கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியமணி மலர்

Page 1
ി.
ܠܟܐܢܘܬܐ
W T 下
W W
%
W
W
݂ ݂
W W
W
KIZIXWAYIW
*
W
W WW
 ܼ ܼ ܼ ܼ LSLS S SLSLSSSSSSSLSSSSSS
 

W. W W
SAیم/////////////////////
|
W W. W.
WA W
W.
ന്നു W. W
/ / A. 。

Page 2


Page 3

கருணாகரன் துணை
உரும்பிராய் மேற்கு, உரும்பிறாய்.
ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்களின்
நினைவாக வெளியிடப்லயற்றது. 29.10.2OO7
O

Page 4
முன்னுரை
எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்கள் 02.10.2007 செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் திடீரென இறைவனடி சேர்ந்தமை எமக்கெல்லாம் தாங்கொணாத வேதனையாகும். நோய்வாய்ப்பட்டுச் சுகமடைந்த நிலையில் இருந்த அவர், திடீரென எம்மைவிட்டுப் பிரிவார் என நாம் எண்ணியதில்லை. அவர் சுகமுடன் இருந்து மேலும் எல்லோருக்கும் வழிகாட்டுவார் என்றே எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கருணாகரப்பிள்ளையார் அவரை அழைத்துவிட்டார்.
அன்னாரது நினைவாக வெளியிடப்பெறும் இம் மலரில் சைவப் பெரியார்களது செய்தியும், அவரது வாழ்க்கை வரலாறும், அவரது ஆக்கங்களில் சிலவும் எழுதப்பெற்றுள்ளன. இம்மலரினை வாசிப்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.
இம் மலருக்கான செய்திகளைத் தந்துதவிய சைவப் பெரியார்களுக்கும், அழகாக அச்சிட்டு உதவிய கோண்டாவில் சிவரஞ்சனம் ஒவ்செற் பிறிண்டேர்ஸ் ஸ்தாபனத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வணக்கம்
உரும்பிராய்மேற்கு, உரும்பிராய், 晴 குடும்பத்தினர்
29 O2OO
H

saesae\,| \,\!No.\,\!No.|
|-|-| . . .|--------------------------------|-|-|- |-\,s. |-|- . . .|- \,|- |-|-||-. . .\,\,, , |- |-|-
|---- , !|-||- |× |-\\\,
|- \,|- s.
Io-a
оа
|- |-~- |----- ----
■·|- |----- |-|-- |-|-|-|- |- |-|- |-| (_),|- . |-|- |- |-|-|-:·|- |-|-|-|-|- |-|-|- ,|- |-|- . . . . .|- , !|- |- ·|-|- . . .|- |-|- |- - ( )|-, |-|- .|-|-| |- .·----|--·|-|-
·|-| -|-|-|-|- |- |-|-|- |-|-|-|- |-|-|-|-|-|- |-|-|-|-|-- |-|-|-|-|-|-s.
ப்ந்து:
"
తిమిలి
පිණitis:
既
『현 :**혁
|-|()
| 그***********「니 : | |-|-|-|-| . ) ( )|-) |-|× |-|-|-|-s |-| .|-
| No
)활|- }
E.
ܢ .
. ¬¬

Page 5

ஆசிரியமணி س-h அருணாசலம் பஞ்சாட்சரம் இவரீதளின் வாழ்வும் வளமும்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகிழக்குப் பிரிவின் மேற்கே அமைந்துள்ளது உரும்பிராய். இங்கு வாழை, கமுகு, கிழங்கு வகை மற்றும் சிறுதானியங்களும் செழித்து வளவருவதற்கேற்ற செம்மண் செறிந்தும் வற்றாத நன்னீரூற்றுக்கள் பரந்தும் இருப்பது ஒரு நற்கொடையாகும். も
இவ்வூரில் சைவப் பெருங்குடி மக்கள் வாழ்வதால் ஊரின் நடுவே பிள்ளையார், முருகன், அம்பாள் ஆலயமும், வடக்கே பிள்ளையார், சிவன் ஆலயமும், வடகிழக்கிலே காட்டுவைரவர் ஆலயமும், கிழக்கே ஞானவைரவர் ஆலயத்துடன் சிவனாலயமும் அமைந்திருப்பது உரும்பிராய் ஊரவர்களின் சைவப் பற்றைக் காட்டுகின்றது.
இந்த வகையிலே இணுவையம்பதி வீரசைவப் பெருமகன் இளையதம்பி (இளையவர்) அவர்கள் உரும்பிராயைச் சேர்ந்த பொன்னாச்சி (பொன்னாச்சன்) என்பவரை மணம்முடித்து உரும்பிராய் மேற்கிலே கருணாகரப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கிலுள்ள காணியில் குடியிருந்து இல்லறம் நடத்தினர்.
இப்பகுதியில் குடியிருந்தோர் தொகை குறைவாக இருந்ததால், இப்பொழுது அம்மன் விதி எனக் குறிப்பிடும் ஒழுங்கையூடாக வழிச் செல்வோர் இளையவர் வீட்டுக்கு வந்து இளைப்பாறிச் செல்வதுண்டு. அதனால் இளையவர் இல்லம் செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும் இடமாய் விளங்கியது. நாளடைவில் இளையவர் குடும்பத்துடன் நல்லோர் இணக்கம் நன்கு வளர்வதாயிற்று. மனைமாட்சி மங்கலப் பொலிவுடன் விளங்கிய அவரின் மனையில் நன்கலமென நன் மக்கட்பேறு கிடைத்தது.
அவரது குடும்பத்தில் தலைமகனாகச் சுப்பையா பிறந்தார். அவரைத் தொடர்ந்து இராமையா (இராமர்), அப்பாப்பிள்ளை,
08 -ത്ത --—

Page 6
அருணாசலம் என ஆண்கள் நால்வரும் சின்னப்பிள்ளை, இத்தாத்தை, வள்ளியம்மை, செல்லாச்சி எனப் பெண்கள் நால்வரும் பிறந்தனர். இளையவர் குடும்பத்தில் மாடு, மனை, மக்கள், செல்வம் யாவும் பொலிவுறத் திகழ்ந்ததால் அவரது இல்லம் எந்நேரமும் பரிமளமாய்த் திகழ்ந்தது.
ஆண் பிள்ளைகள் நால்வருள் இளையவரான அருணாசலம் மிகத் துடிதுடிப்பானவர். வாகன வசதி குறைந்திருந்த அக்காலத்தில் தூர இடங்களுக்குச் செல்வதற்கு மாட்டுவண்டில் சொந்தமாக வைத்திருந்தார். குடும்ப வளர்ச்சியில் கண்ணாய் இருந்த அருணாசலம், அண்ணன்மார் சகோதரிமாருடனும் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி வந்தனர். ஊரிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இக் குடும்பத்தினர் அன்புக் கரம் நீட்டி எல்லோரையும் ஆதரித்தனர். பிள்ளைகளுக்குத் திருமண வயது வந்ததும் அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைகளைப் பெற்றோர் தேடி வைத்தனர்.
திரு. அருணாசலம் அவர்கள் உயர்ந்த உருவம்; நிமிர்ந்த நடை: நேர்கொண்ட பார்வை; உழைப்பிலே ஊக்கம் மிகுந்தவர். எடுத்த கருமம் நிறைவேறும் வரை அவரது உள்ளம் ஓயாது; தொடங்கிய முயற்சியில் வெற்றி காண்பதே அவரின் இலக்காகும். கண்டோர் விரும்பும் குணநலம் வாய்ந்த அருணாசலத்துக்கு மணப்பருவம் வந்ததும் தம்பையா - தங்கமுத்து தம்பதியரின் இரண்டாவது மகள் இரத்தினம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பயனாக நடராசாவைத் தலைமகனாகப் பெற்றதோடு பஞ்சாட்சரம், சிவப்பிரகாசம், அமிர்தலிங்கம் என்னும் நான்கு ஆண்களைப் பெற்று, அப்பிள்ளைகளுக்குத் தாம் வைத்த இயற்பெயர் இருக்க, செல்லப் பெயராக முறையே பூபாலு, சின்னத்தம்பி, அன்னலிங்கம், அமுது எனப் பெற்றோர் அழைத்ததைப் பார்த்து மற்றையோரும் அவ்வாறே அழைத்தனர்.
அருணாசலம் - இரத்தினம் தம்பதியரின் இரண்டாவது மகன் பஞ்சாட்சரம் (சின்னத்தம்பி) 13.11.1927 ஞாயிற்றுக்கிழமை உரும்பிராயில் பிறந்தார். இவர் தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலையிற் கற்றார். பின்பு திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும், திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில், புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையில் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. 1947 - 1948ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆசிரியப் பணி ஆற்றும்போது
SaoS 04

திருநெல்வேலிசைவாசிரிய கலாசாலையிற் பயிற்சிபெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
திரு. பஞ்சாட்சரம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைக்குப் பிரவேசித்த காலத்தில் அங்கிருந்த அதிபர் மயிலிட்டி திரு. சி.சுவாமிநாதன், உபஅதிபர் "மெளனமுனி" அளவையூர் பொன். கைலாசபதி, மட்டுவில் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் கற்கும் பேறு கிடைக்கப்பெற்றது முற்பிறவித் தொடர்பென்றே சொல்ல வேண்டும். 1949 - 1950ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பஞ்சாட்சரம் அவர்கள் சைவாசிரிய கலாசாலைக் குருமூர்த்திகள் மூவரிடத்தும் பாகுபாடின்றிப்பக்தியும் அன்பும் வைத்திருந்தார்.
ஒருநாள் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்களின் தமிழ் இலக்கண பாடம் நடந்துகொண்டிருந்தது. நன்னூல் சூத்திரம் ஒன்றுக்குப் பண்டிதர் விளக்கம் சொல்லுகையில்
அவ்விளக்கம் வேறுவிதமாய் இருக்காதா என்றொரு ஐயத்தை பஞ்சாட்சரம் மிகுந்த பயபக்தியுடன் எழுந்து சொன்னார். பண்டிதர் ஐயா அதனை மனதில் வாங்கிக் கொண்டு “இன்று மாலை என்னை வீட்டில் சந்தியும்” என்றார். குருமொழி கடவாத பஞ்சாட்சரம் அன்று மாலை பண்டிதர் ஐயாவைச் சந்தித்ததுடன் நின்றுவிடாது, அன்றிலிருந்து நாள்தோறும் குருவைச் சந்திக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டார்.
பண்டிதர் ஐயாவின் வீட்டில் அவரைச் சந்தித்த நாளிலிருந்து தனது குருநாதரின் இறுதி நாள்வரை பண்டிதர் ஐயாவை நிழல் போலத் தொடர்ந்து, அவரின் பணி செய்வதும் அவரது உரை கேட்பதும் தமது தவறாத கடமையாகத் திரு. பஞ்சாட்சரம் நடந்துகொண்டது ஊரறிந்த a -60iró0LD.
திரு. பஞ்சாட்சரம் ஆசிரியர் சைவாசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை முடித்த பின் உரும்பிராய் வைசத்தமிழ் வித்தியாலயத்தில் ஓர் ஆசிரியராகச் சேர்ந்தார். இவர் எங்கு எப்பணியை மேற்கொண்டாலும் அதனைத் திறம்படச் செய்யும் இயல்புடையவர். இவரது நடைமுறைகளை அதிபர் முதல் கல்வி அதிகாரிகள் வரை அனைவரும் அவதானித்து இவரை உதவி ஆசிரியர் பதவியிலிருந்து உப அதிபராகவும், அதிபராகவும் கல்வித் திணைக்களம் பதவி உயர்த்தியது. இவர் ஓய்வுபெறும் வரை இப்பாடசாலையில் பணியாற்றிய காலம் முழுவதும்
05

Page 7
சைவத்தமிழ் வித்தியாலயத்துக்கு நற் பெயரீட்டிக் கொடுத்ததைப் பாடசாலைச் சமூகம் நன்றியுடன் பாராட்டி விழாக் கொண்டாடியது மனங்கொள்ளத்தக்கது.
பண்டிதமணியும் ஆசிரியமணி பஞ்சாட்சரமும் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு "இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்” என்ற கம்பன் கவிதை வரியை நினைவூட்டும்; புகழுரை அன்று.
பண்டிதமணி ஏலவே தன்னிகரில்லாத் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த போதிலும் பேராதனையில் அமைந்துள்ள இலங்கைப் பல்கலைக்கழகக் கலையரங்கிற்குப் பண்டிதமணியின் கந்தபுராணம் - தக்ஷகாண்டம் உரைநூல் யானை மீது எடுத்துச் சென்று அரங்கேற்றிய நிகழ்வு முதல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம் பண்டிதமணிக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்ததற்கும் பண்டிதமணியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பண்டிமணியின் உருவம் பொறித்த அஞ்சல் தலை கொண்ட முத்திரையை இலங்கை அரசு வெளியிட்டுக் கெளரவித்ததற்கும் உந்துகோலாய் இருந்து ஊக்குவித்தவர் ஆசிரியமணி பஞ்சாட்சரம் என்பதை ஈழமண்டலத்திலுள்ள அனைவரும் அறிவர்.
பண்டிதமணியின் கடமைகள், பாடசாலை வேலைகள், ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைகள், ஊர்ப் பொதுப் பணிகள், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் திருத்தொண்டுகள் - இவற்றை எல்லாம் முன்னின்று உழைத்த ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்கள் திருமணப் பருவம் வந்தபோதும், அதில் நேரம் போக்காது நடந்துகொண்டார். அதனை அவதானித்த நண்பர்கள் திருமணத்துக்கு அவரை இணங்கச் செய்து, இணுவையூர் அல்லாமாப்பிரபு - பாக்கியம் தம்பதியரின் அருமை மகளும் கோப்பாய் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பெற்ற ஆசிரியருமான ஈஸ்வரி ஆசிரியைக்கு வதுவை பேசி 17.03.1961அன்று கருணாகரப் பிள்ளையார் கோயில் வெளிமண்டபத்தில் திருமணம் சிறப்புற நடத்தி வைத்தனர்.
ஆசிரியர்களான பஞ்சாட்சரம் - ஈஸ்வரி தம்பதியர் மணவாழ்விற் புகுந்ததன் பேறாக, மூவர் பெண்களும் ஒருவர் ஆணுமாக நால்வர் பிள்ளைச் செல்வங்கள்ாக அவர்களுக்குக் கிடைக்கப்பெற்றனர்.

தலைமகள் வாசுகி (ஆசிரியை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), சிவகலை (ஆசிரியை, பாணந்துறை அலவியா முஸ்லிம் வித்தியாலயம்), கணேசன் (ஆசிரியர், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), இளைய மகள் - அம்பிகை ஆகியோருக்கு முறையே ஆசிரியர் மன்மதராஜன், கிருபாகரன் (விளையாட்டு அதிகாரி) அகல்யா (ஆசிரியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்) சுரேஸ் (கனடா) ஆகியோர் மருகர், மருகியராகக் கிடைக்கப் பெற்றதுடன்
புராதனி, அபிலக்ஷன், விபூஷன், வைஷிகன் ஆகியோர் பேரப்பிள்ளைகளாக வாய்க்கப் பெற்றனர். மேலும், சகோதரர் வழியில் - ந. வாலாம்பிகை, சி. இரத்தினபூவதி, அ. சோதிமணி ஆகியோர் மைத்துணிகளாகவும் மனைவி வழியில் - பரமசாமி, நித்தியானந்தன், சதானந்தன் ஆகியோர் மைத்துனர்களாகவும் கிடைக்கப்பெற்றனர்.
1961ஆம் ஆண்டு சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நான்காவது ஆண்டு விழா திருநெல்வேலி பரமேஸ்வர்க் கல்லூரி முன்றலில் அமைக்கப்பெற்ற பந்தலில் நடைபெற்றதையொட்டி திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைத் தமிழ்ப் பேராசான் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை அவர்களின் பேராற்றலை விதந்துரைக்கும் வகையில் "தினகரன்" நாளேட்டு ஆசிரிய பீடத்தில் பிரதம ஆசிரியராய் இருந்தVKPநாதன், பண்டிதர் சி. க. அவர்களைப் பண்டிதமணி” எனக் குறிப்பிட்டு ஆசிரியத் தலையங்கம் எழுதியதைத் தொடர்ந்து அவ்விருதையே நாடு போற்றிக் கெளரவித்தது.
அந்த வரிசையில் நல்லாசிரியராகவும், சமூக சேவகராகவும் தொழிற்சங்கவாதியாகவும், தமிழறிஞராகவும் விளங்கிய ஆசிரியர் அ.பஞ்சாட்சரம் அவர்களை "ஆசிரியமணி” எனக் குறிப்பிட்டுத் "தினகரன்" நாளேட்டின் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன் ஆசிரியத் தலையங்கம் எழுதிக் கெளரவித்ததைப் பாராட்டி அவ்விருதை அனைவரும் வரவேற்றனர்.
ஆசிரியர் பஞ்சாட்சரத்தை ஆசிரியமணி எனப் பத்திரிகையில் வெளிவந்த பாராட்டை அறிந்த கரவெட்டியைச் சேர்ந்த மன்னவன் கந்தப்பு ஆசிரியர் போன்ற வடமராட்சி நண்பர்கள் திரு. பஞ்சாட்சரம் அவர்களைத் தமது ஊருக்கு அழைத்து யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடாதிபதியாய் இருந்த பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம் அவர்களைக் கொண்டு “ஆசிரியதிலகம்” என்ற விருதை நெல்லியடி மகாவித்தியாலய மண்டபத்தில் அ. ப. அவர்களுக்கு அளித்துச் சிறப்பித்தமையும் நினைவு கூரத்தக்கது.
O7

Page 8
ஆசிரியமணி ஆற்றிய சேவைகளில் மீண்டும் நினைத்துப்பார்க்க Catainpuaoat -
சேவையால் உயர்ந்த பஞ்சாட்சரம் ஆசிரியர் சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற காலத்தில் அங்கு பயின்ற மாணவர்கள் ஒன்றாகக் கூடி, சைவாசிரியர் கலாசாலை பழைய மாவர் சங்கம், என்றொரு சங்கம் நிறுவி அதன் காரியதரிசியாகப் பஞ்சாட்சரம் ஆசிரியரைத் தெரிவுசெய்தனர். காரியதரிசி தனது பணிகளைத் திறம்படக் செய்து பலரின் பாராட்டைப் பெற்றார்.
அந்தவகையிலே பண்டிதமணியின் நூல்களை வெளியிடுவதற்கும் பண்டிதமணி நூல் வளியீட்டுச் சபை என்ற மற்றொரு சபையை நிறுவி அதன் காரியதரிசியாகப் பஞ்சாட்சரம் ஆசிரியர் தெரிவுசெய்யப் பெற்றார். தெரிவான நாளிலிருந்து அப்பதவியில் திரு. பஞ்சாரட்சரம் ஆசிரியரே கடமையாற்றி வந்துள்ளார்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியப்பணி ஆற்றிய போது அங்கிருந்த பெற்றார் ஆசிரிய சங்கத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதன் மூலம் பாடசாலை வளர்ச்சியுற்று நற்பெயரீட்டியுள்ளது.
ஆசிரிய சேவையிலன்றி ஆசிரியர் தொழிற்சங்க சேவையிலும் அளப்பரும் சேவைகளாற்றி நற்பெயர் பெற்றுள்ளார். அதனால் பலருக்கு அறிமுகமாகிஅகில இலங்கையிலும் அவர் பெயர் பரவுவதாயிற்று.
இவைதவிர, இயல்பாகச் சமயத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள திரு. பஞ்சாட்சரம் வரலாற்றுத் தொடர்புள்ள உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் திருப்பணிச் சபையிலும் பங்குபற்றி ஆலயப் பணிகளில் அளப்பருந் தொண்டாற்றியுள்ளார். கோயில் திருப்பணி, தேர்த்திருப்பணி, இராஜகோபுரத் திருப்பணி எனப் பல்வேறு திருப்பணிகளில் முன்னின்றுழைத்து ஆலயத்தைப் புதுக்கிப் புனருத்தாரணம் செய்ய உதவியுள்ளார். கருணாகரப் பிள்ளையாரின் கருவறையில் மறைத்து வைத்திருந்த இந்த ஆலயக் கல்வெட்டு இப்பொழுது மகாமண்டபத்தில் வைக்கப்பெற்றிருப்பதற்குப் பஞ்சாட்சரம் ஆசிரியரே அயராது நின்று உதவியுள்ளார்.
இவ்வாலயத்தில் இதுவரை வீதிவலம் வந்த திருத்தேர் பழையதானதால் புதிய சித்திரத் தேர் செய்யும் பணியும் நடைபெற வேண்டிய ஏற்பாடுகளை ஆசிரியமணி செய்துள்ளார்.
08

கருணை அல்லத்தில் காருண்யசேவை
இந்நாட்டில் நிலவிய சீரின்மை காரணமாகப் புலம்பெயர்ந்த உரும்பிராய் மக்கள் இலண்டன் மாநகரில் குடியேறித் தமது வாழ்வை வளம்படுத்தும் வேளைகளில், தாய் மண்ணில் பிறந்த பாசம் அவர்கள் நெஞ்சைக் குடைவது தவிர்க்கமுடியாத நியதி. அதனால் தாய்நாட்டிலே வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வசதியற்ற குடும்பத்தினரின் சிறார் நிறை வாழ்வு வாழவேண்டும் என்று விரும்பி திரு. பொன். தெய்வேந்திரம் அவர்களை ஸ்தாபகராகக் கொண்டு உரும்பிராயில் "கருணை இல்லம்" என்றொரு அறநிலையத்தை நிறுவுவதாகத் திட்டமிட்டனர். அதன்படி உரும்பிராய் ஊடாகச் செல்லும் பலாலி வீதியிலுள்ள கற்பகப்பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இருந்த வீட்டை இதற்கெனப் பெற்று அதற்குக் "கருணை இல்லம்" எனப் பெயரிட்டு ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களை அதன் தலைவராக நியமித்து அதற்கான ஆக்க வேலைகளைச் செய்தனர்.
நற்பணிக்கு உதவும் நன்மனம் படைத்த ஆசிரியமணி தமக்களித்த பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இல்லத்தில் சேர்ப்பதற்கான சிறுமிகளை விளம்பரம் மூலம் தெரிவு செய்தனர். இதற்கான நிதி உதவி இலண்டனில் வாழும் உரும்பிராய் ஊரவர்கள் உதவுவர் என ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் மிகக் குறைந்த சிறுமிகளே இல்லத்துக்குத் தெரிவாகினர். அவர்களை மேற்பார்வை செய்வதற்கும், உணவு தயாரித்து வழங்குவதற்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதற்குமான ஆட்களை நியமித்து "துர்க்கா துரந்தரி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையில் இல்லத் திறப்பு விழா நன்னாளில் ஆரம்பமானது.
இல்லப்பிள்ளைகள் சைவாசார முறைப்படி கல்வி கற்று, உணவு, உடைகளும் அளித்துப் பேணப்படுகிறார்கள். இல்லத் தலைவர் என்ற வகையில் ஆசிரியமணி அவர்கள் ஒருநாளைக்கு ஒரு முறையேனும் இல்லம் சென்று அங்குள்ள பிள்ளைகளின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுத்ததை அதனோடு தொடர்புள்ளோர் அறிவர்.
ஆசிரியமணியின் அயராத சேவையை ஊரிலுள்ளவர்கள் மாத்திரமன்றி, இலண்டனிலிருந்து உதவி வழங்குபவர்களும் நயந்து
ERecR 09

Page 9
மகிழ்ந்தனர். இல்லப் பிள்ளைகள் வசதி குறைந்த குடும்பத்திற் பிறந்தபோதிலும் அவர்களின் வாழ்க்கை நிறைவாழ்வாக மலர வேண்டும் என்பதற்கு ஆசிரியமணியின் மேற்பார்வை மெத்த உதவியது. எதிர்பாரா வகையில் அ. ப. அவர்களைத் திடீரெனப் பீடித்த நோய் அவரின் உயிரைப் பறித்துவிட்டது. அவரது மறைவுச் செய்தியை அறிந்து இல்லத்தைச் சார்ந்த அனைவரும் ஓடோடி வந்து கண்ணிர் பெருக்கியது பாறை நெஞ்சையும் பாகாய் உருக்கியது.
என்செய்வது நில்லாதவற்றை நிலையின என்று நினைப்பது உலகோர் இயல்பு
இவற்றுக்கு மேலாக - ஆசிரியமணியின் குருபக்தியை வெளிக்காட்டும் வகையில் பண்டிதமணி உயிர்நீத்த பின்பு நூல் உருப்பெறாத அவரின் ஆக்கங்களைத் தெரிந்தெடுத்துக் காலத்துக்குக் காலம் வெளியிட்டு விழா எடுத்துச் சிறப்பித்த பண்புடைமை ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களையே சாரும்.
அப்பணியின் தொடர்ச்சியில் - உமாபதி சிவாசாரியர் எழுதிய திருவருட்பயன் நூலுக்குப் பண்டிதமணி எழுதிய உரைநூல் வெளியீடு வண்ணை நாவலர் வித்தியாலயத்தில் 15.07.2007 அன்று சிறப்பாக நடைபெற்றது. அதுவே ஆசிரியமணி வெளியிட்ட பண்டிதமணியின் இறுதி நூல் வெளியீடாகும்.
அவ்வெளியீட்டு விழா பார்வையாளரின் கண்ணைவிட்டு மறைய முன் சர்வசித்து புரட்டாதி 15 (02.10.2007) செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் ரோகிணி நட்சத்திரம் கூடியிருந்த வேளையில் ஆசிரியமணி அமைதியுற்றுக் குலதெய்வமான கருணாகரன் பாதம் அணைந்து கொண்டார். இயற்கை நியதி இருந்தவாறு
*6ாகருகன் உணனொருவன் இன்றின்ைை யெண்னும்
பெருமை யுடைத்திவி இவுை”
-வண்ருவர்வார்மொழி:
SSSSSMSSSSSSMSSSSSSSSSSeSSSSSSS SLL 00L LLSSSSSSS

இளமையில் ஆசிரியமணி

Page 10

Ο Γ D "T" m
உரும்பிராயப் குருக்கள் ஐயா அவர்களின் செப்தி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் கருணாகரன் அடிசேர்ந்த எங்கள் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களின் இழப்பு எமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஒரு பேரிழப்பாகும். நல்ல பேச்சாளனாக, எழுத்தாளனாக சைவத்தமிழ் மரபைப் போற்றிப் பாதுகாக்கும் புரவலனாக மிளிர்ந்து கொண்டிருந்தவர். பண்டிதமணி அவர்களின் முதன்மை மாணாக்கராகத் திகழ்ந்து அவர் வழியில் நின்று பல நூல்களை எமக்குத் தந்துள்ளார். பண்டிதமணியின் நினைவு நாள் மலர் வெளியீட்டைச் சிறப்பாகத் தனது குருவுக்கு செய்து முடித்தார். அந்நாட்களில் வாத்தியாருடன் பல பொயோர்களைச் சந்திக்கின்ற பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. நான் அவரை வாத்தியார் என்றுதான் அன்பாக அழைப்பேன். எமது கருணாகரப்பிள்ளையார் ஆலயத்தில் நாவலர் பெருமான் வழியிலே மகோற்சவ காலங்களில் பெரும் பேச்சாளர்களை அழைத்து பேச வைப்பார். அதுமட்டுமல்ல கருணாகரன் மேல் பலகாலமாக பெரும் பக்தியுடையவராக விளங்கினார். ஆலயத்தின் இராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்தார். கருணாகரனுக்கு ஒரு சித்திரத்தேர் வேண்டுமென்ற ஆவலில் அதனையும் தொடக்கி வைத்துள்ளார். இம்முறை தனது சுகயினத்தையும் பாராது கொடியேற்ற வைபவத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர்களிடம் அனுமதி பெற்று வந்தார். அப்பொழுது என்னுடன் கதைக்கும்போது கண்ணில் ஆனந்தக் கண்ணிர் மல்க வருகிற வருடம் புதிய சித்திரத்தேரில் கருணாகரன் வருவார் என்று கூறினார். ஆனால் சடுதியில் விநாயகன் அவரைத் தன்வசம் இழுத்து விட்டான் என்று நினைக்கும்போது எல்லோருக்கும் மனம் வேதனையாகவே இருக்கின்றது. "சைவமும் தமிழும் உள்ளவரை வாத்தியாரின் புகழ் வாழும்".
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதோடு கருணாகரன் பாதத்தில் அவரின் ஆத்மா சாந்தியடைய பர்வதவர்த்தனி அம்பிகையின் பாதாரவிந்தங்களை வேண்டுகின்றேன்.
C/z/ævö பிரம்மழுநீ. 6e pe சோமசுந்தಙ್கள்
பர்வதவர்த்தணி
ിffമത്ര உரும்பிார்.
* ,"* : , 3, ؟
_—ത്ത് 11

Page 11
நீர்வேலிக் குருக்கள் ஐயா அவர்களின் செய்தி
புகழ்பூத்த புண்ணியர்
திருச்சிற்றம்பலம் வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழ பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம்.
காலஞ்சென்ற அருணாசலம் இரத்தினம் அன்புப் புதல்வர் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் அமரராகிவிட்டார்கள். இவர் தந்தையார் செய்த பெரும் தவத்தால் பிறத்தற்கரிய மானிடப் பிறவி எடுத்தவர். வித்யா குருவாகிய பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இடையறாத குருபக்தி பூண்டவர். தன்னுடைய கல்வி கற்கும் காலம் நிறைவெய்திய பின்பும் தமது குருவினுடைய இறுதிக் காலம்வரை அவருக்குப் பணி செய்தவர். பண்டிதமணி அவர்களுக்கு பல மாணாக்கர்கள் இருந்தும் ஆசிரியமணியவர்களின் குருப்பணியே இவரை மேன்மையடையச் செய்தது.
தன்னலங்கருதாத சேவையும், சலியாத உழைப்பும், புன்முறுவல் பூத்த முகமும் இவரின் அணிகலங்களாக விளங்கின. எழுத்திலும், சொல்லிலும்,செயலிலும் தமிழ்மரபுதவறாது வாழ்ந்தவர்.
"தாரமும் குருவும் தலைவிதிப்படி” என்றபடி இவருக்கு வாய்த்த வாழ்க்கைத் துணை ஈஸ்வரி, ஆசிரியமணியின் பொதுப்பணி, கல்விப்பணி, அர்ப்பணிப்புகள், தியாகங்களுக்கு மசிந்து, நெகிழ்ந்து துணைநின்றார். வாழ்க்கை நல்லறமாக சிறந்த மக்கட்பேறுகளையும், கல்வியூட்டி சிறந்தநிலையில் வைத்துள்ளார்.
"தக்கார் தகவிலர் என்பது அவரவ
ரெச் சத்தாற் காணப்படும்”
18 —

வாழ்வில் பெறவேண்டிய இறைத் தொண்டு கருணாகரப் பிள்ளையாரின் பணியாக அமைந்தது. பிள்ளையாருடைய திருப்பணி மஹாகும்பாபிஷேகத்தை ஆகம முறை தவறாது செய்வித்தார். ஆலயத்திலுள்ள கல்வெட்டை பேணிக்காத்துவந்தார்கள்.
ஆசிரியமணியின் கல்விப் பணிகள் எழுத்திலும், சொல்லிலும் அடங்காதவை. இவ்வாறு புகழ்பூத்த புண்ணியர், அறம், பொருள், இன்பம் ஆகிய புருஷார்த்தம் மூன்றினையும் எம்முன் பிரத்தியட்சமாக பெற்றவர். நான்காவதான முத்திப்பேற்றினை பெறுவது திண்ணம். ஆசிரியமணியின் ஆத்மா "அங்காத் அங்கம்” என்னும் வீரசைவ மரபுப்படி இறைவனிடம் உள்ளமும், உடலும் அவருக்கே அர்ப்பணிப்பாக பூமிதேவியிடம் ஒப்படைக்கப்பெற்றது. ஆசிரியமணியின் பணிகளை தொடரும் அன்பர்கள், மாணவர்கள் வாழும் வரை அவர் புகழ்நிலைப்ெற்றிருக்கும்.
محرم
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
வார்க்காற்தரவை, entrasawab பின்னைumர்தேவனத்தானம், ஆ.சந்திரசேகரக்குருக்கள் diffîøBaraó.
LSSMSSSLSSSMSSSLSSSMSSSSMSSSMLSSSSSSLSSSSL 00 LLSSMSLLLLSSSSSSLSSSSSLSSSSSSMLSSSMSSSMSSSMSSSSSSS S

Page 12
நல்லைக் குருமணி அவர்களின் Qafuhgs
ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்களுடைய மறைவு அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கின்றது. தனக்கென வாழாது பிறருக்கென வாழும் சிலரில் ஆசிரியமணியும் ஒருவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நாட்டில் நல்ல விடயங்களை செயற்படுத்திய நன்மனிதராவர். ஆழமான கல்வியறிவு, அசையாத இறைநம்பிக்கை, நேரான வாழ்க்கைநெறி, சீரான உடை, எடுத்த விடயத்தை செவ்வென ஆற்றுகின்ற செயற்திறன், சொன்ன சொல்லை செயற்படுத்திக் காட்டுகின்ற ஆசிரியமணி அவர்களுடைய மறைவு சைவத்தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும். இம்மறைவை எவ்வகையிலும் நிரப்பமுடியாத ஒன்றாகும். இலக்கிய கலாநிதி பண்டிதமணி அவர்களை குருவாகக்கொண்டு இலக்கியத்தையும், புராண இதிகாசங்களையும் நிறைவாகக் கற்று இதன்படி வாழ்ந்து காட்டியவர். நல்லாசிரியனாக, நற்குருவாக சமுதாய சிற்பியாக வாழ்க்கையினை அமைத்துக் கொண்டதன் காரணமாக ஆசிரியர்களுக்கே திலகமாக விளங்கிய தன்மையினாலே அனைவராலும் ஆசிரியமணி எனப் போற்றப்படுகின்றவர். பல ஆலயங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் தலைமை தாங்கி வழிகாட்டியமையும், சைவமும் தமிழும் வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நாட்டில் இயங்கும் சைவபரிபாலன சபை வளர்ச்சியில் பணியாற்றி ஆதீனப் பணியுடன் எங்களுடன் நீண்ட காலமாக உறவை வைத்திருந்த ஆசிரியமணியினதுநினைவுதமிழும் சைவமும் நிலைக்கும் வரை வாழ்ந்துகொண்டிருக்கும். இந்நிலையில் ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
ern/ævb 6tallmagivagupafraidanavub முநீலழுநீசோமசுந்தரதேசிக ஞானசம்பந்தயரமாசாரியசுவாமிகள்
14

கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் செய்தி
யாழ் மண்ணில் உயர்ந்த வாழ்வும், சிறந்த சேவையும் உடையவர்களாக வாழ்ந்து மறைந்த ஒரு சிலரை எண்ணிப் பார்க்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. பணிப்பாளராகவும், இன்சொல் பேசுபவராகவும், நடமாடும் தெய்வமாகவும் எமது மண்ணில் வாழ்ந்து வந்தவர் ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள். அகவை எண்பதை முன்னிட்டு அன்னாருக்கு முத்துவிழா எடுக்க முன்வந்தவர்கள் பலர். ஆனால் அந்த விழாவை விண்ணுலகிலேயே பணி டிமணி கணபதிப்பிள்ளை ஐயாவின் தலைமையில் நடத்தவேண்டும் என்ற முடிவு எப்பவோ எழுதப்பட்டுவிட்டது. இந்த நியதியின் பேரில் ஆசிரியமணி அவர்கள் எம்மைவிட்டு ஓடோடிசென்றுவிட்டார்.
திருநெல்வேலி கலாசாலை வீதிக்கு அடிக்கடி சென்று பண்டிதமணி ஐயாவின் ஆலோசனையைப் பெற்று வந்தவர் இவர். இவற்றை எல்லாம் எழுத்தாலும், சொல்லாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பதியவைத்தவர் இவர். கல்வி உலகிலே சிறந்த ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி ஆயிரம் ஆயிரம் மாணவ உள்ளங்களில் இடம்பிடித்தவர் இவர். இதனை முன்னிட்டு இவருக்கு "ஆசிரியமணி” என்ற பட்டம் எப்பவோ சொந்தமாகிவிட்டது. பேச்சிலும், எழுத்திலும் நிதானமுடையவர் இவர். இனியவை கூறி எல்லோரையும் மகிழ வைப்பவர் இவர். இன்றைக்கும் இவருடைய புன்னகைபூத்த முகம் ஒன்றே எமது அகக்கண் முன் காட்சி தருகிறது. "பண்புடையார் பட்டு உண்டு உலகம்” என்றார் வள்ளுவர் பெருந்தகை. அன்னாரின் கூற்றுக்கு ஏற்ப இவ்வுலகம் ஒரு சில மாமனிதரை எமது கண்முன் நிறுத்துகிறது. அவர்களின் அடியொற்றி வாழ வேண்டியது சான்றோரின் கடமையாகும். எனவே ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களை எமது நினைவில் இருத்தித் தொழுவோமாக.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
கலாநிதிலசல்விதங்கம்மாஅப்பாக்குட்டி
சமாதானங்திபதி മ്മങ്ങഖf് குறிதுர்க்காதேவிதேவஸ்தானம்
6Rasalòaifftou app, cyfagonélaw7.
— 15

Page 13
----------------------------------------------- 16
லயான்முகத்தான்
6ിഖഞ്ഞ്
அந்திபகல்சாமம் மின்னல் அடைமழையோ எந்த எடுத்ததுவும் முற்றுவிக்க-உந்துவனர் ஒயா துறங்காமல் ஓடும் இவர்சுமந்து சாயாதுதான்தளர்ந்து கீழ்.
அப்பன் இசையானேல் அம்மைபதம் வீழ்ந்து எப்படியும் எப்பணியும் முற்றுவிப்பான்-முப்பொழுதும் மென்முகத்தால் இன்மொழியால் மீண்டும் கரைத்திடும் பொன்முகத்தான் புன்முறுவல் பூண்டு.
நாரும் முடியேறும், நாண்மலர்ச்சேர்க்கையால் வாரும் இடையேறும் வைத்தமுத்தால் - சாரும் மணியால் மணியாகிமுத்திரையில் தேரேறி அணியானான் ஆசிரியமன்.
அசையா மலையும் அசையும்;ஒன்றும் இசையா இரும்பும் இளகும்-விசையால் மிதிவண்டி பத்துமுறை வீடுவர மீண்டும் பதிவந்துபுன்னகைக்கப்பார்த்து.
மாவை, பண்டிதர்க. சச்சிதானந்தன்
- egaflífinuupaans? SY. ugormaerfyað
tInnvøøllmaof
24.2222
 

*******
淄北嶽拳燕欄劑 泰 *
현sae*气
பண்டிதமணியும் ஆசிரியமணியும்

Page 14

uai ஆசிரி 缸
நாவலர் என்றால் அது நல்லைநகர் தந்த ரீலறி ஆறுமுகநாவலர் அவர்களையே குறிக்கும். பண்டிதமணி என்றால் அது இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைத் தவிர வேறு எவரையும் குறிக்காது. ஈழத்தில் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை என்று குறிப்பிடும் பொழுது அது எவரது பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சபை என்பது இங்கு சொல்லாமலே விளங்கும். பண்டிதமணி அவர்கள் எழுதி இதுவரையில் உருவம்பெற்ற நூல்கள் இருபத்துமூன்று. இவ்வெளியீடுகள் அனைத்திற்கும் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை உறுதுணையாக இருந்தாலும் குறிப்பாக ஆறுநூல்கள் வெளிவருவதற்கு முழுக்க முழுக்க உழைத்தமைக்கு அது உரிமை கொண்டாட முடியும். இலக்கியவழி(ஐந்து பதிப்புக்கள்), சமயக் கட்டுரைகள், சிந்தனைக் களஞ்சியம், அன்பினைந்திணை, அத்வைத சிந்தனை, செந்தமிழ்க் களஞ்சியம் என்பனவே அந்த ஆறு நூல்களுமாகும். இவைகளுக்கு எல்லாம் அச்சாணியாக நின்று செயற்படுபவர் பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபைச் செயலாளர் தமிழ் அறிஞர் நல்லாசிரியர் சைவப் பெரியார் ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்களே எனலாம்.
பண்டிதமணி அவர்களுக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியதன் மூலம் தினகரன் பத்திரிகை வரலாற்றில் என்றும் அழியாத புகழைத் தேடிக் கொண்டது. அதே பத்திரிகை அ. பஞ்சாட்சரம் அவர்களுக்கும் ஆசிரியமணிப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்த பெருமைக்குரியது. புலவர்மணி என்றால் அது எப்படி மீன் பாடும் தேன் நாடாம் மட்டுநகர் தந்த ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களைக் குறிக்குமோ அவ்வாறே இன்று ஆசிரியமணி என்றால் அது நல்லாசிரியர், நல்ல நூலாசிரியர் அ. பஞ்சாட்சரம் அவர்களையே குறிக்கும் அளவுக்கு இன்று சூடுபிடித்துவிட்டது.
ஆசிரியத்தலையங்கம்
22.03.1987இல் தினகரன் பத்திரிகை தனது ஆசிரியற் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.
"குருவின்தாள்போற்றும்ஆசிரியமணியஞ்சாய்சரம்
TTMGGLT LLLLTT T TLTTL LL LMTLLLLL LTMTTLTLT LT TTTeTTMTLTTMLTLLTMLLLLLLLLSLLLTT அத்தமிழ்முனியின் நினைவாகஅருநூல்கள்வளிவரவுள்ளன. 藻藝
17 — !,

Page 15
பண்டிதமணியின் கட்டுரைகள் இருபத்தேழைத் தாங்கி வவளிவருவது "வசந்தமிழ்க் களஞ்சியம்” இப் பேரறிஞரின் அரும் பங்களிப்புப்பற்றிஇலங்கைஇந்தியப்பேரறிஞர்கள்ஆராய்ச்சிபூர்வமாக எழுதிய நாற்பது கட்டுரைகளைக் கொண்டது அரண்டாவது நூலான “பண்டிதமணி நினைவு மலர்". தமிழ்ப் லயருமக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும்இனியவசய்திஇதுஎன்பதில் சந்தேகமில்லை.
பண்டிதமணி அவர்களின் பல நூறு கட்டுரைகளைப் பிரசுரித்த வபருமை தினகரனைச் சேரும் பண்டிதமணி அவர்களைப் பண்டிதமணி யாகப்பாரறியச் செய்ததும் தினகரனே என்று கூறினால் அதுமிகையான ஒரு கூற்றாகாது.
"வசந்தமிழ் களஞ்சியம்” எனும் நூலில் தினகரன் பிரசுரித்த கட்டுரைகள் பல நிச்சயமாக இடம்பெற்றிருக்கும் என்று திடமாக நம்பலாம். ஆதலால் குறித்த இருநூல்களின் வருகை குறித்துத் தினகரன் தனதுபாராட்டினைத்தெரிவித்துக்கொள்கிறது.மகிழ்ச்சிஅடைகிறது.
இச்சீரிய பணிகளுக்கெல்லாம் அயராது உழைத்த லயருந்தகை அதிபர், நல்லாசிரியர் திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அன்னர் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின் விசயலாளராக இருந்து ஆற்றும் பணி தமிழ் மக்கள் அறிந்ததே. திரு.பஞ்சாட்சரம் அவர்கள் பண்டிதமணி அவர்கள் வாழ்ந்த காலத்தில் பல்லாண்டுகள் தினசரி அன்னாரது இல்லம் வசன்று குருவுக்குச் சிஷ்யன் வசய்யவேண்டிய பணிவிடைகளைத் தவறாது விசய்து எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். நாவலர் காலத்திற்கு முன்பிருந்தே குரு சிஷ்ய பரம்பரை வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்தில் வேரூன்றிவிட்ட வதான்றாகும். அந்தப்பரம்பரை இன்றும் அழிந்துவிடவில்லை என்பதற்கு ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு பண்டிதமணி அவர்கள்மறைந்தானும்அன்னாருக்குச்செய்யவேண்டிய கடமைகளைச் சீடரான பஞ்சாட்சரம் அவர்கள் மறந்திலர். தமது ஸபயருக்கேற்ப அன்பு, பண்பு, அடக்கம், பக்தி குரு விசுவாசம், நேர்மை, ஒழுக்கம் நிறம்பப் வuற்ற திரு. பஞ்சாட்சரம் அவர்கள் ஆசிரியர்களுள் ஒரு மணி ஆசிரியமணி பஞ்சாட்சரம் என்று அன்புடன் குறிப்பிட்டு வாழ்த்துவதில் தினகரன் மகிழச்சியடைகின்றது. ஆசிரியமணி போன்றவர்கள் இருக்கும் வரை பண்டிதமணி போன்றவர்களின் புகழ் நீடு நிலைத்து நிற்கும் வாழ்க பண்டிதமணியின் நாமம்.வளர்கஅபூசியரியமணியின்தொண்டு.
18

ത്തു இதற்குப் பதிலளித்த ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள் தினகரன் ஆசிரியர் அவர்களுக்கு எழுதிய ஒலைவருமாறு.
கனம் ஆசிரியர் அவர்கள்,
தினகரன்,
ஐயா வணக்கம்
நேற்று (22.03.1987) வெளியான ஞாயிறு தினகரன் என்னைப் பெருவியப்பில் ஆழ்த்திவிட்டது. அதுவும் ஞாயிறு வாரமஞ்சரியில் ஆசிரியத் தலையங்கம் எழுதும் அளவுக்கு என்னைக் கொண்டுபோய் உயர்த்தி இருக்கிறீர்கள். என்னில் கொண்ட பற்றினால் "ஆசிரியமணி” என்றபட்டத்தையும் வழங்கிவாழ்த்தியுமுள்ளிர்கள்.
1951இல் தினகரன் அளித்த பண்டிதமணி என்ற பட்டம்தான் பண்டிதர் ஐயாவுக்கு நிலையான முத்திரையாய் அமைந்தது. அவருக்குத் தொண்டராயிருந்த காரணத்தினாலே எனக்கும் ஒரு ஆசிரியமணிப் பட்டத்தைத் தினகரன் வாயிலாக வழங்கிக் கெளரவித்துள்ளீர்கள். உங்களது உளங்கனிந்த இந்தப் பாராட்டுதல்களுக்கு உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எப்படித்தான் நன்றிக்கடனைச் செலுத்தலாம் என்பதில் மிகவும் தத்தளிக்கின்றேன்.
பண்டிதர் ஐயாவின் மேதா விலாசத்துக்கு யான் உறுதுணையாக இருந்தேன் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதனால், அவர் இல்லாத இக்காலத்திலும் அவர் சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேலும் நான் எடுக்க வேண்டும், எடுப்பேன் என்பதைச் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளிர்கள்.
நாம் எம்மால் இன்னுமின்னும் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளப் பண்டிதர் ஐயா அவர்கள் தேவர் உலகில் இருந்தும் நல்லாசி வழங்குவார்களாக.
நன்றியுண், அ. பஞ்சாட்சரக் குருசிஷ்யபரம்பரை
பண்டிதர் ஐயர் அவர்கள் தேவர் உலகில் இருந்தாலும் தன்னை என்றும் ஆசீர்வதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று யாசிக்கும் இந்த ஆசிரியமணியின் குருபக்தியை மகாபாரதத்தில் வரும் ஏகலைவனின் குரு பக்திக்கும் மேலாக எவரும் மதிப்பிடுவார்களானால்
19

Page 16
மிகையான மதிப்பீடாக இருக்கமாட்டாது. பண்டிதமணி அவர்கள் மறைந்து இன்று மூன்று ஆண்டுகள் மறைந்தோடி விட்டன. அன்னாரது சிடன் எனப் போற்றப்படும் ஆசிரியமணி அவர்கள் அல்லும் பகலும் தமது குருவை மறக்காத தன்மைக்கு இலக்கணமாகப் பண்டிதமணி நினைவுமலர் வெளிவருகிறது. "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்றார் வள்ளுவர்.
பண்டிதமணிக்கும் ஆசிரியமணிக்கும் இடையில் உருவான அந்தப் பெரிய தொடர்பை இவ்விடத்தில் ஆராய்வது மிகவும் பொருத்தமானதென நினைக்கிறேன்.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட திருவாவடுதுறை டி. என். இராசரத்தினம்பிள்ளையின் தொடர்பு தனக்கு எப்படி வாய்த்தது என்பதை ஒரு சமயம் நாதஸ்வர மேதை காரைக்குறிச்சி பி.அருணாசலம்பிள்ளை நான் தினகரனில் கடமையாற்றிய காலத்தில் எனக்களித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த சங்கதி எனது ஞாபகத்திற்கு வருகின்றது. பெரிய இடத்துக் கலியாண வீடொன்றிற்குத் திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளைதான் சிறப்புக் கச்சேரி. அக்கலியாண வீட்டில் உள்ளூர் வித்துவான் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளைக்கு முதலில் இராசரத்தினம் பிள்ளையின் சிறப்புக் கச்சேரி நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசித்த காரைக்குறிச்சியார், இராசரத்தினம்பிள்ளையின் சில உருப்படிகளை அப்படியே வாசிக்கிறார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த இராசரத்தினம்பிள்ளைக்கு "யார் பொடியன்; இவன் நல்ல ஞானஸ்தனாக வருவான் போல் இருக்கிறதே என்று தோன்றுகிறது. உடனே பையனை அழைத்துக் குசலம் விசாரிக்கிறார் இராசரத்தினம்பிள்ளை. "பையா என்னுடன் வருகிறாயா" என்று பெரியவர் கேட்கச் சின்னவர் அதற்கு உடன்பட்டு அன்றே அவருடன் சென்று சிஷ்யனாகிவிட்டார்.
இதுபோன்று ஒரு நிகழ்ச்சிதான் பண்டிதமணி அவர்களையும் ஆசிரியமணி அவர்களையும் இணைத்து வைத்தது. 1949ஆம் ஆண்டு சைவாசிரிய கலாசாலையில் அ. பஞ்சாட்சரம் அவர்கள் மாணவராக இருக்கிறார். இலக்கணம் படிப்பிக்கின்றார் பண்டிதமணி அவர்கள். பாடம் முடிவில் கேள்வி கேட்கிறார் ஆசிரியர். மாணவன் பஞ்சாட்சரம் சொன்ன மறுமொழி ஒன்று ஆசிரியரைக் கவர்ந்திழுத்துவிட்டது. மாணவனைக்

SSSSSLSSSMSSL S SLSLSLSLSLSDDSSDDLSSLSLSSLSLSSLSLSSLSSLLSLSSDuSDSDSSSDSDSDSSuuSuuSuuSLuSDD SLuSu u u uuSuuS uuJeSeSeSeBSSAASSA கூப்பிட்டு பலதும் பத்தும் விசாரித்தவர் மறுதினம் தனது சொந்த ஊரான தனங்கிளப்புக்கு வருகிறாயா என்று கேட்கிறார் ஆசிரியர். ஓம் என்று சொல்லி இணைந்துவிட்டார் நல்மாணாக்கன். அன்றிலிருந்தே குருவும் சிஷ்யனுமானார்கள் பண்டிதமணியும் ஆசிரியமணியும். சுமார் நான்கு தசாப்பதங்கள் ஒரு நாளேனும் தவறாது தினசரி குருவைத் தரிசித்துத் தனது பக்தியைத் தெரிவித்தவர் அ. பஞ்சாரட்சரம் அவர்கள். இதன் காரணமாகப் பண்டிதமணி அவர்களுக்கும் அளவுகடந்த விசுவாசம் அவர்மேல் ஏற்பட்டதென்றே கூறவேண்டும்.
ஒருசமயம் பண்டிதமணி ஐயா அவர்கள் சுகயினமுற்றுத் தனியார் மருத்துவமனையில் ஐம்பத்துமூன்று தினங்கள் சிகிச்சை பெற நேர்ந்தது. அப்பொழுதும் இரவும் பகலும் அவருடன் தங்கிப் பணிவிடை செய்து மகிழ்ச்சிகண்டவர் பஞ்சாட்சரம் அவர்கள்.
குரு சிஷ்ய பரம்பரை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மரபு ஒன்று உண்டு. அதற்கமையத் தமது குருவுக்குப் புனலாட உதவிசெய்து, உண்டிபாகம்செய்து கொடுக்கவும் ஆசிரியமணி
தவறவில்லை.
பண்டிதமணி கொடுத்த அந்தஸ்து பண்டிதமணி அவர்கள் வயோதியம் காரணமாக சகல வைபவங்களுக்கும் செல்லமுடியாது நேர்ந்த போதெல்லாம் தமது பிரதிநிதியாக திரு. பஞ்சாட்சரம் அவர்களையே அவர் அனுப்புவதுவழக்கமாயிற்று.
இலங்கைப்பல்கலைக்கழகம் 1978இல் பண்டிதமணி அவர்களுக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்தபோது பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் பண்டிதமணியின் சார்பில் ஆசிரியமணி பங்குபற்றினார் என்றால் பண்டிதமணி ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களுக்குக் கொடுத்த தானம் எத்தகையது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். இது மாத்திரமன்று நாவலர் பெருமானின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கென வித்தியா பகுதியின் மேற்பார்வையில் யாழ். கல்வித் திணைக்களத்தில் இயங்கும் நாவலர் தர்மகர்த்தா சபையில் நாவலர் மாணவர் பரம்பரையில் நீண்ட காலம் அங்கத்தவராக இருந்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். பண்டிதமணி தமது உடல்நலக் குறைவு காரணமாகவும், முதிர்ச்சி காரணமாகவும் சபைக் கூட்டங்களில் பங்குபற்ற முடியாத நிலை
经1

Page 17
ஏற்பட்டதால் தன்னுடைய இடத்துக்குத் தமது மாணவர் திரு. அ.பஞ்சாட்சரத்தைச் சிபார்சு செய்தார். கல்வித் திணைக்களமும் ஏற்றுக்கொண்டது. நாவலர் பரம்பரை மாணவர் சார்பில் குறித்த நாவலர் தர்மகர்த்தா சபையில் திரு. பஞ்சாட்சரம் தொடர்ந்தும் அங்கத்தவராக இருந்துவருகிறார். Y
பண்டிதமணி அவர்களது ஒவ்வொரு எழுத்தும் பொன் பெறும். அவர் எழுதிய கந்தபுராணம் தஷகாண்டம் உரை வெகு பிரசித்தமானது. அந் நூலில் நன்றியுரையில் ஆசிரியர் திரு. அ. பஞ்சாட்சரம் படிக்கிற காலந்தொடக்கம் நிழல் போலப் பிரியாது தொடர்ந்து பல துறையிலும் உதவிவருவது அனைவரும் அறிந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
வேறொரு சந்தர்ப்பத்தில் “30 வருடங்களுக்கு மேலாக என்னுடன் நெருங்கிப் பழகி என்பெயரைக் கொண்ட நூல் வெளியீட்டுச் சபையின் காரியதரிசியாய் என் எழுத்துக்களைப் பத்திரிகையில் வெளியிட்டும் நூல் வடிவு செய்தும் எனக்கு ஓர் ஊன்றுகோல் போன்று இருந்து வருகிறார். எதிர்காலத்திலும் எனது சேவை மேலும் தொடர்வதற்கு இவரின் உதவி இன்றியமையாதது" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
குருபக்தி
பண்டிதமணி அவர்களுக்கு சுன்னாகம் யூரீமத் அ. குமாரசுவாமிப் பிள்ளை அவர்கள், ந. சுப்பையாபிள்ளை அவர்கள் ஆகியோர் நல்லாசிரியர்களாக விளங்கியவர்கள். பண்டிதமணி தமது ஆசிரியர்கள் மீது குருபக்தி நிறைந்தவர் என்று ஆசிரியமணி அடிக்கடி என்னிடம் கூறுவதுண்டு. தகப்பன் சின்னத்தம்பியாரும் தாய் வள்ளியம்மையாரும் பிள்ளை இல்லையே என்று தனங்கிளப்புப் பிள்ளையாரை வணங்கி வாய்த்த பிள்ளையாதலால் கணபதிப்பிள்ளை என்று பெயர் வைத்ததாகவும் அப்பெயரின் தெய்வாம்சம் கண்டு மனமகிழ்வெய்துவதும் ஆசிரியமணி அவர்களிடம் காணப்படும் ஒரு சிறப்பியல்பு.
பண்டிதமணி அவர்களுக்கு இலக்கிய கலாநிதிப்பட்டம் அளித்தமையைப் பாராட்டி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் அவர்களது தலைமையில் 14.08.1978இல் பாராட்டுவிழா நடைபெற்றபோது பண்டிதமணி அவர்கள் தமது நன்றியுரையில் "பறவை போற் பறந்து திரிந்து தேனி போல் ஓய்வு இன்றி
22

உழைத்து எனக்கு அலுவல்கள் பார்ப்பவராய் ஆசிரியர் திரு.அ.பஞ்சாட்சரம் அவர்கள் எனக்கு வாய்த்த அனுமான்” என்று ஆசிரியமணி அவர்களைப் பாராட்டித் தமது அன்பைப் பொழிந்து கொண்டார். பெரியவரின் இந்த அன்புமழையில் சின்னவர் கொடுகிப்போய்விட்டார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது மணிவிழாக் கூட்டத்திற்கு தலைமைவகித்த தினகரன் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கள் ஆசிரியர் பஞ்சாட்சரம் அவர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகையில், "நல்லூர்க் கந்தசாமி கோயிலில் கந்தசுவாமியாருக்கு முன்பாகச் சண்டேசுவரர் எழுந்தருளி வருவது போல சங்கங்கள், சபைகளை நோக்கி அதிபர் பஞ்சாட்சரம் வருகிறார் என்றால் பண்டிதமணி வருகிறார், பண்டிதமணியின் குரல் வருகிறது என்பதுதான் அர்த்தம்” என்று பலத்த கரகோஷத்திற்கிடையில் கூறியதும் ஈண்டு ஞாபகத்திற்கு வருகிறது.
கோயில் மணிகளுக்கெல்லாம் முன்னதாக ஆசிரியமணி அவர்களின் நாளாந்த அசைவு யாழ் குடாநாட்டில் நிகழ்ந்துவிடும். அதிகாலை மூன்று மணியிலிருந்து இரவு பதினோரு மணிவரை தமிழ்ப் பணியையே முழுப் பணியாகக் கொண்டு நம்மிடையே வாழும் ஒரு சைவப் பெரியாராகிய ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்களை நான் காண்பதுண்டு. உண்மையில் அவர் சுறுசுறுப்புக்கொரு தேனி தான். தமிழ்த் தேனே அவர் உணவு. பண்டிதமணி எனும் கொம்புத்தேனில் இந்தத் தேனி தோய்ந்துவிட்டதால் இதன் உடலும், உள்ளமும் இன்று தேனாகவே தமிழ் நெஞ்சங்களில் இனிக்கின்றது. பண்டிதணி அவர்கள் தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து அருகிலுள்ள உரும்பிராய் கருணாகரப் பிள்ளையாரையும் வணங்குவது வழக்கம் என்றும் ஆசிரியமணி என்னிடம் பல முறை கூறி மகிழ்ந்ததுண்டு. பண்டிதமணி ஆசிரியமணி அவர்களை சைவம் என்றே அழைப்பாராம். உண்மையில் அவர் 6905 மெத்த ஆசாரசீலரான சைவம்தான்.
யான் பண்டிதமணி அவர்களின் எழுத்தோவியங்களைத் தினகரன் மூலம் படித்துப் பயன்பெற்றவனே தவிர அவரிடம் நேரடியாகப் பயின்றவன் அல்ல. ஆனால் ஆசிரியமணி அவர்கள் எனக்குக் குடும்ப நண்பராக வாய்க்கப் பெற்றவர். உண்மையான விசுவாசி. தனது மனைவி
33

Page 18
மக்களுக்கும் மேலாகத் தனது நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காத பண்பு திரு. பஞ்சாட்சரம் அவர்களுடையது என்று எனது இனிய நண்பர் தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அடிக்கடி என்னிடம் கூறுவதுண்டு. ஆசிரியமணி அவர்களின் அப்பெரு முயற்சியால் இன்று பண்டிதமணி நினைவு மலரும் பண்டிதமணியின் செந்தமிழ்க் களஞ்சியமும் அச்சு வாகனமேறியுள்ளன. தினகரன் தனது ஆசிரியத் தலையங்கத்தின் மூலம் எதை எதிர்பார்த்ததோ அதை ஆசிரியமணி தினசரிசெய்துகொண்டே இருக்கின்றார்.
“ஒருலபால்லாப்பும்வராது”
“பண்டிதர் ஐயாவைச் சார்ந்ததன் மூலம் அகில உலகத் தமிழ் மேதைகளுக்கெல்லாம் அறிமுகமாகினேன். அதுவே நான் வாழ்க்கையில் அடைந்துள்ள பெரும் பாக்கியம் என்று தனது வாழ்வில் பூரண மனநிறைவுடனும், சிரித்த முகத்துடனும் வாழ்பவர் ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள். இவர் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபைக்கு மாத்திரம் தான் செயலாளர் அல்ல. ஊரில் எவர் எவர் நூலோ மலரோ வெளியிட விரும்பினாலும் அவரவர்களுக்கெல்லாம் மனமுவந்து உதவிசெய்யும் மாண்பும் இவருக்குரியது. இவர் கைபட்டு வெளிவந்துள்ள பிரசுரங்கள் சுமார் ஐநூறுக்கும் மேலாகிவிட்டன. கும்பாபிஷேக மலர்கள், ஞாபகார்த்த வெளியீடுகள் என்பனவும் இவற்றுள் அடங்கும். பண்டிதர் ஐயாவின் கருணையான பார்வைக்குட்பட்டவர்கள் எல்லோரும் மெத்த நல்லாக இருப்பதாக ஓர் அன்பர் கூறினார். பெரியவரின் சமையற்காரர் கூட ஆல் போற்றழைத்து அறுகுபோல் வேரூன்றிச் சிறப்புடன் வாழ்வதாக அந்த அன்பர் சொல்லி மகிழ்ந்தார். பண்டிதமணியின் உற்ற சீடரான ஆசிரியமணி பஞ்சாட்சரம் அவர்கள் பெற்றுள்ள பெருவாழ்வு பண்டிதமணியின் புகழ்போல் காலம் காலமாக நிலைத்து நிற்கும். தமிழ் அன்னையின் ஆசீர்வாதம் அன்னாரின் செல்வங்களுக்கும் உண்டு. வாழ்க பண்டிதமணியின் பரம்பரை. வளர்க ஆசிரியமணியின் திருத்தொண்டு. ஒரு பொல்லாப்பும் வராது.
- நன்றி தினகரன்
(W325, Øé?, VS9642)
egaastö - 6rsöoÖurr sot-srrornr (Uாராளுமன்ற சிரேவித்ட அறிக்கையானர்)
— 2

ce5äf*iraI965faffa5ír ஆக்கங்களில்
శ6లి.--- s:: ... '

Page 19
உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் வரலாறும் மகத்துவமும்
அன்ன்ைபோம்வன்வினையோம்அண்ணைவயிற்றிற்பிறந்த தோன்ைைபோம்போகாத்துயரம்போம்-கன்ை
குணமதிகமார்கருணைக்கோபுரத்துர்ைமேலும் മമ്മിയമ്മമ6ിമഭ്രൂ,
ஓங்கார மூர்த்தியாகிய விநாயகப் பெருமானின் திருப்பாதங்களை நினைத்துக் கைகூப்பித் தொழுதால், துன்பம், தீவினை, தாய்வழித் தொல்லை, நீங்காத துயரம் இவைகள் யாவும் நீங்கி நன்மையதிகமாம். தொழுவார் துயர் நீக்கும் சர்வவல்லமையும் பொருந்திய உரும்பிராய் பரத்தைப்புலக் கருணாகரப் பிள்ளையாரைக் கைதொழும் அடியார்களது துன்பம் யாவும் பகலவனைக் கண்ட பணிபோலப் பறந்தோடிவிடும். நல்ல வரங்களும் கல்விப் பெருக்கும் சித்திக்கும்.
“ாற்குஞ்சரக்கண்று கண்ணிற்கைைஞானம்
தற்குஞ்சரக்கண்று காண்”
என்ற உமாபதியார் வாக்கு நன்கு சிந்திக்க வேண்டியது. நினைப்பவர் மனம் கோயிலாய்க் கொள்ளும் விக்கினேஸ்வரப் பெருமான் திருவருள் ஒருவருக்குக் கைகூடுமானால் அவருக்கு எவ்விதத் துன்பங்களும் இல்லையாம்.
“எப்போதகத்தும் நினைவார்க்கிடரின்னைக்
தைப்போதகத்தின்கழன்”
இறைவனின் அளவுகடந்த ஆற்றல்களில் அடியார்களின் இடையூறை அகற்றி ஆளும் ஆற்றலும் ஒன்றாகும். இவ்வாற்றல் மிக்கிருப்பவரே விக்கினேஸ்வரன். தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாத பெருமையையுடையவராதலின் விநாயகக் கடவுள் என்றும் பெயர் பெறுகிறார். உரும்பிராய் கருணாகரப் பிள்ளையாரும் தமக்கு மேலே ஒரு தலைவரின்றி ஆன்ம கோடிகளின் இடையூறுகளைப் போக்கி இரட்சிக்கின்றார்.
ஆலய வரலாறு
பல்வகைச் செல்வங்களும் மலிந்து விளங்கும் உரும்பிராய் பதியின் கற்பகமெனக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்றார் கருணாகரப் பிள்ளையார். கருணாகர ஐயர் என்பவரால் பூசிக்கப்பட்டும்,
26

பாதுகாக்கப்பட்டும் வந்தமையால் கருணாகரப் பிள்ளையார் என்ற பெயர் வந்ததென்பர் பெரியோர்.
உரும்பிராய்ப் பதியின் மேற்கு எல்லையில் சைவாசாரம் மிக்கவர்களும், விருந்தோம்பும் சிறப்பை இயல்பாகப் பொருந்தியவர் களும், இசைவல்லுநர்களும் நிறைந்து விளங்கும் இணுவிலம்பதியின் கிழக்கு எல்லையில் மருத நிலங்களாலும், சோலைகளாலும் சூழப்பட்டு அமைந்திருக்கிறது கருணாகரப் பிள்ளையார் ஆலயம். ஆலயம் இருக்கும் குறிச்சி பரத்தைப்புலம் எனப்படும். எனவே உரும்பிராய் பரத்தைப்புலக் கருணாகரப் பிள்ளையார் என்னும் பெயர் சிறப்பாக வழங்கப்படலாயிற்று.
யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த தமிழ் அரசனான விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்திற்றோன்றிய பூர்வ ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரச மரத்தின் கீழ் ஒரு பிள்ளையார் இலிங்கம் இருந்ததாகவும், அது தோன்றிய காலம் எவருக்கும் தெரியாதென்றும் கூறுவர்.
பாட்டசாரிகளும், கிராமவாசிகளும் இந்த இலிங்கத்தைப் பூசித்து வழிபட்டனரென்றும், அந்த வழியால் ஆசிரய பரிவர்த்தனஞ் செய்து வந்தவரான கூழங்கைச் சக்கரவர்த்தி இலிங்கத்தையும், எழில் நிறைந்த காட்சிகளையும் கண்டு அந்த இலிங்கத்தைப் பூசித்து பெரும் பேறு பெற்றாரென்றும், அதனால் பெருமகிழ்ச்சியுடையவராய்ச் செங்கற்களால் அவ்விடத்தில் ஓர் ஆலயத்தை அமைத்தாரென்றும், செங்கற்களால் ஆன ஆலயம் ஒல்லாந்தரால் தகர்க்கப்பட்டதென்றும், பின் குழைமண் கொண்டு கருணாகரர் என்னும் பெருடைய ஐயரவர்கள் அதனைப் புதுக்கி அமைத்தார் என்றும் கர்ணபரம்பரையாய்ப் பேசப்பட்டு வருகிறது.
யூரீ கருணாகரப் பிள்ளையார் ஆலயத்துக்கும் கருணாகரத் தொண்டைமானுக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டென்றும், மிகமிகப் பழமையான ஆலயம் இது என்றுங் கூறுவர்.
அந்தணர்பரம்பரை
கருணாகர ஐயர், பரம ஐயர், அப்புக்குட்டி ஐயர் முதலானோர்
இவ்வாலய வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தார்கள். பிரம்மறி
அப்புக்குட்டி ஐயர் அவர்கள் காலத்தில் மகாமண்டபம், நிருத்தமண்டபம்,
27

Page 20
தம்பமண்டபம் என்பன அமைக்கப்பெற்றன. அக்காலங்களிலும் நித்திய, நைமித்திக பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1910ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ம் தேதி உரும்பிராய் பெரியாரும், பிரபல வைத்தியருமான வயிரவநாதர் வல்லிபுரம் என்பவர் கொடி ஸ்தம்பம் ஒன்றினைச் செய்து கொடுத்ததுடன், விழாவையுமேற்று நடத்திவந்தார். அன்று தொடக்கம் ஆவணிச் சஷ்டியில் துவஜாரோகணத்துடன் விழா ஆரம்பமாகிமகோற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன.
லயாற்காம்ை
அப்புக்குட்டி ஐயரவர்களது சிரேட்ட புத்திரரே வைத்தீஸ்வரக் குருக்கள் (சின்னையா) அவர்கள். உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலய வளர்ச்சியில் பிரம்மறி வைத்தீஸ்வரக் குருக்கள் காலம் பொற்காலமாகும். பெரிய நீதிமானான வைத்தீஸ்வரக் குருக்கள் சிறந்த கல்விமானுமாவர். வேதங்கள், ஆகமங்கள், புராணங்களை நன்கு கற்று, ஆசார ஒழுக்கங்களில் உயர்ந்தவராய் அந்தணர்க்கரசனென வாழ்ந்தார்கள். மறந்தும் பிறர்க்குக் கேடு எண்ணாத மாண்பினர். புராண படனங்களிற் பங்குபற்றி வாசிக்கும்போதும், உரை விளக்கம் செய்யும் போதும் அறிஞர்களையெல்லாம் அப்படியே கொள்ளைகொண்டு விடுவார். குருக்கள் அவர்கள் வாசிக்கும் போதும், உரை விளக்கம் செய்யும்போதும் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையவர்களும், நாவலர் பெருமானும் நினைவுக்கு வருவார்கள். எத்துணைக் காலம் திருப்பித் திருப்பிப் படிக்கினும், கேட்கினும் எட்டுணையேனும் தெவிட்டாது தித்தித்தமுதூறும் அத்தியற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாகிய கந்தபுராண சமுத்திரத்தில் மூழ்கித் திளைத்தவர்களே திரு. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள்.
சாதிமானும், நீதிமானுமான ஐயரவர்கள் தமது உடல், பொருள், ஆவியைக் கருணாகரப் பிள்ளையார் ஆலய வளர்ச்சிக்கே அர்ப்பணம் செய்தார்கள். எடுத்த காரியங்களைச் சிறப்பாகவும், சிரமமின்றியும், விரைவாகவும் செய்யும் தனியாற்றல்கள் குருக்களவர்களோடு கூடிப் பிறந்தவை. வைத்தீஸ்வரக் குருக்களவர்கள் விட்ட ஒவ்வொரு மூச்சும் கருணாகரப் பிள்ளையார் ஆலய வளர்ச்சிக்கென விட்ட மூச்சாகவே இருக்கும். இவரது காலத்தில் வசந்தமண்டபக் கொட்டகை, தம்பக் கொட்டகை முதலிய திருப்பணிகள் நிறைவேறுதற்கும், பெறுமதியும் பேரழகும் வாய்ந்த சித்திரத்தேர் உருவாதற்கும் காரணமாயிருந்தார்கள். திரு. வைத்தீஸ்வரக் குருக்களவர்களது காலம் உண்மையிலேயே பொற்காலம் தான். இசை ஒருவரின் உள்ளத்தை எவ்வாறு தூய்மை

செய்யுமோ அதுபோல இசைமேதையான பூரீ வைத்தீஸ்வரக் குருக்களவர்களின் நற்குண நற்செயல்கள் அடியார்களின் உள்ளத்தை அப்படியே உருக்கிவிடுவன. அவரது இடம் எவராலும் நிரப்ப முடியாத சிறப்புவாய்ந்த தனியிடம். அவர் மனிதரில் தேவர்.
அற்புதங்கள்
0.
O2.
O3.
கருணாகரப் பெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்த பரமையர் சிவபதமடைந்த பின்னர் ஐயரவர்களது பத்தினியார் கருணாகரப் பெருமானுக்குத் தம் குறைகளை முறைப்பட்டு வந்தார். ஒருநாள் ஆலயக் கதவு திடீரெனத் திறக்கப்பட்டதாம். பெரியவர் ஒருவர் தோன்றி"நீஒன்றுக்கும் பயப்படாதே" என்று ஆறுதல் கூறினாராம். முற்காலத்தில் இவ்வாலயம் டச்சுக்காரராற் சிதைக்கப்பட்டிது. மூலமூர்த்தியைத் தூக்கிச் சென்ற சிலருக்குத் தூக்கும் சக்தி குறையவே, அவ்விடத்திலேயே வைத்துவிட்டுப் போனார்கள். நிலத்திலே புதையுண்டது அவ்விக்கிரகம். நிலத்தையகழும் போது விக்கிரகத்தில் ஆயுதம் பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டுப் பாயவே, தொழிலாளர்கள் தம் கவனக் குறைவை இறைவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டதாயும் கர்ணபரம்பரைக் கதையுண்டு.
ஈழநன்னாட்டிற் பல சிவாலயங்கள் பிரசித்தி பெற்றிருந்தபோதும் சாசனங்களோ, கல்வெட்டுக்களோ பல இடங்களில் இல்லை. உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயத்தில் பழமைவாய்ந்த கல்வெட்டு உண்டு. இக் கல்வெட்டைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். இலங்கைப் பல்கலைக்கழக சரித்திரத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திரு. கா. இந்திரபாலா அவர்கள் கல்வெட்டு முழுவதையும் நன்கு பார்வையிட்டு, எழுத்துக்களைப் படியெடுத்துத் தமது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இக் கல்வெட்டு சரித்திரப் பிரசித்தி வாய்ந்த உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயத்தின் பழைமைக்குத் தக்கதொரு சான்றாய் விளங்குகின்றது. .
கருணாகரப் பிள்ளையாரின் சிறப்புப் பற்றிப் புலவர் பலர் பதிகங்கள் பாடியுள்ளனர். நீர்வேலி, இணுவில் தொடர்புடைய சிதம்பரநாதப் புலவர் ஆசுகவி (கல்லடி) வேலுப்பிள்ளை முதலியோர்கள் பாடல்களை இன்னும் யாம் பெறக்கூடியதாயுண்டு. (கல்லடி) வேலுப்பிள்ளை அவர்கள் தமது நூலின் காப்பாகப் பாடிய செய்யுள்களில் ஒன்று வருமாறு.
E 39

Page 21
afvalpsubtropoba-Dao 68gatieDazwangpoogpuff Goldsy diggøføSAMgaflóðaýlazów - avguồuffazoøre பாகும்புரமுரும்பைப் பஞ்சாக்கரUரண்மேற் umbúðgaslonosodum.
என்று பாடிமேலே செல்கின்றார்.
வாண்னேநினங்கயற்பூவே விளம்பிற்வியாவிந்தவிரு மின்னேயடியருணவிணக்கேவினைவிக்கவந்த exaiðærødamótuargoaæduaflaimaasosfvílutb LMTTMLL rTMMMrrTTTCLCMLCarLLTLTTMTCaLGCLMTLLTLLLLLLLLS
இவ்வாறு ஆசுகவி வேலுப்பிள்ளை அவர்களது பாடல்கள் ஒவ்வொன்றும் சிறந்தனவாயும், சிலேடைக் கருத்துநடையுடையனவாயும் திகழ்கின்றன. ஆசுகவி அவர்கள் கருணாகரப் பெருமான் மீது கீர்த்தனங்களும் பாடியுள்ளார்.
உற்சவச்சிறப்பு
ஆவணிபூர்வபக்கச் சதுர்த்தியை முதலாகக் கொண்டு, ஆவணிச் சஷ்டியில் துவஜாரோகணமாகிப் பத்து நாட்கள் மஹோற்சவம் நடைபெறும். அடியார்களுக்கு ஆனந்தமான காலம். கருணாகரன் கருணை மழை பொழியும் நாட்கள். அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களைப் பூசைகள் செய்வித்தும், அங்கப் பிரதசுஷ்ணம் செய்தும், விரதமிருந்தும், காவடி முதலியன எடுத்தும் நிறைவேற்றுவர். மெய்யடியார்கள் எங்கே நினைப்பினும் அங்கே வந்து எதிர் நிற்பார் கருணாகரப் பிள்ளையார். அவரருளை வேண்டி உரும்பிராய், இணுவில், கோண்டாவில் உட்படப் பல பதிமக்களும் ஓடோடி வருவர். ஆலயத்துக்கு அயலில் உள்ள கிணற்றில் நீராடி, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தைத் தரித்தவாறு வழிபடுவதில் அடியார்களுக்கு ஒரு பேரின்பம். அருட் கருணாநிதியாகிய கருணாகரன் தம்மை வழிபடுபவர்களுக்குக் கருணை மழை பொழிந்துகொண்டேயிருக்கின்ற காட்சியை இரதோற்சவ விழர காட்டுவதாயமையும். சித்திர வேலைப்பாடமைந்த சுந்தரத் தேரில் கருணாகரப் பெருமான் ஆரோகணித்து வீதிவலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இக்காட்சிகளை கண்டவர்களும், காண இருப்பவர்களும் புண்ணியசாலிகளே.
சிவநாமமும்திருவிளக்கேற்றனும்
சமீப காலமாக ஆலயங்களிற் கூட்டுப்பிரார்த்தனை என்றும் பஜனைகள் என்றும் நடைபெறுகின்றன. ஆயின் இத்தொண்டு மெத்தப்
SSSSSSSSSSMMSSSL L000L LASSSAAAASAASSAASSA

பழங்காலத்திலேயே அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னரேயே கருணாகரப் பிள்ளையார் கோயிலில் ஆரம்பமாகிவிட்டது. திரு. த. முருகேசு அவர்கள் அன்றெடுத்த முயற்சி இன்றும் நடைபெற்று வருகின்றது. வெள்ளிதோறும் மாலைவேலைகளில் கருணாகரப் பெருமானுக்குப் பூசையாவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன் இச் சிவநாம ஒலி ஆரம்பித்து நடைபெறும். தெய்வாருக்கிரகத்தை வேண்டி நடைபெறும் சிவநாம பஜனையில் ஈடுபட்டோர் அனைவரும் கருணாகரன் திருவருளால் சீரும் திருவும் பொலிந்து விளங்குகின்றனர். இச் சிவநாம பஜனை வெள்ளிதோறுமன்றி மஹோற்சவ காலங்களிலும் இடம்பெறும். அடுத்துள்ள சிதம்பரசுப்பிரமணியர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும், பர்வத பத்தினி அம்மன் கோயிலில் திங்கட்கிழமைதோறும் இச் சிவநாம பஜனை பக்திசிரத்தையுடன் நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் இவ்வாலயங்களில் திருவிளக்கேற்றும் நிகழ்ச்சியும் மறக்கமுடியாத ஒன்றாகும். மூன்று ஆலயங்களிலும் திருவிளக்கிடும் பணி நீண்ட காலமாகத் தினசரி முட்டின்றி நடைபெற்று வருகின்றது. எந்தப் பஞ்சமும் இத்திருப்பணியைத் தோல்வியடையச் செய்யவில்லை.
திருப்பணிச்சபை
24.05.1959இல் திருப்பணிச் சபை இராசவாசல் முதலியார் திரு. வ. பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் ஆம்பிக்கப்பெற்றது. அன்பர்களது உதவியுடன் ஆலயத்தில் திருப்பணிகளை நிறைவேற்றுதே இத்திருப்பணிச் சபையின் முக்கிய நோக்கமாகும். சிவரீ வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களது ஊக்கத்தினால் உண்டாக்கப்பட்டதே இத் திருப்பணிச்சபை ஆகும்.
"கருணாகரன் பாதம் கனவிலும் துணை செய்யும்”
- ബff് ിഞ്ഞുണ്ണuff് ീമസി
@ിUന്നില്ക്ക് മിമ uബ്
2227s
−ത്ത് 81 −ത്ത

Page 22
இலக்கிய கலாநிதி
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை இவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
இந்துசமுத்திர நித்திலம் எனத் திகழும் ஈழமணித் திருநாட்டின் இருதயஸ்தானம் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் நீர்வளம், நிலவளம் மிக்க பகுதி தென்மராட்சி. தென்மராட்சியைச் சேர்ந்த தனங்கிளப்பு என்னும் மருதநிலப் பதியில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளார் காரைத்து விநாயகர்.
தென்மராட்சிப் பிரிவில் கல்வி நலஞ்சான்ற மக்கள் வாழும் இன்னொரு பதி மட்டுவில். உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பண்டிதர் வே. மகாலிங்கசிவம் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக்களைத் தந்த பதி மட்டுவிற் பதி. மட்டுவிலில் தருமர் என்று அன்போடு அழைக்கப்பெற்ற சின்னத்தம்பி அவர்களும், தனங் கிளப்பு முருகர் மகளான வள்ளியம்மையாரும் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சிறப்புடன் வாழ்ந்த இலட்சியத் தம்பதி.
இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றில் நின்ற துணையென வாழ்வாங்கு வாழ்ந்த இவர்களைப் புத்திரபாக்கியம் இல்லையே என்ற கவலை பெரிதும் வாட்டியது. வள்ளியம்மையார் பெருங் கருணைத் தடங்கடலாகிய காரைத்து விநாயகரிடம் புத்திர பாக்கியம் வேண்டிப் பெருந் தவம் புரிந்தார். குலதெய்வமான காரைத்து விநாயகரின் அருளாணை பெற்றுப் பிரயாண வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் தோணி மூலம் சிதம்பர தல யாத்திரையை மேற்கொண்டார் வள்ளியம்மையார். சர்வலோகநாயகரான சிதம்பரநடராசப் பெருமானை வேண்டி அங்கும் தவமிருந்தார். வேண்டுவார் வேண்டுவதை வேண்டியாங்கு ஈந்து அருள்புரியும் சிவகாமி அம்பாள் சமேதரான சிதம்பர நடராசப் பெருமானின் தரிசனத்தைப் பூர்த்திசெய்து கொண்டு மீண்டார். தனங்கிளப்புப் பிள்ளையாரைத் தொடர்ந்தும் வேண்டுதல் செய்துவந்தார்.
32

இவ்வாறு கடுந்தவம் புரிந்த காரணத்தினால் சென்ற விகாரிக்கு முந்திய விகாரி வருடம் ஆனி மாதம் 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 42 நாழிகை 40 விநாடி அளவில் (27.06.1899 செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி சதயப் பெருநாளில் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார் வள்ளியம்மையார். தந்தையாரான சின்னத்தம்பியார் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சந்தோஷ மிகுதியால் துள்ளிக்குதித்தார். கணபதியின் திருவருளை முன்னிட்டுப் பிறந்த அக் குழந்தைக்குக் கணபதிப்பிள்ளை என்று நாமகரணமும் செய்தனர். (மரபுவழிப் பெயர் சட்டநாதர்) அவரே இலக்கிய கலாநிதி பண்டிதமணி. சி.கணபதிப்பிள்ளை அவர்கள்.
1902ஆம் ஆண்டு மாசிச் சிவராத்திரியன்று திருமதி. சின்னத்தம்பி வள்ளியம்மையார் தமது முப்பதாவது வயதில் திடீரெனக் கண்ணை மூடிவிட்டார். சிவராத்திரியில் சிவகதிசேர்ந்த புண்ணியவதி வள்ளியம்மை என்று உலகம் அம்மையாரைப் பாராட்டியது.
மட்டுவில் அமெரிக்கமிஷன் பாடசாலையில் (இப்பொழுது சந்திர மெளலிச வித்தியாசாலை ஆரம்பக் கல்வியைப் பெற்ற கணபதிப் பிள்ளைக்குப் படிப்பில் தடை ஏற்பட்டது. உரையாசிரியர் ம. க. வே. அவர்களது பிள்ளைகளுடன் கூடிக்குலாவியும் சேர்ந்து படித்தும் வந்தார் கணபதிப்பிள்ளை.
1912இல் தந்தையார் சின்னத்தம்பியார் மகன் கணபதிப்பிள்ளை யையும் அழைத்துக்கொண்டு தனங்கிளப்புக்குப் போய் அங்கு குடியேறினார். அறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப்புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோர்களிடத்தில் கணபதிப்பிள்ளை பாடங் கேட்டார். 1917இல் நாவலர் காவிய பாடசாலையிற் சேர்ந்து சுன்னாகம் பூரிமத். அ. குமாரசுவாமிப் புலவர், வித்துவான் ந. சுப்பையாபிள்ளை முதலான பேரறிஞர்களிடம் பயின்று 1926இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதரானார். நாவலர் தமையனார் புத்திரர் ரீமத் த. கைலாசபிள்ளை, வித்தகம் ச.கந்தையாபிள்ளை (தென் கோவை பண்டிதர் ச.க) உள்ளிட்டவர்களது நல்ல கல்வித் தொடர்பு பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு மேலும் கல்வித் துறையில் ஊக்கத்தை நன்கு ஏற்படுத்தி விட்டது எனலாம். நாவலர் காவிய பாடசாலையில் இவரோடு சேர்ந்து
33

Page 23
கற்றவர்களில் மட்டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் வட்டுக்கோட்டை சிவறி குருமூர்த்தி ஐயரவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். கணபதிப்பிள்ளை அவர்கள் மிகவும் சிறப்பாகட் பண்டித பரீட்சையிற் சித்தியெய்தியமையைப் பாராட்டி மானேஜர் ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் மாணவரான கணபதிப்பிள்ளைக்குட் பொற்பதக்கம் ஒன்றைச் சூட்டி உற்சாகப்படுத்தினார். மட்டுவிலில் பெருஞ்சபை ஒன்றைக் கூட்டிப் பதக்கத்துக்கு ஏற்ற சங்கிலியைப் பரிசாக அளிக்க ஒழுங்கு செய்திருந்தவர் மட்டுவில் செல்லப்பா அவர்கள். திரு செல்லப்பா அவர்களை"லோச் செல்லப்பா” என்றே அழைப்பது வழக்கம்
காரைநகர் அருணாசல உபாத்தியாரின் ஆலோசனைப்படி ஆசிரிய பயிற்சிபெறும் பொருட்டு 1927ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சேர்ந்தார் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள். எதிர்பாராதவிதமாக அதேயாண்டில் தந்தையை இழந்து தனிமரமானார். பயிற்சி பூரணம் அடைந்தது. 1929இல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை விரிவுரையாளர் பதவி இவரைத் தேடிவந்தது.
இவர் சைவாசிரிய கலாசாலை விரிவுரையாளர் பதவியை அலங்கரித்த முப்பது ஆண்டுகளும் தொடர்ந்து வந்த காலமும் சைவ தமிழ் வளர்ச்சியின் பொற்காலம் எனலாம். மிகவும் கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் பொருந்தியவரான மயிலிட்டி திரு. சி சுவாமிநாதன் B.A அவர்கள் அதிபர். மெளனதவமுனிவரான யூரீ. பொ கைலாசபதி அவர்கள் உபஅதிபர். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையை தலைமைப் பாடசாலையாகக் கொண்டு ஊர்கள்தோறுப சைவப் பாடசாலைகளை நிறுவிய பெருமையும் சைவ அநாதசாலையை நடத்திய சிறப்பும் சைவவித்தியா விருத்திச் சங்கத்துக்கு உண்டு சைவவித்தியா விருத்திச் சங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தவ சைவப் பெரியார் அப்புக்காத்து திரு. சு. இராசரத்தினம் அவர்கள் நாவலருக்குப் பின் நமக்கோர் காவலர் திரு. சு. இராசரத்தினம் அவர்கள் என்பார்கள். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள் நடத்திவந்த மும்மொழிக் காவிட பாடசாலை அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகம் போல விளங்கியது.
மெளனதவ முனிவரான உபஅதிபர் aj. QLIT. கைலாசப; அவர்களது நெருங்கிய தொடர்பு தனி இலக்கிய உலகில் சஞ்சார செய்து கொண்டிருந்த பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களைச் சம
3.

உலகுக்கும் இழுத்துவிட்டது என்றே கூறலாம். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றவர்களுக்கெல்லாம் பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள் "பண்டிதர் ஐயா"வாகவே காட்சி அளித்தார்கள். சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கல்விக்கூடங்களில் நல்ல வரவேற்பும் இருந்தது.
பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்க வளர்ச்சிக்கு உழைத்த உழைப்புமகத்தானது. கலா நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
சைவாசிரிய கலாசாலையில் பதவி வகித்த காலங்களிலும் சரி, அதன் பின்னரும் சரி அயல்நாட்டு அறிஞர்கள், விசேடமாகத் தமிழ்நாட்டு அறிஞர்கள் ஈழத்துக்கு விஜயம் செய்த காலங்களில் பண்டிதமணி அவர்களைக் கண்டு கலந்துரையாடி அவரது கருத்துக்களை அறிந்து மிகவும் மகிழ்ந்ததுண்டு.
ஈழத்துப் புலவர்களது உண்மைச் சரித்திரங்களை நிலைநாட்டிய பெருமைக்கு உரியவர்கள் பண்டிதமணி அவர்களே. நாவலர் பெருமானில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களான பண்டிதமணி அவர்கள், நாவலர் பெருமானின் எழுத்துக்களையெல்லாம் எழுத்தெண்ணிப் படித்து அவர்களது சரித்திரத்தையும் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களது சரித்திரங்களையும் ஆராய்ந்து பல கட்டுரைகளாகத் தந்துள்ளார்கள். கலைக் களஞ்சியத்தில் நாவலர் பற்றியும், சிதம்பரம் கும்பாபிஷேக மலரில் ஞானப்பிரகாச முனிவர் குறித்தும், கலைமகள் மலரில் பஞ்சகன்னிகைகள் என்ற தலைப்பிலும் எழுதிய கட்டுரைகள் விலைமதிக்க ஒண்ணாதவை.
இலக்கிய சம்பந்தமாகவும், சமய சம்பந்தமாகவும் பண்டிதமணி அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆயிரத்துக்கு மேல் என்று துணிந்து கூறலாம். பண்டிதமணி அவர்கள் எழுதிய அணிந்துரைகள், வாழ்த்துக்கள் பல நூற்றுக்கணக்கானவை. அவர்களது தனிநடையை வாசித்து மகிழ்வதற்கென்றே ஒரு பெருங் கூட்டம் இருந்தது. அன்னவரது ஆக்கங்கள் இருபத்துமூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசில்களைப் பெற்ற நூல்களும் இவற்றுள் அடங்கும். ஏனைய கட்டுரைகளும் நூலுருவம் பெறவுள்ளன என்பது நம்பிக்கை.
35

Page 24
"கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும்" ஆற்றல்மிக்கவர்களான பண்டிதமணி அவர்களது சமயம், இலக்கியம், சமூகம் சம்பந்தமான பேச்சுக்கள் ஈழத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று எடுத்துச் சொல்லும் பண்டிதமணி அவர்களின் மதியினைப் பாராட்டாமல் யாருமே இருந்ததில்லை.
1951இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் தமிழ் பற்றிய பண்டிதமணியின் உரை உச்சமாயமைந்தது. இலங்கை இந்தியப் பத்திரிகைகள் பண்டிதமணி அவர்களின் பொருள் பொதிந்த பேச்சினை மிகவும் பாராட்டி எழுதின; கல்விமான்கள் வியந்தார்கள். “பண்டிதமணி" என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. இப்பொழுது அவர்கள் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. 1959இல் ஓய்வுபெற்றார்கள். w
பலபல சந்தர்ப்பங்களையொட்டிப் பண்டிதமணி அவர்கள் கவிதைகளையும் செய்திருக்கின்றார்கள். காலகதியில் அவர்களது கவிதைகள் யாவும் ஒன்றுசேர்க்கப்பட்டு நூலுருவம் பெறக்கூடும். தமது குலதெய்வமான காரைத்து விநாயகர் மீது அவராலே பாடப்பெற்ற ஊஞ்சற்பாக்கள் பக்திச்சுவை நனிசொட்டுவன.
பண்டிதணி ஓய்வுபெற்றசமயம் திருநெல்வேலியிலும், மட்டுவிலிலும், யாழ்நகர மண்டபத்திலும் பெருவிழாக்கள் நடந்தன. இக்காலத்தில் மட்டுவிலில் அமைக்கப்பெற்ற பண்டிதணி மணிமண்டபம் இப்பொழுதும் பூரண பொலிவுடன் விளங்குகிறது. நூல் வெளியீட்டு விழாக்களோ அனேகம். கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரை நூல் வெளியீட்டு விழா மிகமிக உச்சம்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களினால் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை விழாவிலும், பேராசிரியர் ஆ.விமயில்வாகனம் அவர்களினால் பேராதனைப் பல்கலைக்கழகக் கலை மண்டபத்தில் இடம்பெற்ற கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரைநூல் வெளியீட்டு விழாவிலும், சைவாசிரிய கலாசாலை முன்னைநாள் அதிபர் திரு. சி.சுவாமிநாதன் அவர்களினால் வணிணை வைத்தீஸ் வர வித்தியாலயத்தில் நடாத்தப்பெற்ற கந்தபுராணம் தக்ஷகாண்டம்
36

உரைநூல் சிறப்பு விழாவிலும் பண்டிதமணி அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள். இவற்றைவிட வேறுபல சந்தாப்பங்களிலும் பொன்னாடை மரியாதைகள் இவருக்குக் கிடைத்தன.
பிற்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தினால் பண்டிதமணி அவர்களுக்கு வழங்கப்பெற்ற பட்டம் “இலக்கிய கலாநிதி" என்பதாகும். இன்னும் எத்தனை, எத்தனையோ பட்டங்கள் எல்லாம் இடையில் வந்து அவரைச் சேர்ந்துகொண்டன. பட்டங்கள் அவரைத் தேடிவந்த காரணத்தினால் அவர்கள் ஒரு நொடிப்பொழுதாவது பெருமிதம் அடைந்ததுமில்லை; இறுமாந்ததுமில்லை.
தமக்குக் கிடைத்த பொன்னும் புகழும் குலதெய்வமான காரைத்து விநாயகப்பெருமானும், மட்டுவில், மருதடி, பனையடி விநாயக மூர்த்திகளும் அநுக்கிரகித்தவை என்றும், எல்லாம் அத் தெய்வங்களுக்கே உரியவை என்றும் பண்டிதமணி அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அருள் கனிந்த பார்வை, அன்பு கெழுமிய வார்த்தை, மனநிறைவைக் காட்டும் புன்னகை, மனமார வாழ்த்தும் பண்பு, ஆன்றவிந்தடங்கிய தோற்றம் என்பன பண்டிதமணி அவர்களுக்கு இறைவனாலே வழங்கப்பெற்ற அருட்கொடைகளாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்காலம் வரை வாழ்நாள் முழுவதும் நைட்டிகப் பிரமச்சாரியாக வாழ்ந்தவர்களான பண்டிதமணி அவர்கள் போதனையோடு மட்டும் நிற்கவில்லை; சாதனையிலும் மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். 86 வருடங்கள் 8 மாதங்கள் 16 நாட்கள் இப்பூவுலகை அவரது பொன்மேனி தீண்டியிருந்தது.
குரோதன வருடம் மாசிமாதம் 28ஆம் நாள் புதன்கிழமை இரவு 54 நாழிகை 32% வினாடியளவில் (13.03.1986 வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணி) பூர்வபக்கத் திருதியையும் ரேவதி நட்சத்திரமும் பொருந்தி வந்த புண்ணியபொழுதினில் மூதறிஞர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இயற்கை எய்தினார்கள்.
37

Page 25
எங்கள் தெய்வம்
பண்டிதமணி உயர்திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களை அறியாத தமிழனை நம்நாட்டிற் காண்பதரிது. சைவத்துக்கும், தமிழுக்குப அயராது உழைத்துவரும் சிவநெறிச் செல்வருக்கு வடஇலங்கையில் பல இடங்களிலும் பாராட்டு விழாக்கள் நடாத்தப்பட்டன. இவ்விழாக்களில் பண்டிதமணி அவர்களின் நற்பண்புகள் யாவற்றையும் பேரறிஞர் பல எடுத்துரைத்தனர். மேலும் திருவண்ணாமலை ஆதீனத்தலைவ திருப்பெருந்திரு. குன்றக்குடி அடிகளார் பண்டிதமணி அவர்களுக்கு உரித்திராக்கமாலை சூட்டி பொன்னாடை போர்த்துக் கெளரவித்தார்கள் பண்டிதமணி அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் தொண்டாற்ற எல்லாம்வல்ல இறைவன் இன்னருள் பாலிப்பாராக.
நாவலர் என்றால் யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலறி ஆறுமுகநாவல அவர்களையே குறிக்கும். அதேபோல் ஈழநாட்டிலே பண்டிதமணி என்றால் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலைத் தமிழ் பேராசிரியர் பண்டிதமணிசி.கணபதிப்பிள்ளை அவர்களையே குறிக்கும்.
பண்டிதமணியவர்கள் பதினெட்டாம் வயதிலே யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையில் அமைந்த ஆறுமுகநாவலர் சைவப் பிரகா வித்தியாசாலையில் முநீமத் த. கைலாசபிள்ளையவர்களின் மேற்பார்வையின் கீழ்க் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அக்காலத்து கல்வியுலகில் மிகப் பிரசித்தி பெற்ற பெரியாராகிய தன்னொப்பிலா சுன்னக் குமாரசுவாமிப் புலவரிடம் கல்வி கற்கும் அரிய வாய்ப்பு பண்டிதமணியவர்களுக்குக் கிடைத்தது. மதுரைப் பண்டித பரீட்சையிலே சித்தியெய்திப் பின்னர் ஆசிரிய கலாசாலைக் கல்வியையும் பூர்த்த செய்தார்கள்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னேயே பெரும் பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், கற்றோர் ஏத்தும் சைவ தமிழ்ப் பேரறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும், குணம் நிை ஆசிரியராகவும் விளங்கிய பண்டிதமணியவர்களை சைவவித்திய விருத்திச் சங்கத்தார் சைவாசிரிய கலாசாலைக்குப் பேராசிரியரா வருமாறு பணிந்துவேண்ட தமிழ் மாதா செய்த தவப்பயனால் ஒருவா இணங்கினார்கள். அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய விசேட
S8

SSSSSSSSSSSSSSSSS
நீனாலேயே சைவாசிரிய கலாசாலை சிறப்புப்லபற்றது என்றால்
மிகையாகாது. ஆயிரத்தறுநூற்றுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மாணவரின் வாயும் இந்த உண்மையைச் சொல்லும்.
அவரது இலக்கியவளம் யாரைத்தான் கவராது? அவர்கள் மேடையில் நின்று பேசும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணிமையாது பண்டிதமணியின் வாயையே நோக்கி நிற்பர். சபையோர் இலக்கிய ஆற்றிலே, சமய ஆற்றிலே நீந்துபவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் குரல் ஒலிக்காத இடம் ஈழநாட்டிலே கிடையாது. இலக்கியப் பேச்சு, சமயப் பேச்சு என்றால் அது ஈழநாட்டிலே பண்டிதமணிஅவர்களாலேதான்முடியும்
ஈழநாட்டிலே சைவத்தையும் தமிழையும் நன்றாக உணர்ந்த ஒரேயொருவரான பணி டிதமணியவர்கள் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளிலி எழுதிய இலக்கிய, சமயக் கட்டுரைகள் ஆயிரக்கணக்கானவை. அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சில நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.
ஆடிப்பிறப்பொடு கத்தரித் தோட்டமும் ஆக்கியளித்த புலவராகிய நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “தண்பமிழ் உணர்ந்த பண்டிதமணியே” என்றும் கற்றார் விழையும் கற்பக தருவே" என்றும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். பொய்மையாளரைப் பாடாத புலவராகிய நவாலியூர்ப் புலவரின் நல்ல பாடல்களுக்கு ஏற்ற விமர்சகர் பண்டிதமணியவர்களே.
சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், குன்றக்குடியடிகள், ஜம்புலிங்கம்பிள்ளை, சித்தாந்த செம்மல் வச்சிரவேலு முதலியார் போன்றோரின் பெருமதிப்புக்கு உரியவர்கள் பண்டிதமணியவர்கள். கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜெகநாதன் அவர்கள் பண்டிதணி அவர்களைக் கணபதியன்னா" என்று செல்லமாக அழைப்பார்.
நீதியே சைவம், சைவமும், தமிழும் ஒன்று என்னும் பரந்த நோக்குடையவர்கள் பண்டிதமணியவர்கள். அதியற்புத அதிமதுரச் சுத்தச் வசந்தமிழாகிய கந்தபுராணத்திலே மிகவும் ஈடுபாடுடையவர். தனங்கிளப்புப் பிள்ளையார் கோயிலிலே வருடாவருடம் கந்தபுராணத்தைப் படித்தும் வருகிறார்கள். கந்தபுராணப் பாடல்களை ஒருவர் வாசிக்கப் பண்டிதமணியவர்கள் பயன் சொல்லுவதுமுண்டு. சங்கீதத்தை
39

Page 26
முறையாகக் கற்காவிடினும் வாசிப்பவர் என்ன என்ன இராகத்திலே வாசிக்கிறாரோ அந்த அந்த இராகத்திலே பயன் சொல்லுவார்கள். பண்டிதர் முதல் பாமரர் வரை கேட்டு இரசிப்பர். பயன் சொல்லும்போது கூட சிறந்த நீதிக் கருத்துக்கள் அமைந்த கதைகளை இடையிடையே பயனின் பொருள் விளங்க எடுத்தாளுவார்கள். இந்த முறை எல்லோராலும் கையாளமுடியாத ஒரு தனிமுறையாகும்.
* அவர்கள் பிரசங்கம் செய்யும்பொழுது மக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகச் சில கதைகளைக் கையாளும் முறையே தனிச்சிறப்பாயிருக்கும். அந்தக் கதைகள் அந்த நேரம் மாத்திரமல்ல நித்திரை நேரத்திலும் கூடச் சிரிப்பையூட்டும்.
உதாரணத்துக்கு ஒன்று:
ஒருநாள் யாழ்ப்பாணத்தில் பண்டிதமணியவர்கள் பிரசங்கம். அதிலே உபயோகித்த கதை, அவரே அந்தக் கதையைச் சொன்ன மாதிரி: "ஒரு ஊரிலே ஒரு ஒவசியர் இருந்தார். அவருக்கும் அவருடைய றோட்டு வேலை செய்யும் தொழிலாளருக்கும் மெல்லிய தகராறு, கூலியாட்கள் சம்பளம் சரியாகத் தருகிறதில்லையென்றார்கள். மொங்கானைத் தூக்கி ஓயாமல் கல்லிலே போட்டு எம்முடலெல்லாம் ஓய்ந்துவிட்டது என்றார்கள். அப்பொழுது ஒவசியர் சொன்னதாவது : நீங்கள் வமாங்கானைத் தூக்குவதற்குத் தான் காசு, தூக்கிய வமாங்கானைக் கல்லுக்கு மேலே போடுவதற்குக் காசு இல்லை; ஏனென்றால், நீங்கள் தூக்கிய வமாங்கானை எப்படியும் கீழே போடத்தானே வேண்டும்? இப்படியாகக் கதை முடிந்த போது சபையில் உள்ளோர்கள் கரகோஷம் செய்து சிரித்தனர். அந்தச் சபையில் பிரசங்கம் கேட்டுக்கொண்டிருந்த பிரபலம் வாய்ந்த ஓவசியர்கூட விழுந்து விழுந்து சிரித்தார். உண்மையிலேயே ஒவசியர் கதையை ஒவசியர் தான் எல்லோரிலும் மேலாக இரசித்தார். இப்படியான கதைகள் பல. அவர்களுடைய கதைகளை நினைத்துக் கனவிலே கூட இன்றும் நாம் சிரிப்பதுண்டு கயிறு பாம்பு விட்ட கதை முதலை நரியின் கால் என்று புங்கம் வேறைப் பிடித்த கதை போன்ற் கதைகள் பண்டிதமணியின் முதுசம், அவர்கள் வாயிலிருந்து வரும் கவிதைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. கடதாசி எடுத்துப் பேனை எடுத்து எழுதும் வழக்கம் இல்லை. நம் போன்ற மாணவர்கள் சென்றால் திடீரென்று சொல்வார்கள். கடைசியில் பார்த்தால் கருத்தாழம் மிக்க சிறந்த செய்யுளாய் இருக்கும். சமீபத்திலே பண்டிதமணியின் வாயிலிருந்துவந்த பாட்டு இது:
40

audiatróanativeanaiad
amazwazožîřuoasaílasíliðufall முயற்றருகொம்பர்பன்கி
cgwagóJoruðasadalaireffnað மயற்கணினிங்கிமுண்போன்
மாறியக்கயிறேயாகும் இயற்கையே தத்துவங்கானர்
இதுசொன்னான்மழைமைந்தண்,
மலடி மைந்தன் என்பதிலேதான் செய்யுளின் உயிர். வேதாந்த தத்துவம்” என்று தலையங்கமிடலாம் என்றும் ஹாஸ்யமாகக் கூறினார்கள். ဒိဋ္ဌိ)
பண்டிதமணியவர்கள் பிரசங்கம் செய்யும் போதாயினும் சரி கட்டுரைகள் எழுதும் போதாயினும் சரி உண்மையிலேய்ே குறைகளைக் காணும்போது கண்டிக்கத் தவறுவதில்லை. இதனால் தமிழராய்ப்பிறந்து அங்கிலிசு வாய் படைத்தவர்கள் தமிழுக்குத் தாங்கள் தான் என்று விண் இறுமாப்புக் கொள்ளுகிறவர்கள் "பண்டிதர் கண்டனகாரன்” என்று சொல்வதுண்டு.
நாவலர் ஐயாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அப்பழுக்கற்ற பிறசாரியாய் ஒழுகிவரும்பண்டிதமணியவர்கள் 10.07.1959இல் தமது சேவையிலிருந்து ஓய்வுலபற்றாலும், தமிழ்மக்கள் உள்ளங்களிலிருந்து என்றுமே ஓய்வுலபறமாய்பர்கள். எங்களுடைய இந்த எழுத்துக்களுள்ளே அவர்களுடைய லயருமைகளை அளவிடுதல் நரிவாலைக் லகாண்டு கடலாழம் பார்ப்பதைவியாக்கும். ஈழநாட்டுத் தமிழ் மக்களின் சைவ மக்களின் சீவ ஊற்றாக விளங்கும் சைவத் தமிழ்ப் விபருங்கடலாம் பண்டிதமணியவர்கள்இன்னும்பல்லாண்டுவாழவேண்டும்.
“பண்டிதரையாளங்கள் விதய்வம்"
- முறிாைங்கா சஞ்சிகை
6erdostbuivate
SSSSSSSSSSSSSGSDSSSMSSSSSSS SS SSLL 000L LLLS DSDS SSSSDSSSDSSSS

Page 27
பண்டிதமணி அவர்களும் அவர் லயற்ற பாராட்டுக்களும்
வதன்மராட்சி
சைவசமய சீலர்கள் பலரை நமது நாட்டுக்கு அளித்த பெருமை தென்மராட்சிக்கு உண்டு. தென்மராட்சியின் திலகமென மிளிர்வது மட்டுவில். அங்குள்ள சந்திரமௌலீசர் ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்தது. பனையடிப் பிள்ளையார் ஆலயம், மருதடிப் பிள்ளையார் ஆலயம், பன்றித் தலைச்சி அம்மன் ஆலயம், முத்துமாரி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் மட்டுவிலை அழகுபடுத்துகின்றன. சந்திர மெளலிசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஈழமண்டல சதகம் என்கின்ற அரிய நூலைச் செய்தவர் மட்டுவில் உரையாசிரியர் க.வேற்பிள்ளை உபாத்தியாரவர்கள். மட்டுவிலுக்கு இன்னொரு பெயர் சந்திரபுரம். அங்கு பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றுள் சந்திரமௌலீச வித்தியாசாலை தொன்மை வாய்ந்தது.
ஈழமண்டல சதக ஆசிரியரான வேற்பிள்ளை உபாத்தியாயர் நாவலர் பெருமானால் ஸ்தாபிக்கப்பெற்ற சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் மூலவேராக இருந்து ஆசிரியப் பணிபுரிந்தவர். அவரைப்போல அவரது பிள்ளைகளும் கல்விக்காக உழைத்தவர்கள். இவரது புத்திரர்களில் ஒருவரே கவிஞர் வே. மகாலிங்கசிவம் அவர்கள். சைவப் பெரியார் புலோலி சு. சிவபாதசுந்தரம் அவர்கள் வேற்பிள்ளை உபாத்தியாயர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.
தருமர் வள்ளியம்மையார்
இப்படியானதொரு கல்விச்சூழலில் வாழ்ந்த இன்னொரு பெரியார் சின்னத்தம்பியார். ஊாரில் அவரைத் "தருமர்” என்றே அழைப்பார்கள். மட்டுவிலில் தருமர் போலத் தனங்கிளப்பில் வாழ்ந்த ஒருவர் முருகர். முருகருக்கு ஒரு பெண்பிள்ளை. பெயர் வள்ளியம்மையார். இறைவன் திருவருளினால் மட்டுவில் சின்னத்தம்பியாருக்கும், தனங்கிளப்பு வள்ளியம்மையாருக்கும் திருமணம் நடைபெறலாயிற்று. ஊரில் இவர்கள் இலட்சியத்தம்பதியினர்.
புத் திர பாக்கியம் இனிமையாலி சின்னத் தம்பியார் வள்ளியம்மையார் குலதெய்வமான தனங்கிளப்பு காரைத்து விநாயகரை வேண்டினார்.விநாயகர் திருவருள் துணைக்கொண்டு சிதம்பரம் நடராசர்
4&

=-------e= ாநிதியை அடைந்து தவம் கிடந்தார். அம்மையார் மேற்கொண்ட துவத்தின் பயனாகச் சென்ற விகாரிக்கு முந்திய விகாரி வருஷம் ஆனி மாதம் 14ஆம் நாள் (27.06.1899) ஓர் ஆண்குழந்தையைப் பெற்றார். ஜென்ம நட்சத்திரம் சதயம். குழந்தைக்குப் பெற்றோர் இட்ட பெயர் கணபதிப்பிள்ளை. சந்ததிப் பெயர் சட்டநாதர்.
கணபதிப்பிள்ளையும் கல்வியும்
மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் (இப்பொழுது சந்திரமௌலீச வித்தியாசாலை ஆரம்பக் கல்வியைப் பெற்ற கணபதிப்பிள்ளைக்குத் தொடர்ந்து படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தந்தையார் சின்னத்தம்பியார் மகன் கணபதிப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு மட்டுவிலில் இருந்தும் நீங்கித் தனங்கிளப்பில் குடியேறினார். இது நடந்தது 1912ஆம் ஆண்டு. R
சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப்புலவர், சாவகச்சேரிபொன்னப்பாபிள்ளை ஆகியோரிடம் இடையிடையே பாடங் கேட்டார் கணபதிப்பிள்ளை. அந்தக் காலத்தில் காகித ஆட்டத்திலும் சவாரி வண்டில்களுக்குக் கடைக்கிட்டிபிடித்து ஓடுவதிலும் திறமைசாலியாகவும் இருந்தார் கணபதிப்பிள்ளை. அந்தத் துறையில் அவருக்கு நிகர்அவர் தான்!
1917 கார்த்திகையில் நாவலர் காவிய பாடசாலயிற் சேர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்பொழுது வயது பதினெட்டு. "மட்டுவில் புத்தக வியாபாரியார் திரு. செ. தம்பிமுத்துப்பிள்ளை, திரு. வே. நடராசா ஆசிரியர் இருவருமே யான் நாவலர் காவிய பாடசாலையிற் சேர்ந்து படிப்பதற்கு வழிகாட்டிகளாக இருந்தார்கள்” என்று பண்டிதமணி அவர்கள் மிகுந்த நன்றிப் பெருக்குடன் பல தடவைகள் கூறியதுண்டு. எழுதியும் இருக்கிறார்கள். *
நாவலர்காவியபாடசாலை
நாவலர் காவிய பாடசாலையின் தலைமை ஆசிரியர் சுன்னாகம் ரீமத். அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள். காவிய பாடசாலையின் மானேஜராக இருந்தவர். நாவலர் தமையனார் புத்திரர் ரீமத். த.கைலாசபிள்ளை அவர்கள். புலவர் அவர்களை "சங்கப் பலகை" என்று குறிப்பிடுவார்கள். திரு. கணபதிப்பிள்ளையின் சகபாடிகளுள் ஒருவர் மண்டுர் ஏகாம்பரநாதபிள்ளை பெரியதம்பிப்பிள்ளை (புலவர்மணி) அவர்கள். திரு. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் நாவலர் காவிய பாடசாலையிற்
43

Page 28
சேர்வதற்குக் காலாயிருந்தவரும் மட்டுவில் செ. தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள்தான். "மட்டுவில் எனக்கு மண்டுராயிற்று" என்று ஒரு கட்டுரையிற்குறிப்பிட்டிருக்கிறார் புலவர்மணி அவர்கள்.
முதலாவதுயாராட்டு
"நாங்கள் பன்னிரண்டு மாணாக்கர். ஒரு குறிப்பிட்ட நாளில் யாழ்ப்பாணம் செந்தமிழ் பரிபாலன சங்கத்தின் செயற்குழு நாவலர் பாடசாலையிற் கூடியது. பரீட்சை தொடங்கிவிட்டது. முழுதும் வாய்ப்பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணிநேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப்படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி.கணபதிப்பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்றார். எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. சி. க. சீவகசிந்தாமணியை முதற்பரிசாகப் பெற்றார். சிலப்பதிகாரம் இரண்டாம் பரிசு.
உள்ளதும் நல்லதும் என்ற நூலிற் புலவர்மணி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் போல யாழ்ப்பாணம் செந்தமிழ்ப் பரிபாலன சபையும் கனதி வாய்ந்தது. அச்சபை நடத்திய வாய்மொழிப் பரீட்சையில் புலவர் சிகாமணி சுன்னாகம் யூரீமத் அ. கு. புலவரவர்களின் தலைமாணவரான சி. க. அவர்கள் திறமைச்சித்தியால் முதலாமிடத்தைப் பெற்றார் என்றால் அவரது விவேகம் எத்தகையதாக இருந்திருக்கும்.
pů o ()
1926இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் பரீட்சையில் விசேடமாகச் சித்தியடைந்த திரு. கணபதிப்பிள்ளை அவர்களைப் பாராட்டிநாவலர் காவியபாடசாலையின் மனேஜர் யூரீமத் த. கை. அவர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய பெறுமதி வாய்ந்த தங்கப் பதக்கம் ஒன்றினைப் பரிசாக வழங்கினார்.
மட்டுவிலில் காவிய பாடசாலையை நடத்தி அங்குள்ளவர்களின் பெருமதிப்பைப் பெற்றார் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள். அதனால் அங்குள்ளவர்கள் பெருஞ் சபையைக் கூட்டி யூரிமத் த. கை. அவர்களால் வழங்கப்பெற்ற தங்கப்பதக்கத்துக்கு ஏற்றதொரு தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கிக் கெளரவித்தார்கள். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் மட்டுவில் திரு. லோச் செல்லப்பா அவர்களாவர். ''
44

நாவலர் அவர்களுக்குப் பின் அவர் வழியில் வந்தவர் காரைநகர் அருணாசல உபாத்தியாயரவர்கள். அவர்களது தூண்டுதலினால் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிற் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களுக்குக் கிடைத்தது. 1929ஆம் ஆண்டில் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் தமிழ்த்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள். "அவர்களுக்குப் பின் அருணாசலம் தான்” என்று கட்டுரையை எழுதினார் பண்டிதர் சி. க. அவர்கள். அக் கட்டுரை அருணாசல உபாத்தியாயரின் புனித சேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையின் அதிபர் மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்கள், உபஅதிபர் அளவெட்டி பூரீ. பொ. கைலாசபதி அவர்கள். தமிழ்த்துறைத் தலைவர் பண்டிதமணி அவர்கள் இம் மூவரும் மும்மணிகள் என்று பாராட்டப்பட்டார்கள்.
திருவநல்வேலியிற்காவியபாடசாலை
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை வளாகத்தில் காவிய பாடசாலை ஒன்று உருவானது. 1937 வரையில் இருக்கலாம். பண்டித வகுப்புக்கள் விசேடமாக நடைபெற்றன. காவிய பாடசாலையின் தோற்றத்துக்கு ஆதரவாக இருந்தார் நாவலருக்குப் பின் நமக்கு ஒர் காவலரான இந்துபோட் திரு. சு. இராசரத்தினம் அவர்கள். தமிழ், சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கு முறையே பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை, வியாகரண சிரோமணி தி. கி. சீதாராம சாஸ்திரிகள், நாகவிகாரையைச் சார்ந்த பிரதமகுரு ஆகியோர் பொறுப்பாக இருந்தார்கள். அந்தக் காலத்திலேயே "மும்மொழிப் பல்கலக்கழகம்" எனத் திகழ்ந்த இக்காவிய பாடசாலைக்குத் தெற்கேயிருந்தும் பலர் விஜயம் செய்து பாராட்டியிருக்கிறார்கள். பண்டிதர்கள், படிப்பாளிகள் தோற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து உழைத்தவர் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை அவர்களாவர்.
தினகரன்-பண்டிதமணி
1951இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் "தமிழ் நுதலியது களவு, களவியல் நுதலியது தமிழ்” என்ற தலைப்பில் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்கள். உச்சமான பேச்சு அது.
45

Page 29
பண்டிதரவர்களது உரை குறித்து கர வருஷம் சித்திரை மாதம் 30ஆம் திகதி (13.05.1951) வெளியான ஞாயிறு தினகரனில் "தமிழ்ச்சாறு என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.
"நக்கீரதேவர் கருத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழ் என்னும் பொருள் பற்றித் தமிழறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்ப் பெருமக்களுக்கு அளித்துள்ள கட்டுரை விருந்தை இற்றைட் பிரசுரத்தில் பிறிதோரிடத்தில் தினகரன் பெரும் மகிழ்வுடன் தாங்கி வெளிவருகின்றான்.
தமிழ் நுதலிய பொருளான அறம், பொருள், இன்பம், வீடு, அரும்பு மலர், காய், கனி போலத் தொடர்புபட்டிருப்பதை நன்கு விளக்கிச் காட்டுவது இக்கட்டுரை.
திருவள்ளுவரின் காமத்துப் பாலும் திருக்கோவையும் சத்தியகாமத்தை உணர்த்துவன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இதில் உணர்த்துகின்றார் பண்டிதமணி.
இவ்வாற்றால் "பண்டிதமணி” என்ற நாமத்தை முதல் முதலாக உபயோகித்த பெருமை தினகரனையே சாரும். தொடர்ந்து “பண்டிதமணி” என்ற சொல்லை கல்கி, பூரீலங்கா போன்ற பத்திரிகைகள் விளக்கம் செய்தன.
தினகரன் உபயோகித்த பண்டிதமணி என்ற சொல் உலகளாவிய முறையில் நிலைத்துவிட்டது. பண்டிதமணி அவர்களது பல நூறு கட்டுரைகள் தினகரனில் காலத்துக்குக் காலம் பிரசுரிக்கப்பட்டன கம்பராமாயணக் காட்சிகள் என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரைகளே நூற்றைம்பதுக்கு மேல். கம்பராமாயணக் காட்சிகள் கட்டுரைத் தொகுதிக்கு இலங்கை சாகித்தியமண்டலத்தின் பாராட்டுக்கிடைத்தது.
முதலாவதுஸான்னாடை
பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் சைவசமயம் சார்ந்த விழா. குன்றக்குடி அடிகளார் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார். பிரபல கல்விமானான முதலியார் செ. சின்னத் தம்பி அவர்களும் சமூகமாயிருந்தார். பண்டிதமணி அங்கு பேச்சு. பேச்சினை நன்கு இரசித்தவரான குன்றக்குடி அடிகளார் தாம் சார்ந்த ஆதீனத்தின் சார்பில் பண்டிதமணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
— 6

அய்வுலபறுதல் ܝ -
27.06.1959இல் ஓய்வுபெற்ற பண்டிதமணி அவர்களுக்குத் திருநெல்வேலி, மட்டுவில், யாழ்ப்பாணம் முதலான இடங்களில் இரண்டு நாட்களாக (29.08.1959 - 30.08.1959) பாராட்டு விழாக்கள் நடந்தன. மட்டுவிலில் பண்டிதமணிமண்டபம் உருவாக்கப்பட்டது. மணிவிழா மலர் காத்திரமான முறையில் வெளியிடப்பட்டது. அன்னவரது மணிவிழா பரவலாக நாடு முழுவதுமே கொண்டாடப்பட்டது. மலையகத்தில் பண்டிதமணி அவர்களைச் சுவாமி தனிநாயகம் அவர்கள் பாராட்டியதுடன் பொன்னாடையும் போர்த்திக் கெளரவித்தார்.
05.05.1961இல் சமயக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயமண்டபத்தில் திரு. க.ச.அருள்நந்தி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. பண்டிதர் கா. பொ. இரத்தினம், யூரீ. கி. லகூழ்மணன் உள்ளிட்ட அறிஞர்கள் நூலின் சிறப்பை எடுத்துரைத்தனர். இரசிகரான க. ச. அருள்நந்தி அவர்கள் பண்டிதமணி அவர்களுக்குச் "சைவசித்தாந்த சாகரம்” என்ற பட்டத்தினைப் பெரும் கரகோஷத்தின் இடையே வழங்கினார்.
தக்ஷகாண்டஉரை
கந்தபுராணம் தக்ஷகாண்டத்துக்குப் பண்டிதமணி அவர்கள் எழுதிய உரையை நூல் வடிவில் இடம்பெறச் செய்த பெருமை வைத்தியகலாநிதி பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களுக்கேயுரியது. பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரைநூலின் வெளியீட்டு விழா 25.01.1967 புதன்கிழமை முற்பகல் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமண்டபத்தில் இடம்பெற்றது. உரைநூலின் பிரதி யானைமீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். பெளதீகப் பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் அவர்கள் பண்டிதமணி அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்க டாக்டர். அ. சின்னத்தம்பி அவர்கள் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார். சரித்திரம் கண்டறியாத பெருவிழா இது.
02.03.1967 வியாழக்கிழமை வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற தக்ஷகாண்டம் உரைநூல் சிறப்பு விழாவில் கலாநிதி ஆ. சதாசிவம், யூரீ. கி. லகூழ்மணன், புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, செந்தமிழ்மணி பண்டிதர். பொன்.
S SSDDSSSSSSSSSSSSSSSSSSLS SSLL 0000LSSSSSSLSSSSDSSSSL

Page 30
S YSAAASSSS S AASSJMSeSSMSSJSJSSLSJSSeeeS
கிருஷ்ணபிள்ளை, பேராசிரியர் வைத்திய கலாநிதி அ. சின்னத்தம்பி முதலான பலர் நாவலர் வழியிற் பண்டிதமணி அவர்கள் ஆற்றிவரும் தொண்டினை வெகுவாகப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். சைவாசிரியர் கலாசாலையின் முன்னைநாள் அதிபர் மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்கள் பண்டிதமணி அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
சாகித்தியமண்டலத்தின் உயர்உறுப்பினர்
சாகித்திய மண்டலப் பரிசு கந்தபுராணம் தக்ஷகாண்டத்துக்குக் கிடைத்தது. 04.11.1968 திங்கட்கிழமை வைத்திய கலாநிதி பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் தலைமையில் வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் "இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் உயர் உறுப்பினர்” என்ற விருதினை கலாசார அதிபர் ஹேமறி பிரேமவர்த்தனா அவர்கள் பண்டிதமணி அவர்களுக்கு அளித்துக் கெளரவித்தார்.
இலக்கிய கலாநிதி
முதுபெரும்புலவர், மகாவித்துவான் ஆகிய பட்டங்களும் பண்டிதமணி அவர்களுக்கு வழங்கப்பட்டன. இறுதியாக இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கிய கலாநிதிப் பட்டம் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை "இலக்கிய கலாநிதி" என்ற கெளரவப் பட்டத்தினை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பெற்ற ஒரேயொருவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களேயாவர். 31.05.1978இல் பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விசேட பட்டமளிப்பு விழாவில் பண்டிதமணி அவர்களுக்கு “இலக்கிய கலாநிதி” என்ற கெளரவப் பட்டத்தினை வழங்கினார்கள். அவ்விழாவில் பண்டிதமணி அவர்கள் பற்றிய அறிமுக உரையைப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் ஆற்றினார். இரத்தினச் சுருக்கமாக இருந்தது அவரது அறிமுக உரை. பண்டிதமணி அவர்கள் சார்பில் அவ்விழாவில் யான் கலந்துகொண்டேன். உடல் நலக்குறைவால் பண்டிதமணி அவர்கள் பங்குகொள்ளமுடியவில்லை.
அதனால் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் யாழ் வளாகத்தில் பாராட்டுப் பெருவிழா ஒன்றினை 25.06.1978 ஞாயிறு ஏற்பாடு
ത്ത് 48 m-—

செய்து தாமே தலைமைதாங்கிக் குறித்த "இலக்கிய கலாநிதி" என்ற கெளரவ விருதினை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பண்டிதமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.
பண்டிதமணி அவர்களுக்கு இலங்கைப் பல்லைக்கழகத்தினால் இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டதையடுத்துப் பண்டிதமணி நூல் வெளியீட்டுச்சபை பெருவிழா எடுத்தது.
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 14.08.1978 திங்கள் மாலை இடம்பெற்ற பாராட்டுப் பெருவிழாவில் "சிந்தனைக் களஞ்சியம்” என்ற நூலும் கலாநிதி மலரும் வெளியீடு செய்யப்பெற்றன. அறிஞர்கள் பலர் பாராட்டுரை வழங்கினார்கள். பண்டிதமணி அவர்கள் தமது பதில் உரையில் "ஆசிரியமணி திரு. அ. பஞ்சாட்சரம் எனக்கு வாய்த்த அநுமான்" என்று அன்பு மிகுதியாற் குறிப்பிட்டது இன்றும் என்காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
நூல்கள்வாயிலாகப்யாராட்டு
பண்டிதமணி அவர்களைப் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்கள் ஒரு நூல் செய்திருக்கிறார். நூலின் பெயர் மூன்றாவது கண்.
பண்டிதமணி அவர்களையும், புலவர்மணி அவர்களையும் இணைத்து "வாழையடி வாழை" என்ற தலைப்பைக் கொண்ட ஒரு நூலைச் செய்திருக்கின்றார் திரு. க. செபரத்தினம் அவர்கள். பண்டிதமணி அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெளிவந்தது பண்டிதமணி நினைவு மலர். குறித்த நூல்கள் வாயிலாகப் பண்டிதமணி அவர்களைத் திரிகரண சுத்தியுடன் பாராட்டி இருக்கின்றார்கள் அறிஞர்கள். பண்டிதமணி அவர்கள் மறைந்து பத்து ஆண்டுகள் கழிந்த பொழுதிலும் அவரை யாரும் மறக்கவில்லை.
"ஆடிப்பிறப்பொடு சுந்தரித்தோட்டமும் ஆக்கியளித்த புலவர்பிரான்” என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரவர்களைப் பாராட்டியவர் பண்டிதமணி அவர்கள். "வண்டமிழிதமறி பண்டிதமணியே” என்றார் நவாலியூர் புலவர் அவர்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள் ஒரு யுகபுருஷன் பண்டிதமணி என்று குறிப்பிட்டுள்ளார்.
49

Page 31
பண்டிதமணி அவர்கள் மறைவையொட்டிக் கலைமகள் ஆசிரியர் கி. வ. ஜகந்நாதன் அவர்கள் தமது அனுதாபச் செய்தியில் “கந்தபுராணத்திலே அவருக்கு மிகத் தேர்ச்சி உண்டு. தக்ஷகாண்டத்துக்கு அருமையான ஓர் உரையை எழுதியுள்ளார். அவரைப்போல எழுதுகிறவர்கள் மிகவும் அருமை. எத்தனையோ நுட்பமான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கின்றார். அவர் அமரரானாலும் அந்த உரை அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முத்திரையிற்பண்டிதமணி
தபால் திணைக்களம் நல்லைநகர் பூரீலழரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களைக் கெளரவிக்குமுகமாக முத்திரை வெளியீடு செய்தது. சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வை. துரைசாமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன், இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை உள்ளிட்ட பல பெரியார்களை நினைவுகூரும் வகையில் முத்திரை வெளியிட்டதன் மூலம் அரசு குறித்த பெரியார்களைக் கெளரவித்துள்ளது.*
நமது நாட்டில் தமது கல்விப் பணியின் வாயிலாக மக்கள் மனதில் முத்திரைபதித்தவரான இலக்கிய கலாநிதிபண்டிதமணிசி.கணபதிப்பிள்ளை அவர்களது நூறாண்டு பிறந்ததின நிறைவையொட்டி இலங்கை தபால் திணைக்களம் முத்திரையை வெளியிட முன்வந்தமை (04.12.1999) மிகவும் மகிழ்ச்சிக்குரிய சம்பவமாகும். இம்முத்திரை வெளியீட்டின் மூலம் பண்டிதமணி அவர்களது புகழ் உலகளாவிய வகையில் எங்கும் பரவ ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணி டிதமணி அவர்களின் புகழ் ஈடு இணையற்றது. உலகுள்ளவரை அவரது புகழ்நிலைத்துநிற்கும்.
- முத்திரையிற் பண்டிதமணி
மர்ை வெளியீத
O4-F2.f4999

SLLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSSLSLSSSSSSSS சைவாசிரிய கலாசாலைக்கு விளக்கேற்ப்ய மூவர்
சைவாசிரியர் உலகிற்கெல்லாம் ஒப்பற்ற கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது திருநெல்வேலிச் சைவாசாரியர் கலாசாலை. சைவாசிரிய கலாசாலையில் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால் பூன்றிய தூண்களாக விளங்கியவர்கள் விசேடமாக மூவர் - மூன்று மனுஷர்கள். ஒருவர் கலாசாலையதிபராக விளங்கிய மயிலிட்டி திரு. சி. சுவாமிநாதன் அவர்களாவர்; அடுத்தவர் உபஅதிபர் திரு. பொ. கைலாசபதியவர்கள்; மற்றவர் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள். இம்மூவரும் சைவாசிரிய கலாசாலையில் ஒளியேற்றும் தீபங்களாக இருபத்தைந்து வருடகாலம் ஒருமித்து வாழ்ந்ததோடமையாது ைெடி கலாசாலையின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராதுழைத்த உத்தமர்களாவர்.
மயிலிட்டிதிரு.சுவாமிநாதனவர்கள்
திரு. சி. சுவாமிநாதனவர்கள் ஒரு கலாரசிகர். அவரைப் போல ஒரு
இரசிகரை யாம் கண்டதில்லை. அவர்களது இரசிகத்தன்மை நல்லபண்பாட்டின் மத்தியிலே வளர்ந்தெழுந்த இரசிகத் தன்மையாகும். உதாரநடையுடன் உண்மை இயல்புகளும் பொருந்திய சுவாமிநாதன் அவர்கள் இந்திய முன்னாள் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத், சஞ்சீவிராவ் போன்ற பெரும் மனுஷர்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள்.
offuഖ്വസ്ത്രജ്ബ്
upfesuffaunas/d பேணித்தமராகக் கொனன்”
திரு. சுவாமிநாதனவர்கள் நீ, போ, வா என்ற சொற்களைச் சொல்லியறியார்கள். நீங்கள், போங்கள், வாருங்கள், இருங்கள், சொல்லுங்கள் என்றே தம்மோடொத்தவர்களுடனும், தம்மிலும் தாழ்ந்தவர்களுடனும், அர்த்த புஷ்டியுடனும், அட்சரசுத்தியுடனும் பேசுவார்கள். திரு. சுவாமிநாதனவர்கள் உபஅதிபர் திரு. பொ. கைலாசபதியவர்களுக்கு ஆசிரியருமாவர். நீதிக்கும் நேர்மைக்கும் அடிபணியும் இயல்பை இயல்பாகவே பெற்ற சுவாமிநாதனவர்கள் செயல்கள் யாரையுமே அடிமைப்படுத்தும் தன்மை உடையவைகளாக இருக்கமாட்டா. ஏற்றத்தாலும் தோற்றத்தாலும் பொலிந்த மயிலிட்டியார் வருகிறார் என்றால் மாணவரும் மற்றுமுள்ளோரும் மரியாதையாக ஒதுங்கிநிற்பர். பயத்தினாலல்ல. அன்பும் மதிப்புமே காரணம்.
0 qSS e D DDS DD DD SGDDD S S S D DSiAD DDD D DeDeS Di e eDeeDM DSASYSS

Page 32
O 危 iகள்
பண்டிதமணி திரு.சி. கணபதிப்பிள்ளையைப் பற்றியாம் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகம் வியந்துபோற்றும் பெரியோராவர். சைவாசிரிய கலாசாலையாகிய கலங்கரை விளக்கத்திற் பதிந்து உலகிற்கெல்லாம் ஒளி வீசிய ஞானச்சுடர். பண்டிதரையாவின் பேச்சும், எழுத்தும் யாரைத்தான் கொள்ளை கொள்ளவில்லை.
திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையில் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்து தமிழ்மறை பொழிந்த பண்டிதரையாவைச் சமயம் பற்றிச் சிந்திக்க வைத்தவர்கள் திரு. கைலாசபதியவர்கள். பண்டிதரையா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் பல நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன. திருவருட்பயனுரை, கோயில், பாரத இராமாயண உபய நவமணிகள், சமய சிந்தனைகள், நாவலர் பெருமான் முதலிய தலைப்புகளைக் கொண்ட நூல்களை வெளியிடுவதில் பழைய மாணவர்கள் நூல் வெளியீட்டுச் சபையார் முயன்று வருகின்றார்கள்.
நாவலர் பரம்பரையில் நம்மையெல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ஞானசமுத்திரந்தான் பண்டிதர் ஐயா அவர்கள். பல்லாயிரம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றுமுள்ளோர் களுக்கும் ஞானத் தந்தையாக விளங்கும் பண்டிதர் ஐயா அவர்கள் நாமெல்லாம் உய்யும் பொருட்டு இன்னும் பல்லாண்டுகள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போமாக.
உபஅதிபர் திரு.கைலாசபதி
சைவாசிரிய கலாசாலை உபஅதிபராகத் திகழ்ந்தவர்கள் மகான் திரு. பொ. கைலாசபதி அவர்கள். ஊர் அளவெட்டி, தந்தையார் பெயர் பொன்னம்பலம், தாயார் பார்பதி அம்மையார். ஈழநாட்டிலும் தமிழ் நாட்டிலும் தலைசிறந்து விளங்கிய பேரறிஞர் வித்துவான் தெல்லிப்பளைச் சிவானந்த ஐயரிடம் இளமையில் பாடம் கேட்டவர்கள். தமக்கு ஒரு பொழுது கல்வியூட்டிய மகாஞானி இரத்தினசபாபதி உபாத்தியாரை அதிமனிதன் என்று உப அதிபர் அவர்கள் வர்ணிப்பதுண்டு. திருநெல்வேலியில் பிரசித்திபெற்று விளங்கிய ஈரப்பலா வளவிலே பண்டிதமணி, டாக்டர் சிவப்பிரகாசம், ம. க. வே. நடராசா ஆகியோருடன் கூடி வாழ்ந்த உபஅதிபர் அவர்கள 1930இல் பி. எஸ்ஸி. பரீட்சையில் தேறினார்கள். அப்பொழுது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆசிரியராய் இருந்தார். சைவப் பெரியார் திரு. சு. சிவபாதசுந்தரம் அவர்கள் தொடர்பு உப அதிபர் அவர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டது.
— 58

D
உபஅதிபர் பதவி
சைவ, தமிழ் உலகம் செய்த பெருந்தவப்பயனால் சைவாசிரிய கலாசாலை உபஅதிபரானர்கள் திரு. பொ. கைலாசபதி அவர்கள். கடமையிற் கண்ணும் கருத்துமாய் வாழ்ந்த உபஅதிபர் அவர்களை உடனாசிரியர்களும், மாணவர்களும் மிகவும் பயபக்தியுடன் வைஸ் பிறின்சிப்பல், வைஸ் ஐயா, உபஅதிபர் என்று தம்முட் பேசிக்கொள்வர். எந்த வகுப்புக்கும், எந்தப் பாடத்தையும், எந்தநேரமும் எதுவித முன்ஆயத்தமுமின்றிக் கற்பிக்க முன்வரும் தனியாற்றல் உபஅதிபர் அவர்களுக்குமட்டும் தான் சிறப்பாயுண்டு.
"உபஅதிபர் சின்னவிரல் ஒன்றையசைப்ப அபிநயங்கள் யாவும் அடங்கும்.”
உபஅதிபர் அவர்களைப் பற்றி அவர்களது ஆசிரியரும் அதிபருமான திரு. சி. சுவாமிநாதன் அவர்கள் கூறுகிறார்கள்.
"திரு. பொ. கைலாசபதி அவர்களின் போக்கும் சிறப்பும் மிக விநோதமானவை. பழைய காலத்தவர்கள் ஓர் "வறுத்த வித்து" என்றும் "பழுத்துக் கனிந்த கனி" என்றும் கூறுவர். அவர் லெளகிக விஷயங்களில் அழுந்துவதில்லை. நீதியினத்தை என்றுமே வெறுப்பவர். உண்மையெனவும், திண்மை நிரம்பப்பெற்றவர். ஒரு பெருஞ் சான்றாண்மையாளர்."
உபஅதிபர் அவர்கள் அந்தாமுக நோக்குள்ளவர்கள். உயர்ந்த சிந்தனாலோகத்திலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் உபஅதிபர் அவர்கள் இடையிடையே இந்த உலகத்துக்கு இறங்கி வந்து கடமையை முடித்துக் கொண்டு திரும்பவும் தமது சிந்தனாலோகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் சிந்தனைகளிலே சிலவற்றைக் கேட்டுத் தொடர்ந்தவர்கள் பண்டிதமணி அவர்கள். தொடர முடியாதவைகளை உடனுக்குடன் எழுதி அந்த விடயங்கள் இன்றும் தான் விடுபடாமல் உபஅதிபர் அவர்கள் பெருமைகளை எண்ணி ஏங்குகின்றார்கள். உபஅதிபர் அவர்களிடம் கற்றவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.
ஒருசமயி
உபஅதிபர் அவர்கள்"ஒரு சமயி“ஆவர். சமயிகள் அல்லாதவர்கள் சமயம் பற்றிப் பேச, எழுதத் தலைப்படுகின்ற இந்த இருபதாம்
53

Page 33
நூற்றாண்டிலே உண்மைச் சமயியான உபஅதிபர் திரு.பொ.கைலாசபதி அவர்கள் ஒரு சமயநூல் எழுதத் துணியவில்லை. அவர்கள் மேன்மைகொள் சைவ நீதிப் பிழம்பு, அவர்கள் வரிசை வேறு. உபஅதிபர் அவர்களது சிந்தனைகள் நமக்கு எட்டாதவைகள்.
தேகவியோகம்
உபஅதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்கள் 25.11.1961
சனிக்கிழமை இரவு இரண்டு மணிக்கு இயற்கையெய்தினார்கள்.
அவர்களது குருபூசைத் தினம் 23.11.1964 திங்கட்கிழமையாகும்.
உபஅதிபர் உயர்திரு. பொ. கைலாசபதி அவர்கள் சைவாசிரிய கலாசாலையில் மிக நீண்ட காலம் ஒருமித்து வாழ்ந்து சிறந்த மூன்று மனுஷர்களில் முனிவராவர். அவர் மெளனதவமுனிவர்.
கைலாசமாமுனிவன்
ஆண்டனுபத்தொண்று
ாகிதர்கார்த்திசைuUரம
பூண்ட சதுர்த்திபுனர்பூசம்
-upnazývlalógváš
azopascorrero uorapazớidofazở
காயபந்தங்தவிர்ந்து
கைாைச மேற்சென் குதி
--Viki2005f7dö
22. VV., VG9SF4

இலங்கையில் சைவப் பாடசாலைகளின் பணி
அந்நியர்ஆட்சி:
ஒரு காலத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் சைவர்களாகவே இருந்தார்கள். வியாபார நோக்கமாக இங்கு வந்து சேர்ந்த அந்நியர்கள் தங்கள் சமயமாகிய கிறிஸ்தவத்தை மக்கள் மீது திணித்தனர். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சமயத் திணிப்பு இன்றுவரை வெவ்வேறு கோணங்களில் நடந்துகொண்டே இருக்கின்றது. இப்படியானதொரு சமயத்திணிப்புக்குச் சிங்கள மக்களும் உள்ளானார்கள்.
தெய்வத் திருமூலர் தாமியற்றிய திருமந்திரம் நூலில் இலங்கையைச் சிவபூமி என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஞானசம்பந்தப் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இருவராலும் பாடப்பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன இங்கே காட்சி தருகின்றன. அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழில் வியந்து கூறப்பெற்ற கதிர்காமமும் ஈழமணித் திருநாட்டின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது.பழைய மன்னர்களினால் நிறுவப்பெற்ற சைவாலயங்களோ அநேகம். இராவணனின் தாயாரான கைகசி தினந்தோறும் ஆயிரம் சிவலிங்கங்களைச் செய்து சிவபூசை செய்த மாதரசியார். "இராவணன் மேலது நீறு" என்று பாடுகின்றார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள். "தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரருளின்பமளித்த பெருந்துறை மேயபிரான்” என்பது திருவாசகம். இவ்வாறான பெரியவர்கள் வாழ்ந்த இந்த நாட்டின் சைவப் பரம்பரையினர் உத்தியோகங்களுக்காகவும் உயர்தர பட்டங்களுக்காகவும் உணவு, உடை போன்றவற்றுக்காகவும் நிலை தளர்ந்து சமயம் மாறினார்களே என்பதை எண்ணும்போது கவலைப்படாமல் இருக்க (ՔւգաT85l.
நாவலர்லuருமான்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப் பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்து அழுதவர் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள். சமண இருளைப் போக்கிச் சைவத்தை நிலைநாட்டிய பெருமை அவருக்கு உண்டு. திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், சந்தானாசாரியர்கள் உள்ளிட்ட அனைவரும் சைவத்தைப் பேணிப் பெருமையடையச் செய்தவர்கள். * 。
55 = -ത്ത —

Page 34
மேன்மைகொள் சைவநிதி உலகில் விளங்கும்படியாக அவதரித்தவர் நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சி முடிந்து, அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் நல்லூர் கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினர் பெற்றெடுத்தவர்களில் ஒருவரே ஆறுமுகம்.18.12.1822இல் பிறந்தவர்.
இளமைக் காலத்தில் சுப்பிரமணிய உபாத்தியாயர் வேலாயுத முதலியார் போன்றவர்களிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றவரான ஆறுமுகநாவலர் பேர்சிவல் பாடசாலையில் (யாழ் மத்திய கல்லூரி) ஆங்கிலம் கற்கும் பொருட்டுப் பன்னிரண்டாம் வயதிற் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் கற்றுத்தேறி, அங்கேயே ஆசிரியருமானார். பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளின்படி ஆறுமுகநாவலர் அவருக்குத் தமிழ் கற்பிக்கும் பண்டிதருமானார். பேர்சிவல் பாதிரியார் “மமகுரு" (எனதுகுரு என்று பலசந்தர்ப்பங்களில் நாவலர் பெருமானைப் பாராட்டியிருக்கின்றார்.
பேர்சிவல் பாதிரியார் கேட்டுக்கொண்டதற்கிணங்கப் பைபிளைத் திருத்தித் தமிழில் மொழி பெயர்க்கும் வேலையில் ஈடுபட்டார் நாவலர் பெருமான். பைபிளை அச்சிடும் நோக்கமாக நாவலர் பெருமானையும் அழைத்துக்கொண்டு 1848இல் சென்னபட்டணம் சென்றார். பேர்சிவல் பாதிரியார். அங்குள்ள மிசனரிமார் பைபிள் திருத்தம் மொழிபெயர்ப்பு ஏற்றதாக இருக்குமோ என்ற தமது ஆசங்கையை வெளியிட்டனர். அது கண்டு பேர்சிவல் கலங்கினார்; நாவலர் கலங்கவில்லை. அப்பொழுது அங்கே இருந்த கல்விமான்களில் முதல் வரிசையில் வைத்து எண்ணப்பட்டவரான வித்துவான் மழவை மகாலிங்க ஐயர் அவர்களிடம் திருத்திய பைபிளைச் சமர்ப்பித்தார்கள். வீரசைவரான மழவை மகாலிங்கஜயர் அவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் முதலான பெரிய படிப்பாளிகளின் மாணவருமாவார். திருததிய பைபிளை நன்கு வாசித்து அவதானித்தவரான மகாலிங்கையர் அவர்கள் அதிலே பிழை இல்லையென்றும் வசனநடை நன்றாக இருக்கின்றதென்றும் கருத்து வெளியிட்டார். பேர்சிவல் பாதிரியாருக்கு அளவுகடந்த சந்தோஷம். திருத்திய பைபிளை அச்சிட்டுக் கொண்டு நாவலர் பெருமானுடன் யாழ்ப்பாணம் மீண்டார்.
பேர்சிவல் பாதிரியாரின் பாடசாலையில் ஆங்கிலம் கற்றவர்களுள் ஒருவரான மு. தில்லைநாதபிள்ளையும், சு. சின்னப்பாபிள்ளை என்பாரும் 'சைவசமயத்தின் உண்மையை உணராத காரணத்தினாலே கிறிஸ்தவ
56
 

maamaana
சமயத்திற் சேர்ந்து ஞானஸ்நானம் பெறுவதாகப் பேர்சிவலி பாதிரியாருக்கு உடன்பாடு தெரிவித்தனர். இதனையறிந்த நாவலர் பெருமான் அவர்களுக்குச் சைவ சமய உண்மைகளைப் போதித்தார். அதனால் குறிப்பிட்ட தினத்தில் ஞானஸ்நானம் பெற அவர்கள் இருவரும் செல்லவில்லை. குறிப்பிட்டவர்களை ஞானஸ்நானம் பெறாது தடுத்தவர் நாவலர் தான் என்பதை உணர்ந்தவரான பேர்சிவல் பாதிரியார் கோபமுற்றார். “உம்மிடத்திலே நான் பண்டிதராயிருத்தல் உமக்குப் பிரியமில்லையாயின் இப்பொழுதே நீங்கிவிடுகிறேன்” என்றார். பேர்சிவல் ஒருவாறு சமாதானப்படுத்தினார். எனினும் தில்லைநாதபிள்ளை ஆசிரியர் உத்தியோகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். சின்னப்பாபிள்ளை வேறு உத்தியோகத்தை நாடிச் சென்றுவிட்டார். உத்தியோகத்தின் பொருட்டுக் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு நாவலர் பெருமான் கொடுத்த பெயர் பஞ்சாக்ஷரக் கிறிஸ்தவர்கள் என்பதாம்.
"சைவம் என்ற சீதையைச் சிறைமீட்டன்றி உயிர் வாழேன்” என்று சங்கற்பஞ் செய்துகொண்டார் நாவலர் பெருமான். மூன்று முக்கிய வழிகளைக் கையாள முயன்றார். சைவப்பிரசங்கம் செய்தல், சைப்பிள்ளைக்ள படிப்பதற்குக் சைவப் பாடசாலைகளை அமைத்தல், மாணவர்களுக்கு ஏற்றநூல்களை அச்சிட்டு வெளியிடுதல்.
வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வசந்தமண்டபத்தில் சுக்கிரவாரமும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபதினத்திலே (31.12.1847) முதற்பிரசங்கத்தை நிகழ்த்தினார். "சைவம் என்னும் செஞ்சாலி வளாம் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையைப் பொழிந்தார்" என்ப11.ா. நாவலர் பெருமானின் சைவப் பிரசங்கங்களைக் கேட்டுக்கேட்டு சைவ மக்கள் புத்துயிர் பெற்றனர்.
1848ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ்ப்பாணம் வணினார் பண்ணையில் சைவப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்து, சைவப்பிரகாச வித்தியாசாலை என்று நாமகரணமுஞ் சூட்டி மகிழ்ந்தார். இங்கே அமைத்த முதற் சைவப் பாடசாலை இதுவேயாகும்.
1849இல் அச்சுக்கூடம் வாங்க வடக்கே சென்றவர் . ருவாவடு துறையில் கெளரவிக்கப்பட்டு ஆறுமுகநாவலராகத் திரும்பினார்.
கோயில் என்ற சிறப்புக்குரிய சிதம்பர தலத்தில் 1864இல் சைவப் பாடசாலை ஒன்றை நிறுவி, சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரையே அங்கும் சூட்டினார். மாணவர்களுக்கு ஏற்ற நூல்களையும் எழுதினாார்.
57 ER

Page 35
யாழ்ப்பாணம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராக இருந்தவர் மகான் காசிவாசி செந்திநாதையர் அவர்கள். உதவி ஆசிரியராக இருந்தவர் நாவலர் மருகள் வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை அவர்கள். தொடர்ந்து குறித்த பாடசாலையில் காவிய வகுப்புகள் நடைபெற்றன. அங்கு பேராசானாக இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர்க்ள் புலவர் சிகாமணி சுன்னாகம் பூரிமத் அ. குமாரசாமிப் புலவர் அவர்கள். ஈழமணித் திருநாட்டின் கல்விக்கண்கள் என் விளங்கிய பண்டிதழணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் புலவர் அவர்களிடம் பாடங்கேட்டமுக்கியஸ்தர்களாவர்.
நாவலர் அவர்களினால் ஸ்தாபிக்கப்பெற்ற சைவப் பாடசாலைகளை முன்னோடியாகக் கொண்டு பலபல ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களும் தனிப்பட்டவர்களும் சைவப் பாடசாலைகளை நிறுவினார்கள்.
சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள் சைவர்கள் என்பதைத் தமது பேச்சிலும் எழுத்திலும் சந்தர்ப்பங்கள் தோறும் எடுத்துக் காட்டியுள்ளார் நாவலர்பெருமான் அவர்கள். சைவம் என்ற சொல்லுக்குப் பதிலாக வேறு எந்தச் சொல்லையும் நாவலர் பெருமான் அவர்கள் உபயோகிக்கவிலலை. சைவசமய வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவரான நாவலர் பெருமானைச்"சைவசமய மகோத்தாரணர்” என்று சைவ உலகம் பாராட்டிவருகின்றது.
மகான் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் திருச்செந்தூரில் 1902ஆம் ஆண்டு வைதிக சைவசித்தாந்த வித்தியாசாைையத் தாபித்து தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் சைவசித்தாந்த ஞானத்தையும் போதித்து வந்தார் என்பதும் ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
நாவலர்பெருமான் அவர்களது ஆத்ம சக்தியின் வெளிப்பாடே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. 15.11.1890இல் கூடிய அதிகார சபையாரிடம் அந்தக் காலத்தில் பிரபல வழக்குரைஞராக விளங்கிய சி.நாகலிங்கபிள்ளை தம்முடைய பராமரிப்பின் கீழ் இருந்த Town High School 6T6arguib usirefsissinlgoods Hindu High School 6T6arguib பெயருடன் நடத்தும்படி ஒப்படைத்தார். இக்கல்லூரி இந்துக் கல்லூரியாயிற்று. ச்ைவ ஆங்கில தமிழ் வித்தியாசாலைகளைக் குறித்த சபை நிறுவும் பொறுப்பை எற்றுக்கொண்டது. கொக்குவில், உரும்பிராய், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி, காரைநகர், தொண்டைமானாறு போன்ற
58

−ത്തു இடங்களில் ஆங்கிலப் பாடசாலைகளையும் பக்கபலமாக ஆரம்ப தமிழ்ப் பாடசாலைகளையும் இந்துக் கல்லூரி அதிகார சபையனர் நிறுவினார்கள். நாவலர் வழியில் இந்துக் கல்லூரி அதிகார சபையின் கலவித்தொண்டு மிகவும் புனிதமாகப் பேணப்பட்டுவந்தது.
காரைநகள்அருணாசலஉபாத்தியர்
31.10.1864இல் சங்கரப்பிள்ளை அவர்களுக்கும் பத்தினியம்மாளுக்கும் புத்திரராகக் காரைநகரிற் பிறந்தவர் அருணாசலம் அவர்கள். காரைநகர் களபூமி கிறிஸ்தவ பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றவரான அருணாசலம் அவர்கள் பின்னர் நாவலர் பாடசாலையில் 8ஆம் வகுப்புவரை படித்துச் சித்தியெய்தினார். தெல்லிப்பழையில் அமெரிக்க மிஷனால் நடத்தப்பட்டு வந்த ஆசிரிய கலாசாலையிற் பயிற்சி பெற வேண்டிய ஒரு நிலை அருணாசலம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவரை ஞானஸ்நானம் பெறும்படி உபதேசிமார் மிகவும் வற்புறுத்தினர். படிப்பைக் குழப்ப விருப்பமில்லை. அதனால் பரீட்சை முடிந்த பின் ஞானஸ்நானம் பெறுகிறேன் என்றார். பரீட்சை முடிந்ததும் அன்று இரவே சாமநேரத்தில் மதிலின் மேலாகப் பாய்ந்து காரைதீவை நோக்கி நடந்தார் அருணாசலம் அவர்கள்.
கிறிஸ்தவ தாக்கத்தில் இருந்து விடுதலை பெற்றவரான அருணாசலம் உபாத்தியார் நாவலர் பெருமான் அவர்கள் எண்ணியது போலச் சைவப்பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலேயே கற்க வேண்டும் என்று எண்ணினார். காரைநகரில் பள்ளிக்கூடங்கள் தோன்றுவதற்கு அருணாசல உபாத்தியாரவர்களே காரணராகவும் இருந்தார். மற்றும் கிராமங்களில் சைவப் பாடசாலைகளை
வுவதற்கும் ஊக்கம் அளித்தார்.
அந்துப்பேட்அாசரத்தினம்அவர்கள்
காரைதீவு அருணாசலம் உபாத்தியாயருக்கும் இளைஞராக இருந்த சுப்பிரமணியம் இராசரத்தினத்துக்கும் கீரிமலையில் தொடர்பு ஏற்பட்டது. அருணாசல உபாத்தியாரின் அபிலாஷைகளை நிறைவேற்ற முன்வந்தார்திரு. இராசரத்தினம் அவர்கள். 1923ஆம் ஆண்டு ஆரம்பமானது சைவவித்தியாவிருத்திச் சங்கம். சைவத் தமிழ் ஆங்கில பாடசாலைகள். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை, அநாதச1.ல என்பவற்றின் தோற்றத்துக்கு அயராது உழைத்தர். திரு. சு.இராசரத்தினம் அவர்கள். இந்துப் போட்டின் முதுகெலும்பாக இயங்கிய காரணத்தினால் "இந்துப்போட் இராசரத்தினம்" என்றே அழைக்கப்பட்டார்.
59 R.

Page 36
திருசு. இராசரத்தினம் அவர்களின் உயர்தனிச் சிறப்பினைப் பற்றி இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
பின்வருமாறு கூறுகிறார்.
"திரு. அருணாசலம் வித்தியா பகுதியாரோடு தொடர்புபடுங் காலங்களில் தமிழை இங்கிலிசுப்படுத்தியும், இங்கிலிசைத் தமிழ்ப்படுத்தியும் உபசரிக்கும் வழக்கமுடையவர் ஓரிளங்கனவான். திரு. சு. இராசரத்தினமே அந்தக் கனவான் ஆனமனிதர். அவர் நல்ல அப்புக்காத்து. எவருக்கும் அஞ்சாத செல்லப்பிள்ளை. அவர் வைத்திருந்த பவுண்டன் பேனா மிகப் பெரியது; விலை உயர்ந்தது. அந்தப் பேனா அருணாசலம் அவர்களது தூண்டுதலால் கல்விச்சட்ட இரகசியங்களிலும் சூழ்ச்சிகளிலும் அடிக்கடி தோய்ந்து முழுகித் திளைத்திருந்தது. எந்தச் சந்தர்ப்பத்தில் எது செய்யவேண்டுமென்பதை அந்தப் பேனா நன்கு அறியும்.
சைவவித்தியாவிருத்திச்சங்கம்
திரு. அருணாசலத்தைத் தகனஞ்செய்து, சுடுகாட்டக்கினி தணி
முன்பே திரு. சு. இராசரத்தினம் அவர்களின் இருதயத்தில்
சைவவித்தியாவிருத்திச் சங்கம் கருக்கொள்ளத்தொடங்கிவிட்டது.
1924இல் சட்டசபைப் பிரதிநிதியானார் கெளரவ சு. இராசரத்தினம். அச்சபை ஏழுவருடம் நீடித்தது. தமிழர் ஆதிக்கம் அப்போதுதலைதூக்கி நின்றது. கெளரவ இராசரத்தினத்தின் முதல் மூச்சில் பட்சபாதமான கல்விச் சட்டங்கள் அத்தனையும் தவிடுபொடியாயின. கிறிஸ்தவ பள்ளியின் முற்றத்திலும் சைவப்பள்ளி தோன்றலாம். கிறிஸ்தவ பள்ளிப் பிள்ளைகள் அஃதாவது திருநீறணியும் பிள்ளைகள் புதுப்பள்ளியிற் குடிபுகுதல் செய்யலாம். ஆரம்பித்த நாள் தொடங்கி உதவி நன்கொடை
டைக்கும்.
சைவ வித்தியாவிருத்திச் சங்கம் உதயமாயிற்று. எங்கும் சைவப் பள்ளிகள் தோன்றின. சைவப் பள்ளிகளாய்த் தோன்றிக் கிறிஸ்தவ பள்ளிகளாய் மாறியவை பழையபடி சைவப் பள்ளிகளாய் மாறின. மதம் மாறிய ஆசிரியர்களும் பெருஞ் சைவப் பக்தர்களாயினர்.திரு. அருணாசலம் அவர்கள் தோற்றுவித்த ஐக்கிய போதனா ஆசிரிய கலாசாலைப் பங்கு அருணாசலம் அவர்கள் மறையத் தானும் ஒடுங்கத் தொடங்கியது. ஐந்து பராயத்தில் ஒடுங்கியது. திருநெல்வேலியில் ஒரு வீட்டில் சைவாசிரிய கலாசாலை ஆரம்பமாகின்றது.

SSSSSSSSSSSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLLSSSSLLS
சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் மகோந்நத தாபனம் சைவ அநாதசாலை. அது திரு. இராசரத்தினம் அவர்களின் உயிாப்பு. எத்தனையோ ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் உத்தியோகத்தர் களையும் சைவ அநாதசாலை உருவாக்கியிருக்கின்றது.அது திரு. இராசரத்தினம்அவர்களின் நினைவாய் இன்றும் நின்றுநிலவுகிறது.
மூவர்யாணிகள்
நாவலர் இட்ட வித்தை முப்பது வருடத்துக்கு மேலே பாதுகாத்து முளைவளரச் செய்தார் மகான் அருணாசலம். முளையை வளர்த்து விளைவுசெய்தார் கெளரவ சு.இராசரத்தினம்.
Fi 阮 O
இலங்கை அரசு நிறுவிய தமிழ்ப் பாடசாலைகளில் அதிகமானவை முஸ்லிம் பாடசாலைகளே. அவ்வாறிருந்தும் முஸ்லிம்கள் தங்கள் சமய கலாசாரங்களைப் பேணும் முறையில் பாடசாலைகள் நிறுவினார்கள். ஆங்கிலப் படிப்பில் அதிக ஊக்கம் செலுத்தினர். இவ்விஷயத்தில் முன்னின்று உழைத்தவர் அறிஞர் சித்திலெப்பை அவர்கள். சித்திலெப்பை அவர்களின் முயற்சியால் கண்டி, ஹற்றன், பதுளை முதலான இடங்களில் முஸ்லிம் பாடசாலைகளும் கொழும்பில் இன்றைய சாகிராக்கல்லூரியாக விளங்கும் கல்விஸ்தாபனமும் ஆரம்பிக்கப்பட்டன.
சுவாமிவிபுலானந்தஅடிகள்
இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் சைவசமயக் கல்விப் பணி 1918இல் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பில் இராமகிருஷ்ண சங்கத்தின் சார்பிலான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சுவாமி விபுலானந்த அடிகளாரின் பங்கை முக்கியமாகக் குறிப்பிடலாம். பிரசித்தி வாய்ந்த மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்துக்கான அத்திபாரக் கல்லை நாட்டிய பெருமையும் சுவாமி புலானந்தரையே சாரும். மா. பீதாம்பரனார், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர் சுவாமிகளுடைய சைவ சமயக் கல்விப் பணிக்குப்பக்கபலமாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இளவாலையில்ஏமூர்இராசரத்தினம் .
சைவத்தமிழ்க் கல்வியைப் பரப்புவதில் ஈடுபாடு கொண்டவர்களில் இருவர் இராசரத்தினங்கள் முக்கியமானவர்கள். பாடசாலைகளின் தாபகர்கள் இவர்கள். யாழ்ப்பாணம் நல்லூர் உவைமன் வீதியை வதிவிடமாகக் கொண்டவர் ஒரு இராசரத்தினம். அவர் இந்துப்போட் இராசரத்தினம் அவர்கள். மற்றவர் இளவாலை ச. ஏழுர் இராசரத்தினம் அவர்கள். இருவரும் ஒரே நோக்கம் கொண்டிருந்தார்கள். சைவத்தமிழ்ப்
61

Page 37
பணியால் நாவலருக்குப் பின் நமக்கோர் காவலராய் இருந்தவர் இந்துப்போட் இராசரத்தினம் அவர்கள். நாவலருக்குப் பின் சிலை நாட்டிக் கெளரவிக்கப்படவேண்டிய சேவையாளன் அவர்.
எங்கள் ஏழுர் இராசரத்தின் அவர்கள் இளவலைப் பதியில் உயர்சைவவேளாண்குல திலகராக விளங்கிய சரவணமுத்து அவர்களும் திருமதி மாமாங்கம் சரவணமுத்து அம்மையாரும் கருத்து ஒருமித்த இல்வாழ்க்கையின் பயனாகப் பெற்றறெடுத்த சிரேட்ட புதல்வராவர். பிறந்ததினம் 29.06.1898 ஆகும். இவரது முன்னோர்கள் ஏழு கிராமங்களில் மிக்க செல்வாக்காக வாழ்ந்தார்கள். அதனால்ஏழுர் என்ற பெயர் குடும்பப் பெருமையைப் புலப்படுத்தும் பெயராய் வழங்கி வருகின்றது. இங்கே குறிப்பிடும் "ஏழுர்" குடும்பப் பெருமையை மேலும் பெருக்கியதால் அப்பெயர் மிகப் பிரசித்தியாய்விட்டது.
வமய்கண்டான் .
சந்தானாசாரியர்களில் முதன்மையானவர் மெய்கண்டதேவர். “பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்" யைப் பக்கவர்களுக்கு போதித்ததோடமையாது, அதனை விளக்கிச் சிவஞானபோதம் என்ற நூலையும் இயற்றியருளினார் மெய்கண்டதேவர். அவரின் மாணவர் அருணந்தி சிவாசாரியர். அருணந்தி சிவாசாரியரின் மாணவர் மறைஞான சம்பந்த சிவாசாரியர்; மறைஞான சம்பந்தரின் மாணவர் உமாபதி சிவாசாரியர். சைவசமய வரலாற்றில் மெய்கண்டார் பரம்பரை தொடர்ந்து வளர்ந்துவந்திருக்கின்றது.
ேேசைவசமய சாத்திர உலகில் வியந்து பேசப்பெறும் மெய்கண்டாரின் பெயரைத் தாங்கி இளவாலையில் ஒரு மெய்கண்டான் 1922இல் உதயமாயிற்று. சைவ ஏழைக் குழந்தைகளின் கல்விப் பசியைப் போக்கச் சிறந்த சைவப் பாடசாலையொன்றை அமைப்பதற்கு முன்னமே சங்கற்பம் செய்து கொண்டவரான ஏழுர் இராசரத்தினம் அவர்கள் இளவாலையில் ஒரு மெய்கண்டானைக் கண்குளிரக் கண்டார். அவரது உள்ளத்திலும் மகிழ்ச்சிஉதயமாயிற்று.
சேர்வபான்.இராமநாதன் சகோதரர்கள்சேவை
சேர். பொன். இராமநாதன் அவர்களைச் சட்ட சபைக்கு அனுப்புவதற்கு வழிவகுத்தவர்களில்.நாவலர் பெருமான் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. சேர். பொன். இராமநாதன் பழைய சைவ மரபினை வளர்த்தவர். சைவஞானம் மிக்கவர். அவரால் ஸ்தாபிக்கப்பெற்ற திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியும், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியும் உயர்தர கல்வி ஸ்தாபனங்களாக இயங்கி வந்தன.06.10.1974
63

LSLMSSSLSSLSLSSLSLSSLSLSLSSSMSSSLLLLLSLLLLLLLLuuLMSSSLSLSLSSSMSSSMMSSSLSSLLSLSLLSLSLSLSLSSSLLLLSSSLSLS
தொடக்கம் பரமேசுரவக் கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாக அந்தஸ்தினைப் பெற்றது. இப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகப் பிரகாசிக்கின்றது. இராமநாதன் கல்லூரியில் ஓர்பால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் இயங்குகிறது.
இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்று முதன் முதலிற் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் அவர்களே. 1906இல் இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் தோன்றியது. அச்சங்கத்தின் தலைவராக இருந்தவரும் சேர். பொன் அருணாசலம் அவர்களே. சேர். பொன். அருணாசலம் அவர்களது முயற்சியால் 1921ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது. எனவே இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தந்தை சேர். பொன். அருணாசலம் அவர்களே என்றால் மிகையல்ல. “திரிகரணசுத்தியும் காரியசித்தியும் அருள்வாய்" என்ற இலட்சியத்துடன் அமைக்கப்பட்ட பரமேஸ்வரக் கல்லூரியும், இராமநாதன் கல்லூரியும் பல்கலைக்கழக அந்தஸ்தினைக் காலகதியில் பெறலாம் என்ற சிந்தனை குறித்த ஸ்தாபனங்களை நிறுவிய சேர்.பொன். இராமநாதன் அவர்களுக்கு இருந்தது.
முக்கியகல்லூரிகள்
கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி என விளங்கும் உயர்தரக் கல்லூரிகளும் சைவசமய வளர்ச்சியை முக்கிய இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளேயாம்.
* >
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் அமைந்துள்ள புறமதப் பாடசாலைகளும், அரசாங்க பாடசாலைகளும் ஆற்றிவரும் கல்விப் பணியையும் நாம் மறந்துவிடக்கூடாது.
- 63ewrofi mampap 672. Agyeary? 62ffantarfélagflaenweb
eMasfassfarir
நினைவுப் பேருரையின்

Page 38
உரும்பிராய் பற்றிய ஒரு நோக்கு
யாழ்ப்பாணத்திற் பழைமையும், பெருமையும் வாய்ந்த பதிகளுள் ஒன்றாக விளங்குவது உரும்பிராய். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லை மத்தியாகக் கொண்டு இக் கிராமம் அமைந்திருக்கிறது.
இக்கிராமத்துக்கு உரும்பிராய் என்று பெயர் வரக் காரணம் யாது எனப் பலரும் வினாவுவதுண்டு. இடப்பெயர் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இவ்வூருக்கான பெயரின் காரணம் நன்கு விளக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒருகாலத்தில் வழிப்போக்களின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும், சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதிசெய்து வைத்ததாகத் தெரியவருகிறது. வாகன வசதி மிகமிகக் குறைந்திருந்த காரணத்தினால் நெடுந்தூரம் நடந்தே தமது பிரயாணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிரயாணம் செய்பவர்கள் மரநிழல்களில் தங்கிச் சிறிது களைப்பாறிய பின்னர் பிரயாணத்தை மேற்கொள்ளுவர். பொருள்களைப் பொதியாகக் கட்டித் தலைச் சுமையாகவே கொண்டு செல்லவேண்டியிருந்தது. இப்பொழுதும் அந்தக் காட்சியை நாம் அவதானிக்கலாம். சுமந்து செல்லும் பிரயாணிகள் பிறருடைய உதவியின்றியே பொதிகளைச் சுமைதாங்கியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் ஆறிச் செல்வதுமுண்டு. எந்தச் சுமைகளையும் தாங்கும் சக்தி அந்தச் சுமைதாங்கிகளுக்கு உண்டு. ஆரம்பத்தில் வைரக் கற்களினாலும் பின்னர் சீமெந்து கொண்டும் உறுதியாகச் சுமைதாங்கிகளை நிறுவினார்கள். அப்படியான பழைய சுமைதாங்கிகளை இன்றும் சில இடங்களில் தெருவோரங்களிற் 85T60GT6)ITLib.
மேலே கூறியவாறு நிழல்தரு மரங்களுள் ஒன்றான பிராய் (பராய் என்றும் சொல்வதுண்டு மரக் கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. நன்றாகச் செழித்துப் படர்ந்து வளரக்கூடிய இம் மரத்துக்குப் “பெருஞ்சூலி மரம்" என்று இன்னொரு பெயருமுண்டு. ஆல், அரசு போல இதுவும் பால் உள்ள மரம். W
தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே எங்கள்
64.

கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். எண்களைக் குறிப்பதற்கு அந்தக்காலத்தில் எழுத்து எண்களையே உபயோகித்தார்கள். நாவலர் பெருமான் அவர்கள் எழுத்து எண்களையே அவர் சம்பந்தப்பட்ட நூல்களில் உபயோகித்திருக்கின்றார். நாவலர் பெருமானுக்குப் பின்வந்தவர்களும் எழுத்து எண்களை உபயோகித்திருக்கின்றார்கள். இங்கே நாட்டப்பட்ட பிராய் மரத்தில் இலக்கமும் எழுத்து எண்களைக் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று ஊகித்துணரமுடிகின்றது.
இருபத்தைந்தாம் பிராய் என்பதனை 25ம் பிராய் என்று இக்காலத்தில் எழுதுவார்கள். அப்பொழுது எழுத்து முறையையே கையாண்டு.
உரும்பிராய் என்று எழுதி இருப்பார்கள். ар - - 2; (5 - 5 உரும்பிராய்-25ம் பிராய்
என்பதற்கு ஈடாகும்.
இருபத்தைந்து என்ற எண்களைக் (25) குறித்த எழுத்துக்களை "உரு" என்றும், அயலில் உள்ளம் என்ற எழுத்தையுஞ் சேர்த்து உரும் என்றும், அப்பால், பிராய் என்னும் மரப்பெயரையுங் சேர்த்து,
உரும்பிராய்
என்றும் காலக் கிரமத்தில் வாசிக்கும் வழக்கை ஏற்படுத்தி இருக்கலாம். எழுத்து இலக்கத்தோடு கூடிய மரப்பெயர் (பிராய்) ஊர்ப் பெயராக மாறி இருக்கலாம் என்பதே எனது சிந்தனையில் எழுந்த அபிப்பிராயமாகும்.
பேச்சுவழக்கில், எழுத்து வழக்கில் உரும்புராய், உறும்பிராய், உடும்பிராய் என்றும் கையாளுகின்றார்கள். அவ்வாறு பேசுவதற்கோ எழுதுவதற்கோ தக்க சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
கட்டைப்பிராய், வேலம்பிராய், மானம்பிராய், தம்பிராய் என வழங்கும் இடங்களும் இருக்கின்றன. அந்தந்த இடங்களைச் சார்ந்த அறிஞர்கள் அந்த இடப்பெயர்கள் குறித்து வேறு வேறு விளக்கங்கள் கொடுக்கக்கூடியதாகவுமிருக்கலாம்.
முன்னர் கூறியவண்ணம் பிராய், பராய் என்னும் இரு சொற்களும் பிராய் மரத்தையே குறிப்பன. எனினும், உரும்பராய் என்ற உபயோகத்திலும் பார்க்க, உரும்பிராய் என்ற பிரயோகமே சிறந்ததாகத் தெரிகின்றது.
65

Page 39
அப்பொழுது அரசகரும மொழியாக இருந்த ஆங்கிலத்தில்
URUMPRA
என்றே வழங்கப்பட்டிருக்கின்றது. கச்சேரி, தபாற்கந்தோர், கிராமசேவையாளர் பிரிவு முதலான ஸ்தாபனங்களிலும் Urumpirai என்றே வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கான தமிழ்த் தொடரும் உரும்பிராய் என்றே அமைந்திருக்கின்றது.
சிலர் ஆங்கிலத்தில் எழுதும்பொழுது Urumpirai என்றும், தமிழில் எழுதும் பொழுது உரும்பராய் என்றும் எழுவதுமுண்டு
Urumpirai-go (Cuibly Tui
என்று முறையே ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுவதே பொருத்தமானதாகும்.
கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும், மேற்கே இணுவில் உடுவிலும், வடக்கே ஊரெழு நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கெர்ணட இக்கிராமத்தில் 3753 குடும்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள். இத்தொகை இப்பொழுது கூடியிருக்கலாம்.
அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ் பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைச் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நலல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம். கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம் என்பன உரும்பிராயப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகள்.
ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கிருந்தன. பின்னர் உரும்பிராய் ஊரெழு ஆகிய கிராமங்கள் 01.07.1967இல் பட்டணசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகிழக்குப் பிரதேசசபையின் உபபிரிவாக இங்கிவருகின்றது.
66-ത്ത --—

al
பெரும்பான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவாகள். பிற்காலத்திற் சைவசமயத்தினரினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள் அவர்களில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள் அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸ்தாந்து சமயத்தையும். (அங்கிலிக்கன் சபை தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது.
சிவாலயங்கள் கருணாகரப்பிள்ளையார்கோயில்:
யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி கருணாகரப் பிள்ளையாரை வணங்கி அருள்பெற்றதாகவும், திருப்பணிக்கு உதவியதாகவும் சரித்திரம் கூறுகிறது. அந்தணர் பரம்பரையினர் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வருகின்றார்கள். பழைமையையும், பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் கல்வெட்டுச் சாசனமும் உண்டு. பிரசித்திபெற்ற பிள்ளையார் கோயில்களின் வரிசையில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்பட்டுள்ளது. (சைவநெறி-ஆண்டு 11)
ஆவணிப் பூரணையை இறுதி நாளாக வைத்து மஹோற்சவம் இடம்பெறும். பத்துத் தினங்கள் இடம்பெறும் இம் மஹோற்சவம் 1910ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள். 1973ஆம் ஆண்டு புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக விழாவினையொட்டி ைெடி ஆலய திருப் பணி சபையினால் வெளியிடப் பெற்ற மஹாகும்பாபிஷேகமலர்“பொன்மலர்” என்னும் பாராட்டினைப்பெற்றது.
நீர்வேலி சிதம்பரநாதப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, கவிஞர் செ. ஐயாத்துரை என்பவர்கள் கருணாகரப் பிள்ளையார் மீது வெவ்வேறு காலங்களிற் பிரபந்தங்களைச் செய்துள்ளனர். தனிப் பாடல்களும் உண்டு. மருதநிலச் சூழலில் பரத்தைப்புலம் என்று கூறப் பெறும் திவ் விய கூேடித்திரத்தில் எலி லாமி வலி ல கருணாகரப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். "கருணாகரன் பாதம் கனவிலும் துணை செய்யும்"
சிதம்பரசுப்பிரமணியசுவாமிகோயில்
பரத்தைப்புலம் என்னும் குறிச்சியிலேயே இவ்வாலயமும்
அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரேயொரு கந்தசாமி கோயில்
இதுவொன்றேயாகும். ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம்
67न्म

Page 40
சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு நான்கு தசாப்தங்களாகப் பூசை, திருவிழாக்களுடன் நன்கு நடைபெற்று வருகின்றது. "உரும்பிராயில் ஒரு கதிர்காமம்" என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கதிர்காமத் திருவிழாக்காலத்திலே நடைபெற்றுவந்தன. தொடர்ந்தும் இடம்பெறும்.
தைப்பூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக் கொண்டு இந்த ஆண்டு (1993) இங்கே முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது. வழிகாட்டியாக இருந்து இம் மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்திவைத்த பெருமையைப் பெறுகின்றார் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர் "சிவாச்சார்யமணி" சிவறி. வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள்.
வாகீசகலாநிதி கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. ஐயாத்துரை முதலானவர்கள் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். சிதம்பர சுப்பிரமணிய சுவாமி பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
பர்வதவர்த்தனிஅம்மன்கோயில்
கிராமத்துக்கு ஒரு அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளியுள்ள இடமும் பரத்தைப்புலமே. வைகாசிப் பூரணையைத் தீர்த்தநாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம்.சித்திரத்தேர் சிறப்பானது. பங்குனித் திங்களில் பொங்கல் பூசை என்பன நேர்த்தியாக நடைபெறும். நவராத்திரி பூசை அந்தக் காலந்தொட்டே சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்பாளின் மானம்பூத் திருவிழா இந்தக் கிராமத்தில் ஒர் எழுச்சி விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. பர்வதவர்த்த அம்பாள் மீது அடியார்கள் தோத்திரங்களைப் பாடியிருக்கினற்ார்கள். பர்வதவர்த்தனி அம்பிகை அந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள் பாடி அரங்கேற்றியுள்ளார்.
கற்பகப்பிள்ளையர்கோயில்
தொழுவார் துயர்தீர்த்து அடியார்களுக்கு அருள்புரிகின்றார் கற்பகப்பிள்ளையார். கற்பகப்பிள்ளையார் கோயில்கொண்டு எழுந்தருளி இருக்கும் ஒடையம்பதிஉயர் தனிச் சிறப்புக்கு உரியது. "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். ஆலய முகப்பில் பஞ்ச தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருப்பது அழகுக்கு அழகு தருவதாகும். இவ்வாலயம் ஊர்நடுவில் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு.
_______ 6583

இவ்வாலய மஹோற்சவம் ஆனிப்பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பத்துத் திருவிழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. அழகிய சித்திரத்தேரும் உண்டு.
தெற்கு மேற்கு வீதிகளில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும் கிழக்கில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபமும், வடபால் கமநிலமும் சூழ இருப்பதும் பலவகைக் காட்சிகளாக அமைந்துள்ளன.
கற்பகவிநாயகர் திருவந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்களும், கற்பகவிநாயகர் அந்தாதி என்ற நூலினைக் கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு.பொ. குழந்தைவடிவேலு அவர்களும் இயற்றி வெளியீடும் செய்துள்ளனர்.
கற்பகவிநாயகர் பொற்பதம் பணிவோர் நற்கதி பெறுவர்.
ஞானவைரவர்கோயில்
கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப் பெருமானைத் துண்டிஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் கொண்டு பணிகிறார்கள். துண்டி விசேடம் பெற்றது.
சைவப்பிரகாசங்கள், புராணபடனங்கள் அந்தக் காலத்தில் ஒழுங்காக நடைபெற்றன. இப்பொழுதும் நடைபெறுவதுண்டு. நேரந் தவறாமல் வைரவர் கோயில் மணி அதிகாலை ஐந்து மணிக்கு ஒலிக்கும். அந்த மணியோசை ஊரையே குதூகலிக்க வைக்கும். மக்கள் வழிபாட்டுடன் தங்கள் தங்கள் நாளாந்தக் கடமைகளையும் மேற்கொள்வதற்க வழிசெய்வது இந்த மணி ஓசை,
ஆசுகவி கல்லடி வேலுப்பிளளை, இயலிசை வாரிதி பிரம்மறி ந. வீரமணி ஐயர், கவிஞர் சோ. பத்மநாதன் முதலான அறிஞர் பெருமக்கள் ஞானவைரவசுவாமி மீது பாடப்பெற்ற பாடல்கள நூலுருவம் பெற்றுள்ளன.
பிரயாணிகளின் பிரியமான வழிபாடுகளை ஏற்று அவர்களுக் எல்லாம் நல்ல வழிகாட்டுகின்றார் ஞானவைரவர் சுவாமி.
69

Page 41
சிவபூதநாதேசுவரர்ஆலயம்
உரும்பிராயின் கிழக்கு எலலையில் வடபுறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசுவரர் ஆலயம். நீர்வேலி, கோப்பாய், கரந்தன் கிராமங்களை அண்மித்து இக்கோயில் அமைந்திருப்பதினால் அவ்வூர் மக்களது வழிபாடு இங்கு விசேடமாக இடம்பெறுகிறது.
கமநிலங்கள் நான்கு புறமும் சூழ்ந்திருப்பதனால் பச்சைப் பசேலென அந்தச் சூழல் காட்சியளிப்பதும் ஆலயத்துக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது.
சித்திரைப்பூரணை அடுத்து வரும் அமாவாசைத் தினத்தை இறுதி நாளாகக் கொண்டு பக்திபூர்வமாக அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்ற வருகின்றன. விழாக் காலங்களில் இடம்பெறும் அன்னதான முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அலங்காரத் திருவிழாவுக்கு பதிலாக மஹோற்சவங்களை நடத்துவதற்கு ஆலய பரிபாலன சபை வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
来 求 sk
கற்பகவிநாயகர் ஆலயத்தின் வடபால் இயற்கையாக அமைந்திருப்பது சொக்கநாதர் ஆலயமாகும். அவ்வாலயத்திலுள்ள சுவரோவியங்கள் அழகுபொருந்தியவை.
மேலும் காளிகோயில்கள், பூதராயர் கோயில்கள், அண்ணமார் கோயில்கள், பேச்சியம்மன் கோயில் என்பன பரந்துபட்டிருக்கின்றன. வைரவர் கோயில்களும் உண்டு. காட்டு வைரவர் கோயில்கள் முக்கியமானவை. ஒருகாலத்தில் பலியிடும் வழக்கம் இருந்தது. தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது குறித்த ஆலயங்களில் பொங்கல் பூசைதிருவிழாக்கள் செவ்வனே நடைபெற்றுவருகின்றன.
கத்தோலிக்கதேவாலயம்
உரும்பிராயின் கிழக்குத் திசையில் வடபுறமாகக் கத்தோலிக்க மக்களின் வணக்கத் தலமான புனித மைக்கேல் ஆலயம் விளங்குகின்றது. 1916ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பெற்ற புனித மைக்கேல் ஆலயம் தனது பவளவிழாவைச் சமீபத்திற் கொண்டாடியது. இவ்வாலயத்தின் பரிபாலகர்களது சமூக சேவை பெரிதும் பாராட்டத்தக்கது. குறித்த கத்தோலிக்க தேவாலயம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் என்பது குறிப்பிடத்தக்கது.
70

அங்கிலிக்கன்சபையும்தேவாலயமும்
பலாலி வீதியில் உள்ள அங்கிலிக்கன் சபையைச் சேர்ந்த தேவாலயம் 1955இல் கட்டப் பட்டது. இத் தேவாலயம் அமைக்கப்படுவதற்கு முன் இவ்விடமிருந்த இச் சமயத்தவர்கள் இங்கிருந்த பாடசாலையின் ஒரு பகுதியைத் தமது வணக்கத் தலமாக உபயோகித்தனர். விசேட காலங்களில் கோப்பாயிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்று இவர்கள் வழிபாடாற்றுவதுமுண்டு.
பாடசாலைகள்
ஒருகாலத்தில் முனிசிரேட்டர்களது ஆசிரமங்களை நோக்கிச் சீடர்கள் சென்றார்கள். முனிவர்களுக்குத் தொண்டுபுரிரிந்து கற்கும் நிலை இருந்தது. வீரனாகிய இராமனும் அவன் தம்பியரும் வனம் நோக்கிச் சென்று முனிவர்களிடம் பாடங்கேட்டுவிட்டு மாலையில் திரும்பும் காட்சியை அழகுபட எடுத்துரைக்கின்றது.கம்பராமாயணம்.
பின்னர் கல்வி அபிவிருத்தியின் பொருட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டன. அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இன்றைய சவர்வகலாசாலைகள் போல அன்று பணிபுரிந்தன.
இவ்வாறான திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று கருணாகரப் பிள்ளையார் கோயிலின் வடபுறத்தில் இருந்ததாகத் தெரிய வருகின்றது. தம்பாபிள்ளை ஐயர் என்பவரால் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடம் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். குடிசன நெருக்கம் குறைவாக இருந்த அப் பகுதியில் குடியேற விரும்பியவர்களுக்கு இலகுவான முறையில் காணியை ஐயரவர்கள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. புராண இதிகாசங்களின் பெருமைகளை அங்கு சென்ற மாணவர்களுக்குப் போதித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
அங்கிலிக்கன்சபைப்பாடசாலை
ஒரு காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அங்கிலிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாலையை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளையும் கற்பிக்கும் பாடசாலையாக இயங்கியது. இந்துக் கலலூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலையொன்றை உரும்பிராயில் நிறுவியதனால் கிறிஸ்தவ பாடசாலையில் உள்ள ஆங்கிலப் பகுதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் மட்டும் போதிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாலைகளைக்
71

Page 42
கையேற்றதையடுத்து இப்பாடசாலை மூடப்பட்டது. உரும்பிராயில் முன்முதல் ஆரம்பித்த பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துக்கல்லூரிஅதிகாரசபை
சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலேயே கற்றுத் தேற வேண்டும் என்ற நோக்குடையவர் நாவலர் பெருமான் அவர்கள். அவரது ஆத்மிக சக்தியே பிற்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியாகப் பரிணமித்தது. இதற்கு வழிகோலியவர்கள் இந்துக் கல்லூரி அதிகார சபையினர். குறித்த சபையினர் தேவையை அறிந்து வேண்டிய இடங்களில் இந்துக் கல்லூரி அமைத்தனர். புகழ்பூத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிநூற்றாண்டுவிழாவையும் கண்டுகளித்திருக்கின்றது.
சைவப் பாடசாலைகளை அமைத்த பணியிற் பெரும்பங்கு
சைவவித்தியாவிருத்திச் சங்கத்துக்கும் இருந்தது என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. WM
உரும்பிராய்இந்துக் கல்லூரி
1911ஆம் ஆண்டு இவ்வூர் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக் கலுலூரி சமீபத்திற் பவளவிழாவைக் கொண்டாடியதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளை உள்ளடக்கிய பவளவிழா மலரினையும் வெளியீடு செய்தது. ஆங்கில மொழிக்கு அந்தஸ்து இருந்த காலத்தில் உரும்பிராய் மாணவர்களும், அயலூர் மாணவர்களும் சமயக் கோட்பாடுகளையும் ஆங்கில மொழியுைம் நன்கு அறிந்துகொள்ள உதவியது உரும்பிராய் இந்துக் கல்லூரி. அறிஞர்கள் பலர் இந்தவுரில் உருவாவதற்கு இக் கல்லூரி உழைத்த உழைப்பு மகத்தானது. மகாவித்தியாலய அந்தஸ்தினை முன்னரே பெற்றுக்கொண்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய்க் கொத்தணியின் மூலாதாரப் பாடசாலையுமாகும்.
சைவத்தமிழ்வித்தியாலயம்
03.12.1915இல் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவில் இந்துக் கல்லூரி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலையே சைவத் தமிழ் வித்தியாசாலை. இடநெருக்கடி காரணமாக 1949ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒடையம்பதி கற்பக விநாயகர் ஆலயத்துக்கு உரிமையான காணியிற் கட்டடங்கள் அமைக்கப்பட்டு கற்பகப் பிள்ளையார் வீதியில் சைவத் தமிழ் வித்தியாசாலை இடமாற்றம் செய்யப்பட்டது.
73

T
ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 11 வரை வகுப்புக்களை கொண்டு இயங்கும் சைவத்தமிழ் வித்தியாசாலை கோப்பாய் வட்டாரத்தில் அமைந்துள்ள கனிஷ்ட வித்தியாலயங்களிற் பிரபலம் வாய்ந்தது எனலாம். 1977ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா. வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பரொழுது இடம்பெறுவது பவளவிழா, பவளவிழா மலர் சிறப்புடன் வெளிவருகின்றது.
உரும்பிராயின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வியத்தகு முன்னேற்றத்துக்கு எல்லாம்வல்ல கற்பக விநாயகரின் திருவருளே காரணம் என்பது எமது நம்பிக்கை.
றோமன் கத்தோலிக்கபாடசாலை
கத்தோலிக்க சமயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி 18.10.1916இல் நிறுவப்பட்டதே உரும்பிராய் நோமன் கத்தோலிக்க பாடசாலை. சமய அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சமய சேவை புரிந்ததுடன் விசேடமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்பதைக் கல்வியில் நாட்டமுள்ள பெரியவர்கள் ஒத்துக் கொள்வார்கள். இது இன்று ஆரம்ப பாடசாலையாகப் பிரகாசிக்கின்றது. அரசு பாடசாலைகளைக் கையேற்ற பொழுதிலும் அடிப்படை நோக்கத்திற்கு முரணின்றி இப் பாடசாலை இயங்குகின்றது.
சந்திரோதயவித்தியாசாலை
உரும்பிராய்ச் சந்தியின் அயலிலுள்ள காணியில் 28.10.1928இல் ஆரம்பிக்கப்பெற்ற உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை. மாணவர் கூடக்கூட இடநெருக்கடியும் ஏற்பட்டது. எனவே மானிப்பாய் வீதியில் உள்ள காணியில் கட்டடங்களை அமைத்து அந்த இடத்துக்கு வித்தியாசாலையை மாற்ற (1942) நேரிட்டது. சந்திரோதய வித்தியாசாலை இப்பொழுது அமைந்திருக்கும் வளவும் உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினரிடமிருந்து குத்தகைக்குப் பெறப்பட்டதே. ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 8 வரை கொண்டதாக இயங்கிவரும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை அறிஞர்கள் பலரை உருவாக்கிய கல்விக்கூடம் என்பதை நாம் மறத்தலாகாது. இவ்வித்தியாலயத்தின் தோற்றத்துக்கு உழைத்தவர்களில் திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் (இராசா - வேலுப்பிளளை) முக்கிய இடம்பெறுவார்கள்.
73

Page 43
aammafrekáFfurasidir
உரும்பிராயின் கல்வி வளர்ச்சிக்கு இவ்வூரவர்கள் மாத்திரமன்றி வெளியூரவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றார்கள். விசேடமாக நீர்வேலி, கோப்பாய், இணுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் மேலே குறிப்பிட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து பாராட்டுக்கு உரியவர்களானார்கள். குறித்த பாடசாலைகளில் அதிபர்களாகவும், உப அதிபர்களாகவும் சேவையாற்றியவர்கள் தமது தளராத சேவையின் மூலம் கற்றோர் வரிசையில் நீங்காத இடம்பெற்றுள்ளார்கள். இப் பாடசாலைகளிற் படித்தவர்களுக்கு தங்கள் ஆசிரியர்களைப் பின்தொடர்ந்து தாமும் பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் யாவரும் என்றென்றும் பாராட்டுக்கு உரியவர்களே.
வபரியவர்கள்
உரும்பிராய் என்று சொன்னால் கற்றோர் உலகில் பஞ்சலிங்கம்
குடும்பத்தினர் பற்றிப் பேசப்படுவது வழக்கம். அவர்களது கல்விஅறிவும்
தேச சேவையுமே காரணம் ஆகலாம்.
செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதியினர் பெற்றெடுத்த ஆண் பிள்ளைகள் ஐவர். சிரேட்டரான திரு. பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த வைத்தியர். சட்டத்துறையில் முன்னரே பிரபல்யம் பெற்றவர் திரு. செ. நாகலிங்கம் அவர்கள். நீதியரசராக இருந்த இவர் சிலகாலம் பதில் தேசாதிபதியாகவும் கடமைபுரிந்தவர். இலங்கைத் தமிழரில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த பெருமைக்கு உரிய ஒரேயொரு தமிழர் திரு.செ. நாகலிங்கம் அவர்களேயாவர்.
மூன்றாமவரான திரு. சுந்தரலிங்கம் அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் புகழ்பூத்த கணிதப் பேராசிரியராக விளங்கியவர். இலங்கை, இந்திய சிவில் சேவைப் பரீட்சைகளிற் சித்தியடைந்தவர். சட்ட அறிஞர், வவுனியாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சிலகாலம் வர்த்தக அமைச்சராகவும் இருந்ததுடன் இவர் விவசாய விருத்தியிலும் அக்கறை கொண்டிருந்தார்.
அடுத்தவரான திரு. தியாகலிங்கம் அவர்கள் சட்டத்துறையில் அதி மேன்மை பெற்றிருந்தார். கியு. ஸி. என்ற அந்தஸ்தையும் அடைந்திருந்தவர். முருகபக்தரான இவர் சமய, சமூகத்துறைக்குத் தம்மாலான தொண்டுகளைப் புரிந்துள்ளார்.
கனிட்டரான திரு. அமிர்தலிங்கம் அவர்கள் சிறந்த கல்விமான் எனப் பாராட்டப்பட்டவர். கலாநிதிப் பட்டம் பெற்றவர், மீன்பிடி இலாகாவில் உயர் உத்தியோகம் வகித்தவர். பிற்காலத்தில் இங்கிலாந்துக்குச் சென்று அங்கு வாழ்ந்தவர்.
74.

தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். திரு. செ. நாகலிங்கம் அவர்கள். வழக்காளி எதிரிகள் சார்பில் திரு. செ. சுந்தரலிங்கம் அவர்கள் ஒருபுறமாகவும், திரு. செ. தியாகலிங்கம் அவர்கள் மறுபுறமாகவும் ஆஜராகி வாதிட்டார். அண்ணன் நீதிபதியாக இருந்த அதே வழக்கில் தம்பிமாரான சுந்தரலிங்கம் அவர்களும் தியாகலிங்கம் அவர்களும் நியாயவாதிகளாக ஏற்பட்டு மிகவும் திறமையாகச் சட்டஅறிஞர் உலகம் வியக்கும் வண்ணம் தங்கள் தங்கள் கட்சிக்காரர் பொருட்டுப்பேசினார்கள்.
நீதிபதியும் நியாயவாதிகளான தம்பியர் இருவரும் நீதிஸ்தலத்தில் ஒரேவழக்கில் ஒரே காலத்தில் சந்தித்த சந்திப்பு நீதித் துறை உலகில் ஓர் அபூர்வ சந்திப்பு. இந்த அபூர்வ சந்திப்புக் குறித்து அப்பொழுது பத்திரிகைகள் மிகவும் பாராட்டி எழுதின.
திருமணம் காரணமாக இவ்வூருடன் தொடர்புகொண்டவர்களான பிரபல்யம் வாய்ந்த சட்டமேதைகளும் உளர். திரு. தம்பு துரைச்சாமி அவர்களும், மூதவை உறுப்பினராக இருந்த திரு. எஸ். நடேசன் கியு.ஸி. அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களும் இவ்வூருடன் தொடர்புபட்டவர்.
கருணாகரப்பிள்ளையார் ஆதீனத்தைச் சேர்ந்தவரான சிவறி அ. வைத்தீஸ்வரக் குருக்கள் (சின்னையர்), கற்பக விநாயகர் அதீனத்தைச் சேர்ந்தவர்களான சிவறி இ. பரமசாமிக் குருக்கள், சிவபூரீ கு. வேதக்குட்டிக் குருக்கள், பண்ணிசைச் செல்வர், சிவபூரி ச. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், ஞானவைரவர் கோயிலைச் சேர்ந்தவரான சிவறி பொ. கந்தையாக் குருக்கள் உள்ளிட்டவர்கள் தாம் தாம் சார்ந்த சிவாலயங்கள் வாயிலாகவும் ஒன்றுசேர்ந்தும் ஆற்றிய சைவப் பணிகள் மகத்தானவை. விசேடமாக மஹோற்சவங்கள், சைவப் பிரசங்கங்கள், புராண படனங்கள் காலத்துக் காலம் சிறப்பாக நடைபெற உழைத்த பெருமக்கள் இவர்கள். இவர்களது புகழ் இவர்கள் காலத்திலேயே எங்கும் பரவியிருந்தது. இவர்கள் மறைந்த பொழுதிலும் இவர்கள் பணிகளோ என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாதவை.
மேலும் இக்கிராமத்தில் வைத்தியகலாநிதிகள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க அதிபர்கள், கமக்காரர்கள், கைத்தொழிலாளர்கள், வணிகர்கள் என்றிவ்வாறு பலரும் வாழ்ந்தார்கள்; வாழ்கின்றார்கள். கணக்காளர் உலகில் பலரது பாராட்டையும்பெற்றவரான திரு. மு.பசுபதி அவர்களும் நூலாசிரியர் உலகில் தமக்கென்றே ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவரான திரு. செ. தனபாலசிங்கம் அவர்களும் இவ்வூர்ப் பிறந்தவர்களே. அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார்கள். அவர்கள்
75

Page 44
s
நாமங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இந்தக் கிராமத்தின் புகழுக்கு இன்னும் பலர் அச்சாணியாக இருந்தார்கள்.
"திரைகடலோடியுந் திரவியந்தேடு" என்பது முதுமொழி. ஈழம்வாழ் தமிழர்களை விசேடமாக உரும்பிராயைச் சேர்ந்தவர்களை உத்தியோக நிமித்தம் அப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகள் அழைத்துக் கெளரவம் செய்தன. இந்த நாடுகளில மக்கள் உழைத்த உழைப்பு, உரும்பிராயை வளம்படுத்தியது என்று துணிந்து கூறலாம். இப்பொழுது கல்வி, தொழில் காரணங்களை முன்னிட்டு உலகின் பல பாகங்களிலும் இவ்வூர் மக்கள் பரந்திருக்கின்றனர்.
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார்கள். மொழிப் பற்று, நாட்டுப் பற்றுக் காரணமாக முன்னின்று உழைத்தவர்கள், உழைக்கின்றவர்கள் பலர். "வீர சுதந்திரம் வேண்டி நின்றோர் பின்னர் வேறொன்று வேண்டுவரோ” என்றார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்த வீரர்கள், வீராங்கனைகள் வாழ்ந்த வாழ்கின்ற பதி இதுவாகும்.
உரும்பிராய்க்கிழக்கு
உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட வீரர்கள், சவாரிப் பிரியர்கள், இசைவிற்பன்னர்கள், நடிகர்கள் என்றின்னோரன்னவர்கள் இக் கிராமத்துக்குப் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர். அந்தக் காலத்தில் சிங்கங்கண்டி, நீதவான் பங்கு முதலிய இடங்களே விளையாட்டு மைதானங்கள். இம் மைதானங்களில் உதைபந்தாட்ட வீரர்கள் நல்ல பயிற்சி எடுப்பதுடன் அயலூர் அணிகளை எதிர்த்து உதைபந்தாட்டத்தில் கலந்துகொண்ட சந்தர்ப்பங்கள் பல.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் உதைபந்தாட்டங்களிலும் உரும்பிராய் வீரர்கள் பங்குபற்றி விறுவிறுப்புடன் விளையாடியதுண்டு. வேகமாக விளையாடும் பொழுது உரும்பிராய் வீரர்களைப் பார்த்து "உரும்பிராய்க் கிழங்கு" என்று எதிரணியைச் சார்ந்த இரகசியர்கள் கூக்குரலிடுவது வழக்கம் (மரவள்ளிக் கிழங்குக்குப் பேர் போன இடம் உரும்பிராய்). போட்டியில் உரும்பிராய் வீரர்கள் வெற்றி கொண்டுவிட்டார்களென்றால் வெற்றிக்கு அடையாளமாக இரசிகர்கள் தாம் அணிந்திருக்கும் சால்வைகளை வானத்திலே வீசி வீசித் துள்ளிக் குதித்துக் குதூகலிப்பார்கள். இந்தக் குதூகலக் காட்சியோ வெகு இரம்மியமாக இருக்கும்.
மருதனார்மடம் வீதியில் சவாரிப்போட்டி நடைபெறும். இதுவும் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒரு போட்டியே. இப்போட்டியிற்பங்குபற்றும்
76

LSSLSLSLSSSLSLSSSLSSSSSSSSSSSSSSSSSSSLLLLSSSSSSLSSSSSSLSLSSSSSSLSSLSLSSLSSSSLLSLSSSSSSLSSSSSS
மாடுகளுக்கு நல்ல தீனிபோடுவார்கள். ஒரு வண்டியில் பெரும்பாலும் ஐந்து பேர் பங்குபற்றுவார்கள். எனவே போட்டியில் பங்குபற்றும் இருவண்டில்களிலும் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொள்ளுவர். ஆசனத்தட்டில் சாரதி இருப்பார். இரு மாடுகளுக்கும் அடித்து, உரப்பி ஏவுதற்குத் துவரந் தடியுடன் இருவர் வண்டியின் இருபக்கங்களிலும் ஏறி நிற்பார்கள். wళస్త్ర
பகுத்தறிவுள்ள இந்த மனிதர்களது வீர உணர்ச்சியை பகுத்தறிவற்ற அந்த மாடுகளும் உணர்வன போலும். மாடுகளுக்கும் பெயர் இருக்கும். அளவெட்டி மாவெள்ளை, சங்குவேலிப் பூச்சியன், உரும்பிராய் கமுகன் சோடி, ஊரெழு ஐயருடைய செங்காரி, சரசாலை ஞானமுத்தர் சுட்டியன் சோ, கள்ளக் கறுவல் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும். கொடி காட்டியதும் மாடுகள் ஒடத்தொடங்கும். இரசிகர்களது ஆரவாரம் பெரிதாக இருக்கும். வேகமாக மாடுகள் ஒடும். மாடுகள் வேகமாக ஓடவேண்டுமென்பதற்காக ஆசனத் தட்டிலிருக்கும் சாரதியார் மாடுகளின் குதப் பகுதியில் அடிக்கடி களிஊசி போட்டபடியே இருப்பார். சில மாடுகள் படுத்து விடும். சிலமாடுகள் வெடிவாலைக் கிளப்பிய வணி ணம் முட் கிளுவை வேலியையும் பிரித்துக் கொணர் டு தோட்டங்களினூடே பாய்வதையும் காணலாம். சில சமயங்களில் பக்கச் சாவி விழ சில்லுகளும் கழன்றோட, வண்டியில் உள்ளவர்கள் விழுந்து
எழும்புவதுமுண்டு. விறுவிறுப்பான போட்டிகளில் சவாரிப்போட்டி வெகு
ஜோரானது. இப்படியான சவாரிப் போட்டிகளிற் பங்குபற்றிய சவாரிப் பிரியர்கள் உரும்பிராயில் நிறைய இருந்தார்கள். இத்துறையில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் கமக்காரர்களாகவே இருப்பார்கள்.
ஏரும் இரண்டுளதார் இன்ற்ைதேவித்துளதார்
நீரருகே சேர்ந்தாகிமுைமாப் -ஊருக்குச்
சென்றுவரஅணித்தார்ச்செய்வாருஞ்சொற்கேட்டான்
எண்றுமுறவே இகரிது.
உரும்பிராயின் உயர் தனிச் சிறப்புக்கு அன்றும் இன்றும் காரணர்களாக உள்ளவர்கள் கமக்காரர்களே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
சங்கங்கள் சபைகள்
நாட்டை வளம்படுத்தும் சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் மன்றங்கள், அரசினர் மருந்தகம், தனியார் மருத்துவசாலைகள், இந்துசமய அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக் சபைகள், ஆலய
77 E.

Page 45
பரிபாலன சபைகள், சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்கள், நூலகங்கள், கிறிஸ்தவ சமூக சேவா சங்கங்கள் என்பன செவ்வனே இயங்குகின்றன. மானிப்பாய் வீதியில் உள்ள ஞானசம்பந்தர் இல்லம் ஆதலர் சாலையாக விளங்குகிறது. *
புலவர்மனியின் வாயில்-உரும்பிராய்
நாவலர் காவிய பாடசாலையில் சுன்னாகம் ரீமத் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் ஒரே காலத்திற் பாடங் கேட்டவர்களில் பிற்காலத்தில் பிரசித்திபெற்றவர்கள் இருவர். வடக்கே பண்டிதமணி அவர்கள்; கிழக்கே புலவர்மணி அவர்கள். தம்மைப் பற்றியும் சக பாடியான பண்டிதமணி அவர்களைப் பற்றியும் புலவர்மணி அவர்கள் குறிப்பிடும் போது "ஒரே கிளையில் ஒரே காலத்தில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள்” என்பார். இருவர் பெரியார்களும் உரும்பிராயின் மீது அளவுகடந்த பற்று உடையவர்கள்.
*உலகறிந்த கவிஞர்களில் ஒருவரான மட்டக்களப்பு, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். உரும்பிராயின் சிறப்புக் குறித்த எடுத்தியம்பும் பான்மை இனிக்க வைக்கின்றது.
Ao Lapaðisflåø5 6BUMýósíř
uர்ை பிறந்த சீரூர் உண்மை வளர் நூல்கள் பல
படைத்தோர் வார்ங் துயருர் நிலவுலகும் வானுவைதம் வேண்ட
புகழ்ப் பேரூர் நிலைகாைங்காத் தமிழ் வீரம்
நிைைாட்கும் நிறை பூர் பகைைையும் வளர்த்து கண்த
வாழுமரும் பொரு ரூர் பரமனழுத் தொண்டு புரிங்
தேத்து திருவரு ஆதர் அகிைன்புகழ் யார்ப்பான அன்னை
4. திரு முகத்தின் அவிதிகைம் போன்றிாைங்கும்
உரும்பிராய்த் திரு ஆர்.
- Ao Lödödssymwở aboratóøSuislio adfluuntapuu Jafawartovavý -/992
E 78


Page 46


Page 47
. / ',ി
口  ീM
*
W
M
I"
W.
W
| ή , 《鶯
WS
T
ܔܢ
Wis
TriBGiīgi
t