கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுந்தரத் தமிழுடன் சுந்தரம்

Page 1
ിഖഥ
சுந்தரத் தமிழு
ஈழத்துத் திருநெறி
 

பம்
r
டன் சுந்தரர்
ந் தமிழ் மன்றம்

Page 2

ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் 32வது ஆண்டாக பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடி வழிபாட்டின்பூோது வழங்கப்பட்டது.

Page 3

பதிப்புரை
சிவபரம்பொருளை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவசமயம். துதிப்பாடல்களாகிய தோத்திரங்களும், சாத்திரங்களும் சைவசமயத்தின் இரு கணிகளாக விளங்குகின்றன. தோத்திரங்களுள் திருஞானசம்பந்தரின் தேவாரப்பதிகங்கள் தொடக்கம் தெய்வச்சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் வரை இறைவனின் அருட் செல்வம் பெற்ற இருபத்தேழு அருளாளர்களால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற பாடல்களின் தொகுதியாகிய பன்னிரு திருமுறைகள் மிகவும் புனிதமானவை. திருமுறைகள் என்றால் புனிதமானவை, தெய்வத்தன்மை என்பதை 'திரு' என்னும் சொல் எமக்கு விளக்குகின்றது. திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் தம்மை இறைவன் பாடுவித்தார் என்றே அருளியுள்ளார்கள். திருமுறைகளைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி மெய்யன்போடு ஒதுபவர்களுக்கு, அவை இம்மை, மறுமைப் பயனை அளிக்கவல்லன. திருமுறைகள் இன்றேல் சைவமில்லை. மூவர் தமிழ் என்று சிறப்பிக்கப் படும் தேவாரங்களே முதல் ஏழு திருமுறைகளாகும். இவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்த ராலும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசராலும், ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பாடப் பெற்றவை.
இத்தகைய சிறப்பு மிக்க திருமுறைகளை சைவ நன் மக்களுக்கு அறிவிப்பதும், அவற்றின் அருமை பெருமைகளை விளங்க வைப்பதுமே ஈழத்துத் திருநெறித்தமிழ் மன்றத்தின்

Page 4
தூய பணிகளுள் ஒன்றாகும். இத்துாயபணியினை நிறைவேற்றுமுகமாகக் கால்த்திற்குக் காலம் திருமுறை வெளியீடுகள் அச்சிடப்பெற்று மன்ற உறுப்பினர்களுக்கும், பிறர்க்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய மன்றம் இன்று முப்பத்திரண்டாவது ஆண்டாக பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி வழிபாட்டின் பொழுது சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நூறு திருப்பதிகங்களுள் நான்கு பயன்தரும் தேவாரப் பதிகங்களைக் கொண்ட இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள அற்புதப் பதிகங்களை பக்தி சிரத்தையுடன் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால் கண்ணில் ஏற்படும் குற்றமெல்லாம் நீங்கப் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்பது அனுபவ சித்தமான உண்மை. பயன் அடைந்தோர் இன்றும் பலர் உள்ளனர். இந்நூலினை சிறப்புற வெளியிடுவதற்குப் பொருள் உதவியும், பேராதரவும் நல்கிய திரு. க. ஜெதீசன் குடும்பத்தினருக்கு மன்றத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் றேன். அவர்களின் தூய திருமுறைப்பணி தொடரட்டும். இந்நூலினை குறுகிய காலத்தில் அச்சேற்றித்தந்த லக்ஷமி அச்சகத்தாருக்கும் மன்றத்தின் நன்றி உரித்தாகுக.
24, டீன்ஸ்ரன் பிளேஸ், க. இ. ஆறுமுகம். கொழும்பு - 03. J.P (ALL ISLAND ) தொ.பே 2575562 தலைவர்
25.07.2004. ஈழத்துத் திருநெறித்தமிழ் மன்றம்

剑一
சிவயம் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய ஆரூரர், முன்னர் தாம் சங்கிலியார்க்குச் செய்து கொடுத்த உறுதியினின்றும் மீறியதால் கண்ணொளி இழக்க, மிக இடர்ப்பட்டு வர, வழிச்செல்வோர் வழிகாட்டிட வடதிரு முல்லைவாயிலை அடைந்து அப்பெருமானிடம் தாம்படுதுயர் களைய' மனங்கசிந்து பாடுகின்றார்.
வடதிருமுல்லைவாயில்
சுவாமி - மாசிலாமணி ஈஸ்வரர் பன் - தக்கேசி தேவி - கொடியிடை நாயகியம்மை
திருச்சிற்றம்பலம் திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னை பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 01.
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. ,« O2
1

Page 5
விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 03
பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே. 04
சந்தன வேருங் காரகிற் குறடும்
தண்மயிற் பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண்டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 05 மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்

வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்.
கொள்கையால் மிகைபல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 06
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல் அறாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயில் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 07
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா செம்பொன்மா னிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 08

Page 6
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி. யாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 09
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு) எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு)
அருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறி பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே. 10
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்த வல்லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே, 11
திருச்சிற்றம்பலம்

தம் இடர்களையப்படாத நிலையில் திருவெண்பாக்கம் வந்து சேர்ந்த் சுந்தரர் தன் மனக்கவலை வெளித்தோன்ற சிரத்தின் மேல் கைகூப்பிப் 'பெருமானே நீர் கோயிலினுள் உள்ளாயோ' என விண்ணப்பிக்க பெருமானும் உள்ளிருந்தவாறே ஊன்றுகோல் ஒன்றினை அருளி 'உளோம் போகீர் என்று மறுமொழி கூறினார். நாயனார் அப்போது அருளிச் செய்தது இத் திருப்பதிகம்.
இறைவன் ஊன்றுகோல் அருளியது
திருவெணர் பாக்கம்
சுவாமி - வெண்பாக்கநாதர் பண் - சீகாமரம் தேவி - கனிவாய்மொழி
திருச்சிற்றம்பலம்
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
O1 இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே விடையுடையான் விடநாகன் வெண்ணிற்றன் புலியின்தோல் உடையுடையான் எனையுடையா னுளோம்போகீர் என்றானே. O2 செய்வினைஒன் றறியாதேன் திருவடியே சரணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ பையரவா இங்கிருந்தா யோஎன்னப் பரிந்தென்னை உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.
03

Page 7
கம்பமருங் கரிஉரியன் கறைமிடற்றன் காபாலி செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி நம்பி இங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே உம்பர்தனித் துணைஎனக்கு உளோம்போகீர் என்றானே. O4.
பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறி துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும் உன்னமுதாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே. 05 கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர் தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான் கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோயென்ன ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.
06 பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத் தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன ஊர்அரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.
O7 வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி காரிடங்கொள் கண்டத்தன் கருதும்இடந் திருவொற்றி ஊரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.
08

பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ Nருவென்று சொன்னன்னைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.
09 மான்திகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன ஊன்றுவதோர் கோல்அருளி உளோம்போகீர் என்றானே.
10 ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காராரும் மிடற்றானைக் காதலித்திட் டன்பினொடும் சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.
11
திருச்சிற்றம்பலம்

Page 8
சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரிலே சங்கிலியாரைத் திருமணம் செய்தபோது மகிழடியில் செய்து கொடுத்த ஆணையை மீறித் திருவாரூருக்குப் புறப்பட்டார். உடனே இரண்டு கண்களும் மறைந்தன. திருக்காஞ்சிக்குச் சென்று திருஏகாம்பர நாதரை வணங்கி இடக் கண்ணைப் பெற்றார். அப்போ பாடப் பெற்றது இத்திருப்பதிகம். இதனை நியமமாக ஒதுபவர் கண் குற்றமெல்லாம் நீங்கப் பெறுவர்.
இடக்கண் பெற்றது திருக்கச்சி ஏகம்பம்
பண் - தக்கேசி சுவாமி - ஏகாம்பரநாதர் தேவி - காமாட்சியம்மை திருச்சிற்றம்பலம்
ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 01
உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்றமில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. O2

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 03
குண்டலந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்ட லம்புமலர்க் கொன்றையி னானை
- வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 04
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 05

Page 9
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழை காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 06
விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம்உகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. O7 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக முஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 08
1s

வரங்கள் பெற்றுழல்வாளரக் கர்தம்
வாலி யபுரம் மூன்றெரித் தானை நிரம்பிய தக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 09
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்தீரு நாவலா ரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 11
திருச்சிற்றம்பலம்
11

Page 10
நம்பியாரூரர் திருக்காஞ்சியில் இடக்கண் பெற்று, பலதலங்களையும் தரிசித்துக் கொண்டு திருவாரூர் சென்று சேர்ந்தார். திருக்கோயிலினுட் சென்ற போது இறைவனை வணங்க ஒரு கண் போதாமையால் வருந்தினார். அப்போ இத்திருப்பதிகத்தைப் பாட வலக்கண்ணையும் பெற்றார். இதனை ஒதுபவர் கண்ணைப் பொறுத்த எவ்வகை நோயும் நீங்கப் பெறுவர்.
வலக்கண் வேண்டியது திருவாரூர் <> சுவாமி - வன்மீகநாதர் பண் - செந்துருத்தி தேவி - அல்லியங்கோதையம்மை திருச்சிற்றம்பலம் மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதிரே. ፳ O1
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்
விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை ஆக்கினி எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதிரே. O2
12

அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூர் அகத்திரே கன்றுமுட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதிரே. O3
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறைஆள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே எனவேண்டா அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பணித்தால்
வாழ்ந்து போதிரே. 04
செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)
உமக்காட் பட்டோர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார்
தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ என்றால்
வாழ்ந்து போதீரே. 05
13

Page 11
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப் புனைத்தார் கொன்றைப் பொன்போல்
மாலைப் புரிபுன் சடையிரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது மனத்தால் வாடிஅடியார் இருந்தால்
வாழ்ந்து போதிரே 06
ஆயம்பேடை அடையுஞ் சோலை
ஆரூர் அகத்திரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதிரே. O7
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம் பழிதான் ஆவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதிரே. 08
14

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாம் காய்தான் வேண்டில் கணிதான் அன்றோ
கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூர்
வாழ்ந்து போதிரே. 09
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதிரே. 10
காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பே ராளூரன் பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதிரே. 11
திருச்சிற்றம்பலம்
ge
15

Page 12


Page 13
அன்பளி
க. ஜெக 26 அல்பிரட் கொழும்பு - 03. ெ
Printed by: LL xml Pri

|ப்பு -
திசன்
பிளேஸ், தா.பே 257796
f Tig| : 55