கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா நினைவு மலர்

Page 1
பேரப 2|ÓL10)2)',
 

சிரியர் வர் சிவராஜய வ மலர்

Page 2

பேராசிரியர்,அம்பலவாணர் சிவராஜா நினைவு மலர் I
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் மறைவையொட்டிய ஒரு சமர்ப்பண மலர்
நினைவுக்குழு கொழும்பு 2007

Page 3
წწ
ଽହୁଁ
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
22.06. 1944 - 13.09.2007
 

எனது தெய்வத்திற்கு கண்ணிர் மலர்கள்
என் அன்புத் தெய்வத்திற்கு கண்ணிரை மலர்களாக்கி அவர் தம் கமல பாதங்களுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறேன். அன்புக் கயிற்றால் என்னைக் கட்டி இல்லத்தரசியாய் இனிது வந்தேற்று மலர்மாலை சூட்டி கணவனாகவும் என் மழலைச் செல்வங்களுக்கு வழி காட்டும் தந்தையாகவும் இருந்து என் மனக் கோயிலில் இறைவனாக என்றும் வீற்றிருந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட என் அன்புக் கணவரின் பொன்னடிகளுக்கு இம் மலர் சமர்ப்பணமாகட்டும்.
-மனைவி

Page 4
2.
III.
I2.
l3.
l4.
l3.
16.
17.
உள்ளே.
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
&g
அவர்களின் கல்வி வாழ்க்கை
Condolence Message
பேணப்பட வேண்டிய நினைவுகள் போற்றப்பட வேண்டிய புலமைச் சொத்துக்கள்
சிவராஜா நினைவுப் பதிவுகள்
கற்பித்தல் திறனுள்ள ஆளுமையாளர்
சில நினைவுகள்
துறைசார் வல்லவர்
பன்முகப்பார்வை கொண்ட பேராசான்
நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்
The Void Created by You, Can Never be Filled
எனது ஆசான்
எனது நண்பர் சிவராஜா
ஊரவன்
கண்ணிர் அஞ்சலி
நீங்காத நினைவுகளில்
அறிவின் கடலை யார் வந்து அள்ளிச் சென்றார்!
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் எழுத்துக்கள்
III
13
17
18
2O
21
24
26
27
29
34
36
37
38
39

பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் கல்வி வாழ்க்கை སྣང་བ་
பேராசிரியர் அ.சிவராஜாவின் கல்வி வாழ்க்கை இப்போது நாவற்குழி மகாவித்தியாலயம் என அழைக்கப்படும் அப்போதைய தமிழ்க் கலவன் பாடசாலையில் 1949இல் தான் ஆரம்பமாகியது. "விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற முதுமொழிக்கேற்ப ஆண்டு ஒன்றிலிருந்து ஐந்துவரையும் அங்கு கற்றபோது கல்வி, விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார். கல்விப் பெறுபேறுகளில் நான்கு முதல் மாணவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். ‘.
மதிநுட்பம் மிகுந்த இவரது தாயார் தனது மகனுக்கு ஆங்கிலத்தில் கல்வி புகட்ட விரும்பி, அப்போதும் இப்போதும் ஆங்கிலக் கல்விக்குப் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் இருக்கும் பரியோவான் கல்லூரியில் ஆண்டு ஆறில் சிறுவன் சிவராஜாவைச் சேர்ப்பதில் வெற்றி பெற்றார். 1954இல் ஆறாம் ஆண்டில் யாழ். பரி.யோவான் கல்லூரியில் சேர்ந்த சிவராஜா,பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் வரை தனது இரண்டாம்தரக் கல்வியினை எவ்வித தங்கு தடையுமின்றி ஜீ.சி.ஈ. சாதாரண தரத்திலும் குறிப்பாக ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையிலும் மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றார். பரியோவான் கல்லூரியில் பயின்ற போது ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பெறுபேறுக்காக சான்றிதழ்" கள் பெற்றதோடு கல்லூரி வெளியிடும் சஞ்சிகையிலும் கட்டுரை எழுதி வந்தார். விசேடமாக பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார். இதன் உச்சக்கட்டம் 1964 ஆம் ஆண்டு நடந்த சாம் சபாபதி தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் முதலிடம் பெற்றமையாகும்.
"இலக்கியமும் வாழ்வும்" என்ற விடயத்தில் முன் ஆயத்தமின்றி மூன்று மணி நேரத்தில் எழுதிப் போட்டியில் வெற்றி பெற்றமை பற்றியும் அவ்வாண்டு நடந்த பரிசளிப்பு விழாவில் இவர் ஆற்றிய உரை பற்றியும் இன்றுவரையும் பேசப்படும் அளவுக்கு பிரபல்யம் பெற்றது. பரியோவான் கல்லூரியின் தமிழ் விவாதக் குழுவின் தலைவராகவும் இருந்து பாடசாலைகளுக்கிடையிலான பல போட்டிகளில் தனது கல்லூரியினை வெற்றி பெறச் செய்தார். இக்குழுவில் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் புகழப்பட்ட ஏ.ஈ. மனோகரன், பா. சிவகடாட்சம், கை. திருச்செல்வம் என்போர் இடம் பெற்றிருந்தனர். 1964 ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் இவர் அரசாங்கம்

Page 5
என்ற பாடத்தில் அதிவிசேடமும் மற்றைய மூன்று பாடங்களில் சிறப்பு சித்தியும் பெற்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார். இச்சிறப்பான பெறுபேறுகளுக்கு ஆர். பாணுதேவன் ஆசிரியரும் இளையதம்பி ஆசிரியருமே காரணம் என்று நன்றியோடு சொல்லி வருகிறார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1965இல் பொதுக்கலைத் தகுதித் தேர்வில் பொருளியலில் மிக அதிகமான புள்ளிகளைப் பெற்றமையால் பொருளியலைச் சிறப்புப் பாடமாகக் கற்கத் தெரிவு செய்யப்பட்ட எட்டு மாணவர்களுக்குள் இவரும் ஒருவர். அப்போது அரசியல், விஞ்ஞானம், பொருளியலின் ஒரு பகுதியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது. 1969 ஆம் ஆண்டு இறுதித்தேர்வில் இரண்டாம் வகுப்பில் சித்தி யெய்தி 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொருளியல் துறை உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அதற்கு முன்னர் சுமார் ஆறு மாதங்கள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பட்டதாரிகள் பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கையில், 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற் துறையில் தற்காலிக விரிவுரையாளர் பதவி கிடைத்தது. 1973ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி நிரந்தர விரிவுரையாளர் ஆக்கப்பட்டார். இவரது விரிவுரைகள் அப்போதைய மாணவ பரம்பரையினரை மிகவும் கவர்ந்திருந்தது. இக்கட்டத்தில் 1976 இல் இவருக்கு கனடாவிலுள்ள நியூ பிறண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது. கனடா பயணமானார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்ற இந்த காலத்துள் பேராசிரியர் வில்சன் தனது பதவியை இராஜினாமாச் செய்து கனடாவுக்குப் பதவிபெற்று சென்று விட்டார். இவருக்கு அடுத்த சிரேஷ்ட விரிவுரையாளரான எம். எல்.ஏ. காதர் அவர்கள் தனது முதுமாணிப்பட்டப் படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்று விட்டார். இந்நிலையில் பேராசிரியர் சிவராஜா அவர்களே தமிழ்மொழி மூல விரிவுரைகள் முழுவதையும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியிருந்தார். இல்லாவிட்டால் தமிழ் மொழியில், அரசியல் விஞ்ஞான கற்கை நெறி இடைநிறுத்தப்படக் கூடிய நிலை இருந்தது. கனடாவில் "இலங்கை அரசியலில் சமஷ்டிக் கட்சியின் பங்கு" என்பது பற்றி பேராசிரியர் வில்சனின் மேற்பார்வையில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முதுமாணிப்பட்டம் பெற்று நாடு திரும்பினார். 1978இல் இவரது முதலாவது நூலான "அரசியலில் யாப்பு வளர்ச்சியும் மாற்றங்களும்" என்ற நூல் வெளியாகி மாணவர்களின் பாராட்டைப் பெற்றது. அக்கட்டத்தில் பல்வேறு சஞ்சிகைகளிலும் புதினத்

தாள்களிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். 1984 இல் இவர் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1978இல் இருந்து இவர் ஆங்கிலத்திலும் விரிவுரைகள் நடத்தத் தொடங்கினார். 1983 இல் புது டெல்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்று தனது கலாநிதிப்பட்டத்துக்கான ஆய்வினை உலக அளவில் புகழ்பெற்ற திருமதி ஊர்மிளா பட்னிஸின் மேற்பார்வையில் "இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் அரசியல்" என்ற விடயத்தில் நிறைவு செய்து அதனைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து 1988இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1992இல் "முரண்பாட்டுத் தீர்வும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதலும்” என்ற செயற்திட்டத்துக்காக சர்வதேச விருந்தினராக அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். 1993இல்புல்பிறையிற் சிரேஷ்ட ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டு, ஒரு வருட காலம் "1977இல் இருந்து அமெரிக்க-இலங்கை உறவுகள்" என்ற விடயத்தில் ஆய்வு செய்து பாராட்டுப் பெற்றார். இவ்வாய்வு இப்போதுநூலாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரித்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு 1995இல் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு இணைப் பேராசிரியர் பதவியை வழங்கியது. 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையும் இவர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகக் கடமையாற்றினார். 2000ஆம் ஆண்டில் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்" துறையின் தலைவராக, அப்போதைய துணை வேந்தரினால் நியமிக்கப்பட்டார். 2002 இல் இவர் அமெரிக்க ரெக்சாஸ் பல்கலைக்" கழகத்திலுள்ள கரி நன்சம் மானிடவியல் ஆய்வு நிலையத்தின் வருகை தரு ஆய்வாளராகக் கடமையாற்றினார்.
அத்தோடு 1995இல் இருந்து அவரின் மறைவு வரையும் வந்தாறு மூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மதியுரையாளராகவும் கடமையாற்றினார். 1998 இல் இருந்து அட்டாளைச்சேனையிலுள்ள தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மதியுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இவரின் ஆய்வுகள், பிரசுரங்கள், பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகள் என்பவற்றைக் கவனத்துள் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் 1999 இல் இவருக்குப் பேராசிரியர் பதவியை வழங்கியது.
கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுள் முக்கியமானது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல விரிவுரையாளர்களின் முதுமாணி, முதுகலைமாணி ஆய்வுக்கட்டுரைகளை மேற்பார்வை

Page 6
செய்து அவர்களுக்கு முதுமாணிப் பட்டங்கள் பெற உதவியதோடு அவர்கள் பதவி உயர்வு பெறச் சேவை செய்தமையாகும்.
சுருக்கமாக பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் கல்வி வாழ்க்கை மற்றையோருக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஒர் உதாரண புருஷராக விளங்கி வரும் பேராசிரியர் அரசியல் விஞ்ஞானத்துக்கப்பாலும் தமிழ் இலக்கியம் தமிழர் அரசியல் பண்பாடு கலாசாரம் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டு அவற்றுக்கும் பங்காற்றியுள்ளார்.
இவர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யூன் மாதம் வரை சுவீடனிலுள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் "சமாதானமும் முரண்பாடும்" பற்றிய ஆய்வுக்கான துறையில் உயர்தர சர்வதேச செயற்திட்டத்தினால் நடத்தப்பட்ட டிப்ளோமாவினை பூர்த்தி செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக 2003ஆம் ஆண்டு ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு கார்த்திகை மாதத்தில் நடத்திய தமிழ் சாகித்திய விழாவில், இவர் கல்விக்கு வழங்கிய, பங்களிப்புக்காக, குறிப்பாக மலையக மாணவர்களது கல்விக்கு ஆற்றிய பணிகளுக்காக "வித்தியாயோதி” என்ற பட்டத்தினை வழங்கியதோடு நினைவுச் சின்னம், பொன்னாடை என்பவற்றையும் வழங்கியது. இவ்வாறு பேராசிரியர் சிவராஜா அரசியல், விஞ்ஞானத்துக்கு அப்பாலும் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்பவற்றுக்கு பங்காற்றினார். இவர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகளுக்கு மகுடம் வைத்தாற் போல் 2004ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தேசிய கல்வி நிறுவனத்தின் மதியுரை சபையின் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றிவந்தார்.
வே. சிவயோகலிங்கம் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்.

Condolence Message
The untimely death of our dear friend and colleague, Prof. A. Sivarajah, was a shock to all of us. Prof. Ambalawanar Sivarajah was born in Jaffna on June 22, 1944. He completed his secondary Education in prestigious St.John's College, Jaffna and obtained an honours degree in Economics from the University of Peradeniya in 1973. He joined the staff of this university as an assistant lecturer on September 25, 1973. Ever since that date been served this university continuously. He received post graduate training in University of New Brunswick in Canada and subsequently in Jawaharlal Nehru University in India. He has been apremier authority on constitutional crisis and Tamil politics in Sri Lanka for the past two decades. Following the footsteps of founders of the discipline of Political Science in Sri Lanka, including Dr. K.H. Jayasinghe and Prof. A.J. Wilson, Prof. Sivarajah contributed a great deal to the development of discipline at Peradeniya. He taught the subject in the Tamil and English media and had a wide network of former Students at Peradeniya and Other universities in the Sri Lanka, including universities in North East. He became Professor of Political Science on 25th September 1999. He served the Faculty of Arts in various capacities. He served as a Head of Department, a member of the Crisis Management Committee and a student counsellor.
For over three decades Prof. Sivarajah actively participated, in the academic life in the university. He was a keen participant in faculty seminars, Peradeniya University research sessions and many other academic for a organized by the Faculty and the University. We remember him as a very Straight forward person with strong Opinions particularly on matters related to democracy, peace and devolution of power in Sri Lanka. He was bold enough to express his views without any inhibitions even when his was the lonely opinion on a sensitive subject. In a Department with many personalities representing different viewpoints and political affiliations, Prof.

Page 7
O
Sivarajah always served as a moderator and a person who freely interacted with all parties concerned. For many, including his junior colleagues, he was sincere friend and an honest reviewer of their teaching and research work.
With his demise the Faculty of Arts lost one of its highly committed scholars and a senior don trusted and highly respected by his academic colleagues, students as well as by the non-academic staff of all categories.
Prof. Kalinga Tudor Silva Dean/Faculty of Arts.
இளமைத் தோற்றம்
 

II
பேணப்பட வேணர்டிய நினைவுகள் ` போற்றப்பட வேண்டிய புலமைச் சொத்துக்கள் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு
அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின் நினைவுகள் நீங்குவதற்கு முன்னரே அவரின் நினைவஞ்சலிக்காகக் குழுமுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கக் கவலைகள் ஆழப்படுகின்றன; நினைவலைகள் அகன்று பரவுகின்றன.
அம்பலவாணர் சிவராஜா என்ற அரசறிவியல்துறை அறிஞன் இன்று நம்மிடையே இல்லை. எவ்வாறு அவன் தனது சொந்தச் சுகதுக்கங்களைக் கவனியாமல் தன்னைச் சிறிதேனும் முனைப்புப் படுத்தாமல் வாழ்ந்து வந்தானோ அதேமுறையில் மறைந்தும் விட்டான்.
இப்பொழுதுதான் புரிகிறது அவன் விட்டுச்சென்ற "வெளி" அகன்றது, பெரியது, நிரப்பப்பட முடியாதது. இந்த இழப்பு இரண்டு நிலைப்பட்டது - ஒன்று சிவராஜா என்ற மனிதனை இழந்தமை; இரண்டு சிவராஜா என்ற ஈடிணையற்ற அரசறிவியலாளனை இழந்தமை.
பாராட்டு விழாவிலே கூறியது போன்று அவன் இலங்கையில் தமிழில் அரசறிவியல் பற்றிய கற்கையிலும் ஆராய்ச்சியிலும் ஜீவ ஊற்றாக விளங்கியவன். ஆனால், அந்த ஊற்றின் புலமைப் பாய்ச்சல் சப்தமின்றி ஒடிக்கொண்டிருந்தது; பரபரப்பின்றிப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த ஒடிய தணி னிரை அள்ளி அள்ளிக் குடித்தவர்கள் பலர்.
அம்பலவாணர் சிவராஜாவின் எதிர்பாராத மறைவு சொந்தக் குடும்பத்தையும் புலமைக் குடும்பத்தையும் ஆதரவற்றவையாக்கி விட்டுள்ளது.
சிவராஜாவைப் பற்றி நினைக்க நினைக்கத்தான் அவரது இழப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் ஆழ அகலம் புலனாகின்றது.
சிவராஜா மறக்கப்பட முடியாதவர். மானுடச் சுழல்வின் மறுதலிக்க முடியாத விதியை சிவராஜாவால் மீறமுடியவில்லை என்பது உண்மையே. ஆனால் மறக்கப்பட முடியாத ஒரு பெரும் சாதனையினை அவர் விட்டுச் சென்றுள்ளார். அதுதான் அவர் கையளித்துள்ள புலமைச்சொத்து ஆகும். நீண்ட ஒரு மாணவர் பரம்பரையும் அத்துறையில் புகழ்பெற்றனவான சில நூல்களுமே இந்த இருகிளைப்பட்ட பெரும் சொத்தாகும்.
இவற்றுள் மாணவப் பரம்பரையின் தொடர்ச்சியான

Page 8
12
நினைவுக்காக ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேணி டும். மறுபுறத்தில் அவரது நூல்கள் மீளமீள வெளிக் கொணரப்படவேண்டும்; வெளியிடப்படாத எழுத்துக்கள் நூலுருவில் வெளிக்கொணரப்படவேண்டும்.
அம்பலவாணர் சிவராஜா நினைவாக ஒர் அறக்கொடை நிறுவப்பெற்று, அவரது புலமைப் பங்களிப்புக்கள் நம்மைத் தொடர்ந்தும் வழிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அவன் பத்தொடு பதினொன்றாக வாழ்ந்தவன் அல்ல; ஆயிரத்தில் ஒருவனாக, பல்லாயிரத்தில் ஒருவனாக வாழ்ந்தவன்; புலமைப் பணியினைச் செய்தவன்.
அந்த நினைவுகள் என்றும் அழியாதவை மாத்திரமல்ல; அழிக்கப்பட முடியாதவையுமாகும். அவற்றைப் பேணுவது நமது கடன். அவற்றைப் பேணுவதன் மூலமே, தன்னை முனைப்புப் படுத்தாத அந்த அறிஞனின் பணிவு நிறைந்த புன்சிரிப்பு எங்களைச் சுற்றிச் சுற்றிவரும். அந்தப் புலமைப் பணியையும், அறிவாழத்தையும் தன்னடக்கச் சீர்மையையும் என்றுமே மறக்காத
11.12.2OO7 கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வு நிலைப்பேராசிரியர் யாழ்.பல்கலைக்கழகம்.

சிவராஜா நினைவுப் பதிவுகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அண்மையில் பேராதனையில் காலமானார். அமரர் பேராசிரியர் சிவராஜா அவர்கள் ஏறத்தாழ நாற்பது வருடங்களில் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் தொழில்சார் சேவையில் ஆற்றிய பணிகள் மகத்தானவை. கல்வியிலும் புலமையிலும் அவருடைய திறமையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் நன்கு அறிந்த நற்பண்புகளாகும்.
அன்னார் குரும்பசிட்டியினைப் பிறப்பிடமாகவும் தனங் கிளப்பை வசிப்பிடமாகவும் கொண்டவர். யாழ். பரியோவான் கல்லூரியில் இரண்டாம் நிலைக்கல்வியினைப் பூர்த்தி செய்து, அதற்குப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப்படிப்பிற்கான அனுமதியினை (1965) பெற்றார். அவருடைய முதலாம் வருடப் பொருளியல் ஆசிரியராக இருந்த காலந்தொட்டு அவரின் மறைவுக் காலம் வரை பேராசிரியர் சிவராஜா அவர்களுடன் அறிவு செறிந்த முறையிலும், கல்விசார் ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றிலிருந்து பல நினைவுகள் முன்வருகின்றன.
முதலாம் வருடத்திற்குப் பின்னராக பல்கலைக்கழகத்தில் அவர் அரசறிவியல் கற்கையினை தனது விசேட பாட நெறியாகத் தெரிவு செய்தது முக்கிய திருப்பமாக அமைந்தது. அவர் அரசறிவியல் சிறப்பு மாணவனாக இருந்த பொழுதிலும் அதற்குப் பின்னரும், அக்காலத்தில் சிறந்த அரசறிவியல் (வரலாறு) சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆசிரியர்களுடன் அறிவு சார் ரீதியில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சிவராஜா அவர்களுக்கு இருந்தது. அத்தகைய அறிஞர்களில் காலஞ் சென்ற அரசறிவியல் பேராசிரியர் ஏ. ஜெயரட்ணம் வில்சன், பேராசிரியர் விஸ்வாவர்ண பாலா (தற்பொழுது உயர்கல்வி அமைச்சர்) மறைந்த பேராசிரியர் ஷெல்டன் கொடிகாரா மற்றும் பேராசிரியர் எம். எல். ஏ. காதர் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர். இவர்களின் வழிகாட்டலும், அறிவு செறிந்த செல்வாக்கும் அமரர் சிவராஜாவின் பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு அறிவு சார் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் நல்ல அத்திவாரமாக அமைந்தது. அரசறிவியல் பட்டப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற சிவராஜா அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றது அவருடைய

Page 9
4
எதிர்காலப் புலமைசார் உயர்விற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. இக் கட்டத்திலிருந்து அவருடைய எதிர்காலத் தொழில் சார் முன்னேற்றம் குறித்து பல முக்கிய வாய்ப்புகளை அவர் பெறக் கூடியதாக இருந்தது. தனது மேலான பட்டப் பின் படிப்பினையும் ஆராய்ச்சியினையும் மேற்கொள்வதற்கான முன்னேற்றப் பாதையில் செல்லும் முக்கிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவே அடுத்த முக்கிய கட்டத்தினை அவர் அடைய முடிந்தது.
கனடாவின் நியூ பிறண்ஸ்விக் (New Brunswick) பல்கலைக்" கழத்தின் அரசறிவியல் துறையில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கான இட ஒதுக்கீடும் நிதி ஆதரவளிப்பும் சிவராஜா அவர்களுக்கு கிடைத்தது மற்றொரு முக்கிய திருப்பமாக அமைந்தது. இப்பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவராக சிவராஜாவின் முன்னாள் ஆசானாக பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்த அரசறிவியல் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன், அவர்களே பதவியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவருடைய வழிகாட்டல், சிவராஜாவின் ஆற்றல், அறிவு வளர்ச்சியில் ஈடுபாடு பற்றிய கடப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை அவர் இரு வருடங்களுக்குள் ஆராய்ச்சிப் பகுதி உட்பட்ட முதுமாணிப் பட்டத்தினை பூர்த்தி செய்வதற்குப் பொறுப்பாக இருந்துள்ளன. முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுத் திரும்பிய பின்னர் சிவராஜா அவர்கள் பதவி உயர்வு பெற்றதுடன் பல்கலைக்கழக அரசறிவியல் துறையில் புதுப்பித்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்டார். இது அவர்களுடைய பல்கலைக்கழகப் பணியில் என்றைக்கும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மாணவர்களுக்குக் கற்பித்தல் பல்கலைக்கழகத்தில் தொழில் செய்யும் விரிவுரையாளர்களின் பணிகளில் முக்கியமானது என்பதை அவர் புரிந்து கொண்டதுடன் ஆராய்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது பற்றியும் அவர் நன்கு அறிந்தவர். இப்பணியிலும் அவர் கடும் முயற்சியுடன் செயலாற்றி வந்துள்ளார்.
இக்கட்டத்தில் முன்னோடி முயற்சியாக சிவராஜா அவர்கள் புதுடில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு ஏற்படுத்தியது முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவ்வாறு ஏற்படுத்திய தொடர்பின் வழியாக தனது கலாநிதி ஆராய்ச்சியினை முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. இதனால் கிடைத்த அரிய வாய்ப்பின் ஏற்பாட்டிற" கிணங்க இடையிடையே ஐவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து கலாநிதிப் பட்ட ஆராய்ச்சியினை ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். இவ்விடையீட்டொழுங்கு மூலம் அவருடைய

I5
ஆராய்ச்சியின் முக்கிய பகுதி பூர்த்தி செய்யப்பட்டது. மிகுதிபேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட அப்பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தையும் சிவராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழக கற்றறிவாளன் வளர்ச்சியில் கலாநிதிப் பட்டத்துடன் முக்கியமான மற்றும் உயரிய சாதனையை அவர் நிறைவேற்றினார். பேராசிரியர் சிவராஜா அவர்கள் தமது துறை சார்ந்த ஆராய்ச்சியில் சிறந்த பெறுபேறுகளை நிலை நாட்டினார்.
அவருடைய ஆராய்ச்சிகள் முக்கியமான பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது. 'அரசியல் யாப்பும் அதன் வளர்ச்சியும்', 'அரசியற் கட்சிகளும் அவற்றின் அரசியற் பங்களிப்பும்', 'புதிய அரசுகளின் பரிணாம வளர்ச்சி', 'இனத்துவமும் அரசியலும் இப்பகுதிகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளிலும் அதன் நிமித்தம் வெளியிட்ட கட்டுரைகளிலும் இலங்கையின் பல்வேறு அரசறிவியல் சார்ந்த விடயங்கள் குறித்த கூரிய நோக்கும் விமர்சனப் பார்வையும் நிறைந்திருந்ததனை அறிய முடிந்தது. இத்தகைய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் பேராசிரியர் தனது துறைசார்ந்த நிபுணத்துவத்தினை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதும் தெளிவாகின்றது. அவருடைய பல கட்டுரைகளும் நூலகங்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளன. சில ஆங்கிலக் கட்டுரைகள் வெளிநாட்டுச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் வழியாக அரசறிவியல் துறையில் தனது முத்திரையினைப் பதித்ததுடன் நாட்டின் அரசறிவியலாளர்களில் அவரும் ஒருவராக எண் பதுகளிலும் தொண்ணுறுகளிலும் மதிப்பிடப்பட்டவர் என்பதும் குறிப்பிட வேண்டியது. அவற்றின் பின்புலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைப் பேராசிரியராக அவர் நியமனம் பெற்றது மறைந்த பேராசிரியரின் தகைமை, ஆற்றல், அரசறிவியல் அடைந்த மேன்மை நிலை என்பவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் அவருக்கு புகழையும் தேடித் தந்த பதவியுமாகின்றது. இத்துறையில் அவர் மேன்மை நிலையினை அடைந்த பின்னரும் பல ஆண்டுகள் செயலூக்கத்துடன் கடமையாற்றி வந்தார். துரர் திஷ்டவசமாக ஏற்பட்ட மறைவு அவருடைய இன்னும் சில ஆண்டுகள் சென்றிருக்கும் சிறப்பான சேவை பல்கலைக்கழக சமூகத்தினர்க்குக் கிடைக்கவில்லை என்பது பெரும் கவலையைத் தருகின்றது.
மறைந்த பேராசிரியரின் சாதனைகளில் இன்னொரு அம்சமும் இடம் பெற்றுள்ளது. நீண்ட காலமாக அவர் ஒரு தமிழ் எழுத்தாளர், கமிம் விமர்சகர் என்ற பங்களிப்பினைச் செய்து பெரும் பாராட்டைப்

Page 10
6
பெற்றவர். அநேகமான கருத்தரங்குகள். கூட்டங்கள் ஆகியவற்றில் பேராசிரியர் பங்கு கொண்ட வேளைகளில் அவை அரசறிவியல் தொடர்பானவை என்பதுடன் இலக்கிய விமர்சனம் தொடர்பானவையாகவும் இருந்துள்ளன. தமிழில் இலக்கியம், இலக்கிய விமர்சனம் குறித்து தனக்கே உரித்தான இடத்தினை பேராசிரியர் அவர்கள் பெற்றது அவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அவருடைய நீண்டகால தொழில் சார் வாழ்வின் மற்றொரு பரிமாணமாக அமைந்துள்ளது.
பேராசிரியர் சிவராஜாவுடன் நன்கு பழகியவர்கள் அவருடைய தாராள மனப்பான்மை, தவறாத நயப்பண்பு, சிநேகயூர்வ ஆர்வம், சேவை மனப்பாங்கு என்பவற்றை அறிந்திருப்பார்கள். மாணவர்களும் சக ஆசிரியர்களும் அவரை அறிவுசார் விடயங்கள் குறித்து சந்தித்து உரையாடல் நடத்துவதற்கு அவர் எப்பொழுதும் முன்வருபவர் என்பதும் அவருடைய கடமையுணர்வினை நன்கு வெளிப்படுத்துகின்றது.
பேராசிரியரை ஒரு சிறந்த ஆசானாக, எளிதில் அணுகப்படக் கூடியவராக, நலஞ்செய்பவராக, மனித நேயம் படைத்தவராக, பல்பக்க நோக்கில் அவருடைய முன்னாள் மாணவர்கள், அவருடன் பழகியவர்கள், அவருடைய அறிவுசார் துணையாளர்கள், சக விரிவுரையாளர்கள் அவர் தொடர்பான நீண்டகால கலையாத நினைவுகளைத் தங்கள் மனதிலும் இதயத்திலும் பதித்தல் அன்னாரின் மறைவுக்குச் செலுத்தும் அஞ்சலியாக அமையும்.
பேராசிரியர் என். பாலகிருஷ்ணன் முன்னாள் கலைப் பீடாதிபதி யாழ். பல்கலைக்கழகம்.

17
கற்பித்தல் திறனுள்ள ஆளுமையாளர்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் அறுபதுகளின் பிற்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்துள் நுழைந்தவர், பொருளியலைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். அரசியல் விஞ்ஞானத்தையும் துறைதோய்ந்த ஆசிரியர்களிடம் கற்றுப் பின்னர் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக இணைந்தவர். தனது முதுகலைமாணிப் பட்டத்தைக் கனடாவிலும், கலாநிதிப் பட்டத்தைப் பேராதனையிலும் நிறைவு செய்தவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்த்தியவர்; கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியல் விஞ்ஞானத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் சிறந்த ஆளுமையுடையவராக விளங்கியவர். ܫ
அதுபோலவே ஆய்வறிவுத் துறையிலும் அவர் கணிப்பிடக்" கூடிய பங்களிப்பைச் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அவர் மாணவர்களுடன், மாணவர் சங்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர். குறிஞ்சிக் குமரன் ஆலயத்துடன் அவருக்கு ஈடுபாடு இருந்தது. பல நாடுகளுக்கும் அவர் புலமைப் பரிசில் பெற்றுச் சென்று ஆய்வுகளும், உரைகளும் நிகழ்த்தியுள்ளார். மாணவர்கள் நலன் கருதி பல நூல்களையும் எழுதியுள்ளார்.
அவரது இழப்பினால் கவலையுற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் தில்லைநாதன் தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 11
18
சில நினைவுகள்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே மாணவராக இருந்தகாலம் முதல் எனக்கு அறிமுகமானவர். காலப்போக்கில் எமக்கிடையில் உள்ள உறவுகள் மிகவும் நெருக்கமடைந்தன. அவருடைய சில குணநலன்களும் தகைமைகளும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. தனிப்பட்ட முறையிலும் சமூக விடயங்களிலும்அவர் நேர்மையை உறுதியாக கடைப்பிடிக்கும் பாங்குடையவர். தமிழ் மொழியிலும் தமிழர் சமுதாயத்திலும் மிகுந்த பற்றுக் கொண்டவர். அதன் காரணமாக அந்நாட்களில் தமிழரசுக் கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திற்கு வரும் தமிழ்மாணவர்கள்" அச்சத்தின் காரணமாக ஓர் இரட்டைவேடம் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டனர். தங்களுடைய ஊர்களில் ஒருவிதமாகவும், பல்கலைக்கழகத்திலே வேறுவிதமாகவும் அரசியல் சம்பந்தமாக பேசிக் கொள்ளப் பழகிக் கொண்டனர். இது யாழ்ப்பாணத் தமிழர்களுக்குரிய குணாதிசயம் என்றும், ஆறுமுகநாவலரின் ஆசிரியரும் மெதடிஸ்மிஷன் சபையின் அதிமேதையுமாகிய பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் கருத்து என்றும் கூறுவார்கள். இந்தப் பணி பிற்கு விதிவிலக்காக நடந்துகொள்பவர்கள் மிகச் சிலர். அவர்களில் சிவராஜா குறிப்பிடத்தக்கவர்.
அரசியல் துறையில் கல்வி கற்றதனால் சுதந்திர இலங்கையின் பிரச்சினைகளை அவரால் இளமைக் காலத்திலேயே தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் இளமைக் காலத்தில் தமிழ் மொழியில் ஒரு முன்னணிப் பேச்சாளராக பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியிலும் விளங்கினார். அவருடைய மொழி ஆட்சி போதனா சக்திக்கு வலுவூட்டியது. அதனால் கவரப்பட்டு பல மாணவர்கள் அரசியலை ஒரு பாடமாகப் பயின்றார்கள்.
தமிழ் மொழி மூலம் பல்கலைக்கழகத்திலே பயின்ற தமிழர்களில் அநேகமானோர் ஆங்கில மொழியில் போதிய பயற்சி பெறத் தவறிவிட்டனர். ஆனால் சிவராஜா இளமைக்காலம் முதலாக ஆங்கில மொழியில் பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழக மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்து கட்டுரை சமர்ப்பிக்கும் தகுதியினையும் துணிவினையும் பெற்றார்.

19
எந்தச்சபையிலும் எதுவித அச்சமுமின்றி தனது கருத்துக்களை முன்வைக்கும் தகுதியும் மனப்பாங்கும் அவருடைய சிறந்த குணாதி. சயங்களில் ஒன்றாகும். ஆங்கிலமொழியிலும், தமிழ் மொழியிலும் பல பயனுள்ள நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றி அரசியல் ரீதியாக ஆராய்ந்து பலதரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளமை அவரது மற்றுமொரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாணவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பேராசிரியர் சி.பத்மநாதனி
வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்.
முதுமாணிப் பட்டம் - கனடா

Page 12
2O
துறைசார் வல்லவர்
எனது நோக்கில், முறைப்படி அரசறிவியலைப் பயின்று அத்துறையில் உயர்பட்டங்களைப் பெற்று ஏராளமான ஆய்வுகளைச் செய்து பணியாற்றி வந்த ஒரே தமிழ் அறிஞர் பேராசிரியர் சிவராஜா அவர்களாவர். இவ்வகையில் இவரது மறைவு அரசறிவியல் துறையில் தமிழ் சமூகத்தில் ஒர் "அறிஞர் தட்டுப்பாட்டையே" ஏற்படுத்தியுள்ளது. இத்துறையில் பேராசிரியர் அவர்களைத் தவிர்த்து நோக்குமிடத்து இரண்டாமவர் ஒருவரை இனங்காண முடியாதிருப்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.
பேராசிரியர் அவர்களை இளமை முதல் நான் நன்கு அறிவேன். இளம் விரிவுரையாளராக அவர் நியமனம் பெற்ற அன்று அவரைப் பாராட்டிய முதலாவது நபர் நான் என்பதிலும் எனக்கு ஒரு பெருமை உண்டு. அவர் சார்ந்த துறையில் அவர் வல்லவர் என்பதோடு அவர் ஒரு நல்லவரும் கூட. எனது பார்வையில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிஞராக மட்டுமன்றி, ஆய்வாளராக மட்டுமன்றி, மனித" நேயமுள்ளவராக, நட்புப்பாங்குடன் திகழ வேண்டும். சமூகத் தொடர்பு அறிஞர்களுக்கு முக்கியமானது. சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பதும் உழைப்பதும் மூன்றாம் உலக பல்கலைக்கழக அறிஞர்களின் பிரதான பணி என்பது எமது தாழ்மையான கருத்து. இக்கருத்துக்கு ஏற்பப் பணியாற்றி வந்தவர் என்ற முறையில் பேராசிரியரிடம் எனக்குத் தனியான ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னோடு அவருக்குப் புலமை சார்ந்த தொடர்போடு ஒரு சகோதரப்பான்மையான தொடர்பும் உண்டு என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
அவரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் அவர்சார்ந்த துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரனர் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்.

2.
பன்முகப்பார்வை கொண்ட பேராசான்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு நம்ப முடியவில்லை. விதியாரைத் தான் விட்டது. பிறப்பவர்கள் யாவர்க்கும் இறப்பு நிச்சயம் என்ற போதிலும் தமிழ் மக்களுக்கு பொருத்தமான அரசியல் விஞ்ஞானக் கருத்துக்களும் அதனோடிணைந்த அரசியல் தீர்வும் வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டில் குறிப்பாக எமது பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் விஞ்ஞானிகளில் மூத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அவர்களை இழந்து தவிக்கின்றோம். இவரது இழப்பு தனிப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது முழு நாட்டுக்குமே பேரிழப்பாகும்.
பேராசிரியர் அவர்களுடன் கடந்த நாற்பது ஆண்டுகள் நெருங்கி உறவாடியவர்களில் நானும் ஒருவன். அவரைக் காணும் போது என்னையே அறியாது பாச உணர் வேற்படும். பேராதனை பல்கலைக்கழகத்தில் அவர் மூன்றாம் வருட மாணவனாக இருக்கும் போது நான் முதலாம் வருட மாணவன். பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கமே பல்துறைசார் தமிழ் மாணவர்களின் ஆளுமையினை வளர்த்தெடுக்கும் களமாகச் செயற்பட்டு வருகின்றது. அமரர் அவர்கள் தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படும் விவாத மேடையானாலும் சரி பட்டிமன்ற மாயினும் சரி நாடக அரங்கமாயினும் சரி இலக்கிய கருத்தரங்காயினும் சரி தவறாது தனது பங்களிப்பினைச் செலுத்தி வந்ததை நான் அறிவேன். குறிப்பாகப் பேச்சுப்போட்டிகளில் முதலிடம் இவருக்கே ஒதுக்கப்பட்டிருக்கும். அன்றைய அரசியல் மாணவனாக இருந்தாலும் சரி இன்றைய அரசியல் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி மிகச் சிறந்த இலக்கிய விமர்சகராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர்.
அமரர் அவர்கள் நாட்டில் சமாதானமும் சுபிட் சமும் நிலைப்பதற்கு ஒர் ஆய்வாளன் என்ற வகையில் காலத்துக்குகந்த கருத்துக்களை முன்வைத்தவர். இன்றைய சூழலில் பலர் தாம் வாழும் சூழலுக்கேற்ப தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் மாற்றி சொந்த நலனில் அக்கறை கொள்ளும் நிலை காணப்படுகின்ற போதிலும் பேராசிரியர் அவர்கள் தனது சமூகத்தின் நீதியான கோரிக்கைகளை பணயம் வைக் காது தான் கொணி டிருந்த கொள்கைகள், கருத்துக்களிலிருந்து என்றும் வழுவாத நிலையினைத் தன்னகத்தே கொண்டு வாழ்ந்த உத்தமர்.

Page 13
22
பேராசிரியர் சிவராஜா அவர்களுக்கும் என் போன்ற நண்பர்களுக்குமிடையில் நெருங்கிய உறவு இறுக்கமடைவதற்கு முக்கிய காரணியாக விளங்கியவர் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள். அவர் தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தது மட்டுமல்லாது பல்கலைக்கழத்தில் கட்சியின் விசுவாசிகளாக இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் இணைத்து கட்சிச் செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்த காலங்களில் அமரர் அவர்கள் வகித்த பங்கினை இன்று திரும்பிப் பார்க்கின்றேன். அதுமட்டுமல்லாது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக பிரச்சினைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறுவதில் பின்னிற்காதவர். அவரால் எழுதப்பட்ட பல்வேறு ஆய்வுகள் நாட்டில் சமாதானமும் சுபிட்சமும் நிலைபெறுவதற்கு ஒர் ஆய்வாளன் என்ற வகையில் தர்க்கரீதியான கருத்துக்களைமுன்வைத்தவர்.
நாட்டில் கடந்த கால் நூற்றாண்டாக இனமோதல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. தமிழர்களின் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஆழ்ந்த புலமைகொண்ட அரசியல் விஞ்ஞானிகள் தேவைப் படுகின்றனர். இப்பிரச்சினைகள் பற்றிய விடயத்தில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றக்கூடியவர் பேராசிரியர் சிவராஜா அவர்கள். எனவே ஆற்றல், நியாயப்படுத்தக்கூடிய புலமை கொண்ட அவர் எம்மை விட்டுப்பிரிந்தது பெரும் இழப்பென்றே கூறல் வேண்டும்.
பேராசிரியர் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் தந்தை போலச் செயற்பட்டு அவர்களுக்கேற்படும் அசெளகரியங்களைப் போக்குவதில் நீண்டகாலமாக பணியாற்றியதன் விளைவாக சகல துறை மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அமரர் பேராசிரியர் அவர்கள் எமது சமூகத்தின் விடிவுக்காய் இன்னும் பல அளப்பரிய சேவைகளை ஆற்ற வேண்டிய இக்கால கட்டத்தில் எம்மை விட்டுப் பிரிந்த செய்தியானது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதுள்ளது. பிறப்பு உள்ளது போல மனிதனுக்கு இறப்பும் தவிர்க்க முடியாதது என்பதை நாம் அறிந்திருந்தாலும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் எமது சமூகம் மேலும் பெருமையடைந்திருக்கும்.
இறுதியாக அமரர் பேராசிரியர் சிவராஜா அவர்கள் எம்மிடையே இல்லாதிருப்பினும் அவரால் விட்டுச் சென்ற பல்வேறு ஆய்வுகள்,

23
நூல்கள் அவரது பெயரையும் புகழையும் கூறிக் கொண்டேயிருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல குறிஞ்சிக் குமரனை வேண்டுவதுடன் அவரை இழந்து தவிக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் கா. குகபாலன் தலைவர்
, புவியியற்றுறை
யாழ். பல்கலைக்கழகம்.
புத்தக வெளியீட்டின் போது

Page 14
24
நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்
அரசறிவியற்துறைப் பேராசிரியர் கலாநிதி அம்பலவாணர் சிவராஜா அவர்களின் மறைவு குரும்பசிட்டிக் கிராமத்திற்கும் குறிப்பாக குரும்பசிட்டி சன்மார்க்க சபைக்கும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியாகும். நாவற்குழியே அவரது பிறப்பிடமாக இருப்பினும் அவரது தந்தையார் அமரர் அம்பலவாணர் அவர்கள் எமது குரும்பசிட்டி மண்ணின் மைந்தனாகவும் குரும்பசிட்டி மண்ணை நேசித்த பற்றாளனும் ஆவார். தலைநகர் கொழும்பில் "அம்பலவாணர் அன் சன்ஸ்" என்ற வர்த்தக நிறுவனத்தை நடாத்தியவர். எமது குரும்பசிட்டி மண்ணில் இருந்து கொழும்பு செல்பவர்கள் அவரை நாடிச்சென்றால் அவர்களிற்கு தனது வர்த்தக நிறுவனத்தில் தங்க இடமளித்து அனைத்து உதவிகளையும் செய்வது அவரது மரபாக இருந்து வந்தது. அத்தகைய ஒரு புரவலரின் ஏக புத்திரனான பேராசிரியர் சிவராஜா குரும்பசிட்டி மண்ணின் மீது பற்று மிக்கவராக திகழ்ந்தார்.
நவீன தமிழ் இலக்கியத்திற்கு தொட்டில் அமைத்தவர் என வர்ணிக்கப்படும் ஈழகேசரிப் பத்திரிகையின் தாபகரான நா. பொன்னையா அவர்கள், குரும்பசிட்டி மண்ணில் 1934 இல் ஆரம்பித்த குரும்பசிட்டி சன்மார்க்க சபையோடு அமரர் அம்பலவாணர் அர்ப்பணிப்புடன் இணைந்து 1965 அளவில் அதன் காப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். அவரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரியர் சிவராஜா அவர்கள் அப் பதவியை அலங்கரித்தார்.
குறிப்பாக நாட்டின் யுத்த சூழ்நிலையால் பலாலி விமானத்தளத்தின் தென் புற எல்லையில் அமைந்த குரும்பசிட்டி மண்ணின் மக்கள் 1986 முதல் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இருப்பினும் குரும்பசிட்டி சன்மார்க்க சபை கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூக சேவை எனப் பல துறைகளிலும் இக்காலத்தில் முனைப்புடன் செயற்பட்டது. இக்காலத்தில் பேராசிரியர் அவர்கள் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோதும் தன் பங்களிப்பினை எமக்கு வழங்கினார். 1988இல் சன்மார்க்க சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் அமரர் த. இராசரத்தினத்தின் முதலாவது நினைவுப் பேருரையை "குரும்பசிட்டியின் இலக்கியப்பாரம்பரியம்" என்ற தலைப்பில் நிகழ்த்தினார். அரசியற்துறைப் பேராசிரியரான இவர் இலங்கையின் பல்வேறுபட்ட அரசியற் காலகட்டங்களின்

25
பின்னணியில் குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியத்தை ஆராய்ந்தமை பல இலக்கிய விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. பின் 1989இல் இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். இதில் குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம் தொடர்பான நினைவுரையில் ஈழத்தில் இரசிகமணி கனகசெந்திநாதன் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு விமர்சன மரபைக் தொடக்கி வைத்தார் என்ற கருத்தை வெளியிட்டார். இது ஒரு விரிவான ஆய்வாக இரசிகமணி நினைவுரையாக நிகழ்ந்தது. இது தொடர்பான கருத்துப் பரிவர்த்தனைக் களம் ஒன்றும் இலக்கியப் படைப்பாளிகள், விமர்சகர்களால் அன்று மாலை இடம்பெற்றது.
1999 இல் இவ்விரு ஆய்வுகளும் "இரசிகமணியும் தமிழ் மரபு விமர்சனமும்” என்ற நூலாக கொழும்பில் சன்மார்க்க சபையினரால் வெளியிடப்பட்டது. கொழும்பில் சன்மார்க்க சபை ஒழுங்கு செய்த கருத்தரங்குகளிலும் பங்குகொண்டு ஊக்குவித்தார். இவை அரசியற்" துறைப் பேராசிரியராக அவர் தமிழ் இலக்கியத்தின் மீதும் விசேடமாக தமிழிலக்கிய விமர்சனம் தொடர்பான அவரது ஆர்வத்திற்கு சிறந்த சான்றாதாரங்களாகும்.
பேராசிரியர் அமரர் அம்பலவாணர் சிவராஜா அரசறிவியற் துறை, இலகியத்துறை ஆகியவற்றில் சிறந்தவொரு விமர்சகராகத் திகழ்ந்தவர். அரசறிவியற்துறையில் பல சிறந்த மாணாக்கர்களை இவர் உருவாக்கினார். அவர்களில் பலர் இன்றும் அவரின் மீது கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் எமது குரும்பசிட்டி மண் ணிற்கு பெருமையளிக்கின்றது.
அரசியற்துறை மாணாக்கர்கள் சிறந்தவொரு ஆசானை இழந்து நிற்கின்றனர். கலை,இலக்கியத்துறை சிறந்தவொரு சிந்தனையாளனை இழந்து நிற்கிறது. பல்கலைக்கழகம் ஒரு பேராசிரியனை இழந்து நிற்கின்றது. குரும்பசிட்டி சன்மார்க்க சபை அதன் காப்பாளர்களில் ஒருவரை இழந்து நிற்கிறது. எமக்கு இது நிரப்ப முடியாத ஒரு வெற்றிடமாகும்.
சு. சிவபாதம் தலைவர் சன்மார்க்க சபை

Page 15
26
The Void Created by You Can Never be Filled
When Iheard that Prof. Sivarajah had left us so suddenly it took sometime for meto realizeitsimpact. The Peradeniya University Faculty of Arts lost a Senior Professor with exemplary qualities, because he was a very committed academician in teaching, a researcherandalPolitical Philosopherin Political Science.
When I worked at the Faculty of Artsas Senior Assistant Registrar, I had close association with Prof. Sivarajah, who was one of the humble, genuine Professors in the Faculty, and I had the fortune to work with Prof. Sivarajah, in various capacities. I understood that his commitment to the university was unforgettable and also, works ethics that he exhibited at evaluation committees, conducting examinations and Other academic works have been admirable. When I was in the Faculty Iknow that he was one of the Academic members who was in the Main Library everyday. Considering the above facts Prof. Sivarajah was a role model Professor for the young Academics of the faculty and the university as well. Prof. Sivarajah was one of the active participants of the Faculty Board of Arts. His friendly advice, the simple word spoken and constructive ideas were much helpful to overcome controversial issues. When he worked as Head of the Department for a short period I appreciated his guidance, comforting words, advice continuous encouragement and his inspiring Sermons which Ishall never forget.
The Faculty of Arts will miss you very much because a good teacher is a joy forever. The void created by you, can never be filled. Prof. Sivarjah was agentle unassuming individual; he was never given to Ostentatious talk or action. Whatever he did he did silently and unobtrusively. He was a completely sincere gentleman with deep commitment. Finally, last month I met Prof. Sivarajah at the Senate Staircase. Hen "Abey you are a big man, where's your tie?” I never forget these few words because this exhibited Prof. Sivarajah's generosity, which he did throughout his life. Goodbyesir.
A.M.B.G. Abeysinghe Deputy Registrar Wayamba University of Sri Lanka, Kuliyapitiya.

27
எனது ஆசான்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களை, எனது தந்தையின் ஊரவன் என்ற வகையில் நீண்ட காலமாக நான் அறிவேன். நான் சிறியவனாக இருந்த போது துடிப்புள்ள இளைஞனாக அவர் ஊரில் வலம் வந்தார். அந்நாளிலே விளையாட்டு நிகழ்வாக இருந்தாலும் சரி, வாசிகசாலை நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அரசியற் கூட்டங்களாக இருந்தாலும் சரி அவர் தான் முதல் வீரன், அவர் தான் தலைவர், அவர் தான் பிரதான பேச்சாளர். எல்லா நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக வைத்திருப்பதில் கைதேர்ந்தவராக் விளங்கினார். அவருடைய பேச்சாற்றலை தவில் மேதை தட்சணாமூர்த்தியின் கரவேகத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதனை நான் கேட்டிருக்கின்றேன். இளையோர்களால் அண்ணை என்றும், பெரியோர்களால் தம்பி என்றும் அன்பாக அழைக்கப்பட்டவர். ஊரில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு சமாதான நீதவானாக அவர் விளங்கினார் என்பதனையும் நான் நன்றாக அறிவேன்.
அடுத்து அவருடைய மாணவனாக நான் பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதவையாகும். பல்கலைக்கழகத்திலே இரண்டாவது வருடம் தான் அவரிடம் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கற்பித்தலின் போது அவர் சொற்களைக் கையாளும் விதமும், ரிதமும் இன்றும் என் காதுகளில் றீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கின்றது. கிராமப்புற பாடசாலைகளிலே தமிழ் மொழி மூல மாணவர்களாக உயர் கல்வியைக் கற்றுத் தேர்ந்து பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போது உசாத்துணை நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தமையால் என் போன்ற மாணவர்கள் மிகவும் கவலை அடைந்து இருந்த வேளையிலே, துயர் துடைக்கும் துணைந்தரமாக பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டார். "தக்கார் தருவிலர் யார் என்பது அவர்களின் எச்சத்தால் பெறப்படும்” என்று வள்ளுவம் கூறுவதற்கிணங்க அவர் விட்டுச் சென்ற நூல்களே அவர் ஒரு சான்றோன் என்பதற்குச் சான்றாகும்.
பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறி யாழ்.நகரிலே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிலே விரிவுரையாளராகக் கடமை" யாற்றிய போது அவருடைய இரு நூல்களை நிறுவனத்தின் சார்பாக நான் பதிப்பித்தேன். தமிழ் நூல்களுக்கு இருந்த அருமையும், தேவையும் பதிப்பித்த ஒரு கிழமைக்குள் புத்தகம் தீர்ந்துவிட்டது. அவருக்கு ஒரு புத்தகத்தினையும் அதற்குரிய தொகையினையும்

Page 16
28
அவரிடம் கொடுத்தபோது அவர் நகைச்சுவையாகக் "சுடச் சுட்ச்தோசை விற்றது போல முடிந்து விட்டது" என்று என்னிடம் கூறினார். அவருடைய நூல்கள், கட்டுரைகள், ஏனைய ஆக்கங்கள் தொடர்பாக விரிவஞ்சி நான் குறிப்பிடவில்லை.
இறுதியாக அவருடைய சகாவாக பல்கலைக்கழகத்திலே பணியாற்றிய போது அவருடைய ஆய்வுத்திறன், வழிகாட்டும் திறன், நேரம் தவறாமை, கடமை உணர்வு இவை எல்லாம் வளர்ந்து வரும் இளம் விரிவுரையாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்” திருந்தது. தனது துறை சார்ந்த விடயங்களில் மட்டுமல்ல அவற்றிற்கு புறம்பாக கலாசார நிகழ்வுகளில் தனது பங்களிப்பினை வழங்கிவந்தார். மகாகவி பாரதியினதும் பாரதிதாசனதும் கவிதைகளில் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சில வேளைகளில் மாலையில் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அவர் உலாவரும் வேளையில் அடிக்கடி பாரதியாரின் "நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெடப் புழுதியில் விடுவதுண்டோ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர் மிகவும் அறிவுடன் படைத்துவிட்டாய்” என்ற வரிகளை அடிக்கடி எனக்குச் சொல்லுவார். இது அவர் மனத்திற்குள் ஏதேனும் ஆதங்கம் இருக்கின்றதோ என்று என்னை திகைக்கத் தோன்றும். அதுமட்டுமல்லாது பல்கலைக்கழக மாலை நேரப் பொழுது மிகவும் (கலர் புல் லாக) அனைவரையும் கவர்ந்திருக்கும் நேரம் இவ் வேளைகளிலே கூடத்திலே இன்ப மாடத்திலே உள்ளம் கூடிக்கிடக்கின்ற வேளையிலே என்ற வரிகளை உச்சரித்துப் புன்முறுவல் புரிவார். இவை எல்லாம் எனக்கு என் கண் முன்னால் நிழலாடிக்கொண்டு இருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரை அவர் வளர்வதற்கு இனிய நண்பனாக தேவை ஏற்படுகின்ற வேளைகளில் எல்லாம் மதியுரை வழங்கும் மந்திரியாகவும் பாடவிதானங்களிலே சந்தேகம் ஏற்படுகின்ற போது அதனைத் தீர்த்து வைக்கும் நல்ல ஆசிரியனுமாக, அன்பிலும் பணி பிலும் தெய்வமாகவும் பார்வை அளவில் ஒரு சாதாரண மனிதனைப் போல் பல பரிமாணங்களுடைய மாமனிதராக வள்ளுவர் வாக்கிற்கிணங்க வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று தெய்வத்துள் ஒருவராகி அமர பதம் அடைந்த பேராசிரியர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
வே.சிவயோகலிங்கம்

எனது நணர்பர் சிவாறு
கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறைப் பகுதியில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து கொண்ட மாணவர்கள், தொடர்ந்து கற்கையை மேற்கொள்வதற்குப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதே அன்றைய நடைமுறை. 1966ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு வந்த நான், நடைமுறைக்கு ஏற்ப கற்கையைத் தொடர்வதற்காக 1967ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்" கழத்திற்குச் சென்றேன். இக்காலமே என் நண்பர் சிவராஜாவைச் சந்தித்த ஆரம்பகாலமாகும். ۔
நண்பர் சிவராஜா பல்கலைக் கழக வாழ்க்கையில் எனக்கு ஒருவருடம் "சீனியர்". அதனால் கொழும்பிலிருந்து வந்த என்னை, இவரும் இவருடைய நெருக்கமான நண்பர் இரவீந்திரனும் தொடர்ந்து பலநாட்களாக “றாக்கிங்" செய்து கொண்டே வந்தனர். ஆரம்பத்தில் முரணி பட்டுக் கொண்ட நாங்கள் பின் மிக நெருக்கமான நண்பர்களாகி ஒரு அறையிலேயே மூவரும் தங்கியிருந்து கற்கையைத் தொடர்ந்தோம்.
குணாதிசயங்களின் ஒற்றுமையின் அடிப்படையில் மிக நெருக்கமான நண்பர்களாகிய நாங்கள் மூவரும் நட்பு விடயத்தில் மிகவும் மேன்மையான எண்ணம் கொண்டவர்களாக இருந்தோம், தூய உள்ளத்துடன் நண்பர்களாகப் பழகி நட்புக்கு இலக்கணமானோம். எங்கள் குணாதிசயங்களுக்கு ஏற்ற பலரை நண்பர்களாக ஏற்று அவர்களுடனும் நம்பிக்கையுடன் பழகி வந்தோம். மற்றவர்கள் மனமறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்ததினால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் எங்களுடன் நண்பர்களாக இருந்தார்கள். பல்வேறு மண்டபங்களில் நடைபெறும் விரிவுரைக்குச் சமுகம் கொடுக்கும் நேரம் தவிர, மற்றைய நேரங்களில் நாங்கள் மூவரும் எங்குசென்றாலும் ஒன்றாகவே போய்வருவோம். எங்களில் ஒருவரைத் தனிமையில் காண்பது மிக அரிதாகவே இருக்கும். நண்பர்கள் என்ற தொடர்புடன் சகோதரபாண்மையான தொடர்பும் எங்களிடமிருந்தது. நண்பர் சிவராஜா நண்பர்களுக்காக எந்த உதவிகளையும் செய்யத்தயாராகவே இருப்பவர். வழிதடுமாறும் நண்பர்களைத் தனது பேச்சாற்றல் மூலம் அவர்களைத் திருத்தி விடுவார். இவர் அனைவரிடமும் நட்புக் கொண்ட போதிலும் குறிக்கப்பட்ட சிலரை மட்டுமே தனது நெருங்கிய நண்பர்களாக

Page 17
3O
ஏற்றுக் கொள்பவர். இந்த வகையில் நான், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்ற பெருமை எனக்கு உண்டு.
நண்பர் சிவராஜா ஒரு காவியத்தலைவனுக்குரிய வரைவிலக்கணங்களை உள்ளடக்கிய குணாதிசயப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கியவர். 1967ஆம் ஆண்டு தொடக்கம் அவரின் இறுதிக் காலம் வரை அவருடன் மிகவும் நெருங்கிய நண்பனாகப் பழகி, அவரின் குணாதிசயங்களையும் ஏனைய சிறப்புக்களையும் என்றுமே மனதில் பழைமையான நினைவுகளில் வைத்திருக்கும் என்னால் அந்த நினைவுகளை ஒரு கட்டுரை அமைப்புக்குள் அதுவும் சில பக்கங்களில் சுருக்கமாக எழுதும் எழுத்தாற்றல் எனக்கு இல்லாமலிருப்பதை நினைத்துக் கவலைப்படுகின்றேன்.
நண்பர் சிவராஜாவின் குணாதிசயங்களினால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன். இவர் கூர்மையான நுண்ணறிவு படைத்தவர். இவரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியான சம்பந்தம் இருக்கும். சொல்லுவதைச் செய்வார், செய்வதைச் சொல்லுவார். தனது கொள்கையில் பிடிவாதம் கொண்டவர். தோல்வியைக் கண்டு துவளாத வைரமனம் கொண்டவர். கற்றோர், பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்துத் தன்னடக்கத்துடன் செயற்படுபவர், ஆழ்ந்த சிந்தனை உடையவர். எந்த விடயத்தையும் உடனே கிரகித்து நல்ல சிந்தனையுடன் அறிவு பூர்வமாகச்செய்து கொள்பவர். கல்வி அறிவுடன் உலக அனுபவ அறிவும் உடையவர்.
இவரின் பேச்சிலும் செயலிலும் ஒருவிதத் தனித்துவம் காணப்படும். தமிழிலும், ஆங்கிலத்திலும் தங்குதடையின்றி நகைச் சுவைததும்ப விவேக பூர்வமாகப் பேசும் வல்லமையுடையவர். இவருடைய பேச்சு கேட்பவர்களைச் சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கும் தன்மையுடையது. பேச்சில் இனிமையும் கவர்ச்சியும் ஆழ்ந்த கருத்துக்களும் இருக்கும். எந்த விடயத்தையும் சுற்றிவளைத்துப் பேசாமல் நேருக்கு நேர் பிறருக்குச் சந்தேகமின்றி புரியும் படி உரக்கப்பேசுபவர். பிறர் தன்னைப் புகழ்ந்து பேசுவதை விரும்பாதவர். பிறரைப் புகழ்ந்து பேசி காரியம் சாதிப்பதை அறவே வெறுப்பவர். தனது பேச்சாற்றலினால் மற்றவர்களுடைய மனதைத் திசை திருப்பக் கூடிய இவர், எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் வாதம் செய்வதிலும் வல்லவர்.
நண்பர் சிவராஜா ஒரு சிறந்த நடிகர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பல நாடகங்களில் முக்கியமாக நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்துப் பாராட்டுப் பெற்றுக் கொள்வதுடன் ஒவ்வொரு வருடமும் "சிறந்த நகைச்சுவை நடிகர்" என்ற

31
பட்டத்தினையும் பெற்றுக் கொண்ட பெருமைக் குரியவர். தெய்வ நம்பிக்கையும், குருபக்தியும் இயற்கையிலேயே இவருக்கு அமைந்த குணங்களாகும், மனித சக்திகளை விட தெய்வசக்தியையே பூரணமாக நம்பியவர். பணவசதி அற்றவர்களுக்கும் தனது கிராம மக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பல விதங்களில் உதவிகள் செய்து பலரது அன்பையும், நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டவர். ஏழைகளுக்கு உதவிகள் செய்து மனத்திருப்தி அடையும் இளகிய மனமுடையவர். இவர் தான் கல்வி கற்ற யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியை தன் இதயத்தே வைத்து பழைய மாணவ பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அக்கல்லூரியின் வளர்ச்சியிலும் பங்குபற்றிக் கொண்டவர். தாய் நாட்டின் மீது அதிக பற்றுதல், உடையவர். தமிழ்ப்பற்றும் விடுதலை உணர்வும் நிறைந்த இவர் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைத்தவர்.
நான், யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் பழகும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் குடும்பத்தில் நான் ஒர் உறுப்பினர் ஆனேன். யாழ்ப்பாணத்தில் நாவற்குழியில் வசித்த இவரின் பெற்றோரும், சகோதரியும் என்னுடனும், எனது குடும்பத்தினருடனும் மிக்க பற்றுப் பாசத்துடன் பழகி வந்தார்கள். நண்பர் சிவராஜா பேராதனையில் தங்கியிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியிருந்த நாங்கள் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று இவர்களைப் பார்த்து வேண்டிய உதவிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நான் தோற்றத்திலும் அவர்களுடன் பழகும் விதங்களிலும் சிவராஜா போன்று இருந்த காரணத்தினால் அவர்கள் என்னைக் காணும் பொழுதெல்லாம் தங்கள் மகனைக் கண்டது போன்ற மன நிலையில் மகிழ்ச்சியடைவதை என்னால் காணக் கூடியதாக இருந்தது.
இவரின் பெற்றோர் கண்ணியமானவர்கள். எவருடனும் இனிமையாகப் பழகும் பண்பினர். நிறைந்த இறைபக்தி மிக்கவர்கள். மனம் கோணாது தானதர்மங்களில் நிலைத்து நின்ற பெருமைக்கு உரியவர்கள். குறிப்பாக இவரின் தந்தையார் கொழும்பில் மதிப்பிற்குரிய வர்த்தகராக வாழ்ந்தவர். இனிய பேச்சினாலும் சாத்வீகமான குணத்தினாலும் எல்லோரையும் நேசிப்பவர். உளர் போற்றும் உத்தமராக வாழ்ந்தவர். உடன் பிறந்த சகோதரியும் நாவற்குழி மாதர் சங்கத்தலைவியாகக் கடமைப் பொறுப்பினை ஏற்று, இறுதிக் காலம்வரை சமூக சேவையில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர். இவர்கள் நண்பர் சிவராஜாவை அன்புடனும் பற்றுப் பாசத்துடனும்

Page 18
32
கண்போல பாதுகாத்துவளர்த்தனர். இவரின் உயர் படிப்பிற்காகவும் ஒளிமயமான எதிர் காலத்திற்காகவும் எந்தத் தியாகத்தையும் செய்யும் நிலையில் இருந்தவர்கள்.
இவர்களே யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழியிலிருக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் இவரை 1954ஆம் ஆண்டு ஆறாம் ஆண்டில் சேர்த்து இவர் எதிர் காலத்தில் பலதுறைகளிலும் புகழ் பெற்று வாழ அத்திவாரம் இட்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வு காலத்திலேயே மகனின் அபார திறமைகளையும், புகழ் பூத்த பெருமைகளையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து உரியகாலத்தில் இவர் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்துப் பேரப்பிள்ளைகளையும் அரவணைத்து மகிழ்ந்து, தமது கடமை எல்லாம் பூரணமாக முடிந்து விட்டது என்ற நிலையில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் சரணடைந்து விட்டனர்.
நண்பர் சிவராஜாவின் துணைவியார் துணைவரின் முன்னேற்றத் திற்குப் பெரும் பங்கு ஆற்றியவர். துணைவரின் சிந்தனைக்குப் புத்தி கூறும் மந்திரியாக, இராஜதந்திரியாக விளங்கி அவரின் பரிபூரண வெற்றிக்கு வழிகாட்டியாக துணை நின்றவர். மன நிறைவான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கு வழிகாட்டும் தம்பதியராகவும் வாழ்ந்தனர். இவர்களின் இனிமையான இல்லற வாழ்வின் பயனாக இரு ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையும் பெற்று மகிழ்ந்தனர். பிள்ளைகள் கல்வி கற்று நல்லறிவைப் பெற்று நல்லபண்புள்ள பிள்ளைகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
நண்பர் சிவராஜா இனிய துணைவியாருக்கு இனிய துணைவராகவும், அருமை மக்களுக்கு அன்பான தந்தையாகவும், மருமகனுக்கு போற்றுதற்குரிய மாமாவாகவும், செல்லப் பேரக்குழந்தைகளுக்குப் பாசமிக்க தாத்தாவாகவும், நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு உறுதுணையாகவும் விளங்கி, பூரண வாழ்வு வாழ்ந்து புனிதமான பணிகள் செய்து புகழ் உடம்பை இங்கே விட்டு பூதவுடம்பை நீத்துக் கொண்டார். "நீத்தார் பெருமை பெரிது தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்பது திருக்குறள். அவர் விட்டுச் சென்ற பிள்ளைச் செல்வங்கள் அவர்விட்டுப் போன பணிகளைத் தொடர்ந்து பேணிச் செய்து புகழ் பெற்றவர்களாக விளங்கி சாதனை செய்வதே பெற்றோருக்குக் காட்டும் நன்றிக்கடனாகும்.
"நெருநல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமையுடைத்து இவ்வுலகு"

33
என்ற வள்ளுவரின் வாக்கிற் கிணங்க நண்பர் சிவராஜாவின் மரணச் செய்தியைக் கேட்டதும் தாங்கொணாத் துயரையும், அதிர்ச்சியையும் அடைந்தேன். இவருக்கு இப்படியான திடீர் மரணம் வருமென நான் நினைத்தே இருக்கவில்லை. இவரின் பிரிவால் துயருறும் யாவருக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிப்பதோடு நண்பரின் ஆத்மா தெய்வத்தின் திருவடியுள் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழினம் ஒரு சிறந்த மகனை, கடமை உணர்ச்சி மிக்க குடிமகனை இழந்துவிட்டது. வாழ் நாள் முழுவதும் கெளரவமாகவே வாழ்ந்த நண்பர் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா புகழ் வாழ்க.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
நண்பன்
த. சிதம்பரநாதன் (அகில இலங்கை சமாதான நீதவான்) முன்னாள் விலைக்கட்டுப்பாட்டதிகாரி.
பேராசிரியர் சிவராஜாவின் 60ஆவது ஆண்டு நிறைவின்பொழுது அவரின் நண்பன் திரு.த.சிதம்பரநாதன் அவரை வாழ்த்திப் பாராட்டி பொன்னாடை போர்த்திய போது.

Page 19
34
ஊரவன்
அமரர் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களும் நானும் நாவற்குழி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமின்றி, நாவற்குழி தமிழ்க் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றோம்.
அவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி பரியோவான் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றதும், நான் கைதடி சி.எம்.எஸ். பாடசாலைக்குச் சென்றேன். எனினும், தினமும் மாலை நேரங்களில் சந்தித்துக் கொள்வோம். நாம் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகவும் அயல் வீட்டுக்காரர்களாகவும் உறவினர்களாகவும் திகழ்ந்தோம் என்றால் அது மிகையாகாது.
பள்ளிப்பருவத்தில் மிகவும் திறமையாக செயற்பட்டு அவர் தனது 12ஆவது வயதில் 1956ஆம் ஆண்டு அரசியல் மேடையில் தோன்றி அதிரடிப் பேச்சாளராக அனைவரையும் அதிரவைத்த அற்புதமான சிந்தனையாளர் அம்பலவாணர் சிவராஜா அவர்கள். பாடசாலைகளில் நடைபெற்ற பட்டிமன்றங்கள், பேச்சுப்போட்டிகள், விவாத மேடைகள், கருத்தரங்குகள், கட்டுரை எழுதுதல் போன்ற சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார். எம்போன்ற மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
எதிர்காலத்தில் அவர் ஒரு பேரறிஞராகத் திகழ்வார் என்ற அறிகுறிகள் அன்றே அவரிடம் பொதிந்திருந்தன. 1965 ஆம் ஆண்டு அவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவராக பேராதனைக்கு வந்த அதே கால கட்டத்தில் நானும் வர்த்தகத் துறையிலிடுபடுவதற்காக அதே ஆண்டில் கண்டி வந்து சேர்ந்தேன்.
அவருக்கும் எனக்குமிடையில் நிலவிய அன்பும், பாசமும், நட்பும் மென்மேலும் வளர்ந்தோங்கியது. என்னைத் தம்பி என்றே அழைத்து வந்த பேராசிரியரை நான் எப்பொழுதும் அண்ணாவென்றே அழைத்து வந்தேன்.
அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகவும் பின்பு பேராசிரியராகவும் விளங்கிய காலத்தில் அவருடைய நட்பும் தோழமையும் எங்களிடையே உயர்ந்தோங்கிய வணிணமே இருந்ததுடன் அவர் எனது குடும்ப அங்கத்துவரொருவராகவே விளங்கினார்.

35.
உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் அதியுயர் பட்டங்கள் பலவற்றையும் பெற்ற அவர், எவ்வித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியவர்.
அரசறிவியல் துறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களும், கட்டுரைகளும் இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இன முரண்பாடுகளும் மிகத் தெளிவான தீர்வினை வழங்குகின்ற ஆலோசனைகளை உள்ளடக்கியுள்ளதோடு சமஷ்டி ஆட்சியின் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அதிகாரப் பகிர்வின் மூலம் நிலைநாட்டலாமென்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தார். தான் கற்ற கல்வியை அனைவருக்கும் வழங்கி சமூக மறுமலர்ச்சிக்காக அயராது சேவை செய்தவருமாவார். t பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் மறைவு நம்மனை வருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். நாம் ஒரு தலைசிறந்த அறிஞரை, வழிகாட்டியை, பேராசிரியரை, ஒரு தொண்டரை, தோழரை, உறவினரை இழந்து விட்டோம். அவரது இழப்பு தமிழினத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும். அவரது அறிவுத் தொண்டைப் பின்பற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதையாகும்.
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிராத்திக்கின்றோம்.
நாவற்குழியூர் கனகரட்ணம் தவநாதன்

Page 20
36
கண்ணிர் அஞ்சலி
விழிப்பு உறக்கம்
22 I3
O6 09
1944 2OO7
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
(அரசியற்றுறை - பேராதனைப் பல்கலைக்கழகம்)
அஞ்சாமை பணிவுடைமையின் அணிகலன் நெஞ்சாரப் பொய்யாத நெறியுடையோன் பண்பாளன், பழகுவதற்கு இனியன் தன் அன்பால் எல்லோர் உள்ளமெல்லாம் நிறைந்தவன்! உடலால், உள்ளத்தால் உயர்ந்து உலகமெலாம் தன்கல்வி உறவுகளைக் கண்டவன் பல கற்ற போதும் பெருமையிலான் நிலமுள்ளளவும் நிலைத்து நிற்பான்! அரசியலில் தலைசிறந்த ஆசான் ஆளுமையில் அவனுக்கு அவனே நிகர் வாழுகையில் இருந்த மிடுக்கோடு மரணத்தையும் தழுவிக்கொண்டனையோ! அன்புத் தலைவனே! "நீ இல்லை என்பதெல்லாம் பொய் எம் உள்ளமெல்லாம் நினைவாய் உணர்வாய் நின்நினைவுகள்தானே".
துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உலகளாவிய மாணவச் செல்வங்களுடன் எம் துயர் பகிர்கின்றோம்.
மா. கணபதிப்பிள்ளை
பிரதி அதிபர் கொ/றோயல் கல்லூரி கொழும்பு - 07
அரசியற்பாட மாணவர்கள் சார்பாக,
 

37
நீங்காத நினைவுகளில்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா
பல்கலைக்கழக இளம் உதவி பேராசிரியர்
மாணவர் விரிவுரையாளர்
கணிணி அஞ்சலி
ஆளுமை ஒன்று அமைதியாய் துயின்றதுவோ
தோழமை நெஞ்சு. தெவிட்டாத புன்முறுவல் ஆழக் கலை கடைந்த (அரசு) அறிவாற்றல் அழகு தமிழ்ச் சொல் வன்மை நீளும் விவாதத்தின் வித்துவங்கள் நீ விரித்த ஆக்கங்கள் கோயில், சங்கம், மன்றங்கள் குறைவிலாப் பங்களிப்பு நீள நினைத்து உம்மை நித்தமும் கைதொழுவோம்.
இந்துப் பட்டதாரிகள் சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 21
அறிவின் கடலை யார் வந்து அள்ளிச் சென்றார்!
அரசியல் கற்றாய்; வானம்
அளந்திடும் அறிவும் பெற்றாய் சுரந்திடும் தமிழின் நீரைத்
துதித்துமே நின்றாய்; பாரில் பரந்த நல் ஞானத்தோடு
மாணவர் பலரைப் பெற்றாய்; பரமனின் பாதம் சென்றாய்;
பதறி நாம் துடிக்கின்றோமே!
மெல்லிய சிரிப்பும்; மேவும்
உள்ளத்து அன்பின் விரிப்பும்; நல்லியல்பென்றும் ஊறி
நயந்திடும் நல்ல பேச்சும்; கல்வியில் ஊன்றி நிற்கும்
கனத்த நற்பலமுங் கொண்டாய்; வல்லிய விதிவந்துன்னை
வாவென்றழைத்ததேனோ!
ஐயகோ அறிவின் கடலை
யார் வந்து அள்ளிச் சென்றார்! மெய்யது விட்டு அந்த
உயிரது போனதெங்கே! மெய்யினைக் கூடி நிற்கும்
உயிரெல்லாம் வாடுதிங்கே! பொய்யென ஆகாதோ? நீ
போய்விட்டாய் என்ற செய்தி!
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலிகள்
தலைவர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

பேராசிரியர் அம்பலவாணர் க் ராஜா அவர்களின் எழுத்துக்தின்
கட்டுரைகள் - தமிழ்
l.
3.
O.
1l.
I2.
l3.
14.
15.
16.
17.
18.
இலங்கையின் இனப்பிரச்சினையின் சமூக பொருளாதார காரணிகள், வீரகேசரி, 2.2.1986. அழகியல் வெளிப்பாடும் நோக்கமும் : மொழி பேதங்களைக் கடந்தது பரதம், வீரகேசரி, 2-8-1989. எம்.ஜி.ஆரின் மறைவும் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலமும், வீரகேசரி, 3.1.1988. மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவமும் இலங்கைத் தமிழர்களி சாத்வீகப் போராட்டங்களும், வீரகேசரி, 25.5.1986. . . . . இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் நிலைப்பாடு, வீரகேசரி, II-IO-1987. அறிவினை ஆத்மீகப் பாதையில் செலுத்தினால் அகங்காரம் குறையும், வீரகேசரி, 19-11-1989. தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியம் வளர்த்த தலைமுறையினர், வீரகேசரி, 26-5-1991. இலங்கை இனப்பிரச்சினையின் வெளிநாட்டுப் பரிமாணம்: இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு, வீரகேசரி, 24-5-1987 இலங்கையர் தேசியவாதமும்இனரீதியான பேதங்களும், வீரகேசரி,23-1987 இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் சமீப காலப்போக்கு, வீரகேசரி, இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் நிலைப்பாடு - வடக்குக் கிழக்கு இணைப்பால் அரசியல் ரீதியாக ஏற்படலாமென முஸ்லிம்கள் அஞ்சும் அம்சங்கள், வீரகேசரி, 18-10-1987 இந்து தர்மத்தின் உட்கிடக்கையும் சிவஞான போதத்தின் மகிமையும், தினகரன், 6-1-1991. சேக்கிழாரின் பெரிய புராணமும் உபமான்ய பக்த விலாசமும், தினகரன், 21-1-1991. சோவியத் யூனியனின் உறுதியான நிலைப்பாடே குவைத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், வீரகேசரி, 8-9-1990. சோவியத் யூனியனின் உறுதியான நிலைப்பாடே குவைத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், வீரகேசரி, 10-9-1990. தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள், தினகரன், 7-4-1991. மலையகத்தமிழரின் வரலாறும்இலக்கியங்களும் தினகரன், 174-1991. மலையக இலக்கியமும் தொழிற்சங்கங்களும், தினகரன், 21-4-1991.

Page 22
40
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
மலையக இலக்கியமும் தொழிற்சங்கங்களும், தினகரன்,28-4-1991. சைவசித்தாந்தத்தின் உட்பொருளும் சைவ நூல்களும், தினகரன், 10-2-1991. இலங்கையின் அரசியல் கட்சிகள்: அவற்றின் வளர்ச்சியும் மாற்றங்களும், வீரகேசரி, 23-10-1988. இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளும் தலைமைத்துவமும், வீரகேசரி, 13-11-1988. இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுநிலைப்பாடுகள், வீரகேசரி,13:11-1988. 1961இல் சமஷ்டிக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகம், வீரகேசரி, 8-6-1986. தமிழில்திறனாய்வும்மரபும்நவீன அணுகுமுறையும், வீரகேசரி,291986 எதிர்கால பிரதிநிதித்துவத்தை நோக்கி, வீரகேசரி, 28-5-1989. இலங்கையின் தேசியத்துவ இயக்கம்: ஒரு கோட்பாட்டு நோக்கு, ஆக்கம், 1989.
ஜனநாயகமும் சோஷலிஸமும், வானவில், 1991. மகாகவி பாரதியின் அரசியல் நோக்கு, வீரகேசரி, 8-12-1986. தனிநாயக அடிகளாரின் தமிழ்ப்பணி, வீரகேசரி, 28-9-1986. வேலையில்லாப் பிரச்சினையின் போக்கு, ஊற்று (1), 1972. இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும்,அல் இன் சிறாக் சிறப்புமலர், 1980-81. இளைஞர் தலைமையும் அபிவிருத்தியும் இளைஞர் அபிவிருத்தி கருத்தரங்கு அறிக்கை, இலங்கை மன்றக் கல்லூரி, 1979. தேசிய இனப்பிரச்சினையும் புரட்சிகரத்தத்துவமும்,சோவியத்நாடு, 1987 இந்திய வம்சாவளித்தமிழர்களும்இலங்கை அரசியலும், வீரகேசரி,7-2-1988 இலங்கையின் அரசியல் கட்சிகள், வீரகேசரி, 22-10-1988. மண்வாசனை, சிறுகதைத் தொகுதி, ஒரு மதிப்பீடு. சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநிதித்துவம், விழா மலர், நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1976). இலங்கையில் தமிழ் மொழிக் கோரிக்கைகளும் மொழிச்சட்டங்களும், நாலாவது தமிழாராய்ச்சிமாநாட்டு நிகழ்ச்சிகள், (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1976). 1978ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோஷலிஸ் குடியரசின் பிரதான அம்சங்கள், ஊற்று, 1978 காத்தவராயன் கூத்து தமிழர் தம் பாரம்பரிய கலை வடிவம் வீரகேசரி, 1984 தேசியத் தலைவர்களின் தவறுகளே இன்றைய நெருக்கடிகளுக்கு வழிவகுத்தன, தினகரன், 1987 தேசிய விடுதலை இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பினை தனியாகவே ஆராய வேண்டும், வீரகேசரி, - 1988. இலக்கியத்துறையில் மலையக கவிதைகளுக்கு தனி இடம் உண்டு, வீரகேசரி, 1988.

45.
46.
47.
48.
49.
50.
5l.
52.
53.
54.
55.
56.
57.
ქ58.
59.
6O.
6.
62.
63.
64.
65.
4.
இனப் பிரச்சினையை வேகப்படுத்திய இலக்கத் தகட்டில் பூரீ எழுத்து, வீரகேசரி, 21-1-1990. சைவ சித்தாந்தம் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள், இந்து தர்மம், 1991. 1972 ஆம் ஆண்டின் அரசியல் திட்டம், பூரணி, 1973, கனக செந்திநாதன் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய விமர்சன மரபைத் தொடக்கி வைத்தார், (யாழ்ப்பாணம்: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1988). தேசிய விடுதலை இயக்கமும் தமிழர் பங்களிப்பும், இந்து சமய 56), T3FITT தமிழ் அலுவல்கள் அமைச்சு, 30-09-1989. மலைகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினர். மேர்ஜ் 1989. தென்னாசிய கலாசார சிறுபான்மையினர், இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, 1990. s 1989ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலும் மலையகத் தமிழர் பிரதிநிதித்துவமும், வீரகேசரி, 1990.
இலங்கையில் அரசியற் திட்ட அபிவிருத்தியும் மாற்றங்களும் 1833-1948 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1980). இலங்கையின் அரசியல் திட்டங்கள், (1833- 1978) (கைதடி சிவா பிறின்ரஸ், 1986). அரசியல் மூலத்தத்துவங்கள் (யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 1989). நவீன அரசியற் கோட்பாடுகள், (யாழ்ப்பாணம் : பட்டப்படிப்புகள் கல்லூரி, 1988). சைவசித்தாந்தத்தின் ஆசார முறைகளைப் பறைசாற்றும் குர்க்கு கல்வெட்டுக்கள், வீரகேசரி, 12-7-1992. இலங்கையில் இனமுரண்பாடும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தினூடாக தீர்வு காணலும், சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை - 5 (வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக்கழகம்). முரண்பாடும் முரண்பாடுகளுக்கு தீர்வு காணலும் பற்றிய கற்கை நெறியின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் கோட்பாடுகளும், (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2001). அரசறிவியல் மூல தத்துவங்கள் (கொழும்பு:குமரன் புத்தக இல்லம், 2000). இலங்கை அரசியல் (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2002). இலக்கியமும் வாழ்வும் பரிசளிப்புவிழா மலர், பரியோவான் கல்லூரி,1964 இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளுதல் (கொழும்பு:தமிழ்ச் சங்கம், 2001). “இலங்கைப் பிரதிநிதியின் முதல் திருத்தம்” தமிழாராய்ச்சி மாநாடு
மட்டக்களப்பு மார்ச் 19,20,21 - 1976.
"இலங்கையின் இன முரண்பாட்டிற்கான சமூக , பொருளாதாரக்
காரணிகள்”, வீரகேசரி, 2,9,15, பெப்ரவரி - 1986.

Page 23
66.
67.
68.
69.
7O.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
இலங்கை அரசியலில் முஸ்லிம்கள்: அன்றும் இன்றும், அல்இன் ஹிருஹற் முஸ்லிம் மஜ்லிஸ், பேராதனைப் பல்கலைக்கழகதும்பரை வளாகம் - 1981. இலங்கையர் தேசியவாதமும் இனரீதியான தேசியவாதங்களும், வீரகேசரி, 2 மார்ச், 1986. மகாத்மாகாந்தியின் அரசியல் மெய்யியலும் இலங்கைத்தமிழர்களின் சாத்வீகப் போராட்டமும், வீரகேசரி, 25, மே, 1986. சமஷ்டிக்கட்சியின்சத்தியாக்கிரகப்போராட்டம், வீரகேசரி 8,2229யூன் 1977 தமிழ் ஆய்வுக்குத் தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு, வீரகேசரி, 28செப்டெம்பர் 1986. இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தமும் கிழக்கிலங்கை முஸ்லிம்களும், வீரகேசரி,11,18,25, ஒக்ரோபர் 1987 எம்.ஜி ஆரின் மறைவும் தமிழ் நாட்டின் எதிர்காலமும், வீரகேசரி, 2ஜனவரி 1988. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல், வீரகேசரி, 7,14,பெப்ரவரி 1988. இலங்கையின் அரசியற் கட்சிகள்:இடதுசாரி இயக்கம், வீரகேசரி, 22, ஒக்ரோபர் - 6,13 நவம்பர் 1988. "இளைஞர் தலைமைத்துவமும் அபிவிருத்தியும்", இளைஞரும் அபிவிருத்தியும் கருத்தரங்க அறிக்கை (கொழும்பு : இலங்கை மன்றக் கல்லூரி 1979). "பரதநாட்டியம் அழகியல் வெளிப்பாடும் நோக்கமும்”, கீதம் நான்காவது ஆண்டு மலர் (பேராதனை : சங்கீத நாட்டிய சங்கம்). "சைவ சமயத்தின் வளர்ச்சியில் சோழப் பெருமன்னர்கள்", இந்துதருமம் (பேராதனை இந்து மாணவர் சங்கம் , 1993-94). "மாஒ சே துங்கின் சிந்தனைகள்”, இளங்கதிர் (பேராதனை : தமிழ்ச்சங்கம்: 2003). "இலங்கையில் தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”, இளங்கதிர், (பேராதனை: தமிழ்ச்சங்கம், 1992-93). தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் சார்பு எதிர்வாதங்கள், பேராதனை, இனங்கதிர், தமிழ்ச்சங்கம். சுவாமி விபுலானந்தரின் கல்விப் பணிகள் (வவுனியா சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை 1992). "குரும்பசிட்டியின் வரலாற்றில் பொன். பரமானந்தர் மகா வித்தி யாலயத்தின் இடம்” பரமானந்தர் நூற்றாண்டு நிறைவு மலர் குரும்பசிட்டி 2001). "தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள்” மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாசிறப்பு மலர், 1995). இலங்கையில் அரசியல் யாப்புகள் வரையப்படுதலும் சிறுபான்மை இன.

35.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
OO.
IOI.
102.
IO3.
104.
43
மக்களும், பல்கலை தொகுதி1இதழ் 3 (பேராதனைப் பல்கலைக்கழகம் கலைப்பீடம், 2002). “இலங்கைத் தமிழர்கள் தேசியவாத வளர்ச்சியில் பாரம்பரியத் தமிழர் தாயகம் என்ற எண்ணக்கரு”, தொகுதி இதழ் 1,2 (பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடம், 2000). பிரான்ஸின் அரசியல்முறை, ஆய்வு தொகுதி1, இதழ்1, (பேராதனை : சமூகவிஞ்ஞானமன்றம் 2000). சமஷ்டி முறையும் கூட்டுச் சமஷ்டிமுறையும், பிரவாதம் தொகுதி 2 (கொழும்பு : சமூகவிஞ்ஞானிகள் சங்கம் , 2002). தேசிய இனப் பிரச்சினையும் புரட்சிகர தத்துவமும், சோவியத் நாடு (284 g)gsyp 11.1987). அரசறிவியலின் இயல்பு, அகிலம், தொகுதி1, இதழ் 1 யூன் 1994). "சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநிதித்துவம்" நாலாவது உலகத்தமிழாராய்ச்சி மகா நாட்டு மலர் (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம் 1976). மகாகவி பாரதியின் அரசியல் நோக்கு, வீரகேசரி,1982. "விமர்சனத்துறை மேற்கின் இரவல்களாலும் வளர்கிறது", வீரகேசரி,1982 தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணி, வீரகேசரி, 29-9-1986. "மலையகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா?" மலையக பிரதிநிதித்துவமும் மாறிவரும் கட்டங்களும், மலையக சமூக பொருளாதார ஆய்வகம், 2-05-1989. "கனக செந்திநாதன் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய விமர்சன முறையைத் தொடக்கி வைத்தாரா?” (குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1999). w "தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல்", பிரவாதம் தொகுதி 4, யூலை 2005. ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஒரு ஒப்பீடு, ஆய்வு தொகுதி இதழ் 45,2005. "மகாத்மா காந்தியின் அரசியற் சிந்தனைகள்” இளந்தென்றல் தமிழ்ச்சங்கம் (கொழும்புப் பல்கலைக்கழகம் 2002). "அதிகாரப் பகிர்வினூடாக சமாதானம்" சர்வதேச கற்கை நெறி களுக்கான ஸ்தாபனம் - 1996. "சைவ சித்தாந்தம் பற்றிய சில அறிமுகக்குறிப்புகள்” இந்து தருமம் (பேராதனை: இந்து மாணவர் சங்கம், 1990-91). சமஷ்டி முறையும் கூட்டுச் சமஷ்டி முறைம் பிரவாதம், யூலை டிசம்பர் தொகுதி 2 (2002). "இலங்கையில் அரசியல் யாப்புகள் வரையப்படுதலும் சிறுபான்மை இன மக்களும்" பல்கலை தொகுதி, இதழ்3 - 2002. தென்னாசியாவில் இராணுவமும் அரசியலும், அல்கின்சிராக் (முஸ்லிம் மஜ்லிஸ், 2004).

Page 24
105 "ஆனந்த குமார சுவாமியின் இலங்கை வாழ்வும் பணிகளும்" தேசீய
தமிழ் சாகித்திய விழா (சிறப்பு மலர் 1991).
106. "இலங்கையில் சமஷ்டி முறைமை" சமாதானத்தைக் கட்டியெழுப்பு
வதற்கான கலந்துரையாடல் (கொழும்பு : சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்கள் - 2005).
106. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, ஆய்வு தொகுதி2இதழ்1,2001.
நூல்கள் - தமிழ்
l.
IO.
III.
I2.
13.
l4.
15.
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங்களும் (சுன்னாகம் திருமகள் அழுத்தகம் 1980). அரசியல் மூல தத்துவங்கள் (யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி 1988). நவீன அரசியற் கோட்பாடுகள் (யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 1989). அரசியல் மூலதத்துவங்கள் (கொழும்பு- சென்னை: குமரன் புத்தக இல்லம், 2001). இலங்கை அரசியல் (கொழும்பு - சென்னை: குமரன் இல்லம், 2002). முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணலும் பற்றிய கற்கைநெறி: தோற்றம் வளர்ச்சி பாடப்பரப்பு மற்றும் கோட்பாடுகள் (கொழும்புசென்னை : குமரன் புத்தக இல்லம் , 2001). முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணலும் பற்றிய கற்கை நெறி: கோட்பாடுகளும் நடைமுறையும் (கண்டி சண்பிறிண்டர்ஸ்- 2003). முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணலும் பற்றிய கற்கை நெறி: கோட்பாடும் நடைமுறையும் (கொழும்பு - சென்னை : குமரன் புத்தக இல்லம், 2003). ஒப்பீட்டு அரசியல் (கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம், 2004). இலங்கை அரசியல் (கைதடி சிவா பிறிண்டேர்ஸ், 1987). இலங்கைத்தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் (கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003). இலங்கைத் தமிழர்களின் ஐம்பது வருட கால அரசியல்: சாத்வீகப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வரை (கொழும்பு - சென்னை: குமரன் புத்தத இல்லம் , 2003). மலையகத் தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியங்களும் (கண்டி: மலையக ஆய்வக வெளியீடு, 1992). மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தினூடாக இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு (வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக்கழகம், 2000). குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம் (குரும்பசிட்டி சன்மார்க்க சபை வெளியீடு, 1988).

45
கட்டுரைகள் -ஆங்கிலம்
1.
10.
11.
12.
13,
14.
"Indo-Sri Lanka Relations and Sri Lanka's Ethnic Crisis: The Tamil Nadu Factor", ed S.U. Kodikara, South Asian Strategic Issues (New Delhi: Sage Publications, 1990). "Intra-Regional Relations: South Asia in the 1990s", ed George A, Cooray, New Dimenstions in Regional Security After the Cold War (Colombo: Institute of International Studies, 1997). "The Rise of Militancy in Tamil Politics", eds Mahind Werake and P.V.J. Jayasekara, Security Dilemma of a Small State, Part II (New Delhi: South Asian Publishers, 1995). "Mahathma Gandhi's Technique of Satya Graha and Political Change: A Study of the Prayer Campaign of the Ceylon Workers Congress of SriLanka in 1986", The Sri Lanka Journal of South Asian Studies, No2 (New Series) 1987/88. "Indo-Sri Lanka Relations in the 1980's and the Ethnic Crisis in Sri Lanka", Sri Lanka Journal of Social Sciences, Vol 9, Nos 1X2 , 1986. "Implementation of the Indo-Sri Lanka Agreement and Tamil Nadu Politics", ed S.U. Kodikara, Indo SriLanka Agreement of July 1987 (Colombo: The International Relations Programme, 1983). "Indo-Sri Lanka Relations in the Context of Sri Lanka's Ethnic Crisis", ed P.V.J. Jayasekara, Security Delemma of a Small State, Part I (New Delhi: South Asian Publishers, 1992). "Under V.P. Singh: India and Its Neighbours", Lanka Guardian, Vol 13, No 17, January, 1991. Strategic Importance of South Asia to the U.S.A. in the Post Cold War Era" in ed A.V Manivasagam, South Asia Development Ideological Currents (Jaffna: South Asian Study Center, 1999). "The Indra Doctrine, The Gujral Doctrine and Indo - Sri Lanka Relations Since 1983", The Sri Lanka Journal of South Asian Studies, No.7, 2000/2001. Problems of Minorities in South Asia: An Overview in ed Bhabani Sen Gupta, Regional Cooperation and Development in South Asia (New Delhi: South Asian Publishers Ltd. 1986). "Ethnicity and Constitutional Reform in Sri Lanka: A Consociational Approach" ed Iftekharuz Zamar, Ethnicity and Constitutional Reform in South Asia (Colombo Regional Center for Strategic Studies, 1998. Democracy and Problems of Governance in Sri Lanka (Colombo: Sri Lanka Foundation 2004). Is Sri Lanka Heading Towards a Multi Party System, Lanka Guardian, Vol 10, No 21 March 1988.

Page 25
5.
lf.
1S,
|g),
5
LL LLLL L LL LLLLLL LL LLL LLLLLLLSLLLLLL S0S000 0S00JS S L LLLLLL Journal G| Social Sciences Wol 5. Na 1.Jule 1982. LLLLLL LLLLLLLLSL LLLLLL LSLLLLLLLS GL LLLLLLLLSLLLtt S LLLS
ו"ר ריד
Sernilali Periodeniya University 2CO2.
SHSELSLLLL LLLLeeLLLLLL LLLLLLaS LLS S LtttGS GcL 0S L S LLKKL
15, 1992. "Sri Larılka's Foreign Policy since 19"94", 9th II|Lernatico Illal Con lere IIce on Sri Lanka SLuclies 30-11-2003, lniversity of RuhLulu, Matara. Gandhia II Politic: Philosophy a Lld l’olitical clia ilge: A Case Study of Salya grah-Campaign of the Tamil Federal Party of Ceylon in 1961" Paper Presented at the Fifth interilational Tamil Research Conference held al Madurai, January 1981.
S eLltL LCLLS SrLLL LLmmLLaaLLLmSS GLLLLL LSLLaaLLLL eeSLL0LLLS tLLLLaLLS
of Peradeniyal, cober 2CO2.
. Minoritics and Makiig of Constitutions in Sri Lanka, N. Paper Pre
sented at the Ninual Research Sessions, University of Peradeniyi, 2001, Peace Process in Sri Lanka: Role of India and Norway. Paper Presented at the Annual Research Sessio Els, 2CC-3, i lunian Rights Conditions of Plantation Workers in Sri Lanka, A Paper Presented at the Postgraduate Research Sympostull, 2004.
24. Changes in the Electoral System and Constitutional Reforms, A Paper
LLLLLaL LL LLL LLLLLL LLLLLLLLSllLLltStlLltLLLLSSSLLLLS h: 2004,
"Sri Lanka's Foreign Policy Trends Since 1977: Change and Continuity",
Paper Presented it the National Semilar on Twenty Five years of Non - Alignement, III lernational Relations Program nie, University Col Col:31, 1986.
நூல்கள் -ஆங்கிலம்
1.
Politics of Tamil Nationalisill it Srilaka (New Delhi: South Asian Publishers, 1996). U.S - Sri Lanka Relations in the 1980's (Kandy Institute of Higher Educatio II, 1995}. Fifty Years of Tamil Politics in Sri Lanka (1949-1999): Froil. NonViolent Resistance 10 Armed Sır'ı ggle, 2000,
தொகுப்பு : என்.பி.எம். சைபுதீன் சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்,
44-334

தினருடன்
மபத
குடு
参见| –
----
|-|- ||- | | |- |
Ws.

Page 26


Page 27
Prij Kumaran

nted by Press (Pvt) Ltd.