கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவஞ்சலி (தோழர் தம்பு இளையதம்பி நினைவுமலர்)

Page 1


Page 2

(9றிவஞ்சலி
தோழர் தம்பு இளையதம்பி நினைவுமலர்
ARVANJAL
COMRADE THAMBOO ELIYATHAMBY
COMMEMORATION VOLUME .
O2-09-2OOO

Page 3
அறிவஞ்சலி (தோழர் தம்பு இளையதம்பி நினைவு மலர், )
வெளியீடு
அச்சுப்பதிப்பு
வெளியீட்டுத் திகதி
வெளியிட்ட இடம்
பக்கங்கள்
தம்பு இளையதம்பி நினைவுக்குழு 47, மூன்றாம் மாடி மத்திய கொழும்பு சுப்பர் மார்க்கெட் கட்டிடத் தொகுதி கொழும்பு- 11 இலங்கை
கொழும்பு யூ. கே. பிரின்டர்ஸ் 98A, விவேகானந்த றோட், கொழும்பு - 13.
02.09.2000
ரட்ணகிரி டிவிஷன், பாமஸ்டன் குருப்
தலவாக்கலை, இலங்கை
56
Arivanjali (Commemoration Volume)
Publishers
Printers
Date of Publication
Place of Publication Group
Pages
: Thamboo Eliyathamby
Commemoration Committe 47, 3rd Floor,
Colombo Central Super Market Complex, Colombo-11
: U.K. Printers
98A, Vivekananda Road, Colombo - 13.
... : O2.09.2000
: Ratnagiriya Division Palmerston
Talawakelle, Sri Lanka.
: 56

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேன்னென்று நினைத்தாயோ ?
தம்பு இளையதம்பி
பிறப்பு | இறப்பு
05 31
అం
10 се

Page 4
உள்ளடக்கம்
பக்கங்கள்
1. அறிமுகக் குறிப்பு O1 2. சில நினைவுக் குறிப்புகள் O3
3. என்றென்றும் உனக்காக - சை. கிங்ஸ்லி கோமஸ் 07 4. சமூக மாற்றமும் பெற்றோர்களும் - உதயா O9 5. எதைச் சொல்லும் இந்தக் கண்ணிர்?
- இராகலை பன்னீர் 12 6. பகுத்தறிவு இயக்கமும் பாட்டாளி வர்க்கமும்
- பேராசிரியர் சி. சிவசேகரம் 13 7. விரிவாகும் விட்டம் - நதி 8 யுத்தகோசம் - ச. ஜேசுநேசன் 21 9. மலையக தமிழர் பண்பாடு சில குறிப்புகள்
- 9. 5.Lb6o UT 22 10. கரைசேர்ந்த கன்னி? * வள்ளி 27 11. நிம்மதியாக ஒய்வெடுங்கள் - மூ. நாகராஜன் 30 12. வாழும் உரிமை - ஈவா ஜோன்சன் 32 13. நாம் அன்னியரல்ல - ஏணி டிங்கோ 33 14. நீ நினைக்கலாம் - 'பெலிப்பே பென்யா 34 15. மலைமேலுள்ள என் நான்கு மைந்தர்கட்கும்
- ஒலிவியா சில்வா 35 16. நித்தம் நிலைப்பவன் - இரா சடகோபன் 36 17. சமூக சூழலும் மனித சிந்தனையும்
- சி. கா. செந்திவேல் 40 18. மீண்டும் உயிர்த்தெழுவோம் - பெர். கா. சிவஞானம் 46
19. நீங்கள் காணா சமத்துவத்தை நாங்கள் காண்போமா :
- மிருதுளா, பிருத்திவி 48. 20. எங்களோடு நீ - பொ. கா. சிவஞானம் 49

அறிமுகக் குறிப்பு
ங்ெகளது தந்தையாரான தம்பு இளையதம்பி அவர்களின் முக்கியத்துவம்
சமூக அக்கறைக் கொண்ட ஒரு கலைஞன் என்ற வரையறைக்குட்பட்டதே. சாதாரண வாழ்க்கை முறையை விட அவர் பகுத்தறிவு வாத, சீர்திருத்தவாத கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார். சாதிய, சமய அடிப்படையிலான பழைமை வாத' சம்பிரதாயங்கள் சடங்குகள் என்பவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டவராக அவர் வாழவில்லை. அதேவேளை அவருடைய பகுத்தறிவுவாத கருத்துக்களை பிறர் மீது திணிப்பவராகவும் இருக்கவில்லை. t
சாதி, சமய சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டதாக அவருடைய் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாதா என்ற ஏக்கத்துடன் இறந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை முடியுமானவரை அவரின் விருப்படியே நடத்தினோம். அவர் மாக்சிய அல்லது இடதுசாரி அரசியல்வாதியாகவோ அவற்றின் வழிநின்றோ வாழாவிடினும் முற்போக்கான கலைஞராக, மனிதராக வாழ்ந்தார்.
கருமகாரியமோ, அந்தியேட்டியோ நடத்தப்படக் கூடாது என்பது அவருடைய விருப்பம். அதனைாலேயே அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிவஞ்சலியை செலுத்த முன் வந்தோம். அறிவஞ்சலி என்ற இந்த மலரை வெளியிடுவதுடன் இன்றைய நிகழ்ச்சியை அறிவுபூர்வமாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்சியாக நினைத்தோம். இவை மிகைப்படுத்தல்களோ வலிந்து செய்யப்படுவனவோ அல்ல.
ஒவ்வொரு தோட்டத்தொழிலாளியின் வரலாறும் தனிப்பட சோகம் நிறைந்ததே. ஆனால் அதனுள் மலையக சமூக ஆக்கத்திற்கான இலங்கையின் ஆக்கத்திற்கான கருக்களாவது இடப்பட்டிருந்தன என்பதை மறுக்க முடியாது.
02.08.2000 அன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் இன்று 02.09.2000 அன்று நடைபெறும் அறிவஞ்சலி நிகழ்சியும் இம்மண்ணில் பிறந்து இம்மண்ணிற்காக வாழ்ந்து மடிந்த ஒவ்வொரு தொழிலாளியினதும் சமூக ஆக்கத்திற்கான பங்களிப்பை மதிப்பிட வேண்டியதற்கான முன்னோடி முயற்சிகளாக இருக்கின்றன. தோட்டத்துரைமாரினதும் தொழிற்சங்க தலைவர்களினதும் திரிக்கப்பட்ட வரலாறுகளே மலையத்தமிழ் மக்களினதும் தோட்டத்துறையினதும் வரலாறாக காட்டப்படுகின்றன. அவற்றை மறுதலிக்கும் அதேவேளை உண்மைகளை தேடும் முயற்சிகளாக இந்நிகழ்ச்சிகள் இடம‘பெறுகின்றன.
தெலுங்கு மொழியை மூலமாகக் கொண்ட குடும்பத்தில் மறைந்த இராமன் தம்பு, தம்பு அக்கம்மாள் ஆகியோரின்முத்தமகனாக 05.10.1931 இல் பூண்டுலோயா

Page 5
சீன் தோட்டத்தில் இளையதம்பி பிறந்தார். அவரின் ஒரு சகோதரனாக இராமன் திருச்சி கொனலை கிராமத்தில் வாழ்கிறார். இன்னொரு சகோதரனான ராஜூலு சிறு வயத்திலேயே இறந்து விட்டார். அவரின் சிறுவயதிலேயே தாயார் அக்கம்மாளும் இறந்து விட்டார். பின்னர் தாயார் மறைந்த குண்ணன் லஷ்மியாலேயே வளர்க்கப்பட்டார். 1950 முதல் 1980 வரை வடக்கு பூண்டுலோயா (மில்லர்) தோட்டத்தில் வாழ்ந்தார். 1980முதல் 31.07.2000 அன்று இறக்கும் வரையும் தலாவாக்கலை பாமஸ்டன்குரூப் இரட்ணகிரி டிவிஷனில் வாழ்த்தார்.
வடக்கு பூண்டுலோயாவில் வாழ்ந்த காலத்தில் நாடக கலைஞர் என்ற ரீதியிலும் இசைஞ்ஞர் என்ற ரீதியிலும் மக்களுக்கு அறிவுபூட்டும் சீர்திருத்த வேலைகளை முன்னெடுத்தார். 1970 களில் சிறிதுகாலம் ஜனாப் அஸிஸ் தலைமையினலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தோட்டக் கமிட்டித் தலைவராக இருந்தார். கோயில் கமிட்டித் தலைவராகவும் இருந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ரட்ணகிரி டிவிஷனிலும் சில நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
தவறுகளையும் அநீதிகளையும் எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி எதிர்க்கும் கண்டிக்கும் சுபாவம் கொண்டவராக இருந்தார். அவருடைய முதல் திருமணம் ஒரு சில நாட்களில் முறிவடைவதற்கு கூட அச்சுபாவம் காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது. ஜனநாயக பண்புகளை விட மிகவும் கண்டிப்பான அணுகுமுறைகளே அவரிடம் மிகையாக இருந்ததால் பல்வேறுபட்டவர்களிடமும் இணங்கிப் போவதற்கு முடியாதவராக இருந்தார். அவர் வாழ்ந்த அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த சூழ்நிலையில் அவரது ஆளுமை முழுமையாக வளர்க்கப்படவுமில்லை முழுமையாக பிரயோசனப்படுத்தப்படவுமில்லை.
அவரின் நினைவால் செய்யப்படும் இந்த அறிவஞ்சலி மூலமும் வெளியிடப்படும்அறிவஞ்சலி மலர் மூலமும் ஓரிருவரினது ஆளமை கண்களாவது திறக்கப்படுமானால் மனநிறைவு அடைவோம்; எங்கள் துயரத்திலிருந்து மீள முயற்சிப்போம்
ஏற்றத் தாழ்வுகள் தகரட்டும் சமத்துவம் நீதி ஒங்கட்டும
சட்டத்தரணி இ. தம்பையா
ரட்ணகிரி டிவிஷன் திருமதி. க. இளையதம்பி பாமஸ்டன் குரூப் பிள்ளைகள், மருமக்கள், தலவாக்கலை பேரப்பிள்ளைகள் இலங்கை O2.09.2000

சில நினைவுக் குறிப்புகள்
56O6) வரலாற்றில் சில துளிகள்
அமரர் திரு. த. இளையதம்பி அவர்களைப்பற்றி ஒரிரு விடயங்களை (எனக்குத் தெரிந்த) எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் இவரைப்பற்றி ஒரு பெரும் கட்டுரையை எழுத முடியும். எனினும் என் அறிவுக்கெட்டிய விடயங்களை வரலாற்றுக்குறிப்புகளாக எழுத முனைந்தேன். குறுகிய காலத்தில் எழுத முனைந்தேன் இதற்குக் காரணம் 1960களில் மலையக சமூகத்தைப் பொறுத்தவரை பாமரமக்கள் அதிகம் வாழ்ந்த காலப்பகுதியில் புத்திஜீவியாக எங்கள் மத்தியில் வாழ்ந்து கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி மாத்திரம் சில குறிப்புகளைத் தருவதில் பெருமையடைகிறேன்.
* எமது தோட்ட கணக்குப்பிள்ளை அமரர் திரு. மாலை அவர்களுடன் இணைந்து ‘ஹரிதாஸ்’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியதை முதலில் நான் கண்டு வியந்தேன்.
* அடுத்ததாக ‘குடிகாரன் வாழ்க்கை' என்ற நாடகத்தை சிறப்பாகவும் சமூக சீர்கேட்டை எடுதுதுரைக்கும் பாத்திரத்தில் நடித்து பலரதும் பாராட்டைப்பெற்றார்.
* உதய சூரியன் கலா மன்றம்' என்ற அமைப்பினர் தயாரித்து வழங்கிய
*தாய்நாடு காத்த தனயன்’ என்ற நாடகத்திலும் இவரது நடிப்பு மேலிட்டு காணப்பட்டது.
* தொடர்ந்து வந்த காலங்களில் ‘என்ன தான் மயக்கம்’, ‘இப்படியும் நடக்குமா இந்தரன் சபையிலே முதலான நாடகங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டினர்.

Page 6
«Ο
X
«Ο
X
Ο
X
Ο
x
பெண்வேடம், நகைச்சுவைப் பாத்திரங்கள் இவர் விரும்பி நடிக்கும் பாத்திரங்களாகும். இவைகளிலேயே இவரது நடிப்புத்திறமை மேலோங்கி காணப்பட்டது.
ஒரு நாடகம் தயாரிக்கப்பட்டு அது மேடையேறும் வரை தனது உணவையும் பொருட்படுத்தாமல் நாடகத்தினர் வெற்றிக்காக நடிப்பில் மட்டுமன்றி உடைதயாரிப்பு, மேடைஏற்பாடு முதலான பல விடயங்களை தயக்கமின்றி செய்வார்.
இவரிடம் காணப்பட்ட இன்னொரு விசேட திறமையான அம்சம் என்னவெனில் நாடகத்திற்கு அந்நாளில் மிகவும் தேவைப்பட்ட ஹார்மோனியம் வாசிப்பதில் தன்னிகரற்று விளங்கியமையாகும்.
இறுதியாக தாய்நாடு காத்த தளபதி எனும் நாடகத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றி எம் போன்ற இளையவர்களின் நடிப்பாற்றல் வளர வகை செய்தார்.
இவர் எமது தோட்டத்தை விட்டு சென்றது தோட்ட கலைத்துறை வளர்ச்சிக்கு பெரும் இழப்பாகவே நான் கருதுகிறேன். எமது சமூகம் உள்ளவரை இவரின் கலைச்சேவையை அறிந்திட இவ்வாறான வரலாற்றுச் குறிப்புகள் பயன்படும் என நினைக்கின்றேன்.
எம்.பி.எஸ் மணியம்
வடக்கு பூண்டுலோயா
பூண்டுலோயா

சில நினைவுகள்.
1950 இலிருந்து வடக்கு பூண்டுலோயாவில் வசித்து வந்த அமரர் திரு. த. இளையதம்பி அவர்கள் ஒரு இலட்சியத்துடனேயே வாழ்ந்து வந்தார். கலை, கலாச்சாரம் போன்ற விடயங்களில் பெரிதும் அக்கறை செலுத்தி வந்துள்ளார்.
சற்று கடந்த காலத்தை பின்நோக்கி பார்ப்போமாகில் 1960ம் ஆண்டு இவர் எதிர்கால சந்ததியினரின் கல்வி வளர்ச்சியை கருத்திற்கொண்டு இராப்பாடசாலை ஒன்றை நிறுவி அதன் ஆசிரியராகவும் கடமையாற்றினார். அக்காலத்தில் இவரிடம் கற்ற மாணக்கருள் நானும் ஒருவன் என்று பெருமிதமடைகிறேன். R
இவரிடம் நான் முறையாக ஆங்கிலம் கற்றுத் தெளிந்தேன் எங்களுக்கு இவர் சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாத வாழ்க்கை வழிகாட்டியாகவும் விளங்கினர் என்றால் மிகையாகாது. 1964ம் ஆண்டு நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்று இன்றும் என் மனதை விட்டு நீங்கவில்லை. அதாவது இராபாடசாலையில் பாடங்களை கரும்பலகையில் எழுதிபோட்டிருந்தார் அதில் (வெள்ளைக்காரன் தக்காளி பழத்தை விரும்பி உண்பான்) என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார் அப்போது வீடுகளை பார்த்து வந்த வெள்ளைக்கார துரை அதனை பார்த்து இப்படியொரு ஆங்கில பாடசாலை இயங்குவதை யொட்டி பெருமிதம் கொள்கிறேன் என்று கூறி அவரை பாராட்டினார்.
அத்தோடு மட்டுமல்லாது அவர் பல மேடை நாடகங்களையும் நடத்தியுள்ளார். அவர் நடத்திய நாடகங்கள் பல. அதில் மறக்கமுடியாத நாடகமாக தாய் நாடு காத்த தளபதி இருக்கிறது.
மேலும் அவர் குணசித்திர நடிகராகவும் சிறந்த ஒரு கதாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கினார் என்பது குறிபிடத்தக்க விடயமாகும்.
இவர் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் வழங்கி இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தார். எங்கள் கல்வி, கலை, கலாசாரம், போன்றவற்றுக்கும் அயராது உழைத்தார்
அன்னாரின் மறைவு எங்கள் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகி விட்டது.
இரா. கோபால கிருஷ்ணன்
வடக்கு பூண்டுலோயா ya(66) tuit

Page 7
சீர்திருத்தவாதி
அமரர் தோழர் தம்பு இளையதம்பி அவர்கள் கொத்மலை பிரதேசத்தின் அருகில் அமைந்திருக்கும் பூண்டுலோயா சீன் தோட்டத்தில் 1931.10.05இல் பிறந்தார். சிறிது காலம் சீன் தோட்டத்திலேயே வாழ்ந்த அவர் மில்லர் தோட்டத்தில் (North Punduloya) தன் வாழ்க்கையை தொடர்ந்தார். பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தில் தன் ஆரம்ப கல்வியை தொடங்கி கல்வியை கற்றார். அவர் ஆரம்பத்திலே தமிழையும், ஆங்கிலத்தையும் கற்று பின் பாடசாலையை விட்டு வெளியேறி தன் குடும்ப வறுமை காரமாக தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக வேலைக்கு அமர்ந்தார்.
அந்த நாளிலே மிக சிரமப்பட்டு தன் பிள்ளைகளை தன் போலவே படிக்க வைத்தார். அவர்களில் மிக சிரமப்பட்டு முன்னேறி நம்முன்னிலையில் தலை நிமிந்து நிற்பவர் தோழர். இ. தம்மையா அவர்கள். இலங்கையிலே அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் அக்கழகம் ஹெரோ தோட்டத்திலும் மில்லர் தோட்டத்திலும் பல முற்போக்கானவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோழர்களில் விரல் விட்டு எண்ணப்பட்டவர்களில் ஒருவர்தான் தோழர் தம்பு இளையதம்பி.
அவர் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டார். ஹெரோ தோட்ட ஹார்மோனிய ஆசிரியர் திரு. TR. பெருமாள் அவர்களிடம் ஹார்மோனியம் வாசிக்க கற்றார். அதன் பின்பு நாடக, இசை துறையில் நாட்டம் கொண்டார். சமூக மேம்பாட்டுக்காக பல சீர்த்திருத்த நாடககதைகளை எழுதி தானே மேடையேற்றி மக்களிடையே பல விழிப்புணர்வுக்களை ஏற்படுத்தினார். இவைகளை ஏற்று கொள்ள முடியாத அன்றைய தோட்ட நிர்வாகமும் பெரியகங்காணிகளும் கெடுபிடிகளை கொடுத்தனர்.
இன்று நம்முன்னே மிக கம்பீராக நடைபோடும் சட்டத்தரணி தோழர் இ. தம்பையா அவர்களை பல எதிர்ப்புக்கு மத்தியில் கல்வி பயிலச் செய்து சட்டத்தரணியாக்கிய பெருமை தோழர் த. இளையதம்பியை சாரும். இப்படி பல முற்போக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் பிற்காலத்தில் தலவாக்கலை பகுதியில் உள்ள ரட்ணகிரி தோட்டத்தில் வாழ்ந்து வந்தார். அங்கேயும் காலத்துக்கேற்றப்படி தோட்ட தொழிலாளர்களுக்கு பல முற்போக்கான திட்டங்களை செய்து கொடுத்து தன் 69ஆம் வயதில் காலமானார். (2000-07.31) அன்னாரின் இறுதி கிரியைகளில் முற்போக்கு எண்ணம் கொண்ட பல தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அவர்களில் நானும் ஒருவன். வாழ்க புரட்சி! வளர்க அன்னாரின் கலைத் தொண்டு!
8lÖtሀ6ዞ தோழன் பெருமாள் சந்திரசேகரன் ஹெரோ ப.க, பூண்டுலோயா.

என்றென்றும் இடனக்காக.
சை. கிங்ஸ்லி கோமஸ்
செந்தணலோடு மெய்
சங்கமித்த அன்று கருகியது
உன் எண்ணங்களல்ல
எம்மை விட்டுச் சென்றது
உன் கனவுகளல்ல
உன் உணர்ச்சிகளும்
போராட்டங்களும்
எம்மோடு நாமாய்
திரை மறைவு பாடகன் பாடலாய் வாழ்வது போல் கவிஞன் எழுத்தாகவும் ஒவியன் சித்திரமாகவும் வாழ்வது போல் நீயோ இங்கு மக்களோடு மக்களாய் *நீ திரை மறைவிலிருந்து
மனிதன் படைத்ததனால்.
கோமானையும்
சீமானையும் எதிர்த்ததற்காழ் பழமையையும் ஒடுக்கு முறையையும் திணர வைத்ததற்காய் என் கவி கோலோடு உனக்காய் சில துளிகள்
பனி மூட்டமான மூட நம்பிக்கைகள் மூர்க்கர்களின் கேடயமாய் உழைப்பவர் வாழ்க்கை

Page 8
தோழனும் மூடனுாமாய் இவை சகிக்காத - உனது முரட்டு போராட்டங்கள் இன்று அர்த்தப்படுகின்றன.
உழைத்த களைத்த உன் தேகமும் சொல்லடிபட்ட இதயமும் உன் வாழ்க்கையும் போராட்ட குணத்தின் உச்சமாய் கல்லாகிப் போனது இதுவே சில கற்கள் கரைய
EITU600TLDTub 960Tg5)
கரைந்த கல்லாக அல்ல நீ செதுக்கிய கற்களாக உன் வாரிசு . இல்லை இல்லை ஆயிரம் ஆயிரம் வாரிசுகள் புதிய போராட்ட பாதையில்
எனைக் கவர்ந்த உன் கடைசி பெண்ணியம் உன் மரணத்தின் போது புதிய அர்த்தம் பெற்றது
நீ மாத்திரமல்ல உன்னைப் போன்ற ஆயிரம் ஆயிரம் திரை மறைவு சிற்பிகள் இறந்தும் வாழ்வர் இவர்களுக்கள்யப் என்றென்றும் அன்புடன் ஒரு ஏழைக் கவி.
 

சமூக மாற்றமும் பெற்றோர்களும்
-உதயா
குடும்ப நிறுவனத்தின் உருவாக்கம் அதனுடைய முக்கியத்துவம் என்பன ஒவ்வொரு வரலாற்று காலகட்டத்திலும் இருக்கின்ற சமூக அமைப்பை பொறுத்து வேறுபடுகிறது. இன்று நாம் பார்க்கும் குடும்ப நிறுவனங்கள் முதலாளித்துவம், நிலப்பரபுத்துவம் கலந்த சமூகத்தை இயக்குவதற்கு உதவி புரிவனவாக இருக்கின்றன. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பும் இவ்வாறான குடும்ப நிறுவனங்களை பாதுகாப்பனவாகவே இருக்கின்றன. இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழ் மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படைகள் தகர்க்கப்படாத விதத்திலேயே குடும்பங்கள் இயங்குகின்றன. பெற்றோர்களின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், ஆணாதிக்கமும் நிறைந்து பெண்களினதும், பிள்ளைகளினதும் சுதந்திரத்ததை மறுப்பனவாகவே இருக்கின்றன. முதிர்வடைந்த பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளின் அடக்கு முறைக்கு உட்படுவதும் உண்டு. குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் சுதந்திரத்துடனும் சுயநிர்ணயத்துடனும் வாழ்வதாக எமது நாட்டு குடும் பங்கள் இயங்குவதில்லை. (விதிவிலக்குள் இருக்கலாம்)
இதில் மாற்றம் ஏற்பட பொதுவான சமூக மாற்றமும் பொதுவான சமூக மாற்றத்துக்கான குறிப்பான குடும்ப மாற்றங்களும் அவசியமாகின்றன. முழுமையுடன் பகுதியும் பகுதியுடன் முழுமையும் ஒன்றோடொன்று தொடர்புடையன.
குடும்பங்களில் இருக்கும் பிற்போக்கான அம்சங்களை ஒழிப்பதற்கு குடும்பங்களை உடைக்க வேண்டும் என்பது சிலரின் விரும்பம். அரசு உதிர்ந்து போகும் என்பதன் அர்த்தம் மேலாதிக்கமுள்ள வர்க்க அரசு என்ற நிறுவனம் இல்லாமல் போவதையே குறிக்கும் என்று கொள்ளுவோமானால் குடும்பம் இல்லாமல் போவதென்பது பெற்றோர்களின் மேலாதிகத்தின் ஆணாதிக்கத்தின் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக கொண்ட, உழைப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்தின் நிலப்பிரபுத்துவத்தின் சின்னமாக குடும்பம் இருப்பதை மாற்றியமைப்பது

Page 9
எனறு கொள்ளமுடியும். சமூக மாற்றத்திற்கும் உருவாக்கத்திற்கும் மறு உற்பத்தி என்பதன் அவசியம் இருக்குவரை குடும்பத்தின் அவசியம் இருக்கும்.
எனவே சமூகமாற்றத்திற்கு தற்போது இருக்கின்ற குடும்ப நிறுவனமொன்றின் பங்களிப்பு என்பதில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாக உணரப்பட வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவு, உடை, உறையுள் கல்வி என்பவற்றை உறுதி செய்வதுடன் சமூக அக்கறை என்பதை ஊட்டி வளர்ப்பதும் சமூகப்பிராணிகளாக பிள்ளைகளை ஆக்குவதும் அடிப்படை கடமைகளாகின்றன. அப்போதேகுடும்பம். சுயநலத்தின் வடிவமாக இராது பொதுநலத்தின் அளவாக இருக்கும். சுயநலத்தை அடிப்படையாக்க கொண்ட முதலாளித்துவ சமூகத்தை கேள்விக்குட்படுத்துவதாக மாறும்.
பெற்றோர்கள் ஒருவருக் கொருவர் மேலாதிக் கதி தை நிலைநாட்டாதவர்களாகவும் அதே வேளை பிள்ளைகள் மீது மேலாதிக்கத்தை நிலைநாட்டாதவர்களாகவும் இருப்பது அவசியம். ஆணாதிக்கம், சீதனம் போன்ற சாதிய கொடுமைகளை குடும்பங்களின் மாற்றமுடியாத வழக்காறுகளாக கட்டிக்காப்பதும் கைவிடப்படவேண்டும்.
பிள்ளைகளை மேற்பார்வை செய்வது வழிகாட்டுவது என்பதும் பிள்ளைகளை மேய்ப்பது என்பதும் இரண்டு வேறுபட்ட விடயங்களாகும். பிள்ளைகளை அணுகும்போது சுதந்திரமான ஜனநாயக பண்புகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம் அவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கிற்குட்படுதுவதில் தவறிழைக்கப்படும் போது அவற்றுக்கு எதிராக ஜனநாயக மறுப்பினை உயிர்த்துவது சரியாகாது. பிள்ளைகள் தாங்கள் சுதந்திரமானவர்கள் என்றும் சுயநிர்ணயம் உடையவர்கள் என்றும் உணருமளவிற்கு பெற்றோர்கள் குடும்ப பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும். குடும்ப முகாமைத்துவத்தில் மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயக முறைமை பேணப்பட வேண்டும்.
பிள்ளைகளுடன் பொறுப்புக்களை பகிர்ந்து அவர்களை பொறுப்புடையவர்களாகவும் தன்னம்பிக்கையுடையவர்களாகவும் வளர்க்க வேண்டும். அதன்மூலம் குடும்ப வாழ்விற்கு மட்டுமன்றி அறவாழ்விற்கும் அவர்கள் தயாராக்கப்படுகிறார்கள். உலக வாழ்விற்கு தயாரிக்கப்படுகிறார்கள்.
0

குறிப்பிட்ட சில பழக்கங்கள் நடைமுறைகளை பிள்ளைகள் மீது திணிப்பது தவிர்க்கப்பட வேண்டியது போன்று பெற்றோர்கள் அவர்களது சிந்தனைகளையும், கருத்தியலகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை கைவிடவேண்டும். அவற்றை ஜனநாயக ரீதியாக பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதே சரியானதாக இருக்கும்.
குறிப்பாக சொல்லப்போனால் பிள்ளைகளின் விடயங்களில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பு என்பவற்றுக்கு அப்பால் தலையிட்டு அவர்களின் கல்வி, தொழில், திருமணம் என்பவற்றில் பெற்றோர்கள் அப்பாவாத, அம்மாவாத அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தலாகாது.
இங்கு கூறப்பட்ட ஆகக் குறைந்த விடயங்களுடன் குடும்ப நிறுவனமொன்று நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்தியே தீரும் கேள்விக்குட்படுத்தாத குடும்பமொன்றின் பெற்றோர்கள் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை மறுப்பவர்களாகவே இருப்பர். அவர்களால் சமூக மாற்றத்துக் கான, நீதியும் சமத்துவமான சமூகமாற்றத்துக்கான, நீதியும் சமத்துவமான சமூகத்தை படைப்பதற்கான வரலாற்று கடமையுடைய பிள்ளைகளை உருவாக்க முடியாது; பெற்றோர் இசத்திற்கு அடிமைப்பட்ட பெற்றோர் இசத்திற்கு உட்பட்டு அதனை ஏற்கும் முண்டங்களை மட்டுமே ஆக்க முடியும்.
வரலாறு தானே உருவாவதில்லை மாறாக படைக்கப்படுவது வரலாறு வேகமாக அசையும் போது பெற்றோர்கள் படைப்பாளிகளாகவும் வரலாறு மெதுவாக அமையும்போது பிள்ளைகள் படைப்பாளிகளாகவும் இருப்பதும் மாறுவதும் அதிசயங்கள் இல்லை.

Page 10
எதைச் சொல்லுமிந்தக் கண்ணிர்
இடியாய் இறங்கி அடிவயிறு வரை அசைக்குமந்த நினைவு எங்ங்ணம் மறந்து எங்ங்ணம் துறந்தாலும் காந்தமாய் நெஞ்சைக் கவ்விக் கொள்கிறது
கறுத்துப்போய் காய்ந்து சின்னதாய்
எதற்கோ ஏங்குவதாய் இருந்தந்த முகம்
ஏன்? எதைக் கூற மறந்தீர்கள் உயிர்க் கசிந்தப் பின்னும் ஒரக் கண்ணில் ஒழுகுவதேன் கண்ணிர்?
எங்கோ
அடைப்பட்டுக் கிடந்த ஆத்திரங்களா? சொல்லாமற் போன சோகங்களா? சொல்லுங்களப்பா
அகங்கராத் தொனிகளுக்கு அடங்கி இராது எதிர்ப்புக் குராலாகவே இரு என்றா? W
மெளனம் காக்கும்
மலைகளில்
புழுதிப் பறக்கும்
புயலொன்றை எழுப்பி விட எழுந்து வா வென்றா?
- இராகலை பன்னீர்
கோட்டையில் வாழும் குபேரக் குடும்பங்களின் கொடுக்களுக்கஞ்சி குனியாதே யென்றா
ஏன்? எதைக் கூற மறந்தீர்கள்? உயிர்க் கசிந்தம் பின்னும் ஓரக் கண்ணில் ஒழுகி வருவதேன் கண்ணிர்
விந்தை உலகிற்கு விடுத்த சேதியென்ன பகவத் சிங்கைப் படித்தறி போர்குணம் பெறு சரணடைவை மற சதிகளுக் கஞ்சாதே அலரி மாளிகையின் ஆனைகளுக்க டங்காதே இதில்
எதைச் சொல்ல வந்ததுந்தன் நெஞ்சு ஆத்திரங்களின் வடிவாய் அவதரி என்றா? தீ நாக்குகளாய் யெங்கும் நீண்டெரி யென்றா? எதற்காய்யிந்த
ஏக்கம் உயிர்க் கசிந்த பின்னும் ஒரக்கண்ணில் ஒழுகி வருவதேன் கண்ணிர் சொல்லுங்களப்பா!
خط تحت عند
(12)

பகுத்தறிவு இயக்கமும்
பாட்டாளி வர்க்கமும்
- பேராசிரியர் சி.சிவசேகரம்
தமிழகத்தில் இன்றைய திராவிட இயக்கங்களாகச் சீரழிந்துள்ள அன்றைய பகுத்தறிவு சுயமரியாதை இயக்கம் ஒரு முற்போக்கான வெகுசன இயக்கமாகும் நோக்குடன் ஈ. வெ. ராமசாமி (பெரியார்) அவர்களால் கட்டியெழுப்பப்பட்டது. தமிழகச் சூழலில் அதன் சாதகம்ான அம்சங்கள் காரணமாகப் பல சமூக அரசியல் வெற்றிகள் ஈட்டப்பட்டன. அதன் பாதகமான அம்சங்களின் விளைவாக அந்த இயக்கம் பலவீனப்படவும் அதிலிருந்து உருவான தி.மு.க போன்றவை அரசியல் ஊழலின் அதலபாதாளம் வரை சென்று சீரழியவும் நேர்ந்தது.
ஈ. வெ.ரா. சாதிமுறை ஒழிப்பு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்புப் போன்ற பல முற்போக்கான நடைமுறைகட்கு வித்திட்டவரும் வழிகாட்டியும் ஆவார். காந்தி தீண்டாமை ஒழிப்பைச் சாதிமுறையின் ஒழிப்பாக்கத் தயங்கினார். பெண்களின் சமத்துவம் மூடத்தனமான சடங்குகள் போன்றவற்றை எதிர்ப்பதிலும் அவரிடம் தயக்கம் இருந்தது. காந்தி தேடிய இந்திய சுதந்திரம் எப்படியோ நிலமான்ய தேசிய முதலாளிய வர்க்க நலன் சார்ந்து இருந்தது. அவரது தனிப்பட்ட வாழ்விலான எளிமையும் கொள்கைப் பிடிப்பும் அவரது வர்க்க நலன்களைச் சிலகாலத்துக்கு முடி மறைத்தன. ஆயினும் ஈ.வெ.ரா காந்தியிடமிருந்து விலகியதும் காந்திய விரோதியானதும் அவருடைய சமுதாய நோக்கிற் தவிர்க்க முடியாதது.
தமிழக அரசியலில் காந்திய அரசியலும் " சுயமரியாதை அரசியலும் முக்கியமான இரு போக்குக்களை அடையாளம் காட்டின. அவற்றின் எதிரொலிகளை இலங்கையின் மலையகத்திலும் நாம் கேட்டோம். மலையகத்தில் காந்தி, நேரு பேர்களைச் சொல்லி ஒரு முதலாளிய அரசியல் பாரம்பரியம் வளர்ந்தது. அதன் பிரதான வாரிசுகள் இன்றும் இ. தொ. காவின் சொத்துக்களுக்காகச் சண்டை போடுகிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் சீரழிந்து சிதைந்த மாதிரி இங்கு அதன் நிழலைக் காட்டி
(3)

Page 11
உருவான அமைப்புக்கள் என்றோ சீரழிந்து இன்று சிதைவை எதிர்நோக்குகின்றன. தமிழகத்தின் சுயமரியாதை பகுத்தறிவு இயக்கமும் அதன் வழி வந்த திராவிட இயக்கங்களும் இங்கு எதிரொலிகளை எழுப்பினாலும் ஸ்தாபன ரீதியாக இங்கு ஒரு திராவிடஇயக்கமோ சுயமரியாதை பகுத்தறிவு இயக்கமோ உருவாகவில்லை. தமிழக இயக்கங்களின் பாதிப்பு மிஞ்சினால் சிறு குழுக்களாகவும் பெருமளவும் தனிமனித அடிப்படையிலுமே காணப்பட்டது.
அதற்கான காரணங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியவை. தழிழகத்தில் பார்ப்பனியம் என அடையாளங் காணப்பட்ட சாதிய நிலவுடைமை ஆதிக்கச் சிந்தனையின் பிரசாரகர்களாகவும் தீர்மான சக்தியாகவும் இருந்த பிராமண சாதியினர் சமுதாயத்திலும் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மையினராக இருந்தனர். பிரிட்டிஷ் எசமானருடனும் காங்கிரஸ் தலைமையுள்ளும் அவர்கட்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. எனவே பகுத்தறிவு சுயமரியாதை இயக்கத்தின் இலக்கு நேரடியாகவே பிரமாண ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்தது.
குறுகிய காலத்திற்கு கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஈ.வெ.ரா பிரதான எதிரியாக பிரமாணர்களையே கண்டதன் காரணமாக அவரால் தனது இயக்கத்தை ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களது இயக்கமாக வளர்க்க முடியவில்லை. குறுகிய தமிழ் தேசிய வாதம் மட்டும் மல்லாமல் பிராமணரல்லாத மேல்தட்டுச் சாதியினரும் அந்த இயக்கத்துள் நுழைய முடிந்தது. அவர்கள் பிராமண ஆதிக்கத்தை வெறுத்தார்களே ஒழிய சாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தையோ தமது சாதிய நலன்களையும் மறுப்பதையோ என்றும் ஏற்றவர்கள் அல்ல.
என்ன இருந்தாலும் பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம் தமிழக அரசியலில் சில முக்கியமான பயனுள்ள தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்து மத வெறியர்களின் தூண்டுதலான மதக் கலவரங்களோ சாதிப் பூசல்களோ குறைவாக இருந்த இந்திய மாநிலமாகத் தமிழ் நாடு நீண்டகாலமாக இருந்து வந்தது என்றால் அதில் ஈ.வெ.ரா. தலைமையிலான இயக்கத்தின் பங்கு பெரியது.
இலங்கையில் ஈ.வெ.ராவுடையதும் பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கங்களதும் சிந்தனைகளை நேரடியாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் வடக்கு கிழக்கிலோ மலையகத்திலோ இருக்கவில்லை. வேளாளப்
(1)

பெரும்பான்மை கொண்ட யாழ்குடா நாட்டில் சாதியம் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பிராமணர்கட்கு ஒரு பங்கும் இருக்கவில்லை.
மலையகத்தில் பெரும்பாலும் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களே தோட்டத் தொழிலாளர்களாக இருந்து வந்துள்ளனர். உற்பத்திச் சாதனத்தின் மீதான ஆதிக்கம் தோட்ட முதலாளிகளது கையில் இருந்தது. வணிகர்கள் போன்று பொருளாதார ரீதியாக ஓரளவு மேல் உயர்ந்த பகுதியினர் இருந்தாலும். மலையகத்தின் சாதியம் உற்பத்தி உறவுகளின் மீது தங்கியிருந்த ஒன்றாகக் கூற முடியாது. இவ்வகையில் இது 1960 கட்கு முந்திய வட பிரதேசச் சாதியத்திலிருந்தும் தமிழகத்தின் சாதியத்திலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.
தமது சமூகத்தின் பின்தங்கிய நிலை, பரவலான மூடநம்பிக்கைகள், மக்களது அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டும் இ.தொ.கா. தொழிற் சங்கத் தலைமை போன்றவற்றைக் கணிடு மனம் வெதும்பியவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டது அந்தச் சூழலில் இயல்பானது என்றாலும், தமிழகத்தில் பகுத்தறிவு சுயமரியாதை இயக்கங்களது வளர்ச்சிக்கு வசதியாக இருந்த பிராமண விரோத உணர்வு, இந்தி எதிர்ப்பு போன்றவை இலங்கையில் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனைகளின் கவர்ச்சி ஒரு சமுதாய இயக்கமாக வளர முடியாது போனது. என்றாலும் புதிய சமுதாயத்துக்கான தேவையையும் மனித சமத்துவம் என்ற இலட்சியத்தையும் சாதி மதங்களின் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவதை நிறுத்துவதையும் ஏற்றுச் செயற்படக் கூடிய சக்திகளின் முக்கியமான தோற்றுவாய்களில் பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனையும்
ങ്ങ[].
பின்னர் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தவர்கள் பலர் தொடக்கத்தில் பகுத்தறிவு, சுயமரியாதையால் கவரப்பட்டவர்கள் என்பது உண்மை. ஸ்தாபனரீதியான இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்களைக் கவர்ந்தன. தொண்டமான், அஸிஸ் போன்றோரது தலைமைகட்குச் சவால் விடக் கூடிய ஒரு தொழிற்சங்கமாக செங்கொடிச் சங்கம் 1960களில் எழுந்தது என்றால் சமூக உணர்வு கொண்ட தனிமனிதர்கள் அதில் இணைந்து செயற்பட்டது ஒரு முக்கிய காரணமாகும்.
(s

Page 12
பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கங்கள் பாட்டாளிவர்க்கச் சிந்தனையைத் தன் ஆயுதமாக்கததால் அவை ஒரு ஸ்தாபனமாக உருவாக முடியாது போனாலும். அவற்றின் பங்களிப்புக்களின் பெறுமதியை நாம் முற்றாக நிராகரிக்கக் கூடாது. வெகுசனமட்டத்தில் மலையக மக்களை அரசியல் விழிப்பூட்டிய மாக்ஸிய லெனினிய கம்யூனிஸ்ட்டுகள் மலையகத்தின் குறிப்பான சூழல் காரணமாக தொழிற்சங்கத்தின் மூலமே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. செங்கொடிச் சங்கம் அதற்கான ஒரு கருவியாக இருந்த அளவில் அதன் பங்கு பெரியது. என்றாலும் அதற்குள் சந்தர்ப்பவாதமும் தொழிற்சங்க வேலையை ஒரு தொழிலாகவே நோக்கும் போக்கும் தொடக்கத்திலிருந்தே காணப்பட்டது. அரசியல் இயக்கமும் தலைமையும் பலமாக இருந்த போது அடங்கி இருந்த இந்தச் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத சக்திகள் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி என அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பிளவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை வசதியாகப் பாவித்துக் கட்சியிலிருந்து ஒதுங்க வழி ஏற்படுத்தினார்கள். வெகு விரைவிலேயே செங்கொடிச் சங்கம் இ.தொ.கா. வை ஒத்த அல்லது அதனிலும் மோசமான ஒரு ஏமாற்று வியாபாரமாகச் சீரழிந்தது நீாம் அறிந்த விடயம்.
மலையகத்தில் சமூக நீதிக்கும் சமூக விடுதலைக்குமான சிந்தனைகளின் தோற்றத்தில் தமிழக பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனைகள் ஒரு முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் அதை வர்க்க உணர்வோடும் வர்க்க நிலைப்பாட்டோடும் வர்க்கப் போராட்டத்தோடும் இணைத்து ஒரு வலிய சக்தியாக ஆக்குவதற்கு அந்த சிந்தனைகளுக்குள் சில குறுகிய பார்வைகளும் குறைபாடுகளும் காரணமாயின. அதே வேளை மலையக மக்களின் விடுதலைக்கு வழிகாட்டக் கூடிய மாக்சியச் சிந்தனையை அங்கு கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியான தொழிற்சங்க வேலையானது முடிவில் சந்தர்ப்பவாத சக்திகளின் வளர்ச்சிக்கும் இடதுசாரி இயக்கத்தின் வலிமையைக் குறைப்பதற்குமே உதவியது.
மலையகத்தில் இன விடுதலைக்கும் சமூக நீதிக்குமான வெகுஜன இயக்கத்தைக் காட்டி யெழுப்ப வேண்டிய தேவை நம்முன் பெரிதாக உள்ளது. அது நமது வரலாற்றுக் கடமை. அதற்கான வழிகளை நாம் தேட வேண்டியுள்ளது.
பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனை அதன் போதாமைகளையும் குறைப்பாடுகளையும் மீறித் தனக்கான ஒரு பெரிய பங்களிப்பை
(10

வழங்கியுள்ளது என்பது உண்மை. என்றாலும் மலையகத்தின் சமூக யதார்த்தம் சாதிப் பாகுபாடு, சமூகச் சீரழிவுகள், மூடநம்பிக்கைகள், தொழிற்சங்க அரசியல் தில்லுமுல்லுகள், என். ஜி. ஒ. பித்தலாட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்குகிறது. சாதிப்பாகுபாட்டுக்கு முகங்கொடுக்க பார்ப்பனிய சாதியக் கொள்கையை எதிர்ப்பதால் பயனில்லை. மத எதிர்ப்பை விட மதத்தின் பேரால் நடக்கிற சமூதாய ஏமாற்று வேலைகள் மீது அதிக கவனம் தேவைப்படுகிறது. தொழிற்சங்க வேலைகள் மீது தங்கியிருக்காத அதே வேளை, தொழிற்சங்கங்களில் தொழிலாளர் ஜனநாயக அதிகாரத்துக்கான போராட்டத்துக்கான தேவை இருக்கிறது.
மலையக மக்களுடையை போராட்ட அனுபவங்களை அரசியல் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் என்ற மட்டங்களிலும் சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனைகளின் மட்டத்திலும் நாம் கவனமாக ஆராய்ந்து மதிப்பிடவேண்டும். அவற்றின் சாதகமான அம்சங்களிலிருந்தும் அதே அளவுக்கு அவற்றின் பாதகமான அம்சங்களிலிருந்தும் கற்பதன் மூலமே மலையக பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கட் கானதும் முழு மானிடத்தினதும் விடுதலைக்கானதுமான ஒரு வலிய போராட்டச் சக்தியாக வளரமுடியும்.
☆☆☆
காதல்
காதல் என்பது ஒரு அவரைச்செடி போல ஒரு அவரைச் செடி வளர்வதை பார்த்திருக்கிறாயா? அது தோன்றுகிறது? இலை விடுகிறது, அரும்புகிறது, மலர்கிறது, பிறகு அது செய்வதெல்லாம் அவரைக் காய்களையும் விதைகளையும் உண்டாக்குவது தான் .b......... காதலும் அது போன்றது தான்ا
இவான் குவேரா Ivan Guevara நிக்குரகுவா தமிழில் சிவா

Page 13
- நதி
கடதல் காற்றின் குளிர் நடுக்கத்தில் தோளில் கூடைசுமந்து கொழுந்து பறிக்க சென்றிடுவோம் கூலிக்காய் தினம் உழைத்திடுவோம். றொட்டி உண்டு வளர்ந்த உடம்பில் ஊறிய சொட்டு இரத்தமும் கொழுத்த மலை அட்டையின் வயிற்றுக்குள் குப்பி குப்பியாய் ஏறிவிட ~ நாங்களோ குருதிச் சோகையால் மயங்கிடும் மர்ம நிலை தெரியாதோ நமக்கு ரத்தம் சிந்தியே உழைக்கும் நமக்கு நம் சீரற்ற வாழ்வுதான் தெரியாதோ.
கொழுந்த மட்டுமே பறிக்க வந்த கொத்தடிமை நாமல்ல இயலாமை, ஏழ்மை எல்லாம் எம்மை சுற்றி சூழ்ந்திருக்கும் வேலிகள் மலையகம் கல்வியில் மந்த நிலை ~ இத பத்திரிகையில் பல முறை வந்தவிட்ட செய்திகள் கொழுந்த பறிக்கும் மூளைக்கு அறிவதெற் கென்ற ஆக்கினை முதலாளிவர்க்கத்தின் விந்தை என்பதை விளங்காமலா வீழ்கிறோம்.
பள்ளி செல்ல வேண்டிய நம் பாலகரை பணம் காட்டி, பாசாங்கு செய்த
(8)
 
 
 
 

அழைத்து செல்வர் முதலைகள் அவர் தம் வீட்டு வேலைக்கு பொடியனாய் வஞ்சம் அறியா அப்பிஞ்சுகளை வரம்புக்கு மீறியே வதைத்து வாங்கிடுவர் வேலை. உண்பதன் மீதியே உணவாய் கொடுத்த ஓர் முலையிலே அயர விடுவார். நொந்து அழுகின்ற அந்தப் பிஞ்சுகளின் குரலுக்கு செவிமடுப்போமா ஈரம் கசிந்த வெதும்பி நிற்போமா
வேதனையில்
சீருடையில் வருகின்ற செல்வந்தரை நம்பி சென்று வாவென்று வழியனுப்பி வைப்போம் நம் வயத வந்த செல்லப் பெண்களை வறுமையின் உக்கிரம் எம்மை மழுங்கடிக்கிறதாலா? பருவத்தின் மிளிர்வால் பார்வைக்கு ஆளான நம் செல்லப் பெண்கள் செல்வந்தர் வீட்டு ஆணினத்தின் சின்னதனங்களுக்குள் சிக்கித்தவித்து சீரழிந்து போவதை சிறித சிந்தையில் கொள்வோமா! சீற்றம் கொள்வோமா?
வயிற்றுப் பசியை மட்டும் தீர்த்தப் பிழைத்திருக்கும் மந்தைகள் நாமல்ல. மலையக மண்ணின் மங்கையரென முரசு கொட்டுவோம் முஷ்டியை உயர்த்தவோம். வருங்கால சந்ததியை படைப்போம் வீரமுடன் ஆக்குவோம். விடுதலை உணர்வுடனே
GD

Page 14
தோட்டத்த காம்பராவுக்குள் குறிகிவிட்ட எம் வாழ்க்கை வட்டத்தின் விட்டத்தை விரிவாக்குவோம். தயங்கிய எம் நிலையை தொலைத்திடுவோம் தன்னம்பிக்கையை தாராளமாய் வளர்த்திடுவோம் முதலாளி வர்க்கத்திற்கு முறையான பாடம் புகட்டிடுவோம். மனிதம் இல்லாத இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். வர்க்க பேதம் ஒழித்திடுவோம் பால் அடக்கு முறை தகர்த்திடுவோம். புதிய ஜெகத்தினை படைத்திடுவோம் இனி சமமாய் எந்நாளும் வாழ்வதற்காய்
★★★ áfüumlið arbúnium
தேசிய காவற்படை சிப்பாயே நீ என் சகோதரன் எனவே உன்னைச் சுட நான் கவனமாக குறிபார்ப்பதற்கு i நீ என்னை மன்னிப்பாயாக ஆனால் எங்கள் துப்பாக்கிகளினின்று நாம் முன் கண்டிராத மருத்துவமனைகளும் பாடசாலைகளும் வரும் உன் குழந்தைகளும் பிறகுழந்தைகளுடன் விளையாடும் பாடசாலைகள் என் சொற்களை கவனி அவை எங்கள் கொலையை நியாயப்படுத்தும்
ஆனால் உன் ஒவ்வொரு வேட்டும் உன் பரம்பரை முழுவதினதும் அவமானமாகும்.
பொஸ்கோ கன்ற்றெனோ
நிக்கரகுவா தமிழில் சிவா
 
 
 

ஆசையே தொடரும் அனைத்து நாசத்துக்கும் காரணமென்று போதி மரத்தடிப் புத்தன் ஒதியத இந் நாட்டில் ~ அவன் வேதம் ஒதம் வல்லவர்க்குப் புரியவில்லை அவர்தம் பாதம் பணியும் ஆள்வோருக்கும் தெரியவில்லை சாதியில்லை மதமுமில்லை சர்வேசுரனென் றொருவருமில்லை நாதியற்றது எவ்வுயிரும் நளிவத அறமுமில்லை நீதி நெறி வாழ்ந்து நிர்வாணம் பெற்றிடுவீர் போதனைகள் இவைகள் புத்தன் திருவாய் மொழிகள்
இனவெறியும் மொழிவெறியும் இழிந்தோர் மேல் குலவெறியும் தனவந்தர் மத வெறியும் தளராத தசை வெறியும் இனியேது இந் நாட்டில் இனிய சமாதானமென்று துணிவாகச் சொல்லுவது தாரத்தில் கேட்கின்றதே சிந்தார்த்தன் போதனைகள் சிதறி ஏன் போயினவோ எத்துணை கடுந்தவம் ஏற்றுஅவன் பெற்ற ஞானம் பித்தன் கை பெற்ற స్లమ్డ్కి { பலாப்பழம் போல் ஆயினதே
.... dF ஜேசுதேசன் ن
உதவிக் கல்விப் பணிப்பாளர்) யுத்தம் தான் " புத்தம்” மென்று புதுக் கோசம் கேட்கின்றதே
நல்லவேளை அவன் - பரி நிர்வாணம் பெற்றுவிட்டான் இல்லையென்றால் இன்னொரு பிறவி இந் நாட்டில் அவன் எடுத்து பொல்லாதோர் தம் பெயரில் புரியும் ஈனச் செயல்களுக்கு “புல்லட்'டின் தணை கொண்டு புது மார்க்கம் காட்டிடுவான்
★资放
85n புதன் 13ந் திகதி நேரம் 1.30 இன்றுடன் முடிவு சமையலை நீயே செய்த கொள் உனது கோவணங்களை நீயே தோய்த்துக் கொள்
வீட்டை தப்பரவாக்கு : கட்டிலை ஒழுங்கு செய்: :
வீட்டைக் கழுவு யன்னலையும் மறந்த விடாதே கிழமைக்கு ஒரு முறை படிகளையும் சிலவேளை நடுநிசியிலும் சில வேளை வராமலும் மாலையில் நீ விரும்பயபடி திரும்பும் உலகம்
கூரைமேல் சுற்றுகிறேன் : புகை போக்கி குளிரா8. உள்ளது: நான் சுதந்திமடைந்து விட்டேன். w ஜேர்மனியக் கவிதை நன்றி - இருள்வெளி

Page 15
மலையகத்தமிழர் பணிபாடு
~ சில குறிப்புகள்
- Sò. 5bGOLULLIT
பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் உற்பத்தி முறைமைகள் உற்பத்தி உறவுகள் அவற்றுக்காக அல்லது அவற்றினால் தீர்மானிக்கப்படுகின்ற கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள், சமூகஉறவுகள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள் என்பவற்றின் தொகுப்பெனலாம். பண்பாடு ஒரு சமூகத்தின் மேலமைப்பு; அது மேல் கட்டுமானங்களுக்காக அல்லது அவற்றினால் தீர்மானிக்கப்படுவனவாக சமூக அமைப்பின் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் தொடர்புடையதாக இருப்பது என்பதை பொதுவாகபார்க்கலாம்.
ஒரு சமூகத்தின் பணி பாட்டை அறிவதன் மூலம் அதன் அங்கத்தினர்களின் வாழ்க்கை எவ்வாறு ஒழுங்கமைக்பட்டுள்ளது என்பதையும் சமூகமாற்றத்துக்கு ஏதுவாக அமையும் சாதகபாதகங்கள் பற்றியும் அறியமுடியும்.
மலையக தமிழ் மக்களுடைய பண்பாடு பற்றி அறிகையில் அவர்கள் பண்பாடற்ற ஒரு கூட்டத்தினர் என்றோ பண்டாடற்ற நிலைமையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டனர் என்றோ முடிவை எடுப்பது பிழையும் அபத்தமானதும் ஆகும். இங்கு கொண்டுவரப்பட்ட மலையகத் தமிழ் மக்கள் (இங்கு வாழும் முழு இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் குறிக்கிறது) இங்கு கொண்டு வரப்படுகின்றபோது இந்தியா விலிருந்து பெருபாலும் தமிழகத்திலிருந்து வந்த இடங்களில் ஏற்பட்டிருந்த பண்பாட்டு வளர்ச்சிகளை உள்வாங்கி கொண்டே இங்கு வந்தனர் என்பது மறுக்கப்பட முடியாது. அப்பண்பாட்டு அம்சங்களுடன் இங்கு வாழ்கின்றபோது அவர்களது விஷேட சூழ்நிலைக்கேற்ப (நிர்பந்தங்கள் என்றும் கூறலாம்) பல அவர்களுக்கே உரித்தான பண்பாட்டு அம்சங்கள் தோற்றம் பெற்றுள்ளன. உதாரணமாக தோட்டத்தொழிலாளர்களின் பிரதான உணவாகிவிட்ட கோதுமை மாரொட்டி இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவு பண்பாட்டு முறையில்
(2)

அடங்காது இறந்தவர்களின் சடலங்களை புதைப்பது அல்லது அடக்கம் செய்வது பிரிட்டிஷ் தோட்டமாரின் நிர்ப்பந்தத்தால் திணிக்கப்பட்டதாகும். கல்வி முறை என்பது கூட காலபோக்கில் 5ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரால் அறிமுகம் செய்யப்பட்டதாகும். தொழிற்சங்கங்களுடன நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை முறை என்பதும் விஷேட வாழ்க்கை சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிணைப்பாகும்.
அவர்களின் லயத்து வாழிட முறை பிரிட் டிஷாரினால் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாகும்.
இதைத் தவிர தற்போது வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பாதிப்புக்கள் ஏற்பட்ருந்தாலும் கலை இலக்கிய அம்சங்களில் பெரும்பாலும் இந்திய தமிழக பண்பாட்டு பாதிப்புகளே அதிகமாக இருந்து வருகின்றன.
மத வழிபாட்டு முறைகள் இந்திய வழிபாட்டுமுறைகளை அப்படியே முழுமையாக இங்கு மலையகத்தமிழ் மக்கள் ஒழுகாவிடினும் அவற்றின் அடிப்படைகளும் பாதிப்புகளும் அதிகமாகும். சாதீய பாதிப்புகளில் தீண்டாமை நிலைகொள்ளாது போனாலும் இந்திய தமிழக பாதிப்புகளே அதிகம்.
ஆகவே இங்கு கொண்டு வரப்பட்டபோது பண்பாட்டுடன் வந்தனர். பின்னர் அவர்களின் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் (பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டவைகள்) அவை மாற்றம் பெற்று இன்று பிரத்தியோகமான பண்பாட்டு அம்சங்களாக வெளிகாட்டி நிற்கின்றன.
அந்த பிரத்தியோகமான பண்பாடு வர்க்க, இன, அடக்குமுறைளுக்கும் சாதீய பாதிப்புகளுக்கும் ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் உட்பட்டவை ஆகும்.
இவ்வாறான சூழ்நிலையில் மலையத் தமிழ் மக்களின் பண்பாட்டை வெறும் தூஷனங்கள் என்றோ மிகவும் செழுமையானது என்றோ இரண்டு அந்தங்களில் நின்று பார்வைக்கு உட்படுத்துவதில் கோளாறுகள் இருக்கும். எந்தவொரு சமூகத்தினது பண்பாட்டு ஆய்விலும் மேற்படி இரண்டு அந்தங்களில் நின்று பார்ப்பதாகாது.
(23)

Page 16
அடக்கப்படுகின்ற தொழிலாளர்களான தோட்டத் தொழிலாளர்களினதும் அடக்கப்டும் தேசிய இனமான மலையகத்தமிழ் தேசிய இனத்தினதும் பணி பாட்டை பணி பாட்டு பதிவுகளை தொகுப்பதும் அவற்றில் முற்போற்கானவற்றை இன்னும் செழுமைப்படுத்தி பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகும். அதாவது தொழிலாளர்களின் வர்க்கரீதியான விடுதலைக்கான, தேசிய இனத்தின் விடுதலைக்கான பண்பாட்டை ஒருங்கினைக்க பழையவற்றிலுள்ள முற்போக்கானவற்றை தொகுப்பதுடன் புதிய பண்பாடுகளை கட்டிவளர்க்கவும் வேண்டும்.
அக்கடமைகளை நிறைவேற்ற மலையகத்தமிழ் தேசிய இனத்தின் பழைய பண்பாடுகள் குறித்தும் எதிர்கால பண்பாடுகளின் தோற்றம் வளர்ச்சி செழுமை என்பன குறித்தும் வர்க்கரீதியான சரியான ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதற்கு அடிப்படையாக மலையகத்தமிழ் மக்கள் பற்றிய வர்க்க ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இவை ஆழமாகவும், சரியாகவும் செய்யப்படும் போதே மலையகத்தமிழ் மக்களின் இருப்பு, வளர்ச்சி என்பன பற்றி சரியாக திட்டமிட முடியும்.
பணி பாட்டை பொதுவாக சமூக மாற்றத்திற்கு மிகவும் அடிப்படையானவைகள். அடிநாதமானவைகள் (Organic) என்றும் சமூகமாற்றத்துக்கு இணையாவைகள் (Conjunctural) என்றும் பிரிக்கலாம். வர்க்க உரிமைகளுடனும, தேசிய இன உரிமைகளுடனும் சமத்துவமான நீதியான சமூகத்தை காண நேரடியாக உதவிபுரியும் பண்பாட்டு அம்சங்கள் அடிநாதமானவை. அம்மாற்றத்திற்கு துணை புரிபவை இணையானவை.
மலையத்தமிழ் மக்களின் மதம், மதவழிபாடுகள் குடும்பமுறை உணவுபண்பாடு வதிவிடம் ஆடைஅணிகலன்கள் கலைகள் என்பவற்றில் வெளிப்படும் பண்பாட்டு அம்சங்கள் பெரும்பாலும் இணையான பண்பாட்டு அம்சங்களுக்கு கீழ்நிலையிலே இருக்கின்றன. வெளியிலிருந்து ஏற்பட்ட தாக்கங்களால் அவற்றில் சில முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும் பல விடயங்கள் மாற்றீடு செய்வனவாகவன்றி பிரதிபண்ணும் பதிலீடு செய்வனவாக இருக்கின்றன. குறிப்பாக கல்வி பற்றிய அக்கறை, திருமணங்கள் மத்தியதர வாழ்க்கை முறை வதிவிட அமையம் என்பவற்றில் இலங்கைத் தமிழரிடம் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழரிடம்) இருக்கும் அம்சங்களை அப்படியே பிரதிபண்ணும் முயற்றிகளை மலையத்தமிழ் மக்களிடையே இருக்கும் படித்தவர்களிடம் அவதானிக் முடிகிறது. அவற்றில்
() .

இருக்கும் ஆபத்தான விடயம் யாதெனில் பல பிற்போக்கான அம்சங்கள் நாகரீகம் என்ற அடிப்படையில் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவது தான். ஆடம்பரமான வைபவங்கள், சீதனம், வெளிநாட்டு இடப் பெயர்வை அந்தஸ்தாக கருதும் மனப்பான்மை படித்தவர்களின் அதிகாரத்துவம் என்பவற்றைக் குறிப்பிடலாம் இதற்குமாறாக மலையகப்பண்பாடு என்று பிற்போக்கான அம்சங்கள் என்றாலும் அவற்றை அப்படியே பாதுகாத்து ஒழுகும் பிற்போக்கான போக்கும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது மலையக சமூகத்தை ஒரு அடைக்கப்பட்ட சமூகமாக வைத்திருக்க துணைபோகும் முயற்சியாகும்.
ஆனால் இலக்கிய பண்பாட்டு அம்சங்களை பார்க்கின்ற போது மலையகத்தமிழ் மக்களின் சமூக உருவாக்கத்திலும் மாற்றத்திலும் பெரும்பாலும் இணையான அம்சங்களாக இருக்கின்றன, இருந்து வருகின்றன எனலாம். எழுத்துத்துறை பண்பாடு முற்போக்கான செல்நெறியில் இருப்பதை அவதானிக்க முடியும். பிரிட்டிஷ் காலணித்துவத்தால் இங்கு கொண்டு வரப்பட்ட காலம் தொட்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாய்மொழி இலக்கியங்கள் பாட்டுக்கள், கவிதைகள் என்பவற்றை பார்க்கின்ற போது தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலையை கேள்விக்குட்படுத்துவனவாக இருக்கின்றன. 1960களிலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் வளர்ச்சியடைந்த சிறுகதை, நாவல் என்பவற்றிலும் மலையக மக்களின் பிரச்சனைகளே முழுமையாக இடம்பெற்றுள்ளன எனலாம். தனிப்பட்ட லெளகீகம், வர்த்தக நோக்கம் என்பன மலையகத் தமிழ் (எழுத்து) இலக்கியத்திற்கு அந்நியமானவையாகவே இருந்திருக்கின்றன.
தோட்டத்தொழிலாளர்களின், மலையகத்தமிழ்மக்களின் பின்தங்கிய அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலைமைக்காக பிரிட்டிஷ் காலணித்துவத்தை சாடும் நிலையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. 1960 களிலும் அதற்குப் பிறகும் அடக்குமுறைகளை கேள்விக் குட்படுத்தும் விதத்தில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. 1980களுக்குப் பிறகு தேசிய இன ஒடுக்குமுறைகள் மிகவும் அப்பட்டமாக கட்டவிழ்த்து விடப்பட்டப்பட்ட பிறகு தேசிய இன ஒடுக்குமுறைகள் பற்றியும் எழுத்துக்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 1960 களில் 70களில் அதிகமாகவும் தற்போதும் முற்றாக கைவிடப்படாத நிலையிலும் மலையக எழுத்துக்களில் இருக்கும் சிறப்பம்சங்களில் மிகவும் முக்கியமாக ஒரு விடயத்தை குறிப்பிட முடியும் அதாவது வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறு பிரதேசங்களில் வாழ்கின்ற
es காழும்புதமிழ் *ஆங்கம்

Page 17
குறிப்பாக சிங்கள முஸ்லிம் இலங்கைத் தமிழர்களுடன் மலையகத்தமிழ் மக்களுக்கு பிணைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டன அல்லதுமறுக்க்பபடவில்லை எனலாம்.
பாராளுமன்ற அரசியல் தலைமைத் துவங்களின் தொழிற் சங்கத்தலைமைதுவங்களின் பிற்போக்கு தனங்களை சாடுவனவாக அதிகமான எழுத்துக்கள தற்போது அமைந்துள்ளன எனலாம். இதன் வளர்ச்சி “மாற்று' பற்றிய சிந்தனையையும் கருத்தினையும் தோற்றுவித்து வளர்ப்பதாக அமையும் என எதிர்வு கூறலாம்.
அதேவேளை சமூகமாற்றத்துக்கான அடிநாதமாக அமைவதாக சில எழுத்து முயற்சிகளும் இருந்திருக்கின்றன. அவை குறிப்பாக 1960, 70 களில் பிரதான இடத்தைப்பெற்றிருந்தன. அதாவது சமூகமாற்றத்துக்கான மாக்சிஸ் லெனினிஸ அரசியல் கருத்துக்களும், இயக்கங்களும் மலையகத்தில் பலமாக இருந்த காலத்தில் அவை பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
எனவே 175 வருடகால வரலாற்றை கொண்ட, சுதந்திரத்தையும் விடுதலையையும் வேண்டி நிற்கும், சாதாரணமாக ஜனநாயக மாற்றங்களை கூட மறுக்கப்படுகின்ற மலையகத் தமிழ் மக்களின் பண்பாட்டு செல்நெறி மிகவும் முற்போக்காக நகர்ந்தது என்று கூறமுடியா. எழுத்துப் பண்பாட்டில் சமூகமாற்றத்துக்கான இணையான தாக்கங்கள் இருப்பினும் அவை பெரும்பாலும் அடிநாதமானவையாக வளர்ச்சி பெறவில்லை. ஏனைய பண்பாட்டு அம்சங்களில் சமூகமாற்றத்திற்கான இணையான அம்சங்கள் கூட தோன்றாமல் இருக்கிறது எனலாம்.
மலையகத்தமிழ் மக்களின் வர்க்க இன விடுதலைக்கு அடிநாதமான
பண்பாட்டு அம்சங்களை வரலாறு தோற்றுவிக்குமா? வரலாற்றை படைக்கும் எதிர்கால சந்ததியினர் தோற்றுவிபார்களா?
تب تک رسالت

- வள்ளி
விரும்பாத முடிவுகளுக்கு தள்ளப்பட்டாள் பெண்ணாக பிறந்து விட்டதுடன் ஏழையாய் இருந்து விட்டதன் பலனோ உள்ளத்து உணர்வுகள் ஊனமாகிட கல்யாண சந்தையிலே கரைசேர வேண்டிய கடைச்சரக்கானாள் கண்ணுக்குள் வளர்த்த காதல் நினைவுகளை களவாக கலைத்துவிட்டு பணம் ஒன்றிலே பற்றுவைக்கும் திமிர் பிடித்த சமூகத்தின் இரு உடல்களை சேர்த்து வைக்கும் கலாசாரம் என்ற சம்பிரதாயத்துக்கு இரையானாள். பயமூட்டியே வளர்க்கப்பட்ட பெண்மை அங்கு பலியானது கலாசாரம் என்ற வலைக்குள் பிணைக்கப்பட்டு சம்பிரதாயமாய் கைப்பிடித்தவனின் கைப்பொம்மை ஆனது.
நேர்மையான அவளின் அன்பு அவமதிக்கப்பட்டது அதிகாரமும்
ஆணடக்கு முறையும் ஆட்சி செய்தன. பெண்மை வெறும் பாவனைப் பொருளானது.
காலம் பிந்தி யென்றாலும் கலாசாரம் என்ற கற்பனைகளை காத்து நிற்க ஆண்களின் பொம்மையல்ல என்று பொறுமை இழந்தாள்
(27)

Page 18
பூஜித்த அன்பை இரைமீட்டினாள் கலைக்கப்பட்ட கடந்த காலத்தை கவலையுடன் புரட்டிப் பார்த்தாள்
தொடர்ந்தும் மெளனித்து தொடரும் வாழ்க்கையை பாழாக்க விரும்பாத வேகத்தில் நீதி கேட்டு யாரிடமும் செல்லவில்லை. நிர்மூலமாகக்கப்பட்ட அவள் வாழ்க்கைக்கு தீர்வுகளை கூறுகின்ற நீதிபதியாய் தன்னையே தான் மாற்றி பண்பாடென்ற பாழான பட்டயத்தை தூக்கி தூரத்தில் எறிந்துவிட துணிந்தாள்
கண்ணுக்குள் வளர்த்து மனதுக்குள் காத்த தூய அன்பை தேடி பயணத்தை தொடர்ந்தாள் பொங்கி எழுந்த புதுமையுணர்வுடன் புதிய பயணத்தை தொடர்ந்தாள் சுதந்திரம் விரும்பும் விடுதலை நேசிக்கும் மனங்களுக்கு மட்டுமே அப்பயணத்தின் மகத்துவம் புரியும்
கொச்சைப் படுத்த கோடி கோடி நியாயங்கள் தேடி பலரங்கே பிதற்றினாலும் புதிய பயணத்தில் புதிய படைப்பினில் இலக்கை வைத்திருந்தாள் அவள் சுதந்திரப் பெண்ணா? விடுதலை விரும்பியா?
(28)
 
 

qisë-itmelewson sejresø (opșoaeae) quo-tr@onuŋo sɔŋgếuogo onqos messo hqo
quo-słngnțese qensense@ yumuo qae-ishqae ipsalutaeg yılmæssso (qops@oi) qiqo messo tiqae

Page 19
நிம்மதியாக ஓய்வெருங்கள்
தாத்தா நீங்கள் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் உடம்பு உறுதியாயிருந்த போது நித்தமும் யோசித்து நிஜமாக பேசிட்ட கொள்கை கொண்டோர்
கோலோச்சும் காலம் கன தொலைவில்லை
சங்கப் பிரச்சினையும் சாதிப்பிரச்சினையும் சந்தி சிரித்ததை யெல்லாம் சரியாகக் காட்டி சிந்தையை தொடும் பல சீரிய செயல்களையும் நாடக மாக்கி நற்பெயர் பெற்ற செயல் வீரர் நீங்கள்
திருவிழாவில் பங்கேற்று தெரு தெருவாய் நாமலைந்து உடல் சோர்ந்து உளம் நொந்து உணவுக்காய் நாம் வந்தால் சில நிமிடம் யோசித்து வளைத்த தடியதனை வடிவாய் பிடித்தெடுத்து தள்ளாடித் தள்ளாடி தயவாக கேட்டுவீர் எப்படியப்பா இன்றைய வேலை
வழமையான பல்லவியை வாய் திறந்து சொன்னால்
- மு. நாகராஜன்
நாடிப்பிடித்து நம்மவரின் நிலையை கோடி முறை சென்றாலும் கும்பிடு போட்டாலும் பீடி கொடுத்தவனுக்கு பிசகாமல் போட்டிடுவான் கொள்கை கோட்பாடு கொஞ்ச நாள் போயே தெரியும் ஏமாந்து போட்டிட்டேன் இவர்களுக்கு என்றிடுவார்
நம்மவரின் நிலைமாற்ற நல்ல வேலை நாம் செய்ய வேண்டும் இந்த வேலை போதுமா
இனிதானே உண்டு வேலை
உற்சாகமாய் நீங்கள்
ஒடித்திறிய வேணும்ப்பா என்றவரல்லவோ - நீங்கள்
நாங்கள் ஒடித்திறிய தயார் நீங்கள் ஒய்வெடுத்துக் கொண்டீர்களா? உங்கள் ஓய்வும் உறுதியானதுதான்
சீரிப்பாய்ந் தெறிந்த செந்தணலிலெரியாத துண்டெலும்பைப் பார்த்தபோது துளியளவும் குன்றாத - உங்கள் உறுதி தெரிந்தது - நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள் - நாங்கள் துணிந்து நிற்போம் தொடர்ந்து செல்வோம்

தோழர் த. இளையதம்பி அவர்களுக்கு எமது புரட்சிகர இறுதி அஞ்சலி
tîlpin gpin 1931 2000
03 O7
幻
06 3.
t
بل
பகுத்தறிவுவாத, சீர்திருத்தவாத கருத்துக்களினால் ஈர்க்கப்பட் தோழர் தம்பு இளையதம்பி அவர்கள் ஒரு நாடகக் கலைஞரும். இசைக்கலைஞரும் ஆனார். தபேலா ஓரர்மோனியம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதுடன் தான் சேர்ந்து வாழ்ந்த சக தோட் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக நா கக் கலையைப் பிரயோகித்துள்ளார். தோட்ட துரைமாரின் அ ரவடித்தனங்களையும் எதிர்த்து
Այ: Cirgol Clibus SIVI. தோட்டங்களிலுள்ள கோயில்களில் தலைவிரித்தடி சாதியத்திற்கு எதிராக பல நடைமுறை ரீதியான மீறல்களை செய்துக்கட்டியுள்ளர். அரசியலில் பிற்போக்குத்தனங்களுக்கு எதிரக இ துராரி அரசியலை தொடாந்து ஆதிரித்து வந்தவர். தேர்தல் காலங்களிலும் சரி, வேலை நிறுத்தங்களின் போதும் இடதுசாரி நிலைப்பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தான் சிறுபான்மை என்பதற்காகவே. தனிIாள் என்பதற்காகவோ இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை ஒழிவு மரைவாக வைத்திருந்ததில்லை. அவரது இடதுசாரி நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக பறைசாற்றுவதில் பின் நின்றதில்லை.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுட்ட காலத்தில் முற்போக்கு தொழிற்சங்கங்களின் பக்கமே இருந்து வந்துள்ளர், அந்த வகையில் ஆரம்ப காலந்தொட்டு புதிய-ஐனநாயக கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நஸ்கி வந்துள்ளார். சில இக்கட்டான காலங்களில் ‘புதிய பூமியை சில தோழர்களுக்கு விநியோகிப்பதிலும், 9ெர்திகளை எடுத்துச் செல்வதிலுளி கட்சிக்கு உதவியுள்ளார். தன்னுடைய பாதிப்பும், துண்டுதலும் தன்னுடைய புதல்வர்களில் ஒருவரான புதிய ஜனநாயகக் கட்சியிள் தேசிய அமைiளர் சட்டத்தரணி தம்பையாவுக்கு பதிப்பை ஏற்டுத்தியிருக்கலாம். அதனாலேயே அவர் சமூக அக்கறை மிதந்தவராக இருக்கியர் என்று அவர் கூறுவதுண்டு.
கட்சி தோழர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளிலும். கட்சி பிரச்சினைகள் ஏற்பட்ட வேளைகளிலும் நடைமுறை ரீதியிலான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார், அநியாயங்களைத் தட்டிக் கேட்க பின்னின்றதில்லை.
05-03-1931 இல் பூண்டுலோயா சீன் தோட்டத்தில் பிறந்த அவர் I க்கு பூண்டுலோயா தோட்டத்திலும் பின்னர் தவிளக்கலை பாமஸ்டன் குரூப் ரட்னகிரி தோட்டத்திலும் தொழிலாளர்களுடன் தொழிலாளியாக வாழ்ந்த அவர் அவரது வாழ்க்கையை இயன்ற வரை அர்த்தமுள்ளதாக்கியுள்ளார். சமூக அக்கறையுடன் சமூக முன்னேற்றத்துக்காக பல சேவைகளை செய்துள்ளார். இராம் பாடசாலையினூடாக தொழிலளர்களுக்கு ஆங்கிலத்தையும், தமிழையும் போதித்துள்ளார். அல்வாரான முற்போக்கு வாதியின் நீண்ட சுகள்னமும், இறப்பு எமது கட்சிக்கும் தோழர்களுக்கும் இழப்பாகும். அவருக்கு எமது கட்சியின் புரட்சிகர இறுதி அஞ்சலியை செலுத்துகிறோம். அவரது குடும்பத்தினரதும். தேசிய அமைப்பாளர் தோழர் தம்பைராவினதும் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிரேl.
புதிய ஜனநாயக கட்சி. 02.08.2000,

Page 20
வாழும் உரிமை
(ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கவிதை)
நான் எப்படி வாழ்வதென நீ எண்ணும் ஒரு படிமமாக என்னை மாதிரிப்படுத்தாதே நான் ஒரு பெண, நான் கரியவள், நான் சுதந்திரமாயிருக்க வேண்டும் என் மீது நீ சூட்டிய உனது விழுமியங்களை நான் மீளத்தருவேன் என் பெருமிதத்தை, என் பண்பாட்டை, என் நிசமான அடையாளத்தை மீளப் பெறுவேன்
எதிர்காலத்திற்காகவே நான் முயல்வேன், பின்னே நோக்குவதற்கு இல்லை என்னை என் வழியில் ஆதரிக்கப் பிற பெண்களை நாடுவேன் இச்சமுதாயத்தின் அதிமுக்கிய பங்களிப்பாக மட்டுமே இருக்கும் உரிமைக்காக ஒரு பெண் என்ற வகையில் நான் போரிடுவேன்
ஓம் நான் ஒரு பெண் என்னில் ஒரு குறையுமில்லை என நான் அறிய முடிவில் திறமையை அடையும்வரை நான் என் கல்வியில் முன்னேறுவேன் என் சுயாதீனமான சிந்தனையே என்னை இவ்வளவு வலியவளாக உணரச் செய்கிறது ஒற்றுமையில் எம் நம்பிக்கை நாம் தவறமாட்டோம் எனப் பொருள்படும்
எவரதும் கைபட்ட ரோஜாவாக நான் விரும்பவில்லை உன் நடுப்பக்க கவர்ச்சிப் பெண்ணாகும் தேவையுமில்லை நான் ஒரு பெண், நான் கரியவள் நான் சுதந்திரமாயிருக்க வேண்டும் நிமிர்ந்த தோற்றமும் வல்லமையுமே வாழ்வதற்கு ஒரே வழி
ஈவாஜோன்சன் EVA Johnson தமிழில் சிவா
m m
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைபயோம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் சிசய்யோம் தலை சாயுதல் செய்யோம்
e ao apud 6 løfarebütása srub u6LS SyaorøpuDa56 6leFứáổSusrub - பாரதியார்
تطط
62)

நாம் அன்னியரல்ல
(ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கவிதை)
தடங்களும் சுவடுகளுமே எஞ்சி இருப்பவை ஆயினும் என் மனதின் பின்புலத்தில் அந்த மக்களை இன்னமும் காண்கிறேன்
ஆதிவாசிகளின் சாதனை நிலவின் இருண்ட பக்கம் போல அது அங்கே உள்ளது ஆயினும் சொற்பமே அறியப்பட்டுள்ளது
நம் சொந்த நாட்டில் நாம் அந்நியரல்ல
வெறுமனே
ஐரோப்பியா சமுதாயம் ஒன்றுக்கு
அந்நியர்
ஒரு அந்நியனாயிருப்பது
கடினம்
&LLtd
மற்ற அந்நியனாக
இருக்கையில்
ஏணி டிங்கோ (Ernic Dingo) தமிழில் சிவா
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ
- பாரதியார்
33)

Page 21
நீ நினைக்கலாம்
நான் உன்னை நேசிக்கவில்லை எனவும் உன் சொற்களின் பொருளையோ உன் குரலின் தொனியையோ உன் பார்வையின் சந்தேகத்தையோ புரியாததுபோல் நடிப்பதால் நான் கொடியவனென நீ நினைக்கலாம் உன் அழகை நான் கவனியாதது போல் தெரிவதால் உன் அழகையே ஒரு வேளை நீ ஐயுறாலாம் அவ்வாறு நீ என்னைக் கருதாதே சற்றே நிதானி, சதுப்பு நிலத்திலும் மலைப்பாதையிலும் ஊர்ந்து சுள்ளிகளாலான படுக்கையில் மேல் உறங்கி அல்லது பிளாஸ்ற்றிக் விரிப்பொன்றின் மேல் மல்லாந்து கிடக்கும் ஒரு கெரில்லாப் போராளி உனக்கு எதைத்தான் தர இயலுமென யோசி என் உயிரை மக்களுக்கு வழங்கியப் பிறகு நான் உனக்கு எதைத் தர இயலும் என்னிடம் எஞ்சியுள்ளவை என் தோள்பை என் றை.'பிள் துவக்கு எனக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் என் கரும்பச்சை சீருடை
"பெலிப்பே பென்யா FELIPE PENA நிக்குரவா தமிழில் சிவா
 
 
 

அங்கே மலைமீது
அவர்கட்குப் படுக்கையில்லை தங்கள் தோழர்களுடன் தரைமீது துயில்கின்றார் குளிர்கால இரவின் ஈரப்புற்கள் அவர்களின் அயர்ந்த உடல்களை நனைக்கும் ‘தேசிய காவற்படையினருக்கு” வழங்குவதுபோல உலங்கு வானூர்தி அவர்கட்கு காலை உணவு வழங்குவதில்லை ஆயினும் தங்களது உயிரை ஈந்து நிக்கராஹ?வாவின் ஏனையோருக்கு
அவர்கள் படுக்கையும் காலை உணவும் கொணர்வர்
ஒலிவியா சில்வா (Olivia Silva) தமிழில் சிவா
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ - கிளியே
செம்மை மறந்தாரடி
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணால் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடி

Page 22
நித்தம் நிலைப்பவன்
- இரா. சடகோபன்
சாத்திரம் ஆயிலம் உண்டு - கண்டு ஆத்திரம் கொண்டவர் நாங்கள் கோத்திரம் பிளவுகள் இங்கு
மாத்திரம் செய்தவன் யாரோ! சூத்திரன் என்பவன்தன்னை - மிக
கீழ்த்தரம் என்றவன் மூடன் நேத்திரம் செய்திடல் வேண்டி நல்ல
காத்திரம் பண்புகள் படைப்போம்
செய்தொழில் கீழென்று கண்டோர் - செய்த
சிறுமைகள் ஆயிரம் வென்றோம் வறுமையில் உழல்பவன் தன்னை - வெறும் விழல் என்று சொன்னவன் யாரோ! வாழ்வின் பொருள் என்று கண்டது என்ன?
சொத்து சுகத்தினை குவிப்பது தானோ! கடல் பொங்குது பொங்குது பாரீர்
கனம் அமைதியைத் தேடுவோம் வாரீர்
சிறு கூட்டினில் வாழ்ந்திடும் குருவியும்
பெரு மாடத்தில் மகிழ்ந்திடும் மனிதனும் சேற்றினில் காண்கின்ற இன்பம் - வேறு
வேறு ஏதினில் உண்டெனும் எருமையும் மலத்தினில் நெளிந்திடும் புழுக்களும்
மற்றும் பூமியில் வாழ்ந்திடும் உயிர்களு சாதிக்கும் சாதனை ஒன்றுதான்
இங்கு சீவிக்கும் பேறு என்ற பெருமை
60
 
 

மானுடன் என்ற ஊணடல்
நாறிடும் உயிர் போனபின் தேனுடன் மிகை திணையும் போல்
வீரிடும் புகழ் சேர்ப்பவன் வானிலும் உயர் சூரியன் - என
நித்தமும் நிலை நிற்பவன் சித்திரம் நிகர் வித்தகன் - நல்
சொந்திரம் பெறு நித்திலன்
* மனிதனை சிறுமை செய்யும் சாத்திரங்களையும், சட்டங்களையும் மீறுதலும் அடிமைத்தனம் ஆக்கிரமிப்பு என்ற தளைகளை உடைத்தலும் அநீதிக்கு எதிராவதும் நமது கடமை என்ற கொள்கைகொண்டிருந்தஅமரர் தம்பு இளையதம்பிக்கு என் இதய அஞ்சலி
o o O. O 8 o do o o Os o o o o o o o go o o
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமுதமென்போம்
நீதிநெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்

Page 23

தம்பு இளையதம்பி அவர்களின் இறுதி எழுத்துக்கள்
y ܫܦܝܪ ... گسص : . " ' . . . . ۰۰۰ . . . . . به نم. نسب ۔ ?""۔ مح۔ ۔ معہ۔ ‘سم•حمہم... --. سی: - • مہ۔۔ مضرہ ....................... بس۔ M s t ...Y e : ۔ ۔ ۔ ۔ as sa ay rasgases. Gavrt பிஇஜிடு essery St win شلگهی
e C. it to ܒܗ ܗܶܪܶܗuܘܗ̄ ܢܢܶܗ th బి-సైశికిడో 5ft ROOT - Svists Greg * "3" لنة 63 ميقاته : ܘܪ݀ܝܙܡܕܘܗܗ e - ཆན་། རྗེ་ཉི་ཆོ་ ଦର୍ବ୍ବାfor § u-foo ନ サキ .
m_1 సోకగా రా కాస్తే __
seature general sa ༥.
sa प्aा त्ष्या rex eade). Vro
58۲۲تک سے گامت ده ۳۲۴ قیس به
ଓଟିକ୍ତ ଶୈଞt li ku 8سيسه Syالتهابا ث - سا
ད་དུ་རྒྱ་ லி(Sis عضوية
స్ట్రోషనాత్ ഖ)
విక్త రాయిసిus్ప ఆT"శ్రీరా'
le དཔོའགའ་ལ་གཏོད་ན་ཆོག་ es as ts དཔོaཀ་དག་ཀ. ལ་གྱི་ང་རྒྱུད་ཐག་ཇ་ད་བ་སྟེ་ GD>لحہ لمث-ق )Sلدی GO۲۰۱۲۹ چچا -- ངག་མ་མེད་། Sతస్య &&sm
»لاهoot هوش - SåWGuds KII) os S) c>የ፤ ఫ్రీ-కా திரத 09 ( ^^go ez zis ーカムタ今のrze&r
’’ ’ ہمہ {g/بن ہشن/ آیت قلاتC : یعنیچے c حیلہ (خ؟

Page 24
சமூகச் சூழலும் மனித சிந்தனையும்
சி. கா.செந்திவேல் பொதுச்செயலாளர் புதிய ஜனநாயக கட்சி
LDனித குல வரலாறு மிக நீண்ட நெடிய கால கட்டங்களுக்கு ஊடாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றது. மனிதர்கள் சிந்திக்கவும் செயலாற்றவும் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே சமூகமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தமது கூட்டு வாழ்க்கையில் இயற்கையை எதிர்த்துப் போராடியும் அதே வேளை அதன் பயன்களைப் பெற்று தம் வசப்படுதியும் வந்துள்ளதுடன் தமது சமூக வாழ்வுக்குத் தேவையானவற்றை கண்டு பிடித்து விருத்தி செய்தும் கொண்டார்கள். இத்தகைய மனிதச் செயற்பாடு பல்லாயிரம் ஆண்டுகளாக இடையராது வளர்ச்சி பெற்றதன் விளைவே நாம் வாழும் இன்றைய நவீன உலகாகும். தொடரும் இப் போக்கினதும் வளர்சியினதும் முக்கியத்துவம் வாய்ந்த மையப் புள்ளியாக விளங்குவது மனிதர்களின் சமூக வாழ்வும் அவர்களின் சிந்தனை ஆற்றலும் நடைமுறைச் செயற்பாடுகளுமே uJT(5LD.
இத்தகைய மனித சமூக வளர்ச்சியானது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாக அல்லது சமத்துவம் மிக்கதாக முன்னேறி வந்த ஒன்றல்ல. மனித வாழ்வின் ஆரம்ப நிலையில் மனிதர்களிடையே ஸ்திரமான கூட்டுச் சமூக வாழ்வும் கூட்டுச் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. அத்தகைய நிலை உலகின் எல்லா மனித சமூகங்களிலும் காணப்பட்ட ஒன்றாகும். ஆனால் கால வளர்ச்சியில் தனிச் சொத்துடமையின் தோற்றமானது சமூக வாழ்வில் வர்க்கங்கள் தோன்றுவதற்கும் அதன் வழியாக அரசு உருவாக்கம் பெறுவதற்கும் வழிவகுத்துக் கொண்டது. இதன் மூலம் மனிதர்கள் வர்க்க நியதிகளுக்குள்ளும் சமூக இயக்கத்திற்கான வர்க்கப் போராட்டத்தின் முரண்பாட்டு அம்சங்களுக்குள்ளும் அவர்களின் சமூக வாழ்வு சென்றடைந்தது. இதுவே ஒவ்வொரு கால கட்டத்திலும் அடிமை - ஆண்டான் சமூக அமைப்பாகவும் பின் நிலவுடமை - பண்ணை அடிமை விவசாய அமைப்பாகவும் பின்பு இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பாகவும் மாற்றமடைந்து கொண்டது. இச்சமூக அமைப்புகள் யாவும் சமாதானமாகவும் இணக்கமான ஒரு நிகழ்ச்சி நிரலில் கீழ் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டவையல்ல.
மனித சமூகத்தில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின் ஆளும் நிலையில் உள்ள சொத்துடைய வர்க்கம் சொத்துக்கள் எதுவுமற்ற உழைக்கும் வர்க்கத்தைப் பலாத்காரத்தின் மூலம் அடக்கி ஒடுக்கி வந்துள்ளது. இவ் ஒடுக்கு முறையினை தாங்கிக் கொள்ள முடியாத உச்ச நிலையிலே வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும்
(0

புரட்சியும் காரணமாக ஆளும் வர்க்கங்கள் துக்கி வீசப்பட்டதுடன் சமூக உறவுகளில்: மாற்றங்களும் ஏற்பட்டு புதிய சமூக அமைப்புக்களும் தோன்ற வேண்டியதாயிற்று. இது சமூக இயக்கத்தின் தவிர்க்கவியலாத நியதியுமாகியது. அதன் வழியிலேயே
கடந்த நூற்றண்டில் உக்கிரமான வர்க்கப் போராட்டங்களின் மூலம் பல நாடுகளில்
முதலாளித்துவமும் ஆளும் வர்க்கமும் தோற்கடிக்கப்பட்டு அவ்விடத்திலே
தொழிலாளி வர்க்கத்தின் சொந்த சமூக அமைப்பாக சோஷலிச சமூக அமைப்பு
நிறுவப்பட்டது. அச் சோஷலிச அமைப்புகளில் சில தோல்விக்கு உள்ளாகிப்
பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும் வரலாற்றில் சமூக முரண்பாட்டின் தன்மைகளையும் போராட்டத்தின் சமூக இயங்கு விதியையும் அதன் மூலமான சமூக அமைப்பு மாற்றத்தையும் கடந்த நூற்றாண்டு நிரூபித்துச் சென்றது.
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக அமைப்பானது முதலாளித்துவ சமூக அமைப்பாகவே காணப்படுகின்றது. அதே வேளை இதற்கு முந்திய சமூக அமைப்பான நிலவுடமை நிலவிய காலத்தின் கருத்தியல்களும் அவற்றின்
நடைமுறைகளும் இன்றைய சமூகச் சூழலில் வலிமையுடையவையாகக்
காணப்படுகின்ற, முதலாளித்துவ . நிலவுடமை கருத்தியல் சிந்தனைகள் தனிச்
சொத்துடமையையும் தனி மனித ஈடேற்றத்தையும் வெவ்வேறு தளங்களில் வற்புறுத்துவனவேயாகும். அதேவேளை மனிதர்களின் உழைப்பைப் பறிப்பதில்
சுரண்டுவதில் ஒரே தன்மை வாய்ந்த நியாயத்தையே பேசுகின்றன. மதம் கலை இலக்கியம் மற்றும் சமூக நடைமுறைகள் மூலம் தன்னை நிலை நிறுத்தும் கருத்தியல் நியாயங்களைக் கற்பித்து வந்த நிலவுடைமைச் சிந்தனையானது
முதலாளித்துவத்தற்கு முற்றிலும் சேவை செய்கின்றமையைச் சமூகத்தில்
காண்கின்றோம்.
நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவ நடைமுறைகளால் வேகப்பட்டுச்
செல்வதையும் அதே வேளை நிலவுடமைக் கருத்தியல் சிந்தனைகளின் ஆதிக்கம் அறுபடாமல் தொடர்வதையும் காண முடிகின்றது. இவற்றின் தாக்கம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதரது வாழ்விலும் பிரதி பலிப்பதைக் காண்கின்றோம். அவற்றினுள் அமிழ்ந்து நிற்கும் ஒரு போக்குப் பரவலாகக் காணப்படுகின்றது.
இன்று நாட்டில் வறுமை என்பது உள்ளார்ந்து பரவிச் சென்று உயிர் குடிக்கும்
கொடிய புற்று நோய் போன்று காணப்படுகின்றது. வேலையின்மை வளர்ந்து
செல்கிறது. உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய வேதனம்
கிடைப்பதில்லை. உற்பத்தியில் பங்கு கொள்ளும் விவசாயிகளுக்கு அதன் உரிய பயன் சென்றடைவதில்லை. அவ்வாறே புத்தி ஜீவிகள் பெரும் பகுதியினர் வழங்கும்
சேவைக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. இவ்வாறு தொழிலாளர்கள் விவசாயிகள்
மற்றும் உழைப்பவர்கள் நடுத்தரவர்க்கப் புத்தி ஜீவிகள் ஊழியர்கள் ஆகிய தொண்ணுறு வீதத்திற்கு மேற்பட்டோர் நாளாந்தம் பன்முக நெருக்கடிகளை பிரச்சினைகளையும் எதிர்நோக்கிய வண்ணமே தமது வாழ்க்கையை நடாத்திச் செல்கின்றனர்.
6)

Page 25
இத்தகைய நிலைக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றிய தெளிவை சமூக அமைப்பின் ஊடாகக் கண்டறிவதில் அநோகமாக அக்கறை காட்டப்படுவதில்லை. ஏன்? எப்படி? எதற்காக? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்புச் சூழல் தரும் ஒவ்வொன்றையும் அப்படியே உள்ளவாங்கி விழுங்கிக் கொள்ளும் கண்மூடித்தனமாக நிலைமேன் மேலும் ஊக்குவிக்கப்படுகிறது. தொடர்பூடகங்கள் யாவும் முதலாளித்துவத்தின் விசுவாசமான பிரச்சாரகரர்களாகச் செயல்படுமாறு வைக்கப்பட்டுள்ளன. இன்றை பொருளாதார அமைப்பு மேன்மேலும் முதலாளித்து நவீன வடிவங்களைப் பெற்று வருகின்றன. பூகோளமானமயமாதலும் தனியார் மயமாக்கலும் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியும் மக்களை மயக்கித் திசை திருப்பி போலித்தனமான நம்பிக்கையையும் மாயைகளையும் வளர்த்து வருகின்றன.
உலகின் முதலாளித்துவம் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்று மூன்று நூற்றாண்டுகளில் அந்த அமைப்பினால் எந்தவொரு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கிய எந்தவொரு பிரச்சினையுைம் தீர்த்து வைக்க முடியவில்லை. வறுமை, பஞ்சம், நோய், வீடின்மை, வேலை இன்மை, கல்வியின்மை போன்ற மனித அடிப்படைத் தேவைகளை முதலாளித்துவ அமைப்பினால் தீர்க்க முடியவில்லை.
அதே வேளை தனிநபர் முயற்சி வளர்ச்சி என உரத்துக் கூறிவருகின்றனர். போட்டியின் மூலமும் தளராத முயற்சியின் மூலமும் எல்லோரும் முன்னுக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை சதா ஊட்டப்படுறது. அதற்கான சில உதாரணங்களும் காட்டப்படுகின்றன. ஆனால் அத்தகை உதாரணங்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகக் காணபடுகின்றது. ஏகப் பெரும் பான்மையான மக்கள் மிகத் தாழ்ந்த வாழ்க்கைத் தரத்துடன் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே காண முடிகின்றது.
இவ்வாறு முதலாளித்து அமைப்புச் சூழல் வலுவடைந்து செல்லும் அதே வேளை அதனுடன் கூடவே நிலவுடமைச் சிந்தனையும் செயல்படும் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. சாதியம, பெண் அடக்குமுறை, இனத்துவம் மற்றும் கலாசார த்துறைகளிலும் நிலவுடமைப் பழமைவாத மதிப்பீடுகளோ இன்றும ஆதிக்கம் பெற்றவையாகக் காணப்டுகின்றன. அதன் காரணமாக சமூக அடிமைத் தனங்கள் உள்ளார்ந்த வலுவுடன் தொடருகின்றன.
இத்தகைய ஒரு சமூகச் சூழல் வலுவுடையதாகக் காணப்படும் போது தனி மனித சிந்தனை என்பது அத்தகை சமூக சூழலுக் இணக்கமானதாகவே செயல்படுகின்றது. இதனை மீறிய ஒரு சிந்தனை போக்கு வளர்வது சகல முனைகளிலும் தடுக்கப்படுகின்றது சமூக அக்கறையுடன் விடயங்களை அணுகி ஆராய்ந்து சமூக நீதிக்காக குரல் கொடுக்க கூடிய கூட்டுச் சிந்தனையை நசுக்கும் முயற்சிகளே வலுவுடையவையாகக் காண்படுகின்றன. ஆனால் இற்றையும் மீறி
(2)

நிலையில் சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் சிந்தனைப் போக்கானது வளர்ச்சி பெற்றே வருகின்றது.
தனிமனித சிந்தனை சமூகச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல சமூக வாழ்வும் நடைமுறையும் தான் மனிதர்களின் சிந்தனையை தீர்மானிக்கின்றது. எனவே தான் வாழுகின்ற சமூகத்தின் நடைமுறை அனுபவங்கள் மூலமும் பட்டறிவின் காரணமாகவும் தனிமனித சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படும் போது கூட்டுச் சிந்தனைக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அத்தகைய கூட்டுச் சிந்தனை சமூக நீதிக்கும் சமூக மாற்றத்திற்குமான பரந்த சிந்தனைப்போக்காக மாற்றம் பெறுகின்றது. அதுவே செயற்பாட்டிற்குரிய அடித்தளமாகவும் மாறுகிறது.
இன்றய சமூகச் சூழலில் சுய நலமாக சிந்திக்கும் தனிமனித போக்கே முனைப்புடையதகாக் காணப்படுகின்றது. ஆனால் சமூக முரண்பாடுகளும் அவை தோற்றுவிக்கும் கடுமையான பிரச்சினைகளும் சமூக நலத்திற்கான பொது நலச்சிந்தனையைத் தூண்டி முன் தள்ளி வருதனைக் காண முடிகின்றது. நான் எனது எனக்கு என்ற வாறான தனிமனிதச் சிந்தனையானது நாங்கள் எங்களுடைய எங்களுக்கானவை என்ற பரந்த தளத்தில் பொது நலச் சிந்தனையாக வளர்க்கப்படுவது இன்றைய சமூக சூழலில் அவசியமாகின்றது. தன்னுடன் இணைத்து ஏனைவர்களையும் முழுச் சமுத்தையும் குறிப்பாக சமூக அநீதிக்கும் அடக்குமுறைகளுக்குத் உட்பட்ட மக்களை முன்னிலைப்படுத்திப் பார்க்கின்ற ஒரு பரந்த பார்வை மேல் எழும்பும் போது அங்கே மாற்றங்களுக்கான அடிப்படைகள் தோன்றுவதைக் காண முடியும்.
குறிப்பாக மலையக மக்கள் வாழுகின்ற சமூகச் சூழலில் சுய நலம் சுய ஈடுடேற்றம் போன்ற குறுகிய சுயநலச் சிந்தனைக்கு பதிலாக சமூகநலன் சார்ந்த பொது நலச் சிந்தன்ை மேன் மேலும் வளர்ச்சி பெறுவது அவசியமாகின்றது. ஏனெனில் அத்தகைய சமூக நலச் சிந்தனையில் இருந்தே அடுத்த கட்ட வளர்ச்சியான சமூக மாற்றச் சிந்தனை தோன்றமுடியும்.
தமது சுரண்டலுக்காகவும் கொலனித்துவ சுய நலன்களுக்காவும் பலியாகப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு சமூகமாக மலையக மக்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் இருந்து தனி மனித முன்னேற்றம், ஈடேற்றம் என்ற பாதையின் மூலம் முழுச் சமூகமும் ஈடேற முடியாது விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் பொருளாதார கல்வி கலாசார வளர்ச்சி அல்லது தனிமனித முயற்சி என்பது கூட எல்லைகளுக்கு உட்பட்டவைகளேயாகும். அத்தகையவர் கூட முழுச் சமூகத்தினதும் மீட்சிக்கு எவற்றைப் பங்களிப்புகளாக வழங்கி நிற்கின்றனர் என்பது கேள்விக்குரியதே யாகும். அத்தகையவர்களில் குறிபிடத்தக்கவர்கள் சமூகத்திலிருந்து தூர விலகிப் போவதையும் காண முடிகின்றது பொருளாதரத்தில் கல்வியில் தொழில் அந்தஸ்தில் உள்வர்கள் சமூக அக்கறையிலும் பொது நலச் சிந்தனையிலும் முன்னிற்க வேண்டிய தேவையும் அவசியமும் இன்று எழுந்து
(3)

Page 26
நிற்கின்றது.
மலையக மக்களை பொருளாதார அரசியல் சமூக கலாசாரத்துறைகளில் பரந்த சிந்தனைத் தளத்திற்கு செல்லவிடாது தடுப்பதில் தொழிற்சங்க அரசியல் ஆதிக்க சக்திகள் பலமுனை செயற்பாடுகளால் தடுத்து வருகின்றமை இன்று இளந்தலைமுறைகளால் உணரப்படுகிறது. அவ்வாறு உணர்ந்து சமூக அக்கறையோடு செயற்பட முன்வருபவர்களை பல்வேறு வகைச் சலுகைகளால் திசை திருப்பிக் கொள்ள முயற்சிகள் செய்யப்டுகின்றன ஒரு பின்தங்கிய அடிமைத்தனங்களால் கட்டுண்டு கிடக்கும் எந்த ஒரு சமூகத்திலும் வேகமாகச் சிந்தித்துச் செயல்படும்ஒரு இளைய தலைமுறையினரின் தேவை அவசியமாகின்றது. அத்தகையவர்கள் இன்றைய முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பையும் அதன் ஒடுக்கு முறைகளையும் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக இருத்தல் வேண்டும். வெறுமனே சமூகச் சூழலை அடையாளம் காண்பதும் அதற்கான வியாக்கியானம் அளிப்பது மட்டும் போதுமானதல்ல. தான் அடையாளம் கண்ட சமூகச் சூழலை மாற்றயமைக்க திடசங்கற்பம் பூணல் வேண்டும். அதற்கான உறுதியும் அர்ப்பணிப்பும் தியாகமும் புரியக் கூடிய ஒரு புதிய வகை இளைஞனாகவும் யுவதியாகவும் மலையக இளம் தலைமுறையினர் மத்தியில் இருந்து தோன்றுதல் வேண்டும்.
இத்தகைய இளைஞர்கள் யுவதிகள் தங்களில் இருந்தே ஆரம்பித்தல் வேண்டும். தத்தமது சொந்த வாழ்வில் பழமைவாத நிலவுடமை கருதியல்களுக்கு பதிலாக விட்டுக் கொடுக்காது போராட்டவேண்டும். அதன் அர்த்தம் எல்லோரையும் அறிவற்றவர்களாகவும் பழமைவாதிகளாவும் ஏளனம் செய்து தான் மட்டுமே புரட்சிவாதி என்பதாகக் காட்டிக் கொள்வதல்ல. அறிவு பூர்வமாகவும் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தாத வகையிலும் அதேவேளை ஜனநாயகக் கலந்துயைாடி விழிப்புறச் செய்தல் வேண்டும். குடும்பம் சுற்றுச் சூழல் நம்மை ஏற்குமாறு நாம் முன் மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமாகவே எமது கருத்துக்களை ஏனையோர் கேட்கக் கூடிய நிலையைத் தோற்றுவிக்க முடியும்.
இவ்வாறு இன்றைய நமது சமூகச் சூழலையும் அதில் தனி மனித சிந்தனையின் பலம் பலவீனங்களையும் சதாதக பாதக நிலைமைகளையும் பரிசீலித்து ஒரு முழுமையான சமூக மாற்றப் பாதையில் வழிநடப்பது இன்றைய தேவையாகும்.
 

01.08.2000 வீரகேசரி
01.08.2000 தினக்குரல்
தலவாக்கலை பாமஸ்டன் குரூப் ட்னகிரி தோட்டத்தைச் சேர்ந்த ம்பு இளையதம்பி காலமானார். இவர் காலஞ்சென்ற தம்பு \ဖဂန့်ဂ်၊l ம்பதிகளின் புதல்வனும், காமாட் சியின் கணவரும், மனம், புதிய னநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ம்பையா, நளினி, கிருஸ்ணன் ஆகியோரின் தகப்பலும், கிலோ, தயராணி, பாப்பா ஆகியோரின் மனiாரும், ஸ்டாலின், லெனின், ன்ஸி, மிருதுளா, பிருத்திவி, தீஷ், உதயதீபண், மங்களே, ஞ்சி, சந்தியா, சகிலர், சுபா, னோ ஆகிபோரின் பாட்ட்னரும் ஆவ்ார். அன்னாரின் பூதவுடல் ட்னகிரி, தோட்ட மய்ானத்தில்
solar. 35-a aspărară est
sgs sabsurævar, saflos, SGeysirvör
ஆகிாேவின் தகப்பனும், வீசை, உத ஏர்னி பாப்பா ஆகிரேன்சைமணரும்
, *
sijaitsevä feudape gosposo:
server. .
இன்று இறுதிக்கிரியை
புதிய ஜனநாயகக்கட்சியின்தேசிய அமைப் பாளர் சட்டத்தரணி இ.தம்பையாவின் தந்தை யார்தம்புஇளையதம்பிநேற்றுமுன்தினம்திங் கட்கிழமை காலமானார். இறுதிக்கிரியைகள் இன்றுபுதன்கிழமைபிற்பகல்3ம்ளியளவில்தல் வாக்கலை பாமஸ்கர்டின் குரூப் ரட்னகிரி
தோட்டபயானத்தில் நடைபெறுN A
3g
(45)

Page 27
பொ. கா. சிவஞானம்
நான்
எனக்குள், தொலைத்தவன்
என்னை, நீண்ட மெளனத்தின் விளைவாய்
காணாமல் போனவன்
இன்று மீண்டும் . . . . எங்கள், சந்ததியின்
ஏக்கங்கள், பெரும்மூச்சாய், இன்னும் தான் நீள்கின்றன, ஆனால்? சிந்தனைகளும், எண்ணங்களும் சிறப்பாய் எழுகின்றன மாற்றங்கள் இளந்தளிராய்
துளிர்க்க முயல்கின்றன இளையவர், அணியாய் இணையத் தொடங்கினர்
எங்கள் கரங்களின் இரும்பு விலங்குகள் சிதறித்தான் போயின வாட்டம் போக்கும் வரலாறு படைக்கும்
எங்கள் கரங்கள் இணைந்தே உயரும்
நாங்கள்
 
 

பினிஸ்ப் பறவைகளாய்
மீண்டும் உயிர்த்தெழுவோம் ஐம்பத்தாறு, எழுபத்தேழு எண்பத்துமூன்று
இன்னும் மறப்பதற்கில்லை இத்தனை நடந்தும் எங்கள்
உள்ளம் மரத்து விடவில்லை
கல்லறைக்குள் எங்கள் உடல், மரணித்த போதும்
கலங்கவில்லை, மயங்கவில்லை நாங்கள் வித்துக்கள் அதனால் மீண்டும் உயிர்த்தெழுவோம்
வாடிப் போன எங்கள் சமூகத்தின் மலர்ச்சிக்காய் விடிவுக்கு, வழி தேடி
விரைந்து நாங்கள் உயிர்த்தெழுவோம்
காலங்கள் எங்களுக்காய் காத்திருக்க
இளையவர், திணவெடுத்து விழித்திருக்க
தோளுயர்த்தி, கரமுயர்த்த மீண்டும் உயிர்த்தெழுவோம்.

Page 28
நீங்கள் காணா சமத்துவத்தை
நாங்கள் காண்போமா?
- மிருதுளா, பிருத்திவி சமரசம் உலாவும் இடமே என்று நீங்கள் பாடிய பாடல் கேட்கிறது எங்கள் காதில் ஒலிக்கிறது உங்கள் நினைவை மீட்கிறது இவ்வுலகில் காணா சமரசத்தை தேடியா ஐயா போனிர்கள் இவ்வுலகை விட்டு போனிர்கள்
அவ்வுலகம்’ ஒன்றிருப்பதாய் இந்து சமயத்தில் படித்தோமே அங்கேயா போனீர்கள் அவ்வுலகில் இந்திரனும் பிரமாவும் உங்களை சமத்துவமாய் நடத்துகிறார்களா? ஓம் என்றால் சொல்லுங்கள் ஐயா நாங்களும் வந்திடுவோம் இல்லையென்றால் இங்கேயே இருந்திடுவோம் இங்கேயே சமரசதத்தை நிலைநாட்டும் சங்கதிகள் கண்டிடுவோம் சமரத்திற்காய் உழைத்திடுவோம்
ջgեւ IT நீங்கள் காணா சமரசத்தை நாங்கள் உங்கள் பரம்பரைகள் இப்பாரினிலே கண்டிடுவோம் இறப்பென்றும் பிரிவென்றும் துயரம் கொள்ளாதிருந்திடுவோம்
48
 
 

எங்களோடு நீ
எந்தையே
உன்னை எனக்கு
தெரியாது
உன்னருமை எனக்குப் புரியாது
அன்று. −
உன்முகம் பார்த்தபோது
உன்
பெருமை கேட்டபோது
புல்லரித்துப் போனேன்
உன் இளமையின்
இனிமை
இம் மலையகத்தின்
விடிவுக்காய்
சிதைந்து போனது
துரைத் தனத்தின் தோள்களுக்குள்
உன்னை
அடக்கிக் கொள்ளாமல்
பாமரனின் பாதுகாவலனாய்
மாறிப்போனாய்
இலக்கியத் தாகம்
அதில் நீ
பொ. கா. சிவஞானம்
காட்டிய வேகம்
நாடகங்களால் எம்மவரின்
நாறிப்போன வாழ்க்கையை
Tổ நாடாறியச் செய்தாய்
正源
விடுதலைக்கு வித்திட்ட
பெருமகன்
எங்கள்
தோள்களுக்கு உரமுட்டிய
உத்தமன்
இன்று அமரனானாய்
நீநடந்த பாதையின்
அடிச்சுவட்டில்
உன் மைந்தர்.
இன்று
நீஈங்கில்லை
IŠ |
விட்டுச் சென்ற
எண்ணங்களும் சிந்தனைகளும்
எங்களோடு.

Page 29
பயணத்தின் தொடக்கமும்
 

நன்றி
31.07.2000 அன்று எங்கள் தந்தையார் தம்பு இளையதம்பி காலமான செய்திகேட்டு எமது இல்லத்திற்கு வந்து எமது துயரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் தந்தி மூலமும், தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஆறுதல் செய்தி அனுப்பியவர்களுக்கும் 02.08.2000 அன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் உட்பட அக்கட்சியின் அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தோழர்கள் நிமால்கா பெர்ணான்டோ, பேர்சி சமரசேகர, ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் தோழர் சிறிதுங்க ஜயசூரிய தேசிய ஜனநாயக இயக்கத்தின் செயலாளர் பெற்றிக் பெர்ணான்டோ உட்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எஸ் வைத்திலிங்கம், எஸ் மோகன் உட்பட அனைத்து தொழிற்சங்க வாதிகளுக்கும் எஸ். ஜோன்சன், நேசமணி உட்பட அனைத்து கல்வியியலாளர்களுக்கும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்த்தன, எம். கதிரவேல் பிள்ளை உட்பட அனைத்து சட்டத்தரணிகளுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் உறவினர்களுக்கும். இரங்கல் உரையாற்றிய அனைவருக்கும் இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டு தேகம் தகனம் செய்யப்பட்ட மயானத்திற்கு வந்த அனைவருக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தித் தந்த தோழர். சி. பன்னீர்செல்வம் தலைமையிலான இறுதி அஞ்சலிக்கான அமைப்புக்குழுவினருக்கும், இலங்கை ஜனநாயக வாலிப முன்னணி தோழர்களுக்கும், தேசிய கலை இலக்கிய பேரவை உறுபினர்களுக்கும், ரட்ணகிரி தோட்ட மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வகையிலும் உதவிபுரிந்த அக்கம் பக்கத்தவர்களுக்கும், இன்று 02.09.2000 அன்று எமது இல்லத்தில் நடைபெறும் இந்த அறிவஞ்சலி மலர் வெளியிட்டிலும் அறிவஞ்சலி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர்களுக்கும் அறிவஞ்சலி மலருக்கு ஆக்கங்கள் ஆலோசனைகள் தந்துதவிய அனைவருக்கும் குறுகிய காலத்தில் இதனை அச்சிட்டு உதவிய கொழும்பு யூ. கே. அச்சகத்தினருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
O2.09.2000 சட்டத்தரணி இ. தம்பையா திருமதி. க. இளையதம்பி
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
(குடும்பத்தினர் சார்பாக)
ரட்ணகிரி டிவிசன்
பாமஸ்டன் குரூப்
தலவாக்கலை

Page 30
sysopsreo qiq,3 %
ĢĒrls (g) IĜIITIВолуш9г9長en的rn的「여活945Qı91ņ9ĠU9 இப்9ழிĻ9€@úQ9ơioĻ9ĶĒĢĒĻRoŞİ Ç9$$@!!|ლ9ყო9დ9ტ யாழ9ஐடிĻ09||Úrnų909@III191@@gi ņ9ogi凉gu爱 |į 皇喜qıflotęGIÚIL----专
十十十' + 1ĝ91009ọ19@lo怎唱人urmfīgoqi@quoqĩ
|||| |
BoTIJGIII? ;士 IĜ.816 hạī£ ș.恒9quf圆hg因TIqī£ Inı909@ Fiqi@ ș.
|
gjoț¢909 sporcos soos@ą, o usvojợjøsprox 4.
|
fiquo ipsujungą,


Page 31
இலங்கையில் வாழவிருட் எல்லா இடங்களுக்கும் எல்லா ஆறுகளையும் வீழ்ச்சிகளையும் பற்றி
குறிப்பாக சிவனொளி அங்கிருந்து உருவாகும்
சொட்டாக ஊற்றெ அறிந்திருக்க வேண்டும் ஆகிய மும்மொழிகளை அப்போதே இலங்கையி கிடைத்ததாக இருக்கு
 

oபும் ஒருவன் இலங்கையில் சென்றிருக்க வேண்டும்; ), மலைகளையும் நீர் அறிந்திருக்க வேண்டும். பாத மலைக்கு சென்று ஆறுகள் எவ்வாறு செட்டுச் டுக்கின்றன என்பதை சிங்களம், தமிழ், ஆங்கிலம் பும் கற்றிருக்க வேண்டும். ல் வாழ்வதற்கான தகுதியும்
".
- தம்பு இளையதம்பி