கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாகித்திய விருது பெற்ற மேமன் கவிக்கு பாராட்டு விழா

Page 1


Page 2

சாகித்தியவிழாவில் இலக்கிய விருது பெற்ற
மேமன்கவிக்கு பாராட்டு விழா
13. 12.92. மாலை 5.30 மணிக்கு
ஹோட்டல் தப்ரபேன் (GRAND ORIENTAL, HOTEL) கோட்டை
ஏற்பாடு இந்து இளைஞர் மன்றம் கொழும்பு
Organized By Young Men Hindu Association
.Colombo ܢܠ
ン

Page 3
சிறப்பு அதிதிகள் )
z கெளரவ ஏ. ஆர். மன்சூர்
வர்த்தக வாணிப துறை அமைச்சர்
r கெளரவ பி.பி. தேவராஜ்
இந்து கலாச்சார இராஜங்க அமைச்சர்
கெளரவ எம். ஏ. அப்துல் மஜீத் நெசவு கைத்தொழில் அமைச்சர்
s கெளரவ எம்.எஸ். செல்லச்சாமி
கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
本, கெளரவ எம்.ஈ.எச். மஹ்ரூப்
துறைமுகங்கள் கப்பற் துறை இராஜாங்க அமைச்சர்
事 கெளரவ இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர்
வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
கெளரவ யூ.எல்.எம். பாரூக் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர்
事 கெளரவ இராஜமனோகரி புலேந்திரன்
கல்வி இராஜாங்க அமைச்சர் 事 உயர்திரு.கே. கணேசலிங்கம் ஜே.பி.யூ.எம்.
பிரதி மேயர்
காப்பாளர் இந்து இளைஞர் மன்றம்
திரு. ராஜா சின்னத்துரை ஜே.பி.
மேல்மாகாணசபை உறுப்பினர்
திருமதி வேலம்மாள் செல்லச்சாமி ஜே.பி.
மேல் மாகாணசபை உறுப்பினர்
திருமதி யமுனா கணேசலிங்கம் செயலாளர், இந்து மகளிர் மன்றம்

நிகழ்வுகள்
தமிழ் வாழ்த்து
தலைமை
வரவேற்புரை
தொடக்க உரை
அறிமுக உரை
பாராட்டுரைகள்
கவி வாழ்த்து
நன்றி நவிலல்
ܢܠ
: இந்து இளைஞர் மன்றத்தினர்
: பிரதம ழரீ பா.சண்முகரத்தினசர்மா ஜே.பி.
பிரதம அர்ச்சகர் பூரீ பால செல்வ விநாயகர் ஆலயம்
; திரு.தே. செந்தில் வேலவர்
தலைவர் : இந்து இளைஞர் மன்றம்.
: இலக்கியச் செம்மல்
திரு. ஆர். சிவகுரு நாதன் பிரதம ஆசிரியர் தினகரன்.
திரு. அந்தனி ஜீவா
திரு. ஆ. சிவநேசச்செல்வன் பிரதம ஆசிரியர் வீரகேசரி
திரு.என். சிவராசா பணிப்பாளர் தமிழ்ச்சேவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
திரு.எஸ். விஸ்வநாதன் பணிப்பாளர் தமிழ் நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்
கலாநிதி சுனில் ஆரியரட்ன திரு. மடுளுகிரிய விஜயரட்ன திரு . ஜின்னாஹ் செரிப்புதீன்
: திரு. மேமன்கவி

Page 4
/ இதயம் பேசுகிறது N
தே. செந்தில்வேலவர் தலைவர் கொழும்பு இந்து இளைஞர் மன்றம்
இந்து சமயத்தில் மறுமலர்ச்சியையும் இந்து இளைஞர்களிடையே புத்துணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டது எமது கொழும்பு இந்து இளைஞர் மன்றம் (Y.M.H.A.). அது மாத்திரமல்ல இன ஒற்றுமைக்காகவும், நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுத்துவதற்கு பல பணிகளை செய்து வருகின்றது.
ஆகவே அதன் முன்னோட்டமாக, இன ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக ஓர் இஸ்லாமிய கலைஞனைக் கெளரவிப்பதனை எண்ணி பெருமைப்படுகிறது.
இன்றைய நாட்டின் சூழலில் இனங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியத்தை நாம் உணர்ந்தே இந்தப்பணியிலிடுபட்டோம். அதனால் வெறும் பேச்சளவில் மட்டும் அதனை கூறாமல், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இதன் முதற் கட்டமாகவும், முன் மாதிரியாகவும், எமது மன்றம் ஒரு கவிஞனைப் பாராட்டிக் கெளரவிக்கின்றது. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தான் நம்மிடையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்.
இன்று நாம் பாராட்டி கெளரவிக்கும் மேமன்கவி, மொழி, மதம் கடந்து சிந்திப்பவர். மானுடத்தை நேசிக்கும் அற்புதமான அறிவு ஜீவி. அதனால்தான் அவரை சாகித்திய விருது, தேடி வந்தது. அவரது ஆற்றலும் ஆளுமையும் அவரது கவிதா படைப்புகள் மூலம் வெளிப்படுகின்றன. இனங்களுக்கிடையே ஒற்றுமைக்காக தன் எழுத்துக்களின் மூலம் எடுத்துக்காட்டாக பல செயற்பாடுகளை செய்து வருபவர்.
இந்து இளைஞர் மன்றம் இவரை தெரிவு செய்து பாராட்டுவதில் பெருமைப்படுகிறது. இந்த விழா இன்றைய இளைய தலைமுறையினர்க்கு வழி காட்டும் ஒரு விழாவாக அமையட்டும்.
இது போன்ற விழாக்கள் தொடரட்டும்! இனங்களுக்கிடையே நட்புறவு வளரட்டும்! ノ ܢܠ

பாராட்டு விழா கண்டு மகிழ்கிறேன்
மாண்புமிகு. பி.பி.தேவராஜ் பா.உ. இந்து கலாச்சார ராஜாங்க அமைச்சர்
சாகித்திய விருது பெற்ற புதுக்கவிதையாளர், இலக்கியவித்தகர் மேமன்கவி அவர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டு விழா கண்டு மகிழ்கிறேன்.
மேமன்கவி என்ற பெயர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் நன்கு பழகிய பரிச்சயமான பெயர். தனது புதுக்கவிதைகளால் பெருந்திரளான ஆர்வலர்களைச் சம்பாதித்துக் கொண்ட மேமன்கவி பிரபல கவிஞர்கள், எழுத்தாளர்களின் ஆசியையும் பெற்றவராவார்.
வாணிபத்தை அவர் தமது தொழிலாகக் கொண்டிருந்தாலும் வார்த்தைகளைக் கோத்து கவிதை வடிவத்திலே கைதேர்ந்த கவிஞராக விளங்குகின்றார். தனது தொழில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இலக்கியவிழா, நூல் வெளியீடு கவியரங்கம் ஒன்றுகூடல் போன்ற பலதரப்பட்ட இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்துவதோடு அவற்றுடன் இரண்டறக்கலந்து தனது இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொண்ட கவிஞர் மேமன். வரது பல கவிதைகள் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டன. பிரபல கவிதைச் சக்கரவர்த்திகளான வைரமுத்து, மேத்தா போன்றோர் இவரது கவிதை நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளனர்.
ங்ங்னம்,சிறப்புமிக்க ஒரு கவிஞருக்கு கொழும்பு இந்து இளைஞர்
மன்றம் பாராட்டி கெளரவிக்க முன்வந்துள்ளமை பெருமகிழ்வு தரும் விடயமாகும்.
ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே கொழும்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய மன்றம் அடுத்தடுத்து நல்லபணிகளை ஆற்றி வருகின்றது. தலைநகரில் இங்ங்னம் ஒரு இளைஞர் அமைப்ட ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், சமூக சேவையிலும் துடிப்புடன் செயல்படுவது பாராட்டத்தக்கதாகும்.
இளைஞர் மன்றத்தினர் இத்தனை நாள் செய்துவந்த பணிகளைவிட கவிஞர் மேமன்கவி அவர்களை கெளரவிப்பதன் மூலம் ஒரு புதிய சிந்தனையை முன்வைக்கிறார்கள்.
சமயரீதியான பணிகளை ஆற்றுகின்ற அதேவேளை ஒற்றுமைக்கும், இன செளஜன்யத்துக்கும் பாடுபடமுடியும் என்பதே அந்த புதிய சிந்தனையாகும்.
இந்த பரந்த கண்ணோட்டம் இன்றைய அடிப்படைத் தேவையாக இருக்கின்றது. இதனை நன்குணர்ந்து ஒரு சிறுபணி மூலம் தமது நல்லெண்ணத்தை உணர்த்தி வைக்கின்ற இந்து இளைஞர் மன்றத்தினரை மனமாரப் பாராட்டுகின்றேன். இளைஞர் மன்றப்பணிகள் சிறக்க வாழ்த்துகின்றேன்.
一ノ  ܼܲܢܠ

Page 5
/ இன செளஜன்யம் நாடும் N
மேமன் கவி விழா
எழுத்தாளர் மேமன் கவி முஸ்லிம்களால் மட்டுமல்லாது தமிழ் மக்களாலும் பாராட்டப்படும் ஒரு எழுத்தாளர். இவர் தமிழர் அல்லர். மேமன் சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழ் இவருக்கு அந்நிய மொழி. ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட காதலினால் தமிழ் கற்று இலங்கைத் தமிழ் கவிஞர் வரிசையிலே இவர் இன்று இடம் பெறுகின்றார். பல நூல்களை இந்தியாவிலேயே வெளியிட்டிருக்கின்றார். புதுக்கவிதைச் சக்கரவர்த்திகள் வைரமுத்து, மேத்தா போன்ற புகழ் மிக்க கவிஞர்கள் இவரைப் பாராட்டியிருக்கிறார்கள். எமது இந்து சமய கலாசார அமைச்சு மேமன்கவிக்கு விருது வழங்கிச் சிறப்பித்திருக்கின்றது.
இத்தகைய சிறப்புமிக்க ஒரு கவிஞருக்கு கொழும்பு இந்து இளைஞர் மன்றம் விழா எடுத்து கெளரவிக்க முன் வந்திருப்பது எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும். மேமன்கவி ஒரு முஸ்லிம், இந்து இளைஞர் மன்றம் தமிழ் இந்துக்களின் அமைப்பு. இன ஐக்கியம், செளஜன்யம் பற்றி பேசுகின்ற இவ்வேளையில் இந்து இளைஞர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நாம் பூரண ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும். முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், இந்து சமய கலாசார அமைச்சர் பி. பி. தேவராஜ் ஆகிய இருவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர். இது அழகுக்கு அழகு செய்யும் அம்சம்.
மேமன் கவியின் கவிதைகளும் பரந்த நோக்கங்கொண்டவையே. இவர் குறுகிய வட்டத்துக்குள் நின்று சுழல்பவர் அல்லர். மனித நேயக் கோட்பாடுகளை பொருளாகக் கொண்டு கவிதைய:ப்பவர். சமூகத்தில் இருக்கின்ற குறைபாடுகள் நீங்கிட வேண்டும் என்று தன் கவிதை மூலம் வற்புறுத்துகின்ற ஒரு பெருமகன். இவரது பணி நீடிக்க வேண்டும். இத்தகையவர்களின் பங்களிப்பே தமிழ் சிறப்படையச் செய்யும். அமைதியும், சமாதானமும் நிலவச் செய்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாதலின் இந்து இளைஞர்கள் எடுத்துக் காட்டுகின்ற முன்மாதிரி பலருக்கும் பிரயோசனப்பட வேண்டும்.
‘எங்கள் கருத்து" தினகரன் வாரமஞ்சரி (22-11-92
ஞ ஆசிரியர் தலையங்கம்
ノ ܢܠ

/ N தமிழ் இலக்கியத்தில்
ஒரு வரலாற்றுப்புதுமை
அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், பா. உ. ,
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.
புதுக் கவிதைத்துறையில் சாதனை படைத்து வரும் மேமன் கவி-அப்துல் ரஸாக் அவர்களுக்கு கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பாராட்டு விழா ஒன்றினை நடத்துவதையிட்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இலக்கியத்துறையின் அடித்தளமே கவிதைதான். சங்க கால அகநானுறு, புறநானூற்றிலிருந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமைப்பாகவும், உருவத் தோற்றமாகவும் கவிதை தொடர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது. பெருங் காப்பியங்கள் கவிதையிலேயே பிறப்பெடுத்தன. அத்தகைய நீண்ட, நெடு வரலாற்றையுடைய கவிதைக் களத்தில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட புதுமையே புதுக் கவிதையாகும். யாப்பிலக்கண வரையறைக்குள் இது ஆகுமோ, ஆகாதோ என்கின்ற வாதத்தை ஊமையாக்கி, இத்துறையில் சாதனை படைத்திட்ட பலரை தமிழ் இலக்கிய உலகு தன்னுள் இழுத்துக்கொண்டுள்ளதை இன்று காண்கின்றோம்.
மேமன்கவியின் தனிச் சிறப்பு, அவர் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவரல்லர். அவரது தாய் மொழி மேமன். தமிழில் இருந்து வெகுதுரரப்பட்ட மொழி ஒன்றினைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் இலங்கையைத் தாயகமாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் தனது முத்திரையைப் பதித்திட விழைந்தது ஒரு வரலாற்றுப் புதுமையாகும். அது மட்டுமன்றி இந்நாட்டின் இலக்கிய அரங்கினுள் தனது தடத்தினைப் பதித்திடத்துணிந்தது அவரது வயதொத்த இளைய தலைமுறையினருக்கு ஒரு மகத்தான அறைகூவலுமாகும். இத்தகைய ஒருவருக்கு கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பாராட்டு விழா நடத்துவது மிகவும் பொருத்தமானதே இத்தகு ஆற்றலுள்ளோரைத் தமிழ்கூறும் நல்லுலகு இன்று பேருவகையோடு நோக்குகின்றது. வடஇந்திய வித்திலே உருவாகி, மேமன் பாரம்பரியத்தில் வந்து, இலங்கை மண்ணில் பிறந்து தமிழிலே இலக்கியம் படைக்கும் ஒரு முஸ்லிமுக்கு, இந்து இளைஞர்மன்றம் கண் ணியம் அளித் திடுவதையரிட் டு எனது பாராட் டு க் களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
புனித இஸ்லாத்தின் செய்தியினை, அதன் ஏகத்துவத்தை, அதனைத் தாங்கி வந்த எம். பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குாதுவத்தைத் தமிழ் உலகில் சமர்ப்பிக்கின்ற ஓர் அறப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல பெரும் அறிவாளர்களோடு மேமன் கவியும் இணைந்து தனக்குக் கைவந்த கலையைத் தக்க கருவியாகப் பயன்படுத்தி அரும்பணியாற்றிட விழைவார் என எதிர்பார்க்கின்றேன்.
ノ ܢܠ

Page 6
/ மல்லிகைப்பந்தலின் N கொடிக்கால்கள் - டொமினிக் ஜீவா -
கல்முனையா, நீர்கொழும்பா, புத்தளமா, கொழும்பில் பல்வேறு பகுதிகளா, எங்கெங்கு இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், கலந்துரையாடல்களெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இந்த இளம் இலக்கிய ஆர்வலரைக் காணலாம். அத்தனை ஆர்வம், அத்தகைய தமிழ் உணர்ச்சி, இடையறாத இலக்கியத் தேடுதல் முயற்சி. ་་
பெயர் ஏ. கே. ரஸாக். கொழும்பில் மட்டக்குளியில் வசிப்பவர். மேமன் கவி' என்ற புனை பெயரில் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். பிறப்பாலோ, மொழியாலோ இவர் தமிழரல்ல. இவரது தந்தையார் வட இந்தியாவைச் சேர்ந்த நூல் வர்த்தகர். கொழும்பில் வியாபார நிமித்தம் வாழ்ந்து வருவதினால் இவரும் அங்கே வாழ்விடம் தேடி இருந்து வருபவர். *
இவரை எப்பொழுதும் இரண்டொரு எழுத்தாளர்களுடன் தான் கொழும்பு வீதிகளில் பார்க்க முடியும். எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடி பொழுது போக்குவதே இவரது தினசரிக்கடமைகளில் பெரும் பகுதி வேலை.
தமிழக-ஈழத்து எழுத்தாளர் சகலரினதும் நூற்களைச் சேகரிப்பதுடன் புத்தகங்கள் கிடைக்க வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக வழங்குவதில் தனி மகிழ்ச்சியடைபவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் 'இளந்தளிர்" என்ற தலைப்பில் இவரை மல்லிகை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த அறிமுகம் வீண் போகவில்லை என இன்று பெருமிதம் கொள்கின்றது.
பழகுவதற்கு மிகச்சிறந்த நண்பர். தனது சிரமத்தையும் பாராமல் எழுத்தாளர்களுக்கு ஒடி ஒடி உதவுவதில் தனித் தன்மை மிக்க பிறவி. எப்படியாவது தமிழ் எழுத்து உலகில் வேர் ஊன்றிவிட வேண்டுமென்ற தணியாத ஆர்வம் மிக்கவர்.
மல்லிகைக்கு விளம்பரம் தேடும் பணியில் ஒத்துழைப்பு நல்கும் இவர், சில சமயங்களில் தனது ஆசியையே விளம்பரமாகத் தந்து உதவியுள்ளார்.
அருமையான இதயம் படைத்த இளைஞர், இவரது ஊக்கமும் உற்சாகமும் உழைப்பும் தமிழ் இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டிய \'(. (மல்லிகை மார்ச் ש"י

/ N புதுக்கவிதைக்காரர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்
ஆர். சிவகுருநாதன் பிரதம ஆசிரியர் 'தினகரன்'
தமிழ் தெய்வீக மொழி, சக்தி மிக்க மொழி, யாவரையும் வசீகரிக்கும் முன்மொழி, உலகினர்க்குப் பொதுவான மொழி, இன, மதபேதமின்றி அனைவரையும் கவரும் தன்ன்ேரில்லாமொழி. இதனாலன்றோ மேலைநாட்டு மிஷனரிகளான வீரமாமுனிவர் ஜோன் பெஸ்கி, டாக்டர். ஜி. யு. போப்பைய்யர் போன்றவர்களும் கமில்ஸ் வலபில் போன்றவர்களும் தமிழைக்கற்று, தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தந்தார்கள். இத்தகையவர்களின் வரிசையிலே இன்னும் பலர் தமிழ் தமது தாய்மொழியில்லாவிடினும் தமிழில் ஆர்வம் கொண்டு தமிழில் நூல்களைத் தந்துள்ளனர். சிங்கள பெளத்த துறவியான பலகல்ல சரஸ்வதி வானசிஸல்ல பிரிவேனவின் வண இஸல்ல தர்மரத்ன தேரர் இவ்வாறு தமிழ்ப்பணி ஆற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அண்மைக் காலங்களில் சிறிய அளவிலேனும் இவ்வாறான தமிழ்ப்பணியில் ஈடுபட்டுழைக்கின்றார் அப்துல் றஸாக் லாகானா என்ற மேமன் சமூகத்தைச் சேர்ந்த மேமன் கவி அவர்கள் . எமது புதுக்கவிதைக்காரர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் இவர். மொழி வாழ்க்கை முறை வேறாக இருந்த போதிலும் தமிழ் மகனாகவே வாழ்ந்து இவர் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றார். நீண்ட மேலங்கி, வாய்நிறையத் தாம்பூலம், சுற்றிநிற்கும் சில தமிழ் ஜீவன்கள் - மேமன் நினைத்ததும் மனதிற்தோன்றும் காட்சி இதுவே. தமிழரை நேசித்து, அன்புடன் பழகி உதவி வருபவர் மேமன்கவி.
பலநூல்களை மேமன்கவி வெளியிட்டிருக்கின்றார். இன்னும் பல நூல்களை இவர் படைக்கவேண்டும், இவரதுபணி மேலும் சிறப்படைந்து தமிழ் ஆர்வலர்களுக்கு மேலும் உதவும் வகையிலே வாழ்வில் சுபீட்சம் காணவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

Page 7
இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அல்ஹாஜ் எஸ். எம். கமால்தீன்
அண்மைக் காலத்தில் தமிழ் இலக்கிய துறையிலிருந்து-சிறப்பாக எழுத்துத்துறையிலிருந்து ஓரளவு ஒதுங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இலங்கை நூலக சங்க நடவடிக்கைகளிலான ஈடுபாட்டினால் எனக்கேற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தானும் தமிழ் இலக்கியத்துறையில் என்னைவலிந்து இணைத்துவரும் இரண்டொரு நண்பர்களுள் நான் மிகவும் சிலாகித்துக் கூறக்கூடிய இலக்கிய நண்பர் மேமன்கவி அவர்களாகும். இதைப்போலவே, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து முன்னேற்றுவதிலும் மேமன் கவி மிகுந்த சிரத்தை காட்டிவருகிறர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இலங்கையில் சமகாலக்கவிதையரங்கில் முன்னணியில் நிற்பவர்களுள் ஒருவர் மேமன்கவி கவிதையுலகில் உயர் நிலையில் திகழும் சகாக்களின் மதிப்பினைப் பெற்றவர் அவர், சாகித்திய மண்டலம் பரிசில் வழங்கி இலங்கை கலாசார அமைச்சரினால் கெளரவிக்கப்பட்டவர்.
தமது தாய்மொழியாகிய மேமன் மொழியில் அவர் காலுன்றித் தமிழ்க் கவிதையாக்கத்தில் அவர் அடைந்துள்ள சிறப்பிடம், இன்று இலங்கை முஸ்லிம்களுள் ஒரு சாரார் ஏற்றுவரும் சிங்கள மொழியிலான கவிதையாக்கத்திற்கு சிறந்ததொரு முன் மாதிரியாக அமையுமென்று நம்புகிறேன்.
மேமன்கவி அவர்களின் கவிதைகளில் மேலோங்கி நிற்பது மானிடமே யாகும். வாழ்வின் விழுமியங்களும், பெறுமதிகளும் தேய்ந்துவரும் இக்காலத்தில் அவர்தம் கவிதைகள் சிந்தனைத்தெளிவையும், நேரிய நோக்கையும் எமக்களிக்கு மென்பதில் ஐயமில்லை.
கவிஞர் தமிழ் மொழிக்கு பல்வேறு அறிவுச் சாதனங்களினூடாக ஆற்றிவரும். அரிய பணிகளைப் பாராட்டுவதுடன் அவர் ஆக்க ഴക്ക மேன்மேலும் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ノ

இலக்கிய இதயம்
வாழ்க!
ஆ. சிவநேசச்செல்வன் பிரதம ஆசிரியர் ‘வீரகேசரி’
மேமன் கவி மனிதநேயத்தோடு வாழ்க்கையை நோக்கும் கவிஞர் என்பதை “நாளைய நோக்கில் இன்றில்" என்ற தொகுதி மூலம் உணரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வப்போது உதிரியாக அவருடைய கவிதைகளை அனுபவித்திருக்கின்றேன்.
சொற்கள் அவருக்குக் சேவகம் செய்வது போல விழுவதும், கருத்துக்கள் அதனுாடே கிளர்வதும் புதிய அனுபவங்களை நாகுக்காகச் சொல்வதும் அவருடைய தனித்துவமான பாணியாகும்.
'மல்லிகை" இதழ்களில் அவ்வப்போது வாசித்த நல்ல கவிதைகள் நினைவை நெருடுகின்றன. மேமன் கவி நின்றும், இருந்தும், நடந்தும் என்றும் இலக்கியசேவை என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர். இவருடைய எழுத்துக்களின் ஆதர்சத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் வெளியிடும் சிறப்பு மலரும், பாராட்டு விழாவும் மேமன்கவியை மேலும் சிறப்போடு இலக்கியப்பணியைத் தொடர வழி வகுக்கவேண்டும்.
வர்த்தக உலகின் மூட்டங்களின் மத்தியிலே உணர்வோடும், வேத்தோடும், நிதானத்தோடும் மனிதனைத் தரிசிக்கும் உணர்வோவியங்களாகிய கவிதைகள் அவற்றில் பதிந்துள்ள படிமங்களின் செழுமையால் என்றும் வாழும்.
மேமன்கவி இலக்கிய இதயம் வாழ என் வாழ்த்துக்கள்.
ノ  ܼܲܢܠ

Page 8
/ மேமன் கவியின் N
மேலான பங்களிப்பு
பிரேம்ஜி (பொதுச் செயலாளர்), இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
புதுக் கவிதை விற்பன்னர் மேமன்களிக்குப் புதுமையான பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்து இளைஞர் மன்றத்தினர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்று இனத்தைச் சேர்ந்த, மாற்றுக் கருதுகோளைச் சேர்ந்த ரஸாக்கைப் பாராட்டி விழா எடுக்கிறார்கள். பலர் கடந்த ஆண்டு சாகித்தியப் பரிசைப் பெற்றிருந்தபோதிலும் மேமன்கவி மட்டும் தனித்து இந்து இளைஞர்களின் பாராட்டுக்கு உரித்தாக்கப்பட்டதன் சூட்சுமம் என்ன?
ஒன்று: "நானே எல்லா ஆத்மாக்களினதும் அந்த்ராத்மாவாக இருக்கிறேன" என்று பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறும் "தெய்வம், மானுடம், ஜீவராசிகள் அனைத்தும் ஒன்றே" என்ற மகோன்னதமான ஆத்ம ஒருமைப்பாட்டுத் தத்துவத்திற்கும், 'அன்பே சிவம்' என தெய்வத்தை அண்பாக ஆராதிக்கும் சிவாகமத்தின அடிச்சரடான மூல தர்மத்திற்கும் பாராட்டு விழா எடுக்கும் இந்து இளைஞர்கள் சுத்த விகவசிப்புடன் இருப்பது.
இரண்டு: இந்து இளைஞர்களின் பாராட்டைப் பெறும் மேமன்கவி இன, மத, கருத்துருவ வேறுபாடுகளைக் கடந்து மானுடம் முழுமையையும் மெய்யார்வத்துடனும் மெய்யன்புடனும் நேசிக்கும் மனிதநேயக் கவிஞராக உயர்ந்து நிற்பது.
மெய்யான மதம் மானுடத்தை நேசிக்கிறது. மெய்யான இலக்கியம் அதே மானுடத்தை நேசிக்கிறது. மெய்யான கருத்துருவம் மானுடத்தையே நேசிக்கிறது. இந்த மூன்று தோற்றப்பாடுகளினதும் இயங்கு சக்தியாகச் செயற்படும் மானுட நேய உணர்வுதான் இந்த விழாவின் உள்ளியக்கு சக்தியாக இருந்திருக்கிறது.
மேமன்கவரி இளைய தலைமுறைப் படைப்பாளிகளுள் தனக்கென ஓர் உயர்ந்த ஸ்தானத்தை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். ஆழ்ந்த தமிழ் ஆர்வம், பவித்திரமான இலக்கியப்பற்று, தேனினிய சுபாவம் இவரை இலக்கிய உலகில் உயர உயர உயர்த்தியுள்ளன. புதுக்கவிதையை பழம்பெரும் மரபுக் கவிஞர்களும் மூத்தபெரும் இலக்கிய ஆய்வாளர்களும் ஒரு இலக்கியப் பரீட்சார்த்த வடிவமாகத்தானும் ஏற்க மறுத்த ஒரு பகைப் புலத்தில் புதுக்கவிதைக்கு இலக்கிய அந்தஸ்தையும் பலமான இருப்பையும்பெற்றுக் கொடுப்பதில் மேமனகவி காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். மானுட வக்கரிப்புகளினதும்.தனி மனித மன உளைச்சல்களினதும், தசை உணர்வு விகாரங்களினதும் வெளிப்பாடாக ஆரம்ப தசையில் இருந்த புதுக்கவிதைக்கு-இதனாலேயே இலக்கிய உலகின் நிராகரிப்புக்கு உள்ளான இந்தப் புதிய அளடகத்திற்கு மனித நேய, சமுதாயப் பிரக்ஞைப் பரிமாணத்தை அளிப்பதிலும் மேமன்கவி மேலான பங்குப்பணி ஆற்றியுள்ளார்.
தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள புதுக்கவிதையாளர்களின் வரிசையில் முன்முகப்பில் திகழும் மேமன்கவி புதுக்கவிதையை முற்போக்கான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான கூரிய சாதனமாக பயன்படுத்துவதுடன், புதுக்கவிதையின் படைப்பு நுட்பங்களில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவதும் அதன் சிருஷ்டிச் செய்திறனில் பாண்டித்திய முத்திரையைப் பதித்துவருவதும் படைப்பிலக்கியத்திற்கு ஜீவித முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலம் மேமன்கவி புதுக்கவிதை செய்வோர்களுக்கு ஓர் ஆதர்ஸமாகவும், செல்நெறி காட்டும் படைப்பாளியாகவும் மிளிர்கிறார்.
முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்த மேமன்கவி பாராட்டுப்பெறுவதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கிய உலகமும் பெருமிதமும் பூரிப்பும் அடைகின்றன. மேமனின் இலக்கியப் பணி புதிய புதிய தொடுவானங்களை
Net- வாழ்த்துகிறோம். ノ

/ N மானுடம் நேயம் கொண்ட
மென்மைக் கவிஞர்
என். சிவராஜா பணிப்பாளர், தமிழ்ச்சேவை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
நமது நாட்டிலே, புதுக்கவிதை பற்றி பேசப்படும்போது, நிச்சயமாக நினைவுக்கு வருகின்ற சில கவிஞர்களுள் மேமன்கவி அவர்களும் ஒருவர். இதுவே சிறப்பான முறையிலே, புதுக்கவிதைத் துறையிலே மேமன்கவி அவர்கள் தடம் பதித்திருப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதபோதும் அதிலே தேர்ச்சியும், மாட்சியும் பெற்றவராக இருப்பது அவர்தம் திறமைக்கு சான்று. அவர்தம் திறமை கண்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை அவருக்கு அவ்வப்போது தக்க இடம் கொடுத்து கெளரவித்துள்ளது. மானுடநேயம் கொண்ட இந்த மென்மைக் கவிஞர் மேலும் சிறப்புகளைப் பெறவும், அதனால் புதுக்கவிதையுலகம் பொலிவு பெறவும் எனது வாழ்த்துக்கள்.

Page 9
/ N
ஆளுமையும்,கவிதா ஆற்றலும்
மிக்க கவிஞர்
எஸ். விஸ்வநாதன். உதவிப் பணிப்பாளர் தமிழ் நிகழ்ச்சிகள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
சாகித்திய விருது பெற்ற திரு. மேமன்கவிக்கு இந்து இளைஞர் மன்றம் பாராட்டு விழா நடத்துவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் ஆளுமையும், கவிதா ஆற்றலும் மிக்க கவிஞர் மேமன்கவி.
அவர் தொலைக் காட்சி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது மெல்லிசைப் பாடல்கள் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகியுள்ளன. அத்துடன் அவரது இலக்கிய உரைகளும் இடம் பெற்றுள்ளன.
புதுக்கவிதைத் துறையில் திறமை மிக்கவராகத் திகழும் திரு. மேமன்கவி எல்லாருடனும் இனிமையாக பழகும் நல்ல உள்ளம் படைத்தவர் அவரை இந்து இளைஞர் சமூகம் பாராட்டி கெளரவிக்கின்றது. சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஏற்படுத்த இந்த விழா முன் மாதிரியாக அமைய விருக்கிறது.
கலைஞர்களிடையே இனமதபேத வேறுபாடுகள் இல்லை. அவர்கள் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றுபட்டு பல சாதனைகளை படைக்கவேண்டும்.
கவிஞர் மேமன்கவியின் கவிதா ஆற்றல் மேலும் வளரட்டும், அது மானுடம் தழைத்தோங்க உதவட்டும். 一ノ

மனித நேயன் மேமன்கவி
“ஜின்னாஹ்" மேமன் குலமீந்த மாண்புடைநற் புத்திரனே! “மேமன் கவி' அப்துல் றஸாக்கெனும் நற் கவிவாணா! நாமின் றிங்கொன்றி நாடேற்றும் நின்புகழைப் பாமா லைசூட்டிப் பாராட்ட வந்துள்ளோம். ஏனானால், மேமன் குலத்தோர்கள் மொழியாலே வேறாகத் தாமாய்த் தமிழ் மொழியைத் தாய்மொழியாய் நேசித்தே தேமா மது தோய்த் தெடுத்ததமிழ்ச் சொல்லாலே பூமா தலம் போற்றப் பாடுகின்றாய் என்பதனால் LJ stø) IfTG00Ts Tl சதா சிவந்து கிடக்குமுந்தன் செவ்விதட்க்குக் காரணம் நீ சதா தரிக்குந் தாம்பூலச் சாற்றின்நிறம், என்றாலோ அதுவன்று காரணமென் றடித்துரைப்பேன் நானோர்
நற் w புதுமைப் பொருளதற்குப் பொருந்துமென்ற காரணத்தால் ஏதில்லைக் குருதியிரு வண்ணங்கள் கொண்டிடவோர் சாதி:ே மக்களெல்லாம் சரிநிகராய்ப் பிறந்துள்ளோம் ஈதெடுத்துச் சொல்லிச்சம தர்மத்தைச் செப்புவதால் ஒதும் நின் உதடுகளும் ஒளிர்கிறது சென்நிறத்தால். "பாய்" வாயில் தமிழென்றால் பெருவியப்பே இலை தொழிலால் தாய் மொழியோ டின்னும்பல தெரிந்திருப்பர் ஆனாலும் “ւյուն" |5GաՈ தூயநற் றமிழ்மொழியின் தொடர்சொற்க ளாற்கவிதைப் பாய் விரித்துப் பாமரர்க்கும் பஞ்சணையாய்த் தருகின்றாய்
གས་ཆམས་ར་ 565 D600fGBul ン

Page 10
/
பண்டிதர்க்குப் பாட்டெழுதும் பழக்கந்தான் எனக்குண்டு நீயோ நற் பண்டிதர்க்கும் பாமரர்க்கும் பாட்டெழுதிப் புகழ் கொண்டாய் எதிகைக்கும் மோனைக்கும் என்கவிகள் வாழ்வளிக்க புதுப்படிமம் குறியீடுன் பாக்களிலே நடம்புரியும் "குத்தியானா'ச் சீமைக் குலக்கொழுந்தே ஒப்புவையோ உத்திகள் தான் வேறெங்கள் உளக்குமுறல் ஒன்றென்றே. "நமக்குத் தொழில்கவிதை நாட்டுக் குழைப்ப"தென புரட்சிக் கவியன்று புகன்றிட்டான் அன்னவன் போல் இலக்கியங்கள் செய்வதெங்கள் இருவருக்குந் தொழிலல்ல வேறாக நோய்தீர நானுதவ நூலாடை வாணிபத்தில் "பாய்” நீயாய்: இருவருமே பாச்சரங்கள் தொடுக்கின்றோம் ஆதலினால் பாரதிக்கு நாங்களிரு பெறாமக்கள் தானாவோம். மனிதநேயம் பற்றிநிதம் மார்தட்டிப் பேசுபவர் புனிதர்களாய் வேஷமிட்ட போதினிலும் "மேமனே” நீ இனபேத மற்றெவரும் இன்னலுறுங் காலுதவும் மனங்கொண்டாய் நீமனித நேயத்தின் உவமானம் அதனாற்றான் சொந்தமாய் எண்ணித் தூயமனத் தோடேநம் இந்துநண்பர் கூடியுனை இதயத்தால் வாழ்த்துகின்றார் ஆதலினால் நன்றியுரைப்பேன் நானுமந்த நல்லவர்க்கே என்றும்சமாதானம் இம்மண்ணில் நிலைபெறட்டும்.
一ノ -ܠ

/ N
ஒர் அநாயாசமான ஆற்றல் அவருக்கு உண்டு!
கவிஞர் இ. முருகையன்
"மேமன் கவி எங்களது சிறப்பான அவதானிப்புக்கு உள்ளாகிறார். வேறொரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர், தாம் கற்றறிந்த இரண்டாம் மொழியாகிய தமிழ் மொழியின் வாயிலாக, தலைநகரத்துப் பட்டினப்பாக்கத்து நிலைகளைப் படமாக்கும்போது, குழந்தைகளின் மழலைகளைக்கேட்டுச் சுவைக்கும் அநுபவம் போல்வதொரு நயம் தோன்றவே செய்கிறது. ஆனால் அவர் கலப்பு உருவகங்களை (அல்லது படிமங்களை) அள்ளி அடுக்கி அடுக்கிச் சொல்லும் போது நாம் திகைத்துத் திணறிப் போய் விடுகிறோம். படிமங்களை ஆக்குவதில் அப்படியான ஆசை அவருக்கு, படிமங்களைப் பெருந்தொகையிலே செட்டுமட்டில்லாமல் அள்ளி வீசுவதில் ஓர் அநாயாசமான ஆற்றலும் அவருக்கு உண்டு,"
('மல்லிகைக் கவிதைகள்’
முன்னுரையில் - 1987)
ノ ܢܠ

Page 11
/ -- N
மேமன் கவி இன்றைய ஈழத்துக்கவிதைப் போக்கின்
ஒரு பிரதி நிதி
கலாநிதி எம். ஏ. நுஃமான்
மேமன்கவி 1970ம் ஆண்டின் பின்னர் கவிதை எழுதற் தொடங்கியவர் என்று நினைக்கின்றேன். 70ன் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும் தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கவிதை உலகுள் இழுத்து விட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனைப் போக்குடைய இவ்விளைஞர்கள்யாவரும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளுள் ஈழத்துக் கவிதை பெரும்பாலும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. முற்போக்கான கருத்துக்களே இன்றையப் புதுக்கவிதையின் பலம் என்று சொல்லவேண்டும். கலைப் பெறுமானம் உடைய படைப்புக்கள் இவற்றுள் மிகச் சொற்பமாகவே காணப்படுகின்றன. புதுக்கவிதை உலகின் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடையும்வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபத்தில் தென்படத் தொடங்கியுள்ளன என்று வேறு ஒரு கட்டுரையில் இன்றைய ஈழத்துக் கவிதைப் போக்குபற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நண்பர் மேமன் கவி இன்றைய ஈழத்துக் கவிதைப்போக்கின் ஒரு பிரதிநிதியாகவும் உள்ளார். அவரது இத்தொகுப்பில் பல்வேறு ரசமான 32 கவிதைகள் உள்ளன. பொதுவாக இவை அனைத்தும் சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிரான கருத்துக்களையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வகையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனைப் போக்கை வெளிக்காட்டுகின்றது எனலாம். ஆயினும் இன்றையப் புதுக்கவிதைகளில் காணப்படும் சில குறைபாடுகளை நாம் இங்கும் காண முடிகின்றது. அச்சமைப்பைக்கொண்டு கவிதை அந்தஸ்துப் பெற்ற சில கவிதைகள் இத்தொகுப்பிலும் உள்ளன. திரும்பத் திரும்ப ஒரே பொருளை வெவ்வேறு வகையில் கூறுவதான ஒரு மனப் பதிவையும் சில கவிதைகள் ஏற்படுத்துகின்றன.
ܢܠ
(யுகராகங்கள் முன்னுரையில் 197
ツ

அப்துல் கரீம் அப்துல் ரஸாக்
- ராஜ ழரீகாந்தன் -
கவிஞர்கள், கலைஞர்கள் உட்பட ஆக்கப் படைப்பாளிகள் அனைவரும் கருவிலேயே திருவினைத் தாங்கிப் பிறக்கிறார்கள். அவர்களின் வாழிடம், வாழும் சமுதாயம் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், கூடிக் குலவும் நண்பர்கள், குழிபறிக்கும் எதிராளிகள், கட்டிய மனைவி பெற்றெடுத்த பிள்ளைகள், செய்யுந் தொழில், நாட்டு நடப்புக்கள், சர்வதேச நிகழ்வுகள் போன்றவை அவர்களைப் பட்டைதீட்டுகின்றன. பட்டைதீட்டப்படும்போது தரமானவை ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன, தரமற்றவை மங்கி ஒளியிழக்கின்றன. இந்தவகையில் தனது 35 வது வயதில் "இலக்கிய வித்தகர்" என்ற தேசிய விருதினைப்பெற்ற புதுக் கவிதைப் புரவலர் "மேமன் கவி” என்ற புனைபெயரில் புகுந்து தனது இயற்பெயரை இழந்துவிட்ட அப்துல் கரீம் அப்துல் ரஸாக்கைப்பற்றிய வாழ்குறிப்போன்றை இம்மலரில் எழுதுவது சாலப்பொருந்துமெனக் கருதுகிறேன்.
இலங்கைக்கு மதங்களையும், மதங்கள் சார்ந்த கலாசாரங்களையும், கலைகளையும், நாகரீகங்களையும் இன்னபிறவற்றையும் தந்த இந்திய உபகண்டத்தின் குஜராத் மாநிலத்தின் செளராத் - ஜூனாகட் ராஜ்யத்திலிருந்து திரைகடல் கடந்து திரவியந்தேட இலங்கைக்கு வந்தவர்தான் மேமன் இனத்தைச்சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹமத், இஸ்லாம் மதத்தின் ஜூன்னி - அனபி பிரிவைச்சேர்ந்த இந்த இனத்தவர் பேசும் மேமன் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை. மத அறிவு அரபு மொழியூடாக ஊட்டப்படுகிறது.
"உலகில் எந்தவொரு - திசையிலும் ஒருவன் கொலை செய்யப்படுவானால் உலகில் மற்ற திசையில் வாழ்பவன் சந்தோஷப்படுவானானால் அந்த கொலைப்பாதகத்தில் அவனும் பங்கு ஏற்கிறான்” என்ற அடிப்படையில் அமைந்த நபிகள் நாயகத்தின் மணிமொழியை கட்டிலில் ஒருக்களித்துச் சாய்ந்துகொண்டு தனது இதயத்தெழுந்த வார்த்தைகளை அந்தப் பெரியவர் அப்துல் கரீம் அப்துல் முஹமத் "இன்றைய காலநிலையில்" கூறியதைக்கேட்டபோது எனது உயிர் சிலிர்த்தது. பெருத்த மனிதாபிமானியான இவருடைய துணைவியார் ஜுபைதாவினதும் உயிரும் உடலும் பெற்றவர்தான் அப்துல் ரஸாக், இந்த "மேமன் கவி' - குடும்பத்தின் மூத்த மகனாக 29.04.1957ந் திகதி பிறந்தார். இந்தக் குடும்பம் வாழ்ந்த பகுதியிலுள்ளவர்கள் தமிழ்மொழியைப் பேசியதால்
/ പു
அப்துல் ரஷாக் "கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்திற்கு

Page 12
1. - Imagyagmumung
ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டார். கல்வியற் சான்றோனாய்த் திகழவேண்டுமென்பது தந்தையின் நோக்கமாக இருக்கவில்லை தமது குலத்தொழிலாகிய வியாபாரத்திற்கு ஆரம்ப கல்வியறிவே போதுமெனத் தந்தை கருதியதால் 1971ம் ஆண்டில் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வி முடிந்தது.
அப்துல் ரஸாக்கிற்கு வாசிப்புப் பசி நிறையவே இருந்ததால் தமிழில் -வெளிவந்த சிறு நூல்களையும் மலிவுச் சஞ்சிகைகளையும் மர்ம நாவல்களையும் சிறுவயதில் நிறைய வாசித்தார். தமிழ்மொழிமீது நாட்டத்தை ஏற்படுத்தித்கொடுத்தமைக்காக தனது தமிழாசிரியர் திரு. எம். அஷ்ரப்கான் அவர்களை நன்றியுடன் குறிப்பிடுகிறார். பாடகரும் ஒவியருமான திரு. எச். ஜி. சேகர் இவருடைய ஆர்வத்தை, இலக்கியத்தை நோக்கித் திசைதிருப்பிய சுக்கானாக இருந்தார். இவர் கொடுத்த நா. பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்” நெடுங்கதையே அப்துல் ரஸாக் வாசித்த முதல் இலக்கியப் படைப்பாகும். இந் நூல் தனது வாழ்க்கையில் பெருந்திருப்பமொன்றை ஏற்படுத்திவிட்டதாக அப்துல் ரஸாக் குறிப்பிடுகிறார். படைப்பார்வம் கருக்கொண்டு 70 களில் ஒன்றிரண்டு சிறுகதைகளை எழுதினார். அவை அச்சில் வரவில்லை, கவிதைகளில், குறிப்பாக மரபுக் கவிதைகளில் ஆர்வம் ஏற்பட்டது.
"தமிழே என் மூச்சு" என்ற தலைப்பிலான இவருடைய முதல் இலக்கிய படைப்புப்பாக முதற் கவிதை 1974ம் ஆண்டு பெப்ரவரி மாதம் "சுதந்திரன்" பத்திரிகையில் வெளிவந்தது. மேமன் இனத்தில் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் எவருமே இல்லாதிருந்ததால் தனது இனத்தினுடாகத் தன்னை வெளிப்படுத்த "மேமன்கவி" என்ற புனைபெயரைப் பூண்டுகொண்டு தமிழில் தனது படைப்புக்களைப் பிரசவிக்கின்றார்.
எங்கெங்கு இலக்கியக் கூட்டங்கள் நடந்தாலும் அங்கங்கே சென்று ஆர்வத்துடன் பங்குகொள்வார். 1974 ம் ஆண்டில் "மல்லிகை" டொமினிக் ஜீவாவின் அறிமுகம் ஏற்பட்டது. அக்காலப்பகுதியில் வீரியத்துடன் இயங்கிவந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவரைப் பெரிதும் ஆகர்சித்தது. பிரேம்ஜி, பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, சில்லையூர் செல்வராஜன், தெணியான், லெ. முருகபூபதி அந்தனிஜீவா போன்றோரின் தொடர்புகளும் இக்காலப்பகுதியிலேயே ஏற்பட்டன. இந்த அறிமுகங்களும் தொடர்புகளும் இவரிடம் புதிய மாற்றங்களையும் புதிய சிந்தனை வீச்சுக்களையும் ஏற்படுத்தின.
1976 மார்ச் மாத "மல்லிகை மாசிகையில் "மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள்” பகுதியில் ஆசிரியர் டொமினிக் ஜீவா "கல்முனையா,
لر ܢܠ

N / நீர்கொழும்பா, புத்தளமா, கொழும்பில் பல்வேறு பகுதிகளா, எங்கெங்கு இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், கலந்துரையாடல்களெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இந்த இளம் இலக்கிய ஆர்வலரைக் காணலாம். அத்தனை ஆர்வம், அத்தகைய தமிழுணர்ச்சி, இடையறாத இலக்கியத் தேடுதல் முயற்சி. சில ஆண்டுகளுக்கு முன்னர் "இளந்தளிர்" என்ற தலைப்பில் இவரை மல்லிகை அறிமுகஞ்செய்துவைத்துள்ளது. அந்த அறிமுகம் வீண்போகவில்லை என இன்று பெருமிதம் கொள்கிறது." என்று மிகச் சரியாகவே எழுதியுள்ளார்".
1976 ஜூலை மாதத்தில் மேமன் கவியின் முதலாவது கவிதைத் தொகுப்பான "யுக ராகங்கள்" எழுத்தாளர் சுட்டுறவுப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. இதே ஆண்டு இதே மாதம் 31 ந் திகதி இவர் பரீனா என்ற இளம்பெண்ணைக் காதல் திருமணஞ் செய்துகொண்டார். 4.9.1979ல் முதற் குழந்தை ஷியாராபானு பிறந்தாள். மேமன் கவியின் வேகமான செயற்பாடுகள் யாவற்றிற்கும் இவருடைய மனைவியும் மகளும் ஆதாரமாக நின்றுதவி வருகிறார்கள்.
1982ம் ஆண்டில் இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு "ஹரோஷிமாவின் ஹீரோக்கள்" கவிஞர் மு. மேத்தாவின் முன்னுரையுடன் வெளிவந்தது. மூன்றாவது கவிதைத் தொகுப்பான "இயந்திர சூரியன்” 1984ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரையுடன் வெளிவந்தது.
நான்காவது கவிதைத் தொகுப்பு "நாளையை நோக்கிய இன்றில்" கவிக்கோ அப்துல் ரகுமானின் அணிந்துரையுடன் வெளிவந்து இந்து கலாசார ராஜாங்க அமைச்சின் 1990ம் ஆண்டிற்கான சாகித்திய மண்டல பரிசை மேமன் கவிக்கு ஈட்டித்தந்தது. தமிழ் மொழியில் வெளிவந்த புதுக் கவிதைத் தொகுப்பொன்றிற்கு தேசிய விருதொன்று வழங்கப்பட்டமை உலகின் முதல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இதே அமைச்சு 1992 மே மாதம் நடாத்திய தேசிய இலக்கியப் பெருவிழாவொன்றில் மேமன் கவிக்கு "இலக்கிய வித்தகர்" பட்டத்தினையும் விருதுகளையும் வழங்கிக் கெளரவித்தது. மேமன் கவி இதுவரை சுமார் 200 கவிதைகளையும், ஏறக்குறைய 50 கட்டுரைகளையும், சுமார் 20 இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். இன, மத எல்லைகளைக் கடந்து மானிதத்தின் மேம்பாட்டிற்காகக் கவிபுனையும் புதுக் கவிதைப் புரவலர் மேமன் கவியின் இலக்கியப் பணிகள் தங்குதடையின்றித் தொடரட்டும்!
/ ܠ

Page 13
மேன்மை மிக்க கவிதைகளால்
மேமன்கவி வளரட்டும் கவிஞர் மு. மேத்தா
உழைப்பினாலும் சிந்தனையாலும் இந்த உலகை உயர்த்துகிறவர்கள் யாரோ-அவர்களுடைய காலடிகளில் இந்த பூமி தன்னைத்தானே சமர்ப்பித்துக் கொள்கிறது.
கலை, இலக்கியங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் எது என்பதை அருமை நண்பர் மேமன்கவி அறிந்து வைத்திருக்கிறார்.
அதனால் தன்-சமூக நதிக்கரையில் எனக்குக் கலை மூலத்தை போதித்த மனித குலத்துக்கு" என்று தன் கவிதைத் தொகுதியைச் சமர்ப்பணம் செய்கிறார். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமிடையே இலக்கியப் பாலம் கட்டி வருகிற இதயங்களின் நினைவுகளை நான் எப்போதும் நேசிக்கிறவன்.
இவர்களுடைய சிந்தனைகளில்-சமுதாயப்பொருளாதார, சமத்துவ விடுதலைக்கான சங்கீதம் கேட்கிறது; அறிவியல் அலங்கரிக்கிறது: துருவங்களைக்கூடத் தொட்டணைத்துக்கொள்ள இவர்களின் தோள்கள் டி க்கின்றன; அதில் உலகையும் பார்க்கிற அகக்கண்கள் இவர்களுடைய புறக் கண்களுக்கும் புகழ் சேர்க்கின்றன.
தொலைவிலிருக்கிற இத்தகைய தோழர்களை எப்போதும் என் இதயம் அருகிலேயே அமர்த்திக் கொண்டு விடுகிறது.
"மல்லிகை” இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் என் அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய இலக்கியச் சிந்தனையாளர்.
அவருடைய முற்போக்கு இலக்கிய முகாமையே தன் முகவரியாக்கிக் கொண்டிருக்கிறார் அருமை நண்பர் மேமன் கவி.
"என்னைத் தாக்கிய எல்லா அவஸ்தைகளும் கலைப்படைப்புகளாக உருவம் கொண்டபின் நானும் என்படைப்பும் வேறல்லவே" என்று மேமன்கவி விளக்குகிறார்.
"புயல் சுமந்த மெளனங்களும், மயானத் தெருக்களும்”-என்ற கவிதை, 1981 ஆண்டில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது அவருடைய மனம் பட்ட அவஸ்தையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அடிபட அடிபடச் சீறி எழும் இந்த அவஸ்தைதான் நம்முடைய பேனாவைப் பெண்ணாக்கி விடாமல்பேணிக் காக்கிறது.
“இரவுப் பாடகனாய்ப் புறப்பட்டு தேசீயப் பசியினால் ராப்பிச்சைக்காரனாகத் திரும்பியவனே!” என்று மேமன்கவி பாரதியை அழைக்கிறபோது-நாமும் கூட இவர் நம்மைத்தான் கூப்பிடுகிறாரோ என்று திரும்பிப் பார்க்கநேர்கிறது. இவருடைய கவிதைகளில் தெளிவும், வடிவச் செழுமையும், கவித்வமும் ஏராளமாகத் தேவைப் படுகின்றன. இருப்பினும் இவர் எடுத்துக் கொண்டுள்ள பாடுபொருள்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இவரைத் தாக்கிய எல்லா அவஸ்தைகளும் இன்னும் சிறப்புமிக்க கலைப் படைப்புகளாக உருவம் கொள்ளட்டும் என்றும்.
மேன்மைமிக்க மானுடத்தை, இன்னும் மேன்மை மிக்க கவிதைகளால் மேன்மைப் படுத்துகிறவராக மேமன்கவி வளரட்டும் என்றும் மனங்கனிந்து வாழ்த்துகிறேன்.
('ஹிரோஷிமாவின் ஹீரோக்கள்’ கவிதைத் தொகுதியின் முன்னுரை 1982( الر

உருவங்களும் படிமங்களும் கைகட்டி நிற்கின்றன
- கவிஞர் வைரமுத்து -
காலம் கவிதைகளையும், கவிதைகளுக்கான கருப்பொருளையும் உருவாக்குகிறது. கவிஞன் அந்தக் காலத்தின் பிரதிநிதியாய் இருந்து பேசுகிறான். அந்த வகையில் கருகியும் கருகாமலிருக்கும் ஈழத்து நிலம் இன்று பல உன்னதக் கவிஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. காலத்தின் அடி வயிற்றிலிருந்து மேமன் கவி போன்ற கவிஞர்கள் வெடித்து விழுவதற்கு அந்த மண்ணும் அது பெற்ற புண்ணும் காரணமாகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் தமிழ்க் கவியாய்
மலர்ந்திருப்பது தமிழுக்கும், அவருக்கும் கிடைத்த பெருமையாகும். இந்தக்
கவிதைக்குள் எரியும் கனல் ஓர் அணையாத நெருப்பாக தன் வெப்பத்தை வெகுதூரத்திக்கு வீசுகிறது.
உருவங்களும், படிமங்களும் அணிவகுத்து நின்றாலும் கருத்துக்களி முன்னால் அவை கை கட்டியே நிற்கின்றன.
விமர்சன உலகத்திற்கு விடிவெள்ளியாய்த் திகழ்ந்த கலாநிதி கைலாசபதியை இவர் விமர்சன ஆகாசமே" என்று விளிக்கின்ற போது அந்த அறிவு ஜீவியின் இழப்பை இன்னும் அதிகமாய் உணர முடிகிறது.
புதுக்கவிதையில் "கொழும்புப் புராணம்" என்ற ஒரு குறுங்காவிய முயற்சியை மேமன்கவி செய்து 1ார்த்திருக்கிறார். அந்தக் கவிதைக்கு 6 த:த்தமே ஓர் அலங்காரமாயிருக்கிறது.
அழுது கொண்டிருக்கும் சமாதானப் புருவைப்பார்த்துக் கவிஞன் கேட்கும் கேள்விகள் அடி மனசை அறுக்கின்றன. உள்ளூர்ப் பார்வையைக் கூட
உலகப் பார்வையாய்ப் பார்க்கத் தெரிந்து வைத்திருக்கும் மேமன்கவி வெறும் கவிஞனாய் மட்டுமில்லாமல் ஒரு சிந்தனையாளராய்ச் சிறகு விரிக்கிருர்,
அவரால், பேணுவையே ஆயுதமாக்கி ஒரு பிரளயம் உண்டு பண்ண
(Մ)ւգ պւb
(இயந்திரச் சூரியன் - முன்னுரை 1984 - )
h
ノ  ܼܲܢܠ

Page 14
ஒரு சூரியனை எதிர்பார்க்கலாம். கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிஞனின் படைப் புணர்வு இந்த உலகத்தை ஒரு கச்சாப்பொருளாகவே கருதுகிறது. வேண்டாததை விலக்கி, வேண்டியதைத் தேர்ந்தெடுத்துத் தனக்கென ஓர் உலகத்தைப் புதிதாகப் படைத்துக் கொள்ள முனைகிறது. மேமன் கவியும் அவருக்கான ஓர் உலகத்தைப் படைக்க முயன்றிருக்கிறார். மனித நேயத்தோடு 'ஸர்வ இருதயங்களையும்" அதன் பிரஜைகளாக்கிக் கொள்கிறார்.
யந்திர வாழ்க்கையில் 'புறச் சூழல் அந்நியமாக, சமூகச் சீரழிவின் விளைவாக உடைந்த சுயமுகங்களுடன்" திரியும் மனிதனுக்காக அனுதாபப்படுகிறார்.ரத்தாகிப் போன காசோலைபோல் கிழிந்துபோன மனிதனுக்காகக் காலத்தோடு சேர்ந்து அழுகிறார். இங்கே காற்றும் கூடத் 'தன் சுதந்திரத்தை விற்று நிற்கும் அவலம் கண்டு குமுறுகிறார். கவிக் கிளர்ச்சி ஏற்படுத்தாத அவருடைய வணிகச் சூழலும் அவருடைய கவிப் பார்வை பட்டுப் பிரகாசிக்கிறது.
சிறகுகளுடன் பரிறக்கும் கவிஞனுடைய இயல்பான "வானாசை"அவருக்கும் இருக்கிறது. அவர் குடியேறும் எல்லா வீடுகளின் "கொல்லைப் புறத்திலும் வானமும் அவரோடு குடியேறுவதை ரசிக்கிறார்.
'tങ്ങ് ഞങ്ങ அந்த ஆகாயத்தில் புதைத்துவிடுங்கள்” என்ற வேண்டுதலில், விடுதலையின் - உன்னதத்தின் குறியிடான ஆகாயம் ஆழம் பெற்று விடுகிறது. எதிர்கால விஞ்ஞான விபத்து எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை,
üဓါရီးနိန္တိ தெருவின் ஒரு மூலையில் கடவுளின்பிணம் மிதக்கும் என்று அவரால் தீட்சண்யத்தோடு சொல்ல முடிகிறது.
ஞாபகங்களின் ஆடையை அவிழ்ந்துப் பார்த்தால் உள் உறங்கும் சோகங்கள் என்று சோகங்களே மனித வாழ்வின் எச்சங்களாகும் உண்மையையும் அவரால் காண முடிகிறது. உவமை, உருவங்களின் பலவீனங்களை உணர்ந்துதான் புதுக்கவிதை படிமங்களையும், குறியீடுகளையும் விரும்பி ஏற்றுக் கொண்டது. புதுக் கவிதையின் பரிமாணங்களை அறிந்திருக்கிற மேமன் கவி, 'புன்னகை டிக்கட்" "பிடிக் கம்பியில் விரல்கள் தூக்கிட்டுக் கொள்ளும்" என்பன போன்ற உருவகங்களைத் தவிர்க்கலாம்.
மேமன் கவியின் அருணோதயச் சிவப்பு அவரிடமிருந்து ஒரு சூரியனை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத்தருகிறது.
ار(1990 நாளையை நோக்கிய இன்றில் - முன்னுரை( ܢܠ

/ புதுக்கவிதைக்கு சாகித்திய N
பரிசு பெற்ற
மேமன்கவி - A. L. 956) 6m)Gusto (B.A.) -
இந்து சமய கலாச்சார அமைச்சு நடாத்திய சாகித்திய விழாவில் நண்பன் மேமன்கவியின் புதுக்கவிதை நூலான நாளையை நோக்கிய இன்றில் புதுக்கவிதைத் தொகுதிக்கும் பரிசு கிடைத்ததை அறிந்து உண்மையில் பூரிப்படைந்தவன் நான். இதில் குறிப்பிடக்கூடிய விசயங்கள் இரண்டுள.
(1) புதுக்கவிதைக்கு ச11கித்திய மண்டலப் பரிசு முதன் முதலாக வழங்கப்பட்டுள்ளது. அதனை முதன் முதலாகப் பெற்ற பெருமைக்கு ஆளாகிருப் GtDudaði ég,6)i.
(2) இந்தியாவில் பிரசுரமாகும் இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு சாகித்திய மண்டல பரிசு வழங்கப்படுவதில்லை, இம்முறை இந்தியாவில் பிரசுரமான இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அப்படியாயின் மேமன்கவியின் நூலும் இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டது. அதிலும் முதலிடத்தை மேமன்கவி பெறுகிருப்.
மேமன்கவியின் இலக்கிய பிரவேசத்துக்கு முன்பிருந்தே நாங்கள் இருவரும் உற்ற நண்பர்கள். அந்தளவில் பழகியதில் மேமன்கவி ஒரு சிறந்த கவிஞர்.
உண்மையில் இப்ெ பருவிழா எப்பொழுதோ எடுத்திருக்கவேண்டும். தாங்கள் ஒரு பரிசு பெற்றால் அதற்கு பாராட்டு விழா நடாத்த வேண்டும் என்று மேமன்கவியிடம் வந்தவர்கள், தனதுபுத்தகத்துக்கு விழா எடுக்க வேண்டும் என்று மேமன்கவியைக் கேட்டார்கள் அதனை அவர்க்கு செய்ய முன்வரதது வருந்தத்தக்கது. ஒரு முஸ்லிமுக்கு கிடைத்த கெளரவத்தைப் பாராட்டி விழா எடுக்கவேண்டியது முக்கியமாக முஸ்லிம் எழுத்தாளர்களின் கடமையாகும். ஆல்ை அவர்கள் இக்கடமையில் இருந்தும் தவறியது மிகவும் வருத்தத்துக்கு உரியதாகும். -
இந்தமட்டில் இது எனக்கு ஒரு பெரும்மனக் குறையாகப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு கடிதத்தைக் கூட நான் தினகரன் உதவி ஆசிரியர் நண்பர் சித்தீக்காரியப்பருக்கும் எழுதினேன் அதன் பிரதிபளிப்புத்தான் இப்பெருவிழாவும், மலர் வெளியீடும் என மேமன்கவி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்படித்தான் முடிவு இருந்த தென்ருல் அதனுல் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மேமன்கவியின் ஆக்கங்கள் உண்மையில் இந்திய முன்னணிக் கவிஞர்களின் ஆக்கங்களுடன் போட்டி போடக் கூடியதே. அதனைச் சரியாகப் புரிந்து பரிசு வழங்க முன்வந்த இந்துசமய கலாச்சார ராஜாங்க அமைச்சர் பி. தேவராஜ், சித்தீக்காரியப்பர், விழாஎடுக்கும் Y.M.H.A. மற்றும் தினகரன் முன்பக்கத்தில் ஆசிரிய தலையங்கம் தீட்டிய தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஆகியோருக்கும் எனது பாராட்டுதல்கள்.
நண்பன் மேமன்கவி இன்னும் பல பரிசுகள் பெற்று இலக்கிய வானில் சுடர்விடவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ン

Page 15
7 N
Memonkavi Is Basically A Humanist and Internationalist
K. S. Sivaku maran
Incidentally, we have onc poet here who is a Sri Lankan who writes in Tamil but whose mother tongue is Memon. He belongs to the Mcmon business community here. There are about 500 Mcmon families living in Sri Lanka. His real name is Razak Lakhana, but hc writes under the name of Memon Kavi. He's only 28 years old and published three volumes of what he calls poetry.What I mcan by that is that, in my opinion, his vers libre is notas richas genuine poetry. By "gcnuinc" I meam poctry that has a frcshness in approach and treatment, that has insight with feeling, and an element of surprise, cvcn bewilderment, in dealing with a human predicament or social experience. All the same, Memon Kavi is imaginative and image-conscious. He's published three books: Yuga Ragangal (Melodies of the Age) Hiroshimavin Herokal, about Hiroshima and, lately Eyanthira Sooriyan (Mechanical Sun). The last received a lot of attention from younger critics of localTamil poctry, but the older, more seasoned and more mature ones did not give it the same attention.
R: The quality of his poctry, or whateveryou call it, aside, what are his main themes?
S: Look, I'm not dismissing him as a writer without potentialities, because he shows relinarkable concern or Social problems. That in itself is a functional aspcct of any good literature, even though social consciousness alone is not sufficient for aesthetic satisfaction. Anyway, Memon Kavi is basically a humanistand internationalist. He sinds, however, thateverything is becoming mechanical; even nature is becoming mechanical. In Such an atmosphere human beings becomcalienated, and he is Sorrowful about that, and angry. One nice thing about Eyanthira Sooriyan, which was published in Madras, is a long poem called "The Saga of Colombo". Memon Kavi describes scenes in various parts of the city: a boy calling for passengers from a moving minibus: a man begging; a few twilight women; a few white collar workers; a vegetable vendor; a woman beadseller; a guide. It's sardonic piece. In free verse. Memon Kavi-he figures in this piece himself--is the poet of the city.
Book Aspects on of Culture in Sri Lanka) ノ

/ N MEMON KAVI
- A. Theva Rajan
Mcmons bclong is a community of people of India. Their language is also called mcmon which has no Script. Mcmon language is an admixture of Sindhi and Gujarati. Their religion is Islam.
Mcmon's were a happy-go-lucky community of India. Most of them lived in Junagat District of present-day Gujarat State. They arc a lively commcrcial group. The men were scattered in various parts of the world - mainly the cast, engaged in commercial pursuits. In 1947 India was tornapart resulting in the birth of Pakistan. About Ten lakhs of memons opted to go to Pakistan leaving none in India.The men who were abroad invited their families to Karachi and joined them there. The Mcmons in Sri Lanka invited their families to Sri Lanka. ThoSc who went to Pakistan adoptcd Urudu for thcircducational and business purposcs while retaining their mcmon language for communication among themselves. Those who camc to Sri Lanka adoptcd Tamil for their cducational and busincSS purposes probably becauscTamil is the mother-tongue of the Muslims of Sri Lanka. Except for a fcw clacrly pcoplc, the new gencration of Memons do not know India. Sri Lanka is their Swect homc.
To one such family was born on 29th April 1957, a boy who was named Abdul Karim Abdul Razak. He studicd at the Kotahcna Central College. He mct his Tamil cachcr Mr. M. Ashroff Khan who encouraged and helped this boy to promote the skill displayed by this boy in Tamil. From Grade Six he set about rcading Incwspapers and books. Hic studicd up to Grade eight.
He had an irreprissible urge to write. He attempted short storics but failed. He had an innate inclination towards poetry. He wrote and gained confidence. Appreciated and cncouraged by friends he developed further. The versatile SUTANTIRAN, a weckly first published one of his poems in February 1974 under the name MEMON KAVI. SUTANTIRAN was the cradle of many a Tamil writer in Sri Lanka, including the late Prof. K. Kailasapathy.
From them onwards Mcmon Kavi contributed poems to DESAPIMANI. THINAKARAN and MALLIKAI locally. Prestigious literary journals of India like KUYIL. originally started by poet Bharathidasan and later edited by Dr. Wahab, THAMARAI originally started by the great scholar P. Jeevanandam, KANAIYALI and SIKARAM also published his poems. Within two years, in

Page 16
- 1976 he published his first collection of poems entitled "YUGARAGANKAL". Dr. M. A. Nuhman himself a poet, critic, and scholar in his forcward identificci him as a promising poet of great talents. In 1982, His second collection of pocms HIROSHIMAVIN HEROKKAL was published. Dr. M. Mehta of Presidency College, Madras, himself arcnowed poct, critic and Scholar wrote the forcward where he appreciated the poctics and versatality of Mcmon Kavi. The thirdcollection of his poemsentitled "YANTHIRA SOORIYAN" was published in 1984 with a foreward by Vairamuttu a renowned poct and lyricist of India. In 1990 the fourth collection of poems of Mcmon Kavi cntitled "NALAYA NOKKIYA INRIL" with a foreward by Kaviko Abdul Rahman of India was published. Rahman hailed memon's poetic excellences. Incidentally, it also won the Tamil Sahithya Award for poetry in 1990.
Memon Kavi's poems were spun on the day-to-day sufferings of humanity and the rigmaroles of Society. They were received well by all Scctions of Society. The cxcellencc of Mcmon Kavi proves once more that poets are born, not made.
That is not all about Mcmon Kavi. He is a good critic as well. It is gencrally bclieved that thc work of the artistc is to hide art and that thc work of the critic is to unfold the art. It is seldom that an artistic becomes a good critic. Mcmon Kavi analyses collections of short stories and novels from different angles and subjects them to multi-factcd appraisals. Thus, his criticisms are rich and informative.
This writer was previleged to be present and listen to a lecture he delivered at the Moratuwa University, this year, before a well attunded, Science-attencod critical audience on "Contemporary Tamil pocry in Sri Lanka - it's history and appraisal." It was a thoroughly researched lecture, well periodised, and dealt with the nuances in Siyie, content and artistry. He did not sail to compare and contrast with contcmporary poetry of India, Malaysia and Singapore. He has a computeriscd memory and accuracy of facts and figures on contemparary Tamil poetics.
A businessman by profession, he has a wide range of selective collections of books of poetry, short stories, novels and literary criticism. Memon Kavi is the only writer in Sri Lanka the Memon community has produced. There are three Doctors, one of whom has migrated to USA, an Attorney-at-Law (also in business) and a lady teacher of Tamil. The other Memons are all full-time businessmen.
لر ܢܠ

/ N
மானுடம் பாடும் வானம்பாடி
அந்தனி ஜீவா (சிறப்பிதழ் ஆசிரியர்)
இன்று . நாடறிந்த நாமமாகிவிட்டது! அது மாத்திரமல்ல . அலைகடலுக்கும் அப்பால் அவர் பெயர் உச்சரிக்கப்படுகின்றது! தமிழகத்தில் கவிதாவானில் மூவேந்தர்களாக பவனி வரும் கவிக்கோ அப்துல்ரஹ்மான், கவிஞர் மேத்தா, கவியரசு வைரமுத்து ஆகியோரின் பாராட்டைப் பெற்ற நம்மவர் மேமன்கவி. நம்மகத்து பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் முதல் பண்ணாமத்து கவிராயர் வரை உச்சி மோந்து உவந்து பாராட்டிய கவிதாவாணன் மேமன்கவி, இலங்கை திருநாட்டின், அதி உன்னத விருதான சாகித்திய விருதும் இளம் வயதிலேயே இவனுடைய படைப்புக்காக வழங்கப்பட்டது.
இதற்கு எல்லாம் என்ன காரணம்? மேமன்கவி . வார்த்தைகளால் சொற்சிலம்பமாடும் சிட்டுக்குருவியல்ல. மனித நேயத்துடன், மானுடம்பாடும் வானம்பாடி, "சொல் புதிது, சுவை புதிது ஜோதிமிகு நம் கவிதை” என்றானே மகாகவி பாரதி அவனின் வழி வந்தவன், இன, மத, மொழி மறந்து அவன் நா மானுடத்தையே உச்சரிக்கும். "மனிதன் எத்தகைய அற்புதமானவன்" என்றான் மெக்ஸிம் கோர்க்கி அத்தகைய மானுடம் பாடிய வானம்பாடியான மனித நேயனுடன், பழகினோம், பேசினோம், அவனோடு ஒரே காலகட்டத்தில் வாழ்கிறோம். என்பதற்காக பெருமிதம்
ノ
கொள்கிறேன். இனியும், அந்த வானம்பாடியின் பணி தொடரட்டும்,
ܢܠ

Page 17
மேமன்கவிக்கு பாரதி விருது 92
நாவலப் பரிட் டி ஆன்மீக dob GoÕD GO இலக்கியமன்றம் கடந்த ஆண்டு முதல் வழங்கிவரும் 'மகாகவி பாரதி விருதை" இவ்வாண்டு கவிஞர் மேமன்கவிக்கு பாராட்டு விழாவின் போது வழங்க உள்ளது.
கே. பொன்னுத்துரை
அமைப்பாளர் மலையக ஆன்மீக கலை இலக்கிய மன்றம்.

/ நான்கு கவிதைகள் . . . . . . N
- மேமன்கவி சவமொன்று கிடக்கும், ஸர்வ இயக்கங்களும் . தன் வழியில் சுழலும்; மரணம் வாங்கப் போகும் அவசரத்தில் சரீர இயந்திரங்கள் அவசரிக்கும்; சவமொன்று கிடக்க அனுகுண்டு ஈக்கள் குருதி மலம் கழிக்கும்; சவமொன்று கிடக்கும் மனிதமெனும் பெயருடன்
ருதயம் வாங்கலையோ?
ருதயம் வாங்கலையோ? வரும் நூற்றாண்டின் ஒரு நாளில் தெருவொன்றில் கம்பியூட்டர் கம்பொன்றில் குத்திஓர் இருதயக்காரன் கத்திப் போவான் -
ன்றைய பலூன்காரனைப் C3ц шптөiо...Р
கேள்விகளின் விதைத்தலில் விளைவுகள் பாய் போடும் கலா சிருஷ்டியாக நினைவில் ஆயிரம் அவஸ்தைகள் உணர்ச்சியைப் பிடிக்கும்; ஆக்கச் சடங்கில் சிருஷ்டி உயிர்க்கும்.!
i.
விதவையாகப் போகும் நாள் பெண்ணுக்காய் தென்னை தன் ஒலைகளால் ஓலமிட - சூரியப் பொட்டு அழித்துக் கொண்ட வான நெற்றியில் மீண்டும்ொரு பொட்டிட
ரு முற்போக்கு ளைஞனைப் போல் காத்திருந்தது விடியல்...!
(மல்லிகை, '85) </ 21 ஆவது ஆண்டு மலர்

Page 18
இவ்விழா ஏற்பாட்டுக்கும் இம்மலர் வெளியீட்டுக்கும் இதயம் கனிந்து உற்சாகமும், ஒத்துழைப்பும் வழங்கிய எல்லோருக்கும் எங்கள் நன்றிகள்!
அந்தனி ஜீவா ஏ. எச்.சித்தீக் காரியப்பர்
தே. செந்தில்வேலவர். لم ـ ـ  ܼܲܢܠ
லங்கா வெளியீட்டகம், கொழும்பு.


Page 19
Sошvanir sponso
SURIYA TEXTI
(PVT)
As la T. Trade Cente, 18 Cclar Tila -11, !
TBl: 4905,
 

red by
LES MILLS -TD.
3/5, Kayz. Er Street, Sri LaLıka
34