கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாலடியார் பாடல்கள் சில (அழகையா இராசம்மா அந்தியேட்டிதின வெளியீடு)

Page 1
931 நீர்கொழு இர அழகையா
5 [ |Pk?
அந்தியேட்டிதின
 
 


Page 2

எம்மை எல்லாம் பெற்று எடுத்து இம் மண்ணில் நாம் சிறந்து ஓங்க கல்வியுடன் அன்பையும் கலந்தூட்டி நல்வழிப் பருத்திய எம் அன்புத் GB ui 60 I Liò sÐI LID LT ir SÐI Up GOD 36 uLI IT SD UT IT JF IĎ LIDIT அவர்களின் மலர்ப் பாதங்களில் இம் மலரை அன்புடனும் , பக்தியுடனும் அஞ்சலிக்கு
காணிக்கையாக அர்ய்பணிக்கின்றோம்.
நன்றி
r ફ0, స్టీ R RSFSR تحديكتملتسلل مثل الكنيسة

Page 3

Ի- , *ჯ313 1
---- بنی*
驼子 l
O ခိးန္ဒ 22းဂ?း 05 š9HIDUŤ
õp6)BJ 6äbD
محتی۔

Page 4

ஆசிச் செய்தி
காதலாகி கண்ணிர் மல்கும் இறைகாலம் போய் மண்ணில் மனிதருக்காக கண்ணிர் சிந்தும் மனிதயுகம் இது. மாண்டவர்கள் மீண்டும் வரமுடியாத ஆண்டவ நியதி. அன்புப்பாசமும், நேசமும் கொண்ட அழகையா இராசம்மா இறைபதம் அடைந்தது குடும்பத்திற்கு பேரிழப்பரும்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த இராசம்மா வானுலகத்தில் ஒரு தெய்வமாக வைக்கப்படுவார் என்பது உண்மை. ஆலயத்திலே அவரின் பக்தியும், அன்பும் அமைதியானது, துயரச்செய்தி கேட்டுமனம் வருந்தி இறைபதம் அடைய ஆண்டவரை ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.
கு. குகேஸ்வரக் குருக்கள் பிரதம குருக்கள் பிள்ளையார் கோவில்
நீர்கொழும்பு

Page 5
滋ಪ್ರೆ? 6. స్ట్
ஆசிச் செய்தி,
பூனி முத்துமாரியம்மன் கோவில் 104, கடற்கரை வீதி, நீர்கொழும்பு
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
அழகையா இராசம்மா இன்று எம்மை விட்டுப் பிரிந்து ஒருமாதம் ஆனாலும், அவர் எம் கண்முன் நிற்பது போல்தான் புலப்படுகின்றது. இராசம்மா இன்று நேற்றல்ல சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே எம் ஆலயத்திற்கு தன் கணவருடன் மூன்று நேரப் பூசைகளில் ஒன்றையாவது காணவேண்டும் என்ற எண்ணத்துடன் துவிச்சக்கர வண்டியில் வருவார்கள். வரும்போது முருகனுக்குப் பிடித்த செவ்வரத்தம்பூ கொண்டு வந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து, கர்ப்பூர தரிசனம் செய்தபின்தான் மற்றைய தெய்வங்களை வணங்குவார்.
ஆகவே அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி: ஓம் சாந்தி!!!
கு. ஜெகதீஸ்வரக் குருக்கள் பிரதம குருக்கள் பூரீ முத்துமாரியம்மன் கோவில் நீர்கொழும்பு
ീ
 

அன்பின் இலக்கணம்
செக்கச் சிவந்த செம்மண், கண்ணாடி போன்ற முத்துத்தெறிக்கும் நிலக்கீழ் நீர்வளம். எங்கும் பச்சைப் பசேலென பயிர்களின் கம்பளவிரிப்பு. மதமதவென வளர்ந்திருக்கும் வாழைத் தோட்டங்கள். அவற்றின் தாங்க முடியாத குலைகள். வருவேரை தலை குனிந்து வரவேற்கும் பாங்காங்க. ஆலயங்கள் செறிந்த ஊர். பிரசித்தி பெற்ற முருகமூர்த்தி ஆலயம். அவற்றிலிருந்தெழும் நேரந்தவறா மணி ஓசை, ஒழுங்கு முறைப்படி நடைபெறும் நித்திய பூசை வழிபாடு. இவற்றோடு ஊருக்கு இன்னும் மெருகு சேர்க்கவென சுழன்று வழுக்கி ஓடும் வழுக்கியாறு. இவை சண்டிலிப்பாய் மண்ணின் வரலாற்றுத் தோற்றத் தடங்கள். ஆன்மீகப்பற்று, குடும்பப்பற்று, சமுதாயப்பற்றுக் கொண்டு வாழும் சண்டிலிப்பாய் மக்களின் தனிச்சிறப்பாக, அவை யாழ் மண்ணுக்குப் புகழ் சேர்க்கின்றன.
இவ்வகை சிறப்பு மிக்க சண்டிலிப்பாய் ஊரினை அமரர் திருமதி அழகையா இராசம்மா பிறப்பிடமாகக் கொண்டவர். அவ்வூரின் கண் ஆயிரத்தித்தொழாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். ஊருக்குரிய பண்பாட்டு விழுமியங்களினூடாக வளர்ந்தவர். உரிய வயதை அடைந்ததும் மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கந்தசாமி அழக்ையா அவர்களை தன் கண்ட தெய்வமாகக் கரம்பற்றி நல்லறம் மிக்க இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்.
இவ்வாழ்க்கையின் பலாபலனாக குமாரர்களான சிவகுமார், சிறீகுமரன், ஜெயகுமார் என்ற மும்மூர்த்திகளை உலகுக்கு ஈந்து தந்தனர். இவர்கள் மூவரும் கல்விகற்று பல்துறைகளிஜல் வேரூன்றி, பெரும் பணியாற்றும் ஆல விருட்சங்களாகி, மண்ணுக்கு நிழல் தரும் குணக்குன்றுகளாய் மிளிர்கின்றனர்.
ஒரு தகப்பன் தனது பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய முதற்கடமை தனது பிள்ளைகளின் தாயை நேசிப்பது. ஒரு தாய் தனது குடும்பத்திற்குச் செய்யக் கூடிய முழுக்கடமை தனது கணவனையும் பிள்ளைகளையும் நேசிப்பது.
அங்கு தான் ஓர் ஆரோக்கியமான சமுதாயம் முளை விடுகின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, தெய்வபாசம், குடும்பப் பாசம், தாயப்பாசம்,
ဇ္ဇိန္တိနွံ వస్త్రీ ಶ್ದಿ

Page 6
స్టో
சமுதாயப்பாசம், மானிடநேயப் பாசம், இவற்றுடன் கூடிய ஒழுங்கமைப்பில் ஒரு குடும்பம் உருவாகும் போதுதான் அதன் வெளியீடும் பலாபலன்களும் குடும்பத்துக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையிலான நற்பிரசைகளை மண்ணுக்குத் தரமுடியும்.
சித்த ஆயூர் வேத வைத்தியரான பொன்னம்பலத்தார் தன்னை நாடிவரும் நோயாளிகளின் நோய் தீர்த்து ஊரின் கண் புகழ் பூத்து விளங்குங்கால் அவருக்குப் புத்தியாகப் பிறந்த மேற் கூறப்பட்ட குணாம்சங்களை தன்னகத்தே மானசீகமாகக் கைக்கொண்டு, அதீத தெய்வ நம்பிகையுடன், பாசம், அன்பு எனும் ஆன்மீக வட்டத்தினுள் தன்னைக் குடும்பத்துக்காய் அர்ப்பணம் செய்து ஒரு முன்னுதாரண தாயாகத் தன்னை இனங்காட்டி அமரராகி விட்ட திருமதி இராசம்மா அவர்கள் சுற்றம் எனக் கொண்ட யாவருக்கும் அன்பின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர்.
வன்சொல்லை எப்பொழுதாவது அவர் வாய மறந்து உதிர்த்ததில்லை. மற்றவர்கள் மனம் நோகாதபடி பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சொந்தம், ட பந்தம், உற்றார், உறவினர் அவரிடம் காட்டிய ஈடுபாடும் அன்றும், அவர் அன்பினால் உறைந்தவர், அன்பின் ஊற்று என்பதைப் பறைசாற்றும் தனது பேரப் பிள்ளைகளிடம் காட்டும் பரிவும்மு இரக்கமும் மழழை பேசும் பேச்சும் சொல்லிமாளாது.
ஆலய வழிபாடுகளில் தொண்டு செய்வதில் அவர் கொண்டிருந்த பற்றும் - அளவு கடந்த ஆர்வமும் சைவ மரபு வழிகாத்தவர் என்பதனைப் பறைசாற்றும்.
தனது சொந்த மண்ணை விட்டு வாழ்ந்த மண்ணாம் நீர்கொழும்பு வந்து வசித்தபோதும் ஆலய வழிபாடுகளில் அவர் கொண்டிருந்த அயராத ஆர்வம் அவரது தெய்வநம்பிக்கையினை இச்சமுகத்திற்கு எடுத்துக்காட்டி நிற்கின்றது.
திருமதி அழகையா இராசம்மா அவர்கள் பக்கவாத வியாதியால் சரிந்த போதும், ஒரு மாத காலமாக , ‘சுயநினைவு இழந்து மரணப் படுக்கையில் சாய்ந்த போதும், வீட்டுக்கும், ஆஸ்பத்திரிக்கும், ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக கடந்த இரண்டு வருடமாக மற்றவர்கள் துணையின்றி தாய்க்காக, இரண்டாவது மகன் சிறிகுமரன் தனது கட்டுநாயக்காக விமானப்படை உத்தியோகஸ்தராக கடமையாற்றிய வேலையிலிருந்து ஓய்வு பெற்று, ஆற்றய தொண்டு, பணி, அவர் தாய் மேல் வைத்த அன்பினையும் வியக்க வைக்கின்றது.
నీ ஜீ

எமது கல்லூரியின் ஆசரியைகளில் ஒருவரான திருமதி. சிறிகுமரன்
இராஜேஸ்வரி அவர்கள் தான் எடுத்துக் கொண்ட கடமைப் பொறுப்புக்களை, வெற்றியீட்டும் வகையில் அதனைச் சாதித்து உறுதிப்படுத்தும் வரையில் ஆற்றும் பணி பாராட்டுதலுக்குரியதாகும். அவ்வாறான ஒருவரை மருமகளாகப் பெற்று, அவருடனே நீர்கொழும்பில் வசித்து வந்த காலத்தில், வயோதிபத்திலும் எல்லோருடனும் அவர் சொரிந்த அன்பு மழை, இனர மீட்டக் கூடியவை. நினைவில் கொள்ளக்கூடியவை. மறப்பதற்கரியவை.
தனயன் சிறிகுமரன் பார்த்த தொழிலினையே அவரது தந்தை அழகையா அவர்களும் ஆற்றினார்கள் என்பதனை இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமாகும். திருமதி இராசம்மா அவர்கள் பெற்றோருடன் சண்டிலிப்பாயில் வாழ்ந்த காலத்திலும் சரி, கணவர் அழகையாவுடன் நீர்கொழும்பில் வாழ்ந்த் காலத்திலும் சரி, அதன்பின்னர் பிள்ளைகளுடன் வாழ்ந்த காலத்திலும் சரி, அன்பின் இலக்கணமாய், அன்பின் திருவுருவாய் விளங்கினார்கள்.
அன்னாரது பிரிவால் துயருறும், திரு. திருமதி சிவகுமார், நளினி, பிள்ளைகள் கிருத்திகா, துர்க்கா, திரு. திருமதி சிறிகுமரன், இராஜேஸ்வரி, பிள்ளை கஜானன், பார்க்கவின், ஹரிவிஷ்ணு, திரு. திருமதி ஜெயகுமார், செல்வகுமாரி, பிள்ளைகள் தர்சிக்கா இவர்களுக்கும், அன்னாரது உற்றார், உறவினர்கள் அனைவருக்கும்,
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ? இம் மாநிலத்தீர் என்ற ஒளவையின் வாக்குக்கிணங்க எனது அனுதாபங்களைத் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து இவ்வன்பு நினைவு மடலை நிறைவு செய்கின்றேன்.
என்றும் அன்புடன்
ந. கணேசலிங்கம்
அதிபர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி

Page 7
பிரார்த்தனைப் பாடல்கள்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
தேவாரம்
வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே துஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
ളIബUr
கற்றவர் விழுங்குக் கற்பகக் கனியைக்
கரையிலா கருணைமாகடலை
மற்றவரறியா மாணிக்கமலையை
மதிப்பவர்மன மணிவிளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவிழிமிழலை விற்றிருந்த ட்
கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளங்
குளிரவென கண்குளிர்ந்தனவே
ဇွိုစ္ဆန္တိဇံ $్న ** မ္ဘိန္တိတ္ထိ
 
 
 

--- - -
ဇ္ဇိဒ္ဓိနုံ
}ଷ୍ଣୁଙ୍ଘି
திருப்பல்லாண்டு சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும்பெறாத வறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்
ஊருமுலகுங் கழறவுழறியுமை மணவாளனுக் காட் பாரும் விசும்பு மறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் திகழந்தார்
திருப்புகழ்
ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடுகுரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல்வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்

Page 8
நாலடியார் வரலாறு
வளம் கெழு திருவொடு வையகம் முழுவதும் உளம் குளிர் இன்பத்து இன்பம் உவப்ப, வண்பெருஞ் சிறப்பின் மாதவம் புரிந்தாங்கு எண்பெருங் குன்றத்து இருந்தவ முனிவரர் அறம்பொருள் இன்பம் வீடுஎனும் அவற்றின் திறம்பிறர் அறியும் திறத்தை நாடி, பண்புற எடுத்துப் பாங்குறப் பகர்ந்த வெண்பா இயல் எண்ணாயிரம். இவற்றுள் பார் எதிர்கொண்டு பரவி ஏத்த நீர்எதிர் வந்து, நிரைஅணி பெற்ற, மேல்நூல் தகையின் விதிமுறை பிழையா நானூறு, அவற்றின் நயம் தெரிந்து ஒதிய மதுமலர்த் தண்தார்ப் பதுமன் தெரிந்த ஐயம் இல் பொருண்மை அதிகாரம்தாம் மெய்ஆம் நலத்த எண்ணைந்து. அவற்றுள் ‘அற இயல் பதின்மூன்று; அரசர்க்கு உரிய பொருள்இயல் இருபத்து ஒருநான்கு; இன்பம் ஆன்ற வகையே மூன்று' - என மொழிந்தனன் சான்றோர் ஏத்தும் தருமத் தலைவனே. அறஇயல் இரு வகைத்து ஆம்; அவைதம்முள், தறவு ஏழ்; இல்லறம் இருமூன்று என்ப. பொருள் இயல் வகை ஏழ் புலப்படக் கிளப்பின் அரசியல் ஏழ் அதிகாரம் ஆகும்; நட்பியல் நான்கு அதிகாரம்; இன்பம் மூன்றே; துன்ப இயல் அதிகாரம் நான்கே; ஒன்றுே பொது இயல்; பகை இயல் கூறு அதிகாரம் நான்கே; பன்னெறி W கூறு அதிகாரம் ஒன்று எனக் கிளப்பர். கடை இன்ப வகைதான் கருதின் இருவகை; இன்ப துன்ப அதிகாரம் ஒன்றே; ஏனை இன்பம் கூறு அதிகாரம் இரண்டே.
 
 

3. iබු:Z s 器 முதலாவது அறத்துப்பால்
முதலாவது துறவற இயல் முதல் அதிகாரம் - செல்வம் நிலையாமை
1.அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
அறுசுவையாகிய உணவை, மனைவி அன்போடு பொருந்தி உண்பிக்க, முன் கவளத்தை நீக்கிப் பின் கவளத்தை உண்ட பெருஞ்செல்வரும், அச்செல்வம் அழிய, வறுமையுடையவராகி, வேறோர் இடத்தில் போய்க் கூழைப் பிச்சை யெடுப்பார்கள் என்றால், செல்வமாகிய ஒரு பொருள் நிலையாய் உள்ளதாக மனத்தில் வைத்து எண்ணத்தக்க தன்மை உடையதன்று.
2. துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடுநடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்
செல்வப்பொருள் நடுநிலைமை பொருந்த எத்தன்மை யாரிடத்தும் நிலை பெறாமல், வண்டியின் உருளையைப் போலக் கீழ் மேலாகவும் மேல் கீழாகவும் மாறி மாறி வரும். ஆதலால், குற்றமற்ற பெருஞ் செல்வம் ஒருவனுக்கு உண்டானால், அச்செல்வம் உண்டான நாள் தொடங்கி, எருமைக் கடாக்கள் உழுது நடந்ததனால் உண்டான உணவை, அவன் பலரோடும் கூடி உண்ணக் கடவன்.
.ே யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கிழ்ச
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
யானையினது பிடர் தாம் வீற்றிருத்தலால் விளக்கமாகத் தோன்றும்படி வெண்குடையின் நிழலில் நால்வகைச் சேனைகளையுடைய அரசராய்
th

Page 9
s Ext:(R.
வீதிகளில் உலாச் சென்றவர்களும், தீவினை கெடுப்பதினால், அச்சொல்வத்தை இழந்து, தாம் மணம் செய்து கொண்ட மனைவியைப் பகைவர் கவர்ந்து கொள்ள, நிலைகுலைந்து வறியராவர்.
4. நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின் வொன்றின வல்லே செயின் செய்க சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று
உயிர் உடம்போடு கூடி வாழ்கின்ற நாள்கள் செல்கின்றன, செல்கின்றன; யமன் கோபித்து விரைந்து வருகிறான், வருகிறான்; ஆதலால், நிலைபெற்றன நிலை பெற்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற செல்வப் பொருள்கள் எல்லாம் நிலைபெறா என்ற உண்மையை அறிந்து, உம்மால் செய்தற்குக் கூடிய அறங்களையெல்லாம் செய்ய நினைப்பீராயின், விரைந்து செய்க.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம்
யாதாயினும் ஒரு பொருள் தமது கையில் கிடைக்கப் பெற்றால், அப்பொருள் தம் மூப்புக் காலத்தில் பயன்படுவது என்று இறுகப் பிடித்து வைத்திராமல், இளமையிலேயே இல்லையென்று தம்மிடம் வந்து கேட்டோர்க்குக் கொடுத்தவர், நடுநிலைமையுள்ள, கொடுமையையுடைய யமன் தம்மைப் பாசத்தால் கட்டிக் கொண்டு போகின்ற பாலை நிலத்திலிருந்து தப்பிச் செல்வர்
.ே இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக் கூற்றம் குத்திதுயர்ந்தார் ஈங்கில்லை - ஆற்றப் பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத் தழிஇம்தழிஇம் தண்ணம் படும
மிகப் பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! உடலோடு கூடி வாழ அளவு செய்துள்ள நாள்கள் அவ்வளவில் தவறிப்
မ္ပိန္တိန်ု స్త్రీ 靈

போய்த் தம் அளவைக் கடவா. யமனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர் பிழைத்திருப்பவர் இவ்வுலகத்தில் இல்லை. நாளைக்கே இறந்த வாக்குரிய சாப்பறை ‘தழிஇம் தழீஇம்' என்னும் ஓசை உண்டாகும்படி அடிக்கப்படும். ஆதலால், விரைவாக அறம் செய்யுங்கள்.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துதும் நாளுண்ணும் - ஆற்ற அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதார் இல்.
யமன், உதித்தல் பொருந்திய சூரியனை அளக்கும் கருவியாகக் கொண்டு, உங்கள் வாழ்நாளாகிய தானியத்தை ஒவ்வொரு நாளும் உண்டு வரகின்றான். ஆதலால் மிகுதியாக அறங்களைச் செய்து, உயிர்களிடத்துக் கருணை யுடையீர் ஆகுக. அவ்வாறு ஆகாவிட்டால், எப்படிப்பட்டவரும் இவ்வுலகில் பிறந்தும் பிறவாதவர் போலவே ஆவர்.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழயெண்ணாத
புல்லறிவாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்டுமு வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கற்க கெட்டு விடும்
யாம் இப்பொழுது செல்வமுடையோம் என்று எண்ணிக் களித்து, தாம் இனிச் செல்லும் மறுமை யுலகத்தை நினையாத அற்ப புத்தியுடையவர்களது பெருஞ் செல்வம், இரவில் கரியமேகம் வாய் திறந்ததனால் உண்டாகிய மின்னலைப் போலச், சிறிது காலம் தோன்றி நின்று உடனே தான் இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோகும்.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும்
ஒருவன் நல்ல உணவுகளை உண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெறுகின்ற புகழைச் செய்து கொள்ளாமலும் பெறலரிய உறவினரது வறுமைத் துன்பத்தை நீக்காமலும், கைம்மாறு வேண்டாமலே
့်ရှ်§ సీ. y ಜ್ಞೆ کینتِ$

Page 10
鷲
இரப்பவர்க்கு கொடாமலும், பொருளைக் காத்திருப்பானாயின், ஐயோ! அவன் அப்பொருளை இழந்தான் என்று யாராலும் எண்ணப்படுவான்.
10. உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும் கெடா அதநல்லறமும் செய்யார் - கொடா அது வைத்திட்டினாரிழப்பர் வான்தோய் மலைநாட உயித்திட்டும தேனீக் கரி
ஆகாயத்தைத் தீண்டுகின்ற மலைநாட்டரசனே! நல்ல ஆடைகளை உடுக்காமலும், நல்ல உணவுகளை உண்ணாமலும், தம் உடம்பை வருத்தியும், எந்நாளும் பயன் அழியாத நல்ல அறங்களைச் செய்யாமலும், ஏழைகட்குக் கெடாமலும் பொருளைத் தேடி வைத்தவர்கள், அப்பொருளை ஒரு காலத்தில் இழந்து விடுவார்கள். அப்படி இழப்பதற்குத் தேனைத் தேடிக் கூட்டில் சேர்க்கும் தேனீக்களே சாட்சியம்.
4 ஆம் அதிகாரம் , அறன் வலியுறுத்தல்
அகத்தாரே வாழ்வாரென்று அண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார்
முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாகிய செல்வச் செருக்கால், பிற்பிறப்பில் தவத்தைச் செய்யாதவர்கள், மறு பிறப்பில் வறுமையடைந்து, இவ்வீட்டில் உள்ளவர்களே செல்வமுடையவர்கள் என்று எண்ணி, அவ்வீட்டின் சிறப்புக்களைத் தலையெடுத்துப் பார்த்து, பிச்சையெடுப்பதற்கு அதனுள்ளே நுழையத் தொடங்கி, வாயில் காவலாளர்களால் தடுக்கப்பட்டுத், தாம் உள்ளே நுழையப்பெறாதவர்களாய், தலைவாயிலைப் பிடித்துக்கொண்டு, தாம் மிகவும் வருத்தமுற்றிருப்பார்கள்.
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ, அறம்மறந்து போவாம் நாம் என்னாப் புலைநெஞ்சே - ஒவாது நின்றுளுற்றி வாழ்தி யெனினும்நின் வாழ்நாள்கள் சென்றன செய்வது உரை

அற்பது தன்மையையுடைய மனமே! நீ செல்வத்தை விரும்பி, ‘நாம் மேன்மேலும் செல்வமுடையவராவோம். அச்செல்வம் செலவாவதற்குக் காரணமாய் உள்ள அறத்தை விடக் கடவோம்’ என்றெண்ணி, சிறிதும் ஓய்வில்லாமல் தளராமல் முயன்று வாழ்வாயானாலும், உனது ஆயுள் நாட்கள் கழிந்துவிட்டன. இனி மறுமைக்கு நீ செய்வதைச் சொல்.
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய வுயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லைய தொன்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லா யிகந்தொருவு வார்
அறிவில்லாதவன், தான் முற்பிறப்பில் செய்த தீவினையின்
பயனாகிய துன்பம் வந்து நேர்ந்தால், அது ஊழ் வினைப்பயன் என்று எண்ணியிராமல் கடுமையாகப் பெரு மூச்சு விட்டு, மனம் வருந்துவான்; அத்துன்பத்தைப் பற்றி நினைத்து அது முற்பிறப்பின் தீவினையால் வந்ததென்று தெரிந்து கொள்பவர்களே, சம்சார துக்கத்தின் எல்லையை விட்டு நீங்குவார்கள்.
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெருமபயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு
பெறுதற்கு அரிய மக்கள் உடம்பை அடைந்த பயனால் பெரிய பயனாக அறத்தையும் மிகுதியாகவே மக்கள் செய்து வைத்துக்கொள்க. கரும்பு, தன்னைப் பக்குவமாக ஆலையில் வைத்து ஆட்டினவர்களுக்குத் தன்னிடத்தில் பொருந்திய சாற்றைக் கொடுப்பதுபுோல, மக்கள் உடம்பு மறுமைக்கு வேண்டிய வேண்டிய அறமாகிய பயனை மிகவும் கொடுத்துப் பின்பு அக்கரும்பினது சக்கைபோல ஒழியும்.
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார் வருந்தியுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவது இலர்.

Page 11
i. 52
榭了飞 – ইিঞ্জ
கரும்பை அதனம் பதம் அழிவதற்கு முன் காலத்திலேயே ஆலையில் வைத்து ஆட்டி, அதன் சாற்றாலாகிய வெல்லக் கட்டியைப் பெற்றவர், அக்கரம்பின் சக்கை நெருப்பில் பொருந்தி எரியும்பொழுது, இவ்விடத்தில் அதனைக் கண்டு துன்பப்படமாட்டார். அதுபோலவே, விரதம் முதலியவற்றால் வருத்தமுற்று உடம்பால் ஆகிய அறப்பயனைப் பெற்றவர், யமன் உயிரைக் கொண்டுபோதற்கு வரும் பொழுது வருந்துதல் இல்லை.
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
யமன் வருதல் இவ்விளமையிலோ, முதுமையிலோ, இடை நின்ற காலத்திலோ என்று எண்ணாமல், உயிரைக் கொண்டுபோக அவன் பின்னே வந்து மறைந்து நிற்கின்றான் என்று நினைத்து, பாவச் செய்கைகளைச் செய்யாமல் நீக்குங்கள். மேன்மையான அறிவுடையவர் கூறிய அறத்தை உங்களால் கூடியமட்டில் செய்யுங்கள்.
மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப்படும்
மக்கட் பிறப்பினால் உண்டாதற்குரிய சிறந்த பயன்களும், ஆராயும் இடத்து, எவ்வளவிலும் மிகவும் அநேகம் ஆதலினால், ஏழு தாதுக்களால் கூடிய உடலுக்கே ஒத்த நன்மைகளைச் செய்துகொண்டிராமல், அவ்வுடம்பைக் கொண்டு, மேல் உலக்கதில் இருந்து பேரின்பத்தை அனுபவிக்கும்படி, உயிர்க்குரிய நன்மையாகிய அறங்களைச் செய்ய வேண்டும்.
உறக்கும் துணைய்தோர் ஆலம்வித்து ஈண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும் தான்சிறிதாயினும் தக்கார்கைப்பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்
返 უჯაGჯნ“ 驚 వస్త్రీ 劉

蠶 ಜ್ಞ!
மிகச் சிறிய அளவுள்ளதாகிய ஆலமரத்தின் ஒருவிதை வளர்ந்து மிகுதியாக நிழலைத் தந்தாற்போல, ஒருவன் செய்யும் அறம் மிகச் சிறியதாய் இருந்தாலும், நல்லவர்களது யிைல் சேர்ந்தால், மிகப்பெரிய ஆகாயமும் சிறியது என்னும்படி, அறத்தின் மேலான பயனைப் பரப்பிவிடும்.
வைக்கலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்
நாள்தோறும் பொழுது கழிதலைத் தமது ஆயுள் நாளிலே கழிதலாக வைத்து, நாள் கழிதலின் உண்மை நிலையை அறியாதவர்கள், நாள்தோறும் நாள்கிழிதல் வந்து கொண்டேயிருக்க, அதனைக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அதன் உண்மையை அறிந்து அறம் செய்யாதவர்களாய் நாள்தோறும் ஆயுள் கழிதலை, மேன்மேல் இருக்கிறது என்றெண்ணி மகிழ்ச்சியடைவர்.
மான அருங்கலம் நீக்கியிரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீடித்து நிற்கும் எனின்
இழிவான தொழில்களினாலும் உணவு முதலியவற்றை கொடுத்து வளர்த்த இடத்தும், இந்த உடம்பு வலிமையைப் பெற்றுப் பல்லாண்டு நிலைபெற்று நிற்குமானால், மனமாகிய பெறுதற்கரிய அணியைவிட்டு, பிச்சையெடுத்தல் என்று சொல்லப்படும் இழிவைத் தரும் தொழிலினால் உயிர் வாழ்வேன்.
10 ஆம் அதிகாரம் . ஈகை
இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் ககவ

Page 12
3ší: §
மிக்க பொருள் இல்லாத நிலைமையிலும், தமக்குக் கூடிய மட்டில் செல்வம் உள்ள காலத்திற்போல், இரப்பவர், வருகைக்கு மிகவும் மகிழ்ந்து, சிறிதாகக் கொடுத்தலாகிய நற்செயலோடு கூடின நற்குணமுடைய மக்களுக்கு, சுவர்க்க உலகத்துக் கதவுகள் மூடப்பட்டிரா.
முன்னரே சாநாள் முனிதக்க முப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே பரவன்மின் பற்றமின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து
முன்னமே இருக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமையும் உள்ளன; அவையன்றியும், வலிமையைக் குலைக்கும் வியாதிகளும் உள்ளன. ஆதலால், கைப்பொருள் உண்டாயிருக்கும் காலத்தில், வீணாக மேலும் பொருள் தேடுதல் கருதி அலையாதிருங்கள்; உள்ள பொருளை இறுகப் பிடியாதிருங்கள்; யாவர்க்கும் சோறு முதலியவற்றைப் பகுத்துக் கொடுத்து மிகுதியை உண்ணுங்கள்; சிறிதும் ஒளியாதிருங்கள்.
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்
இரப்போர்க்குக் கொடுத்துத் தாம் அனுபவிப்பினும், செல்வம் நல்வினையால் வளரும் காலத்து வளரும். முற்பிறப்பில் செய்து குறையாக விட்ட அந்நல்வினை முடிந்த காலத்து, இறுக்கிப் பிடித்தாலும் நிலைபெறாமல் போய்விடும். இந்த உண்மையை அறியாதவர்கள், வறுமையால் தளர்ச்சியடைந்து தம்மைச் சேர்ந்தவரது துன்பத்தைப் போக்கார்.
இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயவை கொடுத்துண்முன் - நும்மைக் 65ITLIT 9 தவரென்பர் குண்டுநீர் வைத்து அடா அ அடுப்பினவர்
நாள்தோறும் இம்மியென்னும் அளவைக் கொண்ட அரிசியினது அளவுள்ள பொருளையாயினும் உங்களுக்குக் கொடுக்கக் கூடியவற்றைப்
$ #ಟ್ಲಿ
及经
怒笠 منیتی @娶

*త్త్వ్య
3)
岛 - ت*
பிறருக்குக் கொடுத்து மிகுதியை உண்ணுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால், ஆழமாகிய நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகத்தில் சமைக்காத
அடுப்புடைய சோற்றுப் பிச்சைக்கு வரும் விறயவர் உங்களைக் கொடுக்காத லோபிகள் என்று இகழ்வர்.
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டியுறும்
மேல் உலகத்துப் பயனையும் இவ்வுலகத்துப் பயனையும் நன்றாக ஆராய்ந்து, ஒருவனுக்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒருவன் தக்கபடியே கொடுக்கக் கடவன். அவ்வாறு கொடுத்தல், இல்லாமையால் இசையாமற் போனாலும், தான் பிறர் பால் யாசியாதித்தலால், கொடுத்தலால் வரம் உயர்வைக் காட்டிலும் இரு மடங்கு உயர்வை அடைவான்.
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க படுபனை அன்னது பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தல் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் இடுகபட்டுள் ஏற்றைப் பனை
பலரும் விரும்பும்படி வாழ்பவர், ஊர் நடுவில், மேடையினால் எல்லாப் பக்கமும் சூழ்ந்து கொள்ளுதலைப் பொருந்திய பயன் உண்டாகும் பெண் பனை மரங்களை யொப்பர். தம்முடைய குடும்பம் செல்வத்தால் மிக்க விடத்தும், பிறர்க்குக் கொடுத்து தாமும் உண்ணாத மக்கள் சுடுகாட்டில் உள்ள பயன்படாத ஆண் பனை மாங்களை ஒப்பர்.
பெயற்பால மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப என்னை உலகுய்யும் ஆறு.
மீன்களின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் தம் மணத்தால் விலக்குகின்ற, அலைமோதுகின்ற கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே! பெய்தலையுடைய கார்ப் பருவத்தில் மழை பெய்யாவிடினும், உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைக் காலத்தில் செய்யா விட்டாலும், உலகத்து உயிர்கள் பிழைக்கும் வழி யாதோ?
မ္ဘိဒ္ဓိ -9ܓܝ

Page 13
ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம்வரையார் ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறிவார்க்கு ஈதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து
வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த துறையை யுடையவனே! கொடுத்தலைச் செய்தால், கைம்மாறு கொடுக்க வல்லவர்க்குக் கொடுத்தல், கொழுத்த கடன் கொடுத்தல் என்னும் பெயரை யுடையது. ஆதலால், தம்மிடத்து ஏந்திய கையை இல்லையென மறுக்காமல், தம்மிடம் உள்ள யாதொன்றையாயினும், தாம் இன்னார்க்கு இன்னதைக் கொடுக்கலாமென்றும் கொடுக்கலாகாதென்றும் வரைந்து கொள்ளாதவராய், பிரதி யுபகாரம் செய்யமாட்டாத வறியவர்க்குக் கொடுப்பதே ஆண்மகனது 5L60LDuTib.
இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் அறப்பயன் யார்மட்டும் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பை நிறைந்து விடும்
ஒருவன் நமக்கு உள்ள பொருள் மிகச் சிறியது என்று எண்ணாமலும், இல்லையென்று சொல்லாமலும், எப்பொழுதும் அறமாகிய பயனை ஏற்போர் எல்லாரிடத்தும் எந்நாளும் செய்துவரக் கடவன். அப்படிச் செய்துவரின், அது முறைாயக வீடுகளின் வாயிலில் பிச்சைக்கு நுழைகின்ற சந்நியாசியின் பிச்சைப் பாத்திரத்தைப் போல, மெல்ல மெல்ல அறப்பயனைப் பூரணமாக்கும்.
கூப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய முவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல்
குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற கண்ணினையுடைய பேரிகையின் ஒலியை ஒரு காத தூரத்தில் இருப்பவர் கேட்பர். மேகம் இடியிடித்து முழங்கிய ஓசையை ஒரு யோசனை தூரத்தில் இருப்பவர் கேட்பர். பெரியோரால், ‘இவர், இல்லையென்று கேட்டவர்களுக்கும், கொடுத்தார்’ எனப்பட்ட சொல்லை அடுக்கடுக்காக அமைந்துள்ள மூன்று உலகத்தவரும் கேட்பர்.
ဇွိုစ့်ဇံ E.

இரண்டாவது பொருட்பால்
முதலாவது - அரசியல் 14 ஆம் அதிகாரம் - கல்வி
குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வியழகே யழகு.
மயிர் முடியின் அழகும், வளைவுள்ள ஆடையினது கரையின் அழகும், கலவைப் பூச்சின் அழகும், ஒருவனுக்கு அழகல்லவாம். மனத்தில் யாம் நற்குணமுடையோம் என்று கருதுகின்ற கோணுதல் இல்லாத தன்மையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு.
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாம்உளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து
கல்வியானது இப்பிறப்பின் பயனைத் தரும்; பிறர்க்குக் கொடுப்பதால், செல்வம் போலக் குறைவுபடாமல் மேன் மேல் வளரும்; g5lb60LD புகழால் நெடுந்துாரம் விளங்கச, தம்மை என்றும் உள்ளவராகச் செய்து, அழிதல் இல்லை. ஆதலால், கல்வி போல அறியாமையாகிய நோயை ஒழிக்கும் மருந்தை யாம் கண்டிலோம்.
களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத தலைநிலத்து வைக்கப்படும்.
ஒழுக்கங்களால் நிறைந்தோர், இழிவாகிய உவர் நிலத்தில் தோன்றிய உப்பை நல்ல நிலத்தில் தோன்றிய நெல்லினும் சிறந்ததாகக்

Page 14
கொள்வர். அதுபோல, இழிவான குலத்தில் பிறந்தவர்கள் ஆனாலும், நூல்களைக் கற்று அவற்றின் பொருளை அறிந்தவர்களை மேன்மையான இடத்தில் வைத்தலே தகுதி.
வைப்புழிக் கோட்படா வாய்த்தியின் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் சென்றின்வவ்வார் எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற
கல்விகள், வைக்கப்பட்ட இடத்தில் பிறரால் கவரப்படமாட்டார்; கொள்பவர் தக்கவராகக் கிடைத்து அவர்க்குக் கொடுத்தால் குறைதல் இல்லை; தம்மினும் மிகுந்த சிறப்புடைமையால், அரசர் கோபிப்பாராயின் அபகரிக்கமாட்டார். ஆதலால் அறிவுடைய ஒருவன் தன் மக்களுக்குத் தான் இறந்தபின் ஒழிந்து நிற்கும் பொருளாகத் தேடி வைக்கும் பொருள்கள் கல்விப்பொருள்களேயாம்; மற்றைச் செல்வப் பொருள்கள் அல்ல.
கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல் நினைக்கின் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலணு குருகின் தெரிந்து
கல்விகள் முடிவில்லன்; கற்பவருடைய வாழ்நாள்கள் சில. விரைவின்றி ஆலோசித்துப் பார்த்தால் அவ் வாழ் நாள் சிலவற்றுள்ளும் நோய்கள் பல உள. ஆதலால் நீரைப் பிரித்துவிட்டுப் பாலை மாத்திரம் உண்கிற அன்னப் பறவை போல, நூல்களின் தன்மைகளைப் பகுத்தறிந்து, தெளிவாக ஆராய்ச்சி செய்து, ஞான நூல்களைக் கற்பதற்குத் தகுதியுடைய நூல்களையே அறிவுடையவர்கள் படிப்பார்கள்.
தோணியியக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய் அவன்துணையா ஆறுபோய் அற்றோதுல் கற்ற மகன்துணையா நல்ல கொளல்
நூல்களைக் கற்றுணர்ந்தவன் துணையாகச் சிறந்து நூற் பொருள்களை அறிந்து கொள்ளுதல், மரக்கலத்தைச் செலுத்துபவன்,
பழமையான சாதிகளுள் இழிவான சாதியில் பிறந்தவன் என்று யாவரும்

2了t广
Cas
அறிந்திருந்தும், அவனை இகழ்ச்சி செய்யாதவர்களாய், அவனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடந்து போனாற் போன்ற தாம்.
தவலரும் தொல்கேள்வித்தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முள் குழிஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் மதி
தவறுதல் இல்லாத பழைய நூற்கேள்விகளையும், நல்லொழுக்கத்தையும் உடையவர்களும், பகைமைக் குணம் இல்லாதவர்களும், கூர்மையாகிய அறிவுடையவர்களுமாகிய கற்றவர்களுடைய கூட்டத்தில் கூடி மகிழ்ந்து உரையாடுதலினும் எமக்கு இன்பம் தருவதானால், பரந்த விண்ணுல கத்தில் வாசம் செய்கின்ற தேவர்களது நகரமாகிய அமராவதியைப் பார்க்க விரும்புவோம்.
கனைகடல் தண்சேர்ப்பகற்றறிந்தார் கேண்மை நுனியில் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரில்தின்றன்ன தகைத்தாரோ பண்பிலா ஈரம் இலாளர் தொடர்பு
ஒலிக்கின்ற கடலினது குளிர்ச்சியான துறையையுடையவனே! நல்ல நூல்களைப் படித்து, அவற்றின் பொருள்களை அறிந்தவர்களது நட்பு, கரும்பை நுனியிலிருந்து தின்றாற்போல, நாள் செல்லச் செல்ல விருப்பம் தருவதாகும். கற்றறிந்த குணம் இல்லா அன்பில்லாதவர்களுடைய நட்பு, அக்கரும்பை நுனியிலிருந்து தின்னுதலையொழித்து, அடியிலிருந்து தின்றாற் போன்ற தன்மையையுடையது. (வர வர இனிமை குறையும்)
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிற்ப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணிாக்குத் தான்பதாங்கு
பழமையாகிய சிறப்பினையுடைய விளக்கமாகிய நிறத்தையுடைய
பாதிரி மலரைச் சேர்ந்ததினாலே, புதிய ஓடு தன்னிடம் உள்ள குளிர்ந்த நீர்க்கும் தான் பெற்ற மணத்தைத் தந்தாற்போல், தாம் படியாதவர்களே
இ.
ଦ୍ବିର୍ଭୂ
分

Page 15
யானாலும் கற்றவர்களைச் சேர்ந்து நடந்தால், நல்ல அறிவு நாள் தோறும் உண்டாகப் பெறுவர்.
A s
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவ தெல்லாம - கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல்
அளவு அமைந்த கல்வியறிவால் ஞான நூல்களைக் கற்க விரும்பாமல், இவ்வுலகத்துக்கே பயன்படுகின்ற வேறு நூல்களைக் கற்பது, முழுமையும் கலகலவென்று கூவும் அளவேயல்லாமல், அவ்வுலக நூல் ஒதுவதைக் கொண்டு, பிறவித் துன்பங்களில் தடுமாறுதல் நீங்கும் தன்மையை அறிவார் இல்லை. -
17 ஆம் அதிகாரம் . பெரியாரைப் பிழையாமை
பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்த்தார் மாட்டும் வறுப்பன செய்யாமை வேண்டுத் - வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட பேர்க்குதல் யார்க்கும் அரிது
ஒலிக்கின்ற அருவிகளையுடைய அழகிய மலைநாட்டை யுடையானே! இவர் நாம் செய்யும் பிழையைப் பொறுத்து விடுவர் என்று நினைத்து, குற்றம் நீங்கிய பெரியோர்களிடத்தும் அவர் வெறுக்கத்தக்க கொடுஞ் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில், அவர் பொறாமல் வெறுப்பாராயின், அதன் பின்பு, அதனால் வரும் தீங்கை நீக்குதல், எவ்வகை மேம்பட்டார்க்கும் முடியாது.
பொன்னுே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னுேதலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமில் அறிவினவர்.
குற்றமற்ற இன்பம் பொருந்துதல் இல்லாத அறிவினையுடைய கீழ்மக்கள், பொன்னையே காணிக்கையாகக் கொண்டு கொடுத்தாலும்,
蟲 } ¢
澳@ §-ൾ RASS
 

淞了飞 উইঞ্জি
கூடுதற்கு அருமையாயினாரை, ஒன்றும் தாராமலே தாம் கூடும்படி பெற்றிருந்தும், ஐயோ! அக்காலத்தை நல்ல பயன் தருவதாகச் செய்வித்துக் கொள்ளாமல், வீண் காலமாகக் கழிப்பார்களே!
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்களால்மதிக்கற் பால - நயம் உணராக்
கையிறா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
தாழ்ந்த மதிப்பும் உயாந்த மதிப்பும் ஆகிய இவ்விரண்டும்,
பெருமையுடைய மேன்மக்களால் மதிக்கத்தக்க தன்மையை உடையனவாம். நற்குணத்தை அறியமாட்டாத நல்லொழுக்கத்தையும், அறியாத கீழ்மக்கள் செய்கின்ற அவமதிப்பையும், சிறப்பித்துப் புகழ்தலையும், தெளிந்தெடுத்த நூல்களை உணர்ந்த பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்தில் கொள்ள மாட்டார்கள்.
விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் அருமையுடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமையுடையார் செறின்
படம் விரிக்கும் ஒளியையுடைய பாம்பானது ஆழமாகிய வெடிப்பிடத்தில் உள்ளதாயினும், இடியினது மிக்க கோபமாகி ஒலி நெடுந்தூரத்தில் இருக்கவும், அதற்குத் தான் அஞ்சும். அதுபோல, பெருமைக் குணம் உடையவர்கள் கோபிப்பாராயின், அவர்களுக்குப் பிழை செய்தபிறர், பிறரால் அழித்தற்கும் புகுதற்கும் அரிய காவலிடத்தைச் சேர்ந்திருந்தாலும், அவர் கோபத்திற்குத் தப்பி உயிர் வாழ மாட்டார்கள்.
எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தமமை அரியரா நோக்கி அவன் அறியுமசான்றோர் பெரியராக் கொள்வது கோள்
எமது சிறப்பை நீவிர் அறிந்தீரல்லீர்; எம்மைப் போன்றவர் உலகத்தில் இல்லையென்று தம்மைத்தாமே சிறப்பித்துக் கொள்வது ஒரு பெருமையாகாது. அறங்களை அறிந்த மேன் மக்களால் தம்மை அருமையான குணங்களையுடைய வராகப் பார்த்துப் பெரியோர்களாக மதிக்கப்படுவதே ஒருவர்க்குப் பெருமையாகும்.

Page 16
நளிகடல் தண்சேர்ப்பநாள்நிழற் போல விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி அல்கு நிழற்போல் அகன்றகன்று ஒடுமே தொல்புகழாளர் தொடர்பு
பெரிய கடலின் குளிர்ச்சியாகிய துறையை யுடையவனே! கீழோரது
நட்பு. காலை நிழல் போல வரவரச் சுருங்கும். தொன்று தொட்டு வருகிற புகழையுடைய பெரியோரது சிநேகம் மாலை நிழல் போல மிகவும் வளர்ந்து நீளும்.
மன்னர் திருவும் மகளிர் எழில்நலழும்
துன்னியார் துய்ப்பா தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு
அரசர்களது செல்வத்தையும் செல்வத்தையும், பெண்களது குற்றமற்ற சுகத்தையும் அவரை நெருங்கியிருப்பவர் அனுபவிப்பார்கள்;
அவற்றிற்கு இன்னார் தகுதியுடையவர் என்பது வேண்டுவதில்லை. எதுபோல ,
எனில், தளிர்களைத் தம்மிடம் கொண்டு தாழ்ந்துள்ர்ந்த மரங்கள், தம்மிடம் நெருங்கி வந்தவர்களுக்கெல்லாம் வேறுபாடில்லாமல் ஒரு தன்மையாக இடமாம்.
தெரியத் தெரியும் தெரிவிலார் கானும் பிரியப் பெரும்படர் நோய் செய்யும் - பெரிய உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டும் கலவாமை கோடி யுறும்
பெரிய நீர் வற்றாத நெடிய கதியையுடை கடல் துறையை உடையவனே விளங்க ஆராயும் ஆராய்ச்சியில்லாதவரிடத்தும் ஒருவன் கூடிப்பிரிய அப்பிரிவு அவனுக்கு மிக்க துன்பமாகிய நோயை உண்டாக்கும். ஆதலால் எவரிடத்தும் சிநேகம் செய்யாமை பல மடங்கு நல்லது.
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ கொடாஅது ஒழிந்த பகலும் - உரைப்பின்
LuLT69learTid LuGasirųGODLuur as Goir
မ္ပိန္တိန်ု ఫీ 2

瀏 উইঞ্জি
படித்தற்குரிய நூல்களைப் படியாமல் கழிந்த நாட்களும், பெரியோர்களிடம் நூற்பொருள்களை அறியும் கொடுக்கக்கூடிய பொருள்களை இல்லையென்று தம்மிடம் வந்து கேட்பவர்களுக்குக் கொடாமல் கழிந்த நாட்களும், சொல்லுமிடத்து, நற்குண நற்செய்கையுடையாரிடத்து உண்டாகாவாம்.
பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தன்சேர்ந்தார்
அல்லல் களைப் எனின்
ஆராயுமிடத்து, பெரியோரது பெருமைக் குணமாவது வணங்கியிருத்
தலாம்: கல்வி முதலியவற்றுள் யாதாயினும் ஒன்றற்கு உரிமையுடையவர்களுக்கு உரிய குணமாவது மனமொழி மெய்கள் அடங்கியிருத்தலாம் செல்வர்களும், தம்மை அடுத்தவர்களது துன்பங்களை நீக்குவார்களாயின், செல்வமுடையவர்களே ஆவர்.
22 ஆம் அதிகாரம் - நட்பாராய்தல்
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ்ஞான்றும் குருத்தின் கரும்புதின் றற்றே - குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்தரோ என்றும் மதுரம் இலாளர் தொடர்பு
நூல்களின் உட்பொருளை அறிந்து, படித்துத் தெளிந்தவரோடு செய்யும் நட்பு எப்பொழுதும் நுனிக் கரும்பிலிருந்து அடிவரையில் கரும்பைக் கடித்துத் தின்றாற் போலும் (வரவர இனிமை மிகும்). எப்பொழுதும் இனிய தன்மையில்லாதவர்களது நட்பு, அக்கரும்பைக் குருத்திற்கு எதிரே செல்லும்படி அடியிலிருந்து நுனி வரையில் தின்றால் போன்ற தன்மையை யுடையது (வரவர இன்னாமை மிகும்.)
இற்பிறப்பு எண்ணியிடைதிரியார் என்பதோர் நல்புடை கொண்டமை யல்லது - பொன்கேழ் புனலொழுகப் புள்ளியும் பூங்குன்றநாட மனமறியப் பட்டதொன்று அன்று
SS زکی تح؟ §

Page 17
§9 ان. '.'
-స్ట్
பொன்னோடு கூடிய நல்ல நிறமுள்ள தண்ணிர் பெருக பறவைகள் பறந்து நீங்கும் அழகிய மலை நாட்டையுடையவனே, உயர் குடிப்பிறந்தவர், தமது உயர் குடிப்பிறப்பை நினைத்து, நடுவிலே தமது நற்குணத்திலிருந்து மாறுபடார் என்று சொல்லப்படுவதொரு நல்ல தன்மையைத் தாம் நட்புக் கொள்வதற்கு ஒரு நல்ல காரணமாகக் கொண்டது மாத்திரமேயல்லாமல், ஒருவருடைய மனநிலை மற்றொருவரால் அறியப்பட்டது என்பதொரு தன்மையது அன்று.
யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளலவேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையுே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்
யானையைப் போன்றவர்களது நட்பை விட்டு, நாயைப் போன்றவர்களது நட்பைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும் ஏன் எனில், யானை பலகால் பயின்றிருந்தும், தனக்கு உணவு கொடுத்துக் காக்கும் பாகனையே கொல்லும். நாய் தன்னை யுடையவன் தன் மேல் நினந்து எறிந்து ஆயுதம் தன் உடம்பில் தைத்திருக்கையிலும் அன்பின் குறியாக வாலை வளைத்து ஆட்டும்.
பலநாளும் பக்தர்கள் ஆயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் நீத்தார் எனக்கை விடலுண்டோ தம் நெஞ்சத்து யாத்தாரோடு யாத்த தொடர்பு
பல நாளும் தமது பக்கத்திலேயே இருப்பவராயினும், மனத்தில் பொருத்தமில்லாதவர்களுடன் சில நாளும் சேரமாட்டார் அறிவுடையோர்; தம் மனத்தில் அன்பால் கட்டப்பட்டவர்களுடன் கொண்ட நட்பு, அவர் பல காலமாய்த் தம்மைப் பிரிந்துள்ளார் என்று கருதி அறிவுடையோர் நீங்கி விடுதல் உலகத்தில் உண்டோ?
கோட்டுப்பூப்போல மலர்ந்துபின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்
。1 贞、 リ శ్రీక్షి ဒို့ဗွီ) శ్లో

CANCI
மரக்கிளைகளில் உண்டாகின்ற மலர்போல், முன்னே முக மலர்ச்சி பெற்று, பின்பு குவியாமல், முதலில் ஒருவரையொருவர் விரும்பியதே, முடிவுரையும் மாறாது விரும்புவது நண்பர் இருவர் நட்பைக் காத்தாலாகும். தோண்டப்பட்ட குளத்தில் பூத்த தாமரை முதலிய பூக்களைப் போல, முதலில் முகமலர்ச்சி காட்டி, பின்பு முகம் சுருங்குபவர்களை விரும்பி நாடுவாரும் நட்புக்கொள்வாரும் இல்லை.
கடையாயார் நட்பில் கமுகனையர் ஏனை இடையாயார் தொங்கின் அனையர் - தலையாயர் எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று
தொன்மையுடையார் தொடர்பு. (இட்டதே)
கடையானவர் நட்பினால் கமுக மரத்தை ஒப்பர்; மற்ற இடையானவர் தென்னை மரத்தை ஒப்பர்; தலையானவர்களாகிய, பழமை யென்னும் பெருங்குணத்தையுடைய மேன்மக்களது நட்பு, நினைத்தற்கும் அருமையான சிறப்பையுடைய பனை மரத்தையொத்து, நட்புச் செய்த அக் காலத்தில் நட்ட தன்மையதே.
கழுநீருள் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்
ஒருவன் மற்றவனுடைய நட்பைச் சிறப்புடையதாகக் கொள்ளின் அவனால் இடப்படுவது கழுநீரில் சமைத்த கறுத்த கீரையாயினும்ஈ அது அமுதம்போல இனிமையடையதாகும்; சிறந்த தாளித்த கறிகளோடும் துவையல்களோடும் கூடி நிறைந்த வெண்மையாகிய சோறேயானாலும், உள்ளன் பில்லாதவருடைய கையிலுள்ளதை உண்ணுதல் எட்டிக் காயைத் தின்பது போல இனிமையுடையதன்று.
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியர் ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் - நட்பென்னாம் சேய்த்தானம் சென்று கொளல்வேண்டும் செய்
வாய்க்கால் அனையார் தொடர்பு (வினைக்கும்)
நாயின் கால்களில் உள்ள சிறிய விரல்கள் போல, மிக அருகில் நெருங்கியுள்ளவராயினும், ஈயின் காலளவாகிலும் உதவி செய்யாதவர்களது
N حمسی

Page 18
நட்பு யாது பயனுடைத்தாம்? கழனியைப் பயிர் விளையும்படி செய்கின்ற வாய்க்காலை ஒத்தவரது நட்பு நெடுந்துாரத்தில் உள்ளதாயினும், அங்கப் போய் அந்த நட்பைக் கொள்ளுதல் வேண்டும்.
தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல் விளியா வருநோயின் நன்றால் - அளிய இதழ்கலின் கோறல் இனிதேமற்று இல்ல புகழ்தலின் வைதலே நன்று.
தெளிவான அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நடபைக் காட்டிலும் அவருடைய பகை நல்லது; மருந்து முதலியவற்றால் தீராமல் நீடித்து வருகிற வியாதியைக் காட்டிலும் இறத்தல் நல்லது; ஒருவனது உள்ளம் புண்படும் படி நிந்தித்தலைக் காட்டிலும் அவனைக் கொலை செய்தலே நல்லது; ஒருவனிடம் இல்லாத குணங்களைச் சொல்லிப் புகழ்தலைக் காட்டிலும், அவனுடைய தீக்குணத்திச் செயல்களை எடுத்துச்
சொல்வதே நல்லது
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு
பலரோடு சேர்ந்து பலநாள் கலந்து, தம் குணமும் அவர் குணமும் ஒத்து, உண்மையாகிய தகுதியுடையாரையே நட்புக் கொள்ளுதல் வேண்டும். கடித்து உயிரை யொழிக்கின்ற பாம்போடாயினும் நட்புச் செய்து,பின்பு அதனை விட்டு நீங்குதல் துன்பம் தருவதாகும்.
དེ་
ప్రళీ
ܨܓ="[ܪܐ
 

முன்றாவது
இன்ப இயல்
24 ஆம் அதிகாரம் . அறிவுடைமை
பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் கானாய் இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது அணங்கரும் துப்பின் அரா
நடுவு நிலைமையுடையவர், பகைவர்கள் தாழ்ந்த நிலைமையை அடைந் திருத்தலைப் பார்த்து, போர்க்குச் செல்ல நாணி, தாமே அப்பகைவரிடத்துப் போர் வேண்டிச் செல்லார். பிரிதொன்றால் துன்பமில்லாத வலியையுடைய இராகுவென்னும் பாம்பு, சந்திரனை, இளைய பிறைச் சந்திரனாகும் பொழுது, வருத்துதற்குச் சேராது
நளிகடல் தண்சேர்ப்பநல்கூர்ந்த மக்கட்கு அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர் மாத்திரையின்றி நடக்குமேல் வாழுமுர் கோத்திரம் கூறப்படும்
பெரிய கடலின் குளிர்ச்சியாகிய துறையையுடையவனே, வறுமையடைந் -துள்ள மக்களுக்கு, அழகு செய்யவல்ல ஆபரணமாவது அடங்கியிருத்தலாம். ஒருவன் அடங்குதல் இல்லாத தன்மையுடனே தன் வரம்பு கடந்து நடப்பானானால், அவன் வாழ்கின்ற ஊராரால் அவனது குலம் இழித்துச் சொல்லப்படும்.
எந்நிலத்து வித்திடினும் காஞ்சிராங்காய் தொங்காகா தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்
எத்தன்மையாகிய நிலத்தில் நட்டாலும், எட்டிமரத்தின் விதைகள் தென்னை மரங்களாக முளையா; தென்னாட்டில் பிறந்தவர்களும் அறிவுடைமையால் அறம் செய்து சுவர்க்கத்தில் புகுதலால், தனது
罗。》*,° ,
. بر . area a ဂျို့ဇ် 7 تھی۔, w இk
ܬ݁ܰܥܶܕܶ

Page 19
岛念
新
முயற்சியாலேயே மறுமைக்கதி உளதாகும் வடக்குத்திக்கிலும் நற்கதி பெறமுயலாது வீண்காலம் கழிப்பவர் பலர் உண்டு.
வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம் - ஆங்கே இனம்தீது எனினும் இயல்புடையோர் கேண்மை மனம்திதாம் பக்கம் அரிது
வாழைக்காய் வேப்பிலையினுள் இருந்து பழுத்தாலும் தனது இயற்கையாகிய இனிய சுவை சிறிதும் மாறாது. அது போலவே, இயற்கையாகிய நல்லறிவுடையார், தாம் சேர்ந்த இனம் தீயதாயினும், அவ்வினத்தினது நட்பினால் தம்முடைய மனம் கொடியதாகும் தன்மை இல்லை.
கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும் மலைசார்ந்தும் உப்பீண்டு உவரி பிறத்தலால் தத்தம் இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்
அலைவீசுகின்ற கடலினது குளிர்ச்சியாகிய துறையையுடையவனே. உப்புச் சுவையையுடைய கடலைச் சார்ந்தும் இன்சுவையுடைய நீர் உண்டாகும். இனிய அருவி நீரையுடைய மலையைச் சார்ந்தும் உப்பு நிறைந்த உவர் நீர் உண்டாகும். ஆதலால், மக்கள் என்று சொல்லப்படுபவர், குணம் செயல்களில் தங்கள் இனத்தாரை யொத்தவரல்லர்; தங்கள் மனத்தின் அறிவை யொத்தவர்.
பாரஅரைப் புன்னைப் படுகடல்தண் சேர்ப்ப ஓராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல மருஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் விரா அஆய்ச் செய்யாபமை நன்று
பருத்த அரையையுடைய புன்னை மரங்கள் பொருந்தின குளிர்ச்சியாகிய கடலின் துறையையுடையானே, எல்லாரிடத்தும் மிக்க நட்பைச் செய்து, அந்நட்பில் நிலைத்து நிற்கின்ற மனமுடையார், தம் நண்பரிடத்து ஒருமுறை பிரிதலையும் பின் கூடுதலையும் செய்யார். ஆதலால், பிரிதலையும் பின் கூடுதலையும் செய்யார். ஆதலால், ஒருவரோடு ஆராயாமல் மனம் கலந்து நட்புச் செய்யாமையே நல்லது.
A.
\
「へ。
o K-2RS

உணர வுணரும் உணர்வடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம் - புணரின் தெரியத் தெரியும் தெரிவலா தாரைப் பிரியம் பிரியுமாம் நோய்
எல்லா நூற்பொருள்களையும் அறியும்படி ஆராயும் கூர்மையாகிய அறிவுடையாரை நட்புச் செய்தால், பலவித இன்பங்களும் உண்டாகும். நூற்பொருள்கள் விளங்கும்படி ஆராய்ந்தறியும் அறிவில்லாதவரைத் தெரியாமல் சேர்ந்து விட்டால், அவரை விட்டு நீங்க, அவரால் உண்டாகும் பல துன்பங்களும் நீங்கும்.
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைக்கலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தனனைத்
தலையாகச் செய்வானும் தான்.
நல்ல நிலையில் தன்னை வைப்பவனும், தன்னை நல்ல நிலையிலிருந்து கலங்கச் செய்து, கீழ்ப்பட்ட நிலையில் சேர்க்கிறவனும், தான் நின்ற நிலையினும் மேலே மேலே உயர்ந்த நிலையில் தன்னை நிற்கச் செய்பவனும் தன்னைப் பலரினும் முதன்மையுள்ளவனாகச் செய்வானும் தானேயாவன்.
கரும வரிசையால் கல்லாதார் பின்னும் பெருமையுடையாரும் சேறல் - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப பேதைமையன்றது அறிவு
பெறுதற்கு அருமையான சிறப்புத் தன்மையுடைய அலைகள் மிக வொலிக்கின்ற கடலினது குளிர்ந்த துறையையுடையவனே, முன்செய்த வினைகளின் முறையால் கல்வியறிவில்லார் பின்னும், பேரறிவுடையாரும் சென்று உயிர் வாழ்தல் அறிவின்மையால் அன்று, அது அறிவுடைமையே
ujFT(5LD.
கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருசிலையே முட்டின்றி முன்றும் முடியுமேல் அஃதென்ப
uso 6LibD as GoD ിക്കുf(p5, Aጙ'፳ን፡å ÷ „ „1,l.
༤།

Page 20
ஐ- ག་
அறம் பொருள்களுக்குக் காரணமான தொழிகளையும் உடபட்டுச் செய்து, அவற்றால் உண்டாகும் இவ்வுலக இன்பங்களையும் அனுபவித்து, அறங்களையும் தகுதியுடையவர்களுக்கே செய்து, இம்மூன்று காரியங்களும் ஒரு பிறப்பிலேயே ஒருவனுக்குத் தடையில்லாமல் முடியுமாயின், அந் நிலைமை, பிற நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து, இலாபம் பெற்று, மீண்டு தனது பட்டினத்தையடைந்த மரக்கலத்தை யொக்கும் என்று சொல்வர் அறிவுடையோர்.
30 ஆம் அதிகாரம் - மானம்
திருமதுகையாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே
மானம் உடையார் மனம்
செல்வப் பொருளை வலிய துணையாகக் கொண்டு, நற்குணம் இல்லாதவர்கள் செய்கின்ற வரம்பு கடந்த நடத்தையைப் பார்த்த பொழுதும், மானத்தையுடையவர்களுடைய மனம், காற்றில் தீப்பொருந்துதலால் உண்டாகிய பெருந்தீப்போல, கொதிக்கும்.
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பாடு உரைப்பரோ தம்முடையார் - தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மையுடையார்க்கு உரையோரோ தாமுற்ற நோய்
தமது மானத்தைத் தாமே காக்கும் இயல்புடையார், பொருள் இல்லாமையால் உணவு கடையாமல் தம் உடம்பு எலும்பு மாத்திரமாகிச் சிதைவதாய் இருந்தாலும், நற்குணமில்லாத செல்வரது பின்னுே போய், தமது வருத்தத்தைக் கூறுவார்களோ? தமது வருத்தத்தை தாம் சொல்லாமை க்கு முன்னுே அறிந்து நீக்கவல்ல கூர்மையாகிய அறிவுடையவர்களுக்குத் தாம் அடைந்த துன்பத்தைக் கூறாதிருப்பாரோ?
யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின் காணாவே கற்பழியும் என்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்திவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு
မ္ပိS. } #ಟ್ಲಿ
ト
இ.
@e.
y
j
@ نتیج\

வறுமையுடைய யாம் செல்வர்க்கு உணவு தந்தால், எம் மனையாளை அவர்க்குக் காட்டுவோம். செல்வச் செருக்குடையவர்கள் எமக்கு உணவு தந்தால், தம் மனையானை யாம் பார்க்கவே அவள் கற்பு நிலை கெடுவாள் என்று கருதி, மனையினுள் கொண்டு போகக் கூசி, தலை வாயிலில் எம்மை வைத்துச் சோற்றையும் ஈவார். அதனால் செல்வருடைய நட்பை நீ மறந்திடுக.
இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின் நானம் கமழும் கதுப்பினாய் நன்றேகாண்
மானம் உடையார் மதிப்பு
கஸ்தூரிப் புழுகு மணக்கின்ற கூந்தலையுடையாளே! மானம் உள்ளவர்களது பெருமை, இப்பிறப்பிலும் புகழை விளைத்தலால் நல்லதாகும்; நல்லோர்கள் செல்லத்தக்க நியாய வழியையும் விட்டு நீங்காதது பற்றி, மறுமையிலும் சிறந்த புண்ணியப் பயன்களை உண்டாக்குதலால், மறுமைக்கும் நல்லதே. இதனை நீ அறி.
பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார் சாதல் ஒருநாள் ஒரு பொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று
மறுமைக்குத் தீவினையும், மற்றை இம்மைக்கு உலக நிந்தனையும் உண்டாகும்படி தீச்செயல்களை, நற்குண நற் செயற்கைகளால் நிறைந்த பெரியோர், அவற்றைச் செய்யாவிட்டால் தமக்கு மரணம் நேர்வதாயிருந்தாலும் செய்யமாட்டார்கள்; ஏனெனில், இறத்தல், இறக்கிற ஒரு நாளிலுே அவ்வொரு பொழுதில் மாத்திரமே அனுபவித்துக்கழிகின்ற துன்பமாகும். பாவமும் பழியும் உண்டாகும் அந்த இழிதொழில்கள் போல, உயிர் உள்ள அளவும் அழியும்படி அருமையாகிய மிக்க துன்பங்களைச் செய்தல் இல்லை.
மல்லல்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் செலவர் எனினும் கொடாதவர் - நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணனும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவ தார்
返 r

Page 21
பலவகை வளப்பங்களையுடைய பெரிய பூமியிலே, உயிர்
வாழ்பவர்கள் எல்லாருள்ளும், செல்வர்களாக இருந்தாலும், இல்லையென்று தம்மிடம் வந்து கேட்கும் வறிஞர்களுக்குக் கொடாதவர்கள் தரிதிரரே யாவர்; வறுமையை அடைந்த இடத்தும், பொருளுடையாரிடம் போய் ஒன்றை யாசியாதவர், பெருஞ்செல்வமுடைய பெருமுத்தரையர் என்னும் பிரபுவைப் போல்பவரே.
கடையெலாம் காய்பசியஞ்சுமற்று ஏனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய் தலையெலாம்
சொற்பழி அஞ்சி விடும்
மேற்புறத்தில், பரவிய வில்லைப்போல் வளைத்த புருலங்களையும், வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும் உடையவலளே, கடையாயினார் எல்லாரும், வருத்துகின்ற பசிக்குப் பயப்படுவார்கள்; அவரல்லாத இடையாயினார் எல்லாரும் துன்பத்திற்குப் பயப்படுவார்கள்; தலையினார் எல்லாரம் உலகத்தாருடைய சொல்லால் வருகின்ற பழிக்குப் பயப்படுவார்கள்.
நல்லர் பெரிதனியர் நல்கூர்ந்தார் என்றென்னிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன் உலையூதும் தீயேபோல் உன்கனலும் கொல்லோ தலையாய சான்றோர் மனம்
இவர் யாவர்க்கும் நல்லவர், மிகுதியாக யாவரிடத்தும் அன்புடையார், இப்பொழுது விறியராயினார் என்று கூறி அவமதித்து, செல்வர்கள், பிறரை அற்பப் பார்வையாகப் பார்க்கும்பொழுது,
உத்தமர்களாகிய பெரியோரது மனம் கரமான் உலைக்களத்தில் ஊதியெழுப்பும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும்.
நச்சியார்க்கு ஈயாமை நாணன்றுநாள்நாளும் அச்சத்தால் நானுதல் நாணன்றாம் - எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நான்
தம்மை விரும்பி வந்தவர்க்கு அவர் வேண்டிய பொருளைக் கொடா திருப்பது நாணமன்று; நாள்தோறும் அஞ்சவேண்டிய காரியங்களுக்கு அஞ்சுதலால் நாணுதலும் நாணமாகாது; செல்வக் குறைவையுடைய
蟲 $$$ స్త్రీ
ལུས་ལ་ཚན་པ། ب §

வறியவர்களாய் இருக்கையில் பொருளில் தம்மினும் மேலான செலவர்கள் தமக்குச் செய்த உதவியைப் பலர்க்கும் சொல்லி வெளிப்படுத்தாதிருப்பதே
breOOTLDITLD
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின்
காட்டுப் பசுவைக் கொன்ற, காட்டில் வசிக்கின்ற பெரும்புலி, தான் கொல்லும் பிராணிகளுள் தனது இடப் பக்கத்தில் விழுந்ததைத் தின்னாமல் விட்டுச் செல்லும். அதுபோ, சிறப்புள்ள பெரியோர், செல்வத்தையுடைய சுவர்க்க லோகத்தின் இடம் கைவசமாகக் கிடைப்பதனாலும், தமது மானம் கெட வருவதாயிருந்தால், அந்தச் சுவர்க்க இன்பத்தையும் விரும்பார்.
ஐந்தாவது பொது இயல் 32 ஆம் அதிகாரம் . அவையறிதல்
மெய்ஞ்ஞானக் கோட்டியுறம்வழி விட்டாங்கோர் அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கி அறத்துழாயக் கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறிவாளர்முன் சொல்ஞானம் சோரவிடல்
உண்மையான அறிவையுடைய சபையிலுள்ள புலவர் ஒக்கும் எனக் கொள்ளும் முறையை விட்டு, அறிவில்லாமைக்கு உரியதொரு வார்த்தையை எடுத்துச்சொல்லி அந்த அறிவில்லா வார்த்தையையுே அச் சபையில் மிகுதியாகப் பரப்பி, அற்பமான அறிவக்ை கொண்டு நடக்கின்ற பழிக்கப்படும் அறிவையுடையவர்களின் முன்பு, அறிவுடைய ஒருவன் தான் சொல்லுதற்குரிய அறிவாகிய பொருளை மெல்ல விட்டொழிக.
நாப்பாடம் சொல்லிநலமுணர்வார் போல்செறிக்கும் தீப்புலவற் சேரார் செறிவுடையார் - தீப்புலவன் கோட்டியுள் கன்றக் குடிபழிக்கும் அல்லாக்கால் தோள்புடைக் கொள்ளா எழும்

Page 22
பொருள் உணர்ச்சியில்லாமல், நாவல் பாடம் செய்த மூலத்தைச சொல்லி, அப்பாடத்தின் பொருளையுணர்ந்த வர்போல, பிறர்க்கு அப்பொருளை அறிவுறுத்துகின்ற கல்வியறிவில்லாதவன், சபையில் தோற்பானாயின், தன்னை வெற்றி கொண்டவரது குப்பிறப்பை பழித்துரைப்பான்; அது செய்யாவிடின், தோள்களைத் தட்டிக்கொண்டு போர்க்கு எழுவான். ஆதலால் அடக்கமுள்ள நல்ல புலவர்கள், அந்த இழிகுணமுடைய புலவனைச் சேரமாட்டார்கள்.
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார் - கற்ற செலவுரைக்கும் ஆறறியார் தோற்பது அறியார் பலவுரைக்கும் மாந்தர் பலர்
சொற்களாகிய முட்கோல்களைக் கொண்டு, தினவு கொண்டு வாதம் செய்ய எழுந்திருத்தலை விரும்புகின்றவர்களாய், பிறரது படித்த வன்மையையும் பேசுதல் முதலிய வற்றில் உள்ள வன்மையையும் தாம் அறிந்தவராய், தாம் கற்றறிந்தவைகளைப் பிறர் மனத்தில் புகும்படி சொல்லும் வழியை அறியாதவர்களாய் இன்னதற்கு இதைக் கூறின் தேல்வியடைவோம் என்பதையும் அறியாதவர்களாய், பழமொழிகளை வீணாகச் சொல்லுகிற மனிதர்கள் உலகத்தில் பலர் உளர்.
கற்றஉதூம இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை நல்லார் இடைப்புக்குநாணாது சொல்லித் தன் புல்லறிவு காட்டி விடும்
அறிவிலான், தான் படித்தது நசிறிதும் இல்லாமல் கறபிப்போர் கற்பித்த பாடத்தினால் ஒரு சூத்திரத்தின் மூல பாடத்தைப் பெற்றவன் ஆவான். பின் அச்சூத்திரத்தைக் குற்றமற்ற அறிவுடையாயா கூட்டத்தில் புகுந்து வெட்கப்படாமல் சொல்லி, தனது இழிவான அறிவை வெளிப்படுத்தி விடுவான்.
வென்றிக் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி உரைவித்தகம்எழுவார் காண்பவே கையுள் சுரைவித்துப் போலும்தம் பல்
懿 స్త్రీ

மிருகங்கள் போன்று அறிவுடையோர் கூறும் உண்மைப் பொருளை உணராமல், மிகக் கோபித்து எழுந்து நின்று, பிறரைத் தாம் வெல்வது காரணமாக, மனம் கொதிப்பவர்களோடு சேர்ந்து தமது சொல்வன்மையைக் காட்ட முயல்பவர் சுரைக்காயின் விதைகள் போன்ற தங்கள் பற்களைக் கையில் காண்பார்கள்.
பாடமே யோதிப் பயன்தெரிதல் தேற்றாத முடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடரும்கீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவுே மற்றவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து
மூலபாடம் ஒன்றையே படித்து, அப்பாடத்தின் பொருளை ஆராய்தலை யுணராத மூடர் கேட்பவர் கோபிக்கத்தக்க, குற்றமான சொற்களைச் சொல்லும் பொழுது, அறிவில்லாத புகழையுடைய பெரியோர்கள், அம்மூடர்களைப் பெற்ற தாய்மார்கள், பிள்ளைகளைப் பெற்ற பயனைப் பெற்றிலரே யென்று, அவர்களுக்காக மிகவும் இரக்கமுற்றுச் சும்மா நிற்பார்கள்.
பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிபட்டுக் கற்பவாக் கெல்லாம் எளியநூல் - மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம்போன்று யார்க்கும் அறிதற் கரிய பொருள்
நூலின் பொருள்கள், கொடுப்பவரைக் கொள்ளாமல, கிடைக்கிற பொருளைப் பெற்றுக் கொள்கின்ற விலைமகளிரின் தோள்கள்போல, படிக்கிற வழியிலேயிறங்கிப் படிக்கிறவர்கட்கெல்லாம் எளிதில் உணரப் படுவனவாம்; மாந்தளிரையொத்த மேனியையுடைய அவ்விலைமகளிரது உள்ளத்தின் நிலைமையைப் போல, கற்கும் துறையில் இறங்கிக் கல்லா தவர்க்கெல்லாம் அறிந்து கொள்ளுதற்கு அருமையாய் இரக்கின்றன.
புத்தகமே சாலத் தொகுத்தும் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து தேற்று புலவரும் வேறு
நூல்களையே மிகச் சேர்த்தும், அவற்றின் பொருளை உயராதவர், அவற்றைக் கொண்டு வந்து வீடு முழுவதும் நிறைத்தாலும், அந்நூல்களைப்

Page 23
瀏 స్టోన్ల
ಜ್ಞೆ * -جية
S.
பாதுகாக்கும் புலவர்களும் வேறே; அவற்றின் பொருளை ஆராய்ந்தறிந்து, பிறர்க்கு அறிவுறுத்துகின்ற புலவரும் வேறே யாவர்.
மொழிப்பகலம் நுட்பம்நூல் எச்சம்இந் நான்கின் கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்றநாட உரையாமோ நூலிற்கு நனகு
காட்டுப் பசுவின் கூட்டத்தைத் தம்மிடம் சேரச் செய்கிற, உயர்ந்த மலைகளையுடைய நாட்டை யுடையவனே! தொகுத்துரை, அகலவுரை, நுட்பவுரை, எச்சவுரை ஆகிய இந்நான்குரையாலும் ஆராய்ந்து, ஒரு நூலின் விரிவான பொருள்களை எடுத்துக்காட்டாதவர்களுடைய சொற்கள், ஒரு நூலுக்கு, அறிவுடையோரால் பழிக்கப்படுதல் இல்லாத சிறந்த வுரையாகுமோ?
இற்பிறப்பு இல்லார் எனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்கும் கரவியரோ - இறபிறந்த நல்லறிவாளார் றவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவது இல்
உயர் குடியில் பிறத்தல் இல்லாதவர் எவ்வளவு நூல்களைப் படித்தாலும், பிறருடைய சொற்களை இகழாமல் காத்தற்குரிய அடக்கம் முதலிய சாதனைகளை உடையவராவாரோ? உயர்குடியிற் பிறந்த குற்றமற்ற அறிவுடையோர், கற்றிந்த பெரியோர்கள் சொன்ன நூல்களை அறியாதவர்களுடைய அற்ப புத்தியைக் தாம் கவனித்து அறிவதும் இல்லை.
ஆறாவது - பகை இயல் 36 ஆம் அதிகாரம் . கயமை
ஆர்த்த அறிவ்னர் ஆண்டிளையர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்கும் - முத்தொறுTஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல் போத்தறார் புல்லறிவினார்
كي؟

கற்றல் கேட்டல்களாய நிரம்பிய அறிவினையுடையவர், வயதில் சிறியவராயிருப்பினும் தீப பலன்களில் பொறிகள் செல்லவொட்டாமல் தடுத்து, செய்தற்குரிய அறத்தை வழுவாமல் செய்து இவ்வாறு தம்மை அடங்கி-யொழுகச் செய்வர். அக்கற்றல் கேட்டல்களால் அறிவு நிரம்பாதவர் வயது முதிருந்தோறும் பயனில்லாமல் திரித்து, தீச்செய்கையுே மிகுந்து, கழுகுபோலக் குற்றத்திலிருந்து நீங்கார்.
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழுமபறுக்க கில்லாவாம் தேரை - வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது
நீர்வளமுள்ள பெரிய குளத்தில் தவளைகள் வாழ்ந்தாலும், எக்காலத்திலும், தம் உடலில் வழுக்குதலாகிய அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டாவாம். அதுபோல, தவறுதல் இல்லாத சிறப்புடைய, பொருள் வளமுள்ள பெரு நூல்களைக் கற்றாராயினும், நுட்பபுத்தி சிறிதும் இல்லாதவர், அந்நூல்களின் பொருள்களை ஆராய்ந்து துணியும் தன்மை பெறுதல் இல்லை.
கணமலை நன்னாட கண்இன்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக் குற்றம் எழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா
கூட்டமாகிய மலைகளைச் சார்ந்த நல்ல நாட்டையுடையவனே! புறத்தில் பிறர் ஒருவரது நற்குணத்தையும் எடுத்துச் சொல்வதற்கு நா எழுதல் அருமையாய் இருக்கும். அவ்வாறிருக்க, ஒருவரது எதிரில் நின்று கொண்டு, அவருடைய நற்குணங்கள் அழியும்படி குற்றங்களையே யெடுத்துப் பலர் அறியக் கூறுகின்ற அற்பபுத்தியையுடைய கீழோர்க்கு நாவானது எப்பொருளால் செய்யப் பட்டதோ?
கோடேந்து அகல்9ல்குல் பெண்டிர்தம் பெண்ணிர்மை சேடியர் புோலச் செயல் தேற்றார் - கூடிய புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணின்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்
பக்கங்கள் உயர்ந்து, அகன்ற அலகுலையுடைய குல மகளிர், தமது பெண்மைக்குரிய அலங்காரத்தைத் தம் பாங்கியர் தமக்குச் செய்தல்
徽 స్ట్
.A "م - ༢ གན་ ۔۔۔۔۔۔ ്. 3%-סי למימוש | ، ، روی هم

Page 24
పC !!!!?
&/
போலச் செய்து கொள்ளுதலை அறியார். வேசையர்கள் புதுநீர்ப் பெருக்குப் போலத் தமது பெண்மைக்குரிய அலங்காரத்தைச் செல்வர்களுக்குத் தாமே செய்து காட்டித் தம்மை நன்கு மதிக்கும் படி வெளிக்குக் காட்டி, ஆடவரோடு கலந்து, அவர் செல்வப் பொருளை முற்றும் பெற்றுப் பிரிந்து செல்வர்
தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா உனிநீரர் மாதோ கயவர் - அளிநீரார்க்கு என்னானும் செய்யார் எனைத்தானும் செய்யவே இன்னாங்கு செய்வார்ப் பெறின்
கீழ்மக்கள், பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதி இரங்கும் இனிய குணம் உடையார்க்கு யாதோர் உதவியும் செய்யார்; தமக்குத் துன்பம் செய்பவரைப் பெற்றால், அவர்கட்கு எவ்வளலு பேர் உதவியும் செய்வார்கள். ஆதலால், அவாகள் தளிரின் மேல் நின்றாலும், ஒருவர் தட்டித் தள்ளாமல் இறங்காத உளியின் தன்மையை உடையவராவர்.
மலைநலம் உள்ளும் குறவன் பயத்த வனைநிலம் உள்ளும் உழவன் சிறந்தொருவர் செய்நன்று உள்ளுவர் சான்றோர் கயம்தன்னை வைததை உள்ளி விடும்
குறவன், தனக்கு உறைவிடமாகிய மலையினது வளத்தை நினைத்தக் கொண்டிருப்பான். உழுது பயிர் செய்பவன், தனக்குப் பயனைத் தந்த, விளைகின்ற நிலத்தை நினைத்துக் கொண்டிருப்பான். கல்வி கேள்விகளால் நிறைந்து மேலாயினோர், தமக்குப் பிறர் செய்த உதவியைச் சிறப்பாக நினைத்து கொண்டிருப்பர். கீழ்மகன், பிறன் ஒருவன் தன்னைத் திட்யகதையே மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பான்
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி யெழுந்த பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதிதாயின் எழுநூறும் திதாய் விடும்
கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர், தமக்கு ஒர் உதவியைச் செய்தவர்க்கும், இடைவிடாமல் அவரிடம் தோன்றிய நூறு பிழைகளையும், முன் செய்த ஒரு நன்றியைக் கருதி பொறுத்துக் கொள்வர். கீழாயினோர்க்கு, ஒருவர் எழுநூறு உதவிகளைச் செய்து, பின் அவர் செய்யும் ஒரு செயல் தீயது ஆனால், அந்த எழுநூறு உதவிகளும் தீயனவாகவே தோன்றும்.
の
: Ճ -՞Վ -
ప్రస్తే,
Sk;

இர
ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - கோட்டை வயிரம் சொறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர் வேழம் ஆகுதல் இன்று
வாள்போலும் கண்களையுடையாளே! தன் தந்தங்களில் பூணைப் பூட்டினும், பன்றியானது போரில் கோபிக்கும் இயல்புள்ள யானையைப் போலப் போர்ச் செய்ய வல்லதாகுதல் இல்லை. அது போல, உயர்குடியிற் பிறந்தவர்கள் பொருள் இல்லாமையால் தளர்ச்சியுண்டான காலத்திலும் நல்ல காரியங்களை, மூடர்கள், பொருள் உடைமையால் உயர்ந்த நிலையில நின்ற காலத்திலும் செய்யமாட்டார்கள்.
இன்று ஆதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது. நின்று ஆதும் என்று நினைத்திருந்து - ஒன்றி உரையின மகிழ்துதம் உள்ளமவே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர்
இன்றைக்குச் செல்வம் உடையராவோம். இப்பொழுதே செல்வம் உடையவர் ஆவோம். இனி, சிலகாலங்கழித்துச் செல்வம் உடையராவோம்' என்று எண்ணி அறம் செய்யாமலே இருந்து, இவ்வாறு மேன்மேல் சொல்லுதலினால் மகிழ்ந்து தாம் நினைத்தபடியெல்லாம் நேராமைபால் இறுதியில் தமது மனம் வேறுபட்டு, நீரை விட்டு நீங்காத தாமரையிலை அழிவது போல, அழிந்தவர் பலர்.
நீருள் பிறந்துநிறம்பசியது ஆயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் - ஒரும் நிறைப்பெருஞ் செல்வத்துநின்றக் கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து
தண்ணிரில் பிறந்து, நிறம் பசுமையுள்ளதாய் இருப்பினும், கிடை தனது உள்ளிடத்தில் ஈரம் இல்லாததாகும். அதுபோல, நிறைந்துள்ள பெரிய செல்வத்தில் இருந்தாலும் இவ்வுலகம் பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களளை (மணம் இளகுதல் இல்லாதவரை) உடையதாய் இருக்கின்றது.
懿 ఫీ - இ
VA 7ܐܹܫܠܼ

Page 25
முதலாவது இன்ப துன்ப இயல் 39 ஆம் அதிகாரம் - பொது மகளிர்
விளைக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே அவர் அன்பும்
கையற்ற கண்ணே அறும்
விளக்கினது ஒளியும், பொதுமகளிரது நட்பும், இவ் விரண்டும் குற்றம் நீங்க ஆராயின், வேறாகமாட்டா. விளக்கின் ஒளியும் நெய் வற்றிய அப்பொழுதே ஒழியும் பொதுமகளிரது நட்பும், பொருள் நீங்கிய அப்பொழுதே ஒழியும்.
அம்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்ாெமடு செங்கோடு பாய்துமே யென்றாள்மன் செங்கோட்டின் மேல்காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே
கால்கால்நோய் காட்டிக் கலுழந்து
அழகிய பக்கமுடைய அகன்ற அல்குலையும், அழகிய அணிகளையும் உடைய பொதுமகள் நம்முடன், செம்மையாகிய மலைச் சிகரத்திலிருந்து வீழ்வோம் என்று உறுதி மொழி கூறினாள். கையில் பணம் இல்லாமையால், செம்மையாகிய மலைச் சிகரத்தில் நம்முடன் வாராமல் காலின் கண்வாத நோயினைக் காட்டிக் கலங்கிப் புலம்பி நீங்கினாள்.
அம்கண் விசுமபின் அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆகமன் தம்கைக் கொடுப்பதொன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுத
அழகிய இடம் அகன்ற விண்ணலத்துள், தேவரால் வணங்கப்படும் தாமரைக் கண்ணனாகிய திருமால் ஆயினும் ஆகுக; தம் கையால் கொடுக்கப்படும் பொருள் ஒன்று இல்லாதாரை, கொய்தற்குரிய தளிர்போன்ற மேனியையுடைய பொதுமகளிர், தமது கையால் வணங்கி அனுப்பி விடுவார்கள்.
(၍§§ .િ
క్షత్త

裘
ଖ୍ଯା
ప్రశస్తే
ஆணபமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணமில் லாதார் கடுஅனையர் - காணவே செககூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு
அன்பு நீங்கிய மனத்தினையுடைய, அழகிய நீலமலர் போன்ற கண்களையுடைய பொதுமகளிர்க்கு, பொருள் இல்லாதார், விடம்போல் கொடியவர் ஆவர். ஆராயுமிடத்து, செக்கு ஆட்டுதலாகிய இழிதொழில் உடையவர் ஆனாலும், தேடிய செல்வம் உடையவரே, அப்பொது மகளிர்க்குச் சருக்கரையைப் போல இனியராவர்.
பாம்பிற்கு ஒருதலை காட்டி யொருதலை தேம்படு தென்கயத்து மீன்காட்டும் - அங்கு மலங்கு அன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர்
விலங்கன்ன வெள்ளறி வினார்
தன்னைப் பிடிக்கவரும் பாம்புக்கு ஒரு புறம் காட்டி? மற்றொரு புறத்தை இனிமை பொருந்திய தெளிந்த நீரையுடைய தடாகத்தில் உள்ள மீனுக்குக் காண்பிக்கும் தன்மையையுடைய விலாங்கு மீனைப் போன்ற பலரிடத்தும் அன்பு காட்டும் தொழிலையுடைய பொதுமகளிர் தோள்களை மிருகத்தையொத்த பகுத்தறிவில்லாத மூடர்கள் சேர்வார்கள்.
பொத்தநூல் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த பொற்றொடியும் போர்த்தகர்ககோடு ஆயினாள் நிற்றியோ போதியோ நீ. (நல்நெஞ்சே)
எனது நல்ல மனமே, நூலில் கோத்த, துளைத்த மணியும், கூடியிருப்பது நீங்காத அன்றில் பறவையும்போல, எப்பொழுதும் நம்மைவிட்டுப் பிரியமாட்டோம் என்று முன்பெல்லாம் உறுதி கூறியிருந்த பொன்னாலாகிய வளையல்களையுடைய பொதுமகளும், இப்போது போர் செய்யும் தன்மையுள்ள ஆட்டுக்கடாவின் கொம்பு போல மாறுபாடாகிய குணமுடையவள் ஆயினாள். அவள் அவ்வாறான பிறகும் நீ அவளிடத்தில் நிற்கின்றனையோ? என்பால் வருகின்றனையோ?
ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறுஉம் சில்லைக்கண் அன்பினை
ఫీ W မ္ဘိဒ္ဒိ၊

Page 26
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை
காட்டுப் பசுவைப் போல் முதலில் இன்பம் உண்டாக நக்கி, தம்மிடம் கூடியவர்களது கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்து கொண்டு பிறகு எருதைப் போலக் கவிழ்ந்து படுத்துக் கொள்ளுகின்ற தாழ்ந்த நடத்தையுடைய பொது மகளிடத்தில் கணப்படும் அன்பை, மயக்கம் அடைந்து எமக்குரியது என்று இருந்தவர் பலராலும் நகைக்கப்படுவர்.
ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்ாராய்த் தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடாம் - மான்நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செந்நெறிச் சேர்தும்என் பார்
ஆடவர் பொது மகளிரது மோகவலையில் சிக்கி மயங்கிய பொழுது அப்பொது மகளிர் அவர்களிடம் அன்புள்ளவர்களைப் போல இருந்து, தாம் பொருளால் நிரம்பிய பொழுது அந்த ஆடவர்களுக்கு அன்பில்லாராய், யாட்டின் கோட்டினைப் போன்று திருகுதலை உடையராகி மான் போலும் பார்வையினையுடையராய், தமக்குரிய களவின் வழியில் தப்பாது நிற்கும் பரத்தையர் பெரிய கொங்கயைச் செம்மையாகிய வீட்டு நெறியைச் சேர்வோம் என்பார் அடையக் கருதார்.
ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒன்னுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் தமரல்லர் தம்உடம்பினார்
ஒளி பொருந்திய நெற்றியையுடைய பொதுமகளிர் பிறர்க்குத் துன்பம் செய்யும் எண்த்தைப் பிறர் அறியவொட்டாமல் தமக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு, காமுகர் கேட்டு நம்பும்படி சொல்லிய சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மையென நம்பி அந்தப் பொது மகளிரை, "இவர் எம்மைச் சேர்ந்தவர்' என்று நினைப்பவர்களும் அவ்வாறே நினைக்கட்டும். தம் உட்பினைத் தமக்கே உரியதாகக் கருதும் இயல்பினையுடையார் எப்படிப்பட்டவர்க்கும்சுற்றத்தார் அல்லர்.
உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கரத்தெல்லாம் - தெள்ளி அறிந்த இடத்தும் அறியாராம் பாவம் செறிந்த வுடம்பி னவர்
ーZ送劣リ کیتیتلار

ஒளி பொருந்திய நெற்றியையுடைய பொதுமகளிர் தமது மனம் ஒருவனிடத்தில் இருக்க, கபடமாக அன்புடையார் போன்று செய்கிற எண்ணம் அனைத்தும் தெளிவாக ஆராய்ந்து அறிந்தபோதும், தீவினைச் செயல் நிரம்பிய உடம்பையுடையவர் உண்மையை அறியமாட்டார்கள்.
இரண்டாவது இன்ப இயல் 39 ஆம் அதிகாரம் . கற்புடை மகளிர்
அரும்பெறல் கற்பிள் அயிராணியன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேனும் நறுநுதலாள் நன்மைத் துணை
பெறுதற்கரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற பெரியப் புகழையுடைய பெண்களாயினும் தன்னைப் பெற்று அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசையால் விரும்பம் கொண்டு தனது பின்னே நிற்கும் ஆடவர் இல்லாமையாகிய நற்குணத்தையே காக்கும் அழகிய நெற்றியையுடைய பெண்ணே, தன் கணவனுக்கு நன்மை பொருந்திய துணை.
குடநீர் அறவுண்னும் இடுக்கண் பொழுதும் கடல்நீர் அறவுண்னும் கேளிர் வரினும் கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி
ஒரு குடத்து நீரைக் காய்ச்சியுண்ணும் வுறுமைக் காலத்தும், கடல் நீரும் வற்றும்படி உண்ணும் மிகப்பெருங் கூட்டமான சுற்றத்தார் வந்தாலும், தம் கடமையாகிய தன்மையை ஒழுக்க நெறியாகக் கோள்ளும் மென்மைத் தன்மை பொருந்திய சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குத் தக்க பெருமையையுடையவன்.
நால்ஆறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும் ஊர் தன்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்
-്.

Page 27
•ლ-9
?
நான்கு பக்கங்களிலும் வழியையுடையதாகி, மிகச் சிறிதாகி, எல்லாப் பக்கங்களிலும், ஆகாய வழியால் மழைத்துளி தன்மேல் படினும் மேலாய அறங்களைச் செய்ய வல்லவளாய், தான் வாழுகின்ற ஊரில் உள்ளார் தன்னை புகழும்படி மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய மனைவி வாழ்வதே வீடு.
கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் உட்கி இடன் அறிந்து ஊடி யினிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்
கண்ணுக்கினிய தோற்றம் உடையாளும், கொண்ட கணவனது விருப்பின்படி தன்னை அலங்கரித்துக்கொள்பவளும், அச்சம் உடையவளும், ஊராரைக் கண்டு நாணும் குணம் உடையவளும், தன் கணவனுக்கு அஞ்சி, சமயம் அறிந்து அவனோடு பிணங்கி, இன்பம் உண்டாகும்படி உடனே அறிந்து, ஊடல் தீர்கின்ற மென்மைத் தன்மையுள்ள மொழிகளைப் பேசும் பெண்ணே மனைவியாவாள்.
எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்து எழினும் அஞ்ஞான்று கண்டேம் போல் நானுதுமால் எஞ்ஞான்றும் என்னை கெளி இயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்
எமது கணவர் எக்காலத்தும் எமது தோள்களில் அணைந்து எழுந்தாலும், புதிதாக மணம் செய்துகொண்ட அக்காலத்தில் யாம் அவரைக் கண்டது போல இப்பொழுதும் நாணம் அடைகின்றோம். இவ்வாறு இருக்க, எப்பொழுதும் பொருள் ஆசையால் பலர் மார்புகளை அணைந்து நடக்கும் பொது மகளிர், அந்தப் பலரிடத்தும் உரியராயிருக்கின்றார். இது என்ன தன்மையோ?
உள்ளத்து உணர்வுடையான் ஒதிய நூலற்றால் வள்ளமை பூண்டான்கண் ஒண்பொருள் தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நானுடையாள் பெற்ற நலம்
ஈகைத் தன்மையை மேற்கொண்டவனிடத்தில் உள்ள ஒளி பொருந்திய செல்வம், மனத்தில் நல்லறிவுடையவன் கற்றிந்த நூலைப்போல விளங்கும்; அதுபோல நாணமுடைய குலமகள் அடைந்துள்ள அழகு,
Sട്ടീ

蕊 ་་་་་་་་་་་་་་་་་་ தெளிந்தவுணர் வுடைய வீர மகனது கையிலுள்ள கூரிய வாளாதத்தைப் போலப் பெருமை பெறும்.
உலாப் போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத்
தலைமகள் சொல்லியது
கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கு ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் -
(என்று ஒருங்கொவ்வா நல்நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது என்னையும் தோய வரும்
ஊரில் வசிக்கும் ஒருவன் கரிய நிறமுள்ள கொள்ளினையும் செம்மை நிறமுள்ள கொள்ளினையும், இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையைக் கரதாது ஒரு நிகராக, தூணி பதக்கு என்னும் ஒரே அளவாக வாங்கிக் கொண்டானாம். அதுபோலவே, முழுதும் ஒப்பாகாத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலைபோன்ற மார்பையுடைய என் கணவன் நீராடாமலும் என்னையும் அணைய வருகின்றனன். இது என்ன அநீதி!
தலைவனது பிரிவுணர்த்திய பாணனை நோக்கித்
தலைவி மறுத்துக் கூறியது
’கொடியவை கூறாதி பாணநீ கூறின்
அடிபைய விட்டொதுங்கிச் சென்று - துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை
பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் சொல்லாதே. ஏனெனில், யாம் தலைவனுக்கு உடுக்கையின் இடப்பக்கத்தைப் போலப் பயன்படாதிருக்கின்றோம். அதனால் நீ அப்படிப்பட்ட சொற்களைச் சொல்வதாயிருந்தால் மெதுவாக இவ்விடம் விட்டு அப்புறம் போய், அந்த உடுக்கையின் வலப் பக்கத்தைப் போலப் பயன்படும் மகளிர்க்குச் சொல்.
பரத்தையில் பிரிந்துவந்த தலைமகனோடு நீ புலவாமைக்கு காரணம் யாடு என்ற தோழிக்குத் தலைவி சொல்லியது
g
ఫీ မ္ဘိဒ္ဒိ၊
ஒஇ \محنتخ @感

Page 28
சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீதி ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத் தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம் நோக்கியிருந்தேனும் யான்.
கோரையைப் பிடுங்க, நீர்விளங்கும் குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த ஊரையுடையவனாகிய எனது தலைவன் மேல் (கூடியிருந்த காலத்தில்) ஈயானது பறக்கும் போதும் பொறாமல் மனம் வருந்தியவளும் யானுே. அத் தலைவன் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் நெருப்புப் பொறி பறக்கும்படி பொதுமகளிர் தம்முடைய கொங்கைகளால் தாக்கிக் கலவிப் போர் செய்த, குளிர்ச்சி பொருந்திய கலவைச் சந்தனத்தை அணிந்த அத் தலைவனது, மார்பைப் பார்த்துப் பொறுத்திருந்தவளும் யானே.
தலைவி பாணனொடு வெகுளல்
அரும்பவிழ் தாரினான் எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண - கரும்பின் கடைக்கண் அனையம்யாம ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை
பாணனே! பூ அரும்புகள் மலரப்பெற்ற மாலையையணிந்த தலைவன் எமக்கு அருள் செய்வான் என்று பெரிய பொய் வார்த்தைகளைச் சொல்லாதே. ஏனெனில் தாம் தலைவனுக்கு, கரும்பின் கடைசியிலுள்ள கணுக்களையொத்திருக்கின்றோம். அதனால் இவ்வார்த்தைகளை அக்கரும்பின் இடையிலுள்ள கணுக்களை யொத்த பொது மகளிர்க்குச் சொல்.
汲
邸

狐
நண்றி உடையோம்
அம்மாவின் இறுதிக்கிரியைகளில் கலந்து வேண்டிய உதவிகளைச் செய்தவர்களுக்கு. தந்தி, தொலைபேசி, அஞ்சல் மூலமும், நேரிலும் அனுதாபத்தை தெரிவித்து ஆறுதல் அளித்தவர்களுக்கு.
கண்ணீர் அஞ்சலி, மலர்வளையம் என்பவற்றைத் தந்து அனுதாபத்தை தெரிவித்த அதிபர், ஆசிரியர், மாணவர்கட்கு.
அந்தியேட்டி தின வெளியீட்டிற்கான ஆசிச் செய்திகள், ஆக்கங்கள் தந்ததவிய பிள்ளையார் கோவில் குருக்கள் ஐயா, முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் ஐயா,
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் முதலானவர்கட்கு.
அபரக்கிரியைகள், சபிண்டீகரணக் கிரியைகள், வீட்டுக்கிரியைகள் போன்றவற்றில் கலந்து கொண்டதுடன் சிறப்பாக நடைபெற உதவிய நண்பர்கள், உற்றார்
உறவினர்கள், பாடசாலை மாணவர்கள், குருளைச் சாரணர்கட்கு.
இறுதியாக அமரரின் ஆத்ம சாந்தியை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற மதிய உணவு நிகழ்விழ் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் எமத உளமார்ந்த நன்றிகள்.
இங்ாவனம் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Page 29
大~ 法
* \
い 沿
慈祐
Qısıtsg)T svæðși 1911a1@@@şJogorsmåoloJoỌ9uqi Umugworts1109II/19Éqīng),Jiqoqionமுதிர்பகி Q-InJyroqusố33)1111°S logo1/1c9d1ffrì uscrolysyrygonioso ++++ sựIwolinsosriq go lgotrigoq'i(sg)ingolo quos físiqoJirosqisorg)un †!!* றழ99ஐயூபாu田地um홍形 1091091 sooபஐதிஜிபிஓ Loģisqq.;·· 之�� Julai@f(sqsoloJIroqısốog) III165]JoJ19qÍ o.Ɛ3 ++ Įılaise spinos091911a1@gifĮIITI@rogę ^�^_ pIIIIqipII/105] qimos equipo
î–1
|
^
|
Logoisosiņspriqso - qıoprşı soğ1091ço p + qQeriqi109.1991 TIU9
-****2, TToo~~~
•* „**) «» „**
Innoċesốfigo
†
gio710e1091ņ916) + gııl soos soo
鰓


Page 30
உ(
எது நடந்ததே.அ சிது நடக்கிறதே? அது சித்தடங்க,
೭ೞLö5) தெற்காகதீஜ் சிலித்ரீகாண்டுவந்தார் ைெர்நீபடைத்திருந்தார்
சிதைநீஎடுத்துக்க துேகிங்கிருந்தே எடுத்
எ85கோடுத்து அதுகேகொத்; துெகின்றுண்து
அது மேற்றுழு "ாருநாள்,ஆடி துேவே உங்கநிதிந் எனது 丐司厅孟 ரீ ஜி
 
 
 

தநண்கஃதட்ஜ்:
தங்கீத" *இநடக்குக் ஐத இத்தM ஜீரர்? தை"இஃதுத்தர் துண்ாவது: 3%ri:L76wyr, கீப்பட்டது போ, ப்பட்டது. பரே