கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருப்பாவை

Page 1
口哺』 匙)
¡No,
 

----
■-軸!!----*T:「劑~*虹邨 T적 *****rT현:" T:***:;활
*

Page 2

கழக வெளியீடு: எகிகி
பூரீ பூரீமதே இராமாநுசாய கடி.
பூர் ஆண்டாள் அருளிய
திருப்பா  ைவ
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லி திருநெல்வேலி : சிென்
?..مجسسےیحS“

Page 3
பதிப் புரை
நூல் S.
*திருப்பாவை’ தென்தமிழ்த் திருநாட்டுத் தெய்வநாட்டம் மிக்குள்ள சான்ருேர் பலரும் தெய்வத் தொழுகையும், வேண்டு வன அத்தெய்வத்தின்பால் வேண்டிப்பெறுதலும் கடப்பாடாக வுடையர். கன்னிப்பெண்கள் நல்ல மணவாளரைப்பெற்று வாழும் பொருட்டு 8 மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னளால் திருவரு ளாற்றலை வைகறையில் நீராடிக் கூடி வழிபடுவர். அஃதொரு பெரு கோன்பாகக் கொண்டாடப்பெறும் அந் நோன்பிற்குப் * பாவை நோன்பு? என்று பெயர். அந் நோன்பின் பொதுப்பயன் நல்ல மழைபெய்து நாடு செழித்தல். அதனல் இது திரு என்னும் அடைபெற்றுத் திருப்பாவை என வழங்குவதாயிற்று. திருமா லடியார்கள் ஆழ்வார் எனப் பெறுவர். அவருள் ஒருவர் பூரீ வில்லி புத்தூர்ப் பெரியாழ்வார்தம் செல்வமகளார் ஆண்டாள். அவ் வம்மையார் அருளியது இத் திருப்பாவை
உள்ளுறை
‘திருப்பாவை"யின்கண் உள்ள உள்ளுறை விரிவாக ஆராய வேண்டுவது. சுருக்கமாகத் தருகின்முேம், ஒன்றுமுதல் ஐந்து வரை முறையே பறைதால், பாவை நோன்பு, மழை வேண்டல், மழையொப்பு, கண்ணன் பிறப்பு முதலியன கூறுவனவாகும். ஆரும் பாட்டு முதல் பதினைந்தாம் பாட்டுவரை பத்துப் பாட்டுக்கள் கன்னிப்பெண் ஒருவரை ஒருவர் எழுப்ப எழுந்து ஒன்றுசேர்வ தைக் குறிப்பன 16 முதல் 22 வரை அனைவர்களும் சென்று நந்தகோபர் மாளிகையில் கண்ண?ன எழுப்புதல் குறிப்பன. 23 80. வரைமுறையே கட்டில் வேண்டல், போற்றி, வரலாறு, நான்புத்தொன்மை, இம்மை வாழ்வு, ஒத்தகுலம், அடிமைச் சிறப்பு, திருக்காப்புக் கூறுவன.
கண்ணபிரான் எல்லாப் பொருள்களிலும் விரவியிருப்பினும் கிளக்தெடுத்துக் கூடறுவன சிலவுள. அவற்றுள் ஒன்று மார்கழித் திங்கள். இத் திங்கள் முப்பது நாளும் இஃது ஒதப்படுகின்றது. எல்லார்க்கும் பயன்படுமாறு இனிய எளிய முறையில் உரையுடன் இது வெளிவருகின்றது. இவ்வுரையினை அன்புடன் நோக்கிச் செப்பஞ்செய்து தவிய திருவாட்டி பண்டிதை கிருஃச்னவேணி யம்மையார்க்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்நூ?ல யாவரும் வாங்கியும் வாங்குவித்தும் ஒதிப் பயன்பெற் றின்புறுவார்களாக.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

பூரீ ஆண்டாள் அருளிய
w திருப்பா  ைவ
صاسحمستحسیسی உய்யக்கொண்டார் அருளிய ஆண்டாள் வணக்கம்
அன்ன வயற்புதுவை ஆண்டா ளரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை குடிக் கொடுத்தாளைச் சொல்லு. பாவை நோன்பாளர் பாடி நீராட் அழைத்தல் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால்
நீராடப் போதுவிர் போதுமினே நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான் M
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (பொருள்) நேரிழையிர் - அழகிய அணிகலங்களை யுடைய வர்களே, சீர். சிறுமீர் காள் - செல்வமிக்க திருஆய்ப்பாடியில் தொண்டுசெய்யும் செல்வத்தையும் கன்னிப் பருவத்தையும் உடையவர்களே, மார்கழித். நன்னுளால் - மாதங்களில் சிறந்த மார்கழித் திங்களில் முழுநிலாவாகிய நல்ல முழுத்த நாளிலே, கூர்.குமான் - கூர்மையான வேலையுடையவனும், பகைவர் களுக்குக் கொடுமை செய்பவனும் ஆன, நந்தகோபனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவனும், ஏசார்ந்த .சிங்கம் - அழகு நிறைந்த கண்களையுடைய யசோதைப் பிராட்டிக்கு இளஞ்சிங்கம் போன்ற வனும், கார்.ழகத்தான்-காளமேகம் போன்ற திருமேனியையும், செந்தாமரை போன்ற கண்ணையும் ஞாயிறு திங்கள் போன்ற திருமுகத்தையும் உடைய, நாரா.படிந்து - எல்லாம் வல்ல நாரயணனே நாம் விரும்பிய வாத்தை நமக்கே தந்தருள்வான்; உலகோர் கொண்டாடுமாறு இக் நோன்பிலே ஈடுபட்டு, நீராட. போதுமினுே - நீராட விரும்பு கின்றவர் வாருங்கள்.
(ஏல், ஒர் - அசைகள். எம்பாவாய்: எம் பா ஆய் - நமது நோன்பைப் பின் சென்று. திரு. சே. கி. அவர்கள் உாை) (க)

Page 4
4. திருப்பாவை
நோன்பிற்குச் செய்வன நுவன்று மேற்கொள்ளுதல்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணுேம் பாலுண்ணுேம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தன செய்யோம் தீக்குறளை சென்ருே தோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
(பொருள்) வையத்து..கேளிரோ - உலகத்தில் வாழ்கின்ற வர்களே, (எம்பெருமானலேயே பேறு என்றிருக்கும்) நாமும் நம்முடைய நோன்புக்கு மேற்கொள்ளவேண்டிய செயல்கள் (யாவை என்பதைக்) கேளுங்கள், பாற்கடலுள்.பாடி - திருப் பாற் கடலுள் அறிதுயில் செய்கின்ற பாம்பொருளின் திருவடிகளை அன்புடன்பாடி, நெய்.நீராடி - நெய்யும் பாலும் உண்ணுதவர் களாய் விடியற்காலையில் நீராடி, மையிட்டு.ழடியோம் - கண் ணுக்கு மைதீட்டாதவர்களாய்த் தலைக்குப் பூச்சூடாதவர்களாய், செய்யாதன.ஓதோம் - பெரியோர் செய்யாதவற்றைச் செய்யா, தவர்களாய்த் தீமை பயக்கும் (கொடிய) கோட்சொற்களை (எம்பெருமானிடம் சென்று) சொல்லாதவர்களாய், ஐயழம். உகந்து - அறிவோர்க்கு நல்ல செயல்பொருட்டு அளிக்கும் உயர் பொருள்களையும் பிசம்மசாரிகள் துறவிகள் ஆகிய எளியவர்க்குப் பிச்சையையும் நம்மால் இயன்ற அளவு ஈந்து நாம் உய்யும் வகையை நாடி மகிழ்ந்து வாழ்வோமாக. (e)
உத்தமன்பேர் பாட் ஒங்கும் பெருஞ்செல்வம் ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிரீ ராடினுல் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் კან
(பொருள்) ஓங்கி.பாடி - வானுற வளர்ந்து திருவடியால் மூவுலகையும் தாவி அளந்துகொண்ட புருடோத்தமனுடைய திருப்பெயர்களைப் பாடி நாங்கள் . நீராடினுல் - நாங்கள் நம் முடைய நோன்புக்கு ஒருப்பட்டு முழுகினல், தீங்கின்றி. பெய்து - நாடெல்லாம் நீங்குகள் இல்லாமல் மாதந்தோறும் மும்முறை மழைபெய்து, ஒங்கு . உகள - ஒங்கி வளர்ந்த செந்நெற்பயிர்களின் நடுவே கெண்டைமீன்கள் துள்ளவும், பூங்குவளை ... படுப்ப - அழகுமிக்க நெய்தல்மலரில் புள்ளிக டைய வண்டுகள் கண் வளரவும், தேங்கா ... பசுக்கள் - தாழுவத்திற் புகுந்து பால்கறப்போர் பருத்த மடிகளைப் பற்றிக் கறக்கக் கறக்கக் குடம் நிறையப் பால்தரும், சிறுபிள்ளை கள் கட்டவும் தொடவும் இணங்கும் பெரிய பசுக்களும், நீங்காத. நிறைந்து - அழியாத செல்வமும் நிறைந்து (பெருகும்). (5)
மாலொப்புக் காட்டி மழைபெய்ய வழுத்தியது ஆழி மழைக்கண்ணு! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
(பொருள்) ஆழி. கரவேல் - மழைபெய்தற்குத் தலைமையான மழைத்தெய்வமே ! நீ உன்னுடைய மழையாகிய கொடையில் சிறிதும் ஒளித்தல்கூடாது, ஆழியுள் . ஏறி - நீ கடலிற் புகுந்து நீரைமொண்டுகொண்டு இடிமுழங்கி வானம் ஏறிப்பாவி, ஊழி . கறுத்து - எல்லாப் பொருள்களுக்கும் காரணனன திருமாலின் கிருமேனிபோல் கருமைநிறம் பெற்று, பாழி.மின்னி - பெருமை யும் அழகும் வாய்ந்த திருத்தோள்களையும் உங்தித் தாமரையையும் உடைய முழுமுதல்வன் வலத்திருக்கையில் பொருந்தியுள்ள திருவாழி ஆழ்வானைப்போல ஒளிவிட்டுக்கொண்டு, வலம்புரி . அதிர்ந்து - இடத்திருக்கையில் விளங்குகின்ற பாஞ்சசங்நியாழ்வா னைப்போல நிலைநின்று ஒலித்து, சாtங்கம்.சாமழைபோல் - சார்ங்கவில்லால் தள்ளப்பட்ட பாணமழைபோல், வாழ உலகி னில் - உலகோர் யாவரும் வாழும்படியும், நாங்களும் . நீராட - நாங்களும் மகிழ்ச்து மார்கழி நீராட்டம் செய்ய, தாழாதே பெய்திடாய் - தாமதியாமல் மழைபொழியக்கடவாய். )۳ھ(
2

Page 5
6 திருப்பாவை
யசோதை வயிற்றுதித்த எம்பெருமானை வாழ்த்தியது
மாயன மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனைத் தாயோமாய் வந்து நாம் தூமலர் தூ வித்தொழுது
வாயினுல் பாடி மனத்தினுல் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
(பொருள்) மாயனை . துறைவனை - வியத்தகு செய்கை புடையவனை இறையின்தொடர்பு நிலைபெற்ற வடமதுரையில் தோன்றியவனைத் தாய ஆழமான ைேமயுடைய யமுனை ஆற்றங் கரையில் விளங்குபவனை, ஆயர்.தாமோதரனை - இடைக்குலத் திலே விளங்குகின்ற மங்கல விளக்குப்போன்றவனை யசோதைப் பிராட்டியின் வயிற்றை விளங்கச்செய்யக் கண்ணிக் குறுங்கயிற் முல் கட்டுண்டவனுமான கண்ணபிரானை, தூயோமாய். தொழது - நாம் அகம்புறம் துப்புரவாய் வந்து நறுமலர்களைத் தள்வித் தொழுது, வாயினுல் .சிந்திக்க - வாயாரப் புகழ்ந்து பாடி மனத்தால் இடையருது எண்ண, போய.செப்பு - உண்மை ஞானம் உண்டாதற்கு முன்புண்டான பிழைகளும், பின் பு அறி யாமையால் வருகின்ற பாவங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருமாய்ந்து அழிந்து போகும் ; (ஆகையால் கண்ணனுக அவதரித்துத் தேவர் துயர்துடைத்த எம்பெருமானுடைய திரு காமங்களை) ஒது வாயாக. (6)
அரியென்னும் பேரரவம் அன்புடன் கேட்டெழுதல்
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலேயோ பிள்ளாய் ! எழுந்திராய் பேய்முல்ை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 7
(பொருள்) புள்ளும் . கோயிலில் - இரை )ققs@b ஒலித்துக்கொண்டிருக்கின்றன ; பறவைகளுக்குத் தலைவனுகிய பெரிய திருவடியை நடத்தும் முழுமுதல்வன் திருக் கோயிலில், வெள்ளை . கேட்டிலையோ - வெண்மை நிறமுடைய, யாவரையும் அழைக்குங் தன்மை வாய்ந்த சங்கின் பேரோசை கேட்கவில்லையா? பிள்ளாய் . காலோச்சி - ஆண்டவன்பால் அன்புசெய்து இன்புறும் தன்மையறியாத பெண்ணே ! எழுந் திருப்பாயாக : பூதனையின் கொங்கையில் தடவிய நஞ்சோடு அவ ளுயிரையும் உண்டு வஞ்சனை பொருந்திய சகடமானது கட்டுக் குலையும்படி கிருவடிகளாலே முறித்து, வெள்ளத்.யோகிகளும் - திருப்பாற் கடலிலே அரவணையில் கண் வளர்ந்தருளும் உலக முதல்வனை முனிவர்களும் மூச்சுப் பயிற்சிசெய் தவத்தோரும் தங்கள் உள்ளத்தில் அமைத்துக்கொண்டு, மெள்ள . குளிர்ந்து - அசையாது எழுந்து ‘அரியே அரியே’ என்று முழங்கும் பேரொலி எங்கள் மனம் புகுந்து குளிர்ந்து (வருகின்முேம்). (历)
நீயே வந்து திறவெனக் கூறுதல்
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலேயோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினுல் ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலேயோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணமூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்,
(பொருள்) கீசு . பெண்ணே - அறிவற்ற பெண்ணே, வலியன் பறவைகள் கூடிக் கீச்சுக் கீச்சென்று பேசின பேச்சொலி கேட்கவில்லையோ ? வாச.ஆய்ச்சியர்-மணங்கமழ்கின்ற அழகிய மயிர்முடியையுடைய இடைச்சியர், காசும் . கைபேர்த்துஅச்சுத் தாலியும் முளைத்தாலியும் ஆமைத் தாலியும் கலகலவென்று ஒலிக்கும்படியாகக் கையை எடுத்து, மத்தினுல்.கேட்டிலையோ - மத்தாலே கடைந்து ஒசைபடுத்திய தயிர் கடைகிற ஒசையும் கேட்கவில்லையோ? நாயகப்.பாடவும்-பெண்களுக்குத் தலைமை யானவளே, நாராயணனுடைய அவதாரமான கண்ணபிரானை சாங்கள் பாடவும், நீ.திற - கேட்டிருந்தும் கிடந்து உறங்கு கிருயோ? பத்தியொளி வாய்ந்தவளே! நீ வந்து திறப்பாயாக. (எ)

Page 6
8 திருப்பாவை,
வழிபட்டாருக்குவேண்டுவ தருளுவான் மாயன் கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்ரு ரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்ருேம் கோதுகுலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தான மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் ருராய்ந் தருளே லோ ரெம்பாவாய். (6штóäї) கோதுகுலழடைய . பாவாய் - கண்ணனல், விரும்பப்பட்ட அழகிய பதுமைபோன்றவளே! கீழ்வானம் . காண் - கீழ்த்திசையில் ஆகாயமானது வெளுத்து எருமைகள் வைகறையில் விடப்பட்டுப் பனிப்புல் மேய்கைக்காக வயல்களில் சென்று புகுந்தன; மிக்குள்ள . நின்றுேம் - உன்னை யொழின் தாரெல்லாரும் போகையைப் பய்கைக்கொண்டு போகிற எல்லாப் பெண்களையும் போக விடாமல் தடுத்து உன்னை அழைப்பதற்காக உன் வாசலிலே வந்து நிற்கின்முேம்; எழந்திராய் - எங்களோடு கலந்துகொள்ள எழுங்கிருப்பாயாக. பாடிப் பறைகொண்டு - கண்ணனுடைய குணங்களைப் பாடி அவனிடம் பறையைப் பெற்று, மாவாய் . சேவித்தால் - குதிரை வடிவோடு வந்த கேசி யென்னும் அசுரனுடைய வாயை இருபிளவாகக் கிழித்துப் போகட்டவனைச் சானூர முட்டிகரென்னும் மல்லர்களை மாளச் செய்தவனுய் உள்ள தேவதேவனை நாம் அணுகி அடிபணிந்தால், ஆஆ. அருள் - ஐயோ என்று இரங்கி நம்முடைய குறைகளை விசாரித்துக் கருணை புரிவான். )ئےy(
மாமீர் உம்மகளை எழுப்பீரோ என்பது
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ உம்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 9
(பொருள்) தூமணி.கண்வளரும் - குற்றமற்ற மணிகள் அழுத்திக் கட்டப்பட்ட மாளிகையில் நாற்புறத்தும் விளக்குகள் எரியவும், நறுமணப்புகை எங்கும் மணக்கவும், அன்னத்து வியாற் செய்த மென்மையான படுக்கையின்மேல் கண்ணுறங்குகிற ; மாமான்.திறவாய் - அம்மான் பெண்னே, மாணிக்கக் கதவினு டைய தாழ்ப்பாளைத் திறப்பாயாக. மாமீர்..அனந்தலோ - மாமி யரே, உள்ளே உறங்குகிற உம்மகளை எழுப்பமாட்டீரோ ? உம் முடைய மகள்தான் வாய்ப்புலன் இல்லாதவளோ செவிப்புலன் அற்றவளோ பேருறக்கம் உடையவளோ ? ஏமப்.பட்டானோ - எழுந்திராவண்ணம் காவலிடப்பட்டாளோ, நெடும்போது உறங் கும்படி மந்திரத்தால் கட்டப்பட்டாளோ ? மாமாயன்.தவின்று - அளவிட்டுச் சொல்லக்கூடாத வியத்தகு குணங்களையும் செயல் களையும் உடையவனே, திருமகள் கேள்வனே, பூநீவைகுண்ட காதனே என்று இவ்வாருக எம்பெருமானுடைய ஆயிரக்கணக் கான திருநாமங்களையும் வாயாரச் சொல்லினுேம் (இனியேனும் உன் மகளை எழுப்பலாகாதோ என்றனர். (க)
தெளிந்து வந்து கதவைத் திற என்பது
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மஞய் !
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியஞல் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானே ஆற்ற அனந்த அலுடையாய் ! அருங்கலமே !
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்,
(பொருள்) நோற்று.திறவாதார் - அழகிதாக நோற்று இன்ப நுகர்ச்சியை இடைவிடாது நுகர்கின்ற அம்மே வாசற் கதவைத் திறவாதவர்கள் ஒரு வாய்ச்சொல்லும் சொல்லமாட் டாரோ? பண்டொருநாள். தந்தானுே - முற்காலத்திலே கூற்றத் தின் வாயில் வீழ்ந்து இறந்த கும்பகாணனும் உனக்குத் தோற் றுப்போய்ப் பேருறக்கத்தைத் தானே தந்தானே ? நாற்றத். புண்ணியனுல்-மணம் கமழ்கின்ற திருத்துழாய் அணிந்த திரு முடியை உடையவனும், எவ்வுயிரையும் காப்பவனுமான சாரா யணன் அன்புடையவர்களாகிய நம்மாலே மங்களாசாசனம் பண் ணப்பட்டு நமக்கு வேண்டும் தொண்டாகிய பயனேத் தருபவனுய் நிலைநின்ற அறவாழி அந்தணன் ஆதலால், ஆற்ற...திற - பெருர் தாக்கத்தை யுடையவளே! எங்களுக்கு அணிபோன்றவளே ! தடுமாற்றமின்றித் தெளிந்து வந்து கதவைத் திறப்பாயாக. (கo)

Page 7
10 திருப்பாவை
அசையாது பேசாது உறங்குவது எற்றுக்கு
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்ருர் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்ருதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ
எற்றுக் குறங்கும் பொருளே லோ ரெம்பாவாய்.
(பொருள்) கற்றுக்.செய்யும் - கன்றுகளை ஈன்ற (என்றும் கடமையாகவே இருக்கும்) பசுக்களினுடைய பல குழுக்க2ள (மு?லக்கடுப்புத் தீரும்படி) கறப்பவர்களாய்ப் பகைவர்களுடைய வலிமை கெட வலிந்துசென்று போர் செய்யுமவர்களாய், குற்ற மொன்று.போதாாய்-ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்களாய் உள்ள பசுமேய்க்கும் இடையர்குடியில் பிறந்த பொன்கொடிபோல் அழகிய வடிவுடையவளே! புற்றிலிருக்கிற பாம்பின் படத்தை யொத்த பிட்டியினையும் காட்டில் விரும்பியவாறு திரியும் மயில் போலும் சாயலையும் உடையவளே ! எழுர்து வருவாயாக ; சுற்றத்துத்.பாட - உன்னுடைய எல்லா உறவினர்களும் தோழி யர்களும் திரண்டு வந்து உன் திருமாளிகை முற்றத்திலே புகுந்து கார்மேக வண்ணனன கண்ணனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டிருந்தும், சிற்றதே . பொருள் - செல்வம் வாய்ந்த நீ அசையாமலும் பேசாமலும் உறங்கும் செய்கை எப் பயனைக் கருதியோ ? (அறியோம்.) (ass)
ஊரறிந்ததாயிற்று உறங்காதே என்றது
கனத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முல்வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேருக்கும் நற்செல்வன் தங்காய் !
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினுல் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானப் பாடவும்நீ"வாய் திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் !
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

மூலமும் உரையும் 1.
(பொருள்) கனத்து..சோர-இளங்கன்றுகளையுடைய எருமை கள் பால் கறப்பாரில்லாமையின் கதறிக்கொண்டு தம் கன்றின் மீது இரக்கமுற்று அவற்றை நினைத்து அந்நினைவினல் மடிச் காம்பின் வழியே பால் இடைவிடாது சொரிய, நனைத்து.பற்றி - அதஞல் வீட்டைமுற்றும் ஈரமாக்கிச் சேருகப்பண்ணும் பெருஞ் செல்வத்தையுடையவன் தங்கையே பனி எங்கள் தலையிலே விழு மாறு உன் மாளிகை வாசற்காலின் தண்டியத்தைப் பற்றிச் கொண்டு, சினத். பாடவும் - பிராட்டியைப் பிரித்தான் என்னும் சினத்தினுல் இலங்கை வேந்தன் இராவணனைக் கொன்ற மனத் துக்கு இனியவனைப் பாடிக்கொண்டிருந்தும், நீ.அறிந்து - நீ வாய்திறந்து பேசுகின்றிலை ; ஊரிலுள்ளார் எல்லாரும் து லுணர்ந்த பின்பும் ஈதென்ன பெருந்தூக்கம் ; எங்கள் ஆற்ரு மையை அறிந்த நீ இனியேனும் எழுந்திருப்பாயாக. (àa -)
கள்ளந் தவிர்ந்து கலந்தின்புற வேண்டல் புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்றுப் புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினுய் குள் ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்நீ நன்னுளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலே ரெம்பாவாய்,
(பொருள்) புள்ளின் . போய் - பறவை உருக்கொண்டு வந்த பகாகுசனுடைய வாயைக் கிழித்தவனும், கொடிய இராவண னுடைய பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்தவனுமாகிய சக்கா வர்த்தி திருமகனுடைய வீர வரலாற்றைப் பாடிச்சென்று, பிள்ளைகள்.உறங்கிற்று - எல்லாப் பெண்பிள்ளைகளும், கண்ணி னும் தாங்களும் (நோன்பு கோற்பதற்காகக்) கூடுகைக்குக் குறித்த இடத்தில் புகுந்தார்கள் ; வெள்ளி உச்சிக்கு வந்து வியாழன் மறைந்தது, புள்ளும் . நீராடாதே - பறவை இசை தேடுதற்காக ஒலித்துக்கொண்டு சென்றன; பூவையும் மா?னயும் போன்ற கண்ணழகு வாய்ந்தவளே ! உடம்பு முழுதும் குளிரும் படி குளத்திற்படிந்தி முழுகாதே; பள்ளிக்.கலந்து - படுக்கையிற் கிடந்து உறங்குகின்ருரயோ, பதுமை போன்றவளே! கண்ணனும் நாமும் கூடுகைக்கு வாய்த்த இந்த நல்லநாளிலே நீ கண்ணன் பண்பையும் செயல்களையும் தனியே நினைத்து வஞ்சனையைவிட்டு எங்களுடன் கலந்து இன்புறுவாயாக. (at 5)

Page 8
13 திருப்பாவை
சொல்லும் செயலும் ஒவ்வாதாளை எழுப்புதல் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்த்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்ருர் எங்களே முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணுதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணுனைப் பாடேலோ ரெம்பாவாய்.
(பொருள்) உங்கள்.காண் - உங்கள் புழக்கடைத் தோட் டத்திலுள்ள தடாகத்துள் செங்கழுநீர் மலர்ந்து கருநெய்தல் குவிந்தன அஃதன்றியும், செங்கல்.போகின்றர் - காவிப்பொடி யில் தோய்த்த ஆடைகளையும் வெளுத்த பற்களையும் உடைய தவக்கோலத்தவர் தங்களுடைய திருக்கோயில்களைத் திறத்தற் பொருட்டுப் போகின்றனர், எங்களை. நங்காய் - யாவருக்கும் முந்திவந்து எங்களை எழுப்புவதாக வாய்ச்சொற் சொல்லிச் செய்யாதொழிந்த நங்கையே, நாணுதாய் . பாட - சொல் லியபடி செய்யவில்லையே என்னும் நாணமும் இல்லாதவளே பேச்சில் இனிமையுடையவளே பூரீபாஞ்ச சந்நியத்தையும் திரு வாழியாழ்வானையும் தாங்கிய நீண்ட திருக்கைகளையுடையவனும் செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான கண்ண பிரானைப்பாட, எழந்திாாய் - எழுந்திருப்பாயாக,
(ஆம்பல் - அல்வி. கூம்பின - குவிந்தன. செங்கற்பொடி . காவிப்பொடி, கூறை - ஆடை. நா - ஈண்டுச்சொல். இடவாகு
பெயர்.) (as ap)
மாயனைப் பாடி வருக என்றல்
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லேஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதா ரூயிடுக ஒல்லநீ போதாய் உனக்கென்ன வேறுடையை ܝ
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் வல்லானே கொன்ருண் மாற்ரு ரை மாற்றழிக்க
வல்லானே மாயனப் பாடேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 13
(பொருள்) எல்லே.உறங்குதியோ-(உணர்த்துமவர்) இளம் கிளி போன்ற சொற்களையுடையவளே நாங்கள் வந்தபின்பும் தூங்குகிருரயோ ? சில்லென்.போதர்கின்றேன் - (உறங்குமவள்) பருவம் வாய்ந்தவர்களே சிலுகுசிலுகு என்று அழையாதேயுங்கள்; புற்ப்பட்டு வருகின்றேன், வல்லை. வாயறிதும் - (உணர்த்துமவர்) பேச்சுவன்மையுள்ள உன் உறுதிமொழியையும் பேச்சு வல்லமை யையும் முன்னமே அறிவோம், வல்லிர்கள்.ஆயிடுக் - (உறங்கு மவள்) நீங்களே பேச்சுத்திறமை உடையவர்கள்; நீங்கள் சொல் கிறபடி நான்கானே வல்ல வளாக ஆகக்கடவேன்; ஒல்லை.வேறு டையை - (உணர்த்துமவர்) நீ விரைவில் வந்து சேரவேண்டும்; வேறு என்ன பயனை உடைத்தாயிருக்கிருய்; எல்லாரும் போந் தாரோ - (உறங்குபவள்) எல்லாப் பெண்களும் வந்தார்களோ போந்தார்.கொள் - (உணர்த்துபவள்) வந்திருக்கிருரர்கள்; புறப் பட்டு வந்து எண்ணிக்கொள். வல்லா?ன. பாட - வலிமை புடைய குவலயா பீடத்தைக் கொன்ருரனை பகைவர்களான கஞ் சன் முதலியோருடைய மதிப்பைக் கெடுத்தவனை மாயையில் அகப்படுத்துபவனைப் பாடுகைக்காக (என்கிருரர்கள்) (கடு)
கோயில் வாயிலானைத் திறக்கக் கோருவது
நாயக ஞய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறையறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
துரயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன் னம்முன்னம் மாற்ருதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
(பொருள்) தாயகனுய். திறவாய் - தலைவனுய் இருக்கிற
燃 நந்தகோபருடைய திருமாளிகையைக் காக்குமவனே துகில் காடிகள் விளங்குவதும் தோரணங்கள் கட்டியிருப்பதுமான திருவாயிலைக் காக்குமவனே! அழகிய கதவின் தாழ்ப்பாளைத் திறக்கவேண்டும்; ஆயர்.நேர்ந்தான் - இடையர் பெண்களான எங்களுக்கு நீலமணி நிறத்தையுடைய கண்ணபிரான் ஒலிக்கின்ற பறையைத் தருகிறேனென்று நேற்றே திருவாக்களித்துள்ளான். (ஆதலால்), துரயோமfய். பாடுவான் - திருப்பள்ளி எழுச்சி பாடுகைக்குத் தூய்மை புடையவர்களாய் வந்திருக்கிருேம். வாயால் நீக்கு - முதன் முதலிலே உம்வாயாலே மறுக்காதே; அன்றியும் சேர்ந்திருக்கிற வாசற்படியைபுடைய கதவை நீயே திறக்க. (கசு)

Page 9
14 திருப்பாவை
யசோதை கண்ணன் பலதேவரை எழுப்புதல்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்!
கொம்பனுர்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே! எம்பெரு மாட்டி! யசோதாய் அறிவுருய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா !
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
(பொருள்) அம்பரமே ... எழந்திாாய் - (முதற் கட்டில்) ஆடைகள் குளிர்ந்த தீர்த்தம் அடிசில் ஆகிய இவற்றைத் தானஞ் செய்பவரும் எங்களுக்குக் கடவுளானவருமான பூரீ கந்தகோபரே எழுந்திருக்க வேண்டும், கொம்பர்ை.அறிவுறுங் - (இரண்டாம் கட்டில்) வஞ்சிக்கொடி யை ஒத்த பெண்களுக்கெல்லாம் முதன் மையானவளாய் இக்குலத்துக்கு மங்கள தீபம் போன்றவளாய் எங்களுக்குத் தலைவியாய் உள்ள யசோதைப் பிராட்டியே எழுச் திருக்க வேண்டும், அம்பாம்.எழந்திராய் (மூன்ரும் கட்டில்) வானத்தையெல்லாம் இடைவெளியாக்கிக்கொண்டு, பரமபதத் தளவும் செல்ல வளர்ந்து அனைத்துலகங்களையும் அளந்தருளுகை யாலே தேவர்களுக்குத் தலைவஞனவனே கண் வளர்ந்தருளாமல் எழுந்திருக்க வேண்டும், செம்பொற்.உறங்கேல் - (நான்காம் கட்டில்) சிவந்த பொன்னற்செய்த வீரக்கழலையுடைய திருவடி களையுடைய பூரீமாஞன பலபத்திரனே உனக்குத் தம்பியான கண்ணனும் அவன் சொல்வழியே நடக்கும் நீயும் உறங்காதெழுச் திருக்கவேண்டும் (என்கிருரர்கள்.) (கஎ)
பின்னுய் அலர்பாடப் பெருங்கதவம் திற என்றல் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே ! நப்பின்னுய் ! கந்தம் கமழும் குழலி 1 கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 15
(பொருள்) உந்து.மருமகளே - மதநீர் பெருகாநின்ற யானை போன்ற, பகைவரைக் கண்டு பின்வாங்காத தோள் வலியையுடைய பூரீ நந்தகோபருடைய மருமகளே! நப்பின்னுய்.திறவாய்சறுமணம் கமழாநின்ற கூடந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியே கதவைத் திறவாய்; வந்தெங்கும்.காண் - கோழிகளானவை நாற்புறத்திலும் வந்து சூழ்ந்து கூடவாகின்றன ; குருக்கத்திச் கொடிப் பந்தல்மேல் தூங்குகிற குயில்கள் கூட்டங்கூட்டமாகக் கூடவா நின்றன, பந்தார்.மகிழ்ந்து - பந்து பொருந்திய விரல்களை புடையவளே ! உன் கணவன கண்ணபிரானுடைய திரு5ாமங் களை நாங்கள் பாடுமாறு அவனும் நீயும் மைத்துனமையாடி ஒருவர்க்கொருவர் இட்டீடு கொள்ளும்போது அவனுடைய பேர் களைப் பழித்துப் பாடும்படிக்கீடாக அழகுமிக்க வளைகள் ஒலிக் கும்படி நடந்து வந்து சிவந்த தாமரை மலர் போன்ற கையாலே கதவைத் திறப்பாயாக. (ጫ-9)
நப்பின்னுய் எழுப்பியிட நாடுக என்றது குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினுய் ! நீஉன் மணுளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.
(பொருள்) குத்து.ஏறி - நிலை விளக்குகள் நாற்புறமும் எரியாநிற்க யானைத் தந்தங்களால் செய்த கால்களையுடைய கட்டிலிலே மென்மை தன்மையையும் (அழகு, குளிர்த்தி, மார்த் தவம், பரிமளம், வெண்மை என்னும்) ஐந்து குணங்களையும் உடைத்தான திருப்பள்ளியில் ஏறியிருந்து, கொத்தலர். திறவாய் - சொத்துக்கொத்தாக அலராநின்றுள்ள மலர்களனிந்த திருக்குழலை உடைய நப்பின்னைப் பிராட்டியின் கொங்கைகளைத் தன் மேலே வைத்துக்கொண்டு கண் வளர்ந்தருளுகிற அகன்ற திருமார்பை யுடையவனே வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும், மைத்தடங். தகவன்று - அஞ்சனமிட்டு அழகுசெய் யப்பட்ட அகன்ற கண்களையுடையவளும், நொடிப்பொழுதும் அவனைப்பிரிச்து ஆற்ருதவளுமான நப்பின்னைப் பிராட்டியே! நீ உன்னுடைய மணவாளஞன கண்ணனை ஒரு கண்ணிமைப் பொழுதும் தாக்கத்தைவிட்டு எழுந்திருக்கவிடுகிருரயில்?ல; இது உன் இயற்கைக்கும் குணத்துக்கும் ஒவ்வாது (என்கிருரர்கள்). (கக)

Page 10
16 திருப்பாவை
கண்ணனையும் எங்களையும் கனிந் தாட்டுக என்றல் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்ப முடையாய் ! திறலுடையாய்! செற்ருர்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா 1 துயிலெழாய் செப்பன்ன மென்முலேச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்ன நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணுளண்
இப்போதே எம்மைதீ ராட்டேலோ ரெம்பாவாய்,
(பொருள்) ழப்பத்து . துயிலெழர்ய் - முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்குத் துன்பம் வருவதற்கு முன்னமே அவர்கள் நினைத்த இடத்திற்குச் சென்று அவர்கள் நடுக்கத்தைப் போக்கத்தக்க மிடுக்குடைய கண்ணபிரானே திருப்பள்ளி புணர்ந்து வரவேண்டும், செப்பம். துயிலெழாய் - அன்பரைக் காக்குமவனுய் அவர்கள் பகைவர்களை அடக்கும் வல்லமை புடையவனுய் பகைவர்களுக்குத் துன்பத்தையே கொடுக்க வல்ல வஞய் உள்ள துரயோனே துயிலொழிந்து வரவேண்டும், செப் பன்ன. துயிலெழாய் - பொற்கலசத்தையொத்த மிக மென்மை யான கொங்கைகளையும் பவளம் போன்ற சிவந்த வாயையும் நுண்ணிய இடையையும் உடைய பெண்மைக்குணங்கள் நிறைந்த நப்பின்னைப் பிராட்டியே பெரிய பிராட்டியாரை யொத்தவளே துயிலொழிச்து வந்" உக்கழம். நீராட்டு - ஆலவட்டத்தையும் கண்ணுடியையும் உன்னுடைய மணவாளனன கண்ணனையும் எங்கட்கு உதவி வேட்கையால் மெலிந்த உடம்புடையாான எங்களையும் இப்போதே நீராட்டக்கடவாய். (e-O)
ஒளியுருவே திருப்பள்ளி யுணரவேண்டும் என்றல்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீ தளிப்ப
மாற்ரு தே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுருய்
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்ருர் உனக்கு வலிதொல்ந்து உன் வாசற்கண் ஆற்ருது வந்து உன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 17
(பொருள்) ஏற்ற.பசுக்கள் - சுரந்தபாலை ஏற்ற கலங்கள் எதிரே பொங்கி மேலே வழியும்படியாக இடைவிடாமல் பா?லச் சுரப்பனவும் பெண்களும் பேதைகளும் அணைத்துக்கொள்ளு மாறு_சாங்கமும் உதாாகுணமும் வாய்ந்தனவும் பூநீசத்துருஞ்சய னைப்போலப் பருத்திருப்பனவுமாகிய பசுக்களை, ஆற்ற..அறிவுறுய் மிகவும் எண்ணிக்கையின்றிப் பெற்றுள்ளவரான நந்தகோப ருடைய பிள்ளையானவனே திருப்பள்ளி யுணரவேண்டும், ஊற்ற. துயிலெழாய் - மிக்க திண்மையுடையவஞய் வேதத்தா லும் அறியப்படாமையாகிற பெருமையுடையஞய் ஞானத்திலே விளங்கும்படி நிற்கிற ஒளியுருவமானவனே திருப்பள்ளி யுணா வேண்டும், மாற்றர். ஆற்றது - பகைவர் உன்னுடைய வலிமை யைக் கண்டு தங்கள் வலிமாண்டுபோய் உன் வாசலிலே கதியற்று வந்து பொறுக்கமாட்டாமல், வந்துள்.புகழ்ந்து - உன் திருவடி களிலே விழுமாறுபோலே உன்னைத் துதித்து யாம் மங்களா சாசனம் பண்ணிக்கொண்டுவந்து இங்குச் சேர்ந்தோம். (உக) திருக்கடைக்கண் நோக்கம் சாதிக்க வேண்டல் அங்கண்மா ஞாலத் தரசர்அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்க ணிரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
(6பாருள்) அங்கண்மா...கீழே - அழகியதாய் விரிந்ததாய் உள்ள பூமியை ஆண்ட மன்னர்கள் நமக்கு மேம்பட்டாளில்?ல என்னும் செருக்கொழிந்து தேவரீருடைய அரியாசனத்தின் கீழே, சங்கம்.தலைப்பெய்தோம்-கூட்டங் கூட்டமாய்ச் சேர்ந்து ஒலக்கமாக விருக்கும் மக்களைப்போல கீழ்ப்பட்ட வருத்த மெல்லாம் தீரும்படி வந்து கிட்டப்பெற்முேம், கிங்கிணி. விழியாலோ - (ஆதலின்) கிண்கிணி (சதங்கை)யைப்போல் பாதி மலர்ந்த செந்தாமரை மலர்போன்று அன்பினலே சிவந்திருக்கிற திருக்கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சார்ந்தவர்களான எங்கள் பக்கல் விழிக்கலாகாதோ திங்களும்.இழிந்து - சந்திர சூரியர் தோன்றினற்போன்ற அழகிய இரு கண்களால், எங்களைச் கடாட்சிப்பாயாகில், எங்களுடைய பாவம் யாவும் கழிந்துவிடும்.
(عاع)

Page 11
18 திருப்பாவை
விருப்பத்தை உசாவி அருளவேண்டும் என்றல் மாரி மல்முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதP
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணு உன்
கோயில் நின் றிங்ங்னே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளே லோ ரெம்பாவாய். (பொருள்) மாரி.விழித்து - மழைக்காலத்தில் மலைக்குகை யில் பெடையும் தானும் ஒன்றெனுமாறு ஒட்டிக்கொண்டு கிடக் துறங்காசின்ற வீரச்சிறப்புடைய அரிமாவானது உணர்ந்தெழுந்து (பகைவர்கள் பால் சீற்றத்தாலே) அனற்பொறி சிதறும்படி கண் களை விழித்து, வேரி.புறப்பட்டு - உளை மயிரானது சிலும்பும் படி நாலு பக்கத்திலும் புடைபெயர்ந்து (அசைந்து) உடம்பை உதறிப் பெருமைதோன்ற நிமிர்ந்து பேரொலி செய்து குகையி னின்றும் புறப்பட்டு, போதரு . கோப்புடைய- வருவதுபோல காயாம்பூப்போன்ற திருநிறத்தை யுடையவனே நீ உன்னுடைய கோயிலிலிருந்து இம் மணிமண்டபத்துக்கு எழுந்தருளிப் பலவகை வேலைப்பாடுகள் பொருந்திய, சீரிய.அருள் சீர்மையுடைத்தான இவ் அரியணையில் எழுந்தருளியிருந்து நாங்கள் விரும்பி வந்த காரியத்தை உசாவிக் கிருபை (த?லயளி) செய்யவேண்டும் (என்று இாக்கிருரர்கள்.)
(முழைஞ்சு - குகை, தீ - நெருப்புப்போன்ற ஒளியுள்ள கண், வேரி - மணம். மூரி - வலிமை; பெருமை. போதருதல் - வருதல்.) (e (6) போற்றித் தொடர்புகன்று புரவலனை வேண்டல் அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்ருய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 19
(பொருள்) அன்று .இரங்கு - தங்கள் வாழ்வை மாபலி கவரத் தேவர்கள் வருந்திய அக்காலத்தில் இவ்வுலகை மாவலி பால் இாந்து நீரேற்று இரண்டடியாலே அளந்த உன் திருவடி களுக்கு மங்களமுண்டாகக்கடவது ; இராவணனிருச்த இலங் கையை அழித்தருளியவனே உன் திருத்தோள்வலிக்கு மங்கல முண்டாகக் கடவது; உருமாய்ந்து போமாறு சக டாகுரனை உதைத் தவனே உன் புகழுக்கு மங்களமுண்டாகக் கடவது; கன்றின் வடிவு கொண்டு வந்த வத்சாகுரனை எறிகருவியாகக்கொண்டு (விளா வின் வடிவாய்நின்ற கபித்தாகுசன்மேல், எறிந்து இருவரையும் ஆக்னே உன் திருவடிகளுக்கு மங்களமுண்டாகக்கடவது; காவர்த்தனமென்னும் மலையைக்குடையாக எடுத்துக் காத்த வனே உன் தண்ணளிக்கு மங்களமுண்டாகக் கடவது; பகைவர் களை வேரோடு அழிக்கும் தன்மையதான உனது திருக்கை வேலுக்கு மங்களமுண்டாகக் கடவது; என்று இவ்வாரு க உனது வீர சரிதங்களைச் சொல்லி உன்னை அனுபவிக்கைக்காக காங்கள் இன்று வந்தோம் கருணைசெய்தருள வேண்டும். )eتق(
ஒளிந்து வளர்ந்தாய் உனைப்பாட அருளென்றல்
ஒருத்தி மகஞய்ப் பிறந்துஒ சிரவில்
ஒருத்தி மகளுய் ஒளித்து வளரத் தரிக்கிலா ஞகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (பொருள்) ஒருத்தி. வளர-தேவகிப்பிராட்டியாராகிய ஒருத் திக்குப் பிள்ளையாய்த் திருவவதரித்து அந்த இரவில்தானே ஒப் பற்ற யசோதைப் பிராட்டிக்குத் திருமகனக ஒளித்து வளருங்கால், தரிக்கீலா..பிழைப்பித்து - அதனைப் பொருது உன்னைக் கொல்ல வேண்டும் என்று பொல்லாங்கை நினைத்த கஞ்சனுடைய எண் ணத்தைப் பயனற்றதாக்கி, கஞ்சன்.நெடுமாலே - அவன் வயிற் றில் நெருப்புப்போல் அழலநின்ற சார்ந்தார்பால் பெரும் பித்த ஞனவனே, உன்னை.தருதியாகில்-உன்பக்கல் உறுதிப்பொருளை இரந்து வந்து வேண்டினுேம் நாங்கள் உன்னியதைச் செய்வா யானல், திருத்.மகிழ்ந்து : பிராட்டியும் விரும்பத்தக்க உனது சம்பத்தையும், வீரியத்தையும் நாங்கள் உகப்புடன் பாடி உன்னைப் பிரிக்திபடும் துன்பம் நீங்கி மகிழ்வோம். (e-6)

Page 12
20 திருப்பாவை
மார்கழி நீராட் வேண்டுவன அருளென்றல்
மாலே! மணிவண்ணு மார்கழிநீராடுவான்
மேல்யார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் பொய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே! விதானமே!
ஆலி னிலையாய் அருளே லோ ரெம்பாவாய்.
(பொருன்) மாலே.கேட்டியேல் - சார்ந்தவரிடம் போன் வாய்ந்தவனே ! ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே! நீலம6 போன்ற வடிவுடையவனே ! உத்தமப் பெரியோர்களால் மேற் கொள்ளப்பட்ட மார்கழி ாோட்டத்தை சாங்கள் செய்யும் பொருட்டு வேண்டியவைகள் யாவை என்று கேட்பாயாகில், ஆாலத்தை.போல்வன - பூமியெல்லாம் நடுங்குமாறு ஒலிப்பன வும் பால்போல் நிறத்தையுடைய உன்னுடைய பூரீ பாஞ்ச சன்னியத்தை யொத்தனவுமான, சங்கங்கள்.பறையே-சங்கங் களும் மிக்க பெருமையும் பெரிதுமாயுள்ள பறை ஆகிய வாச்சியங் களும், பல்லாண்டு .அருள் - பல்லாண்டு பாடுபவர்களும் மங்கள தீபங்களும் கொடிகளும் மேற்கட்டிகளும் ஆகும் இவற்றை நீ எங்களுக்கு அளித்தருள வேண்டும் (என்கிருரர்கள்).
(ஞாலம் - உலகம். முரல்வன - ஒலிப்பன. பாஞ்ச சன்யம் - இறைவன் இடக்கையிலுள்ள பாஞ்சசன்யம் என்னும் பெய ருடைய சங்கு.) )ܧaF(
அழகுறுத்தி உடனிருந்து உண்ண அருள் என்றல் கூடாரை வெல்லும்சிர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினுல் நன்ருகச்
குடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 2.
(பொருள்) கூடfரை.சம்மானம் - தன் அடியைத் தொழாத வரை வெற்றிகொள்ளும் குணத்தையுடைய கண்ணபிரானே! உன்னை அன்போடு பாடிப் பறையைப்பெற்றுப் பின்னும் நாங்கள் பெறும்படியான பரிசுகள் யாவை எனில், நாடு.வளையே - நாட்டார் புகழுகைக்கு ஈடாக முன்கைச்சரியும் தோளுக்கிடும் அணிகலனன தோள்வளையும், தோடே.அணிவோம் - தோடும் கர்ணப்பூவும் (காலணியாகிய) பாடகமும் என்முற்போல் சொல்லப்பட்ட பலவகையான அணிகளும் (நீயும் நப்பின்னைப் பிராட்டியுமாக இருந்து பூட்ட) நாங்கள் நன்முக அணிவோம், ஆடை.குளிர்ந்து - திருப்பரிவட்டங்களை (நீ உடுத்த) உடுப் போம், அதற்குப் பின்பு பாற்சோமுனது மறையும்படி நெய் பரிமாறி முழங்கைவழி வழி யும் படி யாக உண்டு (நீயும் காங்களுமாகக்) கூடியிருந்து இன்புற்றுக் குளிரவேண்டும் (என்கிருரர்கள்). (a67)
வெகுளாது எங்கட்கு வேண்டுவன அருளென்றல் கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் .
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னேடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினுல் உன்தன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
(பொருள்) கறவைகள் . ஆய்க்குலத்து - ப சுக் களின் பின்னேபோய்க் காட்டிலே பொருந்தி உடம்போம்பி உண்டு திரியுமவர்களாயும் சற்றேனும் அறிவுமில்லாத இடைக்குலத்திற் பிறந்த நாங்கள், உன் . உடையோம் - உன்னை ஒத்த குலத்தானகப் பெறத்தக்க புண்ணியத்தை உடையவர்களாயும் இாாகின்முேம், குறைவொன்று.ஒழியாது - ஒருவ்கைக் குறையும் இல்லாதவனுய்க் கோவிந்தனென்னும பெயரையுடையனப் உள்ள சிசுவாமியானவனே, உன்றன்னேடு (எங்களுக்கு உண்டான) தொடர்பு இங்கே உன்னலும் எங்களாலும் ஒழிக்கமுடியாது, அழியாத.பறை - (ஆதலால் உலக வழககம் ஒன்றும்) அறியாத சிறுமிகளாகிய நாங்கள் உன்னை அன்பாலே (நாராயணன் என்ற) சிறிய பெயராலே அழைத்ததைக் குறித்து அன்பாைப் பெரிதும் விரும்புகிறீர்; வெகுளாமல் நாங்கள் வேண்டிய பறையைத் தக்தருள வேண்டும் (என்கிருரர்கள்). )e عےy(

Page 13
22 திருப்பாவை
எந்நாளும் அடிமையாயிருக்க வேண்டல்
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்ரு மரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வா னன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழே ழ் பிறவிக்கும் உன்தன்னேடு உற்ருேமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
(பொருள்) கோவித்தா - பசுக்களைக் கா க் கும் கண்ண பிரானே, சிற்றம்..கேளாய் - மிகவும் விடியற்கா?லயிலே இங்கு வந்து தேவரீரை வழிபட்டுத் தேவரீருடைய அழகிய தாமரை மலர்போன்ற திருவடிகளை மங்களாசாசனம் பண்ணுகைக்குப் பயனைக் கேட்டருள வேண்டும், வெற்றம்.பேரீகாது - பசுக்களை மேய்த்துப் பின்பு உண்ணும் இடைக்குலத்தில் திருவவதரித்த தேவரீர் எங்களிடத்தில் அந்தரங்க கைங்கர்யங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருத்தல் கூடாது, இற்றைப் . பிறவிக்கும் ெ பசுக்களைக் காப்பாற்றுபவரே தாங்கள் கொடுக்கும் பறையைப் பெற்று இன்றைக்கு அகலுகைக்கு நாங்கள் வந்தோமல்லோம் காலமுள்ளதனையும் (தேவரீருடைய) எவ்வவதாரங்களிலும், உன் தன்னுேடு.மாற்று - தேவரீருடைய உறவு உடையவர்களாகக் கடவோம் (அ நக்யார்ஹைகளா யிருக்கவேண்டும்) தேவரீருக்கே நாங்கள் அடிமை செய்யக் கடவோம்; எங்களுக்கு வேறு பொரு ளில் உண்டாகும் விருப்பங்களைத் தவிர்த்தருள வேண்டும் (என்கிருரர்கள்). (2-3)
தமிழ்மாலை முப்பதால் சார்வர் பேரின்பு
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப் Q .
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசு ரைப்பா சீரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.

மூலமும் உரையும் 28
(பொருள்) வங்கக்.இறைஞ்சி - கப்பல்களை உடைய திருப் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் தந்தருளின திருமகள் நாதனை கண்ணபிரானை நிறைமதியை ஒத்த அழகிய முகத்தையும் செவ்விய அணிகலன்களையும் உடைய ஆயர்மகளிர் சென்று வணங்கி மங்களாசாசனம் பண்ணி, அங்கப்..சொன்னன அத்திரு ஆய்ப்பாடியில் நாட்டுக்குப் பறையென்ருெரு தலைக் கீட்ட்ையிட்டுத் தாங்கள் அடிமையைக் கைக்கொண்ட வா லாற்றை அழகிய பூரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும் குளிர்ந்த புதிய தாமரை மலர்களாலாகிய மா?லயை உடையவரும்
ராமண உத்தமாான பெரியாழ்வாருடைய திருமகளாரான வ
மான ஆண்டாள் அருளிச் செய்த, சங்கத். இன்புறு *C? திாள் திரளாகக்கட்டி அனுபவித்த பிரபந்தமாய்த் தமிழ்ப் பாமாலையான முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இந்தச் சமுசா ரத்திலே இப்பாசா மாத்திரத்தைச் சொல்லுமவர்கள் எல்லா இடங்களிலும் பெரிய ம?லயை யொத்து கிண்ணிதாயிருந்துள்ள நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருக்கண்களையும் அழகிய திருமுக மண்டலத்தையு முடையனுய் (நீத்திய விபூதியும் லீலா விபூதியுமாகிற) செல்வத்தையுடையனுய்த் திருமகள் நாதனய் உள்ள நாராயணன் அருளப் பெற்றுப் பேரின் பத்துடன் வாழ்வர். (5-0)
பூந் ஆண்டாள் திருவடிகளே சரணம்

Page 14
பொருளியல்பு
'மார்கழித்திங்கள்? இத்திருப்பாட்டு திருப்பாவையின்கண் உள்ள ஏனைப்பாட்டுக்களின் கருக்கொண்டு திகழ்கின்றதென் பதையும் பிறவற்றையும் ஆன்ருேரர்கள் அமைவுற விரித்து விளக்கி யுள்ளார்கள். அவற்றின் சுருக்கத்தை இங்கே தருகின்ருேம்.
*மார்கழித்திங்கள்? மகிநிறைந்த நன்ஞள், நீராடப்போது வீர் போதுமினே நேரிழையீர் சீர்மல்கு ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர் காள், கூர்வேல் கொடுந்தொழிலன், நந்தகோபன், குமரன், கார்மேனி, செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான், நாராயணன் என்னும் ஒன்பது திருமொழிக்குறிப்புக்களாலும் முறையே முதலேந்து திருப்பாட்டுக்களையும், ஆறுமுதல் பதினைந்து வரையுள்ள பத்துப்பாட்டுக்களையும், பதினறுமுதல் முப்பது வரை யுள்ள பாட்டுக்களையும் அமைவுறக்குறிப்பன.
ஆவிகள் அனைத்தும் ஆண்டான் திருவடியைக் கூடி மீண்டு வாரா அடிமைபூண்டு யாண்டும் பெறற்கரிய பேரின்பப் பெரு வாழ்வு நுகர்ந்து இன்புறப் பெண், அன்பு என்னும் ஒரு மாத் திரைப்பெற்றி எய்துதல் வேண்டும். ஆண்டாள் இயல்பாகவே அப்பெற்றி வாய்ந்தவர். ' ஏனை ஆழ்வார்கள் ஆண் அறிவு என்றும் இருமாத்திரைப் பெற்றியர். அவர்கள் ஒரு மாத்திரை (பெண்மை) எய்தியே பாடியருளினர். ஆழ்வார் பதின்மரையும் இங்ஙனமே குறிப்பிற் புலனக வைத்தமையை விரிந்த நூலுட் காண்க. ஆண்டாள் பள்ளமடையன்பாம் பான்மையர்.
நீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
அப்பர் அச்சகம், சென்னை-1, IE. C. 3200-12-1958.


Page 15
கழக வெளியீடு : GT@@
F is கழக வெ
மலர் வழிப
பின்ாேயார் ஆழிபாடு முருகப்பெருமான் வழிபாடு சிவபெருமான் வழிபாடு உமையம்மை வழிபாடு அம்பலவாணர் வழிபாடு திருமால் வழிபாடு
F1 riu II Tri
திருநீறும் சிவமணியும் திருவைந்தெழுத்து சிவதிக்கை திருவிளக்கு வழிபாடு திருக்கோவில் வழிபாடு வழிபாட்டுக்குரிய தேவாரத் வழிபாட்டுக்குரிய பிரபங்தத் பள்ளிக்கூட விழிபாடு திருவெம்பாவை (உரையுட
வேண்டுகோ
(இன்பம்
1, 2, 3, 4, 5 புத்தகங்கள் த
பிற பூப்பிள்ளே அட்டவனே திருவாசகத் திருவகவல்
கழகச் சைவ விணுவிடை ( சைவசமய நோன்பு விளக்க,
அப்பர் அச்சகம், சென்னே -

ர்ச்சிக்கான
எளியீருகள்
r".5 5hI cf53):F
- ജൂ
ச்சி நூல்கள்
திரட்டு
திரட்டு
IF
ன்)
ாள் பதிகங்கள்
ई केन्8 व्57) னித்தனி வில் நூல்கள்
I "முதற் புத்தகம்) lf
விலே காசு 15.