்ச்சியைப் பற்றி மட்டுமே அவர் சிந்தித்தார். சுதந்திரத்தின் பின்பான இலங்கையின் இன
கேரீகணேசலிங்கம் -91

Page 48
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
முரண்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கொள்ளப்படுகின்றது. தென்னாசிய நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்ற தேசியவாதமாக உணர்வுகள் இன-மத முரண்பாட்டுக்குரிய குறைப் பிரசவங்களாகவே விளங்குகின்றன. முரண்படும் சக்திகள் மோதுவதற்கு களம் அமைப்பது போன்றே தேசியவாத போராட்டங்கள் அமைந்துள்ளன.
இலங்கையில் பல்லின தேசியவாதமொன்றைக் கட்டிவளர்க்கும் வரலாற்றுக் கடமையை அநாகரிகதர்மபாலா தவறவிட்டார். அவர் இலங்கையை சிங்கள பெளத்தத்துக்கு மட்டும் உரியதாக ஆக்க முயன்றார். இத்தகைய மதவாத நோக்கு நிலைகளே இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியல் கலாசாரத்திற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். இதனை விளக்கிக்கொள்வதற்கு தர்மபாலா கால அரசியலை சற்று விரிவாக நோக்குவோம்.
தர்மபாலா சிங்கள-பெளத்தத்தின் காவலன், சிங்களபெளத்தத்தை உயிரூட்டுவது அல்லது புத்துயிர் அளிப்பது என்பதே அவரது கொள்கை இதனை அவர் கத்தோலிக்க எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, மது எதிர்ப்பு, மேலைத்தேச கலாசார எதிர்ப்பு, என்ற அடிப்படையிலும், ஆரிய இன மேன்மை சிங்கள மொழி பெளத்தமதத்தை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்ட தேசியவாதமாக வெளிப்படுத்தினார். சிங்கள மக்களை உணர்வு ரீதியாக தூண்டிவிடுவதில் அவருடைய கருத்துக்களும், பேச்சுக்களும் கவர்ச்சிகரமானவையாக இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் அவர் ஐரோப்பிய ஆதிக்கம் பற்றிக் குறிப்பிடும்போது, “போர்த்துக்கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற நாசகாரர்கள் எமது மூதாதையர்களால் நிர்மானிக்கப்பட்ட மேன்மைக்குரிய அடிக்கட்டுமானத்தை கடந்த மூன்று நூற்றாண்டுகளாக முற்றாக அழித்துள்ளனர்." என்றார்.
"எமது சந்ததியினருக்கு பெரும் பணியாற்ற வேண்டிய கடமை எமக்குண்டு எமது புனித நாட்டை மதுப்பிரியர்களும், விஸ்கி வியாபாரிகளும் சீரழிப்பதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. தமது சொந்த நலனுக்காக எமது நாட்டை சீரழிக்க வந்திருக்கும் வெள்ளையனை குருட்டுத்தனமாக நாம் பின்பற்றக் கூடாது."
"அந்நிய தேசத்தவர் எமது நாட்டின் செல்வங்களை திருடி செல்கின்றனர். மண்ணின் மைந்தர்கள் போவதற்கு நாடேது? வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றவாசிகள் போவதற்கு அவர்களுக்கென்றொரு நாடுண்டு. ஆனால் சிங்களவருக்கு போவ
-92- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தற்கு ஒரு நாடுமில்லை அந்நியர்கள் மகிழ்ந்திருக்கையில் மண்ணின் மைந்தர்கள் துயரப்படுவது நியாயமா?" என்ற வாதங்களை முன்வைத்தார்.
இவ்வாறு அநாகரிகதர்மபாலா கிராமம் கிராமமாகச் சென்று இனம், மதம், மொழி, தேசம் என்ற உணர்வு நிலையில் சிங்கள பெளத்தரை அணிதிரட்டினார். பல பெளத்த மத நிறுவனங்களை அமைத்து அதனூடாக நிதிசேகரித்தார். பெளத்த் வணிகர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். சிங்கள மக்களை “தம்மதீப" கோட்பாட்டுடன் இணைப்பதில் இவரது பெளத்த மறுமலர்ச்சிக் காலம் செயல்வேகம் மிக்க காலமாக திகழ்ந்தது. இவ்வாறு எழுந்த பெளத்த சிங்கள தேசியவாதத்தைத் தடுக்க அநாகரிகதர்மபாலா மீது பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுத்தது. தர்மபாலாவால் நிறுவப்பட்ட மகாபோதி அச்சகத்தையும் அதன் வெளியீடான “சிங்களபெளத்தன்” என்ற சஞ்சிகையையும் முதலில் பிரித்தானியர் தடை செய்தனர் பின்பு இவர் மீது நேரடியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 1915 நிகழ்ந்த சிங்கள - முஸ்லீம் கலகத்துக்கு இவரே காரணமென பிரித்தானியர் கருதினர். இதனால் 1915-1922 வரை கல்கத்தாவில் அவரைத் தடுத்து வைத்தனர். இதன் பின்பு அவரது தனிப்பட்ட ஆளுமை மங்கிப்போனதும் அவரால் ஏற்படுத்தப்பட்ட சிங்கள- பெளத்த மறுமலர்ச்சி தேசியவாதம் இன, மத, முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தைப் பற்றி மதிப்பீட்டையும் செய்த குமாரி ஜயவர்த்தனா பின்வருமாறு விபரித்தார்.
“பொருளாதார வளர்ச்சியில் பங்கு மறுக்கப்பட்ட அரசியல் ரீதியிலும், கலாசார ரீதியிலும் ஒதுக்கப்பட்ட சிங்கள பெளத்தர்கள் இனவாத நோக்கில் ஐதீகங்களிலும், புராணங்களிலும் ஆதாரங்கள் தேடினார்கள். அத்தகைய தவறான பிரக்ஞையால் இன,மத, சிறுபான்மையினரை தாக்குவதன் மூலம் தங்கள் ஏமாற்றங்களுக்கு வடிகால் தேடினார்கள். இத்தகைய இனவாத சிந்தனையை வளர்ப்பதற்கு ஒரு காலப்பகுதி தலைவாக அநாகரிகதர்மபாலா விளங்கினார்.”9
அநாகரிகதர்மபாலாவின் தேசிய அலை பிரித்தானிய காலனித்துவத்தை வெளிப்படையாகவும் ஏனைய சிறுபான்மை இனங்களை மறைமுகமாகவும் எதிர்ப்பதாக அமைந்திருந்தது. இது காலப்போக்" கில் பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்கிடையிலான முரண்பாடாக மாறியது. அதாவது அநாகரிகதர்மபாலாவினால் மிக
கே.ரீ.கணேசலிங்கம் -93

Page 49
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மெதுவாக ஆரம்பிக்கப்பட்ட இனவாதம் பின்வந்த சிங்கள- பெளத்த தலைவர்களால் தீவிரப்படுத்தப்பட்டது. தொழில்சங்கவாதியும் தேசியவாதியுமென கருதப்பட்ட ஏ.ஈ. குணசிங்க தொழிலாளரி டையே ஏற்பட்ட முரண்பாட்டின்போது "இந்தியர்களை இந்த நாட்டிலிருந்து அடித்துத் துரத்த வேண்டும்" என்றார். மேலும் அவர் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில், மலையாளிகளை ஆட்குறைப்பு செய்வதற்கு ஒரேவழி அவர்களை நாடுகடத்துவதேயாகும்." என்றார். இவரது சிங்கள பெளத்த மறுமலர்ச்சியும் இனவாதமும் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. இனஉணர்வில் எழும் முரண்பாடுகளையும் மோதல்களையும், மேவி, நாடுதளுவிய தொழிலாளர்கள் ஒருமைப்பட்டையும், ஐக்கியத்தையும் கட்டி" யெழுப்ப முயன்றவர் என்று இவரைக் கருதமுடியாது.
“சிங்களவரால் நீண்டகாலமாக எதிர்த்து வந்த இந்திய ஆக்கிரமிப்பின் பிந்திய மற்றொரு வடிவத்தின் உருவமாகவே தமிழ் தோட்டத் தொழிலாளர் கருதப்பட்டனர்.”
எனவே இலங்கையின் தேசியவாத அரசியல் கலாசாரம் பெளத்த - சிங்கள மேலாதிக்க தேசியவாதமாக விளங்கியது எனக் கூறலாம். இத்தேசியவாதம் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. அரசியல் செற்றி களை அடைவதற்காக சிங்கள - பெளத்தத்தை முதன்மைப்படுத்த வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. வேறுவிதமாகக் கூறுவதாயின் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை முதன்மைப்படுத்தியே அரசியல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றினர். குறிப்பாக பிறப்பால் கிறிஸ்த்தவரும் ஆங்கிலமொழியைப் பேசுபவராகவும் இருந்த சொலமன் வெஸ்ட் றிச்வே டயஸ் பண்டாரநாயக்கா 1956ஆம் ஆண்டு "24 மணி” நேரத்தில் தனிச்சிங்களச் சட்டத்தை பிரகடனம் செய்ததுடன், பெளத்த மதத்தின் காவலராகவும் காட்டிக்" கொண்டார். இது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையேயாகும்
இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் தேசிய தலைவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களில் அனேகமானோர் பிரித்தானியரின் சலுகைகளையும், வசதிகளையும் அனுபவித்தவர்களாகவே காணப்பட்டனர். பலம் வாய்ந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பொருளாதார அல்லது கலாசார அடிப்படை கொண்ட ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை தலைமை தாங்கி நடாத்தக்கூடிய தேசிய பூர்ஷ்வா வர்க்கம் எதுவும் இங்கு இருக்க"
-94- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வில்லை. பழைய நில உடைமையாளர் குடும்பங்கள் பிரித்தானியரோடு அணிசேர்ந்து நின்றன. பூர்ஷ்வா வர்க்கத்தின் புதிய பிரிவு வர்க்க முன்னுரிமைகளுக்காக மட்டுமே போராடியது. அது அரசியல் சீர்திருத்தங்களில் அதிகம் திருப்தி அடையவுமில்லை அந்நிய ஆட்சியாளருக்கு எதிராக போராட்டங்கள் எதனையும் அது நடாத்தவில்லை. மதுஒழிப்பு, பெளத்தகல்வி போன்ற இயக்கங்களின் தலைவர்கள் கூட பிரித்தானிய ஆட்சி தொடர்வது பற்றி கேள்வி எழுப்பவில்லை. அவர்களது நடவடிக்கைகள் எல்லாம் அரச விசுவாசம் அற்றவை எனத் தோன்றாதிருக்கும் வண்ணம் கவனமாக வரையறுக்கப்பட்டன."
மேற்படி குற்றச்சாட்டை ஆதாரப்படுத்தும் விதத்தில் “1908இல் பிரபல சாராய குத்தகையாளர் ஒருவரின் மகனாக மிதவாத சீர்திருத்த அரசியல்வாதி ஜேம்ஸ்பீரிஸ் கருத்து அமைகின்ற்து. பிரித்" தானிய தோட்டக்காரர்கள் இந்த நாட்டுக்குள் மூலதனத்தைக் கொண்டு வருவதோடு நாம் எல்லோரும் வெற்றிக்குரிய பாதையை யும் காட்டி பெருமைக்குரியவர்களாக காணப்படுகின்றனர்." சலுகைகளை சுதந்திரமாக எண்ணினார்களே தவிர அடக்குமுறையின் வடிவமாக அவற்றை அவர்கள் கருதவில்லை.
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் அமைப்பொழுங்கு சார்ந்த தேசிவாதம் தோற்றம் பெற்றதைக் காணலாம். சூரியமல் இயக்கம், கலால் இயக்கம், தேசிய காங்கிரஸ், இளம் இலங்கையர் கழகம், தொழில் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி என பல அமைப்புக்கள் தேசிய விடுதலைக்காக போராடின. அத்தகைய அமைப்பொழுங்கு சார்ந்த தேசியவாதம் இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. இனஒற்றுமைக்கான தேசிய காங்கிரஸின் தோல்வி யானது 1920களில் தமிழர் மகாசபையையும், 1937களில் சிங்கள மகாசபையையும், முஸ்லிம் லீக்கையும் 1944ல் தமிழர் காங்கிரஸையும் தோற்றுவித்தது. இதனால் இனமுரண்பாடு மேலும் மேலும் கூர்மையடைந்தது. இது மட்டுமன்றி ஒப்பீட்டடிப்படையில் இந்தியத் தேசியவாதத்தில் இன, பிரதேச உணர்வுகள் மட்டுமன்றி சாதி வேறுபாடுகளும், சச்சரவுகளும் மிக உயர்வாகக் காணப்பட்டன. உயர்சாதியினருக்கு பிரித்தானியரின் சலுகை கிடைத்தமை" யினால் மக்கள் மயப்பட்ட போராட்டங்களை அவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தடுத்தனர் அத்தோடு இலங்கை மக்கள் தேசிய விடுதலை போராட்டத்துக்கான அரசியல் இயக்கங்களை வளர முன்னர் கலைந்து போகும் நிலையும் அடிக்கடி எதிர்
கே.ரீ.கணேசலிங்கம் -95

Page 50
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கொண்டனர். இனவாத உணர்வு மேலோங்கியதனாலும் அமைப்பொழுங்கு சார்ந்த தேசியவாதமாக வலிமைபெற முடியவில்லை.
எனவே, தென்னாசிய நாடுகளில் தேசியவாத கால அரசியல் கலாசாரத்தில் வன்முறையும், அகிம்சையும் கலந்திருப்பதைக் காணமுடிகின்றது. இந்திய உபகண்டத்தில் அமைப்பொழுங்கும், தனிமனித ஆளுமையும் தேசிய விடுதலைக்கு உரமூட்டுபவையாக அமைந்திருந்தன. இன, மத, முரண்பாடுகளுக்கும், சாதி வேறுபாடுகளுக்கும் தேசிய விடுதலைப் பேராட்டத்தின் வலிமையை மழுங்5Igluua)6) Junta55 d5T60TuuLL-60T.
அடிக்குறிப்புகள்
(1) Jawaharlal Nehur, Glimpses of world History, Lindsay,
Orwmmond ltd. London, 1934, P. 466
(2) D. C Wijayawardena, The Revolt un the Temple, Sinha
Publication, Colombo, 1953, PP 1-13
(3) எஸ். வி ராஜதுரை இந்தி இந்து இந்தியா அறிவகம்,
62zaožeoav, Z9934/ž 6/66
(4) Verinder Gover (Ed) Engycolopaedia of SAARC NATIONS -NEAPAL, Deep of Deep Publications, Newdelhi, 1997, P.25
(5) 6769ö 60%. Z/723/60/7, 4/5,47
(6) Gazz//7. நூல், 4/4 72
(7) மேற்படி நூல், பக்90
(8) KAAthohoba GG Kotovasky, A. History of India from the
middle of the 18" Century to the present, Progess Publication, China, 1987, PP. 1 - 13 (9) D.R. Parwish Ikbal simaa, Indo- Park Relation, Bertram Bastiampillai (Ed) India and her South Asian Naigh bours, Banderanayaka Memorial Center Colombo, 1992, P.71 (10) பார்க்க ரஜனி பாமிதத் இந்தியாவில் பிரித்தானியரின் பிரிதாளும் கொள்கை (எம் வி. வெங்கட்ராம் மெ.பெ) இன்றைய இந்திய, நியூ செஞ்சரி பிரிண்டர்ஸ் சென்னை, 1988, Luj, 562-563 (11) Isaac Tambiah A memorandum to the secretary of state for
coloies (un Published) Jaffna, 1938, P208 -96- கே.ரீ.கணேசலிங்கம்

(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
(21) (22)
(23) (24)
(25)
(26)
(27)
(28)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
K.A. Athohoba, G. G. Kotovsky op. citipp,8-89 Ibid, P90 Karlmarx, Notes of Indian History, Progress publication, mescovov, 1986, P. 186 Ibid, P 117 சுசில் சிறிவர்த்தனா, இலங்கையில் நிலவிய இன உணர்வில் பிரித்தானிய அரசியல் யாப்புக் கொள்கை ஏற்படுத்திய தாக்கம் : ஒரு குறிப்பு, சமூக விஞ்ஞானிகளின் சங்கம் (தொகுப்பு) இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு, பக், 278-279 1985 Karl marx, op, citp, 220 A. T. Thurisingam, Lenin and Asia, S.R.C Publication, Colmbo, 1977, P. 13
Ibid, V.Muthucumaraswami, Foundors of morden Ceylon, Eminent Tamils, umasiva Pattippakam, Sri lanka, Part I and II 1973, P 7-8 Ibid, க.சி. குலரத்னம், நோர்த் முதல் கோபல்லவா வரை இலங்கையின் அணி மைக்கால (1796-1962) அரசியல் வரலாறு. ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். 1966,பாகம்,, Ludi,I67 சுசில் சிறிவர்த்தனா, பக்,279-280 Issac Tambiah, op.cit, P 09 Ibid, P04
L. GC Mendies, Ceylon under the British (Rep), Apothicaris com Ltd. Colombo, 1952, P 125
Sir Pon Arunachchalam, Constitutoinal reforms Address of the Ceylon National Conference, 13th December 1918, P30
A.Jeyaratnam Wilson, The Breat-up-of-Sri lanka, The Sinhalese- Tamil conflict, C. Hurst and company, London, 1988, P 125
கே.ரீ.கணேசலிங்கம் -97

Page 51
29)
30)
(31)
(32)
(33)
(34)
(35)
(36)
(37)
-98
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் தமிழ் மக்கள் மன்றம், இலங்கையின் இனப்போராட்டம், யாழ்ப்பாணம், 1938,பக்,03 சுசில் சிறிவர்த்தன, பக், 280, இவரது இலங்கையில் நிலவிய இன உணர்வில் பிரித்தானிய அரசியல் யாப்புக் கொள்கை ஏற்படுத்திய தாக்கம். ஒருகுறிப்பு என்ற கட்டுரை குறிப்பிட்ட இன முரண்பாட்டை தெளிவாக விளக்குகிறது. தமிழ், சிங்கள முரண்பாட்டை மட்டுமன்றி தேசியவாதிகளுக்கும், இலங்கை மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கு பிரித்தானியர் கையாண்ட விதம் "பிரித்தாளும் கொள்கை” நடைமுறைப்படுத்த வழிகாட்டும் நெறியாக கொள்ளத்தக்கது என Gundiflui G3.6TL pig faixa IIT (Ed, Unverdity of Ceylon History ofCeylon, Vol11, 1973) குறிப்பிட்டதற்கு ஒப்பானதாக உள்ளது இலங்கை மக்களின் அரசியல் கலாசாரத்தில் பிரித்தாளும் கொள்கையை புகுத்தியவர்கள் பிரித்தானியரே என்ற எடுகோளுக்கு சிறந்த மதிப்பீட்டை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. Prof K. M de Silva, (Ed.) The Reform and Nationalist Movement in Early Twentieth Century, History of Ceylon, Oxford University Press, 1981, P396
Sri Ponnampalam Ramanathan The Memorandum of sir. Pon. Ramanathan on the recommendation of the Donough more commissioness appointed by the Rt Honourable the secretary; of state for the colonies to report upon the reform of the exiting constitution of the Government of Ceylo;n, (1924-1930) Vacher and sons Ltd, London, 1930, PP4-5
Isaac Thambiah, op, cit, P.21
S.U. Kodikara, Indo- Ceylon Relations, Since Independence, The Ceylon Institute of world affairs, Colombo, 1965, PP3637
ரஜனி பாமிதத், பக்,562
மேற்படி நூல், பக் 363 Hughselon watston, Nation's and States cambpridge University Press 1977, P01
கே.ரீ.கணேசலிங்கம்

(38)
(39)
(40)
(41)
(42)
(43)
(44)
(45)
(46)
(47)
(48)
(49)
(50)
(51)
(52)
(53)
(54)
(55)
(56)
(57)
(58)
(59)
(60)
(61)
(62)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Mehran Kamrava, Political Culture and new definition of the Third world, THIRD WORLD QUARTERLY VOL 16, No 4,1995,PPይ691-700
பி.சி. ஜோகூரி (தொகுப்பு) புரட்சி 1857, ஓர் ஆய்வு பாவை வெளியீடு, சென்னை, 1989, பக் 37 Verinder Gover, (Ed) op, cit, P26
பி.சி. ஜோஷி, பக்,167
மேற்படி நூல், பக்,37
மேற்படி நூல், பக்,05
ரஜனிபாமிதத், பக், 37
Karlmax, and Engels, The First Indian war of Independentance 1857-59
Progress Publication mosecow, 1978, P44 எஸ்.வி. ராஜதுரை. பக்50 ரஜனிபாமிதத், பக்,402
ஜவகர்லால் நேரு சுயசரித்திரம், கார்த்திகை பிரசுரம் சென்னை 1978, பக்,23-24 ரஜனிபாமிதத், பக்,420 எஸ்.வி. ராஜதுரை. பக்67 ரஜனிபாமிதத், பக்,422 AV B.J. Brown, Modern India, The Origins of Asian Democracy, Oxford, Newyork, 1985, P217
எஸ்.வி. ராஜதுரை. பக் 69 மேற்படி நூல், பக்,47 எஸ்.வி. ராஜதுரை. பக் 86 ரஜனிபாமிதத், பக்,422 மேற்படி நூல், பக்,445 மேற்படி நூல், பக்,461 எஸ்.வி. ராஜதுரை. பக் 78 ரஜனிபாமிதத், பக்,583 Indian Today- 1989 Febuary
கே.ரீ.கணேசலிங்கம் -99

Page 52
(63)
(64)
(65)
(66)
(67)
(68)
(69)
(70)
(71)
(72)
(73)
(74)
(75)
(76)
-100
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
S. Pathmanathan, The Kingdeon of Jaffna, Arul Mr. Rajendran, III pickerings Road, Sri lanka, Part I, 1978, PP 1-11 மேற்கோள், குமாரிஜெயவர்த்தனா, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய வர்க்க இன உணர்வின் சிவ அமசங்கள், சமூக விஞ்ஞானிகள் சங்கம், (தொகுப்பு மொ.பெ) இலங்கை இனத்துவம் சமூக மாற்றமும், 1988, பக்,
152-15
Ganath Obeyesekara, Retigious symbolism and political change in Ceylon. Modern Ceylon Studies, Jeneral of the social Vol. I, June 1970, P46 GP VSomaratna, Kotahena riot 1883 Religions; Riot in Sri lanka, the Riot Commisson Report Sri lanka, 1991, P06 Ananda Guruge (Ed) Return to Righteousness; A Collection of Spicehes Essays and Letters of the Anagrika Dharmapala, Ministry of Education and Cultural Affairs, Ceylon, 1965, P493
Ibid, P. 495
Ibid, P. 509
Ibid, P. 484
குமாரி ஜெயவர்த்தனா பக், 141-164 Cited in Kumari Jeyawardena, The Rise of the labour
movement in Ceylon, Duke University Press North Laroling 1972, P 174
குமாரி ஜெயவர்த்தனா (மொ.பெ.சித்திரலேகா.சி.க.நித்தி) இலங்கையின் இனவர்க்க முரண்பாடு, பாரதி நிலையம், சென்னை, 1995, பக்,44-45
மேற்படி நூல், பக், 43 குமாரி ஜெயவர்த்தனா, 19ம் நூற்றாண்டில்’பக், 157 மேற்படி கட்டுரை, பக், 147
கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசிய நாடுகளின் அரசியல் முறைமைகள்
அறிமுகம்
காலனித்துவ ஆட்சியாளரின் வருகை தென்னாசிய நாடுகளில் நிலைத்திருந்த அரசியல் முறைமைகளை மாற்றத்துக்குள்ளாக்கியது. இந்நாடுகளில் அமைந்திருந்த பாரம்பரிய அரசியல் முறைமை" களுக்கு பதிலாக வரையப்பட்ட அரசியல் யாப்புக்களும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்ட, நிர்வாக, நீதித் துறைகளும் ஜனநாயக முறைமைகளுக்கான அரசியல்கட்சி அமைப்புக்களும் எனப் பலநிறுவனமயவாக்கங்கள் உருவாகின. இவற்றை பின்வரும் பிரிப்புக்களூடாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
* ஜனாதிபதி ஆட்சி முறைமை
* பாராளுமன்ற ஆட்சி முறைமை
* முடியாட்சி முறைமை
* இராணுவ ஆட்சி முறைமை
என அதிகார பிரயோகத்தின் தன்மைகளைப் பொறுத்து ஆட்சி முறைமைகளை வகைப்படுத்தலாம். இதேபோன்று அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்டு
* சமஷ்டி ஆட்சி முறைமை
* ஒற்றை ஆட்சி முறைமை
நாடுகள் என அரசியல் முறைமையின் வகைப்பாட்டையும் அவதானிக்கலாம். உலகில் ஜனாதிபதி ஆட்சிமுறைமைக்கு
கே.ரீ.கணேசலிங்கம் -101

Page 53
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
முன்னோடி நாடாக அமெரிக்கா அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் கொண்டுள்ளது. இதனை அடியொற்றித் தென்னாசிய அரசுகளான இலங்கையும், மாலைதீவும் ஜனாதிபதி ஆட்சிமுறைமையைப் பின்பற்றிவருகின்றன. இதில் இலங்கை மிக நீணட காலமாக பாராளுமன்றம் சார்புடைய மந்திரிசபை ஆட்சி முறையை (Westminister System) கொண்டிருந்த போதும், திடீரென ஜனாதிபதி ஆட்சிமுறையை 1977ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையாக விளக்குகின்றது. மாலைதீவு 1968ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி ஆட்சிமுறைமையை அமுல்படுத்தி வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் ஜனநாயக முறையிலான தனிமனித அதிகார அரசியலை விசேடமான அரசியல் கலாசாரமாக ஏற்படுத்தியுள்ளன. அதிகாரப்படி வரிசையில் உச்சமாக விளங்கும் ஜனாதிபதி பதவி ஆளுமை, கவர்ச்சி போன்றவற்றால் மேலும் உரமூட்டப்பட்டதை சில சமயங்களில் காணப்படுவதும், அத்தன்மை தனிநபர் அரசியல் கலாசாரம் அரசியல் முறைமையில் தலையெடுப்பதற்கு வழிதிறந்து விடுவதாக உள்ளது.
புராதன காலத்திலிருந்து முடியாட்சி நாடாக விளங்கி வந்த நேபாளம், 1950களிலிருந்து முடியாட்சியுடன் பாராளுமன்ற முறை கலந்த அரசாங்கத்தையும் சமகாலத்தில் பலம்மிக்க பாராளுமன்ற அரசாங்க முறைமையையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அயல்" நாடான பூட்டான தொடர்ந்தும் முடியாட்சிப் பாரம்பரியத்துக்குள் ஜனநாயக ஆட்சியை செயல்படுத்தி வருகிறது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து பாராளுமன்ற ஆட்சி முறையில் கூட்டாட்சி அமைப்பொழுங்கையும் பலநெருக்கடிகளுக்கு மத்தியில் பேணிவரும் தென்னாசிய நாடாகிய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகப்பெரிய சமஷ்டி நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருதல் அதனுடைய அரசியல் கலாசாரத்திற்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பண்பாகும். இந்தியாவுடன் சுதந்திரமடைந்த பாகிஸ்தான் 1971ஆம் ஆண்டு வங்காளதேஷ் பிரிவினைக்கு வழி வகுத்ததுடன் பெருமளவு காலப்பகுதியில் இராணுவ அரசையே கொண்டிருந்தது மட்டுமன்றி இந்தியாவினுடைய அனுசரனையுடன் சுதந்திரமான ஜனநாயக நாடாக அறிமுகமாகிய வங்காளதேஷ் 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவ ஆட்சியையும், 1990களுக்கு பின்பு பாராளுமன்ற ஜனநாயகத்தையும் பின்பற்றி
-102- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வருகிறது. மீண்டும் இராணுவம் அல்லது இராணுவ மாதிரியான ஆட்சிக் கலாசாரம் பங்களாதேசிற்குப் புதியதல்ல.
தென்னாசியாவின் பன்மை சமூகங்களில் இன முரண்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்பட்டாலும் தோமஸ் மேயர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவிக்கின்றார்.” பெரும்பான்மைசிறுபான்மை உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசியல் யாப்பு வரைபில் சமத்துவமும், சமூகநீதியும் பேணப்படும் விதத்தில் சிறுபான்மையினர் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் தகுந்த உத்தரவாதம் அளிக்கப்படுதல் அவசியமானது” என்கிறார். மேலும் உடன்பாட்டுக்குரிய அரசியல் கலாசாரத்திற்கான அடிப்படையை கோடிட்டுக் காட்டிய தோமஸ் மேயர் தனது ஆய்வின முத்தாய்பாக “ஒரு நாட்டினது அபிவிருத்தி அரசியல் கலாசாரம் அந்த நாட்டின் அரசியல் முறைமையில் காணப்படும் உரிமைப் பகிர்விலே தங்கியுள்ளது. அதாவது சிறுபான்மை, பெரும்பான்மை" களுக்கு இடையிலே பகிரப்படும் உரிமைகள் அரசியல் முறைமையில் வரையறுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பு முறைமைகள்
அரசியலமைப்பு என்பது அரசொன்றில் அரசாங்கத்தின் அமைப்பையும் அதன் அதிகார தொழில்பாட்டையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் தெளிவாக விளக்கும் விதிகளின் தொகுப்பு என்றே கூறிக்கொள்ளலாம் "சட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சமுதாயமொன்றின் அமைப்பே அரசியல் அமைப்பு என்று ஜேம்ஸ் பிறைஸ் குறிப்பிட்டார். இதேபோன்று பிறைஸ் பிரபு ஓர் அரசியலமைப்பு உறுப்புக்களிடையே வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வையும் அமுல்படுத்தத் தேவையான பொதுக்கொள்கையும் நிர்ணயிக்கப்பட்டு எழுதிய எழுதப்படாத அம்சங்களின் தொகுப்பையும் கொண்டது அரசியலமைப்பு என்றார். தென்னாசிய நாடுகளின் அரசியலமைப்புக்களில் எழுதப்பட்ட நெகிழ்ச்சியற்ற கூட்டாட்சி அரசியலமைப்பாக இந்திய அரசியலமைப்பு காணப்படுகின்றது. 1950களில் வரையப்பட்ட இவ்வரசியலமைப்பு இதுவரை ஏறக்குறைய 100 திருத்தங்களை மட்டுமே கொண்டதாகக் காணப்படுகின்றது. ஏனைய தென்னாசிய நாடுகள் தமது அரசியலமைப்பையே ஐம்பது ஆண்டுகளுக்குள் பல தடைவை மாற்றியுள்ளன. எனவே இந்திய அரசியலமைப்பு ஏனைய
கேரீகணேசலிங்கம் - 103

Page 54
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது வலுவான உறுதியான அரசியலமைப்பாக உள்ளது. பல்தேசிய இனச்சமூக அமைப்புக்கு ஏற்றவகையில் கூட்டாட்சிமுறைமையை இந்தியா கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இக்கூட்டாட்சி அரசியல் கலாசாரம் காணப்பட்டாலும் கூட்டிணைவுக்கான தன்மையை பேணத் தவறிவிட்டது. (1971 சம்பவம்) என்றே கூறலாம். ஆனாலும் இந்திய சமஷ்டி அரைகுறை கூட்டாட்சி (Qusi Federal) என்ற குறைபாடு காணப்படுகிறது. “இந்திய அரசியலமைப்பில் மிக வலுவான மைய அதிகாரக் குவிப்பை இயல்பாக கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாகவுள்ளது" இந்திய அரசியலமைப்பை வரைந்த கலாநிதி அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புக் காலச் சூழ்நிலைக்கு பொருத்தமாக ஒற்றையாட்சி முறையாகவும் கூட்டாட்சி முறையாகவும் இயங்கக்கூடியது என்றார். இந்திய அரசியலமைப்பை முழுமையாக வரைந்தவராக கருதப்படும் அம்பேத்கர் அதன் பலவீனங்களையும் அடக்குமுறையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். 1953ஆம் ஆண்டு செப்டெம்பர் 2ம் திகதி மாநிலங்களவையில் உரையாற்றும்போது அவர்,
“என்னிடம் பலர் எப்போதும் சொல்கிறார்கள் ஒ நீங்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் கர்த்தாவாயிற்றே" என்று கூறும் அவர்களுக்கு எனது பதில் இதுதான், "நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன். நான் எதைச் செய்யவேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டதோ அவற்றை என் சித்தத்திற்கு மிகவும் எதிரான முறையில் செய்தேன்" இதேபோன்று மாநிலங்களவையில் அன்றைய உளத்துறை அமைச்சராக இருந்த கட்ஜிவைப் பார்த்து அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்.
“ஐயர் அரசியல் சட்டத்தை நான் உருவாக்கினேன் என்று எனது நண்பர்கள் சொல்கின்றார்கள். ஆனால் அதைக் கொழுத்தும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பதைக் கூற நான் தயார். எனக்கு அது வேண்டவே வேண்டாம் அது யாருக்குமே உகந்ததன்று.”*
இவ்வாறு அம்பேத்கர் கூறுவதற்கு காரணம் அரசியல் வரைபுக் குழுவுக்குள்ளே பல உள் முரண்பாடுகள் காணப்பட்டமையாகும். இந்திய அரசியல் அமைப்பின் உருவாக்கப் போக்கில் பலவீனம் காணப்பட்டதென்பது தெளிவாகின்றது. இதனை விளங்கிக்கொள்ள யாப்பினை முழுமையாக அவதானிப்போம். அப்போதே அரசியல
-104- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மைப்பின் கலாசாரத்தைக் கண்டறிய முடியும். எனவே அம்பேத்கர் முன்வைத்த கருத்துக்களையும், அவர் பற்றிய மதிப்பீட்டையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் இப்பகுதியில் நோக்குவோம்.
இந்திய அரசியல் முறைமையில் ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட அரசியல் கலாசாரமாக விளங்குகிறது. இந்திய பாராளுமன்ற ஈரவைகளைக் கொண்ட பெரும்பான்மை ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகின்றது. ராஜ்யசபா (Rajya Shaba) லோக்சபா (Lok Shaba) என தேர்தல் மூலம் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களைக் கொண்ட அவைகளாக காணப்படுகின்றன. ராஜ்யசபா என அழைக்கப்படும் மாநிலங்களின் அவை 250 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையாகும். இவர்கள் 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், யூனியன் பிரதேசங்களி லிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப தெரிவு செய்யப்படுகின்றார்கள். மாநில சபைக்கான தேர்தல் மறைமுகத் தேர்தலாக அமைவதோடு குறிப்பிட்ட ஒரு மாநில சபைக்கான பிரதிநிதிகள் அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மிகுதி12 உறுப்பினர்களும் இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும் சமூக சேவைகள் சார்ந்த துறைகளில் சிறந்த அறிவு அல்லது அனுபவம் கொண்டவர்களை ஜனாதிபதி நியமனம் செய்கின்றார். இச்சபை கலைக்கப்படாத ஒரு நிரந்தரமான சபையாகும். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை பதவி விலகக் காலியாகும் இடங்களிற்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் மொத்தமாக இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் இதேபோன்று லோக் சபா என அழைக்கப்படும் மக்களவை 552க்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்ட சபையாக விளங்கும் இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும் ஏனைய 20 உறுப்பினர்களும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்கள். மேலும் ஆங்கில - இந்திய சமூகத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லையென ஜனாதிபதி கருதி னால் அச்சமூகத்திலிருந்து இருவரை அவர் நியமிப்பார். மக்களவை யின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். இதேபோன்று மாநிலங்களுக்கான அரசாங்கங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மை வாக்குகளால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றது. இவ்விதத்தில் இந்திய ஜனநாயகம் அபிவிருத்தியடைந்த அரசியல் கலாசாரத்திற்கு நெருக்கமாக வருகின்றதென்று கூறலாம்.
கே.ரீ.கணேசலிங்கம் - 105

Page 55
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இந்திய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமது உயர்ந்த அரசியல் பங்களிப்பை வழங்கியபோதும், அமைதியான சுபீட்சமான அரசியல் சமூக பொருளாதார வாழ்வை எல்லோரும் அனுபவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. வறுமை இந்திய மக்களின் அரசியல் கலாசாரத்தில் மிக முக்கிய பிரச்சினையாகவுள்ளது. செல்வந்தர்களான ஒரு குறிப்பிட்ட உயர்வர்க்கத்தினரே சமூக அந்தஸ்தையும் அரசியல் அதிகாரத்தையும் பெற்றவர்களாக காணப்படுகின்றனர். இவ் உயர் வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கும் விதத்திலேயே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் என்றும் இந்திய சமூகத்தில் மேல்தட்டுவர்க்க மக்களாகவே இருந்து வந்துள்ளனர். இதனால் பிரித்தானியரின் ஜனநாயக மரபுக்கு உட்பட்ட அரசியலில் முறைமைகளை தமக்கு பொருத்தப்பாடுடையதாக ஆக்கினார்கள். இதனாலேயே “இந்தியா மேற்கு நாடுகளிடமிருந்து சுவீகாரம் செய்யப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக முறை" மையை கொண்டது." என்று கூறப்படுவதற்கு நியாயம் சேர்க்கும் ரமேஸ்நாரான் மதுர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பிரித்தானிய மாதிரியான அரசியல் முறைமைகளோ, ஜனநாயகப் பாரம்பரியங்களோ இந்தியாவிற்குப் பொருத்தப்பாடற்றது. ஏனெனில் இந்திய மக்கள் தமது சுயகெளரவத்திலும், தேசத்தின் மீதும் பற்றுடையவர்கள். இச் சமூகத்தில் பெரும்" பாண்மை சிறுபான்மை என்ற வேறுபாடு ஆழமாக வேரூன்றி. யுள்ளது. இத்தகைய வேறுபாடுகளைக் களையக்கூடியதாக மேற்குலக ஜனநாயகம் இல்லை இறுதியாகக் குறிப்பிடக்கூடியது இந்திய பாரம்பரியத்திற்கும் அதுசார்ந்த நிறுவன அமைப்புக்கும் பொருந்தாத அமைப்பாகவே மேற்குலக ஜனநாயகம் காணப்படுகின்றது." மேற்குறிப்பிட்ட கருத்தை ஆதாரப்படுத்தும் விதத்தில் பின்வரும் அம்சம் அமைந்துள்ளது.
“அரசியலமைப்புச் சபையை யாரிடமும் பிச்சை கேட்காத நேரு” அவர்கள் 1946ஆம் ஆண்டில் பிரித்தானிய அமைச்சரவைத் திட்டத்தை வைத்தே ஏகாதிபத்தியத்தின் அதிகார நிழலில் நமது (இந்திய) அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தினார். அதுமட்டு மல்ல விடுதலைப்பெற்ற பின்னரும் ஏகாதிபத்திய அமைச்சரவையை அழியாது தொடர்ந்து பேணினார்."
ஏகாதிபத்தியத்தின் அரசியலமைப்புக்களையும் அவற்றின் முன்மொழிவுகளையும் இந்தியா மட்டுமன்றி அனைத்துத்
-106- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தென்னாசிய நாடுகளும் பின்பற்றின. இலங்கை சோல்பரி அரசியலமைப்பை 1972ஆம் ஆண்டு வரை பின்பற்றியது. 1972ஆம் ஆண்டு வரையப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பும் சோல்பரி அரசியலமைப்பை பின்பற்றியதாகவே அமைந்திருந்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் பாணியிலே இவ்வரசியல் திட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அவ்வர்க்கத்துக்கு சார்பான அல்லது சமமான நிலைமை உடைய தென்னாசிய நாடுகளின் உயர்குழாமினர் ஏகாதிபத்திய அரசியலமைப்புக்களை தமக்கு ஏற்புடையதாக வரைந்து கொண்டனர். ஆட்சி உரிமையும், அதிகாரமும் அவர்களிடமே தொடர்ந்திருந்து வந்தது. இதனால் உயர்குழாமினருக்கும் வறிய மக்களுக்கும் இடையில் தீவிர முரண் பாடு ஏற்பட்டது. ஆனால் அம்முரண்பாட்டைச் சரிசெய்து கொள்வr தற்குப் பல முயற்சிகளை உயர்குழாமினர் மேற்கொண்டனர். சில பிரதேசங்களில் உயர்குழாமினர் கையாண்ட வழிமுறைகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய வன்முறை சார்ந்த போராட்டங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. இவை மேற்குலகம் சார்ந்த அரசியல் முறைக்கும் தென்னாசிய நாடுகளின் பாரம்பரியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடாகவே கருதல் வேண்டும். இந்திய மக்கள் மொழி, மத, பண்பாட்டு பாரம்பரியப் பிரதேச அடையாளங்களை முன்நிறுத்தி போராட்டங்களை நடாத்துகின்றனர். “தெலுங்கானா” ஆயுதமேந்திய விவசாயிகளின் போராட்டம் இம்முரண்பாட்டையே காட்டுகின்றது. இதில் ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய உயர்வர்க்கமும் ஒரே அடக்குமுறையைப் பின்பற்றிபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது இதேபோன்று பஞ்சாபிய இந்துக்கள் சீக்கிய மத அடையாளத்தை முன்னிறுத்தி பார்பானிய உயர்வர்க்கத்துக்கு எதிரான சீக்கிய தேசத்தை உருவாக்கினர். இவ்வாறே நாகா, காஷ்மீர், அஸ்ஸாமிய, மணிப்பூர் ஆகிய தேசிய இனமக்கள் பிராமண உயர்வர்க்க இந்தியாவிலிருந்து விடுதலைப் பெறப் போராடுகின்றனர். இதனால் அரசியலமைப்பின் வலுவான மத்தியரசு வலுவற்றதாக மாற்றும் ஆயுதப் போராட்ட அரசியல் கலாசாரமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்தியாவில் மேற்குலக மாதிரியிலான பெரும்பான்மை ஜனநாயகம் பல சந்தர்ப்பங்களில் தோல்வி கண்டுள்ளது. ஆரம்பத்” தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திய காங்கிரஸ்கட்சி எதிர்கட்சிகள் பெரிதாக வளராத நிலையில் தனிப்பெருங் கட்சியாக
கே.ரீ.கணேசலிங்கம் - 107.

Page 56
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஆட்சிக்கு வந்தது. ஆனால் 1980களுக்கு பின்பு சாதாரண பெரும். பான்மையே கிடைக்காத அரசியல் கட்சிகளே ஆட்சிக்கு வரும் ஜனநாயகத்தை காணமுடிகிறது. ஏறக்குறைய 10சதவீதவாக்குகளைப் பெற்ற மொறாஜி தேஸாயின் ஜனதாதள் 1977ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. சரண் சிங், வி.பி.சிங், சந்திரசேகர், தேவகெளடா, குஜரால் போன்ற பிரதமர்களின் அரசாங்கங்கள் எதுவும் சாதாரண பெரும்பான்மையைக் கூட மக்களவையில் பெறவில்லை சிறுபான்மை அரசாங்கங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியை முடித்துக்கொண்டன. இதனை பெரும்பான்மை ஜனநாயக அரசியல் கலாசாரமென அழைக்க முடியுமா என்ற வினா தோன்றுகின்றது. காங்கிரஸ் சுதந்திரத்திலிருந்து எண்பதுகள் வரை தனிக்கட்சியாக ஆட்சி அமைத்துக்கொண்டது. அதன் பின்னர் சிறுபான்மை கட்சி களின் யுகம் அல்லது கூட்டு அரசாங்கங்களின் யுகம் தற்போதுவரை தொடர்கிறது. கூட்டாட்சி இந்தியாவுக்கு, கூட்டணி ஆட்சியே பொருத்தப்பாடுடையதுபோல் காணப்படுகிறது. இந்திய ஜனநாயகம் பற்றி ஆராயும் போது, ஜனநாயக அரசியல் காலசாரத்திற்கான அடிப்படைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஜனநாயக அரசியல் கலாசாரம் நிலவும் ஒரு நாட்டில் பின்வரும் விடயங்கள் காணப்பட வேண்டுமென ஜோன் வோல்ரர் பிக்னில்ன் கூறுகின்றார்.
(1) அரசாங்கமும் அரசியலமைப்பும்
(2) பல்லின மக்களின் ஒருமைப்பாடு
(3) இன வேறுபாடுடைய மக்களின் நல்லிணக்க உறவு
(4) சிவில் நிர்வாக ஆட்சியை மக்கள் ஏற்று நடத்தல்
(5) புரட்சி, கிளர்ச்சி சார்ந்த வன்முறை நிகழாத சூழல்
"نة566956
இதனை அவதானத்தில் கொள்ளும்போது தென்னாசியாவில் ஆட்சி முறைகள் பாரதுாரமான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பது புலனாகிறது. அரசியலிலும், அரச நிறுவனங்களிலும் பரந்தளவிலான நம்பிக்கையீனம் நிலவுகின்றது. இதனாலேயே இந்திய ஜனநாயகம் பற்றி ஜெயபிரகாஸ்நாராயன் "இந்தியாவின் பாராளு" மன்ற ஜனநாயகமும், பாராளுமன்ற முறைமையும் தோல்வியடைந்துவிட்டது. இம்முறைமை எமது பாரம்பரியத்துக்கேற்ப
-108- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மாற்றப்பட வேண்டும். அது பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மை ஜனநாயகமாக விளங்க வேண்டும். மேலும் அது கிராமங்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட சுய ஆட்சி அரசுகளாக (SelfGovernment) இருத்தல் வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
எனவே இந்திய அரசியலமைப்புக்குள் உட்பட்ட ஜனநாயக அரசியல் கலாசாரம் முழுமையாக வெற்றிபெறவில்லை. இந்திய மக்களில் கணிசமான தொகையினர் சாதி, மத, பிரதேச முரண்பாடுகளாலும் பகைமையினாலும் வன்முறை அரசியல் கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பிராமணிய உயர் வர்க்கத்தின் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென போராடுகின்றனர்.
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலவியபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியே முதன்மையானதாக விளங்குகின்றது. ஜனாதி பதியின் தெரிவுமுறைமையும் அதிகாரமும் பாராளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடியும். “இலங்கை ஜனாதிபதி அரசின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், முப்படைகளின் தலைவர், மந்திரிசபையின் தலைவராக, மட்டுமன்றி மந்திரி சபையின் ஓர் உறுப்பினராக விளங்கவும் அரசியல் திட்டத்தின் எட்டாவது அத்தியாயம் வழிவகுத்துள்ளது" ஜனாதிபதி நாடாளு" மன்றத்தை ஆரம்பிக்கவும், கலைக்கவும், அமர்வுகளை நிறுத்தவும் அதிகாரமுள்ளவர். அரச கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், நாடாளுமன்றத்தின் சடங்கு முறையான இருக்கைகளுக்கு தலைமை தாங்குவதற்கும் அதிகாரமுடையவர். போர் பிரகடனங்களையும், சமாதான உடன்பாடுகளையும் மேற்கொள்ளவும் அதிகாரமுடையவராக விளங்குகின்றார்." இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை தனி ஒரு மனிதனின் அதிகாரம் கட்டுப்படுத்துகின்றதென்பதையே தெளிவுபடுத்துகின்றது. கொல்வின் ஆர்.டி.சில்வா, என். எம். பெரேரா போன்ற இடதுசாரிகள் "புதிய அரசியல் திட்ட வரைபு இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தை துருப்பிடிக்க வைத்துள்ளது.” (Erosion ofDemocracy) என விமர்சித்தார்கள்" இவ் அரசியலமைப்பையும் முதலாவது குடியரசு அரசியலமைப்பைப் போன்று இலங்கை மக்களின் அடிப்படைத் தேவைகளையும் இன ஒருமைப்பாட்டையும் வளர்க்கத் தவறியது.
கே.ரீ.கணேசலிங்கம் -109

Page 57
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
விரக்தியடைந்த தென்பகுதி இளைஞர்கள் ஆட்சி மாற்ற" மொன்றை வேண்டி புரட்சியில் ஈடுபட்டார்கள். வடபகுதி இளைஞர்கள் ஐக்கிய இலங்கை என்ற வரட்டு சித்தாந்தத்தை நிராகரித்து அரசமைப்பிலிருந்து தனிநாட்டை நோக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் 1971ஆம் ஆண்டும் 1989ம் ஆண்டும் ஜனதா விமுத்தி பெரமுன (ஜே.வி.பி)க்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் பத்தாயி ரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டனர். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸா காலத்தில் களனி ஆற்றில் வெட்டப்பட்ட நிலையில் இனங்காண முடியாத சடலங்கள் நூற்றுக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டன. இறுதியில் ஜே.வி.பி அமைப்பின் தலைவர் றோகணவிஜயவீரா கைது செய்யப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட சம்பவம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் நிகழ்ந்த உச்சமான மனித உரிமை மீறலையும் வன்முறை அரசியல் கலாசாரத்தையும் தெளிவாக விளக்கியது." இவ்வாறே வட - கிழக்கு இலங்கை மீதான ஜனாதிபதிகளின் யுத்தப் பிரகடனம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் போரா? சமாதானமா? சந்திரிகா குமாரதுங்காவின் சமாதானத்திற்கான யுத்தம் என்பன பல ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், அரசபடைகளையும், ஆயுதம் தாங்கிய போராளிகளையும் அழித்துள்ளது. ஜனாதிபதி முப்படைகளின் தளபதியாகவும் விளங்குவதனால் வன்முறை அரசியல் கலாசாரத்" துடன் தொடர்புபட்டதாக நாட்டின் அதியுயர் பதவிகாணப்படுகிறது. இன்னோர் முரண்பாட்டையும் சுட்டிக் காட்டலாம். “கறுவாக்காடடு” “வாழைத்தோட்ட” பகைமை என விமர்சகர்களால் பேசப்பட்ட முரண்பாட்டையே 1992ஆம் ஆண்டு (வாழைத்தோட்ட) ஜனாதிபதி பிரேமதாஸாவை பதவி நீக்கம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த (கறுவாக்காட்டு) லலித், காமினி பிரிவினர் மேற்கொண்ட முயற்சி அம்பலப்படுத்தியது. இது ஒரு வகையில் சாதிவாத அரசியல் கலாசாரமாக காணப்பட்டது. ஜனாதிபதியாக" வும் பிரதமராகவும் இருந்த தலைவர்களான முறையே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், பிரேமதாஸாவும் சாதிவாதத்தின் பின்னணியில் முரண்படுவோராகவே இருந்து வந்தனர். எடுத்துக்காட்டாக இந்திய இலங்கை உடன்பாட்டின்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது மட்டுமன்றி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஜப்பானில் நிகழ்ந்த ஒரு மகாநாட்டில் உரையாற்றுகின்றபோது பிரேமதாஸா குறிப்பிட்டார்.? ஆனால் பிறேமதாஸா ஜனாதிபதி
- 110- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
யாகி அவ்வதிகாரங்களைப் பிரயோகிக்கும்போது காமினி, லலித் போன்ற உயர்சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தனர். அவர் மீது ஊழல் மோசடி, குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வது கடினமானது. அத்தகைய இறுக்கமான தன்மையைப் பெற்றதாக இரண்டாவது குடியரசுயாப்புக் காணப்படுகிறது. பின்வரும் மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜனாதிபதி யைப் பதவி விலக்க வாய்ப்பு உண்டு என அரசியலமைப்புக் கூறுகிறது.
(1) ஜனாதிபதி சித்த சுவாதீனம் உள்ளவராக அல்லது அவர் செயல்பட முடியாத அளவுக்கு நோயுற்றுள்ளார் எனக் காணுமிடத்து, (2) ஊழல் மற்றும் தேசத்துரோகம் போன்ற பாரிய குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனக் காணுமிடத்து,
(3) அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலம் ஜனாதிபதிப்
பதவியை இல்லாது செய்யுமிடத்து,
மேற்குறிப்பிட்ட மூன்றில் ஒரு குற்றச்சாட்டையேனும் முன்னெடுக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர் தொகையில் 2/3 பங்கினர் ஆதரவைப் பெறவேண்டும். முதல் இரு அம்சங்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் சம்மதத்துடன் கூடிய வகை" யில் 2/3 பங்கு உறுப்பினர் ஆதரவும், மூன்றாவதற்கும் 2/3 நாடாளு" மன்ற ஆதரவுடன் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் மூலமாகவும் ஆதரவைப் பெறுதல் வேண்டும்.? இதனால் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யுமதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தனித்துக் கிடையாது. நாடாளுமன்றம் நீதிமன்றத்துடன் இணைந்தோ அன்றி மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புடன் இணைந்தேதான் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம். பிரேமதாஸாவுக்கு எதிரான குற்றச்சாட்டில் நாடாளு" மன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஒப்பமிட்ட பின்பே சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தனர். அதற்கு சபாநாயகரின் சம்மதம் உண்டு எனத் தெரிய வந்ததும் சபாநாயகர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். இதனால் அவர் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டினை நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொள்ளாது தவிர்த்தார். எனவே அரசியல் யாப்புரீதியாக மட்டுமன்றி மிரட்டல் முறையிலும்
கே.ரீ.கணேசலிங்கம் - 111

Page 58
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஜனாதிபதி தனது அதிகாரத்தை பிரயோகிக்க முடியுமென கருத வாய்ப்புண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் தனது கட்சி நாடாளு" மன்ற உறுப்பினர்களிடமும் அமைச்சர்களிடமும் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டு ஆட்சி நடாத்தியதாக தெரியவந்துள்ளது. எனவே இங்கு இவ்வரசியலமைப்பு இரண்டு வகையான முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
(1) ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்குமிடையிலான
உறவில் இழுபறித் தன்மையை ஏற்படுத்தியது.
(2) அரசியலமைப்புக்குப் புறம்பாக மிரட்டல், வன்முறை" களைப் பிரயோகித்து ஆட்சிபுரிய வாய்ப்பை வழங்கியது.
எனவே இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் வன்முறை சார்ந்த அரசியல் கலாசாரத்திற்கு வாய்ப்பளித்துள்ளது எனக் கூறலாம். இவற்றை விட, ஜனாதிபதி தமது நாட்டு மக்களுடன் முரண்படும் சந்தர்ப்பங்கள் நிறையவே காணப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் முறையும் நாடாளுமன்ற தெரிவுக்கான தேர்தல் முறையும் வேறுபட்டிருந்தது மட்டுமன்றி மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கலைக்கலாம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தையே காட்டுகின்றது. மக்களின் இறைமை மட்டுமல்லாது நாடாளுமன்றத்தின் சட்ட இறைமையும் ஜனாதிபதி ஒருவரால் மீறப்படுகின்றது.
இவ்வரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியின் பெரும்பான்மைப் பலம்பெற்ற கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமாக ஒருவரும் நிறைவேற்று அதிகாரமுடைய இன்னோர் கட்சி யின் தலைவரும் இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் வாய்ப்பு உண்டு. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினை ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்தது போல் முரண் பாடு தேன்றுகிறது. அந்தளவுக்கு விட்டுக்கொடுக்கும் அரசியல் கலாசாரம் இலங்கையில் வளர்ச்சியடைந்ததாக கூறமுடியாது. இவ்வரசியல் திட்டத்தின் பலவீனம் பற்றி என். எம். பெரேரா குறிப்பிடும்போது "அரசியலமைப்பின் நான்காவது சாரத்தில் மக்களின் இறைமையைப் பிரயோகிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. ஆனால் அப்படியான அதிகாரம் எதுவும் நீதிமன்றத்துக்கு
-112- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கிடையாது ஜனாதிபதியின் பதவி விலகல் பிரச்சினையில் நீதித்துறை நாடாளுமன்றத்தின் விருப்பத்தை மீற முடியுமென்றால் நாடாளுமன்றத்தின் இறைமை கேலிக்கூத்தாகும்.* இவ்வாறு முன்பின் முரண்பாடான அரசியல் வன்முறைகளை தூண்டக்கூடிய அரசியல் யாப்பாக இரண்டாவது குடியரசு யாப்புக் காணப்படுகிறது.
இஸ்லாமிய நாடான மாலைதீவு இலங்கை அரசியல் முறைமை சார்ந்த ஜனாதிபதி ஆட்சி முறைமைன்ய கொண்டிருந்” தது. ஆனால் இந்நாடு இன மத மொழி வேறுபாடுகளின் தாக்கம் அதிகார அரசியலில் செல்வாக்கு செலுத்தியமையினால் முரண்பாட்டுக்கும் வன்முறைக்கும் பதிலாக உடன்பாடு விழுமியங்கள் காணப்படுகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத உணர்வு இஸ்லாமிய நாடுகளைப் போன்று மாலைத்தீவிலும் சொற்ப அளவு காணப்படுகின்றது. ஆனால் தென்னாசிய இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தனியான அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால் இந்தியாவினதும் சீனாவினதும் தயவி. லும் செல்வாக்கிற்குள்ளும் மாலைதீவின் அரசியல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
"தற்போது நேபாளம் மதமாற்றம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறும் பிரஜைகளை கைது செய்கிறது. இந்தியாவிலும் பாரதீய ஜனதா (BJP) விஷ்ப ஹிந்துபரிசத் (WHP) என்பன இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாரியளவிலான முயற்சிகளை செய்து வருகின்றது. இது பாரம்பரிய சமூகத்தில் மேற்குலகின் நவீனத்துவத்தை புகுத்த முயன்றதால் ஏற்பட்ட முரண்பாடாகும். இம்முரண்பாட்டைத் திருப்தி தரக்கூடிய விதத்தில் தீர்க்கப்படாது" விட்டால் இராணுவ சர்வதிகாரம் தலையிடலாம் அதனை பின்னர் தவிர்ப்பது கடினமானதாக அமையும்.*
தென்னாசிய நாடுகளின் ஜனநாயக அரசியல் கலாசாரத்திற்கு எதிரான பாரம்பரிய விழுமியங்கள் வன்முறை அரசியல் கலாசாரத்" தைத் தூண்டி அரசியல் முறைமைகளை அங்கவீனப்படுத்துகின்றது. தென்னாசியா முழுவதும் பரவிவரும் தனிநாட்டுக் கோரிக்கைக்கான போராட்டங்கள், வன்முறையிலான கிளர்ச்சிகள், உள்நாட்டுப் போர்கள் என்பன மென்டிஸ் குறிப்பிடுவதைப்போல இராணுவ அரசியல் கலாசாரத்தையே வலிந்து ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இந்நாடுகளின் அரசியல் முறைமைகளில் மாற்றங்கள் அவசியமானவை என உணர்த்தப்படுகின்றது.
கே.ரீ.கணேசலிங்கம் -113

Page 59
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தென்னாசிய நாடுகளின் அரசியல் முறைமைகளினை ஆராயும் போது அரச கொள்கைகளை மட்டுமன்றி அதன் நடைமுறைகளை" யும் அவதானித்தல் அவசியமானதாகின்றது. ஓர் அரசியல் யாப்பில் மனித உரிமைப்பிரகடனங்களும், அதன் நடைமுறைகளும் எவ்வாறு பின்பற்றப்படுகின்றதோ அவ்வாறே அதன் பெரும்பான்மை அரசியல் கலாசாரம் உடன்பாட்டை ஏற்படுத்துமென தோமஸ் மேயர் குறிப்பிட்டதை ஏற்கனவே அவதானித்தோம். அதனடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் குறிப்பிட்டவற்றை நோக்குவோம்.
மூன்றாம் அத்தியாயத்தில் 10வது உறுப்புரையிலிருந்து 17வது உறுப்புரை வரை அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றது. ஆளொவ்வொருவரும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் என்பவற்றோடு மத சுதந்திரத்திற்கும் உரித்துடையவராதல் வேண்டும். அத்தகைய தனிமனிதன் ஒவ்வொருவனும் சித்திரவதைக்கோ கொடூரமான இழிவான நடத்தைக்கோ தண்டனைக்கோ உட்படுத்தலாகாது. சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் சட்டத்தினால் அவர்கள் ஒவ்வொருவரும் சமமாக பாதுகாக்கப்பட உரித்துடையவர்கள். இனம், மதம், மொழி, பால் காரணமாக எந்தவொரு பிரஜையும் ஓரங்கட்டப்படலாகாது. ஆயினும், அரசாங்க ஊழியர் ஒருவர் ஊழியத்திற்காக அல்லது பதவிக்கான தகைமையாக ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவை நியாயமான காலத்திற்குள் பெறுதல் வேண்டுமெனக் கோருமிடத்து ஆளொருவர் சட்ட முறையானதாதல் வேண்டும். எவரும் இன, மத, மொழி, பால் காரணமாக பொது இடங்களில் செல்வது தொடர்பாக ஏதேனும் தகுதியீனம் எதற்கும் கட்டுப்பட்டவர் ஆகார்.
இவ்வுறுப்புரிமையில் உள்ள ஏதும் பெண்கள் பிள்ளைகள் அங்கவீனர்களின் முன்னேற்றத்திற்கான சட்டம், துணைநிலைச் சட்டம், ஆட்சித்துறை நிர்வாகத்தின் சிறப்பேற்பாடு செய்யப்படுவதை தடுத்தலாகாது சட்டத்தினால் ஆளொருவர் கைதுசெய்யப்படலாகாது. கைதுக்கான காரணம் எவரொருவருக்கோ அறிவிக்கப்" பட வேண்டும். தடுத்து வைக்கப்படும் அல்லது வேறுவகையில் சொந்த சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைக்கு இணங்க அண்மையில் உள்ள தகுதி
-114- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வாய்ந்த நீதிமன்றத்தின் நீதி முன்னர் கொண்டுவரப்படுதல் வேண்டும். சட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு இணங்க நீதிபதியினால் ஆக்கப்படும் கட்டளையன்றி தடுப்புக்காவலிலோ அல்லது சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது. அவ்வாறான நிலையில் ஆள் எவரும் மரண தண்டனையினால் அல்லது தடுப்புக்" காவலில் தண்டிக்கப்படலாகாது. இவ் அத்தியாயத்தின் கீழ் ஒவ்வொரு பிரஜையும் பின்வரும் விடயங்களுக்கு உரித்துடைய வராக காணப்படுவார்.
(1) பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம். (2) அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம்.
(3) தொழில் சங்கமொன்றை அமைக்கவும், அதில்
உறுப்புரிமை பெறுவதற்கான சுதந்திரம்.
(4) தனியாகவும், கூட்டாகவும் மதத்தையோ அல்லது நம்"
பிக்கையையோ வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்.
(5) கலாசாரத்தையும், மொழியையும், அனுபவிப்பதற்கும்
மேம்படுத்துவதற்கான சுதந்திரம்
(6) சட்டமுறையான உயர் முயற்சிகளை தனியாகவும்
கூட்டாகவும் மேற்கொள்வதற்கான சுதந்திரம்.
(7) இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும் தாம் விரும்புமிடத்தில் வசிப்பதற்கான சுதந்திரம்.
இவ்வாறு இவ் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதே அத்தியாயத்தின் அரசியலமைப்பு உறுப்புரை 15 (01) தொடக்கம் (08) வரையான பிரிவுகளில் தேசிய பாதுகாப்பு நலன் இனச் சுமூக வாழ்வு, மதச்சுமூகவாழ்வு, தேசிய பொருளாதார நலன், மக்கள் ஒழுங்கு முப்படைகள் மற்றும் அமைதி ஒழுங்கைப் பேணும் படைகள் ஆகியோரது கடைமையை புரிவதற்கு ஒழுக்கக் கட்டுப்பாட்டை பேணுவதற்கும் சட்டத்தில் விதிக்கப்பட்ட அடிப்படை உரிமை பிரயோகமும் தொழில்பாடும் மட்டுப்படுத்தலுக்கு அமைந்தன. வாதல் வேண்டும்.*
இவ்வாறு இலங்கையில் அடிப்படை உரிமை பிரகடனத்திலே முரண்பாடும் மீறல்களும் காணப்படுகின்றது. மட்டுமன்றி மக்கள்
கே.ரீ.கணேசலிங்கம் -115

Page 60
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பாதுகாப்பு சட்டமும் மீறப்படுகின்றது. ஆனால் இவையிரண்டும் மக்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளாக யாப்பிலும், நடைமுறை" யிலும் பேணப்படுவதில்லை என்பதைவிட ஜனாதிபதியையும் ஆட்சித்துறையையும் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றதென்பதே பிரதான முரண்பாடாகும் இதனை மக்கள் உரிமைமீறல் சரத்துக்கள் என்றும் விமர்சிக்கின்றனர் மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் பற்றிப் பல சரத்துக்களில் குறித்துரைக்கப்பட்டுள்ளன. எல்லா உரிமைகளும் பொதுசனப் பாதுகாப்புச்சட்டம் 155வது சரத்தில் (3) உபவிதியின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கண்மூடி முழிக்க முன்பே பறிக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மீறப்பட்டு விடுகின்றன." என்பது சுட்டிக்" காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.
இரண்டாம் குடியரசு யாப்பின் ஆறாவது அத்தியாயத்தில் அரச கொள்கை வழிகாட்டல் தத்துவம் குறித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் ஜனநாயக சோசலிஸ சமூகம் ஒன்றை தாபிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. என 27வது சரத்தின் (2) உபபிரிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.* சமூகப்பொருளாதார, அபிவிருத்தியின் பிரகாரம் மக்களின் சேம நலன்களை மேம்படுத்த திட்டங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. உணவு,உடை, வீட்டு வசதி, வாழ்க்கைத்தரம் தொடர்பான அம்சங்களை அரசு விருத்தி செய்யச் சட்டவரைபு இடமளிக்கின்றது.
இதே அத்தியாயத்தில் (ஈ) பகுதியில் திறந்த பொருளாதார முயற்சியின் மூலமும் தனியார் பொருளாதார முயற்சியின் மூலமும் சமூக குறிக்கோளுக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உகந்ததாக இருக்கக்கூடிய அத்தகைய திட்டமிடல்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துரைக்கின்ற சட்டங்களின் மூலம் நாடு முழுவதையும் விரைவாக அபி. விருத்தி செய்தல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரம் இவ்வத்தியாயத்தில் 29வது சரத்தில் கூறப்பட்ட அம்சங்களின் ஏற்பாடுகளுக்கு சட்ட உரிமைகளை அளிக்காமலும், சட்டக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமலும் அரசியல் யாப்பு தப்பிப்பிழைக்கின்றது. அவற்றை எந்த நீதிமன்றத்திலும் அல்லது நியாய சபையிலும் வலுப்படுத்தவும் முடியாது என மேலும் குறிப்பிடப்பட் டுள்ளது. அத்தகைய ஏற்பாட்டுடன் முரண்பாடு காணப்படுகின்றது
- 116- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பிரச்சினைகள் ஏதும் நீதிமன்றம் அல்லது நியாயசபை ஒன்றில் எதிலும் எழுப்பப்படுதலுமாகாது" .
எனவே இது அரசியல் யாப்பிலுள்ள அத்தியாயங்களிலேயே முன் பின் முரண்பாடுகள் காணப்படுகின்றன. என்பதைக் காட்டுகின்றது. அரச கொள்கையும் வழிகாட்டலும் 29வது சரத்தின் ஏற்பாட்டினால் காத்திரமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. அரச பிரகடனத்தின் 27வது, 28வது சரத்துக்களில் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்தப்படுமாயின் நியாயபூர்வமான சனநாயக சோசலிச சமூகத்தைக் கட்டிவளர்க்க முடியும், ஆனால் அரசு அதனை இன்னோர் அரசியலமைப்பு சரத்தினால் நிராகரிக்கப்பட்ட" துடன் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்குக்கூடச் செல்லமுடியாத இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது. A.
இவ்வாறே சோசலிசம் என்ற சமூக சமத்துவத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் ஆறாம் அத்தியாயத்தில் 27வது சரத்தில் 7வது உபசரத்தில், அரசினது பொருளாதார சமூக சலுகைகளையும், ஏற்றத்தாழ்வினையும், மனிதன் இன்னோர் மனிதனை சுரண்டுதலையும் அல்லது அரசு மனிதனை சுரண்டுதலையும் ஒழிக்க வேண்டும்? எனக் குறிப்பிட்ட இவ்வரசியலமைப்பு தனியார் பொருளாதார முயற்சியையும், திறந்த பொருளாதார முயற்சியையும் ஊக்கப்படுத்துமென அதே சரத்தின் (ஈ)ப் பகுதியில் குறிப்பிட்டுள்ளமை இரு உபசரத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படுவதை காட்டுகிறது. மேலும் அரசு நேரடியாக முதலாளித்துவ, தனியார் பொருளாதார முறைகளை விருத்தி செய்ய் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1956களில் அரச உடமையாக்கப்பட்ட தொழில் முயற்சிகள் யாவும் 1978க்குப் பின்பு படிப்படியாக தனியார் மயமாகிக் கொண்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே ஜனநாயக சோசலிச அமைப்பை அரசியல் யாப்பு வரைபில் குறித்து வைத்துவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்தை அமுல்படுத்துவதனை இலங்கை அரசியல் யாப்பின் கலாசாரத்தில் காணப்படும் தெளிவான முரண்பாடாகும்.
இவ் அத்தியாயத்தில் 27வது சரத்தின் 6வது உபபிரிவில், அரசானது பிரஜைகள் எவரையும் இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது முயற்சி காரணமாக ஏதேனும் தகுதியீனத்துக்குட்படா வண்ணம் பிரஜைகளுக்கு சமவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும்? எனக் குறிப்பிடப்பட்ட அரசியல் யாப்பின்
கே.ரீ.கணேசலிங்கம் - 117

Page 61
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இரண்டாம் அத்தியாயத்தின் 9வது சரத்தின் இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு முதன்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். என்பதோடு "அதற்கிணங்க 10வது 14வது (உ) உறுப்புரைகளால் வழங்கப்பட்ட உரிமைகளை காப்புறுதி செய்யும் அதேவேளையில்" பெளத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே அத்தியாயம் நான்கில் 18வது சரத்தில் இலங்கைக் குடியரசின் அரச கருமமொழி சிங்களமாதல் வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றது. இது ஐக்கிய இலங்கையில் இனமுரண்பாட்டை ஏற்படுத் தும் விடயமாக அமைந்துள்ளது. ஓரினம், ஒருமதம், ஒருமொழி, என்ற கொள்கையை அமுல்படுத்துகின்ற அரசியல் யாப்பாக இரண்டாவது குடியரசு யாப்பு காணப்படுகிறது.
இலங்கையின் அரசியல் யாப்பின் இரண்டாவது, நான்காவது, ஆறாவது அத்தியாயங்களுக்கிடையே பாரிய முரண்பாட்டிற்குரிய அம்சங்கள் காணப்படுகின்றன. மொழி, மதம், அடிப்படை உரிமை, அரசகொள்கை தத்துவம் ஆகியவற்றுக்கிடையே அம் முரண்பாடுகள் மலிந்துள்ளன. ஒரு பல்லினச் சமூகத்தின் அரசியல் கலாசாரத்தை விருத்தி செய்கின்ற அரசியல் யாப்புக்குரிய தன்மை ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பில் காணமுடியவில்லை. இது சுதந்திர இலங்கையின் காலப்பகுதியிலிருந்தே வளர்ந்து வந்துள்ளது. முதலாவது குடியரசு யாப்பு இவ்வரசியல் கலாசாரத்தை முதன்மைப் படுத்திய அரசியல் யாப்பாகும். முன்பின் முரண்பாடுகள் மட்டுமன்றி மக்களின் உரிமைகளை ஆட்சியாளர்களோ அல்லது அரசோ இலகுவாக மீறுவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக வரையப்பட்டுள்ளது. சிங்கள பெளத்த இனத்தின் தன்னாதிக்கத்தை வெளிப்படுத்தும் யாப்பாக இவ்யாப்பு விவரணப்படுத்தப்படுகின்றது இலங்கை போன்று இந்தியாவின் அரசியல் யாப்பிலும் முரண்பாடான அரசியல் கலாசாரத்தை அவதானிக்க முடிகின்றது.
இந்திய அரசியல் யாப்பில் 162-169 வரையான சரத்துக்களில் அடிப்படை உரிமை பற்றி தெளிவாக வரையப்பட்டுள்ளது. சமஉரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலை தடுக்கும் உரிமை, மத" வுரிமை, பண்பாட்டுக்கல்வி உரிமை, சொத்துரிமை என அடிப்படை உரிமைகளை விரிவுபடுத்தி இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சமத்துவத்தை மேற்கொள்ளும்போது பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்"
- 118- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல்கன்சாரம
பட்டவர்கள், கல்வி அறிவு குறைந்தவர்கள் தொடர்பான விசேட விதிமுறைகளை அரசு உருவாக்கும்போது இந்திய அரசியலமைப்பு முன்பின் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.
இந்திய அரசியலமைப்பில் பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்புக்களை அமைக்கும் உரிமை, வசிப்பிடத்தை மாற்றுகின்ற உரிமை, வாழ்வுரிமை வணிகம் செய்யும் சுதந்திர உரிமைகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 358வது சரத்தில் 19வது உபவிதியில் சொத்து சுதந்திரத்தை அரசு விரும்பும்போது ரத்துசெய்ய முடியுமெனவும் குறிப்பிடப்பட்" டுள்ளது? இது வழங்கிய உரிமைகளை அரசாங்கம் விரும்பும்போது மீறுகின்ற இலங்கையின் அடிப்படை உரிமைகள் சரத்து 17 இதற்கு சமமானதாக உள்ளது. இது தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தின் சாதாரண நடைமுறையாக அமைந்துள்ளது. உரிமைகள் மீறப்படுகின்றது, அல்லது பறிக்கப்படுகின்றது எனத் தென்னாசிய அரசியலமைப்பை வரைபவர்கள் கருதுவது அரிது. அவர்கள் அதனையே அரசியல் பணியென்றும் கடமைக்கூறு என்றும் கருதும் இயல்பு வளர்ந்துள்ளது. ஆட்சியாளர்கள் நடைமுறையில் எழும் சிக்கல்களையும், முரண்பாடுகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் ஒரம்சமாகவே அரசியலமைப்புக்கள் காணப்படுகின்றன.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் என்ற பிரிவு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. 14 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியரை தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் மற்றும் ஆலைகளில் பணி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே சரத்தின் உபபிரிவில் பொது செயலுக்காகவும், தண்டணைக்காகவும் அரசாங்கம் கட்டாய பணிகளை ஆற்றுவதற்குப் பணிக்கலாம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தென்னாசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் என்பவற்றில் சிறுவர்கள் அதிகமாக அடிமைத் தொழிலுக்கும் பாலியல் வன்முறைக்கும் பிரயோகிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது."
இவ்வாறே சொத்துரிமை தொடர்பான சரத்தின் ஒரு பிரஜை, அல்லது நிறுவனம் எத்தகைய வழிமுறையைப் பின்பற்றியும் சொத்” துக்களை சேர்க்கலாம் எனக் கூறுகின்றது. 1971ஆம் ஆண்டு திருத்”
கே.ரீ.கணேசலிங்கம் - 119

Page 62
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தத்தின்படி இந்தியக் குடிமகன் ஒருவனது சொத்தை அரசுடமை" யாக்கும் போது அரசாங்கம் தீர்மானிக்கும் ஒரு தொகைப்பணத்தைக் குடியுரிமைக்காரனுக்கு வழங்கிவிட்டு அரசு சொத்தை சுவீகரித்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.
தென்னாசிய நாடுகளில் இந்தியாவிலேயே அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தும்போது கண்காணிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது விசேடமான அம்சமாக அமைகின்றது உயர்நீதிமன்றம் மாநில நீதிமன்றம் மற்றும் நீதிப்பிரேரணைகள் மூலம் அடிப்படை உரிமை மீறப்படுகின்றதா என்பதை கண்காணிக்கின்றது. இது நீதிமன்ற சுதந்திரத்தின் பேணுகை மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. இதனால் மக்களிடையே முரண்பாடற்ற சமூகநோக்கு விருத்தியடைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேஷ் போன்ற நாடுகளின் அரசியலமைப்புகளில் அடிப்படை உரிமையை பாதுகாக்க நீதியமைப்பு முறைமை காணப்பட்டாலும் ஆட்சியாளரின் தலையீடு அதிகமாகவுள்ளது. சுதந்திரமற்ற தன்மையையே இந்நீதியமைப்புமுறைமைகள் ஏற்படுத்துகின்றன. தென்னாசியாவில் மதச்சார்பின்மை
இந்தியா தவிர்ந்த தென்னாசிய நாடுகளின் அரசியலமைப்புக்களில் மதம் அரச அந்தஸ்த்தைப் பெற்றதாக விளங்குகிறது. ஆனால் மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஆளும் ஆட்சியாளர்களது கோரிக்கையாக அமைகிறது. இந்தியாவில் உரத்துப் பேசப்படுகின்ற சொற்பதமாக மதச்சார்பின்மை விளங்குகின்றது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் சரத்தில் ஒவ்வொரு மதப்பிரிவினதும் செயல்பாடுகள் ஏனைய மதப்பிரிவினை பாதிக்காத வகையிலும் மதத்தை மக்கள் மீது திணிக்காத வகையிலும் கையாளப்பட வேண்டுமென்று கூறப்படுகின்றது. இதனை மீறும் மதப்பிரிவுகள் மீது அரசின் தடை ஏற்புடையதாக விளங்குகின்றது. ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் சரத்தில் இந்து நிறுவனங்கள் இந்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் உலகம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டுவரும் ஜேவ்ப் கெஜின்ஸ் என்பவரது மதச்சார்பின்மை தொடர்பான கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. இந்தியாவை முதன்மைப்படுத்திய
- 120- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
மூன்றாம் உலகம் பற்றிய ஆய்வில் மதமும், அரசியலும் சமூகத்தில் பெறும் முக்கியத்துவத்தை பின்வரும் விளக்கப்படம் மூலம் காட்டுகின்றார்.
ஜேவ்ப் கெயின்ஸ் விளக்கப்படம்
அரசு
(ggs(IIT b . Third World Quataly Vol. 18, No,4P. 709)
தென்னாசிய நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் முக்கிய சமூக காரணியாக மதம் விளங்குகின்றது. இந்நாடுகளது நவீன வரலாற்றை அவதானிக்கும்போது மதத்தைப் பின்னணியாகக் கொண்ட மத இயக்கங்களும் கட்சிகளும் அமுக்க குழுக்களும் உள்நாட்டில் அதிகார அரசியலின் முகவர்களாக காணப்படுகின்றனர். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக இனங்காட்டுவதற்கு ஆரம்பகால அரசியல் தலைவர்கள் ஒரு சிலர் நவீனத்துவத்தை ஓர் ஆயுதமாகக் கையாள முயன்றனர். காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் வரைந்த அரசியல் அமைப்பிலும் நவீனத்துவத்தில் சில அம்சங்களை இணைத்தனர். இருந்தபோதும் அம்முயற்சி வெற்றி அளிக்கவில்லை. மேலும் மதத்தை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த முயலும் குறுகிய போக்கே இன்று இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது அர்த்தமற்றதொன்றாக அமைவதற்கு காரணமாகிறது.* இந்துமதத்திலும் சீக்கிய மதத்திலும் தீவிரவாத அமைப்புக்கள் வன்முறைக் கலாசாரம் வாயிலாக அரசியல் நோக்கங்களை அடைய எத்தனிக்கின்றனர். இத்தகைய எத்தனம் அனாவசியமாக ஏனைய மதங்களுடனான முரண்பாட்டை கூர்மைப்படுத்தி உள்ளது.
19ஆம் நூற்றாண்டின் சமூக விஞ்ஞானிகளான துர்க்ஹீம், மாக்ஸ் வெபர், கால் மாக்ஸ் போன்றோர் உலகம் முழுவதும் நவீன
கே.ரீ.கணேசலிங்கம் -121

Page 63
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்த முனைந்தனர். அதற்கான முதல் சீர்திருத்தமாக மதவாதத்தை நிராகரித்து மதச்சார்பின்மையை வலியுறுத்தினர். அச்சிந்தனை பெரியளவில் கீழைத்தேசத்திலோ, மேலைத்தேசத்திலோ வெற்றியளித்தது என்று கூறிவிடமுடியாது ஆனால் அவர்களது எண்ணத்தினால் ஆழமான அடிப்படை வாதத்தில் மூழ்கிப்போயிருந்த அரசியல் முறைமைகள் ஒரளவேனும் மாற்றமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நவீனத்துவ விழுமியங்கள் சில இலகுவாக உள்வாங்கப்பட்டதும் உண்மை. அதே சமயம் இம்மாற்றங்கள் தென்னாசிய நாடுகளில் தொன்றுதொட்டு இருந்து வந்த மதத்துக்கும் அரசியலுக்குமான உறவில் இடைவெளியை ஏற்படுத்தியது." இக்கருத்தை மேலும் சிறப்பாக ஷகீர் பாபர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“காலனித்துவக் காலப்பகுதியில் அல்லது அதற்குப் பின்னர் மேற்குலக கோட்பாட்டை வலிந்து சுவீகரித்து இந்தியாவுடன் இணைக்க முயன்றதனால் பல முரண்பாடுகளை மதச்சார்பின்மை வெளிக்கொண்டு வந்தது. இந்த நிலையில் எழுந்த மானிடவியலும் சமூகவியலும் மதச் சார்பின்மைக்கு எதிரான பரிமாணங்களையே அதிகம் உருவாக்கியது. இது மதச் சார்பின்மைக்கு இடமில்லாது செய்தது எனலாம்."
இதனை மேலும் தெளிவுபடுத்தும் நோக்கில் எஸ்.வி. ராஜதுரையின் பின்வரும் கருத்து அமைகிறது. “சுதந்திரமடையும் (இந்தியா) தருவாயிலும் அதன் பின்னரும் காந்தியும் காந்தியமும் இந்திய ஆளும் வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவை நவீனமயமாக்குதல், மதச்சார்பின்மையை உருவாக்குதல் என்ற வடிவத்தில் சாதி அடையாளங்கள், வட்டார, இன, தேசிய அடையாளங்கள் முதலியவற்றை மிகத் திறமையாக புறக்கணிக்கும் நுட்பமான பார்பானிய ஆதிக்கம் வளர்க்கப்பட்டது. நைஜாமின் நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்தையும் பின்னர் நேரு தலைமையி லான இந்திய அதிகாரத்தையும் எதிர்த்துப் போராட்டம் நடத்திய தெலுங்கானாப் போராட்டம் தன்னந்தனியாக விடப்பட்டிருந்தது"
சமூக வாழ்வில் மதத்திற்கு மிக முதன்மையான இடத்தை வழங்கும் தென்னாசிய மக்கள் அரசியல் விடயங்களிலும் அத்தகைய மனப்போக்கையே வெளிப்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர். இதுமதத்தை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துகின்ற குறுகிய நோக்கங் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக
-122- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அமைந்துவிடுகின்றது. மற்றோர் மேலதிக காரணமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாம் கிறிஸ்தவ மதங்கள் இந்துக்களை மதம் மாற்றுவதற்காக மேற்கொண்ட வன்முறைகளும், விரோதப் போக்கு" களும் மதங்களையே புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும் நிலவுவதற்கு பதிலாக வெறுப்புணர்வையும் பகைமையையும் வளர்த்" துள்ளன. இதன் தாக்கம் அரசியலிலும் பிரதிபலிக்க தவறவில்லை. இதுபற்றி புறுாஸ் (Bruce) என்ற அறிஞர் குறிப்பிடும்போது, மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர்பு மதத்தினால் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் அதனைத் தென்னாசிய மக்கள் அரசியலுடன் இணைந்துள்ளனர். மதத்துக்கு உயர்வான அந்தஸ்த்தை இந்த மக்கள் அரசியலில் கொடுத்துள்ளார்கள்.*இதனால் தென்னாசிய நாட்டு மக்களின் அரசியல் கலாசாரம் முலாம் பூசப்பட்டதாகவே வெளிப்படுத்தப்படுகின்றது. தென்னாசிய நாடுகளில் பிரித்தானியரால் புகுத்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் இயல்பாக இந்நாடுகளில் காணப்பட்ட மத நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே தற்கால குழப்பகரமான அரசியலுக்கு காரணமாகும். மக்கள் இயற்கையை நேசிக்க ஒரு சில மேட்டுக்குடிகளும் பிரித்" தானிய விசுவாசிகளும் “நவீனத்துவத்தை" ஆதரிக்க எழுந்த முரண்பாடாகக் கூட இதனை நாம் மதிப்பீடு செய்ய முடியும் இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகத்தில் மதமும் மதம் சார்ந்த இயக்கங்களும் துர்பாக்கிய அரசியலுக்கும் சம்பவங்களுக்கும் தூபமிட்டு வந்துள்ளன. இது அரசியல் கலாசாரத்தையும் அதன் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தையும் மிகவும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது.*
தென்னாசியாவின் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் உயர்குழாமினர் “வர்க்கம்” “தரம்” அல்லது "வகுப்பு" என்ற மேற்குலக தரப்பிரிவுகளை இந்நாடுகளில் வலுப்படுத்தினாலும் மதப்பிரிவுகளில் (இந்துமதப்பிரிவில்) சாதி, வர்ண, அடிப்படையிலான வகைப்பாடுகளே முதன்மையான தரப்பிரிவுகளாக உள்ளன. முதச்சார்பின்மை என்பது மேற்குலகத் தரகர்களான இந்திய உயர் குழாமினரால் உருவாக்கப்பட்ட கோட்பாடு என்றே கருதப்படுகின்றது.* நவீனத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை, அரச கட்டுப்பாட்டின் கீழ்நாட்டை தொழில் மயமாக்குதல் போன்ற நேருவின் கருத்துக்கள் “இந்துமத" அரசை உருவாக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன.*
கே.ரீ.கணேசலிங்கம் -123

Page 64
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நவீனத்துவத்தை நிராகரிக்கும் மத சிந்தனை அடிப்படை வாதத்தை தூண்டுகின்றது. ஆனால் நவீனத்துவம் பொருளாதார விருத்திக்கு அடிப்படையானது என்பதை மதச்சார்பின்மை வலியுறுத்துகின்றது. பொருளாதாரம் சமூகத்தில் உயர்ந்த கெளரவத்தையும், பெறுமானத்தையும் கொடுக்கக்கூடிய நவீனத்துவத்தினால் மதவாத சிந்தனை அழிந்துவிடும். அல்லது வளர்ச்சியற்று தனிமைப்படும் என்ற பயம் மதவாதிகளிடம் காணப்படுகின்றது. இதனாலேயே மதத்தைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகள் முன்மாதிரியாகக் கையாளப்படுகின்றது. இந்நாடுகளின் நடைமுறை அரசியலுக்கு மதம் புத்துயிர் அளிக்கின்றது. அரச நிறுவனம் போன்று மத அமைப்புக்களும் நவீன சிந்தனையை உள்வாங்கி நிறுவனமயப்பட்ட நிலையை அடைந்துள்ளது.
தற்காலத்தில் அரசியலமைப்புக்களையும் அவற்றின் செயல்" பாடுகளையும் தேசியமட்டத்தில் தீர்மானிக்கும் சக்திகளாக மதக்குழுக்கள் காணப்படுகின்றன. புல மதக்குழுக்கள் அரசியல் பலம், ஆயுதபலம், கருத்தியல் பலம், நிர்வாகக் கட்டமைப்புபலம் வெகுஜன ஆதரவுப்பலம் போன்றவற்றை பெற்றிருப்பதனை தாக்கம் நிறைந்த அமுக்கக் குழுக்களை இயக்கி தேசிய அரசியல் பலத்தை தீர்மானிக்கின்றன." மக்களின் உணர்வில் மதம் ஊறிப்போன அம்சமாதலால் அரசியலமைப்பும் அதனூடாக கையாளும்போதே வெற்றி இலகுவாக அடையப்படுகின்றது. தென்னாசிய நாடுகள் காலனித்துவத்தின் போதும், தேசியவாத எழுச்சிக்கட்டத்தின் போதும் தமக்கிடையே போர் புரியும்போது மதத்தை முதன்மைப்படுத்தியே அவற்றை எதிர்கொண்டனர்.
மதம் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஜிவ்யின்ஸ் இந்தியாவில் மதவாதம் ஏற்படுத்திய முரண்பாட்டைப் பின்வருமாறு நினைவு கோருகின்றார். "இந்தியாவின் மத அடிப்படைவாத உணர்வு மகாத்மா காந்தியை அழித்தது. அவ்வாறே இந்தியாவி லிருந்து 1947இல் பாகிஸ்தானைப் பிரித்தது 1984ஆம் ஆண்டு சீக்கிய மேலாதிக்க வாதத்தை எதிர்த்த இந்திராகாந்தியை சீக்கிய ஆயுத பாணியினர் அழித்தனர். 1992ஆம் ஆண்டு பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த பாபர் மசூதியை உடைத்தெறிந்துவிட்டு ராமர் (Ramar) பெயரால் பெரும் அழிவை ஆயுதம் தாங்கிய இந்துக்கள் (Miliant Hindu) ஏற்படுத்தினார். இதே போன்று 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தியும் இலங்கையில் ஏற்பட்ட இந்து தத்துவ பெளத்த முரண்பாட்டின் தீர்வுக்கான அணுகுமுறையால் கொல்லப்பட்டார்."
-124- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தற்காலத்தில் இந்திய அரசியலமைப்புக்கு மாறான அதாவது மதச்சார்பின்மை என்பதற்கு மாறான இந்துமதவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியே ஆட்சியிலுள்ளது. அதன் தோழமை அமைப்பான ராஜ்ரிய சேவாசங் (Rasthiya Sava Song- RSS) இந்தியாவை ஓர் இந்து தேசமாகவும் இந்து இராச்சியமாகவும் ஆக்குவதற்கான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். இன் ஓர் அங்கமே பாரதீய ஜனதாக் கட்சி என்பதை 2001ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த கட்சிமாநாட்டில்உரை அப்போதைய பிரதம மந்திரி அடல்பிகாரி வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.*
இக்கட்சியின் மதப்பண்பை விளங்கிக்கொள்ள ஆர்.எஸ். எஸ். அமைப்பின் முன்னாள் தலைவரான கோல்வால்கரின் கருத்து நினைவு கோரத்தக்கது "இனம், பண்பாடு ஆகியவற்றின் தூய்மை" யைக் காப்பாற்றுவதற்கு ஜேர்மனி உலகத்துக்கு அதிர்ச்சி தரக்கூடிய காரியத்தைச் செய்துள்ளது. அடிவேரிலே வேற்றுமை கொண்ட இன, பண்பாட்டுக் கூறுகளை ஒர் ஒன்றுபட்ட முழுமைக்குள் உட்கிரகித்துக் கொள்வது என்பது முற்றிலும் சாத்தியமில்லாதது என்பதை ஜேர்மனி காட்டியுள்ளது. இந்துஸ்தானில் உள்ள நாம் இந்தப் படிப்பினையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பயனடையவும் வேண்டும்.”* இது ஏனைய மத, இன, கூறுக்கள் மீது செலுத்த வேண்டிய ஆதிக்க முறைமையைக் காட்டுகின்றது. இவ்வமைப்பு ஆத்மீகத்தைக் காட்டிலும் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அமைப்பாக விளங்குகிறது. இந்து இராச்சியம் அல்லது அகண்ட பாரதம் (இதில் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேஷ், பூரீலங்கா முதலியன அடங்கும்) என்பதை திருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே கட்சிகளையும் அமுக்கக் குழுக்களையும், அமைப்புக்களையும் உருவாக்கி வருகிறது." எனவே மதச்சார்பற்ற தேசமாக இந்தியாவைக் அரசியல் யாப்பின் உறுதியுரைக்கு ஏற்ப பேண முடியாத அளவுக்கு நடைமுறை அரசியலில் மதவாதம் செல்வாக்குச் செலுத்துகின்றது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்று இந்திய அரசியலமைப்புத் தொடர்பாக வரைவுக்குழுவின் தலைவரான அம்பேத்கர் கூறியவற்றைக் கொண்டு இந்திய குடியரசு யாப்பை மதிப்பீடு செய்வோம்.
கே.ரீ.கணேசலிங்கம் -125

Page 65
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அடிப்படை உரிமைகளில் பொருளாதார சமத்துவத்தையும், சோசலிசத்தையும் ஆதரித்தவராக அம்பேத்கர் இருந்தபோதும் தனிச் சொத்துரிமை ஒர் அடிப்படை உரிமையாக அரசியலமைப்புச்சட்ட விதி 31 சேர்க்கப்பட்டிருந்ததைக் காணலாம். அது தொடர்பாக அம்பேத்கரே கருத்துக்கூறும்போது "அது அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கியதல்ல, மாறாக நேரு, பட்டேல், பந் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் விளைவே அதுவென்றார்." அரசியலமைப்புச் சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு 1949 நவம்பரில் அரசியலமைப்பு அவையில் உரையாற்றிய அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்.
“பொருளாதாரம் என்பதை எடுத்துக்கொண்டால் பெரும் சொத்துக்களையுடைய ஒரு சிலரையும் மிகக் கொடிய வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமானோரையும் கொண்டுள்ள சமுதாயம் நம்மிடமுள்ளது. 1950 ஜனவரி 26இல் நாம் "முரண்பாடுள்ள" வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்கு சமத்துவமும், சமுதாய பொருளாதார வாழ்வில் நமக்குள் ஏற்றத் தாழ்வும் இருக்கும். அரசியலில் “ஒருமனிதன்” “ஒருவாக்கு" மற்றும் "ஒருவாக்கு" "ஒரு மதிப்பு" என்ற நெறியை நாம் அங்கீகரிக்கப் போகிறோம். நமது சமுதாயப் பொருளாதார வாழ்விலோ, சமுதாய பொருளாதார கட்டமைப்பின் காரணமாக “ஒருமனிதன்” “ஒருமதிப்பு" என்ற நெறியைத் தொடர்ந்து மறுத்து வருகின்றோம். “முரண்பாடுள்ள" இந்த வாழ்க்கையை நாம் எத்தனை நாளைக்குத்தான் கடைப்பிடிக்கப் போகின்றோம்? நமது சமுதாய பொருளாதார வாழ்வில் எத்தனை வருடங்கள் சமத்துவத்" தைத் தொடர்ந்து மறுத்துவர முடியும்? நீண்ட காலம் அதனை மறுத்துக்கொண்டு வருவோமாயின் நமது அரசியல் ஜனநாயகத்தை அபாயத்துக்குள் தான் உள்ளாக்குவோம். கூடிய விரைவில் நாம் இந்த "முரண்பாட்டை” அகற்றியாக வேண்டும். அல்லாவிட்டால் ஏற்றத்தாழ்வினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த அவை கடுமையாக உழைத்துக் கட்டியெழுப்பியுள்ள அரசியல் ஜனநாயகம் என்ற கட்டமைப்பையே வெடிவைத்துத் தகர்த்து விடுவார்.”*
அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் முரண்பாட்டைக் கண்டறிந்தது மட்டுமல்ல அதனை சரிப்படுத்தவும் அரசியலமைப்பில் முன்மொழி வுகளை வரைந்திருந்தது. குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிறுபான்மை" யினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், சமூகப் பொருளாதார, அரசியல்
- 126- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வாழ்வில் பின்தங்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு அம்பேத்கர் அவர்களுக்காக குரல் கொடுத்தார். பிரதம மந்திரியை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அரசுப் பணியிலும், கல்வி வாய்ப்பிலும் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உரிமைகள் வழங்குவது மட்டுமன்றி அது பாதுகாக்கப்படவும் அரசியல் வரைபில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார். அப்பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டதிருத்தங்கள் வரம்புக்குட்பட்டதாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு அவையிலும் நேருவின் அமைச்சரவையிலும் தான் வகித்த பதவி பற்றிய ஐயப்பாடுகளை அம்பேத்கர் அவ்வப்போது தெரிவித்ததுண்டு. தான் முன்மொழிந்த இந்து சீர்திருத்தச் சட்டத்தை (Hindu Reform Bill) நேரு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகத்தான் அவர் அமைச்சரவையிலிருந்து விலகியதாகக் கூறினார்." அவரை அரசியலமைப்பு அவையின் உறுப்பினராக்குவதற்குப் பார்ப்பான- பிராமணியக் காங்கிரஸ் விரும்பாமையால் அவர் நுழைவதற்கான கதவுகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன என்று பட்டேல் அறிவித்தார். அன்று முஸ்லீம் உறுப்பினர்களும் அட்டவணைச் சாதியினரின் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சேர்ந்து பொரும்பான்மையினராக விளங்கிய வங்காள மாகாணச் சட்டமன்றத்திலிருந்தே அவர் அரசியலமைப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்." இதுவே இந்திய அரசியலமைப்பு முரண்பாட்டின் மூலவேர்களாகும். இன, மத, மொழி, சாதி அடிப்படையில் மட்டுமல்லாது பொருளாதார காரணிகள் வாயி லாகவும் அம்முரண்பாடு வளர்ந்துள்ளது.
1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்களாதேஷ் அரசியலமைப்பில் மதச் சார்பற்ற நாடு என பிரகடனப்படுத்தினாலும் 1988ஆம் ஆண்டு திருத்தத்தில் அரச மதமாக இஸ்லாமிய மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வலியுறுத்தப்பட்டுள்ளது." நேபாளம் இந்துமத அரசாகவும் பூட்டான் பெளத்த மதத்தை பின்பற்றுவதையும் காணலாம். பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளில் அரச மதமாக இஸ்லாத்தைப் பின்பற்றி இஸ்லாமிய குடியரசுகள் என அழைக்கப்படுகின்றது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கொண்டுள்ள பாகிஸ்தான், வங்களாதேஷ், மாலைதீவு என்பன பிற மதப் பிரிவுகளின் அச்சுறுத்தலிலிருந்து தமது தனித்துவமான கலாசாரத்தையும்,
கே.ரீ.கணேசலிங்கம் - 127

Page 66
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பாரம்பரியத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளன.*
எனவே, தென்னாசிய நாடுகள் அனைத்திலும் மதவாதம் அரசியல் கலாசாரத்தை தீர்மானிக்கும் சக்தி படைத்த அம்சமாக திகழ்கின்றது. இந்நாடுகளின் மக்களின் மனோநிலையில் மதத்தின் மீதான நம்பிக்கை அரசியல் மூலக்கூறுகளில் ஒன்றாக வளர்ச்சி யடைந்து வருகின்றது ஒவ்வொரு இனத்தவரும் அரசியலமைப்பில் தமது மதக் கூறுகளை ஆதாரப்படுத்துவது உயர் கெளரவமாகக் கருதுகின்றனர். அதனால் தென்னாசிய நாடுகளில் பல்லின மதப்பிரிவுகளின் மத்தியிலும் ஒருசில மதப்பிரிவுகள் ஆதிக்கம் செலுத்துகின்றதை அவதானிக்கலாம். இந்நாடுகளிடையே காணப்படும் மதப்பிரிவுகளிடையேயான முரண்பாடுகள் அரசியல் மோதல்களாக வெடிக்கின்றன. குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் என்பன மதத்தை காரணம் காட்டி பிரிந்தது போன்று அதன் பின்னரும் அவை பல மோதல்களை எதிர்கொண்டனர். இலங்கையிலும் பெளத்த மதத்திற்கு எதிராக அல்லது ஆக்கிரமிப்புக்கெதிராக ஏனைய சிறுபான்மை இந்து-இஸ்லாமிய மதப்பிரிவுகள் முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இலங்கை அரசு பெளத்த மதத்தை அரச மதமமாக அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தியுள்ளதனால் ஏனைய மதங்கள் பெளத்தத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன.
தென்னாசியாவில் மொழியின் ஆதிக்கம்
தென்னாசிய நாடுகளில் மொழி ஆதிக்கம் அரசியல் யாப்பிலும் நடைமுறையிலும் காணப்படும் பிரதான விடயமாகும். இந்நாடுகளின் ஆளும் வர்க்கத்தினரின் மொழி அரசமொழியாகும் ஆதிக்க நிலை காணப்படுகின்ற அதேவேளை சிறுபான்மையினங்களின் மொழிகள் பெரும்பான்மை இனமொழிகளுக்கு எதிராக முரண்பாட்டைவெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.
பொதுவாக இந்தியாவில் இந்திமொழி (Hindi) ஆதிக்கம் செலுத்துவது போன்று இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்களாதேஷ் ஆகிய நாடுகளில் முறையே சிங்களம், உருது, நேபாளி, வங்காளி மொழிகளும் ஆதிக்க மொழியாக உணரப்பட்டன. இந்நாடுகளில் மொழிவழி தேசிய எழுச்சிகள் ஒவ்வொரு பிரதேசத்தினதும் அரசியல் கலாசாரத்தை நிர்ணயிக்கின்றன. தென்னாசிய நாடுகள் ஒவ்வொன்றும் வரைந்துள்ள அரசியலமைப்புக்
- 128- கே.ரீ.கணேசலிங்கம்

6ਰੁ5ਹੰਗਰੀਘ68ਰੀLਨੰ. 56Ob
களில் ஒருசில மொழிகளையே தேசிய மொழியாக அங்கீகரித்துள்ள போக்கு காணப்படுகின்றது. ஆனால் அத்தகைய ஆட்சி மொழித் தனித்துவத்தினால் இந்நாட்டு மக்களிடையே காணப்படும் முரண்பாட்டை ஏனைய மொழிகள் ஆதிக்கம் எற்படுத்துகின்றன. ஆதிக்க மொழிகளுக்கு எதிராக அடக்குமுறைக்கு உட்பட்ட மொழிகள் போராட்டத்தின் குரலாக வெளிவருகின்றது. முடிந்தவரை இந்நாடு" களில் எழுந்துள்ள போராட்டங்கள் யாவும் ஆதிக்கவாத மொழிக்கு எதிரானவையாகவே அடையாளம் காட்டப்படுகின்றன.
இந்திய அரசியல் யாப்பில் இந்தி அரச மொழியாகவும், தேசிய மொழியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்திமொழியால் இணைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கென இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதென்று ஐவர் ஜென்னிங்ஸ் குறிப்பிட்டுள்ளார்." காலனித்துவ ஆட்சிக்காலத்" தில் இந்திய மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தியதுடன் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம் என்பனவற்றிற்கு ஆங்கிலமொழி உதவியது. ஆனால் ஆங்கில மொழியைப் பின்பற்றுவதென்பது காலனித்துவவாத ஆட்சியின் மேலாதிக்கத்தை பேணுவதற்கு ஒப்பானதாக அமைந்தது. இதனால் இந்திமொழியை ஆட்சி மொழியாக அறிமுகப்படுத்தியவர்கள் தம்மை நியாயப்படுத்த ஆங்கிலமொழி மீதான குற்றச்சாட்டுகளை முதன்மைப்படுத்தினர். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காங்கிரஸ் கட்சியினர் காலனித்துவ வாதத்தை எதிர்க்கும் அரசியல் சுலோகமாக இந்தியைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்திய தேசிய போராட்டத்தின் முன்னோடிகளிடையே வேறுபட்ட மொழிகளை இந்திய ஆட்சி மொழியாக உருவாக்க வேண்டுமென்ற கருத்து நிலவியது. குறிப்பாக ரவீந்திரநாத் தாகூர் வங்காளி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமெனவும்,° காந்தி இந்துஸ்தானிய மொழிகளை ஆட்சிமொழியாக்க வேண்டுமெனக் கூறியமையும் கவனத்துக்குரியதாகும். இந்தி, உருது, ஆகிய இரண்டு மொழிகளையும் உள்ளடக்கிய இந்துஸ்தானிய மொழிகளை இந்து முஸ்லீம் உடன்பாட்டை ஏற்படுத்துமெனக் கருதியே காந்தி அதனை முன்வைத்தார்." சுபாஸ்சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தில் இந்தியையே பயன்படுத்தினார்?
கே.ரீ.கணேசலிங்கம் - 129

Page 67
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதேசத்தில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1500க்கும் மேற்பட்டவை என உத்தியோகபூர்வமான அறிக்கைளில் இருந்து தெரியவருகின்றது. ஆனால் கீழ்காணும் நான்கு மொழிக்குடும்பங்களுமே இந்தியாவின் பெரும் பாண்மை மக்களால் பேசப்படும் மொழிகளாகக் காணப்படுகின்றன.
(1) இந்திய - ஆரிய மொழிகள் (2) திராவிட மொழிகள் (3) ஆஸ்திரேலிய - ஆசிய மொழிகள் (4) திபெத்திய - சீன மொழிகள்
இந்திய அரசியலமைப்பின் சரத்து 344(1), 351 ஆகியவற்றின் கீழ் எட்டாவது அட்டவனையில் சேர்க்கப்பட்டுள்ள அரசாங்க அங்கீகாரம் பெற்றுள்ள மொழிகளின் எண்ணிக்கை 15 மட்டுமேயாகும்.
* இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த அஸாம், வங்களா, குஜராத்தி, இந்தி, காசுஷ்மீரி, மராத்தி, ஒரிசா, பஞ்சாபி, சமஸ்கிருதம், உருது, சிந்தி மொழிகளும்
米 திராவிட மொழிக்குடும் பத்தைச் சேர்ந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுமாகும்." ஏனைய இரு மொழிக் குடும்பங்களது மொழிகள் எதுவும் அரசியலமைப்பில் சேர்க்கப்படவில்லை. மேலும் இந்திய மாநிலங்களிடையேயும், மத்தியரசுக்கும் மாநிலவரசுக்கும் இடையிலான இணைப்பு மொழியாக இந்தியைத்தான் அரசியலமைப்பின் சரத்து 34 அங்கீகரித்துள்ளது. * ,
இந்தி மொழியைப் பரப்புவதும் ஊக்குவிப்பதும் இந்தியக் கூட்டுப்பண்பாட்டின் எல்லாக் கூறுகளிலும் தன்மையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒர் ஊடகமாக அம்மொழியை வளர்ப்பதும், இந்தி மொழியின் தனித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனைச் செழுமைப்படுத்தும் பொருட்டு அரசியல் யாப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள எல்லா இந்திய மொழிகளிலிருந்தும், குறிப்பாக (இந்துஸ்தானிய மொழியிலிருந்தும் அதன் வடிவங்கள் சொற்றொடர்கள், ஆகியவற்றை
-130- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
உட்கிரகித்துக் கொள்வதும்) அதன் சொற்களஞ்சியத்தை வளர்ப்பது பொருட்டும் தேவை ஏற்படும் போது முதன்மையாக சமஸ்கிருதத்தி லிருந்தும், இரண்டாவதாக பிற மொழிகளிலிருந்தும், சொற்களை எடுத்துக் கொள்வதும், இந்திய ஒன்றியத்தின் கடமையாகும்."
முழு இந்தியாவிலும் இந்திமொழி பேசுபவர்கள் 27 சதவீதத்தினராக காணப்பட்ட போதும் மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாக விளங்குவதற்கு காரணம் ஆளும் வர்க்கத்தின் மொழியாக உள்ளதேயாகும். இந்தி மேலாதிக்க மொழியாக விளங்குவதனால் பிற தேசிய மொழிகள் இந்திக்கு எதிரான எழுச்சிப் போக்குகளை வெளிப்படுத்தும்போது மொழி அடிப்படையிலான முரண்பாடு வலுக்கின்றது குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் சுலோகமாக ஏனைய தேசிய மொழிக்குடும்பங்கள் கருதுகின்றன. இந்திய ஒன்றியங்களிடையே இந்திய ஒன்றியங்களி டையே இந்திமொழி ஐக்கியத்துக்கான மொழியாக முன்வைத்த போதும் அது மேலும் முரண்பாட்டைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க மொழியான இந்தி உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலேயே பெரும்பான்மை விழுக்காட்டினர் தாய்மொழியாகக் கருதுகின்றனர். இமாசலம் பிரதேசத்திலுள்ள மக்களின் தாய்மொழி இந்தியன்று ஆனால் இந்தி தான் அங்கு ஆட்சி மொழியாக விளங்குகின்றது. நாகலாந்திலும், அருணாவலப் பிரதேசத்திலும் ஆங்கிலமே ஆட்சி மொழியாகக் காணப்படுகிறது. ஆட்சிமொழி பற்றிய பிணக்கு கடும் விவாதத்துக்குள்ளாகிய போது ஆர்.வி. துளேகர் என்பவர் 1950களில் லோக்சபாவில் உரையாற்றும் போது, "சபிையின் நடைமுறைகளை இந்துஸ்தானியில் (இந்தி, உருது) தான் எழுத வேண்டும் இம்மொழியை தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கவோ, அரசமைப்பு உறுப்பினர்களாகவோ இருக்க தகுதியற்றவர்கள்" இதே போன்று வட இந்தியரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சேத் கோவிந்ததாஸ் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“மகாத்மாகாந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகும் கூட தென்மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இந்துஸ்தானிய மொழியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருந்தால் அது அவர்களது குறைபாடே, சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துஸ்" தானிய மொழி தெரியாத காரணத்தினால் விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதற்கு கூடியிருக்கும்
கே.ரீ.கணேசலிங்கம் -131

Page 68
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இறைமை பொருந்திய அரசசபையில் சொன்னால் அது எங்கள் பொறுமையை சோதிப்பதற்கு சமமானதாகும்."
இவ்விரு கருத்துக்களும் வட தென் இந்திய முரண்பாட்டைக் காட்டுகின்ற அம்சமானாலும் அது மொழி அடிப்படையில் எழுந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்சித்துறையிலும், அரசியலமைப்பிலும் தென்னிந்தியர் இரண்டாம் பட்சமானவராகவே காணப்பட்டனர். சுதந்திர இந்தியாவின் பிரதமர்களின் பட்டியலில் நரசிம்மராவ், தேவகெளடா ஆகிய இருவரையும் தவிர மீதி எல்லோரும் வட இந்தியரே கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், ஆட்சித்துறையிலும் வட இந்தியரே மேல்நிலையில் காணப்படுகின்றனர். இந்தியாவில் பார்ப்பானிய பிராமணர்களே உயர்சாதியினர் அவர்கள் முழுமொத்த சனத்தொகையிலும் மூன்று சதவீதத்தினராக காணப்பட்டாலும் அனைத்து ஆட்சித்துறையிலும் அவர்களது ஆதிக்கம் உயர்வான விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. பார்ப்பானிய எதிர்ப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் மிகத் தீவிரமாக உண்டு." பார்பானிய பிராமணர்களின் ஆதிக்கத்தை விளக்குவதற்கு பின்வரும் அட்டவணைகளை அவதானிப்பது பொருத்தமானதாகும்.
அட்டவணை - 1
ஆட்சித்துறையில் இந்தி மொழி பேசும் பார்பானர்களின் செல்வாக்கு
வ.எ பதவிகள் மொத்தம் பார்ப்பா பார்ப்பான
னர்கள் ர்களினர்
விழுக்காரு
1 குடியரசுத்தலைவர் அலுவலகம்
வகுப்பு பதவிகள் 49 45. 91%
வகுப்பு I பதவிகள் 162 138 85% வகுப்பு I பதவிகள் 96 77 74%
2 குடியரசுத் துணைத்தலைவர் அலுவலகம்
வகுப்பு பதவிகள் f 7 100%
வகுப்பு I பதவிகள் 14 11 71%
-132- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
3 பிரதமர் அலுவலகம்
வகுப்பு 1 பதவிகள் 36 32 89%
வகுப்பு 11 பதவிகள் 117 100 85%
வகுப்பு I பதவிகள் 61 40 65%
4 பாதுகாப்பு அமைச்சகம்
வகுப்பு 1 பதவிகள் 1379 1332 96%
வகுப்பு I பதவிகள் 7752 6762 87% வகுப்பு III பதவிகள் 2127 1332 62%
5 கல்வி நல அமைச்சகம்
வகுப்பு 1 பதவிகள் 259 238 92% வகுப்பு I பதவிகள் 851 | 732 86% வகுப்பு I பதவிகள் 278 190 68%
6 சட்ட அமைச்சகம்
வகுப்பு 1 பதவிகள் 1008 947 94%
வகுப்பு I பதவிகள் 2724 2507 92%
வகுப்பு III பதவிகள் 821 506 61ዓ%
7 தொழில் அமைச்சகம் A
வகுப்பு 1 பதவிகள் 169 150 88%
வகுப்பு I பதவிகள் 510 460 90%
வகுப்பு III பதவிகள் 252 138 54%
8 தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வகுப்பு 1 பதவிகள் 2506 2170 86% வகுப்பு I பதவிகள் 9416 6881 73%
வகுப்பு I பதவிகள் 4583 2447 53%
கே.ரீ.கணேசலிங்கம் - 133

Page 69
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அட்டவணை 11
மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட- பழங்குடிகள் பற்றிய விபரம்.
வேலை தாழ்த்த பழங்குடி தாழ்த்த மொத்த ISCIST நிறைவு கமர்த்த பட்டசாதிமக்கள் பட்டசாதி எண் கோட்டா செய்யபட் பட்டவர் I யினர் யினர் SC+ST (22.9%) L G5s.It களின் பழங்குடி இன் மொத்த |டாவின் எண் மக்கள் விழுகாடு இடங்களில்|விழுகாடு இரண்டும் சேர்ந்து (ST+ST)
வகுப்பு 1(A) 170,357 9068 2000 11,068 6% 38,330 29%
(A35 it 20B) 1,50,238 10,516 3141 13,657 9% 33,803 40%
வகுபட 3 (C) 14,03,938 2,67,296 124,949 3,92,245 28% 3,15,886 124% (துப்பரவு பணியா ளர்கள் நீங்கலாக) 4,10.052 1,27,659 79,864 2,07,523 51% 92.262 22.5% துப்பரவு பணியாள ர்கள் 29,539 24,692 838 25,530 86%, 6,646 384%
மொத்தம் 21,64,1244,39,2312,10,792 6,50,023 30% 486,927 133%
அட்டவணை - II
நாடாளுமன்றம் உட்பட உயர் துறைகளில் பார்ப்பானவர்களின் பங்கு
மொத்தம் பார்பபானர்கள் | வீதம்
பங்கு
நாடாளுமன்ற உறுப்பினர் 530 190 36% (மக்களவை) S. ஆளுனர்கள் 27 13 48% உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 16 09 56% உயர் நீதிமன்ற நீதிபதிகள் 330 116 35% தூதர்கள் 140 58 41% துணைவேந்தர்கள் 98 50 51% மாவட்ட ஆட்சியாளர்கள் 438 250 54% இந்தியக் காவல்ப் பணி (IPS) 3300 2376 72%
ஆதாரம் : இந்து இந்தி இந்தியா
-134- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இவ்வாறே இலங்கையின் இனப்பரம்பலின்படி வேலை வாய்ப்புக்கான ஒதுக்கீடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை பின்வரும் அட்டவனையில் காணமுடியும்.
gLL6u6O6UUT - IV
இலங்கையில் பொதுத் துறை ஊழியர் பரம்பல்
இனக்குழு ஆண்கள் பெண்கள் . மொத்தம்
தொகை | % தொகை | % தொகை|%
சிங்களவர் 220,533 84.63 127,481 87.423,48014 | 84
இலங்கைத் தமிழர் 27,069 10.63 13,150 9.02 40,219 9.90 இந்தியத் தமிழர் 425 O.16 2O2 0.14 627 O.15 முஸ்லீம்கள் 9971 3.83 3999 2.74 13970 344 பறங்கியர் 513 O.20 196 0.13 709 O.17 மலாயக்காரர் 713 O.28 278 O.19 1009 0.25
ஏனையோர் 1334 0.51 477 O.33 1811 O.45
ஆதாரம்: குடிசனத் தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் 1992
அட்டவணை - V
இலங்கையில் இனரீதியான வேலைவாய்ப்பு வீதாசாரம
இனக்குழு சனத்தொகை I அரசசேவை|மரகாண அரச மகான
வீதாசாரம் யில் பணியா சேவையில் சேவையின் %
ற்றும் % பணியாற்றும்%
சிங்களவர் 73.9 912 87.1 88.1
இலங்கைத் தமிழர் 12.7 5.9 7.1 8.1
இந்தியத் தமிழர் 5.5 0. 0.2 0.5
முஸ்லிம்கள் 7.0 2.0 4.6 2.2 ஏனையோர் 0.9 O.8 O.7 1.1
ஆதாரம் : தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் 1990
கே.ரீ.கணேசலிங்கம் - 135

Page 70
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அட்டவனை ட V1
இலங்கை நிர்வாக சேவைக்கான இன ரீதியான ஒதுக்கம்
இனக்குழு வகுப்பு 1,11 வகுப்பு II வகுப்பு 1,II வகுப்பு VI
சிங்களவர் 59.4 50.0 73.7 73.7
தமிழர் 25.6 410 17.1 20.4
முஸ்லிம் 2.3 3.3
பறங்கியர் 12.8 11.9 3.9 6.1
gigsstub : Modern Ceylon studies January 1970
தென்னாசியப் பிராந்தியத்தில் காணப்படும் மொழிகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் படிப்படியாக கூர்மையடைந்து இறுதியில் பிரிவினைக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக பங்களாதேஷ் - பாகிஸ்தான் பிரிவினைக்கு மொழி அடிப்படையில் உருவாகிய முரண்பாடும் ஒரு காரணமாகும். இது பற்றி போராசிரியர் விசமானின் கூறும்போது “கலாசார வேறுபாட்" டைக் கொண்ட மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து சென்றுள்ளது அதிர்ச்சியான செய்பாடுதான். காரணம் மதத்தால் எல்லோரும் ஒன்றே ஆனால் கலாசாரக் கூறுகளில் வேறு பாடுகளை அதிகம் கொண்டவர்கள் அவற்றில் மொழி மிகப் பிரதானமானது. மேற்குப் பாகிஸ்தானில் "உருது” மொழி கிழக்குப் பாகிஸ்தானின் ஆட்சி மொழியாகியதும் ஒரே அலகுகள் இரண்டு துண்டுகளாக உடைந்து போனது" என்றார். இம்மொழி முரண்பாடு இலங்கையிலும் 1956ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாகி தமிழ்" சிங்கள முரண்பாடு கூர்மைப்படுத்தி பிரிவினைக் கோரிக்கைக்கு வழிவகுத்தது. “நாங்கள் தமிழரை நிர்ப்பந்திக்காது விட்டால் தனிநாடு கோர வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படாது, இதனைத் தனிச்சிங்களச் சட்டத்தை முன்வைப்போர் உணர்வதாக இல்லை." என்.என்.எம் பெரேரா தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தனிச் சிங்களமொழிக் கொள்கையைப் படிப்படியாகப் பின்பற்றியதனால் விரக்தியுற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் மகாசபையில் சேர்ந்துகொண்டனர். பிாந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பாளரான
-136- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஆதியாகராஜா "தமிழான் வருங்காலம் தமிழ் இராச்சியமே" என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார். அவ்வறிக்கையில் "24 இலட்சம் தமிழ் மக்களிற்கு ஓர் அகண்ட தமிழ் இராச்சியமே சிறந்தது. சம அந்தஸ்து மற்றும் உாமைகளை சிங்கள அரசாங்கம் தர மறுத்தால் தமிழ் இராச்சியம் அமைக்கப் போராடுவோம் என்ற குறிக்கோள் வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே 19.01.1956இல் நடந்த ஐ.தே.க செயல்குழுக் கூட்டத்தில் எஸ். நடேசன், ஸி. சுந்தரலிங்கம்.ஜி.ஜி பொன்னம்பலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையிலும் "தமிழருக்கு சம அந்தஸ்து கிடைக்காவிட்டால் தமிழ்நாட்டுப் பிா வினைப் போர் அதன் பின்பு ஆரம்பமாகும்" என எச்சாத்தார். மொழி தொடர்பான பாந்துரைகள் முதலாவது (1972) இரண்டாவது (1978) குடியரசு யாப்புக்களில் சிங்களத்துக்கு முதலுரிமை வழங்கி வரையறுக்" கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்-சிங்கள இனப்பிரிவுகள் இடையே மொழி அடிப்படையிலான உடனபாட்டுக்கு பதிலாக முரண்பாடே அதிகாத்துள்ளது. இந்தியா தவிர்ந்த ஏனைய தென்னாசிய நாடுகளில் அரசியலமைப்புக்கள் அடிக்கடி மாற்றப்படுவதையும், கட்சிகள் தமக்கே உரித்தான விதத்தில் அரசியலமைப்புக்களை வரைவதையும் இன்னோர் அரசியல் பரிமாணமாக அவதானிக்க முடிகிறது. அரசு, அரசாங்கம், அரசியலமைப்பு என்பவற்றுக்கிடையே அதிக வேறு பாடோ, கொள்கைக்கான ஒழுங்கமைப்புக்களோ அமுலாக்கங்களோ பேணமுடியாத போக்கு காணப்படுகிறது. அரசியல் கட்சி முறைமைகள்
தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் அரசியல் கட்சிகள் பெரும் முக்கியத்துவத்தையும் அரசியலில் அதிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள் “அரசு" “அரசாங்கம்" என்ற இரு அதிகார கட்டமைப்புக்களுக்கு ஏற்ப தொழிற்படுவதனால் மக்கள் மத்தியில் பிரபலமானவைகளாக உருவாகி வருகின்றன பொதுவாக உலக நாடுகளின் நிரந்தமான "அரச" நிறுவனத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கம் எனவும் அவ்வரசாங்கத்தை அமைப்பது அரசியல் கட்சிகள் என்றுமே கருதப்படுகின்றது.
பொதுவாகக் கட்சி முறைகள்,
(1) ஒரு கட்சி முறைமை.
(2) இரு கட்சி முறைமை
(3) பலகட்சி முறைமை
கே.ரீ.கணேசலிங்கம் -137

Page 71
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் என ஆராயப்படுகிறது. இவற்றைவிட மிக அண்மைக்கால ஆய்வுகளில் (4) ஒரு கட்சி மேலாதிக்க முறைமையும் சேர்த்துக் கொள்ளப்
பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்னான இந்தியாவின் ஆட்சியை 1980கள் வரை காங்கிரஸ் கட்சி தனித்து அறுதிப் பொரும்பான்மையைப் பெற்று ஆட்சி செய்தாலும் 1977ம் ஆண்டு தேர்தலின் பின் பலபின்னடைவுகளை சந்தித்து வருகின்றது.
gL660)6OOT - VII
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு வீதமும் ஆசன எண்ணிக்கையும்
ஆண்டுகள் | காங்கிரஸ் பெற்ற காங்கிரஸ்பெற்ற ஏனைய
வாக்குகள் ஆசன கட்சிகளின் வாக்கு % எண்ணிக்கை %
1952 45.0 364 29.57
1957 47.78 371 25.26
1962 44.72 361 37.86
1967 40.73 283 37.90
1971 43.62 362 34.23
1977 34.50 152 50.17
1980 42.68 351 43.39
g5ITULb : Contomporaty Infaian Politics. Election
Commission Report, 1987P:242
ஒருகட்சி மேலாதிக்கத்தைக் கொண்டிருந்த இந்தியா தற்போது பல கட்சி அரசியல் கலாசாரத்தை பின்பற்றும் நாடாக விளங்குகிறது. தேசிய ரீதியில் இருகட்சிகளின் (காங்கிரஸ், பாரதிய ஜனதா) செல்வாக்கு முதன்மையடைந்திருந்தாலும் மாநிலக் கட்சிகளின் கூட்டு இந்திய தேசிய அரசியலை நிர்ணயிப்பவையாக காணப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய இந்திய தேசிய காங்கிரஸ் குறுகியவாத நோக்கு கொண்ட கொள்கை" களாலும் கவர்ச்சியற்ற தலைமைகளாலும் தேசிய அரசியல் அதிகாரத்தை இழந்துள்ளது. மேலும் நேரு பரம்பரை தமது சொத்தாக இந்திய தேசிய காங்கிரஸை பயன்படுத்தியமையாலும் தேசிய
-138- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
விடுதலைப் போராட்டத்தை கடந்து அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் ஈடுபட்டமையாலும் ஆட்சியின்போது சில அரசியல் தலைமைகளின் தவறான போக்கு காங்கிரஸின் வீழ்ச்சியை தவிர்க்க" முடியாததாக்கியது. காங்கிரஸில் இருந்து பிரிந்த பல அரசியல் தலைமைகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டனர். குறிப்பாக சரண்சிங், மொராஜிதேசாய், வி.பி.சிங், எஸ்.சந்திரசேகர், எச்.டி. தேவகெளடா, இந்திர குமார்குஜ்ரால் போன்றவர்கள் பிரதமர்கள் ஆனதைக் காணமுடிகிறது." காங்கிரஸ் கட்சியே இந்திய அரசியலில் பல கட்சிமுறை அரசியல் கலாசாரத்” திற்கு காரணமாக அமைந்திருந்தது. 1977களுக்கு முன்பு கம்மியூனிசக்கட்சி, வலதுசாரி சோஸலிஸ்ட், ராமராஜ் பரிஷத், ஜனசங்கம் என பல சிறுகட்சிகள் காணப்பட்ட போதும் இந்திய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சியே விளங்கியது. ஆனால் 1977ஆம் ஆண்டுக்குப் பின்பு காங்கிரஸ் அல்லாத கூட்டுக் கட்சிகளின் ஆட்சியே அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடாது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியை அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகளின் ஒருசில ஆசனங்கள் கூட மத்தியில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிப்பவையாக விளங்குகின்ற நரசிம்மராவ் அரசாங்கத்தில் ஜர்கன் முந்தி மோஜ்ஜ கட்சியின் பலம் அவரது ஆறுவருட கால ஆட்சியை நிறைவு செய்ய உதவியது. இவ்வாறு சிறுகட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இந்திய அரசியலில் இடம்பிடிப்பதற்குக் காரணம் தேசிய கட்சியாக விளங்கிய காங்கிரஸின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்த்தியேயாகும். தேசிய மட்டத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் தேசியக்கட்சிகள் தீர்வுகாணத் தவறியதனாலேயே பிராந்தியக் கட்சிகளின் வருகை இந்திய அரசியலில் குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக அமைந்தது. இந்திய தேர்தல் கமிஷன் 1957ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சீர்திருத்தத்தின்படி பொதுத்தேர்தல் ஒன்றில் (மக்களவை தேர்தலில்) ஒருகட்சி நான்கு மாநிலங்களில் போட்டியிடுவதுடன் நான்கு சதவிகிதமான வாக்குகளை தேசிய ரீதியில் பெறுமாயின் மட்டுமே அக்கட்சி தேசியக் கட்சியாக கணிக்கப்படுமென முடிவாகியது. மிக நீண்ட காலம் தேசியக் கட்சியாக விளங்கிய இந்திய கம்யூனிஸக் கட்சி மாநிலக் கட்சியாக தற்போது இனங்காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசியக் கட்சிகளோ அல்லது பிராந்தியக் கட்சிகளோ தமது நலனை தனித்துவமாக
கே.ரீ.கணேசலிங்கம் -139

Page 72
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பேணுவதுடன் இன, மத, விழுமியங்களை மிக உயர்வாகப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளாகக் காணப்படுகின்றன" இத்தகைய அரசியல் கலாசாரத்தை இந்தியாவில் உருவாக்கி வளர்த்த கட்சி காங்கிரஸ் கட்சி என்றே விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸின் தலைமையிலிருந்த அல்லது ஆதரவிலிருந்த மாநில அரசுகள் தவிர ஏனைய மாநில அரசுகளை எப்போதும் அச்சுறுத்தும் செயல்பாட்டை காங்கிரஸ் மேற்கொண்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் 100தடவைக்கு மேல் அரசிலமைப்பு சரத்து 356ஐ காங்கிரஸ் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது? இந்திய அரசியலில் கட்சி அடிப்படையிலான முரண்பாடும், மோதலும் மேலோங்குவதற்குப் பிரதான காரணமாக அரசியலமைப்பு சரத்து 356வது காணப்படுகின்றதென கூறலாம்.
பொதுவாக தென்னாசியாவில் அரசியல் கட்சிகள் உருவாக்குவதற்குக் காலனித்துவ அரசின் செல்வாக்கு அடிப்படையாக விளங்கியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ்ஸை பிரித்தானியர் உருவாக்கியது போன்று இலங்கையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பத்திற்குப் பிரித்தானியரே பின்னணியாக விளங்குகின்றனர். பிரித்தானியரின் செல்வாக்கினை சுதந்திர இலங்கையின் அரசியல் அதிகாரத்திலும் பேணுவதற்கான நடவடிக்கையாகவே ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டதென மார்க்ஸிஸ்டுகளால் விமர்சிக்கப்படுகிறது. தென்னாசியாவிலே இலங்கையில் தான் முதலாவது சோசலிசக் கட்சியாகவும் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகவும் 1935ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி (Lanka Samasamaya Party) 2 (56) iTélus. 6J.F. (5600Tafhids.Tafair தலைமையில் தொழில்கட்சி 1925களில் ஆரம்பிக்கப்பட்ட போதும் அது பெருமளவுக்கு தொழில்சங்க இயக்கமாகவே காணப்பட்டது. ஆனால் லங்கா சமசமாஜக் கட்சி கால்மார்க்ஸின் கொள்கையால் கவரப்பட்ட என்.எம்.பெரேரா, பீட்டர்கெனமண், கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற இடதுசாரி தலைவர்களின் தீவிர காலனித்துவ எதிர்ப்புவாத அரசியல் கட்சியாக உதயமானது. இதன் பின்பே இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் சோஸலிஸக் கொள்கையுடைய கட்சிகள் உருவாகத் தொடங்கின. இவ் லங்கா சமசமாஜக் கட்சியின் வளர்ச்சியும் இலங்கையின் சுதந்திரமும் ஒரே காலப்பகுதியில் உருவெடுத்து வந்ததை சகிக்க முடியாத பிரித்தானியர் அவசரமாக உருவாக்கிய வலதுசாரிப் போக்குடைய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். பிரித்தானியரும் தமது காலனித்துவ
-140- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வாத அரசியல் நலன்களை பாதுகாக்கக்கூடிய தலைமையிடமே ஆட்சியை கைமாற்ற விரும்பினர். இதனால் இலங்கையிலிருந்த தொழிலாளி முதலாளி முரண்பாட்டை கட்சி அடிப்படையில் பிளவுபடுத்தினர்.
இடதுசாரிக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகளினாலும் அவற்றின் தீவிர போக்கினாலும் கம்யூனிஸக் கட்சிகளுக்குள்ளேயே விரிசல் தலைதுாக்கியது. குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற கம்யூனிஸக் கட்சியி: லிருந்தே 1965ஆம் ஆண்டு றோஹண விஜயவீரா தலைமையில் ஆயுதம் தாங்கிய "ஜனதா விமுத்தி பெரமுன” (JVP) தோற்றம் பெற்றது. இலங்கையின் ஆட்சிமாற்றத்தை விரும்பிய இக்கட்சி 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் ஆயுதப் போரை உருவாக்கி இலங்கை" யின் அரசியல் சமூக, பொருளாதாரத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. இத்தீவிர புரட்சி உணர்வுக்கு எதிராக இலங்கை ஆட்சியாளர்கள் கொடுமையான வன்முறை அரசியல் கலாசாரத்” தைக் கட்டவிழுத்துவிட்டனர். குறிப்பாக, சிறிமாவோ பண்டாரநாயக்காவினதும், ரணசிங்க பிரேமதாஸாவினதும் ஆட்சிக் காலத்தி லேயே அக்கொடுமையான அரசியல் கலாசாரம் நிகழ்ந்து முடிந்தது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் அழித்தொழிக்கப்பட்டனர்?
இலங்கையின் கட்சிமுறை அரசியலை அவதானிக்கும்போது அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கட்சி அரசியல் கலாசாரத்தை போன்று இருகட்சி முறைமையிலான வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. அதனடிப்படையில் 1946இல் ஐக்கிய தேசிய கட்சியும் 1951ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் (SLFP)ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எஸ்.டபிள்யூ ஆர். டி பண்டாரநாயக்காவால் உருவாக்கப்பட்டதே சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகும். அன்றிலிருந்து இலங்கையின் ஆட்சி உரிமைக்கு இவ்விரு கட்சிகளும் போட்டிபோட்டு வருகின்றன. இக்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து 1960கள் வரை தேசியக் கட்சிகள் என்ற வலுவைக் கொண்டிருந்தன. அதிகாரப் போட்டியின் பிரிவாக எழுந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1956ஆம் ஆண்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தைப் புலப்படுத்தும் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய உடன் தனிச் சிங்களச் சட்டத்தையும் அமுல்படுத்தியது. சமஷ்டி, இருமொழிக் கொள்கை, சமஅந்தஸ்த்து, அரச உடமையாக்கம்
கே.ரீ.கணேசலிங்கம் - 141

Page 73
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
என்றெல்லாம் பிரகடனப்படுத்திய இக்கட்சி தனிச் சிங்களச் சட்டத்தை முன்வைத்துத் தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றியது. அக்காலத்தில் அதிகாரப் போட்டியில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் திடீரென தனிச் சிங்களச் சட்டவரைபை கட்சிமாநாட்டில் ஏற்றுக்கொண்டது. 1943ஆம் ஆண்டு சட்டசபையில் தனிச் சிங்கள மொழிக் கொள்கையை முன்வைத்தவர் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவரும் நிறைவேற்று அதிகாரமுடைய முதலாவது ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது." இத்தனிச் சிங்களச் சட்டத்தால் தேசிய கட்சிகள் என்ற அங்கீகாரம் மழுங்கடிக்கப்பட்டதுடன் சிங்கள-பெளத்த பேரினவாத கட்சிகளாக அவை மாறின. இவ்அரசியல் கலாசாரத்தை தெளிவுபடுத்துவதாக பின்வரும் விடயங்கள் அமைகின்றன.
தனிச்சிங்கள மொழிச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது எழுந்த விவாதத்தில் பண்டாரநாயக்கா உரையாற்றும் போது, “தமிழர்கள் இத்தீவில் வாழும் சிறுதொகையினர் மட்டுமல்ல அருகே தென்னிந்தியாவில் நான்கு அல்லது ஐந்துகோடி தமிழர்கள் பலத்தோடு வாழ்கின்றனர் இலங்கைத் தமிழர்களுட" னான தென்னிந்தியர்களின் தொடர்பாலும் தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளரின் நடவடிக்கையும் சிங்களமொழி ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டுவிடும்.”
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டில் தனிச் சிங்களச் சட்டத்தைக் கட்சிக் கொள்கையாக பிரகடனப்படுத்தியபோது உரையாற்றிய சேர். ஜோன்கொத்தலாவல, "இருமொழிக்கு சம அந்தஸ்த்து கொடுப்பதென்பது சிங்களமொழியினதும், இனத்தினதும் அழிவாக அமைவதுடன் இது சிங்கள மாணவர் தமிழ் படிப்பதில் தான் போய் முடியும். சிங்களத்தில் உயர்கல்விக்கான போதியளவு நூல்கள் இல்லாத நிலையில் சிங்கள மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவேண்டும் என்றிருப்பதானது சிங்களவரை அழிவுக்குவிட்டுச் செல்லும்" என்றார்.
இவ்வாறு இன, மொழி உணர்வுகளை தூண்டும் இரண்டு தேசியக் கட்சிகளும் சந்தர்ப்பவாத அரசியலுக்கான நடவடிக்கை" யாகவே அக்கருத்துக்களை வெளிப்படுத்தினார். இதனை ஆதாரப் படுத்த அவ்விரு கட்சிகளும் 1944களில் கொண்டிருந்த கருத்துக்களை நோக்குவதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
-142- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபகர் பண்டாரநாயக்கா “தமிழ் மொழியையும் உத்தியோக மொழியாக்குவதால் எந்த வகையிலும் எத்தகைய தீங்கும் சிங்களவருக்கு நேர்ந்துவிடப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன் இவ்விரு மொழிகளையும் உத்தியோக மொழியாக்குவது பற்றியோசிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த எதிர்ப்புமில்லை. இவ்வாறு செய்தால் எத்தகைய தீங்கோ ஆபத்தோ மெய்யான கஷடங்களோ ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை."
இக்காலப்பகுதியில் அன்றைய பிரதமரான கொத்தலாவல யாழ்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போது, "நான் உயிரோடிருக்கும் வரையில் தமிழ் மக்கள் மீது எவரையும் ஆதிக்கம் செலுத்த விடமாட்டேன். மற்ற்ெல்லாலோருக்கும் சொந்தமாயிருப்பது போலவே இந்நாடு தமிழருக்கும் சொந்தமானதாகும். பருத்தித்துறையிலிருந்து காலிவரை இன மத பேதமற்ற ஒருநாடாக கருதுவதே எனது லட்சியமாகும். தமிழும், சிங்களமும் சரிநிகர் சமானமுடையவை. அவை இரண்டையும் இந்நாட்டு ஆட்சி மொழியாக்குவதற்கு விரைவில் சட்டத்தை நான் திருத்தம் செய்வேன்" என்று முழங்கினார்.
கட்சி அரசியல் கலாசாரத்தில் சந்தர்ப்பவாத போக்கு இரு தேசிய கட்சிகளிலிருந்தும் அவ்வப்போது வெளிப்பட்டன. ஒரு வகையில் இவ்விரு கட்சிகளினதும் அரசியல் ரீதியான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணமாகும். பிரதமர்பதவியை எதிர்பார்த்தி ருந்த பண்டாரநாயக்கா அது கிடைக்காத போது தனிக்கட்சி அமைத்தார். அதுமட்டுமன்றி அதில் வெற்றியடைவதற்குரிய வழிமுறையாக தனிச் சிங்களச்சட்டத்தை முன்வைத்து இனவாதம் பேசினார்.
இதே சந்தர்ப்பவாதக் கட்சி அரசியல் கலாசாரத்திற்கு சோஸலிஸ்டுக்களும் விதிவிலக்கானவர்கள் என்று கருதமுடியாது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச்சட்டம் முன்வைக்கப்பட்டபோது கொல்வின் ஆர்.டி. சில்வா, பீற்றக்கெனன், என்.எம். பெரேரா போன்றவர்கள் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பண்டார நாயக்காவையும் அவரது மகாஜன எக்சத் பெரமுன (எம்.ஈ.பி)வை எதிர்த்தார்கள் 1956யூன் நாடாளுமன்றத்தில் தனிச் சிங்கள மசோதாவுக்கான விவாதத்தில் உரையாற்றும்போது கொல்வின் ஆர்.டி. சில்வா பின்வருமாறு கூறினார்.
கே.ரீ.கணேசலிங்கம் -143

Page 74
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
"ஒரு நாட்டினையா அல்லது இரு நாட்டினையா நாம் விரும்புகிறோம்? எமது மக்கள் ஒரு இலங்கையையா இரு இலங்கையையா விரும்புகின்றனர்? ஐக்கியப்பட்ட இலங்கையை விரும்புகின்றோமா? அல்லது இரத்தம் பொங்கும் இருகூறான இலங்கையை விரும்புகின்றோமா? "இரு மொழியெனின் ஒரு நாடு: ஒருமொழி. யெனின் இருநாடு" என்ற தீர்க்கதரிசனத்தை வெளியிட்டார்."
அவர் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் திட்டத்தின் பிதாமகர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்குடியரசு யாப்பிலே பெளத்த மதமும், சிங்களமொழியும் அந்தஸ்தைப் பெற்றது. மதமாகவும் மொழியாகவும் அவரால் வரையப்பட்டது. இதனாலேயே கொல்வின் சார்ந்த இலங்கையின் இடதுசாரிகள் எல்லோரும் "அரைவேக் காட்டு" கம்யூனிஸ்டுக்கள் என்றும் "பாதி சோஸலிஸ்டுக்கள்” என்றும் வர்ணிக்கப்படுவதுண்டு.
இவ் அரசியல் கலாசாரம் தென்னாசிய நாடுகள் முழுவதிலும் காணப்படும் அரசியல் கட்சிகளின் முக்கிய இயல்பாக விளங்கு" கிறது. புரட்சிகரமான சிந்தனையைக் கொண்ட உலகத் தொழிலாளருக்காக போராட வேண்டிய இவர்கள் நாடாளுமன்றத்துக்காகவும், அதன் ஆட்சியுரிமைக்காகவும் பங்கெடுப்பதற்குப் போட்டியிடுகின்றனர். இந்திய கம்மியூனிஸ்டுகள், பல மாநில அரசுகளை ஆளுவதுடன் மத்தியில் கூட்டணி அரசியல் அங்கம் வகித்தும் வருகின்றன. மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் அரசியல் அதிகாரத்தை சோஸலிஸ்டுக்கள் மிக நீண்ட காலம் கைப்பற்றி வருகின்றனர். 1997ஆம் ஆண்டு தேவகெளடா அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்ட போது இருபது ஆண்டுகளாக மேற்கு வங்காள மாநில முதல்வராக இருந்த யோதிபாசு பிரதமர் பதவிக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. யோதிபாசுவின் முயற்சியை அவரது கட்சியின. ரான கம்யூனிஸ் களின் (சி.பி.ஐ.எம்) மத்திய குழுவினரே நிராகரித்ததாகவும், மத்திய குழுவில் 20பேர் ஆதரவாகவும் 35பேர் எதிராகவும் வாக்களித்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜோதிபாசு கருத்துத் தெரிவிக்கும்போது "கட்சியின் முடிபு வரலாற்று ரீதியாகப் பெரும் தவறு" என்றார். இவரது நடவடிக்கை தொடர் பாக இந்திய சமூக அறிவியல் பயில்வு மையத்தின் இயக்குனர் பார்த்தா சாட்டர்ஜி பின்வருமாறு விளக்கினார்.
-144- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
“ஜோதிபாசு பத்தாண்டுக்கு முன்பே சித்தாந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டார். காலத்தின் போக்குக்கு ஏற்ப தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் கருத்துக்களை மாற்றிக்கொண்டார். முன்பு அவர் நிலச்சீர்திருத்தத்திலும் செல்வத்தைப் பகிர்வதிலும் கவனம் செலுத்தினார். இன்று மாநிலத்தை தொழில் மயமாக்குவதாகவும் தனியார் மூலதனத்தைக் கொண்டு தொழில் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பாடுபடுகின்றார். மாநிலத்தை தொழில் மயமாக்கு" வதற்கான உந்துவிசையை அவரே அளித்து வருகின்றார்."
இந்திரா காங்கிரஸ் கட்சியும் தனது சந்தர்ப்பவாத அரசியல் கலாசாரத்தைப் பல தடவை நிறைவேற்றியுள்ளது. தலைமைகளின் தனிப்பட்ட நலனுக்காக கட்சியின் கொள்கைப் போக்கை மாற்றுவது அக்கட்சியின் தலைமைகளுக்கு இயல்பான விடயமாகிவிட்டது. 1979இல் காங்கிரஸின் ஆதரவுடன் பதவியேற்ற பிரதமர் சரண்சிங் சில வாரங்களில் காங்கிரஸாலே துாக்கி எறியப்பட்டார். 1991இல் பிரதமர் சந்திரசேகருக்கும் இதே நிலை ஏற்பட்டது. சந்திரசேகரை நான்கு மாதங்களுக்கும், பிரதமர் தேவகெளடாவை 1997இல் ஏழு மாதங்களுக்கும் காங்கிரஸ் ஆட்சி செய்ய அனுமதித்தது.* இதே போன்று தான் நேபாளிய தேசிய காங்கிரஸ் (Napala Congress Party) நாடாளுமன்றச் சார்புடைய ஆட்சி முறைக்குள் பிரவேசித்த கடந்த பத்து ஆண்டுகளில் பல பிரதமரை நேபாள ஆட்சித் துறை" யில் காணமுடிகின்றது. வங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிகளும், ஆட்சிக் கலைப்புகளும், அரசியல் சதிப்புரட்சிகளும் அடிக்கடி நிகழுகின்றன. வங்களாதேஷ், பாகிஸ்தான் என்பன முறைய்ே முஸ்லிம் லீக், அவாமி லீக் ஆகிய கட்சிகளுடன் தமது அரசியல் வரலாற்றை தொடங்கிய போதும் இவ்விரு நாடுகளிலும் படிப்படியாக பல கட்சி அரசியல் கராசாரம் வளர்ந்துள்ளதனைக் காணலாம். மேலும் தந்திரத்திற்கு பின்னர் இராணுவம் தான் அமைக்கும் அரசியல் கட்சியை ஆட்சியுரிமை பெற்றதாக மாற்றுவதனால் பல கட்சிப் பாரம்பரியம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் ஷியா-உல்-ஹக் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உருவாகிய அரசியல் கட்சிகள் பெனாஷிர் பூட்டோவின் மக்கள் கட்சியின் ஆட்சியையும் தோற்கடிக்கத் தவறவில்லை. இக்கட்சிகள் தமக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் மீண்டும் ஒருநெருக்கடியை உருவாக்கி ஆட்சியைக் குழப்பினர். அவ்வாறே பங்களாதேஷிலும் ஜெனரல் எர்சாட்இன் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய கட்சிகள்
கே.ரீ.கணேசலிங்கம் -145

Page 75
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் அவாமிலிக் இன் ஆட்சியைத் தோற்கடிக்க நடாளுமன்றத்தைப் பல மாதங்களாகப் பகிஸ்கரித்தனர். பங்காளதேஷ் கட்சியரசியலில் இன்னோர் அம்சம் மார்க்ஸிஸக் கொள்கையால் கவரப்பட்ட மக்களி டையே டசின் கணக்கான மார்சிஸக் கட்சிகள் உருவாகின. சீன சார்பு, சோவியத் சார்பு, இந்தோனேசிய சார்பு, சிங்கப்பூர் சார்பு எனப்பல பிரிவுகளை காணமுடிகிறது.*
தென்னாசிய நாடுகளின் அரசியல் கட்சிகளின் அரசியல் காரசாரத்தில் இன, மத, மொழி, பிரதேச உணர்வுகளை தூண்டும் விதத்திலான அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சாதிவாதத்தை கொண்ட கட்சிகளின் உருவாக்கங்களையும் காணமுடிகின்றது. இந்தியாவில் எழுந்துள்ள பிராந்தியக் கட்சிகள் மட்டுமன்றி தேசியக் கட்சிகளிலும் இத்தகைய மத, மொழி, சாதிப் பண்புகளின் ஆதிக்கம் நிலவுகின்றது. காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி இரண்டுமே இந்து மதம் இந்தி மொழிக் கட்சிகளாக காணப்படுகின்றதுடன் காங்கிரஸ் மதச்சார்பின்மை பற்றிக் கூறினாலும் அடிப்படையில் இந்துமத வாதம் ஒரளவு பேணுகிறது. ஆஸாம் கணபரித், தெலுங்குதேசம், திராவிட முன்னேற்றக்கழகம், பட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநிலக் காங்கிரஸ், சிறுத்தையர் பிரிவு, மிசோ தேசிய முன்னணி போன்ற இன, மத, மொழி பிரதேசம் சார்ந்த கட்சிகளாக இவை தோற்றி வளர்ந்து வருகின்றன.
சுதந்திர இலங்கையின் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகப் பிரிவுகள் தமது இன, மத, பிரிவுகளுக்கு ஏற்ப கட்சி அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துவிட்டன. 1947ஆம் ஆண்டு ஜி.ஜி பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் மக்களின் முதலாவது அரசியல் கட்சியாக உதயமாகியது. பின்னர் 1949இல் உருவான தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டிக் கட்சி தமிழினத்தின் இன, மத, மொழி பிரதேசப் பண்புகளை மிகத் தீவிரப்படுத்திய கட்சியாக வளர்ச்சியடைந்தது. இவற்றின் தொடர்ச்சியாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் காணப்படுகிறது. சாதாரணமாக சிங்கள அரசியல் தலைவர்கள் காட்டிய முரண்பாடான போக்கே தமிழரின் குறுகிய நோக்கிலான கட்சியமைப்புக்கு வழிவகுத்தது.* இதேபோன்றே முஸ்லிம் லீக், முஸ்லீம் காங்கிரஸ் என்பன விளங்குகின்றன.
தென்னாசிய நாடுகள் சிலவற்றில் கட்சி அரசியல் கலாசாரத்தின் இன்னோர் இயல்பு சினிமா நடிகர்கள் அரசியல் தலைவர்களாக காணப்படும் நடைமுறையாகும். இவ்வியல்பு ஏனைய
-146- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிலே மிகத் தீவிரமாக வேரூன்றி. யுள்ளது. பிராந்திய அரசியலில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் இவ்வரசியல் கலாசாரத்தின் இயல்பு காணப்படுகின்றது. தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் மிக நீண்ட காலம் சினிமா நடிகர்களின் அதிகார அரசியல் நிலவி வருகிறது. தற்போது ஆட்சிக்கான போட்டி" யில் அரசியல் கட்சிகளுக்குத் தலைமைத் தாங்குபவர்களாக நடிகர்களே காணப்படுகின்றனர். அறிஞர் அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெயலலிதா போன்றோர் முதலமைச்சர்கள் சினிமாவின் மூலம் புகழைத் தேடிக்கொள்வதும் அதனால் அரசியலில் கால்பதித்தமையையும் காணலாம். திராவிட மொழி, திராவிட நாடு என்ற இலட்சியத்தின் அடிப்படையில் தந்தை பெரியாரால் தொடக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கட்சிகள் காலப்போக்கில் தமக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டினாலும் சினிமாவின் புகழி னாலும் தனித்தனிக் கட்சிகளாக பிளவுபட்டன. இச்சினிமா அரசியல் கலாசாரத்தில் தனிமனித வழிபாடு மேலோங்கியுள்ளது. அண்ணாத்துரை எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டது, மட்டுமன்றி திரைப்படங்களிலும் மற்றும் உருவப் படங்களுக்கும் கற்பூர ஆராத்தி காட்டும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது.*இதே போன்ற அரசியலில் கலாசாரத்தையுடையதாக ஆந்திர மாநிலமும் விளங்குகின்றது. தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் சினிமாப் பாணியிலிருந்தே அரசியலுக்குள் பிரவேசித்தவர்.
தென்னாசிய நாடுகளின் அரசியல் கட்சிகளின் ஆயுதம் தாங்கிய அமைப்புக்கள் அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டு வருவதைக் விசேட அம்சமாகக் காணலாம். ஆயுதங்கள் களையப்பட்டு ஜனநாயக வழிக்கு திரும்பிய அமைப்புக்கள் பல அதிகார அரசியலில் நிலைத்து நிற்கும் அமைப்புக்களாக விளங்குகின்றன. இந்தியாவில் அஸாம் மாநில விடுதலைக்கு போராடிய அஸாம்கணபரிசத், பஞ்சாப்பில் அகாலிதள், தமிழ்நாட்டில் சிறுத்தையர் அமைப்பு என்பன அரசியல் கட்சிகளாகக் காணப்படுகின்றன. இதேபோன்று வங்களாதேஷில் அவாமிலிக், இலங்கையில் ஜே.வி.பி, தமிழ் இயக்கங்கள், அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசியக் கட்சிகள் சிறுபான்மையினர் மீது தீவிர ஒடுக்குமுறை-யைப் பின்பற்றியமையால் வன்முறை அரசியல் கலாசாரமும் தீவிரமடைந்தது. இந்தியாவை ஆட்சி செய்த தேசியக் கட்சிகள் இரண்டும் சிறுபான்மை சமூகத்துக்கு விரோதமாகவே நடந்துள்ளது. குறிப்பாக
கே.ரீ.கணேசலிங்கம் - 147

Page 76
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
காங்கிரஸ் முஸ்லீம்களுக்கும், சீக்கியருக்கும் எதிராக பலதடவை வன்முறை அரசியல் கலசாரத்தைப் பிரயோகித்துள்ளது. 1984ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜகஜீவன்ராம் பின்வருமாறு கூறினார்.
“இது இந்து இந்தியாவுக்கான வாக்கு முஸ்லீம்கள் கூட காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் இந்த நாட்டில் தான் வாழவேண்டியுள்ளது. அதாவது காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் தான் முஸ்லிம்கள் தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க முடியும்." இவ்வாறே 1984இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் சீக்கியருக்கு எதிராகப் பல கொலை வெறியாட்டம் நிகழ்ந்தது. பல சீக்கியர் கொல்லப்பட்டதுடன் அவர்களது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோதும், உடமைகள் அழிக்கப்பட்ட போதும் காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான ராஜீவ்காந்தி கருத்து தெரிவிக்கும்போது, “ஆலமரம் (இந்தியா) சாயும் போது நிலத்தின் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்குமா?"," என கேள்வி எழுப்பினார்.
தென்னாசியா நாடுகளது அரசியல் கட்சிகளது வரலாறு குறுகியதாகவே காணப்பட்டாலும் அக்குறுகிய காலத்துக்குள் பலகட்சி அரசியல் கலாசாரம் வளர்ச்சியடைந்துள்ளது. அவ்வளர்ச்சிக்கு இந்நாடுகளில் காணப்படும் இன, மத, மொழி வேறு பாடுகளும் அவற்றை பின்னணியாகக் கொண்ட கட்சிகளின் உரு" வாக்கங்களாலும் பலகட்சி அரசியல் கலாசாரம் வளர்ச்சியடைய காரணமாகின. மேலும் மக்களிடையே முரண்பாடுகளைத் தீவிரப் படுத்திக் குரோத உணர்வுகளையும், பகைமையையும் தூண்டி தமது குறுகிய அரசியல் நோக்கத்தை தேசியக் கட்சிகள் அடைய முயலும்" போது பிராந்தியக் கட்சிகள் பல உருவாகின்றதைக் காணமுடிகிறது.
அடிக்குறிப்புகள் (1) DR. Thomas Mayer. The concept of Political culture, A Key for modernization of Societies and the functioning of Democracy, C. R. de. Silva, Dwesumperuma (Ed) Political
culture in Sri Lanka, Seminar Report, Sri Lankan Foundation Institute, Colombo, 1988, P04
(2) Ibid, P, 10.
-148- கே.ரீ.கணேசலிங்கம்

(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
C F Strong, Modern Political constitution An Interduction to the comparative study of their history and Existing. (7" Edition) Sigwick of jacksa Ltd, London, 1970, P11.
Ibid,
Vishnoo Bhagwan, Contitutional History of India and National Movement, (5" Edition) Locknow, Atmaram, Newdelhi 1977, P 253. d
Ibid, மேற்கோள். எஸ்.வி. ராஜதுரை. இந்து, இந்தி, இந்தியா அறிவகம் சென்னை, 1993, பக்,166 மேற்கோள், மேற்படி நூல் பக், 168 A Ramesh Narain Mathur, Working and Prespect of Parlimentary democracy in India, Verinder Gover (Ed) Encyclopedia of SAARC Nation, Deep of Deep Publication, Vol I, Newdelhi, 1997, P76.
Ibid,
எஸ். வி. ராஜதுரை, பக், 131.
எஸ். வி. ராஜதுரை, பக், 239 John walter Bicknell, Reflections on the Humanities in
democratic culture, Vaddukodai Jaffna College, 1983, PP114.
A.
Ramesh Narain Mathur, op, citp,78
Second Republic Contitutalion in Sri Lanka, Government Publication, 1978, P32
Ibid, P22
See N.M. Perera, Cirtical Analysis of the new Constitution of Sri Lankan Government, Star press, Colombo, 1978, P 44, NiNghd; W Colvin R. De. Silva, Sri Lanka's New Capitalism and the Erosion of Democracy 1977-88, Ceylon Federation of Labour, Colombo, 1988, -g,5ìu (3).J65ời (6) DITGẻ ở5G,5Lò இடதுசாரி நோக்கு நிலையில் விமர்சிக்கப்பட்டாலும் அவை சில நியாயப்பாடுடைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன என்ற வகையில் இந்நூல்களை பயன்படுத்தலாம்.
கே.ரீ.கணேசலிங்கம் -149

Page 77
(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
(25)
(26)
(27)
(28)
(29)
(30)
(31)
(32)
(33)
(34)
(35)
(36)
(37)
(38)
-150
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
See, Rohan Gunaratna, Sri Lanka A Lost Revolution? The inside story of the JVP Institute of Fundamental Studies, Colombo, 1990, PP, 32 1-322.
Ibid.,
A. Jeyaratnam Wilson, The Break- Up- Of Srilanka, The Sinhales- Tamil Conflict, C, Hurst and Company, London, 1988, P208.
Second Republic Constitution in Srilanka, op.cit., PP26-29, N. M Perera, op.cit., PP44-48. Ramesh Narain Mathur, op, citp,04. Dr. Thomas Meyer op, cit, p, 04.
L. B. Mendis, India's Role In South Asia S. W. R. De. Bandaranayaka National Memorial Fundation, Colombo, 1992, P20.
Second Republic Constitution in Srilanka, op, citipp, 06-10 N. M Perera, op.cit., PP44-48 Second Republic Constitution in Srilanka, op, citip, 17 Ibid., P 17
Ibid., P. 19
Ibid., P.21
Ibid., P 18
Ibid., P05
Ibid., P 11 வே தில்லைந7யகம் இந்திய அரசியலமைப்பு/ மணிவாசகர் Z42/z/3Zá 6%ojo607/9694/ž,342 Convention on the Rights of the child, Unicef, Colombo, 1997.
வேதில்லை நாயகம் பக்,434
Zahecr Baber communal conflict and Nostalgic Imagination in India, JOURNAL OF CONTEMPERARYASIA, vol28, No. 1, 1988, PP. 27-45
கே.ரீ.கணேசலிங்கம்

(39)
(40)
(41)
(42)
(43)
(44)
(45)
(46)
(47)
(48)
(49)
(50)
(51)
(52)
(53)
(54) (55)
(56)
(57)
(58),
(59)
(60)
(61)
(62)
(63)
(64)
(65)
(66)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Jeff Haynes Religion Secularisation and politics a post modern censceptes THIRD WORLD OUARTELY, vol 18 No04, 1997, PP. 709-710
Zahecr Baber, op. cit: PP21-28 எஸ்.வி ராஜதுரை பக்.155-156 Jeff Haynes op, cit, 714-716 Ibid, P. 718 Zahecr Baber op.cit, P44 எஸ். வி ராஜதுரை பக்., 83 Jeff Haynes, op cit, PP 720-721 Ibid, PP723-725 India Today, 15 August, 2001 எஸ். வி ராஜதுரை பக்., 04 மேற்படி நூல், பக், 10. மேற்படி நூல், பக், 165 மேற்படி நூல், பக், 166 மேற்படி நூல், பக், மேற்படி நூல், பக், 168. Ramesh Narain Mathur, op, cit, PP 79-80. L. B. Mendis Op.cit, P 19
Ibid, P25 எஸ். வி ராஜதுரை பக், 04 மேற்படி நூல், பக், 137 மேற்கோள், மேற்படி நூல், பக், 138 மேற்கோள், மேற்படி நூல், பக், 141 மேற்படி நூல், பக், 142 மேற்படி நூல், பக், 139 மேற்படி நூல், பக், 140 L. B. Mendis Op.cit, P.26
Prof Vahutuss Samanin, Pakistan - Bungalades Relation, Bertram Bastiampillai (Ed.) India and her South Asia
கே.ரீ.கணேசலிங்கம் - 151

Page 78
(67)
(68)
(69)
(70)
(71)
(72)
(73)
(74)
(75)
(76)
(77)
(78)
(79)
(80)
(81)
(82)
(83)
(84)
(85)
(86)
(87)
- 152
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Neighbours, Bandaranayaka Memorial Center, 1992 Colombo, P.256
Hansard, 19 October 1955, P622
தினகரன், 22.03.1956
மேற்படி பத்திரிகை பேராசிரியர் அ. சிவராஜா, இந்திய அரசியல் முறை, அ. சிவராஜா, வே. சிவயோகலிங்கம் (தொகுப்பு) ஒப்பீட்டு அரசியல், லங்கா புத்தகசாலை, 1997-பக்,228
India Today, Auguest21- September 05 1992 Ibid., Rohan Gunaratna, Op. cit, P.322
அரசாங்க பாகூைடி கமிசுஷனின் இறுதி அறிக்கை 1953 அரசாங்க வெளியீடு கொழும்பு பக், 32
Hansard, 19 October 1955, P. 684.
Cited by I.D.S Werawardena, General Election 1956, M.D. Gunesena, Colombo, 1960, P I00
Hansard, 25 May, 1944, PP. 810-812 ஈழகேசரி,07.11.1954 Hansard, 14th June, 1956, PP, 1912-1913 India Today, Januvary21, February 5, 1977 Ibid.,
Ibid.,
Talukder Muniruzzaman, The Future of Bangaladesh, A.J. Wilson and D. Deltion (Ed.) The states of South Asia Problems of National Intergration, C. Hurst and Company, Grat Britan 1982, P. 265
A.Jayaratnam Wilson, The Break- Up- of Srilanka, the Sinhales- Tamil Conflict, Op, cit, p, 76
India Today, August 21, Seprember 5, 1992 எஸ். வி ராஜதுரை பக், 18 மேற்படி நூல், பக், 24.
கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவில் இராணுவ அரசியல்
இராணுவ வாதத்தின் பின்புலம்
பொதுவாக உலகின் முக்கிய பிராந்தியங்களின் ஆதிக்கவாத அரசியலில் முனைப்படைந்து காணப்படும் இராணுவப் பரிமாணம் தென்னாசியாவைப் பொறுத்தவரையிலும் விதிவிலக்கானதாக அமையவில்லை. இவ் இராணுவப் பரிமாணம் தென்னாசியாவில் ஒருசில நாடுகளுக்கு விசேடமானதாக நடைமுறையில் இருந்தாலும் எல்லா நாடுகளிலும் இராணுவ ஆதிக்கம் ஒரு வகையில் நிலவாம" லில்லை. மிக ஆரம்ப காலத்திலிருந்து தென்னாசியாவின் அரசியலில் முக்கிய ஓர் அங்கமான படைப்பிரிவினரும் அரசுகளின் ஒரு முக்கிய நோக்கமாக நாடுகளை ஆக்கிரமித்தலும் இவை காரணமாக அடிக்கடி ஏற்பட்ட போர்களும், அதன் மூலும் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் மக்கள் பரீட்சயமானவர்களாக மாற்றப்பட்டார்கள். தென்னாசியாவில் பரவலாகும் போர்க் கலாசாரத்தில் கவரப்பட்ட இனப் பிரிவுகளும், சாதிக்குழுக்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இப்பிரிவுகளின் மரபுவழியிலான யுத்த அணுகுமுறைமை இராணுவ பரிமாணத்தில் கணிசமான பங்கை வகிக்க காரணமாகின்றது. அரசியலிலோ அல்லது ஆட்சித் துறையிலோ இராணுவத் தலைமையும் பணிக்குழுவும் முழுமை" யாக ஆதிக்கம் செலுத்தும்போது அங்கு சட்டமியற்றலும் சட்ட அமுலாக்கலும் இராணுவத்தின் அதிகாரத்துவம் (MILITRY AUTHORITARANISM) காணப்படும் போது அதனை இராணுவ பரிமாணமாக புரிந்துகொள்வது பொருத்தமானது.
தென்னாசியாவில் இராணுவப் பரிமாணம் படிப்படியாகவும், பகுதியாகவும், முழுமையாகவும் வளர்ந்திருப்பதை காணமுடியும்.
கே.ரீ.கணேசலிங்கம் -153

Page 79
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பாகிஸ்தானை இராணுவம் அடிக்கடி முழுமையாக தனது சிருஷ்டி" யான பணிக்குழுவினால் ஆட்சிப்படுத்துகின்றது. இவ்வாறான அணுகுமுறையே பங்களாதேஷின் ஆட்சி முறையிலும் குறுகிய காலம் நிலவியது. இலங்கை, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் இராணுவப் பரிமாணம் பகுதி ரீதியாக அல்லது பிரதேச, இன ரீதியானதாக செல்வாக்குச் செலுத்துகின்றது. குறிப்பாக இனப் பிணக்குகளை சமரசம் செய்வதற்கு இராணுவ அணுகுமுறை சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்களின் மீது பிரயோகிக்கப்படுகின்றது.
பொதுவாக பின்வரும் இராணுவ அணுகுமுறைகள் தென்னாசிய நாடுகளில் பிரயோகிக்கப்படுவதனைக் அவதானிக்கலாம்.
(1) அரசமட்டத்திலான முழுமையான இராணுவப் பரிமாணம்.
(2) அரசுக்குள் காணப்படும் பிரதேச ரீதியான இராணுவப்
பரிமாணம்
(3) பிராந்திய ரீதியான இராணுவப் பரிமாணம் (4) சர்வதேச ரீதியான இராணுவப் பரிமாணம்
அரச மட்டத்திலான முழுமையான இராணுவப் பரிமாணத் தினை பாகிஸ்தான், பங்களாதேஷ் (இடையிடையே) போன்ற நாடுகளில் பெருமளவு பிரதிபலிக்கின்றன. அவ்வாறு நிகழ்வதற்கான பிரதான காரணியாக அமைவதற்கு அந்நாட்டு மக்களின் அரசியல் கலசாரமும் ஒரு காரணமாகும். இஸ்லாமியர்களின் அரசியல் கலாசாரத்தை மிக நுணுக்கமாக அவதானிக்கும்போது அதில் இராணுவப் பரிமாணம் பிரதிபலிப்பதைக் காணலாம். தென்னாசிய இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த அரேபியா வரண்ட பாலைவனப் பிரதேசமாகும். அவர்கள் கிறிஸ்தவர்களுடனும் (சிலுவை யுத்தம்) தம் இனக் குழுக்களுக்கிடையேயும் மிக நீண்ட காலமாக போர் புரிந்துள்ளதைக் காணமுடிகிறது. இவ்வியல்புடன் இந்திய துணைக்கண்டத்திற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்கள் இந்துமத எதிர்ப்புக்கும் பின்னர் ஐரோப்பிய அடக்குமுறைக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியது. இதனால் போர் புரிவது இஸ்லாமியருக்கு தவிர்க்க முடியாத காரணியாக மாறியது. போருக்கான இயல்பை மட்டுமன்றி இஸ்லாமியர் தமது உயிர் வாழ்வுக்கு வாணிபத்தையும் ஒரு காரணியாகப் பின்பற்றினர்.
-154- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
போரும், வாணிபமும், இஸ்லாமியரின் இரு கணிகளாக விளங்கியமையால் தென்னாசியாவுக்குள் அவர்களால் இலகுவாக ஊடுருவ முடிந்தது. அவ்வாறு நுழைந்த இஸ்லாமியர் படிப்படியாக தமது இனத்தை தென்னாசிய நாட்டு மக்களின் திருமண உறவால் விருத்தி செய்து கொண்டனர். காலப்போக்கில் அவர்கள் வலிமை" யான தேசிய இனமாகவும் தனியரசு அமைக்கும் சக்தி கொண்டவர்களாகவும் மாறலாயினர். ஆனால் அவர்கள் பல அணிகளாக பிரிந்து குழுச் சண்டைகளை ஏற்படுத்தியும் வந்தனர். தனித்தனிக் குழுக்க" ளாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் அரசு என்ற பொது அமைப்புக்குள் ஒன்றுபட்டும் காணப்பட்டனர். 1947ஆம் ஆண்டு இந்திய பெருநிலப்பரப்பிலிருந்து பாகிஸ்தானியர் மிகக் குறுகிய காலத்தில் மேலும் தமக்குள் பிளவுண்டு வங்களாதேஷ் என்ற அரசை உருவாக்" கிக் கொண்டனர். தற்போது இரு அரசர்களுக்குள்ளும் பல இனக்" குழுக்கள் செயல்படுவது தெளிவான அம்சமாகும்.
இன முரண்பாடு கொதிப்படைந்துள்ள பிராந்தியங்களில் தென்னாசியாவும் ஒன்றாகும் தென்னாசியா முழுவதும் இனங்களுக்" கிடையிலான முறுகல்நிலை அதிகமாக உள்ளது. அரச மத்திய தேசியவாதத்தின் கீழ் பெரும்பான்மை இனம் அல்லது ஆதிக்க இனம் ஆளும் இனமாக காணப்படுவதனால் சிறுபான்மை இனங்கள் தமது சுயநிர்ணயத்தை (Self Determination) உறுதிப்படுத்” தற்காக ஆரம்பித்த போராட்டங்கள் பல. பின்னர் வன்முறை வடிவம் பெற்றன. இப்போராட்டங்களை முறியடிக்க ஆட்சிபுரியும் இனம் சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் உட்படுத்தின. இவ் ஆக்கிரமிப்பால் பல தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் அழிந்து போயின. இத்தகைய அழிப்புக்கான முழு அதிகாரத்தையும் ஆளும் வர்க்கம் இராணுவத் திடமே ஒப்படைத்திருந்தது. இதனால் இராணுவப் பரிமாணம் மேலும் வலிமை பெற முடிந்தது. சில சந்தர்ப்பங்களில் நிலைமை கட்டுமீறிச் சென்று ஆளும் வர்க்கத்தின் பலத்தையே இராணுவம் நசுக்குகின்ற சதிப் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன.
தென்னாசியப் பிராந்தியம் இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக அமைவது தவிர்க்க முடியாத அம்சமாகவுள்ளது. இந்தியா பரந்து விரிந்த நிலப்பரப்பையும், பெருமளவான மக்கள் தொகையையும் கொண்ட நாடாக விளங்குவதனால் ஒப்பீட்டடிப்படையில் இராணுவ பொருளாதார பரிமாணத்திலும் மிக உயர்ந்த
கேளிகணேசலிங்கம் - 155

Page 80
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சக்தி படைத்த அரசாக திகழ்கின்றது. இதனாலேயே தென்னாசியாவின் வல்லரசாக கருதுமளவிற்கு பலமான நாடாக இந்தியா விளங்குகின்றது. இப்பலத்தைக் கொண்ட இந்தியக் குடியரசு பல தடவை அயல்நாடுகள் மீது இராணுவ மேலாதிக்கத்தை பிரயோகித்து வெற்றிகண்டுள்ளது. சர்வதேச மட்டத்திலும் பலமான அரசாக கருதப்படுவதனால் பிராந்திய வல்லரசுக்கான அங்கீகாரம் சர்வதேச வல்லரசுகளில் ஒன்றாக மாறும் இந்தியாவின் பரிணாமம் இராணுவத்தின் பங்கை வலுப்படுத்த உதவி வருகின்றது. ஆதரவினால் இலகுவாக இந்தியாவிற்கு கிடைத்ததென்றே கூறலாம். ஏனைய தென்னாசிய நாடுகள் அனைத்தும் இணைந்து கொண்டாலும் இந்தி யாவிற்கு சமமான பலம் சாத்தியப்படும் வாய்ப்பு அரிதாகவே யுள்ளது. அணுவாயுத அரசுக்கான தொழில்நுட்பப் போட்டியில் பாகிஸ்தான் சமநிலையை ஏற்படுத்த முயன்றாலும் இந்தியாவின் இராணுவ ஆற்றல் பலமானதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. இந்தியாவின் இராணுவ பலத்தை முறியடிக்க ஏனைய தென்னாசிய நாடுகள் தமது இராணுவப் பலத்தை தவிர்க்க முடியாது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயும் தென்னாசிய நாடுகள் மத்தியில் இராணுவப்போட்டி ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
பொதுவாகக் கெடுபிடி யுத்த காலத்தில் காணப்பட்ட சர்வதேச இராணுவப்போட்டி தென்னாசியப் பிராந்தியத்தின் இராணுவ பரிமாணத்துக்கு இன்னோர் காரணமாகிறது. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் இப்பிராந்தியத்தில் ஒன்றுக்கெதிராக மற்றைய நாடு இராணுவ வலுவில் தமது நிலையைப் பலப்படுத்த போட்டியிட்டன. அணிசார் உலகம் தென்னாசிய நாடுகளையும் இருவேறு அணி களாகப் பிரித்தது. அதில் பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேஷ் என்பன அமெரிக்க அணியில் சேரவும் இந்தியா, நேபாளம், பூட்டான், மாலைத்தீவு என்பன சோவியத் யூனியன் அணியில் சேரவும் பனிப்போர் வழிவகுத்தது. இது புதிய உலக ஒழுங்கில் முற்றாக மாறியுள்ளது. இந்தியாவின் வலுவும் மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இராணுவ ஆட்சி முறைமை
ஒப்பீட்டடிப்படையில் தென்னாசிய நாடுகளில பாகிஸ்தானிலே நேரடி இராணுவ ஆட்சி முறைமை மிக உயர்வான அரசியல் கலாசாரமாக பேணப்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகவுள்ளது. பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திலிருந்து ஜனநாயக
-156- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசியலமைப்பு ஆட்சி முறைமையை விட இராணுவ ஆட்சி முறைமையில் நாட்டங் கொண்டதாக விளங்கியது. சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்பன மட்டுமல்லாது பணிக்குழுவும் (Bureaucratic) அரசியல் கட்சிகளும் இராணுவத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவையாக விளங்குகின்றன. இதனால் இராணுவம் சீரான பலத்தைப் படிப்படியாக ஆட்சியியலில் இணைத்ததெனக் கூறலாம். அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கின்றதோ அவனே. ஆட்சியாளன் எனக் கருதப்பட்ட பலவந்தக் கோட்பாடே பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்திருக்கலாமெனக் கருதப்படுகின்றது. மனித சமுதாயத்தில் அரசமைபபுக்கான தேவை உணரப்பட்டபோதே பலவந்தக் கோட்பாடு மேலெழுந்தது. பாகிஸ்தானிலும் அரசமைப்பதற்கான பலவந்தப்போக்குக்கு இராணுவமே கைகொடுத்தது. மிக ஆரம்ப காலத்திலிருந்தே பலம் (Force) ஆட்சிக்குரிய அல்லது அதிகாரத்துக்குரிய அலகாக விளங்கியது. அரசானது பலமானவர்கள் பலவீனமானவர்களை அடிமைப்படுத்துவதன் விளைவாகவே தோன்றியது. ஆக்கிரமிப்பு, கைப்பற்றுதல், அடிமைப்படுத்துதல் என்பன அரசொன்றின் தோற்றத்துக்குக் காரணமாகின நவீன அரச நிறுவனங்களிலும் பலவந்தம் ஒரம்சமாக விளங்குகின்றது. மன்னராட்சித் தத்துவம், காலனித்துவம், நவகாலனித்துவம் என்ற வளர்ச்சியில் இராணுவ ஆட்சி முறைமையின் எழுச்சி பலவந்தக் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் எழுச்சியடைந்த ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்களும் நவீனகால இராணுவ பரிமாணத்துக்கு முன்னுதாரணக் கர்த்தாக்களாக அமைந்துள்ளனர். இவ்வாறு வளர்ந்து வந்த பலாத்காரக் கோட்பாட்டின் ஒரம்சமாகவே இராணுவ ஆட்சி முறைமையைக் கருதமுடியும். பிரான்சில் ஜெனரல் டிகோலின் தலைமையில் அமைந்த ஆட்சி தென்னாசிய நாடுகளின் இராணுவ ஜெனரல்களுக்கு வழிகாட்டியாக அமைந்ததென நம்பப்" படுகின்றது. இராணுவ ஆட்சியை ஒழுங்குபடுத்துவதற்கான அரசியலமைப்புக்களை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரம் பாகிஸ்தான், வங்களாதேஷ் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பாகிஸ்தானின் ஜெனரல் அயூப்கான் பிரான்ஸ் ஜனாதிபதியான டிகோலுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டார். இதேபோன்று ஒப்பீட்" டில் வங்களாதேஷின் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் எர்ஷாட்டும் கணிக்கப்பட்டார். அதாவது இராணுவ ஆட்சிக்கான ஒழுங்கு முறைமையை ஏற்படுத்தும் விதத்தில் அரசியல் கட்சிகளை,
கே.ரீ.கணேசலிங்கம் - 157

Page 81
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசியலமைப்புக்களை, ஆட்சித்துறைகளை இராணுவமே உருவாக்கி நிர்வகித்து வருகின்றது. பணிக்குழு ஆட்சியின் தோற்றம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட அரசியல் சமூகவியலாளர்கள் இராணுவமே முதல் பணிக்குழுப் பரிணாமத்தை தோற்றுவித்த" தென்ற முடிவிற்கு வந்தனர். அரச மட்டத்தில் முழுமையான இராணுவ பரிமாணம்
தென்னாசிய அரசியல் கலாசாரத்தில் பாகிஸ்தான் அரசமட்டத்திலான இராணுவ பரிமாணம் தொடர்ச்சியானதாக காணப்படுவது போன்று வங்களாதேஷில் காணமுடியாத போதும் இடையிடையே இராணுவத்தின் செல்வாக்கு காணப்படுகின்றது. இந்நாடுகள் இரண்டிலும் மக்களாட்சி முறைமை அவ்வப்போது நடைமுறைக்கு வந்தாலும் குறுகிய காலத்தில் ஜனநாயக பரிமாணம் மறைந்து இராணுவ பரிமாணம் எழுச்சியடைந்து விடுகின்றது. கடந்த ஒரு தசாப்தமாக வங்களாதேஷின் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள் இராணுவ ஆதிக்கத்தை தோற்கடித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானிலே பலதடைவை ஜனநாயகம் உயிரூட்" டப்பட்டபோதும் இராணுவம் அதனை சாகடித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. 1958-62, 1969-71, 1977-85, 1999 தற்போது வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் அரசியல் காலசாரத்தை காணமுடிகின்றது. ஜனநாயக அரசியல் காலசாரத்தைப் பேணும் அரசியல் தலைவர்கள் அழிக்கப்படும் இராணுவ அரசியல் கலாசாரம் அங்கு நிலவுகின்றது. ஜின்னாவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் எவரும் நிலையாக தமது ஆட்சிக்காலம் முடியும் வரை ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலையை இராணுவ ஆதிக்கம் ஏற்படுத்தி யுள்ளது. இது இராணுவ - ஜனநாயக முரண்பாடாக பரிணமிக்க வழிவகுக்கின்றது. இராணுவ ஆட்சியாளர்கள் நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி ஆட்சி முறையை (Executive Presidential rule system) பின்பற்றுகின்றனர். இராணுவத் தலைமையிடம் அரசியல் பலம் குவிந்திருக்கும்போது மக்களும் அரச சார்பற்ற அமைப்புக்" களும், வெளிநாட்டு அரசாங்கங்களும் இராணுவ ஆட்சிக்கு உதவி அளிப்பது தவிர்க்க முடியாத அம்சமாகவே அமைகின்றது. பொது" வாக இந்நாடுகள் இரண்டிலும் ஜனநாயக ஆட்சிகளை இராணுவம் புரட்சிகள் மூலம் கைப்பற்றும்போது நேரிடையாக அல்லாமல் உள்வாரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ இஸ்லாமிய
- 158- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசுகள் மற்றும் அமைப்புகள் சிலவற்றின் ஆதரவு கிடைக்கும் போதே வெற்றியடைகின்றது. வங்களாதேஷ் மக்களைவிட பாகிஸ்தானிய மக்கள் இராணுவ பாணியிலான அரசியல் கலாசாரத்தை அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு மக்கள் விரும்பு வதற்கு இராணுவத்தின் அரசியல் ஆட்சியில் காணப்படும் உறுதிப்பாடு அயல்நாடுகளது நெருக்குதல்களை தவிர்க்கும் நோக்கு என்பன பிரதான காரணமாக அமைந்திருக்கின்றன.
பாகிஸ்தான் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற இந்தியா வெளிப்படையாக ஒரு ஜனநாயக அரசாக விளங்க பாகிஸ்தான் இராணுவ ஆட்சியை பின்பற்றுவதற்கான காரணங்கள் ஆராயப்படுவது இயல்பானதே. இவ்விதத்தில் முதன்மையாக விளங்குவது பாகிஸ்தானின் இராணுவம் எப்போதும் பாகிஸ்தான் தேசிய நலனிலும், தேசிய பாதுகாப்பிலும் (The Guardian of the national interest) -9,5560p GugligiQugaOTTGaGu இராணுவத் தலையீடுகள் இலகுவானதாகவும் மக்களின் விருப்பு களை பிரதிபலிப்பதாகவும் அமைந்து விடுகின்றது." பிரபல அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகள் குறிப்பிடும்போது இராணுவ சமூகத்துக்கு அடிப்படையான தேவைகளை நிறைவு செய்யும் கலாசாரத்தை வெளிப்படுத்துவதுடன் இராணுவ பரிமாணத்தையும் உறுதியான அரசியலையும் அரசாங்கத்தையும் (Stable Political or Government) கொண்டிருக்கின்றது மட்டுமன்றி இராணுவம் சிவில் கட்சிகளை அமைத்துப் பொருளாதார அபிவிருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்துகின்றது. இதுவே இராணுவம் ஆட்சியில் நிலைத்து உறுதிமிக்கதாக தொடர்வதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக அமைகின்றது. பாகிஸ்தானிலும் வங்களாதேஷிலும், சிவில் அரசாங்கங்கள் மேற்கொள்ளத் தவறும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை இராணுவ ஆட்சிகள் கண்டறிந்து நிறைவு செய்கின்றன.
இஸ்லாமிய அரசுகளுடைய அரசியல் கலாசாரத்திற்கு வழிகாட்டியிருக்கின்ற புனித நூலாகிய "குரான்" ஜனநாயகமுறை பற்றி எதனையும் கூறவில்லை. அதே சமயம் அதனுடைய விதி முறைகள் சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் பலம்வாய்ந்த அதிகாரம் கொண்ட ஒர் அரசியல் தலைமையை விரும்புகின்றது. பொரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் உள்ள "கூடிரியா" சட்டமுறைகள் குரானை அடிப்படையாகக் கொண்டே
கே.ரீ.கணேசலிங்கம் - 159

Page 82
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
காணப்படுகின்றன. பொருளாதார முறையிலும் குரானின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. இதன் காரணமாக ஜனநாயகம் என்பது இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு இரசனைக்குரியதொன்றாகக் காணப்படவில்லை. ஏகபோக அதிகாரங்கள் கொண்ட இராணுவ ஆட்சியை வழங்கும் தலைமைக்கு அவர்களே இயைபாக்கமடையக் கூடியவர்களாகவே காணப்படுகின்றனர். இப்பின்னணியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சூழலை முதலில் நோக்குவோம்.
இந்தியாவை போல பாகிஸ்தானையும் ஜனநாயக அரசாக்கும் எண்ணம் பாகிஸ்தான் ஸ்தாபகரான ஜின்னாவிடம் காணப்பட்டிருக்க வாய்ப்பு அதிகமுண்டு. ஆனாலும் அவர் இறக்கும் வரை உறுதியான அரசியலமைப்பு வரைய முடியாத நிலையில், அவரது மரணத்துக்குப் பின்னர் ஜனநாயக அரசியலில் தளம்பல் ஏற்பட ஆரம்பித்தது. 1953களில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்து, முஸ்லிம் கலவரத்தை அடக்க இராணுவ சட்டமும், அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் முகமது அலி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட இம்முடிவு இராணுவத்தின் ஆட்சிக்குரிய முதல்படியாக அமைந்தது. இதன் பின்பு இராணுவ ஜெனரல் அயூப்கான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிகழ்வு இராணுவ வீரர் ஒருவர் அரசியலில் ஆட்சியுரிமை பெற்றதாக வெளிப்படுத்தியது. 1956களில் இராணுவ செல்வாக்குடைய அரசியலில் தலைவர் மிர்ஷா ஜனாதிபதியாக பதவியேற்றமை பாகிஸ்தா" னில் மேலும் இராணுவ பரிமாணம் அரசியலில் பலமடைய வழிவகுத்தது எனலாம். மிர்ஷா பின்னர் மேஜர் ஜெனரலாக கெளரவிக்கப்பட்டமையும், அவர் அரசியல்வாதிகளை மிக மோச" மாக விமர்சனம் செய்ததனையும், முக்கியமாக நோக்கத்தக்கவை. 1953ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து உரையாற்றும் போது மிருசா பின்வருமாறு கூறினார்.
“சில அபிவிருத்தி அடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளின் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனை முழுமையாக அறிந்துகொள்ளும் வரை எமக்கு ஜனநாயகம் தேவையற்றது. பெருமளவு மக்கள் எமது நாட்டில் படிப்பறிவற்றவர்களாக இருக்கும் போது அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் குழப்பிவிடுபவர்களாக உள்ளனர்.”
-160- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அவர் அரசியல்வாதிகளைவிட இராணுவத்தினர் கண்ணியமானவர்கள் என்பதனை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்கு முற்பட்டார். 1956இல் அப்போதைய பிரதமரான சொரவிராடியின் செல்வாக்கு எழுச்சியடைவதைக் கண்டு அஞ்சிய மிர்ஷா அவரது ஆட்சியை அகற்றினார். அயூப்கானுடன் நெருக்கமான உறவைக் கொண்ட மிர்ஷாவின் ஆட்சியில் மேற்கு, கிழக்கு, பாகிஸ்தானி டையே தீவிர முரண்பாடு கருக்கொண்டிருந்தது. மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்குப் பாகிஸ்தானிலும் விவசாயிகளது ஆயுதப்புரட்சிகள் ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் நிற்காது நகரத் தொழிலாளர்களின் உதவியுடன் பாகிஸ்தானிய நகரங்களையும் அமைதி இழக்கச் செய்தனர். இக்குழப்பகரமான சூழலில் மேலும் ஒரு நெருக்கடி பாகிஸ்தானின் ஐக்கியத்துக்கு சவாலாக அமைந்தது. அதாவது பாகிஸ்தானை ஆட்சி செய்த முஸ்லிம் லீக் கட்சியின் செல்வாக்கு சரிந்து கிழக்குப் பாகிஸ்தானிய அரசியல் கட்சியான அவாமிலிக் கட்சியிடம் கிழக்குப் பாகிஸ்தான் முழுவதன் ஆட்சி அதிகாரமும் கைமாறும்நிலை ஏற்பட்டது. இதனை எவ்வகையிலும் தடுத்து நிறுத்த வேண்டுமென மேற்குப் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் விரும்பியது. இந்நெருக்கடி காலத்தைப் பயன்படுத்திய ஜெனரல் ஜாஹரியாக்கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது இராணுவத்தைப் பாகிஸ்தானின் அரசியலிலிருந்து பிரிக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றது. பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியாளர்களால் ஜனநாயக அரசியல் தலைவர்கள் ஒரங்கட்டப்பட்டனர். உருது மொழிபேசும் புஞ்சாப் மாகாணத்தவர் இராணுவத்தில் முக்கிய வகித்ததுடன் இராணுவ அரசின் உயர் பதவி களை நிரப்புபவர்களாக விளங்கினர். இதேவேளை ஏனைய மாகாணத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அந்நியப்படுத்தப்பட்டனர். குறிப்பாக பாகிஸ்தானியரில் இந்துக்களின் கலப்பை அதிகமாகக் கொண்ட மாநிலமான சிந்து, ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டதனால், இராணுவத்தின் ஆட்சி அதிகாரத்தை அவர்க" ளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மேலும் இராணுவ அரசுக்கும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசுக்குமிடையிலான மோதலானது பாகிஸ்தானின் கூட்டாட்சியில் மேலும் முரண்பாடுகளை வளர்த்தது.
பாகிஸ்தானில் சிந்துஸ்தானியர், பாலுஸ்தானியர், பஞ்சாபியர், பாஸ்ராதானியர் ஆகிய பிரதான இனப்பிரிவுகளையும் அவை
கே.ரீ.கணேசலிங்கம் - 161

Page 83
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
சார்ந்த மரபுவாதக் குழுக்களையும் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானில் பஞ்சாப்பியரே உயர்வர்க்கத்தவர் ஆவார். ஆட்சியதிகாரத்" திலும், இராணுவத்திலும், பணிக்குழுவிலும் ஆதிக்கமுடைய பிரிவினராக அவர்களே விளங்குகின்றனர். ஏனைய இனப்பிரிவுகளில் மிகச் சிறுபான்மையினரான பாலுச்சி மரபுவாதிகள் அரசுக்கு எதிராக மலைப்பிரதேசங்களில் தங்கியிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (இக்குழுவில் 1500 மேற்பட்ட ஆயுதப்படையினர் இருந்ததாக தெரிய வருகின்றது) இதுமட்டுமன்றி அரசியலிலும், இராணுவத்திலும் சம உரிமைக்காக பஞ்சாப்பியரை எதிர்த்து பாலஸ்தானியரும், பஸ்ராதானியரும், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக வழிமுறையிலான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விரு இனப்பிரிவுகளது போராட்டமும் பாகிஸ்தானில் வங்காளியரின் போராட்டத்திற்கு சமமான நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனைய முஸ்லீம் நாடுகளைப் போன்று ஷியா முஸ்லீம்கள், சின்னி முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் என்ற கருத்து இயல்பான ஒரம்சமாகவுள்ளது. இவ்வாறான முரண்பாடுகள் வலுக்கின்றபோது இராணுவ ஆட்சி மட்டுமல்ல பிரிவினைக்" கான போராட்டங்களும் எழுச்சியடைவது இயல்பானதாகிவிடும்."
பாகிஸ்தான் இராணுவ அரசியல் கலாசாரத்துக்கு ஜனநாயக" வாதிகளின் பலவீனமும் இன்னோர் காரணமாக கொள்ளப்படுவது பொருத்தமானதே. ஏனெனில் ஜனநாயகவாதிகள் ஒவ்வொருவரும் ஜனநாயக முலாம் பூசப்பட்ட அரசியல்திட்ட சர்வாதிகாரிகளாக (Constitutional Dictatories) செயல்பட்டிருந்ததனை அவதானிக்க முடிகின்றது. அக்கருத்தை மேலும் விளங்கிக்கொள்ளும் பின்வரும் அம்சத்தை நோக்குவது பொருத்தப்பாடுடையது. “ஜனநாயக ஆட்சி யாளரின் காலப்பகுதியிலேயே தனியான இராணுவ அமைப்புக்கான Jil Lepoolb (Private military Organization act) l pl’il 555, Lil L-51. இது தேசிய ரீதியில் பாகிஸ்தானின் ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கையாகவே அமைந்திருந்தது."
"பாலுஸ்தான் மற்றும் வடமேல் முன்னணி (Balushishstan and N.WFP) மகாணங்களுக்கு எதிராக 1973ஆம் ஆண்டு சிவில் யுத்த" மொன்று ஜனநாயக அரசியல் தலைமைகளால் 70,000 துருப்புக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது."
இவையிரண்டு சம்பவங்களும் ஜனநாயகவாதியும் பிரதமருமான அல்பிகார் அலிபூட்டோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவை
- 162- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
யாகும். இவ்விரண்டு மாநிலங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை அரசியல், சமூக, பொருளாதார நோக்கில் பாரிய வீழ்ச்சியை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியது. பாலுஸ்தான் முழுப் பாகிஸ்தானின் நிலப்பரப்பிலும் ஏறக்குறைய 40 சதவீதத்தைக் கொண்டது. விவசாயம் கைத்தொழில் போன்ற துறைகளில் விருத்தி பெறக் கூடிய பிரதேசமாகவும் விளங்குகின்றது. ஆனால் மத்திய அரசின் பாரபட்சமான நடைமுறையால் பொருளாதார, சமூக விருத்தியில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகிறது. இது பிரித்தானியர் இந்தியத்துணைக் கண்டத்தைவிட்டு வெளியேறிய காலப்பகுதியில் தனித்துவமான உபபிரதேசமாகவும், தேசிய சுயநிர்ணயம் கோரிய பிரதேசமாகவும், மத்திய அரசின் ஆளுகை நிராகரித்த மாகாணமாகவும் விளங்கியது. இப்பகுதி 1948ம் ஆண்டு பாகிஸ்தானியப் படைகளது இராணுவ நடவடிக்கையினாலேயே வலுக்கட்டாயமாக பாகிஸ்தானின் அதிகாரத்துள் இணைக்கப்பட்டது. மட்டுமன்றி பூட்டோவின் ஆட்சிக் காலத்தில் (1973-1977) அவசரகால சட்டப்பிரகடனத்தின் கீழ் இப்பிரதேசத்தின் ஆட்சி நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தினால் பாகிஸ்தானின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் உத்வேகம் பெறத் தொடங்கியது. பொதுவாக அனைத்து பாகிஸ்தானிய மாகாணங்களும் இனத்துவ சமத்துவம் அல்லது சுயநிர்ணய அங்கீகாரம் சாத்தியப்படாத போது மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழும் இயல்பை கொண்டிருக்கின்றன. ஏனெனில் எல்லா மகாணங்களிலும் ஆட்சியாளருக்கு எதிரான உணர்வு அல்லது ஐக்கியத்துக்கு எதிரான போக்கு அவ்வப்போது எழுச்சியடைந்துள்ளன. அத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு ஜனநாயக அரசுகள் இராணுவத்தை பிரயோகித்தமையால் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது இலகுவானதாக மாறியது.
இராணுவ ஆட்சியாளரான ஷியா-உல்-ஹக் இன் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் பாலுஸ்தான் மாகாணம் சில சலுகைகளை அடைந்தது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு, இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. பாதுகாப்பு, வெளிவிவகாரம், இராணுவம் தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிக்குரியதாக மாறியிருந்தது. ஆனால் இச்சலுகைகள் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. 1979ஆம் ஆண்டு சோவியத்யூனியனின் துருப்புக்கள் ஆப்கானிஸ்த்தானுள் நுழைந்ததுடன் பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளரின் பாலுஸ்தான் சோசலிஸ்டுக்கள் ஆயுதப் போரில்
கே.ரீ.கணேசலிங்கம் -163

Page 84
தென்னாசியாவின்ஜரசியல் கலாசாரம்
நம்பிக்கை கொண்டமையே அதற்கு உடனடிக் காரணமெனக் கூறலாம். இச்சந்தர்ப்பத்தில் சோவியத் யூனியனின் பெரியளவான உதவியை பாலுஸ்தான் விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கியது. பாலுஸ்தானிய மக்கள் விடுதலை முன்னணி (Baluchi People Liberation Front) at 6ip guigslf g (TIs du 9/60 LD ill சோவியத் சார்புக் கொள்கையுடன் பாலுஸ்தான் சாம்ராட்சியத்தை (Greater Baluahisthan) அமைக்கப் போராடியது.*
இதே காலப்பகுதியில் பாஸ்ரன் (Pashtan) என்ற இனக்குழு பாஸ்றானிஸ்ரான் (Pashtunistan) என்ற தனியரசுக்கான போராட்டத்தை ஆரம்பித்தது. இது வடமேற்கு முன்னணியும் (N.WFP) பாலுஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் சிறு சிறு பகுதிகளை உள்ளடக்கி தனிஅரசை நிறுவுவதற்குத் திட்டமிட்டது." இவ் இனக்" குழுவிலிருந்து 15000 மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு சோவியத் யூனியன் இராணுவப் பயிற்சிகளை வழங்கியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக இம்மாகாணத்தில் மக்கள் யுத்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் மாகாணங்கள் பங்குபோடும் நிலை வளர்ச்சியடைய அதனை அடக்குவதற்கு இராணுவ ஆட்சி அவசியமானதாக மாறியது.
இராணுவ ஆட்சியாளர்களான அயூப்கான், ஜாஹியாக்கான் ஆகியோரும் ஐக்கிய பாகிஸ்தானை கட்டிவளர்க்க முயன்றதனால் அவர்கள் இராணுவ பாணியிலான அணுகுமுறைகளை இறுக்க" மாக்கினர். குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து தனிநாடாவதை தடுப்பதற்கு இராணுவ இயந்திரத்தை முடுக்கிவிட்டனர். ஆனால் அவர்களது இராணுவ ஆட்சியின் அணுகுமுறை பிரிவினையைத் தவிர்க்க முடியாததாக்கியது. அவர்கள் கிழக்கு பாகிஸ்தானின் பொருளாதார வளங்கள் அனைத்தையும் சுரண்டி மேற்குப் பாகிஸ்தானை விருத்தி செய்தார்கள். ஆட்சி அதிகாரத்தையும் அரசியல் உரிமைகளையும் கிழக்கு பாகிஸ்தானுக்கு வழங்குவதில் மேற்குப் பாகிஸ்தானிய இராணுவத் தலைவர்களோ ஜனநாயக அரசியல் தலைவர்களோ நாட்டம் கொண்டவர்களாக இருக்க" வில்லை. மேலும் இராணுவத்திலும் கீழ்மட்ட பதவிகளே கிழக்குப் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை மேற்குக்" குள் மட்டுப்படுத்தியதுடன் முழுப் பாகிஸ்தானிலும் நான்கு விதமான மக்கள் பேசும் உருதுமொழியை தேசிய மொழியாகவும், அரச மொழியாகவும் பிரகடனப்படுத்தினார். இவ்வாறு ஏற்பட்ட ஒடுக்கு முறைமைக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானியர் தனிநாட்டுக்
-164- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கோரிக்கையை முன்வைத்து போராடத் தயாராகினர். பிரித்தானியர் வருகையின் போதும் அதன் பின்பும் தீவிர தேசிய உணர்வைப் பிரதிபலித்த வங்காளியரின் தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்றாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இப்போராட்ட உணர்வைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குப் பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அடக்கு முறைகள், கிழக்கு பாகிஸ்தானியரின் (முக்திவாகினி) ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்தது. அத்தகைய பிரிவினையின் பின்பு இராணுவ ஆட்சிக்குரிய அவசியமும், இராணுவ ஆட்சியும் மேற்கு பாகிஸ்தானியரால் நியாயப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான். வங்களாதேஷ் பிரிவினைக்கு புவிசார் அரசியல் அடிப்படையில் பிரிந்திருந்த சூழலும் பிரதான காரண்ங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. புவியியல் ரீதியாக மேற்கு பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தானும் பரந்த இந்தியாவின் இருபக்கங்களில் தேசங்களாக (Double Country) அமைந்திருந்தமை பிரிவினையை தவிர்க்க முடியாததாக்கியது. குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து வங்களாதேசத்துக்கு வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் எல்லோரும் விமான மார்க்கமாக பரிமாற்றப்பட்டனர். இது கிழக்குப் பாகிஸ்தானியரை பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து அந்நியமாக வைத்தது. வங்காளத்தவரின் சுதந்திர உணர்வை தணிப்பதற்காக இராணுவ ஆட்சியாளரான ஆயூப்கான் பல பொருளாதார திட்டங்களை முன்வைத்தார். அவர் வங்காளிய உயர்குழாமினரை ஆட்சியில் இணைக்க முயன்றார். இராணுவத்திலும், பணிக்குழுவிலும் வங்காளியரை சேர்த்துக்கொள்ள விரும்பினார். அச்சந்தர்ப்பத்தில் வங்காளியர் மாகாண சுயாட்சி முறைமையை (Provincial Autonomy) கோரினார். இதனை இராணுவ ஆட்சியாளரும் மேற்கு பாகிஸ்தானியரும் நிராகரித்தனர். இறுதித் தீர்வாக அவாமிலிக் (Awami League) கட்சியினர் தீர்வுத்திட்டம் ஒன்றை மேற்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியரிடம் முன்வைத்தனர். அத்தீர்வுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* பூரணமான பிராந்திய சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.
(Greater Regional Autonomy)
* புவியியல் வேறுபாட்டுக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கீடு அமைதல் வேண்டும், அல்லது சமனற்ற தன்மை (Disparity) நீக்கப்படுதல் வேண்டும்.
கே.ரீ.கணேசலிங்கம் - 165

Page 85
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் * இரு பிராந்தியங்களுக்குமான வேறுபட்ட கலாசாரத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும். * கிழக்கு வங்காளியருக்கான பணித்துறை ஆட்சிப் பங்கை
மத்தியரசு வழங்குதல் வேண்டும்.
* அரச சேவையில் கிழக்கு வங்காளியரது பிரதிநிதித்துவத்தில்
உரிய பங்கு வழங்குதல் வேண்டும்.
* பாதுகாப்பு, வெளிவிவகாரம், நாணய வெளியீடு தவிர ஏனையவை அனைத்தும் மாகாண நிர்வாகத் திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்."
இவ் ஆறு அம்சத்திட்டம் (Six Point Programme) மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தான் ஓர் இரண்டாந்தர அரசாக அமைவதை தடுப்பதாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானியர் இராணுவ கலாசாரத்தைக் கொண்டிருக்க, கிழக்குப் பாகிஸ்தானியர் சிவில் ஆட்சிக் கலாசாரத்தை விரும்புகின்ற போக்கு அவர்களிடையே முரண்பாட்டை மேலும் வளர்த்தது. இவ் ஆறு அம்சத்திட்டத்தையும் அதற்கு எதிரான கிழக்குப் பாகிஸ்தானியரின் உணர்வுகளையும் ஆய்வு செய்த பல அறிஞர்கள் பின்வரும் முடிவுக்கு வந்திருந்தனர்.
“பாகிஸ்தான் - வங்களாதேஷ்" பிரிவினைக்கு அரசியல்- சமூகபொருளாதார காரணிகள் பல செல்வாக்கு செலுத்தியுள்ளன. குறிப்பாக பாகிஸ்தானியரின் அரசியல் கலாசாரத்தில் ஊறிப்போன இராணுவப் பணித்துறை மேலாதிக்கமும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும், பெரும்பங்களிப்பை வழங்கியுள்ளது. பல சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானியர் தாம் முன்வைத்த திட்டங்களை வங்காளியர் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற உணர்வை கொண்டிருந்தனரேயன்றி வங்காளியர் முன்வைத்த திட்டத்தை ஒரளவேனும் பரிசிலிக்கும் அரசியல் கலாசாரம் பாகிஸ்தானியரிடம் வளரவில்லை. இது பிரிந்து செல்லும் அரசியல் கலாசாரத்தை கிழக்கு வங்காளியிடம் மேலோங்க வைத்தது." இவ்வாறு கூறுகின்றபோது ஜனநாயக வாதிகளின் ஆட்சியில் அதிகார மேலாதிக்க மனோபாவம் வளரவில்லை என்று கூறமுடியாது. ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அரசியல் அமுலாக்கல்கள் சிலராட்சி போன்றதெனவும் (Oligarchy) பாகிஸ்தானின் அரசியல் முறைமையை நவீன சிலராட்சிக்கு
-166- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
(Modern Oligarchy) ஒப்பானது என்றும் கூறமுடியும்." இதனை மேலும் தெளிவுபடுத்த பின்வரும் அம்சம் ஒன்றை நோக்குவோம்.
ஜனநாயக தலைமைகளின் அரசியல் அதிகாரத்தின் கீழ் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்காகப் (1972-1977 ஆம் ஆண்டுவரை) இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள்.
1972 யூலை சிந்து மாநிலம் மீது மொழிரிதியாக எழுந்த கலகத்தை அடக்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை.
* 1972 ஒக்டோபர்- நவம்பர், லாண்டி (Land) கோராக்கி (Korangi) கராச்சி (Karachi) ஆகிய நகரங்களில் தொழிலாளரிடையே ஏற்பட்ட கலகத்தை அடக்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை.
* 1972 டிசம்பர் முதல் 1977 யூலை வரை பாலுஸ்தானின் இரு பிரதேசங்களுக்கிடையில் எழுந்த பிரதேசப் பிணக்கை தீர்ப்பதற்கான நடவடிக்கை A.
* 1974 யூனில் அக்மெடிக் (Ahmed) எதிராக எழுந்த கலகத்தை
அடக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை.
* 1976 அக்டோபர் வடமேற்கு முன்னணி (NWFP) மாகாணத்தில் சிவில் நிர்வாகத்திற்கும் டியர் (Dir) குலப்பிரிவினருக்குமான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு மேற். கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை.
* 1977 யூலை பூட்டோவுக்கு எதிராக வளர்ந்த இயக்கங்களை அடக்குவதற்கு இராணுவச் சட்டத்தை (Martial Low) கராச்சி, Gost Joi, 60grount Luitgs (Karachi, Lahore and Hyderabad) போன்ற பகுதிகளில் பிரகடனப்படுத்தியமை"
இவ்வம்சங்கள் பாகிஸ்தானின் இராணுவ அரசியல் கலாசாரத்" திற்கு மேலும் முத்திரை பதிப்பவையாகக் காணப்பட்டன. 1958, 1969 ஆகிய ஆண்டுகளைப் போல் 1977ஆம் ஆண்டும் இராணுவத் தளபதியாக இருந்த ஷியா - உல் - ஹக்கினால் இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஷியா - உல் - ஹக் இலகு" வாகக் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானில் அலி பூட்டோ (அன்றைய பிரதமர்)வுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புணர்வே பிரதான காரணமாகக் கொள்ளப்படுகின்றது? பூட்டோவின் ஆட்சிக்காலம்
கே.பீ.கணேசலிங்கம் -167

Page 86
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
எதேச்சதிகரமாகவே வர்ணிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆறு இராணுவ நடவடிக்கைகளும் ஜனநாயகவாதியான பூட்டோவின் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது ஆட்சியில்,
நாடு சிவில் யுத்தத்திலேயே மூழ்கியிருந்தது. தேசியப் பொருளாதாரம் நாசமாகிக் கொண்டிருந்தது. (Ruined) சாதாரண வாழ்க்கை நிலை தடைப்பட்டது. ஜனநாயகம் பேரளவுக்கே அமுல்படுத்தப்பட்டது. நேர்மை, கட்டுப்பாடு இல்லாமல் போனதுடன் பெண்களுக்கு எதிராக சமூகத்தின் வன்முறை அதிகரித்தது. மொத்தத்தில் நாட்டின் எதிர்காலமே நம்பிக்கையற்றதாகப் போனது." என்று கருதுமளவுக்கு நிலமை மோசமடைந்திருந்தது.
இவற்றிலிருந்து பாகிஸ்தான் இன, மத, மொழி பிரதேசம் சார்ந்த அரசியல் வேறுபாடுகளினால் முரண்பாடும், அதையொட்டி வன்முறையும் வளர்ந்துள்ளதென கருத முடியும். இராணுவ ஆட்சியை விரும்பும் மக்கள் பாகிஸ்தானில் அதிகம் காணப்படுகின்றனர் என ஏற்கனவே கருதியிருந்தோம். ஏனெனில் ஜனநாயகத் தலைவர்களை இராணுவ ஆட்சியாளர்கள் தூக்கிலிடும் போதோ (அலி பூட்டோ) சிறையிருக்கும் போதோ (நவாப் கூெடிரீப்) அதற்கு எதிராக மக்கள் பெரிதாக கிளர்ந்து எழவில்லை. மாறாக ஒரு சில மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் இராணுவத்தின் ஆட்சியே பாகிஸ்தானியருக்கு பொருத்தமானது. என்பதை கூறுவது ஏற்புடையதாக தெரிகின்றது. ஜனநாயகத் தலைவர்கள் கூட எதேச்சதிகரமான ஆட்சிமுறையை பின்பற்றி நடைமுறையில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்தனர் பாகிஸ்தானுக்குள்ளே எழும் இராணுவ ஆட்சிக்கான காரணிகளை இனங்காண முயலும் போது,
(1) காலந்தவறாத முறைமையான தேர்தல்கள் (proper
Elections) நடாத்தப்பட்டமை.
(2) மத்திய அரசிலும் மாகாண அரசுகளிலும் அரசியல் கட்சிகளினதும், அமைச்சர்களினதும் அதிகார தலையீடு மேலோங்கியிருத்தலும், ஆட்சித்தலைமை தொழிற்பட முடியாத நிலை காணப்படுவதும்.
(3) சிறந்த, வெகுஜன ஆதரவுடைய தலைமைகளும் ஒழுங்கமைப்புதிறன் கொண்ட அரசியல் கட்சிகளும் விருத்தியடையாமை போன்றவற்றை காணமுடிகிறது.*
-168- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
இதனால் பாகிஸ்தானின் இராணுவம் அடிக்கடி ஆட்சியைக் கைப்பற்றும் நிலை ஏற்படுகின்றது. பாகிஸ்தானிய அரசியல் சமூகத்தில் பிரதேச, மத முரண்பாடுகளும் கூர்மையடைந்து காணப்படுகிறது. அலிபூட்டோ சிந்து மாகாணத்தவராகவும், ஷியா- உல்-ஹக் பஞ்சாப் மாகாணத்தவராகவும் அவ்வாறே நவாப் ஷெரீவ்வும், பர்வேஸ் முஷாரப்பும் முறையே பஞ்சாப், சிந்து மாகாணத்தவராகவும் இருந்தமை அவர்களுக்கிடையே வரியா, சின்னி என்ற மதப்" பிரிவின் அடிப்படையிலான முரண்பாடுகள் வலுவடைந்து காணப்படுகிறது.
இராணுவ தளபதி ஷியா - உல் - ஹக் காலத்தில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இராணுவ துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டதுடன், மத ஒருமைப்பாடும், அரசியல் உறுதிப்பாடும் முன்னேற்றம் அடைந்து காணப்பட்டது. இராணுவ ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானின் அரசியல் உறுதிப்பாடு மட்டுமன்றி பலமான பொருளாதாரம், மத ஒருமைப்பாடு, இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியும்? அடைந்திருந்த பாகிஸ்தானிய மக்களின் உணர்வுகளில் ஷியா - உல் - ஹக் ஏனைய தளபதிகளைவிட இடம்பிடித்துக் கொண்டவராக காணப்பட்டார். பாகிஸ்தானின் தேச நிர்மாணத்திற்கு அவர் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியாதென்பதே விமர்சகர்களது கருத்தாகும்.* 1984ஆம் ஆண்டு ஷியா - உல் - ஹக் நடாத்திய பொதுத்தேர்தல் பாகிஸ்தானின் ஜனநாயகத்தை இராணுவமயப்படுத்தியதில் அவர் வெற்றிகண்டார். (Military Democracy) at 60TGITlb.
பாகிஸ்தானின் இராணுவ அரசியல் கலாசாரம் உள்நாட்டுச் சக்திகளால் மட்டுமன்றி வெளிநாட்டுச் சக்திகளாலும் தூண்டி வளர்க்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் தீவிர பாகிஸ்தான் எதிர்ப்புவாதம் பாகிஸ்தானை இராணுவப் போக்கில் வளரச் செய்த காரணிகளில் முக்கியமான இன்னோரம்சமாகும். இருநாடுகளுக்கு" மிடையில் 1949, 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் பாரிய யுத்தங்கள் ஏற்பட்டதுடன் அவ்வப்போது எல்லையில் சிறு இராணுவ கைகலப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் நிலப்பரப்பாலும் மக்கள் தொகை" யாலும் மிகச் சிறிய நாடாகும். இதனால் இந்தியாவின் இராணுவ பலத்திற்கு நிகராக வளர்வதற்கு வெளிநாடுகளது இராணுவ உதவி களையும், ஒத்துழைப்புக்களையும் பெற வேண்டிய நிலை பாகிஸ்
கேரீகணேசலிங்கம் - 169

Page 87
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தானுக்கு ஏற்பட்டுள்ளது. சுதந்திர பாகிஸ்தானின் பலம் துப்பாக்கி வேட்டுக்களிலேயே உருவாகியது என்ற விமர்சனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே காணப்படுகின்றது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோதே பாகிஸ்தானின் அரசியல் இருப்பு அவநம்பிக்கைக்குரியதாக அமைந்திருந்தது. இந்த அவநம்பிக்கையின் பிரதிபலிப்புக்களாக பிரிவினையின் போது கொல்லப்பட்ட இந்து இஸ்லாமியரின் உடல்கள் விளங்கின. காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் பிரச்சனைகள் மட்டுமன்றி கிழக்குப் பாகிஸ்தானின் பிரிவினையும் அவர்களின் அச்சத்துக்கு மேலும் வலுவூட்டுகின்ற காரணியாகியது. எனவேதான் ஜின்னா முதல் முஷாரப் வரை ஆட்சியாளர்கள் இராணுவ பலத்தில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மீது பாகிஸ்தானிய மக்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இராணுவ பலத்தில் வளர்ச்சியடையாத நிலையில் தம்மை இந்தியா விழுங்கிவிடும் என்பதே பாகிஸ்தானிய அரசியல் கலாசாரத்தில் இழையோடி நிற்கும் அம்சமாகும்.
1979ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த புகார் அரசியல் போட்டியால் பாகிஸ்தானின் இராணுவ அரசியல் கலாசாரம் வளர்வதற்கான இன்னோர் காரணமாக அமைந்துள்ளது. முழு உலகையும் பிரிவினை செய்த அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தென்னாசிய அரசுகளான பாகிஸ்தானையும், இந்தியாவையும் முறையே தமது பக்கம் அணிசேர்த்தன.* ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் படைகளை முறியடிக்க அமெரிக்க பாகிஸ்தானை பயன்படுத்தியது. அதற்கு பிரதிஉபகாரமாக பாகிஸ்தானுக்கு வேண்டிய பொருளாதார இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு சமமாக தனது இராணுவ வளர்ச்சியை வேகப்படுத்தியது. இதற்கு உதவியாக அமெரிக்காவும் பாகிஸ்தான் பக்கம் செயல்பட்டது. காட்டர் நிர்வாகம் நிறுத்தி வைத்த இராணுவ உதவியை றேகன் நிர்வாகம் பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு வழங்கியிருந்தமையிலிருந்து இதனை விளங்கிக்கொள்ள முடியும்.
“1979ஆம் ஆண்டு காட்டார் நிர்வாகம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை 200 மில்லியன் அமெரிக்க டொலராக குறைப்பு செய்தது. இதனை 1981ஆம் ஆண்டு அமெரிக்க அரசு
-170- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
செயலாளர் ஜேம்ஸ் புக்லியின் பாகிஸ்தானிய விஜயத்தின் பின்னர் அது 3.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டது. புதிய இராணுவ உதவியாக எப் 16 ரக யுத்த (Fighter) விமானங்கள் 40ஐ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்குவதாக உறுதியளித்தது. 1987ஆம் ஆண்டு ஏற்கனவே வழங்கப்பட்ட இராணுவ உதவித் தொகையுடன் 2.28 பில்லியன் அமெரிக்க டொலரை பொருளாதாரத்திற்கும் 174 பில்லியன் அமெரிக்க டொலரை இராணுவத்திற்கும் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.”* இவ்வாறு வல்லரசுகளுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டியினாலும் பாகிஸ்தானின் இராணுவப் பரிமாணம் வளம்பெறலாயிற்று. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. As
பாகிஸ்தானைப் போன்று வங்காதேஷின் இராணுவ அரசியல் கலாசாரம் பாகிஸ்தான்-வங்களாதேஷ் விடுதலைப் போர்க் காலத்திலேயே இருப்புக்கொள்ளலாயிற்று. வங்களாதேஷின் தேசபிதாவான முஜிபுர் ரகுமானின் போராட்டம் காரணமாக இராணுவ அரசியல் எழுச்சியடைந்தது. விடுதலை பெற்ற குறுகிய காலத்தில் முஜிபுர் ரகுமான் கொல்லப்பட்டது என்பது வங்களாதேஷின் இராணுவ பரிமாணத்துக்கு மேலும் ஓர் உந்துதலாக அமைந்துவிட்டது. ஏனெனில் அவரது கொலைக்கு வெளிநாடு ஒன்று காரணமானதென கருதப்பட்டாலும் வங்களாதேஷ் இராணுவத்திற்கும் அவரது கொலைக்கும் தொடர்புண்டு என ஊகிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பரிதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத் தலைப் பயன்படுத்தி இராணுவம் மேற்கொண்ட சதிப்புரட்சியினால் நேரடி இராணுவ ஆட்சி வங்களாதேஷில் அறிமுகமானது. 1975ஆம் ஆண்டு முதலாவது இராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.* இதன் பின்பு 1976ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் ஷியாவுர் ரகுமானின் இராணுவப் புரட்சியினால் வங்களாதேஷ் தொடர்ந்தும் இராணுவ அரசியல் கலாசாரத்தில் மூழ்கியது. அது சிவில் நிர்வாகத்தைப் படிப்படியாக இராணுவமயப் படுத்தலுக்கு உள்ளாக்கியது. 1977ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சியார் தம்மைத் தாமே ஜனாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதும் இஸ்லாமிய அரசியலமைப்பை (Islamic (ontitution) தேசிய வாக்கெடுப்பிற்கு மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அமோக வெற்றியை ஏற்படுத்திக் கொண்டமையும்? இராணுவ
கே.ரீ.கணேசலிங்கம் 171- ܡܢ

Page 88
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசியல் கலாசாரத்தின் வளர்ச்சியைக் காட்டியது. வங்காளிய Gg5fluu 35L "faðu u Jurb íšg (BNP- Bungladesh Nationalist Party) பாராளுமன்றத்தையும், சிவில் ஆட்சியையும் வங்களாதேஷ் இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. மீண்டுமொரு இராணுவ சதியில் முஜிபுத் ரகுமானின் சீர்திருத்தக் கொள்கையால் விரக்தியுற்ற பிரிவினர் அவரைக் கொலை செய்தது போன்று ஹியாவுர் ரகுமானையும் கொலை செய்தனர். முஜிபுத் ரகுமானின் கொலைக்குப் பின்னர் வங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி செய்தது போன்று ஷரியாவுர் ரகுமானின் கொலையையும் எதிர்த்து வங்களாதேஷ் மக்கள் கிளர்தெழுந்தனர். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு 1982இல் இராணுவ தளபதியான லெப். ஜெனரல் உஷைன் முகம் எர்சாட் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சியொன்றை அமைதியாக மேற்கொண்டு இராணுவச் சட்டத்தையும், இராணுவத்தின் ஆட்சியையும் மீண்டுமொரு தடவை பிரகடனப்படுத்திக் கொண்டனர்."
சிட்டக் கொங் மலைப்பகுதியில் வாழும் ஆயுதம் தரித்த பழங்குடியினரின் போராட்டமும், வங்களாதேஷின் இராணுவ அரசியல் கலாசாரத்துக்கு உதவிய இன்னோர் காரணியாக கொள்ளப்படுவது பொருத்தப்பாடானதாகும். இவர்கள் பிரித்தானியரின் குடியேற்றவாத காலப்பகுதியில் விசேட நிர்வாகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்தமையால்? சுதந்திர வங்களாதேஷின் ஆட்சியில் தனித்துவமான பிரிவினராக தம்மைக் கருதிக் கொண்டனர். அவர்களை ஒன்றிணைக்க வங்களாதேஷின் ஆட்சியாளர்கள் பல தடைவை முயன்றபோதும் வெற்றி பெற முடியவில்லை. வங்களாதேஷின் மக்கள் தொகையில் 0.5 சதவீதத்தினர் 09 சதவிகித நிலப்பரப்பில் வாழ்கின்ற பழங்குடியினர் ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் கட்சி என்பதை ஆரம்பித்து வங்களாதேஷின் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். காலப்போக்கில் அதனை இராணுவ முன்னணியாக மாற்றி அதாவது சான்ரி வாகினி (Santi Bahini) என்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்ச்சியடைந்த ஆயுதப் போராட்ட பிரிவாக மாறினர்." இவ்ஆயுதப்பிரிவு இந்தியாவின் மிசோராம், நாகலாந்து ஆகிய மாநில ஆயுதப் பிரிவுகளுடன் தொடர்புகொண்டு உதவிபெற்று போராடுவதாக தெரியவருகிறது. மேலும் வங்களா" தேஷின் கம்யூனிசப் பிரிவினர் இவ்வமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பதுடன் போராட்டத்திற்கு ஆதரவளித்தும் வருகின்றனர். ஷியாவுர் ரகுமானின் ஆட்சிக்காலத்தில் அவர்களின்
-172- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்திக்கான சலுகைகள் அதிகரிக்கப்பட்டது. கல்வியில், பழங்குடி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்தது. இதே சந்தர்ப்பத்தில் இராணுவ அரசியல் ஆதிக்கத்தை அப்பழங்குடியினர் மீது திணிக்க ஷியாவின் ஆட்சி பின்னிற்கவில்லை. ஷியாவின் ஆட்சியின்போது பல ஆயிரக்கணக்கான இராணுவத்தை மலைவாழ் பழங்குடியினரின் பிரதேசங்களுக்குள் குவித்துப் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு “சான்ரி வாகினி" அமைப்பை அடியோடு அழிக்க முயன்றார். மேலும் அவர் பழங்குடியினருக்கு எதிராக இனக்குழுக்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை மலைப்பிரதேசங்களில் குடியேற்றி னர். அக்குடியேற்றவாசிகளில் ஐம்பதாயிரம் பேரை ஒன்றிணைத்து இராணுவப்படை ஒன்றை (Contrvailing Force) உருவாக்கினார்." இவ்வாறு பழங்குடிகளின் பிரதேசங்கள் மீது வங்களாதேஷ் இராணுவ ஆட்சியாளரின் ஆக்கிரமிப்பு இராணுவ அரசியல் கலாசாரத்தை முனைப்படைய வைத்தது. இராணுவத்தின் அரசியல் செல்வாக்கு
பாகிஸ்தான் வங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் இராணுவத்தின் செல்வாக்கு ஒர் அம்சமாக விளங்குகினறது. அந்நாடுகளில் இராணுவத்தின் செல்வாக்கு தவிர்க்க முடியாததாக விளங்குவதற்குப் பின்வரும் காரணிகளின் பங்களிப்புக்களே உதவுகிறது,
(1) இந்நாடுகளில் எழுந்துள்ள இனமுரண்பாடுகளுக்கான
தீர்வுகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்தமை. (2) தென்னாசியப் பிராந்தியத்தின் பெரிய சகோதரனாக விளங்கும் (Big Broher) இந்தியாவின் இராணுவ வலிமை ஏற்படுத்தியுள்ள அச்சம். (3) இப்பிராந்தியத்தில் காணப்படும் வல்லரசுப் போட்டியினால் இந்நாடுகளிடையே இராணுவத் தந்திரோபாயங்களில் ஏற்படுத்தியுள்ள மாற்றம். பல்லினக்கட்டமைபைக் கொண்ட தென்னாசிய நாடுகளில் இனங்களிடையே முரண்பாடும் போட்டியும், பகைமையும், மோத" லும் தோன்றுவது தவிர்க்க முடியாத அம்சமாக அமைந்துள்ளது.
கே.ரீ.கணேசலிங்கம் -173

Page 89
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
பெரும்பான்மையினரின் ஆட்சி சிறுபான்மையினரின் உரிமைகளையும், சலுகைகளையும், அலட்சியம் செய்ய அல்லது அடக்க முயலும் போது முரண்பாடு தீவிரமடைகின்றது. இதனால் சிறுபான்மை இனங்கள் தமது சுயநிர்ணயத்தை பாதுகாக்க போராட்டங்களை நடாத்தும்போது பெரும்பான்மை இன அரசுகள் அப்போராட்டங்களை வன்முறை வழிகளால் வெற்றிகொள்ள முற்படுகின்றனர். இது அரசியலில் இராணுவத்தின் பங்கை வலிந்து உள்வாங்குவதாக அமைகிறது. அரசுகளும் அதன் தலைமைகளும் சிறுபான்மை இனக்குழுக்களுக்கு எதிராக செயற்பட முற்படும் போதே" இராணுவ அரசியல் கலாசாரம் தீவிரமடைகிறது. அரசுகள் சிறுபான்மையினங்களை அடக்குவதற்கு இராணுவத்தையே முழுமையாகப் பயன்படுத்துகின்றன. இனங்களிடையே ஒருமைப்பாடில்லாத (Disintergration) தன்மை பிரதேசத்தையும், பிராந்தியத்தையும் நிலைக்குலையச் செய்கின்றது. பொதுவாக இந்நாடுகளில் இன முரண்பாட்டுக்கான எண்ணக்கருவில் முதலில் தோன்றிய இனம் எதுவென்பது அல்லது நீண்ட காலம் நிலைத்திருந்து வாழ்ந்த இனம் எதுவென்பது பற்றிய சர்ச்சையே அடிப்படையானதாக" வுள்ளது. தென்னாசிய நாடுகள் அனைத்திலும் வாழும் தேசிய இனங்" களின் பாரம்பரியமான அரசியல் சமூகத்தில் முரண்பாடு ஏற்படுகின்றது. ஆட்சி செய்யும் வர்க்கம் அத்தகைய சர்ச்சையை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக சிறுபான்மையினரை நிராகரித்து, சிறுபான்மை இனங்களை அடிமைகளாாகவும், இரண்டாந்தரப் பிரஜைகளாகவும், பெரும்பான்மை இனங்களை ஆதிக்க இனங்க" ளாகவும் கையாளுகின்றது. இலங்கையில் பெரும்பான்மை இனத் தின் சிங்கள - பெளத்த ஆட்சியாளர்கள் வன்முறையால் ஒருமைப்பாடின்மையை உருவாக்கியது மட்டுமன்றி அவ்வன்முறை அரசியல் கலாசாரத்தால் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர்* இந்தியாவில் பீகார், மகாராக்ஷரம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், காசுஷ்மீர், அஸாம், நாகலாந்து, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒருமைபாடின்மை வளர்ந்து வருகின்றது. நேபாளத்தில் வர்க்க அடிப்படையிலும், சீனசார்பு கம்யூனிஸ்டுக்களும், நேபாளிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஏனைய நாடுகளிலும் பழமைவாதிகள், பழங்குடியினர், தொழிற்பிரிவினர், என ஒருமைப்பாடற்ற தன்மை நிலவுகிறது. இன, மத, மொழி, பண்பாடு
-174- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வேறுபாடுகள் மட்டுமல்லாது சுரண்டல் குடியேற்றம், சாதி என்பவையும் இராணுவ பரிமாணத்தை விரிவுபடுத்த வழிவகுக்கின்றன.
தென்னாசிய நாடுகளில் அனேகமானவற்றில் 1950களில் இருந்த இராணுவ - ஆயுத தளபாட வளர்ச்சியை விட இன்று மிக உச்சமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சிறுபான்மை இனங்களின் விடுதலைப் போராட்டங்களை அழிப்பதற்காகவே பெரும்பான்மை இன அரசுகள் ஆயுதக் கொள்வனவை அதிகரிப்பதுடன் இராணுவத் தையும் வளர்த்து நவீனப்படுத்திவருகின்றன. இலங்கை சில ஆயிரக்" கணக்கான இராணுவத்தையும் மிகச் சிறிய ரக ஆயுதங்களையும் கொண்டிருந்த நிலைமாறி ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட படை" களையும் மரபுரீதியான யுத்த ஆயுத தளபாடங்களையும் தற்போது கொண்டுள்ளது. இதே போன்றே இந்திய இராணுவத்தின் செல்வாக்கும் அமைந்துள்ளது. ஆனால் இந்திய இராணுவத்தின் வளர்ச்சிக்கு வேறு பல நெருக்கடிகளும், சூழல்களும் காரணமாக அமைந்” துள்ளன என பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரிவினைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் தெலுங்கான விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டது. "வீரமிக்க தெலுங்கானப் போராட்டம் (1946-1951) இக்காலப்பகுதியில் நடந்து கொண்டிருந்தது. இது விசாலாந்திரா என்ற தேசிய இனக் கோரிக்கையை ஆயுதமேந்திய உழவர் போராட் டத்துடன் இணைந்திருந்தது." இதனை மிகக் கொடுரமான முறையில் அன்றைய அரசாங்கங்கள் நசுக்கியது.* இவ்வாறே காஷ்மீரிய தேசிய விடுதலைப் போராட்டமும் அதற்கு எதிராக இந்திய அரசின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றது. பெரும்பான்மையாக முஸ்லீம்கள் காஷ்மீரில் காணப்பட்டாலும் இந்து மன்னனே காஷ்மீர் ஆட்சியாளராக விளங்கினார்.
(Maharaja Hari Singh) காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதியில் (தற்போது அஸாத் காஷ்மீர் என அழைக்கப்படுகின்றது) இஸ்லாமி யரின் ஆதிக்கமும், ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்துக்களது செல்வாக்கும் லடாக் (Ladakh) பகுதியில் பெளத்தர்களின் செல்வாக்கும் காணப்பட்டது. இவர்களுடன் சீக்கியர்கள், பிராமணர்களையும் உள்ளடக்கியதாக காஷ்மீர் அமைந்திருந்தது. அஸாத் காஷ்மீர் 1947களில் பாகிஸ்தானை ஆதரித்ததனால் மன்னன் "ரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதனால் முதலாவது பாகிஸ்தான் இந்தியா மோதல் வெடித்தது. 1949ஆம்
கே.ரீ.கணேசலிங்கம் -1.75

Page 90
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
ஆண்டு யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்குரியதாகவும், அஸாத் காஷ்மீர் பாகிஸ்தானுக்குரியதாகவும் பிரிவினை செய்யப்பட்டது. அப்போது அரசியல் யாப்பு 370வது சரத்தின்படி ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவின் சுயாட்சிப் பரப்புக்குள் ஜவகர்லால்நேரு மகாராஜா "ரிசிங் உடன்படிக்கை” கொண்டு வந்தது.* ஆனால் ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்த பெரும்" பான்மையான முஸ்லீம்கள் இந்தியாவுக்கு எதிரான அரசியல் போக்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய அரசியல் தலைவர்களும், ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் வளர்ச்சியடைந்து, முரண்பாட்டைத் தீவிரப்படுத்தின எனலாம். 1951ஆம் ஆண்டு தேர்தலில் மிதவாத அரசியலில் தலைவரான சேக் அப்துல்லா இறக்கும் வரை காஷ்மீரில் செல்வாக்குடைய தலைவராக அவரும் அவரது அரசியல் கட்சியும் காணப்பட்டது. 1953 களிலேயே இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக காஷ்மீரிய மக்களை அப்துல்லா வழிநடத்தத் தொடங்கினார். 1964 ஏப்ரலில் பாகிஸ்தானுடன் நேரு அரசாங்கம் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சமரசத் திட்டம் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து 1965இல் இரண்டாவது பாக்கிஸ்தான் - இந்தியா யுத்தம் வெடித்தது. 1971ஆம் ஆண்டு மூன்றாவது யுத்தம் வங்களாதேஷ் தொடர்பானதாக அமைந்த போதும் காஷ்மீர் விவகாரம் முதன்மையடைந்து “சில்மா" உடன்படிக்கைக்கு காரணமாக அமைந்தது. 1983 தேர்தலில் பாருக் அப்துல்லா தலைமையில் அரசமைந்தாலும் பின்னர் காங்கிரசுக்கும் அவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்திராகாந்தி "பரா" இராணுவத்தினரை காஷ்மீருக்குள் அனுப்பி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர். இதனால் விரக்தியுற்ற ஜம்மு” காஷ்மீரிய முஸ்லீம்கள் "தீவிரவாதத்தில்" முழுமையாக ஈடுபடத் தொடங்கினர்." இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பும் பல அமைப்புக்கள் அங்கு உருவாகிய போதும் ஜம்மு காஷ்மீரில் 656560Gd (p6768760f (JKLF. Jammu Kashmiria Liberation Front) மிகப் பிரபல்யமான அமைப்பாக விளங்கியது. இஸ்லாமியர்கள் "பள்ளிவாசல்களிலேயே தமது ஆயுத விநியோக நிலையமாகவும், பிரசாரத் தளமாகவும்" அரசியல் நடவடிக்கைகான மையமாகவும் பயன்படுத்துவதனால்° காஷ்மீர் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகவும் ஆயுத போராட்ட வாதிகளாகவும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா தனது இராணுவத்தைத் தீவிரவாதத்துக்கு எதிராக வளர்க்க,
- 176- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தீவிரவாதமும் இராணுவ வன்முறை அரசியல் கலாசாரமும் பரஸ்" பரம் இராணுவ பரிமாணம் விரிவடைய உதவின.
காஷ்மீரிய அரசியல் கலாசாரம் அடிப்படையில் ஆயுத கலாசாரமோ (Gun Culture) ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமகன் வரை ஆயுதத்தினாலேயே தமது உறவுகளைத் தீர்மானித்து வருகின்றனர்." ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் இராணுவத்தினரும் மக்கள் மீது மிகக் கொடுமையான வன்முறைகளை பிரயோகிக்கினறனர். இந்துக்கள் பெருமளவானவர் காஷ்மீரை விட்டு வெளியேறியதனால் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் ஆட்சியாளர்களாலும் இந்துமதவாத அமைப்புக்களாலும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
இதே போன்று இந்தியாவின் இன்னோர் மாநிலமான பஞ்சாப்பின் காலிஸ்தான் தனியரசுக்கான போராட்டமும் இராணுவ செல்வாக்கையே ஏற்படுத்தியிருந்தது. இந்து - சீக்கியர் சமூகம் அடிப்படையில் ஒன்றுபட்டிருந்தாலும் மதப்பிரிவுகளாலும், பண்பாட்டினாலும் வேறுபட்டவர்களாக தம்மைக்காட்டிக் கொண்டனர். சீக்கிய சமூகத்தின் நடத்தைவாதம் (Behaviorism) வன்முறைப்பக்கம் அதிகம் சார்ந்திருப்பதனால் வன்செயலை ஏற்றுக்கொள்வதுடன் எதிர்த்துப் போராடும் போக்கும் அவர்களிடமுண்டு என்ற கருத்து நிலவுகின்றது.? சீக்கிய மரபுவாத மூலத்தில் இருந்தே காலப்போக்கில் வன்முறை அடிப்படையிலான தீவிரவாதம் வலுவடைந்தது. காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்த சீக்கிய சமூகம் மிகத் தீவிரமான ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. இதனை அடக்க இந்திய அரசு பல தடவை பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. 1977, 1980, 1984, 1987, 1991 ஆகிய ஆண்டுகளில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் பல ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவகையில் கூறுவதாயின் பஞ்சாப் மாநிலம் இந்திய அரசின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட போதும் இராணுவமும் விசேட பொலிஸ் பிரிவுமே ஆட்சி நிகழ்த்தி வந்தன. மிக மோசமான தாக்குதலான நீல நட்சத்திர இராணுவ நடவடிக்கை (Operation Blue Star) அமைந்திருந்தது. இதில் சீக்கியரின் பொற்கோவில் அமைந்துள்ள நகரமான அமர்சரஸ் (Amritsars) உட்பட அப்பகுதியில் மேற்கொண்ட இராணுவ நடவக்கையால் தீவிரவாத தலைவரான பிந்தரன்பாலே உட்பட இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்." இந்நடவடிக்கையின் பிரதிபலிப்பாகவே இந்திராகாந்தியின் படுகொலை அமைந்தது. மேலும் சங்கிலித்
கே.ரீ.கணேசலிங்கம் -177

Page 91
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தொடரான பல நிகழ்வுகள் பஞ்சாப்பின் அரசியலோடு இராணுவத்தை இறுக்கமாக பிணைத்தது. போராட்டம் கைவிடப்பட்டாலும் அதனால் உருவான இராணுவத்தின் செல்வாக்கு இந்திய அரசியலில் முதன்மை பெற்று வருகின்றது.
இவ்வாறு காஷ்மீர் பஞ்சாப் மாநிலங்களின் தனிநாட்டுக்கான போராட்டம் இந்திய இராணுவத்தை செல்வாக்குமிக்கதாக ஆக்கிய" துடன் இராணுவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பஞ்சாப்புடன் ஒப்பிடும்போது காஷ்மீர் இந்தியா இராணுவத்தை மிகப் பெரும் இராணுவமாக வளர்ப்பதில் அதிக பங்கு வகித்திருக்கின்றது. காஷ்மீர் பிணக்கு பாகிஸ்தானுடனான பிரச்சனையாக விளங்கியதால் இந்திய இராணுவத்தின் முக்கியத்துவம் அதிஉச்சமாக அமைந்தது. இவ்விரு பிரதேசங்களைப் போன்று அஸாம், நாகலாந்து மாநிலங்களிலும் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் அதற்கு பதிலடியாக இராணுவத்தின் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.* இவ்வாறு இந்தியாவின் பிரிவினை கோரும் மாநிலங்களின் அரசியல் போராட்டங்கள் இராணுவவாதத்தை தவிர்க்கமுடியாதபடி அரசியல் கலாசாரத்துள் இழுத்து வருபவையாக காணப்படுகின்றது.
இலங்கையில் மிக நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் தமிழ் சிங்கள முரண்பாடும் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கை வலிந்து இணைப்பதுபோல் காணப்படுகிறது. 1950களிலிருந்து 1970களின் பிற்பகுதிவரை அகிம்சைப் போராட்டத்தை நடாத்திய தமிழ் மக்கள் 1977களிலிருந்து தனிநாட்டுக் கோரிக்கையை ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாற்றினார்கள். ஆயுதப்போர் 1977களிலும் 1983 களிலும் இனக்கலவரத்துக்கு வழிவகுத்தது. பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள மக்களின் நகரங்களில் கொல்லப்பட்டதுடன் தென்பகுதியிலிருந்து விரட்டப்பட்டனர். தமிழ் மக்கள் உடமை" களை இழந்ததுடன் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர். தற்போது வட கிழக்கு பிரதேசம் இராணுவத்தின் நேரடி ஆட்சிப் பிரதேசமாக அமைந்துள்ள தனித்தீவாக விளங்கும் இலங்கைத் தமிழ் தேசிய இனத்தின் தனிநாட்டுக் கோரிக்கையை முறியடிக்கவே பலமான இராணுவத்தை கட்டிவளர்த்து வருகிறது. இதனால் வட கிழக்குப் பகுதியை இராணுவத்தின முழு பிராந்தியமாக ஆளும் அரசுகள் மாற்றி வருகின்றன. 1958ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான கல்லோயாப் படுகொலை இனரீதியான வன்முறை அரசியல் கலாசாரத்தின் தீவிரவாதத்தன்மையை வெளிப்படுத்தியது.* இவ்வன்முறையில் அரச படைகளும், காடையர்களும் ஈடுபட்ட"
-178- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
போது தமிழ்த் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராச்சி மாநாட்டின்போது வெடித்த வன்செயலினால் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் - சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆளும் கட்சியும், பொலிசாரும் கலந்துகொண்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.* இதற்கொரு வகையில் 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச்சட்ட மூலம் உந்துதலாக அமைந்தது எனலாம். தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களின் குடியேற்றம் ஆட்சிக்கு வந்த அரசுகளில் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புக்கான செயலாகவே கணிப்பீடு செய்யப்படுகிறது. கிழக்கு இலங்கையில் நிறுவப்பட்ட கல்லோயா குடியேற்றம் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்தியது. அதே போன்று ஜே. ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கம் மேற்கொண்ட "வெலிஓயா” குடியேற்றம் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கான வன்முறைக்கு வழிவகுத் தது. இரண்டு பிரதேசங்களிலும் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அல்லது அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். “வெலிஓயா” பிரதேசம் இராணுவ வலயமாகவும், இராணுவக் குடியேற்றங்களைக் கொண்ட பகுதியாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இராணுவமே தமிழ் - சிங்கள எல்லையை வரையறுக்கும் சக்தி படைத்த அமைப்பாக விளங்குகின்றது. தமிழ் தரப்பில் எழுச்சியடைந்த விடுதலைப் போராட்ட அமைப்புக்களும் இராணுவ ஆட்சி அணுகுமுறைமையையே,பின்பற்றி வருகின்றன. அரச இராணுவத்திற்கு மாற்றாக கெரில்லாப் போராட்ட முறைமை" யைக் கையாண்டாலும் அதுவும் இராணுவ அரசியல் கலாசாரத்" துக்கான (இரத்தமும் - இரும்பும்) அம்சத்தையே கொண்டிருக்கின்றன. விடுதலை அமைப்புக்கள் எல்லாம் மனித உரிமைகளை பின்பற்றுபவையாக காணப்படாது, கொலை, படுகொலை என வன்முறை அரசியல் கலாசாரமே அதிகரிக்கின்றது.
தென்னாசிய நாடுகளில் பாகிஸ்தான் வங்களாதேஷ் என்பவற்றுக்கு அடுத்த நிலையில் இராணுவ சதியினை மேற்கொள்ளக்கூடிய வலு இலங்கை இராணுவத்திடம் உண்டென்பதை 1967ஆம் ஆண்டு “இராணுவ சதி"க்கான முன்னாயத்தங்கள் காட்டுகின்றன. அச்சதி பிசுபிசுத்துப் போனாலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவத்தின் எழுச்சிக்கான பரிமாணத்தைக் கோடிட்டுக் காட்டு"
கே.ரீ.கணேசலிங்கம் - 179

Page 92
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
கின்றது. 1967ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவ சதியை தவிர்த்து நோக்கும்போது சுதந்திரத்திலிருந்து சுமார் கால் நூற்றாண்டு காலமாக இலங்கையில் இராணுவம் அரசியல் தலைமைக்கு விசுவாசமானதாகவும், மரபுரீதியான இராணுவ கடமைகளுடன் கட்டுண்டதாகவுமே இருந்து வந்தது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் படிப்படியாக விரிசலடைந்து வந்த சிங்கள- தமிழ் உறவு இராணுவத்" தின் முக்கியத்துவத்தையும் வளர்த்து வந்துள்ளது. சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு இராணுவம் பக்கத்துணையாக இருந்து வந்துள்ளது. தனிச்சிங்களச் சட்டம் சுதந்திரத்தின் பின்னர் தொடர்ச்சியாகவும், இரகசியமாகவும் தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், கல்வியிலும், அரசசேவையிலும் தமிழ் மக்களுக்கு காட்டப்பட்ட பாரபட்சங்கள் போன்ற" வற்றால் தமிழ் மக்களிடம் தோன்றிய அதிருப்தியானது அகிம்சை ரீதியான போராட்டமாக இருந்து வந்தது. இந்த அகிம்சைப் போராட்ட காலத்தில் கூட தமிழ் மக்கள் இம்சைப்படுத்தப்படுவதற்கும், அடக்கப்படுவதற்கும் சிங்கள பேரினவாதிகளின் இராணு" வம் இருந்து வந்தது. தீவிரவாத தமிழ் இளைஞர்கள் சிங்கள பேரினவாதம் நிலைப்பதற்கும் வளர்வதற்கும் இராணுவமே கருவியாக அமைகின்றதெனக் கருதி அந்த இராணுவத்தை எதிர்க்கும் நோக்கில் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அகிம்சை ரீதியாக இடம்" பெற்று வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை நோக்கிய திருப்பம் இலங்கை அரசியலில் இராணுவத்தின் பங்கை முன்னணிக்கு கொண்டு வந்தது. தமிழ் இளைஞர் குழுக்களுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான மோதல்கள் நாளடைவில் இலங்கை அரசியலில் இராணுவத்தின் பங்கை அதிகரித்தது. இலங்கையினுடைய சுதந்திரத்தையும் இறைமையையும் கட்டிப் பாதுகாப்பவர் இராணுவத்தினரே என அரசியல் தலைவர்கள் புகழ்ந்து வந்துள்ளனர். அவசரகால சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அளவுகடந்த அதிகாரங்கள் இலங்கையினுடைய ஜனநாயகத்தை பலவழி களில் கேள்விக்குள்ளாக்கியது. பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற போர்வையில் முப்படைகளுக்கு வழங்கப்பட்ட மிகையான அதிகாரங்கள் இலங்கையில் இராணுவ சதிக்கான வாய்ப்புக்களையும் அதிகரிக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.
- 180- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
1983ஆம் ஆண்டு நிகழ்ந்த இன வன்முறை அரசியல் கலாசாரத்தில் இராணுவமும், ஆட்சியாளரும் கொண்ட செல்வாக்கை விளக்க எல். பியதாஸா என்ற ஆய்வாளரின் கூற்று நோக்குவது பொருத்தமானது.
"29.07.1983 அன்று நுவரெலியாவின் நகரப் பகுதி இராணுவத்தினரால் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பேருந்துகளில் தமிழரை ஏற்றிச் செல்ல வேண்டாமென பேருந்து நடத்துனர்களிடம் உத்தரவு இடப்பட்டிருந்தது. அமைச்சர் காமினி திசாநாயக்கா தமது கட்சிக்காரருடன் கூட்டம் நடத்துவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு வந்தார். இதற்கு முதல் நாள் பல பிரபல்யமான காடையர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஹெரத் ரணசிங்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வித்தார். காமினி திஸாநாயக்காவின் கூட்டம் முடிந்தவுடனேயே கைது செய்யப்பட்டிருந்த காடையர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் இரு இந்துக் குருமாரை தாக்க முயற்சித்தனர். அவர்கள் இருவரும் ஒருவாறு தப்பிச் சென்றனர். காடையர் தமது முயற்சியில் வெற்றி பெறாததால் இன்னோர் காடையர் குழுவுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் ஒரு தமிழ்க் கடையைச் சுற்றி பெற்றோலை ஊற்றி தீ மூட்டினர். இவ்விடத்தில் இராணுவத்தினர் காடையர்களுக்கு கலன்கணக்கில் பெற்றோல் வழங்கினர். "அன்று ஏறக்குறைய சகல தமிழ்க் கடை" களும் தீயிடப்பட்டன.” “எஞ்சியிருந்த தமிழ் கடைகளுக்கும் இராணுவத்தினர் தீயிட்டனர்" ஏறக்குறைய நடுப்பகலளவில் நுவரெலியா நகரமே அக்கினிக் கடலாக காட்சியளித்தது. ஒரு சிறுமி உட்பட பதின்மூன்று பேரை இக்காடையர் உயிருடன் நெருப்பிட்டுக் கொன்றனர். "இக்கூட்டத்தின் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான காமினி திஸாநாயக்காவே ஆவார், கட்டளையிட்ட பின்பே காடையரும் இராணுவத்தினரும் இத்தகைய நடவடிக்கை" களில் ஈடுபட்டனர்.* இது 1983இன் வன்முறை அரசியல் கலாசாரத்தில் அரச தரப்பினரும், இராணுவமும் எப்படி செயல்ப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
இவ்வாறே தென்பகுதி இளைஞர்கள் அமைப்பான ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) யின் ஆயுதம் தாங்கிய போராட்டமும் இலங்கையின் இராணுவ இயந்திரத்தின் வளர்ச்சிக்கு இன்னோர் காரணியாக அமைந்துள்ளது. 1971, 1989களில் பாரிய இராணுவ
கே.ரீ.கணேசலிங்கம் -181 -

Page 93
6ģeöreTdur6ešr9Jfēšodib6OTgJb
வன்முறை மூலம் அரசு இவ்வமைப்பை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய படைகள் இரண்டு தடவை (1971-1987) இலங்கைக்கு வருவதற்கு ஜே.வி.பி இன் எழுச்சியே காரணமென கருதப்படுகின்றது.* அக்காலப்பகுதியிலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டனர், அல்லது சிறையிலடைக்கப்பட்டனர். 1989ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவ நடவடிக்கை மோசமான படுகொலைக் கலாசாரத்தை (Murder Political Culture) வெளிப்படுத்தியது. அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண சிங்கள இளைஞர்கள் வரை வகை தொகை இன்றி படுகொலையை அன்றைய அரசாங்கம் நிறைவேற்றியது.* சமகாலப்பகுதியில் வடக்கிலும், தெற்கிலும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் உதயமாகின. வடக்கில் தனிநாட்டுக் கோரிக் கைப் பிரதான கொள்கையாக அமைய தெற்கில் ஆட்சித்துறையை மாற்றியமைப்பதற்கான போராட்டமாக அமைந்தது. இரண்டு போராட்டத்தையும் அடக்குவதற்கு ஆட்சி செலுத்தும் இரு கட்சிகளும் இராணுவத்தை மாறிமாறி பலப்படுத்தி வருகின்றன. இராணுவத்தின் வளர்ச்சியால் இலங்கை முழுவதும் நிகழும் மனித உரிமை மீறலினால் சமூகநிதி சாத்தியமற்றதாக மாறிச் சட்ட ஒழுங்கை பலவீனப்படுத்துகிறது.
தமிழ் - சிங்கள முரண்பாடு போன்று ஏனைய முரண்பாடுகள் வலுவானதாக இல்லாவிட்டாலும் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் இராணுவப் பாணியிலான வன்முறைக் கலாசாரத்துக்கு வழிவகுத்து வருகின்றது. சாதி ஒடுக்குமுறைகள், சாதி வேறுபாடுகள் கூட இந்தியா போன்று இலங்கையிலும் முரண்பாட்டு அரசியல் கலாசாரத்துக்கு தூபமிடுபவையாக அமைந்திருந்ததை கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக (ஜெனரல் ரத்வத்த) நியமித்துள்ளமை இராணுவம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் வட கிழக்கு புனர்வாழ்வு அதிகாரியாக முன்னாள் இராணுவ தளபதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி பாராளுமன்ற பிரதி சபாநாயகராக, பாதுகாப்புச் செயலாளராக, மற்றும் வெளிநாட்டு தூதுவர்களாகவும், இராஜதந்" திரிகளாகவும், முன்னால் இராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள்
-182- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நியமிக்கப்படும் நிகழ்வு இலங்கை இராணுவ அரசியல் கலாசாரத்தில் வேகமாக இணைகிறதென்பதையே காட்டுகின்றது. இந்நிலை இன்னும் ஆறு ஆண்டுகளில் இலங்கையின் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடுமெனவும், தவிர்க்க முடியாமல் இராணுவத்தின் ஆட்சியை இலங்கை மக்கள் அனுபவிக்க வேண்டிவரும் எனவும் வடகிழக்கு முன்னாள் ஆளுனர் காமினி பொன்சேகா தெரிவித்" துள்ளார்.*இதுவரை காலமும் ஆட்சிசெய்த அரசாங்கங்களை விட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இராணுவத்திற்கு அதிக பங்கை வழங்கி வருகிறது. இவ் அரசாங்கம் இனமுரண்பாட்டுக்கான தீர்வாக இராணுவ அணுகுமுறைகளிலேயே அதிகம் நம்பியிருக்கின்றது. போர் வெற்றிகளை தீர்வுகளாக மட்டும் கொள்ளாது அவற்றை தேர்தல்களில் வெல்வதற்கான சாதனங்களாக பயன்படுத்தி வருகிறது. இச்செயல் தமிழ் சிங்கள முரண்பாடுகளில் வன்முறை வெளிப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைவதுடன் உடன்பாட்டுக்கான அணுகுமுறையினை பலவீனப்படுத்துமென எதிர்வு கூறப்படுகிறது. 1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா உடன்படிக்கை, 1948 திம்பு உடன்படிக்கை, 1987 இந்திய இலங்கை உடன்படிக்கை என இனத்துவ முரண்பாட்டுக்கான தீர்வுகள் பல முன்வைக்கப்பட்ட போதும் இரு தரப்பினரும் கொண்டிருந்த பரஸ்பர அவநம்பிக்" கையும், காழ்ப்புணர்வும் இவ்வுடன்படிக்கைகள் செயல்வடிவம் பெறாமல் போனமைக்கு காரணங்களாகும். எல்லா உடன்படிக்" கையின் தோல்வியிலும் சிங்கள பெளத்த பேரினவாதமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. எனவே தென்னாசிய நாடுகளில் எல்லாவற்றிலும் இராணுவத்தின் கை ஓங்குவதற்கும் இன முரணி பாட்டிற்கான சிக்கல்கள் முக்கிய காரணியாக அமைந்துள்ளன.
பிராந்திய வல்லரசு
தென்னாசியப் பிராந்தியம் இந்து சமுத்திரப் பிராந்தியத்துள் அடங்கும் ஒரு துணைப்பிராந்தியமாகும். இந்து சமுத்திரத்திலுள்ள துணைப்பிராந்தியங்களுள் ஒப்பீட்டடிப்படையில் அதிக அரசியல் உறுதிப்பாடு கொண்ட பிராந்தியமும் இதுவாகும். உள்நாட்டுக் கிளர்ச்சிகளையும், வல்லரசுகளின் சவால்களையும் எதிர்கொண்ட போதும் இந்தியா இப்பிராந்தியத்தில் ஸ்திரமான ஜனநாயக அரசாக விளங்குகிறதெனக் கூறலாம். இந்தியாவிற்கு இராணுவ ரீதியில் சவால்விடும் பாகிஸ்தான் இப்பிராந்தியத்தில் முக்கியத்துவம்
கே.ரீ.கணேசலிங்கம் - 183

Page 94
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
வகிக்கும் இன்னோர் அரசாகும். அதே சமயம் வெளிச்சக்திகள் இந்தியாவின் அரசியல் அபிலாசைகளை மட்டுப்படுத்துவதற்கு அயல்நாடுகளான பாகிஸ்தான், வங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை மறைமுகமாகப் பயன்படுத்த முற்படுகின்றன. இந்நாடுகளது எதிர்ப்பு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் போட்டிக்கு அச்சுறுத்தலாக அமையாத போதும், இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு அஞ்சி இந்நாடுகள் தமக்கிடையேயும், வெளிச்சக்திகளுடனும் ஒத்துழைப்புக்களை பலப்படுத்தி வருகின்றன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிறிய நாடுகளாக காணப்படுகின்ற நாம் எமக்கிடையே பிராந்திய ஒத்துழைப்புக்களை அவசியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்." என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. இதனை விளங்கிக்கொள்ள மேலும் சில அம்சங்களை நோக்குவோம்.
1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த ஆர். பிரேமதாஸா ஆசியான் அமைப்பில் இலங்கை சேர்வதற்கான மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.? இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றான திருமலையில் அமெரிக்கத்தளம் ஒன்று அமைப்பதற்கான உடன்படிக்கையில் 1982இல் இலங்கை ஒப்பமிட்டதாக பேராசிரியர் ஒஸ்மெண்ட் ஜெயரத்னா குறிப்பிட்டுள்ளார்." பாகிஸ்தான் வங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் நெருக்கம் எவ்வளவுக்கு இருக்குமோ அவ்வளவுக்கு அது தென்னாசியப் பிராந்திய அரசியல் உறுதிப்பாட்டையும், அமைதியையும் பேண உதவும்? என வங்களாதேஷ் ஜனாதிபதி ஜெனரல் ஜியாஉர் ரஹற்மான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தின் போது தெரிவித்தார். பூட்டான், மாலைதீவு என்பன இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுள்ள நாடுகளாகும். நேபாளமும் இந்தியாவுடன் சிறு, சிறு பிணக்குகளைக் கொண்டிருந்தபோதும் இந்தியாவின் செல்வாக்குக்குள் உட்பட்ட நாடாகவே விளங்குகிறது. நேபாளம் ஒர் இந்து அரசாக இருப்பதுடன் சீனா மீதான சந்தேகம் இந்துக்கள் வாழும் இந்தியாவுடன் உடன்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஒரளவேனும் பேண உதவுகின்றது. இதனை 1950 ஆண்டு லோக்சபாவில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆற்றிய உரை மூலம் உணர்த்தலாம்.
"நேபாளத்தின் மீது எந்த வெளிநாட்டின் தலையீடும் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. நேபாளத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கிறோம். ஆனால் இந்தியாவினூடாக செல்லாமல் எவரும்
-184- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
நேபாளத்துக்குள் செல்லமுடியாது என்பதை சிறுபிள்ளையும் அறியும் நேபாளத்துடன் நாம் கொண்டுள்ள நெருக்கமான உறவைப் போல வேறெந்த நாடும் அவ்வளவு நெருக்கமான உறவை அதனுடன் கொண்டிருக்க முடியாது." 1954களில் நேபாளத்தின் மன்னராட்சிக்கு எதிராக சீன சார்பு கம்யூனிஸ்டுக்கள் நடாத்திய போராட்டத்தை நசுக்க இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது. ஆனால் சீன சார்பு மாவோயிஸ்ட்டுக்களின் எழுச்சி நேபாளத்தை தற்போது குடியரசாக மாற்றியுள்ளது. நேபாளத்தின் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு நெருக்கடி ஏற்பட வாயப்பு உண்டென விமர்சனங்கள் எழுந்துள்ளன. s
மேலும், இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க வாதத்தை அமுல்படுத்த பிராந்திய நாடுகள் மீது பல தடவை இராணுவ அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிவினையை தொடர்ந்து பலபாரிய யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான்" வங்களாதேஷ் பிரிவினையில் இந்தியாவின் போக்கு பிராந்திய வல்லரசுக்கான அரசியல் மேலாதிக்" கத்தை நிரூபித்தது. இதே போன்று இந்தியா இப்பிராந்திய நாடுகளின் உள்நாட்டு அரசியல் பிணக்குகளை வெளிச்சக்திகள் தலையிடாத வகையில் அவற்றை தீர்த்து வைக்கும் அணுகுமுறைகளை பல தடவை கையாண்டுள்ளது. இலங்கையில் 1971ஆம் ஆண்டு ஏப்ரலில் நிகழ்ந்த கிளர்ச்சியை அடக்க இந்திய இராணுவத்தை அனுப்பியமை, 1987ஆம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் நோக்கில் இலட்சக்கணக்கான படைகளை வட கிழக்கில் குவித்தி ருந்தமை என பல விடயங்களை குறிப்பிடலாம். இவ்வாறு இலங்கை மீது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் அரசியல் கலாசாரத்தை நியாயப்படுத்தும் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவரும், இராஜதந்திரியுமான தீக்ஷ சித்தின் கூற்றை நோக்குவோம். “பாகிஸ்தான், இலங்கை கடற்படைக்கு பயிற்சியளித்தமையும், அதன் உதவிகளை இலங்கை நாடியிருந்தமையும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக் கூடிய நிலை உருவாக்கியிருந்தது" ஆனால் இந்திய விவகாரத்துக்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஸ்டான்லி ஜெயவீர கூறும் கருத்து அதிர்ச்சியாகவுள்ளது. “1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்" கைக்குத் திட்டமிட்டிருந்தார் என்றும் அதன் பிரகாரம் திருவனந்த புரத்தில் விசேட இராணுவப் பிரிவொன்று (Sot.KIndependent partBrigade) தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், மத்திய
கே.ரீ.கணேசலிங்கம் -185

Page 95
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
அரசின் கட்டளைக்காக அப்படைப்பிரிவு காத்திருந்ததாகவும், இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின் அக்கட்டளை என்றுமே வரவில்லை" என்றும் குறிப்பிட்டார்.”
தென்னாசிய நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் பாரிய அளவில் இராணுவத்தை கட்டியெழுப்பியுள்ளன. 1998களில் இரு அரசுகளும் வல்லரசு அந்தஸ்தை உறுதிப்படுத்தும் அணுவாயுதத்தை பரிசோதித்தமை தென்னாசியாவில் மட்டுமன்றி உலகநாடுகள் யாவற்றிலும் ஒப்பீட்டு ரீதியில் தேசிய வருமானத்தில் பெரும் தொகையை இராணுவ வளர்ச்சிக்கு செலவிடும் நாடுகளில் இந்தியவும் பாகிஸ்தானும் உள்ளடங்குகின்றன. இவ்வல்லரசுகள் தமது தேசிய வருமானத்தில் இராணுவ வளர்ச்சிக்காக செலவீடு செய்யும் வீதத்தை பின்வருமாறு நோக்குவோம்.
gjL6u6UD6COT VIII
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவ செலவீனம் பற்றிய விபரம்
நாடுகள் 1989 1990 1991-1992 1993 1994.1995. 1996 1997 1998
இந்தியா 3.1 2.8 2.6 2.4 2.5 2.4 2.3 2.3 2.4 2.5 பாகிஸ்தான் 6.6 68| 68| 6.7 6.8 | 62| 5.8 5.8 5.8 4.9
gs(Igub: SIPRI YEAR BOOK- 1999
மேலும் இரு நாடுகளது ஆயுத தளபாட வளர்ச்சியில் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி இராணுவத்தின் கீர்த்தியை அரசியல் கலாசாரத்தில் நிலைநிறுத்தியுள்ளது. இந்தியா 1983களில் Gd it 6 fugig,60fug075, FIT Lib (SAM-Surface- to-Air- Missiles) ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பின்பற்றி சிம் (SSm- Surface-to Surface-Missles) வகை ஏவுகணைகளை தயாரிக்க தீர்மானித்தது." இதனை அடுத்து இரு நாடுகளது ஏவுகணைத் தொழில்நுட்பத்திற் கான போட்டி ஆரம்பித்தது. இந்தியா திரிசூல் (Trish) ஆகாஸ் (Akash) நக் (Nag) பிருத்வி (Prithvi) அக்னி (Agni) என ஏவுகணைப் பரிசோதனைகளை விரிவுபடுத்திக் கொண்டு சென்றது." பதிலுக்கு பாகிஸ்தானும் ஹ7ப்-1 (Harf) ஹ7ப்-II (harf-I) என்பவற்றைப் பரிசோதித்தது. இவை ஏறக்குறைய 80 கி.மீ இருந்து 280கி.மீ வரையான வீச்சு எல்லைகளைக் கொண்ட ஏவுகணைகளாக அமைந்தன." 1993களில் அமெரிக்கத் தயாரிப்பான எம்- I (அ-I) ஏவுகணையைப் பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் பரிசோ
- 186- கே.ரீ.கணேசலிங்கம்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
தித்தது." 1998இல் இந்தியா 2000 கி.மி தூரம் தாக்கும் திறன் கொண்ட "அக்னி" ஏவுகணையை பரிசோதித்தது ஐந்து வாரத்தில் பாகிஸ்தான் 1500 கி.மீதுரம் தாக்குதிறன் கொண்ட கோரி (Ghauri) ஏவுகணையைப் பரிசோதித்தது." இவ்வாறு பரஸ்பரம் இரு அரசுகளும் தமது இராணுவ பலத்தைப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டன.
தென்னாசிய நாடுகளின் அரசியல் கலாசார்த்தில் இராணுவ பரிமாணத்தை ஏற்படுத்தியதில் சர்வதேச வல்லரசுகளது அணுகு" முறைகளுக்கும் பங்கு உண்டு. குறிப்பாக பனிப்போர் காலப்பகுதி யில் சர்வதேச மட்டத்தில் முதலாளித்துவ, சோஸலிஸ முகங்களாக முரண்பட்டு அமெரிக்காவும், சோவியத்யூனியனும் ஆதிக்க போட்டி முனைப்படைந்திருந்தது போல் தென்னாசியாவும் அதன் தாக்கத்திற்" குள்ளாவதினின்று தவறவில்லை. பாகிஸ்தான் அமெரிக்க முகாமையும், இந்தியா சேவியத்முகாமையும் ஆதரித்து தொழில்" பட்டன. 1980களில் இந்தியா வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட 82% சதவீதமான ஆயுத தளபாடங்கள் சோவியத்யூனி. யனிடமிருந்தே கிடைத்ததாகும்." இவ்வாறே சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் குவிக்கப்பட்டபோது கர்ட்டர் நிர்வாகம் “பாகிஸ்தானின் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வேண்டிய இராணுவ உபகரணங்க" ளையும், மற்றும் நிதி உதவிகளையும் வழங்கும் எனவும் தேவை ஏற்படுமிடத்து படைப்பலத்தையும் வழங்க தயாராகவுள்ளது? எனவும் குறிப்பிட்டார். இலங்கை அமெரிக்க சார்பினை கொண்டி" ருந்தமை உண்மையாகும். ஆனால் சில காலப்பகுதிகளில் அமெரிக்கா இந்தியாவின் மேல் செல்வாக்கை கொண்டிருந்த அரசியல் போக்கினையும் காணமுடிகிறது. இதனை 1977 ஜூலையில் அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலாளரான லோறன்ஸ் கிறிஸ்டோபர் புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, தென்னிந்தி யாவில் இந்தியா பிராந்திய தலைமைத்துவத்தை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது" எனக் குறிப்பிட்டதி லிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது. இதே போன்று 1960களில் சோவியத் யூனியனும் பாகிஸ்தானும் நெருக்கமான உறவை வைத்திருக்க முயற்சித்ததைக் காணலாம். அப்போதைய இர றுவ ஆட்சியாளரும், ஜனாதிபதியுமான அயூப்கானுடன் மாள' கோ கொண்டிருந்த ஆயுத உடன்பாடு" எனவே இந்தியாவிWம் பாகிஸ்தானிலும் அரசியல் கலாசாரத்தில் இராணுவ பரிமானதை
கே.ரீ.கணேசலிங்கம் - 17

Page 96
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
விரிவடைவதற்கு வல்லரசுகளது பங்கு கணிசமான செல்வாக்கை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகின்றது. இதனை மிகச் சிறிய அளவில் ஏனைய தென்னாசிய நாடுகளிலும் அவதானிக்கலாம். தென்னாசிய நாடுகளில் காணப்படும் இன முரண்பாடுகளையும் எல்லைப் பிரச்சனைகளையும் இராணுவ அரசியல் கலாசாரத்துக்கு மேலதிக உந்துதல்களாக காணப்படுகின்றது. இந்நாடுகள் அனைத்" தும் தமது பொருளாதார உதவிகளையும் ஆயுத உதவிகளையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தே அதிகம் பெறுகின்றன. இது புதிய உலக ஒழுங்கு (New World Order) உருவாகிய பின்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இருதுருவ அரசியல் மறைந்ததேயன்றி ஆயுத இராணுவ வாதத்தின் முனைப்பு மறைந்ததாக தெரியவில்லை. இந்த விதச் சூழலில் தென்னாசியாவும் அதில் இந்தியாவும் மிக முக்கிய மையங்களாக மாறியுள்ளது.
அடிக்குறிப்புகள்
(1) Golam W. Choudhary, Pakistan, Transition form military to Civilian rule, Essex, Scorpiont Publishing Ltd, England, 1988, PP 22-23
(2) Biman Behari Majumdar; Principales of Political Science -
and Government, Brothers and Company Ltd, Cacatta, 1949, PP 40-42.
(3) Golam WChodhury, op.cit, P.28.
(4) J. Denis Derbyshire and Ian Derbyshire, Political System of
the World, Allied Publishers Ltd, New Delhi, 1989, P60.
(5) Golam W. Chodhury, op.cit, P.27
(6) Paul Commack David Pool, and William Tordoff. Third World Politics, AComparative Introduction, Macmillan Publication, London, 1988, PP 115-116.
(7) Hunammed A Ouaddas, Pakistan: A Case study of Pural Society, Minerva Associates, Calcatta, 1981, P 103.
-188- கே.ரீ.கணேசலிங்கம்

(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Alaur Rahman, Pakistan, Unity or Further Division? A.J Wilson and D. Daltion (Ed.) The states of south Asia, Problems of national Integation, CHurst and Company London, 1982, PP. 198- I 99.
1իid P 199,
Ibid, P. 200.
Ibid.
Ihial, P. 203
Ibid, P. 205.
Ibid, P. 208
M. Rashiduzzman, East-West Conflict in Pakistan, Bengali Regionalisam, . 1947-1970 A.J. Wilson and D. Daltion (Ed) op. cit, P, 115
Ibid, P 116.
Ibid., P 124.
Golam W. Chodhury, op.cit, P. 22.
Najam Refique, Pakistan Aryny: Towards a new Professionalisam, Verinder Grover and Ranjan Arora (Ed), Pakistan Fifty years of Independence, Deep and Deep Publication, New Delhi, 1977, P.255.
Golam W. Chodhury, op.cit, P 25.
Cited, Ibid, P 25
Ibid, P. 20.
Ibid, PP 33-42.
Aabha Dixit, Pakistan's Economy, Survival or Catastrophe? STRATEGIC ANALYSIS, December 1988, Vol. XII, No, 9, PP. 1 063- 1095.
கே.ரீ.கணேசலிங்கம் - 189

Page 97
(25)
(26)
(27)
(28)
(29)
(30)
(31)
(32)
(33)
(34)
(35)
(36)
(37)
(38)
(39)
(40)
(41)
-190
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் Golam W. Chodhury, op.cit, PP 42-49.
Ibid, PP, 43-44. J. Denis Derbyshire and Ian Derbyshire, op, cit, PP.588-589.
Ibid.
Ibid,
Talukder maniruzzaman, The Future of Bangaladesh, A.J. Wilson and D. Daltion (Ed) op.cit, P.265-289.
Ibid,
Ibid,
Suranjan Das, Kashmir Revisited, Ethnicity Nation Bulding and Reginal Security in South Asia, ETHIC STUDIES REPORT, January 1999, Vol. XIV, No. 1, PP 1-42.
Jemens manor, The dynamic of Political Integration and Disintegation A.J Wilson and D. Daltion (Ed) op.cit, P92.
Suranjan Das, op.cit, PP40-42.
Ibid, PP 5-6.
Ibid, PP 10-12
Ibid, PP 25-26.
John G. Cockell, Ethnic Nationalism in Kashmir, ETHIC STUDIES REPORT July 1983, Vol, XI. No, 2, PP 174-175.
Harish. Puri, Perils of Prespentrity syndrome, Rehinking Relations Between Ethicity Development and Democracy, ETHIC STUDIES REPORT, July 1993, Vol, XI, No, 2, PP 88-102.
J. Haynes, Religion Secularisation and Politics, A Post Modern Conspectns, THIRD WORLD QUARITELY, Vol, 18, No, 04, PP. 726-728.
கே.ரீ.கணேசலிங்கம்

(42)
(43)
(44)
(45)
(46)
(47)
(48)
(49)
(50)
(51)
(52)
(53)
(54)
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
John R. Wood, Interduction, Continuity and crisis in Indian state Politics. John R. Wood (Ed) State Politics in Contemporary India, Crisis or Continuity?, Westview, Publishing 1984, P06.
A. Jayaratnam Wilson, The Break-up- of- Srilanka, The Sinhales- Tamil Conflict, C, Hurst and Company, London, 1988, PP. 108- 1 1 1.
C.R.de. Silva, The Sinhales- Tamil Reft in Srilanka, ETHIC STUDIES REPORT Colombo, January 1988, Vol. VI, No, 2, PP 155-175.
L. Peyadasa, Srilanka, The Holochust and After, Micmillan Publication, London, 1984, PP 83-84.
See, RoHan Gunaratna, Srilanka, A Lost Reuolution?, the Inside Story of the J. V.P. Institute of Fundalamental Studies, Colombo, 1990, PP. 356-358.
Ibid.,
B.B.C News, 200-04-02
Bradman Weerakoon, Premedasa of Srilanka, A Political Biography, Vikas Publication, New Delhi, 1982, P 149.
S.U. Kodikara, Foreign Policy of Srilanka, Third World Prespective, Chankya Publication, New Delhi, 1982, P 149.
Prof. Osmund Jeyarathna, Us Designs on Trincomalee, Christian Worker, 1986, P.10.
Galom Chodhury, Op. Cit. PP 5-49.
S. U Kodikara, Indo- Bhutaness Relation and Blh tu taun 'w strategy for Survival, Bertram Bastiampillai (Ed), India and her South Asian Neighbours, Bandaranaga Memorial Centre, Colombo, 1992, P, 114.
J. N. Dixit, What Brought IPKF here? Lanka Guardium, Vol. 12, No, 17, January 1990, PP, 11-12.
கே.ரீ.கணேசலிங்கம் - 1915

Page 98
(55)
(56)
57)
- 192
தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Stanly Jayaweera, India Planned to Involde Lanka in 84, The Island 06. 1 (0. 1991.
Pervaiz Iqbal Cheema, The Implications of Arms Build-upin South Asia, Verinder Gover (Ed) Pakistan Fifty years of Indepen once and Beyond, the fifty years 1947-97, Deep and Deep Publication, New Delhi, 1997, P.281.
Ibid.,
கேரீகணேசலிங்.ப்


Page 99
கே.ரீ.கணேசலிங்கம் யா கலைக்கழகத்தில் அரச விரிவுரையாளராக உள் கற்பித்தல் செயற்பாட்டி வுக் கலாசாரத்திலும் மு கொண்டவர். இதற்கான
மையை அறிவை தீவிர ஈடுபாடு கொண்ட இவர் எண்பதுகளுக்கு புதிய தலைமுறைக் குழ இதனால் சமூகப் பொறு நிலைப்பாடு, கருத்துநி முகத் தேடல். போன்ற உள்வாங்கும் திறன் செ மனப்பாங்கு ஆளுமை நோக்கு போன்றவை இ சங்களாகும். தமிழில் அ பற்றிய சிந்தனைக்கும் கும் புதுக்களங்களை அ டுவதில் முனைப்புடன் வருகின்றார்.
சேமமடு பதிப்பகம் slanau : AB
 
 

ழ்ப்பாணப் பல் றிவியல் துறையில் ளார். இவர் கற்றல் - ல் மட்டுமன்றி, ஆய் ழுமையான ஈடுபாடு எ தகுதியை விருத்தியாக்குவதில் டவர். ப் பின்னர் உருவான pாமைச் சார்ந்தவர். றுப்பு, அரசியல்
லைத் தெளிவு, பன் உயரிய பண்புகளை காண்டவர். இதற்கான விகசிப்பு, ஆய்வு இவரது பலமான அம் அரசியல் கலாசாரம் ஆய்வுக்கும் தேடலுக் }{60}LEUFF6FFf5 6fTLஉழைத்து I5.BN GD—l, G?= E5 m?
|
= ? 뛰 또 도 1, E. 도 구 리 도 "'