கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுமலர் (நாகலிங்கம் சிவஞானசுந்தரம்)

Page 1
CA2 திரு. நாகலிங்க
sy M P2 ஆவி நினை
03.0
 

--
: JLFIFri.
ம் சிவஞானசுந்தரம் いク ர்களின் 宋 级 ாவுமலர்
8.1995

Page 2


Page 3

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுருவிலைச் சேர்ந்த அமரர் நாகலிங்கம் சிவஞானசுந்தரம் அவர்கள் சிவபதமடைந்தமை குறித்த
நினைவுமலர்
திதி வெண்பா
ஆண்டு பவவருடமான ஆனி உத்தரத்தில் சான்றமிகு சஷ்டிதனில் நீண்ட புகழ் செல்வத்திரு மகனாம் சிவஞானசுந்தரம் சென்றடைந்தார் தில்லை நடராசன் பதம்
தோற்றம் 33.9
மறைவு [] [] []7 - 1945
திதி சஷ்டி வளர்பிறை நட்சத்திரம் பூரம்
3.5G 7

Page 4

வாழ்க்கை வரலாறு
இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் வயலும் கடலும் சூழ்ந்த சுருவில் என்னும் ஊரில் பிரபல வர்த்தகரான தந்தை வி. நாகலிங்கம் என்பவருக்கும் இறை அருள் மிக்க அன்னை சிவக் கொழுந்து அவர்கட்கும் நாகலிங்கம் சிவஞானசுந்தரம் மார்கழி மாதம் 31ம் நாள் 1924ம் ஆண்டில் நற்புத்திரனாகப் பிறந்தார்.
குழந்தைப் பருவத்தை ஐயப்பனாரின் அருள் நோக்காலும் நாக பூஷணி அம்பாளின் ஆசியுடனும் பெற்றோரும் உற்றாரும் உடன் பிறந்தாரும் போற்றிப் புகழ இனிதாக கழித்து வந்தார். ஆரம்பக் கல்வியைச் சுருவிலில் தொடங்கி பின்பு St. Benedicts கொழும்பு, St Antony's ஊர்காவற்றுறை, இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம், தொழில்நுட்ப கல்லூரி, கொழும்பு வரை சென்று படிப்பை முடித்தார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுக்கமைய
நற்குண சீலனாக விளங்கினார்.
வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதையே மேற்கோளாகக் கொண்டு அறநெறி பிறளாது நடப்பதிலே பெரும் விருப்புக் கொண்டவர். அமைதியும் அடக்கமும் பொறுமையும்
கொண்டவர்.
W “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வாழ்வில் நனிசிறந்தனவே” என்பதற்கேற்ப தனது தாயையும் தனது நாட்டையும் மனதார நேசித்தவர்.
தனியார் துறையில் கூடிய காலம் வருமானவரி ஆலோசகராக கடமை புரிந்து, அரசாங்க சேவையில் நீர்ப்பாசன கணக்கியல் பிரிவிலும் தொழில் புரிந்தார். தனது வாலிபக் காலத்தை பொது

Page 5
நலத்துக்காக அர்ப்பணித்தார். கிராம முன்னேற்றம் கோவில் பணி முதலியவற்றில் ஆர்வம் கொணடு பல பணிபுரிந்தார்.
1961ம் ஆண்டு தை மாதம் 21ம் திகதி இளவாலை என்னும் ஊரில் வாழ்ந்த வீரசிங்கத்தின் மகள் சாரதாம்பிகை என்னும் ஆசிரியையைத் தன் வாழ்க்கை துணைவியாக ஏற்று இல்லறமென்னும் நல்லறத்தை மனமொத்த தம்பதிகளாக மேற்கொண்டு அன்புப் பிள்ளைகளான சிவகுமார், அருணகுமார், ஜெயந்தி, ஆனந்தகுமார், கிறிஷாந்தி ஆகியவர்களுக்கு, உகந்த நல்ல அறிவையும் ஆற்றலையும் புகட்டி வளர்த்தார். சிறந்த கட்டுக் கோப்பில் வளர்ந்த பிள்ளைகளின் கல்விச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்த தந்தை, பிள்ளைகளின் திருமணக் கோலத்தைக் காணாமலே திடீரென எதிர்பாரா வண்ணம் நித்திரை பில் அவரை அமைதியாக இறைவன் தன்பால் அணைத்துக் கொண்டார். அவரின் மறைவு அவரின் குடும்பத்தவர்களுக்கு நிரப்ப முடியாத ஒரு இடைவெளியாகி விட்டது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறை அருள் வேண்டி நிற்கும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
மனைவி - மக்கள்.

திருமுறைகள்
விநாயகர் வணக்கம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தனமையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
திருமுறைகள் - தேவாரம் 1ம், 2ம், 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண் மதிசூடி காடுடைய சுட லைப்பொடியூசி யென்னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபிரமேவிய பெம்மாணிவ னன்றே.
விருது குன்றமா மேருவில் நாணர வாஅன லெரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலனி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
நிரைகழல் அரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலை யமர்ந்தாரே.

Page 6
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில்நல் வஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
இடரினுந் தளரினு மெனதுறுநோய் தொடரினு முனகழல் தொழுதெழுவேன் கடல் தனி லமுதொடு கலந்தநஞ்சை மிடறினி லடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
4ம், 5ம், 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசு நாயனார்
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே,

7ம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார்
பித்தாபிறை சூடிபெரு மானேஅரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக் காளாய் இனி அல்லேன்எனல் ஆமே.
8ம் திருமுறை - திருவாசகம் மாணிக்கவாசக சுவாமிகள்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.
9ம் திருமுறை - திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனி யெல்லாம்விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
5

Page 7
10ம் திருமுறை - திருமந்திரம்
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
ஒன்றுகண் டீர் உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர் உல குக்குயி ராவது நன்றுகண் டீர் இனி நமச்சிவா யப்பழந் தின்றகண் டேற்கிது தித்தித்த வாறே.
11ம் திருமுறை
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
12ம் திருமுறை - பெரியபுராணம்
உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

திருப்புகழ்
அருணகிரிநாதர்
உம்பர்தருந் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி இன்பாசத் தேபருகப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
மனக்கவலை நீக்க வல்லது ஆனந்தம் அளிப்பது
இந்தச் சிவபுராணத்தை அன்பர்கள் பூசையின் போது காலை யும், மாலையும் பாராயணம் செய்யலாம். வீதிவலம், மலை வலம், ஆலய வழிபாடு, மகேஸ்வர பூசை முதலிய காலங்களில் பாராயணம் செய்யலாம். இதனால் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள், மனக் கவலைகள் யாவும் ஒழிந்து, அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். இச் சிவபுராணத்திற்கு இணை இதுவே யாகும். இப்பூவுலக மக்கள் உய்யும் பொருட்டு சிவபெருமானே மாணிக்க வாசகர் மூலம் இதனை அருளிச் செய்தார் என உணர்க.
வீட்டில் உள்ளவர்களே சேர்ந்து தினமும் இப்பாடலை, காலை யும் மாலையும் பாராயணம் செய்வது மிகுந்த பயனை நல்கும். வீடு லட்சுமி வசிக்கும் இடமாகத் திகழும் என்பது உண்மை.

Page 8
சிவபுராணம்
ராகம் - மோகனம்
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்கு விவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன்கழல்வெல்க ஈச னடிபோற்றி எந்தை அடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனடிவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பானியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே ஆக்கம் அளவுறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே

Page 9
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத்தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தானே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப், பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
10

கந்தர் சஷடி கவசம்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவுஞ் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்க வென்று உவந்து வரவர வேலாயுதனார் வருக! வருக வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா வருக வருக நேசக குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறு இடும் வேலவன் நித்தம் வருக சிரிகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக
זעזע תת זעזע זעזע *{dו (1600T L16 (6זע. flahu 6001 u 6ug flrfffff frfrf) விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென
வசர கணப வருக வருக அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டு ஆயுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க விரைந்து எனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிளியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனிஒளி யொவ்வும் குண்டலி யாம்சிவகுகன் தினம் வருக
11

Page 10
ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறு இடும் நெற்றியும், நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும், முத்து அணி மார்பும் செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீராவும் இரு தொடை அழகும் இணை முழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகன டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண
ரரர ரரர ரரரர ரர ர ՈրՈրՈրՈ IՈրՈրՈրՈ IՈրՈրՈրՈ IՈրՈրՈ , டுடு(நிடு டுடு(டுடு டுடு(நிடு டுடு(நி டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வர மகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன் திருவடியை உறுதியென்று எண்ணும் என்தலை வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
12

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்து இருபல் முனைவேல் காக்க செப்பிய நாவை செல்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேர்இள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இரு தோள் வளம் பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றி வேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நல் துணையாக நாபிக் கமலம், நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிர வேல் காக்க அரை இருள் தன்னில் அனையவேல் காக்க
13

Page 11
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வாலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்பு சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கன பூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங்காரரும் மிகு பல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகள் உடனே பலகலசத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதர் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய் விட்டு அலறி மதி கெட்டு ஒடப் படியினில் முட்டாப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
14

கட்டி உருட்டு கால் கைமுறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்குச் செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணல்எரி தணல்எரி தணல்எரி தணல் அதுஆக விடுவிடு வேலை வெருண்டது ஓட புலியும் நரியும் புந்நரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்தனைக் கண்டால் நில்லாது ஒட நீ எனக்கு அருள்வாய் ஈரேழ், உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காக மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத் துதிக்க ?ܠܽܐܘܢ ܐ̇ திருநாமமும் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழ்ஒளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர் வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

Page 12
இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடி வாழ் அழகிய வேலா செந்தின் மாமலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என் நாஇருக்க, யான் உனைப் பாட எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை பாடினேன்ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன்யான் நெற்றியில் அணியப் பாசவினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருள்ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசன் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து மைந்தஎன் மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
15

கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு உருக்கொண்டு ஒதியே ஜெபித்து உகந்து நீறு அணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல்எழில் பெறுவர் எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்து எனது உள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச் சூர பத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி என்னைத் தடுத்து ஆட்கொள எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலா போற்றி உயர் கிரி கனக சபைக்கு ஓர் அரசே மயில் நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
17

Page 13
பதிகம் 33 சரஸ்வதி துதி
சகலகலாவல்லி மாலை
வெண் தாமரைக்கன்றி நின்பதந்
தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ
சகமேழும் அளித்து உண்டான் உறங்க வொழித்தான்
பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலா வல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய் தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்
பங்க யாசனத்திற் கூடும் பசும் பொற் கொடியே
கனதனக் குன்றும் ஐம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே
சகல கலா வல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்துன் அருட் கடலில் குளிக்கும் படிக்கென்று கூடும்கொலோ
உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே
சகல கலா வல்லியே.
18

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்
வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே
சகல கலா வல்லியே.
பஞ்சப்பு இதந்தரு செய்ய பொற் பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே
நெடுந்தாட் கமலத்து அஞ்சத்துவசம் உயர்ந்தோன்
செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகல கலா வல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் ப்யனும் என்பால் கூட்டும்படி நின் கடைக்கண்
நல்காய் உளம்கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலா வல்லியே.
19

Page 14
சொல்விற் பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்
நளினாசனம் சேர் செல்விக்கு அரிதென்று ஒரு காலமும்
சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலா வல்லியே. 8
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் ιμπιτ
நிலந்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலா வல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என் பண்கண்டளவிற் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி
உண்டேனும் விளம்பில் உன்போற் கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலா வல்லியே. 10
திருச்சிற்றம்பலம்
சுபம் சுபம் சுபம்
20

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் "அகரம்” முதன்மை போல உலகிற்கு இறைவன் முதல்வன்.
Praise of God
Alphabet "A" leads all letters. Similarly the entire world is led by God.
இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். 50
உலகத்தில் வாழ வேண்டிய நெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வ நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.
If a man leads a good and straight forward life. he will be respected as equivalent to God.
அறன் வலியுறுத்தல்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35
அறமாவது பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களும் இன்றி இயங்குவது ஆகும்.
The Greatness Of Virtue
Virtue is devoid of four bad things, namely, envy, greed,anger and bitter words.
21

Page 15
அறன் வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. 39
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். பிற, இன்பம் ஆகா; புகழும் இல்லாதவை.
The Greatness of Virtue
Real happiness comes only from virtuous deeds. The rest is without renown.
நீத்தார் பெருமை
செயற்கரிய செய்வார்.பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். 'ኳ 26
பெரியோர் அருஞ்செயல்கள் செய்வர், சிறியோர் அருஞ்செயல்கள் செய்ய இயலாதவர் ஆவார்.
The Glory of Great People
Great people achieve great and rare things, Ordinary people cannot achieve such things.
அடக்கமுடைமை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129
தீயினால் சுட்ட புண் புறத்தே இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால்நாவினால் தீய சொல் கூறினால் சொல்லப்பட்டவர்
மனத்திலிருந்து மறையாது.
Self Restraint
Wounds caused by fire can be cured but the damage caused by harsh words can never be set right. بر .
22

நடுவு நிலைமை
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 8. கோடாமை சான்றோர்க்கு அணி. 118
சீர் தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
Impartiality
The noble men will be impartial without leaning to any particular side.
இனியவை கூறல்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின், 96
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின் பாவங்கள் தேய்ந்து குறையும், அறம் வளர்ந்து பெருகும்.
Pleasant Words
With fruitful and Sweet words, virtues grow and sins vanish.
பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151
நிலத்தைத் தோண்டுவாரையும் நிலம் பொறுத்தலே போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் உயர் பண்பாகும்.
Forbearance
Earth bears up with persons who digit. Likewise. it is virtue to bear with people who decry and insult us.
23

Page 16
வாய்மை
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும். 298
புறத்தே தூய்மையாய் விளங்குவது நீரினால் ஏற்படும். அகத்தே தூய்மையாவது, உண்மையைக் கடைப்பிடிப்பதால் அடையப்படும்
Truthfulness TI
Water cleanses a person outwardly. Truth makes him pure inwardly.
ஊக்கம் உடைமை
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. 595
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நற்கும் நீரின் ஆழத்தின் அளவினவாகும். ஒருவரின் உள்ளத்தின் உயர்வைப் பொறுத்தது அவரது முன்னேற்றம்.
Good Natured Consideration
The heightoflotus corresponds to the height of waterinthepond. A man's greatness corresponds to his large heartedness.
மெய்யுணர்தல்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
பொருளின் தோற்றத் தன்மையை விடுத்து அதன் உண்மைப் பண்பைக் காண்பதே அறிவாகும்.
True knowledge
Knowledge is to find the truth of every thing in every case of every kind.
24

செய்ந்நன்றி அறிதல்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110
தனக்குச் செய்யப்பட்ட எந்த அறச் செயலை மறந்தாலும் தப்பிக்க வழி உண்டு. ஆனால் தனக்குச் செய்யப்பட்ட உதவியை மறந்தவனுக்கு எந்தக் காலத்திலும் நல்வாழ்வு கிடையாது.
Gratitude
There is escape for forgetting any other benefit, but there is no escape for those who have forgotten the help done to them.
அன்புடைமை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 80
அன்பின் வழிப்பட்ட உயிரே, உடலை இயக்கும் உயிர்நிலை ஆகும். அவ்வன்வு வழிப்படாத உயிர் உள்ள உடல் எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட உடல் ஆகும்.
The Possession of Love
The essence of life is love alone, Without love, a human being is simply a figure covered by skin and bones.
ஆள்வினையுடைமை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 616
முயற்சி செல்வம் சேர்க்கும். முயற்சி இன்மை வறுமையைத் தந்து விடும்.
Human Effort
Perseverance yields prosperity. Lack of industry would bring poverty.
25

Page 17
ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. 137
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டைப் பெறுவர். ஒழுக்கத்திலிருந்த தவறுதலால் அடாத பழியை அடைவர்.
Good Conduct
Good conduct bestows nobility and fame, whereas bad conduct brings utter disgrace.
மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963
செல்வம் மிகும்போது பணிதலும், வறுமை உற்ற போது கெளரவமும் வேண்டும்.
Honour
Adopt humility at times or prosperity, but uphold dignity during periods, of adversity and decline. S SSAA
நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. 786
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று. நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
Feiendship
For real friendship, there should be meeting of hearts and not mere outward Smile.
26

நாகலிங்கம் சிவஞானசுந்தரத்தின் குடும்ப வரலாறு
பெற்றோர்
சகோதரர்
மனைவி
பிள்ளைகள்
வி. நாகலிங்கம், சிவக்கொழுந்து
இராமச்சந்திரன் ஈசுவரம்பிள்ளை சிவலிங்கம்
கெங்காலட்சுமி இந்திராதேவி தேவராஜா பேரின்பநாயகம் கெங்கைவேணியன்
சாரதாம்பிகை
சிவக்குமார் அருணகுமார் ஜெயந்தி ஆனந்தகுமார் கிறிஷாந்தி
27

Page 18
நன்றி நவிலல்
எங்கள் குடும்பத் தலைவனைப் பிரிந்து நாங்கள் ஆறாத் துயரடைந்த வேளையில் எங்கள் வீட்டிற்கு வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னாரின் பூதவுட லுக்கு பார்வையாளர் மண்டபத்தில் இருந்த நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும், அஞ்சல் மூலமும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அந்தியேட்டிக் கிரியை வீட்டுக் கிருத்திய கிரியைகளில் கலந்து கொண்டு சிறப்பித்த வர்களுக்கும், எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
மனைவி, பிள்ளைகள்.
28


Page 19


Page 20
Thalayan Printers (Pvt) Ltd. Te

s
ா .ܕܐ ா
1 : 32-4531. 433774. F፡l¥ : 434666 1 ܒܩܕ