கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணையிலி அருள்மிகு சிவகாமி அம்மை அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன் அருள்வேட்டற் பதிகங்கள்

Page 1
இணை அருள்மிகு சிவ
அருள்
இளந்தாரி ை அருள்வேட்ட
స్ద FT TF-- * !" 、
| I. É F :IIíÉlj ejFil-I, III
-
* * |
* 靛 ■
لـــــــــ
三、 ---
閭 థ్రో ■ |
இணை
அருட்கவி சின்ன; அருளிய
2OO'
 
 
 
 
 

'uTఇ
காமி அம்மை
மிகு கலாயநாதன்
ற் பதிகங்கள்
եւTaն
த்தம்பிய் புலவர்
6OG)
7

Page 2


Page 3

இணையிலி அருள்மிகு சிவகாமி அம்மை
அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன்
அருள்வேட்டற் பதிகங்கள்
இனையிலி அருட்கவி சின்னத்தம்பிய் புலவர் அருளியவை
2007

Page 4
நால்தரவு
நூல் - இனையிலிஅருள்மிகு சிவகாமி அம்மை
அருள்மிகு இளந்தாரி கைலாயநாதன் அருள்வேட்டற் பதிகங்கள்
ஆசிரியர் ** தமிழ்வேள் இணுவில்
பதிப்புரிமை - ஆசிரியருக்கு
பதிப்பு - முதலாம் பதிப்பு
காலம் - 2007.
பதிப்பகம் - கீதா பதிப்பகம், கொழும்பு-13.
விலை - 30/=
02

அறிமுக உரை
1. எங்கள் ஒளர்
எங்கள் ஊர். வரலாற்றுப் பெருமை உள்ளது. யாழ். அரசு முதலில் பன்னிரு பெரும் பகுதிகள் உள்ளதாக இருந்தது. அவற்றுள் இவ்வூர்ப் பகுதியும் ஒன்று. அப்போது இவ்வூர்ப் பகுதியின் தலைவனாகத் தமிழகத்துப் பேராயிரவன் என்பவன் இருந்தான். இவன் தமிழகத்துக் காலிங்கராயன் என்பவனை இவ்வூர்ப் பகுதிக்கு அரசனாக நியமித்தான். பெரும் வீரனான இவன் இவ்வார்ப் பகுதியைச் சிறப்பாக ஆட்சிசெய்தான். இவனுக்குப் பின் இவன் மகன் கைலாயநாதன் அரசனாக இருந்தான். இவன் பெரும் வீரனாகவும் அருளாளனாகவும் இருந்தான். இவனுக்கு இளந்தாரி என்றும் பெயரும் இருந்தது. இவர்கள் பேரரசர்களாக இருந்தவர்கள் ஆதலின் இவர்களின் படைத்தவர்களாகவும் முதலிமாராகவும் வன்னியத் தலைவர்கள் இருந்தனர். அக்காலத்தில் இவ்வூருக்கு இணையிலி என்னும் பெயர் இருந்தது. இவ்வூர்ப் பகுதி அக்காலத்தில் பெரும் நிலப்பரப்பும் நீர்வளமும் உள்ளதாக இருந்தது. யாழ் குடாநாட்டின் நடுவண் இருந்ததால் இவ்வூர் முத்தமிழுக்கும் நிலைக்களனாக இருந்தது. இவ்வூர் வரலாற்றை யாழ் வரலாற்று நூல்களும் பஞ்சவன்னத் தூது நூலும் கூறுகின்றன. இவ்வூரவர்கள் தமிழ்ப் பற்றும் சமயப்பற்றும் பண்பாடுகளும் உள்ளவர்கள்.
2. சிவகாமி அம்மை திருக்கோயில்
காலிங்கராயன் சிதம்பரத்துச் சிவகாமி அம்மையிடம் மிகப் பற்றுள்ளவன். ஆதலின் இவனே இவ்வழிபாட்டை இவ்வுவூரில் அமைத்தான் இன்று இத் திருக்கோயில் உரிய அமைப்புகளோடு இந்நாட்டில் புகழ்பெற்று விளங்குகிறது. இவ் அம்மை இவ்வூரை மட்டுமல்ல இந்நாட்டையே காப்பவள் என அருளாளர் கூறுவர். இதற்குச் சில நிகழ்வுகளும் சான்றாக உள்ளன. ஆண்டுதோறும் விசேட நாள்களில் இங்கு விழாக்கள் சிறப்பாக நிகழும். இக்கோவிலில் அழகிய பூந்தோட்டம் ஒன்று
03

Page 5
உள்ளது. வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாள்களிலும் பக்திப் பாடல்கள் பாடும் நிகழ்வு நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது. இங்கு பிற ஊர் மக்களும் வழிபட்டுப்பயன் பெறுகின்றனர். இக்கோவிலின் மேல் பால் காலிங்கராயனும் கைலாயநாதனும் வழிபட்ட அருள்மிகு வைரவர், பத்திரகாளி ஆகியவர்களுக்கான வழிபாட்டு நிலயம் உள்ளது.
3. கைலாய நாதன் இளந்தாரி திருக்கோவில்
அருளாளனாக வினங்கிய கைலாயநான் பல அற்புதங்களைச் செய்தனன். ஒருநாள் எதிர்பாரா வகையில் ஒரு புளிய மரத்தில் ஏறி இருந்து வான்வழிச் சென்று மறைந்தான். இதனை அறிந்த மக்கள் இவன் வாழ்ந்த இடத்தில் கூடி இருந்தனர். தன்னை வழிபட்டு வரும் படியும் அவர்களைப் பாதுகாப்பதாகவும் அவர்களுக்குத்ரெரிவித்தான். அன்றுமுதல் இவர் வாழ்ந்த இடத்தில் நாள்தோறும் வழிபாடு நடைபெற்றது. இவர் மறைந்த நாளில் இவர் வாழ்ந்த இடத்தில் பெருவிழா ஆண்டுதோறும் நீண்டகாலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் பொங்கல் செய்தும் உணவு வகைகளை ஆக்கியும் படையல் செய்து வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டு நாளில் இப்பகுதி மகக்ள் வேறு எங்கும் செல்லார். இப்போது இவ்வழிபாடு இவர் உருக்கரந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் ஒரு கோவில் அமைக்கப்பெற்று இருக்கிறது. புளியமரத்தின் முன்பாக உள்ள கருவறையில் உருவங்கள் இல்லை. சில கற்கள் வழிபாட்டுக்கு உரியனவாக உள்ளன. பண்டைத் தமிழர் வழிபாட்டு முறைப்படி இங்கு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வன்னிய முதலிமாருக்கும் இங்கு வழிபாடு உண்டு. ஆண்டுப் பெருவிழாவில் பஞ்சவண்ணத்தூது நூல் படிக்கப்பெறுகிறது. இந்நூலில் இளந்தாரித் தெய்வத்தின் அருளாற்றல் கூறப்படுகின்றது. ஆண்டுப் பெருவிழாவில் சில மரபு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு நடைபெறும் வழிபாடு மிகப் பக்தியொடு நிகழ்கிறது. நாள் தோறும் மக்கள் இங்கு வழிபாடுகின்றனர். அயலில் உள்ள வீதி வழியே செல்பவர்களும் இங்கு பக்தியொடு வழிபாடு செய்து செல்வர். இளந்தாரியரை
04

வழிபடுவதால் தங்களுக்கு எவ்வகை இடர்களும் வரா எனவும் நோய்பிணிகள் நீங்கும் எனவும் இங்கு வழங்கும் விபூதி, தீர்த்தம், உணவு என்பன மிக அருள் உள்ளவை எனவும் மக்கள் நம்புகின்றன இங்கு நடைபெறும் ஆண்டுப் பெருவிழாவில் காலிங் கலிங்கராயன் கைலயநாதன் ஆகியவர்கள் வழிபட்ட வைரவர் பத்திரகாளி ஆகிய கடவுளர்களுக்கும் மெய்ப்பாதுகாவராக விளங்கிய அணமாருக்கும் வழிபாடுகள் நெைபறுகின்றன. இவ்வழிபாடு இந்நாட்டில் வேறு இடங்களில் இவ்வாத ஒரு சிறப்பு வழிபாடு. இளந்தாரி புளிய மரத்தின் வழி வான் வழி சென்றதையும் பின்பு தம்மை வழிபட்டவர்களுக்கு அருளுரை வழங்கியதையும் அருள்மிகு கண்ணகி சேரநாட்டில் வேங்கை மரத்தின்வழி வான் சென்றதும் தனக்குக் கோயில் அமைத்த சேரன் செங்குட்டுவன் முதலியோருக்கு அருளுரைகள் வழங்கியதும் நினைவூட்டுகின்றன. .
4. பாடல்களை அருளியவர்
இந்நூலில் உள்ள சிவகாமியம்மைப் பதிகங்களையும் இளந்தாரியார் பதிகத்தையும் அருளியவர் இவ்வூரில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் என்னும் அருளாளர். இவர் முன்னைய அரசர் வழி வந்தவர். கதிர்காமசேகர மானா முதலியார் என்றும் பெயர் உள்ளவர். ஒல்லாந்தர் ஆட்சியில் தோம்பு எழுதும் பணிசெய்தவர். சிவகாமி அம்மையை வழிபட்டு அருள்பெற்றவர். இவரிடம் பொறாமை உள்ள ஒருவரது தவறான தகவலால் ஒல்லாந்த அதிகாரி இவரைச் சிறையில் வைத்தான். இவர் தனக்கு நிகழ்ந்த நிகழ்வினால் மிக வேதனையுற்று சிறையில் இருந்து தம் குலதெய்வமான சிவகாமி அம்மையை நினைத்து ஒரு பதிகம் பாடினார். இதனால் சிறைக் கதவு தானாகத் திறந்தது. இதனை அறிந்த அதிகாரி இவர் அருளாளர் என உணர்ந்தது. இவரைச் சிறையில் இருந்து விடுவித்தான். இந்நிகழ்வுகளுக்கு இப்பதிகத்தில் ஆதாரம் உள்ளது. இவர் இவை போலச்சிவகாமி அம்மை மீது பிள்ளைத் தமிழ்பாடல்களையும் பாடினார். திருவூஞ்சல் பாடல்களைப் பாடினார். தன்னைப் பிள்ளையாக வும் சிவகாமி அம்மையைத் தாயாகவும் ஏற்றுப் பாடியுள்ளார்.
05

Page 6
இவர் இளந்தாரி மீது பாடிய பஞ்சவண்ணத் தூது நூலில் இளந்தாரி அருள்வேண்டிப் பாடல்கள் பாடி உள்ளார். இவர் முத்தமிழிலும் வல்லவர். ஆதலின் மூன்று நாடக நூல்களையும் எழுதியுள்ளார். இந்நாடக நூல்கள் சிறந்தன. ஆதலின் நாடு முழுவதும் இந்நூல்களைப் பயன்படுத்தி வருகிறது. பஞ்ச வண்ணத் தூது நூல் பாடல்கள் சிறந்த இசை அமைப்பு உள்ளவை. இவற்றில் இவரது சிறந்த இசைப்புலமை புலனாகிறது. ܫ
இவர் சிறையிருந்து பதிகம்பாடி வெளிவந்தமை அப்பர் சுவாமிகள் அரசன் இட்ட அறையில் இருந்து பதிகம் பாடி அதில் இருந்து வெளிவந்தமை போன்றது.
பதிகப் பாடல்களின் பயன்கள்
இப்பாடல்களை அருளிய புலவர் சமய குரவர்களைப் போல இறையருள் பெற்றவர். அற்புதங்கள் செய்தார். ஆதலின் இவர் பாடிய பாடல்கள் திருமுறைப் பாடல்கள் போல அருள் ஆற்றல் உள்ளன. இவற்றை நாள்தோறு பக்தியொடு ஒருமுறையாவது ஓதினால் நினைத்தவை கைகூடும். நோய் பிணி துன்பங்கள் நீங்கும். ஒதுபவர்கள் வளமாக வாழ்வதற்காக தெய்வ அருளை வேண்டி உள்ளார். இவைகளை அன்பொடு ஓதிப் பயன் பெற்றறவர் பலர். ஆகவேதான் வாழ்வாங்கு வளமாக வாழவேண்டும் என எண்ணி இப்பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
ஆசிரியர் தமிழ்வேள் இ.க. கந்தசுவாமி பதிப்பு ஆசிரியர்
இணையிலிப் பேருர்
1.7.2007
O6

ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை பதிகம்
கருணாகர விநாயகரை வேண்டல்
எந்தையே யெந்நாளும் இறைஞ்சன்ப ரகத்துறையும் தந்தையே யடியேனைத் தாபரித்தாண்டருள்புரிவாய் சுநதரஞ்சேர் உரும்பைவளர் சோதியே யாறுமுகக் கந்தனுக்கு முன்னவனே கருணாகரப்பிள்ளயே
சிவகாம அன்னையை வேண்டல்
ஆத்தாளே யெங்க ளனவரையும் பூத்தவண்ணம் காத்தாளே மின்னுங் களபமுலை சுமந்தகிலம் பூத்தாளே செங்கமலப் பூத்தாளே யென்னிதயம் சேர்த்தாளே தெய்வச் சிவகாம சுந்தரியே
தன் தனிநிலை தெரிவித்தல்
பாரிடத்தும் மற்றிடத்தும் பாவியேற் குற்றகுறை யாரிடத்தே சொல்வேன் அனுசரிப்பார் யாருமில்லை சேரிடத்தே நின்றவிச் சிறியேன் வினைதீர்க்கச் சீரிடத்தே மல்குஞ் சிவகாம சுந்தரியே
அன்பர்க்கு அருள்புரிய வேண்டல் எப்பிழை செய்தாலும் இரங்கியிவவுர் மானிடர்க்கு வெப்புவினை நீக்கி மிகுசுகந்தந்தாளுமம்மா அப்பணியும் பொற்சடிலத் தாதையொரு பாற்கண்ணே செப்பினுவை வாழுஞ் சிவகாம சுந்தரியே
பெற்றவள்நீ யானுனது பிள்ளையுல கோரறிய அற்றமிலாச் செல்வம் அருளிவளர்த் தன்புதந்தாய் இற்றைவரை யுந்தனியே யான்வருத்த எங்கொளித்தாய் சிற்றிடைமின் அன்னே சிவகாம சுந்தரியே
07

Page 7
இவர் இளந்தாரி மீது பாடிய பஞ்சவண்ணத் தூது நூலில் இளந்தாரி அருள்வேண்டிப் பாடல்கள் பாடி உள்ளார். இவர் முத்தமிழிலும் வல்லவர். ஆதலின் மூன்று நாடக நூல்களையும் எழுதியுள்ளார். இந்நாடக நூல்கள் சிறந்தன. ஆதலின் நாடு முழுவதும் இந்நூல்களைப் பயன்படுத்தி வருகிறது. பஞ்ச வண்ணத் தூது நூல் பாடல்கள் சிறந்த இசை அமைப்பு உள்ளவை. இவற்றில் இவரது சிறந்த இசைப்புலமை புலனாகிறது.
இவர் சிறையிருந்து பதிகம்பாடி வெளிவந்தமை அப்பர் சுவாமிகள் அரசன் இட்ட அறையில் இருந்து பதிகம் பாடி அதில் இருந்து வெளிவந்தமை போன்றது.
பதிகப் பாடல்களின் பயன்கள்
இப்பாடல்களை அருளிய புலவர் சமய குரவர்களைப் போல இறையருள் பெற்றவர். அற்புதங்கள் செய்தார். ஆதலின் இவர் பாடிய பாடல்கள் திருமுறைப் பாடல்கள் போல அருள் ஆற்றல் உள்ளன. இவற்றை நாள்தோறு பக்தியொடு ஒருமுறையாவது ஒதினால் நினைத்தவை கைகூடும். நோய் பிணி துன்பங்கள் நீங்கும். ஒதுபவர்கள் வளமாக வாழ்வதற்காக தெய்வ அருளை வேண்டி உள்ளார். இவைகளை அன்பொடு 3 g5 Lju65 பெற்றறவர் பலர். ஆகவேதான் வாழ்வாங்கு வளமாக வாழவேண்டும் என எண்ணி இப்பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
ஆசிரியர் தமிழ்வேள் இ.க. கந்தசுவாமி பதிப்பு ஆசிரியர்
இணையிலிப் பேருர்
17, 2007
O6

ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை பதிகம்
கருணாகர விநாயகரை வேண்டல்
எந்தையே யெந்நாளும் இறைஞ்சன்ப ரகத்துறையும் தந்தையே யடியேனைத் தாபரித்தாண்டருள்புரிவாய் சுநதரஞ்சேர் உரும்பைவளர் சோதியே யாறுமுகக் கந்தனுக்கு முன்னவனே கருணாகரப் பிள்ளயே
சிவகாம அன்னையை வேண்டல்
ஆத்தாளே யெங்க ளனவரையும் பூத்தவண்ணம் காத்தாளே மின்னுங் களபமுலை சுமந்தகிலம் பூத்தாளே செங்கமலப் பூத்தாளே யென்னிதயம் சேர்த்தாளே தெய்வச் சிவகாம சுந்தரியே
தன் தனிநிலை தெரிவித்தல்
பாரிடத்தும் மற்றிடத்தும் பாவியேற் குற்றகுறை யாரிடத்தே சொல்வேன் அனுசரிப்பார் யாருமில்லை சேரிடத்தே நின்றவிச் சிறியேன் வினைதீர்க்கச் சீரிடத்தே மல்குஞ் சிவகாம சுந்தரியே
அன்பர்க்கு அருள்புரிய வேண்டல்
எப்பிழை செய்தாலும் இரங்கியிள்வூர் மானிடர்க்கு வெப்புவினை நீக்கி மிகுசுகந்தந் தாளுமம்மா அப்பனியும் பொற்சடிலத் தாதையொரு பாற்கண்ணே செப்பினுவை வாழுஞ் சிவகாம சுந்தரியே
பெற்றவள்நீ யானுனது பிள்ளையுல கோரறிய அற்றமிலாச் செல்வம் அருளிவளர்த் தன்புதந்தாய் இற்றைவரை யுந்தனியே யான்வருத்த எங்கொளித்தாய் சிற்றிடைமின் அன்னே சிவகாம சுந்தரியே
07

Page 8
10.
சிறைத் துன்ப நிலை தெரிவித்தல்
சீலைப்பேன் நுளம்பு தெள்நுள்ளான் மூட்டைகடி சாலப்பார் சேயன் மனமிரங்கான் சற்றுமவன் மாலைப்பால் மேவமுன் வந்துசிறை நீங்கியருள் சேலொப்பாம் உண்கண் சிவகாம சுந்தரியே
இப்பாட்டாற் சிறைக்கதவு திறந்தது துப்பூட்டும் என்றனது துன்னார் சிறைப்படுத்தும் அப்பூட்டும் தீயவரரியசிறை வீட்டிருக்கும் இப்பூட்டும் நிர்ப்பூட்டா யென்சிறையை நீக்கியருள் செப்பூட்டும் பொற்றாட் சிவகாம சுந்தரியே
நேரில் வந்து அருள் புரிந்தமை தெரிவித்தல்
சந்திரோ தயமுகமுஞ் சாற்றவொனாத் தோற்றமொடு வந்தேநின் திருவாயில் வைத்திருந்த பேரமிர்தம் தந்தாயன்றேயுனது தாண்மலர் மேவவருள் சிந்தாமணியேயெங்கள் சிவகாம சுந்தரியே
சிறை நீங்கி வந்தமை தெரிவித்தல்
என்னைச்சிறை யில்வைத்துப் பின்புவந்த என்பகைவன் தன்னைச்சிறை யில்வைத்துத் தாரணியெல்லாம்புகழச் சென்னியிற்சுடருஞ்சுடரே சிவக்கொழுந் தேயன்னையே துன்னிச்சிறை நீதீர்த்தாய் சிவகாம சுந்தரியே
பேரருட்பேறு பெற்றது தெரிவித்தல்
வந்தாயோர் அருமருந்து வாழ்வெனக்குண்டாகவென்று தந்தாய்நீயென்மட்டோ தலைமுறைமூ வேழுமினி யுய்ந்தோம் உய்ந்தோம் நாங்களேர் குறையுமிலேம் செந்தாமரை மலர்த்தாட் சிவகாம சுந்தரியே
ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி 08

ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் (பன்னிரு சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்)
சீரணி முக்கோ னத்து விருக்குந் தேவிசட் கோணத்துட்
சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கெளமாரி நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும் நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந் தேரணி வீதிக ளெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
திருவள ரினுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே.
தானா மோங்கா ரத்துட் பொருளே சமையா சமயத்தி
சட்கோ ணத்து விருக்குங் குமரி சத்தன் பரிசத்தி மானா ரசி சர்ப்பா பரணி மாதங்கி கெளரி
மாலுக் கிளையாள் பத்மா பதத்தி மதுரஞ் சேர்வசனி நானா மணிபொலி சோதிக் குண்டல நளிர்பொற் குழையழகி
நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே தேனார் நறுமலரளகக் குயிலே திக்கெட் டும்புகழும்
திருவள ரிணுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே
கந்தம் நெருங்கிய நறுமலர் கொண்டு கமலத்
துணையடியைக் காதலொ டுநாளுந் துதிசெய் பவர்க்குக் கனசெல்
வமுண்டாம் அந்நிய காலத் தந்தக னும்வந் தனுகா னல்லாமலும்
அடையா வீட்டின தின்பம் பெற்றிங் கருளுட னின்புறுவர் உந்த னுடைச்சீர்ப் பெருமை யாயிர நாவுடை வாளரவும் உரைத்தற் காகா வென்றரு மறைகளுரைத்தன
வாலடியேன் சிந்தை யுயாவுதல் கொண்டொரு நாவாற் செப்பத்
தகுவனவோ திருவள ரினுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே
09

Page 9
எள்ளுக் குள்ளே யெண்ணெய் தாமென எங்கும் நிறைந்தாயே
என்பா லிலையோ யாவு மறிந்தா யென்துய ரறியாயோ உள்ளுக்குள்ளே யுன்னை யல்லால் வேறொரு தெய்வத்தை
உள்ளேனுன்னை யல்லா விவ்வுயிரக் குறுதுணை யுண்டாமோ புள்ளிப் புலியின் றோலைப் புனையும் புனிதன் பைங்கிளியே பொங்கும் சுடரே யடியேற் கருளைப் பூரித் திடுவாயே தில்லம் பழனந் திசையெங்கணுமடு தென்னினு வைப்பதிவாழ்
தெய்வக் குயிலே சைவச் சுடரே சிவகாமித் தாயே
முத்தா னத்தைங் கரனைக் கந்தனை முன்னா ளிடுமானே
மூவா முதலே தேவா னவளே முருகு விரிக்கின்ற கொத்தா ரிதழிச் சடையாய் விடையாய் தொண்டைக் கனியுதரக்
கோதாய் தோகாய் பாகாய் ஞானச் சுடரே யடியேனுக் கெத்தா சுவுமுற் புருடா சுவுமென் றெண்ணும் பேரறிவும்
ஏற்றமு மேதகு திருவும் பெறவே யிரங்கிக் கருணைசெய் சத்தாய் ஞான சித்தா யெங்குஞ் செறிவா யுறைபவளே
திருவள ரிணுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே.
அரியயனிந்திரன் முதலா மற்றுள வமரரு முறைமுறையே
அஞ்சலி செய்து மனஞ்சலி யாநிற்ப ஆளிப் பிடரேறித் தரியல ராயம ராடிய மகிடன் தலையை யறுத்தவளெ
சதுர்வே தத்துட் பொருளே அருளே தழையுங் காரணியே துரியம தாகிய வெளியாய் அளியாய் சோதிப் பூரணியே
தொண்ட ரறியறி வுக்கள வாகிய சிவையே யபிராமி திரிபுர தகனி பரிபுர பதத்தி தேவி ஆனந்தி
திருவள ரினுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே.
பருவத ராசன் தருபுத் திரியே பங்கய யுபசரணி
பன்னக பூரணி கன்னலஞ் சாபரி பஞ்சாட் சரளூபி கருவங் கொள்துட்டர் முடித்தலை தத்தக் கதிரவாள் கொடுவீசும்’ கன்னிகை சரபஞ் சரியே காட்சரி கருதிய காற்சரியென் இருதய மீதே குடிகொண் டென்று மிருக்குங் காரணியே
எள்ளளவாகுதலுன்செய லென்னை யிரட்சித் திடவருளாய் சிறுபிறை வாணுத லாளே வழகிய திரிவோ சனவல்லி
திருவள ரினுவைப் பதிதனிலுறையுஞ் சிவகாமித் தாயே.
O

10.
எள்ளுக்குனெய்போ லெங்கும்நிறைந்தா யென்னிடத்தில்லையோ
எல்லா மறிந்தநீயென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ உள்ளத் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுன்போ உலகத்துமுட்பத் திரண்டறம் வளர்த்தாயிரக்கமிலையோ பிள்ளைய் பெறாமுழு மலடியோ வுலகெலாம் பெற்றதும் பொய்தானே பேய்ப்பிள்ளையாகிலும் பெற்றதாயிகழ்வளே பிழைபொறுத்
துன்கருனை அள்ளித்தராதெனைத்தள்ளிவிடல்நீதியோயிணுவைப்பதியிருக்கும்
அரிவையே மலையரசன் அருமை மகளே சிவகாமித் தாயே
(எண்சீர் ஆசிரியவிருத்தம்)
உன்னடைக் கலமலா தொருவர் துணையுமிலை
உதவி செய்வார் வேறியாரு மில்லை உன்னடி மையா னென்று வந்திருக்க
மற்றொரு வர்பின் இனியான் செல்வதோ பின்னொரு வரையான் கெஞ்சுவதா லுனக்கென்ன
பெருமை யோவது பெருமை யில்லை பிள்ளை யென்றினி யென்னைப் புரப்பதுடன் கடன்
இசைவளர் யினுவைச் சிவகாமித் தாயே.
கன்னலஞ் சொல்லியே சிகாம ல்லியே
கருதரிய பரையே கச்சியில் உமையாய் மன்னு காமாட்சியே மதுரை மீனாட்சியே
காசிவிசா லாட்சியே கருணை செய்வாய் அன்னநடைக் கன்னியே மருவுப்சுங் கிள்ளையே
அரியர னுற்பன்ன மூலமே அகிலமும் துன்னியே பரவவரு இணுவைச் சிவபுரத்து
வீற்றி ருக்குஞ் சிவகாமித் தாயே.
11

Page 10
ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை துதி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
சங்கந் தழைக்க அருள்செய்யுந்
தலைவீ! என்னைப்போ லித்தலத்திற் பங்கப் படுமானிடர்க் கருள்செய்
பரையே யுன்னை நிதம்பாடிப் பொங்கிச் சிந்தை மிகக்கலங்கிக்
கவலும் அடியா ரீடர்நீங்கச் சிங்க மிசையே வருமினுவைச்
சிவகாம வல்லியுணக் கடைக்கலமே
மங்கை மனோன்மணி அபிராமி
திருமாலுக் கிளையாள் சிவகாமி சங்கரி ஐயை பார்பதி
கெளரி துர்க்கை மகேசுவரி பங்கய வதனி நீலிசூலி
பராபரை திரிபுர தகனி அங்கயற் கண்ணி சதுர்வேதத்தி
சித்திகள் அனைத்தும் அருள்கவே
(எண்சீர் ஆசிரிய விருத்தம்) மருப்பொன்று கயமுகக் கருணாகரக் கடவுள்துணை மயிலூருஞ் செங்கை வடிவேல் செவ்வேள்துணை வருஞாளியூர் மாணிக்க வைரவ சுவாமிதுணை மாசத்தி பத்திர காளியாந் தாய்துணை
கருணையுள கைலாயன் இளந்தாரி துணையாம்
காப்பதுன் கடனெனத் திருவடி தொழுதோம் திருமருவு இணுவைநகர்ச் சிவகாமித் தாயே
செய்பிழை பொறுத்துச் செயமெமக் கருள்கவே.
12

பத்தியொடு பரவுவோர்க்குப் பரகதி யருளும்
பராபரை யேபரமே சுவரியே சிவகாமித் தாயே எத்துக்கிவ் வீனனை யிங்குநீ படைத்தாய்
இருவினைப் பவக்கடல் தன்னில் மூழ்கவோ சித்திமிகு சிதம்பர நாதன் சேயாம்
செந்தமிழ் வித்தகன் சின்னத்தம்பி நாவலன் நித்தநின் மலரடி பரவுகின்றேன் முத்தியது
தந்தருள் இணுவைநகர்ச் சிவகாமித் தாயே
ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
ஓம் சிவகாமியம்மை திருத்தாள் போற்றி
சிவகாமியம்மை திருவூஞ்சல் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
திருமார்ப னயன்முனிவர் தேவர் நாதன்
சித்தர்வித் தியாதரர் ஆதித்தர் போற்ற மருமாலை யிதழிபுனை பரமர் பாகம்
மருவுசிவ காமிதன்மே லூசல் பாட நரராசர் புகழினுவை நகரில் வாழும்
நம்பனடி யவர்நினைந்த வரங்க ணல்க பரராச சேகரபூ*சிதனாம் முன்னோன்
பதுமமல ரடியிணைகள் பரவு வோமே
கொண்டல்வரை கனகவரை விட்ட மாகக்
குலவுகுலா சலங்கள்மணிக் கால்க ளாகப் பண்டைமறை யொருநான்குங் கயிற தாகப்
பலபுவன கோடிகள்பொற் பலகை யாக அண்டநடு மன்னுவிராட் புருடன் நல்ல
அணிகொள்ந வரத்னமனிப் பீடமாக மண்டலமெல் லாம்புகழ மினுவை வாழும்
மாதுசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
13

Page 11
வின்ைனுலவு மிருசுடர்கள் தீப மாக
விளங்குபல தாரகைகள் விதான மாக த65ன்னுலவு சந்தனமா முதல வைந்துந்
தருமலர்கள் நறுமலர்ப்பூம் பந்த ராக எ66ன்ணுலவு மிளந்தென்றல் கவுரி யாக
இலங்குபகிரண்டம்மணி மஞ்ச மாக அண்ணல்வளந் திகழினுவை தன்னில் வாழும்
அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
செய்யவெண்டா மரைமலரிந் திரைசீ ராணி
செகமுழுது நிழற்றுவெள்கைக் கவிகை கொள்ளத் துய்யபகிரதிதவளக் கவரி வீசத்
தோகையய் ரானிசெம்பொற் படிக மேந்த ஐயைபை ரவிமுதலோ ரடப்பை ஏந்த
அஞ்சுகமஞ் சக்குயில்கொண் டருகு நிற்பப் பெய்யுமுகில் வளர்சோலை யினுவை வாழும்
பெண்ணரசி சிவகாமி ஆடீ ரூஞ்சல்
தகரமணங் கமழ்மணிப்பொன் மவுலி மின்னச் சசிக்லைகள் மானுநெற்றி யணிகள் துன்ன மகரவனி குண்டலத்தோ டிகல நீல
வரிக்கயல்கள் பாயமணி யாம்பல் மேவ நிகரிலாமைந் தர்சொரிநீ லப்பூ வார
நிரைவடமுத் தரியமிசை நிழல்கள் வீச அகவளமும் பெருகிவளரினுவை வாழும் அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்
6. தும்புருநா ரதர்முதலோர் கீதம் பாடத்
துய்யவுருப் பசிமுதலோர் நடனமாட அப்பரமே வலர்பாரி சாத மேவு
மலர்மழைபொன் மழைபோல அள்ளி வீசச் செம்பதுமக் கன்னியொடு நாவின் மாதும்
திகழ்மாத ரிருகையினால் வடந்தொட் டாட்ட அம்புவியில் வளஞ்சேர்நல் இணுவை வாழும் அம்மைசிவ காமவல்லி யாடீ ரூஞ்சல்
14

10.
மந்திரமே முதலான ஆதி தேவர்
மன்றினட ராசரன்பர் மனதில் வாசர் சிந்தைவந் திணிதிருக்கும் வானுலாவும்
திங்கள்வகி ரெனத்திகழகிம் புரிசே ரொற்றைத் தந்தனொடு கந்தன்மடி மிசையே மேவச்
சகலவுயிர் களும்வானத் தவரு முய்யச் செந்திருவா ழினுவைநகர் தன்னில் வாழும்
சிவகாம சுந்தரியே யாடீ ரூஞ்சல்
கதிராரு மணியணிகுண் டலங்களாடக்
கனகமணியனிவளைகொள் கவின்களாடப் புதிதான கொண்டையணி குச்சு மாடப்
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தே யாட மதிபோலும் நுதலிலனிச் சுட்டி யாட
வனசமலரடியிணைகள் சிலம்பு மாட அதிகவளம் பெருகிவளரினுவை வாழும்
அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்
பவர்முதலா முருத்திரர்பண் ணவர்கள் மூன்று
பத்துடனே முக்கோடி பதுமன் மாலோன் இவர்களுட னிந்திரன்கா லன்தீப் பேரோன்
இனியகூர்மாண் டன்வாயு வொடள கேசன் தவர்களாக மங்கள்சதுர் வேத மோதத்
தசகோடி சத்திகளும் பாங்கின் மேவ அவனிபுகழினுவைநகர் தன்னில் வாழும்
அபிராமி சிவகாமி யாடீ eb(6556)
உரகபதி நகரெட்டுங் கால்க ளாக
ஓங்குபுவியதனிருப்பா வும்பர் மேலா
விரவுமொரு விதானமா டுக்கள் பூவா
விதுவுடனே கதிர்களொளி யாடி யாகப்
பொருவிலகி லாண்டம்நிறை மன்ற மாகப்
பொருந்தியுயிர் புரந்தருளு மன்னர் மன்னன் வரையரச னருள்குமரி யினுவை வாழும் மாதுசிவ காமவல்லி யாடீ ரூஞ்சல்
15

Page 12
11. தத்துடரி ரவியுதயாத் தமனங் காட்டித்
தருமருன இருவரையாந் தம்பம் நாட்டிச்
சுத்ததம னியவரையாம் விட்டம் பூட்டித்
துருவமெனு மிருவடங்கள் தொட்டே யாட்டி
வைத்தசெக மண்டலமாம் ரத்ன பீடம்
மலரினுவைச் சிதம்பரமாம் வளவில் மேவும்
சித்தமகிழ் நித்யநடராச ரோடு
சிவகாம சுந்தரியே யாடீ ரூஞ்சல்
12. ஐயையே யம்மையே யாடீ ரூஞ்சல்
அருளுதவும் ஆரமுதே யாடீ ரூஞ்சல் துய்யவுபநிடதப்பொருளே யாடீ ரூஞ்சல்
சோதியேயெம் ஆதியே யாடீ ரூஞ்சல் வையகத்தைப் பெற்றவரே யாடீ ரூஞ்சல் வானோர்கட் கரியவரே யாடீ ரூஞ்சல் செய்யசிவகா மப்பொருளே யாடீ ரூஞ்சல்
தேவர்தொழு சிவகாமி யாடீ ரூஞ்சல்
ஓம் இணையிலிச் சிவகாமி அம்மை திருத்தாள் போற்றி
ஓம் ஓம் ஓம். ஓம் இணையிலிச் சின்னத்தம்பிப் புலவர் திருவடி போற்றி
16

இளந்தாரி கைலாயன் திருத்தாள் போற்றி
இணையிலி இளந்தாரி கைலாயன் அருள் வேட்டற் பதிகம் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)
திங்கள் கங்கையணி செஞ்சடா முடித்தேவர்
தேவன் திருப் பொன்னடி அனுமதினம் பொங்கும் என்டிசை எங்கனுமே போற்றுவோம்
எம்மைப் போற்றியிங்கு ஆளுவாய் செங்கை வேலன்திருப் பதம்போற்றும் வெல்வக்
காலிங்க ராயன் குமாரனே! கங்கை வமிசத் துங்கப்பயங் கரனேநற் கருணைசேரும் கைலாய நாதனே.
கந்தமலர்க் குழலாட மாலையாடக் கன்னியர்கள்
நடமாடக் கனக ரத்தினப் பந்தாடுந் தண்டிகையில் வீதிமேவும் பரவன்னிய
முதலியார்கள் பரவத் தேவர் வந்தாடுஞ் சோலைபுடை சூழுமிவ்வூர் வாழும்
அடியார்கள் பிணியின்றி நாளும் நந்தாத செல்வமும் நற்சுகமும் வாழ்வும்பெற
நானில்த்திற் கருணை நல்குவீரே
நற்றவத்தின் முயற்சியும் சீலமும் ஞானமும்
நவதானிய இலாபமும் செல்வமும் பெற்றுநின் அடியார்கள் மகிழ்வுற் றிடப்பெரிதும்
இரங்கியே பேரருள் செய்குவாய்
கொற்றமேவிய காலிங்க ராசனாங் குரிசில்
செய்தவந் துற்ற குமாரனே!
உற்றமாதவர் போற்றும் பொற்றொடை அண்ணலே!
கருனையுள கைலாய நாதனே.
17

Page 13
மாக்கயத்துத் தடந்தாமரைத் தாளினையை மகிழ்ந்து
பரவுநின் அடியார்தம் வறுமையை நீக்கியருந் துயரெதுவும் இன்றிநின்னடி நேசித்து
அன்பர்கள் வாழவருள் செய்குவாய் தாக்கவரும் நீள்சரத்தைப் பொரும்விழிச் சந்திர
மயிலன்னாள் மதனனே இணுவையைக் காக்கவந்த காலிங்க ராயன் குமாரனே! கருணையுள கைலாய நாதனே
பற்றலர்கள் எதிர்த்தவெம் போரிலும் பாடும்
பைந்தமிழ்ப் பாவலர்தம் சபையிலும் வெற்றிவேல் மன்னர்தம் சபையிலும் வேண்டும்
வேறுமார்க்கத் திலும்அன்பர் நின்றன் பொற்றிருப்பாதம் எண்ணும் போதுநீ விரைந்தே
வெற்றியை ஈந்தருள் செய்குவாய் நற்றவர் போற்றும்தென் இணுவையின் மெய்த்தெய்வமே!
கருணைசேருங் கைலாய நாதனே!
சித்தமிசை நினைத்த கருமங்கள் கைசேரவும்
தீமைகள் சூனியம் தீரவும் புத்திநண் கூரவும் நித்தம்நின் புகழ்பாடிப் போற்றவும் புன்மைகள் நீங்கவும் பத்தியொடு பாதார விந்தமது பணியவும்
கிருபையது பாலித்தருள் செய்குவாய் எத்திசையும் புகழ்கின்ற காலிங்க குமாரனே!
கருணைநல்கு கைலாய நாதனே
சீருலாவு நிதியமும் இந்திரச் செல்வமும்
செயழும் மிகுசுக முந்தினம் பாருலாவுஞ் சருவ வசியமும் எய்தநின்
பாதமது ஏத்தவருள் செய்குவாய் தாருலாவுஞ் செம்பொற் கனதனச் சந்திர
மோகினி தழுவுந் தயாளனே! காருலாவுங் கொடைக்கரக் காலிங்க வள்ளல்
குமாரனே கைலாய நாதனே!
18

10.
பஞ்சபாத கனாயினும் நின்னடி பரவியே
ஏத்தும் பரிவிலி யாயினும் தஞ்சம் நீயென அடைக்கலம் புகுந்திட்டால்
தடையிலாமற் காத்தல்நின் கடனையா வஞ்சரஞ்ச மறுகில் உலாவரு மன்னன்
காலிங்க ராயன் குமாரனே! கஞ்சம்நிகர் செஞ்சர னக்கழல் வீரனே!
கருணைமிகுங் கைலாய நாதனே!
புரந்தரற்கும் குபேரற்கும் நிகரெனப் பொன்னையும்
திருவினை யும்தினம் நல்கிட வரந்தருந் தெய்வமே! நீயிங்கு இருக்கயாம்
வறுமையாய்த் துயருறல் நீதியோ கரந்துநீர் வயல்சூழ்தென் இணுவையிற் தோன்றிய
காலிங்க ராயன் தோன்றலே! கரந்தை சூடியருள் நல்கும் தூயவனே!
கருணைமிகு கைலாய நாதனே!
பண்டுசெய் தவத்தாலுன் பங்கயத் திருப்பாதம்
பரவுவிப் பணிந்துயாம் அனுதினம் தொண்டுகள் செய்யவும் துதிக்கவும் தொழவும்
இரங்கவும் பேரருள் செய்குவாய் வண்டுகின்டு தொடைப்புயக் காலிங்க மன்னவன்
மாதவ மைந்தனே! கறைதருங் கண்டன்ார் அருள்தருந் தெய்வமே! இளந்தாரியே!
கருணைமிகு கைலாய நாதனே!
தந்தையும் பெற்ற தாயும் கடவுளும்
தனயரும் துணைவருஞ் சற்குருவும் இந்தமா நிலத்தினில் இளையரும் யாவரும்
ஆகிவந்து எங்களை ஆளுவாய் ம்ந்திரப் பொற்புயக் காலிங்க மன்னன்
மாதவத்து வந்த தெய்வமே! கந்த மா மலர்ப்பொற் பாதனே! இளந்தாரியே!
கருணைமிகு கைலாய நாதனே!
19

Page 14
11.
12.
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
சீர்வாழி சிவநெறி செந்தமிழ்வாழி
சிவகாமியம்மை திருவடி வாழி கார்வாழி கருணாகரப் பிள்ளை வாழி
கான்வளர் கடம்புபுனை கந்தவேள் வாழி ஏர்வாழி பத்திரகாளி அம்மன் வாழி எங்கள் வைரவக் கடவுள் வாழி பார்வாழி இணுவைவளர் காலிங்க ராயன்
பாலனாங் கைலாய நாதன் வாழி
திருவாழி மறைவாழி அறம்வாழி அருள்வாழி
திறலரசர் செம்மைசேர் செங்கோல் வாழி இருசுடர்வாழி மன்னுயிர் வாழி இச்சரிதை
கற்றவர் கேட்பவர் சுற்றமும் வாழி பெருமாதவர் வாழி விண்ணவர் வாழி முன்வரும்
அண்ணமார் வாழி இணுவைத் திருவூர் வாழி மருவளர் செங்குவளை மாலையணி கைலாயன்
இளந்தாரி நீடுழி வாழிவாழி வாழியவே!
ஓம் இளந்தாரி கைலாயன் திருத்தாள் போற்றி ஓம் ஓம் ஓம்
20


Page 15


Page 16