கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆனந்தத் தேன் க. சச்சிதானந்தன் நினைவோடை

Page 1

Phil (Lond) Ph.D(Jaffna)

Page 2


Page 3

Ggడి
ஆனந்தத்தேள்
மதுரைப்பண்டிதர் க. சச்சிதானந்தன்
B.A. (Hons.) Lond., M.Phil. (Lond.) Ph.D (Jaffna) .
நினைவோடை
LLsLeeLLesYLzeLeLeYeYLeYezeLs
2 2 ܐܰ: 5 ܨ݂ܳ
厦

Page 4
திருமுறை
தேவாரம்
திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினா லுன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசப தாபரஞ் சுடரே.
திருவாசகம்
மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினார் ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியும் கிறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே
ஆனந்தத்தேன் 2 Ot-et-2008

தருவசைபா
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும் குவளை மாமலர்க் கண்ணியுங் கொன்றையுந்
துன்றுபொற் குழற்றிருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறு மென்மனந்
தழன்மெழு கொக்கின்றதே.
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண் மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒருமுன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
Oq-es-200s 3 ஆனந்துத்தேன்

Page 5
மாவைச் சிந்து
மாலை வடிவேலவனை நீலமயில் வாகனனை
மாவைநக ரானைநிதம் தேடி மாதவர்கள் கூடுவார்கள் கோடி மால்மருக னென்று புகழ் பாடி
பாலக னெனும் வடிவு கோலமுறு புன்முறுவல்
பாதமலர்த் தாமரைகள் கண்டு பாடுமவர் கூடுவிழி விண்டு பாய வசமேயழிவர் நின்று
ஓலமிட வேண்டுமெனக் கோடிவீரம் கேட்பதற்கென்(று)
ஓடிவரு வாரழகு கண்டு ஒர்வரமும் கேட்பதிலை சென்று ஊனுருகு வாரொளியில் நின்று
காலமழி யாத படி காலடியில் வாழ்ந்திடுவர்
காசுநில ஆசைகளை விட்டு காசினியின் பாசவினை கெட்டு
கானு மருட் காந்தவழிப் பட்டு
தலைசரித்து மலர் இதழ்குவித்தகரம்
மது விறைத்தன தரையினில், தவ மிருப்பனவித் தலமிருக்க வரு சடைவளர்த்தன கதலிகள்
குலை சரித்த கமு கொளிமி குத்தசுடர் கொழுவி நிற்பன பழமென குமரனுக்குரிய நிலமிதிற்றவம் கொளவிருப்பமென வளர்வன
ஆனந்தத்தேன் 4 - Out.P5-200s

இலை தளிர்க்க முதல் இடைசிவத்ததளிர்
கரமெனக்குவி மாமரம் இளைய நற்குமரன் இருபதத்திலுறு கிளை நிலத்திலடி தொழுவன
கலைவளர்ப்பவரும் இசை வளர்ப்ப வரும்
கரமெடுப்பவரும் தவமுனம் கருதியுற்றபலன் கனிய இப்பதியில் வரவியற்றினர்கள் யுகமெலாம்.
உன்னைச் சுமந்தேன்
பொன்னைச் சுமந்தார்; பொருளைச் சுமந்தார்; புடைவையொடு மின்னும் அணிகள் சுமந்தார்; மிகச் சுமந்தார்; ஆசைதனை வன்னமயில் வடிவேலோடு நின்னைச் சுமந்திருப்ப உன்னைச் சுமந்தேன் மனத்தினில் உள்ளவா என்செல்வம்.
மதிக்கேன் ஒருவரை மாவைப்பதியல்லால் வேறுதலம் மிதிக்கேன் நினது வேலிருப்ப நீயிருப்ப மாமுடிகள் துதிக்கேன் ஆணைக்கும் போவென்பேன் சூழ்ந்து வருகின்ற விதிக்கேன் பயமென்று செம்மாந்தேன் நினதடி விழ்ந்தமையால்
காடும் புதரும் களிதிலச் சேறும், வரும்மாவை விடும் அமளித் தலமுமாய்க் காண்பேன், வெகு சொகுசாய் மேடும் பனியும் குளிரும் வியர்வைக் குளமுமெலாம் கூடும் சுகமாம் உளத்தேமா விட்டபுரம் கொண்டிருப்ப
கோவைப் படுபொன் மணியும் பெறுமோ? கோடிபவுண் தேவைப்படுமோ சிறிதும் விலையோ சிந்தாமணிகள் பூவென்றலரா அரும்பிற் புதுமை இதழ்க்கடையில் மாவைக்குமரன் மலர் வாய் முரல் மனநிறைய.
ot-et-200s 5 ஆனந்தத்தன்

Page 6
நெஞ்சத்திலேறி வந்தான்
மஞ்சத்தி லேறிய மாமுருகன் - என்றன் நெஞ்சத்தில் ஏறி வந்தான் - விழிக் கஞ்சத்தில் ஒளறி வந்தான் - களி கொஞ்சும் தமிழ் கொணர்ந்தான்
தட்டினில் ஏறி அமர்ந்து விட்டான் - மன மொட்டினில் ஏறிவந்தான் - விழிக் கட்டினில் ஏறிவந்தான் - தலைப் பட்டினில் மேலிவர்ந்தான்
வேலொடு பீடத் தமர்ந்து விட்டான் - மன ஆலய மீதமர்ந்தான் - தண்டைக் காலையு மேபதித்தான் - தலை மேலிடமே மிதித்தான்
புள்ளி மயில் மிசை ஏறிவிட்டான் - எனது உள்ள மயில்மிசை மாறிவிட்டான் - விழி வெள்ள மடுவினில் ஒளறிவிட்டான் - இமைப் பள்ள மிரண்டையும் மீறிவிட்டான்
பீடத்தி லேறிய ஆறுமுகன் - மன மாடத்தில் ஏறிவிட்டான் - விழிக் கூடத்தில் கோயில் கொண்டான் - வெள்ளம் ஓடக் குளிர்ந்து வந்தான்.
பூசத்துப் பூரணை காட்சி தந்தான் - தையாம் மாசத்தில் ஆட்சி செய்தான் - மாவை வாசத்தில் மீட்சி செய்தான் - மீளத் தேசத்தில் மாட்சி செய்தான்.
(1999 தைப்பூசத்தன்று எழுதப்பட்டது, கையெழுத்துப் பிரதி உதவியவர் முதறிஞர் வைத்தீஸ்வரக் குருக்கள்)
ஆவுந்தத்தேன் 6 04.e5-2008

அன்னைக்கு அஞ்சலி
கணபதிப் பிள்ளை கணிதப் பரம்பரைக்கு குணமக்கள் வேண்டிக் குலமகளைத் தேடி தொட்டுப் பிடித்த தூமலர்க்கை பட்டக்கால் இட்டகலம் பெருகும் எடுத்த கலம் பொன்னாகும். வைத்தபயிர் காய்குலுங்கும் வளர்த்தபசு பால்சொரியும் செத்தமரம் துளிர்க்கும் திருமலர்க்கை தெய்வக்கை கந்தபுராண வழுவுக்குக் கண்டனமும் பிந்தும் பஞ்சாங்கப் பிழைகாட்டும் கட்டுரையும் ஞான வாசிட்ட நல்லுரையும் தன்கணவர் பேனை பிடித்தெழுதப் பின்னூக்கும் கண்மலர்க்கை அல்வாய்ப் புலவோரும் ஆராய்ச்சிப் பண்டிதரும் சொல்வாய்ந்த சோதிடரும் துன்னாலை மணவரும் ஏரம்புப் பாவலரும் இன்சொல் விதானையரும் நேரம் தெரியாமல் நெடிதிருந்து வாய்கலக்க சோறிட்ட தெய்வக்கை தொடர்ந்து வருவோர்க்கும் நீறிட்ட ஞானியர்க்கும் நேரமெது வானாலும் பசியாகி வந்தவர்க்கு பாலமுது ஊட்டும்கை நிசியாகி ஒயுங்கை நேரமுடன் ஆடுங்கை பதினெட்டுப் பேரர்க்குப் பத்தியங்கள் வைத்தகை முதிய அபிராமிக்கும் முன்சின்னத் தங்கச் சோதரிக்கும் ஆதராவாய்த் தூக்கியகை நோய்ப்படுக்கை ஆதரவு தந்து அருகமரும் பூமலர்க்கை தம்புவெனும் அத்தான் தளிரடிக்கு கூப்பும்கை நம்பும் மருதடியான் நற்கமலம் சேர்க்கும்கை தம்பன் கதிரன் சங்கரன் சின்னவன் தத்தம் பணிமுடித்து தங்கிக் கலம்பிடித்து வட்ட மிருக்க வாயூறும் சோறுகறி இட்டுக் குழைக்குங்கை இன்முகத்தால் ஊட்டும்கை தெய்வானை சீதேவி முதலிச்சி கொத்திக்கு நெய்வார் கைவண்ண மாங்காய் கரைச்சீலை விசி எறியும்கை விருந்திட்டு நன்னாளில் காசு கொடுக்குங்கை ஆசி வழங்குங்கை
Oq-et-2PPs 7 ஆனந்தத்தேன்

Page 7
நிலமில்லை என்றார்க்கும் நிழலில்லை என்றார்க்கும் குலமொன்றி வந்த குடிநிலங்கள் பங்கின்றி புதியான் புதுக்காடும் பூஞ்சோலைக் காட்டடைப்பும் விதியால் உறுதிசெய்ய கையெழுத்து வீசுங்கை இரவீந்திரன் என்னும் இனிய முதற்பேரன் மருவிநோய் வாய்ப்பட்டு மானிப்பாய் கைவிட்டும் உள்ளம் கலங்காமல் ஒருநாட் டுயிலின்றி நள்ளிரவு நற்குளிகை நாளும் உரைத்துரைத்துத் தேய்ந்து சிவந்த செம்மலர்க்கை தெய்வக்கை மஞ்சுவெனும் குஞ்சை மருத்துவ மாமனையில் நெஞ்சோ டனைத்து நிசியும் விழித்திருந்து வாயாற் கழிவும் வயிற்றாற் கழிவும் தாயாகிச் சுத்தித்த தாமரைக்கை தெய்வக்கை அள்ளித் தருங்கை அறங்காக்கும் தாமரைக்கை உள்ளங் களிலே ஒளியூட்டும் தண்மலர்க்கை அமரர் புரத்தில் அருவிருந்தாய்ச் சேர்ந்து கமழுங் கணவனையும் கண்டு.
ஒர் ஆசிரியரின் நற்சான்று
எழுத்தொடு பொருளின் சொல்லின் இலக்கணம் இலக்கியங்கள் விழுப்புற விளங்கக் கற்றோன்
பிறர்க்கவை விரித்துச் செல்வோன். என்னிடம் கற்றோர் தம்முள்
ஏற்றமே பெற்றான் மேலும் தன்னுணர் வாலுங் கற்றான்
தந்தையின் அறிவும் பெற்றான்.
வித்துவான் மதுரைப்பண்டிதர் இலக்கண வித்தகர் தும்பளை க.கிருஷ்ணபிள்ளை.
ஆனந்தத்தேன் 8 Oq-es-200s

Oq-es-200s
விண்ணின் அமுதம்
தங்க வளைக்கைகள் தொட்டுச் சமைத்தது
சாலக்கமழு தையா - இதில்,
அங்கமெ லாம்மிகப் பொங்கி வழிந்திடும்
அன்புங் கலந்த தையா.
கொட்டிய உப்புக் கசப்பதென் றாலுமுள்
கூடியினிக்கு தையா - இது
விட்டுப் பிரிகையிற் சொட்டுக்கண் ணிர்பட்ட
விண்ணின் அமுத மையா.
சொன்ன படிநட வாத துடிப்பயல்
தொட்டுச் சுவைத்த தையா - இது
சின்னஞ் சிறுகைக் குழந்தை யளைந்தது
தெய்வ அமுத மையா.
ஆகக் கரிந்து பொரிந்ததென் றாலுமே
அன்பு மணக்கு தையா - இது
வேகவைக் காததென் றாலும்எ னக்கொரு
Gafis6o5 2 Qödf GoouuuurT.
இஊது குழற்சத்தம் கேட்டவ திப்பட்டு ஓடிவருகை யிலே - இது
பாதி வழிவந்து தாமரைக் கைதந்த
LUěF6DaF Seiyp5 GoLDUIDIT.
கட்டிய அன்புக் கயிற்றினிற் சுற்றிய
கட்டுப் பொதியி தையா - இதைக் தொட்டுச் சுவைக்கையில் உள்ளமெல் லாமொரு
சோதி மிளிரு தையா.
9 ஆனந்தத்தேன்

Page 8
காக்கையாரே காக்கையாரே எங்கே போனிர்?
பிள்ளை : காக்கையாரே காக்கையாரே எங்கே போனிர்?
காக்கை : காணாத இடமெல்லாம் காணப்போனேன்.
கண்டுவந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயிலில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை
பிள்ளை : அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை : பொங்கலன்று வருவாராம்
புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம் நேற்றுப் போட்டாராம்
காகா என்று கரையட்டாம்.
2 59 10 Ot-es-2008

காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்
தூரத்துச் சிவப்பெல்லாம் வகவாகத் தோன்றும்
சுமையுடலை மாற்றுதற்கு கால் ஒரு கால் மாறும்
நேரத்தை அளந்த நெஞ்சு நீட்டி விடும் முச்சு
நின்றலுத்தோம் காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்
கோழிப் பொழுதெழுந்து குலைந்தோடி வரிசைக்
கொலு விருந்தோம் துண்டெடுத்து வைத்தியரைக் காண
ஊழியரின் தோழியர்கள் உட்செல்வார் நாமோ
உட்கார்ந்து காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்
இந்த முறை எடுபடுவோம் என்றென்று நம்பி
இரும் , நகை அடைவேற்றி நேர்முகத்திற் சென்றோம்
சொந்த நகை போனதல்லால் வேலையிலைச் சோர்ந்தோம்
துணிவோடு காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்
சித்திரையாய்த் தையாகி ஆவணியாய்ச் சென்று
செம்பதுமைக் கன்னிக்கு முப்பது போய்ச் சேர்ந்த
அத்தரகர் தேநீர்க்கே உலையேற்றி ஓய்ந்தாள்
அவர்வாரார் காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்.
முத்திரையிற் காண்போம் முகம்
புத்தகத்திற் காண்போம் புதிய உரைநடையிற் சித்தகத்தைக் காண்போமே தித்திக்க - உத்தமனார் வித்தகத்தைக் காண்போம் கவிதை விளக்கத்தில் முத்திரையில் காண்போம் முகம்.
(பண்டிதமணி சி கணபதிப்பிள்ளைக்கு அரசு முத்திரை வெளியிட்டபோது)
Oles-200s 11 ஆனந்தத்தேன்

Page 9
ஆனந்தத்தேன்
பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு
அளவிலாத காலமென்னும்
அலையின் மீது அலைகளாய்
அழிவிலாது தோன்ற நிற்கும்
அமரனான பாலனே
உரிமை கேட்டு உடைமை கோரி
உலகமெங்கும் போற்றவே
தரும மென்ற நெறியின் போரில்
தமது மண்டை யுடையவே
ஒழுகி வந்த இரத்த ஆற்றில்
உதய மாகிக் கன்னியர்
பழகு பாடற் கருவிலாகும்
பாலனே என் செல்வமே
கட்டு மீறி உரிமை நாதக்
கனல் பிறக்கும் குரலிலும்
சொட்டு கின்ற வியர்வை மீதும்
தோன்று கின்ற பாலனே
மனது தோறும் எழுதிவைத்த
மான மென்னும் முத்திரை
எனது சொந்தக் கடித சேவை
என்று மாறி நின்றதும்
முடிவிலாத வரிசை யாக
முழுதும் நின்று விற்றதும்
மடிவிலாத உனது சொந்த
மானங் காக்க வல்லவோ
12 Ot-et-2POs

அவசரத்துச் சட்ட நாளில்
அடியும் மிதியும் பட்டதும்
தவமிருந்த தாயர் தந்தை
தலையுடைந்து போனதும்
மனவுரத்தில் உயிர்கொடுத்து
மண்ணின் மீது சாய்ந்ததும்
எனது பிள்ளை அடிமை நீங்கும்
என்ற நினைவில் அல்லவோ
(1961ல் தமிழர் நடத்திய சத்தியாக்கிரகம் முறியடிக்கப்பட்டபோது)
தூசிகளைப் பொன்னாக்கி so
பேசு தமிழறியார், பிழைகளுக்குட் சரியுமொன்று மாசுபடவெழுதும் மதிவல்லார் - இவர் படித்தாற் கூசிவிடும் சங்கநூல்” என்றிகழப்பட்ட எம்போற் தூசிகளைப் பொன்னாக்கிப் புலவர்களாய்த் தோற்றுவித்தாய்
வண்டியெனக்காணோம் வசுக்காலை யென்றறியோம் உண்டிதரும் சாலையென உணர்ந்திடோம்; தேவாரக் கண்டினையும் யாத்தெழுதுங் கவியினையுஞ் சந்தித்தால் உண்டிருப்போம் இனியெப்போ துணைக்காண்பன் குருநாதர்
வேறு
கூந்தல் விரித்தழுதாள் கொஞ்சும் தமிழ்மடந்தை சாந்தநெறிச் சைவரிரு கண்பொழிந்தார் - ஏந்தினார் தேவாதி தேவர்கள் கார்த்திகே யன்திருவாய்ப் பூவா னதுகுவிந்த போது,
(குருநாதர் வித்துவான் க. கார்த்திகேசு மறைவையொட்டி 05:11, 74)
Ot-et-2PPs 13 ஆனந்தத்தேன்

Page 10
காய்கள் கட்டிய வெருளி
கந்தன் செய்கு தோட்டத்தில் காய்கறிகள் அதிகமாம்
வந்து மாடு ஆடுகள்
வளர்ந்த வற்றைக் கடிக்குமாம்
காய்கள் ஒன்று கூடின
காக்க வெருளி கட்டின
வாய்கள் திறந்த பேசின
வழி வகுத்துக் கொண்டன
சாம்பல் நீற்றுப் பூசணி
தலைக்கு வருவேன் என்றது
பாம்பு போன்ற புடலங்காய்
பக்கக் கைகள் ஆயின
பானை போன்ற பூசணி
பருத் வயிறு என்றது
ஆனை மிளகாய் களும்
அழகு முக்காய் ஆயின
வெண்டிக்காய்கள் தாங்கள் தாம் விரல்கள் என்று சொல்லின
நொண்டிக் கால்கள் ஆயின
நுனி வளர்ந்த கரும்புகள்
கனிந்த நிறத் தக்காளி
கன்னம் என்று நின்றது
நனைந்த பயிற்றங் காய்களும்
நாலு மயிராயின
ஆனந்தத்தேர் 14 Ot-et-200s

கண்ணில்லாத வெருளி என்று
காய்கள் கவலை கொண்டன
அண்ணன் நாவற் பழவனார்
அதற்கு வந்து குந்தினார்
முறுக்கு மீசை இல்லை யென்று
முணுைமுணுத்துக் கொள்ளவே
நறுக்கி வைத்த அறுகம்புல்
நான் இருப்பேன் என்றது
மாடு வந்து பார்த்தது
மனிதன் மீசை கண்டது
நாடு காடு தாண்டியே
நாலு காலிற் பாய்ந்தது.
யாழ்ப்பாண மாம்பழம்
நீதி பிழைப்பிக்கும் நேர்மை தவறுவிக்கும் பாதிப்படிப்பில் பதவி தரும் - ஏதுக்கும் ஒம்பட் டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பாண மாம்பழத்துத் தீஞ்சுவையின் மாண்பு.
ot-et-200s 15 ஆனந்தத்தேன்

Page 11
ஆனந்தத்தேனுக்கு பாரதியார் வழங்கிய அணிந்துரை
நம் உயிரிலும், இரத்தத்திலும், என்பிலும், தசையிலும், ஒளறிக்கிடப்பதும், இன்னதென நிரூபிக்க முடியாததும், அகக்கண்ணால் மாத்திரம் காணக்கூடியதுமான ஒரு தமிழ் மரபை உணர்கிறோம். பன்னூற்றாண்டுகளாய் வளர்ந்த நம் தமிழ்ப்பாவின் வளர்ச்சியிற் காலந்தோறும் புதுமை தோன்றாமலில்லை அப்புதுமைகளெல்லாம் தமிழ்மரபோடொன்றிச் செல்கின்றன. சுருங்கக் கூறின் புதுமை தோன்றுங்காலெல்லாம், வேற்றுமையில் ஒரு ஒற்றுமையும், ஒற்றுமையில் ஒரு வேற்றுமையையும் காண்கின்றோம்.
முன்னைப் பழையோருடைய மரபை ஒட்டாது ஒவ்வொருவரும் தன்னிச்சைகொண்டு மனம்போனவாறே செய்யுள் செய்யின், அவரவர்க்கு மாத்திரம் அவையவை ஏதேனும் பொருள் கொடுக்குமே யன்றித் தமிழர்க்குப் புலப்படாவாம். மரபிற் சிதைத்த தமிழ் ஓசை கெட்டு, உணர்ச்சி கெட்டுப் பொருள் கெட்டுப் பயனிலதாகும். இத்தகைய புதுமையைப் பித்துப் புதுமை’ (madnovelty) என்று கூறலே சாலும். இப்படியெல்லாம் பித்துப் புதுமை உண்டாவது தமிழ் மரபும் மொழி மரபும் அறியாமையாலும் அம்மொழியில் நன்கு தோயாமையாலுமேயே.
என்னருமை மாணவன் தான் யாத்த பாக்களை அவ்வப்போது எனக்குப் படித்துக் காண்பித்தார். பித்துப் புதுமைக் கவிகளாற் புண்ணான என்நெஞ்சிற்கு அவை பெருமருந்தாயின. தழும்பு கூடக் காணாதவாறு என் மனப்புண்ணை ஆற்றின. நானே அவற்றை வெளியிட வேண்டும் மென்று ஆசை கொண்டேன். காலத்திற் கேற்றவாறு புதுவழியிற் தமிழ்மரபு சிதையாது இன் சுவை சொட்டப் பாடும் அவர் போக்கும், கவியமைவும் இத்துறைச் செல்வோருக்கு ஒரு வழிகாட்டியாயிருக்குமென்று எண்ணுகின்றேன். இன்னோசையும், செஞ்சொல்லும் பொருளும் தாமே அமைத்து இவர்கவிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவைக் கவுணியன், பண்டிதமணி க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார் (1953)
ஆனந்தத்தேன் 16 Oq-.5-2POS

ékszottséb சச்சிதானந்தசிவம்
புலமையிற் சிறந்தவரும், சொல்வன்மை மிகுந்தவரும் தீகூரிதர் போன்றவரும், முற்றுமுணர்ந்த ஞானி போன்றவரும் என்றெல்லாம் என்னைப் பாராட்டி புகழ்ந்து திரியும் கும்பல்கள் இருதிறந்தினராகக் குவிந்திருந்து நாட்டையே இன்று நாசமாக்குகின்றனர். அறிவு என்னும் தந்திரத்தோடு அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லி சமுகங்களிலே பகை முட்டுதலும், அரசியல் துறையினரோடு தாம் நண்பர்களாய் நெருங்கிப்பழகி பொருளீட்டும் தன்னலங்கொண்டு பிறர்தம் குறைகளை முன்மொழிந்து, அவர்களை மிகுபுகழ்களால் புகழ்ந்து தம்வசப்படுத்தும் தந்திரங்களையும் கொண்டவர்களே இவ்விருதிறத்தினருமாவர். இன்று இவ்விருதிறத்தினரும் எம்முடே இஊடுருவி நிற்கின்றனர். இதனைத் தான் ஒளண்பொதி பசுங்குடையார் என்னும் பாடற்சிறப்பால் அறியப்பட்ட புலவரொருவர் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை அடுத்துப்பாடிய பாடலொன்றுண்டு.
“வழிபடுவோரை வல்லறி தியே
பிறர்மொழி கூறுவோர் மொழிதே றலையே”
(புறம் 10)
புகழ்மொழியை நச்சி அடிமையாதலும் பழிமொழியை நம்பி பகைகோடலும் இக்காலங்களின் நிகழ்வுகளே. எனது உடலிலிருந்து உயிர் நீங்கியதும் மேற்கூறிய இருதரத்தாரும் எதைஎதையோவெல்லாம் கூறி பத்திரிகைகளிலும், பாசுரங்களிலும், தத்தம் பதவிபட்டங்களோடு தாம்தாம் நினைத்தவாறு புகழுரைகளோடு விளாசித்தள்ளுவர். சகலதுறைசார் ஆயாதிகளான இவர்கள் வனத்தினூடு அலையும் வேங்கையிலும் பார்க்க கொடுரமானவர்கள்.” என்றெல்லாம் சித்தார்த்தி வருடம் 26ம் நாள் சனிக்கிழமை காலையில் எமதன் பரும் மாவைக்கந்தனது பக்தனுமான பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள் பல்வேறுபட்ட சம்பாகூஷணைகளின்போது அவர்தம் இல்லத்திலிருந்து கூறிய மொழிகள். •
மாவைக் கந்தனோடு நேரில் பேசிப்பயன்பெறும் வழக்க முடையவரான இப்பெருமகன் அடிக்கடி ஆலயம் வந்து அமைதியாக அமர்ந்து மெளனநிலையில் இறைவனோடு உரையாடும் வன்மை கொண்டவர். Ot-es-200s 17 ஆனந்துத்தேன்

Page 12
சமயமார்க்கங்களின் தத்துவார்த்தங்களை மக்களுக்கு எடுத்துரைப்பர். அந்தணர்கள் தத்தம் கடமைகளிலிருந்து வழுவாதிருக்க வேண்டுமென ஆணித்தரமாக அடிக்கடி கூறுவர். ஆலயதுழலை நடைபவனியாகச் சுற்றிவந்து ஆங்காங்கு நடைமுறைப்படுத்த வேண்டியனவற்றை முன்மொழிவர். எமது ஆலய முதோத்தரமகாரதம் அவரது உயிரோடு சங்கமமானது. அந்த ரதத்தின் மேன்மை, மகத்துவம், அழகு, ரசனை என்பதற்கெல்லாம் பாடுலம் பாடி மகிழ்பவர். இந்த மகாரதம் இப்போது இத்தகையதாயிற்றே என முருகன் முன்னிலையில் விண்ணப்பிக்கும் காட்சியை இனி நாம் காணஇயலாது.
கம்ப இராமாயண பாட்டால்
ஆவும் அழுத அதன் கன்றழுத அன்றலர்ந்த பூவும் அழுத புனற்புள்ளழுத கள்ளொழுகும் காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
Dmesaqub அழுதன W
எனப்பாடி என்கண்ணனும் நீர்நிறைந்து மாள்கிறதே என அழுதழுதுபாடுவர். கடந்த தேர்த்திருநாளன்று தனது இல்லத்தில் இடம்பெற்ற மண்டபப்படி பூசை நிறைவுற்றதும், மாகேஸ்வர பூசையில் பங்குபற்றிவிட்டு எனது இருகைகளையும் இணைத்து கண்ணிர்சொரிய குருக்கள், எனது கடமைகள் நிறைவடைகின்றன, அடுத்த தேர்த்திருவிழாவிற்கு வருவதும் சந்தேகம் , தயவுசெய்து கூடிண்முகப்பெருமான் தேரில் எனதில்லம் தேடி வந்து நிற்குங்கால் இந்த மண்டபப்படி பூசையினை தவறாது நடாத்திவிடுவீர்களாக” என இரந்துநின்றார். என்னே அவரது பத்தியின் மாண்பு
புகழாரங்களாலும் பத்திரிகைவாயிலாக இரங்கலுரை அதுஇதென்று வெளியிடும் பசப்பு ஆரவாரங்களும் தனது ஆத்மசாந்திக்கு அனுவளவும் அனுகாதென்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த இந்தப்புண்ணிய ஆத்மா எம்மையழைத்து தனது முக்திநிலைதெரிந்ததும் மாவைக்கந்தனது பாதாரவிந்தங்களில் தனது ஆத்மசாந்திக்காக வில்வ இதழ்பத்திரங்களல் அர்ச்சிக்குமாறு இரந்திருந்தார அதுவும் புனிதமகவே நிறைகொண்டது. இப்பெருமகனார் எனக்கு இறுதியாக எழுதிய கடிதம் கீழ்பதியப்படுகிறது.
ஆனந்தத்தேன் 18 Oq-es-2POs

பண்டிதமணி திரு. கசச்சிதானந்தம் அவர்கள் தமது அமிழ்தினு மினிய வாயால் இனிப்பாடாத நிலையில் இந்நாடு வறுமையை எதிர்நோக்கிப் LugoOLDITs665ADel
அவரது ஆத்மாசாந்திக்காக மாவைமுருகப்பெருமானை நினைத்து தினமும் ஆராதிப்பேன். இது எமது கடமையாகும்.
மகாராஜழரீ சு.து. ஷண்முகநாதக்குருக்கள் ஆதீனகர்த்தா பிரதமகுரு கந்தசாமி கோயில், மாவையாதீனம், தெல்லிப்பழை.
ി
(6 خرما میبانیا رای خا لبيوعا تقع படுத்தித்துறை, w s2.8 2p07 يهدف ذكى محمد تمگg» ك
5. SFG77 GIFTE EST 纥了
rw; é@ , siertë erit a.nr وكمه ق؟
. nി ജ@ഒ4 ൧൯:൪൧, urCari?( نہ۔ مجھ تک6 . كمدوطط هdu) نر یا . نTsu تم نہ ہvovں -C a گا چلہ بڑھتی ۲ کی مقالہما بنیا
:""CCŽ"????" عمه للخيريه بى وهضبطه يتكلمدة مع ومهه يفك الاطة في هذه உணர்வுக்கோடுகின் ܕܡܫܝܟܝܬܠܶ میچللی و ، சிறுகதை Lu്6് پھQaSu۔ اس لیے بھ) ہش>
5rൻ ഭക് 6tré > uj Luoresr ܐܶܗܬ8ܝܗܢܙ
ఈశాశ - శీ కళాశ (BFL-Lrు 6TG56లpr5 GFగాళతో 6ro. «Torreso ܪܶܣܝܙܢܙe GܬrܘQ ܗ̣Q :ܟ݂ܧܵܨs:چشمہ جھک نہ ہی لالہ لکھ ܩܳܝ
همسافا نه مrکـ لكه ويل9) مخی تخلیخانکونه چ� ܣܢܘܙܟ w .لهه ع&Sنهfه
9) s Gen.' らr引6・ L fr5 as Pr ajowirë G2
مجـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــہ
ot-et-2008 19 ஆவுத்ஆத்தேன்

Page 13
அறிவுத் துணிவு கொண்ட எங்கள் ஞானக் கலைஞன்
எங்கள் ஞானக்கலைஞன் பண்டிதர் சச்சி ஐயா காலமான செய்தியின் கனம் தாங்க முடியாதது.
அஞ்சலித்து அழலாம், அவகாசமில்லாமல் எல்லாம் முடிந்தது. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் இலக்கணமாய், இலக்கியமாய் நிமிர்ந்தது அவர் வாழ்வு.
அவரோடு வாழக் கிடைத்த காலங்களும் கணங்களும் மகத்தானவை.
சின்னப் பையனாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆழமைவில் என் அப்பாவின் அறிமுகமாய்த் தொடங்கி இந்நாள் வரை அழகாய்த் தொடர்ந்த எங்கள் உறவின் பிணைப்பும் பரஸ்பர மதிப்பும் தனித்துவமானவை.
மரபுவழி இலக்கியங்களிலிருந்து நவீன இலக்கியங்கள் வரை மரபுவழியான வான சாஸ்திரத்திலிருந்து இன்றைய கணித சாஸ்திரம் வரை என ஆழ்ந்தகன்றது அவர் புலமை வீச்சு.
வாழும் காலத்திலேயே அவருக்கு கலாநிதிப்பட்டம்
தந்து பெருமை கண்டது எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நெஞ்சிலே உரமும் நேர்மைத்திறனும் கொண்டஅவர் வாழ்வே ஒரு பல்கலைக்கழகமானது. எங்கள் ஆய்வரங்குகளில் ஒலித்த அவர் அறிவுத்தெளிவான, அறிவுத்துணிவுக்கு முன்னால் ஆரவாரக் குரல்கள் அடங்கிப்போன சந்தர்ப்பங்கள் இன்னமும் நெஞ்சிலே காக்கப்படும்.
அண்மைக் காலங்களில் அவரைக் கேட்டும் அவரோடு உறவாடும் காலம் மட்டுப் பட்டுப்போன ஏக்கத்திடை இன்றைய பிரிவுச் செய்தி & LiguurTuli 6îUgub.• • • • •
ஆனந்தத்தேன் 20 O4.05-2008

அவரின் நேரிய வாழ்வை, ஆளுமை வீச்சினை நாளைய சமுதாயத்திற்காக்கும் வீடியோ விவரணச் சித்திரம் ஒன்றினைத் தயாரிக்கும் எனது பெருவிருப்பத்தை அவருக்கு அறியத்தந்து அனுமதி பெற்றபோதும் செயற்படுத்த முடியாதபடி ஆழமைவின் கொடுமை தடையானது.
எங்கள் பிள்ளை ஒருத்தி அவரை முதுகலைமாணி பட்டப்படிப்பு பொருளாக ஆராயும் வாய்ப்பினை வழங்கும் எங்கள் பட்டப் படிப்புகள் பீட அவை ஒன்றின் தலைவராய் இருந்து வழிகாட்டக் கிடைத்த நினைவு ஒன்றே இப்போதைக்கு நெஞ்சுக்கு ஆறுதலாகும்.
எங்கள் தமிழின் தேசத்துத் தவப்புதல்வனான கலாநிதி, பண்டிதர் சச்சிதானந்தன் ஐயாவின் நினைவுகள் தமிழுள்ளவரை வாழும் அவரின் அற்புதமான படைப்புக்களினால் எங்கள் தமிழ் உயிர்ப்புடன் வாழும்.
என் ஆத்ம அஞ்சலியுடன் எங்கள் பல்கலைக்கழக சமுகத்தின் ஆழ்ந்த இதய அஞ்சலியினையும் இவ்வேளை காணிக்கையாக்குகின்றேன்.
பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Ot-et-200s 21 ஆனந்தத்தேன்

Page 14
ஒரு நல்ல விவேகி
முன்று ஆண்டுகளுக்கு முன்பு யான் எழுதி வெளியிட்ட கல்விசார் தொடர்புகள் நினைவுகள் சிந்தனைகள் என்னும் நூலில் இளமையில் தோன்றிய தமிழார்வம் அதனை உருவாக்கிய கல்விச் ஆழ்நிலைகள் என்னும் முதல் அத்தியாயத்தில் (பக் 10) பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்களைப்பற்றி எனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன். அது பின்வருமாறு.
“பொதுவாக யாழ்ப்பாணத்தில் அன்று வாழ்ந்த தமிழறிஞர்கள் தந்தையுடன் ஏதே வகையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். விட்டுக்கு வந்து செல்வார்கள் தாம் எழுதும் நூல்களுக்கு அணிந்துரை பெறுவார்கள். அன்பளிப்பாக நூல்களைக் கொண்டு வருவார்கள். தந்தை வடமாகாண தமிழாசிரியர் சங்கத் தலைவராகவும் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்க உபதலைவராகவும் இருந்தவர். இவற்றின் கூட்டங்களுக்கும் தலமை தாங்கும்படி அழைப்புக் கொண்டு வருவார்கள். வருபவர்களுக்கு, தம் பழைய மாணவராக இருந்தால் கூடப் பெரும் மதிப்புக் கொடுப்பார். இவர்கள் வந்து சென்றதற்குப் பின்னர் “அவர் ஆர்”? என்று பிள்ளைகள் கேட்டால் விளக்கமாகக் கூறுவார். இவ்வாறு தந்தை அறிஞர்களின் அறிவை ஆக்கங்களை அவற்றின் முலம் அவர்கள் பெற்ற சிறப்பை கூறும்போதெல்லாம் மனவெழுச்சி பெற்றுள்ளேன்.
இன்று யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர்களுள் முத்தவர் எனக் கருதக்கூடிய மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் அன்று தாம் எழுதிய கவிதைகள் சிலவற்றைத் தந்தைக்கு படித்துக் காட்டுவது நினைவு. ஒரு முறை “உவர் ஆர்?” என்று கேட்ட போது “உவர் ஒரு நல்ல விவேகி; கல்வியில் பல ஆற்றல்கள் படைத்தவர்” என்ற கருத்துப்பட கூறியதும் நினைவு. பிற்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் சிறுகதை எழுத்தாளன். தனிக் கவிதைகளும் காவியமும் படைத்தவர் வானியல் அறிஞர் உளவியல் அறிஞர் பண்டிதக் கற்கை நெறியின் வழிவந்தவராயினும் இலண்டன் பல்கலைக்கழகம் சென்று ஆய்வு செய்து எம் பில் பட்டம் பெற்றவர் அரசியலிலும் ஈடுபட்டவர். தமிழரசுக் கட்சியின் ஆரம்ப ஆனந்தத்தேன் 22 Ples-2POs

அங்கத்தவர் செல்வநாயகம் இருக்கும் வரை கட்சியின் மத்திய குழு அங்கத்தவர் கொள்கையில் தளம்பாதவர் துணிவுடையவர் அன்று தந்தை பண்டிதர் பற்றிக் கொண்டிருந்த கணிப்பை யான் எண்ணி எண்ணிப் பார்ப்பதுண்டு.
கல்வியில் பல்வேறு கலைகளில் ஆற்றல்கள் படைத்தவர்கள் நமது மத்தியில் இருக்கிறார்கள் மிக ஒரு சிலருக்கு மட்டும் ஆற்றல்கள் அனைத்தையும் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பு வசதி ஆழ்நிலை என்பன கிடைத்து விடுகின்றன. பலருக்குக் கிடைப்பதில்லை பிற்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பண்டிதர் மு.கந்தையாவைப் பயன்படுத்தியது போல் சச்சியையும் பயன்படுத்த விரும்பினேன். ஆழ்நிலைகள் இடந்தரவில்லை. அவர் கிழட்டு வயதில் கூடப் படிப்பதையும் எழுதுவதையும் பல்கலைக்கழக நூல் நிலை யத்திற்கு மெல்ல மெல்ல நடந்து வந்து செல்வதையும் பலர் அறிவார்கள். அவரது போக்கு உணர்ச்சியுள்ளவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கமுடியாது.”
இன்று சச்சிதானந்தன் அவர்கள் இல்லை அண்மையில் தமது எண்பத்தேழாவது வயதில் சிவபதமடைந்தார். சென்ற ஆண்டு அவர் கொழும்புக்கு வந்திருந்தபோது எனது வீட்டில் நீண்ட நேரம் கல்வி சம்பந்தமாகப் பல விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடினார். அவரது தள்ளாத வயதிலும் அவரின் கல்விசார் அவதான ஆற்றலைக் கண்டு வியந்தேன். அறிதொறும் அறியாமையைக் காண்பதால் சாந்துணையும் கல்லாதவாறு என்? என்ற வினைத்திட்யத்துடன் வாழ்ந்தவர் சச்சி அறிவுத் தேட்டத்தில் அவரிடம் இருந்த தளராத மனவுறுதி ஏனைய அறிஞரிடத்தும் தோன்றுவதாக,
சச்சி சமயப்பற்றுடையவர் மாவைக்கந்தனின் அடியார்களுள்
ஒருவர். அவர் இம்மைச் செய்தன யானறி நல்வினை. அவரது ஆத்ம
சாந்திக்காகப் பிரார்த்திப்போம்; அவர் ஆற்றிய தமிழ்ப் பணியைப் பயன்படுத்துவோம் வாரீர்.
சு. சுசீந்திரராசா
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Ples-200s 23 ஆனந்ஆத்தேன்

Page 15
ஈடும் எடுப்புமில்லாத முயற்சியாளர்
பண்டிதர் கலாநிதி க. சச்சிதானந்தன் அவர்களின் மறைவு மரபுக்கவிதை வல்லார் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது முற்றிலும் உண்மையாகும். இலக்கண நெறிபிறழாமல் கவிதை எழுதவல்லார் விரல் மடித்து எண்ணக் கூடிய சிறுதொகையினரே யாவர். அவர்களில் முதல் விரலை மடித்து எண்ணத் தக்க ஒருவர் போய்விட்டார் என்பது கவிதை இலக்கணம் தெரிந்த அனைவருக்கும் கவலை தருவதாகும். முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றைப் பின்பற்றி
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணா யினார்
என்று முன்னோர் கூறிவைத்த செய்யுளுக்கு இலக்கியம் தேடினால் முதலில் அகப்படும் ஒருவரும் நண்பர் சச்சிதானந்தன் அவர்களே.
அன்பர் க. சச்சிதானந்தன் என்பாரை யான் முதன்முதலிற் சந்தித்த இடம் பரமேஸ்வரக் கல்லூரியில் பரமேஸ்வர பண்டித ஆசிரிய கலாசாலையிலே தான். முன்றாண்டுகளிற் பண்டிதர்களாகும் வாய்ப்போடு பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரமும் பெறலாம் என்ற ஆசையால் உந்தப்பட்டு 1939 ஆண்டு புரட்டாதி மாதம் அங்கு வந்த முப்பது பேரில் நாமும் இருவர். அங்குக் கற்க வந்தோரில் சிலர் பாலபண்டிதர். பலர் பிரவேசபண்டிதர் ஒரு பண்டித பத்திரமும் இல்லாதோர் சிலர். அச்சிலரில் சச்சிதானந்தனும் நாகலிங்கமும் அடங்குவர்.
நாங்கள் ஆசிரியர் கலாசாலையிற் பிரவேசிக்க முன்னரே எங்களுக்கு முன்று ஆண்டுகளின் முன் எம்மைப் போல பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து வெளியேறிய இருபத்திநான்கு பேரின் பண்டித பரீட்சை பேறு வெளிவந்தது. அவர்கள் எடுத்த பண்டித பரீட்சை ஆரிய திராவிட பாஷாபிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்டது. பரமேஸ்வர பண்டித ஆசிரிய கலாசாலையில் இருந்து தோற்றிய எவருமே சித்தியடைந்திலர் என்ற பரீட்சைப் பேறு வெளியானது.
ஆனந்ஆத்தேன் 24 - P4-P5-2008

இப்பரீட்சைப் பேற்றுக்கு அயராது உழைத்தவர்கள் சிலர் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்க நிர்வாக சபையில் இருந்தவர்கள் பலர் சங்கத்துக்கு வெளியிலும் இருந்தனர். தாம் பல்லாண்டு படித்து சில்லாண்டு பரீட்சையில் தவறி அரிதில் முயன்று பெற்ற பண்டித பத்திரத்தை இந்தச் சிறுவர்கள் முன்றாண்டில் பெறுவதா என்ற காழ்ப்புணர்வே இதற்குக் காரணம் என்று அப்போது பேச்சு அடிபட்டது. இதனை மெய்ப்பிப்பது போல பின்னாளில் பண்டிதமணியும் இலக்கிய கலாநிதியுமாய் விளங்கிய பேரறிஞர் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளையின் கண்டன பத்திரம் ஒன்று வெளிப்பட்டது அதன் தலையங்கம் பண்டிதர் களின் படுகொலை என்பது. படிக்க வந்தோரின் தமிழறிவும் படிப்பித்தோ ரின் தராதரமும் விமரிசனத்துக்கு உள்ளயின. படிக்க வந்தோர் வாழைப்பூ எனவும் அப்பூக்களை பழுக்க வைக்கப் புகையூதியோரில் ஒருவர் ஆங்கில கலாநிதிப் பட்டதாரியெனவும் மற்றொருவர் பீ.ஏ., பி.எஸ் சி எனவும் மற்றைய வித்துவானும் ஆங்கிலப்பட்டதாரி எனவும் நையாண்டி செய்யப் பட்டிருந்தது. இந்த அதிட்டக்குறைவான இருபத்தினான்கு பேரதும் பரீட்சை விடைத்தாள்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு மீள்பார்வைக்கு அனுப்பியபோது பதினாறு பேர் சித்தியடைந்தது கலாநிதி பண்டிதமணிக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிய முடியவில்லை. அங்கு தமிழ் கற்றபித்தவரில் ஒருவர் உலகியல் கண்ட மாவைக் கவுணியன் வெண்ணெய்க்கண்ணனார் எனப்படும் மாவைப் புலவர்மணி பண்டிதமணி க. சு நவநீதகிருஷ்ணபாரதி. மற்றையவர் திரு சு.நடேசபிள்ளை பி.ஏ பி.எல் என்பதும் இருட்டடிப்புச் செய்யப்பட்டே பண்டிதரின் படுகொலை வெளியாயிற்று.
இந்நிலையில் பண்டித ஆசிரிய கலாசாலையின் முகாமை பண்டித ஆசிரிய கலாசாலை மாணவர்களை மதுரைப் பண்டிதப் பரீட்சைக்கே அனுப்புவது எனத்தீர்மானித்தது. இது அங்கு கற்ற முப்பதுபேருக்கும் கிலேசத்ததை ஆக்கியபோதும் எவரும் படிப்பை நிறுத்தவில்லை. படிப்பு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் தொடர்ந்து முன்று வருடத்தில் முடிப்பதற்கும் அரிய பாடத்திட்டம் இரண்டு வருடத்தில் முடிந்தது. அங்குக் கற்ற முப்பது பேரில் பதின்மரை இரண்டாம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றச் செய்யுமாறு அறிவிப்பு விடுத்தார் வித்துவான் கார்த்திகேசு. அவ்வாறு இரண்டாவது வருடம் பரீட்சைக்குத் தோற்றிய பதின்மரில் ஒன்பது பேர் திறமையாக சித்தியடைந்தனர். அவர்களில் ஒருவர் க. சச்சிதானந்தன் ஆவர். இவர்களுடைய இப்பரீட்சைப் பேறு பல Pu-et-200s 25 ஆனந்ஆத்தேன்

Page 16
பண்டிதர்களின் வாயையே அடக்கி விட்டது. படுகொலை செய்த ஆரியதிராவிட பாஷாபி விருத்திச் சங்கப் பரீட்சகர் குழு சங்கத்தின் வளர்ச்சியின் வாயில் மண்போட்டது தான் கண்ட பலன்.
பண்டித வகுப்பில் படித்தவர்கள் பலர் புத்தகம் வாங்குவதற்கு பதிலாக சிலவற்றை எழுதிப்படிப்பது வழக்கம். யான் புறநானுறு நூறு செய்யுள் அகநானுறு ஐம்பது செய்யுள் பதிற்றுப்பத்தில் நாற்பது செய்யுள் என்பவற்றை எழுதிப்படித்துள்ளேன். ஆனால் நண்பர் சச்சிதானந்தன் சீவகசிந்தாமணியில் முன்று இலம்பகங்களில் வரும் ஆயிரஞ் செய்யுள்களையும் நச்சினார்க்கினியரது உரை விருத்தியுரை என்பவற்றோடு ஒரு மார்கழிமாத விடுமுறையில் எழுதி முடித்துக் கொண்டு வந்ததோடு மற்றையோரும் பயன்பெற உதவினார் என்றால் அவருடைய முயற்சியின் அளவை அறிய வேறுசான்றும் வேண்டுமோ!
இரண்டாம் வருடத்தில் சித்தியடைந்த ஒன்பது பேரும் பண்டித பாடங்கள் நடைபெறும்போது வகுப்பிற்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்டனர். சிலர் ஆசிரியர் சிதம்பரப்பிள்ளையிடம் சமஸ்கிருதம் கற்றனர். சிலர் சமயக்கல்வியை மேற்கொண்டனர். அமரர் சச்சிதானந்தன் பரமேஸ்வராக் கல்லூரி அதிபரின் அனுமதியுடன் ஆங்கிலம் கற்றார் இக்கற்கையே இவர் பி. ஏ சித்தியடையவும் சமஸ்கிருதம் கற்கவும் இவரை இளக்கியது எனலாம். லண்டன் பரீட்சையில் சித்தியடைந்தவர் என்பதால் அவரது ஆங்கில அறிவும் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகக் கொண்டவர் என்பதால் அவரது இரு பாஷை அறிவும் துணியத்தகும். மதுரைப்பண்டிதர் என்பதால் அவரது தமிழ் அறிவின் ஆழ அகலம் உணரத்தகும். மும்மொழி வித்தகராக அவர் மிளிர்ந்ததற்கு அவரது சுயமுயற்சியே காரணம் என்பதில் ஜயமில்லை.
தமிழ்ப்பாடசாலை ஒன்றில் கற்றுத் தமிழ் ஆசிரியராக வெளிவந்த ஒருவர் மும்மொழி வித்தகராக முகிழ்த்ததோடு சோதிடம் முதலிய கலைகளிலும் வல்லவராகித் தமிழ் கூறும் நல்லுலகில் நல்லறிஞர் வரிசையில் ஹைத்து எண்ணப்பட வாழ்ந்த பெருமைக்கும் வியப்பிற்கும் உரியர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அவர் புகழ் வாழ்க.
பண்டிதர் க. நாகலிங்கம்
ஆவுந்தத்தேன் 26 Oq-es-2POs

இன்னும் சரியாக அறியப்படாத பெருங்கவி சச்சி
பண்டிதர் சச்சி அவர்கள் “சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்” என்னும் கவிதைக்காக சாகாவரம் பெற்று வாழ்பவராயுள்ளார். அவருடைய பன்முகப்பட்ட திறன்களை எல்லோரும் அறிந்துள்ளனர். ஆனால், அவருடைய சிறப்புள்ள இலக்கிய ஆக்கங்கள் பல ஆய்வாளர்களாலே விரிவாக நோக்கப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள. நடைமுறை அரசியல், நடைபெற்றுவரும் போர், அதற்கு முந்திய நிகழ்வுகள் எனப் பல விடயங்களைத் தன் ஆக்கங்களிலே பண்டிதர் சச்சி சித்திரிக்கிறார். இவற்றை இந்நாட்களிலே ஆராய்வதும், கருத்துக்கள் கூறுவதும் கஷ்டங்களை ஏற்படுத்தலாம் என்ற முக்கியமான காரணத்தை இங்கே குறிப்பிடலாம். o
இலங்கைக் காவியம் (முதல் தொகுதி) பண்டிதர் சச்சியினால் 2002 இல் வெளியிடப்பட்டது. 1950 முதல் நாற்பத்திரண்டு வருட இலங்கை வரலாற்றுக் காவியம் இது. செல்வன் என்னும் தமிழ்ச் சிறுவனும் அவன் பள்ளி மாணவர்களும் பத்து வருட காலத்தில் என்னபாடுபடுகிறார்கள் என்பதைக் கருவாகக் கொண்ட ஒரு கண்ணிர்க் காவியம். இலங்கைக் காடுகள், யாழ்ப்பாணக் கிராமங்கள், கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு திருகோணமலை, வவுனியா, கிளாலித்துறைமுகம் என்பவற்றை நிலைக்களமாகக் கொண்ட காவியம் இது. இதன் முதல் தொகுதி ஆறு பருவங்களைக் கொண்டுள்ளது. அவையாவன: கூடுகுலைந்த பருவம், ஒளசற் பருவம், கண்ணிர்ப்பருவம், இந்தியப் பருவம், தெற்கே தீமுண்ட பருவம், முன்றாம் போர்ப் பருவம் பருவங்களின் பெயர்களிலிருந்து இக்காவியம் என்ன பாடுகின்றது என்பதை இலகுவாக உணரக்கூடிய தாயுள்ளது. இக் காவியத்தின் சிறப்பியல்புகளை விரிவாக ஆராய்ந்து கூறவேண்டும். ஏழாலைப் பண்டிதர் மு. கந்தையா பாடிய புராண காவியத்துக்குப் பின்னர் பாடப்பட்ட ஒரு நவீன காவியம் இது வாகும்.
பண்டிதருடைய யாழ்ப்பாணக் காவியம் யாழ்ப்பாண அரசின் சரித்திரத்தில் கி.பி 1450-1467 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியைப் பின்னணியாகக் கொண்டமைகிறது. 2088 பாடல்களைக் கொண்ட காவியம். வரலாற்றை நன்குணர்ந்து புனைந்த இக் MPs-2PPs 27 ஆவுந்தத்தேன்

Page 17
காவியத்தின் பாடல்கள் சிறப்புற்று விறங்குகின்றன. பாடல்களுடைய இனிமைபற்றி தும்பளை பண்டிதர் க.கிருகூழ்ணபிள்ளை,
அப்பத்தை சுடலாம் ஆரும், அதற்குளே தித்திப் பைத்தான் எப்படிப் புகுத்தினானோ எனச்சொல வைத்தான் சச்சி தப்பிலன் எதுகை மோனை, சந்தங்கள் தவறே யின்றி திப்பில கற்பனைத்தேன் சிந்திட அணிசெறித்தே.”
என்று பாடுகின்றார்.
மேற்குறித்த இரண்டு காவியங்களையும் தெளிந்த மனத்துடனும் சிக்லெதுவுமில்லா ஆழ்நிலையிலே விரிவாக ஆராய்வதற்கான வாய்ப்பு ஏற்படுமென நம்புகிறேன்.
எடுத்த மலர்களும் தொடுத்த மாலையும் என்னும் நூலிலே இலங்கைக்காவியத்தின் இரண்டாம் தொகுதி இடம்பெறுகின்றது. இது தான் ஆசிரியரின் தொடுத்த மாலையாக அமைகிறது. எடுத்த மலர்களாகப் பல கவிதைகளும், கவிதை நாடகங்களும் இடம் பெறுகின்றன. அழகினையும், தமிழ் மொழியினையும் காதலித்து அற்புத மான கவிதைகள் பாடும் பண்டிதர் சச்சி சமுகப்பிரச்சினைகளையும் நாட்டு நடப்புகளையும் பாடத் தவறவில்லை. எடுத்துக்காட்டாக "காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்" என்னும் கவிதையைக் குறிப்பிடலாம். பயணம் செய்வதற்காக 'வசு' வுக்கு காத்திருப்பது, வைத்தியரைக்கான உட்கார்ந்து காத்திருத்தல், வேலைக்காக காத்திருத்தல், முப்பது தாண்டிய பெண் திருமணத்துக்காகக் காத்திருத்தல் ஆகிவை நாம் யாவரும் கண்டவை கேட்டவை பெரும்பாலும் அனுபவித்தவை. எனவே அப்பாடல்களைப் படிக்கும் போது உண்மைத்தன்மையை உணர்கின்றோம். பாடல்களுடன் ஒன்றிவிடு கின்றோம்.
தூரத்துச் சிவப்பெல்லாம் வசுவாகத் தோன்றும்
சுமையுடலை மாற்றுதற்குக் கால் ஒருகால் மாறும்
நேரத்தை அளந்த நெஞ்சு நீட்டிவிடும் முச்சு
நின்றலுத்தோம் காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்
ஆனந்தத்தன் 28 Ot-P5-200s

கோழிப் பொழுதெழுந்து குலைந்தோடி வரிசைக்
கொலு விருந்தோம் துண்டெடுத்து வைத்தியரைக்கான ஊழியரின் தோழியர்கள் உட்செல்வார் நாமோ
உட்கார்ந்து காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும்.
இரண்டு பாடல்களை இங்கு எடுத்துக்காட்டுகளாகத் தந்துள்ளோம்.
1999இல் மாவிட்டபுரம் வீட்டைப் பார்த்து விட்டு தன்னுடைய மனைவிக்கு "தாழிட்டறியாத் தலைவாசல்" என்ற தலைப்பில் எழுதிய கடிதமாகக் கவிதை படைத்துள்ளார். அன்றிருந்த அவர் வீட்டை எண்ணிப்பாடுகிறார். நா. சண்முகலிங்கனின் சந்தன மேடை தொகுதியில்,
எங்களது தேசமெல்லாம்
Dömsöaöelgub....... ssä. ി.പിഖിത്രb 960&fuseo-o-o-o-o-o- Lasóu ai&tsb. •••••••
வசந்தத்தை வரவேற்கும் எங்கள் ஊர் வசந்தன் வளம்சொல்லி மீண்டும் தொடங்கி, பனைமரமாய் நெஞ்சம் பெருமையில் நிமிரும் பண்பாட்டின் அர்த்தங்கள் புரியும்.
என்னும் பாடலைப் படிக்கும் போது பண்டிதர் சச்சியினுடைய "தாழிட்டறியாத் தலைவாசல்" கவிதை நெஞ்சில் வந்து நிறையும். படிக்கும் போது விரக்தி, துன்பம், வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படினும் கவிதையின் கவர்ச்சியாற்றலும் அழகுணர்வும் அவற்றையெல்லாம் ஒற்றடமிட்டு மாற்றி விடுகின்றன.
கோழிக் கொடியேறி ஆடியமா வாசை மட்டும் தாழிட்டறியாத் தலைவாசல் - ஆழவே காவடிகள் வந்தாடக் கண்ணனூட்டும் சாளரம் யாவு மிருக்கும் இராசாவின் இராகத்தின் நாதமழையில் நனைந்த மனை - விதிவரும்
Oq-es-2008 29 ஆனந்ஆத்அேள்

Page 18
அடியாரின் பண்ணோசை அந்தணரின் வேதவொலி துடியோசை பள்ளி எழுச்சி - விடிவோசை முழ்கி எழுந்த மனை முழங்கும் தமிழோசை வாழ்க வெனுமோசை வந்தலைக்கும் - ஏழ்கரம் காலை பயிலக்கலைச் செவிகள் கொண்ட மனை வேலவனின் வீதி விளங்குதம்மா
என்னும் பாடலடிகள் அன்றிருந்த அவர் வீட்டின் சிறப்பு களை அழகாகக் கூறி மிகுதி யாவற்றையும் நாம் உய்த்துணரும் படி செய்துள்ளார்.
பண்டிதர் சச்சியினுடைய கவிதையாக்கங்களை ஒழுங்கான ஆய்வுக்குட்படுத்தி அவற்றிலுள்ள சிறப்பான பண்புகளை வெளிக்கொணர நாம் முயற்ச்சி செய்ய வேண்டும். நல்ல தமிழ்ப்பணி செய்து நம்மைவிட்டுச் சென்ற அந்த நல்ல இலக்கிய ஆன்மா மகிழ்வதற்கு இப்பணியினைச் செய்ய வேண்டும்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
ஆனந்தத்தேன் 30 Oq-es-20s

இலக்கியமுதுசொம்
1939 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆந் திகதி ஈழகேசரியில் “தண்ணீர்த்தாகம்” என்றொரு அற்புதமான சிறுகதை வெளிவந்தது. அதனை ஆனந்தன் என்பவர் எழுதியிருந்தார். அந்தச் சிறுகதை இவ்வாறு ஆரம்பிக்கிறது: “பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டிருந்தது.” கள வர்ணனையோடு கதை விபரிக்கப்படுகிறது. நீதிமன்றத்துக்கு முன் கடகத்தில் பொருள் கொண்டு வந்து வியாபாரம் செய்த கதிரன் மகளுக்கு வெயில் எரிய எரிய தாகம் எடுக்கத் தொடங் கியது. நீர் தேடிப் புறப்பட்டவள் பார்வையில் ஒரு வளவின் கிணற்றுக் கட்டில் செம்பு ஒன்று நீருடன் கண்களில் படுகின்றது. பொறுக்கவியலாத விடாய் செம்பை எடுத்துப் பருகுகிறாள். என்னடி செய்தாய் பாதகி" என்று கர்ச்சித்தபடி நடேசையர் ஓடி வருகிறார். செம்பைப் பறித்து அவள் நெற்றியில் ஓங்கி அடிக்கிறார். நெற்றி உடைந்து இரத்தம் பெருகுகிறது. ஓடிவிடுகிறாள். வடு நெற்றியில் நிரந்தரமாகி விடுகின்றது. இது தண்ணிர் தாகத்தின் முதல் பகுதி. இரண்டாம் பகுதியில் ஆஸ்பத்திரியில் அனாதையாக விடப்பட்ட ஒரு வயோதிபர் விடாயால் “அம்மா தண்ணீர் விடாய் நாவை வறட்டுகிறது” எனக் கதறுகிறார். எவரும் கவனியாதிருக்க, ஒரு தாதி நீருடன் அவர் அருகில் வருகிறாள். நடேசையரை அடையாளம் கண்டுகொள்கிறாள். ஜயா, பறைச்சி தொட்டுத் தண்ணிர் தந்தால் குடிப்பீர்களா?” எனக் கேட்கிறாள். என் மரணத் தாகத்தைத் தீரம்மா” என்கிறார். அவள் நீரைப் பருக்குகிறாள். நடேசையர் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார். அம்மா என்னை மன்னி” என்றபடி அவள் காலடியில் விழ எழுகிறார். இதுதான் அச்சிறுகதை, மிகவும் கலை நுட்பத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது.
எழுதப்பட்ட காலம் 1939. சாதிக் கொடுமைகளும் தீண்டாமையும் தலை விரித்தாடிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புரட்சிகரச் சிறுகதையைப் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதியிருக்கிறார். ஈழத்தில் நவீன புனைகதை இலக்கியத்தை அறிமுகப்படுத்திய இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்தியலிங்கம் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர் க. சச்சிதானந்தனாவார். தரமான சிறுகதை ஒன்றினை முதன் முதல் எழுதிய பெருமை இவருக்கேயுரியது. ஈழகேசரியில் ஆனந்தன் என்ற புனை பெயரில் எட்டுச் சிறுகதைகள் 1939 - 1944 காலகட்டத்தில் எழுதியுள்ளார். அவற்றில் தண்ணிர்த்தாகம் ஈழத்தின் Ot-et-2PPs 31 ஆனந்தத்தேன்

Page 19
உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகும். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக முதன் முதல் ஈழத்தில் மட்டுமன்றித் தமிழ் கூறும் நல்லுல கத்திலேயே குரல் எழுப்பிய படைப்பாளி க. சச்சிதானந்தன் ஆவார்.
பண்டிதர் கணபதிப்பிள்ளை க. சச்சிதானந்தன் 1921 ஆம் ஆண்டில் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தில் பிறந்தார். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லுாரி, பருத்தித்துறை ஹாட்லிக்கல்லுாரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கல்வி கற்று இப்பாடசாலைகளுக்குப் பெருமை சேர்த்தவர். க. சச்சிதானந்தன் அவர்கள் லண்டன் சிறப்புப் பட்டதாரி. பின்னர் லண்டன் முதுகலைமாணியுமானார். இவர் ஒரு மதுரைப் பண்டிதர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. பலாலி ஆசிரியர் கலாசாலையின் உளவியல் விரிவுரை யாளராகவும் பின்னர் உப அதிபராகவும் விளங்கியுள்ளார். வானியலில் மிக்க பரிச்சயமுள்ள க. சச்சிதானந்தன், சோதிடக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர். முந்நூறு ஆண்டுகளாகப் பஞ்சாங்கம் கணித்து வெளியிடும் தொடர்ச்சியான பரம்பரையின் பாரம்பரியத் தொடர்ச்சிப் பொறுப்பு இவருக்கு இருந்தது.
ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி முதலான புனை பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், ஒருநாவல், ஏராளமான கட்டுரைகள், நாடகங்கள், சித்திரங்கள், காவியங்கள் என்பவற்றினை பண்டிதர் க. சச்சிதானந்தன் ஆக்கியளித்துள்ளார். கவிதைத்துறை அவருக்குக் கைவந்த கலை. சிவக்கொழுந்து என்ற கவிஞர், யாழ்ப்பாணன் என்ற புனை பெயரில் கவிதைகள் ஆக்கத் தொடங்கியதும் யாழ்ப்பாணன் என்ற புனை பெயரைக் கைவிட்டு தனது சொந்தப் பெய ரிலேயே கவிதைகளை ஆக்கத்தொடங்கினார். ‘காதலியின் கையெழுத்து’ என்ற அவருடைய முதலாவது கவிதை இந்திய நவசக்திச் சஞ்சிகையில் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் தொகுப்பு ‘ஆனந்தத் தேன்’ என்பதாகும். ‘சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்ற புகழ் பூத்த பாடலின் ஆசிரியர் க. சச்சிதானந்தன் ஆவார். அப்பாடல் அக்காலத் தமிழரசுக் கட்சியின் பிரச்சார மேடைகளில் முழங்கியது. பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. தமிழரசுக் கட்சியின் ஆஸ்தான கவிஞராகவே அவர் அக்காலத்தில் விளங்கினார். அவருடைய கற்பனை இயற்கையைப் பாடுவதிலும் தமிழ்
ஆனந்தத்தேன் 32 os-os-200s

மொழியின் சிறப்பையும், குடும்ப பொது உணர்வுகளையும் கவிதை களாக்குவதிலும் திசை திரும்பியது. மனைவி கட்டிக் கொடுத்த சாதம் என்னும் பொருளை வைத்துக் கொண்டு அவர் பாடிய பச்சை அமிழ்தம்” எனும் கவிதையை இரசிகமணி கனக. செந்திநாதன் அடிக்கடி பாராட்டுவார். தமிழ்ப் பற்றுக் கவிதைகள் நிறைந்த ஆனந்தத்தேன் என்ற கவிதைத் தொகுதியோடு அரசியல்வாதி கு.வன்னியசிங்கம் பற்றிய
தியாக மாமலை’ என்றொரு தொகுப்பும் வெளி வந்துள்ளது.
பண்டிதர் க. சச்சிதானந்தன் யாழ் நூல் தந்த சுவாமி விபுலா னந்தரின் படியெடுக்கும் மாணாக்கனாகச் சில காலம் இருந்துள்ளார். அதனால் ஆய்வுத் துறையில் இயல்பாகவே அவருக்கு மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் உண்டு. சமஸ்கிருதம் முதலான மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராக விளங்குவதால் ஆய்வுத் துறையின் நுணுக்கமான அணுகு முறைக்குப் பரிச்சயமானவராகவுள்ளார். “தமிழர் யாழியல்’ என்ற நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதையும் பரிசிலையும் பெற்றது. அவராக்கிய இன்னொரு ஆய்வு நூல் 'மஞ்சுகாசினியம் - இயங்கு தமிழியல்’ என்பதாகும். மஞ்சு என்ற தன் மகளின் நினைவாக இந்த இலக்கண நூல் அவரால் மஞ்சுகாசினியம் எனப் பெயரிடப்பட்டது. மொழியியல், தொல்காப்பிய அடிப்படையில் இன்றைய வழக்கையும் இலக்கண வரம்புக்குள் இந்நூல் அடக்குகின்றது. புதிய கோணத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல் இதுவாகும்.
சச்சிதானந்தன் அண்மைக் காலமாக காவியம் படைக்கின்ற பணியில் முழு முச்சாக ஈடுபட்டிருந்தார். அவரது முதலாவது காவியம் “யாழ்ப்பாணக் காவியம்’ ஆகும். இந்நூல் ஈழத்துக் காவிய இலக்கியத் துறைக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்ந்திருக்கின்றது. யாழ்ப்பான இராச்சியத்தின் ஒரு கால கட்டத்தினை இக்காவியம் சித்திரிக்கின்றது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது என்பவற்றினை இந்தக் காவியம் தனதாக்கிக் கொண்டது.
இலக்கிய கலாநிதி, பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் நம்மிடையே வாழ்ந்துவந்த இலக்கிய முதுசொம் என்பேன். அவருடைய எழுத்து தமிழுக்கு என்றும் பெருமை சேர்க்கும் என நம்பலாம்.
செங்கை ஆழியான் க. குணராசா
Ot-et-200s 33 ஆந்தத்தக்

Page 20
அறிவுக்களஞ்சியம் அனைந்ததோ?
அன்பு அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, அஞ்சாத ஆளுமை, அறிவுக் களஞ்சியம் என அடுக்கி கொண்டே போகலாம். என் சொல்வோம் பெருங்தமிழ் விருட்சம் வீழ்ந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு பண்டிதர் க. சச்சிதானந்தம் என்ற பல்துறைவிற்பன்னரை இனி எப்பிறப்பிற் சந்திப்போம் இப்பெருமகனார் காலத்தில் வாழ்ந்தோம் அவர் வார்த்தை கேட்கும் வாய்ப்புப்பெற்றோம் அவர் ஆற்றல்கண்டு எம் அளவை யாமே அறிந்து கொண்டோம் என்பதே உண்மை.
பண்டிதர் சச்சி ஐயாபற்றி இந்துக் கல்லூரியில் கற்கும் போதே யான் அறிந்தேன். இவரது புலமைபற்றி வகுப்பறையில் முதல் எடுத்துரைத்தவர் அமரர் சொக்கன் அவர்கள். பின் பண்டிதரின் உரைகள் கேட்கும் வாய்ப்பு ஓரிரு தடவை கிடைத்தது. 1990 களின் பின் பண்டிதர் இணுைவிலில் இடம்பெயர்ந்து அதிபர் ஆயிலியம் வேலுப்பிள்ளை அவர்களின் வீட்டில் வசித்தார். அக்காலம் ஆன்மீகச் சொற்பொழிவு இலக்கியச் சொற்பொழிவு என யான் காலடி எடுத்துவைத்தவேளை.
எதிர்பாராத விதமாக சுன்னாகத்தில் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நிகழ்ச்சியில் யான் உரையாற்றும்போது பண்டிதர் இருந்தார். யான் மிகவும் சங்கடப்பட்டேன். விழா முடிந்ததும் பண்டிதர் அருகேபயந்து போய் நின்றேன். “நல்லாய்ப் பேசுகிறாய்; நிறையப் படித்துப்பேசு” என்றார். மிகவும் ஆனந்தமடைந்தேன் பெரிய பரீட்சையொன்றில் சித்திபெற்ற திருப்தி பண்டிதர் தந்த அங்கீகாரம். பின் பண்டிதர் அவர்கள் மருதனார்மடத்திலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்து போவார். அவரை நாடித்தேடி நான் செல்வதும் அவரின் கருத்துக்களை நான் படிப்பது போல் ரசிப்பதும் வழக்கமாயிற்று. கம்பன் கழகத்தில் இணைந்து பட்டிமண்டபப் பேச்சுக்கு குடாநாட்டில் வலம் வந்த நாட்களில் எனது ஐயங்களை பண்டிதரிடம் போய்க் கேட்பேன். கம்பனை முழுமையாக ரசித்த கவிஞன் பண்டிதர் என்பதை யாரும் மறுக்கார். எந்தப் பகுதியில் கேட்டாலும் பாட்டும் பொருளும் கூறி விளக்குவார். இணுைவில் காரைக்கால் சிவன் கோவிலில் எனது தொடர் சொற்பொழிவு. பண்டிதர் எனக்கு தெரியாமல் தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டு சென்று விட்டார். மறு நாள் பண்டிதரை தெருவில் சந்தித்தபோது யான் பேசியதை விடயங்களை ஆவுத்ஆத்தேன் 34 Otas-2Pos

சொல்லிச் சிரித்தார். “புராணத்திலுள்ள சுவையான பாடல்களை எடுத்து விரித்துச் சொல்லியிருக்கலாம்; கதை சொல்வதோடு கனதியாகச் சொல்லுதல் நல்லது” என்றார். பண்டிதரின் வருகையால் யான் பின் படித்து அறிந்து பெற்றவை பல சபையில் அறிவில் வல்லார் அடக்கமாய் இருந்து கேட்பார் என்ற அச்சம் என்னைக் கற்கத் தூண்டியது.
பண்டிதர் சச்சி ஐயாவுக்கும் எனக்குமுள்ள தொடர்பு தொடர்ந்தது. எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக விளங்கினார்; கடிதம் எழுதுவார். பண்டிதர் ஐயா சங்ககாலப் புலவர்கள் எவ்வாறு புலமையை அடகு வைக்காத தன்மை காத்தனரோ அவ்வழி மரபு இவரிடம் காணப்பட்டது.
முற்றிய திருவின் முவராயினும்
பெட்பின் றிதல் யாம் வேண்டலமே
என்ற புறநானூற்று கூற்றுப் போல் வாழ்ந்த புலமையாளர். அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் வழங்கிய கெளர விப்புக்களை எமது அன்பான வற்புறுத்தலாலேயே ஏற்றுக்கொண்டார்.
பண்டிதர் ஐயா அறிவை மட்டுமல்ல இனிய நல் மாணக்கர்களை யும் சம்பாதித்து வைத்திருந்தார். 2000 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஈழத்து அறிஞர்களின் அருஞ்சொத்துக்கள் குறித்துப் பேசினேன் அவ்விழாத் தலைவர் நா.சீவரத்தினம் சச்சி ஐயாவின் இனிய மாணவன். இவர் தனது ஆசிரியரின் நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்ற அக்கறையில் அதனை அச்சிடுவதற்குரிய பணத்தை அளித்தவர்.
பண்டிதர் ஐயா இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் நல்லை ஆதீனத்தில் யாழ் இலக்கிய வட்டத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் யான் பேசும் போது கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் பேசிய போது பெண் படைப்பாளிகளில் குறமகள் விடுபட்டு விட்டார் என நான் கூற பண்டிதர் “ஐம்பதுகளுக்குப்பின் தான் குறமகள் எழுதினார். மனோன்மணியின் கூற்றுச் சரி” என்றார். பண்டிதர் வரலாறு தெரிந்த அறிவுக் களஞ்சியம் என்பதை சபை மீளவும் உணர்ந்தது.
M-es-2008 35 ஆவுத்ஆத்தேன்

Page 21
விழா முடிந்ததும் கையைப் பிடித்த படி என்னைப் பாராட்டினார். “உனக்குக் கிடைத்த பேறு சொல்லச் சொல்ல முதல் கொட்டுண்ணுது. அடுத்த கிழமை உன்னை வந்து சந்திக்கிறேன் உன்னை சந்திக்கிறதுக்கு நாள் வைக்கமுடியவில்லை; ஓடித்திரியுறாய்” என்று உரிமையோடு கதைத்தார். அன்றைய சந்திப்பு அகத்தில் நிறைந்த நிலையில் அவரை யான் தேடுகின்றேன். பண்டிதப் பாரம்பரியத்தின் முல வேர் அறிவுக் களஞ்சியம் இவரைப் போல் ஒருவர் இனி எமக்கில்லை என்செய்வது இயற்கையை யார் வெல்ல முடியும் அன்னாரது ஆன்மா என்றும் இறை நிழலில் நின்று ஆசீர்வதிக்க வேண்டி அமைகிறேன்.
ஆறு. திருமுருகன் அதிபர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி.
பைந்தமிழின் தொண்டர்
பருவத்தே பெய்கின்ற மழையைப்போல் பைந்தமிழ்க்குத் துணையாய் நீ இருந்தாய் ஐயா உருவத்தில் மட்டுமா உயர்ந்து நின்றாய் உளவியல் கற்பிப்பதிலும் உயர்ந்தே நின்றாய் வருடத்தில் ஒரு முறைதான் வரும் வசந்தம் ஊதுகுழல் கொண்டுவரும் வசந்தம் என்றும் துருவத்தில் வேறாக நிற்கின்றோரும் உன் தமிழைப் பணிந்து துதிபாடச் செய்தாய் கருவத்தில் என்றும் நீ வாழ்ந்ததில்லை கண்ணியமாய்த் தமிழ் தொண்டு புரிந்தாய் ஐயா.
க. கதிரமலை
சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம்.
ஆனந்தத்தேன் 36 P4-05-2008

எளிமைப்பணிபோர்த்திய இமயம்
அன்றும் வழக்கம் போலக் காலையில் கடைக்குச் சென்று பத்திரிகை வாங்கி வங்தேன். எங்கள் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிய அந்த செய்தி கண்களில் உள்வாங்கப்படுகிறது. அவர் சுகமீனமுற்றிருந்தார் என்று கூட யாரும் சொல்லவில்லையே யாழ்ப்பாணத்தில் - காற்றுக்குள் யானை புகுந்த புயல் நாள் ஒன்றில் - காலன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான் என்ற உண்மையை இதயம் ஏற்க மறுத்துப் போராடுகிறது. காலையில் ஈரக் குரலெடுத்துப் பாடும் பறவைகள் யாவும் அன்று ஈனக்குரலெடுத்துப் பாடுவதாய் ஒரு பிரமை, யாழ்ப்பாணத் தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயம் உண்மைதான் என்று அறிந்த பிறகும் மனம் மறுத்தல் என்ற பாதுகாப்பு கவசத்தை அணிந்திருக்கவே விரும்புகிறது.
விடக் `ல் இன்று நாள்தோறும் பலர் இறந்து கொண்டிருக்கிறார் கள். அது ஒரு புள்ளி விபரமாய்ப் போய்விட்டது. அதனிடையில் பண்டிதர் ஐயாவை நாம் இழந்தோம் - மாவைப் பண்டிதர் என்ற இலக்கிய மாமலை சரிந்தது - சச்சி சேர்’ என்ற சரித்திரம் முடிந்தது என்ற விடயம் ஒரு மாபெரும் துயர சம்பவமாய் மனதில் நிலைகொள்ளுகிறது.
1979ம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலை நேரதசி விஞ்ஞான ஆசிரிய மாணவர்களுக்குப் பண்டிதர் தமிழ் கற்பிப்பார் என்றுதான் சொல்லுகிறது. நளவெண்பாவில் பல பாடல்களை அவர் சிரித்துச் சிரித்து, ரசித்து ரசித்துக் கற்பித்த காட்சி இன்னும் உயிர் விம்பமாய் என் உள் மனதில் தெரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கும் அப்பால் பல விடயங்கள் நடந்தன. எங்கள் வகுப்புக்கு அருகில் கிழக்கு மேற்காய்ச் செல்லும் பாதையில் அவர் நடந்து செல்லும் போது, எங்கள் வகுப்பில் விரிவுரையாளர்கள் எவரும் இல்லையாயின் ஐயா உள்ளே நுழைந்து விடுவார். உங்களுக்கு இப்ப என்ன பாடம்?’ என்று சிறு சிரிப்புடன் கேட்பார். நாங்கள் ஒருநாள் மற்ஸ்’ என்போம், மறுநாள் ‘சமயம்' என்போம், இன்னொரு நாள் சைக்கோலொஜி' என்போம், பிறிதொரு நாள் எடுகேஷன்' என்று சொல்லிப் பார்ப்போம். எதைச் சொன்னால் இவர் திரும்பிப் போவார் என்ற தேடலில் நிரந்தரமாய்த் தோற்றோம் நாங்கள். நாங்கள் எதைச் சொன்னாலும் அந்தப் பாடம் அவரால் கற்பிக்கப்படும். ཏི་ ق.م
o-os-2oor 37 ஆந்தத்தேன்

Page 22
ஆசிரியர் கலாசாலை மட்டத்தில் அந்தத் தரத்தில் எல்லாப்பாடங்களையும் - சிலவேளை அதற்கெனப் போடப்பட்ட விரிவுரையாளரைவிடச் சிறப்பாய் - கற்பிக்கும் ஒரு ஆளுமை என்னை அதிர வைத்தது. இது இவரால் எப்படி முடிகிறது? என்ற கேள்வியும் தேடலும் எனக்குள் எழுந்தன. நான் அவரை நுணுக்கமாய் அவதானிக்கத் தொடங்கினேன்.
மிக எளிமையான தோற்றம், மடிப்புக் கலையாத அப்படி இப்படி எல்லாம் சொல்ல முடியாத சாதாரண வேட்டி - ஒரு கோட்' மனது போலவே மிகச் சுகந்திரமாய் இருக்கும் தலை முடி, கையில் ஓரிரு புத்தகங்கள் - ஒரு குடை - உள்ளே பார்த்தால் - தலை நிறைய விஷயம். எந்தச் சந்தேகத்தையும் துணிந்து கேட்கலாம். கலாசாலையில் பண்டிதர் ஐயாவைக் காணவில்லை என்றால் நேரே நூலகத்திற்குப் போகலாம். எங்கோ ஒரு முலையில் ஏதாவது ஒன்றை ஆழ்ந்து படித்தபடி இருப்பார்.
கலாசாலையில் நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் அவதானிப்பார். ஆரோக்கிய விமர்சனம் தருவார். 'எழில் சஞ்சிகையிலை கோகிலாவின்ரை சிறுகதை நல்லாயிருக்கு’ என்று ஒருநாள் சொல்வார். விஜயதசமி விழாவில் நாங்கள் ஆடிய நடனத்தைப் பார்த்துவிட்டு மறு நாள் காலையில் உங்களுக் கெல்லாம் நேற்றுப் பதினாறு வயது ஆகிட்டுது' என்று சிரித்தார் அந்த தூண்டலும் வழிகாட்டலும் கலாசாலையுடன் முற்றுப் பெற்று விடவில்லை.
2012-1992 இல் மாவைப் பண்டிதர் க. சச்சிதானந்தன் இலக்கியப் பணி என்ற சிறு நூலைத் தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம் வெளியிட்டது. இருக்கும் போதே அவர் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற உள் நோக்கம் எமக்குள் இருந்தது.
பண்டிதர் மாவை சச்சிதானந்தன் அவர்கள் இன்று எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பேரறிஞர். 14வது வயதில் கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றிருந்த இவர், கணிதத்துறையிலும் நிறைந்த வல்லமை உடையவராகித் தம் முன்னோர் வழி 16 வயதில் பஞ்சாங்கக் கணிப்பில் தேர்ந்தவரானார்" என்று இக்கையேடு ஆரம்பிக்கிறது. இடையில் அவரது
ஆனந்தத்தேன் 38 ot-et-200s

கலை இலக்கியப் பணிகளை நிரற்படுத்திவிட்டு, ஈழத்துப் பேனா மன்னர்கள் எனும் தொடர் கட்டுரையில் கரவைக் கவி கந்தப்பனார் எனும் புனை பெயரில் இரசிகமணி கனகசெந்திநாதன் எழுதிய இவரது ஆக்கங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரை ஈழ கேசரியில் 14.03.55 இல் வெளி வந்தது" என்ற செய்தி யோடு நிறைவடைகிறது.
எனது நூல் வெளியீடு ஒவ்வொன்றிலும் எனது மதிப்புக்குரிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரை வணங்கி ஆசி பெறும் வழக்கத்தைக் கடந்த பல வருடங்களாக நான் கொண்டிந்தேன். அவ்வகையில் பண்டிதர் ஐயாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறும் பாக்கியம் எனக்கு ஒருநாள் கிடைத்தது. ஆயினும் எந்த விழாவிலும் தனக்கு மாலை அணிவிக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை.
“எந்த வீட்டில் புத்தகங்கள் இருக்கின்றனவோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கறது” என்று பிளேட்டோ சொன்னார். ஆயிரக் கணக்கான நூல்களை வாசித்தும் பல நூல்களை எழுதியும் தன் வாழ்வைக் கோல மிட்டுக் கொண்ட பண்டிதர் ஐயா தனது நூல்கள் ஒவ்வொன்றும் எனக்குக் கிடைப்பதை உறுதி செய்து கொண்டார் என்பது அவர் எனக்குத் தந்த பெரிய மதிப்பு என்று நினைக்கிறேன்.
அவரது படைப்பாக்கத் திறன் பற்றி விரிக்க இது நேரமில்லை அது ஆய்வாளர்களால் செய்யப்பட வேண்டியது. அவரது கவிதைகளின் உள் ஒலிப்பு மிகச் சிறப்பானது. வெறும் சொல்லாய்க் கிடக்கும் கவிவரிகள் அவர் பேனா தொட்டதும் உயிர்த்தெழுந்து நடமாடுவது எப்படி என்று பேராசிரியர்கள் எடுத்துச் சொல்லட்டும். ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராயும் அவர் வைத்தெண்ணப்படத் தக்கவர் என்ற கருத்து வலிமை பெற்றவருவது நாம் அறிந்ததே.
கோகிலா மகேந்திரண் ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப்பணிப்பாளர்
os-os-200s 39 ஆனந்தத்தேன்

Page 23
நடமாடியமாபெரும் நூலகம்
பண்டிதர் சச்சிதானந்தன் அவர்களது மறைவு யாழ்ப்பாணப் புலமைச் சொத்தொன்றின் இழப்பாக நோகக்கத்தக்க அளவுக்கு பேரிழப்பாகும். 87 ஆண்டுகள் யாழ்ப்பாண மண்ணில் ஒரு நடமாடும் நூலகமாக, அறிவுப் பொக்கிஷமாக அவர் மிளிர்ந்து மறைந்துள்ளார்.
அவரை நாம் இரு நிலைகளில் எப்போதுமே இனங்காணலாம். முதலாவது அவர் எப்போதும் மாணவனாக இருந்தார். சதா தேடலும், முயற்சியும், ஆய்வு மனோபாவமும் கொண்டவராக அவர் எப்போதும் கற்றுக் கொண்டேயிருந்தார். மில்ரனையும், ஷெல்லியையும், கீற்ஸையயும், ஷேக்ஸ்பியரையும் அவர் மீள மீளப் படித்துச் சுவைத்துக் கொண்டிருந்தார். மில்ரனின் ஒரு நாடகத்தை 70 தடவைகளுக்கு மேல் படித்ததை அவர் தனது நேர்காணலில் பதிவு செய்துள்ளார். ஆங்கில இலக்கியங்களைப் படித்துத் திளைத்து, அந்தச் சுவையின் உந்துதலினால்தான் அவர் தமிழில் கவிதைகளை எழுதினார். எனவேதான் அவரது கவிதைகள் புதுப்பரிமாணம் பெற்றன எனலாம். இறக்கும் வரையில் ஓர் ஆய்வு மாணவனாக அவர் விளங்கினார். கெளரவ கலாநிதிப் பட்டம் அவருக்குக் கிடைத்த பின்பும், கலாநிதிப் பட்டப் படிப்பில் ஈடுபட அவர் முயன்றிருந்தார். யாழ்ப்பாணத்து நூலகம் எவையும் அவர் கால் படாதிருந்திருக்க முடியாதென்றே கூறலாம். அவரது பெரும் பொழுது கற்பதிலேயே கழிந்ததெனலாம்.
அடுத்த நிலை அவர் எப்போதும் ஒரு ஆசிரியராக, வழிகாட்டியாக விளங்கியமையாகும். தான் கற்ற விடயங்களை - அது தமிழ், ஆங்கில, சமஸ்கிருத மொழியாயினுஞ்சரி, சோதிடம், வானியல் ஆயினுஞ்சரி, இலக்கிய விடயங்களாயினுஞ்சரி, கல்வியியல், உளவியல் ஆயினுஞ்சரி - ஏனையவர்களுக்கு ஐயந்திரிபறக் கற்பிப்பது அவரது பணிகளில் முதன்மையாகவிருந்தது.
அவரது உளவியல் கருத்தமர்வொன்றில் பங்கு பற்றிய அனுபவம் எனக்குண்டு. தனது ஆழ்ந்தகன்ற அறிவை நடைமுறை வாழ்வுடன் பொருத்தமுற விரிவுரையாக அவர் வழங்கியிருந்தார். இன்றும் விரிவுரைக் கருத்துக்கள் என்னில் எதிரொலிக்கின்றன.
O த்தேன் 40 ●2668-وهمه

கல்வியியலாளரான அவள் இலங்கையின் கல்வியளிப்புத் தொடர்பில் அதிகம் கவலையும், அதிருப்தியும் கொண்டிருந்தார் என்பதை அவரை நேர் கண்டவேளை நான் அறிந்து கொண்டேன்.
இலங்கையின் கல்வியை ஆயிரம் பீத்தல்கள் உள்ள சேலை என்று வர்ணிக்கும் அவர் பீத்தல்களை ஒட்டி அடைப்பது கடினம். அதனால் சேலையை மாற்ற வேண்டும் எனக் கருதினார்.
கற்பித்தல் பணியைச் செய்யாத, சாய்மனைக் கதிரைக் கற்பித்தலில் ஈடுபடும் மேலதிகாரிகளால் களநிலவரம் கருதாது திட்டமிடப்படும் கல்வி பயனற்றதாக, உரிய இலக்கை அடையாது தோற்றுப் போவதாக அவர் கூறினார். அக்கூற்று சரியானதே. இன்றுவரை கல்வி நிலையற்றதாக, அடிக்கடி மாற்றமுறுவதாக இருக்கும் நிலைமை அவரது கூற்றை வலுப்படுத்துவதாகவே உள்ளது.
இலங்கையின் அரசியலில் முக்கிய பங்காற்றிய தமிழரசுக் கட்சியின் தோற்றுவாயாக - முலகர்த்தாக்களாக - விளங்கியவர்களுள் அவரும் ஒருவர் என்பது முக்கியமானது. தந்தை செல்வாவின் நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் விளங்கினார். கொழும்பு காலி வீதியில் இரும்பு மனிதன் டொக்ரர் நாகநாதனும், தந்தை செல்வாவும், தானும் பயணம் செய்த போதே தமிழரசுக் கட்சி” என்ற பெயர் பிறந்ததாக அவர் நேர்காணலில் கூறியுள்ளார். தமிழ் மிதவாத அரசியற் களத்தில் பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் உறுதியான உரத்த குரலில் ஒலித்தார். சாவிற் தமிழ் படித்துச்சாக வேண்டும். என் சாம்பல் தமிழ் மணத்து வேக வேண்டும்” முதலிய மொழியுணர்வு, இனவுணர்வுப் பாடல்கள் அவரது குரலை - குரலின் உரப்பை - துலாம்பரப்படுத்து கின்றன.
ஆயினும் மிதவாத அரசியலின் தோல்வியும், வன்முறை அரசியலின் தோற்றமும், அதைத் தொடர்ந்து நீண்டு தொடரும் யுத்தமும், அழிவுகளும், துன்பங்களும் தமிழ் அரசியற் களத்திலிருந்து அவரை ஒதுங்க வைத்தன. அவர் சமகால அரசியல் தொடர்பில் சலிப்புற் றிருந்தார்.
Ot-P5-2aos 41 ஆனந்தத்தேன்

Page 24
தமிழிலக் கலியத்தில் அவரது இடம் நிலையானது. மஞ்சுகாசினியம் இயங்கு தமிழியல்” தமிழிலக்கணம் கற்போருக்கு வரப்பிரசாதமாகும். ஆனந்தத்தேன்” அவரது ஆற்றொழுக்கான செய்யுள்களாலான கவிதைகளின் தொகுதியாகும். தமிழர் யாழியல்’ விபுலானந்தரின் சகபாடியாக இருந்து அவர் மேற்கொண்ட ஆய்வின் GlypuuTasů LîJaFast55 TGlorTS5b. Fundamentals of Tamil Prosody, Footprints of our fathers ebasu &q5 5T 6585gs5u5 up6opguu தமிழிலக்கணத்தையும், தமிழினத்தின் வரலாற்றையும் அரசியலையும் உலகுக்கு விளங்க வைக்கும் நூல்களாகும். மஞ்சு மலர்க்கொத்து சிறவர் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பின் சிறப்பான பதிவாகும். யாழ்ப்பான காவியம், பருவப் பாலியர்படும் பாடு காவியங்கள், ஈழத்தமிழ் வரலாற்றினதும், கவிதையினதும் முக்கிய ஆவணங்களாகும்.
அவர் முன்று மொழிகள் தெரிந்தவராக இருந்ததால் முன்று மனிதனுக்குச் சமமான ஆற்றலாளராக விளங்கினார். இந்த வியாபகத்தன்மை அவரை ஒரு மகாஞானியாக, அறிவச் சுடர் மிகு மகாமனிதனாக மிளிர வைத்தது. ஆம் நமது ஞானவிளக்கு சுடரிழந்து போக, நாம் இருள் வழியில் தடுமாறுகிறோம்.
சு. முறிகுமரன்
ஆனந்தத்தேன் 42 ot-et-zers

அதிபாரச் சிநேகிதனே, சொல்வல்லாள!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சச்சிதானந்தனுக்கு கவிதை எழுதும் சக்தி கிடைத்துவிட்டது. அப்பொழுது இரவு ஏழு மணியிருக்கும் சச்சிதானந்தன் வந்து என் வீட்டுப் படலையில் நின்று கொண்டு என்னைக் கூப்பிட்டார். நான் படலையைத் திறந்து என்ன விஷயம் எனக் கேட்டேன் அவர் எடனே ஒரு வெண்பாவினால் எனக்கு விடை தந்தார். அவ் வெண்பா இதோ -
“மதிபாலசிங்கனே மன்னனே எந்தன்
அதிபாரச் சினேகிதனே தம்பி - கதி இல்லாமல்
போக்கில்லை என்றே புகலவந்தேன் நீ எனக்கு
தீக்குச்சி தந்துதவி செய்”
என்று வெண்பாவின் முலமே தனது கோரிக்ககையை வெளிப்படுத்தினார் இந்த வெண்பாதான் அவர் முதன் முதல் எழுதிய செய்யுளாகும்.
அவர் எனக்கு இரத்த உரித்துள்ள மைத்துனனாகவும் நண்பனாகவும் என்னுடைய ஆசிரியனாகவும் விளங்கினார். என்னுடைய அம்மாவும் சச்சிதானத்தின் தந்தையாரும் உடன் பிறந்தோர். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் லட்சுமணன் தோட்டத்து வீதியில் உள்ள கேணியில் குளித்து விளையாடப் போவது வழக்கம் அப்பொழுது அங்கேயுள்ள தம்பையா ஐயர் என்பவர் குளித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு கல்லால் ஏறிவது வழக்கம்,
ஐயரின் போக்கு சச்சிதானந்தத்திற்கு பிடிக்கவில்லை அவர்
உடனே அந்தக் கோயில் மடத்தின் சுவரிலே ஐயரைக் கண்டித்துக்
ஓர் அகவற்பாவை எழுதி விட்டு வந்தார். அப்பா இதோ :
செல்வச் சிறுவர் சேறடை குளத்து நல் எண்ணத்தொடு நீராடுதலும் புல்லறிவாளன் புகன்ற மொழிகள் கல்லார் தாமும் களிப்பன அல்ல கல்லால் எறிவான் கல்வியில் அவனே செல்வம் இருந்தும் செலவழித்தறியா நல்லுலோபியின் நவையுறு பணம்போல்
Oq-es-200s 43 ஆனந்தத்தேன்

Page 25
பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயம் அந் நாட்களில் மகா வித்தியாலயம் தரத்தில் இயங்கியது. அங்கே ஆங்கிலம், விஞ்ஞானம், அட்சர கேத்திர கணிதங்கள், தமிழ், சமயம் முதலிய பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
தூரத்தில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தார்கள். எங்கள் மாணவன் சச்சிதானந்தனும் இப் பாடசாலையிலேயே ஆறாம் வகுப்பில் சேர்ந்து கொண்டார். ஆறாம் வகுப்பிலேயே தனி வட்டி தொடர்வட்டி முதலிய பாடங்களை படிப்பிப்பதற்கு ஒவ்வொரு மாதத்திற்குரிய நாட்களின் தொகை தேவைப்பட்டது. அவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பது மாணவர்க்கு கஷடமாய் இருந்தது கணித ஆசிரியர் மாணவர்களுடைய கைவிரல் மொழிகளில் ஏதோ செய்து சிக்கலாக்கிக் கொண்டிருந்தார் ஒரு வாரம் சென்றது.
சச்சிதானந்தன் அன்று பாடசாலைக்கு வரும் போது மாதத்திற்குரிய நாட்களை லேகாகக் கண்டுபிடிப்பதற்கு ஒரு செய்யுயை எழுதி அதை கணித ஆசிரியரிடம் கையளித்தார் அச் செய்யுள் கீழ் வருமாறு.
“கார்த்திகை ஆனி சித்திரை கனியும் வாய்த்திடு முப்பதாம் மாசி ஒன்றுமே சேர்த்திடு நாலேழ் தேதி மற்றைய பார்த்திடு முப்பான் ஒன்றும் பகருமே”
ஆசிரியர் அந்தச் செய்யுளை வாசித்து மகிழ்ச்சி அடைந் தார். அந்தச் செய்யுளை எழுதும்படி மாணவருக்குக் கட்டளையிட்டார்.
அடியேன் கஹட்டகஸ்டிகிலியவில் உள்ள எங்கள் தந்தையின் கடைக்குப் போயிருந்த காலத்தில் அவர் எனக்கு செய்யுள்கள் முலமாகவே கடிதம் எழுதுவார். அத்தைய செய்யுள்களுள் ஒன்றை நினைவு கூர்ந்து இப்போது தருகின்றேன்.
Assess 44 Ot-P5-2POs

விருத்தம்
வேலையினருகே நாங்கள் வெண்மணல் நடந்த நாளும் பாலைபோல் வேகும் கோடை பகல் புனல் வார்த்தவாறும் மாலையில் வேளை தன்னில் மனத்தெண்ணி உருகுகின்றேன் ஒலையைக் காணக் காண உன்முக மதியம் காண்பேன்
இந்தச் செய்யுளிலே சச்சிதானந்ததன் என்னோடு கடற்கரையில் ஒட்டப் பயிற்சி செய்து கொண்டு இருந்ததையும் கோடை காலத்திலே கிணற்றிலே நீராடியதையும் குறிப்பிடுகிறார்.
1938ம் ஆண்டு மலர்கின்றது. அவ்வாண்டில் அவர் S.S.C எனப்படும் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திர பரீட்சையில் சித்தி யடைந்தார். அதே ஆண்டில் பரமேஸ்வர பண்டித ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சப போட்டிப் பரீட்சையிலும் சித்தியெய்தி ஆசிரியராக பயிற்சி பெறுவதற்கு சேர்ந்தார். அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து வந்த நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்கள் ஆசிரிய பயிற்சிக்கும் பண்டிதர் வகுப்பிற்கும் பொறுப்பதிகாரியாக இருந்தார்.
இயற்கையிலேயே தனித்தன்மை வாய்ந்த விவேகம் உடையவராக இருந்த சச்சிதானந்ததிற்கு பாரதி ஐயாவின் வழி காட்டலும் கற்பித்தலும் சேர அது சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்தது போலாயிற்று. 1942ம் ஆண்டளவில் அவர் பண்டிதராகவும், பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
நாங்கள் ஓர் ஆங்கிலப் புலவனை - ஒரு வியக்கக்தக்க ஓர்
தமிழ்ப் பேரறிஞனை - ஒரு நல்லவனை - வல்லவனை - சமத்காரமாகப்
பேசக் கூடிய சொல் வல்லாளனை - விந்தை மிகு பிரச்சினைகளுக்கு
விளக்கம் தருபவனை - ஒரு காந்தீயவாதியை இழந்து கலங்கிக் கொண்டி ருக்கின்றோம்.
திரு. வே. மதிபாலசிங்கம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்
பருத்தித்துறை.
04-05-2008 45 ஆனந்தத்தேன்

Page 26
காவியம் தந்தமகாகவி
பேராசான் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள் நமக்கெல்லாம் துயரத்தைத் தந்து ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்திச் சென்றுள்ளார். அத் துயரத்தை ஆற்றுவதற்காக நாமெல்லாம் சேர்ந்து எமது கல்லூரி மண்டபத்தில் சங்கத்தின் சார்பில் அஞ்சலி விழாக் கண்டோம். அன்னார் தன்வாழ்வுக்கால நிறைவில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் காப்பாளராகவும் பரீட்சகராகவும் இருந்தவர். அதற்கு முன்னர் உப தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து சங்கத்தின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்றவர். இவ்வறிஞர் எழுதிய நூல்களில் ஒன்றான: தமிழர் யாழியலை (1996 அம் ஆண்டு ஆவணி) எமது சங்கம் பதித்து வெளியிட்டதோடு வெளியீட்டு விழாவையும் நடத்தியது. மஞ்சுகாசினியம் (இயங்கு தமிழியல்) அறிமுக விழாவை நல்லையாதீனத்தில் 12.03.2002 இல் சங்கப் பதவி வழித்தலைவரும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருமான சி.சிவராசா அவர்கள் தலைமையில் நடத்தியது. யாழ் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கி இவரறிவைப் பாராட்டிய வேளையில் பெருவிழாவெடுத்துக் கெளரவித்தமை போன்ற செய்திகள் நிழலாய் நினைவில் வருகின்றன.
இவரின் ஆழ்ந்த பன்மொழிப் புலமை பழகுவோருக்கு விருந்தாகும். வாழ்வின் தேவைகளும் நிர்ப்பந்தங்களுமே ஒருவரைச் செயற்பட வைக்கின்றன - உருவாக்குகின்றன” என்ற கருத்துடைய இவர் சங்க கல்லூரியான கீழைத்தேயக் கல்விக் கல்லூரியில் பண்டித மாணவ கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து பேருரை வழங்கி எம்மோடிருந்து உறவு பாராட்டினார். இவர் உரைகள் இன்னும் பலவாக விரிந்து தொடரும் என்றெல்லாம் எண்ணியது கனவாகி விடும் என்றோ, அப்பேருரையே இவரது கடைசி மேடைப்பேச்சாகவும் இருக்கும் என்றோ, நாம் யாரும் அன்று நினைத்துக்கூடபார்க்கவில்லை. அன்னார் நம்மைவிட்டு போனாலும், அவர் படைத்த காவியங்கள், ஐம்பெருங் காவியங்கள் போலக்காலத்தை வென்று வாழும் பெற்றியன.
பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் செயலாளர் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்
யாழ்ப்பாணம்.
& 46 شويقيجة Oles-200s

மனிதநேயன்
வான்முகி லிடைதவழும் மதிநிகர் முகமுடையான் ஞானமா ராசிரியர்க் காயதோருடைநடையான் ஆனநீறணிந்த நெற்றி யருட்கண்ணின் பார்வை யுள்ளான் தேனமு தெனுஞ்சொல் வாயான் திருமகன் சச்சிதானே.
ஆரியம் தமிழினோடு ஆங்கிலம் கற்ற மேதை பாரிய நூல்கள் செய்த பண்டிதன் பாவின் வேந்தன் மாரிபோல் செஞ்சொல் லாளன் மதித்திடு மன்த நேயன் பேரியல் மாவை யோடு தும்பளை வாழ்ந்து சென்றான்
புண்ணிய புகன் மிக்கான் போற்றுதற் குரிய னென்று எண்ணிய புலவ ரோடு இரும்பெரும் அறிஞர் வாழ்ந்த மண்ணிற்பத் திரிகை யெல்லாம் மதிப்பிடத்தானே யோர் நல் கண்ணியப் பொருளாய் நின்றான் கம்பன் சச்சி தானந்தனே,
பண்டிதர் பட்டம் பெற்று பலாலியா சிரிய கல்லூரி தொண்டிலே ஈடுபட்டு தோற்றுமா சிரியரைப் பயிற்றி எண்டிசை போற்ற வாழ்ந்தான் இனியபல் நூல்கள் செய்தான் கண்டதை அறிஞர் வாழ்த்த கடவுளின் பணியே என்பான்.
வன்னியிற் சென்று சென்று வாழ்ந்தமுன் னோர்கள் பற்றி மன்னிய பழமை சான்ற மதிப்பரும் பொருள்கள் ஆய்ந்து தன்னிக ரில்லா நூலாம் யாழ்ப்பெருங் காவியத்தை பொன்னென ஆய்ந்தெழுதி பொறித்துக் கால் பதித்தும் விட்டான்.
முதுபெரும் புலவர் கலாபூஷணம் ஆசிரியர் வை.க.சிற்றம்பலவனார்.
Ot-P5-2008 47 ஆவுந்தத்தேன்

Page 27
கவிதைகளே ஆன்மாவாப்
உச்சிமேற் கவிஞர் கொளும் சச்சிதா னந்தக் கவிஞ மெச்சியுனைப் பேசுவோர்க்கும் மேதைமை வேண்டுமையா பேதையேன் - பெருமைப்படுவதற்கு ஏதுமிலேன் - என்றாலும் ஆசையொன்று உள்ளிருந்து ஆட்டிப்படைப்பதனால் கூசுகின்ற உள்ளத்துடன் - உன் குறுங்காவிய மொன்றின் *குணம்” சொல்ல முயல்கின்றேன். உன் மனஓசை - பல இன ஓசையாய் விரிய தமிழ்க் காவியம் “கனம்” கண்டது தனக்கொரு மனம் கொண்டது
வற்றாத கவியூற்று வளம் சிலிர்க்கும் கற்பனைகள் கற்றோரை மற்றோரை கவர்ந்து தலை ஆட்ட வைக்கும் காவியக் கோகிலம் நீ கனகமணிச் சுரங்கம் நீ “வெல்லச்” சொல் வேறில்லா - வெல்லுஞ் சொல் வேறில்லா - உன் சொல்லே உயர் பொருளாய் அப்பொருளே தனிச் சுவையாய் அச்சுவையே இன் கவியாய் கவிதைகளே ஆன்மாவாய் உயிர்ப்பதனைப் பலர் உணர்வார் உன் செம்பாட்டுக் காவியங்கள் - தமிழ்ப் பண்பாட்டின் காரியங்கள் யாழ்ப்பாடி - யாழ்பாடி
ஆனந்தத்தேன் 48. Oq-es-2Od

யாழ்ப்பாணம் பெற்ற கதை பலர் அறிவார் சிலர் சொன்னார் நீ சொன்ன கதையோ நெஞ்சில் நிலைக்கிறது நினைவில் இனிக்கிறது
கண்டியின் மன்னன் அவன் களங்கள் பல கண்டவனாம் வெற்றித் திருமகன் - அவன் விலாசம் கேட்டு வந்தவனாம் அதனால் - வெற்றிமேல் வெற்றி என்பது அவனுடைய விர வரலாறு
அவன் கம்பீரத் தோற்றத்தை - உன் கவிதையிலே காண்கின்றேன்.
தலையோ நிமிர்ந்து தான் தனி வேந்தென செருக்கின் மிக்குச் சேவடி வணங்கும் மன்னர் பலரை வரிசையில் நோக்கும் கண்ணே போர்க்கனல் கக்குவ இன்னும் காலடி வீழ்ந்து கரங்குவித் திறைஞ்சும் மன்னரைப் பார்க்கும் ஒருகால் பின்னர்த் தன்னருகிருக்கும் இன்னுயிர்க் காதலி புன்னகை பூக்கும் இன்முகம் பார்க்கும்
(மனைவியின் முன்னே தம் மதிப்புயர்வது மன்னர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாம்) "
கீழே - புதுவென்றி யென்னும் மதுவுண்ட வீரர் மயிலனை யாரொடு வரிசையில் ஒரு பால் முத்துக் குவித்து முன் விழு வோரும் பொன்குவிப் போரும் புறம்பே ஒரு பால்
Ol-es-200s 49 ஆஆஆத்தேன்

Page 28
சிங்களர் ஒரு பால் சோனகர் ஒரு பால் இங்ங்ணம் இருந்த இறைவனைக் கான சொந்தமாய் யாழினை மட்டுமே கொண்ட அந்தகக் கலைஞன் ஆசைப்பட்டானாம் கண்ணற் றவனைக் காவலன் பார்க்க எண்ணுதல் இழுக்கு என்ற போதிலும் கானம் இசைக்க வந்தவன் என்பதால் கட்டிய திரைக்குப் பின் ஒட்டி இருந்து இசையைப் பருகிட இசைகிறான் அரசன்
வீர வேந்தனை விட்டுப் பிடிக்க விணைக் கலைஞன் விரும்பினான் போலும் வீரச் செயல்களை விரிவாய் அடுக்கி வெற்றிக் கணிகளை வியந்து பாடினான் போர்க்களத்தின் போக்கினைப் புகழ்ந்து மிடுக்கை - துடிப்பை - தடிப்பை எல்லாம் எடுப்பாய்ப் பாடினான்; எழுச்சியைக் கொடுத்தான்
முடிகளுருண்டன மதில்களுடைந்தன
முத்தொளிர் மாளிகைகள்
அடியொடதிர்ந்தன கொடிகள் முறிந்தன
அரச ரொழிந்தன ரால்
மேற்கிலொழிந்தனர் தெற்கிலொழிந்தனர்
மேதினி யுன்னதுவே
பார்க்கு மிடங்களில் எங்கனு முன் கொடி
பறைக ளொலித்தனவே
உணர்ச்சிப் பிழம்பாய் - அரசன் ஊக்கமும் உற்சாகமும் உந்தித்தள்ள மீண்டும் போர்செய்ய வேண்டும் உள்ளத்துடன் புறப்படு கின்றான் போர்க்களம் நோக்கி -
ஆவுந்தத்தேன் 50 Otas-2Pos

இந்த நிலையிலே -
சாதாரணன் அல்லாச் சாத்விகக் கவிப்பெரும யுத்தம் என்பது - உன் இரத்தத்தில் இல்லை - சண்டை என்பது உன் சக்திக்கு ஒவ்வாததால் உன்னுளே இருக்கும் சச்சிதானந்தச் சத்தியம் விழிக்க - வினைக் கலைஞன் விஷயத்தை மாற்றுகிறான் தந்திகளை மாற்றுகிறான் தன் கதியை மாற்றுகிறான் சந்தத்தை மாற்றுகிறான் சத்தத்தை மாற்றுகிறான் விணையினை வில்லாக்கிப் பாணங்களை எய்கிறான் ஆளைக் கொல்லாமல் ஆணவத்தைக் கொன்று அறங் காக்கும் பானங்கள் அருள் சுரக்கும் பானங்கள் ஆன்மாவை உசுப்பும் பானங்கள் -
புகழே பெரிதென் றெழுவாய் அரசே
புனலிற் குமிழியில் தறியாய் அரசே
மகளே புவியும் உனதே யென்பாய்
மண்ணும் உனையே சிரியா நிற்கும்
புழுதிப் பாயல் புரளும் அந்நாள்
பூனுைம் முடியும் புகழும் என்னாம்
கழுதும் நரியும் கழுகும் பேயும்
கரமும் சிரமும் தமதென் றடையும்
Pas-2Pos S1

Page 29
பால்வாய் வழியப் பச்சைச் சிறுவர்
பரியின் கீழே மிதிபட் டனரே
வேல்வாய் புகவும் தாய்மார் அருகே
வீதி புரண்டார் நீ காண்கிலையோ
கால்கள் அறுந்தும் கைகள் குறைந்தும்
கண்கள் இழந்தும் புண்கள் பிளந்தும்
வேல்கள் குடைந்தும் தலைகள் சரிந்தும்
வீரர் விழுந்தார் உன்கை யாலே
அரசே கொலைஞன் நீயே கொலைஞன்
மழுவார் கண்ணிர் சொல்கிறதுவே
உரைசால் நீதிப் படியே கோடி
உயிரைக் கொன்றார் கதியா துரையாய்
வெற்றி யெனுமோர் வெற்றுச் சொல்லால்
வேந்தே படுபா வங்கள் புரிந்தாய்
சற்றே சிந்திப் பாய் மன்னவனே
தண்டம் நினக்கு நீயே பகராய்
LTങ്ങിങ്കബr Lഞ്ഞuിഞ്ഞുങ്ങീ', பக்குவமாய்ச் செய்ய - கட்டிய திரையை வெட்டிப் பிளந்து கருத்துத் திரையின் இருளைக் கழித்து வெளியே வருகிறான் வேந்தர் வேந்தன் " நிதர்சனக் காட்சிகளை - நீதி நியாயத்தை - நிலைபேற்றின் அடிப்படையை நேருக்கு நேர் சொல்லி நெஞ்சிலே பதிய வைத்த அந்த நெஞ்சமலர்க் கண்ண்னை கட்டித் தழுவுகிறான் - கால் தொட்டு வணங்குகிறான் கைகூப்பித் தொழுகின்றான்
ஆனந்ஆத்தேன் 52 Pag-as-2PO's

சித்தம் திருத்தி மெத்த மகிழ்ந்தவன் முத்துக் குவியலையும் மத்த கஜங்களையும் யாழ்ப்பாண இராச்சியத்தையும் தானாகக் கொடுக்கின்றான்
சத்தியத்தின் காவலனே
சாத்வீகப் பாவலனே சச்சிதா னந்தக் கவிஞ மரபுக் கவிஞர்களுள் - ஒரு பிரபுக் கவிஞன் நீ - மின் பிரபைக் கவிஞன் நீ உன் யாழின் தந்திகள் நல் வாழ்வி ைவேதங்கள் வழிகாட்டும் மந்திரங்கள் சத்தியத்தைச் சேர்ந்தணைந்தால் நாடொன்று கிடைக்குமென்ற தத்துவத்தைத் தந்துள்ள சித்தன் நீ. வித்தகன் நீ சத்தியமாய் உன் பேர்தான் இத்தரையில் நின்றொலிக்கும்.
Ples-200s 53
“சிற்பி’ சிவ. சரவணபவன்
ஆனந்துத்தேன்

Page 30
BESTIGDL blaufdalib குளிர்வதனம் தேடுகிறேன்
மரவுவழித் தமிழ்ப் புலமை உரம் படிந்த ஓர் பக்கம், உயர்ந்து செழித்து உலகத்தை ஆளுகின்ற ஆங்கிலமும் உந்தன் அருகிருந்த தோர்பக்கம் ஆரியமும் உந்தன் அடிமடியில் எப்பொழுதும், நாவல், கவிதை சிறுகதைகள் கட்டுரைகள் ஆய்வுக்களங்கள் அனைத்திலும் உன் ஆளுமையை வேரோட விட்டு விழுதெறிந்து நம்ஈழ நாட்டின் பெருமைதனை நாட்டியதோர்
பேரறிஞர் V
வானியலும் தத்துவமும் உளவியலும் உந்தன் உதிரத்தின் ஒவ்வோர் அனுவினிலும் ஓடியதைக் கண்டு உவந்திருந்தேன் ‘ஐயா" எனஉனை நான் அன்புடனே தானழைப்பேன் *மெய்யோ இதைக் கேள்!” - என் மேனி புளகமுற உன்கவிதை ஊற்றை உடைப்பாய் என் முன்னாலே ஆறாய்ப் பிரவகிக்கும் அங்கங்கே கரைகடக்கும் என்னைச் சுழித்து வளைந்து வளைந்து ஓடும் *கண்டியோ” காணும் கணக்கவிஷயமதில் என்று புன்னகைப் பூவை உதிர்ப்பாய் உன் பொன்வாயால்
நின் கவிதைக் கற்கண்டை
மென்று சுவைத்து மேனியுளகமுறத்
தின்ற சிறுவன் நான்
நான் பிறக்கு முன்பே
ஆனந்ஆத்தேன் S4 Ot-es-2008

ஊற்றெடுத்த உன்பேனா நேற்றுவரை வற்றவில்லை நீண்டு பரந்தோடியது. என்றும் நான் தலைவணங்கும் ஏற்றமிகு பெரும் புலவ, தள்ள வயதிலுமே தளராத ஊக்கமுடன் எனக்கு ஆண்டனுபதென்று அறிந்துபல் ஆசிதர மெள்ள நடந்து என்னைவிடு தேடிவந்து உளமார வாழ்த்தியதை பெரும் பேறாய்க் கொண்டு பேணி நடந்தவன் நான்..... ፳ என்னைக் கானும் போதெல்லாம் கவிமழையை * கொட்டி நிற்பாய்; இக்கோடை வெயிலில் உன் குளிர்வதனம் தேடுகிறேன். ஐயா உன் ஆளுமையை ஆரிடம் நான் போய்க் காண்பேன்
பேராசிரியர் சி. சிவலிங்கராசா
தமிழ்த்துறைத் தலைவர், யாழ். பல்கலைக்கழகம்.
Ol-es-2POs 55 ஆவுத்ஆத்தேன்

Page 31
மனித வடிவில் வாழ்ந்ததோர் தெய்வம்
ஐயநீ பிரிந்தனை ஐயநீ பிரிந்தனை ஆற்றொனாத் துயரில் இங்கு நாம் தவிக்க ஐயநீ பிரிந்தனை ஐய நீ பிரிந்தனை எவ்விதம் பொறுப்போம் நின்னதாம் பிரிவை ஆசிரியர்க்கெல்லாம் அறிஞனும் நீயே மனித வடிவில் வாழ்ந்த தெய்வமே புனிதனே பிரிந்தனை எவ்விதம் பொறுப்போம் ஆங்கிலப் புலமையும் அருந்தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றனை ஏடுகள் தோறும் இன்தமிழ்க் கவிதை எழுதிச் சிறந்ததுன் வாழ்க்கையின்பாதை தேனில் விளைந்த சொல் தேர்ந்தே எடுத்து கற்பனை நறுமணம் அத்துடன் கலந்து தமிழின் மேன்மை விளங்கப் பாடிய “ஆனந்தத் தேன்’ என்னும் முதல் தொகுதி ஒன்றே போதும்நின் கவித்துவம் விளக்க
ஆசிரியத் தொழில் தனில்நீ ஈட்டிய சாதனை விளங்க ஞாலம் எங்கும் ஆயிரம் ஆயிரம் மாணவர் உளரே “தம்பி’ என்றே என்னை அழைக்கும் அன்பு வார்த்தையை என்செவி இழந்ததே குடும்ப பாசம் கொண்ட தலைவனாய் பிள்ளைப்பாசம் நிறைந்த தந்தையாய் ஊரார் அயலார் உலகோர் மதிக்கச் சீரொடு வாழ்ந்த அச் சிறப்பினை நினைக்கின்றேன் நினைதொறும் நினைதொறும் கண்ணிர் சிந்துமே.
புலவர் ம. பார்வதிநாதசிவம்
ஆனந்ஆத்தேன் 56 Palas-2Pos

உன்னதம்
பண்கொழிக்கும் தமிழ்க்கவிதை செவிகுளிர நிபாடக் கேட்டுக் கேட்டிம் மண்களித்து வந்ததரை நூற்றாண்டாய் இன்றதனுள் மாந்தி மாந்தி விண்களிக்க வாய்ப்பளித்து விரைந்தனையோ கவியரசே விம்மி விம்மி கண்கலங்கி நிற்கின்றோம் நின்கவிதை நடந்த தடம் நோக்கி நோக்கி
உன்னதம் நீ புனைந்தகவி உன்னதம் நீ நுழைந்த துறை ஒருவர்க் கெட்டா உன்னதம் நீ தொட்டவைகள், உன்னதமுன் சிந்தனைகள், ஊடு போய்ப் போய் உன்னதம்நீ விரித்த பொருள், உன்னதம் நீ வரித்தவைகள் ஒ ஓ ஐயா உன்னதமுன் பெருவாழ்வு கைத்தொழுதோம் குருநாத ஒப்பில்லா தோய்
வெற்றார வாரம் விடுத்த பெரும்புலவர் மற்றாரும் ஒப்பில்லா மாமணியே உன்றனக்கே உற்றோமே ஆனோம்; உனக்கே நாம் ஆட்செய்யப் பெற்றோம் பிறவிப் பெரும்பயனைப் பெற்றோமே.
கவிஞர் சோ. பத்மநாதன்
94.e5-2OPS 57 ஆனந்தத்தேன்

Page 32
கலியுக நாணி
எண்டிசைக் கலையும்தேர்ந்து இயைந்தபல் மொழியும் கற்றுப் பண்டிதர் பரம்பரைக்குப் பார்புகழ் தேடித் தந்தோன்
கல்வி நூல் உளநூல் கல்வி சொல்லிடும் முறை பயிற்றி நல்லபல் லாசார்க் கெல்லாம் நாயகமணியாய் நின்றோன்
வித்தகள் விபுலாநந்தர் வியன்பெரு யாழ்நூல் ஆக்க ஒத்தநல் லுழைப்புத் தந்த வேதி நூற்கணித மேதை
கம்பனே வந்தா னென்னக் கவிநயம் சொட்டச் சொட்டத் தம்பெரும் புலமையால் யாழ்க் காவியம் தந்த மேலோன்
தொல்காப்பியத்துள் தோய்ந்து தொன்னூலா மிலக்கணங்கள் வல்லனென் றுலகு போற்ற மஞ்சுகா சினியம் தந்தோன்
ஆனந்தத்தேன் என்கின்ற அற்புதக் கவிதை நூலால் தேனுந்தும் கவிதை யின்பம் தித்திக்கத் தந்த செம்மல்
சோதிடக் கலையும் மேலை வானியற் கலையும் தேர்ந்து சாதனை பலசெய் திட்ட தத்துவப் பெரும்பே ராசான்
கலியுக ஞானி யாகக் காண்பதற் கெளி யராக உலவிய சச்சி ஐயா உயர்கலை ஞானக் குன்றம்.
கலாபூஷணம், சைவப்புலவர் சு. செல்லத்துரை
ஆனந்தத்தேன் 58 Ot-et-2PPs

நற்றமிழ்நடை நாளி
அற்புதக் கவி ஆயிரம் ஆக்கிடும் அருமையான கவிஞன்; தமிழினை முற்றும் துய்த்துத் தெளிந்த ‘நெடுமுணி” முயன்று ஆய்ந்து நிமிர்ந்த பெருந்தகை, சிற்றறிவுள்ளோர் எள்ளும் உடை, சடை சிரிப்பு செய்கையோடு உலவிய நற்றமிழ் நடை ஞானி, எளியனாய் நமது முன் நடமாடிய பொக்கிஷம்.
ஆழ்ந்த கல்விப் புலமை, பலமொழி ஆற்றல், மற்றும் அசாத்திய ஞாபக ஆளுமை, பல தத்துவம் சாத்திரம் அழைந்த நெஞ்சம், அறிவுப் புதையலை தேடித் தேடி இறுதி வரையிலும் திரிந்த ஒளிவிழி, அனுபவச் சூளையில் காய்ந்து இறுகிக் கனிந்த உடல், இவை கரைந்து போனவோ. கால மழைதனில்?
சாகும்வேளை தமிழ்க்கவி பாடத் தன் சாம்பல் செந்தமிழ் மணக்கவும் வேண்டிய தாடி மேதையை எம்தலை முறை கண்ட தமிழ்ப் புலமையின் கடைசிக் கொழுந்தினை பாலமாகப் பழமை புதுமையைப் பார்த்திணைத்திட்ட “பண்டிதர். க. சச்சி தானந்தன்” என்ற திருவை இழந்தனம் வந்த வெற்றிடம் எப்படிப் போக்குவோம்?
த. ஜெயசீலன்
ot-et-200s. 59 ஆனந்தத்தேன்

Page 33
2) IifiantuIIIu uIIIif|II
எண்ணம் சொல் செயல்என்ற முன்றினாலும்
எமதருமைத் தமிழ்மகளைக் காக்க என்றே
மண்ணினிலே நீ செய்த பணிகள் இங்கு
மலர்கையிலே எமைவிட்டேன் பிரிந்து சென்றாய்
சாவினிலும் தமிழ்படித்துச் சாகும் ஆர்வம்
சாம்பலிலும் தமிழ்மணக்க வேகும் ஆசை
யாவையுமே உன்னோடு போன தையா
யாருள்ளார் உனக்கிணையாய் நாங்கள் சொல்ல
தங்குதடை ஏதுமின்றித் கவிதை சொல்லும் தரமான கவிஞன்நீ உள்ளத்துள்ளே
பொங்கியெழும் உணர்வுகளைப் புரியும் வண்ணம்
பொதிந்துதந்த ஆனந்தத் தேனும் நீயே
ஒருகாவியம் படைக்க முடியாதென்றே
உழல்வோரின் மத்தியிலே துணிந்து வந்து
இருகாவி யங்கள்நி செய்து தந்தாய்
இவையிரண்டும் போதுமுன்றன் மகிமைசொல்ல
நல்லதொரு சிறுகதைக்காய்த் தாகம் கொண்ட
நம்தமிழுக்கு நீதந்தாய் “தண்ணீர்த் தாகம்’
எல்லோரும் பாராட்டும் “அன்ன பூர்ணி”
என்கின்ற நாவலையும் நீயே தந்தாய்
தொல்காப்பி யர்முதலாம் நூலோர் சொன்ன
தொன்மையளம் இலக்கணத்தைப் புரிந்துகொண்டு
நல்லதொரு மஞ்சுகா சினியம் தந்தாய்
நாம் எளிதாய் இலக்கணத்தை அறிந்து கொண்டோம்.
ஆவுந்தத்தேன் 60 PQ-les-2PPs

கற்கையிலே கசடறவே கற்றுக் கொண்டு
கற்பித்தற் பணியினையும் நீமேற் கொண்டாய்
பெற்றோர்பே றுன்னிடத்திற் கற்றார்தானே
நானுமதில் ஒருதுளியைப் பெற்றுக் கொண்டேன்.
*சச்சி” எனும் உன் நாமம் நெஞ்சில் தோன்றின்
சடைமுடியும் தாடியும் நம் கண்ணில் ஆடும் நிச்சயமாய்ப் பண்டிதஉன் பணிகள் என்றும்
நிலைத்திருந்து தமிழ்மகளை வாழ வைக்கும்.
ம.பா.மகாலிங்கசிவம்
தமிழாப் வாழ்ந்தவனே!
காவிய அருவியில் நீராடி கற்பனைச் சோலையில் தலையுலர்த்தி செந்தமிழ்த் தென்றலில் இளைப்பாறி கற்பனைத் தேனைக் கவர்ந்து வந்து தீஞ்சுவைப் பாலும் அதில் சேர்த்து தித்திக்கும் வெல்லப் பாகுடனே தந்தாய் அமர கவிதையினை
முப்பால் உடலம் தளர்ந்தாலும் முச்சும் தமிழாய் வாழ்ந்தவனே போய்வா புகழின் உச்சிவரை போனாய் எங்கள் புண்ணியனே.
சகோதரி கணேசம்மா
MPs-2POs 61 Aalboth

Page 34
ஒருபாதைமூடும்போது
மெய்யிலே மாற்றம் ஐயாதான் மருந்து கையிலே காசில்லாத போதும் கடைசிவரை காத்தாய் பல்வகைப் பரீட்சை முதல் பா எழுதும் வரை சொல்ல முடியாதனவுள வெல்லலாம் என்று வாழ்வைக் கழித்தேன் சொல்ல முடியா சோகம் எல்லாமே வாட்டுது பொல்லாத வேலைகூட வெல்லலாம் என்றிருந்தேன் சொல்லில் எழுத சொன்னவை பல உள அடக்கி வாசிக்கின்றேன் முடங்கி இருப்பதால் அடுத்தது என்ன என்றபோது எடுத்துச் சொன்ன வார்த்தை ஏறி இருக்கு பசுமரத்தாணி போல “ஒரு பாதையை முடிய இறைவன் மறு பாதையைத் திறப்பான்”
ஆனந்ஆத்தேன் 62
- மகன் சிவா -
otes-2POs

வந்தநாள் முதலாய்.
நாட்டிற்கேர் கலங்கரை விளக்கம் என்றும்
நாமகளின் பேரருளால் ஞானம் பெற்ற பாட்டுக்கோர் பெரும்புலவன் என்றும் இந்தப்
பாரறியும் படித்தோரும் அறிவர் எங்கள் வீட்டுக்கு வந்தநாள் முதலாய் உங்கள்
மேதைமையைக் கணந்தோறும் உணரலானோம் ஏட்டுக்கும் வாழ்க்கைக்கும் இணைப்பைக் கண்டோம்
எளிமைக்குப் பண்புக்கும் ஒருவர் என்போம்
காவியங்கள் தந்தபெருங் கவிஞன் என்று
கணமேனும் முனைப்புமக்கு வந்த தில்லை ஒவியங்கள் பட்டுவதும் உளநூல் பற்றி
ஓயாது சிந்தித்தல் தெளிந்த வற்றைக் கூவியழைத் தெவருக்கும் சொல்லு கின்ற
குதுபாகலம் நின்னிடத்தன்றி எங்கு காண்போம் பாவியமன் திடீரெனவே அழைத்துப் போனான்
பண்டிதரே மிகவறுமைப் பட்டுப் போனோம்.
வை. ஜெப்பிரியா தும்பளை
Oles-2POs 63 AMAqabodh

Page 35
சாந்தமே உருவானவர்
ராகம் : வலஜி தாளம் : ஆதி
பல்லவி
சாந்தமே உருவானவர் - எங்கள் சச்சிதானந்தன்
அநுபல்லவி
பல்துறை ஆற்றலையும் தன்னுள்ளே கொண்டு வல்லவராய் உலகம் போற்றிட வாழந்தவர்
(சாந்தமே)
சரணங்கள்
எளிமையும் எழிலும் நிறைந்த தன் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலக் கனவுகளை தெளிவுடன் நிறைவேற்றி வளம்பல சேர்த்த களிதரும் ஆசானாய் யாவர்க்கும் காட்சிதந்து
(சாந்தமே)
பழமையும் புதுமையும் கலந்ததோர் நடையினை அழகுடன் கவிகளில் உலவிட வைத்தவர் கனவிலும் நனவிலும் தமிழுக்காய்த் தொண்டாற்றும் மனநிலையுடைய மாமனிதருள் ஒருவர்
(சாந்தமே)
சோதிடம் வானியல் ஆங்கிலம் கணிதம் உளவியல் விஞ்ஞானம் ஒன்றிய மெய்ஞ்ஞான அறிவுடன் விளங்கிய பரிவுடை அறிஞராய் நெறியுடை வாழ்வை உறுதியாய் நகர்த்திய
(சாந்தமே)
திருமதி நவமணி ராஜ்குமார்
ஆனந்தத்தேன் 64 Ples-200s

in the memory of Ayya, Grandfather
Ithink many including myselfsaw my grandfather as a flame at the center of our lives. His bright and inspiring presence kept those around him warm and enriched. His mind was like the very heart of the flame; you could never cease to be fascinated by how it leapt and danced with the smallest gusts of the winds of thought and how his dclicate but thorough curiosity fuelled the flame till the last of its days. What I know without any of the shadows of doubt is that a flame with such intensity cannot have left our presence without leaving sparks and fires roaringin our hearts, inspired.
He chose to spend his younger days studying the wonders of the heavens, Astronomy and the mysteries of the mind (Psychology) and I believe that in his time he saw that the two subjects sharing a far stonger bond than the difference between Man and the heavens Perhaps he saw the very skies in the eyes of every one of his students as he spent every ounce of energy and time revealing and parting to us the darkness and confusion of our views of the scientific and mathematical world with the light of his unique flame.
I have the last of my words to the man whose books ayya spent hours reading enjoying and studying words that were preserved for this very occasion and this very person in a sense of sweet irony. Goodbye ayya. It was a pleasure and honour to have shared the most impressionable of my years warmed and blessed by your presence and will forever be the richer for it.
"His life was gentle; and the elements
So mixed in him, that Nature might stand up And say to all the world, THIS WASAMAN”
William Shakespeare
Ca2AoEdSed AA 6ܢܐܙܢܬܘܐ
Ples-2PPs جھتے 0}^0حہe\ ஆனந்தத்தேன்

Page 36
Aiya enjoyed reading poetry. He was also an optimist. Hence chose to include this poem by Emily Dickinson.
Tie the strings to my life my lord
then I am ready to go
Just alook at the horses
Rapid that will do
Put me in on the firmest side
So I shall never fall
For we must ride to the judgment
and it's partly downhill
But never I mind the bridges
and never I mind the sea
Held fast in everlasting race
By my own choice and thee
Good-bye to the life I used to live
and the world I used to know
And kiss the hills for me just once
Now I am ready to go
He will remain in our hearts forever. To honor his legacy we shall remain optimistic and focused.
His loving grand daughter Shalini A. Yogendran.
ந்தத்தேன் 66. Me-200s

6NΠπbά க்குறிப்பு
půu : 1921.10.19
தந்தை தும்பளை கணபதிப்பிள்ளை
தாய் :மாவிட்டபுரம் தெய்வானைப்பிள்ளை
ஆரம்பக்கல்வி : காங்கேயன்துறை நடேஸ்வராக்கல்லூரி.
ரிடம் f ம்சோதிடமும்;சிவப்பிரகாசதேசிகளி p.e f சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குருக்களிடமும் சமஸ்கிருதக்கல்வியும்
இடைநிலைக் கல்வி பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மற்றும்
ஹாட்லிக்கல்லூரி (1936-37)
உயர்கல்வி பரமேஸ்வரக் கல்லூரி (1938 - 1940)
மதுரைப் பண்டிதர் பட்டம் - இலங்கை, இந்தியா - இருநாடுகளிலும்
cupairo Didis (1941.09.3O)
London Inter Science as
1948 - 45 : சுவாமி விபுலாந்தருக்கு ஆராய்ச்சித்துணைவர்
1946 j6hangib St. Mary's So assoofs abaffluj
1947 -1959 : உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர்
B.A. (Hons) Londong56yjp éßgDi’Lqi'ü Ut"Luib
otes-200s 67 ஆனந்ஆத்தேன்

Page 37
26.08.1949: திருமணம்
196O : பரமேஸ்வரக் கல்லூரியில் கணித ஆசிரியர்
Dip. in Education (London) 1960
1961: யாழ். இந்துக்கல்லூரி, தமிழாசிரியர்
1962 - 65 : யாழ். மத்திய கல்லூரி, கணித ஆசிரியர்
1965 - 1967 :அரசினர் பாடநூற்சபை, எழுத்தாளர்.
1967 - 1981 :பலாலி ஆசிரியர் கலாசாலை உளவியற் பேராசிரியர்
1978 : M. Phil in Psychology (London)
2OO1 : கலாநிதிப்பட்டம் (பாழ். பல்கலைக்கழகம்
21.03.2008: LD60p6.
ஆனந்தத்தேன் 68 Ples-2POs

எழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
1
O
ஆனந்தத்தேன்(கவிதிை 1955
தியாக மாமலை வரலாறு (1959)
யாழ்ப்பாணக் காவியம் (998)
தமிழர் யாழியல் - ஆராய்ச்சி(1997)
மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2OO)
Fundamentals of Tamil Prosody (2002)
இலங்கைக் காவியம்: பருவப் பாலியர் படும்பாடு (2002)
மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு (2003)
9. எடுத்த மலர்களும் கொடுத்தமாலையும் - கவிதை (2004)
1O. S.J.V. Chelvanayaham (In Print)
கட்டுரை,கவிதைகள்.
தமிழன் (மதுர்ை), சக்தி, ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்,
ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழுநாவல் - (1942,
Ceylon Daily News&sod 6T6fugi) as GB6top,
யாழ். பல்கலைக்கழகவெள்ளிவிழாவின்போதுசமர்ப்பித்தவானியல் (ஆராய்ச்சி),
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள் (1989),
கலாநிதி கு. சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல் (1990),
யாழ். பல்கலைக்கழககத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (199)
முதலிய எண்ணிறந்தவை.
Ples-200s 69 ஆனந்தத்தேன்

Page 38
பெற்ற விருதுகள்
1. சாகித்தியரத்ந - இலங்கையில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் அதியுயர்
விருது (1999 h
சம்பந்தன் விருது (200)
வட- கீழ் மாகாண ஆளுநர் விருது (2003) தந்தை செல்வா நினைவு விருது (2004) இலங்கை இலக்கியப் பேரவைவ விருது (2004) கலாகீர்த்தி (2005) தேசிய விருது இவைதவிர, கவிதைக்காக தேசியமட்டத்திலும் மாகாணமட்டத்திலும்பலமுறை பரிசு பெற்றவர்.
குடும்பம்
மனைவி கந்தையா பரமேஸ்வரி
மக்கள்
ரவிந்திரநாதன் சாருகாசினி மஞ்சுகாசினி அமரர் கணநாதன் பத்மாசனி சிவநாதன் குகநாதன்
பேரப்பிள்ளைகள்:
சாலினி சசிவர்ணன்
SRܟ݂ܝܙܟܣܟ
ஆவுந்தத்தேன் 70 Ples-200s

நன்றி
* எங்கள் குலவிளக்கு நோயுற்று யாழ் மருத்துவமனையிலிருந்தபோது,
அவரைக் கவனித்த மருத்துவர்கள், தாதியர்க்கும் -
* அவர் மறைந்தபோது, நேரில்வந்து இறுதிச்சடங்குகளிற் கலந்து கொண்டும், தொலைபேசிமூலமும் கடிதமூலமும் தொடர்புகொண்டு எம் துயரைப் பகிர்ந்தோருக்கும் -
* பத்திரிகைகள் மூலம் அஞ்சலிக்கவிதை, கட்டுரை வெளியிட்போருக்கும்
* அஞ்சலிக் கூட்டங்கள் நடத்திய அமைப்புகளுக்கும்
来
இந்நினைவோடைக்கு நினைவுக் கட்டுரைகள், பாக்கள் எழுதி உதவிய அறிஞர்கள், மாணவர்களுக்கும் -
* இதனைத் தொகுத்த கவிஞர் சோ. பத்மநாதன், ந. ஞானசூரியர்
ஆகியோருக்கும் -
* அழகுற இதை அச்சேற்றிய ADRA நிறுவனத்தினருக்கும்
எமது இதயங்கனித்தநன்றி உரியது.
ம்பத்தினர் பிராமண வீதி, குடும்பத் தும்பளை, பருத்தித் O4.O.5.2OO8.

Page 39


Page 40


Page 41
இர
உன்னைச் சுமந்தேன் மனத்தி
- -- ܒ -- ܒ -
 

WEFAN DIE ITALI MA DE TF TG2145 GOZE.
ா