கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாமும் குடும்பத்திட்டமும்

Page 1


Page 2


Page 3

நாட்டை உருவாக்கிய மனிதன்
ஹோ-சி-மின்
மொழிபெயர்ப்பாளர்.
நா. தர்மராஜன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை-600 098.
R: 26258410, 26251968

Page 4
Title : Nattai Uruvakkia Manidhan
Ho - Chi - Minh
Author : N. Dharmarajan
Edition : First - October, 2005
Copyright : New Century Book House
Code No : A1401
ISBN : 81-234 - 0974-5
No. of pages : v —+ 227
Price :RS.7500
Text Printed at : Sri Mahendhra Graphics
Chennai - 14. Ph: 28524338
گ فر مهٔ به لبهٔ

பதிப்புரை
பிரெஞ்சு அடிமைத்தனத்தின் நெருப்பு ஜூவாலை வியத்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின்.
"பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை ” எனும் தீட்சணம் சிறைக்குள் தள்ளப்பட்டபோதிலும் குன்றாமல், தன்னுணர்வால் மக்கள் மீது கொண்டிருந்த பற்று அடிமைத்தனத்தின் மீது வெகுண்டெழுந்து பாய்ந்தது.
வலிமையான தமது தோழமையால் வியத்நாம் புதிய பூமி காண்பது உறுதியெனும் வாதம்கொண்டு போராடி வெற்றியும் கண்டவர் ஹோ-சி-மின்.
நான் ஒர் அங்குலம் கூடப் பின் வாங்கமாட்டேன். . .
அவர் நிகழ்த்திய போராட்டங்களும், பிரகடனங்களும் பூமியின் சுற்றுவட்டப் பாதையையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது எனலாம்.
தொழிலாளர் சமுதாயம் மக்களின்பால் பாய்ச்சிய ஈரமான கொள்கையால் இரண்டும் ஒன்றிணைந்து புத்தெழுச்சிப் பெற்றது வரலாறு. 4
ஏகாதிபத்தியம் ஒழியவேண்டும் தொழிலாளர் மீதுள்ள அடக்குமுறை அறுபட வேண்டும் எனும் வார்த்தை சாணையிட்ட போர்வாளாய் சூரியக் கதிரில் பளபளக்கும் கம்பீரம். . .
ஹோ-சி-மின் தன் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி முடிந்தது என்ற கேள்விக்கு விடை இந்நூல் தெளிவாகவும், உணர்வாகவும், சுவைபடச் சித்திரிக்கும்.
ஒழுக்கமும், மனிதநேயமும், உழைப்பின் மேன்மையும் ஒரு தலைவனுக்குள் அல்லது ஒரு தொண்டனுக்குள் எப்படி உள்சென்று

Page 5
ίν
வேலை செய்கிறது எனும் சம்பவங்கள் இங்கே ஹோ-சி-மின் என்னும் மாமனிதரால் காணக்கிடைக்கிறது.
சரித்திரம் படைத்தவர்கள் குரல் வானளாவி விரவி எதிரொலிக்கும், எதிரொலித்துக்கொண்டேயிருக்கும் பட்சத்தில், கார்மேகமாய் அல்லது மழையாய் மக்களின் நலன் மீதுள்ள அக்கறையால் அவர்கள் வான்மாரி பொழிகிறார்கள் என்பது திண்ணம்.
இந்நூலை வெளியிட்டுப் பெருமைப்படுவதிலும் இஃதால் வாசகர் நெஞ்சம் மகிழ்ச்சியுறுவதிலும் ஆனந்தமடைகிறது எங்கள் நிறுவனம்.
-பதிப்பகத்தார்

10.
உள்ளுறை
பக்கம் அடிமை நாட்டில் பிறந்து வளர்ந்த --- 1
ஹோ-சி-மின் (1890 - 1911) தேசிய மீட்சிக்குப் புதிய பாதையைக்
கண்டுபிடித்தல் - - - 7
லெனினியத்தை நோக்கி (1921 - 24) --- 19. வியத்நாமில் தொழிலாளி வர்க்கக் கட்சியை நிறுவுவதற்குத் தயாரித்தல் மற்றும் உலகப்புரட்சி இயக்கத்தில்
பங்கெடுத்தல் (1924 - 30) - - - 40 ஹோ-சி-மின் அந்நிய நாடுகளில் தங்கி வியத்நாம் புரட்சிக்குத்
தலைமை வகித்தார் (1930 - 40) -- 60 ஹோ-சி-மின் வியத்நாமுக்குத் திரும்பியதிலிருந்து ஆகஸ்ட் புரட்சிவரை 莎
(1940-45) - - - 78
பிரெஞ்சு எதிர்ப்புப் போராட்டம்
(1945-54) - - - 109 வடக்கில் சோஷலிஸ்ட் புரட்சியும் ' . தெற்கில் தேசிய மக்கள் ஜனநாயகப்
புரட்சியும் (1954 - 1969) - - - 150 வியத்நாம் மற்றும் உலக மக்களுடைய இதயங்களில் வாழ்கிறார் ஹோ-சி-மின் - - - 200
குறிப்புகள் - - - 212

Page 6

1.
அடிமை நாட்டில் பிறந்த வளர்ந்த (35sps -d- fair (1890-1911)
ஹோ-சி-மின் 19.05.1890 ஆம் ஆண்டில் தன்னுடைய தாயாரின் கிராமமாகிய ஹாங் ட்ரூ கிம் லீன் (நாம் டான் மாவட்டம்) கம்யூனில் பிறந்தார். அவருடைய தகப்பனார் கிம்லீன் கிராமத்தைச் சேர்ந்தவர். A.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வியத்நாமின் மீது படையெடுத்துக் கைப்பற்றிய காலத்தில் அவர் பிறந்து வளர்ந்தார். ஒரு காலத்தில் சுதந்திரமாக, ஒன்று பட்ட அரசுரிமையுள்ள நாடாக இருந்த வியத்நாம் ஒரு காலனியாக, அரை நிலப் பிரபுத்துவ மற்றும் பிரிவினை செய்யப்பட்ட நாடாக மாறியது. குடும் பங்கள் கூண்டோடு அழிந்தன; நாடு வீழ்ச்சியுற்றது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நிலப்பிரபுத்துவக் கூட்டாளிகளின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் விளைவாக வியத்நாமிய மக்கள் பசியிலும் பட்டினியிலும் துன்பமடைந்தார்கள். அவர்கள் கல்வியில் லாத அடிமைகளாக வாழ்க்கை நடத்தினார்கள். வியத்நாமின் சமூகத்தின் வியத்நாம் மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் நிலப் பிரபுத்துவ வர்க்கத்துக்கும் இருந்த பிரதான முரண்பாடு தவிர வியத்நாமிய மக்களுக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் மற்றொரு முக்கியமான முரண்பாடு தோன்றியது. மேற்கூறிய இரண்டு அடிப்படையான முரண்பாடுகளும் மேன்மேலும் தீவிரமடைந்தன. ့် ၄
வியத்நாம் ஒரு வீரமான நாடு. வியத்நாமிய மக்கள் தீவிரமான தேசபக்தர்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வீரத்துடன் போர் செய்து வரலாறு படைத்தவர்கள். ஆகவே பிரெஞ்சு காலனிய வாதிகள் நம் நாட்டை ஆக்கிரமித்த பொழுது அவர்களையும் அவர்களுடைய நிலப்பிரபுத்துவக் கையாட்களை யும் எதிர்த்து மக்கள் வெவ்வேறு முறைகளில் இடைவிடாமல்

Page 7
2 ஹோ-சி-மின்
வீரமாகவே போராடினார்கள். ஆனால் இந்த தேசபக்த, பிரெஞ்சு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள், சரியான தத்துவம் இல்லாத காரணத்தால் ஒவ்வொன்றாகத் தோல்வி அடைந்தன. நமது மக்களின் தேசிய மீட்சி (Salvation) 1920க்கள் வரை ஆழமான நெருக்கடியில் சிக்கியிருந்தது.
ஹோ-சி-மின் பிறந்து வளர்ந்த நகேடின் வட்டாரத்தில் மக்கள் இயற்கையின் சோதனைகளை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடியவர்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்தவர்கள். அவர்கள் அக்காலத்தில் தேசபக்தியின் முன்னணிப் படை வீரர்களாக இருந்தார்கள்.
ஹோ - சி-மின் தேசபக்தியுள்ள அறிவாளிக் குடும் பத்தில் பிறந்தார். அவர் தந்தையார் நகுயென்-சிங்-ஹoய் என்ற நீகுயென்சிங்-ராக் (1863-1829) என்னும் பெயர் உடையவர். அவர் குழந்தையாக இருந்தபொழுது பெற்றோர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். எனவே அவர் படிக்கும்பொழுது ஜீவனோபாயத்துக்கு வேலை பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் கல்வியில் மிகவும் அக்கறையுடன் இருந்ததால் அவருடைய ஆசிரியர் ஹோவாங்-சூவன்-டுவோங் அவருக்கு சிறப்பான முறையில் கல்வி கற்பித்ததுடன் தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் தன்னுடைய மாணவர் களிடம் உழைப்பின் மேன்மையைக் கற்பித்தார். அவர்கள் மனித அறிவியலைக் கற்றுக் கொள்வதற்கு நிறையப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் அதிகாரிகளின் இடைவிடாத வற்புறுத்தலினால் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால் அவர் பொதுவாகத் தன்னுடைய வேலையில் எதிர்மறையான ஒத்துழைக்க விரும்பாத அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 'அரசு அதிகாரிகள் அடிமைகள் மத்தியில் உள்ள அடிமைகள்; ஆகவே அவர்கள் கூடுதலாக அடிமைத்தனம் உள்ளவர்கள்' என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. அவர் தேசபக்தர் என்பதால் பிரெஞ்சு காலனியவாதிகளின் அடிவருடியாக இருக்க மறுத்தார். ஆகவே அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். பின்னர் அவர் நாம் போ என்னும் ஊருக்குச் சென்று நாட்டு மருத்துவராகத்

ஹோ-சி-மின் 3
தொழில் செய்தார். அங்கும் எளிமையாக, தூய்மையாக வாழ்க்கை நடத்தி பிறகு மரணமடைந்தார்.
ஹோ - சி-மின் தாயார் திருமதி. ஹோவாங் -தி-லோன் (1868-1901) மென்மையான பண்பும் கடுமையாக உழைக்கும் திறனும் உடையவர். அவர் வயல்களில் உழைப்பதற்கும் தன் குழந்தைகளை வளர்ப்பதற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
அந்தக் குடும்பத்தில் ஹோ-சி-மின் மூன்றாவதாகப் பிறந்தார். அவருடைய மூத்த சகோதரியின் பெயர் குயென்- தி-தான் என்ற பாக் - லியன் (1884-1954) மூத்த சகோதரருடைய பெயர் குயென் - சின் - கியெம் என்ற குயென் - தட் - டாட் (18881950) இருவரும் பிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.
ஹோ-சி-மின் குழந்தையாக இருந்தபொழுது குயென்-சிங் - கங் என்ற பெயரைக் கொண்டிருந்தார். பின்னர் அது குயென்-டட் - தான் ஹ் என்று மாற்றப்பட்டது. அவர் அறிவில் சிறந்தவராக, கல்வியில் அக்கறை உள்ளவராக இருந்தார். பள்ளிக்கூடப் பாட புத்தகங்களைத் தவிர தேசபக்தியை ஊட்டுகின்ற கவிதைகளையும் நாவல்களையும் படித்தார். வியத்நாமின் வீரபுருஷர்களைப் பற்றிய கதைகளைப் படித்தும் தன் தந்தையாரும் தேசபக்தியுள்ள நண்பர்களும் உரையாடுவதைக் கேட்டும் அவர் இளம் வயதிலேயே தாய்நாட்டையும் மக்களையும் நேசித்தார்.
என் செயல்கள் வரலாற்றில் இடம் பெற வேண்டுமென்று இரவு பகலாகக் கனவு கண்டேன். புகழ்ச்சிக் கட்டுரைகள் எழுதிப் பதவி உயர்வு பெறலாம் ஒருவர் ஆனால் அது கீழான முறை.
வியத்நாம் மக்கள் அரசுக்கு வரி, வாடகை, குத்தகைக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டாவிட்டால் அவர்களை அரசு அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்துவார்கள். இதைத் தினமும் பார்த்தார். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களையும் அவர்களுடைய உள்நாட்டுக் கூட்டாளிகளையும் தேசத் துரோகிகளையும் தீவிரமாக வெறுத்தார்.

Page 8
4 ஹோ-சி-மின்
அவருக்குப் பதினைந்து வயதான பொழுது தலைமறைவு இயக்கத்தின் சார்பில் தேசபக்தர்களின் கடிதங்களைக் கொண்டு செல்கின்ற ஊழியரானார். கான் வுவோங் இயக்கம்? (பான் டிங் புங் தலைமையில் நடைபெற்ற ஹ9வோங்-கே எழுச்சியை நடத்தியது); பான்-பா-செள இயக்கம், டோன்-கிங்-ந்தியா-துக் இயக்கம்", ஹோவாங் ஹோவா தும் தலைமையில் நடைபெற்ற யென்தே எழுச்சிகள்; பான் - சூ- டிரிம் தலைமையில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற இயக்கங்கள்; டுருன்-போ விவசாயிகளின் வரிகொடா இயக்கம் - இவை அனைத்தும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது ஹோ-சி-மின்னிடம் ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தன. வியத்நாமிலிருந்து பிரெஞ்சு காலனியவாதிகளை விரட்டியடிக்க அவர் உறுதி பூண்டார்.
மேலே குறிப்பிட்ட தேசபக்த இயக்கங்கள் மாபெரும் வீரத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றன; ஆனால் சரியான கொள்கை இல்லாமல் அவை அனைத்தும் தோல்வி அடைந்தன.
மேற்கூறிய இயக்கங்களின் தலைவர்கள் பிரெஞ்சு காலனியவாதி களுக்கும் பிரெஞ்சு தொழிலாளிவர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கவில்லை; பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்துவிட்டு தேசிய சுதந்திரத்தை வென்றெடுப்பது, நிலப் பிரபுத்துவ நிலவுடைமையாளர்களை அகற்றி விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பது வியத்நாம் புரட்சியின் கடமை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நமது நாட்டில் தொழிலாளர்களும் விவசாயிகளுமே அடிப்படையான புரட்சிகர சக்திகள் என்ற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. வரலாற்று நிலைமைகள் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம்.
கான் வுவோங் இயக்கம் பெருந்திரளான மக்களை, குறிப்பாக விவசாயிகளைத் திரட்டவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சீரழிந்து விட்டதுடன் அதன் பெரும்பகுதி பிரெஞ்சு காலனியவாதிகளிடம் சரணடைந்துவிட்ட அதே சமயத்தில் வியத்நாமிய மக்களை தீவிரமான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்தியது.
ஆகவே அந்த இயக்கம் தோல்வி அடைந்தது.

ஹோ-சி-மின் 5
ஹோவா-ஹோவா-தும் தலைமை தாங்கிய விவசாயிகளின் எழுச்சிகளுக்குத் திட்டவட்டமான கொள்கைகளும் திசைவழி களும் இல்லை. பெருந்திரளான மக்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படவில்லை; நாடு தழுவிய அளவில் ஆதரவு இயக்கம் இல்லை. ஆகவே அவை தோல்வி அடைந்தன.
பான் பாய் செள தேசிய மீட்சி இயக்கத்தில் முன்னணியில் இருந்தார், ஆனால் அவர் பிரெஞ்சுக்காரர்களை வெளி யேற்றுவதற்கு ஜப்பானியர்கள் உதவியை எதிர்பார்த்தார். 'முன்கதவு வழியாகப் புலியை வெளியேற்றி விட்டுப் பின் கதவு வழியாக சிறுத்தையை அனுமதிப்பதைப் போன்ற" கொள்கை
இது,
பான்-சூ-டிரின் தேசபக்தராக இருந்தாலும் சீர்திருத்தங்களை மட்டும் கோரினார். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கோரவில்லை. மான்டாரின் ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்றாரே தவிர நிலப் பிரபுத்துவ அமைப்பை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் கோரவில்லை.
பான் டின்ங் பூங், ஹோவாங் ஹோவாதாம், பான் போய் செள
மற்றும் பான் சூ டிரிம் ஆகியோரிடம் ஹோ-சி-மின் ஆழமான மரியாதை வைத்திருந்தார். ஆனால் அவர்களுடைய வழிகளை அவர் பின்பற்றவில்லை. டோங் டூ இயக்கம் 'கிழக்கே செல்' அதாவது ஜப்பானை வழிகாட்டியாக வைத்துக் கொள் என்று கூறியது. ஆனால் ஹோ-சி-மின் மேற்கு நாடுகளை நோக்கிச் சென்றார். ஏனென்றால் அவர் சுதந்திரம் , ஜனநாயகம் , நவீன விஞ்ஞானம் - தொழில்நுட்பவியல் ஆகியவற்றினால் ஈர்க்கப் பட்டார்.
'என்னுடைய பதிமூன்றாவது வயதில் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பிரெஞ்சு சொற்களை நான் முதல் தடவையாகக் கேட்டேன். ஆகவே அந்த சொற்களின் சரியான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வதற்காக பிரெஞ்சு நாகரிகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஏற்பட்டது' என்று அவர் பிற்காலத்தில் கூறினார்.

Page 9
6 ஹோ-சி-மின்
1908ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஹோ-சி-மின் தன் படிப்பை நிறுத்திவிட்டு எப்படியாவது வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்ற நோக்கத்துடன் தெற்கே சென்றார். அவர் போகும் வழியில் பான் தியெட் என்ற ஊரில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தப் பள்ளியை நாட்டுப் பற்றுடைய சான்றோர்கள் நிறுவியிருந்தார்கள். அவர் மாணவர்களுக்குக் கல்வி போதித்ததுடன் தாய்நாட்டை நேசிப்பதற்கும் கற்பித்தார்.
ஹோ - சி-மின் சிறிது காலத்துக்குப் பிறகு சைகோனுக்குச் சென்றார். மக்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் காலனிய ஆட்சியிலிருந்த நாம் கீயை போன்றுதான் புரொடக்டரேட் (Protectorate) ஆட்சியிலிருந்த டுருங்கி மற்றும் அரை புரொடக்டரேட் (Semi-Protectorate)ஆட்சியிலிருந்து பாக்-கீயும் இருந்தன என்பதைக் கண்டார். எல்லா இடங்களிலும் மக்கள் அதே சுரண்டல் ஒடுக் குமுறை, துன்பம், அவமதிப்பு ஆகிய வற்றுக்கு உட்பட்டிருந்தார்கள்.
ஹோ-சி-மின் மேற்கு நர்டுகளுக்குச் செல்ல விரும்பினார். அங்குள்ள மக்கள் எப்படி சுதந்திரம் பெற்றார்கள்,அந்த நாடுகள் எப்படி வலிமைமிக்க நாடுகளாக மாறின என்பதைத் தெரிந்து கொண்டு வியத்நாமுக்குத் திரும்பி பிரெஞ்சுக் காலனியவாதிகளை நாட்டிலிருந்து விரட்டுவதற்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற தீவிரமான உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. அவரது முடிவு தேசிய மீட்சிக்காக நமது மக்கள் நடத்திய போராட்டத்தில் புதிய பாதையைத் திறந்தது.

2
தேசிய மீட்சிக்குப் புதிய பாதையைக்
கண்டுபிடித்தல்
ஹோ-சி-மின் சைகோனில் சிறிது காலம் தங்கிய பிறகு, பா என்ற புனைபெயரில் ஒரு பிரெஞ்சுக் கப்பலில் (SIS. Admiral Latouche Treville) சமையற் கூடத்தில் சிப் பந்தியாகச் சேர்ந்து பிரான்சுக்குப் பயணமானார்.
அவர் முதலில் பிரான்சுக்குச் சென்றார். அங்கே அதிக காலம் தங்கியிருக்கவில்லை. பிறகு அவர் ஸ்பெயின், போர்த்துகல், அல்ஜீரியா, டியுனிஷியா, காங்கோ, டஹோமி, செனெகல், ரியூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்குச் சென்றார். அவர் தந்தையர் நாட்டின் பால் தீவிரமான பற்றும் காலனி ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுடைய அடிவருடி களிடம் ஆழமான வெறுப்பும் கொண்டிருந்ததால் வெளிநாடுகளில் எல்லாவிதமான துன்பங்களையும் தாங்கிக் கொண்டார். அந்த நாடுகளில் பார்த்தவற்றை அவர் கவனமாகப் பதிவு செய்து கொண்டு, தன்னுடைய மேன்மையான இலட்சியம் நிறைவேறுவதற்காக அவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தித்தார்.
பிரான்சில் இருந்தபொழுது அவர் சமையல் தொழிலாளியாகவும் லெஹாவர் துறைமுக நகரத்திற்கு அருகில் வசித்தபொழுது தோட்டக்காரராகவும் வேலை செய்தார். இங்கிலாந்தில் வசித்த பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் பனிக் கட்டிகளைக் கூட்டித் தள்ளுபவராகவும் லண்டனில் ஓர் உணவு விடுதியில் சிப்பந்தியாகவும் வேலை செய்தார். அரசியல்வாதிகளும் தத்துவ ஞானிகளும் பேசிய பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார். வெளிநாட்டுத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அயர்லாந்து மக்களுடைய தேசபக்தப் போராட்டத்தை ஆதரித்தார். அக்காலத்தில் பிரான்சில் வசித்த பான் -சூ -டிரின் மற்றும் இதர

Page 10
8 ஹோ-சி-மின்
வியத்நாமிய தேசபக்தர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அவர் இங்கிலாந்தில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்க்கின்ற முதற் பாடத்தைக் கற்றார். அமெரிக்காவில் இருந்தபொழுது அவர் நியூயார்க் நகரத்துக்குச் சென்று புரூக்ளினில் கூலித் தொழிலாளியாக வேலை செய்தார். நீக்ரோக்கள் வசித்த ஹார்லெம் என்ற பகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்வார். அவர் அமெரிக்காவில் குறைந்த காலமே வசித்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதி களுடைய சுயரூபத்தை சீக்கிரமாகத் தெரிந்துகொண்டார். ஜனநாயகக் குடியரசு என்ற பெயருக்குப் பின்னால் அமெரிக்க முதலாளிவர்க்கம் தொழிலாளிவர்க்கத்தை இரக்கமில்லாமல் சுரண்டுவதைக் கண்டார். கறுப்பர்களான உழைக்கும் மக்களுடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி ஆழமான அனுதாபம், அவர்களைக் கொடூரமாக நடத்திய இனவெறியர்கள் மீது வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளுடன்அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பினார்.
உலகத்தின் பல நாடுகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்தபொழுது முதலாளித்துவ சமூகத்தின் அநீதிகள் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையை ஹோ-சி-மின் ஆழமாக உணர்ந்தார். உழைக்கும் மக்கள் வெள்ளை, மஞ்சள், கறுப்பு ஆகிய எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் ஆதரவற்ற நிலையில் வாழ்க்கை நடத்தியது அவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல காலனி நாடுகளுக்கு அவர் சென்றபொழுது தேசிய சுதந்திரத்தை இழந்த நாடுகளில் வசித்த மக்கள் இதே துன்பங்களையும் அவமதிப்புகளையும் சகித்துக் கொள்வதை அவர் கண்டார். எங்கு முதலாளிகள்இரக்கம் மற்றும் மனிதப் பண்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்; எங்கும் தொழிலாளிவர்க்கமும், உழைக்கும் மக்களும் ஒரே விதமான இரக்கமற்ற ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கிறார்கள். எங்கும் காலனி நாடுகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஏகாதிபத்தியவாதிகளும் காலனியவாதிகளும் மூர்க்கமான எதிரிகளாக இருக்கிறார்கள். அவர் மேற்கூறிய முக்கியமான முடிவுகளுக்கு வந்தார். எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் நமது நண்பர்கள்; ஏகாதிபத்தியம் எங்கே இருந்தாலும் அது நம்முடைய எதிரி என்பதை அவர் தெளிவாக உணர்ந்து கொண்டார்.

ஹோ-சி-மின் 9
உடல், தோல்,
நிறம் வேறுபட்டாலும் சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் இரண்டு பிரிவினரே உலகத்தில் உண்டு உண்மையான நட்புக்குரியவர், தொழிலாளிவர்க்க சகோதரர்களே!
தேசபக்த இளைஞரான ஹோ-சி-மின் படித்தும் புரட்சிகரமான இயக்கங்களில் ஈடுபட்டும் உடலுழைப்புத் தொழிலாளியானார். அவருடைய தேசபக்தி மிகவும் கூர்மைப்பட்டது. அவருடைய தேசபக்த உணர்ச்சி வியத்நாம் நாட்டுக்கும் மக்களுக்கும் மட்டுமன்றி, உலகத்தில் மற்ற நாடுகளில் உள்ள தெர்ழிலாளி வர்க்கம் மற்றும் உலக முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மீதும் விரிவடைந்தது.
ஹோ - சி-மின் சிந்தனையில் இது ஒரு திருப்புமுனையாக இருந்தது. தன்னுடைய நாட்டு மக்கள், நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்குமாறு அவர் கற்பித்தார். முன்பு வியத்நாம் தேசபக்தி இயக்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அந்நியர் எதிர்ப்பு உணர்ச்சியைக் கொண்டிருந்தன. பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் நமக்கு நண்பர்கள். பிரெஞ்சு காலனியவாதிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் நமது எதிரிகள் என்பதை நமது மக்கள் உணர ஆரம்பித்தார்கள். இந்தத் திருப்பம் வியத்நாம் புரட்சிக்கு மட்டுமன்றி, காலனிய நாடுகளின் புரட்சிக்கும் போர்த்திட்ட அடிப்படையில் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது.
முதலாவது உலகப்போர் இன்னும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இந்தோ-சீனாவில் நிலைமை வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 1917ஆம் ஆண்டின் முடிவில் ஹோ-சி-மின் பிரிட்டனிலிருந்து பிரான்சுக்குத் திரும்பி வியத்நாம் தேசிய இயக்கத்திலும் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்க இயக்கத்திலும் நேரடியாக ஈடுபட்டார்.
அவர் முதலில் சரோனோ என்னும் இடத்தில் சிறிது காலமும் பிறகு கோபெலின்வில்லா என்ற இடத்திலும் வசித்தார். பிறகு

Page 11
10 ஹோ-சி-மின்)
பாரிஸ் நகரத்தில் ஏழைகள் வசிக்கின்ற மோசமான பகுதியான காம் பாயின்டுக்கு மாறினார். அவர் மிகவும் சிறிய அறையில் வசித்தார். வருமானம் வாழ்க்கை நடத்துவதற்குப் போதவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் எப்பொழுதும் அவரை மிரட்டிக் கொண்டிருந்தது. இப் படிப்பட்ட பல துன்பங்களே அவருக்கு தினமும் ஏற்பட்டன.
அவர் ஒரு ஒளிப்பட ஸ்டுடியோவில் உதவியாளராக இருந்தார். பிறகு ஓர் சீனக்கலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு வர்ணம் பூசினார். இவற்றோடு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். எல்லாவிதமான கஷ்டங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அவருடைய நம்பிக்கை தளரவில்லை. இலட்சிய உறுதி ஒருபோதும் குறையவில்லை.
அவர் பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதுகின்ற திறமையை வளர்த்துக் கொண்டார். காலனிகளில் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதி களுடைய அட்டூழியங்களைக் கண்டனம் செய்யும் பிரசுரங்களை எழுதி அச்சிட்டு பொதுக்கூட்டங்களில் விநியோகம் செய்தார். புறநகரில் உள்ள சங்கங்கள் நடத்திய எல்லாவித அரங்கக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு இந்தோ-சீனப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். கூட்டங்களுக்கு வந்தவர்கள் அந்தப் பிரச்சினையைப் பற்றி சிந்திக்குமாறு செய்தார்.
அக்காலத்தில் பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சி பிரான்சில் மிகவும் பெரிய அரசியல் கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியிலிருந்து முற்போக்கான உறுப்பினர்களுடைய உதவியினால் அவர் 1919ஆம் ஆண்டில் அதில் உறுப்பினராகச் சேர்ந்தார். பிரெஞ்சு சோஷலிஸ் டுக் கட்சியின் வரலாற்றில் 1919ஆம் ஆண்டின் உறுப்பினர்கள் 'நெருப்புத் தலைமுறை' என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் முதலாவது உலகப் போரின் தாக்கத்தில் உருவானவர்கள். அவர்களுடைய புதிய கருத்துகளும் தீவிரமும் பிற்காலத்தில் கட்சியின் வளர்ச்சியில் மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
ருஷ்யாவில் ஏற்பட்ட அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி உலகத்தை குலுக்கியது. உலகத்திலுள்ள தொழிலாளிவர்க்கம் ,

ஹோ-ச1-மன 11
உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அக்டோபர் புரட்சியின் மூலம் விழிப்படைந்தார்கள். அவர்கள் போராட்டங்களுக்குக் கிளர்ந்தெழுந்தார்கள். மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்தை உலகரீதியில் முதலாளித்துவம் தகர்ந்து சோஷலிசம் வெற்றி அடைகின்ற சகாப்தத்தை அக்டோபர் புரட்சி துவக்கியது. ஹோ-சி-மின் புரட்சி வாழ்க்கையில், ருஷ்யாவில் வெற்றி பெற்ற அக்டோபர் புரட்சி தீர்மானகரமான தாக்கத்தைச் செலுத்தியது. புரட்சியின் ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்த ருஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் உறுதி கொண்டார்.
முதலாவது உலகப் போர் 1918 நவம்பர். மாதத்தில் முடிவடைந்தது. வெற்றி பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள் 1919ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரான்சிலுள்ள வெர்சேய் அரண்மனையில் கூடி உலகப் பொருளாதாரத்தை மறுவினியோகம் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிரான்சிலுள்ள வியத்நாமிய தேசபக்தர்களின் சார்பில் குயென்-அய்-கோக் என்ற புனைபெயரில் ஹோ-சி-மின் வெர்சேய் மாநாட்டுக்கு 'வியத்நாம் மக்களின் உரிமைகள்' என்ற ஆவணத்தை அனுப்பினார்.
வியத்நாம் மக்களுடைய ஜனநாயக சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பிரெஞ்சு அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்ற அந்த விண்ணப்பம் வற்புறுத்தியது. அதில் பின்வரும் எட்டுக் கோரிக்கைகள் இடம் பெற்றன.
1. எல்லா அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுதல்.
2. இந்தோ-சீனாவில் உள்ள நீதிமன்ற அமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும். ஐரோப்பியர்களுக்குத் தரப்படுகின்ற நீதிமன்றப் பாதுகாப்புகள் (Safeguards) அனைத்தும் வியத்நாமியர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். நேர்மையான வியத்நாம் மக்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்துகின்ற விசேஷ நீதிமன்றங்கள் முற்றாகவும் திட்டவட்டமாகவும் ஒழிக்கப்பட வேண்டும்.

Page 12
12 ஹோ-சி-மின்
3. பத்திரிகை சுதந்திரம்; கருத்துச் சுதந்திரம் வேண்டும். 4. சங்கம் அமைப்பதற்கு உரிமை; கூட்டம் நடத்துவதற்கு உரிமை வேண்டும்
5. வியத்நாமிலிருந்து அந்நிய நாடுகளுக்குப் பயணம் போவதற்கும், வேலை தேடிச் செல்வதற்கும் உரிமை வேண்டும்.
6. ஆசிரியப் பணியில் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். வியத்நாம் மக்களுக்கு தொழிற் பள்ளிகளும், தொழில் நுட்பக்
கல்லூரிகளும் எல்லா மாகாணங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
7. அரசு ஆணைகளின் மூலம் நடைபெறும் ஆட்சிக்கு பதிலாக சட்டங்கள் மூலம் ஆட்சி செய்தல் அவசியம்.
8. வியத்நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தரக் குழு பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற வேண்டும். வியத்நாம் மக்களுடைய கோரிக்கைகளை அந்தக் குழு பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்கும்.
உலக அரங்கத்தில் வியத்நாம் மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட முதல் குரல் இது. இந்தக் குரலை எழுப்பியவர் ஹோ-சி-மின்.
வியத்நாமில் பிரெஞ்சுக் காலனியவாதிகள் செய்துள்ள குற்றங்களை விண்ணப்பம் உலகத்துக்கு அறிவித்தது. அதே சமயத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தில் வியத்நாமின் நிலையை தொழிலாளி வர்க்கம் மற்றும் ஜனநாயக அமைப்புக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தது.
லாஹ்யுமனைட் (L Humanite) பத்திரிகை 1919 ஜூன் 18ஆம் நாள் இதழில் அந்த விண்ணப்பத்தை 'தேசிய இனங்களின் உரிமைகள்' என்ற தலைப் பில் வெளியிட்டது. அந்த விண்ணப்பத்தை மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகப் பரப்புவதற்கு ஹோ-சி-மின் அதைப் பல பிரசுரங்களாக அச்சிட்டு, பிரெஞ்சு ஜனநாயக அமைப்புகளின் கூட்டங்களில் விநியோகம் செய்தார். வியத்நாமிய மக்கள் அவற்றைச் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கும் நினைவில் வைத்திருப்பதற்கும் அவற்றைப் பாடல்களாகவும் எழுதினாா.

ஹோ-சி-மின் 13
வெர்சேயில் ஹோ - சி-மின் நடத்திய போராட்டம் ஏகாதிபத்திய அரசுகளின் பிரதிநிதிகள் மீது நடத்திய முதலாவது நேரடித் தாக்குதல். ஆனால் வெற்றி பெற்ற கொள்ளைக்காரர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்துகொள்கின்ற இடமாகத்தான் வெர்சேய் மாநாடு இருந்தது. போரில் தோல்வி அடைந்த நாடுகளும் ஒடுக்கப்பட்ட மக்களினங்களும் அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்ளவேண்டும். இந்த அனுபவத்திலி ருந்து ஹோ-சி-மின் மற்றொரு முக்கியமான முடிவுக்கு வந்தார். ஏகாதிபத்தியவாதிகள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றித் தேனொழுகப் பேசுவது ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கே என்பது அந்த முடிவு.
ஒடுக்கப்பட்ட மக்களினங்கள் உண்மையான சுதந்திரத்தையும் விடுதலையையும் பெற அவை தமது சொந்த பலத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்பது முக்கியம். வியத்நாம் மக்களாகிய நாம் நமது சொந்த முயற்சிகளின் மூலமாகவே விடுதலை பெற வேண்டும்.
இந்த முடிவு தத்துவரீதியில் மாபெரும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஏனென்றால் அது நமது மக்களுக்கும் காலனி அடிமைதனத்துக்கு உட்பட்டிருந்த இதர மக்களினங்களுக்கும் அவர்களுடைய போராட்டத்துக்கும் ஒளிமிகுந்த பாதையைக் காட்டியது. வெர்சேய் மாநாட்டில் ஹே-சி-மின் நடத்திய போராட்டம் வியத்நாம், பிரான்ஸ் மற்றும் இதர பிரெஞ்சு காலனிகளில் வசித்த மக்களிடம் மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தியது.
பிரெஞ்சுக்காரர்கள் அதை "வெடிகுண்டு' என்று கருதினார்கள். ஏனென்றால் அது பிரான்சில் பொது மக்களுடைய கருத்தை உலுக்கியது. வியத்நாமிகள் அதை போரை அறிவிக்கும் சமிக்ஞைக் குண்டு' என்று கருதினார்கள். ஏனென்றால் மக்கள் புரட்சிப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குரிய சமிக்ஞையாக அது இருந்தது. பிரான்சிலிருந்த வியத்நாமியர்கள் எப்பொழுது சந்தித்துக் கொண்டாலும் தாய்நாட்டின் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையைப் பற்றியும் பேசினார்கள். குயென்-அய்-கோக் என்ற இளைஞருடைய பெயரை அன்புடனும் மரியாதையுடனும் உச்சரித்தார்கள்.

Page 13
14 ஹோ-சி-மின்
வியத்நாமின் வானத்தில் துருவநட்சத்திரமாகத் தோன்றிய நகுயென்-அய்-கோக்கின் தலைமையில் அவர்கள் நம்பிக்கை வைத்ததுடன் அவரைப் பற்றி பெருமைப்பட்டார்கள்.
ருஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ஒழிக்கின்ற முயற்சியில் ஏகாதிபத்தியவாதிகள் சோவியத் யூனியனுடைய உள்நாட்டு விவகாரங்களில் வெட்கமின்றித் தலையிட்டார்கள். ஹோ-சி-மின் பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர்களுடன் சேர்ந்து அக்டோபர் புரட்சியை ஆதரித்து சோவியத் யூனியனைக் காப்போம் என்ற இயக்கங்களில் பங்கு கொண்டார். சோவியத் யூனியனில் பிரெஞ்சு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பித் தலையிடக் கூடாது என்று கோரி கட்சி வெளியிட்ட 'பிரெஞ்சுத் தொழிலாளர் களுக்கு ஒரு வேண்டுகோள்' என்னும் பிரசுரத்தை அவர் ஆர்வத்தோடு விநியோகம் செய்தார். புரட்சிகர ருஷ்யா மீது துப்பாக்கிச் சண்டை நடத்த மாட்டோம் என்று கருங்கடலில் கப்பல் ஊழியர்கள் கலகம் செய்தபொழுது (அவர்களில் டோன்-டுக்-தாங் என்ற வியத்நாமிய கப்பல் ஊழியரும் இருந்தார்) ஹோ-சி-மின் அவர்களை ஆதரித்துப் பேசினார்.
ருஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப்பிறகு உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் தீவிரமான முறையில் வளர்ச்சி அடைந்தன. 1919ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் லெனினும் அவரை ஆதரித்த மார்க்சியவாதிகளும் மூன்றாவது அகிலத்தை (அதாவது கம்யூனிஸ் டு அகிலத்தை) நிறுவுவதற்காக மாஸ்கோவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள். கம்யூனிஸ்டு அகிலம் நிறுவப்பட்டது . உலக கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர் இயக்கத்துக்கு மாபெரும் வெற்றியாகும். ஏனென்றால் அது இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாத, சீர்திருத்தவாத, இனவெறி சக்திகளை முறியடித்தது. அது உலகத்தின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுவப்படுவதையும் புரட்சிகர இயக்கம் வளர்ச்சி அடைவதையும் ஊக்குவித்தது. கிழக்கு நாடுகளில் தேசிய விடுதலை இயக்கத்திற்குத் தன்னுடைய உறுதியான ஆதரவை கம்யூனிஸ்ட் அகிலம் அறிவித்தது. 1920ஆம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் லெனின் எழுதிய "தேசிய

ஹோ-சி-மின் 15
மற்றும் காலனியப் பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வுரைகளை' நிறைவேற்றியது. காலனிகள் மற்றும் சார்பு நாடுகளில் புரட்சிகர இயக்கம் வளருவதற்கு அடிப்படையான பாதையை ஆய்வுரைகள் வகுத்தளித்தன. உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு இப்பொழுது புரட்சிகரத் தலைமையகம், அதாவது சோவியத் யூனியன் இருந்தது. கம்யூனிஸ்டு அகிலம் தயாரித்த சரியான பாதையும் கிடைத்தது." உண்மையான மார்க்சிய கட்சிகள், தொழிலாளிவர்க்கத்தின் புதிய ரகத்தைச் சேர்ந்த கட்சிகள் உலகப் புரட்சிகர இயக்கத்துக்குத் தலைமை தாங்குவது அவசியமாயிற்று. ஐரோப்பாவில் أنه لا தொழிலாளர்கள் கட்சிகளில் நடைபெற்றதைப் போல, பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியிலும் மார்க்சியத்தை ஆதரித்தும் சீர்திருத்த வாதிகளை எதிர்த்தும் ஓர் உக்கிரமான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் அடிப்படை அமைப்புகளில் நடைபெற்ற தத்துவார்த்த விவாதங்களில் ஹோ-சி-மின் பங்கெடுத்தார். இந்த சமயத்தில் லெனின் எழுதிய 'தேசிய மற்றும் காலனியாதிக்க பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வுரைகள்' நூல் அவருக்குக் கிடைத்தது. தந்தையர் நாட்டுக்கு சுதந்திரம், வியத்நாம் தேசிய மக்களுக்கு விடுதலை என்னும் தனது இலட்சியங்கள் நிறைவேற மூன்றாவது அகிலமும், லெனின் ஆய்வுரைகளும் இன்றியமையாதவை என்பதை ஹோ-சி-மின், மார்செல் காச்சின், பால் வெயிலான் கூட்டூரியேர், மான்மெளசோ ஆகிய பிரெஞ்சுப் புரட்சிக்காரர்களது உதவியுடன் புரிந்து '
கொண்டார்.
ஹோ - சி-மின் அதிலிருந்து வியத்நாமியப் புரட்சி உள்பட தேசியப் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் அடிப்படையான திசை வழியை அறிந்தார். பிறகு, லெனின் ஆய்வுரைகளைப் படித்தபொழுது அவருடைய கருத்து உறுதிப்பட்டது.
"லெனினுடைய ஆய்வுரைகள் எனக்கு உணர்ச்சி. உற்சாகம், அறிவொளி மற்றும் நம்பிக்கையைக் கொடுத்தன. உணர்ச்சிப் பெருக்கில் நான் அழுதுவிட்டேன். என்னுடைய அறையில் தனியாக இருந்தபொழுது பொதுமக்கள் முன்பாகப் பேசுவதைப் போல நான் உரத்த குரலில் பேசினேன். 'தாய் நாட்டின் ஒடுக் கப்பட்ட சகோதரர்களே!'" நாம் தேடியது கிடைத்து விட்டது. நம் விடுதலைக்கான பாதை இதோ இருக்கிறது!"

Page 14
16 ஹோ-சி-மின்
ஹோ - சி-மின் அப்பொழுதிலிருந்து லெனின் மற்றும் மூன்றாவது அகிலத்திடம் முழுமையான நம்பிக்கை வைத்தார். அவர் காரல் மார்க்ஸ் மற்றும் லெனின் எழுதிய புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தார். மார்க்ஸ் எழுதிய "மூலதனத்தை" அவர் தன்னுடைய கையேடாகக் கருதினார். பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டத்தில் தன்னுடைய கருத்தை உணர்ச்சிகரமாக விளக்கினார். பல கஷ்டங்களை நாம் சமாளிக்க வேண்டியிருந்தாலும் எல்லா இடங்களிலும் கம்யூனிஸத்தின் வெற்றியை எதுவும் தடுக்க முடியாது என்று நம்பினார். ஹோ-சி-மின் மார்க்ஸ் மற்றும் லெனின் பாதையில் முன்னேறிச் செல்வதற்கு சித்தாந்த உறுதியைத் தந்தது அந்த நம்பிக்கைதான்.
பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் சில உறுப்பினர்கள், தமது கட்சி, கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரவேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கும் அதைத் தூண்டுவதற்கும் கட்சிக்குள் ஒரு குழு அமைத்திருந்தார்கள். ஹோ-சி-மின் அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்தார்.
பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் மாநாடு 1920 டிசம்பர் 25-30 தேதிகளில் டூர்ஸ் என்ற இடத்தில் நடைபெற்றது. கட்சி இரண்டாவது அகிலத்தில் நீடிப்பதா அல்லது மூன்றாவது அகிலத்தில் சேருவதா என்ற பிரச்சினையில் நடைபெற்ற விவாதத்தில் எல்லா பிரதிநிதிகளும் உணர்ச்சிகரமாகப் பங்கெடுத்தார்கள்.
பிரெஞ்சுக் காலனிகளின் சார்பில் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாக ஹோ-சி-மின் மாநாட்டில் பங்கெடுத்தார். அத்துடன் பிரான்சில் ஒர் அரசியல் கட்சியின் மாநாட்டில் பங்கெடுத்த முதல் வியத்நாமியர் என்ற பெருமையும் சேர்ந்தது. எனவே மாநாட்டின் எல்லா பிரதிநிதிகளும் அவரை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஹோ -சி-மின் மாநாட்டில் பேசியபொழுது இந்தோ-சீனாவில் பிரெஞ்சு காலனியத்தின் குற்றவாளித்தனமான செயல்களைக் கண்டனம் செய்தார். வியத்நாமிலும் இதர காலனிகளிலும் நடைபெறுகின்ற புரட்சிகரமான போராட்டங்களுக்கு செய்முறை யில் ஆதரவளிக்குமாறு பிரெஞ்சு தொழிலாளிவர்க்கத்தையும் உண்மையான புரட்சிகர மக்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஹோ-சி-மின் 17
'கட்சி எல்லா காலனி நாடுகளிலும் சோஷலிசத்துக்குப் பிரச்சாரம் செய்யவேண்டும். இனிமேல் காலனிகளின் பிரச்சினைகள் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக் கொள்ளப்படும் என்ற வாக்குறுதி, மூன்றாவது அகிலத்தில் சோஷலிஸ்ட் கட்சி சேருவதன் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பிரெஞ்சுக் காலனிகளுக்கு ஒரு நிரந்தர கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தோசீனாவிலுள்ள பிரெஞ்சுக் காலனிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் அவை குறித்து நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கும் கட்சியின் சார்பில் ஓர் உறுப்பினர் சீக்கிரத்தில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்' என்று அவர் பேசினார். p
ஹோ-சி-மின் பிரான்சின் உண்மையான புரட்சிகர மக்களுடன் சேர்ந்து மூன்றாவது அகிலத்துக்கு முழு ஆதரவளித்தார். மூன்றாவது அகிலத்தை நிறுவுவதற்கு ஆதரவாக அவர் வாக்களித்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவராகவும் அதே சமயத்தில் முதல் வியத்நாம் கம்யூனிஸ்டாக வும் இருந்தார்.
அவருடைய புரட்சிகர வாழ்க்கையிலும் வியத்நாமின் புரட்சிகர வரலாற்றிலும் அது முக்கியமான அரசியல் நிகழ்வாக இருந்தது. வெர்சேய் மாநாட்டின் போது (1919) அவர் நடத்திய போராட்டம் , பிரெஞ்சு காலனியவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மக்களைத் தூண்டிய கதிரொளி' என்றால், 1920ஆம் ஆண்டில் அவர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது ஒரு தீர்மானமான நடவடிக்கையாக இருந்தது. அதன் மூலம் அவருடைய சித்தாந்தமும் அரசியல் நிலையும் வேகமாக முன்னேற்றமடைந்தன. அன்று முதல் அவர் வியத்நாமிய மக்களுக்கு சரியான புரட்சிப் பாதையைக் கண்டுபிடித்தார். அந்தப் பாதை வர்க்கப் போராட்டத்தை தேசியப் போராட்டத்துடன் தேசிய சுதந்திரத்தை சோஷலிசத்துடன் உண்மையான தேசபக்தியை மேன்மையான பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் இணைத்தது.
ஹோ-சி-மின் நமது மக்களுக்குப் புரட்சிகரமான பாதையைத் தேடியபொழுது, சுதந்திரமான சிந்தனை, சம்பவங்களை

Page 15
18 ஹோ-சி-மின்
ஊடுருவிப் பார்க்கின்ற திறமை, அவற்றுக்கு உடனே எதிர் நடவடிக்கைகளைத் தயாரிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார். கருத்தூன்றிப் படித்தல், போராடுதல், பயிற்சி பெறுதல் ஆகிய நிகழ்வுப் போக்கைக் கடைப் பிடித்தும் அவர் உலகத் தொழிலாளர் இயக்கத்திலும் தேசிய விடுதலை இயக்கத்திலும் பங்கெடுத்தார். அவர் தத்துவக் கல்வியைச் செய்முறையுடன் இணைத்து முக்கியமான முடிவுகளுக்கு வந்தார். அந்த முடிவுகளைக் கோட்பாடுகளாக வகுத்துக் கொண்டு தன்னுடைய செய்முறை நடவடிக்கைகளுக்கு அவற்றை வழிகாட்டியாக கொண்டார். 'போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபொழுது, மார்க்சிய லெனினியத்தை கற்பதன் மூலம், ஓர் உண்மையைப் படிப் படி யாகப் புரிந்துகொண்டேன். ஒடுக்கப்பட்ட மக்களினங்களையும் உழைக்கும் மக்களையும் உலகத்தின் எல்லாப் பகுதி களிலும் நிலவுகின்ற அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்கக் கூடியது சோஷலிசமும் கம்யூனிசமும் மட்டுமே என்பதுதான் அந்த் உண்மை' என்று அவர் எழுதினார்.

3
லெனினியத்தை நோக்கி (1921-24)
கம்யூனிஸ்ட் அகிலத்தின் தீர்மானம் மற்றும் தேசிய காலனியப் பிரச்சினைகளைப் பற்றிய லெனின் ஆய்வுரைகளின் ஒளியிலும் புரட்சியின் செய்முறைத் தேவைகளின் அடிப்படையிலும் , வியத்நாம் உள்பட காலனி நாடுகளில் பிரச்சாரம் மற்றும் ஸ்தாபன வேலையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை ஹோ-சி-மின் கம்யூனிஸ்ட் ஆனவுடன் உணர்ந்தார். பொதுவாக ஆசியாவில், குறிப்பாக இந்தோ-சீனாவில் கம்யூனிசத்தைப் பரப்புவது தன் சொந்தக் கடமை என்று அவர் கருதினார். 1921ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அவர் ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். பொதுவாக ஆசியாவுக்கும் குறிப்பாக இந்தோ-சீனாவுக்கும் கம்யூனிசத்தைக் கடைப்பிடிக்க முடியுமா? இன்று நமக்கு முன்பாக உள்ள கேள்வி இதுவே. இந்தக் கேள்விக்கு "ஆம்" என்று நாம் திட்டவட்டமாக பதிலளிக்க முடியும்."
அவர் ஆசிய மக்களின் நிலை மற்றும் புரட்சிகர சக்தியை உறுதி செய்தார். ஆசிய மக்களின் புரட்சிகர இயக்கங்களுக்கும் மேற்கு நாடுகளின் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவை விளக்கிக் காட்டினார்.
'ஆசியாவில் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்படுகின்ற கோடிக்கணக் கான மக்கள் பேராசைக்கார காலனியவாதிகளின் சுரண் டலை ஒழிப்பதற்குக் கிளர்ந்தெழுகின்ற பொழுது அவர்கள் வலிமையான சக்தியாக இருப்பார்கள். அந்த சக்தி ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்குப் போராடுகின்ற பொழுது முழு விடுதலைக்காகப் போராடுகின்ற மேற்கத்திய சகோதரர்களுக்கும் உதவி செய்ய முடியும்' என்று அவர் கூறினார்.

Page 16
2O ஹோ-சி-மின்
'இந்தோ-சீன நிலைமையைப் பொறுத்தமட்டில் ஹோ-சி-மின் இரண்டு தவறான கருத்துகளை விமர்சனம் செய்தார். இந்தோசீனாவிலுள்ள சுரண்டப்படுகின்ற மக்கள்புரட்சிக்கு முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று கூறுவது தவறு; அவர்கள் அங்கு நிலவுகின்ற ஆட்சிமுறையில் திருப்தியாக இருப்பதால் புரட்சி செய்ய விரும்பவில்லை என்று கூறுவது இன்னும் மோசமான தவறாகும். 'அவர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. இந்தோ-சீன மக்கள் செத்துவிடவில்லை. அவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலத்துக்கு வாழ்வார்கள். காலனிய முதலாளிகள் திட்டமிட்டு அவர்களுக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அவர்களுடைய உணர்வைக் கெடுக்க முடியாது. ருஷ்யாவின் அக்டோபர் புரட்சியும் மற்ற நாடுகளில் உள்ள புரட்சி இயக்கங்களும் தென்றலாக வந்து நஞ்சை அகற்றும்' என்று அவர் கூறினார்.
'இந்தோ-சீன மக்கள் ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இப்பொழுது துடிக்கிறது. குமுறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அது வன்செயலாக வெடிக்கும், முன்னோடிகள் இந்த நிகழ்வுப் போக்கைத் துரிதப்படுத்த வேண்டும். சோஷலிசம் விடுதலை விதைகளை விதைப்பதற்கு முதலாளித்துவத்தின் கொடுமை என்னும் பாதையை அமைத்திருக்கிறது' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு 1921 டிசம்பரில் மார்சேல்ஸ் நகரத்தில் நடைபெற்றது. கட்சியைக் கட்டுவதைப் பற்றிய சில முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதும் முடிவுகளெடுப்பதும் மாநாட்டின் நோக்கமாகும். ஹோ-சி-மின் தலைமைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலனி நாடுகளைப் பற்றி ஆராய்ந்து கம்யூனிச உணர்ச்சியில் கொள்கையைத் தயாரிக்க வேண்டும் என்று அவர் பிரேரணை செய்தார். காலனிய நாடுகளிலுள்ள நிலைமையை ஆராய்வதற்காக கட்சியின் மத்திய கமிட்டியின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

ஹோ-சி-மின் 21
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 1921இல் காலனி நாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தது. காலனிகளின் பிரச்சினைகளைப் பற்றி விவரங்களை சேகரித்து ஆராய்ச்சி செய்து அவை சம்பந்தமாக தத்துவம் மற்றும் பிரச்சாரத்துறையில் தகுந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு கட்சியின் மத்திய கமிட்டிக்கு அது ஆலோசனை தரும். அந்த குழுவுக்கு ஐந்து துணைக்குழுக்கள் இருந்தன. பிரான்சின் காலனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு பொறுப்பாக இருந்தது. இந்தோ-சீனாவைப் பற்றி ஆராய்கின்ற துணைக்குழுவுக்கு ஹோ-சி-மின் தலைமை வகித்தார்.
1922 அக்டோபர் மாதத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்றபொழுது காலனிப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அடுத்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினை சேர்க்கப்பட வேண்டும் என்று அத்தீர்மானம் முன்மொழிந்தது. காலனிகளில் புரட்சிகரமான பிரச்சாரத்துக்குத் தேவையானவற்றைத் தயாரிக்குமாறு மாநாடு காலனிகளைப் பற்றிய குழுவைப் பணித்தது. அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட 'காலணிகளில் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்' என்னும் ஆவணம் மாநாட்டில் வெளியிடப் لانغاسا لا
மாநாட்டின் தலைமைக்குழுவுக்கு ஹோ-சி-மின் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ·
ஹோ - சி-மின் பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்டபொழுது காலனிகளின் பிரச்சினைகளைப் பற்றி தன்னுடைய கருத்துகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கு எழுதினார். காலனிப் பிரச்சினை பற்றி கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங்களின் மாபெரும் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அவற்றைக் கறாராக கடைப்பிடிப்பதற்காக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில கட்சிகளை அவர் ஒளிவு மறைவின்றி விமர்சனம் செய்தார்.
'துரதிர்ஷ்டவசமாக இந்தத் தீர்மானங்கள் இதுவரையிலும் காகிதத்தில் எழுதப்பட்டதுடன் நின்றுவிட்டன. பிரான்ஸ், பிரிட்டன்

Page 17
22 ஹோ-சி-மின்
மற்றும் இதர காலனிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது நாட்டின் காலனிகளைப் பற்றி என்ன செய்திருக்கின்றன? காலனிகளைப் பற்றி நியாயமான தொடர்ச்சியான, திட்டவட்ட மான கொள்கை மற்றும் செயல்திட்டம் உண்டா? காலனி என்றால் என்ன. அதன் முக்கியத்துவம் என்ன என்பது இந்தக் கட்சிகளுக்குத் தெரியுமா? 'தெரியாது' என்பதே பதில் ' என்று அவர் எழுதினார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பின்வரும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் கடிதத்தின் முடிவில் குறிப்பிட்டார். மார்ட்டினிக் சம்மேளனத்தை (ஜின் ஜாரஸ் குழு) அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். கட்சிப் பத்திரிகையில் காலனிப் பிரச்சினைகளைப் பற்றி கட்டுரைகள் வெளியிட வேண்டும்; காலனிகளில் உள்ள கட்சிக் கிளைகள் பிரச்சாரத்தை அதிகப்படுத்து வதையும் ஆதிக்குடிகளைக் கட்சியில் சேர்ப்பதையும் ஊக்குவிக்க வேண்டும் , கட்சியின் எல்லா பத்திரிகைகளிலும் காலனிப் பிரச்சினைகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வாசகர்களின் அக்கறையைத் தூண்ட வேண்டும் கட்சியின் எல்லா மாநாடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் காலனிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவேண்டும் , கட்சியின் உறுப்பினர்களைப் பிரச்சார வேலைக்கு காலனிகளுக்கு அனுப்ப வேண்டும். காலனிகளில் தொழிற்சங்கங்கள் அல்லது அத்தகைய கமிட்டிகளை அமைக்கவேண்டும். இதரவை.
காலனி நாடுகளில் புரட்சிகரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கும் ஸ்தாபனங்களை வலுப் படுத்துவதற்கும் ஹோ-சி-மின் ம்ற்றும் சில தேசபக்தர்கள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் 'யூனியன் இண்டர் கலோனியல்' என்ற அமைப்பை 1921ஆம் ஆண்டில் பாரிசில் நிறுவினார்கள். ஹோ-சி-மின் அந்த அமைப்பின் மத்திய கமிட்டிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலனியாதிக்கம் பற்றி லெனின் ஆய்வுரைகளைப் புரிந்துகொண்டதன் மூலமும் யூனியனில் தீவிரமாக உழைத்தும் அவர் அதன் முக்கியமான தலைவராக வளர்ச்சி அடைந்தார். யூனியனின் இதர உறுப்பினர்களின் நம்பிக்கையையும் பெற்றார்.

ஹோ-சி-மின் 23
பிரெஞ்சு காலனிகளின் (மடகாஸ்கர், மார்டினிக், ஹைதி, அல்ஜீரியா, இந்தோ-சீனா, இதரவை) தேசபக்தர்களுடைய ஸ்தாபனமாக யூனியன் இன்டர் கலோனியல் இருந்தது “காலனி நாட்டு மக்களுக்கு விடுதலை அளித்தல், காலனி நாட்டு மக்கள் சுயவிடுதலைக்குப் போராடுவதற்கு ஊக்குவித்தல்" யூனியனின் நோக்கமாக இருந்தது. பத்திரிகைகள், பிரசுரங்கள் மற்றும் 'சாத்தியமான எல்லாச் சாதனங்களும்' பயன்படுத்தி காலனிப் பிரச்சினைகளைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு யூனியன் முடிவு செய்தது. காலனி மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களினங்களும் சுதந்திரம் மற்றும் விடுதலை அடைவதற்குப் போராடுகின்ற ஐக்கிய முன்னணி வடிவமாக யூனியன் இருந்தது.
ஹோ-சி-மின் தயாரித்த அறிக்கையை யூனியன் வெளியிட்டது. விதிகள் மற்றும் வேண்டுகோள் தயாரிக்கப்பட்டன. சில பிரெஞ்சு காலனிகளில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு சிறப்பு ஊழியர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்தது. காலனிகளில் மார்க்சிய லெனினியத்தைப் பரப்புகின்ற ஆரம்ப முயற்சிகளைச் செய்தது. காலனி மக்கள் தமது சொந்த பலத்தில் விடுதலைக்குப் போராடுவதற்கு ஊக்கமளித்தது. ‘காரல் மார்க்ஸ் கூறியபடி உங்கள் விடுதலை உங்களுடைய முயற்சிகளின் மூலமாக மட்டுமே வரமுடியும்' என்று விளக்கமளித்தது.
இன்டர் கலோனியல் யூனியனது தோற்றம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட அரசியில் சம்பவமாக இருந்தது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு காலனி மக்களை ஒரு பொது முன்னணியில் யூனியன் திரட்டியது. பிரெஞ்சு காலனி மக்களுக்கும் பிரான்சிலுள்ள தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் போர்க் குணம் நிறைந்த ஒருமைப்பாட்டை யூனியன் ஊக்குவித்தது. 'எல்லா நாடுகளிலும் உள்ள பாட்டாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களினங் களும் ஒன்று சேருங்கள்' என்று லெனின் விடுத்த அறை கூவலைச் செயற்படுத்துவதற்கு அது மாபெரும் முன்முயற்சியாக இருந்தது. காலனி நாடுகளில் பிரச்சாரத்தையும் புரட்சிகர நடவடிக்கைகளையும் ஊக் குவிப்பதற்கு 1922ஆம் ஆண்டில் யூனியன் "லெ பரியா? என்னும் பத்திரிகையை வெளியிட்டது.

Page 18
24 ஹோ-சி-மின்
“காலனிகளில் பாட்டாளிவர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக அந்தப் பத்திரிகை இருந்தது. அது போராட்ட ஆயுதம், மனிதனை விடுதலை செய்வது அதன் நோக்கம்.”*
இந்தோ-சீனாவிலும் மற்ற காலனி நாடுகளிலும் மார்க்சிய லெனினியத் தத்துவத்தைப் பரப்புவதில் "லெ பரியா’ முக்கியமான பங்கு வகித்தது. பிரான்சிலுள்ள தொழிலாளிவர்க்கத்தினரும் உழைப்பாளி மக்களும் அதன் மூலம் மார்க்சிய லெனினியத்தைக் கற்றார்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தை சோஷலிசத் துக்கான போராட்டத்துடன், தேசபக்தியை பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி புரட்சிகரமாகப் போராடுவதற்கு அது உதவியது, 'லெ பரியா பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பிரான்சின் தொழிலாளிவர்க்கும் , உழைக்கும் மக்கள் மற்றும் பிரான்சில் வசித்த வியத்நாமியர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றது.
ஹோ-சி-மின் லெபரியா’ பத்திரிகையில் தலையங்கங்கள், விமர்சனங்கள் இதரவற்றை எழுதினார். அவர் எளிமையாக, தெளிவான நடையில் எழுதினார். எழுத்தில் வன்மையும், போராட்ட உணர்ச்சியும் இருந்தன. அரசியல் சமூகத் துறைகளில் ஏகாதிபத்திய வாதிகளையும் காலனியவாதிகளையும் கடுமையாகத் தாக்கி எழுதினார். ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றி அவருடைய கண்டனங்கள்'துப்பாக்கியினால் சுடுவதைப் போல' இருந்தன. அவருடைய கூர்மையான பேனா பிரெஞ்சு காலனியவாதிகளுடைய போலித்தனத்தை தோலுரித்துக் காட்டியது. அவர்கள் நமக்கு நாகரிகத்தைக் கற்பிப்பதற்கு வரவில்லை. நம்மைப் படுகொலை செய்வதற்கு வந்திருக்கிறார்கள்' என்று அவர் எழுதினார். பிரெஞ்சு காலனியவாதிகள் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்று எழுதினார். தன்னுடைய நாட்டிலும் மற்ற காலனி நாடுகளிலும் வசிக்கின்ற மக்களிடம் நட்புணர்ச்சி, அனுதாபம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அவர் எழுதினார். காலனிப் புரட்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளில் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கும் இடையிலான நெருக்கமான

ஹோ-சி-மின் 25
உறவைப் பற்றி அவர் எழுதினார். தேசிய விடுதலைப் புரட்சி உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் ஒரு பகுதி என்பதை அவர் உறுதிப் படுத்தினார். ருஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியைப் போற்றினார். அங்கு உருவாகிக்கொண்டிருந்த புதிய அழகான வாழ்க்கை முறையைப் பாராட்டினார்.
லெபரியா' 'பிரெஞ்சு காலனியவாதிகளுக்கு மரண அடி'
கொடுத்தது.' 'ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் வாழ்க்கையில் புதிய தென்றல் வீசியதைப் போல இருந்தது' °
“ઉો દ્વou fોu.J T' பத்திரிகையை இந்தோ-சீனாவுக்குள் கொண்டு வருவதைத் தடுப்பதற்கு காலனி அதிகாரிகள் பல முயற்சிகளைச் செய்தார்கள். எனினும் இரகசியமான முறைகளில் அது கொண்டுவரப்பட்டது. வியத்நாமிய தேசபக்தர்கள் அதை ஆர்வத்தோடு படித்தார்கள். பிரெஞ்சு காலனிய வாதிகளது குற்றங்களை அவர்கள் முன்னைக் காட்டிலும் மிகத் தெளிவாக உணர்ந்தார்கள். ருஷ்யாவின் அக்டோபர் புரட்சியையும் அதன் தலைவரான லெனினையும் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து
கொண்டார்கள்.
ஹோ-சி-மின் 1923ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வியத்நாமிய,
மொழியில் 'வியத்நாம் ஆன்மா' என்ற பெயரில் ஓர் இதழ் நடத்த வேண்டும் என்று கூறினார். அந்த இதழ் பிரான்சில் வசித்த வியத்நாமியர்களிடம் தேசபக்தி மற்றும் புரட்சிகர உணர்ச்சிய்ைத் தூண்டுவதற்கும் தாய்நாட்டிலுள்ள மக்கள் பிரெஞ்சு ஏகாதிபத்திய
வாதிகளை எதிர்த்துப்போர் செய்து சுதந்திரம் அடைவதற்கும்
தூண்டுதலாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். பிரான்சில் வசித்த வியத்நாமியர்களிடம் புரட்சிகர உணர்ச்சி மற்றும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் கூடிய உண்மையான தேசபக்தியையும் உருவாக்குவதில் அவர் அதிகமான கவனம் செலுத்தினார். அவர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை 'ஹ்யுமனைட்' மற்றும் பிரெஞ்சுத் தொழிலாளர் சம்மேளனத்தின்
பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதினார். இக் கால
கட்டத்தில் 'குற்றவாளிக் கூண்டில் பிரெஞ்சுக் காலனியம்' என்ற பிரபலமான பிரசுரத்தை அவர் எழுதினார்.
s

Page 19
26 ஹோ-சி-மின்
அந்தப் பிரசுரம் பொதுவாக ஏகாதிபத்தியம் குறிப்பாக பிரெஞ்சு காலனியத்தின் மீது குற்றம் சாட்டியது. பிரெஞ்சு ஏகாதிபத்திய வாதிகள் அரசியல், பொருளாதார, கலாசார, சமூகத்துறைகளில் செய்திருக்கின்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைத் துல்லியமான ஆதாரங்களுடன் அவர் எழுதினார். ஏகாதிபத்திய ஆட்சியில் காலனி மக்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கை நடத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். அவர்களை ஒடுக்குவதற்கும் சுரண்டுவதற்கும் எல்லா முறைகளும் கடைப் பிடிக்கப்பட்டன. மிகவும் காட்டுமிராண்டித்தனமான 'இரத்த வரி' (Blood Tax) அந்த முறைகளில் ஒன்று.
'குற்றவாளிக்கூண்டில் பிரெஞ்சுக் காலனியம்' என்ற பிரசுரம் ஏகாதிபத்தியத்தின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்தியதுடன் தேசிய இனம் மற்றும் காலனியப் பிரச்சினைகளைப் பற்றி அடிப்படையான வாதங்களையும் முன் வைத்தது. காலனியில் புரட்சிக்கும் ஏகாதிபத்திய நாட்டில் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கும் இடையில் நெருக்கமான உறவைப் பற்றி அது விளக்கியது. காலனிப், புரட்சி உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதி என்பதை உறுதிப்படுத்தியது. அவர் தகுந்த உதாரணத்துடன், விளக்கினார் . 'முதலாளித்துவம் என்பது இரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டை, அதற்கு இரண்டு உறிஞ்சும் குழாய்கள் இருக்கின்றன. ஒரு குழாய் ஏகாதிபத்திய நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. அடுத்த குழாய் காலனிகளில் உள்ள உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. அட்டையைக் கொல்ல வேண்டும் என்றால் இரண்டு குழாய்களையும் வெட்டிவிட வேண்டும். ஒரு குழாயை மட்டும் வெட்டினால் அடுத்த குழாய் பாட்டாளிவர்க்கத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதைத் தொடர்ந்து செய்யும் . அட்டை உயிருடன் இருக்கும். வெட்டப்பட்ட குழாய் மறுபடியும் வளர்ச்சி அடையும்.'
காலனி நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும் கூட்டணியும் இன்றியமையாதது என்று அவர் எழுதினார். 'இந்தக் கூட்டணி பாட்டாளிவர்க்கப் புரட்சியின் படைவரிசைகளில் ஒன்றாக இருக்கும்.”*

ஹோ-சி-மின் 27
காலனிப் புரட்சிக்கும் ஏகாதிபத்திய நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான இயக்கவியல் உறவை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். ஏகாதிபத்திய நாட்டிலுள்ள பாட்டாளிவர்க்கம் மற்றும் மக்களுடைய புரட்சிகரப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பது அதன் கடமை. அந்தக் கடமை வெறும் வார்த்தைகளுடன் நின்று விடாமல் பொது எதிரிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் வெளிப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
'குற்றவாளிக்கூண்டில் பிரெஞ்சுக் காலனியம்' என்னும் பிரசுரம் புரட்சியின் குறிக்கோள். புரட்சிகர சக்திகள், தேசிய விடுதலைப் புரட்சியில் தலைமை தாங்கக்கூடிய வர்க்கம் ஆகியவற்றை சுட்டிக் காட்டியது. தேசிய சுதந்திரத்தை தேசிய ஒற்றுமையிலிருந்து பிரிக்க முடியாது என்பதை வலியுறுத்தியது. காலனி மற்றும் சார்பு நாடுகளில் மக்கள் ஏகாதிபத்தியத்தை முறியடித்தால் மட்டுமே தேசிய விடுதலை பெறமுடியும், தேசிய விடுதலைப் புரட்சி கம்யூனிஸ்ட் அகிலம் சுட்டிக் காட்டிய திசைவழியில் ருஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று எடுத்துக் காட்டியது. அது தேசிய விடுதலைப் புரட்சியின் போர்த்திட்ட மற்றும் செயல்தந்திரப் பிரச்சினைகளை முதல் தடவையாக முன்வைத்தது, புரட்சிகரமான சித்தாந்தம், தேசிய சுதந்திரத்துக்கான போராட்டம், சோஷலிசத்துக்கான போராட்டத்துடன், உண்மையான தேசபக்தி மேன்மையான பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியது.
மார்க்சிய லெனினியத்தின் பொதுக் கோட்பாடு களுடன் கம்யூனிஸ்ட் மற்றும் உலக தொழிலாளர் இயக்கம் மற்றும் தேசிய இயக்கங்களின் எதார்த்தம் ருஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் ஒளியில் ஒன்றிணைவதை அப்புத்தகம் விளக்கியது. ஏகாதிபத்தியத்தைப் பற்றி லெனினுடைய தத்துவத்தைத் தெளிவு படுத்தி தேசிய காலனியப் பிரச்சினைகளில் லெனின் கோட்பாடுகளை வளப்படுத்தியது. இப்புத்தகம் காலனி நாடுகளில் மக்களின் புரட்சிகரமான போராட்டத்தின் கருதுகோளையும் சித்தாந்தத்தையும் ஆரம்ப வடிவத்தில் தயாரித்து பிரெஞ்சுக்

Page 20
28 ஹோ-சி-மின்
காலனிகளில் மார்க்சியத்தைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களித்தது.
இந்தக் காலகட்டத்தில் ஹோ-சி-மின் புரட்சி இயக்கத்துக்கு உதவி செய்வதற்காக சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதினார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களுடைய அடிவருடிகளுக்கு எதிரான போராட்டங்களில் உணர்ச்சிகரமான சம்பவங்களை அவருடைய ஆரம்ப எழுத்துகள் பிரதிபலித்ததுடன் காலனி மக்களைப் போராடுமாறு தூண்டின. இக்கதைகளில் ஆழமான சித்தாந்தம், வளமான உணர்ச்சி மற்றும் பலவிதமான வடிவங்கள் இருந்தன. அவை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் கூர்மையான ஆயுதமாகவும் காலனி மக்களைப் புரட்சி செய்யத் தூண்டுகின்ற வன்மையான சாதனமாகவும் இருந்தன.
1923ஆம் ஆண்டின் முடிவில் ஹோ-சி-மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தொழிலாளர்கள் உதவியுடனும், தலைமறைவு நடவடிக்கைகளில் தன்னுடைய திறமையைப் பயன்படுத்தியும் ஏகாதிபத்தியத்தின் அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு ருஷ்யாவில் பெட்ரோகிராடுக்கு (பிற்காலத்தில் லெனின்கிராடு என்றும் தற்பொழுது சென் பீட்டர் ஸ்புர்க் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்து சேர்ந்தார். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அகிலத்தின் ஐந்தாவது காங்கிரசில் கலந்துகொள்வதற்கு வந்தார். அக்டோபர் புரட்சியின் தாயகத்துக்கு அவர் முதல் தடவையாக வருகை புரிந்தார். அவர் தன்னுடைய புரட்சிகர வாழ்க்கை முழுவதும் அந்த நாளை நினைவில் வைத்திருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர் உலகத்தின் முதல் சோஷலிஸ்ட் நாட்டின் தலைநகரமாகிய மாஸ்கோவுக்கு வந்தார். ட்வெர்ஸ்கயா தெருவில் (இப்பொழுது கோர்க்கி தெரு) உள்ள லக்ஸ் ஹோட்டலில் மற்ற நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் சேர்ந்து தங்கினார். உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் தலைவர்களுடன் பேசிப் பழகும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பாட்டாளி வர்க்க சர்வதேசியக் குடும்பத்தை அறிமுகம் செய்துகொண்டதில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஹோ-சி-மின் 29
லெனினுடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் கம்யூனிஸ்டு அகிலத்தின் ஐந்தாவது காங்கிரஸ் ரத்து செய்யப்பட்டது. ஹோ - சி-மின் சோவியத் யூனியனில் பல இடங்களுக்குச் சென்று பொருளாதாரம், அரசியல்,கலாசாரம் , சமூகம் ஆகிய துறைகளில் சோஷலிஸ்ட் அமைப்பின் வேகமான முன்னேற்றத்தைப் பற்றி அறிந்தார். கம்யூனிஸ்டு அகிலத்தின் கிழக்கு நாடுகளின் பிரிவில் அவர் வேலை செய்தார். தேசிய விடுதலைப் புரட்சியைப் பற்றித் தன்னுடைய கருத்துகளை கம்யூனிஸ்டு அகிலத்தின் பத்திரிகையிலும் (International Correspondence of the Communist international) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான 'பிராவ் தாவிலும் எழுதினார்.
அவர் சோவியத் பத்திரிகையாளர்களையும் சில வெளிநாட்டு நிருபர்களையும் சந்தித்தபொழுது தேசிய விடுதலைப் புரட்சியைப் பற்றித் தன்னுடைய கருத்துகளை வெளியிட்டார், சோஷலிஸ்ட் ருஷ்யா மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சாதனைகளைப் பாராட்டினார். புரட்சிகரப் போராட்டத்தில் வியத்நாம் மக்களுடைய இலட்சியத்தையும் மன உறுதியையும் பதிவு செய்தார். ஹோ-சி-மின்னை சந்தித்த ஒரு வெளிநாட்டுக் கவிஞர் அவரையும் வியத்நாம் மக்களையும் போற்றிப் பின்வருமாறு எழுதினார்.
'குயென்-அய் - கோபக் பண்பாடு மிக்கவர். அது ஐரோப்பியப் பண்பாடு அல்ல. ஒரு வேளை எதிர்காலத்தில் வரப்போகின்ற பண்பாடாக இருக்கலாம்'° வியத்நாம் மக்கள் எளிமையானவர்கள், செம்மையான பண்புடையவர்கள். அவர் பெருந்தன்மையும் மணிக்குரலும் உடையவர். உலகத்தில் அமைதியும் மாக்கடலைப் போன்று ஆழமான சர்வதேச நட்பும் எதிர்காலத்தில் நிலவும் என்று அவரால் ஊடுருவிக் காண முடிகிறது.' m
ஹோ -சி-மின் காலனி நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கத்தைப் பற்றி ஆழமான அக்கறையுடன் 1923-24ஆம் ஆண்டுகளின் போது புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளி

Page 21
30 ஹோ-சி-மின்
வர்க்கத்தின் உறுதி மற்றும் வர்க்க ஒருமைப்பாட்டைப் பாராட்டி எழுதினார். உலகத் தொழிலாளி வர்க்கத்தின் பொது எதிரி ஏகாதிபத்தியம் என்பதை சுட்டிக்காட்டி உலகத் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய ஒற்றுமையை வலுப் படுத்திக் கொண்டு போராட்டங்களைத் தீவிரப் படுத்த வேண்டும் என்றார், காலனிகள் மற்றும் சார்பு நாடுகளில் உள்ள தொழிலாளிவர்க்கம் ஒரே சமயத்தில் தேசியப் போராட்டத்தையும் நடத்த வேண்டியிருப்பதால் ஏகாதிபத்திய நாடுகளில் தொழிலாளிவர்க்கம் நடத்துகின்ற போராட்டத்துடன் அவை நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும் என்றார். காலனி நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற வேண்டுமானால் தன் ஸ்தாபனத்தையும் கட்டுப்பாட்டையும் உயர்த்துவதுடன் போராட்ட உணர்ச்சியையும் உறுதியையும் அதிகப் படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
வியத்நாம் தொழிலாளிவர்க்கத்தின் போராட்டங்களைப் பற்றி அவர் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார். 1922 ஜனவரி மாதத்தில் சோ-லோன் (கொச்சின் சீனா) என்ற நகரத்தில் 600 சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய செய்தி கிடைத்ததும் 'காலனிகளில் முதல் முறையாக இத்தகைய போராட்டம் நடைபெற்றிருக்கிறது.'* என்று அவர் கூறினார். வியத்நாம் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தில் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கத்துக்குப் பொறுப்பு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். "பிரெஞ்சுத் தொழிலாளர்கள் அதே வர்க்கத்தைச் சேர்ந்த தமது சகோதரர்கள் போராடுகின்ற பொழுது, ஒருமைப்பாட்டை அறிவிப்பதுடன் அவர்களிடம் ஸ்தாபன உணர்ச்சியையும் முறையையும் வளர்க்கவேண்டும். இது தலைமை நாட்டுத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய கடமை’ என்று அவர் கூறினார்.
காலனி மற்றும் சார்பு நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கம் பல துன்பங்களையும் தடைகளையும் சந்தித்தாலும் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் அதன் பிரிவுகளின் தலைமையில் இயக்கம் தொடர்ச்சியாக முன்னேறி வெற்றிபெறும் என்று அவர் உறுதியாக நம்பினார். ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கம்

ஹோ-சி-மின் 31
பொது எதிரியான ஏகாதிபத்தியத்துக்கு எதிராக காலனி மற்றும் சார்பு நாடுகளில் நடைபெறுகின்ற தொழிலாளர் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
ஹோ - சி-மின் தொழிலாளர் இயக்கத்துடன் மட்டும் நின்று விடவில்லை. விவசாயிகள் இயக்கத்திலும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொண்டார். மாஸ்கோவில் 1923 அக்டோபர் 12-15ஆம் நாட்களில் நடைபெற்ற உலக விவசாயிகள் காங்கிரசில் காலனி நாடுகளின் விவசாயிகள் சார்பில் அவர் பங்கெடுத்தார். உலகத்தில் குறிப்பாக காலனி நாடுகளில் விவசாயிகளுடைய போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு உலக அமைப்பை ஏற்படுத்த அந்த காங்கிரஸ் முடிவு செய்தது. காங்கிரஸில் விதிமுறைகள், வேண்டுகோள் மற்றும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் அகிலத்துக்கு பத்து உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹோ - சி-மின் செயற் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் அவர் பேசிய பொழுது பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சியில் வியத்நாம் விவசாயிகளுடைய பரிதாபமான நிலையை பிரதிநிதிகளுக்கு விளக்கினார். விவசாயிகளுடைய நிலங்களும், அரிசியும் பறிமுதல் செய்யப்படுகின்றன. கஞ்சா, மதுபானப், பழக்கத்தை விவசாயி களிடம் ஏற்படுத்தி அவர்களை பீரங்கித் தீனியாக மாற்றிவிட்டது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். 'கிழக்கு நாடுகள், குறிப்பாக காலனிகளைச் சேர்ந்த விவசாயிகள் மிகவும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பங்கெடுத்தால் விவசாயிகள் அகிலம் உண்மையான இயக்கமாக இருக்க முடியும்" என்றார்.
ஹோ-சி-மின் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஐந்தாவது காங்கிரசிலும் பேசினார். வியத்நாம் மற்றும் சீனாவில் விவசாயிகளுடைய நிலையைப் பற்றி சில கட்டுரைகளும் எழுதினார். y
அவர் தன் சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் காலனிகளில் உள்ள நிலைமையை (அங்கே விவசாயிகள் பெரும் பான்மை? யினராக இருந்தார்கள்) விரிவாக ஆராய்ந்தார். விவசாயிகளின் பரிதாபகரமான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் காலனியவாதிகள்,

Page 22
32 ஹோ-சி-மின்
நிலப் பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுடைய ஒடுக் குமுறையும் சுரண்டலும் என்று வலியுறுத்தினார். 'அனைத்து நிலமும் விவசாயிகளுக்கே! இந்த கோஷத்தை விவசாயிகள் அமுலாக்க வேண்டும் என்றால் விவசாயிகள் தங்களுடைய பலத்தைத் தெளிவாக உணரவேண்டும். பெருந்திரளான மக்களுக்கு விளக்கம் அளிக்கின்ற முறையில் அவசரமான வன்மையான இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தவேண்டும்'* என்று கூறினார்.
காலனி நாடுகளில் உள்ள விவசாயிகள் போராட்ட உணர்ச்சியைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இதுவரை ஒரு வெற்றிகூட அடையவில்லை என்றால் அவர்களிடம் ஸ்தாபனமும் தலைவர்களும் இல்லாதது அதற்குரிய காரணம். ஆகவே அவர் பின்வருமாறு ஆலோசனை கூறினார்.
'அவர்கள் ஸ்தாபனம் அமைப்பதற்கு கம்யூனிஸ்டு அகிலம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்களைப் புரட்சிக்கும், பிறகு விடுதலைக்கும் இட்டுச் செல்லக்கூடிய அரசியல் ஊழியர்களைக் கொடுக்கவேண்டும்.”*
மாபெரும் தலைவர் லெனின் 1924 ஜனவரி 21ஆம் நாளன்று மரணமடைந்தார். இதயத்தைப் பிழிகின்ற செய்தி வேகமாகப் பரவியது. உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுகின்ற மக்கள் எல்லாரும் வேதனைப் பட்டார்கள்.
ஹோ-சி-மின் அப்பொழுது மாஸ்கோவில் இருந்தார். அவர் கண்கள் நீரைச் சொரிந்தன. அந்தச் சோகமான நாளைப் பற்றி அவர் பிற்காலத்தில் கூறினார்; ''1924 ஜனவரி மாதத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் கீழ்தளத்தில் வழக்கம்போல காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். லெனின் மரணமடைந்து விட்டார் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது உண்மையாக இருக்குமென்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் ஹோட்டலுக்கு வெளியில் சோவியத் அலுவலகங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்துகொண்டிருப்பதைக் கண்டோம். லெனின் இறந்துவிட்டார். நாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டோம் . லெனின் உயிரோடிருந்த பொழுது அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு

ஹோ-சி-மின் 33
எனக்குக் கிடைக்கவில்லை. என் வாழ்க்கை முழுவதும் இதைப் பற்றி வருத்தப்படுவேன்.'
1924 ஜனவரி 27ஆம் நாளன்று ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ் விக்) மத்திய பத்திரிகையான 'பிராவ்தா வில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரமுகர்களும் லெனினைப் பற்றி எழுதிய பல கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. லெனினும் காலனி மக்களும்' என்ற தலைப்பில் ஹோ-சி-மின் எழுதிய கட்டுர்ை முதலாவதாக இடம் பெற்றிருந்தது.
'இது ஈடு செய்ய முடியாத இழப்பு. நாம் மிகவும் வேதனை அடைந்திருக்கிறோம். நம் சகோதரர்கள் சகோதரிகளுடைய பெருந் துயரத்தை உலக மக்களுடன் சேர்ந்து நாமும் பகிர்ந்து கொள்கிறோம். கம்யூனிஸ்ட் அகிலமும் அதன் பிரிவுகளும் குறிப்பாக காலனி நாடுகளில் உள்ள அமைப்புகள் நம் தலைவர் இட்ட ஆணைகளையும் பரிந்துரைகளையும் நிறைவேற்றும். உயிருடன் இருந்த காலத்தில் லெனின் நமக்குத் தந்தையாக, ஆசானாக, தோழனாக, அறிவுரையாளராக இருந்தார். இப்பொழுது அவர் துருவநட்சத்திரமாக இருக்கிறார். சோஷலிஸ்ட் புர்ட்சிக்குச் செல்லும் பாதையை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.'°
லெனினிடம் தன்னுடைய ஆழமான மரியாதையை, அவர் மரணத்தைப் பற்றி தன்னுடைய ஆழமான துயரத்தை வெளியிடுவதற்கு சரியான வழியைப் பற்றி அவர் சிந்தித்தார். லெனின் போதனைகளை செயல்படுத்துவோம். அவருடைய மேன்மையான புரட்சிகர வாழ்க்கை மற்றும் போராட்டத்திலிருந்து படிப்பினைகளைக் கற்க வேண்டும் என்று அவர் கூறினார். ஹோ-சி-மின் தன்னுடைய புரட்சிகர வாழ்க்கை முழுவதிலும் அதை நின்றவேற்றினார்.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஐந்தாவது காங்கிரஸ் 1924 ஜூன் 17 முதல் ஜூலை 8ம் நாள் வரை மாஸ் கோவில் நடைபெற்றது. அன்றைக் கிருந்த சூழ்நிலையில் உலகத் தொழிலாளிவர்க்கம் மற்றும் புரட்சிகர இயக்கத்தில் ஒற்றுமையைக் கட்டுவதையும் , குறிப்பாக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளை வலுப் படுத்துவதையும் காங்கிரஸ் விவாதித்து முடிவுகளைச்

Page 23
34 ஹோ-சி-மின்'
செய்தது. கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் வலதுசாரிப் போக்கினை விமர்சனம் செய்தது. "இடதுசாரி' போக்குகளை உறுதியாக எதிர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் ஷிவிக் தன்மையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் உண்மையான போல் ஷிவிக் கட்சியின் குணாம்சங்களை வரையறுத்தது. தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணியைப் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியது. காலனி நாடுகளில் உள்ள மக்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்தது.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஐந்தாவது காங்கிரசில் ஹோ-சி-மின் ஆலோசகர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.° காலனியாதிக்கப் பிரச்சினைகளைப் பற்றி தன்னுடைய நிலை மற்றும் கருத்துக்களை விளக்கி அவர் காங்கிரசில் முக்கியமான அறிக்கை அளித்தார். காலனி நாடுகளில் புரட்சியின்நிலை மற்றும் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் காலனிகளில் புரட்சிக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காததை அவர் ஒளிவு மறைவின்றி விமர்சனம் செய்தார்.
'உலகத்தில் காலனிகள் இருப்பதைப் பற்றி கம்யூனிஸ்ட் அகிலத்துக்குத் திரும்பத்திரும்ப நினைவுபடுத்துவதற்கும் அவை எத்தகைய ஆபத்தான நிலைமையில் இருக்கின்றன. அவற்றின் எதிர்காலத்தைக் காப்பது புரட்சியின் கடமை என்று வலியுறுத்து வதற்காகவும் நான் இங்கே வந்திருக்கிறேன். உலகப் பாட்டாளி வர்க்கம் குறிப்பாக காலனிகளை வைத்திருக்கின்ற நாடுகளின் பாட்டாளிவர்க்கத்தின் எதிர்காலத்தை காலனிகளிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் எதிர்காலத்திடமிருந்து பிரிக்க முடியாது. இதை நீங்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே காலனியாதிக்கப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வதற்கு எனக்குத் தரப்படுகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் நான் பயன்படுத்துவேன்.'"
அவர் அதிகமான அழுத்தத்துடன் தொடர்ந்து பேசினார். 'ஏகாதிபத்தியநாடுகளிலிருந்து வந்திருக்கின்ற பிரதிநிதிகளின் சொற்பொழிவுகளைக் கேட்டபொழுது அவர்கள் பாம்பின் வாலில் அடித்து அதைக் கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள் என்ற

ஹோ-சி-மின் 35
உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் விஷமும் , வீரியமும் இப்பொழுது தலைமை நாடுகளில் அல்ல. காலனிகளில் தான் குவிந்திருக்கிறது, என்பது நீங்கள் அறிந்த விஷயம்' தேசிய விடுதலைப் புரட்சியின் புரட்சிகர தாக்குதலின் முன் முயற்சியையும் உணர்ச்சியையும் அவர் வலியுறுத்தினார். காங்கிரசில் கலந்து கொள்கின்ற பிரதிநிதிகளுடைய கவனத்தை காலனிகள் மீது குவிப்பது என்னுடைய சொற்பொழிவின் நோக்கம். உலகப் பாட்டாளிவர்க்கத்தின் எதிர்காலம் ஏகாதிபத்திய அரசுகளுக்கு உணவு மற்றும் ஊழியர்களை அளிக்கின்ற காலனிகளைப் பெருமளவுக்கு சார்ந்திருக்கிறது. ஏகாதிபத்திய அரசுகளை நாம் ஒழிக்க விரும்பினால், நாம் முதலாவதாகவும் முதன்மையாகவும் காலனிகளை விடுதலை செய்யவேண்டும்.'
அவர் காலனிகளின் நிலைமை மற்றும் சமூகப் பண்புகளை புள்ளி விவரங்களின் உதவியுடன் ஸ்தூலமாகப் பகுப் பாய்வு செய்தார். கம்யூனிஸ்ட் அகிலமும் எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் போர்த்திட்ட மற்றும் செயல் தந்திர முறைகளை வகுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர இயக்கம் தொடர்ச்சியாக முன்னேறுவதற்குப் பொருத்தமா நடவடிக்கைகளை வகுக்கவேண்டும்.
தேசிய மற்றும் காலனியாதிக்கப் பிரச்சினைகளைப் பற்றி லெனினுடைய வாதங்களை அவர் எடுத்துக் கூறி உலகெங்கிலு முள்ள கம்யூன்ஸ்டு மற்றும் தொழிலாளர் கட்சிகள் காலனிகளின் விடுதலையைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அந்த அக்கறை வார்த்தைகளில் நின்று விடாமல், செயலில், ஸ்தூலமான நடவடிக்கைகளில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் கட்சிப் பத்திரிகையில் காலனியப் பிரச்சினைகளை பற்றி கட்டுரைகள் (குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு பத்திகள் ஒதுக்கப்பட வேண்டும்) தொடர்ச்சியாக வெளியிடப்படவேண்டும்.
கம்யூனிஸ்ட் அகிலம் கிளைகளை அமைத்துள்ள காலனி நாடுகளில் சுதேசிகளை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Page 24
36 ஹோ-சி-மின்
பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும் , கீழைநாடுகளின் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு காலனி நாடுகளிலிருந்து தோழர்களை அனுப்பவேண்டும், கட்சியின் உறுப்பினர்கள் காலனி நாடுகளைப் பற்றி அதிக கவனம் செலுத்தவேண்டும்; பிரான்சில் வேலை செய்கின்ற காலனி நாட்டுத் தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியில் திரட்டுவதைப் பற்றி பிரெஞ்சுத் தொழிலாளர் சம்மேளனத்துடன் (UGCL) உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று அவர் பல ஆலோசனைகளைக் கூறினார்.
ஹோ - சி-மின் தன் முடிவுரையில் பின் வருமாறு கூறினார்; 'தோழர்களே! லெனினுடைய சீடர்கள் என்ற முறையில் காலனியப் பிரச்சினைகள் மற்றும் இதர எல்லாப் பிரச்சினைகள் மீதும் நம்முடைய முழு கவனத்தையும் சக்தியையும் குவித்து அவருடைய விலை மதிப்பற்ற போதனைகளை அமுலாக்க வேண்டும்."
அவருடைய பிரேரணைகளை காங்கிரஸ் வரவேற்றது. அவை ஒவ்வொன்றாக அமுல் நடத்தப்பட்டன. மேற்கு நாடுகளைச் சேர்ந்த சில கம்யூனிஸ்ட் கட்சிகள் குறிப்பாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி காலனிகளில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதில் அதிகமாக கவனம் செலுத்தின.
டூர் சில் நடைபெற்ற பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியின் மாநாட்டிலிருந்து கம்யூனிஸ்டு அகிலத்தின் ஐந்தாவது காங்கிரஸ் வரை (1920-24) ஹோ-சி-மின் வியத்நாமியப் புரட்சிக்குப் பாதை அமைத்ததுடன் கம்யூனிஸ்ட் மற்றும் உலகத் தொழிலாளர் இயக்கத்திற்கும் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்தார். தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னணிப் போராளி என்ற முறையில் காலனி நாடுகளில் புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதில் தீவிரமாகப் பங்கெடுத்தார்.
காலனிகளில் புரட்சியின் பால் தவறான போக்குகளை எதிர்த்துத் தொடர்ச்சியாக விடாப் பிடியாக வீரத் தோடு போராடுவது இக் காலத்தில் அவருடைய முக்கியமான நடவடிக் கையாக இருந்தது. அந்தப் போராட்டம் தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகளைப் பற்றி லெனினுடைய

ஹோ-சி-மின் - 37
ஆய்வுரைகளைத் தற்காப்பதையும் அமுலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததால், அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியில் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது.
பொது எதிரியான உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் காலனிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் ஐக்கியத்தைக் கட்டுவதற்கு அடிப்படை அமைத்தது.
கிழக்கு நாடுகளில் புரட்சியின் பாத்திரம் மற்றும் நிலை பற்றி லெனின் கருத்துகளை அவர் உள்வாங்கினார். காலனிப்புரட்சி ஏகாதிபத்திய நாடுகளில் பாட்டாளிவர்க்கப் புரட்சியுடன் ஒரே தன்மையில் வைக்கப்படவேண்டும் . அவை தலைமை நாடுகளில் புரட்சியைச் சார்ந்திருக்கவேண்டும் என்று கருதக்கூடாது என்றார். காலனிப் புரட்சி தன் முன் முயற்சியில் ஈடுபட்டு சொந்தமான முயற்சிகளைச் செய்திட வேண்டும். தலைமை நாடுகளில் புரட்சி நடப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. முதலாளித் துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறும் கட்டத்தில் , ருஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியின் தாக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகளில் தொழிலாளிவர்க்கம் வெற்றி பெறுவதற்கு முன்னரே காலனி நாடுகளில் மக்கள் வெற்றி அடையக் கூடும். ஆனால் அவர்கள் தமது புரட்சிகர முன் முயற்சியை முழுமையாக செயற்படுத்துவது எப்படி என்பதை அறிந்திருக்கவேண்டும்.
தேசிய விடுதலைப் புரட்சி வெற்றி அடையவேண்டும் என்றால் அது பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பாதையில் செல்ல வேண்டும்; தேசிய விடுதலை வர்க்க விடுதலையுடன் இணைந்து செல்ல வேண்டும் தேசிய சுதந்திரத்தை சோஷலிசத்திலிருந்து பிரிக்க முடியாது என்று ஹோ-சி-மின் சுட்டிக்காட்டினார். 'தொழிலாளி வர்க்கத்தை விடுதலை செய்தால் மட்டுமே நாம் தேசிய இனத்தை விடுதலை செய்யமுடியும். இரண்டு விடுதலைகளும் கம்யூனிசத் துக்கும் உலகப் புரட்சிக்கும் அடிப்படையாகும்' என்று அவர் மிகவும் முந்திய காலமாகிய 1921ஆம் ஆண்டில் கூறினார்.

Page 25
38 ஹோ-சி-மின்
தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவேண்டுமானால் புரட்சியின் கடமை, குறிக்கோள், சக்திகள் மற்றும் தலைமைப் பாத்திரத்தைப் பற்றி காலனி மக்கள் சரியான பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். காலனி மக்களுடைய பிரதான எதிரி ஏகாதிபத்தியமும் அதன் நிலப்பிரபுத்துவக் கையாட்களுமே என்று ஹோ-சி-மின் கூறினார். அந்த எதிரியை ஒழிப்பதற்கு அவர்கள் தமது சக்தியை ஒன்று திரட்டவேண்டும்.
வர்க்க விடுதலை, தேசிய விடுதலை மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து மனிதகுலத்தின் விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரே வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை ஹோ-சி-மின் நன்றாக அறிந்திருந்தார்.
தேசிய விடுதலைப் புரட்சியில் விவசாய வர்க்கத்தின் பாத்திரத்தையும் அவர் நன்றாக உணர்ந்திருந்தார். விவசாய வர்க்கத்தின் பிரச்சினையை உரிய முக்கியத்துவத்துடன் எழுப்பிய முதல் வியத்நாமியர் அவரே. அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி-விவசாயி கூட்டணியின், பாத்திரத்தை அவர் வலியுறுத்தினார்.அவர் பின்வருமாறு கூறினார்: 'விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து புரட்சிக்குத் தலைமை தாங்கி இறுதி வெற்றிக்கு இட்டுச் செல்கின்ற வரலாற்றுப் பாத்திரம் நமது காலத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கே உரியது. விவசாயிகள் தங்களை பிரதான புரட்சிகர சக்தி என்று சொல்வது வெறும் சந்தர்ப்பவாதம். அது தீவிரவாதம், அராஜகவாதம் மற்றும் இனவெறி அது மார்க்சிய லெனினியத்துக்கு துரோகம் செய்வதற்கு இட்டுச் செல்லும்" என்று கூறினார்.
வரலாற்றில் பெருந்திரளான மக்களுடைய பாத்திரத்தைப் பற்றி மார்க்சிய லெனினிய நிலையைப் புரிந்துகொண்ட ஹோ-சி-மின் பெருந்திரளான மக்களுடைய புரட்சிகர வலிமை வெல்ல முடியாதது என்று முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர்கள் தொழிலாளி வர்க்கத் தலைமையில் , பிரெஞ்சு காலனியவாதிகள் மற்றும் அவர்களுடைய நிலப் பிரபுத் துவக் கையாட்களின் நுகத்தடியை நொறுக்குவார்கள்.

ஹோ-சி-மின் 39
வியத்நாமியப் புரட்சியின் பாதையில் ஒளிவீசிய நட்சத்திரம் ஹோ-சி-மின். அவர் வியத்நாமியப் புரட்சியின் போர்த்திட்டம், செயல் தந்திரம் , முறைகள் ஆகியவற்றின் அடிப்படையான பிரச்சினைகளை முதலில் சுட்டிக் காட்டினார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்கு அவை தலைமையான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன.

Page 26
4.
வியத்நாமில் தொழிலாளி வர்க்கக் கட்சியை நிறுவுவதற்குத் தயாரித்தல் மற்றும் உலகப் புரட்சி இயக்கத்தில் பங்கெடுத்தல் (1924-30)
முதலாவது உலகப்போர் முடிவடைந்த பிறகு நம் மக்களின் தேசபக்தி இயக்கம் வளர்ச்சி அடைந்தது. வியத்நாமியத் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான கட்சி நாட்டிற்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கோரியது. சோவியத் யூனியனில் சிறிது காலம் தங்கியிருந்து சோவியத் சமூகத்தையும் மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளில் கட்சியைக் கட்டும் அனுபவத்தையும் ஆராய்ந்த பிறகு 1924ஆம் ஆண்டில் ஹோ-சி- மின் கான்டனுக்கு (சீனா) சென்றார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்தார்.
அப்பொழுது சீனாவில் ஆட்சியிலிருந்து குவோமின் டாங் அரசாங்கம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைப்புக் கொள்கையைக் கடைப் பிடித்ததால், சோவியத் அரசாங்கம் போரோடின் தலைமையில் ஒரு தூதுக் குழுவை சீனாவுக்கு அனுப்பியது. ஹோ-சி-மின் லி-ரூயி மற்றும் வாங் என்ற புனைபெயரில் அந்தக் குழுவுக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வியத்நாமின் பிரெஞ்சு ஆளுநரைக் குண்டு வீசிக் கொலை செய்வதற்கு பாம்-ஹோங்-தாய் முயற்சி செய்தார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் ஹோ - சி-மின் கான்டனுக்கு வந்தபொழுது அந்த குண்டுவீச்சின் அதிர்வுகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன. அவர் தனிநபரைக் கொலை செய்வதை ஆதரிக்கவில்லை என்றாலும் அது மிகவும் முக்கியமான சம்பவம் என்று கருதினார்.

ஹோ-சி-மின் 41.
'பாம்-ஹோங்-தாயின் குண்டுவீச்சு போராட்ட ஜ்வாலையை மறுபடியும் எழுப்பியது. சிறிய வானம் பாடிப் பறவை வசந்த காலத்தை அறிவிப்பதைப் போல தேசியப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது என்று அது அறிவித்தது" எழுதினார்.
அந்த சமயத்தில் பான்-போய்-செள வியத்நாம் சீரமைப்புச்
என்று அவர்
சங்கத்தை வியத்நாம் தேசியக் கட்சியாக மாற்றியிருந்தார். அதன் செயல்திட்டம் சீனாவின் குவோமின் டாங் கட்சியின் செயல்திட்டத்தை ஓரளவுக்கு ஒத்திருந்தது. ஹோ - சி-மின் புரட்சிகரவழி மற்றும் முறைகள் குறித்து சில ஆலோசனைகளைத் தெரிவித்து பான் - போய் - செளவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு முன்பு பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் அவரைக் கைது செய்து 1925ஆம் ஆண்டில் வியத்நாமுக்குக் கொண்டுவந்தார்கள்.
ஹோ-சி-மின் மேலே கூறப்பட்ட புரட்சி சங்கங்களைச் சேர்ந்த இளம் தேசபக்தர்கள் பலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் வியத்நாமிலிருந்து வந்த வேறு பலரையும் சேர்த்துக்கொண்டு அரசியல் ஊழியர் பயிற்சிப் பள்ளியை* ஆரம்பித்தார். இந்த இளைஞர்களைப் புரட்சிகர ஊழியர்களாகப் பயிற்றுவித்து வியத்நாமின் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு அங்கே அனுப்புவது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதங்கள் வரையிலும் வகுப்புகள் நடைபெற்றன. மாணவர்களுக்குப் பத்து பாட வகுப்புகள் நடத்தப்பட்டன. சுமார் இருநூறு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் ஊழியர் பயிற்சிப் பள்ளியை நடத்துவதில் நிதிப் பிரச்சினை மற்றும் பல கஷ்டங்கள் குறுக் கிட்டன. ஹோ-சி-மின் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வியத்நாம் புரட்சிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஊழியர்களின் முதல் அணியைத் தயாரிப்பதில் வெற்றி பெற்றார். டிரான்-பூ, லெ - ஹோங்-போங், ந்கோ-கியா-டூ மற்றும் இதரர்கள் முதல் அணியில் முக்கியமான
வர்கள்.

Page 27
42 ஹோ-சி-மின்
ஹோ - சி-மின் பள்ளிக்கூடத்தின் பிரதான ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்தார். சில சமயங்களில் மொழிபெயர்ப்பாள ராகவும் வேலை செய்தார். அவர் தத்துவத்தை நடைமுறையுடன் சம்பந்தப்படுத்தி வகுப்புகளை நடத்தினார். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதற்கும் நினைவில் வைத்திருப்ப தற்கும் அது பொருத்தமான முறையாக இருந்தது. பள்ளியில் தத்துவம் மற்றும் அரசியல் பாடங்களுடன் பொது அறிவு, அந்நிய மொழிகள் கற்பிக்கப்பட்டன.
ஹோ -சி-மின்னுடைய நேரடியான வழிகாட்டுதலில் பாடங்களைக் கற்ற மாணவர்கள் சித்தாந்தம் மற்றும் அரசியல் துறைகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்தார்கள். அவர்களுடைய தேசபக்தி தூண் டிவிடப்பட்டு, வியத்நாம் புரட்சியின் சரியான திசைவழி மற்றும் முறையை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்களிடம் கம்யூனிஸ்ட் பண்புகள் வளர்ந்தன. அவர்களில் பலர் வியத்நாமுக்குச் சென்று தளங்களை அமைத்தார்கள். புரட்சிப் போராட்டத்துக்குப் பிரச்சார வேலை, ஸ்தாபனத்தைக் கட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டதுடன் தலைமையும் ஏற்றார்கள்.
ஹோ -சி-மின் அரசியல் ஊழியர் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தது மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. வியத்நாமில் புரட்சிக்குத் தயாரிப்புச் செய்கின்ற மார்க்சிய லெனினிய அரசியல் ஊழியர்களின் முதல் அணி உருவாக்கப் பட்டது. நம் கட்சியை நிறுவுவதில் முக்கியமான கடமை நிறைவேற்றப்பட்டது.
1925ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹோ-சி-மின் அரசியல் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்வரிசையான பாடங்களைத் தயாரித்தார்.
1927ஆம் ஆண்டில் ஆசியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் பிரச்சாரக் கமிட்டி புரட்சிகரப்பாதை' என்னும் தலைப்பில் இந்தப் பாடங்களை வெளியிட்டது.
ஹோ-சி-மின் இந்தப் புத்தகத்தில் முற்றிலும் புரட்சிகரமான சித்தாந்தத்தை வெளியிட்டார். ஒருவர் வாழ்வதற்கு விரும்பினால்

ஹோ-சி-மின் 43
புரட்சி செய்யவேண்டும் என்று அவர் எடுத்துக் காட்டினார். புரட்சி செய்வதற்கு உறுதி, தியாகம், விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை அவசியம். ஆகவே புரட்சி ஏன் இன்றியமையாதது என்பதை ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்திருக்கவேண்டும். அவர் இந்தப் புத்தகத்தில் புரட்சியாளருடைய குணங்களை விளக்கினார். புரட்சிகர ஒழுக்கம் , சுறுசுறுப்பு, சிக்கனம் , பாரபட்சமின்மை, தன் தவறுகளைத் திருத்திக் கொள்கின்ற மனம், தற்பெருமை மற்றும் ஆணவம் இல் லாதிருத்தல் , சொன்ன சொல் லைக் காப்பாற்றுதல் , கொள்கையில் உறுதி, தியாக உணர்ச்சி, பொருளாதார முறையில் பயன் பெற விரும்பாமை, இதரவை புரட்சியாளருடைய குணங்களாகும் வியத்நாமில் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான கட்சியை நிறுவுவதற்கு சித்தாந்த மற்றும் அரசியல் தயாரிப்பில் புரட்சிகரமான உணர்வும் புரட்சிகர ஒழுக்கமும் இன்றியமையாதவை என்று அவர் கருதினார்.
புரட்சி வெற்றிபெறுவதற்கு அரசியல் ஊழியர்கள் புரட்சிகரமான குணங்களைக் கொண்டிருப்பதுடன் மார்க்சிய லெனினிய தத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களாகவும் சரியான புரட்சிகரத் திசைவழியைக் கடைப் பிடிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். புரட்சிகரமான தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் பொழுது ஹோ - சி-மின் தன்னுடைய புத்தகத்தில் லெனினுடைய பிரபலமான வாசகத்தை மேற்கோளாகக் காட்டினார்.
"புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்கமுடியாது. ஒரு கட்சி முன்னணிப் படைத் தத்துவத்தினால் வழிகாட்டப் படுகின்ற பொழுதுதான் முன்னணிப் போராளி என்னும் பாத்திரத்தை நிறைவேற்ற முடியும்.'
வியத்நாம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து வீரத்தோடு போராடி யிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதும் தோல்வி அடைந்தார்கள். ஏனென்றால் அவர்களிடம் மார்க்சிய லெனினியத் தத்துவம் இல்லை; சரியான புரட்சிகரத் திசைவழியும் முறையும் இல்லை; சர்வதேச நிலையைப் பற்றி எதிரிக்கும் தங்களுக்கும்

Page 28
44 ஹோ-சி-மின்
இடையில் சக்திகளின் சமநிலையைப் பற்றி 'போர்த்திட்டம்' மற்றும் 'செயல் தந்திரம்' பற்றி சரியான புரிதல் இல்லை. அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. 'அவர்கள் தவறான சமயத்தில் போராடினார்கள். போராட வேண்டிய சமயத்தில் சும்மா இருந்தார்கள்.' அதனால் தான் புரட்சிக்காரர்கள் மார்க்சிய லெனினியத் தத்துவத்தை உலகப் புரட்சியின் நிலைமை மற்றும் அனுபவத்தை மக்களுக்கு விளக்கிச் சொல்வது இன்றியமையாதது.
வியத்நாமியப் புரட்சியின் உடனடிக் கடமை தேசிய விடுதலை என்பதை ஹோ - சி-மின் தெளிவாக எடுத்துக் கூறினார். அதே சமயத்தில் புரட்சியின் இலட்சியம் சோஷலிசம் என்பதை சுட்டிக் காட்டினார். வியத்நாம் சமூகத்தின் தன்மை மற்றும் தனிவகைக் கூறுகளை ஆழமாகப் புரிந்துகொண்டு தொழிலாளி வர்க்கத்தின் நிலையில் உறுதியாக நின்று தேசிய மற்றும் காலனியாதிக்கப் பிரச்சினையில் லெனினிசத் தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு ருஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் அனுபவத்தை நம்முடைய நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு படைப்பு சக்தியுடன் கையாண்டு வியத்நாம் புரட்சியின் திசைவழி தேசிய விடுதலையிலிருந்து சோஷலிசத்திற்கு முன்னேறுவது என்று ஹோ - சி-மின் வழிகாட்டினார். அவர் வற்புறுத்திய தேசிய விடுதலைப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் ஒரு ரகம், (அது இப்பொழுது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று சொல்லப்படுகிறது); இது முதலாளித் துவக் கட்டத்துக்குள் நுழையாமல் நேரடியாக சோஷலிஸ்ட் புரட்சிக்கு முன்னேறும் . வளர்ச்சி குறைவான நாடுகளில் புரட்சியைப் பற்றி லெனின் ஆய்வுரைகளை அவர் படைப் பாற்றலுடன் வளர்த்துக் கூறிய துறைகளில் இது ஒன்றாகும்.
வியத்நாம் புரட்சி தேசிய விடுதலைப்புரட்சி ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களுடைய ஆதரவாளர்களான அரசர் மற்றும் நிலப் பிரபுத்துவ மன்டாரின்களையும் (mandarin) ஒழிப்பது அதன் உடனடிக் கடமை ஆகும். புரட்சியின் எதிரிகளை முறியடிப்பதற்கு புரட்சிகர சக்திகளைத் திரட்டவேண்டும். பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளால் ஒடுக்கப்பட்டு சுரண் டப்படுகின்ற

ஹோ-சி-மின் 45
மக்கள்தான் நாட்டிலுள்ள புரட்சிகர சக்திகள் என்று ஹோ-சி-மின் சுட்டிக் காட்டினார். தொழிலாளர்களும் விவசாயிகளும் புரட்சி யின் பிரதான சக்திகள்; ஏனென்றால் அவர்களே மிகவும் அதிகமான ஒடுக் குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகி யிருப்பதுடன் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருப்பவர்கள். ஆக, நாட்டை விடுவிப்பது என்பது முதன்மை யாக தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் விடுதலை அளிப்பதாகும் என்று அவர் கருதினார்.
புரட்சி பெருந்திரளான மக்களுடைய பொதுவான செயல்; அது சிலரால் மட்டும் ஏற்படுவதல்ல என்று அவர் கூறினார் வியத்நாமிய மக்களை மத்தியப் பகுதியினர் தெற்குப் பகுதியினர், வடக்குப் பகுதியினர் என்று பிரிப்பதும் அவர்களை அதிகாரத்தின் மூலம் ஏமாற்றுவதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுடைய கொள்கை. ஆகவே புரட்சி வெடிப்பதற்கு நாம் முதலில் எல்லாப் பிரிவினருடைய அரசியல் உணர்வைத் தூண்டி அவர்களை அமைப்பு ரீதியாக்கி, ஒற்றுமைப்படுத்தி, போராட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், இதரர்களுக்குத் தனி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும்.
வியத்நாமிய புரட்சி உலகப் புரட்சியின் பிரிக்கமுடியாத பகுதி, அது கம்யூனிஸ் டு அகிலத்தின் திசைவழியை பின்பற்றும் , பிரெஞ்சுப் புரட்சியுடனும் மற்ற காலனி நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களுடன் அதற்கு நெருக்கமான தொடர்புள்ளது என்பதையும் ஹோ-சி-மின் சுட்டிக் காட்டினார்.
உலகப் புரட்சி அனுபவத்தைப் பொறுத்தமட்டில் அவர் மகத்தான அக்டோபர் புரட்சியிலிருந்து படிப்பினைகளைப் பெற்றார். பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சியின் அனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டார். பிரெஞ்சுப் புரட்சியும் அமெரிக்கப் புரட்சியும் தீவிரமற்ற முதலாளித்துவப் புரட்சிகள் என்று அவர் கூறினார். ருஷ்யாவின் அக்டோபர் புரட்சி மட்டுமே உண்மையான புரட்சி; ஏனென்றால் அது உழைக்கும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம், சமத்துவம், மகிழ்ச்சியை அளித்தது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களினங்கள் தமது விடுதலைக்குப்

Page 29
46 ஹோ-சி-மின்
போராடுவதற்கு ருஷ்யப் புரட்சி உதவி செய்தது. பெருந்திரளான மக்களுடைய, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பலத்தின் மீது அமைந்திருந்தால் மட்டுமே, நம்மிடம் ஒற்றுமையான, வீரமான, உறுதியான அர்ப் பணிப்புடைய மார்க்சிய லெனினியக்கட்சி இருந்தால் மட்டுமே புரட்சி வெற்றிபெற முடியும் என்பதை அக்டோபர் புரட்சி நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.
புரட்சிகர சக்திகளை அமைப்பு ரீதியாக்கி ஒன்றுபடுத்துவதற்கு சரியான புரட்சிகர திசைவழி மற்றும் முறையை உருவாக்குவதற்கு புரட்சிகரமான கட்சி இன்றியமையாதது. அத்தகைய கட்சியின் மூலம்தான் நாட்டு மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டி கிளர்ச்சி செய்வதற்குத் தூண்ட முடியும் , மற்ற நாடுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களினங்களுடனும் பாட்டாளிவர்க்கத்தின ருடனும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும். அனுபவமுள்ள படகோட்டி மட்டுமே படகை நன்றாகச் செலுத்தமுடியும்; அதைப் போல கட்சி உறுதியாக அமைக்கப்பட்டிருந்தால் தான் புரட்சி வெற்றி பெறமுடியும் . கட்சி உறுதியாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு மார்க்சிய லெனினிய உட்கரு (Core) இருக்கவேண்டும். கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தக் கொள்கையை புரிந்துகொண்டு செயல்படவேண்டும் . இந்தக் கொள்கை இல்லாத கட்சி அறிவு இல்லாத மனிதனுக்குத் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்குச் சமம். 'இப்பொழுது பல தத் துவங்களும் கோட்பாடுகளும் இருக்கின்றன; அவற்றில் மிகவும் உண்மையானது நம்பிக் கையானது, புரட்சிகரமானது லெனினிசமே" என்றார் ஹோ-சி-மின்.
‘வாழவேண்டும் என்றால் புரட்சி செய்யவேண்டும். சுதந்திரத்தையும் விடுதலையையும் மீண்டும் பெறுவோம் என்ற உறுதி வேண்டும்; அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் சுதந்திர மனிதனாக மடிவேன் என்று முழங்கவேண்டும். துன்பங்களுக்கும் தியாகம் செய்வதற்கும் அஞ்சாமல் ஒவ்வொரு தலைமுறையும் தொடர்ச்சியாக உறுதியான, அச்சமில்லாத நீண்ட போராட்டத்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.' சோஷலிசத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள சுதந்திரம் மற்றும் விடுதலையே புரட்சிப் பாதை இந்த சகாப்தத்தின் புரட்சிகரமான போக்கு;

ஹோ-சி-மின் 47
மனித சமூகத்தின் இன்றியமையாத வளர்ச்சி விதி. அது மார்க்சிய லெனினியத்தின் முழுமையான புரட்சிகர சித்தாந்தம்; வியத்நாம் தேசிய இனத்தின் மிகவும் சிறந்த மரபுகளுடன் நெருக்கமுடைய தொழிலாளிவர்க்கத்தின் புரட்சிகர உணர்ச்சி.
புரட்சிகரப் பாதை வியத்நாமியப் புரட்சியில் மாபெரும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப் படுவதில் நமது கட்சியின் செயல் திட்டத்துக்கு அடிப்படையைத் தயாரிப்பதில் அது தலைமையான பாத்திரம் வகித்தது. (அந்த செயல்திட்டம் 1930ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமுலுக்கு வந்தது). M
அந்த செயல்திட்டம் மேலும் வளர்க்கப்பட்டு முழுமை யாக்கப்பட்ட பிறகு முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தினுள் நுழையாமல் சோஷலிஸ்ட் புரட்சிக்கு நேரடியாக முன்னேறுகின்ற தேசிய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் திசை வழிக்கு அடிப்படையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைகின்ற பாதையாகவும் அது இருந்தது.
வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்கு அடித்தளம் அமைக்க ஹோ-சி-மின் 1925ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் கான் டன் நகரத்தில் இளம் புரட்சித் தோழர்கள் சங்கத்தை , அமைத்தார். ஆரம்ப கட்டத்திலேயே அமைப்பு விதிகள் மற்றும் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் நோக்கங்களும் இலட்சியங்களும் "புரட்சிகரப் பாதையில் விரித்துக் கூறப்பட்டன.
வியத்நாம் இளம் புரட்சித் தோழர்கள் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்று மிகவும் நெருக்கிப் பின்னப்பட்ட ஸ்தாபனமாக இருந்தது. அது ஜனநாயக மத்தியத்துவத்தைக் கடைப்பிடித்தது; சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தின் மூலம் வளர்ச்சி அடைந்தது.
புரட்சிகர ஒழுக்கத்தை மார்க்சிய லெனினிய அடிப்படையில் விளக்கியும் பெருந்திரளான மக்களுடைய போராட்டத்தில் செய்முறையான பயிற்சியினாலும் வியத்நாம் இளம் புரட்சித் தோழர்களுடைய சங்கத்தின் உறுப்பினர்கள் அநேகமாக எல்லாருமே உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாக வளர்ச்சியடைந்து

Page 30
48 s ஹோ-சி-மின்
நமது கட்சியின் செயல் வீரர்களாக இருந்தார்கள். சங்கத்தின் தலைமையில் நமது தொழிலாளிவர்க்கப் போராட்டமும் நமது மக்களுடைய தேசபக்தி இயக்கமும் இணைந்து செயல்பட்டு நாடு முழுவதிலும் வலிமையான தேசிய ஜனநாயக அலை உருவானது.
வியத்நாம் தொழிலாளர் இயக்கம் மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கிக் கொண்டதிலிருந்து அரசியல் உணர்வு மற்றும் போராட்ட அமைப்பில் புதிய மாற்றங்களை அடைந்திருந்தது. வியத்நாம் இளம் புரட்சிகரத் தோழர்கள் சங்கம் கம்யூனிச நோக்கு, மக்கள் மத்தியில் வேலை செய்தல் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேலை செய்தல், வியத்நாம் தொழிலாளிவர்க்கத்துக்கு அரசியல் களத்தில் வழிகாட்டிச் செல்லுதல் ஆகிய அம்சங்களில் நம் நாட்டில் முதல் புரட்சிகர ஸ்தாபனமாக இருந்தது.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் புரட்சிகர அறிவு ஜீவிகளின் புரட்சி இயக்கம் வியத்நாம் இளம் புரட்சிகரத் தோழர்களின் சங்கத்திற்குள் உருவெடுக்க ஆரம்பித்தது. அதற்கு நாடு முழுவதும் நெருக்கமான தொடர்புகள் இருந்தன.°
தொழிலாளிவர்க்கத்தின் அரசியல் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படை அமைப்பதற்கு ஹோ - சி-மின் கம்யூனிஸ்டுகளை தலைமைப் பகுதியாகக் கொண்ட இளம் புரட்சிகரத் தோழர்கள் சங்கத்தை அமைத்தார். தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளிவர்க்க அறிவுஜீவிகள், மத்தியில் தேசபக்தியை முழுமையாகத் தூண்டி அவர்களுக்கு மார்க்சிய லெனினிசம் மற்றும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தில் பயிற்சியளித்து அவர்களை வியத்நாமிய கம்யூனிஸ்டுகளாக மாற்றுவது அதன் நோக்கம். மாறும் கட்டத்துக்குரிய ஸ்தாபனம் என்ற முறையில் சங்கம் அக்காலத்து வியத்நாமிய நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
புரட்சிகரமான அறிவுஜீவிகள் மூலம் விஞ்ஞான சோஷ லிசத்தைத் தொழிலாளிவர்க்கம் மற்றும் உழைக்கும், மக்களிடம் பரப்பவேண்டிய அவசியத்தைப் பற்றிய பொது அனுபவத்தை மெய்ப்பிக்கின்ற சரியான நடவடிக்கை அது. இந்த அனுபவத்தை

ஹோ-சி-மின் 49
கம்யூனிஸ்டு அகிலத்தின் ஆறாவது மாநாடு (1928 செப்டம்பர்) நிரூபித்தது. 'பெரும் பான்மையான காலனி மற்றும் அரைக் காலனி நாடுகளில் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிகமான கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஆரம்பத்தில் குட்டி முதலாளி வர்க்கத்திலிருந்து விசேஷமாக புரட்சிகரமான அறிவுஜீவிகள் மாணவர்கள் பகுதியிலிருந்துதான் வந்தார்கள். ஏகாதிபத்தியத்தை மிகவும் உறுதியாக எதிர்ப்பது கம்யூனிஸ்ட் கட்சி என்று அவர்கள் கருதியதால் அவர்கள் கட்சியில் சேர்ந்தார்கள்.'
வியத்நாமின் இளம்புரட்சிகரத் தோழர்கள் சங்கம் பிற்காலத்தில் நம் கட்சியின் வளர்ச்சிக்கு அரசியல் சித்தாந்த, ஸ்தாபனத் தயாரிப்புகளில் மிகவும் முக்கியமான வரலாற்றுப் ப்ாத்திரத்தை வகித்தது. V
சங்கத்தின் குறிக்கோள்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக ஹோ-சி-மின் 'இளமை'? என்ற வார இதழை வெளியிட்டார். இந்த வார ஏடு பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் செய்த காட்டு மிராண்டித்தனமான குற்றங்களை அம்பலப்படுத்தி அவர்களைப் பற்றி வெறுப்பைத் தூண்டியது. ஸ்தூலமான ஆதாரங்கள் மற்றும் தெளிவான வாதங்களுடன் இளமை ஏடு "லெ பரியா'வின் பணியைத் தொடர்ந்தது. வியத்நாமில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எல்லா அம்சங்களிலும் கண்டனம் செய்தது. அதே சமயத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளான அரசர் மற்றும் நிலப் பிரபுத்துவ மன் டாரின்களின் தந்திரங்களை விளக்கியது; வியத்நாமில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் நிர்மாணிப்பதற்கு உதவியது.
இளமை" கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்கத் தன்மையை சுட்டிக் காட்டி நெருக்கமாக அமைக்கப்பட்ட ஸ்தாபனத்தின் அவசியத்தை வலியுறுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் புரட்சிகரமான குணங்களைக் கொண்டிருப்பதுடன் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது. நமது நாடு மற்றும் வர்க்கத்தின் விடுதலைக்குப் போராடுவதுடன் உலகப் புரட்சிக்கும் பங்களிப்புச் செய்வது கம்யூனிஸ்டுகளுடைய கடமையாகும்.

Page 31
50 ஹோ-சி-மின்
நமது தொழிலாளிவர்க்கம் மற்றும் மக்களிடம் மார்க்சிய லெனினியத்தைப் பரப்புவதில் வலிமையான ஆயுதம் என்ற முறையில் இளமை வார இதழ் கூட்டுப் பிரச்சாரகர், கூட்டுக் கிளர்ச்சிக்காரர், கூட்டு அமைப்பாளர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றியது.
'குற்றவாளிக் கூண்டில் பிரெஞ்சுக் காலனியம்’ ‘புரட்சிகரப் பாதை', 'லெபரியா' மற்றும் இதர ஆவணங்களின் உதவியுடன் இளமை வார இதழ் நம் கட்சியை நிறுவுவதற்கு தயாரிப்புகளை துரிதப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்புச் செய்தது.* ஹோ - சி - மின் வியத்நாம் தொழிலாளிவர்க்கத்தின் புரட்சிக் கட்சியை நிறுவுவதற்குத் தயாரிப்புகளை செய்துகொண்டிருக்கின்ற பொழுது 1926ஆம் ஆண்டில் கான்டனில் நம் நாட்டிலேயே முதல் பயனீர்கள் குழுவை அமைத்தார். எதிர்காலத்தில் புரட்சியின் போர் குணமிக்க ஊழியர்களாக அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அவருடைய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார். லி-டு-ட்ரோங் என்பவர் அவர்களில் ஒருவர். அவர் கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தில் முதல் உறுப்பினர் என்ற பெருமைக்கு உரியவர். அவர் தன் உடலில் கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காகவும் மக்களின் புரட்சிகர இலட்சியத்துக்காகவும் பாடுபட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஹோ-சி-மின் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்கு நாடுகள் பிரிவில் செயற் குழுவின் உறுப் பினர் என்ற முறையிலும் விவசாயிகள் அகிலத்தின் செயற்குழுவின் தலைமைக் குழுவின் உறுப்பினர் என்ற முறையிலும் பல ஆசிய நாடுகளில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக விவசாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியம்ான பங்களிப்புச் செய்தார். விவசாயிகள் அகிலத்தின் செயற்குழுவின் சார்பில் 1925 ஆகஸ்ட் 13ஆம் நாளன்று அவருக்கு அனுப்பப்பட்ட இரகசியக் கடிதம் அவருக்கு முக்கியமான பொறுப்புகளைத் தந்தது.
'சீனாவிலும் இந்தோ-சீனாவிலும் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள மற்ற காலனி நாடுகளிலும் விவசாயிகள் மத்தியில் இயக்கவேலை செய்யுமாறு உங்களுக்குப் பொறுப்புத்

ஹோ-சி-மின் 51
தருவதென்று தலைமைக் குழு ஜூலை 31ஆம் நாளன்று முடிவு செய்திருக்கிறது. இந்தக் காலனி நாடுகளுடன் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், அங்கு ஸ்தல விவசாய அமைப்புகள் இருக்குமானால் அவற்றுடன் தொடர்பு வைக்க வேண்டும்; விவசாய சங்கங்கள் இல்லாத இடங்களில் விவசாய சங்கங்களை அல்லது கேந்திரமான குழுக்களை அமைக்க வேண்டும்.'
இந்தோ - சீனாவிலும் குறிப்பாக வியத்நாமிலும் விவசாயிகளை அணி திரட்டுகின்ற நோக்கத்துடன் வியத்நாமில் விவசாயி களுடைய நிலைமையைப் பற்றி பல கட்டுரைகளை ஹோ-சி-மின் எழுதினார். அவர்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டதற்கான காரணங்களை சுட்டிக் காட்டினார்; போராட்டத் திசை வழியை சுட்டிக்காட்டினார். உலக விவசாயிகள் இயக்கத்தின் அனுபவமுள்ள தலைவர் என்ற முறையில் சீன விவசாயி களுடைய புரட்சிகர இயக்கத்துக்கு அவர் முக்கியமான பங்களிப்புச் செய்தார். விவசாயிகள் அகிலத்தின் செயற் குழு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் வெளியிட்ட பல ஆவணங்களை அவர் சீன மொழியில் மொழிபெயர்த்தார். சீன விவசாயிகளை அமைப்பு ரீதியாகத் திரட்டுவதற்கென்று சீனாவின் விவசாயிகளைப் பற்றி பல ஆவணங்களை எழுதினார். 1925 மே மாதத்தில் சீனாவின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2,00,000 கிளைகளின் பிரதிநிதிகளின் முதல் மாநாட்டை குவாங் டுங்கில் கூட்டுவதற்கு சீனாவின் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி செய்தார். நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் சுரண்டப்ப்டுகின்ற மக்களுடைய ஐக்கிய முன்னணியை அமைக்கின்ற நோக்கத்துடன் சீனாவின் தொழிலாளிவர்க்கத்தின் பிரதிநிதிகளுடைய மாநாடு நடைபெற்றது.
மேற்கூறிய இரண்டு மாநாடுகளைப் பற்றி ஹோ - சி-மின் அளித்த அறிக்கைகள் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் விவசாயிகள் அகிலத்தின் செயற்குழு பின்வரும் முடிவுகளை செய்தது.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளி விவசாயி கூட்டணியை அமைக்க வேண்டும். நகரத்திலுள்ள தொழிலாளிவர்க்கத்தை முக்கியமாக

Page 32
-િકી-tfી61 52 ஹிே
நினைத்து கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிப் ல் வர்க்கத்தை அமைப்புரீதியாகத் திரட்டுவதைப் புறச்" கூடாது. ஏகாதிபத்தியத்தையும் தொழிலாளிவர்க் களையும் எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளி விவசாயி வர்க்கமும் ஒன்று சேர வேண்டும் . நில திர்த்துப் யாளர்களின் ஒடுக்குமுறை மற்றும் சுரண் டலை s 5 الي
|க்கத்தின் போராடுவதற்கு அமைப்பு ரீதியான தொழிலாளி ਪ தலைமையில் சீனாவின் விவசாயிகள் அமைப்பு
ட்டப்பட வேண்டும் s a a தலைக்குத் திரட்டப்பட வேண்டும். உழைக்கும் மக்கள் தமது சேர்ந்தால்
ாட்டாளி
Sபுடைமை
தாமே பாடுபட வேண்டும். உழைக்கும் மக்கள் ஒன்று ஏகாதிபத்தியத்தை முறியடிப்பார்கள்.
சேர்க்கும்
ஆசியாக் கண்டத்திலுள்ள புரட்சிகர சக்திகளை ஒன்று) நோக்கத்துடன் ஆசியாவில் ஒடுக்கப்பட்ட மக்களி கழகத்தை அமைப்பதில் ஹோ-சி-மின் பலின் ፍቌ (Ü ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி வடிவமாக அது இருந்தது. அதில் வியத்நாம், சீனா, p இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா ம நாடுகளின் தேசபக்தர்கள் கலந்துகொண்டார்கள். ே சங்கத்தின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
g இதர ா - சி-மின்
கத்துடன் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பொது இயகி ழிற் சங்க ஒருங்கிணைப்புக் கென்று பசிபிக் பிராந்திய ਰਲ சம்மேளனத்துடனும் சுதந்திரம் மற்றும் விடுத/. ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகத்துடனும் அவர் முறை" உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.
படியான
விவசாயி களுக்குப்
கவனம்
ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளிலுள்ள களிடம் புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதில் ஊழியர் பயிற்சி கொடுப்பதற்கு ஹோ - சி-மின் அதிக செலுத்தினார். அவர் இந்த நாடுகளிலிருந்து பல ஊழி தேர்ந்தெடுத்து மாஸ் கோவில் கிழக்கு நாடுகளின் கழகத்துக்குப் படிக்க அனுப்பினார். அவர்கள் முடித்தபிறகு தமது நாடுகளுக்குச் சென்று புரட்சிகர நLT
களில் ஈடுபட்டார்கள்.
ர்களைத் ல் கலைக் u Lq 60) u வடிக்கை

ஹோ-சி-மின் 53
1924ஆம் ஆண்டின் கடைசியிலிருந்து 1930ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையிலும் ஹோ - சி-மின் வியத்நாம் புரட்சிக்கு ஊழியர்களைத் தயாரிப்பதில் அக்கறையுடன் பாடுபட்டார்; வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்குரிய பணிகளை விரைவுபடுத்தினார். அதே சமயத்தில் பல ஆசிய நாடுகளில் புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதற்கு ஊழியர்களைப் பயிற்றுவிப் பதில் அவர் மிகவும் முக்கியமான பங்களிப்புச் செய்தார். கம்யூனிஸ்டு அகிலத்தின் செயற் குழுவின் கீழிருந்த கிழக்கு நாடுகள் பிரிவின் வழிகாட்டுதலில் அவர் ஆசியாவில், குறிப்பாக இந்தோ-சீனாவில் கம்யூனிசத்தைப் பரப்பினார்.
1927 ஏப்ரல் மாதத்தில் சியாங்-கே-ஷேக்கின் துருப்புகள் கான்டன் நகரத்தில் நடத்திய கூட்டத்துக்குப் பிறகு ஹோ-சி-மின் ஷாங்காய் (இப்பொழுது ஹாங்காங் ) நகரத்துக்குச் சென்றார். சிறிது காலத்துக்குப் பிறகு அங்கிருந்து சோவியத் யூனியனுக்குச் சென்றார். மாஸ் கோவில் சிறிது காலம் வேலை செய்தபிறகு பிரஸ் ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரத்துக்குச் சென்றார். அங்கே ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். பிறகு ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இரகசியமான முறையில் பிரான்சுக் குத் திரும்பினார். 1928ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில் கப்பற்பயணம் செய்து சயாமுக்கு (தாய்லாந்து) வந்தார். அங்கே தன் பெயரை சின் என்று அவர் மாற்றிக் கொண்டார். அங்கிருந்த வியத்நாமியர்கள் அவரை மரியாதையுடன் தாவ்-சின் (சின் மாமா) என்று அழைத்தார்கள். சயாமில் வசித்த வியத்நாமியர்கள் ஒற்றுமையுடனும் தேசபக்தியுடனும் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நட்புறவுக் கழகத்தின் சார்பில் அவர்கள் 'ஒற்றுமை' என்ற நாளிதழை நடத்தி வந்தார்கள். அவர் ஆலோசனையின்படி அதன் பெயர் நட்பு' என்று மாற்றப்பட்டது. அதன் உள்ளடக்கம் வியத்நாமியர்களின் பொதுஅறிவுக்குப் பொருந்துகின்ற முறையில் மாற்றப்பட்டது.
வியத்நாம் புரட்சி எவ்வளவு கடினமாக, நெடுங்காலம் நடைபெறுவதாக இருக்கும் என்பதை அவர் அரசியல் ஊழியர்களுக்கு விளக்கினார்; நமது புரட்சியிலும் உலகப்

Page 33
54 ஹோ-சி-மின்
புரட்சியிலும் அவர்களுக்கு நம்பிக் கையூட்டி அவற்றின் எதிர்காலத்தை ஆரூடம் கூறினார். இளைஞர்களுடைய கல்வியில் விசேஷ கவனம் செலுத்தினார். ஊழியர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், தமது வேலையை இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். அவர்கள் சயாமிய மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர் அங்கு வசித்த வியத்நாமியர்களுடன் சேர்ந்து கிணறு வெட்டுதல, பூங்காக்கள் அமைத்தல், பள்ளிக்கூடம் கட்டுவதற்கு செங்கல் சுமந்து செல்லுதல் ஆகிய பணிகளைச் செய்தார்.
1928 -1929ஆம் ஆண்டுகளில் நமது நாட்டில் புரட்சிகர இயக்கம் முழுவேகத்தில் இருந்தது. வியத்நாம் இளம் புரட்சிகரத் தோழர்கள் சங்கம் 'பாட்டாளிவர்க்கத் தன்மையைப் பெறுவதற்கு" தன் உறுப்பினர்களை தொழிற்சாலைகள் சுரங்கங்கள் தோட்டப் பண்ணைகள் ஆகியவற்றுக்கு அனுப்பி, தொழிற் சங்கங்களை அமைத்து மார்க்சிய லெனினியத்தையும் புரட்சிக் கொள்கையை யும் பரப்புமாறு பணித்தது.
அதற்கு முன்பு தொழிலாளர் இயக்கம் தன்னியல்பானதாக கோஷ்டிகள் உள்ளதாக, சிதறியதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அமைப்பு, தலைமை மற்றும் கிளைகளுக்கும் ஸ்தலங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு உள்ள உணர்வு பூர்வமான இயக்கமாக மாறியது.
1929ஆம் ஆண்டின் முடிவிலிருந்து வியத்நாம் தொழிலாளர் இயக்கம் தன் சுதந்திரமான குணாம்சங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தது; அது நமது நாட்டில் தேசிய விடுதலை இயக்கத்தின் மையமாக ஆயிற்று. புரட்சிகரமான தத்துவமும் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் அனுபவமும் நமக்குக் கிடைத்தபடியால் அதிகமாக சுரண்டப்பட்ட நமது தொழிலாளிவர்க்கம் முற்றிலும் புரட்சிகர உணர்ச்சியைப் பெற்றது. அது மிகவும் முற்போக்கான உற்பத்தி முறையைப் பிரதிநிதித்துவம் செய்தது, நாட்டின் அடிப்படையான மற்றும் நிரந்தரமான நலன்களின் உருவகமாக மாறியது. வியத்நாம் மக்களுடைய மரபுவழிப் பட்ட உறுதி மற்றும் அஞ்சாமை முழுமையாக வெளிப்பட்டன.

ஹோ-சி-மின் 55
வியத்நாமிய மக்கள், ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய பெருமை உடையவர்கள். வியத்நாம் தொழிலாளிவர்க்கம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மிகவும் முற்போக்கான வர்க்கமாக இருந்தது. ஏகாதிபத்திய வாதிகள், நிலப் பிரபுத்துவவாதிகள், தேசிய முதலாளிவர்க்கம் ஆகிய மூன்று நுகத்தடிகளைச் சுமந்துகொண்டிருந்தது அந்த வர்க்கம் . அது முற்றிலும் புரட்சிகர உணர்ச்சியைக் கொண்டிருந்தது. வியத்நாமில் விவசாயிகள் இயக்கமும் மற்ற பிரிவினருடைய தேச பக்தி இயக்கமும் எல்லாப் பகுதிகளிலும் பலத்துடன் இருந்தன.
நம் காலத்தின் மிகவும் கூர்மையான சித்தாந்த ஆயுதமாகிய மார்க்சிய லெனினிசம், வியத்நாமியப் புரட்சிக்காரர்களுடைய இதயங்களையும் அறிவையும் வென்றபிறகு காட்டுமிராண்டித்தன மான எந்த எதிரியினாலும் அதைத் தடுக்கமுடியவில்லை.
அரசியல் மற்றும் சித்தாந்தக் களத்தில் அது சீர்திருத்தவாதத்தை
யும் குறுகிய தேசியவாதத்தையும் பின்னால் தள்ளிவிட்டு வியத்நாமியப் புரட்சி இயக்கத்தின் தலைமையைப் பெற்றது.
நமது தொழிலாளர் இயக்கமும் நமது மக்களுடைய தேசபக்தி இயக்கமும் தொழிலாளி வர்க்கக் கட்சி தலைமை தாங்கவேண்டும் என்று கோரின. அத்தகைய கட்சியை நிறுவுவதற்கு நிலைமைகள் பக்குவமடைந்திருந்தன. ஆனால் இந்தப் பிரச்சினை வியத்நாம் இளம்புரட்சிகரத் தோழர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்டபொழுது கருத்து வேறுபாடுகள் தோன்றின. சங்கத்திலும் அதன் தலைமைக் குழுவிலும் போட்டி ஏற்பட்டது.
வியத்நாம் தொழிலாளிவர்க்கத்தின் புதிய ரகக் கட்சியை நிறுவுவதைப் பற்றி பாட்டாளி வர்க்கக் கருத்துக்கும் குட்டி முதலாளிவர்க்கக் கருத்துக்கும் இடையில் எழுந்த போராட்டம் அது. போராட்டத்தின் முடிவில் பாட்டாளிவர்க்கக் கருத்து வெற்றி பெற்றது. இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியும் நிறுவப்பட்டன. இந்த சூழ்நிலையில் டான் வியட் தன் பழைய ஸ்தாபன அமைப்பைத் தக்க வைத்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே அது இந்தோசீன கம்யூனிஸ்ட் சம்மேளனமாக மாறியது. ஆறு மாதங்களுக்குள் மூன்று கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் அடுத்தடுத்து

Page 34
56 ஹோ-சி-மின்
நிறுவப்பட்டன. 1929ஆம் ஆண்டில் தொழிலாளர் இயக்கமும் தேசபக்தி இயக்கமும் வளர்ச்சி அடைவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவது இன்றியமையாதது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. ஆனால் ஒரு நாட்டில் மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பது புரட்சியின் நன்மைக்கு எதிரானதாகும் மர்ர்க்சிய லெனினியக் கோட்பாடுகளும் அதை அனுமதிக்க வில்லை. அந்த நிலைமை சித்தாந்த அரசியல் மற்றும் ஸ்தாபன ஒற்றுமையை பலவீனப்படுத்தும்; தொழிலாளர் இயக்கம் மற்றும் தேசபக்தி இயக்கத்தின் பலத்தைக் குறைக்கும், வியத்நாமில் ஒரேயொரு கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது அக்கால தொழிலாளர் இயக்கம் மற்றும் தேசபக்தி இயக்கத்தின் உடனடித் தேவையாக இருந்தது.
வியத்நாமில் கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்களை ஒன்றுபடுத்தக் கூடிய செல்வாக்கும் தகுதியுமுள்ள தலைவர் வேண்டும் என்பது அன்றைய வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஹோ-சி-மின் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய தலைவராக இருந்தார்.
1929ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தின் முடிவில் அவர் தாய்லாந்தில் இருந்தபொழுது வியத்நாமில் கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பற்றி அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ஹாங்காங்குக்குத் திரும்பினார். வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்.
அந்த மாநாடு 1930 பிப்ரவரி 3-7 தேதிகளில் கெளலுன் நகரில் ஒரு தொழிலாளியின் சிறிய அறையில் நடைபெற்றது.* இரகசியமான விவாதங்கள் ஐந்து நாட்கள் நடைபெற்றன. முடிவில் ஹோ-சி-மின் பிரேரணை செய்தபடி வியத்நாமில் கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்களை ஒற்றுமைப்படுத்தி வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரேயொரு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தோ-சீனா என்ற சொல்லுக்கு மிகவும் விரிவான அர்த்தம் இருக்கிறது. தேசிய இனப் பிரச்சினை மிகவும் முக்கியமானது

ஹோ-சி-மின் 57
என்று லெனினிசம் கற்பிக்கிறது. மற்ற தேசிய இனங்களைக் கட்சியில் சேருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது லெனினிசக் கோட்பாடுகளுக்கு முரணாகும். அன்னாம் என்ற சொல் குறுகிய அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அன்னாம் என்பது வியத்நாமின் மத்தியப் பகுதி மட்டுமே. நம் நாடு பாக்-கி (டோன்கின்), ட்ருங்-கி (அன்னாம்), நாம்-கி- (கொச்சின்-சீனா) ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. வியத்நாம் என்ற சொல் மூன்று பகுதிகளுக்கும் பொருத்தமான சொல். தேசியப் பிரச்சினை பற்றி லெனினிசக் கோட்பாடுகளுக்கு அது முரணானது, அல்ல" என்று அவர் விளக்கினார்.
மாநாட்டில் ஹோ-சி-மின் தயாரித்த செயல்திட்டம்'(உருவரை); போர்த் திட்டம் (உருவரை), கட்சியின் சுருக்கமான விதிகள் மேன்முறையீடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
வியத்நாம் புரட்சி ஜனநாயகப் புரட்சியாக (இப்பொழுது மக்கள் தேசிய ஜனநாயகப் புரட்சி என்று சொல்லப்படுகிறது) இருக்கும். அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை என்ற கட்டத்துக்குள் நுழையாமல் சோஷலிஸ்ட் புரட்சிக்கு முன்னேறும் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளையும் நிலப் பிரபுத்துவ நிலவுடைமையாளர்களையும் முறியடித்து வியத்நாம் முழு சுதந்திரம் அடைதல், விவசாயிகளுக்கு நிலம் கொடுத்தல், தொழிலாளி - விவசாயி- படைவீரர் அரசாங்கத்தை நிறுவுதல், ஜனநாயக உரிமைகளை மக்களுக்கு வழங்குதல், தொழிலாளி - விவசாயி இராணுவத்தை அமைத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவது புரட்சியின் கடமையாக இருக்கும்.
நம் கட்சி தொழிலாளிவர்க்கத்தின் முன்னணிப் படையாக் இருக்கும், பெருந்திரளான மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு முழுத் தகுதியைக் கொண்டிருக்கும் என்பதை செயல் திட்டமும் போர்த் திட்டமும் தெளிவுபடுத்தின. உலக முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் விடுதலை இயக்கத்திடம் ஒருமைப்பாடு, உலகப் பாட்டாளிவர்க்கத்திடம், குறிப்பாக பிரெஞ்சுத் தொழிலாளிவர்க்கத்திடம் நெருக்கமான உறவுகளுக்கு அது L1ாடுபடும்.

Page 35
58 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ஹோ-சி-மின்
கட்சியின் செயல்திட்டம் மற்றும் போர்த்திட்டம் (உருவரைகள்) நமது தொழிலாளிவர்க்கம் மற்றும் மக்களின் தீவிரமான விருப்பங்களைப் புரிந்துகொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன. ஆகவே நாட்டிலுள்ள தேசபக்த மற்றும் ஜனநாயக சக்திகளை தொழிலாளி வர்க்கத்தைச் சுற்றித் திரட்டுவதிலும் வியத்நாம் புரட்சிக்கு தலைமை தாங்குவதிலும் அது வெற்றி பெற்றது.
கட்சியின் சுருக்கமான விதிகள் கட்சியின் இலட்சியத்தை சுட்டிக் காட்டின; வர்க்கப் போராட்டத்தின் மூலம் நாட்டில் முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒழித்து கம்யூனிஸ்ட் சமூகத்தை நிர்மாணிப்பதில் உழைக்கும் மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப் பட்டிருக்கிறது.'
கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்குப் பின்வரும் நிபந்தனைகள் விதியில் குறிப்பிடப்பட்டிருந்தன; கம்யூனிசத்துக்கு முழுமையான விசுவாசம் , கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசைவழி மற்றும் செயல்திட்டத்தைக் கடைப்பிடித்தல்; நமது நாட்டிலும் உலகத்திலும் புரட்சிக்கு தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்பதும், போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்கெடுப்பதும்.
நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்களை ஒன்று சேர்ப்பதற் குரிய முறை மற்றும் திட்டத்தை மாநாடு விவாதித்தது.
கட்சி நிறுவப் பட்டபொழுது கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஹோ - சி-மின் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தாய்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பின் வரும் வேண்டுகோளை வெளியிட்டார். 'வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டிருக்கிறது. அது தொழிலாளிவர்க்கத்தின் கட்சி. ஒடுக்கப்பட்டு, சுரண்டப்படுகின்ற எல்லா மக்களுடைய நலன்களுக்காக புரட்சிக்குத் தலைமை தாங்குவதற்கு பாட்டாளிவர்க்கத்துக்குக் கட்சி உதவி செய்யும் இப்பொழுது முதல் நாம் கட்சியில் சேரவேண்டும் , கட்சியை ஆதரிக்க வேண்டும், கட்சியைப் பின்பற்ற வேண்டும்.'

ஹோ-சி-மின் 59
அவர் வெளியிட்ட வேண்டுகோள்' ஒரு முக்கியமான ஆவணம். உலகத்திலும் வியத்நாமிலுமுள்ள நிலைமையை அது முழுமையாகவும் திறமையாகவும் ஆராய்ந்தது, வியத்நாமியப் புரட்சியின் தத்துவத்தையும், குறிக்கோள்களையும் வகுத்தளித்தது. மொத்தக் கட்சிக்கும் மக்களுக்கும் அது அதிகமாக ஊக்கமளித்தது. கட்சியின் ஸ்தாபக மாநாடு ஒரு காங்கிரசைப் போல, அதே முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஏனென்றால் அது வியத்நாமியப் புரட்சியின் போர்த்திட்டம் மற்றும் செயல் தந்திரத்தை உருவாக்கியது. கட்சியைக் கட்டுவதற்கு அடிப்படை யான கோட்பாடுகளை வகுத்தது.
'கட்சியின் ஸ்தாபகம் வியத்நாமியப் புரட்சியின் வரலாற்றில் மாபெரும் முக்கியத்துவமுள்ள திருப்புமுனையாக இருந்தது. வியத்நாம் பாட்டாளி வர்க்கம் வளர்ச்சி அடைந்துவிட்டது, புரட்சிக்குத் தலைமை தாங்குவதற்கு முழுமையான தகுதியைக் கொண்டிருக்கிறது என்பதை அது நிரூபித்தது' * ." கட்சியின் ஸ்தாபகம் காலத்தின் கட்டாயம். உலக நிலைமையும் உள்நாட்டு நிலைமையும் அதை உருவாக்கின. ஹோ-சி-மின் உலகத் தொழிலாளர் இயக்கம், தேசிய விடுதலை இயக்கம் ஆகியவற்றில் சுறுசுறுப்பாகப் பங்கெடுத்ததன் மகத்தான விளைவு. அவர் பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன் மேற்கொண்ட கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் சிறந்த விளைவு, அரசியல் , சித்தாந்த மற்றும் ஸ்தாபனத் துறைகளில் பத்தாண்டுகள் அவர் செய்த கடுமையான முயற்சிகளின் பலன்.
ஹோ - சி-மின் தொழிலாளர் இயக்கம் மற்றும் தேசபக்தி இயக்கத்துடன் மார்க்சிய லெனினியத்தை இணைத்து 1930ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நமது கட்சியை நிறுவினார்.*

Page 36
5
ஹோ-சி-மின் அந்நிய நாடுகளில் தங்கி வியத்நாம்
புரட்சிக்குத் தலைமை வகித்தார் (1930-40)
வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியபிறகு ஹோ-சி-மின் 1930ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் சயாமுக்கும், ஏப்ரல் மாதக் கடைசியில் மலேயாவுக்கும் சென்றார். அந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் சில பணிகளைச் செய்தார். 1930 மே மாதம் முதல் தேதியன்று அவர் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு ஹாங் காங்குக் குத் திரும்பினார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்காணித்தார். கட்சியின் மத்திய கமிட்டியுடன் சேர்ந்து வியத்நாமில் புரட்சிக்கு வழிகாட்டினார். s
வியத்நாமில் கட்சி நிறுவப்பட்ட உடனே, கட்சி சரியான கொள்கையைக் கடைப் பிடித்ததால், இதற்கு முன்பு நர்ட்டில் எப்பொழுதும் இல்லாத புரட்சிகர எழுச்சி ஏற்பட்டு கட்சி அதற்குத் தலைமை தாங்கியது. தொழிலாளி - விவசாயி கூட்டணியை உருவாக்கியது நகே-டின் ஹ் மாகாணத்தில் பல பிரதேசங்களில் சோவியத் ஆட்சியதிகாரத்தை நிறுவியது. கட்சியின் வீரமான போராட்டங்களின் வரலாற்றில் அது முதல் கட்டமாக இருந்தது.
நாடு முழுவதிலும் ஏற்பட்ட கொந்தளிப்பான புரட்சிகர இயக்கத்துக்கு தலைமை தாங்குவதை வலுப் படுத்துவதற்கு 1930ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஹாங்காங்கில் கட்சி மத்திய கமிட்டியின் முதல் விரிவடைந்த கூட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் ஹோ - சி-மின் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அக் கூட்டத்தில் ஜனநாயகப் புரட்சிக்கு (இப்பொழுது தேசிய ஜனநாயகப்

ஹோ-சி-மின் 61.
புரட்சி என்று சொல்லப்படுகிறது) ஆய்வுரையை விவாதித்து நிறைவேற்றியது. ஹோ-சி-மின்னுடைய தலைசிறந்த சீடர்களில் ஒருவரான தோழர் டிரான் - பூ ஆய்வுரையை எழுதியிருந்தார்.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆணையின் பிரகாரம் கட்சியின் பெயரை இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றுவதற்கு விரிவடைந்த கூட்டம் முடிவு செய்தது. இந்தோ சீனாவில் இன்றைய நிலைமை மற்றும் கட்சியின் உடனடிக் கடமைகளைப் பற்றி தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியின் அதிகாரபூர்வமான மத்தியகமிட்டியைத் தேர்ந்தெடுத்தது,தோழர் டிரான்பூ கட்சியின் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியின் மத்திய கமிட்டியின் முதலாவது விரிவடைந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி ஹோ-சி-மின் கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு அறிக்கை அனுப்பினார். அவர் புரட்சிகரப் பேரெழுச்சியைக் கண்காணித்து ஆலோசனை கூறுவதற்காக ஹாங்காங்கில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் நாட்டில் நகே-டின் வட்டாரத்தில் சோவியத் அமைப்பு வளர்ச்சியடைந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
1931 பிப்ரவரி 19ல் விக்டர் என்ற பெயரில் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற் குழுவுக்கு நகே-டின் ஹ் வட்டார சிகப்பு, சோவியத்தைப் பற்றி அறிக்கை அனுப்பினார். நகே-டின்'ஹ் வட்டாரத்தின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பூகோள நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்த பிறகு அவர் பின் வருமாறு எழுதினார்:
'நகே-டின் ஹ் வட்டாரத்தில் வசித்தவர்கள் பட்டினியில் சிக்கியிருந்தார்கள். அவர்களுடைய குடியிருப்புகள் பரிதாபத்தைத் தூண்டுவதாக இருந்தன. அதிகமான வரிகள், கந்து வட்டி மற்றும் அரசியல் ஒடுக்குமுறையினால் அவர்கள் மேன் மேலும் பரிதாபமான நிலையில் இருந்தார்கள்.”*
அந்த வட்டாரத்தின் புரட்சிகரமான வரலாற்றை அவர் மிகவும் உணர்ச்சிகரமான முறையில் விவரித்தார்.

Page 37
62 ஹோ-சி-மின்
'நகே-டின் ஹ் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் முரட்டுப் பிடிவாதம் உடையவர்கள் என்று ஓர் அபிப் பிராயமுண்டு, பிரெஞ்சுப் படையெடுப்பு மற்றும் தேசியப் புரட்சி இயக்கத்தின் போது (1905-25) இந்த வட்டாரம் நாட்டில் பிரபலமடைந் திருந்தது, இப்பொழுது நடைபெற்ற போராட்டத்தில் நகே-டின்ஹ் வட்டாரத்தின் தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது புரட்சிகரமான மரபுகளை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். நகே-டின் ஹ் வட்டாரம் சிகப்பாக மாறியிருப்பது முற்றிலும் நியாயமே.”*
1930-31ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகரப் பேரெழுச்சி, அதன் பிறகு நகே-டின் ஹ்' வட்டாரத்தில் சோவியத் அமைப்பு ஏற்பட்டதைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்.
'நகே-டின் ஹ் வட்டார சோவியத் வியத்நாமிய உழைக்கும் மக்களின் வீரத்துக்கும் புரட்சிகர உணர்வுக்கும், சான்றாக இருந்தது. அந்த இயக்கம் தோல்வி அடைந்தாலும் , பின்னர் ஏற்பட்ட ஆகஸ்ட் புரட்சியின் வெற்றிக்கு சமூக சக்திகளை உருவாக்கியது' k
நஹே-டின்ஹ் வட்டார சோவியத் அமைப்பைப் பாராட்டுகின்ற அதே சமயத்தில் அவர் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 1930-31ஆம் ஆண்டுகளில் வியத்நாமியப் புரட்சியின் பொதுவான திசைவழியைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: "நாம் நம்முடைய ஆதரவாளர்களைத் திரட்ட் வேண்டும். அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் போராடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் ஸ்தலங்களில் ஆட்சியதிகாரத்தைக் கைப் பற்றுவதைத் தடுக்க வேண்டும்’?
எனினும் அவர் சோவியத் அதிகார அமைப்பை ஏற்படுத்தியதைப் பாராட்டினார். அது பெருந்திரளான மக்களுடைய முன் முயற்சி என்று கருதினார். அதே சமயத்தில் நகே-டின் ஹ் வட்டாரத்தில் கட்சி உறுப்பினர்கள், அரசியல் ஊழியர்கள் பெருந்திரளான மக்கள் மத்தியில் காணப்பட்ட உறுதியான போராட்ட உணர்ச்சியை அவர் பாராட்டினார்.

ஹோ-சி-மின் 63
'துப் பாக்கி குண்டுகளும் வெடிகுண்டுகளும் , இயந்திரத் துப் பாக்கிகளும் நெருப்பு மழையும் ந் கே-டின் ஹ் வட்டாரத்து மக்களுடைய புரட்சிகர இயக்கத்தை நசுக்க முடியாது"
தோழர் ஹோ-சி-மின் ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட் அகிலத் துக்கும் மறுபக்கத்தில் உலக முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட்) மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கும் அவசர வேண்டுகோளை அனுப்பினார். வியத்நாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புரட்சிகர இயக்கத்தைப் பற்றி அதிக கவனம் செலுத்துங்கள், இந்த இயக்கத்தை ஊக்குவியுங்கள், உங்கள் போராட்ட அனுபவத்தை வியத்நாமியப் புரட்சிக்காரர்களுக்குத் தெரிவியுங்கள், நிதி அனுப்பி ஆதரவு கொடுங்கள் மற்றும் இதரவை என்று அவர், கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு காலனியவாதிகள் வியத்நாம் புரட்சிமீது அதீதமான அடக்குமுறையைக் கையாளுவதீை எதிர்த்துக் கண்டன இயக்கம் நடத்துமாறு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை, குறிப்பாக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை, உலகத் தொழிலாளர்களை பணிக்குமாறு கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கேட்டுக் கொண்டார். அகிலம் நம் கட்சியை சுதந்திரமான உட்பிரிவாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் பிரேரணை செய்தார். ۔ நம் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து கடைப்பிடிக்கின்ற புரட்சிகரத் திசைவழி மற்றும் முறைகள் அடிப்படையிலும் 1930-31ஆம் ஆண்டுகளில் புரட்சிகரப் பேரெழுச்சி மற்றும் ந் கே-டின் ஹ் வட்டார சோவியத் ஆகிய மகத்தான சாதனைகளின் அடிப்படையிலும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற் குழுவின் 11வது விரிவடைந்த கூட்டம் (25வது அமர்வில்) 1931 ஏப்ரல் மாதம் 11ம் நாளன்று ஹோ-சி-மின்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வதென்று முடிவு செய்தது.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்கு நாடுகளின் பிரிவு 1931 மே மாதம் 12ஆம் நாளன்று ஹோ-சி-மின்னுக்கு எழுதிய கடிதத்தில் நமது மக்களுடைய வீரமான போராட்டத்தை மிகவும் பாராட்டியதுடன் 1930-31ஆம் ஆண்டுகளின் புரட்சிகரமான போராட்டத்திலும் நகே- டின் ஹ் வட்டாரத்தில் சோவியத் அமைப்பை நிறுவியதிலும் கட்சி சரியான முறையில் தலைமை தாங்கியதையும் ஹோ-சி-மின்னையும் உயர்வாக மதிப்பிட்டது.

Page 38
64 ஹோ-சி-மின்
ஹோ - சி-மின் 1930-31ஆம் ஆண்டுகளில் கட்சியின் தலைமையை வலுப் படுத்துவதற்கு மத்திய கமிட்டிக்குப் பல ஆலோசனைகளைக் கூறினார்.
தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் புரட்சிகரமான போராட்டம் மேன்மேலும் அதிகரித்தபொழுது கட்சியின் தலைமை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, நெருக்கமுடையதாக இருக்க வேண்டியதாயிற்று. ஆகவே, கட்சியை வலுப் படுத்த வேண்டும் , வளர்க்க வேண்டும் என்று ஹோ - சி - மின் வலியுறுத்தினார். கட்சியின் வர்க்கத் தன்மையை அதிகப்படுத்தி கட்சி உறுப்பினர்களுடைய தத்துவார்த்த நிலையை உயர்த்துவதற்கு அவர் பல ஆலோசனைகளைக் கூறினார். ஒரு பக்கத்தில் பிரச்சாரத்துக்கும் கட்சி உறுப்பினர்களின் கல்விக்கும் கட்சியின் மத்திய கமிட்டி ஒரு குழுவை நியமிக்க வேண்டும், கட்சி ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் அமைப்பு விதிகளைப் பற்றி, ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு அரசியல் வகுப்புகள் நடத்தவேண்டும் என்றார். மறுபக்கத்தில் கட்சி உறுப்பினர்கள் தொழிலாளர் இயக்கத்தில் வேலை செய்ய வேண்டும் , தொழிலாளர்கள் மத்தியிலிருந்து கட்சிக்கு உறுப் பினர்களை சேர்ப்பதில் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும் என்றார். கட்சி பெருந்திரளான மக்களுக்கு எப்படி தலைமை தாங்கப் போகிறது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். கட்சி தன் அரசியல் ஊழியர்கள் மூலம் கொள்கைகளைப் பரப்புகிறது, கட்சி உத்தரவுகளின் மூலமாக இல்லாமல், இணங்குவித்தல் (Persuasion) மூலம் ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றார். ஒவ்வொரு கமிட்டியும் ஒவ்வொரு செல் அமைப்புக்கும் உறுப்பினருக்கும் ஸ்தூலமான கடமைகளைத் தரவேண்டும். கட்சி செல்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆணைகள் புரிந்துகொள்ளப் படுகின்ற முறையில் இருக்க வேண்டும், உறுப்பினர்கள் ஆணைகளை ஆராய்ந்து, விவாதித்து, நிறைவேற்ற முடியும் கட்சிக் கமிட்டிகளை கீழ்நிலை அமைப்புகளின் வேலையைப் பரிசீலிக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களுடைய பொறுப்பைப் பற்றிப் பேசியபொழுது அவர் பின்வருமாறு கூறினார்.

ஹோ-சி-மின் 65
'கட்சியின் மத்தியக் கமிட்டியின் ஆணைகளையும் தீர்மானங்களையும் கட்சியின் எல்லா உறுப்பினர்களும் கட்சியின் எல்லா செல்களும் விவாதிக்க வேண்டும் கட்சி உறுப்பினர்களுடைய தரத்தை உயர்த்துவதற்கு, கட்சியின் ஆணைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மனம் மற்றும் செயல்களின் ஒற்றுமைக்கு இது இன்றியமையாதது ஆகும்.'
தொழிலாளி - விவசாயி கூட்டணியை வலுப் படுத்தி உறுதி செய்வதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களை
& ·
விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்."
தொழிற் சங்கம் என்பது உழைக்கும் மக்களின் புரட்சிகர ஸ்தாபனம் தொழிற் சங்கத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது செய்வதைப் போல அதிகமான தகுதிகளை வற்புறுத்தக் கூடாது. துணிச்சலுடன் அதிகத் தொழிலாளர்களை குறிப்பாக இளைஞர்களை தொழிற்சங்கங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கட்சி அவர்களுக்குப் பயிற்சி அளித்து புரட்சிகரப் போராளிகளாக அவர்களை மாற்றும்.
தொழிற் சங்கங்களை வளர்ப்பதைப் பற்றி அவர் பின்வரும் ஆலோசனைகளைக் கூறினார். சுரங்கத் தொழில் மற்றும் இதர முக்கியமான தொழில்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் மத்தியில் கட்சி தன்னுடைய பிரச்சாரத்தை அதிகப்படுத்துவதுடன் நகரங்களைச் சேர்ந்த வேலையில்லாதவர்கள் கைவினைஞர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும் . தொழிற் சங்கங்கள் செங்குத்தான முறையில் கீழ்நிலையிலிருந்து மத்திய அமைப்பு வரை அமைக்கப்பட வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளார்கள் அல்லது பாதி நேரம் மட்டும் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் அவர்கள் தீவிரமான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

Page 39
6ხ ஹோ-சி-மின்
போராட்டங்கள் தொழிலாளர்களிடம் விழிப்பை ஏற்படுத்து கின்றன. ஆனால் பலன்கள் இன்னும் குறைவாகவே இருக் கின்றன. ஏனென்றால் ஒரே சீரான தொழிற்சங்க இயக்கம் இன்னும் ஏற்படவில்லை, தொழிற் சங்கம் இன்னும் பலமடைய வில்லை, தொழிற்சங்கங்களின் பாத்திரத்தைப் பற்றி கட்சியின் உறுப்பினர்களுக்கு இன்னும் தெளிவு இல்லை.
தொழிலாளிவர்க்கத்தின் போராட்டம் விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே தொழிற்சங்கங்கள் விவசாயிகள் சங்கங்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்க வேண்டும், விவசாயிகள் போராட்டங்களுக்குத் தொழிலாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஹோ-சி-மின் வலியுறுத்தினார். தொழிற் சங்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகத்தில் கூட்டு உறுப்பினராகச் சேரவேண்டும்.*
அப்படி சேரும் பொழுது அவை தமது சுதந்திரத்தை இழப்பதில்லை; ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் தமது முன்னணிப் பாத்திரத்தை அதிகப்படுத்துகின்றன. . :ܝܬܝܼ
விவசாயிகள் போராட்டங்களில் இன்னும் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும் என்றால், புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயப் புரட்சி பற்றி கட்சியின் திசை வழியை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு கட்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விடுதலை, சுதந்திரம், வரிகளைக் குறைத்தல், தலைவரியை ரத்து செய்தல், நிலக் குத்தகையைக் குறைத்தல், தோட்டங்களில் வேலை செய்வதற்கு விவசாயிகளை அனுப்புதல், காலனிப் பிரதேசங்களில் கூலி வேலைக்கு விவசாயிகளை அனுப்புதல் , போலியான சீர்திருத்தங்கள், அரசு அடக்குமுறை இதரவற்றை எதிர்த்து விவசாயிகள் நடத்துகின்ற போராட்டங்களில் கட்சி தலைமை தாங்கவேண்டும். பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டத்துடன் இணைக்கப்படவேண்டும். விவசாயிகள் தமது போராட்டங்களுக்கு உதவியாக சுயபாதுகாப்புக் குழுக்களை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை சொல்லப் பட்டது. கட்சி விவசாயிகள் இயக்கத்தின் மூலம் விவசாயிகள்

ஹோ-சி-மின் 67
சங்கங்களை விஸ்தரிப்பதும் வலுப்படுத்துவதும் சாத்தியம் ! பணக்கார விவசாயிகளை ஆரம்பத்திலிருந்தே ஒதுக்க வேண்டும்.
'வியத்நாமில் விவசாய சங்கங்கள் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும் அவை தமது குறிக்கோளை அடையமுடிய வில்லை. ஏனென்றால் விவசாயிகள் ஸ்தாபனத்தில் உறுதியில்லை, பிரச்சாரத்தின் அளவு குறைவு; அத்துடன் பணக்காரி விவசாயிகளையும் நிலப் பிரபுக்களையும் எதிர்த்து நிலமில்லாத விவசாயிகள் நடத்துகின்ற போராட்டத்தைப் பற்றி அவர்கள் போதிய அக்கறை காட்டுவதில்லை' என்று ஹோ-சி-மின் கூறினார். விவசாயப் புரட்சி வெற்றி அடையுமாறு செய்வது விவசாயிகள் சங்கத்தின் கடமை என்பதால் விவசாயிகள் தமது பரிதாபகரமான நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும் ஏகாதிபத்தியம் நிலப் பிரபுத்துவம் முதலாளிவர்க்கம் ஆகிய சக்திகளை எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தை உணரும் வகையிலும் அவர்களிடம் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். விவசாயப் புரட்சி (நிலப்பிரபுக்களுடைய நிலத்தைக் கைப்பற்றி நிலமில்லாத விவசாயிகளுக்கும் நடுத்தர விவசாயிகளுக்கும் வினியோகம் செய்தல்) மற்றும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி யின் அடிப்படையான குறிக்கோளை விவசாயிகள் புரிந்து கொள்ளும் விதத்தில் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டணி அமைப்பதன் அவசியம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தை விவசாயிகள் சங்கங்கள் விவசாயிகளுக்கு விளக்கவேண்டும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அரசியல் ரீதியில் கட்சித் தலைமைக்குக் கீழ்ப் படிந்தாலும் அவர்கள் கட்சிக்கும் தொழிற் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு இடையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
தாய் - பின் ஹ் வட்டாரத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் அனுபவத்திலிருந்து அவர்கள் செய்த தவறுகளை அவர் சுட்டிக் காட்டினார். பக்கத்து மாவட்டங்களில்
இயக்கத்தை வலுப்படுத்துகின்ற முறையில் சக்திகளோ, உதவிப்

Page 40
68 ஹோ-சி-மின்
படையோ இல்லை. போராட்டத்தின் குறிக்கோள்களைப் பெருந்திரளான மக்கள் புரிந்துகொள்ளவில்லை, இயக்கத்தின் தலைவர்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியவில்லை. நகே-டின் ஹ் விவசாயிகளுடைய போராட்டத்திலிருந்து தக்க படிப்பினைகளைப் பெறவில்லை, இதரவை.
விவசாயிகள் சங்கங்கள் கீழ்நிலையிலிருந்து மத்திய நிலை வரை அமைக்கப்படவேண்டும் என்ற மத்திய கமிட்டியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இந்தோ-சீனாவில் விவசாயிகள் இயக்கத்தை ஒன்றுபடுத்துமாறு கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்கு நாடுகளின் பிரிவுக்கு ஆலோசனை தெரிவித்தார். இந்தேர சீனாவில் விவசாயிகள் இயக்கத்தில் மற்ற நாடுகளில் உள்ள மாதிரி நிலப் பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் அந்த சமயத்திலிருந்த சிக்கலான நிலைமையினால் இந்தக் கொள்கை அமுலாக்கப்படவில்லை.
நாட்டில் இளைஞர் அமைப்புகளை ஒன்றுபடுத்துவதற்குமி அதற்கு நடவடிக்கைச் சுதந்திரம் அளிப்பதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை அமைக்க வேண்டுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அந்த முன்னணியில் தொழிற் சங்கம், விவசாயிகள் சங்கம், இளைஞர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவை சுறுசுறுப்பாகப் பங்கெடுக்க வேண்டும். கட்சி உறுப்பினர்கள் தமது பிரச்சாரத்தில் காலனியாதிக்கத்தை ஒழிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசி மக்களிடம் தேசபக்தியைத் தூண்ட வேண்டும் என்று கூறினார்.
1930-31ஆம் ஆண்டுகளின் புரட்சிகள் வெடித்தபொழுது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஹோ-சி-மின் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் 1931 ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் அவரை (அப்பொழுது அவர் வான்-ஸோ என்று புனைபெயர் வைத்திருந்தார்) சட்டவிரோதமாகக் கைது செய்தார்கள். அவர் தனிமைச் சிறையில் எவ்விதமான வசதிகளுமின்றி வைக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. காலனியவாதிகள் தன்னைக் கொலை செய்வார்கள் அல்லது அவர்களுடைய சிறையிலிருந்து தப்பி மீண்டும் புரட்சி இயக்கத்துடன் சேர்ந்துவிடமுடியும் என்று அவர்

ஹோ-சி-மின் 69
நம்பினார். நாட்டில் புரட்சி இயக்கத்தைப் பற்றியே அவர் இரவும் பகலும் கவலைப் பட்டார். ஹோ - சி-மின் இதைப் பற்றியே அதிகமாகக் கவலைப்பட்டார். நான் முடிக்காமல் விட்ட வேலையை இனிமேல் தொடரப் போவது யார்? என்னுடைய அனுபவங்களில் சிலவற்றை மற்ற தோழர்களிடம் தெரிவிப்பது எப்படி? தனக்கு மட்டுமே தெரிந்த தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த எவரால் முடியும்? நமது கட்சி புதிதாக நிறுவப்பட்டிருந்தாலும் அதற்கு அதிகமான செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய போராட்ட இயக்கம் ஏறுமுகத்தில் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் ஏகாதிபத்தியு வாதிகள் புரட்சி இயக்கத்தை நசுக்குவதற்குத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். பல தோழர்கள் கைது செய்ய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். பல ஸ்தாபனங்கள் வன்முறையால் கலைக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலையைத் தொடர்வது எப்படி?
இந்தோ சீனாவிலிருந்த பிரெஞ்சு அதிகாரிகள் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் ஒரு கப் பலைத் தயாராக நிறுத்தி வைத்திருந்தார்கள். ஹாங்காங் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, ஹோ-சி-மின்னைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைப்பதில் வெற்றிபெற்றால் அவரை அப்படியே வியத்நாமுக்குக் கொண்டு போவதற்கு அந்தக் கப்பல் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
ஹோ-சி-மின் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் உடனே தேசிய சுதந்திரத்துக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகம் அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று கோரியது. சிகப்பு நிவாரண இயக்கம் நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடுவதற்கு ஒரு வழக்குரைஞரை நியமித்தது. லோஸ்ெபி என்ற பெயருடைய வழக்குரைஞர் ஹோ-சி-மின்னைப் போற்றுபவர். அவருடைய வாதத்திறமையால் ஹோ - சி-மின் 1933ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
ஹோ - சி-மின் விடுதலையானவுடன் ஹாங்காங்கிலிருந்து மக்காவோ (Macao) என்ற நகரத்துக்குச் சென்றார்.

Page 41
70 ஹோ-சி-மின்
ஐரோப்டாவிலிருந்து யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு ஒரு சமாதான தூதுக்குழு ஷாங்காய்க்கு வந்திருக்கிறது, அதில் பால் வாயிலான் கூச்சூரியேர் ஓர் உறுப்பினர் என்று அறிந்ததும் ஹோ -சி-மின் ஷாங்காய்க்குச் சென்றார். 1934ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பிறகு ஷாங்காயிலிருந்து புறப்பட்டு விளாடிவாஸ்டாக் சென்றார். பிறகு அங்கிருந்து ரயில் பயணம் செய்து மாஸ்கோ சென்றடைந்தார்.
அவர் சென்ற தடவை சோவியத் யூனியனில் தங்கியிருந்த பொழுது சோவியத் மக்கள் தங்கள் நாட்டுக்காக கடுமையாக உழைப்பதைக் கண்டார். அவர்கள் எதிர்காலத்துக்காக உற்சாகமாக உழைத்தாலும் அன்றாட வாழ்க்கையில் பெருந் துன்பங்களை சந்தித்தார்கள்.
இந்தத் தடவை அந்த நிலைமை முற்றிலும் மாறியிருந்தது. சோவியத் மக்கள் எல்லா அம்சங்களிலும் முன்னைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் கூடுதலாக நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அப்பொழுதுதான் ஆரம்பமாகியிருந்தது. சோவியத் நாட்டின் நிலைமையை அவர் ஆராய்ந்துகொண்டிருந்தபொழுது கம்யூனிஸ்ட் அகிலம் ஸோச்சி (Sochi) என்ற கடற்கரை நகரத்தில் ஒய்வெடுக்கின்ற வாய்ப்பைக் கொடுத்தது. பல ஆண்டுகள் கடுமையாக உழைத்ததனால் அவரது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தது. ஹோ-சி-மின் ஸோச்சிக்குச் சென்றார். எனினும், சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்திப் பழகியவருக்கு ஒய் வாக இருக்கப் பிடிக்கவில்லை. சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்த பிறகு அவர் மாஸ்கோவுக்குத் திரும்பினார்.
உலகத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான ஊழியர்களுக்காக அரசியல் பள்ளி லெனின் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மாஸ் கோவில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் அறிமுகக் கடிதத்துடன் ஹோ-சி-மின் 1934 அக்டோபர் 1ஆம் தேதியன்று மாணவராகச் சேர்ந்தார். அந்தப் படிப்பு முடிந்தவுடன் தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகளைப் பற்றி கம்யூனிஸ்ட் அகிலம் நடத்திய ஆராய்ச்சி

ஹோ-சி-மின் 71.
நிறுவனந்தில் அவர் வேலை செய்தார்.
இந்தக் காலகட்டத்தில் கிழக்கு நாடுகள் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த வியத்நாமிய மாணவர்களைப் பற்றி அவர் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு அவர் செய்தி இதழ் தயாரித்தல், கலைப் படைப்புகள், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, இதர வேலைகள் கொடுக்கப்படும். ஹோ-சி-மின் அவர்களுடைய வேலைகளுக்கு உதவி செய்தார். தேசிய இனங்கள் மற்றும் காலனி மக்கள் கழகத்தில் அவர் வகுப்புகள் நடத்தினார். அந்தக் கழகத்தின் ஆட்சிக்குழுவின் சார்பில் அவர் வியத்நாம் மாணவர்களுக்கு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைக் கற்பித்தார். சயாமில் வசித்த வியத்நாமியர்களின் போர்க்குணமிக்க ஒருமைப்பாடு, தன்னுடைய புரட்சிகர அனுபவங்கள், அவற்றின் ஏற்ற இறக்கங்கள், ஆகியவை பற்றி மாணவர்களிடம் விரிவுரை ஆற்றினார். ஒருவரையொருவர் நேசியுங்கள்,மற்ற நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தோழர்களுடன் உணர்ச்சியில் ஒன்று சேருங்கள் என்று அவர் அறிவுரை கூறினார்.
எளிமையாக இனிமையாக வாழ்க்கை நடத்தவேண்டும் , எப்பொழுதும் புரட்சிகர நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் மாணவர்களுக்குக் கற்பித்தார். புரட்சிக்கு சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அதிகமாகப் படியுங்கள் என்று அவர் வற்புறுத்துவார். நாட்டில் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களுடைய தத்துவார்த்த அறிவை உயர்த்துவதிலும் அவர் அக்கறை எடுத்துக் கொண்டார்.
அவர் 1935 ஜனவரி 16ஆம் நாளன்று கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு லின் என்ற பெயரில் கடிதம் எழுதியபொழுது, கட்சி உறுப்பினர்களுடைய தத்துவார்த்த நிலை மற்றும் புரட்சிகர உணர்ச்சியை மதிப்பீடு செய்தார். அவர்களுக்கு மார்க்சிய லெனினியத்தில் தத்துவார்த்த வகுப்புகள் நடத்தவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். 'அவர்கள் உற்சாகத்துடன் தீவிரமாக வேலை செய்கிறார்கள். ஆனால் தத்துவார்த்த அறிவு இல்லாததால், இருளில் தடவுகிறார்கள், வேலையில் தவறு செய்கிறார்கள் போராட்டத்திலும் செய்முறை நடவடிக்கைகளிலும்

Page 42
72 ஹோ-சி-மின்)
எப்படியாகிலும் வழியைக் கண்டுபிடிப் பார்கள் என்பது உண்மையே. ஆனால் நாம் அவர்களுக்கு அடிப்படையான தத்துவார்த்த அறிவைத் தந்து சரியான பாதையைக் காட்டினால் 'அவர்கள் மோசமான தவறுகள், பின்னடைவுகளில் இருந்து தப்புவார்கள்' என்று ஹோ-சி-மின் எழுதினார். s
'கட்சி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் திசைவழியை நிர்ணயிப்பதற்கும் எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கும் நடவடிக்கைகளில் உறுதியைக் காட்டுவதற்கும் நமது நடவடிக்கைகளின் வெற்றியில் நம்பிக்கை வைப்பதற்கும் தத்துவம் உதவி செய்கிறது" என்று தோழர் ஸ்டாலின் சரியாகக் கூறினார்.
காலனி நாடுகளில் உறுப்பினர்களுடைய தத்துவார்த்த நிலையை உயர்த்துவதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்கு நாடுகள் பிரிவு, கட்சியைக் கட்டுகின்ற கொள்கை மற்றும் அனுபவத்தைப் பற்றி பெருந்திரளான மக்கள் மத்தியில் கிளர்ச்சி செய்கின்ற முறைகளைப் பற்றி மார்க்சிய லெனினியக் கையேடுகளை வெளியிட வேண்டும். இந்தப் பிரசுரங்கள் எளிமையான முறையில் சுருக்கமாக எழுதப்பட வேண்டும் . வாசகர்கள் சுலபமாகப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் இருக்கவேண்டும். அவை உரையாடல் வடிவத்தில் இருப்பதும் நல்லதே. ஏனென்றால் நம் தோழர்கள் குறைவான கலாசார அறிவு உள்ளவர்கள். அவர்கள் நீண்ட வாக்கியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள இயலாது.
'இந்தோ-சீனாவிலும் சயாமிலும் உள்ள தோழர்களைப் பற்றி நான் கூறியிருப்பது கட்சி சட்டவிரோதமான சூழலில் இயங்கி யிருக்கின்ற மற்ற காலனி நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதே. ஏனென்றால் அங்கு உழைக்கும் மக்கள் குறைவான கலாசாரத் தகுதி உள்ளவர்கள். என் ஆலோசனைப் படி பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டால் அவை காலனி நாடுகளில் அதிகப் பயனுள்ளவையாக இருக்கும்."
1935 ஜூலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் கலந்துகொள்வதற்கு தோழர் லீ- ஹோங் - போங்

ஹோ-சி-மின் W 73
தலைமையில் வியத்நாம் கட்சியின் அதிகாரபூர்வமான தூதுக்குழு மாஸ் கோவுக்கு வந்தது. ஹோ - சி-மின் லின் என்ற பெயரில் அகிலத்தின் கிழக்கு நாடுகள் பிரிவின் பிரதிநிதியாக காங்கிரசில் கலந்துகொண்டார். காங்கிரசின் துணைக்குழுக்களில் அவர் பல விஷயங்களை விவாதித்தார்,ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தெரிவித்தார். நம் கட்சியின் தூதுக்குழு காங்கிரசில் தன் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர் அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் உதவி செய்தார்.
காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அக்காலத்தில் வியத்நாமியப் புரட்சிக்குத் தலைமையான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. காலனி மற்றும் சார்பு நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டுவதில் தோழர் டிமிட்ரோவின் அறிக்கையும் காங்கிரஸ் முடிவுகளும் ஜனநாயக முன்னணிக் காலத்தில் (1936-39) நம் கட்சியின் செயல்பாட்டுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸ் நமது கட்சியை முழு உறுப்பினராக அங்கீகரிப்பதென்று முடிவு செய்தது. தோழர் ல-ஹோங்-போங் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மத்திய கமிட்டியின் மாற்று உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் முடிந்தபிறகு ஹோ-சி-மின் சோவியத் யூனியனில் தங்கியிருந்து தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். வியத்நாமில் புரட்சிகர இயக்கத்தைப் பற்றி தகவல்களும் அறிக்கை களும் வியத்நாமிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் , எழுதப்பட்டு அவருக்குக் கிடைத்தபடியால் அங்குள்ள புரட்சிகர இயக்கத்தை அவர் அக்கறையுடன் கவனித்து வந்தார்.
1936 ஜூலை மாதத்தில் நமது கட்சியின் மத்திய கமிட்டியின் விரிவடைந்த கூட்டம் கான்டன் நகரத்தில் நடைபெற்றது. தோழர் லீ-ஹோங் - போஹ் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது காங்கிரஸ் தீர்மானத்தின் அடிப்படையிலும் நாட்டில் அப்பொழுது நிலவிய பிரத்யேகமான சூழ்நிலையை ஆதாரமாகக் கொண்டும் இந்தோ-சீனா ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணியை (பிற்காலத்தில் இந்தோ-சீனா ஜனநாயக

Page 43
74 ஹோ-சி-மின்
முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிரெஞ்சு பாசிஸ்டுகள் மற்றும் பிற்போக்கு காலனியாதிக்கவாதிகளை எதிர்க்கும் போராட்டத்தில் எல்லா ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் திரட்டுவது ஜனநாயக உரிமைகள், மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தல், மூர்க்கமான பாசிசத்தை எதிர்த்தல், உலக சமாதானத்துக்கு ஆதரவளித்தல் மக்கள் முன்னணியின் நோக்கங்களாக இருந்தன.
1938ஆம் ஆண்டின் முடிவில் ஹோ-சி-மின் தாய்நாட்டுக்குத் திரும்புகின்ற நோக்கத்துடன் சீனாவுக்குச் சென்றார். vn
அவர் தென்கிழக்கு ஆசியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த புரட்சிகர இயக்கத்தை அக்கறையுடன் கவனித்தார். வியத்நாமில் புரட்சி இயக்கத்தைக் கூர்மையுடன் கவனித்தார். கட்சியின் மத்திய கமிட்டிக்குப் பின்வருமாறு எழுதினார்: 'உங்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதமுடியவில்லை. மன்னியுங்கள். நான் பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன். புத் தரைப் போல எனக்கு ஆயிரம் கைகள் இருந்தால் எல்லாவற்றையும் செய்ய இயலும்."
1939 பிப்ரவரி- ஜூலை மாதங்களில் ஹோ-சி-மின் 'சீனாவிலிருந்து கடிதங்கள்' என்னும் தலைப்பில் ஒன்பது கட்டுரைகளை எழுதினார். அவை ஹனோயிலிருந்து வெளியிடப் பட்ட 'நமது குரல்" என்ற சட்டபூர்வமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. அவர் ஜப்பானிய பாசிஸ்டுகளின் ஆக்கிரமிப்பைப் பற்றியும் சீனாவில் டிராட்ஸ்கியவாதிகளுடைய கதிகளைப் பற்றியும் எழுதினார். ஜப்பானிய பாசிசத்தின் பிற்போக்குத் தன்மையைப் பற்றி எழுதினார். ஜப்பானிய பாசிசத்தை எதிர்க்கின்ற போராட்டத்திற்கு வியத்நாமிய மக்களுடைய ஆதரவை வெளியிட்டார். −
டிராட்ஸ்கியவாதிகளுடைய கதிச் செயல்களைப் பற்றி அவர் பின் வருமாறு எழுதினார்: “1936ஆம் ஆண்டின் முடிவிலும் உலகப் போர் நடைபெற்ற காலத்திலும் டிராட்ஸ்கிய

ஹோ-சி-மின் 75
வாதிகளுடைய் கிரிமினல் நடவடிக்கைகள் எமது கண்களைத் திறந்தன. அதற்குப் பிறகு இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு ஆரம்பித்தோம்*
சீனாவிலுள்ள டிராட்ஸ் கியவாதிகள் தமது நாட்டை எதிர்க்கின்ற குணம் உடையவர்கள் என்று அவர் முடிவு செய்தார். சீன மக்களின் பாசிச எதிர்ப்பு இயக்கத்தை சீர்குலைப்பதற்கு ஜப்பானிய பாசிஸ்டுகள் டிராட்ஸ் கியவாதிகளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரகசியமாக நுழைத்திருக்கிறார்கள். சீனாவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள டிராட்ஸ் கியவாதிகள் ஜப்பான் மற்றும் உலக நாடுகளிலுள்ள பாசிஸ்டுகளுடைய ஏவல்நாய்களே என்று அவர் எழுதினார். p
வியத்நாமில் டிராட்ஸ்கியவாதிகளுடைய செயல்பாட்டைப் பற்றி நம் கட்சியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களும் சீனாவின் டிராட்ஸ் கியவாதிகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் டிராஸ்கியவாதிகள் பாசிசத்தின் கைக்கூலிகள் என்ற உண்மையை நமது கட்சியின் உறுப்பினர்கள் புரிந்துகொள்வதற்கு உதவி
செய்தன.
இந்தோ-சீனாவில் ஜனநாயக முன்னணி (1936-39) காலகட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சரியான போர்த்திட்டம் மற்றும் செயல்தந்திரத்தைப் பற்றி அவர் தமது கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். 1939 ஜூலை மாதத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு அவர் அனுப்பிய அறிக்கையில் இக் கருத்துகள் சுருக்கித் தரப்பட்டுள்ளன.
போராட்ட கோஷங்களைப் பற்றி: இன்று° தேசிய சுதந்திரக் கோரிக்கையை வைக்கமுடியாது. ஜனநாயக சுதந்திரம், மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கட்சி சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டல் ஆகிய கோரிக்கைகளையே முன் வைப்பதற்கு இயலும்.
இந்த இலக்கை அை ற்கு பரந்த ஜனநாயக முன்னணியை அமைப்பதற்குக் கட்சி பாடுப்பிழுத்டும்

Page 44
76 ஹோ-சி-மின்
இந்த முன்னணியில் இந்தோ-சீன மக்களுடன் இந்தோ சீனாவில் வசிக்கின்ற முற்போக்கான பிரெஞ்சு மக்களும் இடம்பெற வேண்டும். உழைக்கும் மக்களுடன் தேசிய முதலாளிவர்க்கமும் இடம் பெறவேண்டும்.
கட்சி தேசிய முதலாளிவர்க்கத்தின் பால் சாதுரியமான நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப் பிடிக்க வேண்டும். அவர்களை முன்னணிக்குள் கொண்டு வருவதற்கும், தக்கவைப்ப தற்கும் தீவிரமான முயற்சிகளைச் செய்யவேண்டும்; சாத்தியமானால் அவர்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தலாம்; அவசியமானால் அவர்களை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்த வேண்டும். என்ன ஆனாலும் அவர்கள் முன்னணிக்கு வெளியே இருக்க விடக்கூடாது. ஏனென்றால் அவர்கள் பிற்போக்காளர் களிடம் சிக்கி அந்த முகாமை வலுப்படுத்துவார்கள்"
'டிராட்ஸ்கியவாதிகளைப் பொறுத்தமட்டில் சமரசம் செய்யக் கூடாது, சலுகை காட்டக் கூடாது. அவர்கள் பாசிசத்தின் ஏஜெண்டுகள் என்பதை நாம் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியில் அவர்களை ஒழிப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.'
கட்சியைப் பற்றி: கட்சியின் தலைமையை முன்னணி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஆனால் முன்னணியின் மிகவும் உண்மையான சுறுசுறுப்பான நம்பிக்கையான சக்தி என்று கட்சி பெயர் வாங்கவேண்டும். அன்றாடப் போராட்டம் மற்றும் செயல்பாட்டின் மூலம் பெருந்திரளான மக்கள் கட்சியின் சரியான கொள்கைகளையும் தலைமைத் திறனையும் அங்கீகரித்தபிறகுதான் அது தலைமை யிடத்துக்கு வரமுடியும்.'
'இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, கட்சி சமரசத்துக்கு இடமில்லாதபடி அதிதீவிரவாதத்தை (செக்டேரியனிசம்) எதிர்த்துப் போராட வேண்டும். கட்சியின் உறுப்பினர்களுடைய கலாசார மற்றும் அரசியல் தகுதியை உயர்த்துவதற்கு மார்க்சிய லெனினியத்தை முறைப்படி கற்பதற்கு பாடவகுப்புகள் நடத்த வேண்டும். கட்சியில் இல்லாத ஊழியர்களும் தம்முடைய தரத்தை

ஹோ-சி-மின் M 77
உயர்த்துவதற்கு கட்சி உதவி செய்ய வேண்டும். கட்சி பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவு வைத்திருக்க வேண்டும்."
அரசியல் குறைகள் ஏற்படாமலிருக்க மத்திய கமிட்டி கட்சிப் பத்திரிகைகளை நிர்வாகம் செய்யவேண்டும். இந்தோசீனாவை ஆக்கிரமிக்க ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுடைய திட்டத்தைப் பற்றியும் அவர்களிடம் பிரெஞ்சு காலனியப் பிற்போக்காளர்களுடைய சமரசமான அணுகுமுறை பற்றி கட்சி அதிகமான விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஹோ - சி-மின் மற்றும் கட்சியின் மத்திய கமிட்டி சரியான முறையில் வழிகாட்டியதனால் ஜனநாயக உரிமைகளுக்கும் , வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தக் கோரியும் மக்கள் நடத்திய போராட்டங்கள் இலட்சக்கணக்கானவர்களை ஈர்த்தது. அவர்களிடம் அரசியல் விழிப்பை ஏற்படுத்தின. கட்சியின் செல்வாக்கு மக்களிடம் மேன்மேலும் அதிகரித்தது.
1936-39ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனநாயக இயக்கத்தைப் பற்றி அவர் பிற்காலத்தில் பின்வருமாறு மதிப்பீடு செய்தார்:
'இந்த இயக்கம் கட்சிக்கும் தேசிய முன்னணிக்கும் விலைமதிப்பற்ற படிப்பினைகளைத் தந்தது, எவை மக்களுடைய விருப்பார் வங்களுடன் பொருந்துகின்றனவோ அவற்றுக்காக மக்கள் முழு மனதோடு போராடுவார்கள். அதன் மூலம் உண்மையான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும். அகநிலைவாதம் மற்றும் குறுகிய சிந்தனையை என்ன விலை கொடுத்தாகிலும் அகற்ற வேண்டும் என்பதையும் அது நமக்குக் கற்பித்தது."

Page 45
6
ஹோ-சி-மின் வியத்நாமுக்குத் திரும்பியதிலிருந்து
ஆகஸ்ட் புரட்சி வரை (1940-45)
இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டால் இந்தோ-சீனாவும் பசிபிக் பிரதேசமும் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்ற உலையாக மாறும் என்று ஹோ-சி-மின் மிகவும் முந்திய காலமான 1924ஆம் ஆண்டில் கூறினார். நம் கட்சி நிறுவப்பட்டபொழுது அவர் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளை ஆராய்ந்து இரண்டாவது உலகப் போர் வெடிக்கும் என்று முன்னறிவித்தார்.
1939 செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது உலகப் போர் வெடித்தபொழுது கட்சி அதற்கு முன்பே தலைமறைவு இயக்கமாக மாறிவிட்டது. 1939 நவம்பர் மாதத்தில் கட்சியின் மத்திய கமிட்டியின் 6வது விரிவடைந்த கூட்டம் நடைபெற்றபொழுது போர்த்திட்டத்தை மாற்ற முடிவு செய்தது. தேசிய விடுதலைக் கடமைக்கு சக்திகளை ஒன்று குவிப்பது என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்தோ-சீன தேசிய ஐக்கிய முன்னணியைக் கட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
1940ஆம் ஆண்டில் ஹோ - சி-மின் வியத்நாமுக்குத் திரும் புவதற்கு கட்சியின் மத்திய கமிட்டியின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு குன்மிங்குக்கு (சீனா) வந்தார். உலக ஸ்தாபனங்களுடன் இணைப்புகளைத் தொடரவேண்டும் , வெளிநாடுகளிலுள்ள நமது புரட்சிகர ஸ்தாபனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும், ஒருவேளை 'சீனாவின் படைகள் வியத்நாமுக்குள் நுழைந்தால் ' அதற்கு எதிர் நடவடிக்கை களுக்குத் தயாரிப்புச் செய்யவேண்டும் என்றார்.
1940 ஜூன் மாதத்தில் ஜெர்மானிய பாசிஸ்டுகள் பிரான்ஸ் மீது படையெடுத்தார்கள். பிரெஞ்சு முதலாளித்துவ அரசாங்கம் சரணடைந்தது. இந்தோ சீனாவிலிருந்த பிரெஞ்சு காலனிய

ஹோ-சி-மின் 79
வாதிகள் பெருங் குழப்பமடைந்தார்கள். வியத்நாம் புரட்சிக்கு
நிலைமை சாதகமாக இருக்கிறது என்று ஹோ-சி-மின்
கருதினார். ஆகஸ்ட் மாதத்தின் போது அவர் குவெய்லினில் (சீனா) இருந்தார். எனினும் காவோ-பாங்கில் மூலதளம் (Base) அமைப்பதற்குத் திட்டமிட்டார். அங்கு மக்களுடைய ஆதரவு
உறுதியாக இருந்தது. இயக்கம் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்துடன்
தொடர்புகளை வைத்துக் கொண்டு கழிமுகப் பிரதேசத்துக்குப்
பரவமுடியும் . சீனாவில் அப்பொழுது வேலை செய்து
கொண்டிருந்த ஏராளமான வியத்நாம் கட்சி ஊழியர்களைத்
தந்தையர் நாட்டுக்குச் சென்று ஆட்சியதிகாரத்தைக்
கைப் பற்றுவதற்கு வாய்ப்பை எதிர்பார்க்குமாறு அவர்
ஆணையிட்டார்.
ஹோ - சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் மிகவும் முந்திய காலமாகிய 1939ஆம் ஆண்டில், ஜப்பானிய ஏகாதிபத்திய வாதிகள் நம் நாட்டின் மீது படையெடுப் பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். 1940 செப்டம்பர் மாதத்தில் அவர்கள் படையெடுத்தார்கள். ஜப்பானிய பாசிஸ்டுகள் இந்தோ-சீனா மீது படையெடுத்தவுடன் பிரெஞ்சு காலனி ஆட்சியின் அதிகாரிகள் அவர்களை முழந்தாளிட்டு வணங்கினார்கள். இந்தோ-சீனாவை ஜப்பானியர்களிடம் ஒப்படைத்தார்கள். இரட்டை நுகத்தடியில் சிக்கிய நமது மக்கள் ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு பாசிஸ்டுகளை எதிர்த்துப் புரட்சி செய்வதற்கு உறுதிகொண்டார்கள். 1940 நவம்ப்ர் மாதத்தில் கட்சி மத்திய கமிட்டியின் ஏழாவது விரிவடைந்த கூட்டம் நடைபெற்ற பொழுது, ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு பாசிச ஏகாதிபத்தியவாதிகள் நமக்கு நேரடியான இரட்டை எதிரிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஆயுதப் புரட்சிக்குத் தயாரிப்புகளைச் செய்ய முடிவெடுக்கப் பட்டது. பாக் - ஸோன் கொரில் லா படையை வைத்திருப்பது, புரட்சிக்கு மூலதளப் பகுதியைக் கட்டுவது, பிரெஞ்சு - ஜப்பானிய பாசிஸ்டுகளுக்கு எதிராக தேசிய ஐக்கிய முன்னணியை அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
புதிய நிலைமைகள் புதிய கடமைகளை உருவாக்கின. தேசிய மீட்சிக்கு எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தவேண்டியதன்

Page 46
80 ஹோ-சி-மின்
அவசியத்தை ஹோ-சி-மின் உணர்ந்தார். மக்களின் பரந்த பகுதியினரை ஒன்று சேர்த்து முன்னணியைப் புதுப்பித்து அதற்கு வேறுபெயர் சூட்டவேண்டியிருந்தது. அவர் வியத்நாம் சுதந்திரக் கழகம் (சுருக்கமாக வியத்மின்) என்ற அமைப்பை நிறுவுவதற்கு முனைந்தார். 1940 டிசம்பர் மாதக் கடைசியில் அவர் வியத்நாம் - சீனா எல்லைக்கு வந்தார். அங்கு ‘விடுதலைப் பாதை’ என்னும் ஆவணத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு அரசியல் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தார். W
ஹோ - சி-மின்னால் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் காவோ-பாங்குக்குத் திரும்பியதும் வியட் மின் முன்னணியின் சார்பில் தேசிய மீட்சிச் சங்கங்களை நிறுவினார்கள். நாற்பது ஆண்டுகள் வெளிநாடுகளில் அரசியல் பணிகளை நிறைவேற்றிய பிறகு ஹோ-சி-மின் 1941 பிப்ரவரி 8ஆம் நாளன்று நாட்டுக்குத் திரும்பினார். வியத்நாம்- சீனா எல்லையில் 108வது மைல் கல்லை அடைந்து தாய்நாட்டு மண்ணை மிதித்தபொழுது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். காவோ-பாங் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் ஊழியர்கள் அனைத்து மக்கள் சார்பில் அவரை மகிழ்ச்சி யுடன் வரவேற்று பாக்போ என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு அவருடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. இழைக்கப்படாத மரப்பலகைகளை ஒன்றாக சேர்த்து அதன் மீது பழைய பாயை விரித் திருந்தது. அதுதான் அவர் படுக்கை. குகைக்குள் குளிர்காற்று சில்லென்று அடிக்கும். அவர் லேசான போர்வையினால் உடலைப் போர்த்திக் கொண்டு தூங்குவார். அப்பொழுது அவருக்கு ஐம்பது வயது. அவருடைய உடல்நலத்தைக் காப்பதற்கு கிராமவாசிகளும் ஊழியர்களும் குவோய் -நாம் சிற்றாற்றின் கரையில் ஒரு சிறிய குடிசையை அமைத்தார்கள். மூங்கில் இளம் குருத்து, சோளக் கஞ்சி, அவரது காலைச் சிற்றுண்டி ஆற்றில் பிடித்த மீன் அல்லது உப்புத் தடவிய சிறிய கறித்துண்டு தருவார்கள். உணவு குறைவாக இருந்தாலும் அவர் நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார்.
ஹோ-சி-மின் தன்னுடைய பெயரை கியா-து என்று மாற்றிக் கொண்டார். காவோ- பாங் மாகாணத்தில் தேசிய மீட்சிச் சங்கங்கள்

ஹோ-சி-மின் 81
நிறுவப் படுவதை இயக்கினார், ஊழியர்களுக்கு வகுப்புகள் நடத்தினார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்ற முக்கியமான நூலை மொழி பெயர்த்தார். அதற்கு சுருக்கமும் தயாரித்தார். கட்சியின் மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டத்துக்கு தயாரிப்புகளைச் செய்தார். அவர் எந்த் வசதியுமில்லாத சூழ்நிலையில் வசித்தார், பாடுபட்டார். எனினும்
நீரோடையின் அருகில் காலைப்பொழுதை குகையில் இரவு நேரத்தைக் கழித்து சோளக் கஞ்சியும் மூங்கில் குருத்தும் சாப்பிட்டு கரடுமுரடான கற்பாறை மேசை மீது சோவியத் கட்சி வரலாற்றை மொழிபெயர்த்தேன் ஓ புரட்சிக்காரனுக்கு எத்துணை வசதிகள்
என்று கவிதை எழுதினார். நீரோடையில் ஓடிய தெளிவான, தூய்மையான நீரின் அழகை அவர் புகழ்ந்தார்.
அதற்கு லெனின் ஒடை என்று பெயரிட்டார். அங்கேயிருந்த மலைக்கு காரல்மார்க்ஸ் மலை என்று பெயர் சூட்டினார்.
கண்ணுக்கெட்டிய தூரம் மலைகளும் ஆறுகளும் இதற்கு மேல் இடம் தேவையா? இங்கே லெனின் ஓடை, அங்கே மார்க்ஸ் மலை வெறும் கைகளைக் கொண்டு ஒரு நாட்டை நிர்மாணிக்கிறோம்.
மேலே தரப்பட்ட கவிதைகள் அவருடைய ஆழமான புரட்சிகர இலட்சியங்களை தூய்மையான உணர்ச்சியை வியத்நாம் மக்களின்
சுதந்திர உணர்ச்சியை வெளியிடுகின்றன.
கட்சியின் மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டம் 1941 மே மாதத்தில் நடைபெற்றபொழுது ஹோ - சி-மின் தலைமை தாங்கினார். உலகத்திலும் நாட்டிலும் உள்ள நிலைமையை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்தபிறகு பின்வரும் முடிவுகள் செய்யப் பட்டன. முதலாவது உலகப் போரின் விளைவாக சோவியத் யூனியன் என்ற சோஷலிஸ்ட் அரசு ஏற்பட்டது; இரண்டாவது உலகப் போரின் விளைவாக பல சோஷலிஸ்ட் அரசுகள் தோன்றும். பல நாடுகளில் புரட்சி வெற்றிபெறும் . இந்தோ

Page 47
82 ஹோ-சி-மின்
சீனாவில் புரட்சியின் மிகவும் அவசரமான கடமை தேசிய விடுதலை என்று வலியுறுத்தப்பட்டது. ஆகவே வர்க்க நலன்களும் தனிப் பிரிவினருடைய நலன்களும் , கைவிடப்பட்டு நாட்டின் தலைமையான நலன்களுக்குத் தற்காலிகமாகவாவது முன்னுரிமை அளிக்கவேண்டும் . முதலில் தேசிய விடுதலை, மக்களுக்கு சுதந்திரம் இவற்றைப் பெறுவது அவசியம்.
மக்களின் பரந்த பகுதியினரைத் திரட்டுவதற்கு நாட்டின் முக்கியமான எதிரிகளான ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈட்டிமுனையாக செயல்படுவதற்கு, வியத்நாம் சுதந்திரக் கழகம் (சுருக்கமாக வியத் - மின்) அமைக்க முடிவு செய்யப்பட்டது. முன்னணியில் சேர்ந்திருந்த வெகுமக்கள் ஸ்தாபனங்களுக்கு தேசிய மீட்சி குறிக்கோள். ஆகவே அவை தேசிய மீட்சிக் கழகங்கள் என்று சொல்லப்பட்டன. வியட் மின் முன்னணி என்ற பெயரில்தான், புரட்சிகரப் போராட்டத்துக்கு மக்கள் திரட்டப்படவேண்டும்; ஆனால் கட்சியின் முன்னணிப் பாத்திரம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும். முன்னணி விரிவடைகின்றபொழுது கட்சியின் தலைமைப் பாத்திரம் வலுப்படுத்தப்படும்.
நிலப்பிரபுத்துவ வர்க்கத்தில் மேலும் பிளவுகளை ஏற்படுத்து வதற்கு நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் அதைப் போன்ற கோஷங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தேசத் துரோகிகளிடமிருந்து நிலத்தைப் பறிமுதல் செய்து ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தல் நிலக்குத்தகை மற்றும் கடன் வட்டிகளைக் குறைத்தல், பொதுநிலங்களை மறுவினியோகம் செய்தல், படிப்படியாக உழுபவனுக்கு நிலம் கொடுத்தல் ஆகிய கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தோ-சீனாவிலுள்ள நாடுகளின் சுற்றுவட்டத்திற்குள் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று விரிவடைந்த கூட்டம் வற்புறுத்தியது. 'இந்தோ-சீனாவில் ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசை அமைக்கவேண்டும்' என்ற கோஷத்துக்கு பதிலாக 'வியத்நாம் ஜனநாயக குடியரசை அமைக்க வேண்டும்' என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது.

ஹோ-சி-மின் 83 .
இராணுவப் பிரிவுகள் மற்றும் துணை இராணுவப் பிரிவுகளை அமைத்தல், அவற்றின் தலைமையை வலுப்படுத்துதல், ஆயுதப் புரட்சிக்குத் தயாரித்தல், சிறிய அளவிலான எழுச்சிகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதல் ஆகியவை பற்றி விரிவடைந்த கூட்டத்தில் முடிவுகளெடுக்கப்பட்டன.
மாநாடு ஹோ-சி-மின் பிரேரணையை ஏற்றுக்கொண்டு புதிய மத்தியக் கமிட்டியைத் தேர்ந்தெடுத்தது. தோழர் ட்ருவோங்சின் ஹ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹோ-சி-மின்னுடைய நேரடியான வழிகாட்டுதலில் நடைபெற்ற 8வது விரிவடைந்த கூட்டம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேசிய விடுதலைப் பிரச்சினையை முழுமையாகப் பகுப்பாய்வு செய்தது, வியத்நாம் புரட்சிக்கு முன்னே வைக்கப்பட்ட காலடியாக இருந்தது. பிற்காலத்தில் ஆகஸ்ட் புரட்சி வெற்றி அடைவதற்கு அது தீர்மானகரமான முக்கியத் துவத்தைக் கொண்டிருந்தது.
கூட்டம் முடிவடைந்தபிறகு ஹோ - சி-மின் கட்சியின் நிலைக்குழுத் தோழர்கள் கழிமுகப் பிரதேசத்துக்குப் போவதற்கு முன்பு அவர்களிடம் தனியாகப் பேசினார். அவர்கள் பொறுப்புணர்ச்சி ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தனிப்பட்ட முன்முயற்சியுடன் கூட்டுத் தலைமையைக் கடைப் பிடிக்க வேண்டும். விமர்சனம் மற்றும் சுய-விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்."
கட்சி மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டத்தில் (19.5.1941) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வியத்நாம் முன்னணி அதிகாரபூர்வமாக இயங்கியது. பொன்னிறத்தில் நட்சத்திரம் உள்ள செங்கொடி பட்டொளிவீசிப் பறந்தது. பிரெஞ்சுக்காரர்களைத் தாக்குங்கள் ஜப்பானியர்களை வெளியேற்றுங்கள் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. முன்னணியின் செயல் திட்டமும் விதிமுறைகளும் மக்களிடம் விரிவான முறையில் விளக்கப்பட்டன.
பொதுமக்கள் முன்னணியின் செயல்திட்டத்தை சுலப மாகப் படித்து புரிந்துகொண்டு நினைவில் வைத் திருப்பதற்கு

Page 48
84 ஹோ-சி-மின்
ஹோ -சி-மின் அதைக் கவிதையாக எழுதினார். பொது மக்களுடைய அவசரத் தேவையை அது பூர்த்தி செய்து நாட்டில் உருவாகியிருந்த ஒற்றுமை உணர்ச்சியை வெளியிட்டது. காவோ-பாங் மாகாணத்தில் வியட் மின் முன்னணிக்கு உதாரணமாக சில அமைப்புகள் மட்டுமே இருந்த நிலை மாறியது. வியட் மின் இயக்கம் நாடு முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அது ஏற்படுத்திய புரட்சிகரப் பேரெழுச்சி மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ச்சி அடைந்தது. பிற்காலத்தில் ஹோ-சி-மின் அந்த இயக்கத்தைப் பின்வருமாறு மதிப்பிட்டார்.
‘வியத்நாம் சுதந்திரக் கழகம் என்ற பெயர் மிகவும் தெளிவாக இருந்தது. மக்களுடைய விருப்பங்களுடன் பொருந்தியது. அத்துடன் பத்து அம்சத்திட்டம் எளிமையாகவும் செய்முறை யாகவும் போதுமானதாகவும் இருந்தது.
"பத்து அம்சங்களை மறவாதீர்கள் முதல் அம்சம் நாட்டுக்கு இரண்டாவது மக்களுக்கு." பத்து அம்சங்களில் சில நாடு முழுமைக்கும் பொதுவாக இருந்தன; சில தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் எல்லா பிரிவினர்களுக்கும் உரியவையாக இருந்தன. ஆகவே அவர்கள் வியட்நாம் முன்னணியை முழுமனதாக அங்கீகரித்தார்கள். மக்களுடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்கள் செய்த முயற்சிகளின் மூலம் வியட் மின் முன்னணி வேகமாக சுறுசுறுப்பாக வளர்ச்சி அடைந்தது.' ܢ
1941 ஜூன் 6ஆம் நாளன்று ஹோ-சி-மின் நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நாட்டு நிலைமையை ஆய்வு செய்து அந்தக் காலகட்டத்தில் வியத்நாம் புரட்சியின் கடமைகளை விளக்கினார். தேசிய விடுதலை நெருங்கிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டிய பிறகு, வியத்நாம் மக்கள் பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய பாசிஸ்டுகளை எதிர்த்து தேசிய விடுதலைக்குப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'இன்று தேசிய விடுதலை தலைமையானதாகும். ஏகாதிபத்திய வாதிகளையும் தேசத்துரோகிகளையும் ஒழிப்பதற்கு, ஆபத்தான

ஹோ-சி-மின் 85
நிலைமையிலிருந்து நாட்டைக் காப்பதற்கு நாம் ஒன்று சேர வேண்டும்.
'புரட்சிப் போராளிகளே! நாட்டின் விடுதலைக்கு நேரம் வந்து விட்டது. நாம் சுதந்திரம் என்னும் பதாகையை உயர்த்தி, பொது எதிரியை ஒழிக்கின்ற போராட்டத்தில் அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்குவோம். தாய்நாட்டின் புனிதமான அறைகூவல் உங்கள் காதுகளில் கேட்கின்றன. தேசிய வீரர்களின் ரத்தம் உங்கள் உடலில் பாய்ந்துகொண்டிருக்கிறது. நாடு போராடுவதற்குத் தயாராக இருக்கிறது. நாடு உங்கள் தலைமைக்காகக் காத்திருக்கிறது.'
'நாம் அணிவகுத்து முன்னேறுவோம். அனைத்து மக்களும் முன்னேறுவோம்! நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரெஞ்சுக் காரர்களையும் ஜப்பானியர்களையும் நாட்டிலிருந்து விரட்டுவோம்!'"
அவர் கடிதம் நாட்டு மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வியட் மின் முன்னணியின் தேசிய மீட்சி இயக்கத்துக்கு பிரச்சாரம் செய்வதற்கும் மக்கள் அதில் அதிகமாகப் பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்கும் வியட் லாப்" என்ற பெயரில் பத்திரிகை காவோ-பாங்கிலிருந்து வெளியிடு வதென்று ஹோ-சி-மின் முடிவு செய்தார்.1941 ஆகஸ்ட் முதல் தேதியன்று பத்திரிகை வெளியிடப்பட்டது. அவர் நாடு முழுவதிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த புரட்சி இயக்கத்தில் ஓய்வில்லாமல் ஈடுபட்டிருந்தாலும், பத்திரிகையின் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதில் கட்டுரை எழுதினார், கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தார். செய்திகளைத் தேடி அவற்றைத் தொகுத்து வெளியிட்டார். 1941 ஆகஸ்டிலிருந்து 1942 ஆகஸ்ட் வரை அநேகமாக பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் கட்டுரைகள் எழுதினார்.
ஹோ - சி-மின் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் ஏற்ற படங்களை வரைந்து வாசகர்களை உற்சாகப்படுத்தினார். தேசிய மீட்புச் சங்கத்தின் கிளைகளின் உறுப்பினர்களுக்தி அரசியலைக் கற்பிப்பதும், தாய்நாட்டின் விடுதலைக்கு உறுதியாகப்

Page 49
86 ஹோ-சி-மின்
போராடுமாறு அவர்களைத் தூண்டுவதும் வியத்நாம் புரட்சியின் வெற்றியில் நம்பிக்கையை வளர்ப்பதும் அவர் வரைந்த படங்களின் நோக்கமாக இருந்தது. பத்திரிகையில் பல கவிதைகள் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பான்மை ஹோ-சி-மின் எழுதியவை. 'தாய்நாட்டை மீட்பதற்கும் முற்றான சுதந்திரத்தை அடைவதற்கும் ஒரே மனதுடன் ஒன்று சேருங்கள்' என்று அவர் தொழிலாளர்கள், விவசாயிகள் ,பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆகியோரை வேண்டினார்.
'அது சிறு அளவிலான பத்திரிகை என்றாலும், புரட்சியின் தீவிரமான பிரச்சாரகர், அமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையில் மிகவும் அதிகமான தாக்கத்தைக் கொண்டிருந்தது' அவர் வியத்நாமின் தேசபக்த மரபுகளைப் பற்றி அதிகமான கதைப் பாடல்களை 'வியத்நாம் வரலாறு' என்ற தலைப்பில் எழுதினார்.
அதிகாரத்தைக் கைப் பற்றுகின்ற ஆயுதப் புரட்சிக் குத் தயாரிப்பு செய்கின்ற முறையில் காவோ-பாங்கில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புக் குழுவை அமைத்தார். புரட்சிகர ஊழியர்களுக்கும் மக்களுக்கும் போர்முறையைக் கற்பிப்பதற்கு சில பிரசுரங்களை எழுதினார்; சில பிரசுரங்களை மொழி பெயர்த்தார். 'கொரில்லாப் போர் முறை’, ‘இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முறை', 'கொரில் லாச் சண்டை', 'சீன கொரில்லாவின் அனுபவம்' ஆகியவற்றை அவர் வெளியிட்டார்.
மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டத்துக்குப் பிறகு ஹோ-சி-மின் ஆணைப்படி, "தெற்கில் அணிவகுத்துச் செல்லுதல்" என்னும் பிரச்சினை விவாதிக்கப்பட்டு வேகமாக நிறைவேற்றப் பட்டது. இரண்டு பாதைகள் அமைத்தல்' திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிகமான தோழர்களை ஈடுபடுத்தினார். காவோ-பாங்கிலிருந்து லாங்-சோனுக்கு ஒரு பாதை; காவோபாங்கிலிருந்து பாக்-கானுக்கும் தை-நகுயெனுக்கும் போகின்ற மற்றொரு பாதை, மத்திய கமிட்டியின் நிலைக் குழுவுடன் தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்கும், அரசியல் தளங்கள் மற்றும் புரட்சியின் ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்த இந்தப் பாதைகள் அமைக்கப்பட்டன.

ஹோ-சி-மின் 87
மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டத்தின் தீர்மானம் மற்றும் ஹோ-சி-மின் வகுத்தளித்த தெளிவான பாதையும் மொத்தக் கட்சியாலும் மனப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.
1942 ஆகஸ்ட் மாதத்தில் அவர் ஹோ-சி-மின் என்ற பெயரில் சீனாவுக்குச் சென்றார். சீனாவில் வசித்து கொண்டிருந்த வியத்நாமியர்கள் மத்தியில் ஜப்பானிய எதிர்ப்பு சக்திகளை சந்திப்பதற்கு அவர் சென்றார். ஆனால் அவர் எல்லையைக் கடந்ததும் ஸ்தலத்திலிருந்த சியாங்-கே-ஷேக் அரசாங்கத்தின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தார்கள். அவர் ஓர் ஆண்டுக்கும் அதிகமான காலம் சிறையில் இருந்தார். குவாங்சி மாகாணத்தின் 13 மாவட்டங்களில் 18 சிறைச் சாலைகளுக்கு அவரை மாற்றியனுப்பித் துன்புறுத்தினார்கள். அவருக்கு நேரத்துக்கு சரியான உணவு தரப்படவில்லை; உடை இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருடைய பற்கள் விழுந்தன. அவர் தலைமுடி அதிக வெண்மை ஆயிற்று.
இத்தகைய சோதனையான நிலைமையில்தான் அவர் 'சிறை டைரி என்ற தலைப்பில் சீனமொழியில் நூறு கவிதைகளை ஒரு நோட் புத்தகத்தில் எழுதினார். முதல் பக்கத்தில் விலங்குகள் போடப்பட்ட இரண்டு கைகளைப் படமாக வரைந்து பின்வரும் கவிதையை எழுதினார்.
என் உடல் சிறையில் என் உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது மாபெரும் இலட்சிய வெற்றிக்கு உயிரே உணர்வே பொங்கியெழு?
'உறுதியான எவரும் வெல்லமுடியாத சமரசத்துக்கு இடம் தராத புரட்சிகர உணர்ச்சியில் தோய்ந்திருக்கின்ற இக்கவிதை நூல் ஒரு மாபெரும் தேசபக்தர் மற்றும் கம்யூனிஸ் டின் உணர்ச்சியை அறவியலை குணாம்சத்தை" வெளியிடுகிறது. ஊசலாட்டமின்றிப் போராடுகின்ற சித்தத்தையும் எல்லாவிதமான துன்பங்களையும் விரட்டக் கூடிய உணர்ச்சியையும் வெளியிடுகிறது. புரட்சிகர நம்பிக்கை, தேசபக்தி மற்றும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை வெளியிடுகிறது.

Page 50
88 ஹோ-சி-மின்
ஹோ - சி - மின்னுடைய வீரத் திருவுருவம் கொடுமைச் சிறையின் காரிருளில் பிரகாசித்தது. சிறைவாழ்க்கையின் துன் பங்கள் அவருடைய இரும்பு மனத்தையும் புரட்சிகர உணர்ச்சியையும் மேலும் உறுதியாக்கின.
பிடிவாதமும் விடாமுயற்சியும்
என்னுடன் பிறந்தவை
நான் ஓர் அங்குலம் கூடப்
பின்வாங்க மாட்டேன்
என் உடல்வலிதாங்கமுடியவில்லை
ஆனால் என் உணர்ச்சி
ஒருபோதும் துவளாது
அவருடைய சிந்தனைகளும் உணர்ச்சிகளும் சிறைச்சாலையின்
சுவர்களையும் தாண்டி தாய்நாட்டையும் தன் தோழர்களையும் மக்களையும் சுற்றிச் சுழன்றன. தாய்நாட்டின் மீது அவர் அவ்வளவு அதிகமான பற்று வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் தாய்நாட்டைப் பற்றிய செய்திக்கு ஏங்கினார்; அவரால் இரவில் தூங்கமுடியவில்லை.
காவலனின் முதல்மணி. இரண்டாவது. மூன்றாவது மணியும் ஒலிக்கிறது நான் புரண்டு படுக்கிறேன் என்னால் தூங்க முடியவில்லை நான்காவது. ஐந்தாவது என் கண்களை மூடியவுடனே ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரக் கொடி என் கனவுகளில் தோன்றி என்னைச் சுற்றுகின்றது.
அவர் வரலாற்றின் வளர்ச்சி விதிகளை மனப் பாடமாக அறிந்தவர்; ஆகவே புரட்சியின் வாய்ப்புகளை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டவர். எனவே இறுதி வெற்றியில் முழுநம்பிக்கை உள்ளவர். அவருடைய புரட்சிகர நம்பிக்கையும் எதிர்தாக்குதலும் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன.

ஹோ-சி-மின் 89
அனைத்தும் வளருமென்பது
இயற்கை விதி பலநாட்கள்
மழை கொட்டிய பிறகு,
இதமான பருவநிலை வருகிறது
மனிதனுடைய இதயத்திலும் பிரபஞ்சத்திலும்
மகிழ்ச்சி பொங்கி வழிகிறது
கசப்பு முடிந்து இனிப்பு வரும்
அது இயற்கை நியதி.
女 ★
தொலைவுக்கு அப்பால் பார்; ஆழமாக
சிந்தனை செய், உறுதியுடன் இரு
தாக்கு, இடைவிடாமல் தாக்கு.
★ 女
நீதவறு செய்தால்
இரண்டு வண்டிகள்
இருந்தால்கூடப் பயனில்லை
சரியான நேரம் வந்துவிட்டால்
சதுரங்கக் காயும் வெற்றி தரும்.
'சிறை டைரி விலை மதிப் பற்ற வரலாற்று ஆவணம் மட்டு மல்ல அது ஒரு சிறந்த இலக்கிய படைப்புமாகும். 'அதில் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறந்த போராளியின் இரும்பு, மனத்தையும் உணர்ச்சியையும் வெளியிடுகின்றன.* அந்த நூல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்குப் புரட்சிகர அறவியல் மற்றும் பண்பைப் பயிற்று விப்பதில் ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தது.
ஹோ - சி-மின் 1943 செப்டம்பர் மாதத்தில் விடுதலை
செய்யப்பட்டார். அவர் லுச்சோவ் என்ற சீன நகரத்தில் வசித்த வியத்நாமியர்கள் மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த ஜப்பானிய- எதிர்ப்பு மற்றும் பிரெஞ்சு எதிர்ப்பு ஸ்தாபனங்களுடன் தொடர்பு கொண்டார். இதற்கிடையில் அவர் தாய்நாட்டுக்குத் திரும்பு வதற்கும் இயக்கத்துக்குத் தொடர்ந்து தலைமை தாங்குவதற்கும் மறுபடியும் கட்சியைத் தொடர்பு கொண்டார்.

Page 51
90 ஹோ-சி-மின்
1941 கடைசியிலும் 1942இன் ஆரம்பத்திலும் வி-ந் ஹாய் (தாய்-ந்குயேன் மாகாணம்) கொரில்லாப் போர் எட்டு மாத காலம் நடைபெற்றது. 1944 ஜூலை மாதத்தில் புரட்சிகர இயக்கம் ஓரளவுக்கு வலிமையாகவே வளர்ச்சி அடைந்தது. பாக்ஸோன், வு-ந் ஹை மற்றும் காவோ- பாங் ஆகிய தளங்களில் இயக்கம் வெடித்து கொரில்லாப் போர் ஆரம்பமாயிற்று. 1944 ஜூலையில் இந்த மூன்று மாகாணங்களில் கொரில் லாப் போரை ஆரம்பிப்பதற்கு நிலைமைகள் பக்குவமடைந்திருப்பதாக மூன்று மாகாணங்களின் கட்சிக் கமிட்டிகள் முடிவு செய்தன மற்ற பிரச்சினைகளை முடிவு செய்வதற்கும் கடைசியாக ஒரு கூட்டம் நடத்துவதென்றும் அதில் புரட்சிக்குத் தேதியை முடிவு செய்வதென்றும் திட்டமிடப்பட்டது. அந்த சமயத்தில் ஹோ-சி-மின் காவோ-பாங் மாகாணத்துக்கு வந்தார். நிலைமையைப் பற்றிய அறிக்கைகளையும் , மாகாணக் கமிட்டிகளின் தீர்மானத்தையும் கேட்டபிறகு புரட்சியைத் தள்ளிவைப்பது என்று அவர் முடிவு செய்தார்.
காவோ-பாக் - லாங் மாகாணங்களில் உள்ள நிலைமையை மட்டும் பரிசீலித்து விட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமுள்ள நிலைமை பரிசீலிக்கப்படவில்லை; அதாவது கமிட்டி நிலைமையின் ஒரு பகுதியைப் பரிசீலித்திருக்கிறது, மொத்த நிலைமையைப் பார்க்கவில்லை என்று அவர் கருதினார். நாட்டில் பல பிரதேசங்கள் புரட்சிக்குத் தயாராக இல்லை; ஊழியர்களும், ஆயுதங்களும் சிதறிக் கிடந்தன; முதுகெலும்புப் படை முற்றாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் கொரில் லாப் போரை பெரிய அளவில் ஆரம்பித்தால் அது உறுதியாகத் தோல்வி அடையும். ஏனென்றால் ஏகாதிபத்திய வாதிகள் தமது சக்திகளை ஒன்று குவித்து அதை நசுக்கி விடுவார்கள். புரட்சி அமைதியான முறையில் வளர்ச்சியடைகின்ற கட்டம் முடிந்து விட்டது. ஆனால் தேசிய எழுச்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அவர் கருதினார். நாம் அரசியல் நடவடிக்கைகளுடன் நிறுத்தி விடக் கூடாது. அரசியல் போராட்டங்களிலிருந்து இராணுவ யுத்தங்களுக்கு முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் தற்பொழுது இராணுவ நடவடிக்கையைக் காட்டிலும்

ஹோ-சி-மின் 91.
அரசியல் போராட்டமே அதிகமாக முக்கியத்துவம் கொண்டிருக்கிறது. நாம் வெற்றி பெறப் பொருத்தமான முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
அரசியல் மற்றும் இராணுவப் போராட்ட முறைகளை ஒன்றிணைக்கின்ற கருத்தை ஹோ - சி-மின் முன் வைத்தார். அவ்வாறு இணைப்பதன் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப் பற்றுவதற்கு, புரட்சி செய்வதற்கு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் படைப் பிரிவுகளைத் தயாரிப்பதற்கும் மக்களும் அவர்களுடைய அரஇயல் போராட்டங்களுமே அடிப்படையாகும். மக்களின் புரட்சி அமைப்புகளை எவ்வளவு அதிகமாக வலுப்படுத்து கின்றோமோ அந்த அளவுக்கு அரசியல் போராட்டங்கள் தீவிரமடையும், ஆயுதப் படைகளைத் தயாரித்து, ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்குரிய அடிப்படை அந்த அளவுக்கு உறுதி அடையும்.
காவோ- பாக் - லாங் புரட்சி இயக்கம் அதிகமான சேதங்களைத் தவிர்த்ததற்கு இந்தத் தெளிவான சிந்தனையும் வழிமுறையும் காரணமாகும்.
இதற்குப் பிறகு வியத்நாம் விடுதலைக்கு பிரச்சாரப் படையைத் தயாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார். அதில் இராணுவ நடவடிக்கையைக் காட்டிலும் அரசியல் நடவடிக்கை முக்கியமாக இருக்கும்; செயல்தந்திரத்தைக் காட்டிலும் பிரச்சாரம் முக்கிய்மாக இருக்கும். அது ஆயுதங்களுடன் சென்று பிரச்சாரம் செய்யும் புரட்சிக்கு அரசியல் மற்றும் இராணுவ தளங்களைத் தயார் செய்யும்.
அவர் அறிக்கைகளில் பின்வருமாறு சுட்டிக் காட்டினார்: '.வியத்நாமின் விடுதலைக்குப் பிரச்சாரப் படை என்ற பெயர், இராணுவப் பகுதியைக் காட்டிலும் அரசியல் பகுதி அதிக முக்கி யமானது என்பதைக் காட்டுகிறது. அது ஒரு பிரச்சாரப் பிரிவு, இராணுவ நடவடிக்கைகளில் வெற்றியடைவதற்கு சக்திகளை ஒன்று குவிக்கவேண்டும். ஆகவே காவோ-பாக்-லாங்கிலுள்ள கொரில்லாப் பிரிவுகளிலிருந்து அதிகமான ஆர்வமும் உறுதியும் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து

Page 52
92 ஹோ-சி-மின்
பிரதான - பிரிவு அமைக்கப்படும். நம்மிடமுள்ள ஆயுதங்களில் பெரும்பகுதி அந்தப் பிரிவிடம் கொடுக்கப்படும்.'
'நாம் அனைத்து மக்களுடைய தேசிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். நாம் மக்கள் எல்லோரையும் திரட்டி அவர்களை ஆயுதபாணியாக்க வேண்டும். படைப்பிரிவை அமைப் பதற்கு நம்முடைய சக்திகளை ஒன்று குவிக்கும்போது ஸ்தல ஆயுதப் பிரிவுகளையும் நாம் வைத்திருக்க வேண்டும். இவை நடவடிக்கைகளை ஒருங்கிணைவு செய்து எல்லா அம்சங்களிலும் ஒன்றுக்கொன்று உதவியளிக்கும். பிரதான படைப் பிரிவு ஸ்தல ஆயுதப் பிரிவுகளுக்கு உதவி செய்ய வேண்டும். அவற்றின் உறுப்பினர்களுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் தந்து அவை வளர்ச்சி அடைவதற்கு உதவி அளிக்கவேண்டும்.”*
படைப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகு அது பாராட்டத்தக்க சாதனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முதல் நடவடிக்கையிலேயே வெற்றிபெற வேண்டும். பயிற்சி பெற்ற வீரர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் , தலைமை அமைப்புடன் இடைவிடாத தொடர்பு இருக்க வேண்டும். போர் நடவடிக்கையில் கொரில் லாக்கள் இரகசியமாக சுறுசுறுப்பாக உடனடியாக செயல்பட வேண்டும்; ஆணவம் கூடாது; எதிரியின் சக்தியைக் குறைவாக மதிப்பிடக்
கூடாது.
ஹோ-சி-மின் ஆணைகள் அந்தக் காலகட்டத்தில் கட்சியின் இராணுவத் திசைவழியின் முக்கியமான பிரச்சினைகளுக்கு வழிகாட்டியது. பிற்காலத்தில் நீண்டகால எதிர்ப்புக் கூட்டத்துக்கு கூட அது உதவியாக இருந்தது. மூன்று விதமான துருப்புகளை அமைப்பதற்கு வழிகாட்டியது. படைப்பினர் இராணுவ நடவடிக்கை மற்றும் அரசியல் போராட்டத்தை இணைக்கின்ற வடிவத்தை உருவாக்கியது. கொரில்லா போர்முறை, தந்திரங்கள். இதரவற்றை அமைத்தது.
அச்சமயத்தில் உருவாகிக்கொண்டிருந்த மக்கள் சேனை மற்றும் ஹோ-சி-மின் வழிகாட்டும் ஆணைகளின் அடிப்படை

ஹோ-சி-மின் 93
யிலும் 'வியத்நாம் விடுதலைக்குப் பிரச்சாரப் படை 22.12.1944ஆம் நாளன்று ஜெனரல் கியாப் தலைமையில் அமைக்கப்பட்டது.
முதல் தாக்குதலில் வெற்றி பெறவேண்டும் என்பது ஹோ-சி-மின் ஆணை. 1944 டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் வியத்நாம் விடுதலைக்கான பிரச்சாரப் படை தொடர்ச்சியாக இரண்டு பெரும் வெற்றிகளைப் பெற்றது. பாய்-காட், நா-ந் கான் (காவோ-பாங்) ஆகிய பிரெஞ்சு தளங்கள் அழிக்கப்பட்டன. அன்று முதல் வியத்நாம் படைகளின் வெற்றிகர முன்னேற்றம் ஆரம்பமாயிற்று.
ஹோ-சி-மின் நாட்டில் இராணுவ மற்றும் அரசியல் சக்திகளை வலுப் படுத்திக் கொண்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். தேசிய விடுதலை பெறுவதற்கான நேரம் நெருங்கி விட்டது, தேசிய காங்கிரசைக் கூட்டுவதற்கு எல்லா கட்சிகளும் ஸ்தாபனங்களும் துரிதமான முறையில் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆக்கிரமிப்பாளர்கள் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கி றார்கள். போரில் நேச நாடுகள் இறுதி வெற்றி அடையப் போகின்றன. நமது மக்கள் தம்மைத் தாமே விடுதலை செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஓர் ஆண்டு அல்லது ஒன்றர்ை ஆண்டிற்குள் வந்துவிடும். காலம் நெருங்கி விட்டது. "நாம் வேகமாக நடவடிக்கைகளைச் செய்யவேண்டும்.
"இந்த ஆண்டில் தேசிய காங்கிரசைக் கூட்டுவதற்கு கட்சிகளும் ஸ்தாபனங்களும் அக்கறையுடன் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். நமக்கு அயல்நாட்டு உதவி நிச்சயமாகக் கிடைக்கும். தேசிய மீட்சி லட்சியம் உறுதியாக வெற்றி பெறும்.”*
ஜப்பானிய பாசிஸ்டுகளும் பிரெஞ்சுக் காலனியவாதிகளும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதற்கு முயற்சி செய்வார்கள் என்று ஹோ - சி-மின் கட்சியின் மத்திய கமிட்டியின் 8வது விரிவடைந்த கூட்டத்திலிருந்து, குறிப்பாக 1944 செப்டம்பர் மாதத்திலிருந்து கருதினார். 1945 மார்ச் 9ஆம் நாளன்று ஜப்பானியர்கள் 'திடீர்ப் புரட்சி செய்து பிரெஞ்சு காலனிய

Page 53
94 ஹோ-சி-மின்
வாதிகளை அகற்றினார்கள் . இந்தோசீனாவின் ஆட்சிய திகாரத்தை முழுமையாகக் கைப்பற்றினார்கள். 1945 மார்ச் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற மத்திய கமிட்டியின் நிலைக் குழு டின் - பாங் என்னும் இடத்தில் விரிவடைந்த கூட்டத்தை நடத்தியது. நாட்டு நிலைமையை விவாதித்தபிறகு ஜப்பானியபிரெஞ்சு சண்டையும் நமது நிலையும்’ என்ற மிகவும் முக்கியமான ஆணையை வெளியிட்டது. ஜப்பானிய திடீர்ப் புரட்சி நாட்டில் ஆழமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும், புரட்சிகர எழுச்சிக்கு உரிய நிலைமைகள் முதிர்ச்சியுறுவதை விரைவுபடுத்தும் என்று கூட்டம் முடிவு செய்தது. ஜப்பானிய பாசிஸ்டுகள் மற்றும் அவர்களுடைய ஏசன்டுகள் பிரதான மற்றும் உடனடியான எதிரிகள் என்று சுட்டிக் காட்டியது. புரட்சிகர எழுச்சிக்குப் பீடிகையாக, ஜப்பானியர்களுக்கு எதிராக தேசிய மீட்சிக்கு மாபெரும் போராட்டத்தை ஆரம்பிப்பது மொத்தக் கட்சியின் கடமை என்று வலியுறுத்தியது. அதன்பிறகு தேசிய மீட்சிக்கான இயக்கம் வேகமாக வளர்ச்சியடைந்தது.
ஹோ-சி-மின் நாடு முழுவதிலுமுள்ள புரட்சி இயக்கத்துக்கு நேரடியாக வழிகாட்டுவதற்கு 1945 மே மாதத்தில் காவோ -பாங்கிலிருந்து டான்-டிராவோவுக்கு மாறினார். நாட்டு நிலைமை பற்றி விரிவான அறிக்கைகளைக் கேட்டார். மத்திய கமிட்டியின் நிலைக்குழு மற்றும் புரட்சிகர இராணுவ மாநாட்டின் (பாக்கி, 1945 ஏப்ரல்) ஆணை சரியானது என்று அவர் கருதினார். அதே சமயத்தில் அவர் முக்கியம் என்று கருதிய விஷயங்களையும் ஆணையுடன் சேர்த்தார். வியட்-பாக் விடுதலைப் பிரதேசத்தை? அமைத்தல், ஆயுதப் படைகளை விடுதலைப் படையினருடன் சேர்த்தல் முக்கியம் என்று அவர் கருதினார். விடுதலைப் பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பத்து கொள்கைகளை அவர் வெளியிட்டார்: ஜப்பானிய பாசிஸ்டுகளையும் தேசத் துரோகக் கும்பலையும் நாட்டிலிருந்து விரட்டுதல் ; ஆக்கிர மிப்பாளர்கள் மற்றும் தேசத்துரோகிகளுடைய சொத்துகளைக் கைப் பற்றி ஏழைகளுக்கு வினியோகம் செய்தல், எல்லா மக்களுக்கும் வாக்குரிமை மற்றும் ஜனநாயக சுதந்திரம் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்கள் கொரில்லாக்களுக்கும் விடுதலைப் படைக்கும் ஆதரவளிக்குமாறு கோருதல்; விடுதலை

ஹோ-சி-மின் 95
யடைந்த பிரதேசங்களில் நில மீட்பு இயக்கத்தின மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்; பொதுநிலங்களை மறு - விநியோகம் செய்தல், நிலக் குத்தகை மற்றும் கடன்களுக்கு வட்டியைக் குறைத்தல், கடன்களைக் கொடுக்கும் தவணைகளை நீட்டித்தல், வரிகள் மற்றும் இலவசப் பணிகளை ஒழித்தல், கல்லாமையை ஒழித்து மக்களுக்கு இராணுவப் பயிற்சியும் அரசியல் பயிற்சியும் அளித்தல்; எல்லா தேசிய இனங்களுக்கும் இடையில் சமத்துவம், ஆண்- பெண்- சமத்துவம் ஆகியவை.
வியட்மின் தேசியக் கமிட்டி அவருடைய ஆணைப்படி 4.6.1945 இல் ஊழியர் மாநாட்டை நடத்தி விடுதலைப் பிரதேசத்தை அதிகாரபூர்வமாக அமைக்க முடிவு செய்தது.
விடுதலைப் பிரதேசம் அமைக்கப்பட்டது வியத்நாம் மக்களிடையே மாபெரும் வெற்றி. அது நாடு முழுமைக்கும் புரட்சிகர தளமாக இருந்தது. எதிர்காலத்தில் அமையவிருக்கின்ற புதிய வியத்நாமின் சிற்றுருவமாக இருந்தது. தேசிய மீட்சிக்கான ஜப்பானிய எதிர்ப்பு இயக்கத்துக்கு அது உத்வேகமூட்டி வளர்த்தது.
உலகப் போர் முடிவடைந்துகொண்டிருந்தது. ஜெர்மானிய மற்றும் இத்தாலிய பாசிஸ்டுகள் சோவியத் யூனியன் மற்றும் நேச நாடுகளிடம் சரணடைந்துவிட்டார்கள். ஜப்பானிய பாசிஸ்டுகளின் அழிவும் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தோசீனாவில் ஜப்பானியத் துருப்புகளிடம் குழப்பம் நிலவியது. நாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் புரட்சிகரமாக கொந்தளித்தது. புரட்சிகர எழுச்சிக்கு நிலைமைகள் முதிர்ச்சி அடைந்து விட்டன. ஹோ-சி-மின் உடல்நிலை மோசமடைந்திருந்தாலும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைக் கைப்பற்றினார்.
'இப்பொழுது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலைமை நமக்கு மிகவும் சாதகமாக உள்ளது. ஆகவே நமது கட்சி மக்களுடைய சுதந்திரப் போராட்டத்துக்கு முழு அளவில் தலைமை தாங்க வேண்டும், எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். நமது போராட்டத்தில் ட்ரூவோன்-லோங்

Page 54
96 ஹோ-சி-மின்
மலைப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தாலும் சுதந்திரத்தை வென்றெடுப் பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் '* என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்தாபன வேலையைப் பற்றி அவர் பின்வருமாறு கூறினார்: 'கட்சி செல்லைக் கட்டுவது; ஊழியர்கள் உறுப்பினர்கள் மற்றும் புரட்சிகர மக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு எப்பொழுதும் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும்.'87
ஹோ-சி-மின் பிரேரணையின்படி கட்சியின் மாநாடு வியத்நாம் தேசிய காங்கிரசும் வான்-டிராவோ என்ற இடத்தில் அடுத்தடுத்து நடைபெற்றன. அந்த சமயத்தில் வீரம் நிறைந்த செஞ்சேனை வடகிழக்கு சீனாவில் ஜப்பானிய பாசிஸ்டுகளின் இராணுவத்தை அழித்தது.
1945 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாடு புரட்சிகர எழுச்சியை நடத்த முடிவு செய்தது. 'ஆக்கிரமிப்பை எதிர்த்தல்', 'முழுமையான சுதந்திரம்', "மக்களாட்சி' ஆகியவை குறிக்கோள்கள் என்று முடிவுசெய்யப்பட்ட்து. ஒன்று குவிப்பு, ஒற்றுமையான நடவடிக்கை, சரியான நேரத்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்குதல் வற்புறுத்தப்பட்டது. நிச்சயமாக வெற்றி அடையக் கூடிய நகரத்தில் அல்லது கிராமங்களில் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்; தாக்குதலுக்கு முன்பு எதிரியின் மனவுறுதியைக் குலைப்பதற்கு தகுந்த அரசியல் போராட்டத்தை இராணுவப் போராட்டத்துடன் சேர்ந்து நடத்த வேண்டும்.
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தமட்டில், மக்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் ஸ்தாபனத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். அது வியட் - மின்னுடைய பத்து முக்கியமான கொள்கைகளை, மொத்த கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகள் என்ற முறையில் ஏற்றுக் கொண்டது.
வெளிநாட்டுப் பிரச்சினையில் நாம் ஆங்கில-பிரெஞ்சு மற்றும் அமெரிக்கா -சியாங்-கே-ஷேக்குக்கு இடையிலான முரண்பாடு களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒரே சமயத்தில் பல எதிரிகளுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டும். பிரிட்டிஷ்அமெரிக்க- பிரெஞ்சு அணிக்கும் சோவியத் யூனியனுக்கும்

ஹோ-சி-மின் 97
இடையிலுள்ள எதிர்ப் பின் காரணமாக ஆங்கிலோ அமெரிக்கர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் சமரசம் செய்துகொண்டு அவர்கள் இந்தோ-சீனாவுக்குத் திரும்புவதை அனுமதிக்கக்கூடும். கட்சி அரசியல் மற்றும் ஸ்தாபனரீதியில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். கட்சிக்குள் வலதுசாரி மற்றும் "இடதுசாரி' திரிபுகளை எதிர்க்கவேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் எல்லாரும் புரட்சிகர எழுச்சியில் தீவிரமாகப் பங்கெடுத்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்.
உண்மையான பலம் ஒன்றே வெற்றியை உறுதிப்படுத்துகின்ற ஒரே காரணி என்று கட்சியின் தேசிய மாநாடு வலியுறுத்தியது.
ஜப்பானிய இராணுவம் நேசநாடுகளிடம் சரணடைந்த தகவல் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் கிடைத்தது. மாநாட்டுத் தீர்மானத்தின் உணர்ச்சியுடன் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்குவதற்காக ஹோ-சி-மின் சிலரை ஸ்தலங்களுக்கு அனுப்பினார். புரட்சிச் சூழல் நாடு முழுவதும்
பரவியது.
1945 ஆகஸ்ட் 16-17ஆம் தேதிகளில் ஹோ - சி-மின் தலைமையில் தேசிய காங்கிரஸ் நடைபெற்றது. நாட்டின் அரசியல் கட்சிகள், மக்கள் ஸ்தாபனங்கள், தேசிய இனங்கள், மத ஸ்தாபனங்கள் வடக்கு, மத்தியப் பகுதி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளிலிருந்து கலந்து கொண்டார். வெளிநாடுகளில் வசிக்கின்ற வியத்நாமியர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். மக்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான ஹோ - சி-மின்னை முதல் முறையாக சந்திக்கின்ற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்ற ஸ்தல பிரதிநிதிகளை ஹோ-சி-மின் சந்தித்தபொழுது அங்கே நின்றுகொண்டிருந்த ஏழைக் குழந்தைகளைப் பற்றி அவர்களிடம் பேசினார்: "இந்தக் குழந்தைகளுக்கு, உணவும் உடையும் தரவேண்டும் அதை எப்படி செய்வது? இனியும் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்கக் கூடாது'* என்று கூறினார்.
அவர் மாநாட்டுக்கு முதல் நாளன்று தலைமை தாங்கினார். அவருடைய சொற்பொழிவையும் மத்திய கமிட்டி உறுப்பினர்

Page 55
98 ஹோ-சி-மின்
களுடைய அறிக்கைகளையும் எல்லோரும் கவனமாகக் கேட்டார்கள். புரட்சிகர எழுச்சியை ஆரம்பிப்பதென்று நமது கட்சியும் வியட் மின்னும் செய்த முடிவை தேசிய காங்கிரஸ் வரவேற்றது. நேச நாடுகளைச் சேர்ந்த இராணுவம் இந்தோ - சீனாவுக்கு வருவதற்குள்ளாக நாம் சுதந்திரத்தை வென்று விடவேண்டும் என்ற உறுதியை காங்கிரஸ் வெளியிட்டது. 'ஜப்பானியர்கள் தோற்கடிக்கப்பட்ட உடனே நமது நாடு தன்னியக்க முறையில் சுதந்திரழ் அடைந்துவிடாது. பல கஷ்டங்களும் தடைகளும் குறுக்கே வரும். நாம் மதிநுட்பத்துட னும், உறுதியுடனும் செயலாற்ற வேண்டும். முழு சுதந்திரம் அடைவோம் என்ற உறுதி நமக்கு வேண்டும். உலக யுத்தத்துக்குப் பிறகு சுதந்திரம் கேட்பதில் உறுதியும் ஒற்றுமையும் உள்ள மக்கள் சுதந்திரத்தை நிச்சயமாக அடைவார்கள். நாம் வெற்றி
89
பெறுவோம்
தக்க சமயத்தில் எழுச்சியில் ஈடுபடுங்கள், தேசிய விடுதலைப் புரட்சி பெற ஒற்றுமையுடன் போராடுங்கள் என்று தேசிய காங்கிரஸ் மக்களையும் புரட்சிகர ஸ்தாபனங்களையும் கேட்டுக் கொண்டது. ஹோ-சி-மின்னைத் தலைவராகக் கொண்ட விடுதலைக்கான வியத்நாம் கமிட்டி (அதாவது வியத்நாம் ஜனநாயகக் குடியரசின்
தற்காலிக அரசாங்கம்) அமைக்கப்பட்டது.
செங்கொடியின் நடுவில் பொன்னிறத்தில் ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரம் தேசியக் கொடி, டியென் - குவான் - கா (அணிவகுப்புப் பாடல்) தேசிய கீதம் என்று காங்கிரஸ் முடிவு செய்தது. 総
காங்கிரஸ் முடிவடைந்தபிறகு, மொத்த வியத்நாமிய மக்களும் தேசிய மீட்சிச் சங்கங்களும் போராளிகளும் ஊழியர்களும் கிளர்ந்தெழுந்து ஆட்சியைக் கைப் பற்றுமாறு இந்தோ-சீன, கம்யூனிஸ்ட் கட்சியும் ஹோ-சி-மின்னும் அறை கூவினார்கள்.
பேரெழுச்சியில் கலந்துகொள்ளுமாறு ஹோ-சி-மின் வெளியிட்ட அறைகூவல் நாடு முழுவதும் ஒலித்து எதிரொலித்தது.
'அன்புள்ள தாய்நாட்டினரே!

ஹோ-சி-மின் 99
தற்சமயம் ஜப்பானிய இராணுவம் வீழ்ந்துவிட்டது. தேசிய மீட்சி இயக்கம் நாடு முழுவதிலும் பரவியிருக்கிறது.
நாட்டு மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற முக்கியமான நேரம் வந்துவிட்டது. நாம் எல்லாரும் விடுதலை அடைவதற்கு நமது சொந்த பலத்தில் நம்பிக்கை வைத்து எழுவோம்!
உலகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களினங்கள் சுதந்திரம் அடைவதற்கு போட்டி போட்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. நாம் பின்தங்கிவிடக் கூடாது.
முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்! வியத்மின் பதாகையின் கீழ் நாம் வீரமாக முன்செல்வோம்!'°
அவருடைய அறைகூவலுக்குப் பிறகு நம் நாட்டில் வடக்கு முதல் தெற்குவரை கீழ்நிலப்பகுதி முதல் உயரமான பகுதி வரை இலட்சக்கணக்கான மக்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கிளர்ந்தெழுந்தார்கள்.
1945 ஆகஸ்ட் 19ஆம் நாளன்று ஹனோய் நகராட்சி சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பொம்மை அரசாங்கத்தின் அலுவலகங்களைக் கைப் பற்றினார்கள். புரட்சிகரமான மக்கள் பெருந்திரளாக வந்தபொழுது ஜப்பானியத் துருப்புகள் அவர்களிைச் சுடுவதற்கு பயந்து அதிகாரத்தை வியத்நாம் மக்களிடம் ஒப்படைத்தார்கள்.
1945 ஆகஸ்ட் 23ஆம் நாளன்று ஹ்யு நகர மக்கள் ஒன்றரை லட்சம் பேர் தெருக்களில் ஊர்வலமாக வந்தார்கள். பாவோடாய் பதவியிலிருந்து இறங்கினார். பொதுமக்கள் அரசு அலுவலகங் களைக் கைப்பற்றி பிற்போக்காளர்களை விரட்டியடித்தார்கள்.
1945 ஆகஸ்ட் 25ஆம் நாளன்று சைகோன் - சோலோன் நகரத்தைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் தெருவில் இறங்கினார்கள். பொம்மை அரசாங்கப் பிரதிநிதியைப் பதவி விலகுமாறு செய்தார்கள். பிற்போக்காளர்கள் ஊரைவிட்டு ஓடினார்கள்.

Page 56
100 ஹோ-சி-மின்
புரட்சிகர எழுச்சி பதினைந்து நாட்களில் நாடு முழுவதிலும் வெற்றி அடைந்தது. சுமார் நூறு ஆண்டுகள் நடைபெற்ற காலனிய ஆட்சியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த முடியாட்சியும் அழிந்தன. நிர்வாகத் தைப் புரட்சிகர மக்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது உலகப் போர் ஆரம்பமான பொழுது ஹோ - சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் முற் கூட்டி அறிவித்ததைப் போல ஆகஸ்ட் புரட்சி நல்ல சந்தர்ப்பத்தில் வெடித்தது. புரட்சி வரப் போகிறது, மக்கள் அதை விரைவு படுத்தவேண்டும் என்று அவர் புரட்சிகரப் பாதை' என்ற பிரசுரத்தில் எழுதினார்.
ஹோ-சி-மின் உடல்நலம் குன்றியிருந்தாலும், புரட்சியின் வெற்றிக்குப் பிறகு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான அம்சங்களை முடிவு செய்வதற்கு கட்சியின் மத்திய கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஹனோய் நகரத்துக்கு உடனே வருவதற்கு விரும்பினார். அவர் தை-நகுயேனைக் கடந்து மத்தியப் பகுதிக்கு வந்தபொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். எங்கும் தண்ணீர், நெல் வயல்கள் சமுத்திரத்தைப் போலத் தோன்றின. மக்களை வறுமையிலிருந்தும் பட்டினியிலிருந்தும் எப்படி காப்பாற்றுவது என்று அவர் ஆழமாக சிந்தித்துக்கொண்டிருந்தார்.
1945 ஆகஸ்ட் 25ஆம் நாளன்று அவர் ஹனோயின் புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தார். கா என்னும் பெயரைக் கொண்ட கிராமத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் அவர் தங்கினார். மறுநாள் நகரத்துக்குள் சென்றார்.
புரட்சிகர எழுச்சி வெற்றியடைந்த பிறகு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலைமை இருந்தது. ஆகவே அவர் ஹனோயில் கட்சியின் மத்திய கமிட்டியின் நிலைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டினார். அவர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். புதிய நிலைமையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சினைகளில் நிலைக் குழுவின் கருத்துகளுடன் அவர் உடன் பட்டார். தற்காலிக

ஹோ-சி-மின் 101
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சம்பந்தமாக உழைக்கும் மக்கள் தேசபக்திக் கட்சிகள் மற்றும் பிரிவுகள், கட்சி சாராத பிரமுகர் களையும் சேர்த்துக்கொண்டு தற்காலிக அரசுக்கு விரிவான வர்க்க அடிப்படையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் முன் மொழிந்தார். ஹனோயில் மாபெரும் கூட்டத்தை நடத்தி சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றார். வியத்நாம் தனது சுதந்திரத்தை, ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டிருப்பதை அதிகாரபூர்வமாக அங்கே அறிவிக்க வேண்டும். ஜப்பானியத் துருப்புகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப் பற்றுவதற்கு சியாங்-கே-ஷேக் துருப்புகள் இந்தோ- சீனாவுக்கு வருவதற்குள் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஹோ - சி-மின் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத முக்கியமான தேசபக்தர்களுக்கு தற்காலிக அரசாங்கத்தில் இடமளிப்பதற்கென்று கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் பலர் ஒதுங்கிக் கொண்டார்கள்.
*பதவிமோகம் இல்லாத கட்சி ஊழியர்கள் தன்னலமின்றி பெருந்தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். தனிநபர் நலன்களைக் காட்டிலும் தேசிய ஒற்றுமை முக்கியம், நாடு முக்கியம் என்பதை அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்’** என்று ஹோ-சி-மின் பிற்காலத்தில் கூறினார்.
தலைநகரத்துக்கு வந்தபிறகுகூட அவர் கொரில்லா தளத்தில் இருந்ததைப் போல எளிமையாக வாழ்க்கை நடத்தினார். அப்பொழுது பயன்படுத்திய உடைகள், செருப்புகளை இப்பொழுதும் பயன்படுத்தினார். அலுவலக கான் டீனில் உணவருந்தினார். அலுவலகத்திலுள்ள பெஞ்சின் மீது படுத்துத் தூங்கினார். அவர் பொதுக் கூட்டத்தில் மக்கள் முன் பாகத் தோன்றுவதற்கு முன்பு ஊழியர்கள் அவருக்கு புதிய காக்கி சூட்டும் வெள்ளை ரப்பர் செருப்புகளும் வாங்கிக் கொடுத்தார்கள்.
கட்சியின் முடிவுப்படி ஹோ-சி-மின் சுதந்திரப் பிரகடனத்தின் நகலைத் தயாரித்தார். ஹாங்-ந் காங் தெருவில் அமைந்துள்ள

Page 57
102 ஹோ-சி-மின்
வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் அவர் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தைத் தயாரித்தார். அதை எழுதும்பொழுது அவரிடம் உற்சாகம், மகிழ்ச்சி, பெருமிதம் அதிகமாக ஏற்பட்டது. என்னுடைய புரட்சிகர வாழ்க்கையில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் இவ்வளவு முக்கியமான ஆவணத்தை எழுதுகின்ற வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறினார்.
ஆகஸ்ட் 28ஆம் நாளன்று தற்காலிக அரசாங்கத்தின் உறுப்பினர்களுடைய பெயர்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டன. நாட்டைப் பாதுகாத்து புனர் நிர்மாணம் செய்கின்ற போராட்டத்தில் மக்களில் பல்வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்துகின்ற ஹோ - சி-மின் கொள்கையைக் கட்சி நிறைவேற்றியது. தற்காலிக அரசாங்கம் பதவி ஏற்பதன் முற்பொழுதில் பாக்-போ அரண்மனையில் ஹோ-சி-மின் புதிய, அமைச்சர்களுடன் அன்பாகக் கலந்துரையாடினார்.
1945 செப்டம்பர் 2ஆம் நாளன்று ஹனோயின் பா-டின் ஹ்" சதுக்கத்தில் தற்காலிக அரசாங்கத்தின் சார்பில் ஹோ-சி-மின் வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். வியத்நாம் ஜனநாயகக் குடியரசு பிறந்துவிட்டது, காலனிய மற்றும் நிலப் பிரபுத்துவ ஆட்சி முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. வியத்நாமிய மக்கள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் என்பதை அவர் நமது மக்களுக்கும் உலக மக்கள் எல்லாருக்கும் அறிவித்தார்.
அவருடைய தெளிவான உறுதி நிறைந்த குரல் பா-டின் ஹ் சதுக்கத்தில் ஒலித்தது. அவர் திடீரென்று படித்துக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு மக்களைப் பார்த்துக் கேட்டார்.
'அன்புள்ள தாய்நாட்டினரே! என் பேச்சு உங்களுக்குத் தெளிவாகக் கேட்கிறதா?”
அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பதிலளித்தார்கள். .
அந்தத் தருணத்திலிருந்து மக்கள் சமுத்திரமும் ஹோ-சி-மின்னும் ஒன்றாக இணைந்தார்கள்.

ஹோ-சி-மின் 103
சுதந்திரப் பிரகடனத்தின் மொத்த வாசகம் பின்வருமாறு:
'எல்லாரும் சமத்துவமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களுக்குப் பறிக்கப்பட முடியாத உரிமைகளைத் தந்திருக்கிறார். உயிர், சுதந்திரம், மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவை அந்த உரிமைகள்.
'ஐக்கிய அமெரிக்கா 1776ஆம் ஆண்டில் வெளியிட்ட சுதந்திரப் பிரகடனத்தில் இந்த அழியாத கருத்து இடம்பெற்றிருந்தது. பிறந்ததிலிருந்து பூவுலகத்தின் மக்கள் அனைவரும் சமமான வர்கள். வாழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு.'
பிரெஞ்சுப் புரட்சியின் போது மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகளைப் பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டது. 'எல்லா மனிதர்களும் சமத்துவ உரிமைகளுடன் சுதந்திரமானவர்களாகப் பிறக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் சுதந்திரமானவர்களாக சமத்துவ உரிமையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.'
இவை மறுக்கமுடியாத உண்மைகள். ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் எண்பதாண்டு களுக்கும் அதிகமாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலட்சியங்களை அவமதித்துவிட்டு நம் தந்தையர் நாட்டைக் கைப்பற்றி மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய செயல் , மனிதநேயம், நீதி ஆகிய இலட்சியங்களுக்கு எதிராகும்.
அரசியல் ரீதியில் அவர்கள் நமது மக்களுக்கு எந்த உரிமையும் தரவில்லை.
அவர்கள் மனித விரோதச் சட்டங்களை அமுலாக்கினார்கள். அவர்கள் வியத்நாமின் ஒருமையை அழிப்பதற்கும் நம் மக்கள் ஒன்று சேராமலிருப்பதற்கும் நாட்டை வடக்கு, மத்தியப் பகுதி, தெற்கு என்று மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான ஆட்சிமுறையை அமுல்செய்தார்கள்.
அவர்கள் பள்ளிக்கூடங்களைக் காட்டிலும் அதிகமான சிறைச் சாலைகளைக் கட்டினார்கள். அவர்கள் தேசபக்தர்களை இரக்க மில்லாமல் படுகொலை செய்தார்கள். நமது எழுச்சிகளை அவர்கள் இரத்தக் கடலில் மூழ்கடித்தார்கள்.

Page 58
1O4 ஹோ-சி-மின்
அவர்கள் பொதுமக்கள் கருத்துகளைச் சொல்லக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டார்கள். சீர்திருத்தங்களைத் தடை செய்தார்கள்.
அவர்கள் கஞ்சாவையும் மதுவையும் கொடுத்து நம் இனத்தை பலவீனப்படுத்தினார்கள்.
பொருளாதாரத் துறையில் அவர்கள் நம்மை ஒட்டக் கறந்து விட்டார்கள், நம்மை வகையற்ற நிலைக்கு விரட்டி நாட்டை நாசப்படுத்தினார்கள்,
நம்முடைய வளமான நிலங்களை, சுரங்கங்களை, காடுகளை, இயற்கை வளங்களை அவர்கள் அபகரித்தார்கள். அவர்கள் காகிதப் பணத்தை அச்சடித்தார்கள், நமது ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தைத் தமது ஏகபோகமாகச் செய்துகொண்டார்கள்.
அவர்கள் அநீதியான புதுப்புது வரிகளைக் கண்டுபிடித்தார்கள்; நாட்டு மக்களை, குறிப்பாக விவசாயிகளைக் கடுமையான வறுமை நிலைக்குத் துரத்தினார்கள்.
"நமது தேசிய முதலாளிவர்க்கம் வளம் பெறாமல் தடுத்தார்கள், நம் தொழிலாளர்களை இரக்கமில்லாமல் சுரண்டினார்கள்.
'1940ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ஜப்பானிய பாசிஸ்டுகள் இந்தோ-சீனா மீது படையெடுத்த பொழுது, பிரெஞ்சு காலனியவாதிகள் முழந்தாளிட்டு வணங்கி அவர்களை வரவேற்றார்கள்.
'அன்று முதல் நம் மக்கள் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களுடைய இரட்டை நுகத்தடிகளைத் தாங்கினார்கள். அவர்களுடைய துன்பங்களும் வேதனைகளும் அதிகரித்தன. சென்ற ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் குவாங்-டிரை மாகாணத்திலிருந்து வடக்குப் பகுதிவரை உள்ள பிரதேசத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நம்முடைய சகோதரக் குடிமக்கள் பட்டினியில் மரணமடைந்தார்கள்.
1945 மார்ச் 9ஆம் நாளன்று பிரெஞ்சுத் துருப்புகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஜப்பானிய அதிகாரிகள் ஆணை பிறப்பித்தார்கள். பிரெஞ்சு காலனியவாதிகள்

ஹோ-சி-மின் 1. O5
உடனே நாட்டை விட்டு ஓடினார்கள் அல்லது ஜப்பானியர் களிடம் சரணடைந்தார்கள். அவர்கள் நம்மைப் பாதுகாக்க சக்தியற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டியதுடன் ஐந்தாண்டுக் காலத்தில் அவர்கள் நம் நாட்டை இரண்டு முறை ஜப்பானியர் களிடம் விற்பனை செய்தார்கள்.
மார்ச் 9ஆம் நாளுக்கு முன்பு ஜப்பானியர்களை எதிர்த்து வியட்மின்னுடன் கூட்டுச் சேருங்கள் என்று பிரெஞ்சுக்காரர்களை எத்தனை முறை கேட்டிருப்போம்! ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் நமது பிரேரணையை ஏற்றுக் கொள்ளாமல் வியட் மின்னுக்கு எதிராக தமது பயங்கரமான நடவடிக்கைகளை அதிகப் படுத்தினார்கள். அவர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடுவதற்கு முன்பு யென் ஹாய் மற்றும் காவோ-ஹாங் சிறைகளிலிருந்த அரசியல் கைதிகளைப் படுகொலை செய்தார்கள்.
"நாம் இவற்றை மறந்து பிரெஞ்சுக்காரர்களிடம் இணக்கமும் மனிதநேயமும் உள்ள அணுகுமுறையைக் கடைப்பிடித்தோம். 1945 மார்ச் 9ஆம் நாளன்று ஜப்பானியர்கள் திடீர்ப் புரட்சி செய்தார்கள். பிரெஞ்சுக்காரர்கள் எல்லையைக் கடந்து தப்புவதற்கு வியட்மின் உதவி செய்தது, ஜப்பானிய சிறைகளிலிருந்து பலரைக் காப்பாற்றி யது; பிரெஞ்சுக்காரர்களுடைய உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் 1940ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்குப் பிறகு நம் நாடு பிரெஞ்சுக் காலனியாக இருக்க வில்லை, அது ஜப்பானின் உடைமையாக மாறிவிட்டது.
'ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த பொழுது நமது மக்கள் எல்லோரும் புரட்சி செய்து வியத்நாம் ஜனநாயகக் குடியரசை நிறுவினார்கள்.
'உண்மை என்னவென்றால் நாம் பிரெஞ்சுக்காரர்களிட மிருந்து சுதந்திரத்தைப் பெறவில்லை, ஜப்பானியர்களிட மிருந்துதான் பெற்றோம்.
'பிரெஞ்சுக்காரர்கள் ஓடிவிட்டார்கள். ஜப்பானியர்கள் சரணடைந்துவிட்டார்கள் சக்கரவர்த்தி பாவோ-டாய் அரசர் பதவியைத் துறந்துவிட்டார். சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் தமது

Page 59
106 ஹோ-சி-மின்
கைகளில் மாட்டப்பட்டிருந்த விலங்குகளை நம் மக்கள் உடைத்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக நிலவிய முடியாட்சியை ஒழித்துவிட்டார்கள். அவர்கள் இப்பொழுது ஜனநாயகக் குடியரசை நிறுவியிருக்கிறார்கள்.
'வியத்நாமின் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தற்காலிக அரசாங்கம் பின்வரும் அறிவிப்பை வெளியிடுகிறது. இன்று முதல் பிரான்சுடன் காலனியத் தன்மையுள்ள எல்லா உறவுகளையும் ஒழித்துவிட்டோம் ; வியத்நாம் சம்பந்தமாக பிரான்ஸ் செய்த எல்லா ஒப்பந்தங்களையும் ரத்து செய்கிறோம்; நம் நாட்டில் பிரான்சுக்குத் தரப்பட்ட எல்லாவிதமான விசேஷ உரிமைகளையும் ரத்து செய்கிறோம்.
பிரெஞ்சுக் காலனியவாதிகளின் அநீதியான எல்லாத் திட்டங்களையும் எல்லா வியத்நாமிய மக்களும் ஒரே மனதுடன் உறுதியாக எதிர்க்கிறோம்.
'டெஹெரான் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாடுகளில் நாடுகளுக்கு. இடையில் சமத்துவம் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட நேச நாடுகள் வியத்நாமிய மக்களுடைய சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்குத் தவறக் கூடாது.
'எண்பது ஆண்டுகளாக பிரெஞ்சு காலனி ஆட்சியை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய மக்கள், கடந்த சில ஆண்டுகளின் போது பாசிஸ்டுகளை எதிர்த்து நேசநாடுகளுக்கு உறுதியாக ஆதரவளித்த மக்கள் சுதந்திரம் பெறத் தகுதி உடையவர்கள். அவர்கள் சுதந்திரம் அடைந்தே தீருவார்கள்.
'மேற்கூறிய காரணங்களுக்காக, வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் தற்காலிக அரசாங்கம் மனப்பூர்வமாகப் பின்வரும் அறிவிப்புகளைச் செய்கிறது;
‘விடுதலை மற்றும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு வியத்நாமுக்கு உரிமை உண்டு. உண்மையைச் சொல்வதென்றால் அது விடுதலை பெற்ற சுதந்திர நாடாகிவிட்டது. வியத்நாம் மக்கள் எல்லோரும் தமது விடுதலை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தமது உடல் மற்றும் மனவலிமை

அனைத்தையும் திரட்டுவதற்கு தமது உயிர் மற்றும் உலடமைகளை தியாகம் செய்வதற்கு உறுதிகொண்டிருக்கிறார்கள்.
வியத்நாமின் வீரப் புதல் வர்கள் மற்றும் புதல் வியர்கள் சிறைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் போர்க்களங்களிலும் தூக்குமேடைகளிலும் இரத்தம் சிந்தி, தியாகங்களைச் செய்து உருவாக்கியது சுதந்திரப் பிரகடனம். இரண்டு கோடி வியத்நாமியர் களுடைய நெடுங்கால நம்பிக்கை, கடுமுயற்சி மற்றும் பற்றுறுதியின் விளைவு, சுதந்திரப் பிரகடனம் வியத்நாம் வரலாற்றில் மிகவும் புகழ் நிறைந்த பக்கங்களில் ஒன்று அது. சர்வாதிகார முடியாட்சிக்கும் காலனியாதிக்க ஒடுக்கு முறைக்கும் அது முடிவு கட்டியது. ஜனநாயகக் குடியரசு என்னும் புதிய சகாப்தத்தை அது ஆரம்பித்தது.
வியத்நாம் நாட்டின் சுதந்திரதினமாகிய 1945 செப்டம்பர் 2ஆம் நாள் வியத்நாமியர்களுடைய மிகவும் சிறப்பான கீர்த்தி மிக்க திருவிழாக்களில் ஒன்று. வியத்நாமியர்களுடைய அரசியல் மற்றும் ஆன்மிக வாழ்க்கையில் அது குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமானது.
ஆகஸ்ட் புரட்சி வெற்றி பெற்றதன் விளைவாக தென்கிழக்கு ஆசியாவில் முதல் மக்கள் ஜனநாயக அரசாகிய வியத்நாம் ஜனநாயகக் குடியரசு தோன்றியது. அது வியத்நாம் மக்களுடைய வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஆரம்பித்தது. ஆகவே ஆகஸ்ட் புரட்சி ஒரு சகாப்தத்தை உருவாக்குகின்ற வரலாற்று முக்கியத் துவத்தைக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் புரட்சி 1939-45ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விடுதலை இயக்கத்தின் விளைவு என்பது மட்டுமன்றி கட்சி மற்றும் ஹோ-சி-மின் தலைமையில் நமது மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவும் ஆகும்.
ஹோ-சி-மின் மற்றும் கட்சியின் மத்திய கமிட்டி வியத்நாமின் தேசிய மீட்சிக்குக் கடைப்பிடித்த கொள்கை மிகவும் சரியானது என்பதை ஆகஸ்ட் புரட்சியின் வெற்றி நிரூபித்தது. வெற்றிகரமான ஆகஸ்ட் புரட்சிக்குத் தலைமை தாங்கியதன் மூலம் அவர் உலகப் புரட்சிக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்தார். அவர் தலைமையில்

Page 60
1 O8 ஹோ-சி-மின்
நமது மக்கள் ஏகாதிபத்தியத்தின் காலனிய அமைப்பின் மிகவும் பலவீனமான கண் ணியை நொறுக்கினார்கள். அதன் மூலம் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட புதிய நிலைமைகளில் காலனிய அமைப்பு அழிகின்ற புதிய நிகழ்வுப் போக்கு ஆரம்பமாயிற்று.
தேசிய மற்றும் காலனிய பிரச்சினைகளைப் பற்றிய லெனின் தத்துவத்தை ஹோ-சி-மின் படைப்புத் திறமையுடன் கையாண்டார் என்பது ஆகஸ்ட் புரட்சியின் வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டது. மக்களுடைய தேசிய ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான முதல் காலடியாகிய, தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் தேசிய விடுதலைப் புரட்சி காலனி மற்றும் அரைக் காலனி நாட்டில் வெற்றி அடைய முடியும். இந்தப் புரட்சி ஏகாதிபத்திய நாட்டிலுள்ள பாட்டாளிவர்க்கப் புரட்சியுடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது - ஆனால் அங்கே புரட்சி நடைபெறுவதை அது பொறுத் திருப்பதில்லை. தலைமை நாட்டில் தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அது தன்னுடைய முன் முயற்சியினால் வெற்றி பெற முடியும். 'ஒரு காலனி நாட்டில் மார்க்சிய - லெனினியத்தின் மாபெரும் வெற்றி'* என்று ஹோ-சி-மின் அதைப் பற்றிக் குறிப்பிட்டார்.
'சுமார் பதினைந்து ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட கட்சி, புரட்சிக்கு வெற்றிகரமாகத் தலைமை வகித்து நாட்டின் ஆட்சியைக் கைப் பற்றியது. காலனி மற்றும் அரைக் காலனி மக்களுடைய புரட்சிகர வரலாற்றில் அது முதல் தடவையாக நடைபெற்றது”.*

7
பிரெஞ்சு எதிர்ப்புப் போராட்டம்
(1945-54)
வியத்மின் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாலும், தன்னுடைய சக்தியை அமைப்பு ரீதியாகத் திரட்டுவதற்கும் வலுப்படுத்து வதற்கும் போதிய அவகாசமில்லாதபடியால் அது மிகவும் கடினமான, சிக்கலான நிலைமையை சந்தித்தது. பிரெஞ்சு காலனியவாதிகளும் ஜப்பானிய பாசிஸ்டுகளும் ஏற்படுத்திய கடும் பஞ்சத்தினால் மக்கள் இன்னும் துன்பமடைந்திருந்தார்கள். நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு விட்டது. அரசாங்கத்திடம் நிதி இல்லை. இதற் கிடையில் அமெரிக்காவின் ஆணைப்படி சியாங்-கே-ஷேக்கின் 2,00,000 துருப்புகள் வியத்நாமுக்குள் நுழைந்தன. ஜப்பானியர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க வருவதாகக் கூறியபோதிலும் நம்முடைய கட்சியை அழித்து வியத் மின்னை ஒழித்து அமெரிக்கா-சியாங் ஆதரித்த பிற்போக்கான அரசாங்கத்தை நிறுத்தும் நோக்கத்துடன் வந்தார்கள். எதிர்ப்புரட்சி சக்திகள் அரசாங்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரின. புதிய தேசியக் கொடி, ஹோ-சி-மின் பதவி விலகல் அவர்களுடைய மற்ற கோரிக்கைகளாக இருந்தன. தென் பகுதியில் பிரெஞ்சு காலனியவாதிகள் பிரிட்டிஷ் துருப்புகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு ஆட்சியைப் பிடித்தார்கள். வியத்நாமியப் பிற்போக்காளர்கள் அங்கே பிரெஞ்சு காலனியவாதிகளுடன் ஒத்துழைத்து மக்களுடைய இயக்கத்தை நசுக்கினார்கள்.
புதிய அரசின் எதிர்காலம் நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தபொழுது ஹோ-சி-மின் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 'நான் ஒரு படகோட்டி, தந்தையர் நாடு என்ற இந்தப் படகை புயல்களுக்கு நடுவில் பத்திரமாக

Page 61
110 ஹோ-சி-மின்
ஒட்டிச் செல்லவேண்டும், மக்களை மகிழ்ச்சி என்னும் கரையில் சேர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்தின் முதல் கூட்டம் 3.9.1945 இல் ஹோ-சி-மின் தலைமையில் நடைபெற்றது. அவர் ஆறு அவசரக் கடமைகளைப் பட்டியலிட்டார்: பஞ்சத்தை ஒழிப்பதற்கு உணவு உற்பத்தியை அதிகரிக்கும் இயக்கம் நடத்துதல்; ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்க அரிசியை நன்கொடையாகப் பெறுகின்ற இயக்கத்தை ஆரம்பித்தல்; கல்லாமை ஒழிக்கும் இயக்கத்தை நடத்துதல்; வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளித்து பொதுத் தேர்தலை கூடியவரை விரைவாக நடத்துதல் காலனியாதிக்கத்தினால் ஏற்பட்ட தீயபழக்கங்களைப் போக்குவதற்கு சுறுசுறுப்பு, சிக்கனம், நேர்மை ஆகிய குணங்கள் மக்களிடம் வேரூன்றச் செய்தல்; தலைவரியை ஒழித்தல், கஞ்சா புகைக்கும் பழக்கத்தைத் தடை செய்தல்; கத்தோலிக்க மதம், பெளத்தம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு மத சுதந்திரம் அளிப்பதுடன் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையைப் பேணுதல்.
அமைச்சர்கள் மேற்கூறிய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டார்கள். பொதுமக்களுடைய வரவேற்புடன் அரசாங்கம் உற்சாகமாகப் பணியை ஆரம்பித்தது.
நாட்டில் அரிசி சேகரிக்கும் இயக்கத்தை ஹனோயில் ஹோ-சி-மின் தொடங்கினார். எல்லாக் குடிமக்களும் பஞ்சத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார். 'நாம் உணவருந்த உட்காரும்பொழுது ஏழைகளையும் பட்டினியாக இருப்பவர்களையும் பற்றி நினைக்க வேண்டும். நாட்டிலுள்ள சகோதரர்களுக்கு ஒர் ஆலோசனையைத் தெரிவிக்கிறேன். நாம் பத்து நாட்களுக்கு ஒருதடவை ஒருவேளை உணவை அதாவது மாதத்துக்கு மூன்று வேளை உணவைத் தவிர்க்க வேண்டும். நான் இதைக் கடைப்பிடிக்கிறேன். இப்படி சேமிக்கப்படுகின்ற அரிசி நம் நாட்டிலுள்ள ஏழைகளுக்குத் தரப்படும்'* என்றார். அவர் முதலில் தன்னுடைய அரிசியைக் கொடுத்தார். எல்லா இடங்களிலும் மக்கள் அவரைப் பின்பற்றினார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை பத்தாயிரம் டன் அரிசி சேகரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

ஹோ-சி-மின் 111
"ஓர் அங்குலம் நிலம் கூட தரிசாக இருக்கக்கூடாது', 'ஓர் அங்குலம் நிலம் ஓர் அங்குலம் தங்கத்துக்கு சமம்' என்ற கோஷங்கள் மக்களிடம் பரவின. அவர்கள் உணவு உற்பத்தியை, அதிகரிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். ஹோ - சி-மின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் உணவு உற்பத்தி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள். வெள்ளத்துக்குப் பிறகு வறட்சி வந்தது; ஆனால் மக்களுடைய முயற்சிகளால் பஞ்சம் ஒழிந்தது.
கல்லாமை ஒழிப்பு இயக்கம் மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
'நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உரிமைகளையும் கடமைகளையும் அறிந்திருக்க வேண்டும். நாட்டைக் கட்டுவதில் பங்கெடுப்பதற்குத் தேவையான அறிவை ஒவ்வொருவரும பெற்றிருக்க வேண்டும். அவர்கள், தேசிய ரோமன் எழுத்தை எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றிருக்கவேண்டும். படித்தவர்கள் கல்லாதவர்களுக்குக் கற்பியுங்கள், கல்லாதவர்கள் படியுங்கள்' என்று ஹோ-சி-மின் கூறினார். ஒரே ஆண்டில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான வியத்நாமியர்கள் (மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம்) படிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக் கொண்டார்கள். பல கிராமங்களில் எட்டுவயதாகிய எல்லாருமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றிருந்தார்கள். ஹோ-சி-மின் அளித்த சான்றிதழை அவர்கள் பெற்றுக்கொண்டு பெருமைப் பட்டார்கள்.
நாட்டில் புதிய வாழ்க்கைக்கான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பணவிரயம், சொகுசு வாழ்க்கை, அரசுப் பணத்தைக் கையாடல் செய்தல், லஞ்சப் பழக்கம் இதரவை ஊழியர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பகுதியளவுக்கு மறைந்தன.
அதிகாரபூர்வமான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய சட்டப் பேரவைக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. மக்கள் புதிய அமைப் பின் மீது நம்பிக்கை வைப்பதற்கு அது உதவியது. ஏனென்றால் இனிமேல் வியத்நாம் அரசுக்கு உலகத்தில் மறுக்கமுடியாத சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கும்.

Page 62
112 ஹோ-சி-மின்
‘போர்முனையில் கையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு போர் செய்தோம் . அரசியல் களத்தில் நம் மக்கள் வாக்குச் சீட்டைக் கொண்டு நம் சக்தியை வலுப் படுத்திவிட்டார்கள்' என்று ஹோ-சி-மின் கூறினார். S.
"மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்போம் , காலனியாதிக்கத்தை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம், சுதந்திரத்தை மீண்டும் பெறுவோம் என்பது நிச்சயம்*
என்று நம் மக்கள் உலகத்துக்கு எடுத்துக் கூறுவார்கள் என்று அவர் கூறினார்.
பிரெஞ்சு காலனியவாதிகள் மற்றும் பிற்போக்காளர்களுடைய சதிச் செயல்களை மீறி 1946 ஜனவரி 6ஆம் நாளன்று நாடு முழுவதிலும் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் ஹோ-சி-மின் மீது முழு நம்பிக்கை வைத்தார்கள். அவர் தங்கள் மாகாணத்திலிருந்து சட்டப் பேரவைக்கு வேட்பாளராக நிற்க வேண்டும் என பல மாகாணங்களின் மக்கள் அவரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர் தேர்தலில் போட்டியிடாமல் சட்டப் பேரவைக்கு நியமனம் செய்யப்படவேண்டும் என்று சில மாகாணங்களிலிருந்து பரிந்துரை வந்தது. தேர்தலில் அவர் ஹனோயிலிருந்து போட்டியிட்டார். தொகுதியின் வாக்காளர்களில் 98.4 சதவிகிதத்தினர் அவருக்கு வாக்களித்தார்கள்.
2.3.1946 இல் தேசிய அசெம்பிளியின் முதற் கூட்டம் நடைபெற்ற பொழுது ஹோ - சி-மின் வியத்நாம் ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய நேரடியான வழிகாட்டுதலில் அரசியலமைப்புச் சட்ட தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டது.
புதிய அரசின் தலைவர் என்ற முறையில் ஹோ-சி-மின் புதிய அரசாங்கத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி அதிக கவனம் செலுத்தினார். ‘எல்லா மட்டங்களிலும் உள்ள அரசு உறுப்புகள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். அவை மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டி ருக்கின்றன. அவர்கள் மீது சவாரி செய்வதற்கு அமைக்கப்பட வில்லை' என்றார். 'நாடு சுதந்திரத்தை அடைந்த பிறகும் கூட

ஹோ-சி-மின் 11.3
மக்கள் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை என்றால் அந்த சுதந்திரத்துக்கு உண்மையான மதிப்பு இல்லை' என்றார்.
பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்திய வரி அமைப்பை ரத்து செய்தல் , தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்றுதல், தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்தல், நிலக் குத்தகைக் கட்டணத்தில் 25 சதவிகிதம் குறைத்தல், பிரெஞ்சுக் காரர்கள் மற்றும் வியத்நாமிய தேசத் துரோகிகளிடமிருந்து கைப் பற்றிய நிலங்கள் மற்றும் கிராமங்களில் பொதுவாகவுள்ள நிலங்களை நிலமில்லாத விவசாயிகளுக்கு வினியோகம் செய்தல் ஆகிய திட்டங்களை அவர் பிரேரணை செய்தார். மக்கள், குறிப்பாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடைய நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான அவசர சீர்திருத்தங்களாக இவை இருந்தன.
நாட்டின் இளங் குருத்துகளைப் பற்றி அவர் அதிகமான் அக்கறை எடுத்துக் கொண்டார். பள்ளி- ஆண்டு தொடங்கும் சந்தர்ப்பத்திலும் இலையுதிர் பருவத்தின் இடைத் திரு விழாவின் போதும் அவர் பள்ளிக் கூட மாணவ, மாணவியர் களுக்குக் கடிதம் எழுதுவார், எதிர்கால வியத்நாமை' நிர்மாணிப்பதில் பங்கெடுப்பதற்கு இப்பொழுது நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை சொல்வார்.
'உங்கள் அறிவை மேம்படுத்த விரும்புகின்ற என்னுடைய சொல் லைக் கேளுங்கள். அடிமைகளாக எண்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியதில் நாம் பலவீனமாகி விட்டோம் . நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த நாட்டை நாம் புன்ர்நிர்மாணம் செய்யவேண்டும், உலகத்திலுள்ள மற்ற நாட்டு மக்கள் முன்னேறிவிட்டார்கள்; நாம் ஒடிச் சென்று அவர்களைப் பிடிக்கவேண்டும். நம்நாடு உங்களை அதிகமாக நம்பியுள்ளது'° என்று அவர்களுக்கு எழுதினார்.
லீ-துவோங்-கியெட் என்ற 99 வயதான முதியவர் மேன்மேலும் வீரமான செயல்களைச் செய்கிறார். எல்லா முதியவர்களும் அவரைப் பின்பற்றவேண்டும் என்று அவர் எழுதினார். அவர்

Page 63
114 ஹோ-சி-மின்
இளைஞர்களை ஊக்குவித்தார். அவர்கள் தாய் நாட்டு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தன்னுடைய அனுபவத்தை வாரி வழங்கினார்.
'தங்க வாரம்' கொண்டாடப்பட்டபொழுது நாட்டின் பாதுகாப்புக்கும் நிதிநிலையை சீராக்குவதற்கும் உதவி செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மக்கள் அவருடைய வேண்டுகோளை ஏற்று குறுகிய காலத்தில் 370 கிலோ தங்கம், 4கோடி டோங்கையும் தேசியப் பாதுகாப்புக்கு நன்கொடையாக அளித்தார்கள். ‘சுதந்திர நிதிக்குட்2கோடி டோங் அன்பளிப்புச் செய்தார்கள்.
தேசிய ஐக்கிய முன்னணியில் சமீபத்தில் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகவாதிகளுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கு 1946 மே மாதத்தில் ஹோ-சி-மின் முன் முயற்சியினால் வியத்நாம் தேசிய யூனியன் நிறுவப்பட்டது. அதன் மூலம் நம் மக்களுடைய தேசபக்த மரபு ஊக்குவிக்கப் பட்டது; ஹோ - சி-மின் தலைமையிலான அரசாங்கத்துக் குத் தமது ஆதரவையும் அதனுடன் ஒருமைப் பாட்டையும் வெளியிட்டார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள எதிரிகளை எதிர்ப்பதற்கு இது பேராயுதமாக இருந்தது.
ஆகஸ்ட் புரட்சிக்குப் பிறகு வந்த காலகட்டத்தில் வியத்நாம் ஜனநாயகக் குடியரசு பல எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்களில் பிரெஞ்சுக் காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று ஹோ-சி- மின் மற்றும் கட்சியின் மத்திய கமிட்டி கருதினார்கள். தேசிய சுதந்திரம் மற்றும் அரசுரிமை என்ற கொள்கையை உறுதியாகக் கடைப் பிடிக்கின்ற அதே சமயத்தில் மிகவும் மதிநுட்பமுள்ள, நெகிழ்வான செயல்தந்திரங்களைக் கடைப்பிடித்தார். ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாதிருப்பதற்கும் தெற்குப் பகுதியிலிருந்த வியத்நாம் துருப்புகளுடன் போர் செய்வதற்காகவும் அவர் சியாங் துருப்புகளுடன் தற்காலிகமாக சமரசம் செய்துகொண்டார். ஒரு பக்கத்தில் அவர் சியாங்கின் துருப்புகளுக்கு சில அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளை அளித்தார். மறுபக்கத்தில் அவர் தேசிய ஐக்கிய முன்னணியின் பலத்தைப் பயன்படுத்தி

ஹோ-சி-மின் : 115
அவர்களுடைய சதித் திட்டங்களை முறியடித்தார். எதிர்ட் புரட்சிக் காரர்கள் என்று அவப்பெயரெடுத்த சியாங் ஏசன்டுகளை (வியத்நாம் குவோக்-டான்-டாங்) நசுக்கினார்.
இதற்கிடையில் ஹோ - சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் தெற்குப் பகுதியில் வசித்த சகோதர வியத்நாமியர்களின் பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டி னார்கள்.
பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தம் வியத்நாம் மக்களின் ஒருமைப்பாட்டினால் முறியடிக்கப் படும் என்று அவர் உறுதியாகக் கருதினார். "பிரெஞ்சு துருப்பு களிடம் நவீன ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் நம் நாட்டை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. வடக்கிலிருந்து தெற்கு வரை இலட்சக்கணக்கான நமது மக்கள் பிரெஞ்சுத் துருப்புகளை முறியடிப்பதற்கு சபதம் செய்திருக்கிறார்கள். நம் மக்களின் தியாக உணர்ச்சியை எப்படிப்பட்ட ஆயுதத்தினாலும் தோற்கடிக்க முடியாது" என்று அவர் கூறினார். 1946 பிப்ரவரி மாதத்தில் தெற்குப்பகுதி மக்களுக்கு ‘வியத்நாமின் 'பித்தளைச் சுவர்' என்னும் விருதை வழங்கினார்.
1946 பிப்ரவரி மாதத்தின் முடிவில், தங்களுக்குப் பதிலாக பிரெஞ்சுத் துருப்புகள் வடக்கு வியத்நாமுக்கு வருவதற்கு சியாங் துருப்புகள் ஒத்துக் கொண்டன. (அதற்கு அமெரிக்காவின் ஆணை ஒரு காரணம்). தயாரிப்புகள் இல்லாமல் பல எதிரிகளுடன் ஒரே சமயத்தில் சண்டையைத் தவிர்ப்பதற்காக ஹோ-சி-மின் 6.3.1946 இல் பிரெஞ்சுக்காரர்களுடன் பூர் வாங்க உடன்படிக்கை செய்து கொண்டார். அது ஒரு தற்காலிக சமரசம், அதன் விளைவாக நாம் வடக்குப் பகுதியிலிருந்து சியாங் துருப்புகளை வெளியேற்றி னோம் ,சியாங்கின் ஏசன்டுகளை ஒழித்தோம். அதே சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடைய சதித் திட்டத்தை சீர்குலைத்தோம். பூர்வாங்க உடன்படிக்கையின் மூலம் கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி நமது துருப்புகளை அதிகப் படுத்தினோம். பிரெஞ்சுக் காலனியவாதிகளை எதிர்த்து நாடு தழுவிய இயக்கத்துக்கு தயாரிப்புகளைச் செய்ய முடிந்தது. தெற்குப் பகுதியில் வசித்த சகோதரர்கள் தமது சக்திகளை

Page 64
116 ஹோ-சி-மின்
வலுப் படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
1946 மே 31ஆம் நாளன்று ஹோ - சி-மின் பிரெஞ்சு அரசாங்கத்தின் சிறப்பு விருந்தினர் என்ற முறையில் பிரான்சுக்குப் பயணமானார்.
தெற்குப் பகுதியிலுள்ள நம்முடைய சகோதரர்களுக்கு அவர் ஒரு செய்தி அனுப்பினார். அவர்களுடைய வீரமான போராட்டத்தைப் பாராட்டினார்; அமைதியுடன் இருங்கள், அரசாங்கத் தலைமை யிடம் நம்பிக்கையுடன் இருங்கள், ஒற்றுமையாக இருப்பதுடன், தவறு செய்பவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்று கூறினார்.
'தெற்குப் பகுதியிலுள்ள சகோதரர்கள் வியத்நாம் மக்கள்; ஆறுகள் வற்றிவிடலாம். மலைகள் உடைந்துவிடலாம். ஆனால் உண்மை ஒருக்காலும் மாறாது' என்று கூறினார்.
ஹனோயில் அவரை வழியனுப்புவதற்கு நடைபெற்ற கூட்டத்துக்கு 50,000 மக்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஹோ-சி-மின் பின்வருமாறு பேசினார்:
"என்னுடைய வாழ்க்கை முழுவதும் எனக்கு ஒரே குறிக்கோள் தான் இருந்திருக்கிறது. மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பது அந்தக் குறிக்கோள்'
விமானத்தில் பிரான்சுக்குப் புறப்படுவதற்கு முன்பு அவர் ஹ்யுன் ஹ் - துக் - கான் ஹிடம் விடைபெற்றுக்கொண்டபொழுது 'நிலையற்றதை எதிர்க்க மாற்றப்பட முடியாததைப் Lulu i GöT L(95 g! I'Éi gcil '' (use the unchangeable to oppose the inconstant)19°என்று அறிவுரை கூறினார். தான் நாட்டில் இல்லாதபொழுது மிகவும் கடினமான சூழ்நிலையில் முக்கியமான ஊழியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை கூறுவார்.
ஹோ-சி-மின் பாரிசில் தங்கியிருந்தபொழுது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பிரெஞ்சு மக்களில் பல பகுதியினர், வியத்நாம் மக்கள், ஜனநாயகப் பிரமுகர்கள்,அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்

ஹோ-சி-மின் 117
கட்சித் தலைவர்களை சந்தித்தார். நம் மக்கள் நடத்துகின்ற போராட்டம் எவ்வளவு நியாயமானது என்பதை அவர்களிடம் விளக்கினார். அதன்மூலம் பிரெஞ்சு மக்களுடைய அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றார். உலக அரங்கில் வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் புகழை உயர்த்தினார். நாம் அரசுரிமைக்கும் உலகத்தில் சமாதானத்துக்கும் பாடுபடுவதை வலியுறுத்தினார். 14.9.1946 இல் பிரெஞ்சு அரசாங்கத்துடன் தற்கால சமரச ஏற்பாட்டில் (modus vivendi) ஹோ -சி-மின் கையொப்பமிட்டார். நாடு தழுவிய பிரெஞ்சு எதிர்ப்புக் குத் தயாரிப்பதற்கும் அவகாசம் கிடைத்தது. அத்தகைய எதிர்ப்பு தவிர்க்க முடியாதது என்பதை அவர் அறிவார்.
1946 செப்டம்பர் 18ஆம் நாளன்று ஹோ-சி-மின் பிரான்சிலிருந்து நாட்டுக்குத் திரும்பினார். நான்கு மாதங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு நாட்டுக்குத் திரும்பிய ஹோ-சி-மின்னை செப்டம்பர் 20ஆம் நாளன்று மக்கள் குதூகலமாக வரவேற்றார்கள்.
அவர் அக்டோபர் 23ஆம் நாளன்று பிரான்சில் வியத்நாம் தூதுக் குழுவின் பணியைப் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கினார். 'நம் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு நம் சகோதரர்கள் துன்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது என்னால் ஒரு நிமிடம் கூடத் தூங்கமுடியாது. நம் சகோதரர்கள் இணைப்பில் உறுதியுடன் இருக்கிறார்கள். பாசமிக்க தெற்குப் பகுதி தந்தையர் நாட்டுடன் இணைக்கப்படும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்" என்று ஹோ-சி-மின் கூறினார்.
1946 அக்டோபர் 28ஆம் நாளன்று முதல் தேசிய அசெம்பிளியின் இரண்டாவது அமர்வு நடைபெற்றது. மக்களுடைய சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கும் நாட்டை ஒற்றுமைப் படுத்துவதற்கும் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு ஹோ - சி-மின் ஒருமனதாகக் கேட்டுக் கொள்ளப்பட்டார். நாம் -பா மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடைய ஆலோசனையின் படி தேசிய அசெம்பிளி ஹோ-சி-மின்னை வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் முதல் குடிமகன் என்று கெளரவித்தது.

Page 65
118 ஹோ-சி-மின்
1946 நவம்பர் 9ஆம் நாளன்று ஹோ-சி-மின் ஆலோசனை யுடன் தயாரிக்கப்பட்ட நகல் அரசியலமைப்புச் சட்டத்தை தேசிய அசெம்பிளி அங்கீகரித்தது. 'வியத்நாம் ஒரு சுதந்திர நாடு. வியத்நாமிய மக்கள் சுதந்திரமாக இருப்பதற்கு உரிமை உடையவர்கள். வியத்நாமியப் பெண்கள் எல்லா சிவில் உரிமைகளிலும் ஆண்களுக்கு சமமானவர்கள். வியத்நாமின் தேசிய இனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒற்றுமை எப்பொழுதும் நிலவியிருக்கிறது' என்று அரசியலமைப்புச் சட்டம் உலகத்துக்குப் பிரகடனம் செய்தது.
நமது அரசாங்கத்துடன் செய்த உடன்பாடுகளை பிரெஞ்சுக் காலனியவாதிகள் மீறினார்கள். அவர்கள் போரை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்தார்கள். போர் தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துவதற்கு அவசரமாக செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி 1946 நவம்பர் மாதத்தில் அவர் ஆணை வெளியிட்டார்.
"நாட்டைப் புனரமைப்பதற்கும் எதிரியை வீழ்த்துவதற்கும் எதிர்ப்புப் போரை நாம் நீண்ட காலம் நடத்த வேண்டியிருக்கும். நமது பணி மிகவும் கடினமானது. எதிரியை நாம் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளினாலும் வியத்நாமில் தோல் வியுற்றால் காலனிப் பேரரசு மொத்தமாக வீழ்ச்சி அடையும் என்பதால், எதிரி தன்னுடைய பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு சண்டைக்கு வருவான். எதிரி இன்னும் அதிக எண்ணிக்கையில் துருப்புகள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வந்து நாட்டை அழித்து, மக்களை பயமுறுத்திப் பணிய வைப்பதற்கு முயற்சி செய்வான்' என்று அவர் மக்களை எச்சரித்தார்.
"இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு நாம் உறுதியுடன் போர் செய்தால் எதிரி வீழ்ச்சி அடைவான். வெற்றி அடைவோம் என்ற உறுதியை நாம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்; உற்பத்தியை அதிகப்படுத்துங்கள்; நகரங்களிலிருந்து பின்வாங்க நேரிட்டாலும் கிராமப் பகுதிகளை விட்டுப் போகவேண்டாம் . குளிர்காலத்தை வெற்றிகரமாக சமாளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள், வசந்தகாலத்தின் போது நாம் சந்திப்போம்.

எதிரியின் மூர்க்கமான பயங்கரவாதப் படையெடுப்புகள் முடிந்தபிறகு நாம் வெற்றிக்கனியைச் சுவைப்போம்" என்று
அவர் கூறினார்.
இராணுவம், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில், போக்குவரத்தில் நாம் செய்யவேண்டிய அவசரக் கடமைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நாம் மக்கள் அனைவருடைய சக்தியையும் பயன்படுத்த வேண்டும்,கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுடைய பாத்திரம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நம்முடைய எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெறும் என்று அவர் உறுதிப் படுத்தினார். 'முன்பு வெறும் கைகள் மற்றும் தலைமறைவாக இருந்த சில தோழர்கள் உதவியுடன் ஜப்பானியர்களையும் பிரெஞ்சுக்காரர்களையும் எதிர்க்க தளங்களை அமைத்தோம். ஆனால் இன்று நமக்கு இராணுவம் இருக்கிறது, மக்களுடைய பேராதரவு இருக்கிறது, நாம் -போ நமக்கு சாதகமில்லாத இடம்; தயாரிப்பு குறைவு. ஆனால் அங்கு எதிர்ப்பு இயக்கம் ஓர் ஆண்டுக்கும் அதிகமான காலம் நீடித்தது. நாடு முழுவதையும் பார்க்கும்பொழுது, இன்று நமக்கு சாதகமான அம்சங்கள் அதிகம். நமது படைகள் வலிமையுடன் உள்ளன. வெற்றி கிடைக்கின்றவரை நாம் எதிர்த்து நிற்கமுடியும்'
1945 நவம்பர் 25இல் வெளியிடப்பட்ட எதிர்ப்பு இயக்கமும் தேசியப் புனரமைப்பும்' என்ற ஆணை, 1946 அக்டோபர் 19இல் கட்சி வெளியிட்ட "தேசிய இராணுவ மாநாடு' என்ற தீர்மானம் 'நமது அவசரக் கடமை' என்ற தலைப்பில் ஹோ-சி-மின் வெளியிட்ட ஆணை ஆகியவை நமது நீண்ட ஆனால் வெற்றிகரமான எதிர்ப்பு இயக்கத்துக்கு கட்சி அளித்த உறுதியான அடிப்படையாக இருந்தன.
ஹோ-சி-மின் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் கட்சிக்குத் தலைமை தாங்கினார். அவர் தெளிவான, அமைதியான, துணிச்சல் மற்றும் அனுபவமுள்ள படகோட்டியாக இருந்தார். வியத்நாமியப் புரட்சி என்ற படகை பாறைகள் மற்றும் மணல் திட்டுகளில் சிக்கி விடாதபடி பாதுகாப்பாகச் செலுத்தினார். ஹோ-சி-மின் மற்றும்

Page 66
12O ஹோ-சி-மின்
கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் திசைவழி உண்மையாகவே தெளிவான பார்வையைக் கொண்டிருந்ததை எதார்த்தம் நிரூபித்தது. தேசிய ஒற்றுமையின் பலத்தை ஆதாரமாகக் கொள்; போர்த்திட்டத் திசைவழியில உறுதியாக இரு; கொள்கையில் உறுதியுடனும் செயல் தந்திரத்தில் நெகிழ்ச்சியுடனும் இரு; எதிரியின் அணிகளில் உள்ள முரண்பாடுகளைத் திறமையுடன் பயன்படுத்தி அவர்களைப் பிரித்துவிடு; மிகவும் ஆபத்தான எதிரிகளை முற்றிலும் தனிமைப்படுத்து, புரட்சிகர அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் வலுப் படுத்துவதற்கும் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்து; பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நெடுங்காலப் போர் நடத்த சக்தியைத் திரட்டு ஆகியவை அரசியல் திசைவழியின் முக்கிய அம்சங்கள்.
பிரெஞ்சுக்காரர்கள் நமது நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். 1946 டிசம்பர் 18ஆம் நாளன்று பிரெஞ்சு காலனியவாதிகள் நிதி அமைச்சகம், பொதுப்பணித்துறை மற்றும் தபால் அமைச்சகங்களை கைப் பற்றுவதற்குத் துருப்புகளை அனுப்பினார்கள். நம் சுய-பாதுகாப்புப் பிரிவினரும் போலீசுப் பிரிவினரும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை செய்தார்கள். 1946 டிசம்பர் 19ஆம் நாளன்று பிரெஞ்சு காலனியவாதிகளை எதிர்த்து நாடு தழுவிய போர் வெடித்தது. ஹனோயிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ள ஹா - டோங் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள வான்-புக் என்ற கிராமத்தில் ஒரு சிறிய வீட்டின் முதல் மாடியிலிருந்த அறையில் அமர்ந்து ஹோ - சி-மின் 'நாடு தழுவிய எதிர்ப்புக்கு அறை கூவலை' எழுதினார். 1946 டிசம்பர் 20ஆம் நாளன்று அறைகூவலை வியத்நாம் வானொலி ஒலிபரப்பியது.
'நாம் சமாதானத்தை விரும்புகிறோம். நாம் சலுகைகளைக் கொடுத்தோம். ஆனால் நாம் எவ்வளவு அதிகமான சலுகைகளைத் தருகிறோமோ அந்த அளவுக்கு காலனியவாதிகள் நமது நாட்டை ஆக்கிரமிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் நமது நாட்டை மறுபடியும் அடிமைப்படுத்த விரும்புகிறார்கள். அது நடக்காது சுதந்திரத்தை இழந்து அடிமைகளாக இருப்பதைக் காட்டிலும்

ஹோ-சி-மின் 121
எல்லாவற்றையும் தியாகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சகோதரர்களே! போராடுங்கள்'
ஆண்களும் பெண்களும், முதியவர்களும் இளைஞர்களும், மதம், அரசியல், இன வேறுபாடுகளைக் கைவிட்டு எல்லா வியத் நாமியர்களும் பிரெஞ்சுக் காலனியாதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடுவோம். நம் தந்தையர் நாட்டைக் காப்போம் . துப் பாக்கிகள் வைத் திருப்பவர்கள் துப் பாக்கிகளைப் பயன்படுத்துங்கள். வெட்டரிவாள் வைத்திருப்பவர்கள் வெட்டரி வாளைப் பயன்படுத்துங்கள். வெட்டரிவாள் இல்லாதவர்கள் மண்வெட்டிகளை, கலப்பைகளை, கம்புகளைப் பயன்படுத்துங்கள். காலனி யாதிக்கவாதிகளை எதிர்த்து நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
போர்வீரர்களே, சுய-பாதுகாப்புப் படையினரே! இராணுவத் தினரே! தேசிய மீட்சிக்கு மணி அடிக்கிறது. நமது நாட்டைக் காப்பதற்கு நமது உடலில் கடைசித்துளி ரத்தம் உள்ளவரை நாம் Gunty rrGG86jtub!
எதிரி பலசாலியாக இருந்தாலும் நாம் தியாகம் செய்வதற்கு உறுதிபூண்டிருப்பதால் வெற்றி நமதே.
சுதந்திர வியத்நாம், ஒற்றுமையான வியத்நாம் வாழ்க!
நமது வெற்றிகரமான எதிர்ப்பு வாழ்க!
ஹோ - சி-மின்னுடைய உணர்ச்சிகரமான அறைகூவல் பிரெஞ்சுக் காலனியாதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்புத் திட்டங்களை அம்பலப் படுத்தியது. இறுதிவரை போராடுவதற்கு தயாராகவுள்ள மக்கள் சித்தத்தை வெளியிட்டது. கட்சி உருவாக்கிய மக்கள் யுத்தத்தின் திசைவழியையும் நெடுங்கால எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையான அம்சங்களையும் சுட்டிக்காட்டியது.
கட்சியின் மத்திய கமிட்டி 1946 டிசம்பர் 22ஆம் நாளன்று வெளியிட்ட அனைத்து மக்கள் எதிர்ப்பு' என்ற ஆணை ஹோ - சி-மின்னுடைய மக்கள் யுத்தத்தின் உணர்ச்சியைத் தெளிவாகப் பிரதிபலித்தது.

Page 67
122 ஹோ-சி-மின்
எதிரியை வீழத்துவதற்கும் நாட்டை ஆபத்திலிருந்து காப்பதற்கும் மக்கள் வீரச் சமர் புரிந்தார்கள். ஹனோயில் தொண்டர் படையைச் சேர்ந்த பலர் வீரத்தோடு போர் செய்து உயிர்த் தியாகம் செய்தார்கள். ஹோ-சி-மின் அவர்களுடைய வீரத்தையும் தியாகத்தையும் போற்றினார். -
நாடு தழுவிய எதிர்ப்புப் போர் ஆரம்பமானபிறகு முதல் டெட் புத்தாண்டு (1947) வந்தது. மக்களுடைய போராட்டம் வெற்றி அடையும் என்ற முழு நம்பிக்கையுடன் ஹோ-சி-மின் மக்களுக்குப் பின்வரும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்:
தங்க நட்சத்திரசெங்கொடி காற்றில் அசைந்தாடுகிறது எதிர்ப்பின் பேரிகை முழக்கம் எங்கும் ஒலிக்கிறது அனைத்து மக்களும் பங்கேற்கும் எதிர்ப்புப் போர் நடைபெறுகிறது உறுதியான மனத்துடன், ஒற்றுமையுடன் வீரர்களும் பொதுமக்களும் அணிவகுத்து முன்னேறுங்கள் தற்சமயம், நமது எண்ணிக்கையும் சக்தியும் அதிகரித்திருக்கிறது நீண்ட எதிர்ப்பு வெற்றி பெறும் தேச ஒற்றுமை பூர்த்தியாகும்.* 1947ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் ஹோ - சி-மின் வியெட் - பாக்குக்கு சென்றார். அவருடன் எட்டு நபர்களை (மெய்க்காவலர்கள், தகவலாளர், சமையற்காரர் மற்றும் இதரர்கள்) கொண்ட குழு சென்றது. ஒரு போர்வை, கொசுவலை, உடைகள், ரப்பர் செருப்பு, தூக்கிச் செல்லும் தட்டெழுத்துக் கருவி, புத்தகங்கள், ஆவணங்கள், பத்திரிகைகள் வைத்திருந்த பை ஆகியவை மட்டுமே அவருடைய சொந்தப் பொருட்கள். காடுகளில் விளைந்த காய்கறிகள், உப்பும் மிளகும் தடவிய சிறிய இறைச்சித் துண்டு அவருடைய அன்றாட உணவு. மூங்கில் கம்புகளால் அமைக்கப்பட்டு புல் கூரையுள்ள சிறிய குடிசையில் அவர்

ஹோ-சி-மின் 123
வசித்தார். வாழ்க்கை கடினமானதே; ஆனால் அவர் மகிழ்ச்சியான கவிதைகளை எழுதினார்.
வியெட்-பாக் காடு வேடிக்கையானது
குரங்குகள் கூச்சல்
பறவைகளின் இன்னிசை
நாள் முழுவதும் கேட்கும்
பார்வையாளர்களுக்கு சோளப்பொரி
வேடடை முடிந்து இறைச்சி.
நீலநிற மலைகளை
தெளிவான நீரோடையை
நிதானமாக ரசிக்கலாம்
இனிக்கும் ஒயினும்
சூடான தேநீரும் சுவைக்கலாம்
நிலாவின் அழகையும்
வசந்தத்தின் எழிலையும்
ரசித்து மகிழ்வதற்கு
எதிர்ப்பு வெற்றியடைந்த பிறகு
நாங்கள் மீண்டும் வருவோம்."
ஹோ-சி-மின் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக தீவிரமாக
உழைத்தாலும் இரவில் நெடுநேரம் கண்விழித்தாலும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அவர் கவிதைகள் எழுதினார்.
நெடுந்தூரத்துக்கு அப்பாலிருந்து வரும் பாடலைப் போல தெளிந்த நீரோடை ஒலிக்கிறது உயரமான மரக்கிளைகளை ஊடுருவி நிலாஒளி வருகிறது இரவு நீண்டு செல்கிறது அந்த மனிதர் இன்னும் விழித்திருக்கிறார் நாட்டைப் பற்றிய கவலையால் அவர் தூங்கவில்லை." அவருக்கு அதிகமான வேலை; ஆனால் அவர் முறைப்படியாக, விஞ்ஞான ரீதியில் உழைத்தார். எப்பொழுதும் அமைதியாகவும் நம்பிக்கையோடும் இருந்தார்.

Page 68
124 ஹோ-சி-மின்
மலைச்சாரலில் மலர்கள் பூத்திருக்கின்றன காட்டில் வீரர்கள் நடக்கும்பொழுது பறவைகள் பறக்கின்றன அவர்கள் இராணுவம் அரசியல தகவல்களை அலசுகிறார்கள் ஒரு குழந்தையின் துணையுடன் அந்த மனிதர் தோட்டத்துக்குப் போகிறார்; மூங்கில் குழாயினால் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். 1947ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் பிரெஞ்சு காலனியவாதிகள் அனுபவமிக்க முப்படைகளை (காலாட்படை, கடற்படை, விமானப் படை) உபயோகித்து வியெட்-பாக்கைத் தாக்கினார்கள். தேசிய எதிர்ப் பின் முக்கியமான தளத்தைக் கைப் பற்றி நமது இராணுவத்தை அழிப்பதும் தலைவர்களைக் கைது செய்வதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. 'வேகமாகத் தாக்கி வேகமாக வெற்றி அடையவேண்டும்' என்று விரும்பிய ஆக்கிரமிப்பாளர்களை நமது இராணுவம் ஸ்தல துருப்புகளின் உதவியுடன் விரட்டியடித்தது.
வியெட்-பாக் (1947) வெற்றிக்குப் பிறகு, ஒர் ஆண்டு நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தைப் பரிசீலனை செய்தபிறகு ஹோ-சி-மின் பின்வருமாறு கூறினார்:
"எதிரியின் பலம் சூரியன் மறைவதைப் போன்றது. ஆணவம் இருந்தாலும் அது மறையப் போகிறது.நம்முடைய பலம் பாய ஆரம்பிக்கின்ற நீரோடை, எரிய ஆரம்பிக்கின்ற நெருப்பைப்
போன்றது. அது பின்வாங்காது’**
எதிர்ப்பு எவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக கட்சிக்குப் பொறுப்பும் இருக்கிறது.
கட்சியை வலுப்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் ஹோ-சி-மின் தொடர்ச்சியான கவனம் செலுத்தினார். கட்சியை மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டருடன் அவர் ஒப்பிட்டார். தேசிய எதிர்ப்பு மற்றும் புனர்நிர்மாணம் மின்சாரபல்புகள் என்றார்.

ஹோ-சி-மின் 125
ஜெனரேட்டர் சக்திவாய்ந்ததாக இருந்தால் பல்புகள் பிரகாசமாக எரியும். கட்சி வலிமையுள்ளதாக தூய்மையாக முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எல்லா உறுப்பினர்களும் சித்தாந்தமீ, ஸ்தாபனம் , செயல்முறையில் சிறந்து விளங்கவேண்டும். அப்பொழுதுதான் கட்சி தனது தலைமையான பாத்திரத்தை நிறைவேற்றமுடியும். கட்சி உறுப்பினர்களும் , ஊழியர்களும் கட்சியின் முடிவுகளையும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் உறுதியாகவும் சரியான முறையிலும் நிறைவேற்ற வேண்டும். பெருந்திரளான மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு கட்சியின் வெகுமக்கள் கொள்கையை அமுலாக்க வேண்டும். அவர்கள் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
புரட்சிகர இலட்சியத்தை அடைவதற்கு ஸ்தாபனம் மட்டும் போதுமானதல்ல. ஊழியர்களும் கட்சியின் உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் , ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக அன்பு கொண்டிருக்கவேண்டும். கட்சிக்கும் மக்களுக்கும் முழுமனதுடன் சேவை செய்யவேண்டும் , புரட்சிகரமான உற்சாகமும் நல்ல தார் மிகப் பண்புகளும் கொண்டிருக்க வேண்டும்.
ஹோ -சி-மின் 1947 மார்ச் மாதத்தில் பாக் - போ தோழர்களுக்கும் பிற்பாடு டுருங் - போ தோழர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். பிரெஞ்சு காலனிய வாதிகளை விரட்டியடித்து விட்டு நாட்டில் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகின்ற மாபெரும் இலட்சியத்துக்குத் தமது தார் மிக மற்றும் பொருளாதார பலத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்று எல்லா கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். குறுகிய நோக்கம் , அதிதீவிரவாதம் , இராணுவவாதம் அதிகாரவர்க்க மனோபாவம் , சம் பிரதாயவாதம் , சிகப்பு நாடாமுறை, கட்டுப்பாட்டை மீறுதல், சுயநலம், ஒழுக்கக் குறைவு ஆகிய குறைபாடுகளை அகற்ற வேண்டும் என்றார். 1947 அக்டோபர் மாதத்தில் 'நமது வேலை முறையை மேம்படுத்துவோம்' என்ற பிரசுரத்தை அவர் எழுதினார்.

Page 69
126 ஹோ-சி-மின்
கட்சியின் உறுப்பினர்கள் சித்தாந்தம், ஒழுக்கம், வேலைமுறை ஆகியவற்றில் தம்மை உயர்த்திக் கொள்வதற்குரிய கட்சி ஆவணமாக அது பயன்பட்டது.
'கட்சியின் உறுப்பினர் தகுதியுள்ள அரசியல் ஊழியராக வளர்ச்சியடைவது கடினமான காரியம் என்று கருதக்கூடாது. அவர் கட்சிக்கும் நாட்டுக்கும் உண்மையாகப் பாடுபட்டால் சுயநலம் இல்லாதவராக, மக்களுக்குத் தொண்டு செய்யும் உணர்ச்சி உடையவராக இருந்தால் அவருடைய தவறுகளும் குறைகளும் குறைந்துவிடும்; அவருடைய நல்ல பண்புகள் பன்மடங்கு அதிகரிக்கும்' என்றார்.
புரட்சிகர ஒழுக்கம் என்பது தனிப்பட்ட லாபங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சி, நாடு, மனிதகுலம் ஆகியவற்றைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்கின்ற புதிய அறவியல் என்று அவர் கூறினார்.
மேற்கூறிய ஆவணங்களை கட்சி உறுப்பினர்கள் ஆழமாகப் படித்து விவாதித்தார்கள். அவர்கள் கட்சிக்கும் மக்களுக்கும் உண்மையுள்ள புரட்சிக்காரர்களாக வளர்ச்சி அடைவதற்கு அவை உதவிபுரிந்தன, வியத்நாமில் தேசிய எதிர்ப்பு இயக்கமும் புனர்நிர்மாண இயக்கமும் தீவிரமடைந்தன.
ஹோ-சி-மின்னுடைய முன் முயற்சியினால் கட்சியின் மத்திய கமிட்டி 1948 மார்ச் 27இல் தேசபக்திப் போட்டிக்கு வேண்டுகோளை வெளியிட்டது. பஞ்சம், கல்லாமை மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை ஒழிப்பதற்கு மக்கள் தேசபக்திப் போட்டியில் ஈடுபடவேண்டும் என்று 11.6.1948 இல் ஹோ-சி-மின் வேண்டுகோள் விடுத்தார்.
'இளைஞர்களும் முதியவர்களும் ஆண்களும் பெண்களும், ஏழைகளும் செல்வர்களும் இராணுவ, அரசியல் பொருளாதார, கலாசாரத் துறையில் போராளியாக இருக்கவேண்டும். அனைத்து மக்களும் ஒவ்வொரு துறையிலும் எதிர்ப்பு இயக்கம் நடத்தவேண்டும் என்ற கோஷத்தை அமுலாக்க வேண்டும்' என்று அவர் கூறினார். 1949 வசந்த காலத்தின்

ஹோ-சி-மின் 127
புத் தாண்டு வாழ்த்துச் செய்தியில் தேசபக்திப் போட்டியில் எல்லாரும் ஈடுபடவேண்டும் என்று அவர் ஊக்கமளித்தார்.
ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு துறையும்
ஒவ்வொரு நாளும்
போட்டி போடட்டும்
நமது வெற்றி உறுதி
எதிரியின் தோல்வியும் உறுதி.*
அவர் தேசபக்திப் போட்டிக்கு அளித்த உத்வேகம் அதை
மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது. "அனைத்தும் போர்முனைக் கு! அனைத்தும் வெற்றிக் கு!" என்ற வாசகம் அவர்களை ஊக்குவித்தது.
தேசபக்திப் போட்டி இயக்கத்தில் தொழிலாளிவர்க்கம் முன்னணிப் பாத்திரத்தை வகித்தது. விவசாயவர்க்கம் உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் சிக்கனத்தையும் கடைப்பிடித்து போர்முனைக்கு அதிகமான வீரர்களையும் பொருளாயத வளங்களையும் கொடுத்தது. போர்வீரர்கள், அரசியல் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுடைய கடினவாழ்க்கையை ஹோ-சி-மின் பகிர்ந்துகொண்டார். அவர் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி ஊக்கமளித்தார். உங்கள் திறமை மற்றும் சக்தியை தேசிய எதிர்ப்பு இயக்கத்துக்கும் நாட்டின் புனர்நிர்மாணத்துக்கும் அர்ப்பணி யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த தேசபக்திப் போட்டியின்மூலம் வீரர்கள், முன்னுதாரண மான அரசியல் ஊழியர்கள் உருவானார்கள். அவர்கள் புரட்சியில் பூத்த அழகிய மலர்கள். ஹோ-சி-மின் அந்த மலர்ச் செடிகளுக்கு நீரூற்றி வளர்த்தார்.
மக்கள் யுத்தத்தை நடத்துவதற்கு இராணுவம், போலீஸ், கொரில் லாக்கள் என்ற மூன்று வகையான ஆயுதப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. பொதுமக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் கருவாக மூன்று பிரிவுகளும் இருந்தன. போலீஸ் மற்றும்

Page 70
128 ஹோ-சி-மின்
கொரில்லாப் பிரிவுகளுடைய முக்கியத்துவத்தை ஹோ-சி-மின் வலியுறுத்தினார். 'போலீஸ், சுயபாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் கொரில் லாக்கள் மொத்தமாக நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்; அது வெல்லமுடியாத படை, தந்தையர் நாட்டின் இரும்புச் சுவர். எதிரி எவ்வளவு உக்கிரமாக இருந்தாலும் இந்தப் படைகளுடன், இரும்புச் சுவருடன் மோதினால் அழிவது உறுதி' மக்கள் யுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கு முப்படை யினரும் மக்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் , ஒன்று குவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் . நம் துருப்புகள் இராணுவ பலத்துடனும் அரசியல் மற்றும் பொருளாதார சாதனங்களுடன் எதிரியிடம் போர் செய்யவேண்டும்.
இராணுவத்தைக் கட்டுகின்றபொழுது ஹோ-சி-மின் மிலிட்டரி மற்றும் போர்முறைகளில் கவனம் செலுத்தியதுடன் அரசியல் மற்றும் சித்தாந்தக் கல்விக்கும் மிகவும் அதிகமான கவனம் அளித்தார். அப்பொழுதுதான் நமது இராணுவம் மக்களுடைய அன்பு, நம்பிக்கை, பாராட்டைப் பெற்று உண்மையான மக்கள் இராணுவமாக இருக்கும்'. 'இராணுவம் மக்களிடமிருந்து உருவாகிறது, மக்களுக்காகப் போர் செய்கிறது. இராணுவமும் மக்களும் மீனையும் தண்ணீரையும் போன்றவர்கள்' என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆகவே இராணுவம் மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். அது மக்களிடமிருந்து ஒரு தையல் ஊசியை அல்லது நூற்கண்டைக் கூட எடுக்கக்கூடாது இராணுவம் எங்கு இருக்கின்றதோ, அங்கு ஸ்தல மக்களுடன் ஒத்துழைத்து விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். போர் செய்யும்பொழுது நம் துருப்புகள் வீரம், திறமை, மதிநுட்பம் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எதிரியிடமிருந்து கைப் பற்றிய ஆயுதங்களைக் கொண்டு அவனை அழிக்கவேண்டும் எதிரியின் மூல சக்திகளை ஒழித்து நமது சக்தியை வளர்க்கவேண்டும்.
ஹோ-சி-மின் பல இராணுவப் பிரிவுகளைப் பார்வையிட்டார். பல மாநாடுகளில் கலந்துகொண்டு இராணுவ அனுபவங்களைத் தொகுத்துக் கூறினார். அரசியல் ஊழியர்களுக்கும் போர் வீரர் களுக்கும் ஊக்கமூட்டுகின்ற கடிதங்களை அனுப்பினார்.

ஹோ-சி-மின் 1. 29
கஷ்டமான நிலைமைகளில் அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவார். நமது துருப்புகள் வெற்றி அடைகின்ற பொழுது தன்னிறைவு காரணமாக மெத்தனமாக இருந்து விடாதீர்கள், இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்குத் திட்டமிடுங்கள் என்று கூறுவார். நம் துருப்புகளின் பொருளாதார மற்றும் தார் மிக வாழ்க்கையில் அதிகமான அக்கறை காட்டினார். ‘போர்வீரர்களுக்கு விருந்தளிப்பதற்கு மக்கள் அரிசி கொடுங்கள் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார். ஓர் இளைஞன் மரணமடைந்தால் அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப் பார். 'ஒரு போர் வீரர் இறந்தால் எனக்கு அதிகமான வேதனை ஏற்படுகிறது' என்று கூறுவார்.
போரில் ஊனமுற்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். 'உங்களுடைய தைரியத்தை இழக்காதீர்கள். போர்முனையில் இருந்ததைப் போல முன்னுதாரணமுள்ள W குடிமக்களாக இருங்கள்' என்று அவர் கூறுவார். 'ஊனமுற்ற படை வீரர்களுக்கும் யுத்த தியாகிகள் குடும்பத்துக்கும் உத்வி செய்யும் நாள்' என்று ஜூலை மாதம் 27ஆம் நாளை அறிவித்தார்.
ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் யுத்த தியாகிகளின் குடும் பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான உதவிகளைச் செய்யுமாறு அதிகாரிகளையும் பொதுமக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். ஹோ-சி-மின் மற்றும் கட்சியின் அக்கறையினால் ஆரம்பத்தில் சிறு அளவிலிருந்த மக்கள் இராணுவம் வேகமாக வளர்ச்சியடைந்து பலமான இராணுவமாக மாறியது. அதன் வளர்ச்சி எதிரியின் இராணுவத் திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைத்தது.
நமது மக்கள் மற்றும் இராணுவத்தின் வெற்றியுடன் சேர்ந்து மக்கள் சக்தி அதிகமான வன்மையைப் பெற்றது. சுதந்திரமடைந்த பிரதேசங்களில் மட்டுமன்றி, எதிரி வசமிருந்த பிரதேசங்களிலும் மக்கள் "ஹோ மாமாவின் அரசாங்கத்திடம்' நம்பிக்கை வைத்தார்கள். நிர்வாகம் மக்களுக்கு சொந்தமாக இருக்கவேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்று ஹோ-சி-மின் கருதினார். ஒரு பக்கத்தில் நிர்வாக அமைப்பின் வெவ்வேறு மட்டங்களில் தொழிலாளர்கள்

Page 71
130 ஹோ-சி-மின்
மற்றும் விவசாயிகளுடைய பிரதிநிதிகள் தகுந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவேண்டும் , நிர்வாகத்தில் கட்சித் தலைமை வலுப்படுத்தப்படவேண்டும். மறுபக்கத்தில், நிர்வாக உறுப்புகள், மக்களின் வெவ்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பரந்த அணியின் குணாம்சத்தைப் பெறவேண்டும். நிர்வாகத் துறையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் மக்களுடைய பிரதிநிதிகளாகவும் அலுவலர்களாகவும் தம்மைக் கருதிக் கொண்டு தீவிரமான அர்ப் பணிப்பு உணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் முன்னுதாரண மாக இருக்கவேண்டும் . சுறுசுறுப்பு, சிக்கனம் , நர்மை, பொதுமக்கள் நலனுக்கு முழுமையான அர்ப்பணிப்பு, யநலம், அதிகாரவர்க்கத் தன்மை,பொருள்களை வீணாக்குதல், லஞ்சம் ஆகியவை இல்லாதிருத்தல் ஆகிய அறவியல் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அரசு அலுவலர்கள் நன்றாகப் படிக்கவேண்டும், மக்களுக்கு இன்னும் சிறப்பான முறையில் சேவை செய்வதற்குத் தமது அரசியல், கலாசார மற்றும் தொழில்முறைத் தகுதிகளை மேன்மேலும் உயர்த்தவேண்டும்.
கட்சி மற்றும் அரசாங்கத் தலைவர் என்ற முறையில் ஹோ-சி-மின் நாட்டுப் பற்றுக்கு மிகவும் சிறந்த உதாரணமாக இருந்தார்.
1949ஆம் ஆண்டில் அவருக்கு ஐம்பத்தொன்பது வயது முடிந்த பொழுது அவருடைய பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்று கூறியவர்களுக்கு அவர் பின்வரும் கவிதை மூலம் பதிலளித்தார்.
நாட்டுக்காகப் போராடிய நான் என்னைப் பற்றி நினைக்கவில்லை; ஐம்பத்தொன்பது முதியவயதல்ல எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு என் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள். * நமது மக்களுடைய எதிர்ப்பு இயக்கம் உலகப் புரட்சிகர இயக்கத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்தது. அதனால்தான் சர்வதேச ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று

ஹோ-சி-மின் 131
ஹோ-சி-மின் எப்பொழுதும் வற்புறுத்தினார். வியத்நாம் மக்கள் பிரெஞ்சுத் தொழிலாளிவர்க்கம் மற்றும் மக்களுடன் ஒன்று சேரவேண்டும் , சோவியத் யூனியன், சீனா மற்றும் இதர சோஷலிஸ்ட் நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறவேண்டும். காலனி நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் உலக முழுவதிலும் சமாதானத்தை நேசிக்கின்ற மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.
வியத்நாமின் சுதந்திரம் அரசுரிமை மற்றும் சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற எல்லா நாடுகளுடனும் ராஜாங்க உறவுகளை (diplomatic relations) ஏற்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருப்பதாக ஹோ-சி-மின் 14.1.1950 இல் அறிவித்த்ார்.
சோவியத் யூனியன், சீனா மற்றும் மக்கள் ஜனநாயக நாடுகள் நம் நாட்டை அங்கீகரித்து ராஜாங்க உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அரசியல் ஊழியர்களும் மக்களும் உண்மையான தேச பக்தியை, பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் இணைக்க வேண்டும் , நம் மக்கள் தற்சார்பு உணர்ச்சி, படைப்பாற்றல், சுறுசுறுப்பு, முன்முயற்சி ஆகியவற்றை சண்டையில் மட்டுமன்றி உற்பத்தியிலும் உயர்த்தவேண்டும். வெளிநாட்டு உதவியை நம்பியிருப்பதை எதிர்க்கவேண்டும்.
'மற்றொரு நாட்டின் உதவியை எதிர்பார்க்கின்ற மக்கள் : சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி இல்லாதவர்கள்' என்றார்.
இதுவரை கிடைத்த வெற்றிகளின் அடிப்படையிலும் வியட்-பாக் மூலதனப் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கும் நம் நாட்டை ஜனநாயக உலகத்தோடு சேர்ப்பதற்கும் 1950 செப்டம்பர் மாதத்தில் ஹோ - சி-மின்னும் கட்சியும் எல்லைப் பிரதேச தாக்குதல் இயக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார்கள்.
1950 செப்டம்பர் 2ஆம் நாளன்று அவர் இராணுவத்துக்கு பின்வரும் பரிந்துரைகளை செய்தார்.
'காவோ-பாக்-லாங் தாக்குதல் மிகவும் முக்கியமானது.
"அதில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் முடிவு.

Page 72
132 ஹோ-சி-மின்
'ஆகவே போர்முனையில் போர் செய்கின்ற எல்லா வீரர்களும் துணிவுடன் இருக்கவேண்டும்; அவர்கள் எதிரியை ஒழிப்பதற்கும் காவோ-பாக்-லாங் போர்முனைக்கு துணைப் படைகள் வருவதை தடுப்பதற்கும் மற்ற போர்முனைகளில் உள்ள வீரர்களுடன் போட்டியிட வேண்டும்.
'காவோ-பாக் - லாங்கில் வெற்றி அடைவது நாட்டின் பொதுவான வெற்றியாக இருக்கும்.'
அவருடைய ஆணையை நிறைவேற்றுவதற்கு படைப் பிரிவுகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வீரச்சமர் புரிந்தன.
1950 செப்டம்பர் மாதத்தின் நடுவில் ஹோ-சி-மின் இராணுவ உடை அணிந்து மலைகளில் ஏறி, ஆறுகளைக் கடந்து போர் முனைக்குச் சென்றார். அவர் தேசபக்தியுள்ள மூட்டை தூக்குபவர்களைப் பற்றி விசாரித்தார். இளைஞர்களுக்குப் பின்வரும் கவிதையை எழுதினார்:
மலைகளைத் தட்டையாக்குவது சமுத்திரத்தை மூடுவது கடினமான வேலையல்ல விடாமுயற்சி வெற்றி தரும் மனஉறுதி வெற்றி குடும் அவர் போர்முனைக்குச் சென்றபிறகு போர்த் திட்டத்தை மாற்றினார். ஊழியர்கள் மாநாட்டை ஊக்குவித்தார், போர் வீரர் களையும் உணவுப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வருபவர்களையும் சந்தித்தார். மலை மீது அமைக்கப்பட்ட மேடையிலிருந்து டோங்-கேயில்? வீரர்கள் துணிவுடன் சண்டை செய்வதைப் பார்வையிட்டார். பின்வரும் கவிதையை எழுதினார்:
நான் மலை மீது ஏறி கழியின் மீது சாய்ந்து நின்று போர்க்களத்தைப் பார்க்கிறேன் முடிவில்லாத மலைத் தொடர்கள் உச்சியில் பெரிய மேகங்கள் புயலாகப் போரிடும் நம் துருப்புகள் ந்கு மற்றும் டெள நட்சத்திரங்களைக்கூட

ஹோ-சி-மின் 133
வெல்லும். ஆக்கிரமித்த ஒநாய்களை ஒழிக்க நாம் சபதம் ஏற்போம். ஹோ - சி-மின் போர்முனைக்கு வருகையளித்து நம் இராணுவமும் மக்களும் முன்னேறிச் சென்று வெற்றிபெறுமாறு ஊக்குவித்தார்.
எல்லைப்புறத் தாக்குதல் இயக்கம் நாம் அதிகமான திறமையுடன் நடத்திய முதல் பெரும் தாக்குதல் ஆகும். நாம் 5 நகரங்களை 15 சந்தை நகரங்களை, 1,50,000 மக்கள் வசித்த 750 கி.மீ எல்லைப் பகுதியை எதிரியின் பிடியிலிருந்து விடுவித்தோம். சுமார் 8,000 எதிரி வீரர்கள் மடிந்தார்கள் அல்லது படுகாயமடைந்தார்கள். வியெட் - பாக் எதிர்ப்புகளும் விரிவுபடுத்தப் பட்டது. மற்ற நாடுகளுடன் உறவுகள் நிறுவப்பட்டன. அந்தத் தாக்குதலின் வெற்றி ஹோ - சி-மின் மற்றும் கட்சியின் திறமையான தலைமையை நிரூபித்தது. பிரெஞ்சு காலனியவாதிகளின் தோல்வி தவிர்க்கமுடியாதது என்று காட்டியது.
தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் நான்காவது ஆண்டின் தொடக்கத்தின் போது (19.12.1950) ஹோ-சி-மின் பின்வருமாறு கூறினார்:
'நாம் தற்பொழுது நடத்துகின்ற எதிர்ப்புப் போரை யுவான் மற்றும் மிங்கின் படைகளை எதிர்த்து நமது முன்னோர்கள் நடத்திய போருடன் ஒப்பிடுவோம். அன்று எதிரி அதிகமான பலத்துடன் நமது எல்லைக்கு அருகில் இருந்தான். நாம் சிறிய நாடு என்ற போதிலும் எதிரியைத் தோற்கடித்தோம் . இன்று நெடுந் தூரத்திலிருந்து வரும் எதிரியுடன் போர் செய்கிறோம். நம்மிடம் வலிமையான படை நம் மக்களிடம் ஒற்றுமையும் உறுதியும் இருக்கின்றன. நமது வெற்றி நிச்சயம். பிரெஞ்சுக் காலனிய வாதிகளும் அமெரிக்க தலையீட்டாளர்களும் யுவான் மற்றும் மிங்கைப்போல படுதோல்வி அடைவார்கள்'*
எல்லைப் போரில் வெற்றியடைந்த பிறகு எல்லாத் துறை களிலும் கட்சியின் தலைமையை வலுப்படுத்துவதற்கு தேசிய எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதற்கு கட்சியின் 2வது தேசிய காங்கிரஸ் டுயென் - குவாங் நகரத்தில் நடைபெற்றது. 'இது தேசிய

Page 73
134 ஹோ-சி-மின்
எதிர்ப் பின் காங்கிரஸ் எதிர்ப்பு முழுவெற்றி பெறுமாறு செய்வதும் வியத்நாமில் தொழிலாளர் கட்சியைக் கட்டுவதும் அதன் அரசியல் கடமை' என்று ஹோ-சி-மின் சுட்டிக்காட்டினார்.
காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் அறிக்கையில், இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் மனிதசமூக வரலாற்றில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களை ஹோ-சி-மின் தொகுத்துக் கூறினார். கடந்த 21 ஆண்டுகளில் கட்சியின் தலைமையில் வியத்நாமியப் புரட்சி கடந்து வந்த வரலாற்றுக் கட்டங்களைக் குறிப்பிட்டார். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் மற்றும் அமெரிக்கத் தலையீட்டாளர்களுடைய ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்பதற்கு கட்சியும் மக்களும் இராணுவமும் செய்ய வேண்டிய அவசரமான கடமைகளைக் குறிப்பிட்டார்.
தேசிய எதிர்ப்புப் போரைப் பற்றி ஹோ-சி-மின் பின்வருமாறு கூறினார்: s
ஆரம்பமுதலே எதிரியின் போர்த்திட்டத்தைக் காட்டிலும் நமது போர்த்திட்டம் சிறப்பாக இருந்தது. எதிரி மின்னல் போர் நடத்த விரும்பினான். நாம் நீண்டபோர் என்ற கொள்கையை அமுலாக்கினோம். எதிரி நமது அணிகளில் பிளவை ஏற்படுத்த முயற்சிகளைச் செய்தான். ஆனால் நாம் "மக்கள் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்து" என்னும் கோஷத்தை முன் வைத்தோம். ஆரம்பத்தில் நாம் பலவீனமாக இருந்தாலும் தொடர்ச்சியாகப் போராடினோம். நமக்கு வெற்றி நிச்சயம்.'
சில சந்தேகப் பிறவிகள் நமது போராட்டத்தை 'யானையை வெட்டுக்கிளி எதிர்க்கிறது" என்று கூறினார்கள். அவர்கள் சக்திகளின் இன்றைய நிலையை மட்டும் பார்த்தார்கள். அவர்கள் தொலைநோக்கு இல்லாதவர்கள். எதிரியிடம் போர் விமானங்களும் சக்திமிக்க துப்பாக்கிகளும் இருக்கின்றன. நாம் கூர்மையான மூங்கில் கழிகளைக் கொண்டு அவர்களை எதிர்க்கிறோம். ஆனால் மார்க்சிய லெனினியத்தைப் பின்பற்றுகின்ற நாம் இன்றுள்ள நிலைமையை மட்டும் பார்ப்பதில்லை, எதிர்காலத்தையும் பார்க்கிறோம், நமது மக்களுடைய போராட்ட உணர்ச்சியிலும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறோம்.'

ஹோ-சி-மின் 135
வெட்டுக்கிளி சிறிய உருவமே ஆனால் விடாமுயற்சியால் யானையின் குடலைக் கிழிக்கும்
உண்மை என்னவென்றால் காலனியாதிக்க யானைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் புலிகளைப் போல மேன்மேலும் பலமடைந்துகொண்டிருக்கிறோம் '* கூறினார்.
என்று ஹோ-சி-மின்
கட்சி நிறுவப்பட்ட காலம் முதல் அதன் கொள்கை சரியாக இருந்திருக்கிறது, கட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும் நாட்டுக்காக வீரத்துடன் போரிட்டார்கள் என்று அவர் உறுதிப் படுத்தினார். அமெரிக்காவியத்நாம் விவகாரங்களில் பகிரங்கமாகத் தலையிடுகிறது என்று குற்றம் சாட்டினார். மூன்றாவது உலகப் போரை ஆரம்பிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடைய திட்டத்தை அவர் அம்பலப்படுத்தினார். 'பிரெஞ்சு காலனிய வாதிகளை ஒழிப்போம், அமெரிக்கத் தலையீட்டாளர்களை முறியடிப்போம், ஒற்றுமை மற்றும் முழுசுதந்திரம் அடைவோம், உலக சமாதானத்தைப் பாதுகாப்போம்" என்ற முக்கியமான
கோஷத்தை அறிவித்தார்.
இந்த கோஷத்தை நிறைவேற்ற தேசிய எதிர்ப்பு வெற்றி பெற வைப்பது கட்சியின் முதற் பெரும் கடமை என்பதை அவர் வலியுறுத்தினார். மற்ற எல்லாக் கடமைகளும் அதைப் பொறுத்தே உள்ளன என்பதால் நாம் ஒவ்வொரு துறையிலும் நமது சக்தியை வளர்க்கவேண்டும் , குறிப்பாக தேசிய ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
'நமது மக்கள் தீவிரமான தேசபக்தர்கள். இது விலை மதிப்பில்லாத தேசிய மரபு. நாடு ஆக்கிரமிக்கப்படுகின்ற பொழுது தேசபக்தி பொங்கி எழுந்து ஆபத்துகளையும் துன்பங்களை யும் முறியடிக்கிறது, தேசத் துரோகிகள் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் மூழ்கடிக்கிறது' என்று அவர் கூறினார்.
சகோதர நாடுகளுடனும் உலகத்தின் முற்போக்கான மக்களுடனும் நட்புறவுகளை வளர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். கம்பூச்சியா மற்றும் லாவோஸ் மக்கள் சுதந்திரம்

Page 74
136 ஹோ-சி-மின்
அடைவதற்கு உதவி செய்யவேண்டும் என்றார். மேற் கூறிய கடமைகளை நிறைவேற்ற கட்சியை வளாக்கவேண்டும் , வலுப்படுத்த வேண்டும். நாட்டில் கட்சியின் பாத்திரம் அதிகரிக்க வேண்டும் அப்பொழுது தேசிய எதிர்ப்பும் தேசியப் புனர் நிர்மாணமும் முழுமையாக வெற்றி அடையும்.
வியத்நாம் தொழிலாளர் கட்சி மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமையான, நிலையான தூய்மையுள்ள முற்றிலும் புரட்சிகரமான கட்சியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதில் ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் மற்றும் சுய-விமர்சனம் கடைப்பிடிக்கப் படவேண்டும்.
ஹோ-சி-மின் அளித்த அரசியல் அறிக்கை மற்றும் தோழர் டுருவோங் - சிங் ஹ் வியத்நாம் புரட்சியைப் பற்றி அளித்த அறிக்கையிலடங்கிய முக்கியமான கருத்துகள் வியத்நாம் தொழிலாளர் கட்சியின் அரசியல் செயல்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. வியத்நாமில் மக்கள் தேசிய ஜனநாயகப் புரட்சி சோஷலிஸ்ட் புரட்சிக்கு முன்னேறுகின்ற திசைவழியை அது உறுதி செய்தது. தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் முழுவெற்றி அடைவோம் என்று விளக்கியது.
கடந்த இரண்டு பத்தாண்டுகளில் தேசிய விடுதலைக்கும் வர்க்க விடுதலைக்கும் நடந்த போராட்டத்தில் கட்சியின் சாதனைகளை காங்கிரஸ் மதிப்பிட்டது. நமது கட்சியின் நிறுவுநர், தலைவர் மற்றும் வழிகாட்டியான ஹோ-சி-மின்னுடைய மகத்தான சேவைகளை காங்கிரஸ் பாராட்டியது.
'உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர் எப்பொழுதும் கட்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார், தொழிலாளிவர்க்கத்தின் புதிய பாணி புரட்சிகரக் கட்சியாக அதற்குப் பயிற்சி அளிக்கிறார். நம் நாட்டின் நிலைமைக்கு மார்க்சியத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கற்பித்தது அவர் செய்த மாபெரும் சேவையாகும்.
‘வியத்நாம் புரட்சியில் ஒவ்வொரு திருப்பு முனையிலும் அவர் சிறந்த படகோட்டியாக இருக்கிறார். புயல் காற்று அடிக்கின்ற

ஹோ-சி-மின் 1.37
பொழுது படகைத் திறமையாக செலுத்தி பத்திரமாக துறைமுகத்துக்குள் கொண்டுவருவார்' என்று காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எழுதப்பட்டிருந்தது.
காங்கிரஸ் புதிய மத்தியகமிட்டியைத் தேர்ந்தெடுத்தது. ஹோ-சி-மின் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தோழர் டுருவோங் - சிங்ஹ் பொதுச் செயலாளராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய ஒற்றுமையை வலுப் படுத்தி வளர்த்துச் செல்லும் கொள்கையின் அடிப்படையில் வியத்மின் மற்றும் லின்-வியட் 3.3.1951இல் கூட்டாக காங்கிரசை நடத்தியபொழுது இரண்டு அமைப்புகளும் இணைவது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றிக்கு தேசிய ஒற்றுமைப் பிரச்சினை அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. தேசிய எதிர்ப்பு இயக்கம் எவ்வளவு கடினமானதாக உக்கிரமானதாக மாறியதோ அந்த அளவுக்கு தேசிய ஐக்கிய முன்னணி உறுதியான தொழிலாளி - விவசாயி கூட்டணியின் அடிப்படையில் விரிவுபடுத்தப்பட வேண்டும். நாம் ஒன்று சேரக்கூடிய எல்லாருடனும் சேருங்கள், நம் தரப்புக்குக் கொண்டுவரக் கூடிய எல்லாரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள், எல்லா அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், தேசிய இனங்கள், மதச் சங்கங்கள், தேசபக்தியுள்ள தனிநபர்கள் ஆகியோரை பரந்த தேசிய ஐக்கிய முன்னணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார். முன்னணியின் உறுப்பினர்கள் நிரந்தர ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும் விமர்சனம் மற்றும் சுய-விமர்சனத்தைக் கடைப் பிடிக்கவேண்டும் , எல்லாரும் முன்னேறக் கூடிய முறையில் ஒருவருக்கொருவர் நட்புணர்ச்சி யுடன் உதவிபுரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஹோ-சி-மின் மற்றும் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில் அனைத்து மக்களின் ஒற்றுமை மக்களின் ஜனநாயக சக்திக்கு உறுதியான ஆதரவளிக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்களுடைய கைக் கூலிகளையும் சூழ்ந்திருக்கின்ற வளைய மாகவும் அது இருக்கிறது.

Page 75
138 ஹோ-சி-மின்
வியட்-மின் மற்றும் லின் - வியெட் இணைப்புக் காங்கிரசில் பேசும்பொழுது அவர் பின்வருமாறு கூறினார்:
‘இன்று நம் மக்களும் காங்கிரசும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த உணர்ச்சியை வெளியிட முடியவில்லை. ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த ஒற்றுமை ஏற்படவேண்டும் என்று நான் நெடுங்காலமாகப் போராடினேன். இந்த 'ஒற்றுமை மரபு மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டது. இன்று பழம் பழுத்துத் தொங்குகிறது. அதற்கு 'நிரந்தர வசந்தம்' உண்டு.
"லாவோஸ் மற்றும் கம்பூச்சியா மக்களிடையில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருப்பதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆக, மூன்று மக்களினங்கள் வியத்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஒன்று சேர்ந்துள்ளன'.*
'மூன்று மக்களினங்களும் தமது சிந்தனை ஒருமைப்பாட்டின் மூலம் எல்லாவிதமான கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை ஒழித்து வெற்றி அடைவார்கள். பிரெஞ்சு காலனியவாதிகளையும் அமெரிக்கத் தலையீட்டாளர்களையும் ஆக்கிரமிப்பாளர்களையும் முறியடிப்பார்கள்.*
ஹோ-சி-மின் பிரபலமான கோஷத்தை முன் வைத்தார்.
ஒற்றுமை, ஒற்றுமை, பரந்த ஒற்றுமை வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி
ஹோ - சி-மின் கலாசாரம் மற்றும் கலைத் துறை பற்றியும் அதிகமாக கவனம் செலுத்தினார். கலைப்பணி தேசிய எதிர்ப்பு இயக்கத்துக்கு உதவி செய்யவேண்டும் என்று அவர் கருதினார். 1951ஆம் ஆண்டில் ஓவியக் கண்காட்சி திறப்பு விழாவில் அவர் கலைஞர்களுக்குப் பின்வருமாறு எழுதினார்:
'கலையும் கலாசாரமும் ஒரு போர்முனைதான். அந்தப் போர்முனையில் நீங்கள் போராளியாக இருக்கிறீர்கள். கலையும் கலாசாரமும் தனியாக இருக்கமுடியாது. அவை பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் சேரவேண்டும்."

ஹோ-சி-மின் 139
அறிவு ஜீவிகளும் கலைஞர்களும்' அவருடைய ஆழமான சொற்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள். "எதிர்ப்பு இயக்கத்தின் சேவையில் கலை, கலையின் சேவையில் எதிர்ப்பு இயக்கம்"*என்ற கோஷத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.
கலைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்தார்கள், இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியளித்தார்கள், தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் இருந்தார்கள்.
தேசிய எதிர்ப்புப் போர் இறுதி வெற்றிபெற பொருளாதாரத் துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. 1952ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும், சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று ஹோ - சி-மின் வலியுறுத்தினார். உற்பத்தியை அதிகரித்து, சேமிப்பைக் கடைப் பிடித்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி கிடைக்கும் என்று அவர் கூறினார்.
'உற்பத்தியை அதிகப் படுத்தும் பொழுது மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயரும். சேமிப்பு, உற்பத்தி அதிகரிப்பதற்கு உதவி செய்யும் சேமிப்பு என்பது கருமித்தனம் அல்ல. ஊழல்கள், பொருட்களை வீணாக்குதல் அதிகாரவர்க்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் செயல்திட்டம் நிறைவேற உற்பத்தியை அதிகப்படுத்துவோம், சேமிப்பைக் கடைப்பிடிப்போம்' என்று அவர் பரிந்துரை செய்தார்.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சேமிப்பு இயக்கம் நமது தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் மீது மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. சொந்த முயற்சிகளை நம்புகின்ற உணர்ச்சியை நம் மக்களிடம் உருவாக்கியது.
எல்லைப்புற இயக்கம் வெற்றியடைந்த பிறகு நம் எதிர்ப்புப் படை எல்லா அம்சங்களிலும் குறிப்பாக இராணுவத் துறையில் வளர்ச்சி அடைந்தது. நமது இராணுவமும் மக்களும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக எதிரி எதுவும் செய்யாமல் தன்னைத் தற் காத்துக் கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். இந்த நெருக்கடியிலிருந்து தப் புவதற்கு மிகவும் சூழ்ச்சியான திட்டங்களைத் தயாரித்து தந்திரங்களில் ஈடுபட்டான். 1952இல்

Page 76
140 ஹோ-சி-மின்
தேசிய எதிர்ப்பு இயக்கம் தீர்மானகரமான கட்டத்தை நெருங்கிய பொழுது ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் , இராணுவம் மற்றும் கட்சியின் அரசியல் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுடைய அரசியல் - சித்தாந்த நிலையை உயர்த்துவதற்கு திருத்தல் (Rectification) இயக்கம் நடத்த முடிவு செய்தார்கள். தேசிய எதிர்ப்பு நெடுங் காலம் நீடிக்கும் சுயசார்பு இன்றியமையாதது, தனிநபர் செயல்முறை கூடாது, தியாகங்களை செய்வதற்குத் தயங்கக் கூடாது. நாம் , நம்முடைய நண்பர்கள், எதிரிகள் ஆகியோரை மிகவும் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் ஆகிய நோக்கங்களும் இருந்தன.
"கட்சி உறுப் பினர்களும் அரசியல் ஊழியர்களும் பாட்டாளிவர்க்க நிலையை கடைப் பிடிக்கின்ற முறையில் அவர்களுடைய அரசியல் தரத்தை உயர்த்துவது இன்றியமை யாதது" என்று அவர் கூறினார்.
"அவர்களிடம் (படைவீரர்களிடம்) ஏராளமான ஆயுதங்கள் இருந்தாலும் இதயபூர்வமாக மக்களுக்கு சேவை செய்வோம் என்று உறுதியான நிலை அவர்களிடம் இல்லாவிட்டால், ஆயுதங்களால்
எத்தகைய பயனும் ஏற்படாது.”*
அவர் திருத்தல் இயக்க வகுப்புகளைப் பற்றி அதிகமான கவனம் செலுத்தினார். கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆழமாகப் படிக்க வேண்டும், கட்சி மற்றும் மக்களுடைய நம்பிக்கையைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தேசிய எதிர்ப்பும் தேசியப் புனர்நிர்மாணமும் வெற்றி அடைவதற்குத் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்றார். மேற்கூறிய வற்றை விளக்கி அவர் உரைகள் நிகழ்த்தினார். கட்சியின் உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் எழுதினார்.
1954ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் நம்முடைய துருப்புகளை வடமேற்குப் பகுதிக்குக் கொண்டு செல்வதென்று கட்சி முடிவு செய்தது. அங்கேயிருந்த எதிரிப் படைகளை அழிப்பதும் தன் பிரதேசத்தில் ஒரு பகுதியை எதிரிகளிடமிருந்து விடுவிப்பதும் நோக்கமாகும். 9.9.1952இல் நடைபெற்ற
R. 135
வடமேற்குப் பகுதி இயக்க விளக்க மாநாட்டில்° எப்படிப்பட்ட

ஹோ-சி-மின் 141
விலையைக் கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும் என்று இராணுவ அதிகாரிகளிடம் பேசினார்.
'நம் படைவீரர்கள் மன உறுதியுடன் போர் செய்யவேண்டும். மரக்கிளையை ஒடிப்பது சுலபமானதே; ஆனால் மனஉறுதி இல்லா விட்டால் மரக்கிளையை ஒடிக்க முடியாது. புரட்சி செய்வதும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதும் கடினமானவைதான் ஆனால் மனஉறுதியுடன் நாம் வெற்றி அடைவோம்' என்றார்.
1.10.1952இல் நமது இராணுவம் வடமேற்குப் பகுதிக்குள் நுழைந்தன. வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்தின் சார்பில் அவர் எட்டு ஆணைகளை வெளியிட்டார்:
1) மக்கள் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் உத்தரவாதம் கொடுக்கவேண்டும்.
2) மக்களுடைய சிறுதொழில் மற்றும் வேலைகளைக் காப்பாற்ற வேண்டும்.
3) பிரெஞ்சு காலனியவாதிகள் மற்றும் பிற்போக்காளர் களுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்யவேண்டும்.
4) பெளத்த ஆலயங்கள், கிறிஸ்துவ மாதா கோவில்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ நிலையங்கள் மற்றும் கலாசார அமைப்புகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும்.
5) நன்மை செய்பவர்களைப் பாராட்ட வேண்டும் , தீமை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும்.
6) ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டும். 7) குடிமக்களை, குறிப்பாக விவசாயிகளை ஸ்தாபனங்களில் திரட்ட வேண்டும்.
8) வெளிநாட்டுக்காரர்களின் உயிர்களுக்கும் உடைமை களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும்.
ஹோ-சி-மின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நமது மக்களும் துருப்புகளும் வீரத்தோடு போர் செய்ததன் விளைவாக நாம்

Page 77
142 ஹோ-சி-மின்
வெற்றி அடைந்தோம். வடமேற்கில் எதிரியிடமிருந்த பிரதேசத்தில் பத்தில் எட்டு பங்கையும் 2,50,000 மக்களையும் விடுதலை செய்தோம். தாய் (Thai) சுயாட்சிப் பிரதேசத்தை நிறுவுவதற்கு எதிரி செய்த சூழ்ச்சியை முறியடித்தோம்.
இந்த எதிர்ப்பு இயக்கத்தின் போது ஹோ - சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் மக்கள் சக்தியை, குறிப்பாக விவசாயிகள் சக்தியைப் பேணிவளர்ப்பதில் கவனம் செலுத்தியது, ‘விவசாயிகள் நம் நாட்டின் மாபெரும் சக்தி, தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசமுள்ள கூட்டாளி" என்று அவர் கூறினார்.
நிலக்குத்தகை, கடன் வட்டிகளைக் குறைப்பது மற்றும் இதர கொள்கைகளை ஹோ-சி-மின்னும் கட்சியும் வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களுடைய சுரண்டலைக் குறைப்பது விவசாயிகளுடைய சக்தியை வளர்ப்பது தேசிய எதிர்ப்பு இயக்கத்துக்கு பின் கோடி தளத்தை உருவாக்கி வலுப்படுத்துவது ஆகிய கொள்கைகளைப் பரிந்துரை செய்தார்கள்.
எதிர்ப்பு இயக்கம் தீவிரமான கட்டத்தை அடைந்தவுடன் 'உழுபவனுக்கு நிலம்' என்ற கொள்கையை அமுலாக்கவேண்டும். அது தொழிலாளி-விவசாயி கூட்டணியை வலுப்படுத்தும், மக்கள் சக்தி பன்மடங்கு பெருகும், தேசிய எதிர்ப்பு இயக்கம் வெற்றியடை யும் . நிலக் குத்தகை மற்றும் கடன் வட்டிகளைக் குறைப்பது மற்றும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பெருந்திரளான மக்களைத் திரட்டுகின்ற கொள்கையை 1953 இல் ஹோ-சி-மின்னும் மத்திய கமிட்டியும் அமுலாக்கினார்கள்; நிலச்சீர்திருத்த நடவடிக்கை களும் ஆரம்பிக்கப்பட்டன. 1953 டிசம்பர் மாதத்தில் தேசிய அசெம்பிளி நிலச்சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
ஹோ-சி-மின் நிலச்சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியபொழுது பின்வருமாறு கூறினார்:
‘தேசிய எதிர்ப்பு இயக்கம் வெற்றி அடைவதற்கு தேசிய ஐக்கிய முன்னணியை விரிவுபடுத்தி வலுப் படுத்த வேண்டும் , தொழிலாளி - விவசாயி கூட்டணி, இராணுவம், மக்கள் சக்தி ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும் , கட்சியை பலப் படுத்தி எல்லாத் துறைகளிலும் அதை தலைமை வகிக்கும் படி

ஹோ-சி-மின் 143
செய்யவேண்டும். நிலச் சீர்திருத்தத்தின் மூலமாக பெருந்திரளான: மக்களைத் திரட்டினால் இந்த வேலை திருப்திகரமாக நிறைவேறும்*
1953 இலையுதிர்காலம் - குளிர்காலத்தின்போது, எதிர்ப்புப் போராட்டத்தின் 8ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று. நமது தொடர்ச்சியான வெற்றிகளினால் எதிரி கடுமை பான நெருக்கடியில் சிக்கினான். பதினெட்டு மாதங்களில் நமது இராணுவத்தை அழிப்பதற்கு பிரான்சும் அமெரிக்காவும் நவார்ரே திட்டத்தைத் தீட்டினார்கள். எப்படியும் முக்கியமான வெற்றியைப் பெற்று அந்த இராணுவ பலத்தின் அடிப்படையில் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி லாவோசிலும் கம்பூச்சியாவிலும் அன்றைக் கிருந்த நிலை (status quo) அப்படியே நீடிக்குமாறு செய்வது, வியத்நாமில் முடிந்த அளவுக்கு பிரதேசத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடிவு செய்தார்கள். இது பிரான்சுக்கு "கெளரவமான தீர்வு என்று கற்பனை செய்தார்கள் . 1953 நவம்பர் மாதத்தில் பிரெஞ்சுக் காரர்கள் டீன்-பீன்-பூ வில் துருப்புகளை விமானத்தில் கொண்டு வந்து இறக்கினார்கள். நவார்ரே திட்டத்தின்படி அதை மிகவும் பாதுகாப்பான கோட்டையாக மாற்றினார்கள்.
இத்திட்டத்தை முறியடிப்பதற்கு ஹோ-சி-மின்னும் கட்சியும் பின் வரும் எதிர்த்திட்டத்தை உருவாக்கினார்கள். நம் இராணுவம் தன்னுடைய முன்முயற்சி Luuj600T556T60Ld (Mobility) நெகிழ்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி தன்னுடைய சக்தியை ஒன்று குவித்து எதிரியின் முக்கியமான ஆனால் திறந்த நிலைகளைத் தாக்கவேண்டும் , நமது விடுதலையடைந்த பிரதேசங்கள் மீது எதிரி தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடிய தளங்களைத் தாக்கவேண்டும். அதே சமயத்தில் எல்லாப் போர் முனைகளிலும் மக்கள் போரைத் தீவிரப்படுத்தவேண்டும். 1953 டிசம்பரில் வடமேற்குப் பிரதேசத்தில் எதிரியைத் தாக்கும்பொழுது எதிரிப் படைகளில் ஒரு பகுதியை அழித்தோம் : லாய் - செளவிலிருந்து பிரெஞ்சுக்காரர்களை விரட்டினோம். டீன்-பீன்-பூ கோட்டையை சூழ்ந்துகொண்டோம். மக்கள் போர் இயக்கம் நாட்டிலுள்ள எல்லாப் போர் முனைகளிலும் வளர்ச்சியடைந்தது, லாவோஸில் அங்குள்ள மக்களின் ஒத்துழைப்புடன் வியத்நாம்

Page 78
144 ஹோ-சி-மின்
தொண்டர் படையினர் தா - கேட்டை விடுதலை செய்தார்கள். மீகோங் ஆற்றை நெருங்கி வந்தார்கள். கம்பூச்சியாவில், அந்தநாட்டு வீரர்களின் உதவியுடன் எதிரியைப் பூண் டோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். நாம் பல இடங்களில் தாக்கியதன் விளைவாக, நவார்ரே தன்னுடைய துருப்புகளை டீன் - பீன் - பூ, பாக்-போ கழிமுகம் , ப்ளெய்கு, ஸெனோ, லுவாங் பிரபாங் ஆகிய இடங்களுக்கு அனுப்பி அவற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரெஞ்சு காலனியவாதிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளுடைய சூழ்ச்சியான திட்டத்தை முறியடிப்பதற்கு டீன்பீன் - பூ மீது தாக்குதல் நடத்துவதென்று ஹோ - சி-மின்னும் கட்சியும் முடிவு செய்தார்கள். ஹோ-சி-மின் பின்வரும்
ஆணையை வெளியிட்டார்.
இந்தத் தாக்குதல் இராணுவத்துறையில் மட்டுமன்றி, அரசியல் துறையிலும் நமது நாட்டுக்கும் உலகமுழுமைக்கும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் வெற்றி பெறுவதற்கு நமது இராணுவமும் கட்சியும் உச்ச அளவு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.*
22.12.1953ஆம் நாளன்று அவர் வெற்றி- சபதக் கொடியை இராணுவத்திடம் ஒப்படைத்தார். படைப் பிரிவுகள் ஒன்றை யொன்று ஊக்குவித்து எதிரியை ஒழிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
வெற்றி-சபதக் கொடியை எதிரியின் தலைமையகத்தின் மீது பறக்கவிடுவோம் என்று நம் படைவீரர்கள் சபதம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் வீரப் போர் செய்த இரண்டு தாக்குதல்களில் வடக்குப் பகுதியிலுள்ள எதிரியின் கோட்டை அழிக்கப்பட்டது. ஹிம்-லாம், டாக்-லாப், பான்-கியோ ஆகிய பகுதிகள் விடுதலை செய்யப்பட்டன. கிழக்குப் பகுதியில் முக்கியமான நிலைகளை நம் இராணுவம் பிடித்தது. மலையின் உச்சியில் இருந்த நமது தாக்குதல் நிலைகள் வலுப்படுத்தப்பட்டன. எதிரி படைகளைப் பிளந்து சென்று அவர்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய நிலைமைகள் உருவாக்கப்பட்டன.

ஹோ-சி-மின் 145
அதே சமயத்தில் டீன்-பீன்-பூ போர் எப்படி முடியும் என்று ஒரு வெளிநாட்டு நிருபர் ஹோ-சி-மின்னிடம் கேட்டார். அவர் தன்னுடைய தலையில் அணிந்திருந்த இரும்புத் தொப்பியைக் கழற்றி அதை தலைகீழாகக் கவிழ்த்து நிருபரிடம் காட்டினார் 'இதுதான் டீன்-பீன்-பூ மலைகள் சூழ்ந்திருக்கின்ற பள்ளத்தாக்கு, பிரெஞ்சுத் துருப்புகள் பள்ளத்தாக்கின் அடியில் இருக்கிறார்கள். அதைச் சுற்றியுள்ள மலைகளில் நாங்கள் இருக்கிறோம். அவர்கள், எங்களிடமிருந்து தப்பமுடியாது" என்று பதிலளித்தார்.
டீன்-பீன்-பூ கோட்டையை எவரும் கைப் பற்ற முடியாது என்று ஜெனரல் ஹென்ரி நவார்ரே (பிரான்ஸ்) மற்றும் ஜெனரல் ஒ டானியல் (அமெரிக்கா) சொல்லிக் கொண்டிருந்தார்கள். 7.5.1954 இல் நாம் அந்தக் கோட்டையை முற்றிலும் அழித்தோம். ஹோ-சி-மின் தந்த வெற்றி சபதக்கொடி டீன்-பீன்-பூ மீது பறக்க விடப்பட்டது.
டீன்-பீன்-பூவில் நமக்குக் கிடைத்த வெற்றி நமது வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணிக்கப்படுகிறது. காலனியாதிக்கத்தின் கோட்டை வியத்நாம் படைகளின் சிறப்புமிக்க தாக்குதலில் வீழ்ந்தது என்று உலக வரலாறு குறிப்பிடுகிறது.
ஹோ - சி-மின் பிற்காலத்தில் அந்த வெற்றியைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:
"அது நமது மக்களுடைய மற்றும் உலகத்தின் ஒடுக்கப்புட்ட மக்களின் மாபெரும் வெற்றி. இன்றைய நிலைமைகளில் மார்க்சியம் எவ்வளவு மெய்யானது என்பதை அது தெளிவாக நிரூபிக்கிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்கள் அனைத்தும் முறியடிக்கப் படுவது உறுதி; புரட்சிகரப் போர்கள் அனைத்தும் வெற்றி யடைவது உறுதி."
வியத்நாம் மக்களுடைய வெற்றிகள், குறிப்பாக டீன்-பீன்-பூ வெற்றி, லாவோஸ் மற்றும் கம்பூச்சியா மக்களுடைய வெற்றிகளுடன் சேர்ந்து மூன்று நாடுகளுக்கும் சாதகமான முறையில் சக்தியின் சமநிலையை (balance of force) மாற்றியது. பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் உலகத்தினரால் ஏளனம் செய்யப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

Page 79
146 ஹோ-சி-மின்
1953-54ஆம் ஆண்டுகளின் குளிர்காலம் வசந்தகாலத்தில் ஹோ-சி-மின், இராணுவ பலத்தை உபயோகிப்பதுடன் அரசியல் மற்றும் இராஜியத் (diplomatic) துறைகளிலும் போராடி பிரெஞ்சு ஆக்கிரமிப்பு வாதிகளின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை தடை செய்வதற்கு விரும்பினார்.
வியத்நாம் போரைப் பற்றியும் வியத்நாம் பிரச்சினையை சமாதான ரீதியில் தீர்த்துக்கொள்ளும் சாத்தியங்களைப் பற்றியும் 26.11.1953 இல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிருபர் ஹோ-சி-மின்னிடம் கேட்டார். 'பிரெஞ்சு காலனியவாதிகள் இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தால் வியத்நாமியர்கள் தமக்கு இறுதி வெற்றி கிட்டுகின்றவரை தேசபக்திப் போரை நடத்துவார்கள். அவர்கள் கடந்த சில ஆண்டுகளின் படிப்பினையை கற்றுக்கொண்டு வியத்நாம் பிரச்சினையை சமாதான ரீதியில் தீர்க்க விரும்பினால் வியத்நாம் ஜனநாயகக் குடியரசும் மக்களும் அவர்களுடைய பிரேரணையை ஏற்றுக்கொள்ளத் தயார்' 'வியத்நாமின் சுதந்திரத்தை பிரெஞ்சு அரசாங்கம் மனப்பூர்வ மாக அங்கீகரிப்பதுதான் வியத்நாமில் போர் நிறுத்தத்துக்கு அடிப்படையாகும் '** என்று அவர் பதிலளித்தார். வியத்நாம் போர் வியத்நாமியர்களுக்கு கஷ்டங்களைக் கொடுத்துள்ளது; அது பிரெஞ்சு மக்களுக்கும் துன்பங்களைத் தந்திருக்கிறது. அதனால் பிரெஞ்சு அரசாங்கம் நடத்துகின்ற இந்தப் போரை நிறுத்த பிரெஞ்சு மக்கள் போராட வேண்டும். வியத்நாம் போரை சமாதான ரீதியில் தீர்ப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கட்சியின் மத்திய கமிட்டி இந்த அறிக்கையை விளக்கும் பொழுது பின்வருமாறு கூறியது: 'வியத்நாம் மக்கள் சமாதானப் பதாகையை உயர்த்த வேண்டும். வியத்நாம் பிரச்சினையை சமாதான ரீதியில் தீர்க்குமாறு பிரெஞ்சுக்காரர்களைக் கட்டாயப்படுத்துவதற்கு நாம் தேசிய எதிர்ப்புப் போரைத் தீவிரப்படுத்தவேண்டும், முடிந்த வரை எதிரியின் துருப்புகளை அழித்தொழிக்க வேண்டும்"
1953ஆம் ஆண்டின் முடிவிலும் 1954ஆம் ஆண்டின்
தொடக்கத்திலும் வியத்நாமிய இராணுவம் பிரெஞ்சுத் துருப்புகளை எல்லா முனைகளிலும் தாக்கியபொழுது இந்தோ-சீனாவில் போர்

ஹோ-சி-மின் 147
நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் , பிரெஞ்சு அரசாங்கம் வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுகள் நடத்தவேண்டும் என்று பிரெஞ்சு மக்கள் வலிமையான இயக்கம் நடத்தினார்கள். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அந்த இயக்கத்தில் முக்கியமான பங்கு வகித்தது. இந்த இயக்கம் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இந்தோ-சீனப் போரை நிறுத்த வேண்டும் என்று உலக சமாதானக் கவுன்சில் கோரியது. உலகத்தில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் நேசிக்கின்ற மக்களுடைய தீவிரமான நடவடிக்கை மற்றும் சோவியத் யூனியனுடைய ஆதரவினாலும் 1954 ஜனவரி மாதத்தில் பெர்லினில் நடைபெற்ற அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் மாநாடு, இந்தோ-சீனாவில் சமாதானத்தை மறுபடியும் ஏற்படுத்த ஜெனிவாவில் ஒரு விசேஷ மாநாட்டைக் கூட்டுவதற்கு ஒத்துக் கொண்டது.
டீன் - பீன்-பூ சண்டையில் பிரெஞ்சுத்துருப்புகள் தோல்வி அடைந்தபிறகு இந்தோசீனாவில் உள்ள பிரெஞ்சு இராணுவம் முற்றிலும் அழிக்கப்படுவதைத் தவிர்க்க பிரெஞ்சு அரசாங்கம் விரும்பியது. ஆகவே பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் அதிகமான அக்கறை கொண்டிருந்தது. 'நமது இராணுவ வெற்றிகள். ஜெனிவாவில் நமது இராஜிய நிலையை வலுப்படுத்தி எதிரியை உட்கார்ந்து பேசுமாறு கட்டாயப்படுத்தின.'
8.5.1954இல் பாம் - வான் -டோங் தலைமையில் சென்ற அரசாங்க தூதுக் குழு, வெற்றியடைந்த நாடு என்ற முறையில் ஜெனிவாவில் மாநாட்டு மண்டபத்திற்குள் நுழைந்தது.
புரட்சியின் திருப்புமுனைக்கு மக்களைத் தயாரிப்பதற்காக கட்சி மத்திய கமிட்டியின் 6வது விரிவடைந்த கூட்டம் 15.7.1954 இல் நடைபெற்றது. டீன்-பீன்-பூவில் பிரான்ஸ் தோல்வியடைந்தபிறகு வியத்நாம் , லாவோஸ், கம்பூச்சியாவிலிருந்து பிரான் சை விரட்டிவிட்டு இந்தோ-சீன மக்களைத் தமது அடிமைகளாக மாற்ற அமெரிக்கா சூழ்ச்சி செய்கிறது என்று ஹோ -சி-மின் சுட்டிக் காட்டினார். அமெரிக்கர்கள் உலகத்தில் பதற்றத்தை அதிகப்படுத்த விரும்புவதால் அவர்கள் உலக மக்களுடைய எதிரிகள் மட்டுமல்ல, இந்தோசீனாவின் மக்களுக்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்.

Page 80
148 ஹோ-சி-மின்
ஆகவே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து சண்டை போடுவது நமது கடமை. அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்கின்ற எல்லாரும் நம்முடன் கூட்டணி (தற்காலிகமாகக் கூட) வைக்கலாம் சமாதானம் , சுதந்திரம் , ஒற்றுமை, ஜனநாயகம் ஆகியவை நமது உறுதியான இலட்சியங்கள்.
இந்தோ-சீனாவைப் பற்றி ஜெனிவா மாநாடு 20.7.1954ல் முடிவடைந்தது. வியத்நாம், லாவோஸ் மற்றும் கம்பூச்சியாவின் சுதந்திரம் , அரசுரிமை, ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்படும் என்ற அடிப்படையில் பிரெஞ்சு அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஜெனிவா மாநாட்டை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்தார்கள்; ஆனால் அவர்களும் உடன்பாடுகளை மதிப்பதாக அறிவித்துக் கையெழுத்திட்டார்கள்.
டீன் - பீன் - பூ வெற்றியும் 1954இல் கையெழுத்திடப்பட்ட ஜெனிவா உடன்பாடுகளும் இந்தோ-சீன மக்களுடைய மகத்தான வெற்றியைக் குறித்தன. பிரெஞ்சுப் பேரரசுக்கு அழிவை ஏற்படுத்தின; உலகத்தில் பழைய காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தகர் வைத் தொடங்கின. எனினும் சீனத் தலைவர்களுடைய நம்பிக்கைத் துரோகம் பிரெஞ்சு காலனியவாதி களையும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்து இந்தோ-சீன மக்கள் முழுவெற்றி பெற முடியாமல் தடுத்தது. டீன்-பீன்-பூ வெற்றி மற்றும் 1953-54ஆம் ஆண்டுகளின் குளிர் காலம் - வசந்தகாலத்தில் இந்தோ-சீனா முழுவதிலும் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகுதான் நாம் முழுவெற்றி அடைந்தோம்.
ஹோ-சி-மின் 22.7.1954இல் மக்களுக்கு அனுப்பிய செய்தியில் புதிய நிலைமை மற்றும் கட்சியின் கொள்கை பற்றி மக்கள் அதிகமான விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் , சமாதானம் , பிரதேச ஒற்றுமை, சுதந்திரம் , ஜனநாயகம் ஆகியவற்றிற்கு உறுதியாகப் போராடவேண்டும் என்று கூறினார்.
“ஒரு நாட்டின் பகுதிகள் என்ற முறையில் வடக்கு, மத்தியப்
பகுதி,தெற்கு ஆகிய பகுதிகள் மீண்டும் ஒன்றுசேர வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள மக்கள் விடுதலை பெறவேண்டும்.

ஹோ-சி-மின் 149
சமாதானம் மறுஒற்றுமை, சுதந்திரம் , ஜனநாயகத்துக்கு நடைபெறும் போராட்டம் நெடுங் காலம் நடைபெறுகின்ற கடினமான போராட்டமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
நம் மக்கள் நடத்திய எதிர்த் தாக்குதல்கள் 1945-1954 ஆண்டுகளின் போது பல வெற்றிகளை அடைந்து டீன் - பீன்-பூ வெற்றியில் முடிவடைந்தன. பிரெஞ்சு காலனியவாதிகளையும் அமெரிக்க தலையீட்டாளர்களையும் எதிர்த்து நாம் நெடுங்காலம் நடத்திய போர் வெற்றியில் முடிந்தது. கட்சியின் மத்திய கமிட்டி மிகவும் சரியான போர்த்திட்ட வழிகாட்டலைக் கொடுத்தது நிரூபிக்கப்பட்டது. இராணுவக் கலையில் நமது மக்களுடைய தீவிரமான முயற்சி தலைமையான ஸ்தாபனத்தை அமைத்துக் கொள்வதில் திறமை ஆகியவற்றை நிரூபித்தது.
தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றி "ஹோ-சி-மின்னுடைய அறிவார்ந்த தலைமை மற்றும் வியத்நாமிய மக்களுடைய தகுதியை எடுத்துக்காட்டியது. அவர்கள் பலவீனமான படைகளை பலம் நிறைந்த படைகளாக மாற்றினார்கள். இறுதி வெற்றி நமக்கே என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்'* அவர் தேசிய எதிர்ப்பின் ஆன்மா. நமது மக்களின் போராட்ட உறுதியின் வடிவம் மக்களுடைய சக்தி அவருக்கு நன்றாகத் தெரியும். எதிரியின் மீது எப்பொழுது தாக்குதல் நடத்தவேண்டும் என்பது அவருக்குத் தெரியும் அவர் தலைமையில் நமது மக்களுடைய வலிமை மேன்" மேலும் அதிகரித்தது.
அதிக வலிமையுள்ள ஓர் ஏகாதிபத்திய நாட்டின் ஆக்கிரமிப்பை ஓர் ஒடுக்கப்பட்ட நாடு வரலாற்றில் முதல் தடவையாக முறியடித்தது. அது ஏகாதிபத்தியக் காலனியாதிக்க அமைப்பின் அழிவை விரைவுபடுத்தியது. அது நமது மக்களுடைய மகத்தான வெற்றி, அதே சமயத்தில் உலகத்தில் சமாதானம் ஜனநாயகம், சோஷலிச சக்திகளுடைய வெற்றியாகவும் இருந்தது.
வியத்நாம் - டீன் - பீன் - பூ ஹோ-சி-மின் ஒடுக்கப்பட்ட மக்களினங்களுடைய போர் முழக்கமாக மாறியது. உலக மக்கள் அதைப் பெருமையுடன் முழங்கினார்கள்.

Page 81
8
வடக்கில் சோஷலிஸ்ட் புரட்சியும் தெற்கில்
தேசிய மக்கள் ஜனநாயகப் புரட்சியும் (1954-1969)
பிரெஞ்சுக் காலனியவாதிகளை எதிர்த்து நடைபெற்ற போரின் வெற்றி வியத்நாமியப் புரட்சி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்தது. இந்தோ-சீனாவில் மறுபடியும் அமைதி நிலவியது. வடக்கு வியத்நாம் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைந்தது.
தெற்குப் பகுதியில் பிரெஞ்சுக் காலனிய வாதிகளை வெளியேற்றுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தீவிரமாக முயற்சி செய்தார்கள். அதை அமெரிக்காவின் காலனியாகவும் இராணுவதளமாகவும் மாற்றி, மறுபடியும் போரை ஆரம்பித்து வியத்நாம் ஜனநாயகக் குடியரசையும் சோஷலிஸ்ட் முகாமையும் தாக்குவது அவர்களுடைய நோக்கமாக இருந்தது.
இந்தப் புதிய நிலைமையில் ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் ஒரே சமயத்தில் செய்யப்படவேண்டிய இரண்டு முக்கியமான போர்த்திட்டக் கடமைகளை வலியுறுத்தினார்கள். வடக்குப் பகுதியில் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு சோஷலிசத்தை நோக்கி முன்னேற வேண்டும். அடுத்தது நாட்டின் இரண்டு பகுதிகளையும் ஒன்று சேர்த்து நாடு முழுவதிலும் மக்களுடைய தேசிய ஜனநாயகப் புரட்சியைப் பூர்த்தி செய்ய வேண்டும். சமாதானத்தை வலுப்படுத்துதல், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் நாட்டை மீண்டும் ஒன்று சேர்த்தல் , சோஷலிஸ்ட் முகாமை வலுப் படுத்துவதற்கும் தென்கிழக்கு ஆசியாவிலும் உலகத்திலும் சமாதானத்தை வலுப் படுத்துதல் ஆகிய ஒரே குறிக்கோளை இரண்டு கடமைகளும் கொண்டிருந்தன.

ஹோ-சி-மின் 151.
விடுதலையடைந்த வடக்குப் பிரதேசத்தில் மகிழ்ச்சி ஆரவாரம், குதூகலம் நிரம்பிய சூழ்நிலையில் ஹோ - சி-மின் ஹனோயின் புறநகருக்குத் திரும்பினார். அவருடன் அரசாங்கத்தின் பிரமுகர்களும் கட்சியின் மத்திய கமிட்டியின் உறுப்பினர்களும் வந்தார்கள்.
ஹனோய்க்குச் செல்லும் வழியில் ஹோ-சி-மின் ஹoங் அரசர்களுடைய ஆலயத்துக்குச் சென்றார். தலைநகரத்தைக் கைப் பற்றுவதற்குத் தயாரிப்புகளை செய்து கொண்டிருந்த முன்னணிப் படையின் இராணுவ அதிகாரிகள் மற்றும் போர்வீரர்கள் மத்தியில் அவர் பேசினார். ‘நாம் இங்கு தற்செயலாகத்தான் சந்திக்கிறோம். நெடுங்காலத்துக்கு முன்பு இந்த நாட்டை நிர்மாணித்த புகழ் ஹoங் அரசர்களைச் சேரும். இன்று நீங்களும் நானும் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.'* ‘சமாதானம் நிலவுவதால் நம் இராணுவம் ஓய்வாக இருக்கமுடியாது. தெற்குப் பகுதியில் ஏகாதிபத்திய வாதிகள் இருக்கின்றவரை, அவர்கள் உலகத்தில் இன்னும் உயிருடன் இருக்கின்றவரை நாம் வலிமையான இராணுவத்தை வைத்திருக்க வேண்டும்.' வலியுறுத்தினார்.
என்று அவர்
ஹோ - சி-மின்னுடைய சொற்பொழிவில் உற்சாகமடைந்த முன்னணிப் படையின் போர் வீரர்களும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த துருப்புகளும் ஹனோய் நகரத்தைச் சூழ்ந்து கொண்டார்கள்.
1954 அக்டோபர் 10ஆம் நாளன்று நமது காலாட்படை, பீரங்கிப் படை மற்றும் கவசவாகனப் படை ஹனோய் நகரத்துக்குள் நுழைந்தன. தலைநகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டது. அக்டோபர் 11ஆம் நாளன்று ஹோ-சி-மின் ஹனோய்க்கு வந்தார். மறுநாள் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹனோயில் வசிக்கும் சகோதர மக்கள் சட்டம், ஒழுங்கு முறையைப் பாதுகாக்க வேண்டும் என்றார். உற்பத்தி வேலைகள் தொடர வேண்டும். மக்களுடைய வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படக் கூடாது என்று கூறினார்.
12.10.1954ஆம் நாளன்று அரசாங்கக் கவுன்சிலின் முதல் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தேசிய எதிர்ப்புப்

Page 82
152 ஹோ-சி-மின்
போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு ஹனோய் நகரத்தை விட்டு வெளியேறியபிறகு எட்டு ஆண்டுகள் முடிந்திருந்தன.
31.12.1954ஆம் நாளன்று கட்சி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் தியாகிகள் சமாதியில் அவர் மலர் வளையம் வைத்தார். 'நாளைக் குப் புத் தாண்டு பிறக்கிறது. தலைநகரத்துக்கு அரசாங்கம் திரும்பி வந்ததற்கு மக்களும் இராணுவமும் அதிகாரபூர்வமாக நாளைக்கு வரவேற்பளிக் கின்றார்கள். நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இந்த சமயத்தில் தந்தையர் நாட்டுக்கும் இனத்துக்கும் சேவை செய்து மடிந்த தியாகிகளை நாம் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைக்கிறோம்" என்று கூறினார்.
1955 சனவரி முதல் நாளன்று ஹனோய் நகரத்தின் வரலாற்றுப் பெருமைக்குரிய பா-டின் ஹ் சதுக்கத்தில் 2,50,000 மக்கள் ஹோ - சி-மின் கட்சியின் மத்தியகமிட்டி, அரசாங்கம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான வரவேற்பு அளித்தார்கள்.
வடக்குப் பகுதியில் முழுவிடுதலைக்குப் பிறகு, "நம் நாட்டில் மனிதனை மனிதன் சுரண்டுகின்ற முறையை ஒழிப்பதற்கு, தேவை என்ற துன்பம் மறைந்து மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு' சோஷலிசத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அது மனிதகுல வரலாற்றில் மிகவும் முக்கியமான புரட்சி, உன்னதமான புரட்சி. அதே சமயத்தில் அது மிகவும் துன்பமான, சிக்கலான, கடினமான புரட்சியாகவும் இருந்தது.”* வடக்குப் பகுதியில் சோஷலிசத்தை ஏற்படுத்துவது புரட்சியின் தவிர்க்கமுடியாத சட்டம்; நாட்டை மறுபடியும் ஒன்று சேர்க்கின்ற போராட்டத்துக்கு அது இன்றியமையாதது.
வடக்கில் சோஷலிஸ்ட் புரட்சியை அமுலாக்குகின்றபொழுது ஹோ-சி-மின் பின்வருமாறு வலியுறுத்தினார்:
'பின்தங்கிய விவசாய நாடு என்ற நிலையிலிருந்து முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தைத் தவிர்த்துவிட்டு நேரடியாக
சோஷலிசத்துக்கு முன்னேறுகிறோம். அது இந்த மாறும் காலகட்டத்தின் குறியடையாளம்.”*

ஹோ-சி-மின் 153
அந்த சமயத்தில் வடக்குப் பகுதியிலும் எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் சோஷலிச நிர்மாணத்துக்கு சாதகமாகவுள்ள நிலைமைகளை ஹோ-சி-மின் சுட்டிக்காட்டினார்:
'நம் நாடு வெப்பமண்டலப் பிரதேசத்தில் நல்ல பருவ நிலையுடன் உள்ளது.
நம் காடுகளில் தங்கம் இருக்கிறது. நம் கடல்களில் வெள்ளி இருக்கிறது. நம் வயல்களில் வளமை இருக்கிறது.
நம் மக்கள் துணிச்சல் உடையவர்கள், கடுமையாக உழைப்பவர்கள், சிக்கனமானவர்கள்.
சகோதர நாடுகள் நமக்கு அதிகமான உதவிகளைச்
செய்கின்றன.'?
வடக்குப் பகுதியில் சோஷலிசத்தின் பொருளாயத மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகளை உருவாக்கவேண்டும். நவீனமான தொழில்முறை மற்றும் விவசாயத்தை உருவாக்க வேண்டும் ; முற்போக்கான விஞ்ஞானத்தையும் கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும். நாட்டில் சோஷலிஸ் ட் புரட்சிக்குரிய இந்தக் கடமைகளை ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்தியக் கமிட்டியும் வகுத்தளித்தார்கள். புதிய சோஷலிஸ்ட் பொருளாதாரத்தை அமைத்தது. பொருளாதார ரீதியில் நாட்டை மாற்றவேண்டும்.
சோஷலிச நிர்மாணத்தில் வடக்குப் பகுதியிலுள்ள சாதகமான நிலைமைகளை ஹோ-சி-மின் சுட்டிக் காட்டினார். ஆனால் பிரெஞ்சுக் காலனியாதிக்கம் விட்டுச் சென்ற ஏராளமான பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டியிருந்தது. நாடு வறுமையிலும் சிக்கியிருந்தது. விவசாயத்திலும் தொழில் துன்றயிலும் தனித்தனியான சிறுஅளவிலான உற்பத்திமுறை மேலோங்கியிருந்தது. தொழில்நுட்பம் மிகவும் பின்தங்கியிருந்தது. போரில் பேரழிவு ஏற்பட்டிருந்தது. கஷ்டங்கள் இப்படி குவிந்திருப்பதைப் பற்றி ஹோ-சி-மின் பின்வருமாறு கூறினார்: 'கஷ்டங்கள் பெரிதாக எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன; ஆனால் அவை சார்பு நிலையானவை, தற்காலிகமானவை கட்சியும் மக்களும் தீவிரமான உறுதியுடன் செயலாற்றினால், அவர்களால் கஷ்டங்களை வெல்ல முடியும்.”*

Page 83
154 NPP Zulu II “T VV T LIV Vy V
மக்களுடைய புரட்சிகர சக்திக்குத் தலைமை தாங்கிய ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும், மக்கள் எல்லா விதமான கஷ்டங்களையும் முறியடித்து உறுதியாக முன்னேறிச் செல்வதற்குத் தலைமை தாங்கினார்கள் . புதிதாக விடுதலை அடைந்த வடக்குப் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் ஏற்படுத்திய இடர்களை அகற்ற கட்சியின் எல்லாக் கிளைகளும் பின்வரும் கடமைகளை அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணையிட்டார். நகரங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும், கிராமங்களில் உள்ள நிலைமையை நிலைப்படுத்த வேண்டும், மக்கள் படையை வலுப்படுத்தவேண்டும், மக்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதுடன் அவர்களுடைய வாழ்க்கை நிலைமையை நிலைப்படுத்த வேண்டும்; புரட்சியைப் பிடிவாதமாக எதிர்க்கின்ற சக்திகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும், பொதுஅமைதி மற்றும் ஒழுங்கு முறையைப் பாதுகாத்தல்; வட்டம் , மாவட்டம் , மாகாணம் என்று எல்லா நிலைகளிலும் கட்சி அரசு மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைமைக் கமிட்டிகளை வலுப்படுத்தவேண்டும்.
வடக்குப் பகுதியில் பஞ்சத்தை சமாளிப்பது மிகவும் அவசரமான கடமைகளில் ஒன்று என்று அவர் கூறினார். பஞ்சத்தைத் தடுப்பதற்கு கட்சி மற்றும் அரசு அமைப்புகள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று அவர் ஆணையிட்டார். பஞ்சம் நிலவிய பகுதிகளில் மக்களைக் காப்பாற்றவும் மற்ற பகுதிகளில் பஞ்சம் ஏற்படாமல் தடுப்பதற்கும் ஹோ-சி-மின் 1955 ஜூலை மாதத்தில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். பஞ்சம் ஏற்பட்ட காரணங்களை ஆழமாக ஆராய்ந்து அவர் பேசினார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகள் வஞ்சம் தீர்க்கின்ற முறையில் பஞ்சத்தை உருவாக்கி யிருப்பதை அவர் அம்பலப்படுத்தினார்.
கட்சியும் அரசாங்கமும் மக்களுடைய வாழ்க்கை நிலைமை குறித்து அதிகமாக அக்கறை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். 'மக்கள் பட்டினியாக இருந்தால் கட்சியும் அரசாங்கமும் அதற்குப் பொறுப்பாவார்கள். மக்கள் குளிரில் கஷ்டப்பட்டால் கட்சியும் அரசாங்கமும்தான் அதற்குப் பொறுப்பு.

ஹோ-சி-மின் 155
மக்களுக்கு நோய் ஏற்பட்டால் கட்சியும் அரசாங்கமும் தான் அதற்குப் பொறுப்பு. மக்கள்,பஞ்சம், குளிர், அறியாமை, நோய் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டால், நமது கொள்கை எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அதை அமுலாக்க மாட்டார்கள்.'*
மக்கள் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பஞ்சத்தைத் தவிர்க்க அதுதான் சிறந்த வழி என்று அவர் சுட்டிக் காட்டினார். ஹோ-சி-மின் கவனமாக இயக்கியதன் விளைவாக தரிசாகிப் போன 1,38,800 ஹெக்டேர் நிலம் விவசாயத்துக்குத் தகுதியாக்கப்பட்டு அதில் நெல், சோளம், மற்றும் கிழங்கு வகைகள் பயிரிடப்பட்டன. வடக்குப் பகுதியில் பஞ்சம் படிப்படியாக ஒழிந்தது. A.
நெடுங் காலம் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு வடக்குப் பகுதி மெதுவாக சகஜ நிலைமைக்குத் திரும்பியது. மக்களுடைய வாழ்க்கை நிலைமைகள் நிலைப்படுத்தப்பட்டன. ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் பொருளாதார மீட்டமைப்புக்கு மக்களுடைய முயற்சிகளைத் திரட்டுதல் உற்பத்தியைப் பெருக்குதல், போரினால் ஏற்பட்ட அழிவைப் போக்குதல், பொருளாதார சீரமைப்பு, மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளில் தொடக்க அபிவிருத்தி ஆகியவற்றில் தமது கவனத்தைக் குவித்தார்கள்.
வடக்குப் பகுதியில் பொருளாதார மீட்டமைப்பு பற்றி ஹோ - சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் பின்வருமாறு சுட்டிக் காட்டினார்கள். 'முதலாவதாக நாம் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும் பொருளாதார மீட்டமைப்பில் இது கேந்திரமானது, மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் அடிப்படையானது. விவசாயத் துறைக்கு இணையாக ஆலை உற்பத்தி, தபால், போக்குவரத்து, தனியார் நடத்துகின்ற தொழில் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை படிப்படியாக மீட்டமைத்து அரசின் பொருளாதாரப் பகுதியை வலுப்படுத்த வேண்டும். கூட்டுறவுப் பொருளாதாரத்தை அமைக்க வேண்டும், போரில் அழிந்த நகரங்கஆTபகுதிச்சங்கண்டும் நிர்மாணிக்க வேண்டும்.

Page 84
156 ஹோ-சி-மின்
பொருளாதாரத்தை சீரமைக்கின்றபொழுது அரசியல் ஊழியர்களும் மக்களும் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், மக்கள் இராணுவத்தை அமைத்து நாட்டைப் பாதுகாத்தல், பாட்டாளிவர்க்கத் தலைமை என்ற வரலாற்றுப் பாத்திரத்தை பிற்காலத்தில் நிறைவேற்றக்கூடிய மக்களின் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துதல் இதரவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தவேண்டும் என்று ஹோ-சி-மின் வற்புறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கின்ற அதே சமயத்தில் கலாசார மற்றும் சமூகப் பணிகளை மேம்படுத்துவதும் அவசரமான கடமை என்று ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் கருதியது. பொதுக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியில் அபிவிருத்தி செய்தல், அரசியல் அறிவும் தொழில் துறையில் உயர் பட்டங்களும் உள்ளவர்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்தல் நாட்டில் சோஷலிசக் கல்வியை வளர்ப்பதற்கு இன்றியமையாதது. கலைத்துறை குறித்தும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கலைஞர்களும் எழுத்தாளர்களும் பொருளாதாரப் புனரமைப்பில் அக்கறையுடன் பங்கெடுக்க வேண்டும், புதிய வாழ்க்கை மற்றும் புதிய மனிதனைப் பற்றி எதார்த்தரீதியான படைப்புகளை செய்ய வேண்டும் என்று கட்சி கூறியது. மருத்துவம் மற்றும் சமூக விவகாரங்களில் தேசபக்த சுகாதார இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். புதிதாக விடுதலை அடைந்த பிரதேசங்களில் கொள்ளை நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் மக்கள் நலத்தை படிப்படியாக உயர்த்துவதிலும் மூடநம்பிக்கைகள் மற்றும் எல்லா சமூகப் பேரிடர்களையும் ஒழிப் பதிலும் நாட்டில் புதிய வாழ்க்கையை அமைப்பதிலும் சுகாதார இயக்கத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
பொருளாதாரப் புனர்நிர்மாணக் கட்டத்தில், கிராமப்பகுதியில் நிலவிய எல்லா வகையான சுரண்டல் வடிவங்களையும் ஒழிப்பதற்கு நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றுவது மிகவும் அவசரமான கடமைகளில் ஒன்று என்று ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் கருதினார்கள். அப்பொழுதுதான் விவசாயவர்க்கம் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் பொருளாதாரப் புனர்நிர்மாணத்துக்கும் வடக்குப்

ஹோ-சி-மின் 157
பகுதியின் வளர்ச்சிக்கும் சிறப்பான முறையில் பங்களிப்புச் செய்யமுடியும். 1956ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கட்சி மற்றும் மக்களுடைய மனஉறுதியினால் நாட்டின் வடக்குப் பகுதியில் நிலச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 'அது மாபெரும் வெற்றி, கிராமங்களில் வசித்த நம் சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்புச் செய்வதற்கும் தேசிய ஒற்றுமைக்கான போராட்டத்தில் வடக்குப் பகுதியை உறுதியான அடிப்படையாக மாற்றுவதற்கும் அது வழி வகுத்தது.'
உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் குறித்த போட்டியில் விவசாயிகள் பங்கெடுப்பதை ஊக்குவிப்ப தற்காக ஹோ-சி-மின் பல விவசாய உற்பத்திச் சங்கங்களுக்குச் சென்றார். வயல்களில் இறங்கி நடந்தார். 2.3.1958ஆம் நாளன்று ஹ0வாங்ஸோன் வட்டத்திலுள்ள ஸெள-தான் ஹ் விவசாயக் கூட்டுறவு சங்கத்துக்குச் சென்றார். 12.10.1958ஆம் நாளன்று தான்ஹ்டிரை மாவட்டத்திலுள்ள டாய்-டூ கூட்டுறவுச் சங்கத்துக்குச் சென்றார். அவர் மோக்-செள அரசு பண்ணைக்குச் சென்ற பொழுது கால்நடை வளர்ப்பைப் பற்றி முக்கியமான ஆலோசனைகளைக் கூறினார். தொழில்துறையில் வடக்குப் பகுதியிலுள்ள தொழிலாளி வர்க்கம் அரசுத் திட்டங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளைக் காட்டிலும் கூடுதலாக நிறைவேற்றி சாதனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். A.
ஹோ-சி-மின் பாக்டரிகளுக்கும் நிர்மாணம் நடைபெறுகின்ற இடங்களுக்கும் சென்று தொழிலாளர்களிடம் பேசினார். நீங்கள்தான் இந்த நாட்டின் எசமானர்கள்; ஆகவே உங்களிடம் சித்தாந்த ரீதியான நம்பிக்கை இருக்கவேண்டும், கறாரான அமைப்பும் கண்டிப்பும் இருக்கவேண்டும் என்றார். தொழிலாளி, யின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முதலில் தொழிலாளி, யின் பொறுப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டும் நல்லபடியான நிர்வாகம், கஷ்டங்களை வெல்கின்ற மனஉறுதி, காலம் தவறாமை ஆகியவை அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஹோ-சி-மின் உழைப்பின் மகத்தான பாத்திரத்தை எப்பொழுதும் வலியுறுத்துவார். 'முன்பு நாம் முதலாளிகளுக்கு,

Page 85
158 ஹோ-சி-மின்
நிலப்பிரபுக்களுக்கு, ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பாடுபட்டோம். ஆனால், இன்று நாம் நமக்காகப் பாடுபடுகிறோம். நாட்டுக்கு மக்களுக்கு, வர்க்கத்துக்கு எத் தொழில் இலாபகரமானதோ, அதுவே சிறப்பான தொழில் ஆகும்.*** 'உழைப்பே புரட்சிக்காரர்களுடைய அரசியல் தகுதியை மதிப்பிடுகின்ற அளவுகோல்' "நீங்கள் தாய்நாட்டை,மக்களை, சோஷலிசத்தை உண்மையாக நேசித்தால் உழைப்பை மதிக்கவேண்டும்.”*
அவர் சோம்பேறிகள்ை, உழைக்காமல் ஏமாற்று பவர்களை,படிக்கத் தெரியாமல் உழுவதற்கு விரும்பாமல் எந்தத் தொழிலிலும் ஈடுபடாமல், தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்குக் கூட உழைக்க விரும்பாமல் சமூகத்தின் பொருளாயத செல்வத்தின் அதிகரிப்புக்கு உதவாமல் இருப்பவர்களை ஆனால் சிறப்பான வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்க விரும்புபவர்களைக் கண்டனம் செய்தார். அவர்கள் சோஷலிச அறவியலுக்கு எதிரானவர்கள் என்றார். உடலுழைப்பை வெறுப்பவர்களை அவர் கண்டனம் செய்தார். 'நீ சமையற்காரனாக வீட்டைச் சுத்தம் செய்பவனாக, பாக்டரி தொழிலாளியாக அல்லது தலைவனாக இருக்கலாம். நீ மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்தால்தான் உனக்கு கெளரவம் உண்டு'° என்றார்.
அவர் உழைப்பு புனிதமான கடமை என்று கருதியதுடன் அது மகிழ்ச்சி மற்றும் இன்பத்தின் ஊற்றுக்கண், அது ஒரு கெளரவம், மனித மாண்புக்கு அளவுகோல் என்றார்.
சிக்கனத்துடன் சேர்ந்து நடைபெற்ற உற்பத்திப் போட்டியில் எல்லா மக்களும் பங்கெடுக்கவேண்டும் என்று அவர் கூறினார். ‘உழைப்பின் உற்பத்தித் திறனைத் தொடர்ச்சியாக அதிகப்படுத்துவதில் கவனமாக இருங்கள். சிக்கனத்தைக் கடைப் பிடித்து சேமியுங்கள், உற்பத்தியைப் பெருக்குங்கள். உழைப்பு இல்லாத சிக்கனம் முற்றிலும் பயனற்றதாகும். சிக்கனம் இல்லாத உழைப்பவர்களுக்கு எதுவும் மிஞ்சாது' என்றார். அவர் ஓர் உதாரணத்தைக் காட்டினார். 'சிக்கனம் இல்லாமல் உழைப்பவர்கள் அடித்தட்டு இல்லாத வாளியில் பொருள்களைப் போடுகிறார்கள். சிக்கனம் இல்லாத உழைப்பு ஒன்றுமில்லாத அறைக்குள் காற்று வீசுவதைப் போன்றதே" என்றார்.

ஹோ-சி-மின் 1.59
பணத்தில் மட்டுமன்றி, உழைப்பு அரசுப் பொருட்கள், காலம் இதரவற்றில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது பற்றி அவர் ஆழமான கருத்துகளை கொண்டிருந்தார். அவர் மனித உழைப்பை அதிகமாக மதித்தார். 'அது நம்மிடமுள்ள அரிய பொருள் நாம் மக்களுடைய நலத்தைப் பற்றி அதிகமான கவனம் செலுத்தவேண்டும். மக்களுடைய உழைப்பைத் திறமையுடன் பயன்படுத்த வேண்டும்.”*
மக்கள் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கின்றபொழுது ஊழல், பொருட்களை வீணாக்குதல், அதிகாரவர்க்கத்தன்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார். ஊழலுக்கும் பொருட்களை வீணாக்குவதற்கும் அதிகாரவர்க்கத்தன்மை மூல காரணம் என்று அவர் கருதினார். இரண்டு தீமைகளாலும் ஏற்படுகின்ற தீய விளைவுகளை அவர் ஒப்பிட்டுக் கூறினார். 'பொருட்களை வீணாக்குபவர் பொதுமக்களுடைய சொத்தைத் திருடுகிறார். அது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தீங்கு செய்கிறது, சில சமயங்களில் ஊழலைக் காட்டிலும் அதிகமாகத் தீங்கு செய்கிறது."
சுறுசுறுப்புக்கும் எளிமைக்கும் ஹோ-சி-மின் உதாரணமாக இருந்தார். அவர் அரசு விவகாரங்களுக்கு முதன்மையளித்தார். ஓய்வு மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சி பற்றி அவர் சிந்திப்பதில்லை. பிரெஞ்சு எதிர்ப்புப் போராட்ட காலத்தில் காட்டில் வசித்தபொழுதும் சமாதான காலத்தில் ஹனோயில் வசித்தபொழுதும் அவர் கடுமையாக உழைத்தார். எளிமையும் காலம் தவறாமையும் அவருடைய குணாம்சங்களாக இருந்தன.
ஹனோய்க்குத் திரும்பிய ஆரம்ப நாட்களின் போது அவர் டோன்-துய் குடியிருப்பில் தங்கி வேலை செய்தார். 1954 டிசம்பர் மாதத்தின் மத்தியில் அவர் பிரசிடென்சி மாளிகைக்கு மாறினார். முன்பு கவர்னர் ஜெனரலுடைய தலைமைச் செயலகமான அந்த மாபெரும் கட்டடத்தை தன்னுடைய இருப்பிடமாக அவர் மாற்றவில்லை.
அவர் ஒரு சிறிய வீட்டில் வசித்தார்; பெரும்பாலும் பழுப்பு நிறப் பருத்தி உடைகளையும் ரப்பர் செருப்புகளையும் அணிந்தார். 1945 செப்டம்பர் 2ஆம் நாளன்று சுதந்திரப் பிரகடனத்தை

Page 86
16O ஹோ-சி-மின்
வாசித்தபொழுது அவர் காக்கி நிறத்தில் சாதாரண சூட் அணிந்திருந்தார். அவர் பிரயாணம் செய்கின்றபொழுது அல்லது விருந்தினர்களை வரவேற்கும் பொழுது அதே மாதிரியான காக்கிசூட் அணிந்தார்.
ஹோ - சி-மின்னுடைய மேன்மையான குணங்களும் வேலைமுறையும் மக்களுக்கு உத்வேகமூட்டின. எல்லா இடர்களையும் சமாளிப்போம், வடக்குப் பகுதியில் சோஷலிச நிர்மாணத்துக்கு தீவிரமாகப் பாடுபடுவோம், தெறகுப் பகுதியை விடுதலை செய்து நாட்டை ஒன்று சேர்ப்போம் என்று அவர்கள் வீர சபதம் செய்தார்கள்.
புரட்சியின் புதிய கட்டத்தில் நமது வெற்றியை நிலை நாட்டுவதற்கு மக்கள் அனைவரது ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று ஹோ-சி-மின் வலியுறுத்தினார். நாட்டு நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால் தேசிய ஐக்கிய முன்னணியில் புதிய கூட்டாளிகளை சேர்ப்பதைப் பற்றி முடிவு செய்வது அவசியமாயிற்று. ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் லியென்வியட் முன்னணியைத் திருத்தியமைப்பதற்குத் திட்டமிட்டார்கள். 1955 செப்டம்பர் 5-10ஆம் நாட்களில் தேசிய ஐக்கிய முன்னணியின் காங்கிரஸ் ஹனோயில் நடைபெற்றது. முன்னணியை விரிவுபடுத்தி வியத்நாம் தந்தையர் நாட்டு முன்னணியை நிறுவ முடிவு செய்தது. காங்கிரஸ் புதிய வேலைத் திட்டத்தை நிறைவேற்றியது. சமாதானம் , நாட்டை ஒன்று சேர்த்தல், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை அடைவதற்குப் போராட முடிவு செய்யப்பட்டது. ஹோ-சி-மின் அமெரிக்காவையும் டையம் துரோகக் கும்பலையும் நெடுஞ்சாலையில் நம் வழியை மறைக்கின்ற மாபெரும் பாறையுடன் ஒப்பிட்டார். அது மிகப் பெரிய பாறையாக இருந்தாலும் நாட்டு மக்கள் எல்லோரும் உறுதியாகப் போராடினால் அந்தப் பாறையை அகற்றமுடியும் என்று கூறினார். அவர் நம் மக்களுடைய இதயங்களில் ஒற்றுமை உணர்ச்சியை வலுப் படுத்தி தந்தையர் நாட்டு முன்னணியின் செயல்திட்டத்தை அமுலாக்க வேண்டும் என்ற உணர்ச்சியை உருவாக்கினார். அமெரிக்கா- டையம் துரோகக் கும் பலின் கூட்டணி எவ்வளவு பலமுடையதாக இருந்தாலும் அதை

ஹோ-சி-மின் 161.
வியத்நாம் மக்கள் ஒழிக்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர் அளித்தார்.
மக்கள் ஜனநாயக அரசில் தொழிலாளிவர்க்கத்தின் தலைமை மேன்மேலும் வலுப் படுத்தப்பட வேண்டும் என்று ஹோ - சிமின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் சுட்டிக்காட்டினார்கள்.
"தொழிலாளிவர்க்கம் மிகவும் வீரமான, மிகவும் புரட்சிகரமான வர்க்கம். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் காலனியவாதிகளை அது எப்பொழுதும் வீரத்துடன் எதிர்க்கக்கூடியது.
புரட்சியின் முன்னணிப் படை என்ற தத்துவத்தில் வேரூன்றி, உலகப் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் அனுபவத்தைக் கற்று, வியத்நாம் மக்களுடைய மிகவும் தகுதியுள்ள, மிகவும் நம்புதற்குரிய தலைவன் என்பதை நம் நாட்டுத் தொழிலாளிவர்க்கம் நிரூபித்திருக்கிறது' என்று ஹோ-சி-மின் கூறினார்.
வடக்குப் பகுதியில் சோஷலிஸ்ட் நிர்மாணத்தின் பிரதான கடமை தொழிலாளி-விவசாயி கூட்டணியை வலுப் படுத்தி நிறுவுவதும் தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில் மக்களை, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஆதாரமாகக் கொள்வதும் என்று ஹோ-சி-மின் சுட்டிக்காட்டினார்.
வடக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்த சமூக மாற்றங்களை முழுமையாக பிரதிபலிப்பதற்கும் சோஷலிசத்தை நோக்கியும் நாட்டை ஒன்று சேர்ப்பதை நோக்கியும் முன்னேறுவதற்கும் தேசிய அசெம்பிளி 1957 சனவரி மாதத்தில் கூடிய பொழுது, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தது. ஹோ-சி-மின் அதன் தலைவராகப் பணியாற்றினார்.
27.2.1957ஆம் நாளன்று அரசியலமைப்புச் சட்டத் திருத்தக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. ஹோ-சி-மின் அக்குழுவில் உரையாற்றியபொழுது பின்வருமாறு கூறினார் வியத்நாம் ஜனநாயகக் குடியரசு தயாரித்த முதல் அரசியல் சட்டத்தின் (1946) முற்போக்கான அம்சங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்றார். அது நம் ஆட்சியின் எதார்த்தங்களையும் நமது வளர்ச்சிப் பாதையையும் முழுமையாகப் பிரதிபலிக்கவேண்டும் என்றார். நாடு தற்காலிகமாக

Page 87
162 ஹோ-சி-மின்
இரண்டு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டிருக்கிறது. புதிய அரசியலமைப்புச் சட்டம் வடக்குப் பகுதியின் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதுடன் தெற்குப் பகுதியில் வாழ்கின்ற நமது சகோதரர்கள் தேசிய ஒற்றுமைக்கு நடத்துகின்ற போராட்டத்தின் குறிக்கோளையும் அதில் குறிப்பிடவேண்டும் என்றார். 1.4.1959ஆம் நாளன்று அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது நகல் பிரசுரிக்கப்பட்டது. பொதுமக்கள் அதை விவாதித்துத் தம்முடைய கருத்துகளைத் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டார்கள்.
மக்களுடைய கருத்துகளை மிகவும் ஜனநாயகரீதியில் சேகரிப்பதில் ஹோ-சி-மின் அதிகமான கவனம் செலுத்தினார். ஏனென்றால், அப்பொழுதுதான் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கும் மக்கள் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் ஏற்றபடி அமையும்.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு 1959 டிசம்பர் மாதத்தில் ஹோ-சி-மின் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்ட நகலை தேசிய அசெம்பிளியில் முன்மொழிந்தார். அசெம்பளி அதை ஒருமனதாக நிறைவேற்றியது. அது சோஷலிஸ்ட் அரசியலமைப்புச் சட்டம். மக்களுடைய விருப்பார்வங்களை அது வெளியிட்டது. அவர்கள் நடந்து வந்த சிறப்புமிக்க பாதை அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வடக்குப் பகுதியில் சோஷலிஸ்ட் நிர்மாணம் மற்றும் பொருளாதார சீரமைப்பு நடைபெறும் இடங்களுக்கு ஹோ-சி-மின் தவறாமல் வருகையளித்தார்.
அவர் தேசிய மீட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றபிறகு முதல்முறையாக 14.5.1957ஆம் நாளன்று தான் பிறந்த கிராமத்துக்கு வந்தார். அந்த மாகாணத்தின் மக்கள் எல்லாரும் அவரைப் பரவசத்துடன் வரவேற்றார்கள். பலரால் தமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். அந்த வட்டார மக்களின் சார்பில் கூடியிருந்த 3000 பிரதிநிதிகளிடம் அவர் பேசினார். "நான்

ஹோ-சி-மின் 163
இந்த மாகாணத்தைச் சேர்ந்தவன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல்
வெளிநாட்டில் இருந்துவிட்டேன். என்னுடைய சொந்த
மாகாணத்துக்கு மறுபடியும் இன்று வந்திருக்கிறேன்.
பிறந்த மண்மீது பாசத்தால் என் இதயம் கனத்திருக்கிறது நான் வெளியேறி ஐம்பது ஆண்டுகள் ஆழமான உணர்ச்சிகளால் நிறைந்தன.
சொந்த கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் வசிக்கின்ற நபர் திரும்பி வருகின்றபொழுது ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் வேதனையையும் அனுபவிப் பார் . நான் இன்று மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கிறேன். ஏன்? ஏனென்றால் நான் வியத்நாமை விட்டுச் சென்ற காலத்துடன் ஒப்பிடுகின்றபொழுது நம் நாடு, குறிப்பாக நமது மாகாணம் , அதிகமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. முக்கியமான மாற்றம் என்ன? நான் புறப்பட்டபொழுது நம் நாடு காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்தது, நம் சகோதரர்கள் இன்னும் அடிமைகளாக இருந்தார்கள். இன்று வடக்குப் பகுதியில் குறிப்பாக ந் கே-ஆன் மாகாணத்தில் வசிக்கின்ற நம் சகோதரர்கள் சுதந்திர நாட்டின் குடிமக்கள். அவர்கள் காலம் காலமாக உழுது பயிரிட்ட நிலம் அவர்களுக்கு உரிமையாகி விட்டது. இது மாபெரும் மாற்றம்.'" 戏
ஹோ-சி-மின் கிராமவாசிகளிடம் அவர்களுடைய உடல்நலம் வாழ்க்கை மற்றும் விவசாயம் பற்றி விசாரித்தார். நாட்டில் சோஷலிஸ்ட் நிர்மாணத்திற்கும் , இரு பகுதிகளை ஒன்று சேர்ப்பதற்கும் தொடர்ந்து பாடுபடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 8.12.1961ஆம் நாளன்று ஹோ-சி-மின் தன் சொந்த கிராமத்துக்கு இரண்டாவது முறையாக வந்தார். ந்கே-ஆன் மாகாணத்துக்கு வந்ததும் கட்சியின் மாகாணக் கமிட்டித் தோழர்களுடன் உரையாடினார். அவர்கள் விவசாயத் துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், காடுகளை தொழில்களில் பயன்படுத்தப்படும் மரங்களை வளர்க்க வேண்டும் என்றார்.

Page 88
164 ஹோ-சி-மின்
அரசுப் பண்ணைகள், பள்ளிக்கூடங்கள், நிர்மாண வேலைகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பிறகு தான் பிறந்த கிம்-லீன் என்னும் கிராமத்துக்கு வந்தார். அவர் வருகை பற்றித் தெரிந்ததும் கிம்-லீன் மற்றும் ஹோவாங்-டுரூ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஹோ-சி-மின் தன்னுடைய பெற்றோர்கள் வசித்த குடிசை வீட்டுக்குள் சென்று பார்த்தார். அவர் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் பள்ளிக் கூட மைதானத்தில் திரண்டிருந்தார்கள். விவசாயக் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்துவதிலும் கூட்டுப் பண்ணைக்கு மாறுவதிலும் அந்த இரண்டு கிராமங்களின் சாதனைகளைப் பாராட்டினார். கிராம மக்கள் தமது கூட்டுறவு சங்கங்களை மேன்மேலும் வளர்க்க வேண்டும் , அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் கூட்டுறவு உணர்ச்சியை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார். பிறகு கிம்-லீன் மற்றும் ஹோவாங்-ட்ரூ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள். ஸ்தல பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் , தீவிரமாக விவசாயம் செய்து உணவு மற்றும் இதர விவசாயப் பொருட்கள் பிரச்சினையைத் தீர்ப்போம், அறுவடை அளவை மேன் மேலும் பெருக்குவோம் , நாட்டின் ஜனாதிபதி பிறந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்ற பெருமையை நிலைநாட்டுவோம் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
வியத்நாம் மக்களின் தேசிய விடுதலைப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதற்கு 1941ஆம் ஆண்டில் ஹோ-சி-மின் வியத்நாமுக்குத் திரும்பியபொழுது காவோ-பாங் மாகாணத்திலுள்ள பாக்-போ என்னும் இடத்தில் தான் தங்கியிருந்தார். அவர் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 19.2.1961இல் அங்கு வந்தார். அவர் பாக்-போவில் தான் வசித்த குகைக்கு முன்பாக நின்று பிரம்மாண்டமான மலைகளையும் காரல் மார்க்ஸ் குன்றையும் லெனின் ஊற்று மற்றும் தனக்கு மேசையாகப் பயன்பட்ட பாறையையும் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கினார். ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு குன்றும் அவருக்கு நன்றாக நினைவிருந்தது.

ஹோ-சி-மின் 165
'இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் ஜப்பானியர்கள் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் போர் செய்ய போராடும் மக்களுக்குத் தலைமையேற்க கட்சி திட்டம் தீட்டியது அழகான மலைகளும் ஆறுகளும் நமக்கு மறுபடியும் கிடைத்தன" என்று அவர் உணர்ச்சியோடு கவிதை இயற்றினார்.
வடக்குப் பகுதியில் 1955இல் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீரமைப்பு 1957இல் வெற்றிகரமாக முடிவுற்றது. ஹோ-சி-மின் அதைப் பின் வருமாறு மதிப்பிட்டார் . 'முன்னர் இயங்கிய பாக்டரிகள் இப்பொழுது சீரமைக்கப்பட்டுள்ளன. பல புதிய பாக்டரிகள் ஏற்பட்டுள்ளன. பல துறைகளில் உற்பத்தி போருக்கு முந்திய அளவை எட்டியிருக்கிறது. உணவு உற்பத்தி போருக்கு முந்திய அளவை விஞ்சிவிட்டது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. கலாசார, நடவடிக்கைகளில் வளர்ச்சி இருக்கிறது. மக்களுடைய வாழ்க்கை
நிலைமை வளர்ச்சி அடைய ஆரம்பித்துவிட்டது."
வடக்குப் பகுதியில் பொருளாதார சீரமைப்பு முடிந்தபிறகு ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் சோஷலிஸ்ட் மாற்றம் மற்றும் கலாசார -பொருளாதார வளர்ச்சிக்கு மூன்று: ஆண்டுத் (1958-60) திட்டத்தை நிறைவேற்றுவதில் மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள்.
புரட்சியின் குறிக்கோள் பழைய சமூகத்தைப் புதிய சமூகமாக மாற்றுவது 'மனிதனை மனிதன் சுரண் டல் இல்லாத சமூகம் , சமத்துவ அடிப்படையில் அமைந்த சமூகம், ஒவ்வொரு நபரும் வேலை செய்கின்ற, வேலைக்கு உரிமையைப் பெற்றுள்ள சமூகத்தை அமைப்பது. அந்த சமூகத்தில் அதிகமாக உழைப்பவர் களுக்கு அதிகமான ஊதியம், குறைவாக உழைப்பவர்களுக்குக் குறைவான ஊதியம் தரப்படும். ஆனால் வேலை செய்யாதவர்கள் எதுவும் பெறமுடியாது.

Page 89
166 ஹோ-சி-மின்
நாட்டில் சோஷலிஸ்ட் மாற்றம் மற்றும் பொருளாதார - கலாசார வளர்ச்சியை ஹோ-சி-மின் அக்கறையுடன் கவனித்தார். சிறப்பாக வழிகாட்டினார்.
ஹோ-சி-மின் 3.8.1959ஆம் நாளன்று விவசாயிகளுக்குக் கடிதம் எழுதினார். அவர்கள் ஒரு பக்கத்தில் உழைப்புப் பரிவர்த்தனைக் குழுக்களையும் கூட்டுறவு ஸ்தாபனங்களையும் வளர்க்க வேண்டும், மறுபக்கத்தில் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் ஒருவரோடு ஒருவர் போட்டியிட வேண்டும் என்றார். இவை விவசாயத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்ற 'இரண்டு
கால்கள்' என்றார்.
விவசாயக் கூட்டுறவு சங்கங்களை அமைக்கின்ற இயக்கத்தை அவர் அக்கறையுடன் கவனித்தார். இயக்கம் வெற்றிஅடைவதற்கு எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்; மாகாணங்கள், மாவட்டங்கள், வட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார். வடக்குப் பகுதியில் நின் ஹ் - பின் ஹ் , ஹா-டோங், பாக்-கியாங், காவோ-பாங், தாய்-ந்குயென், தாய்பின் ஹ் மற்றும் பல இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய உற்பத்தி சங்கங்கள் அமைப்பதையும் அவை செயலாற்றுவதையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஊக்குவித்தார். விவசாயிகளிடம் பேசும்பொழுது கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 'ஒரு மரத்தைக் கொண்டு குன்றை அமைக்கமுடியாது. ஆனால் மூன்று மரங்களைக் கொண்டு குன்றை அமைக்க முடியும்' என்று கூறினார். "கூட்டுறவு இயக்கம் உங்கள் வீடு, நீங்கள் அதன் எசமானர்கள்' என்றார்.
ஹோ - சி-மின் 1959ஆம் ஆண்டின் சந்திர பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டுத் துவக்க நாளன்று மரம் வளர்க்கும் இயக்கத்தை ஆரம்பித்தார். நாடு முழுவதும் பசுமையான மரங்கள் இருக்கவேண்டும். பாக்டரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவநிலையங்கள், வீடுகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அதிகமான மரங்களை வளர்க்கவேண்டும் என்றார். 'இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு நம் நாடு அழகில் சிறந்து விளங்கும் பருவநிலை இன்னும் இதமாக இருக்கும் ,

ஹோ-சி-மின் 167
அதிகமான மரக்கட்டைகள் கட்டட வேலைக்குக் கிடைக்கும்'° என்றார். அந்த இயக்கத்தை ஊக்குவிப்பதற்குப் பின் வரும் கவிதையை எழுதினார்:
புத்தாண்டின் வசந்தகாலத்தில்
மரங்கள் நடுகிறோம்;
நம் நாட்டில் வசந்தத்தின் எழிலை
அது நீடிக்கச் செய்யும்.
அரசுக்குச் சொந்தமான தொழில்களின் வளர்ச்சிக்கு, கைத் தொழில்களின் வளர்ச்சிக்கு, தனியாருக்கு சொந்தமான தொழில்துறை மற்றும் வர்த்தகத்தை மாற்றியமைப்பதற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். வடக்குப் பகுதியிலுள்ள தொழிலாளிவர்க்கத்தை முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுதலை செய்வதற்கும் தொழில்கள் மற்றும் விவசாயம் வளர்ச்சி அடைவதற்கு அது அவசியம் என்று அவர் கருதினார்.
வடக்குப் பகுதியின் முன்னேற்றத்துக்கு கலாசாரமும் கல்வியின் வளர்ச்சி இன்றியமையாதது. வடக்குப் பகுதியிலுள்ள கலாசார மற்றும் கல்வி சக்திகள் அனைத்தையும் திரட்டி சோஷலிஸ்ட் நிர்மாணத்துக்கும் தேசிய ஒன்று சேர்த்தலுக்கும் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
கட்சியின் உறுப்பினர்கள்,ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு புரட்சிகரமான அறவியலில் பயிற்சி தருவதில் அவர் அதிகமான அக்கறை காட்டினார். அவர் 1958இல் டிரான்-லுக் என்ற புனை பெயரில் புரட்சிகர நல்லியல்புகளைப் பற்றி எழுதினார். அந்த சமயத்தில் வடக்குப் பகுதி சோஷலிஸ்ட் மாற்றக் கட்டத்தில் நுழைந்துகொண்டிருந்தது. 'வெற்றி யாருக்கு' என்பதை நிர்ணயிப்பதற்குரிய போட்டி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலாவதாகவும் முதன்மையாகவும் கட்சியின் உறுப்பினர்களும் ஊழியர்களும் தம்மிடம் புரட்சிகரமான பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். தனிநபர் வாதத்தை எதிர்க்கவேண்டும், புரட்சிக்கும் மக்களுக்கும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் புத்தகத்தை எழுதினார். புரட்சிகரமான பண்புகள் தீவிரமான தேசபக்தியாக, உறுதியுள்ள

Page 90
168 ஹோ-சி-மின்
தொழிலாளிவர்க்க நிலையாக, அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு துரோகிகள் மீது ஆழமான வெறுப்பாக உருப்பெற வேண்டும். புரட்சிகரமான குணங்களைப் பெற விரும்புகின்ற கடசியின் உறுப்பினர்களும் ஊழியர்களும் கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகளின்படி உறுதியாக செயலாற்றவேண்டும். அவர்கள் கட்சியின் கொள்கைகளையும் முடிவுகளையும் அமுலாக்கும் பொழுது மக்கள் போற்றத்தக்க முறையில் நடக்கவேண்டும்; அவற்றை சிறப்பான முறையில் அமுலாக்குவதற்குரிய வழியையும் கண்டறிய வேண்டும். புரட்சிகரங் பண்புகளில் பயிற்சி பெறுவதற்கு, சோஷலிஸ்ட் தலைமையுணர்ச்சியைப் பெறுவதற்கு பிற்போக்கான பண்புகளின் எச்சங்களை எதிர்த்து உறுதியாகப் போராட வேண்டும். அவர்கள் முக்கியமாக தனிமனிதவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ஏனென்றால் காலாவதியான எல்லாப் பழக்கங்களின் சாரமாக அது இருக்கிறது.
'சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் நிர்மாணிப்பதற்கு நாம் சோஷலிஸ் ட், கம்யூனிஸ்ட் மனிதர்களை உருவாக்க வேண்டும், சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் நாம் சோஷலிஸ் ட், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைப் பரப்ப வேண்டும் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் நிலவ வேண்டும் என்றால், நாம் தனிமனித, முதலாளிவர்க்க சித்தாந்தங்களை ஒழிக்கவேண்டும். தனிமனித சித்தாந்தங்களை எதிர்த்து சோஷலிஸ்ட் சித்தாந்தத்தின் வெற்றியை உறுதிப் படுத்து வதற்கு நாம் அனைவரும் முனைப் புடன் பாடுபடவேண்டும். 'எல்லாரும் ஒருவருக்காக, ஒவ்வொருவரும் பலருக்காக' என்ற வாசகம் நமக்கு ஊக்கமளிக்கிறது" என்றார் ஹோ-சி-மின். ,
புதிய சோஷலிஸ்ட் மனிதன் சோஷலிஸ்ட் சித்தாந்தங்கள், உணர்ச்சிகளைக் கொண்டவன், சமூகத்துக்கும் இயற்கைக்கும் தனக்கும் தலைவனாக இருப்பதற்குப் பாடுபடுபவன் என்று ஹோ-சி-மின் நமக்குக் கற்பித்தார். புதிய சோஷலிஸ்ட் மனிதன் கட்சியின் புரட்சிகரமான இலட்சியத்துக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிப்பவன். நாட்டின் நிர்மாணத்திலும் பாதுகாப்பிலும் சுயநலம் இல்லாமல் பாடுபடுபவன் அவன் கட்டுப்பாடு,

ஹோ-சி-மின் / 169
தொழில் நுட்பம், படைப்புத்திறமை மற்றும் உற்பத்தித்திறனுடன் பாடுபடுவான்.
புதிய சோஷலிஸ் ட் மனிதனையும் சமூகத்தையும் கட்டமைப் பதில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஹோ - சி-மின் குடும்பங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவேண்டும் என்று மக்களிடம் அடிக்கடி நினைவூட்டினார். நாட்டில் புதுமைப் பெண்களை உருவாக்குவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்: "பெண்களைப் பற்றிப் பேசும்பொழுது சமூகத்தின் செம்பாதியைப் பற்றி நாம் பேசுகிறோம். பெண்கள் அடிமைப்பட்டிருந்தால் மனித குலத்தின் ஒரு பாதி அடிமைப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். நாம் பெண்களை விடுதலை செய்யாவிட்டால் பாதி சோஷ்லிசத்தையே கட்டமுடியும்" என்று அவர் கூறினார்.
நாட்டிலுள்ள இளைஞர்களும் இருபது வயதுக்குக் குறைந்தவர்களும் புதிய சோஷலிஸ்ட் மனிதர்களாக உருவாக வேண்டும் என்பதில் ஹோ - சி-மின் அதிகமான அக்கறை, கொண்டிருந்தார். "ஒரு பத்தாண்டு நன்மைக் கென்று நாம் மரங்களை நடுகிறோம் ; நூறாண்டு நன்மை பெற நாம் மக்களைப் பயிற்றுவிக்கவேண்டும்" என்று அவர் கூறினார்.
வடக்குப் பகுதியில் பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் கலாசார வளர்ச்சிக்கான மூன்றாண்டுத்திட்டம் 1960ஆம் ஆண்டின் முடிவில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் புரட்சிகரமான நிகழ்வுப் போக்கை ஹோ - சி-மின் பின் வருமாறு மதிப்பிட்டார் : விவசாயம் கைத் தொழில் , தனியார் முதலாளித்துவ தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளை சோஷலிஸ்ட் ரீதியில் மாற்றியமைப்பதில் நாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறோம். விவசாயம் மற்றும் தொழில்துறையில் கல்வி மற்றும் கலாசாரத் துறைகளில் மக்களுடைய வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதில் நாம் சிறப்பான சாதனைகளைச் செய்திருக்கிறோம். தேசிய ஒற்றுமைப்படுத்தலுக்கான போராட்டத்திற்கு உறுதியான அடிப்படையாக இருக்கும் அளவுக்கு வடக்குப் பகுதி படிப்படியாக வலுப்படுத்தப்பட்டி ருக்கிறது."

Page 91
170 ஹோ-சி-மின்
நாட்டைப் புனரமைப்பதில் சகோதர நாடுகளின் உதவி நமக்குக் கிடைத்தாலும் நம்முடைய சொந்த முயற்சிகளையே நாம் அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். மக்கள். தேசிய ஜனநாயகப் புரட்சியிலும் சோஷலிஸ்ட் புரட்சியிலும் உண்மையான தேசபக்தியை பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் இணைக்கவேண்டும் என்று அவர் அடிக்கடி நினைவூட்டினார்.
ஹோ-சி-மின் 1955 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனுக்கும் மற்ற சோஷலிஸ்ட் நாடுகளுக்கும் சென்றபொழுது சகோதர நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். வடக்குப் பகுதியில் சோஷலிஸ்ட் நிர்மாணத் துக்கும் சமாதான முறையில் நாட்டை ஒன்று சேர்ப்பதற்கான போராட்டத்திற்கும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்கள்.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள தேசிய நாடுகளுடன் குறிப்பாக, லாவோஸ் மற்றும் கம்பூச்சியாவுடன் நட்புறவுகளை வளர்ப்பதற்கு அவர் அதிகமான கவனம் செலுத்தினார். காலனியாதிக்கத்தை எதிர்த்து தேசிய சுதந்திரத்துக்காகப் போராடுகின்ற மக்களுக்கு வியத்நாம் ஜனநாயக குடியரசு மற்றும் வியத்நாமிய மக்கள் உதவிசெய்ய வேண்டும் என்று அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டினார்.
வியத்நாம் அரசாங்கத்தின் தூதுக் குழு ஹோ - சி-மின் தலைமையில் இந்தியா, பர்மா (1958 பிப்ரவரி) இந்தோனேஷியா (1959 பிப்ரவரி) ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது. ஆசியாவில் சமாதானத்தை நேசிக்கும் நாடுகளுக்கு இடையில் நட்புறவுகளை வளர்ப்பதில் ஆசியாவிலும் உலகத்திலும் சமாதானத்தைப் பாதுகாப்பதில் இந்தப் பயணங்கள் மாபெரும் பங்களிப்புச் செய்தன என்று உலகத்தின் முற்போக்காளர்கள் கருதினார்கள்.
உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாஸ்கோவில் 1957 நவம்பர் மாதத்திலும் 1960 நவம்பர் மாதத்திலும் உலக மாநாடுகளை நடத்தின. ஹோ - சி-மின் தலைமையில் சென்ற வியத்நாம் தூதுக் குழு இம்மாநாடுகளில் ஆக்கபூர்வமான

ஹோ-சி-மின் 171
பங்களிப்புச் செய்தது. உலகப் புரட்சியின் போர்த்திட்டம் மற்றும் செயல்முறை பற்றிய பிரச்சினைகளை விளக்குவதிலும் சோஷலிஸ்ட் புரட்சி மற்றும் சோஷலிஸ்ட் நிர்மாணத்தைப் பற்றிய பொதுவிதிகளை வரையறுப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தது. மார்க்சிய-லெனினியம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் சகோதரக் கட்சிகள் மற்றும் நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு ஹோ-சி-மின் மிகவும் பாடுபட்டார்.
"இன்றைய உலகச் சூழ்நிலையில் ஒவ்வொரு நாட்டினுடைய தேசிய குணாம்சங்களும் பிரத்யேக நிலைமைகளும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சியின் கொள்கையை நிர்ணயம் செய்வதில் படிப்படியாக முக்கியமான கூறுகள் ஆகிவிட்டன. அதே சமயத்தில் எல்லாக் கட்சிகளுடைய பொதுப் போராட்டத்திலும் மார்க்சிய-லெனினியம் மாற்ற முடியாத அடிப்படையாக இருப்பது தொடர்கிறது. அந்தப் போராட்டத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது இன்னும்கூட முக்கியமாக இருக்கிறது. ஒரு கட்சிக்கு ஏற்படுகின்ற பிரச்சினையை அந்தக் கட்சியின் "உள் விவகாரம்' என்று கருதக்கூடாது. அது உலகப் பாட்டாளி வர்க்கத்தினர் எல்லாரும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்' என்று ஹோ-சி-மின் கூறினார்.
வியத்நாமில் கட்சியின் உறுப்பினர்களும் ஊழியர்களும் மக்களும் உண்மையான தேசபக்தியையும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தையும் வளர்க்க வேண்டும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒற்றுமை மற்றும் சோஷலிஸ்ட் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர் அதிகமான அக்கறை ள்டுத்துக் கொண்டார்.
மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்குத் தீவிரமாகப் போராட வேண்டும் என்று ஹோ -சி-மின் கருத்து நிலை சர்வதேசப் பிரச்சினைகளில் நமது கட்சியின் கருத்தையும் அணுகுமுறையையும் வெளியிட்டது.
இன்றைய காலகட்டத்தில் எழுந்துள்ள பெருங் கடமைகளின் பின்னணியில் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை உயர்த்துவது

Page 92
172 ஹோ-சி-மின்
இன்றியமையாதது, கட்சியை சித்தாந்த ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் வலுப்படுத்தவேண்டும் என்று ஹோ-சி-மின் கூறினார். நம் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆகவே பொருளாதாரச் சீரமைப்பு, கலாசார வளர்ச்சி ஆகிய பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய சிறிய பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும். கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடைய அரசியல் மற்றும் சித்தாந்தக் கல்வியில், அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் செயல்முறையை மேம்படுத்தி அவர்களை மக்களுடைய உண்மையான ஊழியர்களாகச் செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.
கட்சியின் உறுப்பினர்களும் ஊழியர்களும் கட்சியைத் தொழிலாளிவர்க்கம் மற்றும் மக்களுடைய முன்னணிப் படையாகக் செய்யவேண்டும். நாட்டில் சோஷலிசத்தை நிர்மாணிப்பதிலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் அந்த முன்னணிப் படை தலைமை தாங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
1960ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்சி நிறுவப்பட்ட 30வது ஆண்டுவிழாவும் வரப்போகின்ற மூன்றாவது கட்சி காங்கிரசும் மக்களிடம் தீவிரமான ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. "கட்சியின் 30 ஆண்டுகால நடவடிக்கைகள்' என்ற கட்டுரையை ஹோ - சி-மின் எழுதினார். முப்பது ஆண்டுகால வரலாற்றில் கட்சியின் வீரமான போராட்டங்களையும் மகத்தான வெற்றிகளையும் அவர் பகுப்பாய்வு செய்து எழுதியிருந்தார். புரட்சியின் வெவ்வேறு கட்டங்களில் கட்சி கடைப் பிடித்த போர்த்திட்டம் மற்றும் செயல்முறையின் அடிப்படைகளை அவர் சுருக்கமாக எழுதியிருந்தார். வியத்நாமில் நிலவிய ஸ்தூலமான நிலைமைகளில் மார்க்சிய லெனினியத்தை படைப்பாற்றலுடன் கையாண்டது கட்டுரையில் எடுத்துக் கூறப்பட்டது. வியத்நாமிய புரட்சி கடந்த காலத்தில் பெற்ற வெற்றிகளின் காரணங்களை அவர் ஆராய்ந்து தேசிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியின் வெற்றியைத் தீர்மானித்த காரணிகளை அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த சில பத்தாண்டுகளில் கட்சியின் மாபெரும் வெற்றிகளைப் பற்றி ஹோ-சி-மின் பின்வரும் கவிதையை எழுதினார்:

ஹோ-சி-மின் 173
"பரந்த கடல், உயர்ந்த மலை போலப் பெரியது நம் கட்சி முப்பது ஆண்டுகள் போராட்டமும் வெற்றிகளும் நாம் இலட்சியத்தில் சிறந்திருப்பதை நிரூபிக்கின்றன நல்லியல்பு, நாகரிகப் பண்பின் சொரூபம் நமது கட்சி ஒற்றுமைக்கும் சுதந்திரத்துக்கும் சமாதானத்துக்கும் மக்கள் நலத்துக்கும் குறியீடு நமது கட்சி கட்சியின் சேவைகள் ஏராளம் முப்பதாண்டுப் போராட்டம் நம் வரலாற்றில் பொன்னான அத்தியாயம்'
கட்சியின் மூன்றாவது தேசிய காங்கிரஸ் 1960 செபடம்பரில் ஹனோயில் நடைபெற்றது. ‘வடக்குப் பகுதியில் சோஷலிஸ்ட் நிர்மாணத்துக்கும் நாட்டில் சமாதான முறையில் ஒன்று சேர்த்தலுக்கும் நடைபெறும் காங்கிரஸ் இது' என்று ஹோ-சி-மின் துவக்க உரையில் கூறினார்.
அவர் கட்சியின் வெற்றிகளையும் அதன் காரணங்களையும், குறிப்பாக கட்சியின் 2வது காங்கிரசுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களையும் மதிப்பிட்டுப் பேசினார். கட்சி கடைப்பிடித்த கொள்கை சரியானது, வடக்கிலிருந்து தெற்கு வரை நாட்டு மக்கள் அனைவரது நம்பிக்கைக்கும் கட்சி தகுதியுள்ளது என்று அவர் கூறினார். இன்றைய கால கட்டத்தில் வியத்நாமியப் புரட்சிக்கு வடக்கிலிருந்து தெற்குவரை- இரண்டு போர்த்திட்டக் கடமைகள் உள்ளன என்று அவர் வரையறுத்தார். இரண்டு கடமைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒன்றின் மீது ஒன்று தாக்கம் செலுத்துகின்றன. ஒன்றையொன்று ஊக்குவிக்கின்றன. எந்தத் தடையையும் அகற்றக்கூடிய பலத்தை இரண்டும் சேர்ந்து தயாரிக்கின்றன.
வியத்நாம் புரட்சியையும் உலகப்புரட்சியையும் இணைக்கின்ற உறவுகளை அவர் ஆழமாகப் பகுப்பாய்வு செய்தார். ஓர்

Page 93
174 ஹோ-சி-மின்
இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேருவதற்கு நடத்துகின்ற போராட்டத்தை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உலக மக்கள் நடத்துகின்ற போராட்டத்திலிருந்து பிரிக்கமுடியாது. சமாதானத்தையும் தேசிய சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு நடைபெறுகின்ற பொதுவான போராட்டத்தில் ஏகாதிபத்தியத் தையும் உலகப் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து சகோதர லாவோ மற்றும் கம்பூச்சிய மக்கள் நடத்திய வீரமிக்க போராட்டத்தை வியத்நாமிய மக்கள் உறுதியாக ஆதரித்தார்கள். சோஷலிஸ்ட் நாடுகளும் உலகத்திலுள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளும் எல்லா மக்களுக்கும் சமாதானத்துக்கும் சோஷலிசத்துக்கு நடத்துகின்ற போராட்டத்தை அவர் பாராட்டினார். ஏனென்றால் பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்ச்சியே அந்தப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
புரட்சிகர இலட்சியம் வெற்றி அடைய வேண்டுமென்றால் கட்சியின் தொழிலாளி வர்க்கத் தன்மை மேலும் அதிகரிக்க வேண்டும் , கட்சியில் சித்தாந்தக் கல்வி தீவிரப்படுத்தப் பட வேண்டும் ,சகோதரக் கட்சிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்பதற்கும் அந்தப் படிப்பினைகளை படைப்பாற்றலுடன் உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும். கட்சி பூராவும் மிகவும் நெருக்கமாக ஒன்றுசேரவேண்டும். தம்மை எதிர்நோக்கியுள்ள கடமைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற உறுதி கொண்டிருப்பதன் மூலம் மக்கள் எல்லாரையும் உத்வேகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
கட்சியின் காங்கிரசில் தோழர் லெதுவான் மத்திய கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தைப்போல அறிக்கையும் சோஷலிசத்துக்கும் நாட்டை ஒன்று சேர்ப்பதற்கும் சிறப்பான முறையில் வழிகாட்டியது.
வடக்குப் பகுதியில் சோஷலிஸ்ட் புரட்சியின் பொதுவான திசைவழி மற்றும் தெற்குப்பகுதியில் தேசிய ஜனநாயகப் புரட்சியின் திசைவழி, ஆகியவற்றைக் கட்சிக் காங்கிரஸ் வகுத்தளித்து சோஷலிஸ்ட் திசையில் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் வளர்ச்சி அடைவதற்கு முதல் ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள்

ஹோ- சி-மின் 175
மற்றும் கடமைகளை அங்கீகரித்தது. கட்சியை வலுப்படுத்துவதற்கு அவசியமான முடிவுகளைச் செய்தது. கட்சிக்குப் புதிய விதிகளை நிறைவேற்றியது. புதிய மத்திய கமிட்டியைத் தேர்ந்தெடுத்தது. கட்சியின் மத்திய கமிட்டியின் தலைவராக ஹோ-சி-மின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் லெ-துவான் மத்திய கமிட்டியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியின் 3வது காங்கிரசின் முடிவுபடி வடக்குப்பகுதியில் வசித்த மக்கள் அதிகமான உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் சோஷலிஸ்ட் நிர்மாணத்தில் முன்னே சென்றார்கள். அவர்கள் உற்பத்தி உறவுகளில் புரட்சி, தொழில் நுட்பப் புரட்சி, சித்தாந்த மற்றும் கலாசாரப் புரட்சி ஆகிய மூன்று புரட்சிகளிலும் முன்னேறினார்கள். இம்மூன்று புரட்சிகளின் நிலைகள், இடையுறவுகள், விளைவுகள் ஆகியவற்றை ஹோ-சி-மின்னும் மத்திய கமிட்டியும் விளக்கிக் கூறியதுடன் தொழில்நுட்பப் புரட்சி கேந்திரமானது என்று சுட்டிக் காட்டினார்கள்.
கட்சியின் மத்திய கமிட்டியின் 6வது விரிவடைந்த கூட்டம் 15.9.1954 இல் நடைபெற்றபொழுது பிரெஞ்சுக் காலனியவாதி களுடைய இடத்தைப் பிடிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் தெற்குப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் புதிய போரை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று ஹோ-சி-மின் கூறினார். வியத்நாம் , லாவோஸ் மற்றும் கம்பூச்சியாவில் வசிக்கும் மக்களின் பிரதான மற்றும் நேரடியான எதிரி அவர்கள். ஆக்வே நம் மக்கள் அவர்களுடைய ஆக்கிரமிப் புத் திட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் . இந்தப் போராட்டத்தை நெடுங்காலம் நடத்த வேண்டியிருக்கும்; அது கடினமானதாக இருக்கும்; ஆனால் உறுதியாக வெற்றி அடையும்.
தெற்குப் பகுதியிலுள்ள புரட்சியைப் பற்றி ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் சரியான கொள்கையைக் கடைப் பிடித்தபடியால் தெற்குப் பகுதி மக்களும் ஆயுதப் படைகளும் எல்லாவிதமான கஷ்டங்களையும் சமாளித்து நம் பலத்தைப் பெருக்கி தெற்கில் புரட்சி முன்னேறுவதற்கு நமது இயக்கத்தை வலுப்படுத்தினார்கள்.

Page 94
176 ஹோ-சி-மின்
1956ஆம் ஆண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்கள் கைக்கூலியான நீகோ-டின் ஹ்-டயெமும் தெற்கிலுள்ள புரட்சிக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவினார்கள். தேர்தல்கள் நடத்தமாட்டோம் ஜெனிவா உடன்பாடுகளை ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து சமாதானத்துக்கு உலை வைத்தார்கள். அவர்கள், இராணுவப் பிரிவுகளின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்த துடன் போருக்கு ஆயத்தம் செய்தார்கள். அவர்கள் மனித விரோத அடக்குமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார்கள்; ஏராளமான தேசபக்தர்களை கைது செய்தார்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகளை ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்கள். தூக்குப் போடுகின்ற கருவியை தெற்குப் பகுதி முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களை பயமுறுத்தினார்கள் : அமெரிக்கர்கள் - டயெம் ஆட்சியில் துப்பாக்கி வேட்டைகளும் தேசபக்தர்கள் படுகொலை செய்யப்படுவதும் நாள் தோறும் நடைபெற்றது.
ஹோ-சி-மின் 1956 ஜூலை 6ஆம்நாளன்று தேசிய ஒற்றுமைக்கு மக்கள் உறுதியாகப் போராட வேண்டும் என்ற வேண்டுகோளைக் கடிதமாக வெளியிட்டார். அந்தக் கடிதத்தின் உணர்ச்சிகரமான பகுதிகள் மக்களின் இதயங்களைத் தொட்டன.
'என் திருநாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற அன்பான சகோதரர்களே.'
'நமது வியத்நாமை ஒன்றுபடுத்துவோம். வடக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் உள்ள நம் சகோதரர்கள் ஒரே கூரையின் கீழ் வசிப்பார்கள். வியத்நாம் தந்தையர் நாட்டு முன்னணியின் செயல் திட்டத்தின் அடிப்படையில் நமது சகோதரர்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுசேரவேண்டும். வடக்குப் பகுதியை வலுப்படுத்தி சுதந்திரமான, ஜனநாயக, வலிமையுள்ள, வளம் மிகுந்த வியத்நாமை அமைக்கின்ற போராட்டத்தை தீவிரமாக, உறுதியாகத் தொடரவேண்டும்.
'நம் மக்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் நாட்டின் இரண்டு பகுதிகளும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும். ஒற்றுமை

ஹோ-சி-மின் 177
நமக்கு வலிமையைத் தரும் . நமது சிறப்பான ஒற்றுமையின் விளைவாக நமது தேசிய எதிர்ப்பு இயக்கம் வெற்றியை நெருங்கிவிட்டது. இப்பொழுது நம்முடைய ஒற்றுமையின் விளைவாக நம் அரசியல் போராட்டம் வெற்றி பெறும் நம்நாடு மறுபடியும் ஒன்றுபடுவது உறுதி."
நம் நாட்டைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதி களுடைய சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. பொதுத் தேர்தல் மூலம், ஒற்றுமைப்படுத்தும் வாய்ப்பு நிறைவேறவில்லை. ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் புதிய கட்டத்தில் தெற்குப் பகுதியில் புரட்சியின் திசைவழி பற்றி முக்கியமான தீர்மானத்தை வெளியிட்டார்கள்; அனைத்து மக்களுடைய ஒற்றுமையை வளர்ப்போம் , சமாதானத்துக்கும் தேசிய ஒற்றுமைக்கும் உறுதியாகப் போராடுவோம்."
ஏகாதிபத்திய மற்றும் நிலப் பிரபுத்துவ நுகத்தடியிலிருந்து தெற்குப் பகுதியை விடுதலை செய்வது, தேசிய சுதந்திரம் அடைதல், உழுபவனுக்கு நிலத்தைக் கொடுத்தல், ஒற்றுமையான, சுதந்திரமான, ஜனநாயக ரீதியான வலிமையான, வளமான வியத்நாமை நிர்மாணிப்பதற்குப் பங்களிப்பு என்ற முறையில் தெற்கில் தேசிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுதல் புரட்சியின் அடிப்படையான கடமை என்று ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் சுட்டிக் காட்டினார்கள்.
மக்களை ஒற்றுமைப் படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியப் போர் வெறியர்களின் ஆக்கிரமிப்பை உறுதியாக எதிர்த்து, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான ந் கோடின் ஹ் - டயெம் மின் சர்வாதிகாரத்தை ஒழித்து தெற்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகத்தை அமைத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் கொடுத்து மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்ற அடிப்படையில் தேசிய ஒற்றுமையை சாதித்து, தென்கிழக்கு ஆசியாவிலும் உலகத்திலும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்பு செய்வது தெற்கில் புரட்சியின் உடனடிக் கடமை.

Page 95
1.78 ஹோ-சி-மின்
1959ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிய கட்டத்தில் தெற்குப் பகுதியில் புரட்சிக்குரிய திசைவழி என்னும் தீர்மானத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்குத் தெற்கிலிருந்து அரசியல், ஊழியர்கள் சிலர் வந்தார்கள். ஹோ-சி-மின் அவர்களுக்கு ஜனாதிபதியின் மாளிகையில் வரவேற்பளித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களுடைய கைக் கூலிகளை எதிர்த்து, தெற்குப் பகுதியை விடுதலை செய்வதற்கும் நாட்டை ஒற்றுமைப்படுத்து வதற்கும் போராடிக்கொண்டிருக்கின்ற தெற்குப் பகுதியின் சகோதரர்களின் போராட்ட உணர்ச்சியை அவர் பாராட்டினார். கட்சியின் தீர்மானத்தைத் தெற்குப் பகுதியிலுள்ள பிரத்யேக நிலைமைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு அமுலாக்க வேண்டும் என்று அவர் ஊழியர்களிடம் வற்புறுத்தினார். புரட்சி பெருந்திரளான மக்களுடைய இலட்சியம்; அதை அவர்கள் சார்பில் செய்வதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை. பெருந்திரளான மக்களிடம் புரட்சி செய்வதற்குரிய தகுதியும் படைப் பாற்றலும் போதிய அளவுக்கு இருக்கிறது. பெருந்திரளான மக்களுடைய பலத்தை மற்றவர்கள் வெல்ல முடியாது. கட்சி அவர்களைத் திரட்டி அமைப்பு ரீதியாக்கி, கற்பித்து, நடவடிக்கைக்குத் தலைமை தாங்கவேண்டும்.
தெற்கில் வசித்தவர்கள் ஹோ - சி-மின் மற்றும் கட்சியின் தலைமையில் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் பல வடிவங்களைக் கடைப் பிடித்தபிறகு புரட்சி செய்வதற்கு முன்னேறினார்கள்.
தெற்குப் பகுதியில் மக்கள் ஒரே சமயத்தில் பல இடங்களில் எழுச்சியில் ஈடுபட்டார்கள். எதிரி அடிப்படையான அரசியல் தோல்வியை சந்தித்த நேரம் அது. ஆகவே அது சரியான தருணம். மக்களுடைய புரட்சி அலை உச்சத்திலிருந்த சமயத்தில், ஹோ - சி-மின் மற்றும் கட்சியின் மத்திய கமிட்டியின் முடிவுப் பிரகாரம், 20.12.1960ஆம் நாளன்று விடுதலையடைந்த கிழக்கு நாம்-போ பிரதேசத்தில் தெற்கைச் சேர்ந்த பல்வேறு வர்க்கங்கள், கட்சிகள், மதங்கள் மற்றும் இனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட காங்கிரஸ் நடைபெற்றது. அவர்கள் தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியை அமைத்தார்கள். பத்து

ஹோ-சி-மின் 179
அம்சங்களைக் கொண்ட செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் காலனியாட்சி மற்றும் டயெமின் சர்வாதிகார ஆட்சியை ஒழிப்பது, தெற்குப் பகுதியை விடுதலை செய்து நாட்டை ஒற்றுமைப் படுத்துவது அந்த செயல் திட்டத்தின் முக்கியமான அம்சங்களாக இருந்தன.
1961ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தெற்குப் பகுதி மக்கள் மற்றும் இராணுவம் வன்மையாகவும் திரும் பத்திரும்பவும் தாக்கியபொழுது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மிகவும் குழப்பமடைந்தார்கள். ‘வியத்நாமியர்களை எதிர்த்து வியத்நாமியர்களே போர் செய்யட்டும்' என்னும் போர்த் தந்திரத்தை அமுலாக்கினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தெற்கு வியத்நாமை முழுமையாகக் கைப்பற்ற விரும்பியதுடன் அதை ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்த விரும்பினார்கள். புதிய ஆயுதங்களையும் புதியரக வெடிகுண்டுகளையும் அங்கே உபயோகித்து அதனால் ஏற்படுகின்ற நாசத்தைப் பரிசோதிப்பதும் அந்த அனுபவத்தைக் கொண்டு புதிதாக விடுதலையடைந்த நாடுகளையும் தேசிய விடுதலை முன்னணியையும் பயமுறுத்தி அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கக் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடைய நோக்கமாக இருந்தது.
ஹோ - சி-மின் மற்றும் கட்சியின் மத்திய கமிட்டியின் தலைமையில் தெற்குப்பகுதி மக்கள் வீரத்தோடு போர் செய்து "போர்த்திட்ட கிராமங்கள்' மற்றும் ஸ்டாலி-டேய்லர் திட்டத்தை யும் முறியடித்தார்கள் 2.1.1963 இல் அப் -பாக் (காய் - வே மாவட்டம்) என்ற இடத்தில் முதல் வெற்றி கிட்டியது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் 'விசேஷப் போரை முறியடித்த தெற்குப் பகுதி மக்களும் இராணுவப் படையினரும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களைப் போதிய அளவில் திரட்டிக்கொண்டு பிற்காலத்தில் அமெரிக்கா நடத்திய ‘ஸ்தலப் போர்களையும் முறியடித்தார்கள்.
'இந்த 'விசேஷப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தோல்வி அடைவது உறுதி என்பதை தெற்கு வியத்நாமில் இன்றுள்ள நிலைமை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் தெற்கு வியத்நாமில் நடத்திய விசேஷப் போர் தோல்வி

Page 96
180 ஹோ-சி-மின்
அடைந்ததால், அவர்கள் எல்லா இடங்களிலும் முறியடிக்கப் படுவார்கள். உலக முழுவதிலும் நடைபெறுகின்ற தேசிய விடுதலை இயக்கத்தின் பின்னணியில் தெற்குப் பகுதியில் நம் சகோதரர்கள் நடத்திய தேசபக்தப் போராட்டத்தின் சர்வதேச முக்கியத்துவம் இதுவே" என்று ஹோ-சி-மின் கூறினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இராணுவரீதியிலும் அரசியல் ரீதியிலும் பன்முறை தோற்றபோதிலும் அவர்கள் பிடிவாதமாக தெற்கு வியத்நாமில் இருந்தார்கள். எப்பாடுபட்டாகிலும் அங்கே புரட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தெற்கு வியத்நாமின் போர்க் களங்களில் அமெரிக்க இராணுவம் தோற்றது. பொம்மை அரசாங்கத்தின் இராணுவமும் பலவீனமாக இருந்தது. அமெரிக்க இராணுவத்தை நேரடியாக தெற்கு வியத்நாமுக்கு அனுப்புவதற்குத் திட்டம் தீட்டப் பட்டது. அமெரிக்கா நேரடியான ஆக்கிரமிப்பில் இறங்கியது.
ஹோ-சி-மின் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய திட்டத்தை முன்னரே அறிந்திருந்தார். மக்களுடைய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களை இன்னும் தீவிரமாகத் திரட்டுவதற்கும் விசேஷ அரசியல் மாநாட்டை ஹோ-சி-மின் கூட்டினார். வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநாடு கூட்டப்பட்டது." மாநாடு பா-டின் ஹ் அரங்கத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் 325 பிரதிநிதிகளும் 500 வாக்குரிமையற்ற பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். அவர்கள் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். புதிய நிலைமைக்கும் புதிய கடமைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள் என்பதை மாநாடு எடுத்துக்காட்டியது. "இந்த மாநாட்டில் பிரதிநிதிகளாக நீங்கள் பங்கேற்பது மொத்த வியத்நாமிய மக்களின் ஒற்றுமையின் மகத்தான சின்னமாகும். உங்களுடைய வீரமிக்க போராட்டங்கள் மூலம் நீங்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்றீர்கள் இன்னும் சிறப்பான வெற்றிகளைப் பெறுவதற்கு எல்லா இடர்களையும்

பேசினார்கள்"
ஹோ-சி-மின் m 181
, T7
ஒழித்து நீங்கள் உறுதியோடு முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள்' என்று ஹோ-சி-மின் அவர்களைப் பாராட்டினார்.
மாநாட்டில் ஹோ-சி-மின் முக்கியமான அறிக்கை அளித்தார். அவர் வடக்குப் பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்: 'தெற்குப் பகுதியிலுள்ள சகோதர - சகோதரிகளுக்கு உதவி செய்வதற்கு நாம் இரண்டு மடங்கு உழைக்கவேண்டும்.'
அவர் வடக்குப் பகுதி மக்களை சோஷலிஸ்ட் நிர்மாணத்தில் ஈடுபடுத்தித் தலைமை தாங்கும்பொழுது, தெற்குப் பகுதியிலுள்ள மக்களை ஒருபோதும் மறக்கவில்லை.
தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியின் நியாயமான கோரிக்கைகளுக்கு அவர் முழுமையான ஆதரவு தெரிவித்தார். தெற்குப் பகுதியில் அமெரிக்கத் தலையீடு நிற்கவேண்டும் , எல்லா அமெரிக்கத் துருப்புகளும் ஆயுத தளவாடங்களுடன் தெற்கிலிருந்து வெளியேறவேண்டும். அந்நியர் தலையீடு இல்லாமல் தெற்கு வியத்நாம் மக்கள் தமது உள்விவகாரங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மாநாட்டில் அவரளித்த அறிக்கை நம் மக்களுக்கு புதிய ஒளியாக இருந்தது. வடக்கில் சோஷலிஸ்ட் நிர்மாணத்துக்கும் தெற்கின் விடுதலைக்கும் இரண்டு பகுதிகளும் இணைவதற்கும் மக்கள் தீவிரமாக உழைப்பதற்கு ஊக்கமூட்டியது.
மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் அறிக்கையை ஆர்வத்தோடு விவாதித்தார்கள்.
"ஹோ-சி-மின்னுடைய அறிக்கையை விவாதிக்கும்பொழுது, மூத்த உறுப்பினர்களும் மற்ற தோழர்களும் வடக்கிலும் தெற்கிலும் நமக்குக் கிடைத்துள்ள வெற்றிகளையும் எதிர்காலத்தில் கிடைக்கப் போகின்ற முக்கியமான வெற்றிகளைப் பற்றியும் தங்களுடைய எல்லையற்ற நம்பிக்கையை ஒருமனதாக வெளிப்படுத்திப்
*என்று பிரதமர் பாம்-வான் -டோங் கூறினார்.
விசேஷ அரசியல் மாநாட்டில் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டை ஹோ-சி-

Page 97
182 ஹோ-சி-மின்
மின் கூட்டினார். அவரே தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது. நாட்டு மக்களுடைய கேள்விகளுக்கு பிரதிநிதிகள் ஒருமனதாக பதிலளித்தார்கள். வடக்கில் சோஷலிசத்தை நிர்மாணிப்பது தெற்குப் பகுதியை விடுதலை செய்வது, இரண்டு பகுதிகளையும் ஒற்றுமைப்படுத்துவது என்ற திடமான முடிவுடன் பிரதிநிதிகள் தமது ஊர்களுக்குத் திரும்பினார்கள்.
டயென்-ஹோங் மாநாட்டை நடத்திய முக்கியத்துவம் நவீன காலத்தில் விசேஷ மாநாட்டுக்கு இருந்தது.'
விசேஷ அரசியல் மாநாடு முடிவடைந்தபிறகு தேசிய மீட்சிக்கு அமெரிக்காவை எதிர்த்துப் போராடுங்கள் என்ற ஹோ-சி-மின் ஆணையின் படி தெற்குப் பகுதியிலுள்ள நமது மக்களும் இராணுவமும் மூன்று பிரதேசங்களிலும் தமது அரசியல் மற்றும் இராணுவ முயற்சிகளை முடுக்கிவிட்டன. 1964 டிசம்பரில் பின்ஹ்-கியாவில் (ப்ா-ரியா மாகாணம்) வெற்றியடைந்த பிறகு தெற்குப் பகுதியில் நமது வலிமை எல்லா அம்சங்களிலும் மாபெரும் பாய்ச்சலில் வளர்ச்சியடைந்தது. விடுதலைப் பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டது. மக்களுடைய புரட்சிகர அதிகாரம் நிறுவப்பட்டது. ஒரு வெற்றிதான் என்றாலும் எதிரியின் தோல் விகளின் விளைவாக சூழ்நிலை நமக்கு சாதகமாகத் திரும்பியது.
தெற்கில் படுதோல்வியடைந்த அமெரிக்கத் துருப்புகள் வடக்குப் பகுதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தன. 5.8.1964ஆம் நாளன்று அமெரிக்கர்கள் தமது விமானங்களையும் கப்பல்களையும் வடக்கு வியத்நாமின் எல்லைக்குள் அனுப்பி பென் - துய், ஸோங்-கியான்ஹ், லாச்-டுருவோங் மற்றும் பாய்-சாய் ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசினார்கள். 1965 பிப்ரவரி மாதத்திலிருந்து அமெரிக்கர்கள் தமது கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றைக் கொண்டு வடக்குப் பிரதேசத்தின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். தெற்குப் பகுதி மக்கள் அமெரிக்காவை எதிர்த்து நடத்துகின்ற தேசிய மீட்புப் போருக்கு நாம் உதவி அளிப்பதைத் தடுப்பதும் வடக்கில் சோஷலிஸ்ட் நிர்மாணத்தை சீர்குலைப்பதும் வடக்குப் பகுதியில் மக்களுடைய மனவுறுதியை சீர்குலைப்பதும் அவர்களுடைய நோக்கம். "இவை வெறித்தனமான

ஹோ-சி-மின் 183
நடவடிக்கைகள், மோசமாகக் காயமடைந்த மிருகம் மரணப்பிடியில் போடுகின்ற ஆட்டம்' என்று ஹோ-சி-மின் கூறினார்.
1965ஆம் ஆண்டின் நடுப் பகுதியில், தாங்கள் நடத்திய 'விசேஷப் போர் தோல்வியுற்றபடியால் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் முழுத் தோல்வி அடையாமலிருக்க ஸ்தலப் போரை ஆரம்பித்தார்கள். مسدس
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹோ-சி-மின்னும் கட்சியின் மத்திய கமிட்டியும் சக்திகளின் சமநிலையை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தோல்வி அடைவது நிச்சயம் என்று முடிவு செய்தார்கள். நாட்டு மக்கள் முன்னேறித் தாக்குவதைத் தொடரவேண்டும், சுய-சார்பை வலியுறுத்த வேண்டும் , நாட்டின் பலத்தையும் , சகோதர நாடுகளின் உதவியையும் பயன்படுத்தி அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும், தெற்கை விடுதலை செய்ய வேண்டும், வடக்கைத் தற்காத்துக் கொள்ளவேண்டும், நாட்டை ஒற்றுமைப்படுத்தலை நோக்கி முன்னேற வேண்டும் என்று ஹோ-சி-மின் வற்புறுத்தினார்.
கட்சியின் மத்தியக்கமிட்டியின் 12வது விரிவடைந்த கூட்டத்தின் தீர்மானங்களை ஆராய்வதற்கு 16.1.1966ஆம் நாளன்று நடைபெற்ற உயர்மட்ட ஊழியர்கள் மாநாட்டில் ஹோ-சி-மின் பேசினார். வியத்நாமை எதிர்த்து அமெரிக்கர்கள் நடத்துகின்ற போரில் அவர்களுடைய அடிப்படையான தவறுகளையும் பலவீனங்களையும் அவர் ஆழமாகப் பகுப்பாய்வு செய்தார். வியத்நாம் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் படி அமெரிக்க அரசாங்கம் உத்தர விட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலுள்ள முற்போக்காளர்களும் உலகத்தில் சமாதானத்தையும் நீதியையும் நேசிக்கின்ற மக்களும் அதைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
'இந்த சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உலகமே எதிர்க்கிறது. அமெரிக்காவின் இளைஞர்களும் அறிவுஜீவிகளும், மக்களும் போரை மிகவும் வன்மையாக எதிர்க்கிறார்கள். அமெரிக்காவின் கொள்கையை எதிர்த்து தமக்குத் தீ வைத்துக்

Page 98
184 ஹோ-சி-மின்
கொண்டு செத்துப் போகின்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். இதுவரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால் அவை இப்பொழுது நடைபெறுகின்றன" என்று ஹோ-சி-மின் கூறினார்.
நமது மக்களுடைய அடிப்படையான பலத்தைப் பற்றிப் பேசிய பொழுது அவர் பின் வருமாறு கூறினார். இலட்சக்கணக்கான வர்கள் ஒரு நபரைப் போல ஒன்று சேர்ந்து தாம் நாட்டின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு உலகத்திலுள்ள சமாதான சக்திகளின் உதவியுடன் போராடக் கூடியவர்கள். கடந்த பத்தாண்டுக் காலத்தில் தெற்குப் பகுதியி லுள்ள நமது சகோதரர்கள் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், வீரத்துடன் போராடியிருக்கிறார்கள். அவர்கள் வெறும் கைகளுடன் போருக்குச் சென்று அமெரிக்க வீரர்களிடமிருந்து ஆயுதங்களைப் பிடுங்கி அவற்றைப் பயன்படுத்தி பல வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களையும் அவர்களுடைய ஏசன்டுகளையும் படு தோல்வி அடையச் செய்தார்கள். அவர்கள் இப்பொழுது புதை மணலில் சிக்கியிருக்கிறார்கள். தெற்குப் பகுதி சகோதரர்களுக்கு வடக்குப் பகுதியை சேர்ந்த நாம் முழு ஆதரவளித்தோம் . நம்முடைய சுதந்திரத்துக்காக மட்டும் நாம் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளை எதிர்க்கவில்லை. மற்ற மக்களினங்களின் விடுதலைக்கும் உலக சமாதானத்துக்கும் அமெரிக்கர்களை நாம் எதிர்த்தோம். அதனால்தான் இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி நமதே என்று உறுதியுடன் சொல்கிறோம்.
ஹோ - சி-மின் மேற்கூறிய ஆய்வு மற்றும் உறுதியிலிருந்து எப்பாடுபட்டாகிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுங்கள் என்று வியத்நாம் மக்களை அறைகூவினார். வடக்கைப் பாதுகாப்பதற்கு தெற்கில் விடுதலைப் போர் வெற்றி பெறவேண்டும், நாடு முழுவதிலும் மக்களின் தேசிய ஜனநாயகப் புரட்சி வெற்றியடைந்து சமாதான முறையில் நாட்டை ஒற்றுமைப்

ஹோ-சி-மின் 185
படுத்தலை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்றார். அவருடைய அறைகூவலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
‘தேசிய மீட்சிக்காக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பது தேசபக்தியுள்ள ஒவ்வொருவியத்நாமியருக்கும் மிகவும்
புனிதமான கடமையாகும்.'
"அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடிப்போம் என்ற உறுதியுடன் நாம் எல்லாரும் -இலட்சக்கணக்கானவர்கள் ஒரே
நபராக- ஒன்று சேரவேண்டும்.”*
புரட்சியின் புதிய கட்டத்தில் சோஷலிஸ்ட் வடக்குப் பகுதியின் கடமையைப் பற்றி அவர் பின்வருமாறு கூறினார்:
"வடக்குப் பகுதியிலுள்ள நமது சகோதரர்களும் போராளிகளும்
எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும், வீரத்தோடு போர்
செய்யவேண்டும், உற்பத்தியை அதிகப்படுத்துவதற்குப்
போட்டியில் ஈடுபடவேண்டும், எதிரியின் நாசகர யுத்தத்தின்
இடுப்பை முறிக்கவேண்டும், போரைத் தீவிரப்படுத்துகின்ற எதிரியின் புதிய திட்டங்களை முறியடிப்பதற்கு எப்பொழுதும்
தயாராக இருக்கவேண்டும். மாபெரும் முன்னரங்கத்துக்கு மாபெரும் பின்தளத்தின் கடமைகளை நிறைவேற்றுகின்ற முறையில்
தெற்கிலுள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உச்ச அளவில் உதவியளிக்க வேண்டும்'* என்றார்.
வடக்கில் பொருளாதாரம் மற்றும் தற்காப்புப் பற்றிய சிந்தனையிலும் ஸ்தாபனரீதியிலும் மாற்றம் செய்வது புரட்சியின் அவசரக் கடமை என்று ஹோ-சி-மின்னும் மத்திய கமிட்டியும் சுட்டிக் காட்டினார்கள். அப்பொழுதுதான் வடபகுதி தெற்கில் புரட்சிக்கு உதவி செய்துகொண்டு தன்னுடைய தற்காப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய அளவுக்குப் போதிய வலிமையைப் பெறும் ,சோஷலிசத்தின் பொருளாதாய மற்றும் தொழில்நுட்ப அடிப்படையை நிர்மாணிக்கின்ற பணியைத் தொடர (Մ)tգեւյւb.
29.6.1966ஆம் நாளன்று அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் விமானப்படையை அனுப்பி ஹனோய் மற்றும் ஹாய்போங் மீது

Page 99
186 ஹோ-சி-மின்
சரமாரியாக குண்டுவீசித் தாக்கினார்கள். போரைத் தீவிரப்படுத்து கின்ற முக்கியமான நடவடிக்கையில் ஆரம்பமாக அது இருந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்பதில் இன்னும் அதிகமான தீவிரத்தைக் காட்டுங்கள் என்று 17.7.1966ஆம் நாளன்று ஹோ-சி-மின் மக்களையும் நாடு முழுவதிலும் உள்ள போராளிகளையும் கேட்டுக்கொண்டார்.
"போர் ஐந்து, பத்து, இருபது ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கு நீடிக்கலாம். ஹனோய், ஹைபோங் மற்றும் பல நகரங்களும் தொழிற்சாலைகளும் அழிக்கப்படலாம்; ஆனால் வியத்நாம் மக்கள் பயப்பட மாட்டார்கள் மக்கள் அஞ்சப் போவதில்லை விடுதலை மற்றும் சுதந்திரத்தை விட உயர்ந்தது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. எதிரிகளை முறியடித்தபிறகு நம் மக்கள் நாட்டை மறுபடியும் நிர்மாணிப் பார்கள். இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் இன்னும் வளம் நிறைந்ததாக அழகானதாக இந்த நாட்டை நிர்மாணிப்பார்கள்.”*
ஹோ - சி-மின் போர்முனையில் போர் வீரர்கள் மற்றும் மக்களுடைய முன்னேற்றத்தை அக்கறையுடன் கவனிக்கின்ற அதே சமயத்தில் பின்தளப் பகுதியில் ஆயிரக்கணக்கான அன்றாடக் கடமைகளையும் கவனித்து முடிவு செய்வார். விமானத் தாக்குதல் நடைபெறும்பொழுது மக்கள் தங்குவதற்குரிய பாதுகாப்பிடங்களை கட்டவேண்டும் , முதியவர்களையும் குழந்தைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். விமானத் தாக்குதலில் நாசமடைந்த இடங்களைப் பார்வையிட்டார், மக்களுடைய வாழ்க்கை இயல்புநிலைமைக்குத் திரும்ப ஆவண செய்தார். அவர் கப்பற்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகளுக்குச் சென்று வீரர்களுடன் பேசினார். போர்முனையில் உள்ள வீரர்களுக்கு மலர்ச் செண்டுகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்துக் கூறினார். நமது இராணுவம் மற்றும் மக்களுடைய இரும்பு மனத்துக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமைக்கும் அவர் சின்னமாக இருந்தார்.
வியத்நாம் மக்கள் இராணுவத்தை நிறுவிய ஹோ - சி-மின் இராணுவப் பிரிவுகளின் வளர்ச்சியில் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார். நாட்டில் சமாதானம் மறுபடியும் ஏற்பட்ட ஆரம்ப

ஹோ-சி-மின் 187
நாட்களிலேகூட, நாட்டையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்கு இராணுவத்தை வலுப்படுத்துவது, இராணுவத்தினர் மற்றும் மக்களுடைய பொதுவான கடமை என்று அவர் வலியுறுத்தினார். போர் வீரர்கள் அரசியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஒருவருக்கொருவர் போட்டி போட வேண்டும், கட்டுப்பாட்டையும் சிக்கனத்தையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். அதே சமயத்தில் போர் வீரர்கள் உற்பத்தி வேலையில் பங்கெடுக்க வேண்டும். பொருளாதார அமைப்பை நிர்மாணிப்பதற்கும் பின்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
நம் இராணுவம் சித்தாந்த ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் எந்தத் தாக்குதலுக்கும் தயாராக இருந்ததுடன் அதிகமான கண்காணிப்புடன் இருந்தபடியால் ஆரம்ப சண்டைகளில் எதிரியை வன்மையாகத் தாக்கியது. ஹோ-சி-மின்னும் கட்சியும் உருவாக்கிய மக்கள் போர் என்னும் கருத்தமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் வான்வழிப் போர் மற்றும் கடல்வழிப் போரை எதிர்த்து நிற்க, புதிய அடிப்படையில் புதிய வடிவங்களில் வளர்க்கப்பட்டது. எதிரி விமானங்களையும் போர்க்கப்பல்களையும் எதிர்த்து நடைபெறும் போரில் மக்களுடைய தற்காப்புப் பணியில், போக்குவரத்து மற்றும் தகவல் - தொடர்புத் துறைகளில், இதரவற்றில் அனைத்து மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. குறிப்பிட்ட காலத்தில் சிறப்பான சாதனைகளைச் செய்த படைப் பிரிவுகளுக்கு ஹோ-சி-மின் "அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முறியடிக்க உறுதிபூண்ட படை" என்னும் பதாகையை அளித்து கெளரவித்தார். 1965 மார்ச் மாதத்தி லிருந்து தரப்பட்ட பதாகை வீரச்சாதனைகளை நிகழ்த்துமாறு படைப்பிரிவுகளையும் மக்களையும் தூண்டியது. எதிரியை அழித்து முன்னேறுவதற்கு உறுதிபூண்ட நம் இராணுவமும் மக்களும் ஹோ-சி-மின் போதனைகளை நிறைவேற்ற சபதம் செய்தார்கள்.
"கட்சிக்கு விசுவாசமாக இரு மக்களிடம் உன்னை அர்ப்பணித்துக்கொள் நாட்டின் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் சோஷலிசத்துக்கும் போராடுவதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இரு.

Page 100
188 ஹோ-சி-மின்
எந்தப் பொறுப்பையும் நிறைவேற்று;
எந்தக் கஷ்டத்தையும் சமாளி;
எந்த எதிரியையும் முறியடித்து
வெற்றி கொள்." 199
கட்சி மற்றும் ஹோ-சி-மின்னுடைய தலைமையில் வடக்குப் பகுதியிலுள்ள மக்கள் இராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்காவை எதிர்த்து தேசிய மீட்சிக்காக போட்டி போடுகின்ற இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் சண்டையையும் உற்பத்தியையும் முன்னெப்போதுமில்லாத உணர்ச்சியுடன் இணைத்தார்கள்.
ருஷ்யாவின் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியின் 50வது ஆண்டுவிழா நமது மக்களால் மாபெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டபொழுது ஹோ-சி-மின் 'மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி மக்களினங்களின் விடுதலைக்கு வழி வகுத்தது' என்ற கட்டுரையை எழுதினார்.
அந்த முக்கியமான கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் மனிதகுல விடுதலைக்கு வழிவகுத்து முதலாளித்துவத்தி லிருந்து சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் மாறிச் செல்கின்ற புதிய வரலாற்றுக் கட்டத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சியின் வளமான அனுபவத்தைப் பற்றி அவர் எழுதினார். லெனின் போதனைகள் மற்றும் அக்டோபர் புரட்சியின் அனுபவத்திலிருந்து கொள்கைப் பிடிப்புடைய சர்வப்பொதுவான படிப்பினைகளைப் பெற்றார். அவை தொழிலாளிவர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் முழுமையான விடுதலையை உறுதி செய்யும்.
தொழிலாளிவர்க்கத்தின் உண்மையான புரட்சிகரக் கட்சியை நம்முடைய நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு மார்க்சிய லெனினியத்தை சுதந்திரமான படைப் புத்திறனுள்ள முறையில் கையாளுகின்ற கட்சியைக் கட்டுவதற்கு இன்றியமையாத பிடிப்பினைகள் அவை. கட்சி தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி-விவசாயி கூட்டணியைக் கட்டி, அதன் அடிப்படையில் பொது எதிரிக்கு எதிரான பரந்த தேசிய முன்னணி என்ற அடிப்படையில் எல்லா புரட்சிகர மற்றும் முற்போக்கு சக்திகளைத் திரட்ட வேண்டும்.

ஹோ-சி-மின் 189
வர்க்கத்துக்கும் நாட்டுக்கும் எதிரியை எதிர்த்துப் போராடுகின்ற பொழுது நாம் எதிர்ப் புரட்சி வன்முறையைப் புரட்சிகரமான வன்முறையால் எதிர்க்கவேண்டும்; அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும், ஆயுதப் போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் இணைக்கவேண்டும் , ஆக்கிரமிப் பாளர்களை முறியடிப்பதற்கு நெடுங் காலம் வீரமான மக்கள் போரை நடத்த வேண்டும். அதிகாரத்தைக் கைப் பற்றிய பிறகு தொழிலாளி வர்க்கம் புரட்சியின் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தன்னுடைய சக்தியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி புரட்சிகரவீரத்தின் பதாகையை எப்பொழுதும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் , சமரசமில்லாத புரட்சிகர உணர்ச்சியைப் பேணி வளர்க்க வேண்டும். தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்கு இறுதிவரை போராடவேண்டும். நாம் தேசபக்தியை பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துடன் இணைக்க வேண்டும். 'எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளிகளும் ஒடுக்கப்படுகின்ற மக்களினங்களும் ஒன்று சேருங்கள்' என்ற லெனினுடைய முழக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.
மாபெரும் அக்டோபர் புரட்சியின் ஒளியில், நம் மக்களுடைய இடர்கள் மிகுந்த, வெற்றிகரமான போராட்டத்திலிருந்து கிடைக்கின்ற படிப்பினைகள் இவை. 'மாபெரும் அக்டோபர் புரட்சி மக்களினங்களின் விடுதலைக்கு வழிவகுத்தது' என்ற கட்டுரை வியத்நாம் புரட்சி மற்றும் உலகப் புரட்சியின் தத்துவக் கருவூலத்துக்கு முக்கியமான பங்களிப்பாகும். அது ஹோ-சி- மின்னுடைய போர்த்திட்ட மற்றும் செயல்முறை சிந்தனையைத் தெளிவாக விளக்கியது. வியத்நாமிய மக்களுடைய வரலாற்றின் பொற் காலத்துக்கு சுதந்திரம், விடுதலை, சோஷலிசம் என்ற காலத்துக்கு இட்டுச் செல்கின்ற முழுமையான புரட்சியின் திசை வழியைத் தெளிவாக விளக்கியது.
ஹோ-சி-மின் மக்களுடைய சாதனைகளை உன்னிப்பாக கவனித்தார். அவை அளவில் சிறியதாக இருந்தாலும், நம் நாட்டின் புரட்சிகர மரபுகளுடன் பொருந்துகின்ற ஐந்து புரட்சிகரப் பண்புகளின் வெளியீடுகளான மக்களுடைய சாதனைகளை உடனே பாராட்டுவார். வடக்குப் பகுதியில் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த

Page 101
190 ஹோ-சி-மின்
மக்களுடைய நற்செயல்களைப் பாராட்டி ஆயிரக்கணக்கான சின்னங்களை வழங்கினார். 1959முதல் 1968 வரை சுமார் பத்து ஆண்டுகளில் நல்ல மனிதர்கள் நற்செயல்கள், சின்னங்கள் ஏராளமானவர்களுக்கு வழங்கப்பட்டன. ஹோ-சி-மின் அதற்குப் பொறுப்பான தோழர்களிடம் பின்வருமாறு கூறினார்:
'இது 'நல்ல மனிதர்கள் நற்செயல்கள்’ என்ற புத்தகத்தை மக்கள் படிக்குமாறு தூண்டுகின்ற முயற்சி அல்ல அல்லது மக்களிடம் கல்வி புகட்டுவதற்கு அல்லது அவர்கள் குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட காலம் செய்வதற்குரிய திட்டம் அல்ல. நிகழ் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மக்களைத் தயாரிக்கின்ற இயக்கம் இது. ஆகவே கட்சியை வெகுஜன அமைப்புகளை இராணுவத்தைக் கட்டுகின்ற இயக்கத்துடன் தேசிய மீட்சிக்கும் சோஷலிஸ்ட் நிர்மாணத்துக்கும் அமெரிக்காவை எதிர்க்கின்ற இயக்கத்துடன் இணைக்கவேண்டும்; கட்சி வாழ்க்கையுடன் கட்சியின் செல் கூட்டங்களுடன், வெகுஜன அமைப்புகளின் நடவடிக்கைகளுடன் இணைக்க வேண்டும்"
அமெரிக்காவை எதிர்த்து தேசிய மீட்சிக்கு மொத்தக் கட்சி, இராணுவம் மற்றும் மக்களுக்குத் தலைமை தாங்கிய ஹோ-சி-மின், கட்சி, ஊழியர்கள், உறுப்பினர்கள்,மக்கள் ஆகியோரிடம் புரட்சிகர நற்பண்புகளையும் சோஷலிஸ்ட் அறவியலையும் என்று வற்புறுத்துவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. 1959ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் புரட்சிகரமான நற்பண்புகளைக் கடைப் பிடிப்போம், தனிமனித வாதத்தை ஒழிப்போம்' என்ற முக்கியமான கட்டுரையை எழுதினார். கட்சியும் இராணுவமும், மக்களும் சிந்தனை அறவியல், வேலைமுறை ஆகியவற்றிலுள்ள பலவீனங்களை ஒழிக்கவேண்டும், புரட்சிகர இலட்சியத்துக்கு மேன்மேலும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் ஆணையிட்டார்.
அமெரிக்க எதிர்ப்புப் போரின் மாபெரும் பின் தளத்தின் வாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்கு வடக்குப் பகுதியில் உள்ள சகோதரர்கள் விவசாய உற்பத்தியில் அக்கறை காட்டவேண்டும். பிராந்திய தொழில்துறை மற்றும் கைத்தொழில்களின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் என்று ஹோ-சி-மின் வலியுறுத்தினார். நாம்

ஹோ-சி-மின் 191
உற்பத்தி செய்துகொண்டு போராட்டத்தை நடத்துகிறோம். அரசாங்கம் நடத்துகின்ற தொழில்களில் உற்பத்தி பெருக வேண்டும். திட்டம் போர் நிலைமைகளுடன் பொருந்த வேண்டும். அதே சமயத்தில் சமாதானம் மறுபடியும் ஏற்படுவதற்கு தயாரிப்பு செய்ய வேண்டும்.*
கிராமப் பகுதிகளில் சோஷலிஸ்ட் உற்பத்தி உறவுகளை வலுப் படுத்துவதிலும் முழுநிறைவாக்குவதிலும் ஹோ-சி-மின் விசேஷ கவனம் செலுத்தினார். 1969 ஏப்ரல் மாதத்தின் முடிவில், உயர்மட்ட விவசாயக் கூட்டுறவு சங்கங்களின் அமைப்பு விதிகளை தேசிய அசெம்பிளி நிறைவேற்றியது. அது ஒரு முக்கியமான ஆவணம். கூட்டுறவு சங்கங்களைப் பற்றி கட்சி மற்றும் அரசின் அடிப்படையான கொள்கைகள் மற்றும் திசைவழி அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டிருந்தது. பொறுப்புள்ள அமைப்புகள் ஜனநாயக முறையில் விவாதங்கள் நடத்தவேண்டும், கூட்டுப் பண்ணை விவசாயிகளின் கருத்துகளை சேகரிக்க வேண்டும் அமைப்பு விதிகள் தமக்குரியவை என்று அவர்கள் உணருமாறு: செய்யவேண்டும் என்று ஹோ-சி-மின் ஆணையிட்டார். அமைப்பு விதிகளை அவர் கவனமாகப் படித்து தன் கைப்பட திருத்தங்களைச் செய்தார். அந்த ஆவணத்துக்கு முன்னுரை எழுதினார். அவருடைய முன்னுரையுடன் ஆவணம் அச்சிட்டு விவசாயிகள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது. விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் அமைப்பு விதிகளை அமுல்நடத்த கட்சியின் ஸ்தல கமிட்டி மற்றும் மாகாணக் கமிட்டிகள் உதவி செய்யவேண்டும் என்று அவர் ஆணையிட்டார்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வியத்நாமுக்கு எதிரான ஆக்கிரமிப்போரைத் தீவிரப்படுத்தி விஸ்தரித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தமது ‘சமாதான நல்லெண்ணம் 'முன்நிபந்தனைக ளில்லாமல் பேச்சுவார்த்தை நடத்த முன்வருதல் இதரவை மூலம் அமெரிக்கா மற்றும் உலகத்தின் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். ஹோ-சி-மின் அமெரிக்க அரசாங்கத்தின் சூழ்ச்சிகளை உறுதியாக அம்பலப்படுத்தினார். 'பலத்தின் உச்சியிலிருந்து பேச்சுவார்த்தை நடத்துவது' என்னும் அமெரிக்கக் கொள்கையைக் கண்டனம் செய்தார். வியத்நாம் மக்கள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டுத் தமது நியாயமான கோரிக்கைகளை

Page 102
192 ஹோ-சி-மின்
கைவிட வேண்டும் என்பது இந்தக் கொள்கையின் அர்த்தம் என்பதை அவர் விளக்கினார். அவர் 24.1.1966ஆம் நாளன்று சோஷலிஸ்ட் நாடுகள் மற்றும் இதர நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வியத்நாமிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உருவாகியுள்ள ஆபத்தான நிலைமைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்புதான் ஒரே காரணம் என்று சுட்டிக் காட்டினார். 23.12.1966ஆம் நாளன்று அமெரிக்க மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்திலும் இதை விளக்கிக் கூறினார். அவர் நம் மக்களின் நியாயமான நிலையை விளக்கி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை இராஜிய களத்தில் (diplomatic front) திரும்பத் திரும்பத் தாக்கி அந்த நாட்டுக்கு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தினார். அமெரிக்காவினால் பதில் அளிக்க முடியவில்லை. நம் மக்களுடைய எதிர்ப்புப் போரை உலகத்திலுள்ள முற்போக் காளர்கள் மேன்மேலும் தீவிரமாக ஆதரித்தார்கள். அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஆளும் கும் பல் மேன் மேலும் தனிமைப்பட்டது.
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மீட்சிக்குப் போர் நடத்திய நமது மக்கள் சமாதானம், தேசிய சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்கு உலக மக்கள் நடத்திய போராட்டத்தின் முன் வரிசையில் இருந்தார்கள். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளைக் காட்டிலும் உலகத்தின் புரட்சிகர சமாதான சக்திகள் அதிகமான பலத்தைப் பெற்றுள்ளன என்று ஹோ-சி-மின் சுட்டிக் காட்டினார். ‘அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தோல்வி அடைந்து வருகிறார்கள் என்பது தெளிவு'° என்று அவர் கூறினார்.
மக்கள் தமது புனிதமான அரசியல் உரிமைகளுக்குப் போர் செய்யவேண்டும் என்று அறைகூவியபொழுது நமது சர்வதேசியக் கடமைகளையும் அவர் தவறாமல் நினைவுபடுத்தினார். அதன் காரணமாகவே சோஷலிஸ்ட் நாடுகளின் மக்கள், உலக மக்கள், அமெரிக்காவிலுள்ள முற்போக்காளர்கள் நமது போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள். இந்த சகோதர ஆதரவுக்கு வியத்நாம் மக்கள் சார்பில் ஹோ-சி-மின் பலமுறை நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியத்நாம் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கு உலக மக்களுடைய ஐக்கிய முன்னணி

ஹோ-சி-மின் 193
அமைக்கப்பட்டது. வியத்நாம் நம் காலத்தின் மனசாட்சிப் பிரச்சினையாக உருவெடுத்தது.
நாட்டின் இரண்டு பகுதிகளிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் களுக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் உள்நாட்டில் குண்டு வீச்சையும் தாக்குதல்களையும் 1.11.1968 முதல் நிபந்தனையின்றி நிறுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. வியத்நாம் ஜனநாயகக் குடியரசு மற்றும் தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுடன் பாரிஸ் நகரத்தில் நான்கு கட்சி மாநாட்டில் அமெரிக்கா பங்கெடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. நான்கு ஆண்டு காலம் வீரத்தோடு போர் செய்த பிறகு நமது இராணுவமும், மக்களும் மாபெரும் வெற்றியடைந்தார்கள். வடக்குப் பகுதியை அழிப்பதற்கு அமெரிக்கா நடத்திய போர் முறியடிக்கப்பட்டது.
'இது கட்சியின் சரியான புரட்சிக் கொள்கையின் திசைவழிக்குக் கிடைத்த வெற்றி, நமது தீவிரமான தேசபக்தி மற்றும் நம் மக்களுடைய ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி,போராடுவோம்வெற்றி அடைவோம் என்ற நமது உறுதிக்குக் கிடைத்த வெற்றி, நமது நீதிமிக்க சோஷலிஸ்ட் சமூகத்துக்குக் கிடைத்த வெற்றி. வடக்கிலும் தெற்கிலும் நமது இராணுவத்துக்கும் மக்களுக்கும் கிடைத்த பொது வெற்றி நம் சகோதர நாடுகளைச் சேர்ந்த, மக்களுக்கும் உலக முழுவதிலுமுள்ள நமது நண்பர்களுக்கும் கிடைத்த வெற்றி" என்று ஹோ-சி-மின் கூறினார். இரண்டு பகுதிகளிலும் உள்ள நம் இராணுவம் கூடுதலான விழிப்புடன் இருக்கவேண்டும், வலிமையைப் பெருக்கிக் கொள்வதுடன் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும், முழுவெற்றி அடைய வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார். "நமது பூமியில் ஓர் ஆக்கிரமிப்பாளன் இருக்கின்ற வரை நாம் அவனை ஒழிப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டும்' என்றார்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வடக்குப் பகுதியை அழிக்கின்ற போரை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில் தெற்குப் பகுதியில் போரை அதிகமாகத் தீவிரப்படுத்தினார்கள். ஆனால் தெற்கு வியத்நாம் மக்கள் தங்களுடைய நிலைகளைப் பாதுகாத்துக் கொண்டதுடன் முன்னேறித் தாக்கினார்கள். எதிரியின்

Page 103
194 ஹோ-சி-மின்
எல்லா எதிர்தாக்குதல்களையும் முறியடித்தார்கள். அமெரிக்க இராணுவத்தை முறியடிப்போம் என்ற நமது மக்களுடைய உறுதியை ஹோ-சி-மின் பின்வருமாறு கூறினார்: "அமெரிக்கர்கள் இன்னும் இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து இறக்கினாலும், இந்தக் குற்றவாளித்தனமான போரில் இன்னும் அதிகமான துணைப் படைகளைக் கொண்டு வந்தாலும், நமது இராணுவமும் மக்களும் அவர்களை முறியடிப்பார்கள்.”*
1967 ஆகஸ்ட் மாதத்தில் தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியின் விசேஷ காங்கிரஸ் கூடியது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான தேசிய ஐக்கிய முன்னணியை மேலும் விரிவுபடுத்துவதற்கும் தெற்கு வியத்நாம் மக்களுடைய புரட்சிகர இலட்சியம் முழுவெற்றி அடைவதற்கும் அரசியல் செயல்திட்டத்தை நிறைவேற்றியது. ஹோ - சி-மின் இந்த அரசியல் நிகழ்வை வரவேற்றுப் பின்வருமாறு கூறினார்: "இது விரிவான தேசிய ஒற்றுமைக்கான செயல்திட்டம். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் களையும் அவர்களுடைய ஏவலர்களையும், தேசத்துரோகிகளையும் முழுமையாக முறியடிப்பதற்கு உறுதியான போராட்டத்தை நடத்துகின்ற செயல்திட்டம்."
வியத்நாம் மக்களுடைய தீவிரமான போராட்டம் பல கட்டங்களைக் கடந்து 1968ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகத்தைக் குலுக்கிய தாக்குதல்களிலும் எழுச்சிகளிலும் முடிவடைந்தது. ஹோ - சி-மின் தனது புத் தாண்டு வாழ்த்தில் பின்வருமாறு கூறியிருந்தார்:
'இந்த ஆண்டில் வசந்தகாலம் முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் பிரகாசமாக இருக்கும்.'
தெற்கு வியத்நாம் இராணுவமும் மக்களும் அமெரிக்காவுக்கும் வியத்நாமின் பொம்மை அரசாங்கப் படைகளுக்கும் மரண அடி கொடுத்தார்கள். எல்லாத் துறைகளிலும் அதுவரையிலும் இல்லாத மேதாவிலாசம் நிறைந்த வெற்றிகளைப் பெற்றார்கள். நமது மக்களுடைய மாபெரும் எதிர்ப்புப் போரில் அது திருப்பு முனையாக இருந்தது.

ஹோ-சி-மின் 195
மேற்கூறிய தாக்குதல்கள் மற்றும் எழுச்சிகளின் உச்சகட்டத்தில் வியத்நாம் தேசிய ஜனநாயக மற்றும் சமாதான சக்திகளின் கூட்டணி அமைக்கப்பட்டது. "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நமது தேசிய ஒற்றுமைக் கொள்கைக்கு தேசிய மீட்சிக்கு இது மாபெரும் வெற்றி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய கைக் கூலிகளும் உண்மையில் ஆக்கிரமிப் பாளர்கள், தேசத் துரோகிகள் என்று அம்பலப்படுத்தி அவர்களை இன்னும் அதிகமாக தனிமைப்படுத்துகிறது' என்று ஹோ-சி-மின் கூறினார்.
'இது ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நம்முடைய சகோதரர்கள் இதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. உலக முழுவதிலும் உள்ள நம் சகோதரர்களும் நண்பர்களும் இன்னும் அதிகமாக நமக்கு உதவி செய்கிறார்கள்'*
கடந்த சில பத்தாண்டுகளில் நமது இராணுவமும் மக்களும் போராடிய காலத்தில் அவர்கள் பேரிடர்களை அனுபவித்தார்கள். அவற்றைப் பற்றி சிந்தித்த ஹோ-சி-மின் பின்வரும் முடிவுக்கு வந்தார்.
"புரட்சிகர இயக்கத்துக்கு சாதகமான இன்றைய நிலைமைகளில் ஒரு நாடு- அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்- ஒற்றுமையுடன், சரியான அரசியல், இராணுவக் கொள்கையைக் கடைப் பிடித்து உறுதியாகப் போராடினால், சோஷலிஸ்ட் முகாம் மற்றும் உலகத்திலுள்ள புரட்சிகர மக்களுடைய ஆதரவும் உதவியும் அதற்குக் கிடைக்குமானால் அந்த நாடு அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்பட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர் எவரையும் உறுதியாகத் தோற்கடிக்கும்."
நமது மக்களுடைய போராட்டம் இன்னும் அதிகமான கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அதிகமான போர் வெறியும் பிடிவாதமும் உள்ளவர்கள். ஹோ-சி-மின் 1969ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தாண்டுச் செய்தியில் அறிவித்த புரட்சியின்

Page 104
196 ஹோ-சி-மின்
இலட்சியம் நிறைவேற நமது மொத்தக் கட்சியும், இராணுவமும் மக்களும் , தமது ஒற்றுமையை வலுப் படுத்த வேண்டும், புரட்சிகரமான கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் . போராட்ட உணர்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் , தேசிய எதிர்ப்புப் போரை விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்த வேண்டும்.
சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும்
அமெரிக்கர்கள் வெளியேறும் வரை
பொம்மை அரசர்கள் குப்புற விழுகின்ற வரை
நாம் போர் செய்வோம்.
போர் வீரர்களே! சகோதரர்களே
முன்னேறுங்கள்!
வடக்கும் தெற்கும் ஒன்றுகூடினால்
அந்த வசந்தத்தைக் காட்டிலும்
ஆனந்தம் உண்டா?
தெற்கு வியத்நாமில் வசித்த நம் சகோதரர்களிடம் ஹோ-சி-மின் எப்பொழுதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டிருந்தார். வடக்குப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்ட தெற்கு பகுதியைச் சேர்ந்த இளஞ் சிறார்கள் பற்றி அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்ததில் இதைப் பார்க்கமுடியும் . அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய ஏசன்டுகளும் தெற்கு பகுதியின் தேசபக்தர்களைப் படுகொலை செய்த செய்தி கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் கண்ணீர் வடிப்பார்.
தெற்கு வியத்நாம் விடுதலை முன்னணியின் முதல் பிரதிநிதிகள் குழு 1962 அக்டோபர் மாதத்தில் வடபகுதிக்கு வந்தபொழுது அவர்களைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடித்தார் 'எனக்கு மிகவும் பிரியமான தெற்குப் பகுதியின் பிம்பம் என்னுடைய இதயத்தில் எப்பொழுதும் இருக்கிறது' என்று அவர் கூறினார்.
தெற்குப் பகுதி விடுதலை அடையாமலிருந்தவரை தான் கடமையை நிறைவேற்றவில்லை என்று ஹோ-சி-மின் கருதினார். வியத்நாம் ஜனநாயகக் குடியரசு தேசிய அசெம்பிளி மிக உயர்ந்த கெளரவமாகிய தங்க நட்சத்திரத்தை ஹோ-சி-மின்னுக்கு

ஹோ-சி-மின் 197
அளிப்பதென்று முடிவு செய்தபொழுது அவர் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார். ஆனால் 'தெற்குப் பகுதி முற்றிலும் விடுதலை அடைகின்ற வரை, நம் நாடு அமைதியான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டு, வடக்கும் தெற்கும் ஒரே கூரையின் கீழ் தேசிய அசெம்பிளியில் கூடி இந்த உயர்ந்த பதக்கத்தை எனக்குத் தருகின்ற வரை காத்திருங்கள். அப்படி நடைபெற்றால் நம் மக்கள்
197
அனைவரும் பேரானந்தம் அடைவார்கள் என்று அவர்
கூறினார்.
ஹோ -சி-மின் வியத்நாமுக்குத் திரும்பிய பிறகு கூட அவர் தெற்குப் பகுதிக்குச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் தெற்கில் அவருடைய புகழ் பரவியிருந்தது. நகரவாசிகள் முதல் மத்தியப் பிரதேசத்தில் வசித்தவர்கள் வரை இருட்டுச் சிறைகளில் தள்ளப்பட்டவர்கள் முதல் போர் வீரர்கள் வரை வியத்நாம் தேசபக்தர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் அவர் இடம் பெற்றிருந்தார். மலைப்பகுதியில் வசித்த ஒரு முதியவர் காவல்முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்." அவர் மரணத் தறுவாயிலும் ஹோ-சி-மின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டிருந்ததுடன் தன்னுடைய மாமாவைக் கடைசிவரை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தெற்குப் பகுதியில் ஒரு குழந்தை அரசியல் ஊழியரைக் காப்பாற்றுவதற் காகத் தன் உயிரைத் தியாகம் செய்தது, எதிரியின் துப் பாக்கி குண்டு நெஞ்சைத் துளைத்த நேரத்திலும், 'ஹோ மாமா நீடூழி வாழ்க!" என்று முழங்கியது. தெற்குப் பகுதியைச் சேர்ந்த பெண், எதிரியின் துப் பாக்கி மார்புக்கு நேராக நீட்டப்பட்டிருந்த தருணத்தில் 'ஹோ சி-மின் என்னுடைய இதயத்தில் இருக்கிறார்' என்று சிறிதும் அச்சமின்றிக் கூறினாள்.
ஹோ-சி-மின் தெற்குப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஒளி, வலிமை, துணிவு, நம்பிக்கையைக் கொடுத்தார். அவர்கள் வீரமிக்க சாதனைகளை நிறைவேற்றினார்கள். அவர் ஆணையிட்டவுடன் தெற்குப் பகுதி மக்கள் எல்லோரும் இரும்புச் சுவரைப் போல மாறினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களுடைய ஏசன்டுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தகர்த்தார்கள்.

Page 105
198 ஹோ-சி-மின்
'நம் நாடு ஒன்றே. வியத்நாம் ஒரே நாடு. நம் மக்கள் எல்லாத் துன்பங்களையும் வெற்றியடைந்து தேசிய ஒற்றுமையை சாதிப்பார்கள் வடக்கும் தெற்கும் ஒரே கூரையின் கீழ் வரும்.'"
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தெற்குப் பகுதி மக்கள் உக்கிரமாகப் போராடியபொழுது அங்கிருக்கும் சகோதரர்களையும் தோழர்களையும் பார்ப்பதற்காக ஹோ-சி-மின் அங்கு செல்வதற்கு விரும்பினார்.
தன்னுடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் உடல் பலவீனமாக இருந்தபோதிலும் அவர் நீண்ட தூரம் நடந்தார், மேட்டுப் பகுதிகளில் ஏறினார். தெற்குப் பகுதிக்குச் சென்று தோழர்களையும் சகோதரர்களையும் சந்திப்பதற்கு அவர் பயிற்சி செய்துகொண்டிருந்தார். 1968ம் ஆண்டு முதல், தன் உடல் பலவீனமாகிவிட்டதை அவர் உணர்ந்தார். எனவே தெற்குப் பகுதியிலிருந்து யாராவது ஒரு தோழர் வந்தால் தனக்குத் தெரிவிக்க வேண்டும், அந்தத் தோழர் தன்னை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால்தான் தெற்குப் பகுதியிலிருந்து வடபகுதிக்கு வந்த பல ஊழியர்களும் போர்வீரர் களும் அவரை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்கள். அவர்களிடம் தெற்குப் பகுதியிலுள்ள நிலைமைகளைப் பற்றி மிகவும் துல்லியமாக விசாரிப் பார் தெற்கில் சண்டைகளில் வெற்றியடைந்த செய்தி கிடைத்தால் அதிகமாக மகிழ்ச்சி அடைவார். ஹோ-சி-மின் பகலிலும் இரவிலும் தெற்கை விடுதலை செய்வது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்தார்.
ஹோ-சி-மின் 20.7.1969ஆம் நாளன்று வெளியிட்ட வேண்டுகோளில் இந்தப் புரட்சிகர உறுதியை வலியுறுத்தினார்:
'அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வி அடையவிருப்பது தெளிவாகிவிட்டது. ஆனால் நமது நாட்டின் தெற்குப் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கின்ற சூழ்ச்சியான திட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. நமது இராணுவமும் மக்களும், இலட்சக்கணக்கா னவர்கள் ஒரே மனிதனைப் போல இடர்களைக் கண்டு அஞ்சாமல் தியாகத்துக்குத் தயங்காமல் புரட்சிகர வீரத்தை உயர்த்திப்

ஹோ-சி-மின் 199
பிடிக்கிறார்கள். அமெரிக்கத் துருப்புகள் நமது நாட்டை விட்டு முற்றிலும் வெளியேறுகின்ற வரை, பொம்மை ஆட்சியின் இராணுவமும் நிர்வாகமும் முழுமையாக வீழ்ச்சி அடைகின்ற வரை போர் செய்து வெற்றியடைவது என்று தீவிரமான உறுதியுடன் இருக்கிறார்கள். தெற்குப் பகுதிக்கு விடுதலை, வடக்குப் பகுதிக்குப் பாதுகாப்பு, முடிவில் சமாதான முறையில் நாட்டை ஒற்றுமைப்படுத்துதல் இவை அவர்களுடைய இலட்சியம்'°

Page 106
9
வியத்நாம் மற்றும் உலக மக்களுடைய இதயங்களில் வாழ்கிறார் ஹோ-சி-மின்
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடைபெற்ற போரில் நம் மக்கள் தெற்கிலும் வடக்கிலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் சோகம் நிறைந்த செய்தி கிடைத்தது. ஹோ-சி-மின் அவர்களுடைய உடல் நலம் குன்றிவிட்டது.
அவருடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் முதுமையும் உடல்நலக் குறைவும் இருந்தாலும், அவர் அதிகமான தெளிவுடன் இருந்தார். அமெரிக்கர்களுக்கு எதிரான போரிலும் சோஷலிஸ்ட் நிர்மாணத்திலும் அவர் கட்சியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மக்களுக்குத் தலைமை தாங்கினார்.
ஆனால் 1969ஆம் ஆண்டில் அவருடைய உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. கட்சியின் மத்தியகமிட்டி உடனே அவர் மிகவும் சிறந்த சிகிச்சை பெற ஏற்பாடுகளைச் செய்தது. புகழ் மிக்க மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரிப் பேராசிரி யர்களும் இரவும் பகலும் அவரை அருகிலிருந்து கவனித்தார்கள்.
தன்னுடைய உடல் சக்தியிழந்து கொண்டிருப்பதை அறிந்த ஹோ - சி-மின் 10.5.1969ஆம் நாளன்று தன்னுடைய இறுதி ஆவணத்தை எழுதினார். மக்களுக்கும் நண்பர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் அவர் சில செய்திகளைக் கூறுவதற்கு விரும்பினார்.
அவர் நோயாளிப் படுக்கையில் இருந்தவாறு அமெரிக்க எதிர்ப்புப் போரில் நம்முடைய நிலை, தெற்கில் நமது மக்களுடைய நிலை மற்றும் வடக்கில் சோஷலிஸ்ட் நிர்மாணம் பற்றி அடிக்கடி

ஹோ-சி-மின் 201
விசாரித்தார். நூறாண்டு நிறைவுற்ற முதியவர்களுக்கு அன்பளிப்புகள் (பட்டுத்துண்டு) மூன்று மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்மார்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தல், ஏரிகளின் பாதுகாப்பு, வெள்ளத்தைத் தடுப்பதற்கு அணைக்கட்டுகளின் மதகுகளைத் திறப்பது ஆகிய சாதாரண விஷயங்களைப் பற்றிக்கூட விசாரிப்பதற்குத் தவறமாட்டார்.
அவருடைய உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் மிகவும் அமைதியாக இருந்தார். மருத்துவர்கள் எழுதித் தந்த மருந்துகளை உட்கொண்டார். அவர்கள் ஆணைகளின்படி நடந்து கொண்டார்.
செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் தேசிய நாளாகக் கொண்டாடப்படும் 1969ஆம் ஆண்டில் அந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று வானவேடிக்கைகளை சிறப்பாகக் கொண்டாடும் படி கட்சி மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் கூறினார். அந்த விழாவில் தானும் கலந்துகொண்டு நாட்டு மக்களை சந்திக்க விரும்பினார். ஆனால் அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை.
3.9.1969ஆம் நாளன்று அதிகாலை 4 மணிக்கு கட்சியின் மத்திய
கமிட்டி, தேசிய அசெம்பிளியின் நிலைக்குழு மற்றும் அரசாங்கத்தின் சார்பில் அவருடைய உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிடப்பட்டது.
"ஹோ-சி-மின் கடந்த சில வாரங்களாக உடல்நலமில்லா திருந்தார். நமது கட்சியும் அரசும் அவருடைய நோயை குணப்படுத்துவதற்கு மிகவும் அதிகமான முயற்சிகளைச் செய்தன. அனுபவமிக்க மருத்துவர்களும் மருத்துவப் பேராசிரியர்களும் இரவு பகலாக அவரை கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்."
அன்று காலை 8மணிக்கு மற்றொரு அறிக்கை வெளியிடப் ull-gil.
"ஹோ-சி-மின்னுடைய உடல்நிலை திடமாக இல்லை. நோய் மோசம் என்பதிலிருந்து படுமோசமாகியிருக்கிறது. அவரைக்

Page 107
2O2 ஹோ-சி-மின்
காப்பாற்ற மருத்துவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். அவருக்குத் தக்க சிகிச்சை அளிப்பது மிக முக்கியமான அவசரமான கடமை என்று கட்சியும் அரசாங்கமும் கருதுகின்றன.
அவருடைய உடல்நிலை விரைவில் குணமடையும் என்று கட்சியும் பொதுமக்களும் உலகமுழுவதிலுமுள்ள நண்பர்களும் நம்பிக்கையுடன் இருந்த சமயத்தில் துயரமான செய்தி கிடைத்தது. ஹோ-சி-மின் மிகவும் கடுமையான இருதய வலி ஏற்பட்டு 3.9.1969ம் நாளன்று காலை 9.47 மணிக்குத் தன்னுடைய 79ஆம் வயதில் மரணமடைந்தார்.
அது நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. கட்சியும் இராணுவமும் மக்களும் தமது துயரத்தை அடக்கி அதைப் புரட்சிகரமான செயலாக மாற்ற வேண்டும்; ஹோ-சி-மின்னிடம் நமது அன்பையும் நன்றியையும் காட்டுவதற்கு வீரநடைபோட்டுக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கட்சியின் மத்திய கமிட்டி கேட்டுக் கொண்டது.
"ஹோ-சி-மின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உறுதியாகப் போராடினார். தேசிய விடுதலை, தொழிலாளிவர்க்கம் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கு,சுதந்திரம், விடுதலை, சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றுக்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் வியத்நாம் மக்களின் ஆன்மிக மதிப்புகளுக்குப் புத்துயிரூட்டினார். தேசிய மீட்சிக்கு அவர் செய்த சேவை சுமார் ஒரு நூற்றாண்டு காலம் அடிமைகளாக இருந்ததனால் நமது மக்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை அகற்றியது' என்று கட்சியின் மத்திய கமிட்டி அறிக்கை வெளியிட்டது.
கட்சியின் மத்திய கமிட்டி தேசிய அசெம்பிளியின் நிலைக்குழு, அரசாங்க கவுன்சில், வியத்நாம் தந்தையர் நாட்டு முன்னணியின் தலைமைக்குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் விசேஷ அறிக்கை வெளியிடப்பட்டது.
கட்சியின் மத்திய கமிட்டியின் முதல் செயலாளரான லெ துவான்
தலைமையில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டது.

ஹோ-சி-மின் 203
நாடு முழுமையும் செப்டம்பர் 7 முதல் 10 முடிய ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதென்று கட்சியின் மத்திய கமிட்டியும் அரசாங்கமும் முடிவு செய்தன. ஹோ-சி-மின் இறுதிச் சடங்குகளை நாட்டு மரபின் வீறார்ந்த சிறப்புடன் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
ஹோ-சி-மின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 6.9.1969ஆம் நாளன்று காலையில் பா-டின் ஹ் மண்டபத்தில் சம்பிரதாயப்படி ஆரம்பமாயிற்று. அவர் உடல் வழக்கமான, எளிய, சாயம் போன காக்கிநிற சூட் அணிவிக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவர் நாட்டின் மூலை முடுக்குகளுக்குச் சென்றபொழுது அணிந்த ரப்பர் செருப்புகள் இப்பொழுது புனிதமான சின்னம் என்ற முறையில் கண்ணாடிப் பெட்டியில் அவர் காலடியில் வைக்கப்பட்டிருந்தன. தாங்க முடியாத சோகத்துடன் இரவுபகலாக மக்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கிராமங்கள், வட்டங்களின் பிரதிநிதிகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து நாட்டின் மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செய்தார்கள். போர்முனையிலிருந்து வந்த பிரதிநிதிகள் ஹோ-சி-மின் மீது தெற்குப் பகுதி மக்கள் கொண்டிருந்த ஆழமான மரியாதையை எடுத்துக் காட்டினார்கள். வியத்நாமிய பூமியில் வசிக்கின்ற சிறுபான்மை தேசிய இனங்கள் சுதந்திரம், விடுதலை, சமத்துவம் ஆகியவற்றுக்கு நடைபெற்ற பொதுப் போராட்டத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கி வலுப்படுத்திய தலைவருக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார். வெளிநாடுகளில் வசித்தாலும் தந்தையர் நாடாகிய வியத்நாமைப் பற்றி எப்பொழுதும் சிந்திக்கின்ற மக்களுடைய பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினார்கள். ஏழு நாட்களில் 2,00,000க்கும் அதிகமானவர்கள் ஹோ-சி-மின்னுக்கு இறுதி மரியாதை செய்தார்கள். w
ஹனோய் மற்றும் வடக்குப் பகுதியில் எல்லா இடங்களிலும் அவர் நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அலுவலகத்திலும் அவருடைய உருவப்படம் முக்கியமான இடத்தில் தொங்கவிடப்பட்டது.

Page 108
204 ஹோ-சி-மின்
தெற்குப் பகுதியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நமது சகோதரர்கள் பலவிதமான முறைகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். செப்டம்பர் 8ஆம் நாளன்று தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியின் மத்திய கமிட்டி, வியத்நாம் தேசிய ஜனநாயக மற்றும் சமாதான சக்திகளின் கூட்டணி, தெற்கு வியத்நாம் குடியரசின் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மற்றும் அரசாங்க ஆலோசனைக் குழு எதிர்ப்பு தளத்தில் நினைவு நிகழ்ச்சியை நடத்தியது.
அமெரிக்கா மற்றும் அதன் பொம்மை அரசாங்கத்தின்' கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் வசித்த மக்கள் எதிரியின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான வழிகளில் ஹோ-சி-மின்னுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
தெற்கிலுள்ள நம் சகோதரர்கள் ஹோ-சி-மின்னுக்கு மாபெரும், வரவேற்பளிக்கவேண்டும் என்று ஆர்வத்தோடிருந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை கனவாகிவிட்டது. தெற்கில் வசித்த 140 லட்சம் மக்கள் ஆழமான பாசத்துடனும் நன்றியுடனும் அவர் பெயரால் சபதம் செய்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை யும் அவர்களுடைய கைக் கூலிகளையும் முறியடிப்பதற்கு தீவிரமான உறுதியுடன் போர் செய்வோம், எல்லா இடர்களையும் ஒழித்து 'தந்தையர் நாட்டின் பித்தளைச் சுவராக இருப்போம்' என்று சபதமெடுத்துக் கொண்டார்கள்.
முற்போக்கு மனிதகுலம் ஹோ-சி-மின்னுக்குத் தன் மரியாதையையும் அவர் மரணத்துக்குத் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்தது. 121 நாடுகளிலிருந்து 22,000க்கும் அதிகமான இரங்கல் செய்திகளும், கடிதங்களும், கட்சிக்கு தேசிய அசெம்பிளிக்கு, அரசாங்கத்துக்கு, வியத்நாம் தந்தையர் நாட்டு முன்னணிக்கு அனுப்பப்பட்டன. சோஷலிஸ்ட் அரசுகள் மற்றும் பல அரசுகளின் தலைவர், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் தலைமை அமைப்புகள் பல நாடுகளையும் சேர்ந்த வெகுஜன அமைப்புகள், சர்வதேச ஜனநாயக ஸ்தாபனங்கள், உலகத்தின் ஜனநாயக மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோர் செய்தி அனுப்பினார்கள்.

ஹோ-சி-மின்' 205
சோஷலிஸ்ட் அரசுகளும் பத்து தேசிய அரசுகளும் ஹோ - சி-மின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டித்தன. சில நாடுகள் அஞ்சலிக் கூட்டங்களைப் பெரிய அளவில் நடத்தின. பல நாடுகளில் பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள்,தெருக்கள் மற்றும் சதுக்கங்களுக்கு ஹோ-சி-மின் பெயர் வைக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களின் விடுதலை முன்னணி 6.9.1969ஆம் நாளன்று "ஹோ - சி-மின் படையெடுப்பு' என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்குத் தாக்குதல் நடத்தியது. பல நாடுகளில் வெகுஜன அமைப்புகள் அவர் பெயரை சூடிக்கொண்டன. பல கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் "ஹோ-சி-மின் அணி' என்று புதியகட்சி உறுப்பினர்களுக்குப் பெயர் சூட்டின. அவருட்ைய இறுதி ஆவணத்தை இக்கட்சிகள் ஆழமாகப் படித்து அவருடைய சாதனைகளையும் நூல்களையும் மக்களிடம் பரப்பின.
வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்களில் வைக்கப்பட்டிருந்த துயரப் பதிவேட்டில் பல தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் ஆறுதல் செய்திகளை எழுதினார்கள். பல நாடுகளில் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் அவருடைய உருவப்படங்களைத் தூக்கிக் கொண்டு நகரத்தின் முக்கியமான வீதிகளில் ஊர்வலமாகச் சென்றார்கள். அமெரிக்காவிலும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியதநாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கின்ற் ஆர்ப்பாட்டங்களாக அவற்றை மாற்றினார்கள்.
உலக மக்கள் ஹோ -சி-மின்னைப் பற்றிக்கொண்டிருந்த ஆழமான, மனப்பூர்வமான தூய்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு இவை. நம் மக்களுடன் அவர்களுடைய மேன்மையான நட்பு, அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக நம் மக்களுடைய நியாயமான போராட்டத்துக்கு உலகத்தின் முற்போக்காளர்கள் அரசியல் ரீதியில் கொடுத்த ஆதரவின் வெளிப்பாடு இவை.
ஹோ - சி-மின்னுடைய மாபெரும் புரட்சிகரப் பணி நமது கட்சியின், வீரத்தோடு போர் செய்து வெற்றிகளைப் பெற்றுள்ள

Page 109
2O6 ஹோ-சி-மின்
வியத்நாம் மக்களின் தேசிய விடுதலை, சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்கான போராட்டத்தில் மேதாவிலாசம் நிறைந்த உதாரணமாக விளங்கும் வியத்நாம் மக்களின் சாதனைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஹோ-சி-மின் உலகப் புரட்சிக்கு, உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்துக்கு செய்துள்ள பங்களிப்புக்காகவும் போற்றப்பட்டார்.
அவருடைய தூய்மையான முழுநிறைவான வாழ்க்கை அபூர்வமான உதாரணமாகும். அவருடைய சிறந்த பண்புகளும் வேலைமுறையும் புரட்சிப் புோராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணங்களாக உள்ளன. அவருடைய ஆளுமை, மேன்மையான குணங்கள், புரட்சிகர செயல்பாடு ஆகியவற்றை அவருடைய எதிரிகள் கூட மதித்தார்கள்.
ஹோ - சி-மின் நினைவுக் கூட்டம் 9.9.1969ஆம் நாளன்று ஹனோயிலுள்ள பா-டினஹ் சதுக்கத்தில் வீரமைதியுடன் நடத்தப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அதில் கலந்துகொண்டார்கள். கட்சியின் மத்திய கமிட்டியின் முதல் செயலாளர் தோழர் லெதுவான் கட்சியின் அஞ்சலித் தீர்மானத்தையும் ஹோ-சி-மின்னுடைய இறுதி ஆவணத்தையும் வாசித்தார்.
இறுதி ஆவணம்
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மீட்சிக்கு நமது மக்கள் நடத்துகின்ற போராட்டம் இன்னும் பல பேரிடர்களையும் தியாகங்களையும் கடந்து வரவேண்டும் என்றாலும் நாம் முழு வெற்றி அடைவோம்.
இது உறுதியானது.
அந்த வெற்றிக்குப் பிறகு நமது சகோதரர்கள், அரசியல் ஊழியர்கள், போராளிகள் ஆகியோரைப் பாராட்டுவதற்கும் முதியவர்களையும் அன்புக்குரிய இளைஞர்களையும் குழந்தை களையும் பார்ப்பதற்கும் தெற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் சுற்றுப் பயணம் செய்ய உத்தேசிக்கிறேன். பிறகு நமது மக்கள். சார்பில் சோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்த சகோதர நாடுகளுக்கும் உலக முழுவதிலுமுள்ள நட்பு நாடுகளுக்கும் சென்று

ஹோ-சி-மின் 2O7
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நமது மக்களின் தேசபக்திப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து உதவி செய்த தற்கு நன்றியைத் தெரிவிப்பேன். சீனாவில் டாங் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தைச் சேர்ந்த டுபூ என்ற புகழ்மிக்க கவிஞர் பின்வருமாறு கூறினார்: "எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டுபவர் மிகச் சிலரே.'
இந்த ஆண்டில் எனக்கு எழுபத்தொன்பது வயதாகிவிட்ட காரணத்தால்,அந்த 'மிகச் சிலரில்' நானும் ஒருவன் என்று கூற முடியும். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது எனக்கு உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும் என் சிந்தனை முற்றிலும் தெளிவாக இருக்கிறது. ஒருவர் எழுபது வசந்த காலங்களுக்கும் அதிகமாகப் பார்த்தபிறகு அவருடைய முதுமைக்குத் தக்கவாறு உடல்நலம் கெடுகிறது. இதில் வியப்பில்லை.
இன்னும் எவ்வளவு காலம் நான் புரட்சிக்கும் பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கூடும் என்பதை யார் சொல்ல முடியும்?
நான் காரல் மார்க்ஸ், லெனின் மற்றும் இதர மூத்த புரட்சிக்கா ரர்களுடன் சேரப் போகின்ற நாளை எதிர்நோக்கி இந்தச் சில வரிகளை எழுதுகிறேன். அப்பொழுதுதான் நாட்டு மக்களுக்கும் கட்சித் தோழர்களுக்கும் உலகத்திலுள்ள நண்பர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படாது.
முதலாவதாக, கட்சியைப் பற்றி அதன் நெருக்கமான ஒற்றுமையினாலும் தொழிலாளி வர்க்கம், மக்கள், மற்றும் தந்தையர் நாட்டிற்கு முழுமையான அர்ப்பணிப்பினாலும் நம் கட்சி நிறுவப்பட்ட நாள் முதலாக நம் மக்களை ஒற்றுமைப்படுத்தி அமைப்பு ரீதியாகத் திரட்டி, உறுதியான போராட்டத்தில் வெற்றி மேல் வெற்றி அடைகின்ற வகையில் மக்களுக்குத் தலைமை தாங்க முடிந்திருக்கிறது. −
ஒற்றுமை நம் கட்சிக்கும் மக்களுக்கும் சொந்தமான மிகவும் உயர்ந்த மரபு. மத்திய கமிட்டியிலிருந்து கீழ்மட்டத்தில் செல் அமைப்பு வரை எல்லாத் தோழர்களும் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒரே சிந்தனையைக் கண்ணின் கருமணி போலப் பாதுகாக்க வேண்டும்.

Page 110
208 ஹோ-சி-மின்
கட்சிக்குள் பரந்த ஜனநாயகத்தை அமைத்து விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்தை முறைப் படியாகவும் உறுதியோடும் கடைப் பிடிப்பதே ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு சிறந்த வழி.
நம் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. கட்சியின் ஒவ்வொரு உறுப் பினரும் ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாகக் கடைப் பிடிக்க வேண்டும். உழைப்பு, சிக்கனம், நேர்மை, நேர் கொண்ட பார்வை, பெர்துமக்கள் நீலனுக்கு முழுமையான அர்ப் பணிப்பு, தன்னலமின்ம்ை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். நம் கட்சியில் முற்றான தூய்மை இருக்க வேண்டும். கட்சி மக்களின் தலைவன், மக்களின் விசுவாசமுள்ள ஊழியன் என்ற தகுதியைப் பெற வேண்டும்.
உழைக்கும் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களும் நமது இளைஞர்களும் மொத்தத்தில் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் கட்சிப் பணிக்குத் தயாராக இருக்கிறார்கள், கஷ்டங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, நாட்டு முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள். அவர்களுடைய புரட்சிகர நற்பண்புகளைக் கட்சி பேணி வளர்க்கவேண்டும் சோஷலிசத்தைக் கட்டுவதில் அவர்கள் நமது வாரிசுகளாக வளர்வதற்குப் பயிற்சி அளிக்கவேண்டும்.
எதிர்காலப் புரட்சித் தலைமுறையினருடைய பயிற்சியும் கல்வியும் மிகவும் முக்கியமானது, இன்றியமையாதது.
சமவெளிகளிலும் மலைகளிலும் வாழ்கின்ற நமது உழைக்கும் மக்கள் தலைமுறை தலைமுறையாகத் துன்பங்களை நிலப்பிரபுத்துவ மற்றும் காலனிய ஒடுக்குமுறை மற்றும் சுரண் டலை தாங்கிக் கொண்டிருக்கிறார்க்ள். இவற்றுடன் பல ஆண்டுகளாக நடைபெற்ற போர்களிலும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
எனினும் நம் மக்கள் மகத்தான வீரம், துணிவு, உற்சாகம் , சுறுசுறுப்பு ஆகியவற்றைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து நிபந்தனையற்ற விஸ்வாசத்துடன் கட்சிக்குப் பாடுபட்டிருக்கிறார்கள.' * .

ஹோ-சி-மின் 209
நமது மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சித் திட்டங்களைக் கட்சி தயாரிக்கவேண்டும்.
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்ற போர் நீடிக்கலாம். அப்படியானால் நமது மக்கள் தமது உயிரையும் உடைமைகளையும் இன்னும் அதிகமாகத் தியாகம் செய்யவேண்டியிருக்கும். என்ன நடைபெற்றாலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முழுமையாக முறியடிக்கின்ற வரை போராடுவது என்ற நமது முடிவில் உறுதியாக இருக்கவேண்டும்.
நம் மலைகள் எப்பொழுதும் நம்முடையவை நம் ஆறுகள் எப்பொழுதும் நம்முடையவை நம் மக்கள் எப்பொழுதும் நம்முடன் இருப்பார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்போம் நம் நாட்டை மீண்டும் அமைப்போம் இன்னும் பத்துமடங்கு அழகுடன்.
எவ்வளவு இடர்களும் துன்பங்களும் வழிமறித்தாலும் இறுதி வெற்றி நமதே என்று நம் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெளியேற்றப்படுவது உறுதி. நம் நாடு இணைவதும் உறுதி, தெற்கிலும் வடக்கிலும் உள்ள நம் சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே கூரையின் கீழ் வாழ்வார்கள். நமது நாடு சின்னஞ்சிறிய நாடுதான். ஆனால் பிரான்ஸ் , அமெரிக்கா என்னும் இரண்டு பெரிய ஏகாதிபத்தியங்களை நமது வீரமிக்க போராட்டங்கள் மூலம் தோற்கடித்த பெருமை நமக்கு உண்டு. உலகத்தின் தேசிய விடுதலை இயக்கத்துக்கு சிறந்த பங்களிப்புச் செய்த பெருமையும் நமக்கு உண்டு. w
உலக கம்யூனிஸ் ட் இயக்கத்தைப் பற்றி என் மொத்த வாழ்க்கையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தவன் நான். உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றி நான் பெருமைப்படுகின்ற அதே அளவுக்கு சகோதர கட்சிகளிடையில் தற்பொழுது எடுத்து ليا لإقليم إلكتروTانعكاسا 68 نا பற்றி வேதனைப்படுகிறேன்.

Page 111
21O ஹோ-சி-மின்
மார்க்சிய லெனினியம மற்றும் பாட்டாளிவர்க்க சர்வ தேசியத்தின் அடிப்படையில் பகுத்தறிவுக்கும் உணர்ச்சிக்கும் பொருந்துகின்ற முறையில் சகோதரக் கட்சிகளுக்கு இடையில் மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நமது கட்சி தீவிரமான முயற்சிகளைச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.
சகோதரக் கட்சிகளுக்கும் நாடுகளுக்கும் இடையில் மறுபடியும் ஒற்றுமை ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னைப் பற்றி! என் வாழ்க்கை முழுவதும் நாட்டுக்கும் புரட்சிக்கும் மக்களுக்கும் என் முழு பலத்துடன் மனப்பூர்வமாக உழைத்திருக்கிறேன். இப்பொழுது நான் உலகத்தை விட்டுப் போக நேருமானால், இன்னும் சில ஆண்டுகள் சேவை செய்யமுடிய வில்லையே என்பதைத் தவிர வேறு வருத்தம் எனக்கு இல்லை.
நான் மரணமடைந்த பிறகு பெரிய அளவில் எனக்கு இறுதிச் சடங்குகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் . அதற்காக மக்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம்.
கடைசியாக, மக்கள் எல்லாருக்கும் மொத்தக் கட்சிக்கும் , இராணுவத்துக்கும், பேரன், பேத்திகளுக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் எனது அளவற்ற அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் கட்சி முழுமையும் மக்களும் தமது முயற்சிகளை ஒன்றிணைத்து சமாதான, ஒன்று சேர்க்கப்பட்ட, சுதந்திரமான, ஜனநாயக, வளமான, வியத்நாமை நிர்மாணித்து உலகப் புரட்சிக்குத் தகுதியான பங்களிப்புச் செய்யவேண்டும். இது என்னுடைய கடைசி விருப்பம்.
ஹனோய் ஹோ-சி-மின் 19.5.1969.
ஹோ-சி-மின்னுடைய இறுதி ஆவணம் அவருடைய மாபெரும் பொறுப்புணர்ச்சியை, நம் நாட்டின் எதிர்காலம் கட்சி மற்றும் சோஷலிஸ்ட் நாடுகளின் எதிர்காலம், மொத்த மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவருடைய தீவிரமான அக்கறையை வெளியிடுகிறது.

ஹோ-சி-மின் 211
கட்சி நம் மக்கள் மற்றும் நமது எதிர்காலத் தலைமுறைகளைப் பற்றி அவருடைய கவலையையும் நம்பிக்கையையும் இறுதி ஆவணம் வெளியிடுகிறது.
ஹோ -சி-மின்னுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்று கின்ற பணியில் இலட்சக் கணக்கான நமது மக்கள் உயர்ந்த புரட்சிகர உணர்ச்சியில் ஊறி, எதிர்ப்புப் போரையும் சோஷலிஸ்ட் நிர்மாணத்தையும் தீவிரப்படுத்துகின்ற திட சித்தத்துடன் 1975ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் முன்னேறித் தாக்கி மாபெரும் வெற்றிகளை அடைந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க ஹோ-சி-மின் போராட்டத்தில் (Campaign) முடிவடைந்த போர்களின் விளைவாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் படுதோல்வியுற்றது. தெற்குப் பகுதி முழுவிடுதலை அடைந்தது. அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான நமது மக்கள் நடத்திய நீண்ட, இடர்கள் நிறைந்த தேசபக்கிப் போர் பெரும்புகழுடன் முடிவடைந்தது.
அமெரிக்கர்களை எதிர்த்து நடைபெற்ற போரில் நாம் பெற்ற வெற்றி நமது நாட்டு வரலாற்றில் புகழமிக்க பக்கங்களில் ஒன்றாகும், வியத்நாம் மக்களுடைய புரட்சிகரமான வீரத்துக்கும் மதிநுட்பத்துக்கும் சிறப்பான சின்னமாகும். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை, உலகத்தில் தலைசிறந்த நிகழ்வு என்று உலக வரலாறு அதைப் பதிவு செய்திருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பிறகு வியத்நாம் புரட்சி புதிய கால கட்டத்துக்கு முன்னேறியது. முழு சுதந்திரம், முழு ஒற்றுமையை அடைந்த வியத்நாம் தற்பொழுது சோஷலிஸ்ட் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

Page 112
ப் பகள் 1) பான் போய் - செளவின் காலவரிசை முறை, ஹனோய், 1955, Lu. 30
2) கான் வுவோங் இயக்கம்.1885 மே மாதத்தில் அரசர் ஹாம் நிகி தலைநகரத்தை விட்டு வெளியேறியபொழுது குபென் அரசமரபை மீண்டும் அரியணையில் அமர்த்த நாட்டுப் பற்றுடைய அறிஞர்கள் தலைமையில் வியத்நாம் மக்கள் நடத்திய பிரெஞ்சுஎதிர்ப்பு இயக்கம் அரசர் ஹாம் நிகி கைது செய்யப்பட்ட பிறகு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இயக்கம் படிப்படியாக மறைந்தது.
3) டோங்டூ இயக்கம்: (1904-08)
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பான் பாய் செள மற்றும் சில அறிஞர்கள் தலைமை வகித்த பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கம். ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்திய இயக்கம். தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரெஞ்சுக்காரர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஜப்பானியர்களுடைய உதவியைப் பெற வேண்டும் என்று கூறி இராணுவப் பயிற்சிக்கு இளைஞர்களை ஜப்பானுக்கு அனுப்பியது. ஆரம்பத்தில் சில ஜப்பானியப் பிரமுகர்கள் இந்த இயக்கத்துக்கு உதவியளித்தார்கள். ஆனால் பிரான்ஸ் - ஜப்பான் உடன்படிக்கை ஏற்பட்டபிறகு வியத்நாமிய மாணவர்களும் இயக்கத்தின் தலைவர்களும் ஜப்பானிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அதன் பிறகு, டோங்-டூ இயக்கம் முடிவடைந்தது.
4) டோன்ஹ்-கின்ஹ-ந்கியா- துக் இயக்கம்: முதலாளித்துவ ஜனநாயகப் போக்குடைய பல தேசபக்தர்கள் கலாசார மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக ஹனோயில் நிறுவிய இயக்கம். 1907 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப்பிறகு பிரெஞ்சு அதிகாரிகளால் நசுக்கப்பட்டது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

ஹோ-சி-மின் 213
5) மான்டெல்ஸ்டாம், “கம்யூனிஸ்ட் போராளி, குயென் அய் கோக்குடன் சந்திப்பு'-ஸ்பார்க் பத்திரிகை (சோவியத் யூனியன், எண்: 39, 23.12.1923)
6) 1908இல் நடைபெற்ற விவசாயிகளின் வரி- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததற்காக காலனிய அதிகாரிகள் அவரைப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றியதாக மற்றொரு ஆவணத் தகவலும் உண்டு.
7) குயென் அய் கோக் 'வர்க்க ஒற்றுமை - கதைகளும் காட்சிகளும் (வியத்நாம் மொழியில்) ஹனோய், 1974, ப. 44
8) ஹோ-சி-மின் 1918ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரான்சுக்குத் திரும்பியதாக சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
9) புயிலாம்: "ஹோ மாமாவுடன் பாரிசில் ஒரு சந்திப்பு'- பாக் -ஹோ-(ஹோ மாமா) ஹனோய், 1960,ப. 37.
10) ஹோ-சி-மின்: "நான் லெனினியத்துக்கு வந்த பாதை’- சுதந்திரம், விடுதலை மற்றும் சோஷலிசத்துக்கு (வியத்நாமிய மொழியில்) ஹனோய், 1970, ப. 228.
11) ஹோ-சி-மின், டூர்ஸ் காங்கிரசில் சொற்பொழிவு, மேலது, U.16.
12) ஹோ-சி-மின் மேலது ப.229 13) இந்தோ-சீனா என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகள் 'கம்யூனிச ரிவ்யூ" சஞ்சிகையின் இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டன. (எண்: 14-15, 1921 ஏப்ரல் -மே மாதங்கள்)
14,15,16) மேலே கூறப்பட்ட இரண்டு கட்டுரைகளிலிருந்து. 17) குயென்- அய்-கோக் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்குக் கடிதம் 1923, கட்சி வரலாற்று ஆவணங்கள்.
18,19) குயென்-அய் - கோக், "குற்றவாளிக் கூண்டில் காலனியாதிக்கம் (வியத்நாமிய மொழியில்) ஹனோய், 1975, L. 175.

Page 113
214 ஹோ-சி-மின் 20) மேலது ப. 174. . . . . . . . . -----
21) "லெ பரியா பத்திரிகை" பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. தலைப்பு மட்டும் பிரெஞ்சு, அராபிக் மற்றும் சீனமொழிகளில் அச்சிடப்பட்டது. நான்கு ஆண்டுகளில் (1922-26) 38 இதழ்கள் வெளியிடப்பட்டன.
22) லெ பரியாவின் முதல் இதழ், 1.4.1922.
23) சின்ஹோசிபட்டா, "ஹோ-சி-மின் ஒரு சித்தாந்தி’.
24-25) டிரான் டான் டீன்,ஜனாதிபதி ஹோ-சி-மின் வாழ்க்கை பற்றிய கதைகள் (வியத்நாமிய மொழியில்) ஹனோய், 1975, ப. 45.
26) 'குற்றவாளிக் கூண்டில் பிரெஞ்சுக் காலனியாதிக்கம்' என்ற நூல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு பாரிசில் 1925 இல் வெளியிடப்பட்டது. சில பகுதிகள் "லெ பரியா' இதழில் 1922 -24ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிரசுரிக்கப்பட்டன. 1 ம்
ஹோ-சி-மின் இந்த நூலை 1920 சனவரி மாதத்தில் எழுதினார் என்று 'சமூக விஞ்ஞான ரிவ்யூ" (எண்: 5, 1978 டிசம்பர், பாரிஸ்) தெரிவிக்கிறது. ஹோ-சி-மின் இந்த நூலுக்கு முதலில் 'ஒடுக்கப்பட்டோர்' என்ற தலைப்பைக் கொடுத்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
27-28) குற்றவாளிக் கூண்டில் பிரெஞ்சுக் காலனியாதிக்கம், u.162.
29) ஹோ-சி-மின் 1922-1925ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதிய சிறுகதைகளும் கட்டுரைகளும் "லெ பரியா' 'லெஹ்யு மனைட்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. அவை வியத்நாமிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 'கதைகளும் காட்சிகளும் என்ற தலைப்பில் 1974இல் ஹனோயில் வெளியிடப்பட்டன. 1922இல் அவர் எழுதிய 'மூங்கில் பறவை நாகம்' என்ற நாடகத்தின் கையெழுத்துப் பிரதி அழிந்துவிட்டது.
அதன் சுருக்கம் பின்வருமாறு:
"ஒரு மூங்கில் மரத்தின் கிளைகள் வளைந்து போய்விட்டன. ஒரு பழம்பெரும் கலைஞர் அந்த மூங்கிலைக் கொண்டு பலவிதமான

ஹா-சி-மின் - 215 - ܐ -- ܕ -- ܐ - ܒ - ܓ.
பிராணிகளைச் செதுக்கினார். அவற்றில் பறவை நாகம் ஒன்று. எனினும் அவை பிராணிகள் அல்ல, வெறும் மூங்கில் குச்சிகளே. அவற்றால் பயனில்லை."
வியத்நாமின் பொம்மை அரசர் காய் டின் பிரான்சின் காலனி நாடுகளைப் பற்றிய கண்காட்சியின் துவக்க விழாவுக்கு பாரிசுக்கு, வந்தார். அதனை ஒட்டி எழுதப்பட்ட இந்த நாடகத்தை பிரெஞ்சு அரசாங்கம் தடை செய்தது எனினும் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒரு கிளப்பில் நாடகம் நடைபெற்றது. பிரெஞ்சுக் கலை விமர்சகர்கள் அதை வரவேற்றார்கள்.
30-31) மேலது.
32-33) குற்றவாளிக் கூண்டில் காலனியாதிக்கம் ப. 119.
34) குயென் அய்கோக்,விவசாயிகள் அகிலத்தின் முதலாவது காங்கிரசில் நிகழ்த்திய உரை, அக்டோபர் 1923.
35) குயென் அய்கோக் - சீனாவில் விவசாயிகள் நிலைமை 'காலனியாதிக்கத்துக்குக் கண்டனம்' என்ற நூலில் (வியத்நாமிய மொழியில்) உள்ளது.
36) குயென் அய்கோக், மேலது. ப.123.
37) ஹோ-சி-மின், அக்டோபர் புரட்சியின் தாயகத்தில் நியு டைமஸ், (மாஸ்கோ) எண் 43, அக்டோபர் 1977
38) குயென் அய்கோக் , “லெனினும் காலனி நாடுகளின் மக்களும், குற்றவாளிக் கூண்டில். மேலது, ப. 86.
39) அவர் பிரான்சிலிருந்து வெளியேறி சில ஆண்டுகளாகி விட்டன. எனவே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த காங்கிரசுக்குப் பிறகு அவர், சிகப்பு அகிலம், மகளிர் அகிலம் இளைஞர் அகிலம், புரட்சிப் போராளிகளின் ஆதரவு அகிலம் ஆகியவற்றின் காங்கிரஸ்களில் கலந்து
கொண்டார். :مزین بالا ... ( د با آ آر. ناوه . "A n L1 مالا( ،
40,41,42,-43) குயென்-அய்-கோக் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 5வது காங்கிரசில் சொற்பொழிவு,1924.
44) குயென் அய் கோக் - பிரெஞ்சு எதிர்ப்புப் போர், மேலது.ப.22.

Page 114
216 ஹோ-சி-மின்)
45) குயென் அய்கோச் விவசாயிகள் அகிலத்தின் முதல் காங்கிரசில் சொற்பொழிவு, அக்டோபர் 1923. ܐ
46) 1923 இல் புதிய வியத்நாம் இளைஞர் கழகம் என்ற புரட்சிகரஸ்தாபனம் கான்டன் நகரத்தில் நிறுவப்பட்டது.
47) டிரான் டான் டியென், மேலது ப. 64. 48) அரசியல் ஊழியர் பயிற்சிப் பள்ளியை ஹோ - சி-மின் 1925ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கான்டனில் நிறுவினார்.
49) ஹோ-சி-மின் புரட்சிகரப் பாதை.
50) லெதுவான் , "வியத்நாம் புரட்சியின் சில கூறுகள் (வியத்நாமிய மொழியில்) ஹனோய், 1967, ப.53,
51) காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் புரட்சி இயக்கம் பற்றிய ஆய்வுரை (கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது)
52) 1925 ஜூன் முதல் 1927 ஏப்ரல் முடிய 88 இதழ்கள் பிரசுரிக்கப்பட்டன. 1927 ஏப்ரலில் சியாங் கே ஷேக் சீனப் புரட்சிக்காரர்களை அச்சுறுத்தினார். கான்டன் நகரத்திலிருந்த வியத்நாமியர்களின் தேசபக்த ஸ்தாபனத்தைத் தடை செய்தார். ஹோ - சி-மின் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டபடியால் அவர் இந்த வார இதழுக்கு ஆசிரியராக இல்லை. கான்டனிலிருந்து தான் ஹ் நீன் என்ற வார இதழை வெளியிட்டதுடன் 1926 டிசம்பரில் “தொழிலாளர்களும் விவசாயிகளும்' என்ற இதழை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. (பிரதி கிடைக்கவில்லை), 1927 பிப்ரவரியில் புரட்சி வீரன்' என்ற இதழையும் (2ம் இதழ் மட்டும் கிடைத்துள்ளது) வெளியிட்டார். என்று சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
புரட்சிவீரன் இதழின் அட்டையில் இரும்புத் தொப்பியணிந்த போர் வீரனுடைய படம் அச்சிடப்பட்டிருக்கிறது. அவன் பத்திரிகையின் பெயர் எழுதப்பட்டுள்ள கொடியை வலது கையில் வைத்துக்கொண்டிருக்கிறான். இந்தப் பத்திரிகை வியத்நாமின் இராணுவ வீரர் பாசறைகளிலும் வெளிநாட்டிலிருந்து வியத்நாம் படையினர் மத்தியிலும் வினியோகிக்கப்பட்டது. இரண்டாவது

ஹோ-சி-மின் -- 217
இதழில் புரட்சியில் வன்முறை மார்க்சிய லெனினிய நோக்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. புரட்சி வெற்றி பெறுவதற்கு வன்முறை யைப் பயன்படுத்த வேண்டும், ஆதிக்க சக்திகளின் வன்முறையைப் புரட்சிகர சக்திகளின் வன்முறையினால் எதிர்க்க வேண்டும்.
53) குயென் அய் கோக் வெளியிட்டதான்ஹ் நீன் என்ற இதழின் செல்வாக்கை பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். வியத்நாமிலும் வெளிநாடுகளிலும் உள்ள புரட்சிக்காரர்களும் அனுதாபிகளும் அதைப் படித்தார்கள். வாசகர்கள் அந்தப் பத்திரிகையைப் பிரதிசெய்து மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள்.
54) விவசாயிகள் அகிலத்தின் தலைமைக்குழு 13.8.1925இல் தோழர் குயென் அய் கோக்குக்கு ஆங்கில மொழியில் எழுதிய இரகசியக் கடிதம்.
55) மாநாட்டில் இந்தோ-சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அன்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்தோ-சீன கம்யூனிஸ்டுக் கழகம் தன் பிரதிநிதியை அனுப்பமுடியவில்லை.
56) கட்சியின் வரலாறு பற்றிய ஆராய்ச்சி கமிஷன் (CRPH)
57-58) ஹோ-சி-மின் கட்சியின் 30 ஆண்டு வரலாறு' மேல U.221. A
59-60) குயென் அய் கோக் சிகப்பு ந்கே டின்ஹ் சோவியத் (19.2.1931)
61) ஹோ-சி-மின் 'முப்பது ஆண்டு வரலாறு, மேலது, ப. 221.
62) குயென் அய்கோக், விவசாயிகளுடைய புரட்சிகர முயற்சியில் தவறுகளும், குறைகளும் (CRPH)
63) குயென் அய் கோக், சிகப்பு ந் கே டின் ஹ் சோவியத் (19.2.1931)
64) ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணி,
65-66) குயென் அய் கோக் 16.1.1935 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்கு நாடுகளின் பிரிவுக்கு எழுதிய கடிதம் (CRPH)

Page 115
218 ஹோ-சி-மின்
67) நமது குரல், எண்: 13, (9.4.1939). 68) மேலது. எண்: 23 (23.9.1939) 69) பிரான்சில் மக்கள் முன்னணி ஆட்சி செய்த காலகட்டம். 70-71) ஹோ-சி-மின், ஜனநாயக முன்னணிக் காலகட்டத்தில் (1936-39) கட்சிக் கொள்கை பற்றி கருத்துரை.
72) நம் குரல் எண்: 23 (23.9.1939) 73) ஹோ -சி-மின் கட்சியின் 2வது காங்கிரசுக்கு அரசியல் அறிக்கை (பிப்ரவரி, 1951)
74-75) ஹோ-சி-மின் கவிதைகள் (வியத்நாமிய மொழியில் ஹனோய்,1967, பக்கங்கள் 9-10. )م
76) CRPHநிறுவப்பட்ட 15வது ஆண்டு விழாவில் டுருவோங்சின்ஹ் சொற்பொழிவு.
77) ஹோ-சி-மின், கட்சியை வளர்ப்பது எப்படி? "ஹனோய் 1970, Lu. 47.
78) குயென்-அய்-கோக், "சகோதரர்களுக்கு சில அறிவிப்புகள் ஹாக்டாப் ரிவியூ, செப், 1971.
79) வோ குயென் கியாப், "ஹோ-சி-மின் வியத்நாம் புரட்சி இராணுவத்தின் தந்தை, ஹனோய் 1960, ப. 188.
80) ஹோ-சி-மின், சிறை டைரி, (கவிதைகள்) ஹனோய், 1960. 81-82) டுருவோங் - சின் ஹ் , ஹோ-சி-மின்; வியத்நாம் தொழிலாளிவர்க்கம் மற்றும் மக்களுடைய அன்புத் தலைவர், ஹனோய், 1961, ப.60 மற்றும் 61.
83) ஹோ-சி-மின், தேர்வு நூல்கள் மேலது. ப.47. 84) ஹோ-சி-மின் சகோதரர்களுக்குக் கடிதங்கள்' (1939-45) மேலது. 1963, ப.447,
85) வியெட் பாக் பிரதேசம் காவோ பாங், பாக் லான், லாங் சோன் ஹா கியாங், டுயென் குவாஹ், தைந்குயென் ஆகிய பழைய மாகாணங்களைக் கொண்டிருந்தது.

ஹோ-சி-மின் 219
86-87) வோ ந்குயென் கியாப், 'வரலாற்றுப் பாதைகள்' மேலது, u.203.
88) குயென்னுவோங் பாங்: "ஹோ மாமாவுடன் சந்திப்புகள் ஹனோய், 1975, ப.55)
89) தேசிய காங்கிரஸ் தீர்மானம் CRPH 3ஆம் தொகுதி ஹனோய், 1977, ப.556.
90) ஹோ-சி-மின், புரட்சிகர எழுச்சிக்கு அறைகூவல், தேர்வு நூல்கள், மேலது, ப.49.
91) ஹோ-சி-மின், கட்சியின் 2வது தேசிய காங்கிரசுக்கு அரசியல் அறிக்கை கட்சி காங்கிரஸ் ஆவணங்கள் "CRPH ஹனோய் 1956, ப.28.
92) ஹோ-சி-மின், தேர்வு நூல்கள் மேலது. ப.235.
93) ஹோ-சி-மின், கட்சியின் 2வது காங்கிரஸ் அரசியல் அறிக்கை தேர்வு நூல்கள், 1973, ப. 109.
94) ஹோ-சி-மின், ‘சுயவிமர்சனம் ஹோ-சி-மின் அறைகூவல்கள் முதல் தொகுதி, ஹனோய், 1958, ப. 5.
95) ஹோ-சி-மின், பஞ்சத்தை எதிர்க்க நாட்டு மக்களுக்குக் கடிதம், தேர்வு நூல்கள், ஹனோய், 1960, ப. 220.
96) ஹோ-சி-மின், "மக்கள் வாக்களிக்க வேண்டுகோள்' தேர்வு நூல்கள், (வியத்நாமிய மொழியில்) ஹனோய், 1961 ப.66.
97) ஹோ-சி-மின், மக்கள் கமிட்டிக்குக் கடிதம், மேலது, 1960, Lu. 215.
98) ஹோ-சி-மின், பள்ளி ஆண்டு தொடக்கத்தின் போது பள்ளிக் குழந்தைகளுக்குக் கடிதம் தேர்வு நூல்கள், மேலது, ப.208.
99) லீ துவோங் கியெட் (1019-1105) இராணுவ தளபதி, அரசியல்வாதி, சீன ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடியவர்.
敦 100) ஹோ-சி-மின், தெற்குப் பகுதியிலுள்ள சகோதரர்களுக்கு வேண்டுகோள், தேர்வு நூல்கள், 1ம் தொகுதி 1958, ப.44,

Page 116
220 ஹோ-சி-மின்
101) ஹோ - சி-மின், பேச்சுவார்த்தைகளுக்கு பிரான்சுக்குப் புறப்படு முன்பு தெற்கில் வாழும் சகோதரர்களுக்கு செய்தி, 1960, மேலது. ப. 238.
102) ஹோ-சி-மின், மேலது. ப. 238
103) வோ குயென் இயாப், வரலாற்றுத் திருப்புமுனைகள், ஹனோய், 1977, ப. 457,
104) ஹோ - சி-மின், பிரான்சிலிருந்து திரும்பியபிறகு மக்களுக்குப் பிரகடனம் தேர்வுநூல்கள், மேலது. 1960 ப. 224.
105) வோ குயென் கியாப், மேலது, 1977, ப.533 .
106-107) ஹோ-சி-மின் நமது இன்றைய அவசரக் கடமை, 1946 Bauud Luff (CRPH)
108) ஹோ - சி-மின், ‘தேசிய எதிர்ப்புப் போருக்கு அறை கூவல் மக்கள் இராணுவத்துடன் ஹனோய், 1975, ப.22.
109) ஹோ-சி-மின், புத்தாண்டுக்கு ஒரு மகிழ்ச்சிக் கவிதை மேலது. ப.129. w
110) ஹோ-சி-மின், வியட் பாக் மலைப் பிரதேசம் (வியத்நாமிய மொழியில்) (1945-75) ஹனோய், 1976 ப.10.
111) ஹோ -சி-மின் இரவுக் காட்சி ஹோமாமாவின் கவிதைகள், ஹனோய், 1975, ப.112.
112) ஹோ-சி-மின் தேசிய எதிர்ப்புப் போரில் ஒரு ஆண்டு தேர்வு நூல்கள் மேலது. ப.284.
113) XYZ, வேலைமுறையை மாற்றுதல், ஹனோய், ப.33.
114) ஹோ-சி-மின், தேசபக்திப் போட்டிக்கு அறைகூவல் மேலது, ப.294
115) ஹோ-சி-மின், புத்தாண்டு மகிழ்ச்சிக் கவிதை, மேலது u.228
116) ஹோ-சி-மின், போலீஸ், சுய-பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் கொரில்லாக்களுக்கு செய்தி, மேலது.ப.179.

ஹோ-சி-மின் 221
117) ஹோ - சி-மின், டாக்டர் வு டின் ஹ் டுங்குக்கு கடிதம், மேலது. ப.140.
118) ஹோ-சி-மின், பிணியாளர்களுக்குக் கடிதங்கள், மக்கள் இராணுவத்துடன் ஹனோய், 1975, ப.89.
119) ஹோ-சி-மின், அறைகூவல்கள் மேலது. ப. 296.
120) ஹோ-சி-மின், கொரில் லாப் போர்முறை பற்றிய மாநாட்டில் உரை மேலது ப.221.
121) மேலது, ப. 224
122) டோங் கே. நெடுஞ்சாலை எண் 4 இல் பிரெஞ்சுக்காரர்களுடைய இராணுவ முகாம். 1950 எல்லைப்புறப் படையெடுப்பில் முதல் தாக்குதலை நடத்துவதற்கு நமது உயர்மட்டத் தலைமை தேர்வு செய்த இடம்.
123) ஹோ-சி-மின், தேசிய எதிர்ப்புப் போரின் 4வது ஆண்டுவிழா அறைகூவல், மேலது, ப. 346.
124) ஹோ-சி-மின்: ‘மாநாட்டுத் தயாரிப்புக் குழுவுக்குக் கடிதம், கட்சியின் 2வது காங்கிரஸ் ஆவணங்கள், (CRPH) ஹனோய், 1965, Lu. 8.
125) கட்சியின் 2வது காங்கிரஸ் அரசியல் அறிக்கை, மேலது, பக்கங்கள் 31,32.
126) அரசியல் அறிக்கை, மேலது, ப.41
127) 3.3.1951ஆம் நாளன்று ஹோ-சி-மின் நிகழ்த்திய சொற்பொழிவு.
Α 128) ட்ருவோங்-சின்ஹ், கட்சியின் 2வது காங்கிரஸ் அறிக்கை (11.3.1951)
129-130) ஹோ-சி-மின், வியட்மின் லீட் வியெட் இணைப்பு மாநாடு, (சொற்பொழிவு) மேலது, ப.120-121.
131) ஹோ-சி-மின், 1951ஆம் ஆண்டில் ஒவியக் கண்காட்சியில் பங்கெடுத்தவர்களுக்கு செய்தி, தேர்வு நூல்கள், மேலது, ப. 386.

Page 117
222 ஹோ-சி-மின்
132) 2வது தேசிய கலாசார மாநாட்டில் ஹோ - சி-மின் அறிக்கை.
133) ஹோ-சி-மின், கட்சியின் முதல் சித்தாந்த மாநாட்டில் தொடக்கஉரை, மேலது, ப.426. ઇં૦ ૨
134) வியட்நாம் மக்கள் இராணுவத்தின் வரலாறு, ஹனோய், 1974, u.519.
135) வடமேற்குப் பகுதி என்பது இன்றுள்ள லாய் செள, சோன்லா, ஹோவாங் லியா ஸோன் ஆகிய மாகாணங்களைக் கொண்டது.
136) ஹோ-சி-மின், முதல் சித்தாந்த வகுப்புக்குத் தொடக்க உரை, வடமேற்குப் படையெடுப்புத் தயாரிப்பு மாநாட்டில் சில கட்டளைகள், மேலது. ப.431.
137) ஹோ - சி-மின், அரசியல் ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடிதம், மேலது. ப. 316. × 138) ஹோ-சி-மின், முதல் தேசிய அசெம்பிளியின் மூன்றாம் அமர்வுக்கு (1.12.1958) அளித்த அறிக்கை, மேலது, ப. 149
139) ஹோ-சி-மின், தளபதி கியாப்புக்கு அளித்த கட்டளை (1953 டிசம்பர்) வியத்நாம் மக்கள் இராணுவத்தின் வரலாறு, ஹனோய், 1974, ப.557, از به . . ...
140) உலகம் ஹோ-சி-மின்னுக்குப் புகழஞ்சலி செய்கிறது 3ஆம் தொகுதி, 1970, ப.238
141) ஹோ-சி-மின் "அறிக்கை" (27-3-1964) இல் நடைபெற்றி விசேஷ அரசியல் மாநாடு, ஹனோய்.
142) ஹோ-சி-மின், வெளிநாட்டு நிருபருக்கு பதில் (26.11.1953) மேலது. 1960 ப.457
143) கட்சியின் மத்திய கமிட்டியின் செயற்குழு 27.12.1953 இல் வெளியிடப்பட்ட கட்டளை, எண். 92 (TTU)

ஹோ-சி-மின் 223
144) ஹோ-சி-மின் வியத்நாம் (TTU) தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியின் 6வது விரிவடைந்த கூட்டத்தில் அளித்த அறிக்கை.
145) பாம் வான் டோங் ஹோ -சி-மின் மக்களின் பிம்பம்
மாமேதை மேலது. 1974, ப.16.
146-147) ஹோ மாமாவும் வின்ஹ் பூவின்ஹ் பூவும், கலாசாரப் u Goof6MdLouuio, 1975, Lu. 78.
148) ஹோ-சி-மின், தேசிய அசெம்பிளியின் இரண்டாவது தொடர் கூட்டத்தின் 8வது அமர்வில் தொடக்கவுரை (1958 ஏப்ரல்)
தேர்வு நூல்கள், ஹனோய், 1960 ப.677.
149) ஹோ-சி-மின், கட்சியின் 30 ஆண்டு நடவடிக்கைகளின் வரலாறு, மேலது, ப.215. .
150) ஹோ-சி-மின், கட்சியின் மத்திய கமிட்டியின் 7வது விரிவடைந்த கூட்டத்தில் சொற்பொழிவு (1962 ஏப்ரல்) சோஷலிஸ்ட் ரெய் புரட்சியும், நிர்மாணமும், ஹனோய் 1976, u.153.
151) ஹோ-சி-மின், கட்சியின் மத்திய கமிட்டியின் 7வது விரிவடைந்த கூட்டத்தில் அறிக்கை, மேலது, ப.121.
152) ஹோ-சி-மின், உற்பத்தி மற்றும் பஞ்சத்தைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் பற்றி மாநாட்டில் அறைகூவல்கள், 3ஆம் தொகுதி ஹனோய் 1958, ப.185.
153) ஹோ - சி-மின், வடக்கில் நிலச்சீர்திருத்தம் வெற்றி அடைந்ததை ஒட்டி கிராமமக்களுக்கும் ஊழியர்களுக்கும் கடிதம், தேர்வு நூல்கள், ஹனோய், 1960, ப. 599
154-156) ஹோ-சி-மின், தொழிற்சங்க ஊழியர்கள் பயிற்சிப் பள்ளியில் சொற்பொழிவு (19.1.1957) ஹோ-சி-மின் அறை கூவல்கள் 4ம் தொகுதி 1958, ப.44,
155) கல்வியைப் பற்றி ஜனாதிபதி ஹோ, கல்வி வெளியீட் சம் ஹனோய்,1962 ப.194.

Page 118
224 ۔۔۔۔ ஹோ-சி-மின்
157) டிரான்லுக், எல்லோரும் கடும் உழைப்புச் செய்தால் அமோக விளைச்சல் ஏற்படும். ஹனோய், 1963, ப.12.
158-159) ஹோ-சி-மின், சித்தாந்த செயல்முறை திருத்தல் மாநாட்டில் சொற்பொழிவு (1961 வசந்தகாலம்) ஹாக் டாப் filogy, 6t 6öT : 4, 1961, Lu.8. لو۔
160) ஹோ-சி-மின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்போம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம், ஊழல் வீணாக்குதல் மற்றும் அதிகாரவர்க்கத் தன்மையை எதிர்ப்போம், ஹனோய்,1968, ப.35.
161) ஹோ-சி-மின், முப்பது ஆண்டுகள். மேலது,1970 .270-71.
162) ந்கே டின்ஹ் மாகாணத்தில் கட்சியின் வரலாற்றைப் பற்றிய கமிஷன் (CRPH) ஆவணங்கள்.
163) ஹோ-சி-மின், தேசிய அசெம்பிளியின் 8வது கூட்டத்தில் தந்த அறிக்கை (16.4.1958) ஹோ-சி-மின் அறைகூவல்கள், 5ஆம் தொகுதி, 1960, ப. 43-44
164) ஹோ-சி-மின் , வியத்நாம் மக்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் அரசியல் ஊழியர்கள் மத்தியில் ஆற்றிய சொற்பொழிவு,மேலது .ப.20.
165) டிரான் லுக் 'டெட் புத்தாண்டில் மரம் நடுவோம்' நாம்தான் தினசரி, 28.11.1959.
166) ஹோ-சி-மின், "மாஸ்கோவில் வியத்நாம் மாணவர்கள் மற்றும் அரசியல் ஊழியர்கள் மத்தியில் ஆற்றிய சொற்பொழிவு ஹோ-சி-மின் உரைகள், ப.159
167) ஹோ-சி-மின், திருமணங்கள் மற்றும் குடும்பங்களைப் பற்றிய மசோதாவை விவாதிக்கின்ற மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு. மேலது. ப.281.
168) ஹோ-சி-மின், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை ஆசிரியர்கள் 2000 நபர்களுக்கு அரசியல் வகுப்பு, கல்வி அமைச்சகம் (13.9.1958) நாம் தான்' தினசரி, 14.9.1958.

ஹோ-சி-மின்* 225
w
169) ஹோ-சி-மின், மூன்றாவது தேசிய காங்கிரசில் தொடக்க உரை (5.9.1960) சுதந்திரம். மேலது, 1970, ப.232.
170) ஹோ - சி-மின், மார்க்சிய லெனினியக் கட்சிகளின் சித்தாந்த ஒற்றுமையை வளர்ப்போம் , பிராவ் தா, (3.8.1965) மேலது, ப. 595
171) ஹோ - சி-மின், கட்சி நிறுவப் பட்ட 30வது ஆண்டு விழாவில் தொடக்கவுரை தேர்வு நூல்கள், மேலது. ப.767. 恐
172) ஹோ-சி-மின், கட்சியின் 3வது காங்கிரசில் தொடக்கவுரை (5.9.1960) சுதந்திரம். மேலது, ப.234
173) ஹோ-சி-மின், நாடு முழுவதிலுமுள்ள சகோதரர்களுக்கு: கடிதம் ஜனாதிபதி ஹோவும் தெற்குப் பகுதியும், ஹனோய் 1975, Lu. 61-62.
174) கட்சி மத்திய கமிட்டியின் 15வது விரிவடைந்த கூட்டம் (15.1.1959) இந்த முக்கியமான தீர்மானத்தை விவாதித்து நிறைவேற்றியது. y
175) ஹோ-சி-மின், விசேஷ அரசியல் மாநாட்டில் அளித்த அறிக்கை "சுதந்திரம். ' மேலது, ப. 262.
176) 'வியத்நாம் ஜனநாயகக் குடியரசின் தலைவர் அவசியமேற்பட்டால், நாட்டை எதிர்நோக்கியுள்ள முக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதற்கு விசேஷ அரசியல் மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமை வகிக்கலாம்' என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 67வது ஷரத்து அதிகாரமளிக்கிறது.
177) ட்ருவோங் - சின் ஹ் , விசேஷ அரசியல் மாநாட்டில் தொடக்கவுரை (27.3.1964).
178) பாம் வான் டோங், விசேஷ் அரசியல் மாநாட்டில் அறிக்கை, நாம் தான் தினசரி (29.3.1964).
179) குரங்கு ஆண்டின் கடைசி மாதத்தில் (1285ஆம் ஆண்டு சனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை) அரசர் டிரான், தான்ஹ் டோன்
மூத்தோர்களின் பிரதிநிதிகளைத் தலைநகரத்துக்கு அழைத்து அரண்மனையில் . விருந்தளித்தபிறகு மங்கோலிய

Page 119
226 ஹோ-சி-மின்
ஆக்கிரமிப்பாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கேட்டார். 'போர் செய்வதா அல்லது போர் செய்யாமலிருப்பதா என்று அரசர் கேட்டபொழுது ‘போர் செய்யவேண்டும்' என்று மூத்தோர்கள் ஒருமனதாகக் கூறனார்கள்' என்று பழைய வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
180) ஹோ - சி-மின், சுதந்திரத்தையும் விடுதலையையும் காட்டிலும் விலைமதிப்பற்றது வேறு இல்லை, ஹனோய், 1975 U.72.
181) புரட்சியைப் பற்றி ஆராய்ந்த கட்சியின் உயர் மட்ட ஊழியர்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு (16.1.1966) (CRPH)
182-183) தேசிய அசெம்பிளியின் இரண்டாவது அமர்வில் (3வது சட்டப் பேரவை) அறிக்கை, 10.1.1965, சுதந்திரம். மேலது. U.274-275
184) ஹோ-சி-மின், '20.7.1968 இல் வெளியிட்ட அறைகூவல், மேலது.ப.313.
185) ஹோ-சி-மின், தேர்வு நூல்கள், 1973 ப308.
186) ஹோ - சி-மின், வியத்நாம் மக்கள் இராணுவம் நிறுவப்பட்ட 20வது ஆண்டுவிழாவில் சொற்பொழிவு (22.12.1964), L.270.
187) ஹா-ஹoய் - கியாப், ஹோ மாமா வியத்நாமின் தலைக சிறந்த இளைஞர், ஹனோய், 1977, ப. 107-108. ;
188) ஹோ-சி-மின், கட்சியின் மத்திய கமிட்டியின் 12வது விரிவடைந்த கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்த உயர்மட்டெ ஊழியர்கள் மாநாட்டில் செரற்பொழிவு (16.1.1966) (CRPH)
189) ஹோ - சி-மின், வியத்நாம் மக்கள் இராணுவம் நிறுவப்பட்டதையும் தேசிய எதிர்ப்புப் போரையும் கொண்டாடுகின்ற விழாவில் சொற்பொழிவு (22.12.1967) நாம்தான், தினசரி, (26.12.1967).
190-191) ஹோ-சி-மின், தேர்வு நூல்கள், ஹனோய்,1973, u.347.

o ܩܰ، ஹோ-சி-மின் 227
192) ஹோ-சி-மின், தேசிய அசெம்பிளியின் 2வது அமர்வில் 10.4.1965ஆம் நாளன்று நிகழ்த்திய உரை.
193) ஹோ-சி-மின், வழக்குரைஞர் குயென் ஹஸ் தோவுக்கு தெற்கு வியத்நாம் தேசிய விடுதலை முன்னணியின் அரசியல் தீர்மானத்தைப் பற்றி 6.3.1967ம் நாளன்று எழுதிய கடிதம் . சுதந்திரம். மேலது. ப.295.
194) ஹோ -சி-மின், 20.7.1968 இல் வெளியிட்ட அறிக்கை மேலது. ப. 312.
195) தெற்குவியத்நாம் தற்காலிக புரட்சி அரசாங்கத்துக்கு ஹோ -சி-மின் மற்றும் பாம் வான் டோங் 11.6.1969இல் அனுப்பிய வாழ்த்துச் செய்தி நாம்தான்' தினசரி, 12.6.1969.
196) ஹோ-சி-மின், தேர்வு நூல்கள், ஹனோய், 1973, ப.335.
197) ஹோ-சி-மின், வியத்நாம் குடியரசின் 6வது அமர்வில் அளித்த அறிக்கை, மேலது, ப.251.
198) ஹோ-சி-மின், வியத்நாம் தொழிலாளர் கட்சியின் 3வது தேசிய காங்கிரசின் தொடக்கவுரை, (5.9.1960) மேலது. ப. 234,
199) ஹோ-சி-மின், தேர்வுநூல்கள், ஹனோய், 1973, ப. 357.
200) ஜனாதிபதி ஹோ-சி-மின் 2.9.1969ஆம் நாளன்று மரணமடைந்தார் என்று வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி வெளியிட்ட ஜனாதிபதி ஹோ-சி-மின்னுடைய இறுதி ஆவணம்" என்ற பிரசுரம் தெரிவிக்கிறது (ஹனோய், 1995, U.10).
(பின் குறிப்பு: CRPH என்பது கட்சியின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சிக் கமிஷனைக் குறிக்கிறது.)

Page 120


Page 121


Page 122
National Flag
நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) லிமிடெட் 41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை-600 098
 

வ வி 0ே ம ய ர ன த ம து தோழமையால் வியத்நாம் புதிய பூமி காண்பது உறுதி யெனும் வாதம் கொண்டு போராடி வெற்றி யும் கண் டவர்
Earl IT-F-Isler.
அ வர் நிகழ் த் தி ய போராட்டங்களும், பிரகடணங்களும் பூமியின் சுற்றுவட்டப் பாதையையே ரும்பி பார்க்க வைத்துவிட்டது Mestol Lib.
தொழி லா கார் சமுதாயம் மக்களின்பால் பாய்ச்சிய ஈரமான கொள்கையால் இரண்டும் ஒன்றிணைந்து புத்தெழுச்சி
பெற்றது வரலாறு.
ஏ க ம தி ப த் தி ய ம் ஒ பூழி ய வே ண் டு ம் SONUCCIO, மீதுள்ள
அடக்குமுறை அறுபட வே எண் டும் எனும் Guriosong FITSDIGCOIII'll I போர்வாளாய் சூரியக் கதிரில் பளபளக்கும் கம்பீரம்.
ஹோ-சி-மின் தன் Min GRE / GT (gij zij Isi) JD ou II gJih, க வி ய | ற் ற லா லு ம் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படிமுடிந்தது என்ற கேள்விக்கு விடை இந்நூல் தளிவாகவும், உணர்வாகவும்,
வபடச் சித்திரிக்கும்.
ISBN 81-234,0974-5
7 x : 1 고표, '4 (1) 7 - !) COde NG. A 1401 RS.75.00