கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வீரவாகு கனகசபாபதி)

Page 1


Page 2

சிவமயம்
இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட
eltos வீரவாகு கனகசபாபதி
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவு
2O52OO6

Page 3
:韃s.s.
|파냐어: 다약냐.
山==·國|-
E=터--3
曹叶吨山軍t=叫翻吨|}|■ 豐山酬Ệ
珊珊ĦE=§地露露翔ģ高
國 國 km2盛河据5;迈画
娜娜飓舞鹤舞蹟
噶翻娜娜感器 喷出叠山 *府院=『r코H*E}}£
心 -剧(司七e-乐睡偃历星E' ss - E3
副题而心跳舞吧娜娜圆圈娜品
历t터Å勇感5日吨
蛋喷匿
 
 

மலர்வு: உதிர்வு: Ο1. O7.1931 2з.o4.2oо6
அமரர் வீரவாகு கனகசபா

Page 4

கனகமலர்
பாத கமல மதில் கண்ணிர் தொட்டு காணிக்கை யாக்குகிறோம்
இந்த கனகேஸ்வரம்” எனும்
நினைவுமலர்
செல்வமும் செழிப்பும் ஒருங்கே சைவமும் விருந்தோம்பும் பண்பும் நிறைந்த ஈழ வள நாட்டின் இணுவையம் பதியின் மேற்கு திசையின் உயர் குலத்தோன் வீரவாகு தெய்வானைக்கு நன் மகனாய் அவதரித்த புதல்வன் தான் இளைப்பாறிய அதிபர் பிரபல சோதிடர்
be . S9UTI d5601858 Tugs 96).T856T,
d

Page 5
சிவமயம்
பஞ்ச தோத்திரம்
திருச்சிற்றம்பலம்
" விநாயகர் காப்பு
விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான்
விநாயகனே வெட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
(356mm trib (திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகம்)
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில் ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன் முன் மலர்பறித்திட் டுண்ணாராக்கில் அருநோய்கள் கெடவெண்ணி றணியாராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே
ー:01:ー
 

திருவாசகம்
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம வெனப் பெற்றேன் தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே
556isnaffunr
அன்னநடையார் அமுதமொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள் பொன்னும்மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கட்டு மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் செவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரம் உலகுங் கழற உழறி உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
மண்ணிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுதுசெய் வித்தல் கண்ணிலால் அவர் பொலிவுகண் டார்தல் உண்மையாம் எனின் உலகர்முன் வருக எனஉரைப்பார்
-:02:-

Page 6
திருப்புகழ்
முததைத்திரு பத்தித் திருநகை
அத்திக் கிறை சத்திச் சரவன
முத்திக் கொரு வித்துக் குரபர எனவோதும் முக்கடட்பர மங்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திரவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப் பத்துத்தலை தத்திக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப் பத்திற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தரள்வது மொருநாளே தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்தப் பொரவல பெருமாளே
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள்சைவ நிதி விளங்குக உலகமெல்லாம் திருச்சிற்றம்பலம்
-:O3:-

|-|-
| _
|
| || .|||,
|
)*|| () . |×s.||三盏 saesae.歴 |-
*--|-
|言-|| ,No.W |-||
|

Page 7

வாழ்க்கை வரலாறு
அமரர் வீரவாகு கனகசபாபதி சைவவேளாண் குடிமகன். வைத்திய பரம்பரையைச் சோந்தவர். வைத்தியமும் சோதிடமும் இக்குடும்பத்திற்குக் கைவந்த கலையாகும். இவரது தந்தை வழிப் பாட்டன் இணுவில் மேற்கைச் சேர்ந்த வைரவநாதர் ஆவார். வைரவநாதர் இணுவையூர்ச் சின்னப்பிள்ளையைத் திருமணம் முடித்த பேறாக வீரவாகு, மாணிக்கர், பெரியதம்பி, அபிராமிப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளையும் பிள்ளைகளாயினர். மூத்த மகன் வீரவாகு பரியாரி வேலுப்பிள்ளையின் (நாகநாதர் வேலுப்பிள்ளை) மகள் தெய்வானைப்பிள்ளையைத் திருமணம் செய்ததன் பேறாக அமரர் கனகசபாபதி 01.07.1931ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு வைத்தியர் சோமசுந்தரம் அம்பலத்தரசு என்ற இரு ஆண் சகோதரர்களும் கனகம்மா, மனோன்மணி என்ற பெண் சகோதரிகளும் உளர்.
இவர் இளமைக் காலத்திலேயே பணிவும், பண்பும், கடவுள் பக்தியும், பெற்றோர்க்கடங்கிய பிள்ளையாகவும் இருந்தார். சகோதரர்களிடம் அன்பும் பணிவும் கொண்டவர். உறவினர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்வார். சகோதரர்களுக்குப் பக்கபலமாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். இளமைக் கல்வியை இணுவில் இந்துக் கல்லூரி, உடுவில் மான்ஸ் ஆங்கிலப் பாடசாலையில் கற்றுத் தேறி மலையகப் பாடசாலைகளில் சுமார் 13 வருடகாலம் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். 1957 தொடக்கம் 1969 வரை இவரத சேவை மலையகத்தில் பதிவானது. இந்த வகையில் வி ஓயா எட்டியாந் தோட்ட K.G நியூ பொலட்கம E.TM பாடசாலை K.G சென்மேரி த.க. பாடசாலை அகியன இவரது பணியைப் பெற்றிருக்கின்றது. 1970ல் நல்லூர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை
ー:04:ー

Page 8
முடித்த இவர் சிலாபம் கொட்டுவல R.C பாடசாலையிலும் R.C ஆண்கள் பாடசாலையிலும் ஆசிரியப் பணிகளை முடித்துக் கொண்டு யா.கொக்குவில் மேற்கு சீ.சீத கலவன் பாடசாலையில் 1974 தொடக்கம் 1991 வரையான நீண்ட காலப் பகுதியில் தன் பணியை ஆற்றியுள்ளார். இவர் இப் பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் ஆசிரியப் பணியுடன் நின்று விடாது சோதிடக் கலையிலும் வல்லுநராகக் காணப்பட்டார்.
இவர் 1968ம் ஆண்டு தாவடி தெற்கு விதானை செல்லத் தம்பி மகன் அம்பிகைபாகர் பொன்னம்மா தம்பதிகளின் மகள் மகேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார். இல்லறம் நல்லறமாகியது. அன்பும் அறனும் மிக்க இவரது இல் வாழ்க்கை இனிதே சிறக்க நன்கலமாகிய மக்கட் பேற்றையும் பெற்று மகிழ்ந்தார். சக்திதாசன், வீரசக்திருபன் என்ற இரு ஆண் பிள்ளைகளையும் சக்திமனோகரி என்ற ஒரு பெண் பிள்ளையையும் பெற்று மனமுவந்தார். பிள்ளைகள் மூவரும் நல்ல கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்குகின்றனர். மூத்த மகன் சத்திதாசன் சிறந்த கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் விளங்குகிறார். அவர் சிறந்த அறிஞனாக விளங்குவதோடு நில்லாது தான் பிறந்த நாட்டில் மட்டுமல்லாது மேற்கு நாட்டிலும் அதாவது டென்மார்க்கிலும் தமிழ் மணக்கச் செய்கின்றார். "உலக மெலாந்தமிழோசை முழங்கச் செய்வீர்” என்ற பாரதியின் கனவை நனவாக்கி வருதல் போற்றத்தக்க பணியாகும். வீரசக்திருபனும் நல்ல கல்வி பயின்று தற்பொழுது கெயர் நிறுவனத்தில் சமூக சேவை புரிந்த வருகிறார்.
இவ்வாறே இல்லறம் இனிதே சிறக்க இல்லத்தரசி மகேஸ்வரியுடன் இணைந்த வாழ்வில் திரு கனகசபாபதிக்குச்
2O)52

சோதனைக் Effootb வந்தது மாண்புள்ள மனைவி நோய்வாய்ப்பட்டார். 1996ல் மனைவி சிவபதமடைந்தார். அமரர் கனகசபாபதி வாழ்வில் பக்கபலம் குன்றியதால் மனமுடைந்தார். தாங்கொணத்துயரம் கொண்ட அவர் தன் பிள்ளைகள் மூவரையும் கண்ணை இமை காப்பது போல காத்து வந்தார்.
மனைவியின் பிரிவாற்றாத அவர் அதனை ஈடுசெய்ய டென்மார்க்கில் தொழில் புரியும் சக்திதாசனுக்கு கொக்குவில் மேற்கைச் சேர்ந்த பேரின்பநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் மகள் இராஜினிக்குத் திருமணம் செய்து வைத்தார். இதன் பேறாக கஸ்தூரி, மிதுாஷன், வைஷ்ணவி என்னும் பேரப்பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தார். இரண்டாவது மகன் வீரசக்திருபனுக்கும் இணுவில் தெற்கைச் சேர்ந்த பரமலிங்கம் இராசலட்சுமி தம்பதிகளின் மகள் இன்ப்தி நடன ஆசிரியையைத் திருமணம் முடித்தும் செல்லமகள் சக்திமனோகரிக்கு சுதுமலையைச் சேர்ந்த செல்லத்துரை நற்குணராசாவிற்குத் (கனடா) திருமணம் முடித்தும் வைத்தார். தாயில்லாத தவிப்பை நீக்கிப் பிள்ளைகளை நன்னிலையில் வைத்துத் மனநிறைவு கண்ட கனகசபாபதி தன் இறுதிக் காலத்தை நல்ல வழியில் பயன்படுத்தியுள்ளார்.
இயற்கையாகவே இறை நாட்டமுடைய இவர் ஆத்மீகத் துறையில் மிக்க விளங்கினார். இதனால் ஆத்மீகச் சிந்தனையாளர்களது தொடர்பும் கிடைத்தது. கற்பக விநாயகர். இணுவில் கந்தன், விளாத்தியடி வைரவர் இவரது இட்ட தெய்வங்களாகும். கந்தபுராணப்படிப்பு, பிள்ளையார் கதைப்படிப்பு, தேவாரம் பாடுதல், இவரது பணிகளாகும். சோதிடம் பார்த்தல், கைரேகை பார்த்தல் முதலிய பணிகளையும் சமூகத்திற்குச் செய்து வந்தார். வீட்டுக்கு வரும் விருந்தினரை அன்போடு
- -:O6:-

Page 9
உபசரித்தும் அவர்களுக்கு வேண்டியன உதவி புரிந்து மகிழ்வித்து அனுப்புவார். இதனால் இவரிடம் எல்லோரும் அன்புடன் பழகுவார். இவரது இறுதிக் காலத்தில் இளையமகன் வீரசக்திருபனுடன் இருந்தார். வீரசக்திருபன் தன் தந்தையின் கடமைகளைக் குறிப்பறிந்து செய்து மனம் நோகாமல்ப் பார்த்து வந்தார்.
இதற்கு உறுதுணையாக இருந்து ஒத்தாசை புரிந்தவர் வீரசக்திருபனுடைய துணைவியாரே எனவே இருவரும் தம் கடைமைகளைச் சரிவரச் செய்துவரும் நாளில் நோய் வாய்ப்பட்டார். அமரர் திரு கனகசபாபதி அசிரியர் தீடீரென்று சித்திர்ை மாதம் ஏகாதசி திதியில் 23.4.2006 ஞாயிற்றுக் கிழமை இறைபதம் அடைந்தார். 75 வருடங்கள் நிறைவாழ்வு வாழ்ந்து இறைபதம் அடைந்த அன்னார் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி! ம்ை சாந்தி ஓம் சாந்தி!
ஆக்கம் வை. கணேசபிள்ளை
ー:07:ー
 

மூப்பத்தொரு நாள் நினைவோடு
பதினொரு வருட இடை வெளியில் - மீண்டும்
எங்கள் வானில்
ஒரு சூரிய வஸ்தவனம்
அன்று ஒரு சித்திரைத் திங்களில் பூரண நிலவினை யிழந்தோம்
இன்று ஒரு சித்திரை திங்களில் சூரியனையே யிழந்தோம்
பேரொளி காட்டிய இரு விழிகளுமே இப்ப நம்மிடத்திலிருந்து பறி போய் விட்டன
மூவுவலகை யாளுகின்ற பிரமன் தாளடி சேர்ந்த என் ஐயனே பொய்யுலகை வென்று வினை தீர்த்த வெங்கற் பரம்பொருளே!
தந்தையாக வருகிலிருந்த போது தெரியவில்லையஜ்ஜா - உந்தனருமை சிந்தை கலங்கி யழுகின்றேன் விந்தை யுலகே யிருண்டது போல் பித்து பிடித்த லைகின்றேன்.
ー:O8:ー

Page 10
பிரியாமல் பிரிந்திட்ட உறவுகள் உயிர் பிரிந்திடும் வேளையிலும் இணைந்திடாத வலங்கள் தினம் தினம் உணர்வுகள் அழுகின்றன.
பனி முகட்டின் உச்சியிலே விழுதுகள் பாச நிலத்தின் அடியினிலே வேரினெச்சங்கள் ஒட்டிட முடியா தமிழினத்தின வலங்கள்
மனங்களுக்குள்ளே தான் சோகம் வேரறுந்தாலும் விழுதநியாக்
85/T6)lb
வித்தறியுமா! வேர்களின் சோகம் நகர் விக்கிறது காலம்!
வாசற் படியில் வைத்தே
நினைத்த காரியத்தை செப்பிடும் ஞானத்தரிசியே - எம் வாழ்க்கையின் அகராதியே வசந்தத்தை யிழந்து தவிக்கின்றோம் உள்ளுனார்வாய் தேய்கின்றோம் இரு கை கூப்பி ஆத்மா சாந்திக்காய் தொழுகின்றோம்.
இணுைவை சத்திதாசன்
r:09:-

கனகேஸ்வர விருத்தம்
விரதங்கள் பல விருந்தும் விழுமியங்கள் பல காத்து விளாத்தியடி வயிரவரை விடாப் பிடியாய் பற்றிய வீரவாகு மைந்தன் கனசசபாபதி விண்ணுலகம் சேர்ந்தான் காண்
பண்பாய் பணிவாய் - நல் ஆசானாய் அதிபராய் அன்பால் நற் பயிர்கள் பலவும் நாட்டியவரே
இன்சொல்லால் மற்றவரையும் தான் கவர்ந்து ஆற்றல் மிகு சோதிடனாய் நல்லாளாம் மகேஸ்வரியை - தன் இல்லாளாய் கரம் பற்றி இல்லறமாம் நல்லறத்தில் அறம் காத்து ஒன்றாய் பலவாய் நன் மக்கள் மூவரையும் தானின்று - நல் வழிப்படுத்திய பேராளனே!
ஓயாத உழைப்பாளியாய் - நல் ஆற்றல் மிகு கமக்காறனாய் இணுவை மண்ணின் பெருமை
-:O:-

Page 11
காத்திட்ட சீராளன்! இல்லாளின் பிரிவினிலே - மனம் நொந்து கலங்கியும் - மதியாலே உலகை வென்று ஆற்ருப்படுத்தியவனே
கற்பக விநாயகனின் பொற் பதம் தொழுது - நாளும் வெவ் வினையை வேரறுக்க பாடுவான் பிள்ளையார் கதை படிப்பினை செப்பினான் தொழுதான் தன் கடன் பணி செய்தேகினான் காண் நின் பதம் தொழ தேற்றிடுவோம் நாளும்
இணுவைக் கந்தனது அருளாலே - எந்தனது தெய்வத்தின் பாதம் படுக்கேல்ல பொல்லூண்றும் நிலை வந்தாலும் தவன்றேனும் உன்னடிக்கு வருவேனென்று இயலாமையிலும் இயன்ற தன்மையுடன் இறைவனடி யெய்தினன்
&iLub
-:1:-
 

வாழும் காலத்தை வளமாக வாழ்ந்து சோதிடக் கலையின் நுணுக்கால்களை யறிந்து கற்று தனக்கும் மற்றுவர்க்கும் பயன் படும் வகையில்
சோதிடத்தின் குறியாய் மற்றவர் மனதை சோர்ந்திடாமல் நினைந்தவுடன் நினைத்த காரியத்தை செப்பிடும் சோதிடனாய் பல்லி சொற் பலன் சொல்லும் சற் புத்திரனாய்
கற்றவரையும் கல்லாதவரையும் கவர்ந்திடும் - நற்
பண்பாளனாய்
கற்ற வித்தையாவும் காருண்யத்துடன் சமூகத்துடன் சமூகத்துக்காகவே வாழ்ந்து யர்ந்த
b6f)6OTBFITGir
ー:12:ー

Page 12
அப்பா வளவு வெளிச்சு போச்சு
தொண்ணுாற் ஐந்து ஐப்பசி திங்கள் இணுவைக் கந்தன் வீதி போர்க்களமாக கந்தசஷ்டி விரதம் முருகனுக்கும் சூரனுக்கும் முண்டது போர்
நின்ற நிலையில் முருகன் வெட்ட வெட்ட தழைத்தபடி - சூரன் வருடம் தேர்றும் நடக்கும் வழமையான சூரன் போர் தான் பக்திப்பரவசத்துடன் பக்தர்கள்
இறுதியாக சூரன் வயிறு பிளக்க சேவலும் மயிலும் பறக்க சூரன் போர் முடிந்தது வீரா வேசத்துடன் முருகன் நடக்க வெற்றிக் களைப்புடன் பக்தர்கள் வீடு திரும்ப - மீண்டும் மூண்டது! ஒரு
சூரன் போர்
பலாலியிருந்து சூரன் ஏவிய கணைகளை ஊர் மனை தோறும் அதிர்வுடன் வெடிக்க கந்த சஷ்டி விரத பால் பழமருந்த முன்னரே ஒலி பெருக்கி செய்தி
-:13:-

ஊரை விட்டே விரட்டியது! பாலாலியிலிருந்து - ஆமி வெளிக்கிட்டு விட்டான் ஊரை விட்டே ஒடுங்கள் இது தான் அந்த சேதி
கையில் எடுத்ததை எடுத்தபடி ஊர் புறப்பட்டது! ஓடியோடி யுழைத்து அப்பு தந்த சொத்து கட்டிக் காக்க வேண்டுமென்று பாடு பட்டு அப்பா கட்டிய வீடு வளவு விட்டு கூட நின்ற அன்பு மகளையும் அணைத்தபடி அப்பாவும் புறப்பட்டார் நடைப்பிணமாக
வருத்தம் மாற்றவென்று அம்மாவுடன் தம்பி கொழும்பில் வெளிநாடு தான் சொர்க்கமென்று நானோ இங்கு டென்மார்க்கில்
பாடுபட்டு அப்பா கட்டிய வீடு வளவு வெளிச்சு போச்சுது
வானமே அழ அழ ஊர்கள் நடந்தன ஊர்களைக் கண்டு
ー:14:ー

Page 13
சாவச் சேரியும் மிரண்டது தொடப்புகளறுந்து உறவுகள் தவிர்த்தன உடுத்த உடுப்புக்களை தவிர மாற்றுடையின்றி மழையில் நனைந்த ஆடைகள் பெருமூச்சால் உலர்ந்தது!
பாரத்தை தெய்வத்தின் மேல் போட்டு விட்டு - எங்கள் தெய்வமும் தவித்தது முழுவிரவிரவாய் நடந்தது!
அம்மாவின் நோயும் நாளுக்க நாள் அதிகரிக்க சாவகச்சேரி, பளை, விடத்தல்பளை யென்றிருந்த அப்பாவும் கொழும்புக்கச் சென்றடைந்தார்
கையெடுத்த தெய்வமும் கை விரிக்க கை பிடித்த இல்லாளும் கை நழுவி போக மெய்யுருகி யழுதார்! பொய்யுலகின் தத்துவத்தை தானுணர்த்தும் அமைதியானார் பிள்ளைகளை அமைதிப்படுத்தி
ー:15:ー

மனதுக்குள்ளே தானழுதார் பிள்ளைகளின் - நல் வாழ்வுதனை யுணர்ந்து கொழும்பினிலேயே - சில காலம் வாழத் தலைப்பட்டார்
தன் சோகத்தை தன் மனதுக்குள்ளேயே தான் புதைத்து தன்னை நாடி வருபவர் பலரையும் ஆறுதல்ப்படுத்தினார்
தான் கற்ற சோதிடக்கலையால் மற்றவர்களுக்கும் பயனுள்ளவராக வாத்தியார், வாத்தியாரென்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு தன் பிள்ளைகளின் வாழ்வுகளை வளம்படுத்தி விட்டு இளைய மகனுடன் மீண்டும் தன் சொந்தவூருக்கே வந்து சேர்ந்தார்!
பாடுபட்டு தான் கட்டிய வீடு வளவுக்குள் மீண்டும் போயிருக்க முன் இளைய மகன் தான் கட்டிய வீட்டினுள் இருக்குமாறு கூறிய
ー:16:ー

Page 14
அன்புக் கட்டளைகளையேற்ரு தெற்கிணிவிலின் வந்தமர்ந்த போதும் தானென்ற மிடுக்குடன் இருந்து உழைப்பினில் உயர்ந்த தெய்வம் உண்மையன்யினில் மிதந்திட்டார் நாளும் இருக்கையில் இருந்ததில்லை . பிறர் இருப்பையே நினைந்தேங்கும் உள்ளம்
சித்திரைத்திங்கள் ஏகாதேசி நன்நாளில் இறைவனடி சேர்ந்தார் காண்!!
ஆக்கம்
De
இணுைவை சத்திதாசன்
டென்மார்க்.
ー:17:ー
 

தூக்கனாம் குருவி ஒன்று
அழகினுவை வயற்கரையில் குச்சொழுங்கை ஒன்றில் தான் தூக்கணாங் குருவி Aட்டிய கூடிருந்தது!
வேட்டை நாய்களுக்கும் - கழுகு கண்களுக்கும் படாமல் - தன் கிட்டை காத்தது பொரித்த குஞ்சு மூன்றினையும் அதில் தான் வளர்த்தது
வானத்தில் பறந்து வண்ண யிரை தேடி ஊருக்குள் ஐந்து குருவிகளும் ஒன்றாய் சிறப்புடன் வாழ்ந்தது
காலத்தின் கதவு திறந்து குருவிகள் ஒவ்வொன்றும் திக்குக் கொன்றாய் பறந்தது
முதுமையும் தளர்ச்சியும் முகவரி காட்ட
காலத்தோடு சேர்ந்து பறக்க சிறகுகள் மறுத்தன.
தாய்க்குருவியும் - பாதியில்
ー:18:ー

Page 15
பறக்க மறுத்தது ஊருக்கு வர முன்னமே வானத்தில் கலந்தது
சிறகுகள் மறுக்கவும் தூக்கணாங் குருவி பறந்தது குஞ்சுகளுக்காய் வாழ்ந்தது - மீண்டும் பறந்து ஊருக்கே வந்தது கூடு பறக்குமா? அது இருந்த இடத்தில் தான் இருந்தது குருவிகள் தான் அதில் தொடர்ந்தும் இருக்க முடியவில்லை!
தேவையும் முடிய பாதையும் முடிந்தது இயலாமையிலும் இயலும் தன்மையில் தன் கடமை முடிந்த தென்று. மனம் சாந்தி கொண்டது!
நாவலடி காற்ரும் - ஒரு கணம் பேச மறந்தது நட்டு வைத்த நாற்றும் தலை கவிண்டது வளர்த்த நாய் மட்டும் நன்றியுடன் உணவு உண்ண மறந்தது
W இணுவை சத்திதாசன்
ー:19:ー

இளையமகன் புலம்பல்
ராசன் ராசனென்று நெஞ்சில் பாசம் பொங்க நேசமுடன் அழைக்கும்
என் அப்பா!
S-6 floists) நினைவிழந்து துடிக்கின்றேன்
மாலையானவுடன் - நான் வேலை முடிந்து வீடு வரும் வாசல் பார்த்து காத் திருக்கும்
என் அப்பா
வாசற் கதவுச் சத்தம் கேட்கும் வரைக்கும் உன் விழி யேங்கி துடிக்கும்
எனி யார் தான் -என் வரவு பார்த்து கிடப்பர்ோ நெஞ்சடைத்து துடிக்கின்றேன்
வீசிய காற்ரும் - என் வீட்டில் நின்று மாதமொன்றானது வீடே கலகலக்கும் உங்கள் பேச்சொலியும் நிசத்தமானது.
தூசு பட்டால் கூட
-:2O:-

Page 16
தாங்காத உன் உடம்பில் எந்த அரக்கன் பூந்தானோ மூத்த மகன் வருவானென்று முழு நாளுமே கலன்டரைப் பார்த்தபடி இருந்தீர்களே! அண்ணன் வர முன்னம் கண் மூடிப் போன மாயமென்ன
பலன் பார்க்க வென்று வந்தவர்களுக்கெல்லாம் பலன் பார்த்து கூறிவிட்டு உங்கள் பலனை பார்த்து எங்களிடம் கூறாமல் ஏன் தான் அவசரப்பட்டீர்களப்பா!
வீடிருண்டு கிடக்கிறது விழி திறந்து பாருங்கள் - ஒரு சொல்லாவது வாய் திறந்து பேசுங்கள் ஒளி யேற்றி தாருங்கள்
முப்பத்தொரு நாள் நினைவுதனில் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்
இளைய மகன்
வீரசக்திருபன்
“T3Z

அன்பு மகளின் புலம்பல்
ஓடோடி வந்தேனே அப்பா அதற்கிடையில்
அவசரமாய் எங்கு போனீர்கள்
வெளிநாடென்னை அனுப்ப மனமின்றி தாயாக சுமந்தவரே
என் செய்வேன் என்
தெய்வமே!
நேரே வந்துங்களை பார்ப்பேனென்றிருக்க கனவில் வந்தென்னிடம் விடை பெற்றுவிட்டீர்களே!
விரைவாக நான் கனடா போய் சேரவேண்டுமென்று கோயிலெல்லாம் நேர்த்திவைத்து அனுதினமும் தொழுது கொண்டிருந்தீர்களே
வண்ணக் கனவுகளுடன் கனடாவிலிருநந்து - என் அப்பாவை பார்க்க வரவிருந்தேன் கோயில் குளமெல்லாம் அப்பாவுடன் போகவேண்டுமென்று
ー:22:ー

Page 17
ஆசை வைத்திருந்தேன் கொடுத்து வைக்கவில்லையே
உங்கள் கடமை முடிந்து விட்டதென்று முழுத் தூக்கம் கொண்டீர்களே
உங்கள் செல்ல மகள்
சத்திமனோகரி
self
டென்மார்க்கில் இருந்து மருமகள் ராஜினியின் நினைவுத் துளி
கை பிடித்துப் பார்த்தே என் தலை விதியைச் சொன்னவரே - நின் தலை மகனை தந்தே வாழ்வை உயர்த்தியவரே மாமா
LDě56Mü LDOblD856IIffü பேணி காத்தீர் - தங்களுக்கு மருமகளாக என்ன தவம் செய்தேனோ
பேச்சினிலே பக்தி கண்டேன் நடையினிலே பணிவு கண்டேன் உடையினிற் கூட - தமிழனென்ற உணர்வினில் நின்றவரே
ー:23:ー

ஒரு பூவினைப் போல
மென்மையுள்ளம்
ஒரு புன்னகையாலே அனைவரையும் கவர்ந்திழுக்கும் பெரு வெள்ளம்
நாவாலே உலகை யாண்ட சற் புத்திரரே! நானிலம் போற்ற வாழ்ந்த சோதிடரே!
நீங்கள் சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதங்களாய் என் வாழ்வின் முன் திரை போட்டுக் கிடக்கிதஜ்ஜா
எனி வந்து ஆறுதல் சொல்ல யார் தான் எனக்கு நினைவாலே அழுகின்றோம் நின் பாதம் தொழுகின்றோம்.
மருமகள்
ராஜினி
-:24:-

Page 18
இளைய மருமகள் இன்பமதி
மாமாவின் நினைவுத் துளிகள் LDTLDst LDTuDT (o6u6örg மனங் கிடந்தழுகிறது வாசலுக்குள் விழியுன்னைத் தேடுகிறது
ஊருக்குள்ளே வேண்டுமென்று உன்மனதில் விருப்பம் கொண்டு யாருக்குமே தெரியாமலே குறிப்பறிந்து யாதகத்தை பார்த்து என்னையே தேர்ந்தெடுத்த மாமா!
யாருக்குமே யில்லா கொடுப்பனவு எனக்கு கிடைத்தது உங்களது அருகிலிருந்து பணி விடைகள் செய்யவைத்ததே!
ஆசை மகனென்று மனம்விட்டுப் பேசும் பொழுது அறிவுரைகள் சொல்லும் போதும் கூடவே யென்னையும் சேர்த்திருத்தி மகள் போல பேசுவீர்களே
கலகலக்கும் எங்கள் வீடு களையிழந்து கிடக்கிறது உங்களை யிழந்த சோகத்தில் போட்டபடியே எல்லாம் கிடக்கிறது மாமா
மருமகள் இன்பமதி
ー:25:ー

Uroup6irst tortoiré6.
எம்மைப் பார்க்க முன்னம் பறந்திரோ சுத்தியோடும் கடலாலே சூழ்ந்துவிட்ட இலங்கை விட்டு தூர தேசம் வாழ்ந்தாலும் தொலைபேசியால் - தினந்தோறும் அன்பைப் பகிர்ந்தவரே!
பாசமுள்ள மாமாவே பக்தி கொண்ட தேனாறே சக்தியொன்று கண்டேன் உன்னிடத்தில் தெய்வ முக்தி பெற வேண்டுகிறேன்
மகளை யெனக்கு தந்தாலே - உம் மனதை கண்டேன் தெளிவாக - சகல உயிர்களிடத்திலும் அன்பு காட்டும் உயரிய உணர்வை கொண்டவரே
நேரில் வந்து உம்மோடு நீண்ட நேரம் பேசவேண்டு மென்று நீண்ட கனவுடனே - பயண
ஒழுங்கும் கொண்டு
கப்பலேற முன்னம் - எம்மை காணாமலே கண்மூடிப் போனதேனோ! எம் கண்ணிரைக் காணிககை யாக்குகிறோம்!! ஆத்மா சாந்திக்காய் மெய்யுருகி வணங்குகிறோம்
கனடாவில் இருந்து
மருமகன் நற்குணராசா.
ー:26:ー

Page 19
அப்பப்பா மீண்டெழுந்து வாருங்கள்
அன்புடன் புன்னகைத்து ஆசையுடன் கதைக்கும் எங்கள் அப்பப்பாவே எங்கு போனிர்கள்!
நிலவு தேய்ந்து எங்கள் வானம்
அமுகாசை யானதோ!
டென்மார்க்கிற்கு வாறனென்று எங்களை ஏய்த்து விட்டு எங்கு போனிர்கள்!
நானுங்கே வந்த போது தூக்கி யென்னை தோளில் வைத்து குட்டிக் கதைகள் கூறி பப்பாப் பழமும் வெட்டி வெட்டி ஊட்டி விட்டீர்களே
அப்பப்பா!
ஆசையாக என்ர கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பீர்களே! எனி யாரப்பப்பா!
என்ர கதையை ஆசையாகக் கேட்பார்கள்
ー:27:ー

JT8F(ypL-6 i poslu u 6Tb வேசமில்லா நெஞ்சமே மீண்டுமெப்போ பார்ப்பேனென்று ஆவலோடு காத்திருக்க மீளாத் துயில் கொண்டு விட்ட அப்பப்பாவே!
மீண்டெழுந்து வாருங்கள் மீளாத் துயரோடு மீண்டுகின்றேன் உங்கள் நினைவுகளை
அப்பா உங்களுடன் ரெலி போனில் கதைக்கும் போதெல்லாம் கஸ்தூரி யென்ன செய்கின்றா என்பீர்களே
ஓடிவந்து அப்பாவிடம் ரெலிபோனை பறித்து அப்பப்பா!
சுகமாய் இருக்கிறீர்களா? என்றவுடன் சிரிப்பாலேயே பதில் சொல்லுவீர்களே அந்த சிரிப்பை எனி எங்கு கேட்பேன்
பேத்தி கஸ்தூரி
டென்மார்க்
ー:28:ー

Page 20
டென்மார்க்கில் இருந்து 6பரன் மிதுசனின் ஆதங்கம்
அப்பப்பா! அப்பப்பா! ஓடியாருங்கோ எனக்குநல்ல கதைகள் வந்து சொல்லி தாருங்கோ!
பக்தியுடன் தேவாரம் பாசமுடன் என் பக்கமிருந்து சொல்லித் தர ஒடியாருங்கோ - என்னை தோளில் தூக்கி கூத்தாடுங்கோ
தமிழ் படிக்க ஆசை மண் விளையாடவும் ஆசை இரண்டுமில்லா நாட்டுக்குள்ளே கிடந்தேங்கிறேன் பணி வீட்டுக்குள்ளே
பாம்புமில்லை பல்லியுமில்லை இங்கு பயமுமில்லைத் தான் தேம்பியளும் பிள்ளைகளும் கூட தாய்ப் பாலு மில்லைத் தான் அன்பு மில்லை பாசமுமில்லை தனிமை யேக்கம் தான் - ஒரு அயலுமில்லை சொந்தமுமில்லை பணம் மட்டும் தான்
அப்பிள் பழமும் புளிக்குதுங்கோ வெளிநாடும் வெறுக்குதுங்கோ தோப்போர குயில்களைத் தான் அழைத்து வாந்தாலும் - இங்கு கூவ மறுக்குதுங்கோ!! அப்பப்பா அப்ப்பா ஓடி வருங்கோ எனக்கு .
பேரன் மிதுசன்
ー:29:ー

அமரர் அவர்கள் அன்புத் துணைவியாருடன்
-:30:- ,

Page 21
ー:31:ー
 

ஆத்ம நேயம்
அன்பின் சித்தப்பா என்றும் உங்கள் நினைவலைகள் என் நினைவில் சுமந்து நீங்கள் செய்த நுட்பமான அளப்பரிய தியாகங்களை என் சிரல் தேக்கி சிவ சிவ வென்று சிவபுராணம் பாடி பிறர் நோய் துன்பம் போக்கிய ஆத்ம நேயம் கொண்டவரே உங்களை என் பார்ரைவயில் நிலை நிறுத்தி அயலவர்கள். கஸ்ரமென்று ஓடி வந்து தங்களிடம் ஆறுதல் கேட்கும் போது ஒரு கணம் கண்களை மூடி மூச்சை சிரசில் நிறுத்தி பதில் கூறி ஆறுதல்ப்படுத்தும் உங்களை என் ஆத்மாவில் நிலைநிறுத்தி பார்க்கின்றேன் என் வாழ்வையும் உயர்வித்தாய் நேரம் காலம் தவாறு நேய அர்ப்பணிப்புக்களுடன் துணிவுடன் துணிவாய் நின்று தூய பணி செய்தவரே! ஆத்ம நேயம் என்ற சொல்லுக்கு வடிவம் கொடுத்து உங்களை என் ஆத்மா உள்ளவரை மறவேன்.
"தவசிகளை விட யோகி மேலானவன் ஞானிகளை விட யோகி சிறந்தவன் அதனால் அர்ச்சுனா நீ யோகியாவாயாக"
விளக்கம் :- அடக்கத்துடனும் பணிவுடனும் தன்னுடைய கடமைகளை பலன் எதிர்பாராமல் மிக சிறப்பாக செய்து கொண்டு மற்றவருக்கு துன்பமளிக்காமல் வாழ்ந்து மற்றவர்களின் துன்பத்தை போக்கிறவன் ஜோகி எனப்படுவான்.
பகவத்தீதை
V அத்தியாயம்
46ம் சுலோகம்
பெறாமகன் யோகேந்திரன்
பிரபல சோதிடர் சுவிஸ்லன்ட்
o:32:-

Page 22
இதயத்தின் நீர் மல்கும் கண்ணிர் பூக்கள்
இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற வீரவாகுகனகசபாபதி ஆசிரியர் அவர்கள் 23.04.2006ம் திகதி சிவபதம் அடைந்தார். என்ற செய்தி என்னை மிகவும் வாட்டியது ஏனெனில் கூடிய காலம் நான் அவருடன் நெருங்கிப் பழகியவன் அவர் என்னை தனது பிள்ளைகளை நோக்குவது போலத்தான் "ஐயா" என்று செல்லமாக அன்போடு அழைப்பார். இவர் எப்பொழுதும் சைவச் சின்னங்களின் இருப்பிடமாகவே விளங்கியவர் இவர் இணுவில் மேற்கில் வசித்த தகப்பன் வீரவாகு அவர்களுக்கும் தெய்வானைப்பிள்ளை அவர்களுக்கும் 1.07.31. திகதி மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இணுவில் இந்துக்கல்லூரியில் கற்று பின்பு சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் வேளையில் சிறு நோய்வாய்ப்பட்டு 23.04.06ம் திகதி பி.ப 11.30 மணிக்கு கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் பாதாரவிந்தங்களை இறுக்கப் பற்றிக் கொண்டார். இவரால் துயருறும் மக்கள் முதலானோருக்கு "வையத்துள் வாங்வாங்கு வாழ்ந்தவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். என்ற முதுமொழிக்குக் கேற்ப வாழ்ந்து காட்டியவர். தற்பொழுது அவரின் சிவதோற்றம் கண்முன்னே நிழலாயிடுகின்றது அன்னாரின் ஆத்ம இறைபதம் அடைந்து இன்புற்றிருக்கப் பிரார்த்திப்போமாக.
நெருநல் உளனெருவன் இன்றில்லை என்றும் பெருமை உடைத்து இவ்வுலகு
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
钴 சிவழறி வை.பாஸ்கரக்குருக்கள் இணுவில் கந்தசுவாமி கோயில் பிரதமகுரு
مسے 33:۔

இணுவில் மேற்கைச் சேர்ந்த அமரர் வீரவாகுகனகசபாபதி மிகுந்த அறிவாளி இவர்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க வானுலகில் தெய்வமானவர். இவர் சமூகத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்கியும், ஆசிரியத் தொழிலில் புரிந்து சமூக கல்விப் பணி ஆற்றியும் வந்தார். அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ஒரு வைத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் பிற்காலத்தில் ஆத்மீக துறையில் ஆர்வம் காட்டினார். இவர் இணுவில் கந்தசாமி கோயிலில் கந்தபுராணம் படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். எல்லோரிடமும் SEĐ6őTL60)Lu J6 JT356quib பண்புடையவராகவும் விளங்கிய இவர் இறைவனருளால் சில ஆண்டுகளிற்கு முன் எனது குடும்ப உறவினராக இணைந்து கொண்டார். இவருடைய இழப்பு எமக்கு பெருந் துன்பத்தைத் தருகிறது. இவரை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
உறவினர்
தி. பரமலிங்கம்
-:34էgա

Page 23
நல்லாசான்
கல்விப் பணியிலே ஆசிரியராைகவும் பின்பு அதிபராகவும் 35 வருடங்களுக்குமேல் கடமை உணர்வுடன் சேவையாற்றி அதன் பேறால் பலரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர் அமரர் கனகசபாபதி அவர்கள் பாடசாலைகள் கொத்தணி அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டபொழுது அவரின் பாடசாலையும் எனது பாடசாலையும் ஒரே கொத்தணியின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் காரணமாக அவருடன் எனக்குநெருங்கிய உறவு ஏற்பட்டது.
அமரர் அவர்கள் விசுவாசமாகப் பழகக் கூடியவர். குழந்தை உள்ளம் படைத்தவர். தனது மாணவர்களின் மீது கரிசனை கொண்டவர். அவருக்குத் திறமையான மாணவர்கள் கிடைக்காத போதும் இருக்கின்ற மாணவர்களின் ஈடேற்றத்திற்காக மனவுறுதியுடன் உழைத்தவர். அதன் பேறாக மாணவர்களின் நன்மதிப்பையும் சமூகத்தின் பாராட்டையும் பெற்றவொரு அதிபர் தான் அமரர் தனது பதவிக்கும் தொழிலுக்கும் மெருகூட்டிய அமரரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்.
உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் அ.பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் யாழ் இந்துக்கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரி (முன்னாள் கொத்தணி அதிபர்)
ー:35:ー

ஆளுமை மிக்க அதிபர்
அமரர் வீரவாகு கனகசாபதி அவர்களின் பிரிவுத்துயரை தாங்கிக்ககொள்ளமுடியாதவர்களில் நானும் ஒருவன். நல்லதொரு குடும்ப தலைவனாக பாசமுள்ள தந்தைாக நல்ல ஆசிரியராக, ஆளுமை கொண்ட அதிபராக நம்பிக்கையான சோதிடராக சமூகத்தொண்டனாக வாழ்ந்த எமது அன்புக்குரிய அமரர் கனகசபாபதி அவர்களின் இழப்பு நம் எல்லோருக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அமரர் கனகசபாபதி அவர்களை சிறுவயதிலிருந்தே நான் அறிவேன். இருந்த போதும் அவரது குடும்பத்தவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மூன்று தசாப்தங்களாக ஏற்பட்டிருந்தது. அவரது இரு புதல்வர்களும் என்னிடம் கல்வி கற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டதிலிருந்து அவர்களது குடும்பத்துடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் ஏற்பட்ட தாயாரின் இழப்பு அவர்களது குடும்பத்தை மட்டுமல்லாது எம்மையும் கதிகலங்க வைத்தது. இருந்தும் அமரர் கனகசபாபதி அவர்களின் மனத்துணிவு பிள்ளைகளைத் தேற்றியது மட்டுமன்றி அவர்களுக்கு தந்தையாகவும் தாயாகவும் வாழவைத்து அவர்கள் தாயில்லாப் பிள்ளைகள் என்ற குறையில்லாமலேயே தமது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வந்தமை நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது எனக் கூறினால் அது மிகையாகாது. அண்ணாரது சிறந்த பிள்ளை வளர்ப்பிலையே அவர்களது பிள்ளைகளை திருமணம் செய்ய பலர் போட்டியிட்டது மட்டுமன்றி மனம் நிறைந்த மருமக்களைப் பெறும் வாய்ப்பு அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டது. எனக் கூறினால் அதில் மிகையொன்றுமில்லை.

Page 24
“தக்கார் தகவிலார் என்பது
அவரவர் எச்சத்தில் காணப்படும்” என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க டென்மார்க்கில் வசிக்கும் மூத்தமகன் சக்திதாசன்
ஒரு நல்ல கவிஞர். அவரது கவிதைத்தொகுப்பான “நெஞ்சின்
நெருடலி ” 6T LD ğ5 இணுவில் பொது நுலகத் தரிலி வெளியிடப்பட்டமையை எல்லோரும் அறிவர் அதே போல் இளையமகன் வீரசக்திருபன் சர்வதேச கெயர் நிறுவனத்தில் சமூகசேவையுடன் கூடிய சிறப்பானதோர் பணியை ஆற்றிற வருவதைக் காணமுடியும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
என்ற பொய்யாமொழிப்புலவரின் வாக்கு பெருமை மிக்க வாழ்வை நிறைவு செய்த அமரர் கனகசபாபதி அவர்கள் விண்ணுலகில் தெய்வமாகிவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல. பரராஜசோகரப்பிள்ளையாரை இறைஞ்சுவதுடன் அவரது பிரிவால் வாடும் குடுபத்தவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
க.தேவராஜா
பீடாதிபதி
முகாமைத்துவ கற்கைகள்
வணிக பீடம்
யாழ்பல்கலைக்கழகம்.
ー:37:ー

இணுவையூர் ஆசிரியர் அமரர் கணகசபாபதி அவர்களின் ஆத்ம சாந்திப் பிராந்தனையை மூன்னிட்டு வழங்கப்பட்ட அஞ்சலி உரை
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ் வுலகு”
- திருக்குறள் -
நேற்று உயிரோடு இருந்த ஒருவன் இன்று இல்லை, என்னும் நிலையாமையைப் பெருமையாக உடையது இவ்வுலகம். இவ்வுலகில் வாழுகின்ற நாம் இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும். இதனை உணர மறுப்பவர்கள் மணனில் நல்ல வண்ணம் வாழ மறுப்பவர்கள் ஆகிவிடுகின்றனர். "
திரு கனகசபாபதி ஆசிரியர் என்னுடைய ஓர் அன்பர், நண்பர் என்பதோடமையாது எனக்கு ஒரு சோதிட ஆலோசகர் ஆகவும் விளங்கியவர். வரும் பொருள் உரைக்கும் வல்லமை உடையவர். அந்த வகையில் அவரிடம் தெய்வீகசக்தி இருப்பதை உணர்ந்தேன். சோதிடம் ஒரு அறபுதக்கலை வெறுமனே சோதிட அறிவிருந்தால் மட்டும் போதாது. தெய்வீக அருளும் வேண்டும். என்பதை திரு கனகசபாபதி அவர்கள் பால் கண்டு தெளிந்தேன். அவரிடம் வாக்குச் சுத்தம் இருந்தது. உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்பது பாரதியாரின் வாக்கு மோதிரச் சாத்திரியார் என்ற பெயரையும் பெற்றவர் கனகசபாபதி ஆவர்கள்
அசிரியர் என்போர் அறிவோர், அறவோர் ஏனெனில் அவர்கள் எல்லோர் மீதும் செந்தண்மை பூண்டொழுகுபவர். திரு கனகசபாபதி அவர்கள் நல்லாசிரிய பண்புகளுடன் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். நான் கல்வியதிகாரியாக பணியாற்றிய ー:38:ー

Page 25
காலத்தில் அவரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நன்னடத்தை, கற்பிக்குந்திறன் என்பவற்றைக் கணிப்பீடு செய்து மிகத் திருப்தி எனக் கண்டுகொண்டவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர் தனது குடும்பத்தைச் செவ்வையாகப் பராமரித்தவர்: பிள்ளைகளை ஒழுங்கப்பண்பாளர்களாக வளரத்தவர். அவரின் மறைவு பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்தும் அவை வாழ்க்கை நியதிகள் என்பதைத் தெளிந்து ஆறுதல் பெறுவோமாக.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிராத்திப்போமாக ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
1/10, 1/1, 47ஆவது ஒழுங்கை வெள்ளவத்தை
கொழும்பு குமாரசாமி சோமசுந்தரம் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் தலைவர், கொழும்புத் தமிழ்ச்
சங்கம்
ー:39:ー
 

மனித நேயம் மிக்க மனிதர்
மனித நேயம் மரணித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் மனத நேயப் பண்புகளுடன் மனிதநேயத்துக்கே இலக்கணமாக வாழ்ந்தவர் அமரர் வீ.கனகசபாபதி அவர்கள் அவருடன் நான் பழகிய நாள்கள் சிலவே எனினும் அவரிடம் காணப்பட்ட நற்பண்புகள் என்றும் மறக்க முடியாதவை.
அன்பான பேச்சு, அடக்கமான சுபாவம், ஏழைகளுக்கு இரங்கும் மனப்பாங்கு, எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் ஆற்றல், மனோவலிமை இத்தனையும் கொண்டவர் எமது இனிய அதிபர் சமய அனுட்டானங்களில் நிறைந்த ஈடுபாடும் சோதிடக் கலையில் மிகுந்த புலமையும் உடையவராய் வாழ்ந்த இவர் தமது நடை, உடை, பாவனைகளால் ஆசிரியர்கட்கும் மாணவர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
கொக்குவில் மேற்கு சி.சி.த.க பாடசாலையில் சிறந்த ஆசிரியராக கடமையாற்றியதோடு நான்கு ஆண்டுகள் அதிபராகவும் அரும்பணியாற்றியவர் பல்வேறு திறமைகளைத் தன்னிடத்தே கொண்டிருந்த அவர் பல நல்மாணாக்கர்களை உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட பலர் நல்லொழுக்கமும் சிறந்த விழுமியங்களும் கொண்டவர்களாக பல்துறைசார் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் பாடசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பாடசாலையில் பலத்த தேசம் ஏற்பட்ட போது மனம் தளராது மீண்டும் பாடசாலையைப் புனரமைத்து புத்துயிர் கொடுத்த
-:4O:-

Page 26
பெருமைக்குரியவர். அவர் இளைப்பாறிய பின் அவரின் இடத்திற்கு நான் அதிபராக நியமிக்கப்பட்ட போது அவரின் ஆசீர்வாதம் பூரணமாகக் கிடைத்தது. பாடசாலையின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட அவர் அடிக்கடி பாடசாலைக்கு வருகைதந்து நல்ல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி எம்மை எல்லாம் ஊக்கிவித்த பெருந்தகை இவரின் இழப்பு எமக்கு மட்டுமல்ல எமது கிராமத்துக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து” மக்கள் மத்தியின் தனக்கென தனியாக ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்ட அமரரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திப்போமாக
ஓம் சாந்தி
திருமதி மா.வேதநாதன்
அதிபர்
யா/ கொக்குவில் மேற்கு
af. af.5. as LITL&FIT606)
ー:41:ー
 

எனக்கு வாய்த்த பள்ளித் தோழன்
"சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளின் கல்வி கற்க வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தவர் நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்கள் அவரின் அருமந்த கருத்தை செயலாக்கும் வகையில் அவரது காலத்திலே நிறுவப்பெற்றது இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலை (இணுவில் இந்துக் கல்லூரி) இதன் ஆரம்ப காலத் தலைமை ஆசிரியராயும் முகாமையாளராயும் இயற்றமிழ் ஆசிரியர் அ.க.வைத்திலிங்க உபாத்தியார் இருந்தார். அவர் சீவந்தராய் வாழ்ந்த போது புதிய மாணவர்களுக்கு திரு. வைத்திலிங்க உபாத்தியார் அவர்களே வித்தியாரம்பம் செய்து வைப்பார்.
வடமொழி தென் மொழிகளில் வல்லவராண அமரர் வைத்திலிங்க உபாத்தியார் ஏடு தொடக்கி வைத்த பாக்கியத்தால் நானும் நண்பர் வீரவாகு கனகசபாபதி அவர்களும் பல நெருக்கடிகளுக்கு இடையே எதிர் நீந்திக் கல்விப் புலத்தில் நற் பெயர் பெற்றோம்.
ஆரம்பக்கல்வியை இணுவில் சைவப் L Ja5 Tef வித்தியாசாலையில் ஒரு சாலை மாணாக்கராகக் கற்றதால் நாம் இருவரும் நண்பர்களாணோம்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கனகசபையின் கூர்மதியைக் கண்டு அவர் மீது சிலர் பொறாமை கொண்டனர். ஒட்டார் உறவை விரும்பாத கனகசபாபதி அவர்கள் உடுவில் Man School என்ற ஆங்கில பாடசாலைக்கு இடம் மாறிச் சென்று சிரேஸ்ட பாடசாலைத் தராதரப் பரீட்சையில் சித்தியெய்தினார்.
-:42:-

Page 27
இதன் பேறாகத் தோட்டப் பாடசாலை ஆசிரியராக மலையகத்திற் சில காலம் பணியாற்றினார். அக்காலத்தில் ஓய்வு நேரத்தை உறங்கிக் கழிக்காது சோதிடம் கற்பதில் கருத்தைச் செலுத்தினார். சோதிட நுட்பங்களைத் தெரிந்து தன்னை வளம்படுத்திய இவர் ஆரவாரம் இன்றித் தானும் தனது குடும்பமும் அமைதியாக வாழப் பழகிக் கொண்டார்.
இதே வேளையில் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டிருந்த நான் மீண்டும் அதனைத் தொடர்ந்தேன். இரு வேறு பாடசாலைகளிற் கற்று தமிழ், ஆங்கில மொழிகளில் S.S.C பரீட்சை திறமைப் பள்ளிகள் பெற்றுச் சித்தியெய்தினேன். மேலும் தமிழகம் சென்று சென்னைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான போது திரு கனகசபாபதி ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்து பாராட்டியது இன்றும் பசுமையான நினைவிருக்கிறது.
அமரரான திரு கனகசபாபதி அவர்கள் ஓய்வு நேரத்தைச் சோதிடம் கற்பதில் செலவிட்டிருந்தால் தமது எதிர்காலம் எப்படி அமையும் என்பதைச் சோதிட மூலம் அறிய விரும்பினோரை அன்புடன் வரவேற்று மன அமைதிக்கு ஏற்ற ஆலோசனைகள் கூறுன்ார். மனம் நவிவுற்று வந்தோரை வழிப்படுத்திமை எந்நாளும் நினைவு கூரத்தக்கது.
ஒரு முறை இவரின் சோதிட அறிவைத் தெரிந்து கொண்ட இவரது கல்வி அதிகாரி இவரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் உபசரித்து மகிழ்ந்தமை îABÚ அறியாத இரகசியம் அப்பழுக்கில்லாத நண்பர் வீ. கனகசபாபதி அவர்களின் ஆன்மா அரண்டியில் அமைதி பெற இறைவனை பிராத்திப்போமாக
Gam. Lugusto B.Sc
ud og blt D6oet W ஓய்வு பெற்ற அரச மொழிபெயர்ப்பாளர் இணுைவில் தெற்கு, இணுைவில்,
an:43:

அன்பே சிவம்
பெறுதற்கரிய பிறவிகள் மானிடப்பிறவி மிக மேலானது அதனிலும் ஞானமும் கல்வியும் அமைந்து விட்டால் மிகப் பிரமாதமே என்பது மூதுரை அதற்கேற்ப வைத்திய பரம்பரையில் அமரர் திரு.வீரவாகு கனகசபாபதி அவதரித்தார். இவர் ஓர் நல்லாசிரியனாகவும், அதிபராகவும் சோதிட வித்துவானாகவும் தமது இளஞ்சமுதாயத்தை புத்துயிருட்டி வளர்த்ததோடு ஆத்மீக துறையிலும் ஊறியவர் என்பதால் ஆத்மீக விருப்புடையோர்க்கு இவரின் நட்பு மிகத்தேவைப்பட்டது. இதனால் எனக்கும் சிலகாலம் இவரின் தொடர்பு திருவளால் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சிக்குரியது.
இவர் இல்லறவாழ்வில் இணைந்ததன் பேறாக தவப்புதல்வர்கள் மூவரைப் பெற்றெடுத்து அவர்களும் இன்று சிறப்புடன் வாழ்கிறார்கள் என்றால் முற்தவப்பயனேயாகும். இவர் போன்ற நல்மகனைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும், எமது கிராமத்திற்கும் ஓர் வரப்பிரசாதமே.
இவரின் ஆன்மா இறையின் நிலையில் சாந்தியடையும்.
“ஆன்மா ஒரு நாளும் அழியாது என்பது தத்துவ மகான்களின் அனுபவ சித்தாந்தகும்”
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்புடன்
Gursuasion
مست 444سے

Page 28
அமரர் கனகசபாபதியின் வநஞ்சத்தின் நினைவுகள்
எனது மனையாட்டியின் தங்கை மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டவர் அன்று முதல் நானும் அவரும் அண்ணன் தம்பி போல நடந்தோம். அதனால் அவரின் மனநிலையை நான் நன்கு அறிவேன். இவர் நேர்மை, இரக்கம், அன்பு, நிதானம்,தெய்வ பக்தி, எல்லோரையும் மதிக்கும் மாண்பு என எல்லா விதமான நற்குணங்களையும் கொண்டு பூரணமான மனிதராகத் திகழ்ந்தவர். அவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். அத்துடன் அவர் ஆறு சாஸ்திரங்களில் சோதிடசாத்திரத்தை நேர்த்திரமாகக் கொண்டு நினைத்த காரியம் சொல்ல பல்லி சொற் பலன் சொல்லல் விவாகப் பொருத்தம் பார்த்தல், இவற்றில் திறமை சாலியாகத் திகழ்ந்தார். நெஞ்சம் பக்திக்கு அடிமையாய் இருந்தது. ஆண்டவனின் சிந்தனை நிரம்பி வழிந்தன இவர் இடுக்கண் வந்தால் சிவ சிவ என்று சொல்வது வழக்கம் நான் ஒரு நாள் கேட்டேன் ஏன் இப்படி சிவ சிவ சொல்லுகிறீர்கள் என்று அவர் ஒருபாட்டுச் சொன்னார்.
சிவ சிவ என்றிடத் தெரிகிலர் மாந்தர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்றிட சிவகதி தானே இது திருமந்திரத்தில் சொல்லப்பட்டது. என்றும் சொன்னார்.
வயிரவர் பொங்கல் வந்தால் வயிரவருக்கு வடை மாலை சாத்தினால் தான் திருப்தியும் மகிழ்ச்சியும் வரும் அந்திய காலத்தில் தினமும் வடை கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். இந்த வடை இவரின் மூத்த மகன் சக்திதாசனின் நெஞ்சினும்
ー:45:=

இருந்திருக்கு சக்திதாசன் நெஞ்சு நெருடல் என்ற கவிதையை உருவாக்கிய போது அதில்
பாட்டி வடை சுட்டாள் பேத்திமாரை கரை சேர்க்க பேத்தி அதைச் சுட்டாள் பூட்டிமாரைக் கரை சேர்க்க
என்று ஒரு பாட்டு வரையப்பட்டுள்ளது.
அமரர் கனகசபாபதியிடம் வடை சாப்பிட ஏன் ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டேன் அவர் சொன்னார் சாப்பாட்டுக்
குறையை பூரணமாக்குகிறது என்றார்.
இவர் அந்திய கால நேரம் சக்திருபனிடம் உடல் நிலை தளருகிறது பத்திரகாளிக்குஅர்ச்சனை செய்த விபூதியிருக்கு கொண்டு வந்து பூசு என்றதும் மகன் விபூதியை நெற்றியில் பூசியதும் அந்த நினைவுடன் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
இப்படிக்கு
நடராசா குடும்பத்தினர்
பிரபல சோதிடர்
ー:46ー

Page 29
அமரர் வீரபாகு கனகசபாபதி அண்ணர் பற்றிய சில வார்த்தைகள்
இவர் கல்வி கற்கின்ற நாள் தொடக்கம் கமத்தொழிலிலும் ஈடுபட்டு குடும்பத்தவர்க்கு கலங்கரை விளக்கம் போல் இருந்தார். பின்னர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வரும் நாளில் தாவடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்னும் பெண்ணை திருமணம் செய்தார். இதன் பயனாக சக்திமிக்க தாசன், ரூபன், மனோகரி ஆகிய செல்வங்களைப் பெற்று இன்புற்றார். பிள்ளைகளை கல்விகற்க வைத்தார். இந்தநேரத்தில் இவரது துணைவியார் விட்டுப் பிரிந்து போக துன்பம் அடைந்தும் தான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து பிள்ளைகளை வளர்த்து உரிய இடத்தில் திருமணம் செய்து வைத்தார். இதன் பயனாக பேரப்பிள்ளைகளையும் கண்டு சந்தோசம் அடைந்தார். இவர் விநாயகரையும் முருகனையும் குல தெய்வமாக வணங்குவார். கோயில்களில் பஜனை, புராணபடலம் என்பவற்றிலும் சேர்ந்து தொண்டாற்றியவர் உடல் நிலை குன்றிய காலத்திலும் இறைவணக்கம் செய்து வந்தார். எல்லோருடனும் அன்பாக உறவாடுவார். இவர் திடீரென அப்பர் சுவாமியைப் போன்று சதைய நட்சத்திரத்தன்று இறைவனடி சேந்தார். அன்னாரின் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அவரது சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
சகோதரர்
DT-5s,6085uT
(ஒய்வு பெற்ற ஆசிரியர்
-:47:-

ούτατύυυώ
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற முதுமொழிக்கிணங்க வாழ்ந்த எமது முன்னோர்கள், ஞானிகள், சிவஞான போதகர்கள், எண்ணிப்பார்த்த பொழுது அவர்கள் g5LD5 பிறப்பு இறப்புக்களை 905 இறை விளையாட்டாகவே கருதி வாழ்ந்தார்கள் பிரபஞ்சத்திலே தற்பொழுது வாழ்கின்ற எங்களுக்கு ஆசா பாசங்களுக்கும் பந்த பாசங்களுக்கும் மலிந்து இறைவனை கவர்ச்சி வணக்கமாக கொண்டு காலனுக்கும் பயந்து கொண்டு வாழுகின்றார்கள் இதை நினைக்கும் போது எமது சமய குரவர்கள் முன்னோர்கள் வரலாறுகளை படிக்கும் போது அப்பர் பெருமானுடைய வரலாற்றில் சைவ சமயத்திலே பிறந்து சமண சமயத்திற்குமாறி மீண்டும் சைவ சமயத்திற்குஇறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
அவர் சமண சமயத்தில் சேர்ந்த திட்டு மாற வேண்டும் என்று விரும்பி இவ்வுடலுடன் உயிர் வாழ்தல் தகாது என்று
"பொன்னார் திருவடிக்கோர் விண்ணப்பம்” என்றும்
எம்பெருமானே! கூற்றுவன் வந்து என்னை நெருங்கமுன் உமது அழகிய திருவடியை அடியேன் சென்னி மீது வைத்தருள, வேண்டும். என்று கூறினார்.
கோவாய் முடுகி யழுதிறல்
கூற்றம் குமைப்பதன் முன்
பூவாரடிச் சுவருடன் மேற்
பொறித்த வை போகாவிடில்
a:48:-

Page 30
மூவா முழுப் பழி மூமும் கண்டாய்
முழுங்குந் தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
துறையும் சிவக்கொழுந்தே
என்று வாகீசப்பெருமான் பாடினார். இந்தப் பாடல் மனதை சிந்தையில் ஆழ்த்தியுள்ளது. அப்பர் பெருமானே எமன் தன்னை தீண்டக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.
பிரபஞ்சத்திலே மூழ்கியிருக்கும் எம்மைஎமன் சும்மா விடுவானா இறக்கும் பொழுது கூட உன்னை மறக்க வைத்து விடுவானே என் செய்வேன்? என்று ஆழ்ந்த வேளையில் கனவோ நனவோ தெரியாத வேளை ஒரு பெரியவர் தோன்றி நீ திரிபுண்டரக்குறி பொறி என்று கூறினார். விளங்கவில்லை என்றேன்.
ஒழுக்கம், நிதானம், உண்மை இம்மூன்றும் கடைப் பிடித்து வாழ்பவர்க்கு திரி புண்டரக்குறி உண்டு என்றார்.
இது உண்மையா பொய்யா என்பதை அறிந்து கொள்வதற்கு சான்றுகள் எட்டவில்லை எமது முன்னோன் அமரர் ஆசிரியர் வீ.கனகசபாபதி அவர்கள் தமது உடலை நீக்கி முன் இரவு எழுந்து சென்று படுக்கையில் படுத்து இறை நாமத்தை கூறி உடலை விடுத்து உயிரை நீத்து இறைவனடி சேர்ந்தார்.
!t:g {&# , , , :##f
இறக்கும் போது கூட இறைவன் எம்மை ஆட்கொண்டாள் போதுமென்று அடிக்கடி கூறுவார் இது அவர் திரிபுரண்டரக்
குறியுடன் வாழ்ந்தார் என்பதற"கு சான்று
மா.சொர்ணலிங்கம்
சோதிடர் (இணுைவில்)
r:49:

"எனது ஆருயிர் நண்பன்
இலங்கையில் யாழ் நல்லூர் வடபால் இணுவை மாநகரம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாவகையாலும் ஈடுஇணையற்று இருந்த படியால் இணையில் என்று இருந்து மருவி இணுவில் என பெயர்பெற்றது இங்கே விவசாயப் பெருங்குடியினர் கல்விமான்கள், வீரசைவர்கள், வித்துவான்கள் யாவரும் வாழ்ந்த
சிறந்த ஊர்.
இவ் ஊரில் பெருந் தொகையான தோட்டக்காணியும் அவற்றை செய்யும் திறமையும் ஆரோக்கியமும் இருந்தபடியால் அக்காலத்து மக்களால் தோட்டத்து வைரவப்பிள்ளை என்று அழைத்தனர் வைரவநாதர் மகன் வீரவாகு மூத்தவராக திகழ்ந்தார் இவர் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினார்.
இணுவில் கந்தசுவாமி கோயில் ஸ்தாபகர் குழந்தையர் மகன் வேலாயுதர் இவரின் மூர்த்த மகன் இராமநாதனின் இரண்டாவது மகன் நாகநாதர் (வைத்தியர்) அவரின் மகன் வேலுப் பிள்ளைவைத் தயர் இவரின் இளையமகன் தெய்வானைப்பிள்ளையை தோட்டத்து வைரவப்பிள்ளையின் மூத்த மகன் வீரவாகு திருமணம் செய்தார் இவர்களின் இல்லறத்தின் பலனாக சோமசுந்தரம், கனகம்மா, மனோன்மணி, அம்பலத்தரசு, கனகசபாபதி இவரின் மூத்தமகன் சோமசுந்தரம் தனது பேரன் வேலுப்பிள்ளை வைத்தியரை குருவாகக் கொண்டு முஸ்லிம்கள் வாழும் யாழ் ஐந்து சந்தியில் சிறந்த ஆயுள்வேத வைத்தியத்தினை பேரனுடன் மேற்கொண்டார். ஆம்பலத்தரசு தமிழ் இலக்கண இலக்கியத்தில் வல்வராக இருந்து காலச்சூழ்நிலையால் கமத் தொழிலை மேற்கொண்டார்.
ー:50:ー

Page 31
மூன்றாவது மகன் குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகிய் வீ.கனகசாபாபதி வைத்தியத்தின் சோடிப்பிளளையாக சோதிடத்தின் திறனாய்ந்து அவற்றை சமூகத்தில் எல்லோரும் உய்த்து உணரும்படி போதித்து மக்களின் நன்மதிப்பை பெற்று வந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை அம்பிகையாகர் வித்தியாலத்திலும் தொடர்ந்து ஆங்கிலக்கல்வியை உடுவில் மான் பள்ளியில் கற்று தமிழ், ஆங்கில் S.S.Cயில் சித்தி எய்தினார். ஆரம்ப ஆசிரிய பணியை எட்டியாந்தோட்டையில் ஆரம்பித்து இறுதியில் கொக்குவில் சி.சி.த.க.பாடசாலையில் அதிபராகி ஓய்வு பெற்றார். முனைவி இலலாது இருந்தும் பிள்ளைகள் நல்லநிலைக்கு வர உறுதுணையாக இருந்தார். நண்பனின் மறைவு எனக்கு மட்டுமல்லா எம்.அனைவருக்கும் இழப்பாகும்.
பொன் ஏடுபத்திரிகை ஆசிரியை மணிகள்.
ー:51:ー
 

வநஞ்சில் நிலைத்திருக்கும் நினைவுகள்
1985ம் ஆண்டில் எமக்குஅறிமுகமாகியவர் அமரர் வீ.கனகசபாபதி அவர்கள் அன்னாரது இளைய மகனாகிய வீரசக்திருபனும் நானும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற போது ஏற்பட்ட நட்பினால் ரூபனும் நானும் நண்பர்களானோம். அன்றிலிருந்து அவரது வீட்டிற்கு நான் அடிக்கடி சென்று வருவேன். அவரது வீட்டுக்குச் சென்றதும் முதலில் வா வா என வரவேற்பார். எனது நண்பனின் தந்தையான அமரர் வீ. கனகசபாபதி அவர்கள் தான். தனது பிள்ளைகளுடன் பழகுவது போலவே என்னுடன் பழகி வந்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் எங்களுக்கு நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வந்தார். சில வேளைகளில் நான் அவரது வீட்டிற்கு இரண்டு மூன்று தினங்கள் செல்லாதிருந்தால் கூட ஏன் வரவில்லை என்று அன்பாக கடித்துக் கொள்வார். நான் G.C.E O/L படிக்கும் காலத்தில் எனது தந்தையார் பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் எனது கல்வியை மேற்கொண்டு தொடர முடியுமோ? என நான் யோசித்துக் கலங்கி நின்ற வேளையில் மனதுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகமளித்து என்னை மேலே படிப்பதற்கு அறிவுரைகளை வழங்கினார். தற்பொழுது என்னைக் கண்டதும் எங்கள் குடும்ப சுக நலன்களை விசாரிப்பார். அவர் சிறந்த சோதிடராக இருந்த படியால் எங்கள் குடும்பத்தவர்கள் அனைவரதும் சாதக பலன்களையும் பார்த்துக் கூறுவார். இவர் என்னுடன் மட்டுமல்லாது எனது சகோதரர்கள் அனைவருடனுமே என்னுடன் பழகுவதைப் போலவே மிகவும் அன்பாகப் பழகியவர். அவர் அமரத்துவம் அடைவதற்கு ஓரிரு நாட்களிற்கு முன்பு கூட நான் எனது மனைவி மகளுடன் சென்று பார்த்து விட்டுத் தான் வந்திருந்தேன். அவர்
ー:52:〜

Page 32
இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் பிரியப் போகிறார் என்று நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த 24.04.2006 அன்று அமரர் அவர்கள் இறந்த செய்தி கேட்டதும் பேரதிர்ச்சியும் அளவில்லாத் துயரும் அடைந்தேன் மண்ணிற் பிறப்போர் யாவரும் இறப்பது இயற்கையின் நியதி ஆயினும்அமரர் வீ.கனகசபாபதி அவர்கள் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் பிரிந்து தாங்க முடியாத துயராகவுள்ளது. அன்னாரது பிரிவால் துயருற்று துடித்து நிற்கும் எனது நண்பன் வீரசக்திருபன் குடும்பத்தவருக்கும் சகோதரன், சகோதரி குடும்பத்தினருக்கும் எனதும் எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இணுவைக் கந்தனை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
இணுைவில் மேற்கு
அ.ழறிதரன் குடும்பத்தினர் யாlஏழாலைல மேற்கு சைவ மார்க்க வித்தியாசாலை
ஏழாலை
 

مست.
விண்ணில்
அமரர். வீர்வாகு கனகசபாபதி (ஒய்வுபெற்ற அதிபர், பிரபலசோதிடர்) இன்தமிழ்ப் பற்றும் சைவய்பற்றும்
நிறைந்த இணுவில் பதியிற் பிறந்தனை
நற்குணம் பெற்ற நல்லதோர் மனிதராய்ய்
பலரும் போற்றச் சிறப்பாய் வாழ்ந்தனை
உம்மைச் சாய்ந்தோர் சீராய்
வாழ்ந்திட என்றும் வழிசமைத்தாய் நீ உந்தன் மறைவால் துயருறுகின்றோம்
ஆத்மா சாந்தியடைந்திட வணங்குவோம்.
SYLLLLLLLttttttS TeLLStTTT TSkeeegSLeeeL LLS zSTTYztteT ektmmeeS SzTttT S MS SmmOLSYTTOieYezeY zztkkkekmmmmmS
ஓம் சாந்தி: 8ாந்தி: சந்தி!!!
x சைவப்பணியனை, இனந்தொண்ட சபை
* இணுவில். r o ပိုမွို ଓଁ இதுவில் கந்தக3ாமி கோயில்
Ý: 28.04.200Ꭶ

Page 33
挚
挚 இராஜகோபுரம் வைத்திய பரம்பரையின் வாரிசு நல்
挚 ஆசாணைய் அதிபராய் - பெருஞ் சோதிடனாய் ஊருக்கே 学 挚 சேவையாற்றிய எங்கள் தெய்வம் அமரர் கனகசாUாபதி 芽 织 அவர்களின் மறைவுச் சேதி கேட்டு ஒழ வந்து x% 婷 உதவிகள் புரிந்தவர்களுக்கும் நான்கு நாட்களும்கூடவே 挚 挚 நின்று ஆறுதல் படுத்தியவர்களுக்கும்இறுதிக் கிரியைகளில் 学 挚 கலந்து கொண்டுசிறப்பித்தவர்கட்கும் இறுதி அஞ்சலிக் 学 கூட்டம் நடத்தியவர்கட்கும் கண்ணிர் அஞ்சலிகள் 参
学 வெளியிட்டவர்களுக்கும் தொலைபேசியில் அனுதாபம்
*い。
தெரிவித்தவர்கட்கும் வீட்டுக் கிருத்திய நிகழ்வில் கலந்து 学 கொண்டவர்களுக்கும் மற்ரும்அனைவர்க்கும் எமது
குடும்பத்தின் சார்பில்நன்றிதனை தெரிவித்து
婷 6)ém6iffd86of(8prTuბ.
学 இங்ாs/னம்
பிள்ளைகள் மருமக்கள்
婷 பேரப்பிள்ளகள் 学
 

geleseqeress og er@gı yır@qes
鞑(ụu-ı7ụeSouncello) Joseqırııgojiri?) JIrequeo?)(IIquoteírusoqffi) ' " işsiègăạlloqi ' gieopoemoșın
�A\4A\ A\
Lonquitessourių9 + !oeuropicosiqike <+– Jiqoqoeqe sous
A
$rIIIIIaeleosesofosfæriqỊgJonssourceș)ai uanqioloose quaesoqueo - /\ &iqoners of qeelineæriq se pençedeIlgiqımaeșîęIsossoriuscìbureņoto ++十++ lees!!! Justilo 1909ųoņņie@@ Miqyo mụırıls ņospyrollan@ıņemps
4\\A4À4 Leseroorseseo + sousesfēG5, FīīīīīīīīEsp <- ựąsąsœ