கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலர் வெண்பா பொழிப்பு உரையுடன்

Page 1
செந்தமிழ்ச்செல்வி
 

வெளியீடு வேலணை

Page 2

நாவலர் வெண்பா
பொழிப்பு உரையுடன்
செந்தமிழ்ச்செல்வி வெளியீடு: ഖേഖങ്ങ

Page 3

நூல் நாவலர் வெண்பா
பொழிப்பு உரையுடன்
ஆசிரியர் 3. denusrló
"தில்லைச் சிவன்" கூடல், வேலணை.
தற்போதைய முகவரி: 161/1, கனல் பாங் வீதி,
கொழும்பு-06.
முதற்பதிப்பு 1997 (ஈசுவர வருடம்).
விலை ரூபா 20/=
வெளியிடுபவர்கள் செந்தமிழ்ச்செல்வி
வெளியீடு - வேலணை.
9 јаOLD ஆசிரியருக்கு.
இந்நூல் கிடைக்குமிடங்கள்:
1. பூபாலசிங்கம் புத்தகசாலை செட்டித்தெரு.
2. பூபாலசிங்கம் புத்தகசாலை வெள்ளவத்தை.
3. பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ்ப்பாணம்.
4. கவிதா ஸ்ரோர்ஸ்
வவுனியா.

Page 4

6პტE5 நிமிடம்.
உள்ளே திறந்து பார்ப்பகுற்கு முன் ஒரு நிமிடம் வெண்பாக்களைப் போன்று, நாற்பதிற்கு மேற்பட்ட பந்திகளில் நாவலர் பற்றி நானறிந்தவைகளைச் சொல்லியிருக்கிறேன். இவற்றை வெண்பா போலப் பாடலாம், அல்லது வாசிக்கலாம்.
உரையினையும் பொழிப்பாகக் குறித்துள்ளேன், என் கருத்தினை விளக்குதற் பொருட்டு எனலாம். அவ்வளவே. இவ் வெளியிட்டின் பயன் யாதோ எனின், இதனால் ஏற்படும் புகழோ இகழோ என்னைச் சாரும். இலாப நட்டம் வெளியிட்டாளருக்கு. வாசகர்கள் நூற்பயனைப் படித்துத்தான் கூறவேண்டும். இதற்காக ஒரு குேரீர்க் காசை இழக்க 3ருப்பட மாட்டீர்கள் என்று நான் ரும்பவில்லை. தமிழ் மக்களின் இழப்புக்களோடு ஒப்பு நோக்கின்ால் இச்சிறுபணம் ஒரு இழப்பே அல்ல. இவ் ஏட்டில் கூறப்பட்டுள்ள விடயம் மிகக் கனதியானது. நன்றிக் கடப்பாடுடையதுங் கூட பாருயம் பற்றி அன்றி எடுத்துக் கொண்ட பொருட்சிறப்புக் கருதி இவ்வேட்டினைப் பெற்று ஆதரிப்பீர்கள் என்று வேண்டுகிறேன். -
அன்று ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் யாழ்ப்பாணம் இருந்த நிலையை நினைத்துப் பார்க்க வேண்டா. இன்று இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் உள்ள நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். ஏழ்மை நிலையில், கல்வி வாய்ப்புக்களும் இன்றி, பரசமயம் சார்ந்தோர்க்கே வசதிகளும் வேலைவாய்ப்புக்களும் என்ற நிலையில், யாழ்ப்பாணம் இருந்தது. சுதேசிகளைப் புறந்தள்ளி, விதேசிகளும் பரசமயிகளும் மேலாண்மை பெற்றிருந்த காலம். அந்தக் காலத்திலேதான் நாவலர் தோன்றினார். இவரின் தோற்றச் சிறப்பை ஒரு வெண்பாவால் பேரறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கூறுவதைக் காண்க. .
ருல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லுகுமிழ் எங்கே சுருதி எங்கே - எல்லவரும் ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேயிர சங்கமெங்கே ஆத்தனரீ வெங்கே அறை. இத்தகைய நாவலரை நினைந்து நன்றி கூர்வதே இவ்வேட்டின் ருோக்கம் எனக் கொள்க.
இதற்கென ஒரு புகழுரை நல்கிய இலக்கியச் செம்மல் திரு. செ. குணரத்தினம் (SLAS ஒய்வு) அவர்கட்கும், லகழ்மி அச்சகத்தினருக்கும் நன்றிகள் பல.
-தில்லைச் சிவன்

Page 5
புகழுரை
செ. குணரத்தினம்
தலைவர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் முன்னைநாள் அரசு அமைச்சுச் செயலாளர்.
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுகுமிழ் எங்கே சுருதி எங்கே - எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேபிர சங்கமெங்கே
ஆத்தனரி வெங்கே அறை.
என்று பேரறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளையால் விகுந்து ஏற்றப்பட்ட நாவலர் பெருமானைச் சைவத் தமிழ் உலகம் என்றும் மறவாது. இந்த நாட்டுத் தமிழ் அறிஞர்கள் நாவலரின் சேவையைக் காலத்துக்குக் காலம் பெருமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். அத்தகைய ஆளுமை நாவலர் பெருமானுக்கு இருந்தே வந்திருக்கிறது.
எமது தலைமுறைக் கவிஞர்களுள் இன்றும் நின்று
போற்றப்படுபவர் கவிஞர் தில்லைச்சிவனார். இவர் எமது ஊரவரும் எமது காலத்தவரும் என்று நினைக்கும்பொழுது உள்ளத்தில் மிகழ்ச்சிப் பிரவாகம் ஏற்படுவதை யான் உணர்கின்றேன். வாலிப வயதினராய் இருக்கும்பொழுதே இளஞ்கவிஞராக இனம்கண்டு கொள்ளப்பட்டவர் கவிஞர் அவர்கள் கணகசெந்திருாகுன் தலைமையிலே நிகழ்ந்த அவரது கவித்துவப் பாராட்டுவிழா ஒன்றுக்கு யான் சென்றிருந்த பொழுது இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த கிரசிகவிமர்சகர் தில்லைச்சிவனாருடைய கவிதா ஆற்றலையும், கவித்துவச் சிறப்புக்களையும் எடுத்து விளக்கிய பொழுது யானும் எனது ஊரைச் சேர்ந்த அறிஞர்களும் கேட்டு மனம் மகிழ்ந்தோம். தான் பிறந்து வளர்ந்த ஊரினை விடுத்துப் பதியெழுவறியாய் பழங்குடி மக்களுடன் புலம் பெயர்ந்த நிலையில் கொழும்பில் இருப்பிடம் கொண்ட கவிஞர் ருல்லைருகர் நாவலரைப் பற்றி நாற்பதின் மேல் அழகான வெண்பாக்களைப் பாடி எமக்குத் தந்திருக்கிறார்கள். ஆறுமுகமாகத் திருவாவடுதுறை சென்ற ஆறுமுகனார் ஆறுமுக நாவலராக வெளிப்போந்த செய்தி பலராலும் விதந்து புகழப்படுவதொன்று.

முத்தமிழ் முனிவர் விபுலாருந்த அடிகள்
"நாவலரென ஆதீனம் பட்டமளித்தபொழுது
வையத்தோர் தகும் தகும்” என்றார் என்று பாடியுள்ளார்.
தில்லைச் சிவனாரின்
" ஆறுமுகனாக ஆதீனத் துள்நுழைந்து
விறோடு நாவலராய் வெளிவந்தார் - பேறுடைய
அங்கி அணியாடை ஆடகப்பொன் மாலையென
சங்கைமிகு சன்மானங் கொண்டு” என்ற பாடல் நாவலர் சாதனையை நின்று நிலவ வைக்கும்.
நாவலர் பெருமானின் கோலத்தையும் அவர் ஆளுமையையும் அவரை ருேரிலே கண்டு வரைந்து சித்திரப் பிரதிமைகள் இல்லை. ஆனால் கண்டவர்கள் சொல்கொண்டு செய்து சித்திரங்களை மனதுள் வாங்கியே பிற்காலச் சித்திரங்கள் வரையப்பட்டன எனலாம். ஆனால் தில்லைச்சிவனார் தரும் சித்திரம் மனதில் கண்டு உருவகப் படுத்தக்கூடிய ஒன்று.
"கட்டைக் கறுவல் கருநிலக் கண்அழகர்
மொட்டைத் தலையர் முழுநீற்றர் - பொட்டுநுதல்
கட்டுஉடல், உள்ளக் கருணை ஒளி நனிகாட்டும்
வட்டமுகம் நாவலர்கும் வடிவு”
என்ற சொற்சித்திரம் நாவலர் பெருமானை எம்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதக் கோலம்.
இவ்வாறே சுவைகொட்டும் பாடல்கள் நிரம்பியதான இப்படைப்பு நாவலர் வரலாற்றில் இன்னுமொரு வைரமாக நின்று பிரகாசிக்கும்.
கவிஞருடைய கவித்துவத்தை வியந்து போற்றுகுலோடு அவருக்கு நீடித்த வாழ்வும் நிரம்பிய அமைதியும் கிடைத்து இன்னும் பல ஆக்கங்களாக உருப்பெறுதல் வேண்டும் என்ற வேண்டுதலோடு, ஊரவரான ஒரு சிறந்த கவிஞரின் படைப்பொன்றுக்கு இந்த முகவுரையை வழங்கக் கிடைத்தமையைப் பெரும்பேறாகக் கருதி உளம் நிறைந்த பேரன்போடு வாழ்த்துகிறேன்.

Page 6
படையல்
கற்றல் கேட்டல் மிகுந்த நல்மனக்
காழ்ப் புவப்பிலாக் காட்சியீர்! நற்றவத்திரு நாவலர் புகழ்
நாணிலாதுரை நாய்ச் செயல் வெற்றுரைக் குரைப் பேயெனினும் சொல்
பொருளின் மேன்மை கருதியென் பற்றினை உணர்ந் தூக்கு வீரெனப்
பணிந்தின் நூலைமுன் படைக்கிறேன்.
நன்றி.

சிவமயம்
IīIIGIGUÏr GilguHGÚĩFIT -பொழிப்புஜட்னட
பஞ்சமுக விநாயகர்
சீரேறு சிவ நெறியும் திருநீறுடி செந்தமிழும் பாரேறப் பணிசெய்த பண்பாளர் - பேராறு முகநாவலர்வெண்பா முட்டின்றிச் சொலவைந் முகயானை முன்நிற்க வே. (1)
பொழிப்பு: சிறப்புமிக்க சைவமதமும், விபூதியும், செய்ய தமிழும், பூமிமீதுயர்ந்து வளரத் தொண்டு செய்தவரும் பண்புமிக்கவருமான ஆறுமுகநாவலர் பேரில் வெண்பாக் களைத் தடையின்றிச் சொல்ல ஐந்து முகங்களையுடைய ஆனைக் கடவுள் முன்னின்று அருள் புரிவாராக.
bITChD
பாட்டுக்கு யாழ்ப்பாணம் பரிசுநல் இலங்கைவள நாட்டுக்குத் தலையாய நாடென்பார்-ஈட்டுபுகழ் இருபுனலும் கல்வியும் ஏராளர் கொழுமுனையால் தருமுழைப்புந் தலைநின்ற தால். (2)
பொழிப்பு: யாழிற் பாடிய அந்தகக் கவிக்குப் பரிசாகக் கிடைக்கப்பெற்ற யாழ்ப்பாணம், இலங்கைவள நாட்டுக்குத் தலையானது என்பர். இப்புகழ் எதனால் ஈட்டப்பெற்றது என்றால் மழைநீர், ஊற்று நீர் என்ற இருவகை நீரும் கல்வியும், உழவினால் வரும் உழைப்பும் பெருக நின்றதால் என்க.

Page 7
தில்லைச் சிவன்
பேரியாறு வழுக்கைப் பெயராறு பூமிபுகழ் கீரிமலை ஊற்றுக் கிளர்ந்துநனி - வாரி சேரருவி பீறிச் செல்லும் யாழ்ப் பாணம் பேர்பிறங்கு நாடென்றே பேசு. (3)
பொழிப்பு: (ஆறுகளும் மலைகளும் நாட்டுக்கு அழகு தருபவை) வழுக்கிப் பெயர் கொண்ட பேராறும், கீரிமலையும் அதனடியில் ஊறிக் கடலைச் சேரும் அருவிகளும் சேர்தலால் யாழ்ப்பாணம் பேர் ஒளிவீசும் அழகுமிக்க நாடென்று பேசப்படும்.
நகர்
மதிதோய்ந்த மாளிகைமுன் வாயிலொடு வீடுகளும் விதியாய்ந்தமைந்தபல வீதிகளும் - அதிசூர சங்கார வேலன் சந்நிதியும் சாந்திவளர் சிங்கார நல்லை நகர். (4)
பொழிப்பு: உயர்ந்த(அரச) மாளிகையின் முகப்புத் தோரண வாயிலும், வீடுகளும், நகர விதிப்படி திட்டமிட்டமைந்த வீதிகளும், சூரசங்கார வேலன் திருக்கோயிலும் சாந்தியைத் தருகின்றதுமான அழகிய நல்லை நகர் என்பது வரலாறு.
சூரியோதயம்
சேவல் துயில் எழுப்பச் செந்தா மரைமலர கோவில் மணிகளிசை கொண்டொலிக்க - மேலை கடல் மூழ்கிக் குணமலையில் கதிரோன் எழுந்தான் அடல் ஏறு உழைசிலிர்த்த வாறு. (5)
பொழிப்பு: சேவல் கூவித் துயில் எழுப்பவும், செய்ய தாமரைப் பூக்கள் மலரவும், கோயிலின் கண்டா மணிகள் பூசை காலத்தை அறிவித்து இசையோடு ஒலிக்கவும், முன் அந்திவேளையில் கடலில் மூழ்கிய சூரியன், ஆண்சிங்கம் பிடரி மயிர்களைச் சிலிர்த்துக் கொண்டு கிழக்கு மலையில் எழுவதுபோல் தோற்றியவாறு கதிர்களைப் பரப்பி உதயமாகிறான் என்க.
6

நாலுலர் Q6IGOLITI
யாழ்ப்பாணச் சைவர்நிலை
எல்லாப்படி யாலும் யாழ்ப்பாணச் சைவர்நிலை செல்லாக்கா சாகிமிகு சீரழிவு! - கல்விச் சாலைகளும் ஆலைகளும் கச்சேரி கோடுகளில் வேலைகளும் கிறித்தவர்க்கே விதிப்பு. (6)
பொழிப்பு: எப்படிப் பார்த்தாலும் யாழ்ப்பாணச் சைவ மக்களின் நிலை ஒரு பெறுமதியும் அற்றதாக இருந்தது. படிப்பதிலும், தொழில் களிலும் , உத் தியோகங்களிலும் சைவர் கள் . புறம்போக்காகவும் கிறித்தவர்கள் முதன்மை பெற்றும் இருந்தனர்.
தாயில்லாப் பிள்ளைகள்போல் தட்டழிந்தார் சைவரிங்கே கோயிற்பிள்ளைகளென்போர் கொழுகொழுத்தார் - வாயில் காப்போர் முதற்பெரிய கருமாதி பீடமெல்லாம் பார்ப்போர் கிறித்தவரே பார். (7)
பொழிப்பு: சைவர்கள், தாயில்லாப் பிள்ளைகள் போன்று கவனிப்பாரற்றும், கோயில்பிள்ளைகள் என்ற பெயர் பரவலாகப் பெற்றுள்ள கிறித்தவர்கள் கொழுகொழுப்பாகவும் இருந்தனர். வாயில் காப்போர் முதற்கொண்டு பெரிய பெரிய வேலைகள் பார்ப் போல் எல்லாம் கிறித்தர்களாக இருப்பதையே யாழ்ப்பாணத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.
பரசமயப் பரம்பல்
பள்ளிகளை நிறுவிப் பாவிகளை மீட்கவந்த நல்லதொரு மேய்ப்பரென நம்பவே - மெல்ல நன்றியுணர் வென்ற நன்னிலத்தில் பரசமயப் புன்விதையை ஊன்றினரப் போது. (8)
பொழிப்பு: அப்போது பள்ளிக் கூடங்களைக் கட்டிப் படிப்பித்து, பாவிகள் என்று அவர்களால் கருதப்பெற்ற சைவ மக்களை மீட்பதற்காக வந்த நல்ல மந்தை மேய்ப்பரென தம்மை நம்ப வைத்து, மெல்ல மெல்லத் தம்சமயம் என்ற கிறித்தவ நெறியைப் புகுத்தினார்கள். இச்செயல் மக்களின் நன்றியறிதல் என்ற நல்
7

Page 8
தில்லைச் சிவன் இதயத்தில் பரசமயப் புல் விதைகளைத் தூவுதல் போலிருந்தது.
பெற்றதாய் நனிஇருக்கப் பேறறியாப் பிறர்மதத்தை நற்றவத்தாய் என்று நாடினார் - முற்றும் அறியாதவர் அல்ல அறிந்துமரைச் சாண்வயிற்றைப் பெரிதாக எண்ணியஅப் பேர். (9)
பொழிப்பு: (பரசமயப் புல் விதைகள் ஊன்றப் பெற்ற) அப்பேர்வழிகள் பெற்ற தாயாகிய தம்சமயத்தைத் துறந்து பேறறியாத பிறர் தாயை (பரசமயத்தை) நற்றவத்தால் கிடைத்த தாயென நம்பிச் சேர்ந்தார்கள். அவர்களோ ஒன்றும் அறியாத அப்பாவிகள் அல்ல. தமது அரைசாண் வயிற்றுப் பிழைப்புக்காகச் சேர்ந்தார்கள். இவர்கள் மானம், குலம், கல்வி வன்மை, அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை ஆகிய அனைத்தையும் விட வயிற்றைப் பெரிதாகக் கருதியவர்கள்.) என்பது கருத்து.
நாவலர் அவதாரம்
சைவம்மகிழத் தமிழ் வாழ்த்தத் தாமரை வாழ் ஐயன்கரம் உயர்த்தி ஆசிசெய்ய - செய்யவேள் ஆலயத்து மாமணிகள் அசைந்தொலிக்கச் சிவகாமி மாதுளைந்து ஈன்றாள் மகன். (10)
பொழிப்பு: சைவநெறி இனித்தன் வழிபற்றுவார் பலராதல் எண்ணி மகிழவும், என்றுமுளதென் தமிழ் வாழ்த்திநிற்கவும், தாமரைப் பூவில்வாழ் அயன் தன் உயர் படைப்பாகிய நாவலர் பெருமானின் உதயம் கண்டு அபயகரம் தூக்கி ஆசி செய்யவும், அயலில் இருக்கும் நல் லுTர் க் கோயில் மணிகள் அசைந்தொலிக்கவும், சிவகாமித்தாயார் வயிறுளைந்து மகனை (நாவலரை)ப் பெற்றாள், என்க.
செந்தமிழும் சிவநெறியும் செழித்தோங்க நல்லூர்வாழ் கந்தர்மனம் விண்டு களிகொள்ள - வந்துதித்தார் ஆறுமுக நாவலராம் அந்தணர்மெய்ச் சைவநெறி வீறுகொள நின்றுழைத்த வேந்து. (11)
R

நாவலர் வெண்பா பொழிப்பு: சைவம் வெற்றிபெற உழைத்த மன்னர் போன்றவரும், எல்லா உயிர்களிடத்தும் இரக்கமாகிய செந்தண்மை உடைய நாவலராகிய அந்தணர், செந்தமிழும் சிவநெறியும் செழிப்படையும் பொருட்டு நல்லூரில் வாழ்ந்த கந்தர் என்னும் பெரியாரின் மகனாகப் பிறந்தார். மைந்தன் பிறக்கத் தந்தை மகிழ்ந்தார்,
GT 605.
ஆங்கிலர்போல் மொழியுடைபாவனைகளொடு அவர்மதமும் தாங்கிவருந் தமிழர் தாம்திருந்த - வீங்குபுகழ் ஆறுமுக நாவலனார் அவதரித்தார் அன்புமதம் வீறுபெற்று விண்டெழுந்த தன்றே. (12)
பொழிப்பு: ஆங்கில மக்களின் உடையை உடுத்து அவர்களின் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைப் பழகியதோடு அமையாது அவர்கள்தம் மொழியையும் சமயத்தையும் தமதாகக் கொண்ட தமிழர்கள் தாமாகவே உணர்வு பெற்றுத் திருந்தும் பொருட்டு ஆறுமுகநாவலர் தோன்றினார். அற்றைப் பொழுதிலேயே அன்பு மதமாகிய சைவமதமும் நசிவு நீங்கி வீறுபெற்று எழுந்தது.
செந்தமிழும் ஆரியமும் சீமைமொழி யுடனறிந்து எந்தரமும் இல்லாத எமைப்புரக்க - கந்தர் பிள்ளைகளோடாறு முகன் பிறந்தாரே நல்லூரில் இல்லையினிச் சைவர்க்கு இடர். (13)
பொழிப்பு: சைவமக்களுக்கு இனித்துன்பம் இல்லை என்னும் பொருட்டுத் தென்மொழி வடமொழி என்னும் இருமொழிகளோடு சீமை மொழியாகிய ஆங்கிலத்தையும் கற்று, எந்தவகையான ஆதாரமும் அற்றிருந்த எமைப் பாதுகாக்க நல்லூரில் கந்தர் என்பவரின் பிள்ளைகளுள் ஒருவராக ஆறுமுகன் பிறந்தார்.
நாவலர்தம் வடிவு
கட்டைக் கறுவல் கருநீலக் கண்அழகர் மொட்டைத் தலையர் முழுநீற்றர் - பொட்டுநுதல், கட்டுஉடல், உள்ளக் கருணைஒளி நனிகாட்டும் வட்டமுகம், நாவலர்தம் வடிவு. (14)
9

Page 9
தில்லைச் சிவன் பொழிப்பு: கட்டையான உருவமும் கறுத்தநீலநிறம் பொருந்திய அழகான கண்களும் மழித்து மொட்டையான தலையும், மேனி முழுதும் உள்தூளனம் செய்த திருநீற்றுப் பொலிவும், நெற்றியில் சந்தணப் பொட்டும் கட்டழகும் பொருந்திய நாவலர்தம் வட்ட
வடிவமான முகத்தில் தோன்றும் பிரபை அவர் உள்ளத்தின் கருணையை வெளிக்காட்டுவதாக இருந்தது.
நாவலர் தனிமனிதனல்ல தத்துவம்
தனிமனித இயக்கமாய் தத்துவமாய் நெஞ்சத்து துணிவோடு நின்றுழைத்த தொண்டன்சீர் - பணியும்நற் குணவான்வன் நெஞ்சற்குக் கோளரியா வானறிவுத் தனவான்நா வலன்வணங்கு வாம். (15)
பொழிப்பு: தனியே ஒரு ஆலமரம் தோப்பானாற் போல தாமே தனித்து நின்று ஒரு இயக்கமாகவும், உண்மை விளக்கம் செய்தலில் தத்துவமாகவும், துணிவுமிக்க சிவத்தொண்டனாகவும் பணிகின்ற பெருமை உடையவராகவும் நற்குணங்கள் பொருந்திய வராகவும் வன்நெஞ்சரான கயவர்கட்குக் கொல்லும் தன்மையு டைய சிங்கம்போலவும் அறிவுச் செல்வனாகவும் உள்ள நாவலரை வணங்குவாம் நாம் என்றவாறு கூறப்பெற்றது.
நாவலர்தம் சிம்மக்குரல்
சட்டித்தலையர் சபைநடுவே சிங்கேற்றுக் குட்டியெனச் சொற்பொழியும் குரல்கேட்டு - மொட்டாக்கு இட்டுவந்து இவருரைக்கு எதிர்வாதம் தெரியாது கொட்டாவி விட்டாராம் குரு. (16)
பொழிப்பு: மழித்த சட்டி போன்ற தலையை உடைய ஒருவர் ஒரு பெருஞ்சபையிலே மேடையிலே சிங்கக் குட்டிபோலப் பாய்ந்து ஏறி அதே சிம்மக் குரலிலே சொற்பொழிவு செய்வதைத் துாரத்தே நின்று கேட்ட ஒரு குருவானவர், சபையினர் மருங்கில் தன்னை அடையாளம் காணாதவாறு மொட்டாக்கு இட்டுக் கொண்டு நின்று கேட்கிறார். நாவலர் உரைக்கு எதிரான கருத்துக்களைக் கண்டறிய முடியாத கவலையினால் கொட்டாவி
10

5 FIGIGufr Q6)IGoor IT
விட்டுக் கொண்டே திரும்பிச் சென்றார் என்பார்கள்.
மக்கள்தம் வறுமை அறியாமை என்றிவற்றை தக்கபடி பயன்படுத்தித் தம்மதத்தை - சிக்கலற நாட்ட நினைத்தோர்க்கு நாவலனார் கண்ணால் காட்ட முடியாத கனல். (17)
பொழிப்பு: மக்களுடைய வறுமை நிலையையும் பொது அறிவு குறைந்த நிலைமையையும் தமது மதப் பரப்பலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிக்கல் ஒன்றுமில்லாமல் தமது மதமாற்றப் பணியில் தீவிரமாக நின்ற பரசமயிகளுக்கு நாவலர் கண்ணால் காணமுடியாத வெப்பம்போல இருந்தார்.
பாவிகளைக் கரையேற்றிப் பரசமயம் சேர்வதற்கு ஆவிவரப் பெற்றசில ஐயர்கள்பால் - மேவி நல்லறிவு பெற்றமெனும் ஞானிகட்கும் நாவலர்சொல் புல்லுணர்வு போக்கியதே போ! (18)
பொழிப்பு: ஞானஸ்னானத்தின்போது, பரிசுத்த ஆவியினால் நிரம்பப் பெற்ற சில பெரிய போதகர் (ஐயர்) பால் சென்று, "தாமும் பாவிகளாகிய சைவர்களை பாவ மன்னிப்பளித்து (கரையேற்றி) பரசமயமாகிய கிறித்துவத்திற் சேர்ப்பதற்கு வேண்டிய நல்லறிவாகிய ஞானத்தைப் பெற்றோம்” என்று சொல்லக்கூடிய புதுப் போதகர்கட்கும், நாவலரின் பேச்சு அவர்கள் கொண்டிருந்த புன்மையான உணர்வினைப் போக்கியது. போ - வியப்புரை.
சிவனைப் பழித்துரைத்த செந்நாவைச் சுட்டுத்தம் அவமானம் நீங்கிச்சிவம் ஆனாரும் - சிவமே எப்பொருட்கும் மூலமென இணைந்தாரும் நாவலர்தம் சொற்பெருக்கால் சுயம்பெற்ற வர். (19)
பொழிப்பு: பரசமயிகளுடன் சேர்ந்து சிவதுரசணை செய்தவர்கள் பின் உண்மையை அறிந்து சிவதுரசணை செய்த தமது நாவினைக் காய்ச்சிய தங்க, வெள்ளி ஊசிகளாற் சுட்டு, தமது அவமானத்தை நீக்கிச் சிவமானார்கள். வேறு சிலர் பிராயச்சித்தங்கள் இன்றியும் பரசமயத்தில் நின்று விலகி, சிவமே முழுமுதற் கடவுள் என உணர்ந்து சைவத்தைத் தழுவினார்கள். இவர்கள் அனைவரும்
11.

Page 10
தில்லைச் சிவன்
நாவலருடைய சொற்பெருக்கினால் சுயஉணர்வு பெற்றவர்களாவர்.
நாவலர்தம் கல்விப்பணி
ஏடெடுத்துக் குறியீட்டு இலக்கணத்தோ டெழுதிமிகு பாடுபட்டுப் பதிப்பித்துப் பலபேரும் - தேடி படித்தறிய வைத்தபெரும் பாவலனார் நாவலர்பேர் எடுத்துரைப்பதாலுண்டே ஏற்றம். (20)
பொழிப்பு: மெய்ப்புள்ளிகளோ குறியீடுகளோ அற்றிருந்த பழைய ஏடுகளைப் புதிதாக எல்லாக் குறியீடுகளுடனும் எழுதியும், பதிப்பித்தும், படித்த பலபேரும் படியாதோரும் தேடி எடுத்து படித்துணர வைத்த பெரும் பாவலரான நாவலருடைய புகழ் நாமத்தை எடுத்துக் கூறுவதனால், எமக்கு முன்னேற்றம் உண்டு.
கல்வியொன்றே மக்கள்குலக் கருந்தனமென் றுள்வாங்கி பள்ளிகளும் பாடநூல் பலவுஞ்செய் - வள்ளல் ஆறுமுக நாவலனார் அவர்பெருமை எஞ்ஞான்றும் கூறுவதே எங்கள் குறி. (21)
பொழிப்பு: மக்கட் தொகுதிக்குக் கல்வியே பெருஞ்செல்வம் என்பதை மனத்திற் கொண்டு, அக்கல்வியைக் கொடுக்கவல்ல பள்ளிக்கூடங்களை அமைத்தும் பாடநூல்களை அச்சிடுவித்தும் வேறுபல வழிகளிலும் கல்வியை வளர்க்க முன்னிறன்ற வள்ளண்மை மிக்கவர் நாவலர். அவர்தம் பெருமையைப் பேசி மகிழ்வதே எமது இலட்சியமாகும்.
“நாவலரைப் போலவினி நமக்கொருவர் இல்லை எனல்" ஆவலுரை அல்லவிவை அனைத்தும்மெய் - காவலர்போல் செந்தமிழைப் புரந்தாரைச் சிலைக்கண்டு கும்பிடுவோம் நந்தமக்கு செய்நன்றிக் கடன். (22)
பொழிப்பு: நாவலரைப் போல இனி நமக்கு ஒருவர் இல்லை என்று சொல்கிறார்கள். இதனை வெறும் ஆவலால் கூறப்படும் வெற்றுரை என்று தள்ளிவிட முடியாது. மேற்சொன்ன கூற்று முற்றும் முழு உண்மை. தமிழ்மொழியின் காவலர் போன்ற
12

நாவலர் வெண்பா அவர், பள்ளிகளைக் கட்டியும் நுல்களை எழுதியும், அச்சிற்
பதித்தும், பிரசாரம் செய்தும், வசனநடையைத் தமிழுக்குப் புதிதாகக் கொணர்ந்தும் கண்டிக்கும் இடத்துக் கண்டித்தும் ஆதரிப்பதை ஆதரித்தும் அரசன்போல நடந்து கொண்டார். அவரைச் சிலையிற் கண்டு கும்பிடுவோம். இது நமக்கு நாமே செய்யும் நன்றிக்கடனாகும்.
பாரதிபோல் கவிஞரில்லை பகுத்தறிவுப் பெரியார்போல் பேரறிந்த ஒருவரில்லை பெருமைசொல - ஊரறிந்த நாவலரு மில்லை யெனில் யாழ்ப்பாணிக் காருண்டிக் கேவலத்துக் கென்சொல்வேன் கேட்டு. (23)
பொழிப்பு: யாழ்ப்பாணிகட்டுப் பாரதிபோல் ஒரு கவிஞரில்லை. பெரியார் ஈ. வே. ரா. போன்ற ஒரு பகுத்தறிவு வாதிதானும் இல்லை. பெருமைப்பட நின்ற நாவலரும் இல்லை யென்றால்! அதனால் ஏற்படும் கேவலத்தைக் கேட்பவர்களிடம், என்ன
சொல்வேன்! எனவே நாவலரை விட்டால் நமக்காள் இல்லை.
தமிழுக்கு வசனநடை தந்தார் முதன்முதலாய் அழிவுற்ற ஏடுகள்பார்த் தச்சிட்டார் - மொழியறிவு இல்லார்முன் "கல்வி இரந்தும் பெறு" கென்று சொன்னாரெம் நாவலராம் தோன்றல். (24)
பொழிப்பு: எல்லாம் செய்யுள்நடையாக இருந்த அந்தக் காலத்தில் தமிழில் வசனநடையைப் பயிற்றியவர் நாவலர். அழிவுற்று நைந்த திருக்குறள் முதலாம் ஏடுகளை நூலாகத் தந்தார். கல்வியின் அருமையைப் படியாதார் முன்கூறி “கல்வியை பிச்சை எடுத்தும் கற்க” என்று கூறினார், நாவலர் பெருமான் என்பர்.
தோன்றல் - ஆண்பாற் பெயர்
கல்வியிற் பெரியன் கம்பன்போல் எழுத்துலகில் வல்லவன்நா வலனென்பார் வளர்தமிட்கு - புள்ளிகளும் பொழுதும்வாய் பாடுகளும் போட்டுக்கி நல்லதமிழ் எழுதும் படிக்களித்தார் என்று. (25)
பொழிப்பு: கவிச்சக்கரவர்த்தி கம்பன் போல, எழுத்து (வசன)
13

Page 11
தில்லைச் சிவன் ச்சக்கரவர்த்தி நாவலர் என்பர். தமிழ் வசனநடைக்கு வேண்டிய கால் அரை முக்கால் புள்ளி முழுப்புள்ளிகளையும் அளவைக்குரிய பொழுதினையும் போட்டு ஊக்கப்படுத்தி நல்ல தமிழ் எழுத வைத்தார் என்பர்.
திருமுறைகள் பாடவுஞ்சீர் தெய்வத்திரு முன்னின்று அருமறையா கமப்பூசை ஆற்றவும் - வெருவும் பார்ப்பார்கைத் திருநீறு பற்றாது நாவலனார் காத்தாராம் சிவபூசை காண். (26)
பொழிப்பு: திருக்கோயில்களில் திருமுறைகள் பாடவும் ஆகம முறையில் சிவபூசை செய்து வழிபடவும் வெருவிய அந்தணர் களிடத்தே விபூதி பெறாததால்; அப்பிராமணர்கள் சிவபூசை முடிந்தபின்பே தமது ஏனைய கருமங்களை ஆற்றினர் என்பர்.
கண்டித்தும் கட்டுரைத்தும் காதலொடு பாமரரைப் பண்டிதர்போல் ஆக்கியநற் பண்பாளன் - தண்டமிழோர் பாண்டித்துரைத் தேவர்முதல் பல்வோரின் நன்மதிப்பை வேண்டிமகிழ் நாவலராம் வேந்து. (27)
பொழிப்புரை: தமிழ்ப் புரவலனான பாண்டித்துரைத் தேவர் முதலாம் பல தமிழ்நாட்டுப் பெரியார்களின் நன்மதிப்பைப் பெற்ற நாவலர், கண்டனப் புலியாகிக் கண்டித்தும் கட்டுரைகளால் தெருட்டியும் பாமரரைக்கூடப் பண்டிதராக்கிய அன்பும் பண்பும் உடையவர். வேந்து - அரசன்.
ஆதீனத் தலைவர்களும் அறிஞர்களும் உடனிருந்து வாதித்து ஐயம்,வரத்தெளிந்து - ஏதீது பேதிக்கா மறைஞானப் பேச்சென்றார் நாவலரைச் சோதித்தார் எல்லாருந் தோற்று. (28)
பொழிப்பு: திருவாவடுதுறை முதலாம் ஆதீனங்களில் பல அறிஞர்கள் சூழ்ந்த சபையில் நாவலரைச் சோதிக்கக் கருதியவர்கள் விடுத்த ஐய வினாக்களுக்கு வேதசாட்சியான விளக்கம் சொல்லக்கேட்டு வியந்தவர்கள் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு
நாவலரைப் பாராட்டினர், என்பர்.
14

நாவலர் வெண்பா
ஆறுமுகனாக ஆதீனத் துள்நுழைந்து விறோடு நாவலராய் வெளிவந்தார் - பேறுடைய அங்கி அணியாடை ஆடகப்பொன் மாலையென சங்கைமிகு சன்மானங் கொண்டு. (29)
பொழிப்பு: ஆறுமுகனாக திருவாவடுதுறை ஆதீனத்தினுள் வீரத்தோடு நுழைந்தவர் நாவலராக வெளிவந்தார். வரும்போது அங்கி அணியாடை ஆடகப் பொன் மாலை என மகிமைமிகு சன்மானங்களோடு வந்தார் என்பர்.
திருவா வடுதுறையா தீனம் மதித்துமிகு அருமை தெரிந்தளித்த அப்பட்டம் - பெருமைபெற நின்றாரெம் நாவலனார் நிகரில்லா நாவன்மை கண்டார் புகழ்ந்தார் களித்து. (30)
பொழிப்பு: நாவலர் என்று திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய அந்தப் புகழ்ப்பட்டம், நாவலர் தம் நிகர் இல்லா நாவன்மையால் பெருமை பெற்றது. இப்போதும் நாவலர் பட்டம் வேறொருவரைச் சாரா திருப்பதும் நாவலரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.)
கவியரசர் என்றால் கம்பன் ஈடுக்குக, கருணைமிகு புவியரசர் என்றே போற்றுவார் - சிபியரசை, நாவலர் என்றாலோ நல்லூரான் ஆறுமுகன் காவலர்செந் தமிட்குமிவர் காண். w (31)
பொழிப்பு: கவியரசர் என்றால் கம்பர், கருணை மிக்க புவியரசர் என்றால் சிபிச்சக்கரவர்த்தி தான். இவர்கள் போலவே நாவலர் என்றால் நல்லூர் ஆறுமுக நவலர்தான். இவர் செந்தமிட் காவலனாகவும் இருந்தார்.
சாதித் தடிப்பு சக நாவலர்
சாதித் தடிப்புச் சகநாவல ரென்று பேதித் துரைத்தல் பிரமையே - தீதின்றி தன்சாதி தன்சமயம் தன்இனமென் றுழைத்ததனால் விண்சாதிக் குயர்ந்தாரவ் வேந்து. " (32)
15

Page 12
தில்லைச் சிவன்
பொழிப்பு: சாதித் தடிப்புடையவர் நாவலர் என்று மாறுபாடாக உரைப்பர். இது ஒரு மனப்பிராந்தி. மற்றவர்கட்டுகுத் தீது பயக்காமல் தன் சாதி சமயம் இனமென்று உழைத்த காரணத்தினால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பெற்றார். வேந்து - தலைவன்.
“கல்க்கவென நூல்பெற்றுக் கட்டியொழுங் காவடுக்கி செல்தூசி தட்டி வைத்தாற் சேருமோ - கல்வியென” கேட்டாராம் நாவலனார் கேடில் விழுநூல்கள் பூட்டிவைத்தார் காட்டியஅப் போது. (33)
பொழிப்பு: நாவலர் பதிப்பித்த, எழுதிய நூல்கள் அனைத்தையும் பெற்ற ஒருவர், அவற்றை அடுக்கி வைத்திருந்த அழகை நாவலருக்குக் காட்டியபோது, நூல்களை அடுக்கி அழகு பார்பதனால் கல்வியைப் பெற்றுவிட முடியாது என்று கூறினார், என்பர்.
தானுணர்ந்த வாறே சைவத்தைத் தமர்உணர வேணுமென்ற நல்ல விருப்பால் - வானுயர்ந்த கொள்கைப்பிர சங்கமொடு குலவுதமிழ் நூல்கள்பல வள்ளல்நாவலர்வழங்கினார். (34)
பொழிப்பு: சைவத்தை தானறிந்தவாறே தமது இனமும் உணரவேண்டும் என்று விரும்பிய காரணத்தினால், உயர்ந்த பொழிவுகளையும் நிகழ்த்தி நூல்களையும் பதித்து எமக்கு வழங்கினார், நாவலர்.
பனைபோல வளர்ந்துலகைப் பார்த்துநனி வளைந்தசிலைக் கணைபோலக் கண்டனங்கள் கான்று - இணைவேறு இல்லாது பரசமய இருள்கடிய எழுந்தவொளி நல்ஞா யிறிளநா வலர். (35)
பொழிப்பு: பிற உதவிகளின்றி மேல்நோக்கி வளர்ந்து, உலகின் மதமாற்றக் கொடுமைகளைப் பார்த்து வளைந்த வில்லில் இருந்து பாயும் கணைகள் போல ஆவேசக் கண்டனக் கதிர்களால் பரசமய இருள்நீக்க எழுந்த இளஞ்சூரியன் நாவலர் என்பர்.
16

நாவலர் வெண்பா நாம்பிறந்த காரணத்தை நாமறியோம் நாவலனார் ஏன்பிறந்தோ மென்றுநணி எடுத்துரைத்தார் - "கூன்பிறந்த செம்பிறையான் பாதமலர் சென்றிறைஞ்சி முத்திஎனும் இன்பமடை தற்பொருட்டு" என்று. (36)
பொழிப்பு: நாம் ஏன் பிறந்தோம் என்று அறியாத பொழுது அதனைப் பற்றிச் சிந்தித்த நாவலர் சிவனை வணங்கி முத்தியடைதற் பொருட்டே நாம் பிறந்தோம் என்று கூறினார்.
மல்லிகையோ வெள்ளை மனமோ பொருளல்ல நல்லபெரு மானெம்பால் நாடுவது - உள்ள உயிரே சிவம்என்று உணர்ந்து"சும் மா’விருப்பின் அவரே அனைத்தும் ஆவார். (37)
பொழிப்பு: சிவனை வணங்குவது எப்படி என்பதற்கு மலர்களால் அர்ச்சித்தல் வெள்ளை மனத்தால் துதித்தல் பொருட்களால் பூசை செய்தல் எனப்பல. இவற்றையெல்லாம் சிவபெருமான் எம்மிடம் நாடவில்லை. அவர் என்றும் உள்ள உயிராகவே எம்மோடு இருக்கிறார். இதை உணர்ந்து "சும்மா இருந்தாற் சரி அவரே அனைத்தையும் செய்வார். எல்லாம் அவரே".
நான்காவது குரவர்
இயற்கைதனை வென்றார் இல்லறஞ்சா ராதே
மயக்கடைந்தார்சிவம்மேல் மனதாகி - முயங்கும்
தொண்டரடி கூடும் தொழும்பர் இறைவனைநேர் கண்டநாற் குரவர்நா வலர். (38)
பொழிப்பு: இயல்பான உணர்ச்சிகளை வென்று பிரமச்சாரியம் காத்து சிவம்மேல் காதலாகி மயங்கி, சேர்ந்த சிவன் அடியார்கள் தம் அடி தொழும் தொழும்பரிவர். இறைவனை நேரிற்கண்டு நாலாவது குரவரானார் நாவலர் என்பர்.
17

Page 13
தில்லைச் சிவன்
நாவலர் வைத்த கஞ்சித் தொட்டி
பஞ்சத்தில் மக்கள்தம் பசிதீர்க்க நாவலனார் கஞ்சித்தொட்டிகள்வைத்தார் கருணையால் - அஞ்சாதே கஞ்சர்பால் சென்றிறைஞ்சி கையேந்திப் பெய்யாய் பஞ்சமர்க்கும் வார்த்தாரே பார். (39).
பொழிப்பு: நாவலர் சமுதாய பற்றற்றவர் என்று சொல்லலாமா? ஒருமுறை ஏற்பட்ட பஞ்சத்தில் மக்களின் பட்டினியை நீக்க நாவலர் கஞ்சித்தொட்டிகள் வைத்தார். அதற்கு வேண்டிய நிதி தானியம் என்பவற்றை ஈயாக்கஞ்சரிடம் இரந்து பஞ்சமர் முதல் யாவருக்கும் கஞ்சி வார்த்தார், என்பர்.
நாவலர் தம் பேச்சு
சொல்லின் பொருள் அறிந்து சொல்லுதலும் சொற்செட்டும் வல்லமையும் கேட்போரை வசியத்து - வெல்லும் வகைதெரிந்து அஞ்சாது வரிசையாய் எடுத்துரைத்து பகை ஒடுக்கும் நாவலர்தம் பேச்சு. (40)
பொழிப்பு: சொல்லும் சொல்லின் பொருளைத் தாமறிந்து சொல்வதும், சொல்லைக் குறைவாக உபயோகிப்பதும் கேட்போர் பிணிக்கும் தன்மையும் வெற்றிபெறும் வகையை ஆராய்ந்து ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்துரைத்து எதிராளிகளை மடக்கும்
தன்மை உடையது நாவலரது பேச்சு என்பர்.
பிறரும் நாவலரும்
பிறந்தார் வளர்ந்தார் பெண்ணோ டணைந்துமகிழ் சிறந்தார் மக்கள் பலர் சேர்த்தார் - இறந்தாரே என்றில்லா தெச்சமெலாம் எம்மோடு உடன்வாழ நின்றுள்ளார் நாவலரே நேர். (41)
பொழிப்பு: பிறத்தல் வளர்தல் திருமணம் செய்தல் மக்களைப்
18

நாவலர் வெண்பா பெறுதல் மரணித்தல் இவ்வகையினைராகவன்றி இன்றும் அவர் விட்டுச் சென்ற எச்சங்களான பாடசாலைகள் நூல்கள், கட்டிடங்கள் காட்டியவழிகள் என்பவற்றில் நாவலரை நாம் நேரே கண்டு கொண்டிருக்கிறோம்.
சைவவழிகாட்டு விளக்கு (கலங்கரை விளக்கு)
நாவலர்வீதி நல்லைநகர் மண்டபங்கள் பாவலர்செய் பன்னூ ல்கள் பள்ளிகளும் - ஆர்வலர்தம் நெஞ்சங்கள் தோறும் நின்றொளிரும் நாவலர்பேர் விஞ்சுசைவ நெறிகாட்டும் விளக்கு. (42)
பொழிப்பு: நாவலர்வீதி, நல்லைநகர், நாவலர் கலாச்சாரமண்டபம், நாவலர் நினைவு மண்டபம், பலபுலவர்களால் எழுதப்பெற்ற நூல்கள், நாவலர் பள்ளிகள், நாவலர்தம் ஆர்வலர்களின் உள்ளங்கள் என்றெல்லாம் நின்றொளிரும் நாவலர் தம் பெயர்களே சைவநெறியின் வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாகும்.
நாவலர் நமது நேசர்
காவியத்தில் பாடினார் கற்சிலையில் காட்டினார் ஒவியத்தில் தீட்டிப்பார்த் துவந்தார் - பாவியற்றி ஆசையினால் நாயேனும் ஆறுமுக நாவலரெம் நேசரெனப் போற்றினேன் நினைந்து. (43)
பொழிப்பு: பல காவியங்களில் நாவலரைப் புகழ்ந்து பாடியுள்ளார்கள். அவரது உருவ எழிலை கல்லில் செதுக்கி வைத்திருககிறார்கள். பலர் ஓவியங்களில் வரைந்து பார்த்துள்ளர்கள். நாயனைய நானும் ஆசை காரணமாக ஆறுமுகநாவலர் எம்மேல் நேசம் உள்ளவர் என்பதை நினைந்து பாக்கள் இயற்றிப் போற்றினேன், என்க.
19.

Page 14
தில்லைச் சிவன்
நாவலர் வெண்பாக்களின் பயன்
வைதாலும் “செந்தமிழால் வைதானே” எனமகிழ்ந்து கைவேல் அனுப்பியெனைக் காத்த - செய்யார் நல்லூர் முருகனருள் நாவலர்வெண் பாமுழுதும்
சொல்வார் பெறுவார் சுகம்.
பொழிப்பு: ஏசியபோதும் தமிழினாலே ஏசினானே என மகிழ்ந்து, துயரை நீக்குதற் பொருட்டு திருக்கைவேலை அனுப்பி எனைக் காத்த நல்லுரர் முருகப்பெருமானது, திருவருளை நாவலர் வெண்பா முழுவதையும் சொல்பவர் பெற்றுச் சுகம் அடைவர்.
Tഖബ Lത്തിയെ
விரவு கல்வி ஒளி பரப்பி
விடியல் வரச் சைவம்எழ பரசமய இருள் அகலப்
பைந்தமிட்கு வசனம் எனும் புதிய எழில் நடை பயிற்றி
புத்த கங்கள் பலவளித்த பொதியைமுனி நல்லூரான்
புரவலன்நா வலன், பணிவாம்.
-சிவம்
 


Page 15
செந்தமிழ்ச்செல்வி
 
 

| ബിf; ബേങ്ങ
LL LSYLL LLLL LL L LLL LLLL LL LLL SKLLL 0LL0000LL