கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மழலைப் பாமலர்கள் (சின்னையா சிதம்பரநாதன் நினைவேடு)

Page 1
Qu | P 12. இணுவில்
சின்னையா சிதம்ப
 

கோண்டாவில் ரநாதன் நினைவேடு

Page 2


Page 3

ás LouLub
மழலைப் பாமலர்தர்
இணுவில், கோண்டாவில் பிரபல சட்டத்தரணி திரு. சின்னையா சிதம்பரநாதன் நினைவேடு 02-03-2002

Page 4
சமர்ப்பணம்
இந்த உலகிலெமக்கு ஏற்றவகை கல்வி தந்து சிந்திக்க வைத்துச் சிறப்புமிகு வாழ்வமைத்த எங்கள் பெருந்தலைவர் அப்பா, அவர் நினைவாய் இணுவில் சிவகாமியம்பாள் திருவடிகளில் இப்பாமலர் சமர்ப்பணம்
மனைவி பிள்ளைகள் சி.சரோஜினிதேவி சிவராஜ்
புரீஸ்கந்தராஜ் நவரட்னராஜா வீதி, வசந்தினி கோண்டாவில், சுதர்சினி
fiLTaff
பிரியதர்சினி,

இணுவை, கோண்டாவில்
சின்னையா சிதம்பரநாதன்
தோற்றம் மறைவி
932-1-8 2O2-O-29
திதி வெண்பா
ஆண்டு விஷ"தை அபரப் பிரதமைதான் கோண்டாவிற் கோமான் சிதம்பரனார் - வேண்டிச் சிவகாமி யம்மைதாள் சேர்ந்தின்பம் துய்த்த
நவமான நாளாம் நவில்.

Page 5

சிவீமயம்
பதிப்புரை
'நற்றமிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவி னுக்கரையன் நாளைப்போ வானும்
கற்ற குதனற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதும்'
கொள்கையை, இறை இயல்பை, உணர்ந்தவர்களே மனிதர்கள். அந்த உணர்வு எம்முடையதாக வேண்டும். அந்த அளவிற்கு எம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வண்ணமாய உயர்ந்த நெறியிலே தாமும் வளர்ந்து எம்மையும் அவ்வழியில் வாழ வைத்தவர் எங்கள் அப்பா சின்னையா சிதம்பரநாதன் அவர்கள். எங்கள் இளமைக் காலத்திலிருந்தே எங்களுடனா கியிருந்த எங்கள் அப்பா வையத்து வாழவேண்டிய முறைப்படி எங்களை வாழ வைத்த உத்தமர்.
சின்னஞ் சிறுவர்களிடம் அளப்பரிய அன்பு காட்டுபவராகிய எங்கள் அப்பாவின் ஆத்ம சாந்தியை நினைத்த நாம் பாலர்களுக்கான பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து மழலைப் பாமலர்கள் என்னும் பெயரில் நூலாக்கிக், கோண்டாவில் நெட்டிலைப் பாயப் விநாயகனை வணங்கி, எங்கள் அப்பா நினைவாக, இணுவை சிவகாமியம்மை பாதார விந்தங்களை வாழ்த்தி வணங்கி அன்னைதிருவடி மலர்களிற்
IV

Page 6
சமர்ப்பிக்கின்றோம். மழலைச் செல்வங்கள் இந்நூலைப் பயன்படுத்துவது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வழிசெய்வதாகலாம்.
来源
米
இந்நூலிலுள்ள பாடல்களை உருவாக்கம் செய்தவர்களுக்கு, ஆசியுரை வழங்கிய சிவபூரி வை. சபாரத்தினக் குருக்கள் அவர்களுக்கு, பிரார்த்தனை உரை வழங்கிய சிவறி தா. ஹரிஹர சுப்பிரமணியக் குருக்கள் அவர்களுக்கு, ஆத்ம சாந்தியுரை வழங்கிய சிவபூரீ சாம்பசிவ சோமசபேஷக் குருக்கள் அவர்களுக்கு, கண்ணிர் அஞ்சலி உரை வழங்கிய கந்தையா இராமநாதன்
அவர்களுக்கு,
பிரியாவிடை வழங்கிய கனகரத்தினம் கேசவன் அவர்களுக்கு, எமது நீங்கா நினைவுகள் வழங்கிய இணுவில் இந்து மகா சபையினருக்கு, அப்பாவின் வாழ்க்கை வளத்தினை வரைந்துதவிய பெரியார் திரு பொ. இலங்கநாதபிள்ளை அவர்களுக்கு, கருத்துக்களைத் தந்ததுடன் நூலை அமைத்துதவிய பண்டிதர் ઈી. அப்புத்துரை அவர்களுக்கு, நூலை அழகுற அச்சிட்டுதவிய கொட்டாஞ்சேனைக் கீதா பதிப்பகத்தாருக்கு,
எம் நன்றி என்றும் உரியது. சுபம்
மனைவி பிள்ளைகள் மருமக்கள் சி. சரோஜினிதேவி சிவராஜ் - லலிதாம்பிகை
பூரீஸ்கந்தராஜ் - சியாமளா , வீதி, வசந்தினி - ஞானகணேசன் 666). சுதர்சினி
siumefloof - சோதிநாதன் பிரியதர்சினி.
V

எங்களை வழிநடத்திய அன்புத் தெய்வம்
எம்மைச் சீராட்டி வளர்த்த எம் அப்பா எம்மை விட்டு அகன்றாலும் எம் நெஞ்சிலே இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.
ஒளிவிளக்காய் அன்புடனும் பாசத்துடனும் கண்ணை இமைகாப்பது போல் எம்மைக் காத்த தெய்வம் அவர்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நாம் எம்மைப் பக்குவப் படுத்த வேண்டும், இருப்பதைக் கொண்டு வாழத் தெரிய வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்து வழிநடத்தியவர் அவர்கள்!
யாராவது இல்லை என்று வந்தால் அவர்களிடம் இருப்பதை கொடுத்து உதவுவார்கள்! அவ்வளவு மென்மையான இதயம் படைத்தவர் அவர்கள்! மூன்று வேளையும் முகம் கழுவித் தலைவாரிக் கடவுளை வணங்க வேண்டும் என்று சொல்லும் அவர்களும் அப்படியே செய்வார்கள்.
எமது சிறு வயது முதல் நாம் ஆங்கில அகராதியை உபயோகித்ததில்லை. எல்லாச் சொற்களுக்குமான அர்த்தத்தை எங்கள் நாவிலேயே வைத்திருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து!
VI

Page 7
சிவகாமி அம்மன் ஆலயத்திற் பூசையின்போது எங்கள் அப்பா மணி அடித்த காலங்கள் இன்னும் மனத்திரையில் நிழலாடுகின்றன. அப்பாவுடன் பட்மிற்றன் காட்ஸ் விளையாடி மகிழ்ந்த காலங்களை, கோண்டாவில் ரீகணேசா சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்திற் கரப்பந்தாட்டம் விளையாடிய காலங்களை இனிமேல் எப்போ காணப்போகிறோம்.
அதிகாலையில் துயில் எழுந்தவுடன் முகம் கழுவித் திருநீற்று பூச்சுடன் இருக்கும் அப்பாவின் கம்பீரமான முகம் எப்பொழுதும் எம்மனக் கண்முன் வருகின்றது.
எமது ஊரிலே நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீண்டும் நாம் காணமுடியாத தூரத்திற்கு அப்பா நீங்கள் சென்று விட்டீர்கள்! நல்ல அப்பாவாக, வழிகாட்டியாக, ஆசானாக, நண்பனாக எங்களோடு விளையாடி எமக்கு எல்லாமே நீங்களாக இருந்த நினைவு ஒவ்வொரு கணமும் எம்கண்முன் ஒடிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் எங்கள் அப்பா மட்டுமன்று எல்லாமே நீங்கள்தான். எங்கள் அன்புத் தெய்வத்தின் நினைவு என்றும் எங்களுடனாகும்.
- பிள்ளைகள் -

சிவறி. வை. சபாரத்தினக் குருக்கள் இணுவில் சிவகாமியம்மன் கோயில் முன்னைநாட் பிரதமகுரு அவ்ர்கள்
ஆசியுரை
சின்னையா சிதம்பரநாதன் அவர்கள் இணுவில் சிவகாமி அம்பாள் கோவிலுடன் மிக நெருங்கிய தொடர்பும் ஈடுபாடும் கொண்டவர். அம்பாளே அவரது குலதெய்வமும் உபாசனா தெய்வமும் ஆகும். அம்பாளுக்கே தம்மை அர்ப்பணித்துப் பணி புரிந்தவர். சிவகாமி அம்பாள் கோவிலில் நடைபெறுகின்ற விசேட விழாக்காலங்களிலெல்லாம் தவறாது சமூகமளித்துத் தம்மாலான தொண்டுகளைச் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். அம்பாளின் மகோற்சவப் பெருவிழாவின் இறுதி நாளாகிய தீர்த்தத் திருவிழா அவரின் மூதாதையர் வழிவந்து அவரது உபயமாகவே இன்றும் நடைபெறுகின்ற பெரும் புண்ணியப் பேற்றைப் பெற்றவர்.
எல்லோருக்கும் நல்லவனாகி, ஏற்புடைவாழ்வினனாகி, இன்சொல்லால் எவரையும் தன்பால் ஈர்க்கும் பண்பினனாகி, வல்லவனாகி, வையத்தில் நல்வாழ்வு வாழ்ந்த சின்னையா சிதம்பரநாதன் அவர்கள் மனைவி மக்கள், சுற்றம், நண்பர் ஆகிய எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு மிக விரைவாக மறைந்து விட்டார். எம்மால் ஆவது ஒன்றுமில்லை. நாமொன்று மறியோம். அவரது பிரிவால் மனம் நொந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன் அவரது ஆன்மா சாந்திபெறும் பொருட்டு அன்னை சிவகாமி அம்பாளின் பாத கமலங்களை வணங்கிப், பிரார்த்திப்போமாக.
*குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு”
VII

Page 8
சிவறி. சாம்பசிவ சோமசபேசக் குருக்கள்
“வேத சிவாகம கிரியாரத்தினம்” சிவகாமி அம்மன் கோவில், பிரதம சிவாசாரியர்
ஆத்மசாந்தியுரை
உலகமாதாவாகிய அன்னை சிவகாமி அம்பாளின் கடாட்சம் பெற்று வாழ்ந்தவர் அன்பர் சட்டத்தரணி திரு. சின்யைா சிதம்பரநாதன் அவர்கள். அவருடன் யாம் பழகிய காலத்தில் ஒரேயொரு பெருந்தன்மையைக் கண்டிருக்கிறோம். யான் ஒரு சட்டத்தரணி என்ற பெருமை யில்லாது யாருடனும் சுமுகமாகப் பழகும் இயல்பே அது. நாம் ஏதாவது விடயத்திற் கோபமாகக் கதைத்தாற்கூட அதனைப் பொருட்படுத்தாது நகைச் சுவையாகப்பேசி எம்மைச் சாந்தமுறச் செய்துவிடுவார். சிவகாமி அம்பாள் ஆலயத்தில் அவரும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும், ஆலோசனைச் சபை உபதலைவராகவும், திருப்பணிச்சபையின் தலைவராகவும் இருந்து பணியாற்றி யுள்ளார். ஆலய வளர்ச்சியிற பெரும் பங்காற்றியவர். தங்கள் குலதெய்வமான சிவகாமி அம்பிகையின் தீர்த்தோற்சவ விழாவின் உபயகாரராகவும் விளங்கியவர். வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்ற ஆதங்கத்துடன் தன்னைவிட வயதிற்குறைந்த நண்பர்களோடும் உற்சாகமாகச் செயற்பட்டவர். அவருடைய பிரிவு அவரது குடும்பத்திற்கு மட்டுமன்று, எமக்கும் பேரிழப்பான விடயமாகும். போர்க்காலச் சூழலிலும்கூடச் சிவகாமி அம்பாள்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் இரவு பகல் பாராது ஆலயத்திற்குத் தன் குடும்பத்தவருடன் வருகைதந்து தரிசித்துச் செல்பவர். அவரது பிரிவுச் செய்தியால் நாம் ஆழ்ந்த துயரமுற்றோம். அவரது உடம்பு அழிந்தாலும் ஆத்மா சிவகாமி அம்பரளின் ஆலயமே தஞ்சமென வந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. அவரது ஆத்மா சாந்திபெற அன்னை சிவகாமியை வேண்டிப் பிரார்த்தித்து அர்ச்சிக்கிறேன்.
ஓம் சாந்தி!
Yk DX

சிவநீ ஹரிஹரசுப்பிரமணியக் குருக்கள் கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவிற் பிரதம சிவாசாரியர் அவர்கள்
பிரார்த்தனை உரை
உயர்திரு சின்னையா சிதம்பரநாதன் அவர்கள் சிறந்த கல்விமான், சிறந்த பண்பாளர், இரக்க சிந்தை உள்ளவர். அவர் கோண்டாவில் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோவில் நிர்வாகசபைத் தலைவராக இருந்து சிறப்பாகக் கும்பாபிஷேகத்தை நடாத்தியவர். மக்கள் தொண்டனாகவும் சிவத்தொண்டனாகவும் இருந்து அளப்பரிய சேவையாற்றியவர். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
அவர் பிரிவால் துயருறும் அன்னார் குடும்பத் தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத தெரிவித்துக கொள்கிறேன்.
冰水水冰米水米米冰冰冰米米米
சிராத்தம் என்பது :
அந்தியேட்டிக்குப்பின் இறந்தவரைக் குறித்து நிகழுங் கிரியைகள் எல்லாம் பொதுவிற் சிராத்தம் எனப்படும். சிரத்தையோடு செய்வது சிராத்தம் ஆகும் சிரத்தை என்பது கிரியை செய்பவர் இறந்தவர்மேற் கொள்ளும் அன்பு
நன்றி : அபரக்கிரியை விளக்கம்.

Page 9
அமரர் சி. சிதம்பரநாதன் புறக்டர்
6TDg நீங்கா நினைவுகள்
இணுவில் இந்து மகா சபை என்ற ஒன்று உருவாவதற்கு மூலகாரணமாய் இருந்தவர் அமரரான சட்டத்தரணி அன்பர் திரு. சின்னையா சிதம்பரநாதன் அவர்கள். தேர்த் திருப்பணிச் சபைத் தலைவராக இருந்த வேளையில் இளைஞர்களாயிருந்த எம்மை ஆத்மீகப் பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் இச்சபையை உருவாக்கி அதன் காப்பாளராக ஆயுட்காலம் பூராவும் இருந்தவர். எமது சபையின் 25 ஆவது வருட விழாவை நிறைவு செய்துகொள்ளும் இவ்வேளையில் அவரது பிரிவுச் செய்தி எட்டியது. இணுவில் சிவகாமி அம்பாள் ஆலயத்தின் உரிமைக்காரர்களில் ஒருவராக விளங்கிய அவர் ஆலயத்தின் வளர்ச்சிக்காக இரவுபகல் பாராது பணியாற்றினார். அவரது பணியின் நினைவுச் சின்னங்களாக ஆலயத்தில் இரு சிற்பரதங்கள் விளங்குகின்றன.
தான் ஒரு சட்டத்தரணி என்ற பெருமையின்றி எல்லோருடனும் அன்புடனும், பண்புடனும் பழகியவர். சிவகாமியம்மை ஊர்வலம் வரும்போது இணுவில் வீதிகளில் தானும் ஓர் அன்பனாக எம்மோடு நின்று, கொடுக்கும் பிரசாதங்களை மகிழ்வோடு வாங்கி உண்டு எம்முடன் பழகிய அந்த நாள்கள் எமது உள்ளத்தில் நீங்காத நினை வலைகளாக என்றும் இருக்கும். அவரது பணிகள், பெருமையில்லாத நடைமுறைகள், தொண்டுகள் பற்றி எழுதுவதானால் நிறைய எழுதலாம். வயதிற் குறைந்த எம்மிடம் தனது கருத்துக்களைக் கூறி ஆலோசனை கேட்பார்.
X

தனக்குப் பிடிக்காவிடினும், நாம் ஓர் தீர்மானத்தை எடுத்துக் கொண்டோமானால் விட்டுக் கொடுக்கும் பரந்த மனப் பான்மையை உடையவர். இவ்வகை நடைமுறைகள் அவருக்கு எமது மத்தியில் ஓர் நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டது.
நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் அவரது குடும்பத்தவர்களுடன் நாமும் கலந்து கொள்கின்றோம். அவரது நினைவு எமது சபையுடன் கலந்ததோர் உறவு. *அவரே இவராய்” என்னும் தலைப்பில் நாம் சமீபத்தில் வெளியிட்ட நூலில் அவரது சேவைகள் இடம் பெற்றுள்ளன. அவர் நாமம் என்றும் எமது சபையில் நிலைபெறும்.
கே. எஸ் ஆனந்தன் தலைவர் இணுவில் இந்து மகா சபை
水水冰冰冰米水米米米米米米米米米水米事
துடக்குக் கழித்தல் :
ஜனன மரணத் தொடர்புடன் கூடிய ஒருவர் காரணமாக இன்னொருவருக்கு ஏற்படும் அசுகுசுப்பான அகப்புறச் சூழ்நிலைகளைக் குறிப்பது துடக்கு, துடக்குக் கழித்தல் ஆசௌச நீக்கம் எனவும் பெயர் பெறும் குறிப்பிட்ட அசுகுசுப்புச் சூழ்நிலைகள் மாறுவதற்கு ஒரு கால எல்லை உண்டு அது இயற்கை நியதி அவ்வெல்லையில் மந்திரக் கிரியை சம்பந்தமான ஒரு தூய்மை செய்தல்முலம் அகப்புறச் குழ்நிலையில் ஒரு திருப்தியும் பரிமளிப்பும் புது மலர்ச்சியும் ஏற்படுதல் சாத்தியமாகும்.
நன்றி : அபரக்கிரியை விளக்கம்
XIII

Page 10
அன்புத் தோழரின் பிரியாவிடை கனகரத்தினம் கேசவன். ஜே.பி.யு.எம் சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு
பிரபலமான பரம்பரையில், கோண்டாவிற் கிராமத்தில் உதித்த பண்பாளன் திரு. சிதம்பரநாதன் அவர்கள். அன்பால் அனைவரையும் கவர்ந்த அறிவுச் செம்மல், படுக்கையில் உறங்காமல், நோயில் வாடாமற் பரமனடி சேர்ந்த பெரியவர்.
திரு. சிதம்பரநாதன் அவர்கள் சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்ய முன்னர், யாழ் மாவட்ட நீதி மன்றங்களிற் கடமையாற்றிய காரணத்தாற், சட்டத்தரணித் தொழிலும் நொத்தாரிசுத் தொழிலும், அவருக்குக் கைவந்தனவாக அமைந்ததை நாம் அனைவரும் அவதானித்திருந்தோம்.
அவர் சட்டத்தரணியாக, யாழ்க் குடாநாட்டிற், சுடர்விட்டுப் பிரகாசித்த பொற்கால நினைவுகள் என் சிந்தனையிற் சிறகடித்துப் பறக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர், என்னைக் கொழும்பிற் சந்தித்துப் பல மணி நேரம் உரையாடினார். தான் மாணவனாக இருந்த போது தனக்கு இருந்த மனமகிழ்ச்சி இப்போர்க்காலச் சூழ்நிலையில் இல்லாத குறையை என்னுடன் மனம்விட்டுப் பேசினார் அந்த உரையாடலை மறக்க முடியாமற் கவலையடைகின்றேன்.
சட்டத்தரணியாகக் கடமையாற்றிய காலத்திற் பிறிவிடல், தத்துவ வழங்குகளில் மட்டற்ற தேர்ச்சிபெற்று அவ் வழக்குகளைத் திறம்பட நடாத்தியமை நாம் அனைவரும் அறிந்த விடயம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் கோட்பாடு களுக்கமைய வாழ்ந்த பெருந்தகை அவர். அன்பு, அடக்கம், அமைதி ஆகியவை அவருடைய சிறப்பு இயல்புகள். உற்றார், உறவினரைப் பேணி வாழ்ந்தவர். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து பண்பில் உயர்ந்தவர். அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவருடைய ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். Φ
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு.
XLI

கண்ணிப் அஞ்சலியுரை கந்தையா இராமநாதன் சமாதான நீதவான் (தீவகம் முழுவதற்கும்)
அமரர் திருவாளர் சின்னையா சிதம்பரநாதன், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் ஆவர். அவர் கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோயிலடியில் வசித்த அமரர் EP குமாரசாமி அதிபர் அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்த காலம் தொடக்கம் நன்றாக அறிவேன், அவர் சிவகாமியம்பாளின் பரம்பரைத் தொண்டர் ஆவர்.
சட்டத்தரணி ஆகிய பின்பு அவர் கோண்டாவில் நெட்டிலைப்பாயை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். அன்று தொடக்கம் அவர் எம்மை விட்டுப் பிரியும் வரை தனது தொழிலைச் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்தார்.
சடுதியான அவர் மறைவு பெரிய தொரு
வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பல சட்டத்தரணிகள உள்ள கிராமத்தில் சிதம்பரநாதன் அவர்கள் மாத்திரம் கடமையில் இருந்தார். எமது கிராம மக்களுக்கு அவர் சடுதியான மறைவு பெரும் பேரிழப்பாக முடிந்தது.
அவருடைய பொதுச் சேவை மிகவும் சிறந்தது. கோண்டாவிற் சைவப்பாடசாலையினதும் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோவிலினதும் அபிவிருத்திக்குக் காரணராக இருந்தார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் பணியெல்லாம் சிறப்புற நிறைவு செய்த அமரர், சிவகாமி அம்பாளின் கிருபையால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டுள்ளார் என்பதில் ஐயமில்லை.
XIV

Page 11
சின்னையா சிதம்பரநாதன் அவர்கள் வாழ்க்கை வளம்
- பொ. இலங்கநாதபிள்ளை -
வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வளம் மிகு சுற்றத்தையும் வனப்பு மிகு சூழலையும் உடையவராகி எல்லோருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமகன் சின்னையா சிதம்பரநாதன் இன்று எம்மிடை இல்லை. “நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்ற பெருமையை உடையதுதானே இந்த உலகம். அவர் சேவை இந்த உலகத்திற்குத் தேவை என்று எல்லோரும் அங்கலாய்க்கின்ற நிலையிற் கூற்றுவன் அவர் ஆன்மாவைக் கவர்ந்துவிட்டான். அவர் போய் விட்டார்தான். அதேவேளை அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டுமிருக்கிறார். வள்ளுவர், நாவலர், பாரதி போன்ற பெரும் புலமையாளர்கள் எப்படி எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அ.தேபோன்று சிதம்பரநாதன் அவர்களும், அவர்கள் பணிகளுடனாகி எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இணுவில் கோண்டாவில் என்னும் ஊர்களைத் தொடர்புபடுத்தும் வகையிலமைந்த வாழ்க்கையை உடையவராகச் சிதம்பரநாதன் அவர்கள் 1932 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆந் திகதி சின்னையா சர்ஸ்வதி தம்பதியரின் அருந்தவப் புதல்வனாகத் தோன்றினார். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் தமது கல்வி முயற்சியை ஆரம்பித்த சிதம்பரநாதன் அவர்கள்
XV

யாழ் மத்திய கல்லூரியிற் தொடர்ந்து நிறைவு செய்தார்கள். 1952 ஆம் ஆண்டு அரச எழுதுவினைஞர் சேவையிற் சேர்ந்து குருநாக்கல், கொழும்பு முதலிய இடங்களிற் பணிபுரிந்தார்கள்.
1961 இல் வாழ்க்கைத்துணையாகத் தாய்மாமன் மகளாகிய சரோஜினிதேவியை ஏற்று இல்லறத்தை நல்லறமாகத் தொடர்கின்ற வேளை சிவராஜ், ரீஸ்கந்தராஜ், வசந்தினி, சுதர்சினி, சுபாசினி, பிரியதர்ஷினி என்னும் ஆறு குழந்தைச் செல்வங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
கல்விப் பயிற்சிக்கு வயதெல்லை கிடையாது என்னும் கருத்தை நிறுவுவது போன்று சிதம்பரநாதன் அவர்கள் சட்டத்துறைக் கல்வியைத் தொடர்ந்து 1966 இல் சத்தியப்பிரமாணஞ் செய்து தம்மைச் சட்டத்தரணி அந்தஸ்திற்கு உயர்த்திக் கொண்டார்கள். பிரபல சட்டநூல் வல்லுநர் திரு. தனபாலசிங்கம் என்பவரைச் சார்ந்து அவருடனாகி நின்று பணிபுரிந்து சட்ட நுணுக்கங்களைத் தமதாக்கிக் கொண்டார். தொடர்ந்து சுதந்திரமாகப் பணிபுரியத் தொடங்கி 1968 இல் சட்டத்தரணியாகவும் நொத்தாரிசாகவும் விளங்கினார்.
சட்டத்தரணியாகப் பணியாற்றிய அதேவேளை மக்கள் உயர்வாழ்விற்கான பொதுப்பணிகளிலும் ஈடுபாடுடையவராக இருந்தார். கோண்டாவில் இந்து மகா வித்தியாலய அபிவிருத்திச் சபையின் உறுப்பினராகி அக்கல்வி நிலையத்தின் உயர்விற்காக உழைத்தார். அந்நிறுவனத்தின் மேல்மாடிக் கட்டிடப் பரிமளிப்பிற்குச் சிதம்பரநாதன்தான் முதன்மையானவர் என்பதை யாவரும் அறிவர்.
XVI

Page 12
கோண்டாவில் நெட்டிலைபாய்ப் பிள்ளையார் கோவிற் கட்டிடங்கள் 1976 இற் புதிதாக அமைக்கப் பட்டபோது பரிபாலன சபையின் தலைவராகி அயராது உழைத்தவரென்பது குறிப்பிடப்பட வேண்டியது. கர்ப்பக்கிருகம் முதலாகக் கட்டிடங்கள் புதியனவாயின. 1980 இல் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடை பெற்றது. இந்த நிகழ்வுகளையும், அவற்றின் கோலாகலத்திற்குக் காரணரான சிதம்பரநாதனையும் மக்கள் இன்றும் நினைவு கொள்கின்றார்கள்.
இணுவில் சிவகாமி அம்பாளையும் தமது மரபு வழிவந்த குலதெய்வமாக வழிபடும் இயல்புடைய சிதம்பரநாதன் அவர்கள் மகோற்சவ காலத்துத் தீர்த்தத் திருவிழாவையும் தொடர்ந்து தமது பரம்பரை உபயமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரநாதன் சரோஜினிதேவி தம்பதியர் பெற்றெடுத்த குழந்தைகளின் சிறப்பைக் கண்டு அன்னாரின் சீரிய வாழ்வை மதிப்பீடு செய்ய முடிகின்றது. அவர் ஆன்மா இறைவன் சந்நிதியிற் சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
米水水米水水水米米米米米水水冰米米米米
ஒருவர் இறந்த பின்பு அவர் இங்கில்லை. அந்த நிலையில் அவருக்குச் செய்யுங் கிரியைகளை அவர் பெறுவதெப்படி? இறந்த பின்பும் குறைந்தது முப்பத்தொரு நாள் வரை அதாவது அந்தியேட்டி வரை அவர் இங்கேதான் இருக்கின்றார். அதாவது தான் விட்ட உடலின் தொடர்பு நீங்காமல் அருவமாய் இருந்துகொண்டிருக்கிறார். அந்நிலையில உடலைத் தொடர்புபடுத்திச் செய்யும் கிரியைகளிள் பலன்ன அவர் நேரடியாகவே பெறுகிறார் அந்தியேட்டியின் பின் நிகழும் கிரியைகளின் பலனை மேலுலகத்திலுள்ள பிதிரர் என்ற தேவசாதியார் ஏற்றுச் சேரச் செய்வர்.
நன்றி : அபரக்கிரியை விளக்கம
XVII

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
தேவாரம்
அங்கமும் வேதமு மோதுநாவர் அந்தணர் நாளு மடிபரவ
மங்குன்மதிதவழ் மாடவீதி மருக
னிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணப தீச்சரங் காமுறவே
திருவாசகம் புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்
மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல்
பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே.
திருவிசைப்பா
ஏகநா யகனை இமையவர்க் கரசை என்னுயிர்க் கமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வுர்ந்த மேகநா யகனை மிகுதிரு விழி
மிழலைவிண் ணிழ்செழுங் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.
XVIII

Page 13
திருப்பல்லாண்டு மின்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
ஈசற்காட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள்அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால் எற்றைக்கும் திருவரு ஞடையேம்; நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் இருவினையின் மதிம யங்கித் திரியாதே
எழுநரகில் உழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள் நினைந்திட் டுணர்வாலே
பரவு தரிசனையை என்றெற் கருள்வாயே தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே ?
சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
XDX

அய்யா சொல்லே மந்திரம் - கூடல்நாடன் -
அன்பாய் அறிவை வளர்ப்பவர் அகிலம் போற்றச் செய்பவர் துன்பம் இலதாய் வாழ்வினைச்
சுடரச் செய்து சுவைப்பவர்
அப்பா சொல்லே மந்திரம் ஒளவை அன்றே சொன்னதை தப்பாதேநாம் போற்றுவம் தயங்காதெவர்க்குஞ் சொல்லுவம்
கல்வி கற்கச் செய்பவர் கழங்கம் இன்றி வாழ்ந்திட எல்லாஞ் செய்து தருபவர்
ஏற்றங் கண்டு மகிழ்பவர்
புறநானூறாம் புனிதநூல் போற்றுஞ் சான்றோன் ஆக்குதல் இறையும் மறவாதேத்துவம் எவர்க்குஞ் சொல்லி ஆடுவம்
Ol

Page 14
அம்மா எங்கள் தெய்வம் - ஆடலிறை -
பத்து மாதம் என்னைச் சுமந்து
பெற்றெடுத்த அம்மா
சொத்தாய் என்னை என்றுங் காக்கும்
தெய்வம் எங்கள் அம்மா
எனக்கு நோய்கள் ஏதும் வந்தால்
தான்மருந்து குடிப்பாள் தனக்கு வந்த வருத்தமாகத் தான்மெலிந்து நிற்பாள்
காலை கோழி கூவு முன்பு கண்விழித்து நிற்பாள் வேலை எல்லாம் தான்முடித்து விரும்பி எம்மை வளர்ப்பாள்
எம்மை எழுப்பிக் காலைக் கடன்கள்
யாவுஞ் செய்ய வைப்பாள்
அம்மை அப்பன் தனைவணங்கிப் பாடஞ் சொல்லித் தருவாள்
அம்மா எங்கள் அரிய தெய்வம் அவளை என்றும் பணிவோம்
இம்மா நிலத்தில் என்றும் இனிய
கண்ணாய் அவளைக் காப்போாம்.
நன்றி . சின்னப்பாப்பா - 2001
O2

துள்ளி ஒரும் வெள்ளைக்கன்று
- சைவப்புலவர் திருமதி இரத்தினம் அப்புத்துரை -
துள்ளித் துள்ளி ஓடுகின்ற
வெள்ளைக் கன்று அம்மா-அதை
மெள்ளஓடிப் பிடிக்க எனக்குக்
கொள்ளை ஆசை அம்மா.
பஞ்சு போன்ற உடலைத் தடவக்
கெஞ்சு தம்மா நெஞ்சு - அதைக்
கொஞ்சிப் பேசிக் கதைகள் கூறக்
கூப்பிடடட்டா அம்மா.
புல்லைத் தினமும் பிடுங்கி அதற்குப்
போடுகின்றேன் அம்மா - அதை
மெல்ல உண்ண வேண்டு மென்று
சொல்லிடுங்கோ அம்மா.
நெட்டை யான கொம்பி ரண்டு
நீண்டு நிற்கு தம்மா - அதைத்
தொட்டுப் பார்க்கக் கூட எனக்குத்
துணிவு இல்லை அம்மா.
கல்லும் முள்ளும் போடமாட்டேன்
கடவுளானை அம்மா - அதைப் புல்லு மேயக் கொண்டு போக
விட்டிடுங்கோ அம்மா.
நன்றி . சின்னப்பாப்பா - 2001
03

Page 15
பொந்திற் கிளியும் பூதனும் - கதிரேசன் -
வயலருகே நின்றபல தென்னைகளில் ஒன்று புயலடித்து வட்டுவிழப் பட்டுப்போச்சு நின்று
பட்டமரப் பொந்தினிலே கூடமைத்துக் கொண்டு முட்டையிட்டு வாழ்ந்தனவே பச்சைக்கிளி இரண்டு
அந்தவழிச் சென்றபூதன் பொந்திற்கிளி கண்டான் அந்திவேளை வந்தவற்றைப் பற்றமணங் கொண்டான்
ஆசையுடன் பூதனங்கு மாலையிலே சென்றான் ஓசையின்றி ஏறியந்தப் பொந்தருகே நின்றான்
உள்ளிருந்த கிளியிறகு கோதுமொலி கேட்டான் துள்ளுமனத் தோடுகையைப் பொந்தில்மெல்ல விட்டான்.
சத்தமின்றிப் பற்றவரும் கையைக்கிளி கண்டு கொத்திடவே பூதன்மிக நொந்தலறிக் கொண்டு
கையெடுத்த போதில்மற்றக் கையின்பிடி நழுவ பையனவன் வீழ்ந்துருண்டான் மண்ணையுடல் தழுவ.
ஒலக்குரல் கேட்டசிலர் ஓடிவந்து பார்த்தார் காலொடிந்த பூதன்நிலை கண்டுவிட்டிற் சேர்த்தார்.
நன்றி - சின்னவீரன் . 2001
04

பாய்யாவும் பாட்டியும்
- கலாநிதி என். சண்முகலிங்கன் .
காலைக் கட்டித் தூரத்தள்ளிக் கன்றுக் குட்டி கத்தவே பால்கறக்க வென்று பாட்டி
ஆவலோடு குந்தினாள்.
கன்று கத்தி அழுத ஓசை காதினுள் விழுந்ததும் நன்று பால் குடித்திருந்த நமது தம்பி கதறினான்.
பால் குடிக்க மாட்டேனென்று படுத்திருந்து அழுதவன் பால்கறந்த பாட்டி மீது
பாசமில்லை என்றனன்.
பாட்டி ஓடிச் சென்று கன்றைப் பால்குடிக்கச் செய்தனள் பாட்டி அச்சாப் பாட்டி யென்று பாடிப்பால் குடித்தனன்.
0ა

Page 16
காய்கள் கட்டிய வெருவி
- பண்டிதர் க. சச்சிதானந்தன் -
கந்தன் செய்த தோட்டத்திலே
காய் கனிகள் அதிகமாம்
வந்து ஆடு மாடுகள்
வளர்ந்தவற்றைக் கடிக்குமாம்
காய்கள் ஒன்று கூடியே
காக்க வெருளி கட்டின வாய்கள் திறந்து பேசின
வழி வகுத்துக் கொண்டன
சாம்பல் நீற்றுப் பூசினி
தலைக்கு வருவேன் என்றது பாம்பு போன்ற புடலங்காய்
பக்கக் கைகள் என்றது
பானை போன்ற பூசினி
பருத்த வயிறு என்றது ஆனை மிள காய்களும்
அழகு மூக்காய் ஆகின.
06

வெண்டிக் காய்கள் தாங்கள்தாம் விரல்கள் என்று தொங்கின
நொண்டிக் கால்கள் ஆயின நுனி வளர்ந்த கரும்புகள்
கனிந்த நிறத் தக்காளி
கன்னம் என்று நின்றது
நனைந்த பயற்றங் காய்களும்
நாலு மயிராயின.
முறுக்கு மீசை இல்லையென்று
முணுமுணுத்துக் கொள்ளவே
நறுக்கி வைத்த அறுகம்புல் நானிருப்பேன் என்றது.
கண்ணில்லாத வெருளி என்று
காய்கள் கவலை கொண்டன
அண்ணன் நாவற் பழவனார் அதற்கு வந்து குந்தினர்.
மாடு வந்து பார்த்தது
மனிதன் மீசை கண்டது
நாடு காடு தாண்டியே
நாலு காலிற் பாய்ந்தது.
நன்றி . சின்னவீரன் . 2001
07

Page 17
சின்னப் பாய்பா
- வை. சுந்தரேசன் -
சின்னப் பாப்பா சின்னப் பாப்பா
அழக்கூடாது
சங்கு வளையல் பொம்மைகளை
உடைக்கக்கூடாது.
பள்ளிக்கூடம் கூட்டிச் செல்வேன்
Urlub Ulgä866)TLib பாட்டுப் பாடிச் சிறுவருடன்
Lugbg|LDITL-6)TLb.
கூட்டினிலே கிளியிருந்து
என்ன சொல்லுது கொவ்வைப் பழத்தைக் கொத்திக் கொத்திக் கதைகள் சொல்லுது.
மியா மியா பூனைக்குட்டி காலை நக்குது கண்ணை மூடிக் கள்ளமாகப்
பாலைக் குடிக்குது.

சோறுாட்டித் துங்க வைக்க அம்மா வருகிறாள் சொன்ன சொல்லைக் கேட்டு நீயும் துள்ளி எழுந்து வா.
நன்றி . பிள்ளைப்பாமலர் . 1998
கனவு இரசிகமணி கனக. செந்திநாதன் -
வன்னிக் காட்டில் முன்னோர்நாள் வழியுந் தவறிச் சென்றுவிட்டேன்.
வெள்ளை முயலின் குட்டிகளும்
விளையாடிடலாம் என்றனவே.
புள்ளி மானின் கன்றுகளும் துள்ளித் துள்ளி ஓடினவே.
யானைக் குட்டி முதுகின்மேல் ஏறிக் குரங்கு ஆடியதே.
கன்னங் கரிய கரடியனார் கண்ணைத் தோண்ட வந்தாரே.
“அம்மா’ என்றே அலறிவிட்டேன் “சும்மா கனவு படு” என்றாள்.
நன்றி . சின்னவீரன் . 2001,

Page 18
பளல் வண்டி
- ஆசி. செல்வன் -
பென்னம் பெரிய பஸ்வண்டி
பெற்றோல் டீசல் தானுண்டு
சின்னஞ் சிறுசில் நான்குண்டு சிறிய எஞ்சின் தானுண்டு.
ஆந்தைக் கண்போல் இரண்டுண்டு
அதற்குப் பகலில் ஒளியில்லை
காந்திக் கண்ணை இரவினிலே
காட்டிக் கொண்டே ஓடுமடா.
எஞ்சின் வேலை செய்யுமடா
இரைந்து கொண்டே செல்லுமடா
முன்சில்லுடனே பின்சில்லும்
மூச்சையடக்கிச் சுற்றுமடா
ஒன்று பட்டுச் சுற்றுதுபார்
உறுமிக்கொண்டே ஓடுதுபார்
நன்றி கெட்ட மனிதருக்கு
நல்ல பாடம் காட்டுதடா.
சாரதி கையை விட்டுவிடின்
சாலை தவறிப் போகுமடா
பாருலகத்தில் இவ்வுண்மை
பரவும் வண்ணம் ஏகுமடா.
10

கொண்டக்டர் சொல் வேதமடா குறிப்புக் காட்டில் நிற்குமடா
கண்டார் தம்மை மரியாதை
காட்டி யேற்றிச் செல்லுமடா.
பஞ்சைச் சொரியும் தலையணைபோல்
பார்க்கும் வண்ணம் மனிதர்தனை
மிஞ்சும் வண்ணம் ஏற்றிடினும்
மேன்மை தாங்கிச் சென்றிடுமே.
நன்றி : மழலைச் செல்வம் - 1964
சூரியன்
- பண்டிதர் க.மயில்வாகனம்
வட்டமான சூரியன் வாழ்வு காட்டுஞ் சூரியன் எட்டி வான விதியில் எழுந்து மெல்ல வருகிறான்.
கொடிய இருளுஞ் சென்றது கோழி காகம் கூவுது விடியல் கண்டு மக்களும் விழித்தெழுந்து நிற்கிறார்.
பந்து போன்ற சூரியன்
பார்க்கப் பார்க்கக் கூசுது வந்து வானில் நின்றதும்
வையகத்தைப் பார்க்கிறான்.
நன்றி : குழந்தைகளுக்கான இன்பத் தமிழ்ப் பாடல்கள் . 1988
11

Page 19
கூவுகுயில்
- இ. நாகராசன் -
கூக்கூ வென்று கூவுகுயில்
கொம்பர் ஒன்றின் மீதிருந்து
காக்கைக் கூட்டில் முட்டையினைக்
கரவாய் இட்டு மறைந்ததுவே.
கூட்டிற் குயிலின் முட்டையது
கூடிய செய்தி அறியாது
நாட்ட மாகக் காக்கையடை
நாளும் நாளும் காத்ததுவே.
குறித்த நாளும் வந்தவுடன்
குஞ்சுகள் அங்கு தோன்றிடவே
பொறுக்கும் உணவைக் காக்கையுமே
புகட்டி அன்பாய்ப் பேணியதே.
பஞ்சுந் தும்பும் பார்த்தெடுத்துப்
பக்குவ மாகப் படுக்கவைத்துக்
குஞ்சுகளோடு கொஞ்சிநிதம்
குலவி இன்பம் கொள்கையிலே.
12

காலம் மெல்லக் கழிந்திடவே
காக்கைக் குஞ்சுடனேவளர்ந்த
கோலக் குயிலின் குஞ்சதுவும்
கூக்கூ வென்று கூவியதே.
காக்கா என்று கத்தாது
கனிந்து பாடுங் குயிற்குஞ்சின்
கூக்கூக் குரலைச் சகிக்காது
கொத்திக் காகம் துரத்தியதே.
முட்டை யிட்ட அன்னையையும்
முயன்று காத்த அன்னையையும்
விட்டுக் குயிலும் தனிமையுடன்
விண்ணிற் கீதம் இசைக்குதுவே.
அன்னை தந்தை ஆதரவு
அற்பமேனும் இல்லாதே
இன்னிசைக் கீதம் குயிலிசைத்து
இன்பம் ஈந்து களிக்குதம்மா.
நன்றி - மழலைச் செல்வம் - 1964
13

Page 20
கொழும்பு மாம்பழம்
- தெல்லியூர் நா. ஆறுமுகம் -
அம்மா தந்த மாம்பழம் அருமையான மாம்பழம் இம்மா நிலத்தில் இலங்கைபோல்
இனிய கொழும்பு மாம்பழம்.
அண்ணாவுக்கும் எனக்குமென்று
அரிந்து தின்னும் மாம்பழம் அம்மா தந்து சென்றனள்
அண்ணன் கையில் மாம்பழம்.
வண்ணமுள்ள மாம்பழம்
வாயிலூறும் மாம்பழம்
எண்ணி எண்ணி அண்ணனை
இரந்து கேட்கும் மாம்பழம்
சும்மா வந்த மாம்பழம் சுவைநிறைந்த மாம்பழம் அம்மாவின்சொல் மீறியே
அண்ணன் உண்ணும் மாம்பழம்
4.

தம்பி வெம்பி வாடவே தமயன் உண்ணும் மாம்பழம் நம்பி மோசம் போவதோ நல்ல கொழும்பு மாம்பழம்.
நன்றி - மழலைச் செல்வம் - 1964
தம்பி - சிதம்பரபத்தினி -
தம்பி தம்பி தம்பி தங்க வண்ணத் தம்பி.
கம்பி கம்பி கம்பி குணமோ தங்கக் கம்பி.
வெம்பி வெம்பி வெம்பி அழுவான் விழுந்து வெம்பி.
கும்பி கும்பி கும்பி குவிப்பான் மணற் கும்பி.
நம்பி நம்பி நம்பி தொழுவான் இறையை நம்பி.
அம்பி அம்பி அம்பி அவனே எங்கள் தம்பி.
நன்றி - மழலை அமுதம் 2001
15

Page 21
அன்னை எங்கள் உயிராவாள் - கூடல்நாடன் -
அன்னை எங்கள் உயிராவாள் அன்பாய் அரிதாய் அணைத்திடுவாள் இன்பம் துன்பம் எவற்றிலுமே
இருந்தெம்முடனாய் இணைந்திடுவாள்
என்பைக் கூட ஈந்தெமக்கு ஏற்றங் கிடைக்கச் செய்திடுவாள் நன்மை தீமை நினைந்துளத்து நலஞ்செய்துயர்வு கண்டிடுவாள்.
ஆசான் தாதி செவிலித்தாய் அவர்களாகி அணைத்திடுவாள் பேசாதிருந்த காலத்தும் பின்னாய் உதவி நின்றிடுவாள்.
என்றும் உலகு வாழ்த்திநிற்ப
எம்மை இட்டுச் செல்லுமவள் அன்பால் மெழுகென உருகியெமக்(கு) ஆதரவாகி நின்றிடுவாள்.
16

பட்டம் கட்டி ஆருவோம் - ச. அருளானந்தம் -
பட்டம் ஒன்று கட்டுவோம் பறக்க விட்டுக் கட்டுவோம் எட்டு மூலைப் பட்டத்தை ஏற்றி விளை யாடுவோம்.
மயிலைப் போலப் பட்டமாம் வண்டு போன்ற பட்டமாம் குயிலைப் போன்று வானிலே
கூவும் விண்ணுங் கட்டுவோம்.
வண்ணத் தாளை வெட்டுவோம் வெட்டி அளவாய் ஒட்டுவோம் கண்ணைப் பறிக்கும் நிறத்திலே
கட்டிப் பட்டம் ஏற்றுவோம்.
நூலைக் கட்டி கொள்ளுவோம் நுனியைப் பிடித்துக் கொள்ளுவோம் வாலை ஆட்டிப் பட்டமும்
வடிவாய்க் காற்றிற் பறக்குதாம்.
..)sm(!ptöL| *';
நன்றி - னச் சின்னப் பாட்டு -
17
2000

Page 22
குருவியுஞ் சிறுவரும்
- சைவப்புலவர் திருமதி இரத்தினம் அப்புத்துரை
சிட்டுக் குருவி இரண்டு சேர்ந்து சிறிய கூட்டில் இருந்தன துட்டச் சிறுவர் இருவர் சேர்ந்து விட்டெறிந்தார் கல்லினை
விட்ட கல்லுப் பட்ட சிட்டு விழுந்து மண்ணில் இறந்தது மட்டில்லாத கவலையோடு மற்றச் சிட்டுப் பறந்தது.
பறந்த சிட்டுத் தூர இருந்த பனைமரத்தில் இருந்தது எறிந்த சிறுவர் ஓடி வந்து இறந்த சிட்டைக் கண்டனர்.
இறந்த சிட்டைக் கண்ட சிறுவர் இன்பமடைந்தே ஆடினர் பறந்து சென்ற மற்றச் சிட்டை விரைந்து தேடிச் சென்றனர்.
விரைந்து தேடிச் சென்று அதனைப் பனை மரத்திற் கண்டனர் கரையிற் கல்லுக் குவியல் கண்டு மறைந்து மறைந்து பொறுக்கினர்.
18

மறைந்து கல்லுள் இருந்த பாம்பு விரைந்து காலிற் கடித்திட மறைத்து வைத்த கல்லைப் போட்டு மயங்கி வீழ்ந்தான் மண்ணிலே.
மயங்கி விழுந்த நிலையைக் கண்டு கலங்கி நின்ற மற்றவன் துயரந் தாங்க முடியா தழுது தவறு நினைந்து வருந்தினான்.
நன்றி - மழலை முத்துக்கள் 1998.
шт"Lцр
- பொன். தர்மேந்திரா -
வயது நிறைந்த பாட்டியவர் வாஞ்சையாய்க் கதை கூறிடுவார் பாட்டி என்று அழைத்திடவே பாசங் கொண்டு சிரித்திடுவார்.
பல்லும் இல்லாக் கிழவியவர் சொல்லும் எல்லாம் மறந்தாரே பொல்லும் மெல்லப் பிடித்திடுவார் பொக்கை வாயால் சிரித்திடுவார்.
அல்லும் பகலும் மகிழ்வுடனே பொழுதை எல்லாம் கழித்திடுவார் அழகு யாவும் நீங்கிடவே அழுது கொண்டே இருந்திடுவார்.
நன்றி - குழந்தைக் கவி அமுதம் . 1991
19

Page 23
சிங்கமும் முயலும் - ஆடலிறை -
சிங்கம் ஒன்றின் உணவாய் நாளும்
ஒருவிலங்கு சென்றது
அங்கு வாழ்ந்த சிறிய முயலின்
நாளும் வந்து சேர்ந்தது
மூளை கொண்ட சிறிய முயலார்
திட்டம் ஒன்று திட்டினார் வேளை வந்த போது மெதுவாய்
நடந்து பிந்திச் சென்றனர்
பசியினாலே வாட்ட முற்ற சிங்கம் சீறிச் சினந்தது அசிங்கம் ஒன்றைக் கண்டு நின்றேன்
என்று முயலும் சொன்னது
போட்டியாக இன்னும் ஒன்றா
காட்டு கொல்வேன் என்றது கூட்டிச் சென்று முயலார் கிணற்றுள்
எட்டிக் குனிந்து காட்டினார்
20

கிணற்றுள் சிங்கம் தன்னைக் கண்டு
கொல்லத் தாவிப் பாய்ந்தது
சுணக்கம் இன்றி ஓடி முயலார்
செய்தி சொல்லி மகிழ்ந்தனர்.
நன்றி . சின்னவீரன் - 2001
பச்சைக்கிளி
பண்டிதர் க. மயில்வாகனம்
பச்சைக் கிளியே அஞ்சுகமே பழத்தைக் கோதும் அஞ்சுகமே உச்சிக் கொம்பில் உட்கார்ந்தே ஊஞ்சலாடும் அஞ்சுகமே.
வட்டமான ஆரத்தை வாங்கித் தந்தார் ஆரம்மா எட்டி எட்டிப் பறந்தே நீ எங்கே போகப் போகின்றாய்
பாலும் பழமும் தருவேன்யான் படுக்க மெத்தை தந்திடுவேன் கோலக் கிளியே வா அம்மா கொஞ்சிக் கொஞ்சிப் பேசிடுவோம்.
நன்றி - குழந்தைகளுக்கான இன்பத் தமிழ்ப் பாடல்கள் - 1988
21

Page 24
காகமும் சூழலும் - ச. அருளானந்தம் -
விரைவாய்ப் போன லொறியது முட்டி எலியை அடித்தது அரைந்து தேய்ந்த உடலது அந்தத் தெருவிற் கிடந்தது.
பாவம் பார்க்க ஆளில்லை பக்கம் போடத் தோதில்லை போவோர் வருவோர் பார்த்தனர்
பார்த்துப் பார்த்துப் போயினர்.
காகம் ஒன்று வந்தது கண்ணால் எலியைக் கண்டது காகா என்று சொன்னது
காகக் கூட்டஞ் சேர்ந்தது.
சத்தம் போட்டு நின்றது தசையை எலும்பைத் தின்றது சுத்தம் செய்து போனது சூழல் தப்பிப் பிழைத்தது.
நன்றி . காகமும் தம்பியும் . 199
22

திருவாளர் சின்னையா சிதம்பரநாதன் அவர்களின் வரலாற்றுப் பின்னணி
“தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்”
மனித வாழ்வின் வெற்றி தோல்வியை மட்டிடற்கு வான் புகழ் கொண்ட வள்ளுவன் சொல்லி வைத்த பொன்னான விதி இது. ஒருவர் வாழ்ந்து மறைந்தபின் அவர் வாழ்வு பின்னோற்குப் பயனுடைய வழிகாட்டியாய் அமையுமாயின், அதுவே முழு வெற்றியுடைய வாழ்வாகும். இதனைக் கருத்திற்கொண்டே வாழ்வாங்கு வாழவேண்டும். தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ வேண்டும் என்றெல்லாம் அறிவுடையோர் சொல்லி வைத்தனர். ஒருவர் வாழ்ந்து மறைந்தபின் அவர் வாழ்வின் இலட்சியங்கள் பிறர்க்குப் பயன்படுவதும் அவருடைய பின்னோர் அவர் வழியில் வாழ்ந்து சிறப்புறுதலுமே அவர் வாழ்வின் எச்சமாகும். எனவே நாம் எமது சந்ததியினரின் வாழ்க்கை வரலாறுகளையும், வெற்றி மேம்பாடுகளையும் ஆராய்ந்து தெளிந்து அவற்றைக் காலத்தாற் சிதையாவண்ணம் சொல்லோ வியமாக்கிட வேண்டும். அதுவே நின்று நிலைத்துப் பின்வரும் சந்ததியினர் தம் முன்னோர் வழிநின்று அவர் புகழுக்கு ஊறுநேராவண்ணம் அவர் புகழ் பேணி தம் புகழ் நாட்டி வாழ்வதற்கு உதவ வேண்டும்.
இவ்வுயரிய நோக்குடனேயே நினைவுமலர் வெளியிடும் வழக்குத்தோன்றி நிலைபெற்று வருகின்றது.
23

Page 25
இவ்வழியில் வாழ்வாங்கு வாழ்ந்து வான்புகுந்த திருவாளர் வேலுப்பிள்ளை சின்னையா அவர்களின் இந்நினைவுமலரில், நாடாளவந்து நல் வாழ்வில் நிலைபெற்ற அவர் முன்னோர் வரலாற்றை இங்கு எடுத்துரைப்போம்.
சோழ இராச்சியம் நிலைகுலையப் பாண்டியர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆதிக்கம் பெற்றிருந்தபோது பாண்டியர் ஆஞ்ஞைப்படி சிங்கை ஆரியர் யாழ்ப்பாணத்தில் அரசு செய்யத் தொடங்கிய காலத்துப் பாண்டியரின் மந்திரியாகவும், அவர் ஆஞ்ஞைப்படி சிலகாலம் இலங்கைச் சிற்றரசராகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் நல்லூரை இராசதானியாக்கி அடிமை குடிமைகளுடன் வசித்து வந்தவரும், பின் இணுவிலைத் தமக்குறைவிடமாக்கி அடிமை குடிமை களுடன் வசித்தவரும், கங்காகுலதிலகரும், இந்தியாவில் காரைநகரைத் தமது ஜெனனவூராகக் கொண்டவரும், திருக்கோவலூர்ப் பேராயிரவனைத் தமது மருகராகக் கொண்டவருமாகிய மன்னன் காலிங்கராயன் தென்னாட்டில் மந்திரியாயும், இலங்கைச் சிற்றரசாயுமிருந்தாரென்பதும், பிறவும் சரித்திர ஆராய்சியாலும் இருமரபுந்துய்ய ரீமான் சின்னத்தம்பிப் புலவரென அழைக்கப்படும் கதிர்காமசேகர மானாமுதலியார் பாடிய செய்யுள் களாலும், தென்னிந்தியாவிலே வெளிப்பட்டுள்ள சாதனங்கள் சிலவற்றாலும் அறியக்கிடக்கின்றன. கி.பி. 1263-1312 வரையும் அரசாண்ட மாறவன்மன்குலசேகர பாண்டியன் இக் காலிங்கராயன்மேற் கொண்ட பிரீதியினாற் தமது , சிம்மாசனத்துக்கும் மாளிகை ஒன்றிற்கும் காலிங்கராயனெனப் பெயர் வழங்கினா
24

னென்பது குருவித்துறைச் சாதன மொன்றால் தெரிய வருகின்றது. இன்னும் திருட்டாந்தமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரிலும் இணுவிலிலும் இவைகளை யடுத்தும் சிலவுண்மைகள் அறியக்கிடக்கின்றன. நல்லூர்ச் சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அருகேயிருக்குங் குளம் காலிங்கராயன் குளம் எனப்படும். அதையடுத்த காணிகள் அநேகம் காலிங்கராயன் வயல், திடல், புலம் என்னும் பெயர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இணுவிலில் காலிங்கராய மன்னர் தாம் கட்டிய 16 கட்டு வீட்டில் ஓர் அறையில் சிவகாமியம்மன், நடராசர், பிள்ளையார், வைரவர், பத்திரகாளியம்மன் முதலிய தெய்வங்களை வைத்துப் பூசித்தார் என்பதும், காலிங்கராயன் மகன் இளந்தாரி (கைலாயநாதன்) தெய்வீகமானான் என்பதும், இளந்தாரியார் கட்டிடம் இவற்றையடுத்து காரைக்காடு காலிங்கராயன் புலம் என்ற காணிகள் இருக்கின்றன என்பதும் சென்னை சாதனப் பரிசோதனை றிப்போட 1900 ஆம் ஆண்டின் 319 ஆம் இலக்க சாதனத்தால் அத்தாட்சிப்படுத்தப் பகின்றது. இன்னும் மகாவம்ச நூலில் 90 ம் அதிகாரத்தாலும் தெரிய வருகின்றது.
தென்னிந்தியாவில் திருக்கோவலூரில் இருந்து
சிங் கை ஆரியனினர் அழைப் பரிணி பேரில
பரிவாரங்களுடன் இலங்கை வந்து இணுவிலில்
குடியேறிய பேராயிரவர் காலிங்கராயரின் மகள்
கமலாலயத்தை மணந்து கொண்டார். இந்த
வம்சத்துதித்த பெரியதம்பி என்பவருக்கு மூத்தத்தம்பி
25

Page 26
சிதம்பரநாதர், இராமநாதன், சின்னத்தம்பி என நான்கு மைந்தர் பிறந்தனர். சின்னத்தம்பி சிறுவயதிலே சிவகாம சுந்தரியின் அருளாற் கவி பாடினார். அதனாற் சின்னத் தம்பிப்புலவர் என அழைக்கப்பட்டார். ஆசிரியத் தொழில் புரிந்த புலவர் அவர்கள் சிவகாமியம்மை பேரிற் பத்துப் பதிகம், பாமாலை, திரு ஊஞ்சல் போன்ற அநேக பாடல்களையும் இளந்தாரியார் என நாம் வணங்கும் கயிலாயநாதன் பேரில் பஞ்சவர்ணத்தூது என்ற பதிகத்தையும் பாடியருளினார். காரைக்கால் காலிங் கராயன் வம்சத்திலும், திருக்கோவலூர் பேராயிரவர் வம்சத்திலும் உதித்த சின்னத்தம்பிப்புலவர் இருமரபும் தூய கதிர்காமசேகரமானா முதலியார் என்று பட்டப்பெயர் பெற்றார் என்பது பாவலர் சரித்திர தீபத்தின் 147-148 ம் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. புலவர் அவர்கள் தான் புனைந்த கவிதைகளில் மேற்காட்டிய சரித்திர வரலாறுகளை விளக்கியுள்ளார்.
மேற்குறித்த சின்னத்தம்பிப்புலவரின் சகோதரன் சிதம்பரநாதருக்குப் பெரியதம்பியார், காலிங்கராயர், வேலாயுதர் என மூன்று மைந்தர்கள் தோன்றினர். இவர்கள் வம்சம் இணுவில், ஆனைக்கோட்டை, சுதுமலை, கோண்டாவில் ஆகிய இடங்களில் முதுபெரும் குடிகளாக வளர்ந்து வருகின்றன. இவர்களிற் குறித்த வேலாயுதருக்குச் சுப்பையா, முதலித்தம்பி என இருவர் மக்கள். குறித்த முதலித்தம்பி சுதுமலையில் தமது வம்சத்தில் உதித்த செல்வத்தை விவாகம் "செய்து பெற்றமகன் வயித்திலிங்கம். இவர் பிறந்ததும் தாயார் தேகவியோகமாயினார். குறித்த முதலித்தம்பி 2ம் தாரமாகத் தமது வம்சத்தைச் சேர்ந்த சுதுமலை
26

கதிர்காமர் முருகேசரின் இளையமகள் பார்வதிப் பிள்ளையை விவாகம் செய்து இணுவிலைத் தமது உறைவிடமாக்கி வாழுங்காலை பெற்ற மக்கள் சிதம்பரநாதர், சுப்பையா (உபாத்தியார்). வேலுப்பிள்ளை, பெரியதம்பியார், கார்த்திகேசர் முருகேசம்பிள்ளை, சின்னத்தம்பர் அல்லது சின்னத்தம்பி (உபாத்தியார்), தம்பையா, கந்தையா, செல்லப்பா, சிதம்பரவல்லி, கண்ணகைப்பிள்ளை என்போராவர். இவர்களில் குறித்த வேலுப்பிள்ளை, திருவாளர் சின்னையா அவர்களின் தந்தையாவர். ஏனையவர்களின் வழிவந்தோர் இணுவில், சுதுமலை, ஆனைக்கோட்டை, சங்கானை, உரும்பராய், சங்குவேலி, நல்லூர், வண்ணார்பண்ணை, கோப்பாய், குரும்பசிட்டி, தெல்லிப்பளை ஆகிய இடங்களிற் பரந்து நலம் பெறு மரபில் மிளிர்கின்றனர்.
மேற்குறித்த வேலுப்பிள்ளை தமது வம்சத்தில் சைவ வேளாண் மரபில் உதித்த, கோண்டாவில் ஐயம்பெருமாளின் பிள்ளைகளான வீரகத்தி உபாத்தியார், செல்லப்பா, பொன்னம்மா, தங்கமுத்து மக்களுள் தங்கமுத்துவை மணம்புரிந்து கோண்டாவிலைத் தமது உறைவிடமாகக் கொண்டு பொன்னையா, சபாபதி, சின்னையா என்போரை மக்களாகப் பெற்றெடுத்தார். குறித்த வேலுப்பிள்ளை அமரரானதும் தங்கமுத்து அவர்கள் கந்தர் வேலுப்பிள்ளையை மணம்புரிந்து அன்னம்மா எனும் பெண் மகளையும் பெற்றார். திரு. பொன்னையா அவர்கள்.ழுருகேசு புத்திரி
27

Page 27
மாணிக்கம் அவர்களை மணமயர்ந்தார். திரு. சபாபதி ஆசிரியர் அவர்கள் பிரமச்சரிய ஒழுக்கவழி வாழ்ந்து கடமைகள் பல புரிந்து ஒழுகினர். அன்னம்மா என்பவர் திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களை வதுவைசெய்து, திரு. சபாபதி (தற்போதைய கிராமசபைத் தலைவர், கொக்குவில்) அவர்கள், திரு. இரத்தினசிங்கம் (தபாலதிபர்), திரு. ஞானசேகரம் ஆசிரியர் என்போரும், ஆசிரியர் திரு. பரமானந்தம் பெண் கனகலட்சுமி. திரு. இராமநாதன் (பொலிஸ் சேவை), பெண் மனோன்மணி ஆகிய இரு புதல்வியரும் சிறந்து விளங்குகின்றனர்.
தற்போது பரமபதமடைந்த திரு. வேலுப்பிள்ளை மகன் சின்னையா அவர்கள், இல்லறப் பண்பின் இனிது பொலிவுற்ற திரு. இராமலிங்கம் பொன்னையா அவர்களின் சிரேஷ்ட புத்திரி சரஸ்வதி அவர்களைத் திருமணமயர்ந்து, இல்லறத்தை நல்லறமாக நடாத்தி வந்தார்கள். சரஸ்வதியவர்களின் சகோதரர்கள் கோண்டாவில் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தலைமை ஆசிரியராகச் சேவையாற்றி இப்போ இளைப்பாறியிருக்கும் திரு. குமாரசாமி ஆசிரியர் அவர்களும், சுகாதார மேற்பார்வையாளர் திரு உலகநாதர் இராசசுப்பையா அவர்களின் பாரியார் பாக்கியமும் ஆவர். திரு. இராசசுப்பையா பாக்கியம் தம்பதிகளுக்குப் பாலசுப்பிரமணியம், பிரேமானந்தன், கருணானந்தன், நந்தகுமார் ஆகிய குமாரர்களும், தனலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய இரு புத்திரிகளும் வாழ்கின்றனர். திரு. குமாரசாமி ஆசிரியர் அவர்கள், திரு. சீனிவாசகம் மகள் சிவஞானம்மாவைக்
28

கடிமணமியற்றி, ஆனந்த நடராசா என்னும் அருந்தவப் புதல்வனையும், சரோஜினிதேவி, சிவஞானதேவி, மகாதேவி, பத்மாதேவி யென்னும் அருமைப் புதல்வியரையும் பெற்றெடுத்தார். w
அமரரான திரு. வேலுப்பிள்ளை சின்னையா அவர்களும், மனைவி சரஸ்வதி அவர்களும் இனிது இல்லறம் நடாத்தி வந்த காலையும், பல்லாண்டுகாலம் புத்திரரின்றி வருந்திச் சதிபதிகளாகத் தில்லைச் சிதம்பர தரிசனை செய்து பொற்பிள்ளைத் தொட்டில் நிர்மாணித்து நடராஜப் பெருமானுக்கு வழங்கிய புண்ணியப் பேற்றின் பயனாக ஒப்பற்ற பண்புடை மைந்தன் அவதரித்தார். சிதம்பரநாதரின் கருணையால் அவதரித்த காரணத்தாற் சிதம்பரநாதன் என்று நாமமிடப்பட்டுக் கல்வியிலுயர்ந்து அரசாங்க எழுதுவினைஞராகக் கடமை புரியத் தொடங்கித், தனக்கே உரிய இயல்பான ஆற்றலால் உயர்ந்து, தற்பொழுது வழக்கறிஞராகத் திகழ்கின்றார். வரம்பெற்ற மைந்தனாகையாற் சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகும் பண்பில் திகழ்கின்றார். தந்தையின் விருப்பத்தையும் தாயின் பண்பையும் சிரமேற்குடித் தாய்மாமன் புத்திரி சரோஜினிதேவியை இல்லறம் நடாத்தத் திருமண மியற்றிச் சிவராஜ் ரீஸ்கந்தராஜ் என்னும் மைந்தர்களும், வசந்தினி என்னும் புத்திரியும் மிகுசைவத்துறை விளங்கவும், பரம்பரை பொலியவும் மலர்ந்திலங்கு கின்றனர்.
திரு. வேலுப்பிள்ளை சின்னையா அவர்கள் தங்கள் மூதாதையர்களின் வழிவந்த இணுவில்
29

Page 28
சிவகாமியம்மன் கோவில், அங்குள்ள பிள்ளையார் கோவில் என்பவற்றின் வளர்ச்சியிலே வாழ்நாள் முழுவதும் கண்ணுங்கருத்துமாயிருந்ததுடன் தன் தவப்புதல்வன் சிதம்பரநாதன் அவர்களின் ஆக்கத்திலும் நோக்கங்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். காணி சம்பந்தமான சட்ட நுணுக்கங்களை வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வந்த காரணத்தால் அவருடைய மைந்தன் சட்ட மேதையாகத் திகழ்கின்றாரென்பது சான்றோர் பலர் முடியாகும். அவர் வாழ்வில்கொண்ட ஆசைகள் இரண்டு. ஒன்று சிவகாமியம்மன் கோவில் சிறப்புற்று வளர்ந்தோங்கவேண்டுமென்பது. மற்றையது தன் மகன் சட்டநூல் அறிஞன் ஆகவேண்டும் என்பது. இவ்விரு ஆசைகளும் அவர் உயிர் வாழும்பொழுதே நிறைவேறின வென்றால், அரவது இதய சுத்தியும் இலட்சிய வாழ்வும் எத்துணை உயர்ந்தன என்பதை நாம் எடுத்துரைக்க வேண்டுவதில்லை. இவர் தக்கார் என்பதை அவரது எச்சமே காட்டிற்று. அவரது சந்ததி எதிர்காலத்தில் இதனை எல்லோர்க்கும் உணர்த்தும். அன்னார் பரம்பரை அட்டலக்குமி வாசம் பெற்று மேலோங்கி வாழவேண்டுமென்பதே மக்கள் யாவரதும் வேணவா
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது” - அறிக.
- மணிமேகலை
(குறிப்பு : இக்கட்டுரை, கோண்டாவில் உயர்திரு வேலுப்பிள்ளை சின்னையா அவர்களின் நினைவு மலரிலிருந்து எடுக்கப்பட்டது)
30

சிவமயம்
நன்றி
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவின் இறுதி நிலையில் உதவியோர்க்கும் இறுதிக் கிரியைகள் செவ்வனம் நடைபெற உழைப்பு வழங்கியோர்க்கும்
தந்தி, தொலைபேசி, கடிதம், என்னும் ஊடகங்கள் மூலம் அஞ்சலி செலுத்தியோர்க்கும்.
மலரஞ்சலி, மலர்வளைய அஞ்சலி, மலர்மாலை அஞ்சலி, உரை அஞ்சலி வழங்கியோர்க்கும்
இறுதிக் கிரியை நிறைவாகிய பின் நடைபெற்ற ஆத்ம சாந்திக் கிரியைகளிற் பங்கு கொண்டோர்க்கும
முடிவில் நடைபெற்ற ஆத்மசாந்தி மதியபோசன
விருந்திற் கலந்து அப்பாவின் ஆத்ம சாந்திக்காக வேண்டியோர்க்கும்
எமது இதயங் கனிந்த நன்றி.
LD606016, பிள்ளைகள் மருமக்கள்
சி. சரோஜினிதேவி
சிவராஜ் - லலிதாம்பிகை
1/3, G Block, பூரிஸ்கந்தராஜ் - சியாமளா
Barathy Mawatha, i osgi gadfa - ஞானகணேசன்
Maligawatte, சுதர்சிணி
Colombo - 10 சுபாசினி - சோதிநாதன்
Tel: 343913. பிரியதர்சினி.
31

Page 29
\, V V
முதலித்தம்பி Lμπίτι
V V Ny
சிதம்பரநாதர் சுப்பையா வேலுப்பிள்ளை பெரிய முருகேசம் சின்னத்தம் (உபாத்தியார்) -- தம்பியார் பிள்ளை சின்னத்த தங்கமுத்த (உபாத்திய
பொண்ணையா + சில
பொன்னையா சபாபதி சின்னையர
十 (9 uagsabuni) மாணிக்கம் -r
சரஸ்வதி
ஆனந்தந
ፈm o --
தமபரநாதன ஆனந்தல
-- சறோஜினிதேவி <--
V V
சிவராஜ் சிறிஎம்கத்தராஜ்
-- -- லலிதாம்பிகை fugiorg
ஞானகணேசன்
கெளசிகன் ரஜிவன்
V V
வசந்தினி சுதர்சினி சுபாசினி
-- சோதிநாதன்
சர்றி s சந்திய

வதிப்பிள்ளை
V V V
i obsû60Uuo கந்தையா செல்லப்பா சிதம்பரவல்லி கர்ைனகப்பிள்ளை bio Inủ)
இராமலிங்கம் + தையல்நாயகி
Jåfssos &diffygosaflu grib Glassbenody&&?
குமாரசுவாமி பாக்கியம்
(அதிபர்)
--
சிவஞானம்மா இர்ாசசுப்பையா
டராசா சறோஜினிதேவி , சிவஞானதேவி மகாதேவி பத்மா தேவி
+
ட்சுமி தரைராஜா சிறீஸ்தாளல்
ரியதர்சினி

Page 30


Page 31