கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குஞ்சிதபாதம்

Page 1
"குத்சி
(இந்து சமயச் சித்
சிகா முரீ பொன்னம்பலவா6ே
மஹா கும்
1999 -
 

தபாதம் தர
தினைக் கட்டுரைகள்)
s
ணஸ்வரர் தேவஸ்தான பாபிஷேகம் 06 - 23

Page 2

2dish LDub
"குத்சிதயாதம்”
(இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகள்)
ஆசிரியர்
இந்து வித்யாநிதி பிரம்மறுநீ சோ. குவறானந்த சர்மா பத்திரிகைவியல்துறை டிப்புளோமா (இந்துசமய ஆலோசகர், எழுத்தாளர், பிரசுரிப்பாளர்)
கொழும்பு நீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் 1999 - 06 - 23

Page 3
முதற் பதிப்பு 1999 உரிமை ஆசிரியருக்கே பிரதிகள் - 1000
பிரதிஷ்டா கலாநிதி, சைவ சித்தாந்த பிரதிஷ்டா சக்கரவர்த்தி ஈசான சிவ சிவாநி சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயா அவர்கள் நீ சிவகாம செளந்தரி அம் மிகையுடனான நீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் ஐம்பது வருடங்களாகச் சிவாசார்யப்பணிகளைச் செய்துகொண்டு தமது சேவைக் காலத் தரில் மூனர் றாவது மஹா தும்பாபிஷேகத்தை 1999-06-73 ஆந் திகதி காலை பிரதம பிரதிஷ்டா சிவசார்யராக இருந்து பக்திபூர்வமாகச் செய்து வைப்பது சிறப்பானது. இம் மஹோன்னத வேளையில் "குஞ்சிதயாதம்" என்ற நாலை "இந்து வித்யாநிதி" பிரம்மறி சோ. குஹானந்த சர்மா ஐயா அவர்களின் இந்துசமயச்
சிந்தனைக் கட்டுரைகள் அடங்கிய நாலை கொழும்பு,
ஒட்டோ அச்சகத்தார் அச்சிட்டு உதவினார்கள்.
ாற் பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மஹா | கும்பாபிஷேகத்தைத் தர்சித்துக் கொண்டிருக்கும் இச் சுய வேளையில் இந்தத் தேவஸ்தான முகாமைத்துவ தர்மகள்த்தா பூmநீமான் டி.எம்.சுவாமிநாதன் அவர்களால் "குஞ்சிதயாதம்” என்ற நால் பக்தர்களின் பக்தி மேம்பாட்டிற்காக வெளியிட்டு
வைக்கப்படுவத அதி உத்தமமானது.
எல்லோரும் இன்புற்று வாழ்வார்களாக
2
 

1949 ஆம் ஆண்டு முதல் ஐம்பது வருடங்களாக
விதமும் நீ ரிவர் பிசகாந்திரி சமேத ஆதி பொன்னம்பலவாணேஸ்வரத்தில் சிவாச்சார்ய பணிகளை செய்து கொண்டிருக்கும்
「一
பிரதம அரிவார்புசாரிபர்
சிவமூர் சி. குஞ்சிதயாதக் குருக்கள்
ஐயா அர்ைகள்
பிரதம குரு நீ பொன்னம்பலவாரேஸ்வரர் தேவனம்தானம் இந்துசமய,
is இந்து கலாசார ஆலோசகள்
கல்வி, உயர் கல்வி அமைச்சு அகில இலங்கைச் சிவப்பிராமண சங்கம் கொழம்பு, விவேகானந்த சபை.
ஆலோசகர் தலைவர் உபதலைவர்

Page 4

வெளியீட்டாளர் உரை
ஆடலரசனின் சபைகளுள் பொன்னம்பலமும் ஒன்று. பூரீ நடராஜரின் திரு நடனத்தில் அருளைக் கொடுப்பது அவரது திருப்பாதம் ஆகிய "குஞ்சிதயாதம்” கொழும்பு நீ பொன்னம்பலவாணேஸ்வரம் மிகவும் தலைசிறந்த சிவாலயம். நாங்கள் இந்த ஆலயஞ் சென்று வழிபடுவது வழக்கம்.
நாங்கள் காரைநகள் வாசிகள். ஈழத்துச் சிதம்பரரேஸ்வர பக்தர்கள். சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயா அவர்கள் திருமணஞ் செய்தது எமது ஈழத்துச் சிதம்பர பிரதம குருக்கள் சமஸ்கிருத பண்டிதர் சிவநீ கணபதிஸ்வரக் குருக்கள் ஐயாவின் பேத்தியை ஆகும். ஆகவே, குருக்கள் ஐயாவுக்கும் எமக்கும் 42 வருடங்களாக ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயாவின் மருமகன் பிரம்ம பூரீ சோ.குஹானந்த சர்மா அவர்களுடன் பல வருடங்களாகப் பழகி வருகின்றேன். அவரின் சமயக் கட்டுரைகளும், வானொலியில் அவர் பேசும் நற்சிந்தனைகளும் எல்லோருக்கும் பயனளிப்பவை. ஆகவே அவரின் ஆக்கங்களில் சிலவற்றைத் அச்சிட்டு வெளியிடுவது பெரும்பேறு என்று எண்ணினேன்.
நீ பொன்னம்பலவாணேஸ்வர மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை அறிந்தேன். அதற்கு சிவழறி சி. குஞ்சித பாதக் குருக்கள் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இந்தத் தேவஸ்தானத்தில் சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயா தலைமை தாங்கிச் செய்வது இது மூன்றாவது மஹா கும்பாபிஷேகம் ஆகும். இக்கும்பாபிஷேகத்தில் சென்னை இந்திய பண்பாட்டு அலுவல்கள் ஆய்வு நிலைய இயக்குனர் டாக்டர் எஸ். பி. சபாரத்னம் அவர்கள் கும்பாபிஷேகப் பிரகாசமாக உள்ளார். சர்வசாதகராகத் திருக்கழுங்குன்றம் சிவநீ டி. சி. தியாகராஜ சிவாசாரியார் அவர்கள் சிவப்பணி புரிகின்றார். கலாநிதி கணபதிஸ் தபதி அவர்களும்
3.

Page 5
இக்கும்பாபிஷேகத்தில் முக்கிய பங்கெடுத்துள்ளார்கள்.
எல்லா வழிகளிலும் சிறந்ததாக உள்ள இந்த மஹா கும்பாபிஷேகத்தை இந்தத் தேவஸ்தானத்திலேயே ஐம்பது ஆண்டுகளாகச் சிவப்பணி புரிந்து வரும் எங்கள் குருக்கள் ஐயா சிவபூர் சி. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களே தலைமை தாங்கிச் செய்வது மிகவும் சந்தோஷமான விஷயம். ஐம்பது ஆண்டுகள் பறி பொன்னம்பலவாணேஸ்வரர் பணியில் போற்றிப் பாராட்டி வரும் அவரைச் சிவபெருமான் என நாம் வணங்குகின்றோம். V
அவ்வேளையில் பிரம்மழரீ சோ. குஹானந்த சர்மா அவர்களின் ஆக்கங்களை, நீ பொன்னம்பலவாணேஸ்வரர் கும்பாபிஷேக காலத்தில் சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயா அவர்களின் பெயரையே தாங்கி "குஞ்சிதமாதம்” என்ற நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
‘குஞ்சிதமாதம்” என்ற இந்துசமய சிந்தனை நூல் றி பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான முகாமைத்துவ தர்மகர்த்தா, நீமான் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் வெளியிடப்படுவது போற்றுதற்குரியது.
நீ சிவகாம செளந்தரி சமேத பொன்னம் பல வாணேஸ்வரர் மஹா கும்பாபிஷேகத்தை தர்சிக்கும் அடியார்களும், அன்பர்களும் "குஞ்சிதமாதம்” என்ற நூலை படித்துப் பயனடைவார்களாக.
க.தியாகராசா
உரிமையாளர்
ஒட்டோ அச்சகம் 1999-06-23

இந்து சமயச் சிந்தனைகள் மக்கள் மத்தியில் வளரவேண்டும் என்பது எனது விருப்பம். சமய வாழ்வு எல்லோருக்கும் என்றும் பலனைக் கொடுக்கவல்லது. இந்த அடிப்படையில் எனது ஆக்கங்களை அவ்வப்போது தினசரி பத்திரிகைகளுக்கு எழுவது வழக்கம். அதேபோல இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபத்திலும் எனது உரைகள் வருவது வழமையில் உள்ளது. இவைகளை ரசிப்போர் என்னிடம் நேரில்வந்து உரையாடுவதுண்டு.
அவ்வழியில் ஒட்டோ அச்சக உரிமையாளர் நண்பர் அன்பர் திரு.க.தியாகராஜா அவர்கள் என்னைக்கானும் போதெல்லாம் எனது ஆக்கங்களை வெயிடவேண்டும் என்பார்கள்.
அத்தோடு பூனி சிவகாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகமும் வந்தது. எனது மாமனாரின் ஐம்பதாவது வருட சேவையும் இத்தேவஸ்தானத்தில் உள்ளது. அதனால் இந்த நூலை எப்படியும் வெளியிட வேண்டும் எனச் சித்தங்கொண்ட திரு. க. தியாகராஜா அவர்களைப் பாராட்டுகின்றேன். இது தொடர்பாக தேவஸ்தான முகாமைத்துவ தர்மகர்தா பூனிமான் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் உரையாடினேன். 'நல்ல விஷயங்கள் எப்பொழுதும் நன்மையாகவே அமையும். நீங்கள் எழுதி வெளியிடுங்கள் என அன்புடன் கூறி ஊக்கமளித்தார்கள்.
இவைகள் எல்லாம் தெய்வ செயல். ழனி பொன்னம்பல வாணேஸ்வர சுவாமியையும் அம்பாளையும் வணங்க, ‘குஞ்சிதபாதம்" என்கின்ற இந்து சமயச் சிந்தனை நூலை மஹா கும் பாபிஷேகம் காணும் பொன்னம் பலவாணேஸ்வரரின்
திருப்பாதங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
சோ.குஹானந்த சர்மா
ஆசிரியர் 136/28 ஜோர்ஜ் ஆர் த சில்வா மாவத்தை
கொழும்பு - 13. 1999-06-23

Page 6
3 KN is &
IŤŮ (3576), so oriġi ff(b
沈彤心中点)本之中心划即陷浮) )心门!!!!门é!!- - - - - - - - -• • • • • • • • •=****************-- - - - - -나流~T Z)11–1---s ----人- - - - - - ----鼻 – – → – → ~叱-----来→ → → → → →冷-----; 다. 에41–11411없애74,%心]料门树• • • • • • •=.い- - - - --*----- – 해 中——————~~~~ - z -r ;{† 「「Qシ Q%이人 --------------+----------ı ; , ! 參→屬? → →*鼻 → →心~以~~~常~ → → → →中:11·남·1 - 中–1·1 – 11–>= * → → → → →• • • • • • •=> — — — —• > – — ± 5 : ?” i 3. § 2以~);ፉ” 2似i å £ i s Y --~∼5–11人–11-1→臺→→→ → →,人1–11–1–人→ → → → → →-------+---- ------->----o---> – – – – –>– – – – –>--~~~~); ;| : ---**– – – –< — — — — —鼻 — = → = •疊 → → → = –鼻— = → • →<<----<------+-+ - - - - - -→ –––––**• • • → -+ -->* - -------+--"和 *---o---.-- ~- - ----寶= → → * =·-~--~so-->-------寶·→ → → → → →翼易---~~~)•••• • • • • • —------o---o
་་་་་་་་་་་་
சோமசூத்திரப்ŴŵŶö------
. iffor($5'Tony 35sreo•ısım, běமுதலில் நந்தி தரிசனம் செய்து பின்னர் 1ஆம் இலக்க வழியே சென்று சண்டேஸ்வரர் சந்நிதி வரை சென்று வழிபடல். . சண்டேஸ்வரர் சந்நிதியிலிருந்து 2ஆம் இலக்க வழியே வந்து நந்திதரிசனம் செய்து கோயிலை வலமாக வந்து கோமுகை வரைசென்று வணங்குதல்.
(பிரதோஷ காலத்தில் கோமுகயைக் கடத்தல் ஆகாது)
. அடுத்து 3ஆம் இலக்க வழியே வந்து நந்திதரிசனம் செய்து சண்டேஸ்வரர் சந்நிதியை அடைதல். . 4ஆம் இலக்கப்படி வந்து நந்திதரிசனம் செய்யாது கோயிலை வலமாக வந்து கோமுகைப்பதம் வரை செல்லல், . 5ஆம் இலக்க வழிப்படி திரும்பி வந்து நந்திதரிசனம் செய்யாது சண்டேஸ்வரர் பதம் வரை சென்று தரிசித்தல். . கடைசியாக 6ஆம் இலக்கப்படி வந்து நந்தியையும், நந்தீஸ்வரப் பெருமானின் இரு கொம்புகளுக்கு மத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானையும்
தரிசிக்கலாம்.u(!mf. f. @@i, đoạyı ısıg, đ, g,(boisés, 6ii Lsjøsid of sufførifluff 6பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்.
 

2 பிள்ளையார்
நமது வழிபாட்டில் பிள்ளையார் வழிபாடு முதன்மையானது. அவர் சகல விக்னங்களையும் போக்கி நல்லருள் புரிபவர். நாம் எந்த ஒரு கருமத்துக்குச் செல்லும் போதும் விநாயகரை வழிபட்டே செல்வது வழக்கம், “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” என்ற வாக்கிற்கு அமையவும் "நமக்கு மேன்மை தந்திடவும்” என்பதனாலும் நாம் விநாயகப் பெருமானை வழிபடுகின்றோம்.
ஒரு விடயத்தை எழுத ஆரம்பிக்கும் நாம் முதலில் எழுதுவதே பிள்ளையார் சுழியாகும். அழைப்பிதழ், வாழ்த்து, நூல் என்பன எழுதுமுன் பிள்ளையார் சுழியையே எழுதுகின்றோம். பிள்ளையார் சுழியின் "உ" கரம் நாதம் , பிந்து ஆகிய இரண்டினதும் சேர்க் கையேயாகும் . இன்னொரு நோக்கில் பிள்ளையாரின் துதிக்கைக்கும் ஒப்பிட்டுக் கூறுவர்.
பிள்ளையாருக்கு விருப்பமானது அறுகம்புல். அறுகம்புல் ஓர் இடத்தில் முளைத்தால் ஆறு இடங்களில் அது வேரூன்றும், நன்கு செழிப்புற வளரும். நாம் வாழ்த்தும்போது "ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி” என வாழ்த்துவது இதனாலேயாகும். காற்றில் உள்ள குளிர்த் தன்மையை உட்கொண்டு மழை இல்லாத காலத்திலும் அறுகம்புல் வளரும் தன்மையைக் கொண்டது. ஒரு சமயம் புல் சேகரிக்கும் பெண் மழை காரணமாக அண்மையில் இருந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கு நின்ற காளையும், கழுதையும் புல்லை உட்கொள்ள முயன்ற வேளையில் காற்றில் பறந்த அறுகம்புல் மேனியைப் பற்றிக்கொண்டது. பிள்ளையார் அறுகம்புல்லால் அக மகிழ்ந்தார் என்பது ஒரு கதை. இதனால் விசேஷமாகச் சதுர்த்தித் தினத்திலும் பிள்ளையார் வழிபாட்டிலும் நாம் அறுகம்புல் மாலை சாத்துகின்றோம். அறுகம் புல்லால் பிள்ளையாரை அர்ச்சிக்கின்றோம். அறுகம்புல்லை வேரோடு பிடுங்கக்கூடாது. முதல் ஐந்து தளிர்களை கொண்டதாக 36, 108 என்ற எண்ணிக்கையில் அறுகம்புல்லை எடுத்து கோவில்களிற் கொடுப்பது நல்லது.
அறுகம்புல்லை மாலையில் நன்னீரில் ஊற வைத்து மறுநாட் காலை அந்நீரைப் பருகிவரின் சூட்டு நோய்கள் நீங்கும். யோகிகள் யோக நிலையில் இருந்து மீண்ட பின் "மூலதண்ட கஷாயம்” அருந்துவர் எனவும் கூறுவர். பிள்ளையாருக்கு வன்னி, மந்தாரை இவைகளால் அர்ச்சிப்பது வழக்கம், m
பிள்ளையாரைக் கண்ட உடனே நமது இரு கைகளும் நம்மை அறியாமலே தலையிற் குட்டிக் கொள்ளுகின்றோம். நெற்றியின்
7

Page 7
இருபுருவங்களிலும் குட்டும் போது குண்டலி சக்தியைத் தட்டி எழும்புவதாக அமையும். மனம் ஒரு நிலைப்படும். அதேவேளையில் நமது பிழைகளைப் பொறுத்தருளும் படி விண்ணப்பஞ் செய்து கொள்ளுவதாகவும் தலையிலே குட்டி வழிபடுதல் அமைகின்றது.
பிள்ளையார் சந்நிதியிலே நாம் தோப்புக்கரணம் போடுகின்றோம். இதற்கு ஒரு கதை உள்ளது. ஒரு சமயம் பூரீ மகாவிஷ்ணுவின் சக்கரத்தைப்பிள்ளையார் விளையாட்டாக விழுங்கிவிட்டார். இதனால் பூரீ மஹா விஷ்ணு தமது இரு கரங்களாலும் காதுகளைப் பொத்திய வண்ணம் ஆடி அசைந்து அங்கும் இங்கும் சென்றார். இதனைக் கண்ட பிள்ளையார் வயிறு குலுங்கச் சிரிக்க சக்கரம் வெளிவந்தது. இதனை ஒத்ததே தோப்புக்கரணம் ஆகும். வி + விநாயகன் = விநாயகன். தனக்கு மேலே ஒருவருமே இல்லாதவன். தோப்புக் கரணம் 36, 108 என்ற வகையில் போடப்படுவதாகும். சாதாரணமாக மூன்று முறை தலையியிற் குட்டுவதும் மூன்று முறை தோப்புக்கரணம் போடுவதும் வழக்கமாகும்.
தேங்காய் உடைத்து வழிபடுவது பிள்ளையாரையேயாம். நிர்விக்கினங்கள் நீங்கவும் சர்வ காரியங்களும் நன்றே நடைபெறவும் பிள்ளையாருக்கு தேங்காயை இரு துண்டுகளாக உடைத்து வழிபடுகின்றோம். ஒரு சமயம் பிள்ளையார் சிவபெருமானது தலையைக் கேட்டதாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் முக் கண்கள் தேங்காயில் உள்ளதாக ஐதீகம்.
தேங்காயைச் சிதறு தேங்காயாகவும் உடைப்பர். இது கோபுரவாயில், தேரடியில் உடைக்கப்படுவதாகும். பெண்கள் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. அவர்கள் ஆக்கப் பணிக்காக அவதரித்த புண்ணிய சீலர்கள். கத்தி கொண்டு இரு கூறுகளாகத் தேங்காயை உடைத்து நைவேதனஞ் செய்வது உத்தமமானது. கல்லிலும் இரு கூறுகளாக உடைக்கலாம்.
தேங்காயை நோக்கினால் மேல் பாகம் மட்டை தும்புகளைக் கொண்டது. இவை ஆணவம், கன்மம் ஆகும். சுத்திகரித்த தேங்காயின் வைர ஓட்டை அதாவது மாயையை உடைத்தால் நாம் காண்பது வெள்ளை வெளேரென உள்ள தேங்காயையேயாகும். இது பரிசுத்த ஆன்மாவைக் காட்டும். தேங்காயுள் உள்ள இளநீர் அமிர்தத்துக்கு ஒப்பாகும். w
இது காறும் பிள்ளையார் வழிபாட்டின் மகத்துவத்தையும் அதன் உட்பொருள் விளக்கங்களையும் நாம் நோக்கினோம்.
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதத்தைத் தப்பாமல் பூ, அறுகம்புல் என்பனவற்றைக் கொண்டு சென்று வணங்கினால் நல்வாக்கு, நல்மணம் எல்லாம் நமக்குக் கிட்டும்.
8

ஆவணிச் சதுர்த்தி
பிள்ளையார் விரதங்களுள் ஆவணிச் சதுர்த்தியும் ஒன்றாகும். ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியும், விசாக நட்சத்திரமும், சிம்ம லக்கினமும், சோம வாரமும் கூடிய சுபமுகூர்த்தத்தில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் பாலச்சந்திர மூர்த்தியாக அவதரித்தார். இதனால் விநாயகர் அடியார்கள் ஆவணிச் சதுர்த்தியன்று விரத அனுஷ்டானங்களுடன் பிள்ளையாரை வழிபட்டு வருகின்றனர்.
வி + நாயகர் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவரும் இல்லாத ஏக நாயகன் என்பது பொருள், விநாயகப் பெருமானின் திருமேனி ஞான வடிவினதாகும். எனவே, இவர் ஞான விநாயகர் ஆகின்றார். சகல சித்திகளையும் நல்குவதால் சித்திவிநாயகர் எனப்படுகின்றார்.
பிள்ளையார் வழிபாடு இப்பொழுது உலகெங்குமே உள்ளது. அதற்கான காரணம் அவரது பேரருளேயாம். பிள்ளையார் வழிபாட்டில் ஆவணிச் சதுர்த்தி பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதாகும். ஆவணிச் சதுர்த்தி வழிபாடு அன்புடனும், பக்தியுடனும், பற்றுடனும் அடியார்களால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
சதுர்த்தி விரதமிருப்போர் ஆவணிச் சதுர்த்தியன்று சங்கற்பித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் ஆவணிச் சதுர்த்தியன்று காலையில் விரதகாரர் தலையில் தோய வேண்டும். பின்பு உலர்ந்த ஆடை அணிந்து சைவ அனுஷ்டானங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவரவர் வசதிகளுக்கமைய வீட்டிலே பிள்ளையார் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். கோவிலுக்குச் சென்று அபிஷேகம், பூஜை உற்சவம் என்பனவற்றைக் கண்டு வணங்கலாம். அர்ச்சனை வழிபாடுகளைச் செய்தல் நல்லது. நட்சத்திரம், பெயர் என்பன சொல்லி அர்ச்சனை செய்வதே மேலானது.
பிள்ளையாருக்கே பிடித்தமான அறுகு, எருக்கு மாலைகளைச் சாத்தலாம். அறுகு, எருக்கு, கொன்றை, தும்பை, வன்னி என்பவற்றால் அர்ச்சிப்பது உத்தமமானது. பாலும், நல்லதேனும், எள்ளுப்பாகும், மோதகம், அப்பம், அவல், பொரி, இராசவள்ளிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, கரும்பு, மாம்பழம் பலாப்பழம், வாழைப்பழம், விழாம்பழம் என்பனவும் சதுர்த்தித் திதியில் நைவேதிக்கப்படுபவையாகும். சதுர்த்தி விரதம் இருப்போர் சகல சித்திகளையும் பெற்றுச் செளபாக்கிய வாழ்வு வாழ்கின்றனர். சதுர்த்தித் தினத்தில் பிள்ளையாருக்கே பிடித்தமான "விநாயகர் அகவலைப்” பாராயணஞ் செய்தல் நற்பலனைக் கொடுக்கும்.
9

Page 8
“பிடியதனுருவுமை " போன்ற பிள்ளையர் சம்பந்தமான தேவாரம், புராணம் என்பவற்றையும் பாராயணஞ் செய்தல் மிக்க நல்லது. புராணங்கள் “பிரணவப் பொருளாம்" ஐங்கரன் எனப் பிள்ளையாரைப் போற்றுகின்றன. அவர் யானை முகங் கொண்டவர் மூன்று கண்களையும், இரு பெருஞ் செவிகளையும், ஐந்து கரங்களையும், பெரு வயிற்றையும், இரு குறுகிய திருவடிகளையும் கொண்டு விளங்குபவரே விநாயகப் பெருமான்.
யானைமுகத் தோற்றம் பிள்ளையார் சகலருக்கும் உணர்த்தும் பிரணவத் தத்துவமாகும். ஓம் என்ற உயர்ந்த தத்துவம் பிள்ளையாருக்கே உரியதாகும். பிள்ளையாரின் ஐந்து கரங்களும் அவர் தாமே செய்யும் ஐந்து தொழிலைக் குறிப்பனவாகும். சூரிய, சந்திர, அக்கினி என்பனவற்றைப் பிள்ளையாரின் மூன்று கண்களும் காட்டுகின்றன. ஆன்மாக்களின் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலவாதத் தன்மைகளைப் பிள்ளையாரின் இரு செவிகளும் காத்தருளுகின்றன. பெரு வயிறானது உலகம் முழுவதையுமே அடக்குவதாக உள்ளது. பெருந் தோற்றமும் பொலிவும் கொண்டு வேண்டுவார் வேண்டுவதை அருள்பாலித்தருளும் விநாயகனைச் சதாகாலமும் நாம் வழிபட வேண்டும். விசேஷமாக ஆவணிச் சதுர்த்தி முதல் சதுர்த்தி நாட்களில் விரத அனுட்டானங்கள் மேற்கொண்டால் இஷடசித்திகளைப் பெற்று நல்வாழ்வு வாழலாம்.
ஆவணிச் சதுர்த்தி தினத்தில் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகங்கள் உள. பல ஆலயங்களில் 108 அல்லது 1008 சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மஹோற்சவம், உற்சவம் என்பனவும் இடம்பெறுவது வழக்கம்.
ஊர் நன்மைக்காக கணபதி ஹோமம், லட்சார்ச்சனை செய்யும் ஆலயங்களும் உள்ளன. ஆவணிச் சதுர்த்தி என்றதும் அன்பு, பாசம் கொண்டு தொண்டுகள் புரியும் பக்தர்களை எங்கும் காண முடியும். “எங்கள் பிள்ளையார்” என்ற இறுக்கமான பிடிப்பு எல்லோர் மனதிலும் சந்தோஷத்துடன் இருப்பதையும் நாம் காணலாம். இவற்றிக்கான காரணம் பெருமை வாய்ந்த பிள்ளையார் அருள்மிக்கவர். அடியார் இடரினைப் போக்கி அவர்களைச் சந்தோஷப்படுத்துபவர்.
இதனால் விசேஷமாக ஆவணிச் சதுர்த்தியன்று எல்லோரும் விரதம் இருக்கின்றனர். மாதச் சதுர்த்தி நாட்களிலும் விரத அநுட்டானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பிள்ளையர்ர் பேரருள் எல்லோருக்கும் கிட்டுவதாக!
1()

நீ நடராஜரின் மார்கழித் திருவாதிரை
மார்கழித் திருவாதிரை நட்சத்திரமும் பூரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்களுள் ஒன்றாகும். மார்கழி மாதம் முழுவதுமே வைகறை - அதிகாலை வழிபாட்டு நாட்களாகும். ஆலயங்களில் மார் கழிப் பூஜை அன்றே அதிகாலையில் மேலதிகப் பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆதலால் திருவாதிரை நன்னாளும் யூரீ நடராஜ மூர்த்தியின் வைகறை வழிபாட்டு நாளாக உள்ளது.
சமஸ்கிருதத்தில் ஆருத்ரா எனின் தமிழில் ஆதிரை ஆகும். அதற்கு முன்னே அடைமொழியான திருவையுஞ் சேர்த்தால் திருவாதிரை எனவரும், திருவாதிரை நட்சத்திரத்தன்று பூலோக கைலாயம் எனப் போற்றி வழிபடப்படும் தில்லைச் சிதம்பரச் ஷேத்திரத்தில் அதிகாலை முதல் நடைபெறும் பூரீ நடராஜா அபிஷேகம், பூஜை, தேர்ப்பவனி என்பன மிக அற்புதமானவை இதனை:
"ஆடிநாய்நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்" என வியந்து போற்றிப் பாடியுள்ளனர். தேர்த் திருப்பவனியில் மங்கள வாத்தியம் முன்னே செல்ல பக்தர் குழாம் தேர் வடத்தைப் பிடித்துத் தேரை இழுப்பர். அப்போது தில்லை வாழ் அந்தணர்கள் வேதங் கோஷித்தபடி வர தேரின் இரு மருங்கிலும் பறை முழங்கப்படும். பறை முழக்கத்தாள் லயத்துக்கு அமைய தேர் அசைந்து ஆடிவர, சபாநாயகரான ரீநடராசாப் பெருமான் திருநடனம் புரிந்து வரும் காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அதி அற்புதக் காட்சியாகும். பூரீ சிவகாமி அம்பாள். அம்பாள் தேரில் எழுந்தருளி வருவார். சிதம்பரச் சேஷத்திரத்தில் நடைபெறுவது போன்று இலங்கையில் உள்ள ஆலயங்களிலே திருவா திரை நாள் பக்தி பூர் வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
திருவாதிரைத் தினத்திலே பூர் சிவகாம செளந்தரி அம்பிகா சமேத யூரீ நடராஜ மூர்த்தியைத் தரிசிப்போம் வாருங்கள். "ஓம்" என்ற பிரணவத்தின் சபாநாயகராக பூரீ நடராஜப் பெருமான் எழுந்தருளி உள்ளார். “ஓம் நமசிவாய' என்ற அதி உன்னத சிவ அட்சரங்களைத் தாங்கியிருப்பதுவே திருவாசி. திருவாசியில் உள்ள திரிசூலங்கள் ஆன்மாக்கள் மும்மலங்களினின்றும் விடுபட வேண்டும் என்பதையும் பஞ்சசுடர்கள் பஞ்சமா பாதங்களினின்றும் விடுபட வேண்டும் என்ற தத்துவத்தைக் கூறுவனவாகும். இதனாலேயே மலர் மாலைகள் கொண்டு திருவாசியை முன்னையோர் அலங்கரிப்பதில்லை. திருவாசி
பூரீ நடராஜ தத்துவத்தில் ஓர் அங்கம் ஆகும்.
11 a

Page 9
நாம் இப்பொழுது பூரீ நடராஜரைத் தரிசிக்கின்றோம். “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்ளு சிரிப்பும் கொண்ட ஆனந்த தாண்டவ மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். அவருக்கு அருகில் ழரீ சிவகாம செளந்தரி அம்பாள் அடக்கமே உருவாக இருந்து திருநடனத் திருக்கோலத்தை இரசித்த வண்ணம் உள்ளார்.
பூரீ நடராஜப் பெருமான் ஆடுவது அற்புத ஆனந்தத் தாண்டவ நடனம். அவரது வலது மேற்கை உடுக்கையை ஏந்தியுள்ளது. அண்ட சராசரங்களும் டமருகமான உடுக்கை ஒலிக்கே இயங்குகின்றன என்பது ஐதீகம். இது படைத்தலைக் காட்டும். இடது மேற்கை தீயினை ஏந்தி உள்ளது. ஆன்மாக்களின் மும் மலங்களை அழிப்பதை இது சுட்டுகின்றது. இ.'து அழித்தல் தொழிலாகும். வலது கீழ்கை அஞ்சேல் என அபயம் அளிக்கின்றது. இது காத்தலைக் காட்டுவதாகும். இடது கீழ்க்கை தூக்கிய திருவடியை நம்பு என அறிவுறுத்துகின்றது. இத்திருவடியே “குஞ்சிதயாதம” ஆகும். சகல உயிரினங்களுக்கும் அருளுவது "குஞ்சிதபாதம்” ஆகிய தூக்கிய திருவடியேயாம். ஊன்றிய திருவடி மறைத்தலையும் தாக்கிய திருவடி அருளலையும் எடுத்தியம்பிய வண்ணம் உள்ளன. இங்கே ஆடலரசனின் இரு திருப் பாதங்களும் பஞ்ச கிருத்தியங்களில் இரண்டினைச் செய்வதைக் கண்ணுற்றோம். அவை மறைத்தல், அருளல் ஆகிய இரண்டுமாம், மூன்று கண்களும் இச்சா சக்தி, ஞானா சக்தி, கிரியா சக்தி ஆகும். முயலகன் மாயை ஆகும். மாயையை அழித்து அருளும் காட்சி இதுவாகும்.
முரீ நடராஜருக்கு உரிய விரதம் திருவாதிரை விரதமாகும். இதனை மார்கழித் திருவாதிரையில் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு நோற்க வேண்டும்.
"செவ்வழி சின்மயச் சிதம்பரத் தலத்து இவ்வழி இந்த நோன்பியற்று வாரவர் வெவ்வழித் தன்மைய வினையின் நீங்கிமற்று உய்வழி அருங்கதி ஒடுங்குவார்களே” என உபதேச காண்டம் திருவாதிரை நோன்பினை விமர்சித்து அறிவுறுத்துகின்றது. திருவாதிரைக்கான விஷேச நைவேத்தியம் களி, பிட்டு என்பனவாகும்.இலங்கையில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், கொழும்பு,நீ பொன்னம்பலவாணேஸ்வரம் ஆகிய ஆலயங்களிலும் ஏனைய எல்லா ஆலயங்களிலும் பக்திபூர்வமாகத் திருவாதிரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிறப்பு என்னும் பிணியில் இருந்து சகல ஜீவன்களையும் விடுவிக்கும் ஞான மோசஷ்த் திருநாளில் நாம் எல்லோரும் “குஞ்சிதயாத” நாயகரான பூரீ நடராஜ மூர்த்தியையும் அம்பாளையும் வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோமாக!
12

தைப்பூசச் சிறப்பு
சைவ வாழ்வில் சிவதத்துவம் முதன்மையானது. சிவலிங்கத் திருமேனியரான சிவபெருமான் சிவாலயங்களின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். அம்பாள், அம்பாள் சந்நிதியில் உள்ளாள். எல்லா ஆலயங்களிலும் சபை என ஒரு மண்டபம் மஹா மண்டபத்துடன் உள்ளது. அதிலே மூல மூர்த்தியின் எழுந்தருளி மூர்த்தி உள்ளமையை நாம் காணலாம். ஆனால் சிவாலயங்களில் இந்த மண்டபத்திலே சிவசக்தி வடிவாக பூரீ நடராஜரும் பூர் சிவகாம செளந்தரி அம்பாளும் கொலுவீற்று உள்ளமையை நாம் காணலாம். தில்லைத் திருப்பதியில் ஐந்து சபைகள் உள.
பூரீ நடராஜர் புரிவது என்ன? ஆம்! அவர் ஆனந்த நடனம் ஆடுகின்றார். சிறந்த திரு நடனம் மூலம் அவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் புரிகின்றார். இதனால் இவரைப் பஞ்சகிருத்திய நாயகர் எனக் கூறுவர். இவைகளைச் சைவசிந்தாந்த வடிவில் நாம் பார்த்தால் உடுக்கையை ஏந்திய கரம் மாயாமல நீக்கத்தைக் கூறும். அக்கினிக் கை கன்மமல நீக்கம் ஆகும். ஊன்றியதிருவடி ஆணவ மல நீக்கம் எனப்படும். தூக்கிய திருவடியாகிய “குஞ்சிதயாதம்” அருளலை உணர்த்தும். அபயகரம் பேரின்ப நிலையைக் காட்டும். எனவே ஆனந்த நடனம் ஆன்மாக்களின் வழி நடத்தலைக் குறிப்பதாகும். திருமூலர் பார்வையில் திரு நடனச் சிறப்பை நோக்குவோம்.
”வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழுஆடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட நாதங் கொண்டு ஆடினார் ஞான ஆனந்தக் கூத்தே" தை மாதம் ஒரு தலை சிறந்த மாதம் ஆகும். சூரிய பகவான் நற்பார்வையால் நற்கருமங்கள் நன்றே நடந்தேறுகின்றன. தை மாதத்துக்கான நட்சத்திரம் பூசம் ஆகும். வட மொழியில் தை மாதத்திற்கு புஷ்ய மாதம் என்பர். ஆகவே புஷ்ய மாத புஷ்ய நட்சத்திரம் சிறப்படைகின்றது. இது சிவ விரத நாள். இதனால் விசேஷமாக எல்லாச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் உள்ளது. சிவ விரதம் என்பதால் எல்லாச் சைவ ஆலயங்களிலும் விசேஷ அபிஷேகம், பூஜை என்பன உள. Հ.
தை மாத பூச நட்சத்திரத்தன்று பஞ்ச கிருத்திய நாயகன் ஆன பூரீ நடராஜப் பெருமானின் திருநடனம் நிகழ்ந்தது. தை த தை
13

Page 10
என்ற லயத்துக்கேற்ப அவர் திரு நடனம் புரிந்தார். அம்பாள் அருகே இருந்து இரசித்தாள். அப்போது துந்துபி, பேரிகை, மத்தளம். உடுக்கு எல்லாமே ஒலித்தன. வேதம் முழங்கிற்று. கீதம், நாதம், இசை ஒலிகள் எல்லாமே அவரது நடனத்துக்கு இசைத்தன. இதுவே ஆனந்த அற்புத நடனம்!
வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், பிரம்மா, விஷ்ணு, தில்லைமூவாயிரர், அடியார்கள் எல்லோருமே இந்தத் திவ்விய நடனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணிர் மல்கினர். மெய் சிலிர்க்க மெய் மறந்து பூரீ நடராஜ சிந்தனையுடன் இருந்தனர்.
பதஞ்சலி முனிவர் அப்போது பூரீ நடராஜப் பெருமானை வழிபட்டு “எம்பெருமானே, தைப்பூசத் திருநாளாகிய இன்று தாங்கள் பூர் சிவகாமி அம்பாளுடன் எமக்குக் காட்சி கொடுத்தீர்கள். இந்நடனத்தை எல்லோரும் எப்போதும் பார்க்க வேண்டும். அந்த அற்புத நடனத்தை ரசிக்க வேண்டும். இதனால் அவர்கள் ஈடில்லாப் பெருவாழ்வு வாழ வகை செய்து அருளுக” என வேண்டினார். அதனால் தைப்பூச நடன நாயகராக ழரீ நடராசர் எழுந்தருளுகின்றார். தைப் பூசத் திருநாள் பெளர்ணமியுடன் கூடி வருவது மேலானது. அன்று முழு மதிநாள். நிறைந்த நன்னாள். திருஞான சம்பந்தமூர்த்தி நாயானார் தமது பூம்பாவைப் பதிகத்தில் தைப் பூசச் சிறப்பினை இவ்வாறு கூறுகின்றார்.
திருச்சிற்றம்பலம் மைம் பூச மொண்கண மட நல்லார் மா மயிலைக் கைப் பூசு நின்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப் பூசு மொண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப் பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
திருச்சிற்றம்பலம்
தைப் பூச நாள் சிறந்தது. இப்புண்ணிய நாளில் பல
வருகின்றன. தைப்பூசத் திருநாள் தொழும்பு, (நீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தான மணவர்லக் கோல நன்னாள். அன்று சுவாமிக்கு 1008, அம்பாளுக்கு 1008 சங்கு அபிஷேகம் எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேகம், பூஜை, உற்சவம் என்பன நிகழ்ந்து வருகின்றன.தைப்பூசம் முருக பக்தர்களுக்கும் உரியநாள். ஆறுபடை வீட்டு யாத் திரை காலமும் இதுவாகும் . இதனால் விரத அனுட்டானங்களோடு முருகப் பெருமானை வழிபடுதல் மேலானது. ஆனந்த நடன தர்சனத்தால் எல்லோரும் நல்வாழ்வு வாழ்வார்களாக!
14

பிரதோஷ வழிபாடு
சைவ வாழ் வில் விரத அனுஷ்டானங்கள் முதன்மை வாய்ந்தவை. அந்நோக்கில் பிரதோஷ வழிபாடு மிக முதன்மை வாய்ந்ததாக அமைகின்றது. இந்த விரத வழிபாடானது பகல் முழுவதும் உணவு உட்கொள்ளாது விரதம் இருந்து மாலைப் பூஜைக்குப் பின்னரே விரத முடிவு செய்ய வேண்டும் என உள்ளது. சோம வார விரதம், திருக் கார்த்திகை விரதங்களும் இவ்வாறே ஆனவை. ஆகவே நாம் பிரதோஷ வழிபாடு பற்றி இங்கு பார்ப்போம்.
முன்னனொருகால் தேவர்கள் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அவர்கள் அதிலே அமுதம் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் அமுதத்திலே நஞ்சு கலந்தபடியால் அது ஆலகால் விஷம் ஆயிற்று. ஆனமையிற் செய்வது எது எனத் தெரியாது தேவர்கள் அங்கும் இங்கும் ஓடினர். ஈற்றில் கைலயங்கிரியில் சிவ பெருமானிடம் முறையிடச் சென்றனர். அங்கே அதிகார நந்தி கொலு வீற்றிருந்து காவல் புரிந்தார். அவரிடம் சென்று தஞ்சம் புகுந்து முறையிட, சிவபெருமான் அந்த விஷத்தைத் தாமே உண்டு நஞ்சுண்ட கண்டன் ஆனார். தேவர்கள் வியந்து சிவபெருமானைப் போற்றி வழிபட்டனர். இந்த அற்புதக் காட்சியினை நாயன்மார் “நஞ்சு உண்ட கண்டன்” எனப் போற்றித் தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சிவபெருமான் நஞ்சை உண்டு திருநந்தி தேவரின் இரு கொம்புகளுக்கும் இடையில் நின்று திரு நடனம் புரியலானார். ஒரு சனி வாரமும் திரயோதசித் திதியும் மாலை பூஜை வேளையும் கூடிய காலத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆகவே சனிப் பிரதோஷம் முதன்மை வாய்ந்தது. பிரதோஷ விரதம் இருப்போர் சனிப் பிரதோஷ தினத்தில் சங்கற்பித்து விரதத்தை ஆரம்பித்தல் முறையானது.
பிரதோஷ விரதம் அனுடிப்பவர்கள் காலையில் தோய வேண்டும். சைவ அனுட்டானம், சிவபூஜைகளைச் செய்தல் வேண்டும். சிவபூஜை செய்யாதோர் தமது இல்லத்தில் உள்ள சுவாமி படங்களுக்கு வழமை போல பூஜை செய்யலாம். திருமுறைப் பாராயணம், சிவ கவசம், சிவபுராணம், பஞ்சாட்சர ஜபம் என்பவற்றைச் செய்தல் முறையானது. இதன்பின் தத்தமது தொழில்களைச் செய்யலாம். மாலையில் குளித்து தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ என்பனவற்றுடன் கோவிலுக்குச் சென்று சிவ தரிசனஞ் செய்தல் வேண்டும்.
15

Page 11
பிரதோஷ வழிபாட்டில் பல விசேஷங்கள் உள. இவ்வழிபாட்டில் நாம் வீதி வலம் வருதல் இல்லை. அதற்குப் பதிலாக உள்ளதே சோமசூத்திரப் பிரதசஷணம் எனப்படும் பிரதோஷ கால வழிபாட்டு முறையாகும். திரு நந்திக்கு விரிவான பூஜை நிகழ்ந்த பின்பே சிவன் அம்பாளுக்குப் பூஜை நிகழ்கின்றது. பிரதோஷ காலத்தில் மட்டும் வசந்த மண்டபத்தில் சுவாமியும் அம்பாளும் இடபாருடராக இருக்கும் வேளையில் தீபாராதனை, பூஜை என்பன நிகழுகின்றன. மேலும் திருநந்தி உள்ள தம்ப மண்டபத்திலும் நவசந்திகளிலும் சுவாமியும் அம்பாளும் வீதி வலம் வரும்போது தூப தீபம், தீபம், நைவேத்தியம், கற்பூர ஹாரர்த்தி என்பன உள்ளன. திரு நந்திக்குச் சாத்தப்படுவது அறுகம்புல் மாலை, அவருக்கான தீபம், நெய் விளக்கு, நைவேத்தியம், சர்க்கரை, பச்சை அரிசி கலந்த காப்பரிசி ஆகும். ஆகவே அதிவிசேஷ பிரதோஷ வழிபாட்டில் பூஜைகளைத் தரிசிப்போம் வாருங்கள்.
ஆலகால விஷத்துக்கு அஞ்சித் தேவர்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள் அல்லவா? அதனை ஒத்த விதிப் பிரதசஷம், பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டும். முதலில் திரு நந்தி தொடர்ந்து சண்டேஸ்வரர் மீண்டும் ஆலயத்தை வலமாக கோமுகை வரை வந்து வந்த வழியே மீண்டும் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே வந்து திரு நந்தியைத் தரிசித்து சண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கே பிரதோஷ காலத்தில் மட்டும் கோமுகையைக் கடத்தல் ஆகாது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரதோஷ காலத்தில் விரிவான அபிஷேகம் திருநந்தி, சிவன், அம்பாளுக்கு உள்ளன. பிள்ளையார் பூஜையைத் தொடர்ந்து விரிவான பூஜை திருநந்திக்கு நடைபெறும். அதன் பின்பே சிவனுக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜை நிகழ்கின்றது. அதன்பின் இடபாருடரான சிவனுக்கும் அம்பாளுக்கும் அதாவது பிரதோஷ மூர்த்திக்குப் பூஜை நிகழும். அதனைத் தொடர்ந்து வீதி உற்சவம் நடைபெறும். கொழும்பு றி சிவகாம செளந்தரி அம்பிகாசமேத நீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் வெள்ளியிலான இடப வாகனத்தில் பிரதோஷக்காசலி உள்ளமையை இங்கு கூறலாம்.
பிரதோஷ வழிபாட்டு நேரம் மாலை 4.30 முதல் சூரியன் அஸ்தமனம் வேளைவரையும் ஆகும். இது பகல் வேளை முடிந்து இரவு வேளை ஆரம்பிக்கும் காலம் ஆகும். அதாவது சகல உயிர்களும் இக்காலத்தில் தமது இல்லங்களிலே ஒடுங்குகின்றன. மாலை வேளை மனநின்மதியான காலம். இறை வணக்கத்திற்கு உகந்த நல்ல பொழுது
3(5 D.
16

எனவேதான் பிரதோஷம் எனப்படும் மஹோன்னத சிவ விரதம் மாலையில் விரத நாளாக, உற்சவ நாளாக, விசேஷ சிவ தர்சன நாளாக உள்ளது. பிரதோஷ விரதத்தால் நோய் நொடி இல்லாது திருமணப்பேறு, புத்திரப்பேறு, உத்தியோகம், உத்தியோக உயர்வு, குற்றம் நீங்கல், செளபாக்கிய வாழ்வு என்பன எமக்குக் கிட்டுகின்றன. பிரதோஷ வழிபாட்டில் சோமசூத்திர பிரதோஷ கால விதிமுறை, பிள்ளையார், திருநந்தி, சிவன், அம்பாள் பிரதோஷ உற்சவம், சண்டேஸ்வரர் என்பனவற்றைத் தரிசனஞ் செய்து பஞ்சாட்சர ஜபத்துடன் நிறைவு செய்து நல்வாழ்வு வாழ்வோமாக!
米米米米米米米
ஏகாதசி விரதம்
வைஷ்ணவ சமயத்தின் முழு முதற் கடவுள் ரீ விஸ்ணு ஆகும். பூரீ விஷ்ணுவைக் காத்தற் கடவுள் எனச் சைவர்களான நாம் வழிபட்டு வருகின்றோம். சைவம் பரந்து விரிந்த சமயம், சிவபூஜையில் விஷ்ணு பூஜை உள்ளது. சிவாலயங்களில் தேவிமாருடனான பூரீ விஷ்ணுவை வழிபடுகின்றோம். லிங்கோற்பவ முகூர்த்தத்தில் பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஓர் அங்கமாக உள்ளமையை நாம் காணலாம். எனவே, நாம் சிவனையும் வஷனுவையும் வழிபடுகின்றோம். ஆகவே, பூரீ விஷ்ணுவின் ஏகாதசி விரதநாளை நாம் எல்லோரும் முறைப்படி விரதம் இருந்து நோற்று வருகின்றோம்.
ஏகாதசி நாள் பூரீ விஷ்ணுவின் மஹோன்னத விரத நாளாகும். இந்நாள் எமது விரத நாளாக, பெருநாளாக, வழிபாட்டு நாளாக இருந்து வருகின்றது. மாதா மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை நாள் வந்த பதினொராம் நாள் வருவது ஏகாதசி ஆகும். தேவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து வந்த முஹாசுரன் எனும் அரக்கனை மாய்த்துத் தேவர்களின் துயர்களை பூரீ விஷ்ணு களைந்த நாள் இதுவாகும். ஒரு மாதத்துக்கு இரு ஏகாதசிகள் என்ற வகையில் ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் உள. இவற்றுடன் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகிய பூரீ வைகுந்த ஏகாதசியையும் சேர்த்து எல்லாமாக 25 ஏகாதசி நாட்கள் ஒரு வருடத்தில் உள்ளன. இவையே பூரீ மஹாவிஷ்ணுவின் திருநாட்களாகும். இவை புனித நாட்கள், விரத நாட்கள், வழிபாட்டு நாட்களாகும்.
ஏகாதசி விரதம் இருப்போர் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி அன்று முறைப்படி சங்கற்பித்து ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக இலங்கையில் எல்லோருமே பூரீ வைகுண்ட ஏகாதசி அன்று விரத
17

Page 12
அனுட்டாங்களை மேற்கொண்டு வருகின்றனர். வல்லிபுரக் , கோவில். பொன்னாலை, யாழ்ப்பாணம், தெஹிவளை முதலான விஷ்ணு ஆலயங்களிலும் கொட்டாஞ்சேனை மாரி அம்மன் ஆலய சயன பூர் விஷணுவுக்கும் விசேஷ பூஜை அலங்காரங்கள், உற்சவங்கள் என்பன வைகுந்த ஏகாதசியன்று சிறப்பாகச் செய்யப்படுகின்றன. நீ பொனர் னம் பலவாணேஸ் வரம் முதலான சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள விஷ்ணுவுக்கு விசேஷ அபிஷேகம், உற்சவம் என்பன உள்ளன. எனவே, வைகுந்த ஏகாதசி ஒரு தலைசிறந்த விரத நாளாக இருந்து வருகின்றது.
மார்கழி மாத பூரீ வைகுந்த ஏகாதசியன்று ஆரம்பிக்கும் ஏகாதசி விரதத்தை முறைப்படி நோற்க வேண்டும். பகல் உணவு, இரவு உணவு என்பன தவிர்க்கப்பட்டு உபவாசம் இருந்து துவாதசி அன்று காலை துளசித் தீர்த்தம் அருந்தி, பாறணை செய்வதே மேலான விரதம் ஆகும். தற்காலத்தில் பால்,பழம் அருந்தி விரதம் இருப்போரும் உளர். சிலர் நெல் அரிசி இல்லாது கோதுமை அரிசி மாவில் பிட்டு, இடியப்பம் மட்டும் மதிய போசனமாக உட்கொண்டு விரதம் இருந்து வருகின்றனர். இவ்விரதத்தின் போது காலையில் குளித்து அனுட்டானங்களை நிறைவு செய்தபின் பூரீ நாராயணனைப் பூஜிக்கலாம். ஜபஞ் செய்யலாம். திவ்விய பிரபந்தம், ஆழ்வார் திருவாய்மொழி என்பவற்றைப் படிக்கலாம். பாராயணஞ் செய்யலாம். மாலையில் ஆலயம் சென்று பூரீ நாராயணனை வழிபடலாம். அன்று இரவு கண் விழித்து இருந்து பூரீ நாராயணனைத் துதிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று குளித்து அனுட்டானங்களைச் செய்து வீட்டில் சுவாமி படங்களுக்கும் விசேஷமாக பூரீ நாராயணனுக்கும் பூஜை செய்து வழிபட வேண்டும். இவை நிறைவானதும் துளசி தீர்த்தம் அருந்திய பின் பாறனை செய்து ஏகாதசி விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். ஏகாதசி விரதம் இருப்பின் பாவங்கள் போகுமெனக் கூறப்பட்டுள்ளது. நாம் ஏன் பிறந்தோம்? முற்பிறப்பு, இப்பிறப்புப் பாவங் களைக் போக்கவேயாம் . அதற்கு ஏகாதசி விரதம் சொல்லப்பட்டுள்ளது.
ரீ விஷ்ணுவை வழிபடச் சில நியமங்கள் உள. இறைவனை அடைய இரு வழிகள் உள. ஒன்று பக்தி. யாதொரு பலனையும் எதிர்பாராது இறைவனே தஞ்சமென வழிபடும் முறை-பக்தி மயமானது. மற்றையது பிறபக்தி பூரீ நாராயணனுக்குப் பிடிக்காத, விருப்பமில்லாத, எதிரானவைகளை விட்டு விட வேண்டும். அவை ஒரு புறம் இருக்க இறைவா யூரீ நாராயணனே இன்னல், இடரில் இருந்து எம்மைக் காத்து அருள் என வேண்டி வழிபடும் முறையாகும்.
பூர் விஷ்ணுவை அடைய உள்ள மகா மந்திரம் “ஓம் நமோ
18

நாராயணாய என்பதாம். இது மூன்று பதங்களைக் கொண்டது. "நாராயணாய நம" என்பது இரு பதங்களைக் கொண்டது. இவைகளை நாம் எத்தனை தடவைகளுஞ் ஜபஞ் செய்யலாம். பாராயணஞ் செய்யலாம். பிராயணத்தின்போதுகூடச் சொல்லிக் கொண்டே போகலாம். எழுதலாம். பூரீ நாராயணன் வந்து அருள்பாலிப்பார் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே உள்ளது. நாராயண மந்திரத்தை பெரிய திரு மொழி இவ்வாறு விதந்து புகழ்கின்றது.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர்
ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் நீர் விசும்பு அருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும் வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்
ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்ட்ேன்
நாராயணர் என்னும் நாமம்"
ஆம்! ஏகாதசி விரதம் இருப்போம். நாராயண மந்திரம் சொல்வோம். எல்லோருக்கும் பூரீ நாராயணன் அருள்கிட்டுவதாக!
米米米米米米米
காரடையர் நோன்பு (பங்குனி மாதப்பிறப்பன்று வரும்)
புராண்ங்கள் மக்கள் வாழ்விற்கு என்றும் உறுதுணை புரிவன. புராணங்கள் சமயம், சமயநெறி, விரதமுறை, சமய கலாசாரம் என்பவற்றைக் கூறிக்கொண்டு இருப்பன. இதனால் அவை என்றும் நன்றே வளர்ந்து வருகின்றன.
கற்புநெறி வாழ்க்கைக்கு கணவன் நீடுழி வாழ ஒரு விரதம் உள்ளது. கற்புநெறி வாழ்விற்கு சாவித்திரியைக் கூறுவர். சாவித்திரியின் கணவன் சத்தியவானிற்கு அவமிருந்து தோஷம் - அதாவது ஆயுட்குறைவு. யமபயம் என்பன இருந்தன. இதனால் தனது கணவனின் யமபயம் நீங்கவும் நீண்ட ஆயுளுக்கும் செளபாக்கிய வாழ்வுக்குமாக சாவித்திரி (கெளரி அம்பாளையும்) பூரீ காமாகூ அம்பாளை நினைந்து இருந்த விரதம் காரடையா நோன்பு எனலாம்.
காரடையா நோன்பு பற்றி இங்கு பார்ப்போம். சாவித்திரி - சத்தியவான் திருமணம் நிறைவுற்றது. தனது கணவனின் ஆயுள் ஒரு
19

Page 13
வருடத்தில் முடிந்து விடும் என்பதனைச் சாவித்திரி நன்கு அறிவாள். ஆதலின் தான் சுமங்கலியாக வாழ வேண்டும். அவ்வாறாயின் கண்வன் திடகாத்திரமாக நோய் நொடி அற்று நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். ஆகவே, அம்பாளை நோக்கி தேவி! எனது மாங்கல்யத்தை தந்து சுமங்கலியாக என்னை வாழவிடு எனக்கு ஆசி நல்குக எனச் சங்கல்பித்து காரடையா நோன்பு இருக்கலானாள்.
திருமணமாகி ஒரு வருடம் முடியுந் தினத்தன்று கணவனோடு காட்டுக்குச் சென்ற சாவித்திரி சொற்ப நேரத்தில் நோயுற்ற கணவன் அவள் மடியிலே படுத்திருக்க யமன் உயிரைப் பறிக்கலானான். அப்போது தனது நோன்பு விரத பலத்தால் கணவனின் உயிரைக் காப்பாற்றிச் சுமங்கலியாக வாழ்ந்தார். அது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர் இழந்திருந்த அவர்களது கண்ணையும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
சாவித்திரி . சத்தியவான் கதை சுமங்கலியின் கற்புநெறி வாழ்வினை எடுத்தியம்புவதாகும். ஒரு பெண் திருமணம் ஆனதும் கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுதல், மாமன் மாமியரின் உபதேசப்படி நடத்தல், புகுந்த வீட்டின் பெருமையைக் காப்பாற்றுதல் மிக முக்கியமானவை எனச் சாவித்திரியின் கதை எடுத்துக் கூறுகின்றது. அரச போக வாழ்விருந்தும் காட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பாங்கினைக் காண முடிகின்றது. இவை சமய வாழ்வு, விரத அனுட்டானங்களால் வந்த பேறுகள் ஆகும். இதனால் பண்டுதொட்டுப் பெண்கள் காரடையா நோன்பினை நோற்று வருகின்றனர்.
காரடையா நோன்பு விரதம் இருப்போர் மாசிமாதம் முடிய உள்ள 2 மணி நேரத்தின் முன் தலையிற் தோய வேண்டும். பின் புத்தாடை அல்லது தோய்த்து உலர்ந்த ஆடையை அணிந்த பின் காராமணிப் பயறு, சிவப்புப் பச்சை அரிசிமா என்பவற்றைக் கொண்டு அடை செய்ய வேண்டும். உப்பு கலந்த அடை குறைவாகச் செய்யலாம். சர்க்கரை கலந்த அடை அதிகமாகச் செய்யலாம். அடைகளில் சில நீள்சதுரமாகவும் மற்றயவை வட்ட வடிவமாகவும் இருக்க வேண்டும். இதே வேளையில் நோன்புச்சரட்டையும் அளவுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும்.
அடுத்ததாக மெழுகி கோலமிட்டு தலைவாழை இலையை ஒவ்வொன்றாக வைத்து முறையே நெல், அரிசி, பயறு, உழுந்து, எள்ளு என்பனவற்றை வைத்து அதன்மேல் பூரீ காமாசவி அம்பாள் கும்பத்தை வைத்து பூஜைகளை முறைப்படி செய்தல் வழமையாகும். ஒவ்வொரு பெண்ணும் கோலமிட்டு தலைவாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் சதுர, வட்ட அடைகள், நோன்புச்
20

சரடு என்பன வைத்து பூஜைகள் செய்து கற்பூர ஆராத்தி காண்பித்து வணங்க வேண்டும். அடுத்ததாக குடும்பத்தில் உள்ள சுமங்கலிப் பெண்மணி ஒவ்வொரு பெண்ணுக்கும் நோன்புச் சரட்டை எடுத்து கொடுத்துப் பிரார்த்தனைகள் நடைபெறும். அப்போது அவர்கள் பூரீ காமாகூ அம்பாளை மனதிலே தியானித்து வணங்கித் தாலிச் சரட்டைக் கட்டிக் கொள்ளுவார்கள். அவர்களின் வேண்டுதல் இதுவாகும்.
"உருகாத வெண்ணையும் ஓர் அடையும் நூல் நூற்று என் கணவன் என்னை ஒருபோதும் பிரியாது இருக்க வேண்டும்” என்பதே அந்த உத்தம விண்ணப்பம் ஆகும்.
இங்கே நாம் இல்லற மாண்பினை நோக்கினோம். Wx கற்புநெறி வாழ்வை நோக்கினோம். கற்புநெறி வாழ்க்கை வாழ்வதற்கான விரத முறையினைக் கண்டோம். கற்பிற்கு இலக்கணமாக இருந்த சாவித்திரி நோற்ற அரிய, பெரிய காரடையா நோன்பினை அறிந்தோம்.
கற்புநெறி காக்க வந்த காரடையா நோன்பினை சுமங்கலிகள் விஷேசமாக இருத்தல் நல்லது. கன்னிப் பெண்கள் கூட நல்ல கணவனைப் பெறக் காரடையா நோன்பு இருந்து பூரீ காமாசவி அம்பாளை வழிபடுதல் நல்லது.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பு என்னுந் திண்ணம் உண்டாகப் பெறின்” என்ற வள்ளுவர் வாக்கு இங்கே சிந்தனைக்கு உரியது. இதற்காகவே, பெண்ணின் மங்கள வாழ்விற்கே காரடையா நோன்பு உள்ளது.
பூரீ காமாகூ அம்பாள் அருள் எல்லோருக்கும் கிட்டுவதாக!
米米米米米米米
நீ ராம நவமி
பூரீ ராமர் ஓர் அவதார புருஷர். அவர் அரச வம்சத்தில் பிறந்தார். தமது இளம் பராயத்திலேயே தேவ கார்யமான யாக சாலையைக் காக்கச் சென்றார். அதன் பின்னர் அவரது திருமணம் கோலாகலமாக நடந்தது. என்றாலும் திருமண வாழ்வை அரண்மனையில் இருந்து அனுபவிக்க முடியவில்லை. அதேபோல முடிசூடி மன்னனாக வர வந்த வாய்ப்பும் தானாகவே அகன்று போயிற்று. இதனையே கர்ம வினை எனக் கூறுவர். சாபக் கேடு எனவும் கூறுவர். நாடாள இருந்த அரசிளங்குமாரனுக்கும் கிடைத்தது 14 ஆண்டு வனவாசம். "தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்பர். அதற்கமைய
21 .

Page 14
அவர் வனவாசஞ் சென்றார். 14 ஆண்டுகள் நிறைவெய்திய பின்னர் பூரீ ராமச்சந்திர மூர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.
ராம பிரான் தமது வாழ்வில் என்றும் சத்தியத்தைக் கடைபிடித்தார். தர்ம வாழ்வு வாழ்ந்தார். வனவாசத்தில் தர்ம வழியிலேயே சென்றார். தெய்வ வழிபாடுகளை உரிய முறையில் உரிய வேளைகளிற் செய்தார். தந்தை இறந்த செய்தி கேட்ட நாள்முதல் அவர் பிதுர்க் கடனையும் செவ்வனே செய்தார். பூரீ ராமன் மூத்தபிள்ளை அல்லவா? ஆகவே தந்தைக்கான பிதுர்க் கடனை நிறைவேற்ற அவரே பூரண உரித்தானவர். இந்த எல்லா வழிபாடுகளும் அவருக்கு என்றுமே உறுதுணையாக இருந்தன. 14 ஆண்டு வனவாசத்தின் பின்னர் சத்தியங்காத்த உத்தமர் பூரீ இராமர் நாடாளும் மன்னராகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டார். தர்மவினை அப்போதுதான் அவரை விட்டு நீங்கிற்று. எனவே ராமபிரானின் வாழ்வு எமக்கு எதனைக் காட்டுகின்றது? மானிடனாகப் பிறப்பில் சத்தியம், தர்மம், தெய்வ வழிபாடு, பிதுர் வழிபாடு என்பன எல்லோருக்கும் உரித்தானவை. இவைகளை உரிய வேளையில் உரிய முறையில் முறையில் செய்வது நற்பலனை நல்க வல்லது என்பதனை மனதிற் கொள்ள வேண்டும். ராமநாமம் அன்றும் இன்றும் நிலைத்து நிற்கிறது. எம்முடன் வாழ்ந்து வருகின்றது. எம்மை ஆற்றுப்படுத்திய வண்ணம் உள்ளது. எனவே ராம நாமத்துக்கு இவ்வளவு வலிமை ஏன்? ஆம்! இந்த மஹோன்னத மந்திரம் விஷ்ணு சிவ அம்சங்களைக் கொண்டது. ஒம் நமோ நாராயணாய என்ற நாராயண மந்திரத்தின் “ரா’ எழுத்தையும் ஓம் நமசிவாய என்ற சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தின் “ம” எழுத்தையும் கொண்டதே. ”ராம” என்ற மஹா மந்திரம் ஆகும். இது மங்களமான சொல். இதனைத் தாரக மந்திரம் எனவும் கூறுவர். கலியுகத்தில் காத்தருளும் நாமம் ராம நாமம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே ராம நாமம், ராம பக்தி மிக விசேஷமானது. பூரீ ராமரின் வாழ்வில் அவரைச் சகல உயிரினங்களும் கண்ணினை இமைகாப்பது போல காத்த பெரும் பாங்கினை நாம் அறிவோம். தம்பி லசஷ்மணன் சதாகாலமும் பணிவிடை செய்கிறான். ராமரின் மீது பக்தி, அன்பு கொண்டு பரதன் மகிழ்வுறுகின்றான். பூரீ அனுமான் சமுத்திரத்தை ஒரே தாவலில் கடந்து சீதையிடஞ் செல்கின்றான். சீதை கணையாழி மூலம் ராமனை அறிகின்றாள் இவை ராம நாமத்தின் ஈர்ப்புச் சத்தியால், பாசத்தால் நிகழ்ந்தவை.
ஜனக மஹாராஜனின் அரண்மனையில் சிவதனுசான வில்லை முறித்தார் இராமர். அதேபோல கல்லாகக் கிடந்த அகலிகை, ராமரின் பாதத் தூளிகள் பட சுய உருவம் கொண்டு ராமரை விழுந்து வணங்கி,
22

சாப விமோசனம் பெறுகின்றாள். ஆரம்பத்தில் கை வண்ணம் கண்டோம். இதனைக் கை வண்ணம் அங்கு கண்டேன்.கால் வண்ணம் இங்கு கண்டேன்” எனத் தத்ரூபமாக வர்ணித்துள்ளனர். இவை ராம அவதாரச் சிறப்புக்கள்.
பூரீ ராம பிரான் அவதரித்த பங்குனி மாத மஹா நவமியில் ஆகும். நட்சத்திரம் புனர்பூசம். இதனையே பூரீ ராம நவமி எனக் கொண்டாடுகின்றார்கள். இதனால் பூரீ ராம நவமிக்கு முதல் நாள் மஹா அவஷ்டமி என்ற சிறப்புப் பெயரைப் பெறுகின்றது.
பூரீ ராம பக்தர்களின் விரதநாள் பூரீராம நவமி நன்நாளாகும். அன்று காலை தலையில் தோய்ந்து புதிய ஆடை அல்லது தோய்த்து உலர்ந்த ஆடை அணிவர். ஆசாரசீலர்களாக இருந்து பூரீ ராம தியானத்தில் இருப்பது வழக்கம் , யூரீராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு துளசி மாலை சாத்தி துளசியால் அர்ச்சித்து முதலில் துளசித் தீர்த்தம் அருந்துவர். பூரீராமர் கோவில் அல்லது விஷ்ணு கோவில், பூர் ஆஞ்சனேயர் கோவில்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்வர். பாணக்கம், நீர்மோர், இனிப்புப் பக்ஷணம், பழவகைகளை நைவேதித்து எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுப்பதும் வழமையில் உள்ளது.
விசேஷமாக பூரீராம ஐயம் எழுதுவது அதனை மனதிற் கொண்டு ஜபஞ் செய்வது எல்லோருமே சேர்ந்து பாராயணஞ் செய்வதும் உள்ள வழமை. பூரீ தியாகராஜசுவாமிகளே "ராமா, ராமா” எனக் கசிந்து உருகிய பாக்கள் பாடியுள்ளார்.
ராம நாமத்தால் பாவம் அகலும், வறுமை, பிணி நீங்கும், குடும்பம் நலம் பெறும். வாழ்வு மிகுந்துவரும்.
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மானமும் இன்றித் தீருமே இம்மையே “ராம” என்ற இரண்டு எழுத்தினாய்.” இது கம்பர் வாக்கு. “ரகுபதி நிஜமந்திரம் ராமராமேதி மந்திரம்"
23

Page 15
ஆவணி ஞாயிறு
சைவ சமயத்திலே வார விரத நாளாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகள் அமைந்துள்ளன. சூரிய பகவான் ஆவணி மாதத்தில் சிங்கராசியிலே சஞ்சாரம் செய்கின்றார். ஆகவே ஆவணி மாதத்துக்குச் சிங்க மாதம் எனவும் பெயருண்டு. இதனால் ஆவணி ஞாயிறு விரத அனுஷ்டானத்துக்கு உரிய நாளாகின்றது.
நவ நாயகர்களின் தலைமைப்பீடத்தில் இருந்து அவர்களையும் உலகையும் வழி நடத்துபவர் சூரிய பகவானேயாவர். சூரியன் உலகிற்கு ஒளியை நல்கிப் கொடுக்கின்றார். வேண்டிய வேளைகளில் மழையைக் கொடுப்பவரும் அவரேயாம். இதனால் சகல ஜீவராசிகளும் உலகிலே சீவிக்க முடிகின்றது.
நான்கு வேதங்களும் 18 புராணங்களும் சூரிய பகவானின் அருமை பெருமைகளை விதந்துரைக்கின்றன. காலையில் ரிக் வேதத்தில் உதயமாகும். சூரியன் பகலில் பஜுர் வேதத்தில் பிரகாசித்து மாலையில் சாம வேதத்தில் அஸ்தமனமாவார் என அறிஞர் கூறுவர். இந்த மூன்று வேளைகளும் சந்தியா காலங்கள் ஆகும். ஆகவே இக்காலத்தில் சந்தியாவந்தனம், ஜபம் என்பன செய்யப்படவேண்டும். எனச் சைவசமயத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்தியாகால வழிபாட்டுமுறையானது சூரிய பகவானை மனத்தால் தியானித்துக் கணிணால் நேரிலே பார்த்துச் செய்யப்படுவதாகும். பிரத்தியட்ச தெய்வமான சூரியனைப் பார்த்தே அர்க்கியங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவை சூரியனைச் சென்று அடைவதால் அவர் திருப்தி அடைகின்றார் என்பது ஐதீகம். சூரிய வழிபாட்டால் மும்மூர்த்திகளை வழிபட்ட பலன் உண்டு எனவும் கூறுவர். ஒரு மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமையில் வந்து அன்று சப்தமித் திதியும் சூடி நின்றால் அன்றைய தினம் விரத வழிபாட்டுக்குச் சிறந்தது. அன்றைய தினத்தில் தான, தர்மஞ் செய்தல் மிக விசேஷமானது. விசேஷமாக நோய் நீங்கி வாழப் பிரார்த்திப்பது இந்நாளில் நல்லது. கண், தலை, மூளை சம்பந்தமான நோயாளர்களுக்கு இந்த நாள் நற்பயனைக் கொடுக்கவல்லது.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் தலையில் தோய்ந்து உலர்ந்த வஸ்திரம் அணிய வேண்டும். சைவ சமயங் கூறும் சைவ அனுட்டானங்களை மேற்கொள்ள வேண்டும். இவ் வேளையில் விஷேச அர்க் கியங்கள் சூரியனுக் குச் செய்யப்படுகின்றன. பின்னர் இரு கரங்களிலும் நீரும் சிவப்புப்பூவும்
24

எடுத்துக் கொண்டு சூரியனைப் பார்த்தவாறு தன்னைத் தானே வலமாகச் சுற்றி வந்து சூரியனை நமஸ்கரித்துப் பூவையும் தீர்த்தத்தையும் சூரியனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இப்படி 11, 16, 36, 108 முறைகள் செய்வது நல்லது. சிவப்பு, மஞ்சள் மலர்களால் அர்ச்சிக்கலாம். மாலை சாத்தலாம். கோவில்களில் சிவப்பு, மஞ்சள் நிறப் பட்டுக்களைச் சாத்தி வழிபடலாம்.
சர்க்கரைப் பொங்கல் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானதாகும். இதனால் சர்க்கரைப் பொங்கலை ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நைவேதனஞ் செய்வது சிறப்பானது. தை மாதப் பிறப்பு, சித்திரை மாதப் பிறப்பு நாட்களில் செய்யப்படுவது போன்ற சர்க்கரைப் பொங்கலும் வழிபாடும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இருத்தல் மிக அவசியம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு பூரீ சிவகாம் செளந்தரி அம்பிகா சமேத நீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் சூரிய பகவானுக்கு விசேஷ அபிஷேகம், பூஜை என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆவணி ஞாயிறு அன்று ஆரம்பிக்கும் ஞாயிறு விரதம் வருடம் முழுவதும் மேற்கொள்ளப்படுவது சாலச் சிறந்தது. நல்ல ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் நமக்கு நல்கும் சூரிய பகவானைத் துதிப்போமாக! நல்வாழ்வு வாழ்வோம்!
米米米米米米米
சனீஸ்வர வழிபாடு
சனிஸ்வரன் என்றதும் எல்லோரது மனத்திலும் ஒரு பயம் அல்லது பீதி தோன்றுவது இயல்பு. இதற்கான காரணம் சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களேயாகும். தசரதச் சக்கரவர்த்தி, நளன் ஆகிய மன்னர் பிரான்களையே ஆட்டிப்படைத்த சனி எம்மை விடவா செய்யும் என்ற ஐயம் எல்லோருக்குமே உண்டு. சிவத் தியானகரனான மார்கண்டேயரை யமன் அணுகியபோது சிவபெருமான் யமனையே அடித்து விரட்டியமையை நாம் இங்கு சிந்தித்தல் அவசியம். சிவத்தியானம் எல்லாவற்றிக்கும் மேலானது.
சனிக்கிரகம், சிவபூஜை செய்து சிவபெருமானின் அருள் பெற்ற அதாவது ஈஸ்வரப் பதவி பெற்ற ஒரேயொரு கிரகம் என்பதை நாம் மனதிற் கொள்ளல் அவசியம். சிவ பூஜைச் சிறப்பால் சனியானவர் சனிஸ்வரன் எனப் போற்றி வழிபடப்படுகின்றார்.
“சனியைப் போலக்கொடுப்பவரும் இல்லை. சனியைப் போலக் கெடுப்பவரும் இல்லை” எனபது முதுமொழி. ஆம்! 7 1/2 சனி காலத்தில் ஒருவருக்குத் திருமணம் நிகழ்கின்றது. புதுமனை கிட்டுகின்றது.
25

Page 16
உத்தியோகம், உத்தியோக உயர்வு என்பன கிடைக்கின்றன. வியாபாரத்தில் சுபீட்சம் ஏற்படுகின்றது. ஆகவே, சனீஸ்வரன் நல்லவரே. அவர் சிவ பக்தன் சித்தியானகாரர் அல்லவா? அவரை நாம் முறைப்படி ஆராதிக்க வேண்டும். வணங்க வேண்டும். அந்த வணக்க முறைகளை ஈண்டு நோக்குவோம்.
ஒருவருக்கு 7 1/2 சனி, அட்டமத்துச் சனி, ஜென்மச் சனி, ராகு திசையுடன் கூடிய சனி வருங்காலங்களில் சனிக் கிரக வழிபாடு செய்ய வேண்டும் எனத் ஜோதிஷர் ஆலோசனை கூறுவர். இக்காலங்களில் சனிக் கிரகத்தின் தாக்கம் உண்டு என்பது உண்மையே. இது நாம் அனுபவவாயிலாக அறிந்த விஷயம்.
எனவே சனி நீராடல் என்ற வாக்கியத்திற்கு அமைய நல்லெண்ணையைத் தலையிலும் உடம்பிலும் சனிக்கிழமை காலையில் பூச வேண்டும். பின்னர் எலுமிச்சம் பழம், அரப்பு அல்லது சீயாக்காய் என்பவற்றைத் தலையிலும் உடம்பிலும் பிரட்டி நன்கு தோய வேண்டும். அன்று சனி விரதம் இருத்தல் முறையானது.
இந்தியாவில் உள்ள ஒரேயொரு சனிஸ்வரன் கோவிலான திருநள்ளாற்றில் சனீஸ்வரன் வழிபாட்டிற்கு முன்னதாக நளதீர்த்தத்தில் இப்படியாகத் தலையிலே எண்ணெய் வைத்து முழுகிய பின் சனீஸ்வர வழிபாடு செய்யும் வழக்கம் இன்றும் அங்கே உள்ளது. எண்ணெய் வைத்து முழுகிய பின்னர் சைவ அனுட்டானங்கள், வீட்டில் சிவ பூஜை அறையில் உள்ள பூஜைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவைகள் நிறைவெய்தியதும் ஆலயத்திற்குச் சென்று முதலில் எள் எண்ணெய்த் தீபத்தை ஏற்றி, உடனே உரிய இடத்தில் பிரார்த்தனையுடன் வைக்க வேண்டும். எள் எண்ணெய்த் தீபத்துடன் வீதிவலம் வருதல், நெஞ்சுக்குக் கிட்டவோ, தலைக்கு மேலோ கொண்டு செல்லக்கூடாது. இவை அபசகுனங்கள். தீபத்தை ஏற்றியவுடன் ஏனைய தீபங்களைப்போல இதனையும் உரிய இடத்தில் வைத்து வழிபடுதலே மேலானது. அதன் பின்பு சனிஸ்வரன் சந்நிதியை அடைந்து அங்கு நட்சத்திரம், பெயர், சொல்லி நீலப்பூ, வன்னி இலை, வில்வம் இலைகளால் அர்ச்சனை செய்யலாம். நீலம் அல்லது கறுப்பு நிறத்துணியைச் சார்த்தி மாலை அணிவித்து வழிபடலாம். எள் அல்லது நல்லெண்ணையைத் தானமாகக் கொடுக்கலாம். இவை சனிப் பிரீதிக்காகச் செய்யப்படுபவை ஆகும். சனிஸ்வரன் சந்நிதியில் நைவேதிக்கப்பட்ட பழம், தேங்காய் முதலானவை பிரசாதமாகக் கொடுக்கப்படுவதில்லை. சனீஸ்வரன், நவக்கிரகம் சந்நிதிகளில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் திருநீற்றைத் தரிக்க வேண்டும். பூவை இரு கண்களிலும் ஒற்றிய பின் ஆணர்கள் காதிலும் பெணிகள்
26

தலைமுடியிலும் வைக்க வேண்டும். இவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இவை பிரசாதங்கள் ஆகும். இதன் பின்பு பிள்ளையார், சிவன் , அம்மன் , விஷ்ணு கடவுளரையும் ஏனைய இவர் ட தெய்வங்களையும் வழிபடலாம். சனியோடு ராகு, கேது சம்பந்தப்பட்ட துர்க்கை, பிள்ளையார், அம்பாள், காளி முதலான கடவுளரை வழிபடலாம். கோவில் வழிபாடு முடிந்தபின் கோளறு பதிகம், திருவாய் மொழி என்பவற்றைப் படித்தல் நற்பயனைக் கொடுக்க வல்லது.
சனி விரதத்தில் காகத்துக்குச் சோறுவைத்த பின்பே மதிய போசனம் உட்கொள்வது என்பது விதி. சனியின் வாகனம் காகம் அல்லவா? ஆகவே வீட்டில் சமைத்த சைவ உணவின் மேல் கறுப்பு எள்ளு அல்லது நல்லெண்ணையைச் சாதத்தின் மேலே சிறிது பரப்பிக் காகத்தை அழைத்து, காகம் உண்பதைப் பார்த்த பின்பே நாம் சாப்பிட வேண்டும்.
வீட்டிலே நவக்கிரக சாந்தி செய்து முடியும் வேளையில் சிவாசார்யர் கொடுக்கும் பூவுடன் கும்பங்களை மும்முறை வலம் வந்து அவற்றைக் கும்பங்களிலேபோட்டு விழுந்து வணங்குதல் நமது வழிபாட்டு முறை. ஆனால் கோவில்களில் விக்கிரகங்களுக்கு நாம் பூவைப் போடலாகாது. விக்கிரகங்கள் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மூர்த்திகள் என்பதனை நாம் கவனத்தில் இருத்துதல் அவசியம்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டதும், பின் தேவர்களுக்கு திருநந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையில் நின்று திரு நடனம் புரிந்ததும் சனி வார நாளிலேதான். இதனால் சனிப் பிரதோஷம் மஹா பிரதோஷமாகச் சிவபக்தர்களால் போற்றப்படுகின்றது. சனீஸ்வரனும் . தலை சிறந்த சிவபக்தனே. கொழும்பு நீ சிவகாம செளந்தரி அம்பிகையுடனான நீ பொன்னம்பலவாணேஸ்வரத்தில் புரட்டாதிச் சனி வார வழிபாடு மிக மேன்மையானது. பல நூற்றுக்கணக்கான பக்தர் சனி வழிபாடு செய்கின்றார்கள். கோளறு பதிகம் படிக்கிறார்கள். திருவாய் மொழியையும் படிக்கின்றார்கள். மாலையில் பூரீ விஷ்ணுவிற்கு விசேஷ அபிஷேகம் உள்ளது.
புரட்டாதி மாதச் சனி, வாரத்தில் சனி விரதத்தைச் சங்கற்பித்து ஆரம்பித்தல் நல்லது. எனவே பக்தி பூர்வமான சனி வார விரதம் இருந்து கிரகப் பிரீதியுடன் மூர்த்திகளின் அருளைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக!
27

Page 17
வியாழக்கிரக வழிபாடு
நாம் இப்பூவுலகில் பிறக்கும்போது எமது பிறந்த நேரத்தை வைத்து எமது ஜாதகத்தைக் கணிப்பர். அந்த ஜாதகக் கணிப்பிற்கும் அதன் பலனுக்கும் அமைய நமது வாழ்வு நடக்கும். அதிலே ஏற்றம், தாழ்வு உண்டு. சுக. துக்கங்கள் இருக்கும். நோய், நொடி. வீண் அலைச்சல் கெட்ட பெயர் என்பன வந்து கொண்டே இருக்கும். சுபீட்ச வாழ்வுகூட வரும், அதுவே ஒருவரின் பூர்வ புண்ணியம் அதனைக் கூறுவது அவரின் ஜாதகம் - கிரக அமைப்பு தெசாபுத்திகள் என்பவை ஆகும்.
எதற்கும் குரு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறுவர். அதாவது அவரின் பார்வை சற்றேனும் இருந்தால் ஏனைய கிரகத் தாக்கங்களினின்றும் தப்பித்துக் கொள்ள முடியும் என்பதே அதுவாகும். குரு நல்ல இடத்தில் இருந்தால் எல்லாமே நன்மையாக அமையும். கெட்ட இடத்தில் இருப்பின் தீயதாக இருக்கும்.
ஜன்மத்து வியாழன், அட்டமத்து வியாழன், 10 இல் வியாழன் இருக்கும் வேளையில் ஜாதகள் பல வித இன்னல்களுக்கு உட்படுவார். துயருறுவார். அதேவேளை இவைகள் விலகினால் அவர் நன்மையைப் பெறுவார்.
எனவே எம்மை ஆட்டிப் படைக்கும் இந்தக் குரு யார்? இவர் இராசி மண்டலத்தில் எல்லாக் கிரகங்களுக்கும் பெரியவர். இவரைப் பொன்னவர் என அழைப்பர். பொன் போன்ற மஞ்சள் நிறத்தவர் என்பதாகும். இவருக்கான இரத்தினக்கல் புஷ்பராகம் கடலை இவரது தானியம் மலர்களில் முல்லை மலர் இவருக்கானது. சமித்து அரசஞ் சமித்து ஆகும், தனு, மீன இலக்கினங்களின் அதிபதி. புனர்பூசம் விசாகம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாயகரும் இவரே. ஒருவரின் மஹா தெசையில் 16 வருடங்களுக்கு இவரின் சஞ்சாரம் இருக்கும். வியாழ பகவானைத் தேவ குரு எனச் சிறப்பாக அழைப்பர். இவர் ஒரு பேர் அறிஞன். கிரக அமைப்பில் வியாழ பகவான் சுபக்கிரக மூர்த்தி ஆவர். வியாழ பகவானை வழிபடுவோர்க்கு அவர் மங்கள வாழ்வு, புத்திரப்பேறு, உத்தியோகம், உத்தியோக உயர்வு, வியாபார உயர்ச்சி, செளபாக்கிய வாழ்வு எல்லாவற்றையுமே கொடுக்கின்றார். வியாழபகவானை வணங்க வேண்டும். விரதம் இருக்க வேண்டும். மஞ்சள் பட்டு, மஞ்சள் மலர்மாலையைச் சாத்தலாம். நட்சத்திரம், பெயர் என்பன சொல்லி அர்ச்சிப்பது மேலானது. வியாழனுக்கு அதிபதி யார்? அவரே பூரீ தசஷ்ணாமூர்த்தி ஆவர். வியாழக் கிரகத் தாக்கத்தைப்
28

போக்கி நல்வாழ்வு வரந்தரவல்லவர் பூர் தக்ஷணாமூர்த்தி ஆவர். சிவாலயங்களில் கோஷடத்தில் கல் ஆலமரத்தின் கீழ் யோக வடிவில் உள்ள மூர்த்தியே பூர் தசஷ்ணாமூர்த்தி, பூரீ தசஷ்ணாமூர்த்தியின் வடிவங்கள் நான்கு, யோக தசஷ்ணாமூர்த்தி, ஞான தசஷ்ணாமூர்த்தி, வீணதர தசஷ்ணாமூர்த்தி, வியாக்கியான தசஷ்ணாமூர்த்தி ஆகியவை இவரின் முகூர்த்தங்கள். கோவில்களில் யோக மூர்த்தியையே நாம் தர் சிக்கின்றோம். ஏனைய மூர்த்திகரங்கள் இந்தியாவிலுள்ள ஆலயங்களில் உண்டு. எனினும், கொழும்பு நீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தான கிழக்கு வாயிற் கோபுரத்தில் தென்புறத்தே நாம் இந்த நான்கு தகஷ்ணாமூர்த்திகளையும் காணமுடியும்.
பூரீ தக்ஷ னா மூர்த்தியின் வலதுகை முத் திரையைக் கொண்டுள்ளது. உயிர்கள் மும்மல ஆட்சியினின்றும் விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையவேண்டும் என்ற தத்துவமே அதுவாகும். சனகர், சனந்தனர், சநாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு ரிஷிகளும் பூர் தசஷ்ணா மூர்த்தியின் உபதேசத்தைக் கேட்ட வண்ணம் உள்ளனர். அவரது வலதுகால் முயலகனை மிதிக்கின்றது. தீய சக்திகள் யாவும் அழிக்கப்பட வேண்டும் என்பதே அதன் தத்துவ விளக்கம் ஆகும்.
வியாழபகவானின் தாக்கம் உள்ளோர் விசேஷமாக ரீ தசஷ்ணாமூர்த்தியை வழிபட வேண்டும். வியாழக்கிழமை விரதம் இருப்பது மேலானது. மஞ்சள், வெள்ளைப் பூமாலைகளைச் சாத்தலாம். வெள்ளைப்பட்டு, மஞ்சள் பட்டுச் சாத்தி வழிபடலாம். கடலையைத் தானமாகக் கொடுக்கலாம். இவற்றோடு நட்சத்திரம், பெயர் சொல்லி அர்ச்சனை வழிபாடுகளைச் செய்வது மிக்க நல்லபயனைக் கொடுக்கும்.
இவைகளோடு “ஓம் நமசிவாய' என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தை அவருக்கு முன்னே இருந்து 36, 108 தடவைகள் ஜபஞ் செய்தல் உத்தமமானது. வியாழபகவானின் தாக்கம் உள்ள காலத்தில் இந்த வழிபாடுகள் நன்மை பயக்கும்.
米米米米米米米 கோமாதா வழிபாடு (பசு)
வீட்டு மிருகங்களுள் பசு முதலிடத்தைப் பெறுகின்றது. பசு பால் தரும். பசு சாதுவானது. பசு எங்கள் வீட்டு மஹாலஷ்மி என்ற சொற்கள் எமது காதுகளில் எப்பொழுதும் ரீங்காரஞ் செய்கின்றன. கோமாதா எங்கள் குலமாதா என்பதும் பட்டி பெருகினால் பால் பெருகும். வாழ்வு மிகுந்து வரும் என்ற வார்த்தைகள் உண்மையானவையாகும்.
29

Page 18
ஆம்! பசு ஒரு தெய்வத்தன்மையுடனான தெய்வத் தன்மை கொண்ட எமது சொத்து ஆகும் எனக் கூறுவது சாலப் பொருந்தும், எல்லாத் தேவர்களும் பசுவில் வாசஞ் செய்கின்றார்கள் என்பது வேதவாக்கு பசுவின் கொம்புக்கு அடியில் பிரமாவும், விஷ்ணுவும் வாசஞ் செய்கின்றனர். சரீரத்தில் சிவபெருமானும் நடுநெற்றியில் சக்தி அம்பாளும் வீற்றிருக்கின்றனர். இவ்வாறு பசுவின் எல்லா அங்கங்களிலுமே எல்லாத் தேவர்களும், ரிஷிகளும், நிதிகளும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே பசு நம்முன் உயிர்வாழும் நடமாடும் நமக்குத் தொண்டுகள் புரியும் ஒரு தெய்வம். இதனால் பசுவை நித்தமும் வணங்கு எனச் சைவ சமயம் சைவ சமயிகளுக்குக் கூறுகின்றது.
அம்பா எனப் பசு அழைக்கும். சமஸ்கிருதத்தில் அம்பா எனின் தமிழில் அம்மா எனப் பொருள்படும். ஆகவே பசு எப்பொழுதும் உலக மாதாவையும் வீட்டுக் கிருகலசஷ்மியையும் அழைத்த வண்ணம் உள்ளது. ஆகவே இப்படியான மங்களகரமான சொல் நாம் வாழும் பூமியில் ஒலிப்பது மங்களகரமானதல்லவா?
சைவ சமயக் கிரியைகளில் கோ வாசம் என்பது ஒன்று. புதிதாக ஓர் ஆலயம் அல்லது வீடு கட்டுவதாயின் அத்திவாரம் இடமுன் அவ்விடத்தில் பசுவைக் கட்டி புல் கொடுத்து ஆதரிப்பது வழக்கம். அதே போல கட்டிடம் நிறைவெய்தியதும் கட்டிடத்தின் நடுப்பாகத்தில் பசுவை வதியச் செய்யும் முறை உள்ளது. இவை கோவாசம் அல்லது பசு ஜிவித்தல் எனப்படும். இதனால் சகல தோஷங்களும் அகன்று விடுகின்றது. லசஷ்மி கடாட்சஷம் அங்கு கிட்டுகின்றது. சகல தேவர்களுமே அவ்விடத்தில் வந்து ஆசீர்வதிப்பது போல் அமைகின்றது. கிரியைகளில் கோபூஜை கூறப்பட்டுள்ளது. சிவபூசையில் கோதர்சனம், கோபூஜை என்பன உள்ளன. வீடுகளில் தினமும் கோ பூஜை செய்வோர் உளர். ஆலயங்களில் கோ பூஜை சில இடங்களில் உள்ளது. விசேஷமாகத் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், வருடப்பிறப்பு நாட்களில் கோ பூஜையை விரிவாகச் செய்வாரும் உளர். பட்டிப் பொங்கல் எல்லா இடங்களிலுமே இன்றும் விமரிசையாகச் செய்யப்படுவது பசுவின் பெருமையினால் ஆகும். பட்டி பெருக வேண்டும் அல்லவா?
கும்பாபிஷேகம் இனிதே நிறைவாகி தசதர்சனம் எனப்படும் கிரியையில் கோ தர்சனம் முதன்மையானதாகும். கும்பாபிஷேகம் கண்ட மூர்த்தியே பசு தர்சனம் செய்கின்றார். அதேபோல அடியார்களையும் பசுவை வணங்குங்கள் எனக் கூறி உள்ளார்கள்.
திருமணமாகி இல்லம் வரும் மணப்பெண் பசுவுக்குப் புல் கொடுத்து
30

வணங்கி இல்லம் புகும்முறை ஒரு சில இடங்களில் காணப்படுகின்றது. இவை பசு வழிபாட்டின் மேன்மையைக் காட்டுகின்றது.
இதுகாறும் தெய்வத் தன்மை கொண்ட பசுவை நோக்கினோம். இனி பசுவினால் நமக்குக் கிடைக்கும் பெறுபேறுகளை ஆராய்வோம். பசு பால் தரும். ஆம்! பால் கறந்த உடன் அந்தச் சூட்டோடு முதலாம் காலப் பூஜையில் சுவாமிக்கு அபிஷேகம் ஆகின்றது. நைவேதனம் ஆகின்றது. அதிகாலைப் பூசையின் போதும் அர்த்தசாமப் பூஜையின்போதும் பால் நைவேத்தியம் உள்ளது. பாலில் உறையிட்டால் தயிரும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய்யும், வெண்ணெய்யை நெருப்பில் உருக்கினால் நெய்யும் கிடைக்கின்றது. பஞ்சகவ்வியம் யாது? பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்பனவேயாம். வருஷப் பிறப்பு மருத்து நீரில் பால், கோமயம், கோசலம் சேர்க்கப்படுகின்றது. எல்லா அபிஷேகங்களுக்கும் பால், தயிர், நெய் கூறப்பட்டுள்ளது. நைவேதனப் பொருளாகப் பால்சாதம், பால் பாயாசம் அமைகின்றன. t
சைவசமயம் கூறும் "எரி ஒம்புதல்" எனப்படும் அக்கினி கார்யத்துக்கு நெய் மிக அவசியம். பெரும் யாகத்தில் நெய் சொரியப்படுகின்றது. ஆகவே அபிஷேகம் ஹோமம் இவற்றிற்கு நெய் மிக அவசியம். ரீ நடராஜரை வியந்து பாடும்போது ஆடினாய் நறு நெய்யோடு பால், தயிர் எனப பசுவின் புலழைப் போற்றியுள்ளார்கள். மந்திரமாவது நீறு, பூசுவதும் வெண்ணிறு எனத் திருப்பதிகங்கள் உள. பசுவின் சாண விறாட்டியைச் சுட்டு அதன் வெண்சாம்பலை எடுத்தே விபூதி செய்யப்படுகின்றது.
பசு வாழும் இடத்துத் தூசி - பசு நடமாடும் இடத்துப் புழுதி பட்டாலே போதும், ஸ்நானஞ் செய்ய வேண்டியதில்லை. அவ்வளவு மகத்துவம் பசுவிற்கு.
பசுவின் பாலை நாம் கறந்து எடுத்தாலும் அது தனது கன்றுக்குத் தேவையான பாலை ஒளித்து வைத்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இது ஒரு வகைச் சேமிப்பு முறையாகும். பசு புகட்டும் சேமிப்பு முறையை நாம் சிந்திக்க வேண்டும்.
பசுவை வீட்டில் வளர்க்காதோர் பசு உள்ள இடந்தேடிச் சென்று புல் அல்லது பழம் கொடுத்தல் நல்லது. இது சைவ மரபு.
பசுவை வளர்ப்போம்! பசுவை வழிபடுவோம்!! நல்வாழ்வு வாழ்வோம்!!!
31

Page 19
கருங்கல் மகத்தவம்
நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்றோம் அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளை வழிபடுகின்றோம். அங்கு கருங் கல்லினால் ஆக்கப்பட்ட விக்கிரங்கள் மூலமூர்த்திகளாக விளங்குகின்றன. அவற்றிற்கு அபிஷேகம், பூஜை என்பன வழுவாது உரிய காலங்களிற் செய்யப்படுகின்றன. இதனால் மூர்த்தி கரம் ஓங்குகின்றது.
கருங்கல் விக்கிரகங்கள் கலை அம்சங் கொண்டவை. இவைகளை வடிப்பவர்கள் சிற்பாசாரிகள். பண்டைக் காலம் முதல் இவர்கள் பெருங் கலைஞர்களாக மதிக்கப்பட்டு வருகின்றார்கள். நாம் ஒரு பாறைக் கல்லை முதலிலே காண்போம். பின்னர் அது அழகுறு கண்கவர் விக்கிரமாகச் செதுக்கப்பட்டதும் ஆராதிக்கின்றோம். அதுவே சிற்பாசாரியாரின் கை வண்ணம் ஆகும். இதனையே “கல்லிலே கலை வண்ணம் கண்டேன்” எனப் புகழ்ந்து பாடினர்.
கல் இருக்கிறதே இதில் ஓர் இரகசியம் உள்ளது. அதுவே கல்லானது பஞ்ச பூத வடிவங் கொண்டது என்பதாகும். பஞ்ச பூதங்களானவை நிலம், நீர், நெருப்பு. காற்று, ஆகாயம் என்பவையாகும். கல் எங்கே இருக்கின்றது? அது நிலத்துக்கு அடியிலும் நிலத்துக்கு மேலும் உள்ளது. நிலத்தில் இருந்து கல் வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே கல்லானது நிலத்தின் ஒரு அங்கமேதான். ஆகவே கல்லும் மண்ணும் நிலத்தின் பாகங்களே. நாம் ஒரு கல்லைத் தொடும்போது எமக்கு என்ன உணர்வு ஏற்படுகின்றது? ஒரு குளிர்த் தன்மையேதான். அதாவது நீரில் உள்ள குளிர்ச்சித் தன்மையையே கல்லில் இருக்கக் காண்கின்றோம். இதனால் கல்லுக்கு நீர்த்தன்மை இருக்கவே செய்கின்றது.
நமது மூதாதையர் கல்லோடு கல்லை உரைஞ்சி நெருப்பை உண்டாக்கினர் என்பதனை நாம் சரித்திர வாயிலாக அறியமுடிகின்றது. சரித்திர ஆய்வாளர் இக்காலத்தைக் கற்காலம் என்றே வகுத்துள்ளனர். தீக்கல் எனவும் ஒரு கல் இருக்கின்றது. ஆனால் எந்த ஒரு கல்லுடன் இன்னொரு கல்லை உராயும்போது நெருப்புப் பொறி கிளம்புவதை நாம் பார்க்கமுடியும். ஆகவே கல்லில் நெருப்பு இருக்கவே செய்கின்றது. கல் உள்ள இடத்தில் பூச்சி,புழு,எறும்பு எல்லாம் சீவிக்கின்றன. கல்லுக்கு மத்தியில் கூடு அமைத்து வாழ்கின்றன. “கல்லினுட் தேரை” என்ற சொற்றொடரை நோக்கும்போது தேரையானது கல்லினுள்ளே சிவிக்கின்றமையை அறியமுடிகின்றது. ஆகவே அங்கு சுவாசிக்க
32

முடியும். சிவிக்க முடியும். எனவே கல்லுக்கும் காற்றுத் தன்மை இருக்கவே செய்கின்றது.
அண்டவெளியில் பல வித சப்தங்கள் உள. இவை அங்கு ஒலிக்கின்றன. இந்த ஒலிகளை எல்லாம் ஆகாயம் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும். பின்னர் அவைகளை வெளிவிடும். கருங்கல்லாற் கட்டப்பட்ட ஆலயங்களை நோக்கின் அங்கு வேத கோஷம், திருமுறை. பஜனை, மணி, மங்கள வாத்யம் எல்லாம் ஒலிக்கின்றன. பின்னர் அவை எதிரொலிக்கின்றன. இதனைப் போலவே மலைப் பிரதேசத்தில் நாம் நின்று கொண்டு சப்தமிட்டால் அது எதிரொலிப்பதைக் கேட்கமுடியும். எனவே, சப்தத்தை வாங்கிய பின்னர் அதனை விடும் சக்தி கல்லுக்கு உள்ளது. அண்டவெளி ஆகாயத்தின் எதிரொலித் தன்மை கல்லுக்கும் உள்ளது. கல்லுக்கு இவ்வாறான மகத்துவம் இருக்கின்றமையால் நமது மூதாதையர் கல்லினால் ஆலயங்களையும் விக்கிரங்களையும் அமைத்தனர். இலங்கைச் சரித்திரத்தில் அனுராதபுரம், பொலன்னறுவைக் காலங்களில் எழுந்த சிவாலயங்களை இங்கு கூறலாம் . தற்பொழுதும் பொலன் னறுவைச் சிவாலயத்தை இடிபாடுகளுடன் நாம் காண முடியும். இவ்வாலயம் கருங்கல் ஆலயமே. சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களாற் கட்டப்பட்ட கருங்கல் ஆலயம் கொழும்பு நீ சிவகாம செளந்தரி அம்பிகா சமேத நீ பொன்னம்பலவாணேஸ்வரா ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் உள்வீதி, நிலம், சுவர், துண், மேற்பாகம் எல்லாமே கருங்கல்லேதான். மூலமூர்த்திகளும் கருங்கல் மூர்த்திகளேயாம்.
பஞ்சபூதத்தன்மைகளும் கல்லிலே உள்ளமையை
“பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"
என மாணிக்கவாசக சுவாமிகள் விதந்து போற்றிப் பாடியுள்ளார்.
இதுகாறும் நமது சமய வாழ்வில் கல்லின் மகத்துவம் பற்றிச் சிந்தித்தோம். பஞ்சபூதங்களும் கல்லில் உள்ளமையையும் அறிந்தோம். இறைவனின் உறைவிடத்தின் மகத்துவத்தையும் மகிமையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டோம்.
33

Page 20
அக்கினி மகத்தவம் (சீதை)
இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் இராவணன் மாண்டதுடன் முடிவுற்றது. பிரிந்தவர் ஒன்று சேரும் காலமும் வந்தது. இராமன் சீதைக்கு நடந்தவைகளைக் கூறி அவளை அழைத்துவர மாருதியின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பினான். சீதை விபரங்களை அறிந்து சந்தோஷம் அடைகின்றாள். அசோக வனத்தில் தான் சிறைப்பட்டு இருந்த வேளையில் செய்த பிரார்த்தனைகள் நல்லதாக அமைந்து விட்டதென அகமகிழ்கின்றாள். இது எல்லாப் பெண்களுக்கும் உரியதுதான்.
ஆனால் சீதையின் நிலை சற்று வித்தியாசமானது. சீதை ஓர் அரசிளங்குமாரி இராமனைத் திருமணஞ் செய்தாள். அவள் பட்டத்து இராணியாக வேண்டியவள். பல அரசகுமாரர்கள் இருந்த போதும் குறி தவறாது ஒரே நிலையாக நின்று சுயம் வரத்தின்போது இராமனுக்கே மாலை சூட்டியவள். “அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கியதால்” மனப் பொருத்தமே அங்கு இருந்தது. இது தெய்வீகப் பொருத்தம் ஆகும். திருமணம் நிகழ்ந்து அரசபோக மணவாழ்க்கை வாழ வேண்டியவர்களுக்குக் கிடைத்ததோ வனவாசம். இதனைச் சாதாரண பெண்ணாலேயே பொறுக்க முடியாது. இங்கே சீதைக்கு அரசபோக வாழ்க்கையல்லவா பறிபோயிற்று. இங்கே பொறுமைக்குச் சீதை இலக்கணங் கூறுமாப்போல் உள்ளது.
இராமன் வனவாசம், சீதை அசோக வனவாசம் - பிரிவுத்துயர், பிரிவாற்றாமை, பிரிவுத் தாக்கம் எல்லாம் இருவரிடையேயும் குடிகொண்டிருந்தன. எந்த நிலையிலும் இராமன் தனது வழிபாடு, நேர்மை, நிதானம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அறநெறி என்பவைகளை வழுவாது கடைப்பிடித்தான். இவை அவனது வெற்றிக்கு ஏதுவாக அமைந்திருந்தன.
இராமனின் தூதுவர்களிடமிருந்து சீதை இராமனிடம் தான் சேரும் காலம் வந்ததை உணர்ந்தாள். சீதை உடனே மங்கள ஸ்நானஞ் செய்தாள். பட்டுப் பீதாம்பரம் உடுத்தாள். அழகுறு நகைகளை எல்லாம் பூண்டாள். சுக்கிரீவன் தலைமையில் வானர சேவுகர்கள் பல்லக்கில் சீதையை அமர்த்திச் சுமந்து சென்றார்கள். இராமனின் இருப்பிடமும் வந்தது. பல்லக்கில் இருந்து இறங்கிய சீதை இராமனிடம் சென்றாள். வீழ்ந்து வணங்கினாள். சந்தோஷத்தால் கண்ணிர் மல்க, வெட்கத்தால் தலை குனிந்து நின்றாள். சீதையை இராமன் பார்க்கின்றான். பகைவன்
34

பனையில் இவ்வளவு நாளும் இருந்த உன்னைப் பிரமதேவன் வந்து சொன்னாலும் நான் ஏற்கமாட்டேன். நீ விரும்பிய இடத்துக்குச் செல்லலாம் எனச் சொன்னான். இதனைக் கேட்ட சீதை பதட்டம் அடையவில்லை. லசஷ்மணனிடம் தீயை மூட்டச் சொன்னாள். ஸ்நானஞ் செய்தாள். அக்கினியை வலமாக வந்தாள். அக்கினியைப் பார்த்து வணங்கி
"அனைத்தையும் சுத்தமாக்கும் அக்கினி தேவனே நான் சதாகாலமும் இராமனையே இதயபூர்வமாகப் பூசித்தேன். நான் இப்போது உன்னை அடைகின்றேன். சீதையாகிய நான் தூய்மையானவள் என்பதை நிரூபிப்பாயாக."
எனச் சீதை விண்ணப்பித்து அக்கினிப் பிரவேசஞ் செய்தாள். சீதையை அப்படியே அக்கினி தேவன் வெளிக் கொணர்ந்து, அவள் பரிசுத்தமானவள் என்பதை நிரூபித்தான். இராமன் சீதையை அன்புடன் ஏற்றுக் கொண்டான். அங்கே குழுமியிருந்தவர்கள் ஆனந்தித்தனர்.
சீதையைப் பற்றி இராமன் முற்றாக அறிந்திருந்தும் இராமன் பூவுலகில் வாழ்வோருக்கு ஒரு புத்தி புகட்டவே இவ்வாறு செய்தான். இது ஊரறிய, நாடறியப் பிரகடனப்படுத்தும் செயலாக அமைந்தது. ஆம்! இது அரச பிரகடனமே தான் சீதை பட்டத்து இளவரசியல்லவா? யாகங் காக்கச் சென்ற இராமனுக்குக் கிடைத்த பெரும் பரிசு சீதையே. அங்கேயும் அக்கினியின் அற்புதம் இருந்தது. சீதை அக்கினிப் பிரவேசஞ் செய்தபோது அவளைப் பரிசுத்தமானவள் பட்டத்து இளவரசியே அவள் என நிரூபித்ததும் அக்கினியேயாகும். இந்து மதத்தில் அக்கினிக்கு அக்கினி தேவன் எனப் பெயரளித்து பெருமதிப் புடன் எல் லாக் கிரியைகளையும் செய்கிறோம். கெட்டவைகளை நீக்கி நன்மைகளை நல்கும் பண்பு அக்கினிக்கே உண்டு. இதனாலேயே இந்து மதத்தில் அக் கினி வழிபாடு மிகவுயர்ந்ததாக உள்ளது!
米米米米米米米
திருத் தொண்டு மகத்தவம் (திருவாரூர்த் தண்டியடிகள்)
சிவனடியார் செய்வது திருத்தொண்டு காண்டு செய்வது அதனைப் பரப்புவது எல்லாமே சிவ செயல்கள் i, , ),தாண்டு செய்வார் சிவனடி சேர்வார் என்பதனை சைவ சமயம் எடுத்தியம்புகின்றது.
இந்நோக்கில் திருவாரூர்த் தண்டியடிகள் பற்றி இங்கு
3S

Page 21
பார்ப்போம். தண்டியடிகள் பிறவிலேயே குருடர். இவர் தாம் குருடராயிருந்தும் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத் திருத் தொண்டைச் செய்யச் சித்தம் கொண்டார். இந்தக் குளம் தூர்க்கப்பட்ட நிலையில் இருந்தது. கவனிப்பாரற்றுக் கிடந்தது.
இந்தக் குளம் திருத்தப்பட வேண்டும். அடியார் யாவரும் திரவாரூர்க் திருக்குளத்தில் மூழ்க வேண்டும். அவர்கள் ஆனந்தமடைய வேண்டும் என்பதே குருடராயிருந்தும் பெருஞ் சிவப்பணியை நல்க எண்ணிய தண்டியடிகளின் திருவுள்ளமாகும். கமலாலயத்தை ஆழமாக வெட்டவும் அதனை அகலமாக்கவும் திருவுளம் கொண்ட தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். குளத்தின் அகலும் குழியின் ஓரத்தில் ஒரு கோலை நட்டார். அதிலே கயிற்றைக் கட்டினார். குளக்கரையில் ஒரு கோலை நட்டார். கயிற்றின் மறு நுனியை அதிலே கட்டினார். இப்பொழுது குளத்தின் நடுப் பகுதியும் கரையும் கயிற்றால் இணைக்கப்பட்டு விட்டது. கயிற்றைப் பிடித்தவாறு குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்றார் தண்டியடிகள், மண்ணை வெட்டி கூடையில் போட்டு தரையில் வைத்துவிட்டு கயிற்றைப் பிடித்தவாறு கரைசேர்ந்தார். மண்ணை அப்படியே குளக் கரையிற் கொட்டினார். இப்படியே குளந்தோண்டும் திருத்தொண்டு வளரலாயிற்று.
இதனிடையில் சமணர்களின் துன்புறுத்தலால் மனம் நொந்தார். சிவனிடமே அழுது, புலம்பித் தம் இடர் நீங்க விண்ணப்பித்தார் தண்டியடிகள். சிவன் தண்டியடிகளின் கனவில் வந்து உனது குறை நீங்கும் எனக் கூறியதோடு சோழ மன்னனின் கனவில் “தண்டியடிகளின் மனக்குறையை நிறைவேற்றும்” எனப் பணித்தார். பொழுது புலர்ந்ததும் சோழ மன்னன் தாண்டியடிகளிடம் சென்று சிவனின் திருவருளால் உமது கண்பார்வையைப் பெற்றுக் காட்டும் எனக் கூறினான். தண்டியடிகள் சிவனைத் தியானித்தார். கண் பெற்றார். இது சிவ அற்புதம், தண்டியடிகள் தமது தொண்டுகளை மீண்டும் தொடர்ந்து அதனைச் செவ்வனே நிறைவேற்றினார். பேரானந்தம் அடைந்தார். இது தண்டியடிகள் பற்றிய விபரமான கதை.
இங்கே நாம் பார்த்தது யாது? அங்கவீனர்களும் சாதாரணமானவர்களும் எவரும் சிவத்தொண்டு புரியலாம் என்பதேயாம். சிவத்தொண்டுகள் யாவும் சைவர்களின் திருத் தொண்டுகள். இதனைச் சிவ சிந்தனையுடன் செய்ய வேண்டும் என்பதே விதி. தண்டியடிகள் மனதிலே சிவனைத் தியானித்தார். வாயால் ஓம் நமசிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சொல்லிய வண்ணம் தமது திருப்பணியைச் செய்தார். அங்கே எல்லாமே நல்லதாக அமைந்த நிலையினை நாம் கண்டோம்.
36

'ஏய்ந்த அடிமை சிவனுக்குயான்
என்னில் இன்றுஎன் கண்பெற்று வேந்தன் எதிரே திருவாரூர்
விரவும் சமணர் கண் இழப்பர்! ஆய்ந்த பொருளும் சிவபதமே
ஆவது என்றே அஞ்செழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார் ”
இங்கே திருத்தொண்டின் மகத்துவமும் திருவைந்தெழுத்தின் உயர் நிலையும் வெகு அழகாகக் காட்டப்பட்டு உள்ளது. m
இதுகாறும் நாம் நோக்கியது திருத் தொண்டினை யாரும் எப்படியும் செய்யலாம். அது நல்லதாகவே முடியும். திருத்தொண்டினைப் புரியச் சிவனடியர் சித்தம் கொள்ள வேண்டும் என்பதேயாம். அவ்வேளையில் நாம் சிவத்தியானராக இருக்க வேண்டும். திருவைந்தெழுத்தை மனதில் இருத்தி வாயாற் சொல்லியே செய்தல் வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
பார்வதி சமமேத பரமேஸ்வரனின் அருள் எல்லோருக்கும் கிட்டுவதாக,
சர்வ மங்களானி பவந்து!

Page 22
ஓட்டோ 98SD 122, சென்ரல் வீதி,
கொழும்பு - 12.
 


Page 23
ஓட்டோ 122. GoldFଶ கொழுப்
 
 
 
 

அச்சகம் ன்ரல் வீதி, եւ - 12.