கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கருத்தியலும் வரலாறும்

Page 1


Page 2

கருத்தியலும் வரலாறும்
தொகுப்பு :
கந்தையா சண்முகலிங்கம்
தெ.மதுசூதனன்
તિg)
ஆற்றல் மேம்பாட்டு மையம்

Page 3
நூல் : கருத்தியலும் வரலாறும்
தொகுப்பு கந்தையா சண்முகலிங்கம்
தெ.மதுசூதனன்
பதிப்பு : ஐப்பசி 2006
வெளியீடு: விழுது
3, டொறிங்டன் அவெனியூ கொழும்பு - 07 தொ.பே ; 011-2506272
அச்சு : டெக்னோ பிரிண்ட்
55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06 தொ.பே: 0777-301920

அறிமுகம்
ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
இன்று எம்மிடையே வாசிப்பு பரவலாக குறைந்து செல்கிறது. இதனால் அறிவு மட்டம் தாழ்ந்து செல்கிறது. சமகாலக் கல்வி வளர்ச்சியின் பன்முகத்தன்மைகளை நாம் உள்வாங்குவதில் பின்தங்கி வருகின்றோம். இது ஆபத்தானது. சமூகமேம்பாட்டுக்கு தடையாக
glooDD6)lgil.
தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவிற்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அறிவு உள்ளது. இந்த அறிவுருவாக்கச் செயற்பாட்டுக்கு வாசிப்பு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளது. மொழித் திறன்களின் வளர்ச்சிக்கும் வாசிப்பு முக்கியமாக உள்ளது.
சிந்தித்தல், கற்றல், தொடர்பு கொள்ளல் என்ற செயற்பாடுகளில் மொழியானது அடிப்படைக் கருவியாகின்றது. இத்தகைய மொழித் திறன்கள் இயல்பாகவே கடத்தப்படுவதற்கும் வாசிப்பு அவசியமாக உள்ளது. இந்த உயர்ந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையிலும், அறிவுருவாக்கப் பணியில் தொடர்ந்து செயற்படுவதற்கான திறன்களை ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி வளர்க்கும் பெரும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்கு உறுதுணையாகவே அக்டோபர் வாசிப்பு மாதத்தையொட்டி விழுது நிறுவனம் சில நூல்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படையில் "கருத்தியலும் வரலாறும்" எனும் நூல் வெளிவருகிறது.
'கருத்தியலும் வரலாறும்' எனும் தலைப்பில் அமைந்துள்ள இந்நூல் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. வரலாறு பற்றிய கற்கையின் அடிப்படைகளை ஆழப்படுத்தும் நோக்கில்

Page 4
அமைந்துள்ளது. வரலாறுபற்றிய சிந்தனைக்கான தேடல் கருத்தியல் தளம் பற்றிய விரிவான தேடலுக்கும் கற்றலுக்கும் உரிய களங்கள் நோக்கி வாசிப்புச் சாத்தியங்களுக்கான நூல்களை அடையாளம் காட்டுகின்றது. வரலாறு என்றால் என்ன? என்ற கேள்விக்கான விடைகளை இலங்கைச் சூழலில் தேடும் பொழுது நாம் பல்வேறு சிக்கல்களை முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். என்பதையும் உணர்த்துகிறது.
இலங்கைத் தமிழரின் சமகால வரலாற்றுப்பின்புலத்தில் வரலாறை ஓர் கற்கைப் புலமாக மேற்கொள்ளும் பொழுது வரலாற்றியல் நோக்கு எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைகளையும் கருத்தியல் தெளிவுகளையும் இந்நூல் முன்வைக்கிறது எனலாம்.
க. சண்முகலிங்கம்
தெ.மதுசூதனன்

உள்ளே.
Κ)
வரலாறு என்றால் என்ன? “இலங்கை வரலாற்றின் பிரச்சினைகளும்“ “வரலாறு பற்றிய பயமும்" வரலாற்றியலும் இனத்துவமும் கால்டுவெல்லின் கற்பனைக் குழந்தை தமிழர் வாழும் பிரதேசங்களும் வரலாற்று மூலங்களும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் வரலாற்று அறிமுகக் குறிப்பு
சித்திரவேலாயுதர் காதல்: சில வரலாற்றுக் குறிப்புகள்
தமிழ்ச் சாசனங்களும் வரலாற்று ஆராய்ச்சியும் தமிழ்க் கல்வெட்டுக்களும் வரலாறும்
எடுத்துரைக்கப்பட்ட நாட்டார் வழக்காறுகளை வகைப்படுத்தல்
மாற்று வரலாற்றைத் தேடி
இந்தியாவைப் பற்றி - மார்க்ஸ் இந்தியாவில் வரலாற்று ஆய்வுகள்
வரலாறுகளை எழுதுவது என்பது.
O7
2
27
37
45
5
59
65
7Ο
72
8
88
92
Ο3

Page 5

வரலாறு என்றால் என்ன?
க.சண்முகலிங்கம் தெ.மதுசூதனன்
வரலாறு என்றால் என்ன?
இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். இந்த விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விளக்கங்களாக உள்ளன. ஆகவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையோ - விளக்கமோ - வரைவிலக்கணமோ இதுவரையில் தரப்படவில்லை.
பிரெஞ்சு சிந்தனையாளர் வோல்டேர் ஒரு முறை கூறினார். "நமது பழைய வரலாறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட கற்பனைகள் என்பதைத் தவிர அதற்கு மேலாக எதுவும் இல்லை"
பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியனும் பிரிட்டனின் பிரதமராக இருந்த சேர்கிராபர்ட் வோல்போலும் ஏறக்குறைய வரலாறு குறித்து இத்தகைய கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கருத்துக்களின் அடிப்படை என்ன?
இதுவரை கூறப்பட்டுள்ள வரலாறுகளில் எழுதப்பட்டுள்ள வரலாறுகளில் உண்மைகளை விட மிகைப்படுத்தல்களும் கற்பனைகளுமே அதிகமாக இருக்கின்றன என்ற ஆதங்கத்தில் உருவான கருத்துத்தான் இது.
அதேநேரம் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள் வரலாற்றைத் தொகுத்தவர்கள் ஆகிய வரலாற்றாசிரியர்களின் நேர்மையிலும் அறிவு நாணயத்திலும் அவநம்பிக்கை கொள்ளும் போக்கும் அதிகரித்தது. இன்னொருபுறம், புராணங்களை வரலாறாகத் திரித்துத்தர முற்படும் போக்கு இயல்பாக பல மட்டங்களில் வளர்ந்தது. இந்நிலைமை தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல ஆங்கிலச் சூழலிலும் இதே நிலைமைதான்.

Page 6
இதனை சற்று விளக்க முடியுமா?
அதே நேரம் ஆங்கில நாட்டில் History என்ற சொல்லும் Story (கதை) என்ற சொல்லும் ஒரே கருத்துடைய சொற்கள் என்றே கி.பி 15ம் நூற்றாண்டு வரை கருதப்பட்டன. இதன் பின்னர்தான் கதை வேறு வரலாறு வேறு என்ற உணர்வு இங்கிலாந்தில் மெல்ல அரும்பத் தொடங்கியது. தமிழ்ச்சூழலில் 1960 க் களில் கூடக் கதையையும் வரலாற்றையும் சொல் என்ற மட்டத்தில் கூட பிரித்து நோக்க முடியாத சூழ்நிலையே இருந்தது. உதாரணமாக மாணவர்களுக்கான பாடநூல்களின் தலைப்புக்கள் ‘இலங்கைச் சரித்திரம் உலக சரித்திரம்' என்று இருந்தது போல் 'குசேலர் சரிதம்’ ‘தமயந்தி சரிதம்’ என்றே பெயரிடப்பட்டன. புராணம், இதிகாசம் கதைகள் ஆகியனவும் வரலாறும் ஒன்றாகவே குழப்பப்பட்டன.
மறுமலர்ச்சிக்காலத்தில் தான் ஐரோப்பாவில் பொய்ப்புனைவை உண்மையில் இருந்து பிரித்து வரலாற்று நாயகர்களான மன்னர்கள், வீரர்களின் வரலாறுகளை எழுதும் எண்ணம் வளர்ச்சியுற்றதாம். அதுவும் வரலாறு என்பது நாட்டை ஆளும் தகுதி பெற்ற மன்னர்கள். போர்க்களங்களில் சாதனை படைத்து நாடுகளை வெற்றி கொண்டு தமது ஆட்சி எல்லையையோ அதிகாரத்தையோ விரிவுபடுத்தியவர்கள்தான் வரலாற்றுக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். 19ம் நூற்றாண்டில்தான் வரலாற்றை எழுதுவோர் பகுத்தறிவு நோக்கில் உண்மையை எழுதும் ‘விஞ்ஞான முறையான வரலாறு பற்றிக் கருத்துச் செலுத்தலாயினர். அக்கட்டத்தில் இலக்கியத்துறையில் வரலாற்று நாவல் என்னும் புதிய இலக்கியவடிவம் உருவாயிற்று இவற்றை ரோமான்சஸ் (Romances) என்றும் வரலாற்று அறிஞனின் அக்கறைக்கு உரிய விடயம் அல்ல என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதத் தொடங்கினர். இலக்கியத்தின் ‘அழகியல் அம்சமும் வரலாற்றின் விஞ்ஞான அம்சமும் ஒன்றோடொன்று முரண்பட்டவை என்ற தெளிவு அங்கே இருந்தது. மார்க்சிஸ்ட் இலக்கிய விமர்சகராகிய லூகஸ் (Lukacs) வரலாற்றுநாவல் (Historical Novel) என்ற இலக்கிய வடிவம் பற்றி எழுதியிருக்கிறார். தமிழக மார்க்சிஸ்ட் இலக்கிய விமர்சகர் எஸ். தோதாத்திரி கல்கியும் ஸ்கார்ட்டும்' என்ற தலைப்பில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஸ்கார்ட்டையும் கல்கியையும் ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆனால் தமிழரின் பொதுப் புத்தியில் கல்கியின்நாவல்களையும் சோழர் வரலாற்றையும் பிரித்துப் பார்க்கும் அறிவியல் நோக்கு இன்றுவரை வளரவில்லை என்றே கூறத் தோன்றுகிறது.
கருத்தியலும் வரலாறும் 18

சந்திர குப்த மெளரியனுக்கு மகத நாட்டு அரியணையைப் பெற்றுத்தர சாணக்கியன் கையாண்ட சூழ்ச்சி முறைகள்; எதிரிகள் தீயிட்ட சிறையிலிருந்து கருகிய கால்களுடன் தப்பிச் சென்ற சோழ இளவரசன் திருமாவளவனை, பட்டத்து யானை தேடிப்பிடித்து மாலையிட்டு மகுடம் கொடுத்த விந்தை; படையெடுத்துவந்த மாவீரன் அலெக்ஸாண்டர் ஜீலம் நதிக்கரைப் போரில் வென்ற பிறகும் தோற்றுவிட்ட போரஸ் மன்னனின் வீரத்தை மெச்சி அவனிடமே நாட்டைத் திருப்பிக் கொடுத்த பெருந்தன்மை; டில்லியையும் ஆக்ராவையும் வென்று இந்தியாவில் மொகலாயப் பேரரசிற்கு வித்திட்ட பாபர், மரணப்படுக்கையிலிருந்து தன் அன்பு மகன் ஹிமாயூனைக் காப்பாற்ற, இறைவனிடம் வேண்டி அந்த நோயைத் தான் வாங்கி இறந்து வெளிப்படுத்திய ப்ெற்ற பாசம்; இராணி சம்யுக்தயை சுயம்வர மண்டபத்திலிருந்து கடத்திச் சென்ற பிருதிவிராஜனின் சாகசம் இப்படிப்பல்வேறு கதைகளைக் கூறலாம். இவை சுவாரசியமாகவும் விறுவிறுப்பும் நிறைந்த கதைகளாக நமக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுக் கதைகள் என்ற புனைவுகள் நமக்கு எடுத்துக்காட்டுபவை இவற்றைத் தான்.
டயோனிசியஸ் என்ற அறிஞர் இப்படிக் கூறினார்.
"உண்மைச் சான்றுகளிலிருந்து பெறப்படும் தத்துவம் தான் வரலாறு".
அதாவது இவரது கூற்றுப்படி தத்துவத்தைக் கற்றுத்தரும் வரலாறு உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அந்த நிகழ்வுகளால் தரப்படும் பரிமாணங்கள் தவறான முடிவுகளைத் தருவதாக இருக்கக் கூடாது.உண்மையில் வரலாற்றிற்கு ஓர் இலக்கியத்தன்மை உண்டு. அதுவே வரலாறாக Cpl.9 ul IITg5l.
தமிழ்ப் புனைகதை இலக்கியத்தில் ‘வரலாற்றுப் புதினம்’ என்ற வகைமைப்படுத்தப்பட்ட போக்கு உள்ளது. இவை கதைகற்பனை - வரலாறு போன்றவற்றின் கலவையாக உள்ளன. கல்கி போன்றவர்களைக் கூட வரலாற்று ஆசிரியராக இனங்காணும் சூழலும் உள்ளது. இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
கருத்தியலும் வரலாறும் 19

Page 7
வரலாற்று நிகழ்வுகளை, வரலாற்றுப் பாத்திரங்களை கதை - நாடகம் - புதினம் - காவியங்கள் ஆகியவற்றிற்கான கருப்பொருளாகக் கொள்வது இயல்புதான். ஆனால் அந்தக் கதைகள் - காவியங்கள் அப்படியே வரலாறாகி விட முடியாது.
உதாரணமாக வரலாற்றுப் புதின ஆசிரியரான ‘கல்கி' எழுதிய ‘பார்த்திபன் கதை’ ‘பொன்னியின் செல்வன்’ ‘சிவகாமி. யின் சபதம்’ போன்றவை தமிழக வரலாற்றிலிருந்து கருப்பொருள்களை பெற்றுக்கொண்டவை.
இந்தப் புதினங்களில் சோழ, பல்லவ, விஜயநகர வரலாறுகளைப் பார்த்து நிறைவு கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இந்தப் புதினங்களின் நோக்கம் வரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டுவருவதன்று. இவற்றைப் படைத்த ஆசிரியர்கள் தாம் சுவீகரித்துக் கொண்ட கதாநாயகர்களை - நாயகிகளை சூப்பர் ஹிரோக்களாகக் காட்டுவதில் உண்மைகளை விட கற்பனைகளை அதிகமாக நம்ப வேண்டியிருக்கிறது.
அப்படியானால் இவற்றின் பொருத்தப்பாடு குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?
நாம் நிச்சயம் அப்படித்தான் இருக்க வேண்டும். பொதுவாக நாம் வரலாற்றில் கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும், பிரமிக்க வைக்கும் அவர்களது சாகசங்களைத் தேடவில்ல்ை மாறாக உண்மையைத் தேடுகிறோம். மனிதகுல மாற்றத்தின் - முன்னேற்றத்தின் - அவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள பிரச்சினைகளின் - மானுடத்தின் - சமூக, பொருளாதார - அரசியல் - பண்பாட்டு அமைப்புக்களின், பண்புகளின் அடிப்படை நீரோட்டங்களைத் தேடுகிறோம். வரலாற்றாளர் - வரலாற்று ஆர்வலர் யாருடைய ரசிகராகவும், தொண்டராகவும், அடிமையாகவும், அனுதாபியாகவும் இருந்து உண்மைகளை - அவற்றின் பல்வேறு பரிமாணங்களைத் தேடவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. மெய்க்கீர்த்திகளைப் பிரசங்திகளையும் படைக்கும் அரசவைப் புலவர்களாக வரலாற்றாளர் செயல்பட முடியாது. வரலாற்றாளருக்குத் தேவை அறிவு நாணயம். கதைகளிலும் கவிதைகளிலும் நாடகங்களிலும் மட்டுமல்ல நாம் வரலாற்றை உரு
கருத்தியலும் வரலாறும் 10

வாக்கப் பயன்படுத்தும் பிற இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கூட அளவு கடந்த புகழுகளும் மிகைப்படுத்தல்களும் கற்பனை இடைச் செருகல்களும் உண்மையை அறிவதில் சிக்கல்களைத் தோற்றுவித்து வருகின்றன. மிகப் பெரும்பாலான இலக்கியங்கள் - கல்வெட்டுக்கள் - தம்மைத் தாமே பெரிதுபடுத்தவும், பெருமைப்படுத்தவும் விரும்பிய மன்னர்களுக்காக அவரது கருணையை எதிர்பார்த்து நின்றவர்களால் உருவாக்கப்பட்டவை தாம். முன்னர் எப்போதோ வாழ்ந்தவர்கள் மீது ஒரு விதமான அபிமானத்தை வளர்த்து அந்த மானசீகக் கதாநாயகர்களைப் பெருமைப்படுத்த ஓரிரு உண்மைகளைப் பெருமளவு கற்பனையுடன் கலந்து காவியங்களைப் படைத்தவர். களான இந்த அரசவைப் புலவர்கள் கூற்றில் நாம் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்று வரலாறு என்பது பல்வேறு அறிவுத்துறைகளுடன் தொடர்புடைய துறையல்லவா?
ஆம் வரலாறு பல்வேறு அறிவுத் துறைகளுடன் தொடர்புடையது. குறிப்பாக தொல்லியல், கல்வெட்டியல், சாசனவியல், என வரலாற்றுடன் நேரடித் தொடர்புடைய துறைகள் உள்ளன. இதைவிட அரசியல், பொருளியல் சமூகவியல், மானிடவியல், மொழியியல் என இன்னும் பல்வேறு துறைகளுடனும் வரலாறு தொடர்பு கொண்டதாகவே உள்ளது.
ஆக அறிவுத்துறைகள் அனைத்திற்கும் உள்ளது போல் வரலாற்றின் அடிப்படைத் தேவையும் உண்மையைத் தேடுதலே ஆகும். இந்தத் தேடுதல் தான் வளர்ந்துவரும் பல்வேறு அறிவுத்துறைகளையும் உள்வாங்கி ‘வரலாறு’ சமூக அறிவியல் துறையில் ஒரு முக்கியத் துறையாக இன்று வளர்ச்சியடைந்துள்ளது.
கருத்தியலும் வரலாறும் 11

Page 8
“இலங்கை வரலாற்றின் பிரச்சினைகளும்“ “வரலாறு பற்றிய பயமும்" சுதர்சன் செனிவிரட்ண
முகவுரை :
நுண்மாண் நுழைபுலம் மிக்க புலமையாளர்கள் கூடியிருக்கும் இந்த அவையிலே ஜி.சி. மென்டிஸ் ஞாபகார்த்தச் சொற்பொழிவை நிகழ்த்தும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு உண்மையில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இதனை ஒரு கெளரவமாகவும் கருதுகிறேன். கலாநிதி மென்டிஸ் அவர்களைச் சந்தித்து அளாவும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எனினும் நான் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் இருந்து அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அவருடைய "பண்டைய இலங்கை வரலாறு" (The Early History of Ceylon) என்னும் நூல் மூலம் தான்நான் இந்நாட்டின் வரலாறு பற்றிச் சரியான முறையில் முதன்முதல் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்நூலில் வெத்தர்களின் (Vedda) குடும்பம் ஒன்று குகையொன்றின் வாயிலில் நிற்பதான படம் ஒன்று உள்ளது. இலங்கையின் "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் உயிரோவியம்" என்று கூறத்தக்க அந்தப்படம் என் மனத்தில் ஆழமான பதிவை ஏற்படுத்தியது. எனக்கு வரலாற்றில் ஒரு விருப்பத்தை முதலில் ஏற்படுத்தியது அந்தப்படம்தான். அன்று தொடக்கம் வரலாற்றாய்வின் அகழ்வாராய்ச்சியாளன் என்ற நிலை வரையான எனது வாழ்க்கையில் பெருவிருப்புக்குரிய ஒரு விடயப் பொருளாக வரலாறு என்னும் இத்துறை
அமைந்து விட்டது.
இந்த நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் முன்னைய ஆண்டுகளில் பல சிறப்புமிக்க அறிஞர் பெருமக்கள் உரையாற்றி
பேராசிரியர் GC. மெண்டிஸ் நினைவுப் பேருரை வரிசையில் "Problems of Ceylon History" and "The Fear of History" 6T6ip g5606utilisi (SuTTafflu if digitatoir செனிவிரட்ன அவர்கள் வழங்கிய உரையின் தமிழாக்கம் "இலங்கை வரலாற்றின் பிரச்சினைகளும்" "வரலாறு பற்றிய பயமும்" எனும் தலைப்பில் சமூக அறிவு தொகுதி 2 இல் வெளிவந்துள்ளது. இதனை க.சண்முகலிங்கம் தமிழாக்கம் செய்துள்ளார். இக்கட்டுரையே இங்கு வெளிவருகின்றது.
கருத்தியலும் வரலாறும் 112

உள்ளார்கள். வரலாறு, சமூகம் என்ற இரு விடயங்கள் தொடர்பாகவும் அவர்கள் பெறுமதிமிக்க பங்களிப்பைத் தமது உரைகளின் மூலம் நல்கினர். மேன்மை மிகு இத்தகு அறிஞர் பெருமக்கள் சென்ற இப்பாதையில் நானும் எனது தடத்தைப் பதிப்பதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகக் கருதிப் பெருமகிழ்வடைகிறேன். எனது இன்றைய உரைக்கான விடயப்பொருள் "இலங்கையின் வரலாற்றின் பிரச்சினைகள்" என்ற தலைப்பையும் 'வரலாறு பற்றிய பயம்' என்ற இன்னொரு தலைப்பையும் இணைத்ததாக உள்ளது. முன்னது கலாநிதி ஜி.சி.மென்டிஸ் அவர்கள் எழுதிய நூல் ஒன்றின் தலைப்புப் பெயர். மற்றது பேராசிரியர் சர்வபள்ளி கோபால் அவர்கள் 1978ம் ஆண்டில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையொன்றின் தலைப்பு. எமது நாட்டில் அகழ்வாராய்ச்சி, வரலாறு என்னும் இரு துறைகளிலும் நிலவும் சூழலை மனதில் கொண்டு இந்த இரு தலைப்புக்களையும் ஒன்றிணைத்த விடயப் பொருளில் பேச வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவாகியது. தென் ஆசியாவின் வரலாறு பற்றிப் பொதுவாகவும் இலங்கையின் முந்து வரலாறு பற்றிக் குறிப்பாகவும் (கி.மு. 4ம் நூற்றாண்டு - கி.பி 4ம் நூற்றாண்டு வரை) எனது உரையில் ஆராய விரும்புகிறேன்.
மென்டிஸ் போன்ற ஒரு வரலாற்றாய்வாளரைக் காலத்திற்குக் காலம் இப்படியாக நினைவு கூரும் நிகழ்வுகள் வரலாற்றுக் கல்விக்கு புத்துக்கம் தருவதாகும். சமகால சமூகவாழ்வில் வரலாறு பற்றிய சிந்தனையின் வழியாக புதிய விடயங்களை முன்வைப்பதற்கும் அவற்றை விமர்சன நோக்கிற் பரிசீலிப்பதற்கும் ஏற்ற சிறந்த அரங்கமாக இவை விளங்குகின்றன. வரலாற்றை நாம் புதிய கோணத்திற் பார்ப்பதற்கும், கடந்த காலத்தினை உணர்வு பூர்வமாக மீள் ஒழுங்கமைத்துப் பார்க்கவும் உதவுகிறது. கடந்த காலத்தை நாம் ஒழுங்கமைத்துப்பார்க்கும் முறைகளைப் பரிசீலிக்கவும் வேண்டும். அத்தோடு "நிகழ்காலத்தில் கடந்தகாலத்தைப் பார்த்தல்" "கடந்த காலத்தில் நிகழ்காலத்தைக் காணுதல்" என்ற இருவகை இயங்கியற் செயற்பாடுகளையும் நாம் நுனிந்து நோக்குதல் வேண்டும். கடந்த காலத்தை இறந்தகாலமாகப் (dead past) பார்க்காமல் வாழும் காலமாகப் பார்த்தல் வேண்டும். எமது இன்றைய காலத்தின் வாழ்விற் பழமையின் பங்கு, பணியாது?அதன் வகிபாகம் என்ன?எமது காலத்தின் மதிப்பீடுகளுக்கு அதனை எவ்வகையிற் பொருத்துவது என்ற வகையிற் கடந்த காலத்தை நாம் பார்த்தல் வேண்டும். வரலாறும் அதனோடு இணைந்த ஏனைய துறைகளிலும் அத்துடன் வரலாற்றைக் கற்கும்
கருத்தியலும் வரலாறும் 113

Page 9
முறையிலும் பெருமாற்றம் நிகழ்ந்து வருகிறது. வரலாற்றைத் தமக்கென உரிமை கொண்டாடுவோர் யார்?எவர்?(Who owns the past); வரலாற்றில் இடம் இல்லை என ஒதுக்கப்பட்டோர் யாவர்?(excludedpast), வரலாற்றில் மறைக்கப்பட்டவர்கள், மறைந்தவர்கள் யார்?(hidden inhistory) ஆகிய விடயங்களை ஆராய்வதால் வரலாற்று ஆராய்வு தன் எல்லைகளை விரித்துள்ளது. வரலாற்று உணர்வு என்பதனை இன்று பொருள் கொள்ளும் முறை மாறிவிட்டது. பண்டைய காலத்தை உயர்த்திப் புகழ்தலும் மனோரம்மியமான கற்பனைகளை விரிப்பதும் தான் வரலாற்று உணர்வு அன்று. வரலாற்று அசைவியக்கத்தை நுட்பமாகப் பரிசீலனை செய்யும் திறன்மிகு கலையாக வரலாறு வளர்ச்சி பெற்றுள்ளது. வரலாற்றின் அசைவியக்கத்தை மனிதரின் சிந்தனையும் நடத்தையும் எப்படி நெறிப்படுத்தின என்பதை அது ஆராய்கிறது. அதுமட்டுமல்ல, வரலாற்றை ஆராயும், வரலாற்றாய்வாளனின் ஆளுமையையும் அது மதிப்பீடு செய்கிறது. எமது நாடு பற்றிய வரலாற்றாய்வின் சொல்லாடல் மேற்கிளம்பாது, உள்ளே அழுங்கி இருந்த பலவிடயங்களைச் சொல்லாடலின் விடயப் பொருளாக்கும் தேவை இன்று உருவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பான எண்ணக்கருக்களின் சட்டகம் ஒன்றை மென்டிஸ் அவர்கள் தமது "இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள்" நூலின் முன்னுரையில் முன்மொழிகின்றார்:"வரலாறு என்றால் என்ன என்ற வரைவிலக்கணம் பற்றிய அறிவீனம் பிரச்சினைகளுக்கு முதன்மையான காரணமாக உள்ளது. இலக்கிய உணர்மைகளையும் சமய உணர்மைகளையும் வரலாற்று உணர்மைகளில் இருந்து பிரித்தறியத் தெரியாமை காரணமாகவும் பிரச்சினைகள் எழுகின்றன. அண்மைக் காலத்தில் வரலாற்று ஆய்வு தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றி வரலாற்றாய்வாளர்களே தெரியாமல் இருப்பது பிரச்சினைகளுக்கான இன்னோர் காரணம்" வரலாற்றுமனிதர்களையும், புராணங்களிற் கூறப்படும் அதிமானுட கற்பனை மனிதர்களையும் பிரித்தறிவதற்கான முறையியலின் தேவையை மென்டிஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார். வரலாற்று நிகழ்வுகளை அது பற்றிய கதைகளை பழைய மரபுக்கதைகளில் (Legend) இருந்து பிரித்தறிவது எப்படி? வரலாற்று உண்மைகளைச் சமய நம்பிக்கைகளில் இருந்து பிரித்தறிவது எப்படி?பண்டைக்கால வரலாற்று நூல்களை நவீன கால வரலாற்று நூல்களுடன் ஒப்பிடுவது எப்படி? போன்ற முக்கியமான கேள்விகளை மென்டிஸ் அவர்கள் வினாவுகின்றார் (மேற்குறித்த நூல் vi).
மென்டிஸ் அவர்கள் அனுபவ உண்மைகளுக்கும் தரவுகளுக்கும் (empirical data) முக்கியத்துவம் கொடுத்தார். அதே சமயம் குறித்த
கருத்தியலும் வரலாறும் 14

வகையான நிலைமைகள் இன்னொன்றாக மாறியது ஏன்? எப்படி? என்ற காரணகாரிய ஆய்வுமுறைக்கும் முதன்மையளித்தார். "வரலாறு என்பது மாற்றம் பற்றியும் மாற்றத்திற்கான காரணங்கள் பற்றியும் ஆராய்வது, (மென்டிஸ்15) என்றார் அவர். "நவீன வரலாறு ஒன்றை உருவாக்கும் வேலையைத் தரவுகளைப் புதிய அடிப்படையில் திரட்டுவதன் மூலம் நாம் தொடங்க வேண்டும்." என்றும் கூறினார். பழைய நூல்களினைப்படிக்கும் பொழுது மேலோட்டமாகத் தெரிவனவற்றுக்கு அப்பால் உள்ளே புதைந்திருக்கும் செய்திகளை வெளிக்கொணர வேண்டும் என்றார். சாசனவியல், புவியியல், அகழ்வாராய்ச்சி, இனவரைவியல், மொழியியல் போன்ற துறைகளின் துணையுடன் வரலாற்று ஆய்வு நிகழ்த்தப்படவேண்டியதன் அவசியத்தன்மையையும் அவர் எடுத்துக் கூறினார் (மென்டிஸ் 79).
"இந்த வகையில் சான்றாதாரங்களைக் கொண்டு, அரசியல் , பொருளியல், சமூக முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களிற்கான காரணங். களைத் தெரிந்து வரலாற்றினை நாம் மீளக் கட்டியமைக்க வேண்டும்" என்று அவர் முடிவுசெய்தார் (மென்டிஸ் 80). வரலாற்றுவரைவுமுறையியல் பற்றிய தமது சிந்தனைகளுக்கு ஈ.எச். கார் அவர்களின் "வரலாறு என்றால் என்ன? என்னும் நூல் பெரும் உந்துதலாக இருந்தது என மென்டிஸ் கூறியிருக்கிறார். 1961ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஈ.எச்.கார் ஆற்றிய ஜோர்ஜ் மக்கியுலி றெவெலியன் நினைவுப் பேருரைதான்" வரலாறு என்றால் என்ன?(What is History) என்னும் நூல், குறிப்பிட்டநிறுவனச் சூழலில் அமையும் மக்கள் தொகுதிதான் வரலாற்று இயக்கத்தின் மையம், தனிநபர் அல்ல என்பதை ஈ.எச்.கார் நிறுவுவதற்குக் காலாயிற்று.
ஜி.சி மென்டிஸும், லக்ஷ்மன் பெரேரா போன்ற அவரது மாணவர்கள் சிலரும் இலங்கையின் பண்டைய வரலாறு பற்றி நிலவிய கருத்துக்களுக்கு மாறாக ஆழமான விமர்சன நோக்கினை முன்வைத்தார்கள். மென்டிஸின் இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள் என்ற நூலும் இதன் பின்னர் லக்ஷ்மன் பெரேரா எழுதிய "சாசனங்கள் காட்டும் பண்டைய இலங்கையின் நிறுவனங்கள்" என்ற நூலும் சிறந்த ஆய்வு நூல்கள். இலங்கை வரலாற்றைப் பண்பாடு, சமயம், இனம் என்ற எல்லைக்குள் வைத்து நோக்குகின்ற ஆய்வு முறைகளில் இருந்து விலகிச் செல்லும் நூல்கள் இவை. வரலாற்று வரைவியலிலும் இலங்கை வரலாற்றை விளக்கும் பாங்கிலும் இவை புதுப் பாதையிற் சென்றன. தனது குருவின் வழிச் சென்ற லக்ஷ்மன் பெரேரா இலங்கையின் முன்னை வரலாற்று ஆய்வினை அடுத்த முக்கிய படிக்கு எடுத்துச் சென்றார். சமூகத்தின்
கருத்தியலும் வரலாறும் 15

Page 10
கட்டமைப்புக்கும் வரலாற்றுநிகழ்வுகளுக்கும் இடையிலான பிணைப்பை வற்புறுத்துவதும் அந்த அடிப்படையில் விளக்கங்கள் தருவதும் பெரேரா அவர்களது வரலாறு பற்றிய தத்துவத்தின் பிரதான அம்சமாகும். நிறுவனங்களை அவர் ஓர் ஒழுங்கமைப்பாகக் கண்டார். சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூக, சமயநடவடிக்கைகள் மனிதரின் நடத்தை முறைகள், சிந்தனைகள் என்பன இந்நிறுவனங்கள் மூலம் வெளிப்பட்டன. மென்டிஸ், பெரேரா ஆகிய இருவரின் சிந்தனைகளும் வரலாறு பற்றிய கட்டளைப் படிவ மாற்றம் (Paradigm Shift) என்றே கூறலாம். இத்தகைய கட்டளைப் படிவமாற்றம் டி.டி கோசாம்பியின் எழுத்துக்கள் ஊடாக இதே காலத்தில் ஏற்பட்டன என்பதும் கவனிக்கத்தக்க சுவாரசியமான விடயமாகும். கோசாம்பி புகழ்பெற்ற பெளத்த அறிஞர் ஒருவரின் மகன்; மகாராஸ்டிர மாநிலத்தில் தோன்றியவர். அவர் ஒரு கணிதவியலாளர். கணிதத் துறையில் இருந்து வரலாற்றுக்குள் நுழைந்தவர். இவர் வரலாற்றை வெறும் விவரணையான கதையாக (narrative) கூறும் முறையை மாற்றினார். பெரு மனிதர்களின் வீரதீரக்கதையாக சமயத்தின் வரலாறாக காலமுறைப்படி வருணிக்கும் வரலாற்று எழுது முறையில் இருந்து டி.டி கோசாம்பியின் எழுத்துக்கள் முற்றிலும் வேறுபட்ட திசையில் கால்பதித்தன.
இதே போன்றுதான் மென்டிஸும் பெரேராவும் வரலாற்று வரைவியலில் புதிய தடம் பதித்தனர். வரலாற்று அறிஞர் ஹொப்ஸ்போம் (Hobsbawm) வார்த்தைகளில் கூறுவதாயின் 'சமூக வரலாறு என்பதிலிருந்து afpabib605i Liipful 6 J6urIp' (Social History to History of Society) என்பது நோக்கிய மாற்றமாக இது அமைந்தது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களிடம் இத்தகைய தெளிவு இருக்க வில்லை. சமூக உறவுகள் எவ்வாறு உருவாகின்றன. சமூகங்கள் எப்படி இயக்கம் பெறுகின்றன என்பது பற்றிய புரிந்துணர்வு அவர்களிடம் இல்லாமல் போனது ஒரு துரதிஷ்டமே. இந்தியாவில் வரலாற்றாய்வு அதன் பின்பு பெரும் உந்துதல் பெற்றது. கோசாம்பியின் கருத்துக்களால் கவரப்பட்ட இரண்டாம் தலைமுறை வரலாற்றாசிரியர்கள் விளக்கமுறை வரலாற்றில் (interpretative history) ஒரு புரட்சியையே நிகழ்த்தினார்கள். மூன்றாம்; நான்காம் தலைமுறை வரலாற்றாசிரியர்கள் அடித்தள மக்கள் ஆய்வு (Subaltern Studies) என்னும் துறையிலும் பின்நவீனத்துவ ஆய்வுகளிலும் முக்கிய பங்களிப்பை நல்கினர். எமது நாட்டில் மென்டிஸும் பெரேராவும் விட்டுச் சென்ற தடத்தை இனம்கண்டு அடுத்த படியை அடைவதற்கு நாற்பது ஆண்டுகள் பிடித்தன. மக்களின் புழங்கு பொருள் முதற் பண்பாட்டையும்
கருத்தியலும் வரலாறும் 116

(Material Culture),அகழ்வாராய்ச்சியையும் துணையாகக் கொண்டு வரலாற்றை ஆராயப் புகுந்தோரால் பண்டைய இலங்கை வரலாறுபற்றிய மாற்று விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
சமூகத்தின் வரலாற்றையும், மாற்றுச் சிந்தனைகளையும் முன்வைப்பதற்கு எதிராகப் பல தடைகளை 20ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்கள் எம் நாட்டில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பின் காலனித்துவ வளர்ச்சிவாதத் தேசியக் கோட்பாடு ஒன்று வரலாற்று வரைவியலில் தோற்றம் பெற்றது. இந்தத் தேசியவாத வரலாற்று வரைவியல் சமூக வரலாற்றையும், தொல்சீர் காலம் பற்றிய விமர்சன முறையான வரலாற்று நோக்கு முறைகளையும் ஏற்கவில்லை. அவர்கள் காலனித்துவ காலத்து வரலாற்று வரைவியலையும் (Colonial historiography) கீழ்த்திசை வாதத்தையும் (Orientalism) தமக்கு ஆதர்சமாகக் கொள்ளலாயினர். அத்தோடு ஏனைய விஞ்ஞானத். துறைகளின் துணையுடன் வரலாற்று ஆய்வை மேற்கொள்வதிலும் இவர்களுக்கு நாட்டம் இருக்கவில்லை. அதனால், சரியான தரவுகளும் தகவல்களும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சி தொடர்பான விஞ்ஞானமுறையான பகுப்பாய்வுத் தகவல்கள் அக்காலத்தில் கிடைக்காததும் இதற்கோர் காரணமாகும். ஏனெனில் அகழ்வாராய்ச்சித் துறையில் விஞ்ஞான அடிப்படையிலான தரவுகள் 1980களின் பின்னரே கிடைத்தன. இதனை விட வரலாறும் அகழ்வாராய்ச்சியும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்ட சம்பந்தமற்ற துறைகளாகக் கருதப்பட்டன. அவ்வாறே இலங்கைப்பல்கலைக்கழகங்களின் பாட பாடவிதானங்களிலும் இவை பிரித்து நோக்கப்பட்டன. அண்மைக் காலம் வரை இந்நிலையே தொடர்ந்தது. இக்காரணத்தாற் சுவடிகள், நூல்கள், தொல்சீர் மூலங்கள் சாராத தகவல்களில் அக்கறையின்மை வளர்ந்தது. விளக்கமுறை வரலாற்று ஆய்வுகளுக்கு அகழ்வாராய்ச்சி பயன்படுத்தப்படவில்லை.
இந்திய வரலாற்றாசிரியர்கள் 1970களில் அகழ்வாராய்ச்சித் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு வரலாற்று விளக்கங்களை அளித்தனர். இவர்கள் கோசாம்பியின் முன்முயற்சியை ஆதர்சமாகக் கொண்டு இத்துறையில் துணிவோடு இறங்கியவர்கள். அவர்கள் விவரணமுறை வரலாற்றைக் கைவிட்டுப் புதிய பாதையிற் சென்றனர். வரலாற்றையும் அகழ்வாராய்ச்சியையும் ஒன்றிணைத்துக் கடந்தகால வரலாற்றிற் சமூகங்களின் சிந்தனையும் நடத்தையும் எப்படி இயங்கின என்பதை விளக்குகிறார்கள். மேற்குநாட்டுப் புலமையாளர்கள் விரிந்த வரலாற்றுப் பார்வையுடனும் சமூக மானிடவியலின் துணையுடனும் அகழ்வாராய்ச்சி
கருத்தியலும் வரலாறும் 117

Page 11
தொடர்பான விளக்கங்களை முன்வைப்பதற்கு முன்னரேயே இந்திய வரலாற்றாசிரியர்கள் தமது ஆய்வுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர்.
எமது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்ட பிரச்சினைகள் சிலவற்றை நான் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இந்த ஆய்வுகள் எமது நாட்டின் வரலாற்றாசிரியர்களால் முன்னர் அதிகம் கவனிக்கப்படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு காலத்தையும் அக்காலத்தின் பொருளாதார நிலைமைகளையும் பற்றியது. ஜி.சி. மென்டிஸ் அவர்கள் முன்னை வரலாறு பற்றி எழுப்பிய பிரச்சினைகளை கருத்திற் கொண்டும் இவை பற்றிக் கூற விரும்புகிறேன். இவை பற்றிய எனது வாதங்கள் வரலாறு, சாசனவியல், உயிரியல், அகழ்வாராய்ச்சியியல் மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமையும்.
வரலாற்றிலும் மானிடவியலிலும் பயன்படுத்தப்படும் எண்ணக்கருக்களில் ஒன்று பிறர் (Other) என்பது, நாம்', 'நம்மவர்', 'எமது', எங்களுடையது' என்பவற்றுக்கு எதிரான அந்நியர் பற்றிய எண்ணமே பிறர் என்னும் எண்ணக்கரு, இது வெறும் கருத்தற்ற சொல் விளையாட்டாக நாம் கருதத் தேவையில்லை, இந்த எண்ணக்கரு மூலமாக வரலாற்றில் மறைந்துள்ள வெளித்தெரியாத பல உண்மைகளை, அவற்றின் திரையை அகற்றிப் பார்ப்பதற்கு முடியும். இந்த மறைப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. தப்பெண்ணமும், பக்கச் சார்பும் முற்சாய்வும் இந்த உண்மைகளைக் காண்பதைத் தடுக்கின்றன. வரலாற்றை விளக்கக் கூடிய தெளிந்த ஞானம், இல்லா அறிவின்மை இன்னொரு காரணம் (Poverty of explanation) எனலாம். ஒரு சமூகத்திற்கு வெளியே உள்ள பிறர் (other) பற்றிய ஆய்வு என்பது அதற்கு வெளியே உள்ள பிற பண்பாடு' பிற பிராந்தியம்' (region) பிற பொருளாதாரம்' (economy) என்று விரியும். இலங்கையில் மக்கள் எங்கெங்கே வாழ்ந்தனர் என்பதையும் வடமத்திய சமவெளியும் அங்கு உருவான விவசாயப் பொருளாதாரமும் என்ற இரண்டையும் நாம் கருத்திற் கொண்டு இந்த "நாம் பிறர் என்ற எதிர்நிலைகளைப் பரிசீலிக்க வேண்டும்.
எனது உரையின் நடுநாயகமான விடயமான 'பிறர்' பண்பாடு என்பதை இப்போது எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இரத்தினபுரிப் படுகையில் உள்ள தாவர எச்சச் சுவடுகளையும் 'லுணுகல'வில் கிடைத்த கல்லாயுதங்களையும் ஆதாரமாகக் கொண்டு இற்றைக்கு 80,000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தனர்
கருத்தியலும் வரலாறும் (18

என்று தெரணியகல கூறுகிறார். இரணமடு பகுதியில், ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் கருதுகிறார். வரலாற்றுக்கு முற்பட்டகாலப் பகுதி மனிதர்கள் கி.மு. 35,000 க்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதற்கான தடயங்கள் உள்ளன. இடைக்கற்கால பண்பாடு பற்றிய சான்றாதாரங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்துள்ளன. (யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும், மகாவலி நதியின் கழிமுகப் பகுதியிலும் மட்டும் இதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.) இடைக்கற்கால மனிதர்கள் வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் என்பன சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். அலைந்து திரியும் சிறு கூட்டங்களாக இவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர். இம்மக்களோடு உயிரியல் அடிப்படையிலும், தொழில்நுட்பமுறைமைகளின் அடிப்படையிலும் ஒத்த தன்மையுடைய மக்கள் தென்னிந்தியாவிலும் இந்தியத் தீபகற்பத்திலும் வாழ்ந்தனர். இவர்களுக்குத் தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த மக்களோடும் தொடர்பு இருந்திருத்தல் கூடும்.
தீபவம்சம், மகாவம்சம் ஆகிய பாளி நூல்களில் இலங்கையில் நாகரின் வாழ்க்கை ஆரியர் வருகையுடன் ஆரம்பிப்பது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இந்தோ - ஆரிய மொழியினைப் பேசிய சத்திரிய இனக்குழுக்கள் வடமேற்கு இந்தியாவில் இருந்தும் தென்கிழக்கு இந்தியாவில் இருந்தும் குடியேறினர். இக்குடியேற்றங்கள் கி.மு. 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டில் புத்த பகவானின் மறைவு என்னும் நிகழ்வின் பின் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தீபவம்சமும் மகாவம்சமும் அவை எழுந்த காலத்தில் இலங்கையில் மேலாண்மை பெற்றிருந்த மகாவிகாரை நிறுவனத்தின் சுய வரலாறாகவே அமைந்தது எனலாம்.
அனுராதபுர நகரத்தில் அகழ்வாய்வைச் செய்த பொழுது பழைய இரும்புக்கால புதைபொருள் படிவுகளை 1969ஆம்ஆண்டில் தெரணியகல முதன்முதலில் கண்டு பிடித்தார். இந்தப் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் இருந்து, குறிப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து, இலங்கைக்குள் ஊடுருவிப்புகுந்த ஒன்று என்பதை இன்று பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஏறக்குறைய கி.மு 1000 காலப்பகுதியில் இலங்கைக்குள் புகுந்ததென்பது விஞ்ஞான முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டினது பண்பாட்டு உருவாக்கத்தின் தொடக்க காலமான இக்காலம் முக்கியமான தொழில்நுட்பப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக இருந்தது. இது பற்றி முழுமையான சித்திரத்தைக் கடந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எமக்குத் தருகின்றன.
கருத்தியலும் வரலாறும் 19

Page 12
தீபகற்ப இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பழைய இரும்புக் காலத் தொழில்நுட்பமும் அது சார்ந்த பண்பாட்டு அமைப்பும் பரவியிருந்தன. இப்பண்பாடு சிறுசிறு சமூககுழுமங்களின் பரவல் மூலம் இலங்கைக்குள் புகுந்தது. தென் ஆசியாவின் பழைய இரும்புக் கால நாகரிகக் கட்டமைப்பின் தெற்கு எல்லைப் பகுதியாக இலங்கை விளங்கியது. இந்த உண்மைகள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அனுராதபுரப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட ரேடியக் கதிரியக்க முறையிலான காலக் கணக்கீட்டின்படி கி.மு. 900 முதல் 750 வரையான காலப்பகுதியில் இப்பண்பாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இக்காரணத்தினால் இவர்களுடைய கவனம் தம்புல்லவிற்கு அப்பால் அனுராதபுரத்தையும் அங்குநிலை கொண்டிருந்த சமய நிறுவனத்தின் கொள்கைகளை ஆதரிக்கும் செல்வந்த குடும்பங்களையும் மாத்திரம் தான் மையமாகக் கொண்டிருந்தது. இலங்கைத் தீவின் பிற பாகங்களையோ, ஏனைய சமூகங்களையோ, பண்பாடுகளையோ இவர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. மகாவிகாரைப் பிக்குகள் பின்பற்றிய சமய கொள்கைகளுக்குமாறுபட்ட பெளத்த சமயப் பிரிவினர் பற்றியும் இவர்கள் அக்கறைப்படவில்லை. இவ்வாறான பிற சமூக, பண்பாட்டு சமயக் குழுக்களைப் பற்றி ஏதாவது குறிப்புக்கள் காணப்படின் அக்குறிப்புகள் இந்நூல்களின் பிரதான விடயப் பொருளோடு சம்பந்தமுறும் வகையில் தான் இடம் பெற்றன. இவ்வரலாற்று நூல்கள் தரும் செய்திகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைச் சாசனவியல், அகழ்வாராய்ச்சியில் ஆதாரங்களோடு தொடர்புபடுத்த முடிவு செய்யலாம். முந்து வரலாற்றுக் (Proto- historic period) காலம் பற்றிய செய்திகள் இந்நூல்களில் இல்லை. புத்தர் இந்நாட்டுக்கு வந்து போனது பற்றியும் இயக்கர், நாகர் என்ற சமூகங்கள் பற்றியும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அகழ்வாராய்ச்சியியல் துறையை எடுத்து நோக்கின் எமக்கு மாறுபட்ட செய்திகள் பல கிடைக்கின்றன. வரலாற்றுக்கு பழைய இரும்புக் காலத்தின் பெருங்கற்பண்பாடு தொடர்பான தொழில்நுட்பமும் பண்பாடும் இலங்கையில் நிலவியதை அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறுகிறது. இப்பன்கட்டுவவிலும் அதன் உள்ள பகுதிகளிலும் காணப்பட்ட கல்லறை இடுகாடுகள் கி.மு. 600-450 காலப்பகுதிக்குரியவை என றேடியம் கதிரியக்க முறையிலான காலக் கணிப்பு மூலம் அறியப்பட்டுள்ளது. இதே போல் பின்வேவ-ஹல்சோகன்னத்த (யப்பஹசவ அருகில் உள்ள இடம்) பகுதியின் கல்லறைகளின் காலக் கணிப்பு கி.மு 450 முற்பட்ட காலத்திற்கு உரியவை என அக்கல்லறைகள் எடுத்துக் காட்டுகின்றன. மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கைக்கு வருகை என்னும் கதை நிகழ்ந்த காலம் கி.மு 500 எனக் கூறப்படுகிறது. அக்காலத்திற்கு
கருத்தியலும் வரலாறும் 120

முன்னரே இரும்பின் உபயோகத்தை அறிந்திருந்த கிராம சமூகங்கள் மலைநாட்டின் அடிவாரக் குன்றுப் பகுதிகள் வரை பரவியிருந்ததென்பதை அகழ்வாய்வுச் சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பழைய இரும்புக் கால அகழ்வாராய்ச்சி மையங்களிற் கிடைத்த சான்றுகளில் இருந்து இந்த நாகரிகம் தீபகற்ப இந்தியாவில் இருந்து இலங்கைக்குட் புகுத்திய பண்பாட்டு அம்சங்கள் எவையென நிச்ச. யிக்கக் கூடியதாக உள்ளது. நெல், சாமை போன்ற பயிர்களை இவர்கள் பயிரிட்டார்கள். குதிரைகளையும் மாடுகளையும் இவர்கள் வளர்த்தார். கள். இம்மையங்களில் கிடைத்த சான்றுகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் பலவகைப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள் செம்பு, பொன்,இரும்பு ஆகிய உலோகங்களினால் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்தார்கள். மணிகளால் ஆன மாலைகளை அணிந்தார்கள். கிராமக் குடியிருப்புக்களில் வாழ்ந்தார்கள். பெருங் கற்பண்பாடு இங்கே பரவியிருந்தது. கறுப்புநிறத்தனவும், சிவப்பு நிறத்தனவுமான மட்பாண்டங்களை உபயோகித்தார்கள். மட்பாண்டங்களில் எழுத்துக்களையும் பல்வித குறியீடுகளையும் பொறிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இன்று வரை ஏறக்குறைய ஐம்பது ஈமப் புதைகுழிகள் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை கற்குவியல்கள், கல்மேடைகள், தாழி என்ற மூன்று வகையான ஈமப் புதைகுழிகளாக உள்ளன. இம்மக்கள் இறந்தோரை இவ்விதம் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததும் இறந்தோருக்கான ஞாபகச் சின்னங்களை அமைத்திருப்பதும் ஒன்றினை உறுதிப்படுத்துகிறது. இவ்வுலக வாழ்வை நீத்த பின் மறு உலகவாழ்வு ஒன்று உண்டு என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தது. மூதாதையரை வழிபடும் வழக்கமும் இவர்களிடம் இருந்தது. மரங்களைக் குலச் சின்னங்களாக இவர்கள் கொண்டிருந்தனர். இறந்தோரைப் புதைக்கும் இடங்களிற் கற்குவியல்களை அமைத்தனர். புனித போதி மரம் (அரசமரம்), ஸ்தூபிகளை அமைத்தல் ஆகிய இரு பண்பாட்டுக் கூறுகளும் பெருங்கற் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் தோன்றின எனக் கொள்ளுதல் முடியும்.
பழைய இரும்புக்கால மனிதர்கள் ஒரு பாதி நாடோடி வாழ்க்கையுடையவராய் இருந்தனர். இவர்கள் சில குழுக்கள் ஓரிடத்தில் நிலைத்த வாழ்க்கை மேற்கொள்வனவாகவும் இருந்தன. 'பெருமகன்' என்று அழைக்கப்பட்ட குலத் தலைவர்களின் தலைமையில் அமைந்த இரத்த உறவு முறைக் குழுக்களாக இவை விளங்கின. பானை ஒடுகளிலும், ஈமப்புதைகுழிகளிற் காணப்பட்ட கற்களிலும் பொறிக்கப்பட்ட குறியீடுகள் இக்குலங்களின் குலச் சின்னங்களாகவும் குறியீடுகளாகவும்
கருத்தியலும் வரலாறும் 121

Page 13
கொள்ளத்தக்கன. பல்வகை வளங்கள் நிறைந்த பிரதேசத்திற்குள் பிழைப்பூதிய வாழ்முறைகளை அவர்கள் அமைத்துக் கொண்டனர். அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகள் தாவரங்களின் எச்சங்கள் மூலம் இவர்கள் வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல், மந்தைமேய்ப்பு, பிழைப்பூதிய விவசாயம் என்பவற்றை மேற்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்து. இவ்விதமான பல்வகை உற்பத்தி முறைகள் இவர்களது பொருளாதார ஆதாரமாக விளங்கியிருந்தன. கடற்கரைப் பகுதிகளிலும் வரண்ட வலயத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் இவர்கள் தமது வாழ்விடங்களை ஆரம்பத்தில் அமைத்துக் கொண்டனர். இவ்வாறான ஒரு சூழலில் அவர்களுக்குத் தேவையான நீர், மண்வளம், என்பனவும் வேட்டையாடுவதற்கான விலங்குகளும் ஏனைய மூலப்பொருட்களும் போதியளவு கிடைத்தன. இலங்கையின் நாகரிக வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திற் பழைய இரும்புக் காலத்தின் தொழில்நுட்பப் பண்பாட்டுக் கட்டமைப்பு இவ்விதம் உருவாக்கம் பெற்றது. இதற்குப் பிந்திய காலத்தின் சமூக-பண்பாட்டு, தொழில் நுட்ப அடித்தளமும் இந்த ஆரம்பக் கட்டமைப்பில் இருந்தே உருவானது. வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மையத்திற்குரிய குலங்கள் எங்கெங்கே குடியேறினரென்பதை மகாவம்சம் கூறுகின்றதோ அந்தந்தப் பகுதிகளுக்கு மிக அண்மையில் பெருங்கற் பண்பாட்டு மையங்களும் மட்பாண்ட சிதைவுகளும் அமைந்துள்ளமை சுவாரசியம் மிகுந்த ஒரு விடயமாகும்.
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமப் புதைகுழிகளிற் காணப்பட்ட எலும்புக் கூடுகளைத் தொன்மை உயிரியலாளர் ஆராய்ந்தனர். அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் சில உண்மைகளைத் தெளிவுபடுத்தின. இந்த எலும்புக் கூடுகளின் பெளதீக வடிவமைப்பை நோக்கும் போது வேற்று மனிதர்களின் பெருமளவான படையெடுப்பும் உள்வரவும் நிகழவில்லை என்பது புலனாகின்றது.
பெருங்கற்கால மனிதர்கள் உயிரியல் அமைப்பின்படி பன்மைத்துவம் உடையவராக இருந்துள்ளனர். இவர்கள் ஒரே தன்மையினரல்லர். மேலும் உயிரியல் ரீதியான ஒரு தொடர்ச்சி இந்தியாவிலும், இலங்கையிலும் நீண்ட நெடுங்காலமாக நிலவியதை இந்த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதர்களுக்கும், பெருங்கற்கால மனிதர்களுக்கும் இவ்விருநாடுகளிலும் இன்றும் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டங்களுக்கும் உயிரியல் அடிப்படையில் நெருங்கிய உறவும் தொடர்ச்சியும் உள்ளன. ஆரியர், திராவிடர் என்ற இனங்களின்
கருத்தியலும் வரலாறும் 122

பெரும் எண்ணிக்கையிலான இடப்பெயர்வு என்பது கற்பனை என்றே கொள்ள வேண்டும். கல்லாயுதங்களை உபயோகித்த ஆதிக் குடிகளுடன் சிறுசிறு சமுதாயக் குழுக்கள் வேற்றுப் பிரதேசங்களில் இருந்து வந்து கலந்தன. அவ்வாறு கலக்கும் போது தத்தம் தொழில் நுட்பங்களையும் பிற பண்பாட்டுக் கூறுகளையும் இக்குழுக்கள் கொண்டு வந்து உட்புகுத்தின என்று கொள்வதே பொருத்தமானது. இக்குழுக்கள் ஆரம்ப காலத்தில் ஆஸ்திரிக் முண்டாரி மொழிகளின் கலப்பான மொழிகளையும் முன்னை திராவிட மொழியினையும் பேசினர் என்றும் கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டகாலத்தில் இந்தோ -ஆரிய மொழியினையும் பேசினர் என்றும் கொள்ள இடமுண்டு. இதனை மொழியியல் மானிடவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
II A. இதுவரை நான் கூறியவை, நான் மேற்கொண்டு எடுத்துரைக்கவிருக்கும் பிரிதொரு விடயத்திற்குப்பின்னணியாக அமைகின்றன. அது பிறர் (the other) என்னும் விடயமாகும். பிறர் பகுதி அல்லது பிரதேசம் பிறரின் பொருளியல் என்பன பிறர் என்பதில் அடங்கும் முக்கிய கூறுகள் ஆகும்.கி.மு 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகள் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்த காலமாகும். இக் காலத்தில் ஏற்பட்ட இரு முக்கிய மாற்றங்களை இங்கு குறிப்பிடலாம். 1) ஆரம்பக் கட்டத்திற் பழைய இரும்புக்காலத் தொழில்நுட்ப கலாசாரம் குறுகிய இடப் பரப்புக்கள் கொண்டு சுருங்கியதாக இருந்தது. கி.மு. 4ஆம் ,5ஆம் நூற்றாண்டுகளில் இது பரந்து விரிவடையத் தொடங்கியது. விரிந்த பிரதேச எல்லைக்குட் பலவிதப்பட்ட சூழமைவுகளை உள்ளடக்கிய பருநிலைச் சூழல் 6.6lou Jib (Macro ecological Zone) 66injibgb6i gu gig 2 pods குலங்கள் பலவற்றின் சேர்க்கையான குறுநில அரசுகள் (Chiefdoms) 9 (56)JTéé7607. 2) இச்சமுதாயக் குழுக்கள் மத்திய மலைநாடு நோக்கி நகரத் தொடங்கின. இது இன்னோர் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். கி.மு 4ஆம் நூற்றாண்டளவிற் பழைய இரும்புக் கால கலாசாரம் அதன் பிரதான வள ஆதாரங்களான மாணிக்கக் கற்கள், உலோகங்கள், உலோகமல்லாத பிற கனிமங்கள் நிறைந்த மலைநாட்டுப் பகுதிக்கு இடம் பெயர்ந்து குடியேறி இருந்தன. இப்பகுதியில் மேற்குறித்த வளங்களோடு வாசனைத் திரவியங்களும் யானைத் தந்தமும் கிடைத்தன. இதே காலப்பகுதியில் இந்தியத்
கருத்தியலும் வரலாறும் 23

Page 14
துணைக்கண்டத்தில் மாணிக்கக் கற்கள், முத்து, சங்கு என்பன போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கான கேள்வியும் அதிகரித்ததோடு சந்தையொன்றும் விரிவடைந்தது. வட மத்திய இந்தியாவில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் நகர சமூகம் ஒன்று உருவாகியதால் இப்பொருட்களுக்கான சந்தை பெருகியது. இலங்கையின் மத்திய மலைநாடு நோக்கிய இடப்பெயர்ச்சியை துணைக் கண்டத்தின் விருத்திகளோடு நாம் இணைத்து நோக்குதல் வேண்டும். இப்புராதன சமுதாயக் குழுக்கள் மலைப்பகுதியில் வாழ்ந்த இடங்கள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மலைக் குகைகளிற் கிடைத்த பிராமிக்கல் வெட்டுக்களும் இம்மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன. பெருங்கற் பண்பாட்டு மையங்களுக்கு அருகிலே கல்வெட்டுக்களும், இம்மக்களின் குலமரபு அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தடயப் பொருட்களும் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் மூலம் பெருங்கற்பண்பாட்டுக்கால மக்கள் பெளத்த, சைவ மதத் துறவிகளைப் போவித்து ஆதரித்தவர்கள் என்பதும் புலனாகிறது. மத்திய மலைநாடு, சமவெளிப் பிரதேசம், கடற்கரைப் பகுதி ஆகியவற்றை இணைக்கும் இயற்கைப் பாதைகள் அமைந்த இடங்களிற் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் வர்த்தகப் பாதைகளும் வர்த்தக மையங்களும் விருத்தி பெற்றிருந்தன என்பதை இச்சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான சான்றுகள் இலங்கையின் பண்டைய வரலாற்றுக் காலத்தின் பொருளாதார நிலைமை யாது என்பது பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றன. இது தொடர்பாக எம்மிடையே நிலவும் தப்பான எண்ணங்கள் சில பின்வருமாறு: * கி.மு. 6ம் நூற்றாண்டு தொடக்கம் விருத்தியடைந்த
விவசாயப் பொருளாதாரம் இந்நாட்டில் இருந்தது. * இந்நாட்டில் விருத்தியுற்ற நீர்ப்பாசன முறை அக்காலத்தி
லிருந்தே இருந்து வந்தது. St. * வட மத்திய பிரதேசம் விருத்தியடைந்த மையப்பகுதியாக
இருந்தது. * இந்த அபிவிருத்திகளின் பயனாகச் சமூகக் கட்டமைப்பு, அரசு உருவாக்கம் என்பன நிகழ்ந்தன. அரசு பல கட்டமைப்பு நிர்மாண வேலைகளை நிறைவேற்றியது.
கருத்தியலும் வரலாறும் 24

அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மேலே கூறப்பட்டவாறான வரலாற்றுப் பரிமாணத்திற்கு மாறுபட்ட பார்வையை உருவாக்கியுள்ளன. மத்திய மலைப்பகுதி அதனை அடுத்துள்ள சிறிய குன்றுகளைக் கொண்ட பிரதேசம் கரையோரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் எமது பல்கலைக் கழகத்தின் தொல் பொருளாய்வுத் துறை நடத்திய ஆய்வுகளின் மூலம் பல புதிய சான்றுகளைக் கண்டெடுத்துள்ளது. விளிம்பு வலயங்கள் (peripheral Zones) என்று அழைக்கக்கூடிய இப்பகுதிகளில் நடத்திய ஆய்வுகளின் பயனாக ஏற்படும் சித்திரம் வேறுபட்டதொன்றாக உள்ளது. இப்பகுதிகள் யாவும் விவசாய வலயமான வரண்ட வலயத்தின் "குளங்கள் நிறைந்த பிரதேசத்திற்கு" அப்ப்ால் தூரத்தே 2) 6660)6). மலைப் பகுதிகளில் உற்பத்தி - விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடும் நகரங்கள், கிராமங்கள்என்பவற்றைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டிருந்தது. உயர் பெறுமதியுடைய நாணயம் பற்றிய குறிப்பு மலைப் பகுதியிற் கிடைக்கப் பெற்ற சாசனத்தில் குறிக்கப்படுகிறது. இச்சாசனம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்திற்குரியனவும் மலைப்பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டனவுமான சாசனங்களில் இந்தியாவின் மேற்குக்கரைத் துறைமுகங்கள் மூலம் வந்து சேர்ந்த நீண்டதூர வர்த்தகர்கள் பற்றியும்: குறிப்பிடப்பட்டுள்ளது. வளங்கள் காணப்படும் இடங்களையும், சந்தைகள், நுகர்வோர் வாழிடங்கள் அமைந்த பகுதிகளையும் இணைக்கும் வர்த்தக மையங்கள் இந்தச் சுற்றியல் பகுதிகளில் இருந்தன. இவை உற்பத்தியிலும் விநியோகத்திலும் பங்குபெறும் மையங்களாக விளங்கின. குளத்தோடு இணைந்த கிராமங்கள் பற்றி (Tank - Villages) கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கப் பகுதிச் சாசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்கள் இருந்த இடங்கள் நீர் ஊற்றுக்களையும் நீர் வழிந்தோடும் பகுதிகளையும் சார்ந்து காணப்பட்டன. பெரியநீர்த் தேக்கங்களை இப்பகுதி. களில் அமைக்கும் வேலைகள் கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்திலேயே நிகம்ந்தன. b பொறியியல் வளர்ச்சியர்
த்தி நிகழ்ந்தன.நீரிழ்? # தமிழ்ச் 岑 கருத்தியலும் வரல்ாறும் 125

Page 15
பின் கலிங்கு கண்டுபிடிக்கப்பட்டதும், கால்வாய்களை அமைப்பதில் நுட்ப அளவு முறைகளைக் கையாள்வதும் இக்காலத்தில் சாத்தியமாயிற்று. வடமத்திய மாகாணத்தின் செம்மண், கபில நிற மண் பகுதியைப் பண்படுத்திப் பயிரிடுதல் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சியினால்தான் சாத்தியமாயிற்று, அத்தோடுமண்ணை உழுது பண்படுத்துவதற்கான இரும்பாலான விவசாயக் கருவிகளும் தேவைப்பட்டன. இவ்விரு தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்குச் சிறிது முற்பட்ட ஒரு காலத்தில் தான் ஏற்பட்டது. ஆகவே முந்து வரலாற்றுக்காலச் சமூகத்தின் (Early Historic Society) பொருளாதார ஆதாரமாக விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து வேறுபட்ட மாற்று உற்பத்தி முறைமையொன்று அல்லது பலமுறைமைகள் நிலவி இருத்தல் வேண்டும், ஏற்றுமதியை நோக்கிய மதிப்புக்குரிய பண்டங்களின் உற்பத்தி இம்முறைமையின் கீழ் நிகழ்ந்தது. இந்தியாவினதும் மேற்கு ஆசியாவினதும் பெரிய சந்தைகளுடன் இணைப்பை ஏற்படுத்திய கைவினைப் பொருள் உற்பத்திப் பொருளாதாரமாக இது விளங்கியது என்று கூறலாம். இப்பொருளியல் பிற்காலத்தில் மத்தியதரைப் பகுதியுடனும் தென்கிழக்கு ஆசியாவின் சந்தைகளுடனும் தொடர்புகளை வளர்த்தது. இந்த உற்பத்தி அமைப்புமுறைதான் காமினி வம்ச பரம்பரை அரசின் உருவாக்கத்திற்கும் மகாதூபி கட்டடம் போன்ற பெரும் நிர்மாண வேலைகளுக்கும் பின்னணியாக அமைந்த உந்து சக்தியாக விளங்கியது.
கருத்தியலும் வரலாறும் 26

வரலாற்றியலும் இனத்துவமும் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தன
தேசியவாதத் திட்டங்களும் கடந்தகாலத்தை கட்டமைத்தலும்
G3LuTiTefifiuJiř sig2gff.676ö.67ão, éjj6øOT62Jriĝ5ø56ø7 "Historiography In a time Of Ethnic Conflict' என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்நூல் இன முரண்பாடும் வரலாற்றியலும்' என்ற தலைப்பில் தழிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் பக்கம் 2-10 வரையுள்ள பகுதியில் 1. வரலாற்றியலும் இனத்துவமும் 2. ஆரியர்திராவிடர் பற்றிய கண்டுபிடிப்பு என்னும் இரு விடயங்கள் பற்றி பேராசிரியர் எழுதியிருப்பதை இங்கு கட்டுரையாகத் தருகிறோம்.
இனத்துவ அடையாளம்(Ethnic Identity) உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சி முன்று கட்டங்களாக ஏற்படுகிறது என்கிறார் பேராசிரியா. அவை
1. gutbust7606 Primary Form 2. LUTITZ56ørstfløp6v - Archaic Form 3. Cupg5.iii.25 stop6 - Mature Form
இந்த முன்று வடிவங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது வரலாற்றுச் சூழலில் ஒரு வரிசைக் கிரமத்தில் - நேர் கோட்டில் வளர்ச்சியுறுகின்றன என்று கருத வேண்டியதில்லை. முதிர்ந்த நிலையை இனத்துவ அடையாளம் பெறும்போது சமுகத்தில் சில முக்கிய வளர்ச்சி நிலைகள், மாற்றங்கள் உருவாகின்றன. தென் ஆசியாவில் காலனித்துவ, பின்காலனித்துவவரலாற்றுச் சூழலில் தான் இனத்துவத்தின் முதிர்ந்த வடிவம் உருவாகியது.
இலங்கையில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டிலும் தோன்றிய சிங்கள பெளத்த தேசிய வாதமும் (அதன் எதிர் விளைவாக)
(BuJrTdfliffluuii sg24,ri.6J.6T6ib.6Těř.@g560076)Jiiĝ5ĝ5607 6T(pĝ59uu Historiography in a time of ethnic conflict - Constraction of the past in contemporary Sri Lanka (1994) எனும் நூலின் தமிழாக்கம் இனமுரண்பாடு வரலாற்றியலும்'-தற்கால இலங்கையில் கடந்தகாலம் பற்றிய கட்டமைப்பு (2000) எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இதனை பேரா.எம்.ஏ நுஃமான் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் நூலில் இருந்து வரலாற்றியலும் இனத்துவம் எனும் தலைப்பிலான பகுதியிலிருந்து சிலபகுதி இங்கு பிரசுரமாகின்றது.
கருத்தியலும் வரலாறும் 127

Page 16
தோன்றிய தமிழ் தேசிய வாதமும் வரலாற்றை தம் தேவைக்கேற்ப மீள் கட்டமைப்புச் செய்கின்றன. தத்தமக்கென ஒரு செவ்வியல்யுகம் இருந்தது என்று கண்டுபிடிப்புநிகழ்த்தப்படுகிறது என்கிறார் பேராசிரியர்.
இந்தக் கண்டுபிடிப்பின் போது இன்று வளர்ச்சியுற்ற நிலையில் உள்ள முதிர்ந்த இனத்துவ வடிவம்'இதே வடிவில் பண்டைக்காலம் முதலே இருந்து வந்தது என்பதை தேசியவாதம் நிறுவ முனைகிறது என்கிறார் பேராசிரியர். அவர் தந்துள்ள ஆரம்பநிலை, புராதனநிலை, முதிர்ந்தநிலை என்ற மூன்று கட்ட பரிணாமமுறை இனவாதக் கருத்தியலை புரிந்து கொள்ளவும் இனவாதக் கருத்தியலின் கட்டுடைப்பு ஒன்றை செய்வதற்கும் விமர்சிப்பதற்கும் உதவியாக அமைகிறது. இலங்கையில் இனத்துவ தேசிய வாதத்தின் எழுச்சியின் போது 'ஆரியர் திராவிடர்' என்ற கண்டுபிடிப்புகள், மொழி ஆய்வு மக்கள் குழுமங்களை எதிரெதிர் நிலையில் நிறுத்துவதற்கு எப்படிப் பயன்பட்டது என்பதையும் பேராசிரியர் விளங்கப்படுத்துகிறார். - தொகுப்பாளர்கள்
வரலாற்றியலும் இனத்துவமும்
இலங்கையின் வரலாறு பற்றிய இனத்துவவாத விளக்கங்கள் சிலவற்றைப் பரிசீலனை செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இனத்துவவாத வரலாற்றியலைக் கட்டவிழ்த்துப் பார்ப்பது, ஆரம்பகால வரலாற்றில் இனத்துவக் குழுமங்கள் இருந்தமையை நிராகரிப்பதாகாது. சில அண்மைக்கால எழுத்துகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கரின் எழுத்துகளில் இனத்துவம் (ethnic) என்பதும் (உடற்கூற்றியல் அடிப்படையிலான) மரபினம் (Race) என்பதும் பெரும்பாலும் ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் முன்நவீன காலச் சூழலில் இச்சொல்லைப் பயன்படுத்துவது கேள்விக்குள்ளாக்கப்பட்டும் உள்ளது. எவ்வாறாயினும், இனம் (Ethnos) என்ற சொல் வரலாற்றில் ஹெறொடோரோஸ், அரிஸ்டாட்டில் ஆகியோர் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் கிரேக்க நாட்டில் இச்சொல் பலவகையான குழுக்களைக் குறிக்கப் பயன்பட்டது. தேனீக்களின் கூட்டம், பறவைகள் அல்லது விலங்குகளின் தொகுதி, ஒன்றாக வாழும் ஒரு தொகையான மக்கள், தோழர்களின் குழு போன்ற எதையும் அது குறித்தது. காலப்போக்கில் இச்சொல் அன்னிய அல்லது பிறநாட்டு மக்களைச் சுட்டவும் பயன்பட்டது. குறிப்பாக கிரேக்கர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தப்பட்ட பாபறோய் (barbaroi) எனப்பட்டவர்களைச் சுட்டியது. பின்னர் யூத- கிறிஸ்தவ சமுதாயங்களுக்குப்புறம்பான எல்லாரையும் குறித்தது. (Liddeland Scott 1968:480, Hall 1991:3-13, Smith 1986:21) இவ்வகையில், முன்நவீன கால
கருத்தியலும் வரலாறும் 128

வரலாற்றில் இனத்துவ வகைப்பாடுகளை முற்றாக நிராகரிப்பதை விட வரலாற்று ரீதியாக வேறுபாடும் அவற்றின் பொருளை இனங்காண முயல்வதும், வலைாற்றியலில் இனம் (ethnos) இனத்துவம் (ethnic) ஆகிய சொற்களின் பயன்பாடுபற்றி மிகுந்த கவனத்துடனும் தெளிவுடனும் இயங்குவதும் அவசியமாகும்.
இக்கட்டுரையில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் இனத்துவத்தின் மூன்று பருமட்டான வரலாற்று வடிவங்களை இனங்காண்பதன் அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றை ஆரம்ப(Primary)புராதன (archaic) முதிர்ந்த (Mature) இனத்துவ வடிவங்கள் என நாம் அழைக்கலாம். கடைசியாகக் குறிப்பிட்ட இனத்துவ வடிவம் தென் ஆசியாவில் காலனித்துவ, பின்காலனித்துவ காலகட்டத்துக்குரியது. இம்மூன்று இனத்துவ வடிவங்களும் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களில் வரிசைக் கிரமமாக வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இனத்துவத்தின் "முதிர்ந்த" வடிவத்தை அதன் புராதன வடிவத்தில் இருந்து வேறுபடுத்தும் முக்கியமான உருமாற்றமும் நிகழ்ந்துள்ளது. இனத்துவத்தின் ஆரம்ப பரிணாமம், அரச நிறுவனங்களின் தோற்றத்துடனும், குறிப்பாக விஸ்தரிப்பு வாதத்துடனும் (Expansionism) நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது என்று கருத இடம் உண்டு.
ஆரம்ப இனத்துவக் குழுமப் பகுப்புகள் அரச நிறுவனத்தின் வியாபக்தின் விளைவாகத் தோன்றிய "வெளிப்புறம்" பற்றிய பிரக்ஞையின் வளர்ச்சியினதும், அந்த அரச நிறுவனத்துக்கு வெளியே உள்ள மக்களை வகைப்படுத்த வேண்டிய தேவையினதும் விளைவுகள் எனலாம். ஒரு இனக்குழுமத்தை குறிக்கப் பிறரால் பயன்படுத்தப்பட்ட லேபல்கள் அந்த இனக்குழுமத்தின் உள்ளே உள்ளவர்களால் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக இருக்கலாம். இதுபோல பக்கத்துநாடு ஒன்றுக்குச் செல்லும் ஒருவன் அவனது சொந்த நாட்டின் பெயரால் அடையாளம் காணப்படலாம். அவனே கூட அந்த அடையாளத்தைத் தன்னைச் சுட்டப்பயன்படுத்தலாம். ஆனால் அவன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியதும் அந்த லேபல்கள் தம் முக்கியத்துவத்தை இழந்து விடும்.அக்குழுமத்துக்கு வெளியே உள்ளவர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த லேபல் உணர்த்தும் அக்குழுவின் இறுக்கமான தன்மை, பெரும்பாலும் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கவில்லை.
பெரிய அளவிலான அரசியல் உருவாக்கங்களின்போது தோன்றிய புராதன இனத்துவக் கட்டத்தில் இனக் குழுமங்கள் அவ்வரச
கருத்தியலும் வரலாறும் 129

Page 17
நிறுவனத்துக்கு வெளியில் இருந்து மட்டுமன்றி அதன் உள்ளிருந்தும் இனங்காணப்பட்டன. இப்பெரும் அரசுகளின் உள்ளிருந்த இனக்குழுமங்கள் சிறுபான்மை இனக்குழுமங்களாகும். இவற்றுட் சில வியாபகமடைந்து கொண்டிருந்த அரசுக்குள் இணைக்கப்பட்ட பிறகும் அதனோடு ஒன்றிணைந்து கலப்பதை எதிர்த்து நின்ற அரசுகளின் உறுப்பினராக இருந்திருக்கலாம். இத்தகைய நிலமைகளில் இனத்துவ அடையாளம் என்பதை பழங்குடியுடன் (tribal), அல்லது முன்னைய அரசியல் அடையாளங்கள், மற்றும் ஒவ்வொரு குழுவுக்கும் உரிய குறிப்பான கலாசார நடைமுறைகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தலாம்.
வெல்லப்பட்ட குழுமங்கள் அடிக்கடி ஒரு பேரரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் குடியகல்வுக்கும். மீள் குடிஅமர்விற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டன. குடியகல்வு நெடுந்துர வர்த்தகத்தின் உடன் விளைவாகவும் நிகழ்ந்தது. வர்த்தகப் பாதைகளில் குடிப்பெயர்வும் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்கள் போன்ற வினைத்திற உற்பத்தியாளர்களின் மீள் குடியமர்வும் வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை. இத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெற்றிக்கொள்ளப்படுவதற்கு அல்லது குடியமர்வதற்கு முந்திய காலகட்டம் பற்றிய நினைவுகள் பாதுகாக்கப்பட்டு அத்தகைய இன்க்குழுமங்கள் மத்தியில் வாய்மொழியாகக் கடத்தப்பட்டன. ஒரு குழுவின் தனித்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் செயற்பாடுடைய ஒரு முக்கிய காரணியாக இத்தகைய கடந்த காலம் பற்றிய நினைவுகள் இருந்திருக்க முடியும். பேரரசு உருவாக்கங்கள், வென்று அடிமைப்படுத்துபவர்களின் இத்தகைய "குறுகிய வரலாற்று மரபுகளை" சந்தேகத்துடன் நோக்கின. இவை இலக்கியங்களாக பாதுகாக்கப்படுவதைத் தடுக்கவும் சிலவேளைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இனத்துவ உருவாக்கத்தின் புராதன நிலையில், சிறிய சிறிய உள்ளகக் குழுமங்கள் பெரிய குழுமங்களால் உள்வாங்கப்படுவதை அரசுகள் பெரிதும் ஆதரித்தன. ஆயின் இதிலும் ஒரு முரண்நிலை காணப்பட்டது. அதாவது இத்தகைய உள்வாங்கலுக்குச் சமாந்தரமாகப் புதிய இனக்குழுமங்களை விஸ்தரிப்புவாதம் உள்ளுக்குள் கொண்டு வந்தது. விஸ்தரிப்பு வாதம் அச்சுறுத்தப்பட்ட அரசுக்குள் இனத்துவமயமாக்கல் போக்கைத் துண்டக்கூடியதாகவும் காணப்பட்டது. குறிப்பாக தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது இது நிகழ்கின்றது. சாத்தியமான அல்லது உண்மையான ஆக்கிரமிப்
கருத்தியலும் வரலாறும் 130

பாளர்களிடம் இருந்துவரும் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான படைதிரட்டல் கூட இத்தகைய இனத்துவ மயமாக்கல் முறைமைக்கு மேலும் உதவியிருக்க முடியும். w
புராதன இனத்துவத்தின் ஒரு முக்கியமான அம்சம் இனத்துவப் பிரக்ஞையின் வளர்ச்சியைப் பொறுத்தவரை அதன் பலஹினமான தன்மையாகும். சமூகரீதியான பாகுபடுத்தல்கள். படிமுறை அமைப்பாக்கங்கள் என்பன விருத்தியுறும் சூழலிலேயே புரதான இனத்துவம் வளர்ச்சியடைந்தது. இச்சூழல் இனத்துவப் பிரக்ஞை வளர்ச்சியடைவதைப் பெரிதும் மட்டுப்படுத்தியது. இனத்துவப் பிரக்ஞைக்கு அத்தியாவசியமான "ஒன்றுபட்டவர்கள்" என்ற உணர்வு, இக்காலகட்டத்தில் குடும்பம், உறவு முறை என்பவற்றின் அடிப்படையிலேயே வரையறுக்கப்பட்டது. இத்தகைய புராதன இனத்துவச் சூழல்களில் ஒரு குழுவினரின் ஒன்றுபட்டவர் என்ற உணர்வு புனைந்துரைப்பாங்கான மூதாதையரின் பொதுவழித்தோன்றல்கள் என்ற வகையிலேயே சிறிய பழங்குடிப்பாங்கான (Tribal) ஒரு குழுமத்தை சிற் சில அகவேற்றுமைகளுடன் இவ்வரைவிலக்கணத்துக்குள் இணைத்துக்கொள்வதும் அக்குழு உறுப்பினர்கள் அத்தகைய ஒரு வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதும் பாரியபிரச்சினைகள் எவற்றையும் ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், ஒரு முன் நவீனகாலச் (Premodern) சூழ்நிலையில் அரசியல் அதிகாரம், மூலவளங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு என்பவற்றை பொறுத்தவரையில் தீவிர அசமத்துவமும், வர்ணம், ஜாதி, என்ற அடிப்படையிலான சமூக அந்தஸ்து வேறுபாடுகளும் நிலவிய பின்னணியில் வாழ்ந்த ஒரு பெரிய குழுமத்தினுள். இத்தகைய "ஒன்றுபட்டவர்கள்" என்ற உணர்ச்சி வளர்வதற்கான வாய்ப்புகள் முற்றிலும் வேறாக இருந்தன. இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை ஒரு ஆட்சியாளனுக்கு விசுவாசமாகக் கீழ்ப்பட்டு வாழ்வோர் என்ற பொதுத் தன்மையைவிட வேறுவழிகளில் தாம் ஒன்றுபட்டவர்கள் என்ற உணர்வு இத்தகைய தனித்தன்மையுடைய சமத்துவமற்ற குழுமங்களிடையே தோன்றுவது அபூர்வமாகும். புராதன சூழலைப் பொறுத்தவரையில் இனத்துவ உணர்வுகற்றறிந்தோர் மத்தியில் இருந்த சிறுகுழுக்களுக்குள்ளேயே பெரிதும் மட்டுப்பட்டிருந்தது என்பதே இதன்பொருளாகும்.
மேம்பட்டதும், பொதுமைப்படுத்தப்பட்டதுமான ஓர் இனத்துவப் பிரக்ஞைதான் "முதிர்ந்த" இனத்துவத்தை அதன் புராதன
கருத்தியலும் வரலாறும் 31

Page 18
வடிவத்திலிருந்து திட்டவட்டமாக வேறுபடுத்துகின்றது. மரபினர் பற்றிய எண்ணக்கருவுடனும் மரபின் அடிப்படையில் விபரிக்கப்படும் சமத்துவ, அசமத்துவக் கருத்துக்களுடனும் இனத்துவ அடையாளம் எந்த அளவுக்கு இணைக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு இனத்துவப் பிரக்ஞையும், உயர்ச்சியடையும். கல்வி, எழுத்தறிவு ஆகியவற்றின் வியாபகமும், அவற்றோடு சேர்ந்து வளர்ச்சியுறும் அச்சுச்சாதனங்களின் செல்வாக்கும் இனத்துவப் பிரக்ஞை தீவிரமான முறையில் விருத்தி. யடைவதற்கு உதவுகின்றன. வரலாற்று ரீதியாக, இக்காலகட்டத்தில் மட்டும்தான் அரசியலில் வெகுஜனங்களைக் கிளர்ந்தெழச் செய்யும் உயர்ந்த அளவு வலுவுடன் கூடிய பரந்துபட்ட ஜனரஞ்சக சக்தியாக இனத்துவம் மாறுகின்றது. இதற்கு முந்திய கட்டமான புராதன இனத்துவத்தில் காணப்படும் பண்புகளில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. இவ்வகையில் முதிர்ந்த இனத்துவம் மட்டும்தான், இனத்தேசியவாதம் என்று வகைப்படுத்தக் கூடிய அறிவுத்துறை, கலாசாரம் மற்றும் அரசியல் இயக்கங்களை உருவாக்கும் திறனை விருத்தி செய்கின்றது."
"முதிர்ந்த" கட்டத்தில் இனத்துவப் பிரக்ஞையின் வளர்ச்சியில் பொருளாதாரக் காரணிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது சில குறிப்பிட்ட சூழல்களில் இன்னும் அதிக முக்கியத்துவம் உடைய பிறிதொரு அம்சமாகும். சமூகத்தில் வர்க்க வேறுபாடு வலிமை பெறும்போது: வர்க்கத்துக்கும்" "இனத்துவத்துக்கும்" இடையே உள்ள உறவுமிகுந்த சிக்கலானதாக இருப்பினும், வசதி கருதி இங்கு இரண்டு கோட்பாட்டு ரீதியான வகைகளை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். சில குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களில் ஒரு பல்இன அரசின் உள்ளிருக்கும் ஒரு இனத்துவக் குழுமம் ஒரு வர்ககத்தோடு ஒப்பு நோக்கும் ஒரு நிலையைப் பெற்றிருக்க முடியும். அத்தகைய சூழல்களில் வர்க்கப்பிரிவுகளும் இனத்துவப் பிரிவுகளும் ஒன்றை ஒன்று தாங்கி நிற்கும். இதன் மூலம் ஒரு பிரிவு மற்றப் பிரிவின் சாயலைப் பெறுவதோடு, உண்மையில் மற்றப் பிரிவாகவே தன்னைக் காட்டிக்கொள்ளும் நிலைமை தோன்றும்.
இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் பொருத்தமான இரண்டாவது வரலாற்று வகை பின்வருமாறு அமைகின்றது. இங்கு வர்க்கமும் இனத்துவமும் சமுகத்தைக் கூறுபடுத்தும் பிரிவுகளாக உள்ளன. ஆகவே, மேலே கூறப்பட்ட முதலாவது வரலாற்று வகையில் காணப்படுவது போல் இங்கு இவை இரண்டும் ஒரே தன்மை உடையவை அல்ல.
கருத்தியலும் வரலாறும் 32

வர்க்கப் பிரிவுகள் இனத்துவக் குழுமங்களையும் இனத்துவப் பிரிவுகளையும் சமூக வர்க்கங்களையும் ஊடறுத்துச் செயற்படும் சந்தர்ப்பங்களில் இவற்றுள் ஒன்று பெறும் முதன்மை அல்லது முன்னுரிமை மற்றது தொடர்பான பிரக்ஞையின் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இவ்விரு வரலாற்று வகைகளுள் எது இடம்பெறும் என்பதை சமூக வளர்ச்சி மட்டமும், வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்படும் காரணிகளுமே பொதுவாகத் தீர்மானிக்கின்றன. ஒப்பீட்டளவில் மேலாதிக்கம் பெற்ற குழுமங்களிடையே காணப்படுவதைவிட கீழ்நிலைப்படுத்தப்பட்ட (SubOrdinate) குழுமங்களிடையே ஒரு குறைந்த வேகத்தில் காணப்படும் வர்க்கப்பிரக்ஞையின் வளர்ச்சிநிலை இந்த நிலைமையை ஒரளவுக்குத் தெளிவுபடுத்தும். இருப்பினும், கோட்பாட்டு ரீதியில் சாத்தியமானதாகத் தோன்றும் மாற்று வழிகளுள் ஒன்றை அல்லது சிலவற்ற்ை முதன்மைப்படுத்துகின்ற காரணிகள் எவை என்ற முக்கியமான பிரச்சினை பற்றிய ஓர் ஆழமான கோட்பாட்டு ரீதியான விளக்கத்தைப் பெற மேலதிக ஆய்வு அவசியமாகும். இலங்கை நிலைமையைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு ஆய்வில் குறிப்பான கவனம் அவசியமாகும். மேலே குறிப்பிடப்பட்ட கோட்பாட்டு ரீதியான வகை மாதிரிகளுடன் தொடர்புடைய சிக்கல்களைப்புரிந்து கொள்வதற்கு இத்தகைய ஆய்வு உதவும்.
மிக அண்மைக்கால இலங்கை வரலாற்றில் இனத்துவ அடிப்படை யில் வெகுஜன எழுச்சிகளை ஏற்படுத்துவது முதன்மை பெற்றுவந்திருக்கின்றது. இது தொடர்பாக குட்டி முதலாளித்துவ சக்திகளின் பங்கு பற்றி ஆய்வு செய்த கலாநிதி குமாரி ஜயவர்த்தன (1983) எல்லா இனக் குழுமங்களையும் ஒன்றிணைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் 1930கள் வரை பங்கு பற்றிய தொழிலாளர் வர்க்கம் எவ்வாறுபடிப்படியாக இனத்துவ அரசியல் பிடிக்குள் சிக்குண்டது என்பது பற்றிக் குறிப்பிட்டுள். ளார். அடுத்துவந்த காலகட்டத்தில் கீழ்நிலைப்படுத்தப்பட்ட குழுமங்களில் வர்க்கப் பிரக்ஞையின் வளர்ச்சியைத் தடுத்த காரணிகளுள் இனத்துவவாதம் (ethnicism) முதன்மையானதாக மாறியது. பிறிதொரு கோணத்தில் இருந்து நோக்கினால், இனத்துவ அடிப்படையில் வெகுஜன எழுச்சியை ஏற்படுத்துவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தின் நலன்களையும் அதிகாரத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்பதையும், உண்மையில் பெருமளவு இவற்றுக்குத் துணையாகச் செயற்பட்டது என்பதையும் காணலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இனத்துவப் பிரக்ஞை சில வர்க்கங்களின் நிலையை உயர்த்தி
கருத்தியலும் வரலாறும் 33

Page 19
உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முக்கிய சாதனமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இனத்துவத்துக்கும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை இது துலக்கமாக வெளிக்காட்டுகின்றது.
கீழைத்தேயவியல் ஆய்வாளர்களும் இலங்கையில் முதிர்ந்த இனத்துவத்தின் தொடக்கமும்; ஆரியர், திராவிடர் பற்றிய கண்டுபிடிப்பு
தென் ஆசியாவில் "முதிர்ந்த" இனத்துவத்தின் தோற்றத்திலும், இனத்துவ உணர்வின் வளர்ச்சியிலும் கீழைத்தேயவியல் ஆய்வில் காணப்பட்ட சில பிரதான போக்குகள் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற கீழைத்தேய புலமைத்துறை உற்பத்திகளுள் ஒன்று ஆரியர் பற்றிய கண்டுபிடிப்பாகும். 1788ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, இந்திய, ஐரோப்பிய, மொழிகளுக்கிடையே காணப்படும் அமைப்புரீதியான உறவுகள் பற்றிய வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் விரிவுரை ஆசிரியாவிலும் ஐரோப்பாவிலும் ஒரு புதிய சிந்தனைப் போக்கின் தொடக்கத்தைக் குறித்தது. (Gunawardana) 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பதசாய்தங்களில் ஆரியர் என்ற பதம் ஒற்றுமையுடைய மொழிகள் பலவற்றைப் பேசிய பரந்துபட்ட மக்கள் குழுவினரைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டது. (Poliakov 1974-193).இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த செமிற்றிக் அல்லாத மக்களின் பொது மூலம் பற்றிப் பேசிய இப்புதிய கோட்பாடு ஹெகல் போன்ற ஆர்வமுடைய ஆதரவாளர்களைக் கவர்ந்து மிகுந்த செல்வாக்குப் பெற்ற கோட்பாடாக வளர்ந்தது. ஹெகலைப் பொறுத்தவரை இந்திய, ஜேர்மன் மக்களின் பொது மூதாதையரும், ஆசியாவில் இருந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றதும் மறுக்க முடியாத SD 6Øö76ØDuDa56m TG5b. (unwidersprechliches faktum Hegel 1955: 163)
தென்னாசிய புலமைத் துறையிலும் அரசியலிலும் ஆரியக் கோட்பாடு மிகவும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியமைக்கு மாக்ஸ் முல்லரின் நூல்கள் பெரிதும் காரணமாயின. கீழைத்தேய ஆய்வுத்துறையில் தன் காலத்தில் இவரே மிகுந்த ஆதிக்கம் உடையவராக விளங்கினார். முல்லர் "ஆரிய" இனம் என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்தினார். மொழிகளுக்கிடையிலே காணப்படும் உறவு, அந்த மொழிகளைப் பேசும் மக்கள் ஒரு பொதுவான மரபினத்தை மூலமாகக் கொண்டிருப்பதைக் குறிப்பதாக அவர் கருதினார். அவருடைய கருத்துப்படி ஆங்கிலேயரதும் வங்காளிகளினதும்
கருத்தியலும் வரலாறும் 134

நாடிகளில் ஒரே இரத்தமே ஓடியது. பல ஆண்டுகளின் பின்னர் முல்லர் ஆரிய இனம் என்ற பதத்தைப் பயன்படுத்துவது பற்றிச் சில ஐயங்களை வளர்த்தாராயினும் "மரபினம்" என்ற சொல்லைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தார். தனது சந்தேகங்களை வெளிப்படுத்திய அவரது கட்டுரைகளில் ஒன்று "நமது இனத்தின் தொட்டில்" என பெயரிட்ட ஒன்றைத் தேடுவதற்கான முயற்சியாகவே முற்றிலும் காணப்படுகின்றது என்பது இங்கு நம் கவனத்துக்கு உரியது (Muler 1888 91,120-1; Huxley 1901-281). ஆரிய இனம் என்ற எண்ணக்கரு பற்றிமாக்ஸ் முல்லர் வெளியிட்ட ஐயங்கள் எவையாய் இருப்பினும் ஆரியக்கோட்பாட்டின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முடியாத அளவு அவை காலதாமதமாகிவிட்டன. அதற்குள் ஆரியக் கோட்பாடு மிகுந்த பிரபலம் பெற்றுவிட்டது.
ஆரியர் என்ற கண்டுபிடிப்பைத் தொடர்ந்து திராவிடர் என்ற கண்டுபிடிப்பும் விரைவிலேயே நிகழ்ந்தது. 1856ல் றொபேட் கால்ட்வெல் (1956:3-6) தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 12 தென் இந்திய மொழிகளைத் "திராவிட மொழிக் குடும்பமாக" வகுத்தார். தென்இந்திய மொழிகள் இவ்வகையில் வகைப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆரிய, திராவிடக் கோட்பாடுகள் பிரபலப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மொழிகள், இனங்களுடன் சேர்ந்து மிக எளிதாகக் குழப்பப்பட்டன. இக்கோட்பாடுகளின் செல்வாக்கின் முக்கியத்துவத்தை ஹென்றி சும்னர் மைன் (1881:209) என்பவரின் வார்த்தைகளில் சுருக்கிக் கூறலாம். "மொழி ஆய்வு முன்னர் ஒருபோதும் சிந்திக்கப்பட்டிராத வகையில் மக்களைக் குழுமங்களாகப் பிரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது" என்பது அவரது கருத்தாகும்.
ஆரியர்களையும், திராவிடர்களையும் பற்றிய துணைக்கோட்பாடுகளும் அவை அறிமுகப்படுத்திய புதிய இன வகைப்பாடுகளும் தென் ஆசியாவில் கடந்த காலத்தைப் பற்றிப்புரிந்து கொள்வதிலும் அதைக் கட்டமைப்பதிலும் அடிப்படையான மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாயின. இவ்வாறு மக்களை ஆரியர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் வகைப்படுத்தும் இந்த இரட்டை வகைப்பாட்டின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் வேறு எந்தத் தென்னாசிய நாடுகளையும் விட இலங்கையிலேயே அதிக தீவிரத்தன்மை பெற்றது. இத்தீவின் வேறுபட்ட மக்கள் பிரிவினர் இவ்விரு பிரதான குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர். அதே வேளை, ஒரு சாராரில் இருந்து மறுசாராரைத் திட்டவட்டமாக வேறுபடுத்தக்கூடிய மரபினங்களாகவும்
கருத்தியலும் வரலாறும் 35

Page 20
அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அதாவது, சிங்களவர் எல்லாரும் ஆரியராகவும் தமிழர் எல்லாரும் திராவிடர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இவ்வாறாக, இனக்குழுமமாக்க முறைமையில் புதிய அபிவிருத்திகளைத் தூண்டுவதில் கீழைத்தேயவியல் சட்டகத்துள் நடைபெற்ற புலமைத்துறை முக்கியமான முறையில் பங்களிப்புச் செய்யத் தொடங்கியது. மறுபுறத்தில், இக்காலப் பகுதியில் பரிணமித்துக் கொண்டிருந்த இனத்துவத்தின் முதிர்ந்த வடிவம் இத்தீவின் கடந்த காலத்தை திட்டவட்டமான முறையில் கட்டமைக் கத் தொடங்கியது.
அடிக்குறிப்புகள்
1.
இக் கலைச்சொற் பயன்பாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றிய விளக்கங்களுக்குப் பார்க்கவும் சின்டர் (1983), யூன் (1990). உதாரணமாக இலங்கைக்கு வரும் தென் இந்தியரைக் குறிக்கப் பண்டைய இலங்கை வரலாற்று நூல்களில் சோழிகா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல, இலங்கையில் இருந்துவருவோரைக் குறிக்க இந்திய சாசனங்களில் சைம்ஹலக, ஈழ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய வாதத்தின் வளர்ச்சியிலும் குறிப்பாக "சுதேச மொழிகளைப் பேசுவோரின்" அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவை முன்னணிக்கு வந்ததிலும் "அச்சு முதலாளித்துவத்தின்" (Print Capitalism) செல்வாக்குப் பற்றி அன்டர்சன் (1992:37-46) கூறும் கருத்துக்கள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. இக்கட்டுரையில் கொன்னர் (1973) உருவாக்கிய "இனத் தேசியவாதம்" (ethnonationalism) என்ற சொல் "தேசிய வாதத்தின்" ஒரு துணை வகையை உருவாக்கும் அரசியல், பண்பாட்டு இயக்கங்களைச் சுட்டப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயக்கங்கள் "நாட்டெல்லைக்குட்பட்ட (35ðflu g)6JIsÉ a56lhL6ör (territorial nations) (fluólā 1986:134-8) தொடர்புடைய இயக்கங்களில் இருந்து வேறுபட்டவையும் அவற்றுக்கு எதிரானவையுமாகும். இச்சொற் பயன்பாடு பற்றிய ஆழமான விவாதங்களுக்குப் பார்க்கவும் யுன் (1990), இலங்கை அரசியலின் இன்றையப் போக்குகள் பற்றிய தனது ஆய்வில் ஹென்னாயக்க (1991) இப்பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
கருத்தியலும் வரலாறும் 136

கால்டுவெல்லின் கற்பனைக் குழந்தை
பேரா.இரா.சுந்தரம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் அண்மையில் வெளியிட்டுள்ள இந்திய ஆரியர் (ஆ.பழனியப்பன், 2004), தமிழர் தம் ஆங்கிலச் சார்பு (முத்தையா, 2003) என்ற இரு நூல்களையும் படித்தேன், இரண்டையும் குறித்துச் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றாலும் இரண்டு பேரும் ஒரே சிந்தனையோட்டத்தில் தெரிவித்துள்ள ஒரு கருத்துப் பற்றிய என் கருத்தைப் பதிவு செய்வது இளந்தலைமுறையினருக்கு உதவும் என்று நம்புகிறேன்.
இரண்டு பேரும் ஒன்று போல் தெரிவித்துள்ள அந்தக் கருத்து கால்டுவெல்லின் திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் 5ut 56udsab600TLD (A Comparative Grammar of dravidian or South Indian Family of Languages- 1856) | ''[i][óiulg5T(g5úb. @ibg5 Ib/T6ð06).j6f6).Jfbgy 148 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே போல் ஒரு விரிவான ஒப்பிலக்கண நூல் இம்மொழி குறித்து 2003 வரை வெளிவரவில்லை. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் டாக்டர் பி.எச்.கிருஷ்ணமூர்த்திThe Dravidian Languages என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
கால்டுவெல் பயன்படுத்தியுள்ள 'திராவிடம்' என்பதுதான், பழனியப்பன், முத்தையா இருவரையும் ஒரே கோட்டில் நிறுத்தியுள்ளது. திராவிடம் கால்டுவெல்லின் கற்பனைக்குழந்தை' என்று பழனியப்பன் கூறுகிறார். முத்தையாவோ, இந்த ஒப்பிலக்கண நூலை எழுதக் கால்டுவெல்லுக்கு ஓர் அரசியற் பின்னணி உண்டு சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பை ஊட்டுவது, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆதரவளிப்பதுதான் அவரது நோக்கம். தமிழ்
பேரா.இரா.சுந்தரம் என்.சி.பி.எச் வெளியீடாக வந்த இரு நூல்களை மையமாகக் கொண்டு கால்டுவெல்லின் கற்பனைக் குழந்தை'எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை உங்கள் நூலகம்'மார்ச்,ஏப்ரல் 2005 இதழில் வெளிவந்தது. பொருத்தப்பாடு கருதி இக்கட்டுரை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
கருத்தியலும் வரலாறும் 137

Page 21
வழக்காற்றில் இல்லாத திராவிடம் என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார் (பார்க்க : கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி). முத்தையாவின் இந்தக் கருத்துரைக்கு ஆசான் கைலாசபதி, அவர் இதை வேறு சொற்களில் தமது (காலந்தோறும் கடவுள் வாழ்த்து) என்ற கட்டுரையில் (அடியும் முடியும்) அரசியல் சார்ந்து வெளிப்படுத்தினார்.
திராவிடம்' கால்டுவெல்லின் கற்பனையுமன்று, கண்டுபிடிப்புமன்று. திராவிடம் என்கின்ற சொல் பல்வேறு வடிவங்களில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்திய ஆவணங்களிலும், வெளிநாட்டினர் பயணக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள சொல்லாகும். மனுசுமிருதி பல பழங்குடி மக்களை பட்டியலிடும் போது, 'திராவிட' என்ற குடிமக்களையும் குறிப்பிடுகிறது.யவான்சுவாங் (சீன யாத்திரிகர், கி.பி 7ஆம் நூற்றாண்டு) தமது பயணக்குறிப்பில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதியை திராவிட என்றழைக்கிறார். குமரிலபட்டர் (கி.பி.7 ஆம் நூற்றாண்டு) பாணினி நூலுக்கு எழுதிய உரையில் திராவிட பாஷா எனக் குறிப்பிடுகிறார். 'தெலுங்கு மற்றும் திராவிட/தமிழ் மொழி என விளக்கமும் தருகிறார். கமில் சுவலபில் இதுதிராவிட பாஷா என்றில்லை'ததி அதறிதிராவிடாதி பாஷாயாம் எவ' என்றே உள்ளது எனவும், இதற்கு ஆகவே, திராவிடம் மற்றும் பிற மொழிகளில்' என்பது பொருள் என்றும் குறிப்பிடுகறிார். திராவிடாதி என்பது தமிழையும் பிற மொழிகளையும் குறிக்கும்.
வேதசாஸ்திரநூல்கள், மிலேச்சர்கள் பேசும் மொழியில் திராவிடம் என்பதைச் சேர்க்கும் பைசாச மொழிகளில் திராவிட மொழியும் இடம்பெறும். காரவேலரின் கல்வெட்டு (கி.மு.169), "த்ரமிள தேச சங்காதம்' என்று தமிழ் மன்னர்கள் அயலார் படையெடுப்பை எதிர்க்க அமைத்த கூட்டணியைக் குறிப்பிடுகிறது. அவந்திசுந்தரிகதா, "த்ரமிளதேசம்' என்று தொண்டை நாட்டைக் குறிப்பிடுகறிது. ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை திராவிட சிசு" என்றார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி திராவிட வேதம்' என்று போற்றப்பட்டது. நாமதீப நிகண்டு, தமிழ் தென்மொழி திராவிடம்' என்று சொல்கிறது. ராமானுசர் தமது சிறீபாஷ்யம் என்ற நூலில் சாணக்கியரை, "த்ரமிளாச்சாரி எனச் சுட்டுகிறார். இவற்றில் சிலவற்றை முத்தையா தமது கட்டுரையில் குறித்துள்ளமை பாராட்டுக்குரியது. எனவே, திராவிடம் என்பது கால்டுவெல் மூளையில் உதித்ததன்று. அவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இச்சொல் வழக்கிலிருந்தது.
இச்சொல்லின் பொருள் என்ன?இதன் மூலம் என்ன?திராவிடம் என்ற சொல் பல இடங்களில் தமிழை, தமிழர்களைக் குறித்தது. சில
கருத்தியலும் வரலாறும் 38

சூழல்களில் தென்னிந்திய மக்களை (தெக்காணப்பகுதிக்கு இப்பால் வசித்தவர்கள்) குறித்தது. அவர்களின் மொழிகளைக் குறித்தது. அதாவது சிறப்பு நிலையில் தமிழையும், பொது நிலையில் தமிழோடு உறவுடைய தமிழகத்தை ஒட்டிய பல பகுதிகளில் வழங்கும் மொழிகளையும் குறித்தது. திராவிடம் என்பது தமிழ் என்ற மூலத்திலிருந்து வந்தது என்றும் தமிழ் என்பது திராவிட' என்பதன் மாற்று என்றும் இரு கருத்துகள் உள்ளன. கால்டுவெல் இரண்டாவது கருத்தினர். S.K öFlı fiğ (ypğ56ü 6)/(b60âbâ5 d5(böğ56OTi. Tamil > Dramila > Dravila / T> d/dr m>V, Pd இவ்வகை மாற்றங்கள் தமிழ் - சமஸ்கிருத மொழி. களுக்கிடையேயான கொள்வினை கொடுப்பினையின் போது ஏற்பட்டதாகும். விஷயம் > விடம், கஜம்) கயம், ஜன்மம் > சன்மம், விஹாரம் > விகாரம், ப்ராஹற்மண > பிராமணன் என, சமஸ்கிருதச் சொற்கள் தமிழாவது போன்ற ஒரு ஒலியன் மாற்ற நிலையாகும் இது. திராவிட மொழிகளில் கூட வ/ ம .ழ/ட, மாற்றம் உண்டு. வானம் > மானம், விளக்குமாறு > மிளக்குமாறு->முளக்குமாறு>மொளக்கமாறு, ஏழு > ஏடு (தெ) தரங்கம்பாடி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோழிக்கோடு, GabsT6řT6nflúb (pg356óluu6OT (yp6ODmps3uu Tranobar, Tuticorin, Capecomarin, Caticut, Couldran என ஐரோப்பியர் எழுத்துக்களில் இடம் பெற். றுள்ளதை அறிகிறோம். இவ்வகை மாற்றம் எல்லா மொழிகளிலும், நாடுகளிலும் நடந்துள்ளன. (எ.கா.பம்பாய் > மும்பை, கல்கத்தா > GlabT6babö5/T, Giugiń - faśń (Warszawa > warsza (Eng), Krakow > Cracow (Eng).
சமஸ்கிருதத்திலும் அது சார்ந்த மொழிகளிலும், தமிழ், த்ராவிட, த்ரமிள என வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பொருள் விரிவும் (Semantic Expression) ஏற்பட்டது. அதனால் தமிழ்/தமிழர்/தமிழகம் என்பதை மட்டும் குறித்தது. கால ஓட்டத்தில் அதோடு தொடர்புடைய மொழிகள், நிலங்கள், மக்கள் என எல்லாவற்றையும் குறித்ததாகக் கொள்ள வேண்டும். இன்று வடஇந்தியர், தென்னிந்தியரைக் குறிக்க மதராசி என்று வழங்குவதை ஒப்பு நோக்கலாம்.
கால்டுவெல் இதைப்பற்றி கவனம் செலுத்தினார். அதன் காரணமாக, பொதுப் பொருள் தரும் நோக்கில், திராவிடம் என்பதைப் பயன்படுத்தினார். தமிழ் என்பது ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறித்துத் தெளிவுபட வழங்குவதால் அதே சொல்லைப் பிற தென்னிந்திய மொழிகளுக்கும் வழங்குவது மயக்கம் தரும் என்பதால், தமிழ் என்பதை அந்த மொழிக்கும், திராவிடம் என்பதை மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார். இது அவரது விரிந்த
கருத்தியலும் வரலாறும் 139

Page 22
பார்வையையும், அறிவியல் வழிப்பட்ட ஆய்வையும் காட்டுகிறது. (தமிழைச் செம்மொழி என்றதும் இன்றுகூட, கன்னடச் சகோதரர்கள் அதற்கு எதிராகப் பேசியுள்ளதையும், 2000 ஆண்டு பழமை உள்ளதே செம்மொழி என்பதை மாற்றி 1000 ஆண்டும் அதற்கு முன்னும் பழமயுடையதைச் செம்மொழியாக்கலாம் என அறிவித்திருப்பதையும் நினைக்கையில் கால்டுவெல்லின் 'எதிர்கால நோக்கு' புலப்படும்).
கால்டுவெல் சமஸ்கிருதமும் - தமிழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இரண்டும் தனித்தனியானவை; இரண்டுக்கும் இடையில் சொற்கோவையில் (Vocabulary) சில ஒற்றுமைகள் உண்டே தவிர, இலக்கண அடிப்படையில் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனப் பல்வேறு சான்றுகள் மூலம், அறிவியல் சார்ந்து, ஒப்பிலக்கண அடிப்படையில் நிறுவியுள்ளார். இங்கு இன்னொரு வரலாற்றுச் செய்தியும் குறிப்பிடப்படவேண்டும்.
கால்டுவெல் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் இருந்து மதத் தொண்டும், தமிழ்த் தொண்டும் செய்தவர். தாம் பயின்றுள்ள தமிழ் உலக மொழிகளில் எம்மொழியோடு உறவுடையது என்பதைக் காணும் ஆர்வம் மீது ரப் பெற்று, இந்த ஒப்பியல் ஆய்வை மேற்கொண்டார். அதன் பலனாக இந்தோ - ஆரிய மொழிகளோடு தமிழுக்கு உறவில்லை என்றவர், சித்திய மொழிக்கு குடும்பத்தோடு உறவு இருக்கலாம் என்று ஒரு கருதுகோளை முன்வைத்தார். இன்று அதன் விளைவாக, திராவிட மொழிகளைச் சித்தியன், மங்கோலியன், சுமேரியன், பாஸ்க், ஜப்பானியம் முதலிய மொழிகளோடு ஒப்பிட்டு நோக்கும் ஆய்வு வளர்ந்துள்ளது. இதன் குறை நிறைகள் மறுஆய்வுக்கு உரியவை.
கால்டுவெல் 1856இல் கூறிய கருத்தை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலிய தென்னிந்திய மொழிகள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவை, சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லை என்ற கருத்தை, 1816 இல் FW. எல்லிஸ் முன்வைத்தார். காமப்வெல் எழுதிய தெலுங்கு மொழி இலக்கணத்துக்கு அவர் வரைந்த முன்னுரையில், தமிழ், தெலுங்கு முதலியன சமஸ்கிருதத்தினின்றும் வேறுபட்டவை என்று பல சான்றுகள் காட்டிக் குறிப்பிட்டார். எல்லிஸ் இதை எழுதக் காரணம், அன்று கல்கத்தாவை மையப்படுத்திச் செயல்பட்ட ஐரோப்பிய கீழ் திசையில் அறிஞர்கள் மத்தியில் இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் தாய் சமஸ்கிருதமே என்ற கருத்து நிலவியதுதான். கோல்புரூக், கர்ரே முதலிய அறிஞர்கள் இக்கருத்தை வலியுறுத்தினா. அவர்களது ஒப்பாய்வில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி எல்லிஸ்
கருத்தியலும் வரலாறும் 140

தென்னிந்திய மொழிகளின் தனித்தன்மையைக் குறித்து எழுதினார். அவற்றைத் தனிக்குடும்பமாகக் கருதவேண்டும் என்றார்.
இன்னொரு குறிப்பு. 1855 இல் பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த தமிழ் - பிரெஞ்சு அகராதியின் ஆசிரியர்கள் (Louis Savinien Dupuis & Louis Marie MouSSt). தமிழுக்குச் சமஸ்கிருதம் தாய் அன்று, இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை இலக்கண வேறுபாடுகளைச் சுட்டி நிறுவினர். கைவல்லிய நவநீத ஆங்கில மொழிபெயர்ப்(8 JITGB (63Fijibgbj6i571 An Outline of Tamil Grammar 6T6ölp Lig55ulsio Charles Graul (1855), "Tamil, the most distinguished member of the dravida family." எனக் குறித்துள்ளார். கால்டுவெல்லுக்கு முன்பே Dravida family என்ற வழக்கை இதில் காணலாம்.
இந்த நூல்கள், கருத்துகள் கால்டுவெல்லால் பார்வையிடப்பட்டனவா என்பது தெரியவில்லை. தெரிந்திருப்பின் அதை எழுதியிருப்பார். G.U.Pope மற்றும் சிலரின் கருத்துகளை குறிப்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லிஸ், லூயிமரீமோசட், காம்ப்வெல், கால்டுவெல் ஆகியோர் மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் சமஸ்கிருதம் உள்ளடங்கிய இந்தோ - ஆரிய மொழிகளும், தமிழ் உள்ளடங்கிய திராவி / தென்னிந்திய மொழிகளும் வெவ்வேறானவை என்பதை நிலைநாட்டினர். இதில் சமஸ்கிருத வெறுப்பு இருப்பதற்கான அறிவியல் விழிபட்டதே அன்றி உணர்ச்சிவசப்பட்டதோ , அரசியல் கட்சிப் பின்னணி உடையதோ அன்று.
முத்தையா மற்றொரு கட்டுரையில் தமிழ்த் தேசியத்தன்மை, தமிழின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டு, "இந்திய அளவில் ஏற்பட்ட தமிழ்ப்படைப்புகளையும் தமிழ் மொழிச் சிறப்புகளையும் ஏனைய உலகப் படைப்புகளோடும், உலக மொழிகளோடும் உரசிப் பார்ப்பது அடுத்த முயற்சியாகும். இவ்வாறு ஒப்பிடும்பொழுது தமிழ் அதற்கான உலகத்தரத்தினை அதுவாகவே பெற்றுவிடும்" (மேற்படி, பக் 141 - 142) என்று எழுதுவார். கால்டுவெல் இதைத்தானே செய்தார்! மொழி அளவில் அவர் செய்ததை வேறுசிலர் இலக்கிய அளவில் செய்துள்ளனர் (எ.டு.ஜார்ஜ் ஹர்ட், கைலாசபதி) இங்கும் பிற மொழி வெறுப்பு என்ற முத்திரை குத்தப்படுமோ? '-
சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு, இந்து மத வெறுப்பு கால்டுவெல்லுக்கு இருப்பது என்பது அடுத்த கருத்து.
தமிழகத்தில் வடமொழி ஆதிக்கம் குறித்து, கவனம் வேண்டும் என்பதில் தொல்காப்பியரே விழிப்போடு செயல்பட்டார். "வடசொற் கிளவி
கருத்தியலும் வரலாறும் 41

Page 23
வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே" என்ற நூற்பா இந்த விழிப்புணர்வின் வெளிப்பாடுதான்.தன்மொழியைக் காக்கும் உணர்வு அந்த மொழி பேசுபவனிடம் உலகெங்கும் காணக்கூடியதே. George Thomas 6T6ör 16i (9.g5 Ling 667Tdisablpit as "Linguistic Purism' என்ற நூலில் எழுதியுள்ளார்.
தற்சமம் - தற்பவம் குறித்து நன்னூலார் விதி வகுத்தது. இந்த மொழிபேணல் காத்தல்' அடிப்படையில்தான். மேலும், பழங்காலத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழின் புகழ் பாடினர். வடமொழியோடு இணைத்தும் உயர்த்தியும் பாடியுள்ளானர். நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்' என்று தான் அந்தப் பார்ப்பன அடியாரும் பாடியுள்ளார். இறைவனே தமிழை விரும்பினார் என்று கூறப்படுகிறது. தமிழ்ப் பாட்டைக்கேட்டுப் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆழ்வார்பின்னே சென்றான் என்பது குமரகுருபரர் வாக்கு. A.
'தேவபாஷை சமஸ்கிருதத்துக்கு இணையானதே தமிழும் என்பதைக் காட்டும் செயலாக்கம் இது. புதுயுகக்கவி - புரட்சிக்கவி பாரதியும் இதிலிருந்து மீளவில்லை. 'ஆதிசிவன் பெற்றுவிட்டான் அகத்தியன் என்றோர் மைந்தன் எனை வளர்த்தான்' என்றும், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்றும் பாடிய பொழுது பக்தி இயக்கத்தின் தாக்கம் தெரிகிறது. இங்கே தன்மொழியைப் பேணும் ஆர்வம் தெரிகிறதே தவிர, பிற மொழி வெறுப்பு தெரியவில்லை. கால்டுவெல் இரண்டின் தனித் தன்மையை எடுத்துக்காட்டினாரே தவிர, வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை.
இந்துமத வெறுப்பு என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை. அரேபிய, ஐரோப்பிய நாடுகளிலும் மதமோதல்கள் இருந்திருக்கின்றன. ஆனால், கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலை எழுத இந்து கிறிஸ்துவ மத மோதல் காரணம் என்பதை ஏற்க முடியாது.
'பிரித்தாளும் சூழ்ச்சி" என்பதும் அரசியல் சார்ந்த ஒரு கருத்து. இந்திய-இலங்கை மார்க்சியர்கள் தேசிய இனம், மொழி பற்றிச் சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சர்வதேசியம் பேசினர். இந்திய தேசியம் பேசினர். தமிழ்த்தேசியம் பேசவில்லை. தமிழ்த்தேசியம்/ திராவிட தேசியம் பிரிவினை வாதமாகப்பட்டதால் இதை முன்வைத்த திராவிட இயக்கங்களோடு முரண்பட்டதால், இந்த தமிழ்த் தேசிய உணர்வை, 'பிரிவினைவாதம்' எனக்கூறி, புறந்தள்ளினர். தேசிய இனம் என்பது மொழி, எல்லை, பொருளாதாரம், உளப்பாங்கு என்ற நான்கையும் உள்ளடக்கியதாக மார்க்சியம் சொல்லும். தேசிய இனம் என்பது
கருத்தியலும் வரலாறும் 42

பொருளாதார, பிரதேச மொழி, கலாசார - உளவியல் தொடர்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட மக்களின் உறுதியான பொதுவாழ் அமைப்பாகும்' (சமூக விஞ்ஞானம்). ஆனால், இந்திய-இலங்கை மார்க்சியர்கள் இதில் உறுதியாக இல்லாததால் பல சிக்கல்கள். இலங்கைப் பிரச்சினையிலும் கம்யூனிஸ்ட்கள் தெளிவான, உறுதியான நிலை எடுக்கவில்லை. அதனால் பல தொய்வுகள். இது குறித்து கலாநிதி கா.சிவத்தம்பி கூறுகிறார்:
"தேசிய மறுமலர்ச்சி பற்றிய தெளிவின்மை காரணமாக மார்க்சிஸ்ட் கட்சிகளும் சிங்கள தேசியத்தை இலங்கைத் தேசியமாக மயங்கிக் கொண்டன." (யாழ்ப்பாணம்)
"தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு புரிந்துணர்வைச் சில மார்க்சிய அறிவுஜீவிகளே கொண்டிருந்தனர்."
(ஈழத்து தமிழ் இலக்கியத்தடம்) பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கைலாசபதியின் தொடர் இந்த மார்க்சிய அரசியலின் வெளிப்பாடே அன்றி, அறிவியல் வழிப்பட்ட வெளிப்பாடன்று.
சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், திராவி இயக்கத்தினர் கால்டுவெல்லை ஆசானாகக் கொண்டு இந்த உணர்வை வளர்த்து, பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்தனர் என்றால் அது கால்டுவெல்லின் குற்றமா? கால்டுவெல் தமது கருத்தை இப்படியெல்லாம் புரிந்து கொண்டு, புதிய பொருளும் விளக்கமும் செயன்மையும் தருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பாரா என்ன? இன்று, மார்க்சியத்தைப் பலரும்: பல்வேறு விதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். திசை மாறிச் செல்ல மார்க்ஸ் காரணமா? நமது புரிதலும் செயல்பாடும் காரணமா? சோவியத் யூனியனின் சிதைவுக்கு மார்க்சியம் காரணமா, சோவியத் மார்க்சியர்கள் காரணமா? முத்தையாவும், 'சோவியத் யூனியன் சிதைவுக்கு ஐக்கிய தெசியம் என்ற போர்வையில் ரஷ்ய மொழித்திணிப்பும், பிற தேசியமொழிப் புறக்கணிப்பும்தான் காரணம்' என்கிறார். (மேற்படி, பக் 137). அன்று - தமிழகத்தில் சமஸ்கிருத ஆதிக்கம், இன்று - ஆங்கில ஆதிக்கம். தமிழைத் தக்க வைக்க இந்த ஆதிக்கத்தை எதிர்ப்பதில் சூழ்ச்சி என்ன இருக்கிறது?
இந்திய ஆரியர் நூலில் (பக்.XI), தமிழ் மொழி வரிவடிவம் பெற்றது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு உட்பட்டே அன்றி அதற்கு முன்னால் அல்ல' என்று பழனியப்பன் எழுதுகிறார். தெ.பொ.மீ(கலைக்களஞ்சியக் கட்டுரைகள்), ஐராவதம் மகாதேவன் (The Early tamil Epigraphy)
கருத்தியலும் வரலாறும் 43

Page 24
முதலியோர் தமிழ் எழுத்தியல் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். தொல்காப்பியர், 'எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப' என்றும், திருவள்ளுவர், 'அகர முதல எழுத்தெல்லாம்.' என்றும் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் படிக்கும்போது தமிழ் எழுத்து வடிவம் 2000 ஆண்டு பழமையுடையது எனத் தெரிகிறது. ஆனால், பழனியப்பன் புதுவது புனைகிறார்.
முடிவாக, கால்டுவெல் நூலை அதற்குரிய தன்மையோடு படித்து, புரிந்து, மதிப்பீடு செய்ய வேண்டும். அரசியல் கற்பனைக் கண் கொண்டு காண்பது, 'கனியிருக்கக் காய் கவர்ந்தது போல் ஆகும்.
கருத்தியலும் வரலாறும் 44

தமிழர் வாழும் பிரதேசங்களும் வரலாற்று மூலங்களும்
Guaraófafundi áfo.ugšuDg5agsaøi
ஐரோப்பியரான வரலாற்றாசிரியர்களும் நிர்வாக அதிகாரிகளும் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளிலே எழுதிய நூல்களில் இலங்கையிலுள்ள அரசியலமைப்புகளான இராச்சியங்கள், சிற்றரச்சுகள் என்பன பற்றியும். அங்கு வழங்கிய மொழிகளைப் பற்றியும், பல குறிப்புகளை எழுதியுள்ளனர். அவர்களிற் சிலர் தாம் நேரடியாகக் கண்டு பார்த்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்கள். றொபர்ட் நொக்ஸ், பிலிப்பூஸ் வோல்டே ஆகிய இருவரும் அந்த வகையினோராவர். ஜான் ஷoறோய்டர், கிளெக்கோர்ண்ஆகிய இருவரும் வேறொரு வகையினர். அவர்கள் இலங்கையில் ஆதிக்கஞ் செலுத்திய காலனித்துவ அரசாங்கத்திலே சேவை புரிந்த காரணத்தினாலே நிர்வாக அறிக்கைகளிலுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையிலும், நாட்டு நிலைகளை நேராக அவதானித்து அறிந்து கொண்ட விபரங்களின் அடிப்படையிலுந் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். பெர்ணாஒ தே கேறோஸ் என்னும் போர்த்துக்கேயப் பாதிரியாரான வரலாற்றாசிரியர் இன்னொரு வகையைச் சேர்ந்தவர். அவர் இலங்கைக்குச் சென்று அந்நாட்டினை நேரிலே பார்க்கவில்லை. ஆயினும் இலங்கை பற்றிய பலவகையான மூலாதாரங்களைப் படித்து, அவற்றை ஆராய்ந்து, மிக விரிவான முறையில் இலங்கை வரலாற்றை அவரால் எழுத முடிந்தது. போர்த்துக்கல் நாட்டிலுள்ள பலவகையான ஆவணச் சுவடிகளை அவரால் ஆராய்ந்து கொள்ள முடிந்தது. இலங்கையிலே சிங்களவரிடையிலும் தமிழரிடையிலும் பூர்வீக வரலாறு சம்பந்தமாக நிலவிய ஐதீகங்கள், மரபுகள் என்பன அடங்கிய ஆவணங்கள், இலங்கையிலே நிர்வாக சேவை புரிந்த போர்த்துக்கேய அதிகாரி
பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய "இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமுக வழமைகளும்" (2002) எனும் நூலிலிருந்து தமிழர் வாழும் பிரதேசங்களும் மூலங்களும்' எனும் பகுதி பிரசுரமாகிறது. பேராசிரியரது இந்த நூல் தமிழர் வரலாறு தமிழர் பண்பாடு பற்றிய ஆய்வில் முக்கியமானது.
கருத்தியலும் வரலாறும் 45

Page 25
களினால் எழுதப் பெற்ற அறிக்கைகள், குறிப்புகள், கடிதங்கள். லிஸ்பனிலும் கோவாவிலுமுள்ள உயரதிகாரிகள் எழுதிய பத்திரங்கள், கட்டளைகள் முதலாளவற்றை அவராற் பயன்படுத்திக் கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தகுந்தது.
ஐரோப்பியரின் ஆதிக்கம் இலங்கையில் ஏற்படுவதற்கு முன்பு அங்கு பல அரசியற் பிரிவுகள் காணப்பட்டன. அவை குறித்து கேறோஸ் மேல்வருமாறு விபரிக்கின்றார்.
"(அநுராசபுரம் இராசதானியாக விளங்கிய காலம் முழுவதும் இலங்கைத் தீவின் பகுதிகள் எல்லாம் தனியரசன் ஒருவனின் அதிகாரத்தின் கீழிருந்தன. ஆனால் தாழ்நிலங்கள் சீரழிந்த பின்பும், கோட்டை இராசதானி தோன்றியதைத் தொடர்ந்தும் 15 சிறிய இராச்சியங்கள் தோன்றிவிட்டன. அவை கோட்டை அரசனின் மேலாட்சியின் கீழிருந்தன. அதனாலே கோட்டை அரசனைச் சக்கரவர்த்தி என்று கருதினார்கள். இந்நாட்களிற் கண்டிராசன் உரிமைகோரும் பட்டங்கள் கோட்டை அரசனுக்குரியனவாகும். தெனவக்க, ஊவா, வளவே, புத்தளம், மாதோட்டம், பனங்காமம், முள்ளியவளை, திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு, பாணமை, விந்தனை, ஒருப்பல, மாத்துறை என்பன அந்தச் சிறிய இராச்சியங்களாகும். இவற்றோடு கண்டி, வடபகுதியிலமைந்த யாழ்ப்பாணநாயன்பட்டினம், கோட்டை இராச்சியம் ஆகியவற்றைச் சேர்ப்பின் அவை எல்லாமாகப் பதினாறு ஆகும்."
"சில காலஞ் சென்றதும், வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைநான்கு இராச்சியங்களாகவும் மூன்று சிற்றரசுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. கோட்டை, சீதாவக்கை கண்டி, யாழ்ப்பாணநாயன் பட்டினம் என்பனவே அந்த இராச்சியங்களாகும். ஏழுகோறளை, ஊவா, மாத்தளை, என்பன சிறிய இராச்சியங்களாகும். இவற்றோடு வன்னியர் என்னும் பரதானிகளின் வசமாயிருந்தபாண்மை, மட்டக்களப்பு, ஊறுகுணை, புத்தளம் போன்ற பல பிரிவுகளும் இருந்தன"
கேறோஸ் பாதிரியார் எழுதியுள்ள குறிப்புகள் 17 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பெற்ற வேறு நூல்களிலுள்ள விபரங்களினால் ஆதாரம் பெறுகின்றன. அந்த விபரங்கள் பல இந்நூலின் முதலாம் பகுதியிலும், மூன்றாம், நான்காம் பகுதிகளிலும் கையாளப்பட்டுள்ளன.
தமிழ் மொழி வழக்கினைப் பற்றி ஐரோப்பியர் கூறியுள்ளவை குறிப்பிடத்தக்கவை.
கருத்தியலும் வரலாறும் 46

"நீர்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணப்பட்டினம் வரையுள்ள பகுதிகளிலே வாழுகின்றவர்கள் தமிழ் மொழியைச் சீராகப் பேசுகின்றனர். இலங்கையிலே, அவர்களே அதிக தயக்கமின்றிக் கிறிஸ்தவ சமயத்தை ஒப்புக்கொண்டார்கள்"
இது கேறோஸ் பாதிரியார் கூறியவை. தமிழ்மொழி வழக்குத் தொடர்பாக அவர் சொல்வனவற்றைக் காட்டிலும் பிலிப்பூஸ் வோல்டே என்னும் உலாந்தாக்காரப் பாதிரியார் கூறுவன அழுத்தமானவை. தெளிவானவை. இலங்கையில் வழங்கும் மொழிகளைப் பற்றி அவர் மேல்வருமாறு வர்ணிக்கின்றார்.
"இலங்கையில் வாழுகின்றவர்கள் சிங்களத்தை மட்டும் பேசவில்லை. அவர்கள் தமிழ்ப் பாஷையினையும் பேசுகின்றார்கள் நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, களுத்துறை, வேருவலை, அலுத்கம, காலி, வெலிகம, மாத்துறை, தேநுவரை முதலான இடங்களில் உள்ளவர்கள் சிங்களத்தைப் பேசுகின்றனர். சோழமண்டலக் கரைக்கு அண்மையிலுள்ளனவாகிய இலங்கையின் மற்றெல்லாய்பகுதிகளிலும்வழங்கும்மொழி தமிழேயாகும். சோழமண் டலத்திலுள்ளவர்கள்முற்காலங்களிலே சென்றுதங்கள் தேசத்திலே குடியேறினார்கள் என்றும், அதன் விளைவாகவேதங்கள்முந்தையர் நாட்டுக்குரியதான தமிழ் மொழி அங்கெல்லாம் வழங்குகிறதென்றும் யாழ்ப்பாணய் பட்டினத்தவர்கள் சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இந்த விபரத் உண்மையாக இருக்கக்கூடும் என்பது இலங்கையின் மத்திய பகுதிகளான கண்டி, விந்தனை, வலனை முதலான பகுதிகளிற் சிங்கள மொழி மட்டுமே வழங்குவதாலும் உணரப்படும்"
வரலாற்று மூலங்களிலே தமிழர் வாழும் பிரதேசங்கள் பற்றியும் பல தெளிவான குறிப்புகள் உள்ளன. இலங்கையிலே, கண்டி இராச்சியத்தில் தடுப்புக் காவலில் நெடுங்காலம் சிறைக்கைதியாக வைக்கப்பட்டிருந்து பின் தப்பிச்சென்ற பிரித்தானியப் பிரசையான றொவேர்ட் நொக்ஸ் தான் எழுதிய நூலிலே தமிழரின் தேசம் பற்றி மேல்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"நாங்கள் வியாழக்கிழமை பொழுது மதியத்தைக் கடக்கும்வரை பிரயாணஞ் செய்தோம். அப்போது குருந்துஒயா என்று சொல்லப்படும் ஆற்றைக் கடந்தோம். அது வரட்சியாகிய நிலையிற் காணப்பட்டது. அது (கண்டி) அரசனுடைய இராச்சியத்தை தமிழரின் தேசத்திலிருந்து வேறுபடுத்துகின்றது"
"எனினும், நாங்கள் தமிழர்கள் வாழும் நாட்டை அடைந்து விட்டதால் சற்று ஏக்கமடைந்தோம். அந்த மக்களின் புரவல
கருத்தியலும் வரலாறும் 147

Page 26
னாகிய வன்னியனார் அச்சத்தின்காரணமாக உலாந்தாக்கார. ருக்குத் திறை செலுத்துகின்றான். ஆயினும், அவன் கண்டி அரசன் மேற்கூடிய அனுதாபங் கொண்டவனாவான்.""
"தமிழரின் தேசம்" என்று றொவேர்ட் நொக்ஸ் குறிப்பிடுவது அடங்காப்பற்று வன்னியிலுள்ள பனைங்காமம் பற்று என்பதாகும். அதனை வேறோரிடத்திலே"கொய்லத் வன்னிநாடு" என்று அவர் சொல்லுகிறார். பதினேழாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின் பனைங்காமப்பற்று வன்னிபமான கயிலாய வன்னியனார் அவர்களுக்குத் திறைசெலுத்த மறுத்துவிட்டான். அடங்காப்பற்றிலுள்ள மற்றைய வன்னிபங்கள் அவனுடைய தலைமையை ஏற்றுக்கொண்டனர். கயிலாய வன்னியன் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தமையால் ஐரோப்பியர் 17ஆம் நூற்றாண்டிலே பனைங்காமம் பற்றினை அவனது பெயராற் குறிப்பிட்டனர்.
உலாந்தக் காரத் தேசாதிபதியான ஜான் ஷ0 றோய்டர் இலங்கையிலுள்ள "சிங்களவரின் தேசம்", "தமிழரின் தேசம்" என்பன பற்றிப் பேசுகின்றார். அவர் தனது அறிக்கையிலே மேல்வருமாறு கூறுவர்.
"கொம்பனிக்கு உரிய குடியானவர்களையும் நிலப்பகுதி. களையும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை சிங்களவர் வாழும் தேசம். தமிழர் வாழும் தேசம் என்பனவாகும். அந்த நிலப்பிரிவுகளும், அவற்றிலுள்ள குடியானவர்களும், அவர்களுக்குரிய ஆட்சிமுறைகளும் மிகப்பெரிய அளவிலே வேறுபட்டவை"
"சிங்களவரின் தேசம் என்று கொள்ளப்படுவது கைமால் ஆற்றங்கரை முதலாக வளவகங்கை வரை பரந்திருக்கின்றது. அது கொழும்பு திசாவைப் பிரிவு. காலி கோறளை, மாத்தறை திசாவைப் பிரிவு என்னும் பகுதிகளைக் கொண்டது."
"இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலே தமிழரின் தேசம் என்று நாம் குறிப்பிட்டனவாகிய, கொம்பஞ்ஞயவுக்கு உரிமையான, ஏனைய நிலப்பிரிவுகளைப் பற்றிச் சற்று மேலும் சொல்லவேண்டும். அது இலங்கைத் தீவின் வடபகுதி முழுவதையும் அடக்கியதாகும். அது ஒரு வரையறையில்லாத முக்கோண வடிவில் அமைந்தவொன்றாகும். அது தென்பக்கமாக 15 மைல் நீளமும், மேற்கிலே 30 மைல் நீளமுங் கொண்டதாகும் அது (1) வன்னி, (2) வன்னியின் எல்லைப் பிரதேசங்கள், (3) பல தீவுகள் சகிதமான குடாநாடாகிய யாழ்ப்பாணப் பட்டின மாவட்டம் என்னும் பிரிவுகளை உடையதாகும். '
கருத்தியலும் வரலாறும் 48

ஜான் ஷoறோயடர் தேசாதிபதியாகப் பதவி பெற்றிருந்த காலத்திலே கிழக்கிலங்கையிலுள்ள பகுதிகளிற் கொம்பனியின் ஆட்சி ஏற்பட்டிருக்கவில்லை. கிழக்கிலங்கையிலுள்ள தமிழர் வாழும் பகுதிகள் யாவும் 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் மூலமாகவே உலாந்தாக்காரின் ஆட்சியின் கீழ் வந்தன.
உலாந்தாக்காரரும் பேராசிரியருமான கிளெக்கோர்ண் 1796 ஆம் ஆண்டிலே இலங்கையின் கரையோர மாகாணங்கள் உலாந்தாக்காரரிடமிருந்து, கைமாறுவதற்குப்பிரித்தானியருக்கு உதவிபுரிந்தவர் அதற்குப் பிரதியுபகாரமாக அவரைத் தேசாதிபதி நோர்த் பிரபுவின் காலத்திலே பிரதம நிர்வாக அதிகாரியாக அரசாங்கம் நியமித்தது. அவர் கரையோர மாகாணங்களிலுள்ள நிர்வாக முறை பற்றி ஓர் அறிக்கையினை எழுதிப்பிரித்தானிய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தார். இலங்கை வாசிகளைப் பற்றி அவர் கூறுவனவற்றை இங்கு கவனிப்பது அவசியமாகின்றது. அவர் இலங்கையிலுள்ள சமூகங்களைப் பற்றி மேல்வருமாறு எழுதுகின்றார்.
"மிகப் பழங்காலம் முதலாக இரு தேசிய இனங்கள் இலங்கையின் வெவ்வேறான பாகங்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். அவர்களில் முதலாவது பிரிவினரான சிங்களவர் நாட்டின் மத்தியபகுதிகளிலும், வளவகங்கை தொடக்கம் சிலாபம் வரை பரந்துள்ள தெற்கிலும், மேற்கிலுமுள்ள பகுதிகளிலும் வாழுகின்றனர். இரண்டாவது பிரிவினர் வடக்கிலும், கிழக்கிலுமுள்ள மாவட்டங்களை உடைமையாக்கிக் கொண்ட தமிழராவர் சமயம், மொழி, பழக்கவழக்கங்கள் ஆகியனவற்றில் இத்தேசியவினங்கள் இரண்டும் முற்றிலும் வேறுபட்டனவாகும்."
"தமிழர்கள் இந்திய தீபகற்பத்திலிருந்து சென்று குடியேறி. யுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அங்குள்ள கரையோரங்களில் வாழ்கின்றவர்களின் மொழியையே தமிழர் பேசுகின்றனர். அவர்களின் சமயத்தைப் பின்பற்றுவதோடு அவர்களுடைய வழமைகளும் ஒரேவிதமானவை"
17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகளை அவதானித்து, அவற்றைப் பற்றி உலாந்தாக்காரரும் பிற ஐரோப்பியரும் எழுதிய கருத்துக்களையே 19ஆம் நூற்றாண்டில் இலங்கை பற்றித் தாங்கள் எழுதிய நூல்களிற் பிரித்தானிய ஆசிரியர்களுங்குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக ஹென்றி மார்ஷல் கூறுவனவற்றை இங்கு குறிப்பிடலாம்.
கருத்தியலும் வரலாறும் 49

Page 27
"இலங்கையின் சனத்தொகையில் ஐந்து பிரிவினரை அடையாளங் காணமுடிகின்றது. முதலாவதாகப் பொதுவாகப் பெளத்தர்களாயுள்ள சிங்களவரைக் குறிப்பிடலாம். இந்த இனத்தவர் கிழக்கிலுள்ள மாகம் பத்து முதலாகச் சிலாபம் வரையாகப் பரந்துள்ள, தெற்கிலும் மேற்கிலுமுள்ள கரையோரப்பகுதிகளிலும், கண்டிநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழுகின்றனர்"
"இரண்டாவது தமிழர்களாகவுள்ள இந்துக்களைக் குறிப்பிடலாம். இந்த வகுப்பினர் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள பகுதிகளில் வாழுகின்றனர்."
இலங்கையில் வாழும் சமூகங்களைப் பற்றியும் அவற்றுள் ஒவ்வொன்றும் வாழும் பிரதேசங்கள் குறித்தும்ஜோன் டேவி (John Davy) என்பவர் மேல்வருமாறு எழுதுகின்றார்.
"இலங்கையில் வாழும் மக்களை நாட்டின் பூர்வீகக் குடிகள், அங்கே குடியேறிச் சுதேசிகளாய்விட்ட அந்நியர் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவர்களில் முதலாவது பிரிவின. ரான சிங்களவர் நாட்டின் நடுப்பகுதிகளில் முழுமையாகவும், தென்மேற்குக் கரையோரப் பகுதிகளிற் பெரும்பான்மையின. ராகவும் வாழுகின்றனர். இரண்டாவது வகையினர் பெரும்பாலும் தமிழராகவும் சோனகராகவும் உட்ள்ளனர். தமிழர் வடக்கிலுங் கிழக்கிலுமுள்ள கரையோர மாகாணங்களில் வாழுகின்றனர். மற்றையோரான சோனகர் எந்தவொரு மாவட்டத்திலும் அடங்கியிருக்கவில்லை. அவர்கள் ஐரோப்பாவிலுள்ள யூதர்களைப் போல சிறு சிறு பிரிவுகளாகப் பரந்து நாட்டு மக்களோடு கலந்து வாழுகின்றனர்."
கருத்தியலும் வரலாறும் 150

மட்டக்களப்புபூர்வ சரித்திரம் வரலாற்று அறிமுகக் குறிப்பு
த.சிவராம்
மட்டக்களப்பு வரலாற்றைப் பற்றி விரிவான ஆய்வுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. மட்டக்களப்பின் வரலாற்றைப் பற்றி எவராவது ஆராய்வதானால் S.O. கனகரத்தினம் அவர்கள் 1923 ஆம் 3,60ôr(B 6TC19gólu The Monograph of Batticaloa 616ó769)|úb bT606u LDĽ(6(3D மேற்கோள்காட்டுவார்கள்.
இதற்கப்பால் அமெரிக்காவிலிருந்து 1960களின் பிற்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்து களவேலைகளில் ஈடுபட்ட மானிடவியலாளரான பேராசிரியர் டெனிஸ்.பி.மக்கில்ரே (Dennis B.Me.Givray) அவர்கள் முக்குவ வன்னிமை மற்றும் மட்டக்களப்பின் தாய்வழிக்குடிமுறை பற்றி எழுதிய ஒரு நூலும், கட்டுரைகளும், அவரது கலாநிதிப் பட்டத்திற்கு சமர்பித்த ஆய்வுநூலும் இருக்கின்றன.
இவருக்கு அடுத்ததாக அமெரிக்காவின் பிறின்ஸ்டன் (Princeton) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க்விட்டகர் (MarkWhitaker) என்பவர். மண்டூர் கோயிலை மையமாக வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வில் ஒரு சில இடங்களில் பிரிட்டிஷ் காலத்தைப் பற்றிக் கூறப்படுகின்றது. இதுபோக மட்டக்களப்பைப்பற்றிய அறிவியல்ரீதியான ஆய்வுகள் எதுவும் வரவில்லை.
அண்மைக்காலங்களில் மட்டக்களப்பில் சாதிகளை முன்னிலைப் படுத்தும் வரலாற்றுநூல்கள் சில வந்துள்ளன. எனினும் இவை அறிவியல்
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்' (2005) எனும் நூலை வித்துவான சா.இ.கமல. நாதன் கமலா கமலநாதன் ஆகியோர் இணைந்து பதிப்பித்துள்ளார்கள். இந்நூலுக்கு ஊடகவியலாளர் அமரர் த.சிவராம் வரலாற்று அறிமுகக் குறிப்பு எனும் தலைப்பில் எழுதிய பகுதி இங்கு மட்டக்களப்புபூர்வ சரித்திரம் வரலாற்று அறிமுகக் குறிப்பு எனும் தலைப்பில் இடம்பெறுகிறது. சிவராமுக்கு மட்டக்களப்பு பற்றிய வரலாற்று ஆய்வில் மிகுந்த ஈடுபாடு இருந்தும் அவைபற்றியநிறைய செய்திகளை குறிப்புகளை வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்தியலும் வரலாறும் 151

Page 28
பூர்வமான ஆய்வை அடிப்படையாக கொண்டவையல்ல. மேலும் S.O கனகரத்தினம், கதிர்காமர் போன்றோர் எழுதிய நூல்களையும் ஆங்கிலேயர் சிலர் எழுதிய சில குறிப்புரைகளையும் அடிப்படை ஆதாரங்களாக நாம் கொள்ள முடியாது. இவை இரண்டாம் தர மூலங்களே.
இந்நிலையில் மட்டக்களப்பு வரலாற்றை ஆராய்வதற்குத் தேவையான மூலங்கள் எவை என்பதை ஆராய்வது முக்கியமாகின்றது. ஏனெனில் மட்டக்களப்பைப் புரிந்துகொள்வதற்கும், இன்று காணப்படும் பல சமூகப் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கும் மட்டக்களப்பின் வரலாற்றைப்புரிந்துகொள்வது அவசியமாகும். எனவே இவ்வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாய் கிடைக்கப்பெறும் மூல ஆவணங்களை (Primary Sources) நாம் அடையாளம் கண்டுகொள்வது அவசியமாகும்.
மட்டக்களப்பு வரலாற்றை விபரிக்கக் கூடிய அடிப்படை மூலங்களை மூன்று காலப்பகுதிகளாக பிரிக்கலாம். பழைய வரலாற்றுக் காலப்பகுதி, சோழர் காப்பகுதிக்குப் பின் போர்த்துக்கேயரின் வருகை வரையான, அதாவது 16ஆம் நூற்றாண்டு வரையான நடுக்காலப்பகுதி, காலனியாதிக்கக் காலப்பகுதி என்பவையே அவை. இம்மூன்று காலகட்டங்களிலுமிருந்து நாம் பெறக்கூடிய மூலாதாரங்கள் எவை என்பதை இனி பார்க்கலாம்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை சோழர் காலத்து முற்பட்ட திட்வட்டமான வரலாற்று சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்தில. மேலும் வடபகுதியில் கிடைக்கப்பெற்றநாணயங்களும் அதன் அடிப்படையிலான ஆய்வுகளும் போல கிழக்கில் நாயங்கள் ஆராயப்படவில்லை. அத்துடன் கல்வெட்டுகள் செப்பேடுகள் என்பவற்றைப் பார்த்தாலும் மட்டக்களப்பைப் பொறுத்தவரை திருக்கோவில் கல்வெட்டு, வீரமுனை செப்பேடு, சம்மாந்துரை செப்பேடு என்பவை மட்டுமே பிரதானமாகக் கிடைக்கின்றன.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டது.
வீரமுனைக் கல்வெட்டு எங்கிருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. அதனை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை படியெடுத்திருந்தார். செட்டிகுழு ஒன்றுக்கு கண்டி மன்னன் வீரமுனையில் நிலம் வழங்கியது தொடர்பாக இச்செய்பேடு குறிப்பிடுகின்றது.
கருத்தியலும் வரலாறும் (52

ஒரு பிராமணனுக்குநிலம் வழங்கியது தொடர்பானது சம்மாந்துறை செய்பேடாகும். இதுவும் எங்கிருக்கின்றது என்பது தெரியாது.
இவை எல்லாமே 16ஆம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அதற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், செய்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணம் மட்டக்களப்புப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மிகக் குறைவாகவேநடைபெற்றுள்ளமையாகும். முயற்சிகள் மேற்கொண்டால் எதிர்காலத்தில் கல்வெட்டுகள் பல கிடைக்கப்பெறலாம்.
பேராசிரியர் பரணவிதான கதிரவெளிப் பகுதியில் தாழி அடக்கமுறை காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இதைப் பற்றி தங்கேஸ்வரி போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதைப் பற்றி ஆழமாக ஆராயவில்லை.
இந்நிலையில் இடைக்காலத்திற்கு முற்பட்ட மீட்டக்களப்பு வரலாற்றை அறிந்துகொள்ள அடிப்படையாக தற்போது இருப்பது "மட்டக்களப்பு மான்மியம்"என வித்துவான் FX.C.நடராசா அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட" மட்டக்களப்புபூர்வ சரித்திரம்" எனும் நூல் மட்டுமே. வித்துவான் FX.C. நடராசா அவர்கள் மிகச் சிறந்த ஆவண சேகரிப்பாளர். அவ்வாறான சேகரிப்பு முயற்சியின்போது அவர் கைக்குக் கிடைத்த சில ஏடுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு மானிமியம் எனும் நூலை வெளியிட்டார். இந்நூல் 1962ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனினும் இந்நூலுக்கு அடிப்படையான ஏடுகளை யாரும் காணவில்லை.
வித்துவான் FXCநடராசாவின் நூலே நீண்ட காலம் மட்டக்களப்பு : பற்றிய வரலாற்று ஆவணமாக இருந்து வந்தது. இந்நூலின் மூலப்பெயரும் மட்டக்களப்பு மான்மியம் என்றே பலராலும் கொள்ளப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மான்மியம் பற்றி நான் செய்த ஆய்வொன்றில் இந்நூலின் பெயர் வித்துவான் FX.C நடரசா அவர்களாலேயே வழங்கப்பட்டது எனவும் அவரது பதிப்பில் காணப்படும் பிரிவுகளான நாமவியல், சரித்திரவியல், சாதியியல்,ஆலயவியல், ஒழிபியல் ஆகியன அவராலேயே செய்யப்பட்டவை என்பதையும் அகச்சான்றுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் எந்தவொரு நூலும் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இதன் பின்னர் இக்கட்டுரையாளரும் வித்துவான் ச.கமலநாதனும் பழைய ஏடுகள் சிலவற்றை ஆராய்ந்த போது வித்துவான் FX.C.
கருத்தியலும் வரலாறும் 153

Page 29
நடராசாவின் பதிப்பிற்கு மூலப்பிரதியாக இருந்த ஏட்டின்பெயர் "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்" என்பது தெரிய வந்தது. அத்துடன் இப்பெயரில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏட்டிலும் தாளிலும் எழுதப்பட்ட வேறு சில பிரதிகள் இருப்பதும் தெரியவந்தது. இவ்வேடுகளில் ஒன்று திரு. கணபதிப்பிள்ளை என்பவர் அவருடைய பரம்பரை ஏடு ஒன்றிலிருந்து படியெடுத்து எழுதி வைத்திருந்தார். அதன் தலைப்பும் "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் தொடர்பாய் தற்போது நான்கு ஏடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கிடையே சில பிரதிபேதங்கள் உள்ளன. இவற்றை ஒப்புநோக்கி நேர்த்தியான, வரலாற்றுஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய சிறந்த பதிப்பொன்றை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் நானும் எனது ஆசிரியர் வித்துவான் கமலநாதன் அவர்களும் அவருடைய துணைவியாரும் ஏழாண்டுகளுக்கு முன்னர் இப்பதிப்புமுயற்சியை ஆரம்பித்தோம். அனைத்துப் பிரதிகளையும் கவனமாக வாசித்து, ஒப்புநோக்கி வித்துவான் கமலநாதன் அவர்களும் அவருடைய துணைவியாரும் இப் பதிப்பைத் தயார் செய்தனர். அவர்களுடைய கடின உழைப்பின்றி மட்டக் களப்பு பூர்வ சரித்திரம் இவ்வளவு செம்மையான முறையில் எதிர்காலச் சந்ததியினருக்கு ஓர் அரிய வரலாற்று மூலமாக கிடைக்கப் பெற்றிராது. எனினும், மட்டக்களப்பு ஒரு பூர்வ சரித்திரம் கூறும் நூல் ஒன்றுள்ளது. என்பதினை முதன்முதலாக வித்துவான் FXC நடராசாவின் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் நூலின் மூலமாகவே அறிந்துகொள்கிறோம். எனினும் இந்நூல் பேராசிரியர்கள் இந்திரபாலா, பத்மநாதன் ஆகியோர் தவிர எவராலும் ஆழமாக ஆராயப்படவில்லை.
இம் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தைத் தவிர மட்டக்களப்பின் இடைக்காலத்திற்கு முன் காலத்தை அறிய வேறு நூல்கள் எமக்கில.
காலனித்துவக் காலம் இதற்கு அடுத்ததாக வரும் காலப்பகுதி. யாகும். இக்காலம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையாகும். இக்காலப் பகுதியில் மட்டக்களப்புத் தொடர்பாய் ஏராளமான ஆவணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை எவையுமே பயன்படுத்தப்படாதுள்ளன. இவ்வாவணங்களில் ஒரு சிலவற்றை ஆராயும் w பொழுதே எமக்கு மிகச் சிறந்த தகவல்கள் மட்டக்களப்பு வரலாறு, சமூகம் தொடர்பாய் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாவணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டக்களப்புத் தொடர்பாக ஏராளான தகவல்கள் கிடைக்கப்பெறும்.
மட்டக்களப்பிற்கு போர்த்துக்கேயர்கள் வந்த காலமாக ஒருசிலர் 1622ஆம் ஆண்டை குறிப்பிடுவர். இதுமட்டக்களப்பு கோட்டை கட்டப்பட்ட
கருத்தியலும் வரலாறும் 154

ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நம்பப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் விஸ்பனிலுள்ள ஆவண காப்பகத்தில் பிரான்சிஸ்கள் (Fransiscan) பாதிரிமார்களின் இலங்கையிலிருந்து எழுதிய கடிதங்கள் பல உண்டு. இவற்றில் சில தொகுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பில் மட்டக்களப்புத் தொடர்பான கடிதங்களும் காணப்படுகின்றன. 1539ஆம் ஆண்டிலிருந்து 1542ஆம் ஆண்டு வரையில் பிதா சைாவே கொய்ம்ரா அவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள் அத்தொகுப்பில் காணப்படுகின்றன. அதில் மட்டக்களப்பு ஒரு தனி இராச்சியமாக இருந்ததாகவும், அவ்ராச்சியத்தின் மன்னனைச் சென்றுதான் நேரில் கண்டதாகவும், அம்மன்னன் போர்த்துக்கேய மன்னனிடம் கோட்டை மன்னனிடமிருந்து தனியாக தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பீரங்கிகள் முதலியவற்றைக் கேட்டதாகவும், அதற்கு பதிலாக கப்பல் கட்டுவதற்கான மரங்கள் போன்றவற்றை தருவதாக கூறியதாகவும் அவர் விரிவாக குறிப்பிடுகின்றார். இதிலிருந்து 1539 ஆம் ஆண்டுக்கு முன்னரே மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பற்றிய பரிச்சயம் போர்த்துக்கேயர்களுக்கு இருந்துள்ளது என்பதினை நாம் அறிந்து கொள்ளலாம். இத்தொகுப்பில் மட்டக்களப்புப் பிரதேச மன்னன் போர்த்துக்கேய மன்னனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாவணங்களிலிருந்து 16 ஆம் நூற்றாண்டின் மட்டக்களப்பு நிலவரத்தை அறிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மிக முக்கிய இடமாக இருந்துள்ளது என்பதையும் நாம் இவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்தாய் டிக்கிரி அபயசிங்க அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட போர்த்துக்கீஸ் ரெஜிமென்டோஸ் (Portuguese Reguments on Sri Lanka) எனும் நூல் முக்கியம் பெறுகின்றது. இதில் மட்டக்களப்பு மண்ணில் போர்த்துக்கேயர் எவ்வாறு காலூன்றினர் என்பதினை அறியக்கூடியதாகவுள்ளது. இத்தொகுப்பில் 1582-1597ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட போர்த்துக்கேய நிர்வாக ஆவணங்கள் உள்ளன. அது 1582ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மன்னனிடமிருந்து போர்த்துக்கேயர்கள் 300 அவன (மட்டக்களப்பில் நிலவிய ஒர் அளவு முறை) நெல்லை திறையாகப் பெற்றதையும் குறிப்பிடுகின்றது.
இதற்கு அடுத்ததாக எமக்கு கிடைக்கும் மிக முக்கிய ஆவணம் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு பொறுப்பாகவிருந்த
கருத்தியலும் வரலாறும் |55

Page 30
ஒல்லாந்த அதிகாரிபீட்டர் டீ கிறாவ் என்பவருடைய ஆண்டறிக்கை (Memoir of Peter de Graewe). 8-4-1976 glid g5a55uit'll g6565ds605 மட்டக்களப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாயும், சாதிகள் தொடர்பாயும் பல தகவல்களை தெரிவிக்கின்றது.
1767ஆம் ஆண்டளவில் ஜோஹானஸ் பிறாங்க் என்ற மட்டக்களப்புக்குப் பொறுப்பான இன்னுமொரு அதிகாரியின் சுற்றுப்பயணக் குறிப்பும் முக்கியமானது. மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு பொத்துவில் பாணமை வரைக்கும் சென்று வந்தது. தொடர்பாக அது விபரிக்கின்றது. இதில் அக்காலத்தில் முக்கியம் பெற்றிருந்த போடிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பின் ஏழு பற்றுகளுக்கும் இவர் சென்று வருகின்றார். இக்குறிப்பிலிருந்துதான் மட்டக்களப்பு என்பது சரியாக எங்கு இருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இப்பொழுது மட்டக்களப்புநகரம் இருக்கின்ற இடம் உண்மையில் பழைய மட்டக்களப்பு அல்ல. இப்பொழுது மட்டக்களப்பு உள்ள இடம் (புளியந்தீவு) கோட்டை கட்டுவதற்காக போர்த்துக்கேயரால் தெரிந்தெடுக்கப்பட்ட இடம். மட்டக்களப்பிலிருந்து 30 மைல் தெற்கில் சம்மாந்துறைக்கருகே உள்ள இடத்தை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் மட்டக்களப்பு என்று குறிப்பிடு கின்றது. இக் குறிப்பை பிறாங்கின் ஆவணம் உறுதிப்படுத்துகின்றது. பிறாங் தனது குறிப்புரையில் லீக் (துர அளவு) கணக்கில் மட்டக்களப்பு இருந்த இடத்தை குறிப்பிடுகின்றார். இது மைல்களில் அதே துரமே.
1789ஆம் ஆண்டில் ஒல்லாந்தர்கள் மட்டக்களப்பில் சமூக ஒழுங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர். டச்சு ஆளுநர் வாண்டிகிறாய் (Vande Grafe) அவர்களின் உத்தரவின்படி இது வெளியிடப்பட்டது.
2.6.1789 ஆம் ஆண்டு தமிழிலும் டச்சுமொழியிலும் மட்டக்களப்பின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாணை ஒட்டப்பட்டது. இவ்வாணையில் கோயில்கள், தோட்டங்கள் உட்பட பல தகவல்கள் கிடைப்பதுடன் மட்டக்களப்புப் பகுதியிலும் சமூக ஒழுங்கை ஏற்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவுள்ளது.
அடுத்ததாக டச்சு காலத்திற்குரியமிக முக்கிய சமூக ஆவணமாக வருவது ஒரு சிறந்தநிர்வாகியாக பிரிட்டிசாராலும் கொள்ளப்பட்ட ஜேகப் (8 J600TT67' 676örl J6Jifeit 9.5-i6Oatsu IITg5td (Memoir of Jacob Burnand) 1794ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இவ்வறிக்கையில் மட்டக்களப்புச் சமூகம் பற்றிய பல தகவல்கள் கிடைக்கின்றன. சாதி அமைப்பு, கோயில்களில் யாருக்கு பங்கு போன்ற பல தகவல்கள் இவ்வாவணத்தில் கிடைக்
கருத்தியலும் வரலாறும் 156

கின்றன. பிரிட்டிஸார் இவ்வாவணத்தை மட்டக்களப்பு பகுதியை நிர்வகிப்பதற்கு வழிகாட்டியாக பெரிதும் பயன்படுத்தினார்கள். இவ்வாவணத்தில் பல மிக முக்கிய வரலாற்றுப் புதிர்களை அவர் விடுவித்துள்ளார். மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் காணப்படும் பல விடயங்களை நிறுவுவதற்கு இவ்வாவணம் பெரிதும் பயன்படுகின்றது.
நானும் பேராசிரியர் மக்கில்ஷ்ரேயும், பழையடச்சு மொழித் தேர்ச்சி பெற்றவரான பேராசிரியர் கே.டி.பரணவிதானவுமாக மேற்படி மூன்று அறிக்கைகளையும் தொகுத்து ஆய்வுக் குறிப்புகளுடன் வெளியிடும் பணியில் உள்ளோம்.
டச்சுக் காலத்தைப்பற்றிய அனைத்து நிர்வாக ஆவணங்களையும் 1943ம் ஆண்டு MWJuruanse என்பவர் பட்டியலிட்டு நூலாக வெளியிட்டார். இதில் மட்டக்களப்புப் பற்றி இலங்கை ஆவணக் காப்பகத்தில் உள்ள நூற்றுக் கணக்கான ஒல்லாந்த ஆவணங்கள், நாளாந்தக் குறிப்புகள் 6T6ötu607 Utiquis Liu'GB6iGIT607. (Catalogue of the Archives of the Dutch Central Government of Coastal Ceylon 1640-1796) (360)6) u606015gib பழைய டச்சு மொழியில் கையெழுத்துப்பிரதிகளாகக் காணப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் தெளிவாக வாசிக்கக்கூடிய நிலையில் பேணப்பட்டுள்ளன.
1803-1816 ஆம் ஆண்டுகளின் மட்டக்களப்புப் பகுதியில் ஆங்கில அரசின் கலக்டர்களாயிருந்த ஜிவல் (Jewell), சோவர்ஸ் (Sawers) போன்றோரின் அறிக்கைகள் ஆவண காப்பகத்தில் கிடைக்கின்றன. இவையும் மிக முக்கியமான தகவல்களைத் தருகின்றன. 1801-1803 காலப்பகுதியில் ஆங்கில அரசின் நிர்வாகக் கடிதங்கள், பிரகடனங்கள் மூலமாகவோ மட்டக்களப்பில் அப்போது ஆங்கில அரசுக்கு எதிராக இடம்பெற்ற பெரும் ஆயுத கிளர்ச்சி பற்றிய தகவல்களை நான் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
கோல்புறுக் காலம் வரையில் காணப்படும் காலணித்துவ அறிக்கைகள் (Colonial dispatches) மிக முக்கிய சான்றாதாரங்களாக அமைகின்றன. மற்றும் பிசர் போன்ற ஆங்கிலேய அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின் மூலம் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை, குறிப்பாக நில உடமையில் உள்ளார்ந்தமாக ஏற்பட்ட மாற்றங்களையும் புதிய செல்வாக்குள்ள குழுக்களின் எழுச்சிகளையும் அதனோடு கோயில் உரிமைகள் மாறும் போக்கினையும் அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
கருத்தியலும் வரலாறுழ் |57

Page 31
புளு புக்ஸ் (Blue Books) எனும் நிர்வாக அறிக்கைகளிலும், இணைக்கப்பட்ட அரச வர்த்தமானிகளிலும் (Supplement to the Ceylon Govement Gazette) இவை பற்றி மேலும் விரிவாய் ஆறியலாம்.
இங்கு குறிப்பிட்ட ஆவணங்கள் சிலவே. அதுவும் ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறும் ஆவணங்களையே பெருமளக்கு இங்கு குறிப்பிட்டுள்ளேன். போர்த்துக்கீச மற்றும் டச்சு மொழியில் இவை தவிர மிக ஏராளமான ஆவணங்களுள்ளன.
இன்று எமக்குள்ள மிகப்பெரிய பிரச்சினையே மொழிப்பெயர்ப்பாகும். பழையடச்சு மொழி தெரிந்த தமிழ் அறிஞர் எவரும் எம் மத்தியில் இன்று இல்லை. மேலும் மொழிபெயர்ப்புமிக பொருட்செலவு கொண்டது. மாறாக சிங்கள சமூகத்தில் இம்மொழிப்பாண்டித்தியம் பெற்ற பலர் இருப்பதுடன் மிக ஆழ்ந்த பல ஆய்வுகளையும் இவர்கள் இது தொடர்பாய் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு பூர்வ சரித்திர ஏடுகளை படியெடுத்து ஒப்புநோக்கி எனது ஆசிரியர் வித்துவான் கமலநாதனும் அவனுடைய துணைவியாரும் ஆராய்ந்து கொண்டிருந்த வேலையில்தான் எனக்கு இன்னொரு உண்மையும் புரிந்தது. அதாவது எமது பழைய தமிழ் வரலாற்று ஏடுகளை ஒப்புநோக்கிப் படிப்பதற்குக் கூடி எம்மத்தியில் அறிஞர்கள் மிக அருகிவிட்டனர் என்பதே அது.
எனவே இவ்வாறு ஏராளமான ஆவணங்களை முதல் நிலை மூலாதாரமாக நாம் கவனத்தில் எடுத்துத்தான் மட்டக்களப்பு வரலாறு என்பதை நோக்க வேண்டியுள்ளது. அவ்வாறு வரும் வரலாற்றைக் கொண்டுதான் இன்றுள்ள சமூக அமைப்பைப் பற்றிக்கூட நாம் புரிந்துகொள்ளலாம். இவ்வாறான வரலாற்றெழுதுகைக்கு வரலாற்றுணர்வும், அறிவியல் அணுகுமுறையும், மொழித்தேர்ச்சியும், உண்மையான ஈடுபாடும் இருத்தல் வேண்டும்.
இந்த வகையில் எமது மண்ணின் வரலாற்றை புரிந்துகொள்வதற்கு வித்துவான் கமலநாதனும் அவரது துணைவியாரும் எடுத்துள்ள அரிய முயற்சி ஈழத்தமிழருக்கு இன்றியமையாத ஒருகொடையாகும்.
கருத்தியலும் வரலாறும்|58

சித்திரவேலாயுதர் காதல்: சில வரலாற்றுக் குறிப்புகள்
Guanáffluido.luéuogangsgai
நூலாசிரியர்
ஈழத் தமிழ் நூல்கள் பலவற்றின் பாடல்களைத் தெரிந்து, ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் தொகுதியானது நூலொன்றைச் சாகித்திய மண்டலம் சில தசாப்தங்களின் முன் வெளியிட்டது. அதன் தொகுப்பாசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், பின்பு கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்த் துறையில் விரிவுரையாளராக விளங்கியவர். பின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவி பெற்றவர். அவர் செய்த நல்ல பணிகளிற் கவிதைக் களஞ்சியம் பிரதானமானது. அந்தப் பணியில் அவருக்குப் பலர் துணையாக இருந்தனர் என்று பலர் சொல்லுகிறார்கள். அவர்களிற் பலர் பிரபலமான தமிழ்ப் பண்டிதர்கள்.
கிடைத்தற்கு அரிதாகிவிட்ட பல நூல்களின் பாடற்பகுதிகளை அந்தத் தொகுப்பு நூல் உள்ளடக்கியிருந்தது. அத்தகைய நூல்களில் ஒன்று வீரக்கோ முதலியார் பாடிய வெருகல் பூரீ சித்திரவேலாயுதர் காதல் என்பது. இற்றைக்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த நூலைப் பார்த்த போது குறிப்பிட்ட பகுதிகளை எம்மாற் படிக்க முடிந்தது. அதிலுள்ள பாடல்கள் சில எம்மைப் பெரிதுங் கவர்ந்தன. பொதுவாகப் பல தமிழ் நூல்களிலே காணப்படாத அம்சமொன்று அவற்றிலே காணப்பட்டது. தமிழிலக்கிய வரலாற்றிலே நூல்களின் கால நிர்ணயம் ஒரு பிரச்சினையாகும். அவற்றிலே
பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய "ஈழத்து இலக்கியமும் வரலாறும்" (2004) எனும் நூலில் இருந்து 'சித்திரவேலாயுதர் காதல்; சில வரலாற்றுக் குறிப்புகள் எனும் பகுதியில் இருந்து ஒருபகுதி இங்கு பிரசுரமாகிறது. இதன்மூலம் பல்வேறு அரிய விடயங்களை அறிந்து கொள்ளலாம். வரலாற்றியல் பற்றிய சிந்தனையில் புதுவெளிச்சம் பாய்ச்சும் பகுதியாகவும் இதனைக் கருதலாம்.
கருத்தியலும் வரலாறும் 159

Page 32
நூலாசிரியரைப் பற்றியும் அவர் நூலை எழுதிய காலம். சூழ்நிலை என்பன பற்றியும் தெளிவாக எதுவுஞ் சொல்லப்படுவதில்லை. இலங்கையில் எழுந்த தமிழ் நூல்கள் பலவற்றிலும் இந்தக் குறைபாடு உண்டு. சரசோதி மாலை, பூரீ வெருகற் சித்திரவேலாயுதர் காதல் என்பன இதற்குப் புறநடையானவை.
பூரீ வெருகற் சித்திரவேலாயுதர் காதல் என்னும் நூலிலிருந்து தெரிவு செய்து ஈழத்துக் கவிதைக் களஞ்சியத்திலே சேர்த்துக் கொள்ளப்பட்ட பாடல்களில் எம்மைப் பெரிதும் கவர்ந்தவை மேல் வருவனவையாகும்:
பம்பிநிதங் கண்டனைநீர் பாயும் வளமிகுந்த தம்பலகமத்திற்ற கையுறு வேளாண் மரபில் (27)
ஐம்பெருமானருந் தவத்தில் வந்துதித்தோன் செய்ய சித்திரவேலன் பொற் சீரடியை யேத்திடுவோன் (28)
செப்பரிய வாய்மைசெறிவீரக்கோன் முதலி ஒப்புவமையில்லா வொளிபரவு வேலவன் மேற் (29)
சொல்லுமிந்தக் காதறனைக் தொல்லுலகி லெல்லாரும் நல்லதெனக் கொள்வரென்றே நம்பியியம் பலுற்றேன் (30)
துன்னிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும் வன்னிமை பொற்பாதம் வணங்கையினி சொல்லாதை (378)
வன்னிமை தேசத்தார் மகாநாடு தான் கூடி மின்னுமெழில் மண்டபத்தில் வீற்றிருக்கும் வேளையில் (382)
கோதில் புகழ்சேர் வீரக்கோன் முதலிதானியற்றுங் காதலரங்கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை (383)
இவற்றுள் முதல் நான்கு பாடல்களும் நூலாசிரியரைப் பற்றியவை. ஏனைய மூன்றும் நூலின் அரங்கேற்றம் பற்றியவை. நூலாசிரியரின் பெயர் வீரக்கோன் முதலி. அவர் தம்பலகாமத்தவர். வெருகற் சித்திரவேலாயுதர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நூலாசிரியர் முதலிப்பட்டம் பெற்றிருந்தமையால் அவர் தலைமைக்காரர் பரம்பரை ஒன்றைச் சேர்ந்தவரென்று கொள்ளலாம். அவர் தேசத்துப் பரிபாலனத்திலே உயர் பதவியினைப் பெற்றிருந்தவராதல் கூடும். பாடல்கள் வீரக்கோன் முதலியாரின் வித்துவப் புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் உள்ளன. வெருகலைப் பற்றிப்பாடும் நூலாசிரியர் தேசத்து வளங்களையும், பிற கோயில்களையும், வழிபாட்டு நெறிகளையும், ஊர்கள் பலவற்
கருத்தியலும் வரலாறும் | 60

றையுஞ் சிறப்பாகவும் சுருக்கமாகவும் வர்ணிக்கும் முறை கவர்ச்சி.
u IIT60Igb.
நூலின் அரங்கேற்றம்
நூலின் அரங்கேற்றம் ஒரு பெருவிழாவினை ஒத்த வைபவமாயிருந்தது. அது சித்திரவேலாயுதர் கோயில் மண்டபத்திலே நடைபெற்றது. தேசத்தவர் சபையோராயிருந்தனர். அக் கூட்டம் தேசத்தவரின் மகாநாடாக விளங்கியது. தேசத்து வன்னிமையின் தலைமையில் அந்த மகாநாடு கூடியிருந்தது. வன்னிபத்தின் பெயர் இருமரபுந்துய்ய இளஞ்சிங்கம். இந்த விவரங்கள் இந்நூலின்றி வேறெங்குங் காணப்படாதவை. ஒரு நூலின் அரங்கேற்றம் பற்றிய இத்தகைய விவரங்கள் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றிலே வேறெந்த நூலைப் பற்றியுங் கிடைக்காதவை. சரசோதி மாலை என்னுஞ் சோதிட நூலின் ஆசிரியரான தேநுவரைப் பெருமாள் என்னும் போசராசன் பாராக்கிரமபாகுவின் அரச சபையிலே அந்நூலின் அரங்கேற்றம் நடைபெற்றதென்று கூறுவார். ஆயினும் அதிலே சபையோரைப் பற்றிய இவ்வாறான வர்ணனை எதுவுமில்லை.
தேசத்து வன்னிமை
வீரக்கோன் முதலியாரின் காலத்திலே திருகோணமலைப் பிராந்தியத்திலே வன்னிபமாய் விளங்கியவர்களில் ஒருவர் இளஞ்சிங்கம். அப்பிராந்தியம் நான்கு வன்னிமைப் பற்றுகளைக் கொண்டது என்பது கோணேசர் கல்வெட்டு என்னும் நூல் வாயிலாகவும், உலாந்தாக்காரர், பிரித்தானியர் என்போரின் ஆட்சிக்காலங்களில் எழுதப்பெற்ற சமகாலத்து ஆவணங்கள் மூலமாகவும் அறியப்படுஞ் செய்தியாகும். திருகோணமலை நகரப்பகுதி. தம்பலகாமம் பற்று. கட்டுக்குளம் பற்று. கொட்டியாரம் பற்று என்ற நான்கும் தனித்தனியான வன்னிபங்களின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்த பகுதிகளாகும்.
இருமரபுந்துய்ய இளஞ்சிங்கம் இவற்றுள் எந்தப் பற்றிலே நாயகமாக விளங்கினான் என்பதைவீரக்கோன் முதலி குறிப்பிடவில்லை. சமகாலத்தவர்களுக்கு அதைச் சொல்லி வைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் இளஞ்சிங்கம் எங்கே வன்னிபமாய் இருந்தான் என்பதை அறிந்திருப்பர். ஆனால், தங்கள் தேச வரலாறுகளை அறியாதவர்களாயும், அதிலே ஈடுபாடு அற்றவர்களாயும் உள்ளவர்களான எமது காலத்தவருக்கு இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. வெருகலானது
கருத்தியலும் வரலாறும் 161

Page 33
திருகோணலைப் பிராந்தியத்தின் தென்பகுதியான கொட்டியாரம்
பற்றின் எல்லையிலுள்ளது. அங்குள்ள கோயிலின் மண்டபத்திலே கூடிய
தேசத்தவர் மகாநாட்டிலே அக் கிராசனராயிருக்கும் உரிமை
கொட்டியாரம் பற்று வன்னிபத்திற்கு மட்டுமே உரியதாகும். அந்தப்பற்று வன்னிபங்கள், போர்த்துக்கேயர் திருகோணமலையினைக் கைப்பற்றி,
அதன்பின் பூபாலக் கட்டிலிருந்த தனியுண்ணாப் பூபால வன்னிமை
வம்சத்தாரை நிர்மூலஞ் செய்தபின், பிராந்தியத்திலே முதன்மை
பெற்றனர். கொட்டியாரம் பற்று வன்னிபங்கள் கண்டி மன்னரோடு
ஏற்படுத்தியிருந்த தொடர்புகளைப் பற்றிய பல குறிப்புகள் 17 ஆம்
நூற்றாண்டில் எழுதப் பெற்ற ஆவணங்களில் உண்டு.
திருகோணமலைத் தமிழரின் வரலாற்றிலே மறைந்துபோன ஓர்
அம்சத்தை மீட்பதற்கு வீரக்கோன் எழுதி வைத்த குறிப்புப் பெரிதும் பயன்படுகின்றது என்பது குறிப்பிடற்குரியது. அதிலே தேசத்தார், மாநாடு என்பன பற்றிச் சொல்கின்றார். இவை வழக்கொழிந்த சொற்கள்; அவை குறிக்கும் வழமைகளும் அப்பிரதேசத்தவர்களும் புரிந்துகொள்ள முடியாதனவாகிவிட்டன. இவற்றைத் தெளிவுபடுத்துவதற்குத் தெற்கிலுள்ள மட்டக்களப்பு நோக்கிப்பார்வையைச் செலுத்த வேண்டும். அங்கிருந்து கிடைத்துள்ள செப்பேடொன்றிலே மட்டக்களப்பு தேசம் என்னும் மொழித்தொடர் காணப்படுகின்றது. செப்பேடு கண்டி மகாராச. னால் வழங்கப்பட்டதென்றும் அதிலே குறிப்புண்டு. இந்தச் சாசனத்தைப் படித்து வெளியிட்டவர்கள் தேசம் என்ற சொல்லை அதிகம் பொருட். படுத்தியதாகத் தெரியவில்லை.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் விடயங்கள் தொடர்பாக இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிலரது ஆலோசனை. களைப் பெற்றபோதும், சில நூற்குறிப்புகளைப் படித்த போதும் முக்குவதேசம் என்ற சொற்றொடர் மிக அண்மைக் காலத்திலே தேசம் என்னுஞ் சொல் வழக்கினைப் பற்றிச் சற்று ஆழமாகச் சிந்திக்க நேர்ந்தது. தேசம் என்பது வட இலங்கையிலும் கிழக்கிழங்கையிலும் வாழ்ந்த தமிழரிடையே நிலவிய ஒரு சொல்லாகும். யாழ்ப்பாண தேசம், மட்டக்களப்பு தேசம் என்ற சொற்றொடர்கள் முற்காலங்களில் வழங்கி வந்தமையினை நூல்களிலும் ஆவணங்களிலுமுள்ள குறிப்புகளினால் அறிகின்றோம். அது பிராந்தியம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அது பழந்தமிழ் நூல்களிலும் சாசனங்களிலுஞ் சொல்லப்படும் நாடு என்பதற்குச் சமனானது.
கருத்தியலும் வரலாறும் 62

தேசம் என்பது புவியியற் பரிமாணங் கொண்டது. எல்லைகள் குறித்து அடையாளங் காணப்படக் கூடிய ஒரு நிலப்பகுதியாய் அமைந்தது. அது சில தனித்துவமான வரலாற்று அனுபவங்களால் ஏற்பட்ட சமுதாய உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது. மேலும், அது மொழி வழியாகவும், சமூக வழமைகள், பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றின் வழியாகவும் உருவாகிய பொதுமையினை உணர்ச்சி பூர்வமாகப் பிரதிபலிப்பது. எனவே, தேசம் என்பது இலங்கைத் தமிழரின் அரசியல் நோக்கிலமைந்த சிந்தனை வளர்ச்சியில் ஒரு பிரதானமான கட்டத்தைக் குறிக்கும் கோட்பாடாகும். அது முற்காலங்களிலே நிலவியது; நெடுங்கால மரபொன்றினைப் பிரதிபலிப்பது. தேசம் என்ற சொல்வழக்கு திருகோணமலைத் தமிழரிடையிலும் நிலவியது என்பதை வீரக்கோன் முதலியின் பாடல்கள் வழியாக அறிகின்றோம். கோணேசர் கல்வெட்டு. திரிகோணாசல புராணம் என்னும் நூல்கள் திருகோணமலைத் தமிழரின் பிராந்திய உணர்வுகளை ஒருவகையிலே பிரதிபலிக்கின்றன என்று அவற்றைப் பற்றி எழுதிய கட்டுரைகளிற் குறிப்பிட்டுள்ளோம்."யூரீசித்திரவேலாயுதர் காதலிலுள்ள பாடல்கள் சிலவற்றால் அந்தக் கருத்து அழுத்தம் பெறுகின்றது.
இராசசிங்க மகாராசன்
தேசத்துவ வன்னிமை பற்றிச் சொல்லும் வீரக்கோன் முதலி. தேசத்தின் மீது மேலாண்மை பெற்ற முடிமன்னனைப் பற்றியுஞ் சற்று விரிவாகக் குறிப்பிடுகின்றார். அந்த மன்னனைப் பற்றிய பாடல்கள் மேல்வருவனவாகும்:
எண்டி சையுமேத்து மிரவி குலத்துதித்தோன் கண்டி நகராளுங் கவினுலவு ராசசிங்கன் மானமுடன் மிக்க வயனிலமுந் தோப்புகளும் மானியமா வீழ்ந்த புகழ்படைத்த பூபாலன் (372)
மாணிக்கம் வைத்திழைத்த வன்னப் பதக்கமுடன் பூணணிகளிந்து புகழ்படைத்த பூபாலன் (373)
கண்டி நகராளுங் கனகமுடி ராசசிங்கன் தொண்டனிடும் போதெனது சேதியை நீசொல்லாதை (374)
இந்தப் பாடல்கள் இராசசிங்கன் என்ற மன்னனொருவனைப் பற்றியவை. அவன் கண்டி நகராளும் வேந்தன். சூரிய வம்சத்தவன் என்று கொள்ளப்பட்டவன். இராசசிங்கன் என்ற பெயர் கண்டியில் ஆட்சிபுரிந்த
கருத்தியலும் வரலாறும் 63

Page 34
மன்னர் பலருக்குரியதாகும். சீதாவாக்கை அரசனாகிய இராசசிங்கன் 17ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலே கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி அதனைச் சிலகாலம் ஆட்சி புரிந்தான். அவன் பேராற்றல் மிக்கவன். சைவசமயத்தைச் சேர்ந்தவன் என்றுஞ் சில நூல்கள் கூறும்." இராசதானியன் பெயரால் இவ்ராச்சியத்தைக் குறிப்பிடுவது வழக்கம் என்பதால் "கண்டி நகராளும் இராசசிங்கன்" என்ற வர்ணனை அவனுக்குப் பொருந்துவதாகும். ஆயினும், கிழக்கிலங்கையிலுள்ள வன்னிபங்களோடு சீதாவாக்கை மன்னனான இராசசிங்கன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தமைக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை.
எனவே, பூரீ சித்திரவேலாயுதர் காதலிற் புகழ்ந்துரைக்கப்படும் அரசனைக் கண்டி மன்னனாகிய பிரபலம்மிக்க இரண்டாம் இராஜசிங்கன் என்று அடையாளம் காண்பதே பொருத்தமாகும். எனவே, நூல் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொள்ளத்தக்கதாகும். வீரக்கோன் முதலி, இளஞ்சிங்க வன்னிபம் ஆகியோர் இராசசிங்கனின் காத்தவர் என்பது நூலிலுள்ள பாடல்கள் மூலம் அறியப்படுகின்றது. இப்பொழுது கிடைக்கின்ற சான்றாதாரங்களின் அடிப்படையிலே இவர்கள் இரண்டாம் இராசசிங்கன் காலத்தவர் என்று கொள்வதே பொருத்தமான முடியாகும்.
இராசசிங்க மன்னன் சில தானங்களைக் கோயிலுக்கு வழங்கியிருந்தான். வயல்நிலங்களையும் தோப்புகளையும் மானியமாக அவன் கொடுத்தானென்று இந்நூலிலே கூறப்பெற்றுள்ளது. மேலும், மாணிக்கக் கற்கள் பதித்துச் செய்யப்பட்ட பதக்கத்தையும் வேறு ஆபரணங்களையும் மன்னன் வழங்கினான் என்றுஞ் சொல்லப்படுகின்றது.
கருத்தியலும் வரலாறும் 164

தமிழ்ச் சாசனங்களும் வரலாற்று ஆராய்ச்சியும்
பேராசிரியர் சி.பத்மநாதன்
ஈழநாட்டு வரலாற்று மூலங்கள்
சுற்றத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அறிவு, ஆற்றல், இதய உணர்வு என்பனவற்றை உறுதுணையாகக் கொண்டு மக்கள் சமுதாயம் வளர்ந்தவாற்றை உள்ளவாறு எடுத்துக்கூறி விளக்குவதே வரலாறு, சமுதாய மாற்றங்களுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப வரலாறு என்னும் கலையும் வளர்ந்து வருகின்றது. வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கையாளப்படும் விதங்களும் அவற்றை விளக்கும் முறைகளும் மாற்றமடைந்து வருகின்றன.
வரலாற்று நூல்கள், ஆட்சியாவணங்கள், சாசனங்கள், காவியம், நாடகம் போன்ற இலக்கியங்கள், புராதன கட்டடங்கள், அழிபாடுகள், பண்டைக்கால மக்கள் தம் அன்றாட வாழ்க்கையில் உபயோகித்துவிட்டுச் சென்ற உபகரணங்கள் முதலிய தொல்பொருட்கள் போன்ற யாவும் ஏதோ வகையில் ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் பண்பாட்டு நிலைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன.
மகாவம்சத்தின் ஈழவரலாறு
ஈழம் அளவிலே சிறிதாகியிருப்பதாலும் ஒரு தீவாக அமைந்துள்ளதாலும் அண்மையிலுள்ள ஏனைய பல ஆசிய நாடுகளைப் போலன்றி கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து ஐரோப்பியர் காலம் வரை அது ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவிலே அமைதியும் தொடர்ச்சியும் இடம் பெற்றதாற் சமயநிறுவனங்களும் நிர்வாக நிறுவனங்களும் அழிந்தொழியாதுநிலைபெற்றுவந்தன.
பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதிய "ஈழத்து இலக்கியமும் வரலாறும்" (2004) எனும் நூலில் இருந்து தமிழ்ச்சாசனங்களும் ஈழத்து வரலாற்று ஆராய்ச்சியும்' என்ற பகுதி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
கருத்தியலும் வரலாறும் 65

Page 35
பெளத்த சங்கம் போன்ற சமயநிறுவனங்கள் நிலைபெற்றுவந்தமையாற் பெளத்தசமயம் பரவிய காலத்தில் ஈழத்தை அடைந்த இலக்கிய மரபும் வரலாற்று மரபும் தொடர்ச்சியாக நிலைபெற்றதோடு அவை வளர்ச்சியும் கண்டன. மகிந்த தேரரின் காலம் முதல் ஈழத்திலே வளர்ந்த வரலாற்று மரபைக் கருவாகக் கொண்டெழுந்த பாளி மொழியிலுள்ள நூலே மகாவம்சம். அந்நூல் பல பிரிவுகளையுடையது. அவை பல்வேறு காலப்பகுதிகளிலே வெவ்வேறு அசிரியர்களால் எழுதப்பட்டவை. அவை அனைத்தும் வரலாற்று மூலங்கள் என்ற வகையிலே தரத்திலும் தன்மையிலும் வேறுபடுகின்றன. தேவநம்பியதீசன் காலம் முதற் கண்டியிலாண்ட நாயக்க மன்னனாகிய கீர்த்தி யூரி ராஜசிங்கன் காலம் வரையிலுள்ள ஈழவரலாற்றைத் தொடர்ச்சியாகக் கூறும் சிறப்பினையுடைய நூல் மகாவம்சம். அது வரலாற்று நிகழ்ச்சிகளைக் காலவரை. யறைப்படி - புத்தவர்ஷத்தின் அடிப்படையிலே - கூறுகின்றது. மன்னர்களின் ஆட்சியாண்டுகளைக் கூறி, அவர்களின் ஆட்சிகளில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சிகள் பற்றியும் கூறுகின்றது. ஆயினும், ஈழவரலாற்றை முழுமையாகவும் முறைப்படியும் இந்நூலின் துணை கொண்டு அறியமுடியாது. அரச குலத்தை மையமாகக் கொண்டே மகாவம்சம் அரசியல் வரலாற்றை அறிவதற்கு அது அதிகம் பயன்படுவதில்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வட இலங்கையில் எழுச்சி பெற்றுநிலைத்த யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றி மகாவம்ச ஆசிரியர் ஒன்றுமே கூறவில்லை. கம்பளை, கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சி செய்த சிங்கள மன்னர்களைப் பற்றி மிகச் சுருக்கமாக - ஒரு சில வரிகளில் மட்டுமே - கூறியுள்ளார்.
மகாவிகாரை வளர்த்த வரலாற்று மரபை ஆதாரமாகக் கொண்டு மகாவிகாரையைச் சேர்ந்த மகாநாமர் முதலிய தேரர்களினாலே எழுதப்பெற்ற இந்நூலிற் சமய வளர்ச்சிகளின் பின்னணியிலேயே அரசியல் வரலாறும் கூறப்பெற்றுள்ளது. இன உணர்ச்சியையும் மத உணர்ச்சியையும் வளர்க்குமுகமாக நூலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. விவசாய முறைகள், தொழில்நிலைகள், வாணிபம், சமய நிறுவனங்கள், சமுதாய நிலைகள் என்பன பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் மகாவம்சத்தில் இடம்பெறவில்லை. அவற்றைப் பற்றி அறிவதற்குச் சாசனங்களையே நோக்க வேண்டும். எனவே, ஈழத்துச் சாசனங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஈழவரலாற்றைத் தக்க முறையிலே அறிந்து கொள்வதற்கு மிகவும் பயன்படும். אי
கருத்தியலும் வரலாறும் 166

ஈழத்துச் சாசனங்கள்
சாசனங்கள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், என இருவகைப்படும். சில சாசனங்கள் அரசன் அல்லது அவனுடைய அதிகாரிகள் ஏற்படுத்திய பிரகடனங்கள், நிர்வாக ஏற்பாடுகள் போன்றவற்றையும், அற. நிலையங்கள், சமய நிறுவனங்கள் முதலியவற்றுக்கு அவர்கள் கொடுத்த தானங்களையம் பொருளாகக் கொண்டுள்ளன. வேறு சில. பொதுமக்களுட் சிலர் தனியாகவோ கூட்டாகவோ புரிந்த செயல்களைக் கூறுகின்றன. ஈழத்திலே பிராகிருதம், சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளிலே எழுதப்பெற்ற சாசனங்கள் கிடைக்கின்றன. அராபிய, பாரசீக மொழிச் சாசனங்களும் உள்ளன. சீனப் பேரரசரான யுங் - லோ தேநுவரையிலிருந்து கோயிலொன்றுக்கு வழங்கிய தானங்கள் பற்றிய விவரங்கள் சீனமொழியிலே சாசனமாக எழுதப்பட்டுள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவிலே பெளத்த சமயம் ஈழமனைத்தும் பரவியபின் ஈழத்தவர் எழுதும் முறையினை அறிந்து கொண்டனர். காலத்தால் முந்திய ஈழத்துக் கல்வெட்டுக்கள் அனைத்தும் பிராகி எழுத்திலும் பிராகிருத மொழியிலும் வரையப்பட்டுள்ளன. அவை அசோகனது ஆட்சியிலும் அதற்குப் பின்பும் இந்தியாவிலே, குறிப்பாகத் தென்னிந்தியாவிலே, சாசன வழக்கிலுள்ள மொழியையும் வரிவவெங்களையும் ஒத்திருக்கின்றன. பிராமிக் கல்வெட்டுகளுள் மிகப் பெரும்பாலனவை பெளத்த சங்கத்தக்குக் கொடுத்த நன்கொடைகளைப் பற்றியே கூறுகின்றன.
பெரும்பாலான ஈழத்துச் சாசனங்கள் சிங்கள மொழியிலுள்ளன. அவை கி.பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கண்டி அரசின் இறுதிக்காலம் வரையுள்ள காலப்பகுதியைச் சேர்ந்தவை. அவற்றிலே பிரதானமான சாசனங்கள் தொல்பொருளியல் திணைக்களத்தினாலே பிரசுரிக்கப்படும் "இலங்கைச் சாசனங்கள்" என்ற தொகுதிகளிலும் சில சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் வெளியிடப்படாத, படியெடுக்கப்பெற்ற பல சாசனங்களுள்ளன. வடமொழிச் சாசனங்கள் சிலவே காணப்படுகின்றன. நூற்றுக்கு மேலான தமிழ்ச் சாசனங்களும் கண்டெடுக்கப்பெற்றுள்ளன.
வரலாற்று மூலங்கள் என்ற வகையிலே சாசனங்களும் அவற்றின் பொருளமைதிகளுக்கேற்பப் பல தரத்தனவாயுள்ளன. சில கல்வெட்டுக்களும் பட்டயங்களும் மிக நீண்டனவாகிப் பல நூற்றுக்கணக்கான வரிகளைக் கொண்டுள்ளன. வேறு சில, குறிப்பாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் மிகச் சிறியனவாய் அமைந்துள்ளன. முன் கண்டவாறு அரசர், அரசரின் அதிகாரிகள் அமைச்சர் ஆகியோரின் பிரகடனங்கள். நிர்வாக
கருத்தியலும் வரலாறும் 67

Page 36
ஏற்பாடுகள் என்பவற்றோடு அவர்களும் பொது மக்களும் அறநிலையங்களுக்கும் சமய நிறுவனங்களுக்கும் கொடுத்த தானங்களுமே பெரும்பாலான சாசனங்களின் பொருளாய் வந்துள்ளன. அவை அரசும் மக்களும் ஆற்றுகின்ற செயல்களாகையால் அவற்றைக் கூறும் ஆவணங்கள் வாயிலாகச் சமுதாய நிலைகளையும் சமூகமும் அதன் நிறுவனங்களும் அடைந்த வளர்ச்சிகளையும் தளர்ச்சிகளையும் அறிந்து கொள்ளலாம். அரண்மனைகளிலும் பிற நிர்வாக நிலையங்களிலும் இருந்த ஏடுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டமையாற் சாசனங்களின் மூலமே பதினைந்து நூற்றாண்டிற்கு முற்பட்ட ஈழ வரலாற்றில் எந்தவொரு குறிப்பிடடது. காலத்து நிலைகளையும் ஒரளவிற்கு அறிந்து கொள்ளலாம்.
நிர்வாக முறைகள், அவற்றிலே பணிபுரிகின்ற பல தரப்பட்ட அதிகாரிகள், சமூகப் பிரிவுகள் கைத்தொழில் முறைகள், வாணிபம், சமய நிறுவனங்கள், மொழி, இலக்கிய வளர்சிகள் போன்ற பல துறைகளைப் பற்றியும் சாசனங்களிலே சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
சாசனங்களை வரலாற்றாராய்ச்சிக்குப் பயன்படுத்துமிடத்து அவை கூறும் பொருளையும் அப்பொருள் கூறப்படும் முறையினையும் அவதானத்துடன் நோக்க வேண்டும். சில சாசனங்களிலே புனைந்துரை. களும் புகழ்மொழிகளும் மலிந்து வருகின்றன. மேலும், அவற்றை உருவாக்கிய சிலர் சிறந்த கவிஞர்களாக இருந்ததனால் உவமான உவமேயங்கள் முதலிய அணி அலங்காரங்களைச் சிறந்த முறையிற் கையாண்டுள்ளனர். அவற்றின் காரணமாகப் பொருள் மயக்கம் ஏற்படுவதோடு சில வரலாற்றுண்மைகளும் திரிபடைகின்றன. மன்னனின் புகழைக் காவியநயம் பொருந்தக் கூறுமிடத்து மெய்க்கீர்த்திகளிலே பொருளற்ற பல புனைந்துரைகள் இடம் பெறுகின்றன.
வரலாற்று மாணவர்கள் சாசனங்களை, குறிப்பாகச் செப்பேடு. களை, ஆராய்ச்சிக்கு உபயோகிக்குமிடத்து அவை ஆதாரபூர்வமானவையா என்பதனை ஆராய்ந்து அறிதல் வேண்டும். நிலம் முதலிய சொத்துக்களிலே ஏதோவிதமாகத் தாம் பெற்றிருந்த உரிமைகளைப் பயன்படுத்தி அச்சொத்துக்களைத் தம் உடைமைகளாக்கிக் கொள். ளும் நோக்குடன் சிலர் போலிப்பட்டயங்களைத் தயாரிப்பதுமுண்டு. தென்னகத்திலும் ஈழத்திலும் அவ்வாறான சில ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது.
கருத்தியலும் வரலாறும் | 68

சாசனங்களும் காலவரையறைகளும்
ஒருசாசனத்தின் காலத்தினைத் திடமாக அறிந்தால் மட்டுமே அதனை வரலாற்று ஆராய்ச்சிக்கு நன்கு பயன்படுத்த முடியும். சாசனங்களை எழுதுமிடத்து. ஆளும் மன்னனையும் அவனுடைய ஆட்சியாண்டையும் குறிப்பிடுவது வழக்கம். சில சாசனங்கள் சக வருஷத்தினைக் குறிப்பிடுகின்றன. வேறு சில எந்தவிதமான காலவரையறை பற்றிய குறிப்புகளையும் கொண்டிருக்கவில்லை. மன்னனுடைய பெயரும் ஆட்சியாண்டும் கூறப்பெற்ற பொழுதிலும் சில சாசனங்களில் எழுதப்பெற்ற ஆண்டினை அறிந்து கொள்வது சிரமம். ஏனெனில் ஒரே பெயரைக் கொண்ட மனன்ர் பலர் இருந்திருக்கின்றனர். ஈழத்து வேந்தர்களில் காமணி அபய, அக்கிரபோதி, மஹிந்த, விஜயபாகு, பராக்கிரமபாகு, புவநேகபாகு முதலிய பெயர்களைக் கொண்டிருந்த மன்னர்கள் பலர். சாசனத்திலே காலம்பற்றிய குறிப்புகள் இல்லாவிடத்தும், அவை இருந்தும் தெளிவில்லாதிருக்குமிடத்தும் வரிவடிவங்களின் துணைகொண்டே சாசனத்தின் காலத்தை அறியலாம். வரிவடிவ ஆராய்ச்சியிலே தக்க அறிவு, பல சாசனங்களை வாசித்ததன் பயனாகப் பெற்ற பயிற்சியும் கொண்ட சாசனவியலாளரே வரிவடிவங்களின் துணைகொண்டு அவ்விதமான சாசனங்களின் காலத்தை நிர்ணயிக்க முடியும். அதுவும் ஒரு வரலாற்று மூலம் என்ற வகையிலே தன் சிறப்பினை இழந்து விடுகின்றது. ஈழத்தினைப் பொறுத்த வரையில் பதினேழாம் நூற்றாண்டளவில் இந்நிலை ஏற்பட்டது. போர்த்துக்கேயரும் அவர்களின் பின் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் ஈழத்தின் கரையோரப்பகுதிகளில் நிர்வாக அறிக்கைகள் பெரும்பாலும் கடதாசியிலே எழுதப் பெற்றன. ஐரோப்பியர், நிர்வாக அறிக்கைகளை எழுதும் முறையிலும் சில புதிய வழிகளைப் புகுத்தினார்கள். அரசிறை நிர்வாகம், வர்த்தகம், அரசியலுறவுகள் என்பனவற்றைப்பற்றிப்புள்ளிவிவரங்களோடு விரிவான முறையில் அறிக்கைகளைத் தயாரித்தார்கள்.
போர்த்துக்கேயரும் அவர்களைத் தொடர்து ஒல்லாந்தரும் ஆண்ட காலத்திலே கரையோர மாகாணங்களைப் பற்றி ஆட்சியாளர் தயாரித்த அறிக்கைகள் நூற்றுக் கணக்கிலே காணப்படுகின்றன. மேல் நாட்டவரின் ஆட்சி ஏற்பட்ட பின்பே ஈழநாட்டு அரசியல். பொருளாதார, சமூக, வாணிப நிலைகள் பற்றி விரிவானமுறையிலே அறியமுடிகின்றது. எனவே, ஈழநாட்டு வரலாற்று ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டிலே பதினேழாவது நூற்றாண்டளவிற் சாசனவியலானது அதுவரை பெற்றிருந்த முக்கியத்துவத்தை முற்றிலும் இழக்கின்றது எனலாம்.
கருத்தியலும் வரலாறும் 69

Page 37
தமிழ்க் கல்வெட்டுக்களும் வரலாறும்
எ.சுப்பராயலு
தமிழ்நாட்டில் கல்மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் ஏறக்குறைய கிறித்துவுக்கு முன் இரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி அண்மைக்காலம் வரை காணப்படுகின்றன. இவற்றோடு செம்புத்தகட்டில் எழுதும் வழக்கமும் ஆறாம் நூற்றாண்டு முதல் இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டு வரை கல்வெட்டுக்கள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. மேலும் அவை ஓரிரு வரிகள் கொண்டவையாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. 550க்குப் பின் வட தமிழ்நாட்டில் பல்லவர் அரசும், தெற்கே பாண்டியர் அரசும் வளரும் நிலையிலும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் எண்ணிக்கையிலும் வகையிலும் வளர்ந்தன. அதற்குப்பின் சோழர் ஆட்சிக்காலத்தில், அதாவது 10-13ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை உலகில் வேறு எங்கும் எப்பொழுதும் கண்டிராத அளவுக்கு உயர்ந்தது. 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் அவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. விஜயநகர ஆரசாட்சிக் காலத்தில் செப்பேடுகள் ஏராளமாக வெளியாயின என்பதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் காலந்தோறும் கல்வெட் டுக்கள் எவ்வளவு பொறிக்கப்பட்டன என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை 1 காட்டும்:
இந்த அட்டவணைக் கணக்கு ஒரு தோராயமான மதிப்பீடுதான். கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscriptions) தொகுதிகள், கல்வெட்டுகள் ஆண்டறிக்கைகள் (Annual Report in Epigraphy) (pgb65u 16 libó02nd 9ilgill J60Lu JTab 60615gs இக்கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய
முனைவர் எ.சுப்பராயலு எழுதிய 'தமிழ்க்கல்வெட்டுக்களும் வரலாறும் எனும் கட்டுரை அவர் பேரா.செ.இராசு அவர்களுடன் இணைந்து பதிப்பித்த "தமிழ்க் கல்வெட்டியலும் வரலாறும்" (2001) எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூல் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கருத்தியலும் வரலாறும் 70

காலம் அரசு கல்வெட்டுக்கள் செய்பேடுகள் எண்ணிக்கை எண்ணிக்கை
550-850 பல்லவர் 400
பாண்டியர் 300
பிற 300 60
850-985 சோழர் 2000
985-300 சோழர் 9000
985-1300 பாண்டியரும் 7000
பிற அரசுகளும்
300-600 பாண்டியர், சம்புவராயர் 1000 500
முதலியோர்
விஜயநகர அரசு 3500
600-900 நாயக்கர், மராட்டியார், 2500 W சேதுபதி,
பிறகுறுநில அரசுகள்
26000 560
கல்வெட்டுக்களும் செய்பேடுகளும் பல ஆயிரங்கள் இருக்கலாம். மேலே உள்ள எண்ணிக்கையில் அண்டை மாநிலங்களிலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்களும் அடங்கும். ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த, குறிப்பாக திருமலை-திருப்பதிக் கோயில்களைச் சேர்ந்த, தமிழ்க் கல்வெட்டுக்கள் 12000ம், கன்னட மாநிலத்தில் தென் மாவட்டங்களிலுள்ள 1100ம், கேரளத்தில் தென் மாவட்டங்களில் உள்ள 400ம் இவ்வகையில் சேரும்.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக் கல்வெட்டுகளின் பாடங்கள் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் (இ.தொ.து.) கல்வெட்டியல் பிரிவு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கன்னட மாநில அரசு தொல்லியல் துறை, திருமலை -திருப்பதி தேவஸ்தானம், புதுக்கோட்டை சமஸ்தானம், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானம், தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் மூலம் வெளியாகியுள்ளன. (இந்நூற்பட்டியல் நூலில் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது) பாடங்கள் வெளியிடப் படாத பிற
கருத்தியலும் வரலாறும் 171

Page 38
கல்வெட்டுக்களின் ஆங்கிலச் சுருக்கங்களை இ.தொ.து.வின் கல்வெட்டியல் பிரிவின் ஆண்டறிக்கைகளில் காணலாம்.
தமிழ்க் கல்வெட்டுக்களில் 95 விழுக்காடு கோயில் சுவர்களில் மீதே பொறிக்கப்பட்டுள்ளன. "ஏதோ ஒரு வகையில் கோயில் நடைமுறைகளைப் பற்றியதாகவே உள்ளன. செப்பேடுகளில் பெரும்பாலும் ஒரு பகுதி (முதற்பகுதி) சமஸ்கிருதத்திலும் பிறபகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் மிகச்சிலவே இவ்வாறு இரட்டை மொழியில் உள்ளன. ஆயினும் சமஸ்கிருதச் சொற்கள் ஒன்றிரண்டு ஆங்காங்குக் கல்வெட்டுக்களில் காணப்படும்.
கருத்தியலும் வரலாறும் 172

எடுத்துரைக்கப்பட்ட நாட்டார் வழக்காறுகளை வகைப்படுத்தல்
பேராசிரியர். தே.லூர்து
நாட்டார் வழக்காறுகளுள்நாட்டார் கதைகள்(Folktales), பழமரபுக் கதைகள் (Legends) புராணக்கதைகள் (Myths) போன்றவைகளும் அடங்கும். இவ்வகை வாய்மொழி இலக்கியங்கள் முறையாகத் தொகுக் கப்பெறவும் இல்லை. ஆய்வு செய்யப்பெறவுமில்லை. இவ்வகை வழக்காறுகளைத் தொகுப்பவர்கள் மிகக் கவனமாக இவற்றைத் தொகுக்க வேண்டும். வெறும் பாடங்களை (Texts) மட்டும் தொகுத்துக் கொண்டு வந்தால் போதாது. இந்த வழக்காறுகட்கு இவற்றைத் தம் சமூகத்தில் வழங்கும்மக்கள்என்ன பெயரிட்டழைக்கிறார்கள்?இவற்றை உண்மையாக நடந்தகதை என்று நம்புகிறார்களா? இவற்றைப் புனிதமானவை என்று கருதுகிறார்களா?இவற்றைப்பற்றி என்ன மதிப்புக் கொண்டிருக்கிறார்கள்? என்ற நுணுக்கமான விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்தால்தான் வகைப்படுத்துவதும், சுவடிச்சாலைகளில் வகைப்படுத்தி வைப்பதும் (Archiving) எளிமையாக அமையும்.
கிழக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பழமொழியை 'ஒவகதை' என்றே அழைக்கிறார்கள். பழமொழியென்றால் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. இந்தச் செய்தி ஆய்வுக்கு மிகமிக இன்றியமையாதது. நாட்டார் வழக்காற்றுச் சேகரிப்பாளன் தன் கருத்தை வழக்காறுகட்கு ஏற்றிவிடாது எச்சரிக்கையாகச் சேகரிக்க வேண்டும். மேலும்
பேராசிரியர் தே.லூர்து நாட்டுப்புற வழக்காற்றியல் ஆய்வுகளில் முக்கியமானவர். இத்துறைசார் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு ஆழமானது. அவர் எழுதிய "எடுத்துரைக்கப்பட்ட நாட்டார் வழக்காறுகளை வகைப்படுத்தல்" எனும் கட்டுரை "நாட்டார் வழக்காறுகள் (1998) எனும் அவரது நூலில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாற்றியல் அணுகுமுறையில் லுர்துவின் இந்தக் கட்டுரை புதிய களங்கள் நோக்கிநம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இதற்கு உறுதுணை செய்யும் வகையில் தான் 'ஓர் இடையீடு' எனும் தலைப்பில் நம்மிடமுள்ள சில பழமரபுக்கதைகளை இணைத்துள்ளோம். இதன்மூலம் நாம் வரலாறு பற்றிய தேடலில் சிந்தனையில் புதிய அணுகுமுறைகளை வேண்டியுள்ளமையின் பொருத்தப்பாட்டினை உணர்ந்து கொள்ளலாம்.
கருத்தியலும் வரலாறும் 173

Page 39
அவ்வழக்காறு குறித்துமக்கள் என்ன மதிப்பு வைத்துள்ளனர் என்பதை 'Meta Folklore என்று மேலைநாட்டினர் குறிப்பிடுகின்றனர். சான்றாகப் "பழமொழி பொய்யின்னா பழயதுஞ் சுடும்" என்பது பழமொழி பற்றிய ஒரு LigGLDITg) (Meta Folklore)
பல்வேறு நுட்பமான செய்திகளைச் சேகரித்தால் தான் நாட்டார் இலக்கிய வகைகளை (genre) வேறுபடுத்தி அறிய முடியும்.
இந்தக் கட்டுரையில் புராணங்கள், பழமரபுக்கதைகள், நாட்டார் கதைகள் போன்றவற்றின் இயல்புகளையும் அவற்றை வில்லியம் பாஸ்கம் எவ்வாறு வகைப்படுத்துகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.
நாட்டார் வழக்காறுகளுள் மக்கள் கேட்குமாறு எடுத்துரைக்கப்படுபவை (Marrativers) ஒருவகை, பாடலாகப் பாடப்படுபவை, உரைநடையில் அமைபவை என்று எடுத்துரைக்கப்படும் வழக்காறுகள் இருவகைப்படும். நாட்டார் கதைப்பாடல்களும் (Ballads), வீரயுகப் பாடல்களும் (Heroic poetry) மக்கள் முன்னர் சிலபல இசைக்கருவிகளை இசைத்துமக்கள் முன்னர் பாடப்பட்டு, எடுத்துரைக்கப்படும் வழக்காறுகளாம். அல்லியரசாணிமாலை,பவளக்கொடிமாலை, புலந்திரன் களவுமாலை, புலந்திரன் தூது, அபிமன்யூ சுந்தரிமாலை, மதுரை வீரசுவாமி கதை, முத்துப்பட்டன் கதை, நல்லதங்காள் கதை, பழையனுர் நீலி கதை, அண்ணன்ம்ார் சுவாமி கதை, இராமப்பையன் அம்மானை, சிவகங்கை அம்மானை, சிவகங்கைச் சரித்திக்கும்மி, கான் சாகிபு சண்டை போன்றவை பாடலாகப் பாடப்பட்டு எடுத்துரைக்கப்படுவனவற்றுள் சில.
நாட்டார் கதைகள், பழமரபுக் கதைகள், புராணக் கதைகள் முதலியவை உரைநடையாக அமையும் நாட்டார் வழக்காறுகள் ஆகும். இவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. இருப்பினும் பொதுவாகக் கதைகள் என்றே இவற்றைக் கூறுகிறோம். ஆனால் இவற்றிடையே நுண்ணிய வேறுபாடுகள் உள. புராணக் கதைகள் எவை? பழமரபுக் கதைகள் எவை? நாட்டார் கதைகள் எவை? என்று வேறுபடுத்தி அறிவது நல்லது. இவற்றை வேறுபடுத்திஅறிவது நல்லது. இவற்றை வேறுபடுத்தி அறிவது எவ்வாறு? அதற்குரிய வழி யாது? உள்ளார்ந்த பண்புகளை அடிப்படை அலகுகளாகக் கொள்வதா? புறப்பண்புகளை அடிப்படைய அலகுகளாகக் கொள்வதா?
இவற்றை வேறுபடுத்தி அறிதற்கு முன்னர் வேறுசில ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளுதல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கு உறுதுணையாகும். புராணக்கதைகளும் பழமரபுக் கதைகளும் உரை நடையில் மட்டுமே அமைவனவா என வினா எழலாம். தமிழ்நாட்டில் பல கருத்தியலும் வரலாறும் 174

புராணக் கதைகளும் பழமரபுக் கதைகளும் ஏட்டிலக்கியத்தில் கவிதைகளாக அமைந்துள்ளனவே? பெரிய புராணக் கதைகளும், திருவிளையாடற் புராணக் கதைகளும் உரைநடையில் அமையவில்லையே என்று குறிப்பிடலாம். சேக்கிழார் காலத்திற்கு முன்னும் இக்கதைகள் நாடெங்கும் மக்களால் சொல்லப்பட்டு, எடுத்துரைக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். பல்வேறு வடிவங்கள் (Versions) வழக்கில் இருந்திருக்கும். அவற்றையெல்லாம் சேக்கிழாரும், திருவிளையாடல் புராண ஆசிரியரும் தொகுத்துத் தம் கற்பனையையும் கலந்து கவிதை வடிவில் அளித்துள்ளனர். அவையெல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனையில் உருவானவை. சற்றும் உண்மையல்லாதவை என்று கொள்ளுதற்கிடமில்லை ஆதலின் உரைநடையில் எடுத்துரைக்கப்படுவன மட்டுமன்றிக் கவிதையிலும் புராணக்கதைகள், பழமரபுக் கதைகள், நாட்டார் கதைகள் அமையும் என்பதில் தவறில்லை. உரைநடையில் வழங்குவதும், கவிதையில் வழங்குவதும் அவை வழங்கும் சமுதாயத்தைப் பொறுத்ததே.
ஒரே மாதிரியாக இருப்பவற்றை இனங்கண்டு ஒன்றாக்குதலே வகைப்படுத்தல் எனப்படும். ஆதலின் மேற்கண்ட மூன்று வகைகளையும் (Genres) வேறுபடுத்தியறிந்து கொள்ளுதல் நலம். இவ்வாறு வேறுபடுத்தியறிவதன் பயன் யாது? இவற்றின் இயல்புகளையும், மனித வாழ்க்கையில் இவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வகைப்படுத்தல் உதவும்.
சான்றாகப் பெரிய புராணத்தில் வரும் கதைகளை எடுத்துக் கொள்வோம். புராணம் என்பதற்கு வரலாறு என்றும் பொருளுண்டு. ஆனால் பெரிய புராணக் கதைகள் முழுக்க முழுக்க வரலாறுகளா? அவற்றைப் புராணக் கதைகள் (Myths), பழமரபுக் கதைகள் (Legends) நாட்டார் கதைகள் என்பனவற்றுள் எதில் சேர்ப்பது?
நாட்டார் கதைகள் உரைநடையில் எடுத்துரைக்கப்படுபவை. ஆனால் கற்பனையாகப் புனைந்து கூறப்படுவனவாகக் கருதப்படுபவை (Fictious) அவை வரலாறுகள் அல்ல. சமயக்கோட்பாடுகளும் அல்ல. அவற்றை இவ்வுலகில் நடந்த நிகழ்ச்சிகளாக யாரும் கருதுவதில்லை. அவற்றை முக்கியமான ஒன்றாக யாரும் கருதுவதில்லை. அடிக்கடி அவை கூறப்பட்டாலும் அவை பொழுது போக்குக்காகவும், நீதி போதனைக்காகவும் சொல்லப்படும். நாட்டார் கதைகளுக்குக் காலமும் இல்லை, இடமுமில்லை. (Timeless and placeless) அதாவது முன்னொரு காலத்தில் அளகாபுரியில் என்றோ, துவாபர யுகத்தில் மருங்காபுரி மாநகரத்தில் என்றோ அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு
கருத்தியலும் வரலாறும் 75

Page 40
ஊரில் என்றோ கதையில் கூறப்பட்டாலும் அது பொய் என்றே கேட்போர் கருதுவர். இவை உண்மையாக நிகழ்ந்தவை என்று யாரும் கருதுவதில்லை (அதனால் தான் கதைக்குக் கால் உண்டா கை உண்டா என்று கூறுகின்றனர்). இவை நிகழ்ந்த ஒரு காலமும், இடமும் இருப்பதாக யாரும் நம்புவதில்லை.நாட்டார் கதைகளில் வரும் கதைப்பாத்திரங்கள் மானிடராகவும் இருக்கலாம். மானிடர் அல்லாத உயிர்களாகவும் இருக்கலாம்.
புராணக்கதைகளும் (Myths) உரைநடையில் எடுத்துரைக்கப்படும் இயல்பின. ஆனால் அவை வழங்கும் சமுதாயத்தில் அச்சமுதாய மக்களால் வரலாற்றுக்கு முந்திய மிகப் பழங்காலத்தில் (Remote past) உண்மையாக நிகழ்ந்தனவாக நம்பப்படும். அவை நம்பிக்கையின் அடிப்படையில் உண்மை என்றே ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே அவை சொல்லப்படுகின்றன. அறியாமையும், ஐயுறவும், நம்பிக்கையின்மையும் கொண்டோருக்கு நம்பிக்கையூட்டச் சான்றாதாரங்களாக அவை எடுத்துரைக்கப்படுகின்றன. அவை சமயக் கோட்பாடுகளின் கருத்துருவங்கள் (Embodiment of Dogma) அவை புனிதமானவையாக அவை வழங்கும் சமுதாயத்தினரால் கருதப்படுவன. பெரும்பாலும் இவை இறையியலோடும் (Theology), சடங்குகளோடும் தொடர்புடையவை. இவற்றில் காணப்படும் இன்றியமையாத கதா பாத்திரங்கள் வழக்கமாக மனிதர்களாக அமையா. ஆனால் அப்பாத்திரங்கள் மனித இயல்புகளோடு காணப்படும். இவைவிலங்குகளாகவோ தேவதைகளாகவோ அமையும். அவை செயல்புரியும் உலகம் முந்தைய உலகமாக (Earlier World) இருக்கும். அதாவது இந்நிலவுலகம் தற்போது இருப்பது போன்றில்லாது வேறொருவாறாக இருந்த காலத்தில் நடைபெற்றவை இப்புராணக் கதைகள் என்பர். வேறோர் உலகத்தில் அல்லது வானுலகத்தில் அல்லது பாதாள உலகத்தில் நடைபெற்றதாக நம்புவர் மக்கள். உலகம் எவ்வாறு தோன்றியது? மனிதன் எவ்வாறு தோன்றினான்?சாவு எவ்வாறு உயிர்களை ஆட்கொண்டது? விலங்குகள், பறவைகள் ஏன் இத்தகைய இயல்பினைக் கொண்டிருக்கின்றன? (ஏன் வெளவால் குருடாயிருக்கிறது இல்லது இரவில் மட்டும் பறக்கிறது?) இந்த இடத்தில் ஏன் நிலம் மலை முதலியவை இவ்வாறிருக்கின்றன? (அனுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தபோது கீழே விழுந்த ஒரு துண்டுதான் ஆரல்வாய் மொழிக்குப் பக்கத்தில் உள்ள மருத்துவா மலை) சில இயற்கை நிகழ்ச்சிகள் ஏன் நடைபெறுகின்றன? (வானவில் ஏன் தோன்றுகிறது? அல்லது சப்தரிசி மண்டலம் வானத்தில் ஏன் அமைந்தது?) விழாக்களும், சடங்குகளும் எவ்வாறு தோன்றின? (தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்?) என்பது போன்ற வினாக்கட்கெல்லாம் புராணங்
கருத்தியலும் வரலாறும் 76

கள் விடைபகர்கின்றன. தெய்வங்களின் செயல்கள், அவற்றின் குடும்ப உறவுகள், நட்புகள், பகைகள், வெற்றிகள், தோல்விகள் முதலியவற்றிற்கும் விளக்கம் தருபவையாக அமையும்.
ஆனால் தோற்றம் (Origin) பற்றிய எல்லாக் கதைகளும் புராணங்கள் அல்ல. சமயச் சார்புபுராணங்கட்கில்லை எனின், அவற்றில் வரும் தலைமைப்பாத்திரங்கள் தெய்வங்களாக இல்லை எனின், அவை புராணங்கள் அல்ல என்பதையும், கருத்தில் கொள்ள வேண்டும். தெய்வத்தன்மையினின்று மாறி மனித இயல்பைக் கொண்டதாக ஒரு பாத்திரம் அமைந்திருப்பின் அது பழமரபுக் கதை என்ற வகையுள் அடங்கும். ஏதோ ஒன்றைப்பற்றிய வெறும் விளக்கமாகவோ, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கே உரிய மிகப் பொதுவான ஒன்றாகவோ இருக்குமாயின் அது நாட்டார் கதையாகும்.
பழமரபுக் கதைகளும் (Legends) கவிதையிலும் உரைநடையிலும் எடுத்துரைக்கப்படும். நாட்டார் வழக்காறுகளுள் ஒன்றேயாகும். (கவிதையில் எடுத்துரைக்கப்படும் பழமரபுக்கதைகளை பழமரபுக் கதைப்பாடல்கள் என்று குறிப்பிடலாம்). புராணக் கதைகளைப் போலவே, பழமரபுக்கதைகளும் அவற்றை எடுத்துரைப்போராலும், கேட்போராலும் உண்மையாக நடந்தவை என்றே நம்பப்படுவன. ஆனால் அவை புராணக்கதைகளைப் போல மிகப் பழங்காலத்தில் அன்றி, தற்போதைய உலகில் நடந்தவையாகக் கருதப்படும். பழமரபுக் கதைகள் பெரும்பாலும் சமயச்சார்பற்றவை; அவை பெரும்பாலும் புனிதத் தன்மை கொண்டவையாக கருதப்படவில்லை. அவற்றில் வரும் பாத்திரங்கள் மனிதர்களே. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் பெயர்ந்தார்கள்? (கன்னியாக்குமரி மாவட்டத்தில் வாழும் ஏழுர்ச் செட்டிமார்கள் எப்படி அங்குவந்து சேர்ந்தார்கள்?அல்லது கோவில்பட்டி வட்டத்தில் வாழும் தெலுங்கு பேசுவோர் எப்படி அங்கு வந்தனர்?) போர்கள், வெற்றிகள், பழங்கால வீரர்கள், தலைவர்கள் அரசர்கள் முதலியோரின் வீர தீரச்செயல்கள், ஓர் அரச பரம்பரை எவ்வாறு உருவாயிற்று என்பவைபற்றியெல்லாம் பழமரபுக் கதைகள் அமையும். ஆனால் இவை எழுதப்பட்ட வரலாறுகட்கு மாறாக வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, நம்பப்பட்டு வருபவை. மேலும் மறைத்து வைக்கப்பட்ட புதையல் (ஜெய்ப்பூர் அரண்மனையில் அல்லது அங்கு ஒரு மலையில் பழைய அரசர்களின் புதையல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது), புனிதர்களைப் பற்றிய செய்திகளும் பழமரபுக்கதைகளுள் அடங்கும்.
இம்மூன்று வகை வழக்காறுகளையும் வகைப்படுத்தும்போது சிலவற்றைக் கருத்தில் கொள்ளுதல் நலம். ஒரு புராணமோ,
கருத்தியலும் வரலாறும் 77

Page 41
பழமரபுக்கதையோ, ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்திற்கு ஊடுருவிப் பரவும்போது, புகுந்த இடத்தில் அது உண்மையாக நடந்த ஒன்றாகக் கருதப்படாமல் போகலாம். அப்பொழுது அச்சமூகத்தில் வேறொரு சமூகத்தின் புராணக் கதை, நாட்டார் கதையாகக் கருதப்படலாம். அதாவது ஒருவகைக்கதை, ஒரு சமூகத்தில் புராணக் கதையாகவும், வேறொரு சமூகத்தில் பழ மரபுக் கதையாகவும் மற்றொரு சமூகத்தில் நாட்டார் கதையாகவும் கருதப்படலாம். மேலும் காலப்போக்கில் ஒரு சமூகத்தில் மிகச் சிறுபான்மையினரே புராணத்தில் நம்பிக்கையுடையவராக இருக்கலாம். சிறப்பாக, மிக வேகமாகப் பண்பாட்டு மாற்றம் நடைபெறும் காலத்தில் அச்சமூகத்தின்நம்பிக்கைக் கோட்பாடுகளும் புராணங்களும் மதிக்கப்படாமலும் போகலாம். மேலே நாம் கண்ட வழக்காறுகளை வேறுபடுத்திபட்டியலிட்டு வகைப்படுத்திக்
1. வடிவக்கூறுகள் உரைநடையில் எடுத்துரைக்கப்படுபவை
Formal Features Prose Narratives 2. மரபான தொடக்கம் | எதுவுமில்லை வழக்கமாக Conventional None Usually Opening 3. இரவில் எந்தக்கட்டுபாடுமில்லை வழக்கமாக Told after dark No Restrictions Ususlly 4. நம்பிக்கை உண்மை w புனைவு
Belief Fact Fiction 5. பின்புலம் சிலவேளைகளிலும் சில இடங்களிலும் காலமில்லை
Setting Some Time and some Place Any Time 6. காலம் நினைவிற்கெட்டா அண்மைப்பழங்காலம் எல்லாக்காலமும்
நெடுங்காலம் Time Remote past Recent past Any Time 7. இடம் முந்தைய அல்லது இவ்வுலகம் எல்லா இடங்களிலும்
மறு உலகம் Place Earlier or other World World as it is today Any Place 6. போக்கு புனிதம் சாதாரணம் அல்லது சாதாரணம்
புனிதம் Attitude Sacred Sacred or Secular Secular 7. முக்கிய கதை மானுடர் அல்லாதோர் மானுடர் மானுடர் அல்லது
மற்றையவை Characters Non-human Human Human or others 8. உரைநடையில்
எடுத்துரைக்கப்படும் புராணம் பழமரபுக்கதை நாட்டார் கதை 6).96)ito Form of Prose Narratives Myth Lrgend Folk tale
கருத்தியலும் வரலாறும் 78

காட்டுகின்றார் வில்லியம் பாஸ்கம் என்ற அமெரிக்க மானிடவியலாளர். அவர் உரைநடையில் எடுத்துரைக்கப்படுவனவற்றிற்கே இவ்வகைப்படுத்தும் முறையைத் தருகிறார்.
ஒர் இடையீடு பழமரபுக்கதைகளின் வரலாற்றுச் செய்திகளை விளக்குதல் 1. மாருதப்புரவீகவல்லி
சிங்கையாரினைப் பற்றிக் கூறுமுன் மாருதப்புரவீகவல்லி, யாழ்ப்பாணன் என்போரைப் பற்றிக் கைலாயமாலை மிகச் சுருக்கமாகச் சொல். கின்றது. சோழவரசனின் மகளான மாருதப்புரவீகவல்லிதான் பிறப்பிலே பெற்றிரந்தகுதிரை முகத்தை நீக்கிக் கொள்வதற்காகப் புனிதயாத்திரை வந்து கீரிமலையில் நீராடி எழில் மிக்க உருவினைப் பெற்றுப் பின்னர் தன் பரிவாரத்துடன் அங்கு பாளையமிட்டிருந்தாள் என இந்நூல் கூறும். சிங்க உருவத்தைக் கொண்ட ஈழ வேந்தனான வாலசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக் கவர்ந்து சென்று கதிரைமலையில் வாழுங்காலத்தில் அவ்விருவரும் நரசிங்கராசன் டின்ற புதல்வனையும் ஒரு புதல்வியையும் பெற்றெடுத்தனர். காலப்போக்கில் இவ்விரு பிள்ளைகளையும் மணம் முடித்து வைத்துப் பின் வாலசிங்கனும் மாருதப்புரவீரவல்லியும் நரசிங்கராசனுக்கு அரசுரிமையை அளித்தனர். மாருதப்புரவீகவல்லி, வாலசிங்கன் ஆகியோரைப்பற்றிக் கைலாயமலையில் வருங்கதைகளை முற்றிலும் வரலாற்றுச் சார்பற்ற புனைகதைகளென்றே கொள்ள வேண்டும். சிங்களவரலாற்றுநூல்களில் உள்ள சிங்கவாகு, சிங்கவல்லி என்போரைப் பற்றிய கதைகளே திரிபடைந்து இவ்வாறு கைலாயமலையில் வருகின்றன. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேராசரியர் சி.பத்மநாதன் பக்கம் - 56 2. குணசிங்கன் சரித்திரம்
குணசிங்கன் சரித்திரம் மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் ஒரு கதை போலச் சொல்லப்படுகின்றது. அதன் பிரதான அம்சங்கள் மேல்வருவனவாகும்.
1. கலி வர்ஷம் 3500 இல் மட்டக்களப்பிலே குணசிங்கன் ஆட்சி
புரிந்தான். அக்காலத்தில் மேகவண்ணன் இலங்கை அரசனாக விளங்கினான். அவனது ஆட்சியில் உலகநாச்சி கலிங்கதேசத்துத் தந்த
புரத்திலிருந்து புத்திரின் தந்ததாதுவினையும் சிவலிங்கத்தையும் கொண்டு வந்தாள்.
கருத்தியலும் வரலாறும் {79

Page 42
4. உலகநாச்சிக்கு மட்டக்களப்பில் நிரந்தரமாக நிலம் வழங்கப்பட்டது. அவள் குகக் குடும்பங்களை வரவழைத்துக் காப்புமுனைக் காட்டிலே குடியேற்றினாள்.
5. உலகநாச்சி மண்முனைப் பகுதியில் அரசியானாள்.
6. கொக்கட்டிச்சோலையில் ஆலயதாபனஞ் செய்து அங்கே சேவை புரிவதற்குப்பட்டர், மாலைக்காரர் முதலியோரை வரவழைத்துக் குடியிருக்கச் செய்தாள்.
இந்தக் கதையில் மண்முனைப் பற்றில் ஏற்பட்ட குடியேற்றம் உலகநாச்சி குடியின் உற்பத்தி, அக்குடியினர் மண்முனையில் ஆட்சியதிகாரம் பெற்றமை, கொக்கட்டிச்சோலைக் கோயிலின் உற்பத்தி முதலான விடயங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் உண்மையான விவரங்களும் உண்மைக்குப் புறம்பான விஷயங்களும் கலந்து சொல்லப்படுகின்றன. உலகநாச்சி, குணசிங்கன் ஆகியோரின் காலம் மேகவண்ணனின் காலமென்று சொல்லப்படுகின்றது. மகாவம்சத்திலுள்ள மன்னர் வம்சாவழியில் மேகவண்ணஅபய என்பவன் மகாசேனனின் குமாரன். அவ னுக்குப் பின் ஆட்சிபுரிந்தவன். அவனுடைய காலத்திலே தந்தபுரத்திலிருந்துதந்ததாதுவைக்கலிங்க தேசத்திலிருந்துங்கொண்டுவந்தனர். உலக நாச்சிக்கும் அதற்கும் எதுவிதமான தொடர்பும் இருப்பதாகக் கொள்ள முடியாது. மேற்குறித்த நூல் பக்கம் -96 புராணங்கள், பழமரபுக்கதைகள், நாட்டார் கதைகள் நாட்டார் வழக்காறுகள் (Folklore) என்ற வகையில் அடங்குவன. இவை. வாய்மொழியாக மக்களிடையே வழங்கி வருவன. இவ்வித வாய்மொழி வழக்காறுகள் காலப்போக்கில் பாடல்களாகவும், உரைநடையிலும் ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டன. அச்சியந்திரத்தின் வருகையின் பின் இவை நூல்களாகவும் அச்சிடப்படடன. இலங்கைத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை மட்டக்களப்பு மான்மியம் முதலிய நூல்களில் வரும் செய்திகள், கதைகள், புராணவழக்காறுகள் ஆகியவற்றின் ஊடே வெளிப்படும் வரலாற்றுச் செய்திகளை கற்பனையான பொய்ப்புனைவுகளில் இருந்து பிரித்தறிதல் வரலாற்றை கட்டமைத்தலின் முக்கியமான பணிகளுள் ஒன்று.
புராணங்கள், பழமரபுக்கதைகள், நாட்டார்கதைகளில் வரும் செய்திகளை பகுத்தாய்ந்து விளங்கிக்கொள்வதற்கு பேராசிரியர் தே.லூர்து அவர்களின் இந்தக் கட்டுரை துணை செய்யும். இம்மூவகை வழக்காறுகளின் இயல்புகளை வில்லியம் பாஸ்கம் எவ்வாறு வகைப்படுத்துகிறார். என்பதையும் கட்டுரை எடுத்துரைக்கிறது.
கருத்தியலும் வரலாறும் 180

மாற்று வரலாற்றைத் தேடி பேரா.ஆ.சிவசுப்பிரமணியம்
ஏழு நுழைவாயில்கள் கொண்ட தேயன் நகரைக் கட்டியது யார்? வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன அரசர்களின் பெயர்கள். அரசர்களா சுமந்து வந்தனர் கட்டிட வேலைகளுக்கான கற்களை? பலமுறை நிர்மூலமாக்கப்பட்டது பாபிலேர் நகர் மீண்டும் மீண்டும் அதை நிர்மாணித்தவர் யார்?
பொன்கதிர்வீசும் லிமாநகரத்தில் எவ்விதமான வீடுகளில் வாந்தனர் தொழிலாளர்கள்?
மாலையில் எங்கே சென்றனர் சீனச்சுவர் கட்டி முடித்ததும் கொத்தர்கள்?
மாபெரும் ரோம் நகரத்தில் எங்கும் வெற்றி வளைவுகள். அவற்றைக் கட்டியவர் யார்?
யாரை வென்றனர் சீஸர் பேரரசர்கள்? பெருமளவில் புகழப்பட்ட கைஸான்ஸ் நகரத்தில் குடிமக்கள் எல்லாரும் மாட மாளிகைகளிலா இருந்தனர்.
இதிகாசப் புகழ் அட்லாண்டிஸ்ஸைக் கடல் விழுங்கிய இரவில் மரணத்தில் பிடியிலிருந்தோர் - அடிமைகளின் உதவியைநாடி கூக்குரல் இடவில்லையா?
காளை அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றான். அவன் தனி. யாகவா? அப்போது ஒரு சமையல் காரன் கூடவா இல்லை அவனோடு?
பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் எழுதிய 'மாற்று வரலாற்றைத் தேடி' எனும் கட்டுரை அவரது 'அடித்தளமக்கள் வரலாறு' (2002) எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாறு எழுதியல் பற்றிய விரிந்த மாற்றுச் சிந்தனைக்கான ஒரு அறிமுகமாகவும் இதனைக் கருதலாம்.
பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் ' பண்பாட்டியல் வரலாறு' 'சமூக வரலாறு' உள்ளிட்ட துறைகளில் அவரது ஆய்வுகள் முக்கியமாக உள்ளது. இச் சிந்தனைகள் வரலாறு பற்றிய மரபுரீதியான விளக்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது.
கருத்தியலும் வரலாறும் 181

Page 43
ஸ்பெயின் நாட்டு அரசன் அழுதான், அவனுடைய கப்பல் சாகரத்தில் மூழ்கும்போது வேறு யாருமே அழவில்லையா?
இரண்டாவது ஃபிரடரிக் ஏழு ஆண்டுப் போரில் வென்றான். அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி. வெற்றிவிழா உணவு சமைத்தவர் யார்?
பத்து ஆண்டுகளுக்கொருமுறை ஒரு மாவீரன். இவர்களின் செலவுக்கு முதலீடு செய்தவர் யார்?
கணக்கில் அடங்கா சாதனைக் கட்டுரைகள். கணக்கில் அடங்காக் கேள்விகள்.
படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள் என்ற தலைப்பில் ஜெர்மானிய நாட்டு நாடக ஆசிரியரும் கவிஞருமான பெர்ட்டோல்ட் பிரெஷ்ட் (Bertold Brecht) எழுதிய இக்கவிதை சாதிய மேலாண்மையும் ஒடுக்குமுறையும் மேலோங்கி இருந்த - இருக்கும் தமிழக மற்றும் இந்திய சமூகத்தில் ஆழமாக வாசிக்க வேண்டிய ஒன்று. தமிழக மற்றும் இந்திய வரலாற்றைப்படிக்கும்போது பிரெஷ்டின் கேள்விகளைப் போல்நம்மிடமும் கேள்விகள் எழ வேண்டும். ஆனால், நமது மரபுவழி வரலாற்றாசிரியர்கள் இக்கேள்விகள் எழும்போதே தவிர்த்து விட்டனர். எனவே தான், ஒரு மாற்று வரலாற்றைத் தேடவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
மற்றொரு புறம் உவக அரங்கில் உருவான, 'அடித்தளத்திலிருந்து வரலாறு' என்ற கருத்துநிலையின் தாக்கத்தால் உருவான, 'அடித்தள மக்கள் வரலாறும்', சமூகவியல் - மானிடவியல் - பொருளாதாரம் - உளவியல் போன்ற அறிவுத் துறைகளின் துணையுடன் வரலாற்றைக் காணத் தொடங்கிய பிரெஞ்சு அனெல்ஸ் பள்ளியின் புதியவரலாறும்' இந்திய வரலாற்று வரைவில் புதிய அணுகுமுறையையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, மாற்று வரலாறு' என்று இங்கு குறிப்பிடும்போது அடித்தள மக்கள் வரலாறு - புதிய வரலாறு என்று இரண்டு புதிய வரலாற்றுப் பள்ளிகளுக்கும் முக்கிய இடமுண்டு.
இப்புதிய வரலாற்றுப் பள்ளிகள் மட்டுமின்றி சமூக வரலாறு என்ற மரபு வழியிலான வரலாற்றுப் பிரிவும்கூட ஆளுவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபு வழி வரலாற்றுப் போக்கிலிருந்து மாறுபட்டு நிற்கும் தன்மையது. ஆனாலும் கூட சுமித் சர்க்கார் (1990) குறிப்பிடுவது போல் 'துரதிஷ்வசமாக சமூக வரலாறு என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இந்தியாவில் உள்ளது. மேலும், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கையும், அதில் நிலவிய நிலவும்
கருத்தியலும் வரலாறும் 82

முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தாது கலை, இலக்கியம், சமயம் குறித்த செய்திகளை மேலெழுந்தவாரியாகத் தொகுத்துக் கூறும் தன்மையிலேயே நம் வரலாறு எழுதப்படுகிறது. ஹாப்ஸ்பாம் (1972:14) என்ற இங்கிலாந்து நாட்டு சமூக வரலாற்றறிஞர் சமூக வரலாற்றின் ஆய்வுக்குரிய அம்சங்களாக,
1. LDébéib6ir G25/T605uiu Iglub 2 sp6.a561bib (Demography and Kinship) 2. babit ILDib (fffigy guilójab6i (Urban Studies) 3, 6) idisabilisabelbib gepatids (5Gupdbab65tb (Classes and Social groups) 4. மனப்பாங்கு குறித்த வரலாறு அல்லது கூட்டு நனவரைவு அல்லது LDIT60ft 6iu65,637 (8biTdisassi) LIGOöLJITGB (The history of 'mentalities' or collective consciousness or of 'culture' in the anthropologists sense). 5. சமூகங்களின் மாற்றம். (எடுத்துக்காட்டாக நவீன மயமாக்கம் 966 g5 G5IIglsio6.ju ILDITg56io) The transformation of societies (for example, modernization or industrialization) 6. சமூகங்களின் மாற்றம். (எடுத்துக்காட்டாக நவீன மயமாக்கம் 966 g5 G5ITypsis).ju ILDT256i (Social movements and phenomena of social protets) ஆகியனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் நோக்கினால் சமூக வரலாறு என்பது பரவலாகவும் ஆழமாகவும் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளமை விளங்கும்.
இவ்வாறு மாற்று வரலாறு என்ற ஒன்றை நாம் உருவாக்கும்போது மாற்று வரலாற்றுக்கான சான்றுகளைக் குறித்த கேள்வி உருவாகிறது. ஏனெனில், மரபுவழி வரலாற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆவணங்களும் ஆளுவோரால் உருவாக்கப்பட்டவை. இவற்றிலிருந்து ஒரளவுக்கே மாற்று வரலாறு தொடர்பான சான்றுகளைப் பெறமுடியும், எனவே மாற்று வரலாற்றை உருவாக்கும்பொழுதுமாற்று வரலாற்றுக்கான தரவுகளையும் நாம் தேடவேண்டியுள்ளது. மேலும் இந்தியா போன்ற எழுத்தறிவின்மை மிகுதியாக உள்ள நாட்டில் எழுத்து வடிவிலான சான்றுகளின் வாயிலாக மட்டும் பெரும்பாண்மையினரான அடித்தள மக்களை மையப்படுத்தும் வரலாற்றை எழுதமுடியாது. இத்தகைய நிலையில் வாய்மொழி வழக்காறுகளே முக்கியச் சான்றுகளாக அமைகின்றன.
பிரெஞ்சு வரலாற்றறிஞர் ஒருவர், பாடல்கள், நடனங்கள், பழமொழி. கள், கதைகள் ஆகியனவற்றின் மூலம் குடியானவர்களின் உள நிலையைப் புரிந்துகொள்ளலாமென்று குறிப்பிட்டுள்ளார் (சுமித்சர்க்கார் 1990:10)
கருத்தியலும் வரலாறும் 83

Page 44
வாய்மொழியாக வழங்கும் வழக்காறுகள் மட்டுமன்றி சில சடங்குகளும்கூட மாற்று வரலாற்றிற்குத் துணைபுரியும் தன்மையின (இ.பி.தாம்சன் 1977:252 -253). W
குறிப்பிடும் நிகழ்ச்சி ஒன்றை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இங்கிலாந்துநாட்டில் 18,19ஆம் நூற்றாண்டுகளில் மனைவியை விற்கும் சடங்கு அடித்தள மக்களிடையே நிகழ்ந்துள்ளது. இதன்படி சந்தை வெளியில் மனைவியை நிறுத்தி, கணவன் ஏலம் விடுவான். பணம் கைமாறியதும் ஏலம் எடுத்தவனுடன் மனைவி சென்று விடுவாள். இதை ஆராய்ந்த தாம்ஸன், உண்மையில் ஒருவகையான விவாகரத்து என்று இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். விவாகரத்து உரிமையில்லாதிருந்த இங்கிலாந்து சமூகத்தில் மனைவியில் சம்மதத்துடனே இவ்விற்பனை நிகழ்ந்துள்ளது. மேலும், ஒருவனது மனைவியை ஏலத்தில் எடுப்பவன் யாரென்பதை முன்னதாகவே ஏற்பாடு செய்து விடுவார்கள் என்றும், பல நிகழ்வுகளில் மனைவியின் காதலனே ஏலம் எடுப்பவனாக இருப்பான் என்பதும் தெரிய வந்தது. இவ்வாறு புறத்தோற்றத்திற்கும் உண்மைக்குமிடையே பெரிய இடைவெளி உள்ளது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற சடங்கு, கோவில்களை மையமாகக் கொண்டு நிகழ்கிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் குழந்தையை ஏலம் விடுவதாக வேண்டிக்கொள்ளும் பெற்றோர் கோவில் முன்மண்டபப் பகுதியில் வைத்து ஏலமிடுவார்கள். முன்னதாகச் செய்த ஏற்பாட்டின்படி நெருங்கிய உறவினர் ஒருவர் பணம் கொடுத்து ஏலம் எடுப்பார். பின்னர் பெற்றோர் அப்பணத்தை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு ஏலம் எடுத்தவரிடமிருந்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள்.
இத்தகைய ஏலம் கூறும் நேர்த்திக்கடன் நெல்லை - துரத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் நிகழ்கிறது. சமயம் சார்ந்த இந்நிகழ்ச்சி மக்களை அடிமைகளாக ஏலம் விட்டதன் அடிப்படையில் உருவான சடங்கியல் நிகழ்வாக இன்றும் வழக்கில் உள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக வழக்கிலிருந்த சமணம், சைவத்துடன் நிகழ்த்திய மோதலை அடுத்து தேய்ந்து மறைந்து போனது. (தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் மட்டும் பாரம்பரியமானச் சமண குடும். பங்கள் நிலை பெற்றுள்ளன). தத்துவ மோதலினால் மட்டும் சமணம் அழிக்கப்படவில்லை. வன்முறையினாலும் சமணம் அழிக்கப்பட்டது. மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்களைப் பாண்டிய மன்னன் கழுவேற்றியதாக திருதொண்டர் புராணம் குறிப்பிடும்.இந்நிகழ்வை உறுதிப்படுத்தவது போல மதுரை, திருநெல்வேலி, சீர்காழி ஆகிய
கருத்தியலும் வரலாறும் 184

திருத்தலங்களில் உள்ள கோவில்களில் 'கழுவேற்று உற்சவம்' நடைபெறுவது சான்றாகும்.
சமயம் சார்ந்த இச்சடங்கு சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப். பட்டதை உணர்த்துகிறது. 'போம்பழியெல்லாம் அமணர் தலையோடே' என்ற பழமொழியில் அடங்கியுள்ள கதை, மிக எளிதாகக் கொலைத் தண்டனைக்கு ஆளாகுபவர்களாக சமணர்கள் இருந்துள்ளதை உணர்த்தகிறது. இப்பழமொழியையும் இதில் அடங்கியுள்ள கதையையும் திருவாய்மொழி விளக்கவுரை ஆசிரியர் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார்.
ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹகத்திலே கன்னமிட, அது ஈரச்சுவராகையாலே இருத்திக் கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்த பிராமணனைப் பழிதர வேணுமென்ன, இரண்டு திறத்தாலும் ராஜாவின் பாடேபாக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ப்ராஹ்மணா! நீரீச்சுவரை வைக்கையாலேயன்றோஅவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்க வேணும்' என்ன, அவன் 'எனக்கு தெரியாது, சுவரை வைத்த கூலியாளைக் கேட்கவேணும்' என்ன, அவனை அழைத்து, நீயன்றோ ஈரச்சுவர் வைத்தாய், நீபழி கொடுக்க வேணும் என்ன, என்ன, அவனும் தண்ணிரை விடுகிறவள் போராவிட்டாள்; என்னா செய்வாவது என்? என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் குசவன் பெரும்பானையைத் தந்தான், அதனாலே நீர் ஏறிற்று' என்ன, அவனை அழைத்துக் கேட்க அவனும் 'என்னால் வந்ததன்று ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது' என்ன, அவளையழைத்துக் கேட்க, அவளும் என்னால் அன்று, வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன்' என்ன, அவனை யழைத்துக் கேட்க, அவனும் 'என்னால் அன்று, துறையில் கல்லிலே ஒரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்ப வேண்டியதாயிற்று' என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, நீயன்றோ இத்தனையும் செய்தாய், நீ பழிகொடுக்க வேணும்' என்ன, அவனும் மெளனியாகையாலே பேசாதிருக்க, என்ன, 'உண்மைக்குத் தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்' என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.
கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்மை ஆளத் தொடங்கியபோது அவர்கள் ஆட்சியை எதிர்த்துப் பாளையக்காரர்கள் போரிட்டனர். இவர்களுள் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன். போரில் தோற்றுப்போய் புதுக்ாேட்டையில் அடையக்கலம் புகுந்திருந்த இவரைக் கைது செய்து கயத்தாறில் தூக்கிலிட்ட பின்னர் இவர் வணக்கத்திற்கும் போற்று
கருத்தியலும் வரலாறும் 185

Page 45
தலுக்குமுரிய வீரராகி இன்றுவரை மக்கள் மனத்தில் நிலைபெற்றுள்ளார். ஆயினும், இவர் போராடிய காலத்தில் இவரது கட்டுப்பாட்டிலுள்ள படைவீரர்களைத் தவிர சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை கிழக்கிந்தியக் கம்பெனிஆவணங்கள் எவையும் நமக்குக் குறிப்பிடவில்லை. ஆனால்நட்டாத்தி, குரும்பூர் பகுதியில் வாழும் நாடார் சாதியினரிடமும் ஆழ் வார் திருநகரி பிராமணர் மற்றும் கோனார் சாதியினரிடமும் வழங்கும் வாய்மொழிக் கதைகள் வழக்கமான குறுநில மன்னர்களின் நடைமுறைகளிலிருந்து கட்டபொம்மன் மாறுபடவில்ல்ை என்பதை உணர்த்துகின்றன. இதனால்தான் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்குமிடையே நிகழ்ந்த சண்டையை ஜமீன்தார்களுக்கிடையில் அவ்வப்போது நிகழும் மோதலாகக் கருதினார்கள். விடுதலைப் போராட்டமாக அவர்கள் கருதவில்லை.
ஆங்கிலேயரின் வரவால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் இந்திய விவசாயி, தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்ததுதான். இதை மிக எளிதாக நாட்டார் பாடலென்று.
ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன் என்று குறிப்பிடுகிறது. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில்
தை தக்கா தை ஒரு பக்கா நெய் வெள்ளக்காரன் தலையிலே விளக்கேத்தி வை என்று பாடும் பாடல் அடித்தள மக்களிடம் நிலவிய வெள்ளையர் எதிர்ப்புணர்வைக் காட்டுகிறது.
இதுபோன்று வெள்ளையர் ஆட்சி உருவாக்கிய சட்டமன்றங்கள், மருத்துவமனைகள், காவல்துறை, நீதிமன்றங்கள்ஆகியன குறித்து இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கிய பாடல்களும் கதைகளும் மக்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இந்திய சமூகச் சீர்திருத்தவாதிகளின் முயற்சியினால் உருவான பல்வேறு சமூகச் சீர்திருத்தங்களை நம் வரலாற்றுடன் ஏற்று விதவை மறுமணம் ஒரு முற்போக்கான முயற்சி என்பதை நமது தேசியவாதிகள் எடுத்துக்கூறியுள்ளார்கள். ஆனால், உண்மையில் இவை பெரும்பாலான
கருத்தியலும் வரலாறும் 186

அடித்தள மக்களிடம் ஏற்கனவே வழக்கிலிருந்த ஒன்றுதான். இத்தகைய சாதியினரை மேட்டிமை சாதியினர் அறுத்துக்கட்டும் சாதி என்று இழிவாக அழைத்து வந்துள்ளனர். ஆங்கிலக் கல்வியைத் தொடக்க நிலையிலே பெற்று அரசு வேலை வாய்ப்புகளில் இடம்பெற்ற மேட்டிமை சாதியினர், தங்கள் சாதிப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மாற்றி அமைக்கும் முறையில் விதவை மறுமணத்தை வரவேற்றனர். கைமைக் கொடுமைகளைக் கண்டித்தனர். ஆனால் கைமைக் கொடுமையோ மறுமணத்தடையோ வரவேற்றனர். கைமைக் கொடுமைகளைக் கண்டித்தனர். ஆனால், கைமைக் கொடுமையோ மறுமணத் தடையோ விவாகரத்துத் தடையோ இல்லாதிருந்த அடித்தள மக்கள் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு இச்சீர்திருத்தங்கள் தேவையற்றவை. இச்சமூக உண்மையைப் புரிந்துகொள்ளாமல் பொத்தாம் பொதுவாக மேற்கூறிய சீர்திருத்தங்கள் வாயிலாகத்தான் தமிழ்ச் சமூகப்பெண்கள் அனைவர்க்கும் மணவிலக்கு உரிமையும் மறுமண உரிமையும் கிட்டியதென்று கூறுவது பொருத்தமற்றது.
இதுபோன்றே, தமிழ்நாட்டில் அடித்தள மக்கட்பிரிவைச் சார்ந்த பெரும்பாலான சாதியினரின் திருமணச் சடங்குகளை அந்தந்த சாதிப்பிரிவுகளிலுள்ள குருக்களோ சாதியத் தலைவர்களோ நடத்தி வந்தனர். ஆனால், பிராமணக் குருக்களின் துணைகொண்டு திருமணம் நடத்தும் முறை ஒரு சில மேட்டிமை சாதியினரிடையேதான் இருந்தது. ஆயினும், சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன்னர் பிராமணர்கள் வாயிலாகவே தமிழர் திருமணம் நிகழ்ந்தது வழக்காறுகளின் அடிப்படையை நோக்கினால் இக்கருத்து பொருத்தமற்றது என்பது புலனாகும்.
இவ்வாறு மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.
கருத்தியலும் வரலாறும் 187

Page 46
கேள்வி:
பதில்
கேள்வி:
பதில்
இந்தியாவைப் பற்றி - மார்க்ஸ்
இலங்கையின் வரலாற்றை நான் மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ள விரும்புகின்றேன். இலங்கையின் வரலாறு பற்றி மார்க்கியர்கள் என்ன கருதுகின்றார்கள். அவர்களின் கருத்துக்களை பிறருடைய நோக்குமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். குறிப்பாக கார்ல் மார்க்ஸ் இலங்கையைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாாா?நான் அவற்றைப் படிக்க விரும்புகின்றேன்.
: மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தியா.
வைப் பற்றி அவர் எழுதியவற்றை நீங்கள் படித்தால் இலங்கை உட்பட அனைத்துக் கீழைத்தேசக் காலனிகள் பற்றியும் அவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதியவை'On India" என்ற தலைப்பில் மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பக நூலாக வெளிவந்திருக்கிறது. தமிழிலும் இது இந்தியா பற்றி என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. தேடிப்படியுங்கள்.
மார்க்ஸின் கட்டுரைகளை நேரடியாகப் படிக்க முன்னர்
அதைப் பற்றிய அறிமுகம் ஒன்றைப் படிக்க முடிந்தால் நல்லதல்லவா? எதைப் படிக்கலாம்?
: ரஜனிபாமிதத் எழுதிய இன்றைய இந்தியாவைப்படியுங்கள்.
இதன் முதல் தமிழ் பதிப்பு 1947ல் ஜனசக்தி பிரசுராலய வெளியீடாக வந்தது. இரண்டாம் தமிழ் பதிப்பு 1978ல் என்.சி.பி.எச் பதிப்பாக ரூ 35/= இந்திய விலிையில் வெளியிடப்பட்டது. இந்த நூலின் மூன்றாம் பதிப்பு (2006) இப்போ வெளிவரப்போகிறது. இதுபற்றிய விளம்பரத்தை அண்மையில் பார்த்தேன்.
இத்தொகுப்புக்காக கேள்வி - பதில் வடிவில் க.சண்முகலிங்கம் எழுதிய சிறு கட்டுரை தான் இது
கருத்தியலும் வரலாறும் 88

கேள்வி:
பதில்
கேள்வி:
பதில்
பாமிதத் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். தன் சிந்தனைப் போக்கை மிக ஆழமாகப் பாதித்த நூல் பாதிதத்தின் இன்றைய இந்தியா' என்று பிரபல தமிழ் சுந்தரராமசாமி ஒரு தடவை எழுதியாக ஞாபகம் இந்த தத் இவர் தானா?
: ஆமாம் அவரே தான். ஆர்.எஸ்.சர்மா இந்த நூல் பற்றி இப்படி
அறிமுகம் செய்கிறார்.
"இந்த நூல் வரலாற்றின் முக்கியப் போக்குகளைப் பின்பற்றுகிறது. தத்தின் இன்றைய இந்தியா' சமூகவியல் நோக்கில் எழுதப் பெற்றது. இந்தியத் தேசத்தின் மூலத்தை அது உள்ளொற்றிக் காண்கிறது; காலனிப் பொருளாதார முறை எவ்வாறு முரண்பாடுகள் செறிந்த ஒரு சமூக ஏற்பாட்டை உண்டாக்கியது என்பதைக் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரத்தைகப் பிரிட்டிஷ் ஆட்சி எப்படி பாதித்தது என்பதை விவரிக்கிறது; இந்தியத் தேசியத்தின் வளர்ச்சியில் சமூகச் சக்திகள், சமூக, சமய இயக்கங்களின் பங்கு என்ன என்பதை மதிப்பீடு செய்கிறது. ஆனால் மிக முக்கியமாக, முதன் முறையாக, இந்திய தேசிய இயக்கத் தலைமையின் வர்க்கக் குணம் இந்த ஆராய்ச்சி நூலில் பரிசிலனை செய்யப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம்.
மார்க்ஸ் இந்தியா பற்றி எழுதியவற்றை அறிய இந்நூலின் எந்தப் பகுதியைப் படிக்கலாம் என்று குறிப்பிட்டுச் சொல்வீர்களா?
: நூலின் இரண்டாம் பாகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற
தலைப்பில் உள்ளது. 126-137 பக்கங்களைப் படியுங்கள். (1978 பதிப்பு) இந்தியாவைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் எழுத்துக்கள் உதவுமா என்று கூட பலரிடம் ஐயம் இருந்த காலத்தில் ரஜனி பாமிதத் இந்த நூலை எழுதினார். (1940ல் ரஜனி பாமிதத் எழுதும் போது) லாஸ்கியின் மேற்கோள் உடன் ஆரம்பிக்கின்றார்.
"மார்க்சியத்தின் நிலையான கருத்துக்களை வைத்து இந்தியப் பிரச்சினையை அறிந்து கொள்ளச் செய்யும் முயற்சி மேதைத்தனத்தின் வெளியீடாக இருக்க முடியும். ஆனால் இது சோஷலிஸ்த்தின் முன்னேற்றத்திற்கு அறிவு பூர்வமான மெய்யான உதவியாக இருக்க முடியாது". லாங்கி 1927ல்
கருத்தியலும் வரலாறும் 189

Page 47
கேள்வி:
பதில்
கேள்வி:
பதில்
இப்படிக் கூறினாராம். இப்படியான ஒரு சூழலில் தான் பாமிதத் மார்க்ஸை இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இன்று 66 ஆண்டுகள் கடந்து விட்டன. பாமிதத் கருத்துக்கள் முடிந்த முடிபல்ல என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்.
மார்க்ஸ் இந்தியாவை பற்றி எழுதிய காலம் எது?
: பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்தியா பற்றி ஒரு சூடான
விவாதம் நடந்து கொண்டிருந்தது. மார்க்ஸ் அப்போது லண்டனில் வாழ்ந்தார். பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்திற்குப் போய் படிப்பதும் எழுதுவதும் தான் அவர் வேலை.
"1853ல் கிழக்கு இந்தியக் கம்பெனியின் உரிமைப் பத்திரம் உறுதியாகப் புதுப்பிக்கப்படுவதற்க்ாகப் பாரிலிமெண்டில் வைக்கப்பட்டபோது, மார்க்ஸ் நியூயார்க் டெய்லி டிரிப்யூன் ஏட்டுக்காக எட்டுக் கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதினார். இவற்றையும், மூலதனத்தையும், கடிதப் போக்குவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையும் சேர்த்தால் இந்தியாவைப் பற்றி மார்க்ஸின் கருத்துக் கருவூலம் இதுவாகும்.
1848ல் ஐரோப்பா எங்கும் புரட்சி கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த புரட்சி அலை அடக்கு முறையால் தடுக்கப்பட்டது; வீழ்ந்தது. ஐரோப்பிய புரட்சிகள் இலகுவாக நசுக்கப்பட்டதற்குக் காரணம் 'உலகச் சந்தை' ஒன்றை உருவாக்கும் முயற்சியில் முதலாளித்துவம் கண்ட வெற்றி தான். காலனித்துவம் பற்றியும் இந்தியா பற்றியும் மார்க்ஸ் ஆராய்வதற்கான தூண்டுதல் இதுதான். 1858ல் மார்க்ஸ் எங்கல்சுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இது பற்றிக் குறிப்பிடுகிறார். 127ம் பக்கத்தில் தத் இக்கடிதத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
மார்க்ஸ் இந்தியா பற்றி கூறியவற்றின் முக்கிய அம்சங்கள் எவை என்று கருதுகின்றீர்கள்?
: மார்க்ஸ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றிச் சொல்லி.
யிருக்கிறார். பாமிதத் வார்த்தையில் சொன்னால்
முதலாவதாக, இந்தியாவில் பிரிட்டிஷாரின் அழித்தல் வேலை பழைய சமூக முறையை வேரோடு பிடுங்கியது. இரண்டாவதாக, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் புத்துயிரூட்டும் பணி.
கருத்தியலும் வரலாறும் 190

கேள்வி:
பதில்
கேள்வி:
பதில்
கேள்வி:
சுயேட்சை வணிக முதலாளித்துவ காலத்தில் எதிர்காலப் புதிய சமூகத்திற்கு உறுதியான அடிக்கல் நாட்டியது. மூன்றாவதாக, அதன் விளைவான நடைமுறையான முடிவு. புதிய சமூகத்தை எழுப்புவதற்கு இந்திய மக்களே ஏகாதிபத்தியத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவின் பழைய சமூக முறைமை பற்றியும் இந்தியக் கிராமங்கள் பற்றியும் 'மார்க்ஸ்' எழுதியவை தவறானவை என்று பலர் சொல்லியிருப்பதையும் படித்திருக்கின்றேன். இது 2 603760)LDu IIT?
: 1850 க்களில் சுமார் 150 வருடங்களுக்கு முன்மார்க்ஸ் எழுதிய
போது இந்தியா பற்றி அவருக்கு கிடைத்த நூல்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு தானே அவர் எழுதியிருக்க முடியும். இன்று பின்நோக்கிப் பார்க்கும் போது அவரின் விவரணையில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவரின் முறையியல்(Methodology) உலக நோக்கு. என்று ஒன்று இருக்கிறதே. அதுதான் முக்கியம். வரலாற்று பொருள் முதல் வாதத்தின் மிக வளமான பகுதி. இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியவையும் தான் என்று கூறலாம்.
சில மார்க்ஸிஸ்ட் வரலாற்றாய்வாளளர்களின் பெயர்களைச் சொல்வீர்களா? தொடர்ந்து நான் எவற்றைப் படிக்கலாம்?
: ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், பிபின் சந்திரா, .
ஆர்.எஸ்.சர்மா இப்படி பலர் எழுதியிருக்கின்றார்கள்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிச் சொல்லுங்கள்,
: ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், சர்தேசாய் கோசாம்பி சட்டோ
பாத்யா, கே.என்.பணிக்கர் அகியோரின் எழுத்துக்கள் தமிழில் உள்ளன. வரலாறு மட்டுமல்ல தத்துவம், அரசியல் சமூகம் பற்றி எழுதிய எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
கருத்தியலும் வரலாறும் 191

Page 48
இந்தியாவில் வரலாற்று ஆய்வுகள்
ரொமிலா தப்பார் புதிய போக்குகள்
சமூக விஞ்ஞானங்களுக்குள் வரலாறுதான் அறிவார்ந்த கேள்விகளைக் கூர்மையாக எழுப்பும் விஞ்ஞானம் என்ற உண்மை கடந்த சில ஆண்டுகளாக உணரப்பட்டுள்ளது. பிற சமூக அறிவியல் துறையில் ஏற்படாத அளவுக்கு மிகப்பெரும் மாற்றம் வரலாற்றுத் துறையில் ஏற்பட்டிருப்பதைப் பொருளியலாரும் சமூக இயலாளரும் கூட ஏற்கின்றனர். இதற்கு என்ன காரணம்?வரலாற்றுநிகழ்வுக்கான பொருளுரைத்தல், பொதுக் கருத்தாக்கங்களை உருவாக்குதல் பற்றிய பிரச்சினை. களில் நெடுங்காலமாகவே தொடர்ந்து விவாதம் நடந்துவருகிறது. இந்த விவாதம், இந்தி வரலாற்று ஆய்வில் ஈடுபட்ட ஐரோப்பிய அறிஞர்கள் காலத்திலேயே தொடங்கியது. தேசியவாதிகள் வரலாற். றுத்துறை ஆய்வில் ஈடுபட்டபோது இந்த விவாதம் மேலும் வலுப்பெற்றது. முன்னைய வரலாற்று ஆய்வாளர்களின் கோட்பாடுகளை இவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்குப் பிறகு, இந்திய வரலாற்று ஆய்வில் மார்சியலாளர் பங்கு குறிப்பிடத்தக்கதாகிறது. வரலாற்றுக்குத் தேவையில்லாதது அல்லது முக்கியமில்லாதது என்று மற்றவர் ஒதுக்கி வைத்திருந்த பகுதிகளிலெல்லாம் வரலாற்றாய்வார்களின் ஆர்வத்தை இவர்கள் தூண்டினர். மார்க்சியத்தை ஏற்காதவர்களின் கவனத்தை இப்படித் தூண்டியது குறிப்பிடத்தக்க உண்மை. இப்பொழுது விவாதம் உயரிய அறிவார்ந்த தளத்தில் நடைபெறுகிறது. இது மிகவும் பொருளுடையதாகிறது.
இன்று இந்தியாவில் மட்டுமல்ல பன்னாட்டு மட்டங்களிலும் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர்கள் சிலரது பெயர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் இந்தியாவில் வரலாற்று ஆய்வுகள்' எனும் தலைப்பில் வெளியான இந்தக் கட்டுரை, இந்து' பத்திரிகையில் (29.10.1979) வெளிவந்தது. இதன் தமிழ் வடிவம் பரிமாணம்' நவ79 புறப்பாடு யூலை 87 ஆகிய இதழ்களில் வெளிவந்தன. அந்த வடிவமே இங்கு பிரசுரமாகிறது
V
கருத்தியலும் வரலாறும் |92

வரலாற்றின் ஆய்வு இரண்டு வகையிலானது. கடந்தகாலம் பற்றிய புரிதலைத் தருவது ஒன்று. இறந்தகாலத்தின் எச்சங்கள் பல நிலவும் நமது சமுதாயத்தில் இத்தகைய புரிதலின் தேவை அதிகம். மிக முன்னேறிய தொழில்துறை வளர்ச்சியும் மிகப்பழங்காலத்தைச் சார்ந்த வேட்டையாடுதல் போன்ற தொழில்களும் ஒருங்கே நடைபெறும் நமது சமுதாயத்திற்கு, வரலாறு பற்றிய புரிதல் மிகவும் தேவை. இன்னொன்று, அரசியல் சித்தாந்தத்தில் வரலாற்றியலைத் திட்டமிட்டுப் பயன்படுத்துதல் ஆகும். அண்மைக்காலத்தில் இப்போக்குத் தீவிரப்பட்டிருக்கிறது.
பிபின் சந்திரா சித்தாந்தங்களின் செல்வாக்கு
இந்திய வரலாற்றாய்வில் சித்தாந்தத்தின் செல்வாக்கு பெருமளவு உள்ளது என்பதில் ஐயமில்லை. நான்கு வகையான சித்தாந்தப் போக்குகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய வாதப் போக்கு இவற்றுள் முதன்மையானது. பிரிட்டிஷ்காரர் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றாசிரியர் பலரிடமும் இப்போக்கு ஓங்கியிருந்தது. தம் அரசியல் கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தவர்களும்கூட இதில் அடங்குவர். இந்திய ஆன்மீகம் பற்றிப் பேசியவர்கள் இத்தகையவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஏகாதிபத்தியக் கருத்தோட்டம் உடையவர்கள். இந்தியமக்கள் ஆன்மீகத்துறையில் பெருஞ்சாதனைபுரிந்தவர்கள், ஆனால் பொருளியல், அரசியல் போன்ற துறைகளை நிர்வகிப்பதில் ஆங்கிலேயர்களே திறன்மிக்கவர் என்ற நோக்கில் இந்திய வரலாற்றைப் பார்த்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய சமுதாயத்தை முழுமையாக எடுத்துக்கொண்டால் - அதன் சித்தாந்தக் கட்டமைப் போடும் சேர்த்து - வளர்ச்சிபெறாத அரைகுறை நாகரீகம் மட்டுமே உடைய சமுதாயம். இதற்குக் காலனியாதிக்கம் தேவை என்ற முறையில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் நம்பினர். பின்னர் இக்கருத்தை முன்கூறியவாறு மாற்றிக்கொண்டனர்.
இந்திய வரலாற்றாய்வில் இரண்டாவது போக்கு தேசியவாதம். இதன் எதிரொலியை பழங்கால, இடைக்கால வரலாற்றாய்வில் மிகுதியாகக் கேட்கிறோம். நவீனகால வரலாற்றைத் தேசியவாத நோக்கில் எழுதுவதனால், காலனியாதிக்க எதிர்ப்புக் கண்ணோட்டம் கொள்ள வேண்டியிருக்கும். தம் தொழிலுக்கு இது ஆபத்தாகிவிடும்.
வகுப்புவாதக் கண்ணோட்டம் மூன்றாவது போக்கு, அறிவாளிகள் மீது தேசியவாத நோக்கு வலுவாக இருந்ததால், வகுப்பு வாதம் அவர்களை ஆதிக்கம் செய்யமுடியவில்லை. 1920,30களில் வகுப்புவாத
கருத்தியலும் வரலாறும் 93

Page 49
இழைகள் இருந்தபோதிலும், வெளிப்படையாக இக்கண்ணோட்டம் கொள்வது நடைபெறவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் ஆர்.சி.மஜும்தார் பாணியிலும் இதேபோல பாகிஸ்தானிலும் இக்கருத்தோட்டம் வலுப்பெற்று இருக்கிறது.
விஞ்ஞான முறையிலான வரலாற்றாய்வாளர்கள் நான்காவது பிரிவினர். இவர்களில் மார்க்சியவாதிகள் குறிப்பிடத்தக்கவர். வெபரின் பாதிப்புக்கு உள்ளானவரும் சிலர் உண்டு. வரலாற்றாய்வில் விஞ்ஞான நோக்கை ஏற்பவர் வேறு பலரும் உண்டு. இவர்களுக்கும் மார்க்சீயவாதிகள் அல்லாதவர்களுக்குமிடையில் கடுமையான பிளவு இதுவரை நேரவில்லை. இதற்கு முதன்மையான காரணம் கோசாம்பி முதற்கொண்டு, இத்தகைய நோக்கோடு வரலாற்றைப் பார்த்தவர்கள் மார்க்சியத்தை ஒரு சூத்திரவாதம் ஆக்காததுதான். டி.டி.கோசாம்பி. ஆர்.எஸ்.சர்மா, இமாம்ஹபீப் ஆகியவர்கள் உணர்வுபூர்வமாக மார்க்சிய முறையியலை ஏற்றவர்கள். விவாதங்களில் இவர்கள் நேச முறையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கிடையில் பொது அடிப்படை இருக்கிறது. இவர்களுள் மார்க்சியலார் அல்லாதவர்கள் உண்டே தவிர மார்க்சிய எதிர்ப்பாளர்கள் (வகுப்புவாதிகளைத்தவிர) இல்லை.
இர்பான் ஹபீப்
47க்கு முன்பே வரலாற்றாய்வில் வகுப்புவாதக் கண்ணோட்டம் நிலவியது. வெள்ளையர் வருகைக்கு முன்னர்கூட இது ஏதோ ஒரு உருவில் இருந்தது. தற்போது இது ஒரு குறுகிய வெறித்தனமான கண்ணோட்டத்துடன் இணைந்திருப்பதுதான், இந்தியாவில் விஞ்ஞானவியல் வரலாற்றின் வளர்ச்சிக்கான பெரும் ஆபத்தாகிறது. பழங்காலத்தைப் பெருமைப்படுத்துவது இவர்கள் போக்கு, உலக அளவில் ஏற்பட்ட எந்த ஒரு முன்னேற்றமும் இந்தியாவில்தான் முதலில் நேர்ந்தது என்ற கருத்தில் புதை பொருளாய்வில் கண்ட பொருள்களுக்கு தொலைதூரமான காலத்தை வழங்குகிறார்கள் இதுபோலவே, விஞ்ஞானச் சிந்தனைகள், தொழில்நுணுக்கச் சாதனைகள் என்ற முறையில் வெளிநாடுகளிலிருந்து வந்து சேருபவற்றின் தகுதியைக் குறைத்துப் பேசுகிறார்கள். இதன் விளைவாக, மத்தியகால இந்திய நினைவுச் சின்னங்களின உருவாக்கம் பற்றிய அறிவற்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவியிருக்கின்றன. இது போலவே, நவீன கால சிந்தனையின் அடிப்படைகள் யாவும் பழங்கால இந்தியச் சிந்தனையிலேயே இருந்தன என்றெல்லாம் கூறுகின்றனர். இந்தியா உலகுக்கு அளித்த கலாசார நன்கொடைகளை மிகைப்படுத்துகின்றனர். வெறும் இந்தியாவைப்
கருத்தியலும் வரலாறும் 194

பெருமைப்படுத்துகின்றனர். இவை இன்று வித்தியாபவன் வெளியீடுகளிலும், கல்வித்துறை நூல்களிலும் மிகுதியாக இடம் பெறுகின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக, இந்திய வரலாற்றாய்வில் இத்தகைய வகுப்புவாத நோக்கை வரலாற்றாய்வாளர் பலர் எதிர்த்துவருகின்றனர். குறிப்பாக, இந்திய வரலாற்றியல் பேரவையும், இன்னும் பல்வேறு வரலாற்றாய்வாளர்களும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பாடநூல்களில் இத்தகைய கருத்துக்கள் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டு வந்துள்ளனர். தேசியவிடுதலைப் போராட்டத்தைப் பற்றிய மறுபரிசீலனைக்கான தேவையையும், குறிப்பாக தேசிய விடுதலை இயக்கத்தில் உழவர் தொழிலாளர் பங்கு, இடதுசாரிப் போக்குகள், பகுத்தறிவு வாதப் போக்கு இவற்றின் பங்கு பற்றிய பரிசீலனையின் தேவையைப் பலர் உணரத்தலைப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்தோற்றுவிக்கப்பட்ட பிரச்சாரம் இந்தியவரலாற்றியல் ஆய்வில் ஏற்பட்டுவரும் புதிய போக்குகளுக்கு எதிரிடையாகும். இந்திய வரலாற்றாய்வாளர்களின் விஞ்ஞானவியல் கருத்தோட்டங்கள் கொண்ட பாடநூல்கள் இவர்களின் முதல் கட்டத்தாக்குதலுக்கு உள்ளாகின. இந்திய வரலாறறியல் ஆய்வுக்கழகத்தில் (ICHR) செய்த மாற்றங்களையும் வரலாறு பற்றிய விஞ்ஞானவியல் நூல்களின் மொழிபெயர்ப்புத் திட்டத்தைக் கைவிட்டதையும் சேர்த்துப் பார்க்கும் போது வரலாற்றியல் ஆய்வின் மீதே இவர்கள் தொடுக்க விரும்பும் தாக்குதல் புரிகிறது.
இந்திய வரலாற்றியல் ஆய்வுக் கழகம் ஆறு அல்லது ஏழு
ஆண்டுகளுக்கு முன் தொடங்கியபோது அரசின் தலையீடு இல்லாமல் ஒரு கழகத்தின் மூலம் விஞ்ஞானவியல் ஆய்வை ஊக்குவிப்பதாக இருந்தது. பல்வேறு அமைச்சரகங்களின் கீழிருந்த வரலாற்று ஆய்வுத்திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றின் நிதி வசதிகள், இக்கழகத்திற்குத்தரப்பட்டன. இந்திய வரலாறு பற்றிய விஞ்ஞானவியல் நூல்கள் பல்வேறு மாநில மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டமிடப்பட்டது இத்திட்டம் சிறப்பாகச் செயல்படலாயிற்று. ஆர்.எஸ்.எஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்டு தீன்தயாள் ஆய்வு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட இந்திய வரலாற்று கலாசாரக் கழகத்தினர் இந்தப் புதிய அமைப்பில் இடம் பெற்றனர். மொழிபெயர்ப்புத் திட்டம் கைவிடப்பட்டது. இனி வித்தியா பவன்தொடர் வெளியீடுகள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டு மாநில மொழிகளில் வெளியாகும்.
கருத்தியலும் வரலாறும் 195

Page 50
ரோமிலா தப்பார்
இந்திய வரலாற்றை இந்து வகுப்புவாத நோக்கில் பொருள்படுத்திய முன்னவர் முயற்சிகளைக் கேள்விக்கு உட்படுத்தியபோது இவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். உயர்சாதியினர் 'ஆரிய' மூலங்கள், குப்தர் காலத்தில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சி பொற்காலமாக வர்ணிக்கப்பட்டமை - பழங்கால வரலாற்றில் கேள்விக்கு உள்ளான பிரச்சனைகள் இவை. இடைக்கால இந்திய வரலாற்றை இந்துக்களும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமை என்ற ஒரேகாரணம் கொண்டு விளக்குவதை நாங்கள் மறுத்தோம் இந்து வகுப்புவாத கண்ணோட்டம் கொண்ட அரசியல் கட்சியினர் இத்தகைய ஆய்வால் தங்கள் சித்தாந்த அடிப்படைகள் தகர்வதை விரும்பவில்லை. இதனால் இத்தகையவரலாற்று ஆய்வாளர்களை இந்திய எதிர்ப்பின" ராக முத்திரை குத்தலாயினர். மார்க்சியம் ஓர் அந்நிய சித்தாந்தம்; மார்க்சியத்தை ஏற்பவர்கள் இந்திய எதிர்ப்பாளர்கள்; அந்நியசித்தாந்தத்தை இந்தியவரலாற்றில் திணிக்க முயல்பவர்கள் இவர்கள்; இத்தகைய குற்றச்சாட்டுகளை சில வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டு அவற்றை திரும்பக் கூறலாயினர். இந்திய வரலாற்றை இந்திய முறையில் பொருள்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் எழுப்பினர். சில கருத்தரங்குகளில் இது விவாதிக்கப்பட்டபோது உண்மை வெளிப்பட்டது. கலாசார தேசிய வாதத்தில்இருந்து வெளிப்பட்ட சித்தாந்தமே இவர்களது கண்ணோட்டம் என்பது தெரியலாயிற்று. கடந்த சில பத்து ஆண்டுகளில் வரலாற்று ஆய்வில் ஏற்பட்டுவரும் உயர் அறிவுத்தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களும் இவர்களோடு சேர்ந்து கூச்சல் எழுப்பினார்கள். பழங்கால வரலாறுபற்றிய புதிய விளக்க உரைகள் மீதே இவர்கள் கடுமையான தாக்குதல் தொடுத்தார்கள் இவர்கள். பெரும் அளவில் சராசரித் திறமை உடைய வரலாற்று ஆசிரியர்கள் இவர்கள். விவரங்களை கண்டுபிடிப்பதிலும் அவற்றைத் தொகுப்பதிலும் திறன்மிக்கவர்கள், விபரங்களைப் பகுத்தாய்ந்து புரிதலில் இவர்களின் திறன் என்றுமே வெளிப்பட்டது இல்லை. வரலாற்று ஆய்வு நாளுக்கு நாள் நுணுக்கமான தனித்திறன் மிக்க ஆய்வாகி வருகிறது. வரலாற்றாய்வில் புதிய போக்குகள் தோன்றுகின்றன. இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் தான் முன் கூறியவாறு தாக்குதல் தொடுக்கிறார்கள்.
ஏ.கே.பாக்சி
வரலாறு எந்த\அளவுக்கு விஞ்ஞானவியலாகிறது. அல்லது எந்த அளவுக்கு வரலாற்றாசிரியனின் உலகக் கண்ணோட்டத்தின் அகவியல்
கருத்தியலும் வரலாறும் 96

வெளியீடாகிறது என்பது ஈ.எச்.கார் போன்றவர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது. நம் பங்கு இந்த விவாதத்தில் சில அம்சங்களைச் சேர்ததல்தான். வரலாறு என்பது மக்களின் வாழ்வைப்பற்றியது. ஆகவே தங்கக் கோபுரங்களில் அமர்ந்துள்ள வரலாற்றாசிரியன் மக்கள் வாழ்வைச் சிறப்பாக வெளியிடுவது இயலாத செயல். கைநிறையச்சம்பளம் பெறும் ஒரு வரலாற்றாசிரியன் இந்தியக் கிராமப் புறத்தில் பல நூற்றாண்டுகளாக பஞ்சத்திலும், பட்டினியிலும் வாடியிருக்கும் மக்கள் வாழ்வை தனது வர்க்க வேர்களைக் களைந்து கொண்டால் ஒழிய எப்படி அறிய முடியும்? காலந்தோறும், மக்களின் போராட்டங்களைக் கணக்கில் கொள்வது தான் விஞ்ஞான முறையி. லான வரலாறு ஆகும். பெளத்தர்களின் நூல்களை பிராமணர்கள் திருத்தியது மாதிரி, உழவர்களின் போராட்டங்களைக் கொள்ளைக்காரர் செயல்களாக பிரிட்டிஷ் ஆட்சியாளர் திரித்துக் கூறியது மாதிரியும், மக்களின் போராட்டங்களைத் திரித்துக்கூறக்கூடாது. வரலாற்றில் உண்மையைக் கண்டறிவதற்கான நுழைவாயில், சுரண்டப்படும் மக்களின் சார்பிலான நிலைப்பாட்டை மேற்கொள்வதாகும்.
இர்பான் ஹபீப்
வரலாறு ஒரு விஞ்ஞானமா? அல்லது வரலாற்றைப் பற்றிய விஞ்ஞானவியல் அணுகுமுறை சாத்தியமா என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். வரலாற்றை அளவியல் முறையில் விளக்க முடியாது. ஒரு விஞ்ஞானத்தைப் போல, வரலாறு பற்றிய விஞ்ஞானமுறை அணுகலின் வரையறைபற்றிநாம் கவனமாக இருக்க வேண்டும்.நிகழ்ந்து இருக்கக்கூடிய நூறு நிகழ்வுகளில் ஆதாரத்தோடு கூடிய நிகழ்வுகள் நமக்கு ஐந்து அல்லது ஆறுதான் கிடைத்திருக்கும் பழங்கால நிகழ்வுகளில் இதன் தொகை இன்னும் குறையும். இவையும் கூட மையமான, மிக முக்கியமான நிகழ்வுகளாக இரா. இந்த வரையறைகள், வரலாற்றை விஞ்ஞானமாக கருதுவதன் அளவைக் குறைக்கின்றன. கிடைத்திருக்கும் சில பகுதி விவரங்களில் இருந்து முழுமையை உருவாக்க வேண்டும். கற்பனாவாதி போல இதைசெய்துவிடக்கூடாது. வேறு சமூகங்களுடன் ஒப்பீட்டு முறையிலோ அல்லது முன்னர் அல்லது பின்னர் ஏற்பட்ட, வளர்ச்சியிலிருந்தோ இதை உருவாக்க வேண்டும்.தவிர வரலாற்றை உருவாக்கிப் பார்க்கும் போது வரலாற்று ஆசிரியனுக்கு ஏற்றவாறு ஒரு சமுதாயத்தின் சிலபல அம்சங்களுக்கு அழுத்தம் தர நேரும். இங்குஅகநிலை அம்சங்கள் நுழைகின்றன. குறுகிய பார்வை, தேசிய வெறி, சாதிப்பெருமை முதலிய அகநிலை அம்சங்களில் இருந்து விலகி வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்க வேண்டும்.
கருத்தியலும் வரலாறும் 197

Page 51
இர்பான் ஹபீப் வரலாற்றுக் கட்டங்கள்
இந்திய வரலாற்றை இந்து, முஸ்லீம், பிரிட்டீஷ் வரலாற்றுக் கட்டங்களாக வகுத்தவர்கள் பிரிட்டீஷ் வரலாற்று ஆசிரியர்கள்தான். பிரிட்டனின் வெற்றிக்கு முன்னர், ஆட்சியாளர்களின் சமயம்தான் மிக முக்கியமான சக்தியாக இருந்தது என்பது அவர்கள் கருத்து. இது தவிர இக்கால கட்டங்களுக்கு ஆதாரமான மூலங்கள் இருந்த மொழி காரணமாகவும் இப்பிரிவு ஏற்பட்டது. பழங்கால வரலாறு சமஸ்கிரும், பாலி மொழியோடும், இடைக்கால வரலாறு பெர்சியன், அரபு மொழியோடும், நவீன கால வரலாறு ஆங்கில மொழியோடும் சம்பந்தம் உடையதாக இருந்தது.
வரலாற்றுக் கட்டவகுப்பு, காலத் தொடர்புக்காகவும், வரலாற்று ஆய்வு கருதியும் செய்யப்படுகிறது. வரலாற்றின் வளர்ச்சி பல்வேறு குணங்களோடும் நடைபெறுகிறது. சில குறிப்பிட்டகாலங்களில் மிகக் குறுகிய கால அளவிலேயே ஒரு சமூக அமைப்பாக ஒரு பாய்ச்சலாக மாறுகிறது. இத்தகைய பாய்ச்சல்களைக் கண்டறிவது, வரலாற்றாய்வில் மிக முக்கியமானதாகும். வரலாற்றுக் கட்டமைப்பை வகுப்பதில் வெற்றிபெறுவது இதைப் பொறுத்து அமைகிறது.
மார்க்சீயவாதிகள் மத்தியில் முதலில் புராதனச்சமூகம், பிறகு அடிமைச் சமுதாயம், பிறகு முதலாளித்துவம் என்ற முறையில் வரலாற்றுக் கட்டங்கள் தவறாது அமைவதாக கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கான பாய்ச்சல் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் நடைபெறுவதை விளக்குவதான அணுகல் முறை பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். முதலாளித்துவத்திற்கு முற்பட்ட சமுதாயங்களில் சுரண்டுவதில் பல்வேறு வகையான முறைகள் இருந்தன. நிலக்கிழார் - பண்ணை அடிமை என்ற உறவுதான் எல்லா இடங்களிலும் நிலவியது என்பது இல்லை. இந்தியாவில் இத்தகைய உறவுமுறை நிலவவில்லை. அதே சமயம் இங்கு சுரண்டல் மிக உயரிய அளவில் நடைபெற்றது. முதலாளிய சமுதாயத்தில் தான் சுரண்டல் முறை, ஒரே மாதிரியான உலகு தழுவிய முறையாகிறது. ஐரோப்பிய சமுதாயத்தில் நிலவியதைப் போன்ற வரலாற்றுக் கட்டங்களை நாம் கடன் வாங்கிக்கொள்வது பயன்படாது.
ரொமிலா தப்பார்
தற்போது பயன்படுத்தப்படும் வரலாற்றுக் கட்ட வகுப்பு முறை, ஆய்வுக்கான வசதியாகிறது. என்பதற்கு மேல் இது உண்மையானதாக இல்லை. தவிர இந்த வகுப்பு முறையின் கீழ், உள்ளார்ந்த ஓர்
கருத்தியலும் வரலாறும் 198

அறிவுரீதியான அடிப்படை இருக்கிறது. இந்த வகுப்புமுறையை ஒருவர் ஏற்கவில்லை என்றால், அதற்கு அடியில் உள்ள அடிப்படையை அவர் மறுக்கிறார் என்று ஆகிறது. உதாரணமாக, பழங்காலம், இடைக்காலம் என்ற பகுப்புமுறை, இந்து முஸ்லிம் என்ற வேறுபடுத்தலின் அடிப்படையில் அமைகிறது. இக்கருத்துடையவர் டெல்லி, முஸ்லிம்களின் ஆளுகைக்கு வந்தவுடன் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து விட்டதாகக் கருதுகின்றனர். கி.பி. 10-ம் நூற்றாண்டு முதல் 16 வரை மாபெரும் மாறுதல் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. அடிப்படையான சமூக - பொருளாதார மாறுதல்களின் அடிப்படையில் செய்யும் பகுப்பு முறையே சரியானமாக இருக்க முடியும். இந்தியாவில் ஒரே சமுதாயத்தில் எல்லா இடத்திலும் சமுதாய மாறுதல் ஒரே அளவில் நடைபெறவும் இல்லை. மிக வேறுபட்ட சமுதாய அமைப்புகள் இங்கே அருகருகே இருக்கவும் செய்கின்றன. இவை பிரச்சனைகள்.
இர்பான் ஹபீப்
இந்திய சமுதாயம் தனக்கான ஒரு வரலாறு உடையது: இதன் வளர்ச்சியும் தனி வகையானது, என்று முதலில் காட்டியவர் கோசாம். பியே ஆவார். இவரைத் தொடர்ந்து இவர் வழியில் ஆய்ந்தவர்கள் ரொமிலாதப்பார். ஆர்.எஸ்.சர்மா ஆகியோர். இவர்களது ஆய்வுகள், இந்திய வரலாற்றில் பழங்காலம் என்பது பலகால கட்டங்களை உடையது; ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வர்க்க உறவுகள் நிலவின என்பதைப் புலப்படுத்தகின்றன. 12,13 நூற்றாண்டுகளில் இந்திய வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டதை சர்மா விளக்கி இருக்கிறார். கிராமப்புறத்தில் சுரண்டும் வர்க்கம் சிதைந்து, நகர்புறத்தில் ஒரு அதி. காரவர்க்கம் தோன்றியது.நில வருமானம், அரசின் பெயரால்நகரத்தில் இருந்த மிகச் சிறிய ஆளும் வர்க்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இந்த மாறுதலை நிலவுடமை ஆதிக்க முறையில் இருந்து ஆசிய முறைக்கு" மாறியதாக கூறலாம். இந்தச் சொல்லை மார்க்ஸ் கருதிய பொருளியல் இங்கு பயன்படுத்தவில்லை. இந்த மாறுதல் ஒரு பாய்ச்சல்.
ரொமிலாதப்பார் பிறதுறைகளின் பங்கு
வரலாற்று ஆய்வுக்கு மொழியியல் பெருந்துணை புரியலாம். வேதகால சமஸ்கிருதம் முற்றிலும் இந்தோ ஆரிய மொழிதான் என்ற கருத்தைநாம் கைவிட வேண்டுபவர்களாக உள்ளோம். வேதகால சமஸ்கிருதத்தில் உழவுத் தொழில் முதலிய சில தொழில்களைக் குறிப்பிடும் சொற்கள், ஆரியம் அல்லாத மொழிமூலம் உடையவை. இதிலிருந்து இன்னோர் உண்மையை அறியலழ ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு
காழும்பு தமிழ்ச் சங்கம்
கருத்தியலும் வரலாறும் 199

Page 52
இருந்தவர்கள் பேசிய மொழி இந்தோ ஆரிய மொழி. உழவர் குடியினரது மொழி இந்தோ-ஆரியர் அல்லாத மொழி. இம்மக்களுக்கு இடையில் இருந்த உறவுகள் புதிய பரிமாணத்தில் இன்று தென்படுகின்றன.
மொழி இயலைப்போலவே வேறுபல துறைகளும் வரலாற்று ஆய்விற்கு பெரிதும் இன்று பயன்படுகின்றன. வரலாற்று ஆய்வுக்கு ஒரே ஒரு தனிமுறை என்று எதுவும் இல்லை. ஆய்வுக்கான முறைகளும் குறிப்பிட்டகால அறிவுநிலைக்கேற்பவும், அவ்வறிவு தொகுக்கப்படுதல், உறவுபடுத்தப்படதல், இணைக்கப்படுதலுக்கு ஏற்பவும் மாற்றம் அடைகிறது.
பீபின் சந்திரா வட்டார வரலாற்றின் தேவை
12-ஆம் நூற்றாண்டு முதல் இந்திய சமுதாயம் ஓர் ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சிபெற்று வருகிறது.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தியா ஒரே சந்தையாகி வருகிறது. அரசியல் முறையில் ஒன்றிணைந்து அனைத்து இந்திய வரலாறு என்று பேசும் அதே சமயத்தில், வட்டார, மாநில வரலாறுகளின் தேவையையும் நான் வலியுறுத்துகிறேன். காரணம் பொதுமையாக்கப்பட்ட கருத்தாக்கங்களை வட்டார அளவில் சோதிக்க இது பயன்படுகிறது. இந்திய வரலாறு பற்றிய ஆழ்ந்த அறிவுக்கு இது பயன்படும். இந்திய வரலாறு என்று எதுவும் இல்லை என்று கூறி, வட்டாரப் பண்புகளுக்கு அழுத்தம் தரும் வரலாற்று ஆசிரியர்களையும் நான் அறிவேன். இவர்கள் தம் குறுகிய நலன்களுக்காக வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
இர்பான் ஹபீப்
மிக விரிந்த நிலவியல் அடிப்படையில் உருவாக்கப்படும் பொது கருத்தாக்கங்களைச் சோதிக்கவும் வட்டார வரலாறு பயன்படலாம். இத்தகைய நோக்கம் இல்லாமல் தனது வட்டாரம் தன்னிகரற்ற வரலாறு உடையது என்று காட்ட விரும்பி, பிறவற்றில் இருந்து தனியே பிரித்து ஒரு வரலாற்றை உருவாக்குவது என்பது பயன்படாது. இத்தகைய கருத்தாக்கம் தவறானது. உதாரணத்தில் சந்தேகம் இல்லை. சிவாஜியைப் பெருமைப்படுத்த விரும்பி அவரை உழவர் தலைவர் ஆகவும், அவரது ஆட்சிப் பரப்பில் பொருளாதாரம் உன்னதமான முறையில் நடைபெற்றதாகவும் தயாத்தை உருவாக்கிக் காட்டுவது தவறு. இந்தப் போக்கு எல்லா இடங்களிலும் உள்ளது. எனது மாநிலமாகிய உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர்கள், உத்தரப்பிரதேசம்தான் இந்தியா என்பது போல் எழுதுகிறார்கள்.
கருத்தியலும் வரலாறும் 100

ரொமிலா தப்பார்
வரலாறு, அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலையில், இத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாவது தவிர்க்க இயலாதது. மக்கள் தம் வட்டார வரலாற்றுடன் நெருக்கமாக உறவு கொண்டிருப்பதன் காரணமாக இப்படி நேர்கிறது.
ஏ.கே.பாக்சி வரலாற்றின் தேவை
வளர்ச்சி பெற்ற, விஞ்ஞானவியல் நோக்கிலான வரலாறு மக்களுக்குத் தம் மரபைப் பற்றிய தெளிவான பார்வையைத் தரும். தம்மைத் தாழ்ந்தவர் என்று மக்கள் தாமே நம்புமாறு ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்தியுள்ள தவறான உணர்வைக் களையும்.
பீபின் சந்திரா
சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும் தர்க்கவியல் முறையிலான கருவி ஏற்கனவே நிலவும், சமூக - சித்தாந்த மேல் ஆதிக்கங்களை நிலை நிறுத்தவல்ல கருவி. வரலாறு என்பது ஓர் உண்மை. பிற சமூக விஞ்ஞானங்களும், இத்தகைய கருவிகளே. மாறுதல் ஏன், எப்படி நிகழ்கிறது. சிலவகை மாறுதல்கள் ஏன் நிகழ்கின்றன, எப்படி என்பதை வரலாறு மட்டுமே விளக்குகிறது. சமூகத்தை மாற்ற விரும்புவோர், வரலாற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும், சமூக மாறுதல்களில் அக்கறை கொண்டவர்கள்தான் வரலாறு பற்றிய சரியான பார்வையைப் பெறமுடியும். பெற்றும் இருக்கிறார்கள்.
இர்பான் ஹபீப்
இந்திய வரலாற்று ஆய்வில் முக்கியமான பிரச்சினை, சாதாரண மக்கள் எனப்படும் உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்திய வரலாற்றில் உள்ள பங்கு என்ன? எத்தகைய பங்கு? நமது நாட்டின் பழமைக்காகப் பெருமைப்படுதல் என்பது, இம்மக்களின் வேதனையையும் அவற்றுக்கான நிலைமைகளையும், அவர்கள் அனுபவித்த நெருக்கடிகளையும் மறந்துவிடுவதா என்பதாகும். வரலாற்றுப் பாட நூல்கள் பற்றி எழுந்த விவாதங்கள் இத்தகையஅணுகல்முறை பற்றியதே. புவனேஸ்வரில் நடந்த இந்திய வரலாற்று நூல்கள், நாகரீகமற்ற மக்களை வரலாற்றுக்குள் கொண்டு வருகின்றன. அரசாங்கற்களை இகழ்கின்றன. வரலாறு இம்முறையில் மக்களுக்கு உதவ முடியும். நமக்கு அந்நியமானவர்களைப் பற்றிய கற்பனையான கதைகளை உருவாக்குவதாக வரலாறு இருகக்கூடாது.
கருத்தியலும் வரலாறும் 101

Page 53
ரொமிலா தப்பார்
சமுதாயத்தின் இயல்புபற்றி 19ஆம் நூற்றாண்டில் கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட பிறகு சமுதாய பொருளியல் வரலாற்றுக்கு அழுத்தம்தரும் முறை உலகளவில் உருவாகியுள்ளது. இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு இதன் அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் முற்காலச் சமூகங்களின் வரலாற்றுப்பங்கைத் தீர்மானிப்பது முக்கிமாகிறது. இதை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம். இந்தியாவில் பொருளாதார மாறுதலைத் தடுக்கும் பெருஞ் சக்திகளுள் ஒன்று, மதம் என்று விவாதிக்கப்படுகிறது. மாக்ஸ் வெபரின் கருத்துக்கள் இம்முறையில் பல சமுக விஞ்ஞானிகளால் திரும்பத்திரும்ப எடுத்தரைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பொருளாதார உருவங்களை வளர்ப்பதில் சமயம் பெரும் பங்காற்றியதை பழங்கால வரலாறு பற்றிய ஆய்வில் நாம் அறியமுடியும். பொருளாதார மாற்றமே சமயப் பிரிவுகளின் தோற்றத்திற்கு காரணமாக இருந்ததையும், பொருளாதார மாறதலின் குறிப்பிட்ட வடிவங்களுள் சமயப் பிரிவுகள் இணைந்து இருந்ததையும், அறிய முடியும். இப்படிச் சொல்வதை, ஏதோ கோட்பாடு முறையிலான வெறும் பயிற்சிபோலக் கருதிவிடக்கூடாது. இதனால் மாக்ஸ்வெபர் கருத்து தவறு என்று நாங்கள் சிலர் நிரூபிக்க விரும்புகிறோம் என்றும் இதற்கு பொருளாகாது. தற்காலத்தில் வளர்ச்சி பற்றிய சிக்கல்கள் எழும் சூழலில் இத்தகைய புரிதலுக்கான தேவையை நாம் உணர வேண்டும். இவற்றைச் சரிவர அறிந்து கொண்டால் வளர்ச்சிக்கான திட்டத்தின் வறட்சியும், படைப்பற்ற தன்மையும் மாற்றம்பெற முடியும்.
கருத்தியலும் வரலாறும் 102

வரலாறுகளை எழுதுவது என்பது.
செந்தில் பாபு தமிழில் : திண்டுக்கல் கே.அறம்
எந்தவொரு அடையாளத்தையும் கட்டமைக்கும் போது வரலாறு தன்வயமாக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் நிகழ்வுகள், கருத்துருக்கள், கடந்த காலத்தைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட வகையிலான வியாக்கியானங்கள் - இவை எல்லாம் ஒரு சமூகத்தில் அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூகக்குழுக்களின் அடையாளங்களை மறுகட்டமைப்புச் செய்ய சமூகரீதியாகவும் (அடிக்கடி) அரசியல் ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அளவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் வரலாற்று நடவடிக்கைகள் என்பவை (வரலாற்றின் உருவாக்கம், அதைபோதிப்பது மற்றும் ஆய்வு செய்வது) நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகம் அரசியல் தன்மை வாய்ந்தவையாக உள்ளன.
அரசியலில் எப்போதுமே என்னநடக்கிறதென்றால் தற்கால அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே வரலாறு பயன்படுத்தப்படுகிறது. தூய்மையானவரலாறு என்பதற்கு அங்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது.
இனத்துவமும் வரலாற்றியலும் ஒன்று கலக்கும் இலங்கைச் சூழலில் இக்கட்டுரை மிகப் பொருத்தமானது. வரலாறு பற்றிய அடிப்படையான தேடலை கேள்விகளை முன்வைக்கும் கட்டுரை ஆகும். இந்தியாவின் ஆட்சி அதிகாரத்துக்கு பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் வரலாற்றை திரித்து மாற்றி எழுதும் போக்கு வெளிப்படையாக வெளிப்பட்டது. வரலாறும் மதவாதமும் ஒன்றிணைந்து வரலாற்றுப்பாடங்கள் திருத்தப்படும் போக்கு அதிகரித்தது. மதச்சார்பற்ற சனநாயகம் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் வரலாற்றாய்வாளர்கள் பலரும் இப்போக்குகளுக்கு எதிராக தமது கண்டனத்தையும் போராட்டங்களையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் முனைவர் செந்தில்பாபு 'வரலாறுகளை எழுதுவது என்பது. எனும் கட்டுரையை எழுதியுள்ளார். இது புதுவிசை ஆகஸ் 2000 இதழில் வெளிவந்தது.
கருத்தியலும் வரலாறும் 103

Page 54
சமீபகாலங்களில் இதுபோன்ற விஷயங்கள் பற்றி நாம் பேசும்போதெல்லாம் நமக்கு நினைவுக்குவருவது ராமஜென்ம பூமி-பாபர்மசூதி பிரச்சனைதான். கடவுள்ராமர் அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான்பிறந்தார் என்று ஒரு பிரிவினர் கூறினர்.
சிலர் அதை நிரூபிக்க வேண்டிப் புதைபொருளாதாராய்ச்சிகளில் ஈடுபட்டு சிலகுழிகளைத்தோண்டி ஒரு சைஸான சில சான்றுகளைத் தேடிக்கொண்டு வந்தனர். கடைசியில் நடந்ததென்ன? 16ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு நினைச்சின்னம் தகர்த்தெறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் வரலாற்று ஆய்வார்களும், புதைபொருளாராய்ச்சியாளர்களும் என்னசெய்து கொண்டிருந்தார்கள்? சிலர் எப்போதும் போலவே அமைதியாகக் கொருவீற்றிருந்தார்கள்! ராமர் இங்கே பிறந்தாரா? அங்கே பிறந்தாரா? என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்துகொண்டிருப்பதைவிட வேறு பல முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. அவைபற்றிச் செயல்படவேண்டியுள்ளது என்று வேறுசிலர் வாதாடத் தொடங்கினார்கள். ஆனால் அந்தப் பிரச்சினை அத்தனை எளிதான ஒன்றல்ல. எந்தவழியில் சிந்திக்கவேண்டும் என்பதை 'அரசியல்' தீர்மானித்தது. அதன்படியே சில மரபுவழிப்பட்ட வரலாற்றாய்வாளர்கள் களத்தில் இறங்கி வாதங்களிலும் எதிர்வாதங்களிலும் ஈடுபட வேண்டியதாயிற்று.
ஒருவர் இரண்டு தூண்களைப்பிடுங்கியெறிந்தார். மற்றும் ஒருவர் மூன்றாவது துணை விழச் செய்தார். கடைசியில் மசூதியே தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.நாம் அரசியலைப்பற்றியும் சரித்திரம் ஆய்வுபற்றியும் விவாதிக்கும் போது இந்த விவாதத்தின் திசைவழி எதுவாக இருக்க வேண்டுமென்பதை தீர்மானித்தது அரசியலே என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. அந்தத்திசையில் வரலாறு, கலாச்சாரம். புராணம் எனபலவும் இழுத்துச்செல்லப்பட்டது. நாம் இதன்மூலமாக அரசியலும் வரலாறும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கின்றன என்ற ஒரு அம்சத்தை நன்கு புரிந்துகொள்ளலாம்.
நம்மைப்போன்ற பெரும்பான்மையான மக்களுக்கு அரசியலுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான தொடர்பு என்பது என்ன?நாம் எந்தவிதமாக வரலாற்றை உள்வாங்கப் போகிறோம் என்பதில்தான் அது அடங்கியிருக்கும். ஆம். எந்த "விதமாக" என்பதுதான் முக்கியம்.
வரலாறு என்று நாம் சொல்லுகின்ற பொழுதில் நாம் என்ன நினைக்கின்றோம்? கடந்து போன நாட்களைத்தானே! அதுசரிதான்.
கருத்தியலும் வரலாறும் 1104

ஆனால் அது எந்தக் கடந்தகாலம்? பள்ளிப்பாடப்புத்தகங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்த மக்களுக்கு அவையெல்லாம் நினைவிற்கு வரக்கூடும். ஆனாலுங்கூட நாம் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது ஏதோ ஒன்று நெருடுகிறது. அது என்ன? அதுதான் நம்முடையநாட்டில் நடைபெற்ற விடுதலைப்போராட்டம், நாம் வர. லாற்றைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் மேற்படி நிகழ்ச்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றுகின்றது. அது ஏன்? -
உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளூர் சம்பந்தப்பட்ட குடும்பரீதியான நிகழ்ச்சிகள் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம்நாம் வரலாறு என்று நினைப்பதில்லை. நாம் அவைகளைப் பற்றிய பல்வேறு கதைகளை. யெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் ஆண்டாண்டு காலமாகக் கேள்விப்பட்ட மேற்படி நிகழ்ச்சிகள் யாவும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் நாம் எதற்காக ஒரு குறிப்பிட்ட கடந்த காத்தைப்பற்றி மட்டும் எண்ணிப்பார்க்க வேண்டும்?அதிலும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி?அதில் அரசியல் கலந்துள்ளது என்று எவரெனும் கூறிடத் துணிவார்களா?
நாம் அரசியல் என்று கூறும்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் அல்லது அரசியல் மேலிடத்தில் தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டு காரியஞ்சாதிக்கக்கூடிய உள்ளுர் தாதாக்கள் ஆகியோரைப் பற்றி மட்டுமோ அல்லது அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டுமோ எண்ணிப் பார்க்கவில்லை. அதையும் விட அதிகமான அம்சங்கள் அரசியலில்' உள்ளன. உதாரணமாக இந்தியநாட்டின் வரலாற்றைப்பற்றிக் குறிப்பிடும். சமயத்தில் விடுதலைப்போராட்டத்துக்கு இணையான பல்வேறு வரலாற்று ரீதியான நிகழ்ச்சிப்போக்குகளெல்லாம் ஒன்றாகப் பிணைந்து நின்று நம்முடைய இந்திய வரலாறு பற்றிய சிந்தனையை உருவாக்குகின்றன.
விடுதலை பெற்ற அன்றைய இளம் இந்தியாவுக்கு தன் உருவாக்கத்தின் இருத்தலின் - நியாயத்தை தன் மக்களின் முன் நிரூபித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே சுதந்திரப் போராட்ட வரலாற்றை வலுவாக முன்வைத்து வரலாறு எழுதப்பட்டது. அது நம்மனங்களில் ஆழப்பதிந்துள்ளது. இது அரசியல்தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாம் யாவருமே இத்தகைய நடைமுறையில் தொடர்புள்ளவர்களாகவே விளங்குகின்றோம். உலகைப்பற்றிய நம்முடைய கண்ணோட்டங்கள், நமது எண்ணங்கள், சமுதாயத்தைப் பற்றிய நமது மனப்பான்மை ஆகிய எல்லாமே அரசியலை உட்கொண்டே இருக்கின்றன.
கருத்தியலும் வரலாறும் 105

Page 55
அரசியலானது பல்வேறு மட்டங்களிலும் மானுட உறவுகள் சம்பந்தப்பட்ட இயல்புகளையெல்லாம் மாற்றியமைத்துக் கொண்டடே செல்கின்றது. அப்படியானால் வரலாற்றாசிரியர்களும், தொழில்முறை ஆராய்ச்சியாளர்களும் ஏன் இத்தகைய சமூகரீதியான வரலாற்றுபூர்வமான நடைமுறைகளையெல்லாம் புறக்கணித்துக் கொண்டு செய்படுகின்றனர்?
"வரலாற்றை எழுதுவது" என்ற ஒரு நடைமுறையுங்கூட அரசியலின் ஒரு பகுதிதான் என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். இன்றைக்கு நாம் படிக்கிற பாடநூல்களில் வரலாற்றை எழுதத் தொடங்கிய அன்றைய நபர்களைப்பற்றியெல்லாம்நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.இந்திய வரலாற்றை எழுதியவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. கீழைநாடுகள் பற்றிய ஆய்வாளர்கள்
இவர்கள், தங்கள் சொந்த (ஐரோப்பிய) சமூகத்திலிருந்துதங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகின் பிற பகுதிகளில் கற்பனாலோகங்களைத் தேடி அலைவார்கள். அத்தகைய நபர்களுடைய கற்பனாவாதத்துக்கு ஏற்றதோர் தளமாக இந்தியா இருந்தது.
இவர்கள் தொழில்மயமாதலின் ஆரம்பக் கட்டித்திலிருந்தே படுவேகமாக மாறிக் கொண்டிருந்த தங்களது ஐரோப்பிய மண்ணில் காணக் கிடைக்காத ஆன்மீகம், உள்நாட்டு சிறுசிறுகுடி அரசு அமைப்புகள், சமூக அமைதி இணக்கம் போன்ற புனைவுவயமான எல்லாம் கொண்ட ஒரு சமுதாயமாக இந்தியாவைப் பார்த்தனர்.
2. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர் அல்லது பயன்பாட்டுவாதிகள்
பயன்பாட்டுவாதிகள் என அழைக்கப்படும் வேறு ஒரு வகையான வரலாற்றாசிரியர்கள் இருந்தனர். ஒரு சமூகத்தின் தேவைகளை அதிகப்படுத்துவதன் மூலமே அதனையும் அதனுடைய பொருளாதாரக் கட்டுக்கோப்பையும் வலுப்பெறச் செய்ய முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்.
அவர்கள் நிலைபாடு கீழையநாட்டு ஆய்வாளர்களிலிருந்து நேர் எதிரான ஒன்றாக இருந்தது. அவர்கள் இந்தியா பின்தங்கிய நாடாகும் என்றும் 'கடவுளால் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ்ப்படிவது ஒன்றுதான் அவர்கள் கடைத்தேற ஒரே வழியாகும் என்றும் வாதாடினர். இத்தகைய சிந்தனைப்போக்கைச் சார்ந்தவரான ஜெம்ஸ் மில் என்ற அறிஞர்தான் அறியப்பட்ட முதல் இந்திய வரலாற்று நூலான பிரிட்டிஷ்
கருத்தியலும் வரலாறும் 106

இந்திய வரலாறு' என்ற நூலை எழுதி முடித்தார். அவர் ஒரு தடவை கூட இந்தியாவிற்கு வந்ததேயில்லை என்பதுதான் இதிலுள்ள வேடிக்கையான அம்சமாகும்! அவர் இங்கிலாந்திலிருந்து கொண்டே இந்திய வரலாற்றை எழுதி முடித்தார்.
அவர் இந்தியாவின் கடந்த காலத்தை இந்துக்கள் காலம்' (இன்று நாம் பழங்காலம் என்கிறோம்) முஸ்லீம்கள் காலம் (மத்தியகாலம்), பிரிட்டிஷார் காலம் (நவீனக்காலம்) என்று மூன்றுபகுதிகளாகப் பிரித்தார். பிரிட்டிஷ் காலத்தை அவர் 'கிறிஸ்துவர்களின் காலம்' என்று குறிப்பிட்டாரில்லை! அதுதான் முதல் தலைமுறை வரலாறு ஆகும்.
தேசியவாதிகள்
இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளைக் குறித்து தேசியவாதிகள் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருந்தனர்?
பிரிட்டிஷாருடைய ஆட்சியின்கீழ் தங்கள் நாடானது இழிவுபடுத்தப்பட்டுக் கிடப்பதை ஒழித்ததாக வேண்டும் என்பது ஒன்றுதான் தேசியவாதிகளுடைய அவசரக்கடமையாக இருந்தது. இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி வானளாவப் புகழத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் கீழைநாட்டு ஆய்வாளர்களின் பார்வையில் இந்திய வரலாறு மூன்று பிரிவுகளாகப் பிரித்தெழுதப்பட்டிருப்பதை எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொண்டனர். ஆனால் மேற்கண்டவகையில் மூன்று பாகங்களாகப்பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள அக்காலப் பாகுபாட்டின் அடிப்படையில் தவறு என்ன? இரண்டு விஷயங்கள்:
1. வரலாற்றுமாற்றங்களுக்குக் காரணமாக மதம் அமைந்திருந்ததாக
ஒப்புக்கொள்வது.
2. ஒரு நாடு உருவாவதற்கு அடிப்படையாக மதம் அமைவதாகப்
பார்க்கப்பட்டது.
மேற்கண்ட கண்ணோட்டத்தினூடே இருநாடுகள் (இந்தியா - பாகிஸ்தான்) என்ற தத்துவப் பார்வை உள்ளுறைந்திருப்பதை நாம் அவதானிக்க முடியும். ஏன் இது நிகழ்ந்தது?தேசியமும், வகுப்புவாதமும் 18ம் நூற்றாண்டின் பிரதானமான சமூக அம்சங்களாக விளங்கின. அன்று இந்தியா கடந்து கொண்டிருந்த நவீன அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக நடைமுறைகளின் நேரடிவிளைவாக இந்தஇரண்டும் அமைந்திருந்தன.
கருத்தியலும் வரலாறும் 107

Page 56
இந்தியசமூகத்தின் மிகப்பரந்த பல்வேறுபட்ட வேற்றுமைத் தன்மைகளை கணக்கில்கொண்டு பார்க்கையில் அன்றைய தேசிய - வாதிகள் பிரிட்டிஷாரின் இந்து - முஸ்லிம் என்ற அணுகுமுறைக்கு பின்வருமாறு எதிர்வினையாற்றியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
"இந்தியசமூகம்" தான் ஒன்றுபட்டதாக இல்லாமல் பிளவுண்டு கிடக்கிறதே அன்றி "இந்துசமூகம் ஒன்றுபட்ட ஓர் முழுமையாகத்தான் இருக்கிறது". "இந்திய தேசம்", 'இனத்துவம்' - இந்த இரண்டையும் சமப்படுத்திப் பார்ப்பதின் விளைவுகளை இன்று நாம் அளவுக்கு அதிகமாகவே அனுபவித்துவிட்டோம்.
பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் காலனி ஆட்சியின் மீதான தத்துவார்த்த விமர்சனத்தின் உள்ளுறையாக - ஏகாதிபத்தியத்திற்கான பதிலாக 'கலாசாரதேசியம்'* திகழ்ந்தது. ஆனால் இத்தகைய தேசிய வரலாற்று அறிஞர்கள் இந்தக் கண்ணோட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட முன்வந்தது ஏன்?
முதலாவதாக ஏகாதிபத்திய ஆட்சியைப்பலவழிகளிலும் எதிர்த்தாக வேண்டியிருந்தது. தேசிய இயக்கத்தின் ஒரு முக்கியமான கூறாக அது அமைந்திருந்தது. தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால் உலக அளவிலேயே கூட ஏகாதிபத்தித்துக்குச் சரியான பதிலடியாக 'கலாசார தேசியம்' அன்று விளங்கிக் கொண்டிருந்தது.
ஆர்.சிதத். நெளரோஜி போன்றவர்கள் உருவாக்கிய காலனியத்துக்கு எதிரான பொருளாதார அடிப்படையிலான விமர்சனப்பார்வை ஒருபுறம் இருக்க வேறுபல நபர்கள் இந்தியாவைப் பிரிட்டிஷார் பாகுபடுத்திக்கூறியதன் அடிப்படையிலேயே இந்தியாவின் கடந்தகாலம் பற்றிய தங்களது ஆய்வுகளை முன்வைக்க முனைந்தனர்.
"இந்தியநாட்டின் புகழ்மிக்க பழங்காலத்தைப் போற்றி அதற்கு வக்காலத்து வாங்கிப்பேசுவதன் மூலமாகத்தான் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதுபற்றிப்பேசவும் வாதாடவும் முடியும்" என்ற கருத்தை அவர்கள் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கிவிட முனைந்தார்கள். "பழங்காலமானது புகழ்மிக்கதோர் காலமாக மிளிர்ந்தது" என்று கூறுவது கலாச்சார தேசியத்தின் அடிப்படைக்கூறாக உலகளாவிய அளவில் அன்று புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.
* ஆர்.எஸ்.எஸ் முன்வைப்பது = கலாசார தேசியம், நேரு முன்வைத்தது = நவீன தேசியம், இடதுசாரிகள் முன்வைப்பது = சர்வதேசியம்
கருத்தியலும் வரலாறும் 108

தேசிய இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக உருவான காலகட்டத்தில் மக்களை மிகப்பெரிய அளவில் ஓரணியில் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேசிய இயக்கத்திற்குள் மக்களைக் கொண்டுவரவும் உத்வேகப்படத்துவதற்கும் எல்லாவித வழிமுறைகளையும் கையாளவேண்டிய அவசியம் தேசிய இயக்கத்தின் தலைமைக்கு உருவானது. சிலர் ஒருகருத்தை முன்வைத்தனர். அவர்கள் மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவதுதான் சாலச்சிறந்த ஏற்பாடாகும் என்று வாதிட்டனர். திலகரின் விநாயகபூஜை திருவிழாக்கள், அரவிந்தரின் அதீத ஆன்மீகம் (வேதங்களுக்கு அவர்தந்த முக்கியத்துவம்) காந்திஜியின் ஹேராம்!, பஜனைகள் முதலிய வழிமுறைகள் இவையெல்லாம் பளிச்செனத் தோன்றும் உதாரணங்கள்.
இந்துக் கடவுளர்களைப் பொதுவாழ்வில் - பொதுவெளியில் பிரதானப்படுத்தி முன்வைத்தது பெரியபயனைத் தந்திடவில்லை. இத்தகைய நடைமுறைகள் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தியிருக்க முடியாது. அதனால் தேசிய இயக்கத்தின் குணாம்சத்துக்கு எத்தகைய மதிப்பு ஏற்பட்டது?
அதுபோகட்டும், இவையெல்லாம் சின்னவிஷயங்கள், நவீன சிந்தனை படைத்த இன்னொருவகையான தேசீயவாதிகளுடைய செயல்பாடுகள் எவ்வாறிருந்தன? விடுதலை, மக்களாட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கான கருத்தோட்டங்களை முன்வைத்து அறிவியல் மனோபாவத்தை தேசமெங்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டு. மென பிரச்சாரம் செய்பவர்களாக அவர்கள் இருந்தனர்.நேருவைப் போன்ற அத்தகைய நபர்கள் மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவது பற்றிக் கேள்வி எழுப்பவில்லையா? நேருபோன்ற அத்தலைவர்கள் தேசீயம் என்ற கம்பீரமான முழக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வகுப்புவாதப் பிரச்சாரத்தை முறியடித்திட முடியும் என்று நம்பினர். அவர்கள் வகுப்புவாதமானது தேசீயத்துக்கு எதிரானது என்பதை மக்களிடம் புரியவைக்கமுடியும் என்றும் நம்பினர். அவர்கள் மக்களைத் திரட்டுவதற்கு மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாமா என்ற ஒரு விவாதத்தை தேசிய இயக்கத்துக்குள் நடத்திட முன்வரவேயில்லை.
தேசியத்தலைமையின் அத்தகைய பலவீனத்துக்கும் வழக்கமானதோர் விளக்கம் தரப்படுகின்றது. அதாவது அவர்கள் பலதரப்பட்ட பொதுமக்களிடையே தேசீய உணர்வு அலையடித்துப் பரவிடும்போது தேசியம் முழுமையாக மலர்ந்துநிற்கும்போதுவகுப்புவாதம் எழுந்துநிற்க
கருத்தியலும் வரலாறும் 109

Page 57
முடியாது என்பதே அந்த விளக்கம். தேசீய உணர்வுகள் கொந்தளித்துப் பொங்கியெழுந்திடும்போது பொதுமக்கள் தங்கள் தாய்த்திருநாட்டைப் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்பட முன்வருவார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படி நடக்காமல் போனதற்கு காரணம் தேசிய இயக்கத்தின் ஸ்தாபன பலவீனமே அன்றி வேறு எதுவுமல்ல என்பதே இந்த வாதத்தின் சாரம், ஆனால் அவர்கள் வகுப்புவாதத்தைப்பற்றி அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் என்பதுதான் உண்மை.
தேசியத்தலைமையானது வகுப்புவாதமும் தேசியமும் ஒன்றுக்கொன்று இயல்பாகவே எதிரும்புதிருமானவை என்று எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டிருந்தது. சமீபநாட்களாக நம்முடைய சமூகவாழ்வில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளுக்குப் பின்னராவது வெறும் தேசியம் மட்டுமே வகுப்புவாதத்தை எதிர்க்கப் போதுமானது என்ற வாதம் குறைபாடுடையது என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் நாம் குறித்துக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் எதுவெனில் தலைவர்கள் அப்படி ஒரு பார்வையை முன்வைத்து பாதைபோடும்போது வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் அதை அப்படியே பின்பற்றினார்கள் என்பதுதான்.
கற்பனைகளை உருவாக்குதல்
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியமக்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், அதைப்பற்றிய அனுபவமே கிடையாதென்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து இந்தியமண்ணில் தங்களது ஆட்சியை நியாயப்படுத்தி வந்தனர். மேலும் ஆங்கிலேயத்தரப்பில் இந்தியர்களுக்குத் தங்களைத்தாங்களே ஆண்டுகொள்ளத் தெரியாது என்றும் பிரச்சாரங்கள் முடுக்கப்பட்டன. அத்தகைய சித்து விளையாட்டுக்களின் பொய்மையை உடைத்துப்பதில் கூறுவதற்கு முன்னால் இது ஆங்கிலேயர்கள் முன்வைத்த அரசியல் ரீதியான சதி என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் கூறுவது அ-சரித்தர ரீதியானதும் கூட என்பது நமக்கு தெட்ட தெளிவாகத் தெரியும்.
இந்தியர்கள் ஆங்கிலேயர்களது அத்தகைய பிரச்சாரங்களை எவ்வாறு எதிர்கொண்டனர்?
அவர்களும் எந்தவிதமான வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களும் இல்லாது அரசியல்தன்மையுடன் கூடிய கதைகளையே முன்வைக்கத் தொடங்கினர்.
கருத்தியலும் வரலாறும் 1110

புராதன இந்திய நாட்டில் மகோன்னதமானதோர் பொற்காலம் நிலவியதாக அவர்கள் கதைகட்டத் தொடங்கினார்கள். அப்படிக் கூறுவதற்கு அவர்கள் தேர்வு செய்து கொண்டகாலம் மனிதநினைவுகளுக்கு அப்பாற்பட்ட மிகப்பழங்காலம். எவருக்கும் தெரியாது ஒரு காலம் பற்றி கற்பனைகளைப் படரவிடும்போது அவற்றை நம்ப வைப்பது எளிது. இத்தகைய தந்திரங்களெல்லாம் நம்முடைய இன்றைய நிகழ்கால அரசியல் மற்றும் அன்றாட சமூகவாழ்வில் நிறையவே பார்த்து விட்டோம். எத்தனையோ கற்பனைக் கதைகள் இட்டுக்கட்டுப்பட்டுவிட்டன.
இந்திய நாகரீகமானது ஆன்மீகத்தன்மையுடன் கூடியதென்றும் அது மேற்கத்தியர்களின் உலகாயதத்துக்கு எதிரானதென்றும் கற்பனைகள் மிதக்கவிடப்பட்டன. மேலும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள சாதியப்பாகுபாடுகளுக்குச் சில தார்மீக அடிப்படைகள் உள்ளன என்றும், எனவே அவை மேற்கத்தியநாடுகளில் நிலவி வருகின்றன வர்க்கப்பாகுபாடுகளை விட மேன்மையானவை என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.
மேலும் அறிவீனமான உலகாயதக் கோட்பாடுகள் யாவுமே இந்திய சமூகத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றவையாகும் என்றும் கூறப்பட்டது.
இந்தியாவின் ஆன்மீகம் என்பதுதான் என்னய்யா என்று நாம் கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கிறது?
இந்த அம்சத்தைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் ஆன்மீகம் பற்றி ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்த கருத்தாக்கம் வசதியாக அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியநாகரீகமானது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற அடிப்படைகளில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அவற்றில் மோட்சம் என்பது மட்டுமே ஆன்மீகத்தைக் குறிக்கின்றது. மற்றவையெல்லாமே லெளகீக நடைமுறைகளேயாகும். இன்பத்தை நாடக்கூடியவை அல்லவா?
அவர்கள் மேற்படி கற்பனைகளையெல்லாம் மேற்கத்திய நாட்டுக் கற்பனைக் கதைகளின் இணைகளிலிருந்தே தோண்டியெடுத்துத் தந்தார்கள் என்பதே இதன் ருசிகரமான அம்சமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் சொல்லப்பட்ட இருண்டகாலம் என்ற கருத்திலிருந்து அவர்கள் தங்களது பொற்காலத்தை உருவகப்படுத்திக் கொண்டனர். மேலும் ஆங்கிலோ சாக்ஸானியர்கள், டியூட்டானிய வம்சம் ஆகிய இனவெறிக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவர்கள்
கருத்தியலும் வரலாறும் 1111

Page 58
இந்திய மண்ணில் ஆரிய இனத்தின் மேன்மைகளைப் பற்றிய புனைவு களை உருவாக்கினார்கள். ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வீகக்குடிகள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய 'ஆரியப்புனைவு புனைக்கதைகள் உருவாககத்துக்கு மிகச்சிறந்த உலகளாவிய உதாரணமாகும்.
இன்னொரு கற்பனையான கருத்தையும் பரப்பத் தொடங்கினார்கள். அது இந்தியநாகரீகமானது வன்முறைகளேயில்லாத, அன்புவழியிலானதோர்நாகரீகமாகும் என்ற கருத்தோட்டமாகும். இந்த சந்தர்ப்பத்தில்நாம் சிறிதளவு பின்னோக்கிப் பார்ப்போம். புத்தமதத்தினரும், ஜைனர்களுந்தான் அகிம்சை மார்க்கத்தைப் போதித்தனர். அவர்களது கருத்தோட்டங்கள் யாவுமே மேற்கூறப்பட்ட அகிம்சை வழிமுறைகளைச் சார்ந்ததாகவே விளங்கின. மிகப்பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்துவிட்ட ஒரு போரின் போதுதான் அவர்களுடைய பகவத்கீதையே பிறந்தது.
சமீபகாலமாக அவர்கள் மற்றொரு கற்பனைக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முகம்மது கஜினி மற்றும் முகலாயர்கள் ஆகியோர் கோயில்களை நிர்மூலம் செய்தவர்கள் என்றதோர் கற்பனைக் கருத்தோட்டத்தை உலவ விட்டுள்ளனர். ஆனால் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துவான ஹர்ஷமன்னர் கோயில்களை அழித்துக் கொள்ளையடிப்பதற்கென்றெ அதிகாரபூர்வமானதோர் குழுவை அமைந்திருந்தார் என்ற உண்மையை மறந்து விடக்கூடாது.
தேசிய வரலாற்றாய்வாளர்களைப் போன்ற நல்இதயங்கொண்ட நபர்களால் மேற்கண்ட மாதிரியான கற்பனைகளையெல்லாம் எப்படி முன்வைக்க முடிந்தது? அவர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? தலைமுறை தலைமுறையாக அத்தகைய கற்பனைகளையெல்லாம் உருவகப்படுத்தி மக்களது உள்ளங்களிலே பதியும்படியாக உலவ
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று கற்பனைக் கதைகளை உருவாக்கி உலாவச் செய்வதென்றதோர் நடைமுறையானது உலக. மெங்கிலும் நடைபெற்ற தேசிய இயக்கங்களுடைய பிரித்தற்கரியதோர் அம்சமாக அன்று விளங்கி வந்துள்ளது. மேலும் அவர்கள் கலாச்சார தேசியம் என்ற பெயரால் சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லவே முயல்கின்றனர்.
காலனி ஆட்சி போன்ற நிஜமான யதார்த்த வாழ்வில் உள்ள எதிரிகள் கையிலும் - பலசமயம் உருவாக்கப்பட்ட கற்பனையான எதிரிகள் (ஒரு நாட்டுக்குள்ளேயே வாழும் இன்னொரு இனம் என்ற
கருத்தியலும் வரலாறும் 112

கற்பனை எதிரிகள்) கையிலும் சிக்கிச் சீரழிவுக்குள்ளாகும் மக்களின் புண்பட்ட மனதை ஆற்றுகிற வைத்தியமாக (கலாசார தேசியம்) மக்களை பழங்காலம் என்ற கற்பனையான பொற்காலத்துக்கு இழுத்துச் செல்கிறது. எப்போதும் ஒரு அற்புதமான கடந்தகாலமும் பல்விதமான பொய்கள் - புனைகதைகளின் ஆதரவோடும் உருவாக்கப்பட்ட ஒரு 'எதிரியும் கலாசார தேசியத்துக்கு அவசியம். அவை இரண்டும் இல்லாமல் வெகுஜன ஆதரவை அதனால் திரட்ட இயலாது.
மேற்படி 'கலாச்சார தேசியம்' என்ற கருத்தோட்டமானது அறிவு ஜீவிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றது. அதன் மூலமாக மேற்படி அறிவுஜீவிகள் தங்கள் தாய்நாட்டைப்பாதுகாத்துநிற்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு அணிதிரளத் தொடங்குகின்றனர்.
மேலும் அத்தகைய அறிவுஜீவிகள் தங்கள் பற்கிற்கு பற்பல கட்டுக்கதைகளை உருவாக்கி கடந்தகாலத்தை தங்களுடைய பாணியிலேயே மறுகட்டமைப்புச் செய்யத் தொடங்குகின்றனர். ஆம், அவர்கள் அனைவருமே அரசியல் ரீதியானவர்கள்தான்.
இந்த மாதிரியான வரலாற்றாய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றிவந்த ஊழியர்கள் என்பதுமற்றொரு அடிப்படையான காரணமாகும். அவர்களால் ஆட்சியாளர்களையும் சார்ந்திருக்க முடியாது அல்லது ஆளப்படுபவர்களையும் சார்ந்து நிற்க முடியாது. இப்படி ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமையில் அவர்கள் இருந்தாக வேண்டியிருந்தது. இருந்தாலுங்கூட அவர்கள் தங்களை தேசியவாதிகளாக விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பினர். என்ன செய்வது? தனக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாமலேயே தேசியஉணர்வுகளை வெளிப்படுத்துவது எப்படி?
கடந்தகால வரலாற்றைப் பற்றியெல்லாம் வானளாவப் புழ்ந்திடத் தொடங்கலாம். ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு மொகலாயப் பேரரசர்களுக்கு எதிராக போராடிய ஒரு சில உள்ளுர் தளபதிகளைப் பற்றியெல்லாம் புகழ்மாலை சூட்டத் தொடங்கலாம். ஆம். அப்படித்தான், ராஜ்புத்திரர்கள், சீக்கியர்கள், மராட்டியர்கள் பற்றிய பல்வேறு வகையான கதைகள் புனரமைக்கப்பட்டன.
அத்தகைய தளபதிகள் யாவருமே மொகலாயப் பேரரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள் என்பதுதான் அதிமுக்கியமானதோர் அம்சமாக முன்வைக்கப்பட்டது. உங்களுக்கு இதைவிட வீராவேசம்மிக்க கதைகள் தேவையா?ராணாயிரதாய், சத்ரபதி சிவாஜி என்ற பெயர்களைச் சொன்ன மாத்திரத்திலேயேதேசிய உணர்வுகள் பீறிட்டுப் பாயுமல்லவா?
கருத்தியலும் வரலாறும் 113

Page 59
ஆனால் அவர்கள் ராணாயிரதாய், சிவாஜி, குருகோவிந்த்சிங் ஆகியவர்களைப் பற்றி மட்டுமே தேசிய அளவில் மாவீரர்களாகச் சித்திரித்தார்களே. அது ஏன் என்று எப்போதாவது நாம் கேட்டதுண்டா?
மாபெரும் இந்திய நாகரிகமானது இருண்ட காலத்தில் அதாவது மொகலாயப் பேரரசின் கீழ் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்படி மாவீரர்கள் யாவருமே செயலாற்றினர் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் இந்திய நாகரிகத்தின் பொற்காலத்தில் ஒளிவீசிய அசோகர், ஹர்சர் போன்றவர்களைப் பற்றியெல்லாம் பேசுவதில்லையே. அது ஏன்? அவ்வாறு நாம் கேள்விகளைத் தொடுக்கும்போதுதான் சிறுபிள்ளைத்தனமான தேசியத்துக்கும்பாசிஸத்துக்குமிடையே மயிரிழையிலான இடைவெளிதான்நிலவருகின்றது என்ற பேருண்மையைப் புரிந்து கொள்ள முடியும். நவஇந்தியாவின் சிற்பிகளாகக் கருதப்படும் ராஜாபாம் மோகன்ராய், தயானந்தசரஸ்வதி, திலகர் ஆகியவர்களைப் பற்றி எந்தவிதமானதோர் விமர்சனப்பார்வையுமில்லாமல் புகழ்மாலை சூட்டி மகிழ்ந்திடும் போக்குகளையும் நாம் கண்டு வருகின்றோம். எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, அவர்கள் யாவருமே மகத்தான மனிதர்கள்தான். ஆனால் அவர்களும் மனிதர்கள்தான், மரித்துப்போகின்ற உயிர்கள்தான். ஏனைய மனிதர்களைப் போலவே மேற்படி மகத்தான தலைவர்களும் கூட, பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதில் தவறுகளை செய்திருக்கலாம் அல்லவா? நம்மால் அப்படி ஏன் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.
பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கற்பனைக் கதைகளைப் பரப்பி கொண்டேயிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட புழக்கடை தேசியவாதிகள்'ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்துப் போரிடாமலேயே தங்களைத் தேசியவாதிகளாக வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள இயலும். ஆனால் அத்தகைய புழக்கடை தேசியம் தீவிரமான வகுப்புவாதிகளை மட்டுமே உருவாக்க முடியும். ஒருபோதும் தீவிரமான தேசியவாதிகளை உருவாக்கவே முடியாது. ஏகாதிபத்தியமானது பல்வேறு அவதாரங்களை எடுத்துக்கொண்டு நம்முன்நடமாடக்கூடும். அதை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடுவதற்கு மக்கள் சக்தியை ஓரணியாகத் திரட்டநாம் சகலவிதமான வழிமுறைகளையும் கையான வேண்டும். பொய்யான முரண்பாடுகளை மையமாகக் கொண்ட சிறுபிள்ளைத்தனமானகோட்பாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்பும் அரசியலையே ஊட்டி வளர்க்கும்.
கருத்தியலும் வரலாறும் 1114

சரி, இவையெல்லாம் பொறுப்பற்றவகையில் வரலாறு எழுதப்பட்ட தன் உதாரணங்கள், வரலாற்றை பொறுப்பாக எழுதுவது என்பதுதான் எப்படி?
அரசியல் வரலாறு என்றாலே முகம் சுளிக்கும் போக்கு (இது சடத்துவ மனநிலைக்கே பின்னர் இட்டுச்செல்லும் என்பது ஒரு புறம் இருக்க) தான் இன்று நடப்பில் ஆதிக்கத்தில் உள்ள சரித்திரவியல் நடைமுறையாகும். இது நீடிக்கும் வரை வரலாறு என்பது முன்பே தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான கோர்வையான கூற்று என்று காட்டப்படுவதே நீடிக்கும்.
நல்ல அல்லது கெட்ட மன்னர்களைப்பற்றிய கதைகளை எழுதுவது மட்டுமே என்பதுதான் அரசியல் வரலாறாகும் என்று கருதப்பட்டு வருகின்றது.
இதுபற்பலவிதமான கற்பனைததும்பும் கட்டுக்கதைகள் உருவாகவும் அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக வகுப்புவாத சிந்தனைகள் வளர்வதற்குமே வழிவகைகள் ஏற்படுத்தும்.
அரசியல் வரலாற்றை ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமிடையிலான அதிகார அடிப்படையில் நிலவுகின்ற உறவுகளின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டும் ஆராய்ந்து எழுதிட இயலும், அத்தகைய அதிகார விசைகளின்தர்க்கங்கள் குறித்து ஆய்வது வழக்கமான அரசியல் வரலாற்றை விட அதிகமான தரவுகளை நமக்குத் தரும்.
அதற்குப் பதிலாக நாம் பொருளாதார அடிப்படையில் வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் விரிவாக ஆராய்வோமானால் கடந்தகால சமூக வாழ்வில் நிலவிவந்தவர்ககரீதியான உறவுகளைப்பற்றியெல்லாம்நாம் துல்லியமாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சமுகரீதியில் வரலாற்றை ஆராய முற்படும்போது ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவுக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட முஸ்லிமுக்குமிடையே பற்பல பொதுவான அம்சங்கள் நிலவுகின்றன (ஒரு உயர்வர்க்க முஸ்லிமோடு விட) என்ற உண்மைகளையெல்லாம் கண்டு தெளிந்திட முடியும். இந்து சமூகமானது ஒருமித்த கருத்துடனும் கட்டுக்கோப்புடனும் விளங்கி வருவதாக அடிக்கடி சொல்லப்பட்டு வருகின்றது. அத்தகைய இந்து சமூகத்திலுங்கூட பற்பல கூர்மையான வேறுபாடுகளும், உள்முரண்பாடுகளும் நிலவுவதை நம்மால் இனங்காணமுடியும்.
வரலாற்றை வேறுவிதமாக ஆராய்ந்து எழுதவும் கற்பிக்கவும் முற்படும்போது புகழ்பெற்ற" வடகலை -தென்கலை பிராமணர்களுக்
கருத்தியலும் வரலாறும் 115

Page 60
கிடையான மோதல், சைவ-வைஷ்ணமதத்தாருக்கிடையில் நடைபெற்ற குரூரமான போட்டிகள், தேசார்த் - மற்றும் கொங்கண பிராமணர்களுக்கிடையேநிகழ்ந்த பூசல்கள்நாட்டார் சமயநம்பிக்கைகள் மீது உயர்சாதி இந்துக்கள் புரிந்த பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றிய கதைகள் முதலியவற்றையெல்லாம் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக நாம் வரலாற்றை நுணுக்கமாக ஆராய முற்படுவோமேயானால் சார்வாகர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே மோதல்கள் உருவானபோது தத்துவார்த்த இலக்கிய நூல்களிலிருந்து சார்வாகர்களுடைய உலகாயதக் கோட்பாடுகள் முழுவதுமே அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டு விட்ட பல்வேறு வெங்கொடுமைகளைப் பற்றியெல்லாம் நாம் உள்ளக் குமுறலுடன் புரிந்து கொள்ளமுடியும்.
ஒரு வரலாற்றாய்வாளன் தனது ஆய்வுக்காக எத்தகைய ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு செயல்பட முற்படுகிறான் என்பதைப் பொறுத்தும் வரலாற்றின் தன்மைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆதாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இலக்கியம், புதைபொருள் ஆய்வு, செவிவழிச் செய்திகள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
ஆதாரங்களைத் திரட்டும்போது விருப்புவெறுப்பில்லாமல் திரட்ட வேண்டும். அத்தகைய ஆதாரங்களானவை எத்தகைய சமூக பின்னணி. யில் கிடைக்கப்பெற்றன என்பதும் முக்கியமான அம்சமாகும். இலக்கியங்களை ஆதாரமாகக் கொள்ளும்போது அவைகள் படித்த வகுப்பாரைப் பிரதிபலிப்பதாகவே அமையும். வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தும் வேதங்கள் மேல்தட்டு மக்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவகையில் அரசியலை மாற்றுவதற்காக உருவாக்கிக் கொண்ட கோட்பாடுகள்தான்.
நாம் எடுத்துக் கொள்கின்ற ஆதாரங்களையெல்லாம் விமர்சனபூர்வமாக ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அத்தகைய சமூகங்களில் நிலவி வந்த அடக்குமுறைகளைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள. முடியும். ஒருவரலாற்றாய்வாளன் இவ்வாறு விமர்சனபூர்வமாகச் செயல்படும்போது தற்கால அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புக்களுக்கும் ஆளாகக்கூடும்.
ஆனால் வரலாற்றாய்வாளன் என்ன செய்கிறார்? எவ்வாறு செய்கிறார்?
கடந்த காலம் பற்றி ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்றாளர் சமூகத்தின் எதிர்காலத்தை இறந்தகாலத்துடன் ஒருங்கிணைக்கிறார். வரலாற்றாசிரியரின் அரசியலால் வழிநடத்தப்படும் இந்தவிதமான போக்குகளும்
கருத்தியலும் வரலாறும் 1116

நவீன அரசியலின் அடித்தளத்தை உருவாக்கத் தேவையான முன்வரைவுகளை தருகின்றன.
கடந்தகாலம் குறித்து வரலாற்றாசிரியர் என்னவிதமான சித்திரத்தை முன்வைக்கிறாரோ அதுதான் எதிர்காலத்துக்கான அவரது பங்களிப்பாகும். இந்த சித்திரங்கள் அரசியல் புனைவுகளை உருவாக்கிவரலாற்றை போதிப்பது. கற்பது என்பது தலைமுறை தலைமுறையான ஆசிரியர்களும், மாணவர்களும் சம்பந்தப்பட்ட விஷயமென்பதால் அது முன்மாதிரிகளை தொடர்வதும், பின் தொடர்வதும் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். S.
வரலாற்றை விமர்சனப்பூர்வமாக பார்க்கும் சக்தியுள்ள சமூக சக்திகள்தான் வகுப்புவாத வரலாறு என்பது உண்மையிலேயே மிகவும் தரங்குறைந்தோர் வரலாறாகும் என்பதைக் கூற முடியும். இந்த வகுப்புவாத அடிப்படையிலான வரலாறு செழித்து வளர்ந்திடுமேயானால் நாட்டில் தவறான வரலாற்றுச் செய்திகளும் அரசியல்கட்டுக்கதைகளும் கரங் கோர்த்து கொண்டு தலைமுறைகளுக்கும் நடைபயிலத் தொடங்கிவிடும்.
பாடநூல்களை எழுதுவது என்பது இந்தபின்னணியில் முக்கியமான விஷயமாகும். ஆனால் கற்றுக் கொடுக்கும் முறைமைகளை மறுசீரமைப்புச் செய்யாமல் வெறுமனே பாடப்புத்தகத்தை மட்டும் எழுதுவது என்பது உருப்படியான தலையீட்டை செய்யாது என்பதே நமது அனுபவம்.
வரலாற்றை கற்பது என்பதோடு வரலாற்றுப்பணிகளில் புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது தேவை. உள்ளுர் வரலாறுகளை எழுதுவது, என்பது கற்கும் முறையில் ஒரு முக்கியமான தப்படியாக இருக்கும். ஏற்கனவே எழுதி இறுதியாக்கப்பட்டுள்ள வரலாறே சமூகத்தின் கடந்தகால அனுபவம் என்கிற இறுகிப் போன அங்கீகரிக்கப்பட்ட பழம் பார்வையை உடைக்கிற ஒரு மாற்றாக இந்த உள்ளுர் வரலாறுகள் அமைய முடியும். தேசத்தின் போராட்ட வரலாறே வரலாற்றின் முகம் என்கிற பார்வையை மாற்றப்பட்டு பல்தரப்பட்ட பெருவாரியான மக்களின் வாழ்க்கைப்பாதையில் கிடைத்த அனுபவங்கள் எல்லாம் அதில் இடம்பெறும் வகையிலும் அவற்றிக்கு வரலாற்றின் துவக்கம் முதலே மையமான கவனிப்பு கிடைக்கும் வகையிலும் செய்ய வேண்டும். கடந்தகாலத்திய உள்ளுர் வரலாறு தேசத்தின் - உலகத்தின் வரலாற்றோடு கொண்டிருந்த உறவின் அடிப்படையில் ஆயும்முறை கொண்டுவரப்பட்டால் அது சரித்திரத்தை மீண்டும் மக்களிடம் கொண்டுசேர்க்க பேருதவியாக இருக்கும்.
கருத்தியலும் வரலாறும் 117

Page 61
வரலாற்றை எழுதுவதிலும் போதிப்பதிலும் தொடர்புடைய எல்லோருடனும் அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவதன் மூலமும் அறிவை ஜனநாயகவழியில் உருவாக்கும் முறையை வளர்த்தெடுக்க முடியும். வரலாறானது ஜனநாயக ரீதியில் மக்கள் யாவரும் பெற்றிடும் வகையில் எழுதப்பட்டாக வேண்டும். அத்தகைய நடைமுறையில் சகலபகுதி மக்களும் பங்கேற்கவேண்டும். அதற்குமாறாகப் பலர் கல்விக்கூடங்களின் நான்கு சுவர்களுக்கிடையில் தங்களது வரலாற்று ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அவர்களது அத்தகைய ஆய்வு களினால் என்ன பயன் ஏற்படுகின்றது?
துரதிஷ்டவசமாக பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று போதிக்கப்பட்டு வருகின்ற வரலாற்றுக்கும் இன்று உலகில் நிலவுகிற வரலாற்றுச் சிந்தனைபோக்குகளுக்கும் எந்த ஒரு தொடர்புமேயில்லை. இது வருத்தப்படவேண்டிய அம்சமாகும். அத்தகைய தொடர்புகளை எவ்வாறு ஏற்படுத்திவிடலாம்என்பதைப்பற்றி பல்கலைக்கழகங்களும் பள்ளிக்கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் சிந்தித்துப்பார்ப்பதில்லை. வரலாற்று ஆய்வுக்கூடங்களில் உண்மையாக நடப்பதென்ன?
வரலாற்று ஆய்வுக்கூட நடைமுறைகளைப் புரிந்து கொள்ளுதல்
இதைப் புரிந்து கொள்ள ஒரு வழியாக - ஆய்வு நிறுவனங்களுக்குள்ளே வரலாற்று ஆய்வுகள் நடத்தப்படுவதின் ஒரு சமூகவியலைப் பற்றிப் பேசிப் பார்க்கலாம். அங்கு எத்தகைய வகையான ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன? மேலும் அவற்றுக்கு எந்த அளவுக்கு நிறுவனங்களுடைய அங்கீகாரம் கிடைக்கப்பெறுகின்றது? அங்கு நடைபெறும் மேற்படி ஆராச்சிகளுக்கும் வரலாறு போதிக்கப்படுவதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? யார் வரலாற்றுப் பாடநூல்களை எழுதுகின்றனர், அவைகள் எவ்வாறு போதிக்கப்படுகின்றன? ஒரு சமுதாயத்தில் மேற்கண்ட நடைமுறைகளிலேயே ஒரு சமூகத்தின் பாரம்பரியமான பொதுவாக நிலவுகின்ற அறிவுசார்ந்த வாழ்க்கைமுறைகள் எல்லாம் வேர் கொண்டு உள்ளன. தனியாக பேச வேண்டிய அளவுக்கு இதைப்பற்றிநிறைய விஷயங்கள் உள்ளன. எனினும் ஒன்றை மட்டும் கூறிவிட விரும்புகிறோம். அது என்னவென்றால் ஆராய்ச்சி வட்டாரத்தில் அதிகாரபீடத்தின் குறுக்கீடுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பதே ஆகும்.
அரசியலிலும் அவ்வாறே நடந்து வருகின்றது. ஆய்வுக்கூடங்களில் அந்தந்த நிறுவனங்களின் லோக்கல் அரசியல் சார்ந்தே ஒரு குறிப்பிட்ட
கருத்தியலும் வரலாறும் 118

ஆராச்சியானது தேர்வு செய்யப்படுகின்றது. வலிமை மிக்க குழுக்களில் பதவிகளைப் பெறுவதற்கான போட்டிகள், ஆராய்ச்சிப்பட்டங்கள் (Followship) மற்றும் உதவித்தொகைகளைப் பெறுதவற்காகத் தலைதெறிக்க ஒடுவது ஆகிய அனைத்து விதமான நடைமுறைகளிலுமே நாட்டின் பிற இடங்களைப் போல அரசியல்குறுக்கீடுகள் நிலவத்தான் செய்கின்றன.
gifugig56) fib6|T6576irst Indian Institute of Advanced Studies என்ற மேற்படிப்பிற்கான இந்திய நிறுவனத்தில் ஒரு சர்ச்சை கிளம்பியது. பாரதீய ஜனதாவினர் ஆட்சிக்கு வந்தபின்னர் திரு.ஜி.சி.பாந்தே என்பவர் மேற்படி தலைசிறந்த நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டார். அந்த நிறுவனமானது நீண்ட நெடுங்காலமாக தலைசிறந்த மாணவர்களையும், அறிஞர்களையும் உருவாக்கி வந்துள்ளது. உந்துசக்தியாக இருந்துள்ளது. இன்று ஜி.சி.பாந்தே அதனுடைய நிர்வாகியாகப் பதவியேற்றதும் மேற்படி நிறுவனத்தில் நடைபெற்று வருகின்ற சகலவிதமான ஆராய்ச்சிகளும் வெறும் மோசடிகள் (Humbug) என்று கூறியது மட்டுமன்றி ஆராய்ச்சியில் எதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்பதைப் பற்றி மறு ஆய்வு செய்தாக வேண்டும் என்று செயல்படத் தொடங்கியுள்ளார். அதன்விளைவாக மேற்படி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற அறிஞர்களது அன்றாட நிலைமையானது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நாம் கற்பனை செய்து பார்க்க முடியும்.
சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்ச்சியை நாம் சான்றாக எடுத்துக்கூறிட விரும்புகின்றோம்.அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தபின்னர் ஆய்வு நிறுவனங்களில் நடைபெற்றதை போன்று பற்பல மாற்றங்களையெல்லாம் செயல்படுத்தினார்கள். இன்றைக்கு அவர்கள் வெறுங்கட்டு கதையான சரஸ்வதி என்ற கற்பனை நதியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான பத்துக்கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளனர்.! ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் அரசியல் நுழையுமானால் என்ன நடக்கக்கூடும் என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சியானது ஒரு சான்றாக விளங்குகின்றது.
வரலாறும் அரசியலும்
இதற்கெல்லாம் வேறு மாற்று வழிகளே கிடையாதா? அதற்காக வரலாற்றில் அரசியலுக்கு இடமே கிடையாது என்று நாம் வாதிட முன்
கருத்தியலும் வரலாறும் |119

Page 62
வரவில்லை. பல்வேறு சிக்கல்களுடன் கூடிய அரசியல் கோட்பாடுகள் யாவுமே நம்முடைய கற்கும் மற்றும் கற்பிக்கும் நடைமுறைகளில் இரண்டறக் கலந்தும் விரவியும் கிடைக்கின்றன. அப்படியானால் என்ன செய்வது? இது ஒரு விஷச் சூழல் மாதிரித் தோன்றுகின்றது அல்லவா? கற்றல் மற்றும் கற்பித்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் விமர்சனப் பூர்வமான அர்த்தமுள்ள நியாயப்பூர்வமான அரசியல் தலையீடுகள் அனுமதிக்கப்படலாம். அது ஆய்வுகளையும் கற்கும் முறையையும் ஊக்கப்படுத்துவதாக விளங்கிட வேண்டும். அரசியலானது சமூக வாழ்வின் பல்வேறுபட்ட அம்சங்களையும் உருவாக்கிடும் தன்மையுள்ளதாகவே விளங்கிவருகின்றது. ஆகவேவிமர்சனப்பூர்வமான அரசியல் தலையீடுகள் இருந்தால் எந்தவொரு முன்முடிவையும் கேள்விக்குள்ளாக்கிட முடியும்.
சமூக ஊழியர் என்ற வகையில் இன்று நம் அரசியல் மற்றும் சமூகவாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்துநாம் எல்லோருமாக சேர்ந்து கவலைப்பட்டாக வேண்டும். கூர்மையான விமர்சனப்பூர்வமான விசாரணை என்பதுதான் அடிநாதம். கூடுதலான பொறுப்புணர்வுடன் கூடிய தலையீடுகள் இன்றைய அவசரத் தேவைகள் ஆகும்.
இன்று நாம் கடந்தகால தலைமையின் குறைபாடுகளை அமைதியாக உட்கார்ந்து விவாதிக்கமுடியும்தான். ஆனால் இன்று வகுப்புவாதம் உருவாக்கி உலவ விடுகிற வார்ப்புகளை (Stereo Types) நாம் அனுமதித்துக் கொண்டேயிருக்கப்போகிறோமா?சரித்திரம் நம்மில் இத்தகைய திறனை கோருகிறது. எங்கிருந்தாவது நாம் செயல்படத் துவங்கியாக வேண்டும்.
கருத்தியலும் வரலாறும் 120


Page 63
விழுது பற்றி . ஒரு ஆலமரம் கிளை பரப்பி திக்கேட்டும் ஆதாரமாகின்றன. இதேபோல் மக்கரின் சமுதாயத்திற்கு ஊட்டம் அளிப்பதற்கா நிறுவனம்
எங்கள் தொலைநோக்கு. மக்களால் நெறிப்படுத்தியும் கண்கா செயற்படும் ஒரு சமூகத்தை நோக்கி எங்கள் பணி நோக்கு. மனித ஆற்றல்களை வளப்படுத்துவதன்ஊ நிறுவகங்களுக்குள் :நாகப் பண்பா மனிதர்களின் பங்கேற்புக்கான பொறிமுறை
எங்கள் அணுகுமுறை.
* மக்கள் நிறுவனங்களையும் துறை
2ள்ந்துவித்தலும், * அபிவிருத்திசார்ந்த பயிற்சியும்க
வழங்கல்,
* தொடர்புகளை உருவாக்கி கருத்து மற்றும் குழுக்களின் வலையமைப் * மத்துவமும் மாதானமும் நிை சட்டங்கள் ஆகியவற்றில் ம எடுத்துரைத்தலும் தூண்டுதலும் ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள் ت::::
பரப்புதலிலும் ஈடுபடல்
تي
வறுமையினாலும் கல்வியின்ை சமூகத்தினருக்கு எழுத்தறிவு நடவடிக்கைகளுக்கூடாக அவர்கள் குரல் கொடுத்தலுக்கும் உ திவுதல். எங்கள் உபாய மார்க்கங்கள். கல்விச் சமூகத்தின் விழிப்பு சிவில் சமுகத்தி உள் ஞராட்சி மன்றங்கள் மற்றும் அரசி கட்டமைப்புக்களில் வளர்ச்சி
பால்நிலை அபிவிருத்தி அரங்கக்கலையின் எமது வெளியீடுகள். அகவிழி - ஆசிரியர்களுக்கான மாதஇதழ் கூடம் - பன்முக சிந்தனைகளுக்கான காலான்

அகன்று வியாபிப்பதற்கு அதன் விழுதுகள் வலையமைப்புக்கள் கிளைவிட்டுப் பரந்து க இயங்கும் அமைப்புத் தான் விழுது
சித்தும் பங்கேற்பு சனநாயகர் விர ன்
டாக, அரபி தனியார் மற்றும் அரசு ग्i।J। ட்டையும் விழுமியங்களையும் வளர்த்து களைத் தாபிக்க உதவுதல்
சார்ந்த அமைப்புக்களையும் நிறுத்தலும்,
ாத்திலான திட்டச்செயற்பாட்டு உதவியும்
க்களினால் ஊட்டமளித்துநிறுவனங்கள்
புகளுக்கு அனுசரணையாயிருத்தல்,
லத்து நிற்பதற்கான கொள்கைகள் ாற்றங்களை கொண்டு வருவதற்கு
புலம் அறிவு உருவாக்கத்திலும் அதன்
மயினாலும் குரலின்ரி இருக்கும் அரங்கச் செயற்பாடு மற்றும் கலை ரின் பிரச்சினைகளின் வெளிப்பாட்டுக்கும்
ன்ே இயக்கம்
யல் அமைப்புக்களின் சீனநாதுத்
லர்ச்சி தனியார்துறையினரின் விருத்தி
ண்டிதல்