கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு

Page 1
UP-COUN RESEARCH
RESEARC
 


Page 2

மலையகத் தமிழாராய்ச்சி DITBTOb
من قواعد
ہے اوقا- نئے قونیہ لوگو! ((Lt فرنگ بود با اولیه
(ஆய்வுக் கட்டுரைகள்)
15. ܚܨܚܨ ܕ ܥܪܩ,F //ിട്ടു
ܢ ܓܪ
வெளியீடு மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு செயற்பாட்டுக் குழு
மத்திய மாகாண கல்வி (தமிழ்), இந்து கலாசார அமைச்சு.
த.பெ. எண்: 132 செயலகம், கண்டி

Page 3

UP-COUNTRY TAMIL RESEARCH CONFERENCE (RESEARCHARTICLES)
Published by The Up Country Tamil Research Action Committee Ministry of Education (Tamil) and Hindu Cultural Affairs (Central Province) P. O. BOX. 132 Secretariat Kandy.
First Published: 1997.
Second Edition 2007
Printed by: The Prestige Printer 138, Layards Broadway, Colombo - 14. Sri Lanka.

Page 4
மலையகத்திற்குப் பெருமை சேர்த்துவரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்களர் அறிஞர்கள் கல்வியியலாளர்கள் தொழிலாளப் பெருமக்கள் ஆகியோருக்கு இந்நூால் சமர்ப்பணம்,
I

மத்திய மாகாண சபை மாண்புமிகு அமைச்சர்
கெளரவ வீ. புத்திரசிகாமணி JP
கல்வி (தமிழ்), கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, உணவுத்துறை, வர்த்தகம், வாணிபம், சுற்றுலா, இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர்.

Page 5

அமைச்சர்
வீ. புத்திரசிகாமணி அவர்களிடமிருந்து.
மலையக தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல் கட்ட வேலைகளின் பூர்த்தியே இந்நூல் வெளியீடாக அமைகின்றது. இம் மாநாடு நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் எதிர்கால ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஓர் பிராரம்பமே என்பது ஏற்றுக் கொள்ளகூடியது.
எமது மக்களைப் பற்றிய ஆராய்ச்சி ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்தி முடித்துவிட முடியாது. எமது மொழியின் இலக்கண, இலக்கியம் அதை ஒட்டிய கலாசார பண்பாட்டு
பழக்கவழக்கங்கள் மிகவும் தொன்மைவாய்ந்தது.
இலங்கையில் திராவிட மக்களின் வரலாறு மிகவும் பழமைவாய்ந்தது. அவற்றுள் "பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை" அதற்கு முன் ஏற்பட்ட "கறுவா செய்கை" காலத்திலிருந்தே எம்மைப் பற்றிய ஆய்வு ஓர் குறிப்பிட்ட கால ஆய்வேயாகும்.
மத்திய மாகாணத்தை தனித்து எடுத்துக் கொண்டாலும் கூட மாத்தளை யூரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாறே 200 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததோடு கடலாதெனிய, லங்காதிலக்க விகாாையில் உள்ள திராவிட - நாகரீ எழுத்துக்கள் இருப்பதையும், இலங்கையின் தென்பகுதியில் கரந்தெனியாவில் வாழும் சிங்கள மக்களின் ஒரு பகுதியினர் ஆதி தமிழர்கள் என்ற கூற்றையும் கேட்கின்றோம்.
இந்த தமிழாராய்ச்சி ஆய்வுகளுக்கு எவ்வித மறுப்பும் கூறாமல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஏனைய பிரமுகர்கள் ஒன்றிணைந்து எமக்கு வழங்கிய ஆதரவை நோக்குமிடத்து, எமது ஆராய்ச்சியின் வேகத்தையும், ஆழத்தையும் அதிகரிக்கச்செய்து, பரந்த நோக்கிலே, உணர்வோடு மேலும்

Page 6
பல கருத்தரங்கள், ஆய்வரங்குகள், மாநாடுகள் நடாத்துவதற்கு நல்லதோர் சூழல் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் இந்த நூல் வெளியீட்டு வைபவமும், இந்நூலிலே பொதிந்திருக்கும் கருத்துக்களும் எமது எதிர்கால சந்தியினருக்கு நாம் வழங்கும் ஓர் துளியே. இவற்றை அறிந்து கொள்ள வாய்ப்புக் தந்த எல்லாம்வல்ல இறைவனுக்குநன்றி கூற
வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த, கருத்துரைகள் வழங்கிய, பங்குபற்றிய என் இனிய நண்பர்களுக்கும் டெரியோர்களுக்கும், மலையக மக்களுக்கும் நன்றி கூறுவதில் பெருமை அடைகின்றேன்.
இந்நூலில் உள்ள விடயங்களை மேலும் ஆய்வு செய்வதுவும், புதிய விடயங்களை சேர்த்துக் கொள்வதுவும், விமர்சனம் செய்வதுவும்
வரவேற்கத்தக்கது.
இந்நூல் எம் சிந்தனையை மேலும் தூண்டட்டும்.
வீ. புத்திரசிகாமணி
VI

மலையக தமிழாராய்ச்சி மாநாடு, சில எண்ணங்கள் தி. வே. மாரிமுத்து, (செயற்பாட்டுக்குழுத் தலைவர்)
ஆராய்ச்சியும் முன்னேற்ற அபிவிருத்தியும் என்ற ஓர் சகாப்தத்தில் காலப்போக்கில் நாம் வாழ்கின்றோம். வெவ்வேறான பண்பு தன்மை கொண்ட மலையக சமூகத்தின் எதிர்கால அபிவிருத்திக் கொள்கை, அச்சமூகத்தோடு தொடர்பு கொண்ட தன்மைகளின் ஆராய்ச்சியில்தான் தங்கியுள்ளது. அதாவது அச்சமூகத்தின் பண்பாடு, சமூக பொருளாதார நிலை, கல்வி முதலியன திட்டமிட்ட நோக்கத்திலில்லா தீர்மானச் செயல்கள் வளர்ச்சியை தடை செய்துள்ளது.
சர்வதேச சமூகங்கள் 21ம் நூற்றாண்டு சவால்களை எதிர்நோக்கி முன்னேறத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதனால் நாமும் சவால்களை நோக்கி புதிய நூற்றாண்டில் முன்னேற்றமடைய கடந்த கால, தற்கால நிலையை அறிந்து புரிந்து கொள்ளவ்ேண்டும். ஆகவே மாநாட்டின் நோக்கம் எங்களைப் பற்றிய தகவல்களையும், தரவுகளையும் பெற்று படித்து அப்பண்புகளைப் பாதுகாப்பதேயாகும். எனவே எங்கள் கருத்தரங்குகள், ஆலொசனைகள், ஆழ்ந்த சிந்தனைகள் எல்லாம் எதிர்கால பிரச்சினைகளின் பல்வேறு அம்சங்களிடையேயுள்ள ஒரு தொடர்புகளைப் பற்றியதாகவிருக்க வேண்டும்.
தனித்தன்மை பெற்ற எமது சமூகம் நற்பண்பு கூறுகளைப் பெற்றுள் ளது. அதேபோல குறைபாடுகளும் , எதிர் நிலையானவைகளும் காணப்படுகின்றன. முன்னையதைப் பாதுகாக்கவும் பின்னையதைத் தவிர்த்துச் சீர்திருத்திக் கொள்வதே அதனது நோக்கம். எனவே சுருங்கக் கூறின் எங்களது தனித் தன்மையைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்ற அபிவிருத்திகளில் நாட்டம் கொள்வதே இம்முயற்சியின் முக்கிய நோக்கம்.
புகல் பெயர்ந்த இந்தியர்களைப் பற்றிய கருத்தரங்குகள் மொரிசஸ், ஹொங்கொங் போன்ற நாடுகளில் நடைபெற்று இலங்கை இந்தியர்களின் நிலையினால் இவ்விதமான ஆராய்ச்சி கருத்தரங்குகள் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவேதான் எங்கள் சிந்தனையில் உதித்த மலையக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அமைச்சர்

Page 7
கெளரவ வீ. புத்திரசிகாமணி இந்து கலாசார தமிழ் அமைச்சின் மதியுரைக் குழுவின் மூலம் ஏற்பாடு செய்திருப்பதை தமிழ் மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். பல வரலாற்று ஆசிரியர்கள், ஆரிய ரோம, கிரேக்க, இந்திய, சீன பண்பாட்டு நாகரீகங்கள் பற்றி கூறும் போது மொழியைப் பேசும் எங்களுடைய நாகரீகப் பண்பாடு சிறந்த அம்சங்களைக் கொண்டதாக கருதுகின்றார்கள்.
மார்க்கபோலோ, தெற்கில் கிருஸ்ண, வைகை போன்ற இடங்களில் கூத்து வளர்ந்ததாக குறிப்பிடுகின்றார். எனவே எங்களது முயற்சி தொண்மை வாய்ந்ததாக, பண்பாட்டு நாகரீகத்தைப் பற்றி நன்கு அறிந்து அந்த வாழ்க்கை முறையினை சிறப்பியல்புகளை எதிர்கால சந்தியினர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த இந்தியர்களின் வருகை அவர்களின் பிரச்சினை மையங்கள் என்னும் தலைப்பில் அரசியல், சமூக கட்டமைப்பு, பண்பாட்டு பேரு, மலையக இலக்கியப் பண்பு, மலையக இலக்கியங்களின் பிரதேச வேறுபாடுகளும் பொதுமையும் என்ற விரிவான ஆய்வுரைகளும் அதை நோக்கிய கருத்துரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல ஆய்வுகளை நிகழ்த்தி பாராட்டுப் பெற்றவர்கள் எல்லாம் இதில் சமூக உணர்வோடு தமது பங்கினை நல்க முன்வந்துள்ளார்கள். இந்த முதல் தமிழ் ஆர்ாய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்திய பிறகு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இதைப்பற்றிய ஆய்வுகளை நடாத்தி உலக அரங்கிலே ஒரு முக்கியத்துவத்தைப் பெறுவதற்கான ஒரு ஈடுபாட்டோடு செயற்பட, மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு செயலகம் ஒன்றை அமைத்து, பல்கலைக்கழக மூத்த அறிஞர்களின் ஆலோசனைகளை வைத்து செயற்பட எண்ணும் இந்த எண்ணத்தை வெற்றிகரமாகச் செயலாற்றுவதற்கு இந்த மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு ஒரு முன்னோட்டமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுதி வருங்கால தலைமுறைக்கு ஒரு வரலாற்று ஆவணமாக ՖI60)ւDպլb.
தி. வே. மாரிமுத்து செயற்பாட்டுக்குழுத் தலைவர்
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு தலைவர், இந்து கலாசார அமைச்சின் மதியுரைக்குழு.

இம்மாநாடு நடைபெற்ற காலத்தில் எமது மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில்
நுவரெலியா
மாண்புமிகு எஸ். தொண்டமான்
பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர்
மாண்புமிகு பெ. சந்திரசேகரன்
பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர்
கெளரவ முத்து சிவலிங்கம்
பாராளுமன்ற உறுப்பினர்
கெளரவ எஸ். சதாசிவம்
M பாராளுமன்ற உறுப்பினர்
கெளரவ ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர்
கெளரவ எஸ். ராஜரட்ணம் பாராளுமன்ற உறுப்பினர் (கண்டி)

Page 8
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு
மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு செயற்பாட்டுக்குழு
காப்பாளர் மாண்புமிகு வீ. புத்திரசிகாமணி
மத்திய மாகாண கல்வி (தமிழ்), இந்து கலாசார அமைச்சர்.
தலைவர்
திரு. டி. வீ. மாரிமுத்து (தலைவர் இலக்கிய மதியுரைக்குழு)
Ogug)st 6ft fr
திரு. அந்தனி ஜீவா
செயற்குழுவினர் கலாநிதி துரைமனோகரன் திரு. சு. முரளிதரன் திருமதி, நளாயினி சுப்பையா
(இணைப்பாளர்)

மத்திய மாகாண சபையில்
g/6/67.6//7 மாண்புமிகு வீ. புத்திரசிகாமணி (அமைச்சர்) கெளரவ எஸ். ஏ. கந்தசாமி கெளரவ எம். நடராஜா கெளரவ எஸ். ரெங்கநாதன்: கெளரவ டீ. அய்யாதுரை கெளரவ எஸ். அருள்சாமி கெளரவ எஸ். வெள்ளையண் கெளரவ எஸ். வீ. விமலவன் கெளரவ சிங் பொன்னையா
. 4662oizg2 கெள்ரவ இரா. தங்கவேல் (பிரதி அவைத் தலைவர் கெளரவ அ. கதிரேசன் கெளரவ து, மதியுகராஜா மர்த்தளை கெளரவ எஸ். கந்தையா
உளளுராட்சி சபைகளில் முக்கிய பிரமுகர்கள்
நுவரெலியா பிரதேச சபை திரு. டி. வி. மாரிமுத்து (தலைவர்)
அம்பகமுவ பிரதேச சபை திரு. எம். ரவீந்திரன் (தலைவர்)
நுவரெலியா மாநகரசபை
திரு. எல். நேருஜி (பிரதி மேயர்)
கொத்மலை பிரதேசசபை திரு. க. ரஞ்சன்.
Χ

Page 9
மாண்புறும் மலையகம்
மலையக தமிழாராச்சி மாநாட்டின் கட்டுரைகள் அடங்கிய இந் நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடை கிறேன் அன்று அமைச்சராக இந் நூலை தமிழாராச்சி மாநாட்டில் வெளியிட்டபோதே பலரும் இந் நூல் அவர்களுக்கு கிடைக்க வில்லையென வருத்தம் தெரிவித்தனர். அவர்களும் இவ்விரண்டாம் பதிப்பு பற்றி அறிந்து மகிழ்வர்.
மலையக தமிழாராச்சியின் பின் அதற் கென நிரந்தர கட்டிடமும், காப்பகமும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டினேன் ஒருசிலரின் தூய்மையற்ற அரசியல் போக்கினால் அதை செய்யமுடியவில்லை.
ஆனால் தற்போது ஓரிரு இடங்களில் காப்பகங்கள் இருப்பதாக அறிகிறேன். எனினும் நிச்சயமாக எனக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் 'போது எனது என்னத்தை நிச்சயம் நிறைவேற்ற அனைவரது ஆசியும், ஆதரவும் கிடைக்க ಫ್ಲಿಕ®
i í tick i {
என்றும் மலையக சேவயில்
வீ. புத்திரசிகாமணி JP-AFP சமாதான நீதிவான் சமாதானத்திற்கான தூதுவர் பாராளுமன்ற உறுப்பினர்
ne te J. KGaA
112, லேடி மைக்கலம் டிரைவ், நுவரெலியா.

முன்னுரை
இக்கட்டுரைத் தொகுதி மலையக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைவது. ". . . .
பண்பாட்டு விழாக்கள், இலக்கிய விழாக்கள் என விழா நிலைப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ஈழத்தின் ஒரு பிரதான பிரதேசத்தில், ஒரு "தமிழாராய்ச்சி" மாநாடு ஒன்றினை நடத்தி அதன் முதல் அறுவடையாக வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இது.
"ஆராய்ச்சி" / "ஆய்வு" எனத் தொடங்கும் பொழுது, நாம் சில விடயங்களைக் காய்தல் உவத்தலின்றி, விருப்புவெறுப்பின்றிப் புறநோக்காகப் பார்த்து உண்மையைத் தேடும் ஒரு முயற்சி தொடங்குகின்றது என்பது கருத்து ஆகும். அதாவது ஆய்வுபூர்வமாக எடுத்துக் கூறுவனவற்றை உன்னிப்பாக நோக்குவதற்கான ஒரு மனநிலை ஏற்படாவிட்டால் ஆய்வு நிகழ்ச்சிகள் எழ இடமேயில்லை.
இந்த ஆய்வுப் பணியில் இறங்கியிருப்பவர்களுள் மலையகத்தைச் சேர்ந்த புலமை விற்பன்னர்கள் உள்ளனர் என்பது இதில் மிக முக்கியமான அம்சமாகும்.
மலையகச் சமூகத்தை சாராத பிறராலேயே மலையகம் பற்றிய பிரதான ஆய்வுகள் வெளிவந்த காலம் போய், இப்பொழுது மலையகப் பின்புலத்தைக் கொண்டவர்களே தம்மைத்தாம் புறநிலையாக நின்று நோக்கும் மனப்பக்குவத்தையும் முதிர்ச்சியையும் பெற்றுள்ளனர். இதுதான் கல்வி தரும் கொடை.
இந்த வளர்ச்சி படிப்படியாக முளைவிட்டு கிளம்பிவந்துள்ள ஒன்றாகும். அண்மையில் உதயம் நிறுவனத்தினர் நடத்திய ஆய்வு போன்ற கூட்டுநிலை முயற்சிகளும், தனிநிலை ஆய்வாளர்கள் பலரது தனி நிலை முயற்சிகளும் இந்த வளர்ச்சியின் பின் புலத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக மலையகப் பின்புலத்திலிருந்து வந்து, இன்று பல்கலைக்கழகப் புலமையாளர்களாக, பேராசிரியர்களாக வளர்ந்துள்ளவர்களின் பணி இத்தகைய நிலையில் முதலிடம் பெறுவது இயல்பே. ஆயினும் இந்த ஆய்வு வளர்ச்சி பல்கலைக்கழக மட்டத்திலே மாத்திரம் வளர்ந்தது என்று கூறிவிட முடியாது. பல்கலைக்கழகத்தைச் சாராத, ஆனால்

Page 10
வரன்முறையான ஆய்வு நிலைக்குப் பழக்கப்பட்ட சிலரும் இதிலே இடம்பெறுவர் (உ-ம் : ப. மாணிக்கம்). மேலும் இலக்கியம், வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளில் ஆய்வு எழுத்துக்களைப் படைத்துள்ளோரும் (உ-ம் : சால்நாடன்), வரலாறு, பொருளியற் பயிற்சியுடையோரும் (உ-ம் : வ. தேவராஜ், மு. நித்தியானந்தன்) இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டி வந்துள்ளனர். இவர்களுடன் அரசு சார்பற்ற நிறுவனப் பின்புலமுடையோரும், பத்திரிகையாளர்களும் (சிவம்) இப்பணி வளர உதவியுள்ளனர்.
இன்று இத்துறையில் முன்னணியில் நிற்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுகள் இங்கு இடம்பெறுகின்றன.
இந்த ஆய்வு வளர்ச்சிக்கு D-Olg88)600TL IIT 86 இலங்கைத் தமிழர்களான புலமையாளர்களும் இருந்து வந்துள்ளனர், இருந்து வருகின்றனர் என்பதாகும் இந்த மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு சாட்சியமளித்தது.
மலையகத் தமிழாராய்ச்சி எனும் பொழுது அது பன்முகப்பட்ட, பல்துறைச் சங்கமப் போக்கினைக் கொண்ட ஆராய்ச்சி தொழிற்பாடாகும். அவர்களின் இலக்கியம் மாத்திரமல்லாமல், மலையக மக்கள் என்போர் யாவர், இப்பொழுதுள்ள வரைவிலக்கணங்களின் பொருத்தப்பாடு, இவர்களது மொழி வழக்குகள், இவர்களது பண்பாட்டுக் கூறுகள், பழக்கவழக்கங்கள், இவர்களது சமூக அமைப்பு, இவர்களது தொழில்கள், இவர்களின் பொருளாதார அபிவிருத்திகள், சமூக வளர்ச்சிகள் (சமூக மாற்றங்கள்) இவர்களின் கண்ணோட்டங்கள் முதலிய பற்பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த ஆய்வினை எமது மொழியான தமிழிலேயே பரதானமாகச் செய்ய முற்படுவதும் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஆங்கிலம் எமக்கு எந்நிலையிலும் ஒரு "புற" மொழியே அதன் தாடனமும், அதன் பயில் வும் எம்மிடையே ஒரு "புற" நோக்குப்பார்வையைத் தருவது ஆச்சரியமன்று (ஆங்கிலம் வழி கற்றோருக்கு அதுவே சிந்த6ை மொழியாகவும். அமைந்து விடுகிறது.)
சிறிதளவாயினும் 6: தொலைப்படுத்தலைத் தருகின்ற ஆங்கில மொழி வழியாகவல்லாத, : தாய்மொழியான தமிழிலேயே இந்தக் யாய்தல் உவத்தல* tp.J 1.j0 ཨོཾ་ཧ” .༔ : :ே ஸ்ளது, رLDébj

உளவளர்ச்சியையும் நமது மொழியின் பயில்வு வளர்ச்சியையும் நிதர்சனமாகக் காட்டுவதாகும்.
"மலையகத்தினர்" பற்றிய வரைவிலக்கணத்தினைச் சற்று நோக்குவோம். இது பிரதானமாகப் பெருந்தோட்டத் தொழிலாளரைக் குறிப்பதற்கான, அந்தக் குறிப்பை உள்ளடக்கிய ஓர் அரசியற் பிரக்ஞையையும் உள்ளடக்கியதாகும். ஆனால் இலங்கையின் மலைப்பகுதிகளைச் சாராத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் - குறிப்பாக தென் மாநிலத்திலேயுள்ள அகலவத்தை, போன்ற பிரதேசங்களை
"மலையக" இயக்கம் உள்ளடக்குவதில்லை.
மேலும், இந்தத் தொகுதியிலேயே இடம்பெறும் ஒரு கட்டுரையில், அந்தனி ஜீவா, மலையக இலக்கியம் என்பது மத்தியப் மாகாண முஸ்லிம்களின் படைப்புக்களையும் உள்ளடக்கி நிற்பது என்று கூறுகின்றார். இது சுவாரசியமான வாதங்களைக் கிளப்பக்கூடியது. மலைநாட்டுப் பெருந்தோட்ட மக்களின் இலங்கை நிலைப்பாடு பலமடைய, பலமடைய இத்தகைய வரைவிலக்கணப் பிரச்சினைகள் முக்கியமடையும்.
"மலையகம்" என்ற தொடரே, பெருந்தோட்டத் தொழிலாளர் பலரை விட்டு நோக்கும் ஒரு தொடராக அமையலாமா என்பதும் ஒரு முக்கிய வினாவே ஏனெனில், இந்த விவாதத்துக்குள் அந்த, விடுபட்ட (தென்பகுதி) பெருந்தோட்டத் தமிழரின் எதிர்காலத் தனித்துவம் பற்றிய வினைவும் தொக்கு நிற்கின்றது. A.
எனது இக்குறிப்பில், மலையக வளர்ச்சியின் ஒரு முக்கிய அமிசம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். பெருந்தோட்ட எழுத்தறிவு, கல்வி நிலைகள் பற்றி பக்கம் 5 இலே, பேராசிரியர் சந்திரசேகரம் தரும் தகவல்கள் முக்கியமானவை.
பெருந்தோட்ட நிலையில் எழுத்தறிவு வளர்ச்சி 68.5% ஆகம். அதாவது நூற்றுக்கு 30 (முப்பது) பேர் வாசிக்கமுடியாதவர்கள்,
இவர்களுள்ளும் ஆரம்பக்கல்வி கற்றோர் 52.5% விகிதத்தில:
ஆரம்பக்கல்விக் கற்றோருள் எத்தனைபேரால் வாசிப்புப் பழக்கத்: ப் பேணமுடியும்.

Page 11
இப்படியாகப் பார்க்கும் பொழுது, இங்கு தொடர்ச்சியான வாசிப்புடையோர் தொகை எவ்வளவு என்பது மிக முக்கியமான ஒரு
விசயமாகும்.
இந்த வாசிப்புப் பழக்கம், இலக்கியவழி வரும் செல்வாக்குக்கு இடங்கொடுப்பது என்பது ஒருபுறம், மறுபுறம் இது சமூகப் பிரக்ஞை, அரசியற் பிரக்ஞை என்பவற்றில் முக்கியம் பெறுவதாகும். தொழிற்சங்க நிலையில் ஏற்படும் மேலாண்மைகளுடன் கூட இது தொடர்புபடும்.
மலையகத் தமிழரின் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள் உள்ளதே என்ற ஒரு மனப்பதிவு வெளியேயுண்டு. அதற்குக் காரணம் தொழிற்சங்கங்களின் மேலாண்மையே. சமூக அமைப்பு, பிரச்சினைகள், பெண்களின் நிலைபற்றிய பிரக்ஞை ஆசியன இன்னும் போதிய அளவு உணரப்படாமலே உள்ளன.
பெருந்தோட்டதுக் தொழில் நிலை வாழ்க்கையின் யதார்த்தங்கள் இன்னும் பூரணமாக வெளிக்கொணரப்படவில்லை. அண்மையில் துரைவி நிறுவனத்தினர் மலையகத்தைப் பற்றிய சிறுகதைத் தொகுப்புக்கள் இரண்டினை வெளிக் கொணர்ந்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி. இவ்வாறே மலையகக் கவிதைத் தொகுதியும் கொண்டு வரப்படல் வேண்டும்.
யாவற்றுக்கும் மேலாக, மலையகம் பற்றிய எழுத்துக்களை நன்கு ஆவணப்படுத்தல் வேண்டும்.
இவை யாவற்றுக்குமான அடிப்படைத் தேவையாக அமைவது, மலையகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கான ஒரு நிரந்தர, நிறுவன அமைப்பாகும். 1997 திசெம்பர் 13ல் நடைபெறும் விழாவில் அதற்கான அமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.
د كاله روهو، لTا
- سكسيسي
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கலைப்பீடம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம், செங்கலடி,
 

জািনয়া
খ্রী
விழாவில் தமிழ் அறிஞர்கள் போல் வேடமிட்ட சிறுவர்கள் ஊர்வலமாய் செல்லும் காட்சி

Page 12

மத பெரியார்களிலிடம் ஆசிபெற்றபோது.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகளிடம் ஆசிபெற்றபோது

Page 13

நுவரெலிய காயத்திரி சித்தர் முருகேசு தனது துணைவியார் சகிதம்
சுவாமிகளிடம் ஆசிபெற்றபோது. ஆசிபெற்றபோது
இந்து கலாசார ஊர்வலமொன்றில் திரு. இராதாகிருஸ்ணன் அவர்களுடன்

Page 14

its . . . . . . . . . . . . . . . .
l.
2.
.
5.
8.
?.
0.
il.
2.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும்,
வெளிநாடுகளில் இந்திய சமுகங்களும் ஓர் ஒப்பீட்டுக்
கண்னோட்டம்.
பேராசிரியர். மு. சின்னத்தம்பி
இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புகள் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
இலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் கல்வி நிலை அதன் வளர்ச்சியும் போக்கும்
மா. செ. முக்கையா
மலையக மக்களின் கல்விப் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும்
அடிப்படை உரிமைகளும் இந்திய வம்சாவளி மக்களும்
பெ. முத்துலிங்கம்
மலையகத் தமிழரின் அரசியலும் சமுக இசைவியக்கமும் வி. ரி. தமிழ்மாறன்
மலையகத் தமிழரின் சமுகப் படையாக்கம் ஏ. எல். சந்திரபோஸ்
மலையக நாட்டார் வழக்காற்றியல் மாத்தளை பெ. வடிவேலன்
மலையக இலக்கியத்துக்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பு தெளிவத்தை ஜோசப்
மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு
அத்தனி ஜீவா
மலையகம் பற்றிய ஆங்கில ஆக்கங்கள்
சாரல் நாடன்
மலையக மக்கள் இலக்கியம்
விகிசகலாநிதி கனகசபாபதி - நாகேஸ்வரன் M. A.
O3
42
59
84
29
139
59
73
97
2
O
7
227

Page 15
தலாவது அமர்வு
18, 11, 96
மலையக சமூகம் ஒரு பன்முக ஆய்வு
தலைமை
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைவர் சமூக விஞ்ஞான கல்விபீடர் கொழும்பு பல்கலைக்கழகம் கொழும்பு k
 
 

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர்
பதில் பொதுச் செயலாளர்
கெளரவ திரு. வீ. புத்திரசிகாமணி J. P
அவர்களை பாராட்டி உவந்தனித்த வாழத்தப் பாக்கள்
நிலை கெட்ட எம்மவர் நிம்மதி இழந்தவர் தலை நிமிர்ந்த திரு நாட்டில் தனித்துவம் எய்திட தலைப்பட்ட ஒளிச்சிந்தனை தலைக்கின்ற இலைஞர்கள்
தலையை ஏற்றிடும் தலைமையை வாழி நீ !
விலைப்பட்ட தொழிற் சங்க விதி முறைப் பிழையினால் கலைஞானம், கல்வி, நல் கருத்தாழும் அரசியல் குலைவுற்றுக் கிடக்கின்ற குன்றத்தவர் வாழ்க ge606) GueOT G3 D G36) This அயராது விழைகவே
A.
மலை மீதில் இருள் வேண்டாம் மந்தாரம் இனி வேண்டாம் உலை நீரின் உணர் வேந்தி உரியதோர் சமுதாய வலை வீசிப் புதிதான வரலாற்றுச் சமத்ருமுவம் நிலைவெல்ல உழைத்திடும்
நினைவினில் நிலைப்பீரே !
கவிஞர் மலைத்தம்பி 317. மெயின் வீதி, மாத்தளை, 30. O7. 1982

Page 16
கெளரவ அமைச்சர் அவர்களின் சிந்தனைத் துளிகள்
இருட்டிலே இருப்பவனுக்கு மின்சக்தியையும், அனுசக்தியையும் பற்றி போதிப்பதற்குப் முன் ஓர் அகழ் விளக்கை கொடுப்போம்.
-uponஉங்கள் மூளையிலே செய்ய வேண்டியவற்றை இதயத்திலே செய்ய வேண்டியதில்லை, இரண்டையும் இணைக்கும் பாதையை
மட்டும் அகல திறந்துவிடுங்கள் போதும்.
-apoooமனிதனுக்கு மட்டுமே சிரிப்பை சொந்தமாக்கினானே கடவுள் அது மற்றவன் படும் துன்பத்தை கண்டு சிரிக்கின்றானே இவன், இவன் துன்பப்படும் போது சிரிக்க இன்னொருவன் பிறக்கவில்லை என்ற நினைப்பிலா?
-ruddenபிறக்கும் போது நாம் அழுவது சாகும் வரை அழப்போகின்றோம் என்று தான். நாம் இறந்த பின்னும் இன்னும் ஒருவன் அழுவதற்
கென்றே தான் பிறக்கின்றானா?
-xxum
எதற்கும், எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அதை எல்லோ
ரும் பெற்றுக் கொள்ளுங்கள்.
-axe
அழகானவையெல்லாம் தூய்மையானவையல்ல.
-Hx00Oxஒருவன் எத்தனை பெரிய செல்வந்தனாக இருந்தாலும்.
கல்விமானாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அழகானவனாக இருந்தாலும், புஜபல பராக்கிரமம் கொண்டிருந்தாலும், அவனுள் நல்லுள்ளமும், பிரகாசமான சிந்த னையும், தீங்கற்ற மனசாட்சியும் இல்லாவிட்டால் அவன் முழு மனிதனே இல்லை.
-modern
வகுப்பில் தேறினால் முதல் மாணவன் வாழ்க்கையில் தேறிவிட்டால் கடைசி அவன்
-oxOO
முட்டாள் சொல்லும் பொய்யிலும் பார்க்க அறிவாளி சொல்லும் பொய்யில் அழிவுகள் கலந்திருக்கும்.
-ukopenஎவனோ ஒருவனுடைய கிரீடத்தில் மின்னிக் கொண்டிருக்கும்
வைரக்கல்லாக இருப்பதை விட, எங்கள் மலையக மக்கள் -காய்ச்சும் கஞ்சிலே உப்பு கல்லால் கலப்பதே எனக்கு பெருமை.
-On
தேன் சுவைப்பதற்கு இனிமைதான், சுகம் தான் அதற்காக தலையிலா தடவி கொள்ள முடியும்? மையல்லவா தடவ வேண்டும். கவரிமான் ஒரு மயிர் உதிர்ந்தாலும், உயிரை விட்டு விடுமாம்.
வேட்டைக் காரணுக்கு அதுவே வெற்றிதானே.
–unex{XXam
-use
துள்ளி விளையாட மீனுக்கு நீர்தான் தேவை, அதே நீரிலேயே
அதை அவிக்க எம் மனிதன் கண்டுப்பிடித்தானே ?
நாக்கு ஒன்றும் பெரிய பாரமானதல்ல ஆனால் அதை சிலருக்கு
வைத்திருக்க முடியாது தவறவிட்டு விடுகின்றார்கள்.
நாவிற்கு இறைவன் எவ்வளவு பெரிய வேலியை (பல்) அமைத்திருந்தாலும் அடிக்கடி தப்பியோடி மற்றவர்களை தாக்குகிறதே. ஆனால் அவர்களோ பல்லை உடைப்பேன் என்று தான் கூறுகிறார்கள்.
வீ. புத்திரசிகாமணி J.P. அமைச்சர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமுகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம." -பேராசிரியர் மு. சின்னத்தம்பிதலைவர், பொருளியற்றுறை-பேராதனை பல்கலைக்கழகம்-பேராதனை
இந்தியர்கள் புலம் பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. தென் கிழக்காசிய நாடுகளுடனும் கிழக்காபிரிக்க கரையோரப் பிரதேசங்களுடனுமான இந்திய கலாசார, வர்த்தக உறவுகள் கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்திய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிகின்றது. இந்தியாவிற்குள்ளேயே ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் இவ்வித குடிப்பெயர்வுகள் காலப்போக்கில் அருகி வந்தன. எனினும், அளவிலும் பண்பிலும் வேறுபட்ட புதியதொரு குடிப்பெயர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெற்றது. வரலாற்றின் முந்திய காலங்களில் குடிபெயர்ந்தோர் ஒரு மாபெரும் நாகரிகத்தினதும் மதத்தினதும் துTது வர்களாகவும் விலையுயர்நீத பணி டங்களின் வர்த்தகத்திலீடுபட்டோருமாகவிருக்க, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அந்நியருக்குச் சொந்தமான தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைக்கச் சென்ற கல்வியறிவிலாப் பாமர மக்களாகவிருந்தனர். (KOndapi, C. 1951)
வெளிநாடுகளுக்கான மேற்படி இந்தியக் குடிப்பெயர்வானது கிழக்கே பிஜித்தீவுகள் வரையும், மேற்கே மேற்கிந்தியத் தீவுகள் வரையும், தெற்கே மொறிசியஸ் தீவுகள் வரையும் பரவிக்காணப்பட்டது. இலங்கை, பர்மா, மலேசியா, பிஜித்தீவுகள், மொறிசியஸ் தீவு, மேற்கிந்தியத் தீவுகள், கிழக்காபிரிக்க நாடுகள், தென்னாபிரிக்கா போன்றன அவர்கள் புலம் பெயர்ந்து சென்று குடியேறிய நாடுகளுட் சிலவாகும். 1834 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்டதும், அதன் விளைவாக, மேற்கிந்தியத் தீவுகளிலும் பிஜி, மொறிசியஸ் ஆகிய தீவுகளிலுமிருந்த கரும்புத் தோட்டங்களிலேற்பட்ட ஊழியத்துக்கான கடும் தட்டுப்பாடுமே இந்தியர்கள் பெருமளவிற் சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கான
1 1994 டிசம்பரில் கொட்டகலையில் நடைபெற்ற மலையக தமிழாராய்ச்சி மகாநாட்டில் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
O3

Page 17
பிரதான காரணங்களாகவிருந்தன. அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஊழியத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கிந்திய பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெள்ளையர்களை வேலைக்காரர்களாக கொண்டு செல்லுதல், கடன் ஒப்பந்த முறையில் (இது கீழே விளக்கப்பட்டுள்ளது) ஆபிரிக்கரையும் சீனரையும் தொழிலாளர்களாக வரவழைத்தல் போன்ற பல்வேறு மாற்று வழிகளை நாடினர். இவற்றுள் எதுவுமே, அடிமை ஊழியத்திற்குச் சிறந்த ஒரு மாற்றீடாக அமையத் தவறிய அதே வேளையில், ஊழியத்தட்டுப்பாடு பெருந்தோட்டங்களைத் தொடர்ந்தும் நடத்துவதற்கு பெரும் அச்சுறுத்தலாகவிருந்தது. இந்நிலையிலேயே மலிவான ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா ஒரு மூலமாக மாற்றப்பட்டது. கடன் ஒப்பந்த முறையின் கீழ் கொண்டு செல்லப்பட்ட மலிவான இந்திய ஊழியத்தை பெருந்தோட்ட விவசாயத்தில் கையாளுவது மொறிசியஸ் தீவில் வெற்றியடைந்தமையால், ஆயிரக்கணக்காக இந்தியர்கள் பல்வேறு தொலைதூர நாடுகளுக்கு தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து வேறு பல இந்திய சமூகத்தினரும் சுய விருப்பின் பேரிலேயே குடி பெயர்ந்தனர்.
தொழிலாளர் புலம்பெயர்ந்து சென்று குடியேறிய கிழக்காபிரிக்க நாடுகள், தெற்கு-தென்கிழக்காசிய நாடுகள் என்பன உட்பட வேறுபல நாடுகளிலும் இந்திய வர்த்தகர்களும் சென்று குடியேறினர். ஒழுங்குபடுத்தப்படாத சில குடிப்பெயர்வுகளும் இடம்பெற்றன. (பஞ்சாபியர் கனடாவிற் சென்று குடியேறியமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.) சட்ட நிபுணர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் போன்றோரும் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். காலனித்துவ அரசாங்கங்கள் சில இந்தியரை எழுதுவினைஞராகவும், போலிஸ் உத்தியோகஸ்தர்களாவும் வரழைத்தன. கிழக்காபிரிக்க இராணுவத்திலும் உள்ளுர் பாதுகாப்புப் படைகளிலும் இந்தியப் படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. பர்மாவில் சட்டத்தையும் 69{ք հl 60) & սկմ; நிலைநாட்ட இந்திய இரTணுவ படைகள் கையாளப்ட்டடன. பர்மிய நிர்வாக சேவையிலும் இந்தியர் சேர்த்துக் கொள்ளப்ட்டு, படிப்படியாக s! Bl(5 இன அடிப்டையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகமானது. மேலே கூறியோரை விட இந்திய உயர் சாதியினர் சிலரும் தமது வாழ்க்கை நிலையை முன்னேற்றிக் கொள்ளும் நோக்குடன் குடிபெயர்ந்தனர்.
04

1810 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக தனியார் முகவர்கள் ஒழுங்குபடுத்திய முறையில் இலங்கைக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து 1836 முதல் மொறிசியசுக்கும், 1838 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் (தாழ்நில பர்மா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர்) 1850 முதல் பர்மாவிற்கும், 1879 முதல் பிஜித் தீவுகளுக்கும் அவர்கள் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டனர். (Arasaratnam, S 1970) ஆபிரிக்க மேற்கு கரையோரப் பிரதேசங்கள் அடிமை ஊழியத்திற்கு ஊற்றாக விளங்கியது போன்று, இந்தியா கடன் ஒப்பந்த முறையிலான ஊழியத்திற்கு பிரதான மூலமாக மாற்றப்பட்டது. எனவே, மூன்றாம் உலக நாடுகளில் இன்று காணப்படும் புலம் பெயர்ந்த இந்திய சமூகங்கள் கடந்த இரு நூற்றாண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஒரு நேரடி விளைவெனலாம். எனினும், பிரித்தானியரது வருகைக்கு முன்னரே இலங்கை, பர்மா, மலேயா போன்ற நாடுகளில் இந்தியர் குடியேறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
敲 இந்தியரின் குடிப்பெயர்வினையும் பல்வேறு நாடுகளில் அவர்கள் குடியேறிய வரலாற்று முறையினையும் அடிப்படையாகக் கொண்டு குடிப்பெயர்வை ஜெயின் ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார். (Jain, CP 1982) o
1% கடன் ஒப்பந்த முறையிலான குடிபெயர்வு.
மேற்கிந்தியத் தீவுகள், பிஜித்தீவுகள், மொறிசியஸ் என்பவற்றுக்கான குடிப்பெயர்வுகள்.
2. கங்காணிமேஸ்திரி முறையின் கீழான குடிப்பெயர்வு.
இலங்கை, மலேசியரு பர்மா போன்ற நாடுகளுக்கான குடிப்பெயர்வு.
3 சகாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கான
குடிப்பெயர்வு . . . இது பெரும்பாலும் வணிகக் குலத்தவரின் அல்லது வகுப்பினரின் குடிப்பெயர்வாக இருந்தது.
4. தன்னிச்சையான குடிப்பெயர்வு.
ஐரோப்பிய, வடஅமெரிக்க வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான குடிப்பெயர்வு.
5 மேற்காசிய நாடுகளுக்கான அணிமைக்கால குடிப்பெயர்வு.
O5

Page 18
இப்பல்வேறு வகைப்பட்ட இந்தியக் குடிப்பெயர்வுகளுள் பரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இடம்பெற்ற முதல் மூன்று வகையான குடிப்பெயர்வுகளுமே இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கடைசி இரண்டும் சமகால நிகழ்வுகளாகும்.
அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர், கடன் ஒப்பந்த முறையின் கீழ்க்கொண்டு செல்லப்பட்ட தொழிலாளரின் வழித்தோன்றல்களே மேற்கிந்தியத் தீவுகள், பிஜி, மொறிசியஸ் போன்ற நாடுகளில் இன்று காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். கடன் ஒப்பந்த காலத்தைப்பூர்த்தி செய்த பின்னர் தொழிலாளர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வசிப்பதற்கான சில விதிகளையும் இக் கடன் ஒப்பந்தங்கள் கொண்டிருந்தன. (Gillion K.C. 1962). மேற்கிந்தியத் தீவுகள், பிஜி, மொறிஸியஸ் போன்ற தூர நாடுகளுக்கான குடிப்பெயர்வில் ஒப்பந்தக்காலம் முடிவுற்ற பின்னர் அவர்களை இலவசமாக தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கு அல்லது அந்நாடுகளிலேயே அவர்கள் குடியேறுவதை ஊக்குவிப்பதற்கு சில விதிகள் காணப்பட்டதோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்விதிகள் பின்பற்றவும்பட்டன. அதாவது, அந்நாடுகளிலேயே அவர்கள் குடியேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தவரை, கடன் ஒப்பந்த முறை, கங்காணி/மேஸ்திரி முறை, தன்னிச்சையான குடிப்பெயர்வு போன்ற மேலே குறிப்பிட்ட எல்லா வகைக் குடிப்பெயர்வுகளுமே இடம்பெற்றன.
இந்தியக் குடிப்பெயர்வுகளை பல்வேறு கட்டங்களாகப் பிரித்தும் நோக்கலாம். ஆரம்பத்தில் அது தனிப்பட்டோரால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால், 1839ஆம் ஆண்டு அவ்விதக் குடிப்பெயர்வை இந்திய அரசாங்கம் தட்ை செய்தது. அடுத்த கட்டத்தில், குடிப்பெயர்வை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தொடங்கிற்று. தொழிலாளர் தேவையாகவிருந்த நாடுகளுக்கு இந்தியர் குடிப்பெயர்ந்து செல்வதற்குப் பொருளாதார ரீதியான எவ்வித தடைகளும் இருப்பதாக இந்திய அரசாங்கம் கருதாத போதும் அவ்வாறு குடிப்பெயர்ந்து செல்வோருக்குச் சில காப்பீடுகள் இருக்க வேண்டுமென அது கருதிற்று. அவ்வித காப்பீடுகள் இருப்பதாகக் கருதிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அது குடிப்பெயர்வை அனுமதித்தது. அரசாங்கத்தினது இந்த அணுகுமுறை பரோபகார ரீதியான சார்பிலாத் தன்மை’ என வர்ணிக்கப்படுகிறது. (Arasaratnam, op.cit)
06

குடிப்பெயர்வு தொடர்பான இந்திய உளப்பாங்கு
1. இநதிய அரசாங்கத்தின உளப்பாங்கு: பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட நாடுகளில் இந்தியர் பெருமளவாகச் சென்று குடியேறிய இக்காலப்பகுதியில், இந்திய காலனித்துவ அரசாங்கம் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து (அவ்வப்போது) அக்கறை காட்டி வந்தது (Tinker, H. 1976). வேறு நாடுகளுக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு செல்வதற்கு இலங்கை ஒரு பாலமாகக் கையாளப்பட மாட்டாது என்ற உறுதி மொழியின் பேரில் இந்தியத் தொழிலாளர் இலங்கைக்கு கொண்டு வர்ப்படுவது அனுமதிக்கப்பட்டது. புலம் பெயர்வோரது நலன்களைப் பாதுகாப்பதற்கு பல ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தற்காலிகமாக குடியேற்றத்தை நிறுத்தியது. இருந்தும் கூட, பல சந்தர்ப்பங்களில் அவை மீறப்படுவதை இந்திய அரசாங்கத்தினால் தடைசெய்ய முடியவில்லை.
இந்தியரது குடிப்பெயர்வைப் பொறுத்தவரை, இந்திய ஆட்சியாளர் இரு குரல்களில் பேசியதாகக் கூறப்படுகின்றது. ஒன்று இந்திய அரசாங்கத்தின் குரலாகும். இது உண்மை நிலையுடன் தொடர்பற்றதாக இருந்த போதும், இந்திய தேசிய உணர்வுகளை நன்கு உணர்ந்ததாகவிருந்தது. மற்றது, லண்டனில் இருந்த பிரித்தானிய அரசியலினதும் அரசாங்கத்தினதும் நலன்களைப் பிரதானமாகக் கொண்ட 35 flu Gls usus, ifsir (India Office at the whitehall) (syangsui.
பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டும் ஒன்றோட்ொன்று முரண்பட்டனவாக இருந்தன. இந்தியச் செயலகமானது பிரித்தானிய பேரரசுவாத நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. மறுபக்கத்தில், இந்திய அரசாங்கமானது குடியேற்றக் கொள்கை பற்றியும் இந்தியர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் முறை பற்றியும் கண்டனம் செலுத்திய, இநீ திய மக்களின் உணர்வுகளை புறக் கணிக்க முடியாத நிலையிலிருந்தது. எனினும், பிரித்தானிய பேரரசினது நலன்களை முக்கியமாக கருதிய காலனித்துவ செயலகம் தான் சரியென
எண்ணியதையே செய்தது.
11. மக்கள - *கு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் - - - ன்டின் முற்பகுதியிலும் பெருமளவு குடிப்பெயர்வு
O7

Page 19
ஏற்பட்டபொழுதும், பல்வேறு காரணங்களினால் இந்திய மக்களிடையே அது பிரசித்தம் பெற்றிருக்கவில்லை. கடல் கடந்த பயணங்கள் மதம் சார்ந்த காரணங்களால் சில சாதியினரால் வரவேற்கப்படவில்லை (Saha, P. 1970) மேலும், சாதி, மதம், வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாது முகாம்களிலும், கப்பல்களிலும், புலம்பெயர்ந்த நாட்டு குடியிருப்புக்களிலும் அவர்கள் ஒருவரோடொருவர் கலக்கப்பட்டமை இந்திய உயர்சாதியினரின் வெறுப்புக்குள்ளானது. ஆரம்ப காலங்களில் இவ்வித எதிர்ப்புக்கள் எதுவித நடைமுறைத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1930 ஆம் ஆண்டுகளில் எல்லாவித குடிப்பெயர்வுகளுக்குமே நடைமுறை எதிர்ப்புக்கள் தோன்றின. குடிப்பெயர்வுகளுக்கு எதிரான வலுவானதொரு தேசிய அபிப்பிராயமும் உருவானது. அதேவேளையில் , சமூக-பொருளாதாரச் சிந்தனைகளிலேற்பட்ட மாற்றங்களும் தொழிலாளர் குடிப்பெயர்வு தொடர்பாக அரசாங்கத்தினது உளப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தின. தலையிடாக் கொள்கை, பொருளாதாரத் தாராணி மைவாதம் போன்றவற்றிற்கெதிராக சவால்கள் விடப்பட்டன. பல குடியேற்ற நாடுகளில் புலம் பெயர்ந்து சென்று குடியேறிய தொழிலாளர் அனுபவித்த பாதகமான நிலைமைகளும் இதற்குப் பங்களித்தன. மேற்படி காரணங்களினால் 1916 தொடக்கம் குடிப்பெயர்வு தொடர்பான அரசாங்கக் கொள்கைகளிலும் பல
மாற்றங்கலேற்பட்டன.
1. கடன் ஒப்பந்த முறை 1916ல் நீக்கப்பட்டது.
2. அரசாங்க உதவியுடன் கூடிய ஏனைய வகைக் குடிப்பெயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு 1922ஆம் ஆண்டு இந்திய குடியகல்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
3. குடிப்பீெர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக குடிப் பெயர்வு நிலையியற் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
4. 1938இல் எல்லாவிதக் குடிப்பெயர்வுகளுமே தடைசெய்யப்பட்டன.
5. புலம் பெயர்ந்த தொழிலாளரின் நலன்களைக் கவனிக்கவெனப் பல
நாடுகளில் இந்திய அரசாங்க முகவர்கள் (Indian Agents) நியமிக்கப்பட்டனர். .÷ à .
O8

குடிப்பெயர்வுக்கான காரணங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிலிடம்பெற்ற பல்வேறு மாற்றங்களின் மோசமான தாக்கத்தினை அனுபவித்த தென்னிந்தியாவே பிரித்தானியாவினது குடியேற்ற நாடுகளுக்கு பெருமளவான விவசாயத் தொழிலாளரை நிரம்பல் செய்யும் மூலமாகவிருந்தது.
இந்தியாவில் நிலவிய பொருளாதார நிலைமைகளுக்கேற்ப குடிப்பெயர்வு தளம்பியது. இயற்கை அனர்த்தங்களாலேற்படும் பஞ்சம், அல்லது கிட்டிய பஞ்சங்கள் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த தாக்கங்களே இவ்வித தளம்பல்களை ஏற்படுத்தின. சிறு நில விவசாய வகுப்பின் கீழ் மட்டத்திலிருந்தோரும், சமூக பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட பிரிவினருமே குடிப்பெயர்ந்தனர். குடிப்பெய்ர்ந்தோரிற் பெரும்பாலானோர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த இந்துக்களாவர். இவர்கள் தாம் வாழ்ந்த கிராமங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். நிலச்சுவாந்தார்களிடமிருந்து தாம் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலையில் அவர்களோடு இறுகப்பிணைக்கப்பட்டிருந்த இவர்கள், குடிப்பெயர்வை தமக்குக் கிடைக்கும் விடுதலையாகக் கருதினர். சமூகரீதியான நசுக்கல்களும் மானியச் சுரண்டல்களும் இவர்களது குடிப்பெயர்வைப் பெரிதும் தூணி டின. பிரித் தானிய காணிக்கொள்கைகளினால் உருவாக்கப்பட்ட கானியற்ற விவசாயத் தொழிலாளரும், கட்டற்ற இறக்குமதிகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாது முறிவடைந்த இந்திய கிராமிய கைத்தொழில்களினின்று வெளியேற்றப்பட்ட தொழிலாளருமே இவ்வித குடிப்பெயர்வுக்குத் தயாராகவிருந்தனர். சனத்தொகை அதிகரிப்பு, விவசாயத்துறையிலேற்பட்ட உற்பத்தித்திறன் வீழ்ச்சி, அடிக்கடி ஏற்பட்டு வந்த பஞ்சங்கள், வேதனங்களின் வீழ்ச்சிப் போக்கு, தானியங்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகளின் இடைத் தாக்கங்களினால் காணியற்ற இவ்விவசாயத் தொழிலாளர் வகுப்பினர் தீராத வறுமை, கடன் பளு, பட்டினி நிலை என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேற்படிக் காரணிகளே இவர்களை வெளிநாடுகளுக்கு குடிப்பெயரத் தூண்டின (Gillion, 1962), எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருந்தொகையான இந்தியர்கள் தொழிலாளர்களாகப் புலம்பெயர்ந்தமைக்கான காரணங்கள் சிக்கல் நிறைந்தனவெனலாம்.
O9

Page 20
குடிப்பெயர்வு முறைகள்
1. கடன் ஒப்பந்த முறை. இந்த முறையின் கீழ் தொழிலாளரைத் திரட்டும் ஒரு முகவர் அவர்களை வேலைக்கமர்த்தத் தயாராகவிருக்கும் தொழில் வழங்குநரின் வேண்டுகோளின் பேரில் இந்தியக் கிராமப்புறங்களிலிருந்து தனது இடைத்தரகர்களினூடாகத் தொழிலாளரைத் திரட்டுவர். கடன் ஒப்பந்தத்தில் கைச் சாத் திட்டதும் இவர்கள் & L-6i ஒப்பந்தத்திற்குட்பட்டோராகக் கருதப்பட்டனர். ஒப்பந்தம் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குச் செல்லுபடியானது. இக்காலப் பகுதியில் அவர்கள் தமது தொழில் வழங்குநரை மாற்றிக்கொள்ளவோ, தொழிலை மாற்றிக்கொள்ளவோ உரிமை இருக்கவில்லை. வேதனங்களை நிர்ணயிப்பதில் அவர்களைக் கொண்டு செல்வதற்கேற்பட்ட செலவுகளும் கவனத்திற்கொள்ளப்பட்டன.
கடன் ஒப்பந்த முறையானது அடிமை ஊழியமுறையாகவோ, கட்டற்ற ஊழியமுறையாகவோ இராது இவையிரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகவிருந்தது (Saha, 1970), அடிமை ஊழியத்திற்கு ஒரு மாற்றீடாகவிருந்த அது, தொழிலாளருக்கு வரையறுக்கப்பட்ட சில காப்பீடுகளையும் கொண்டிருந்தது. ஒப்பந்தக்காலப்பகுதியின் பின்னர் தொழிலாளர் ஒப்பந்தத்தினின்றும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விரும்பினால் மீண்டும் தம்மைப் பிணைத்துக் கொள்ளலாம். கடன் ஒப்பந்த நிபந்தனைகள் பிரித்தானிய - இந்திய அரசாங்கத்தின் சட்ட மூலங்களில் காணப்பட்டன. இந்நிபந்தனைகள் கடன் ஒப்பந்த முறையின் கீழ் தொழிலாளரைத் திரட்டுவதில் காணப்பட்ட துஷ்பிரயோகங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதேவேளையில், பிரித்தானிய குடியேற்ற நாடுகளிற் செயற்பட்ட பிரித்தானிய நிறுவனங்களுக்குத் தேவையான ஊழிய நிரம்பலை உறுதிப்டுத்துவதும் அவற்றின் நோக்கமாகவிருந்தது (Wesmperma, 1986).
11. கங்காணி/மேஸ்திரி முறை. இந்த முறையின் கீழ் தொழிலாளரைத்
திரட்டுதல், அவர்களைத் தொழிலிலமர்த்துதல், வேதனங்களைச்
செலுத்துதல், அவர்களைக் கட்டுப்படுத்துதல், தொழிலினின்றும்
அவர்களை விலக்குதல் என்பன தென்னிந்தியாவில் கங்காணி’ என்றும்,
வட இந்தியாவில் "மேஸ்திரி என்றும் அழைக்கப்பட்ட ஊழிய
ஒப்பந்தக்காரரின் பொறுப்பாகவிருந்தது (de Silva, K. M. 1968)
O

இவர்கள் தோட்ட உரிமையாளரால் இதற்கென விசேடமாக அமர்த்தப் பட்டவர்களாகவோ அல்லது தாமாகவே இதில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தனர். தொழிலாளரைத் தெரிவு செய்வதில் இவர்கள் கவனமாக செயற்படுவர் என்பதாலும், சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதாலும், தொழிலாளர் விரும்பியே குடிப்பெயர்வுக்கு முன் வருவர் என்பதாலும், கடன் ஒப்பந்த முறையில் காணப்பட்ட பலவந்தம், கண்மூடித்தனமான தொழிலாளர் திரட்டல் போன்ற குறைபாடுகளை இது நீக்கி விடுமென்று எதிர்பார்க்கப்பட்டது
(Arasaratnam, op. cit.)
உண்மையான தொழில் வழங்குநருக்கும் தொழிலாளருக்கு மிடையிலான உறவுகள் நேரடியானவையாக இருக்கவில்லை. கங்காணி அல்லது மேஸ்திரிமாரே இவ்விரு சாராருக்குமிடையே ஊடகமாகச் Gs Lugibu ' L-GOI it (Chakravarthi, 1991). .
வெளிநாடுகளில் குடியேறியோரின் நிலைமை:
குடிப்பெயர்விற்காக தொழிலாளர் திரட்டப்பட்ட காலந்தொட்டு, முகாம்களிலும் கப்பல்களிலும், குடியேறிய நாடுகளிலும் அவர்களது நிலைமை மிக மோசமாக இருந்தது. சரக்குகளோடு சரக்காக அவர்களும் கப்பல்களில் ஏற்றப்பட்டனர். ..
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலின் தன்மை, வேதனங்கள், சுகாதார-இருப்பிட வசதிகள் என்பன தொடர்பானி நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டனவாகவிருந்ததோடு, தோட்ட முகாமையாளரால் அவை ஒரு தலைப்பட்சமாக மீறப்பட்டும் வந்தன. உதாரணமாக, மேற்கிந்தியத் தீவுகளில் இந் நிபந்தனைகள் தொழிலினது இயல்பு, வேதனங்கள், பங்கீட்டு உணவு, வீட்டு வசதி, மருத்துவ வசதி போன்றவற்றை அடக்கியிருந்த போதும் அவை திட்டவட்டமானவையாக இருக்கவில்லை. நடைமுறையில் அவை தோட்ட முகாமையாளரின் தயவிலேயே தங்கியிருந்தன. அத்துடன் தொழிலாளர் பல்வேறு உடல் ரீதியான தணடனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர் (Klass, 1961). உதாரணமாக, மொறிசியஸில் 1867க்கும் 1872க்குமிடையே 50 இந்தியத் தொழிலாளர்கள் கசையடியினால் மண்ணிரல் சிதறி மரணமடைந்ததாக
ஒரு ஆணைக்குழு கூறுகின்றது (Tinker, 1974), இந்தியப்
11

Page 21
பெருந்தோட்டங்களில் பல தொழிலாளர் கசையடியினால் இறந்ததாகவும் இவ்வித குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வெறுமனே தண்டப்பணம் செலுத்துவதாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது (Moldrich, 1986) மலேயாவில் ஒரு தொழிலாளி மனிதக் கழிவை உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்று நோய்க்கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப் பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான். இது பொலிஸ் நிலையத்திலிருந்து 50 யார் தூரத்திலேயே இருந்ததாக கூறப்படுகின்றது. (Satel, 1977), மோர்ட்டன் கிளாஸ் என்பவர் இத்தொழிலாளரது நிலை, இதற்குச் சற்று முன்னர், விடுவிக்கப்பட்ட உண்மையான ஒரு அடிமையின் நிலையை ஒத்ததாக இருந்ததாகவும், இவை இரண்டிற்குமிடையே ஒரேயொரு வேறுபாடு மட்டுமே காணப்பட்டதாகவும் கூறுகிறார் (Morton, op. cit). அடிமைத்துவம் ஒருவனது வாழ்நாள் முழுவதற்கும், கடன் ஒப்பந்த முறையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியானதாகவிருந்ததுமே இந்த வேறுபாடாகும்.
நாளாந்த வேதனங்கள் ஏறக்குறைய எல்லாக் குடியேற்றங்களிலுமே ஒரே சீராக குறைந்த மட்டத்திலிருந்தன. 1922 ஆம் ஆண்டு இந்திய குடியகல்வுச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே அவை ஓரளவு உயர்த்தப்பட்டன. தொழிலாளரது குடியிருப்புக்கள் அடிப்படை வசதிகளற்றனவாகவிருந்ததோடு, பல்வேறு சமூகக் கேடுகளுக்கும் அவை காரணமாக விருந்தன. சுகாதார - மருத்துவ வசதிகளின் மை தொடர்ச்சியானதொரு பிரச்சினையாக விருந்தது. இதனால், குடியேற்றவாசிகளிடையே மரண விகிதமும் மிகவும் உயர்வாகவிருந்தது.
கடன் ஒப்பந்த முறையில் தொழிலாளரைத் திரட்டிய ஆரம்ப காலங்களில், குடியேறியோரிடையே ஆண் - பெண் விகிதாசாரம் சமமற்றதாகவிருந்தமை ஆரம்பகாலக் குடிப்பெயர்வுக் கொள்கையில் காணப்பட்ட முக்கியமானதொரு குறைபாடாகவிருந்தது. 1843க்கும் 1850க்குமிடையே இலங்கைக்கு வந்த ஆண் தொழிலாளரின் எண்ணிக்கை 9737 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 38 ஆகவும் இருந்தமை இதனைத் தெளிவுபடுத்துகின்றது. எனினும் காலப்போக்கில் இச்சமமின்மை ácsbábüuu'l-3b) (Moldrich, op. cit).
12

தாம் குடியேறிய நாடுகளில் இந்தியர் பல்வேறு வகையான வரையறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். குடியேற்ற நாடுகளுக்குள் இந்தியரின் தடையற்ற பிரவேசத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை 1921 ஆம் ஆண்டு பேரரசு மகாநாடு அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து, இந்நாடுகளில் வசித்த இந்தியர்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டதோடு, ஏனைய சமூகங்களுக்கில்லாத மொழி, சொத்து, தொடர்பான நிபந்தனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். மேலும், குடிவரவு, குடிப்பெயர்வு என்பவற்றிற்கு உயர்ந்த வைப்புக்களைச் செலுத்துமாறும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். கள்ளக் குடியேற்றம் (தென்னாபிரிக்கா), இந்தியப் பொருளாதார ஊடுருவல் (பர்மாவும் இலங்கையும்) என்பவற்றைத் தடுப்பதற்காகவே இவ்விதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தென்னாபிரிக்காவிலும் கெனியாவிலும் இந்தியரின் காணியுடைமை, குடியிருப்பு என்பவற்றின் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தென்னாபிரிக்காவில் இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களிலேயே அவர்கள் வாழவேண்டுமென்றும், கெனியாவில் உயர் நிலங்களை அவர்கள் கொள்வனவு செய்ய முடியாதென்றும் ( இவை ஐரோப்பியருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன) விதிக்கப்பட்டன. பிஜித்தீவில் இந்தியர் தனியார் காணிகளை கொள்வனவு செய்வது தடைசெய்யப்பட்டது. இதேபோன்ற வரையறைகள் ஏனைய நாடுகளிலும் இருந்தன.
சில நாடுகளில் இந்தியருக்கு வர்த்தகத்திலீடுபடும் உரிமை வழங்கப்படவில்லை. தொழில் ரீதியாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், உள்ளுர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தொழில்கள் மட்டுமே அவர்களுக்குத் திறந்து விடப்பட்டன.
இந்தியரது அரசியற் பிரதிநிதித்துவம்
இந்தியர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இக்காலப் பகுதியில் ஒரு சில நாடுகளில் மட்டுமே தேர்தல் முறை காணப்பட்டது. இந்நாடுகளிலுங் கூட, வாக்குரிமை அங்கு வதிந்த வெள்ளையரது ஏகபோக உரிமையாகவிருந்தது. உதாரணமாக, மொறிசியஸின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியராக இருந்த போதும், ஒரு வீதத்திற்கும் குறைவான இந்தியருக்கே வாக்குரிமை இருந்தது. 1937 ஆம் ஆண்டிற்கு முன்னரே இந்தியருக்கு அங்கு வாக்குரிமையிருந்த
3

Page 22
போதும், சட்டசபையில் ஒரேயொரு இந்தியப் பிரதிநிதியே இருந்தார். இந்த ஆண்டில் அது இரண்டாக அதிகரிக்கப்பட்டது. எனினும், நாட்டினது நிர்வாக சபையில் இந்தியப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய சமூகத்தினர் பொதுவாகவே இன ரீதியான பிரதிநிதித்துவத்தையே கோரி வந்த போதும், அது காலனித்துவ செயலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பலவீனமானதும், ஒழுங்குபடுத்தப்படாததுமான இந்திய சமூகத்தினருக்கு இன ரீதியான பிரதிநிதித்துவம் சாதகமாகவிருக்கும் சந்தர்ப்பங்களில் அது ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதும், இந்தியர் பெருந்தொகையினராகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும், அரசியல் அதிகாரத்திற்குப் போட்டி போடக்கூடிய தகுதியும் பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இன ரீதியான தேர்தற்தொகுதிகளில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவதும் காலனித்துவச் செயலகத்தின் கொள்கையாகவிருந்ததென டிங்கர் கூறுகிறார் (Tinker, op. cit) 1930 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியான போராட்டங்களினூடாக இந்தியர் தமக்கென ஓரளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டனர். எனினும், இந்நாடுகளில் காணப்பட்ட அவர்களது எண்ணிக்கையோடு சார்பளவில் அது குறைவாகவே இருந்தது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்நாடுகள் சுதந்திரம் பெற்றமை இந்தியரது நிலைமையில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சில நாடுகளில் அவர்கள் ஏற்கனவே தாம் பெற்றிருந்த குடியுரிமையையும் இழக்க நேரிட்டது (உதாரணம். பர்மாவும் இலங்கையும்). பர்மிய குடியுரிமையைப் பெறுவதற்கு ஒரு இந்தியன் 1942க்கு முன்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் அல்லது 1948க்கு முன்னருள்ள 10 வருடங்களில் தொடர்ந்து 8 வருடங்களாவது பர்மாவில் வசித் திருக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. இவ்விதிகளுக்கமைய 140,000 இந்தியர் மட்டுமே பர்மிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். இதில் ஒரு மிகச் சிறிய தொகையினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. எனவே: பெருந்தொகையான இந்தியர் தமது தொழில்களைக் கைவிட்டுத் தாயகம் திரும்பினர்.
இலங்கையில் 1931இல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, வாக்குரிமைக்கு விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளின் கீழும், glaitíf 100,000 இந்தியர் வாக்குரிமை பெற்றதுடன் தமது சார்பாக சட்டசபைக்கு இரு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும் முடிந்தது. இந்நாட்டினது சட்டசபையில் இந்தியரது ஆரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆரம்பத்தை
14

இது குறித்தது. 1939ல் சுமார் 225,000 பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். ஆனால், நாடு சுதந்திரமடைந்த பின்னர் கொண்டு வரப் بسالا لا குடியுரிமைச் சட்டம் மிக இறுக் கமான தாவும் , இந்தியரின் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது. எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாத சுதேசிகள் அல்லாதோரும், வதிவு, பொருளாதார ஆதாரம், குடும்ப வாழ்க்கை என்பவற்றின் அடிப்படையில் இலங்கையில் தமது நிரந்தரமான குடியிருப்பை நிரூபிக்க முடியாதோரும் இக் குடியுரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கி வைக்கப்பட்டனர் (Lait Kumar, 1977) தொடர்ந்து கொண்டுவரப்பட்ட இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் (1949) குடியுரிமைக்கு விண்ணப்பித்த 825,000 பேரில் 134188 பேருக்கு மட்டுமே 1964 ஆம் ஆண்டு வரை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. எஞ்சியோரது குடியுரிமை இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையே பிரச்சனைக்குரிய ஒரு விடயமாக மாறியது. 4.
புலம்பெயர்ந்த இந்தியர்களின் இன்றைய நிலை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியரின் வழித்தோன்றல்களே இன்று உலகின் பலநாடுகளிலும் காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். மொறிசியஸ், கயானா, பிஜி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையினராகவும், வேறு சில நாடுகளில் பிரதான சிறுபான்மை இனமாகவும், இன்னும் சில நாடுகளில் மிகச் சிறிய சிறுபான்மைக் குழுக்களாகவும் அவர்கள் உள்ளனர். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் சுமார் 7 வீதமாகவும், மலேசியாவில் 11 வீதமாகவும், சிங்கப்பூரில் 5.6 வீதமாகவும், கயானாவில் 50 வீதமாகவும், டிரினிடாட்டில் 35 சதவீதமாகவும், பிஜி தீவில் 51 வீதமாகவும், மொறிசியஸ் தீவில் 67 வீதமாகவும் அவர்கள் உள்ளனர். தென்னாபிரிக்காவில் அவர்களது எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 3 வீதத்திற்கும் குறைவாகவும், கிழக்காபிரிக்க நாடுகளில் 8 வீதமாகவும் உள்ளது.
இந்தியர் வாழுகின்ற பல நாடுகள் பன்மைத்தன்மை வாய்ந்த சமூகங்களைக் கொண்ட நாடுகளாக (Pluralist Countries) உள்ளன. பன் மைத்தன்மை கொண்ட சமூகம் என்பது, ஒரு அரசியல் அலகுக்குள்ளேயே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமூகங்கள் ஒன்றாக ஆனால், ஒன்றுடனொன்று கலவாமல் வாழும் நிலையெனக்
15

Page 23
கூறப்படுகின்றது (Furniva, 1938) இந்தியர்கள் இன்று நான்கு விதமான பன்மைச் சமூகங்களில் வாழுகின்றனர் (Patel, 1974)
1. இரு கலாசார நாடுகள்: மொறிசியஸ், பிஜி, கயானா போன்றன.
2. ஆசிய பெரும்பான்மைச் சமூகங்கள்: இலங்கை, பர்மா, மலேசியா
போன்றன.
3. ஆபிரிக்க பெரும்பான்மைச் சமூகங்கள்: கெனியா, உகண்டா,
தன்சானியா, செம்பியா போன்றன.
4. நவகாலனித்துவ நாடுகள்: தென்னாபிரிக்காவும் றொடிசியாவும்
1. இரு கலாசார நாடுகளில் இந்தியர்
மொறிசியஸ், பிஜி, கயானா, போன்ற இரு கலாசார நாடுகளில் இந்தியர் மிகப் பெரிய தேசிய இனமாகவிருந்த பொழுதும், அவர்களது எண்ணிக்கைக்கேற்ற அரசியற் சக்தி அற்றவர்களாக வாழுகின்றனர்.
மொறிசியஸினது சனத்தொகை ஐரோப்பியர், இந்தியர், ஆபிரிக்கர், சீனர் ஆகியோருடன் உள்ளுர் கலப்பு இனமக்களையும் கொண்டதாகும். இங்கு எல்லாச் சமூகங்களுமே ஒன்றுடனொன்று கலந்து விட்டதால், இந்தியர் இப்பொழுது ஒரு தனிப்பட்ட இனமாக இல்லை. இந்திய கலாசாரம் மொறிசிய கலப்புக் கலாசாரத்துடன் கலந்து படிப்படியாகத் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. உண்மையில் மொறிசியஸ் ஒரு குடியேறியோர் தீவாகும். போர்த்துக்கேயர் முதன்முதலாக அங்கு அடியெடுத்து வைத்தபோது அங்கு மனித குடியிருப்புகள் எதுவுமே இருக்கவில்லை. 1834க்கும் 1922க்குமிடையே இந்தியர் அங்கு சென்று குடியேறினர். பொருளாதார ரீதியாக இந்தியர்களது செல்வாக்கு குறைவாகவே உள்ளது. சாகுபடிக்குட்பட்ட காணிகளில் சுமார் 32 வீதம் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனினும், தமது பெரும்பான்மை காரணமாக அவர்கள் அரசியலில் ஓரளவு செல்வாக்குக் கொண்டுள்ளனர். மொறிசிய இந்தியர், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமது பொதுவான புறநோக்கு என்பவற்றில் ஏனைய நாட்டு இந்தியரினின்றும் வேறுபடுகின்றனர். முதலாவதாக, இந்தியர் அங்கு ஒரு
16

தனிப்பட்ட இனமாகவிராது, நாட்டினது பல்லின அமைப்பின் ஒர் அங்கமாக மாறிவிட்டனர். இரண்டாவதாக, அவர்கள் (5 சிறுபான்மையினராகயிராது பெரும்பான்மையினராக உள்ளனர். மூன்றாவதாக, அவர்கள் மொறிசியர்களாகவே மாறிவிட்டனர்.
1981ஆம் ஆண்டு 636,000 ஆகவிருந்த பிஜிய சனத்தொகையில் 320,000 பேர் இந்தியராகவிருந்தனர். பிஜிய சுதேசிய மக்களும், இந்தியரும் வேறுபட்ட மொழி, மதம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டவர்களாவர். இந்தியர்கள் இந்துக்களாகவோ, முஸ்லிம்களாகவோவிருக்க, பிஜியர்கள் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர். ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்தே பெரும்பாலான இந்தியர் அங்கு சென்றனர். இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே தமிழ்த் தொழிலாளர் அங்கு செல்லத் தொடங்கினர். தமது சொந்தச் செலவிலேயே அங்கு சென்ற பஞ்சாபியர் விவசாயிகளாகவும், குஜராத்தியர் வர்த்தகர்களாகவும் மாறினர். இந்தியர் தமது பெரும்பான்மைக்கேற்ற செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. நாட்டினது காணிகளில் மூன்றில் இரணி டு பங்கு பிஜியருக்கே சொந்தமாக விருக்க, இந்தியர் அவர்களிடமிருந்து அக்காணிகளைக் குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். 1930 ஆம் ஆண்டுகளில் ஆரம்ப குத்தகைக் காலம் (90 வருடங்கள்) முடிவுற்ற பொழுது பிஜியர்கள் அதனைப் புதுப்பிக்க தயக்கம் காட்டியதோடு, சில இந்தியர்கள் தமது காணிகளினின்று வெளியேற்றவும் பட்டனர். எனினும், 1941ல் உருவாக்கப்பட்ட உள்நாட்டு காணிகள் நம்பிக்கை சபை (Native Lands Trust Board) இதில் இணக்கப்பாட்டைக் கொண்டு வர முயன்றது. பிஜிய தலைவர்கள் எப்பொழுதுமே இந்தியர்களுக்குச் சலுகைகள் வழங்குவதற்குத் தமது மக்களை வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்குப் பிரதியுபகாரமாக இந்தியர் 1965 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற அரசியற் திட்டம் தொடர்பான மகாநாட்டில் காணிப் பிரச்சினையை எழுப்பாதிருக்க இணங்கினர்.
இந்தியரும், ஐரோப்பியரும் வைத்தியம், ச்ட்டம், வர்த்தகம் போன்ற துறைகளில் உயர்மட்டத்தை அடைந்துள்ளனர். அதேவேளையில், பிஜியரும் அரசாங்க சேவை, ஆசிரிய சேவை, மதகுருத்துவம் போன்ற துறைகளில் முன்னேறி பலர் இன்று மத்திய வகுப்பு அந்தஸ்தையும் எட்டிப்பிடித்துள்ளனர் V
17

Page 24
மேற்கிந்தியத் தீவுகளின் சனத்தொகை கயானா, டிரினிடாட், சூரிநாம் ஆகிய நாடுகளிலேயே செறிந்து காணப்படுகின்றது. 1946ல் கயானாவின் மொத்த சனத்தொகையில் இந்தியர் 435 வீதமாகவும். டிரினிடாட்டில் 351
வீதமாகவும், சூரிநாமில் 46 வீதமாகவும் இருந்தனர்.
இந்தியரின் வருகை ஆரம்பத்தில், அடிமைத்தளையினின்றும் விடுதலை பெற்றிருந்த ஆபிரிக்க மக்களின் எதிர்ப்பிற்குள்ளானது. இந்தியத் தொழிலாளரின் வருகையால் தமது வேதனக் கோரிக்கைகள் தோட்ட முதலாளிமார்களினால் தட்டிக் கழிக்கப்படக்கூடும் என்பதே இதற்கான காரணமாகவிருந்தது. ஆனால், ஆபிரிக்கருக்கு நகர்ப்புறங்களில் போதிய வேலைவாய்ப்புக்கள் கிடைத்தமையால் அவர்கள் நகர்ப்புறங்களிலும் இந்தியர் கரும்புத் தோட்டங்களிலும் குடியேறியதால், இவ்வெதிர்ப்பு பின்னர் மறைந்தது. 1950களில் இந்தியரது எண்ணிக்கை ஆபிரிக்கர்களது எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்ததோடு, இந்தியரும் கல்விகற்று நகர்ப்புறத் தொழில்களுக்கு போட்டியிடத் தொடங்கியபோது பகைமை உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின. w டீ
கயானா ஆறு இனமக்களைக் கொண்ட ஒரு நாடாகும். 1965க்கு முன்னர் இந்தியரின் செல்வாக்கைக் கொண்ட ஜெகன் அரசாங்கத்தின் கீழ் அரசாங்கத்துறை தொழில்வாய்ப்புக்களில் இந்தியர் சம அந்தஸ்து பெற்றிருந்தனர். இந்த அரசாங்கம் வீழ்ச்சியுற்ற பின்னர் நிலைமை மாறிற்று. பல்கலைக்கழக அனுமதி, தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றில் இப்பொழுது தனிப்பட்டோரின் திறமையுடன் இனவிகிதாசாரமும் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. இந்தியர் இதனைத் தமக்கெதிரான இனப் பாகுபாடு எனக்கூறி எதிர்த்து வருகின்றனர்.
2 ஆசியப் பெரும்பாண்மைச் சமூக நாடுகளில் இந்தியர்
இந்தியர் பெருமளவினராக வாழும் ஆசிய நாடுகள் ஐரோப்பியரது வருகைக்கு முன்னரே இந்தியாவுடன் வரலாற்று ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்த நாடுகளாகும். பல நூற்றாண்டு காலமாகவே இந்தியர் இலங்கையில் குடியேறி வந்துள்ளனர். இலங்கையினது பிரதான மொழிகள், மதங்கள், கலை, கலாசாரம் என்பன இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. 1852க்கு முன்னர் இந்தியர்கள் பெருமளவில் பர்மாவில் குடியேறவில்லையெனினும் இரு நாடுகளுக்குமிடையே நெருங்கிய வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்தன. நாட்டினது பிரதான மதமான
18

பெளத்தமும் இந்தியாவினின்று சென்றதாகும். கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பம் தொட்டே மலேசியாவிற்கும் இந்தியாவிற்குமிடையே தொடர்புகள் நிலவி வந்துள்ளன. எனினும், இத்தொடர்புகள் பெருமளவிற்கு வர்த்தகம் சார்ந்தனவாகவே இருந்தன
இலங்கையில் இந்திய சமூகமானது இன்று சுமார் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டதாக உள்ளது. 1946ல் மொத்த சனத்தொகையில் 117 வீதமாகவிருந்த இவர்களின் பங்கு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பலர் தாயகம் திரும்பியதால், 1981ஆம் ஆண்டு 5 வீதமாகக் குறைந்தது. மிக அண்மிய காலக்கணக்கெடுப்பில் இது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிகின்றது. எனினும், இந்தியர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட உண்மையான வீழ்ச்சியை இது காட்டவில்லை. இலங்கைக் குடியுரிமை பெற்ற பலர் தம்மை இலங்கைத் தமிழரென குடித்தொகைக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்வதாலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் மேற்படி வீழ்ச்சி காணப்படுகின்றது. இதேவேளையில், குடித்தொகை மதிப்பீட்டில் இலங்கைத் தமிழரது விகிதாசாரப்பங்கு கணிசமாக அதிகரித்துள்ளமை இதனைத் தெளிவுபடுத்துகின்றது. எண்பது வீதத்திற்கும் அதிகமான இந்தியர் (தமிழர்கள்) மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் அமைந்துள்ள பெருந்தோட்டங்களிலேயே செறிந்து வாழுகின்றனர். எஞ்சியோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் காணப்பட்டாலும், கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் செறிவாக உள்ளனர். கடந்த சுமார் இரு தசாப்தங்களில் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வந்த இனக்கலவரங்களினால் அவர்கள் தமது பாதுகாப்பிற்காக நாட்டின் வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இப்பகுதிகளில் இப்பொழுது சுமார் ஒன்றரை இலட்சம் இந்தியத் தமிழர்கள் வாழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்கால இராணுவ தடவடிக்கைகள் காரணமாக இதில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியமுண்டு.
இலங்கையினது பொருளாதார அபிவிருத்திக்கு இம்மக்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரியது. நாட்டினது மொத்த வெளிநாட்டு நாணய உழைப்பில் சுமார் அரைவாசிக்கு இவர்களது உழைப்பே காரணமாகவுள்ளது. எனினும், சமூக-பொருளாதார ரீதியாக இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளனர். தோட்டப்புற மக்களது புவியியல் தியான அசைவு கட்டுப்படுத்தப்பட்டதாகவிருப்பதுடன், தோட்டங்களுக்கு
19

Page 25
வெளியே அவர்களது தொழில் வாய்ப்புகளுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளும் இருந்து வந்துள்ளன. இவ்விதத் தடைகளுக்கு மத்தியிலும் ஒரு சிலர் தமது கல்வி, முயற்சியாண்மை, வினைத்திறன் என்பன காரணமாகத் தோட்டங்களை விட்டு வெளியேறி ஏனைய துறைகளில் தொழில் வாய்ப்புப் பெற்றனர். ஒரு சிலர் சட்டம், மருத்துவம், கணக்கியல் போன்ற துறைகளிலும் பயிற்சி பெற்று வெளியேறினர். இச்சிறு குழுவினரது வளர்ச்சியும் அபிவிருத்தியும் இச்சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தவும் தொடங்கிற்று. ஆனால் 1977 முதல் ஏற்பட்டு வந்த இனக்கலவரங்களினால் இவர்கள் மீண்டும் தோட்டப்புறங்களுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை இவர்களது அசைவினை மேலும் கட்டுப்படுத்துகின்றது. பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தோட்டங்களில் தொழில் வாய்ப்புக்கள் பெருகாத நிலையில் வெளியிடங்களில் அவர்கள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதும் தடைப்படுவதால், அவர்களது பொருளாதார நிலை மோசமாகப் பாதிப்படைந்து வருகின்றது.
மலேசியா பல்லினச் சமூகத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அங்குள்ள இந்தியர், இந்திய சுதேசிய இனத்தைச் சேர்ந்தவர்களென மலேசிய அரசாங்கத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் (Thangaraj, 1971), சுமார் 15 இலட்சம் எண்ணிக்கையான மலேசிய இந்தியர் சிலாங்கூர், பெராக், ஜொஹோர், பினாங்கு, கெடா ஆகிய மேற்கு மலேசியப் பிரதேசங்களில் செறிவாக வாழ்கின்றனர். இவர்களிற் சுமார் 80 வீதமானோர் தமிழரும், 10-11 வீதமானோர் மலையாளிகளும் தெலுங்கருமாவர்.
பிரித்தானிய ஆட்சியின் கீழ் அரசாங்கத்தில் மலாயருக்கு விசேட சலுகைகள் இருந்தன. மலேசிய தீபகற்பத்திற்கு வெளியிலிருந்து வந்த சமூகங்களுக்கு குறைந்த அந்தஸ் தே வழங்கப்பட்டிருந் ததால், அவர்களுக்கு அரசாங்கப் பாதுகாப்பும் கவனிப்பும் குறைவாகவே இருந்தன. அரசியல் தாபனங்கள் இதனைத் தொடர்ந்தும் நிலைக்க வைத்துள்ளன. 1948ம் ஆண்டு மலாயர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டபோதும் அது மலாய இனத்தினருக்குப் போன்று தன்னியல்பானதாக இருக்கவில்லை. இவ்விதப்பாகுபாட்டை எதிர்ப்பதில் சீனரும் இந்தியரும் ஒன்றுபட்டபோதும் இந்த ஒற்றுமை நெடுங்காலம் நீடிக்கவில்லை. இனங்களுக்கிடையே காணப்படும் பரஸ்பர சந்தேக
20

உணர்வுகள் இனரீதியான அரசியல் அமைப்புக்களை அங்கு உருவாக்கியுள்ளன.
அரசாங்க நிர்வாகத்துறைகளிலும் சேவைகளிலும் மலாயர் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். மலேசிய அரசியற்றிட்டம் மலாயருக்குப் பல விசேட சலுகைகளை வழங்குகின்றது. (1) நிர்வாக சேவையில் கணிசமான பங்கு (75) மலாயருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (11) காணிப் பங்கீடு, குறிப்பிட்ட சில தொழில்களுக்கும் வர்த்தகத்திற்குமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் (உதாரணம்: போக்குவரத்து) போன்றவற்றில் மலாயருக்கு விசேட சலுகைகள் உண்டு. மலாயருக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வித சலுகைகள் இந்தியரின் வருமானம், தொழில் வாய்ப்பு என்பவற்றைப் பாதித்துள்ளன.
1971ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பெருளாதாரக் கொள்கை இந்தியரைப் பெரிதும் பாதித்தது. மலாயரினது பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த இக்கொள்கை, இதற்கென ஒரு சூத்திரத்தையும் முன்வைத்தது. இதுவரை காலமும் கம்பனிகளின் பங்கு முதலில் 3 விதத்திற்கும் குறைவாகவிருந்த மலாயரது பங்கினை, 1990 அளவில் 30 வீதமாக உயர்த்தவும், றப்பர் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை சிற்றுடைமைகளுக்கு மாற்றவும் அது முயன்றது. இக்கொள்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் தேசிய செல்வத்தில் இந்தியரின் பங்கு வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. இந்தியரிடையே காணியில்லாப் பிரச்சினையும் அதிகரித்து வருகின்றது. எனவே, மலேசியாவில் இந்தியர் வீழ்ச்சியடைந்து வரும் ஒரு சமூகமாக மாறி வருகின்றனர்.
இரண்டாவது போர்க்காலம் வரையும் மலேசிய இந்தியர்கள் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் மொழி, கல்வித் தகைமைகள், பொருளாதார வளம் போன்ற அடிப்படைகளில் பிரிவுபட்ட ஒரு சமூகமாக இருந்து வந்தனர். இந்திய விடுதலைச் சங்கத்தை அமைப்பதன் மூலம் அவர்கள் அரசியலில் காலடி வைத்தனர். 1946ல் மலேசிய இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்டபோதும், றப்பர் தோட்டத் தொழிலாளரை அதில் இணைத்துக் கொள்வதில் சில பிரச்சினைகள் தோன்றின. காங்கிரசுத் தலைவர்கள் வட இந்தியராகவும் தோட்டத்தொழிலாளர் தென்னிந்தியராகவுமிருந்ததே இதற்கான முக்கிய காரணமாகும். எனினும், மலேசிய காங்கிரஸ் கட்சி ஐக்கிய மலாய தேசிய
21

Page 26
அமைப்புடனும், மலேசிய சீன அமைப்புடனும் கூட்டுச்சேருவதன் மூலம் அரசியற் செல்வாக்கைத் தேடிக் கொண்டது. எனவே, தோட்டத்தொழிலாளர் அக்கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்தனர். இன்று மலேசிய இந்திய காங்கிரகம், தோட்டத்தொழிலாளர் தேசிய சங்கமும் இந்தியரின் அரசியல், பொருளாதாரம் என்பவற்றின் பாதுகாவலராக விளங்குகின்றன.
பர்மிய இந்தியரைப்பற்றி எழுதிய சக்ரவர்த்தி, தனது நூலில் SSSSSSLSL SL S S S S S S S S SqS S LSL SL S S S S C S S S S S C C qSL SLL SLL SLC S LL LLS CC SLL LL பர்மாவில் வாழ்ந்து கஷ்டப்பட்டு உழைத்து, அந்நாட்டினது அபிவிருத்திக்குப் பெரும் பங்கினையளித்த ஒரு சமூகம், இறுதியாகத் தனது வீடுகளையும் தொழில் களையும் விட்டுத்துரத்தியடிக்கப்பட்ட ஒரு சோகமான கதை யென அவர்களது வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (Chakravari, op. cit.).
பர்மா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அந்நாட்டினது பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டது. இந்திய மூலதனம், மனிதவலு, பொருட்கள் என்பவற்றின் கட்டற்ற பாய்ச்சலின் காரணமாகவே இவ்வளர்ச்சி ஏற்பட்டது. எனினும், இந்தியர்கள் கட்டுப்பாடின்றி நாட்டிற்குள் நுழைவதையும் முக்கிய துறைமுகங்களிலும், கைத்தொழில் மையங்களிலும் செறிந்து வாழ்வதையும் பர்மியர்கள் விரும்பவில்லை. கட்டுப்பாடுகளின்றி இந்தியர் அங்கு குடியேற விடப்பட்டமை பர்மியரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அவ்வாறு குடியேறிய இந்தியளிடையே வறுமையையும் வேலையின்மையையும் அது தோற்றுவித்தது. இருந்துங்கூட இவ்விதக் குடியேற்றத்தை நிறுத்தவோ, வேலையின்றி இருப்போரை இந்தியாவிற்குத் திருப்பியனுப்பவோ எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1938 ஆம் ஆண்டு இனக்கலவரங்களுக்கும், இந்தியர் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் இதுவே காரணமாயிற்று. எனவே, பர்மிய இந்தியரது தலைவிதி, தவறான குடிவரவுக் கொள்கையின் ஒரு விளைவாகும்.
3 ஆபிரிக்க பெரும்பான்மைச் சமூகங்கள்
கிழக்காபிரிக்காவின் நான்கு நாடுகளான கெனியா, தன்சானியா, உகண்டா, சென்ஸிபார் என்பவற்றில் 1954ல் சுமார் 295000 இந்தியர்கள் வாழ்ந்தனர் (Hollingworth, 1960), எனினும், கடந்த மூன்று தசாப்தங்களில் அவர்களது எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 150,000 பேர் மட்டுமே (கெனியா 100,000: தன்சானியா
22

50,000 உகண்டா 50) அங்கு எஞ்சியுள்ளனர். இந்நாடுகளின் மொத்த சனத்தொகை 183 மில்லியனாகவிருப்பதால், இந்தியர் இங்கு ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினமாகவே உள்ளனர்.
நைரோபி, மொம்பாஸா, டார்-எஸ்-ஸலாம், சென்ஸிபார் போன்ற வர்த்தக மையங்களிலேயே இந்தியர்கள் செறிந்து வாழுகின்றனர். இரணர் டாயிரம் ஆண் டுகளாகவே கிழக் காபிரிக் காவில் குடியேற்றங்களையமைத்து வாழ்ந்து வந்துள்ள போதும், அவர்கள் பெரும்பாலும் கரையோரப் பிரதேசங்களிலேயே வாழ்ந்தனர். இப்பிரதேசம் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்ட பின்னரே அவர்கள் உட்பிரதேசங்களுக்கு முன்னேறினர். பிரித்தானியர் பெருமளவு இந்தியத் தொழிலாளரை அங்கு கொண்டு சென்ற போதும், ஒப்பந்தக் கால முடிவில் அவர்கள் தாயகம் திரும்பினர். அங்கிருந்த இந்தியப்படைகளும் 1917 ஆம் ஆண்டு பின்வாங்கப்பட்டன. இந்தியர்கள் பெருமளவு காணிகளைக் கொள்வனவு செய்யாததால், இந்திய நிலச்சுவான்தார் வகுப்பு ஒன்றும் அங்கு உருவாகவில்லை. எனினும், நகர்ப்புறச் சொத்துக்களின் நீண்டகாலக் குத்தகை மீது அவர்கள் பெருமளவு முதலீடு செய்தனர். பொருட்களின் விநியோகத்தின் மீது அவர்கள் பூரண ஆதிக்கம் கொண்டிருந்ததோடு உயர் மட்ட மனித வளத்தையும் அவர்களே நிரம்பல் செய்தனர். கணிசமான மூலதனத்தையும் அவர்களே கட்டுப்படுத்துகின்றனர். 杀
4 நவகாலனித்துவ நாடுகள் ::
தென்னாபிரிக் காவில் இந்தியர் கறுப்பு, வெள்ளை இனத்தவர்களிடையே ஒரு இடைநில்ை இனமாக உள்ளனர். வெள்ளையினக் குடியேற்றவாதிகள் அவர்களை அங்கு அழைத்ததோடு, விரும்பினால் நிரந்தரமாகக் குடியேறவும் தூண்டினர். ஆனால், அவர்கள் அங்கு குடியேற முயன்றபோது அவர்களுக்கெதிராகப் பல சட்டரீதியான கட்டுப்பாடுகளை விதித்தனர் (Moodley, 1975). எனவே, இந்தியர் வெள்ளையின ஆதிக்கத்திற்கெதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தனர். இது சட்டமறுப்பு எதிர்ப்புக்கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள், சத்தியாக்கிரகம் போன்ற பல்வேறு வடிவங்களை எடுத்தது. இவற்றினுடாக சில நிவாரணங்களை அவர்கள் பெறக்கூடியதாக இருந்தது. ..
நெடுங் காலமாக இந்தியர் தென்னாபிரிக்க சமூகத்தில் ஒருங்கிணைக்க முடியாத ஒரு குழுவினராகக் கருதப்பட்டனர். எனினும்,
23

Page 27
1961 ஆம் ஆண்டு நாடு குடியரசாக மாறிய போது, கொள்கை மாற்றமொன்று ஏற்பட்டது. "இந்தியர்' தென்னாபிரிக்காவின் பொறுப்பாக ஏற்கப்பட வேண்டுமென்றும், குடியுரிமை பெற அவர்களுக்குப் பூரண உரிமையுண்டு என்றும் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று கூறியது இவ்வித கொள்கை மாற்றத்திற்குப் பல காரணங்களிருந்தன.
1. சுய விருப்பின் பேரில் இந்தியர் தாயகம் திரும்பாமை,
2. இந்தியர்கள் சட்டரீதியான பிரஜைகளாகவிருந்தமை.
3. தென்னாபிரிக்காவே தமது தாயகமென இந்தியர் விடாப்பிடியாக
இருந்தமை.
4. தனது இன ஒதுக்கல் கொள்கையின் கீழ் இந்திய குடியிருப்புக்களை கவனமாகத் திட்டமிடுவதன் மூலம் இந்தியப் பிரச்சினையைத் தீர்க்கலாமென அரசாங்கம் கருதியமை,
1948 ஆம் ஆண்டு இன ஒதுக்கல் முறையான ஒரு அரசியல் திட்டமாக தேசியக் கட்சியினால் அறிமுகம் செய்யப்பட்டதோடு, 1950ல் குழுப் பிரதேசச் சட்டமும் (Group Areas Act) கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் வெவ்வேறு இனக்குழுக்கள் தனிப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வின ஒதுக்கல் இந்தியர்களையே பெரிதும் பாதிப்பதாக இருந்தது. அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபோது, அவர்களது சொத்துக்களுக்கு உண்மையான சந்தைப் பெறுமதிகள் செலுத்தப்படாததால் அவர்கள் பெரும் நிதி இழப்பிற்கு உட்பட்டனர்.
இரண்டாம் போரின் பின்னர் இந்தியர்களுக்கு இருந்த அரசியல் தெரிவு ஒன்றில், தமக்கெதிரான பாரபட்சங்களை ஏற்றுக்கொள்வதாக அல்லது அவற்றை எதிர்ப்பதாகவிருந்தது. அவற்றை எதிர்ப்பதாயின், வெள்ளையினருக்கு எதிராக கறுப்பு இன மக்களுடன் இணைய வேண்டியிருந்தது. ஆனால், கறுப்பு இன மக்கள், இந்தியர் தமது பிரதேசங்களில் வர்த்தகத் தனியுரிமையின் மூலம் தம்மைச் சுரண்டுவதாகவும் அவர்கள் தம்மிலும் பார்க்க சலுகைகளுடன் வாழுவதாகவும் கருதியமை ஒரு முக்கிய பிரச்சினையாகவிருந்தது
24

அழைத்துவரப்பட்டப்போது
மலையக தமிழ் பாரம்பரியத்தை சித்தரிக்கும் மலையக களைஞர்களின் கலை நிகழ்ச்சி

Page 28

1949 ஆம் ஆண்டு இந்தியர்களுக்கும், ஆபிரிக்கர்களுக்குமிடையே டர்பன் நகரில் ஏற்பட்ட இனக்கலவரம் இதற்கு முடிவுகட்டியது. இறுதியாக இவ்விரு இனங்களும் ஒன்றுபட்டு, வெள்ளையர்களுக்கெதிராகப் போராடத் தொடங்கின.
மேலே கூறிய நான்கு வகையான பன்மைச் சமூகங்களிலும் இந்தியர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சில பொதுவான பண்புகளையும் சில வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பிரதம நீதியரசர் ஹிதாயத்துல்லா கூறியது போன்று வெளிநாடுகளில் இந்திய சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒத்ததன்மை வாய்ந்தனவன்று. உதாரணமாக, கென்யா, உகண்டா, தன்சானியா ஆகிய நாடுகளில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மலேசியா, பர்மா அல்லது இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளை ஒத்தனவன்று: எத்தனை நாடுகள் உள்ளனவோ, அத்தனை பிரச்சினைகளும் உள்ளன. ஆயினும் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் இருக்கவே செய்கின்றன (Hidayathullah, 1969), மொத்த சனத்தொகையில் இந்தியர் அரைவாசிக்கும் மேலாகவிருக்கும் கயானா, பிஜி, மொறிசியஸ் போன்ற நாடுகளில் அவர்கள் தமது உயர்ந்த எண்ணிக்கை காரணமாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலுகின்றனர். இந்தியர் சிறுபான்மையினராகவிருக்கும் ஆபிரிக்க நாடுகளில் அவர்களது அரசியல் செல்வாக்கும் குறைவானதாகவே உள்ளது. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட நாடுகளில் அவர்களது பிரச்சினைகள் சிக்கல் நிறைந்தனவாக உள்ளன. கயானாவில் 1960 ஆம் ஆண்டு வரையும், மொறிசியஸில் இன்று வரையும் அரசியலில் அவர்களது செல்வாக்கு காணப்படுகின்றது. பிஜியில் அவர்கள் உள்நாட்டு மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதோடு அரசியலிலும் ஓரளவு செல்வாக்கைப் பெற்றுள்ளனர்.
இலங்கையிலும் மலேசியாவிலும் நிலைமை சற்று வேறுபட்ட இந்திய வழித்தோன்றல்களிலும் பார்க்க எண்ணிக்கையிற் கூடிய உள்நாட்டுத் தமிழ்ச் சமூகமொன்று இலங்கையிற் காணப்படுவது அவர்களது பிரச்சினையை சிக்கலாக்கியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் தனிநாடு அமைக்கவென சில இலங்கைத் தமிழ்க் குழுக்கள் மேற்கொண்டுள்ள ஆயுதமேந்திய போராட்டம் அவர்களது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத்
25

Page 29
தள்ளப்பட்டுள்ளனர். இன்று பாதுகாப்பே அவர்களது முக்கிய பிரச்சினையெனக் கூறின் அது மிகையாகாது. 1948ம் ஆண்டு பறிக்கப்பட்ட அவர்களது குடியுரிமை 1988ம் ஆண்டிலேயே மீண்டும் வழங்கப்பட்டது எனினும், இன்றுங்கூட இப்பிரச்சினை பூரணமாகத் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
மலேசியாவில் சீனருக்கு அடுத்ததாக மூன்றாமிடத்திலுள்ள இந்தியர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அங்கு அரசியல் பலம் மலாயரது கைகளிலும், பொருளாதார சக்தி சீனரது கைகளிலும் உள்ளன. இவ்விரு இனங்களுக்கு நடுவில் அகப்பட்டுள்ள இந்தியர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கவனத்திலெடுக்காது விடப்படுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் வேற்றாருக்குச் சொந்தமான இறப்பர் தோட்டங்களில் தொழில் புரிகின்றனர். எனினும், அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாக இருப்பதால், தொழிற்சங்கங்களினூடாக தமது செல்வாக்கைக் கையாளுகின்றனர். மலேசிய இந்திய சமூகம் அதனது வீழ்ச்சியடைந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார நிலைமை காரணமாக ஒரு அநாதைச் சமூகம் என வர்ணிக்கப்படுகின்றது. (Far Eastern Economic Review, 26th July. 1984).
மலேசியா, இலங்கை, பர்மா ஆகிய மூன்று நாடுகளிலுமே இந்தியருக்கெதிரான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பர்மிய தேசிய வாதம் எழுந்தபோது 1938இல் சுமார் 4 இலட்சம் இந்தியர்கள் பர்மாவினின்றும் வெளியேற்றப்பட்டனர். இதே விதமான இந்தியரின் வெளியேற்றம் 1948இல் பர்மா பிரித்தானிய குடியேற்ற ஆட்சியினின்று விடுதலை பெற்ற வேளையிலும், 1960ம் ஆண்டுகளில் நெவினினது (Nevin) தேசிய
கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் இடம்பெற்றன.
இலங்கையில் (இந்தியத்) தமிழருக்கெதிரான கலவரங்கள் நாட்டின் சுதேசிய தமிழர்களின் போராட்டங்களுடன் தொடர்புள்ளனவாகும். தனி நாட்டுக் கோரிக்கையுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத மலையகத் தமிழர் தாக்கப்படுவது இன்று சகஜமாகிவிட்டது. 1969ம் ஆண்டு மலேசியாவில் சீன இனத்தவருக்கெதிராக வெடித்த இனக்கலவரங்கள் இந்தியரையும் பாதித்தன. இந்தியர்கள் செறிந்து வாழும் பினாங்கு, பெராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களில் மலேசியக் கூட்டாட்சிக் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறிய பின்னரே இக்கலவரங்கள் தோன்றின. இத் தேர்தல் முடிவுகளை மலாயர், தமது அரசியல்
26

அதிகாரத்திற்கு ஒரு அச்சுறுத்தலெனவும், அதற்குக் காரணமாகவிருந்தோர் தணி டிக் கப்பட வேணி டுமெனவும் கருதியதன் விளைவே இக்கலவரங்களாகும். இலங்கையில் முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தியாது குடியுரிமை பறிக்கப்பட்டதை இது எமக்கு நினைவுபடுத்துகின்றது.
இலங்கையிலும் மலேசியாவிலும் இன ரீதியான போக்குகள் நிலைபெற்று விட்டனி. பல்வேறு சமூகங்களுக்கிடையே காணப்படும் பரஸ்பர சந்தேகங்களும் பிணக்குகளும் அமைதியின்மையையும், இனரீதியான கலவரங்களையும் தோற்றுவிக்கின்றன. எனவே, இனக் கலவரங்களைத் தவிர்ப்பது (குறிப்பாக இலங்கையில்) அரசாங்கங்களின் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது.
இச்சூழ்நிலையில் தனியொரு இனத்தை அல்லது சமூகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கைகளிலும் பார்க்க எல்லா இனங்களுக்கும் சமூகங்களுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் கொள்கைகளை அமுலாக்குவதன் மூலமே இன நல்லுறவை உருவாக்கலாம். இந்நாடுகளில் பல்வேறு இனங்களும் சகவாழ்வு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடில், முழு நாடுமே ஒரு இடுகாடாக மாறிவிட நேரிடும் என்ற மலேசியப் பிரதமர் தூங்கு அய்துல் றஹற்மானினது கூற்று (as quoted inkaul, M, 1980) மலேசியாவிற்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெரிதும் பொருந்தும்.
பல்வேறு நாடுகளில் இந் தியர்கள் ஆட் சியாளருக்கும் ஆளப்படுவோருக்குமிடையே ஓர் ஆப்பாகத் திணிக்கப்பட்டதாகவும், இந்நாடுகளை நிர்வகிப்பதிலும் வர்த்தக ரீதியாக இவற்றைச் சுரண்டுவதிலும் ஆட்சியாளருக்கும் சுதேசிய மக்களுக்குமிடையே காணப்பட்ட இடைவெளியை அவர்கள் நிரப்பியதாகவும் கூறப்படுகின்றது. பிரித்தானியர் இந்நாடுகளை ஆட்சி செய்த காலத்தில் இந்தியரது நலன்கள், எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே திருப்திகரமாக இல்லாவிட்டாலுங்கூட, பெருமளவிற்கு பாதுகாக்கப்ப்ட்டு வந்தனவெனலாம். பிரித்தானியர் தமது சுயநலனைக் கருதியே அவர்களைப் பாதுகாத்தனர். சுதந்திரம் பெற்ற பின்னர் இந்நாடுகளில் நிலைமை மாறிற்று. காலனித்துவத்திற்கெதிரான சுதேசிய மக்களது வெறுப்பு இந்திய சமூகத்தினர் மீது திருப்பப்பட்டது (Patel Op. cit) 1972ம் ஆண்டு 50,000 இந்தியர்கள் உகண்டாவிலிருந்து
7ר

Page 30
வெளியேற்றப்பட்டதை இதற்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம் இந்நாடுகள் பலவற்றில் இன்று இந்தியர் அரசியல் ரீதியாக செயற்றிறன் அற்றோராகவும், சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டோராகவும் வாழ்ந்து வருகின்றனர்.
பிஜி, மொறிசியஸ், கயானா போன்ற நாடுகளில் இந்தியரின் நிலைமை வேறு சில நாடுகளிற் போன்று மோசமானதாக இல்லை. இம்மூன்று நாடுகளிலுமே இந்தியர் அந்நாட்டுச் சமூகங்களின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு வழிகளில் தமது தனித்துவத்தை ஓரளவு பேணியும் வருகின்றனர். அதேபோன்று புதிய சூழ்நிலைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டும் உள்ளனர். இச் சமூகங்களில் இந்தியர் பெரும்பான்மை வகித்த பொழுதும், ஏனையோருக்கு அவர்கள் ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை. ஆனால் இந்தியர் சிறுபான்மையினராக வாழும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அவர்கள் காணப்படுவது அந்நாட்டு மக்களால் விரும்பப்படவில்லை போன்று தெரிகின்றது. கிழக்காபிரிக்க நாடுகளில் இந்தியரது பொருளாதாரச் செல்வாக்கும், அவர்களது இனரீதியாக ஒதுங்கி வாழும் போக்கும் ஆபிரிக்கரின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளன. அவர்கள் வசதியும் சலுகைகளும் படைத்தோராக ஆபிரிக்கரால் கருதப்படுகின்றனர். கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக ஆபிரிக்க தேசியவாதத்தின் எழுச்சியும், கல்வியில் ஆபிரிக்கர் அடைந்துள்ள முன்னேற்றமும் இந்தியருக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளன. இந்தியர் தமது சொந்த செல்வத்தைப் பெருக்கிக் கொண்ட அளவிற்கு இந்நாடுகளினது செல்வத்தைப் பெருக்குவதற்கு உதவவில்லை என்றும், இந்நாடுகளினது பொருளாதாரங்களில் ஆபிரிக்கர் பங்குபற்றுவதை அவர்கள் தாமதப்படுத்தினர் என்றும் ஆபிரிக்கர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் (Daster, A. in Gupta ed). எனினும், இந்தியருக்கெதிரான இக்குற்றச் சாட்டுக்கள் முற்றிலும் உண்மையானவையென்று. உதாரணமாக இந்தியர் அந்நாடுகளுக்குச் சென்றிருக்காவிடில், ஆபிரிக்கரது வருமானங்கள் உயர்ந்த மட்டத்தை அடைந்திருக்குமெனக் கூறமுடியாது. மறுபக்கத்தில், கிழக்காபிரிக்க நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியர் எவ்வித பங்கையும் அளிக்கவில்லையென்றும் கூறமுடியாது. இந்தியரது பங்களிப்பின்றி கிழக்காபிரிக்கா அதன் இன்றைய பொருளாதார அபிவிருத்தி மட்டத்தை அடைந்திருக்க முடியாது என்றுகூடக் கூறலாம்.
28

மூன்று ஆபிரிக்க நாடுகளிலுமே தேசிய உணர்வு ஒரு பலம் மிக்க சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. எனினும், ஆபிரிக்கர் மயமாக்கலின் வேகம் இவற்றுக்கிடையே வேறுபடுகின்றது. உகண்டா இந்தியரை முற்றாகவே வெளியேற்றிவிட்டது. கெனியா இந்தியரை கட்டுப்படுத்துவதற்கு பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, தன்சானியா சோஸலிசத்தைச் சார்ந்திருப்பதால், இந்தியரைப் பொறுத்து மிகவும் அவதானமான ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றது. இவ்வித சூழ்நிலையில், இந்தியர்கள் ஒன்றில் இந்நாடுகளை விட்டு வெளியேறவோ அல்லது உள்ளுர் மக்களுடன் இணைவதற்கோ நேரிட்டுள்ளது. எனினும் சமூக ஒருங்கிணைவு என்பது ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக இருப்பதோடு அது எதனைக் குறிக்கின்றது என்பது பற்றியும் எவ்வித உடன்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நாடுகளில் இந்தியருக்கெதிராகக் காணப்படும் வெறுப்புணர்வு பிரித்தானிய ஆட்சிக்கெதிரான சுதேசிய மக்களது போராட்டங்களில் அவர்கள் பங்கு கொள்ளத் தவறியதாலும், மாறாக வெள்ளையருடன் சம உரிமை கோரி தனிப்பட்ட போராட்டத்தை நடத்தியதாலும், ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. காலனித்துவ ஆட்சி மறையப் போவதை உணர்ந்த பின்னரே அவர்கள் ஆபிரிக்கருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் இந்தியரது காலந்தாழ்ந்த இந்த ஆதரவு ஆபிரிக்கரால் நிராகரிக்கப்பட்டது என்பதும் சிலரது கருத்தாகும். சுதந்திரப் போராட்டத்தில் வெகு தூரம் முன்னேறிவிட்ட ஆபிரிக்கர்களுக்கு அதன் இறுதிக் கட்டத்தில் இந்தியரின் உதவி தேவைப்படவில்லை. இந்நாடுகள் விடுதலை அடைந்த பின்னர் இந்தியர் இதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிட்டது.
தென்னாபிரிக்காவில் தமக்கெதிராக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், பாரபட்சங்கள் என்பவற்றை எதிர்த்து நெடுங்காலமாக வெள்ளையருடன் போராடிய இந்தியர், இப்பொழுது தமது தலைவிதியை ஏற்றுக்கொண்டு விட்டனர். மேலும், அண்மைக்காலங்களில் அவர்கள் ஆபிரிக்கக் கறுப்பு இன மக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தொடங்கினர். பல சந்தர்ப்பங்களில் ஆபிரிக்கருடன் இணைந்து வெள்ளையின ஆட்சிக்கெதிரான போராட்டங்களில் பங்குபற்றியுமுள்ளனர்.
பர்மா பெருமளவுக்கு இந்திய சிறுபாண்மையினரை ஒழித்துவிட்டது தமக்கெதிரானதாக்குதல்களுக்கு தாக்குப்பிடித்து அங்கு
29.

Page 31
நிரந்தரமாக வாழ முன்வந்தவர்கள் (சுமார் 250, 000 பேர்) இன்று ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதோடு, பர்மிய சமூகத்தோடு இரண்டறக் கலந்துவிட்டனர். அல்லது தமது தனித்துவத்தை இழந்து நிற்கின்றனர். 1948இல் பர்மா சுதந்திரமடைந்த பொழுது இந்தியரது பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இக்காலப்பகுதியில் 25 வீதமான நெற்காணிகள் இந்தியருக்கு (செட்டிமாருக்கு)ச் சொந்தமாகவிருந்தன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பர்மிய காணித் தேசிய மயமாக்கச் சட்டம் விவசாயம் செய்யாதோர் காணிகள் வைத்திருப்பதை முற்றாகத் தடைசெய்தது. அதேபோன்று, விவசாயம் செய்வோருக்கு 20 ஹெக்டேயர்களை உச்சவரம்பாகவிதித்தது. காணி ஒதுக்கீட்டுச் சட்டம் (1948) பர்மியரல்லாதோருக்கு காணிகள் விற்கப்படுவதைத் தடைசெய்தது. ஒருசில இந்தியர் மட்டுமே பர்மிய குடியுரிமையைப் பெற்றதால், இந்தியர் பெருமளவு காணிகளைக் கொள்வனவு செய்வது இதன் மூலம் தடைசெய்யப்பட்டது. மேலும், பர்மிய அரசியற்றிட்டம் இந்தியரை ஒரு சிறுபான்மை இனமாக ஏற்கவில்லை. அவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவமோ, விசேட பாதுகாப்புக்களோ அரசியற்றிட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுமில்லை.
பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துப்படி, பர்மிய இந்திய சமூகம் ஒரு செயற்றிறனுள்ள தலைமைத்துவத்தையோ, பர்மியர் அல்லது பர்மிய நலன்களோடு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒரு கொள்கையையோ உருவாக்கத் தவறிற்று. அவர்கள் காலனித்துவ ஆட்சியாளரோடு ஒத்துழைப்பது போன்று தோன்றிற்று. இந்தியருக்கிடையிலேயே பல பிரச்சினைகளும் காணப்பட்டன. ஆட்சியாளருடன் இணைவதிலும் பார்க்க பர்மியரின் நல்லெண்ணத்தைப் பெறுவதே தமக்கு ஆகக்கூடிய பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணரவில்லை (Chakravarti, op. cit). பர்மாவில் அவர்களது வீழ்ச்சிக்கும் இதுவே காரணம் என்பது பல்வேறு ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மலேசியாவில் இந்தியர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பல்வேறு சட்டரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது பொருளாதார நிலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியற்றிட்டம் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்காத அதேவேளையில், மலாயருக்கு (பூமி புத்திரர்கள்) அது பல்வேறு விசேட உரிமைகளையும் சலுகைகளையும் உறுதி செய்கின்றது. எந்தவொரு
30

தேர்தற்றொகுதியிலும் இந்தியர் 20 வீதத்திற்கும் மேலாக இல்லாதிருப்பதால், ஒரு அரசியற் சக்தியாக அவர்கள் வலுவற்றோராகவிருக்கின்றனர். ஏதேனுமொரு தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேருவதன் மூலமே பாராளுமன்றத் தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெறக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் இதனைத் திறமையாகக் கையாண்டுள்ளனர். (இலங்கையிலும் இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் இதே கொள்கையையே பின்பற்றி வருவது இங்கு நினைவுகூறத் தக்கதாகும்).
வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினர் ஓரினத்தன்மை வாய்ந்தவர்களன்று. மொழி, மதம், பிரதேசம், சாதி போன்ற வேறுபாடுகளினடிப்படையில் நெடுங்காலமாகவே அவர்கள் பிரிபட்டுள்ளனர். உதாரணமாக, மலேசியாவில் பெருந்தோட்டத் தொழிலாளர் ஏனைய இந்தியச் சமூகங்களினின்றும் ஒதுக்கப்பட்டிருப்பதோடு, அவர்களது நலன்களும் தொழிற்றிணைக்களத்தினாலேயே கவனிக்கப்பட்டு வந்தன. இலங்கையிலும் ஏறக்குறைய இதே நிலையே காணப்பட்டதெனலாம். கிழக்காபிரிக்க நாடுகளில் இந்தியச் சமூகம் சாதி, மத, மொழி, அடிப்படைகளில் பிரிந்து வாழுகின்றது. இந்தியன் ஒருவனுக்கு அவன் ஒரு இந்தியன் என்பதிலும் பார்க்க, தான் ஒரு இந்துவா, முஸ்லிமா, இஸ்மாயிலிஸ் அல்லது வேறு ஏதேனுமொரு சாதி அல்லது குழுவைச் சேர்ந்தவனா என்பதே முக்கியமாக இருப்பதாக மொறிஸ் என்பவர் கூறுகிறார், (Morris) கிழக்காபிரிக்காவின் மொத்த சனத்தொகையில் இந்தியர் எட்டு வீதமாகவே இருந்தபோதும், மதம், மொழி, கலாசார அடிப்படைகளில் பல குழுக்களாக அவர்கள் பிரிந்து வாழுகின்றனர். (Koudapi of. cit) எனினும், சீக்கியர், குஜராதீதியர் இஸ்மாயிலிஸ் போன்ற சில குழுவினரிடையே உள்வாரியான ஒருமைப்பாடு காணப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத் தவரினி" தலைவர்களுக்கிடையேயும் இதேவித பிரிவினைகள் நிலவுகின்றன. இவற்றுட் சில மேலே கூறிய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டனவாகும். எனவே, வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகங்களின் வரலாறு உள்வாரியான முரண்பாடுகளைக் கொண்ட ஒன்றாகும். டிங்களினது கருத்துப்படியூதர்கள், சீனர்கள் போன்றோரிடையே காணப்படும் ஒற்றுமை இந்தியரிடையே காணப்படவில்லை. (Tinker op. cit.) வெளிநாட்டு இந்திய சமூகத்தினரிடையே காணப்படும் பிரதான பலவீனங்களுள் இதுவும் ஒன்றாகும்.
31

Page 32
ஒருங்கிணைவும் எதிர்காலமும்
சிறுபான்மையினர், அவர்கள் எந்த இனத்தினை அல்லது குழுவைச் சார்ந்தவர்களாகவிருப்பினும், நெடுங்காலமாகத் தமது தாயகமெனக் கருதி வாழ்ந்து வரும் நாடுகளில் அவர்கள் தொடர்ந்தும் வாழுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்பதே சிறுபாண்மையினரைப் பொறுத்தவரை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விதியாகும். அதே வேளையில், அவர்கள் எந்தளவு அதிகாரத்தை அல்லது செல்வாக்கைக் கொண்டிருப்பினும் பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்துடன் மட்டுமே வாழவும், வளம்பெறவும் முடியும் என்பதை அவர்கள் உணரவேண்டும் (Chakravari, 1971). எனவே, $90 b நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்தியர் வாழ்ந்துவரும் நாடுகளில் தொடர்ந்தும் வாழுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்பதில் ஐயத்திற்கிடமில்லை. மேலும், பெரும்பாலான நாடுகளில் அவர்களது குடியுரிமைப் பிரச்சினையும், சட்டரீதியாகத் தீர்க்கப்பட்டு விட்டது. அவர்களது சமூக, அரசியல் அந்தஸ்தே இன்றுள்ள முக்கிய பிரச்சினையாகும். நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குமுண்டு என்பதையும், அவர்கள்
பூரணத்துவம் வாய்ந்த பிரஜைகள் என்பதையும் ஏற்க இந்நாடுகள் முன் வரவேண்டும். துரதிர்ஷ்டவசமாக பல நாடுகளில் இது பிரச்சினைக்குரியதாக இருந்து வருகின்றது.
இந்நிலைமை நீடிப்பதற்கு இந்தியர் மீதே சிலர் குற்றம் சுமத்துகின்றனர். சீனரைப் போன்று இந்தியரும் சமூக ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை சிக்கலானவொரு குழுவினராக இருப்பதாகவும், தாம் குடியேறிய நாடுகள் அனைத்திலுமே தம் மீது திணிக்கப்பட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் ஏனைய சமூகங்களினின்றும் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளமை அவர்கள் ஏனைய சமூகங்களுடன் ஒருங்கிணைக்க முடியாத ஒரு குழுவினர் என்பதை நிரூபிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். தென்னாபிரிக்காவில் இது இந்தியரது இனப்போக்கினை நிரூபிப்பதாக சுதேசிய மக்கள் நம்புகின்றனர் (Moodley, 1975). இந்தியரது சமூக கலாசார வாழ்க்கை முறை அவர்களை ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு சமூகங்களுக்கும் இந்தியருக்குமிடையே பிரிவினை காணப்படுகிறது. உதாரணமாக, பிஜி தீவில் இந்தியருக்கும் சுதேசிய மக்களுக்குமிடையே
32

தொழிற்சங்கங்களிலும், நகர்ப்புற சமூகக் கழகங்களிலும் மன்றங்களிலும் பல்வேறு விதமான இணைப்புக்கள் காணப்பட்டபோதும், மொழி, மத கலாசார வேறுபாடுகளினால் அவர்களுக்கிடையே சமூக ரீதியான உறவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன (Morton, 1981) இலங்கையிலும் பெரும்பாலான இந்தியர் அதிலுங்குறிப்பாக, தோட்டத்தொழிலாளர் 6J606STL சமூகத்தினரோடு தொடர்பு குறைந்த நிலையில் தோட்டப்புறங்களிலேயே தனித்து வாழுகின்றனர். இது விடயத்தில் தோட்டப்புற மக்களை மட்டும் நாம் குறை கூற முடியாது. பெருந்தோட்டங்களில் அவர்கள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், பெருந்தோட்ட விவசாயத்தின் சில விசேட பண்புகளும் இந்த நிலை உருவாகுவதற்கு பெரும் பங்கை அளித்துள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டமை இதற்கு மேலும் வலுவூட்டியது. எழுபதாம் ஆண்டுகளில் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதும், சிறிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் அமுலாக்கமும் இவ்வித தனிமைப்படுத்தலை உடைப்பதற்கு ஓரளவு உதவின.
அண்மைக்காலம் வரை மலேசிய இந்தியர்கள் தம் தாயகமான இந்தியாவிற்கு விசுவாசமுள்ளவராக இருந்து வந்தனர். ஆனால், இன்று பெரும்பாலானோரிடையே இது மறைந்து விட்டது. ஒரு சில வயோதிபர்களிடையே மாத்திரமே இந்த உணர்வு இன்றும் 5/1600TüUGälsörp35). (Arasaratnam op. cit.) 釘患
ஆபிரிக்க நாடுகளில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் அவற்றையே தமது நிரந்தர தாயகமாகக் கருதுகின்றனர். அதேபோன்று. மேற்கிந்தியத் தீவுகளும், பிஜி, மொறிசியஸ் தீவுகளும் இந்தியாவினின்றும் வெகுதொலைவில் இருப்பதால் ஆரம்பம் தொட்டே அவற்றையே தமது நிரந்தர இருப்பிடமாக ஏற்றனர். இலங்கை இதற்கு ஒரு விதிவிலக்கெனலாம். இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் புவியியல் நெருக்கமும் இந்நாட்டில் பரம்பரைத் தமிழ்ச் சமூகமொன்று காணப்படுவதும் இந்தியர் தமது தாயகத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்கின்றன. அண்மைக்கால இனக்கலவரங்களினால் இந்தியர் தற்காலிகமாக இந்தியாவிற்குச் சென்று நிலைமை திருந்தியதும் இங்கு திரும்பி வருவதும் சகஜமாகிவிட்டது. ހށި
இந்தியர் குடியேறிய நாடுகளுக்குள்ளேயும் ஒருங்கிணைப்பிற்கு பாதகமான சில காரணிகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் இந்தியரது
33

Page 33
சார்பளவிலான் செல்வாக்கு அவர்களுக்குப் பாதகமாக இருந்து வந்துள்ளது. பர்மாவினின்றும் இந்தியர் வெளியேற்றப்படுவதற்கும் உகண்டாவில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் இதுவே காரணமாகவிருந்தது. இவ்விரு நாடுகளுமே இந்தியரின் வெளியேற்றத்தினால் அதிகம் நன்மையடைந்ததாகக் கூறமுடியாது. மாறாக, இந்தியரின் திறமைகளும், அனுபவமும், நிதிவளமும் இந்நாடுகளின் முன்னேற்றத்திற்கு கையாளப்பட்டிருக்கலாம். இந்நாடுகளில் வாழ்ந்த இந்திய சமூகத்தினர் அனைவருமே செல்வமும், செல்வாக்கும் கொண்டிருந்தரென பொதுப்படுத்திக் கூறவும் முடியாது. மொறிசியஸ், பிஜி, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தொழிலாளர் வகுப்பில் இந்தியர் கணிசமான பகுதியினராகவுள்ளனர். அவர்கள் அடைந்துள்ள சமூக, பொருளாதார அந்தஸ்து எந்தவிதத்திலுமே உயர்ந்த ஒன்றல்ல. உதாரணமாக, பர்மாவிற்குக் குடிப்பெயர்ந்த இந்தியர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். (1) முதலாளித்துவ அல்லது வணிக வகுப்பினர்-சிறிய எண்ணிக்கையான இவர்கள் பெருமளவு முதலீடு செய்யத் தயாராக இருந்தனர். (2) கற்றறிருந்தோர் -ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டநிபுணர்கள், கணக்காளர் போன்றோரை இது அடக்கும். (3) தொழிலாளர்கள்-குடியேறியோரிடையே இவர்களிே பெரும்பான்மையினராகவிருந்தனர். மேலே குறிப்பிட்ட முதலாவது வகையைச் சார்ந்தோர் போன்று இந்த நாடுகள் அனைத்திலுமே ஒரு சில இந்தியர் தமது அயரா முயற்சியினாலும், வெளிநாடுகளுடன் தமக்குள்ள தொடர்புகள் காரணமாகவும் வர்த்தகத்தினூடாக ஓரளவு செல்வந்தர்களாக மாறினர். இக்குழுவினரே ஏனைய சமூகங்களின் பொறாமைக்குக் காரணமாகவிருந்தனர். இச்சிறு பிரிவினர் தவிர்ந்த ஏனைய இந்தியர்கள் வறுமை நிலையிலிருப்பது மற்றையோரின் கண்களுக்குத் தெரிவதில்லை.
தாம் குடியேறிய நாடுகளில் இந்தியர் அந்நாட்டு சுதேசிய மக்களுக்கிருக்கும் அதே உரிமைகளையும் சலுகைகளையும் கோருவது சிலரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதுபற்றிய விவாதங்களில் இந்தியரது நாட்டுப்பற்று, அவர்களது சமூக ரீதியான உறுதித்தன்மை என்பன அடிக்கடி விமர்சிக்கப்படுகின்றன. இதனை நிர்ணயிப்பதில் இந்தியர் அந்நாடுகளில் வசித்த காலப்பகுதி முக்கிய காரணியாகக் கருதப்படுமாயின், அமெரிக்கா செவ்விந்தியருக்கும், ஆபிரிக்கா கறுப்பு இன மக்களுக்கும் சொந்தமாக்கப்பட வேண்டும். மறுபக்கத்தில், இந்நாடுகளினது பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியரது பங்களிப்பு கவனத்திலெடுக்கப்படுமாயின்,
34

அவர்கள் சம உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் பாத்திரமானவர்கள் என்பதில் ஐயப்பாட்டிற்கு இடமில்லை.
சமூக ஒருங்கிணைப்பு பற்றிய ஆய்விற்கு சிங்கப்பூர் 9(b சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது. மலேசியாவில் அரசியல், சமூக ரீதியாக இனவாதம் ஏற்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு இனத்தவர்கள் இன. அடிப்படையில் சிந்திக்கவும் தொடங்கிவிட்டனர். ஆனால் சிங்கப்பூரில் கல்விக் கொள்கையும் அரசியற் படிமுறை வளர்ச்சியும் இன உணர்வுகளை மழுங்கச் செய்துள்ளன. தேசிய இயக்கம் அங்கு இன அடிப்படையில் அமையவில்லை. பிரதான அரசியற் கட்சிகள் பல்லினத் தன்மை கொண்டனவாக உள்ளன. இதன் காரணமாக, இந்தியர் சமூக ரீதியாக இல்லாவிடினும், அரசியல், பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களுடன் ஒருங்கிணையக்கூடியதாக உள்ளது (Arasaratnam, op. cit.). இலங்கை, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் அரசியலில் இனவாதம் காணப்படுவதால் இவ்வித ஒருங்கிணைப்பு சாத்தியமாகவில்லை. மொறிசியஸில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளோ, சச்சரவுகளோ மிகவும் குறைவாகும். பிஜி தீவிலும் அதிக முரண்பாடுகளின்றி இந்தியர் வாழக்கூடியதாக இருந்தது. எனினும், இலங்கையிலும் மலேசியாவிலும் போன்றே பிஜி தீவிலும் பிஜிய அரசியற் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளும் போட்டியும் அங்கு இனவாதத்தை தூண்டியுள்ளன (Morton, op. cit). உதாரணமாக, 1977 இல் இந்தியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய தேசிய , சமஷ்டிக்கட்சி, பிஜியரை பெரும்பான்மையாகக் கொண்ட கூட்டாட்சிக் கட்சியை, பிஜியக் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட போட்டி காரணமாக, சிறியதொரு வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன் புதிய அரசாங்கத்தையும் அமைத்தது. ஆனால், பிரதமருக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் காரணமாக, அரசாங்கம் தோல்வியடைந்து புதிய தேர்தல் நடைபெற்றது. இதில் பிஜிய கூட்டாட்சிக் கட்சி வெற்றியீட்டிய சந்தர்ப்பத்தில் அங்கு இனக்கலவரம் வெடித்தது.
இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில் இன்று காணப்படும் முக்கிய பிரச்சினை இந்நாடுகளின் சமூக, கலாசார அமைப்புக்களுக்குள் இந்தியரை. ஒருங்கிணையச் செய்வதேயாகும். இந்தியர் தமது கலாசாரங்களோடு ஒன்றிணைய வேண்டுமென உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்தியரோ தமது கலாசார தனித்துவத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்கு
35

Page 34
முயலுகின்றனர். தேசிய ஒருங்கிணைப்பிற்கு இவ்வித பிரச்சினைகள் காணப்படும் சூழ்நிலைகளில் பொதுவாக மூன்று விதமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. பூரணமான ஒருங்கிணைவு (Integration) கலாசாரப் பன்மைத் தன்மை (Cultural Pluration) ஒன்றுடனொன்று சங்கமமாகுதல் (Melting Pot) என்பனவே இம்மூன்றுமாகும். இவற்றுள் மூன்றாவது பல்வேறு சமூகங்கள் ஒன்றோடொன்று சங்கமமாகுவதன் மூலம் புதியதொரு கலாசாரம் உருவாகுவதைக் குறிக்கும். இது அவ்வாறு சங்கமமாகும் கலாசாரங்களினது பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் அதே வேளையில் எந்தவொரு தனிப்பட்ட கலாசாரத்தையும் சாராததாகவும் இருக்கும். இந் நாடுகளைப் பொறுத்தவரை, பல்வேறு சமூகங்களின் பூரணமான இணைவே சிறந்த தீர்வாகவிருந்தபொழுதும், தமது மொழி, மதம் என்பவற்றுடன் இறுகப்பிணைக்கப்பட்டுள்ள இந்தியர் இதனை ஏற்பதில்லை. இந்தியர் குடியேறியுள்ள நாடுகளில் மூன்றாவது வகைத் தீர்வும் சாத்தியமானதன்று. எனவே, ஒவ்வொரு சமூகமும் தனது தனிப்பட்ட இன அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய கலாசார பன்மைத் தன்மையே சாத்தியமானதும் ஏற்கக் கூடியதுமான தீர்வாகும்.
சமூக ஒருங்கிணைவு பற்றி ஆராய்ந்த சிலர் பல்லினத் தன்மை வாய்ந்த சமூகங்களுக்கும் பன்மைத் தன்மை வாய்ந்த (Heterogeneons) சமூகங்களுக்குமிடையே வேறுபாடு காட்டுகின்றனர். பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான ஒருங்கிணைவானது உள்ளூர் மட்டங்களிலா, தேசிய மட்டத்திலா ஏற்படுகின்றது என்பதே இவற்றுக்கிடையிலான முக்கிய வேறுபாடாகும். பல்லினத் தனிமை வாய்ந்த சமூகங்களில் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிணைவு பாடசாலை, வணக்கத்தளங்கள் போன்ற உள்ளூர்த் தாபனங்களின் மட்டத்திலேற்படும். எனவே, தேசிய மட்டத்தில் அரசியல் தாபனங்களில் ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட பிரதிநிதித்துவத்தை இது தேவையற்றதாக்கும். இதன்படி, பன்மைச் சமூகங்கள் ஒருங்கிணைவதற்கு முன்னர் பல்லினச் சமூகங்களாகத் தம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இம்மாற்றத்தை ஒவ்வாறு ஏற்படுத்தலாமென்பது ஆய்விற்குரிய ஒரு விடயமாகும்.
சமூக ஒருங்கிணை விற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமூகங்கள் அங்கு அரசியல் - பொருளாதார அமைப்புக்களில்
36

ஒருங்கிணைந்து செயற்படுவதோடு, பிரதான அரசியற் கட்சிகள் பல்லினத்தன்மை கொண்டனவாகவிருக்கின்றன. இன ரீதியான உணர்வுகளும் இன ரீதியான பதட்ட நிலைகளும் இங்கு மிக மிகக் குறைவாகும். கடந்த சுமார் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களில் இந் நாடு அடைந்துள்ள குறிப்பிடத் தக்க அபிவிருத்தி இனங்களுக்கிடையிலான சமரச வாழ்வின் ஒரு பிரதிபலிப்பே எனக்கூறின் அது மிகையாகாது. எனினும், இந்தியர் குடியேறியுள்ள ஏனைய நாடுகளிலுள்ள சமூகங்கள் சிங்கப்பூரோடு ஒப்பீட்டு ரீதியில் நீண்ட வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டனவாகவிருக்க, சிங்கப்பூரில்
எல்லாச் சமூகங்களுமே வந்தேறு குடிகளாகவிருப்பதால், இங்கு இன ரீதியான பிரச்சினைகள் குறைவாகவிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இக்கூற்றில் ஓரளவு உண்மை இருந்தாலுங்கூட, சிங்கப்பூரினது அனுபவத்தினின்றும் ஏனைய நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் பல உள்ளன என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
முடிவுரை
சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் அயனவலய நாடுகளிலும், உப அயனவலய நாடுகளிலும் பிரித்தானிய தொழில், வர்த்தகம் என்பவற்றின் கேள்வியைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய குடிப்பெயர்வுகள் அதிலுங்குறிப்பாக தொழிலாளர் வகுப்பினரின் குடிப்பெயர்வுகள் இடம்பெற்றன. இவ்வாறு குடிப்பெயர்ந்தோர் வெளிநாடுகளிலே அனுபவித்து வரும் பிரசினைகள் பலவற்றிற்கு பெருந்தோட்ட விவசாயத்தில் பிரித்தானியர் கையாண்ட முதலாளித்துவ முறைகளும் தொழிலாளர் தொடர்பாக அவர்கள் பின்பற்றிய கொள்கைகளுமே காரணமெனலாம். பெருந்தோட்ட விவசாயத்திற்கு மலிவானதும், அடங்கி நடப்பதுமான ஊழியமே தேவையானதாகவிருந்தது. பிரித்தானிய காலனித்துவக் கொள்கைகளினால் மந்த நிலையடைந்திருந்த அல்லது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட பிரதேசங்களிலிருந்து வினைத்திறனற்ற பெருமளவு தொழிலாளரை இறக்குமதி செய்வதன் மூலம் தொழிலாளர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு குடிபெயர்ந்து சென்றோரின் சமூக பொருளாதார நிலை இந்தியக் கிராமங்களில் காணப்பட்ட நிலைமைகளிலும் பார்க்க அதிகம்
37

Page 35
வேறுபட்டதாக இருக்கவில்லை. நசுக் கப்பட்டதும் மனிதாபிமானமற்றதுமான சூழ்நிலைகளில் அவர்கள் வாழ நேர்ந்ததோடு, பல்வேறு வித சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். தாய் நாட்டில் வறுமையின் பிடிக்குட்பட்டிருந்த அவர்கள், தாம் குடியேறிய நாடுகளில் முதலாளித்துவ சக்திகளின் பிடிக்குட்பட்டனர். அவர்களது கல்வி புறக்கணிக்கப்பட்டது: தமது பாடசாலைகளைத் தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கோ, ஏனையோரிலும் பார்க்க தமது கல்விக்குக் கூடிய கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கோ தள்ளப்பட்டனர். உதாரணமாக, பிஜி தீவுகளில் இந்தியர் தாமாகவே பாடசாலைகளை அமைக்க வேண்டியிருந்ததோடு, ஆசிரியர்களையும் பராமரிக்க வேண்டியிருந்தது. பிஜியருக்கு மட்டுமே அரசாங்ப்க பாடசாலைகளிருந்தன. இன்று இந்நாடுகளில் அவர்களது கல்வி நிலை மிக மோசமாக உள்ளமைக்கு இதுவே ஆரம்ப காரணமாகும். கல்வியறிவின்மை அவர்களது சமூக மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் இன்று மிகப் பெரும் தடைக்கல்லாக உள்ளது.
வர்த்தகம், அரசாங்க நிர்வாகத்துறை, நிபுணத்துவத்தொழில்கள் என்பவற்றில் முன்னேறி மத்திய வகுப்பு அந்தஸ்தையடைந்த ஒரு சிறிய அளவான இந்தியர் சுதேசிய மக்களின் பொறாமைக்கு இலக்காயினர். அதேவேளையில், துறைமுகங்களிலும், பெருந்தோட்டங்களிலும் வேறு தொழில்களிலும் வியர்வை சிந்தி உழைத்து இந்நாடுகளின் செல்வத்தைப் பெருக்கிய பெரும்பான்மை இந்தியர்கள் ஏனைய சமூகங்களினால் ஒன்றில் மறக்கப்பட்டனர் அல்லது வெறுக்கப்பட்டனர். இந்தியர்களைத் தம்மைச் சுரண்ட வந்த இடைத்தரகர்களாகவும், ஊடுருவற்காரர்களாகவும் அவர்கள் கருதினர். பிரித்தானிய ஆட்சியாளரால் இந்தியர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டமை ஆபிரிக்களினதும், பர்மியரினதும், மலாயரினதும், ஏன் இலங்கையினரது கவனத்தையுங்கூட ஈர்க்கத் தவறியது.
இந்தியர்கள் தாம் வாழும் நாடுகளில் சட்டபூர்வமான ஒரு சமூக அரசியற் குழுவாக ஏற்கப்படவேண்டுமென விரும்புகின்றனர். ஆனால், அந்நாடுகளிற் காணப்படும் சில விசேட நிலைமைகளினால் (தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலும் கிழக்காபிரிக்க நாடுகளில் ஆபிரிக்கர் மயமாக்கலும் ஆசிய நாடுகளில் தேசிய வாதத்தின் எழுச்சியும் காரணமாக) பல்வேறு பாகுபாடுகளுக்கும் புறக் கணிப்புகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்பட்டனர். சில நாடுகளில் அவை சுதந்திரமடைந்த பின்னர்
38

குடியுரிமைப் பிரச்சினையையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. பல சிரமங்களுக்கும் மத்தியில் குடியுரிமையைப் பெற்றோர் அது தமக்கு நாட்டினது அரசியலிலும் பொருளாதாரத்திலும் நியாயமான பங்கினை வழங்கத் தவறியமையை உணர்ந்தனர். அதேவேளையில், நாடற்றோர் பல்வேறுபட்ட சட்டரீதியான கட்டுப்பாடுகளினாலும், நிர்வாக நடவடிக்கைகளினாலும் பாதிப்பிற்குள்ளாக நேரிட்டது.
சீனரைப் போன்றே இந்தியரும் தாம் வாழும் சமூகங்களில் ஒருங்கிணைய முடியாத நிலையிலுள்ளர் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்றவிடங்களிலெல்லாம் அவர்கள் ஏனைய சமூகங்களினின்றும் ஒதுங்கியே வாழ்ந்துள்ளனர். எனவே இந்தியர்கள் தேவைக்குமதிகமாகவே இந்தியர்களாகவிருப்பதாகவும், ஒதுங்கி வாழுவதாகவும் குறை கூறப்படுகின்றது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியர்களிடையே மனமாற்றம் ஏற்பட வேண்டுமென்றும், தாம் வாழும் நாடுகளின் சமூகங்களுடன் சேர்ந்து வாழ்வதா, அல்லது தொடர்ந்தும் புதியவர்களாகவே அந்நாடுகளில் வாழ்வதா என்பதை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. இந்தியர்களது தெரிவு இதில் முன்னையதாக இருக்குமாயின், அவர்கள் உள்நாட்டு மக்களது தேசிய அபிலாசைகளுடனும், அவர்கள் தமது நாட்டில் கட்டியெழுப்ப விரும்பும் சமுதாயத்துடனும் தம்மை இனங்கண்டு கொள்ளவேண்டும். அதேபோன்று, உள்ளுர்வாசிகளும் அவர்களை ஏற்று, அவர்களுடன் சகவாழ்வு வாழ முன்வரவேண்டும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே சிறந்த வழியாகும்.
M
கட்டுரையின் சில வரையறைகளும் குறைபாடுகளும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் என்ற இச்சிறு ஆய்வுக்கட்டுரையில் காணப்படும் சில குறைபாடுகளையும் வரையறைகளையும் இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகிறேன். இது பற்றிய ஆரம்ப ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் இக்கட்டுரையை எழுதத்தொடங்கிய காலத்திற்குமிடையே இம்மக்களது சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், இக்கட்டுரையில் அவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மேலும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில்
39

Page 36
வெளிவந்துள்ள பல கட்டுரைகள் கைக்கு எட்டாததோடு இலங்கையில் கிடைப்பவற்றைக் கூட திருப்திகரமாக வாசித்தறிய முடியவில்லை. இந்நிலையில் இக்கட்டுரையை இதுபற்றிய ஒர் ஆரம்ப முயற்சியாகக் கருதுவதே சரியானதென்பது எனது பணிவான கருத்து. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது இது மேலும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படும்.
(l)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(O)
References
Arasaratnam. S. 1970. Indians in Malaysia and Singapore.O.
U.P. London, New York. Bombay.
Chakravarti, N. R. 971. The Indian Minority in Burma: The rise and decline of an Immigrant Community.
Dastur, Aloo. 1971. A Gupta (ed.) Indians Abroad: Asia and
Africa. Report of an International Seminar. Orient Longman
Ltd., New Delhi, 1971.
De Silva, K. M. 1962, Social Policy and Missionary Organisations in Ceylon 1840 - 1855. The Bowering Press, Plymouth. .
Far Eastern Economic Review, 26 July 1984.
Furnivall.J. S. 1938. Colonial Policy and Practise. Cambridge University Press, London.
Gillion, K. L. 1962. Fiji's Indians: Migrants: A History to the End of Indenture in 1920. Melbourne, London. Wellington, New York, O.U.P., 1962.
Hollingworth. L. W. 1960. The Asians of East Africa. London. Macmillan.
Jain. C. P. 1982. "Indians Abroad: A Current Population Estinate". Economic and Political Weekly, Vol 17 (8) 10th January.
Kondapi, C. 1951. Indians Overseas, 1938 - 1949. Indian Co., cil of "World Affairs. New Delhi.
40

( . )
(12)
( 13)
(14)
(5)
(16)
(17)
(18)
(19)
(20)
(2)
Kaul. Man Mohini. 98(). Indians in Malaysia. Problems of lintegration. Man and Development II (4)
Klass. Morton. 1961. East indians in Trinidad, New York. Kumar. Lalit. 1972. India and Sri Lanka.
Moldrich, D. 1988. Bitter Berry Bondage. The nineteenth century Coffee Workers of Sri Lanka. CSPA, KANDY. Sri Lanka.
Moodley. K. A. 1975." South African Indians: The Wavering Minority" in Thompson. L. and Butler, J (eds.) Change in cointemporary South Africa. Berkley. University of California Prss.
Morris. H. S." Communal Bivalry among - Indians in Uganda British Journal of Sociology: 8 (4)
Norton, R. 1981. The Mediation of Ethnic Conflict: Comparative Implications of Fiji Case Journal of Commonwealth and Comparative Politics, XIX (3).
Patel, N. 1968. Kenya's Minorities and the African Crisis over
Citizenship. Race 9 (4)
Patel, N. 1974." Sociology of Indian Minorities in the Third World", International Review of Modern Sociology, Vol. IV (1)
Saha. Panchanan. 1970. Emigration of Indian Labour, 1834,900
New Delhi, P. P. H.
A.
Thangaraj. T. 1971. "Social Problems of the People of Indian Origin in Malaysia and Singapore in A. Gupta (ed.)
4.

Page 37
இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புகள் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
பேராதனைப் பல்கலைக்கழகம்
I
இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்களின் அல்லது மலையகத் தமிழர்களின் வரலாறு எப்போது ஆரம்பிக்கின்றது என்பது பற்றி கருத்தொருமைப்பாடு இல்லை. அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் இதுபற்றி வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் மலையகத் தமிழர்களது வரலாறு மிகவும் பழமையானது. அது எல்லாள மன்னனின் வருகையோடு ஆரம்பிக்கின்றது என்று கூற, வேறு சிலர் கண்டியின் கடைசி மன்னனான இரண்டாவது இராஜசிங்கனுடன் தான் ஆரம்பிக்கின்றது என்றும் கூறுகின்றனர். மற்றுஞ் சிலர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கைக்குத் தொழிலாளர்களாக வந்து காலக் கிரமத்தில் பெரும்பான்மை இனத்துடன் இணைந்து விட்டவர்களோடு தான் ஆரம்பிக்கின்றது என்று கூற பலர் 1828 ஆம் ஆணி டில் முதன் முதலாக கோப்பிப் பயிர்ச் செய்கைக்கென தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானிய தோட்டத்துரைமார் தொழிலாளர்களை இறக்குமதி செய்ததோடுதான் ஆரம்பிக்கின்றது எனக் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, உண்மையில் மலையக மக்களின் வரலாறு இலங்கையில் எப்போது ஆரம்பிக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அத்தேவையினை நிறைவு செய்யும் முகமாக அமைவதே இக்கட்டுரையாகும்.
II
வரலாறு என்றால் என்ன?
கிரேக்கச் சொல்லான Toropia (ரொறோப்லா) ஆரம்பத்தில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தகவல் என்றே பொருள்பட்டது. பின்னர் அது ஆராய்ச்சிகளின் முடிவுகள், வாய்மொழி அல்லது எழுத்துமூல விபரிப்பு என்ற கருத்தினைப் பெற்றது. லத்தீன் சொல்லான (Historia) கிஸ்ரோறியா என்பதினூடாக அது றோமன்ஸ் மொழிகளுக்கும் பெரும்பாலான இந்தோஐரோப்பிய மொழிகளுக்கும் சென்றடைந்தது. 17 ஆம் நூற்றாண்டில்
42

இச்சொல் வரலாற்றுத் தரவுகளின் தொகுப்பினைக் குறிக்கவும் பயன்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த அர்த்தத்திலேயே இச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படலாயிற்று. 18 ஆம் நூற்றாண்டில் ஜெஸ்ஸிஸ்ரி (Geschichte) என்ற ஜேர்மன் சொல்லுக்குப் பதிலாக இஸ்ரோறி (Historie) என்பது பயன்பாட்டிற்கு வந்தது. இச்சொல் மனித உண்மைகளையும் அவற்றின் படிமுறை வளர்ச்சியையும் குறித்து நின்றது.
வரலாறு என்ற பதம் இரண்டு தெளிவான விசாரணை மாதிரிகளைக் குறித்து நிற்கிறது. மரபு ரீதியாக அது முறையான விளக்கம் தருவதனையோ அல்லது அங்க சம்பூரணமான விளக்கத்தினைத் தருவதையே குறித்து நின்றது. அவ்வாறாயின் வரலாற்றின் பொருள் என்ன? வரலாறு அபிவிருத்தியினையும் மாற்றத்தினையும் ஆட்சி செய்யும் அடிப்படை விதிகள் மீது கவனம் கொள்கிறது. இத்தகைய விளக்கத்தினை முன்வைத்தவர்களுள் கார்ல் மார்க்சும், ஸ்பென்கிலெரும், ஆர்னல்ட்
ரொயின்பியும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
மார்க்ஸ் வரலாறு என்பது குறிப்பிட்ட எதிர்வுகூறத்தக்க இலக்கினை நோக்கியதாக இருக்கும் என்றார். ஸ்பென்கிலெரும் ரொயின்பியும் சில வகையான ஒழுங்கிலமைந்த திரும்பத் திரும்ப இடம்பெறும் மாற்றம் எனக் கொண்டனர். மற்றையோர் மேற்சொன்ன இரண்டையும் கலந்த இயல்புகளை முன் வைத்தனர். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அம்சம், வரலாற்று வழிமுறை என்பது சம்பவங்களின் தொகுப்புகளுக்கு மேலானது என்பது உணர்ச் சிவசப் படாது விடயங்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சி என்பவையே.
ஆகவே வரலாறு என்றால் பழமை பற்றியதொரு ஆய்வா அல்லது திட்டவட்டமான இலக்கினையும் நோக்கங்களையும் கொண்டதொரு விடயமா? வரலாறு என்பது கடந்த காலங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது என்று பொருள் படுகின்றதா? கலாசார அபிவிருத்திகள் பற்றிய விபரத்தைத் தரும் ஒரு முயற்சியா அல்லது நாட்டின் அரசியல் பொருளாதார, சமூக, அரசியல் யாப்பு மாற்றங்களையும் இவை ஒன்றிலொன்று கொள்ளும் தொடர்புகளை விபரிக்கும் ஒன்றா எனப் பல வினாக்களுக்கு விடை காண வேண்டும்.
மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களோடு வரலாறு கட்டாயமாகத் தொடர்புப்படுகிறது. வரலாற்றினை எழுதும் போது வரலாற்றாசிரியர்கள்
• 43

Page 38
அத்தகைய மாற்றங்களுக்கு காலாயிருந்த முக்கியமான நிகழ்ச்சிகளில் பிரதான கவனம் செலுத்துகிறார்கள். எங்கு, எவ்வாறுஅந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன என்பதை விளக்குகிறார்கள். வரலாற்றில் தனியே சாதனைகளில் மாத்திரம் கவனம் கொள்ளாது வீழ்ச்சிகளிலும் சிதைவுகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இவையே நவீன வரலாற்றின் முக்கிய பகுதிகளாக அமைந்துள்ளன. வரலாறு பற்றிய நோக்கு இப்போது மாற்றம் அடைந்து வருகின்றது. சமூகவியல் நோக்குக்கு இப்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எல்லாத் திசைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் போது தனியே அரசியல் வரலாற்றுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது சமூகம் முழுவதிலும் கவனம் கொள்ள வேண்டும். இறுதியாக வரலாறு உணர்ச்சிகளிலல்ல உண்மைகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
III
மலையகத் தமிழரின் வரலாறு பற்றி "இலங்கை இந்தியர் வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் ஒரு நூலையும் ஆங்கிலத்தில் திரு. எஸ் நடேசன் அவர்கள் மலையக மக்களின் வரலாறு (The History of Up-Country Tamils) stip snough gildajási கலாநிதி டீ. வெசும்பெரும அவர்கள் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த 6IDIš65usi (GSTTL și G5IngolorT6ITTSi 6s (Indian Immigrant Plantation Workers) என்ற நூலையும் பேராசிரியர் பேற்ரம் பஸ்தியாம்பிள்ளை அவர்கள் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்கள் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவர்களது நூல்களிலும் கட்டுரைகளிலும் தவறு கண்டு பிடிப்பது அல்ல இக்கட்டுரையின் நோக்கம் மாறாக இலங்கை வாழ் மலையகத் தமிழரின் வரலாறு எப்போது ஆரம்பிக்கின்றது என்பது பற்றிய சில குறிப்புகளையே இக்கட்டுரையில் நான் ஆராய்ந்துள்ளேன். ஆகவே இது மலையகத் தமிழரின் வரலாறு பற்றிய கட்டுரை அல்ல என்பத்ையும் கவனித்தல் வேண்டும்.
திரு. எஸ். நடேசன் அவர்கள் இந்தியத் தொழிலாளர்களின் முறைப்படியான ஆட்சேர்ப்பு 1838 இல் தான் ஆரம்பித்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பேராசிரியர் பேற்ரம் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கருத்தின் படி கோப்பிப் பயிர்ச்செய்கையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த தோட்டத்துரையான யோர்ஜ் பேர்ட் (George Bird) என்பவரும் 1824 க்கும் 1931க்குமிடையில் இலங்கையில்
44

தேசாதிபதியாகவிருந்து எட்வர்ட் பாண்ஸ் (Edward Barns) என்போரால் 1828 இல் முதல் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கைப் பெருந்தோட்டங்களில் வேலை செய்யவென தொழிலாளர்கள்
வரவழைக்கப்பட்டனர். திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற
மாவட்டங்களிலிருந்து பிரதானமாக தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தனர்.
கலாநிதி டீ. வெசும்பெரும அவர்கள் கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பத்தில் ஒரு சில பெருந்தோட்டங்களே இருந்தபோது சில: பிரதேசங்களில் சிங்களவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்தனர் என்றும் ஆனால் மிக விரைவில் இவர்கள் தமது மரபு ரீதியான சமூக-பொருளாதார முறையினுள் திரும்பச் சென்று விட்டனர் எனவும் அதன் காரணமாக மிகத் தீவிரமான தொழிலாளர் பற்றாக்குறையினை பிரித்தானிய தோட்டத் துரைமார் எதிர்நோக்கினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது இலங்கைக்கெனவே அமைந்த ஒரு தனித்துவமான பிரச்சினையாக இருக்கவில் லை. ஐரோப்பிய காலனித்துவ அரசுகள் பல இப்பிரச்சினைகளினை எதிர்நோக்கின. இத்தகைய தொழிலாளர் பற்றாக்குறையினைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிகள் கையாளப்பட்டன: 1. புலம்பெயர் தொழிலாளர் முறை. 2. சனத்தொகை அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து பெருமளவு தொழிலாளர்களை இறக்குமதி செய்தல். பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இவ்விரண்டாவது முறையே பின்பற்றப்பட்டது எனவும் விளக்குகிறார். இவரது ஆய்வின் படி 1832 ஆம் ஆண்டிலேயே பெருந்தோட்டங்களில் முதற் தொழிலாளர் வருகை இடம்பெற்றது: M
பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலம் பற்றி எழுதிய எரிக் மேயர் என்பவர் இலங்கையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வர்த்தக விவசாயம் பிரித்தானியர் வருகைக்கு முன்னரே இடம்பெற்றிருந்தது என்றும் போர்த்துக்கேயர் ஆட்சியின் போது குறிப்பாக டச்சுக்காரர் ஆட்சியின் போது கறுவா, புகையிலை, பாக்கு தேவைக்கதிகமான நெல், மற்றைய பயிர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன எனவும் கண்டிய மன்னர்களின் கண்காணிப்பின் கீழும் இவை பயிரிடப்பட்டன. இப்பயிர்ச்செய்கைக்கு தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார். மைக்கல் றொப்ேர்ட்ஸ் அவர்கள் முன்னர் பாய் பின்னுவதைத் தொழிலாகக் கொண்ட பின்னர் சலாகம் என அழைக்கப்பட்டவர்களை கறுவாப்பட்டை, உரித்துப் பதம்
45

Page 39
பண்ணுவதற்காக காலனித்துவ அரசாங்கம் தென்னிந்தியாவிலிருந்து தருவித்தது என்றும் பிரதியுபகாரமாக இவர்களுக்கு நெல்லும், வேறு நிலங்களும் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபற்றி சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் தமது நாடற்றவர் கதை என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். "டச்சுக்காரர்கள் இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி செய்த காலத்தில் முதன் முறையாக அவர்கள் தான் 10,000 தமிழ் தொழிலாளர்களை கருக மரத்தை (கருகப்பட்டை) பயிர் செய்து அதன் பட்டையை உரித்து பாடம் பண்ணுவதற்காகக் கொண்டு வந்தார்கள்' ஆகவே 1928 இல் தான் மலையகத் தமிழரின் வரலாறு ஆரம்பமாகிறது எனக்கொள்வது தவறானது என்பது புலனாகிறது.
இலங்கையில் டச்சுக்காரர் ஆட்சி பற்றிய விரிவான ஆய்வுகளை செய்துள்ள பேராசிரியர் அரசரத்தினம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். போர்த்துக்கேயர் இலங்கையிலுள்ள முழுக் கறுவா உற்பத்தி செய்யும் பிரதேசங்களையும் வெற்றிகரமாகத் தமது கட்டுப்பாட்டினுள் கொணி டு வந்தார்கள் டச்சுக் காரர்கள் போர்த்துக்கேயர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு அவர்களும் கறுவாப்பட்டை தொழிலைத் தமது தனியுரிமை ஆக்கிக் கொண்டனர். இவ்வுரிமை அவர்கள் கண்டிய மன்னனுடன் 1738 இல் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கறுவாவினை சேகரிப்பதும் அதனை எடுத்துச் செல்வதும் டச்சுக்காரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதற்கென தனியானதொரு திணைக்களத்தினை உருவாக்கி இருந்தனர். அகு மகாபெத்த (Mahabedde) என அழைக்கப்பட்டதோடு அத்திணைக்களம் நேரடியாக தேசாதிபதியின் அதிகாரத்தினுள் இருந்தது. இத்திணைக்களத்தின் கீழ் கறுவாப்பட்டை உரிப்பதற்கான உள்ளூர் சாதிக்குழு ஒன்றும் இருந்தது. இக்குழுவினை சிங்களத்தில் சாளியாஸ் (ChaliaS) என அழைத்தார்கள். இச் சாளியாஸ்கள் அவர்களது நாட்டு மரபுகள், வழக்கங்கள் படி ஆளப்பட்டனர். இவர்களது உழைப்புக்குப் பதிலாக முடி இவர்களுக்கு நிலம் வழங்கியது. அவற்றில் இவர்கள் சாகுபடி
செய்தார்கள்.
ஆரம்பத்தில் கூடை பின்னுபவர்களைச் சேர்ந்த ஒரு சாதியினர் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தோர்களே இவர்கள்
46

என மரபு கூறுகிறது. கறுவாப்பட்டை வியாபாரம் முக்கியத்துவம் பெற்றபோது சிங்கள மன்னர்கள் கறுவாப்பட்டை உரிப்பது அவர்களது கட்டாய சேவை எனக் கட்டளையிட்டனர். போர்த்துக்கேயர்களும் இந்நிலைமையினைக் கண்டு அதனை தமது நன்மைக்குப் பயன்படுத்திக் கொண்டதால் டச்சுக்காரர்களும் இதனைத் தொடர முடிந்தது. ஏனெனில் அவர்களும் போர்த்துக்கேயர்களின் இடங்களைக் கைப்பற்றி தம்மை நிலத்துக்கு இறைமை உடையவர்களாக ஆக்கிக் கொண்டதோடு சாலியர்களுடைய சேவைகளைக் கட்டாயமாக்கினர்.
ஆகவே தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களின் வருகை என்பது கண்டிய மன்னர் காலத்திலும் போர்த்துக்கேயர், டச்சுக்காரர் ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்றமை தெரிகின்றது.
கலாநிதி குமாரி ஜெயவர்த்தன" அவர்கள் 1910 இல் புகைவண்டி பகுதி ஊழியர்கள் அப்பகுதியில் இந்தியர்களைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்து முறைப்பாடு செய்தது பற்றியும் 1913 இல் புகைவண்டிப் பகுதி ஆணைக்குழு விசாரணையின் போது சிங்களவர், பறங்கியர் ஆகியோரை விட அப்பகுதியில் இந்தியத் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் நியமனத்தில் முன்னுரிமை வழங்குவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவும் 1928 க்கு முன்பே இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் தொழில் செய்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் வருகையோடுதான் மலையகத் தமிழர்கள் வரலாறு இலங்கையில் ஆரம்பிக்கிறது எனக்கொள்வது தவறானது என்பது புலப்படுகின்றது. ஆகவே அவர்களது வரலாறு எப்போது ஆரம்பிக்கின்றது என்பதை அறிவதற்கு ஆதிகால மத்திய காலத் தமிழர்கள் குடியேற்றங்கள் பற்றியும் அநுராதபுர கால, பொலநறுவைக் கால குடியேற்றங்களைப் பற்றியும் அறிதல் அவசியமாகும்.
IV புவியியல் ரீதியில் இலங்கை தென்னிந்தியாவுக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதும் இந்தியாவின் கரையோரங்களிலிருந்து இலங்கைக்கு சுலபமாக வரமுடியும் என்பதும் இலங்கை சனத்தொகையின் இனத்துவ பண்பினைப் பாதித்துள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிங்கள மக்களின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சம் (Mahavamsa) கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் விஜயனின் வருகையுடன் 47

Page 40
தான் இலங்கையில் மனித குடியிருப்புக்கள் ஆரம்பித்தன எனக் கூறும் அதேவேளை விஜயன் மதுரையைச் சேர்ந்த அரசகுமாரி ஒருவரையே மனஞ் செய்தான் எனவும் குறிப்பிடுகிறது அரச குமாரியோடு சேர்ந்து 18 கைவினைஞர் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தன எனவும் குறிப்பிடுகிறது. ஆகவே முதலாவது தமிழ் குடிபெயர்வு கி. மு. 5 ஆம் நூற்றாண்டளவில் இடம்பெற்றதாகக் கொள்ள வேண்டும்.
தீபவம் சமும் மகாவம்சமும் இலங்கை ஒரு பெளத்த நாடென்பதையும் அம்மதத்தினை காக்கத் தெரிவு செய்யப்பட்ட மக்களாக சிங்களவர்களையும் கொள்கிறது. இருந்தபோதிலும் கி. மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஐந்து தமிழ் குடியிருப்புகளைப் பற்றி குறிப்பிடுகிறது. இவர்களது தலைவர் ஒரு கடலோடி என்பதும் இக் குழு சில 6 605) 8 tLJ T 63 வர்த் தக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகத் தெரிகிறது. இவை கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகமும் இந்தியாவுடனேயே பெருமளவுக்கு நடத்தப்பட்டன என்பதனை காட்டுகின்றது. இந்த தொடர்பிலேயே தமிழ்க் குதிரை வர்த்தகர்களான சேனனும் குட்டிகனும் இலங்கையின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது என்பதையும் வர்த்தகத்தில் தமிழர்கள் வகித்த உன்னத நிலையினையும் காணக்கூடியதாகவுள்ளது.
V அநுராதபுரத்தின் தமிழ் குடியிருப்பாளர்கள் பற்றியதொரு கல்வெட்டு பெளத்த விகாரைகளைக் கட்டுவித்தல் பற்றிக் குறிப்பிடுகின்ற அதேவேளையில் ஆறு தமிழர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியபுளியங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட இரு சிறிய கல்வெட்டுக்கள் விசாக்கா (Visakha) என அழைக்கப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.'
கி. பி. 33 தொடக்கம் 43 வரையுமுள்ள காலப்பகுதியிலும் கி. பி. 231 தொடக்கம் 240 வரையுள்ள காலப்பகுதியும் இலநாக (lanaga) என்பவரும் அபயநாக (Abhayanaga) என்பவரும் அரசுரிமைளைப் பெறுவதற்காக தென்னிந்தியாவிலிருந்து கூலிப்படைகளை கொண்டு வந்தனர் என்பதை வரலாறு குறிப்பிடுகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில்
48

பல பாண்டிய இளவரசர்கள் அநுராதபுரத்தைக் கைபற்றியதோடு இலங்கையில் பெருமளவு பகுதிகளையும் ஆட்சி செய்தனர். அநுராதபுர காலத்தின் இறுதிப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர் தென்னிந்தியாவிலிருந்து பல கூலிப்படையினரை இலங்கைக்கு கொண்டு வந்தனர் என்பதையும் அறியமுடிகின்றது.
கீலமேகவண்ணனின் (619-628)ளில் தளபதியாயிருந்த சிறீநாக என்பவன் தமிழ் இராணுவத்தின் ஆதரவுடன் வட மாகாணத்திலிருந்து ஒரு கிளர்ச்சியினை நடத்தினான். ஆனால் இம்முயற்சி அரசனின் படைகளினால் அடக்கப்பட்டது. பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஆட்சியாளனான அகபோதி II (628-639) தென்னிந்தியாவுக்கும் சென்று தமிழர்களுடன் திரும்பி வந்து ஜெத்ததிஸ்ஸ (ethatissa) என்பவனிடம் முன்னர் அடைந்த தோல்வியினை பழிவாங்கும் நோக்கில் போரிட்டு தனது ஆட்சியினைப் பெற்றான். இருந்த போதும் ததாசிவ (Dathasiva) என்பவன் ஒழுங்கமைத்த கிளர்ச்சியின் போது மீண்டும் அகபோதி பதவியிழந்தான்.
"17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாணவன்ம எனும் இளவரசன் (684-718) பல்லவ மன்னனான நரசிம்ம வர்மனால் வழங்கப்பட்ட தமிழ் இராணுவத்தினைக் கொண்டு வந்து கைப்பற்றினான். இதனைத் தொடர்ந்து இராஜரட்டையில் குடியேறிய திராவிட கூலிப்படைகள் அவர்களது பரம்பரையினரும் அநுராதபுர இராசதானியின் அரசியலில் தொடர்ந்தும் ஒரு காரணியாக வந்தனர்’ ,
A.
7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கூலிப் படைகளை தொழிலுக்கமர்த்தியமையும் தென்னிந்திய வர்த்தகக் குழுக்களின் நடவடிக்கைகளும் இராஜரட்டையில் தமிழ்க் குடியேற்றங்களின் வளர்ச்சிக்கும் காரணங்களாயின. சூளவம்சம் இராஜரட்டையின் பல பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த வரலாற்று ஏடு குறிப்பிடும் சாட்சியங்களை சிங்கள கல்வெட்டுக்கும் உறுதிப்படுத்துகின்றன. 9ஆம் நூற்றாண்டிலிருந்து வெளிவந்த கல்வெட்டுக்கள் தீவின் வேறுபட்ட பகுதிகளிலும் தமிழர் குடியிருப்புக்கள் இருந்தன என்பதற்கு தெளிவான சாட்சியங்களாயுள்ளன. (Deme, Kaballa, Demel-Gambim and Demela Valademin) Guit Gip சொற்தொடர்கள் பல நிலங்கள், கிராமங்கள். என்பவற்றை தமிழர்கள்
49

Page 41
கொண்டிருந்தனர். அல்லது அவற்றில் குடியிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன.
V
கி. பி. 993 இல் சோழர் இலங்கைக்குப் படையெடுத்து வந்த போது ஒழுங்குபடுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்று இருக்காமையால் ஆட்சியைக் கைப் பற்றுதல் இலகுவானதாக அமைந்தது. கைப்பற்றபட்டபின் அரசாங்கம் தமிழ் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட உத்தியோகத்தர்களின் கீழ் நடத்தப்பட்டது. இருந்தும் மத்திய தென், பகுதிகளில் 1017ஆம் ஆண்டுவரை மகிந்த ஆட்சி புரிந்து வந்தான். ஆனால் புதிய சோழ மன்னனான முதலாம் இராஜேந்திரன் அனுப்பிய படை மகிந்தனைக் கைது செய்து சோழ நாட்டுக்கு அழைத்துச் சென்றது. இதன் பின்பு இலங்கை முழுவதும் அவனால் கைப்பற்றப்பட்டதாக இராஜேந்திரனின் உத்தியோகபூர்வமான பதிவுகள் எடுத்துக்கூறுகின்றன. இதன் பின்பு முதன்முதலாக இலங்கைத் தீவில் பிரதான பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்தில் ஒன்றிணைந்த ஒரு பகுதியாகியது."
சோழர் காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த ஐயாவொளி திசை ஆயிரத்து ஐந்நூறுவர் இலங்கையிலும் ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டனர். ஐயாவொளி என்பது பல பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும் இவ்வமைப்பு நானதேசிஸ் (Nanadesis) 5 Jusărfuumi (Valanciyar) siyš@s,TLų (Virakkoti) நகரத்தார் (Nagarattar) செட்டிகள் (Cettis) செட்டி புத்திரர்கள் (Cetti Putras) என்ற உபகுழுக்களையும் கொண்டிருந்தது.
இக்காலப் பகுதியில் இலங்கையில் காணப்பட்ட இன்னொரு முக்கியமான வர்த்தக சமுதாயம் 'வீரக்கொடி ஆவர். இவர்கள் அத்துறவர்களோடு இணைந்து வியாபாரம் செய்தனர். காலக்கிரமத்தில் வீரக்கொடிகள் சிங்கள சனத்தொகையுடன் இணைந்து கொண்டதாக தெரிகின்றது. தீவில் கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகள் செட்டிகள், செட்டிபுத்திரர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன. செட்டி எனப்படுவோர் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு சாதியினராகவும் இருந்ததோடு பட்டின பூமி நாட்டுச் செட்டி எனவும் அழைக்கப்பட்டனர். செட்டி என்பதே வர்த்தகத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இருந்தது.
50

இலங்கையில் 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் ஐயாவொளியும் மற்றைய திராவிட வர்த்தக சமுதாயங்களும் மிக அதிகமாகக் காணப்பட்டதால் பலமிக்கவர்களாகவும் இருந்ததால் சுயேட்சையான நகரங்களை உருவாக்கக் கூடியதாயிற்று. வாகல்கடா (Vahalk:Ida) வின் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் ஒரு குடியிருப்பினை உருவாக்கினர். அது கட்டனேறி என அவர்களது கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. பதவியாவில் ஐயம்பொலில் பட்டினம் என இன்னொரு குடியிருப்பும் அபிவிருத்தியடைந்தது. தக் கினதேசத்தின் பிரதான நகரமான lum 55ời (66um 6rỏ [bi Sug (Pandu-VaS-Nuwara) 5ứìgọi tổ Long, g, so 6II மாவட்டத்திலுள்ள விகாரகின்ன (Viharahinna) விலும் அத்தகைய பல நகரங்கள் எழுச்சி அடைந்தன."
VII இக்காலத்தில் இலங்கையில் காணப்பட்ட தமிழ்க் குடியிருப்புக்கள் இராணுவ சமூகங்களையும் உள்ளடக்கியிருந்தன. அவர்களுக்குள் வேளைக்காரர், அகம்பதிகல் எனப்படுவோர்கள் முக்கியமானவர்கள் பொலன்னறுவைக் காலகட்டத்தில் சிங்கள மன்னர்களின் இராணுவத்தில் மேற்சொன்னோர் பிரதான இடம்பெற்றனர். கோவில்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
பொலநறுவையிலுள்ள வேளைக்காரர் பற்றிய கல்வெட்டு பொலநறுவையிலுள்ள அவர்களது இராணுவம் பெரியதாக இருந்ததோடு பல பிரிவுகளையும் கொண்டிருந்தது. வேளைக்காரர் பொலநறுவையில் நிரந்தரமாக குடியிருந்ததாகத் தெரிகின்றது. அங்கு இவர்கள் செல்வாக்கு மிக்க வட்டாரங்களில் உயர்ந்த மதிப்புடன் இருந்ததோடு அரசியலிலும் மத விடயங்களிலும் அதிகாரமும் செலுத்தி வந்தனர்."
. tij.
12ஆம் நூற்றாண்டின் முதல் அரை பகுதியிலிருந்து அகம்பதிகள் என்ற தமிழ் இராணுவ சமூகம் பற்றி மூலங்கள் குறிப்பிடுகின்றன. பராக் கிரமபாகுவின் இராணுவத்தில் அகம்பதி வீரர்கள் பலர் கடமையாற்றினர். பொலநறுவைக் காலகட்டத்தில் சிங்கள மன்னர்களால், வேலை வழங்கப்பட்ட தமிழ்ப் போர் வீரர்கள் தமிழ் அதிகாரி என அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் கீழ் கடமையாற்றினர். இவர்களில் தலைவர்கள் சிலர் தளபதிகள் என்ற அந்தஸ்தையும் பெற்றனர். சேனக்க பண்டாரநாயக்க தனது ஆய்வொன்றில் குறிப்பிட்டது போல் இலங்கை
51

Page 42
வரலாற்றில் தமிழரும் தமிழ்ச் சமூகங்களும் அநேகமாக ஆக்கிரமிப்பாளர் அல்லது அந்நியராக உருவகிக்கப்பட்டனர். அதுமாத்திரமல்ல அவர்கள் பெளத்த மதத்தைப் பரப்புபவர்களாகவும் தந்த தாது விண் பாதுகாவலராகவும் கூலிப் படைகளாகவும் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் ஆழமாகப் பங்குபற்றியவர்களாகவும் வணிகர்களாகவும், வர்த்தகர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு."
VIII திரு. பி. பி. தேவராஜ் அவர்கள்
பரதவர் அல்லது பரவர் எனப்படுவோர் போர்த்துக்கேயர் காலத்திலிருந்து இலங்கையில் குடியேறியதற்கான வரலாறு உண்டு. பிரித்தானியர் காலத்துக்கு முன்னர் நீர்கொழும்புக்கு அண்மையில் குடியேறிய அவர்களுள் சிலர் இனமாற்றத்திற்குட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். பிரித்தானியர் ஆட்சிக் காலத்துக்குப் பின்பு இலங்கையில் குடியேறிய பரதவர்களில் பெரும்பாலானோர் கொழும்பிலும் வேறு சில நகரப்பகுதிகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் தமிழைப் பேசுபவர்களாகவும் தோட்டப் பகுதிகளைச் சார்ந்த தமிழர்களிலிருந்து வேறுபட்ட தனித்துவமுடையவர்களாயிருந்தும். இந்தியத் தமிழர் என்றே பொதுவாக கணிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது."
என்றும்
இலங்கையில் குடியேறியவர்களுள் பெருந்தோட்டத்தைச் சாராத பிறிதொரு குழுவினராய் உள்ளோர் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எனப்படும் குழுவினராவர். இவர்கள் இந்நாட்டின் வர்த்தக உலகின் குறிப்பிடத்தக்க முதன்மை பெற்றவர்களாயிருந்தனர். இவர்கள் முற்று முழுதானதொரு வர்த்தக சமூகத்தினராவர். இவர்களை ஏனைய ரெட்டியார்கள் அல்லது செட்டிகளுடன் இணைத்து மயங்குதல் கூடாது இன்று மிகச் சிலரான நாட்டுக்கோட்டைச் செட்டியார்களே இங்குள்ளனர்."
என்று குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது மேலும்
தோட்டத் தொழிலாளர்களாக இல்லாத, ஆனால் பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் நகரங்களிலும் பெருந்தோட்ட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கை வினைஞர்களாகத் தொழில் செய்யும் தமிழ்க் குழுவினரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்தே கணிப்பிடப்பட்டனர். "பெருந்தோட்டத் தொழிலாளர்களை போலல்லாது இக்குழுவினர் சமூகத்தின் ஏனைய பகுதிகளுடன் சேர்ந்து முன்னேற்றமும் வளர்ச்சியும் பெற்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர் அல்லாத இந்தியத்
52

தமிழர் குறிப்பாக மாத்தளை. தங்காலை, கேவாகெட்டை, கண்டி கம்பளை நாவலப்பிட்டி, அப்புத்தளை, ராகலை, பதுளை போன்ற இடங்களில் காணப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சிறுநிலச் சொந்தக்காரர்களாகவும் சிறு வியாபரிகளாகவுமே உள்ளனர்."
இறுதியாக தேவராஜ் அவர்கள்
நகரத்தைச் சார்ந்த தொழிலாளர்களில் நகரசபைகளின் சேவைகளில் ஈடுபடும் "அருந்ததியர்’ என்ற சமூகக் குழுவினரும் உள்ளடங்குவர். இவர்களுடைய மரபும் மூலமும் வரலாறும் இந்தியத் தோட்டத் தமிழர்களிலிருந்து வேறுபட்டது. அருந்ததியர்களது தாய்மொழியாக தெலுங்கு மொழியின் ஒரு வகைப் பேச்சு வடிவம் இருந்த போதிலும் அவர்கள் தற்போது தமிழைப் பேசுகின்றனர்"
என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது. *
ஏ. என். என். ஷாஜகான் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும் என்ற நூலில் புத்தளம் நகரத்தின் ஆதி குடியேற்றம் பற்றி எழுதும் போது:
முஸ்லிம் அல்லாதவர்கள் புத்தளம் நகரில் புறம்பாக வாழ்ந்தனர் முகையதின் தர்ஷாவுக்குரிய பரந்த காணிக்கும் மெளலா மக்காம் பள்ளி வாசலுக்குரிய காணிக்கும் இடைப்பட்ட பகுதியில் செட்டியார்கள் வாழ்ந்தனர். இவர்கள் தென்னிந்தியப் பரம்பரையினர் ஆயினும் வட்டிக் கடை வைத்துத் தொழில் புரிந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் என வழங்கப்பட்ட சைவசமய செட் டிமார்தளிலும் இருந்து வேறுபட்டவர்கள். இவர்கள் 'கொழும்புச் செட்டிமார் எனக் குறிக்கப்பட்டனர்."
மேலும்
சைவத் தமிழ் மக்கள் புத்தளத்தின் வடக்கே உப்பளத்துக்கும், நகரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையை அடுத்த பகுதியில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர் இன்றைய உடப்புக் கிராமத்தில் வசிப்போரின் சந்ததியினர் ஆவர்."
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமையும் கவனத்துக்குரியவை.
நாயக்கர் எனப்படுவோர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் விரிவோடு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் செல்வாக்குப் பெற்றோராவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள். கண்டி மன்னர்கள் தமக்கென மணப்பெண்களை தென்னிந்தியாவிலிருந்து தருவித்ததோடுதான்
53

Page 43
இவர்களின் இலங்கைத் தொடர்புகள் ஆரம்பித்தன. ஆகவே கண்டியின் கடைசி மன்னர் ஒரு தமிழர் என்பது எந்தளவுக்குச் சரியானதென்பது கேள்விக்குள்ளாகின்றது. 1707க்கும் 1939க்குமிடையில் கண்டியில் ஆட்சி செய்த நரேந்திர சிங்கன் இறந்ததால் பின்பு அவனது மனவிையின் சகோதரனான மதுரையைச் சேர்ந்த பூரீ விஜய இராயசிங்கன் (17391747) என்ற பெயரில் ஆட்சி செய்யத் தொடங்கினான். இவனும் தனது பட்டத்து இராணியை வரவழைத்தான். விஜய இராஜசிங்கன் இறந்ததின் பின்னரும் அவனது மனைவியின் சகோதரன் பட்டத்துக்கு வந்தான். அவனே கீர்த்தி பூரீ இராஜசிங்கன் ஆவான். இவனே உண்மையான நாயக்க மன்னனாவான். இவன் தஞ்சாவூர் மன்னன் விஜயமானன் நாயக்கரின் இரண்டு புதல்வியர்களை மணம் செய்தான். இவனைத் தொடர்ந்து இவனது சகோதரனான இராஜாதி இராஜசிங்கன் கண்டியை ஆண்டான். இராஜாதி இராஜசிங்கனின் சகோதரியின் மகனான பூரீ விக்கிரம இராஜசிங்க 1815ல் கண்டியினை ஆண்டான். 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பூரீ விக்கிரம இராஜசிங்கனும் அவனது ராணியும் கைது செய்யப்பட்டதோடு கண்டி இராசதானி பிரித்தானியர் கைவசமாகியது.
LX
இலங்கையில் மலையகத் தமிழரின் வரலாறு எப்போது ஆரம்பிக்கின்றது என்பதைப் பரிசீலனை செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். ஆனால் மலையகத் தமிழரின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது எனக் காட்டுவதற்காக அல்ல. அது உண்மையான ஆய்வாகவும் அமையாது. இந்தத் தொடர்பில் முதலில் "மலையகத் தமிழர்' என்ற பதம் முக்கியத்துவம் பெறுகிறது. இப்பதம் தனியே பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களை மாத்திரம் குறிப்பிடவில்லை. பெருந்தோட்டங்களுக்கு வெளியே வாழும் மற்றைய இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்குகிறது. அவ்வாறாயின் இலங்கை மலையகத் தமிழரின் வரலாறு 1828 ஆம் ஆண்டு இலங்கைக்குக் கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்யவென வந்தவர்களோடு தான் ஆரம்பிக்கின்றதா? அல்லது சி. வி. வேலுப்பிள்ளை, மைக்கல் றொபர்ட்ஸ், எரிக் மேயர் என்போர் குறிப்பிடுவது போன்று டச்சுக்காரர் ஆட்சியின் போது கறுவாப்பட்டை உரிப்பதற்கென தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களுடன் ஆரம்பிக்கின்றதா? அல்லது கலாநிதி குமாரி ஜெயவர்த்தன அவர்கள் குறிப்பிடுவது போல் கொழும்பு நகரில் குறிப்பாக புகையிரதத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தவர்களோடுதான்
54

ஆரம்பிக்கின்றதா? அல்லது வட்டிக்குப் பணம் கொடுப்போராக வந்த நாட்டுகோட்டைச் செட்டிமாரோடு ஆரம்பிக்கின்றதா? அல்லது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் போரிடுவதற்கென படைவீரர்களாக சிங்கள மன்னர்களால் கொண்டுவரப்பட்டவர்களுடன் ஆரம்பிக்கின்றதா? என்பதைத்
திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை.
ஆகவே, இவ்விடயத்தில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அத்தகைய ஆய்வுகளுக்கு இக்குறிப்புகள் முன்னோடியாக அமைய வேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆனால் மலையகத் தமிழரின் வரலாறு 1828 இல் இருந்து தான் ஆரம்பமாகிறது எனக் கொள்வது தவறு என்பது மாத்திரம் உண்மையாகும்.
குறிப்புகள்
1. Betram Basthiampillai "Social Conditions of the Indian Immigrant Labour in Ceylon the 19th Century, with special reference to the seventies and some composisons with conditions to other Countries" ed International Association of Tamil Research, Proceedings of the First linternational Conference Seminar os Tamil Studies Vol. Il (Kuda Lumpur. Rajiv Printers, 1976), P. 682
2. D. Wesumperuma, Indian Immigrant Plantation Workers in Sri Lanka
(Kelaniya: The Vidyalankara Press. 1987), p.25
3. See Eric Meyer, "Enclave Plantation, Hemmed in Villages and Dualistic Representations in Colonial Ceylon" ined Valentine Daniel Plantations, Peasants and Proletarians in Colonial Asia (Grate Britain: Frank Cass and Company Ltd., 1992).
f. 6. வேலுப்பிள்ளை, நாடற்றவர் கதை (நீலகிரி ஐலண்ட் அறக் கட்டளை வெளியீடு, 1987), ப. 18
S. Arasaratnam, Dutch Power in Ceylon 1658 - 1687 (New Delhi: Nawaraing 1968), pp. 184 - 185
Sirinna Kiribamuna, "Tamils in Ancient and Medieral Sri Lanka". The Historical Roots of Ethnic identy "Ethnic Studies Report Vol.2, 1986
S. Pathmanathan, The Kindom of Jaffna (Colombo: Arul M. Rajendran, 1978), p.25.
55

Page 44
8.
9.
().
l.
4.
5.
6.
7.
bid, p35
[ hid. p
bid. p.
,னக்க பண்டாரநாயக்க, இலங்கை மக்கள் வசிப்பிடமாதல், தேசீயப் பிரச்சினை و قا வரலாறு தொடர்பான சில கேள்விகள், தொகுப்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கம்,
இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும் (கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கம், 1985), பப - 20 - 21
பீ. பீ. தேவராஜ் 'இலங்கையில் இந்தியத் தமிழர், தனித்துவ உறுதிப்பாடும்
இனங்களுக்கிடையிலான பரஸ்பர செயற்பாடும் தொகுப்பு சமூக விஞ்ஞானிகள் சங்கம், மே. பா. ப - 225
மேற் பார்த்து - ப 225
மேற் பார்த்து - 226
மேற் பார்த்து - பப - 224 - 225
ஏ. என். எம். ஷாஜகான். புத்தளம் வரலாறும் மரபுகளும், ப. 28
மே. பார்த்து ப84
56

இரண்டாம் அமர்வு
18. 11.96
‘மலையகத் தமிழர்களின் பிரச்சனை மையங்கள்”
656.066OLD பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி முதுநிலை விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு

Page 45

இலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் கல்வி நிலை அதன் வளர்ச்சியும் போக்கும் -மா. செ. மூக்கையா
புவியியற் துறை பேராதனைப் பல்கலைக்கழகம் - பேராதனை
உலகளாவிய வகையில் கல்வி வளர்ச்சியே மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தகுதி என்னும் கருத்து ஏகோபித்த முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்துள்ள ஆங்கில அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய யாவுமே தமது மக்களின் கல்வியில் பெரிதும் வளர்ச்சி கண்டுள்ள நாடுகள். கல்வி வளர்ச்சியுடன் வருமானமும் அதிகரித்து வருகின்றது என்ற உண்மை பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாகத் தெரிய வந்துள்ளது.
கல்வி கற்ற சமூகத்தினர் கூடிய தொழில் வாய்ப்புக்களையும் அவற்றின் விளைவாக உயர் வாழ்க் கைத் தரங்களையும்' பேணக்கூடியவர்கள் எண்பதிலும் கருத்து உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன? இவை மாத்திரமன்றி உலக நாடுகளின் அபிவிருத்தி மட்டத்தினை இனங்காணப் பயன்படுத்தப்படும் பிரதான குறிகாட்டிகளுள் பெளதீக surgiosi, Usodius LGL6Gi (Physical Quality of Life Index) என்பதும் முக்கியமான குறிகாட்டியாகும். இக்குறிகாட்டி வீதாச்சாரத்தில் காட்டப்படுகிறது. அது எந்தளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்தளவுக்கு குறித்த நாட்டின் அபிவிருத்தி மதிப்பிடப்படுதிறது. இதற்குச் சராசரி பிரசையின் வாழுங்காலம், எழுத்தறிவு, சிசுமரணம் ஆகியவற்றின் நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுக் கணிப்பீடு செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும் மதிப்பீட்டின் அடிப்படையில் நாடுகளின் அபிவிருத்தி நிலைமை மதிப்பிடப்படுகிறது. இக்குறிகாட்டி பொதுவாக வளர்ச்சியுற்ற நாடுகளில் 90 வீதத்திற்கு மேலாக காணப்படுகிறது. குறைவிருத்தி நாடுகளில் இது குறைவாகக் காணப்படுகிறது. இக்குறிகாட்டியினை நிர்ணயிக்கும் 3 காரணிகளில் எழுத்தறிவும் ஒன்று என்பதனை இங்கே அவதானிக்க வேண்டும்.
கல்வி அறிவு ஏற்படுவதால் வருமானங்கள் உயர்வடைகின்றன என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. பாடசாலையில் நான்கு வருடங்கள் கல்வி கற்ற விவசாயிகளின் உற்பத்தி திறன் ஒன்பது சதவீதத்தால்
59. . . . . .

Page 46
அதிகரித்குள்ளது. பாடசாலையில் சிறந்த முறையில் கற்றவர்களால் கூடியளவு உழைக்க முடியும். சில பரிசோதனைகளின் மூலம் சராசரி மாணவர்களை விட பத்து வீதம் கூடிய புள்ளிகளுடன் தேறியவர்கள் கானா, கென்னியா, பாகிஸ்தான், தன்சானியா ஆகிய நாடுகளில் 13முதல் 22 வீதம் வரையான கூடிய வேதனங்கள் பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நேபாளத்தில் கூடியளவான கணிதப் பயிற்சி பெற்ற விவசாயிகள் லாபகரமான புதிய பயிர்களை வளர்த்தனர் என்றும் உலக வங்கியின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. "
பெண்களுக்கு சம உரிமை, சமூக அந்தஸ்து, முன்னேற்றம் என்பன ஏற்பட வேண்டுமானால் அவர்கள் கல்வியில் முன்னேற வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதனை 1994 ஆம் ஆண்டு கெய்ரோ மகாநாட்டிலும் 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற மகாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் வற்புறுத்தியுள்ளனர். உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து குழுமிய பல்துறை சார்ந்த நிபுணர்களும் இக்கருத்தினை ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்." இவற்றை விட வேறு பல ஆய்வு நிகழ்ச்சிகளும் இத்தகைய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளன. இவற்றிலிருந்து ஒரு சமூகம் முன்னேற வேண்டுமாயின் அதற்குக் கல்வி மிக முக்கியமான கருவி என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற கருத்தினை அறியமுடிகிறது. அதற்காக கல்வியினால் மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான யாவற்றினையும் பெற்றுவிடலாம் என்றும் கூறிவிட முடியாது.
இத்தகைய கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் இன்று கல்வியில் எத்தகைய நிலையில் காணப்படுகின்றனர் என்பதனையும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் யாவை?, ஏன் இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றிற்கான காரணகாரிய விளக்கங்கள் என்ன?, கடந்த காலங்களில் இவற்றை நீக்க மேற்கொள்ளப்பட்ட வழிகள் யாவை?, அவற்றின் பெறுபேறுகள் யாவை?, அவ்விளைவுகள் பிரச்சனைகளை எந்தளவுக்குத் தீர்த்துள்ளன?, அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை? என்பன பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இதற்காக முதலில் எழுத்தறிவு, கல்வித்தகைமை, அறிவுடைமை, தொழில் பயிற்சி போன்ற கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்வதும் அவசியமாகும்.
60

கோட்பாட்டு விளக்கம்:
எழுத்தறிவு:
கல்வித் தகைமை:
அறிவுடைமை:
ஒருவர் ஏதோ ஒரு மொழியில் எழுத வாசிக்கத் தெரிந்தவராக வளர்ந்துள்ள நிலையினை எழுத்தறிவு மிக்க நிலை எனக் கூறலாம். 1982 - 83 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மத்திய வங்கி மேற்கொண்ட நுகர்வோர் நிதியம் ஆய்வில் தமது பெயர், விலாசம் ஆகியவற்றை ஏதோ ஒரு மொழியில் எழுதத் தெரிந்தவர்களை எழுத்தறிவு மிக்கவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது
முறையாகப் பாடசாலை சென்று குறிப்பிட்ட வருட காலம் கல்வி கற்றதன் காரணமாக பெறப்படும் சான்றிதழ்களினால் பெறப்படுவதே கல்வித் தகைமைகள். குறித்தளவான சில வருடங்களின் பின் நடைபெறும் பரீட்சையில் சித்தியடைந்தமையினை அடிப்படையாகக் கொண்டு கல்வித் தகைமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. க. பொ. த. (சாதாரணம்), க. பொ.த. (உயர்தரம்) பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகைமைகள் பற்றி பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுகின்றோம். பாடசாலையில் எட்டாம் வகுப்பு வரை கற்று சித்தியடைந்திருந்தாலும் அதுவும் ஒரு கல்வித் தகைமையாகும். அது போன்றே சில கல்வித் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய தகைமைகளுக்கு ஏற்ற உயர் கல்வியினை ஓய்வு நேரங்களில் கற்று வெளிவாரி மாணவர்களாக தேர்ச்சி பெறுவதன் மூலமும் கல்வித்
தகைமைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
தாம் பெற்ற கல்வியின் அடிப்படையிலும் மற்றும் அனுபவங்கள், சுய வாசிப்பு போன்றவற்றால் தமது அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் குறித்த பிரச்சனைகளைப் பொறுத்து வேறான கோணங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலையினை அறிவுடைமை எனக் கூறலாம்.
61

Page 47
தொழிற்பயிற்சி: அடிப்படைக் கல்வியின் பின்னரோ அல்லது கல்வியல்லாமலோ குறித்தவொரு அல்லது பல தொழில்களைச் செய்வதற்கான பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதனை தொழிற்பயிற்சி எனலாம். பாரம்பரியமாக வளர்த்துக் கொள்ளும் தச்சுவேலை போன்றவற்றிற்கான பயிற்சி முதல் அடிப்படைக் கல்வியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறப்புப் பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளும் கனணிகளை இயக்கும் பயிற்சி வரை இது வேறுபடலாம். இன்று சமகால உலகின் பல்வேறு தொழிலாளர்களுக்கும் சாதாரண பயிற்சி முதல் பட்டயம் (Charted)பெற்ற பயிற்சி வரை வேறுபட்ட தரங்களில் தொழில்களுக்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய கோட்பாடுகளை மனதிற் கொண்டு இலங்கையில் மலையக மக்களின் இன்றைய கல்வி வளர்ச்சி பற்றி நோக்கும் போது சமகால உலகில் இச் சமூகம் ஒரு பின் தங்கிய சமூகமாகக் காணப்படுவதனையே பல்வேறு தகவல்களும் உணர்த்தி நிற்கின்றன.
கல்வியை சனநாயகப் படுத்துவதற்காக இலங்கையில் இந்நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் இருந்து (1945) இலவசக் கல்வி நடைமுறையில் இருந்து வருகிறது. பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை இலவசமாகவே கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. 1960 ஆம் ஆண்டை அடுதது இலங்கையில் பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. அதற்கு முன்னர் பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்துவ மிசனரிகளினாலும் ஏனைய சமய நிறுவனங்களினாலும் பெருந்தோட்ட (1960 ஆம் ஆண்டில் - 874) நிருவாகங்களினாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இலவசக் கல்வியினை அர்த்தமுள்ளதாக்க ஏற்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை அகில இலங்கையிலும் இலவசக் கல்வியினை சிறந்த முறையில் மக்களுக்கு வழங்க அரசினால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கு நடவடிக்கை எனவும் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தோட்டப் பாடசாலைகளை பொறுத்தமட்டில் அவை தொடர்ந்தும் பெருந்தோட்ட நிருவாகங்களின் கீழேயே இருக்க வேண்டியதாயிருந்தது." 1956 ஆம் ஆண்டின் பின்னரும்
62

ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பெருந்தோட்டங்களிடமிருந்த பாடசாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் ஏனைய பாடசாலைகள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் அவற்றில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உப அரசாங்க அதிபர் பிரிவுதோறும் விஞ்ஞான கூடம், நூலகசாலை போன்ற வசதிகளுடன் மத்திய மகா வித்தியாலங்கள் நிறுவப்பட்டன. கிராமிய பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதி பெறச் செய்யும் நோக்குடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவ்வாறான அரசின் கல்வி அபிவிருத்தி சேவை பெரிதும் பாராட்டுதற்குரியது. ஒரு நாட்டு மக்களே ஒரு நாட்டின் பிரதான மூலவளம் அவர்களைத் திறம்பட கல்வி பயிற்றுவித்து தொழிற் பயிற்சி பெற்றவர்களாக்குவதன் மூலம் அவர்கள் நாட்டின் அபிவிருத்தியை துண்டுவிக்கும் மூலவளங்களாக மாறுகின்றார்கள்." அவ்வாறான கருத்தினை ஏற்று தமது மக்களை வளமாக்கிக் கொண்ட நாடுகளே இன்றைய உலகில் நன்கு வளர்ச்சியுற்ற நாடுகளாகத் திகழுகின்றன, அவ்வழியில் இலங்கையும் தனது பிரசைகளை மூலவளமாக்கச் சிறந்த கல்வி வசதிகளை பட்டி, தொட்டியெல்லாம் அறிமுகமாக்கியது. இலங்கையில் 1990 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்திருந்த கல்வி பெறுவதற்கான வசதிகளை பின்வரும் அட்டவணையில் உள்ள தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அட்டவணை - 1 இலங்கை - கல்வி வசதிகள் - 1990
அரசாங்கப் பாடசாலைகள் 9, 857 ஏனைய பாடசாலைகள் 518. பாடசாலை சென்ற மாணவர்கள் 4, 232, 356 அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் 178, 333 மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 22, 901 பொதுக்கல்விக்கான அரசாங்க செலவினம் (மில்லியன் ரூபாவில்) 6, 879 பல்கலைக்கழகங்கள் 09 தொழில்நுட்பக் கல்லூரிகள் 30 விவசாயக் கல்லூரிகள் 03
உயர்கல்வி நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் 44, 000 63

Page 48
உயர்கல்விக்கான அரசாங்க செலவினம் (மில்லியன் ரூபாவில்) 13, 793
எழுத்தறிவுடையோர் (1992) 88% இலங்கையின் மொத்த மக்கள் தொகை (மில்லியனில்) 175 path. Central Bank of Sri Lanka, Economic and Social statistics of Sri Lanka - 1992. (Colombo), pp.94-96.
இவ்வட்டவணையில் உள்ள விபரங்களின் படி இலங்கையில் 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வசதியும் ஏனைய வசதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 88 வீதமானோர் எழுத்தறிவு மிக்கவர்கள். இது ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா (43%), பாகிஸ்தான் (30%) மற்றும் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா (73%), சிங்கப்பூர்(86%), இந்தோனேசியா (74%) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையிலும் கூட ஒரு கூடிய வளர்ச்சியினையே காட்டுகிறது." (வரிப்படம் 1) ஆனால் இலங்கையிலோ கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 1981 ஆம் ஆண்டு குடிமதிப்பீட்டின் போது மலையகத் தமிழர்களின் எழுத்தறிவு வீதத்தினை ஒப்பிட்டு நோக்கும்போது கவலைக்குரிய அளவில் குறைவாக இருந்தது.
அட்டவணை - 2
இலங்கை - எழுத்தறிவு - 1981
இனம் விதம்
சிங்களவர் 893 இலங்கைத் தமிழர் 873
முஸ்லிம்கள் 79.3 மலாயர் 91.5 பறங்கியர் : 97.1
மலையகத் தமிழர் 680
மூலம்: Dept. of Census and Statistics. General Report - 1981. (1986) Vol. 3 (Colombo). p. 3
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் 15 வருடங்களுக்கு முன்னையதாக இருந்தாலும் அதில் இன்றும் ஒப்பளவான நிலைமை பெருமளவுக்கு வேறுபட்டதாக இல்லை. 1981- 82 ஆம் ஆண்டு " நடைபெற்ற மத்திய வங்கியின் நுகர்வோர் நிதிய ஆய்விலும் இத்தகைய நிலைமைகளே மென்மேலும் வலியுறுத்தப்பட்டன.
64.

é9luu GaGorocosov - 3 இலங்கை - எழுத்தறிவு - 1981 - 82
(வீதத்தில்)
நகரம் கிராமம் தோட்டங்கள் ஆண் 92.9 90.1 780 பெண் 86.8 82.1 52.6 மொத்தம் 897 86.0 648
youth. Central Bank of Ceylon. Report. Report on Consumer Finances and Socio Economic Survey, Sri Lanka, Part (1984) (Colombo), P58.
தோட்டப் புறங்களில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் மலையகத் தமிழ் மக்களாவர் என்பதில் எதுவிதச் சந்தேகமுமில்லை. இவர்களில் 648 வீதமானோரே எழுத வாசிக்கத் தெரிந்த எழுத்தறிவு மிக்கவர்கள். அதிலும் பெண்களின் நிலைமையோ மிகவும் மோசமாக 52.6 வீதமாகக் காணப்பட்டது.
இத்தகைய எழுத்தறிவு நிலை காரணமாக மலையகத் தமிழ் மக்களில் மிகச் சிறிய அளவில் (>5) நகர்ப் புறங்களில் காணப்படுபவர்களைத் தவிர்த்து ஏனையோர் தொடர்ந்தும் பெருந்தோட்டங்களில் உடல் உழைப்பாளிகளாகவே தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்த வண்ணம் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது.
A ஒரு நாட்டில் குறித்த சேவை குறித்து பொதுவாக சிறந்த நிலைமை காணப்படும் போது, ஒரு சமூகத்தினர் மத்தியில் அச்சேவை ஏன் பின்தங்கியதாகக் காணப்படுகின்றது என்பது குறித்து விசாரணை தேவைப்படுகிறது. இலங்கை உலகளாவிய வகையில் குறைவிருத்தி நாடுகளிடையே எழுத்தறிவைப் பொறுத்து உயர்நிலை வகிக்கின்றது. தாழ் வருமான நாடுகளிடையே 60 வீத எழுத்தறிவும், மத்திய வருமானம் பெறும் நாடுகளிடையே 79 வீத எழுத்தறிவும் காணப்பட்ட (1990) ஒரு அக்காலகட்டத்தில் இலங்கையில் 88 வீதமாகக் காணப்பட்டது." அவ்வளர்ச்சி காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த அனைத்து சமூகங்களிடையேயும் பரவிக் காணப்பட்ட போது மலையக மக்கள் மத்தியில் மாத்திரம் குறைந்ததாகக் காணப்பட சில காரணங்கள் பொறுப்பாயிருந்தன.
65

Page 49
0.
02.
O3.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றால் அவர்கள் ஏனைய தொழில்களுக்காகத் தோட்டங்களை விட்டுச் சென்று விடலாம் என தோட்ட நிருவாகங்கள் அஞ்சியதால், அவர்களுக்கு கல்வி வசதிகளை அளிக்க முன்வரவில்லை. இதனை 1956 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாடசாலைகள் இலங்கையில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்னரே நிலவிய பிரதானமான காரணமாகக் கருதலாம்"
1948 ஆம் ஆண்டோடு ஏற்பட்ட குடியுரிமை நீக்கம் காரணமாக மலையகத் தமிழ் மக்களுக்கு வாக்குரிமையும் இல்லாதொழிக்கப்பட்டது. எனவே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமக்கு வாக்களிக்கும் தகைமை இல்லாத சமூகத்தினரின் நலனுக்காக எதுவித திட்டங்களையும் முன்வைக்கும் தேவையை கொண்டிருக்கவில்லை. எனவே குடியுரிமை பறிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் அனுதாபத்துடன் நோக்கி அவர்களுக்கு மீண்டும் அவ்வுரிமையை அளிப்பதற்கு மாறாக, அதனை வசதியான காரணமாகக் கொண்டு ஓரங்கட்டும் ஒரு மனப்பான்மையினை பின்பற்றினார்கள்.
1956 ஆம் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பாடசாலைகள் அரசினால் கையேற்கப்பட்ட போதும் 1960 ஆம் ஆண்டில் 834 தோட்டப் பாடசாலைகள் தோட்ட நிருவாகங்களின் கீழேயே தொடர்ந்தும் நிருவகிக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டில் தோட்டங்களை அரசு சுவீகரித்ததன் பின்னரும் கூட 1988 ஆம் ஆணிடுவரை அப்பாடசாலைகள் தொடர்ந்தும் தோட்ட நிருவாகத்தின் கீழேயே பராமரிக்கப்பட்டன." •
இவ்வாறான காரணங்களினால் தோட்டப் பாடசாலைகளில்
கற்பதற்கான வசதிகள் மிகவும் குறைபாடுடையனவாகக் காணப்பட்டன. நாட்டின் ஏனைய துறைகளில் கல்வி கற்பதற்கான வசதிகள் கவர்ச்சியாகக் காணப்பட தோட்டப் பாடசாலைகளில் குறைபாடான நிலைமைகளே காணப்பட்டன. அவற்றில் பின்வருவன முக்கியமானவை.
01.
போதிய ஆசிரியர்கள் இல்லாமை. (1996 ஆம் ஆண்டிலும் ஏறத்தாழ 3500 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தோட்டப் பாடசாலைகளில் காணப்பட்டன). இதனால் சில பாடசாலைகளில் ஒரு ஆசிரியரால்
66

02.
03.
04.
05.
பல வகுப்புக்களும் 50 - 100 வரையிலான மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டிய சிரமங்களும் உள்ளன."
தேவையான பயிற்சி மிக்க ஆசிரியர்கள் இல்லை. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் மிகவும் தட்டுப்பாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சமய பாடம் கற்பிக்கவும் போதிய ஆசிரியர்கள் இல்லை. பாடசாலைகளில் சமயம் கற்பித்தல் இலங்கை அரசின் கல்விக் கொள்கையில் முக்கியமான ஒரு அம்சமாகும். 11 ஆம் வருட பரீட்சைக்கு இது ஒரு கட்டாய பாடமாகும். ஏனைய பாடங்களுக்கும் சிறப்புப் பயிற்சி மிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர்."
பெளதீக வசதிகளான வகுப்பறை, தளபாடங்கள் மற்றும் கற்பித்தலுக்கான உபகரணங்கள் முதலியன பற்றாக்குறையாகவே உள்ளன.
ஆறாம் வருடத்திற்குப் பின்னர் மாணவர்கள் கல்வி கற்க தோட்டங்களிலிருந்து அண்மையில் உள்ள சிறிய நகரங்களுக்கு செல்லவேண்டி உள்ளது. இதற்கு போக்குவரத்து வசதிகளும், அதற்கு தேவையான நிதி வசதிகளும் தொழிலாளரைப் பொறுத்து போதியளவினதாக இல்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களே இலங்கையில் மிகக் குறைந்த வருவாயினைப் பெறும் பிரிவினர். 1981 4 82 ஆண்டு நுகர்வோர் நிதிய ஆய்வின் படி மாதாந்த வருமான நடு எண், நகரங்களில் ரூபா 977 ஆகவும் கிராமங்களில் ரூபா 781 ஆகவும் இருந்த போது தோட்டப்புறங்களில் ரூபா 376 ஆகவே இருந்தது. இதனால் தோட்டப்புற மக்கள் தமது குழந்தைகளின் கல்விச் சேவைகளுக்காக ஒப்பளவில் கிராமிய மக்களை விட மிகக் குறைவாகவே செலவு செய்ய முடிகிறது."
இவ்வாறான பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கூட தற்போது
தோட்டப்புற மக்கள் மத்தியில் கல்வியில் ஒரு வளர்ச்சிப் போக்கினைக்
காணக்கூடியதாய் இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். அட்டவணை
4 இல் இத்தகைய போக்கினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. (வரைபடம் 3)
67

Page 50
இத்தகைய சில சாதகமான நிலைமைகளின் வளர்ச்சிக்கு இரண்டு பிரதான காரணங்களை இனங் காணலாம். சுவீடன் (சீடா) அரசாங்கத்தின் உதவி மூலம் மலையக பாடசாலைகள் ஒருசிலவற்றில் சில அடிப்படை பெளதீக வசதிகள் விருத்தி செய்யப்பட்டுள்ளன." இதனை விட மலையகத் தேர்தல் தொகுதிகளின் அபிவிருத்திக்காக அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாடசாலைகளின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளை மலையகத் தமிழ் பிரதிநிதிகள் ஊக்குவித்ததனால் சில விருத்திகள் ஏற்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளினால் இவ்வாறான விளைவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், மலையகத் தமிழ் மக்கள் சராசரி இலங்கைப் பிரசையின் கல்வித் தரங்களுக்கு உயர்வடைய வேண்டுமானால் இத்தகைய கல்வி வளர்ச்சிக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டியது அத்தியாவசியமாகும்.
அட்டவணை - 4 இலங்கை - தோட்டப் பகுதிகளில் கல்வி வளர்ச்சி
எழுத்தறிவற்றோர் முதனிலை கல்வி இரண்டாம் நிலை கல்வி
மட்டும் பெற்றோர் மட்டும் பெற்றோர்
1953 6. 36 03 1963 57 35 08 1973 52 42 06 1978-79 45 48 07 1981-82 46 45 08.5 1985-86 41 43 14 1988 32 53 15
மூலம்: மூக்கையா. எம். எஸ். இன்றைய மலையகம், (1993) (சென்னை)ப119
பெருந்தோட்டங்களில் உள்ளவர்களுடைய எழுத்தறிவு நிலை கடந்த 50 ஆண்டுகளில் 39 வீதத்திலிருந்து 68 வீதமாக பெருகியுள்ளது என திருப்திப்பட முடிந்தாலும், இவ்வளர்ச்சி இலங்கையின் 660)6STL குழுக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனைவிட இவ்வெழுத்தறிவு என்பது முன்னேற்றத்திற்கான ஒரு படியே ஒழிய அதுவே இறுதி இலக்கல்ல
68

என்பதும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். எழுத்தறிவோடு இணைந்த அடிப் படைக் கல்வியின் வளர்ச்சி மிக அத்தியாவசியமானதாகும்.
பாடசாலையில் 11 ஆம் ஆண்டு வரை கற்று சித்தியடைந்தவர்கள் அளவு 15 வீதம் வரையில் காணப்படுகிறது. இதன் காரணமாக உயர் கல்விக்காக செல்வோர் அளவில் பாரதுரமான கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. 1991 ஆம் ஆண்டில் 9 தேசிய பல்கலைக்கழகங்களிலும், 31, 447 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் மலையக மாணவர்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. ஆயினும் பேராதனை, கொழும் பு, கிழக்கு மாகாண, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொத்தமாக 314 மலையக மாணவர்கள் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை எனக் கூறமுடியும். மலையக மாணவர்கள் ஒன்று கூடல், மலையக பட்டதாரிகள் ஒன்றியம் போன்ற நிறுவன ரீதியான சமூக அமைப்புக்களின் அனுபவங்களின் மூலம் இத்தகைய தகவல்கள் பெறப்பட்டன. நாட்டில் உள்ள 30 தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் 16, 000 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்* இவற்றிலும் 160 மாணவர்கள் கூட பதிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் எனக் கூறலாம். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்.
01. மலையகப் பகுதிகளில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளில் தமிழ்
மொழி மூலம் கற்கை நெறிகள் இல்லை.
02. கொழும்பில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியிலும் இத்தகைய கற்கை
நெறிகள் மிக சிலவே நடைபெறுகின்றன.
03. ஏனைய பகுதிகளில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளில் மலையக இளைஞர்கள் அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
04. மலையக இளைஞர்களுக்கு குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விக்காக உதவிப் பணம் வழங்க விண்ணப்பங்கள் 1994 ஆம் ஆண்டு கோரப்பட்டது. அதற்காக கிடைக்கப்பட்ட ஏறத்தாழ 500 விண்ணப்பங்களில் இவ்வாறான தொழில்நுட்பக் கல்லூரிகளில் கற்பதற்கான விண்ணப்பம் ஒன்றுமே இருக்கவில்லை.*
69

Page 51
எனவே இத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான அனுமானங்களை ஏற்படுத்த முடிகிறது.
1992 ஆம் ஆண்டுமுதல் இணைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரிகள் 11 செயற்பட்டன." அவற்றில் வவுனியா, திருகோணமலை, சம்மாந்துறை ஆகியவற்றுக்கே தமிழ் மாணவர்கள் முதன்மையாக அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறியளவினரிலும் பெரும்பான்மையினர் முஸ்லீம் மாணவர்களாவர். சம்மாந்துறையிலும் பெரும்பாலும் முஸ்லீம் மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். வவுனியாவிலும் பதிவு செய்யப்பட்ட 371 மாணவர்களில் இருவர் மலையகத் தமிழ் இளைஞர்கள். திருகோணமலையிலும் எவரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே உயர் கல்விக்கு வசதிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்ட 3,000 * இளைஞர்களில் உறுதியாகக் கூறக் கூடிய வகையில் 2 மாணவர்களே பதிவு செய்யப்பட்டிருந்தனர். 30 பேர் தெரிவாகி இருந்தாலும் கூட அது மொத்த மாணவர் தொகைக்கு ஒரு வீதமாகவே இருந்திருக்கும். எனவே இவை யாவற்றையும் மனதில் கொண்டு பார்க்கும் போது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 5.6 வீதமான மலையக மக்கள் இலங்கையில் உயர் கல்வி பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் (47,000 பேர்) ஒரு வீதமானவர்கள் கூட இல்லை என்ற விபரத்தின் மூலம் உயர் கல்வியில் அவர்கள் வகிக்கும் தாழ்ந்த நிலையினை இனங்காண முடிகிறது.
அண்மையில் மலையக தமிழ் மக்களில் கல்வி சற்று தகுதிகளின் அடிப்படையில் தொழில் புரிபவர்கள் பற்றிய உத்தேசமான மதிப்பீடு ஒன்று செய்யப்பட்டது. மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் போன்றோரிடம் நேரிடையாகக் கலந்தாலோசித்து செய்த மதிப்பீட்டின்படி பின்வரும் வகையில் தொழில் புரிவோர் பற்றிய விபரங்கள் பெறப்பட்டன.
ம் க. பொ. த. (சாதாரண தரம்) தகுதியுடனான ஆசிரியர்கள் 3000 பேர் 6 க. பொ. த. (உயர் தரம்) தகுதியுடனான ஆசிரியர்கள் 750 பேர்
ம் பட்டதாரி ஆசிரியர்கள் 300 பேர்
ம் பெருந்தோட்ட - வர்த்தக நிறுவன அலுவலக கிளார்க்
மற்றும் கல்வி கற்ற சாதாரண உத்தியோகத்தர்கள் 3, 000 (ui
70

ம் இடைப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி மிக்க
தொழிலாளர்கள் 1250 பேர்
ம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 500 (ur
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள், அரச உயரதிகாரிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள்,
வங்கி அதிகாரிகள் 300 பேர் ம் மொத்தம் 9100 பேர்
உத்தேச விலகல்-10% 810 Gui
மொத்தம் V 9910 (Cuñʻ°
இத்தரவுகள் உத்தேச மதிப்பீடுகளே தவிர வேறில்லை. இவை அனுமானத்தின் அடிப்படையில் செய்த அதிகபட்ஷ மதிப்பீடுகளாகும். இவர்களை விட நகரங்களில் வாழும் 15,000 க்கு உட்பட்ட பலதரப்பட்ட மலையகத் தமிழ் வியாபாரிகளையும் சேர்த்துக் கொண்டால் 24,000 பேரே விவசாய தொழிலாளர்கள் அல்லாததும் ஓரளவு கூடிய வருவாய் பெறும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறலாம். இவர்களும் இவர்களில் தங்கியுள்ளவர்களுமான 120,000 பேரைத் தவிர்ந்த ஏனைய எட்டு இலட்சத்து தொண்ணுாராயிரம் (890,000) பேரினதும் வருமானம் ஆகக்குறைந்த பட்ச தேவைகளைத்தானும் பூர்த்தி செய்ய முடியாத மட்டத்திலான தாழ் நிலையிலேயே காணப்படுகிறது.
மலையகத் தமிழ் மக்கள் இன்று கல்வியில் இவ்வாறு பின்தங்கி காணப்படுகின்றமையினை கவனத்திற் கொண்டு இதற்கான தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. 1977 ஆம் ஆண்டு முதலாக மலையகத் தமிழ் மக்கள் தேசிய அரசியலில் முன் எப்பொழுதையும் விடக் கூடியளவு பங்கெடுத்து வருகின்றனர். பிரதேச சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், சனாதிபதி தேர்தல் முதலிய யாவற்றிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஈடுபாடு காட்டினார்கள். பிரதேச சபைகளில் அம்பகமுவ பிரதேச சபை, நுவரெலிய பிரதேச சபை என்பவற்றில் அதிகாரம் பெற்றனர். மத்திய மாகாண சபையின் அமைச்சரவையில் குறிப்பிடத்தக்களவில் பிரதிநிதித்துவம் பெற்றனர். ஊவா மாகாண சபையிலும் அமைச்சர்களாகப் பங்குபற்றினார்கள். மேல் மாகாண அமைச்சரவையிலும் பங்குபற்றினார்கள். இவை யாவற்றையும் விட 1989
71

Page 52
ஆம ஆண்டு சனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக பேரம் பேசி இதுவரை இழுபறியாக இருந்து வந்த பிரஜாவுரிமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது" ஆனால் மலையக மக்கள் ஒரு சமூகமாக வளர்ச்சி பெறுவதற்கு பிரஜாவுரிமை பிரதான அடித்தளமே ஒழிய அதனால் மட்டும் யாவற்றையும் சாதித்து விட முடியாது. அது மாத்திரமன்றி பாராளுமன்ற சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரஜாவுரிமையினை நடைமுறைப்படுத்துவதில் பல இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இச்சட்டத்தின்படி பிரஜாவுரிமை நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆகக் கூடினால் சட்டபூர்வமாக இலங்கையில் வாழும் மலையக மக்கள் இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற சத்தியக் கடுதாசியினை வழங்கும் பட்சத்தில் அவர்கள் இந் நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அதுவும் குறிப்பாக உள்நாட்டு அரசியல் அமைதியற்ற சூழலில் பல்வேறு இடையூறுகளை இம்மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
இன்று பிரஜாவுரிமை பிரச்சனை சட்டரீதியாக தீர்க்கப்பட்டுள்ளது. இதனை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் இவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறுவதன் மூலமும், தொழிற் பயிற்சிக் கல்வியினை பெறுவதன் மூலமும் பல சாதனைகளைப் படைக்க முடியும்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றிலும் கல்வி கற்ற மத்திய தர வர்க்கத்தினர் அவர்களுடைய சமூகங்களின் புரட்சிகரமான முன்னேற்றத்திற்கு அளப்பரிய தொண்டுகள் புரிந்துள்ளனர். பிரான்சிய புரட்சியின் வெற்றிக்கு மத்தியதர வர்க்கத்தினைச் சேர்ந்த சட்ட வறிவாளர்கள், கல்விமான்கள், மருத்துவ நிபுணர்கள் ஆற்றிய தொண்டுகள் இன்றும் வரலாற்றில் நினைவு கூறப்படுகின்றன. பிரான்சிய புரட்சியின் போது வால்டேர், ரூசோ போன்றோரின் வழிகாட்டல்கள் குறிப்பிடத்தக்கவை. இது போன்ற உதாரணங்கள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. அது மாத்திரமன்றி கல்வி கற்ற ஒரு சமுதாயத்தினால்தான் தமது உரிமைகள் யாவை? அவற்றினை பாதிக்கும் உணர்வுகள் பற்றிய தர்க்க ரீதியான சிந்தனைகளின் தோற்றம் என்பன ஆக்கபூர்வமாக தோன்றுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.
72

இதுவரை கூறியவற்றை மனதிற் கொண்டு பார்க்கும் போது இன்று இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் கல்வியில் பின்தங்கிக் காணப்படுகின்றமை கணி கூடு. இதனால் இவர்களில் பெரும்பான்மையானோர் உடலுழைப்பாளிகளாகவே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்நிலை மாற வேண்டுமானால் இதற்கு பலசாராரதும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் அத்தியாவசியமாகிறது. அத்தகையவர்களில்
அ) தேசிய கல்விக் கொள்கைகளைப் பொறுத்துத் தீர்மானம்
செய்பவர்களும் திட்டமிடுபவர்களும் ஆ) மலையகத் தமிழ் பெற்றோர் இ) மலையகத் தமிழ் இளைஞர்கள்
ஆகியோரது பங்கு மிக முக்கியமாகும்.
பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்கங்கள் சில பக்கம் சார்ந்த கொள்கைகளை (Partial Policies) பின்பற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் முதலாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் வரையான பலதரப்பட்ட நாடுகளிலும் பின்தங்கிய பிரதேசங்களுக்காகவும், பின்தங்கிய மக்கள் குழுக்களுக்காகவும் தேசிய, பிரதேச அபிவிருத்தித் திட்டங்களில் பக்கம் சார்ந்த கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன." இந்தியாவில் பின்தங்கிய சமூகங்களுக்காக அரச தொழில்கள், உயர் கல்விக்கு அனுமதி, தொழில்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதி, நில ஒதுக்கீடு, வங்கிக் கடன் வசதிகள் போன்ற பலவற்றிற்கும் பாதுகாப்பு வசதிகள் கோட்டா முறைகள் மூலம் வழங்கப்பட்டு வநகின்றன." இலங்கையிலும் பின்தங்கிய மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற வாய்ப்பாக மொத்த அனுமதியில் 60 வீதம் மாவட்ட ரீதியான ஒதுக்கீட்டு முறையின் கீழேயே வழங்கப்படுகிறது. இதனைவிட 1970 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகங்களுக்கு அறிவியற் துறையில் கல்வி கற்க அனுமதி பெற விரும்பும் மாணவர்கள் செய்முறை பயிற்சிகள் தொடர்பான பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது. ஆனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் இவ்வசதிகள் வளர்ச்சியடைந்த பாடசாலைகளில் காணப்படுவது போன்று இல்லாததன் காரணமாகச் செய்முறைப் பயிற்சி பரீட்சைகளே இல்லாதொழிக்கப்பட்டன. எனவே இவ்வாறான சலுகைகளை உயர் கல்வியில் மிகவும் பின்தங்கியதாகக் காணப்படும் மலையக தமிழ் இளைஞர்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும். அதற்கான கோரிக்கைகளை மலையக பிரதேசங்களில் இயங்கும் 73

Page 53
அரச கட்சிகள் அரசிடம் சமர்ப்பிப்பதன் மூலமே இதற்கான தீர்வினைக் காணமுடியும். மொத்த மக்கள் தொகையில் 6 வீதமாகக் காணப்படும் மக்களில் ஒரு வீதத்தினரே உயர் கல்வி கற்கச் செல்லும் மிகவும் பின்தங்கிய நிலைமையினை எடுத்துக் கூறி தேவைப்படும் பட்சத்தில் அரச யாப்பில் இதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இத்துடன் தொடர்புடையதான இன்னுமோர் முக்கிய அம்சம் மலையகப் பகுதிகளில் தற்போது தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடியதாயுள்ள கல்வி வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் விருத்தி செய்யக்கூடியதான கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்குவதாகும். இதற்காக ஏற்கனவே குறிப்பிட்டவாறு போதியளவு ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி வசதி, பாடசாலை மேற்பார்வை அதிகாரிகள், பாடசாலை கட்டிட வசதி, உயர் வகுப்புக்கள் ஆகியவற்றை வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு மற்றும் மூலவள ஒதுக்கீடுகளையும் தீர்மானங்களை உருவாக்குபவர்களும் திட்டமிடுபவர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களையும் கல்வி அதிகாரிகளையும் நியமிப்பதில் மிகவும் தெளிவான கொள்கைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். முன்னேற்றப் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்த வழிகாட்டிகளின் பங்கு அளப்பரியதாகும். கல்வி கற்கும் மாணவர்களின் சமூகத்தைச் சார்ந்த ஆசிரியர்களின் சேவை அத்தியாவசியமாகிறது. பிற பகுதிகளிலிருந்து வருவோர் பல்வேறு சமூக பொருளாதார காரணங்களுக்காகத் தொடர்ந்து அப்பகுதிகளில் பணிபுரிவதில்லை. ஆனால் மலையகப் பகுதிகளைச் சார்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதால் குறுங்காலத்தில் ஒருசில குறைபாடுகளை எதிர்நோக்க நேரிட்டாலும் கூட, நீண்ட காலத்தில் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாயிருக்கும். எனவே ஆசிரியர்களைத் தெரிவு செய்வது பொறுத்தும் கொள்கையளவில்
தீர்மானங்கள் தேவை.
இரண்டாவதாக மலையகத் தமிழ் பெற்றோர்களும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி தெளிவான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது. தமது பிள்ளைகளை குறைந்த பட்சம் 16 வயது வரை கட்டாயமாக பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
74

y பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதனை உறுதிப்படுத்தும் பெற்றோர் பாடசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் தமது பிள்ளைகள் எவ்வாறு பங்கு கொள்கின்றனர் என்பது பற்றியும் அக்கறையுடன் அவதானிப்பதோடு இடையிடையே ஆசிரியர்களிடம் தமது பிள்ளைகளின் கல்வி பயிற்சி பற்றியும் கலந்தாலோசிக்க வேண்டும். மலையகத் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக இருப்பதனால் அவர்களுடைய வருமானம் மிகக் குறைவானது என்பதனை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி இலவசமாக கிடைத்த போதிலும், பெற்றோர்களும் தமது பங்கிற்கு ஒரு சில செலவீனங்களைத் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு தமது வருமானத்தின் அடிப்படையில் தமது பிள்ளைகளின் கல்விக்காக ஒரு தொகையினை ஒதுக்கீடு செய்யும் வாழ்க்கை முறையும் முக்கியமாகும். பெரும்பாலான பெற்றோர்கள் கல்வியறிவில்லாதவர்கள். இவர்களால் தமது பிள்ளைக்ளைக் கல்வியில் வழிநடாத்த முடியாது போகலாம். இதற்கு அயலவர்களையும், தமது பிரதேசங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களையும் கொண்ட அமைப்புக்களை ஏற்படுத்தி மாதாந்த கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளை கலந்தாலோசிக்க வழிவகுக்க முடியும். எனவே சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இவ்வாறான அமைப்புக்களின் பங்கும் அளப்பரியதாகும். சூழ்நிலைக்கேற்றவாறு சிந்திப்போமாயின் தொழிலாளர்களின் வாழ்க்கையில் தொழிற்சங்கங்கள் பிரபல்யமாயிருப்பதால், மேற்கூறிய அமைப்புக்களை தொழிற்சங்க அமைப்புக்களே உருவாக்கும் முன் மாதிரி நடவடிக்கைகளை சிபாரிசு செய்யலாம்.
M
மூன்றாவதாக மாணவ பிராயத்தினரின் கல்வி பற்றிய அபிலாசைகள் குறிப்பிடத்தக்கனவாகும். இளைஞர்கள் மத்தியில் கல்வி கற்று உயரவேண்டும் என்ற எண்ணம் வளரவேண்டும். பாடசாலை காலத்தில் பாடசாலை செல்வதன் அடிப்படை நோக்கத்தை உணர்ந்து அதன்ை பூர்த்தி செய்யும் எண்ணங்களுடன் செயற்பட வேண்டும். கற்கை நெறிகளை தேர்ந்தெடுப்பதிலும் சில பகுத்தறிவு சார்ந்த ஒழுங்கு முறைகள் தேவை. ஒவ்வொரு மாணவனும் தனக்கு ஆர்வமான கல்வித்துறை எது என்பதனையும், எத்துறை சார்ந்த கற்கை நெறிகளை கற்க தனது சூழலிலும் பாடசாலையிலும் வசதிகள் உள்ளன என்பதனையும், தனக்கு எத்துறையில் திறமை உண்டு என்பதனையும் நன்கு இனங்கண்டு அதன் அடிப்படையில் கற்கை நெறிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
75

Page 54
இவ்வாறாக மேற்குறிப்பிட்ட முச்சாராரும் தமது பங்கினை சிறந்த
முறையில் ஆற்ற வேண்டும். அவ்வாறான பங்களிப்பின் மூலமே மலையகத்
தமிழ் சமூகம் நீண்ட காலமாக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும்
பின்தங்கியிருந்த நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கல்வித்
துறையில் வளர்ந்து இப்போதைய தொழிலாளர் வர்க்கமாக செயற்படும் நிலை மாறி ஒரு மத்தியதர வர்க்கமாக தலையெடுப்பதோடு, அச்சமூகம் ஏனைய சமூகங்களுடன் சமமாக வீறுநடையுடன் உயர் வாழ்க்கைத்
தரங்களை அடைய வழி தோன்றும். இது வரை விவாதித்த
கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளுக்கு வரலாம். அத்துடன் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சிபாரிசுகளையும்
முன்வைக்கலாம்.
01.
02.
03.
04.
06.
07.
இலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்களை இலங்கையில் வாழும்
ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் இவர்களே கல்வி, மற்றும்
பொருளாதார வளர்ச்சியில் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்படும் ஒரு சமூகமாகக் காணப்படுகின்றனர்.
அடிப்படைக் கல்வித் தகுதிகளும் தொழிற் பயிற்சி கல்வித் தகுதிகளும் இச்சமூகத்தினரிடம் மிகக் குறைவு.
இதனால் இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் விவசாயத் தொழிலாளர்களாக குறைந்த வருமானத்தையே உழைக்கின்றனர்.
எழுத்தறிவு என்பது இலங்கையில் 89 வீதமாகக் காணப்பட இச்சமூகத்தினரிடம் அது 68 வீதமாகவே காணப்படுகிறது. பெண்கள் மத்தியிலோ அது இன்னும் குறைவு.
உயர் கல்வியிலும் மிகவும் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர்.
தோட்டப்புற மக்களிடையே எழுத்தறிவு குறைந்து காணப்படுவதால் அவர்களுடைய வருமானமும் குறைந்தே காணப்படுகிறது. (வரைபடம் 2)
இவ்வாறு பின்தங்கிக் காணப்படுகின்றமைக்கு நீண்ட காலமாக இவர்களுக்கு அடிப்படை குடியுரிமை இல்லாதிருந்தமை முக்கிய காரணமாகும்.
76

08.
09.
10.
1.
12.
13.
14.
5.
1988 ஆம் ஆண்டோடு அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதன் அமுலாக்கம் இன்னும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளது.
மலையகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு கல்வி சேவையை சிறந்த முறையில் வழங்குவதற்கு தேவையான போதிய அளவிலான ஆசிரியர்கள், மற்றும் பாடசாலைகள், கற்பிக்க தேவையான
உபகரண வசதிகள் என்பன போதாது.
1953 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் எழுத்தறிவு அளவு மலையகத் தமிழ் மக்களிடையே’ அதிகரித்துள்ளது. ஆனாலும் அது தேசிய சராசரியை எட்டிப் பிடிக்க இன்னும் பல தசாப்பதங்கள் செல்லலாம்.
கல்வித் தகைமைகள் இச்சமூகத்தினரிடையே மிகக் குறைவு. எனவே கல்வித் தகைமைகளின் அடிப்படையிலான தொழில்களில் இவர்கள் ஈடுபடுவது குறைவு.
மலையகத் தமிழ் மக்கள் அரசாங்கம் மற்றும் கண்ணியத் தொழில்களில் ஈடுபட்டிருப்பதனையோ அல்லது உயர் கல்வித் துறைகளில் ஈடுபட்டிருப்பதனையோ கண்டறியக் கூடியதாக அரசாங்க புள்ளி விபரங்கள் இல்லை. இது இவர்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்ட முடியாத நிலைமையினை உருவாக்குகின்றது.
M
பதிவு செய்யப்பட்ட பிரசையா என்ற வினா அரச நிர்வாக ஒழுங்கில் கேட்கக் கூடாதென அரசினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் இன்னும் பல இடங்களில் அது கேட்கப்படுகின்றது.
மலையகத் தமிழ் பாடசாலைகளுக்கு இன்னும் ஏறத்தாழ 3500 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை மலையகத் தமிழ் இளைஞர்களிடம் இருந்தே திரட்ட வேண்டும் என அரசியல் கட்சிகள் அரசினை தொடர்ந்தும் நிர்ப்பந்திக்க வேண்டும்.
அவ்வாறு திரட்டப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும்.
77

Page 55
6.
17.
18.
19.
20.
21.
22.
மலையகத் தமிழ் மாணவர்கள் குறைந்தபட்சம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலாவது சிறப்புப் பயிற்சி பெறவேண்டும். சிங்களத்தையும் கற்பது அவர்களுக்கு நிச்சயமாக பல வசதி வாய்ப்புக்களை அளிக்கும்.
மலையகத் தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 16 வயது வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய கடமையினை பல சாராரும் வற்புறுத்தும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
மலையக தமிழ் மக்களை நோக்கமாகக் கொண்ட அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தமது அங்கத்தவர்கள் கற்றவர்களாக இருப்பதனால் தமது நிகழ்ச்சித் திட்டங்களை இலகுவாக அமுல் செய்யலாம் என்ற மனப்பான்மையினை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம், முறைசாரா கல்வி, முதியோர் கல்வி, தொழிலாளர் கல்வி, பெண்கள் கல்வி, இரவு பாடசாலை போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தமது சேவை நிகழ்ச்சிகளில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
16 வயதுக்குட்பட்டவர்களை தொழிலுக்கமர்த்துவதனை எதிர்த்து பிரசாரங்களும் கருத்தரங்குகளும் மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படைக் கல்வியினை அடுத்து ஏதாவது ஒரு சிறப்புத் தொழில் பயிற்சியுடன் தொழிலுக்கு செல்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய பிரசாரமும் அவசியம்.
மலையகத் தமிழ் இளைஞர்கள் உயர் கல்வியினைப் பெற வசதியாக அரசியல் மட்டத்தில் தீர்மானங்களை செய்பவர்கள் இவர்களுக்கான பக்கம் சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்.
இவை யாவற்றினதும் விளைவாக மலையகத் தமிழ் சமூகத்தில் பலம் வாய்ந்த ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்தினை உறுதி செய்வதன் மூலம் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் ஒரு சக்தியின் தோற்றத்திற்கு வழிகோலலாம்.
78

அடிக்குறிப்புகள்
R
5
6.
சந்திரசேகரன், சோ. கல்வியியல் கட்டுரைகள், (1991) (சென்னை), Lu.35
Agarwal. A. N. Indian Economy. Problems of Development and Planning (1988), New Delhi. p. 103
World Bank. World Development Report 1993, OUP 1994.p.18 Rajalakshmi, T. K. "Agenda for Beijing" Frontline, 8, 9.95. (Madaras) pp. 122-123. Central Bank of Sri Lanka. Report on Consumer Finances and Socio Economic Survey, Sri Lanka. Part I, 1981/82, (1984) (Colombo), p. 58.
சந்திரசேகரன், சோ. கல்வியியல் கட்டுரைகள், முறைசாரா கல்வியின் சில அம்சங்கள், (1991), (சென்னை), ப, ப, 64 - 72
மேலது சந்திரசேகரன் சோ. கருணாநிதி. மா, இலங்கையில் கல்வி வளர்ச்சி, (1992),
(சென்னை), ப, 57
9. மேலது இலங்கையில் கல்வியை ஜனநாயகப்படுத்தும் சீர்திருத்தங்கள், ப.ப. 54-73.
(). Gnanamuthu, G. A., Education and the Plantation worker in Sri
.
6.
7.
18.
Lanka, (Colombo), (1977), p.29. Alan, B. Mountjoy, (Ed.) Developing the under developed countries (Bristol), (1971), pp. 92-128. Central Bank of Sri Lanka, Economic and Social Statistics of Sri Lanka 1992, (Colombo), (1994), p. 96.
. World Bank, World Development Report - 1993, OUP (1994), p.
238.
Gnanamuthu G. A. (1977), p. 87.
Peiris, L. L.T., The Citizenship Law of the Republic of Sri Lanka, 1979. (Colombo), p. 21.
Gnanamuthu, p. 2.
Ibid. p.36.
மூக்கையாமா செ இலங்கையில் மலையகத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார
அரசியல் நிலைமைகளின் பரிமாணங்கள். (சென்னை) (1996) ப. 24
79

Page 56
23.
25.
26.
27.
Central Bank of Sri Lanka. Report on Consumer Finances and Socio
Economic Survey, Sri Lanka. Part I. (1984) Colombo), p.
வீரகேசரி, அம்பகமுவ பிரதேச சபை தலைவரின் அறிக்கை, 1993 (8.2. 94)
Central Bank ()f Sri Lanka. Economic and Social Statistics of Sri
Lanka - 1992 (Colombo). (1994), p.96.
இந்திய உயர் தூதுவராலயம் வருடாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விக்கான உதவிப்பணம் வழங்க கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விண்ணப்பம் கோரி வருகின்றது. பல்கலைக்கழகம், தொழில் நுட்பக் கல்வி, க. பொ. த. (உயர்தரம்) கற்கும் மாணவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் இதற்கான விண்ணப்பங்கள் கோரியபோது கிடைக்கப் பெற்றவற்றில் தொழில் நுட்பக் கல் விக்காக எவரும் விண்ணப்பிக்கவில்லை.
University Grants Commission, University News, Vol. 1 Jan/Feb 1994,
р.2.
. Report of the Committee appointed by the Hon. Minister of Educa
tion and Higher Education on the Affiliated University Colleges, April
995, Table II
Sivarajah A., "Are Plantation Tamils in Sri Lanka a National Minority", (1990), (Colombo), Workshop paper of MIRJE, p.8. -
Glassen, K.L., Introduction to Regional Planning, (1970), (London), p.263.
Sankaran, S. Indian Economy, Problems. Policies and Development (1991), (Madras), p.373. −
80

t
í
T poss-co3
finger's
N
Ugnq Ingyn
lറng(\9മ്നീ
N பmழிழ9ஐயஜேர்டு
பாதிரகு
1991.gouesiri
q-99.319.9ersists
Q919g)
میظ
홀
na
i
81

Page 57
zess on os odd (oquoqoɔ) (izo) ozg/1861 A3auns səoueus, uəuunsuoɔ ‘exsuel sus go Muea seusuɔɔ :əɔunos
folglossfixis
quouono)rts :
ர$9
Ģ@rıņúogi
& &
loĝ@rıņ—ızıloĝo) ,
議!-
gifogos)19 gifòksson@rs riqi@@
- qı-ıfıú0919
sue
0 00Z 00守 009 ே t= 封 008
000s
82
 
 

g - q-inboorts(8861 o $561) səulos ao uns səəueuso seunsuoɔ sexuen sis so »uea sequeo qisuoso
886.
98/986
C8/1861
6Z/8461
––ł sudio@ng.ပ္ဇဇု%sposodos quoniĝosúī£ –ợ– - |ņuosogne, qi@ own ffoợe șasosựsofi) ––– ~~–~~~~–, , ) suấostis ĝ&#ħ19 →–
8881 - gest gęsiens soos wysogon Q-Tipos - seessaeg001
83

Page 58
மலையக மக்களின் கல்விப் பிரச்சினைகளும் ஏதிர்பார்ப்புகளும் -பேராசிரியர் சோ. சந்திரசேகரன் -
அறிமுகம்
மனித சாதன விருத்தியில் அக்கறை செலுத்தும் ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் நோக்கில் மக்களின் கல்வித் தேர்ச்சிக் குறைவும் எழுத்தறிவுக் குறைவும் அவர்களுடைய குறைந்த வாழ்க்கைத் தரத்துக்கு மட்டுமன்றி தேசிய அபிவிருத்தி இலட்சியங்களை அடைந்து கொள்வதற்கும் தடையாக உள்ள முக்கிய காரணிகளாகும். யுனெஸ்கோ நிறுவனத்தின் மனித அபிவிருத்தி அறிக்கையை (1990) தயாரித்த அறிஞர்கள், மனித அபிவிருத்திக்கு அடிப்படையான மூன்று காரணிகளில் எழுத்தறிவையும் கல்வித் தேர்ச்சியையும் முக்கியமானதொன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் கல்வித் துறையில் மலையக மக்கள் பின்தங்கிய பிரிவினர்களாக இருப்பது அவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கும் பாதகமானதாகும்; இவர்கள் கல்வித் துறையில் பின்தங்கியவர்களாக இருக்கும் வரை யாவருக்கும் கல்வி என்ற உயர் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியாது.
நிறுவனத்தின் நோக்கில் பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளும் அவர்கள் பெறும் கல்வியின் தராதரமும் அவர்கள் சார்ந்துள்ள இனம், சமயம், பொருளாதார சமூக வசிப்பு, வாழ்விடம், பெற்றோரின் நிதி வசதி என்பவற்றில் தங்கி இருக்க முடியாது. பிள்ளைகள் தமது நன்மைக்காகவும் சமூக நன்மைக்காகவும் கல்வி வாய்ப்புக்களைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு என்பது யுனெஸ்கோவின் கருத்தாகும்.
சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்பது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைக் குறிக்கும். இவர்கள் பெரும்பாலும் மொழி, இன, சமய சிறுபான்மையாளர்களாக சேரிவாழ் மக்களாக, பெருந்தோட்டங்களிலும் துரப் பிரதேசங்களில் வசிப்பவர்களாகவும் தொழில் நுட்ப அறிவு குறைந்தவர்களாகவும் காணப்படுவர்.
84

மலையக மக்களின் கல்விநிலை பற்றி ஆராய்ந்த அறிஞர்களும் ஆணைக்குழு அறிக்கைகளும் அவர்களை கல்வியில் பின்தங்கிய பிரிவினர்களாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளன. முக்கியமாக, 1977 ஆம் ஆண்டின் பின்னர் தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரசாங்கப் பாடசாலைகளாக்கப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டு பல செயற்றிட்டங்கள் நடைபெற்ற பின்னரும் கூட மலையக மக்களின் கல்வி நிலைகள் பின் தங்கியவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1990-1991 க்குரிய யுனெஸ்கோவின் யாவருக்கும் கல்வி பற்றிய ஆய்வறிக்கை (யுனெஸ்கோ 1990-1991) கல்வியில் பின்தங்கிய ஆசிய இனச் சிறுபாண்மையினர் பற்றிய குறிப்புகளில் மலையகச் சிறுபான்மையினர்களையும் இனங்கண்டுள்ளது. (யுனெஸ்கோ பக். 184) இவ்வறிக்கை மலையகக் கல்வியின் தற்போதைய நிலைமைக்கு நீண்ட காலமாக கல்வி வசதிகளை அலட்சியம் செய்து வந்த பெருந்தோட்ட நிர்வாகத்தைக் குறை கூறியுள்ளது. இவ்வறிக்கையின்படியும் மற்றும் தரவுகள், புள்ளி விபரங்களின்படியும் மலையக மக்கள் ஆரம்பக்கல்வி, ஆசிரியர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, முறைசாராக் கல்வி, வளர்ந்தோர் கல்வி முதலிய கல்வி நிலைகள், ஏற்பாடுகள் என்பவற்றில் இன்றைய தேசிய ரீதியான வளர்ச்சி வீதங்களுடன் ஒப்பிடும் போது பின்தங்கியவர்களாக உள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி இலங்கை சமூகத்தில் ஏற்படுத்திய சமூகநகர்வு, பொருளாதார, சமூக அந்தஸ்து மேம்பாடு போன்ற நன்மைகளை மலையக மக்கள் சம அளவில் பெற்றுக் கொள்ளவில்லை. கல்வித் தகுதிகளும் பயிற்சியும் தேவைப்படாத பெருந்தோட்ட உடல் உழைப்புத் தொழில்களிலேயே அவர்கள் செறிந்து காணப்படுகின்றனர். ஏறத்தாழ 5 இலட்சம் பேர் தோட்டத் தொழிலாளர் உட்பட அவர்களில் தங்கி வாழ்வோரையும் சேர்த்தால் 8 இலட்சம் பேர் இன்று பெருந்தோட்ட மக்கள் என்று ஒரு சமூகமாக - பெருந்தோட்டம் என்ற பொருளாதார அலகை அடைமொழியாகக் கொண்ட ஒரு சமூகம் - உருவாகக் காரணம் அவர்கள், பெருந்தோட்டத்தை விட்டு வெளியேறி பிற தொழிற்துறைகளில் சேரும் முறையில் கல்வித் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளாமையாகும். மறுபுறம் கல்வி வசதிகளைப் பெறுகின்ற ஆற்றலுடைய மத்தியதர வகுப்பினர் வர்த்தக தொழிற்துறையினால் கவரப்பட்டு, கல்வித் தகுதிகளையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்களையும் பெறுவதில் அக்கறை செலுத்தவில்லை. இன்று
85

Page 59
மலையகத் தமிழர் அதிகமாகத் தெரிவு செய்துள்ள முக்கிய மத்திய வர்க்கத் தொழில் பாடசாலை ஆசிரியர் பதவிகளாகும். ஒரு மதிப்பீட்டின்படி இன்று ஆறு மலையக மாவட்டத் தமிழ் பாடசாலைகளில் 4397 ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். இலங்கைக் குடித் தொகையில் மலையக மக்களின் வீதாசாரம் 55 வீதம் என்று கூறப்பட்டாலும் அரசாங்க சேவையில் அவர்களுடைய வீதாசாரம் 01 மட்டுமே. மாகாண சேவைகளில் 0.2%, கூட்டுத்தாபனங்களில் 0.5 வீதம் என்ற முறையிலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிட்டியுள்ளது. (1995) இக்குறைந்த வீதாசார வேலை வாய்ப்புக்குப் பொறுப்பான பல்வேறு காரணிகளுள் மலையக மக்களின்
கல்வித் தகுதிப் பற்றாக்குறையும் முக்கியமானதொன்றாகும்.
தற்போதைய கல்வி நிலை
மலையகத் தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று இரு தசாப்த காலம் முடிவடைந்து, பல வெளிநாட்டு உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரும் இப்பாடசாலைகள் தேசிய தராதரங்களை எட்டவில்லை. பெரும்பான்மையினர் பாடசாலைகளுக்கும் இப்பாடசாலைகளுக்குமிருந்த இடைவெளி இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது. மலையக மக்களின் பாடசாலைகளும் கல்வி நிலையும் எதிர்நோக்கும் முக்கிய சவால் அவை தேசிய தராதரங்களை எட்டிப்பிடிக்கும் வகையில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதாகும்.
தென்னாசிய நாடுகள், வளர்முக நாடுகள் என்ற முறையில் நோக்குமிடத்து, பாடசாலைக் கல்வி பெருவளர்ச்சி பெறச் சாதகமான கொள்கைகள் இலங்கையிலேயே கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் கல்வி வளர்ச்சியில் ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஜப்பானுக்கு அடுத்த இடத்தைப் பெற்றாலும், அரசாங்கத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், திட்டங்கள், கொள்கைகள் என்பன மலையகத்திற்கு முறையாக எட்டவில்லை.
மத்திய பாடசாலை அமைப்பு, இலவசக்கல்வி, பல்கலைக்கழகம் வரை தாய் மொழிக் கல்வி, பல்கலைக்கழக, தொழில்நுட்ப, ஆசிரியர் பயிற்சி, முறைசாராக் கல்வித் துறை சார்ந்த விரிவாக்கங்கள் தொடர்பான கொள்கைகள் பின்தங்கிய பிரிவினர்களைக் கருத்திற் கொண்டமைந்த
போதிலும் அவற்றின் நன்மைகளும் பயன்களும் மலையக மக்களை சரியாக
86

எட்டவில்லை. அண்மைக் காலங்களில் நாட்டின் பிறபிரிவினரின் கல்வி மட்டம், எழுத்தறிவு மட்டம் என்பன அதிகரிக்க இக்கொள்கைகளும் நடவடிக்கைகளும் காரணமாக இருந்தன. 1943 முதல் 1995 வரை - ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலப்பகுதியில் வெளிவந்த கல்வி அறிக்கைகள், ஆணைக்குழு அறிக்கைகள் என்பன மலையக மக்களின் பின் தங்கிய கல்வி நிலையை முறையாகக் கருத்திற் கொள்ளவில்லை. ஆயினும் பிற்காலத்தில் வெளிவந்த இளைஞர் ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு (1992) என்பன இவ்விடயத்தில் ஓரளவு சிரத்ை
காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலத் தரவுகள், விபரங்களின் படி மலையகப் பாடசாலைகள், மக்கள் கல்வி நிலை பற்றிய சில தகவல்கள் பின்வருமாறு:
* க. பொ. த. உ/நி வகுப்புகள் உள்ளடங்கிய உயர்நிலைப் பாடசாலைகளின் தொகை மலையகத்தில் மிகவும் குறைவு நுவரெலியா மாவட்டத்தில் 187000 பெரும்பான்மை மக்களுக்கு இவ்வாறான (1) பாடசாலைகள் 38 உண்டு. ஆனால் 317000 தமிழ் மக்களுக்கு 9 பாடசாலைக்ளே காணப்படுகின்றன.
ஆசிரியர் - மாணவர் விகிதம் தேசிய மட்டத்தில் 21 1 ஆக இருந்தவிடத்து மலையகத்தின் இவ்விகிதம் 64 - 1 ஆக இருந்தது.
1992 இல் நுவரெலியா மாவட்டத்தில் இவ்விகிதம் 44 1 ஆகவும் பதுளையில் 37 = 1 என்ற முறையிலும் அமைந்தது.
பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகள் ஒரு அல்லது இரு ஆசிரியர்களையும் கொண்ட சிறிய பாடசாலைகள், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சியற்றவர்கள் ஆறு மலையக மாவட்டங்களில் கற்பித்த 4397 தமிழாசிரியர்களில் 2869 பேர் (65%) பயிற்சியற்றவர்கள் (சிங்கள பாடசாலைகளுக்கான இவ்வீதம் 31.7, முஸ்லீம் பாடசாலைகள் 26.6%)
மலையக மாணவர்களில் ஆரம்பக் கல்வியைக் கற்று முடித்தவர்களின் 9 வீதமானவர்களே இடைநிலைக் கல்வியை நாடுகின்றனர்.
岑
மலையக மக்களின் எழுத்தறிவு, பாடசாலை தவிர்ப்பு, கல்வி மட்டம் தொடர்பான வீதாசாரங்கள் நகர்ப்புற, கிராமப்புற மக்களுடன் ஒப்பிடும்
87

Page 60
முறையில் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. (பார்க்க 1986/87 சமூக, பொருளாதார ஆய்வு)
நகர்ப்புறம் கிராமப்புறம் பெருந்தோட்டம்
1. எழுத்தறிவு 93 89.5 68.5 2. பாடசாலைக் கல்வியைத்
தவிர்ப்போர் வீதம் 74 10.9 32.3 1. எழுத்தறிவற்றோர் பாட
சாலைக் கல்வி அற்றோர் 70 10.5 315 திரும்பக் கற்போர் வீதம் 10.4 10.4 15.5 2. ஆரம்பக் கல்வி வரை 37 42.2 52.5 3. இடைநிலைக் கல்விவரை 361 31.1 12.1 4. க. பொ. த. சா/நி சமமான 185 12 2.1 5. க. பொ. த. உ/நி சமமான 42 2.0 02 6. கல்வி அடைவுச் சுட்டெண் 6.46 5.16 2.57
பெருந்தோட்டப் பகுதி மாணவரில் - பாடசாலை
வயதெல்லையினரில் 32 வீதமானவர்கள் பாடசாலைக் கல்வியைத் தவிர்ப்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
மேலும், பெருந்தோட்ட மக்களில் 85 வீதமானவர்கள் ஆரம்பக்கல்வி பயின்றவர்களாகவும் அல்லது எழுத்தறிவற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். 15 வீதமானவர்களே ஓரளவு இடைநிலைக் கல்வி பயின்றவர்கள். நகர்ப்புற மக்களில் 60 வீதமானவர்களும் கிராமப்புற மக்களில் 46 வீதமானவர்களும் ஓரளவு இடைநிலைக் கல்வி கற்றவர்களாக உள்ளனர். 1953, 1963, 1973 1978 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி (நுகர்வோர் நிதி மதிப்பீடுகள்) பெருந்தோட்ட மக்களில் முறையே 3% , 78%, 77%, 8% மக்களே ஓரளவு இடைநிலைக் கல்வி பயின்றவர்களாகக் காணப்பட்டனர். (அட்டவணையில் 2,3,4 என்பவற்றின் கூட்டுத்தொகை). இவற்றோடு ஒப்பிடும்போது 1986இல் 15% மக்கள் இத்தொகுதிகளைப் பெற்றிருப்பது ஒரு முன்னேற்றமாயினும், அவர்கள் நகர்ப்புற, கிராமப்புற மக்களின் கல்வி அடைவுகளை எட்டவில்லை; நெருங்கும் நிலையில் கூட இல்லை என்பதை இவ்வட்டவணை காட்டுகின்றது. பெருந்தோட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் எழுத்தறிவு குறைந்தோராய் இருப்பது அவர்களுடைய சமூகம் ஒரு ஆரம்பக் கல்வியைக் கூடச் சரியாகக்
88

கற்காத ஒரு சமூகம் என்ற அந்தஸ்தையே பெறச் செய்கின்றது. அத்துடன் ஏறத்தாழ 5 இலட்சம் இந்திய மரபுவழித் தமிழர்கள் தொடர்ந்து கல்விப் பயிற்சி தேவைப்படாத பெருந்தோட்டத் தொழில்களை நம்பிய பெருந்தோட்ட சமூகமாக உருவாக, அவர்களுடைய பின்தங்கிய கல்விநிலையும் அதனால் ஏற்பட்ட சமூக தேக்க நிலையுமே முக்கிய காரணங்கள் எனலாம்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கான கல்விச் சீர்த்திருத்தங்கள் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கான கொள்கைகள் பற்றி
ஆய்வாளர்கள் வலியுறுத்திக் கூறுவதாவது:
வளர்முக நாடுகளின் சேவைத்துறை, தகவல், தொழில்நுட்பத்துறை என்பவற்றில் வேலைவாய்ப்புகள் பெருக வேண்டுமாயின் அதற்கு சகல மக்களுடைய கல்வி மட்டங்களும் உயர்த்தப்படல் வேண்டும்.
அரைகுறையாகப் படித்தவர்கள், இடையில் விலகியோர் ஒரு புறம் வேலைவாய்ப்புகளைப் பெறமுடியாது, மறுபுறம் அவர்கள் எதிர்காலத்துக்கான புதிய தொழிற்துறைகளில் பயிற்சி பெறுவதற்கான அடிப்படைக் கல்வி இல்லாத நிலையில் நாட்டுக்கே ஒரு பெரும் சுமையாகிவிடுவர்.
இன்றைய நூற்கல்வி பாட ஏற்பாடு, உயர்கல்வியை நாடும் சிறு தொகையிரைக் கருத்திற் கொண்டன: அவர்களுக்கும் இப்பாட ஏற்பாடு பொருந்துவதில்லை. பயனளிப்பதில்லை என்ற கருத்தும் உண்டு. இந்நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்குப் பொருந்தும் வகையில் மாற்றுப்பாட ஏற்பாடுகளை உருவாக்க வேண்டிய ஒரு கால கட்டம் இதுவாகும்.
இன்றைய, பொருளாதார முறை, தொழிற்சந்தை என்பன 'உலகளாவிய அமைப்பாக மாறிவருவதால், கல்வி முறைகள், இளைஞர்கள் தேசிய தொழிற் சந்தைக் கன்றி சர்வதேச தொழிற்சந்தையின் தேவைகளைக் கருத்திற் கொண்ட பாட ஏற்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டும். மக்களின் கல்வித் தகுதிகளை நகர்ப்புறம், கிராமப்புறம், தோட்டப்புறம் என்ற முறையில் ஒப்பிடாது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் நிலை தோன்ற வேண்டும்.
89

Page 61
இளைஞர்களின் கல்வி, கடந்தகால கல் வித்துறைக் குறைபாடுகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களைப் புதிய தகவல் மைய, அறிவுமைய நூற்றாண்டில் வாழ ஆயத்தம் செய்வதாய் அமைதல் வேண்டும்.(1993) இன்றைய இலங்கையின் தேசிய கல்வி முறை விரைவில் இவ்வுயரிய நோக்குகளை அடிப்படையாகக் கொண்டு சீர்திருத்தி அமைக்கப்படத் தேவையான அடியமைப்புக்களைக் கொண்டதாய் வளர்ந்துள்ள நிலையில் மலையக மக்கள் சாதாரண எழுத்தறிவு, ஆரம்பக்கல்வித் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர்.
இலங்கையின் பிற பிரிவினரின் பாடசாலைகளில் பல மலையகத் தமிழ் பாடசாலைகள் போன்று பின்தங்கிய நிலையில் உள்ளது உண்மையே. அத்தகைய சிங்களப் பாடசாலைகள் ஊவாவிலும் வடமத்திய மாகாணத்திலும் காணப்படுகின்றன. பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளைப் பின் தங்கியவை என்பதை ஏற்றுக் கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழு அவற்றுக்கு மட்டும் பின்தங்கிய அந்தஸ்தை வழங்க விரும்பவில்லை. நாட்டில் உள்ள சகல பின் தங்கிய பாடசாலைகளை இனங்காணப்படக்கூடாது. இவ்வாறான விசேட சலுகைகளை எதிர்ப்போர் மனம் புண்படக் கூடாது என்பது இவ்வாணைக் குழுவின் கருத்தாக இருந்தது. (1992) இவ்வாணைக்குழுவே முதன்முதலாகப் பெருந்தோட்டப் பாடசாலைகளின் பின்தங்கிய நிலை பற்றிச் சற்று விரிவாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 1943ஆம் ஆண்டின் விசேடக்குழு (கன்னங்கரா)வின் அறிக்கை, 1961ஆம் ஆண்டின் கல்வி ஆணைக்குழுவின் (ஜே. சி. ஜயசூரியா) அறிக்கை, 1981ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கை போன்றன மலையக மக்களின் பின் தங்கிய கல்வி நிலை பற்றி சாதகமான குறிப்புகளையோ விதந்துரைகளையோ கொண்டிருக்கவில்லை. ஆயினும் 1992 ஆம் ஆண்டின் இவ்வறிக்கை ஒரு முக்கிய அம்சத்தைக் கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையின் பிற சமூகத்தவரின் படி பாடசாலைகள் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் சகல க. பொ. த. (உ/நிலைப்) பிரிவுகளையும் (கலை, வர்த்தகம், விஞ்ஞானம்) 589 பாடசாலைகள் அவர்களுடைய கல்வி வளர்ச்சியைக் கவனிக்கின்றன; க. பொ. த. (உ! நிலை கலை, வர்த்தக வகுப்புகளைக் கொண்ட 1898, பாடசாலைகளும் அவர்களுக்கு உள்ளன. பாடசாலை வகைகளின் படி மலையக மக்களின் கல்விநிலை பின் தங்கியுள்ளதை நோக்குவதாக கட்டுரையின் அடுத்த பகுதி அமைந்துள்ளது. -
. 90

பாடசாலை வகைகள்
1992 ஆம் ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையின் படி இலங்கையில் உள்ள பெரும்பாலான மலையகத் தமிழ் பாடசாலைகள் சிறிய பாடசாலைகள் என்னும் பிரிவில் (100 மாணவர்களையும் 1-2 ஆசிரியர்களையும் கொண்டவை) அடங்குவன. இலங்கையில் காணப்படும் 2000 சிறிய பாடசாலைகளில் ஏறத்தாழ 800 மலையகத் தமிழ் பாடசாலைகளாகும். இலங்கையில் 10, 191 பாடசாலைகள் காணப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவற்றில் 4180 பாடசாலைகள் 68 ஆண்டு வகுப்புகளைக் கொண்ட 3 ஆம் தரப்பாடசாலைகளாகும். மலையகப் பாடசாலைகளில் பெரும்பாலானவை இப் பிரிவில் அடங்குவனவாகும். ஏனைய சமூகத்தவர்களைப் பொறுத்தவரையில் சகல க. பொ. த. (உlநி) கல்வி வசதிகளைக் கொண்ட 589 பாடசாலைகள் காணப்படுகின்றன; க. பொ.த. உlநி கலை, வர்த்தகவியல் வகுப்புகளைக் கொண்ட 1698 பாடசாலைகள் நாடெங்கும் பரந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மேல் மாகாணத்தில் இவ்விருவகைப் பாடசாலைகள் 375 உம் தென் மாகாணத்தில் 335 பாடசாலைகளும் காணப்படுகின்றன. மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் இப்பாடசாலைகளின் தொகை முறையே 317, 177 ஆகும். சுருங்கக்கூறின் நாட்டில் 4180 மூன்றாம் தர பாடசாலைகள் (1-6 தரம் வரையுள்ள) காணப்பட்டாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் உயர்நிலைக் கல்வியை வழங்கும் பாடசாலைகளும் கணிசமான அளவில் பிற சமூகத்தவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் மலையக தமிழ் பாடசாலைகளில் பெரும்பாலானவை (79 வீதமானவை) மூன்றாம் வகைப் பாடசாலைகளாகவே இயங்கி வருகின்றன.
(சிங்கள பாடசாலைகளில் 35 வீதமானவை மட்டுமே மூன்றாம் தரப் பாடசாலைகள்)
நாட்டில் வாழும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மலையக மக்களுக்கு உயர்நிலைக் கல்வியை வழங்க 9 பாடசாலைகளும் 31 பாடசாலைகளுமே மலையக மாவட்டங்களில் உருவாகியுள்ளன. மலையக மாவட்டங்களில் இவை கண்டி 1, மாத்தளை 2, நுவரெலிய 3, பதுளை 2. இரத்தினபுரி 1, கேகாலை 0 என்ற முறையில் மிகச் சிறிய அளவில் பாடசாலைகள் காணப்படுகின்றன. அவ்வாறே இம்மாவட்டங்களில் 31 பாடசாலைகள் மட்டுமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
9.

Page 62
க. பொ. த. (உ/நி) கல்வி
மலையகத்தில் உயர்நிலைக் கல்வி வழங்கும் இம்முப்பத்தியொரு பாடசாலைகளில் 3300 மாணவர்கள் பயிலுவதாக அறியமுடிகிறது. இன்று நாட்டில் ஏறத்தாழ 200000 மாணவர்கள் ஆண்டு 12 - 13 இல் பயிலுகின்றனர். இவர்களில் மலையக மாணவர்கள் தொகை குறைந்த பட்சம் 11,000 ஆக இருத்தல் வேண்டும். கல்வி அமைச்சின் புள்ளி விபரங்களின் படி மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் உயர்நிலைக் கல்வி பயிலும் தமிழ் மொழிமூல மாணவர்களின் தொகை முறையே 3656, 401 ஆகும். இத்தொகையில் தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களும் அடங்குவர். ஒப்பீட்டு ரீதியில் வட மாகாணத்தில் இந்நிலைகளில் பயிலும் மாணவர் தொகை 17,888 கிழக்கு மாகாணத்தில் 10, 000 (1995) மலையகத் தமிழ் பாடசாலைகளின் தர வாரியான தொகை, உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் தொகை என்பன மலையகக் கல்வியின் பின்தங்கிய நிலையைக் காட்டும். முழு மலையகத்திலும் 9 பாடசாலைகளில் மட்டுமே உயர்நிலை விஞ்ஞான வகுப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மொத்த உயர்நிலை மாணவர்களில் 20 வீதமானவர்கள் மட்டுமே விஞ்ஞானம் பயிலுவதாக
ஒரு மதிப்பீடு கூறுகின்றது (1995).
மலையக உயர்நிலை மாணவர் பற்றிய வேறு சில புள்ளி விபரங்கள் உண்டு. சிங்கள மொழி மூல பாடசாலை மாணவர்களில் 54 வீதமானவர்கள் உயர்நிலையில் பயிலுகின்றனர். தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான தேசிய வீதாசாரம் 39 வீதம் மட்டுமே, மலையக மாணவர்களின் உயர்நிலை சேர்வு வீதம் குறைய இருப்பதால் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மாணவர் வீதாசாரம் குறைந்து காணப்படுகின்றது.
க. பொ. த. உயர்நிலை வகுப்புகளின் மொழி முல வகைப்படி மாணவர் தொகையும் வீதாசாரமும் (1995)
மொச் e க. பொ. த மொழி முலம் "* "*" | உ மாணவர் வீதம்
தொகை
தொகை
சிங்களம் 32, 00000 1, 64000 54 தமிழ் 9, 86000 38700 3.9
ஆதாரம் கல்வி அமைச்சு. முன்னேற்ற அறிக்கை 94/95
92

மேலும் இலங்கையில் தமிழ் மொழி மூலம் பயிலும் உயர்நிலை மாணவரில் மலையக மாணவர்களின் தொகை மிகக் குறைவாகும். 1995 இல் தமிழ் மொழி மூல மாணவர்களின் மொத்த தொகை 38700. இவர்களில் 3000 பேர் மட்டுமே மலையக மாணவராவார். தமிழ் மொழி மூல மாணவர்களின் (க, பொ. த. உ/நி) மாகாண ரீதியான பரம்பல் பின்வருமாறு அமைகின்றது. (1994/1995)
மாகாண ரீதியாக தமிழ் மொழி முல மாணவர் தொகை
மாகாணம் ஆண்டு 12-13
தமிழ் மொழி முல மாணவர் மத்திய மாகாணம் 3, 656 6ILLAT4, T600Ti 17, 888 கிழக்கு மாகாணம் 10, 724 ஊவா மாகாணம் 401
ஆதாரம் கல்வி அமைச்சு முன்னேற்ற அறிக்கை 1994/95
米 இத்தொகைகள் தமிழ் மொழி மூலம் பயிலும் முஸ்லிம் மாணவர்களையும் உள்ளடக்கும்.
ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் 48300 மாணவர்களில் 400 பேர் மட்டுமே உயர்நிலையில் பயிலும் மாணவர்கள். அவ்வாறே மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் 1,72000 மாணவர்களில் 3600 பேர் மட்டுமே உயர்நிலை மாணவராவர். இது முறையே 8, 21 விதமாகும். சிங்கள மொழி மாணவர்களைப் பொறுத்தவரையில் பாடசாலை மாணவரின் உயர்நிலை மாணவரின் வீதாசாரம் இதனை விட அதிகமாகும். எடுத்துக்காட்டாக மத்திய மாகாணத்தில் இவ்வீதாசாரம் 6 ஆகவும் மேல் மாகாணத்தில் 6 ஆகவும் ஊவா மாகாணத்தில் 4 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய வீதாசாரம் முறையே 6 வீதம், 4 வீதமாகும். சுருங்கக் கூறின் மலையகத் தமிழ் மொழி மூல மாணவர்கள் ஒப்பீட்டு அளவில் க. பொ. த. உயர்நிலை வகுப்புகளை அடைய முன்னர் கணிசமான அளவில் பாடசாலைகளை விட்டு இடையில் விலகுகின்றனர் என்பதையே இப்புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. மேலும் மலையக மாணவர்களின் பாடசாலைக் கல்வி பெருமளவுக்கு ஆரம்ப, கீழ்
93

Page 63
இடைநிலைக் கல்வியுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது என்றே கொள்ள வேண்டியுள்ளது. ஏறத்தாழ 1960களின் முற்பகுதியில் மலையகப்" பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட க. பொ. த. உயர்நிலைக் கல்வி கடந்த 3 தசாப்த காலத்தில் பெரு வளர்ச்சி பெறவில்லை என்பதையே தரவுகள் காட்டுகின்றன.
ஆண்டு ரீதியாகவும் மொழி ரீதியாகவும் மாணவர்
எண்ணிக்கை (1994/95)
மத்திய மாகாணம் ஒளவா மாகாணம்
தமிழ் மொழி முல மாணவர்*
ஆண்டு 1-5 99.500 29,500 ஆண்டு 8-11 69,700 18,400 ஆண்டு 12-13 3,600 400
ஆதாரம் கல்வி அமைச்சு, முன்னேற்ற அறிக்கை 1994/95 * முஸ்லிம் மாணவர் தொகையும் இதிலடங்கும்.
மலையக தமிழ் பாடசாலைகளில் இடம் பெறும் உயர்நிலைக் கல்வி பற்றி இவ்வாறு விரிவாக ஆராய்ந்து அதன் பின்தங்கிய நிலையைச் சுட்டிக்காட்ட பல காரணங்கள் உண்டு.
1. இன்றைய பாடசாலைக் கல்வி முறையில் முக்கிய இயல்பும் முக்கியக் குறைபாடும் அதன் ஒருவழித் தன்மையாகும். இன்று பெருமளவுக்கு ஆரம்பக் கல்வி நிலை, மாணவர்களை இடைநிலைக் கல்விக்கும் இடைநிலைக் கல்வி நிலை உயர்நிலைக் கல்வி நிலைக்கும், உயர்நிலைக் கல்வி பல்கலைக்கழக கல்விக்கும் மாணவர்களை ஆயத் தம் செய்யும் போக்குடையதாக விளங்குகின்றது. இந்நிலையில் பாடசாலைக் கல்வியின் நோக்கங்களையும் பயன்களையும் மாணவர்கள் முழுமையாக அடைந்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் உயர்நிலையை வந்தடைய வேண்டும். அவ்வாறு வந்தடையாது இடையில் விலகும் போது கல்வித் துறையில் வீண் விரயம் ஏற்படுவதாகவே கல்வியாளர்கள் கொள்வர். ஏனெனில் இடையில் விலகுவோர்
94

பாடசாலைக் கல்வியில் முழுப் பயனையும் அனுபவிப்பதில்லை. இவ்வகையில் மலையக மாணவர்கள் மிகக் குறைந்த தொகையினர் உயர்நிலையில் பயிலும் நிலை, பாடசாலை கல்வியினால் அவர்கள்
உரிய பயனை அடையவில்லை என்பதனையே காட்டுகின்றது.
2. இன்று அரசாங்க மற்றும் தனியார்த்துறை தொழில்களில் சேர்ந்து கொள்ள க. பொ. த. உயர்நிலைத் தகுதிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. குறைந்த பட்சம் உயர்நிலை கல்வித் தகுதி அல்லது பல்கலைக்கழக பட்டமின்றி கண்ணியமான தொழில்களில் சேர்ந்து கொள்ள முடியாது.
3. கல்விப் பொருளியல் ஆய்வாளர்களின் நோக்கில் கல்வித் தகுதிகளுக்கும் தனியாள் வருமானத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு உண்டு. மலையக மாணவர்கள் உயர் வருமானத் தொழில்கள் பெற்றுக் கொள்ள உயர்ந்த கல்வித் தகுதிகளை பெறுவது அவசியமாகின்றது. இன்று தொழில் வாய்ப்புகளில் இன விதாசார முறை பின்பற்றப்பட்டாலும் கூட அடிப்படைக் கல்வித் தகுதிகள் அவசியமாகின்றன. இவ்வீதாசாரப்படி உயர்தொழில் வாய்ப்புகளைப் பெற போதிய கல்வித் தகுதிபெற்றோர் அவர்கள் மத்தியில் இல்லை என்ற முறைப்பாடும் உண்டு. அசாதாரணமான ஒரு எடுத்துக் காட்டைக் கூறுவதாயின் இன்று பல்கலைக்கழகங்களில் நிரந்தர விரிவுரையாளர்களாக 2179 பேர் பணிபுரிகிறார்கள், இவர்களில் ஒரு 100 பேராவது மலையகத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியும். அவ்வாறே உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இன்று 1420 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்களில் 50 பேராவது மலையகத்தவராக இருத்தல் வேண்டும். ஆயினும் உயர்கல்வி தகுதிகள் இன்றி இவ்வுயர் தொழில்கள் மீது மலையகத்தவர்கள் உரிமை பாராட்ட முடியாதுள்ளது. இன விகிதாசாரக் கொள்கையைச் சாதகமாகப் பயன்படுத்தி நன்மைகளைப் பெற அடிப்படைக் கல்வித் தகுதிகள் தேவை என்பதால் பாடசாலைகளின் உயர்நிலை கல்வி பற்றிய இப் பகுப்பாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது.
க. பொ. த. (உ/நி) பரீட்சைச் சித்திகள்
மலையக மாணவர்களுக்கான க. பொ. த. (உ/நி) கல்வி வசதிகள் ஒப்பீட்டளவில் குறைந்தளவினதாக உள்ள அதே வேளையில், பொதுப்
95

Page 64
பரீட் சைக்கு மாணவர்களை அனுப்பும் ஒரு சில மலையக பாடசாலைகளின் செயலாற்றமும் குறைபாடுகள் நிறைந்து காணப்படுகின்றது.
1992 ஆம் ஆண்டில் நாட்டில் விஞ்ஞானத் துறையில் சிறந்த சித்தி பெற்ற பாடசாலைகளின் தொகை 36, இவற்றில் மலையகப் பாடசாலை ஒன்று கூட இல்லை. இது கலை, வர்த்தகவியல் உயர்நிலைப் பரீட்சைகளுக்கும் பொருந்தும்.
பரீட்சைத் திணைக்களம் தயாரித்துள்ள சுட்டெண் மதிப்பீட்டின்படி உயர்சித்தி பெற்ற பாடசாலைகள் விஞ்ஞானத்துறையில் பெற்ற சுட்டெண்கள் 56-66 வரையாகும். கலை, வர்த்தகத்துறையில் அவை பெற்ற சுட்டெண் 60-72 வரையாகும் பண்டாரவளை, கண்டி, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழ்
பாடசாலை மட்டுமே 47 சுட்டெண்களைப் பெற்றுள்ளது.
பெரும்பாலான மலையகத் தமிழ் பாடசாலைகள் க. பொ. த. (உ/நி) விஞ்ஞானப் பரீட்சைக்கு 20 க்கும் குறைவான மாணவர்களையே அனுப்புகின்றனர். பண்டாரவளை மாவட்டத்தில் இரு பாடசாலைகள் முறையே 47, 30 சுட்டெண்களையும் கண்டியில் ஒரு பாடசாலை 38 சுட்டெண்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பாடசாலைகள் முறையே 40, 33, 41, சுட்டெண்களையும் பெற்றுள்ளன. கருங்கக்கூறின்,
* மலையகத்தில் ஒரு தமிழ் பாடசாலை மட்டுமே 51 மாணவர்களை
விஞ்ஞான உ/நி பரீட்சைக்கு அனுப்பியுள்ளது.
மலையகத்தில் ஏனைய 6 தமிழ் பாடசாலைகள் மொத்தமாக 64 மாணவர்களையே பரீட்சைக்கு அனுப்பி 47, 47, 40, 33, 30 என்ற சுட்டெண்களைப் பெற்றுள்ளன.
பாடசாலைகளில் விஞ்ஞான உயர்கல்வி மிகப் பின்தங்கிய நிலையிலிருப்பதையே இப்புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் நாட்டின் கல்வி நிலை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. உயர்சித்தி பெற்ற பாடசாலைகளை மட்டும் எடுத்து நோக்கின் அவற்றில் மூன்று பாடசாலைகள் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களை இப்பரீட்சைக்கு அனுப்பியுள்ளன. 19 பாடசாலைகள் நுாறுக்கும் மேற்பட்டவர்களை அனுப்பியுள்ளன: பதுளை மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் கண்டி மாவட்டத்தில் 21 பாடசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் 7 பாடசாலைகளும் இப்பரீட்சைக்கு மாணவர்களை அனுப்பியுள்ளன.
96,

ёик. பாடசாலைகளின் தொகை, பரீட்சைக்கு அமரும் மாணவர் தொகை,
அவர்கள் பெறும் பரீட்சைச் சித்திகள் என்பவற்றில் மலையகத்
தமிழ் மாணவர்களுக்கும் ஏனைய பிரிவு மாணவர்களுக்குமிடையே
பெருத்த இடைவெளி காணப்படுகின்றது.
கலை, வர்த்தகவியல் துறையில் நாட்டின் உயர்சித்திச் சுட்டெண்
60-72 ஆக இருந்தவிடத்து மலையகப் பாடசாலைகள் 20 இல் ஒன்றேனும் 60ஐ எட்டவில்லை. (ஒரு பாடசாலை மட்டும் 65 சுட்டெண் - (மாணவர்
தொகை 6 பேர்).
"
«Xპ.: , ’.
's
பாடசாலைகளின்
மாவட்டம் unselot 6his
தொகை தொகை கட்டெண் பண்டாரவளை 5 102 54, 41, 65, 52, 40
鲇 கண்டி 4. 7 49,86,50,46
மாத்தளை 3 53 52, 48, 56
நுவரெலியா 7 1.59 57, 53, 44, 54,
54, 48, 42
அடுத்து க. பொ. த. உlநி பாடங்களில் மலையக மாணவர்கள் பெற்ற
தேர்ச்சிகளை நோக்குவோம்.
விஞ்ஞான பாடங்கள்
M
நாட்டில் விஞ்ஞான பாடங்களில் உயர் சித்தி பெற்ற பாடசாலைகளின் உயர்சித்திச் சுட்டெண் பின்வருமாறு அமைகின்றது.
பாடம் உயர்சுட்டெண் --
தூய கணிதம் 67
பிரயோக கணிதம் 66
பெளதீகவியல் 70
இரசாயனவியல் 68
தாவரவியல் 69
விலங்கியல் - 70
97

Page 65
மலையகப் பாடசாலைகளின் சுட்டெண்
மாவட்டம் பாடசாலைகளின் கட்டெண்
தொகை தூய பிர பெள இரசா தா வில பண்டாரவளை 1. 70 75 41 48 40 46 2 26 23 25 35 31 23
கண்டி 1. 47 40 38 45 32 26
நுவரெலிய 1. 37 4 3 28 - 28 30
- - 32 43 45 33 43 42 42 45 37 30
ஏழு தமிழ் பாடசாலைகளின் பாட வகைப்படியான சுட்டெண் இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ளது. பண்டாரவளை மாவட்டப் பாடசாலை ஒன்று கணிதப் பாடங்களிலும் நாட்டில் உயர்சித்தி பாடசாலைக்ளை விட அதிகமான (70-75) சுட்டெணிகளை பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள். பிற எல்லா பாடசாலைகளும் சகல விஞ்ஞான பாடங்களிலும் பின்தங்கியுள்ள நிலைமை அட்டவணையில் தெளிவாகத்
தெரிகின்றது.
கலை, வணிகவியல் பாடங்கள்
நாட்டில் உயர் சித்தி பெற்ற பாடசாலைகளின் உயர் சுட்டெண்
பாடம் சுட்டெண்
புவியியல் 90 பொருளியல் 74 வர்த்தகவியல் 73 கணக்கியல் 75
இந்நான்கு பாடங்களில் எட்டு மலையகத் தமிழ் பாடசாலைகள் பெற்ற சுட்டெண்ணை நோக்குவோம்.
98

மாவட்டம் file உயர்நிலைப்பாடங்கள்
புவி. பொருள். வர். கண.
பண்டாரவளை 1. 57 58 50 56
46 42 34 43
கண்டி 1. 67 51 43 - 39
மாத்தளை 1 64 48 52 40 58, 46 41 31
நுவரெலிய 1. s 48 45 h− 60 58 46 46
3 52 48 37 38
உயர்சித்தி பெற்ற பாடசாலைகளின் தராதரங்களை எட்ட மலையகப் பாடசாலைகள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதை இவ்வட்டவணை காட்டும். சுட்டெண் 80 ஐ ஒரு எல்லையாகக் கொண்டால் கூட ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டுமே உயர் சுட்டெண்ணைக் காணமுடிகின்றது. மேற்கண்ட அட்டவணையில் பல பாடசாலைகள் பல பாடங்களில் பெற்ற சுட்டெண் 50க்கும் குறைவாக உள்ளது.
கடந்த பத்து ஆண்டு காலப்பகுதியில் மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்காக செய்யப்பட்ட பல்வேறு முயற்சிகள் ஆச்iயர் நியமனம் ஆசிரியர் பயிற்சி, ஆரம்ப பாடசாலைகளுக்கு வெளிநாட்டு உதவி போன்றன) காரணமாகவே இந்த அளவு முன்னேற்றமாவது ஏற்பட்டது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக கல்வி
இன்று பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புப் பிரச்சினை இருப்பது உண்மையிேயாயினும் கடந்த ஐம்பது ஆண்டு காலப் பல்கலைக்கழக வளர்ச்சியினாலும் அதற்குச் செலவிடப்பட்ட பெருமளவு மூலதனத்தினாலும் ஏனைய சமூகத்தவர் அடைந்த நன்மைகளை மலையக சமூகத்தவர் பெறவில்லை. முஸ்லிம்கள் உயர்கல்வியில் காலங்காலமாக மலையகத்தவர் போன்று பின்தங்கியிருந்து அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். கடந்த மூன்றாண்டு காலங்களில்
99

Page 66
(1991, 1992, 1993) உயர் கல்விக்கென செலவிடப்பட்ட பணம் முறையே 147 கோடி, 235 கோடி, 258 கோடியாகும். 1981 தொடக்கம் 1991 வரையுள்ள பத்து ஆண்டு காலப்பகுதியில் உயர்கல்விக்கு 985 கோடி ரூபாய் வரை. செலவிடப்பட்டுள்ளது. இதனால் மலையக மக்கள் எத்தனை மருத்துவர்களையும் பொறியியலாளரையும் பட்டதாரிகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது? உயர் கல்விக்கான தேசிய செலவினத்தில் மலையக மக்களுக்கு கிடைத்த பங்கு என்ன? பல்கலைக்கழக அனுமதியில் இன வீதாசாரம் பேணப்பட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு அனுமதிக் கொள்கைகள் (உதாரணமாக தரப்படுத்தல், மாவட்ட அனுமதி, பின்தங்கிய மாவட்ட அனுமதி போன்றன) மலையக மக்களுக்கு உயர்கல்வியில் வழங்கிய வாய்ப்புகள் என்ன? இப்பிரிவு மக்களின் பின் தங்கிய உயர்கல்வி நிலை பற்றி சிந்திக்கும் போது இவ்வினாக்கள் எழுகின்றன.
ஒரு பரந்த கருத்தில் உயர்கல்வி அமைப்பில் இன்று இருவகையான அம்சங்களைக் காணமுடியும். ஒருபுறம் தேசிய ரீதியான உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து இன, பல்வேறு பிராந்திய மாணவர்களைக் கொண்டு விளங்குகின்றன. பல்கலைக்கழக கல்வியைப் பொறுத்தவரையில் சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்கள் என்பதே தேசிய கொள்கையாயினும் பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையக மாணவர் தொகை மிகவும் குறைவு. மலைநாட்டிலும் அதற்கு அண்மையில் கொழும்பிலும் காணப்படும் இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மொத்த மாணவர் தொகை 13500 (1992/93) ஆகும். இவர்களில் ம்லையக மாணவர் தொகை 100க்கு மிகக் குறைவானதே. அதிகாரபூர்வ அறிக்கைகள் மலையக மாணவர் பற்றிய விபரங்கள் எதுவும் தருவதில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இவ்விரு தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் தமிழ் மாணவரின் தொகை மிகக் குறைவு. 1992/93 க்குரிய தமிழ் மாணவர் அனுமதி விபரம் பின்வருமாறு. மாணவர் அனுமதி 1992/1999
1. மொத்த மாணவர் அனுமதி 7241.
(சகல பல்கலைக்கழகங்களும்) 2. தமிழ் மாணவர் தொகை (மொத்தம்) 756
100

3. கொழும்புப் பல்கலைக்கழகம் 69
பேராதனைப் பல்கலைக்கழகம் 155 யாழ் பல்கலைக்கழகம் 339 கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் 16
இவ்விரு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்ற 224 தமிழ் மாணவர்களில் மலையக மாணவர் தொகை மிகச் சிறியதே.
இத்தேசிய பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் பின்னர் உருவாகிய பல்கலைக்கழகங்கள் இன ரீதியாகவும் / பிராந்திய ரீதியாகவும் எழுந்த கோரிக்கைகளை நிறைவு செய்ய உருவாக்கப்பட்டவை. 1958 இல் பெளத்த உயர்கல்வியை வழங்கிய இரு பிரிவேனாக்கள் வித்தியோதய வித்தியாலங்காரப் பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்பட்டன. பின்னர் 1974 இல் யாழ் பல்கலைக்கழகமும் அதன் பின்னர் றுகுனு பல்கலைக் கழகமும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகமும் உருவாக்கப்பட்டன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியும் ரஜரட்டை, சப்பிரகமுவா ஆகிய இரு பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டன. தேசிய பல்கலைக்கழக அமைப்பு நாட்டின் பிராந்திய ரீதியாகப் புதிய பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டிய அவசியத்தை இப்புதிய பல்கலைக்கழகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பேராதனை தவிர ஏனைய பல்கலைக்கழகங்கள் கொழும்பையும் அதனைச் சுற்றியும் அமைந்திருந்த நிலைமை நீங்கி, உயர்கல்வி வாய்ப்புகளும் அமைப்புகளும் வடத்கு, கிழக்கு தெற்கு, தென்கிழக்கு என தூரப்பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதிகாரபூர்வமாக இவை அனைத்தும் தேசிய உயர்கல்வி அமைப்புகளே ஆயினும் மாணவர் அனுமதி, விரிவுரையாளர் தெரிவு, பாட ஏற்பாடு, உயர்மட்ட முகாமைத்துவம் என்பவற்றில் பிராந்தியச் சாயல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. /
சென்ற அரசாங்க காலத்தில், மாகாணங்கள் தோறும் அமைக்கப்பட்ட இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரிகளும் உயர்கல்விக்கான பிராந்திய ரீதியான தேவைகளையும் கோரிக்கைகளையுமே எடுத்துக் காட்டுகின்றன. வட, கிழக்கு மாகாணங்களிலும் முஸ்லீம்கள் வாழுகின்ற பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இத்தேவைகளையே எடுத்துக் காட்டுகின்றன.
101

Page 67
தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர்களைப் பொறுத்தவரையில் பிராந்திய ரீதியான இவ்வுயர் கல்வி நிறுவனங்கள், அவர்கள் பிறரின் தலையீடின்றி தமது கல்வி வளர்ச்சியைப் பேணிக்கொள்ள உதவுகின்றன. அவர்கள் சார்ந்த வரலாறு, கலாசாரம், இலக்கியம், சமூகவியல், சமயம், புவியியல், பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் என்பவை பற்றிய ஆராய்ச்சி மற்றும் எதிர்கால செயற்றிட்டங்களுக்கு இவ்வுயர்கல்வி அமைப்புக்கள் உதவும் வாய்ப்பு உண்டு. இச்சிறுபான்மையினர் பற்றிய இச்செயற்றிட்டங்களுக்கு இவ்வுயர்கல்வி அமைப்புகள் உதவும் வாய்ப்பு உண்டு. இச்சிறுபான்மையினர் பற்றிய இச்செயற்றிட்டங்களில் தேசிய பல்கலைக்கழகங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்ட இயலாத நிலையில், இப்பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் சிறுபான்மையினருக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில் அவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்கான உந்து சக்தியாகவும் விளங்க (Մtդպth. s
இப்பின்னணியில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட மலையகத் தமிழ் சமூகம் தனக்கென 9C) உயர்கல்வி அமைப்பொன்றைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் அவ்வாறான கோரிக்கையையாவது முன்வைக்கும் நிலையில் அது இல்லை. கணிசமான மலையக மாணவர்கள் ஆண்டுதோறும் பல்கலைக்கழக அனுமதி பெற்றால் மட்டுமே அவ்வாறான கோரிக்கை எழுவது சாத்தியமாகும். இன்றைய வருடாந்த அனுமதி 9000 பேர் என்றால் அதில் 400-500 பேராவது மலையகத்திலிருந்து அனுமதி பெறும் நிலை இன்றில்லை. புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையால் 2000 ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 15000 மாணவர்களை அனுமதிக்கும் திட்டமொன்று உண்டு. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகங்களில் 50000 பேர் பயிலுவர். இவர்களில் 2000-2500 பேராவது மலையக மாணவராக இருப்பதும், அவர்கள் பல்வேறு போதனா பீடங்களில் பரந்த முறையில் பயில வேண்டும் என்பதும் மலையக மக்களின் பல்வகைப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். ஆனால் இவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தற்போதைய நிலைமைகள் சாதகமாக இல்லை. மலையக அரசியல் தலைமைத்துவம் பின்வரும் நிலைமைகளைக் கருத்திற் கொண்ட முறையில் மலையக மக்களின் எதிர்காலக் கல்வி வாய்ப்புகள், அவை தொடர்பான கோரிக்கைகள் என்பவற்றைத் திட்டமிடல் வேண்டும்.
102

க. பொ. த. உ/நி பரீட்சைக்கு அமரும் 150, 000 மாணவரில் 9000 பேர் மட்டுமே இறுதியில் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். 35,000 பேர் வரை அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றும் கூட 26,000 பேருக்கு இடவசயில்லை. இவ்வாறான கடுமையான போட்டி நிலவும் போது மலையக மாணவர்கள் பெரிய அளவில் 200-300 பேர் கூட அனுமதி பெறுவது கடினம். இன்றைய திறமை சித்தி, மாவட்ட ரீதியான அனுமதி முறை என்பன மலையக மாணவர்களுக்கு சாதகமானதாக இல்லை.
மாகாணங்கள் தோறும் இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு (தற்போது மூடப்பட்டு) வந்த போதிலும் மலையக மாணவர்கள் அவை வழங்கிய கல்விப் பயிற்சி நெறிகளில் பங்கு கொள்ளவில்லை.
இன்று மலையகத்தில் உள்ள மாகாணக் கல்லூரிகள் இணைக்கப்பட்டு சப் பிரகமுவா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கல்லூரிகளின் திப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களே இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில் வழங்கும் உயர்கல்வி வாய்ப்புகளை மலையக மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது.
வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் நடைமுறையில் தமிழர்களுக்குரிய நிறுவனங்களே, ஆனால் இன்று யாழ். பல்கலைக்கழகம் "சரிவர இயங்கவில்லை; கிழக்குப் பல்கலைக்கழகம் பெரிய அளவில் வளர்ச்சி பெறவுமில்லை. மேலும் இன்றைய போர் சூழ்நிலையில் மலையக மாணவர்கள் அனுமதி கிடைத்தாலும் அவ்வளவு தூரம் செல்லும் நிலையில் இல்லை. *၇,
களனி, யூரீ ஜயவர்த்தனபுர, ருகுணை போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளோ தமிழ் மாணவர்களோ இல்லை. இவற்றின் கல்வி வளங்களில் தமிழ் மாணவர்களுக்குப் பங்கில்லை.
ஏற்கனவே கூறியதுப் போல பேராதனை, கொழும்பும் பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகவியல், சட்டம் போன்ற
102

Page 68
துறைகளில் தமிழ் மொழிப் பயிற்சி நெறிகள் உண்டு. ஆயினும் அனுமதி பெறும் தமிழ் மாணவர்கள் குறைவு.
பாடசாலை மட்டத்தில் இன்று எவ்வாறு பாடசாலைகள் இன, மொழி வாரி அடிப்படையில் பிரிந்து இயங்குகின்றனவோ அவ்வாறே பல்கலைக்கழகக் கல்வியும் வளர்ச்சி பெறும் போக்குத் தென்படுகின்றது. இந்நிலையில் மலையக மாணவர்களுக்கு தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியில் விசேட வாய்ப்புகளை வழங்கும் என்று நம்பமுடியாது. அவ்வாறே, மலையக மான வ்ர்கள் இன்றைய நிலையில் வட, கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் துணிந்து செல்லும் நிலையில் இல்லை.
மலையக மாணவர் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ள தலைமைப்பீடங்கள் ஆராய்ந்தறிய வேண்டிய விடயங்கள்; - க. பொ. த. உ/நி பரீட்சைக்கு அமரும் மலையக மாணவர்
தொகை. - பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுவோர் தொகை. - இவர்களில் அனுமதி பெறுவோர் தொகை. - அனுமதி பெற்றும் பல்கலைக்கழகம் சேராதோர் தொகை. - அவ்வாறு சேராமல் விடுவதன் காரணங்கள். - அனுமதி பெற்றுப் பல்கலைக்கழகம் சேர்ந்து பின்னர் இடையில்
விலகியோர்.
ஆண்டுக்கு 400-500 மலையக மாணவர்களாவது பல்கலைக்கழக அனுமதி பெறும் வகையில் க. பொ. த. உlநி வகுப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படல் வேண்டும்.
மலையக மக்கள் வாழும் மாவட்டங்கள் இன்று பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் இல்லை. இம் முன்னேறிய மாவட்டங்களுக்குள்ளே மலையகத்தவர் போன்ற பின்தங்கிய பிரிவினரும் வாழ்கின்றனர். பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை அவர்களுக்கு அனுகூலமானவை அல்ல என்பது உணர்த்தப்பட வேண்டும்.
இன்றைய இலங்கைச் சிறுபான்மையினர் தமது உயர்கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பான்மையினரின் நிர்வாகத்தில் வருகின்ற தேசிய
104

பல்கலைக்கழகங்களை நிறுவி தாமே நடாத்தி வருகின்றனர். மலையகத்தவர்கள் இம்முன்னுதாரணத்தை இன்றோ நாளையோ பின்பற்ற வேண்டிய நிலையே உருவாகி வருகிறது. சிறுபான்மையினர் நிலைமைகளையும் கோரிக்கைகளையும் நாட்டில் உயர் நிர்வாகம் கருத்திற் கொண்டமையினாலேயே வடக்கிலும் கிழக்கிலும் தென்கிழக்கிலும் பல்கலைக்கழகங்களும் இணைப்புக் கல்லூரிகளும்
ஆசிரியர் கல்லூரிகளும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களும் தோன்ற
முடிந்தது.
மலையக மக்களின் கல்வி நிலை பற்றிய தரவுகள் ஆங்காங்கு சிதறிக்
கிடக்கின்றன. இவற்றை தனியாட்கள் தொகுப்பது கடினமான பணி இவர்களின் தற்போதைய கல்வி நிலை அதன் குறைபாடுகள், குறைபாடுகளின் பின்னணி, காரணங்கள், எதிர்காலத்துக்கான
நடவடிக்கைகள் என்பன பற்றி முறையாக ஆராய்வதற்கான ஒரு
பணிக்குழு ஒன்றின் நியமனம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
கி. பி. 2000, 2010 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசியக் கல்வித் தராதரங்கள் எந்நிலைமையில் இருக்கும். நாட்டின் பிறபிரிவினர் அடையவிருக்கும் கல்வி மட்டங்கள் என்ன என்பதைப் பற்றி எதிர்வு கூறி மலையக மக்கள் அத்தராதரங்களை அடையும் வகையில் இப்பணிக்குழு விதந்துரைகளைச் செய்ய வேண்டும். இந்நோக்குடன் செயற்படல் வேண்டும். கல்வியின் பின் தங்கிய பிரிவினர் எனும் அங்கீகாரத்தைப் பெற்று அவர்களுக்கு வழமையாகச் செய்யப்படும் ஒதுக்கீடுகளை விட மேலதிகமான வளஒதுக்கீட்டைப் பெறும் முயற்சி இவ்விடத்து முக்கியமானது. உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டுடன் வெளிநாட்டு உதவித் திட்டங்களை ஒன்றிணைத்து எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு வள அத்திவாரத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும்.
மலையகக் கல்வி தொடர்பான முறையான ஆவணப்படுத்தற் செயற்பாட்டினூடாக அரசாங்க உயர்மட்டத்தின் கவனத்தை மலையக மக்களின் கல்வி நிலையின் மீது ஈர்க்க வேண்டும். மாவட்ட ரீதியாக அல்லது பெருந்தோட்டங்களுக்கு அண்மையிலுள்ள க. பொ. த. சா/நி, உ/நி வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் ஆசிரிய வளம், பெளதீக வளம் என்பவற்றை வலுப்படுத்தும் முயற்சி தேவை.
105

Page 69
இவ் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேலதிக ஊக்குவிப்புகளை ஏற்பாடு செய்தல் முக்கியமானது. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களை இனங்கண்டு அவர்கள் பிற பாடசாலைகளில் மேலதிக ஊக்குவிப்புகளுடன் பகுதி நேர ஆசிரியர்களாகச் சேவையாற்ற வழிவகை செய்தல் வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புகள் வருவாய் மட்டுமன்றி
விருதுகளாகவும் பாராட்டுகளாகவும் அமையலாம்.
வகுப்பாசியர்களின் கஜ்பித்தல் தகுதிகளை மேம்படுத்துவதுடன் மேற்பார்வை மற்றும் ஆலுே:னை சேவைகள் நடைபெறல் வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு உதவும் மேலதிகத் துணைச் சாதனங்களை வழங்குதல் பயனுடையது. - பெற்றோர் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய பயனுள்ள மனப்பாங்கு வளர்ச்சிக்கு ஆவன செய்தல் வேண்டும். மாணவர்கள் இடைவிலகலைத் தவிர்க்க இது உதவும். - மாணவர்கள் வகுப்புகளில் திரும்பக் கற்கும் வீதத்தைக் குறைக்க sics - கற்பித்தல் ஒழுங்குகளைச் செய்யும் போது தனியாள் முறை கற்பித்தலுக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும். பிள்ளைகளின் கல்வித் தேர்ச்சி தொடர்ச்சியாக மதிப்பிடப்பட்டு அவ்வப்போது குறைகளை இனங்கணி டு களைந்தால் திரும்பக்கற்றலைத் தவிர்க்க முடியும்.
முடிவுரை
பாடசாலைக் கல்வி முறையிலும் பல்கலைக்கழகக் கல்வி, ஆசிரியர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என்பவற்றிலும் வளர்ந்தோரின் கல்வி மட்டம் என்னும் விடயத்திலும் மலையக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு இந்நாட்டின் பிற சமூகத்தவர்களின் கல்வித் துறை செயலாற்றங்களையும் சித்திகளையும் எட்டிப்பிடிப்பதாகும் என்று விதந்துரைக்க முடியும்.
தேசிய நோக்கில், 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு சமூகம் கல்வித் துறையில் நீண்ட காலமாக பின்தங்கிய நிலையில் இருப்பது தேசிய அபிவிருத்திக்கும் சம்பந்தப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.
106

ஆரம்பக் கல்வி, இடைநிலைக், கல்வி உயர் கல்வி, ஆசிரியர் கல்வி, எழுத்தறிவு நிலை, இவற்றினடிப்படையிலான அரசாங்க, தனியார்த்துறை வேலை வாய்ப்புகள், வெளிநாட்டுக்கல்வி, வெளிநாட்டில் உயர் அந்தஸ்து தொழில்கள் என்பவற்றில் அடிப்படையான உயர் செயலாற்றங்களைக் கொண்டு ஏனைய சமூகத்தவர் விளங்கும் இன்றைய நிலையில் மலையக சமூகத்தவர் துரித காலத்தில் மேற்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் முன்னேற்றம் பெறவேண்டிய அவசரத் தேவை உண்டு. பிற சமூகத்தவரின் இவ்வுயர் செயலாற்றங்களின் அடிப்படையில் அவர்களுடைய எதிர்கால முன்னேற்றம் மேலும் துரித கதியில் ஏற்பட வாய்ப்புண்டு. மலையக சமூக ம, அதன் தலைமைப்பீடங்கள், அரசியல் அதிகார பீடம் என்பன இ னைக் கருத்திற் கொண்டு செயலாற்றாவிடின் இச்சமூகத்திற்கும் பிற முகங்களுக்கும் இடையிலுள்ள கல்வி, பொருளாதாரம், பண்பாட்டுத் துறை சார்ந்த இடைவெளி மேலும் விரிவடைந்து மலையக மக்கள் நிரந்தரமாக பெருந்தோட்ட சமூகமாக வாழும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. l. Angela Little, Education and change in Plantations. The Case of Sri
Lanka, IDS Bulletin, Vol. 18, No.2, Sussex Institute of Development Studies, 1987.
2. Central Bank, Consumer, Finances Surveys, 1953 - 1987.
3. Department of Examinations, School Performance Indices,
G.C.E. (O/L), 1990.
4. Hedley Beare and Richard Slaughter, Education for the 21st Century,
Routledge, London, 1993. M
5. Manikkam, P.P., Tea Plantations in Crisis, Social Scientist's Associa
tion, Colombo, 1995.
6. Ministry of Education, Prog ss Report 1994 - 1995.
7. Sandarasegaram. S.S. Educational Problems of the Indian Tamil Popu
lation, I.C.E.S., Colombo, 1985.
8. Department of Examinations, School Performance Indices,
G.C.E. (AVL), 1992.
9. Sessional paper No. V. The First Report of the National Education
Commission, Colombo, l992.
10. UNESCO, Bulletin Education for all No. 31, 1990 - 1991.
il. University Grants Commission, Statistical Hand Book, 1994.
O7

Page 70

19. 11.96
இந்திய வம்சாவளியினரும் அடிப்படை உரிமைகளும்
ക്രങ്ങബബD பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைவர் சமூக விஞ்ஞானக் கல்வி பீடம்

Page 71

அடிப்படை உரிமைகளும் இந்திய வம்சாவளி மக்களும் பெ. முத்துலிங்கம்
இன்று மனித உரிமைகளைப் பற்றி பேசாத அரசியல், பொருளாதார, அரங்குகளே இல்லையெனலாம். உலக நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை மேற்கொள்ளும் போது உதவி வழங்கும் நாடுகள் குறிப்பிட்ட நாடுகள் தமது மனித உரிமையை மறுக்கின்றனவா என்பதனையறிந்து வர்த்தகத்தை மேற்கொள்ளும் படி அமெரிக்க வல்லரசு கோரி வருகின்றதுடன், சில நாடுகளுக்கெதிராக வர்த்தகத் தடையையும் மேற்கொண்டு வந்துள்ளது. 1995 மார்ச் 8-12 வரை கொபன் ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட 185 நாடுகளின் தலைவர்கள்'மனித அந்தஸ்து, மனித உரிமை, சமத்துவம், சமாதானம், ஜனநாயகம், மற்றும் மக்களின் பல்வேறு மதங்கள் விழுமியங்கள், கலாசார பின்புலங்கள் என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்ட அரசியல், பொருளாதார, ஒழுக்கம் மற்றும் ஆன்மீக நோக்கில் சமூக அபிவிருத்தியை மேற்கொள்ள அரசினதும், ஆட்சிகளினதும் தலைவர்களான நாம் கடமைப்பட்டுள்ளோம் என சூளுரைத்துள்ளனர்.
என்றுமில்லாதவாறு உலக நாடுகளின் தலைவர்கள், மனித உரிமைகளைப் பேணுவோம் என சூளுரைப்பதற்கான காரணம் யாது? யாரிடமிருந்து மனித உரிமையைப் பாதுகாக்கப் போகின்றனர்? எங்கிருந்து மனித உரிமைக்கான அச்சுறுத்தல் வருகின்றது? மறுபுறும் மனித உரிமைகள் தான் என்ன? என்பது இன்று கேள்விக் குறியாகவே எழுந்துள்ளது. மனித சமூகம் தமது வாழ்விற்கு அவசியமான உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உள்ள சுதந்திரமே அடிப்படை உரிமைகளாகும். இவ்வடிப்படைத் தேவைகளுக்கான வளங்களை சிறு பிரிவினர் தம்வசம் கொண்டிருப்பதுடன் , பெரும் பாண்மையினருக்கு அவை மறுக்கப்படுகின்றமையினால் அங்கு அடிப்படை உரிமை மறுப்பு நேரிடுகின்றது. மனித வரலாற்றினை பின்நோக்கும் போது ஆண்டான், அடிமை முறை தோன்றியதுடன் அடிப்படை உரிமை மறுப்பு தோன்றியுள்ளது. இவ்வுரிமை மறுப்பு இன்றைய சமூக அமைப்பு வரை தொடர்கின்றதுடன், இம்மறுப்பிற்கு எதிரான உரிமை மறுக்கப்பட்ட பிரிவினர் காலத்திற்கு காலம் குறிப்பிட்ட கட்டமைப்புகளின் கீழ் போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இயந்திரப் புரட்சியுடன்
111

Page 72
தோன்றிய முதலாளித்துவ முறையின் கீழ் இப்போராட்டம் வலுவடைந்தது. முதலாளித்துவ அமைப்பு முறையுடன் தோன்றிய தொழிலாளர் வர்க்கம் இப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கலாயிற்று. 20ம் நூற்றாண்டில் இப்போராட்டங்கள் பல்வேறு அபிவிருத்தியுற்ற நாடுகளில் வலுப்பெற்றது. 1930களின் பிற்பகுதிகளில் இது மிக சக்தி வாய்ந்ததாக எழுந்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நாடுகளைச் சார்ந்த தொழிலாளர் / விவசாயிகள் அடிப்படை உரிமைகள் கிடைக்கும் வகையிலான சமதர்ம ஆட்சிக் கட்டமைப்பினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது உரிமைகளை மறுக்கும் பிரிவினரை விழிக்கச் செய்தது, இதன் விளைவு இரண்டாம் உலக யுத்தத்தின் பின் உரிமைகளை மறுத்த பிரிவினர் (ஆட்சியாளர்கள்) அடிப்படை உரிமைகள் பற்றி பேச ஆரம்பித்தனர்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் உலகில் சமாதானத்தை உருவாக்கவென முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்கத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, 1930களில் தோன்றிய பொருளாதார மந்தத்தையும் பாசிசத்தையும் ஆராய்கையில் அடிப்படை உரிமைகளை மறுத்தமையே ஏனைய பிரச்சினைகளுக்கான காரணம் என்பதை அடையாளம் கண்டன. வீடு, கல்வி, சுகநலம், பாதுகாப்பான சூழல், வாழ்விற்கான தொழில், வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு என்பனவற்றை அடிப்படை மனித உரிமைகள் என வரைவிலக்கணம் செய்தது. இதனடிப்படையில் 1948 இல் மனிதவுரிமை சாசனத்தைப் பிரகடனப்படுத்தியது. அனைத்து தனி மனிதர்களும் இன, மத, மொழி, பால் மற்றும் அரசியல் வேறுபாடின்றி அனைத்து உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் அனுபவிக்க உரித்துடையோர் என வலியுறுத்தியது.
இவ்வடிப்படைத் தேவைகளை மேலும் வலியுறுத்தும் வகையில், சர்வதேச பிரகடனத்தினை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பாக இரு உடன்படிக்கைகளை 1966 இல் பிரகடனப்படுத்தியதுடன் 1976 முதல் இதனை அமுல்படுத்தும்படி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நாடுகளைக் கோரியது. இவற்றினைத் தொடர்ந்து பெண்களின் அடிப்பட்ை உரிமைகளை வலியுறுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டினை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கையை 1979 களிலும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையை 1988ல் பிரகடனப்படுத்தியது.
112

இவ்வனைத்து உடன்படிக்கைகளினூடாக பெரும்பான்மை மக்களின் சமூக பாதுகாப்பிற்கான உரிமை, சுகநலத்திற்கான உரிமை, குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை, தொழிற்சங்கத்திற்கான உரிமை, வாழ்வதற்கான உரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, கருத்துரிமை வீட்டுரிமை மற்றும் சித்திரவதை, விசாரணையின்றி தடுத்து வைத்தல் போன்றவற்றிலிருந்து உரிமை போன்றவற்றினை ஆட்சியாளர்கள் உத்தரவாதம் செய்யவேண்டும் என்பதனை ஐ. நா. சபை வலியுறுத்திய போதிலும் கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகெங்கிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட இப்பிரிவினர் போராடியே உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
இப்பின்னணியுடன் இலங்கையின் மலையக மக்களை நோக்குகையில், பிரித்தானிய காலனித்துவவாதிகள் 1818 இல் முழு நாட்டினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் இலங்கையின் சமூக பொருளாதார, அரசியல் செல்நெறிகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றத்துடன் புதிய ஒரு சமூகத்தின் குடியமர்வும் ஏற்பட்டது. முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிரித்தானியர், மலைநாட்டுப் பகுதியில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்ததுடன், அப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்கென, தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பேசும்
தொழிலாளர்களைக் கொண்டு வந்தனர்.
ஆரம்பத்தில் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கென கொண்டு வரப்பட்ட் தமிழ் தொழிலாளர்கள் அறுவடை முடிந்த பின் தமது தாயகம் திரும்புவதை வழமையாகக் கொண்டனர். 1860 களின்இறுதியில் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் பெரும்பான்மையானோர் இலங்கையின் நிரந்தரக் குடிகளாக இருக்க ஆரம்பித்தனர். 1980 கள் வரை குடிவிரவு, குடியகல்வுகள் காணப்பட்ட போதிலும் 1860க்குப் பின் பெரும்பான்மையோர் நிரந்தரமாக இருக்க ஆரம்பித்தனர்.
நிரந்தர குடிகளான இந்திய வம்சாவளி மக்கள்; நாட்டின் சுதேச மக்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டதுடன், அரை அடிமைகளாக நடத்தப்பட்டனர். இம்மக்கள் தமது தோட்டங்களை விட்டுச் செல்ல முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டனர். இத்தடுத்து வைத்தல் நாட்டின் சுதேச மக்களுடன் ஒன்றிணைய வாய்ப்பளிக்காதது மட்டுமல்லாது சுதேச மக்கள் தமது அடிப்படை உரிமைக்காக மேற்கொண்ட
13

Page 73
போராட்டங்களிலும் பங்கு கொள்ள வாய்ப்பளிக்கவில்லை. இதன் விளைவாக நாட்டின் சுதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பேற்படவில்லை. எவ்வாறாயினும் பிரித்தானிய அரசு 1931 இல் சர்வசன வாக்குரிமையை இலங்கைக்கு வழங்குகையில் அவ்வுரிமையை திட்டமிட்டு ஒதுக்கி வைத்த இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கியது. அக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் தோன்றிய அரசியல் மாற்றங்கள் மற்றும் இலங்கையினர் மத்தியில் தோன்றிய விடுதலை வேட்கை என்பன இதற்கான பின்புலமாக அமைந்தன.
சர்வசன வாக்குரிமை, இம்மக்கள் ஏனைய சமூகங்களுடன் சமநடை போடுவதற்கான கதவினைத் திறந்த போதிலும், 1948ல் அரசியல் சுதந்திரத்தைப் பெற்ற சுதேச ஆட்சியாளர்கள் அக்கதவினை மீண்டும் மூடிவிட்டனர். 1948ல் கொண்டு வரப்பட்ட பிரசாவுரிமை சட்டத்தினூடாக இக்கதவு மூடப்பட்டது.
இச்செயற்பாடு இந்திய வம்சாவளி மக்கள் 21 ஆம் நூற்றாண்டினை எய்தும் வேலையிலும் ஏனைய சமூகங்கள் அனுபவித்து வரும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. நாட்டின் குடிமையாக அங்கீகரித்தலே ஏனைய அடிப்படை உரிமைகளுக்கான அடித்தளம். இவ்வுரிமை இந்திய வம்சாவளி மக்களுக்கு மறுக்கப்பட்டது. இதன் விளைவு இன்றும் இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை உரிமையிழந்து நாட்டின் அபிவிருத்திக்கு மட்டும் தம்மை அர்ப்பணிக்கும் மனித இயந்திரங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
குடியுரிமை
1931 இல் வழங்கப்பட்ட சர்வசன வாக்குரிமை இலங்கை மக்கள் தமது அடிப்படை நலன்கள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளும் சபைக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பினை அளித்தது. தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் பெறுகையில் இந்திய வம்சாவளியினரின் சார்பாக 7 பிரதிநிதிகள் சட்ட மன்றச் சபையில் அங்கம் வகித்தனர். சுதந்திரம் வழங்கும் போது ஆட்சியிலிருந்த கட்சியான இன்றைய ஐக்கிய தேசிய கட்சி இம்மக்களின் குடியுரிமையைப் பறித்தலினூடாக இவ்வாய்ப்பினை இல்லாதொளித்தது. இதன் பின்னர் இம்மக்கள் மத்தியில் தோன்றிய எதிர்ப்புகள் மற்றும் தேசிய, சர்வதேசிய ரீதியில் ஏற்பட்ட
14

நிர்ப்பந்தங்கள் இம்மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமைப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சில சட்டங்கள் உருவாக வழி சமைத்தன. அச்சட்டங்களாவன முறையே:-
1 - இந்திய பாகிஸ்தானிய வதிவிட (பிரசாவுரிமை) சட்டம் - 1949 2 - சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அமுலாக்கல் சட்டம் - 1987 3 - நாடற்றோர் சட்டம் - 1986 4 - நாடற்றோர் சிறப்பு ஏற்பாட்டுச் சட்டம். - 1988
இவ்வனைத்துச் சட்டங்களும் இம்மக்களின் குடியுரிமைப் பிரச்சினையை முற்று முழுதாக தீர்க்கவில்லை. 1949 இல் கொண்டுவரப்பட்ட இந்திய-பாகிஸ்தானிய சட்டத்தின்படி 98 சதவீதமானோர் குடியுரிமை பெறும் வாய்ப்பினை இழந்தனர். இச்சட்டத்தின்படி இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் பிறந்தமையை பதிவுக் குறிப்பின் மூலம் ஊர்ஜிதம் செய்ய நேர்ந்தது. இதனால் கல்வியறிவற்ற இம்மக்கள் குடியுரிமையை இழக்கலாயினர். இதன் பின்னர் இம்மக்கள் மத்தியில் ஏற்பட்ட சாத்வீக போராட்டங்கள் காரணமாக 1967 இல் கொண்டுவரப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் இம்மக்களின் குடியுரிமைப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காமை ஒருபுறமிருக்க இம்மக்களின் ஒரு பகுதியினரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப வழிசமைத்தது. 1984 இல் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு அமைய இந்தியா 525,000 இந்திய வம்சாவளி (தோட்டத் தொழிலாளர்) மக்களுக்கு குடியுரிமை வழங்கவும், இலங்கை 300,000 இந்திய வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்க இணங்கியது.
இச்சட்டத்தின்படி விண்ணப்பம் கோருகையில் 6,00,000 இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக் குடியுரிமையைக் கோரி விண்ணப்பித்தனர். எவ்வாறாயினும் இச்சட்டமும் இம்மக்களின் குடியுரிமைப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்கவில்லை. இச்சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்பட்டோர் பதிவு பிரசையாகக் கருதப்பட்டமை ஒருபுறமிருக்க மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் நாடற்றோராகக் காணப்பட்டனர். 1948ல் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறலுக்கு மாற்றீட்டாக சிறிமர் 4 சாஸ்திரி
115

Page 74
ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோதிலும், மீண்டும் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டது. 1980 களில், வடக்கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை அமைப்புகளும் அவர்கள் மத்தியில் செயல்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1985ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தைகளின் போது இம்மக்களின் குடியுரிமைப் பிரச்சினையை தமது கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைத்தமை, மற்றும் சர்வதேச ரீதியாகத் தோன்றிய நிர்ப்பந்தங்களும் இப்பிரச்சினையைத் தீர்க்க அரசினை நிர்ப்பந்தித்தது. இதன் பயனாக 1986ல் நாடற்றோர் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி நாடற்றோர் எனக் கூறப்படும் மக்கள் தாம் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதை எழுத்து மூலமாக ஊர்ஜிதம் செய்தால், அவர்களுக்கு பதிவு குடியுரிமைப் பெறக்கூடிய வாய்ப்பேற்பட்டது. ஆயினும் நடைமுறைப்படுத்துவதில் தாமதம்
காட்டப்பட்டது. இதன் பின்னர் குடியுரிமை தொடர்பாக மலையக அமைப்புகள் மேற்கொண்ட சாத்வீக போராட்டம் காரணமாகவும், மற்றும் தேர்தல் இலாபம் கருதியும் 1988ன் இறுதியில் நாடற்றோர் சிறப்பு ஏற்பாடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி தாம் இந்தியாவிற்கு விண்ணப்பிக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் சத்தியக் கடதாசின்ய தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்தால் வாக்காளர் இடாப்பில் தமது பெயரினைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் நடைமுறையில் இதனைப் பெறுவதில் இந்திய வம்சாவளி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சத்தியக் கடதாசி வழங்கிய போதிலும் இந்நாட்டின் பிரசையென்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் சான்றிதழ் கோரப்படுகின்றது. 1988 நாடற்றோர் சிறப்பு ஏற்பாடு சட்டத்தின்படி குடியுரிமைச் சான்றிதழ் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்தும் பல ஆயிரக்கணக்கானோர் தம்மை வாக்காளர் அட்டவணையில் பதிவு செய்து கொள்ள முடியாதுள்ளனர். இந்தியாவிற்கு விண்ணப்பிக்காத இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை இவ்வாறிருக்க, 1967ன் சட்டத்தின்படி இந்தியாவிற்கு விண்ணப்பித்த 84000 விண்ணப்பதாரிகளின் (குடும்பங்களின்) பிரச்சினை இன்னுமொரு தீர்க்கப்படாத பூதாகரமான பிரச்சினையாக எழுந்துள்ளது.
1969ல் தம் குடும்பங்கள் சார்ப்ாக இந்தியாவிற்கு விண்ணப்பித்த குடும் பத் தலைவர்களும் தலைவிகளும் வயோதிபத்தை
116

அடைந்துள்ளதுடன் (பலர் இறந்துவிட்டனர்) அவரது பிள்ளைகளில் பெரும்பான்மையோர் திருமணம் முடித்து தனிக் குடும்பங்களாகவும், இளம் பராயத்தினர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரிவினர் இலங்கையைத் தமது தாயகமாகக் கருதுவதுடன், இந்தியாவிற்கு செல்ல விருப்பமில்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது பெற்றோர்கள் இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பித்துள்ளமையினால், தற்போது இந்திய வம்சாவளி மக்கள் அனுபவித்து வரும் ஆகக் குறைந்த உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாதிருக்கின்றனர். இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பித்த குடும்பத்தினைச் சார்ந்த இளைஞர் அல்லது யுவதி ஒருவர் குறிப்பிட்ட அரச தொழிலுக்கு விண்ணப்பிக்கக்கூடிய தகைமைகளைக் கொண்டிருந்த போதும் அவரால் விண்ணப்பிக்க முடியாதுள்ளது. பல்கலைக்கழகத்திற் கற்கக் கூடிய தகைமையைக் கொண்டிருந்த போதிலும் அவர்களால் அதனை பெறமுடியாதிருக்கின்றது.
அடிப்படை மனித உரிமைகளுள் மிக முக்கியமான குடியுரிமை மறுக்கப்பட்டமை மற்றும் குடியுரிமை கிடைத்த போதிலும் அவை இரண்டாம் தரமாகக் கணிக்கப்படுகின்றமை ஏனைய அனைத்து அடிப்படை உரிமைகளிலிருந்தும் புறக்கணிப்பதற்கு ஏதுவாக அமைந்தது.
கல்வி
அரையடிமைகளாக தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி மக்களுக்கு வெளிச்சமற்ற பத்தடி காம்பிராக்களை மட்டுமே பிரித்தானியர்கள் வழங்கினர். அவர்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றினை வழங்கவில்லை. அடிப்படை சுகாதார வசதியற்ற இப்பிரிவினர் நோய்வாய்ப்பட்டு இறக்க ஆரம்பித்ததுடன் இம்மக்கள் சார்பாக இந்தியத் தலைவர்கள் குரல் எழுப்பியமையினால் 1890களில் இம்மக்களுக்கு சில சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கினர். 1901ல் குடிசன புள்ளிவிபர திணைக் களத்தின் அத்தியட்சகராகவிருந்த சேர். பொன்னம்பலம் அருணாசலம் 8600 சிறுவர்களில் 6500 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வசதியினைக் கொண்டுள்ளனர் எனும் தகவலை வெளியிட்ட பின் இலங்கைத் தலைவர்கள் சிறுவர் கல்வித் தொடர்பாக குரலெழுப்பலாயினர்.
-. س.117

Page 75
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தோட்ட சிறார்களுக்கும் கல்வி வசதி வழங்கும் படி கோரிக்கை எழுப்பினர். அதேவேளை பிரித்தானிய பாராளுமன்றவாதிகளும் குரல் எழுப்பியதுடன், சில மனித நேய அமைப்புகளும் குரல் எழுப்பின. இதன் விளைவாக தோட்டத்துறைக் கல்வி வசதியை ஆராயும்படி முன்னாள் பொதுநல இயக்குனர் என். எம். பரோஸ் அவர்களை பிரித்தானிய அரசு கோரியது. இவர் தமது ஆய்வில் தோட்டத்துறைக்கான கல்வி வசதியின் தேவையை முன்மொழிந்தார். இதன் பின்னர் 1905ல் நியமிக்கப்பட்ட வேஸ் கமிஷன் தோட்டத்துறை சிறார் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், இக் கல்விச் சேவையை தேசிய கல்வித்துறையுடன் இணைக்கக்கூடாது எனக் கூறியதுடன், தோட்ட நிர்வாகத்தின் கீழேயே இதனை மேற்கொள்ள வேண்டும் என விதந்துரைத்தது. தோட்ட நிர்வாகம் ஆரம்பக் கல்விக்கான வசதியை தோட்டங்களில் ஏற்படுத்திக் கொடுத்தது. லயன் அறையொன்றில் பாடசாலைகள் அமைக்கப்பட்டதுடன் ஒரு ஆசிரியர் கடமையிலிருத்தப்பட்டார்.
ஒரு ஆசிரியர் முறை இன்றும் தொடரப்படுவதுடன் 1975ல் தோட்டங்கள் அரசினால் சுவீகரிக்கப்பட்டப் பின் தோட்டப் பாடசாலைகள் தேசிய கல்விச் சேவையின் கீழ் இணைக்கப்பட்டன. இவ்விணைப்பின் போது பல தோட்டப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் கல்வித் திணைக்களத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்த போதிலும் ஏனைய சமூகத்தினரின் கல்வி வளர்ச்சியுடன் சமநடை போடுவதற்கான வாய்ப்பு இம்மக்களுக்கு கிடைக்கவில்லை. தோட்டக் கல்விச் சேவை தேசியக் கல்விச் சேவையுடன் இணைக்கப்பட்ட போதிலும் இந்திய வம்சாவளி மக்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் வகையில் எவ்வித சிறப்புத் திட்டத்தினையும் அரசு மேற்கொள்ளவில்லை. போதிய அளவு ஆசிரியர்களையும், உபகரணங்களையும் வழங்கவில்லை. இதனால் ஏனைய சமூகங்களுக்கும் இச் சமூகத்திற்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி விசாலமடைந்தது. கடந்த சில வருடங்களாக சுவீடன் அரசு பல தோட்டப் பாடசாலைகளுக்குக் கட்டிடங்களை வழங்கிய போதிலும், போதிய அளவு பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும், தேவையான உபகரணங்களையும் அரசு வழங்கவில்லை. தற்போது நடைமுறையிலுள்ள தரவுகளை நோக்கும் போது மலையகக் கல்வியின் பால் காட்டப்படும் பாரபட்சத்தை நன்கு அடையாளம் காணலாம்.
118

மக்கள் அரச diffects 963) - 93 விகிதாசாரம் சேவைகள் சேவைகள் சேவைகள்
% % % % சிங்களவர் 73.9 9.2 87.7 88.1 இலங்கைத் தமிழர் 2.7 5.9 7. 8.2 இந்தியத் தமிழர் 5.5 O. . 0.2 0.5 முஸ்லிம் 70 2.0 4.6 2.2 ஏனையோர் O.9 0.8 0.4 O
இந்திய வம்சாவளி மக்கள் செறிவாக வாழும் நுவரெலிய மாவட்டத்தில் 187, 280 சிங்கள மக்கள் வாழ்வதுடன் 220 சிங்கள மொழி பாடசாலைகள் காணப்படுகின்றன. இதேவேளை, 317,000 இந்திய வம்சாவளி மக்கள் வாழ்வதுடன் 258 தமிழ் பாடசாலைகளே காணப்படுகின்றன. மேலும் 38, 1 ஏ. பி தர சிங்களப் பாடசாலைகள் (விஞ்ஞானம் கற்பிக்கும் பாடசாலைகள்) காணப்படுவதுடன் 09, 1 ஏ. பி தர தமிழ் பாடசாலைகளே காணப்படுகின்றன. இப்பின்னடைவுகளே உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர் தொகையிலும் பிரதிபலித்துள்ளன. V−
மாணவர்/ஆசிரியர் விகிதாசாரம் - 1991
மாவட்டம் தமிழ் பாடசாலை முஸ்லிம் பாடசாலை சிங்கள பாடசாலை
களுத்துரை 475 320 235 கண்டி 342 23.1 211 மாத்தளை 29.6 25.0 44 நுவரெலியா 48.0 17.2 19.0 காலி 48.9 19.1 21.4 மாத்தறை 68.7 15.8 20. பதுளை 37.4 23.5 18.5 மொனறாகலை 48.5 444 28.1 இரத்தினபுரி 39.7 23.3 23.7 கேகாலை 31.9 19.5 N 18.0
ஆதாரம் - பாடசாலை புள்ளி விபரம் - 1991
மலையக கல்வித் தரத்தை உயர்த்த, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முன்வந்த போதிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக
119

Page 76
பாரபட்சம் காட்டப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில் கல்வி கல்லூரி ஒன்றினை கொட்டகலையில் அமைக்க ஜி. டி. இஸட் (ஜேர்மன்) நிறுவனம் முன்வைந்ததுடன், அரசு அதற்கு இடமளித்தது. இப்பயிற்சிக் கலாசாலை நிர்மாண வேலைகள் முடிவடைந்ததுடன், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் என்ற போர்வையில் இப்பயிற்சி கலாசாலையில் சிங்கள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் கொட்டகலைக் கல்வி கல்லூரி எனப் பெயரிடப்பட்ட இக்கல்லூரியின் பெயரை பூரீபாதக் கல்வி கல்லூரி என பெயர் மாற்றம் செய்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய வம்சாவளி மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வியுரிமை மீறப்பட்டுள்ளது.
வதிவிடம் - வீடு
இம்மக்களின் இன்னுமொரு அடிப்படை பிரச்சினையான வதிவிடப் பிரச்சினையை நோக்கின் பிரித்தானியரால் அமைக்கப்பட்ட ஆறடி அகலத்தையும் பத்து அடி நீளத்தையும் கொண்ட வெளிச்சம் புகமுடியாத லயக் காம்பிராக்களிலேயே 98 சதவீத இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐந்து முதல் பத்து குடும்ப உறுப்பினர்கள் இவ்வரிசை நிரல் அறைகளில் (லயக் காம்பிராக்களில்) வாழ்ந்து வருவதுடன் சில தோட்டங்களில் இரண்டுக்கும் அதிகமான குடும்பங்கள் ஒரு அறையில் வாழ்க்கை நடாத்தி வருகின்றனர். சுமார் 75 வருடங்களுக்கு முன் பிரித்தானியரால் கட்டப்பட்ட லயக் காம்பிராக்களிலேயே பெரும்பாலான மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வெறுமனே உடல் உழைப்பிற்கான மனித இயந்திரங்களை உற்பத்தி செய்பவர்களாக இவர்களை பிரித்தானியர் கருதியமையே இவ்வாறான வதிவிட வசதியை ஏற்படுத்தியமைக்கான காரணமாகும். பிரித்தானியரின் பின் இச்செயற்பாடு தொடர்ந்து தேசிய அரசாங்கங்களிலும் பேணப்பட்டது.
கடந்த இரு தசாப்தங்களாக பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் நாட்டின் வறிய மக்களுக்காக அரசினால் மேற்கொள்ளப்பட்டதுடன் ஏனைய திட்டங்களிற் போல் இதிலும் இந்திய வம்சாவளி மக்கள் ஒதுக்கப்பட்டனர். வழமை போல் நிர்ப்பந்தம் காரணமாக 1984ல் முன்னெடுக்கப்பட்ட பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இம்மக்களுக்கான துணைத் திட்டமொன்றை கடந்த அரசாங்கம் முன் வைத்தது. இத்திட்டம் 1990ல் அமுல்படுத்தப்பட்டதுடன் 1990க்கும் 1995க்கும் இடையில் 5000 தோட்ட
120

வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 242 தோட்ட வீடுகளே இத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்டது. அதேவேளை இக்கால இடைவெளிக்குள் 300000 கிராம வீடுகள் நிர்மானிக்க திட்டமிடப்பட்டதுடன் 117208 வீடுகள் 1995ண் இறுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின் இம்மக்களின் சமூகநல சேவைகளைப் பேணுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூகநல நிதியத்தின் அறிக்கையின் படி சுமார் 820,000 வதிவிட தொழிலாளர்கள் 191000 லயன் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 25% வீடுகளே திருப்திகரமானவை எனக் கருதக்கூடியதாக இருப்பதாகவும் 4% வீடுகள் எவ்வித திருத்த வேலைகளும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 70% தொழிலாளர் குடும்பங்கள் போதிய வசதியற்ற வீடுகளில் வர்ழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கணிப்பீடு 100 ஏக்கருக்கும் குறைவான தனியார்த் தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டக் குடியிருப்பு சீரமைப்புத் திட்டங்கள்
தோட்டங்கள் அரசமயமாக்குவதற்கு முன் தோட்டக் குடியிருப்பு சீர்திருத்தங்கள் தோட்ட முகாமைத்துவத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. தோட்டங்கள் அரசமயமாக்கப்பட்ட பின்பும், இது தொடரப்பட்டது. 1985 முதல் 1992 வரையிலான காலப்பகுதிக்குள், இரு தோட்ட முகாமைத்துவ கூட்டுத்தாபனங்களின் கீழ் இயங்கின. சமூக அபிவிருத்தி அலகுகள், தோட்ட வீடுகளுக்கு மீள் கூரையிடுவதற்காக 295, 5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின் உருவாக்கப்பட்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமூகநல நிதியம் 150 மில்லியன் ரூபாவை சுயவீடமைப்பிற்காக ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 15 வருடக் காலப்பகுதியில், 15% வட்டியுடன், மீள்செலுத்தக்கூடிய கடனாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கென வழங்குகின்றது. இக்கடனுக்குப் பிணையாக தொழிலாளர்களின் சேமலாப நிதியை வைக்க வேண்டும்.
இப்பிணை வைத்தல் கிராம, மற்றும் நகர வீடமைப்புத் திட்டங்களின் போது கோரப்படவில்லை என்பதுடன், மத்திய வங்கியில்
121

Page 77
poạnqi@@ $ĝ-lossosoɛɛ)
6ț9'6ţz | ÇLI ‘69 || $39,67 || 990'Z9 | 89L'19 || L8Z'Lo 000‘009冯奥喉ung 9:79 £Z寸8L6ț7Z00 000's硕T卸召u? 寸二‘L99.L699" |LOZ‘Z | ZZț7'IOLO" |000:SZ项羽召电un COL“ 19 | 89 L’6899°8696°Ø. I || 1760's I | Vț7€‘SI .000‘9 ||& 교통 경 un 98 lo |ț78Z ,96Z| 0699 |0000‘Ş!ყ9%ტდ9 000% 990'6Z , | €Zț7'#769Z‘L | 08 Io9 || L08'SLLƐS000'09硕瑜归99 ç#0'0ç | | | | 6'gz || 899" | 9 || || #8‘89 | 6Zw'0€ | 96ţ'SZ000‘00€& 공통 명 :않 --· 통改造&F)心的) *병83 ფn??uთტ | t7661966 | 2 || Z66||| 66 s966" | mtiņosios m-iqsol și-inç şiesosfē ... - - -966 I - 066 s
-porțiriqi@@ §§ 1090ïssos)·편n「T니m城gna8 điş (ş so 'n gI - Q-TI@ |#$@Ųssig, họvios-ış9 mự$9
122

齿的Go可—rariņossifi)
zv6z81069“Zzwɛ'69 | £LS'97 | 900'LE I SCO'Lo | 665'00Z冯翊城ung Zoz0969寸00 •0硕瑜949) ț7Lț7"#7Şț7寸E6ZOZ“ įÇ00" | | 09] ‘I8ZIĢ ĶĒ Ģs · e -ion 099'LĘLZS60 ['0]| Z8‘L08|| ‘6[9] ‘9 - || Z98‘9Ķ ĶĒ Ģs son Ç8|* |0寸8Z96Z069 || || 91 · " | 0용%GD평 응용Og €LI ‘ZZ01 Z08ț7'#7 | 89ț7“Çyɛyɛ | LZ9's || vs6oz颂明g图 80Z'Lİ I809' 169 #7'ɛZ || |#79" | 9ț76L“ZZ || || LO‘ț77 || 999'9 i硕f助哈密
冯奥喉um@S66||Þ661 - || $661Z66||| 66 I066||역「니% 源miser통
possīvo —ızırıņmmoo@#fffï - qı-ı Zışựmee)
123

Page 78
வைப்புச் செய்யப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, தேசிய வீடமைப்பு அதிகாரச் சபை, அரச ஈட்டு வங்கி என்பவற்றிற்கு வட்டிக் கடனாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகநலச்சேவை
ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சியை அளவிடுவதற்கான சரியான அளவீட்டுத் தரவு சிசு மரணம் விகிதாசாரம் எனக் கூறப்படுகின்றது. ஒரு சமூகத்தின் சமூகநலச் சேவைகள், பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி என்பன போதியளவு காணப்படின் அங்கு சிசு மரணத்திற்கான வாய்ப்பு குறைவு எனக் கருதப்படுகிறது. சார்க் நாடுகளைப் பொருத்தமட்டில் ஆகக் குறைந்த சிசு மரண விகிதாசாரத்தை இலங்கையே கொண்டுள்ளது. 1992ல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரப்படி 1000 பிரசவத்திற்கு 18, சிசு இறப்புக்களை இலங்கை கொண்டுள்ளது. அதேவேளை, பிரசவ மரணம் (1980-1992) 80 ஆகக் காணப்பட்டுள்ளது. ஆனால் மலையகத்தைப் பொறுத்தமட்டில் இது இரு மடங்காகக் காணப்படுகின்றது. ஏனைய சேவைகளைப் போல் சுகாதாரச் சேவையும் இம்மக்களுக்கென தனியாகவே நடாத்தப்படுகின்றது. பிரித்தானியரால் பின்பற்றப்பட்ட இம்முறை அரச மயமாக்கப்பட்ட பின்பும் தொடரப்பட்டது. 1875ல் பிரித்தானியரால் அமுல்படுத்தப்பட்ட மெடிக்கல் வோன்ட் ஓர்டினன்ஸ் மற்றும் டிசீஸ் (நோய்த் தொழிலாளர்கள்) ஓர்டினன்ஸ் சட்டங்களே சில திருத்தங்களுடன் பின்பற்றப்படுகின்றது. தோட்டங்கள் அரசமயமாக்கப்பட்ட பின் இவ்விரு சட்டங்களையும் மீள்பரிசீலனை செய்யும்படி 1976ல் அரசு குழுவினை நியமித்தது. (இக்காலகட்டத்தில் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து காணிப் பங்கீட்டின் காரணமாக வெளியேற்றப்பட்டதுடன், பெரும்பான்மையானோர் கடும் நோய்க்குள்ளானார்கள். இதனால் சர்வதேச ரீதியாக இம்மக்களின் பால் அனுதாப அலை எழுந்ததுடன், அரசும் நிர்ப்பந்தத்திற்குள்ளானது.) இக்குழுவில் இரு தொழிற்சங்கங்களின் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) பிாதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் தோட்டங்களுக்கான சுகநலச் சேவையை தனியான பிரிவாக மேற்கொள்ளும் படி சிபாரிசு செய்தது. அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் தோட்டங்களுக்கு விஜயம் செய்தல், பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ சேவையாளர்களையும் மற்றும், வைத்தியசாலைகள் மருந்தகங்கள் போன்றவைகளை உருவாக்கல்
124

என்பனவற்றினை விதந்துரைத்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தோட்டங்களை மருத்துவ மாவட்டங்களாகப் பிரிக்கவேண்டும் என விதந்துரைத்தது. இக்குழுவின் விதந்துரைப்பின் படி ஒரு சில வைத்தியசாலைகள், மருந்தகங்கள், மற்றும் மலசலகூடம், போன்றவற்றினை சில தோட்டங்களில் நிறுவிய போதிலும், மருத்துவ மாவட்டங்களாக தோட்டங்கள் பிரிக்கப்படவில்லை. அதேவேளை அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்களின் விஜயமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும் நிலவும் சுகாதார வசதிகளை நோக்கின், தேசிய ரீதியில் காணப்படும் சேவைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சேவையையே இந்திய வம்சாவளி மக்கள் அனுபவித்து வருகின்றனர். 1996ல் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 3,068 பேருக்கு பயிற்றப்பட்ட வைத்திய அதிகாரி வீதம், 5,904 வைத்தியர்கள் (உதவி வைத்தியர்கள் உட்பட) நாட்டில் சேவையாற்றுவதுடன், 510 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. சுகநலச் சேவைகளுக்காக 10:925 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் பத்து இலட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வாழும் பிரதேசத்திற்கும் ஒரு பயிற்றப்பட்ட வைத்தியர் கூட நியமிக்கப்படவில்லை. 20, பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1991ல் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின் படி 44265 குடும்பங்களுக்கு முறையே
தோட்ட வைத்தியசாலைகள் up 20 பிரசவ விடுதிகள் 113 மருந்தகங்கள் - 25, பதியப்பட்ட வைத்தியர்கள் - - 20 உதவி வைத்தியர்கள் 04
தோட்ட வைத்திய உதவியாளர்கள் - 18 முதலிய சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (1991
வரை ஜனவசம கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.)
125

Page 79
தோட்டங்களில் காணப்படும் பிரசவ விடுதிகள், மருந்தகங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றின் தரத்தைப் பற்றி குறிப்பிடுவது என்றால், பெரும் பாண்மையான பிரசவ விடுதிகள், மருந்தகங்கள், வைத்தியசாலைகளில் தேவையான மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் காணப்படுவதில்லை. சில மருந்தகங்களில் பயிற்றப்படாத ஊழியர்களே மருந்தகர்களாக கடமையாற்றுகின்றனர்.
வேலைவாய்ப்பு:
தோட்டத்துறை அரசமயமாக்கப்படும் வரை, தோட்டத்துறை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு வேலைவாய்ப்பு பாரிய பிரச்சனையாக எழவில்லை. பெரும்பான்மையோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தமையினாலும் மற்றும் தோட்டத்துறைக்கு தேவையான தொழிலாளர்கள் தோட்டத்திற்குள்ளேயே உள்வாங்கப்பட்டமையினால் 1975ம் ஆண்டு வரை இவ்வுரிமை மீறப்படவில்லை. ஆயினும் 1975ல் தோட்டங்கள் அரசமயமாக்கப்பட்டவுடன் இவ்வுரிமையும் மீறப்பட்டது. தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கு தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளித்தமையினூடாக வேலைவாய்ப்பு உரிமை குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காணிச் சுவீகரிப்பு படிப்படியாக வேலையாப்பினை குறைத்தது. ஆயினும் இதற்கு மாற்றீடாக வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசத்துறைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. நிரந்தரமற்ற குறைவேதன வேலைவாய்ப்பினையை இம்மக்கள் நம்பியிருக்க வேணி டியுள்ளது. அணி மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய வேலைவாய்ப்புகளின் போது ஐந்து சத ஒதுக்கீடு இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் இது பின்பற்றப்படுவதில்லை. மலையக ஆசிரியர் நியமனத்தில் மட்டுமே இவ்வொதுக்கீடு ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வடிப்படை உரிமை மறுப்புகளுடன் ஏனைய அடிப்படை உரிமைகளான மொழி, பாதுகாப்பு, கலாசாரம் போன்றவற்றினை நோக்குவோமாயின் இவற்றிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. மொழி
வடகிழக்கு வாழ் தமிழ் மக்களைப் போல் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். வடகிழக்கு
126

மக்க்ளின் போராட்டத்தின் காரணமாக தமிழ்மொழி அரசகரும மொழியாக அங்கீகரித்த போதிலும் இந்திய வம்சாவளி மக்கள் அவ்வுரிமையை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்மொழியை அரசகரும மொழியாக அங்கீகரிக்கும் படி கொண்டு வரப்பட்ட பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தம், வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமே தமிழ்மொழி அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. வடகிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ்மொழி அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. இதன் மூலம் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு மொழி உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமக்குத் தெரியாத மொழி மூலமே உத்தியோகபூர்வ தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பாதுகாப்பு
ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரசினால் உத்தரவாதம் செய்யப்படல் வேண்டுமெனக் கூறப்படுகின்றது. இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு என்றும் அச்சுறுத்தலுக்குட்பட்டதாகவே இருக்கின்றது. ஒரு மக்கள் கூட்டம் செறிவாக வாழ்தலே அம்மக்களுக்கான இயற்கை பாதுகாப்பாகும். இந்திய வம்சாவளி மக்கள் மலையக பகுதிகளில் செறிவாக வாழ்கின்றமை இவர்களுக்கு இயற்கைப் பாதுகாப்பாக அமைந்தது. ஆனால் இம்மக்களின் பாதுகாப்பு தொடர்ச்சியான திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்ற அனைத்து இன வன்முறைகளின் போது இந்திய வம்சாவளி மிக்கள் தாக்கப்பட்டதுடன் இவர்களுக்கான பாதுகாப்பு இதுநாள் வரை உத்தரவாதம் செய்யப்படவில்லை. மேலும் பாதுகாப்பு நிமித்தம் மேற்கொள்ளப்படும் தேடுதல் களின் போது இம் மக்கள் பெரிதும் இன்னலுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
இவற்றுடன், இம்மக்கள் தேசிய அடையாள அட்டைகள் பெறுவதில் பெரிதும் பாரபட்சம் காட்டப்படுவதும் பெரும்பான்மையோர் தேசிய அடையாள அட்டைகள் இல்லாது இருக்கின்றனர். தேசிய அடையாள அட்டைகள் இல்லாத இளைஞர், யுவதிகள் தாம் வாழும் தோட்டத்துக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். இது இவர்களது வாழ் நிலைக்கான அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
8.
127

Page 80
கலாசாரம்
மிக அணி மைக் காலத்தில் இம் மக்களின் கலாசார மேம்பாட்டிற்கானக கலாசார அமைச்சின் ஊடாக சில கலைவிழாக்களை அரசு நடத்தியபோதும், இம்மக்களின் செல்லரித்துச் செல்லும் பாரம்பரிய கலை, கலாசாரத்தை பேணுவதற்காக எவ்வித முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக ஏனைய இனங்களின் கலை, கலாசாரத்தினைப் பேணுவதற்காக பல்வேறு கலாசார நிலையங்களையும் அரசு நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக நோக்கில், இந்திய வம்சாவளி மக்களின் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் கடந்த பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டுள்ளமை கண்கூடாகும். கடந்த ஒன்றரை தசாப்த வரலாற்றில் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவையனைத்தும் நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு இணையானவையல்ல. இவற்றினைக் கருத்திற் கொள்ளும் போது இந்திய வம்சாவளி மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கோரி போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது.
சான்றாதாரங்கள்
1. A History of the Up-country Tamil People S. Nadesan - 1993.
2. Basic Rights - Suzanne Williams Oxfam UK/1.
3. The Human Rights - Hand Book Kathryn English, Adam Stapleton.
4. Interdoc. No. 1. Third Edition December - 1995.
5
. Lanka's Alternatives. Susil Siriwardane Lanka Guardian October 1st
996, Vol. 19-No. 1.
6. சனநாயகமும் மனித உரிமைகளும் - நீலன் திருச்செல்வம்.
128

மலையகத் தமிழரின் அரசியலும் சமுக அசைவியக்கமும்: வி. ரி. தமிழ்மாறன்
aff
இலங்கையில் மலையகத் தமிழரின் இருப்பு அல்லது வருகை என்பது இந்தியா குடியேற்ற நாடொன்றாகப் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்ததன் பக்கவிளைவு ஒன்றே என்பதை ஞாபகப்படுத்தி இக்கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். குடியேற்றவாதம் அல்லது குடியேற்ற ஆட்சி என்பதற்கான காரணம் அல்லது அவசியம் பொருளாதாரஞ் சார்ந்ததாக இருந்திருக்கலாம். இதனால் ஐரோப்பியர் நாடுபிடி சண்டைகளை நடாத்தினர். குடியேற்ற நாடுகளை ஸ்தாபித்ததன் பின்னர் அவற்றின் கேந்திர முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும் பொருளாதார நலன்களைக் கவனிப்பதற்கும் பெருந்தொகையான அதேவேளையில் செலவு குறைந்ததுமான மனிதவளம்/சக்தி இந்தக் குடியேற்ற ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. இந்திய மக்களின் சமூக அசைவியக்கத்தின் ஆரம்பமும் குடியேற்ற ஆட்சியுடன் ஆரம்பித்தது என்று கூறுவதற்கான காரணங்களையே குறிப்பிடுகின்றேன். இந்தச் சமூக அசைவியக்கம் என்பது இந்திய மக்களைப் பொறுத்தவரையில் 19 ஆம் நூற்றாண்டின் துரதிர்ஷ்டவசமானதும் தவிர்க்க முடியாததுமான விளைவாக அமைந்துவிட்டது.
இந்த அசைவியக்கத்தின் உந்துதலால் பூமிப்பத்தில் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டிருந்த மக்கள் குழுவின் ஒரு பகுதியினரே இந்தச் சின்னஞ்சிறிய தீவின் மத்திய பகுதியில் விந்து விழுந்த- மலையகத் தமிழர் என்று இன்று நாம் சுட்டுகின்ற இந்திய வம்சாவளி மக்களாவர். ஆக, மலையகத் தமிழரின் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் அவற்றின் பிறப்பிடம் குடியேற்றவாதமே என்பதை உளங்கொளல் வேண்டும். இது, பின்னாட்களில் மலையகத் தமிழரின் சமூக அசைவியக்கத்தை நன்கு புரிந்து கொள்ளவும் உதவும். மலிவான கூலிக்காகவும் பொருளாதாரச் கரண்டலுக்காகவும் ஏகாதிபத்தியத்தினால் இழுத்து வரப்பட்ட மக்களின் தலைவிதி அவர்களது கைகளினால் எழுதப்பட முடியாதவாறு சூழ்நிலைகள் அமைந்துவிட்டன. 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் அடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப்படலாயிற்று. ஆயினும் ஏறக்குறைய அதே காலப்பகுதியில் இந்திய மக்கள் உபகண்டத்திற்கு உள்ளேயும்
120

Page 81
வெளியேயும் எழுதா அடிமைகளாக இழுத்துவரப்பட்டமை தற்செயலான ஒரு நிகழ்வென்று தட்டிக்கழித்துவிட முடியாது.
1830களில் (Indenture) வேலை ஒப்பந்தம் மூலமாகவே முதலில் இந்தியத் தமிழரின் வருகை இங்கு ஆரம்பமாகிற்று எனலாம். 1880 - 90 களில் இங்ங்னம் ஒப்பந்தத்தின் கீழ் அழைத்துவரப்பட்டோர் தொகை உச்சக் கட்டத்திலிருந்து இந்த முறைமை 1920இல் முற்றாக அழிக்கப்பட்டதெனலாம். இதற்கென 1916இல் Abolition of Indenture Actஆக்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் வளர்ந்த இன்னொரு குடிபெயர்வு முறைதான் கங்காணி முறைமை என்பது. கங்காணி என அழைக்கப்படும் தலைமைத் தொழிலாளி மூலம் பிரித்தானிய (இந்திய) அரசாங்கமானது தொழில் மேற்பார்வையை மட்டுமன்றி ஆட்திரட்டுவதற்கான முதன்மை முகவர் நிலையங்களையும் நடாத்திற்று எனலாம். இவர்கள் தத்தமது சொந்த மாவட்டங்களிலிருந்தே ஆட்களைத் திரட்ட முடிந்தது. இந்த முறைமை தென்னிந்தியாவில் மட்டுமே செயற்பட்டதாகையினால் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் அதிகமான அளவில் தமிழர்கள் வந்து சேர்ந்தனர். இதுவும் 1939 ஆம் ஆண்டில் சட்டத்தின் மூலமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.
:ங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் இருப்பினை வறுமனே தொழிலாளர் பிரச்சனையாக அன்றி, அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணியிலான ஓர் இனத்தின் பிரச்சனையாக அணுகுவதையே எனது ஆய்வு இலக்காகக் கொண்டுள்ளது. எனவே தான் - குடியேற்றவாதம் தோற்றுவித்த ஓர் இனப்பிரச்சனையாக இதனை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான காரணங்களைப் பின்னாலே தரமுயல்வேன்.
இலங்கை அரசியற் சமுகமும் மலையகத் தமிழரும்
1981 ஆம் ஆண்டு இறுதியாக நடாத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் இனவாரியான விதாசாரம் பின்வருமாறு அமைகின்றது.
சிங்களவர் 74.0%
இலங்கைத் தமிழர் * 12.7%
இலங்கை முஸ்லீம்கள் 7.0%
130

இந்தியத் தமிழர் 5.5%
பறங்கியர் 0.3% மலே 0.3% ஏனையோர் O.2%
ஆயினும் இந்தக் கணக்கெடுப்பின் புள்ளிவிபரம் சரியானதா என்பது பற்றி இன்று கேள்வியெழுப்பப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டிலிருந்து வம்சாவளி பிரசாவுரிமை பெற்றவர்களுள் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் தம்மை இலங்கைத் தமிழர் என்றே பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த மக்கள் தொகையை ஏறக்குறைய 8% அதாவது 10 இலட்சத்திற்கு மேலென மதிப்பிட்டுள்ளது.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த இந்திய வம்சாவளி மக்களுக்குப் பாவிக்கப்பட்ட உத்தியோகபூர்வமான அடையாளப் பதம் இந்தியத் தமிழர் என்பதாகும். முதன்முதலில் 1911 இல் குடிசன மதிப்பின்போது இந்த வகுப்பரக்கஞ் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழர்களில் இருந்து இந்தியத் தமிழர்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் வதிவிடம், கலாசாரம், சமூகபொருளாதாரம், குடியியல் அந்தஸ்து (சிறிது காலத்துக்கேனும்) என்பவற்றால் வேறுபட்டவர்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குடியியல், அரசியல் உரிமைகளற்று ஐந்து தசாப்தங்கள் வாழ்ந்தவர்கள் என்றளவில் ஏனைய பிரஜைகளுடன் ஒப்பிடுகையில் செயற்கை முறையான இ ைவெளியொன்று உருவாக்கப்பட்டது. 1981 இன் குடிசன மதிப்பீட்டின் படி ஏறக்குறைய 78% மக்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் குடியேறியுள்ளனர். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் கூட 77% - அந்த மாகாண மொத்தச் சனத்தொகையில் - இவர்கள் வாழ்ந்துள்ளனர். அங்ங்னமே, மலையகத் தமிழரில் 80% மானோர் தொழிலாளிகளாக உள்ளனர். இது இந்த நாட்டில் 33% விவசாயத் தொழிலாளர் என்ற வகைக்குள் அடங்குகின்றது.
இந்தத் தரவுகளின் பின்னணியிலேயே மலையகத் தமிழரின் அரசியல், சமூக அசைவியக்கம் பற்றி ஆராய வேண்டியுள்ளது. 1945 இல் சோல்பரி ஆணைக்குழு சமர்ப்பித்த அரசியலமைப்புச் சீர்திருத்த அறிக்கையில் சர்ச்சைக்குரிய பிரசாவுரிமை, குடிவரவு என்பன தொடர்பில் எவ்வித யோசனைகளும் இருக்கவில்லை. பதிலுக்கு, இப்பிரச்சனைகள் இலங்கை அரசாங்கத்தினால், இந்திய அரசாங்கத்தினுடனான ஆலோசனையின் பேரில்
... 13.

Page 82
தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதில் கவனத்துக்குரியது யாதெனில் இப் பிரச்சனைகள் இருநாடுகளுக்குமுரிய அதாவது, இருதரப்புப் பிரச்சனையென்பது சோல்பரி அறிக்கையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலேதான் நேரு சேனாநாயக்க பேச்சுவார்த்தைகள் 1947 இலேயே ஆரம்பித்து விட்டன.
பிரசாவுரிமைச் சட்டம் 1948 இல் கொண்டுவரப்பட்டபோது மலையகச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆப்புவைக்கப்பட்டது என்பது பின்னாட்களிலேயே தெரியவந்தது. இச்சட்டத்திலுள்ள மிக நுணுக்கமான ஆனால் இனவாத அணுகுமுறை அநாகரீகமாக இருந்தபோதும் பிரித்தானிய அரசுக்கு - பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தும் அவசியத்தில் இது கண்ணுக்கெட்டவில்லை. சர்வதேச மனித உரிமை விதிகளை அப்பட்டமாக மீறுவதான ஒரு தொடரான விதிகள் இச்சட்டத்தைப் பின்பற்றி வரத்தொடங்கின. இவ்விடத்து இச்சட்டம் பற்றி ஒரு தெளிவுரையை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன். பிரசாவுரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் இதனால் புரியவரும்.
ஒரு நாட்டு மக்களுடைய குடியியல் அரசியல் உரிமைகளே அந்த நாட்டுக்கு முறையான அரசமைப்பை வழங்குவதற்கான அத்திவாரமாகும். மறுவிதத்தில் கூறுவதாயின், மக்களின் இந்த உரிமைகளின் உச்சப்பயன்பாடே ஒரு நாட்டுக்குத் தேவையான ஆட்சி முறையைத் தீர்மானிப்பதாக இருக்கும். அங்ஙனமே, மறுபுறத்தில், ஒரு நாட்டின் அழிவுப்பாதையும் அந்நாட்டு மக்களின் குடியியல், அரசியல் உரிமைகள் மீதான கைவைப்பின் மூலமே ஆரம்பமாக முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இன, மத, மொழி, கலாசார வேறுபாடுகளைக் கொண்ட நாடொன்றின் அரசானது சுதந்திரம் பெறுகின்றபோது அது ஆரம்பிக்க வேண்டிய முதற் பணி - ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்புவதாகும். The Primary Task of Nation Building. Iš 605 u 5 litų. GuugůųšES அவசியமானது - மக்களிடையேயான பிளவுகளை இயன்றளவுக்கு மேவி நிற்பதான பொதுவான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை முன்னெடுத்துச் செல்வதாகும். இது ஒரு தொடரான நடபடியாகும் (It is a Continuing Process).
ஆயின், இலங்கை சுதந்திரம் பெற்றபோது Nation Building என்பதற்குப் பதிலாக - Nation Dividing என்பதே ஆரம்பமாகிற்று.
132

அதாவது மக்களின் பிளவுகளுக்குக் காரணமான நிகழ்வுகளைக் கண்டறிந்து அந்த வேற்றுமைகளை முதன்மைப்படுத்துவதாகும். இதன் மூலம் நீங்கள்-நாங்கள் என்று வேறுபாடுகள் கூர்மையடையும். அங்ஙனம் கூர்மையடையும் போது மக்களின் குடியியல், அரசியல் உரிமைகளின் சுதந்திரமான பிரயோகமும் பயன்பாடும் பாதிப்புக்குள்ளாகும். ஒரு பிரிவு மக்கள் - ஜனநாயக நடபடிமுறையில் பங்கெடுப்பது பகுதியளவில் அல்லது முற்றாக மட்டுப்படுத்தப்படும். இதன் விளைவு மோசமான வன்முறைக் கிளர்ச்சியாக இருக்கும். அல்லது நாடு பிரிவினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு ஒரு பிரிவு மக்களின் பங்குபற்றல் ஜனநாயக உரிமை பறிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உரிமையாக இங்நுனம் பறித்து - நாட்டில் அன்றாடம் ஒவ்வொரு வித கிளர்ச்சியை அல்லது எதிர்ப்புணர்வைச் சந்திப்பதை விட ஒரேயடியாக ஆப்புவைப்பதான செயலைச் செய்வதனால் அதற்கு வழிசெய்யக்கூடியது ஒரேயொரு வகையான நியதிச்சட்டமாகவே இருக்க முடியும். அதுதான் பிரசாவுரிமைச் சட்டம். ஒரு பிரசையின் எல்லாவித உரிமைகளுக்கும் அடிப்படையாக அமைவது இந்த பிரசாவுரிமையேயாகும். பிரசாவுரிமை மறுப்பு என்பது ஜனநாயக அரசில் பங்குபற்றுவதை மறுப்பதாக அமையும்.
இலங்கையில் Nation Building ஆரம்பித்த விதமே அலாதியானதாக இல்லையா? பிரசாவுரிமைச் சட்டமானது யார் இலங்கையில் பிரசை என்பதை வரைவிலக்கணப்படுத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1948 இல் இருந்த தமிழர்கள் எவரும்ே தாங்கள் இச்சட்டத்தின்கீழ் இலங்கைப் பிரசைகள்ே என்பதை நியமிக்க முடியாமல் இருந்தது. இந்தச் சட்டத்தின்படி இருவிதத்தில் பிரசாவுரிமை பெறப்படக்கூடியதாக இருந்தது. வம்சாவழி மூலமாகவும் பதிவின் மூலமும் இது பெறப்பட் முடிந்தது. இச்சட்டத்தின் ஏற்பாடுகள் திட்டமிட்டும் மிக இறுக்கமாகவும் ஆக்கப்பட்டிருந்தன. தன்னுடைய தந்தையும் பாட்டனாரும் இலங்கையில் பிறந்ததை நிரூபிக்கும் ஒருவரே இலங்கை பிரசாவுரிமையைப் பெறமுடியும். சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1948. ஒருவரின் தந்தையும் பாட்டனாரும் 1897க்கு முன்பு இலங்கையில் பிறந்திருந்தால் அவர்களின் பிறப்பு பதியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பிறப்புப் பதிவுக் கட்டளைச் சட்டம் முதன் முதலில் 1895 இல் தான் இங்கு நிறைவேற்றப்பட்டது. அது 1897 இலேயே நடைமுறைக்கு வந்தது. ஆகவே எந்த ஒருவரும் 1948 இல்
133

Page 83
பிரசாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது - அவரது பாட்டனார் 1897க்கு பிறந்தவராகவே இருந்திருப்பார். ஆனால் அதில் பதிவை நிரூபிக்க முடியாது. இதன் விளைவாகப் பேரப்பிள்ளை பிரசாவுரிமையை இழக்கின்றது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து Koddakkan Pillai V. Mudanayake என்ற வழக்கு பிரிவுக் கவுன்சில் வரை நடைபெற்றதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த பிரிவுக் கவுன்சில் - ஓர் அரசாங்கம் தன்னுடைய பிரசைகள் யார் என்பதை வரையறுப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றது என்றும் இது இறைமையின் பாற்பட்ட விடயம் என்றும் நீதிமன்றம் கூறியது. அதே காலகட்டத்தில் கனடாவும் இத்தகைய சட்டத்தை ஆக்கியிருந்தமையைப் பிரிவுக் கவுன்சில் சுட்டிக் காட்டியது. ஆனால் இங்கே மறக்கப்பட்ட விடயம் ஒன்றுள்ளது. இது பாரபட்சமான சட்டம் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைகள் சட்டத்தின் கீழும் ஆவணங்களுடன் படிக்கும் போது நிறுவக் கூடியதாக இருந்தது. பொதுவிலே சட்டம் பிரசாவுரிமைக்கான நியதிகளைக் கூறினாலும் அது அதிகாரிகளினால் பாரபட்சமாக அமுல்படுத்தப்படும் சாத்தியத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுக்கவில்லை. சட்டம் அதனுடைய வெளிவடிவத்திலே நியாயமானதாகத் தெரிந்தாலும் அதனுடைய உள்ளடக்கம் செயற்படுத்தப்படும் போது பாரபட்சமாக ஒரு பிரிவைப் பாதிக்கும் என்பதையிட்டு நீதிமன்றம் மிக அவதானமாக இருந்திருக்க வேண்டும். W
இப்படிப் பார்த்தால் கொடக்கன்பிள்ளை வழக்குத் தீர்ப்பு தவறானது. இதனை இன்று அரசியலமைப்பு நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இத்தீர்ப்பினால் வாக்குரிமை பறிபோயிற்று. நாடற்றவர்கள் என்ற நிலை உருவாகியது. மக்கள் வர்த்தகப் பொருளைப் போல பண்டமாற்று ரீதியில் பரிமாறப்பட்டார்கள். இது வரலாறு தரும் பாடம்.
மலையக சமூகம்-சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோலத் தலைதுாக்க முயற்சிக்கின்றது. பிரசாவுரிமை வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும் அதையொட்டிய பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. 1964 ஆம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் பல்வேறு வகையான இந்தியத் தமிழர் என்ற வகுப்புகளை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் 1981 உடன் செயற்பாடற்றதாகியது. 1985 இல் 84,000
134.

பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டியவராக இருந்தனர். 1986 இல் இதுபற்றிய தீர்வு எட்டப்பட்டபோது தொகை 94,000 ஆக மாறிற்று.
இறுதியாக, 1988 இல் கொண்டு வரப்பட்ட பிரசாவுரிமைச் சட்டம் 'இது விடயத்தில் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது. இச்சட்டம் எண்ணிக்கை எதனையும் குறிப்பிடாததைக் கவனிக்க வேண்டும். 1988 இல் 168 இலட்சம் பேர் இந்தியா செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். இதில் அரைவாசிப் பேர் இந்தியப் பிரசாவுரிமைப் பெற்றவர்கள். மீதிப்பேர் பிரசாவுரிமை பெறவேண்டியவர்கள். ஆனால் இவர்கள் இந்தியா செல்வதற்கு விரும்பவில்லை. இவர்களுக்கும் இலங்கை பிரசாவுரிமை வழங்கப்பட்டாக வேண்டும். இந்தப் பிரச்சனை இன்னும் செயற்பாட்டு வடிவில் தீர்க்கப்பட வேண்டும்.
நாங்களும் நாளையும்
மேலே குறிப்பிட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுத்த இந்த நாட்டின் பிரசை என்று தலைநிமிரும் மலையக இளைஞனுக்குக் காத்திருக்கும் நாளை எப்படிப்பட்டது? பிறப்புச் சட்டத்தின் சாட்சிப் பத்திரத்திற்காகவும் அடையாள அட்டைக்காகவும் கடவுச்சீட்டுக்காகவுமே காலத்தைக் கழிக்கப் போகின்றானா? கவ்வாத்து மரங்களின் கணக்கெடுப்புக்காகவும் அரைநாள் பேருக்காகவும் தோட்டத்துரையோடு மோதுவதற்குத் தனக்குக் கிடைக்கும் லீடர் பதவியே போதுமானதென்று நம்பி திருப்தியடைந்துவிடப் போகின்றானா. தோட்டத்துக்குள்ளேயே சுற்றிச்சுற்றி, தந்தையும், பேரனும், பாட்டனும் உரமாகிப்போன அந்த நிலத்துக்கே தனது எதிர்காலத்தையும் பசளையாக்கிடப் போகின்றானா?.
இல்லையேல், பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பிலே விரும்பிய இடம் சென்று விரும்பிய தொழில் புரிந்து நாமார்க்குக் குடியல்லோம், நமனையஞ்சோம், நரகத்திலிடப்படோம் என்று தன்விதியை தானே நிர்ணயிக்கப் போகின்றானா? ஏறக்குறைய 50 வருட அடிமை வாழ்வின் எச்ச சொச் சங்களைத் துடைத்தெறிவதற்கு அவன் கங்ங்னம் கட்டவேண்டுமாயின் தன்னைச் சுற்றி தானே இட்டிருக்கும் சுவர்களையும் தரைகளையும் அவன் தகர்த்தாக வேண்டும். இதன் முதற்படி-மலையக சமுதாயத்தின் இன்றைய பரிணாமம் நன்குணரப்படுவதாகவும்
135

Page 84
லயத்துக்குள்ளேதான் எல்லாம் என்ற தளையை முதலில் அகற்றவேண்டும். வேலையிலிருந்து இடைநிறுத்தி விடுவார்கள், பெயர் பதியமாட்டார்கள் என்ற பயப்பிராந்திகளுக்கு இனியும் இடமிருக்கக்கூடாது இதெல்லாம் பேச்சளவில் நன்றாகத் தானிருக்கின்றது! செயற்படுத்துவது எப்படி என்ற வினாவை இப்போது நீங்கள் என்னை நோக்கித் தொடுக்கத் தயாராகியுள்ளீர்கள்.
உண்மைதான்! செயல்வடிவம் மிகக் கடினமே. ஆனால் முதலடியெடுத்து வைக்காமல் பயணங்கள் ஆரம்பமாவதில்லை. நீரிலிறங்காமல் நீச்சலில் தேற முடியாது. ஆகவே அடியெடுத்து வைத்தேயாக வேண்டும். அதற்குரிய தருணம் என்ன? இன்றைய காலகட்டந்தான் அந்தத் தருணம் என்று நான் கூறுகிறேன். மலையக சிறார்களின் கல்வியிலிருந்துதான் இந்த முதலடியும் தளையகற்றலும் ஆரம்பமாக வேண்டும். வீட்டுக்கொருவனை நாட்டுக்குத் தாருங்கள் என்ற கோஷம் இந்த நாட்டின் வடக்கேயும் கேட்கிறது. தெற்கேயும் ஒலிக்கின்றது. ஆனால் நான் உங்களைக் கேட்பதெல்லாம் வீட்டுக்கொருப் பிள்ளையையாவது கல்விக்குத் தாருங்கள் என்பதை மட்டுமே. இன்றைய சமூக அசைவியக்கத்தின் பிரதிபலிப்பு நாளைய எமது எதிர்கால சுபீட்சம். அதே நோக்கு நகர்ந்திட கல்வியெனும் கண்ணைத் திறப்போம்.
பொருளாதார அசைவியக்கம் இன்று வேறு பரிமாணங்களில் வந்து மலையக இளைஞர் சமுதாயத்தைக் கவர்ந்திழுக்கின்றது. மத்திய கிழக்கிலே வேலையென்ற முகமூடிக் கவர்ச்சி எம்மை இழுக்கின்றது. ஆடைத் தொழிற்சாலையே அழகான வேலைத்தளம் என்று எசமான மாற்றத்துக்கு விசுவாசமாகிவிடப் பார்க்கின்றோம். குடிசைக் கைத்தொழிலாக கசிப்பும் கஞ்சாவும் எமக்குள்ளே புதியதொரு உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கி விடப் பார்க்கின்றது. எட்டடி லயத்து இருட்டு வாழ்க்கைக்கு பதிலாக இரும்புத் திரைகளை இழுத்து மூடும் முயற்சிகளிது. கொழும்பிலே தேநீர் கடைக்கும் வீடுகளிலே கூலி வேலைக்குமாக மலையகச் சிறார்கள் சென்ற காலம் மாறிவிட்டது என்றாலும் புதிய விலங்குகளைப் பூட்டிக்கொள்ளப் பார்க்கின்றோமே!
மலையக இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள்-அது கிளப்பிய புழுதி இன்னுமே அடங்கவில்லை. இருக்கின்ற குடியிருப்புக்கள் சொந்தமாகும் என்றார்கள். அது பொய்யா - பழங்கனவா என்பது இன்னும்
136

சாத்தியமாகவில்லை. வீட்டுக்கு வரும் தபால்களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு தோட்டத்திலே தபாற்சேவைகள் கிடையாது. பிரசவ வேதனையால் துடிக்கும் பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு ஆகக்குறைந்தது 3-4 கி. மீ. செல்ல தோட்டத்து லொறியை விட வேறு வாகனம் இல்லை. லொறியைப் பெறுவதற்கு துண்டுக் காகிதம் பெற்று வரமுன்னர் பிரசவங்கள் நடந்து முடிந்துள்ளன. சில வேளைகளில் பிரசவித்தவள் - தவித்து - சவமாகவும் போயிருக்கிறாள். ஆனால் அன்றும் இன்றும் அதே லொறிதான் தோட்டத்து ஆஸ்பத்திரிக்கே என்றால் அஸ்பிரினைத் தவிர அடுத்த மருந்து தெரியாது. துண்டு தருவார் மருந்து பெற துட்டுத் தருவார் யார்? உணர்ச்சிகரமான இந்த வினாக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் விடையைத் தேடுவதில் இன்றைய மலையக இளைஞனுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள்.
தொழிற்சங்கத்தையே நம்பியிருப்பதா? தோட்டத் தொழிலாளி என்ற முத்திரையைத் தொடர்ந்தும் சுமப்பதா? மலையகம் என்ற எமது பாரம்பரிய பிரதேசம் பறிபோகாமலிருப்பதை எப்படி உத்தரவாதப்படுத்துவது? தோட்டத் தொழிலைக் கைவிட்டால் எமது மண் பறிபோகாதா? இவையெல்லாம் எம்மை அலைக்கழிக்கும் வினாக்கள். இதற்கும் மேலாக இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை இனியும் நாம் தொடர்ந்து பேண வேண்டுமா? இந்த அடையாளத்தினால் எமக்கு வரும் நன்மைகள் யாவை? நஷடங்கள் யாவை? இவற்றை எடைபோட்டுப் பார்ப்பின் எது அவசியம். இது முக்கியமானதொரு அசைவியக்க வினாவாகும். இதுபற்றிய ஆரேக்கியமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். என்னுடைய தனிப்பட்டக் கருத்தாக - அடையாளத்தைப் பேணுவது மிக அவசியம் என்று மட்டும் கூறி வைக்க
விரும்புகின்றேன்.
அரசியல் அசைவியக்கத்தைப் பொறுத்தளவிலும் நாம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனை ஒன்றுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியத் தமிழர்களின் ஒருங்கிணைவு முதன் முதலில் - வர்த்தக நலன் களைப் பாதுகாப்பதற்காகவும் அதன் மீதான போட்டியின் காரணத்தினாலுமே ஏற்பட்டது. நேரு கூட இலங்கை வந்த போது அவரால் முன்னுணரப்பட்டது-ஏதாவது ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றே தவிர அது எந்த நலனைப் பாதுகாப்பதற்காக என்பது பற்றியல்ல இந்த வகையில் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நலன் என்பது - ஒன்று
137

Page 85
திரள்வதற்கான போதிய காரணியாகத் திகழவில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தோடு பிரசாவுரிமை பறிபோகுமே - தொழிலாளர் அசைவியக்கம் ஆரம்பித்தது. இதனுடைய விளைவே தொழிற்சங்கமாகும். ஆக, இந்தியத் தமிழரின் பரிமாணம் இங்கே புதியதொரு வடிவம் பெற்றது. இது இரண்டாவது கட்டம். அதாவது இலங்கை-இந்திய காங்கிரஸ் என்பது போய் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வந்தது. அதிலிருந்தே ஏனைய சங்கங்கள் கிளைத் தன. ஆனால் இன்று மூன்றாவது கட்டம் தோன்றியிருக்கின்றதா? தொழிற்சங்கத் தலைமையிலிருந்து வேறுபட்ட அரசியற் தலைமையொன்று தேவையா? அல்லது தொழிற்சங்க தலைமையே அரசியல் தலைமையாக தொடர்ந்தும் செயற்படுவதா? இதில் மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
உசாத்துணை நூல்கள்
l. Sahadevan, P., India and Overseas Indians - The Case of Sri Lanka,
Kalinga Publications Delhi, 1995.
2. Thondaman, S., My Life and Times: An Autobiography, Vol. 1,
Colombo, The CWC, 1987.
3. Goldman, Robert and Wilson A.J., eds., From Independence to Statehood: Managing Ethnic Conflict in Five Asian and African States, New York; St. Martin's Press, 1984.
4. Sabaratnam, T., Out of Bondase: The Thondaman Story; Colombo,
The Sri Lanka - Indian Community Council. 1990.
5. Suryanarayan, V, ed., Rehabilitation of Sri Lankan Repatriates; A critical Appraisal, Monograph -7, Madras, University of Madras, 1986.
6. Navaratnam, V. The Fall and Rise of the Tamil Nation, Kanthalasam,
Madras, 1991
7. Kodakkanpillai V. Mudanayake (1951) 8. Kodeswaran V. Attorney General (1972 NLR 337) 9. Leelawathie V. Minister of Defence and External Affairs (1962).
138

மலையகத் தமிழரின் சமுகப் படையாக்கம் ஏ. எஸ். சந்திர போஸ் சமூகக் கல்விப் பிரிவு, மானிடவியல் சமூகவிஞ்ஞானங்கள் பீடம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட
மலையகத் தமிழரின் சமுகப் படையாக்கம்
கடந்த பத்தாண்டுகளில் மலையகத் தமிழரின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி பல்வேறு ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் அநேகமானவை சமூகவியல் சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டனவாகும். இந்த ஆய்வு நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள விடயங்களை மையமாகக் கொண்டு ஆழமான சமூகவியல் ஆய்வுகள் மேற்கொள்ள முடியும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். "மலையகத் தமிழரின் சமூகப்படையாக்கம்’ என்ற விடயம் சமகால ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டே நோக்கப்படுகின்றது. இக்கட்டுரையின் முதல் பாகத் தில் சமூகப் படையாக்கம் பற்றிய எணி ணக் கருக்கள் விளக்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் பாகத்தில் இவ்விளக்கத்தினை பின்னணியாகக் கொண்டு மலையகத் தமிழர்கள் பற்றிய கண்ணோட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சமுகப்படையாக்கம்
Social Stratification 5 gip gssais) ë G6 Tp Gp TLGJ சமூகப்படையாக்கம் என்று நோக்கப்படுகின்றது. சமூகப் படையாக்கம் இரண்டு வகையானதாகும். ஒன்று சாதி முறைமை (Caste System) Lisbgopug5 seps, 6 (5ul (gp60p60L.D (Social Class System).
சாதி முறைமையையும், சமூக வகுப்பு முறைமையையும் உள்ளடக்கமாகக் கொண்ட சமூகப்படையாக்கம் சமூகத்தில் நிரந்தரமான ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது என்பது சமூகவியல் அறிஞர்களின் கருத்தாகும். சமூகக் கட்டமைப்புப் பற்றிய அணுகுமுறையானது சமூக உறவுகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றன என்பதையும் சமூகத்தின் வளர்ச்சிக்கு இவை எவ்வளவில் துணை போகின்றன என்பது பற்றிய விளக்கத்திற்கும் அவசியமாகின்றது. ஒரு சமூகத்தில் பல்வேறு வடிவங்களிலான
139

Page 86
கட்டமைப்புகளை அவதானிக்க முடியும். இவை வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்கள் போன்றவற்றினை பொருத்தும் அமையும் அதுபற்றிய சமூகவியல் அறிஞர்களின் விளக்கங்கள் சிலவற்றினை நோக்குவது பொருத்தமுடையதாக இருக்கும்.
எல்லா சமூகங்களிலும் தனிமனித வேறுபாடுகளும் அவர்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளும் இயல்பான சமூக விழுமியங்களாக அமைந்துள்ளன. ஒரு சமூகத்தில் பெரும்பாலானோர் வறுமையாளர்களாகக் காணப்படும் அதேவேளை குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் வசதி படைத்தவர்களாகவும் காணப்படுவது பொதுவான அம்சமாக அவதானிக்க முடிகின்றது. ஆனாலும் வசதிபடைத்த செல்வந்தர்கள் யாவரும் சமூகத்தில் அதிகாரம் பெற்றவர்களாகவும் உயர்ந்த அந்தஸ்து உடையவர்களாகவும் வாழ்கின்றனர் என்று கருதுவதற்கில்லை. இவை மற்றுமொரு வகையில் உருவாக்கப்படுகின்றன.
சமூகத்தில் வாழும் தனிமனிதர்களை அவதானிக்கும் போது அவர்கள் யாவரும் சமமான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிப்பவர்களாக இல்லை. இருப்பினும் ஒவ்வொரு தனிமனிதனும் தமது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களின் நடமாட்டம், உடலியல் அமைப்பு, அவர்களுடைய தொடர்புகள் போன்றவற்றினை நோட்டமிட்டு மதிப்பீடு செய்யும் ஆற்றலை வழக்கத்தில் கொண்டவர்களாகக் காணப்படுவர். இவ்வாறு ஒருவரையொருவர் ஒப்பிட்டு வேறுபடுத்தி உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பிரிவுகளையும் ஏற்படுத்திக் கொள்வர். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அளவிட்டு நோக்கும் கருவிகள் அவர்கள் வாழ்கின்ற சூழலுக்கேற்ப மாறுபடும். ஒரு சமூகத்தில் மதிப்பளிக்கப்படும் விடயங்கள் மற்றொரு சமூத்தில் மாறுபட்டுக் காணப்படும். வேற்றுமைகளுடன் காணப்படும் சமூகப்படையாக்கமானது செல்வவுடமை (அதிகாரம்) கெளரவம் (சமூக அந்தஸ்து). சலுகைகள் போன்றவற்றிலேயே தங்கியிருக்கும்.
சமூகத்தில் வேறுபட்ட படையாக்கம் தோன்றியமைக்கான காரணங்களையும் சமூகவியல் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். சமூக வரலாற்றில் 18 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நிலவிய படையாக்கம் கடவுளினால் சிருஷ்டிக்கப்பட்டதாகவும், இயற்கையின் நியதி என்றும் கருதப்பட்டது. கிரேக்கதத்துவ ஞானிகளான அரிஸ்டோட்டில், பிளேட்டோ
140

போன்றோர் 'சமூகத்தில் காணப்படும் வேற்றுமைகள் பிரிவினாலானவையாகும் என்று கருதினர்."
18 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் அறிவியல் சார்ந்த வளர்ச்சியும் பழமையான சிந்தனைகளை நிராகரிக்கச் செய்தன. உற்பத்தி அதிகரிப்பும், கைத்தொழில் புரட்சி காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகத்தில் புதிய குறிப்பாக சொத்துக்களை சுவீகரித்துக் கொண்ட வகுப்பினர் ஒரு புதிய சமூகப்பிரிவினராக உருவாகினர். ஏனையோர்கள் உழைப்பை மட்டும் நல்கும் அடிமைகளைக் கொண்ட சமூகப்பிரிவினராக்கப்பட்டனர். இக்காலப்பகுதியில் ’மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான்’ (RouSSeau) போன்ற சிந்தனைகள் வளர்ச்சிப் பெற்று சமூகத்தில் புதிய பரிமாணம் தோன்றலாயிற்று.
உற்பத்திக் காரணிகளை தம்வசம் கொண்டிருக்கும் முதலாளிகள் ஒரு சமூகப் பிரிவினராகவும் வளங்கள் எதுவுமின்றி உழைப்பினை மட்டுமே நல்கும் வகுப்பினர் தொழிலாளர் பிரிவினர்களாக இரண்டு வகுப்புகள் சமூகத்தில் காணப்படும். இவ்வேற்றுமையானது தனிப்பட்ட சொத்துடைமைகளுக்கு எதிராக தொழிலாளர் வகுப்பினர் கிளர்ந்தெழுந்து ஒழிக்கப்படும்போது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடும் என்பது "கால் மாக்சின்’ (Karl Marx)விளக்கமாகும். சமூகத்திலுள்ள தனிநபர்கள் பல்வேறு தொழில்களைப் புரியும் போது தொழிலைப் பின்னணியாகக் கொண்ட பிரிவுகள் உருவாகும் என்பது டர்கிம்பின் (Durkheim) கருத்தாகும். மார்க்ஸ் வெபர் (Max Weber) சமூகப்படையாக்கத்தில் usoufus TGT (51.60s, pairgo suggiri. (Multidimensional View) 36 வகுப்பு (பொருளாதாரம்) அந்தஸ்து (கெளரவம்) மற்றும் கட்சி (அரசியலதிகாரம்) என்ற மூன்று பிரிவுகளில் சமூகப்படையாக்கத்தினை விபரித்தார். ஒரு வைத்திய நிபுணர் செல்வம், கெளரவம், அதிகாரம் என்பவற்றில் உயர்ந்த நிலையிலுள்ளவராக மதிப்பளிக்கப்படும் போது ஒரு குற்றவாளி பொருளாதார ரீதியாக மதிப்பளிக்கப்பட்டவனாகவே காணப்படுவான்.
5 6f 60T s Typ 5, síluu só 9 góING (W. G. Runci man) சமூகப்படையாக்கமானது வருமானம், அதிகாரம், தொழில், செல்வம், கல்வியடைவுகள் மற்றும் சொத்துக்களை அடையும் நோக்கற்
141

Page 87
காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நோக்கப்பட வேண்டும் என்று
குறிப்பிடுகின்றனர்.
சமூகவியல் அறிஞர்களின் விளக்கங்களின்படி சமூகப்படையாக்கம் என்பது மனிதர்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்டதெனவும் இவை அரசியல் பொருளாதார சமூகக் காரணிகளின் பின்னணியில் வழுப்பெற்றதெனவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
சமூகப்படையாக்கத்தில் பின்வரும் நான்கு குணாம்சங்களைக் காணலாம்.
1. வேறுபட்ட அடுக்குகள் காணப்படுகின்றமை.
2. ஒரு அடுக் கிலும் பொதுவான அம்சங்கள்
காணப்படுகின்றமை.
3. அடுக்குகளிடையே படிவரிசை காணப்படுதல்.
4. செல்வம், அதிகாரம், சமூக அந்தஸ்து போன்ற
படிவரிசைகளில் சமனற்ற பரம்பல் காணப்படுதல்.
ஒரு சமூகத்தில் உயர்வகுப்பினர், மத்தியதர வகுப்பினர், தாழ்ந்த வகுப்பினர், உயர் சாதியினர், தாழ்ந்த சாதியினர், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் போன்று காணப்படும் பிரிவுகளை ஒரு சமூகத்தில் படையாக்கத்தில் காணப்படும் அடுக்குகளாகக் குறிப்பிடலாம்.
அடுக்குகளிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் தனித்தனியான அடுக்கில் பொதுவான அம்சங்கள் ஒத்த மாதிரிக்காணப்படும். வருமானம், தொழில், வாழும் முறை, கல்வித் தகைமை, தனக்கிருக்கின்ற அதிகாரம் என்பன ஒத்தத்தன்மையில் காணப்படுகின்றமையே குறிப்பிடுவதாகும். உதாரணமாக துரைமார்கள், ஒரு தோட்டத்தில் உள்ள தோட்டத்துரையும் மற்றுமொரு தோட்டத்திலுள்ள தோட்டத்துரையும் வருமானம், தொழில் போன்றவற்றில் சமமான நிலையில் காணப்படுவர். இவர்கள் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்கின்ற முறையும், தொழிலின் போது அணிகின்ற உடையும் பெருமளவில் ஒத்த இயல்பினதாகும். இது போன்ற
142

நடவடிக்கையே பொதுவான அம்சங்கள் காணப்படும் அடுக்கு என்று வகைப்படுத்துகின்றன.
சமூகத்தில் நிலைத்துள்ள உயர்மட்ட தாழ்மட்டம் என்பன அடுக்குகளிடையேயான படிவரிசை என்ற வகைக்குட்படுத்தி நோக்கலாம்.
சமூகத்தில் சில காரியங்களுக்கு மதிப்பளிக்கப்படும் அதே விடயம் ஏனைய சமூகத்தில் வழங்கப்படுவதில்லை. உதாரணமாக ஆசிய நாடுகளில் சாதி அமைப்புகளுக்கு வழங்கப்படும் மதிப்பு அமெரிக்க சமூகத்தில் இல்லை.
சமூகப்படையாக்கத்தில் காணப்படும் மற்றுமொரு இயல்பு என்னவெனில் மதிப்பளிக்கப்படும் விடயங்கள் சமூகங்களிடையே வேறுபடுகின்றமையுமாகும். சமூகவியலாளர்கள் செல்வம், அதிகாரம், கெளரவம் என்பனவே சமூகத்தில் மதிப்பு அளிக்கப்படும் அம்சங்கள் என்று கருதுகின்றனர். அதாவது மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் செல்வந்தரா அல்லது அதிகாரத்துடனா இருக்க வேண்டும்? அல்லது கெளரவமான பிரசையாக இருக்க வேண்டுமா? என்பது சமூகங்களிடையே வேறுபடுகின்றன.
சமூகப் படையாக்கம் பற்றிய சமூகவியலாளர்களின் அணுகுமுறைகள் இலங்கைச் சமூகத்திற்கும் பொருத்தமுடையவாறு பிரயோகப்படுத்திப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை செல்வ நிலையில் உயர்ந்த வசதி படைத்தவர்கள் ஒரு அடுக்கிலும் இவற்றினைக் கொண்டிராத எளியவர்கள் மற்றொரு அடுக்கிலும் நோக்கப்பட்டிருக்கின்றனர். இதைவிட தொழில், கல்வி வளர்ச்சி, வாழ்க்கை முறை என்பனவும் சமூகப்படையாக்கத்தினை இவ்விரண்டு அடுக்கில் இருந்தும் வேறுபடுத்தி ஆராயப்படுகின்றன. மேலும் சாதி முறைமையையும், சமூக வகுப்பு முறைமையையும் பின்னணியாகக் கொண்ட ஆய்வுகளும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன. (Samudra Dissanayake - 1996)
இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் இந்திய வம்சாவளித் தமிழர்களே இக்கட்டுரையில் 'மலையகத் தமிழர் என்றவாறு நோக்கப்படுகின்றனர். மலையகத் தமிழர்கள் இந்நாட்டில் 150
143

Page 88
வருடங்களுக்கும் மீேலாக வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்களுடைய சமூக வழக்குகளும், நடைமுறைகளும் தென்னிந்தியாவில் இவர்களது மூதாதையினர் எந்த கிராமங்களில் வாழ்ந்தார்களோ, எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனரோ அதற்கு ஏற்ற முறையில் தான் காணப்படுகின்றனர். (Veluppillai CV-1970) மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டவர்களாக இருப்பதுடன், தொழில், தொழிற்சங்கம், சிங்கள மக்களுடனான தொடர்புகள்" மற்றும் இவர்களைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் சிந்தனைப் போக்குகளும் இவர்களை தனிமைப் படுத்தப்பட்ட ஒரு இனக் குழுவாக அடையாளப்படுத்திக் காட்டுகின்றது.
இவ்வாறு மலையகத் தமிழர்கள் தனி இனக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்டாலும், இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களின் புலப்பெயர்வினை அவதானிப்பதற்கு பிரயோகப்படுத்தும் சமூகப் படையாக்க அணுகுமுறைமைகளை இவர்களுக்கும் பொருத்தமுடையதாக சாதி முறைமையும் , சமூக வகுப்பு முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கலாம்.
மலையகத் தமிழரின் சாதி முறைமையை அடிப்படையாகக் கொண்டு ஆர். ஜெயராமன் - 1975 விரிவான ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றார். அப்போதிருந்த நிலைமைகள் சமகாலத்தில் மாற்றமடைந்துள்ளன. அவரது அவதானிப்பில் எடுத்துக்காட்டும் சாதி அமைப்பிற்கும் தோட்டத் தொழில் முறைமைக்கும் இடையே தொடர்பு காணப்பட்டது. உயர்சாதியினர் கங்காணி போன்ற உயர் தொழில் புரிபவர்களாகவும் இருந்தனர். இதைவிடத் தோட்டங்களில் கோவில் பரிபாலனம், தொழிங்சங்கத் தலைமை (தோட்டக் கமிட்டி, மாவட்டக் கமிட்டித் தலைவர்) போன்றனவும் உயர் சாதியினரின் தலைமையின் கீழேயே காணப்பட்டன. இவர்களது பிள்ளைகள் நகரப் பாடசாலைகளில் கல்வி பயில்பவர்களாகவும், அவ்வாறே படித்தவர்கள் மாலைநேர வகுப்புகளை நடத்துபவர்களாகவும், பெட்டிக்கடை, வியாபாரம் செய்பவர்களாகவும், அடிக்கடி தென்னிந்தியாவிலுள்ள தமது உறவினர்களிடம் சென்று வருபவர்களாகவும் இருந்த இவர்களது தொடர்புகளே தோட்டங்களில் மேலோங்கிய நடவடிக்கைகளாகவும் காணப்பட்டன.
144

இத்தகைய செயற்பாடு, கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றிக் கொண்ட ஆதி திராவிட பிரிவினரிடமும் காணப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களின் வாராந்த செயற்பாடுகளில் பங்குகொள்ள வேண்டியவர்களாக இருந்தமை மற்றும் நகரங்களில் இருந்த கிறிஸ்தவ பாடசாலைகளில் இவர்களது பிள்ளைகளுக்கு அனுமதி கிடைத்தமை போன்றன இவர்களை ஏனையோரிலும் வேறுபடுத்திக் காட்டின. மேற்குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கில் சாதிப் பிரிவில் கீழ்த் தட்டிலிருந்த ஏனையோர் பங்கு கொண்டவர்களாக இல்லை. இவர்கள் பெருமளவில் தோட்ட வேலைகளில் மட்டுமே கூடுதலான கரிசனை உள்ளவர்களாக இருந்தனர்.
நூற்றாண்டு காலமாக இருந்து வந்த இந்த வழமைகளானது கீழடுக்கில் உள்ளவர்களை பின்னடையச் செய்திருந்தது என்பதை மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுகளில் சுட்டிக் காட்ட்ப்பட்டன. இருப்பினும், 1950 களின் பின்னர் இந்த நிலைமையில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பிரஜாவுரிமை அமுல்படுத்தப்பட்டமை மலையகத் தமிழர்களின் மீது சிங்களவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் (1956, 1977, 1978, 1983) என்பனவற்றினால் பாதிப்படைந்த உயர் சாதியினர் மீளவும் தென்னிந்தியக் கிராமங்களுக்கு நிரந்தரமாகக் குடிபெயரத் தொடங்கினர். இந்நிலைமை 1983 இல் உச்ச நிலையிலிருந்தது. பெரும்பாலான தோட்டங்களில் சாதிப்பிரிவில் உயர்தட்டில் இருந்தவர்கள் குடிபெயர்ந்த போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலாசார தொடர்பு முயற்சிகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்து விட்டன. அவர்களுடைய காலத்தில் கலாசாரச் செயற்பாடுகளில் பங்கு கொள்ளாமல் போன கீழ்த்தட்டு மக்கள் விடுபட்ட இடத்தில் இருந்து ஆரம்பத்தில் சிரமங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக, 1983 கலவரத்தின் பின்னர் மலையகத் தமிழரின் கலாசாரத் தொடர்பு நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதம் அடைந்தே காணப்பட்டன. இதற்கு வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் உயர்சாதியினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட வடிவத்தில் செயற்படுத்துவதில் தாமதம் காணப்பட்டதையே அவதானிக்க முடிகிறது. தாமதித்த இந்நிலைமை குறுகிய காலத்தில் புதிய பரிமாணத்துடன் நடைமுறைக்கு வந்ததையும் அவதானிக்கலாம். மார்கழி பஜன், அச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், காமன்கூத்து மற்றும் பொதுச்சடங்கு முறைகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் கீழ்த்தட்டில் உள்ள சகல சாதிப் பிரிவினருக்கும் ஏற்புடையதொன்றாகக் காணப்பட்டன. இதன்போது தோட்டங்களில் ஒரு சிலராக இருந்த உயர்சாதிப் பிரிவினர் இதனை ஏற்றுக்கொள்பவர்களாக
145

Page 89
இருக்கவில்லை. உதாரணமாக, அம்மன் திருவிழாக்களில் சாதிப் பிரிவில் கீழ்த் தட்டிலுள்ளவர்கள் கரகம் தூக்கி ஊர்வலம் வரும் போது அவர்களுடைய பாதங்களை நீரில் கழுவி வீழ்ந்து வணங்குவது வழக்கம் ஆனால், உயர்சாதிப் பிரிவினர் தயங்கினர். இன்று இந்த நிலைமை மாற்றம் பெற்றதாகக் கருதமுடியாது.
இக்காலப் பகுதியில், மலையகத் தோட்டப்பகுதிகளில் சீடா மற்றும் பல்வேறு உதவி வழங்கும் நிறுவனங்களினால் பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன. கல்வி பற்றிய புரிந்துணர்விலும் முன்னொரு போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. நகரங்களில், இடைநிலைப் பள்ளிகளில் தோட்டப்புற மாணவர்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி அனுமதி கிடைக்கப்பெற்றன. இவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இடைநிலை மற்றும் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் வளர்ச்சியடையலாயிற்று அணி மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, இந்திய வம்சாவளித் தமிழர்களின் 500 பேர் பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்துள்ளமை (மூக்கையா எம். எஸ் -1996) அறியமுடிகின்றது. இதில் 300 பேராவது மலையகத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாக இருப்பர். இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது, தாழ்ந்த மட்டத்திலிருந்தாலும், இச்சமூகத்தினைப் பொறுத்தவரை 1960 களில் காணப்பட்ட நிலைமையைவிட மாற்றம் பெற்றதாகக் கருதலாம்.
இவ்வாறு கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியின் பயனாக தோட்டப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கென மலையகத் தமிழருக்கு ஆசிரியர் நியமனங்களும் கிடைக்கப்பெற்றன. இவர்களின் விரிவாக்கம் ஒரு புதிய சமூகப்பிரிவினரின் தோற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது எனலாம். புதிய ஆசிரியர்கள் தோட்டங்களில் கலாசார விவகாரங்களில் பங்கு கொள்ளும் போது மலையகத் தமிழர்களின் பிரச்சனையை புதிய வடிவத்துடன் வெளிப்படுத்துகின்றதையும் காணலாம். அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்கள், புதுக்கவிதைகள், பாடசாலை மட்டத்திலான நாடகப்போட்டிகளில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் (1994) என்பன இவற்றுக்குச் சான்றுகளாகும்.
சமகால நிகழ்வுகளை அவதானிக்கும் சிலர் தோட்டங்களில் கீழ் மட்டத்திலுள்ள சாதிப் பிரிவினர்களே - பெரும்பான்மையினராக
146

இருப்பதனால், அங்கு இப்போது கலாசார தொடர்புகளில் அவர்களை முன்னணியாகக் கொண்ட வாழ்க்கை முறை மேலோங்கிக்
காணப்படுகின்றது என்று குறிப்பிட்டாலும், இவற்றினை முழுமையாக
ஏற்றுக்கொள்ள முடியாததென்பது ஏனையோர்களின் கருத்தாகும். அதாவது மலையகத் தொழிற்சங்கங்களிலும் அரசியலமைப்புகளிலும் மற்றொரு செயற்பாடு முன்பாகக் காணப்படுகின்ற நிலைமையையே சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த பாராளுமன்ற மற்றும் மாகாணசபைத்
தேர்தல்களிலும் உட்கட்சி விவகாரங்களிலும் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் சமமாக மதிக்கப்பட்டதாக அறியமுடியவில்லை. இக்காலப் பகுதியில்
அட்டன் நகரில் கூடிய 'அடக்கப்பட்டோர் இயக்கம் இதுபற்றிய புரிந்துணர்வை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முயற்சிகளை
மேற்கொண்டனர் என்பதையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
சுருக்கமாகக் கூறுவோமாயின், உயர்மட்ட அடுக்கில் உள்ள உயர்சாதியினர் தோட்டங்களில் இருந்து வெளியேறுவதும் அங்கு சர்தி அடிப்படையிலான வேறுபாடுகள் பெருமளவில் மறைந்து போய்விட்டன. இரண்டாவதாக, தோட்டங்களில் கலாசாரக் கல்வித் தொடர்பாடல்களில் தற்போது புதிய பரிமாணம் காணப்படுகிறது. இது வளர்ந்து வரும் இளம் சமூகத்தினரின் பங்களிப்பின் விளைவுகளாகும். மூன்றாவது, தொழிற்சங்கம் மற்றும் முன்னணி அரசியல் தலைமைப்பீடங்களில் சாதி வேற்றுமைகளை அனுசரித்தே அதிகாரத்திற்கான உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதும் இவ்விடயத்தில் சாதி முறையினால் திறமை, தகுதி, அனுபவம் என்பன முழுமையாக நிராகரிக்கப்படுகின்றன என்பதும் அவதானிக்கப்படுகின்றன
சமூக வகுப்பு முறையிலான அடுக்கினை அவதானிக்கும் போது, பெருந்தோட்டங்களில் மூன்று தெளிவான வகுப்புக்கள் காணப்படுகின்றன.
1. உயர்வகுப்பினர் -தோட்ட முகாமையாளர் (துரைமார்கள்) 2. மத்தியதர வகுப்பினர் - தோட்ட பணியாளர்கள் (Estate Staff) 3. கீழ் வகுப்பினர் - தொழிலாளர்கள்.
மலையகத் தமிழரின் சமூகப் புலப்பெயர்ச்சியானது தனிமனிதர்கள் கல்வியறிவு பெற்று தோட்ட முகாமையாளர்களாக உயர் வகுப்பினராக வருவதற்கு இடமளிப்பதாக இல்லையென்பதால், அவர்களுடைய
147

Page 90
வாழ்க்கை முறைபற்றி இங்கு எடுத்து நோக்கப்படுவது பொருத்தமுடையதன்று. ஒரு தொழிலாளி அல்லது அவர்களது வம்சத்தினர் ஏதோ ஒரு வகையிலேனும் தோட்டத்துரையாக வருவதற்கான சூழ்நிலை தோட்டங்களில் இல்லை. எனினும், தொழிலாளர் மத்திய வகுப்பினராகப் புலம்பெயர முடியும். ஆனால், மத்திய வகுப்பினரும் தோட்டத்துரையாக வருவதற்கான ஏற்பாடுகள் பெருந்தோட்ட ஒழுங்கில் இல்லை. தோட்டதுரையாக நியமனம் பெறும் ஒருவர் நிலச்சுவாந்தாராகவோ, இனரீதியாக சிங்களவராகவோ, மேற்கு நாடுகளின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராகவோ இருப்பதுடன், குறிப்பிட்ட சில முன்னணிப் பாடசாலையில் கற்றவராகவும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ளவராகவும், கட்டளைகளையிட்டு வேலை வாங்கும் மனப்பக்குவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அல்லது தொழிலாளியின் பிள்ளை ஒரு பல்கலைக்கழகத்தில் தோட்ட முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவராக இருந்தாலும், அவர் தோட்டத்துரையாக நியமனம் பெற முடியாது. தோட்டத்துரைமார்கள் தமது எல்லைக்குள் அதிகளவிலான அதிகாரம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். بنيتها
தோட்டங்களில் மத்தியதர வகுப்பினராக எழுதுவினைஞர்கள், தொழிற்சாலை அலுவலர்கள், தட்டெழுத்தாளர்கள், உதவி மருத்துவர்கள், மேற்பார்வையாளர்கள் (சுப்பர்வைசர்) கணக்கப்பிள்ளை, சாரதிகள், புழுதுபார்ப்பவர்கள் போன்றவர்களைக் கருதலாம். இவர்களுக்கு மாதாந்தச் சம்பளம் வழங்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர்தரக் கல்வித் தராதரங்களைக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மாதாந்தச் சம்பளமாக ரூபா 2, 000/- முதல் 6, 000/- வரை வழங்கப்படுகின்றது. ஓய்வூதியம் பெறும்வரை இவர்களுக்கு வாடகை இல்லாத வீடு, இலவச மின் விநியோகம், குடிநீர் மற்றும் சலுகை அடிப்படையில் தேயிலை, விறகு, மண்ணெண்ணெய் என்பன கிடைக்கப்பெறுதல் மற்றும் சிரேஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு நாளாந்த வீட்டு வேலைகளுக்கு ஒரு தொழிலாளியை (சில தோட்டங்களில் இரண்டு முதல் மூன்று தொழிலாளர்கள்) கொடுப்பனவு எதுவுமின்றி பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருத்தல் என்பன விசேட சலுகைகளாகக் காணப்படுகின்றன. பதவி உயர்வு 20 அல்லது 30 வருடங்களின் பின்னரே அதுவும் பதவி வெற்றிடம் வரும் போதே வழங்கப்படும். அதிகமானவர்கள் ஓய்வு பெறும் வரையில் ஒரே மாதிரியான வேலையை செய்கின்றனர். தோட்ட முகாமையாளர்
148

சிங்களவராக இருக்கும் போது சிரேஷ்ட நிலையிலான (Chief Clerk, Chief Factory Officer) segy susuis, GT T s állás, GT6Yi seo) a Gu வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். “ஏனைய தொழிலிலும் பார்க்க தோட்டத்தில் பணியாளராக இருப்பது பயனுள்ளதாகும். காய்கறித் தோட்டங்களைச் செய்ய செலவில்லாமல் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மாடு, கோழி வளர்ப்பதும் இலாபகரமானது. வாடகை இல்லாத வீடு, தண்ணிர், மின்சாரம், விறகு, தேயிலை என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களைத் தமது வேலைக்காக கிராமங்களுக்கும் கூட்டிச் செல்லவும் முடியும்." (Holup Oddvar) மத்தியதர வகுப்பினராகத் தோட்டங்களில் தொழில் புரியும் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் தமது கிராமங்களுக்குச் சென்று வருபவர்களாகவும் அங்கு வீடு, நிலம் போன்றவற்றினை சொந்தமாகக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்தப் பணியாளர் அந்தஸ்த்தில் தொழில் புரியும் மலையகத் தமிழர்கள் பெரும்பாலும் தலைமைக் கங் காணி அல்லது தோட்டங்களிலேயே வேலை செய்த மத்தியதர வகுப்பினரின் சந்ததிகளாகவே காணப்படுகின்றனர். அண்மைக்காலத்தில் தோட்டத்தில் சாரதிகளாகவும் சுப்பர்வைசர் போன்ற தொழில்களையும் பெற்றுக் கொள்பவர்களில் சிலர் தொழிலாளர்களது சந்ததியினராகவும் இருப்பதை அவதானிக்கலாம். 500 - 600 குடும்பங்கள் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்களை நிருவகிக்க 10 முதல் 12 பணியாளர்கள் மட்டுமே ாேட்டங்களில் காணப்படுகின்றமையினால் கல்வி கற்ற இளைஞர்கள் யாவருக்கும் இத்தகைய வாய்ப்புக் கிடைப்பதில்லை. 'தோட்டத்துரைமார்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்பவர்களுக்கே தோட்டங்களின்
பணியாளர்களாகத் தொழில் புரியும் வாய்ப்புக் கிடைக்கும். அவ்வாறிே
நியமனம் வழங்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்கு (3-5 வருடங்கள்) அவர்களுக்கான மாத வருமானம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த வேதனமாகவே வழங்கப்படுகின்றது.
இவ்வாறு தொழிலாளர் வகுப்பினரில் இருந்து பணியாளர் சேவைக்கு நியமனம் பெற்றாலும் அல்லது பணியர்ளரினது சந்ததியினர்களாக இருப்பினும் இவர்கள் கூடுமானவரை தொழிலாளர்களைப் பொது இடங்களில் சந்திப்பதையோ, தனிப்பட்ட முறையில் உறவுகளைப் பேணிக் கொள்வதையோ தோட்ட முகாமை விரும்புவதில்லை.
149

Page 91
தொழிலாளர்களிலும் பார்க்க வேறுபட்ட சலுகைகளை அனுபவிப்பவர்களாகவும் துரைமார்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், தொழிலாளர்களது வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணங்களைக் கையாள்பவர்கள் என்ற வகையிலும் தம்மிடம் இருக்கும் பொறுப்புகளுக்கு விசேட தகுதியையும் மதிப்பையும் வழங்கி தனித்துவமானவர்களாகவும, ஒதுங்கி வாழ்கின்றவர்களாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
பதவி, பொறுப்பு, கல்வித்தகைமை போன்றவற்றில் தொழிலாளர்களிலும் பார்க்க உயர்வானவர்களாகக் காணப்பட்டாலும் இவர்களுடைய தொழில் அமைப்புக்கள் பெருமளவில் ஒரு சுற்று வட்டத்திலேயே கட்டுண்டதாகக் காணப்படுகின்றது. உதாரணமாக, தோட்டத்தில் சுப்பவைசராக முதல் நியமனம் பெறும் ஒருவர் அடிப்படையாகப் பதவி உயர்வு பெற்று தலைமை எழுதுவினைஞராக உயர்வடைவதற்கான தகுதிகாண் படிமுறைகளோ வேறு நேர்முகப் பரீட்சைகளோ பின்பற்றப்படுவதாக இல்லை. இவர்களில் தோட்ட வருமானத்திலேயே முழுமையாகத் தங்கியிருக்கும் பணியாளர் குடும்பங்கள் ஒரு ஸ்தம்பிதமான நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.
தோட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் யாவரும் கீழ் வகுப்பினர் என்ற பிரிவில் உள்ளடக்கப்படுகின்றனர். தோட்டத்தொழில் மூலம் தொழிலாளர் வகுப்பினருக்குக் கிடைக்கின்ற வருமானத்துக்கிடையில் பெருமளவிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களிடையே தொழிற்றிறன் பெற்ற தொழிலாளர்கள் தொழிற்றிறன் பெறாதோர் என்பவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. தோட்டத் தொழிலாளர்களில் உயர் தொழில் புரிவோர்களுக்கு (உதாரணமாக, கங்காணி) வழங்கப்படும் வேதனத்தில் பெருமளவு வேறுபாடுகள் இல்லை. தேயிலை மலையிலும் தேயிலை தொழிற் சாலையிலும் தொழில் կflպtճ தொழிலாளர்களுக்கிடையேயும் வருவாயில் வேற்றுமை இல்லை. இவர்களுக்கு மாற்று முறையிலும் வேலைகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலான தொழிலாளர்களின் குடும்ப வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் ஒரு மட்டத்திலேயே காணப்படுகின்றது. ஒரே நாளில் வழங்கப்படும் ஒரேயளவான மாதாந்த வருமானம் பெருமளவு
150

மாற்றங்களுக்கு உட்படாத நிலையில கொளவனவு செயயும நுகாவுப பண்டங்கள், உணவு சமைத்தல், பரிமாறுதல், குடும்ப அமைப்புக்கள், பொழுதுபோக்கு போன்றவற்றினை அவதானிக்கும் பொழுது இவர்கள் யாவரும் ஒரு சமூகக்குழுவாக வாழ்கின்றதையே எடுத்துக்காட்டுகின்றது. தொழிலாளர்களது நாளாந்த வேலைகளுக்கிடையே மாற்றங்கள் குறிப்பிடத்தக்கதாக இல்லை. இவர்கள் மேல் மட்டத்தில் கட்டளையிடப்படும் வேலையை பணிவுடன் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். இம்மாதிரியான தொழில் அமைப்புக்களானது, கல்வியறிவு குறைந்த வெளித்தொடர்புகளற்ற சலுகைகளால் கால் கட்டுப் போடப்பட்டுள்ள சமூகக் குழுக்களின் மேல் நோக்கிய நகர்விற்கு இடைஞ்சலாகவே காணப்படும் என்பதை, மலையகத் தோட்டப்புறங்களின் தொழிலாளர்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு கருதலாம். உண்மையிலேயே, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட தொழில் அமைப்பானது, மிக அற்புதமாக, இயல்பாகவே மாற்றமடைந்து செல்கின்ற சமூகக் குழுக்களைக் கூட நூற்றாண்டு காலமாக அதே வடிவத்தில் வைத்திருக்கின்ற திறன் படைத்த செயலமைப்ப்ாகக் காணப்படுகின்றது.
அதிகமான தொழிலாளர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாகவும் தேயிலைச்செடி, அதுவும் தாம் செய்யும் தொழிலைத் தவிர வேறு எதனையும் (தொழிற்சாலை வேலை போன்றன) அறியாதவர்களாகவும் அதே லயத்தில் அதே காம்பராவில் தாத்தாவும், அதன் பி *ார் தந்தையும் தற்போது தானுமாக வாழ்கின்ற அமைப்பானது இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களிலுள்ள தமிழ் சமூகத்திற்கே தனித்துவமானதாகக் காணப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமூக அடுக்கில் காணப்படும் மற்றுமொரு அம்சம் பெண் தொழிலாளர்களாகும். நாளாந்த வேதனத்திற்கு கடமைக்குச் செல்லும் போது (கொழுந்து கொய்தல்) 9 முதல் 10 மணித்தியாலங்களை வேலைத் தளத்திலேயே செலவு செய்ய வேண்டியவர்களாகவும் உணவு சமைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தல், ஞாயிறு போன்ற விடுமுறைக் காலங்களில் விறகு தேடுதல், ஏனைய வீட்டு வேலைகளைக் கவனித்தல் போன்றவற்றில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களாக காணப்படும் பெண் தொழிலாளர்களில் அதிகமானோர் குறைந்த போஷாக்குடன் காணப்படுகின்றனர் என்பது
151

Page 92
அவதானிக்கப்பட்டுள்ளது. தாய்மை அடைந்துள்ள பெண்கள் குறைந்த பட்சம் நாளாந்தம் 3000 கலோரி உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால் தோட்டங்களில் 1120 கலோரி உணவே உட்கொள்ளப்படுகிறது. (ICES-1989) இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டதாய்மார்களில் 90 வீதமானவர்கள் இரத்தச்சோகை நோய்க்கு உட்பட்டிருக்கின்றனர். (SPC Report 1991)40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 60 வீதமானவர்கள் ஒரு போதும் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக உள்ளனர். இலங்கையில் தாய்மை அடைந்துள்ள பெண்களின் சராசரி நிறை 46.4 கிலோ கிராம் ஆக இருக்கும் போது தோட்டங்களில் 489 ஆகக் காணப்படுகின்றது. (CES - 1989) இவ்வாறு கடுமையான நிபந்தனைகளும் உடல்நலக்இ குறைபாடுகளும் குடும்பங்களில் காணப்படும் ஆண், பெண் உறவு முறைகளும் இவர்களைப் பின் தங்கிய நிலைமையிலேயே வைத்திருக்கின்றன.
இதை விட 1970 களின் பின்னர் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய், சேய் நலத் திட்டங்கள் தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கு சில புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்த அதேவேளை, அவர்களால் அறிமுகம்படுத்தப்பட்ட குடும்பத் திட்ட ஆலோசனைகளும் நடைமுறைகளும் சில குடும்பங்களில் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இவை பெருமளவில் பொதுத் தொடர்பு மற்றும் கல்வியறிவுக் குறைபாட்டினால் ஏற்பட்ட விளைவுகள் என்று கருதலாம். இந்நிலைமைகள் பெண் தொழிலாளர்களை மிகவும் பின்தங்கிய அமைப்பிலேயே வைத்திருக்கின்றமைக்குத் துணை புரிந்துள்ளது.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களிடம் ‘தங்கி வாழும் மனப்பான்மை வேரூன்றிக் காணப்படுகின்றமை மலையகத் தமிழர் சமூகத்தில் காணப்படும் மற்றுமொரு அம்சமாகும். தோட்ட நிருவாகமும், தொழிற்சங்கமுமே தமது சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக் கடமைப்பட்டுள்ளது என்று கருதுகின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து உபரி உழைப்பைப் பெற வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் தேவைகளை தோட்ட நிர்வாகமே கவனித்து வருகின்றது. சில சலுகைகளுக்குத் தொழிற்சங்கம் தோட்ட நிர்வாகத்துடன் கொள்கை ரீதியில் இணங்கி செயற்படுகின்றன. இம்மாதிரியான போக்கு தோட்ட நிருவாகமும் தொழிற்சங்கமும் தமக்கே
152

கடமைப்பட்டுள்ளதாகக் கருதி அவர்களால் வழங்கப்படும் சேவைகளை மட்டும் போதுமானதாகக் கொண்டு மட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கின்ற முறைமையைத் தோட்டங்களில் அவதானிக்கலாம். இதனால் தேசிய மட்டத்தில் உள்ள விவகாரங்களிலும் கூட அக்கறை செலுத்த முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். எங்கு எது நடந்தாலும் தோட்ட நிருவாகம் ஏற்றுக்கொண்ட விதிகளின்படி, உடன்பட்டதன்படி தமக்குச் செய்ய வேண்டியதை செயற்படுத்தும் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர். இந்த மனப்பாங்கு அண்மையில் உள்ள நகரங்களுக்குச் சென்று தமக்குத் தேவையானதைத் தெரிவு செய்து, பேரம் பேசி ஒப்பிட்டு வேறுபடுத்தி நுகர்வு செய்யும் மனப்பான்மைக்குப் பதிலாகத் தருவதை வாங்கி வரும் வழக்கம் இவர்களிடையே வழக்கமானதொன்றாகக் காணப்படுகின்றது. சுயநம்பிக்கையுடனான சமூகக் கட்டமைப்பு உருவாவதற்கு இம்மனப்பாங்கு பெரும் தடையாகவே காணப்படுகின்றது எனலாம்.
பொதுவாக அவதானிக்கும் பொழுது, இவ்வாறான ஸ்தம்பித நிலைமைகள் அவதானிக்கப்பட்டாலும் தொழிலாளர்களிடையே வேறு வருமான வாய்ப்புக்களும் கல்வியறிவும் கிடைக்கப்பெற்றவர்கள் தோட்டங்களில் மற்றொரு சமூக வகுப்பினராக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாகத் தோட்ட வேலைகளுடன் மாடு, ஆடு போன்ற கால்நடைகளின் மூலம் வருமானம் தேடிக் கொள்பவர்கள் காய்கறித் தோட்டங்களை நல்ல முறையில் பராமரிப்போர், ஆசிரியர் தொழில் கிடைக்கப்பட்டவர்கள், தோட்ட வேலைகளுடன் பகுதி நேரமாக நகரங்களில் தொழில் பார்ப்பவர்கள் பெட்டிக்கடை போன்ற வியாபாரம் செய்பவர்கள், நகரங்களில் உள்ள கடைகளில் விற்பனையாளர்களாகத் தொழில் புரியும் குடும்பத்தினர், வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்ள குடும்பத்தினர்கள் தமது வருமான வாய்ப்புக்களுக்கு ஏற்பத் தகுதியானப் பொருள்களை நுகர்வு செய்பவர்களாகக் காணப்படுவதுடன், இவர்களுடைய கலாசார சடங்கு முறைகளில் இயலுமான வரை மேலடுக்கில் உள்ளவர்களைப் பின்பற்றுபவர்களாகவும், வாய்ப்புக்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுபவர்களாகவும் காணப்படுவதை அவதானிக்கலாம். அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள் சமூகத்தில் உயர்ந்த அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வதால் அவர்கள் கெளரவமாகவும் மதிக்கப்படுகின்றனர்.
153

Page 93

உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகளோடு அமைச்சர் புத்திரசிகாமணி அவர்கள்
அமரர் தொண்டமான், காமினி திசாநாயக்க, திரு. 8. சதாசிவம் அவர்களுடன்

Page 94

■■ பாகிஸ்தான் அதிபர் முஷரப் அவர்களை சந்தித்தபோது
கெளரவ அமைச்சர் அவர்களுக்கு திரு. துரை விஸ்வநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் காட்சி

Page 95

s
போலந்து ஜனாதிபதியுடன்
தென் கொரிய தொழில் அமைச்சருடன்

Page 96

நான்காவது அமர்வு
(மாத்தளை)
3. 8, 97
தலைமை பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
முன்னால் தலைவர் 7 தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 97

மலையக நாட்டார் வழக்காற்றியல் மாத்தளை - பெ. வடிவேலன் பி. ஏ.
வளர்ந்து வரும் அறிவுத் துறைகளில் நாட்டுப்புறவியலும் ஒன்றாகும். மானுடப் பண்பாட்டை கிராமியப் பண்பியல் (Folk Cultural) 66špruh pós). Ti 55 USojúlusů (Learned Cultural) 66šiph வகுக்கும் வழக்கம் பன்னெடுங்காலமாய் வழக்கிலுள்ளது. ஒரு சமூகத்தில் காணப்படும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு பண்பாடு எனப்படுகின்றது.
ஒரு நாட்டு மக்களினதோ, அல்லது குறிப்பிட்ட ஒரு இனக் குழுவினதோ நாகரீகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை நாட்டு நடப்பை உண்மையான முறையில் படம் பிடித்துக் காட்டுவதே நாட்டார் வழக்காற்றியலாகும். பண்பாட்டை ஆய்வு செய்யும் அறிவியல் துறைகளில் ஒன்றே நாட்டுப்புறவியல். தமிழியல் ஆராய்ச்சியில் மொழியியல், வரலாறு, பண்பாடு, நாகரீகம், மானுடவியல், சமூகவியல், நுண்கலைகள், இதழியல் என பல்வேறு துறை ஆய்வினைப் போன்றே நாட்டாரியல் ஆய்வும் முக்கியத்துவம் பெறுகின்றது.
தமிழில் நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப்புறவியல், மக்கள் கலை இலக்கியம், நாடோடி இலக்கியம், மொழியிலக்கியம், எழுதா இலக்கியம், கிராமிய இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. இன்றைய நவீன ஆய்வுகளின் பயனாக நாட்டுப்புறவியலை வெறும் வாய்மொழி இலக்கியமாகக் கூறிவிடமுடியாதென்றும். அதனை தனியே கிராமிய இலக்கியமாகக் கொள்ள முடியாதென்றும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ኣ፱፱ë பேராசியரியர் கா. சிவத்தம்பி அவர்கள் "தமிழில் நாட்டார் (Folk) பற்றிய தேடல்’ என்னும் கட்டுரையில் கூறும் கருத்துக்கள் நோக்கத்தக்கவை.
”தமிழ் நாட்டார் வழக்கியல் எனும் பயில் துறையின் முக்கியத்துவத்தினையும் பயில்வு வட்டத்தினையும் அறிந்து கொள்வதற்கு இத்துறை பெயரில் வரும் "நாட்டார் என்பது யாரைக் குறிக்கின்றது?’ என்பது பற்றிய திட்டவட்டமான அறிவுத் தெளிவு இருத்தல் அவசியம் என்று வினாவெழுப்பும் அவர் அக்கட்டுரையிலேயே ஐரோப்பிய பாரம்பரியத்தில் ஜேர்மனி நிலையிலேயே இப்பயில்துறை பற்றிய சிரத்தை ஆரம்பித்ததென்பர் அம்மொழியில் ஃபோக் (Folk) என்பது சாதாரண
159

Page 98
மக்கள் யாவரையும் கருதும் அத்துடன் அது ஒரு சமூகக்குழு நிலைப்பாட்டையும் உணர்த்தி நிற்கும் என்பதோடு அதே கட்டுரையில் மேலும் இந்த நீட்டார் மக்களின் பண்பாடு என்பது எப்பொழுதும் தொல்சீர் செந்நெறி சாதனைகளிலிருந்து பிரித்துப் பார்க்கப்படக்கூடியதாகவிருக்கும். அதாவது சில பண்பாடுகளைப் பொறுத்தவரையில் ஃபோக் எனும் பொழுது அந்த நிலையும் அந்த பண்பாடும் அவர்களது செந்நெறி நிலையினதும் பண்பாட்டினதும் மறுபுறமாகவே கருதப்படும் ஒரு நிலையுண்டு. செந்நெறிப் பண்பாடு நாட்டார் பண்பாட்டிலிருந்து ஊட்டம் பெறுகின்றது என்பதுவும் செந்நெறிப் பண்பாட்டில் நாட்டார் தனிமங்கள் (Elements) உண்டு என்பதும் உண்மையே எனினும் அது பற்றிய அறிவு, அறிகையைப் பொறுத்தவரையில் செந்நெறி சார்ந்தவை; சாஸ்திரிய நிலைப்பட்டவை என்றும் நாட்டார் நெறி சார்ந்தவை; சாஸ்திரிய நிலைப்படாதவை என்றும் கருதப்படும் ஒரு நிலை உண்டு என்கிறார். ஆலன்டன்டிஸ் என்னும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் கிராமிய இலக்கியமாகக் கொள்வது தவறு என்கிறார். (உ+ம்) நகரமொன்றில் கழிவறையில் எழுதுதல் கிராமங்களில் மட்டுமே நாட்டுப்புறவியல் இருந்து வருவதாகக் கூறிவிட முடியாது. மீப்பெறும் நகரங்களிலும் (Metropolitan-Cities) நாட்டுப்புறவியல் அமைந்துள்ளது என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாட்டுப்புறவியலின் எல்லா வெளிப்பாடுகளும் வாய்மொழியானவை என்றும் கூறமுடியாது. சில வகை கூக்குரல்கள் - கதறல்கள் விசும்பல் ஒலிகள் அழுகை ஒலிகள் மந்திரச் சொற்கள் வாழையடிவாழை என வருபவவை. செவியினால் ஏற்கப்படுவது மட்டுமன்றி கண்களால் ஏற்கப்படுவதும் நாட்டுப்புறவியலில் அடங்குகின்றன. பெண்கள் வீட்டு முற்றத்தில் போடும் கோலம் செவிக்கு மாறாக கண்களால் ஏற்கப்பட்டாலும் இதுவும் நாட்டுப்புறவியலேயாகும். இவ்வாறு பிரம்பு பின்னுவதிலும் பாய் பின்னுவதிலும் கூடை முடைவதிலுமுள்ள கலைத்துவமும் மரபு ரீதியான பாங்கும் நாட்டுப்புறவியலேயாகும். **
நாட்டுப்புற மக்களின் இலக்கியங்கள், கலைத்துறை மரபு பழக்க் வழக்கங்கள், நம்பிக்கைகள், நாட்டுப்புற மருத்துவங்கள், விளையாட்டுகள் போன்ற பல்வேறு நாட்டார் வழக்காறுகளைப் பற்றி ஆராயும் சமூக அறிவியல் துறையை நாட்டுப்புறவியல் (Folk Loristics) துறை என்கிறோம். ஒரு சமூகத்தில் காணப்படும் பழக்கவழக்கங்களின் தொகுப்பு - -
160

பண்பாடு எனப்படுகின்றது. பண்பாட்டை ஆய்வு செய்யும் அறிவியல் துறைகளில் ஒன்றே நாட்டார் வழக்காற்றியலாகும்.
தமிழ் மொழி 'நீசபாஷை என்றொதுக்கப்பட்ட காலத்தில் தாழ்வு மனப்பான்மைக்குட்பட்ட தமிழ் நாட்டில் அதனை வடமொழியினைப் போன்று தேவபாஷை என்ற நிலைக்குயர்த்த, செம்மொழி இலக்கியங்களில் ஈடுபட்டும், திளைத்தும் பார்த்த போது, தமிழர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய வழக்காறுகளை ஒதுக்கியும் தவிர்க்கவும் முற்பட்டதோடு குறுகிய மனப்பான்மை கொண்ட பண்டிதப் போக்காளர் நாட்டார் வழக்காறுகளை "சேரி மொழி'இழிசனர் இலக்கியம்’ என்று ஒதுக்கினர். இன்றும் சிலர் அவ்வாறு செயற்படுகின்றனர்.
எனினும் தமிழ் நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய ஆய்வு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டது எனலாம். 'பீட்டர் பெர்சிவல்' 'ஹெர்மான் ஜென்சன்’ 'ஜான் லா சரஸ்' ”பெர்சீ சீ மாக்லின்’, நடேச சாஸ்திரி ஆகியோரை இப்பணிகளின் முன்னோடிகளாவர். 1960 களில் தமிழ் கல்விப் புலத்துக்குள் வந்துவிட்ட தமிழ்நாட்டார் வழக்காற்றியலுக்கு, ஆறு. அழகப்பன், கே. பி. எஸ். ஹமீது பா. ரா. சுப்பிரமணியம் வி. ஐ. சுப்பிரமணியம் 70களில் முத்துச்சண்முகம் நா. வானமாமலை முதலானோர்; நாட்டார் வழக்காறுகளே மக்கள் பண்பாட்டுச்
செல்வங்கள் என்பதை சரியாகக் கணித்து புலங்கல் தொடர வழிசமைத்தனர்.
நாட்டார் வழக்காறுகள் பற்றி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கால ஆய்வுகள் பனுவல் (Text) ஆய்வுகளாகவே அடங்கப் பெற்றிருந்தன. நாட்டார் வழக்காற்றியலை ஒரு சமூக அறிவியலாகக் கருதிச் செய்த ஆய்வுகள் சிலவே ஆகும். பின்னர் பேராசிரியர் நா. வானமாமலை பேராசிரியர் கைலாசபதி ஆகியோர் இப்பணியை வித்திட்டும் வளர்த்தும் சென்றனர்.
வானமாமலை, கைலாசபதி ஆகியோர் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கு கொடுத்த முக்கியத்துவமும் மாற்றமும். 1. பாடல்களை நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு வெளியீடாகக் கருதி
பாடல்களை ஆராய்வது. 2. உருவ ஆராய்ச்சியாக இல்லாமல் உள்ளக (கருப்பொருள்)
ஆராய்ச்சியாக இருப்பது.
161

Page 99
3. இலக்கிய வழியில் பொருள் காணாது மானுடவியல் சமூகவியல் வரலாற்று பொருள்முதவாத விதிகளின் போக்கில் பொருள் கான முயன்றனர்.
நாட்டார் வழக்காற்றியல் உலகளாவிய ஓர் அறிவுப் புலமாக இடம்பெற்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவ்வியல் ஆய்வுக் கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் வளர்ந்துள்ளன. இவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
(அ) புராணவியல் கோட்பாடு - மொழிநூலார் ஆய்வு முறை (ஆ) இந்தியக் கோட்பாடு - அல்லது இடம்பெயர்தல் கோட்பாடு (இ) புராணவியல் கோட்பாடு - சூரியப் புராணவியல் (ஈ) வரலாற்று நிலவியல் கோட்பாடு (உ) அமைப்பியல் ஆய்வும் - பொருண்மை பற்றிய சிக்கலும் (ஊ) உளவியல் ஆய்வுக் கோட்பாடு (எ) வரலாற்று நிலவியல் - அமைப்பியல் உளவியல் கோட்பாடு
இணைப்பாய்வு (ஏ) வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு (ஐ) நாட்டார் பண்பாட்டுக் கோட்பாடு (ஒ) வாய்மொழி - வாய்ப்பாட்டுக் கோட்பாடு (ஓ) வழக்காறு வகைமை ஒழுங்கமைப்பு கோட்பாடு (ஒள) நிகழ்தலும் மரபின் உற்பத்தியும் (க) சித்தாந்த கோட்பாடு அல்லது லட்சியக் கோட்பாடு (கா) பண்பாட்டிடை ஒப்பீட்டுக் கோட்பாடு (கி) செயல்திற அல்லது பயன்பாட்டுக் கோட்பாடு (). வாய்மொழி மரபின் சுற்றுச் சூழலியல் (Sn) (Ep6ð (Context)
இவ்வாறான நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகளும் அணுகு முறைகளும் தமிழில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் இதுவரை எழுதப்படவில்லை எனவும் தமிழ்நாட்டில் வழக்காற்று ஆய்வுகள் இன்றும் கூட அக்கறையோடு நடத்தப்பெறவில்லையெனவும் பேராசிரியர் தே லூர்து குறிப்பிடுகின்றார்.
இலங்கையிலும் இந்தியாவைப் போன்றே ஆரம்ப கட்டத்தில் மேலை நாட்டினரும் கிறிஸ்தவ மிஷனரிகளுமே நாட்டுப்புற வழக்காறுகளை
162

சேகரிக்கத் தொடங்கினர். பின்னர் சைமன் காசிச் செட்டி பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வ. குமாரசுவாமிப்பிள்ளை, க. நவரத்தினம், மு. ராமலிங்கம், சி. வி. வேலுப்பிள்ளை, சி. வி. கந்தையா, வி. சு. கதிர்காமத் தம்பி, எஸ். வி. சோமநாதர், வரதர், சு. வித்தியானந்தன், F. X, C.நடராஜா, அருள் செல்வநாயகம் முதலானோர் பல கட்டுரைகளை எழுதி பணியினைத் தொடக்கி வைத்தனர்
1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஈழத்து தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஓர் ஆய்வு நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு இந்து சமய கலாசார திணைக்களம் கொழும்பில் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் எனும் பொருளில் ஆய்வு மகாநாடு ஒன்றினை நடாத்தியது. இதே ஆண்டில் மலையகக் கலை இலக்கியப் பேரவை கண்டியில் மலையக பாரம்பரியக் கலைகள் பற்றிய ஆய்வரங்கினை நடாத்தியது. இவைகளுக்கு முன்னரே மலையக பாரம்பரியக் கலைகள் என்ற நூல் வெளியிடப்பட்டு மலையக பாரம்பரியக் கலைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் தமிழக நாட்டார் கலைகளை பல்கலைக்கழக மட்டத்தில் ஜனரஞ்சகமயப்படுத்தப்பட்டதும், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டதுமான கலைக்கூறுகள் வியாபார நோக்கில் மலையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் தனித்துவமும் கலாநயமுமிக்க மலையக நாட்டார் கலைஞர்கள் ஆர்வலர்கள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் மலையக பாரம்பரியக் கலைகளினதும் கலைஞர்களின்தும் ஆற்றல் ஓங்கவே செய்தது.
இலங்கையில் மலையகம் என்ற பதம் தனியே ஒரு புவியியல் விவரணமாக இல்லாது தனித்துவமான ஓர் இனக்குழுவை சுட்டி நிற்கும் குறியீடு என்பதுடன், இலக்கியத்திலும் அது வடகிழக்கிற்கு வெளியே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை விளைநிலத்தையும்; கடந்து பரந்து வாழும் தமிழர் அனைவரையும் உட்கொண்டதாக அமைகின்றது. மலையக இனக்குழுவில் தமிழரே பிரதான இடத்தினைப் பெறுகின்ற போதிலும் இன்று மிகவும் குறைந்த நிலையிலுள்ள மலையகத்தவர் கன்னடர், தெலுங்கர் என்போரையும் மறப்பதற்கில்லை. அத்துடன் தென்னிந்தியத் தமிழர் பெருந்தோட்டங்களுக்கு குடிபுக முன்னர் பல
163

Page 100
நூற்றாண்டுகளுக்கு முன் வடமேல் மாகாணத்தில் குடியேறிய இந்திய வம்சாவளி இந்துசமய தமிழர்களின் நாட்டார் வழக்காறுகளும் மலையக நாட்டார் வழக்காறுகளும் ஒன்றாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. மாரியம்மன் கலாசாரம், முனைக் கொட்டு பாடல்கள், அம்பா பாடல்கள் வழிபாட்டு சடங்குகள் என்பன இதனை நன்கு உறுதி செய்கின்றன். (கடற்கரை மக்கள் முனைக் கொட்டு பாடுவது)
மலையகத்தில் நீண்ட கால திராவிடப் பாரம்பரியம் நிலவி வந்துள்ள போதிலும் மலையக நாட்டார் வழக்காற்றியலில் இங்கு நாம் எடுத்துக் கொள்வது ஐரோப்பியர் காலத்தில் இங்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்துவரப்பட்ட மக்களினதும் அவர்களது பக்க விளைவாகத் தோன்றிய சமூகத்தைப் பற்றியதுமே ஆகும். இலங்கையின் தேசிய இலக்கியத்தில் மலையக இலக்கியம் தனித்தன்மை வாய்ந்து காணப்படுவதுடன் , தனி அலகு கொண்டு விளங்குவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
ஈழத் தமிழியலுக்கு தொல்பொருளியல் பெரும் சான்றாக விளங்குகின்றது என்பர். மலையகத் தமிழியலுக்கு மலையக நாட்டாரியலே ஆணிவேறாகும்.
மலையக நாட்டாரியலை இலக்கியத்துறை; நாட்டுப்புற கலைத்துறை; மரபும் நம்பிக்கைகளுக்குமுட்பட்ட சடங்காசாரங்கள்; விளையாட்டுகள்; என வகுத்துக்கொள்வது இவற்றை விளங்கிக் கொள்வதற்கு எளிதானதாகும். மலையக நாட்டார் இலக்கியத்துறையில் நாட்டார் பாடல்களே முக்கியமானவைகளாக விளங்குகின்றன. தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை நயமிக்க பல்லாயிரக்கணக்கானப் பாடல்கள் உள்ளன. இவற்றுடன் தொழில் சார்ந்த பாடல்கள், கூத்து அந்தஸ்த்தினைப் பெறாத சிற்றாட்டங்களாக கரகம், காவடி, கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், ஒயில் கும்மி, தேவராட்டம், பாவைக் கூத்து, வேடன் புலி ஆட்டம், கரடி ஆட்டம், பொம்மலாட்டம், உடுக்கடிப் பாடல்கள், தேர்ப் பாட்டு, பூசாரிப் பாட்டு, சேகண்டிப்பாட்டு, மாரடிப்புப்பாடல்கள், பபூன்-கோமாளிப் பாட்டு, வெட்டியான் வெட்டிச்சி பாட்டு, என்பனவும் அடங்குகின்றன. இவைகள் காலத்திற்குக் காலம் பலரால் சேகரிக்கப்பட்டு, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளதுடன் சிறு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. மலையக நாட்டுப்புறவியலில் இது வரை அதிகமாக
164

அறிமுகஞ் செய்யப்பட்டவை பாடல்களே என்றால் அது மிகையான கூற்றாகுது.
அவலம் தோய்ந்த மலையக மக்களின் வாழ்வியலை இப்பாடல்கள் படம் பிடித்துக் காட்டுவது போல் எந்தவொரு இலக்கியப் பிரிவும் காட்டவில்லை எனலாம்.
“ஊரான ஊர் இழந்தேன் ஒத்தபனை தோப்பிழந்தேன் பாரான கண்டி சீமையிலே பெத்த தாயை நான் இழந்தேன்’
”கூனி அடிச்ச மலை கோப்பி கன்னு போட்ட மலை அந்தா தெரியுதடி உங்க அண்ணனை தோத்த மலை’
நவரசங்களையும் உள்ளடக்கிய இப்பாடல்களில் சில தமிழக நாட்டார் பாடல்களின் மறுபதிவாக விளங்குகின்றன.
முற்றா மொளையில மூணு கொளம் வெட்டினோம் ரெண்டு கொளம் பாழ் ஒன்னுலேயும் . என்ற தமிழக கிராமிய பாடல்
”முற்றா மலையில மூணு நெறை வெட்டினேன் ரெண்டு கலன் பால் ஒன்னும் தர்ைணியே இல்ல' என்ற றப்பர் தோட்டப்பாடல்களாக பாடப்படுகின்றது. நாட்டுப்புறவியல் ஆய்வில் பொதுவாக கலைகளைப் பற்றிய ஆய்வினைவிட இலக்கியங்களைப் பற்றிய ஆய்வு அதிலும் பொதுவாக பாடல்கள் பற்றிய ஆய்வே அதிகமாக இடம்பெறுவது போல் இங்கும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல்களை பெரும்பாலும் திறந்த வெளியிலே பாடுவதால் உரத்த ஒலியில் பாடுவதும் பாடுவோர் ரசிப்போர் என்ற நிலை இல்லாமையால் "கமகம்' செய்து பாடுதல்
ஆலாபனை’ செய்து பாடுதல் என்பன கிடையாதென்றே கூறலாம்.
இப்பாடல்களில் அநேகமானவை உழைப்பின் துயரம் பக்தி என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டிருப்பதால் நெட்டுத் தெம்மாங்கு என்னும் இழுவைத் தெம்மாங்கிலேயே அமைந்துள்ளன.
165

Page 101
நையாண்டி இசைப் பாடல்களை காமன் கூத்தில் வெட்டியான் வெட்டிச்சி ஆட்டத்திலும் பயூன் ஆட்டங்களிலும் காணலாம். தெம்மாங்குப் பாடல்களை தேன்பாங்கு என்றும் தென்பாங்கு என்றும் பொருள் கொள்ளலாம். தெம்மாங்கு மெட்டில் கலகலப்பான பாடல்களைப் பாடுவதைக் காணலாம். மலையகத் தெம்மாங்கு பாடல் பாடும் முறையாகிய மெட்டினையே குறிக்கும். டப்பாத் தெம்மாங்கு, நெட்டுத் தெம்மாங்கு, ஒத் தடித் தெம் மாங்கு, தெக்கத்தித் தெம் மாங்கு ஆகிய மெட்டினடிப்படையில் மலையகப் பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். நாட்டுப்புறவியலில் நோக்கப்படும் வட்டார வழக்கு இங்கு நிலத்தில் உயர தாழ் அமைப்பில் தேயிலை, றப்பர், தோட்ட சூழ்நிலையில் அமைந்து காணப்படுகின்றது.
மலையகத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், துரைத்தனத்தின் கொடுமைகளையும், இயற்கையின் அழகையும் இன்னும் காதலர்களின் மனநிலையையும் இன்ப ஓட்டங்களையும் அழகுற இப்பாடல்கள் சித்தரிக்கின்றன. இக்கட்டில்லா கவிகள் தம் துயர் நீக்க தெய்வங்களை வேண்டிப் பாடும் பாடல்கள்.
நாட்டார் இலக்கியத்தினுள் ஏட்டில் எழுதாத கவிதைகளைப் போன்றே கதைகளும் கதைப்பாடல்களும் உள்ளன. மலையக நாட்டார் கதைகள் தென்னிந்திய கிராமங்களில் வழங்கப்பட்ட கதைகளாகவே பெரும்பாலும் உள்ளன. கதைப்பாடல்களும் அவ்வாறானவையே. தென்னாலிராமன் முதலான வேடிக்கைக் கதைகள் முதற்கொண்டு தேசிங்கு ராஜன் கதை, தேசிங்கு ராஜன் கதைப்பாடல், கட்டபொம்மு கதை - கட்டபொம்மு கதைப்பாடல்கள் முதலான பல பாடல்கள் உள்ளன. இவற்றோடு மலையக சூழலில் எழுந்த கதைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் ஆவி, பேய், பிசாசு பற்றியன. அம்மன் கதைப் பாடல்கள், வள்ளிராசன் கதை, நல்லதங்காள் கதைப்பாடல் என்பன போன்றவைகளும் வழக்கிலுள்ளன. மறைபொருளில் இருந்து விடையினை விடுவிக்கப்பட வேண்டிய கதையே விடுகதை ஆகும். ஒப்புவமையும் உருவகப் பண்பும் மிக்கவை விடுகதைகள். இவை சிந்தனையைத் தூண்டவல்ல அனுபவ முத்திரைகளாகும். பழமொழிகள், சொல்லடைகள் மலையக நாட்டார் இலக்கியத்திற்கு அணி செய்வனவாகும்.
எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு மொழியினை பேசுவோருக்கும் அந்த மண்ணின் இசையான நாட்டுப்புற இசையுண்டு.
166

செவ்வியல் இசையும் நாட்டுப்புற இசையின் அடித்தளத்தில் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதே எனலாம். தமிழ் மண்ணுக்கான நாட்டுப்புற இசை மிக நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தமை வரலாறாகும். சங்க இலக்கியத்தில் கவி பரி, போன்றவற்றிலும் பின்னர் பக்தி இலக்கியங்களிலும் பள்ளு குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்களிலும் நாட்டுப்புற இசையின் வெளிப்பாட்டினைக் காணலாம்.
பகலுக்குரிய இராகம் , இரவிற்குரிய இராகம் எண்று செவ்விலாளரிடம் இருப்பது போல் உழைப்பின் வாயிலாக ஏற்படும் உணர்ச்சியே நாட்டார் பாடல்களாக மலர்கின்றது. உத்திமுறை சந்த அமைப்பு என்பனவெல்லாம் தொழிற்பாங்கிலேயே அமைகின்றன. மலையக நாட்டார் இசைத்துறையில் தப்பு, உடுக்கு உருமி, சங்கு, சேகண்டி, செஞ்சன கட்டை, அளுக்கு சட்டி என்னும் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மலையக நாட்டார் கலைகளில் சிறப்பிடம் பெறுவன என கொள்ளத்தக்கவைகளில் முன்னணியில் நிற்பவை கூத்துக்களாகும். மலையகத்தில் காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, இராமர் காதை ஆகிய கூத்துக்கள் வழக்கிலுள்ளன. இவைகள் சமய சடங்காசாரங்களோடு பிண்ணிப்பிணைந்தவை, பக்திமயமானவை காமன்கூத்து வீதிநாடகப் பாணியில் அமைந்தது. முழுத்தோட்டத்தையுமே அரங்காகக் கொண்டது. நீண்ட காலப் பகுதியில் இவை இடம்பெறுவது சிறப்பம்சமாகும். அருச்சுனன் தபசில் அருச்சுனன் தபசு மரம் ஏறுவது பக்திப்பரவசத்துடன்கலைக் கூத்தாடியின் திறமையினையும் காட்டுவதாக விளங்குகின்றது. பொன்னர்-சங்கர் கூத்து காவியப் பாணியில் அமைய, இராமர் காதை மலையகக் கூத்துகளில் காணப்படாத மிகுந்த ஆட்ட வகைகளுடன் லவன் குசலவன் கதையை சிறப்பாகக் காட்டுகின்றது. தொழில் ரீதியான கலைஞர்கள் இன்றி இவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தோட்டப்புறத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மலையக கூத்துக்களில் சமயச் சடங்குகள் மிகுதியாகக் காணப்படுவதும் அவற்றோடு ஒன்றியிருப்பதும் தொழில் ரீதியான பரிமானத்தை எய்தமைக்குக் காரணமாகும். '.
இந்து ஆலயங்களிலும் அவற்றோடு தொடர்புடைய அம்சங்களிலும் ஒவியம் சிற்பம் என்பனவற்றைக் காணலாம். (காவடி-காமன்கூத்து - நகை-ஒலை வேலைகள்)
167

Page 102
மலையக நாட்டுப்புறவியலின் முக்கிய அம்சங்களாக சிற்றாட்டங்கள் மிளிர்கின்றன. கரகம், காவடி, கும்மி, ஒயில் கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம், ‘வெட்டியான் வெட்டிச்சி ஆட்டம்’ என்பன இவ்வாட்டங்களுக்கு சமயப் பின்னணியியே முக்கியமானதாகும். பெண்கள் சீர் கொண்டு வரும் போது போடும் குரவையும் இவ்வகையிலேயே அடங்கும். பொம்மலாட்டம், தோற்பாவையாட்டம், வேடன்புலி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பபூன் கோமாளி ஆட்டம், டிங்கி டிங்கி ஆட்டம் என்பனவெல்லாம். நகைச்சுவையினை, களிப்பினை நோக்கமாகக் கொண்டவை.
கரகம், கும்மி, அம்மன் என்பன அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடையவை. காவடி முருகனுக்குரியது என்றாலும் பொதுவாக எல்லா திருவிழாக்களிலும் ஆடப்படுகின்றது.
வெட்டியான் வெட்டிச்சி ஆட்டம். காமன் கூத்தில் இடம்பெறுகின்றது. பிற ஆட்ட வகைகள் பொதுவாக எல்லா திருவிழாக்களிலுமே ஆடப்படுகின்றன. வேடன் புலி ஆட்டத்தை வேட்டை நடனங்களோடு ஒப்பிடலாம். சிலம்பாட்டத்தைப் போன்றே "பிடிவரிசையும்' உடற்பயிற்சியாகவும் தற்பாதுகாப்பு கலையாகவும் கலை ஆட்டமாகவும் காணப்படுகின்றது.
நாட்டார் வழக்காற்றியலில் நம்பிக்கைகளும் சடங்காசாரங்களும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. பூக்கட்டிப் பார்த்தல் என்பது ஒரு
நம்பிக்கையாகும். இதுபோல் கண்ணேறு கழித்தல் போன்ற பல
மரபுரீதியான நம்பிக்கைகள் உள்ளன.பூப்புச்சடங்கு சாவுச்சடங்கு போன்ற பல உள்ளன. மந்திரச்சடங்கும் குறிப்பிடத்தக்கது. மேல்நிலையாக்கம் பெற்றுள்ள சமயச் சடங்குகளோடு இவையும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் சிறந்த கைவினைப் பொருட்களை ஆக்கும் வல்லமை படைத்தவர்கள். ஒரு பல்லாங்குழி ஆட்டப்பலகையே இதனை நிரூபிக்கும்,
நாட்டுப்புற விளையாடடுகள நாட்டுப்புற வாழ்வியலின் ஒரு
கூறாகும். மலையகத்தில் சிலம்பாட்டம் முதலான பயிற்சிகளும் கிளித்தட்டு,
சடுகுடு முதலான பல்வேறு விளையாட்டுகளும் வழக்கில் உள்ளன.
நாட்டுப்புற மருந்தும் மலையகத்தில் தனித்துவமானது. பிள்ளைப் பேறு
168

பார்ப்பது முதல் பல்வேறு வகையான கைவைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம் என்பன உள்ளன. சுளுக்கு எடுத்தல் என்பது நாட்டுப்புற மருத்துவம் ஆகும்.
நாட்டார் வழக்காற்றியலில் அடங்கும் நாட்டுப்புற கட்டிடக்கலை, நாட்டுப்புற தொழில்நுட்பம் என்பனவற்றை அவர்கள் அமைத்துள்ள பாதைகள், பண்டைய குல தெய்வ ஆலயங்கள், கரகம், காவடி, தேர், உரல், உலக்கை, தெய்வ உருவங்கள், நடுகல் என்பனவற்றில் சிறப்பாகக் காணலாம்.
மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து ஓரிடத்தில் நிலையாக வாழத்தலைப்பட்ட காலத்திலேயே ஊர்கள் தோன்றி பெயர்கள் பெற்றிருக்க வேண்டும். தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் மலையகத்தில் குடியேறி சூட்டிய பெயர்கள் வரலாற்றை அறிய உதவும். எனவே மலையக நாட்டார் வழக்காற்றியலில் ஊர்ப்பெயராய்வு மிகவும் முக்கியமானதாகும். "சிந்தாகட்டி மலை', "ஊமையன் கோயில்”, “ஜெர்மன் தோட்டம்”, “அசமான கந்த தோட்டம்',"ராசா தோட்டம்’ போன்றவற்றை ஆராயும் போது வரலாற்றை அறிய முடியும்.
மனிதனது வாழ்வில் அவனது பெயர் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது பெயராகும். இது வெறும் குறியீடு மட்டுமல்ல. ஆளுமையினையும், இயல்பையும் வெளிப்படுத்துவது. பெயர்கள் பழமையின் எச்சங்களாக நின்று மனித வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்து நிற்பன. தோட்டப் பகுதியில் "புள்ள பெரட்டி’ என்ற பெயருண்டு. இது உண்மையில் சென்னைக்குப் பக்கத்திலுள்ள ஆந்திரப் பகுதியிலிருந்து வந்த குள்ளப்பரெட்டியின் வழிவந்தவர்களாவர்.
பழங்குடி நாட்டுப்புறவியலும் மலையகத்திற்கு உரியது. இடம் மாறிச் செல்லும் குரவர் இனத்தவரை ஆராய வேண்டும். அவர்கள் இடம் மாறிச் செல்வதற்கான காரணம் வரலாற்றில் உண்டு. தோட்டங்களில் மிகுந்த வேட்டை தொழிலில் ஈடுபாடுடையோர் மலையின மக்களின் சந்ததியென்று தம்மை பெருமையோடு கூறிக்கொள்வதை இன்றும் காணலாம்.
169

Page 103
முடிவுரை
மலையகத்தில் இதுவரை நாட்டார் வழக்காறுகள் பற்றிய முறையான கள ஆய்வு நடைபெறவில்லை. கள ஆய்வின்றி இத்துறையில் ஆய்வு மேற்கொள்ள முடியாது. எனவே கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படல் வேண்டும். கூத்துக்களை ஆடவல்லோரும் நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்புடையோரும் ஆதரிப்பாரின்றி நலிந்தும் மறைந்தும் வருகின்றனர். இவர்களை ஆதரிக்க வேண்டும். தப்பு முதலான வாத்தியக் கருவிகளை இசைப் போர் சமூகரீதியாக கொச்சைப்படுத்தப்பட்டுள்ள நிலைமை மாறவேண்டும். மலையக BITLG Lipsius) ,686)ios Ts) 91-59s (Glossary of Technical Terms. in Folklore) ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். மலையக நாட்டுப்புறவியல் நூலடைவுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும் (Bibliographies of Folklore ofUpcountry)
மலையக நாட்டார் வழக்காற்றியலின் கூறுகள் பற்றி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவாக தனித்தனி நூல்கள் எழுதப்படல் வேண்டும். இதுவரை இத்துறையில் ஈடுபட்டுள்ளோரை அழைத்து அவர்களின் சேகரிப்புகள் பாடல்களாக, விடுகதைகளாக, சொல்லடைகளாக சிறிய அளவில் இருப்பினும் ஒன்று சேர்க்கவேண்டும். மலையக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒன்று கூடல் ஒன்று இடம்பெறுவதோடு அவர்களை ஒன்றிணைத்து ஒரு கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டும். இதன் வெளியீடாக ஒரு பருவ சஞ்சிகை வெளியிடப்படல் வேண்டும்.
சான்றாதாரம்
1 தமிழில் நாட்டப் பற்றிய தேடல் - கட்டுரை பேராசிரியர் கா சிவத்தம்பி
2. நாட்டுப்புற இசைக்கலை (நூல்) டாக்டர் கோ. குணசேகரன்
3. தமிழின் நாட்டுப்புற இயல் ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும் (கட்டுரை)க சக்திவேல்
4. நாட்டார் வழக்காற்று கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் கட்டுரை தே லூர்து
நன்றி
மலையகத்தில் பாரம்பரிய கலைகளை கடும்பாடுபட்டு வளர்த்து மறைந்த முன்னோருக்கும் இந்நாளில் வளர்த்து வருவதுடன் தகவல்களை தந்துதவியோர்க்கும்.
170.

ஐந்தாவது அமர்வு
கண்டி
தலைமை பேராசிரியர் க. அருணாசலம்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 104

மலையக இலக்கியத்துக்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பு தெளிவத்தை ஜோசப்
நாம் எல்லோரும் இன்று நிறைய எழுதுகின்றோம். விழா எடுத்துத் தமிழ் வளர்க்கின்றோம். தமிழ் ஆராய்கின்றோம்! மிகவும் மகிழ்ச்சிகரமான செயல். சந்தோஷமாக இருக்கிறது!
ஆனால் இன்றைக்கு எழுதுகிறோமே இந்தத் தமிழ் - இந்த வசனம் - இந்த உரை நடை - அது எப்படி வந்தது. திடீரென முளைத்ததா - என்பது பற்றி எப்போதாவது யோசித்தோமா. யோசித்திருக்கிறோமா..?
சுவிட்சைப் போட்டால் லைட் எறிகிறது! கோச்சில் ஏறினால் கொண்டு போய் விட்டு விடுகின்றார்கள்! நம்பர்களைச் சுழற்றினால் எங்கோ இருக்கும் நண்பர்களுடன் அளவளாவிக் கொள்கின்றோம்! என்பதைப் போலத்தான் இதுவும். விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள்
ஆனால் மலையக இலக்கியத்துக்கு கிறீஸ்தவர்களின் பங்களிப்பு என்பது பற்றிப் பேச ஒரு சந்தர்ப்பம் அளித்ததன் மூலம் இது பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய மத்திய மாகாண சபையின் இந்த மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் குறிப்பாக கெளரவ அமைச்சர் புத்திரசிகாமணிக்கு எனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
செந்தமிழ் கற்றோம்பிய சீர்சால் கிறித்தவர்கள் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து இந்தத் தமிழ் மொழிக்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பதனை நிரூபித்துக் காட்டினார்கள்.
தமிழின் ஜீவ வேகம்: தூரத்துச் சங்கீதம் போன்று நினைவைச் சுண்டி விடும் இந்த மொழியின் சக்தி: காதலனின் குழைவு போல் நெஞ்சை லாவும் அதன் மோகனம்: போர்முரசு போல் கட்டளையிடும் ஆணித்தரமான ஆக்ஞை நுட்பமான சித்திரங்களைப் பதித்துத் தரும் கலைத்திறன் ஆகியவற்றை மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் புரிந்து கொண்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
173

Page 105
பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து இந்தத் தமிழுக்கு எத்தனை சக்தி இருக்கிறது என்பதனை நிரூபித்தவர்கள் கிறித்தவர்கள்.
நமது முறுக்கேறிய தமிழ்வெறி அந்தப் பாதிரிமார்களுக்கு ஏதாவது நன்றி செலுத்தியிருக்கிறதா
ஆழமாகவும் நிதானமாகவும் யோசித்துப் பார்த்தால் கல்வியைக் கொடுத்த மாதிரி ஆஸ்பத்திரிகளைக் கொடுத்த மாதிரி தமிழுக்கு ஜீவன் மிக்க வசனத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
பைபிள் தமிழின் சில உதாரணங்களைப் பார்ப்போம். இவைகளைப் படித்ததும் முழு பைபிளையுமே படித்துப் பார்த்து தமிழ் வசனத்தில் அவர்கள் செய்துள்ள தட்டார வேலைப்பாட்டை ரசிக்க ஆவல் எழுவதை
தவிர்க்க முடியாது!
"ஒரு சந்ததி போகிறது. மறு சந்ததி வருகிறது. பூமியோ எண்றைக்கும் நிலைத்து நிற்கிறது.”
"முன் இருந்ததே இனிமேலும் இருக்கும். முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும். சூரியனுக்குக் கீழே பூமியில் நூதனமானது ஒன்றுமில்லை.”
”எல்லா நதிகளுமே சமுத்திரத்திலே ஓடி விழுந்தாலும் சமுத்திரம் நிரம்பாது. தாங்கள் உற்பத்தியான இடத்துக்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.”
"எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது எல்லாம் மண்ணிலே உண்டாகிறது. எல்லாம் மண்ணுக்கே திரும்புகிறது.’
”காட்டு மரங்களிடையே இச்சிலி மரம் எப்படி இருக்கின்றதோ அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார். அதன் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கும்.'
"மாரிக்காலம் சென்றது. மழை பெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகின்றன. குருவிகள் பாடும் காலம் வந்தது. காட்டுப் புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கிறது.’
174

"நீரூபவதி. என் நேசமே நீரூபவதி. உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாவின் கண்களைப் போல் இருக்கின்றன. உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போல் இருக்கிறது.”
"நேசம் மரணத்தைப் போல் வலிது. நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிது. அதன் நிழல் அக்கினித் தழல்.’
'துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்.”
”ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே துழைவது எளிதாயிருக்கும்.”
'முந்தினோர் அனேகர் பிந்தினோராயும் பிந்தினோர் அனேகர் முந்தினோராயும் இருப்பார்கள்.’
"வீடு கட்டுகிறவன் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத்
தலைக்கல்லாயிற்று.
"நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுப்பான். நல்ல மேய்ப்பன் அல்லாதவனும் - ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாத கூலி மேய்ப்பனும் - ஒநாய் வருவதைக் கண்டு ஓடிப்போவான். அப்பொழுது ஒநாய் ஆடுகளைப் பீறிக் கிழித்து அவைகளைச் சிதறடிக்கும்.”
சென்ற நூற்றாண்டில் தான் தமிழில் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து ஆரவாரமில்லாமல், தாரைதப்பட்டைகள் அடிக்காமல் கூட்டிவைத்துக் கூப்பாடுகள் போடாமல் தமிழ்மொழியின் சக்தியை, அள்ளக்குறையா அதன் செல்வத்தை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள், நம்மை பிரமிக்க வைத்திருக்கின்றார்கள் கிறீஸ்துவம் பரப்ப வந்த கிறீஸ்தவர்கள்.
......... ۔
175

Page 106
ஐரோப்பியரின் இந்திய வருகைக்கு முன் தமிழில் வசனம் இல்லை. தனி உரை நடை இல்லை. இலக்கணம், இலக்கியம், நிகண்டு, சோதிடம், மருத்துவம், முதலிய சகல நூல்களுமே செய்யுளிலேயே ஆக்கப்பட்டு வந்தன. இவைகளுக்கு உரை ஆசிரியர்கள் எழுதிய உரைகள் கூட அரைகுறையாகவே இருந்தன. இவை தவிர்த்து தமிழிலே தனியான உரைநடை நூல் எதுவுமே இல்லை.
"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள்’ இருந்தன என்று தொல்காப்பியம் பேசினாலும் அதற்குதாரணமாய் இருப்பது-கிடைப்பதுசிலப்பதிகாரம் மட்டுமே. அதுவும் கூட ஒரு சின்னஞ்சிறு பகுதி மட்டுமே, உரைநடை, மற்றதெல்லாம் பாட்டே-செய்யுளே!
"செய்யுட்களைப் படித்து மக்கள் திருந்துவதென்பது அசாத்தியம் அன்றோ. வசனகாவியங்களால் தான் மக்கள் உயர்ச்சி பெறவேண்டும். ஐரோப்பிய தேசங்கள் நாகரீகமும் நற்பண்பும் அடைந்திருக்கின்றன என்றால் ஐரோப்பிய மொழிகளில் வசனகாவியங்கள் நிறைய இருக்கின்றின. நம்முடைய தமிழ் மொழியிலும் உரைநடை நூல்கள் இல்லாமல் இருக்கிற வரைக்கும் இந்தத்தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். பண்டைத் தமிழ் மொழியில் வசன நூல்கள் இருந்திருக்குமேயானால் தமிழ் நாடு பல துறைகளில் முன்னேறி இருக்கும்’ என்றெழுதுகின்றார் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவர் ஒரு சிறந்த கல்விமான். சீர்காழி மாயவரம் முதலிய ஊர்களில் நீதவானாகப் பணிபுரிந்த இவர் ஒரு கவிஞரும் கூட. 1885ல் தன்னுடைய பிரதாப முதலியார் சரிதம் என்னும் நாவலை எழுதிய தன் மூலம் தமிழில் முதல் நாவலைத் தந்தவர் எனும் பெருமையுடன் வரலாற்றிலும் அழியா இடம் பெற்றுக்கொண்டவர். இவரும் ஒரு கிறிஸ்தவரே என்பதையும் ஒரு வசதிக்காக நாம் இங்கே குறித்துக் கொள்ளலாம்.
உரைநடையின் முக்கியத்துவம் பற்றி மயூரம் வேதநாயகம் பிள்ளையின் இப்பகுதி அறிவுறுத்துகின்றது. முதன் முதலில், தமிழில் தனியாக உரைநடையைப் பாவித்து நூல் இயற்றியவர் தேம்பாவணி எனும் தீந்தமிழ்க் காவியம் தந்த வீரமாமுனிவரே என்பது பலரது முடிவு. ஆனால் அது தவறு என்று கூறுகின்றார். "கிறித்துவமும் தமிழும்’ எழுதிய ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.
176

வணக்கத்துக்குரிய G. U.Pope ஐயர் மகா வித்வான் இராமானுஜக் கவிராயரிடம் கல்வி பயின்றவர். திருநெல்வேலி உதகமண்டலம், தஞ்சாவூர் என்று நீண்ட நெடுங்காலம் தமிழுக்கும் கிறீத்துவத்துக்கும் சேவையாற்றிய இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பின் ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார்.
தமிழ்மொழியின் மகோன்னதத்தை உண்மையான அதன் சிறப்பை உலகம் அறியும்படிச் செய்தவர்களில் இவரும் ஒரு முதல்வர். திருவாசகம் - திருக்குறள் - நாலடியார் முதலிய நீதி நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐரோப்பியருக்கு தமிழின் செழுமையை பறைசாற்றிய இவரை வெறுமனே மதம் பரப்ப வந்த கிறித்துவப் பாதிரி என்று கொள்ள முடிகிறதா என்ன
உரைநடையின் முதல்வராகக் கொள்ளப்படும் வீரமாமுனிவர் இத்தாலி தேசத்தவர். இவருடைய இயற்பெயர் "கொன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ் கி’. ஏசுவின் சபைத் துறவியான இவர் 1680களில் தேவ ஊழியத்துக்காக மதுரை வந்தார். 1742ல் திருநெல்வேலியில் மணப்பாட்டில் காலமாகும் வரை தமிழுக்காக, அதன் வளர்ச்சிக்காக நிறைய பாடுபட்டுள்ளார். தேம்பாவணிக்கு உரைநடை விளக்கமும், பரமார்த்த குரு கதைகள் - வாமன் கதை - திருச்சபைக் கணிதம் - ஞானம் உணர்தல் - வேதியர் ஒழுக்கம் - வேத விளக்கம் - என்று பல நூல்கள் எழுதி உரைநடையின் முதல்வராகக் கணிக்கப்படுகின்றவர்.
இவருக்கும் முன்பதாகவே றொபட்டி நோபிலி எனும் தத்துவப் போதகஸ்வாமியும் (1577) அதற்கு முன்பதாகவே ஏசு சபைப் பாதிரிமார்களும் (Jesuits Fathers) "கிறித்துவ வேதோபதேசம்' எனும் நூலை உரைநடையில் இயற்றியுள்ளார்கள் என்றும் அச்சு வசதி இல்லாத காரணத்தால்தான் இவர்களுடைய உரைநடை நூல்கள் பிரசித்தம் அடையவில்லை என்றும் திரு வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
எழுதுதல் என்னும் செயற்பாட்டுக்கு எழுவாயாய் நின்றதால்தான் எழுத்து என்னும் பெயர் வந்தது. எழுதும் கருவி எழுத்தாணி ஆயிற்று ஆனால் எழுதப்படாத எழுத்தான ‘அச்சு என்னும் விசயத்தை தமிழுக்கீந்தார்களே இந்தக் கிறிஸ்துவர்கள் அதை நாம் என்னவென்று போற்றுவது. பாராட்டுவது!
177

Page 107
அச்சுப்பொறி இயங்காவிடத்து புத்தகங்கள் இல்லை. புத்தகங்கள் இல்லையேல் கல்வி இல்லை. கல்வியறிவில்லையென்றால் என்னவாகும் என்பது பாகற்காய்க்குள் கிடக்கும் புழுவான பெருந்தோட்ட மக்களாகிய நமக்கு கசப்புப் பற்றி விளங்கப்படுத்துவதற்கொப்பாகும் ஒரு மொழியின்; இனத்தின் சமூகத்தின் நாட்டின் கலை கலாசாரத்தின் முன்னேற்றம் கல்வி வளர்ச்சியிலேயே ஓங்கி இருக்கிறது எனும் போது அச்சுப்பொறியின் முக்கியத்துவமும் அதைக் கொண்டு வந்தவர்களின் முக்கியத்துவமும் புரிகிறது.
15ஆம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியர் இந்தியாவை அடைந்து கொச்சி, கள்ளிக்கோட்டை, கோவா முதலிய கரையோரப் பட்டினங்களில் அமர்ந்து வணிகம் செய்த போது இலங்கை, சாவகம், ஆகிய தீவுகளையும் தம் வசப்படுத்தி வணிகத்தை விருத்தி செய்த அதேவேளை கிறீத்துவ மதத்தினையும் பரப்பினர். Robert De Nobeli (தத்துவ போதகச் சாமி) Father Bescki (வீரமாமுனிவர்) ஜோன் டி பிரிட்டோ, சவேரியார் போன்ற துறவிகள் இவர்களால் கொண்டுவரப்பட்டவர்களே!
போர்த்துக்கேயர் 'ஒஹோவென்று வியாபாரம் செய்வதைக் கண்ட ஏனைய சில ஐரோப்பிய நாட்டினரும் இந்தியாவைத் தேடிக் கிளம்பினார்கள். ஒரு விதமாக ஒல்லாந்துக்காரர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இவர்கள் இந்திய நாட்டை அடைந்ததுமே போர்த்துக்கீசர்களை வெற்றி கொண்டு விரட்டியதுமல்லாமல் அவர்கள் கொண்டு வந்த துறவிகளையும் துன்புறுத்தினார்கள். இலங்கையை அடைந்த இவ்வொல்லாந்தர்கள் யாழ்ப்பாணத்திலிருநீத இந்துக் கோவில்களை உடைத்தார்கள். தேவாலயங்கள் கட்டினார்கள். பலவந்தமாக இந்துக்களை கிறீத்துவர்கள் ஆக்கினார்கள். கிறித்துவர்களுக்கு மட்டுமே அரசியலில் உயர் பதவிகள் கொடுத்தார்கள். இவர்களுடைய கொடுங்கோலாட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஐரோப்பியர்கள் கடலில் சுற்றிச் சுற்றி வந்து இந்தியாவுக்குள் இறங்கினர். பொல்லாதவர்கள் என்று பட்டம் பெற்றுவிட்ட ஒல்லாந்தர்களை ஒட்டி விட்டு ஆங்கில ஆட்சியை மேற்கொண்டனர். இவர்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைத்தன.
ஐரோப்பியரின் வரவால் தமக்கேற்பட்ட தீங்குகள் எப்படியிருப்பினும், நன்மைகள் அனந்தம், அதிலும் குறிப்பாக இவர்களால் கிடைத்த ஆங்கிலக்
178

கல்வி, ஐரோப்பிய புது நாகரீகத்தின் உன்னத அம்சங்களுடன் கூடிய வெளியுலகைத் திறந்து இந்தியர்களுக்குக் காட்டியது. ஓர் உள்ளும் எழுச்சிக்கும் இந்தத் திறவுகோலே காரணமுமாகியது.
ஆங்கிலேயரின் தொடர்பினால் அச்சுப்பொறியும், தமிழ் மொழியில் உரைநடை நூல்களும் அச்சுப் புத்தகங்களும் டிக்ஷனரி எனும் அகராதிகளும் தோன்றியது போலவே விஞ்ஞான நூல்களும் தோன்றலாயின. சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்து தமிழ் புதிய நூல்களை எழுதுவோருக்குச் சன்மானம் கொடுத்தார்கள். எழுதும்படி ஊக்குவித்தார்கள். இன்றைய சிறுகதைப் போட்டிகள், நாவல் போட்டிகள், கவிதைப் போட்டிகள் ஆகியவற்றிற்கும் இவர்களே காலெடுத்துக் கொடுத்துள்ளார்கள் இதன் மூலம்.
இந்து தேச சரித்திரம்; உலக சரித்திரம் பல்தேச சரித்திரம், ரொபின் சன் குரூஸோ, முதலிய நூல்கள் இந்த உந்துதலால் தோன்றியவைகளே.
"Indian Christian School Book Society" 6T sigui இன்னுமொரு சங்கமும் இந்த நூல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்டு இயங்கியது.பூமிசாத்திரம், எகிப்தின்பூர்வீக சரித்திரம், இந்து சாதி விளக்கம், Elementry Algebra, Elementry Glometry, 667 96T60d6 msò, General Knowledge per frî saviássy ui- (Domestic Animals), ரசாயன முதல் நூல், மருந்துச் சரக்குகளின் பெயர் தொகுப்பு, வான சாஸ்திரம் என்று பல் வகையான நூல்கள் எழுந்தன.
Geometry As An Art - Geometry as a Science என்ற இரு நூல்களை போப் ஐயர் எழுதி வெளியிட்டார். வானசாஸ்திரம்: Elementry Algebraஆகிய நூல்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்டன.
மிஷன் என்னும் பிரச்சாரச் சங்கம் மூலமாக வார, மாத, செய்தித் 576i56i Goussu Liu Loy. The Madras Religious Tract Society 1831ல் Tamil Magazine என்னும் மாத வெளியீட்டைக் கொண்டு வந்தது. இதுவே தமிழின் முதல் மாத இதழ். அதன் பின் மாதம் இரண்டாக வெளிவரத் தொடங்கி நின்று விட்டது.
179

Page 108
சுவிசேச பிரபல விளக்கம், பால பீடிகை, ஜன சினேகன், ஜில்லா கெஸட் மிசன் பாடசாலை தாள், பாலியர் நேசன் - (மாணாக்கர்களுக்காக). உதய தாரகை, தேசோபகாரி, என்று எண்ணற்ற இதழ்கள் வரத் தொடங்கின இவற்றுள் உதய தாரகை ஈழத்தின் முதல் மாத இதழாகும். இதன் தோற்றம் 1841 ஆங்கிலம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலுமே இதில் ஆக்கங்கள் இடம்பெற்றன. ஆங்கிலப்பகுதிக்கு Hentry Martin என்பவரும் தமிழ்ப்பகுதிக்கு Seth Dayson என்பவரும் பொறுப்பாயிருந்தனர். பாலியர் நேசன், கத்தோலிக்கப் பாதுகாவலன் போன்றவைகளும் இலங்கையிலிருந்து வரத்தொடங்கின.
இன்று தினத்தாள், வாரத்தாள், மாதத்தாள் என்று வந்துகுவியும் செய்தித்தாள் மற்றும் வார மாத சஞ்சிகைகளின் வருகைக்கும் அடி எடுத்துக் கொடுத்தவர்கள் இவர்களே.
மதம் பரப்பத்தான் வந்தார்கள் என்றாலும் அவர்களுடைய தமிழ்த் தொண்டு மகத்தானது. தமிழ் படித்து அதன் எளிமை, தூய்மை, இனிமை, தொன்மை ஆகியவற்றால் கட்டுண்ட இவர்கள் தமிழ் எழுத்துக்களை அச்சாக்கி அதற்கான வசதிகள் இங்கு இல்லாததால் தாங்கள் தாங்கள் வந்த அந்த ஐரோப்பிய நாடுகளில் அச்சாக்கி, கோர்த்து எழுத்து, வளி, வசனம், என்று வடிவமைத்து திருக்குறளையும் திருவாசகத்தையும்; திருவருட்பயனையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து; தமிழ் நூல்கள் வெளியீடுகள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளில் அச்சடித்து இங்கே கொண்டு வந்து, பிறகு அச்சுயந்திரங்களையே இங்கே கொண்டு வந்து இயக்கி, அச்சுப் புத்தகங்களை தமிழில் அடித்துக் கொடுத்தமை ஆகியவை இவர்களது மதத் தொண்டை விட தமிழ்த் தொண்டையே பறையடித்துக் காட்டுகின்றன. சுட்டி நிற்கின்றன.
ஐரோப்பியர் காலத்தில் கோவாவில் இருந்து படகுமூலம் மன்னார் வந்து புத்தளம் மன்னார் யாழ்ப்பாணம் என்று பணியாற்றிய ஜோசப் வாஸ் முனிவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டியில் சேவையாற்றியவர். ஆங்கிலேயர் கைவசம் கண்டிராஜ்யம் விழாத அந்த ஆதி காலத்தில் கணி டி மண்னனி விமலதர்ம சூரியனின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டவர். வைசூரி, அம்மை என்னும் தொற்று நோய் வந்தவர்களை மற்றவர்களுக்கும் பரவும் என்னும் பயத்தில் காட்டுக்குள் கொண்டுபோய் போட்டுவிடுவார்களாம். அப்படி போடப்பட்ட வியாதியஸ்தர்
180

கூட்டத்துடன் காட்டில் தங்கி அவர்களுக்கு பணிவிடை செய்து தொற்று நோயிலிருந்து தன்னையும் காத்துக் கொள்ள படாதபாடு பட்டு ஆஸ்பத்திரிகள் ஸ்தாபித்த வாஸ் முனிவரின் வாழ்க்கையைப் படிக்கையில் மதம் முன்தோன்றவில்லை. மனிதமே முன்தோன்றுகிறது. மன்னனும் மருத்துவம் கற்க எண்ணி போர்த்துக்கீச மொழியில் தன்னிடம் இருந்த வைத்திய நூல் சுவடியை தமிழாக்க ஜோசப் வாஸ் முனிவரின் உதவியை நாடினான். அதன் நிமித்தம் அடிக்கடி அரண்மனை போய், மொழி பெயர்ப்பை ஒலையில் எழுத நீண்ட நாள் எடுத்தது. மன்னனுடன் பழகும் சந்தர்ப்பமும் கிட்டியது. வார்த்தையால் மட்டுமல்லாமல்: வாழ்க்கையாலும் இவர் ஏசுவின் நற்செய்தித் தூதுக்கு சான்றாக இருந்ததை மன்னன் அறிந்து மனமகிழ்ச்சி கொண்டான். 1699ன் ஆரம்பத்தில் கிறிஸ்தவ எதிர்ப்புக் கிளர்ச்சிகள் கண்டியில் தோன்றின. பெளத்த சங்கம், குருமார்களின் தோற்றம் ஆகியவையூடாக - வெலிவித்த சரணங்கர உட்பட கிளர்ச்சியாளர்கள் உடைத்தெறிந்த கோவிலை மீண்டும் ஐந்தே மாதங்களில் கட்டி எழுப்பிக் கொள்ளவும், அந்தோனியார் விழா எடுக்கவும் அவரால் முடிந்திருக்கின்றது. ஒரு கால் நூற்றாண்டு கண்டிச் சேவையின் பின் தனது 60 ஆவது வயதில் கண்டியிலேயே இவர் அமரரானார்.
1995 ஆம் ஆண்டு பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இலங்கை வந்து கத்தோலிக்கத் திருச்சபையின் திருப்பீடங்களில் மகிமைப்படுத்தப்படக்கூடிய முத்திப்பேறு பட்டத்தை ஜோசப் வாஸ் அடிகளாருக்கு வழங்கிச் சென்றதை நாம் அறிவோம். (சென் ஜோசப் வாஸ்).
கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும் தேசிய உணர்விலும் இலக்கிய அபிமானத்திலும் நெருங்கிய தொடர்புடைய அண்டை நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் இருந்துள்ளதை வரலாறுகள் நிரூபிக்கின்றன. இந்தியாவில் ஏற்படும் சகல மாற்றங்களும் இலங்கையையும் பாதித்தே வந்துள்ளது. தமிழ் நாட்டில் எழும் எண்ணங்கள் எழுச்சிகள், அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையிலும் பிரதிபலிக்கத் தவறியதில்லை. இலங்கையின் தேயிலை உற்பத்தி என்பது பற்றி ஆராயப் புகுந்த S. Rajaratnam என்பவர் 1873ல் இலங்கையின் முதல் தேயிலை ஏற்றுமதி தொடங்கியுள்ளது என்றாலும் போதுமான அளவு ஏற்றுமதி இல்லாத காரணத்தால் இந்தியத் தேயிலை என்னும் பெயருடனேயே (Label) ஏற்றுமதி செய்யப்பட்டது என்றெழுதுகின்றார். லண்டன் மின்சிங்லேன்
181

Page 109
சந்தையில் Ceylon Tea சந்தையில் என்று தனியாக பெயர் பொறிக்கப்பட்டது 1883ல் தான் என்றும் அப்போதைய ஐரோப்பிய சந்தையின் 62 வீதமான தேயிலையை சைனாவும் 36 வீதத்தை இந்தியாவும் 2 வீதத்தை இலங்கையும் ஏற்றுமதி செய்தன என்றும் இவர் குறிக்கின்றார். இலங்கையின் மீதான இந்தியப் பாதிப்பு இதனாலும் புலப்படுகிறது. 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்ட ஆங்கிலேயர்கள் அடுத்த ஆண்டே அதுவும் ஆறே மாதத்தில் இலங்கைக்கும் கொடுத்து விடவில்லையா கையே போய்விட்டது. நகத்தைப் பற்றி என்ன என்னும் பாவனையில்
1875 ஆகஸ்ட் 30ல் மானிப்பாய் இந்து பெற்றோருக்கு ஒரே மகனாய்ப் பிறந்தவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாச அடிகளார். ஒன்றேகால் நூற்றாண்டுக்குப் பின்னும் இன்றும் பேசப்படுகின்றார்; ஞானமாய்ப் போற்றப்படுகின்றார் என்றால் அவர் மதத்திற்காற்றிய அரும்பணியால் அல்ல தமிழுக்காற்றிய அருந்தொண்டால் பல்கலைக்கழகத்தின் படிகள் ஏறா இவரை பல்கலைக்கழகங்கள் பாராட்டிக் கனம் பண்ணுகின்றன. ஆராய்ந்து ஆய்வுகள் செய்கின்றன. அயல் நாடு செல்லா அவர் அன்னிய மொழிகள் கற்று அவற்றின் அடிச்சொல் கண்டு சொல்லொலிகள் கேட்டு சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி படைத்தாரே. அந்தப் பணியின் மகிமை.தமிழ் மொழி ஒப்பியல் அகராதி - தமிழ்ச்சொல் பிறப்பாராய்ச்சி - தமிழ் மொழி ஆராய்ச்சி என்று 80க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர் இந்தக் கிறிஸ்துவத் துறவி. யாழ் St. Patrick கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஒரு தோட்டத்தில் சில காலம் கிளார்க்காக உத்தியோகம் Qs ugli GTri. 9 is G5) i3,6ss Ceylon Railway Clerical Examination க்குப் படித்து திறமைச் சித்தி பெற்று கொழும்பு புகையிரதத் தலைமைப் பிரிவில் வேலைக்கமர்த்தப்பட்டார். எதிர்காலம் வெகு ஜோதியாய் இருக்கும் அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் ஞானப்பிரகாசம் அமைதி குலைந்து காணப்பட்டார். இந்தக் கிளாக்கர் உத்தியோகத்துக்காக தான் படைக்கப்படவில்லை என்னும் எண்ணம் உள்ளத்தில் ஒடி ஒடி அலைக்கழித்தது. வணக்கத்துக்குரிய அடிகளார் சார்ள்ஸ் கொலின் O. M.I. யை அணுகித் தனது மனக்குறையை விளக்கினார். "நன்றாகத் தீர்மானித்துக் கொள் உன் முடிவு சரியானதென்றால் வேலையை ராஜினாமாச் செய்து விட்டு உலகைத்துறந்து செமினரியில் (குருத்துவக் கல்லூரியில்) சேர்ந்து கொள்’ ள்னறு அறிவுரை வழங்கினார் கொலின் பாதிரியார். சுவாமிநாத பிள்ளை வணக்கத்துக்குரிய நல்லூர் ஸ்வாமி
ானப்பிரகாசர் அடிகளார் ஆனார்.
182

இன்று நாம் மலையகத்துத் தமிழ் பற்றி ஆராய்கின்றோம். இந்த வேளை தமிழ் பற்றி ஆராய்ந்து இவரை நினைவு கூர்ந்து கெளரவித்தல் பொருத்தமானதென்றே எண்ணுகின்றேன்.
உலகத்துத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழறிஞர்களைக் கூட்டி வைத்து உலகத் தமிழாராய்ச்சி நடத்திக்காட்டி இன்றைய நிகழ்வுக்கான விழாக்களுக்கு வித்திட்டாரே தமிழ்த்தூது தனிநாயக அடிகளார், அவரும் கிறித்துவத்தின் விளைச்சல் அல்லவா! தமிழ் மொழியின் இலக்கியச் செறிவு கலையழகு, பண்பாட்டுச் சிறப்பு பற்றியெல்லாம் அயல் நாட்டு மொழிகளுடன் ஒப்பிட்டுக்காட்ட தமிழ்த்துது சென்ற வணக்கத்துக்குரிய தனிநாயக அடிகளாரையும் இச்சபையில் கெளரவித்தல் நமது கடமையாகும்.
ஞானப்பிரகாசர், தனிநாயக அடிகளார் தொட்டு பிரெஞ்ச் நாட்டின் Dgså i Guds Gsel (Eugene De Mezenod) Sig-Hsinflså வரலாற்றை இன்றைய அரசியல் மற்றும் வாழ்க்கைப் பின்னணியுடன் இணைத்து "புரட்சியில் பூத்தபூ' என்னும் நூலாகத் தந்துள்ள இலக்கியப் பட்டதாரியும் - நவீன தொடர்புசாதனக் கலைப்பட்டதாரியுமான கரவையூர் செல்வம், கே. டானியல், டொமினிக் ஜீவா, பெனடிக்ட் பாலன், அகஸ்தியர், வ. அ. இராசரத்தினம் போன்றவர்கள் ஊடாகத் தமிழ் இலக்கியப் பணியாற்றும் இளவல்கள் எத்தனை பேர். அ. ஜெயராஜ், K. R. டேவிட், மைக்கல் கொலின், சூயோ பற்றி மாகரன் என்று கிறித்துவ விளைநிலத்தின் புதுப்பயிர்கள். AV
தனி மனிதர்களாக வாழ்ந்துவிடாது பொதுத் தொண்டுகள் புரிந்து, மனிதர்களை சமூக விழிப்புணர்வுள்ளவர்களாக்கும் குறிக்கோளை முன் வைத்து திருமறை வட்டத்துக்கு அம்பாலும் தமது பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் தமிழுக்கும், இலக்கியத்துக்கும் பணியாற்றிய, பணியாற்றும் ஆயர்கள், குருவானவர்கள் எத்தனை எத்தனை பேர்.
வழிபாட்டு முறைகளில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த
அயராதுழைத்த ஆயர் எமிலியானுஸ், நூறாண்டு கண்ட மட்டக்களப்பு - திருக்கோணமலை மறை மாவட்ட குருவானவர்கள்; ஆயர்கள்.
183

Page 110
நாடகங்கள் இசைவிருந்துகள்; ஒப்பியல் சமய ஆய்வுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், நாடக, நடனப் பயிற்சிகள் என்று சதா இயங்கிக் கொண்டிருக்கும். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவகரான நீ, மரிய சேவியர் அடிகளாரின் கலை இலக்கியப் பணிகள் போற்றுதலுக்குரியன. திருமறைக் கலாமன்றத்தினர் வெளியிடும் 'கலைமுகம்’ திருக்கோணமலை, மட்டக்களப்பு மறை மாவட்டம் வெளியிடும் கிறிஸ்தவ இலக்கியத் திங்களேடான ”தொண்டன்’ அமரர் டி. பாக்கியநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருக்கோணமலை கிறிஸ்தவ இலக்கிய வட்டம் வெளியிட்ட கமைதாங்கி; மெதடிஸ்ட் திருச்சபை கொழும்பிலிருந்து வெளியிடும் தொடுவானம், தேவதாசன் ஜெயசிங் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தொடர்பு; யாழ் நகரிலிருந்து வெளிவந்த புதிய உலகம் போன்ற கிறீஸ்த்துவ ஏடுகளும் சமயத்துக்கும் அப்பால் தமிழ்ப்பணி ஆற்றியே வந்துள்ளன என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இப்படிப் பொதுவாகத் தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் தொண்டாற்றிய கிறீத்தவர்களைப் போலவே மலையகத் தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் தொண்டுகள் பல புரிந்த கிறித்துவர்கள் பற்றி இனிப்
LurrúGumth.
மலையக இலக்கியத்துக்கு கிறீத்தவர்களின் பங்களிப்பு’ என்பது" -حبه، ۶ தான் இந்த ஆய்வுக்கான தலைப்பும் கூட. ஆனாலும் நான் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழுக்கு கிறீத்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் அவர்தம் தொண்டுகள் பற்றியும் சிறிது சிந்திக்கத் தூண்டி விட்டதே இந்தத் தலைப்புத்தான்.
இரண்டாயிரமாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டது தமிழகம். 170 ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்டது மலையகம்,
1815 ஆம் ஆண்டளவில் கண்டி ராஜ்யமும் ஆங்கிலேயர் கைகளில் விழுந்த பிறகே, கோப்பிப் பயிரின் அறிமுகமும் பெருந்தோட்ட மக்களின் வருகையும் தொடங்குகின்றது. 1817ல் இருந்தே இவர்களது வருகை தொடங்கி இருப்பினும் 1827ல் 10,000 இந்தியர்கள் இலங்கையின் மலையகத்தில் இருந்தனர் என்று தொழில் ஆணையாளரின் அறிக்கை குறிக்கின்றது. தொழிற்றிணைக்களம் (Labout Department)
184

உருவாக்கப்பட்டதே 1923ல் தான் என்கையில் இது எந்தளவுக்கு சரியான புள்ளிவிபரம் என்பது தெரியவில்லை.
"The Ceylon Journal of Historical Studies" staigui Gaussui (Qais (1961) (The Indian Immigration to Ceylon The First Phase)"இந்தியர்களின் இலங்கைக் குடியேற்றம்’ என்னும் தனது கட்டுரையில் 1830 களிலிருந்து ஆரம்பிக்கிறது இவர்களது வருகை என்றெழுதுகின்றார் சரித்திரப் பேராசிரியர் கே. எம். டி. சில்வா. எப்படிப் பார்த்தாலும் மலையக மக்களின் சரித்திரம் கிட்டத்தட்ட 170 ஆண்டுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
இந்த 1 3/4 நூற்றாண்டு கால மலையக சரித்திரத்தில் மலையக இலக்கியத்துக்கு 125 வருட சரித்திரத்தை தேடிக்கொடுத்திருப்பவர் ஆப்பிரஹாம் ஜோசப் என்னும் கிறீஸ்துவர். இப்போதைக்கு (1997) மலையகத்தின் முதல் நூலாக கொள்ளப்படும் இந்த ஆபிரகாம் ஜோசப் அவர்களின் "கோப்பிக்கிருஷிக்கும்மி' 1869ல் வெளிவந்திருக்கிறது. 1 1/4 நூற்றாண்டுக்கு முன் மலையகத்தில் அச்சுக்கூடங்கள் தோன்றியிராத நிலையில் கிறித்துவ மிஷனரிமாரின் ஒத்தாசையுடன் ஆ. ஜோசப் இந்நூலை யாழ்ப்பாணத்திலேயே அச்சிட்டிருக்கின்றார்.
"Strong and Asbury Printers' 61 sigli si is sigs iss நேர்த்தியாக, அச்சிடப்பட்டிருக்கும் இந்த நூலின் தலைப்பு "A Cummipoem on Coffee Planting with English Translation" என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. (மு. நித்தியானந்தன் - தினகரன் வாரமஞ்சரி கட்டுரை ஆகஸ்ட் 94) இந்த முதல் நூலை எழுதியவரும், அதை நூலாக்க துணை நின்றவர்களும் கிறீஸ்தவர்கள் என்னும் போது மலையக இலக்கியத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர்களாக நாம் கிறீஸ்துவர்களையே கொள்கின்றோம்.
தமிழகத்தின் உரைநடை விருத்திக்கு அச்சு யந்திரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் அத்திவாரமிட்ட இக்கிறீஸ்துவர்கள் யாழ்ப்பாணத்திலும் அச்சகங்களை நிறுவினார்கள். மானிப்பாய் அமெரிக்க மிஷன் அச்சுக்கூடம்: றிப்ளி அன் ஸ்றோங் அச்சகம்: ஸ்றோங் அன் ஆஸ்பரி அச்சுக்கூடம்: யாழ் சென்ஜோசப் கத்தோலிக்க அச்சகம்: போன்றவை 1850 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இயங்கி அச்சுக்கூடங்களாகும்.
185

Page 111
இலங்கையின் முதல் நாவலான அறிஞர் சித்திலெப்பையின் அசன் பேயுடைய கதை' வெளிவருவதற்கு (1885) பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரஹாம் ஜோசப்பின் கும்மிப் பாடல் வெளியாகி இருக்கிறது. இவர் ஒரு கோப்பித் தோட்டத்துக் கண்டக்டர் என்பதும் அந்த 1800 களில் இந்தியர்களை மேலும் கூலிகளாய் இலங்கைக்குக் கொண்டு வர ஒரு பிரச்சாரமாகவே இக்கும்மிப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதுவும் வேறு விஷயங்கள்.
மலையகக் குழந்தைகளுக்குக் கல்விக் கண் கொடுக்க முனைந்தவர்களும் முயன்றவர்களும் கிறீஸ்துவர்களே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தோட்ட நிர்வாகமோ, அரசோ, தோட்டச் சிறார்களின் கல்விபற்றி எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. 1867ல் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த H.G. R.றொபின்சன் என்பவர் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில் இப்படி எழுதுகின்றார். "1867 ஆம் ஆண்டு வரையிலும் தோட்டத் தொழிலாளர் மதச்சார்பற்ற நிறுவனங்களிடம் கல்வி பெறவில்லை. கிறீஸ்துவப் பாதிரிமார்களே தோட்டப் பகுதிகளுக்குச் சென்று இவர்களுக்கு கல்வி அளிக்கின்றனர். இவர்களின் இப்பணிகள் சிறந்த முடிவுகளைப் பெற்று வருகின்றன’ என்று குறிப்பிடுகின்றார்.
பொதுப் போதனைத் திணைக்களத் தலைவரான ஜே. எஸ். லோரி 1889ல் வெளியிட்ட கல்வி பற்றிய அறிக்கையில் தோட்டச் சொந்தக்காரர்களே தொழிலாளரின் பிள்ளைகளின் கல்விக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறினார். ஆனால் அறிக்கைகள் அறிக்கைகளாகவே இருந்து விடுவது நமக்கு ஒன்றும் புதிதானதல்லவே.
ஆரம்ப காலங்களில் தோட்டக் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்டவர்கள் கிறீஸ்துவ நிறுவனங்களைச் சேர்ந்த பாதிரிமார்களே. தோட்டங்களிலும் தோட்டங்களைச் சூழவுள்ள மலையக நகரங்களிலும் பாடசாலைகள் அமைத்தவர்களும் இவர்களே. "கிறிஸ்டியன் பிரதர்ஸ்’ என்றிழைக்கப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய கல்லூரிகள் மலையகத்துப் பிள்ளைகளின் கல்வியை உயர்த்தியதுடன் அவர்களது பண்பையும் உயர்த்தின.
186

சென் பீட்ஸ் பதுளை-சென் உருசுலாஸ் கொண்வண்ட் பதுளை -சென் ஜோன் பொஸ்கோஸ் ஹட்டன்-சென் அந்தனிஸ் தெஹியோவிட்ட -சென் பெட்றிக்ஸ் தலவாக்கலை-சென் ஜோசப் பண்டாரவளை என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.
மலையகத்தின் கல்விக்கும் மலையக இலக்கியத்துக்கும் வித்திட்டவர்களும் இன்றைய அதன் மகத்தான செழுமைக்கு பங்களிப்பவர்களும் கிறிஸ்தவப் பின்னணியில் இருந்தே எழுந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 1869ல் வெளிவந்த ஆபிரகாம் ஜோசப்பின் கும்மிப்பாடல்களுக்குப் பின் 1937ல் வெளிவருகிறது மஸ்கெலிய ஆ. பால் எழுதிய சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி என்னும்
நாவல.
68 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகே மலையகத்தின் இரண்டாவது நூலான சுந்தரமீனாள் வந்துள்ளது என்பது ஒரு புறமிருக்க இதுவே மலையகத்தின் முதல் நாவல் என்ற பெருமையையும் மலையக நாவல் இலக்கியத்துக்கு ஒரு 60 ஆண்டுகளாக சரித்திரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றது. இந்த நாவலைத் தந்த மஸ்கெலிய ஆ. போல் என்பவரும் கிறீஸ்தவரே எண்பது விதந்துரைக்கப்பட வேண்டியது. ஒரு இனிய தமிழ் 'நாவல்' என்று முன் அட்டையில் குறித்தபடி 138 பக்கங்களில் வந்துள்ள இந்த நூல் கொழும்பு யூனியன் பிரஸ்சில் அச்சிடப்பட்டுள்ளது.
At
இராஜமாளிகை, அரச மண்டபம், மந்திரி பிரதானிகள், குதிரையோட்டம், என்று ஒரு இராஜாராணி கதை போலவும், றொபின்சன் துரை - ஆனந்தபவான் ஹோட்டல், கொலை போலீஸ், மர்மம் என்று ஒரு துப்பறியும் மர்ம நாவல் போலவும் ஆ. பாலின் இந்த நாவல் விகின்றது. முப்பதுகளில் எழுத்துலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டு நாவலாசிரியர்களான வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை. மு. கோதை நாயகி போன்றவர்கள் மஸ்கெலிய பாலையும் நிறையவே பாதித்திருக்கின்றனர்.
மலையக மக்களின் துயர்தோய்ந்த வாழ்வை இலக்கியத்தின் மூலம்
தரிசிக்க நாம் மேலும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
187

Page 112
φιδρά சிறுகதையின் மூலவர்கள் என்னும் போது பாதிரியின் பெயரும் வந்து விழுகிறது தான்! ஆனால் ஆய்வுக்கு மட்டுமே 'பாரதியின் சிறுகதைகள்’ நூல் நிலையங்களின் தூசு படிந்த மூலைகளில் இருந்து எடுக்கப்பட்டு மீண்டும் ஒட்டடை பிடிக்க அதே மூலைகளில் இடப்படுவது போலவே ஆபிரகாம் ஜோசப், மஸ்கெலிய ஆ. போல் போன்ற பெயர்களும் இதுபோன்ற ஆய்வுகளுக்காக தூசு தட்டி எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆனாலும் எழுதவேண்டும் என்னும் அந்த உணர்வு எழுந்ததால் இலக்கிய உலகில் இவர்களுடைய பெயர்கள் என்றும் நிலைத்திருக்கும்.
மேல் தட்டு வாழ்வைப் பற்றியே இவர்கள் எழுதினார்கள். கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாததால் அந்த உணர்வு வராததால்
தோட்ட உத்தியோகத்தர்கள், சிறு முதலாளிகள், தோட்டத்தை அண்மித்துள்ள பட்டணத்துவாசிகள், கடைக்காரர்கள், உழைக்கும் தோட்டத்து மக்களுடனான இவர்களது தொடர்புகள் மத்தியதர வர்க்க உறவுகள் போன்றவைகள் பிறகு பிறகே இலக்கியத்துக்குள் வருகின்றது.
இருபதுகளில் கோ. நடேசய்யர் முப்பதுகளில் சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ் என்று ஆரம்பித்த மலையகத்தின் இலக்கிய நன்னிலம், நாற்பது, ஐம்பதுகளில் பி. டி. ராஜன், பாரதி ராமசாமி, பதுளை கந்தசாமி, கார்மேகம், க. ப. சிவம், வேலாயுதம், இர. சிவலிங்கம், செந்தூரன், ஈழக்குமார் போன்றவர்களால் உரமிடப்பட்டு, பண்படுத்தப்பட்டு, நீர்பாய்ச்சப்பட்டு
அறுபதுகளில் பசுமை கண்டது. விளைச்சல் கொண்டு உயர்ந்து நின்றது.
கண்டி வத்தேகம தோட்டத்தில் கண்டக்டரின் மகனாகப் பிறந்து பண்டாரவளை சென் ஜோசப் கல்லூரியில் படித்து அட்டன் மின்சார சபையில் பணிபுரிந்த த. ரஃபேல் 50களில் எழுத்துத் துறைக்குள் வருகின்றார். 1947ல் தனது வழிப்போக்கன் என்னும் வசன கவிதை நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். சி. வி. வேலுப்பிள்ளை. அதற்கு முன்பதாகவே 1934ல் விஸ்மாஜினி என்னும் கவிதை நாடக நூலையும் சி. வி. வெளியிட்டிருந்தார். அப்போது வீரகேசரியின் ஆசிரியராக இருந்த திரு. எச். நெல்லையா சி. வி. யின் கட்டுரைகளை அடிக்கடி வீரகேசரியில் பிரசுரித்தார். இவ்வெழுத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட ரஃபேல் சி. வி. அவர்களுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய சிறுகதை ஒன்றை
188

அவருக்கு அனுப்பி அவர் திருத்தங்கள் செய்தனுப்பிய பின் மீண்டும் எழுதி வீரகேசரிக்கு அனுப்பி பிரசுரித்துக் கொண்டுள்ளார். "வெறி' என்னும் தலைப்பில் பிரசுரமான இச்சிறுகதை ஒரு முக்கோணக் காதல் கதை. வீரகேசரி, தினகரன், குமுதம், தினமணிக் கதிர், போன்ற ஏடுகளில் வாசகனை சிரமப்படுத்தாத பொழுதுபோக்கு ரகத்தில் அமையும் ஜனரஞ்சக கதைகளையே இவர் எழுதியுள்ளார். சி. வி. வெளியிட்ட தை என்னும் சஞ்சிகையின் முதல் இதழிலேயே ரஃபேலின் சிறுகதை வெளிவந்திருக்கிறது என்னும் செய்தி இவர்கள் இருவருக்குமிடையிலான நெருக்கத்தை உறுதிப்படுத்துகிறது. இருந்தும் மலையக இலக்கியத்தில் தனது பெயரை ஆழமாகப் பதிக்கமுடியாதவராகவே ரஃபேலும் இறந்துவிட்டார்.
1860 களிலேயே மலையக இலக்கியம் என்னும் பதத்துக்கு தனது கோப்பித் தோட்டத்து கும்மிப் பாடல்கள் மூலம் ஆபிரகாம் ஜோசப் வித்திட்டிருந்தாலும் 1860க்கும் 1960க்கும் இடைப்பட்ட ஒரு நூறாண்டு காலத்தில் மலையக இலக்கியம் இரண்டு முக்கியமானவர்களையே சுட்டி நிற்கின்றது. சுற்றியும் நிற்கின்றது. ஒருவர் கோ. நடேசய்யர் மற்றவர் சி. வி. வேலுப்பிள்ளை.
அறுபதுகளில் மலையகம் சிலிர்த்துக் கொண்டு எழுந்தது ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு மெளனப் புரட்சி நடந்த ஆண்டான 1956ன் உத்வேகம் மலையகத்தையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. செந்தூரன், சிவலிங்கம், என். எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், ராமசுப்ரமணியம், பி. மரியதாஸ், வாமதேவன், பன்னீர்செல்வன், சொலமன்ராஜ்? மல்ரன்பன், மாத்தளை வடிவேலன், மல்லிகை சி. குமார், மாத்தளை சோமு, மாத்தளை கார்த்திகேசு, மு. சிவலிங்கம், மு. நித்தியானந்தன், தமிழோவியன், நயீமா பஷீர், பரிபூரணன், பூரணி, நூரளை சண்முகநாதன், அந்தனிஜீவா, மொழிவரதன், அல்அஸமத், கே. கோவிந்தராஜ் என்று ஒரு பட்டாளமே கையில் பேனாவும் மனதில் மலையகமுமாகக் கிளம்பியது.
இவர்களின் இலக்கிய வருகை இலங்கையின் எழுத்துத்துறைக்கு ஒரு புதிய ரத்தம் பாய்ச்சுவதாக போற்றப்பட்டது. ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகமே கொண்டிருக்கிறது என்று வியந்து பேசப்பட்டது.
189

Page 113
இந்தப் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் கிறீஸ்துவர்களின் பங்களிப்பு காலாய் நின்று தோள் கொடுத்துள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும் பரந்த மலையகத்தின் பசுமையான எழுத்துலகில் இங்கொருவர் அங்கொருவர் என்றே இவர்கள் எழுத்துப்பணியில் ஈடுபட்டாலும், பொங்கலில் கடிபடும் முந்திரி போல், திராட்சைப் போல் தங்களின் தனித்துவமான இருப்பை, செயற்றிறனை நிலைநாட்டியே வந்துள்ளனர்.
மலையகம் என்னும் உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர் என்று போற்றப்படும் தெளிவத்தை ஜோசப், தெளிவத்தை என்ற மலையகத்தின் புவியியல் பிராந்திய அலகினைத் தமிழின் இலக்கிய அரங்கில் பதித்தவர். மலையக இலக்கியம் என்னும் பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன’ என்றெழுதிச் செல்கின்றார் இலங்கையின் பிரதான விமர்சகர்களில் ஒருவரும் சமூக ஆய்வாளருமான பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன்
அவர்கள்.
”காலங்கள் சாவதில்லை’ என்னும் தெளிவத்தை ஜோசப்பின் நாவல் 1974ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. ‘வைகறை வெளியீடாக 1979ல் மு. நித்தியானந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட "நாமிருக்கும் நாடே’ சிறுகதை நூல் அந்த ஆண்டுக்கான இலங்கை சாகித்திய மண்டல விருதினைப் பெற்றது. ஒரு மலையகப் படைப்பிலக்கிய நூல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடக்கூடியது. தன்னுடைய சிறுகதை நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதன் மூலம் இலக்கிய ரீதியாகவும், அண்மையில் (1995) தன்னுடைய இலக்கிய பங்களிப்பிற்காக “கலாபூஷணம்’ விருதினைப் பெற்றதன் மூலம் தேசிய ரீதியாகவும் மலையக இலக்கியத்தை உயர்த்திக் காட்டியவர் தெளிவத்தை ஜோசப். 1997ல் 'துரைவிட் ப்திப்பகம் இவருடைய 'பாலாயி’ என்னும் குறுநாவல் தொகுதியினை வெளியிட்டுள்ளது. இந்த நூல் "துரைவி'யின் மூன்றாவது நூல். துரைவியின் முதல் நூல் "மலையகச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பு நூல். இதில் மலையகத்தின் முதல் சிறுகதையை எழுதிய கோ. நடேசய்யரிலிருந்து மலையகச் சிறுகதைகள் என்றதும் மளமளவென மனதில் தோன்றும் படைப்பாளிகள் முப்பத்துமூன்று பேரின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. துரைவியின் இரண்டாவது நூல் உழைக்கப்
190

பிறந்தவர்கள் என்னும் பெயரில் வெளிவந்திருக்கும் மலையகச் சிறுகதைகளின் இரண்டாம் தொகுதி. இதில் மூத்த எழுத்தாளர் சி. வி. யிலிருந்து புதிதாக மலையக எழுத்துக்குள் வரும் படைப்பாளி வரை 41 சிறுகதைகளும் மலையக மக்களைப் பற்றி எழுதிய மற்றப் பிரதேச எழுத்தாளர்களின் 14 கதைகளுமாக 55 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பிற பிரதேசப் படைப்பாளர்களின் படைப்புக்களில் புதுமைப்பித்தனின் துன்பக் கேணியும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதே.
இந்த மூன்று நூல்களையும் மிகக் குறுகிய காலத்தில் (1997பிப்ரவரி 1997 ஜூலை) மிக நேர்த்தியாக நூலாக்கிக் கொடுத்துள்ள துரைவியின் அதிபர் துரை விஸ்வநாதன் அவர்களை இந்த வேளை பாராட்டுவது பொருத்தமானதென்றே எண்ணுகின்றேன்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் 88 எழுத்தாளர்களின் மலையகச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 88 எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வெளியீடுகள் மலையக எழுத்தாளர்களின் ஆக்க இலக்கியப் பணிகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமைவதுடன் மலையகச் சிறுகதை இலக்கியம் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு ஒரு ஆவணமாகவும் மலையகத்தின் இளம் படைப்பாளிகளுக்கு மலையகச் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள உதவும் ஒரு ஊடகமாகவும் திகழப் போகின்றன. இந்த இரண்டு நூல்களினதும் தொகுப்பாஏராகப் பணிபுரிந்தவர் திரு. தெளிவத்தை ஜோசப் அவர்களே என்பதுவும் மலையக இலக்கியத்துக்கான கிறீஸ்துவர்களின் பங்களிப்பிற்கானதொரு முத்திரையே
மலையகத்தின் நுழைவாயிலென கருதப்படும் மாத்தளையில் வசிப்பவரும், பாடசாலை அதிபராய் பணியாற்றி ஓய்வு பெற்ற மலையகத்தின் பல்கலைச் செல்வரான திரு. ஏ. பி. வி. கோமஸ் அவர்கள் மலையக நாட்டார் பாடல்கள் விரவி நிற்கும் ஒரு குறுநாவலை நூலுருவில் வெளியிட்டுள்ளார். "அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்’ என்னும் தலைப்பே நாட்டார் பாடலை நினைவுபடுத்துகிறது. இது ஒரு புதிய முயற்சி என்பது பாராட்டப்பட வேண்டியது. "மறைக்கப்பட்டு வருகிற கிராமிய தோட்டக்கலைகளை புதுப்பித்து தொகுக்கின்ற பணியில் ஆத்ம உணர்வுள்ள சில எழுத்தாளர்கள் தான் முயற்சிக்கின்றார்கள். அந்த
191

Page 114
வகையில் திரு கோமஸ் அவர்களின் இந்த நூல் ஒரு புது அத்தியாயத்தை தொடங்குகிறது’ என்று இந்த நூலில் குறிக்கின்றார் மாத்தளை சோமு. சிறுகதை, கவிதை நாடகம் நடிப்பு, மேடைப்பேச்சு என்று பல்துறை வல்லவரான கோமசின் "வாழ்க்கையே ஒரு புதிர்’ என்னும் சிறுகதை நூல் 1992ல் வெளிவந்தது. இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டவர் தமிழ் மன்றம் எஸ். எம். ஹனிபா அவர்கள். இவரது நினைவால் எழும் (மலையக இலக்கியத்துக்கு) இஸ்லாமியர்களின் பங்களிப்பு வியந்து போற்றத்தக்கதாகும். அருள்வாக்கி அப்துல் காதிருப் புலவரிலிருந்து, டி. எம். பீர்முகம்மது, அபுதாலிப் அப்துல் லத்தீப், என்று வேரோடி இன்றைய அல் அஸமத் வரை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், கல்வித்துறை, வெளியீட்டுத்துறை என்று முஸ்லிம்களின் பணி தனித்து ஆராயப்படவேண்டியதும் போற்றுதலுக்குரியதுமாகும்.
அறுபதுகளில் ஆக்க இலக்கியப் படைப்புக்கள் மூலம் (சிறுகதைகள்) எழுத்துப் பிரவேசம் செய்த பி. மரியதாஸ் ஹட்டன் ஹைலண்ட்ஸ் தந்த ஒரு பட்டதாரி. பாடசாலை அதிபர். தீவிர இடதுசாரிக் கொள்கையுடைய ஒரு அருமையான விமர்சகர். இவரது தற்கால எழுத்துலக ஒய்வு மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லெனவே நான் கொள்ளுகின்றேன்.
தோட்டத்து கண்டக்டருக்கு மகனாய் பிறந்து பத்திரிகையாளராகி, வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய அ. சொலமன்ராஜ் மலையக விழிப்புணர்வில் அக்கறை கொண்டவர். தனது சிறுகதைகளை விட கட்டுரைகள் மூலமாகவே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர். "தோட்டப் பாடசாலைகளும் ஆசிரியர்கள் படும் சிரமங்களும்’ என்பது பற்றிய இவருடைய கட்டுரைகள் தொடராகப் பத்திரிகைகளில் வந்தபோது தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரிய நியமனம் செய்யும் மேலிடத்து அழுத்தம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு ஆளாகியவர். நியாயத்தின் பக்கத்துக்காக எழுத்தைப் பயன்படுத்தும் இவர் ஒரு “பைபிள் உபதேசியார்’ என்பது குறிக்கற் பாலதே.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியினூடாக நடத்திய மலையகச் சிறுகதைப் போட்டிகள் இரண்டில் இரண்டாவது பரிசு பெற்றவர் பரிபூரணன். பாக்கியசாமி என்பது இயற்பெயர். பரிபூரணம் என்பது அம்மாவின் பெயர். அதையே தனது இலக்கியப் பெயராக்கிக் கொண்டு
192

சிறுகதைகள், கவிதைகள் படைத்த 90) மனித நேயமிக்க படைப்பாளி. யாழ் மண்ணிலிருந்து கரவையூர் செல்வம் அடிகள் வெளியிட்ட புதிய உலகம்' சஞ்சிகையின் மலைநாட்டு மலருக்குப் பொறுப்பாய் இருந்து பணியாற்றியவர். தனது துணைவியான 'விலா வின் பெயரிலும் ஆக்கங்கள் பல செய்தவர். தகவம் வெளியிட்ட பரிசுக்கதைகள் தொகுதியிலும், கதைக்கனிகள் தொகுதியிலும், அண்மையில் 'துரைவி வெளியிட்ட மலையகச் சிறுகதைகள் தொகுதியிலும் இவருடைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1983 கலவரத்தின் பின் தமிழகம் சென்றுவிட்டார். இவரது புலப்பெயர்வால் ஏற்பட்ட வெற்றிடம் மலையக இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பேயாகும்.
1983 ஏற்படுத்திய சீரழிவுகள் மலையக இலக்கியத்தையும் பெருமளவில் பாதித்தே இருந்தது. வீடிழந்து, உடைமையிழந்து, உற்றார் உறவினரை இழந்து, உடலாலும் உள்ளத்தாலும் ஊனமுற்று சகல பிராந்திய தமிழ் மக்களும் பாதிப்புற்றிருந்தது போலவே மலையக மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இம்மக்களின் மத்தியிலிருந்து கிளம்பிய படைப்பாளிகளும் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். புத்திஜீவிகள் பலரும், படைப்பாளிகள் பலரும் மலையகத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கென்றும் ஐரோப்பிய நாடுகளுக்கென்றும் உலகின் மூலை முடுக்கெங்கனும் ஒடி அலைக்கழிந்த நிலையில் சகல விதமான கலை இலக்கிய முயற்சிகளும், இலக்கிய இயக்கமும் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டன.
60களில் கம்பீரமாகக் கிளம்பி 70களில் கிளை விரித்து உயர்ந்து நின்ற மலையக இலக்கியம், அரசியல் கெடுபிடிகள், இனக்கலவர சீரழிவுகள் ஆகியவற்றால் 80களில் சோர்ந்து போய் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இந்த ஸ்தம்பித நிலையை உடைத்தெறிந்து கொண்டு மலையக இலக்கியம் மறுபடியும் அதே வீறுடன் கிளம்பி இயங்கத் தொடங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதே.
இந்தப் புது இயக்கத்துக்குக் காரணமானவர் மலையக இலக்கியத்துக்குள் புயலென நுழைந்து பணியாற்றிய திரு. அந்தனி ஜீவா. மலையகக் கலை இலக்கியப் பேரவை’ என்னும் அமைப்பின் மூலம் சோர்ந்து போய்க்கிடந்த மலையக இலக்கியத்தை உயிர்ப்பித்துக் காட்டியவர் இவர்.
193

Page 115
உறைந்து போய்க் கிடந்த மலையக சமூகத்தைத் தனது அரும்பணிகள் மூலம் உலுப்பி உலுப்பி எழுப்பிவிட அரும்பாடு பட்ட தொழிற்சங்க முன்னோடியான கோ. நடேசய்யரின் மலையகப் பிரவேசம் பற்றியோ சோர்ந்து போய்க் கிடந்த மலையக இலக்கியத்தை சுறுசுறுப்புடன் இயக்கிக் காட்டிய அந்தனி ஜீவாவின் மலையக இலக்கியப் பிரவேசம் பற்றியோ ஆராயப்புகுவது ரிஷிமூலம் நதிமூலம் தேடுவதற்கொப்பானதாகும். நதிமூலமல்ல முக்கியம். நதியின் பிரவாகத்தால் செழித்து நிற்கும் நன்னிலங்கள் விளைந்து நிற்கும் வயல்வெளிகள், தோட்டம் துறவுகள் இத்தியாதிகளே பிரதானம்.
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் தோற்றமும், பேரவையின் செயலாளர் அந்தனி ஜீவாவின் துடிப்பான இயக்கத்தினால் ஏற்பட்ட அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளும், மலையக இலக்கியத்தினை ஒரு மகத்தான வெற்றி நோக்கி நகர்த் திச் சென்றது என்பது மிகைப்படுத்தலாகாது.
1986ல் சாரல் நாடனின் சி. வி. சில சிந்தனைகள் எனும் நூலை மலையக வெளியீட்டகம் மூலம் வெளியிட்ட அந்தனி ஜீவா 1996க்குட்பட்ட பத்தாண்டு காலத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுக் காட்டியவர்.
நூல் வெளியீடுகள், நூல் அறிமுகங்கள், இலக்கிய சந்திப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், குன்றின் குரல் மூலம் ஆற்றிய சேவைகள், கொழுந்து சஞ்சிகையின் வெளியீடு போன்ற ஜீவாவின் பன்முகச் செயற்பாடுகள் மலையக இலக்கியத்துக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தன. மலையக இலக்கியத்தை நேசிப்பவர்கள், அதன் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளவர்கள் இச்செயற்பாடுகளின் பலத்தினைக் கருத்திற் கொண்டு அவருடைய ஒரு சில பலவீனங்களை மறந்து விடுதல் வேண்டும்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய ஆறாவது சிறுகதைப் போட்டியிலும், கலை ஒளி முத்தையாப்பிள்ளை நினைவு சிறுகதைப் போட்டியிலும், பரிசு பெற்ற திரு. கே. கோவிந்தராஜ் எழுபதுகளில் இலக்கியப் பிரவேசம் செய்தவர். பசியா வரம் என்னும் சிறுகதை நூல் 1996ல் வெளிவந்தது. அந்தணிராஜ், போர்ஷியா ஆகிய புனைப்பெயர்களிலும்
194

கிறீஸ்துவ கட்டுரைகள் எழுதி வரும் இவர் தொலைக்காட்சி, வானொலி, மேடை நாடகங்கள் மூலமாகவும் மலையகத்தை அறிமுகம் செய்யும் பெரும் பணியில் ஈடுபட்டுழைக்கின்றார். 12 வாரங்கள் தொடர் நாடகமாக ஒளிபரப்பான மலையோரம் வீசும் காற்று, நான்கு வாரத் தொடராக ஒளிபரப்பான மாப்பிள்ளை வந்தார் மற்றும் அரும்பு போன்ற டி. வி நாடகங்களும், தோட்டத்து ராஜாக்கள் எனும் மேடை நாடகமும், நாடக விழாவில் முதற் பரிசு பெற்ற மேடை நாடகமான கவ்வாத்துக் கத்தியும் இவருடைய கலைப் பணிக்கு சான்று பகர்பவை. மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. கோவிந்தராஜ் கொழும்பில் வசிக்கின்றார்.
ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சினால் 'பல்கலைவேந்தன் என்று பட்டமளிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் மாசிலாமணி பதுளையைச் சேர்ந்தவர். மறைக்கல்வி போதனாசிரியரான இவரும் சிறுகதைகள் கவிதைகள், கவியரங்குகள், சஞ்சிகை வெளியீடுகள் மூலம் இலக்கியப் பணியாற்றும் கிறீஸ்துவராகும். எழுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் 'நவஉதயம் அமைதி ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். அறுபதுகளின் இறுதிக் கூறுகளில் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளாக எழுத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ள ரூபராணி ஜோசப் நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மேடைப்பேச்சு என்று இயங்கி வருகின்றார். ஏணியும் தோணியும் என்னும் சிறுவர் இலக்கிய நூல் 1996க்கான சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்டது. யௌவனம், லாவண்யம்' என்னும் இரண்டு நூல்களை மலையக வெளியீட்டகம் மூலம் வெளியிட்டிருக்கும் தேவதாஸன் ஜெயச்ங் ஓவியம் எனும் நூலாசிரியர் சி. ஏ. எலியாசன் ஆகியோரும் கிறிஸ்துவப் பின்னணியில் இருந்து எழுந்தவர்களே.
மலையகத்தையும் மலையக மக்களையும் அவர்தம் விழிப்பினையும் அதனால் வரப்போகும் எழுச்சியையும் சதாசர்வகாலமும் சிந்திப்பதும், கவிதையாக வடிப்பதையுமே லட்சியமாகக் கொண்ட அமரர் 'மலைத்தம்பி எனும் இரா. ஐசெக் அவர்களையும் இந்தச் சபையில் கனம் பண்ணுவது எனது கடமையாகும்.
வணக்கத்துக்குரிய போல் கெஸ்பர்ஸ் அடிகளின் ஆதரவில், ஜே. ஜோன் ஜேஸ்கொடி, அ. கி. இம்மானுவேல் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் குன்றின் குரல் சஞ்சிகையின் பணியினையும், மலையக மக்களின் வரலாறு பற்றி விரிவாக ஆராய்ந்து
195

Page 116
கட்டுரைகள் படைத்து வரும் மலையகத் தமிழர் வரலாற்றியல் முன்னோடியான பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளையின் பங்களிப்பினையும் நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழ் இலக்கியத்துக்கு: ஈழத்து இலக்கியத்துக்கு, மலையக இலக்கியத்துக்கு பணியாற்றிய பணியாற்றுகின்ற கிறீஸ்துவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து கணம் பண்ணும் இவ்வேளை கிறீஸ்துவ அமைப்புக்களையும் நாம் கனம் பண்ண மறந்து விடக்கூடாது. மல்லிகை சி. குமாரின் கவிதைகளை மாடும் வீடும் என்னும் தலைப்பில் நூலாக்கித் தந்த கிறிஸ்துவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பு போன்றவைகளை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
கிறீஸ்துவமும் தமிழும் எனும் நூலை ஆக்கிய ஆய்வறிஞர் மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் 1936ல் இருந்து 1971ஆம் ஆண்டு வரை இந்த நூலின் ஏழு பதிப்புக்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பதிப்பின் முன்னுரையையும் "இந்தப் பதிப்பில் ஒரு சில புதிய தகவல்களைச் சேர்த்துள்ளேன்’ என்று எழுதுகின்றார்.
அது போலவே இன்றைய எனது இக்கட்டுரை இந்த வகையில் ஒரு முதல் முயற்சியே. இதில் சிலர் விடுபட்டிருக்கலாம். சில செய்திகள் வராமலிருந்திருக்கலாம். முக்கியமான சில தகவல்கள் பேசப்படாமல் போயிருக்கலாம். அது போன்ற தகவல்கள், செய்திகள், பெயர்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
Activity is not Success.Gaubu TGS, 9.6öAğı (yubî GTGiugi வெற்றியல்ல. வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதே. அந்த இட்டுச் செல்லுதலுக்காக நீளும் எல்லாக் கரங்களையும் நேசத்துடன் பற்றிக் கொள்ளத் தயங்கமாட்டேன்.
வளர்க மலையக இலக்கியம்
மலையக தமிழாராய்ச்சி மாநாடு அர்த்தமுள்ளதாகப் பரிணமிக்க எனது வாழ்த்துக்கள்.
96

சிறுகதைகள், கவிதைகள் படைத்த ஒரு மனித நேயமிக்க படைப்பாளி. யாழ் மண்ணிலிருந்து கரவையூர் செல்வம் அடிகள் வெளியிட்ட புதிய உலகம்' சஞ்சிகையின் மலைநாட்டு மலருக்குப் பொறுப்பாய் இருந்து பணியாற்றியவர். தனது துணைவியான வீலா வின் பெயரிலும் ஆக்கங்கள் பல செய்தவர். தகவம் வெளியிட்ட பரிசுக்கதைகள் தொகுதியிலும், கதைக்கனிகள் தொகுதியிலும், அண்மையில் 'துரைவி வெளியிட்ட மலையகச் சிறுகதைகள் தொகுதியிலும் இவருடைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1983 கலவரத்தின் பின் தமிழகம் சென்றுவிட்டார். இவரது புலப்பெயர்வால் ஏற்பட்ட வெற்றிடம் மலையக இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பேயாகும்.
"1983 ஏற்படுத்திய சீரழிவுகள் மலையக இலக்கியத்தையும் பெருமளவில் பாதித்தே இருந்தது. வீடிழந்து, உடைமையிழந்து, உற்றார் உறவினரை இழந்து, உடலாலும் உள்ளத்தாலும் ஊனமுற்று சகல பிராந்திய தமிழ் மக்களும் பாதிப்புற்றிருந்தது போலவே மலையக மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இம்மக்களின் மத்தியிலிருந்து கிளம்பிய படைப்பாளிகளும் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். புத்திஜீவிகள் பலரும், படைப்பாளிகள் பலரும் மலையகத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கென்றும் ஐரோப்பிய நாடுகளுக்கென்றும் உலகின் மூலை முடுக்கெங்கனும் ஒடி அலைக்கழிந்த நிலையில் சகல விதமான கலை இலக்கிய முயற்சிகளும், இலக்கிய இயக்கமும் ஸ்தம்பித்துப் போய், நின்றுவிட்டன.
60களில் கம்பீரமாகக் கிளம்பி 70களில் கிளை விரித்து உயர்ந்து நின்ற மலையக இலக்கியம், அரசியல் கெடுபிடிகள் இனக்கலவர சீரழிவுகள் ஆகியவற்றால் 80களில் சோர்ந்து போய் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இந்த ஸ்தம்பித நிலையை உடைத்தெறிந்து கொண்டு மலையக இலக்கியம் மறுபடியும் அதே வீறுடன் கிளம்பி இயங்கத் தொடங்கியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதே.
இந்தப் புது இயக்கத்துக்குக் காரணமானவர் மலையக இலக்கியத்துக்குள் புயலென நுழைந்து பணியாற்றிய திரு. அந்தனி ஜீவா. மலையகக் கலை இலக்கியப் பேரவை’ என்னும் அமைப்பின் மூலம் சோர்ந்து போய்க்கிடந்த மலையக இலக்கியத்தை உயிர்ப்பித்துக் காட்டியவர் இவர்.
193

Page 117
உறைந்து போய்க் கிடந்த மலையக சமூகத்தைத் தனது அரும்பணிகள் மூலம் உலுப்பி உலுப்பி எழுப்பிவிட அரும்பாடு பட்ட தொழிற்சங்க முன்னோடியான கோ. நடேசய்யரின் மலையகப் பிரவேசம் பற்றியோ சோர்ந்து போய்க் கிடந்த மலையக இலக்கியத்தை சுறுசுறுப்புடன் இயக்கிக் காட்டிய அந்தனி ஜீவாவின் மலையக இலக்கியப் பிரவேசம் பற்றியோ ஆராயப்புகுவது ரிஷிமூலம் நதிமூலம் தேடுவதற்கொப்பானதாகும். நதிமூலமல்ல முக்கியம். நதியின் பிரவாகத்தால் செழித்து நிற்கும் நன்னிலங்கள் விளைந்து நிற்கும் வயல்வெளிகள், தோட்டம் துறவுகள் இத்தியாதிகளே பிரதானம்.
மலையகக் கலை இலக்கியப் பேரவையின் தோற்றமும், பேரவையின் செயலாளர் அந்தனி ஜீவாவின் துடிப்பான இயக்கத்தினால் ஏற்பட்ட அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளும், மலையக இலக்கியத்தினை ஒரு மகத்தான வெற்றி நோக்கி நகர்த் திச் சென்றது என்பது மிகைப்படுத்தலாகாது.
1986ல் சாரல் நாடனின் சி. வி. சில சிந்தனைகள் எனும் நூலை மலையக வெளியீட்டகம் மூலம் வெளியிட்ட அந்தனி ஜீவா 1996க்குட்பட்ட பத்தாண்டு காலத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுக் காட்டியவர்.
நூல் வெளியீடுகள், நூல் அறிமுகங்கள், இலக்கிய சந்திப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், குன்றின் குரல் மூலம் ஆற்றிய சேவைகள், கொழுந்து சஞ்சிகையின் வெளியீடு போன்ற ஜீவாவின் பன்முகச் செயற்பாடுகள் மலையக இலக்கியத்துக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தன. மலையக இலக்கியத்தை நேசிப்பவர்கள், அதன் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளவர்கள் இச்செயற்பாடுகளின் பலத்தினைக் கருத்திற் கொண்டு அவருடைய ஒரு சில பலவீனங்களை மறந்து விடுதல் வேண்டும். V مهٔ به " | ؟
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய ஆறாவது சிறுகதைப் போட்டியிலும், கலை ஒளி முத்தையாப்பிள்ளை நினைவு சிறுகதைப் போட்டியிலும், பரிசு பெற்ற திரு. கே. கோவிந்தராஜ் எழுபதுகளில் இலக்கியப் பிரவேசம் செய்தவர். பசியா வரம் என்னும் சிறுகதை நூல் 1996ல்" வெளிவந்தது. அந்தணிராஜ், போர்ஷியா ஆகிய புனைப்பெயர்களிலும்
194

கிறீஸ்துவ கட்டுரைகள் எழுதி வரும் இவர் தொலைக்காட்சி, வானொலி, மேடை நாடகங்கள் மூலமாகவும் மலையகத்தை அறிமுகம் செய்யும் பெரும் பணியில் ஈடுபட்டுழைக்கின்றார். 12 வாரங்கள் தொடர் நாடகமாக ஒளிபரப்பான மலையோரம் வீசும் காற்று, நான்கு வாரத் தொடராக ஒளிபரப்பான மாப்பிள்ளை வந்தார் மற்றும் அரும்பு போன்ற டி. வி நாடகங்களும், தோட்டத்து ராஜாக்கள் எனும் மேடை நாடகமும், நாடக விழாவில் முதற் பரிசு பெற்ற மேடை நாடகமான கவ்வாத்துக் கத்தியும் இவருடைய கலைப் பணிக்கு சான்று பகர்பவை. மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. கோவிந்தராஜ் கொழும்பில் வசிக்கின்றார்.
ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சினால் பல்கலைவேந்தன் என்று பட்டமளிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் மாசிலாமணி பதுளையைச் சேர்ந்தவர். மறைக்கல்வி போதனாசிரியரான இவரும் சிறுகதைகள் கவிதைகள், கவியரங்குகள், சஞ்சிகை வெளியீடுகள் மூலம் இலக்கியப் பணியாற்றும் கிறீஸ்துவராகும். எழுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் “நவஉதயம் 'அமைதி ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார்.ப அறுபதுகளின் இறுதிக் கூறுகளில் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளாக எழுத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ள ரூபராணி ஜோசப் நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மேடைப்பேச்சு என்று இயங்கி வருகின்றார். ஏணியும் தோணியும் என்னும் சிறுவர் இலக்கிய நூல் 1996க்கான சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்டது. 'யௌவனம், லாவண்யம்' என்னும் இரண்டு நூல்களை மலையக வெளியீட்டகம் மூலம் வெளியிட்டிருக்கும் தேவதாஸன் ஜெயச்ங் ஓவியம் எனும் நூலாசிரியர் சி. ஏ. எலியாசன் ஆகியோரும் கிறீஸ்துவப் பின்னணியில் இருந்து எழுந்தவர்களே,
மலையகத்தையும் மலையக மக்களையும் அவர்தம் விழிப்பினையும் அதனால் வரப்போகும் எழுச்சியையும் சதாசர்வகாலமும் சிந்திப்பதும், கவிதையாக வடிப்பதையுமே லட்சியமாகக் கொண்ட அமரர் 'மலைத்தம்பி எனும் இரா. ஐசெக் அவர்களையும் இந்தச் சபையில் கனம் பண்ணுவது எனது கடமையாகும்.
வணக்கத்துக்குரிய போல் கெஸ்பர்ஸ் அடிகளின் ஆதரவில், ஜே. ஜோன் ஜேஸ் கொடி, அ. கி. இம்மானுவேல் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் குன்றின் குரல் சஞ்சிகையின் பணியினையும், மலையக மக்களின் வரலாறு பற்றி விரிவாக ஆராய்ந்து
195

Page 118
கட்டுரைகள் படைத்து வரும் மலையகத் தமிழர் வரலாற்றியல் முன்னோடியான பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளையின் பங்களிப்பினையும் நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழ் இலக்கியத்துக்கு: ஈழத்து இலக்கியத்துக்கு, மலையக இலக்கியத்துக்கு பணியாற்றிய பணியாற்றுகின்ற கிறீஸ்துவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து கனம் பண்ணும் இவ்வேளை கிறீஸ்துவ அமைப்புக்களையும் நாம் கனம் பண்ண மறந்து விடக்கூடாது. மல்லிகை சி. குமாரின் கவிதைகளை மாடும் வீடும் என்னும் தலைப்பில் நூலாக்கித் தந்த கிறிஸ்துவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்பு போன்றவைகளை நாம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
**
கிறீஸ்துவமும் தமிழும் எனும் நூலை ஆக்கிய ஆய்வறிஞர் மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் 1938ல் இருந்து 1971ஆம் ஆண்டு வரை இந்த நூலின் ஏழு பதிப்புக்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பதிப்பின் முன்னுரையையும் "இந்தப் பதிப்பில் ஒரு சில புதிய தகவல்களைச் சேர்த்துள்ளேன்’ என்று எழுதுகின்றார்.
அது போலவே இன்றைய எனது இக்கட்டுரை இந்த வகையில் ஒரு முதல் முயற்சியே. இதில் சிலர் விடுபட்டிருக்கலாம். சில செய்திகள் வராமலிருந்திருக்கலாம். முக்கியமான சில தகவல்கள் பேசப்படாமல் போயிருக்கலாம். அது போன்ற தகவல்கள், செய்திகள், பெயர்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
Activity is not Success.Gs dubList(s), 96A)gl (pupé GT sig வெற்றியல்ல. வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதே. அந்த இட்டுச் செல்லுதலுக்காக நீளும் எல்லாக் கரங்களையும் நேசத்துடன் பற்றிக் கொள்ளத் தயங்கமாட்டேன்.
வளர்க மலையக இலக்கியம்
மலையக தமிழாராய்ச்சி மாநாடு அர்த்தமுள்ளதாகப் பரிணமிக்க எனது வாழ்த்துக்கள்.
196

மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு -அந்தனி ஜீவா
இலங்கை முஸ்லீம்களும் தமது வணிக உறவுக்கும் கலாசார தலைமைக்கும் இந்தியாவையே எதிர்நோக்கி நின்றனர். இதனால் இலங்கைச் சோனகர் வாழ்வில் இந்தியப் பண்புகள் இடம்பெறலாயின். இனக்கலப்பு பழக்கவழக்க மாற்றங்கள் ஏற்பட்டனவெனினும் அவர்களது சமூகத்தின் தனித்துவம் அழியாது போற்றப்பட்டது.
இலங்கையில் இஸ்லாம் (யாழ்ப்பாணம் 1963. பக்.59)
இலங்கையில் முஸ்லீம் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தனர் என்பதாலும் தென்னிந்திய முஸ்லீம்களுடன் உறவுகளைக் கொண்டிருந்தரென்பதாலும் அவர்களது இலக்கிய முயற்சிகள் தமிழிலக்கியத்தில் தனித்துவமிக்கதாக மிளிருகின்றது.
"இலங்கை தமிழ் இலக்கிய பரிமானத்திற்கு மலையக இலக்கியம் புது ரத்தம் பாய்ச்சியது' எனப் பேராசிரியர் கைலாசபதி பெருமையுடன் குறிப்பிட்டார். அத்தகைய மலையக தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லீம்களும் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பது வரலாற்று ரீதியான உண்மையாகும்.
மலையக இலக்கியம் என்ற வரையறைக்குள் நின்று பார்ப்பதற்கு முன்னரே மலையகத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் பல சாதனைகளை செய்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலக்கிய முன்னோடிகளான மூவரை மனங்கொள்ளல் வேண்டும். முத்தான மூவரின் இலக்கியப் பணி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வித்துக்களாக அமைகின்றன.
அத்தகைய மூவர்தான் அக்குறணை கசாவத்தை ஆல்ம் அப்பா, அடுத்தவர் அறிஞர் சித்திலெவ்வை, மூன்றாமவர் மலையக கவிதை இலக்கியத்தின் முன்னோடி வித்துவ தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர். இவர்களின் இலக்கியப் பணியை இலக்கியத் தமிழ் தொண்டு என்றே குறிப்பிட வேண்டும்.
197

Page 119
இலங்கை முதல் தமிழ் நாவலை எழுதியவரான அறிஞர் எம். ஸி. சித்திலெப்பை முஸ்லீம் சமூகத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளார். அறிஞர் சித்திலெப்பையின் முன் நிற்பது ஏழு ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக வெளியிட்ட 'முஸ்லிம் நேசன்' என்ற பத்திரிகையாகும். அறிஞர் சித்திலெப்பையின்”அசன்பே சரித்திரம்' என்னும் நாவல் 1885ல் கொழும்பில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவலாகும். அறிஞர் சித்திலெப்பை முஸ்லீம்களின் அறிவுக்கண்ணை திறப்பதில் பெரும் பணியாற்றியுள்ளார். இது போன்ற முஸ்லீம் எழுத்தாளர்களின் தமிழ்ப்பணிகள் பற்றி வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியமாகும்.
வரலாற்றுப் பின்னணி
மலையக இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பைப் பற்றி அறிவதற்கு முன்னோட்டமாக இந்த மக்களின் வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வது அவசியமாகும். அது அவர்களின் இலக்கிய முயற்சிகளை இனங்கண்டு கொள்ள வழிகாட்டுவதாக அமையும்.
மலையக மக்களிடையே ஆரம்பகால முயற்சிகள் அனைத்தும் கவிதை வடிவிலேயே வெளிவர ஆரம்பித்தன. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவை மலையக வாய்மொழி இலக்கியங்களான நாட்டார் பாடல்களுடன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ராஜா தேசிங்கு அல்லி அரசாணி மாலை, நளமகாராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை, மாரியம்மன் தாலாட்டு, போன்றவையாகும். இவற்றின் உந்துதலால் மலையக ஆக்க இலக்கியத்தின் முன்னோடியாக பாடல்களே பிறந்துள்ளன.
மலையக கவிதை இலக்கியத்தின் முன்னோடியாகவும், முதல்வராகவும் நமக்கு காட்சி தருபவர் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் மதிப்புப் பெற்று விளங்கினார். இவர்கள் மத்தியில் இடம்பெற்ற விழாக்களில் அவர்கள் சடங்கு வைபவங்களிலும் கலந்து கொண்டு கவிதை பொழிவார். வேறு பொது வைபவங்களிலும் விஷேட அழைப்பாளராக பங்குபற்றி கும்மி, நொண்டிச்சிந்து போன்ற மலையகச் சூழ்நிலையை கருவாகக் கொண்டு பாடிக் காட்டுவார். இவர் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கண்டி மாநகருக்கு
198

அருகிலுள்ள தெல்தோட்டையில் 1866-ஆம் ஆண்டு பிறந்த இவர் 191 ஆம் ஆண்டு கண்டியில் அமரரானார். -
”இவரது அபாரத் திறமை தமிழிலக்கண இலக்கியங்களுடன் ஒட்டியிருந்ததால், இலக்கண இலக்கிய வித்தையில் மரபு வழியில் பற்றிலக்கியங்கள் செய்யவே இவரைத் தூண்டி நின்றது. தமிழிலக்கிய உந்தல் அவரைத் தைரியத்துடன் தமிழ்க்கவி அரங்கேறும் யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச்சென்றது. இளமைத் துடிப்புடைய அப்துல் காதிர் அங்கே புலவரேறுகள் மத்தியில் பதினாறு வயதுச் சிறுக்கனாய் அமர்ந்து கவிபாடி 'அருள்வாக்கி’ என்னும் அற்புதப் பட்டத்தைப் பெற்றார். இலக்கிய ஈடுபாடுகளும் சமய அறிவும் கற்றதுடன் பயிற்சி அனுபவம் முற்றிய தமது நாற்பத்தாறாவது வயதில் யாழ்ப்பாண அசனா லெவ்வைப் புலவர் தலைமையில் மூன்று வாரங்கள் தொடர்ந்து ஆற்றிய சொற்பொழிவின் பின், ”வித்துவ தீபம்’ என்னும் பட்டத்தைச் சான்றோர்களாலும், பொது மக்களாலும் பெற்றார். இவ்விரு பட்டங்கள் பெறுவதற்கிடையில் அப்துல் காதிர் "நாவலர்’வித்துவ சிரோன்மணி', 'திவ்யகவி நாவலர்', "கீர்த்திப் பாவலோன்', 'உலகதீபம்', "முத்தமிழ்ச் சிங்கம்","கலை வல்லோன்',"கல்விக் கட்ல்","கலை முனி என்றெல்லாம் கீர்த்தியுள்ள சிறப்புப் பட்டங்களை அவ்வப்போது பெற்றிருக்கின்றார். இப்பட்டங்களுக்கு வழிகோலியவர்கள் அக்காலம் இலக்கிய வழியில் உந்துதல் பெற்ற சான்றோர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள் வாக்கியின் பிறப்பிடமான போப்பிட்டியில் அவரே கல்விக்கூடம் அமைத்துக் கற்பித்து வந்திருக்கின்றார். எனவேதான், அறிஞர் சித்தி லெவ்வையின் கல்வி முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றார். அவர் நடத்தி வந்த கல்விக் கூடந்தான் வித்துவதீப மஹா வித்தியாலயமாக ஹென்ஸல் கொல்லையில்' இன்றும் உயர்ந்து நிற்கின்றது. இவ்வாறு எழுத்தாளர் ஏ. இக்பால் எழுதியுள்ளார். இவரது கவிதையொன்று.
'முத்தார மார்பகத்தென்
முத்தமிழாம் வித்தாரக்
கொத்தாரம் பூண்ட கண்டிக்
கொற்றவரே - சித்தார்
புலவனெனக் கண்டன்பு
தந்தருள்வீர் பாடல னெனக் - கண்ணாய்ந்து
199

Page 120
வண்ண புலவர்
வடித்தமிழால் போற்றியை வெண்ணற்ற மாரியருளிந்தீரே - தண்ணத் தமிழ் பகர்வோனென் மேற்றயை - புரிவீர் - கண்டீர் தமிழ்தென வாய்ந்தூற் றீரணி.
மலையக கவிதை இலக்கியத்தின் முன்னோடியாகவும் முதல்வராகவும் அருள்வாக்கி அப்துல்காதர் புலவரை சுட்டுவது அவசியமாகும்.
மலையக ஆக்க இலக்கியத்திற்கு முன்னோடியாக தேசபக்தன் கோ. நடேசய்யரை நாம் கூறுவது போல, மலையக கவிதைத் துறைக்கு முதல்வராக அருள்வாக்கி அப்துல் காதர் புலவரையே குறிப்பிட வேண்டும்.
இவரைத் தொடர்ந்து மற்றுமொரு முஸ்லீம் பாவலரை குறிப்பிட வேண்டும் தென்னிந்தியாவின் கீழக்கரையில் பிறந்து, இலங்கைக்கு வந்து மாத்தளையில் வாழ்ந்த சதக்குத் தம்பி பாவலர் என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ். டி. எம். சதக்குத்தம்பி பாவலர். இவர் சாதாரண மக்கள் பாடக்கூடிய பாடல்களையும் சந்த ஒசைமிக்க ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இவர் இயற்றியுள்ள பாடல்களை இவரே பொது மேடைகளிலும், இலங்கை வானொலியிலும் பாடியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள், கவிதைகள், சங்கீதமாலை, இன்னிசை பூங்கா, கீதா விருத்தச்சோலை, எனும் பெயர்களோடு வெளிவந்துள்ளன. பாவலர் சதக்குத்தம்பி அவர்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தவர். இலங்கை சுதந்திரம் பெற்ற பொழுது இவர் இயற்றிய பாடல்கள் "பூரீலங்கா சுதந்திர கீதம்’அல்லது “மரதன் ஒட்ட மணி ஒளி' எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
”தேசத்தை தேசங்கள் ஆளவிடோம் - எங்கள் தேவியின் மேனியை தீண்டவிடோம் நேசக்கரம் நீட்டி நின்றிடுவோம் - ஆனால் நீசபாசக்கரம் நெருங்கவிடோம்
என்ற பாடல் வரிகள் அவரின் நாட்டுப் பற்றை எடுத்தியம்புகின்றன. மாத்தளை மக்களால் மரியாதைக்குரியவராக திகழ்ந்த பாவலரை கலாநிதி 200

ஏ. எம். ஏ. அஸிஸ், கலாயோகி சுத்தானந்த பாரதி, மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை போன்றவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் வளர்த்த கிராமங்களில் மிக முக்கியமானது கல்ஹின்னை கண்டிக்கு அருகிலுள்ள கல்ஹின்னை என்ற கிராமத்தில் வாழும் முஸ்லீம்களின் தமிழ் பற்று வியந்து பாராட்டக் கூடியது. 'மலையகத்தின் தமிழகம்' என பேராசான் சு. வித்தியானந்தன் அவர்களே பாராட்டியுள்ளது மனங்கொள்ளத்தக்கது.
கல்ஹின்னையில் தமிழ் மன்றம் அமைத்து நூல் வெளியீட்டு பணிகளில் எண்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்துள்ள சட்டத்தரணியும், பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியுமான அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, பல எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பித்தது மாத்திரமின்றி இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி, மகாகவி பாரதி போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். மற்றும் கல்ஹின்னை தந்த இரண்டு கவிமணிகளை குறிப்பிட வேண்டும். ஒருவர் கவிமணி எம்.'ஸி. எம். சுபைர், மற்றவர் எம். எச். எம். ஹலீம்தீன் கவிமணி சுபைர் அவர்களின் ஆற்றலையும் ஆளுமையையும் பற்றி கல்வியாளரும், ஆய்வாளருமான ஏ. ஏ. எம். புவாஜி, கவிமணி எம். ஸி. எம். சுபைர் என்ற நூலை எழுதியுள்ளார்.
கவிமணி சுபைர் மாணவர்களுக்காக மணிக்குால்’ என்ற சஞ்சிகையை நடத்தியவர். மணிக்குரல் - என்ற பதிப்பகம் மூலம் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். கவிமணி சுபைர் அவர்களின் மலரும் மனம் (சிறுவர் பாடல்).கண்ணான மச்சி, காலத்தின் குரல்கள், எங்கள் தாய்நாடு, இலக்கிய மலர்கள், போன்றவை நூல்களாக வெளிவந்துள்ளன.
A
மலையக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை 'தேயிலைத்தோட்டத்திலே.’ (In Ceylon Tea Garden) என்ற கவிதை நூலில்
புழுதிப்படுக்கையில் புதைந்த என் மக்களை போற்றும் இரங்கற் புகழ் மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பிரிந்தவர் நினைவு நாள் பகர் வாரில்லை.
201

Page 121
இதனை தமிழில் தந்தவர் கவிஞர் சக்தி பாலையா, இது போன்று கவிமணி சுபைரின் கவிதை.
தேயிலைத் தோட்டத்தில் - உடல் தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட ஒய்வின்றி நாமுழைத்தோம் - மக்கள் நோய் கண்டு தானிளைத்தோம் - உடல் ஊறிச் சுரந்திடும் வேர்வை புனல்பாய்ச்சி ஓங்கும் பயிர் வளர்த்தோம் - வளம் தாங்கும் உயிர் கொடுத்தோம் - வரும் சாவிலும் நாமிந்த தேயிலைக்கே - உரம் ஆகப் புதைந்திடுவோம் - பெரும் தியாகம் புரிந்திடுவோம்
என்கிறார்.
கல்ஹின்னை தந்த மற்றுமொரு கவிஞரான 'கவியரசு என்ற சிறப்பு பெயர் பெற்ற அல்ஹாஜ் எம். எச். எம். ஹலீம்தீன். இவரின் முதல் நூல் தியாகச்சுடர் (1983) வெளிவந்தது. அடுத்தது ”காலத்தின் கோலங்கள் , இதயமலர், மகாகவி இக்பால், என்பன. அத்துடன் தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். இவரின் ஆங்கிலப் படைப்புகள் BioSSOms (1984), Roses (1985) என்பன நூலுருவில் வெளிவந்துள்ளன.
மலையக கவிதை இலக்கியத்திற்கு பெரும்பங்களிப்பு செய்த காத்திரமான கவிஞர் எஸ். எம். பாறுாக், மாத்தளை மாநகரின் பழம் பெயரான பண்ணாகமம் என்ற பெயரை தன் புனைப் பெயராக பண்ணாமாத்துக்
கவிராயர் என்ற பெயரில் எழுதி வருகிறார்.
"செத்த கவிதைகள் செப்புதற்கு நானறியேன், அக்கினியாய் உமிழும் ஆவேசப் பாவலன் நான் என பண்ணாமத்துக் கவிராயர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இவர் சுய ஆக்கம் தழுவல், மொழிபெயர்ப்பு என இவரது ஆற்றலையும் ஆளுமையையும், கவிதா உலகம் நன்கறியும். நஸ்ருல் இஸ்லாம், நஸிம் இக்மத் மற்றும் பாலஸ்தீனிய, பாகிஸ்தான் கவிஞர்களை தமிழுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. நஸ்ருல் இஸ்லாம் கவிதைகளை "கவிதை பூங்கா’ என்ற தலைப்பில்
இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் தொகுத்து வெளியிட்டுள்ளது.
202

மற்றும் இவரது மெழ .ாப்பு ஆக்கங்கள் ”காற்றின் மெளனம் என்ற பெயரில் நூலுருவில் வெளிவந்துள்ளது. இவருக்கு இலங்கை அர8 'கலாபூஷணம் விருது அளித்து கெளரவித்துள்ளது.
மாத்தளை என்றவுடன் சில பெயர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து, பின் பத்திரிகையாளராகவும், பல்துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கிய அபுதாலிப் அப்துல் லத்தீப், தாரகை, இன்சான் ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. இலங்கையிலுள்ள சோவியத் தகவல் பிரிவில் பணியாற்றியுள்ளார். இவரின் பலராலும் பாராட்டப்பட்ட 'மையத்து’ எனும் சிறுகதை 'உழைக்கப் பிறந்தவர்கள்' மலையக சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது
கவிஞராகவே அறியப்படும் அல் அஸமத் நல்ல சிறந்த சிறுக:ை சிருஷ்டிகளை தந்துள்ளார். இவர் எழுதிய விரக்தி எனும் சிறுகதை கலை ஒளி முத்தையாபிள்ளை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. ‘புலராத பொழுதுகள், மலைக்குயில் என்ற இரண்டு கவிதை நூலின் படைப்பாளி. முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில் 'புலராத பொழுதுகள்’ கவிதைத் தொகுதிக்கு பரிசு கொடுத்து பாராட்டியது. பூபாளம் என்ற கவிதா இதழை நடத்தியுள்ளார்.
மற்றும் எ. ஏ. எம். புவாஜி ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் ‘கவிமணி சுபைர், பேராசிரியர் அல்லாமா உவைஸ்,
v v ) A. மாத்தளை மாவட்ட முஸ்லீம்களின் வரலாறு, ஆகிய ஆய்வுகள் நூலுருவில் வந்துள்ளன.
தொழிற்சங்கவாதியாகவும், சமூக சேவையாளராகவும் திச்டி, ஸி. மதார் சாஹிபு, சித்திரக்கலைபற்றியும், சிற்பக்கலைபற்றியும் சில தர கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மற்றும் ஊவாப் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் சாரணா கையும், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார் குழந்தை இலக்கியத்துறையின் முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம்.
மற்றும் கவிதைத்துறையில் வெளிமடை ரபீக், இப்னு அஸமத், உ ஸ் மாண் மரிசிலர், அக் குறணை இளைய அப்துல்லா
203

Page 122
கவிதைத்துறையைப் போலவே புனைகதைத்துறையில் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லீம் எழுத்தாளர்கள் பங்களிப்பினை செய்துள்ளார்கள். தமிழகத்திலிருந்து இங்கு வந்து மலையக மக்களிடையே தொழிற்சங்கவாதியாக பணியாற்றிய டி. எம். பீர்முகம்மது ஆறு சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு - இதனை மலையகத்தில் அச்சில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி எனக் குறிப்பிடலாம். இவர் சதியில் சிக்கிய சலீமா என்ற நாவலையும் எழுதியுள்ளார் - பேச்சாற்றலிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். தமிழ் வளர்த்த கல்ஹின்னை தந்த நாவலாசிரியரான 'மாமா' எனும் புனைபெயரில் எழுதிய என். எம். ஹனிபா கட்டுரையாசிரியராக அறிமுகமான இவர் பின்னர், நாவலாசிரியராக மலர்ந்தார். பகற்கொள்ளை (1960) மர்மக்கடிதம் (1963) ஏமாற்றம் (1963) இலட்சியப்பெண் (1974) குட்டிக்கதைகள் கொண்ட மாணிக்கச்சுடர்கள் (1963) போன்ற படைப்புகள் அச்சில் வெளிவந்துள்ளன.
பேராதனை ஷர்புன்னிஸா முஸ்லீம் பெண் எழுத்தாளர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தேசிய தினசரிகளிலும் வார இதழ்களிலும் இவரது ஏராளமான ஆக்கங்கள் வந்துள்ளன. ‘கிராமிய மனம் என்ற பெயரில் இவரது நூலொன்று வெளிவந்துள்ளது.
சிறுகதை, நாவல் என்று ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு பெண்மணி நயீமா ஏ. சித்தீக் அறுபதுகளில் மலையக இலக்கிய விழிப்புணர்வில் மலர்ந்தவர். ஆசிரியையாகப் பணியாற்றியவர். மலையகப் பெண்களின் முன்னேற்றத்துக்காக தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். இவரது 'வாழ்க்கை பயணம்' என்ற நாவலும், "வாழ்க்கை சுவடுகள் என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. வானொலியிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
இதே போன்று சிறுகதை, கவிதை, நாடகம் என பிரகாசிக்கும் இன்னும் ஒரு பெண் படைப்பாளி புசல்லாவ இஸ்மாலிகா, இவருடைய கவிதைகள் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பு நூல்களில் வந்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'ஷர்மிளாவின் இதயராகம்’ திரைப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நாடகப் பிரதிகள் அரங்கேற்றங்கண்டுள்ளன.
தமிழறிஞர் எனப் பெருமையுடன் நாம் குறிப்பிடும் அல்ஹாஜ்
204

எஸ். எம். ஏ ஹஸன் அவர்களின் இலககியப் பணியை விதந்து குறிப்பிடலாம் ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாக, பணிப்பாளராக பணியாற்றி தற்போது கண்டியிலுள்ள ஒராபிபாஷா நிறுவனத்தில் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார் இவருடைய நூல்கள் அருள்வாக்கி (1973) கம்பன் கவியமுதம் (1974) நெஞ்சத்தாமரையின் இன்ப நினைவுகள் (1975) கலாநிதி பதியுதீன் (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது). மற்றும் மலையக மக்களைப் பற்றிய பல தகவல்களை பதுளையைச் சேர்ந்த கல்வி அதிகாரியான எம். எம். சமீம் காத்திரமான கட்டுரைகளை
எழுதியுள்ளார்.
சிறுகதை, நாவல், ஆய்வுகள் என பல்துறைகளிலும் எழுதி வரும் எழுத்தாளர் உடதலவின்னையைச் சேர்ந்த பட்டதாரியான புன்னியாமீன், தமிழக சஞ்சிகைகளிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. நிழலின் அருமை (சிறுகதைத் தொகுதி) அடிவானத்து ஒளிர்வுகள் (நாவல்) இலக்கிய உலகு, இலக்கிய விருந்து என்பன அச்சில் வந்த நூல்களாகும்.
அடுத்து "சர்மிளாவின் இதயராகம்’ என்ற நாவலை எழுதிய பேராதனை ஜுனைதீன் தனது அயராத முயற்சியினால் திரைப்படமாகவும் தயாரித்தார். நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டு உழைத்து வருகிறார். நாவல் நகர் ப. ஆப்தீன் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதைகள் "இரவின் ராகங்கள்’ என்ற தலைப்பில் நூலுருவில் வெளிவந்துள்ளது. எம். எல். எம். மன்சூர் ஒரு தொகுதி வெளியிடும் அளவு சிறப்பான சிறுகதைகளை எழுதியுள்ளார். டிக்கோயா எம். எச். எம். ஜவ்பர் சிறுகதைகளை எழுதியுள்ளார். சூரியன்’ எனும் சஞ்சிகை நடத்தியுள்ளார்.
மலையகத்தின் விளிம்பு என வர்ணிக்கப்படும் மாவனல்லையிலிருந்து உயன்வத்தை றம்ஜான் 'ப்ரியநிலா என்ற சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார். "ஓர் இதயம் அழுகிறது' என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு இலக்கிய தேனி ஆவார். மடவளை கலீல் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். V
பத்திரிசை சஞ்சிகை வெளியீட்டுத் துறைகளில் மலையகத்தில்
2O3:

Page 123
முஸ்லீம்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அறிஞர் சித்திலெப்பை முதல் 'தினகரன் ஆசிரியர் பீடத்திலிருக்கும் எம். என். அபீன் வரை பெரும்பங்களிப்பு செய்துள்ளனர். இஸ்லாமிய இயக்கத்தின் செயலாளரான ஐ. ஏ. ரஸாக் சிறந்த பத்திரிகையாளர். எம். எல். எம். மன்சூர், ஸ்டார் ராசிக், குவால்தீன் இவர்கள் பத்திரிகையாளராகவும் இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டுபவர்களாகவும் திகழ்கிறார்கள். பத்திரிகையாளரான ஜனாப். ஏ. எஸ். எம். ஹாஸிம் சமூகப் பணிகளில் ஆர்வமுள்ளவர். 'ஊசி' என்ற பத்திரிகையை வெளியிட்டுள்ளார். ரஷீத் எம். இம்தியாஸ் பத்திரிகைகளில் விளையாட்டுத்துறை சம்பந்தமான கட்டுரை எழுதி வருகிறார்.
மலையக இலக்கியம் இன்று புதிய பரிமாணத்தை பெற்றுத் திகழ்கின்றது. இத்தகைய வளர்ச்சியில் முஸ்லீம்கள் செய்த பங்களிப்பு பதிவு செய்யப்படவேண்டியது அவசியமாகும்.
சான்றாதாரங்கள் 1 தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும்
கா. சிவத்தம்பி மார்ச் 1983 தமிழ் புத்தகாலயம் 2. அசன்பே சரித்திரம்
சித்திலெவ்வை மரைக்கார் முதல் பதிப்பு 1883 நான்காம் பதிப்பு 1990 3. மலையகமும் இலக்கியமும்
அந்தனி ஜீவா முதற் பதிப்பு 1995 மலையக வெளியீட்டகம்
4. கண்டி மாவட்ட முஸ்லிம்கள்
பதிப்பாசிரியர் எம். எஸ். எம். அனஸ் கலாசார சமய விவகார அமைச்சு
5. மாத்தளை மாவட்ட முஸ்லீம்கள்
ஏ. ஏ. எம். புவாஜி 6. நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள்
(கட்டுரைத் தொகுதி) பேராசிரியர் சு. வித்தியானந்தன். பதிப்பாசிரியர் 1977 7. காற்றின் மெளனம் (கவிதைத் தொகுதி)
பண்ணமாத்துக் கவிராயர் பதிப்பு 1996 மலையக வெளியீட்டகம்
8. இலக்கிய ஊற்று
(கட்டுரைத் தொகுதி) கலைமணி ஏ. இக்பால்.
206

மலையகம் பற்றிய ஆங்கில ஆக்கங்கள்
-சாரல் நாடன்
மலையகம் பற்றிய ஆங்கில எழுத்துக்களை நான்கு வகைப்படுத்திப் பார்க்கலாம்.
1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வாழ்ந்த ஐரோப்பிய துரைமார்களும் , அரசாங்க உத்தியோகத் தர்களும் தனிப்பட்டவர்களும் எழுதி வைத்துள்ள அநுபவ உண்மைகளும், தகவல் சேகரிப்புக்களும்.
2. பல்கலைக்கழக பட்டம் பெறுவதற்கும், தொழில் உயர்வுக்கான
தகைமைக் காண்பதற்கும் மேற்கொண்ட ஆய்வுகள்.
3. தனிமனிதர்கள் சுயவிருப்பில் வெளியிட்ட ஆய்வுகள், நிறுவனங்கள்
வெளியிட்ட ஆய்வுகள்.
4. படைப்பிலக்கியங்கள்.
1. 1815ம் ஆண்டு இலங்கை பிரித்தானியராட்சிக்குட்பட்டது. அதன் பயனாக இலங்கையில் புதிய ஒரு சமுதாயம் வேரூன்றியது. சாலையில்லா வனாந்தரத்தில், குரூரமானக் விலங்குகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த மலைப் பிரதேசத்தில் முதன் முறையாக மனிதகரீம் பட்டதால் இயற்கை வளம் - பொருளாதார வளமாக உருவெடுத்தது. இந்த அற்புதத்தைச் செய்தவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆங்கிலேயர்களும், அவர்களுக்குப் பக்க துணையாக தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தமிழர்களுமாவர். இத்தமிழர்களின் சந்ததியினரையே தாமின்றி மலையகத் தமிழர் என்று இனம் காண்கிறோம். காடழித்தும், காட்டு விலங்குகளைக் கொன்றொழித்தும், கொடிய கானக நோய்களோடு போராடியும் மலையகத் தமிழர் இலங்கைத் தீவுக்காக உழைத்துச் செத்த துயர் கதைகளை ஆங்கிலேயர்கள் அச்சில் பதித்துச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் குடியேறிய ”மதசுதந்திரம் வேண்டியவர்கள் அனுபவித்தவைகளை பெர்ஸி எண் பார் (Observations
207

Page 124
அ61% விடப்புக்கம் ஆ ? . கபூர்த். ' ; அநத நூளிப்பேன். இ:ங்கை, rார்பர்ேதர் காண்க: *ல் $ பற்ற அவலங்களையும். :Iந்து "ரேச் செயல்களையும் ந. . :து கொள்வதற்கு நம்மவர்" - எந்த நுரையும் எழுதி வைக்க:பில்:
மனனம் பணி துன்பதை சாதனையாகக் சுேனாம். து செவிவழியாகவே காணப்பரம்பரைக் கதைகளையும், தேம்U:1வது பாடல்களையும் இலக்கியமுதுமாகச் சேர்த்து வைத்துள்ள இந்த மக்களின் உரர்வுகளுக்கு வலுவூட்டும் ஆதாரங்களாக அமைந்துள்ளன ஐரோப்பியர்கள் எழுதி வைத்துள்ம்ே ஆங்கில நூல்கள் தாம் இந்நூல்களில் க18ணப்படும் அரிய டகர்னான்ர் - போப் கலவாத வரலாற்று உண்மைகளாக பிளங்குகின்றன மேற்படி நூல்கள் அந்நூலாசிரியர்களின் நேரடி அனுபவங்களாக அமைந்துள்ளன. s
தமது சொந்த அனுபவத்தால் தாம் மேற்கொண்ட முடிவுகளையும் ஏற்படுத்திக் கொண்ட அபிப்பிராயங்களையும் அவர்களால் பக்கச் சார்பின்றி எழுத முடிந்திருக்கின்றது
‘நமது பரந்து விந்த சாம்ராஜ்யத்துக்குட்பட்ட ஒரு கவனித்துவ, நாடான இலங்கையில் தான் விளங்கிக் கொண்ட டஜர்மைகனை விசுவாசமான ஆசைங்ாதி எழுதியிருக்கிறேன். இந்த அனுபவங்கள் அஜீத்தியாசமானாைகன் நாம் உண்தைானவைகள் என்று .பி) ரீக் லூயிஸ் தனது நூல் தோற்றுவதற்கான காரனத்தைக் குறிப்பிடுகின்றார். Sixty Four Years in Ceylon - Frederick i.ewis - 1926.)
இவ்விதம் உளப்பூர்வமான கருத்தை வெளியிட்ட ஃபிரட்ரிக் லுயீஸ் இந்த நாட்டில் அறுபத்திநான்கு வருடங்கள் வாழ்ந்துள்ளார்: அறுத்திநான்கு வருடங்கள் என்பது தனிமனித வாழ்க்கையில் ஒரு 8ரிதம், மானுட சரிதத்திலும. ஒரு தேசத்தின் சரிதத்திலும் தவிர்க்க முடியாத் காலப்பகுதி.
"My object in writing this bu çık has been to, give the Simple.story of a lan's life ii one of El Epire's Cilies, under Conditions that may be regarded as exceptikhla though pos Mibly not unique. Ili homest desire di teil the ti'u h, is the LLLLLL CCLLL L0 LLLS tTTT TTLe T TTTTTTT TOTLLLLL பகுதியில்
ք{18

வெளிவந்துள்ள ஆங்கில நூல்கள் பரவற்றிலும் காணக்கிடைக்கின்ற பிரதான அம்சமாகும்.
அந்த அம்சத்தினாலேயே, அந்த நூல்கள் இன்றும் தமது முக்கியத்துவத்தை மையமாக்கி அறிவுலகின் சுவாத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.
மேற்குறித்த நூல்களை இயற்றியவர்கள் ஆன்ைடு க்ணக்கில் மலையக் பக்கனோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். எஜமார் ஏலலாள் என்ற பேதத்தை மறந்து ஒன்றாக உழைக்கும் மனித கூட்டமாக இணைந்து மலைப்பிரதேசத்தில் மரகதப் பசுமையை தோற்றுவித்த வரலாற்றை. ஏராளமான நிஜ நிகழ்ச்சிகளை எழுத்தில் ஆவணமாக்கி உள்ளார்கள்.
இந்த ஆவணங்கள் - விசுவாசமான விருப்பத்தில் உண்மைப் நடப்புக்களை டி.ண்:ைவானவைகளாக தாம் விளங்கிக்கொண்ட விதத்தில் அவர்கள் எழுத்தில் வடித்தவைகள்
அப்படி எழுதப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில் மலையகத்தைப் பற்றியும் மலையகத்து மக்களைப் பற்றியும் குறிப்புக்கள் கானப்படுகின்றன.
ஃபிரட்ரிக் லூயிஸ் 64 ஆண்டுகளும் மேஜர் தே ட்ர் ஸ்கின்னர் 30 ஆண்டுகளும் பி. டி மில்லி 30 ஆண்டுகளும்'இலங்கை மணிணில் தொடர்ந்து வாழ்ந்தனர் அதன் பயனாக தாமே சேகரித்த தகவல்களையும், அவைகளுக்கான விளக்கங்களையும் தந்து முறையே இலங்கையில் அறுபத்து நன்கு வருடங்கள்
Sixty four years IT Ceylon - 926
இலங்கையில் 50 ஆண்டுகள்
Fifty years in Ceylon - 1871)
முப்பதா65ண்டுகளுக்கு முன்பு
(Thirty years ago - 1866) &#ன்ற நூல்களை ஆக்கித் தந்துள்ளனர்
"இலங்கையின் மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கைக்கு பெருத்த செலவில் சீனர்களும் மலே இனத்தாய்களும் 2Ա9

Page 125
காணடு வாபபட்டர்க என்ற தகவலை $ாம் பெற்றுக கொளவது ஃபிரட்ரிக் லூயிஸ் எழுதிய நூலில் இருந்துதான்
கோட்டத தொழிலாளர்களுக்கு எப்போதுமே கிராக்கி இருந்தது. கோபபி நோயினால் பாதிக்கப்பட்ட போது டிம்புல்ல பகுதியில் உள்ள தோடடங்கள் பலவற்றிலும் தொழிலாளர்களுக்குப் பஞ்சமிருந்ததையும், புசலலாவை நகருக்கு முதல் நாள் கால் நடையாகவே சென்று மறுநாள் தமது சமையலுக்குத் தேவையான சாமான்களை மூட்டைகட்டி தோளிலும், அரிசிமூடையை கையிலும் காவிக் கொண்டு வரும் துரைமார்களைப் பற்றி கூறுவது பி. டி மில்லியன் நூலாகும். இன்று நாம் பார்க்க கிடைக்கின்ற நீண்டு வளைந்தோடும் தண்டவாளங்களும், சுரங்கங்களும், இரும்புப்பாலங்களும் தோமஸ்கின்னரின் ஆற்றலையும், நெஞ்சுறுதியையும் வெளிப்படுத்துவனவாகும். அவரின் சாதூர்யமிகுந்த திறமையால் தான் ரயில் வண்டிப் பாதை சாத்தியமானதென்றும் கூறப்படுகிறது. அவர் தனது சுயசரிதையில் "இலங்கை மக்களுக்கு இரயில் வண்டி தேவைப்படவில்லை இரயில்வே பாதைகளில் வேலை செய்வதற்கு அவர்கள் முன்வரவுமில்லை. கோப்பி தோட்டத் தொழிலாளிகளை இரயில் பாதைகள் அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டாமென்றும், இரயில்வே தொழிலுக்கென்றே இந்தியாவிலிருந்து ஆட்களைக் கொண்டுவரும்படியும் துரைமார்கள் சங்கம் சிபாரிசு செய்ததென்றும் கூறுகின்றார்.
நமது மூத்தோர்களின் பங்களிப்பை நாம் தெரிந்து கொள்வதற்கு மேலும்
1892ல் வெளியான சிவனொலி பாதையிலிருந்து ஆனையிறவு வரை 1889ல் வெளியான பெரியதுரையின் சுயசரிதை 1899ல் வெளியான தோட்டப்பகுதிகளில் சைக்கிள் சவாரி 1900ல் வெளியான தங்கத்தளிர்கள் 1879ல் வெளியான கோப்பிப் பயிர்ச்செய்கை என்ற நூல்கள் உதவுகின்றன. இந்த நூல்களில்தாம் திரிபுபடுத்தப்படாத - மறைக்கப்படாத உண்மைகள் - அறிவுலகுக்கு விருந்தாக காணப்படுகின்றன.
இலங்கை காலனிச் செயலாளர் சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னன்ட் 1859) எழுதிய நூல் ( இலங்கை' - இரண்டு பாகங்கள்) ஆராய்ச்சியாளர்களுக்கும், சரித்திர விற்பன்னர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகின்றது

”இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை நோய்வாய்ப்பட்டு அழிவதற்கு முன்னரே, ஆங்கிலேயர் ஒருவர் ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனது கோப்பித் தோட்டத்தில் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டிருந்ததை கூறுகிறார். தேயிலை பதனிடும் முறைகளை தெரிந்து கொள்வதற்கு சீனர்கள் வரவழைக்கப்பட்டதை கூறுகின்றார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களின் உழைப்பின் அவசியத்தை டென்னன்ட் சரியாக விளங்கிக் கொண்டதால், தொழிலாளர்கள் கோப்பி அறுவடையின் போது (ஆகஸ்ட் - நவம்பர்) அதிக எண்ணிக்கையில் வந்து இந்தியாவுக்குத் திரும்பி விடுவதை ஆதரிக்காது, அவர்களை நிரந்தரமாக இங்கேயே வைத்துக் கொள்வதன் மூலம் பல தேவைகளுக்கு அவர்களின் உழைப்பைப் பயன்படுத்த முடியும் என்று எண்ணினார்.
அநுராதபுரிக்கருகில், ஒரு தென்னிந்தியக் கிராமத்தை உருவாக்கி அதிக எண்ணிக்கையில் தமிழர்களை குடியேற்ற வேண்டும் என்ற யோசனையை அப்போது இலங்கை கவர்னராக இருந்த டொரிங்டன் பிரபுவுக்கு கொடுத்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டிருந்தார் என்ற குறிப்புக்களை இந்த நூலில் காணுகிறோம்.
இந்தியாவிலிருந்து கடல் மூலம் தனுஷ்கோடியை அடைந்து அங்கிருந்து கால்நடையாக தோட்டங்களுக்கு நாட்கணக்கில் காட்டு வழியாக பயணம் மேற்கொள்பவர்கள் ஆங்காங்கே அ ^சிக் கிடந்த மிருக மாமிசங்களை உணவாகக் கொண்டனர். அந்த மாமிசங்களுக்கு உரிமை கொண்டாடிய கண்டி சிங்களவர்கள் இதனால் சச்சரவுபட்டனர். இதைத் தவிர்க்கவே பாதைக்கருகில் அம்பலங்கள் அமைத்து குடிதண்ணிருக்கான கிணறுகள் தோண்டப்பட்டது என்றும் டென்னன்ட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒற்றையடிப் பாதை அமைத்து காடுகளுக்கூடாக மரக்கூடாரங்களமைத்து மாதக்கணக்கில் தனித்திருந்த மனிதர்களையும், யானைகளோடும் சிறுத்தைகளோடும் அவர்கள் போராடியதையும், மான் இறைச்சியை தினந்தோறும் உணவாகத் தின்று உயிர் வாழ்ந்திருந்ததையும் குறிப்பிடுகின்றார்.
கவர்ச்சி காட்டிய சில பிரதேசங்கள் ஈற்றில் பயிர்ச்செய்கைக்கு
உகந்ததாக இல்லாது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்ததையும் குறிப்பிடுகின்றார்.
21

Page 126
டென்னன்ட் இலங்கையிலிருந்த காலப்பகுதி கோப்பி பயிர்ச் செய்கை காலம் - தேயிலை இங்கு அறிமுகமாகாத காலம், இலங்கையில் தேயிலை பரந்தளவில் பயிடப்பட்டாப் திறமை மிகுந்த சீனர்களுக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்ற அவரது கூற்று - சீனர்கள் வராமலேயே தென்னிந்தியர்களின் திறமைகளுடன் சமாளிக்கப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் - மலையகத் தமிழரின் மூதாதையர்களைப் பற்றிய பெருமித உணர்வை எழுப்புகிறது.
டென்னன்ட்டின் நூல், புள்ளி விபரங்களையும், வரைபடங்களையும், சித்திரங்களையும் கொண்டவை நுட்பமான தகவல்களைக் கொண்டவை.
யானை என்ற தலைப்பில் ஓர் அத்தியாயத்தையே எழுதி வைத்திருக்கும் அவர் தன்னுடைய "புசல்லாவை - நுவரெலியா பாதை அமைக்கும் பணியில் காப்பிரியர்கள் பயணிபடுத்தப்பட்டனர். மொசாம்பிக்கிலிருந்து போர்த்துக்கேயர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் எஞ்சியிருந்த சந்ததியினரே அந்தக் காப்பிரியர்கள் என்ற குறிப்பின் மூலம், இலங்கை சபித்திரத்தில் மறைக்கப்படாத சில ஒளிப் பாய்ச்சலைத் தந்திருக்கின்றார்.
கோபம் மிகுந்த யானை ஒன்று காப்பிரியன் ஒருவனை அடித்தே கொன்றதை ரம்பொடை பள்ளத்தாக்கில் தான் பார்த்துப் பயந்ததாகக் குறிப்பிடும் டென்னன்ட் அந்தக் காப்பிரி மனிதர்கள் யானையின் இருதயத்தை விரும்பி சாப்பிட்டதையும், அதன் வாலை மாலையாக அணிந்து கொண்டதையும், அதன் எலும்புகளைக் கோப்பிச் செடிகளுக்கு எருவாகப் போட்டு வைத்ததையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது மாத்திரமல்ல, "அனுபவிக்கும் துண்பத்தை வாய்விட்டு வெளிப்படுத்த விரும்பாது மனசுக்குள்ளாகவே போட்டுப் புலம்பும் இந்தியத் தமிழரின் குணத்தையும் குறித்து எழுதியுள்ளார். தனக்கிழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்துப் புகாரி செய்வதற்கு அவன் முன் வந்ததே இல்லை; மாறாக தாங்கிக் கொள்ள முடியாத இறுதி கட்டத்தில் இந்தியா திரும்பி விடஷம், இனிமேல் இலங்கைக்கு வருவதே இல்லை எண்று நினைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்ற இக்கட்டான வார்க்கைக்கு அவன் உட்பட்டவனாயிருக்கிறான் என்பதையும் விவரித்துள்ளார். இந்த வரிகள் மிகவும் கவனத்துக்குரியவைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு வந்த தென்னிந்திய தமிழர்களில் பலரும்
212

பத்திரிகைகளில் வெளியான செய்திகள் | C T 'நந்தலாலா
= 1 ساعات == ت = التي تعني
el 5 TET eq CC L S L SL S S uu S S S S S S S
॥1॥1॥1॥॥
エ కె-- ॥1॥
L T SS S S LL S SuuSS SS S S S S S S L
ਜ॥
H - -శాకె Бала: Вила = تجتمعات توعية التي تقع من 1 دريد - يتيتيتيتيتيتي
TL C T TuT TAJSaa JJSLLL LTS S a LLL تتوعية
--
a -| في تلقي
三
- *=րt-ւ էքr-tք---------------------ք-քՅք է
三ー エリ
*、 ■■三 三-エ uS S CCa S L S S S A AAAS S LLLL
曰 . ܕ ܢܝ
gFFFFFFFFFF
உதிது 琶、
easis a CFEEEEEEEE---
gas is sigsses sist is is sis ... Eis
- - ATSLLLL LL LLLLLLuuu uu au uu L S S S S S SSLLL LS SSS SSCSCL S S S S 琴リ琴*
-- . . . . . . . . . . . . . . . . .
------II
- bafie == ---EEазан 18 ғ-ға негізгі 5 – 8-і бізгізін - ̄ട്ട - SS AAS S S AA 0 S S S u u S LLS00 S SS SS aS
as is sing isssssssssssssssssssss
-- 1. ܒ... | =* --Fi - Fr::-:քՇ:: - -
- FEIII is Et-i-H
silii - III Finant |- II i
تتقتلعتيقيقة - as ----FH----
a og Eiff 5..... h = i ====================== Egia ======= it filiar usales. -------------* -----
எம்மை இழிவு படுத்துபவர்களின் சொற்களை எம் வளர்ச்சியின் ஏணிப்படிகளாக்குவோம். எம்மை நோக்கி வீசும் கற்களை எமது அரண்களாகவும் வீடுகளாகவும் ஆக்குவோம். எம்மீது பூகம் சானத்தையும் சேற்றையும் சேர்த்து குதிய சிந்தனைகளை, உறுவாக்கும் வித்துக்களாக நன்றி வளர்ப்போம்.
வீ. புத்திரசிகாமணி

Page 127

—
靛
皇* milf fil
Jij, Gju JIsIE)II SOOTIDIT, GUST GİTGİT GIGIÚIGÍ
| " நசிரிாம்
*、
அமரர் தொண்டான் அவர்களுடன்
First
.ܨܒܝܢ ീട്
T
*
- -
.÷a7

Page 128

ܐ ܕܒ ܢܪܒܕܐܲܝܒܥܬܐ | 1+5+1 ܕܠܐ ܨ ܒܐ
seas
- -
+1=
மலையக மக்களை தனிதேசிய இனமாக அங்கீகரிக்க கோரி நடந்த ஊர்வளம்,

Page 129

|- 그. . . . No. , ||-\\|-||-|-|- | –|- -| )|-\,| ()|
|
No.
|-|-| ||-_
|-| ( )|-| || |- ! -|- | |-|- |- , -: , !
ஆண்டவருட
(3LIIT
, .

Page 130

மேதகு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன காமினி திசாநாயக்க அவர்களுடன்
ஜெனீவாவில் ஐ. எல் ஒ. பிரதிநிதிகளுடன்

Page 131

இங்கேயே தங்கி விட்டனர் இலங்கையையே தாயகமாக எண்ணத் தலைப்பட்டனர் என்ற - இலங்கை சட்ட நிரூபண சபையில் கூறப்பட்ட
ஒரு கருத்தை - இது மெய்ப்பிக்கிறது.
1850ல் முதன் முறையாக ஆயிரக் கணக்கில் கண்டியில் தமிழ்க்கூலிகள் காணப்பட்டதாகவும், இங்கே வா, அங்கே போ என்ற தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டதாகவும், கொள்ளிக் கட்டைகளைக் கொண்டு சுருட்டு பற்ற வைக்கும் அவர்கள் கடுமையான உழைப்பாளர்கள் எனவும் ஐம்பதுகளிலும் எண்பதுகளிலும் இலங்கை (Ceylon in the fifties and the eighties) STssip 56Slaò (1886) தோட்டத்துரை ஒருவர் குறிப்பிட்டுள்ளதும் இக்கருத்தை மெய்ப்பிக்கிறது. இந்த ஆங்கில நூல்களை முறையான விதத்தில் பயன்படுத்தி, தகவல்களை அகழ்ந்தெடுத்தால் மலையகத் தமிழரின் ஆரம்ப கால சரிதத்தை அழகுற எழுதும் வாய்ப்புண்டு. 4.
ஆங்கிலத்தில் பெருந்தோட்டத் தொழில்சார்ந்த தொழில்நுட்ப நூல்களும், துரைமார்களுக்கான கையேடுகளும், அவர்களின் தமிழறிவை விருத்தி செய்யும் கூலி தமிழ் அகராதிகளும் - Cooly Tamil Dictionary வெளியிடப்பட்டுள்ளன.
By Marsh Smith - Arivu - 9is
- ... Inge Vaa -- Quái GS5 6nIFT - " - Cooly Tamil - J. Gólj36ly
- Enna Venum - 67sio Gagltò By D. A. Wilkinson − Udday Uppar - 9Gull 9 turt
என்ற இந்த வரிசையில் அடே அப்பா 1939 ஆம் ஆண்டு 11வது பதிப்பைக் கண்டது. இத்தகு கையேட்டு நூல்களை - ஆங்கில துரைமார்களின் 'பைபிளாக கருதப்பட்ட டைம்ஸ் ഉ:ഖ சிலோன்
முறையாக வெளியிட்டு உதவியது.
இக்கையேடுகளில் காணப்படும் வாக்கியங்களும், அவைகளுக்கான அர்த்தங்களும் மலையக சமூகத்தில் காலனித்துவ காலத்தில் நிலை கொண்டிருந்த சமூக - பொருளாதார கட்டமைப்பை விளங்கி கொள்ள
உதவுகின்றன என்பதைக் குறிப்பிடுதல் தகும்.

Page 132
வேட்டைப் பிரியரான சேமுவேல் பேக்கர், நுவரெலியாவில் நீண்ட snout is surgis sui. 18556) 36 is siggu (Eight years' wandering in Ceylon) நூலின் மறு பிரசுரம் அச் சானபோது - 1875ல் - இருபதாண்டுகளில் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றத்தைThe Stride of Civilization during the Past twenty years has been enormous - the wilderness had blossomed as the rose 6Tsip sigs வியக்கிறார். இக்கால எழுத்துக்கள் இன்றியமையாத மூல ஆவணங்களாக விளங்குகின்றன. காலனித்துவ ஆட்சியின் போது, பிரித்தானியர்களை இலங்கையில் குடியேற்ற தூண்டுவதற்காகவென்று ஆங்கில படைப்புக்கள் படைக்கப்படுவது அதிக அளவில் தூண்டப்பட்டது.
காலனித்துவ ஆட்சிபற்றி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படும் போது அந்நாடுகளைப் பற்றிய போதிய அறிவு கொண்டவர்களே விவாதத்தில் முழுமையாக பங்கேற்க முடிந்தது. இக் காரணங்களால் உயர்வு நவிற் சியோடும் சில நூல்கள் படைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் (1815 - 1878 காலப்பகுதி) ஆங்கில இலக்கியம் என்ற நூலை எழுதிய யஸ்மின் குணரட்ன குறிப்பிடுகிறார்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் - இலங்கை, இந்தியா, மேற்கத்தைய நாடுகள் - பலராலும் எழுதப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக எழுதப்படும் இவைகளை ஆக்கங்கள் என்று பேசப்படுவதை தவிர்த்துக் கொள்வோம்.
மலையகத்தைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்த ஆக்கங்களாக இவைகளைக் கொள்ளலாம்.
இப்படி நூல்கள் படைத்தவர்களில் முனைப்பாக தெரியும் பெயர் ஜி. ஏ. ஞானமுத்து என்பவருடையதாகும்.
மலையகத்தமிழரின் கல்வி இடர்பாடுகளை எடுத்தியம்பி, அதில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிந்தனையை ஏற்படுத்தியவர் ஞானமுத்து ஆவார். அவர் படைத்தளித்த ஆங்கில நூல் (1977) ஆய்வாளர்களுக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. சில வருடங்களுக்கு
214

முன்பு அவரோடு நான் தொடர்பு கொண்டேன். அவர் எனக்கெழுதிய கடிதத்தில் "நிமித்தம் அவர்களோடு பழக ஆரம்பித்த நான், அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கையை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் நூல்களை எழுத ஆரம்பித்தேன். ஊக்குவிப்பவர்கள் இல்லாது போய்விட்டனர்" என்று கவலை தெரிவித்திருந்ததோடு "எனது ஆங்கில புத்தகத்தை வாசித்து விட்டு, எண்னைப் பாராட்டி மலையக சமுதாயத்திலிருந்து எனக்கொரு கடிதம் வந்தது எண்வாழ்நாளில் நான் கண்ட மிகப்பெரிய சந்தோஷம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரதிபலன் பாராது, மலையகத்தைப் பற்றிய வரலாற்று தகவல்களை உள்ளடக்கி மக்களின் சோகக் கதையை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்திய unpopGulf suit Donovan Moldrich 6, siruri Bitter Berry Bondage என்ற தனது நூலில் மலையக சமுதாயத்தின் ஆரம்பகால வாழ்க்கையை - 1834ம் ஆண்டு ஆரம்பமான Times of Ceylonலிருந்து ஆரம்பித்து அழகாக கோர்த்துத் தருகிறார்.
"எங்கள் எஜமானர்கள் கொடூரமானவர்களாய் இருப்பதையே நாங்கள் விரும்புகின்றோம். கருணையுள்ளம் மிகுந்த எஜமானர்களால் எங்களுக்குக் கஷ்டமே மிகுந்தது’ என்று கூறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் ’கொடுமையானவர்களாக இருக்கும் துரைமார்கள் கோபத்தை அடக்க முடியாது எங்கள் முதுகில் அடித்தார்கள், அது வலிப்பதோடு முடிந்துவிடும். கருணை நிறைந்த துரைமார்களே இவ்விதம் எங்களை தாக்குவதில்லை. அரைபேர் போடுவார்கள், சில வேளை முழு பேருக்கும் நாமம் போடுவார்கள் அது எங்களின் வயிற்றிலடிப்பதாயிருக்கும்" என்று அதற்கு அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
"ஆதிலெட்சுமி என்ற ஒரு நீராவி கப்பலில், பிரயாணம் செய்து இலங்கைக்கு வந்த 120 பிரயாணிகளும் கடலில் மூழ்கி இறந்து போயினர், என்று கூறி நம்மை கண்கலங்க வைத்த கையோடு "1848ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுதந்திர கிளர்ச்சியின் போது கோப்பித் தோட்ட துரைமார்கள் கதிகலங்கி நின்றதையும், கோடரியும் கத்தியும் கையிலேந்தி ஆயிரக கணக்கில அணிவகுத்து நிணறு அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர்கள் தொழிலாளர்கள் தாம் என்று கூறி சிந்திக்க வைக்கின்றார்.
215

Page 133
இநத ஆஸ்/2 நூலில இரண்டு முககிய கருத்துக்களைப் பெறக்கூடியதாயிருக்கின்றது ஒன்று அவர்களின் வாழ்க்கை இருப்பை பற்றியது. 18394.கும் 1864க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இலங்கைக்கு வந்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இங்கேயே தங்கி விட்டனர் என்பதை எடுத்துக் கூறி "மூன்று தலைமுறைகளாக இலங்கை மண்ணிலேயே வாழ்ந்து வரும் இவர்களுக்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்" என்று சட்டநிரூபண சபையில் 1883ம் ஆண்டு . L. Shand என்று பேசி இருப்பதும், இதே காலப்பகுதியில் கண்டி மலைப் பிரதேசங்களில் இவர்களில் சிலர் நிலங்களை விலை கொடுத்து வாங்கியதை கவர்னர் ரொபின்சன் குறிப்பிட்டுள்ளதும், இதனாலேயே இக்காலப்பகுதியில் மலையத்துக்கு விஜயம் செய்த பின்னர் சட்ட நிரூபணசபையில் "அந்த மக்கள் நல்ல நிலையில் வாழுவதாக" சேர் முத்துக்குமாரசுவாமி பேசினார். இந்த வாழ்க்கை இருப்பை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடேசய்யரும் சட்ட நிரூபண சபையில் வலியுறுத்தியுள்ளதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். 1886ம் ஆண்டு ஹந்தானை தோட்டத்துரையை அதே தோட்டத்து பெரிய கங்காணி சுட்டுக் கொன்றதையும் இணைத்துப் பார்க்கலாம். இந்தப் பின்னணியில் 1920களில் தான் இந்த மக்கள் இங்கு வாழத் தொடங்கினார்கள் என்ற கலாநிதி குமாரி ஜெயவர்தனாவின் கருத்தும், 1870களில் தான் அப்படி வாழத் தொடங்கினார்கள் என்ற மைக்கல் றொபர்ட்ஸின் கருத்தும் அடிபட்டுப் போகின்றது.
இரண்டாவது கருத்து - இத்தனை ஆதாரங்களையும் எடுத்துக் காட்டும் டொனோவன் மோல்ட்ரிஜ் *மதகுருமார்கள், துரைமார்கள், கவர்னர்கள், அரசியல்வாதிகள் என்ற பலதரத்து உயர்தரப்பினரும், "பாவப்பட்ட ஜீவண்கள்" என்று இந்த ஏழை உழைப்பாளி மக்களைப்பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதை நாம் அவதானித்தாலும் அவர்கள் அனைவருமே பாவப்பட்ட வாழ்க்கை நீடிப்பதற்கு காரணகர்த்தாக்களாயிருந்தனர் என்கிறார்.
"இந்த அனைவரும், இவர்களைப் பிரதிநிதித்துவம் பண்ணித்
தமது எண்ணங்களை எழுத்து வடிவில் பொறித்துச் சென்றுள்ள
நூலாசிரியர்களையும் சேர்த்து, தொழிலாளர்களின் உடல் நலத்தில் காட்டிய
ஆர்வத்தை - அந்த ஆர்வம் சுயநலமானது, அந்த மக்களுடைய சமூக
முன்னேற்றத்தில் - பொதுநலம் சார்ந்த ஆர்வமாகக் காட்டுவதற்கு தீவளிப்
216

போனார்கள்” என்று தீர்மானமாக குறிப்பிடுகின்றார்.
மலையகத் தமிழ்மக்களின் வரலாறு எழுதப்படாத குறையை எஸ். நடேசனின் ஆங்கில நூல் ஒரளவுக்கு நிவர்த்தி செய்கிறது. உழைக்கும் மக்களைப் பற்றி - உழைக்கும் மக்களால் - எழுதப்பட்ட ஒரு நூல் என்ற பெருமை இதற்குண்டு.
1950களில் இங்கிலாந்தில் கல்விகற்ற காலத்திலிருந்தே - மலையக மக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட தொழிற்சங்கவாதியான எஸ். நடேசனின் இவ்வாங்கில நூல் - இத்துறையில் ஒரு மூல நூலாகப் பயன்படும் சிறப்பைக் கொண்டிருப்பதாக கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
இத்துறையில் முதலடி எடுத்துக் கொடுத்தவர் மலையக நிர்மானச் சிற்பி என்று கொள்ளப்படும் கோதண்டராம நடேசய்யராவார். அவர் எழுதி Gsussufl ill Planter Rajib Tayi. The Ceylon Indian Crisis (Jigy is மலையகத் தமிழரைப் பற்றி - அவர்களுடன் வாழ்ந்து அவர்களின் விடியலுக்காக உழைத்த செயல் வீரனின் உரத்தச் சிந்தனைகள் என்று இன்றும் போற்றப்படுகின்றன. இந்த மக்களை பண்பாட்டு முறையில் அடையாளம் காட்டும் முயற்சிகளுக்கு ஆரம்பமாக ஒரு கையேட்டை sigsongsurt The Hill Country in Sri Lankan Tamil Literature (1995) Qsiosuit Goit Trit. The People of Ceylon STsarp 90s, bligos) டாக்டர் என். டி. விஜயசேகரா 1949ம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.
தென்னிந்தியத் தமிழர்கள் இந்த நாட்டில் ஊமை ஜந்துக்களாக (Dumb Creature) நடாத்தப்படுகின்றார்கள் என்று இதில் எழுதியிருக்கிறார்.
எனினும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திரம் பெற்ற இலங்கையில் சில தகவல்களைத் தவிர்த்துக் கொண்டு எழுதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. −
பிழையான தகவல்களைத் தருவது கணி டிக் கப்படும் அபாயத்துக்குள்ளாவதைப் போல அரைகுறை தகவல்கள் தருவது கண்டிக்கப்படுவது இல்லை எனத் தெரிந்து கொண்டவர்கள் தமது
217

Page 134
சிலவரித்துக் கொண்ட நோக்கங்களுக்காக இப்படிச் செயற்படுகின்றனர்.
1854 suid sgb6OG Forest Life in Ceylon 67 Gogo Ng6ONG தொகுதிகளாக வெளிவந்த ஒரு நூலை வில்லியம் நைட்டோன் வெளியிட்டார். இந்த நூலில்தான் மலையகத் தமிழரின் அடிமை வாழ்வின் அவலம் முதலில் அகிலத்துக்கு அம்பலமானது. சி. வி. வேலுப்பிள்ளை முதற் கொண்டு சமீபத்தைய ஆய்வாளர்கள் வரை இந்த நூலை மேற்கோள் காட்டியுள்ளனர்.
நடக்க முடியாத தோழர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்ல முடியும்? பத்து மைல் பதினைந்து மைல் தூக்கி கலைத்து முடியாத நிலையில் நடுக்காட்டில் மிருகங்களின் இரக்கத்திற்கு இவர்களைப் போட்டார்கள், இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி அழுவார்கள். ஒரு சிரட்டையில் தணர்ணரும் இலையில் கொஞ்சம் ஆகாரமும் வைத்து விட்டு உள்ளம் குமுறி அழுத கணினிருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். காணகத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்ல முடியுமா?’ என்ற சி வி வேலுப்பிள்ளை எடுத்துக்காட்டும் நாடற்றவர் கதை’ என்ற நூலில் வரும் இதே வரிகளை மீண்டும் மீண்டும் இன்றைய இளம் ஆய்வாளர்கள் எடுத்துப் பயன்படுத்துகின்றனர். உண்மையில் நைட்டான் எழுதிய "கானகத்தில் வாழ்வு' என்ற இந்த நூல் ஒரு கற்பனைக் கதை என்பதை இவர்களில் பலரும் உணர்ந்திருக்கவில்லை. மலையகத் தமிழரை பற்றிய முதல் கற்பனை படைப்பு உண்மைகளைத் தழுவியிருந்ததால் - இன்றும் பேசப்படுகிறது.
1968 tid sb6OG The Knuckless and other Poems GT cigp கவிதை நூல் வெளியானது. வில்லியம் ஸ்கீன் என்பவர் இதை படைத்தார். மக்களின் மேம்பாட்டில் நேரடிப் பங்கேற்கும் படைப்பாளியான இவர் 1849ம் b6OOT (G sgáâADITÉ S House of Commons (ypG A6Mda, LiS, 6ssi சமுதாய அமைப்பு குறித்து சாட்சியமளித்தவராவார். கோப்பிப் பயிர்ச் செய்கையின் மூலம் மலையகத்து இயற்கை வனப்பில் ஏற்பட்ட மாற்றத்தை இவர், மலையகத்து இயற்கை வனப்பில தனித்து நிற்கும் நக்கில்ஸ் மலைத்தொடரை வைத்தெழுதியது வியப்புக்குரியதேயாகும் இது குறித்து கருத்து தெரிவிக்கும் YaSmine G00ratne தனது tragish literature in Cevior 1815 - 1878 stop улоki (uisti
28

212/213) கதை வாசிப்பில் கவனம் குறைந்த ஒரு காலத்தில், கவிதை என்பது பெரும் பொழுது போக்காக கருதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளதையும் நோக்குதல் நலம்.
1908ம் ஆண்டு CEYLONSKETCHES என்ற நூலை வெளியிட்ட COSMOPOLTE என்ற புனைபெயர் தாங்கிய தோட்டத்துரை ஒருவர் சித்தப்பன் என்ற இந்திய வம்சாவளி தொழிலாளி சிங்களப் பெண்மணி ஒருத்தியை காதலிப்பதாகவும் கல்லோயாவுக்குச் சென்று தொழில் புரிந்து வந்ததாகவும் காதல் காரணத்தால் நடை உடை பாவனைகளில் தன்னை மாற்றிக் கொள்வதாகவும் எழுதியிருக்கிறார்.
1977ம் ஆண்டு LLCTMMGRANT என்றதொரு நாவலை ராஜா புரக்டர் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வெளியிட்டார். இலங்கைக் கடற்படையில் ஒரு காலத்தில் கமாண்டராகப் பணியாற்றிய ராஜா புரக்டர் தென்னிந்தியாவில் தன் வறுமை வாழ்க்கையிலும், பிள்ளை பேறு இல்லாத இல்லற வாழ்க்கையிலும் வெறுப்புற்று கள்ளத்தனமாக இலங்கையில் குடியேறிய ஒருவனது சோகமும், ஏமாற்றமும் மிகுந்த வாழ்க்கையை 'கள்ளக்குடியேறி” என்ற நாவலில் விளக்குகிறார். தனது கணவனும், தனது வருங்கால மருமகனும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாத பபுன் சிஸ்கோவின் மனைவி மூலம் இலங்கையில் நிலவும் குறுகிய அரசியலை விமர்சிக்கிறார். 1956 கலவரத்துக்குப் பின்னர் எழுந்த நூல் இது.
1985ல் 'சரணம் என்ற தலைப்பில் ஒரு நாவல் வெளியானது இதை எழுதிய கோபால் காந்தி நான்கு ஆண்டுகள் (1978-1982) கண்டி இந்திய ஹைகமிஷனில் செயலாளராகப் பணியாற்றிவர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புபவர்களோடு தொடர்புடைய பணிகளைச் செய்து பெற்ற அனுபவங்களை வைத்துக் கொண்டு அழகுற சரணம் என்ற நாவலை எழுதியுள்ளார். சோகமும், ஏமாற்றமும் நிறைந்த வள்ளி என்ற பெண் கதாபாத்திரமும் - ஜவஹர்லால் நேரு, மாக்ஸ்முல்லர், அநாகரிக தர்மபால, ஏ. ஈ. குணசிங்கா, கோ. நடேசய்யர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகளும் கதாசிரியரின் மலையக விஷயஞானத்தைப் புலப்படுத்துகின்றன.
1975ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது இலங்கைத் தீவின் அழகிலும், மக்களின் விருந்தோம்பலிலும் ஈடுபாடு கொண்ட ஒரு
219

Page 135
Qu60ötuosoî BARBARACARTLAND.
இலங்கையின் வரலாறு - குறிப்பாக தோட்டப் பயிர்ச் செய்கையின் வரலாறு அவரை வெகுவாக ஈர்த்தது. MOONOVEREDEN என்ற நாவலை படைத்தளித்தார்.
175க்கு மேற்பட்ட நாவல்களை எழுதி சர்வதேச புகழ்பெற்ற BARBRACARTLAND என்பவர் இங்கிலாந்தில் புகழ் மிகுந்த ஒரு சமூக சேவகி ஆவார். பரந்த நிலப்பரப்பில் விசாலித்தெழும்பிய கோப்பிப் பயிர்ச்செய்கை அழிவுற்ற ஒரு வருடத்துக்குள்ளாகவே மாற்றுப் பயிராக தேயிலைப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதும், பீனிக்ஸ் பறவையைப் போல அழிவிலிருந்து எழும் செயலுக்குப் பின்னால் ஜேம்ஸ் டெய்லர் இருப்பதும், அவர் இறந்த போது சாமித்துரை என்று தோட்டத் தொழிலாளர்கள் அழுது அரற்றிய உண்மை சம்பவங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
அவன் எனக்காக மரணித்தான் என்ற ஒரு நாவல் (HEDIED FORME) அருட்திரு ஆதர் லீ வேவ்ரா என்பவரால் எழுதப்பட்டது. ஆங்கிலப் பாடசாலை சிறுவர்களையும் தமிழ் கூலிகளையும் பற்றி எழுதப்பட்ட இந்நாவலை பற்றிய தகவலை மட்டுமே என்னால் பெறமுடிந்தது. நூல் வாசிக்க கிடைக்கவில்லை.
மலையக மக்களைப் பற்றி ஆங்கிலத்தில் படைப்பிலக்கியம் செய்தவர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர் சி. வி. என்ற இரண்டெழுத்துக்களில் அறியப்பட்ட கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை ஆவார்.
THE BORDER LAND LIFELESS LIFE, THE HOLOCAUST ST 6p மூன்று நாவல்களும், BORNTOLABOUR என்ற கட்டுரைத் தொகுதியும், In Ceylon's Tea Garden 95467 sip 3,6605 G5 (55uth -96. Jg ஆற்றலைப் பறைசாற்றும் எழுத்தோவியங்களாகும்.
மலையக மக்களிடையே தோன்றி, அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர் மேற் கொண்ட ஐம்பது ஆண்டுகால ஆங்கில எழுத்துப் பணிகளால் தான் ஆங்கிலம் தெரிந்த சிங்களவர்களும், சர்வதேச ஆங்கில வாசகர்களும் மலையக மக்களைப் பற்றிய தமது அறிவை விசாலித்துக்
220

கொள்ளமுடிந்தது
"மலையக மக்களிடையே சோகம் ததும்பிய அழகு இருக்கின்றது. இந்த மக்களை அந்நியர்களக அபிப்பிராயப்படும் மக்கள் இந்த உழைப்பாளர் கூட்டத்தினரால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளையும் அகன்றவாகன பாதைகளையும், நீண்ட ரயில்வே பாதைகளையும், நீண்டு வளைந்த பாலங்களையும் அழிப்பதற்கு தயாராயிருக்கின்றார்கள" என்று கேள்வி எழுப்பும் ஸண்டே டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் எஃவ், டி. சில்வா "இந்த மக்களின் உழைப்பை ஏற்றுக்கொண்டோம். அதனால் ஏற்பட்ட வனத்தை அனுபவிக்கின்றோம் அந்த உழைப்பான மக்களின் உணர்வுகளை மதிக்கவும், இந்நாட்டின் தேசிய ஓட்டத்தில் அவர்களை இரண்டற கலக்க விடவும் நாம் நம்மைத் தயார் செய்து கொள்வது அவசியம். இதற்கு இவரது "உழைக்கப் பிறந்தவர்கள்" நூல் (BORNTOLABOUR) உதவும்" என்று கூறியுள்ளார். அது மிக உண்மையான ஒரு கருத்தாகும். இன்று இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் சங்கமிக்க தொடங்கியிருப்பது அரசியலால் மாத்திரம் சாத்தியமான ஒன்றாகக் கொள்வது தவறு. எழுத்துக்களின் மூலம் கருத்துக்களை உருவாக்கி, மக்களின் உணர்வுகளை மதிக்கவும். ஒருவரின் துன்பங்களை மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளவும் மக்களைத் தயார்படுத்துதல் மிகவும் அவசியம் அதை அவரது எழுத்துக்கள் செய்தன.
மலையக் மக்களின் வாய்மொழிப் பாடல்களைத் திரட்டி ஆங்கிலப்படுத்தி அறிமுகம் செய்தவரும் சி. வி. வேலுப்பிள்ளை அவர்களே ஆவார்.
s
யாழ்ப்பாண தமிழர்கள் தமது மொழி, இனப்பெருமையைப் பற்றி GTGig 60 giusbes MORNING STAR, HINDU ORGAN, JAFFNA CATHOLiC GUARDIAN. CEYLON ANTIQUARY. LITERARY REGISTER THE ORIENTALIST. TAMIL CULTURE 6T6ip usu syG3,6061T uugiruGisori. அந்த வளமும் வாய்ப்பும் மலையகத்தினருக்கில்லை. எனினும் OBSERVER TIMES SISD 65Éu uššflso556stgYud MADRAS MAiL. ILLUSTRATED WEEKLY என்ற இந்திய சஞ்சிகைகளிலும் நிறைய எழுதி மலையக மக்களின் பண்பாட்டுப் பெருமைகளை வெளிப்படுத்தினார். CEYLON ANTIQUARY. LITERARY REGISTER oshi 6 so 6 is, Ty 965 Junaird, 6i மலையக மக்களின் வாழ்க்கையம்சங்கள் குறித்து எழுதியுள்ளதும் கவனிக்கத்தக்கது. ஈர்க்கும் சக்தி இல்லாத இடத்தில் எதிரொலிக்கும்
22

Page 136
சக்தி இல்லாது போகும் என்ற உண்மைக்கொப்ப எழுத்தறிவு குறைந்திருந்த மலையகத்தில் - எதிரொலி என்பது சமீபகாலம் வரை இல்லாமலே இருந்தது என்று கூறுவது தவறில்லை எனலாம்.
இந்த நிலைமையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது 6Tsirugog 3,60l furts, subg. VIOLENT MEASURES IN THE DISCOURSE OFSRLANKASESTATETAMLS 66šp G6)fG 2ņšūuGšildsps.
3. 6. 1994ல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் புனிதம் திருச்செல்வம் நினைவுச் சொற்பொழிவாக இதைச் செய்தவர் பேராசிரியர் வாலண்டைன் ஈ. டேனியல் ஆவார்.
மலையகப் பின்னணி கொண்ட இப்பேராசிரியர் மலையக மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சொற்களின் மூலம், அவர்தம் வாழ்க்கைப் பகைப் புலங்களையும், அவர்தம் வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகளையும் பயன்தரு சரிதமாக (EFFECTIVEHISTORY) விளக்கி உள்ளார்.
கல்வாத்துக் காட்டிலும், கொழுந்து மலையிலும் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கூறிச் செல்லும் பாங்கு ரசிக்கத்தக்கதாக உள்ளது.
இவ்விதம் நான்குவிதமான பொதுவகைப்படுத்தலுக்கு உட்படும் ஆங்கில ஆக்கங்கள் மேலதிகமான பணிகளையும் செய்துள்ளன.
சமீப காலமாக நம்நாட்டில் செயற்படும் அரசாங்க சார்பற்ற தன்னார்வ அமைப்புக்கள் பெருந்தோட்ட மக்களைப்பற்றிய ஆங்கில வெளியீடுகளைச் செய்து வருகின்றன.
சத்யோதய நிறுவனத்தைச் சார்ந்த போல் கெஸ்பர்ஸ் அவர்கள்
ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறார். அந்நிறுவன வெளியீடான VOCE
OFVOCELESS சில மலையகத் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
*ắìả
தானே இலங்கையில் ஒரு சிறுபான்மையினனாக இருந்தமையால்
பெற்ற கசப்பான அனுபவத்தாலும், இயேசுபிரானில் கொண்டிருந்த இறை
நம்பிக்கையாலும் வரித்துக் கொண்ட மனிதநேயத்தாலும், மலையக
222

மக்களுக்கு இழைக்கப்படுகிற ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக தம்முடைய கருத்துக்களை அவ்வப்போது ஆங்கில பத்திரிகைகளில் ஆசிரியருக்கு கடிதங்கள் என்று எழுதி வந்தவர் இத்தாலியரான பியோசியம்பா அவர்களாவார். அவரது கடிதத்தொகுப்புகள் A VOICE CRYING FROM THE PLANTATIONS OF SRI ANKA 6T sigo Guussů (saussî613 6i 6ITI.
மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இராசராச சோழன் தெரு உள்ளது. இலங்கையின் மலையகத் தலைநகரான கண்டியில் பூரீ விக்கிரமராஜசிங்க வீதி உள்ளது. இவைகள் காலத்தையும் வென்று நிற்கும் ஆதாரங்கள்.
விக்ரமராஜசிங்கன், கண்ணுசாமி என்ற தமிழ் பெயர் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நச்சாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதையும் கண்டி பிரதேசத்தை ஆங்கிலேயருக்கு கையளித்ததை சாட்சிப்படுத்தும் அவரது தமிழ்க்கையொப்பம் இன்னும் இங்கிலாந்தில் பத்திரமாக இருக்கின்றது என்பதையும் ஆங்கில ஆக்கங்களின் வாயிலாகவே நாம் உறுதி செய்து கொள்கிறோம்.
உடன்பிறப்புக்களை பெண்டாளுவதற்கு ஒத்துப்போகும் மனித கூட்டத்தினராக தமது முன்னோர்களைச் சித்தரிக்கும் நூல்பிரதியை தேசிய நூதனசாலையில் இருந்து அகற்றிவிட மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா கட்டளைப் பிறப்பித்து அவ்விதமே இல்லாதொழித்தார்.
மலையகத்தைப் பற்றிய பல்வேறு சித்தரிப்புகளும் பயன்படாத
காரணத்தால் அழிவுறும் அபாயமிருக்கின்றது என்பதை கூறிக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
223

Page 137

ஆறாவது அமர்வு
நாவலப்பிட்டி
தலைமை பேராசிரியர் எம், சின்னத்தம்பி
தலைவர் பொருளியற்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 138

மலையக மக்கள் இலக்கியம் வாகீசகலாநிதி கனகசபாபதி - நாகேஸ்வரன், M. A. சிரேஷ்ட விரிவுரையாளர். மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம் பெலிஹல்லோயா இலங்கை.
"காற்றில் வந்த கவிதைகள் ஏட்டில் எழுதா இலக்கியம் வாய்மொழிப் பறவைகள், நாட்டுப்புறப்பாடல்கள் என்றெல்லாம் கூறப்படுது மக்கள் இலக்கியம். நாட்டுப்புற இயலாய்வு என்றும் இத்துறை ஆய்வினைக் கூறுவதுண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் இன்று ஆய்வுக் களத்தில் நிற்கின்றன. இப்பாடல்களுக்குக் கல்வியுலகிலும் மதிப்பேற்பட்டது. பல்கலைக்கழகங்களில் பாடப் பொருளாகின. பிறப்பறியா இப்பாடல்கள் இறப்பறியாத் தன்மையும் பெற்றன."
என்று டாக்டர் சு. கண்முகசுந்தரம் எழுதிய தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் (1993) என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் கூறுகின்றார்.
சமூகவியல், மானிடவியல் அறிஞர்களும் இவ்வாய்வில் ஈடுபட்டால் தமிழிலக்கியம் புதுமை பெறும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வு நலங்கள் வெளிப்படும். சமூகப்பார்வையும், பார்வையில் நேர்மையுடைய ஆய்வாளர்களும் வளரவேண்டும்.
நாட்டுப்பாடல், நாட்டார்பாடல், நாடோடிப்பாடல், நாட்டுப்புறப்பாடல், வாய்மொழிப்பாடல், செவிவழிப்பாடல், பாமரர் பாடல், பரம்பரைப்பாடல், பட்டிப்பாடல், கிராமியப்பாடல், ஊர்ப்பாடல் 'என்றும், இன்னும் சிலர் மலையருவிகள், காட்டுப்பூக்கள், வானமலர்கள், காற்றில் மிதந்த கவிதைகள், ஏட்டில் எழுதாத கவிதைகள் என்னும் சொற்களாலும் கூறுவர்.
மக்கள் இலக்கியம் அல்லது நாட்டாரிலக்கியம் ஒரு பெருங்கலை. நாட்டார் பாடல்கள் அதில் ஒரு பிரிவு நாட்டுப்பாடல்கள். தாலாட்டு, ஒப்பாரி, கும்மி, ஒயில், கரகம், காவடி, தெம்மாங்கு என்று வகைப்படும். வசதிகருதி தாலாட்டு, குழந்தைப்பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற்பாடல்கள், மணவாழ்த்து, பக்திப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், கதைப் பாடல்கள் என்று பாகுபடுத்தலாம்.
தொழிலையும், மொழியையும், சமயத்தையும் பொதுவான அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட எந்தவொரு குழுவும், கூட்டமும்
227

Page 139
நாட்டுப்புறம் (Folk) என்று அழைக்கப்படும். நாட்டுப்புற இயல் என்பது நாட்டுப்புற மக்களின் 'மரபு வழிப்பட்டப்படைப்புகள்’ (Traditional Creations) எனலாம். இவ்வியலுக்குள் இலக்கியம், கலைப் பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவை அடங்கும்.
நாட்டுப்புற இலக்கியத்தைப் பாடல், கதை, கதைப்பாடல், விடுகதை, பழமொழி என ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
bri disoggiso "Folk Lore'ssip sini56sog56ou William John Thomas என்ற ஆங்கிலேயர் 1846 ஆம் ஆண்டளவில் உருவாக்கினார். இதற்கு முன்னர் பொதுமக்கள் சார்ந்த மரபுமுறைகள் (Popular Antiquities) என்ற சொல் வழக்கில் இருந்து வந்தது.
தமிழ் நாட்டில் நாட்டுப்புறப்பாடலுக்கான கூறுகள் தொல்காப்பியர் காலந்தொட்டே காணப்படுகிறது. முதலில் நாட்டுப்புறப் பாடல்களை அச்சிட்ட பெருமை அறிஞர் மு. அருணாசலம் அவர்களையே சாரும்.
”ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம் அந்நாட்டில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களே' என்பார் திரு. பி. சாம்பமூர்த்தி,
"மக்கள் மனதில் உள்ள எண்ணங்கள், ஏக்கங்கள், இலட்சியங்கள், நம்பிக்கைகள், இன்ப துன்பங்கள் ஆகிய அனைத்தையும் இவை பிரதிபலிக்கின்றன’ என்பர் அறிஞர் மு. அருணாசலம்.
எளிய பதங்கள், யாரும் பாடக்கூடிய எளிய மெட்டுக்கள், (56)uLOT3, பாடக்கூடிய தன்மை அனைவரும் விரும்பும் சிறப்பு இவற்றுக்கு உண்டு. அந்தந்தப்பகுதி மண்ணுடன் வளர்ந்து வளம் பெற்றவை. மனித உணர்ச்சிகளை வடித்து எடுத்து இசையில் ஊறிவரும் உணர்ச்சிக் குவியல்கள். செழுமை மிக்க மனோபாவமும், கற்பிக்கப்படாத கட்டுப்பாடற்ற கற்பனையும் நிறைந்த களஞ்சியங்கள். இவை மனித இனத்தின் சரிதத்தை, வாழ்வை, முடிவைச் சித்தரிக்கின்றன.
நாட்டுப்புறப்பாடல்கள் மண்ணின் மலர்கள், மானுடக்கனிகள், இவை வாழ்க்கையில் பிறந்து, வாழ்க்கையில் வளர்ந்து, வாழ்க்கைக்கே பயன்படுகின்றன.
228

தாலாட்டின் இசை குழந்தையின் உறக்கததிற்கும், இயல் உள்ளத்திற்கும் பயன்படும் விளையாட்டுப் பாடல்கள் குழந்தைகளுக்கு மனவெழுச்சி, உடல் வளர்ச்சி, குண வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றை நல்குகின்றன என்பார் ஆய்வாளர் செ அன்னகாமு.
தொழிற்பாடல்கள் வேலையிலுள்ள சிரமத்தை மாற்றுகின்றன. வேலையின் வேகத்தை அதிகரிக்கச் செய்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பக்திப்பாடல்கள் பக்தி உணர்வைப் பெருக்குகின்றன.
ஒப்பாரிப் பாடல்கள் சோகத்தின் வடிகாலாக அமைகின்றன. நாட்டுப்புறப் பாடற் பயிற்சி நம் இலக்கியப் படிப்பைத் தெளிவுபடுத்தும். இலக்கிய ஒய்வை விரிவுபடுத்தும் இலக்கியச் சுவையை மிகுதிப்படுத்தும்.
"மேல் தளத்தில் ஓடும் மற்றைய கிளை நதிகள் விரண்டுபோய்த் தன் ஆண்மாவையே இழக்க நேரிடும் போது நாட்டுப்புறப் பாடல்கள் என்ற ஜீவ நதியுடன் தொடர்பு கொண்டு அவற்றில் மலிந்து வற்றாத ஊற்றுக் கணிகளாகவுள்ள பண்பு நிறைந்த சொற்களை மீண்டும் பெற்று உயிர்பெறுகின்றன." எண்பார் நாட்டாரியல் நிபுணர் செ. அன்னகாமு.
நாட்டுப்புறப் பாடல்களுக்குக் குறிப்பிட்ட வடிவம் இல்லை. நாடோடிப் பாடலின் உணர்ச்சிகள் எங்கும் முடங்கி ஒடுக்கப்படுவது இல்லை. நாட்டுப்புறப் பாடல்களில் அலங்கார இறுக்கம் கிடையாது. வட்டார வழக்குச் சொற்களைத் தவிர புரியாத சொற்கள் வேறு கிடையாது. வலிந்து புகுத்தப்படாத இயல்பான, தாமாகவே பிறப்பெடுத்த எதுகை, ம்ோனைகள் உண்டு.
(உ+ம்) "ஏச்சுப்புட்டேன் கீச்சுப்புட்டேன்”
ஏழுபணம் வாங்கிப்புட்டேன்’
நாட்டுப்புறப்பாடல்களின் ஆன்மாவே அதன் இசையில்தான் அடங்கிக் கிடக்கின்றது. இசையில் இப்பாடல்கள் வளமும் கம்பீரமும் பெறுகின்றன. தன் அழிவைத் தடுத்தாட்கொண்டு நீண்ட ஆயுளைப் பெறுகின்றன.
கர்நாடக சங்கீத ஆய்வாளர் பி. சாம்பமூர்த்தி "நாட்டுப்புறப்பாடல்களில் புன்னாகவராளி, நாதநாமக்கிரியா, ஆனநத பைரவி,
229

Page 140
செஞ்சுருட்டி, குறிஞ்சி, கௌரோஜ், நீலாம்பரி ஆகியவை பழக்கப்பட்ட ராகங்களாகும். ஆதி, ரூபக, சாபு தாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முத்தளம், திஸ் ரம்’ அதிகமாக வழக்கில் உண்டு.' என்று ஆய்ந்தெழுதியுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒவ்வொரு வகைப் பாடல்களுக்கும் ஒவ்வொரு விதமான மெட்டுக்கள் உண்டு. (p + i) 1. நடவு மெட்டு:-
"தன்ன னானே னானே னன்னே ஏ
னானானே னானே னன்னே’
2. களையெடுப்பு:-
"நன்ன னன்னே னான்னன்னே - மணித்தங்கமே
னான னன்னே னானனனனே - ஒயில் அன்னமே
3. வண்டிக்காரன்:-
”அடடா தன்ன னன்னே னானே னன்னே
னானே னன்னே னானே னன்னே’
4. காவடி
'தனன தன தன்னதன தனனா'
"கவிதை இலக்கியத்துக்கு எண்றுள்ள சம்பிரதாயங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் தானே எழுந்து, தான் விரும்பியவாறு வீசும் தென்றல் போலவும், தன் மனம் போல் பொங்கிச் சுரக்கும் தண் சுனை போலவும் சுற்றியிருக்கும் யாரையும் எண்ணாமல் ஏதோ பேசும் மழலைக் குழந்தை போலவும் இயல்பாகப் பொங்கிப் பெருகுவது நாடோடிப் பாடல்" என்கிறார் அன்னகாமு.
கலைஞர்கள் நாட்டுப்புறப் பாடலோடு ஒன்றுவார்கள், கவிஞர்கள் தனியன்கள்.
”கவிஞர்களின் உலகைப் போல் கலைஞர்களின் உலகம் தனித்தன்று'
பேராசிரியர் தெ. பொ. மீ. பின்வருமாறு எழுதியுள்ளார்.
"நாட்டுப்பாடல்களும் இலக்கியமும் தமிழர் பண்பாட்டின் சிகரத்தில் தோன்றிய இரு நீரோடைகள். இவை சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று
230

கலப்பதுண்டு. அவ்வாறு கலக்கும்போது இலக்கியம் மறுமலர்ச்சி பெற்று பேராறாக ஒடுகின்றது’.
தாலாட்டு:-
குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகத் தாய்மார்கள் இனிய குரலில் எளிய மொழியில் அன்புகனியக் கனியப் பாடுவதே தாலாட்டு எனப்படும். அப்பாடல்களில் பசுமையான நினைவுகளும், வாச உணர்வுகளும் பளிச்சிடுகின்றன. கற்பனைச் சுவையும் காவிய அழகும் கண் சிமிட்டுகின்றன. எண்ண அலைகளும் இனிய கனவுகளும் மோதுகின்றன. * >
'தாயுள்ளத்தின் ஊற்றே தாலாட்டு’ ག
என்கிறார் தமிழண்ணல்
"குழந்தை அவளுடைய இன்பக் கனவுகளின் உரு ஆண்டவனின் அருள் பிரசாதம், சந்ததியின் தூண்
என்கிறார் திரு. அன்னகாமு. தால் என்ற சொல் நாக்கு தொட்டில் என்ற பொருள்படும்.
1. நாவை ஆட்டிப் பாடுதல். 2. தொட்டிலை ஆட்டிப் பாடுதல்.
தாலாட்டு, தாராட்டு, தாலேலோ, ஒராட்டு, ரோராட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஒலாட்டு, திருத்தாலாட்டு என்றும் வழங்கி வருகின்றன.
பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களில் தாலாட்டு என்பது தனிப்பருவமாகும். அதில் பத்துப்பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இலக்கியத்துக்கே இலக்கியமாகத் தாலாட்டுப் பாடல்கள் விளங்குகின்றன. உவமைகள் இலக்கியங்களின் அரியாசனங்கள். தாலாட்டில் உவமைகள் உருவகங்கள் தலைநிமிர்ந்து நிற் கிண்றன. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை பின்வருமாறு பாடியுள்ளார்.
'முல்லை நறுமலரோ முருகவிழ்க்குந்தாமரையோ மல்லிகைப் பூவோ மருக்கொழுந்தோ சண்பகமோ'
என்பது கவிமணியின் பாடல்.
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை,
"சீராரும் காவேரித் தேவி திருவருளால் வராமல் வந்துதித்த மாமணியே கண்ணுறங்கு
என்று பாடுவார்.
23

Page 141
வாகீச கலாநிதி கி வா. ஜகந்ா.த ை லைவ் ,ல பக் 4) பின்வருமாறு எழுதியுள்ளார். “மனித இனத தன் உன் எத ல: சியததை இலக்கியக் கவிதை சொல்கிறது, அ +ன்று மனிதன் படும் இன்பதுன்பத்தை உள்ளபடியே நாடோடிக கவிதை கட்டுகிறது
கும்மிப்பாட்டு: *
கும்மாளமிட்டாடுவதை கும்மி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். கும்மாளம் குதித்தாடுதல் எனப்படும். கும்முதல் கைகொட்டுதல் என்று பொருள். 'குழுமி என்ற சொல்லினின்றும் கும்மி என்ற சொல் உருவாகி இருக்கவேண்டும் என்பர். அ.கி. பரந்தாமனார். சீவகசிந்தாமணிகொம்மை என்று குறிப்பிடப்படுவது கும்மியையே. அகநானூறு கொப்பி என்று குறிப்பிடுகிறது.கொம்மாய் என்று கோமலே குறிப்பிடுவார். சங்ககாலமே கும்மியின் தோற்றக் காலம் எனலாம். குறவையாடலும், கும்மியை ஒத்தது என்ற கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.
பெண்கள் வட்டமாக நின்று கும்மி கொட்டுவர். நடுவில்
குத்துவிளக்கு, கிருஷ்ணர் சிலை, மலர்க்கூடை, பலகாரக்கூடை, போன்வற்றை வைத்துச் சுற்றி நின்று ஆடுவர். பெண்களில் பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடுகளேதும் இல்லாது இணைந்து நின்று ஆடுவர். பெரும்பாலும் சிறுமியரும் கன்னியரும் கும்மி கொட்டுவதுண்டு. வளைந்தும் வணங்கியும் குதித்தும் ஆடுவர். (உ+ம்) "வாங்கடி வாங்கடி தோழிப்பெண்கள் - வள்ளி
மாமயில் பாட்டைப் பாடுங்கடி
காணவில் இருந்த மாமயில் கந்தன்
கண்ட கதையைப் படியுங்கடி'
இனிக் கள ஆய்வில் பெறப்பட்ட வாய்மொழிப் பாடல்களை بود . இக்கட்டுரையில் நோக்கலாம். ஐம்பத்தாறு (56) வயதுடைய திருமதி காமாட்சி பெரியசாமி உணுகல்ல தோட்டத்தைச் சேர்ந்தவர். உணுகல்ல தோட்டம் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தது. பதுளை, ஹாலிஎல பகுதியில் அமைந்துள்ளது. பின்வரும் பாடல் திருமதி காமாட்சி (ஹாலிஎல - உணுகல்ல தோட்டம்) பாடிய பாடலாகும்.
மெட்டு:-
'தன்னன்ன நாதின்னம் நன்னானே தன்னன்ன நாதின்னம் நன்னானே'
232

பாவப்படந்தத பாருங்கையா! பாவபட்சி பறந்தத பாருங்கையா! பாவ பழம் போல நம்ம கதிரேசன் பல்லு வரிசையை பாருங்கையா! (தன்னன்ன)
சூறப்படந்தத பாருங்கையா!
குற சுற்றிப் படந்தத பாருங்கையா! சூறப்பழம் போல நம்ம கதிரேசன் சொல்லு வரிசையை பாருங்கையா! (தன்னன்ன)
இந்த நெனவுக்கும் சந்தனபொட்டுக்கும் இப்படியா பெண்ணே கொட்டுறது? கொட்டுங்கடி பெண்ணே கொட்டுங்கடி நம்ம கோயிலு வாசலுக்கிடு முழங்க (தன்னன்ன)
சாவலும் கூவுதே கேவலமாகுதே சரியா கும்மிய கொட்டுங்கடி கொட்டுங்கடி பெண்ணே கொட்டுங்கடி நம்ம கோயிலு வாசலுக்கிடு முழங்க (தன்னன்ன)
சின்ன கிணத்திலே பாம்படிச்சி - தொர சிங்கார தோப்புல வேட்டையாடி வேட்டையாடிய துரை வீட்டுக்கு போறாரா வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி - நம்ம துரைக்கு வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி (தன்னன்ன)
கிருஷ்ணன் பாட்டு
புங்கமரத்தடியாலே புல்லாங் குழலூதையிலே தாம்பரைக் குளம் ஒன்று - சீதை தங்க குடமெடுத்து - 11 சீதை தண்ணிரு அள்ளையிலே நல்லாய் கணை தொடுத்தான்
நாக சருப்பம் போல
233

Page 142
சந்தனக் குளங்களிலே - சீதை தண்ணிரு அள்ளையிலே சந்தன மரத்தடியே நம்ப கிருஷ்ணா சம்பகம் ஒடையிலே. நல்லாய் கணை தொடுத்தான் - கிருஷ்ணன் நாக சருப்பம் போல. கண்டு பிடித்தாரையா சீதையை கொண்டு தூர வைத்தாரையா!
மலையகத்தில் கொழுந்து பறிக்கும் பெண்களின் வாய்மொழியாக அனேகம் பாடல்கள் வெளிவரும். பின்வரும் கொழுந்துப் பாடல் மூலம் அப்பாடலின் பொதுவான உள்ளடக்கச் செய்திகளை நாம் ஊகித்து அறிந்துகொள்ள முடியும். பெண்களின் கலாசாரம் அப்பெண்கள் மீது ஆடவர் கொள்ளும் ‘காதல்’ என்பன புலப்படுகின்றன. இனிப் பாடலைப் பார்ப்போம்.
கூடமேல கூடபோட்டு கொழுந்தெடுக்கப் போற பெண்ணே! பச்ச லவுக்கங்களாம் - பணத்துக்கொரு பொட்டுங்களாம்! நீல வளையல்களும் - நிறத்துக்கேற்ற பொட்டுங்களாம்! ஒங் கண்ணாடி வளையலும் மின்னல்மின்ன! கறுத்த றோட்டு பெண்ணே! சின்ன றோட்டாம் கறுத்த றோட்டாம்! கூடமேலே கூடபோட்டு கடுவேகமா போற பெண்ணே! கூட இறக்கி விட்டு - பெண்ணே! நான் கொய்யாக் கனியும் தாரேன் பெண்ணே! குளிர்ந்த வார்த்த பேசனுமே - மச்சான் கொய்யாக் கனியும் வேண்டாம் - எனக்கு கொண்டைக்குத்தான் பூவும் வேண்டாம் I நான் கூட இறக்கமாட்டேன் - மச்சான் குளிர்ந்த வார்த்த பேசமாட்டேன்!
(கூடமேல கூடபோட்டு)
234

தாலாட்டுப் பாடல் 1
திருமதி காமாட்சி பெரியசாமி (56)
ராரிரரோ ராராரோ - எங்க அம்மா ராரிரரோ ராராரோ! மருத திருநாளோ - எங்க வேலையா மயிலுமோ வாகனமோ! மயில வரவலையா - எங்க வேலையா ஓம் மைந்த விளையாட தெக்கை திருநாளோ - எங்க வேலையா ஒங் கோட்டை திருநாளோ! குயிலுமே வாகனமோ? குயில வரவலையா - எங்க வேலையா ஒங் கொழந்த விளையாட! மருத திருநாளுக்காய் - எங்க வேலையா ஓம் மாமருத நாடகமோ? வடக்கத்தி செட்டிமக - எங்கண்ணே வடநாட்டு பாப்பாத்தி வரவலைப்பா எங் கண்ணனை வரவலைப்பா ஒலையிலே! - எந் தெக்கை திருநாளாற் - எங்க வேலையா தெம்மருதை நாடகமோ? தெக்கத்தி செட்டிமக - எங்கண்ணே திட்டுப்பா ஒலையிலே (ராரிரரோ ராராரோ) A.
தாலாட்டுப் பாடல் 11
அள்ளி தின வெதச்சி - எங்க வேலையா அருங்குயில காவவச்சி - வேலையா அள்ளி வெதச்ச தின - நம்ம வேலையா அருங்குயிலும் காத்த தி(ன)ன அறுக்க பருவமாச்சு - எங்க வேலையா திங்க கென வெதச்சி II - எங்கண்ணா
ஒந் தேமயில காவவச்சி - எங்க வேலையா
235

Page 143
திங்க வெதச்ச தின தேமயிலு காத்த தின - எங்க வேலையா திங்க பருவமாச்சா தேனெடுக்கும் வேலையா - எங்க அம்மா நீங்க தேனெடுக்கும் வள்ளியம்மா! தேடுறார் வேலவரும்
தெய்வ பசுங்கிளிய
ஒடுனா வள்ளி - அவ
ஒளிஞ்சா வனந் தேடி தேனும் தினமாவும் - நம்ம தேவனுக்கு திட்டாத மாங்கனியும் பாலும் கனியையா
பழுத்த கனி வேலனுக்கு
வள்ளி அழகுக்கும் வள்ளி வலதுகை தேமலுக்கும் கூந்தல் அழகுக்கும்
எங்க வள்ளியம்ம! தேனும் தினமாவும் - எங்கண்னையா உனக்கு திகட்டாத மாங்கனியும் பாலும் கனியம்மா - எங்க வேலையா பழுத்த கனி உங்களுக்கு தேவ மயிலாகும் - எங்க வேலையா இது பழந்திங்கும் சிட்டுகளும் வாழைப் பழமுங் கொண்டு - எங்க வேலையா உனக்கு வையகத்து தேனுங் கொண்டு கோவ கனியுங் கொண்டு - எங்க வேலையா உனக்கு வெள்ளிமல தேனுங் கொண்டு
(அள்ளி தின வெதச்சி)
தாலாட்டுப் பாடல் 111
பொட்டுமிட்டு மையுமிட்டு பட்டணமே போனாலும்
பட்டணத்து ராஜா மகன் பொட்டு ரூபா தந்தாரோ ஆராரோ - ஆரிரரோ.
236

வள்ளின்னா வள்ளி மலைபோல் படரும் வள்ளி கொடி பிறந்த வள்ளியோட எங்கண் கண்ணே நீ கூட பிறந்தவரோ! பச்சைநிற வள்ளியம்மை பவளநிற தெய்வானை சோதிநிற மாயவரும் கண்ணே - உங்கள் அம்மா சொக்கரோடு வாதாடி ஓடினாவள்ளி ஒளிஞ்சான் வனத்தோடி தேடினா மாயவரு வள்ளி திருமுகத்தைக் காணாமல் வள்ளிக்கு வெள்ளிரதம் வடிவேலனுக்கு தங்கரதம் தங்கரதமேறி நீங்கண் தைபூசை செய்தவரோ மலைக்குமல்ை மண்ணெடுத்து மன்முதரரை உண்டுபண்ணி ஏலைக்கு ஒரு பூ வெடுத்து ஏந்திவந்த பாலகனே கடலை திரளாக்கி கருங்கடலை முத்தாக்கி வேப்பனையே தேனாக்கி விற்கலந்த பாலகனே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ!!
இனி ஹாலிஎல - மொறகொல்ல பழைய டிவிசனைச் சேர்ந்த எளப் புஷபம் பாடிய தாலாட்டுப் பாடல்
தாலாட்டுப் பாடல் IV
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆரிரரோ ஆராரோ - ஆராரோ ஆரிரரோ ஆரடித்து நீயழுதாய் அடித்தாரைச் சொல்லியழு சீரெடுத்த மாமன் செல்வன் திருக்குமரா பாட்டியடித்தாளோ பாலூட்டும் கையாலே மாமன் அடித்தாரோ மது எடுக்கும் கையாலே அத்தை அடித்தாளோ அரும்பெடுக்கும் கையாலே ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஐந்துதலை பூ நாகம் அடைகிடக்கும் தாழையிலே அஞ்சாமல் பூ எடுக்கும் அருச்சுனரா உன் தகப்பன் பத்துத்தலை பூ நாகம் பள்ளிகொள்ளும் தாழையிலே பாராமல் பூ எடுக்கும் பாண்டியரே உங்கள் அப்பா பிள்ளை ஒரு மாமரமா பிள்ளை பூக்கிறது ஆயிரம் பிள்ளையை சுத்தி பூ எடுக்கும் புண்ணியரே முத்தானமுத்து முது கடலில் உங்கள் மாமன் ஆணிமுத்தோ
237

Page 144
சாதி வலம்புரி சமுத்திரத்தில் ஆணிமுத்தோ ஆராரோ ஆரிரரோ கண்மணியே ஆரிரரோ
மருதையிலே கூடாரமா உங்கள் அய்யா மல்லிகை கோட்டையிலே மல்லிகைப் பூ உங்கள் பூ யாவாரி அய்யா குறிஞ்சிப் பூ யாவாரி மலைமேல் பசுமேளம் எங்கள் கண்ணே மகராசி மாடோட்டும் ** மலை இரங்கி வாபசுவே எங்கள் தம்பி மகராசி பால் குடிக்க செடிமேல் பகமேல என்செல்ல மகன் மாடோட்டும் செடியிரங்கிவா பசுவே என் செல்ல மகன் பால் குடிக்க
ஆாாரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
அல்லி மகனோ அருச்சுனன் பெற்ற கண்ணே வீமன் மகனோ விலைமதிக்கும் பாண்டியனோ ஆடிவரும் காவடிகள் எங்கள்கண்ணே அசஞ்சிவரும் மயில் இறகு வீசிவரும் வெஞ்சாமரை வேலருடன் பட்டுஎடுங்க தொட்டி கட்ட பசும்பொன் - சன்னிதிக்கு கொடுங்க
பொட்டுவைக்க
ஜினி ஆலிஎல, மொரகொல்ல பழைய பிரிவைச் சேர்ந்த திருமதி இழுவாய் பழனியாண்டி (38) பாடிய தாலாட்டுப் பாடல்
தாலாட்டுப் பாடல் V
ஆராரோ ரfrரோ ராராரோ ராரிரரோ. ஆரடிச்சி நிய புத தங்க மவனே ராராரோ. அடிச் 4: சொல்லியழு ஆக்கனைகள் பண்ணிவ கண்c1ை3 *ன்ைணுறங்கு, கானா மயிலுறங்குபோ
பாட்டி அடி 41ளே! தங்க மவனை பாலூட்டுர் கையாலே(ல) அம்ம அடிச் 'ளோ தங்கமவன அமுது டும் கையால
238

வாசலில வன்னி மரம் தங்க மவனவம்மு சங்கு ராமர் கொலம் பெத்த செல்வம் தங்க மகனே ரத்னமே நித்திரையோ. gmga Gym.
முட்டாயி தட்டுகொண்டு தங்கமகன் மூணு கவருமாலை கொண்டு மூணு கவரு மாலையிலே மொகப்பு மால கேட்டு அழுதான் இட்டலி தட்டுகொண்டு ஏழு கவருமாலைகொண்டு ஏழுகவரு மாலையிலே எழுத்துமால கேட்டழுதான் வாசலிலே வன்னி. ராமர் குலம் . வெள்ளி வெரதமிருந்து தங்கமகன் நான் வெகு நாளா தவமிருந்து அல்லி பொறந்தானே தங்கமகன் அத்தமக மாலையிட ராராரோ ராரிரரோ என் கண்ணே கண்ணுறங்கு ராராரோ
(ஆராரோ ராரிரரோ.)
冰
பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி க. அருணாசலம் அவர்கள் வெளியிட்டுள்ள "மலையக தமிழ் இலக்கியம்’ (பக். 147) என்னும் நூலிலே பின்வருமாறு விளக்கியுள்ளார். "மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பிரச்சினைகள் பலவற்றையும் பண்புகளையும் கொண்டு விளங்குவது போலவே அச்சமூகத்தைச் சீரிய முறையிற் பிரதிபலித்து நிற்கும் நாட்டாரியற் கூறுகளும் பெருமளவு தனித்துவமானவை. அவர்களது பண்பாட்டு கருவூலமாகவும் அபிலாஷைகளை வெளிப்படுத்துவனவாகவும், தொழிராளர்களது அனுபவ வெளிப்பாடுகளாகவும் அவர்களைப் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குபவை. மலையக நாட்டாரியல் ஒரு தனித்துறையாகும்’
என்பது பேராசிரியர் கலாநிதி க. அருணாசலம் அவர்களது கூற்று.
மலையக நாட்டுப் பாடல்கள் பெரியகங் காணிமார்கள், கங்காணிமார்கள் முதலியோரின் சுகபோக வாழ்க்கை, சர்வாதிகாரம்,
239

Page 145
காமக்களியாட்டம், குரூர சிந்தை, அடாவடித்தனங்கள் முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன. தொழிலாளர்கள் அச்சத்தின் நிமித்தம் இவர்களால் புகழ்ந்தும் மதித்தும் பாடியுள்ள போதும் தமது மனக்குமுறல்களையும் இவர்களைப் மீதான கோபத்தையும் நேரடியாக வெளிப்படுத்துவதற்கு பதில் கேலியும் கிண்டலும் தொனிக்கப்பாடியுள்ள பாடல்கள் பல காணப்படுகின்றன.
" ஏழெட்டுப் பேராம் வப்பாட்டி' 'பாகை விதைபோல நம்மையா கங்காணிபல்லுவரிசை' ”முன்னஞ்சு பின்னஞ்சு கடத்தியராம் என வரும் தொடர்கள் கவனிக்கத்தக்கவை. "தோட்டம் பிரளியில்லே
தொரமேலே குத்தமில்லே
கங்காணி மாராலே
கணபிரளி யாகுதையா
"எண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சி நிற்கையிலே வெட்டுவெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி' 'அஞ்சு மணியாச்சு ஐயா வர நேரமாச்சு கொஞ்சி விளையாடாதீங்க கோளுக்காரன் கங்காணி'
-என வசை பாடவும் தயங்கவில்லை.
பேராசிரியர் கலாநிதி க. அருணாசலம் மேலும் இதுபற்றி குறிப்பிடுகையில்,
"மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிலவிவரும் சாதி ஆசாரங்களைப் பிரதிபலித்து நிற்கும் நாட்டார் பாடல்களும் பழமொழிகளும் பலவுள. நாட்டார் பாடல்கள் பலவற்றில் இடம்பெறும் பிராமணத்தி, சக் கிலியண் , கங் காணி, சக் கிலியக் குட்டி, துலுக்கக் குட்டி, வண்ணாரக்குட்டி, வண்ணாரப்புள்ளே, அம்பட்டப்புள்ளே, வடுகப்புள்ளே முதலிய சொற்பிரயோகங்களும் "எவன் பொண்டாட்டி எவனோடு போனால்
240

என்ன, லெப்பைக்கு வேண்டியது மூணு பணம்தான் "மூளிக்கொரங்கா இருந்தாலும் ஜாதிக்கொரங்காயிருக்கனும்’ என வரும் பழமொழிகளும்,
”கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க சாதிகெட்ட கண்டியிலே சக்கிலியன் கங்காணி'
என வரும் நாட்டார் பாடல் எடுத்துக் காட்டாகக்
குறிக்கத்தக்கது.
சி. வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், ஏ. வி. பி. கோமஸ், அமரர்
கோ. நடேசய்யர், திருச்செந்தூரன், மாத்தளை வடிவேலன், நந்தி, தெளிவத்தை ஜோசப், தி. ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம், பெனடிக்ற்பாலன், என். எஸ். எம். ராமையா, தமிழோவியன், பன்னீர்ச்செல்வன், திருமதி கோகிலம் சுப்பையா, கவிஞர் சு. முரளிதரன், சக்தி ஏ. பாலையா, இரா. சிவலிங்கம், மு. நித்தியானந்தன், கே. கணேஷ், மலரண்பன், எம். ஏ. அப்பாஸ், டி. எம். பீர் முகம்மது, செந்தூரன், சிக்கன்ராஜா, சி.
அழகுப்பிள்ளை என்போர் மலையக மக்கள் இலக்கியம் பற்றிப் பேசவும், எழுதவும் தகைமை படைத்தார்கள் என்ற செய்தியையும்
மனங்கொள்வதவசியம்.
மலையகத் தெய்வங்களென, சிண்டாதட்டி, ரோதைமுனி, கவ்வாத்துமுனி, முனியாண்டி, மாடசாமி, பட்டமரத்தான், முத்துமாரி என்பனவற்றைக் கொள்ளலாம். தப்பு, உடுக்கு, உறுமி மேளம், சங்கு சேகண்டி என்பன வாத்தியக் கருவிகள்.
காமன்கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர்சங்கர், மதுரைவிரன் என்பன கூத்துக்கள். லங்காதகனம், (கண்டிராசன் கதை) இராமாயணம், சத்தியவான் சாவித்திரி, குலேபகாவலி, அரிச்சந்திரன் மயானகாண்டம், அருச்சுனன் தபசு, அரிச்சந்திர விலாசம், நந்தினி சரித்திரம், ஒட்டநாடகம், மருதவீரன், பொன்னர்சங்கர் என்பன நாடகங்கள்.
அபூர்வசிந்தாமணி, மின்சாரமாயவன், இராஜாதேசிங்கு, பாண்டவர் வனவாசம், நளமகராஜன், மன்னன் சின்னாண்டி என்பன கதைகள்.
241

Page 146
முடிவாக மூளையால் எழுதப்படாதவை நாட்டாரிலக்கியங்கல. மக்கள் இலக்கியம் உணர்வாழத்தைப் புலப்படுத்துவன இவை இவை தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்துக்களாகும் தமிழ் மொழியைக் கற்போர் இத்தகு இலக்கிய வளத்தினை அனுபவித்துக் கற்று இன்பமுற Աբգամ,
சாகில் தமிழ் படித்து சாக வேண்டும் - என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும். . . . .
மலையக, மக்கள் நாவிலே நடமாடும் நாட்டார் இலக் கியங்களையெல்லாம் அவர்கள் வா யாலேயே கேட்டு ஆவணப்படுத்துவதும், ஆராய்வதும் இக்கால மலையக ஆய்வாளர்களது தலையாய கடமையாகும்.
242

மலையக இலக்கிய தோற்ற - வளர்ச்சிக்கான பின்னணித் தளங்கள் சு. முரளிதரன்
இன்றைய இலக்கியச் சூழ்நிலையில் மலையக இலக்கியமென்பதால் உணர்த்தப்படுவது, கூலிகளாக தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய பிரதேசத்துக்கு வெள்ளையர்களால் உழைப்புக்காக அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் குறித்தெழுகின்ற படைப்புகளாகும். வெள்ளையர்களால் 1824ம் ஆண்டு முதல் காலந்தோறும் அழைத்து வரப்பட்ட இவ்விந்தியத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நிலையில் கிராமிய முறையிலிருந்து வேறுபட்ட பெருந்தோட்ட முறைக்கு தம்மை இயைபு படுத்திக்கொண்டு வாழத்தொடங்கி, இந்நாட்டின் கணிக்கப்பட வேண்டிய தனித்துவமான இனக்குழுவாக தம்மை நிலைநாட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவது வரையுமான ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணியையொட்டி மேற் கிளம்புகின்ற இலக்கிய முயற்சிகள் அதன் காத்திரம் கருதி கவனயீர்ப்பு பெற்ற பெருமை மலையக, இலக்கியத்தைச் சாருமென்பார்.
இந்திய தோட்டத் தொழிலாளர்களை பெரும்பான்மை சமூகத்தினர் பல்வேறு அர்த்தங்களில் நோக்குகின்றனர். கள்ளத் தோணிகளாக, தம் காணிகள் பறிபோவதற்கு காரணமானவர்களாக பார்ப்போரும் தென்னிந்திய படையெடுப்புகளோடு, இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களின் தொடர்ச்சியாக இவர்களை நோக்கி அச்சப்படுவோரும் இருப்பதைக் காணலாம். அவ்வாறானவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப இலங்கையில் இந்தியவம்சத்தினரின் இலக்கியங்கள் குறித்து பார்ப்போமாயின் அதற்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. கி. பி. 14ம் நூற்றாண்டில் கேகாலை பகுதியின் கோட்டகமவில் கல்வெட்டில் பொறித்த வெண்பா காணப்படுவதும் குருநாகல் மாவட்ட தம்பதெனியாவில் நாலாம் பராக்கிரமபாகு காலத்தில் தெவிநுவரவில் வாழ்ந்த புலவரான பேராசான் ஆக்கியதும் நமக்கு இலங்கையின் முதல் தமிழ் நூல் எனவும் கொள்ளப்படுவதுமான சரசோதி மாலை அரங்கேற்றப்பட்டதும் கவனத்துக்குரியன. இவ்வாறான தமிழர்களும் கயபாகு மன்னனால் அழைத்து வரப்பட்டு மாத்தளையை அணி டிய பகுதியில் குடியமர்த்தப்பட்ட தமிழர்களும் காலவோட்டத்தில் என்னவானார்கள் அவர்களின் உச்ச சொச் சங்கள் வெள்ளையரால் கொணரப்பட்ட
243

Page 147
தமிழர்களோடு கொண்டிருந்த உறவுகள் ஏதாவது இருந்தனவா என்பன ஆராய்ச்சிக்குரிய விடயங்களே.
இலங்கையின் மன்னராட்சி காலத்தில் வாணிப நிமித்தம் வந்து பின் இஸ்லாத்தை தழுலிய அரேபியர்கள் மலையகப் பகுதியில் நிரந்தர குடிகளானமை அவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தமை பின்னர் தென்னிந்திய பகுதிகளிலிருந்து வந்த தமிழ் இஸ்லாமியர்களோடு கலந்தமை என்பவைகளுக்கு ஆதாரங்கள் உண்டு.
இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழகத்தினின்று தொழிலாளர்களாக கூலிகள் என்ற அடையாளத்தோடு பல்வேறு நாடுகளுக்கு வெள்ளையரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களை பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் நாடுகளின் சமூக கலாசார சூழல்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்து வருமாறு பகுப்பர்.
1. இரு கலாசார நாடுகள் (மொறிஸியஸ், பிஜி, கயானா போன்றன) 2. ஆசிய பெரும்பான்மை சமூகங்கள் (இலங்கை, பர்மா, மலேசியா) 3. ஆபிரிக்க பெரும்பான்மை சமூகங்கள் (கென்யா, உகண்டா,
தன்சானியா, செம்பியா) 4. நவ காலனித்துவ நாடுகள் (தென்னாபிரிக்கா, ரொடீசியா)
(இதில் பிஜி, கயானா, மொறிஸியஸ் ஆகிய நாடுகளில் இந்தியர்களின் சனத்தொகை 50% க்கு அதிகமாகவும் ஏனைய நாடுகளில் 10% க்கு குறைவாகவும் காணப்படுகின்றன.)
இவ்வாறு உலகளாவிய பெருந்தோட்டங்கள் பலவற்றில் காணக் கூடிய ஒருங்கமைவுகளான, இந்தியாவிலிருந்து (தமிழகத்திலிருந்து பெரும்பான்மையாக) குடிபெயர்ந்த தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருத்தல், நிர்வாக அமைப்பு, பயிற்சி நுட்பமில்லா தொழிலாளர்கள், உற்பத்தியோடு இணைந்த சமூக அமைப்பு, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் பெருந்தோட்டத்துக்கு வெளியே திருமண மற்றும் பாலுறவுகளுக்கான தொடர்பு அதிகமில்லாத நிலையில் உள்ளுறவுகளால் ஆன சமூகத் தோற்றம் என்பதாக பெருந்தோட்டமென்பது, தொழிலாளி வேலை செய்யுமிடமாக அமையாமல் வசதிகளிருந்து வழிபாடுகள் வரை அங்கேயே முடங்கிக் கிடப்பதால் அதுவே வாழ்க்கையாக அமைவதால் தாம் சுமந்து சென்ற நாட்டுப்புற
244

அம்சங்களை எச்சங்களாகக் கொண்ட தோட்டப்புறங்களாக அவர்களின் சூழல் கருதப்படுகின்றது. இதனாலேயே கே. எஸ். ராஜு பெருந்தோட்ட சமூகம் குறித்து "தோட்டப்புறவியல்’ என்ற கருத்துருவாக்கத்தின் கீழ் தமிழில் ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்துவதும் கலாநிதி. க. அருணாசலம் 'மலையக தோட்டத் தொழிலாளரியல்’ என்பதை முன்வைப்பதும் காணக்கிடைக்கின்றது.
இவ்வாறான அடிப்படையில் சர்வதேச தோட்டத் தொழிலாளர்களை முதன்மைப்படுத்தி பிறந்த இலக்கியங்களை ஒருங்கே நோக்க வேண்டும் என்ற அவாநிலையுற்ற கருத்து தோன்ற வேண்டியிருக்கின்றது. ஆனால் அது குறித்த பரஸ்பர பரிமாறல்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவோ அல்லது எல்லா இடங்களிலும் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவோ கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இரு கலாசார நாடுகளில் குடிபெயர்ந்த தமிழர்கள் அங்குள்ள சமூகங்களோடு கலந்து விட்டமை காரணமாகவும் பர்மாவிலிருந்து பெரும்பாலான தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டமை காரணமாகவும் நாம் மலேசியாவோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதாகின்றது. ஆனால் "மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு அரை நூற்றாண்டு வரலாறு தான் உண்டெனினும் இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர்கள் போன்று ஒரு தனி மரபை இன்றும் உண்டாக்கிக் கொள்ளவில்லை. இலங்கை மலையக தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்கும் போது அவை மலையக மண்ணுக்குச் சொந்தமானவை என்பது பளிச்சென தெரிந்துவிடும். ஆனால் மலேசியத் தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு தனி முத்திரை இல்லை.” என மலேசிய இலக்கிய வரலாறு எழுதிய மா. இராமையா குறிப்பிடும் போது, மலையக இலக்கியத்தின் கனதி வெகுவாக அதிகரிப்பதோடு அதனை தனித்து நின்று நோக்குவதற்கான அவசியம் வேண்டப்படுவதாகின்றது.
மலையக தொழிலாளர் சார் இலக்கியத்தை நோக்குதற்கு புக முன்னர் மற்றுமொரு அம்சத்தையும் கவனத்திற் கொண்டு, தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அது புலம்பெயர் நிலை அற்று பெருந்தோட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்களை நோக்கியது. தமிழகத்து நீலகிரி பகுதிகளில் பெருந்தோட்டங்களில் பணிபுரிபவர்கள் குறித்து ஆக்கப்பட்ட இலக்கியங்களும் தாயகம் திரும்பி அப்பகுதியில் மீளவாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் குறித்து எழுந்த இலக்கியங்களும் மலையக
245

Page 148
இலக்கியத்தோடு தொடர்புறுத்திப் பார்க்கப்பட வேண்டியதாகின்றது. மற்றுமோரம்சமாக கொள்ளப்பட வேண்டியது, இலங்கைப் பெருந்தோட்டப் பகுதிகளில் இன அடையாளத்தை தவிர (சில சமயங்களில் வாய்ப்புகள்) ஏனைய அம்சங்களில் ஒருமை காட்டும் ஒரு லட்சமளவிலான சிங்களத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து எழுந்த படைப்புகளாகும். ஆனால் இரு மொழியுறவுகள் இன்றும் தீவிரமாக நிலைப்படுத்தி பொது குணாம்சங்களை இனங்காணும் பாரம்பரியம் இலங்கையில் சரிவர தோன்றாத காரணத்தால் கேகாலை, ரத்தினபுரி, களுத்துறை பகுதிகளில் பெருந்தோட்ட சிங்கள இளைஞர்களின் படைப்புகள் நமக்கு அறிமுகமாதல் பூச்சிய நிலையிலேயே இருக்கின்றது. அத்தோடு ஆங்கிலத்தில் உருவாகும் படைப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம். எனவே நாம் இலங்கை மலையக் தமிழ் இலக்கியமென இலக்கியப் பரப்பிலிருந்து ஒரு நூண் கூறினை எடுத்தே பகுத்தாய வேண்டியவர்களாக உள்ளோம்.
அவ்வாறு மலையக தமிழ் இலக்கியமென எடுக்கும் போது, இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புகளை அதனுள் உள்வாங்கிக் கொள்வதில் புரிந்துணர்வோடு புறந்தள்ளலின்றி படைப்பு ரீதியான ஒரு வடிகட்டல் பொறிமுறையைப் பயன்படுத்தி கணிசமான மலையக முஸ்லீம் எழுத்தாளர்களை அங்கீகரித்ததாக மலையக இலக்கியம் திகழ்கின்றது. அவ்வகையில் தெல்தோட்டை பகுதியில் வாழ்ந்த வித்துவதீபம் அப்துல் காதிறுப் புலவரை (1866 - 1918), அவர் சமயம் சார்ந்த கவிதைகள்ை முதன்மையாக படைத்தாலும் மலையக தொழிலாளர் குறித்து அவராக்கிய கவிதைகளை இனங்கண்டு, மலையக கவிதை முன்னோடி என ஏற்றுக்கொள்ளுவதோடு, மலையக இலக்கியத்துக்கு ஒரு புலமைசார் பின்பலம் இருப்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளோம். 1918லிருந்து மலையகத்தில் ஊற்றெடுத்து பிரவாகித்த பாடல் மரபு பாவலர்களின் படைப்புகளில் கணிசமானவை கதிர்காம யாத்திரை போன்ற பக்தி மார்க்கமானவை என்பதை இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியதாகின்றது. இவ்வாறான ஒரு முன்னோட்டத்துடனும் தெளிவுடனுமே மலையக தமிழ் இலக்கியம் தொடர்பான அணுகுதல்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான சாத்தியமான சில அணுகுமுறைகள் குறித்த சிந்தனைகளே இக் கட்டுரையினூடு சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றன.
1824ம் ஆண்டு தொடக்கம் கோப்பிப் பயிர்ச்செய்கைக்காகவும் தேயிலைபயிர்ச் செய்கைக்காகவும் சுதேசிகளை பயன்படுத்தி 246

தொழிற்கொள்வதன் சங்கடங்களை மனதிற்கொண்டு, தமக்கு அனுகூலமான ஒரு தொழிற்படையை இறக்குமதி செய்வதாக தமிழகத்திலிருந்து மலையகம் வந்த தமிழ் தொழிலாளர்கள் இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை தமக்கென எவ்வித எழுத்து மூலமான சிருஷ்டி ஆக்கங்களை கொண்டிருந்தனரா என்பது நிச்சயிக்கப்படவில்லை. அதுவரை தமது இடப்பெயர்வின் போது சுமந்து வந்த ஒரே சொத்தான சொந்த கிராமத்து நாட்டார் வடிவங்களில் நாட்டார்பாடல்கள், உள்ளபடியும் புதுச் சூழலுக்கு ஏற்ப திரிபு கொண்டும் புதிதாக ஆக்கப்பட்டும் எழுதா இலக்கியங்களாக பயின்று வந்திருக்கின்றன என்பதற்கு அவர்களின் கவலைகளும் அனுபவங்களும் கனவுகளும் ஜீவனிழக்காத வகையில் பிரதிசெய்யப்பட்ட, இன்றும் கிடைக்கக்கூடியதும் தொகுக்கப்பெற்றதுமான நாட்டார் பாடல்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாது அவ்வாறான நாட்டார் பாடல்களே அவர்களின் எழுத்து இலக்கிய வடிவத்தில் முதல் தோன்றிய பாடல் இலக்கிய மரபினையும் தோற்றுவித்திருக்கின்றது என்பதை அக்கால பாடல் பிரசுரங்களில் காண்பதோடு, அத்தனிப்பாடல்கள் பல பிற்காலத்தில் இம் மக்களின் நாட்டார் பாடலாகவும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டதிலிருந்து, உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. சாரல் நாடனின் ஆய்வின் படி 1918ம் ஆண்டு கும்மியோ கும்மி கோப்பிக்காட்டுக் கும்மி என்ற வில்சன் என்பாரின் பாடல்கள் அடங்கிய சிறுபிரசுரம் மலையகத்தின் முதல் இலக்கிய ஆவணமாக கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அறுபதுகள் வரை வெளியான 122 பாடல் நூல்களின் பிரசுரங்களானிது இம்மக்களின் நாட்டார் தன்மையை முதலீடாகக் கொண்டவையே எனலாம். மலையக இலக்கியத் தொடர்பில் நோக்க வேண்டிய மற்றொரு அம்சம் அதன் வளர்ச்சிப் போக்கினை காலப்பகுப்பு செய்வதாகும். சுமார் எண்பது ஆண்டுகள் எழுத்துமரபு இலக்கியம் பயிலும் மலையக இலக்கிய வளர்ச்சியை வெறுமே. ஆண்டுவாரியாக காலப்பகுப்புச் செய்வது அர்த்தபுஷ்டியாக அமையாது. கவனிக்கத்தக்க சமூக மாற்றப் போக்குகள் இலக்கிய உள்ளடக்கத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை வைத்து பல்வாறாக அவற்றை காலந்தோறும் இனங்காண வைக்கின்றது.
தமிழ் இலக்கிய வரலாறு குறித்து பல்வேறு ஆசிரியர்களின் கணிப்பில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கு சங்ககாலத்துக்கு
247

Page 149
முன்னரிருந்து கட்டம் கூட்டமாக நோக்கப்பட்டிருக்கின்றது. ஈழதது பூதன் தேவனார் பங்களிப்பும் அவரை இலங்கையராக சிலர் கருதுவதும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியையும் சங்க காலமுதல் தொடக்குவர். பேராசிரியர் சிவத்தம்பி யாழ்ப்பாண இராச்சியம் தொடங்குவதற்கு முன்பதான காலம், யாழ்ப்பாண இராச்சிய காலம், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம். பிரித்தானியர் காலம் என வகுத்து பிரித்தானியர் காலத்தை உப பிரிவுகளாக பிரித்துள்ளார். இதிலே பிரித்தானியர் காலப்பகுதியிலேயே systs) இலக்கியம் தொடக்கமுறுகின்றது என்பது தெளிவு.
மலையக இலக்கிய வளர்ச்சியை பாகுபாடு செய்வதில் திருப்திகரமான முதல் முயற்சியை மேற்கொண்டவர் கலாநிதி க. அருணாசலம் ஆவார். அவர்
1. ஆரம்ப பாலம் (1825-1920)
2. விழிப்புணர்ச்சி காலம் (1921-1950)
3. எழுச்சி காலம் (1960 முதல்)
எனப் பகுப்பது இலகுவாக மலையக இலக்கிய போக்கினை மேலெழுந்த வாரியாக நோக்குவதற்கு போதுமானதெனினும் மலையக சமூகத் தொடர்பில் விழிப்புணர்ச்சி, எழுச்சி என கொள்ளப்படுதல் தொழிற்சங்க, அரசியல் கண்ணோட்டங்கள் அடிப்படையில் வேறுபடுவனவாகும். எனவே காலப்பகுப்பு முயற்சிகளின் போது, கவனத்திற் கொள்வதற்கு சில முக்கியமான அம்சங்கள் உள்ளன.
இலக்கியமென்பது காலத்தின் உற்பத்தி, அது காலத்தையும் உற்பத்திக்கின்றது என்ற அடிப்படையில் இலக்கிய வளர்ச்சிக் கட்டங்களை இனங்காண்பது அவசியமாகும். படைப்புகள் குறித்து, படைப்பாளிகள் குறித்து, படைப்புப் பிறப்புச் சூழல் குறித்து அல்லது சமூக மாற்ற பின்னணி குறித்து இனங்காண வேண்டிய தேவை இலக்கிய வரலாறு குறித்து ஆய்வோருக்கு அவசியமாக இருக்கின்றது.
1824 தொடக்கம் 1918ம் ஆண்டு முதன்முதல் மலையக பிரசுரமென அடையாளங் காணப்பட்டுள்ள கும்மியோ கும்மி கோப்பிக்காட்டு கும்மி வெளிவந்த காலம் வரையான பகுதியை வாய்மொழி இலக்கிய காலமாகவும் அதற்கு பின்னரான காலத்தை எழுத்துவழி இலக்கிய காலமாகவும் கொள்ளலாம். இந்த எழுத்துவழி இலக்கிய காலத்தை பகுப்பு செய்ய,
248

ஈழத்து இலக்கிய வளர்ச்சியை மதிப்பீடு செய்வோர் நாவலர், பாவலர் துரையப்பாப்பிள்ளை போன்றோரை முதன்மைப்படுத்தி நோக்குவதற்கொப்ப மலையக இலக்கியப் போக்கில் முனைப்புடன் செயற்பட்ட முன்னோடிகளான நடேசய்யர், சி. வி. என். எஸ். எம். இராமையா போன்ற சரியாக இனங்காணப்பட்ட ஆளுமைகளை அடிப்படையாகக் கொள்ளலாம். ஏனெனில் நடேசய்யரின் இலக்கிய முயற்சிகள் மலையகத்துக்கு பாடல் மரபுக்கு அப்பாலான சிறுகதை, நாவல் முதலான வழிகளூடாக மலையக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் பத்திரிகைகள் - பிரசுரங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியில் சி. வி. வேலுப்பிள்ளையின் பணி ஆரம்பமாகின்றது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆக்க இலக்கிய பண்புகள் மிகுந்ததும் தரமானதுமான படைப்புகள் அவரால் படைக்கப்பட்டதோடு, அவர்களின் படைப்புகளுடு மலையகம் கடந்த சர்வதேச பின்னணியில் அம்மக்கள் குறித்த கவனயீர்ப்பை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டவ்ராக அவர் அடையாளம் காணப்படுகின்றார். அவரின் காலத்தோடு ஒட்டி இன்றைய மலையக சிறுகதைத் துறைக்கு சரியான அத்திவாரத்தையும் அதற்கான பாதையையும் சமைத்தவராக என். எஸ். எம் இராமையா விளங்குகின்றார். அதற்கு பின் ஒரு முற்போக்கான பாதையில் மலையக இலக்கியம் நடைபயில வழிவகுத்த படைப்பாளர் குழு முனைகின்ற தன்மையை
866),
மலையக இலக்கிய வளர்ச்சி தொடர்பில் கைக்கொள்ளக் கூடிய மற்றுமொரு அணுகுமுறை பத்திரிகைகள் சஞ்சிகைகள் அடிப்படையில் அவைகளின் இலக்கிய பங்களிப்புகளை 4மதிப்பிடுவது தொடர்பில் நோக்குவதாகும். (மணிக்கொடி காலம், மறுமலர்ச்சி காலம் என நோக்கப்படுவதை கவனத்திற் கொள்க) தேசபக்தன் - செய்தி - மலைமுரசு, நதி, தீர்த்தக்கரை - கொழுந்து முதலானவைகளின் பங்களிப்பு மறுமதிப்பீடு செய்யப்படுவதினூடாக காலப்பகுப்புகளை மேற்கொள்வது மற்றுமொரு பொருத்தமான முறையாகும்.
இயக்கத்தளங்களின் அடிப்படையிலும் இலக்கிய வளர்ச்சியை நோக்குவது மற்றுமொரு அர்த்தபுஷ்டியான முறையாகும். மலையகத்தில் தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகளென காலந்தோறும் சமூக இயக்கத்தை நெறிப்படுத்துவனவாக இருந்திருக்கின்றமையைக் காணலாம். தொழிற்சங்கங்களில் மக்கள் தங்கியிருந்த காலம், தி. மு
249

Page 150
மலையக இளைஞர் முன்னணி - மலையக மக்கள் இயக்கம் என சமூக சீர்திருத்த இயக்கங்களோடு இணைந்திருந்த காலம், அரசியல் கட்சிகள் தோற்றம் பெறும் காலம் என்பன அவ்வக் காலப்பகுதிகளில் எடுத்த இலக்கியங்களில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றமையைக் காணலாம். இவ் வியக் கதி தளங்களில் பல படைப் பாளிகள் முகிழ்ந்திருத்தலையும் காணலாம். எனவே இவ்வடிப்படையை நோக்கியும் கவனஞ் செலுத்தின் காலப்பகுப்பு செய்ய முடியுமென உணரலாம்.
இது போன்று இம்மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் காலந்தோறும் காணப்பட்டிருந்த நிலைமைகள் தொடர்பிலும் தோட்டங்கள் காலந்தோறும் தனியார் - அரசு - தனியார் என கைமாறுவது இலக்கியப்படப் பரப்புக்குள்ளாகியிருக்கின்றதா என்பதை தேடியறிந்து அவ்வகையிலும் பகுக்க முடியும். இவ்வாறு சில அடிப்படைகளில் காலப்பகுப்பு செய்யும் சாத்தியம் குறித்து பார்ப்பது போன்று படைப்புகளை படைப்பாளர் பின்னணியில் இருந்தும் பகுக்கக் கூடிய தனித்தன்மை மலையக இலக்கியத்துக்கு இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மலையக இலக்கியமென்பதை கூறுபடுத்தும் முயற்சியாக படைப்பாளர்களை ஒட்டி நோக்குவது அமையலாமென நினைக்கக்கூடாது. ஏனெனில் மலையக இலக்கியத்தின் முக்கியத்துவத்தை அது எழுவதற்கான பின்புலத்தை மதிப்பீடு செய்வதால் இவ்வாறு படைப்பாளர் தொடர்பில் பார்ப்பதும் அவசியமானது. சுப்ரமணியப் பாரதியார் தமிழகத்திலிருந்து தொழிலாளர்களாக வெளியேறி பிறநாடுகளில் துன்பப்படுவோர் குறித்து பாடுவதைக் கொண்டு, பாரதியே மலையக இலக்கியத்துக்கு முன்னோடி என கருதுவோரும் உண்டு. அது போன்று தமிழகத்தில் இருந்து கொண்டு துண்பக் கேணி என்ற நெடுங்கதையைப் படைத்த புதுமைப்பித்தனும் மலையக இலக்கியத் தொடர்பில் கவனம் பெறுபவராவார். அதன் பின்னர் தமிழகத்து எழுத்தாளர்கள் பலரும் இலங்கை மலையக மக்கள் தொடர்பில் தமது படைப்பிலக்கியங்களைத் தந்துள்ளனர். ராஜம் கிருஷ்ணன், கோதண்டம், பார்த்தசாரதி என்பார் அதில் முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர மலையக இலக்கியம் படைப்பவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. மலையக மண்ணில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வருபவர்கள்.
2. நேரடியாக தோட்டத் தொழிலாளர் சூழலில் கலக்காவிடினும்
அதன் அயற் சூழலில் வாழ்பவர்கள்.
250

3 இலங்கையின் ஏனைய பிரதேசத்தவர்கள் தொழில் நிமித்தம்
மலையகம் வந்து வாழ்ந்தவர்கள் - வாழ்பவர்கள். இலங்கையின் ஏனைய பிரதேசத்தில் வாழ்பவர்கள். மலையகத்தில் வாழ்ந்து பின் தாயகம் திரும்பியவர்கள். மலையகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள்.
மலையக பிரச்சினைகள் தொடர்பில் கவனஞ்செலுத்திய வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்கள்.
இதிலே முதலாவதாக குறிப்பிட்ட எழுத்தாளர் வகையினரே ஜீவனுள்ள மலையக இலக்கியப் படைப்பில் முன்னணி வகிக்கின்றனர். தொழிலாளராக, தோட்டத்துறை ஊழியர்களாக, ஆசிரியர்களாக, சமூக சேவைத்துறையில் உள்ளவர்களாக, தொழிற்சங்க - அரசியல் பணிபுரிபவர்களாக அவர்களை மேலும் வகைப்படுத்த முடியும். குறிஞ்சித் தென்னவன், மல்லிகை சி. குமார் போன்றோர் இவ்வகையில் பிரதானமாக அடங்குவோராவர். இத்தகையோரில் சிலர் பிற்பகுதியில் தொழில் வாய்ப்புகள் காரணமாக கொழும்புப் பகுதிக்கு சென்று அங்கிருந்து மலையக இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவராக கணிசமானோர் உளர். தெளிவத்தை ஜோசப், கங்குலன், அன்புச்செல்வன் போன்றோரை இவ்வாறு குறிப்பிடலாம்.
மூன்றாவதாக குறிப்பிடப்படும் வகையினரில் முக்கியமானவர்களாக தி. ஞானசேகரன், பெனடிக் பாலன், புலோலியூர் சதாசிவம் ஆகியோர் திகழ்கின்றனர். மலையக மக்கள் பால் அவர்களின் பிரச்சினைகளின் பால் உளப்பூர்வமாக ஒன்றுபட்டு கணிக்கத்தக்க நாவலிலக்கியம் படைத்தோர் இவ்வகையினரே. அதைப்போல் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்தாலும் இம்மக்களின் துயர்களை கேள்வியுற்று உளமிளகி டானியல், முருகையன், சு. செ. முருகானந்தன் போன்ற பலர் தாக்கமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சி. பன்னீர்செல்வன், வண்ணச்சிறகு அரு. சிவானந்தன், ராஜு, வீரா. பாலச்சந்திரன் போன்ற முக்கிய மலையக எழுத்தாளர்கள் தாயகம் திரும்ப வேண்டிய சூழலில் தமிழகம் சென்று அங்கிருந்து மலையக இலக்கியம் படைப்பவர்களாக திகழ்கின்றனர். மாத்தளை சோமு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தொடர்ந்தும் மலையக இலக்கியச் சிந்தனையில் இருப்பதை காணமுடிகின்றது.
இவ்வாறு வாழ்வோர். வந்தோர், கேட்டோர், உணர்ந்தோர் என பல்வகைப்பட்டவர்களின் பங்களிப்பு மலையக இலக்கியத்துக்கு இருப்பது
251

Page 151
அதன் தனித்துவத்துக்கும் செழுமைக்கும் காரணமாக இருக்கின்றமையைக் காணலாம். இவ்வாறு கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், உரைச் சித்திரம் என மலையக மக்கள் தொடர்பில் ஆவணங்களாகக் கொள்ளத்தக்க ஏராளமான படைப்புகளை மலையக இலக்கியம் உள்ளடக்கியுள்ளது.
சிந்துப்பாடல் வழி மரபில் ஊற்றெடுத்த மலையக கவிதையை சிதம்பரநாத பாவலர், ஜில், பெயொம்பிள்ளை, வேல்சாமிதாசன் என பெருவாரியானோர் வளர்த்து வந்துள்ளனர். நாற்பதுகளில் தனிக்கவிதைகள் ஆக்கும் பண்பும் அது அறுபதுகளில் வெகு சிறப்புப் பெறுவதும் எழுபதுகளில் புதுக்கவிதைகள் தோற்றம் பெறுவதும் நிகழ்ந்துள்ளது.
தேயிலைத் தோட்டத்திலே குறிஞ்சிப்பூ தூவானம், குறிஞ்சித் தென்னவன் கவிதைகள், விழிப்பு, தியாகயந்திரங்கள், மலைக்குயில், கூடைக்குள் தேசம், முகவரியைத் தொலைத்தவர்கள், மாடும் விடும், வாழவா தோழா, குன்றத்து குமுறல்கள் முதலானவை மலையகத்தில் எழுந்த முக்கியமான கவிதை நூல்களாக கொள்ளத்தக்கவை.
மலையக சிறுகதை எனும் போது ஒரு நூலுக்கும் குறையாத சிறுகதையாளர்கள் ஒரு தனித்துவ பிரதேச இலக்கியமென்ற அடையாளத்தை வலியுறுத்தும் பண்பினைக் கொண்ட சிறுகதைகள் ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெளிவத்தை ஜோசப்பின் நாமிருக்கும் நாடே. என். எஸ். எம். இராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து, மலரண்பனின் கோடிச்சேலை, மு. சிவலிங்கத்தின் மலைகளின் மக்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் இலங்கை சாகித்திய மண்டல பரிசை பெற்றுக்கொண்ட சிறுகதை தொகுப்புகளாகும் மொழிவரதனின் மேகமலை ராகங்கள், ஆப்தீனின் இரவின் ராகங்கள், கோவிந்த ராஜூவின் பசியாவரம், மாத்தளை சோமுவின் அவர்களின் தேசம் என்பவை குறிப்பிடத்தக்க மலையக சிறுகதைத் தொகுப்புகளாகும் கதைக்கனிகள் மலையகப் பரிசுக் கதைகள் மலையக சிறுகதைகள், தீர்த்தக்கரை கதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், தோட்டக் காட்டினிலே என்பவை பல சிறுகதையாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புகள். இவ்வாறு நூல் வடிவில் வந்த சிறுகதைகளை நோக்கும் போது, மலையக இலக்கியச் செழுமைக்கும் அங்கீகரிப்புக்கும் சிறுகதைகளே காரணமாகியிருக்கின்றதென்பதை உணர்ந்து கொள்ளலாம்.
252

சுந்தரமீனாள் எனும் மலையகத்தின் முதல் நாவல் தொடக்கம் இன்று வரையான காலம் வரை கணிசமான நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நாவல்களை தொகுத்து நோக்கும் போது அங்கு தெளிவாக இனங்காணக்கூடிய அம்சமாக இருக்கக்கூடியது அவை மலையக மக்களின் வரலாற்றின் பல்வேறு கட்டங்களை சித்தரிக்க முனைந்திருப்பதாகும். எனவே தூரத்துப் பச்சை, வீடற்றவள், மலைக்கொழுந்து, சொந்தக்காரன், தாயகம், குருதிமலை, மூட்டத்தினுள்ளே, எல்லை தாண்டாத அகதிகள், இனிப்படமாட்டேன், லயத்துச் சிறைகள், கவ்வாத்து என அவ்வாறான பல நாவல்களை வரிசைப்படுத்வோமாயின் அதுவே இன்று வரையான மலையக மக்களின் வரலாற்றைக் கூற போதுமானவையாக இருப்பதைக் காணலாம்.
இவ்வாறு பல தளங்களின் பின்னணியில் மலையக இலக்கியம் விரிவாக ஆராயப்பட வேண்டும். அப்போது தான் அதன் காத்திரம் அவ்விலக்கியத்துள் புதைந்திருக்கும் துயரம் - சோகம் - போர்க்குணம் - மானுட நேயம் என்பவைகளை சரிவர இனங்காட்டி மலையக இலக்கியத்தின் முன்னோடியான தன்மையை உணர்த்த முடியும். அது நிறைவேறும் போது மலையக இலக்கியம் என்பது மாறி இலக்கியத்தில் மலையகம் என பேசப்படுவதாக இருக்கும்.
வெளியீடு 19964 1997 முதற் பதிப்பு
கல்வி (தமிழ்), கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, உணவுத்துறை, வர்த்தகம் வாணிபம், சுற்றுலா, இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு.
2 ம் பதிப்பு 2007 - 2008 ம் ஆண்டு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வீ. புத்திரசிகாமணி JP. AFP. அவர்களால் வெளியிடப்ப்ட்டது.
253.

Page 152


Page 153
UP-COUNT RESEARCH C
(RESEARCH
 

RY TAMIL ONFERENCE
)
ARTICLES