கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலர் வழிக்கோர் காவலர்

Page 1
SS
I 轟一
நாவலர் வ1
靛 a 13 T திரு. அ. சபாபதிப்பி நாவலர் நெறிக்
பரட்(
அறிமுக ட இ- வித்துவான் ை
1971 s: ජූජ්, ーエ لبنتہائی
1 - === - 15 - ܀
 
 
 
 
 
 
 
 

고 11 고l , "ت ள்ளே அவர்களின்
"། j: T ಟೌgo' l
ܩ݂ܕܵ¬ -܂ ப்
5ᏠᏁ Ꭻ
ք:--
வப்புல்வர்

Page 2
நாவலரும் சாதி/ம்
சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிக மெனக்கொள்வது சுருதி, யுத்தி, அநுபவமூன்றுக்கும் முழுமையும் விாதம். உலகத்துச் சாதி பேதம்போலச் சற்சமயமாகிய சைவ சமயத்திலும் முதற்சாதி, இரண்டாஞ்சாதி, மூன் முஞ்சாதி, நாலாஞ் சாதி, நீச சாதியெனச் சமய நடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்ப டும். சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாத முறைப்படி எழு வற நடந்து சிவானந்தப் பெரும் பேறுபெற்ற சீவன்முத்தர் சிவமே யாவர். இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண் டாஞ்சா தி; சிவக்கிரியாவான்கள் மூன்ருஞ்சாதி; சிவசரியா வான் , கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும், இவர் களையும் இவர்கள். . . . . நிந்திப்பவர்களும், இந் நெறிகளிலே முறை பிறழ்ந்து நடக்கின்றவர்சளும் இந் நடைகளை விட்ட பதிதர் சளும், சதாகுதகிகளாகிய பஞ்சம சாதி. சிவ சரியை கிரியை முதலியவை களினலே பொருள் தேடி உடம்பை வளர்ப்பவர் சளும், அப்பொருள் களைப் பாசத் தாருக்குக் கொடுத்து இன்புறுவே ார் 4ளும், கோயில தி காரிகளாய்த் தேவ திரவியத்தைப் புசிப் ப வர் களும், விருத்திப் பொருட்டுச் சிவ வேடந்தரித்தவர்களும் , விருத்திப்பொருட்டுத் துறவறம் பூண்டோர்களும், சிவஞான நூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர் சளும் பிறரும் பதிதர்களுள் அடங்கு வார்கள் (உண்மை நாயன்மார் மகிமை, பெரிய புராண வசனம் , நாவலர்)
(இப்பேர்வழிகள் இன்று கூசாது ஆலயங்களுக்குள் செல் வது மாத்திரமல்லாமல் ஏனையோரை உட்செல்ல விடாமல் கதவை
யும் அடைக்கிரு?ர்கள். என்னே அதிசயம்!)
நூல்: நல்ல வாழ் கந்தனும் நல்ல நகர் நாவலரும்.
ஆசிரியர்: திரு. 3 . . إعم.

திங்க்யம் நாவலர் வழிக்கோர் காவலர்
r::crews
நாவலப்பிட்டி,
இந்து வாலிபர் சங்கத் துணைத்தலைவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை அவர்களின்
நாவலர் غ நெறித் தொண்டினைப் பாராட்டும் மதிப்புரை
அறிமுகம்: வித்துவான் சைவப்புலவர் க. கணபதிப்பிள்ளை ரி. A.

Page 3
SA2
3.
இந்நூல். ...
முதற் பகுதி திரு. அ.
சபாபதிப்பிள்ளை அவர்க ளேப் பற்றிய பாராட்டு
மதிப்புரை அறிமுகம்
9-60 lugs.
tušis 86D; -V
இரண்டாம் பகுதி அ.
சபாபதிப்பிள்ளை அவர்
கட்கு எழுதப்பெற்ற கடி
தங்களையும் அன் னு ர்
பேசிய பேச்சு, எழுத்துப் பகுதிகளையும் உடையது
Usässid: I-25.
杀
 

(All சிவமயம்
நாவலர் வழிக்கோர் காவலர் மதிப்புரை - அறிமுகம்
NMMMM "VMNM
சீர் பூத்த கருவிநூல் உணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாகமங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்க ணங்கப்
பரம்பூத்த சைவ நிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானர் தந்த வார்பூத்த அறிவிச்சை தொழிலென் ருேதும்
மதம் பூத்த விநாயகன் முள் வணங்கிவாழ்வாம்.
-- நாவலர் பெருமான்.
நாவலர் பெருமான் நம் சைவக் காவலர். நாவலர்க்கோர் காவலரா? எனச் சிலர் வினவலாம். நாவலர் கொள்கை குறிக்கோள் இவையென எடுத்துக் காட்டுவோரும் நாவலர் வழிக் காவலராவர்.
இவ்வகையில் பல்லாண்டுகளாக உறுதியுடனும் ஊக்கத்துட னும் அஞ்சாதவீரத்துடனும் தொண்டாற்றி வருகின்ற ஒரு சிலருள் ஒருவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை அவர்கள்.
நாவலர் நாமம் விளங்கினுற் போதுமென எண்ணுவோர் சிலர். அவர் நாமத்தால் தம் நாமம், கொள்கை விளங்க வேண்டு மென எண்ணுவோர் சிலர். சைவசமயத்திலிருந்து நாவலரையே பிரித்து விடவேண்டுமென முயல்வோர் சிலர். சாதி வெறியர் நாவலர் எனச் சாடுவோர் சிலர். சைவக் காவலரல்லர் சாதிக்காவலர் நாவலர் என
எண்ணி மகிழ்வோர் சிலர்.
இவ்வாறு இன்று நாவலர் பெருமான் குருடர் கண்ட யானை போல விளங்குகின்ருர், "நாவலர் பெருமானின் உயிர் சைவம்; உடல் தமிழ்; நீதி அன்பு அவர் கண்கள்; அவர் சாதி வெறியரல் லர். சைவ சமயம் சாதிவெறிச் சமயமன்று சமத்துவ சமயம். இதோ நாவலர் காட்டும் உதாரணம்' எனக் காலத்திற்குக் காலம் கருத்துக்களைத் தெரிவித்து நாவலர் வழிக்கோர் காவலராக விளங் குகிருர் திரு. அ. ச. அவர் பேச்சு மூச்சு யாவும் நாவலர் மயம், நால் வர் மயம், சிவமயம் , அன்புமயம்.

Page 4
- iv -
நாவலர் சிலையைத் திருக்கேதீச்சரத்திற்கும் கொண்டுசெல்ல வேண்டுமென யான் குரல் கொடுத்ததும் மறு குரல் மலைநாட்டிற் கேட்டது. அக்குரலின் உரிமையாளரே எனக்கு முன்பின் நேர் அறி முகமில்லாத திரு. அ. ச.
திரு. அ. ச. அவர்களுடன் மோட்டார் வண்டியில் கோவை சென்ருேம். எங்கள் சந்திப்பை விநாயகப்பெருமான் ஏற்படுத்திய விதத்தையும் கூறினுேம்,
முன்னியது முடித்தலில் முருகன்
“முன்னியது முடித்தலில் முருகன்" என்பது சங்கச் செய்யுள். நல்லூரான நாளும் பணியும் பேறு கிட்ட இந்நூல் எழுதும் நிலை ஏற்பட்டது. பெயரிடுவதிலே இருவித அபிப்பிராயம் தோன்றி ஈற் றில் முடிவாயிற்று.
**ஆவணிமாதம் புதன்கிழமை, யானைக்கன்று, இந்துக் கல்லூரி, பசுபதிச் செட்டியார்'- இவை முதலாம் வகுப்பிலே படித்தவை: படிந்தவை; என்றும் பசுமைநிலையில் நிற்பவை.
ஆவணிமாதம், புதன்கிழமை இந்துக் கல்லூரியிற் புகுந் ததும் பசுபதிச் செட்டியார் நினைவே முன் வந்தது, அது பழம் பாடம். திருக்கேதீச்சரம், சைவபரிபாலன சபை யாவும் பின் தொடர்ந்தன. பணிகள் பல வந்தன. வரலாற்றுப்பணி பல படத் தொடர்ந்தது. முற்றுப் பெறவில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லைப் பணிதொடர உணர்வும் உயிர்ப்பும் அளித்தோர் பலர். மூவர் முருக நாமத்தினர். முதலியார் முத்துத்தம்பி, மாகாணத்துணை அதிபர் முருகேசம்பிள்ளை கர்மயோகி முத்துக்குமாரன் ஆகியோரே அம் மூவர். அறியாமலே துணையானவர்கள் இவர்கள்,
திரு. அ. சபாபதிப்பிள்ளை
திரு. அ. ச. கர்மயோகியின் மைத்துனர், மகாபிரபு பசுபதிச் செட்டியார் சந்ததியினர் என்றதும் இருவருக்கிடையேயும் நாவலர் பற் றிய கருத்து ஒற்றுமையால் ஏற்பட்ட அன்பு வளர்ந்தது, நாவலர் பெருமான் கிட்டிய உறவினராயினும் சைவமரபுப் பிறழ்வினரைத் தம் உறவினரெனக் கருதாதவர் என்பதைத் திரு. அ. ச. எழுதிய எழுத்து மூலம் அறியலாம். திருத்தொண்டர் பெரியபுராண மரபு நெறி அதுவே. சைவத்திருமரபை நால்வர் நாவலர் நெறிப்படி இந் நாட்டில் நிலைநாட்டிய பெருமக்கள் வரலாற்றின் ஒரு பகுதியை நாவலர்தாசன், ப்ருளாய் விநாயகன் எ ன் னு ம் புனைபெயர்களில் இந்துசாதனத்தில் எழுதிய கட்டுரைத் தொடர் நிறைவேறுவது

போன்ற பேருணர்வை இந்நூல் எனக்கு அளிக்கின்றது. உண் மைச்சைவம் வாழவேண்டுமாயின் உண்மைச் சைவர் வரலாறு வெளி வரல்வேண்டும்.
சிவஞான வெளியீட்டகம்
a-1\/YMaM
எங்கள் மத்தியில் நாவலர் வழிக்காவலர் பலர் இன்றும் உளர்" நாவலர் காலத்திலே பற்பலர் வாழ்ந்தனர். அவர்களுள் முத லுரிமை பெற்றவர் நாவலரின் கிட்டிய உறவினர் உளராக நாவலர் தம் ஈமக்கிரிகையை ஆற்றிய சபாபதிச் செட்டியார் அவர்கள். அவர் நாவலர் போதனைப்படி வாழ்ந்தவர்; சைவாசாரசீலர்; சிவபூஜா துரந்தரர்; மிகப் பிரசித்திபெற்ற பெருவள்ளல் பசுபதிச் செட்டி யாரின் சகோதரர். அன்னர் திருமகளார் அருணுசலம்பிள்ளையின் தரும பத்தினியார் கமலாம்பிகை அம்மையார். இவர்கள் தம் Hதல்வரே நமது நாவலர் வழிக்கோர் காவலர். நாவலர் குறிக்கோளை நாளிலும் பொழுதிலும் திரு. அ. ச. அவர்கட்குப் புகட்டியவர் அவர் தம் தந்தையாரின் சகோதரியார் சிவஞானப் பூங்கோதை விநாசித்தம்பி அம்மையார். m
அம்மையார் இளமையில் தம் சிறியதந்தையாரும் நாவலர் மரு கரும் மானக் கருமாகிய பொன்னம்பலபிள்ளையுடன் சிதம்பரத்தில் வாழ்ந் தவர். நாவலர் தருமபரிபாலகர் விசுவநாதபிள்ளையின் சகோதரி யார் எழுபத்தாமும் வயதில் 18-1-71-இல் குஞ்சிதபாத நீழல் அடைந் தவர். அன்னர் நினைவுக்கறிகுறி சிவஞான வெளியீட்டகம், அதன் முதற்பிரசுரம் நாவலர் வழிக்கோர் காவலர்! நாவலர் வழி
நாவலர் வழியென்பது அவர் தம் உற்ருர் உறவினர் மரபு வழி யன்று. சமயகுரவர், சந்தானகுரவர், அறுபத்து மூவர் கைக்கொண்ட சைவவழியே நாவலர் மரபு வழியாகும். அம்மரபு வழி ஆணவத்திை அழிப்பது; திருவருள் மயமானது. நிலவுலகிலும் அழியாப் பேரின் பம் அளிப்பது. − “எவ்வுயிரும் உறை இறைசிவனென்று இரு' என்பது அதன் குறிக்கோள். உலகத்தை அன்பினுல் அருளினல் ஒன்ருக்கி மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலமெலாமெனப் பேசுவது, இந்நெறி என்றும் சிறந்து விளங்கவே இந்நூல் உதயமாயிற்று திரு. அ. சபா பதிப்பிள்ள்ை அவர்களைப்போன்ற பற்பலர் உதயமாகி நாவலர் வழிக் கோர் காவலர், பாவலர், நாவலர் ஆதல்வேண்டும் என்பதே எமது பேரவா.
அப்பேரவாவை நிறைவேற்ற இறைவன் அருள் புரிவாராக யாவருக்கும் நன்றி, வணக்கம்.
'அருளே உலகெலாம் ஆள்விப்பது' - காரைக்காலம்மையார்.
42/5, கல்லூரி வீதி, க. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம். l-2-7l.

Page 5
திரு. அ. சபாபதிப்பிள்ளை அவர்கள்
'நாவலர் வழிக்கோர் காவலர்”
என்பதற்குரிய அகச்சான்றுகளைக் காட்டும் நூலின்
இரண்டாம் பகுதிப்
பொருளடக்கம்.
1. ஆசிச்செய்தி . பக்கம் .
2. கடிதப் பகுதி ...་ o e e os e a o se a 2
3. செய்திப் பகுதி. s e a so e g o O so a 6
4. கட்டுரைப் பகுதி . 8 A 3
5. நூற் பகுதி di 8 9 * P p p g r ........... 2 2
 

சிவமயம்
ஆசிச்செய்தி
நல்லை ஞானசம்பந்தர் ஆதீனகர்த்தர் பூணீலழறீ ஸ்வாமிநாதத் தம்பிரான் ஸ்வாமிகள்
"மேன்மைகொள் சைவநிதி
விளங்குக உலகமெல்லாம்”
என்னும் திருவார்த்தையைச் சிரமேற் கொண்டு தெய்வத் திரு முறைகளையும், நால்வர் பொற்ருளையும் நாளும் ஏத்திப்போற்றிப் பற்பல நற்ருெண்டுகளைப் பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் ஆற்றி வருகின்றர் வடகோவை திரு. அ. சபாபதிப்பிள்ளை அவர்கள்.
அன்னர், சைவத் திருநெறியை வளர்த்த நாவலர் அவர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
நாவலர் பற்றியும், சைவசமயம்பற்றியும் அன்னர் பேசிய பேச்சு, எழுதிய எழுத்து, சிந்தித்த கருத்து ஆகியவை என்றும் போற்றிப் பாதுகாக்கப்படத்தக்கவை; எக்காலத்திற்குந் தேவையானவை:
அவர் ஆற்றும் தெய்வீகத் தொண்டு தொடர்ந்து நடை பெற எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி ஆலவாய் அண்ணலை உள மாரப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றுேம்.
யாழ்ப்பாணம். பூனிலழரீ ஸ்வாமிநாதத்தம்பிரான்
20. 1-7 l. ஸ்வாமிகள்.

Page 6
கடிதப்பகுதி
'நாவலர் வழிக்கோர் காவலர்”
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அன்பிற் சிறந்த நமது அ. சபாபதிப்பிள்ளை அவர்களுக்கு . எல்லா நன்மைகளும் பெருக அண்ணுமலை அண்ணலின் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்ருேம்.
மிண்டிய மாயா வாதத்தையும் சாயிபாபா இசத்தையும் தாங்கள் உடன்படாது சிவநெறியைப் போற்றி வருவதற்கு நமது நெஞ்சு *னிந்த வாழ்த்துக்கள். நம்முடைய சமயத்தைச் சார்ந்த மக்கள் பலஹினமானவர்களாக இருக்கிறர்கள். அவர்களுடைய சந்தையில் எந்தச் சரக்கையும் விற்கலாம் என்ற எண்ணம் வருகிறது. இந்தப் பேராபத்தைத் தங்களைப் போன்ற சிவநெறி ஆர்வமுடையவர்கள் 57ன் தடுத்து நிறுத்தல் வேண்டும். தங்களுடைய முயற்சிக்கு நமது பாராட்டு.
என்றும் வேண்டும் இன்ப அன்பு.
தெய்வசிகாமணி.
ழரீமத் தத்புருஷ தேசிகர் அவர்கள். பேரன்புடையீர்!
நலம், நலமே தழைக.
மாயா வாதம் முதலிய கீழ்நெறிகளையும் சாயிபாபாவைப் போற் றுவது முதலிய அவலநெறிகளையும் யாருக்கும், எதற்கும் அஞ்சாது உண்மைப் பற்றுடன் எதிர்த்துச் சித்தாந்த சைவத்தை, பூரீல பூரீ ஆறு முகநாவலர் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நின்று நிலை நாட்டப் பெருந்தொண்டு செய்து வருகின்ற உங்களுக்குத் திருநீறு முதலிய சிவ சின்னங்களை அணிந்துகொண்டு சிவத்துரோகம் செய்து வரும் ஒரு சிலரால் புறக் கணிப்பு நேருமாயினும், பேரறிவுப் பிழம் பாக உள்ள சிவபரம் பொருள் உங்களது உண்மை நாட்டத்தையும் உங்களை எதிர்ப்போரது பொய்ம்மைப் போக்கையும் திருவுள்ளத்திற் கொண்டு உங்களுக்குப் பெரும் பரிசையும், அவர்களுக்குப் பெருந் தண்டனையையும் கொடுத்து அநுக்கிரகம் செய்வாரென்பதில் எள் துணையும் ஐயமில்லை. 'அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வரு வதும் இல்லை' என்ற பரம்பரையில் வந்தவர்கள் நாம்,

م-3--
வைத்தின் மேற் சமயம் வேறில்லை. அதிற்சார் சிவமாம் கெய்வ்த்தின் மேல் தெய்வம் இல்' என்னும் உறுதிப்பாட்டுடன் உங்கள் பணியைத் தொடர்ந்து புரிந்து வருவீர்களாக. திருவருள் உங்களுக்குப் பெரு வெற்றியை வழங்குவதாக
அன்புள்ள தத்புருஷ தேசிகர்.
முதலியார் செ. சின்னத்தம்பி அவர்கள்
~~ہلا سم۔:^سم 20 عیسمعمسیسبرتری
அன்புமிக்க திரு. சபாபதிப்பிள்ளை அவர்களுக்கு
நால்வர் பெருமக்கள் மீதும், தெய்வத் திருமுறைகள் மீதும் சைவ த்ெதாந்தப் பெருநெறி மீதும் தங்களுக்குள்ள 'ெரு' பற் றைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் கொள்கைகளே எனது கொள்கைகளும் சத்தியசாயி பாபாவைத் தெய்வ அவதாரம் என்று சைவர்களாகிய நம்மவர் கள் பலர் பித்துக்கொண்டு நிற்பதைக் காணும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. சைவ தத்துவத்தை அறியாமையே இதற் குக் காரணம். ,
சாயிபாபா ஒரு சித்தர், சித்தர்கள் பலர் முன்னேயும் தோன் றியிருக்கிருர் கள்; அவர்களிலும் பார்க்க விரிவாக ஒரு கடையை' இவர் நடத்துகின்றர். அவ்வளவுதான் அவருடைய பெருமை, இந் தக் கூத்துக்கள் நிலைக் கா.
சாயிபாபாத் தொண்டர்கள் உங்களோடு போர் தொடுத்து நிற்கிருர்கள் போல் தெரிகிறது. உங்களை வெல்ல அவர்களுக்கு முடியாது. ஆகவே, ஆவேசத்திற்கு ஆளாகாது அமைதியாக உங் கள் தொண்டைச் சீராகச் செய்யுங்கள். உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும் காலம் தூரத்தில் இல்லை.
நால்வர் பொற்பாதம் நமக்குயிர்த்துனே? ஆகவே வெற்றி யும் ஈற்றில் நமதே
இங்ங்ணம் அன்புள்ள
செ. சின்னத்தம்பி.

Page 7
一4一
ஒரு சிறைக் கைதி, மஹாற
அன்புக்குரிய ஆசிரியர் ஐயா அவர்களுக்கு:
வணக்கம்.
தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட நாவலர் இலவச வெளியீட்டுப் புத்தகம் கிடைக்கப்பெற்றேன். மிக நன்றி, அய்யா அடுத்தபடி தங் கள் இலவச வெளியீடான மகாத்மா காந்தி நூற்றண்டு மலர் இலவச வெளியீடு புத்தகம் ஒன்றையும் சிறைக் கைதியாகிய எனக்கு அனுப்பி வைக்கும்படி மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
வணக்கம்.
இப்படிக்கு (ஒப்பம்)
LLLLLL LLLLLLLLL0LLLLLLLLLLL0L0LLLL00LLL 00LLLLLLL LL LCLCLLLL LLLLLL
Mahara Ragama Prison.
திரு. ம. சி. சிதம்பரப்பிள்ளை அவர்கள்
Ministry of Education Colombo - 2, 10-10-69.
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சகோதர,
ஒரு சில மறதி வசத்தால் உங்களை ஞாபகத்தில் இருத்த முடியவில்லை. . . . . . . நீங்கள் ஆற்றிவரும் பல் துறைத் தொண்டுகளைப்பற்றிப் பேசி ஆனந்தம் அடைந்தேன்.
இன்று “மிண்டிய மாயாவாதமும் தவத்திரு குன்றக்குடி அடி களும்’ என்ற பிரசுரம் எனக்கு நீங்கள் அனுப்பி வைத்தமைக்கு
மிக்க நன்றி. - * ぷ
அடிக்கடி எனது சிந்தனையில் உதித்த ஒரு அரிய கருத்தைத் தாங்கள் எழுதியதை வாசிக்க உள்ளம் மகிழ்ந்தது. . . . .

-- S -
உங்களைப்போலவே யானும் சிவனுண்டு நாமுண்டு என்ற விர
தம் 1 1ண் வன், தேவார திருவாசகங்களையே தினமும் "நான் மறக் , தும் சொல்லுநா நமச்சிவாயவே" என்ற அடிப்படையில்
வாழும் எங்களுக்கு, வேறு வழிபாடு எதற்கு என்ற அடிப்படையில் வாழுகின்றேன். -
பெரியபுரணத்திலே தேவார திருவாசகத்திலே வேறெரு தெய்வத்தையும் நினைத்திலேன், எண்ணிலேன் என்று பன்னிப் பன்னி எங்கட்கு வழி காட்டிய உத்தமர்கள் வழியைப் பின்பற்றுவதே
குரைக்கின்றவர்கள் குரைக்கட்டும். நீங்கள் செய்யும் சிவத் தொண்டுக்கோர் பங்கமும் வராமல் தொடர்ந்து ஆற்றுங்கள். தவி மும் தவமுடையார்க்கே என்றபடி நாவலர் ஐய்ா வழி வந்த குடும் பத்தில் பிறந்த தனிப்பாக்கியம். இந்துக் கல்லூரியில் படித்த பெரும் பாக்கியம். பிறவிதோறும் ஆற்றிய பெரிய தவம் கைகூடியபடியி னற்ருன், கிடைத்தற்கரிய தேகம் முடிந்து போம்முன் இத்தொண்டு களைச் செய்ய முடிகின்றது உங்கள் தொண்டுகள் முன்னேற உல கெலாமுணர்ந்தோதற்கரியவனை வேண்டுகின்றேன் . . . .
உங்களன்புள்ள
ம. சி. சிதம்பரப்பிள்ளை.
மாவனெல்லை கே. கே. ரி. சர்மா அவர்கள்
அன்புடையீர்! "
தாங்கள் அனுப்பிய இலவச வெளியீடுகள் கிடைக்கப் பெற் ருேம். காலத்திற்கேற்பக் கடைப்பிடிக்கும் தங்கள் பகுத்தறிவுக் கொள்கைகளும், மக்கட்கு அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கும் தன்மையும் வரவேற்பதற் குரியதாகும் தவறென்று தெரிந்துகொண்டே தன்னலங் கருதி மீண்டும் மீண்டும் அவற்றைச் செய்வதன் மூலம் நாட்டுக்கும் நமக்கும் இன்னல் ஏற்பட வழி வகுப்போரைப் பெயர்களைச் சொல்லாமற் சொல்லிக் கண்டித்திருப் பதன் மூலம் தவறு புரிபவர்கள் உணரவும், நாடும் நாமும் நல்லன காணவும் வழியமைகின்றது.
இதற்குத் துணிவும் முயற்சியும் மேற்கொண்டுள்ள தங்கட்கும், அன்பும் ஆதரவும் தருவோருக்கும் எமது அன்புப் பாராட்டுக்கள் உரியனவாகும். 'நல்லன கொண்டு அல்லன தவிர்ப்போம்"
தங்கள் முயற்சி சிறந்தினிதாகுக.
இவ்வண்ணம், தங்களன்புள்ள
கே. கே. ரி. சர்மா,

Page 8
செய்திப்பகுதி
நாவலர் வழிக்கோர் காவலர்
govove,"v-
விநாயகர்
**நாத விந்து கலாதி நமோநம' என்று பாடினர் அருணகிரிநாதர். 'நாதன்ருள் வாழ்க’’ என்று சிவபுராணத்தில் முதல் வரியிலே குறிப்பிடுகிருர் மாணிக்கவாசகப் பெருமான். இந்த நாதப் பிரணவப் பெரும் பொருளே பெருந்தகை ஐங்கரன். ஐங்கர விநாயகப் பெருமானையே சைவர்களாகிய நாம் எல்லோரும் எத்தக் கருமங்கள் செய்ய முன்னும் வணங்குகிருேம்.
நாதன் திருவைந்தெழுத்தில் உள்ள ஒலி நாத வடிவினன். இந்த நாதமே உலக உற்பத்திக்கு முதற் காரணம்.
'விநாயகருடைய திருவுருவம் ஓங்கார வடிவமாக அமைந்துள் ளது. விநாயகரை வணங்குகின்றவர்கள் செல்வத்தைப் பெறுவர்; செய்கின்ற கருமங்களில் அநுகூலம் பெறுவர்; பெருமையைப் பெறு வர்; நல்ல அழகைப் பெறுவர்; முத்தியைப்பெறுவர்' இவ்வாறு நாவலப்பிட்டி இந்து இளைஞர் மன்ற உபதலைவர் திரு. அ. சபாபதிப் பிள்ளை அவர்கள் மல்வத்தை விநாயகராலயத்தில் நிகழ்ந்த சதுர்த்தி
உற்சவத்தில் பிரசங்கம் செய்தார்.
- இந்துசாதனம் (19.9-69)
மலைநாட்டில் வைதிக சைவ மறுமலர்ச்சி
பசுக்களைப் பதியெனப் போற்றும் பேர்வழிகளுக்கு நாவலர் பெயரை உச்சரிக்கத்தானும் அரு கதையுண்டா? நாவலப்பிட்டி கதிரேசன் குமார மகாவித்தியாலத்தில் 1-12-69-ல் இந்து வாலிபர் சங்க ஆதரவில் நடைபெற்ற நாவலர் நினைவு விழா வுக்குத் தலைமை வகித்துப் பேசிய அறிஞர் அ. சபாபதிப்பிள்ளை அவர் கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது;
*நாங்கள் எங்கும் நாவலர் விழாக் கொண்டாடுகின்றபோதி லும் அவரைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதிருக்கின் ருேம், நாங்கள் அவரைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால் எல் லாச் சமயக் கோட்பாடுகட்கும் மாறுபட்ட ஒரு குற்றத்தைச் செய்ய மாட்டோம் . சில அற்புதங்களைச் செய்யும் ஒருவரை அதுவும் சாதா ரண மனிதரைக் கடவுளே என்று கருதி ஏமாந்து விடமாட்டோம்.

سسسه 7--
விக்கைக்காாரை அவகார புருஷரென்றுதானும் சொல்வது சமய விரோதமாகும். சாச் சமயமும் அவர்களை முழுமுதற் கடவுள் என்று சொல்வதில்லை.
சைவம் சிவனைக் கடவுள் என்கின்றது. அதில் வேறு கடவு ளுக்கு இடமேயில்லை. வித்தைக் காரப் புரு ட னை ச் சிவமென்பது சைவத்திற்கும் நாவலர் பெருமானுக்கும் நாம் செய்யும் துரோகமும் பாவமுமாகும். நாவலர் பெயரைச் சொல்லும் சிலர் அக்குற்றங் களைச் செய்வதும் உடந்தையாக இருப்பதும் மகா தவருகும்: W
(நாவலப்பிட்டி நிருபர்) சைவகாவலன் - 15.10.69.
'திருக்கேதீஸ்வரத்தில் நாவலர் சிலேயைவைத்துப் புனிதப்படுத்த வேண்டும்" இந்துவாலிபர் சங்க உபதலைவர் கூறுகிறர்
SASe SSASSASSLAqAMMLMLASLeMeMeMMMMeeLeMSeAMAMLMeAMMeeMSeAeMMSeMAqS SAASAeSeMLSSASAAS AAJALAJAYAeLSeLS AeMS SeMLSAALMq SMMSAMMqSSeSLSMSAMSAS
நாவலப்பிட்டி, gਫਰੰ. 10
'நாவலர் பெருமானுடைய திருவுருவச் சிலையை ஊர்வலப் பவனியின்போது திருக்கேதீஸ்வரத்துக்கும் எடுத்துச் சென்று அங்கு ஆலயத்தில் வைத்துப் புனிதப்படுத்தி அதன் பின்னர் கொண்டு செல்லாமல் நாவலர் சபையினர் நொண்டிக் காரணம் கூறித் தட்டிக் கழிப்பது பெருந் தவருகும்.'
இவ்வாறு நாவலப்பிட்டி இந்துவாலிப சங்க உபதலைவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை தினபதி நிருபரிடம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
'நாவலருக்குப் பெருவிழாவா? திருவுருவச் சிலை ஊர்வலமா? என்ற தலைப்பில் சமீபத்தில் சிந்தாமணியில் வெளிவந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் கருத்து பாராட்டற் குரியது.'
பெரியபுராண வசன நூலிலே நாவலர் பெருமான் பின் வரு மாறு எழுதியுள்ளார்.
- சாதியினுஞ் சமயமே அதிகம்.
சமயத்தினும் சாதி அதிகம் எனக் கொள்வது சுருதி, யுக்தி அனுபவ மூன்றிற்கும் முழுமையும் விரோதம். இப்படி எழுதிய நாவ லர் பெருமான் இன்று இருந்தால் புலவர் மணியைப் புகழ்ந்து

Page 9
- 8
பாராட்டி இருப்பார். சிலை நிறுவுமுன் கோயிற் கதவுகளைத் திறந்து விடுங்கள் என்று கூறியிருப்பார்.
பாடல் பெற்ற பழம்பெரும் ஸ்தலமாகிய திருக்கேதீஸ்வர ஆலயம் இருந்த இடத்தைத்தேடி அதை அக்கால அரசாங்க அதிப ரிடம் கோரிப் பெற்று, புனருத்தாரண வேலைகளுக்கு வித்திட்ட ஆறு முகநாவலர் சிலைக்குத் திருக்கேதீஸ்வரப் பிரவேசம் மறுக்கப்பட லாமா? நொண்டிக் காரணம் காட்டி அங்கு செல்லாமல் சிலையை யாழ்ப்பாணம் எடுத்துச் செல்வது வேடிக்கையே அல்லவா?
இவ்வாறு கூறிமுடித்தார் திரு. அ. சபாபதிப்பிள்ளை.
-தினபதி 11-669
நாவலர் பெருமான் நம் நாட்டுக்கு ஆற்றிய தொண்டு
(நாவலப்பிடம்டி நிருபர்)
.நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்கத்தின் ஆதரவில் கதிரே சன் கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நாவலர். விழாவிற்குத் தலைமைவகித்த மேற்படி சங்கத் துணைத் தலைவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை தம் தலைமைப் பேருரையில் நாவலர் பெரு மான் சாதி வெறியர் அல்லர் என்பதை அவரது கருத்துக்களைக் கொண்டே நிரூபித்ததுடன் மட்டக் களப்பில் தமிழர் வாழ்ந்தனர் என்பதை நாலாம் பால பாடத்தில் பிரதேச ரீதியில் தெரிவித்துள் ளார் என்ருர் . y
'நாவலர் பெயரைச் சொல்லிக்கொண்டே நாவலருடைய கருத் துக்களுக்கு முழுமையும் விரோதமான கருத்துக்களைப் பரப்புவதும் அவ்வாறு விரோதமான செயல்களைச் செய்வதும் சைவத்திற்குச் செய்யும் சிவப்பெருந் துரோகம்' என்ருர் ,
தினகரன் - 9.10-69.
சைவ நீதிக் கழக அங்குரார்ப்பணக்கூட்டத்தில் பேச்சு:
நாவலப்பிட்டி மே, 23
. . ருே சாலைப் புகையிரத நிலைய உதவி அதிபர் திரு. அ. சபாபதிப் பிள்ளை கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகை யில் கூறியதாவது: . . . . .

-س-9-س-
சாதியும் அறியாமையும் 'பெருமை வாய்ந்த எங்கள் சைவ சமயத்தைவிட்டு எம்மவர் சிலர் மதம் மாறுகின்றனர். காரணம் என்ன? எங்கள் சமயத்தில் இடையில் புகுந்த சாதி வியாதியும் அறியாமையும்தான் காரணம். இந்த அவலநிலையைப் போக்கவே தெருவெல்லாம் சமயச் சங்கங் கள் தோன்றிச் சைவ நீதியை விளங்கப்படுத்த வேண்டும்.’’
- வீரகேசரி 23.5-63
உண்மை அன்புடன் வழிபட வேண்டும்:
MAS SAAASSASASMJSHHAAAS AAAAA AAAqLS AMAMMSAAMMMLMMMMMMLSAMSMMMMSMqS JS SMS S SSqMALLAMqMqSAAA AAAA S AAAAASS AAASSAAAAAA AMMALAL qLqMMA
நாவலப்பிட்டி, ஆகஸ்ட் - 3
‘ ஆண்டவனை இலஞ்சம் வாங்கும் பேர்வழி என்று நினைத் துப் பணம்கொடுத்து வாங்கப் பலர் முயல்கின்றனர். இந்தப்பேரம் பேசும் வேலையைவிட்டு உண்மை அன்பைக் காட்டி உள்ளம் உருகி இறைவனை வழிபட வேண்டும்'.
இவ்வாறு ருேசலே விக்ரன் பாடசாலையில் நடைப்ெற்ற சுந் தரமூர்த்தி நாயனர் குருபூசை விழாவில திரு அ. சபாபதிப்பிள்ளை
தலைமை வகித்துப் பேசுகையில் கூறினர்.
63ܝ8ܝ5 [ofj(8ggrf -
கடவுள் காப்பாற்றுவாரென்ற சோம்பல் வாதம்
கூடாது
தமிழுக்குற்ற இழிநிலையைப் போக்க வற்புறுத்து:
JAS SSiDhASASAS MLASAMSMS SqS YMSMSJSAeMeAS MMMS AL YJSJSMSMALSLSeMS SSLS SALLAA LS LAM ALALAL ASeSL YS ALAL AJALSA MMeLeL ASMLMMMLMAeSMLL S AMASAMSMMeMMMeMSMYSMSSMMSSSS AAAAASASA SSASASSSLSMAMASAMS
நாவலப்பிட்டி, ஆக, 26
*ஆதிசிவன் பெற்ற தமிழ், அகத்தியனர் போற்றி வளர்த்த தமிழ் அழியாது என்று வரட்டு வேதாந்தம் பேசுவதில் பயனில்லை இக்கட்டான இன்றைய நிலையில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட் டுத் தமிழுக்கு வந்திருக்கும் இழிநிலையைப் போக்க வேண்டும். கட வுள் காப்பாற்றுவார் என்று கூறும் சோம்பல் வாதம் எங்களைக் காப்பாற்ற மாட்டாது."

Page 10
-10
இவ்வாறு நா வல ப் பிட் டி வட்டாரப் புகையிரதநிலைய அதிபர்கள் தொழிற்சங்கத் தலைவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை ருேசாலையைச் சேர்ந்த மயிலாடி முற்றவெளியில் நடைபெற்ற இளை ஞர் அறிவியற் கழக ஆண்டுவிழாவில் தலைமைதாங்கிப் பேசுகை யில் கூறினர்.
-- வீரகேசரி 28-8-64
நாவலர் முத்திரை மாதிரிப்படம் அமைச்சு பரிசீலை
qMSSLLSSLLSLLSASqSqS qSSqqSLLSS LSLS AqSS AASASALLLS SAAS AAAqS SSLS SASLL Sqqqq SJS AqqLq Sqqqq SASSLqSASLSLqSqLLq SLSL qL SSqSqqS qSSSL qq AS SLLS AAASq SLq AAAASLSASSSLq Aq S S Sq SqqqS SSAS SSASLSS SSSqAqAqSqSASMSSSASLMSASq S ASASALASqSqLqAqSqqSqqSqq SqqSSqSAqAS SqS ASLSASL AqLSLLLSAAAASLLLLSLLLSLLLSeASqSS SASLSASAASASASASASS
கினிகத்தனை, நவ . 29.
** நாவலரின் நினைவு முத்திரை வெளியிடுவது சம்பந்தமாக, நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. அ. சபாபதிப்பிள்ளை தபாற் தந்தி அமைச்சர் திரு. செ. குமாரசூரிய ருக்கு அனுப்பியுள்ள நாவலர் மாதிரி உருவப்படம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
திரு. அ. சபாபதிப்பிள்ளையின் கோரிக்கை வருமாறு:-
** நாவலர் பெருமானின் உருவம் பொறித்த முத்திரை வெளி வருமாயின் மிகவும் பொருத்தமானது. இத்துடன் நாவலர் படம் ஒன்று அனுப்புகிறேன். அப்படத்தின் பின் அமைப்பு அடியேனது கருத்தாகும் .
மூலப்படம் நாவலரின் நன் மாணுக்கனும் மருமகனுமாகிய திரு. ச. பொன்னம்பலபிள்ளை போற்றி வைத்திருந்தது. இப்படத்தை முத் திரைக்குரிய அளவினதாகச் சிறுப்பித்து வெளியிட்டால் முத் திரை சிறப்பாக அமையும் என்பது அடியேனது தாழ்மையான கருத்தாகும்.
அமைச்சருக்கு அனுப்பிய மேற்படி கோரிக்கைக்கு, இலங்கை முத்திரைப் பணியகம் பதிலில் தெரிவித்துள்ளதாவது: . . . . தங்களின் கோரிக்கை முத்திரைப் பணியக ஆலோசனைக் குழுவின் தீர்மானத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். ஆலோசனைக் குழுவில் தீர் மானித்ததும் அதன் முடிவு தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
தினபதி - 30-11-70

- I 1 -
சைவசமயம் மெலிவுற்ற காரணம்
சபாபதிப்பிள்ளை கூறுகிறர்.
யாழ்ப்பாணம் ஜன. 11.
" ஏனைய மதத்தினர் தங்கள் தங்கள் மதகுருமார்களுக்குச் செய் யும் மரியாதையை நாங்கள் எங்கள் மதகுருமாருக்குச் செய்யாத காரணத்தினலேதான் பெருமையும் உயர்வும் வாய்ந்த எமது சைவ
சமயம் இன்று மெலிவுற்றிருக்கின்றது '
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கர்த்தாவான பூரீமத் சுவாமி நாதத்தம்பிரான் அவர்களைக் கெளரவிக்கும் முகமாக யாழ்ப்பா ணத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற் றிய நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்க உபதலைவர் திரு அ. சபா பதிப்பிள்ளை இவ்வாறு கூறினர்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது. 'உலகத்திலே முதன் முதல் சமரசமும் உலகப் பொது நோக்கமும் பேசியவர்கள் சைவ சமயத்தினர்; இன்று சிலர் திருமுறைகளைக் குறுகிய நோக்கமுடை யவை என அவற்றைத் திருத்த முனைந்தார்கள். இப்பொழுது திரு முறைகளுக்கும் சத்திர சிகிச்சை செய்ய ஆரம்பித்திருக்கிருர்கள்.
தேவாரத்தில் திருவாசகத்தில் திருப்புகழில் ஒவ்வொரு வரியை எடுக்கிருரர்கள். சொந்த வரிகளையும் சேர்க்கிருர்கள். திருமுறைக ளுக்கு நடக்கும் இந்த நிந்தனை களையெல்லாம் கண்டும் கேட்டும்
சைவர்களாகிய நாம் வாழா விருக்கின்ருேம்' என்ருர்,
தினபதி 12-1-71.
நடுநிலை நின்று சேவை செய்கிறது. நாவலர் விழாவில் தினபதிக்குப் பாராட்டு
நாவலப்பிட்டி, டிச. 8
'தமிழுக்குத் தொண்டாற்றிய பெருந் தலைவர்களை மக்கள் மறந்து விடுகின்றனர். அண்மையில் சேர் பொன் இராமநாதன் அவர்களின் நினைவுவிழாவிற்கு வந்த கூட்டம் பற்றி தினபதி மட் டுமே மக்களுக்கு எடுத்துக் காட்டியது. இவ்வரிசையில் ‘தினபதி
சிந்தாமணி’ பத்திரிகைகள் நடுநிலை நின்று சேவைசெய்கின்றன.
நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்க ஆதரவில் ரயில்வே உளN யர்கள் கொண்டாடிய நாவலர் விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசிய திரு அ. சபாபதிப்பிள்ளை இவ்வாறு கூறினர்.

Page 11
--12-۔۔
'நாவலர் காலத்திலிருந்த அந்நியமத கலாசார எதிர்ப்பை விட அவர் புகழ் பாடுகின்ற இந்தக் காலத்தில் சைவத்திற்குச் சைவம் என்ற பெயரால் போலிக் கொள்கைகள் புகுந்து செய்யும் இடர் பெரிது. எனவே இந்த ஆபத்தைத்தடுத்து நிறுத்துதல் அவசி யம். இல்லாவிட்டால் வெறும் உயிரற்ற தோற்றப் பொருள்களா கவே சைவமும் தமிழும் காணப்படும் என்று பண்டிதர் செ. நட ராசா பேசுகையில் சொன்னுர் .
- தினபதி 9.12.69
திருவாசகத்தைக் கூட்டுப் பிரார்த்தனையில் பயன்படுத்த வேண்டும்,
நாவலப்பிட்டி யூல் 23.
'பெருமைகள் வாய்ந்த தெளிதேனுகிய திருவாசகத்தைக் கூட்டுப் பிரார்த்தனைகளில் சிலர் ஒதுக்கி வருவது கவலைக்குரிய விடயம் , ' 喙 W
நாவலப்பிட்டி இந்து வாலிபர் சங்க ஆதரவில் நடைபெற்ற மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூசைக்குத் தலைமை வகித்த திரு, அ , சபாபதிப்பிள்ளை அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திருவாசகத்தின் இனிமையை உலகறியச் செய்தார். கிறிஸ்த வப் பாதிரியாரான டாக்டர் போப். ‘திருவாசக மொழியாக்கப் பதிப்புரையில் உலக மதங்களில் உயர்ந்த உண்மையான மதம் சைவ சமயம், தத்துவ சாஸ்திரங்களிலும் சைவசித்தாந்தமே ஏனையவற் றைக் காட்டிலும் பொது நோக்குடையது; சைவசித்தாந்தத்தின் தெளிதேனுகிய திருவாசகம் ஒவ்வொரு தமிழனுடைய உதட்டிலும் உலவி வரும் உள்ளம் உருக்கும் ஒரு தனிச் செந்நூல் என டாக்டர் போப் கூறியுள்ளார்' . ...எனக்கூறி முடித்தார்.
தினபதி 24.7.69.

நாவலர் வழிக்கோர் காவலர்
கட்டுரைப் பகுதி.
நாவலர் பெயரைச் சொல்லிக்கொண்டே அவருக்கு விரோதமான கருத்துக்களைப் பரப்புகிறேம்.
''. . . . . . . . . . . . முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொளாகிய சிவபெருமானை வேதசிவாகம விதிப்படி மெய்யன்போடு வழிபடு வோர் சைவசமயிகள் என்றும் சிவனடியார்கள் என்றும் சொல்லப் படுவார்கள். பூரீல பூரீ ஆறுமுகநாவலர்.
இன்று நாங்கள் நாவலர் பெயரைச் சொல்லிக்கொண்டே நாவ லருடைய கருத்துக்களுக்கு முழுமையும் விரோதமான கருத்துக்க ளேப் பரப்ப முற்படுகின்ருேம். இது நாவலருக்கும் எங்கள் மேன்மை கொள் சைவத்திற்கும் செய்யும் பெருந்துரோகம்.
'அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை" என்று அப்பர் அடிகள் பாடிய போதிலும், வாதவூரடிகள் அஞ்சுவ தொன் றைச் சொல்கிருர்:
**புற்றில் வாழரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்.
கற்றை வார் சடையெம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந்தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே. **
தினபதி, இந்துசாதனம் 1969,
நாவலர் உள்ளம் என்றும் நடுநிலை கோடாதது
سمع^سمب^محہ"محم^محم۔ سمت مسیحیی سمہ سمیدسمبر"سمیہ
சேக்கிழார் பெரிய புராணத்தில் நாவலர் அளவிறந்த ஈடுபாடும் பக்தியும் உடையவர். மாணவர்களுக்கு முதல் படிப்பிக்கும் காவி யம் பெரிய புராணம்.

Page 12
-س- 4 Il ---
நாவலரின் தமையனர் திரு. தியாகராசா * பெரிய புரா னத்தில் உள்ள கதைகள் எல்லாம் கட்டுக் கதைகள்’ என்று சொல்லிவிட்டார்.
நாவலர் அடங்காக் கோபங்கொண்டு ஒர் கத்தியை எடுத்து ஓங்கி அவரை வெட்டப்போனர். அங்கு நின்றவர்கள் நாவலரைத் தடுத்துவிட்டார்கள். அண்ணன் தப்பியோடிவிட்டார். இதனல்
w நாவலர் தமையனருடன் பேசுதலையும் நிறுத்திவிட்டார்.
திரு. தியாகராசா மரணப்படுக்கையில் இருக்கும்பொழுதுதான் சென்று ஆசீர்வதித்தார். அண்ணன் தம்பியைப் பார்த்து 'நான் ஏதும் குற்றம் செய்திருந்தால் அதனைப் பொறுத்துக்கொள்' என்று கூறி குஞ்சிதபாத நிழலையடைந்தார்.
1879-ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிரசங்கம் செய்த முடிவில் இதுவே தமது கடைசிப் பிரசங்கம் என்று கூறி முடித்தார். அவ் வாறே சில தினங்களில் குஞ்சித பாத நிழலையடைந்தார். இறைவ னடி சேரச் சில தினங்களுக்கு முன் அபிமானிகள் நாவலர் உயிர் துறந்தால் அவர் பூதவுடலைச் சமாதி செய்து, சிலை நாட்டிக் கோயில் கட்டுவதாகத் திட்டம் போட்டார்கள். நாவலர் இதை எப்ப 4°யா அறிந்து எல்லோரையும் அழைத்துத் தான் இறந்த பின் உடலைச் சைவாசாரப்படி தகனம் செய்யும்படி கட்டளே இட்டார். ஈ மைக்கிரிகைகள் செய்வதற்குக் கூட உற்ற உறவினர் உடன் பிறந்த சோதரர்களை எல்லாம் விலக்கி சைவாசாரப்படி சிவபூசை செய்து சிறப்புடன் வாழ்ந்த திரு. சபாபதிச் செட்டியார் அவர்களை நிய மித்தார்,
நாவலர் சரித்திரம் எழுதிய பெரியார்கள் எல்லாம் இப்படிப் பல உண்மைகளை ஏன் மூடி மறைத்தார்களோ தெரியவில்லை,
OA vab e 兴
நாவலர் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக் கும் பொழுது நாவலரின் மருமகனகிய திரு. ச. பொன்னம்பல பிள்ளை (வித்துவசிரே பணி அல்லர்) பாடத்தில் கவனம் இல்லா திருந்தார். நாவலர் பல க அடித்துவிட்டார். பாடங்கள் முடிந்து மாணவர்கள் கலைந்த பின் மரு கஃன அழைத்து, 'ஏன் இன்றைக்கு வழக்கத்திற்கு மாரு க படிப்பிற் கவனஞ் செலுத்தவில்லை" என்று கேட்டார். திரு. பெ11 வhபலபிள்ளை அவர்கள் விம்மி விம்மி அழு தவண்ணம் 'எனக்கு \ன்று பொருளைப்பற்றிய சிந்தனை வந்தது. பொருளே கல்வியிலும், பெl கன்று எண்ணிவிட்டேன்' என்ருர்

صيد 5 1 جي
நாவலருக்கு உண்மை என்ன என்பது புரிந்துவிட்டது. பொன் னம்பலபிள்ளையின் தந்தையார் ஏற்கனவே இறந்து விட்டார். தாயார் நாவலருக்குச் சகோதரியாவார். பொன்னம்பலபிள்ளை தாயு டனேயே இருந்தார். முதல்நாள் பொன்னம்பலபிள்ளையின் தாயாரை நாவலரின் சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இரவோடு இரவாக அழைத்துச் சென்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி அவர் பெயருக்கு இருந்த சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு எழு திக்கொண்டார்கள்.
நாவலர் உடனே ஏமாற்றியவர்களை அழைத்து "த கப்பன் இல்லாத பிள்ளைக்கு நீங்கள் செய்த துரோகம் மிகக் கொடியது கண் கெட்டு மண் தடவுவீர்கள்' என்றும் சொல்லிவிட்டார் ஆத் திரத்தில்.
பெரியோர்களின் வார்த்தை பொய்யாகுமர்? அவர் சபித்த படி கள்ள உறுதி எழுதியவர்கள் கண்ணை இழந்தார்கள். இவர்களு டன் நாவலர் இறக்கும்வரை பேச்சு வார்த்தை இல்லாதிருந்ததும் உலகறியுமே!
இக்காரணங்களால் தான் நாவலர் உடன் பிறந்த சகோதரர் களில் ஒருவரையும் தமது ஈமக்கிரியைகள் செய்வதற்கு நியமிக்க வில்லைப்போலும்! மரண சாசனத்திற்கூட மாணவ பரம்பரையையே தமது தருமச் சொத்துக்களைப் பரிபாலனம் செய்ய நியமித்தார்.
தினபதி, வெள்ளிவிருந்து, 4-7-69.
'இடைக்” துரை
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராயிருந்த 'இடைக்' துரையும் நாவலரும் உற்ற நண்பர்கள். ஒரு நாள் இடைக் துரை குடும்ப சமேதராய்க் குதிரை வண்டியில் அதிகாலையில் உலாவந்து கொண்டிருந்தார். நாவலர் வீட்டு வாசலில் ஒரு பெரிய கல் இருந்தது. அக் கல்மேல் இருந்துநாவலர் பல்துலக்கிக் கொண்டிருந் தார். நாவலரைக் கண்டதும் இடைக் துரை வண்டியை நிறுத்தி "குட் மோணிங். நீங்கள் உங்கள் சுவாமிமேல் உட்கார்ந்து பல் துலக்க 6υ Πτι Ο Π Ρ
நாவலர் புன்சிரிப்புடன் எழுந்து வண்டியருகே சென்ருர்,
"குட் மோணிங்' என்ருர் நாவலர். திரு. இடைக் , திருமதி. இடைக் (மனைவி) செல்வி இடைக் (மகள்) மூவரையும் பார்த்த வண் ணம் நாவலர் தொடர்ந்து திரு. இடைக் அவர்களை நோக்கி,

Page 13
-س-16 --
“மன்னியுங்கள்’’ நீங்கள் திருமதி இடைக் அவர்களிடம் நடந்து கொள்வதுபோல் செல்வி இடைக்கிடமும் நடந்து கொள்வீர்களா?
இடைக் துரை வெட்கி வண்டியை விரட்டிச் சென்றர். நாவலர் ஆற்றிய தொண்டுகள் அளப்பில . . .
(தனிப்பிரசுரம்)
கூட்டுப் பிரார்த்தனையில் திருமுறைகள்.
கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அன்பர்சுள் தேவார திருவாச கங்களை ஒதுக்கிச் சிறு துணுக்குகளை முதலில் பாடுகிறர்கள். திரு முறைகளே அவமதிக்கும் முறையில் அவற்றை ஈற்றில் பாடி வருகி முர்கள்.
அன்று நாவலர் தேவாரம் பாடிய இடங்களில் அருட்பா
பாடியதற்கு என்ன செய்தார்? இப்பெரியார் பிறந்த ஈழத்திலேயே திருமுறை நிந்தனை நடக்கிறதே! இது முறையா?
கூட்டுப் பிரார்த்தனை செய்யும் சைவப்பெருமக்கள் முறை யாகத் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருப்புராணங்கள் பாடி ஈற்றில் தாம் விரும்புகிறபடி சிறு துணுக்கு களைப் படிப்பார்களாக,
இந்து சாதனம் 25.9.60.
ஆறுமுகநாவலர் வடமொழியில் பாண்டித்தியம் பெற்றவர் ஆணுல் அம்மொழிச் சொற்களை அருமையாகத்தான் பிரயோகித்தார்.
- - - - - - - நாவலர் வடமொழியும் நன்கு கற்றிருந்தார். ஆனல் வடமொழிச் சொற்களை அருமையாகத் தேவையான இடங்களி லேயே நாவலர் தம் நூல்களில் பயன்படுத்தியிருக்கிருர், அம்பல வாண நாவல சுவாமி அவர்கள் தமது குருவாகிய ஆறுமுகநாவ லரைப் பற்றி எழுதிய "சற்குருமாலை" என்னும் நூலிலே ஆங்கில மும் ஆரியமும் தமிழை நலிவுறச் செய்யுங் கால் நாவலர் தோன் றிக் காப்பாற்றினர் என்று மிக அழகாக எடுத்துரைக்கிருர்,

سسہ / Il --
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலிலே அக்காலத்தில் நடந்த வான வேடிக்கை, வனிதையர் நடனம், ஆட்டுப்பலி முதலியவற்றை வன் மையாகக் கண்டித்தார். இவைகள் எல்லாம் இப்போது கைவிடப் பட்டபோதிலும் நாவலர் விரும்பியவாறு மூலமூர்த்தி இன்னும் சிலை
யாக அமைக்கப்படவில்லை. Y
இக் கண்டனங்கள் காரணமாகப் பலர் நாவலருக்குப் பல இன் னல்கள் விளைவித்தார்கள். வாழைப்பழத் தோலால் எறிந்தார்கள். எச்சில் வடைகளை வீசினர்கள். நாவலர் பயபக்தியுடன் அணியும் உருத்திராட்சத்தைத் தூவிக்கும் முறையில், பனம் பணியாரத்தில் மாலே கோத்து அணிந்தார்கள். பிறந்த ஊரில் இந்த மரியாதை, இந்தியாவில் நாவலர்ப்பட்டம் இது மட்டுமா? காடையர் சிலருக்கு மது உண்ணக் கொடுத்து, கல்லாலும், பொல்லாலும் அடிக்கவும் ஏவினர்கள். ஏவற்பேய்கள் நாவலர் வரும் வழி பார்த்திருந்தார் கள். நாவலரைக் கண்டதும் நாவலரின் பிரமசரிய விரதத்தினதும் கடவுள் பக்தியினதும் சத்திபோலும் நினைத்து வந்ததை மறந்து கல் லேயும் பொல்லையும் வீசிக் காடையர்கன் நாவலரை வணங்கிச் சென்ருர் கள்.
வீரகேசரி 26-11-64,
நல்லறிவுச் சுடர்
* மாங்கல்யத்தைத் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் நாயக ருக்குத் துரோ கஞ்செய்து இல்லொழுக்கிறந்த பெண்டிர்கள் போல, விபூதி உருத்திரா கூடிங் களைத் தரித்துக்கொண்டு அச்சின்னங்களுக்குரிய சிவபெருமானேடு பசுக்களைச் சமமெனக் கூறியும், சிவவாக்காகிய சிவாகமங்களை நிந்தித்தும், அச் சிவபெருமானுக்குத் துரோகிகளாய் ஒழுகும் இவர்கள் மற்றை எப்பாத கந்தான் செய்யக் கூசுவார்கள். ஐயையோ! இச்சிவத்துரோகிகளை நம் மு  ைடய சைவசமயிகள் வணங்குதலும், இவர்களுக்கு நாம் வருந்தித் தேடிய பொருள்களை பாழுக்கிறைத்து, எரிவாய் நகரத்துக்கு இரையாவதும் எவ்வளவு
அறியாமை.
தனிப்பிரசுரம், 15-11-68.

Page 14
O S :)Caesalar σί Gaste ( /Die_G(ard?
SLMLA LASLSLLL LSL SLSLSLSLSSSeeeSLLLLLeLS LMLLLLLL LL LLLLLLLLeLeL LASSS AAALSLALLLL LLLLLLLLSLLLSAAA
Reproduced herein are a few lines which are a translation of his (Navalar) writings in the Peria Puranam under the caption True Saints and their merits'
Religion is above caste. If one considers that caste is above religion it is contrary to the accepted principles of learning, intelligence and experience the untouchables or the Panchama caste people are those Who:-
(i) Live on offerings made at temples, without using some for the purpose it was intended.
(ii) Levy charges for religious preachings
(iii) As temples authorities misuse the charitable donations made by the public.
w (iv) Renounce and wear robes for selfish and Worldly purposes.
Was Navalar with such noble and progressive Views a caste die-hard?................
SUN 8-7-69.

G(Inti *)Caesalar Campaign
'Navalar was a caste die-hard'
''Why erect a Statue to such a reactionary'
"Blow up the statue of Navalar for. he was a Hindu revivalist''
These were some of the slogans conspicuously displayed on the walls of Jaffna Town according to the newspaper reports.
These misguided youths and their leaders who dominated by foreign influence and dictation are always in the habit of creating caste dissention and communal hatred. These mischief makers should first study the lives of our great men and their Works........ Our great leaders had revolted against those social evils such as caste distinction animal sacrifice in temples and the priest-hood monopoly and their tyranny.
Daily Mirror 7-7-69.

Page 15
சிறப்புக் கட்டுரை
சென்னை சென்று சைவத்தொண்டாற்றிய சைவசித்தாந்த மகாசரபமும், மாயாவாத தும்ஸ கோளரியுமாகிய, யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சதாவதானம் அருட்டிரு நா. கதிரவேற்பிள்ளை (1860-1907)
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலியில் முருகபக்தராகிய நாகப் பிள்ளை என்பவருக்குப் புத்திரராக 3ஆம் தேதி மார்கழி மாதம் 1860ஆம் ஆண்டு அருட்டிரு கதிரவேற்பிள்ளை அவதரித்தார்.
பூரீலபூரீ ஆறுமுக நாவலரின் நன் மாணுக்கராகிய மகாவித்து வான் தியாகராசப்பிள்ளை அவர்களிடம் முறையாகக் கல்வி கற்ருர் பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்க ளையும். சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும், கற்றுப் பண் டித சிரோமணியாக விளங்கினர்.
நாவலர் பெருமான் தமிழகத்திலும் சைவத் தொண்டு தமிழ்த் தொண்டு செய்தமுறையில் அருட்டிரு கதிரவேற்பிள்ளை அவர்களும் சென்னை சென்று பெரும் சைவத்தொண்டு ஆற்றியுள்ளார், அக் காலத்தில் வாழ்ந்த பூரீலபூரீ சபாபதி நாவலர் " வைதீக சைவசித் தாந்த சண்டமாருதம்’ பூரீலபூரீ சோமசுந்தர நாயக்கர் ஆகியோ ருடன் நட்புரிமைகொண்டு அன்பு பாராட்டி வந்தனர். இவர் இயற் றிய நூல்கள்: சிவகூேடித்திராலய மகோற்சவ விளக்கம், திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புரா ணத்திற்கு அரும்பதவுரை முதலியன.
சென்னை வாழ் பண்டிதர் பலருடைய வேண்டுகோளுக்கிணங் கத் தமிழ்ப்பேர்-அகராதி முதன்முதலாக தமிழ்நாட்டிற்கு உபகரித் துத் தமிழ்த்தாய்க்குத் தலைமகனய் இயங்கினர். அவ்வகராதியின் அருமையைப்,
"பூவில் இடைகடை ஆதி எழுத்தின் முன்பேருறப்
/ பதித்த புத்தகங்கள் யாவும் இடைகடை எனவே யாழ்ப்பாணப்
புலோலி நகரின் மாசீர்த்தி பாவுபுதுச் சந்நிதியான் அருட் கதிரைவேற்
புலவன் பதித்த மேன்மை மேவும் அகரர் தியிதே முதலதெனக் கிதின்பெய
ரேவிளங்கும் அன்றே.' என்று தஞ்சை சதாவதானம் பிரமயூரீ சுப்பிரமணிய ஐயரவர் கள் புகழ்ந்திருப்பதால் அறியலாம்.

-س- 1 2 س--
நாம் பிரமம் என்னும் சோம்பல் வாதத்தைப் பரப்பும் சித t களின் சைவ நிந்தனையைப் பொருது பொங்கி எழுந்தார். சென்னை சித்த திரிப்பேட்டையில் சிவன் யாம் என்று கூக்குரல்போடும் கூட்டத் இலேயே சிங்கம்போல் சென்று விணக் கணைகள் தொடுத்தார். ஆட்டுமந்தைகள் போல் கலைந்தனர். அரிபொறித்த விஞக்கட்கு அன்னேர் விடை அளிக்கவே இல்லை. மற்ருெரு நாள் காசிவாசி செந்திநாத சுவாமிகள் அக்கிராசனத்தின் கீழ் ஒர் பேரவைதக் கவர் களால் சேர்க்கப்பட்டது. இப்பேரவையிலும் அத்துவிதம் செழிக்க வந்த அறிஞர் தருக்க நெறி பிறழாது சுருக்கமாகக் கடாவிய வினக்கட்குப் பதில் இறுக் காது விழித்தனர் நாம் பிரமம் கட்சி
அக் கிராசனர் முக்கண ன் நாமம் முழக்கி மக்கள் உய்யவந்த மாதவப் பெருந்தகைக்கு " 1ாாயாவாத தும்ச கோளரி" என்னும் பட் டம் அளித்தனர் (கோளரி-சிங்கம்)
நாம் பிரமம் என்னும் நாகங்கட்கு இடி என இலங்கிய பிள்ளை அவர்களை ஆரணி சமத்தான அரசர் தமது சமத்தானத்திற்கு வித் து வானுய் அமர்த்தி தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுவந்தார் அரசனும் ஒர் பேரவைகூட்டினன். அரச சபையிலே ஒரு சாத்திரி யார் வந்து பிள்ளை அவர்களுடன் வாதித்துத் தோல்வி கண்டார். அதை நேரில் கண்ட அரசரால் எம் குருநாதருக்கு அத்துவித சித் தாந்த மதோத் தாரணர் என்னும் அரிய பட்டம் அணியப்பட்டது’’ என்று பிள்ளை அவர்களின் தலை மாணவராய கிரு. வி. கலியா ைசுந் தர முதலியார் அவர்கள் எழுதிய 'கதிரவேற்பிள்ளை சரித்திரத்தில்' கூறப்பட்டிருக்கின்றது. இக் கட்டுரையையும் அடியேன் இச்சரித்தி ரத்தைத் தழுவியே எழுதியுள்ளேன். ஈழத்திலும் திரு. வி. க. அவர் களைத் தெரியாத தமிழர்கள் இருக்கமுடியாது.
திரு, வி. க வின் நினைவாக ஒரு மணிமண்டபம் சென்னையில் திகழ்கின்றது. இந்த மணிமண்டபத்திற்கு அயராது உழைத்தது ‘பூரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை சென்னை. இச்சபையை நிறுவிய (1903) பெருமையையும், இச்சபையின் ஆரம்ப தலைவராகிய பெரு மையையும் உடையவர் பிள்ளை அவர்கள்.
நன்றிக் கடமை உணர்ச்சியுடன் பூரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை இன்றும் பிள்ளை அவர்களின் குரு பூசைத்தினத்தை (பங்குனி மகம்) முறையாகக் கொண்டாடுகின்றது தாய்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள் ஈழத்துப் பெரியார்களை மதிக்கிருர் கள் இல்லை என்று கூறுபவர் இதை நினைவுகொள்வார்களாக. அங்குள்ள ஒரு சில விஷமிகளால் பரப்பப்படும் துவேஷ கோஷங்கள் நிலைநிற்கமாட்டா.

Page 16
2. சிவமயம்
நாவலர் வழிக்கோர் காவலர்
நூற்பகுதி
நூல்: 1
மிண்டிய மாயாவாத துவம்சத் தொகுப்பு
மாயா வாதமும், உலகாயதமும் (இம்மைச் சு கத்தின் பொருட்டு எதுவும் செய்யலாம் என்பது) கீழ்நிலையிலேயுள்ள மதங் கள், (சோமசுந்தரப் புலவர்)
முழுமுதற் கடவுள் சிவன் படத்தை வைத்து வணங்கும் சைவர்களின் வீடுகளில் எல்லாம் வித்தைக் காரர்களின் படங்கள் தான் தொங்குகின்றன. பணத்திற்காகச் சைவர்கள் சில வித் தைக்காரர்களையெல்லாம் கடவுளர்களாக மாற்றி வணங்குவது என்ருல் "சுவீப் டிக்கெட்' சமயம் ஒன்றை உருவாக்கி விடுதல் சிறந்ததாகும்.
சைவ சித்தாந்தத்திலே அவதார புருஷர்கள் என்ற பெயரில் நடைபெறும் ஏமாற்று வித்தைகளுக்கு சைவர்கள் தங்கள் தனித் துவத்தைப் பலியிடக் கூடாது. (கேரள நாட்டு திருவாங்கூர், பல் கலைக் கழகப் புலவர் திரு. சி. சத்தியமூர்த்தி - தினபதி 14:5-68)
‘ படத்தில் இருந்து வீயூதி வருகிறது; குங்குமம் வருகிறது; தீர்த்தம் சிந்துகிறது என்றதும் யாழ்ப்பாணம் திரண்டது யாவரும் அறிந்ததே! (பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை)
'சத் சித், ஆனந்த ரூபமான சிவன் வியாபக அறிவுடைய வன், ஒரு தாய் வயிற்றில் அவதரித்துப் பஞ்சேந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டுச் சுட்டி அறியும் தன்மை சிவனிடமில்லை, அவதாரம்' என்னும் வடசொல் தமிழில் இறங்குதல்’ என்னும் பொருளைக் குறிக்கும். பதியாகிய சிவனை மனித நிலைக்கு இறக்குதல் அசைவ மாகும்’ (திரு. நா. செல்லப்பா, இந்துசாதனம் 4-8-691
ஒவ்வொரு கோவில்களிலும் சைவ சமயத்தை மக்சளுக்கு தாய் மொழியிலேயே போதித்தல் வேண்டும் என்று காமிகாமகத்தில் விதிக்கப்பட்டிருக்கின்றது. "" (நாவலர்)
பூசினிக்காய் எடுத்தவனைத் தோழிலே தெரியும்" என்ரு ற் போல் ஓர் உபாயம் சொல்வோம் கேளுங்கள். இப் புத்தகத்தை (தொகுப்பை) வாசிக்கும்போதும் கேட்கும் போதும் வாய்முறுத் தலிலும், கண்சிவத்தலிலும், முகம் கறுத்தலிலும், சரீரம் படபடத் தலிலும் அவர்களை அறிந்து கொள்ளலாம்." (நாவலர்)

-س- 23 صس
அண்மையில் ஓரி ஆசிரியர், பிரபல பத்திரிகை நிருபர் கூட ஆசிரியர் ஒருவரிடம் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன் பள்ளிக்கூட முன்றலில் பேசிக்கொண்டு நின்ருர், ஓர் சிறு மாணவன் எதிர்ப் புறக் கானில் இருந்து குறுக்கே பள்ளிக்கூடத்திற்கு ஓடி வந்தான். மிக வேகத்தில் மோட்டார் ரதம் ஒன்று வீதியில் வந்துகொண்டிருந் தது. தெய்வாதீனமாக ஓர் மயிரிழையில் மாணவன் காரில் அடி படாது தப்பினன். பத்திரிகை நிருபராகிய ஆசிரியர், "அட பாவிப் பயலே! ஐந்துளூபாய் உழைப்பைக் கெடுத்து விட்டானே!!" என்று ஏங்கினர். சக ஆசிரியர் கோபங்கொண்டு, நிருபர் கழுத்தைப் பிடித்தவண்ணம் 'அட துரோகி! இதுவா உண் சைவ நற்சிந்தனை! வானெலியில் விளாசுவது ஊருக்காகவும் உன் பிழைப்புக்காகவும் விளம்பரத்திற்க சவும் என்று ஊரார் பேசுவதின் உண்மையை அறிந் தேன். ஒர் உயிரிலும் ஐந்து ரூபா பெரிதா!' என ஏசினர் நிருபர். நான் சும்மா பகிடிக்கல்லோ சொன்னேன் என்று சொல்லித் தப்பிக் கொண்டார். இந்தப் பேர்வழிகளுக்கு பத்திரிகைகளும் இலங்கை வானெலியும் சைவநற்சிந்தனைக்கு இடங்கொடுப்பது எவ்வளவு அறி யாமை! சாயிபாபா பிரதிநிதி வேறு எப்படி இருக்க முடியும்!! அதிசயம் ஒன்றும் இல்லையே?
பொதுமக்களிடம் பொதுச்சேவைக்குப் பணம் சேர்த்தால் பொதுமக்களுக்கு கணக்கு காட்டவேண்டியது முறை. இரு (பெரிய) நாவன்(க்ைகள் (நான் என்ற மமகாரம்) அரசாங்கத் கையே ஏமாற்றி ஆள் மாருட்டம் செய்து பட்டப்பகலிலேயே திருடர்களாகப் பணம் திரட்டுகிருர்கள்.
சமய சேவைக்கு ஊரில் யாசித்த பொருள்கொண்டு வாக னம் வாங்கப்பட்டது. வாடகைக்கோடியது, விற்கப்பட்டது. இன்று
வரை கணக்குக் காட்டப்பட்டதா?
ஆண்டவன் நாமத்தைப் பாடிய இடத்தில், பா வேண்டிய இடத்தில், "பசுப் பஜனைக்கு இடங்கொடாதீர்கள் சிவாயநம" என்று முழங்கிய இடங்களில் வேறு பிதற்றல்களுக்கு இடங்கொடுத்து இழுக்குத் தேடாதீர்கள், மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகப் பெரி யார் ஒருவர் நல்லதோர் உவமானம் சொன்னர் இரணியாய நம" என்று சொல்லச்சொன்ன அசுரனுக்கு வந்தகெதிதான் இந்த ஏமாற் றுக்காரர்களுக்கும் வரும்.

Page 17
நல்லை வாழ் கந்தனும்
நூல்: 2. நல்லை வாழ் நாவலரும்
பதிப்புரை
நாம் எல்லோரும் நல்லூர்க் கந்தனை நாவலரின் நோக்கரிய நோக்கோடு நுணுக்கரிய நுண்ணுணர்வோடு சிந்திப்போமா க. நாவ லரின் கருத்துக்கள் நால்வரின் கருத்துக்கள். நால்வரின் கருத்துக் கள் சிவாகமகக் கருத்துக் கள். எனவே, இச்சிறு தொகுப்பிற்கு முன் னுரையோ, அணிந்துரையோ தேவையில்லை என்று கையெழுத்துப் பிரதியை அச்சகத்திற்கு எடுத்துச் சென்றேன். எதிர்பாராத வித மாக எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தார் நண்பர் சு. பிரேமசம்பு அவர்கள். வணக்கம்சுறி பிரதியைக் காட்டி அபிப்பிராயம் கேட் டேன். மறுநாள் ஒரு பாராட்டுரை எழுதித் தந்தார். அதுவே முன் னுரை ஆயது. உயர்ந்த உள்ளம் படைத்த இவருக்கு முதற் கண் நன்றி உரித்தாகுக.
அ. சபாபதிப்பிள்ளை
முன்னுரை
இந்நூலில் நாவலரின் சுருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சமயத்துக்குத் தகுந்த மாதிரியான புத்தகங்களை உசிதம் போல் வெளியிட்டு அவற்றை விற்றுக் காசாக்கிக்கொள்வது சாதுரியத்துக கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகக் கணிக்கப்படும். ஆயின் சபாபதிப்பிள்ளை அப்படிச் செய்யாது, நாவலரைப் பற்றிய தகவல் களை எவ்விலை கொடுத்தும் வாங்கத் தயாராக மக்கள் இருக்கும் மனேநிலையைத் தமக்குச் சாதகமாக்காமல் இதனை இலவசமாக அச்சிட்டு விநியோகிப்பது அவரது உள்ளுணர்வு ஆர்வத்தைப் புலப் படுத்தியுள்ளது.
'பூgரீல பூரீ ஆறுமுக நாவலர் சாதி வெறியர்' என்ற தவருன அபிப்பிராயம் சிலரால் பரப்பப்பட்டது. அப்பிழையான தன்மையை ஆணித்தரமாக மறுத்துரைக்க எந்தச் சபைகளும் எந்தத் தனி நபர் களும் இதுவரை சரியான முறையில் முன் வரவில்லை. இப்பிரசுரத்தி லுள்ள ஒரு பகுதி அதனைச் செவ்வனே மேற் காண்டுள்ளது. நாவலர் கீர்த்தனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
க. பிரேமசம்பு.

மிண்டிய மாயாவாதமும் தவத்திரு குன்றக்குடி அடிகளும் என்னும் நூலின்
முகவுரை
/Nov/MYNY"
'நல்லறிவுச் சுடர்', 'மிண்டிய மாயா வாத துவம்சத் தொகுப்பு’, ‘நல்லை வாழ் கந்தனும், நல்லை நகர் நாவலரும்' ஆகிய் மூன்று இலவச வெளியீடுகளையும் சைவப் மெருமக்கள் பெரு மகிழ்வோடு ஆதரித்துப் பாராட்டியுள்ளார்கள்.
'இந்து சாதனம்', 'தினகரன்', 'செய்தி' ஆசிய மூன்று தமிழ்ப்பத்திரிகைகளும் விமர்சனங்கள் எழுதியுள்ளன. * * Gର l_luଜଶଃ நியூஸ்', 'டெயிலி மிரர்', ' ஸன்' ஆகிய ஆங்கிலப் பத்திரிகை கள் செய்திகள் பிரசுரித்தன.
அவைகளைப் படித்ததும் அன்பர்கள் கடிதங்கள் எழுதிப் பிர சுரங்களைப் பெற்றுக் கொண்டார்கள். அவ்வாறு தபால் மூலம் அனுப்பப்பட்ட பிரதிகள் இன்றுவரை 436 ஆக உயர்ந்துள்ளது. அம்மூன்று பிரசுரங்களுள்ளும் குறிப்பாக இரண்டாவது வெளியீ டான “மிண்டிய மாயாவாத து வ ம் ச த் தொகுப்பு’’ அனுப் பும்படி இன்னும் பல இடங்களிலிருந்து கடிதங்களும், தபால் அட் டைகளும் வந்த வண்ணமாய் இருக்கின்றன. அத்தொகுப்பின் பிர திகள் கைவசம் இல்லாமையால் மறு பிரசுரம் செய்கின்ருேம் .
அச்சாகும்பொழுது அணுகிய செய்தி! 翡
'பரிண்டிய் மாயாவாதத் தொகுப்பு” ஈட்டிய
அற்புத வெற்றி!
(பயந்து படம் எடுக்கும்) பாம்புக்குத் தலை காட்டி மீனுக்கு வால் காட்டும் விலாங்குபோன்ற நாவல் நகர் சாயிபாபாவின் பிரதி நிதி, ஒரு பெரும் பதவியில் இருக்கும் கொழும்புப் பிரதம பிரதி நிதிக்கு “மிண்டிய மாயா வாதத் தொகுப்பின் முதற் பிரசுரப்பிரதி யொன்றை எடுத்துச்சென்று முறையிட்டது. rs
"அந்தப் பொடிப்பயலை (ஆசிரியரை). கத்தியால் . . .!, • s • முடித்துக் கட்டிவிட்டல்லவா நீங்கள் இங்கு வந்திருக்கவேண்டும்" என்று பொங்கி விழுந்ததாம் பிரதம பிரதிநிதி.
மொழியால், எழுத்தால், கருத்தால், சாதிக்கமுடியாத நிலை யில் கத்தியும் எடுக்கலாம் என்ற போதனையும்,சாயிபாபா போதனை \போலும் !!!

Page 18
T= -
* . திே
கணபதி
அட்டைப்பட .
'பஃறுளியாற்றின் பன் ப கொடுங் கடல் கோள்ள வடதிசை தென் திசை யாண்ட தென்ன என் இளங்கோவடிகள் வாழ்த்துகின் ரூர்
கடல் கொண்ட குமரிக் கண் தியே ஈழம், பஃறுளி ஆற்றின் இரு தி ஸ்தான் +ம் என்பது பெரும் தொடர் தான் । மீான்கள், புலவர்கள் தோன் துச் ச செய்கிருர் கள்.
எக்காலத்திலும் இங்குச் சிறந்த இதுவே காரணம். நாவலர் பெரும இதுவே காரணம்,
நாவலர் முேஜாப் புளில் மிகப் மாக உபயோகித்துத் தமது பூஜை
| சி வ ஞான வெ
கோப்பாய்,
AMAAA AAAA AAAA M MAAMAAqAq qqAqAq q qSqq SqqqSqSMS AeALAAMA
திருவள்ளுவர் அச்சகம், ந
 
 
 

து:
அருட் கோலம்
"الـكـة ميامي
0ஃப் யடுக் சுத்துத் குமரிக்கோடுங் க் கிங் எ கயும் இமயமும் கொண்டு பாழி 'வான்று சிவப்பதிகாரத்தில்
டத்தில் எஞ்சி நிற்கும் ஓர் கு கிஃ களுக்கிடையே உள்ளதோர் பார்களின் கருத்தும். இப்பழம் சங்க காலத்திலும் பல கல்வி Wம். இன்றும் இருக்கித்தான்
தமிழர் சுத்த சைவமும் நிலவ ான் ஈழத்தில் தோன்றியதற்கும்
பிரீதிய டையவர். அதஃ ைஅதிக
.4-7-69 ,glan I LIE سے۔
பச் செய்தவர்
i.
விபயிட்ட கம் இலங்கை.
TSqS qqqq SSqSqTS AAAAS S qSqqSqqSqqSqq SqqSqSqS qeASTqS S SSSSSSe eSqSqSqSqSqSSqSS S SSASS
iல்லூர், யாழ்ப்பாணம்.