கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கங்காமிர்தம் 2

Page 1
ஓம் கீதா கெங்
(9
3.
தங்கா
(2.
ஆக்கம் - ெ
ஜெக
(ஜெயச்சந்திரன் (

காதராய நம:
为
தாகுப்பு
என்
ஜெயமயூரகன்)

Page 2


Page 3

றிமத் சுவாமி கெங்காதரானந்தா
அவர்கள்

Page 4

ஓம் கீதா கெங்காதராய நம: குரு ஸ்தோத்திரம்
குரு உருவமற்றவரும் உருவமுள்ளவருமாவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவருமாகிறார் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவ ரேதான் முற்றிலும் அறிவார்.
"கு" எனும் எழுத்து குணத்தை கடந்த நிலையையும் "ரு” எனும் எழுத்து உருவைக் கடந்த நிலையையும் குரிப்பன. குணத்தையும் உருவத் தையும் கடந்த நிலையை எவர் அளிப்பாரோ எவரால் அளிக்கமுடியுமோ அவரே குரு எனப்படுகிறார்.
"கு" எழுத்து இருளைக் குறிக்கும். "ரு” என்னும் எழுத்து ஒளியைக் குறிக்கும் அஞ்ஞானமாகிய இருள் நிலையை அகற்றி மெஞ்ஞானமாகிய என்ன முடியாததும், வெளிப்படையானதும், உருவமில்லாததும், குணங்க ளேதும் அற்றதும், உலகத்திற்கு ஆதாரமானதுமான பிரம்மத்தை எவரால் காட்டமுடியுமோ அவரே குரு ஆவார் என்று குருபக்தி மகிமையைக் கூறும் குருகீதை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (அதிலிருந்து தரப்பட்ட ஏழு சுலோகங்கள்.
யத் ஸத்வேன ஜகத் ஸத்யம்
யத் ப்ரகாசேன பாதி யத்!
யதானந்தேன நந்தந்தி
தஸ்மை பூரி குரவே நம!
(எவருடைய உண்மையால் உலகம் உண்மையோ, எவருடைய பிரகாசத்தால் உலகம் பிரகாசிக்கிறதோ, எவருடைய ஆனந்தத்தால் உலகி னர் மகிழ்ச்சியடைகின்றனரோ, அப்படிப்பட்ட எங்கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.)
நிர்க்குணம் நிர்மலம் சாந்தம்
ஜங்கமம் ஸ்திரமேவ ச
வ்யாப்தம் யேன ஜகத்ஸர்வம்
தஸ்மை பூரீ குரவே நம:!
(குணமற்றவராயும், மாசற்றவராயும், சாந்தராயும், உள்ள எவரால் அசைவதும் அசையாததுமான இவ்வுலகனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ அப்படிப்பட்ட எங்கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)

Page 5
சைதன்யம் சாச்வதம் சாந்தம்
வ்யோமாதீதம் நிரஞ்ஜனம்
நாதபிந்து கலாதீதம்
தஸ்மை பூரீ குரவே நம:
(சைதன்யமாயும் சாசுவதமாயும் சாந்தமாயும் ஆகாயத்திற்குமப்பாற் பட்டதாயும், மாசற்றதாயும் நாதம் பிந்து கலை ஆகியவற்றையும் கடந்து நிற்பதாயுமுள்ள உண்மை வடிவுடையவராகிய எங்கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)
ஹேதவே ஜகதாமேவம் ஸம்ஸரார்ணவ - ஸேதவே! ப்ரபவே ஸர்வவித்யானாம் சம்பவே குரவே நம:
(உலகிற்கு காரணரும், பிறவிக்கடலைக் கடக்கப் பாலம் போன்றவ ரும், எல்லா வித்தைகளுக்கும் தலைவரும், சம்புவடிவானவருமாகிய எங்கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)
குரு மத்யே ஸ்திதம் விச்வம் விச்வமத்யே ஸ்திதோ குரு:! குருர் விச்வம் நமஸ்தே ஸ்து தஸ்மை ழரீ குரவே நம:
(குருவின் மத்தியில் உலகம் நிலைபெற்றுள்ளது. உலக மத்தியில் குரு நிலைபெற்றுள்ளார். குருவே உலகமாய் விளங்கும் அப்படிப்பட்ட எங் கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)
யஸ்மை காரணஞபாய கார்யரூபேன பாதி யத் கார்யகாரண - ரூபாய தஸ்மை, பூரி குரவே நம:
(எவர் காரணவடிவாயிருப்பதால் காரிய ரூபமான உலகம் பிரகாசிக் கின்றதோ அந்தக் காரிய காரணருபியாக விளங்கும் எங்கள கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)
ஸம்ஸாரவிருகூடி - மாரூடா: பதந்தி நரகார்ணவே! யேநோத்தரதே விச்வம் தஸ்மை ழரீ குரவே நம:
(ஸம்ஸாரமாகிய மரத்தின்மேல் ஏறியவர்கள் நரகமாகிய சமுத்திரத் தில் விழுகிறார்கள் அப்படிப்பட்ட உலகு (உலகத்தவர்கள்) எவரால் கைதுக்கி விடப்படுகிறதோ அப்படிப்பட்ட எங்கள் கெங்காதரானந்த குருவாகிய உங்களுக்கு நமஸ்காரம்)
அன்பும் கருணையும் திருவருட்கடாட்சமும் நிறைந்த
ழரீமத் சுவாமி கெங்காதரானந்தா
அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு
கங்காமிர்தம்
சமர்ப்பணம் ஜெயச்சந்திரன் குடும்பம்
Ցiւյլb. ஜெயமயூரன் குடும்பம்

கங்காமிர்தம் - துளி (1)
மறவாதிருப்போமாக
கருணையின் வடிவம் அவர் உருவம் - அது
தன் நிகர் இல்லா எழில் வடிவம்
கடவுளின் உருவின் மறு வடிவம் - எங்கள்
சுவாமிஜி என்னும் அருள் வடிவம்.
ஓம் கீதா கெங்காதராய நம:
இறை அவதாரம்
காலத்துக்குக் காலம் பற்பல ஞானிகள் இவ்வுல கில் தோன்றி யாவரையும் ஆத்மீக வாழ் வில் வழிகாட்டி வ்ழிநடத்தியுள் ளார்கள். இவர்கள் மூன்று வகையினர். முதல் வகையி னர் தாம் பூமியில் அவதாரம் செய்து தம்மைத்தாமே ஈடேற் றிக் கொள்பவர்கள். தங்க ளின் ஈடேற்றத்திற்கு அவர் கள் ஏற்றி வைக்கும் ஆத்ம சக்தியில் அவர்களுடன் சார்ந்த ஒரு சிலரும் ஈடேற்றப் படுகிறார்கள். மற்றுமொரு வகையினர் தாம் பூமியில்
அவதரித்து மக்கள்ை ஈடேற்றுவதற்காக, ஆத்ம சாதனைகளையும், மார்க் கங்களையும் வழிகாட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்கள் போதனைகளைச் சாதனைகளாக்கி, தம்மைத் தாமே ஈடேற்றுபவர்கள் ஒரு சிலரே. மூன்றாவது வகையினர் பிரார்ப்த தொடர்பு காரணமாக தன்னுடன் தொடர்புபட்ட ஒரு கூட்டத்தினரை ஈடேற்றுவதற்காக தாமே கீழ்நோக்கி இறங்கி அவதாரம் எடுத்து ஆத்மீக சாதனைகளையும் மார்க்கங்களையும் காட்டுவதோடு மட்டு மல்லாது கருணையினால் தம்முடன் அழைத்துச் சென்று ஈடேற்றும் அருள் ஞானிகள். இத்தகைய அருள் ஞானிகள் வரிசையில் வந்துதித்த இறையவதாரமே எமது சுவாமிஜி கெங்காதரானந்தா அவர்கள்.
பாரத நாட்டில் அவதரித்து எம்நாட்டுக்கு வருகைதந்து எம்நாட்டிற் கும் மக்களுக்கும் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுத்து ஞானசுகத்தை அளித்து இன்னும் தோன்றாத் துணையாய் காத்து வரும் பிரம்மஞானி எமது சுவாமிஜி அவர்கள்.
“ஞானி ஞானோதயத்திற்கும் பின்னர் மக்களையும் மாநிலத்தையும் நன்றி உணர்வுடன் பார்க்க வேண்டும்" (வஜனாம்ருதம் - 160)
03

Page 6
பிரம்ம நநானியான எம் சுவாமிஜி அவர்களும் தாம்பெற்ற ஞானத்தை யு. டிதான சுகத்தையும் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கையையும் தியாகத் தின் இருப்பிடமாகவே அமைத்துக் கொண்டார்.
வித்தினின்று மரம், மரத்திலிருந்து பூ, காய், பழம் உண்டானாலும் மரத்தில் காய்த்துப் பழுத்த பழம் மரத்திற்குரியதன்று. இது மரத்தின் நியதி. அது போன்று தவத்திலிருந்து ஞானமும் ஞானத்திலிருந்து சுகமும் பிறந் தாலும் ஞானசுகம் ஞானிக்கு மட்டும் உரியதன்று. (வஜனாம்ருதம் - 86)
"மக்களுக்காகவே வாழ்தல் மக்கள் துயர் போக்குதல் தனது சங் கற்பம்" என்று கூறும் சுவாமிஜி ஆத்ம தாகம் கொண்டவர்களுக்கு ஆத்ம முன்னேற்றத்திற்கும்.லெளகிகப் பிரச்சனைகளைத் தாங்கி வரும் அடியவர் களுக்கு தனது அருட் சக்தியால் அப்பிரச்சனைகளைத் தீர்த்தும் மனநிம்மதி அளித்து அருளினார். அவரது அற்புதங்கள் எமது வாழ்க்கையில் நேரடியா, அனுபவித்த ஆனந்தம் எமக்குண்டு. அவர் மறைந்த பின்னும் அற்புதங்கள் தொடர்கின்றன.
உயிருடன் இருக்கையில் என்னென்ன செய்தேன்
உடல் தனை நீத்தபின் அனைத்தையும் செய்வேன்
இதுதான் சுவாமிஜியின் இறுதி வார்த்தை
அதுதான் எங்கட்கு அருட் பெரும் வார்த்தை
அடியவர்கள் துன்பத்தால் அல்லல் உரும்போது அவர்களின் கனவுகளி லும், மற்றும் அவர்கள் முன் பிரத்தியட்சமாகவும் அருட்காட்சி தந்து அத்துன்பங் களை தன் அருட்சக்தியால் நீக்கியருளினார்.
நாம்ஒவ்வொருவரும் எண்ணரிய பரிணாம வளர்ச்சிக்குப் பின் கிடைத்த இவ்வரிய மானிடப் பிறவியை வீணாக்காது சுவாமிஜியின் உபதேசத்திற் கிணங்க, சுவாமிஜியின் அறிவுரைகளுக்கிணங்க சாதகமான சுகத்தைத் தரும் ஜீவித தர்மங்களை எமது வாழ்க்கையில் அனுசரித்து வழ்ந்து ஜிவித இலட் சியத்தை அனுபூதிமயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
சிறந்த ஒரு ஜீவித லகூழியம், ஈஸ்வரபுத்தி, சரீர சுகம், மனக்கட்டுப் பாடு, நித்திய கருமங்களின் ஒழுங்கு, ஹிருதய சுத்தி, கரும சுத்தி, குடும்ப ஐக்கியம் இந்த எட்டும் ஒருவருடைய வாழ்க்கையில் அமையுமானால் அவ ருடைய வாழ்க்கையும் அமிர்தம் உண்டு, வாழும் அமிர்தபசுஷ்ணிகள் போன்று அமிர்தமயமாயிருக்கும். (சன்மார்க்கசுகம் - ஞானமண்டலம்)
இத்தகைய அமிர்தமயமான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கும் வாழ முயற்சிப்பவர்களுக்கும் எமது சுவாமிஜி நித்தியனாய், நிர்மலனாய், சர்வ வியாபியாய் இருந்து காலம் காலமாய் எமக்கு வழிகாட்டி வழிநடத்தி தோன் றாத் துணையாய் காத்து அருள்புரிவார் என்ற பெரும் பேருண்மையை மறவாதிருப்போமாக.
04

தியானம்
றுநீமத் சுவாமி கெங்காதரானந்தா
சித்தம் ஸம்ஜாயதே ஜன்மா ஜரா காரணம் (மனமே பிறப்பு இறப்பு இரண்டிற்கும் காரணம்)
சுகத்திற்கும் துக் கத்திற்கும் மனமே. உயர்ந்தவன் தாழ்ந் தவன் என்று பேதம் காட்டுவதும் மனமே. மனம் ஒரு நண்பன். ஒரு சத்துருவும்கூட. காமத்திற்கும் கோபத் திற்கும் காரணம் மனமே. காமத்தின தும் கோபத்தினதும் அழிவிற்கும் காரணம் LD607(3D. LD607(3D 616) லையற்ற சச்சிதானந் தத்திற்கும் அழைத் துச்செல்லும் சாதனம். மனம்தனது சங்கற் பத்தால் உலகத்திலி ருக்கின்ற உயிருள்ள உயிரற்ற சகலபொருட் களையும் உண்டுபண் ணுகிறது. அனைத்தை யும் அழிப் பதும் மனமே, மனம் இல்லை என்றால் நாங்கள் இல்லை. நாங்கள் இல்லை என்றால் விருப்புக்களோ வெறுப்புக்களோ இல்லை. விருப்பங்களை நாங்கள் விட்டு விட்டால் மனம் கடந்த மெளன நிலைக்கு நாங்கள் இட்டுச் செல்லப்படுவோம். கட்டுப்படுத்தப்பட்ட மனம் சீரான வாழ்க்கைக்கு அவசியமாகிறது. புலன் இச்சைக்கு இடம்கொடுத்த மனம் விடுதலை அடைவது என்பது இயலாத காரியம். ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி அலையும் மனதைக் கட்டுப்படுத்து பவன் எவனோ அவனே ஆத்மீக வாழ்விற்கு உரியவன்.
05

Page 7
விஞ்ஞானம் சிறந்த ஒரு சாதனம். எங்களுடைய வாழ்க்கைக்குப்
பல வசதிகளைச் செய்கிறது. சந்திரனிற்கும், மற்றைக் கிரகங்கட்கும் செல் வதற்கு அது பயன்படலாம். விஞ்ஞன் உபகரணங்களால் நான் என்னும் அகந்தையை அழிக்க முடிகிறதா? உங்களைக் கட்டுப்படுத்துகின்ற அநேக விஷயங்களை அதனால் நீக்க முடிகிறதா? அதனால் பூரண மன அமைதி யைத்தான் தரமுடிகிறதா? மனது உங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையும் பூரண தூய சந்தோஷத்தை நீங்கள் பெறமுடியாது. உங்களால் உலகத்தை திருத்த முடியாது. உங்களால் நிச்சயமாக உங்களுடைய மனதைப் பண்படுத்த முடியும். மகத் என்னும் பேருள்ளத்தின் ஒரு சிறு பகுதியே உங் களுடைய மனம். பேருள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுவீர்களா னால், மற்றைய மனங்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். கட்டுப் படுத்தப்பட்ட மனம் வல்லமை பொருந்திய மனமாகிறது. வலுவான மனதால் எதைத்தான் சாதிக்க முடியாது?
பூரண மன அமைதியில் ஏற்படும் ஆனந்தம் விபரிக்க முடியாததொன்று. புலன்களின் அனுபவத்தைக் கடந்தது. சுத்த சைதன்ய அறிவால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும். சத்தியத்தை உணர்வதால் மட்டுமே அது அறி யப்படும். உங்களுடைய கஷ்டங்கள், துக்கங்கள் எல்லாவற்றிக்கும் காரணம் மனமே என்றால் அதனைப் பயிற்சியால் ஒருமுகப்படுத்தி நல்வழியில் அதனைச் செலுத்த வேண்டியது உங்களுடைய கடமை அல்லவா? விதியையும் காலத் தையும் நோவதில் பயன் இல்லை. எனவே இப்பவே மனதை ஒருமுகப்படுத் தும் பயிற்சியைத் தொடங்குங்கள். அறிவுள்ளங்களே மேலே தரப்பட்டுள்ள கருத்துக்களை ஆழமாகச் சிந்தியுங்கள். உங்கள் தீர்மானத்தின் பேரில் திட மனதுடன் கீழே காணும் வழி முறைகளைக் கைக்கொண்டு பயிற்சி செய் யுங்கள். பயிற்சியின் பலனை விரைவில் அறிவீர்கள். இது நிச்சயமான ஒரு வார்த்தை.
பயிற்சி செய்யும் முறை
பல முறைகளையும் பல விதிகளையும் மன ஒருமைப்பாட்டைப் பெறுவதற்கு கையாளவேண்டும். ஒரு சிறந்த முறை கீழே தரப்படுகிறது. இல குவாகப் பயிற்சி செய்யலாம். உடனடியாகவே பலன் அளிக்கும். இது ஒரு சிறந்த முறை என்று அனுபவத்தால் காணப்பட்டது.
உண்மனய வியப்த்யே சீக்ரம்
புரு த்யானம் மம சம்மதம் உன்மணி என்னும் அந்த உயர்ந்த பரம ஞான நிலையைச் சீக்கிரம் பெறுவதற்கு புருவ மத்தியிலே தியானம் செய்வதுதான் சிறந்த வழி என்று
06

யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒரு மூடனையே புருவமத்திய திருஷ்டி தியானம் உயர்ந்த அதீத நிலைக்கு உயர்த்துமானால் புத்திசாலியினது நிலை எத்தகைய உயர்வை அடையும் என்று எண்ணிப்பாருங்கள்.
"புருவத் மத்யே சிவ ஸ்தானம் மனஸ் தத்ர விளே யதே”
ஆத்மசொரூபமாக இருக்கின்ற சிவனுடைய இருக்கைபுருவ மத்தியே தான். எனவே மனது அவ்விடத்திலேயேதான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மனதை அங்கே கட்டுப்படுத்துவதுதான் சுலபம்.
அதிகாலை நாலு மணிக்கு (பிரம முகூர்த்தம்) மனதில் தெய்வீக நினைவுடன் எழுந்திருக்க வேண்டும். காலைக்கடன்களை முடித்துவிட்டு கை கால், முகம் கழுவி யோகாசனப்பயிற்சி அல்லது தேகப்யியாசம் செய்ய வேண்டும். தேகத்தை திடமாக வைத்திருக்க வ்ேண்டும் பிறகு குளித்துவிட்டுத் தூய்மையான மெல்லிய உடை அணிந்து கொள்ள வேண்டும். பின் பிரார்த் தனைக்கு என்று ஒதுக்கப்பட்ட தனி அறைக்குள் செல்ல வேண்டும். பித் தளை விளக்கு ஒன்றை ஏற்ற வேண்டும். தீபம் பிரகாசமாக ஒளிவிடவேண் டும். வசதிப்படுமானால் எமது இஷ்டதெய்வத்திற்குப் பூஜை செய்யலாம். ஊது பத்தி ஏற்றலாம், மணம் கமழும் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். உலக அமைதிக்காகவும் உங்களுடைய மன அமைதிக்காகவும் உங்களது மனம் உருகப் பிரார்த்தனை செய்யுங்கள். வேறு எதனையும் உங்களுடைய பிரார்த் தனையில் சேர்க்க வேண்டாம். தெய்வீகப் பாடல்கள் சிலவற்றைப் பாடலாம். தேவாரம் திருவாசகம் இவற்றைப் பாடலாம். பாடும்போது கருத்துான்றிப் பாடுங்கள்.
நீங்கள் ஒரு இருக்கையை தயார் செய்து கொள்ளுங்கள்.(மான்தோல் நல்லது.) அதற்கு மேல் ஒரு வெள்ளை விரிப்பு விரிப்பது நல்லது. அந்த இருக்கையின் மேல் நீங்கள் ஒரு இலகுவான வசதியான ஆஸனத்தில் (பத்மாஸனம், சித்தாஸனம், சுகாஸனம், சம்மாஸனம் ஏதாவது ஒன்றில்) அமருங்கள். தலையும் கழுத்தும் முதுகெலும்பும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும் இப்போது உங்கள் மனதை வெளி விவகாரங்களிலிருந்து விடுவித்து மெதுவாக உள்முகப்படுத்துங்கள். சிறு பிரயத்தனத்தின் பின் இது சாத்திய மாகலாம். உங்கள் கண்களை நீங்கள் மூடியிருக்காலம். எந்த உலக விவ. காரங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டாம். நிமிர்ந்து உறுதியான நிலையில் இருங்கள். இப்போது உங்களுக்கு உள்ளும் புறமும் ஒரு பிரகாசமான ஜோதி இருப்பதாக பாவனை செய்யுங்கள். உங்கள் உடம்பைப் பற்றிய சிந்தனை வேண்டாம். சுவாசத்தைப் பற்றியும் நினைக்க வேண்டாம்.
07

Page 8
இந்த நிலையில் உங்களுடைய மனதை மெல்ல மெல்ல புருவமத் தியில் செலுத்தி உங்கள் நினைவை அந்த இடத்தில் இருத்துங்கள். ஒளி விடும் ஒரு சிறு பொருள் உங்களுடைய புருவமத்தியில் இருப்பதாக பாவனை செய்யுங்கள். உங்கள் மனதை அவ்விடத்தில் இருத்தி உங்கள் மனக்கண் ாைல் அந்த ஒளியைப் பாருங்கள்.
மனம் இப்பொழுது அலைபாயத் தொடங்கும். உலக விவகாரங்களில் ஈடுபட முற்படும். அதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். முழு முயற்சியோடு புருவ மத்தியில் ஒளிவிடும் பொருளை அவதானியுங்கள். ஆரம்பத்தில் நீண்ட நேரம் பயிற்சி செய்ய வேண்டாம். காலம் செல்லச் செல்ல நேரத்தை நீட்டு வது நன்று. உங்களது பயிற்சி உங்களுடைய உடம்பையோ உள்ளத்தையோ பாதிக்கக்கூடாது. அவதானமாக பயிற்சி செய்யுங்கள். மெல்ல மெல்ல பயிற் சிக்கு உரிய நேரத்தைக் கூட்டுங்கள். தொடர்ந்து ஒரு மணித்தியாலம் எவ் வித கஷடமுமில்லாமல் நீங்கள் தியானத்தில் ஈடுபடக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களுடைய உடலுணர்வு முழுமையாக நீங்கும்வரை நீங்கள் தியானத்தில் ஆழ்ந்து விடுங்கள்.
தியானத்தின்போது உலக விவகாரங்கள் உங்களைத் தொந்தரவு செய்யும். சாதனையைக் கைவிடாது தொடருங்கள். கைவிடாது தொடரும் சாதனையால் தடைகள் தாமே விலகிவிடும். நல்லவர்களது தொடர்பினாலும் நல்ல எண்ணங்களினாலும் உங்களுடைய அறிவினாலும் இடையூறுகளைக் களைய முற்படுங்கள். சில சந்தர்ப்பங்களில் மனம் தளர்ந்து விடும். உறுதி குலைந்துவிடும்.
தியானத்தில் ஈடுபடுவதற்குக்கூட விருப்பம் இருக்கமாட்டாது. பயப் படாதீர்கள். மனம் தளர்ந்துவிடாதீர்கள். திடசித்தத்துடன் பயிற்சியைத் தொட ருங்கள். முயற்சியுடன் பயிற்சி செய்வீர்களானால் மனம் தானாக அடங்கும். தொடர்ந்து ஒரு மாத காலம் காலை, மாலை இருவேளைகளிலும் தொடர்ந்து பயிற்சி செய்வீர்களானால் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களை நீங்களே காண் பீர்கள்.
தொடர்ந்து செய்யப்படும் தியானப்பயிற்சி மனதை ஒரு நிலைப் படுத்தி வர்ணிக்க முடியாத ஒரு அதீத ஆனந்த நிலைக்கு இட்டுச்செல்லும். தியானம் பூர்த்தியானதும் தியானம் செய்த இடத்தை விட்டு உடனடியாக எழுந்து செல்ல வேண்டாம். தியானம் செய்யும் போது அமர்ந்து இருந்த நிலையில் இருந்து வேறோர் யோகாசன நிலைக்கு உங்களது ஆசனத்தை மாற்றி தியானம் செய்த அதே இடத்திலேயே சொற்ப நேரம் அமர்ந்து இருங் கள். தியானத்தில் நீங்கள் பெற்ற சுபானுபவத்தை கொஞ்ச நேரம் சிந்தியுங் கள். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். சிறிது நேரத்தின் பின் அன்றாட விஷயங்களைக் கவனியுங்கள்.
08

சாத்வீக உணவினாலும் எண்ணைக் குளிப்பினாலும் உங்களுடைய உடம்பை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருங்கள். உணவை யும் நித்திரையையும் கட்டுப்படுத்தி கூடாமலும், குறையாமலும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒய்வெடுத்துக்கொள்வதும் நித்திரை விழித்திருப்பதும் கூட அவ்வாறே கவனிக்கப்படவேண்டும். உங்களுடைய ஜீவ சக்திகளை விரயம் செய்யக் கூடாது. சத்தியம், இரக்கம், கருணை இவற்றை கூடிய வரை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அன்பு மயமானதாக மாற்றி அமைப்பதற்கு முழு முயற்சி செய்யுங்கள். தூய் மையின் முழு வடிவமாக விளங்குங்கள். ஆழ்ந்த தியானம் கைகூடுமேயா னால் கஷ்டங்களும் கவலைகளும் இல்லாமற் போய்விடும். பொறுமையும் சாந்தமும் உங்களிடமிருந்து பரிணமித்து உங்கள் நடை, உடை பாவனை மூலம் எல்லா திசைகளிலும் பரவும்.
நீங்கள் விரும்பும் தெய்வீக காட்சிகளை இடை இடையே நீங்கள் கண்டு களிப்பீர்கள். உங்களுடைய தியான பலத்தால் பூரண அமைதி, சந் தோஷம், ஆரோக்கியம் கிடைக்கும். நீங்கள் பழகும் மக்கள் மத்தியில் நீங் கள் ஒரு தைரியசாலியாகவும் பிரபல்யமானவராகவும் காணப்படுவீர்கள். இனிய குரலும், தெளிவான வார்த்தைகளும் தியான பலத்தால் ஏற்படும். எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். பூரண அமைதி கிட்டும். உலக இன்பங்கள் குவியல் குவியலாக உங்கள் காலடியில் கிடக் கும். உலகம் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் மனம் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்து தெய்வீகத்தில் ஆணித்தரமாக அமை யும் வரையும் பூரண சந்தோஷத்தை ருசிக்க முடியாது.
சமகால உலக நிகழ்ச்சிகளை பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களானால் ஒரு உண்மை தெளிவாகும். அதாவது நாங்கள் புலன்களின் இச்சைக்கு இடங்கொடுத்து ஆயிரம் வருடங்கள் வாழும் வாழ்க்கையை விட ஒரு நிமி டம் மட்டும் மனக்கட்டுப்பாட்டுடன் வாழும் வாழ்க்கை சிறந்தது என்பதே. ஆத்மீக உள்ளங்களே! சந்தோஷம் வெளி உலகத்தில் இல்லை. உங்க ளுடைய ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி எடுக்கப்படும் தூய வெண்நிற முத்து அது. எத்தனை அமைதி எவ்வளவு ஓய்வு! அந்த சுகத்திற்கு அதுவே நிகர். தீர்மானத்துடன் தியானப்பாதையில் செல்லுங்கள். துன்பம் ஒழிந்து பூரண சந்தோஷத்தை உணர்வீர்கள்.
சுர்வேஷாம்பூரணம் பவந்த,
(சுவாமிஜி எழுதிய தமிழ்மூலம் கிடைக்கப்பெறாமையால், பி. கணநாதபிள்ளை (B. A) அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து, மீண்டும் தமிழுக்கு
திரு. ஜெயச்சந்திரன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.)
09

Page 9
O ÖiLIII6)ILI6)ID
சந்திரசேகரம்பிள்ளை ஜெயச்சந்திரன்
வாருங்க ஜெயச் சந்திர ன். இருங்க. வார்த்தைகள் உதிர்ந் தன. கதவுக்கு நேரே சாய்மனைக் கதிரை யில் சுவாமி உட் காந்திருந்தார். அவர் கால டி யில் அவர் அருகே அமர்ந்திருந் தேன்.மாலைப்பொழுது மங்கலான வெய்யில் அவர் மேனியைப் போர்த்திருந்த சால் வைக்ஊடாக அவரது 8ഥങ്ങി தகதகத்தது. G L T 6 போன்று ஒளிர்ந்தது. முகம் பொலிவோடு காணப் பட்டது. அழகிய தாடி கேசம் பின் னுக்கு வாரிவிடப்பட்டி ருந்தது. பின்கழுத்தை அதுதாண்டி நின்றது. ராஜபார்வை ஆழ்ந்த
*
சிந்தனையில் சுவாமி திளைத்திருந்தார். சுவாமி அசையவில்லை. அவர் பார்வை எங்கோ எதையோ தேடிச்சஞ்சரித்தது. மெளனம் அமைதி நேரம் சென்றது, நொடிப் பொழுது விநாடியாகியது, விநாடிகள் நிமிடங்களாயின, நிமிடங்கள் மணித்தியாலங்களாகப் பரிணமித்தன. மெளனம் அமைதி. சுவாமி அசைய வில்லை நானும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்க முயற்சிக்கவும் இல்லை. என்னால் எழுந் திருக்க முடியவில்லை. மாலைப்பொழுது இரவாகியது. இரண்டு மூன்று மணித்தியாலங்கள் சென்றிருக்கலாம் மெளனம் கலைந்தது. சுவாமியின் முகத்தில் ஒரு பூரணத்துவம், ஒரு புன்னகை, ஒரு தெளிவு, ஜெயச் சந்திரன் நீங்கள் வரும்போது ஒரு சிக்கலான பிரச்சனை இப்போ பிரச்சனை தீர்ந்து விட்டது, முடிவு வந்துவிட்டது.
சுவாமி நான் வரட்டுமா கைகூப்பினேன்.
போய் வாருங்கள் ஜெயச்சந்திரன். வழக்கம்போல் சுவாமி எழுந்து
நின்றார், கைகுவித்தார், விடை தந்தார். வழமைபோல் அவரது காலில் வீழ்ந்து வணங்கினேன்.
10
 

இப்படியும் ஒரு அனுபவம் சுவாமியின் அருகில் இருப்பது ஒரு தனி ஆனந்தம். ஒரு சுபானுபவம்.
உலகத்தில் நிறை ஞானிகள் வருவதுண்டு. சிலருக்கு அவர்களது தரிசனம் கிடைக்கும். சிலருக்கு அவர்களது உபதேசம் அறிவுரைகள் கூடக் கிட்டுவதுண்டு. அருகில் இருந்தும் அவர்களை அறியாமல் இருப்பவர்களும் உண்டு.
ஞானிகளை அடையாளம் காண்பதரிது.
காலவெள்ளத்திலே கடவுளின் கருணையினாலே கடவுளின் விளக் கம் பெற்ற பெரியோர் கடவுளின் வெளிப்பாடு உடைய மாகான்கள் பூமியில் அவதாரம் எடுப்பது உண்டு. சுவாமி கெங்காதரானந்தா அவர்களும் அத்தகை uj63).
அவர்கள் வாழுகின்ற காலகட்டத்தில் அவர்களது எண்ண அலை கள் சிந்தனைகள் வார்த்தைகள் வெளிப்படும் தருணங்களில் நாம் வாழு வது பெரும்பேறு.
சமகாலத்தவராய் மட்டுமல்லாது அவர்களது தரிசனம் உபதேசம் ஆசிகளில் பாக்கியவான்கள். சுவாமியைத் தரி சித்து அவர்களது அருளாசிகளைப்பெற்ற நாம் பாக்கியசாலிகள்.
1952ஆம் வருடத்திலிருந்தே சுவாமியுடன் எனது அறிமுகம் ஏற்பட்டது.
சுவாமியுடன் என்னை அறிமுகம் செய்துவைத்தவர் எனது நண்பர் புலவர். திரு. வை. சோமஸ்கந்தர் அவர்கள்.
ஒருநல்ல மனிதரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். என்றார். என்னைச் சுவாமி கெங்காதரானந்தாவிடம் அழைத்துச் சென்றார். 1. சுவாமி ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல ஒரு மகானுங் கூட என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
அன்று அவர் சந் நியாசம் பூணவில்லை. சுவா மிக்குரிய கா வி உ  ைட இல்லை வெள்ளை வேட்டி வெள்ளைப்போர்வை, குறுந் தாடி, கறுத்த நீண்ட கேசம், பொன் றம் பொலிவான தோற்றம், கூரிய மூக்கு, குளிர்ந்த பார்வை, நெற்றி யில் சிவப்பு நிறக் குங்குமப்
பொட்டு.
11

Page 10
ஞாயிறு தோறும் வடகரை வீதியில் அவர் வாழ்ந்து வந்த இல்லத் தில் நடக்கும் சத்சங்கத்திற்கு வரும்படி கட்டளை இட்டார். முதல் ஒவ்வொரு ஞாயிறும் கூட்டுப் பிரார்த்தனைக்கு வரும் இளம் சிறார்கள் வாலிபர்களது சந்தேககங்கட்கு விளக்கம் அளிக்க வேண்டிய பணி எனக்கு இடப்பட்டது.
சிவயோக சமாஜம் உருவான பின்னர் சுவாமி என்னை பேசும்படி கட்டளை இடுவார். எதைப்பற்றிப் பேச, என்னத்தைப் பேச என்று சுவாமியிடம் நான் கேட்பேன்.
ஜெயச்சந்திரன் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசினால் போதும் என்பார். தரப்படும் நேரம்மட்டும் குறுகியதாக இருக்கும். பத்து அல்லது பதி னைந்து நிமிடங்கள் தான். ஒரு நிமிடங்கூட பேச்சு நீடிப்பதில்லை. ஒரு நிமி டங்கூடக் குறைவதுமில்லை. அதுவும் அவர் செயலே.
கீதை வகுப்புக்கள் கூட சுவாமியின் கட்டளைப்படி தொடர்ந்து பல வாரங்கள் சமாஜத்தில் நடத்தப்பட்டது. திருமந்திரம், தேவாரம், வேதமந்திரங் கள் சுவாமியின் கட்டளைப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. பல வற்றை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் என்னை ஆத்மீகத்தில் மட்டுமன்றி அறிவாற்றல் பெருக்கி வளர்வதற்கும் சுவாமி அருள்பாலித்தார்.
மனித சுபாவம்:
மனிதருடைய அந்தரங்க உணர்வு தனது சக ஜீவிகளிடம் அன்பும் சமரச பாவனையும் உடையதாயிருந்தபோதிலும், சொந்த விருப்பு வெறுப்புகளுக்குப் பங்கம் விளையும் பொழுது மனித சுபா வம் கொடிய விலங்குகளைவிட மூர்க்க குணமுடையதாகின்றது.
நேற்று வர்ையிலும் இனிமையாகவும் நன்மையாகவும் போற் றிப் புகழ்ந்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகைமையும் உடை யவைகளாகவே மாறிவிடுகின்றன. பகைமை கொண்ட மனமும் பாகனில்லாத யானையும் ஒன்றே. இங்ங்ணம் சுயநலத்தால் வெறுப் பும் பகைமையும் கொண்டு சீறும் மனம் நல்ல குணங்களெல்லா மிழந்து மதயானை போன்று தனக்கும் சமுதாயத்திற்கும் பெருங் கேடுகளை விளைவிக்கின்றது.
இப்படியான கரவுக் குணத்திலிருந்தெழுந்த விளைவுகள் தனி
மனிதனிலிருந்து உலக ரீதியில் தோன்றிக் கொண்டிருக்கும் சகல தொல்லைகளுக்கும் மூல காரணம்.
-றுரீமத் சுவாமி கெங்காதரானந்தா
12

1973ஆம் வருடம் ஒரு நாள் காலை சுவாமி என்னை அழைத்தார். ஒரு ஜெர்மன் அன்பர் குண்டர் என்பவரையும் அவருடன் வந்த அவருடைய எதிர்கால மனைவியாக வரவிருந்த ஒரு ஜெர்மன் பெண்மணியையும் திருக் கோணேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்று வரும்படி பணித்தார். ஜெர்மனியராகிய இவர்களது திருமணம் சுவாமியினது ஆசியுடன் சிவயோகபுர நடேசர் கோவி லில் இந்து கலாச்சாரமுறைப்படி நடந்தேறியது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்று. மேற்குறிப்பிட்ட இருவரையும் கோணேசர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றேன். மேலைநாட்டார் இருவருடன் சைவ சித்தாந்தம் பற்றி யும் ஆகமங்கள் பற்றியும் கோவில் வழிபாட்டு முறைகள் பற்றியும் அளவளா வுதற்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டளவில் முப்பது நாற்பது அவுஸ்திரிய சுற்றுலா பயணிகள் சமாஜத்திற்கு வருகை தந்தனர். சுவாமிஜியின் அழைப்பின்பேரில் சுவாமிஜி ஆசனப்பயிற்சிகள் பற்றித் தமிழில் விளக்கியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
உப்புவெளியில் உல்லாசப்பிரயாணிகள் தங்கும் விடுதியில் அந்த சுற்றுலாப் பயணிகட்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று, மூன்று மணித் தியாலங்கள் பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் பற்றி விரிவுரைகள் சுவாமிஜியின் கட்டளைக்கிணங்க நடத்தப்பட்டது. இதுவும் சுவாமிஜியின் கருணையே.
ஒரு சமயம் டிமங்கே என்ற பிரஞ்சுப் பெண்மணியின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. யோகாசனப்பயிற்சியில் ஈடுபாடுடைய அவர் சுவாமிஜியைச் சந்திக்க விரும்பினார். சுவாமிஜியினிடம் விஷயத்தைக் கூறினேன். அழைத்து வரும்படி கட்டளை இட்டார்.
டிமங்கேயை கூட்டிச்சென்றேன். சுவாமிக்கு என்ன கொடுக்கவேண்டு மென்று டிமங்கே என்னிடம் கேட்கவில்லை. பழக்கடை ஒன்றுக்குச் சென்று பழங்கள் வாங்க வேண்டுமென்றார். சில பல பழங்களை வாங்கிக் கொண்டார்.
பொழுதுசாயும் வேளை, சுவாமியும் நானும் அவ்வம்மையாரும் சுவாமிஜியின் அறையில் அமர்ந்திருந்தோம். இரவாகியது. சம்பாஷணை தொடர்ந்தது. இரண்டு மணித்தியாலம் சென்றிருக்கலாம்.
எதிர்பாராதவிதமாக சுவாமிஜியிடம் மந்திர தீட்சை அளிக்கும்படி அம்மையார் கேட்டார். சுவாமி பின்னிற்கவில்லை. என்னை நோக்கினார். புன் முறுவல் செய்தார். கருணை பொழியும் கண்கள். மந்திரம் உதிர்ந்தது. அந்த மந்திரத்தைக் கூறும்படி கட்டளை இட்டார். அவர் மூன்று முறை மந்திரத்தை உச்சரிக்க நான் அதை மூன்று முறை கூறினேன். என்னை தான் கூறியவாறே டிமங்கே அம்மையாருக்கு கூறும்படி கட்டளை இட்டார். ஒவ்வொரு முறையும் மந்திரம் என்னால் ஒலிக்கப்பட்டதும் டிமங்கே அம்மையார் அதைத்திரும்பக் கூறினார். மூன்று முறை. என் வாழ்க்கையின் பெரும் பயனை அன்று நான் பெற்றேன். வாழ்க சுவாமியின் ஆசிகள். வளர்க வளர்க அவர் தம் புகழ்.
13

Page 11
கங்காமிர்தம் - தனி (2) அதியுயர் சாதனை
உலகில் பிறந்த ஒவ் வொரு மனிதனும் தன்னை அறிய தான் வந்த நோக்கம் அறிய முயன்றும் முயற்சித் துக் கொண்டும் இருக்கின் றான். மனித வாழ்வின் ஒவ் வொரு கணப் பொழுதும் அகத்தே வசிக்கும் சர்வ வியாபக உண்மையை அறி. யாது. குழந்தை முதல் பெரி யோர் வரை பாவிக்கப்படும் பதமே "நான்” இந்த "நான்" தெளிவாக நுணுகி ஆராயப்பட வேண்டும்.
தன்னைத் தரிசிப்ப வனே தன்னிடத்தில் ஒளி யைக் காண முடியும். தன் னிடத்தல் ஒளியைக் காண்ப வனே பளிங்குக் கண்ணாடி போல் தன்ஞள்ளே உறை யும் தூய அறிவு மயமாருக்கும் பரமானந்தப் பரவஸ்துவை அறிய முடியும்.
"ஊனுக்குள் நீனின்றுலா வினதைக் காணாமல் நானென்றிருந்து நலமிழந்தேன் பூரணமே”
"உடலுக்குள் நீ நின்றுலாவினதைக் காணாமல் கடல்மலைதோறுந் திரிந்து காலலுத்தேன் பூரணமே”
"என்னையறியாம லெனக்குள்ளே நீயிருக்க உன்னையறியாம லுடலிழந்தேன் பூரணமே”
“எனக்குள்ளே நீயிருக்க வுனக்குள்ளே நானிருக்க மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே”
என்று பட்டினத்தாரும்
14
 

"தன்னையறியத் தனக்கொரு தீங்கில்லை தன்னை யறியாமற்றான் கெடுகின்றான் தன்னையறியுமறிவை யறிந்தபின் தன்னையர்ச்சிக்கத் தானிருந்தானே"
என்று திருமூலரும
நானதுவாய் நிற்க்கு வண்ணம் - வெண்ணிலாவே ஒரு ஞானநெறி சொல்லு கண்டாய் - வெண்ணிலாவே ஞானமாய் விளங்கும் வெண்ணிலாவே - என்னை நானறியச் சொல்லு கண்டாய் வெண்ணிலாவே
என்று வள்ளளாரும் தன்னை தன் சொரூபத்தை தான் அறிய வேண்டும் என்று வலி ருறுத்துகிறார்கள் t
முறைப்படி அணுகுபவனும் அமைதியான உயர்ந்த உள்ளத்தை உடையவனும் புலன்களை அடக்கியாளும் வலிமை நிறைந்தவனும் "நான்” என்பது தூய்மையின் நித்தியமான பிறப்பு లిDUL வவியாபியாக, சூக்கும சுயஞ்ஜோதியான சச்சிதானந்தமே என்று அறிகிறான்.
உலகிலுள்ள வேற்றுமைக்கு மூலகாரணம் தன்னையறியாதிருத்தலே தன்னை அறிய முயலும் சாதனையை சாதகன் விசாரணையாகத் தொடங்கும் போது முதல் எழும் கேள்வி நான் யார்? நானார்?
9 L-6)
அழியும் இயல்புள்ள இவ்வுடல் "நான்” அன்று. பிறப்பு இறப்பு இப் பெளதிக உடலுக்கு உரியன. உறக்கத்தில் உடம்பின் சார்பின்றி நீ இருக் கின்றாய். ஆதிசங்கரர், ஹஸ்தமாலகர் போன்ற ஞானிகள் தங்கள் தங்கள் பெளதிக உடலிருந்து வேறாகிப் பிரிந்து வேறு உடலுக்குள் பிரவேசித்தி ருக்கிறார்கள். இது பரகாயப்பிரவேசம் எனப்படும். இவ்வுடலுக்கு பசி, களைப்பு தாகம் என்பன உண்டு.
பிராணன் - உயிர்சக்தி
பிராணன் அல்லது உயிர்ச்சக்தி "நான்” அன்று. பிராணாயாமம் என்றும் சாதனைமூலம் நீபிராணனைக் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தப்படுவது கட்டுப்
படுத்தப்பட்டதிலும் வேறானது. அது உன் கருவி மாத்திரமே. பிராணனுக்கு பசி, களைப்பு, தாகம் என்பன உண்டு.
15

Page 12
மனது
மனமும் "நான்" அன்று. நீ மனதையும் எண்ணங்களையும் அடக்க லாம். அடக்குபவன் அடக்கப்பட்டதிலிருந்து வேறு. இன்பதுன்பம் சொர்க்கம் நரகம் என்பன மனதின் குணங்கள்.
நான் யார்? நான் யார்? நான் யார்? ஆராய்பவன் அறிகின்றான். உணர்கின்றான். விழிப்புணர்ச்சிகுள்ளாகின்றான் அவன் பேரின்பப் பெருவாழ் வில் இணைகிறான்.
ஆத்மாவை ஆத்மபோதத்தை, ஆத்ம விசாரத்தை, ஆத்ம தரிசனத்தை அறிய அறிவிக்க அருளிய மார்க்கங்களில் ஒன்றே சுவாமியின் நான் யார்? நானார்? என்ற விசார மார்க்கம்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் சுவாமிஜியின் நானார் என்ற விசார மார்க்கம் என்னும் அதி உயர்ந்த ஆத்ம சாதனையில் ஆழ்ந்து தன்னுள் மூழ்கி ஆத்ம நிஷ்டனாக இருந்து ஈசனுக்கர்ப்பணம் செய்வோமாக! இத்த கைய அதியுயர்ந்த ஆத்ம சாதனையைச் செய்யும் சாதகர்களுக்கு சுவாமிஜி யின் அருளாசிகள் வழிநடத்தி வழிகாட்டி அருளும் என்பதில் ஐயமில்லை.
மனதை ஆத்மாவில் லயம் செய்து நிறுத்தும் நிலைதான் மனோல யம். மனவொடுக்கம். மனநாசம், மனதைக் கடந்தநிலை என்றெல்லாஞ் சொல்லப்படுவதும.தே. 4. (வஜனாம்ருதம் - 51)
"உனது அறிவைப்பற்றிய அறிவு உனக்கில்லாமல் இருப்பதே உனது துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம்”
(வஜனம்ருதம் - 152)
"உனது துன்பங்களைத் தீர்க்கும் சக்தி உனக்கில்லாமலிருக்க லாம். ஆயினும் அதனைத் தீர்க்கக் கூடிய ஒரு சக்தி உன்னிடமிருக்கின்றது. அதற்கு உன்னைச் சுயாதீனப்படுத்தினால் காற்றில் பறந்து போகும் சாம்பல் போன்று துன்பங்களெல்லாம் பறந்து விடும்." (வஜனாம்ருதம் - 9)
"கருணை வள்ளலே அஞ்ஞானத்தால் தனக்குத்தானே துன்பமிளைத் துக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு தெளிந்த மெய்யுணர்வைக் கொடுப்பாயாக! அவர்களைத் தெய்வவாசனை உடையவர்களாக்குக! ஆத்ம சுகம் என்ற அமிர்தத்தின் ஒரு துளியை என்றாலும் அவர்களுடைய நெஞ் சில் ஊற்றி விடுக." (பரமேஸ்வரா - ஞானமண்டலம்)
ஆத்மா பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை இது முன் இல்லாதிருந்து பிறகு பிறந்ததுமல்ல. ஆத்மா பிறப்பு இறப்பு அற்றது. குன்றாதது. வளராதது. காயம் அழிக்கப்பட்டாலும் அவன் அழியான்."
(கீதையின் அருளுரை - சுலோ-20 ஞான மண்டலம்)
16

IG uni
றுநீமத் சுவாமி கெங்காதரானந்தா
இந்த ஊன் உடலி லிருந்து முற்றிலும் வேறாய் அழிவற்றதாய் தூய அறிவுமயமாயி ருக்கும் பரமானந்தப் பரவஸ்து ஒன்று இருக் கின்றதென்பது சமயத் தின் முற்றான முடிவு. இது ஆத்மாவென்றும் பிரம்மமென்றும், சிவ மென்றும், விஷ்ணு வென்றும் இன்னும் பல பெயர்களாலும்அழைக் கப்படுகின்றது. சுயம் பிரகாச மாயிருக்கின்ற இந்த ஆத்மா ஜெனன மரணமற்றதாயும்,புலன் களால் அறிய முடியாத தாயும் சுயப்பிரகாசமா யிருக்கின்றது. இந்த ஆத்ம தரிசனமே வாழ்வின் இறுதி இலட்சியமென்று சான்றோர்களின் ஏகோபித்த முடிவு. தோற்றம் அனைத்திற்கும் அடிப்படைத் தத்துவமான ஆத்ம சொரூபத்தை அறியும் முயற்சியே பெருமுயற்சி. இதை விசாரித்தறியும் முறையே ஆத்மவிசாரம். இதை உணரும் உணர்வே மெய் யுணர்வு. இந்தக் காட்சியே மெய்க்காட்சி. இதில் இரண்டற கலப்பதை ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம். இந்த ஐக்கிய பாவமே ஜனன மரணமற்ற பெருநிலையென்றும், மோட்சமென்றும், ஜீவன்முக்தி நிலையென்றும் கூறப் படுகின்றது. சம்சார துக்கத்தை அழித்து சர்வசுத்த சுதந்திரப் பேரின்பநிலை யில் நிலைபெற்றிருக்கச் செய்யும் அழியா நிலை இது. அகண்ட பரிபூரண ஆனந்தமாய் அழிவற்றதாயிருக்கும் ஏகப் பரம்பொருளை அறிந்து அதில் இரண்டறக்கலப்பது பரமசாந்திநிலை. மனம் புத்திகளைத் தாண்டி பேத்புத்தியகன்று உபாதிகள் எதுவுமின்றி சமரச நிலையில் நின்று கானும் காட்சியே ஆத்ம தரிசனம்.
17

Page 13
இந்த ஆத்மா சங்கற்பவிகற்பாதிகளற்றது. கூறுபடாத குணாதித சொரூபம். குணங்குறியின்றி நித்தியமாய்ப் பிரகாசிக்கும் ஏகாத்ம சொரூபன். இந்த ஆத்ம சொரூபமே நீ! இதை அறி. இதுவே வேத, வேதாந்தங்களில் விளக்கிக் கூறப்படுகிறது. நான் எனது என்ற பேதபுத்தியால் ஆத்மதரிசனம் மறைபட்டிருக்கிறது. நான் என்னும் தற்போதம் அழிந்து முடிவில் தோன்றும் போதமே ஆத்மபோதம். நான் எனது என்ற அகந்தையால் ஜீவ பேதங்களும் ஆணவமலங்களும் உண்டாகின்றது. நான் என்பதில் பஞ்சகோசரூபமான தூல, சூக்கும, காரண சரீரங்கள் அடங்கிவிட்டன. நானார் என்ற விசாரமார்க்க சாதனையால் இம் மூவித பேதங்களையும் அகற்றிவிட லாம். அந்தக் கரணத்திற்கு இதயமே இருப்பிடம். இந்திரியங்கள் புறக் கரணம். சுத்த சத்துவமணம் தாமோ குணத்தின் சேர்க்கையால் ஜெகத்தாகத் தோற்றமளிக்கின்றது. ரஜோ குணத்தின் தோஷத்தால் நான், நீ என்ற பேத புத்தியும், அதனால் பாவ புண்ணியங்களையும் செய்து ஜனன மரணங்களில் சுழன்று கொண்டிருக்கின்றது. பாவ புண்ணியத்தாலுண்டாகும் ஜெனன மர ணங்களை அகற்றி தான் தானாக இருக்கும் நிலை மோட்ச நிலை.
நானார் என்ற விசாரமார்க்கம்'
மனதை முழு நாசஞ் செய்யும் அதியுயர்ந்த ஆத்ம சாதனம் திட வைராக்கியத்துடன் நர்ண்யார் என்ற விசாரத்தில் ஆழ்ந்து தன்னுள் மூழ்கி ஆத்ம நிஷ்டனாயிருப்பதே தன்னை ஈசனுக்கர்ப்பணம் செய்தலாகும். இந்த விசாரமார்க்கத்துடன் பூஜை, ஜெபம் முதலியவைகள் செய்துவருவனாகில் சாதகன் எளிதில் முன்னேற்றமடைவான். நான் என்பதில் இரண்டுவிதமுண்டு. ஒன்று அகந்தையால் ஏற்படும் நான் என்ற தற்பெருமை மற்றது சங்கர்ப்பவிகர்ப்பாதிகளகற்றி உள்ளத்தில் ஆழ்ந்து பார்க்கும்போது நன்கு பிரகாசித்துக்காணும் சச்சிதானந்த சொரூபமாயிருக் கும் சிவம். இதுவே சத்திய சொரூபியாயிருக்கின்ற உண்மையான நான் உடலல்ல, மனமல்ல, பிராணனுமல்ல, ஏனைய கர்ம ஞானேந்திரியங்களு மல்ல. இவற்றையெல்லாம் விலக்கி மிஞ்சியிருப்பதெதோ அதுவே அது. இதன் இயல்பு சத், சித் ஆனந்தம். உள்ள மெய்ப்பொருளும் இதுவேதான். நானாரென்ற விசாரணையும் ஒருவித மனோவிருத்திதான். எனினும் முள்ளை முள்ளால் எடுப்பது போல் விசாரணையின் இறுதி முடிவில் விசாரணைக் குரிய மனதின் மற்றப்பகுதியும் அழிந்துவிடும். எஞ்சி நிற்பது எதுவோ அதுவே ஆத்மா. சகல வாஸனைகளும் அந்த இடத்தில் பரம்பொருளின் காட்சி கிடைக்கின்றது. (நான் என்ற சுகம் அழிகின்றது. இந்நிலையில் எல்லா விருத்திகளும் அடங்கி ஒடுங்கி விடுகின்றன விசாரமார்க்கத்தை
18

'சாதனையாகக் கொள்ளும் சாதகன் எதைச் செய்கின்ற பொழுதும் நான்
"ெ "லெறேன் என்ற அகந்தையை அகற்றிச் செய்தல் வேண்டும்.)
நான்யார் என்ற விசாரணையை சாதனையாக கொள்ளும் சாதகன் பூர்வாசனைகளும், வினைகளும் அகலுமா இல்லையா? என்ற சந்தேகத் திற்கு இடம் கொடாது உறுதியுடன் விசாரத்தில் ஆழ்ந்து மூழ்கி விடவேண் டும். சந்தேகம் உண்டாகும் போதெல்லாம் யாருக்கு இந்த சந்தேகம் வந்த தென்று விசாரணையால் அறிய வேண்டும். எண்ணங்கள் கிளம்பும்போதெல் லாம் எண்ணம் எழுந்த இடத்தில் வைத்து நசுக்கி விட வேண்டும். திட வைராக்கியத்துடன் பெருமுயற்ச்சி செய்து விசாரணை செய்து கொண்டு போகும் பொழுது இறுதியில் மனது அடங்கி சகலவித வினைகளும் அகன்று சகல வாசனைகளும் அந்த இடத்தில் பரம்பொருளின் காட்சி கிடைக்கும்.
(சுவாமிஜி அவர்கள் சொல்லச் சொல்ல பண்டிதர். இ. வடிவேல் அவர்களால் எழுதிப்பட்டு சுவாமிஜி அவர்களால் திருத்தப்பட்ட கட்டுரை)
bö5 elîği:
காலம் போகப் போகச் சிறிதேனும் உள்ளக் களிப்புடன் அமைதி நிறைந்த ஆத்மார்த்தமான ஒருவரைக் காண்பதே அரிதாகி விட்டது.
மனிதன் தன் தன் உணர்வுகளை, செயல்பாடுகளை உன் னிக் கவனிப்பதில்லை. மனம் தோற்றுவிக்கும் விருப்பு வெறுப்புக் களின் பலாபலன்களை அலசி ஆராய்வதுமில்லை.
கெடுபிடிக்குரிய யதார்த்த காரணங்கள் வேறெங்கேயோ இருக்கையில், விருப்பு வெறுப்புக்க ளை மாத்திரம் முன்வைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்தால் மேலும் புதிய பிரச்சினை களைத் தோற்றுவிக்கும்.
மனிதன் மனச் சாட்சியை நேர் கோட்டில் வைத்துக் காரிய காரணங்கைளப் பார்த்தறியப் பழக வேண்டும்.
-றுரீமத் சுவாமி கெங்காதரானந்தா
19

Page 14
கங்காமிர்தம் - தனி (3) அரிய நூல்கள்
வாழ்க்கை என்பது
- X கர்மங்களின் ஒரு
স্বল্পনা-কল্প தொகுப்பு. உண்பது
உறங்குவது கூட
ಭಜ್ಜಿ கர்மங்கள் அல்லது
செயல்கள். சரீர சுகம்,
மன சுகம், ஆத்மசுகம்
இவைகள் இல்லாத
வாழ்க்கை விரக்தியும்,
வேதனையும், ஜீவிதக்
கிலேசமும் உடைய
தாக இருக்கும்.
"கரும மாற்றம், நியதி நியமங்களைய றியாமல் வந்த விரக்தி யும்வெறுப்பும் அயோத் தியில் வைத்து இரா மனுக்கும், குருஷெத் திரத்தில் வைத் து அருச் சுனனு க் கும் உண்டாயின. த க்க தருணத்தில் இராம னுக்கு தனது குலகுரு வாகிய வசிஷ்டரிடத் திலிருந்தும் அருச்சுன னுக்கு கிருஷ்ணரிடத் தி லிருந்தும் கர்ம ரகசியங்கள் உபதேச
மாகக் கிடைத்தன".
(ஞானமண்டலம்-கர்ம ரகசியம்
s
.s. th. e - W. W' العامة.
இதன் பயனாக வசிட்டரிடமிருந்து பாலயோக வாசிட்டம். கிருஷ்ண ரிடமிருந்து பகவத்கீதையும் உபதேசமாகக் கிடைத்தது.
20
 
 
 

வாழ்க்கையில் விரக்தியடைந்த எங்களுக்கு மீண்டும் கர்மத் திறமை யுடையவர்களாக மாறுவதற்கு மாற்றுவதற்கு, கிடைத்த அரிய உபதேச நூல்களே சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் இயற்றிய ஞானமண்டலம் அமிர்த வர்ஷம் வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விடும்போது எமக்கு ஊன்று கோலாய் உதவிய அமிர்தவாசங்களே சுவாமி தன்னால் இயற்றிய வஜனாம்ருதம்.
சுவாமிஜி அவர்களின் ஞானமண்டலத்தில் தனிமனிதச் சமுதாய வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குரிய காரண காரியங்கள் யதார்த்தமாகக் கூறப் பட்டதோடு அப்பிரச்சனைகளைச் சாதுரியமாக தீர்த்துக் கருமமாற்றும் முறை யும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கர்ம, ஞான, பக்தி யோக மார்க்கங்களை, தெளிவுபடுத்துவதோடு சாதனைகளின் விளக்கமும் சாதகர்களின் கடைப் பிடிக்கும் முறைகளும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
சுவாமிஜி அவர்கள் இயற்றிய வஜனாம்ருதத்தில் குறிப்பிட்ட வாசகங் கள் ஒவ்வொன்றும் சுவாமிஜியின் வாழ்க்கை அனுபவங்களே, உண்மைகளே. ஒவ்வொரு சம்பவங்களும் நிகழும் போதோ நிகழ்ந்து முடிந்த போதோ நிகழ இருக்கும் போதோ சுவாமிஜி அவர்களின் குறிப்பில் பதிந்த வாழ்க்கையின் அனுபவ உண்மைகளே. இத்தகைய உண்மைககள் சிந்தித்து உணர்ந்து எமது மனம், வாக்கு, காயம் என்பவற்றைச் சுத்திகரித்து பிறப்பு இறப்பு என்ற நியதிக்கிடையில் இம் மண்ணுலகில் தாமரை இலையில் நீர் போல் வாழ்ந்து குறையிலும் நிறையிலும் நிரந்தரமான திருப்தியும் நிரந்தரமான சுகத்துடன் வாழலாம் என்பது சாஸ்வதமான உண்மையாகும்.
சுவாமிஜிஅவர்கள் மக்களின் கருணைகாரணமாக மக்களை உயர்த்து வதற்காக, மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்து வழிகாட்டுவதற் காக மக்களின் ஆத்மீக முன்னேற்றத்திற்காக காலத்துக்கு காலம் சுவாமிஜி அருளிய உபந்நியாசங்களின் தொகுப்பே அமிர்தவர்ஷம்.
கால மாற்றத்தால் அல்லது தற்கால பழக்கவழக்கத்தினால் சரீரம், மனம், புத்தி இவைகளில் காணும் பலவித வித்தியாசங்களைக் கருத்தில் வைத்தும், முற்றிலும் சரீர மன சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டும் துறவறம், இல்லறம் ஆண், பெண் என்ற பேதங்கள் இன்றி மனதை விரை வில் ஒரு முகப்படுத்தக் கூடிய எளிதான யோகமுறைகளைப் பின்பற்றி குறுகிய காலத்தில் பலவிதமான ஆத்மீக அனுபவங்களை பெற உதவும் நூலே சுவாமியினால் இயற்றப்பட்ட அலையாத இன்பம்.
தனிமையிலிருந்து மீண்டும் மீண்டும் இவ்வரிய நூல்களைப் பாராய ணம் செய்யத் தொடங்கினால் நாளடைவில் இவ்வரிய நூல்களின் உட் பொருளில் இரண்டறக் கலந்து அவ்வரிய உபதேசங்களை எமது வாழ்வில் இணைத்து வாழ்ந்தால் இவ்வையக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளை யாட்டாகவே அமையும்.
"கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பயன் ஏற்படும்" (ஞானமண்டலம்)
21

Page 15
ஒளி மயமான வாழ்வு றுநீமத் சுவாமி கெங்காதரானந்தா
நன்மையும், தீமை யும் நம்மைக் கை விரு கின்றனவா? நன்மைக் கும், தீமைக் கும் பின் அனைத்தையும் கடந்து நிற் (35LD 2 -535(6b60)Lulu diu சொரூபத்தை அறிய வேண் டும். அறிந்த பின் உங்கள் பார்வையில் அனைத்தும் நல்லதாகவே தோன்றும். தீர்வு காண முடியாத வாழ்க் கைப் பிரச்சனைகள் அறவே நீங்கும். துயரம் தீர்ந்த சுக அனுபவம் ஒவ்வொரு நிமி டத்திலும் அனுபவ மாத்திர மாய் நிற்கும். வாழ்க்கை என் பது ஒரு கடினமான போராட் டம். பிரச்சனைகள் நெருக் கிக் கொண்டிருக்கிறதென்ப தில் சந்தேகமில்லை. தைரியமுடன் அதனைக் கடந்து செல்ல வேண்டும். அதனைக் கடந்து செல்லும் அற்புதமான சக்தி, உங்களுடைய ஹிருதயத் திலிருக்கிறது. அந்த ஆத்ம சக்தியை உபயோகப் படுத்தி, சகலவிதமான இன்ப துன்பங்களையும் ஒதுக்கி மேலே செல்லுங்கள்.
இ.து ஒவ்வொரு மனிதனாலும் சாதிக்கக் கூடியது. அனுபவத்திற்குக் கொண்டு வரக் கூடியது. அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும். "விதி" என்பதற்கு நீங்கள் தான் கர்த்தா. உங்களால் படைக்கப்பட்ட நன்மை தீமைகளிலிருந்து நீங்களாகவே விடுதலை அடைய வேண்டும். ஜீவசக்தியும், பரமாத்ம சக்தி யும் ஐக்கியப்படும்பொழுது அது தானாகவே நிகழக் கூடியது. மனம், புத்தி, சரீரம் இம் மூன்றையும் தன் வசப்படுத்தி, பிரபஞ்ச நியதி நியமங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். இதற்காகத் தனித்துறவும் வேண்டும் என்ப தில்லை. அன்றாடக் கடமைகளைத் தார்மீக நெறியிற் செயற்படுத்தினால் நாளடைவில் ஹிருதய சுத்தி கிடைக்கும். அழுக்கற்ற கண்ணாடியில் தனது முகம் தெளிந்து காண்பதுபோல் மாசற்ற ஹிருதயத்தில் தன்னைத்தான் காண முடியும்.
22
 

உன்னுடைய எதிர்காலத்தை நிச்சயிப்பது நீ பழம் வினைகளி லிருந்து விமுக்தனாகும் ஆத்மசக்தி உன்னிடமிருக்கின்றது. அந்தச் சக்தி தான் நீ நிரோட்டத்தைக் கிழித்துச் செல்லும் வள்ளம் போன்று தன்னறிவால் முன் செல்வாய். உன்னை ஓர் ஆத்மீக வீரனாக மாற்றுக. வேற்றுமைகளும் துன்பங்களும் நிறைந்த பிரபஞ்ச நியமங்களில், குற்றமற்ற இன்பம் நிறைந்த ஒன்றை எல்லாவற்றிலும் எப்பொழுதும் காண முயற்சிக்க வேண்டும். அது தான் வாழும் வாழ்க்கை.
ga
ഉ-ഓക്ക് Ifഞ്ഞാ:
கேடுகள் பூமியில் இருந்தும் வானத்தில் இருநஹ தும் உருக் கெள்வதில்லை. அவைகள் மனித மனத்தில் இருந்து சிருஷ்டிக் கப்படுகின்றன.
பேராசையும் சுயநலமும் கேடுகளை வளர்த்தெடுக்கின்றன.
இவ்விரு நீச குணங்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வரு கின்ற உலகம் சர்வ நாசத்திற்கு ஊர்ந்து செல்லக் கூடும்.
மிலேச்ச குணங்கள் கண்களைத் திசைமாறிப் பார்ப்பதற்குப் பழக்கி வைத்திருக்கின்றபடியால் அது நேரான மார்க்கத்தைப் பார்ப் பதற்குரிய ஒளியை இழந்து வருகின்றது.
ஜனங்களுடைய நல்ல சுபாவந்தான் உலக சேமத்தின் ஆதார பிஜம். இதை ஒவ்வொருவரும் திடமாகவே கருத்தில் ஊன்ற வேண் (Sub.
மனிதர் களங்கமற்ற நற்குண சீலராய் வாழ்ந்தால் கலகமும் கலக்கமும் இருக்க மாட்டா. எதார்த்தம் இவ்வாறிருக்கையில் வெவ் வேறு மார்க்கங்களில் யோக சேமங்களைத் தேடப் பார்ப்பது அர்த்த மற்றதாய் விடுகின்றது.
ஆத்மீக சிட்ஷணங்கள் சமய ஆசார அனுஷ்டானங்கள் எல் லாம் மனக் கசடுகளை உருக்கி மனிதர்களை நல்ல சுபாவ சுத்தி யுடையவர்களாக்குவதற்கு உரிய உபாயங்களாகும்.
மனிதர் சர்வ சக்திகளையும் உபயோகித்து நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும்.
-றுரீமத் சுவாமி கெங்காதரானந்தா
23

Page 16
கங்காமிர்தம் - தளி (4)
உபதேசம்
சுவாமிஜி அவர் களின் உபதேசங்கள் பலவகைப்படும், பல தரப்படும். அவர்களின் உபதேசங்கள் ஆத்மீ கத்துக்கு உறுதுணை யாகவும், லெளகிகத் துக்கு மருந்தாகவும் அமைவதோடு அவர வர் மனப்பக்குவத் திற்கும் ஏற்ப ஜீர ணி க்கும் தன்மை உடையதாக விளங் கும்.
அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை உணர்த்துவதாகவோ, கரும நோய்களைக் களைந்து தீர்க்கும் மருந்தாகவோ, சாதகர்களின் ஆத்ம சாதனைக்கு வழிகாட்டுவதாகவோ, லெளகிகப் பிரச்சனைகளுக்கு தீர்வா கவோ, சமுதாயப் பிரச்சனைகளை பிரதிபலிப்பதாகவோ, தீர்க்க தரிசன உண்மை வெளிப்பாடாகவோ, தனிபட்ட பக்தர்களின் கருணை காரணமா கவோ செய்யும்.
இவ்வுபதேசமானது கலை, கலாச்சாரம், கல்வி, அரசியல், அறிவி யல், பொருளாதாரம் போன்றவற்றைத் தழுவியும், குடும்பச் சண்டை தொடக்கம் தேசியக் கலவரங்கள் வரையும், ஆத்மீக வாழ்வு தொடக்கம் லெளகிக வாழ்வு வரை தொட்டு நிற்பதோடு அதனால் தோன்றுகின்ற சகல பிரச்சனைகளுக் கும் காரண காரியங்களும், நுட்பமாக எடுத்துக் கூறுவதோடு அதைக் கருத் துான்றிப் படிப்பதால் அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய நுண்ணறிவும், கர்மத் திறமையும் தரவல்லதாகவும் அமைந்து விடும்.
தனிப்பட்ட உபதேசம்
சுவாமிஜி அவர்களின் தனிப்பட்ட பக்தர்களுக்கு செய்யும் உபதே சம் அன்புடன் கூடிய அறிவு வார்த்தைகளாக, அனுபவ நிகழ்ச்சிகளாக
கண்டிப்புடன் கூடிய அன்புக்கட்டளைகளாக, ஏன் தீர்க்க தரிசனமாக அவர் கள் வாழ்வில் நிகழ்ந்து முடிந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும், நிகழப் போகும்
24
 

நிகழ்ச்சிகளுக்கு பரிகாரமாகவும் அமைந்து விடுகிறது. கூறப்படும் அறிவுரை கள், உபதேசங்கள், அவரவர்களுக்கு ஏற்படும் மனச்சஞ்சலங்களை துன்பங் களை போக்குவதற்காகவோ அவர்கள் மூலம் பிறிதொருவருக்கு பரிமாற்றப் படும் அறிவுரையாகவோ அமைந்து விடும். யாருக்கு? யார் மூலம்? யாருக்காக? என்பதற்கு விளக்கம் புரியாத புதிராகவே அமைந்து விடும்.
இவ்வுபதேசமானது அவரவர் பிரார்ப்த்த பலனுக்கும், தொடர்புக்கும், அவரவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தின் கொள்ளளவுக்கும் தக்கதாக அமைந்து விடும். இவ்வுபதேசமானது அந்தந்த பக்தனுக்கு மட்டுமே உரியது. பயன் கொடுக்கக் கூடியது. அப்பக்தனின் பிரார்ப்த்த, சஞ்சித, ஆகாமிய வினைகளைக் களைந்து போக்குவதற்கு வைத்தியமாக எழுதிக் கொடுக்கும் மருந்துப் பட்டியல் போன்றது.
இத்தகைய கருணையுடன் கூடிய அறிவுரைகளை, உபதேசங்களை, கடைப்பிடித்து வாழ்பவர்கள், ஒழுகுபவர்கள் அவ்வுபதேசத்துக்குரிய பலனை அடைந்து இன்புற்று வாழ்வர்.
உபந்நியாசம்
சுவாமிஜி அவர்கள் மக்களின் கருணை காரணமாக, மக்களை உயர்த்துவதற்காக, வழிகாட்டுவதற்காக காலத்துக்குக்காலம் செய்யப்படும் உபதேசங்கள் உபந்நியாசங்களாக அமைந்து விடும்.
ஏகாதசி, சிவராத்திரி போன்ற புனித நாட்களிலும், கூட்டுப்பிரார்த் தனைகளின் போதும், துண்டுப்பிரசுரங்களின் வாயிலாகவும், சில தின ஏடு களில் வெளி வந்த கட்டுரைகளாகவும், அரிய நூல்கள் மூலமும், அரிய கருத்துக்களை இத்தகைய அரிய உபதேசங்களை ஒவ்வொருவரும் அறிந்து அதற்குரிய பலனை அடைய வேண்டும் என்று அருளியுள்ளார்கள்.
இவ்வுபதேசமானது காலமாற்றத்திற்கு அல்லது தற்காலப் பழக்க வழக்கத்திற்கு பொருந்தும் வண்ணம் துறவறம், இல்லறம் என்ற பேதங்கள் இன்றி அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து வாழக் கூடியதாக அமையும்.
புத்தம்புதியதும்,விசாலமானதும், இயற்கை மாற்றங்களை உட்கொள்
ளக் கூடியதுமான ஒரு சமுதாயத்தை, ஒர் சம்பூர்ண வாழ்க்கையை வாழ இவ்வுபதேசங்கள் வழிவகுக்கும்.
25

Page 17
ஆகவே நாம் ஒவ்வொருவரும் பேசுவதிலும், கேட்பதிலும், வாசிப்பதிலும் மாத்திரம் நிற்காமல் சுவாமிஜியின் உபதேசங்களைக் கடைப்பிடித்து அனு பவத்திற்கு கொண்டு வந்து அமைதியும், சுகமும், சாந்தமும், சமாதானமும் நிறைந்த தெய்வீக வாழ்வை வாழ்வோமாக.
bL6DLO :- 9 LJ65d LĎ -l
ஒவ்வொருவருக்கும் தமது சொந்தக்கடமைகளிலிருந்து தேசக் கடமைவரையிலும் பலவகையான கடமைகள் இருக்கின்றன. ஒருவன் இல் லறத்தில் இருக்கும்போது தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார், உற வினர் போன்றவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள், அவன் செய்யும் தொழிற்துறையில் செய்யவேண்டிய கடமைகள், தான் பிறந்த நாட்டிற்கும் தாய்மொழிக்கும் செய்யவேண்டிய கடமைகள், துறவிகளுக்கும், உலகிற்கும் செய்ய வேண்டிய கடமைகள்.
இக்கடமைகள்யாவும் சித்தகத்தியுடனும், நிறைமனத்துடனும், அன்பு டனும், ஆர்வத்துடனும், இலட்சியத்துக்கு பொருந்தும் வண்ணம் செய்து கடமையின் பலாபலனை இலட்சியத்துக்கு சமர்ப்பணம் பண்ண வேண்டும். இவ்விதம் சீரிய குறிக்கோளுடன் வாழும் வாழ்க்கை சுதந்திரத்துடனும், சுகத்துடனும் கூடி அமையும் வாழ்க்கையாகப் பரிணமிக்கும்.
"சுயநலம் கருதி கடமையும், சேவையும் செய்கின்றவர்களுக்கு இறு தியில் அதுவே துன்பத்திற்கு காரணமாகின்றது."
(வஜனாம்ருதம் - 75)
"அன்றாடக் கடமைகளைப் பகடைக் காய்களை உருட்டி விளை யாடுவது போன்று விளையாடினால் ஜீவிதமும் ஒரு சூது விளையாட்டாகவே முடியும். எனவே கடமைகளை நெறிப்படுத்திப் பொறுப்புணர்ச்சியோடு செய்க." (வஜனாம்ருதம் - 19)
"குறியில்லாமல் அம்பெய்தால் எய்த அம்பால் ஆபத்துக்களே விளையும். இவ்வாறானதுதான் ஒரு சிறந்த குறிக்கோளில்லாத வாழ்க்கை யும். மனிதன் ஒரு உயர்ந்த இலட்சியத்துடன் வாழ வேண்டும். அன்றாடக் கடமைகளை இலட்சியத்தில் பொருந்தும் வண்ணம் செய்து கடமை யின் பலாபலனாகிய இன்ப துன்பங்களை இலட்சியத்திற்காக சமர்ப் பணம் பண்ண வேண்டும். இவ்விதம் வாழுகின்றவன் சீரிய குறிக்கோளை அடைந்த ஒரு பெருமகனுக்குரிய சுகத்தை அனுபவிக்கின்றான். ஞானம் இதுதான் இலட்சியங்களில் சிறந்தது. ஜீவித தர்மங்களை இந்த இலட்சியத் துடன் இணையாவிட்டால் வாழ்க்கையின் அச்சாணி உடையும். ஜீவாதாரத் தேவைகளில் தன்னிறைவெய்தினாற்கூட மனிதன் அதில் திருப்திப்படுவதில்லை. அதற்கப்பால் ஒரு இதயத் தாகம் இருக்கின்றது. மனிதருடைய மன
26

வேட்கைக்கு முடிவு காணும் அந்த அந்தரங்க ஆத்மீக மூல உணர்வுகளை வித சமுதாயம் புறக்கணிக்கும்போது நீர் வற்றி வறண்டு போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் பறந்து செல்வதுபோன்று அமைதியும் சுகமும் உலகத்தை விட்டு பறந்து செல்லுகின்றன. (வஜனாம்ருதம் - 33).
"உனது கடமைகளைச் செயற்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு இடையூறு விளையாமல் பார்த்துக் கொண்டால், இன்னலும் விரோதமும்
குறையும்.” (வஜனாம்ருதம் - 194) N ༣زہریلی تقلی ، ** "அந்தரங்கசுத்தி இல்லாத நாம ஜெபம் தியானம் போன்றவைகள்
எள்ளளவிலும் பயன் அளிப்பதில்லை. அது வெறும் நாடகமாயும், தன்னை யும் மற்றவர்களையும் ஆத்ம வஞ்சனைக்கு உட்படுத்தும் ஒரு தந்திரமாக வும் மாறலாம்.” (வஜனாம்ருதம் - 35)
"புனித யாத்திரைகள், ஆலய தரிசனம் போன்றவைகளை இறைவ னோடு இணையும் முறையில், திரிகரண சுத்தியுடன் சிறுமைக் குணங்களை நீக்கிச் செய். அழுக்காறுகள் நீங்கும் வண்ணம் அது புனிதமாய் இருக்கட்டும். (வஜனாம்ருதம் - 34)
"நல்லொழுக்கக்குறைவால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் துயரம், கடவுளே! கடவுளே! என்று சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டும் தீர்ந்துவிடாது. நற்செயலால் மனதைப் பரிசுத்தப்படுத்தும்பொழுது எல்லாம் சுகமாய் முடியும். a (வஜனாம்ருதம் - 36)
இதய சுத்தி:- உபதேசம் -2
அசுத்தங்களை மனதில் வைத்து இறைவனை வழிபட்டால் அது கருணை காட்டாது. இரக்கமும் கொள்ளாது மனதிலிருந்து கழிவுகளை நீக்கி வழிபாடியற்றினால் ஆகாததும் ஆகும். வேண்டிநின்றால் பெரும் ஞானமும் கிடைக்கும்.
அரிய மனித ஜென்மம் கிடைத்தும் பஞ்சமா பாதகங்களாகிய மது, மாமிசம், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை, இலஞ்சம் போன்றவற்றால் ஜென்மத்தைப் பாழாக்கி விடாது, பகை, பொறாமை, சினம், கோபம், வஞ்சனை முதலிய புன்நெறி உணர்வுகளை அறவே நீக்கி இருதயத்தை தூய்மையுடன் ஆளுகின்ற திறமையும் சக்தியும் பெற்றால் எங்கும் நிறைந்து என்றும் உள்ள தெய்வ கிருபையும் தெய்வ கடாட்சமும் எம்முள் இறங்கி அல்லது வெளிப் பட்டு சகல துறைகளிற் அது தானாகவே எம்மை வழிநடத்திச் செல்வதைக் கண் கூடாகக் காணலாம்.
27

Page 18
"இறைவனைக் காண்பது கடினமான காரியமன்று. அதனைப் பார்ப் பதற்குரிய கண்ணாடியாகிய இருதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதுதான் மிகக் கடினமானது" (வஜனாம்ருதம் - 1)
"ஹிருதய சுத்தி; இதுதான் ஜீவித சாரம். இதைப் பெற்றவர்கள் கற்பக விருட்சத்தின் கீழ் இருப்பவர்கள்." (வஜனாம்ருதம் - 31)
"பூமி முழுவதிலும் எவ்வளவோ குப்பை கூழங்கள் மண்டிக் கிடக் கின்றன. அவையெல்லாம் உன்னால் சுத்தஞ் செய்ய முடியுமா? இல்லை. ஆனால் பூமியின் ஒரு பகுதியாகிய உனது முற்றத்தை தினசரி கூட்டிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும். அதே போன்று உலகத்தவர்களுடைய மனதை உன்னால் சுத்திகரிக்க முடியாயவிட்டாலும் உனது சொந்த மனதின்
அழுக்காறுகளை நீக்கிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும்."
(வஜனாம்ருதம் - 12)
"இறைவன் பொருட்டு தனக்கு மிகப் பிரியமானதைவிட்டு விடுவதற் கும், மிகவும் வெறுப்பானதை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராயிருப்பவனே யதார்த்தமான இறைபக்தன்." (வஜனாம்ருதம் - 2)
"ஞானம், அது ஒரு இரவில் அடையக் கூடிய காரியமல்ல. நாக மணியைச் சுற்றிக் கிடக்கும் நாகம் போன்று, ஜீவனைச் சுற்றிக் கிடக்கும் தீய வாசனைகள் கடுந் தவத்தால் நீங்கும் பொழுது மாத்திரம்தான் ஞானம் பிரகாசிக்கும்.” (வஜனாம்ருதம் - 3)
"பக்தியென்பது மன உணர்வுகளை மீறிச் செல்லும் பொழுது அனு பவப்படுகின்ற ஒரு தனித்த பேரானந்தம்.” (வஜனாம்ருதம் - 6)
"உனது துன்பங்களை தீர்க்கும் சக்தி உனக்கில்லாமலிருக்கலாம். ஆயினும் அதனை தீர்க்கக் கூடிய ஒரு சக்தி உன்னிடமிருக்கின்றது. அதற்கு உன்னைச் சுயாதீனப்படுத்தினால் காற்றில் பறந்துபோகும் சாம்பல் போன்று துன்பங்களெல்லாம் பறந்துவிடும்." (வஜனாம்ருதம் - 9)
“தனது இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி எடுப்பதுதான் நிலையான சம்பத்து. அது எதனாலும் அழிக்கப்படுவதில்லை." (வஜனாம்ருதம் -202)
“என்னதான் இருந்தாலும் நல்ல குணமில்லாவிட்டால் ஜீரண சக்தி குறைந்தவர்கள் உண்ணும் உணவு போன்று பிரயோசனமற்றது."
(வஜனாம்ருதம் - 203)
28

சரணாகதி:- உபதேசம -
"பார்க்கப் பார்க்க, பழகபபழம, அலுப்பும், வெறுப்பும் தட்டாமலிருப் பது எதுவோ அதுதான் சாஸ்வதமான அன்பும், இன்பமும் தரும். முழுமுதற் தெய்வம்.” (வஜனாம்ருதம் - 4)
பார்த்தும், பேசியும், பழகியும் அடையும் சாஸ்வதான இன்பத்தை யும், அமைதியையும் அனுபவங்களையும் நினைத்து, நினைத்து மீண்டும், மீண்டும், உயர் நிலைநாடி எம்மை நாமே உயர்த்திக் கொண்டு ஒரு சாத் னையே பூரண சரணாகதி.
தன்னை மறந்து, நெஞ்சுருகி, பூரண சரணாகதி அடையும் மனப் பக்குவம் நமக்கு வரும்போது மனக்கலக்கம், மனப்பயம், பொல்லாப்பு அகன்று வாழலாம்
"மனம் நொந்துபோய்த் தளர்ந்த நிலையில் இறைவன் பாற் கொள் ளும் சரணாகதியைத் தவிர மனத்துயரம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி? வேறென்ன கதி? இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயல் பட்டால் முத்தி இன்பம் பெறலாம் என்பது திண்ணம்” (ஞானமண்டலம் - சரணாகதி)
"உன்னிடமிருக்கும் சகலவிதமான உடமைகள், உரிமைகளை முற் றாக விட்டுவிடு. உன்னை நிர்க்கதிக்கும் உட்படுத்து. உனது சுய சிந்தனை யிலிருந்தும் செயலிலிருந்தும் விலகு. பட்டம் பதவிகளை உதறு. கற்ற கல்வியை நிஷபிரயோசனப்படுத்து. இங்ங்ணம் நீ செய்ய முடியுமானால் "சரணாகதி” என்ற உயர்ந்த நிலையால் ஞானத்தின் உச்சநிலை அடைவாய்” (வஜனாம்ருதம் - 90) தொடரும்.
மனித மனம்:
பால் அதிக சத்து நிறைந்த உணவாயினும் கெட்டால் நச்சுத் தன்மையடைகின்றது.
மனத்தால் வாழுகின்றவன் மனிதன். மனிதருடைய மனம் கெட்டுவிட்டால் இவ்வையகம் முழுவதும் கெடும்.
-ருநீமத் சுவாமி கெங்காதரானந்தா
29

Page 19
நவயுகம்
றுநீமத் சுவாமி கெங்காதரானந்தா
சென்ற காலங் களில் பல துறைகளி லும் அதி சக்தி வாய்ந்த சீர்திருத்தங் கள் பல நடைபெற்று வந் திருக்கின்றன. இத்தகைய சீர்திருத் தங்கள் எதுவும் மனித சமுதாயத்தில் ஒரு சம்பூர் ண வாழ்க் கையை அமைக்கக் Ցուգեւ] வகை யில் பல ன விக்கவில்லை. புராண இதிகாச சரித் திர சம்பவங்கள் வாயிலாக நாம் இதனை ஆராய்ந்து : * அறிவது அவசியமா கின்றது. நமக்கு இப்பொழுது சீர்திருத்தங்களும் புரட்சியுமல்ல தேவைப்படுவது. இம் முயற்சிகளில் காலங்கள் வீண்விரயமாவதே தவிர நம்மால் எதிர்பார்க் கப்படும் ஒரு சம்பூர்ண வாழ்க்கை முறை உருவாகப்போவதில்லை. ஆகையி னால் ஒரு புத்தம் புதியதும் விசாலமானதும் இயற்கை மாற்றங்களை உட் கொள்ளக் கூடியதுமான ஒரு நவயுக சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அத்தகையதொரு புதிய சமுதாயம் சுதந்திரமான சக்தியும் ஆழமான சாந்தி யின் சுகத்துடன் கூடியதுமாக இருக்கும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் மனிதனுடைய மானசீக சக்திக்கு அப்பால் இருக்கும் ஆத்மீக சக்திகளைக் கொண்டு செயற்படும் ஒரு சமுதாயத்தைத்தான் நவயுக சமுதாயம் என்று இங்கு குறிப்பிடுகிறோம். இத்தகைய புதியதொரு சமுதாய சிருஷ்டியின் சிந்தனை புதியதன்று. கடந்த பல கால கட்டங்களிலும் இவ்விதம் உருவாகியிருக்கின்றது. இத்தகையதோர் தன்னிறைவுடைய புதிய வர்க்கத்தை உருவாக்கி எடுப்பதற்குக் காலம் வரும்,
30
 

கடவுள் வருவார், என்று காத்திருப்பது நமது பலவீனத்தின் அறிகுறியே யாகும். தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் இருக்கும் இடத்தில் தான் இறைவன் இறங்கி வருவாரே தவிர மற்றை இடங்களில் இறங்கி வருவ தில்லை.
எமது ஆத்மீக பெளதீக சக்திகள் உள்ளிருந்தும் , வெளியிருந்தும் வந்த தாக்கங்களால் நசுக்கப்பட்டிருக்கின்றன. இதனை நமது சுய சக்தி யினாலும் அறிவினாலும் தெரிந்து கொள்ள வேண்டும். காலமாற்றத்திற்கு ஒவ்வாத சில மத சித்தாத்தங்களையும் புதிய அர்த்த வாதத்தையும் மாத் திரம் தஞ்சம் என்று கருதி நிற்போமாகில் முற்போக்குச் சக்திகள் நம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தள்ளி விடும். கடந்த கால ஆத்மீக உண்மை களும், நவீன விஞ்ஞான சக்திகளும் இணைந்த தத்துவத்தைச் சிந்தனை செய்து கிடைக்கும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து, மேற் சொன்ன ஒரு நவயுக சமுதாயத்திற்கு அடிகோல வேண்டும். சனாதன தர்மம் என்ற கண்ணாடியினால் பார்த்தறியப்பட்ட ஆத்மீக வெளிச்சத்தின் உதவியைக் கொண்டு கலை, கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் சித்தாத்தங் கள் போன்றவைகளை அதற்கேற்றவாறு புதுப்பிக்க வேண்டும்.
தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமான நிலையில் ஆத்மீக பெளதீக பிரகாசங்கள் காணக்கூடியதாய் இருந்த போதிலும், அவைகள் இன் னும் சாதாரண மக்களுடைய இதயத்தை ஒன்றிணைக்கும் சுயாதீன சக்தி யினைப் பெறவில்லை. ஆகையால் அத்தகையது நல்லவையாகத்தோன்றிய போதிலும் உட்பூசல்களால் பின்னப்பட்டுக் கிடக்கின்றது.
அதிக கடினமானதும், ஆனால் அவசியம் செயற்படுத்த வேண்டிய
துமான இந்த நவசமுதாய சிருஷ்டி என்ற அரிய செயலைச் செயற்படுத்துவது எங்ங்ணம்? இப்பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரும்பெரும் செயல் களெல்லாம் மனிதன் மூலமாகவே இறைவன் செயற்படுத்துகிறாரென்பதை அறிவீர்களாக. இதை நீங்கள் உணரும் பட்சத்தில் உங்களுடைய சிந்தனைக் கும் செயலுக்கும் பன்மடங்கு தெளிவும் சக்தியும் கிடைக்கும். எங்களுடைய தினசரி வாழ்க்கைக்கு ஒளியும் சக்தியும் பகிர்ந்தளிக்கும் கலை கலாச்சா ரங்களின் சகல துறைகளையும் புதிய கண்ணோட்டத்துடன் தெளிவாக ஆராய்ந்து படிக்க வேண்டும். மனித வாழ்க்கையின் சரியான நோக்கம் எவை என்பதை உணர்ந்தால் அதற்குரிய அடிப்படையான சிந்தனைகள் தெளியும். உங்கள் ஒவ்வொருவருடைய பகுத்தறிவையும் உபயோகித்து நீங்களாகவே நடை முறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்களுடைய ஆழமான சிந்தனைகள் பிரபஞ்சத்தின் கர்ப்பக் கிரகத்திற்கு இறங்கிச் செல்லும்பொழுது அதில் காணும் உண்மைகளை வைத்துச் செயற்படுவீர்களானால் எல்லாம் எளிதாகவும் சுகமாகவும் முடியும்.
ப்ரசாந்தம்பவது
31

Page 20
நான் கண்ட சுவாமிஜி தாம மகிமையும் அவதார உர்ைமையும்
எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர் அனைத் தும் அவர் செயல், அனைத்தும் அவர் அடிக்கே. அவரே நான் கண்ட சுவாமிஜி.
-ஜெகன்
ஓம் கீதா கெங்காதராய நம:
கெங்காதரன் என்னும் நாமம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பொது வானது. கீதா கெங்காதரன் சிவமும் விஷ்ணுவும் இணைந்த ஒரு சக்தி யின் வடிவம். அத்தகைய சிவதத்துவத்தையும் விஷ்ணு தத்துவத்தையும் உள்ளடக்கியதே எமது சுவாமிஜியின் அவதாரம் சுவாமிஜி அவர்கள் உருவ மற்றவரும், உருவமுள்ளவருமானவர். உருவம், அருவம் இவ்விரண்டையும் கிறார். அவர் எப்படிப்பட்டவர் என் ரேதான் முற்றிலும் அறிவார்.
அவதார உணர்மை:
பல நூற்றாண்டுகள் தவம் புரிந்து பல்லாயிரம் ஆன்மாக்களின் வேண்டுதலின் பேரில் அவர்களை உய்விக்க பூமியில் எடுத்த அவதாரமே சுவாமிஜி கெங்காதரானந்தா அவர்கள்.
பிரம்மஞானி; இறைவனடி அடையின் அட்டமா சித்திகளும் எளியனவாம். ஆனால் அதனிலும் உயர்ந்த உயர்சாதனையான துர்யக என்ற மேலான நிலையை, தான் அவனாகவும், அவன் தானாகவும், அடையும் ஞான சித்தியை, சித்தமே எல்லாம் சிவமயம் என்னும் திரிகால ஞானமாகிய சிவஞானத்தை அடைந்த பிரம்மஞானி.
சிவயோகி; விசேஷமான சில பிறவி வாசனைகளும், குணங்களும் பிறவியிலே அமைந்தும், கடினமான மார்க்கங்களை உடையதுமாகிய சிவயோகம் என்னும் உயர்ந்த யோகத்தை அடைந்த சிவயோகி. AO
அவதார புருஷர்: இவ்வுலகில் ஒரு துறவியின் தவ வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதையும், அதன் பின்னர் லெளகிக வாழ்க்கையின் மத்தியில் ஒரு துறவி எவ்வாறு பற்றற்று வாழ்தல் வேண்டும் என்பதையும் பிரத்தியட்ச மாக வாழ்ந்து காட்டிய அவதார புருஷர். தொடரும்.
32
 


Page 21
அன்பளிப்பு:
ஜெயமயூர ஜெயச்சந்
09 - 03 - 1997
தி/பூரி கணேச அச்சகம்
 

கன் குடும்பம் திரன் குடும்பம்
ஆறாவது குருபூஜை
தொலைபேசி: 025-2617