கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)

Page 1
கலாநிதி க
 


Page 2

7ー
ஈழத்தவர் வரலாற
(கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1621 ஆம் ஆண்டுவரை)
கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்)
ଜୋଗଣuffiud(6;
பூபாலசிங்கம் பதிப்பகம் 340, கடற்கரை வீதி, கொழும்பு.

Page 3
முதற் பதிப்பு
(c) பதிப்புரிமை :
அச்சுப் பதிவு
வெளியீடு
விலை
Elaththavar Varalaru :
Author
Copyrights
First Edition
Published by
Price
. . ؟هٔ ۰. مسانا،... وی
திருமதிகமலா குணராசா, 82, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்
யுனி ஆர்டஸ் பிரைவேற் லிமிடெட கொழும்பு.
பூ பூீரீதர்சிங், பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம் + கொழும்பு
ebourt. 200/=
A Brief History of the Political, Administrative and Social Structure of Tamils in Sri Lanka, (From 5 th Century B.C. to 1621 A.D)
Dr.Kandiah Kunarasa, B.A. Hons. (Cey), M.A, Ph.D., SLAS.
: (C) Mrs. Kamala Kunarasa, B.A. (Cey)
Dip-in-Ed., SLPS II, 82, Brown Road, Neeraviyaday, Jaffna
August 1996.
PSridhersingh, Poobalasingam Book Depot, 340, Sea Street, Colombo
Rs... 200/s
விற்பனையாளர்
பூபாலசிங்கம் புத்தகசாலை
யாழ்ப்பாணம்/ கொழும்பு

וג ;שע "וFup$26u
முன் னுரை
1987 ஆம் ஆண்டு ‘நல்லைநகர் நூல் எனும் வரலாற்று ஆய்வு நூலொன்றைப் பூபாலசிங்கம் புத்தகசாலையினர் வெளியிட்டனர். அந்த நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்: “கந்தவேளினது அருள் விளக்கத்தைப் புலப்படுத்தும் தலவரலாறாக இந்நூலைக் கொள்ளமுடியாது. ஏனெனில் பக்திச் சுவை சொட்டக் கந்தவேளினது கருணை இந்நூலில் விபரிக்கப்படவில்லை. நுல்லூர்க் கந்தசுவாமி கோயிலினது உண்மை வரலாற்றை ஆதாரங்களோடு புலப்படுத்தும் நூலாக இதனை ஆக்கியுள்ளேன். அதனால், மனதிற்குச் சங்கடந் தரும் கசப்பான சில உண்மைகளை ஜீரணிக்க வேண்டிய இடர்ப்பாட்டை இந்நூலைப் படிக்கும் பெருமக்கள் அடைவார்களாயின் அது என் தவறன்று; வரலாற்றில் மறைக்கப்படக்கூடாத மெய்மையை முன் வைக்க நினைக்கும் வரலாற்று மாணவன் ஒருவனுக்குள்ள உரிமையைப் பூரணமாக எடுத்துக் கொண்டதன் விளைவே, கசப்பான உண்மைகளை ஜீரணிக்க வேண்டிய சங்கடத்தை
உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.” .
ஈழத்தவர் வரலாறு' என்ற நூலிற்கும் இது சாலப் பொருந்தும் என நினைக்கின்றேன். இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் தமிழ் மன்னர்களதும் அவர்கள் சார்ந்த மக்களதும் முதன்மை சரிவரக் கணிப்பீடு செய்யப்படவில்லை. இனச்சார்பான சிந்தனைகள் உண்மையான வரலாற்றைத் திரிவுபடுத்தியுள்ளன. நடுநிலை நின்று நமது வரலாற்றைக் கூறவேண்டுமென்ற அவாவின் ஆய்வே'ஈழத்தவர் வரலாறு' என்ற இந்நூலாகும்.
இலங்கையின் வரலாறு என்பது இரண்டு இனங்களுக்கிடையிலான ஒயாத போராட்ட விளைவு என்பது

Page 4
ஈழத்தவர் வரலாறு
என் ஆய்வின் முடிவாகும். இலங்கை மட்டு மன்றி உலக நாடுகள் அனைத்தினதும் வரலாறும் அதுவே. உலகில் நிகழும் யுத்தங்கள், போராட்டங்கள், பயங்கரவாதங்கள் அனைத்திற்கு மடிப்படைக்காரணியாக இனவுணர்வே மேலோங்கி நிற்பதைக் காணலாம். ஒவ்வொரு இன மக்களும் தத்தமது அடையாளங்களைப் பேண விரும்புகிறார்கள். ஒரின மக்களை அடையாளம் காணும் சிறந்த குறிகாட்டிகளாக மூன்றுள்ளன: அவை, அம்மக்களது மொழி, அம்மக்களது கலாசாரம், அம்மக்களது ஆள்புலம் என்பனவாம். வர்க்கம், சாதியம், சமயம் என்பன இனவுணர்வு மேலோங்கும் போது இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. பலநூறு நாடுகளை உதாரணங்களாகவும் இதற்கு ஆதாரமாகவும் நிரல்படுத்த முடியும். இனரீதியாக அமைந்த ஆள்புலத்தின் அடுத்த கட்டப் போராட்டக்காரணிகளாக வர்க்கம், சாதியம், சமயம் என்பன அமையும். மனுக்குலம் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறில்லை. அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றல்; அதற்காக மனுக்குலத்தின் நிம்மதியை காவுகொடுக்க அரசியல்வாதிகள் என்றும், எங்கும் தயாராகவுள்ளனர். இதுதான் வரலாறு.
இலங்கையின் ஆட்சியதிகாரம் பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை சிங்கள மன்னர்களிடமும் தமிழ் மன்னர்களிடமும் மாறி மாறி இருந்து வந்துள்ளது என்பதனை கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.1ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட 230 ஆண்டு கால அனுராதபுர அரசியல் வரலாற்றில், இக்கால எல்லைக்குள் ஆட்சிபுரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ்மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சிபுரிந்துள்ளனர் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
கி.பி. 1505 இல் இலங்கைக்குப் போர்த்துக்கேயர் வந்தபோது இலங்கையில் ஐந்து இராச்சியங்கள் இருந்தன. யாழ்ப்பாண இராச்சியம் தமிழ் மன்னனாலும், கண்டி இராச்சியம் நாயக்கத் தமிழ்மன்னனாலும் ஆளப்பட்டன. கண்டி இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் மட்டக்களப்புப் பிரதேசம் (அம்பாறை உட்பட) அடங்கியிருந்தது. கோட்டை, சீதவாக்கை, இரய்கம என்ற மூன்று மேற்குக்கரையோர
V

ஈழத்தவர் வரலாறு இராச்சியங்கள் சிங்கள மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் விளங்கின. இலங்கையின் பெரும் பகுதியில் தமிழ் அரசாட்சி நிலவியது. ஒல்லாந்தர் காலத்தில் கண்டி இராச்சியம் தவிர்ந்த
கரையோரங்கள் அனைத்தும் அவர்களால் நிர்வகிக்கப்பட்டன. மட்டக்களப்புக்கரையோரமும் அவர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அவர்கள்
வடபகுதியையும் கிழக்குப் பகுதியையும் தமிழர் வாழும் பிரதேசமாக, ஒரு பிரிவாக்கி யாழ்ப்பாணப் பிரதேசம் எனப்பெயரிட்டு நிர்வகித்தனர். அவ்வாறு பிரிப்பது அவர்களுக்கு இலகுவாகவிருந்தது. இவ்விரு பெரும் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தமையும், யாழ்ப்பாணப்பிரதேசம் எனப்பட்ட இப்பெரும் பகுதியையும் ஏனைய சிங்களப்பகுதிகளையும் பல மைல்கள் அகலமான காடு பிரித்திருந்தமையும் இதனைத் தனித்ததொரு பிரதேச அலகாக அவர்களைக் கருதவைத்தது. பிரித்தானியர்கள் இலங்கையை ஐந்து மாகாணப்பிரிவுகளாகப் பிரித்து ஆண்டனர். தெதுறு ஒயாவிற்கும் யான்ஒயாவிற்கும் வடபகுதி முழுவதும் வட மாகாணம் எனப்பட்டது. இது இன்றைய வடமாகாணப்பிரிவிலும் பார்க்க இருமடங்குபெரியது. யான்ஒயாவிலிருந்து கும்புக்கன் ஒயாவரையிலான கிழக்குப் பகுதி கிழக்கு மாகாணம் எனப்பட்டது. அவர்களின் மாகாணப்பிரிவு குடி சார் அடிப்படையிலும் புவியியற் பிரதேச அடிப்படையிலும் அமைந்த பிரிவுகளாகும். 1946 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஒன்பது மாகாணங்களாக வகுத்த போது தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்கு பிரதேசம் ஒரு மாகாணமாகவும், கிழக்குப் பிரதேசம் ஒரு மாகாணமாகவும். பிரிக்கப்பட்டன. தமிழரின் தாயகப்பிரதேசங்கள் குடிசார் அடிப்படையில் நிர்வாகப்பிரிவுகளாக வகுக்கப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுபட்டபோது, அவர்கள் தமிழ்மக்களது நலனைப் பேணத்தவறி விட்டனர். போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது, சிங்கள இராச்சியம், தமிழ் இராச்சியம் என இரு தெளிவான அரசியற்பிரிவுகள் இலங்கையில் இருந்தன. தமது நலனுக்காகப் போர்த்துக்கேயரும்
V

Page 5
ஈழத்தவர் வரலாறு ஒல்லாந்தரும் பின்னர் வந்த ஆங்கிலேயரும் இலங்கையை ஒருங்கே வைத்து ஆண்டனர். ஆங்கிலேயர் தமது ஆதிக்கத்தை விடுவித்துக் கொண்டு கப்பலேறியபோது நிச்சயமாக, முன்னர் இருந்தவாறு வகுத்துக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது 1948 இல் இந்த மண்ணிலிருந்து வெளியேறினர்.
இக்காலகட்டத்தின் பின்னர் இலங்கை அரசு திட்டமிட்டவிதத்தில் குடியேற்றங்களை நிறுவத்தொடங்கியது. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் சிங்கள மாகாணங்களுக்கும் இடையிலான காட்டுப் பிரதேச எல்லைகளை அழித்துக் குடியேற்றத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் சிங்கள மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தை அபகரிக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான குடியேற்றத்திட்டங்கள் ஆங்கிலேயர் ஆதிக்கம் நிலவி விலகிய காலத்திலிருந்து திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றது. தமிழ் மொழி மீட்பில் கவனம் செலுத்திய தலைவர்கள், மண் மீட்பில் கவனம் செலுத்தத்தவறியதன் விளைவே இதுவாகும்.
வரலாறு' என்பது இடையிடையே பிணைப்புகள் கழன்ற சங்கிலி போன்றது. அந்த நொய்தலான பிணைப்புகளைத் கண்டறிந்து வரலாற்றுச் சங்கிலியை முழுமையாக்குகின்ற பணியில் வரலாற்றறிஞர்கள் அயராது உழைக்கின்றனர். இந்த நூலில் அத்தகைய ஒரு காரியத்தை நான் செய்துள்ளேன். அதனால் வரலாறு என்ற நிலையைக்கடந்து வரலாற்று ஆய்வு என்ற ஒரு உயர்நிலைக்கு இந்நூல் சென்றாலும், இலக்கியம் என்பது வாசிக்கப்படவேண்டு மென்ற கருத்தில் பிடிவாதமான விருப்புடையனவாகையால், இந்த நூலையும் மக்கள் களைப் புச் சலிப்பின்றி வாசிக்க வேண்டு மென்ற "அவாவினால் எளிமையாக விளக்கியுள்ளேன்.
'ஈழத்தவர் வரலாறு' என்ற இந்த நூலில் நான் நிறுவ முயன்றுள்ள கருதுகோள்கள் பின்வருவனவாம்:
VI

1)
3)
4)
5)
6)
7)
8)
ஈழத்தவர் வரலாறு
இலங்கையின் வரலாறு என்பது இரண்டு இனங்களுக்கிடையிலான தொடர் போராட்டமாகவே இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.
சிங்ஹல விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் இறங்கியபோது இலங்கைத்தீவு ஒரளவு நாகரீகமடைந்துள்ள மக்கள் வசத்தில் இருந்தது.
ஈழத்தின் நாகரீக கர்த்தாக்கள் திராவிடரே. இன்றைய சிங்கள-தமிழ்மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே.
பெளத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்து மதமே இந்நாட்டு மக்களின் மதமாக விளங்கியுள்ளது.
இந்துவாக முதலில் விளங்கிய தேவனம்பியதீசனின் மேலாதிக்கத்தை ஏற்ற உத்தரதேசக் குறுநில மன்னர்களால் பெளத்த தேவனம்பியதீசனின் வல்லாதிக்கத்தை ஏற்க முடியவில்லை. கிளர்ந்தெழுந்தனர்.
வடவிலங்கையில் சிற்றரசர்களாகவிருந்த சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள் பின்பு அனுராதபுர மன்னர்களாக மாறினர். இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து படைநடத்தியவர்களல்லர்.
கி.மு.3ஆம் நூற்றாண்டிலும், கி.பி.முதலாம் நூற்றாண்டிலும் வடவிலங்கையில் பெரும்பாலும்
சிங்கள மன்னர்களது ஆதிக்கம் நிலவியது. கி.பி.8ஆம்
நூற்றாண்டு வரை வடவிலங்கை சிங்கள ஆட்சியாளரின் ஆதிக்கத்தின் கீழ் அடிக்கடி உட்பட்டது. சிங்கள ஆட்சியாளருக்கெதிராக எழுந்த கிளர்ச்சிக்குத் தலைமைவகித்தவன், நாகதீப அரசின் முதல் மன்னனான உக்கிரசிங்கனாவான்.
VII w

Page 6
9)
10)
11)
13)
14)
ஈழத்தவர் வரலாறு பெளத்தம் நிலவிய நாகதீபத்தைக்கைவிட்டு, சைவம் சிறப்புறக் கூடிய பெருநிலப்பகுதிக்குத் தலைநகர் மாறியது. இதனைச் செயற்படுத்திய உக்கரசிங்கனின் பெயரால் உருவான புதிய தலைநகரே சிங்க(ன்) நகராகும்.
கலிங்கமாகன் உத்தரதேச மன்னனாகச் சிங்கைநகரில் முடி புனைந்து, யாழ்ப்பாண நகரியைத் தனது அமைச்சன் புவனேகவாகு மூலம் கட்டு வித்து, விஜயகாலிங்க ஆரியச் சக்கிரவர்த்தியாக யாழ்ப்பாண
இராசதானியை நிறுவிக் கொண்டான்.
உத்தரதேசத்திலிருந்து பெருந்தொகையான பெளத்தர்களும் சிங்களவரும் தென் புலம் பெயர்ந்து விட்டமையால் புதிய யாழ்ப்பாண இராசதானிக்கு மக்கள் வளம் தேவைப்பட்டது. கி.பி. 1248 இல் தமிழகத்திலிருந்த மக்கள் இங்கு குடிபெயர்ந்தனர். அதன் விளைவாக புதிய குடியேற்றங்கள் தோன்றின.
15ஆம் நூற்றாண்டில் சப்புமல்குமரயா (செண்பகப் பெருமாள்) என்ற சிங்களத்தளபதியால் யாழ்ப்பாண நகரி பாழாகிவிட, அவன் மன்னனாகமுடி சூடியபோது நல்லூரைத் தலைநகராக்கிகொண்டான்.
தமிழர் இராச்சியத்தில் வன்னிச்சிற்றரசுகளின் வளர்ச்சியும், சுதந்திரப்பேணலும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தின.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றில் நல்லூர்க்கந்தசுவாமி ஆலயத்தின் )up;פו (68760 ש மறுக்கவியலாதது.
ஈழத்தவர் வரலாற்றுச் சங்கிலியின் நொய்தலான
இழைகளை இணைக்கின்ற எனது செயற்பாட்டி ற்கு இலங்கையின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த
VIII

ஈழத்தவர் வரலாறு
வரலாற்றாசிரியர்கள், தொல்லியலாய்வாளர்கள் கண்டறிந்த முடிவுகள் ஆதாரமாயின. முதலாம் தலைமுறை வரலாற்றறிஞர்களாகச் சுவாமி ஞானப்பிரகாசர், டானியல் ஜோன், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, முதலியார், செ.இராசநாயகம் ஆகியோர் உள்ளனர். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த வரலாற்றறிஞர்களாக பேராசிரியர் கா.இந்திர பாலா பேராசிரியர் ச.பத்மநாதன், கலாநிதி. எஸ்.அரசரத்தினம், திரு வி.சிவசாமி, திரு.சி.எஸ்.நவரத்தினம், திரு.எஸ்.நடேசன், பண்டிதர் பொ.செகந்நாதன் முதலியோர் விளங்குகின்றனர். இலங்கை வரலாற்றில் குறிப்பாகத்தமிழ் மக்களது வரலாற்றில் புதிய சிந்தனைகளையும் கண்டு பிடிப்புகளையும் எடுத்துக்காட்டிய மூன்றாந்தலைமுறை வரலாற்றாளர்களாகப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கலாநிதி, செ.குணசிங்கம், கலாநிதி.பொ.ரகுபதி, திரு.ப.புஸ்பரத்தினம், திருமதி.ஜி.தனபாக்கியம், திரு.செ.கிருஸ்ணராசா ஆகியோரை நான் கருதுகிறேன். இவர்கள் துணிச்சலாகத் தமது கருத்துக்களைச் சரியாகவும், சுதந்திரமாகவும் முன்வைத்துள்ளனர். இந்த மூன்று தலைமுறை வரலாற்றறிஞர்களுக்கும் நன்றிகளை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன். அத்தோடு இந்த நூலினை உவந்தேற்று வெளியிடும் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர். திரு.பூ,பூரீதர்சிங் நன்றிக்குரியவர். காலத்தேவைக்குரிய செயற்பாட்டை அவர் இந்நூல் வெளியீடு மூலம் ஆற்றியுள்ளார்.
இந்நூல் ஒரு காலத்தின் தேவை என நம்புகின்றேன்.
கமலம்'
82, பிறவுன் வீதி,
நீராவியடி
யாழ்ப்பாணம் கந்தையா குணராசா 01-08-1996 (செங்கை ஆழியான்)
ΙΧ

Page 7
Ugburt/Go/7
கலாநிதி ககுணராசா அவர்களால் எழுதப்பட்ட "ஈழத்தவர் வரலாறு’ என்ற இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு காலத்தின் தேவையை இந்நூல் நிறைவு செய்கின்றது. ஆசிரியரின்,“நல்லைநகர்நூல் என்ற ஆய்வு நூலினையும் 6T LDgif நிறுவனத்தினரே 1987 இல் வெளியிட்டி திருந்தனர். அந்த நூலிற்குக் கிடைத்த வரவேற்பு, ஈழத்தவர் வரலாறு என்ற இந்த முழுமையான நூலை வெளியிட எம்மைத் தூண்டியது.
இந்த நூலின் ஆசிரியர் நிர்வாகத்துறை, கல்வித்துறை, இலக்கியத்துறை ஆகிய முத்துறைகளில் தன் திறனை ஆழப்பதித்ததன் மூலம் தமிழ்பேசும் உலகினால் நன்கு அறியப்பட்டவர். இந்த ஆய்வு நூலை எழுதப் பல வகைகளிலும் தகுதியானவர். இந்த நூல் கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1631 வரையிலான காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல், நிர்வாக, சமூக அமைப்பினைச் சித்திரிக்கின்றது. அறிவு பூர்வமாகவும், ஆய்வு பூர்வாகவும், தமிழ் மக்களதும், தமிழ் மன்னர்களினதும் வரலாற்றைச் சித்திரிக்கின்றது. இந்நூலினைத் தமிழ் கூறும் நன்னுலகம் உவந்தேற்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
பூபாலசிங்கம் புத்தகசாலை, பூ,பூரிதர்சிங் 340, செட்டியார் தெரு கொழும்பு .

அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள்
பொதுவுடைமைவாதியாகவும் சமூகசீர்திருத்தவாதியாகவும் வாழ்ந்து, அடக்கப்பட்ட மக்களின்
விடிவுக்காகவும்
உலக மனுக்குல மேன்மைக்காகவும்
குரல் தந்து,
இலக்கிய நெஞ்சங்களுக்கு இதம் தரும் குளிர்த்தருவாக விளங்கிய அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களுக்கு இந்நூல் காணிக்கை
-குனராசா
XI

Page 8
GITCGTLd,5b
விடயம் பக்கம்
ஈழநாடும் ஈழத்தவர்களும் .am 4 as a 1
வரலாற்றுதய காலத்தமிழ் மன்னர்கள் . 23
ஈழராஜா எல்லாளன் . 35
சிங்கை நகர் அரசு . 50
யாழ்ப்பாண இராச்சியம்: ஆரியச் சக்கிரவர்த்திகள் . 67
சிங்கைப் பரராசசேகரன் தொட்டு
சங்கிலி செகராசசேகரன் வரை . 82
வன்னிச் சிற்றரசுகள் . 93
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் . 112
உசாத்துணை நூல்கள். . 142

ஈழநாடும் ஈழத்தவர்களும்
1. இலங்காபுரி/ஈழம்
இலங்கைத்தீவு முழுமைக்குமுரிய பெயராக இலங்காபுரி, ஈழம் எனும் பெயர்கள் பண்டைதொட்டு வழங்கி வந்துள்ளன. பல்வேறு பெயர்களினால் இலங்கை பூர்வதகாலந்தொட்டே விளிக்கப்பட்டு வருகின்றபோதிலும் இவ்விரு பெயர்களும் இன்றுவரை நிலைத்து நிற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்காபுரி என்ற பழைய பெயரே இன்றைய லங்கா, இலங்கை என்ற நிரந்தர நாமங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்காபுரி பற்றிய ஆரம்பக்குறிப்பு, இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகின்றது. குபேரனுக்காக விசுவகர்மன் என்ற தேவதச்சனால் அமைக்கப்பெற்ற இலங்காபுரி, பின்னர் குபேரனால் இராவணனுக்குக் கையளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை என்ற பெயரால் இந்நாடு முழுவதும் இன்றுவரை அழைக்கப்படுவதே இலங்காபுரியின் மங்காத புகழை இன்றும் நிலைநிறுத்துகிறது. மேலைத்தேய நாட்டினர் இந்நாட்டிற் காலெடுத்து வைத்தது முதலாகவே இலங்கை என்ற பெயர் சைலன் (Zeilan) என்றும், சையிலன் (Sailan) என்றும் சிலோன் (Ceylon) என்றும் திரிவுபெற்று உச்சரிக்கப்படலாயிற்று
ஈழம் என்ற பெயரால் இலங்கை அழைக்கப்பட்டமையை பண்டைய தமிழ் இலக்கியங்கள், பழைய கல்வெட்டுகள், புராதன காசுகள் என்பன
உறுதிப்படுத்துகின்றன. பட்டினப்பாலை எனும் சங்க நூலில், “ ஈழத்துணவும்
1. தனபாக்கியம், ஜி. இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக்
கலாசாரமும், மட்டக்களப்பு, 1988, பக்கம் 54 2. பட்டினப்பாலை, 190-193

Page 9
ஈழத்தவர் வரலாறு காழகத்து ஆக்கமும்' என வருகின்ற வரி குறிப்பிடத்தக்கது.*திருப்பரங்குன்றப் பிராமிக்கல்வெட்டில் ஈழக்குடும்பிகன் என்பவனது பணிபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் பாண்டிய கல்வெட்டொன்றில் ஈழம் பற்றிய தகவலுள்ளது. இலங்கையில் அனுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் ஈழக் காசுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஈழக்காசுகளே சிங்கள மன்னர் பயன்படுத்திய சுகவனுக் காசுகள் எனக் கருதுவர். எவ்வாறாயினும், இலங்கையின் பிரதான வரலாற்று மூலகங்கள் எதிலும் இதுவரை இலங்கை, ஈழம் என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முதன்முதலாக ப.புஸ்பரட்ணம் என்பவரால் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மட்பாண்டப் பிராமிச் சாசனங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
இவற்றுள் மூன்று எழுத்துக்களைக்கொண்ட முதலாவது சாசனம் பெருமளவு உடைந்து இருப்பதனால் அதனை ஒரு முழுச் சாசனமாகக் கொள்ளமுடியாதிருக்கின்றது.ஆயினும் இதன் முதலிரண்டு எழுத்துக்களிற்கும் 'ஈழ’ என்ற ஒலிப் பெறுமானத்தைக் கொடுத்து “ ஈழ’ என்று வாசிப்பது பொருத்தமானதாகத் தெரிகின்றது எனப் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். இரண்டாவது சாசனம் ஈலா’ என்ற வாசகத்தைக் கொண்டது. இவை இரண்டும் ஈழத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம். * i
ஈழம் என்றால் உலோகக்கட்டிகள், பொன் எனப் பலவாறாக அர்த்தப்படும். ஈழம் என்ற பெயர் வந்தமைக்கான காரணத்தை வரலாற்று ஆசிரியர் முதலியார் செ.இராசநாயகம் விளக்கியுள்ளார். இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் 'எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கப்படும் ஈழு வென்னும் நிறைவற்ற பாஷையையே பேசிவந்தார்கள். அதனால் இலங்கைக்கு
'ஈழம்' என்றும் "ஈழமண்டலம்' என்றும் பெயர் உண்டாயிற்று. ஈழம், சீழம் என
3. இராமன். கே.வி. தொல்லியல் ஆய்வுகள், சேகர் பதிப்பகம், 1967
4. ARE. for 1901, No. 128 of 1901., SII VII, No 778.
5 Srisena, O.M.R., 'Our Gold Kahavanu Coins and Currency
Daily News, April 5 1985.
6. புஸ்பரட்ணம், ப. சங்ககால ஈழம் தமிழர் பிராந்தியங்களில் ஒன்றா? வெளிச்சம், யாழ்ப்பாணம், புரட்டாதி-ஐப்பசி 1991, பக்கம் 13-14
7. கழகத் தமிழ் அகராதி. திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், சென்னை, 1989, பக் 144

ஈழத்தவர் வரலாறு மருவிச் 'சிஹழம், சிங்களம் என மாறியது. சீழம் என்ற பெயரிலிருந்தே சீழம்தீப், சேரண்டிப் எனும் அராபிய நாமங்களும், ‘சிலாங்’, ‘ சிலோன்’ என்னும் மேலைத்தேயவளிட்ட பெயர்களும் வந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். "ஈழம் என்ற பெயர் திரிபடைந்து சிறீ என்ற அடைமொழியுடன் சேர்ந்து சீகள என்ற பாளி வடிவமாகவும் சீம்கள என்ற வடமொழிவடிவாகவும் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்புடைய கருத்தாகுமெனச் சிற்றம்பலம் கருதுகிறார்"
பண்டைய இலங்கையின் வட பெரும்பகுதி நாகதீபம் எனவும், தென் பெரும்பகுதி தம்பண்ணை அல்லது தாமிரபர்ணி எனவும் இரு தெளிவான புவியியல் அலகுகளாக விளங்கின. கதம்பநதி எனப்படும் அருவி ஆற்றுக்கும் நாகபொக்கனை, திரிகூடம் எனும் பகுதிகளுக்கும் வடக்கேயுள்ள பிரதேசம் நாகதீபம் எனப்பட்டது. நாகதீபத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் அயற்றிவுகள், மன்னார், வவுனியா, முல்லைதீவு முதலான பிரதேசங்கள் அடங்கியிருந்தன." கதம்பநதியையும் மகாவலிகங்கையின் சுழிமுகக்கிளையையும் இணைக்கும் தென்புற வளைகோட்டிற்குத் தெற்கே பரந்துகிடக்கும் இலங்கையின் நிலப்பரப்பு தாமிரபர்ணி எனப்பட்டது.
1.1. தாமிரபர்ணி
எனினும், இலங்கைத்தீவின் புகழ்மிக்க பெயராகத் தாமிரபர்ணி , மேலைத்தேய/கீழைத்தேய அறிஞர்கள் பலராலும் தமது ஆவணங்களில் குறிக்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இலங்கைத்தீவின் தென்பெரும்பகுதிக்குரிய தாமிரபர்ணி என்ற பெயர், இலங்கை முழுவதற்குமுரிய பொதுப் பெயராகப் பயின்றுவந்தமைக்குரிய காரணிகள் தெளிவானவை. மிகச்சிறந்த கடலோடிகளாக விளங்கிய கிரேக்க, ரோம, அராபிய வணிகளர்களின் வர்த்தகக்கலங்கள் இந்து சமுத்திரத்தில் பிரவேசித்தபோது, காற்றினதும் நீரோட்டத்தினதும் மரக்கல உந்துகை கதம்பநதி (அருவியாறு) க்கும் கல்யாணி நதி (களனிகங்கை) க்கும் இடைப்பட்ட தாமிரபர்ணியின் மேற்குக் கரையோரம் நோக்கியதாக இருந்துள்ளது. எனவே,
8. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம், சிறி சண்முகநாத அச்சகம்,
யாழ்ப்பாணம், 1933, பக்கம் 11-12,
9. கலாநிதி சிற்றம்பலம், சிக, ஈழத்தமிழர் வரலாறு, சாவகச்சேரி, 1994, பக் 6.
10. குணராசா, க, குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள்,
முத்தமிழ்விழா மலர், 1991, பக்கம் 130-131.
3

Page 10
ஈழத்தவர் வரலாறு
மேலைத்தேயத்தவர்கள் அறிந்த பிரதேசமாகத் தாமிரபர்ணி விளங்கியமையால், இத்தீவின் பொதுப் பெயராக அதனைத் தமது தேசப்படங்களிலும், நூல்களிலும் குறித்துப்போயினர்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏராதோஸ்தீனிஸ், குளோடியஸ் தொலமி ஆகிய இரு வானவியல் புவியியல் அறிஞர்கள் அக்காலகட்டத்தில் வரைந்த தேசப்படங்களில் இலங்கைத்தீவு குறிக்கப்பட்டுள்ளது. ஏராதோஸ்தீனிஸ் தனது படத்தில் இலங்கைத்தீவை தப்ரோபேன்’ எனக் குறித்துள்ளார்; அவரது தேசப்படத்தைப் பின்பற்றி வரைந்த தொலமியும் இலங்கைத்தீவுக்கு ' தம்ரபேன்’ என்ற பண்டைய பெயரையே குறித்துள்ளார். தாமிரபர்ணி என்ற பெயர் கிரேக்க அறிஞர்களால் தப்ரோபேன்’ எனவும் 'தப்ரபேன்’ எனவும் உச்சரிக்கப்பட்டுள்ளது."
இலங்கையின் வரலாற்றுப் பனுவலாக் கொள்ளப்படும் மகாவம்சத்தில் தாமிரபர்ணிப் பிரதேசம், தம்பபன்ன” எனக் குறிக்கப்படுகின்றது.“தாமிரவர்ணி என்ற சமஸ்கிருத வார்த்தையின் பாளிமொழி உச்சரிப்பே தம்பபன்ன எனக் கொள்ளலாம்." தாமிரபர்ணி என்று இலங்கைத்தீவு முழுவதும் அல்லது தென்பகுதி மட்டும் அழைக்கப்பட்டமைக்குரிய காரணங்கள் பலவாகவுள்ளன. இலங்கையில் தென்கிழக்கே பாய்கின்ற தம்மன என்ற ஆற்றின் பெயரால் தம்பன்னி' என்ற பிரதேசப் பெயர் உருவாகியது என எச்.பாக்கர் கருதுகிறார்." விஜயனும் தோழரும் இளைப்பாறும் பொருட்டு உள்ளங்கைகளை நிலத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபோது உள்ளங்கைகள் செம்புநிறமாக (தாமிரமாக) மாறியதால் அப்பகுதிக்குத் தம்பபன்னி' என்ற பெயர் உண்டானதாக ஐதிகக் கதையுள்ளது."
ll. Birch, T. W. Maps Topographical and Statistical, Oxford University,
Press, 1967, p.2
12 The Mahavamsa, Translated into English by Wilhelm Geiger, 1950.
Chapter: VI: 47; Page 54.
13. தனபாக்கியம் , ஜி. மு.கு.நூல், பக்.10
14. Parker, H., Report on Archaeological Discoverises at Tissamaharama R.A.S.
Vol. VIII, No, 27, 1887.
15. The Mahavamsa, op.cit., (hapter: VII; 41, 42, &c. 58

ஈழத்தவர் வரலாறு
இலங்கைத்தீவின் தென்பெரும்பகுதி தாமிரபர்ணி என்று அழைக்கப்பட்டமைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமாக, இந்தியத் தமிழ்நாட்டு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்கின்ற தாமிரபர்ணிநதி வடிநிலப் பிரதேசத்தோடமைந்த தொடர்பின் விளைவைக் குறிப்பிடலாம். மேற்குக் கரையோர மலைத்தொடரில் உற்பத்தியாகின்ற தாமிர்பரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற பண்டைய குடியிருப்புப் பகுதியான ஆதிச்ச நல்லூர் ஊடாகப் பாய்ந்து, மன்னார்க்குடாவில் இந்து சமுத்திரத்துடன் சங்கமமாகின்றது. இந்த ஆற்றுக்கு நேர்கிழக்கே இலங்கைத்தீவில் கொணாநதி (காலாஒயா) அமைந்துள்ளது. கதம்பநதிக்கும் (அருவியாறு), கொணாநதிக்கும் இடைப்பட்ட பிரதேசமே தாமிரபர்ணி’ என அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுவடிநில மக்கள், பல்வேறு காரணங்களுக்காக இலங்கையின் மேற்குக்கரையோரத்தில் குடியேறிவாழ்ந்துள்ளனர். அவர்கள் தமது தாயகப் பெயரைத் தாம் குடியேறிய பகுதிக்குமிட்டனர் எனக் கொள்வது மிகவும் ஏற்ற காரணமாகும்.
சிங்கள வரலாற்றுசிரியரும், தொல்லியலாய்வாளருமான பரணவிதானவின் ஆய்வுக்கூற்று இதனை உறுதிசெய்யும். அவர் விஜயனின் வருகைக்கு முன்னரே முத்துக்குளிக்கவந்த தாமிரபர்ணி மக்கள் கதம்பநதிக்கரையை அண்டிய பகுதிக்குத் தாமிரபர்ணி எனப் பெயரிட்டிருக்கலாம்’ எனக் கூறிப்போந்தார்." மன்னார்க்குடா : முத்துக்குளித்தலுக்குப் புகழ்பெற்ற முத்துச்சலாபமாகும். தாமிரபரணி ஆற்றின் தென்கரையோர ஆதிச்ச நல்லூரில் கிடைத்த ஈமத்தாழிகளை ஒத்தவையே,
16. தாமிரபரணி ஆறு திருநெல்வேலியூடாக இலங்கைவரை ஒடியது என்றும், கடற்கோளினால் இலங்கை பிரிக்கப்படு முன்னர் தாமிரபரணி வடிநில மக்கள் இலங்கைத்தீவில் குடியேறினர் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர். இது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.இந்தியத்திணிவினின்றும் இலங்கை பிரிவுற்ற மயோசீன்காலத்தில், புவியில் மனிதகுலம் தோன்றியிருக்காத நிலையில், மக்கள் இடப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கூறுவது பொருத்தமுடையதன்று. ஆனால், புவிச்சரிதவியலடிப்படையில் ஒரு நிலப்பாலம் இன்றைய இராமர் அணையில், இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைத்திருந்தது என்பது நிறுவப்பட்ட உண்மையாகும். இந்த நிலப்பாலத்தினூடாகத் தமிழகத்திலிருந்து. இலங்கைத்தீவுக்கு புலப்பெயர்வு நிகழ்ந்துள்ளது எனக் கொள்ளலாம்.
17. Nicholas, C.W. and Paramavitama, S., A Concise History of Ceylon,
Ceylon University Press, 1961, p.24

Page 11
ஈழத்தவர் வரலாறு
இலங்கையின் தாமிரபர்ணிப் பிரதேசத்தில் பொம்பரிப்பு எனுமிடத்தில் கிடைத்த ஈமத்தாழிகளாகும் எனத் தொல்லியலாய்வுகள் இன்று நிரூபித்துள்ளன." பொன்பரிப்பிற் கிடைத்த சிறப்புமிக்க தொல்லியற்றடயங்கள் பாண்டிநாட்டுத் தாமிரபர்ணி மக்களுக்கும் இலங்கைத் தம்பபன்ன மக்களுக்குமிடையேயிருந்த கலாசார ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வரலாற்றேடுகள் எனின் மிகையாகாது. அத்துடன் இலங்கை வரலாற்று நூல்களில் மட்டுமன்றி இந்தியா, கிரேக்கம் முதலான நாட்டு இலக்கியங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற ஆதாரபூர்வமான குறிப்புகளிலிருந்து கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தாமிரபர்ணி என்ற நிலப்பரப்பின் பெயரால் இலங்கை பிறநாடுகளில் அறிமுகமாகியிருந்தது என்பது தெளிவாகின்றது. "
12. நாகதீபம்
இலங்கைத் தீவின் தென் பெரும்பகுதி தாமிரபர்ணி என்றழைக்கப்பட்ட வேளையில் வடபகுதி நாகதீபம் அல்லது நாகதீவு என வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பூர்வகுடிகளான ந்ாகர்கள் வாழ்ந்த பிரதேசம், பண்டைநாளில் நாகதீபம் எனப்பட்டது. இப்பெயர் குறிக்கும் ஆள்புலப்பரப்பு சுருங்கியும் விரிந்தும் ஆய்வாளர்களின் கண்டுணர்வுகளில் கூறப்பட்டுள்ளது. நாகதீபம் என்ற பெயர் சுட்டும் ஆள்புலம் நயினாதீவு எனச் சிலவிடத்தும், அவ்வாறன்று யாழ்ப்பாணக் குடாநாடு எனச் சிலவிடத்தும் கருதப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத்தீவின் வடபெரும் ஆள்புலத்தின் பண்டைய பெயர் நாகதீபம் எனக் கொள்வதே ஏற்புடையதாகவுள்ளது. ‘வரலாற்றுக்காலத்தில் நாகதீபம் என்ற பிரதேசம் இலங்கையின் இன்றைய வடமாகாணத்தைக் குறித்தாக டபிள்யூ, கெய்கர் குறித்துள்ளார்."மகாவில்லாச்சியா (மதவாச்சி) க்கு வடக்கேயுள்ள பகுதியையே நாகதீபம் குறித்ததாக செலிக்மன் என்பார் கூற்று. இலங்கையின் வடபகுதியே வரலாற்றுக்கால நாகதீபம் என்பது பாக்கர் என்பவரின் முடிவு.*மவாவம்சத்தில்
நாகதீவு பற்றிய குறிப்புகள் பலவுள்ளன. இரு நாக மன்னர்களுக்கிடையிலான
18. Paranavitana, S., "Archaeological Investigations Near Pomparippu",
Ceylon Today, 5 (ii), November 1956.
19. தனபாக்கியம் ஜி. மு.கு.நூல், பக்கம் 11, 13
20. Geiger, W., Culture in Mediaeval Times,
Ed:by Heigz Bechert, 1960 page: 108.
21. Parker, H., Ancient (Seylon, Colombo-1909, page: 14
6

ஈழத்தவர் வரலாறு தகராறைத் தீர்த்துவைப்பதற்காகப் புத்தர் நாகதீவிற்கு இரண்டாவது முறையாக வருகைதந்தார் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது. * வசபன் என்ற மன்னன் (கி.பி.127-171) அனுராதபுரத்தை ஆண்டகாலத்தில் இசிகிரியன் என்பவன் நாகதீபத்தை ஆண்டதாக வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனம் குறிப்பதிலிருந்து *, இலங்கையின் வடபகுதி நாகதீபம் என வழங்கப்பட்டமை நிரூபணமாகின்றது.
2. ஈழத்தவர்
இலங்கையின் வரலாறு என்பது இரண்டு இனங்களுக்கிடையிலான தொடர் போராட்டமாகவே இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. * குடிசார் வரலாற்றுப் புவியியல் அடிப்படையில் திராவிட இனத்தின் பாரம்பரியத்தீவாக விளங்கிய இலங்கை, தனது ஒரு பெரும்பகுதியில் புதியதொரு இனத்தினைச் சேர்த்துக் கொண்ட சம்பவம் கி.மு.483 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்த லாடா நாட்டின் மன்னன் தன் நாட்டிற்கு உதவாதவர்கள் எனக் கருதிய தன் மகன் சிங்ஹல விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் மரக்கலமொன்றில் ஏற்றி நாடுகடத்திவிட்டான். * அவர்கள் தாமிரபர்ணி என்ற கொணாநதிக்கும் (காலஓயா) கதம்பநதிக்கும் (அருவியாறு) இடைப்பட்ட பிரதேசத்தில் வந்து சேர்ந்தனர். சிங்ஹல விஜயனின் வருகையுடன் இலங்கையில் சிங்கள மக்களது தோற்றம் ஆரம்பமாவதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அவை கூறத்தவறிய செய்திகள் என்னவென்றால் விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் இறங்கியபோது, இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கட் கூட்டமும், பண்டைய வாழ்க்கைமுறையைக் கைக்கொண்டு வாழ்ந்த ஒரு மக்கட்கூட்டமும் வாழ்ந்துவந்துள்ளன என்பதாம் *.
22. Mahavamsa, op.cit., Chapter l; 46 & 47, page 6, 23. Paranavitna, S., Vallipuram Gold Plate, Epigraphia Zeylanica,Vol. IV, p. 237 34. குணராசா, க, நல்லூர்க்கந்தசுவாமி கோயில் வரலாற்றில் திருத்தம்,
வீரகேசரி வாரமலர்- 27.08.1995 25. The Mahavamsa, Translated into English by W.Geiger,Colombo,
1950 Chapter: VI: 39-47, pp. 53-54, 28. கலாநிதி குணராசா, க. குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள்.
முத்தமிழ் விழா மலர், யாழ்ப்பாணம், பக். 129

Page 12
ஈழத்தவர் வரலாறு
பகைவராக வந்த சிங்களவர் ஒரளவு நாகரிகமடைந்திருந்த மக்கள் வசத்தில் இந்த நாடு இருந்ததைக் கண்டனர்' எனப் பார்க்கர் என்பார் தன் புராதன இலங்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.'இயக்கர் என்று வரலாற்று நூலில் கூறப்படும் இம்மக்கள் அரசியல் முறைகளுக்கு ஏற்ப வாழ்ந்தனர் என்று தோன்றுகிறது. அத்துடன் இவர்கள் நகரங்கள் என்று சொல்லக்கூடியதான, குறைந்தது இரண்டு குடியேற்றிடங்களைக் கொண்டிருந்தனர் என்றும் தோன்றுகிறது. ஐந்தாம்படை என்று நாம் இப்பொழுது கூறும் உட்பகையின் உதவி கொண்டு, சிங்களவர் இம்மக்களை இலகுவில் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர் எனத் தமது நூலில் ஏ.ஜி.ரணசிங்க என்பவர் குறிப்பிட்டுள்ளார் * இராமாயணம் போன்ற காவிய நூல்கள் இலங்கையில் நாகரிகமான ஒரு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்துவந்த செய்தியினைக் கூறுகின்றன.
ஆரியமொழி பேசிய மக்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இயக்கர்’ என்று அழைக்கப்பட்ட ஒரு கூட்டத்தினர் இலங்கையில் வசித்துவந்தார்கள். சிங்கள இதிகாச வரலாற்றுப் பனுவலான மகாவம்சத்திலிருந்தே இலங்கையில் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்ட மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்துள்ளனர், என
அறியமுடிகின்றது.
2.1 இயக்கர்
மகாவம்சத்தின்படி புத்தர் ஞானம் பெற்று ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்தார். அவ்வேளை இலங்கையில் இயக்கர்கள் நிறைந்திருந்தனர். மகாநாகா தோட்டத்தில் இயக்கர்கள் குழுமியிருந்தபோது, அவர்கள் முன் தோன்றிய புத்தர், இயக்க மக்களது பயங்களை நீக்கி ரட்சித்ததாகக் குறிப்புள்ளது.*தாமிரபரணிப்பிரதேசம் எங்கும் இயக்கர்கள் பரவி வாழ்ந்துள்ளனர். அருவியாற்றுக்கும் மகாவலிகங்கைக்கும் தெற்கே இவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இவர்கள் மூன்று யோஜனாதூரம் நீளமும் அகலமும் கொண்ட மகாநாகா (மகியங்கனை) தோட்டத்தில் சடங்கு
27. Parker H., Ancient Ceylon, London, 1909 27. அ. றணசிங்க, ஏ.ஜி, 1946-ம் ஆண்டு இலங்கைக்குடி மதிப்பு, கொழும்பு-1951 பக் 4 28. The Mahavamasa, op, cit, Chapter 1 :20-30, pp. 3-4

ஈழத்தவர் வரலாறு
ஒன்றுக்காகக் கூடுவர் என மகாவம்சம் கூறுகிறது. விஜயனின் இலங்கை வருகையின்போது அவன் சந்தித்த இயக்ககுல ராணி குவேனி பற்றி தகவல்கள் மகாவம்சத்திலுள்ளன. விஜயன்- குவேனி கதை ஒரு கட்டுக்கதை என்றாலும், சிங்ஹல மூதாதையின் வருகையின்போது இலங்கையில் இயக்கர்களின் ஆட்சி நிலவியது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. 'இயக்கர்களின் புகழ்பெற்ற ஒரு நகரமாக சிறிஸ்தவத்து விளங்கியுள்ளது *. எனினும், இராமாயணக்காவியம், தொலமியின் தேசப்படம், ஜாதகக்கதைகள் என்பனவற்றிலிருந்து இயக்கர்கள் வாழ்ந்த பிரதேசங்களாக திரிகூடம், இலங்காபுரி, அரித்தகிரி, யக்குரகல, லக்கல, நிகும்பிலாவனம், தூமரமக்க, விந்தனை, மகியங்கனை, சிறிஸ்துவத்து, யக்குரே என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன". இவற்றோடு பொம்பரிப்பு, தாமிரபர்ணி (நகரம்), கதிர்காமம் என்பனவற்றையும் இயக்கர் குடியிருப்புகளாகக் கொள்ளலாம். ( விளக்கப்படம் 1 ஐப் பார்க்கவும்). வடக்கேயுள்ள இயக்கச்சி எனுமிடத்தையும் இயக்கர் குடியிருப்பாகக் கருதவிடமுண்டு."
2.2 நாகர்
பண்டைய இலங்கைத்தீவு முழுவதும் நாகர் இன மக்கள் பரவி வாழ்ந்துள்ளரெனினும், சிறப்பாக நாகதீவு என வரையறுக்கப்பட்ட வடபகுதியில் செறிந்து வாழ்ந்துள்ளனர். நாகதீவு என்ற பெயரை இப்பிரதேசம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தவர்கள் இப்பிரதேசத்தின் பண்டைக் குடிமக்களாக வாழ்ந்திருந்த நாகர்களோயாவர். நாகர் எனப்படும் ஒரு மக்கட் கூட்டத்தினர் இலங்கைத்தீவில் நெடுங்காலமாகக் குடியேறி வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குப் பல ஆதாரங்களுள்ளன.
இலங்கை வரலாற்றின் செய்திகளை அளிக்கும் பனுவலாகக் கருதப்படும் மகாவம்சம், கெளதம புத்தர் இலங்கைக்கு இரண்டாவது தடவை விஜயம் செய்தபோது, நாகதீவிலிறங்கி இரண்டு நாக அரசர்களின் பிணக்கைத் தீர்த்து வைத்தார் எனக் கூறுகிறது. மகோதரன், குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் ஒரு இரத்தின சிம்மாசனத்திற்காகப் பொருதினர். மகோதரன்
29, Ibid., Chapter VI:32, p.57
30. தனபாக்கியம், ஜி, இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்,
மட்டக்களப்பு. 1988, பக் 245.
31. குணராசா. க. குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம்- 1993

Page 13
ஈழத்தவர் வரலாறு
நாகதீவின் அரசனாகவும், அவனது மருமகளான குலோதரன் கந்தமாதனத்தின் அரசனாகவும் விளங்கினர். இவ்விரு நாக மன்னர்களும் தத்தமது படைகளோடு பொருதியபோது, புத்தர் அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்தார். அவரது போதனையால் மனம் மாறிய நாக மன்னர்கள் இருவரும் இரத்தினச்சிம்மாசனத்தைப் புத்தருக்கே வழங்கிவிட்டனர்.? நாக மன்னர்களின் இச்சர்ச்சைபற்றி மணிமேகலைக் காவியமும் குறிப்பிட்டுள்ளது.* நாகதீவுக்கு, வெளியே தென்னிலங்கையில் இன்றைய களனிநதிக் கரையோரத்தில் அமைந்திருந்த கல்யாணி என்ற நாக அரசு பற்றியும் மகாவம்சத்தில் குறிப்புள்ளது. கல்யாணி இராச்சிய அரசனான மணியக்கியன் என்பவன், புத்தரின் போதனைகளை ஏற்றுப் பெளத்தத்தைத் தழுவினான்.* மகாவம்சம் கூறுகின்ற இச்செய்திகளிலிருந்து இலங்கையில் நாக மக்கள் எனப்படுவோர் வாழ்ந்துள்ளனரென அறியமுடிகின்றது.
நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணிய மக்கள் என்பதும், புத்தருடைய காலத்தில் இவர்கள் பெளத்தத்தைத் தழுவினர் என்பதும், மேலும் அவர்கள் புத்தருடைய காலத்தில் இலங்கையின் வடபாகத்தில் மட்டுமன்றி தென்மேற்குப் பகுதியிற் களனியாவரை பரவி வாழ்ந்தனர் என்பதும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. * கிடைக்கக்கூடிய இலக்கிய, பண்டையதேசப்பட (தொலமி) ஆதாரங்களிலிருந்து இலங்கையின் பல பகுதிகளிலும் நாகர் குடியிருப்புகள் இருந்துள்ளன என அறியமுடிகின்றது. தேவிநுவர, நாகர்கோயில், திருக்கோயில் நனிகிரி, தென்கிழக்கில் நாகதும, நயினாதீவு எனும் மணிபல்லவம், மதவாச்சி எனும் மகாவில்லாச்சி, காங்கேசன்துறை எனும் ஐம்புக்கோளம், வல்லிப்புரப்பகுதி, நாகர்கோயில், குருந்தன்குளம், மிகிந்தலைப்பகுதி, நாகசதுக்கம், கந்தரோடை எனும் கதிரமலை, கரியாலை நாகபடுவான், மகாதீர்த்தம் (மாந்தை) முதலானவை நாகர் குடியிருப்புகளாக விளங்கியுள்ளன. இந்த ஆதிக் குடியிருப்புகள் ஒவ்வொன்றிற்கும் தந்தைவழிச் சமூக அமைப்பின் வழிமுறைப்படி, ஒவ்வொரு தலைவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தான்."
32. The Mahavamsa, op cit, Chapter 1 : 46-62, pp. 6-7 33. மணிமேகலை, காதை 8 வரி 52-63 34. The Mahavamsa op.cit, Chap 1: 63-64, p.7 35. தனபாக்கியம், ஜி. மு.கு:நூல், பக். 26 36. கலாநிதி குணராசா, க, மு.கு.கட்டுரை. பக். 131. 37. Navaratnam,C.S. Tamils and Ceylon, Jaffna, 1958
O

ஈழத்தவர் வரலாறு
ஆதிக்குடிகளான நாகர்கள் நாகவழிபாட்டுடன் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். சிந்துநதி நாகரிக காலத்திலிருந்து நாகவழிபாடு நிலவிவந்துள்ளது. இன்றும் இலங்கையில் இந்துக்கள் நாகவழிபாட்டை மேற்கொண்டுவருகின்றனர். ' கிடைக்கின்ற ஒருசில தகவல்களைக் கொண்டு நாகவழிபாடு ஆதி இலங்கையில் நிலவியிருக்கலாமென ஊகிக்கமுடியும்.* ۔۔۔۔۔
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாகியான் என்ற நாடுகாண் பயணி, இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றித் தனது நூலில் எழுதியுள்ளார். அவரின்படி இந்தத்தீவில் ஆதியில் தேவதைகளும் நாகர்களும் இருந்தார்கள் என்றும் அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளுடன் வர்த்தகம்
39
நடாத்தி வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.° வர்த்தகம் நடாத்தக்
கூடியளவிற்கு நாகர்கள் கலாசார மேம்பாடுடையவர்களாக விளங்கியுள்ளனர்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் நாகர்களை மனிதர்களாக ஏற்கத் தயாராகவில்லை. மகாவம்சம் குறிப்பிடுகின்ற இயக்கர், நாகர் என்போர் மனிதவர்க்கத்தினரைக் குறிக்கவில்லையென மெண்டிசும், "மகாவம்சத்திலும் மணிமேகலையிலும் நாகர் ஒருபோதும் மனிதவர்க்கத்தினராகக்
காட்டப்படவில்லை என பரணவிதானவும் "
கூறியுள்ளனர். இவை சிரிப்பிற்குரிய அவதானிப்புக்களாம். இயக்கர்களும் நாகர்களும் மனிதர்களாக ஆதி இலங்கையில் வாழ்ந்தார்கள் என்று கூறுவதில் தவறில்லை. * சிங்கஹ விஜயனின் வருகையுடன் தான் இலங்கைத்தீவில் மக்கட் குடியேற்றங்கள் ஆரம்பமாகின என்பதை வலியுறுத்துவதற்காக இத்தீவின் மூதாதையினரை அமானுஸ்யர்கள் என வலியுறுத்தியுள்ளனர் போலும்.
38. குணசிங்கம், செ, கோணேஸ்வரம், பேராதனை, 1973, பக். 44
39. Legge, Fa-Hieris Record of Buddhist Kingdom, Oxford, 1886, pp.101-102
40. Mendis, G.C., The Early History of Ceylon, Culcatta, 1946, p.8
41. Paranavitana, S., The Arya Kingdom in North Ceylon, JRASCB (NS),
Vol. VII, Pt, 11, 1961, pp. 181-182.
43. குணசிங்கம், செ, மு.குநூல் . பக். 48.
11

Page 14
ஈழத்தவர் வரலாறு
2.3 திராவிடர்
ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகின்றது. இன்றைய சிங்கள -தமிழ்மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே என்பதும் உறுதியாகின்றது. அத்துடன் இவ்விரு மொழி பேசுவோருக்கிடையே ஏற்பட்ட கலாசார வேறுபாடு ஈழத்தின் வரலாற்றுக் காலத்தில் பெளத்தமதத்தின் வருகையோடுதான் ஏற்பட்டது எனலாம். இங்குள்ள சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் மூதாதையினர் ஒன்றுக்கு மேற்பட்ட திராவிட மொழிகளைப் பேசினாற்போல தெரிகின்றது. இவற்றுட் தமிழோடு சிங்களத்தின் மூதாதை மொழியாகிய எலுவும் காணப்பட்டது எனலாம். இந்த எலு மொழி பெளத்தம் வந்தபோது அதன் சமயமொழியாகிய பிராகிருதமாகிய பாளியுடன் கலந்தபோதே இன்றைய சிங்களமொழி உருவாகியது.* அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்த தொல்பொருட்சான்றுகள் இலங்கையில் சிங்கஹ விஜயன் வருவதற்கு முன்னரே திராவிட மக்கள் தமக்குரிய கலாசாரத்துடன் வாழ்ந்துவந்துள்ளனர் என்பதை
நிரூபிப்பனவாகவுள்ளன.
ஆரியர்கள் வடஇந்தியாவில் நிலைகொண்டபோது, திராவிடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பாகத்திற்கும் இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம் நாகதீவில் மிகக் கூடுதலாக நிகழ்ந்திருத்தல்வேண்டும். தென்னிலங்கையில் சிங்ஹல விஜயனைத் தொடர்ந்து புதிய குடியேற்றங்கள் நிலைகொள்ளத் தொடங்கியவேளை, வட இலங்கையில் திராவிடக் குடியேற்றம் வளர்வதாயிற்று. சேர்.போல் பீரிஸ் என்ற அறிஞரின் கருத்துப்படி, விஜயன் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வட இலங்கையில் குடியிருப்புகள் விருத்தியுற்றிருந்தன என்பதாகும். இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல் கடலே வடவிலங்கையைப் பிரிக்கின்றது. அதனை இலகுவில் கலங்களில் தாண்டி வடவிலங்கையில் குடியிருப்புகள் உருவாகின. *
43. கலாநிதி சிற்றம்பலம், சி.க, தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம்,
முத்தமிழ் விழா மலர், 1991, பக், 163
44. கலாநிதி குணராசா, க. குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங்கள்.
முத்தமிழ் விழா மலர். 1991, பக் 130.
44அ. குணராசா. க, நல்லைநகர் நூல், பூபாலசிங்கம் வெளியீடு- 1987
2

ஈழத்தவர் வரலாறு
இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கதியாகும். ஆதிக்குடிகள் இவர்களாயின், இவர்கள் திராவிடர்கள் என்பதை நிரூபிக்கும் சான்றுகளாகப் பின்வருவன உள்ளன:
1) ஈமச்சின்னங்கள் 2) ஆதிப்பிராமிக் கல்வெட்டுக்கள் 3) ஆதிமக்களது சமய வழிபாடு
தொல்லியலாய்வுகள் மூலம் இன்று இக்கருத்தினை நிலைநாட்டிய பெருமை ஈழத்தின் மூன்றாம் தலைமுறை வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்லியலாய்வாளர்களுக்கும் உரியதாகும். * M
இலங்கையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மனிதகுலம் நிலைபெற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாகப் பலாங்கொடைப்பகுதியில் அகழ்வாய்வின்மூலம் கிடைத்த புராதன மனிதரின் எழும்புச் சுவடுகள் ஆதாரமாகின்றன. நியாண்டல்தால் மனிதரின் சுவடொத்த இவை இலங்கையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாகின்றன. *
2.3.1. திராவிட மக்களது ஈமச்சின்னங்கள்
இலங்கையின் ஆதிக்குடிகளுக்குரிய கலாசாரம் பெருங்கற்காலக் கலாசாரம் என தொல்லியலாளர் இனங்கண்டுள்ளனர். இறந்தோரை அடக்கம் செய்வதற்காகப் பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச்சின்னங்களைப்
படைத்ததால் இது இவ்வாறு பெயர் பெற்றது எனலாம். இம்மக்கள் படைத்த
45. இலங்கை வரலாற்றில் குறிப்பாக தமிழ் மக்களது வரலாற்றில் புதிய சிந்தனையும் கண்டுபிடிப்புக்களையும் எடுத்துக்காட்டிய மூன்றாம் தலைமுறை அறிஞர்களாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கலாநிதி செ.குணசிங்கம், கலாநிதி பொ.ரகுபதி, திரு.ப.புஸ்பரட்ணம், திருமதி ஜி தனபாக்கியம், திரு.செ.கிருஸ்ணராசா ஆகியோரை நான் கருதுகின்றேன். இவர்கள் துணிச்சலாகத் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைத்துள்ளனர். இரண்டாம் தலைமுறைச் சேர்ந்த வரலாற்றறிஞர்களாக பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் எஸ்.பத்மநாதன், திரு.வி.சிவசாமி, வேலனைப் பண்டிதர் பொ.செகந்நாதன். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, திரு.சி.எஸ்.நவரத்தினம் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். முதலாம் தலைமுறை வரலாற்றறிஞர்களாக சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம், திரு.டானியர் ஜோன், திருகமுத்துத்தம்பிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.
46. கலாநிதி குணராசா, க, மு. கு. கட்டுரை. பக்-130
13

Page 15
ஈழத்தவர் வரலாறு
ஈமச்சின்னங்கள் பல்வகைப்பட்டன. கல்லறைகள், கல்பட்டங்கள், கல்மேசைகள், நடுகற்கள் போன்றவற்றோடு, எவ்வித ஈமச்சின்னங்களுமின்றி அடக்கம் செய்தல் போன்றவை இவற்றுட் சிலவாகும். கடந்த நூற்றாண்டில் பாக்கர் திசாமகாராமப்பகுதியில் அகழ்வினை மேற்கொண்டபோது இத்தகைய தடயங்களைக் கண்டுபிடித்தார். * இத்தகைய ஈமச்சின்னங்களுக்கு மேலாக தாழி அடக்கமுறை திராவிடக் கலாசாரத்திற்குரிய ஒன்றாகும். மரணமடைந்த தலைவனைப் பெருந்தாழி (பானை) ஒன்றினுள் இட்டு, அவன் உபயோகித்த பொருட்களையும் கூடவே வைத்து புதைக்கின்ற ஈமத்தாழி/ முதுமக்கள் தாழி முறை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திராவிட மக்களது கலாசாரம் என்பது இன்று நிரூபணமாகிவிட்டது.*
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்குக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்ச நல்லூரிற் கிடைத்த ஈமத்தாழி அடக்கமுறைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் திராவிடக் கலாசாரமாகக் காட்டியுள்ளன. இத்தகைய அடக்கமுறைகளை நிகர்த்த ஈமத்தாழிகள் இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் பழைய தம்பபன்னியில் பொம்பரிப்பு எனுமிடத்திற் செய்யப்பட்ட தொல்லாய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. *
இந்நூற்றாண்டின் முற்பகுதியில் பொம்பரிப்பில் ஒரு தாழிக்காடு காணப்பட்டது. 1970 இல் இதில் மேலும் பல அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாழிக்காடு தமிழ்நாட்டுத் தாம்மிரவர்ணி ஆற்றுப்படுக்கையிலுள்ள ஆதிக்க நல்லூர்த் தாழிக்காட்டினைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றது. 1969 இல் அனுராதபுரத்திலும் 1970 இல் கந்தரோடையிலும் 1980 இல் மாந்தையிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்ட்டன. இத்தகைய அகழ்வுகள் விஜயன் கூட்டத்தினரின் ஆதிக்குடியேற்றம் நடந்ததாகக் கூறும் இடங்களிலெல்லாம் இப்பெருங்கற்காலக் கலாசாரம் நிலைத்திருந்ததை எடுத்துக்காட்டியுள்ளன." ஆதிக்க நல்லூருக்கு எதிரேயமைந்த மாந்தையும் அரிக்கமேட்டிற்கு
47. கலாநிதி சிற்றம்பலம், சி.க. மு.கு.கட்டுரை, பக்162 48. கலாநிதி குணராசா க, மு.கு.கட்டுரை, பக்.130 49. Paranavitana, S., Aichaealogical Investigation Near Pomparippu',
Ceylon Today 5 (11), November 1956. 50. கலாநிதி சிற்றம்பலம், சிக, மு.கு.கட்டுரை, பக். 163

ஈழத்தவர் வரலாறு
எதிரேயமைந்த பொம்பரிப்பும் ஒரே பிராந்தியம் எனக் கூறக்கூடியளவிற்கு இப்பெருங்கற்காலப் பண்பாட்டில் அதிக ஒற்றுமை இருப்பதாகத் தொல்லியலாளர் கூறுகின்றனர் என சிற்றம்பலம் கூறுகிறார். முதுமக்கள் தாழிகள் இலங்கையின் வேறு பல பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனைக்கோட்டை, பரந்தன், இப்பன் கடுவ, பத்தியகம்பளை, கல்மனை, கித்துல்கல், குருவித்தை, பத்ததொம்பலென்ன முதலான பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திராவிட மக்களது குடியிருப்புகள் பரந்து நிலைத்திருந்தமையைச் சுட்டுகின்றன. 1985 ஆம் ஆண்டு மேமாதம் 31ஆம் திகதி குஞ்சுப்பரந்தனில் என்னால் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது."
இது இப்பிரதேசத்தில் நிலைத்து நின்ற பண்டைய திராவிட நாகரிகத்தின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.
2.3.2. ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள்
தென்னாசியாவில் எழுத்துக்களின் தோற்ற காலத்தையிட்டு முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் கி.மு. 3ம் நூற்றாண்டளவில் அசோகன் ஆட்சியுடன் பிராமி என்ற வரிவடிவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இதை அசோகப் பிராமி எனவும், வடபிராமி எனவும் அறிஞர் அழைத்தனர். இதையொத்த வரிவடிவங்கள் சமகாலத்தில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அசோக பிராமியில் காணப்படாத தமிழுக்கே சிறப்பான இ,ம,ழ,ற,ன,ள போன்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை தமிழ்ப் பிராமி எனவும் திராவிடி எனவும் அழைக்கப்படுகின்றன.* இலங்கையில் இதுவரை 1500 இற்கு மேற்பட்ட பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பிராகிருதமொழியிற் பெளத்தம் சார்ந்த செய்திகளைக் கூறுகின்றன. இச்சாசனமொழி இங்கிருந்த திராவிட எலு மொழியுடன் கலந்தே பிற்காலத்தில் சிங்கள மொழி தோற்றம்பெற்றது. தமிழ்நாட்டில் பிராமிச்சாசனங்கள் நன்கு ஆராயப்பட்டுள்ளன. இலங்கைச் சாசனங்கள் பலவற்றோடு ஒப்புநோக்கிச் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்நாட்டு
51. குணராசா, க. குஞ்சுப்பரந்தன் முதுமக்கள் தூது ஈழநாடு, 9.6.1985 கிளிநொச்சியின் கதை, கந்தன் கருணை, மகாகும்பாபிஷேக மலர், கிளிநொச்சி, 1988. பக். 46
52. Mahadevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions, Madras, 1916.
15

Page 16
ஈழத்தவர் வரலாறு
பிராமிச் சாசனங்கள், வடபிராமி எழுத்துக்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. தென்னிந்திய இலங்கைப் பிராமி எழுத்துக்கள் வரிவடிவ அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த சிங்கள ஆய்வாளர்களான ஈ.பி.பெர்னாட்டோ, சத்தமங்கல கருணரத்தின, ஆரிய அபயசிங்க போன்றோர் பெளத்தமதத்துடன் வடபிராமி எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னரே, தமிழ்நாட்டிலிருந்து பரவிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இலங்கையில் உபயோகத்தில் இருந்துள்ளன என்கின்றர்.*
யாழ்ப்பாணத்தில் கிடைத்த மிகப் பழைய சாசனம் கந்தரோடையிலே மட்பாண்ட ஒடொன்றில் பொறிக்கப்பட்டுக்கிடைத்த பிராமி எழுத்துச் சாசனமாகும். பிராகிருதமொழியில் இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது: ததஹபத/தத்தவின் பாத்திரம். * கி.பி. 3 அல்லது 4 நூற்றாண்டைச் சேர்ந்த முத்திரைச்சாசனம் ஒன்று கந்தரோடையில் கிடைத்துள்ளது. செந்நிறக் கார்ணிலியன் முத்திரை ஒன்றில் விஷ்ணு பூதிஸ்ய/ விஷ்ணு பூதியனுடைய எனத் தென்பிராமி எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது.*
ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது ஒர் எலும்புக்கூடும், வெண்கலத்தாலான முத்திரை ஒன்றும் கிடைத்தன. இதன் வாசகம் கோவேந்தன்/கோவேதன்/ கோவேதம் ஆகும். *
தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் தொடர்பாக மூலாதாரங்களைத் தேடும் பணி ஒன்றின்போது கந்தரோடையில் தமிழ்ப் பிராமி வரிவடிவம் பொறிக்கப்பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டத்துண்டுகள் சில கிடைத்தன. கறுப்பு சிவப்பு மட்பாண்ட வகையைச் சேர்ந்த தட்டையான சட்டி ஒன்றின் விளிம்பில் மிகத் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்த சாசன வாசகம் ஒன்று கந்தரோடையில் உள்ள மேட்டு நிலப்பகுதியில் பொதுமக்களால் வெட்டப்பட்ட குழி ஒன்றினுள்ளிலிருந்து மீட்கப்பட்டது. அதில் குணி’ என்று மிகவும் தெளிவாகப் பிராமி வரிவடிவம்
53. புஸ்பரட்ணம், ப. தமிழீழ நோக்கு தொகுதி 1, பகுதி 2, 1992,
பக்.32-33 54 இந்திரபாலா, கா. சிந்தனை 111-2, பக். 158, யாழ் பல்கலைக்கழக வெளியீடு 55. இந்திரபாலா, கா. யாழ்ப்பாணத்துச் சாசனங்கள், இளங்கதிர்,
1959, பேராதனை, பக் 25-34 56. Ragupathy, P., The Early Settlement in Jaffna, Madras, 1987
16

ஈழத்தவர் வரலாறு
காணப்பட்டது. இது பிக்குணி என்ற தமிழ்ப்பதத்தின் இறுதிப்பதமாக அமையக்கூடும், என சொ.கிருஷ்ணராசா தெரிவித்தார். இது கி.பி.1ம், 2ம் நூற்றாண்டு தமிழ்நாட்டு வரிவடிவமுறையைத் தழுவியதாகவுள்ளது.
கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையிற் பயன்படுத்தப்பட்டுவந்த பிராமிச் சாசனங்களிலிருந்து தென்னிந்தியாவையொத்த அரசமுறைமை இங்கும் தோன்றியதை உறுதிப்படுத்தலாம். சாசனங்களில் காணப்படும் ஆய் (ஆய), வேள் (வேள) என்பன இலங்கையின் சிற்றரசர்கள் சூடிய பட்டங்களாகும். 'ள்' என்ற பிராமி எழுத்து தமிழ்மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தாகும். ஆய், வேள் என்ற சிற்றரசர்களைக் குறிக்கும் 40 இற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் அனுராதபுரம், களனி, வவுனியா, பெரியபுளியாலங்குளம், திருமலை, மட்டக்களப்பு, பூநகரி ஆகிய விடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கி.மு.3ம் நூற்றாண்டில், அனுராதபுரத்திற்குத் தெற்கிலும் வடக்கிலும் பல தமிழ்ச் சிற்றரசுகள் இருந்தனவெனக் கூறமுடியும்.*
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் பழைய திராவிட வடிவங்களான பருமக (பருமகன்/பெருமகன்) வேள், ஆய், பரத போன்றவை திராவிடக் கலாசாரத்திலிருந்து துளிர்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன. * இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்ந்த சத்தமங்கல கருணரத்தின, இலங்கையின் பழைய பிராமிக் கல்வெட்டுகளில் தென்னிந்தியத் தமிழ்ப்பிராமி எழுத்துக்களே கையாளப்பட்டிருந்தன எனக் காட்டியுள்ளார். அசோகன் காலப் பிராமி எழுத்துக்கள் கி.பி.1ஆம் நூற்றாண்டளவில் தான் இலங்கைக் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றன. இந்த இரு பிராமி எழுத்துக்களுக்கிடையிலான வேறுபாடுகளை இவர் எடுத்துக்காட்டுவதன் மூலம் தென்னிந்தியப் பிராமியின் பழைமை நிலையும் தெளிவாகப்பட்டுள்ளது. ° மேலும், ஈழத்தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் ஈழ, தமேட, தமேழ போன்ற பதங்கள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. " அண்மையில் பூநகரியில் கிடைத்த
57. வீரகேசரி வாரவெளியீடு, 11.04.93 58. புஸ்பரட்ணம், ப. மு.கு.கட்டுரை பக்.34 59. சிற்றம்பலம், சிக, வரலாறு- 9. பக்.20. 60. தனபாக்கியம், ஜி. முகுநூல், பக்.38 81. சிற்றம்பலம், சிக, மு.க கட்டுரை, பக்164
17

Page 17
ஈழத்தவர் வரலாறு
மட்பாண்ட ஒடுகளில் கிடைத்த ஈழ, ஈலா என்ற பிராமிய எழுத்துக்கள் *, திராவிட மக்களது குடியிருப்புக்களை நிறுவும் சான்றுகளாகும்.
2.3.3 சமய வழிபாடு
இலங்கையின் ஆதிமக்களான இயக்கர்கள் இயற்கை வழிபாட்டையும், நாகர்கள் நாகவழிபாட்டையும் சிவவழிபாட்டையும் கொண்டிருந்தனர். ' மகாவம்சம் தரும் தகவல்களுக்கு இணங்கப் பெளத்தமதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, இயக்கர், நாகர் என்போரது வழிபாட்டு முறைகள், மரவழிபாடு, லிங்கவழிபாடு, மற்றும் ஜைனம், பிராமணியம் ஆகிய மதக்
கருத்துக்கள் காணப்பட்டன என அறியலாம்."
பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் இந்துமதப் பெயர்கள் இந்த நாட்டில் பெளத்தமதம் கால்கொள்ளுமுன்னர் இந்துமதமே மக்களின் மதமாக விளங்கியதையும் இந்த இந்துக்களில் பெரும்பான்மையினர் பெளத்தர்களாக மாறியதையும் எடுத்துக்காட்டுகின்றன. பெளத்தம் இந்த நாட்டில் கி.மு.3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புகுத்தப்பட்டபோது, பெளத்தமதத்திற்கு அளிக்கப்பட்ட குகைத் தானங்களை எடுத்துக்காட்டும் பிராமி வடிவத்திலுள்ள கல்வெட்டுக்களிற் காணப்படும் இந்துப் பெயர்கள், பெளத்தர்களாக இவர்கள் மதம்மாறமுன்னர் இந்துக்களாக இருந்ததை எடுத்துக்காட்டியுள்ளன." கிடைக்கும் ஆதாரங்களில் இருந்து பார்க்கும்போது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது ஆகக் குறைந்தது கிறிஸ்துவுக்கு முற்பட்ட 6ஆம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட 3 ஆம் நூற்றாண்டுவரையுள்ள காலப்பகுதியில் இலங்கை மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடையே இந்துமத நம்பிக்கை இடையீடின்றி இருந்து வந்திருக்கின்றதென்பதை அறியலாம். *
4.
இயக்க வழிபாடு அக்காலத்தில் விரவியிருந்த இயற்கை வழிபாட்டின் ஒரம்சம் என்பது உறுதி. ஆரம்பத்தில் கட்டப்பட்ட தாதுகோபங்கள், அன்று
83. புஸ்பரட்ணம், ப. சங்ககால ஈழம் தமிழர் பிரதேசங்களில் ஒன்றா?
வெளிச்சம் - 1991, புரட்டாதி -ஐப்பசி, பக்.14 63. Paranavitana, S, Pre-Buddhist Religious Beleafs in Ceylon,
JRASCB XXXI, No 82, 1909, pop, 302-28 84 சிற்றம்பலம், சிக, வரலாறு 7, பக்.20, 65. குணசிங்கம், செ, கோணேஸ்வரம், பேராதனை, 1973, பக் 31
18

ஈழத்தவர் வரலாறு
இயக்க வழிபாடு போன்றன செல்வாக்குப் பெற்றவிடங்களில்தான் கட்டப்பட்டிருக்கலாம். கி.பி.4 ஆம் நூற்றாண்டில் யக்ஷ காலவேலன் கோயில் அமைந்திருந்த இடத்தில் தாதுகோபம் ஒன்று கட்டப்பட்டதென மகாவம்சம் கூறுகிறது. யக்ஷ மகேஜன் கோயில் கொண்ட இடத்தில்தான் ஈழத்தின் முதல் தாதுகோபமாகிய தூபராம கட்டப்பட்டதாகப் பரணவிதான குறிப்பிடுகிறார். *
இயக்க வழிபாட்டோடு நெருங்கிய ஒன்றுதான் நாகவழிபாடு. இந்தியாவுக்கு ஆரியர் வருமுன் நிலவிய தஷ்யுக்களின் (திராவிடரின்) வழிபாடுகள் இவை எனப் பேர்க்கசன் என்பார் குறிப்பிட்டுள்ளார். * இந்தியக் துணைக் கண்டத்திலும் இயக்கவழிபாட்டிற்கான ஆதாரங்களுள. இது பண்டைய ஆரியர் அல்லாத மக்கட்கூட்டத்தினரின் சுதேச வழிபாட்டுமுறை பிற்பட்ட இந்துமதக் கடவுள்களான சிவன், உமை, குபேரன் போன்றோரின் அம்சங்கள் பல மட்டுமன்றி, வழிபாட்டுமுறைகள், பக்தி மார்க்கம் போன்றனவும் இதனின்று வளர்ச்சி பெற்றவையே. * இயக்கர்கள் வழிபாடு ஆரியரால்லாதோர் வழிபாட்டுமுறை என்பதோடு, பிற்கால இந்துமதத்தில் முதற்றோன்றிய உருவச்சிலைகள் பலவும் பழைய இயக்கசிலைகளை ஒத்துக் காணப்பட்டன, என ஆனந்தக்குமாரசாமி குறிப்பிடுகிறார். ஈழத்தில் நிலவிய இயற்கை வழிபாட்டையும் உருவவழிபாட்டையும் யக்ஷ வழிபாடு எனப் பாளி நூல்கள் அழைத்தன. இந்து மதத்திலுள்ள லிங்க வழிபாடும் ஒருவகையில் இவ்வழிபாட்டைச் சேர்ந்ததுதான்." இயற்கை வழிபாட்டின் இன்னொரு அம்சமாகச் சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியனவும் வழிபடப்பட்டன. என்பதை ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுவதாகப் பரணவிதான குறிப்பிடுகிறார்." பெளத்தமதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே இந்த நாட்டில் சிவவழிபாடு நிலவியது எனக் கொள்ளலாம். பண்டுகாபயன், சிவலிங்கக்கோயில் ஒன்றைக் கட்டினான் என அறியக்கிடக்கின்றது. ‘சிவ என்று தொடங்கும் பெயரையும் ‘சிவ' என்று முடியும் பெயரையும் கொண்ட பலர் சாசனங்களிலிடம்பெற்றுள்ளனர். இவற்றிலிருந்து இந்துமதம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட இலங்கையில் ஒரு காலப்பகுதியிலாவது நிலவியது எனத் துணியலாம்.
66. சிற்றம்பலம், சி.க, பண்டைய ஈழத்து யக்ஷ நாக வழிபாடு,
சிந்தனை, 1983. தொகுதி, இதழ் 111, பக்.1-4-135 67. Fergusson, J.T., Tree and Serpent Worship in India, London, 1873 68. Coomarawawamy, A.K., The Yakeas, New Delhi, 1971 69. சிற்றம்பலம், சிக, பண்டைய ஈழயக்ஷ, நாக வழிபாடு,
சிந்தனை, 1983. தொகுதி 1,இதழ் 11, பக்123
19

Page 18
ஈழத்தவர் வரலாறு
தொல்லியற்றிணைக்களம் தொகுத்து வரிசைப்படுத்தி வெளியிட்ட சாசனங்களில்,63 சாசனங்களில் ‘சிவ என வருகின்றது."
ஈமச்சின்னங்கள், திராவிடப் பிராமிக் கல்வெட்டுகள், பண்டைய வழிபாட்டுமதம் முதலான ஆய்வுகளின் விளைவாக, இலங்கைத்தீவின் ஆதிமக்கள் திராவிடர் என்பது புலனாகின்றது. ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் இந்த ஆதித் திராவிடரே என்பது தொல்லியலாய்வாளரின் முடிவாகும்.
2.4 ஆரியர் (?) வருகை
சிங்கள வரலாற்றாசிரியர்கள், சிங்கள மக்கள் ஆரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் சிங்களமொழி ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் நிறுவமுயன்றுள்ளனர். ஆனால், மகாவம்சத்திலோ, சூளவம்சத்திலோ அவற்றை யொத்த வேறு நூல்களிலோ சிங்கள மக்களை ஆரிய மக்கள் என்று குறிப்பிட்டில்லை. இந்நூல்கள் திராவிடரைத் தமிழர், பாண்டியர், கேரளர், சோழர், கன்னடர்கள், நாயக்கர்கள் எனக் குறிப்பிட்டது போலவே, சிங்கள மக்களைச் சீகளர்கள் எனக் குறிப்பிடுகின்றன. " மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதை, பாண்டுகாபயன் கதை என்ற ஐதிகக்கதைகள் மூலம் ஈழத்தின் இன்றைய நாகரிக கர்த்தாக்கள் இலங்கைக்கு வந்தனரென விபரிக்கப்படுவது, இலங்கையில் நிகழ்ந்த குடியேற்றங்களைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் ஆரியர்களென நிறுவமுயல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவில்லை. அதற்குரிய சான்றுகள் எங்குமில்லை. பெளத்தமதத்தின் வருகை வடஇந்தியாவிலிருந்து நிகழ்ந்ததாகையால், சிங்கள மூதாதையினரின் வருகையும் வடஇந்தியப் பிரதேசங்களோடு இனங்காணப்பட்டு, அவர்கள் ஆரியரென வலிந்துரைக்கப்பட்டுள்ளன.
கி.மு.483 ஆம் ஆண்டு நிகழ்ந்த விஜயனதும் அவனது தோழர்கள் எழுநூறு பேரினதும் இலங்கை வருகைக்கு முன்னர், உண்மையான ஆரிய சேனாதிபதிகள் இலங்கைக்கு வந்துசென்றுள்ளனர். இராமன் என்ற ஆரியன்,
70. Paranavitana, S., Inscription of Ceylon, Colombo, 1970
71. குணசிங்கம், செ. மு.கு.நூல், பக். 27-31.
72. தனபாக்கியம், ஜி, வங்க இளவரசர் விஜயனின் வரலாறும், இலங்கையிற் சிங்கள இன
மொழி எழுத்துத் தோற்ற வளர்ச்சி நிலைகளும், மட்டக்களப்பு, 1989, பக்30
20

ஈழத்தவர் வரலாறு
இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவி சீதையை மீட்டுச் செல்வதற்காக இலங்கைக்கு வந்தான். பாரதப் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், அல்லியைக் கவர்ந்து செல்வதற்காக இலங்கையின் மேற்குக் கரையோர அரிப்புக்கு வந்தான். இயக்கப் பெண்ணான வள்ளியை மணம்முடிப்பதற்காக ஸ்கந்த என்ற ஆரியச் சேனாதிபதி, கதிர்காமம் (மாகம) வந்துசென்றான். “ஆனால் இலங்கைக்கு வந்த விஜயனையும் தோழர்களையும் ஆரியர் என பாளி நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. மெண்டிசும், பரணவிதானவும் அவர்பின் வந்தவர்களும் ஆரியராக்க முயன்றுள்ளனர்.
விஜயனின் கதையை நிரூபிக்ககூடிய தொல்லியற் சான்றுகள் எதுவுமில்லை. கிடைத்த சான்றுகள் வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களின் மூதாதையினர் இந்நாட்டிற்கு வரவில்லை என்பதையும், இந்நாட்டிற்கு நாகரிகத்தினை உருவாக்கியோர் தென்னிந்தியாவிலிருந்து ஈழம் புகுந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளன.
பெருங்கற்காலப் பண்பாடுபற்றி இலங்கையிற் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான்றுகள் இலங்கையின் நாகரிக வரலாறும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடவிந்தியத் தொடர்பால் ஏற்பட்டதென்ற பாரம்பரியக் கருத்தை முற்றாக நிராகரித்துள்ளன. ஈழத்தில் ஆதிக்குடியேற்றம் நிகழ்ந்ததாகப் பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் பகுதிகளை உற்றுநோக்கும் போது பெருங்கற்கால மக்களது குடியிருப்புக்களையே பாளி நூல்கள் விஜயன் கூட்டத்தினரின் குடியிருப்புகள் என அழைத்துள்ளமை தெளிவாகின்றது என சிற்றம்பலம் குறிப்பிடுவது ஏற்கத்தக்கது. எனவே, வடவிந்தியக் குடியேற்றத்திற்குப் பதிலாக தென்னிந்தியக் குடியேற்றமே நடந்ததென்பதும், இம்மக்கள் அப்போது இங்கே காணப்பட்ட கற்கால மக்களின் கலாசாரத்தின்மேல் தமது கலாசாரத்தைக் திணித்தனர் எனவும் கொள்ளலாம். இங்கு காணப்பட்ட கற்கால மக்களே பாளி நூல்களில் இயக்கர்கள், நாகர்கள் என அழைக்கப்பட்ட அமானுஷ்யர்களாவர். எனவே ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகின்றது."
73. செங்கையாழியான், குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம்.1992 ’ 74 சிற்றம்பலம், சி.க, மு, கு.கட்டுரைகள் பலவும்
21

Page 19
ஈழத்தவர் வரலாறு
சிங்கள விஜயனைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த சீகளர், இங்கு வாழ்ந்த ஆதித்திராவிடரின் பிரதேசங்களில் குடியேற்றங்களை நிறுவி நிலைபெற்றதோடு, அம்மக்களுடனும் கலப்பினை ஏற்படுத்திக்கொண்டனர். பெருங்கற்காலத்தில் ஈழத்திலிருந்து வளர்ந்த மொழிகளாக எலு, தமிழ் என்பன விளங்கின. இயக்க மக்கள் எலுமொழியையும், நாகர்கள் தமிழையும் பேசினர். எலுமொழி பேசிய இயக்க மக்களுடன் தற்காலச் சிங்களமக்களின் மூதாதையினர் கலந்து பெளத்தத்திற்குமாற, பாளிமொழியின் தாக்கம் ஏற்பட்டுச் சிங்களமொழி உருவாகியது என்பது அறிஞர்களின் கருத்தாகும். வடநாட்டிலிருந்து வந்த பெளத்தமதக் கலாசாரத்தினால் எலுமொழி பேசிய திராவிட மக்களாகிய சிங்கள மக்களின் கலாசாரம் தனியான பாதையில் தமிழ்இந்து கலாசாரத்தை விட்டு விலகிச்சென்றது எனச் சிற்றம்பலம் கருதுகிறார்."
எனவே, பெளத்தமதத்தின் வருகைக்கு முன் இலங்கைத்தீவில் திராவிட ஆதிக்குடிகள் வாழ்ந்துவந்தனர். கி.மு.483 இன்பின் அலையலையாக நிகழ்ந்த தென்னிந்தியக் குடியேற்றங்களும், சிலவிடத்து வடவிந்தியக் குடியேற்றங்களும் பெளத்தத்தின் வருகையும் பாளிமொழியும் புதியதொரு சிங்கள- பெளத்த கலாசாரத்தைத் தென்னிலங்கையில் உருவாக்கக் காரணமாயின. அதேவேளை தமிழ்-இந்து கலாசாரம் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நிலைபெற்றது. ஆகவே, இலங்கைத்தீவு மொழிவாரியாக இரண்டு இனங்களுக்குரியதாக விளங்கி வருகின்றது.
75. சிற்றம்பலம், சி.க, தமிழ் மக்களின் பாரம்பரியம் பிரதேசம்,
முத்தமிழ்விழா மலர், 1991, பக், 13 r
22

2 GDJØTGD/TiogOJg5 uLu á5/TGDéis
தமிழ் மன்னர்கள்
(கி.மு.483 ஆம் ஆண்டு, தாமிரபர்ணியில் வந்திறங்கிய விஜயனும் அவனது தோழர்களும் தென்னிலங்கையில் வாழ்ந்த இயக்கத்திராவிடரை வெற்றிகொண்டு பல குடியேற்றங்களை நிறுவிக் கொண்டனர். தாமிரபர்ணியின் இயக்ககுலத் தலைவியாக விளங்கிய குவேனி என்பவள், அதற்குத் துணைபோயினள். விஜயனும் தோழரும் இலங்கைக்கு வந்து குடியேற்றங்களை அமைத்தவிதம் மகாவம்சத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
2.1 சிங்ஹல விஜயன் வருகை
வங்கதேச இளவரசி ஒருத்தி அரண்மனையை விட்டு வெளியேறி மகதநாடு நோக்கிச் சென்ற வணிகக்குழுவுடன் பயணப்பட்டாள். காட்டுவழியில் எதிர்ப்பட்ட சிங்கம் ஒன்று வணிகர்களைக் கொன்றுவிட்டு அவளைக் கவர்ந்து சென்று, இணைந்தது. அதனால், சிங்கபாகு, சீகசிவிலி என இரட்டைப்பிள்ளைகள் பிறந்தனர். சிங்கபாகுவுக்குப் பதினாறு வயதானபோது அவன் தந்தையான சிங்கத்தைக் கொன்று தனக்குரிமையான வங்கநாட்டிற்கு மன்னனானான். தனது மனைவியாகத் தன் சகோதரியை மணந்து கொண்டான். சிங்கபுர என்ற ஒரு நாட்டைத்தாபித்துக் கொண்டான். அவர்களுக்குப் பதினாறு தடவைகளில் இரட்டையராக முப்பத்திரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில்
மூத்தவன் விஜயன் என்பவனாவான். இரண்டாமவன் சுமித்தன்.
விஜயன் மிக்க கொடூரமான நடத்தைகளையுடையவன். அவனும்
அவனது தோழர்களும் தமது நாட்டு மக்களுக்கு மிகுந்த இன்னல்களைப்
l. The Mahawamsa, Translated into English by Wilhelm Geiger,
Colombo-1950 Chapter VI: I-74 VIII:I-28 Pages 51 to 61.
23

Page 20
ஈழத்தவர் வரலாறு
புரிந்தனர். இவனுடைய கொடிய செயல்களைக்கண்டு கோபமுற்ற நாட்டு மக்கள் அவனைக்கொன்று விடுமாறு மன்னனை வேண்டினார்கள். மன்னன் அவனைப்பலமுறை எச்சரித்தும் ப்யனற்றுப் போகவே, விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் பிடித்து, அவர்களது தலையில் அரைப்பங்கு தலைமயிரை வழித்து, கலமொன்றிலேற்றி கடல்வழி அனுப்பி விட்டான்.
அவர்களின் கப்பல் இலங்கையின் தாமிரபர்ணிக் கரையை வந்தடைந்தது.
விஜயனின் கதை முற்றுமுழுதான கட்டுக் கதையாகும். விலங்கு ஒன்றுக்கும் மனிதமகள் ஒருத்திக்கும் பிறந்த மன்னன் ஒருவனின் வழிவந்தவர்களாக விஜயனைக் காட்டுவதும், சிங்கள மக்களின் பரம்பரை அவ்வாறான சிங்கம் ஒன்றின் வழியானது என்று கூறுவதும் உண்மையில் சிங்கள மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகாது. விஜயனின் கதை சிங்கள் மூதாதையினரின் வருகையைக் குறிக்கும் குறியீடாகக் கருதலாம். எனினும், இக்கட்டுக்கதையின் தோற்றத்திற்குப் பெளத்த மத ஜாதகக் கதைகளே கருப்பொருளாக அமைந்தனவென வரலாற்றிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். *
தாமிரபர்ணியில் வந்திறங்கிய விஜயன், இயக்கத்தலைவியான குவேனியை மணந்துகொள்கிறான். இவர்களது திருமணவிழா இயக்க மக்களது சிறிஸ்சவத்து நகரில் நிகழ்ந்தது. திருமணக் கொண்டாட்டத்திற்கென வந்திருந்த இயக்கர் அனைவரையும் குவேனியின் ஒத்தாசையுடன் விஜயனும் தோழர்களும் அழித்தொழித்தனர். குவேனி என்ற திராவிட மூதாதைப்பெண் தனது காதல் போதையால் செய்த தவறால் இயக்க மக்களில் ஒருபகுதியினர் அழிந்தொழிய நேரிட்டது. *
குவேனியின் ஒத்தாசையுடன் இயக்க இன அழிப்பு நிகழ்ந்துபோனது. அதன்பின்னர் விஜயனுடைய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
2. The Mahawamsa, p.36-BITổio, gefasstyti VIII : Surf : 42 LIėsGish :58
3. Mendis.G.C., 'The Vijayan Legend'
Paranvitana Felictation Volume, Colombo-1965. Pages 263-279.
4. செங்கை ஆழியானின் ' குவேனி என்ற வரலாற்று நாவலில் இவை நன்கு
விபரிக்பபட்டுள்ளன. குவேனி, தமிழ்த்தாய் வெளியீடு, யாழ்ப்பாணம்-1992
24

ஈழத்தவர் வரலாறு
இடத்திற் குடியேற்றங்களை அமைத்து அக்குடியேற்றங்களுக்குத் தத்த்மது பெயர்களை இட்டுக் கொண்டனர். அனுராத என்ற அமைச்சனால் மல்வத்து ஒயாவுக்கு (அருவியாறு/கதம்பநதி) அண்மையில் அமைக்கப்பட்ட குடியேற்றம் அனுராதகம எனப்பட்டது. அனுராதகமத்திற்கு வடக்கே கணதற ஒயாவிற்கு அண்மையில், உபதிஸ்ஸ என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம், உபதிஸ்ஸகம எனப்பட்டது. கலாஒயா (கொணாநதி) முகத்துவாரத்திற்கு அண்மையில் உறுவெல என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம் உறுவெலகம எனப்பட்டது. விஜித என்ற அமைச்சனால் அமைக்கப்பட்ட குடியேற்றம் விஜிதகம எனப்பட்டது. உண்மையில் இந்தக்குடியேற்றங்கள் நிறுவப்பட்ட பகுதிகள், முன்னரேயே சிறந்த குடியிருப்புகளாக விளங்கியுள்ளன என்பதும், ஈழத்தின் நாகரீகத்திற்கு வித்திட்ட திராவிட மக்களது சிறப்புமிக்க வதிவிடங்கள் அவை என்பதும் தொல்லியலாய்வுகள் மூலம் இன்று
நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே, சிங்ஹல விஜயனே இலங்கையின் அடையாளங் காணப்படும் முதலாவது மன்னனாக முடிபுனைந்து கொண்டான். முடிசூடிக் கொள்ளுமுன் தென்னிந்தியாவின் பாண்டிநாட்டிலிருந்து தனது அரசியாகப் பாண்டி இளவரசி ஒருத்தியையும், தனது எழுநூறு தோழர்களுக்கும் எழுநூறு பாண்டிய இராச்சியப் பெண்களையும் வரவழைத்துக் கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது. "சிங்கள நவீன வரலாற்றாசிரியர்கள் விரும்புமாப்போல விஜயனும் அவனது தோழர்களும் இந்தியாவின் வடபுலங்களிலிருந்து இலங்கையில் குடியேறினர் எனக் கொண்டாலும், அவர்கள் வரும்போது இத்தீவில் இருந்தவர்களும், அவர்கள் வந்த பின்னர் வருவிக்கப்பட்டவர்களும் திராவிடர் என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பாண்டிநாட்டு இளவரசியுடன் வந்த 700 தோழியரும் விஜயனின் 700 நண்பர்களை மணந்ததாக மகாவம்சம் கூறும் செய்தியை நோக்கும்போதும், இவர்களே இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள் எனப்பாளி நூல்கள் கூறுவதை அவதானிக்கும்போதும், ஆதி ஈழத்து நாகரிக வரலாற்றில் தமிழ் மக்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் புலனாகின்றது. '
5. The Mahawamsa, (yp.e-gyrai). SoglassiTJJ tid : VIII ; GAuf: 43-45, Luở35 iib : 58.
6. The Mahavamsa, (yp-&35-45 mtai, əgəlğast grib : VII, 6) sırf 49- 50. İl uğkəsib : 59.
7. சிற்றம்பலம் சிக, ஈழத்தமிழர் வரலாறு, தொகுதி 1, இந்துக்கல்லூரி, சாவகச்சேரி - 1994 பக் 5-6
25

Page 21
ஈழத்தவர் வரலாறு
22 நாக சிற்றரசுகள்
இயக்ககுழுக்கள் தமக்குள் பகைத்துக்கொண்டு பிரிவுற்று நின்றதால், தென்னிலங்கை சிங்ஹல விஜயனிடம் பறிபோனது. ஆனால் அவர்கள் வடக்கே நாகதீபத்தைக் கைப்பற்றவோ அங்கு தமது குடியேற்றங்களை நிறுவவோ இயலாது போய்விட்டது. விஜயன் கி.மு.483 இலிருந்து கி.மு.445 வரை இலங்கையின் மன்னனாக விளங்கினான் என மகாவம்சம் கூறுகின்றது. விஜயனின் வருகைக்கு முன்னரும், விஜயனின் காலத்திலும் ஆதிகால இலங்கையில் பல சிற்றரசுகள் இருந்துள்ளன என்று துணியலாம். ஏற்கனவே, முதலத்தியாயத்தில் விபரித்ததுபோல, தென்னிந்தியாவில் கி.மு.1000 ஆண்டளவில் தோற்றம் பெற்ற திராவிட மக்களது பெருங்கற்காலப் பண்பாட்டின் தொல்லியற் சின்னங்களான ஈமத்தாழிகள், பிராமியக் கல்வெட்டுக்கள் இதனை நிரூபிக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட பிராமியக் கல்வெட்டுகளில் வரும் பருமக (பருமகன்) கமணி, அய (ஆய்) வேள (வேள்) என்பன குறுநிலத்தலைவர்களையே குறிக்கின்றனவாம்.
இலங்கையின் ஆட்சிமையமாக அனுராதபுரத்தையே மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிக்கின்றன. அதே நூல்கள் அனுராதபுரத்திற்கு வடக்கேயும் தெற்கேயும் இருந்த சிறு இராச்சியங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளன. உதாரணமாக இலங்கைத்தீவின் வடபாகத்தில் கி.மு.6 ஆம் நூற்றாண்டில் நாகதீவு (நாகதீபம்) எனும் ஒர் அரசு விளங்கியது. " நாகதீவின் மன்னர்களாக மகோதரன், குலோதரன் என்போர் விளங்கியுள்ளனர். ‘நாகதீபத்தில் சிறப்பான சிற்றரசுகளாக கோகர்ணம் (திருகோணமலை), மகாதித்த (மாந்தை), மணிபல்லவம் (நயினாதீவு), நாவலந்தீவு (வலிகாமம்), கரியாலை, நாகபடுவான் முதலியன விளங்கியுள்ளன. திரிகூடம், இலங்காபுரி, கோகர்ணம் எனப் பலபெயர்களால் திருகோணமலை அழைக்கப்பட்டு வந்துள்ளது. மாந்தை என்று புகழ்பெற்ற மாதோட்டம் மன்னாரிலுள்ளது. விஜயனின் அரசியும் 700 தோழிகளும் வந்திறங்கிய துறைமுகமாக மாந்தை குறிப்பிடப்படுகின்றது. பாளி நூல்கள் இதனை மாதித்த (மகாதீர்த்தம்) என அழைக்கின்றன." மகாதித்த
8. The Mahawamsa, மு.கு.நூல், அதிகாரம் : 1. வரி : 47, பக்கம்: 6. 9. The Mahawamsa, (p.g.gifroi, sigism if b : I, Gulf: 48-51, Lud: 6 10. The Mahawansa, cypg.giftei, gigs/riflis VII, 58: Luisti : 60
26

ஈழத்தவர் வரலாறு
என்றால் பெருந்துறை எனப் பொருள்படும் எனச் சிற்றம்பலம் கருதுவார். " மணிபல்லவம் பற்றிய சிறப்புக்கள் தமிழிலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. * வளைவணன் என்ற நாகமன்னன் ஆண்டநாடு இதுவென அறியப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டின் இன்றை வலிகாமம் பகுதி முன்னர் ஜம்புத்தீவு என அழைக்கப்பட்டது. ஜம்புத்தீவு என்றால் தமிழில் அதனை நாவலந்தீவு" எனலாம். தீவு என்ற பெயருக்கேற்ப வலிகாமம் முன்பு நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருந்தது. கிழக்கே உப்பாற்றையும் தொண்டமானாற்றையும் பிரித்து காலகதியில் நிலமேடு ஒன்று தோன்றியது என்பதைப் புவிச்சரிதவியல் அடிப்படையில் நிறுவமுடியும். இந்த நாவலத்தீவிலேயே மகாவம்சம் குறிப்பிடுகின்ற ஐம்புக்கோளப்பட்டினம் என்ற துறையுள்ளது. இதனூடாகவே சங்கமித்தை வெள்ளரசுக்கிளையுடன் ஈழம் புகுந்தாள்." இன்றைய வன்னிப்பெருநிலப்பரப்பிலமைந்துள்ள பூநகரிப்பிரதேசக் கரியாலை நாகபடுவான், நாகபடுவான்வில்லு, குருந்தன்குளம் முதலான பகுதிகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் புகழ்பெற்ற குடியேற்றங்களாக விளங்கியுள்ளன. பூநகரியில் அண்மையில் நிகழ்ந்த தொல்லியலாய்வுகள் இதனை நிரூபிக்கும் சான்றுகளைத் தந்துள்ளன. ஆட்சிக்காலத்திலும், அதற்கு முன்னரும் நாகதீபம் என்றழைக்கப்பட்ட வடபிரதேசத்தில் பல குறுநில அரசுகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று துணியலாம்.
15
எனவே, விஜயனின்
தாமிரபர்ணிப்பிரதேசமடங்கிய தென்னிலங்கை ஆள்புலத்தை விஜயன் கி.மு.483 இலிருந்து கி.மு.445 வரை ஆண்டான். அவனுக்குப்பின் பண்டுவாசுதேவா (கி.மு.444 -414), அபயன் (கி.மு.414-394), பண்டுகாபயன் (கி.மு. 377-307), முத்துசிவன் (கி.மு.307-247) ஆகிய மன்னர்கள் ஆட்சி
11. சிற்றம்பலம் : சி.க, தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம்
முத்தமிழ் விழாமலர் - 1991 பக்கம் : 163 13. மணிமேகலை, சுவாமிநாத ஐயர் பதிப்பு,
சென்னை: 1956, காதை 9, வரி 21. காதை 11, வரி 21-26. 13. மணிமேகலை, மே.கு.நூல். காதை :35 வரி 12-13
காதை 38 வரி, 180 14. The Mahawamsa, cyp.e.gsfrei, gjëlstutub, XIX, 6ufl: 93 uë, : 130 15. புஸ்பரத்தினம்.ப, வடவிலங்கையில் சிங்கைநகர்,அருட்திருஜி.ஏ.பிரான்சிஸ் யோசெப்
அடிகளார் மணிவிழாச்சபை வெளியீடு, 1993
27

Page 22
ஈழத்தவர் வரலாறு
செய்துள்ளனர். " அதன் பின்னர் ஈழத்தின் புகழ்மிக்க மன்னனான தேவநம்பியதீசன் (கி.மு.247 -207) அரசகட்டிலேறினான்.
2.3. தேவநம்பியதீசன்
ஈழத்தின் வரலாற்றுக்காலம் தேவநம்பியதீசனின் ஆட்சியோடு ஆரம்பமாகின்றது. அனுராதபுரத்தினைக் தலைநகராகக் கொண்டு இம்மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒற்றையாட்சி அமைப்பு வட கிழக்கு மாகாணங்கள் உட்பட ஈழம் முழுவதும் அனுராதபுர அரசின் இறுதிக்காலம் வரை (கி.பி.10 ம் நூற்றாண்டுவரை) நீடித்திருந்தது எனப்பாளி நூல்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் பாளிநூல்களை நுணுகி ஆராயும் போது வரலாற்றுக்காலத்தின் ஆரம்பத்தில் பல சிற்றரசுகள் காணப்பட்டதாகக் தெரிகிறது. இத்தகைய சிற்றரசுகள் பல நாடளாவிய விதத்தில் காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன."
தேவநம்பியதீசன் காலத்தில் இலங்கையின் வடபெரும்பகுதி உத்தரதேசம் என்றும், தென்பெரும்பகுதி தக்கன தேசம் என்றும் வழங்கலாயிற்று. நாகதீவு என்ற பெயர் யாழ்ப்பாணக்குடா நாட்டிற்குரியதாக ஆள்புலச்சுருக்கமடைந்தது. தேவநம்பிய தீசன் காலத்தில் பல சிற்றரசுகள் வடக்கேயும் தெற்கேயும் நிலை பெற்றிருந்தாலும், அவை அனுராதபுர மன்னனின் ஆதிக்கத்தை ஏற்றிருந்தனவென உய்த்துணர முடிகின்றது.
தேவநம்பிசதீசன் காலத்திலேயே இந்தியாவிலிருந்து பெளத்த மதத்தூதுவர்கள் இலங்கைக்கு வந்தனர். அசோகனின் தர்மத் தூதை எடுத்துவந்த மகிந்ததேரர், வெள்ளரசுக்கிளையை எடுத்துவந்த சங்கமித்ததேரி, முதலானோர் உத்திரதேசமூடாகவே இலங்கைக்கு வந்தனர். சங்கமித்ததேரி, ஜம்புக்கோளப்பட்டினமூடாகவே இலங்கைக்கு வந்துள்ளாள்."
16. Geiger.W., The Mahawamsa- Introduation,
Colombo-1950- Pages XXXVI
17. சிற்றம்பலம். சி.க. தமிழ் மக்களின் பாரம்பரியப்பிரதேசம்
முத்தமிழ் விழாமலர்: 1991 பக்கம் 165.
18. The Mahawamsa, (yperTesi, Joyé) : xix Gauf? : 23, Ludi.30
28

ஈழத்தவர் வரலாறு
அனுராதபுரமன்னனை நாடி, வடஇலங்கையூடாக நிகழ்ந்த வருகைகள் தடையின்றி நிறைவேற, அப்பிரதேசமும் அனுராதபுர மன்னனின் ஆதிக்கத்திற்குள் இருந்திருக்க வேண்டுமெனக் கொள்வதில் தவறில்லை. எனவே தான் தேவநம்பியதீசன் ஜம்புக்கோளப்பட்டினத்தில் ஸமுத்த-பண்ணை
ஸாலா என்ற மண்டபத்தையும் ஜம்புகோள விகாரையையும் கட்டுவிக்க முடிந்தது. *
தேவநம்பியதீசன் காலத்தில் தென்னிலங்கையில் பலசிற்றரசுகள் காணப்பட்டுள்ளன. கல்யாணி (களனியா) உதிய என்பவனின் அரசாகவும், உரோகனைப்பகுதியில் (காஜரகமம்), சண்டனாகம ஆகிய விடங்கள் சத்திரிய
வம்சத்தினரின் சிற்றரசுகளாகவும் விளங்கியுள்ளன. "
காஜரகமத்தைக் கதிர்காமமென கெய்கரும், சண்டனாகமத்தைக் கல்லோயாப்பகுதி என சிற்றம்பலமும் இனம் காண்பர்.* கிழக்கிலங்கையில் சேருவில, சோம ஆகிய இடங்களில் முறையே, சிவ, அபய என்போரால் ஆட்சி செய்யப்பட்ட இரு சிற்றரசுகள் இருந்துள்ளன எனப் பிராமிக்கல்வெட்டுக்ளிலிருந்து அறிய முடிகின்றது. * இச்சிற்றரசுகள் தமிழ்க்குறுநில மன்னர்களுடையனவாம்.
எவ்வாறாயின் இலங்கையின் பெருமன்னனாகத் தேவநம்பியதீசன் விளங்கியுள்ளான். ஈழத்து வரலாற்றில் பெளத்தமதத்தைக் கைக்கொண்டு தன் மக்களையும் பெளத்தத்தைத்தழுவ வைத்தமையால் புகழ்ந்துரைக்கப் படுகின்றான்.
2.4. சேனன், குத்திக்கன்.
தேவநம்பியதீசன் வலிமை மிக்க மன்னனாக விளங்கியமையினால் நாட்டில் அமைதி நிலவியது. அதனால் பெளத்தமதம் நாடெங்கும் பரவமுடிந்தது. நாகதீவிலும் (யாழ்ப்பாணக்குடாநாடு) பெளத்தம் பரவியது. தமிழ்ப்பெளத்தர்கள் உருவாகினர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடையில் காணப்படும் பெளத்த சின்னங்களும், வல்லிபுரப்பகுதியில் கிடைத்த பெளத்த சின்னங்களும் நாகதீவில்
19. The Mahawamsa, மு.கு:நூல், அதிகாரம் XIX 26,27, பக்:130
0. The Mahawamsa, முகுநூல், அதிகாரம்,XIX வரி:54-55 பக்கம் 132 1. சிற்றம்பலம். சிக, முகுநூல்-பக்கம்:15 2. Paramavitana.S.Early Brahmi Inscriptions, Colombo -1970
29

Page 23
ஈழத்தவர் வரலாறு
தமிழ்ப் பெளத்தர்கள் இருந்தமையைப் பறைசாற்றுகின்றன. கந்தரோடையில் கிடைத்த பிராமி எழுத்து கொண்ட பாத்திரமொன்றில் 'ததஹ பத-தத்தவின் பாத்திரம் என்றும், * இன்னொன்றில் குணி என்றும் * குறிப்புள்ளது.
தேவனம்பியதீசன் காலத்தில் தமிழ்ச்சிற்றரசுகள் திறைசெலுத்தி வந்தன என ஊகிக்கலாம். இம்மன்னனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருந்தன. கதிர்காம, சண்டானகமச் சத்திரிய மன்னர்கள், தேவனம்பியதீசன் பணிப்பை ஏற்று புனித அரசமரக்கிளை நாட்டல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அரசமரக்கிளைகளை தத்தமது அரசிலும் நாட்டியுள்ளனர்.* கல்யாணிப்பிரதேச சிற்றரசு தேவனம்பியதீசனின் சகோதரன் (உதிய) என்பவனால் கைப்பற்றப்பட்டது. * காஜரகமம், சண்டனாகமச் சத்திரிய மன்னர்களைத் தேவனம்பியதீசனின் சகோதரன் மாகாநாகன் அழித்துத் தனதாட்சியை நிறுவியுள்ளான்." இவற்றிலிருந்து தேவனம்பியதீச மன்னனின் ஆதிக்கவிரிவு புரியும். நாகதீவு (யாழ்ப்பாணக் குடாநாடு) இந்த மன்னனின் ஆதிக்கத்தை ஏற்றிருந்துள்ள போதிலும், உத்தரதேசத்தின் குறுநில மன்னர்கள் சிலர் இதனால் வெறுப்படைந்திருக்க வேண்டும். அனுராதபுர மன்னனின் ஏகாதிபத்தியச்செருக்கும், அதற்கு மேலாக இந்துக்களாக விளங்கிய உத்திரதேசத்து மக்களைப் பெளத்தராக்கும் முயற்சியால் நாகதீவு மக்களில் ஒரு பகுதியினர் பெளத்தராகியமையும் வெறுப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்துவாக விளங்கிய தேவனம்பியதீசனின் மேலாதிக்கத்தை ஏற்ற இக்குறுநில மன்னர்களால், பெளத்த தேவனம்பியதீசனின் வல்லாதிக்கத்தை எற்க முடியாது போனது. அவ்வாறு கிளர்ந்தவர்களில் சேனன், குத்திக்கன் என்ற இரு சிற்றரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
23. இந்திரபாலா.கா. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும்
இளங்கதிர், பேராதனை-1969/70. பக்கம் :14
34. வீரகேசரி, 1995 25. The Mahawamsa, (psgrgi, sorb: XIX 61-63 26. Gunawardana. P.A.L.H. An early Plase in the evalution of political
Institutions in Ancient Srilanka, The Sri Lanka Journal of ets Hunarities, Vol: VIII, No 142, 1982
27. Paranavitana. S. (Ed) Histry of Ceylon, Vol: 1, Part,l,
Colombo -1959 Chapter:3
30

ஈழத்தவர் வரலாறு
தேவனம்பியதீசனின் மரணத்தின் பின்னர் பல தசாப்தங்களாக வட விலங்கையைத் தம்மாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கச் சிங்கள மன்னர்களால் முடியவில்லை. மயூரசாம்ராச்சியத்தின் மாமன்னன் அசோகனின் படைப்பலமும் செல்வாக்கும் தேவனம்பியதீசனுக்கு இருந்ததால், தேவனம்பியதீசன் கால உத்திரதேசத்துக்குறு நில மன்னர்களும் உரோகணப் பிரதேசச் சிற்றரசர்களும் அனுராதபுர மன்னனின் ஆணையை ஏற்றிருந்தனர். தேவனம்பியதீசனின் மரணத்தின் பின்னர் இந்நிலையில் மாற்றம் காணப்பட்டது. தேவனம்பியதீசன் பெளத்தமதப்பரவலிற்கும், விகாரைகளைக் கட்டுவதிலும், தன் செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டான். இராணுவப் படைப்பலத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அதனால் இந்த மன்னனின் மறைவின் பின்னர் உத்தரதேசத்துத் தமிழ் மன்னர்கள் அனுராதபுர அரசின் ஆணையை ஏற்காததோடு, அனுராதபுரத்திற்கு எதிராகத்தண்டெடுக்கவும் தலைப்பட்டனர்.”*
தேவனம்பியதீசன் கி.மு.247 தொட்டு கி.மு.207 வரை ஆட்சிபுரிந்தான். அவனின் பின்னர் உத்தியன் (கி.மு.207-197), மகாசிவன் (கி.மு.197-187), சூரத்தீசன் (187-177) ஆகிய மன்னர்கள் அரசகட்டிலிலேறினர். சூரத்தீசன் என்ற சிங்கள மன்னன் அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆட்சி செய்த காலவேளையில், உத்தரதேசத்துக் குறுநில மன்னர்களான சேனன், குத்திக்கன் என்போர் அனுராதபுரத்திற்கு எதிராகப் படை நடாத்திச் சென்றுள்ளனர். அனுராதபுர மேலாதிக்கத்திற்கு எதிராக நிகழ்ந்த முதலாவது தண்டெடுப்பாக இது வரலாற்றிலுள்ளது.
இவர்கள் இருவரும் எங்கிருந்து படை நடாத்தினர்? உத்திரதேசத்தின் பூநகரிப்பகுதியில் செழிப்பான ஓர் தமிழரசு நிலவியிருந்துள்ளது.* அனுராதபுரத்தில் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களின் சாதனைகளை மறைத்தும்
திரித்தும் கூறிய மகாவம்சம் இவர்களை ஆக்கிரமிப்பாளர், படையெடுப்பாளர்,
27. History of Ceylon, Part 1, Chapter IV, Page: 144
28. வரலாற்றாசிரியர் ப.புஸ்பரட்ணத்தின் பல கட்டுரைகளில் இது நிறுவப்பட்டுள்ளது.
31

Page 24
ஈழத்தவர் வரலாறு
சோழமரபில் வந்தவர்கள், * அக்கரையைச் சேர்ந்தவர்கள் எனக்கூறுகிறது. இதற்கு இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்குமிடையே வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நெருங்கிய வர்த்தகக் கலாசாரத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இதைப் பாளி இலக்கியங்கள் மட்டுமன்றி சங்ககால இலக்கியங்களும், இலங்கை-தென்னிந்தியப் பிராமிக் கல்வெட்டுகளும், தொல்பொருட் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரையான தமிழ்நாட்டு வரலாற்று மூலகங்களில் இலங்கையுடனான அரசியல் தொடர்பு பற்றியோ, படையெடுப்புகள் பற்றியோ எதுவித குறிப்பும் காணப்படவில்லை. அத்துடன் அத்தகைய ஒரு படையெடுப்பை இலங்கை மீது மேற்கொள்ளக் கூடிய அளவுக்குப்பலமான அரசுகள் தமிழ்நாட்டில் இருந்ததாகக் கூறுவதற்கும் இல்லை. மேலும், அனுராதபுரத்தில் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களின் பெயர்களுக்கும் தமிழ்நாட்டில் ஆட்சிசெய்த மன்னர்களின் பெயர்களுக்குமிடையே அதிக ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை. இதனால் அனுராதபுரத்தின் மீது படையெடுத்த தமிழர்கள் அனைவரும் தமிழ் நாட்டிலிருந்து படையெடுத்தார்களா அல்லது இலங்கையின் இன்னொரு பிராந்தியத்திலிருந்து படையெடுத்தார்களா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதொன்றாகும். தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்த பல மன்னர்களே பின்பு அனுராதபுர மன்னர்களாக மாறியதைப் பாளி நூல்களிலிருந்து அறிய முடிகின்றது. * அதேபோல வடவிலங்கையில் சிற்றரசர்களாகவிருந்த சேனன், குத்திக்கன், எல்லாளன் போன்ற தமிழ்
மன்னர்கள் பின்பு அனுராதபுர மன்னர்களாக மாறியதை நிறுவ வேண்டும்.
பூநகரிப் பிரதேசம் உத்தரதேசத்தில் முதன்மையான ஒரு அரசாக விளங்கியுள்ளது என்பதற்கு அண்மையில் இப்பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட
பிராமிச்சாசனங்கள் சான்றாகின்றன. பூநகரிப்பிராமி சாசனம் பற்றிக்
39. "ஆக்கிரமிப்பாளர்களைச் சோழராகக் குறிப்பிடும் மகாவம்சம் அவர்களைப் பாண்டியர்களாகக் கூறுவதில்லை. காரணம், சிங்கள மரபின் தாயாதிகள் பாண்டிய و . . " இளவர்சி ஒருத்தியும் 400 பாண்டியப்பெண்களுமாவர் என்பதினாற் போலும் 30. புஸ்யரட்ணம்...இலங்கையில் தமிழ்மன்னர்களின் ஆட்சி- ஒரு நோக்கு நினைவுபேருரை அமரர் நீா.கிருஸ்ணானந்தன், பொருளிதழ்-3 பக்கம் :4
32

ஈழத்தவர் வரலாறு
கருத்துத்தெரிவித்த தமிழ்நாட்டின் முதன்மைச் சாசனவியலாளரான ஐராவரம் மகாதேவன் இச்சாசனம் கி.மு.3 ஆம் கி.மு.2 ஆம் நூற்றாண்டில் சங்ககாலத்தை ஒத்த தமிழ்வேளரின் ஆட்சி வடவிலங்கையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது என்றார். “ இப்பிராந்தியத்தில் ஒர் இராசதானி இருந்ததெனக் கருதக்கூடிய கட்டிட அழிபாடுகள் உள்ளன. இதனை யாழ்ப்பாணத்திற்கு முன்னோடியான இராசதானியெனப் புஸ்பரட்ணம் கருதுகிறார்.*ஈழ, ஈலா என்ற பிராமி எழுத்துக்களைக் கொண்ட இரு மட்பாண்ட ஒடுகள் பூநகரியில் கண்டெடுக்கப்பட்டன. இவை புராதன ஈழம் என்ற இடப்பெயர் தொடர்ந்தும் பூநகரிப்பிரதேசத்திற்கு ஈழவூர் என இடப்பட்டு பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்த அனுராதபுர அரசின் மீது படையெடுத்த குறுநில மன்னர்கள் எனக்கூற முடியும்.
* எனவே, சேனன், குத்திக்கன் என்போர்
எனவே, அனுராதபுரத்தைச் சூரத்தீசன் ஆண்டபோது, சேனன், குத்திக்கன் ஆகிய குறுநில மன்னர்கள் ஒருங்கிணைந்து, உத்திரதேசத்திலிருந்து படைநடாத்தி வெற்றி கொண்டனர். இவர்கள் இருவரும் தமிழர்கள் எனவும், குதிரை வர்த்தகர்கள் எனவும், பெரும் சேனையுடன் வந்து சூரத்தீசனை வென்று, 22 ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர் எனவும் மகாவம்சம் கூறுகின்றது. * கி.மு.177 இலிருந்து கி.மு. 155 வரை இலங்கையில் சேனன், குத்திக்கன் ஆகிய தமிழ் மன்னர்களது ஆட்சி நிலைத்திருந்தது. கதம்பநதியை (அருவியாறு) அனுராதபுரநகருக்கு அருகாகப் பாய்வதற்குத் திசை திரும்பிய பெருமை சேனன், குத்திக்கன் ஆகிய மன்னர்களுக்கேயுரியது. *
தமிழ் மன்னரது ஆட்சி அனுராதபுரத்தில் நிலைத்தவேளை, சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் புதல்வர்கள் உருகுணைக்குத் தப்பி ஓடினர்.
31. புஸ்பரட்ணம் ப.மே.கு.கட்டுரை, பக்கம் :5 32. மேகுநூல், பக்கம் : 11 33. புஸ்ப்ரட்ணம்.ப. சங்ககால ஈழம் தமிழர் பிராந்தியங்களில்
வெளிச்சம் - யாழ்ப்பாணம். புரட்டாதி. ஐப்
பக்கம் : 14
The Mahawamsa, (pg.giftei, sigst TibX வரிபூ, பதிம்ே*144?" 34. Histry of Ceylon, Colombo - Part 1, chater f Page; 144
33

Page 25
ஈழத்தவர் வரலாறு
அவர்களில் ஒன்பதாவது பிள்ளையான அசேலன் கி.மு.155 ஆம் ஆண்டு படைநடாத்தி அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனுராதபுரத்திலிருந்து 10 ஆண்டுகள் (கி.மு.155- கி.மு.145) அரசாட்சி புரிந்தான்.* இவ்விடத்து ஒர் உண்மை நோக்குதற்குரியது. தமிழ் மன்னர்கள் உத்தரதேசத்திலிருந்து சேனையுடன் படைநடாத்தி அனுராதபுரத்தைக் கைப்பற்றும்போது சிங்கள அரச குடும்பத்தினர் தெற்கே உருகுணைக்குத்தப்பித் தலைமறைவாகினர். அதேபோல உருகுணையிலிருந்து சிங்கள மன்னர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றும்போது, தமிழ் அரச குடும்பத்தினர் உத்தரதேசத்திற்குத் தப்பித் தலைமறைவாகினர்.
அசேலன் அனுராதபுரத்தைக் கைப்பற்றியபோது, அரச குடும்பத்தினர் சிலர் உத்தரதேசத்திற்குத் தப்பிச் சென்றரெனத் துணியலாம். ஏலேலன் கூத்தில் (எல்லாளன்) வரும் 'ஈழசேனன் புத்திரன் ஏலேலன்’ என்ற அடிகள் புதிய தகவல்களைத் தரக்கூடியது. அனுராதபுரத்தை 22 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த சேனனின் மகனா எல்லாளன்?
36. The Mahawamsa, yg-BIT da, elasiryuh: XXI aft 12, ušiasüb : 143
34

3 (ጫFg9፴/ጣቛ?T
GIG G/767Gd/
3.1 எல்லாளன்
கி.மு.3 ஆம் நூற்றுாண்டிற்கும் (கி.மு.247) கி.மு. 1ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு.29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றை நோக்கினால் இக்கால எல்லைக்குள் ஆட்சிபுரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்தததைக் கண்டு கொள்ளலாம்." ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதிதவறாது ஆட்சி நடாத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டும் கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்குச் சிறந்த சான்றாகும்*
அனுராதபுரத்தைச் சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களிடமிருந்து கைப்பற்றிய அசேலன் என்பான், 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.கி.மு.145 ஆம் ஆண்டு எல்லாளன், உத்திரதேசத்திலிருந்து பெரும்படையுடன் தண்டெடுத்து அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்) மீண்டும் இலங்கையின் ஆட்சி தமிழரிடம் வந்து சேர்ந்தது. எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவனாகவும் பாளி இலக்கிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், அத்தகைய ஒரு சோழன்
1. Geiger, W., The Mahawamsa - Intruduction, Colombo, 1950. Page :XXXVII 2 புஸ்பரட்னம், ப, இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி- ஒருநோக்கு.
நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3. பக்கம்-5.
35

Page 26
ஈழத்தவர் வரலாறு
இருந்ததாகத் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த மன்னன் உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து அனுராதபுரத்தின் மீது படையெடுத்ததாகக் கொள்வதே ஏற்புடையதாகும். ஏனெனில், வவுனிக்குளத்தினை முதன்முதல் கட்டியவன் எல்லாளன் என அடையாளம் காணப்படுகின்றது. உத்தரதேசக்குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் அமைப்பிக்க
அவனால் முடிந்தது என ஊகிக்கலாம்.
ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அனுராதபுரத்திற்கு வடக்கேயமைந்துள்ளதாகக் கூறப்பட்ட பெலிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத் தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
பாளி இலக்கியங்களில் எலாரா' என்று அழைக்கப்படும் தமிழ் மன்னன் ஏலேலன், எல்லாளன் எனத் தமிழில் அழைக்கப்பட்டு வருகிறான். உண்மையில் ஈழராஜா என்ற பெயரே பாளியில் எலாரா (எல்லாளன்) என மருவியதாகப் பேராசிரியர் வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். 4 இது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தாகும்.
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனின் நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் கைகர் இப்பழைய மதநம்பிக்கையென்பது
3 புஸ்பரட்ணம்.ப. மு.கு.கட்டுரை, பக்கம் 5
Parker.H., Ancient Ceylon. Londan : 1909
4. வேலுப்பிள்ளை-ஆ தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும்
அவற்றின் வரலாற்று பின்னணியும், யாழ்ப்பாணம்.1986 சிற்றம்பலம் சிக ஈழத்தமிழர் வரலாறு 1 சாவகச்சேரி - 1994 பக்கம் 30 The Mahawamsa, up-g-gnei). Syssity is :XXI auf :34, Ludisti : 145.
36

ஈழத்தவர் வரலாறு
இந்துமதத்தையே குறிப்பிடுவதாகக் கருதுகிறார்." எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்களுக்கும் சமநீதி வழங்கியதாகக் கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறிதவறாதஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. ノ
எல்லாளனின் சயன அறையில் ஒர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்தநேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன்வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான். எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவர். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில், ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்."
பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது. ஒரு வயோதிபமாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழைபொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கின்றது."
எல்லாளனின் நீதி வழுவாமையைக் கூறமுயலும் இக்கதைகள் நம்பகமானவையல்ல. அவனது செங்கோலாட்சியைப்புலப்படுத்த மகாவம்சம் எடுத்துக்கொண்ட ஐதீகக்கதைகள் எனலாம். எனினும் மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் சமயத்துறையில் பெளத்தத்திற்கு ஆதரவு அளித்தான் என்பதையும் போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது.
7. புஸ்பரட்ணம்.ப. மு.கு. கட்டுரை பக்கம் :5
The Mahawamsa, (pg.gifroi, sigsmyth : XXI ag. :15-18
9. மேகுநூல். அதிகாரம் XXI வரி : 19-20
10. மேகுநூல். அதிகாரம் XXI வரி: 27-33
37

Page 27
ஈழத்தவர் வரலாறு
எல்லாளன் தேரிலேறி சேத்திய கிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். ‘தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக, தூபத்தைத் திருத்தி விடுவோம்’ என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தைப் புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப்
பணங்களைச் செலவிட்டான்."
3.2 துட்டகாமினி
எல்லாளனின் ஏகாதிபத்தியம் இலங்கை முழுவதும் பரவியிருந்தது. கல்யாணி, உருகுணை ஆகிய இரு தென்னிலங்கைச் சிற்றரசுகள் எல்லாளனின் ஆட்சியை ஏற்றிருந்தன. கல்யாணி இராசதானியின் மன்னான களனிதீசனும், உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசனும் எல்லாளனின் மேலாதிக்கத்தை ஏற்று திறை செலுத்தி வந்தனர். அரசபரப்பரையை தேவநம்பியதீசனின் பரம்பரையோடு பிணைப்பதற்காகப்
* காக்க வண்ணதீசனின்
பாளிநூல்கள் முயல்கின்றன.
தேவனம்பிய தீசனின் சகோதரன் மகாநாகன் அனுராதபுரத்தின் சிம்மாசனத்திற்குரிமையுடைய இளவரசனாவான். அனுராதபுரத்தின் மணிமகுடம் தனது கணவனுக்குப்பின்னர் தனது மகனுக்கு வரவேண்டும் என்று கருதிய தேவனம்பியதீசனின் மனைவி, நஞ்சூட்டப்பட்ட மாங்கனி ஒன்றினை மாங்கனிகள் நிரம்பிய தட்டொன்றில் மிக மேற்கணியாக அடுக்கி மகாநாகனுக்கு அனுப்பி வைத்தாள். அந்த நஞ்சூட்டப்பட்ட கனியை அவ்வேளை மகாநாகனோடு நின்றிருந்த அவளது மகனே உண்டு இறக்க நேர்ந்தது. இந்தத் துர்மரணத்தினால் பயமுற்ற மகாநாகன் தனது மனைவி மக்களுடன் உருகுணைக்குத் தப்பியோட நேர்ந்தது. அங்கு மகாகமம் என்ற நகரத்தை
11. மே.கு.நூல் அதிகாரம் XXI வரி : 21-36
12. Senaveratuna, M.John, Dutugemunu, Shinha Publication,
Colombo -1946. Page:2
13. The Mahawamsa, Gypg-g5/vai, Jevésnyib:XXII. Gupf : 2-9 uszlib.: 146-147
38

ஈழத்தவர் வரலாறு
உருவாக்கி உருகுணையின் மன்னனாகினான். “ அவனைத் தொடர்ந்து அவனது மகன் ஜத்தலாயாதீசனும், அதன்பின் அவனது மகன் கோதபயனும் உருகுணையின் மன்னராகினர். இவர்கள் பெரும் போராட்டத்தின் பின்னரே உருகுணையின் அரசராக முடிந்தது. கதிர்காமப் பிரதேசத்தின் சத்திரிய தமிழ் மன்னர்கள் பத்துப்பேரை அழித்து வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. தட்டுவம்சம் என்ற நூலின்படி இந்த சத்திரிய மன்னர்களை கோதபாயனே அழித்து வெற்றி கொண்டான் என்பதாகும்." அனுராதபுரத்திலிருந்து தண்டனைக்குப் பயந்து தப்பியோடிவந்த மகாநாகனுக்குத் தஞ்சமளித்த கதிர்காமக் குறுநில மன்னன் கமணியையும் "அவனது பத்துப்பிள்ளைகளையும் அழித்து உருகுணையின் இராசதானியைக் காக்கவண்ணதீசனின் தந்தை கோதபாயன் தனதாக்கிக் கொண்டான். சத்திரிய மன்னர்கள் பத்துப்பேரையும் அழித்தபோதிலும், கதிர்காமப்பகுதியில் அவர்களது ஆதிக்கம் சிறிதளவில் இருந்துள்ளது. பத்துச் சத்திரிய மன்னர்களில் மூத்தவனின் மகனான தர்மராஜா என்பவனின் மகன் மகாதீசன் என்பவன் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் பெற்றிருந்துள்ளான். சத்திரிய மன்னன் ஒருவனின் மகளான இளவரசி அபி அனுரதி பற்றி பிராமிக் கல்வெட்டொன்றில் குறிப்புள்ளது. *
எவ்வாறாயினும் தென்னிலங்கையில் காக்கவண்ணதீசனின் காலத்தில் உருகுணை ஒரளவு வலிமையுடைய இராசதானியாக விளங்கியுள்ளது. ஈழராஜா எல்லாளனின் மேலாதிக்கத்தையேற்று திறை செலுத்தி வந்தமையால், தமிழ் மன்னன் இதன் நிர்வாகத்தில் தலையீடு செய்யாதிருந்தான்.
காக்கவண்ணதீசனின் பட்டத்துராணி, களனிதீசனின் மகள் விகாரைமகாதேவியாவாள். 'இவளைக் காக்கவண்ணதீசன் மணந்த வரலாறு
1-1. Histry of Ceylon, Chapter: lll Page: 146
15. CISG, II, PP. 99-100
16. The Mahawamsa, CLD.5-siri,Chapter:III Page:147
17. சிங்கள மன்னர்களதும் அரசிகளினதும் பெயர்கள் பாளிதுால்களில் அவர்களது பட்டப்பெயர்களோடு அல்லது மக்கள் அவர்களை இழிவாக அல்லது புகழ்ச்சியாக அழைத்த பெயரோடு சேர்த்து வழங்கப்படுகின்றன. உதாரணமாக, அபயன், கோதாபயன், (குள்ள அபயன்) என்றும், காவந்த தீசன் காக்கவண்ண தீசன் (காக நிறத் தீசன்) என்றும், காமினி துட்டகாமினி (துஷ்டகாமினி) என்றும், மகாதேவி விகாரைமகாதேவி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
39

Page 28
ஈழத்தவர் வரலாறு
சுவையானது. களனிதீசனின் மனைவிக்கும், அவனது தம்பியான அய்ய உத்திகனுக்கும் கள்ளஉறவு இருந்தது. இந்த உறவு மன்னனுக்குத் தெரிந்ததும் உத்திகன் பயந்து நாட்டைவிட்டோடினான். பின்னர் தமையன் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் எழுதி, பிக்குவேடமணிந்த ஒருவனிடம் கையளித்து, அதனை அரசியிடம் சேர்ப்பிக்கும் மார்க்கத்தையும் கூறினான். ஒவ்வொரு நாளும் அரண்மனைக்குப் பிச்சையேற்கச் செல்லும் தேரர் பின்னால் செல்லும் பிக்குகளுடன் சென்ற பிக்குவேடமணிந்தவன், கடிதத்தை அரசியின் முன் தருணம் பார்த்து நழுவவிட்டபோது, அதனைக் கண்ணுற்ற களனிதீசன் கடிதத்தை எடுத்துப்படிக்க நேர்ந்தது. கோபமுற்ற மன்னன், பிரதம தேரர், வேடமணிந்த பிக்கு இருவரையும் கொன்று கடலில் வீசுவித்தான். அதனால், கடல் பொங்கிக் கல்யாணிமீது பரவியது. அதனைச் சாந்தப்படுத்துவதற்காகக் தனது மகள் மகாதேவியை ஒரு வள்ளத்தில் ஏற்றிக் கடலில் விட்டு கடலிற்குக் காணிக்கையாக்கினான். அந்த வள்ளம் மகாகமத்தின் கரையைச் சென்றடைந்தது. அவள் யாரெனக்கண்டுகொண்ட காக்கவண்ணதீசன், மகாதேவியைத் தனது பட்டத்துராணியாக்கிக் கொண்டான். அவள் கரையொதுங்கியவிடம் விகாரையொன்றுக்கு அருகாக இருந்தமையால், விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள்." மகாவம்சம் கூறுகின்ற இக்கதைகள் எவ்வளவு தூரம் சிங்கள இராஜபரம்பரைக்குப் பெருமை சேர்க்கின்றதோ அல்லது அபகீர்த்தியுண்டாக்குகின்றதோ என்பதைவிட, இக்கதைகளின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒன்று.
மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமதேரர், துட்டகாமினியைத் தனது நூலின் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளார். அவனது வரலாற்றை விபரிக்கும்போது இரு அம்சங்களை வலியுறுத்தியுள்ளார். ஒன்று தமிழருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள், மற்றையது பெளத்தத்திற்கு அவனாற்றிய சேவை. விகாரைமகாதேவி துட்டகாமினியைக் கருவில் கொண்டிருந்த போது அவளுக்கு ஏற்பட்ட ஆசைகள் பற்றி மகாவம்சம் விபரிக்கின்றது. பெருந்தொகையான பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரியதொரு தேன் அடை வேண்டும் என்பது அவளது முதலாசை. ஈழராஜா எல்லாளனின் முதலாவது படைத்தளபதி ஒருவனின் தலையைச் சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக் கழுவிய நீரை அருந்த வேண்டுமென்பது அவளது இரண்டாவது
18. The Mahawamsa, (pGBrei Chapter:XXII, aupfl:13-29, Lésd: 147
40

ஈழத்தவர் வரலாறு
ஆசை, அனுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலைகட்டி அணிய வேண்டும்
என்பது அவளது மூன்றாவது ஆசை." இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.
காக்கவண்ணதீசனின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி வேலுசுமண என்பவன் விகாரைமகாதேவியின் இரண்டாவது விரும்பத்தை நிறைவேற்ற அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டான். அவன் தனது வாளினைக் கதம்ப நதிக்கரையில் மறைத்து விட்டு அரண்மனைக்குச் சென்று குதிரைகளைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்து கொண்டான். ஒருநாள் வாகா என்ற அரச குதிரையைப் பிறர் அறியத் தக்கதாகக் கடத்திக்கொண்டு புறப்பட்டான். இதனையறிந்த எல்லாளனின் படைத்தளபதி நந்தசாரதி அவன்ைக்கைப்பற்றக் கருதி தனது குதிரையில் விரைந்தான். காட்டிற்குள் மறைந்து நின்ற வேலுசுமண, நந்தசாரதி குதிரையில் வேகமாக நெருங்கியதும் தலையைச் சீவினான். நந்தசாரதியின் தலையுடன் இரத்தம் தோய்ந்தவாளை உருகுணைக்கு எடுத்துவந்து, விகாரமகாதேவியின் விருப்பத்தைப் பூர்த்திசெய்தான்." சீலமயமான வாழ்க்கையொன்றை மேற்கொண்ட விகாரமகாதேவிக்கு இப்படியான குரூர ஆசைத்தனம் ஏற்பட்டதென்று மகாவம்சம் குறிப்பிடுவதன் மூலம் அவளின் பாத்திரத்தைச் சிதைத்துள்ளது. துட்டகாமினியைத் தன்னிகரற்ற வீரபராக்கிரமம் வாய்ந்தவனாகக் காட்டுவதே மகாவம்சத்தின் நோக்கம். தமிழ் மக்களுக்கு இந்த வகையில் மகாவம்சம் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என இலங்கை பாளி, பெளத்த பல்கலைக்கழகப் பேராசிரியர் கும்புருகமுவே விஜிஹிமி குறிப்பிடுகிறார்.*
விகாரமகாதேவியினதும் காக்கவண்ணதீசனதும் மூத்தமகன் காமினி அபயனாவான், இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். அவனது தம்பியே சத்தாதீசனாவான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கு எதிரானவனாக உருவாக்கப்பட்டான். விகாரமகாதேவி தமிழருக்கெதிரான துவேஷத்தை அவனுக்கு ஊட்டி வளர்த்தாள். ஒருமுறை காக்கவண்ணதீசன் தன்னிரு பிள்ளைகளிடமும் மூன்று
19. மு.கு.நூல் Chapter : XXII வரி: 42-46 பக்கம் :149-150.
20. yp.sgyrsio, Chapter XXIII Gnuffl: 51 -58, Lukasib : 150, 15 l.
30.அ கும்புருகமுவே வாகிரஹிமி, எல்லாளன் -காமினி யுத்தம், தினகரன்
வாரமலர், 26.5.96, பக்கம் : 24
4.

Page 29
ஈழத்தவர் வரலாறு
வேண்டுகோள் விடுத்தான். பெளத்த சங்கத்தினருக்கு எப்பொழுதும் பணிவாக இருக்க வேண்டுமென்றும் சகோதரர்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டைபிடிக்கக் கூடாதென்றும், தமிழர்களோடு போர்புரியக்கூடாதென்றும் கேட்டுக் கொண்டபோது, முதலிரு வேண்டுகோள்களையும் ஏற்ற சகோதரர்கள் மூன்றாவது கோரிக்கையை ஏற்கவில்லை. துட்டகாமினி விரைந்து எழுந்து சென்று கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்துக் கொண்டான். தாய் வினவியபோது, வடக்கே மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழரும், தெற்கே சமுத்திரமும் நெருகும்போது, எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க முடியும்? என்றானென மகாவம்சம் கூறுகிறது."
3.3 எல்லாள -துட்டகாமினி யுத்தம்
காக்கவண்ணதீசனின் மரணத்தின் பின்னர் துட்டகாமினி உருகுணையின் மன்னனானான். காக்கவண்ணதீசன் தயார்ப்படுத்தி வைத்திருந்த பெரும் சேனையுடன், தான் தயார்ப்படுத்திய வீரர்களுடனும் அனுராதபுரத்தினை நோக்கிப்படை நடாத்தினான். அவனுடன் திசமகராமை விகாரையைச் சேர்ந்த ஐந்நூறு பிக்குகளும், தாய் விகாரமகாதேவியும் கூடவே
சென்றனர்.
துட்டகாமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு இனத்தோடு மதத்தையும் முன்வைத்தான். நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்.' என்ற கவர்ச்சிகரமான சுலோகத்தையே அவன் முன்வைத்தான். உண்மையில் எல்லாளனுக்கு எதிராக சமய ரீதியாகவோ இனரீதியாகவோ எதிர்பு ஏற்பட எவ்வித அடிப்படையும் கிடையாது. நேர்மையும் பாராபட்சமின்மையும் கொண்ட நீதிமிக்க அரசன் அவன். எல்லாளன் போன்ற செங்கோல் அரசன் ஒருவனை முறியடிப்பது இலகுவல்ல. எனவேதான் அவன் அந்தக் கவர்ச்சிகரமான சுலோகத்தைப் பயன்படுத்தினான். பெளத்த பிக்குகள் யுத்தமொன்றுடன் தொடர்புபடும் சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் தடவை.*
21. The Mahawamsa., Chapter:XXII, af:78-86, usiasti :153,154 31.அ கும்புருகமுவே வாஜிரஹிமி, மு.கு.கட்டுரை, பக்கம் : 24
42

ஈழத்தவர் வரலாறு மகாவலிகங்கை மருங்கே எல்லாளனின் இராணுவத்தளங்கள் அமைந்திருந்தன. மகியங்கனையில் முதன் முதலாகத் தமிழ்ப்படையினருக்கும் துட்டகாமினியின் படைக்கும் சண்டை மூண்டது, அதனைத்தொடர்ந்து அம்பதீர்த்தம், சர்ப்பக்கோட்டை, அந்தரசொப்பம், நாளி சொப்பம், கச்சதீர்த்தம், கொத்த நகரம், நந்திக்கிராமம், விஜிதபுரம் முதலான தமிழரின் படையரண்களைத் தன் படைவலிமையாலும் தந்திரத்தாலும் துட்டகாமினி
வெற்றிகொண்டான்.
அம்பதீர்த்தம் என்றவிடத்தில் அமைந்திருந்த எல்லாளனின் படையரணை, நான்கு மாதங்கள் முற்றுகையிட்டும், துட்டகாமினியால் வெற்றி கொள்ள முடியவில்லை. அம்பதீர்த்ததின் படைத்தளபதி தித்தம்பன் பெண் விடயத்தில் மிகவும் பலவீனமானவன். அப்பலவீனத்தைத் துட்டகாமினி தனது வெற்றிக்குப் பயன்படுத்தக் கொண்டான். தனது தாய் விகாரைமகாதேவியைத் தித்தம்பனின் முன் பார்வைக்கு நிறுத்தினான் என மகாவம்சம் கூறுகிறது. * மகாவம்சம் கூறுகின்ற இந்த சந்தேகத்குறிப்பிலிருந்து சரியான அனுமானத்தைப் பெறுவது கடினமெனவும், எனினும் திக்கா நூலின்படி எதிரியுடனான தாயின் திருமணத்திற்கு அரசியல் லாபம் கருதிய துட்டகாமினியின் சம்மதம் இருந்தது என மகாவம்சத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பாளரான கெய்கர் அந்நூலின் அடிக்குறிப்பில் குறித்துள்ளார்.* 'இலங்கை வரலாறு' என்ற நூலின் மூன்றாம் அத்தியாயத்தை எழுதிய வரலாற்றறிஞர் பரணவிதான, நான்கு மாதங்களாகியும் கோட்டையைக் கைப்பற்ற முடியாதுபோன துட்டகாமினி, தமிழ்ப்படைத்தளபதியின் பெண் பலவீனத்தைப்பயன்படுத்திக் கொண்டானெனவும், துட்டகாமினி விரித்த பொறியில் தமிழ்ப்படைத்தளபதியை வீழ்த்துவதற்கு அவனின் தாய் விகாரைமகாதேவியே விரும்பி முன் வந்தாளெனக் குறித்துள்ளார். *
அம்பதீர்த்தத்தைக் கைப்பற்றியபின்னர், சர்ப்பக்கோட்டை என்ற படையரணைத் துட்டகாமினி வெற்றி கொண்டான். இங்கு அகப்பட்ட ஏராளமான செல்வங்கள் படைவீரர்களிடையே பங்கீடு செய்யப்பட்டன. மகாவலிகங்கையின்
3. மு.கு.நூல், Chapter : XXVவரி ; 89, பக்கம் 170,171 23. Geiger.W. Mahawamsa, - 1950.-9535üll, Luäb: 171 24 Paranavi thma. S. History of Ceylon, Colombo-Chapter lll, Page: 157
43

Page 30
ஈழத்தவர் வரலாறு
வலதுகரையோரமாக முன்னேறிய சிங்களப்படை தமிழரின் பல அரண்களைத் தகர்த்து வெற்றிக்கொண்டு விஜிதபுரக் (பொலநறுவை) தைச் சென்றடைந்தது. எல்லாளனின் விஜிதபுரத் கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. உயர்ந்த மதில்களையும் காவற் கோபுரங்களையும் கொண்டது. அகழிகளினால் சூழப்பட்டிருந்தது. விஜிதபுரத்தைக் கைப்பற்றுவதற்குச் சிங்களப்படைக்கு நான்கு மாதங்கள் எடுத்தன.அதனையடுத்து அனுராதபுரத்தை நோக்கி முன்னேறிய சிங்களப்படைகளை கிரிலகம், மகிளநகரம் எனுமிடங்களில் எல்லாளனது படை எதிர்கொண்டு தாக்கித் தோல்வியடைந்தது. துட்டகாமினி அதன்பின்னர் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்து ஒய்வெடுத்துக் கொண்டான். உருகுணையிலிருந்து படைபுறப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியிருந்தது. படையின் பலத்த அழிவுகள் ஏற்பட்டிருந்தமையால் வீரர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டி காசபர்வதத்தில் பாசறை அமைத்துத் தங்கினான். உருகுணையிலிருந்து ஆளணியைப் பெறவும், உணவுப் பொருட்களைப் பெறவும் இந்த ஒய்வு தேவைப்பட்டது என்பர்.
அனுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே பதினெட்டுமைல்கள் தூரத்தில் காசபர்வதம் அமைந்திருந்தது. எல்லாளனின் பிரதான படைத்தளபதிகளும் வீரர்களும் சிங்களப்படையை எதிர்கொள்ளத் தயாராகவிருந்தனர். காசபர்வதப்பாசறையைத் தமிழர்படை தீகஜந்து என்ற தளபதியின் தலைமையில் தாக்கியது. துட்டகாமினி போல வேடமணிந்த பல உருவங்கள் ஆங்காங்கு போரிட்டன. அதனால் அந்தப்போர்முனையில் உண்மையான துட்டகாமினியை அடையாளம் காண முடியவில்லை. தமிழ்த்தளபதி தீகஜந்து உண்மையான துட்டகாமினியை அடையாளம் கண்டு அவனை ஆவேசத்தோடு நெருங்கியவேளை, இடையில் புகுந்த சிங்கள்த்தளபதி சூரநிமலனால் கொல்லப்பட்டான்.* தீகஜந்துவின் மரணத்துடன் தமிழர்படை தோல்வியைத்தழுவி பின் வாங்கியது.
சிங்களப்படைகள் அனுராதபுரத்தைநோக்கி முன்னேறின. அனுராதபுரம் முற்றுகையிடப்பட்டது. எல்லாளன் தனது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடாத்தினான். தானே எஞ்சியுள்ள தமிழர்படையை நடாத்திச்
25. The Mahawansa, மு.குநூல், அதிகாரம் : XXV வரி. 57-65, பக்கம், பக்கம்: 174
44

ஈழத்தவர் வரலாறு
செல்வதென எல்லாளன் முடிவு செய்தான். அவ்வேளை துட்டகாமினியிடமிருந்து ஒர் அறைகூவல் தூதுவன் மூலம் விடுக்கப்பட்டது. எல்லாளனைத் தனிச்சமருக்குத் துட்டகாமினி அழைத்தான். அந்தச் சவாலை எல்லாளன் ஏற்றதன் மூலம் பெருந்தவறு செய்தான். எல்லாளன் 72 வயதுடை முதுமையெய்தியவன். துட்டகாமினியோ இளைஞன். துட்டகாமினி தனிச்சமருக்கு அழைத்தமைக்கும், அதனை எல்லாளன் . ஏற்றமைக்கும் பல காரணங்கள் இருக்கலாம். உருகுணையிலிருந்து புறப்பட்ட சிங்களப்படை மகியங்கனையிலிருந்து காசபர்வதம் வரை ஒரு ஆண்டிற்கு மேலாக யுத்தம் செய்து இழப்பையும் களைப்பையும் அடைந்திருந்தது. அதேபோலவே தமிழர்படையின் நிலையும் இருந்தது. பெரும் அழிவின் இறுதியில் அனுராதபுரம் சிங்களப்படையால் முற்றுகையிடப்பட்டிருந்தது. வெற்றிக்கனி எவருக்குக்கிட்டுமெனத் தெரியாத நிலையில், இரு மன்னர்களும் தனிச்சமருக்கு ஒப்புக்கொண்டனர் என ஊகிக்கலாம்.
எல்லாளன் ஆயுதபாணியாகத் தனது மகாபர்வதம் என்ற யானையிலேறி, அனுராதபுரநகரின் தெற்கு வாயிலையடைந்தான். துட்டகாமினி தனது கண்டுலன் என்ற யானையிலேறி அவனை எதிர்கொண்டான். இருவருக்கும் கடுஞ்சமர் மூண்டது. ஆயுதயுத்தத்தில் எல்லாளனின் பலமோங்கியிருந்தமையால், துட்டகாமினி தனது யானையைத் தூண்டி எல்லாளனின் யானையைத் தாக்கினான். கண்டுலன் தனது வலிமையான தந்தங்களால் மகாபர்வதத்தை தாக்கியது. மகாபர்வதம் சரிந்த போது, துட்டகாமினி வீசியவேல் எல்லாளனைத் தாக்கியது. தமிழ் மாமன்னன் நிலத்தில் சரிந்து வீழ்ந்திறந்தான்.
தனது தனிப்பட்டவீரம், வெற்றி என்பனவற்றுடன், தமிழ் ஈழக் குடிமக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்தியமையால், எல்லாளனின் தனிச்சமர் தமிழ் ஈழமக்களின் தோல்வியாயிற்று. தமிழரசு தோல்வியுற அனுராதபுரத்தில் சிங்கள அரசு எழுந்தது. *
எல்லாளனின் உடல் உரியமரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. அத்துடன், அவன் வீழ்ந்திறந்த இடத்தில் நினைவுச்சின்னமாகச் சைத்தியம் ஒன்றை துட்டகாமினி எழுப்புவித்தான். இச்சைத்தியத்தைக் கடக்கும் பவணிகள்
36. திருச்செல்வம். மு. ஈழத்தமிழர் இறைமை, காந்தளகம், 1977, பக்கம் : 56
45

Page 31
ஈழத்தவர் வரலாறு
வாத்திய ஒலியை நிறுத்திச் செல்லவேண்டுமென அவனால் இயற்றப்பட்ட கட்டளை நெடுங்காலம் பின்பற்றப்பட்டது. ‘எந்த மனிதனாயினும் அவன் இளவரசனாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி இந்த வழியாகச் சிவிகையிலோ, மூடு பல்லக்கிலோ வர நேர்ந்தால் வாத்தியவொலி எழுப்பக்கூடாது."என ஒரு தூணில் பொறித்து வைத்தான்." அதற்கிணங்க யானைகள் மீது சென்றவர்கள் இந்த இடத்தில் இறங்கி நடந்தனர். மேள வாத்தியங்களுடன் ஊர்வலஞ் சென்றவர்கள் இந்த ஞாபகக்சின்னத்தைக் கடக்கையில் வாத்தியங்களை நிறுத்தி மரியாதை செலுத்திச்சென்றனர்.
துட்டகாமினி அனுராதபுரத்தில் முடிசூடிக் கொண்டான். அவன் சிம்மாசனம் ஏறுவதற்கு முன் இலங்கையின் பலபகுதிகளிலும் ஆட்சிசெய்த முப்பத்திரண்டு தமிழ்க் குறுநில மன்னர்களை வெற்றி கொள்ள நேர்ந்தது.* எல்லாளன் இறந்தமையைக் கேள்விப்பட்ட அவனது மருமகன் பாலுகன் என்பான் 6000 படைவீரர்களுடன் அனுராதபுரத்தைத் தாக்கினான் என்றும், அப்படை தோல்வியடைந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் மரணமான ஏழாம்நாள் பாலுகன் அனுராதபுரத்தைத் தாக்கியதாகக் குறிப்புள்ளது.* எனவே, உத்தரதேசத்திலிருந்து (பூநகரி) பாலுகன் படையெடுத்து வந்திருக்க வேண்டுமெனத் துணியலாம்.
துட்டகாமினி இலங்கையின் மாமன்னனாக முடிபுனைந்த பின்னர், பெளத்த தேரர்களிடம் தனது மனத்துயரை வெளியிட்டான். ஆயிரக் கணக்கானவர்களை எனது வாளுக்கு இரையாக்கியுள்ளேன். என்மனத்தில் அமைதியில்லை. என வினவுகிறான். பெளத்தத்தை நம்பாதவர்கள், பைசாச வாழ்க்கையை அனுஷ்டிப்பவர்கள், விலங்குகளுக்கு சமமாகக் கருதப்பட
வேண்டியவர்கள்' "
எனச் சங்கத்தினர் கூறினார்கள். பரணவிதான தனது கட்டுரையில் இதனை 'துட்டகாமினியால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்
(தமிழர்கள்) பெளத்தத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்.
27. Senaveratma, MJohn Qypo-gogorr65)} ..., XXV. 6aupfl: 75, Luisay5ub : 59 28. The Mahawamsa, Cyp.g5-5pitai). - geologi7aysagub : XXV. 63upfl: 75, Luées5ub: l: 75 39. முகுநூல், அதிகாரம்: XXV வரி 78, பக்கம் : 175 30. முகுநூல். அதிகாரம் : XXV வரி 108, பக்கம் 178
46

ஈழத்தவர் வரலாறு விலங்குகளிலும் மேலானவர்களல்லர். இவர்களைக் கொன்றதால் பாவம் சேராது." என விளக்குகிறார்.
3.4 எல்லாளனிற்குப் பின்னர்
மாமன்னன் எல்லாளனின் 44 வருட நீதிநெறிதவறாத ஆட்சி, கி.மு.101 இல் முற்றுப்பெற, சிங்கள ஆட்சி அனுராதபுரத்தில் அரசோச்சத்தொடங்கியது. காமினியைத் தொடர்ந்து கி.மு.44 வரை அனுராதபுரசிம்மாசனத்தில் சிங்கள மன்னர்கள் அமர்ந்திருந்தனர். வட்டகாமினி என்ற மன்னன் காலத்தில் அனுராதபுரத்தின் மீது மீண்டுமொரு தமிழர் படையெடுப்பு நிகழ்ந்தது. வட்டகாமினி அனுராதபுரத்தில் ஆட்சி செய்த போது உருகுணிையில் தீசன் என்ற குறு நில மன்னன் ஆதிக்கம் பெற்றிருந்தான் எனத் தெரிகிறது,' அவன் அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் ஆட்சியுரிமை வேண்டிக் கலகம் செய்ததாகத் தெரிகின்றது. அதேவேளை உத்தரதேசத்தைச் சேர்ந்த ஏழு தமிழ்க் குறுநில மன்னர்கள் மாந்தை வழியாக அனுராதபுரத்தை நோக்கிப் படையெடுத்தனர். இந்த ஏழு தமிழர்களைப் பாண்டியர்களாக வரலாற்றாசிரியர் சிலர் குறிப்பர், மகாவம்சத்தில் எவ்விடத்திலும் இவர்களைப் பாண்டியர்களாகக் குறிக்கவில்லை. இலங்கையின் குறுநில மன்னர்கள் அனுராதபுர ஆட்சியை ஏற்காது கிளர்ச்சிசெய்கின்ற நிகழ்ச்சிகள் இலங்கை வரலாற்றில் புதியனவன்று, தென்னிலங்கையில் தீசன் கிளர்ந்தெழுந்த போது வடக்கே ஏழு குறுநிலத்தமிழ்மன்னர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவர்களோடு உருகுணைத்தீசனும் சேர்ந்து கொண்டானெனத் தெரிகின்றது. இவர்கள் எண்மரும் சேர்ந்து ஆட்சியைத்தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு வட்டகாமினிக்கு ஒலையனுப்பினர். *
வட்டகாமினி, உருகுணைத்தீசனோடு சமாதானம் செய்து கொண்டான். ஏழு தமிழ்க் குறுநில மன்னர்களின் படைகளைத் தடுத்து நிறுத்தி வெற்றி கொள்ளில், அனுராதபுர ஆட்சியைத் தீசனிடம் ஒப்படைப்பதாக ஒப்புக் கொண்டான். இதனையேற்ற தீசன், தமிழ்ப்படையோடு மோதி தோல்வியடைய நேர்ந்தது. உருகுணைப் படையை வெற்றி கொண்ட ஏழு தமிழ்க்குறுநில மன்னரின் படை அனுராதபுரத்தை நோக்கி விரைந்தது.
31, Paranavithina. S. History of Ceylon, Colombo-Chapter: III Page : 162 32. The Mahawamsa, Colombo-1950. elésrrü: XXXIII, nfl: 38, uá5ül 231 33. மே.கு.நூல், அதிகாரம் : XXXI, வரி.40 பக்கம் : 381
47

Page 32
ஈழத்தவர் வரலாறு
கொலம்பலாகா என்றவிடத்தில் இருபடைகளும் சந்தித்து மோதிக் கொண்டன. வட்டகாமினி தோல்வியைத் தழுவி, பின்வாங்கி அரண்மனைக் கோடித்தன்னிரு மனைவியரையும் புதல்வனையும் ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பியோடினான். தமிழர்படை துரத்தியதால் தேரின் வேகத்தைக் கூட்டும்பொருட்டுப் பாரத்தைக் குறைப்பதற்காக, அவன் தனது இரண்டாவது மனைவி சோமாதேவியைத் தேரினின்றும் இறக்கி விட்டுத்தப்பி ஓடிவிட நேர்ந்தது. *
ஏழு குறுநிலத்தமிழ் மன்னரில் ஒருவன் சோமாதேவியைத் தன்னுடைமையாக்கிக் கொண்டான். மற்றொருவன் புத்தரின் ஐயக்கலத்தைத் தனதாக்கி கொண்டான். இந்த இருவரும் தமது பிரதேசங்களுக்கு மீண்டுசென்றனர் எனவும், மிகுதி ஐந்து தமிழரும் அனுராதபுரத்தை 14 ஆண்டுகளும் 7 மாதங்களும் அரசாண்டனர் எனவும் அறியக்கிடைக்கின்றது. இந்த ஐந்து தமிழ் மன்னர்களாக புலகத்தன், பாகியன், பனையமாறன், பிணையமாறன், தாடிகன் என்போர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் அனுராதபுரத்திலிருந்து அரசாண்டனர் என அறியப்படுகின்றது. இவர்கள் ஒருவரையொருவர் கொன்றே ஆட்சிபுரிந்தனரென 35 குறிப்பிடுகின்ற போதிலும், இக்குறுநில மன்னர்கள் முறைவைத்து தமக்குள் அனுராதபுர சிம்மாசனத்தை அலங்கரித்தனரெனக் கொள்ளலாம்.
மகாவம்சம்
தாடிகன் அனுராதபுரத்தை ஆண்டபோது வட்டகாமினி மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றி மன்னனானான். தமிழ்க்குறுநில மன்னனால் கவர்ந்து செல்லப்பட்ட சோமாதேவியை மீளப்பெற்றுத் தனது ராணியாக்கிக் கொண்டான். வட்டகாமினியின் ஆட்சி கி.மு.17 வரை நிலவியது, அதன்பின்னர் கி.பி.9 ஆம் ஆண்டுவரை சிங்கள ஆட்சி இலங்கையில் நிலவியதாக அறிய முடிகிறது. சோரநாகன் என்ற மன்னன் ஆட்சியிலிருந்த போது, அவனது மனைவியான அனுலாதேவியின் விபரீதக்காம ஆசையால் ஆட்சி அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அனுலாதேவி தனது கணவனை நஞ்சூட்டிக் கொன்றபின், திசா என்பவனை மணந்து அவனை அரசனாக்கினாள். அதன் பின்னர் சிவா, வாதுகன், தீசன், நீலியன் என
34. GBD-sarrsiv, oss ft g ab: XXXIII, nu fl-45-48, udikasib : 235 35. மே.கு.நூல், அதிகாரம் : XXXI, வரி 56-61. பக்கம் 233
48

ஈழத்தவர் வரலாறு
ஒவ்வொருவராக மணந்து மன்னனாக்கிப் பின்னர் நஞ்சூட்டிக் கொன்று இறுதியில் தானே நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டாள்." அவளது ஆசைக்கும் விருப்பத்திற்கும் 32 அரண்மனைக்காவலர் உட்பட்டனரென வரலாறு கூறுகிறது. வாதுகன், நீலியன் ஆகிய இருவர் தமிழராவர். இவர்கள் அனுலாவுடன் அனுராதபுரச் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய வரலாற்றுக் காலத்தினை உள்ளடக்கிய 250 ஆண்டுகளில் மூன்றிலொரு பகுதியில் தமிழரின் ஆட்சி நடைபெற்றதைப் பாளிநூல்கள் கூறுகின்றன எனலாம். *
36. மே.கு.நூல், அதிகாரம் : XXXIVவரி 13-26 பக்கம் 239 37. சிற்றம்பலம் சிகாழத்தமிழர் வரலாறு, இந்துக்கல்லூரி, சாவகச்சேரி,
1994, பக்கம்: 21
49

Page 33
சிங்கைநகர் 9/14,
4.1 புராதன பெயர்கள்
வரலாற்றுக் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் என்னும் பெயரால் நாம் அறியும் வட இலங்கை இராச்சியம், எப்போது தாபிக்கப்பட்டது என்பதைச் சரியாக அறிந்து கொள்வற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை என நவீன வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கல்வெட்டு ஆதாரங்கள், 守T守6顶T ஆதாரங்கள் இருந்தால் தான், இலக்கிய ஆதாரங்களின் மெய்மையை ஏற்றுக்கொள்ள முடியும் என்கின்றனர். பனையோலைகளில் எழுதிய நம் முன்னோர், செப்பேடுகளில் எழுதிப் புதைக்காது போயினராம். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக்கூறும் மூலநூல்களாக கைலாய மாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன. இந்நூல்களின் அடியொற்றியும், இத்துறை சார்ந்த பல்வேறு நூல்களின் துணைகொண்டும் கல்வெட்டுகள், சாசனங்கள், அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத்திற்குக் காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைபவ கௌமுதி (க.வேலுப்பிள்ளை-1918), யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசர்-1928), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன்-1930), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை1933), யாழ்ப்பாணச்சரித்திரம் (செ.இராசநாயகம்-1933), Tamils and Ceylon (é.6Tsii). Is Jijigaoth), The Northern Kingdom (Tsh). ECLs sit-1960), யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (கா.இந்திரபாலா-1972), The Kingdom of Jaffna (ச.பத்மநாதன்-1978), யாழ்ப்பாணத்தமிழரசர் வரலாறும் காலமும் (பொ.ஜெகந்நாதன்-1987), யாழ்ப்பாண இராச்சியம் (சி.க.சிற்றம்பலம்-1994),
1. இந்திரபாலா, கா, யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும்
சூழ்நிலையும், இளங்கதிர், பேராதனை - 1970, பக்கம்; 13,
50

ஈழத்தவர் வரலாறு
பூநகரி தொல்லியலாய்வுகள் (ப.புஸ்பரட்ணம்) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. -ܢܥ
பதின் மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தான் வடவிலங்கையில் தோன்றிய அரசானது யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. பண்டைய வடவிலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்பட்டது? தமிழர் காலத்து வடவிலங்கையை யாழ்ப்பாணம் என்னும் பெயரால் வழங்குவது ஒரு கால வழுவாகும். தீவின் வடபாகத்தில் ஆட்சி நடாத்தியவனை யாழ்ப்பாணத்து மன்னனென்று கூறுவதும் சரியன்று, " என ஞானப்பிரகாசர் தனது நூலிற் கூறுகிறார். வட இராச்சியத்தில் வரலாற்றின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் என்ற பெயர் அதற்கு இருக்கவில்லை என்றே கூற வேண்டும். யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லை மன்னாரிலிருந்து திருகோணமலைவரை வரைந்த கோட்டிற்கு வடக்கு பரந்த ஒரு பெரும்பிரதேசமாகும். வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி, வன்னி நிலங்களும் பிற நிலங்களும் இதனுள் அடங்கியிருந்தன. சிலவேளைகளில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாதிக்கம் கம்பளை வரை பரந்திருந்தது. சிலவேளைகளில் ஜயவர்த்தன கோட்டைவரை பரந்திருந்துள்ளது.
எனவே, யாழ்ப்பாண இராச்சியம் என்ற வடவிலங்கை இராச்சியத்தின் பண்டைய பெயர் என்ன? வடவிலங்கை நாகநாடு, சிங்கைநாடு (சிங்கைநகர்), மணவை (மணற்றி), ஈழம், உத்தரதேசம், தமிழ்ப்பட்டினம் எனப்பலவாறாக அழைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் வடபெரும்பகுதி ஆரம்பத்தில் நாகதீபம் அல்லது நாகதீவு என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாகதீவு என்ற பெயர் யாழ்ப்பாணக்குடாநாட்டிற்குரிய பெயராக மாறியது. அவ்வேளைளஞ்சிய வடவிலங்கை உத்தரதேசம் என்று கூறப்பட்டது. உத்தரதேசத்தின் ஒரு பகுதியாக நாகதீவு அவ்வேளை இருந்தது. யாழ்ப்பாணக்குடாநாடு தீவு என்ற பெயருக்கேற்ப வரலாற்றுக் காலத்தில் பெருநிலத் தீவினின்றும் கடலால்
ஞானப்பிரகாசர் சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நல்லூர் -1978 இந்திரபாலா. கா.மே.கு. கட்டுரை, பக்கம் 41
மே.கு. கட்டுரை
கோட்டகம கல்வெட்டுச் சான்று. யாழ்ப்பாண இராச்சியம், பதிப்பாசிரியர் : கி.க.சிற்றம்பலம், பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்-1999, பக்கம் :52-53 7. குணராசா. க. நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் -1987, பக்கம் 3.
:
51

Page 34
ஈழத்தவர் வரலாறு பிரிக்கப்பட்டு ஒரு பெரிய தீவாக யாழ்ப்பாணக்குடாநாடு விளங்கியது. இன்று யாழ்ப்பாணக்குடாநாட்டை பெருநிலத்திணிவோடு சுண்டிக்குள மணல் அணை இணைத்துள்ளது. பண்டைநாளில் யாழ்ப்பாண-ஆனையிறவுக் கடனீரேரியூடாகக் கலங்கள் வங்காள விரிகுடாவில் பிரவேசித்துள்ளன." காலகதியில் மணல் படிந்த சுண்டிக்குள நுழைவாயில் அடைபட்டது.
நாகதீவு என்ற பெயரை இப்பிரதேசம் பெறுவதற்கு காரணமாக அமைந்தவர்கள், இப்பிரதேசத்தின் பண்டைய குடிமக்களாக வாழ்ந்திருந்த நாகர் என்ற இனமக்களாவர். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தெற்கே நாகர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்த பிரதேசம் உத்தரரட்டை அல்லது உத்தரதேசம் எனப்பட்டது. கதம்பநதி என்ற அருவியாற்றிலிருந்து கோகர்ணம் (திருகோணமலை) வரை இணைத்து ஒரு குவிவு வளைகோடு வரைந்தால், அந்த வளைகோட்டிற்கு வடக்கேயமையும் வடபிரதேசம் உத்தரதேசம் எனப்பட்டது. இந்த உத்தரதேசத்தில் மகாதீர்த்தம் (மாந்தை), குதிரைமலை (புத்தளம்), குருந்தை (முல்லைதீவு), பல்லவங்கம் (பதவியா), கோகர்ணம் (திருகோணமலை) முதலிய பகுதிகளில் தமது புராதன குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். இவற்றைவிட உத்தர தேசத்தின் சிதறலாக ஆரண்யகமங்கள் (காட்டுக்கிராமங்கள்) காணப்பட்டன. நாகதீவும் உத்தரதேசமும் ஒருங்கே ஈழமண்டலம் என அழைக்கப்பட்டது. நாகதீவில் கதிரமலையும், உத்தர தேசத்தில் மகாதீர்த்தமும், குதிரை மலையும் நாக குடியிருப்புக்களில் முக்கியமானவையாக விளங்கின.
யாழ்ப்பாண இராச்சியத்தின் பழைய பெயர்களில் குறிப்பிடத்தக்கது சிங்கை ஆகும். சிங்கை நகர் இதன் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கிரவர்த்திகள் பொதுவாகச் சிங்கைநகரத்தின் ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்டனர். சிங்கைஆரியன், சிங்கை தங்கும் ஆரியர் கோமான், சிங்கையெங்கோமான் எனப்பல வகைப்பட்ட விருதுகள் இம்மன்னர்களுக்கு இலக்கியத்திலும் சாசனத்திலம் கொடுக்கப்பட்டுள்ளன. செகராசசேகரம் என்ற மருத்துவ நூலிலே செயம்பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் என மன்னன் வர்ணிக்கப்பட்டுள்ளான். ஆகவே சிங்கை அல்லது சிங்கைநாடு என்ற பெயர் வடவிலங்கை இராச்சியத்தின்
8. இராசநாயக்ம். செ. யாழ்ப்பாணச் சரித்திரம், வண்ணார்பண்ணை -1933 9. குணராசா.க, யாழ்ப்பாண இராச்சியத்தின் கதை, உருப்பிராய்
இந்துக் கல்லூரி, பவளவிழாமலர்.
52

ஈழத்தவர் வரலாறு ஒருபெயராக வழங்கியிருக்க வேண்டும். " கொட்டகமக்கல்வெட்டில் சிங்கை நகராரியன்’ என்று யாழ்ப்பாணம் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
வடவிலங்கை இராச்சியத்தின் இன்னொரு பெயராக மணவை, மணற்றி, மணற்றிடல் என்பன இருந்துள்ளன. மணவை என்ற பெயரின் திரிபுகளே ஏனைய பெயர்களாகும். யாழ்ப்பாண ஆரியச்சக்கிரவர்த்திகளை செகராசசேகரமாலை மணவை ஆரியவரோதயன், மணவையோர்கோன் செகராசசேகரமன், மணவை தந்தமால் எனக் குறிப்பிடுகின்றது. மணவை அல்லது மணற்றி என்ற பெயர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குரிய பொதுப்பெயராக இருந்துள்ளது. அது பின்னர் இன்றைய மேற்குப் பகுதிக்குரியதாக மாறியது. அவ்வாறு மாறிய வேளையில் மணற்றி (மணல் ஊர்) என்ற அர்த்தப்படும் வகையில் வலி (மணில்) கம (ஊர்)
எனச் சிங்களப்பெயராக உருமாறியது எனப்பல அறிஞர் கருதுவர்.
தமிழருடைய வடவிலங்கை இராச்சியம் பண்டைநாளில் ஈழம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. இப்பெயர் முழு இலங்கைக்கும் வழங்கிய ஒரு பெயராகும்." பூநகரிப் பிரதேசத்தின் தொல்லியலாய்வின் விளைவாகக் கிடைத்த பிராமி மட்பாண்ட ஒடுகளில் ஈலா, ஈழ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன." பூநகரிப்பிரதேசம் ஈழம் என்ற இராச்சியமாகக் கருதப்பட்டமைக்குரிய சான்றாக இதனைக் கருத இடமுண்டு. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகளில் இந்த இராச்சியம் ஈழம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகர காலத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுக்களும் யாழ்ப்பாணத்தை ஈழம் என்றே குறிக்கின்றன."
வடவிலங்கை இராச்சியத்தை யாழ்ப்பாண அரசு என அழைத்தமை, 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயாகும். 1435 இல் திருமாணிக்குழி எனுமிடத்தில் பொறிக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டிலே முதன் முதலாக யாழ்ப்பாணாயன் பட்டினம் என்ற பெயர் வடவிலங்கை இராச்சியத்திற்கும், ஈழம் என்ற பெயர் தென்னிலங்கை இராச்சியத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. 15 ஆம்
10. இந்திபாலா. கா. மு.கு.கட்டுரை. பக்கம் :42 11. Gnanapragasam, S, (ypursi, Luóhøsid ; 303 13. புஸ்பரட்னம்.ப. வடவிலங்கையில் சிங்கைநகர், யாழ்-1993
13. இந்திரபாலா. கா. மு.கு:கட்டுரை. பக்கம் 44
53

Page 35
ஈழத்தவர் வரலாறு
நூற்றாண்டுச் சிங்கள நூல்கள் ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசிருக்கையை "யாபாபடுன" என்று குறிப்பிடுகின்றன. g
எவ்வாறாயினும், வடவிலங்கை இராச்சியத்தில் பல்வேறு குறுநில மன்னர்கள் ஆங்காங்கு ஆட்சி செலுத்தி வந்துள்ளனர் எனத் துணியலாம். ஆரியர்கள் வட இந்தியாவில் நிலைகொண்டபோது, திராவிடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பாகத்திற்கும், இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம், நாகதீவில் மிகக் கூடுதலாக நிகழ்ந்திருத்தல் வேண்டும். தென்னிலங்கையில் சிங்களக் குடியேற்றம் நிலை கொள்ளத் தொடங்கிய வேளை, வடவிலங்கையில் திராவிடக் குடியேற்றம் வளர்வதாயிற்று. சேர்.போல் பீரிஸ் என்ற அறிஞரின் கருத்துப்படி, விஜயன் பிறப்பதற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே வடவிலங்கையில் குடியிருப்புகள் விருத்தியுற்றிருந்தன என்பதாகும். இந்தியாவிலிருந்து ஆக முப்பது மைல் கடலே வடவிலங்கையைப் பிரிக்கின்றது. அதனை இலகுவில் கலங்களில் தாண்டி வடவிலங்கையில் குடியிருப்புகள் உருவாகின." இலங்கையின் பல பாகத்தில், ஆதித் திராவிட மக்கள் சடலங்களைப் பெருந்தாழிகளிலிட்டு அடக்கம் செய்த முது மக்கள் தாழிகள் அகன்றெடுக்கப்பட்டுள்ளன. 1955 ஆம் ஆண்டு புத்தளம் -மறிச்சுக்கட்டி வீதியில் முது மக்கள் தாழி ஒன்றும், 1982 இல் ஆணைக்கோட்டையிலும், 1984 இல் குஞ்சுப் பரந்தனிலும் " இத்தகு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை விஜயனின் வருகைக்கு முன்னரே திராவிட நாகரீகம் இங்கு நிலைபெற்றிருந்ததைக் காட்டி நிற்கின்றன.
கி.மு.2 ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியில் மக்கள் குடியேற்றம் இருந்தது என்பதைத் தொல்பொருட் சான்றுகள் திட்டவட்டமாக நிறுவுகின்றன. கந்தரோடைப் பிரதேசத்திலே குடியேறியிருந்த மக்கள் பண்பாட்டு முன்னேற்றம் அடைந்தவர்களாக, கி.மு.நூற்றாண்டுகளிலிருந்து பிறநாடுகளுடன் தொடர்பு கொண்டு, எழுத்தின் உபயோகத்தையும் அறிந்து வாழ்ந்தனர் என இதே சான்றுகளைக் கொண்டு அறியலாம். இவ்வாறே
14 மே.கு.கட்டுரை, பக்கம் 45 15. மே.கு.கட்டுரை, பக்கம் 46 16. குணராசா, க. குஞ்சுப்பரந்தன் முதுமக்கள் தாழி, ஈழநாடு-1994
54

ஈழத்தவர் வரலாறு
யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளிலும் முன்னேற்றமடைந்த மக்கள் வாழ்ந்திருக்க
வேண்டும்."
4.2. முதலாவது சிங்களப் படையெடுப்பு
வட விலங்கையில் நாகர்களதும் அவர்களோடு கலந்து திராவிடர்களினதும் குடியிருப்புகள் வளர்வது, தென்னிலங்கைச் சிங்கள ஆட்சியாளருக்குத் தலையிடியைக் கொடுத்தருக்க வேண்டும். இந்தியாவுடனான சகல தொடர்புகளும் வடவிலங்கைத் துறைமுகங்களுடாகவே (மாதோட்டம், ஜம்புக்கோளம்) நடந்து வந்தன. எனவே வட இந்திய ஆரியருக்கும் தென்னிலங்கை சிங்களவருக்குமிடையே திராவிடக் குடியேற்றங்கள் அமைவது களையப்பட வேண்டியதாகப்பட்டிருக்கும். உத்தரதேசத்தைத் (வடவிலங்கை) தக்கண தேசத்தின் (தென்னிலங்கை) ஆதிக்கத்தினுள் வைத்திருக்க விருப்பு எழுந்தது. அதனால், கி.மு.1 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் முன்னர், தென்னிலங்கையிலிருந்து, ஈழ மண்டலத்தின் மீது பெரும் படையெடுப்பொன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அந்தக் கால கட்டத்தில், கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழ மண்டல ஆட்சியாளனின் தலை நகரமாக இருந்திருக்க
வேண்டும்.
கந்தரோடையில் கிடைத்த மட்பாண்ட ஒடொன்றில் பொறிக்கப்பட்டுக் கிடைத்த பிராமி எழுத்துச் சாசனத்தின் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது. "தஹ பத" - தத்தவின் பாத்திரம், இதன் காலம் கி.மு. நூற்றாண்டு என்று எழுத்தின் அடிப்படையில் கூறலாம்." கந்தரோடையில் நிகழ்ந்த அகழ்வாராச்சிகளின் மூலம் கிடைத்த பெளத்த சின்னங்கள், இப்பகுதியில்
பெளத்த மக்கள் நிலை கொண்டிருப்பதைக் சுட்டுகின்றன.
எனவே, தென்னிலங்கை ஆட்சியாளர் கதிரமலையைக் கைப்பற்றியதும்
அப்பிரதேசத்தில் வாழ்ந்தோரில் ஒரு பகுதியினர் தொண்டமானாற்றைக் கடந்து
17. இந்திரபாலா. கா. மு.கு.கட்டுரை, பக்கம் 14 18. மே.கு.கட்டுரை , பக்கம் ; 14 19. மே.கு.கட்டுரை, பக்கம் 16
55

Page 36
ஈழத்தவர் வரலாறு
வல்லிபுரப்பகுதியில் ஏற்கனவே குடியிருந்தோருடன் இவர்களும் சேர்ந்து குடியேறிக் கொண்டனர்.
வல்லிபுரப்பகுதியிலும் அவர்களால், அமைதியாகத் தொடர்ந்து வாழ முடியவில்லை. கி.பி.1ம் நூற்றாண்டில் அநுராதபுரத்திலிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப என்ற மன்னன் வல்லிபுரப் பிரதேசத்தை வெற்றி கொண்டு தன் அமைச்சன் ஒருவனை அப்பகுதியை நிர்வகிக்க நியமித்தான்.
வல்லிபுரத்திலிருந்து கி.பி.முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பொற்சாசனம் கிடைத்துள்ளது. இச்சாசனம் பல வகையாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணப்பகுதி நாகதீவு எனப்பெயர் பெற்றிருந்ததையும், அக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து சிங்கள இராச்சியத்தை ஆண்ட வசப மன்னனுடைய (கி.பி.67-111) ஆதிக்கத்திற்கு உட்பட்டு மன்னனின் அமைச்சன் இசிகிரயன் என்பவனால் அது நிர்வகிக்கப்பட்டது என்பதையும், வல்லிபுரப் பிரதேசத்தில் பெளத்தம் பரவியிருந்தது என்பதையும் இச்சாசனம் அறிவிக்கின்றது.
கந்தரோடையிலும், வல்லிப்புரப்பகுதியிலும் தொல்லியலாய்வின் பேறாகக் கிடைத்த சாசனங்கள் இப்பகுதிகளில் பெளத்தம் நிலை பெற்றிருந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழ்நாட்டின் பெளத்தம் பரவியகாலவேளையில் வடவிலங்கைத் தமிழர் பலரும் பெளத்தத்தை தழுவியிருப்பர். இத்திராவிடத் தமிழ்ப் பெளத்தர்கள் காலகதியில் தமது முந்தைய சமயத்திற்கு மாறியிருப்பர் அல்லது இவ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பர் என ஊகிக்கமுடியும்.
எனவே, கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிலும், கி.பி. 1 ஆம் நூற்றாண்டிலும் வடவிலங்கையில் பெரும்பாலும் சிங்கள மன்னர்களது ஆதிக்கம் நிலவியது. அக்காலவேளையில் நாகதீவின் ஊர்ப்பெயர்கள் பலவும் சிங்களப் பெயர்களாகின. கொக்குவில், கோண்டாவில், மிருசுவில் என்பன இத்தகையன. சிங்கள ஆட்சியாளரின் கீழ் வடவிலங்கை கி.பி.8ஆம் நூற்றாண்டு வரை அடிக்கடி உட்பட்டது. இடையிடையே தமிழ் மன்னர்களின் ஆதிக்கத்தினுள்ளும் அமைந்திருந்தது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி.மு. 259-210 வரை) அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவநம்பிய திஸ்ஸ மன்னன் நாகதீவு
56

ஈழத்தவர் வரலாறு
உட்பட உத்தர தேசத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்தான். அக்காலத்தில் அநுராதபுர இராச்சியத்தவர் கிழக்கிந்தியாவுக்குச் செல்வதற்குப் பயன்படுத்திய பிரதான துறைமுகமாக யாழ்ப்பாணத்து ஜம்புக்கோளத்துறை (தற்காலத்துச் சம்புத்துறை என அடையாளம் காண இடமுண்டு) இடம்பெற்றது. இங்கு தான் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் சங்கமித்தா தேரியை வரவேற்றான் என்றும், அவனால் இங்கு ஸமுத்த-பண்ண-ஸாலா என்ற மண்டபமும், ஜம்புக்
கோலா விகாரையும் கட்டுவிக்கப்பட்டன என்றும் அறிகின்றோம்."
கி.பி.1ஆம் நூற்றாண்டில் உத்தரதேசத்தை வஸப என்ற சிங்கள மன்னன் தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தான். கி.பி.2ஆம் நூற்றாண்டில் உத்தரதேசம் மஹல்லலகநாக, கனிஷ்ட திஸ்ஸ ஆகிய சிங்கள மன்னர்களாலும், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வொஹாரிகதிஸ்ஸ என்ற சிங்கள மன்னனாலும், கி.பி.7 ஆம் நூற்றாண்டில் 2ம் அக்கபோதி, சிலாமேகவண்ண ஆகிய சிங்கள
மன்னர்களாலும் நிருவகிக்கப்பட்டது.*
கி.பி.2 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலே ஸாலிபப்பத விஹாரை என்னும் பெளத்த நிறுவனத்தை மஹல்லகநாக (136-143) என்ற அநுராதபுரத்து மன்னன் கட்டுவித்தான், என்றும், அதே நூற்றாண்டில் அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இன்னொரு மன்னனாகிய கனிஷ்ட திஸ்ஸ (167-186) யாழ்ப்பாணத்தில் ஒரு கோயிலைத் திருத்தியமைத்தான் என்றும், 3ஆம் நூற்றாண்டிலே வொஹரிக திஸ்ஸ (209-231) என்ற அனுராதபுரத்து மன்னன் யாழ்ப்பாணத்திலிருந்து திஸ்ஸ விகாரையைச் சுற்றி மதிலமைப்பித்தான் எனவும் அறிகின்றோம். இதற்குப் பிற்பட்ட காலத்திலே 2ஆம் அக்கபோதி (604-614) என்ற அநுராதபுரத்து மன்னன் யாழ்ப்பாணத்திலிருந்த உண்ண லோமகாக் கோயில் என்ற நிறுவனத்தை ராஜாயதனதாது என்ற விகாரைக்குக் கட்டிக் கொடுத்தான் எனவும், அங்கிருந்த அமலதேசிய என்ற சைத்தியத்துக்கு ஒரு குடையைத் தானமாக அளித்தான் எனவும் சூளவம்சத்தின் மூலம் அறிவதாக கா.இந்திரபாலா என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார்." ஸிலாமேக வண்ண மன்னன் 619-628) அனுராதபுரத்திலிருந்து ஆட்சி நடத்தியபோது (யாழ்ப்பாணத்தையும் உள்ளடக்கிய பழைய மாவட்டமாகிய உத்தர தேசத்தை
20. மே.கு. கட்டுரை 31. மே.கு.கட்டுரை
57

Page 37
ஈழத்தவர் வரலாறு
கிரிநாதன் என்பான் கைப்பற்ற முயற்சித்தான் எனவும், கிரிநாகனை ஸிலாமேக வண்ணன் உடனே அடக்கி, மீண்டும் உத்தர தேசத்தைத் தன் ஆணைக்குட்படுத்திக் கொண்டான் என்றும் மேலும் சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நூலின் கூற்றின்படி உத்தர தேசத்தில் மீண்டும் ஒருமுறை அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி தோன்றியது. அப்போது 2 ஆம் மகிந்த மன்னனுக்கு (777-797) எதிராக உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர். *
4.3. உக்கிர சிங்கன்
sN
வகித்தவன் கலிங்க தேசத்தவனாகத் மணற்றியில் குடியேறியிருந்த
சிங்கள ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்ந்த இக்கிளர்ச்சிக்கு தலைமை
உக்கிரசிங்கன் என்ற தலைவனாவான் எனத் துணியலாம். *
f
நெடுங்காலம் இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில் போரிட்டு நாகதீபத்தை உக்கிரசிங்கன் பெற்றுக்கொண்டான். இது நிகழ்ந்தது கி.பி.785 இல் ஆகும். வெற்றி கொண்ட உக்கிரசிங்கன், கதிரமலை (கந்தரோடை) யினைத் தலைநகரமாகக் கொண்டு உத்தர தேசத்தை ஆண்டு வந்தான்)
s யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னனாக உக்கிரசிங்கனையே அறியக் கிடக்கின்றது)
உக்கிர சிங்கன் கதிரமலையில் ஆட்சி செய்த காலத்தில், சோழ இளவரசியாகிய மாருதப்பிரவல்லி என்பாள் தீர்த்தயாத்திரை பெற்கொண்டு கீரிமலைக்கு வந்தாள். அவளை வலிந்து சிறைகொண்டு உக்கிர சிங்கன் மணந்து கொண்டான். அவளின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, மாவிட்டபுரத்தில் கந்தனுக்கு ஆலயம் சமைப்பித்தான். இந்தியாவிலிருந்து அக் கோயிலுக்குரிய விக்கிரங்கங்களையும் பெரிய மனத்துளார் என்ற
பிராமனோத்தமரையும் வரவழைத்தான்.* என யாழ்ப்பாண வைபவமாலை
மே.கு. கட்டுரை :
3
. குணராசா. க, நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம்-1987, பக்கம் 10
. யாழ்ப்பாண வைபமாலை, குலசபநாதன் பதிப்பு, சுன்னாகம் -1949
去
5
. மே.கு.நூல், பக்கம் 18-23.
58

ஈழத்தவர் வரலாறு
கூறும். உக்கிரசிங்கன் தலைநகராக விருந்த கதிரமலையை விட்டு, சிங்கை நகருக்குத் தனது தலைநகரை மாற்றிக்கொண்டான். *
4.4 ஏன் தலைநகர் மாறியது?
கந்தரோடை (கதிரமலை) யைவிட்டுத் தனது தலைநகரைச் சிங்கைநகருக்க மாற்றியதற்கான காரணங்கள் தெளிவானவை. கந்தரோடைப் பிரதேசம் பெளத்தமத மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. அத்துடன் சங்கமித்தை தேரியின் வருகையின் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பெளத்தயாத்திரிகர்கள் ஜம்புக்கோளப்பட்டின (திருவடிநிலை) மூடாக வந்திறங்கினர். ஜம்புக்கோளப்பட்டினத்தின் விகாரையொன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனை விட ஸாலிப்பத விகாரை, திஸ்ஸவிகாரை என்பனவும் நாகதீவில் அமைந்திருந்தன. கந்தரோடையோடு வல்லிபுரத்திலும் பெளத்தமத மக்கள் பரவியிருந்தனர். பெளத்தம் நாகதீபப்பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில், சிங்கள ஆட்சியாளரின் ஆதிகத்திலிருந்து உக்கிர சிங்கன் விடுவித்திருந்தான். தீவிரசைவனாக இவன் விளங்கியுள்ளான் என்பதை இவன் ஆற்றிய திருப்பணிகள் நிரூபிக்கின்றன/கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் இவனால் புனருத்தாரணம் செய்யப்பிட்டுள்ளது. இவனது மனைவியான மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கந்தசுாமி கோயிலைக் கட்டுவித்தாள்) யாழ்ப்பாண இராச்சியத்தில் சைவம் இழிவுநிலையிலிருப்பதைக்கண்டு புத்தூக்கம் அளிக்கவிரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்துளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துக் குடியிருத்தியுள்ளான். இந்தியாவிலிருந்து சிலா விக்கிரங்கள் எடுத்து வரப்பட்டு இந்துக்கோயில்களில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு உக்கிரசிங்கன் பல்வேறு முயற்சிகள் செய்தும், பெளத்தத்தினது செல்வாக்கு, கதிரைமலை, வல்லிப்புரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப்பகுதி, கிழக்குப்பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்க தென்பகுதி (யாழ்ப்பாணம்), மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது. இத்தகு நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உக்கிரசிங்கன் விரும்பினான். இதனையே
26. இராசநாயகம்.செ. மு.கு.நூல், பக்கம் : 29
59

Page 38
ஈழத்தவர் வரலாறு முதலியார் செ.இராசநாயகம், உக்கிரசிங்கன் சிவவழிபாடுடையவனானபடியால், புத்தபள்ளிகள் நிறைந்த கதிரமலையிலும் சிங்கைநகரே சிறந்ததென நினைத்தான் போலும் என்கிறார்.' சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் தெரிவு செய்யவிரும்பினமையின் விளைவே, சிங்கைநகர் புதிய தலைநகராக மாறியது. \
4.5 சிங்கைநகர் எது?
உக்கிரசிங்கன் புதியதலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப்பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றிணை மேற் கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறைகொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள்.* உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கைநகராகும். வடவிலங்கை இராச்சியத்தின் தலைநகரின் பெயர் சிங்கை அல்லது சிங்கைநகர் எனச் செகராசசேகரமாலை, செகராசசேகரம், தகூதிணகைலாசமலை ஆகிய நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரியச்சக்கரவர்த்தி, ஒருவனைக் குறிப்பிடுகின்ற கல்வெட்டாக இலங்கையிலே கிடைத்துள்ள ஒரேஒரு கொட்டகமக் கல்வெட்டிலும் சிங்கைநகரே ஆரியச் சக்கிரவர்த்தியின் அரசிருக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.* இப்பெயர் வருவதற்கான காரணத்தை ஆராய்வது பொருத்தமானது. ’சிங்கைநகர் (சமஸ்கிருதம்-ஸிங்ஹ நகர) என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்ஹபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு. கலிங்கநாட்டு வம்சங்களுள் ஒன்று கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையாவது ஸிங்கபுர என்ற தலைநகரிலிருந்து ஆட்சிநடத்தியது என அறிகிறோம் என இந்திரபாலா குறிப்பிடுகிறார். " சோழன் முதலாம் பராந்தகனின் தலைநகர்களில் ஒன்று சிங்கபுரமாகும். இம்மன்னன் ஈழத்தைத்தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். உத்தரதேசத்திலும் இவனது ஆட்சி நிலவியது. அத்தலைநகரின் பெயர் இங்கு வழங்கலாயிற்று எனப்
27. மேகநூல், பக்கம் :29 28. யாழ்ப்பாணம் வைபவமாலை, மு.கு.நூல், பக்கம் 14
29. இந்திரபாலாகா, மு.கு.கட்டுரை, பக்கம் : 49
60

ஈழத்தவர் வரலாறு
புஸ்பரத்தினம் கருதுகிறார்.* ஆனால், சிங்கைநகர் என்றபெயர், முதன்முதல் கதிரமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத்தாங்கி சிங்க (ன்)நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது.
தமிழரசின் ஆரம்பத்தலைநகரான சிங்கைநகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப்பிராந்தியத்தில் குறிப்பாகப் பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும்." வல்லிபுரப்பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும் வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கைநகரை உக்கிரசிங்கன் பகுதியிலே நிறுவினான் என்பது பொருத்தமானது. ப.புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளில் இருந்து பூநகரிப்பிரதேசம் பண்டைய இராச்சியம் ஒன்றின் வளமான பிரதேசமாக விளங்கியிருக்கிறது எனத் தெரிகிறது. பூநகரிப்பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன.*
சிங்கள நூல்களிலிருந்தும் கம்பளைக்கல்வெட்டிலிருந்தும் சிங்கைநகர் அலையெறியும் கடற்கரையோரத்தில் அமைந்திருந்தது எனத் தெரிகிறது. “பொங்கொலி நீர்ச்சிங்கைநகராரியன்’ என கோட்டகமக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது. சுண்டிக்குள மணல்தடை, ஆனையிறவு மணல்அணை, பண்ணைப் பாலம், பொன்னாலைப்பாலம் எதுவுமின்றி இந்து சமுத்திரத்தின் கிழக்குமேற்கு இணைப்பு, இக்கடனிரேரியைப் பொங்கு கடலாக வைத்திருந்தது.* யாழ்ப்பாணகுடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளத்தின் பயன்பாட்டை உணராத எமது மூதாதையினரான பண்டைய தமிழ் மக்கட் கூட்டத்தினர் தமக்குப் பரிச்சயமான தரைமேல் வடிகாலமைப்பைக் கொண்ட நதிகள் பாய்கின்ற வன்னிப்பிரதேசத்தை
80. மேகுகட்டுரை, பக்கம் :55 31.அ புஸ்பரத்தினம்.ப, மு.கு.நூல், பக்கம் :41 31. இராசநாயகம்.செ. மு.கு.நூல், பக்கம் 29 32. இராசநாயகம்,செ.மு.கு.நூல், பக்கம் 29 33. மே.கு.நூல், பக்கம் -30 34. குணராசா.க.நல்லூர்க்கந்தசுாமி கோயில் வரலாற்றில் திருத்தம்,
வீரகேசரி வாரமலர், 37.08. 1995, பக்கம் 9 35. மே.கு.கட்டுரை, பக்கம் 15
61

Page 39
ஈழத்தவர் வரலாறு
ஆரம்பத்தில் தமது வதிவிடங்களாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ளலாம். பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களின் தரையமைப்பும் வடிகாலமைப்பும் நீர்ப்பாசனக்குளங்களை நிறுவிப் பயிர்ச்செய்கை பண்ணச் சாதகமான நிலமை அவர்களால் ஆரம்பத்தில் விரும்பப்பட்டிருக்கின்றது. தரைமேல் வடிகாலற்ற யாழ்ப்பாணக் குடாநாட்டுப்பிரதேசமானது, மணல்கிராமமாகவும் (வலிகாமம்), மணற்றியாகவும் (வடமராட்சி) எமது பண்டைய மக்களால் கருதப்பட்டு, விரும்பிக்குடியேற்றப்பட்டாது இருந்தது. எனவே தமிழரது பண்டைய குடியிருப்புகள் யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பெருநிலப்பரப்புகளில் கூடுதலாக அமைந்திருந்தன என்பதில் எவ்வித ஐயமில்லை. *
( சிங்கைநகரிலிருந்து அவனரசு செய்யுங்காலத்தில் நரசிங்கன் என்னும் ஒர் ஆண்மகவும் செண்பகவதி என்னும் ஒரு பெண்மகவும் பிறந்தார்கள். உக்கிரசிங்கனின் பின் நரசிங்கன், ஜெயதுங்க பரராசசிங்கன் என்னும் நாமத்துடன் அரசனானான். “அவன் அரசியற்றும் நாளிலே யாழ்ப்பாடி என்னும் பாணகுலத்தவனொருவன். பரிசில் பெறுவான் வேண்டி அரசவைக்கு வந்து தனது திறமைக்காட்டினான். அரசன் மகிழ்ந்து இப்போது கரையூர், பாசையூர் என்றழைக்கப்படுவதாகிய மணல் மேட்டைப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப்பாடியும் உவகையுடன் ஏற்று, தன்னுார் சென்று தன்குலத்தவருடன் வந்து அவ்விடத்தைத் திருத்தி குடியேறினான். அவ்விடம் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டது. அப்பெயர் பின் பறங்கிக்காரர் கட்டிய நகரிக்காகி ஈற்றில் குடாநாடு முழுவதற்குமுரியதாகி விட்டது."
கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத்தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல்வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகத் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதே.*
36அ குணராசா, க, மு. கு. கட்டுரை, பக்கம் :9 37. மே.கு. நூல், பக்கம் :29 38. குணராசா. க. மு. கு, கட்டுரை, பக்கம் 9
62

ஈழத்தவர் வரலாறு
4.6 பாண்டியர் படையெடுப்பு
தென்னிந்தியாவில் தமிழரசுகள் வலிமை பெற்றிருந்த காலவேளைகளில் கடல்கடந்து இலங்கை மீது படையெடுப்புகள் மீண்டுந் தொடங்கின. சிங்கை நகரிலிருந்து ஜெயதுங்கன் வடவிலங்கையை ஆண்டு காலத்தில், முதலாம் சேனன் என்பான் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தான். பூரீமாற வல்லபன் (கி.பி.815-862) என்ற பாண்டிய மன்னன் இலங்கைக்கு படையெடுத்து வந்து ஜெயதுங்கனை வென்றதோடு, சேனனையும் புறமுதுகிடச் செய்து திறை பெற்றுச் சென்றான்)
ஜெயங்துங்கனின் பின்னர் உத்தரதேசத்தை அவன் சந்த்தியினரே ஆண்டிருக்க வேண்டும். அவர்கள் தென்னிந்தியத் தமிழரசர்களுக்கு அல்லது தென்னிலங்கைச் சிங்களவரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் உத்தரதேசம், 2ம் கஸ்ஸப மன்னனின் ஆதிக்கத்தின் கீழ் உட்பட்டிருந்தது என்பதை கந்தரோடைக் கல்வெட்டிலிருந்து அறியலாம் என கா.இந்திரபாலா குறிப்பிடுகிறார். மேலும் பத்தாம் நூற்றாண்டில் உத்தரதேசம் 4ம் மஹிந்த என்ற சிங்கள மன்னனின் ஆதிக்கத்துட்பட்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு படையெடுப்பு யாழ்ப்பாணத்திலே நடைபெற்றபோது, அப்பொழுது அநுராதபுரத்தை ஆண்டு கொண்டிருந்த நான்காம் மஹிந்த மன்னன் (956972) உடனே யாழ்ப்பாணத்துக்கு படையனுப்பி அப்பகுதியை மீண்டும் விடுவித்தான் என சூளவம்சம் கூறும். படையெடுப்பு நடாத்திய தென்னிந்திய மன்னன் சுந்தரசோழன் எனப்படும் 2ம் பராந்தகனாவான்." பின்னர் மீண்டும் கி.பி.1003 இல் ராஜராஜசோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றி கொண்டான்."
4.7 சோழராட்சி
உருகுணை தவிர்ந்த பிறபாகங்கள் சோழராட்சிக்குட்பட்டன என்று சூளவம்சம் கூறுமிடத்து யாழ்ப்பாணப்பகுதியும் பொலநறுவையிலிருந்து ஆட்சி
39. இந்திரபாலா. கா., மு.கு.கட்டுரை. 40. இந்திரபாலா.கா, மு.கு.கட்டுரை. 41. மே.கு.கட்டுரை
63

Page 40
ஈழத்தவர் வரலாறு
நடத்திய சோழருடைய ஆதிக்கத்திற்குள் அடங்கியிருந்தது என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் நூற்றாண்டில் சோழ ஆட்சியின் போது பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளன. முதலாவது சாசனம் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தது. இது யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டது. வேறு இரு சோழராட்சிக் காலத்துச் சாதனங்கள் ஊர்காவற்றுறைக் கோட்டைக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழராட்சி உத்திரதேசத்தில் நிலவியதை உறுதிப்டுத்துகின்றன."
உத்தர தேசத்தை சோழரால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள், என நம்ப இடமுண்டு. கி.பி.948 ஆம் ஆண்டளவில், புகனேகவாகு அல்லது புவனேசவாசர் என்பவர், சிங்கைநகர்ப் பகுதிக்குரிய அரசப் பிரதிநிதியாக இருந்திருக்க வேண்டும். (புகனேகவாகு தமிழ்ப்பெயர், வீரவாகு போல) இவன் சோழபராந்தகனின் பிரதிநிதியாக இங்கு நியமனம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கி.பி.945 காலகட்டத்தில் சோழப்பராந்தகன் படையெடுத்து இலங்கைக்கு வந்து சிங்களவரசனான் 4ஆம் உதயனைப் புறங்கண்டான் என்றும், சிங்கைநகர் அரசனைக் கொன்றான் என்றும் வரலாற்றுக்குறிப்புள்ளது.* இச்சோழ மன்னனின் பிரதிநிதியாகப் புவனேகவாகு சிங்கைநகரில் ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளான்.
பத்தாம் நூற்றாண்டிலே பார்சியாவின் அரசனான டோபாக் என்பவன், கர்ஷாஸ்ப் என்பவனின் தலைமையில் அனுப்பிய படை ஒன்றும் கலா என்ற துறையில் (கலா என்பது ஊர்காவற்றுறை-களபூமி) இறங்கி இருநாட் w தூரமுள்ள ஓரிடத்தில் வாகு வென்னும் அரசனை வெற்றி கொண்டது என்று அசேதி என்ற பார்சியன் கர்ஷாஸ்ப் நமா என்னும் கிரந்ததத்தில் எழுதியுள்ளான். பத்தாம் நூற்றாண்டில் வாகு என்னும் பெயருடன் இலங்கை அரசரில் யாழ்ப்பாண மொழிந்த பிறவிடத்தில் எவருமிருந்திலர்." வாகு என்று
43. இந்திரபாலா.கா. மு.கு.கட்டுரை : 43. இராசாநாயகம்.செ. மு.கு.நூல், பக்கம் 33 44. மு.கு.நூல், பக்கம்

ஈழத்தவர் வரலாறு
பார்சிய நூல் குறிப்பிடும் மன்னன் அல்லது சிற்றரசன் இந்தப் புவனேகவாகுவாக
இருக்கலாம்.
கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதற்கு ஆதாரங்களுள்ளன. அவ்வேளையில் அப்பிரதேசத்தின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு, பூநகரியில் இன்று விளங்குகின்ற நல்லூர் என்ற பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும், உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களிலிருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லூர் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதன நல்லூர் ஆகும் எனக் கொள்வதில் தவறு இல்லை. தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லூர் எனப்பெயருள்ளது. ஆகவே, அத்தகைய ஒரு பெயர் பூநகரியிலுள்ள இந்தப் பிரதேசத்திற்கும் சோழரால் இடப்பட்டிருந்தது எனக்கொள்ளலாம். * முதலாம் பராந்தகன் ஆட்சியில் தான் தமிழ்நாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென் எல்லையிலுள்ள நல்லூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது. பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும், வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்றுவடக்காக நல்லூர் என்ற இடமும் காணப்படுகிறது. *
பதினோராம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைக் துரத்தி விட்டு, இலங்கை முழுவதற்கும் முதலாம் விஜயபாகு (1055-10) அரசனானான். அவன் ஆட்சிக் காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புராதன பெளத்த விகாரைகளுள் ஒன்றாகிய ஜம்புக் கோல விகாரையை புதுக்க அமைப்பித்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகின்றது. *
விஜயபாகு இறந்த பின்.கி.பி.1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன், சோழராட்சியை மீண்டும் நிலை நாட்ட இலங்கைமீது படையெடுத்தான்.
45. குணராசா.க.மு.கு.கட்டுரை, பக்கம் 15 46. புஸ்பரட்ணம்.ப, மு.கு. கட்டுரை, பக்கம் :15 47. குணராசாக, மு.கு.கட்டுரை, பக்கம் 15 48. இந்திரபாலாகா, மு.க. கட்டுரை,
65

Page 41
ஈழத்தவர் வரலாறு அப்படைக்குத் தலைமை தாங்கி வந்தவன் கருணாகரத்தொண்டைமான் என்னும் தளபதியாவான்." அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் என நம்ப இடமுள்ளது. தொண்டைமானாற்றைத் துறைமுகமாக்குவித்தான். தொண்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை (தானாக விளையும் உப்பு) சோழ நாட்டிற்கு ஏற்றுவித்தான். உருப்பிராயிலுள்ள கருணாகரப் பிள்ளையார் கோயிலை இவனே அமைப்பித்தான்."
பன்னிரண்டாம் நூற்றாண்டில், உத்திரதேச அரசு, தென்னிலங்கை ஆட்சியாளரின் ஆதிக்கத்தினுள் மீண்டும் உட்பட்டது. அவ்வேளை முதலாம் பராக்கிரமபாகு (கி.பி.1153-1286) இலங்கையின் மன்னனாக இருந்தான். இதற்கு ஆதாரமாக நயினாதீவில் அகப்பட்ட கல்வெட்டொன்றும், தென்னிந்தியாவில் திருவாலங்காட்டிலே கிடைத்த கல்வெட்டொன்றும் ஆராதமாகவுள்ளன. முன்னதில் ஊர்காவற்றுறையிலே நடைபெற்ற கடல் வாணிபம் பராக்கிரமபாகுவின், ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது என்பதையும், பின்னதில் ஊறாத்துறை, மட்டிவால், வல்லிக்காமம் ஆகிய இடங்களிலே பராக்கிரம பாகுவின் கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் அறிய முடிகின்றது."
பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சிங்கைநகர் வடவிலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது.
49. இராசநாயகம், செ. முகுநூல், 50. மு.கு.நூல், : 51. மு.கு.நூல்,
66

uuagpuuaGOOI gaagapup: 5 ஆரியச்சக்கிரவர்த்திகள்
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடர் வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு, மிக முக்கியமான காலகட்டமாகும். சுதந்திரத் தமிழ் இராச்சியம் நிறுவப்பட்டு நிலைகொண்ட கால மிதுவென வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். ஆரியச் சக்கிரவர்த்தி எனச் சிறப்புப் பெயரோடு விதந்தோதப்படும் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கால ஆரம்பமாக பதின்மூன்றாம் நூற்றாண்டு
விளங்குகின்றது.
அவர்கள் இராமேஸ்வரத்துப் பிராமணவரச குடியிற் சம்பந்தஞ் செய்த பின், உபவீதம் அணிந்து, ஆரிய அரசர் என்ற நாமம் புனைந்து, இராமேஸ்வரத்தை தந்தேயத்தினாளுகைக்குட்படுத்தி, அதனால் சேதுகாவலன்' என்ற புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியும் சேதுலாஞ்சனையும் பொறித்து, ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப்
பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்தி வந்தார்கள். '
5.1 கலிங்கமாகன்
سمبر
கி.பி.1215 ஆம் ஆண்டு கலிங்கமாகன் என்ற மன்னன் இலங்கையைக் கைப்பற்றி, 1236 ஆம் ஆண்டு வரையும் இருபத்தோரு வருடங்கள் பொலநறுவையிலிருந்து ஆட்சி செலுத்தினான். இலங்கை வரலாற்றில் கலிங்கமாகனின் படையெடுப்பும் ஆட்சியும் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக் கூடியது. கலிங்கமாகன் தென்னிந்தியாவிலிருந்து இருபத்தினாலாயிரம் தமிழ்க்கேரளப்படை
1. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச்சரித்திரம், யாழ்ப்பாணம்-1933
67

Page 42
ஈழத்தவர் வரலாறு
வீரர்களுடன் வந்து பொலநறுவையை கைப்பற்றிக் கொண்டான்பொலனறுவை யுகத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியற் குழப்பங்கள் மாகனின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தன. இவன் தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தானா அல்லது உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து தண்டெடுத்தானா என்பது ஆய்வுக்குரியது. இவனுடைய படைவீரர்களும் இவனுக்குதவியாக வந்த ஜயபாகுவின் படைவீரர்களும் தங்குவதற்கு அரசன் அமைந்திருந்த விடங்களாக ஊர்காவற்றுறையும் வலிகாமமும் அமைந்திருந்தனவெனச் சூளவம்சம் கூறுகிறது. உறுதிப்படுத்துவதாக இந்திரபாலா குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து உத்தரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மாகனின் படையெடுப்பு நிகழ்ந்ததாவும் கூறலாம்.
2
இதனைப் பூஜாவலிய என்ற சிங்கள வரலாற்று நூலும்
மாகன் பொலநறுவையில் தன் ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டான். சிங்களவரால் தமிழரிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த நிலங்கள், சொத்துக்கள் என்பனவற்றை இவன் மீளப்பறித்துத் தமிழருக்குக் கொடுத்தான்) இதனைச் சூளவம்சம் இவ்வாறு கூறும் : “ சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே தர்மமான சமத்துவம் பாராட்டிய எல்லாளனைப்போல மாகன் விளங்கவில்லை. இவன் தன் தமிழ்துணைவரிடம் விசேஷமாக அன்பு பாராட்டி அவர்களுக்கு வயல்களும், புற்றரைகளும், வீடுகளும், தோட்டங்களும், பணியாட்களும், மாடுகளும், எருமைகளும், தொகுத்துக் கூறுங்கால் சிங்களவரின் உடமைகள் யாவற்றையும் கொடுத்தான். அந்தோ, காலனின் பூதங்கள் போன்ற அந்தத் தமிழ்ப்பூதங்கள் இப்படியே இந்த இராச்சியத்தையும், சமயத்தையும் அழித்தனர் எனச் சூளவம்சம் புலம்பும். ‘தமிழர் பிரதேசங்களைச் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மீட்டு இராசரட்டை எனப்படும் வடபகுதியில் குடியேறியிருந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைத் தென்புலம் பெயர வைத்தவன்
மாகன் ஆவான் எனச் சில வரலாற்றாசிரியர்கருதுவர். பொலநறுவையைப்
3. சூளவம்சம், 83:17 3. இந்திரபாலா. கா. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும்
சூழ்நிலையும், இளங்கதிர், பேராதனை -196970 பக்கம் 18 4 சூளவம்சம் 5. குணராசா.க, குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப்பிரதேசங்கள்,
முத்தமிழ் விழாமலர்-1991, பக்கம் 133
68

ஈழத்தவர் வரலாறு
பாழாக்கி அங்கிருந்த புத்த பள்ளிகளையிடித்து, புத்தபிக்குகளை அவ்விடத்திலிருந்து துரத்தி, வேறுமனேக கொடுந்தொழில்களைச் செய்து, பழிபாவத்திற்கு அஞ்சாதவனாய் பொலனறுவையில் அரசாண்டிருந்தானெனச் சிங்கள நூல்கள் குறிப்பிடுவதாக இராசநாயகம் குறித்துள்ளார். இவனை ஒரு வீரசைவனாகக் கூறும் வரலாற்றாசிரியர்கள் மட்டக்களப்பில் இம்மதம் வளர்ச்சியடைய இவன் ஆட்சிக்காலமே காரணம் எனவும் கூறுவர்'இவனை ஒரு தமிழ்மன்னனானக் கூறும் மட்டக்களப்பு மான்மியம் இந்து மதத்திற்கு இவன் ஆற்றிய பணிகள் பற்றிச் சிறப்பாகக் கருத்துரைக்கின்றது. தவறான மதக்கொள்கையைப்பின்பற்றியவன் எனக் கூறும் சூளவம்சம் இவன் விகாரைகள், வழிபாட்டிங்கள் முதலியவற்றைத் தனது படைவீரர்களின் வதிவிடங்களாக மாற்றினான் எனவும் கூறுகிறது. *
கலிங்கமாகன் ஆட்சியில் சிங்கள மக்களும் பெளத்தமதமும் பெரிதும் பாதிப்புற்றன, ஆதரவை இழந்தன எனக் கொள்ளலாம். அவர்களைப் பொறுத்தளவில் மாகன் பெருங்கொடுங்கோலனாக விளங்கியுள்ளான். இவனுடைய ஆட்சி தமிழருக்குச் சார்பாக இருந்ததனால் இவன் மீது வெறுப்படைந்த சிங்கள மக்கள் 250 ஆண்டுகள் தலைநகராக விளங்கிய பொலனறுவையைக் கைவிட்டு தென்னிலங்கை நோக்கி இடம் பெயர்ந்தனர். புதிய சிங்கள ஆட்சியின் தலைநகராகத் தம்பதெனியா உருவாக்கப்பட்டது. சிங்கள மக்கள் பாதுகாப்புக்கருதித் தெற்கு நோக்கித் தமது இராசதானிகளை காலத்திற்குக் காலம் அமைத்தபோது வடக்கே பலமான தமிழ் இராச்சியம் ஒன்று உருவாகியது.
கலிங்கமாகனின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கும் பெளத்தமதத்திற்கும் எதிராக நிகழ்ந்த சம்பவங்களின் எதிரொலி இராசரட்டைப் பிரதேசத்தில் மட்டுமன்றி உத்திரதேசத்தில் குறிப்பாக நாகதீபத்திலும் (யாழ்ப்பாணக் குடாநாட்டில்) எதிரொலித்துள்ளது என ஊகிக்க இடமுண்டு. வலிகாமம்
இராசநாயகம். செ. மு.கு.நூல், பக்கம் :49 7. புஸ்பரட்ணம், ப, இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி பொருளிதழ் -3
யாழ்ப்பாணம் -பக்கம் 11 m 8. புஸ்பரட்ணம், ப, நாகரிகம் தென்மேற்குத் திசை நோக்கிய இடம் பெயர்ந்தமையும்,
இராச்சியங்கள் இடம்மாறியமையும், வரலாறு -9, யாழ்ப்பாணம் 1992, பக்கம்:57
69

Page 43
ஈழத்தவர் வரலாறு
(கதிரைமலை- கந்தரோடை, காசாத்துறை- காங்கேயன் துறை, ஜம்புக்கோளப்பட்டினம்- திருவடிநிலை), வல்லிபுரம் முதலான பகுதிகளில் பரவி வாழ்ந்த சிங்கள பெளத்தர்களும் தமது பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாணக்குடாநாட்டைவிட்டு இடம்பெயர நேர்ந்தது என ஊகிக்கலாம். அதனால் தான் யாழ்ப்பாண இராச்சியம் தோற்றம் பெற்றபோது, அல்லது பூநகரின் சிங்கைநகரிலிருந்து தமிழர் இராச்சியம் யாழ்ப்பாணத்திற்கு இடம்மாறியபோது மக்கட் குடியேற்றங்களை யாழ்ப்பாணக்குடாநாட்டில் நிறுவ நேர்ந்தது. மாகனின் பொலநறுவைக் கைப்பற்றலின் விளைவாக எப்படி இராசரட்டைச்சிங்கள மக்கள் தென்புலம் பெயர்ந்தார்களோ அதேபோல மாகனின் தோல்வியுடன் உத்தரதேசத் தமிழ் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர நேர்ந்துள்ளது. இதுபற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.
சோழர் மறைந்தாலும் சோழராட்சி ஈழவரலாற்றில் குறிப்பாகத் தமிழர் வரலாற்றில் பாரிய தாக்கித்தினை ஏற்படுத்தியது. சோழராட்சியின் தவிர்க்க முடியாத விளைவு யாதெனில் ஈழத்தின் மதத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் இருந்து- பிராமண சைவசமய நடைமுறைகளும் திராவிடக் கலையும், கட்டிடக்கலையும் தமிழ்மொழியும் ஊடுருவி மிகப்பலம் வாய்ந்த முறையில் மேலோங்கியமையே, இக்காலந்தொட்டு ஈழத்தின் மீது தென்னிந்தியா செலுத்திய ஆதிக்கம் முற்றுமுழுதாக இந்துமத உள்ளடக்கத்தினையே கொண்டதாயிருந்தது."(மாகனின் ஆட்சிக்காலத்தில் சைவசமயிகளுக்கும் தமிழரும் மேலாதிக்க மிக்க மக்களாக விளங்கினர்.அதனால், பொலநறுவைக்கு வடக்கே இராசரட்டையில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்புலம் பெயர்ந்ததுபோல, யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்த சிங்கள பெளத்தர்களும் குடாநாட்டைவிட்டு வெளியேறித் தென்புலம் பெயர நேர்ந்தது.
(1236 ஆம் ஆண்டு 2 ஆம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னன், கலிங்கமாகனைப் பொலநறுவையிலிருந்து துரத்தி விட்டான். அந்த யுத்தத்தில் கலிங்க மாகன் இறந்ததாக, ஆதாரமில்லை என்றும் அவன் வடவிலங்கைக்குத் தனது எஞ்சிய படைகளுடன் சென்றிருக்க வேண்டும் என கா.இந்திரபாலா கூறுகிறார். மதுரைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டுமெனச்சிலர்
9. சிற்றம்பலம், சி.க, தமிழ்மக்களின் பாரம்பரியப்பிரதேசம்,
முத்தமிழ்விழா மலர் - 1991, பக்கம் 171 10. இந்திரபாலா.கா, மு.கு.கட்டுரை,
70

ஈழத்தவர் வரலாறு கருதுகின்றனர். எவ்வாறாயினும் 1236 ஆம் ஆண்டிலிருந்து 1242 ஆம் ஆண்டுவரை கலிங்க மாகன் எங்கிருந்தானென்பது தெளிவாகவில்லை. இக்குறித்த காலத்தில் வடவிலங்கையைப் பாண்டிமழவன் என்ற அதிகாரியே நிர்வகித்து வந்தானென்பது கயிலாயமாலையிலிருந்து புலனாகின்றது.
தென்னிலங்கைச் சிங்களவரசனின் அச்சுறுத்தல் ஆரம்பமானபோது பாண்டிமழவன் கயிலாயமாலையில் விபரித்தவாறு கரந்துறைந்திருந்த கலிங்கமாகனை வலிந்து அழைத்து வந்து விஜயகாலிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்ற நாமத்தோடு அரியணை அமர்த்தினான் என்று துணியலாம்.
பாண்டிமழவனைப்பற்றி கைலாயமாலை கூறுவனவற்றைப் புனைத்துரைகனென்றோ கற்பனைக் கதைகளென்றோ கொள்ள முடியாது." இவ்வாறு பாண்டிமழவனால் அழைத்துவரப்பட்டவன் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி இவனே, விஜய கூழங்கை ஆரியச் சக்கிரவர்த்தி என்றும் சிங்கை ஆரியன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். செகராசசேகரன் என்ற சிங்காசனப் பெயரையும் புனைந்து கொண்டான்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்ற நூலில், சுவாமி ஞானப்பிரகாசகர் கூறுவது போல, விஜய கூழங்கை என்ற பெயர் விசயகாலிங்க என்ற பெயரின் திரிபாகும் எனக் கொள்ள வேண்டும்." முதலியார் செ.இராசநாயகத்திலிருந்து கா.இந்திரபாலா வரை இக்கூற்றின் மெய்மையை ஏற்றுக்கொள்கிறார்கள். விசய காலிங்கன் என முடிவெடுக்கும் போது, விசயகாலிங்கனைக் கலிங்க மாகன் என அடையாளம் காண்பதில் சிரமமில்லை என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.
கலிங்கமாகன் சிங்கைநகரின் மன்னனாக அமைந்ததால் சிங்கை ஆரியன் எனப்பட்டான், சிங்கை நகரிலிருந்து தலைநகரை மீண்டும் நாகதீபத்திற்கு (யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு) இடம்மாற்றிய பெருமை இந்தச் காலிங்க ஆரியச்சக்கிரவர்த்தியையே சேரும்.
11. பத்மநாதன்.எஸ், ஈழத்தமிழ் வரலாற்று நூல்கள்,
இளங்கதிர், பேராதனைப்பல்கலைக்கழகம் -1970 18. ஞானப்பிரகாசர்சுவாமி, யாழ்ப்பாண வைபவவிமர்சனம், அச்சுவேலி -1928
71

Page 44
ஈழத்தவர் வரலாறு
52. புதிய தலைநகர் உருவாக்கம்
உக்கிரசிங்க மன்னன் கதிரமலை ( கந்தரோடை) யிலிருந்து தனது தலைநகரைப் பூநகரிச் சிங்கைநகருக்கு மாற்றிக்கொண்டான். யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெளத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்ததலைநகர் இடமாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமைமாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென்புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து மாகன் மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங்கைநகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பெளத்த சிங்களவர்களையும் இடம்பெயரச் செய்திருக்குமென நம்பலாம்.
அக்கால நாகதீவின் தென்பகுதியில் இன்றைய நல்லூர்ப்பகுதியில் ஒரளவு வளர்ச்சி பெற்ற குடியேற்றம் ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும். யாழ்பாடிப் பரிசிலாகப்பெற்ற, யாழ்ப்பாணனால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு இதுவாகும். அதனால், இது யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப்பின் ‘யாபாபட்டுன’ எனவும், யாழ்ப்பாணம் எனவும் புகழ்பெறப்போகும் இந்த நகரம் முதலாவது ஆரியச்சக்கிரவர்த்தி காலத்தில் பெரியதொரு கிராமக்குடியிருப்பாக இருந்திருக்க வேண்டும். குடியிருப்புகளின் வளர்ச்சி அவ்வாறானதே.
வன்னிப்பிரதேசத்திலிருந்த சிங்கைநகரைப் புதியதொரு பிரதேசத்திற்கு, அதாவது குடாநாட்டிற்கு இடம்மாற்றுவதற்குப் பல்வேறு காரணங்களை வரலாற்று ஆவணங்களிலிருந்து ஊகித்தறிய முடிகின்றது. கலிங்கத்துமாகனின் படையெடுப்பினால் இராசரட்டையின் (வன்னியுட்பட) நீர்ப்பாசன நாகரீகம் அழிவுறநேர்ந்தது. பெளத்தத்தையும் சிங்களமக்களையும் இப்பகுதிகளிலிருந்து அகற்றும் நோக்கோடு இந்த வீரசைவனான கலிங்கத்துமாகன் எடுத்த நடவடிக்கைகள், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக நன்கு பயிரிடப்பட்டு வந்த பரந்த வயல்நிலங்களை காடுபரவ வைத்தன. நீர்பாசனக்குளங்கள் கவனிப்பாரின்றி சிதிலமடைந்தன. உத்தரரட்டையிலும் இராசரட்டையிலும் காட்டுநோய்களும் மலேரியாவும் மக்களைப்பிடித்து அழிவை ஏற்படுத்தின. வெள்ளப்பெருக்கும் வறட்சியும் இப்பகுதிகளில் சகசமாயின. மக்கள் செறிவாக வாழ்ந்த உலர்பிரதேசம், மக்கள் அரிதாக வாழும் பகுதியாக
72

ஈழத்தவர் வரலாறு
மாறியது. உத்தரதேசமும் இந்த நெருக்கடிக்குள்ளாகியது. அதனால், விசயகாலிங்கன் சிங்கைநகரிலிருந்து இராசதானியை வடக்கே நகர்த்த விரும்பியிருக்கலாம்.
ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் வன்னிப்பிரதேசத்தில் வரலாற்றுக் குடியேற்றங்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகளுள்ளன. இன்று இப் பிரதேசத்தில் பாழடைந்து கிடக்கும் நீர்ப்பாசனக்குளங்களும் நெல்வயல்களும் அழிபாடுகளும் இப்பிரதேசத்தின் வரலாற்றுக்காலக்குடியிருப்புகளை வலியுறுத்தும் சான்றுகளாகவுள்ளன. இப்பிரதேசத்தின் காடுகளிடையே சிதிலமடைந்து காணப்படும் குளங்களும் அவற்றின் முறிப்பு அணைக்கட்டுகளும் இப்பிரதேசத்தின் புராதன நீர்ப்பாசன நாகரீகத்தின் மேம்பாட்டைக் காட்டுவனவாகவுள்ளன. இப்பாழடைந்த வன்னிக் குளங்களின் நீர்ப்பாய் பரப்பில் வளர்ந்திருக்கும் இளங்காடுகள், கைவிடப்பட்ட வயல்களில் வளர்ந்த மீள்காடுகள் என்பதனைக் காட்டுகின்றன. இப்பாழடைந்த குளங்களையும் கைவிடப்பட்ட வயல்களையும் நோக்கும்போது இப்பிரதேசத்தில் மக்கட் குடியிருப்புகள் நன்கு அமைந்திருந்தமையைப் புரிந்து கொள்ள முடியும்."
இப்பண்டைக்குடியிருப்புகள் பலவும் பல்வேறு காரணங்களால் மக்களால் கைவிடப்பட்டு காடுகளால் மூடப்பட்டன. தென்னிந்தியப்படையெடுப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. தென்னிலங்கையைக் கைப்பற்ற விரும்பிய படைவீரர்கள் வடவிலங்கையிலேயே பாசறை அமைத்துக் கொண்டனர். அதேவேளை தென்னிலங்கைப்படைகளும் இப்பிரதேசத்தினூடாக வடவிலங்கையைத் தாக்க விரும்பின. இவை காரணமாக குடாநாட்டிற்கும் தென்னிலங்கைக்குமிடையில் நிலைமாறு வலயமாக அமைந்த வன்னிப் பிரதேசம் யுத்தகளமாக அடிக்கடி மாறநேர்ந்தது. இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்த போர்கள், மலேரியா போன்ற கொள்ளை நோய்களால் ஏற்பட்ட அழிவுகள், கடும்வறட்சி, வெள்ளப்பெருக்கு, இவை காரணமாக ஏற்பட்ட பஞ்சம்பசி என்பன யாவும் இந்தப் புராதன
13. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு
சுன்னாகம்-1949. பக்கம் :35
14 குணராசா.க, கிளிநொச்சியின்கதை, கந்தன்கருணை,
கும்பாபிஷேக மலர், கிளிநொச்சி-1983, பக்கம் 48.
73

Page 45
ஈழத்தவர் வரலாறு
குளக்குடியிருப்புகளைக் கைவிட்டு மக்கள் வெளியேறக் காரணமாயின. இப்பிரதேசத்தில் பரவலாகக் குடியேறி வாழ்ந்த மக்கள் நான்கு திக்குகளாலும் குடிபெயர்ந்தனர். முக்கியமாக முல்லைத்தீவுக் கரையோரம், பூநகரிக் கரையோரம் என்பனவற்றிற்கும், அதிகமானோர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் குடிபெயர்ந்தனர்."
சிங்கைபுரத்தைவிட்டு குடாநாட்டிற்கு இராசதானியை மாற்றிக் கொள்வதற்கு இன்னொரு காரணம், காலிங்க ஆசிரியச்சக்கிரவர்த்திக்கு இயல்பாகவே சிங்கள மன்னனிடம் அடைந்த பெருந்தோல்வியின் தாக்கமும் தூண்டியிருக்கும் என ஊகிக்கலாம். தென்னிலங்கையிலிருந்து தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சம் காரணமாக வடக்கே பாதுகாப்பான ஓரிடத்தில் தலைநகரை மாற்ற அவன் விரும்பியிருக்கலாம். யாழ்ப்பாண-ஆனையிறவுக் கடனிரேரி இயற்கையான அகழிபோன்ற குடாநாட்டு இராசதானிக்கு அரணாக விளங்கியது. மக்களதிகரிப்பால் வன்னிப்பிரதேசத்திலேற்பட்ட நீர்ப்பாற்றாகுறை, தரைக்கீழ் நீர்வளம் கொண்ட நன்னீர்ப்பிரதேசமான குடாநாட்டை நோக்கி நாடவைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது முன்னோர்களின் இராசதானியை மீண்டும் சைவச்சூழலில் தாபிக்க இம் மன்னன் விரும்பியுள்ளான்.
யாழ்ப்பாண வைபவ மாலையின்படி விசயகாலிங்கனின் மந்திரியாகப் புவனேகபாகு என்பவன் இருந்திருப்பதாக அறிய முடிகின்றது. “ அவன் குடாநாட்டில் புதிய தலைநகரைத் தக்கவிடத்தில் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பணிக்கப்பட்டான். நல்லூர்ப்பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதி, சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்மூசுடர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு நாலுமதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்காய் விடுத்து மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும். கட்டுவித்து, நகர்ப்புகுந்ததாக வைபபமாலை கூறுகிறது." இதனையே கைலாயமாலையில் வரும் ஒரு தனிச்செய்யுள் பின்வருமாறு விளக்குகிறது. "
15. குணராசா.க கரைச்சி பூநகரி, பச்சிலைப்பள்ளப்பிரதேசங்களின் நிலப்பயன்பாடும் நீர்வளமும், முதுகலைமாணி ஆய்வுக் கட்டுரை, யாழ் பல்கலைக்கழகம்-1984
16. யாழ்ப்பாணம் வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம் 1949 பக்கம் :25
17. மே.கு.நூல், பக்கம் 26
18. கைலாயமாலை, பக்கம் 23
: 74

ஈழத்தவர் வரலாறு
இலக்கிய சகாப்த மெண்னூற்றெழுபதா
மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்பனாம் புவ
னேக வாகு
நலமிகு யாழ்ப்பாணத்து நகரி கட் ழ வித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும்
புரிவித்தானே.
இத்தனிப்பாடலிருந்து மூன்று விபரங்கள் புலனாகின்றன. ஒன்று யாழ்ப்பாண நகரியைக் கட்டுவித்தவன் புவனேகவாகு; நல்லூர் கந்தசுவாமி கோயிலையும் இவனே கட்டுவித்தான். அது சக வருடம் எண்ணுாற்றெழுபதாமாண்டில் கட்டப்பட்டது எனலாம். யாழ்ப்பாண நகரி அமைக்கப்பட்ட ஆண்டின்
மெய்ம்மையை முதலில் நோக்குதல் வேண்டும்.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற சரித்திரநூலின் ஆசிரியரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தின்படி, எண்ணுாற்றெழுபது என்பது 870 அன்று. ஆயிரமாகிய பேரெண்ணும் நூற்றியெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும். எண் என்றால் 1000. இந்த 1000+107; 1107. சக வருடம் 107 ஆம் ஆண்டு என்றால் அது கி.பி.1248 ஆம் ஆண்டைக் குறிக்கும் * இந்த முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளக்தக்கதாகும். இந்தக் குறித்த ஆண்டிற்கு முன் யாழ்ப்பாண நகரி இருந்தது என்பதற்கு எதுவித சான்றுமில்லை. 1242 ஆம் ஆண்டு வடவிலங்கையில் சிம்மாசனமேறிய காலிங்க ஆரியச்சக்கிரவர்த்தி, 1248 ஆம்
என்பதாகும்.
ஆண்டளவில் யாழ்ப்பாண நகரியை உருவாக்கி அங்கு தனது இராசதானியை அமைத்துக் கொண்டான் என்பது மிகப்பெருத்தமான முடிவாகும். எனவே, உக்கிரசிங்கன் காலத்தில் குடாநாட்டின் கதிரைமலையிலிருந்த தலைநகர் பெருநிலத்தின் சிங்கை நகருக்கு மாறியது. பின்னர் காலிங்க ஆரியன் காலத்தில்
குடாநாட்டின் யாழ்ப்பாண நகரிக்கு மாறியது.
19 ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாண பைபவ விமர்சனம், நல்லூர் 1928 பக்கம் :
75

Page 46
ஈழத்தவர் வரலாறு
வீரசைவனான விசயகாலிங்க ஆரியன் தான் புதிதாகக் கட்டுவித்த யாழ்ப்பாண நகரியிலும் இராசதானியிலும், ஆலயங்கள் பலவற்றை நிறுவியுள்ளான். 'அவன் தன் வழிபாட்டுத் தேவைக்காக கைலாயநாதன் கோயிலைக்கட்டுவித்தான். கயிலாயநாதருக்கும் உமையவளுக்குமென இருவேறான உயர்ந்த பெருங்கோயில்களையும் இவற்றோடு மூன்று சபைகள், பரிவாரத் தேவர்களுக்கான மாடங்கள், உக்கிராணசாலை, யாகசாலை, சுற்றுப்பிரகாரம், தேரோடும் வீதி, மடம், அன்னசத்திரம் முதலியவற்றையும் மிகச்சிறந்த முறையிலே அமைப்பித்தான் என்று சொல்லப்படுகின்றது. * அத்தோடு தனது தலைநகரின் கீழ்த்திசையில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடதிசையில் சட்டநாதர் கோயில், தையல்நாயகியம்மன் கோயில், சாலைவிநாயகர் கோயில் முதலியவற்றையும் கட்டுவித்தான்."இ இவற்றிற் சிலவற்றைப்பிற்காலத்திற் சிம்மாசனத்திலிருந்த பரராசசேகரன் கட்டுவித்ததாகக் கூறுவர். உண்மையிற் சிங்களப்படைகளால் அழிக்கப்பட்ட இக்கோயில்களைப் பரராசசேகரன் புனருத்தாரணம் செய்தான் எனக் கொள்வதே ஏற்றதாகும். யாழ்ப்பாண நகரிக்கு உத்தரதேச இராசதானி மாறியதும், அது புதிய நகராகவும் புதிய இராசதானியாகவும் இருந்ததாலும், ஏற்கனவே குடாநாட்டிலிருந்து பெருந்தொகையான பெளத்தர்களும் சிங்களவரும் தென்புலம் பெயர்ந்துவிட்டமையாலும் புதிய யாழ்ப்பாண இராசதானிக்கு மக்கள் தேவைப்பட்டார்கள். நிலவளத்திற்கு ஏற்ப மனிதவளம் குறைந்து காணப்பட்டது. தென்புலம் பெயர்ந்த மக்களது தோட்டங்களும் வயல்களும் வதிவிடங்களும் மக்களின்மையால் தூர்ந்து போகத் தொடங்கின. எனவே, யாழ்ப்பாண இராச்சியத்தின் சமூக பொருளாதார அரசியற் படைப்பலத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேறிடங்களிலிருந்து மக்களைத் தருவித்துக் குடியேற்றங்கள் நிறுவுவது அத்தியாவசியமாகியது. எனவே யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் மன்னன் விசயகாலிங்க ஆரியன் தென்னிந்தியாவிலிருந்து மக்களை இங்கு குடியேற்ற வரவழைக்க நேர்ந்தது. இதனையே யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை முதலான நூல்கள் விபரிக்கின்றன.
திருநெல்வேலி, புலோலி, பச்சிலைப்பள்ளி, தொல்புரம், கோயிலாக்கண்டி, நெடுந்தீவு. பல்லவராயன்கட்டு, இணுவில், இருபாலை, தெல்லிப்பளை, மயிலிட்டி,
19ஆ கயிலாயமாலை -பக்கம் 16-21 யாழ்ப்பாண வைபவமாலை, பக்கம் :31-32
19இ வைபவமாலை, பக்கம் 26
76

ஈழத்தவர் வரலாறு முதலான ஊர்களில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. அத்தோடு வன்னியர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. கரிக்கட்டு மூலைப்பற்று, முள்ளியவளை, மேல் பற்று, மேற்குமூலை, கிழக்குமூலை, திரியாய், கச்சாய், கட்டுக்குளம், திருக்கோணமலை, தம்பலகாமம், கொட்டியாரம், துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி, நொச்சிமுனை, புல்வெளி, தனிக்கல் முதலான உத்தரதேசத்தின் பகுதிகளில் வன்னியர்கள் குடியேறினார்கள்."
பொன்பற்றியூரைச் சேர்ந்த பாண்டிமழவன், சண்பகமழவன் ஆகியோர் திருநெல்வேலியில் குடியேறினர். அதேயூரைச் சேர்ந்த கனகமழவன் புலோலியிலும், கச்சூரைச்சேர்ந்த நீலகண்டன் பச்சிலைப் பள்ளியிலும், திருவொள்ளூரைச் சேர்ந்த கூபகாரேந்திரன் தொல்புரத்திலும்; புல்லூரைச் சேர்ந்த தேவராயேந்திரன் கோயிலாக்கண்டியிலும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இருமரபுந்துய்ய தனிநாயகன் நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவராயன் பல்லவராயன் கட்டிலும், திருக்கோவிலூரைச் சேர்ந்த பேராயிரமுடையான் இணுவிலிலும், மண்ணாடு கொண்ட முதலி இருபாலையிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த கனகராயன் தெல்லிப்பழையிலும், காவிரியூரைச்சேர்ந்த நரசிங்கதேவன் மயிலிட்டியிலும், வாலிநகரைச் சேர்ந்த செண்பகமாப்பாணன், சந்திரசேகரமாப்பாணன் ஆகியோர் தெல்லிப்பழையிலும் குடியேறினர். * இக்குடும்பங்கள் தத்தமது அடிமை குடிமைகளுடன் அவ்வவிடங்களில் வந்து குடியேறினர். அத்தோடு தலையாரி முதலிய தலைவர்களை நியமிக்க விரும்பி, இமையான மாதாக்கனை வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கனைத் தென்பற்றுக்கும், செண்பக மாதாக்கனைத் கீழ்ப்பற்றுக்கும் நியமித்தான். வெற்றிமாதாக்கன் என்பவன் சேனைத் தளபதியாகினான்.*
சிங்கையாரியன் (விசய காலிங்கன்) காலத்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னிப்பிரதேசத்திலும் ஏற்பட்ட தமிழர் குடியேற்றத்தின் பிரதான கட்டத்தையே கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்பிரதேசங்களின் ஆதிக்குடிகளான நாகர்களுடன், ‘தென்னகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிய
0.
குணராசா. க, மு.கு.கட்டுரை மு. கு.கட்டுரை கைலாயமாலை, பக்கம் 12-15, யாழ்ப்பாணம் வைபவமாலை பக்கம் 37-39
l
3.
பைவவமாலை, பக்கம் : 30
77

Page 47
ஈழத்தவர் வரலாறு
தொடர்பின் விளைவாகவே ஈழத்தமிழகம் உருவாகியது. தென்னாட்டிலிருந்து ஈழத்திற்கு வந்த வணிகர் சிங்கள மன்னரின் அழைப்பில் வந்த தென்னாட்டுப் போர்வீரர், முத்துக்குளிக்க வந்த பரவர் முதலிய மீனவர், தமிழ்நாட்டிலிருந்து படையெடுத்து வந்த போர்வீரர் முதலியோரின் பிற்சந்ததியினரே ஈழத்தமிழ்க்குடிகள் ஆவர்."
5.3 சாவகமன்னன்
காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப்பின் அவன் Ln 56T குலசேகரசிங்கையாரியன் அரசகட்டிலேறினான் என வரலாற்றறிஞர் பலர் கூறியுள்ளனர். ஆனால் காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப் பின் வடவிலங்கையை ஒரு சாவகமன்னன் ஆண்டுள்ளான் என்பதற்குச் சான்றுகளுள்ளன. கி.பி.1247 ஆம் ஆண்டு சந்திரபானு என்ற சாவகன் (யாவா நாட்டைச் சேர்ந்தவன்) சிங்கள அரசின் மீது படையெடுத்தான். அவ்வேளை சிங்கள மன்னனாக விளங்கிய இரண்டாம் பராக்கிரமபாகு இந்தப் படையெடுப்பை முறியடித்துச் சந்திரபானுவைத் துரத்தியடித்தான்.
தெற்கிலங்கையில் தோல்வி கண்ட சந்திரபானு வடக்கிலங்கையில் வெற்றி பெற்று அங்கு தோன்றியிருந்த புதிய இராச்சியத்தின் ஆட்சியாளனாக மாறியிருக்கலாம் என இந்திரபாலா கருதுவது ஏற்புடையதாகும்.* எனவே காலிங்க ஆரியச்சக்கரவர்த்தியின் அரியணையைச் சந்திரபானு என்ற சாவக மன்னன் கவர்ந்து கொண்டான். அவனோடு வந்தவர்கள் குடியேறிய பகுதிகள் தாம் சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என வழங்கப்படுகின்றது. அவன் சிங்கள இராச்சியத்தை இரண்டாம் முறை தாக்குவதற்காக படை திரட்டினான். பதீ (பதவியா), குருந்தீ (குருந்தனூர்) மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் வசித்த சிங்களவரைத் தன்பக்கத்தில் சேர்த்துக் கொண்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது. * இவன் சிங்கள இராச்சியத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் 1258 ல் சுந்தரபாண்டியன் சாவகனை வென்று
24. பத்மநாதன்.சி, ஈழத்தமிழ் வரலாற்று நூல்கள், இளங்கதிர்
பல்கலைக்கழகம், பேராதனை, பக்கம் : 136
25. இந்திரபாலா. கா. மு.கு.கட்டுரை,
26. மு.கு.கட்டுரை,
78

ஈழத்தவர் வரலாறு
திறைபெற்றுச் சென்றான். அவன் திறையை ஒழுங்காகச் செலுத்தாமையினால் 1262ல் ஜடாவர்மன் வீரபாண்டியன் சாவகமன்னனைத் தண்டிக்க அல்லது இரண்டாம் பராக்கிரமபாகுக்கு உதவ படையெடுத்தான். அவ்வேளை சாவகமன்னன் சிங்கள அரசன் மீது இரண்டாவது தடவையாகப் படையெடுத்துச் சென்றிருந்தான். அப்போரில் சாவகமன்னனின் தலையை வீரபாண்டியன் துண்டித்தான். அதன் பின் திரிகூடகிரியிலும் கோணாமலையிலும் இரட்டைக்கயல் இலச்சினையை வீரபாண்டியன் பொறிப்பித்தான். * இந்த
இலச்சினை இன்றும் திருக்கோணமலைக் கோட்டை வாசலில் உள்ளது.
5.4 குலசேகரசிங்கை ஆரியன்.
கி.பி.1262 ம் ஆண்டில் சாவகமன்னன் போரில் இறக்கவே யாழ்ப்பாண அரசின் மன்னனாக காலிங்க ஆரியச்சக்கரவர்த்தியின் மகன் குலசேகரசிங்கை ஆரியன் (பரராசசேகரன் 1) முடிசூடிக் கொண்டான். குலசேகரசிங்கை ஆரியன் இராச்சியத்தின் நிர்வாக ஒழுங்கைச் சீர்படுத்தி நாட்டின் சமாதானம் நிலவ வழிசெய்தான்.குலசேகரனையடுத்து அவனது மகனாகிய குலோதுங்க சிங்கை ஆரியன் ( செகராசசேகரன்-2) கி.பி.1284ல் அரசனானான். மன்னார்க்கடலில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை நகர் மன்னனுக்கே உரித்தாயிருந்தது. சிங்கள மன்னன் புவனேகவாகு என்பான் உரிமை பெறமுயன்றதால் குலோத்துங்கன் புவனேகபாகுடன் போர் செய்து உரிமையை நிலைநாட்ட
நேர்ந்தது. *
குலோத்துங்க சிங்கையாரியனை டுெத்து கி.பி.1292ம் ஆண்டு விக்கிரம சிங்கையாரியன் (பரராசசேகரன்-2) அரசனானான். இவன் காலத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் மத வேறுபாட்டால் உத்தர தேசத்தில் கலவரம் மூண்டது. அரசன் கலவரத்திற்குக் காரணமான புஞ்சிபண்டாவையும் அவனைச் சார்ந்த பதினெழு பேரையும் பிடித்துச் சிரச்சேதஞ் செய்வித்தான். கலவரம் அதனால் அடங்கியது. *எனினும் இவன் காலத்தில் உத்தரதேசத்தில் வன்னிச் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின.
37. மு.கு.கட்டுரை 28. இராசநாயகம், செ, மு.கு.நூல், 39. யாழ்ப்பாண வைபவமாலை- குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம் 1949, பக்கம் :38
79

Page 48
ஈழத்தவர் வரலாறு
கி.பி.1302 இல் யாழ்ப்பாண அரசின் மன்னனாக வரோதய சிங்கையாரியன் (செகராசசேகரன்-3) முடிதரித்தான் அவன் தனது இராச்சியத்தில் வாழ்ந்த சிங்களவருக்கும் தமிழருக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தினான். இவன் காலத்தில் வன்னியர்கள் ஏற்படுத்திய குழப்பம் அடக்கப்பட்டது. கி.பி.1325 ல் வரோதயன் இறக்க, அவனது மைந்தன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (பரராசசேகரன்-3) அரசகட்டிலேறினான். இவன் காலத்திலும் வன்னியர் குழப்பஞ்செய்து அடக்கப்பட்டனர். இந்த அரசன் காலத்தில் இபன்பட்டுடா என்ற முஸ்லிம் பயணி யாழ்ப்பாணம் வந்தான். அங்கே ஆரியச் சக்கிரவர்த்தியின் திரண்ட கடற்படையையும் செல்வத்தையையும் கண்டு அதிசயித்தான். "
கி.பி.1347 இல் குணபூசணசிங்கையாரியன் (செகராசசேகரன் 4) முடிசூடினான். இவன் காலத்தில் யாழ்ப்பாணவரசில் அமைதியும் சமாதானமும் நிலவியது. இவன் பின் இராச்சியத்தின் அரசனான விரோதய சிங்கையாரியன் (பரராசசேகரன்-4) காலத்தில் நாட்டில் அமைதி நிலவிய போதிலும், வன்னியர் கலகம் இருந்தது. விரோதயன், பாண்டிய மன்னன் சந்திரசேகரன் என்பானுக்குப் படையுதவி, இழந்து பாண்டி நாட்டையும் முடியையும் மீட்டுக்
கொடுத்துள்ளான்."
5.5 தென்னிலங்கை மீது படை
கி.பி. 1380 ஆம் ஆண்டில் விரோத சிங்கையாரியனின் மகன் சயவீரசிங்கையாரியன் (செகராசசேகரன்-5) யாழ்ப்பாண அரசின் சிங்காசனமேறினான். சயவீர சிங்கையாரியன் காலத்தில், முத்துக் குளித்தல் சம்பந்தமாக எழுந்த பிரச்சினையில், தென்னிலங்கை மன்னர்களில் ஒருவனான புவனேகபாகு என்பானைப் போரில் வென்று, திறைபெற்று மீண்டான். பன்னிரண்டு வருடங்கள் தென்னிலங்கை மன்னர்கள் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்தினர் அழகக்கோனார் என்பான் திறை செலுத்த ஒரு கட்டத்தில் மறுத்ததோடு,
32
எனினும், கோட்டையின் அரசனாகவிருந்த
30. இராசநாயகம்.செ. மு.கு:நூல், 31. மே.கு.நூல், 32. மே.கு.நூல்,
80

ஈழத்தவர் வரலாறு சிங்கைநகர் அரசனால் இவனிடம் திறை வாங்கும்படியனுப்பப்பட்ட ஏவலாளர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றான். அதனால் சயவீர சிங்கையாரியனின் பெரும்படை தரைமார்க்கமாகக் கம்பளைக்கும், கடல் மார்க்கமாகக் கோட்டைக்கும் அனுப்பப்பட்டது. கம்பளையரசனான புவனேகபாகு அப்படைக்கு எதிர் நிற்க வஞ்சி ஒடி ஒளிந்தான்.° கடற்படை தோல்வி கண்டு திரும்ப நேர்ந்தது.
கி.பி.1410 ஆம் ஆண்டளவில் ஜயவீர சிங்கையாரியன் இறக்க, குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன் 5) முடிதரித்தான் இவன் காலத்தில் பராக்கிரமபாகு என்ற சிங்களஅரசன் திறைசெலுத்த மறுத்தான். அதனால் தென்னிலங்கைக்குப் படையெடுத்துச் சென்று சிங்களவரச்ைத்தோல்வி காணவைத்து, திறைபெற்று மீண்டான்." இப்படையெடுப்புக்கு விஜய நகர மன்னன் படைகொடுத்து உதவியுள்ளான்.
5.6 கனகசூரியசிங்கையாரியன்
குணவீரசிங்கையாரியனின் பின்னர் கி.பி.1440 ல் அவனது மகனான கனக சூரிய சிங்கையாரியன் (செகராசசேகரன் .6) அரசனானான். யாழ்ப்பாண இராச்சியவரலாற்றில் இவனது காலம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கி.பி.1215 ஆம் ஆண்டிலிருந்து 1440 ஆம் ஆண்டுவரை ஆரியச் சக்கிரவர்த்திகன் கட்டிக் காத்த வடவிலங்கையின் விலை மதிப்பில்லாத சுதந்திரத்தை, தென்னிலங்கை மன்னனிடம் பறிகொடுத்தமையால் ஆகும்.
33. இந்திரபாலா கா, மு.குகட்டுரை, 34. மு.கு.கட்டுரை,
81

Page 49
6 சிங்கைப் பரராசசேகரன் தொட்டு சங்கிலி செகராசசேகரன் வரை
6.1 சப்புமல் குமரயா
கனகசூரிய சிங்கையாரியன், வடவிலங்கையை ஆண்டவேளை, தென்னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு என்பான் விளங்கினான். அவன் யாழ்ப்பாணத்து ஆரிய அரசர்கள் மீது மாறாத பகைமை கொண்டிருந்தான். தென்னிலங்கை மன்னர்களிடமிருந்து யாழ்ப்பாண மன்னன் திறைபெற்றுவருகின்றமையை அவனால் பொறுக்க முடியவில்லை. கம்பளை, றைகம, கோட்டை இராசதானிகளிலும் பார்க்க, யாழ்ப்பாணப்பட்டினத்தின் ஆரியச்சக்கிரவர்த்தி சேனாபலத்திலும், பொருட்பலத்திலும் மேலோங்கியிருந்தான். அதனால் அவன் மலை நாட்டிலிருந்தும் கீழ்நாட்டிலிருந்தும் ஒன்பது துறைமுகங்களிலிருந்து திறைபெற்றான். கம்பளை மன்னனை ஆரியச்சக்கிரவர்த்தியொருவன் வெற்றிகொண்டதோடு நில்லாது கல்சாசனமொன்றில் தனது வெற்றியைப் பொறித்து மீண்டிருந்தான். கம்பளைக்கு அண்மையில் கோட்டகம எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ச்சாசனம் அதனை நிரூபிக்கின்றது.’ இவற்றை
பராக்கிரமபாகுவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
1. பத்மநாதன். சி, யாழ்ப்பாண இராச்சியம் -ஆரியச் சக்கிரவர்த்திகள் காலம்,
யாழ்பல்கலைக்கழகம்-1992, பக்கம் : 50
'கங்கணம்வேற் கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக் கையினாற்
திலோதம் பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியனைச்
சேராவனுரேசர் தங்கள் மடமாதர் தாம் !
- ( கோட்டகம சாசனம்)
a

ஈழத்தவர் வரலாறு
கோட்டை மன்னனாக கி.பி.1415 இல் ஆறாம் பராக்கிரமபாகு அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. பராக்கிரமபாகு விவேகமும் ஆற்றலுஞ் சாதுரியமுங் கொண்ட அரசனாக விளங்கினான். இலங்கை முழுவதும் தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். கண்டி இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், யாழ்ப்பாண இராச்சியம் என்பனவற்றைக் கைப்பற்றியமை
இவனுடைய சிறப்புமிக்க சாதனைகளாகும்."
பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தின் மீது (ய்ாப்பாபட்டுன) படையெடுப்பதற்கான ஆயத்தங்களை ஆரம்பத்திலிருந்தே செய்தான். பதினைந்தாம் நூற்றாண்டுச் சிங்கள நூல்கள் ஆரியச்சக்கிரவர்த்தியின் அரசிருக்கையை 'யாபாபடுன' என்று குறிப்பிடுகின்றன. 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட் விஜயநகரப்பேரரசின் எழுச்சியும் ஈழத்தின் வடபகுதியில் அதனது ஆதிக்கப்படர்ச்சியும் ஆரியச்சக்கிரவர்த்தியின் மேலாணை ஈழத்தின் தென்பகுதிக்கு விஸ்தரிக்கப்படுவதைத் தடுத்தன." இவையும் பராக்கிரமபாகுவின் யாபாபடுன வெற்றிக்குக் காரணமாயின.
கி.பி.1450 ஆம் ஆண்டு தனது வளர்ப்புப்புத்திரனும், சேனாதிபதியுமான சம்புமல் குமரயா (செண்பகப்பெருமான் ) என்பானை, ஆறாம் பராக்கிரமபாகு, பெரும் படையுடன் யாழ்ப்பாண தைக் கைப்பற்ற அனுப்பினான். சப்புமல் குமரயாவின் தந்தை மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு பணிக்கனாவான். (யானையைப் பழக்குபவன்) ஆறாம் பராக்கிரமபாகு அவனை உபசரித்து, அவன் தேகவலியிலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த் தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம் முடிப்பித்தான். அவர்களுக்கு இரு புத்திரர்களும் ஒரு புதல்வியும் பிறந்தனர். இருபுத்திரர்களையும் பராக்கிரமபாகு தத்தெடுத்து அரண்மனையில் வளர்த்தான். அவர்கள் வலிமையும் வீரமும் கொண்டவர்களாக மாறினர். மூத்தவனான சப்புமல் குமராயாவின் வலிமையும்,
3. பத்மநாதன், சி. மு.கு.நூல், பக்கம் :55 4 கோகில- சந்தேஸ், 236-364இந்திரபாலா. கா. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய
காலமும் சூழ்நிலையும் , இளங்கதிர், பேராதனை -1969/70, பக்கம் 45 5. சிற்றம்பலம். கி.க.தமிழ்மக்களின் பாரம்பரியப் பிரதேசம், முத்தமிழ்விழாமலர்-1992.
பக்கம் : 173 8. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் -1938 பக்கம் :
83

Page 50
ஈழத்தவர் வரலாறு
படைத்திறனும் கோட்டை இராச்சியத்தில் அவனைப்பற்றிய கணிப்பை ஏற்படுத்தின. பராக்கிரமபாகுவிற்கு இது கவலையைக் கொடுத்தது. ஏனெனில், அவனது சொந்த மகளான உலகுடையதேவியின் வயிற்றுப்பிள்ளை ஜெயவீரனுக்குத் தனக்குப்பின் கோட்டை அரசு கிடைப்பதற்கு சப்புமல்குமரயா தடையாக இருப்பானோ என அஞ்சி, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றும் சிரமமான பணிக்குட்படுத்தினான் எனப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் குறித்துள்ளார். '
யாழ்ப்பாணத்தின் மீது படையெடுப்பதற்கு முன் சப்புமல் குமரயா யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைப்புறக்கிராமங்கள் பலவற்றைக் கைப்பற்றி, அவற்றிலிருந்து சிறைப்பிடித்தவர்களைக் கோட்டைக்குக் கொண்டுவந்து, எதிரியின் படைவலிமையை அவர்களிடமிருந்து அறிந்து கொண்டானென ராஜவலிய கூறுகிறது. கோட்டை இராசதானியின் பெரும்படை தரைமார்க்கமாக வடக்கு நோக்கி நகர்ந்தது. கோகிலசந்தேஸ என்ற நூலில் இப்படை நகர்ந்த வழி விபரிக்கப்பட்டுள்ளது. கோட்டையிலிருந்து மேற்குக் கரையோரமாகப் புத்தளம் பூநகரிக் கரைப்பாதைவழியே இப்படை முன்னேறியது. *
உத்தரதேசத்தின் பண்டைய தலைநகரான பூநகரிச் சிங்கைநகர் எதிர்ப்பட்டிருக்கும். சப்புமல்குமராயாவின் படை, சீரும் சிறப்போடும் செழித்து விளங்கிய பொங்கொலி நீர்ச்சிங்கை நகரைச் சிதைத்து அழித்தது. * வன்னிப்பிரதேசத்தில் சப்புமல் குமரயாவின் படையை எதிர்த்து வன்னியர்கள் நிற்கவில்லை. அவர்கள் ஏற்கனவே கோட்டை மன்னனின் மேலாணையைப் ஏற்றிருந்தார்கள். சிங்களப்படைக்கும், தமிழ்ப்படைக்குமிடையிலான முதலாவது சண்டை சாவகக்கோட்டை (சாவகச்சேரி)யில் நிகழ்ந்தது. அங்கு விஜயநகர மன்னனது சேனா வீரர்கள் சப்புமல்குமரயாவின் படையை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவிக் கொண்டனர். அதன்பின் சிங்களப்படை யாழ்ப்பாணப் பட்டினத்தை வந்தடைந்தது." அவனது படைமுன் எதிர்நிற்கவியலாது, தமிழ்ப்படை தோற்றது. கனக சூரிய சிங்கையாரியன் தன்னிரு புதல்வர்களுடன் இந்தியாவிற் கோடிப்போனான்)
7 Hostory of Ceylon, Colombo-1960 Chap: 111, Page:678 .ே முகுநூல், பக்கம் 674 9. குணராசா.க, நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் 1987,
84

ஈழத்தவர் வரலாறு
சப்புமல்குமரயா யாழ்ப்பாணத் தலைநகரிட் புகுந்து, மதங்கொண்ட களிரெளக் கண்டாரைக் கொன்று, அந்த நகர் ஆவணங்கெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தேடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாட மாளிகைகளை எல்லாம் இடிப்பித்து தரைமட்டமாக்கினான். யாழ்ப்பாண நகர் சிதைந்து போனது. அவ்வேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் தகர்த்தெறியப்பட்டது. கி.பி.1248 ஆம் புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன் முதல் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், கி.பி.1450 ஆம் ஆண்டு சப்புமல்குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான்புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான் போன்று, யாழ்ப்பாண நகரியை மீண்டும் புதுப்பித்த சப்புமல்குமரயா, அழிந்து போன கந்தசுவாமி கோயிலையும் மீண்டு ஆக்கினான். * சப்புமல்குமரயா என்ற செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன்நாளங்களில் ஒடக் கொண்டவனாதலாலும் தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலே வழிபாடு பயின்று வந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப்புத்தமதத்தாபகரெனப் புகழ்ந்தோதிய விடத்தும் தமிழ்ப்பிரசைகளுக்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளை யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமன்று என சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுகிறார். "
ஆரியச்சக்கிரவர்த்தியோடு செண்பகப்பெருமாள் கடும்போர் நிகழ்த்திய நாட்களில் அரண்களும் இராசதானியும் பெரிதும் அழிவுற அவற்றைச் செண்பகப் பெருமாள் திருத்தியமைத்தானென்றே கொள்ள வேண்டும். சப்புமல்குமரயா யாழ்ப்பாணப்பட்டினத்தில் கோட்டைகளையும் காவலரண்களையும் அமைத்தான்
என்று ராஜவலிய சொல்வனவும் இக்கருத்துக்கு ஆதாரமாகவுள்ளன. "
ஆரியச் சக்கிரவர்த்திகளின் பழைய தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாண நகரி பாழாய் விட்டமையினால், இவன் நல்லூரைத் தலைநகராக்கிக் கொண்டான். உண்மையில் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே நல்லூர் - தலைநகரமாக மாறியது.
10. History of Ceylon, p.ggirai), Ludis, in 674 11. இராசநாயகம், செ, முகுநூல், பக்கம் 74-75 12. குனராசா.க, மு.குநூல், பக்கம் 35 13. ஞானப்பிரகாசர். சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி 1928, 14 பத்மநாதன், ச, ஈழத்து வரலாற்று நூல்கள், இளங்கதிர். பேராதனை -1970,
85

Page 51
ஈழத்தவர் வரலாறு
யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைவித்தது. இவ்வெற்றியைப் புகழ்ந்த கோகில சந்தேசவெனும் குயில் விடு தூதைப்பாடிய சிங்களப் புலவர் ஒருவர் சப்புமல் குமரயாவை ஆரிய வேட்டையாடும் பெருமாள்' எனப் புகழ்ந்துள்ளார்." சப்புமல் குமரயா யூரீ சங்க போதி புவனேகபாகு என்னும் சிம்மாசனப் பெயரோடு
யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனானான்.
சிறிசங்கபோதி புவனோகவாகு, நல்லூரிலிருந்து உத்தரதேசத்தை பதினேழு வருடங்கள் ஆட்சி செய்தான். கி.பி.1467 ஆம் ஆண்டு அவன் தென்னிலங்கைக்குத் திருப்பிச் செல்ல நேர்ந்தது. அவனுடைய வளர்ப்புத் தந்தை ஆறாம் பராக்கிரமபாகு இறந்து போக, அவனது பேரன் ஜெயவீரன் கோட்டைக்கு அரசனானான். அதனை விரும்பாத பூரீசங்க போதி புவனேகவாகு, விஜயவாகு என்பவனை யாழ்ப்பாணத்தின் அரசனாக்கி விட்டு, கோட்டைக்கு மீண்டு ஜெயவீரனைக்கொன்று விட்டு, அரசகட்டிலேறினான். தருணத்தை எதிர்பார்த்துத் திருக்கோவிலூரில் கரந்துறைந்திருந்த கனகசூரிய சிங்கையாரியனும் அவனது இரு புதல்வர்களும் சேனைகளுடன் வந்து விஜயபாகுவைக் கொன்று, இழந்த இராச்சியத்தை மீட்டுக் கொண்டனர்.
6-y சிங்கைப் பரராசசேகரன்
/ கனகசூரிய சிங்கையாரியன் மீண்டும் இழந்த மணிமுடியைத் தரித்துக் கொண்டான். அவன் பின் அவனது மூத்த மகனான பரராசசேகரன் கி.பி.1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன் ஆவான்)
சப்புமலர் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற தேவாலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ளவிடமுண்டு. விசயகாலிங்க ஆரியனால் கட்டப்பட்ட கோயில்களை இவனே அமைத்ததாக வரலாற்று மயக்கமுள்ள போதிலும், சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில்,
15. இராசநாயகம், செ, மு.கு.நூல், பக்கம் 74.
86

ஈழத்தவர் வரலாறு
கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பவனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.
* சிங்கைப் பரராச சேகரனே தமிழ்ச்சங்கம் ஒன்றை நல்லூரில் நிறுவிய அரசனாவான். பரராசசேகரனின் சகோதரன் செகராசசேகரன் சிறந்த தமிழறிஞனாவான். பரராசசேகரம் என்ற வைத்திய நூல், செகராசசேகரம் என்ற சோதிடநூல், இரகுவம்சம் என்ற காவியநூல் என்பன பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்டவை என வைபவமாலை கூறும். இரகுவம்சத்தை இயற்றிய அரசகேசரி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்பது ஒரு சாராரின் முடிவு.
சிங்கைப் பரராசசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கன், சங்கிலி என நான்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஆனால் போர்த்துக்கேய நூல்களை கொண்டு வக்கிரத்துக்குறி பண்டார சியங்கேரி' என விரு பெயர்களே அறியக்கிடக்கின்றன " பரராசசேகர மன்னனின் பிற்காலம் மிகத் துயர்நிறைந்ததாக இருந்துள்ளது. கடைசி மகனான சங்கிலியே அத்துயருக்குக் காரணமாவான். யாழ்ப்பாண 6O)66)TO)6) uni இந்தச் சங்கிலியையும், போர்த்துக்கேய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்ற யாழ்ப்பாணவரசின் கடைசிமன்னனான சங்கிலி குமாரனையும் ஒருவரென மயங்கி எழுதியுள்ளார். இவ்விரு சங்கிலிகளுக்குமிடையில் ஒரு நூற்றாண்டு காலமும், ஐந்து அரசர்களும் இருந்துள்ளனர்." சங்கிலி தனக்கு முன் அரசுரிமை கொண்டிருந்த சிங்கவாகு, பண்டாரம் இருவரையும் சூழ்ச்சியால் கொன்றான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்தமையால் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது தந்தையையும் புறக்கணித்துவிட்டு, கி.பி.1517ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியாசனையில் ஏறினான்." மன்னன் பரராசசேகரனையும் சங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப்பெயரோடு மன்னனானான் என போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிச் சிலகாலம் பேசாதிருந்தான்.
கி.பி.1519 ஆம் ஆண்டளவில் சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும்
16. மு.கு.நூல். பக்கம் : 17. Natesan. S. The Northern Kingdom, Hostory of Ceylon, Colombo-1960 18. இராசநாயகம், செ, மு.கு.நூல் பக்கம்,
87

Page 52
ஈழத்தவர் வரலாறு
மாமன்னனாகச் சங்கிலி விளங்கி வருகிறான். பரராசசேகரின் பட்டத்து ராணியில்லாத ஒருத்திக்கு, மகனாகப் பிறந்த சங்கிலி, தனக்கேற்பட்ட வைப்பாட்டி மகன்’ என்ற வசையை நீக்க, தன் மூத்த சகோதரர்களை (பட்டத்து ராணியின் பிள்ளைகளை) அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனத்திலேறினான். எனினும் இறுதிவரை யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேய அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ்ச் செல்லவிடாது போராடிய சுதந்திர வீரனாகக் கருதப்படுகிறான்."
போர்த்துக்கேய நூல்கள் சங்கிலியைப்பற்றிக் கடுமையாகக் குறிப்பிடுவதற்குச் சில காரணங்களிலிருந்தன. கொடியவன், கொலைகாரன், கொடுங்கோலன் எனக் குற்றம் சாட்டுகின்றன. சங்கிலி ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவனாகவும் அவர்களுடன் தொடர்பு கொண்டோரைத் தண்டிப்பவனாகவுமிருந்தான். உண்மையில் சங்கிலி ஒர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஒர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான், எனத் தெரிகின்றது.* போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டே கோட்டை இராசதானிக்கு வந்திருந்தபோதிலும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ள முடிந்தமைக்குச் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகும்.
6.3 மன்னார்ப் படுகொலைகள்
தென்னிலங்கையில் ஆதிக்கம் பெற்ற போர்த்துக்கேயர், யாழ்ப்பான அரசைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரச் சந்தர்ப்பம் பார்த்திருந்தனர். கி.பி.1542 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சவேரியர் என்ற போர்த்துக்கேய மதகுரு
19. முதலாம் சங்கிலி மன்னனைப்பற்றி நிறையவே இலக்கிய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் சங்கிலி (நாடகம்), சொக்கனின் துரோகம் தந்த பரிசு, (நாடகம்) செங்கை ஆழியானின் நந்திக்கடல் (நாவல்) கவிஞர் காரை சுந்தரம்பிள்ளையின் சங்கிலியம் (காவியம்) குறிப்பிடத்தக்கன.
20. கிருஸ்ணகுமார். திருமதி சோ. யாழ்ப்பாண மன்னர்களும் போத்துக்கேயரும்,
யாழ்ப்பாண இராச்சியம் , யாழ் பல்கலைக்கழகம் -1992, பக். 67
88

ஈழத்தவர் வரலாறு
மன்னாருக்கு வந்து, 600 பேரைக் கிறீஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்தார். அதனைக் : சங்கிலிமன்னன், படையுடன் மன்னார் சென்று மதம் மாறிய மக்களையும், மதம் மாற்றிய குருவையும் சிரச்சேதம் செய்வித்தான். அத்துடன் யாழ்ப்பாணத்திற் பல கலகங்களுக்குங் காரணராயிருந்த பெளத்த ஃே வேண்டிக் குறித்த தவணைக்குள்ளே தனது இராச்சிய எல்லைக்கப்பாற் செல்லுமாறு கட்டளை செய்து, அவர்கள் பள்ளிகளையும் இடித்துத் தள்ளினான். அநேக சிங்களக் குடிகள் வன்னிப் பிரதேசத்திற்கும் கண்டி நாட்டிற்கும் சென்றார்கள். *
/
'மன்னாரில் மதம்மாறியவர்களையும் மதப்பிரசாரம் செய்த குருவையும், மன்னாரின் அரசியல் நிர்வாகியாகவிருந்த இளஞ்சிங்கம் என்பவனையும் சங்கிலி கொன்றமை மதம்பற்றியதன்று, அரசியல் பற்றியதே எனச் சில வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். மதம் மாறியவர்கள் போர்த்துக்கேயரின் ஊடுருவல்களுக்கு வழி செய்வார்கள் என எண்ணியே சங்கிலி அவ்வாறு செய்தான். சங்கிலியின் நடவடிக்கை ஆனது அரசியல் கண்ணோட்டத்திலும், சமகாலத்தில் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களையும் கருத்திற்கொண்டு பார்க்குமிடத்து முற்றுமுழுதாக நியாயமற்றது எனக் கூறுமுடியாதுள்ளது.*
சங்கிலி மன்னன் எக்கட்டத்திலும் போர்த்துக்கேயரை யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலை கொள்ளாது தடுப்பதில் முழுக்கவனத்தோடு திட்டவட்டமான கொள்கையோடுமிருந்துள்ளான் என்பது அவனது செயல்களிலிருந்து புலனாகின்றது. 1545 ஆம் ஆண்டு சீதவாக்கை, கண்டி, அரசர்களுடன் இணைந்து போர்த்துக்கேயருக்கு எதிராகக் கோட்டைக்குப் படையனுப்பிச் செயற்பட்டான். அதில் வெற்றி காண முடியவில்லை. 1552 இல் விதியபண்டாரா என்பவன் கோட்டை மன்னனுடனும் போர்த்துக் கேயருடனும் பகைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவனைச் சங்கிலி தன்னுடன் இணைத்துக் கொண்டான். வீரமாகாளியம்மன் கோயிலில் நிகழ்ந்த ஒரு கலவரத்தில் விதிய பண்டார இறக்க நேர்ந்தது.
31. இராசநாயகம்.செ.மு.கு.நூல் 23. இராசநாயகம்.செ. மு.கு.நூல், பக்கம் 104-109
y
3. கிருஸ்ணகுமார் . திருமதி சோ. மு.கு.நூல், பக்கம் 69
89

Page 53
ஈழத்தவர் வரலாறு
6.4 போர்த்துக்கேயப் படையெடுப்பு
மன்னாரில் நிகழ்ந்து முடிந்த துயரச் சம்பவத்திற்காகப் பழிவாங்கும் பொருட்டு, கி.பி.1543 இல் போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டது. இப்படைக்கு மாட்டின் அல்போன்சோதே செளசா என்பான் படைத்தலைவனாக வந்தான். அவனது கப்பல்கள் நெடுந்தீவில் ஒதுங்கிய போது, பரநிருபசிங்கன் அவனை நாடிச்சென்று உதவிகோரினான். சங்கிலி செகராசசேகரன் வழங்கிய திரவியத்தால் திருப்தியடைந்த மாட்டின் அல்போன்சோதே செள சா படையுடன் திருப்பிச் செல்ல நேர்ந்தது. வக்கிரதுக்குறி பண்டாரம் எனப் போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்ட பரநிருபசிங்கன், சங்கிலி மன்னனுக்கு பயந்து கோன்வக்கு ஒட நேர்ந்தது. அரசுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பரநிருபசிங்கன் கத்தோலிக்க மதத்தையும் தழுவிக் கொண்டான். இருந்தும் யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனத்தில் அமர அவனுக்கு இறுதிவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இரண்டாம் முறை கி.பி. 1560 ஆம் ஆண்டு கொன்ஸ் தாந்தீனு தே பிறகன்சா என்றும் தளபதியின் தலைமையில் போர்த்துக்கேயப்படை 77 கப்பல்களுடன் கரையூரில் வந்திறங்கியது. தமிழர்படை எவ்வளவு எதிர்த்தும் போர்த்துக்கேயப்படை நல்லூரை நோக்கி முன்னேறுவதைக் தடுக்கமுடியவில்லை. நல்லூர் நகரி முழுவதும் பறங்கிப்படைகளால் சூறையாடப்பட்டது. இளவரசனின் மனைவியும் அரண்மனைப் பெண்களும் போர்த்துக்கேயரினால் கைது செய்யப்பட்டனர். சங்கிலிமன்னன் கோப்பாய்க்குத் தப்பி ஓடி அங்கிருந்த காவல் அரணை அடைந்தான். போர்த்துக்கேயத்தளபதி பிறகன்சா சங்கிலி மன்னனைப்பிடிக்கும் நோக்குடன் கோப்பாய்க்குச் சென்றபோது, சங்கிலி மன்னன் பச்சிலைப்பள்ளிக்குப் பின்வாங்கிச் சென்றான். போர்த்துக்கேயப்படை தொடர்ந்து போரிட முடியாத நிலையில், சங்கிலி மன்னனுடன் ஒர் உடன்படிக்கை செய்து கொள்ள நேர்ந்தது. அந்த ஒப்பந்தப்படி சங்கிலி போர்த்துக்கேயருக்குத் திறையாக ஆண்டுதோறும் 12 கொம்பன் யானைகளையும் 1200 பதக்குப் பணமும் தர ஒப்புக்கொண்டான். அத்துடன் மன்னார்த்தீவைப் போர்த்துக்கேயரிடம் விட்டுக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டான். * இந்த ஒப்பந்தப்படி சங்கிலி மன்னன் திறைசெலுத்தியதாகத் தெரியவில்லை.
24 மே.கு.நூல், பக்கம் 109
90

ஈழத்தவர் வரலாறு
பிறகன்ஸா மன்னாரைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டான். திருக்கேதீஸ்வரம் இடிக்கப்பட்டு, அதன் கற்களும் இக்கோட்டையமைக்கப் பயன்படுத்தப்பட்டன. மன்னாரில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவது
இலகுவாகியது. மன்னாரில் முத்துக்குளிக்கும் பகுதிகள் பறங்கிகள் வசமாகின.
முதலாம் சங்கிலி 1565 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் எனக் கொள்ளலாம். 1564 ஆம் ஆண்டு சீதவாக்கை மன்னன் மாயாதுன்னைக்கு ஆதரவாகவும் போர்த்துக்கேயருக்கு எதிராகவும் வடக்கர் படையொன்றினைச் சங்கிலியனுப்பியிருந்தான். எவ்வாறாயினும் போர்த்துக்கேயரிடம் இறுதிவரை
சங்கிலி போராடியுள்ளான். அவனை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
சங்கிலி செகராசசேகரனுக்குப் பின் புவிராசபண்டாரம், காசிநயினார் அல்லது குஞ்சுநயினார் (1565), பெரியபிள்ளை செகராசசேகரன் (1570), புவிராசபண்டாரம் பரராசசேகரன் (1582), எதிர்மன்ன சிங்ககுமாரன் (1591), சங்கிலிகுமாரன் செகராசசேகரன் (1616) ஆகிய ஆறு மன்னர்கள் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளர்களாக விளங்கினர். யாழ்ப்பாண இராச்சியத்தில் நிகழ்ந்த உண்ணடாட்டுக் குழப்பத்தினாலும், போர்த்துக்கேயரின் அரசியல் தலையீட்டினாலும் இந்த மன்னர்கள் நிலையாகத் தொடர்ந்து ஆள முடியாது போனது. புவிராச பண்டாரம், இருதடவைகள் மன்னாரைத் தாக்கிப்
போர்த்துகேயரைத்துரத்த முயன்றும், இயலாது போயிற்று.
6.5 சங்கிலிகுமாரன் செகராசசேகரன்
கி.பி.1591 இல் போர்த்துக்கேயர் மூன்றாவது தடவையாக, அந்திரே பூர்த்தாடு தே மென்டோன்சா என்னும் படைத்தலைவனை, பெரும்படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர். தமிழர் படையுடன் பறங்கியர் படையும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் வீரமாகாளியம்மன் கோயிலுக்குமிடையில் மோதின. தமிழர்படை தோல்வியைத் தழுவ நேர்ந்தது. பூர்த்தாடு, பெரியபிள்ளையின் மகனாகிய எதிர்மன்னசிங்கனை மன்னனாக்கி மீண்டான். எதிர் மன்னசிங்கன் கி.பி.1616 இல் மரணமடைய சங்கிலிகுமாரன் செகராசசேகரன் அரியணையிலமர்ந்து கொண்டான். இவனே யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனாவான்.
91

Page 54
ஈழத்தவர் வரலாறு
கி.பி. 1620 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் இறுதிப்படையெடுப்பு நிகழ்ந்தது. இப்போர்த்துக்கேயப் படையெடுப்புக்கு பிலிப்தே ஒலிவேறா என்பவன் படைத்தலைமை தாங்கினான். இப்படையெடுப்பில் தமிழ் வீரர்கள் கொடுரமாகத் தாக்கப்பட்டார்கள். சங்கிலி குமாரன் குடும்பத்துடன் சிறைப்பிடிக்கப்பட்டு, கோவைக்கு அனுப்பப்பட்டான். அங்கு அவனைச் சிரச்சேதம் செய்தார்கள். ஆரிய அரச பரம்பரை அவனது மரணத்துடன் அழிந்து போனது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தேசாதிபதியாக பிலிப் தே ஒலிவேறா தன்னை நியமித்துக் கொண்டான். அவன் காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுட்பட பல சைவக்கோயில்கள் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
அவற்றைக் கொண்டு யாழ்ப்பாணக் கோட்டை கட்டப்பட்டது.
பல நூற்றாண்டு காலமாகச் சுதந்திரத்தை பேணி பாதுகாத்து வந்த தமிழர் இராச்சியத்தில், கி.பி.1621 ஆம், ஆண்டு, சுதந்திர சூரியன் அஸ்தமித்தது.
92

சிற்றரசுகள்
7 வன்னிச் சிற்றரசுகள்
வடவிலங்கையின் யாழ்ப்பாணக்குடாநாடு, தவிர்ந்த பெருநிலப்பரப்பு வன்னி எனப்படுகின்றது. பச்சிலைப்பள்ளியில் கச்சாய்ப்பகுதியும், சில காலங்களில் வன்னிமையாகக் கருதப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்களுள்ளன. வடக்கே யாழ்ப்பாணக் கடனீரேரிக்கும் தெற்கே அருவியாற்றுக்கும் நுவரகலாவியாப் பிரதேசத்திற்கும், மேற்கே மன்னாருக்கும் கிழக்கே திருகோணமலைக்குமிடையில் வன்னிப்பிரதேசம் அமைந்திருந்தது.* ஆங்காங்கு சிதறலாகக் கிராமியக் குளங்களை ஆதாரமாகக் கொண்டமைந்த காட்டுக் கிராமங்கள், அடர்காடுகளால் சூழப்பட்டு விளங்கியுள்ளன. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பிரதேசம் நாகரீகம் வாய்ந்த மக்கட் கூட்டத்தினரின் குடியிருப்புக்களாக விளங்கியுள்ளன என்பதற்கு 1985 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி குஞ்சுப் பரந்தனில் கண்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சான்றாகிறது. வன்னிநாட்டில் முதன்முதல் கண்டறியப்பட்ட தாழி இதுவே. திராவிட நாகரீகம் இங்கெல்லாம் பரவி நிலை கொண்டிருந்தது என்பதற்கு முறையான ஆதாரமாக இத்தாழி நமக்குக் கிடைத்துள்ளது."
வன்னிப்பிரதேசத்தில் குளக்குடியிருப்புகளே பெரிதும் பரந்துள்ளன. குளத்தின் பெயராலேயே அப்பகுதிக் கிராமங்களும் அழைக்கப்பட்டு வருகின்றன.
1. குணராசா.க, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி நிலப்பயன்பாடும் நீர்வளமும்,
முதுகலை மாணி ஆய்வுக்கட்டுரை, பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்-1984
9, Lewis. J.P. Manual of Vanni
குணராசா.க, குஞ்சுப்பரந்தன் முதுமக்கள் தாழி, ஈழநாடு, யாழ்ப்பாணம் 9.6.1985
4. குணராசா.க, கிளிநொச்சியின் கதை, கும்பாபிஷேக மலர்,
கந்தன் கருணை- கிளிநொச்சி 1988 பக் 46
93

Page 55
ஈழத்தவர் வரலாறு
புளியங்குளம், கனகராயன்குளம், பெரியபுளியாலங்குளம், தென்னியன்குளம் என்ற பெயர்கள் குளங்களைக் குறிப்பதோடு அவ்விடத்துக் கிராமத்தையும் குறிப்பனவாகவுள்ளன.
எனவே, வன்னிப்பிரதேசத்தில் இன்று பாழடைந்து கிடக்கும் குளங்களையும் ஒவ்வொரு கிராமக் குடியிருப்பாகக் கருதில் வன்னிப் பிரதேச மக்கட்தொகை முன்னர் அதிகமாக இருந்திருக்க வேண்டும். வன்னிப்பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான குளங்களை அமைப்பதற்கு எவ்வளவு மனிதவலு தேவைப்பட்டிருக்க வேண்டுமென எண்ணும் போது இன்றைய வன்னிப்பிரதேச மக்கட்டொகைபோலப் பலமடங்கு அன்று இருந்திருக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்களின் வாழிடமாக வன்னி விளங்கியிருக்க
வேண்டும்.
வன்னி நாட்டின் வரலாற்றுச்சிறப்பினை அங்கு பாழடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான குளங்களும், முறிப்பு அணைகளும், கல் கலிங்குகளும், மடைகளும், சிசிலமடைந்த கோயில்களும், புராதன பாலங்களும், பாதைகளும் எடுத்துக் கூறுகின்றன. ஒவ்வொரு சிற்றாறுகளும் முழுமையாகப் பயன்கொள்ளப்பட்டிருக்கின்றனவென்பதை அவற்றின் வடிகாற்போக்கில் அமைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொடர் குளங்கள் எடுத்தியம்புகின்றன.'
வன்னிப்பிரதேசத்தில் காண்ப்படுகின்ற புராதன குளங்கன, கட்டிட அழிபாடுகள், ஏனைய தொல்லியற் சான்றுகள் இப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்த சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகவுள்ளன. வன்னிப்பிரதேசத்தின் தென்பகுதி நதியான அருவியாற்றின் பிரதான கிளையாகிய கல்லாற்றில் அலவிச்சைக்குளம் (ஈரற்பெரியகுளம்), பாவற்குளம் எனுமிரு புராதன குளங்களுள்ளன. பாவற்குளத்தின் கலிங்குகளையமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செங்கற்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தவை என பாக்கர் குறிப்பிட்டுள்ளார்."
குணராசாக, மே.கு. ஆய்வுக்கட்டுரை Brohies R.L. Ancient Irrigation Works in Ceylon. Colombo-1935, Page:2 மே.கு.நூல், பக் 12
Pargker. H, Ancient Ceylon, Colombo, Page:371
94

ஈழத்தவர் வரலாறு
அருவியாற்றுக்கு அடுத்ததாக முக்கியம் பெறும் மேற்குக் கரையோர நதி மணலாறு எனப்படும் பறங்கியாறாகும். மன்னா ருக்கு அருகே இலுப்பைக்கடவையில் இது கடலையடைகின்றது. மேற்கே பாயும் அடுத்தநதி பாலியாறு ஆகும். இந்த நதியில் பெலிவாவி என்றொரு நீர்த்தேக்கம் இருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இது கி.மு.3ஆம் நூற்றாண்டில் தமிழரசன் எல்லாளனால் கட்டப்பட்டதாக புறோகியர் என்பார் கருதுகிறார். எல்லாளன் கட்டிய பெலி வாவி வவுனிக்குளமாகும். வசபன் என்ற மன்னனால் (கி.பி.6610) அமைக்கப்பட்ட பாலிநகரம் இந்த வவுனிக்குளத்தின் அருகே இருந்துள்ளது. 1889 ஆம் ஆண்டு யூன் 8 ஆம் திகதி வவுனிக்குளத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவின் உதவி அரசாங்க அதிபர் நெவில், பாலியாற்றின் அருகே சிதிலமடைந்த கட்டமைப்புகளை அவதானித்துள்ளார். கோவில் காடு என்ற இடத்தில் பாழடைந்த கோயில் ஒன்று காணப்பட்டது. தலையில்லாத புத்தர் சிலையொன்றும் இடுப்புடன் உடைந்த விஷ்ணு சிலையொன்றும் அவ்விடத்தில் காணப்பட்டன. உடைந்த லிங்கம் ஒன்றும் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்."
கரியாலைக்குளம், நாகபடுவான்குளம் ஆகிய இரண்டும் வன்னிப் பிரதேசப் புராதன நீர்ப்பாசனக் குளங்களாகும். அணைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பரந்த பிரதேசத்தினை இவை நீர்ப்பாய்ச்சியுள்ளன. கலவலப்பு ஆற்றிலமைந்துள்ள புதுமுறிப்புக்குளம், அக் கராயனாற்றிலமைந்துள்ள அக்கராயன்குளம் இரண்டும் புராதன . வன்னிப்பிரதேசக் குளங்களாகும். 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் டபிள்யூ.சீ.துவைனம் இக்குளங்களைப் பார்வையிட்டுள்ளார். உருத்திரபுரத்தில் பாழடைந்த சிவன்கோவில் ஒன்றினதும், தாதுகோபம் ஒன்றினதும் அழிபாடுகளைக்கண்டு குறித்துள்ளார். செழிப்பான ஒருநகரம் இங்கு இருந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்து."
வன்னியின் வடகிழக்குப் பகுதியில் நாயாறு, பேராறு என இரு அருவிகள் பாய்கின்றன. முன்னது நாயாறுக் கடனிரேரியிலும், பின்னது நந்திக்கடலிலும் சங்கமமாகின்றன. நாயாற்றில் மிகப்புராதனமான தண்ணிமுறிப்புக்குளம் அமைந்துள்ளது. இங்குகாணப்படும் இன்னொரு புராதன குளம் குருந்தன்
9. Brohies R.L. (gpGgfrs), LéSüd: 15 10. மே.கு.நூல், பக்கம் 16
95.

Page 56
ஈழத்தவர் வரலாறு
குளமாகும். இந்த இரு குளங்களையும் பிரிப்பது போன்று குருந்தன்மலை அமைந்துள்ளது. புத்தரின் இலங்கைக்கான இரண்டாவது விஜயத்தின்போது இந்தக் குருந்தன் மலைக்கு அவர் வந்தார் என்பது ஐதிகம். இப்பகுதிகளில் பாழடைந்த கட்டிடச் சிதைவுகள் உள்ளன. குருந்தன் குளமலையின் உச்சிவரை குருந்தன்குள அணையிலிருந்து கற்படிகள் பொழியப்பட்டுள்ளன, குருந்தன் மலையுச்சி நீள்வட்டத்தட்டையாகவுள்ளது. ஏழு, எட்டு அடி நீளமான கருங்கற்சுவரின்பகுதி அங்கு காணப்படுகிறது. சதுரக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இவை கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்குரியவை. குருந்தனூர் ஒரு புராதன நகரமாக இருந்திருக்க வேண்டும்."
பேராற்றில் புராதன குளமொன்றுள்ளது. அதுவே அலைக்கல்லு போட்டகுளம் அல்லது பண்டாரக்குளம் ஆகும். பண்டாரக்குளம் பகுதி,
பண்டாரவன்னியனின் வதிவிடக்கிராமமாகும்.
வரலாற்றுக் காலத்தில் மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேசங்களையுள்ளடக்கிய மன்னார்ச் சமவெளி நீர்ப்பாசனக் குளங்களையும் அவற்றினடியாக வயல்களையும் கொண்டிருந்தது. இப்பிரதேசம் சுதேசமக்களான நாகர்களால் பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இராச்சதக்குளமெனும் சோதியன்கட்டுக் கரைக்குளம் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. விஜயனுக்கு முதலேயே இப்பிரதேசத்தில் நெற்செய்கை நடைபெற்றுள்ளது." மாதோட்டம் பண்டைய துறைமுகமாகும். விஜயனையும் அவனது தோழர்களை மணப்பதற்காக வந்த பாண்டிய இளவரசியும் தோழிகளும் மாதோட்டத் துறையிலேயே (மகாதீர்த்தம்) வந்திறங்கினர் என்பது மகாவம்சம் கூறும் நிகழ்ச்சியாகும். *
மன்னாருக்கும் புத்தளத்திற்குமிடையில் வடமேற்குக் கரையோரத்தில் குதிரைமலை அமைந்துள்ளது. குதிரைமலை புராதன துறைமுகமாகும். கி.மு.50 ஆம் ஆண்டுக்கு முந்திய மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளன. அவற்றில் சட்டிகள், பானைகள், ஜாடிகள் அடங்கியுள்ளன. அல்லி அரசாணியின் அரண்மனை இங்கிருந்ததாக ஐதிகம். பிலினி என்பார் குறிப்பிட்ட ஹிப்போறஸ்
11. மே.கு.நூல், பக்கம்.17 12. மே.கு.நூல், பக்:18 - 13. The Mahawamsa, Chapter VII:58. Page :60
96

ஈழத்தவர் வரலாறு
(ஹிப்போ: குதிரை) துறை குதிரைமலையெனக் கருதுவர். எட்டாம் நூற்றாண்டளவில் அராபியாவிலிருந்து வந்த முகமதியர்களின் குடியிருப்புகள் குதிரைமலையில் காணப்பட்டதாகக் காசிச்செட்டி குறிப்பிட்டுள்ளார்."
பூநகரிப்பகுதியில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த தொல்லியலாய்வுகளும், பொருட்களும் வன்னிப்பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகவுள்ளன. 'ஈழம்' என்ற பெயருடன் கிடைத்த பிராமி எழுத்தினைக்கொண்டு ஒடும் அதன் சார்பான தொடர் ஆய்வுகளும் யாழ்ப்பாண அரசின் சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்துள்ளன என நிறுவியுள்ளன. " சேனன், குத்திகன், எல்லாளன், கலிங்கமாகன் முதலான தமிழரசர்கள் இப்பகுதியிலிருந்தே ஆட்சிசெய்து, தென்னிலங்கை இராச்தானி மீது படையெடுத்துக் கைப்பற்றி ஆண்டுள்ளனர்.
கட்டிடங்களின் சிதைந்தபகுதிகள், சின்னச் செட்டிகுளம், செட்டிகுளம், பாலம்பிட்டி, வேனாயன்குளம் முதலிய இடங்களிலும் காணப்படுகின்றன. திரு.ஜே.பி.லூயிஸ் என்பவர் பழைய தமிழ்க் கையெழுத்துக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நூலில், சுமார் கி.பி.247 இல் மதுரையிலிருந்து பல பரவர்களுடன் வந்த வீரவராயன் செட்டி என்ற பெயருடைய வாணிகன் ஒருவன் மரக்கலம் உடைந்து மன்னாரின் மேற்குக் கரையை வந்தடைந்தானென்றும், பின் அவன் தன்னைச் சேர்ந்தாருடன் வந்து செட்டிக்குளத்தில் குடியேறி வவ்வாலை என்ற பெயருடைய கேணி ஒன்றையும், சந்திரசேகருக்குக் கோயில் ஒன்றையும், கி.பி.289 இல் அமைத்தான் என்றும் குறித்துள்ளார்."
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே ஏழு வன்னிப்பிரதேசங்கள் இருந்துள்ளன. பனங்காமம், மேல்பற்று, முள்ளியவளை, கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி என்பன அவற்றில் முக்கியமானவை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வன்னிமையால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன.
14. Brohier.R.L., (p.eggbraiò, i g, :35
15. புஸ்பரட்ணம், ப, வடவிலங்கையில் சிங்கைநகர்,
அருட்திரு.ஜி.ஏ. பிரான்சிஸ் யோசெப் அடிகளார் மணிவிழாச்சபை வெளியீடு-1993
16. நவரத்தினம். சி.எஸ். வன்னியும் வன்னியரும், திருக்கேதீஸ்வரம்
திருக்குடத்திருமஞ்சன மலர் 1976, பக் 171
97

Page 57
ஈழத்தவர் வரலாறு
வன்னிநாடு, நுவர கலாவியாப்பிரதேசத்தையும் உள்ளடக்கிய பெருநிலப்பரப்பு எனச்சிங்கள வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனை அவை மகாவன்னி' என்கின்றன.
நுவரகலாவியா மகாவன்னியாக வரலாற்றுக் காலத்திலிருந்து விளங்கி வருகின்றது. நுவரவீவா, கலாவீவா, பதவியா ஆகிய மூன்று நீர்ப்பாசனக் குளங்களின் நீர்ப்பாய்ச்சும் பரப்புப்பிரதேசம் இம்மூன்று குளங்களின் பெயரால் நுவர-கலா-வியா என வழங்கப்படுகின்றது."
72 வன்னிக்குடியேற்றங்கள்
வன்னிப்பிரதேசத்தின் ஆதிக்குடிமக்கள் நாகர் ஆவர். இயக்கர்களையும் அவர் வழிவந்த வேடுவ மக்களையும் வன்னிப்பிரதேசம் கொண்டிருந்துள்ளது. யாழ்ப்பாணக்குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளத்தின் பயன்பாட்டை உணராத எமது மூதாதையினரான பண்டைத் தமிழ் மக்கட் கூட்டத்தினர் தமக்குப்பரிச்சயமான தரைமேல் வடிகாலமைப்பைக் கொண்ட நதிகள் பாய்கின்ற வன்னிப்பிரதேசத்தை ஆரம்பத்தில் தமது வதிவிடங்களாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ளலாம்."
பண்டைநாளில் வன்னிப்பிரதேசத்தின் குடித்தொகை மிக வதிகமாகவும், செறிவாகவும் இருந்துள்ளதென்பது பல அறிஞரின் முடிவு பாழடைந்து கிடக்கின்ற வன்னிக்குளங்களினதும் கிராமங்களினதும் எண்ணிக்கை இவ்வாறான முடிவினை எடுக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள எண்பது சதவீதமான கிராமப்பெயர்கள் சிங்கள நாமவழி தழுவியனவாகவிருக்க, வன்னியின் தொண்ணுாறு சதவீதமான கிராமப்பெயர்கள் முற்று முழுதான தமிழ்ப்பெயர்களாகவுள்ளன. வன்னிப் பிரதேசங்கள் சைவமக்களாலும், தமிழ் மக்களாலும் விரும்பிக் குடியேற்றப்பட்ட பிரதேசங்களாகவுள்ளன.
வன்னிப்பிரதேசமக்கள் வன்னியர் என வரலாற்று நூல்கள் வரையறுக்கின்றன. வன்னியர்கள் பண்டைக்காலத்தில் தென்னிந்தியாவில்
17. Brohier R, Llap.g.gsfrei, uji :3 18. குணராசாக, நல்லூர்க்கந்தசுவாமி கோயில் வரலாற்றில் திருத்தம்,
வீரகேசரி 37.8.1995, பக்கம் :9
98

ஈழத்தவர் வரலாறு
வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினர் ஆவர். அவர்கள் மறத்தொழில் புரியும் வீரர் பரம்பரையில் தோன்றியவர்கள்" வன்னியர் அக்கினிகுலச் கூழித்திரியரென்றும், இவர்கள் யாகாக்கினியிலிருந்து
தோன்றினரென்றும் கூறப்படுகிறது. இவை எவ்வளவு தூரம் ஏற்புடையனவென்பது கற்றோருக்குப் புரியும். வன்னிப்பிரதேசம் என்று வடவிலங்கை ஏன் அழைக்கப்படுகின்றது என்பதற்கு இரு இயல்பான விளக்கம் தரமுடியும். இப்பிரதேசம் கடும் வறட்சியான பகுதி. வன்னி என்றால் வறட்சி. நெருப்பு போல இங்கு கடும் வெப்பம் நிலவும். வன்னிவெப்பம் என்பது இதனையே குறிக்கும். மேலும் வன்னிமரங்கள் முன்பு நிறைந்த பிரதேசமாதலால் வன்னிப்பிரதேசம் எனப்பட்டதெனலாம். மரங்களை அடிப்படையாகக் கொண்டு வன்னிப்பிரதேசத்துக் கிராமங்கள் புளியங்குளம், பூவரசங்குளம், மருதன்குளம் எனப்பலவாறு பெயரிடப்பட்டுள்ளன. காரணப்பெயர்கள் வன்னிப்பிரதேசத்தில் பரவலாகவுள்ளன. எவ்வாறாயினும் வன்னிப்பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்த
அனைவரும் வன்னியர் எனப்பட்டனர்.
வன்னியில் இருதடவைகளாக வன்னியரின் குடியேற்றம் ஏற்பட்டதென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவற்றுள் முதற்குடியேற்றம் குளக்கோட்டன் காலத்தில் ஏற்பட்டதென்றும், இரண்டாம் குடியேற்றம் பாண்டியநாட்டில் வந்த எண்பதொன்பது வன்னியரின் வருகையோடு ஏற்பட்டதென்றும் கூறும்.* தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு வந்த அடங்காப்பற்று. என வழங்கிய வன்னியை அடக்கி அங்கு அதிகாரமும் பெற்ற வன்னியரின்
வரலாற்றைப் பொருளாகக் கொண்டு வையாபாடல் என்றொரு நூலேயுள்ளது.*
கி.பி.436 ஆம் ஆண்டளவில் குளக்கோட்டன் என்னும் மன்னன் கோணேஸ்வரர் ஆலயத்திருப்பணியை நிறைவேற்ற வந்தான்.திருப்பணியை நிறைவேற்றி அந்த ஆலயப்பணிவிடைகளை நிறைவேற்றுவதற்கும், கோணேசலிங்கத்திற்குப் பூசனை புரிவிப்பதற்கும் செலவுவரவுகளுக்காக ஏழு நாடுகளில் வயல்நிலங்களையும் தோப்புக்களையும் ஏற்படுத்தி அவற்றிற் பயிரிட்டு
19. நவரத்தினம்.சி.எஸ், மு.குகட்டுரை, பக்.172 20. பத்மநாதன்.சி, வன்னியர், பேராதனை-1970, பக்ம 17 21. பத்மநாதன் சி, மே.கு.நூல், பக்
99

Page 58
ஈழத்தவர் வரலாறு
வருமானம் செலுத்தும்படி வன்னியர்களை அழைப்பித்துக் குடியேற்றித் தன்நாட்டிற்கு மீண்டான் என வைபவமாலை குறிப்பிடுகிறது.* அது தொடர்ந்து வன்னியரின் குடியேற்றத்தைப் பின்வருமாறு கூறுகிறது.)
அந்நாள் முதல் அவ்வருமானங்களால் ஆலயப்பணிவிடைகளும், அந்தணர் அக்கிரகாரங்களும், மடங்களும் சப்பிரமமாகச் சிறந்து வந்தன. சிலகாலத்தின் பின் குளக்கோட்டு மகாராசன் தேகவியோகமானான். அதன் பின் மேற்கூறிய ஏழுநாடுகளிலும் பயிர்க் குடிகளாயிருந்த வன்னியர்கள் மிகவும் பெருகியிருந்தார்கள். பாண்டி நாட்டிலிருந்து ஐம்பத்தொன்பது வன்னியர்களும் வந்து அவர்களுடன் கூடினார்கள். குடிசனங்கள் வரவரப்பெருகி அதிகப்பட்டுக் கொண்டமையால் அரசாட்சியின்றி வெகுவித கலகங்கள் பலகாலம் நேரிட்டன. அவ்வேழு நாடுகளின் வருமானங்களிலும் கோணேசர் கோயிலுக்குச் செல்வனவேயன்றிக் கண்டி நாட்டரசருக்கு அந்நாடுகளினால் யாதொரு நயமுமில்லாமையாற் கண்டிநாட்டு அரசர்கள் அந்நாடுகளைப் பாராமுகம் பண்ணிவிட்டார்கள். அக்காலத்திலே சந்திரவன்னியனும் வேறு அநேக குறுநில மன்னரும் ஒருவரின் பின்னொருவராகத் தோன்றியழிந்த பின் அவ்வன்னியர்கள் அனைவரும் ஒத்திணங்கித் தங்கள் சாதியிற்றலைப்பட்ட ஏழுபேரைத் தெரிந்து அவ்வேழு நாடுகளுக்குந்தலைவராக்கி அவர்களுக்குக் கீழ் அமைந்திருந்தார்கள். வன்னியர்கள் ஆண்டு வந்ததினால் அவ்வேழுநாடுகளும் வன்னிநாடுகளெனப் பெயர்பெற்றன. அதுமுதல் அவ்வேழு தலைவரின் சந்ததியார் சுயேற்சைப்படி ஆண்டு வந்தார்கள். *
வன்னியர்களின் இரண்டாவது குடியேற்றம் செயதுங்க்வரராசசிங்கன் என்ற மன்னனின் காலத்தில் நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் (நாகதீவு) முதன் மன்னனான உக்கிரசிங்கனின் மகன் இவனாவான். உக்கிரசிங்கன் கதிரமலை (கந்தரோடை) யிலிருந்து தலைநகரை பெருநிலத்திலமைந்திருந்த சிங்கை நகருக்கு மாற்றியுள்ளான். இது குறித்து ஏற்கனவே விரிவாக முன்னைய அத்தியாயங்களில் ஆராய்ந்துள்ளோம். அவ்வேளை சிங்கை நகரிலும் அதனைச் சூழ்ந்து பரந்திருந்த
32. பத்மநாதன் சி. ஈழத்தமிழ் வரலாற்று நூல்கள். இளங்கதிர்
பேராதனை 196970, பக்128
23. யாழ்ப்பாண வைபவமாலை, குலசபாநாதன், பதிப்பு, சுன்னாகம்
1949 பக்கம் 11
24 மே.கு.நூல், பக் 12-13
100

ஈழத்தவர் வரலாறு
வன்னிப்பெருநிலத்திலும் மக்கள் மிகக்குறைந்த அளவிலும் மிகவரிதாகவும் இருந்துள்ளனர் என ஊகிக்கலாம். நாட்டுக்கும் அரசுக்குமுரிய மக்கட்டொகை இருக்கவில்லையாதலால், செயதுங்க வரராசசேகரன் வேறிடங்களிலிருந்து வன்னிப்பிரதேசத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்த எண்ணினான். இம்மன்னனின் காலத்து வன்னிக்குடியேற்றங்களை வையாபாடல் மேல்வருமாறு விபரிக்கின்றது: -
செயதுங்கவரராசசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்குமாறு தூதுவரை அனுப்பினான். தூதுவர்கள் சொன்னவற்றைக் கேட்ட மதுரை மன்னர் 60 வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமதூதியை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செயதுங்கவரராசசிங்கன் இளவரசியை மணம்முடித்துவிட்டு அவளோடு வந்த வன்னியர்களை அடங்காப்பற்றினைச்சென்று ஆளுமாறும் ஆண்டுதோறும் தனக்குத் திறை செலுத்துமாறும் பணித்தான்.
அடங்காப்பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக்கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே இளஞ்சிங்கமாப்பாணன், நல்லவாகுதேவன். அத்திமாப்பாணன் என்போரிடம் தூதுவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவைநாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு எனுமிடங்களிலிருந்து கூட்டிவரக்கூடியவர்கள் அனைவரையும் கொண்டுவருமாறு சொல்லியனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லை மூவாயிரவர், திடவீரசிங்கன், குடை காத்தான், முடிகாத்தான், நல்லவாகு, மலைநாடான், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக் காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக் கோட்டு முடியோன், வீரகச்சமணி, முடியரசன், கபாலி வீரன், சேதுபதி, இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் யாழ்ப்பாணம் வந்தார்கள்.
இவர்களிலே திடவீரசிங்கன் கரிக்கட்டுமூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளங்சிங்க மாப்பாணன், இராசசிங்க மாப்பாணன், நல்லவாகு மெய்த்தேவன், கருத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்திவிட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்த சகரன், மகரன்
101

Page 59
ஈழத்தவர் வரலாறு
என்ற வேட்டுவத் தலைவர்களைக் கொன்றுவிட்டு நாட்டை ஆண்டனர். மேற்குமூலை, கிழக்குமூலை என்பனவற்றைக் கைப்பற்றிய சிங்கவாகு பொக்கா வன்னியிலிருந்தான். சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் எனுமிடத்திற்குச் சென்று நீலப்பணிக்கனைக் கொன்றுவிட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத்தார், கன்னார் முதலியோர் கச்சாயில் குடியிருந்தார்கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்று வாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருகோணமலைக்குச் சென்றான். மைடன் என்போன் கொட்டியாரத்திற்கு அதிபதியானான். ஒடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி எனுமிடங்களுக்குச் சென்றனர். ஆற்றல் பொருந்திய சன்மன் நொச்சி முனையில் ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல நிலையினான் வாகுதேவன் தனிக்கல்லிலிருந்தான். வன்னியர்கள் வந்தபின்னர் அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப்பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மழுவீர மழவராயனும், நாட்டையாண்ட மழவராயனும் மன்னனோடு இருந்தார்கள். பூபாலவன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாயிலும் இனிது வாழ்ந்தனர். வல்லவராயன் நல்லூரிலிருந்தான் (பூநகரி நல்லூர்) குடைகாத்தான், கொடித்தேவன், தேவராயன், கந்தவனத்தான் என்போர் செட்டிகுளத்தின் அதிபதிகளாயினர். உத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.*
வன்னிக்குடியேற்றங்கள் படையெடுப்புகளின் விளைவாக ஏற்பட்ட ஒன்றாகவே தோன்றும். ஐம்பத்தொன்பது வன்னியரும் பாண்டிநாட்டில் வந்தனரென்று சொல்லப்படுவதால் பாண்டியப் படையெடுப்புகளின் விளைவுகளுள் ஒன்றே வையாபாடல் கூறும் வன்னிக்குடியேற்றம் எனக்கொள்வது சாலப்பொருத்தம் *
பிற்காலத்தில் சோழபாண்டி சேனைகளுடன் இலங்கைக்குப் போர்வீரர்களாக வன்னியர்கள் வந்துள்ளனர். அவர்கள் இலங்கையில் தங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். மன்னார் முதல் திருகோணமலை வரையும், ஆனையிறவு முதல் காட்டுத்தம்புளை வரையுமுள்ள பரந்த
25. வையா, பக். 13-19, 30-35, 38-43,
பத்மநாதன், சி, ஈழத்தமிழ் வரலாற்று நூல்கள், இளங்கதிர், பேராதனை-196970, பக். 134
26. பத்மநாதன்சி, முகுகட்டுரை, பக் 136
102

ஈழத்தவர் வரலாறு பிரதேசத்தின் சிற்றரசர்களாக மாறினர். யாழ்ப்பாணத்து அரசரினதும் சிங்களவரசரினதும் அதிகாரங்கள் குறைந்தகாலத்தில் வன்னியர்கள் தமது பகுதிகளில் மேலாதிக்கம் வகித்துள்ளார்கள்."
யாழ்ப்பாண அரசரினதும், சிங்களவரசரினதும் வலிமை குன்றிய காலங்களில் வன்னியர்கள் தத்தமது பிரதேசங்களைத் தாமே அரசாள நோக்கம் கொண்டார்கள். தம்பலகாமத்தில் தனியுண்ணாப் பூபாலவன்னியன் என்பான் கோணேச்சரக் கோயிலதிகாரத்தைக் கவர்ந்து அவ்விடத்திற்குத் தன்னை அதிகாரியாக்கிக் கொண்டான். பனங்காமம், குமாரபுரம், ஒமந்தை
முதலானவிடத்து வன்னியர்களும் இவ்வாறு நடந்து கொண்டனர்."
பிெ.26 ஆம் ஆண்டு கலிங்கமாகன் என்ற மன்னன் இலங்கையைக் கைப்பற்றிப் பொலநறுவையிலிருந்து ஆட்சி செலுத்தினான், இவனது படையெடுப்பு உத்தரதேசத்திலும் இராசரட்டைப்பிரதேசத்திலுமுள்ள மக்களை இடம்பெயரவைத்தன. இப்பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்புலம் பெயர்ந்தனர். “காலனின் பூதங்கள் போன்ற அந்தத் தமிழ்ப்பூதங்கள் இப்படியே இந்த இராச்சியத்தையும் சமயத்தையும் அழித்தனர். என மகாவம்சம் புலம்பும். கலிங்கத்து மாகனின் படையெடுப்பால் நீர்ப்பாசனக்குளங்கள் அழிந்தன. உரிய
காலத்தில் உரிய பராமரிப்பின்மையால் அவை அழிவுற்றன.*
நீர்த்தேக்கங்கள், குளங்கள் முதலான நீர்ப்பாசன வசதிகளோடு வளமான வயல் நிலங்களையும் கொண்டிருந்த வன்னிப் பிரதேசம் போசித்த செறிவான குடித்தொகை அவ்விடத்தைக் கைவிட்டு இடம்பெயர்ந்த மக்களின் நகர்வோடு அருகியது. பருவகாற்று மழையின் பொய்த்தலும், வெள்ளப்பெருக்கும், காட்டு நோய்களின் பரவலும் பல்வேறு அரசியற் காரணிகளும் மக்களை இடம்பெயரவைத்தன. தக்க பராமரிப்பு இன்றிக் குளங்கள் பாழடைந்தன. அணைகள் முறிப்புற்றன. அயனமண்டலக்காடு விரைந்து வளர்ந்து அவற்றை மூடிக் கொண்டது"
27. இராசநாயகம்செ யாழ்ப்பாணச்சரித்திரம், வண்ணார்பண்ணை-1933 பக்:24
28. மே.கு.நூல், பக்ம:58
29. குணராசா,க, குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப்பிரதேசங்கள்,
முத்தமிழ்விழாமலர்-1991, பக்132
90. Broheir R.L. (p.svTai, Luė:58
103

Page 60
ஈழத்தவர் வரலாறு
வன்னிப்பிரதேசத்தின் பண்டைக் குடியிருப்புகள் பலவும் பல்வேறு காரணங்களால் மக்களால் கைவிடப்பட்டுக் காடுகளால் மூடப்பட்டன. தென்னிந்தியப் படையெடுப்புகள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்தன. தென்னிலங்கையைக் கைப்பற்ற விரும்பிய படைவீரர்கள் வட விலங்கையிலேயே பாசறை அமைத்துக்கொண்டனர். அதேவேளை தென்னிலங்கைப்படைகளும் இப்பிரதேசத்தினூடாகவே வடவிலங்கையைத் தாக்க முயன்றன. இவை காரணமாக யாழ்ப்பாண அரசுக்கும் தென்னிலங்கை அரசுக்கும் இடையில் நிலைமாறு வலயமாக அமைந்த வன்னிப்பிரதேசம் யுத்தகளமாக அடிக்கடி மாற நேர்ந்தது. இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்தபோர்கள், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள், கடும் வறட்சி, வெள்ளப்பெருக்கு இவை காரணமாக ஏற்பட்ட பஞ்சம்பசி என்பன யாவும் இந்தப்புராதன குளக்குடியிருப்புகளைக் கைவிட்டு மக்கள் வெளியேறக் காரணமாயின. இப்பிரதேசத்தில் பரவலாகக் குடியேறி வாழ்ந்த மக்கள் நான்கு திக்குகளிலும் குடிபெயர்ந்தனர். முக்கியமாக முல்லைத்தீவுக் கரையோரம், பூநகரிக் கரையோரம் என்பனவற்றிற்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் குடிபெயர்ந்தனர்." வன்னியரசின் முக்கிய மையங்களான பெருங்காலி, முசலி, செட்டிகுளம், கிழக்குமூலை, மேல்பற்று, பனங்காமம், துணுக்காய், உடையாவூர், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கரிக்கட்டு மூலை, மாகவன்னி, திருக்கோணமலை முதலான பகுதிகளில் மக்கள் எஞ்சினர். பருவமழை பொய்க்கும் போதும், காலந்தப்பிப் பொழியும்போதும், அதிகமாகப் பொழிந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் போதும் இப்பிரதேசங்களில் நெற்செய்கை சிரமமானதாக அமைந்தது. இப்பிரதேசங்களில் பாழடைந்த குளங்களும், நீர்க்குண்டுகளும், பள்ளங்களும் சதுப்பு நிலங்களும் நீரைத்தேக்கி நுளம்புகளை உற்பவித்தன. அவை கொடிய மலேரியா நோயைத் தோற்றுவித்து மக்களைத் தொடர்ந்து இப்பிரதேசங்களில் வாழவிடவில்லை. மேலும் அடர்காடுகள் யானைகளின் உறைவிடமாகி இடையறாது தொல்லைகள் ஏற்பட்டன. கோடை வறட்சி இப்பிரதேசங்களிற் கொடூரமாக இருந்தது. குடிப்பதற்கே நன்னீர் கிடையாது போனது. இத்தகுநிலைகள் வன்னிப்பிரதேசத்தில் அதிக செறிவான குடியிருப்புகளை உருவாக்க விடவில்லை."
31. குணராசா.க. கிளிநொச்சியின் கதை, கந்தன் கருணை,
கும்பாபிஷேகமலர்-1988, பக்48
32. Kuranasa, K.A Critial Survey of Land Settlement and Land Development
in N.P of Sri Lanka, PhD Thesis, University of Jaffna-1991
104

ஈழத்தவர் வரலாறு
7.3 வன்னி அரசர்கள்
வையாபாடலில் வையாபுரி ஐயர் வன்னித்தலைவர்கள்/ அரசர்கள் பற்றி ஒழுங்குமுறையான பெயர்களைப் பதிந்து சென்றுள்ளார். ஆனால், நம்பகத்தன்மையான வன்னித்தலைவர்களின் குறிப்புக்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய வரலாற்றுக்குறிப்புகளிலிருந்து பெறக்கூடியதாகவுள்ளது. எனினும், இலங்கை வரலாற்றில் வன்னியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண மன்னர் சிலகாலத்தும், சிங்கள மன்னர் சிலகாலத்தும் நடவடிக்கைகள் எடுத்துத்துள்ளனர்.
[೩೧.1302 இல் யாழ்ப்பாண அரசனாக வரோதய சிங்கை ஆரியன் இருந்தபோது, வன்னிய அதிகாரிகள் சிலர் கலகம் விளைவித்து, மன்னனுக்கு எதிராகச் சிங்களவரசனின் உதவியை வேண்டியுள்ளார்கள். சிங்கள மன்னன் உதவவில்லை. கி.பி.1347 ஆம் ஆண்டு குணபூஷணன் செகராசசேகரன் என்ற பட்டத்துடன் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்தபோது, வன்னிப் பிரதானிகள் சிங்களப்பிரசைகளைத் தூண்டி அவர்கள் உதவியுடன் கலகம் விளைவித்தார்கள். அரசன் தன் படையுடன் சென்று கலகத்தையடக்கி வன்னியருக்குதவிய சிங்களவரையும் தண்டித்து மீண்டான். அரசனுக்கு இக்கலகத்தையடக்க உதவிய ஓமந்தையின் சிறு பிரதானியை வன்னிப்பிரதேசத்தின் சிற்றரசனாக்கி, ஏனைய வன்னியர்களை அவனுக்குட்பட்டு ஆள வழிசெய்தான்."
ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி வருமாறு தனது வளர்ப்புப்புத்திரன் சம்புமல் குமரயாவை அனுப்பிய போது, அவன் முதற்கட்டமாக வன்னியர்களை அடக்கி, வன்னிச் சிற்றரசுகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளான். *
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக்குடாநாட்டையும் தீவுகளையும் கோயிற் பற்றுகளாகப் பிரித்தனர். வன்னிநாட்டில் பூநகரி, பல்லவராயன்கட்டு,
33. குணராசா.க, மேற்படி 84. இராசநாயகம், செ. மு. கு. நூல், பக் 61-56 35. மே.கு.நூல், பக் 74
105

Page 61
ஈழத்தவர் வரலாறு
பெருங்காளி, மாந்தை, நானாட்டான், அரிப்பு என ஆறு கோயிற்பற்றுக்கள் இருந்தன.° எனினும் வன்னிநாடு பெருங்களிப்பற்று, பனங்காமம், கருநாவற்பற்று, முள்ளியவளை, தென்னமரவாடியென ஐந்து வன்னிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வோர் வன்னியனாட்சிக்குட்பட்டு இருந்தது."
பறங்கியர் அரசாட்சிக்குட்பட்ட தேசத்தில் வன்னிநாடு இருந்தாலும், வன்னியர் ஒருகாலத்திலும் அவ்வரசாட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தாரல்லர். அவர்கள் பலமுறையும் கடற்கரைப்பட்டினங்களிலும் யாழ்ப்பாணக் கிராமங்களிலும் நுழைந்து கொள்ளையடித்துச் சூறையாடிப்போவர். ஆகையினால், அவர்கள் ஆனையிறவில் பைல் (Pyl) எனும் கோட்டையையும் வெற்றிலைக்கேணியில் பெஸ்சூற்றர் (Beochuter) எனும் கோட்டையும் கட்டினர்.*
போர்த்துக்கேயர் காலத்தில் வன்னியர்கள் வரியாக 42 கொம்பில்லாத யானைகளையும் 125 தீராந்திகளையும் செலுத்தி வந்தார்கள். ஒல்லாந்தர் வன்னியரிடமிருந்து அதே வரியைத் திறையாகப் பெற்றார்கள். அதிகமாக அவ்வரியை அறவிட நேரில் வன்னியர்கள் கண்டியரசனுடன் சேர்ந்து கொள்வார்களென்ற பயமும் இருந்தது. ஆனால், பனங்காமத்து கைலாய வன்னியன் ஒரு கட்டுப்பாட்டுக்கும் உடன்பாட்டானில்லை. அதனால், ஒல்லாந்தர் மற்ற வன்னித் தலைவர்கள் அவனோடு பகைக்குமாறு சில சூழ்ச்சிகள் செய்துள்ளனர். * ஒல்லாந்தத்தேசாதிபதி முன் கைலாய வன்னியன் பன்னிரண்டாண்டுகளாக சமூகம்தரமறுத்துள்ளான். அவனோடு பகைக்க விரும்பாத ஒல்லாந்தர் அவன் இறந்ததும் அவனது மகன் காசியனாரை வன்னிமையாக்கித் திறை பெற்றனர்.
1679 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசம் ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பனங்காமமும் பரந்தன் வெளியும் ஒரு மாகாணமாக விளங்கின. இதன் வன்னிமையாக டொன்பிலிப் நல்லமாப்பாணன் விளங்கினான். பேகன் விளாக்குளப்பிரிவின் வன்னிமையாக டொன்கஸ்பார்
36. மே.கு.நூல், பக்: 143 37. மே.கு.நூல், பக், 161 38. மே.கு.நூல், பக்: 163 39. மே.கு.நூல், பக் 188, 189
106

ஈழத்தவர் வரலாறு
குஞ்சிநயினார் இருந்தான். மேற்பற்றும் முள்ளியவளையும் ஒரு மாகாணமாகக் குட்டிப்பிள்ளை என்ற வன்னியனால் ஆளப்பட்டன. கரிக்கட்டு மூலையின் வன்னிமையாகச் சேந்தயினார் என்பவனும், கருநாவற்பற்றுபுதுக்குடியிருப்புப்பிரிவின் வன்னிமையாக திரிகைலை என்பவனும், தென்னமரவாடி என்ற பிரிவின் வன்னிமையாகச் செம்பாத்தை (சியமாத்தை)
என்பவனும் விளங்கினார்கள்."
1697 ஆம் ஆண்டும் வன்னிப்பிரதேசம் ஆறு வன்னிப்பிரதேசங்களாக இருந்துள்ளது. பனங்காமம்-பரந்தன் வெளி, பேகன் விளாங்குளம்புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கரிக்கட்டுமூலை- மேல்பற்று, கருகாவற்பற்றுபுதுக்குடியிருப்பு, தென்னமரவாடி என்பன அவையாம். இவற்றின் வன்னிமைகளாக முறையே டொன்பிலிப் நல்லமாப்பாணன், இலங்கை நாராயணன், பெரியமெயினார் உடையார், டொன்தியோகு புவி நல்ல மாப்பாணன், அம்பலவாணவன்னியன், சேதுகாவல மாப்பாணன் என்போர் விளங்கினர். 1697 இல் புதுக்குடியிருப்பு பேகன் விளாங் குளத்தோடும், கரிக்கட்மூலை மேல்பற்றோடும் சேர்க்கப்பட்டு முள்ளியவளை தனியாக அமைக்கப்பட்டிருந்தது. "
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலும் ஆட்சியாளருடன் வன்னித்தலைவர்கள் முரண்பட்டே நடந்து கொண்டனர். ஒழுங்காகத்திறை செலுத்திவரவில்லை. 1680-ஆம் ஆண்டு 313 யானைகள் திறைப்பாக்கியாக விருந்தன. இத்திறையை அறவிடமுடியாதநிலையில் ஒல்லாந்தர் நீக்கியபோதும், 1696இல் 70 யானைகள் மீண்டுந் திறைப்பாக்கியாகவிருந்தன. யாழ்ப்பாணக்கம்மந்தோரின் அதிகாரியாகவிருந்த ஹென்றிக் சுவாதிக்குருன் (1694-1697) நல்ல மாப்பாணன், நிச்செய சேனாதிராயன், இலங்கை நாராயணன் ஆகிய மூன்று வன்னியருடன் பிணக்குப்பட்டிருந்தான். இந்த வன்னியர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும்போது மேளதாளம் முதலான வரிசைகளோடு வரவேற்கப்படவில்லை என்பது இப்பிணக்கிற்குரிய காரணமாகும். இந்த வன்னியர்கள் பிறப்பால் கம்பனியின் பிரசைகளாகவிருந்தும், சாதியிற் பொதுவான
39.2 Navaratnam, C.S. Vanni and Vanniyas, Jafna -1960 Page:26. 40. Memoir of Van Goens (1975-79) Translatd by
Sobhia Pieters. Colombo -1910
107

Page 62
ஈழத்தவர் வரலாறு வேளாளராகவிருந்தும், காலகதியில் மிகவுஞ் செருக்குற்று'வன்னியன்’ என்னும் பதவி மிகவும் மேம்பாடுடையதொன்றென நினைத்திருக்கிறார்கள். 'வன்னியன்’ என்னும் பதவி கம்பனியரால் அளிக்கப்பட்டதாயிருந்தும், கம்பனியையாவது அதன் மேலுத்தியோகத்தரையாவது கனம்பண்ண வேண்டுமென நினைக்கின்றாரில்லை. கம்பனி உத்தியோகத்தர்முன் சென்று தக்க மரியாதையுடன் பணிவுகாட்டுவது தங்களுக்கு வேண்டியதொன்றல்லவெனவுங் கருதுகின்றார்கள் என ஹென்றிக் சுவாதிக்குருன் தனது அறிக்கையில் எழுதியுள்ளார்.* 1715 இல் ஒல்லாந்தரால் புவிநல்லமாப்பாணனும் நிச்செய சேனாதிராயனும் கைதுசெய்யப்பட்டனர். 1716 இல் வன்னிப் பிரதேசம் நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தோணி குலசேகரம், கந்தப்பு மயிலாத்தை, சேந்தையினார் வாரி, கந்தப்பர் சிலம்பியனார் ஆகிய நால்வர்
வன்னிமைகளாக நியமிக்கப்பட்டனர்.*
1766 இல் பனங்காமத்திற்கு கதிரிநாச்சி வன்னிச்சி தலைவியாக இருந்தாள். பனங்காமத்து வன்னியனான நிச்செயசேனாதிராயன் இறக்க அவனது மகளான கதிரிநாச்சிவன்னிச்சி அரசபொறுப்பேற்றாள். இவள் பராயமற்ற பிள்ளையாக இருந்ததால் இலகுநாதநல்லநாச்சி பராமரிப்புக்காரியாக நியமிக்கப்பட்டிருந்தாள். கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று எனும் நான்கு வன்னிப் பிரிவுகளுக்கும் புவிநல்லமாப்பாணன் என்பவனே வன்னிமையாக விளங்கினான். தென்னமரவாடிக்கு சேதுகாவல
மாப்பாணன் வன்னிமையாக இருந்தான்."
ஒல்லாந்தர் வன்னியரின் ஆட்சியதிகாரத்தைக் குறைக்க எண்ணி கப்பித்தான் நாகெல் என்பவனை வன்னியதிகாரியாக நியமித்தபோது, பனங்காமவன்னியனான நல்லமாப்பாணனின் மருமக்களான நல்லைநாச்சி, சிதம்பரநாச்சி (சின்னநாச்சி) எனுமிரு வன்னிச்சிகள் கலகம் செய்ததாகத் தெரிகிறது.* நாகெல்லுக்கு எதிராக மக்களைத்திரட்டிப் போராடினர். அதில் தோல்விகண்டதால் நல்லைநாச்சியும் அவளது கணவரும்
41. Memoir of Hendirck, Zwaardeeroon 43. இராசநாயகம்.செ. மு.கு.நூல், பக்.190 43. மு.குநூல், பக்.193 44. மு.கு.நூல், பக் 193 45. மு.கு.நூல்,பக் 194
108

ஈழத்தவர் வரலாறு வண்ணார்பண்ணைக்கு ஒடி அங்கு மரணமடையும்வரை கரந்துறைந்தனர்.
சின்னநாச்சி முல்லைதீவுக்கோடி அங்கு வாழ்ந்திருந்தாள்."
1790 ஆம் ஆண்டு பனங்காமத்திற்கு நல்லமாப்பாணன் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான் என அறியப்படுகிறது. இவன் மீது குற்றம் சுமத்திய ஒல்லாந்த கம்மாந்தர் இவனைக் கைதுசெய்து கொழும்புக்குக் கொண்டு சென்று, பன்னிராயிரம் றிக்ஸ் டொலர்கள் குற்றப்பணமாகக் கட்டும்படி பணித்ததோடு, அது கட்டும்வரை சிறையிலிருக்குமாறும் பணித்தனர். நல்ல மாப்பாணனின் மனைவியான நல்லைநாச்சியார் வண்ணார்பூண்ணைக்குச் சென்று வைத்திலிங்கம் செட்டியாரிடம் அடைக்கலம் புகுந்தாள். தனது கணவர் விடுதலையாகும்வரை குளித்தலைக் கைவிட்டதுடன் ஒரு நேர உணவுடன் விரதமிருந்தாள். வைத்திலிங்கச்செட்டியார் ஒல்லாந்தராட்சியில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தமையால், கொழும்பு சென்று நல்லமாப்பாணனை விடுவித்து வந்தார். அதற்குப் பிரதியாக வைத்திலிங்கச் செட்டியார் வண்ணைச் சிவன் கோயிலைக் கட்டியபோது, அக்கோயில் கட்டமைப்புக்குத்தேவையான மரங்களை வழங்கியதோடு, தேராங்கண்டல்
கிராமத்தையும் கோயில் தொண்டு இடையறாது நடைபெற ஆய்கினர். *
7.4 பண்டாரவன்னிபன்
இறுதிச் சிற்றரசனாகக் குலசேகர வைரமுத்து பண்டாரவன்னியன் என்பான் விளங்கியுள்ளான். ( வன்னிநாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிமடிந்தவன் என்ற பெரும்புகழ் இவனுக்குண்டு. பண்டாரவன்னியன் ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியிலும் ஆங்கிலேயர் ஆட்சியின் முற்பகுதியிலும் வாழ்ந்தான், "ஒல்லாந்தருக்கோ ஆங்கிலேயருக்கோ அடங்கித் திறைசெலுத்தி வாழப் பண்டாரவன்னியன் உடன்படவில்லை. ஒருதடவை ஒல்லாந்த ஆள்பதி தங்களுக்குத் திறையாகச்
46. Navaratnam.C.S, (p.g.gjitai), Ligj:37
47. முத்துத்தம்பிபிள்ளை. ஆ, யாழ்ப்பாணச்சரித்திரம், யாழ்ப்பாணம். பக்110
48. சுப்பிரமணியம்.வே.புகழ்புத்த வன்னிமண்ணின் காவலர்கள், பண்டார
வன்னியின்விழா மலர்-1982, பக்:36
109

Page 63
ஈழத்தவர் வரலாறு
சாயவேர் தரவேண்டுமெனக் கேட்டபோது பண்டார வன்னியன் அந்தப்பணிப்பை நிராகரித்துள்ளான்."
கப்டன் வொன்டிறிபேக், ஆங்கிலேயப்படையில் சேர்ந்து கொண்ட ஒல்லாந்தனாவான். இவனுக்கும் பண்டாரவன்னியனுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
1803 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் கண்டியரசனுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பண்டாரவன்னியன் மூன்று படைப்பிரிவுகளை இரவோடிரவாக அனுப்பி, ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் (Pyl) கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூற்றர் (Beschuter) கோட்டை ஆகியவற்றைத்தாக்கினான். முள்ளிய வளையிலிருந்து சுண்டிக்குளமூடாகச் சென்ற பண்டார வன்னியனின்படை பெஸ் சூற்றர் கோட்டையைக் கைப்பற்றியது. குமாரசிங்க முதலியார் தலைமையில் கண்டாவளையூடாக இயக்கசிக்குச் சென்ற வன்னிவீரர்கள் பைல் கோட்டையைக் கைப்பற்றினர். கோட்டைகளில் இருந்த படையினரில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர். ஒரு பகுதியினர் தப்பி யாழ்ப்பாணத்திற்கு ஒடினர் தாம் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டார வன்னியன் கட்டளையிட்டான். பெஸ் சூற்றர், பைல் கோட்டைகளில் சிலபகுதிகள் தகர்க்கப்பட்டன. ஆனையிறவுக்கோட்டையின் நான்கு கொத்தளங்களும் தகர்க்கப்பட்ட நிலையில், ஆங்கிலேயரின் படைபெருந்திரளாக நெருங்கிவந்தமையால், பண்டாரவன்னியன் தன் படைவீரர்களுடன் கற்சிலைமடுவுக்குப் பின்வாங்க நேர்ந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவில், கப்டன் வென்டிறிபேக் அமைத்து வந்த கோட்டையைக் பண்டாரவன்னியன் தாக்கியுள்ளான். அவனுக்கு உதவியாக நுவரகலாவியா திசாவையினதும் கண்டி மன்னனதும் படைகள் சென்றுள்ளன. முல்லைதீவுத் தாக்குதலில் தோல்வியடைந்த டிறிபேக் தனது வீரர்களுடன் யாழ்ப்பாணத்திற்கு வள்ளங்களில் தப்பியோட நேர்ந்தது. எனினும் திருகோணமலையிலிருந்து ஆங்கிலேயப்படை எட்வேட் மெட்சின் என்பவனின்
தலைமையில் முல்லைதீவைக் கைப்பற்றிக் கொண்டது.
49. முத்துதம்பிப்பிள்ளை, ஆ. மு.கு.நூல். பக் 103
110

ஈழத்தவர் வரலாறு
பண்டாரவன்னியனும் அவனுடைய படைவீரர்களும் கோட்டையிலிருந்து மூன்று பீரங்கிகளைக் கைப்பற்றிச் சென்றனர். பண்டார வன்னியனுக்கு உதவி புரிந்தமைக்காக இராசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு குமாரசேகர முதலியாரும் அவருடைய நண்பர்கள் சிலரும் தூக்கிலிடப்பட்டனர். *
அதன்பிறகும் பண்டாரவன்னியன் ஆங்கிலேயருக்குப் பெருந்தலையிடியாக விளங்கியுள்ளான். ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக் கோட்டை என்பன அவனது தாக்குதலுக்குள்ளாகின. அதனால் 1803 ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு படையணி ஜோன்யுவெலின் தலைமையிலும், மன்னாரிலிருந்து ஒரு படையணி கப்டன் வொன்றிபேக் தலைமையிலும் வன்னியை நோக்கி நகர்ந்தன. கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனையும் அவனது வீரர்களையும் கப்டன் வொன்றிபேக்கின் படை சந்தித்தது. போர் மூண்டது. பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டமையால், கரந்துறைந்தான். கப்டன் வொன்டிறிபேக்கிற்குப் பண்டார வன்னியனைக் கைது செய்யவோ, சாகடிக்கவோ முடியாது போனது. அவன் தனக்கு முன்னர் ஏற்பட்ட அவமானத்தைப்போக்க விரும்பி, கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை நாட்டுவித்தான். அதில் 1803 ஒக்டோபர் 31 இல் இங்கு கப்டன் வொன் டிறிபேக் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தான் எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
1811 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதத்தில் பண்டாரவன்னியன் கண்டி மன்னனின் உதவியுடன் உடையாலுரில் ஆங்கிலேயரைத் தாக்கினான். இவ்வாறான தாக்குதல் நிகழவுள்ளதென்பதை முன்கூட்டியே ஒற்றறிந்த ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்திலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் படையினரைக் குவித்திருந்தனர். அதனால் பண்டார வன்னியனின் படை அழிவையும், பண்டாரவன்னியன் கடுங்காயங்களுக்குமுள்ளாக நேர்ந்தது. இவனை இவனது வீரர்கள் பனங்காமத்திற்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முயன்றனர். முடியவில்லை. அங்கு பண்டார வன்னியன் என்ற சுதந்திர வன்னி வீரன் மரணமடைந்தான்."
50, சுப்பிரமணியம்வே, மு.கு.கட்டுரை, பக்36
51. வன்னிமன்னர்கள் பற்றி நவீன ஆக்க விலக்கிய நூல்கள் சிலவுள்ளன. கயிலாயவன்னியனைப் பற்றி கரவைக்கிழான் கந்தசுவாமியின் தனியாத தாகம், பண்டாரவன்னியனைப்பற்றி முல்லைமணியின் பண்டாரவன்னியன் என்பன நாடக நூல்கள், கலைஞர் மு.கருணாநிதி, ' பாயும் புலி பண்டாரவன்னியன்' என்றொரு வரலாற்று நாவலை எழுதியுள்ளார்.

Page 64
8 நல்லூர்க் கந்தசுவாமி
9, Gault V
8.1 ஆதாரவுரை
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றிக்கும், நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் தலவரலாற்றிற்கும் நெருங்கிய பிணைப்புள்ளது. யாழ்ப்பாணநகர், நல்லூர்க் கந்தசுவாமிகோயில் என்பன அமைக்கப்பட்ட காலம், அமைத்தவர் பெயர் என்பன குறித்து யாவரும் ஆதாரமாகக் கொள்ளும் பாடல் ஒன்று யாழ்ப்பாண வரலாற்றின் இலக்கிய ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் கைலாயமாலையின் முடிவில் தனிப்பாடலாக வந்துள்ளது.
இலகிய சாகாத்த மெண்னூற் றெழுபதா மாண்டதெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகவாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே."
இத்தனிப்பாடலிலிருந்து இருவிபரங்கள் புலனாகின்றன. ஒன்று நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக்கட்டியவர் புவனேகவாகு என்ற பெயர் பூண்டவர்.
மற்றையது, அக்கோயில் சகவருடம் எண்ணுாற்றெழுபதாமாண்டில் கட்டப்பட்டது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக்கட்டியவர் புவனேகவாகு என்பதற்கு இன்னோர் ஆதாரம், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் என்ற நூலில் காணப்படும் விசுவநாதசாஸ்திரியார் சம்பவக்குறிப்பு ஆகும்.
95 (IC5ort:
1. கைலாயமாலை, சாவெஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு சென்னை -1939
12

ஈழத்தவர் வரலாறு
இலகிய சகாத்த மெண்ணுாற் றெழுபதாமாண்டதெல்லை அலர்திரி சங்கபோதியாம் புவனேகவாகு நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்துக் குலவிய கந்தனார்க்குக் கோயிலொன்றமைப்பித்தானே. *
இச்செய்யுள் கைலாயமாலையில் வரும் தனிச்செய்யுளின் அப்பட்டமான பிரதி. திரிசங்க போதி புவனேகவாகு கோயிலை அமைப்பித்தாரென அறிந்த விஸ்வநாத சாஸ்திரிகள் கைலாயமாலைத் தனிச் செய்யுளில் மாற்ற முண்டாக்கி யாத்துள்ளார். எவ்வாறாயினும் புவனேகவாகு என்பவரே நல்லூர்க்கந்தசுவாமி கோயிலைக் கட்டிய பெருமகன் என்பதில் பாடபேதமில்லை. இன்னோர் ஆதாரமும் இதனை உறுதிப்படுத்தும். நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியமே அதுவாகும்
சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி
சிறீகஜவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க போதி புவனேகவாகு'
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக்கட்டிய புவனேகவாகு, இவ்வாறு கோயில் கட்டியத்தில் இன்றும் போற்றப்படுகிறார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு: 'திருவருட்சக்திகளான தெய்வயானை யம்மனும், வள்ளியம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களுடையவனும், மிகப்பரந்த பூமியடங்கலுமுள்ள திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழையுண்டயவனும், மக்களுடைய தலைவனும், முதலாம்
2. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் -1933 3. குலசபாநாதன், நல்லூர்க்கந்தசுவாமி, நல்லூர் தேவஸ்தான வெளியீடு-1971
3

Page 65
ஈழத்தவர் வரலாறு
பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமான புவனேகவாகு' "
எனவே, கைலாயமாலை கூறும், அலர்பொலி மாலை மார்பன் புவனேகவாகு' வும் விஸ்வநாதசாஸ்திரியின் சம்பவக் குறிப்புக்கூறும், 'திரிசங்கபோதி புவனேகவாகுவும் கோயில் கட்டியம் கூறும், சிறீசங்கபோதி புவனேகவாகுவும் ஒருவரா என்ற வினா எழுகின்றது. பின்னவர் இருவரும் ஒருவரே என்பதில் வரலாற்றறிஞர்களிடையே பேதமில்லை.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதல் கட்டிய புவனேகவாகு என்ற பெயர் கொண்டவர் யார்? கல்வெட்டாதாரங்களும், செப்பேட்டா தாரங்களும் இவர் குறித்துக் கிடையாது விடினும், நூலாதாரங்களும், பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை;
‘சிங்கையாரியன் சந்தோஷத்துடனிசைந்து, கலை வல்லசிகாமணியாகிய புவனேகவாகுவென்னும் மந்திரியையும் காசிநகர்க்குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்’ என யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். * சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தி வருகையில் புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ம் வருசத்தில் புவனேகவாகு எனும் மந்திரி நிறைவேற்றினான்’ என யாழ்ப்பாண வைபமாலை என்று நூல் கூறுகின்றது. யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது. கந்தசுவாமி கோயில், குருக்கள்வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்த்தியின் பிரதம மந்திரி புவனேசவாகரால் 884 ஆம் ஆண்டளவில் கட்டப்பெற்றது.' நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையர் என்பார், 1811இல்
சிவகாமி. வி. நல்லூரும் தொல்பொருளும், ஒளி சஞ்சிசை, யாழ்ப்பாணம் -1971 ஜோன்எஸ், யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம் -1882 யாழ்ப்பாணம் வைபவமாலை, குலசபாநாதன் பதிப்பு, சுன்னாகம்-1949 குலசபாநாதன், முகுநூல்-1971
14

ஈழத்தவர் வரலாறு
ஆள்வோருக்கு எழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார்."
8.2 புவனேகவாகுகள்
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றினை நுணுகி ஆராயில் மூன்று புவனேகவாகுகள் ஏதோ ஒவ்வொரு வகையில் வரலாற்றின் போக்கில் சம்பந்தப்பட்டிருப்பதனை அறிய முடியும்
இலகிய சகாத்த மெண்ணுாற்றெழுபதாமாண்டு' என முற்குறித்த செய்யுள்களில் வரும், சகவருடம் 870 ஆம் ஆண்டு என்றால் அது கி.பி.948 ஆம் ஆண்டாகும். எனவே, 948 ஆம் ஆண்டுகளில், அல்லது பத்தாம் நூற்றாண்டில் வடவிலங்கை அரசில் புவனேகவாகு என்ற அரசர் அல்லது அரசப்பிரதிநிதிகள் இருந்துள்ளனரா? கி.பி.944 இல் பராந்தகச் சோழன் இலங்கைமீது படையெடுத்து சிங்கள மன்னனானப் புறங்கண்டு, சிங்கைநகர் அரசனைக் கொன்று, வடவிலங்கையைவென்று ஒரு இராசப்பிரதிநிதியை நியமித்து விட்டுச் சோழநாடு மீண்டான்." அந்த இராசப்பிரதிநிதி புவனேகவாகுவாக இருக்கலாம். இக்காலகட்டத்தில் வடவிலங்கையில் புவனேகவாகு என்ற ஒருவன் அரசனாக அல்லது அரசப்பிரதிநிதியாக இருந்துள்ளான் என்பதற்குச் சில ஆதாரங்களுள்ளன. |
பத்தாம் நூற்றாண்டிலே பார்சியாவின் அரசனான டோபாக் என்பவன், கர்ஷாஸப் என்பவனின் தலைமையில் அனுப்பியபடை ஒன்று கலா என்ற துறையில் (கலா என்பது ஊர்காவற்றுறை: களபூமி) இறங்கி இருநாட் பயணதூரமுள்ள ஓரிடத்தில் வாகுவென்னும் அரசனை வெற்றி கொண்டது என்று அசேதி என்ற பார்சியன் கர்ஷிஸ்ப் நமா என்னும் கிரந்தத்தில் எழுதியுள்ளான். ' பத்தாம் நூற்றாண்டில் வாகு என்னும் பெயருடன் இலங்கை அரசரில் யாழ்ப்பாண மொழிந்த பிறவிடத்தில் எவருமிருந்திலர்." வாகு என்று
8. Johnrsone Alexander, The Temple of Camdaswamy Jaffna, CALR, VOL. II,
Part : III, 1916) 17
9. ஜோன்,எஸ்.முகுநூல்-1883
10. இராசநாயகம், செ, யாழ்ப்பாணச்சரித்திரம், யாழ்ப்பாணம்-1933
11. மு.குநூல்-1933
115

Page 66
ஈழத்தவர் வரலாறு
பார்சிய நூல் குறிப்பிடும் மன்னன் அல்லது சிற்றரசன் அக்காலவேளையில் சோழரின் அரசப் பிரதிநிதியாக வடவிலங்கையில் விளங்கிய புவனேகவாகுவாக இருத்தல் வேண்டும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் பூசகராக விளங்கிய சின்னமனத்துளார் என்பவர் புவனேகவாகு என்பவருக்கு ஒருநாள் விருந்து வைத்ததாகவும், அவ்விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றிற்கும் புவனேகவாகு ஒவ்வொரு வெண்பா பாடியதாகவும் வைபவமாலை குறிப்பிடுகின்றது. இந்தச் சின்னமனத்துளார் சிதம்பர தீட்சகரின் மகன், பெரியமனத்துளராரின் பேரன். நாகதீவின் (யாழ்ப்பாண அரசின்) முதல் மன்னான உக்கிரசிங்கன் காலத்தில் (கி.பி. 785) தான், பொரியமனத்துளார் இந்தியாவிலிருந்து கோயில் திருப்பணிக்காக இங்கு வந்துள்ளார். “ எனவே, மூன்று தலைமுறைகளை மனதிற்கொண்டு கணிக்கும்போது, அசேதி சந்தித்தவாகு, சின்னமனத்துளார் விருந்தளித்த புவனேகவாகுவாக இருத்தல் சாத்தியமாகும்.
\யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெளத்தச் செல்வாக்கும், சிங்கள மக்களது ஆதிக்கமும் மேலோங்கி வந்ததால் உக்கிரசிங்கன் தனது தலைநகரான கந்தரோடையை (கதிரமலை) க் கைவிட்டு, புதியதொரு தலைநகரான சிங்கைநகரைத் தனது பெயரில் அமைத்து இடம்பெயர்ந்தான் என ஏற்கனவே கண்டோம். அந்தச் சிங்கைநகர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலமையாது பெருநிலப்பரப்பில் அமைந்தது எனவும் அறிந்தோட்(கி.பி.944 இல் பராந்தகச் சோழன் (2 ஆம் பராந்தகன்) சிங்கைநகர் மன்னனைக்கொன்று தனது பிரதிநிதியை உத்தர தேசத்தை நிர்வகிக்க நியமித்துள்ளான். எனவே, புவனேகவாகு என்ற இந்த முதலாவது அரசப்பிரதிநிதி கி.பி. 948 இல் நல்லூர்க் கந்தசுவாமிகோயிலை முதன் முதல் கட்டினானர
அவ்வாறு கட்டியிருந்தால் அது நிச்சயமாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள நல்லூராக இருக்கவாய்ப்பில்லை. சிங்கைநகர் அமைந்திருந்த பெருநிலப்பரப்பிலுள்ள நல்லூராக இருந்திருக்க வேண்டுமெனத் துணியலாம்.
12. யாழ்ப்பாண வைபவமாலை-மு.கு.நூல், 1949
116

ஈழத்தவர் வரலாறு
உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களிலிருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லூர் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதன நல்லூர் ஆகும் எனக் கொள்வதில் தவறில்லை. கி.பி.948 இல் முதலாவது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைக்கப்பட்டது என முடிவுசெய்தால், அக்கோயில் பூநகரி நல்லூரில் கட்டப்பட்டிருக்க வேண்டும்)
யாழ்ப்பாண வரலாற்றிற் சம்பந்தப்படும் இரண்டாவது புவனேகவாகு கி.பி.1248 ஆம் ஆண்டில் இடம்பெறுகிறான். கைலாயமாலை குறிப்பிடும் செய்யுளிலுள்ள இலக்கிய சகாத்த மெண்ணுாற்றெழுபதாமாண்டு' என்ற வரி குறிப்பிடும் சகவருடம் 870 ஆம் ஆண்டை கி.பி.1248 ஆம் ஆண்டெனக் கணிக்கின்றனர்)
யாழ்ப்பாணக் வைபவ விமர்சனம் என்ற சரித்திர நூலின் ஆசிரியரான சுவாமி ஞானப்பிரசாசரின் கருத்தின்படி, எண்ணுாற்றெழுபது என்பது 870 அன்று. ஆயிரமாகிய பேரெண்ணும் நூற்றியெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும், எண் என்றால் 1000. இந்த 1000+107:1107 சகவருடம் 107 ஆம் ஆண்டு என்றால், அது கி.பி.1248 ஆம் ஆண்டைக் குறிக்கும் என்பதாகும்."
கி.பி.1242 இல் உத்தரதேசத்தின் மன்னனாக விளங்கியவன் விசய காலிங்க ஆரியச் சக்கிரவர்த்தியாவான். இவனே வைபவமாலை குறிப்பிடும் பாண்டிமழவன் என்பவன் அழைத்து வந்த சிங்கையாரியன் ஆவான். இந்த சிங்கையாரிய மன்னனுக்குப் புவனேகவாகு என்பவன் மந்திரியாக இருந்துள்ளான்."
யாழ்ப்பாண இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டில் தான் உருவாகி நிலைத்திருந்ததெனக் கருதும், முதலியார் செ. இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோருட்பட நவீன வரலாற்றறிஞர்கள் சிலரும்,
13. குணராசா, க. நல்லூர்க் கந்தசுாமி கோயில் வரலாற்றில் திருத்தம் - 1995 14. ஞானப்பிரகாசர், சுவாமி, யாழ்ப்பாணம் வைபவிமர்சனம், நல்லூர்-1928 15. குணராசா. க. நல்லைநகர் நூல், யாழ்ப்பாணம் -1987 16. யாழ்ப்பாண வைபவமாலை- முகுநூல், 1949
117

Page 67
ஈழத்தவர் வரலாறு
கந்தனாலயம் யாழ்ப்பாண இராச்சியம் செழித்தோங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். சிங்கைநகரில் ஆட்சிப்பொறுப்பேற்ற காலிங்கச் சக்கிரவர்த்தி தனது தலைநகரைக் குடாநாட்டிற்கு மாற்றிக் கொண்டான். அதற்காக யாழ்ப்பாண நகரியைத் தனது மந்திரி புவனேகவாகுவைக் கொண்டு கட்டுவித்தான்." யாழ்ப்பாண நகரியை நல்லூர்க் குடியிருப்பில் உருவாக்கிய புவனேகவாகு கந்வேட்கும் அங்கு ஒர் ஆலயம் எடுப்பித்தான்.
யாழ்ப்பாண வரலாற்றில் சம்பந்தப்படும் மூன்றாவது புவனேகபாகு, கி.பி.1450 ஆம் ஆண்டிலிருந்து 1467 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட தென்னிலங்கை இளவரசன் சப்புமல் குமரயா என்ற செண்பகப்பெருமாள் என்ற சிறீசங்கபோதி புவனேகவாகு ஆவான்.
8.3 முதலாவது ஆலயம்
எனவே, நல்லைக்குலவிய கந்தவேட்குக் கோயில்கட்டப்பட்டது. கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி.1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்." முதலாவது ஆலயம் கி.பி.948 ஆம் ஆண்டு கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகவாகுவால் பூநகரி நல்லூரில் கட்டப்பட்டடிருக்க வேண்டும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கிரவர்த்தியின் மந்திரியாக விருந்த புவனேகவாகுவால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விரு கருத்துக்களிலும் பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. எனவே, கி.பி. 1248 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண வரசனின் மந்திரியாக விளங்கிய புவனேகவாகு/ புவனேகவாசர் குருக்கள் வளவு என்று இன்று வழங்கப்படும், அருள்விளக்கத்துடன் இன்று விளங்கும் திருக்கோயில் அமைந்துள்ள இதேயிடத்தில், முதலாவது கந்தவேள் ஆலயத்தைக் கட்டுவித்தான் எனத் துணியலாம்.
等
17. சிங்கைநகரிலிருந்து யாழ்ப்பாண நகரிக்குத்தலைநகர் மாறநேர்ந்த சூழ்நிலையை
அத்தியாயம் : 4-இல் விரிவாகக் காணலாம். 18. டானியல் ஜோன், யாழ்ப்பாணச் சரித்திரம், முதல் பாகம், யாழ்ப்பாணம் -1930
118

ஈழத்தவர் வரலாறு
8.4 கந்தசுவாமிகோயிலின் அழிவு
கனகசூரியசிங்கையாரியன், வடவிலங்கையை ஆண்டவேளை, தென்னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு என்பான் விளங்கினான். அவன் ஆரிய அரசர்கள் மீது மாறாத, பகைமை கொண்டிருந்தான். 1450 ஆம் ஆண்டு தனது வளர்ப்புப் புத்திரனும், சேனாதிபதியான சப்புமல்குமரயா (செண்பகப்பெருமாள்) என்பானைப் பெரும்படையுடன் உத்தரதேசத்தைக் கைப்பற்றுமாறு அனுப்பினான். அவனது 6) முன் எதிர்நிற்கவியலாது, தமிழ்ப்படை தோற்றது. கனகசூரியசிங்கையாரியன் தன்னிரு புதல்வர்களுடன் இந்தியாவிற்
கோடிப்போனான்.
அனுராதபுரத்திலிருந்து பெரும்படையுடன் புறப்பட்ட சப்புமல்குமரயா உத்தரதேசம் எல்லாம் வெற்றிக்கொண்டு யாழ்ப்பாண நகரினுள்ளே யாபாபட்டுன புகுவதற்கு முன் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த சிங்கைநகரைத் தாக்கி, அங்கிருந்த மாளிகைகள், கட்டிடங்கள் என்பனவற்றை அழித்தான். *
சப்புமல்குமரயா யாழ்ப்பாணத் தலைநகரிட் புகுந்து, மதங்கொண்ட களிறெனக் கண்டாரைக் கொன்று, அந்த நகர் ஆவணங்களெல்லாம் இரத்தவெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாடமாளிகைகளையெல்லாம் இடிப்பித்துத் தரைமட்டமாக்கினான். சீரும் சிறப்போடும் செழித்து விளங்கிய பொங்கொலி நீர்ச் சிங்கைநகர், சப்புமல்குமரயாவின் படையெடுப்பால் சிதைந்து அழிந்தது."
சிங்கை நகரை அழித்துத் தரைமட்டமாக்கிய சப்புமல்குமரயாவின் படை, நல்லூரிற் புகுந்தது. அப்படை யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போது, நகரிலிருந்த மாடமாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. பழைய தலைநகர் பாழாய்விட்டது. சப்புமல் குமரயாவின் யாழ்ப்பாண வெற்றியைப் புகழ்ந்தபாடும் 'கோகில சந்தேஷிய எனும் குயில்விடுதூதுப் பிரபந்தம் ஒன்று, யாழ்ப்பாணப்பட்டினத்தின் சிறப்புக்களையும், படை சென்ற பாதையில் நிகழ்ந்த யுத்த அழிவுகளையும்
9. குனராசா.க, மு.கு.கட்டுரை-1995 20. இராசநாயகம்.செ. மு.கு.நூல் -1933
119

Page 68
ஈழத்தவர் வரலாறு
பெருமையாகப் பாடியுள்ளது. எனவே சப்புமல்குமரயாவின் படை தலைநகரைத் தரைமட்டமாக்கியது எனக் கொள்வதில் தவறில்லை. அவ்வேளை நல்லூர்க்
கந்தசுவாமி கோயிலும் தகர்த்தெறியப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே கி.பி. 1248 ஆம் ஆண்டு, புவனேகவாகு எனும் அமைச்சரால் முதன் முதல் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி. 1450 ஆம் ஆண்டு, சப்புமல்குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரம் தேடுவான் போன்று, யாழ்ப்பாண நகரியை மீண்டும் புதுப்பித்த சப்புமல்குமரயா, அழிந்துபோன நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையையும் மீண்டும் ஆக்கினான்.
ஆரியச் சக்கிரவர்த்தியோடு செண்பகப்பெருமாள் கடும்போர் நிகழ்த்திய நாட்களில், அரண்களும் இராசதானியும் பெரிதும் அழிவுற, அவற்றைச் செண்பகப்பெருமாள் திருத்தி அண்மத்தானென்றே கொள்ள வேண்டும், சப்புமால்குமாரன் யாழ்ப்பாணப் பட்டினத்திற் கோட்டைகளையும் காவலரண்களையும் அமைத்தான் என்று ராஜாவலிய சொல்வனவும் இக்கருத்திற்கு ஆதாரமாயுள்ளன."
சப்புமல்குமரயாவின் தந்தை மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு பணிக்கனாவான். ஆறாம் பராக்கிரமபாகு அவனை உபசரித்து, அவன் தேகவலியிலும் வாட் போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த் தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனுக்கு மணம்முடிப்பித்தான்'*இவர்களுக்குப் பிறந்வனே சப்புமல்குமரயா ஆவான். ‘செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன் நாளங்களில் ஒடக் கொண்டவனாதலாலும், தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந்தொட்டு ஜயவர்த்தன கோட்டையிலேயும் வழிபாடு பயின்றுவந்தமையாலும், கோகில சந்தேசமுடையார் அவனைப் புத்தமதத் தாபகரெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப் பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதும் சந்தேகமன்று. *
1. பத்மநாதன்.ச, ஈழத்து வரலாற்று நூல்கள், இளங்கதிர், பேராதனை-1970
இராசநாயகம், செ.மு.கு.நூல்-1933
s
3. ஞானப்பிரகாசர். சுவாமி, மு.கு.நூல்-1928
120

ஈழத்தவர் வரலாறு
8.5 இரண்டாவது கந்தசுவாமி கோயில்
கி.பி.1450 ஆம் ஆண்டிலிருந்து 1467 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சப்புமல்குமரயா என்ற சிறிசங்கபோதி புவனேகவாகு, குருக்கள்வளவு என்றவிடத்திலிருந்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமிகோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான். படையெடுப்பின் போது அழிந்து சிதைந்துபோன முதலாவது தேவாலயம் அமைந்திருந்த விடத்தில் அக்கோயிலை அமைக்காது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை, அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டாரவளவு, சங்கிலித்தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றிற்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச்சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும். அவ்விடத்தில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாவது தடவையாக அமைக்கப்பட்டது.*
இக்கோயில் ஆகம விதிகளுக்கு இணங்க அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இக்கோயில் விதானங்கள் செப்புத் தகடுகளில் வரையப்பட்டிருந்தன. சிலாவிக்கிரங்கள் இக்கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தன? இக்கோயில் மிகப்பெரியதாக தென்னிந்தியக் கோயில்களை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக இதுவே இருந்தது.’ என்பதை, குவெறோஸ் சுவாமிகளின் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. இக்கோயிலைச் சுற்றி நெடு மதில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் இந்தக் கோயில் மதிலின் ஒரு பகுதியை சங்கிலித்தோப்பில் யமுனாரி என்ற பகர வடிவ ஏரிக்குக் கிழக்குப்புறத்தில் காண முடிகின்றது. நான்கு அடிகள் அகலமான செங்கற்சுவரின் அத்திவாரத்தை யமுனாரிக்குச் செல்கின்ற ஒழுங்கை முகப்பிலும் காணலாம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில், உயர்ந்த மதில்களுள் அமைந்திருந்தமையால் தான், பின்னர் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த பிலிப் ஒலிவேரா என்ற போர்த்துக்கேயத் தளபதி, ஒரு கட்டத்தில், இக்கோயிலினுள் தனது வீரர்களுடன் புகுந்து, இதனை ஒரு கோட்டையாகப் பயன்படுத்தி இருக்கிறான்."
fn
h d
4. குணராசா.க, மு.கு.நூல் -1987 5. முத்துத்தம்பிப்பிள்ளை , ஆ. மு.கு.நூல் -1933
121

Page 69
ஈழத்தவர் வரலாறு நல்லூரில் மீண்டும் முத்திரைச் சந்தி கிறிஸ்தவ தேவாலயம் இன்று அமைந்துள்ள கோட்டத்தில் கந்தனாலயம் கோபுர கலசங்களோடு அமைந்தது. இக்கோயிலிருந்த சிலா விக்கிரகங்கள் சிலவற்றை யாழ்ப்பாணத் தொல்பொருட் காட்சிச்சாலையில் இன்றும் காணலாம். இப்பெரிய ஆலயத்தை அமைத்தமையால், இவனது பெயர் இன்றும் கோயில் கட்டிடத்தில்
சிறீசங்கபோதி புவனேகவாகு வென நினைவு கூரப்படுகின்றது.
சிறீசங்க போதி புவனேகவாகு, நல்லூரிலிருந்து உத்தரதேசத்தை பதினெழு வருடங்கள் ஆட்சி செய்தான். கி.பி.1467 ஆம் ஆண்டு அவன் தென்னிலங்கைக்குத் திருப்பிச் செல்ல நேர்ந்தது. அவனுடைய வளர்ப்புத் தந்தை ஆறாம் பராக்கிரமவாகு இறந்துபோக, அவனது பேரன் ஜெயவீரன் கோட்டைக்கு அரசனானான். அதனை விரும்பாத சிறிசங்கபோதி புவனேகவாகு, விஜயபாகு என்பவனை யாழ்ப்பாணத்தின் அரசனாக்கிவிட்டு கோட்டைக்கு மீண்டு, ஜெயவீரனைக் கொன்றுவிட்டு அரசகட்டிலேறினான். தருணத்தை எதிர்பார்த்து திருக்கோவிலூரில் கரந்துறைந்திருந்த கனகசூரிய சிங்கையாரியனும் அவனது இரு புதல்வர்களும் சேனைகளுடன் வந்து விஜயபாகுவைக் கொன்று, இழந்த இராச்சியத்தை மீட்டுக் கொண்டனர்.
கனகசூரிய சிங்கையாரியன் மீண்டும் இழந்த மணிமுடியைத் தரித்துக்கொண்டான். அவன்பின் அவனது மூத்த மகனான பரராசசேகரன் கி.பி.1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்புமிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராசசேகரன் ஆவான். கந்தசுவாமி கோயிலுக்கண்மையில் ஒர் ஏரி அமைப்பித்து, யமுனாநதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள் பெய்வித்து, அதனை ( யமுனாரி) யமுனையோ எனப்பெயர் தந்து அழைத்தான்." இந்த யமுனாரி என்ற பகர வடிவ ஏரி இன்று அழியுந்தறுவாயிலுள்ளது.
26. Queyros. F.De, The Temporal and Spiritual Corquest of
Ceylon., Colombo-1930 27. இராசநாயகம், செ.மு.கு.நூல்-1933
122

ஈழத்தவர் வரலாறு
8.6 யோகியார்
கி.பி.1591 இல் போர்த்துக்கேயர் மூன்றாவது தடவையாக அந்திரே பூர்த்தாடு டி மென்டொன்சா எனும் படைத்தலைவனை பெரும் படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர். போர்த்துக்கேயத் தளபதி யாழ்ப்பாண அரசினைப் பெரும்படையுடன் தாக்கினான். -
தமிழர் படையும் பறங்கியர் படையும் வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்குமிடையிலுள்ள பெரும் வெளியில் அதாவது தற்போதைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலமைந்துள்ள இடத்தில் ஒன்றினையொன்று எதிர்கொண்டன.
அரசனுடைய மகாவீரர்களைக் கொண்ட அத்தப் பத்துப்படை தங்கள் உயிரை வெறுத்துச் சத்துருக்களை எதிர்த்துப் பொருதினர். அக்கடும் போரிற் கலந்த தமிழரெல்லாரும் மாண்டனர். அவர்களை நடாத்திய யோகி ஒருவரும்,
28
கந்தசுவாமி கோயிற் பூசகரும் (பெரிய ஆலயத்துப் பிராமணரும்) மாண்டனர்.
அக்காலவேளையில் யாழ்ப்பாண மண்ணில் துறவிகள் நடமாடினர். தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாண இராச்சியமூடாக சிவனொளிபாத மலைக்கும், கதிர்காமத்திற்கும் தலயாத்திரையை யோகிகள் மேற்கொண்டிருந்தார்கள். யோகிகள் வடிவில், கண்டி மன்னனுக்குதவ , போர்வீரர்கள் தென்னிந்தியாவிலிருந்து செல்வதாகப் போர்த்துக்கேயர் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் நல்லூரில் யோகியர் ஒருவர் வாழ்ந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
இவரது பெயர் சிக்கந்தர் என்பர். இவரை சைவமக்களும் அக்காலத்தில் நல்லூரில் வாழ்ந்த முஸ்லீம் மக்களும் ஆதரித்துப் போற்றினர். இந்த இரு மதத்தவர்களுக்குமுரிய அற நெறிகளை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தபடியால் தான் இருமத மக்களும் அவரை வழிபட்டனர். புராதன நல்லூர்த் தேவாலயம் அமைந்திருந்த குருக்கள் வளவில் அந்த யோகியார் உலவினார். தன்னை நாடிவந்த மக்களுக்கு அறநெறி புகட்டினார். போர்த்துக்கேயருக்கும் தமிழ்ப் படைவீரர்களுக்குமிடையில், குருக்கள் வளவில்
29. இராசநாயகம். செ.முகுநூல்-1933
123

Page 70
ஈழத்தவர் வரலாறு
நிகழ்ந்த யுத்தத்தில் அந்த யோகியார் உயிரிழக்க நேர்ந்தது. குருக்கள் வளவின் சுற்றாடலில் அக்கால வேளையில் முஸ்லிம்கள் வாழ்ந்தமையால், அவர்களால் நன்கு மதிக்கப்பட்ட அந்த யோகியாருக்கு, ஒரு சமாதியைக் குருக்கள் வளவில் கட்டி வழிபாடியற்றி வருவாராயினர்.*
அக்காலகட்டத்தில் இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ள குருக்கள் வளவு என்றவிடத்தில் முஸ்லிம்கள் குடியேறியிருந் தார்கள் என அறியப்படுகின்றது.
'அக்காலத்தில் கந்தசாய்பு என்பவனால் முகம்மது மார்க்கத்தவர்களாக்கப்பட்ட தமிழ் வம்சத்தவர்களான சில சோனகச் குடிகள் காயல் பட்டணம் முதலிய இடங்களிலிருந்து வந்த தென்மிருசுவில் என்னும் ஊரில் குடியிருந்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாமில் என்னுமிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரம் பண்ணிக்கொண்டு தாங்களிருந்ததென மிருசுவிலுக்கு உசனென்று பேருமிட்டனர். சிலகாலம் அவ்விடத்திலிருந்து அவ்விடம் வசதிப்படாததினால் அந்தச் சோனகக்குடிகள் அவ்விடத்தை விட்டு நல்லூரில் கந்தசுவாமி கோயிலிருந்த இடத்தில் குடியிருந்தார்கள்."
‘சோனகர் உசனின்று மகன்று சோனகன் புலவில் சிறிது காலம் வைகி, அதுவும் வாய்ப்பாகாமையால், இப்போது நல்லூரிக் கந்தசுவாமி கோவிலிருக்குமிடத்திற்கு மேல்பாகத்தில் குடிகொண்டார்கள். அங்கே ஒரு பள்ளிவாசலுங் கட்டினார்கள்." கோயிலின் அயலிலே மேற்குத் திசையாக சில காலத்திற்கு முன் மசூதி யொன்றிருந்ததாகத் தெரிகின்றது. கி.பி.1560 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்தினூ டி பிறகன்ஸா யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தபோது, பறங்கிகளுக்கு எதிராக தமிழர் படையிலுள்ள வடக்கரும்,
33
சோனகரும் போராடினர்.° கி.பி.1591 இல் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட
29. குணராசா, க, மு.குநூல்-1987 30. யாழ்ப்பாண வைபவமாலை, மு.குநூல் 31. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. மு.கு:நூல்-1933 33. சிவசாமி, வி, மு.கு.கட்டுரை-1976 33. ஞானப்பிரகாசர், சுவாமி, முகுநூல், -1938
124

ஈழத்தவர் வரலாறு
அந்திரேபூர்த்தாடு மீண்டும் கலகம் விள்ைவிக்கக் கூடியவர்களென எண்ணமிட்ட எண்ணுாறு வடக்கரையும் சில சோனகரையும் சிரச்சேதஞ் செய்துள்ளான்." மேலும் கரையிறங்கிய பறங்கிப்படை, இவ்விடத்திற்கன்மையிலிருந்த சோனகரின் வர்த்தகச்சாலைகளைக் கண்டு, அவைகளுட் புகுந்து 10000 கண்டி நெல்லையும், 400 கண்டி அரிசியையும் வாரிக்கொண்டு போயினர்." இவற்றிலிருந்து நல்லூரில் சில சோனகக் குடிகள் வசித்துவந்தனர் எனத் துணியலாம்.
8.7. கோயில் அழிவு
1450 ஆம் ஆண்டிற்கும் 1467 ஆம் ஆண்டிற்கு மிடையில் பூரீ சங்கபோதி புவனேகவாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஒன்றரை நூற்றாண்டுகளின் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் அத்திபாரத்தோடு அழிவுற நேர்ந்தது.
1620 ஆம் ஆண்டு பிலிப் டி ஒலிவேறா என்ற போர்த்துக்கேயத் தளபதி, பெரும்படையுடன் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தான். இதுவே போர்த்துக்கேயரின் இறுதிப்படையெடுப்பாகும். அவன் யாழ்ப்பாணத்தைப் பூரணமாகத் தன் ஆதிக்கத்துக்குட்படுத்தினான். பிலிப் டி ஒலிவேறா, யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்த சைவாலயங்களில் பலவற்றை இடித்துத்
தரைமட்டமாக்கினான்.
யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிறவிடங்களிலெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமயம் வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்."
1621 ஆம் ஆண்டு பிலிப் தே ஒலிவேறா நல்லூரைத் தன்னுறை விடமாக்கிக் கொண்டான். அவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத்
34 இராசநாயகம், செ. மு.கு.நூல்-1933 35. மு.குநூல் 1933 36. மு.கு.நூல்-1933
125

Page 71
ஈழத்தவர் வரலாறு
தரைமட்டமாக்கி, இருந்தவிடமுந் தெரியாமல் அத்திவாரத்தையும் கிளறுவித்தான். 'அங்கிருந்த பெரிய கோயிலில் கிறிஸ்தவரல்லதவர்கள் மிக்க ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அவன் அதனை அழியாது விட்டால், அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாக அவர்கள் வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால், அவன் ஒரு மதப்பற்றுமிக்க கத்தோலிக்கனாதலால், அவர்களின் நடவடிக்கை அவன் அக்கோயிலை அழித்தற்குக் கொண்டிருந்த விருப்பத்தினை மேலும் அதிகரிக்க வைத்தது. எனவே அதனை அத்திவாரமில்லாது அழிக்குமாறு கட்டளையிட்டான்' என குவேறோஸ் சுவாமிகள் தனது நூலில் எழுதியுள்ளார். * இவ்விதமான கொடுந் தொழில்களைச் செய்வதற்கு அவர்களது சமயாபிமானமும், வைராக்கியமும், மறுசமயத்தவரது வழிபாட்டுக்குரிய கோயில்கள் தம்மத விரோதமென்ற நம்பிக்கையுமே காரணங்களாயவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய காரணமென்பது மறுக்கொணாத உண்மை. * பிலிப்தே ஒலிவேறா, முன் கூறியபடி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையிடித்து அக்கோயிற் கற்களைக் கொண்டு, கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்திலிருந்த சைவ வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரை மட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோயிலதிகாரிகளும் அர்ச்சகர்களும் தத்தம் கோயில் விக்கிரங்களைக் கிணறுகளிலுங் குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். *
கீரிமலையிலிருந்த திருத்தம்பலேஸ்வரன் கோயிலை அவர்கள் இடிக்குமுன்னே, விக்கிரகங்களை அக்கோயில் குருக்களாகிய பரசுபாணி ஐயர் ஒரு கிணற்றிலிட்டு மண்ணால் தூர்த்துவிட்டு அவ்விடத்தினின்றும் நீங்கினர். நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்க்காப்பாளனாயிருந்த சங்கிலியென்னும் சைவப்பண்டாரம், அக்கோயில் விதானங்கள் வரையப்பட்ட செப்பேடு, செப்புச் சாதனங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கோடினான். அங்கிருந்த சிலவிக்கிரகங்கள் தாமிரவிக்கிரகங்களையெல்லாம் அக்கோயில் குருக்கள் மார் பூதராயர் கோயிலுக்கு சமீபத்திலுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கோடினர். *
37. மு.கு.நூல்-1933 38. Queyros Fide, (p.s-ursiv- 1930 39. இராசநாயகம், செ, மு.குநூல் -1933 40. மு.குநூல்-1933 41. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, மு.கு:நூல்-1933
126

ஈழத்தவர் வரலாறு
8.8 கந்தமடாலயம்
கி.பி.1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயர் வசமாகியது. போர்த்துக்கேய தனியரசாட்சியில் கந்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையே மக்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டுமென போர்த்துக்கேய
ஆட்சியாளர் வற்புறுத்தினர்.
சைவமத வணக்கம் செய்யப்படாதென்றும் பூசை முதலியன அனுட்டிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்களென்றும் கட்டளை பிறப்பித்ததுமன்றி ஒற்றர்கள் வைத்தும் ஆராயப்பட்டது. ஆனால் அந்தரங்கமாகத் தங்கள் தெய்வங்களை வழிபடுவதையும், சைவ ஆசாரங்களையுஞ் சனங்கள் கைவிட்டாரல்லர். தங்கள் தங்கள் வீட்டுச் சார்களிலும், வளவுகளிலும், மரத்தடியிலும், ஒவ்வோர் அடையாளங்களை வைத்து வழிபட்டு வந்தனர். விரதகாலத்தில் சாப்பிட்ட இலைகளைக் கூரைகளிலும் வேலிகளிலும் மறைவாக ஒளித்துச் செருகி வந்தனர். ஒவ்வொருவருஞ் சிலுவையடையாளமணிய வேண்டுமென்றுங் கட்டளை பிறந்தது. உலோகங்களால் செய்யப்பட்ட சிலுவைகளை அணிவதற்குச் சனங்கள் நாணித் தங்கள் தலைப்பாகைகளைச் சிலுவை ரூபமாகக் கட்டி வந்தனர். போர்த்துக்கேயப் பறங்கியர் சைவாலயங்களைப் பாழாக்கிய பின் பெரும்பாலும், அக்கோயில்களிருந்த விடங்களிலேயே, தங்கள் கோயில்களை கட்டினர். நல்லூரில் யமுனாரிக்கருகே விளங்குங் கிறிஸ்தவ கோயிலிருக்குமிடம் ஒலிவேறாவால் இடிக்கப்பட்ட புராதன கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டிருந்தவிடமே. *
எனவே, போர்த்துக்கேயர் காலத்தில், நல்லூரில் இடிக்கப்பட்டழிந்த கந்தசுவாமி கோயில் விளங்கியவிடத்தில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றமைக்கப்பட்டது. முதலில் இந்தக் தேவாலயம் களிமண்ணாலும்
பனையோலையாலுமமைக்கப்பட்டது."
42. இராசநாயகம், செ, மு.கு.நூல்-1933
43. Baldeaus, Phillip, A True and Escact Description of its
Great Island of Ceylon
44 இராசநாயகம் செ. மு.கு.நூல்-1933
127

Page 72
ஈழத்தவர் வரலாறு
கி.பி.1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகியது. அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்திலிருந்து, தமது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் தீவிரமாகவிருந்தனர். மக்களைக் கத்தோலிக்க சமயத்தினின்றும் திருப்ப முயன்றனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்தும் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்கள் ஆக்கினர்.
'ஒல்லாந்தர் தங்கள் அரசாட்சியின் பிற்கூற்றில் சமய விஷயமாக
அதனால் சைவசமயிகள் தமது ஆசாரங்களையும், வழிபாடுகளையும் பயமின்றிக்
கொண்ட வன்கண்மையைக் குறைத்துக் கொண்டனர்*
கைக்கொண்டொழுகத் தொடங்கினர். ‘நல்லூரில் வாழ்ந்த சைவசமயிகள் பலர் கந்தசுவாமி கோயில் இருந்தவிடத்திற்கு வந்து வழிபாடியற்றினர்.* போர்த்துக்கேயப் பறங்கியர்களால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததியோராகிய பிராமணர் சிலர், இக்கோயிலின் வழிபாட்டை மீளவும் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்கள் என அறியப்படுகிறது. கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமணோத்தமர் ஒருவர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்தவிடத்திற்கு அண்மையில், மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டைசெய்து வழிபாடியற்றக் காரணமாக இருந்தார் என அறியப்படுகின்றது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பறங்கியர்களினால் இடிக்கப்ப பெற்றுச் சிலகாலஞ் சென்றபின், கிருஷ்ணையர் சுப்பையர் என்னும் பிராமணோத்தமரின் முயற்சியினால், அக்காலவரசினரிடம் உத்தரவு பெற்றுக் கோயில் கட்டி மடாலயமாகப் பிரதிட்டை செய்தனர்' என யாழ்ப்பாண வைபவம் என்னும் நூல் கூறுகின்றது. இந்த உண்மையை ஆங்கிலேயராட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பிரதம நீதியரசராவிருந்த, சேர்.அலேக்சாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவரின் நினைவுக் குறிப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். *
எனவே, 1734 ஆம் ஆண்டளவில், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், முன்னர் இருந்த இடமாகிய யமுனாரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம்
45. Johnstone Alexander, p.g.a. Geof 1916:17 46. மே.கு. கட்டுரை, 1916:17
128

ஈழத்தவர் வரலாறு
அமைக்கப்பட்டிருந்தபடியால், அதேவளவில் பிறிதோரிடத்தில் ஒரு சிறு மடாலயம் அமைக்கப்பெற்றது. இம் மடாலயம் பழைய கந்தசுவாமி கோயில் இருந்த அதே இடத்திற்றானே அமைக்கப்பெற்றது எனச் சிலர் கருதுகின்றனர். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இந்த மடத்திற்றானே ஒரு வேலையும் வைத்து வழிபட்டனர் போலும். இது மடாலயமாக இருந்தமையால், கோபுரம், தூபி முதலியனவின்றியேயிருந்தது மேலும். உயர்ந்த கோபுரமுடைய கோயிலாகக் காணப்படின், ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்டமாக்கிவிடக் கூடும் எனப் பயந்து பக்தர்கள் பெரிய கோயில் கட்டியெழுப்பாமல், அமைதியாக வழிபாடு நடத்தி வந்திருத்தல் கூடும் என ஊகிக்க இடமுண்டு. *
/ 8.9 மட்ாலயம் அமைந்த இடம்
கி.பி.1734 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோயில், யமுனாரிக்கு அருகில் அம்ைக்கப்பட்ட மடாலயமா அல்லது இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலா என்பது முடிவுசெய்யப்பட வேண்டியதொன்றாகும். யாழ்ப்பாண அரசாங்க அதிபராக 1869 தொடக்கம் 1896 வரை கடமையாற்றிய சேர் துவைனம் அவுர்களின் குறிப்புகளிலிருந்தும் 1882 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள சைவ சமயக் கோயில் இடாப்பிலிருந்தும், ன்றைய கோயில் 1734 இல் இரகுநாத மாப்பாண முதலியாரால், கல்லினாலும் சங்கற்களினாலும் கட்டப்பெற்று ஒட்டினால் வேயப்பெற்றது' என்பதாகும். * இது ஏற்புடையதன்று. உண்மையில், யமுனாரிக்குப் பக்கத்தில் நிறுவப்பட்ட கந்த மடாலயமே 1734 இல் அமைக்கப்பட்டது எனக் கொள்ளவேண்டும்.
இக்கோயிலின் அதிகாரிகளுள் ஒருவராயிருந்த மாப்பாண முதலியார் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்துக்குச் சமர்பித்த பெட்டிசமொன்றில், இக்கோயில் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பெற்றதெனக் குறிப்பிட்டுள்ளார்." அதன்படி நோக்கில், இன்றைய கந்தசுவாமி கோயில் 1749 இல் கட்டப்பட்டது எனக் கொள்ளவேண்டும். அதாவது யமுனாரிக்கு அருகில்
47. குலசபாநாதன். மு.கு.நூல்,1971 48. மேகுநூல்-1971 49, மே.கு.நூல்-1971
129

Page 73
ஈழத்தவர் வரலாறு
கந்தமடாலயம் கட்டப்பட்டு 15 வருடங்களின் பின்பாகும். மேலும், முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில், இன்றைய கோயில் 1793 இல் அமைக்கப்பட்டதெனக் குறிப்பிடுகின்றார்."
\
\
எனவே 1749 ஆம் ஆண்டளவில் கிருஷ்ணையர் சுப்பையரும் வேறு சைவ சமயிகள் பலரும் கந்தசுவாமி கோயிலை மீண்டும் ஆலயமாக அமைக்கும் விருப்போடு, அரசாட்சியாருக்கு விண்ணப்பஞ் செய்தனர். ஒல்லாந்தர் காலத்தில், மலபார் சமயத்தை (சைவம்)க் கைக்கொண்டொழுகிய தனியார் சிலர், ஒருகாலத்தில் புகழ் பூத்திருந்து பின்னர் அழிவுற்ற கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசுக்கு விண்ணப்பித்தனர். அக்கோயிலைக் கட்டுவதற்கான ஒருவகை உறுதி வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு, கந்தசுவாமிகோயில் அர்ச்சகரின் சந்ததியோராகிய சில பிராமணர், அரசாட்சியாருக்கோர் விண்ணப்பஞ் செய்து, கோயில் அமைக்க உத்தரவு பெற்று, முன்னே கோயிலிருந்தவிடமாகிய யமுனாரிக்குப் பக்கத்தே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருந்தபடியால், பிராமணவளவு (குருக்கள்வளவு) என்னும் தங்கள் உரிமைக் காணியில் சி கோயிலோன்றமைத்துத் தாங்களே வணங்கி வந்தனர். இக்கோயிலிருக்குமி th அம்பலவாணர் கந்தப்பச்செட்டி பெயரில் தோம்பு பதியப்பட்டிருக்கிறது. எ முதலியார் செ.இராசநாயகம் கூறியுள்ளார்." இவ்வாறு குருக்கள்வளவில் இன்றைய கந்தசுவாமி கோயிலை நிறுவுவதற்கு, அக்காலத்தில் ஒல்லாந்தர் பணிமனை (கச்சேரி) யில் சிறாப்பராகக் கடமையாற்றிய தொன்யுவான் மாப்பாண முதலியார் உதவி புரிந்துள்ளார்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் சிறாப்பராகக் கடமைபார்த்து வந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமாகத் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார், என குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.* கிறிஸ்தவராகவிருந்த தொன்யுவான் மாப்பாணமுதலியாருக்கு, ஒரு சைவக்கோயிலைக் கட்டுவதற்கு ஆட்சியாளர் அனுமதி வழங்கியிருப்பார்கள் என்பது ஏற்றதாகாது. *
50. இராசநாயகம், செ, மு.கு.நூல் 1933 51. மே.கு. நூல்-1933 52. குலசபாநாதன், மு.கு.நூல், 1971
130

ஈழத்தவர் வரலாறு
8.9 நான்காவது ஆலயம்
பறங்கிகளாலிடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகரின் சந்ததியோராகிய கிருஷ்ணையர் சுப்பையர், மீண்டும் அக்கோயிலை அமைக்க விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பத்திற்கு உத்தரவு பெற்றுக் கொடுத்தவர் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆவர். சிங்கை ஆரியச் சக்கிரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகவாகு, முதன் முதல் கந்தசுவாமி கோயில் அமைத்த அதேயிடத்தில், புதிய ஆலயத்தை அமைப்பதற்கு ஒல்லாந்த ஆட்சியாளர் அனுமதி வழங்கினர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினிறும் அகற்றும் நோக்கம்.
இரண்டு, தமது வர்த்தகத்திற்குப் போட்டியாளராக அமைந்த முஸ்லீம்களை குருக்கள் வளவிலிருந்து அகற்றும் நோக்கம். *
எனவே, ஆட்சியாளர்கள், குருக்கள் வளவை, கந்தசுவாமி கோயிலமைக்கத் தோம்பு எழுதிக் கொடுத்தனர். ‘அம்பலவாணர் கந்தப்பசெட்டி
* அம்பலவாணர்
எனக் கந்தவேளின் பெயரிலேயே தோம்பு பதியப்பட்டது. சுப்பிரமணியம் என நல்லூர்க் கந்தசுவாமி பேரில் பதியப்பட்டதாக குலசபாநாதன்
கூறுவார்ஃ
கிருஷ்ணையர் சுப்பையர் ஆலயத்தை அமைப்பதற்காக ஊர் ஊராக நிதி சேகரித்தார். அவருக்குப் பலவகைகளிலும் உதவியாக இருந்தவர் தொன்யுவான் மாப்பாண முதலியார் ஆவர். எனினும், அவர் நேரடியாக ஆலயத் திருப்பணியில் ஈடுபடமுடியாதிருந்தமையால், மைந்தன் இரகுநாத மாப்பாண முதலியாரை, ஆலயத் திருப்பணியில் முழுமூச்சாக ஈடுபட வைத்தார் எனக் கொள்ளலாம். *
53. குணராசா. க, மு.கு. நூல் 1987 54. மே.கு.நூல் 1987
55. இராசநாயகம்.செ. மு.கு.நூல் - 1933 56. குலசபாநாதன், மு.கு.நூல்-1971 57. குணராசா. க, மு.கு.நூல்-1987
131

Page 74
ஈழத்தவர் வரலாறு
தொன்யுவான் மாப்பாண முதலியாருக்கு இரகுநாத மாப்பாண முதலியார் எனவும் பெயர்’ என குலசபாநாதன் குறிப்பிடுவது ஏற்றதாக வில்லை. தந்தைக்கும் மகனுக்கும் ஒரேபெயர் இருக்க வாய்ப்பில்லை. அவர் முதல் கிறிஸ்தவராதலால் அவ்வழக்கப்படி மாப்பணர் என்ற நாமம் அவரது குடும்பப் பெயராகி பிள்ளைகளின் பெயரோடு சேர்ந்து வழங்கப்பட்டது. மாப்பாண முதலியாரின் மகன் இரகுநாத மாப்பாண முதலியார் என மாப்பாண வம்ச பரம்பரை தெளிவாகக் சுட்டும்போது, மாப்பாண முதலியாரை இரகுநாதன் மாப்பாணர் எனவும் அழைப்பர் என்பது பொருத்தமற்றதாகும். கோயிற்றாபகர் அவரென வலியுறுத்தும் பொருட்டு, இது வலிந்துகொள்ளப்பட்ட கூற்றாகும்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை, அமைத்ததில் இரகுநாத மாப்பான முதலியாருக்குரிய இடத்தை எவரும் மறுப்பதற்கு இல்லை. அதேபோன்று கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமணருக்குரிய இடத்தையும் எவரும் மறுக்கவியலாது. ஆக இவ்விருவரும், கந்தவேள் சந்நிதியை மீண்டும் அமைப்பதில் ஈடுபட்டனர்.
கோயிலை மீளவும் அமைப்பதற்குரிய காணியில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தனர். சோனகர் அதிலே குடியிருந்தாற் கந்தசுவாமி கோயில் கட்டவருங்காலத்தில் தடையாயிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்தும் கூடாமற் போயிற்று. ‘அந்த நிலங்களுக்கு அதிகவிலை தருவோம். எங்களுக்கு விற்றுவிடுங்கள்’ என்றுங் கேட்டுப் பார்த்தனர். சோனகர் அதற்குஞ் சம்மதிக்கவில்லை. யாதொரு இணக்கத்திற்குஞ் சோனகர் சம்மதியாது போனதினால், அந்தத் தமிழர் பன்னிறியிறைச்சியைக் கொண்டுபோய், தண்ணிர் குடிக்கும் கிணறுகளில் போடுவித்தார்கள். பன்றியிறைச்சியைக் கண்டவுடன் சோனகர் அழுது புலம்பிப் பசிபட்டினி கிடந்து ஆற்றாமல் ஈற்றில் தமிழருடனே தங்கள் பெருநாட்களில் வந்து சமய வழிபாடு செய்யத் தடைபண்ணாதிருப்பதற்கு ஒரு உடன்படிக்கை யெழுதுவித்துக் கொண்டு, கிடைத்த விலையையும் வாங்கிக் கொண்டுபேர்ய் நாவாந்துறைக்குக் கிழக்குப் பக்கமாகத் குடியேறினார்கள்' என மயில்வான கப்புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது.* முஸ்லீம்கள் ‘நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிருக்குமிடத்துக்கு மேல்பாகத்திலே
58. யாழ்ப்பாண வைபவமாலை, மு.கு.நூல்-1949
132

ஈழத்தவர் வரலாறு
குடிகொண்டார்கள். அங்கே ஒரு பள்ளிவாயிலுங் கட்டினார்கள். அப்பொழுது முன் இடிபட்ட கந்தசுவாமி கோயிலை மீளவுஞ் கட்டுவதற்குத் தமிழர் முயன்று சோனகரை அவ்விடத்தினின்றும் நீக்கித் தருமாறு ஒல்லாந்த தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். ஒல்லாந்த தேசாதிபதி அதற்க நுகூலஞ் செய்வதாகக் கூறியும் செய்யாது காலம் போக்கினான். அதுகண்டு தமிழர் சோனகரை அவ்விடத்தை விடும்படி கேட்டும் இரந்தும் பார்த்தார்கள். முடிவில் அந்நிலத்துக்குப் பெருவிலை தருவதாயுங் கேட்டார்கள். அது கண்டுசோனகர் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாற்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக் கொண்டு அங்கே குடியேறினார்கள்.’ என ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தனது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறிசெல்வர்."
ஆகவே, குருக்கள் வளவிலிருந்து வாழ்ந்த முஸ்லிம்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரே, அவ்விடத்தில் கந்தசுவாமி கோயிலை நிறுவ முடிந்தள்ளது.
வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து நோக்கும்போது, பொது மக்களிடமிருந்து ஆலயத் திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு, கிருஷ்ணையர் சுப்பையர் நான்காவது தடவையாகக் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயில், அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது.
பின்பு அக்கோயிலைப் பெருப்பித்துக் கட்டும்பொழுது, அங்கிருந்து இறந்து அடக்கம் பண்ணப்பட்ட ஒரு முஸ்லிம் பெரியாருடைய சமாதி அக்கோயிலின் உள்வீதிக்குள் அகப்பட்டபடியால், அதையிட்டு முஸ்லீம்கள் கலகம் செய்தனர். பின்பு கோயில் மேற்கு வீதியில், வாயில் வைத்துக் கொடுத்துச் சமாதியையணுகி அவர்கள் வணங்கிவர இடங்கொடுத்ததால் கலகம் ஒருவாறு தணிந்தது. அதற்குச் சாட்சியாக அவ்வாயிற் கதவு இன்றுமிருப்பதும், அதனருகே வெளிப்புறம் பந்தரிட்டுச் சிலகாலத்தின் முன்வரை தொழுகை நடத்தி வந்ததும் இதனை வற்புறுத்தும். *
59. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, மு.கு. நூல்-1933 60. இராசநாயகம், செ, மு.கு.நூல் -1933

Page 75
ஈழத்தவர் வரலாறு எனவே, பொதுமக்களிடமிருந்து ஆலயத் திருப்பணிக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியினைக் கொண்டு, (கிருஷ்ணையர்) சுப்பையர் என்ற பிராமணரால் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் பிரதம குருவாக சுப்பையர் தெரிவானார். அவரின் கீழ் (இரகுநாத) மாப்பாண முதலியார் என்பவர், சுப்பையரோடு சேர்ந்து ஆலய பரிபாலனத்தை நடாத்த நியமனமானார். * கிருஷ்ணையர் சுப்பையரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்தார்."
இக்குறித்த பிராமணரும், (இரகுநாத) மாப்பாண முதலியாரும் ஆலய பரிபாலனத்தை மிகவும் சிறப்பாக, எவ்வித வழுவுமின்றி, மிகுந்த முன்னேச்சரிக்கையோடும், சமய ஆசாரத்தோடும் நடாத்தி வந்தார்கள். *
8.10 இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா!
தற்போதைய கந்தசுவாமி கோயிலின் தாபகர்களில் ஒருவரான கிருஷ்ணையர் சுப்பையர், ஆலயத்தின் பிரதம குருவாகத் தெரிவானதால் ஆலயக் கட்டியத்தில் அவர் இடம்பெற முடியாது போனது. அதனால், அந்தக் கெளரவம், இரகுநாத மாப்பான முதலியாருக்குக் கிடைத்தது.
திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின்பெயரை முன்னும், இக்கோயிற்றாபகராக இரகுநாத மாப்பாண முதலியார் பெயரைப் பின்னும் கட்டியத்தில் கூறி வருகின்றார்கள். அக்கட்டியம்
வருமாறு:
பூரீமான் மகாராஜாதிராஜ அகண்ட பூமண்டல
ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி
ழரீ கஜவல்லி மகாவல்லி
ஸமேத பூரீ சுப்ரிமண்ய
6l. Johnstone Alexander, மு.கு.கட்டுரை, 1916/7 63. குலசபாநாதன், மு.கு.நூல் -1971 63. Jonrstone Alexander, cup.g., Geof 1916.17
134

ஈழத்தவர் வரலாறு
பாதாரவிந்த ஜனா சிவகோத்திரோற்பவஹா
இராகுநாத மாப்பரிண முதலியார் சமூகா
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மகாமண்டபத்துக் கீழைச் சுவரிலே மேற்குமுகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாணர் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமைம வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்றும் பார்க்க
(փգպth."
கோயில் கட்டியத்தில் இரகுநாத மாப்பாணரின் பெயர் இடம் பெற்றதால், அக்கோயில் தாபகர்களில் ஒருவரான கிருஷ்ணையர் சுப்பையரின் பெயர் உரிய
கெளரவத்தைப் பெறாது போனது.
8.11. ஆங்கிலேயர் காலம்
கி.பி.1798 ஆம் ஆண்டு யாழ்ப்பாணவரசு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. குடிகளும் தத்தமது வருணாசாரத்தையும் சமயாசாரத்தையும் சுயேச்சையாகக் கைக்கொண்டொழுகுஞ் சுயாதீனம் ஆங்கிலவர சாற் கொடுக்கப்பட்டது. முன்னர்கோயில் போலாது, கொட்டில்போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. இடிந்த கோயில்களை மீளக் கட்டிக்கொள்ளும்படி ஆங்கிலவரசு வந்தவுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. *
அக்காலவேளை நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக இரசுநாதமாப்பாண முதலியாரின் மகன் ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார். ஆங்கிலரசினர் சைவாலயங்களுக்கு அர்ச்சகர்களை நியமனஞ் செய்தனர்.
84. குலசபாநாதன், மு.குநூல்-1971 85. முந்துந்தம்பிப்பிள்ளை. ஆ முகுநூல்-1933து
135

Page 76
ஈழத்தவர் வரலாறு
அவர்களுக்குரிய மரியாதைகளும் வரிசைகளும் ஆணைப்பத்திரமூலமாகத் தேசாதிபதி கைச்சாத்தோடு நியமன நிரூபம் பெற்றாருள்ளே முதல்வர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர் சிகிவாகன ஐயர் புத்திரராகிய வாலசுப்பிரமணிய ஐயர். இவருக்கு நியமனப்பத்திரம் 1807 ஆம் ஜனவரி மீ 5 ஆம் திகதி தேசாதிபதி தோமஸ் மெயிற்லண்ட் (கவனர்) அவர்களாற் கொடுக்கப்பட்டது. அப்பத்திரம் இன்றும் அவர் சந்ததியாரிடமுள்ளது. * கிறிஸ்து வருஷம் 1807 ஆம் வருஷம் தை மீ 5 ம் திகதி சகல குருத்துவ மரியாதைகளுடன் குரு பிரதானியாக இவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி, வேறு ஐந்து குருமார்களை இவருக்குத் துணையாகக் குருத்துவம் நடத்தும்படியும் கவனர் உத்தரவு செய்திருக்கின்றார்." அவர்களில் கணபதி ஐயரும், இராமசாமி ஐயரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். * பக்தகோடிகளால் நன்கு மதிக்கப்பெற்றுச் சிறப்பாக நித்திய நைமித்தியங்கள் நடைபெற்றன.
கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சினைகள் முதன்முதலாகத் தலைதூக்கின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்கு ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பிரதம நீதியரசர் ஸேர்.அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரணை செய்தார். அவர்
தனது தீர்ப்பைப் பின்வருமாறு வழங்கினார்:
“கந்தசுவாமி கோயிலின் சகல நடவடிக்கைகளையும் இன்றைய பிரதம குருவும், (ஆறுமுக) மாப்பாண முதலியாரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும். ஆலயப்பொருட்களுக்குச் சேதாரம் நேராவண்ணம் அவை ஓர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை இரு பூட்டுகளால் பூட்டப்படவேண்டும். அப்பூட்டுக்களின் சாவிகளிலொன்று பிரதம குருவிடம், மற்றையது குறித்த (ஆறுமுக) மாப்பாணரிடமும் இருத்தல் வேண்டும்.”*
36. இராசநாயகம், செ. மு.கு.நூல் -1933 67. Johnstone Alexander up.g. siligent 1916.17 38. இராசநாயகம், செ.மு.கு. நூல், 1933 69, Johstone Aleaxander p.g.a. Garnir, 1916 17
136

ஈழத்தவர் வரலாறு
இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைத் தரவில்லை. கோயில் தம் குடும்பச்சொத்து, அதனால் கோயில் நிர்வாகம் முழுவதும் தமக்குரியதென அவர் கருதியதால், 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு ஒரு பெட்டிசம் ஒன்றினைச் சமர்ப்பித்தார்."அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கலெக்டரால் ( அரசாங்க அதிபர்) விசாரணை செய்யப்பட்டது. அவர்முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள், கோயிலின் உரிமையில் மாப்பாண முதலியாருக்கே சாதகமாகவிருந்தன. ஆறுமுக மாப்பாண முதலியார் கொடுத்த பெட்டிசத்தை விசாரித்த கறிங்றன் என்னும் கலெக்டர், இம் மாப்பாண முதலியாரின் தகப்பனே இக்கோயிலைக் கட்டுவதற்கு முக்கிய காரணராயிருந்தமையால் இவரே கோயிலதிபதித்துவம் பெறுதற் குரியவரென்று அரசாட்சியாருக்கு அறிக்கைசெய்தார்." அதனால், ‘சுப்பையா, குருக்களிடம், நீதிபதி ஸேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்ரனால் வழங்கப்பட்ட, ஆலயப் பண்டசாலையின் ஒரு திறப்பு குருக்களிடமிருந்து மீளப் பெறப்பட்டு, ஆறுமுக மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது.”
கந்தசுவாமி கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்த ஆறுமுக மாப்பாணர் தமது முன்னோர் போல, கச்சேரி சிறாப்பராகவும் விளங்கினார். கி.பி.1811 இல் கச்சேரியில் காசு குறைந்ததென்னுங் காரணத்தால் மாப்பாணர் சிறாப்பு வேலையால் விலக்கப்பட்டார். விலகிய சில நாட்களுள் அவர் இறந்திருக்க வேண்டும். அவருக்குப்பின் அவர் மருமகளாகிய சின்னத்தம்பியென்பவர் கோயிலதிகாரத்தையேற்றனர். பின்பு சிறாப்பு மாப்பாணருடைய பேரனாகிய (இரகுநாத ) மாப்பாண முதலியார் அதிகாரியாயினர். "
1807 இல் தீவாந்தர தண்டனையடைந்த மலாக்காவுக்கு அனுப்பப்பட்டு, 1812 ல் மன்னிக்கப்பட்டு திரும்பி வந்த வில்லவராய முதலியாரும், பெரிய தாமோதரம்பிள்ளையும் பிராமணர் பக்கஞ் சார்ந்து (இரகுநாத) மாப்பாண முதலியாருக்கு மிகவும் இடர் விளைவித்தனர். அது பற்றி மாப்பாண முதலியார் 1819ம் ஆண்டு ஜூலை மாசத்தில், அவர்கள் தனக்குச் செய்யும்
70. இராசநாயகம், செ. முகுநூல் 1933 71. Johrstone Alexlander, (yp.g. GS sog. 191617 73. மு.கு.கட்டுரை 73. இராசநாயகம், செ. மு.கு.நூல். 1933
137

Page 77
ஈழததவர் வரலாறு
இடையூறுகளைப்பற்றி பிறெளன்றிக் தேசாதிபதி அவர்களுக்கு விண்ணப்பஞ்செய்தனர். அதனை அவ்வூர் சர்வாதிகாரி ( கலக்டர்) யே கவனித்து, அதற்கு வேண்டிய நீதிசெய்ய வேண்டுமென்று தேசாதிபதி கட்டளையிட்டனர். கலக்டர் செய்த நீதியின்னதென்று தெரியவில்லை. "
கி.பி.1851 இல் கோயில் அருச்சகர்களாயிருந்த பிராமணர், தேசாதிபதியின் கைச்சாத்துடன் தங்கள் முன்னோருக்கு அதிகாரச்சிட்டுக் கொடுத்திருந்ததென்றும், தங்களுக்கும் அவ்வித சீட்டுக்கிடைக்கவேண்டுமென்றும் தேசாதிபதிக்கு விண்ணப்பித்தனர். அதற்குக் கண்டி ஆதின புத்த கோயில்களிலுள்ள குருமாருக்கன்றிப் பிராமணருக்கு அவ்வித சீட்டுக் கொடுப்பதில்லையென்றும், அவர்களுள் "வியாச்சியமிருந்தால் டிஸ்திரிக் கோட்டில் வழக்குத் தொடுத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அரசாட்சியார் உத்தரவிட்டனர். அப்படியே வழக்கு வைக்கப்பட்டது. உடனே அக்காலத்திருந்த கோயிலதிகாரியாகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிராமணருக்கு அவ்வித அதிகார நியமனம் கொடுப்பதற்கு அரசினர்க்கு எதுவித சுதந்திரமுமில்லையென்றும், இருந்தால் அரசினரே அதனை வெளிப்படுத்த வேண்டுமென்றுந் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். டயிக் ஏசண்டர் அவ்விண்ணப்பத்தைப் பற்றி விசாரித்துச் செய்த அறிக்கையினால் அரசாட்சியார் அக்காரியத்திற் பிரவேசியாது நெகிழவிட்டனர்."
எனவே, யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலினால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயவுரிமையை இழந்தனர்.
மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோகவுரிமையைப் பெற்றனர்.
8.12 ஆதியில் வழங்கிய வழக்கம்
“ 55 திருவிழாக்கள் வருடந்தோறும் நடைபெறும். ஆறுகாலப் பூச்ை, மகோற்சவம், ஆடி-ஆவணியில் 25 நாட்களுக்கு நடைபெறும். சுவாமியை மக்கள் தோளிற் காவிக் கொண்டு நடந்தும், வாகனத்தில் வைத்தும் வீதிவலமாகச் சுற்றி வருவார்கள். கிழக்கு வீதியும் வடக்கு வீதியும் கோயிற்றெரு. மேற்கு வீதி
74 முகுநூல்-1933 75. மு.கு.நூல் -1933
138

ஈழத்தவர் வரலாறு
பருத்தித்துறை றோட்டிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் தெரு. தெற்கு வீதி பருத்தித்துறைத் தெரு. மகேற்சவ காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து 1000 தொடக்கம் 2000 யாத்திரிகர் சமூகமளிப்பர்’ என வடமாகாண ஏசெண்டராக இருந்த சேர் வில்லியம் குறொப்ரன் துவைனம் தனது குறிப்பில் எழுதியுள்ளதாக குல சபாநாதன் தனது நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
ஆதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழா, இன்றைய காலவேளைகளில் நிகழும் திருவிழாக்கள் போன்று நிகழவில்லை. அறையும் பறையொலியோடு குமிழ்ஞ்சூழ் வெளிச்சத்தில் திருவிழா நடந்து, பின்பு நானாவித வாத்தியவொலியோடு தீவர்த்தி வெளிச்சத்தில் திருவிழா நடந்தது." மேலும், தேர்த்திருவிழாவின்போது, ‘ சுவாமி எழுந்தளருப் பண்ணும் தேரின் உருளையிலே வைரவருக்கும் பிரியமென்று ஆடுபவியிட்டே தேரினை இழுத்தார்கள். சாயங்காலப் பூசைக்கும் இரண்டாங்காலப் பூசைக்கும் இடையேவசந்தமண்டபத்தின் எதிரே பொதுப் பெண்களின் நடன சங்கீத நிகழ்ச்சிகள் நடந்தன."
திருவிழாக் காலங்களில் தேவதாசிகள் நடனமாடுவது சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்துள்ளது. ‘அழகிய கோயிற் பெண்கள், ஏராளமான நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேரின் முன் நடனமாடினார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் அரை நிர்வாணமாக புழுதியிற் பிரதிஸ்டை செய்தார்கள். என மிறன் வின்ஸ்கோ தனது குறிப்பில் எழுதியுள்ளார்."
8.13 நல்லூரும் நாவலரும்
நல்லைநகர்க் கந்தவேளுக்கும், நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில்
நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமாரதந்திரத்திற்கும் இணங்க மாற்றியமைக்க
76. ஆறுமுகநாவலர், பூணூலயூரீ, நல்லூர்க் கந்தசுவாமி கோயில்,
சென்னை -1875 ad 77. மு.கு.நூல்-1875 78. Miron Wrinslow, A Memoir of Mrs.W. Winlow Combining Sketch of
Ceylon Misson, New York -1835
39

Page 78
ஈழத்தவர் வரலாறு
வேண்டுமென அவர் விரும்பினார். இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபியில்லாதது கோயிலாகாதே! இக்கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப்பட்டிருக்கவில்லை, என அவர் கூறினார். இது மடாலயம் ஆதலாலும், சமாதிக்கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கும் இணங்க அமைய வேண்டுமென்ற நியதில்லை என்பர்.
கி.பி. 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாயிருந்த காலத்தில், ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றிருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விரும்பினராய், அஃதோடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய், அவ்வருடம் தைமாசத்தில் அக்கோயில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து 6000 வரையில் பணமும் கையெப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன. "
இந்தியாவிலிருந்து முருகன், தெய்வயானை, வள்ளிநாயகி விக்கிரகங்கள் தருவிக்கப்பட்டன. இடையில் நிகழ்ந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக்கந்தசுவாமி கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டன." மேலும், தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வருகிற ஆட்டுக்கொலையை இனிமேல் அவ்வாறு செய்யதில்லையென்று நாவலருக்கு முன்செய்த, கொடுத்த பிரதிக்கினைக்கு மாறாகப் பின்னும் அக்கொலை நடந்தபடியால், நாவலர் அவர்கள் கோபித்து, 1876 ஆம் ஆண்டு மார்கழி மாசம் வண்ணார்பண்ணைச் சிவன்கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்கத் தொடரவும், பின் அக்கோயிலை ஒழுங்காய் நடத்துவதற்குமாக, ஒரு சபை அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட சபையால் கோயிலதிகாரிமேல் வழக்குத் தொடர்ந்தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவலரவர்கள் தேகவியோகமாயினர். 1929 ம் ஆண்டு ஜூன் மீ 10 ம் இக்கோயில் பொதுவென்றம், கோயிலதிகாரி கோட்டுக்குக் கணக்குக் காட்டவேமென்றுந் தீர்ந்த டிஸ்திரிக் கோட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும்."
79. இராசநாயகம், செ, மு.கு.நூல்- 1933 80. சிவராமலிங்கம்.க, நாவலரும் நல்லூரும், நல்லைக்குமரன் மலர், 81. இராசநாயகம், செ, மு.கு.நூல் -1933
140

ஈழத்தவர் வரலாறு
இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில், இங்கிருக்கிற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை, வேலாயுதம், கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை' என நாவலர் கூறினார். தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்ததும், தேவதாசிகள் நடனமாடுவதும், தேர்த்திருவிழாவின்போது தேர்க்காலில் ஆடு வெட்டிப் பலிகொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணானவை, என அவர் கருதினார். அதனால் அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பாணருடன் பெரும் சச்சரவுப்பட்டுக் பிரிந்தார். ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்.
நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் ‘நல்லூர்க் கந்தசுவாமி கோயில்’ என்ற கட்டுரையிலிருந்து அறியமுடிகின்றது.
‘எப்படியாயினும் ஆகட்டும் இங்கே அருள் விளக்கம் இருக்கிறது. என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.
கி.பி. 1248 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ் மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பலநூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாண்டுகள் நீyண்ட பாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.
14

Page 79
1
1
O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
ஈழத்தவர் வரலாறு
உசாவிய நூல்கள்
தமிழ் நூல்கள்
கைல7யம7லை - சா.வே.ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை -1939.
வைz/7/7டல் - கலாநிதி.க.செ.நடராசா பதிப்பு, கொழும்பு-1980. யாழ்ப்பாண வைபவமாலை- குல.சபாநாதன் பதிப்பு, சுன்னாகம் -1949.
செகராசசேகரம் - ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி-1932. செகராசசேகரமாலை-இ.சி.இரகுநாதையர் பதிப்பு, கொக்குவில் -1942.
வை/7- ஞா.ஞானப்பிரகாசர் பதிப்பு - அச்சுவேலி-1921
ம/ழ்ப்ப7ணச்சர2த்திரம் - எஸ்.ஜோன், யாழ்ப்பாணம் -1882. யாழ்ப்பாண வைபவ கெளமுதி. க. வேலுப்பிள்ளை, வசாவிளான்-1918, யாழ்ப்பாண வைபவம்-சிபாலசுப்பிரமணிய சர்மா பதிப்பு, சங்கானை-1927
z/ழ்ட்//7ன வைபவ விமர்சனம் - சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி-1928,
யாழ்ப்பாணச் சரித்திரம் - டானியல் ஜோன் (முதல்பாகம்) யாழ் -1930. யாழ்ப்பாணக் குடியேற்றம் - சிவானந்தன், யாழ்ப்பாணம் -1932. யாழ்ப்பாணச்சரத்திரம்-ஆ முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணம்-1933. யாழ்ப்பாணச்சரத்திரம்-முதலியார் செ.இராசநாயகம், யாழ்ப்பாணம்- 1933 யாழ்ப்பாணச் சரத்திரம் - ஆங்கிலேயர் காலம்.செ.இராசநாயகம், யாழ்ப்பாணம் - 1935.
தமிழர%ன் பூர்வ சர2த்திரமும் சமயமும் - சுவாமி ஞானப்பிரகாசர், அச்சுவேலி-1932. இலங்கைவாழ் தமிழர் வரலாறு- பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை
பேராதனை- 1956. மாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - கா. இந்திரபாலா,
யாழ். தொல்பொருளியற்கழகம், கண்டி 1972
42

19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30,
31,
32.
ஈழத்தவர் வரலாறு
நல்லூர்க்கத்தசுவாமி கே7மயில்-1, 11- பூநீலழரீ ஆறுமுகநாவலர்- 1875, நாவலர் பிரபந்தத் திரட்டு (இரண்டாம் பாகம்)
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை-1955.
நல்லு7ர்க் கந்தசவாமி- குல. சபாநாதன், நல்லூர் தேவஸ்தாபன
வெளியீடு- 1971.
யாழ்ப்பானத்தமிழரசர்வரலாறும் காலமும்-பொ. செகந்நாதன் யாழ். இலக்கியவட்ட வெளியீடு -1987
நல்லைநகர்நூல் க. குணராசா, பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, யாழ்ப்பாணம் -1987.
யாழ்ப்பான இராச்சியம், பதிப்பாசிரியர் கலாநிதி சி.க. சிற்றம்பலம், யாழ் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி -1992.
வடவிலங்கைமரில் சிங்கைநகர்ப புஸ்பரத்தினம், அருட்திரு.ஜி.ஏ.பிரான்சிஸ் யோசெப் அடிகளார் மணிவிழாச்சபை வெளியீடு, யாழ்ப்பாணம் - 1993 4/த்தனம் வரல7றும் மர4/களும், ஏ.என். எம்.ஷாஜஹான், ஆசியா (Asseay) கொழும்பு -1992
கோணேஸ்வரம் செ.குணசிங்கம், பேராதனை - 1973,
இலங்கையிற் தொல்வியல7ய்வுகளும் திராவிடக் கலாசாரமும், ஜி.தனபாக்கியம் - மட்டக்களப்பு -1988. தமிழர%ன் பூர்வீக சரத்திரமும் சமயமும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம் -1932. மட்டக்கணப்புத்தமிழகம் வீ.சி.கந்தையா, யாழ்ப்பாணம்- 1964, தமிழர் வரலாறும்இலங்கை இடப்பெயர் ஆய்வும், கதிர்தணிகாசலம், சரவணா பதிப்பகம் சென்னை 1992
இலங்கை வாழ் தமிழர் வரலாறு, பேராசிரியர்.க.கணபதிப்பிள்ளை
பேராதனை -1956, *ጰ
ஐரோப்பியர் பார்வைவில் இலங்கை, நா. மயில்வாகனம்,
யாழ்ப்பாணம்-1974,
143

Page 80
33.
34.
35.
36.
37.
38.
39.
ஈழத்தவர் வரலாறு
மட்டக்களப்பு/ மான்மியம், பதிப்பு எஃப்.எக்ஸ்.சி. நடராசா,
கொழும்பு -1962
வன்ன7ம/ர், சி.பத்மநாதன், பேராதனை -1970. செகராசசேகரமாலை, இ.சி.இரகுநாதையர் பதிப்பு, யாழ்ப்பாணம் -1942. செகர7சசேகரம் ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி -1932.
வைz/7, சுவ/7மிஞ7ன7//7கரசர் பதிப்பு, அச்சுவேலி -1921 ஈழத்தமிழர் இறைமை மு.திருச்செல்வம், காந்தளகம்,
யாழ்ப்பாணம், மூன்றாம் பதிப்பு 4 1983. //ச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகர7 ஆகிய ட27வுகளின் நீர் நிலப் பயன்பாடு, க.குணராசா, முதுகலைமாணி ஆய்வுக்கட்டுரை
(அச்சில் வெளிவராதது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-1984
ஆங்கில நூல்கள்
Mahavamsa, (ed)WGeiger, Colombo-1950 Culavamsa, (ed.) W. Geiger, London- 1925 A True and Exact Description of The Great Island of Ceylon - Phillip Baldeaus. The Temporal and Spiritual Conquest of Ceylon -Fde.Queyroz, Translated by: Fr. S.G.Perera, Colombo -1930 Tamils and Ceylon -C.S. Navaratnam, Jaffna, 1958 The Northern Kingdom- S. Natesan. History of Ceylon, Vol: I, Part: II Colombo -1960 The Kingdom of Jaffna - S. Pathmanathan, Colombo -1978 Political History of the Kingdom of Kotte - G.P.V. Somaratne, Colombo
144

10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
ஈழத்தவர் வரலாறு
A History of Ceylon, S.G.Perera, London - 1948. Dutugemunu, John M. Senaveratna, Colombo -1946. Ceylon and the Hollanders, P.E. Pieris, Colombo - 1948. History of Ceylon, (ed) Paranavithana,Part I & II,Colombo -1960. Ancient Jaffna - C. Rasanayagam, Madras -1926. Early History of Ceylon - G.C. Mendis, Colombo -1954. Vanni and Vanniyas, C.S. Navaratnam, Jaffna -1960. A History of Sri Lanka - K.M.De.Silva, Colombo -1981. Manuel of Wanni, J.P.Lewis, Colombo -1985. Ancient Irrigation Works in Ceylon - R.L.Brohier
(Part I & II) Colombo -1935. A Critical Survey of Land Settlements and Land Development in the Northern Province of Sri Lanka, Dr. K. Kunarasa, Ph.d.Thesis (Unpublished), University of Jaffna, 1991. The Dutch Forts of Sri Lanka – W.A. Nelson, Colombo - 1984 Ancient Ceylon, H.Parker, London - 1909. IIIustration and Views of Dutch Forts in Ceylon, 1602-1796, R.K.de. Silva and W.G.M.Beumer, London - 1988. Tamil Culture in Ceylon, M.D.Raghvan, Colombo. Early Settlement in Jaffna - An Archaeological Survey, P.Ragupathy, Madras - 1987. Dutch Power in Ceylon (1665 1687) S. Arasaratnam, Amsterdam, 1958. Early History of Ceylon, G.C. Mendis, Colombo -1954. A. Concise History of Ceylon. C.W.Nicholas and S.Paranavithana, Ceylon University Press -1961. Discovering Ceylon, B.L.Brohier, Colombo -1973.
14S

Page 81
10.
11,
12
13.
ஈழத்தவர் வரலாறு
தமிழ்க் கட்டுரைகள்
யாழ்ப்ப7ணச் சாசனங்கள் - கா. இந்திரபாலா, இளங்கதிர், பேராதனை -1959. z/7ழ்ப்ட்/7ண இராச்சியம் தோன்றிய காலமும், சூழ்நிலையும்கா.இந்திரபாலா, இளங்கதிர், பேராதனை -1970. ஈழத்து வரல7ற்று நூல்கள்- ச. பத்மநாதன், இளங்கதிர், பேராதனை -1970. நல்லுரரும் தெ7ல்பெ7ருளும் வி.சிவசாமி, ஒளி சஞ்சிகை, யாழ்ப்பாணம்-1974. ம/ழ்ட//7ணஇர7ச்சியத்தின் கதை- க.குணராசா, வித்தியா சஞ்சிகை, உரும்பிராய் இந்துக்கல்லூரி பவளவிழா மலர், 1986. இலங்கையில் தமிழ் மன்னர்க7ைன் ஆட்சி- ப. புஸ்பரத்தினம், பொருளிதழ்-3, திரு.நா.கிருஸ்ணானந்தன் நினைவுமலர். தமிழ்ச் சாசனங்களும் ஈழவரலாற்று ஆர7ய்ச்சியும் கலாநிதி சபத்மநாதன், இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், பல்கலைக்கழகம் -1972 குடியேற்றங்கள7ல் இழந்துபோன தமிழ்ப் டபிரதேசங்கள் - க.குணராசா, முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம் -1991 தமிழ் மக்களின் பாரம்பரியப்பிரதேசம்-கலாநிதி.சி.க.சிற்றம்பலம் முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம்-1991 யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர்- ப.புஸ்பரட்ணம், முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம்-1991 இலங்கையில் இந்துமதம்- ஆரியச் சக்கிரவர்த்திகள் காலம்கலாநிதி.சி.பத்மநாதன், சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தெல்லிப்பழை -1985. கிளிநொச்சியின் கதை கலாநிதி. க.குணராசா, கந்தன் கருணை, கந்தசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகமலர், கிளிநொச்சி -1988. ஈழமும் இந்து மதமும் ( 1250-1505) சி.க.சிற்றம்பலம். சிந்தனை, யாழ்
பல்கலைக்கழகக் கலைப்பீடம் -1984,
146

14.
15.
伯。
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
ஈழத்தவர் வரலாறு
சாசனத்துத்தமிழ் இலக்கியம் கலாநிதி.ஆ.வேலுப்பிள்ளை, இளங்கதிர், பேராதனை -1959. சங்ககால ஈழம் தமிழர் ட77ந்தியங்களில் ஒன்ற7? ப.புஸ்பரட்ணம், வெளிச்சம், யாழ்ப்பாணம், புரட்டாதி-ஐப்பசி 1991 ட77மி எழுத்துக்கள் ஒரு வரலாற்றுநே7க்கு - ஆ.தேவராசன் தேசிய தமிழ்ச் சாகித்திய விழா மலர் -1991 கிறிஸ்தவ சக/7/ப்தத்திற்கு முந்திய வன்னிநாடும் தெ7ல்வியற்ச7ன்றுகளும்-கலாநிதி.சி.க.சிற்றம்பலம், பண்டார வன்னியன்
விழாமலர், வவுனியா-1982 A. அடங்காப்பற்று வன்னிமைகள், கலாநிதி, சி.பத்மநாதன், பண்டாரவன்னியன் விழாமலர், வவுனியா- 1982. புகழ்பூத்த வன்னிமண்ணின் காவலர்கள். முல்லைமணி. வே.சுப்பிரமணியம், பண்டாரவன்னியன் விழாமலர்-1982 நல்லு77டப் பெர7/ கே7மரில் கலாநிதி, கந்தையா குணராசா, நல்லைக்குமரன் மலர், மாநகராட்சி, யாழ்ப்பாணம் -1993. வன்னியும் வன்னியரும் சி.எஸ்.நவரத்தினம், திருக்கேதீஸ்வரம் திருக்குடத்திருமஞ்சன மலர், மன்னார் -1976. ம/ழ்டர்/7ணத்தில் பெர7/கே7மில்-கலாநிதி.க.குணராசா. வீரகேசரி வாரமலர், கொழும்பு - 15.8. 1993. நல்லு77க் கத்தசுவாமி கே7மரில் வரலாற்றில் திருத்தம் கலாநிதி.க.குணராசா, வீரகேசரி வாரமலர், கொழும்பு -1993 ம/7ழ்ட//னத்துக்கல்வெட்டுக்கள், பேராசிரியர் கா.இந்திரபாலா, சிந்தனை, பேராதனை -1969 கந்த7ே7டை2ற் கிடைத்த ஒரு / 277மிச்ச7சனம் பேராசிரியர் கா.இந்திரபாலா, யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகச் சஞ்சிகை, 1993 குஞ்ச4//ரத்தன் முதுமக்கள் த7ழி. க.குணராசா, ஈழநாடு வாரமலர், யாழ்ப்பாணம்-9.6.1985 ம/ழ்ப்ப7ணநகரம் க.குணராசா, எழில்மிகு யாழ்ப்பாணம்,
மாநகரசபை நூற்றாண்டு விழாமலர், யாழ்ப்பாணம் -1974
147

Page 82
ஈழத்தவர் வரலாறு
ஆங்கிலக் கட்டுரைகள்
The Ariya Kingdom in North CeylonS.Paranavithane, JRASCB, Vol: VIII, Part-II
On the History of Jaffna from the Earliest Period to the Dutch Conquest- d Simon Asie Chetty, JRASCB Vol: I Ceylon Gazetter, Colombo
1834 w w
The Temple of Candaswamy, Jaffna Sir Alexander Johnstone's Manuscripts, CALR Vol: II, Part : III 1916/1917
A Memoir of Mrs. H. W. Winslow, Combining A Sketch of Ceylon Mission - Miron Winslow, New York-1835
Memorie of Laurens Pye, Sophia Pieters, Colombo - 1910
Memorie of Ry clof Van Goens, Sophia Pieters, Colombo - 1910
Vallipuram Gold Plate Inscription of the reign of Vasabha. S.Paranavithana, Epigraphia Zeylanica, Vol: IV, No. 29, 1934-1942
The Brahmi Inscriptions of Ceylon -S.Paranavithana, Colombo-1970
Nagadipa and Buddhist Remains in Jaffna, Paul Peries, JRAS (CB), Vol : XVII, No. 70 and XXVIII No: 72


Page 83

1. நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் இன்றைய தோற்றம்
یا ဦးနှီး
2 நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் கிழக்கு விதியில் தேர் உலா
15| -

Page 84
运亏与总h?点与点Pru响咀唇g追加
r-1 is.
Ķ
|×
 

No|×喇 -- :)|-
篇):&!|-海saes.: ()
(§§ (
&シ|× 密密,冠
|-
ரைச்சந்
ங்கள் -
『T|- ~~|- T ( )
(முத்தி
ITEMITI I ILI
சிலா விக்கிரக
தவ தேவ
(~
រ៉ា
o ,
o===
கிறி
அமைக்கப்பட்ட
பழைய ந6
5.

Page 85
8. நல்லூரிலுள்ள மந்திரிமனை- இன்னொரு தோற்றம்
| 4
 

- திருமலை
配
f
呜L
.
தேர்ப்பாறைக
ரை
föETT
கல்வி
1.
இராவ
- - - - - ....!!!
10
. . . . . .
sae i ae
g|TODITJETE LITTLs,
|fil|IITT LITT FīLJETIT
芭

Page 86
-----《----|×s.|-|-
---- ~sae● ):
syTit
品
TillIItleFT
T3 Fu FM= E
14. சேது
 
 
 
 

சிவசக்தி
ü一
| եմ:

Page 87
  

Page 88
sifi୩ #,
ப்பான ஒல்லாந்தர்
ITHIT LIIIT
չե հն
| fn )
footy,
III
24
========
=======
。凸
 
 

叫|× )
)
:|-|-
: |-|×
ញ|TFLITLD
|- . . .
-
வெலிசாயா - து
ருவான்
விகாரை - நிற்கும் நிலையி
No.龚No.|-| - ( ) &No. | (
|-|- |×
28,
翌日
FfilTLILII
LITITT
துபாசாதி விகான
:
s.( ) |×:
密

Page 89
- - 29. வட்டதாகே - பொலநறுவை
蠶
мээ. - பொலநறுவை தி క్ష్
E. ప్స్ట EEEEEEEEEEEE
31. அரச ஸ்ஞானத்தடாகம் - பொலநறுவை
| fi?
 
 
 
 
 
 

:
E.
33. கீரிமலை - புனித தீர்த்தம்

Page 90
34. வட்டதாகே புத்தர் சிலை
==_E *二曇
霆
='+ 戮
5:3522܊
1卤斗
 
 
 
 
 

@um) quae saeuon go
( )
현역트田議) 역T트日中國道臣 관드T그의르평g드n'8€.
( ) .sae ----},--
5

Page 91
편도gun얼를는n- 연료道都明Lign T물원
s, |-|×·
%
|-|-
|×%|- |-
는學는됐활동g TL守
são
闇心
|(
관ug日南道民日出는 데 드크들목
0寸
| tith
 

ம்
4니. E= 만읽 山s= 前일 巧氏 唱田信田 明읽 出田 ==- E 통네 氏u|통 仰s= 읽凤 cm剧 血홍 证则 Ē历L |-州 !『디비 *七 『55 『

Page 92

《哥Họ岛号事哥 シa)
*u劑uan=
七世houg Từ#iffo****a*軍

Page 93
FFE# 「シ
L)H-t is『
唱片)|----- 汀习)科)_-)
dolaeză, s-și so:
| ()
l L ぐ2っ
 
 
 
 

]
f
s
s
t
3.f
Wy
|7 |

Page 94


Page 95


Page 96


Page 97
Elatathava
"ElaththaWar Waralar Lu" - a " able Work of Dr. Sengaiya K. Kunarasa which narrates briefl history of political, administrative Social structure Of Tamilis in Sri Li from the fifth century B.C. to 1621
Indeed the book tells us history of Tamils and Tamil mona of Our Land in a refined way wit any partiality.
Dr. Sengaliyalian K, Kuna Was born in 1941 in Jaffna. He graduate from the Peradeniya Un sity and later on obtained his Do ate in geography (Land use and 1 of Jaffna.
He is a prolific Writer and : To his Credit he has Written mor accomplishments in the sphire of
Dr. Kuna rasa Was a Wa Shahithiya Academy for his achie StOrieS. SOTE of his SOrt Storie language and published in Weeklie One of his novels, named "THE BE and published.
Het is aISO als auth Or ( geography,
As a Senior officer in the at present dispatches his duties tional Govt. Agent of Jaffna.
 
 
 

ar Warallaru
by Dr. K. Kunarasa M.A. Ph.D.
Walu
|rasa
is a
Wer|CtOT
and settlement) from the University
a Well known critic in the literary field. 'e than thirty five novels and three
fictional history.
ded more than five times by the evement in Writing novels and short }S had been translated into Sinhala Slike Silustlina, Vivarana and SO On. EAST was translalted into in English
of Se Wera | text DO OkS Writter Oil
Sri Lanka Administratiwe Serwice, he as the Divisional Secretary Addi
R. Sridharsingh (Publisher)