கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு தீபம் (கா. கதிர்காமத்தம்பி)

Page 1
குனித்த புருவமும் கொவ்6ை னித்த சடையும் பவளம்போ இனித்த முடைய எருத்தபெ மனித்தம் பிறவியும் வேண்
Y -
&. நினை
്ള 28-03
 

வச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் ல் மேனியிற் பால்வெண்ணிறும் ாற் பாதமுங் காணப்பெற்றால்
ாருவ தேயிந்த மாநிலத்தே.

Page 2


Page 3
裘
بي سياسية "
砷 〔
نسبت به سده ۰۳ مه || 6 < |
 
 
 

திதிவெண்மா
செப்புநற் சுபானுதனிற் சேர்மாசி சார்பூர்வம் ஒப்பிலா வட்டமியோ குற்றசனி - இப்புவியில்
மன்னர்புகழ் கதிர்காமத் தம்பியுமே தான் மறைந்து
கண்ணுநலோன் தாளடைந்து நாள் 莺

Page 4

சிவமயம்
தில்லைச் சிற்றம் பலத்துள் உறையும் அம்பலவாணர் அருள் நிழலில் ஆனந்தத் துயில் புரியும்
பன்னாலை ~ தெல்லிப்பழை
setoji கா. கதிர்காமத்தம்பி
(ஒப்வு பெற்ற அதிபர்) அவர்களின்
சிவபதப் பேறு குறித்து வெளியிடப்பட்ட
நினைவு தீபம்
28-O3 - 2 OO 4

Page 5
ஓம் fuš
எங்கள் குடும்பத் தலைவரின் நினைவு தீப மலரை அவர்களின் பாதமலர்களில் துட்டிச் சமர்ப்பித்து வணங்குகின்றோம்
Dobsors மக்கள்,மருமக்கள்
பேரர்கள்
 

திருச்சிற்றம்பலம் தேவாரங்கள் திருதுநானசம்பந்த சுவாமிகள் முதலாம் திருமுறை
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
இரண்டாம் திருமுறை
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
முன்றாம் திருமுறை
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது நாத நாம நமச்சிவாயவே.
திருநாவுக்கரக சுவாமிகள்
நான்காம் திருமுறை
கூற்றாயினவாறு விலக்க கிலீர் கொடுமைப் பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை யம்மானே.
-1-

Page 6
ஐந்தாம் திருமுறை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.
ஆறாம் திருமுறை
தூண்டு சுடரனை சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஏழாம் திருமுறை
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
W நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே.

எட்டாம் திருமுறை
மெய்தான் அரும்பி விதிர் விதித்து உன் விரையார் கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணிர்ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
ஒன்பதாம் திருமுறை
திருவிசைப்பா~சேந்தனார்
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளங் குளிரவென்கண் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
-3-

Page 7
பத்தாந் திருமுறை
திருமந்திரம் ~ திருமூலர்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாருமறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
பதினோராந் திருமுறை
கல்லாப் பிழையும் கருதாப் பிழையுங் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருளாய் கச்சி யேகம்பனே.
பன்னிரண்டாந் திருமுறை
திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்
இறவாத வின்ப வன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்று
மறவாமை வேண்டு மின்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி யறவாநி யாடும் போதுன் னடியின்கீ பூழிருக்க வென்றார்.
--O-52(k-be-de---

மறு பிரசுரம் இல்லற வாழ்வில் சஷ்டியப்த பூர்த்தி கானும் மாமனிதர் ஆசிரியர் திரு.காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள்
செய்வதற்கு அரும்பெரும் காரியங்களைச் செய்து சாதனை படைப்பவர்களைப் பெரியோர் என்றும் அவ்விதம் அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர்களைச் சிறியோர் என்றும் காரிய வகையால் மக்களை இருவகைப்படுத்தியுள்ளார் திருவள்ளுவ நாயனார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு அமைய இன்றைய விழா நாயகராகத் திகழும் எமது ஆசிரியப்பெருந்தகை திரு. கா. கதிர்காமத் தம்பி அவர்களும் அரிய பெரிய கைங்கரியங்களைச் செய்து பெரிவர்களுள் ஒருவராக மிளிர்கின்றார்கள்.
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் பன்னாலைக் கிராமத்தில் திரு. காசிப்பிள்ளை அவர்களுக்கும் திருமதி வள்ளிப்பிள்ளை காசிப்பிள்ளைக்கும் மகனாக 26.02.1914ல் பிறந்தார் திரு. கதிர்காமத்தம்பி அவர்கள். இவரது மூத்த உடன்பிறப்புகள் மீனாட்சிப்பிள்ளை, சண்முகம்பிள்ளை விநாயகமூர்த்தி ஆகியோர். கிருஷ்ணமூர்த்தி இவருக்குத் தம்பி.
அக்காலத்தில் கல்விக்குப் பெயர் பெற்று விளங்கிய பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் திரு. கதிர்காமத்தம்பியின் கல்வி ஆரம்பமாகியது.

Page 8
பண்டிதமணியின் மாணவர்
திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையில்
1931 முதல் 1933 வரை பயின்று ஆசிரியர் தராதரப் பத்திரத்தைப் பெற்ற இப் பெரியார் தான்கற்ற பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் 1936 ல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1959 முதல் அதன் அதிபராகவும் சேவையாற்றினார். கணிதம், நாட்டுச் சீவன சாஸ்திரம், பூமி சாஸ்திரம் கயிற்று வேலை, விவசாயம் ஆகிய பாடங்களைச் செவ்வனே கற்பிப்பதில் வல்லவராக விளங்கினார். கணிதத்தில் இவர் மிக விவேகி. 1942ல் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடந்த தும்புக் கைத்தொழிற் பயிற்சி வகுப்பில் ஆறு மாதங்கள் பங்குபற்றிப் பயிற்சி முடிவில் சேர் கனகசபை வித்தியாசலையில் தமது செவில் கொட்டில் அமைத்து, 6ம் வகுப்பு முதல் S.S.C வரையான எல்லா வகுப்புகளுக்கும் தும்புக் கைத்தொழிலை ஒரு பாடமாகக் கற்பித்தார்.
கல்விச் சேவையுடன் சமய சமூக சேவைகளையும் மேற்கொண்டு ஊரவர்களும் அயலுாரவர்களும் போற்றும் வகையில் பலவித பணிகளைச் செய்தார். சைவாசிரிய கலாசாலையில் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் மாணவராக இருந்தவராதலால் அவர் வழியில் இவரும் சமய தீட்சை பெற்றுச் சிறந்த சைவாசார சீலராக விளங்கியவர். நித்திய சந்தியாவந்தனம் செய்து பன்னிரு திருமுறைப் பாராயணம் செய்தே உணவருந்தும் பழக்கம் உடையவர். ரீலழரீ ஆறுமுக நாவலர் பெருமான் அவர்களின் வழிநின்று ஒழுகுபவர்.
பாடசாலையில் நால்வர் குருபூசைகள் வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். மாணவர்களிடையே திருமுறைப் பண்ணிசைப் போட்டியும் மனனப் போட்டியும் நடத்தப் பெற்று வெற்றி பெற்ற மாணவருக்குப் பரிசில்களும் வழங்கப்பெறும். வருடந்தோறும்
-6-

மாணவருக்குச் சமயப் பிரவேசத்தீட்சை கார்த்திகை மாதத்தில் நடைபெறும். கிராமத்துப் பொதுமக்களும் சமயத் தீட்சை பெற வசதிகள் அளிக்கப்பட்டன. மாணவர் கல்வியிலும் பாடசாலை வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த இவர் மெய்வல்லுநர் போட்டி, பரிசளிப்பு விழா, கலை விழா முதலியவற்றை ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் ஒத்துழைப்புடன் வருடந்தோறும் நடத்தி பொதுமக்களுக்கும் பாடசாலைகளுக்குமிடையே நல்ல உறவையும் வளர்த்து வந்தார். அதனால ஊரவர்களினதும் கலி விதி திணைக்களத்தினதும் நன்மதிப்புக்கு அவர் உள்ளானதில் வியப்பொன்றுமில்லை.
சிறந்த நிர்வாகி
தமது நிர்வாகத் திறமையாலும் ஆளுமையாலும் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பாராட்டுதல்களை எப்பொழுதுமே
பற்று வந்திருக்கின்றார். ஒரு சம்பவத்தை இந்த இடத்தில்
டுத்துக் காட்டுதல் பொருந்தும். 1960ம் ஆண்டு தனி முகாமையில் இயங்கி வந்த பாடசாலைகளை சுவீகரிக்கத் தொடங்கியது. அப்போதைய பாடசாலை முகாமையாளர் தாமாகவே முன் வந்து பாடசாலையை அரசாங்கத்துக்குக் கையளித்தார்.
கையளிக்கும் சம்பவத்துக்குக் கொழும்பிலிருந்து கல்விப் பணிப்பாளரும் உயர் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். அப்பொழுது அதிபராகக் கடமையாற்றிய ஆசிரியர் திரு. கா.கதிர்காமத்தம்பி அவர்கள் ஆற்றிய உரையை வியந்து பாராட்டிய பணிப்பாளர் தமக்கு அணிவித்த மாலையைக் கழற்றி எமது அதிபருக்கே சூட்டிக் கெளரவித்தமை ஊருக்கே பெருமையளித்த காட்சியாகும். அதிபரின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாக அமைந்த அந்நிகழ்ச்சி பாடசாலைப் பதிவுப் புத்தகத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Page 9
பாடசாலையின் நூற்றாண்டு விழாவை 1965ம் ஆண்டு அதிபர் கோலாகலமாகக் கொண்டாடினார். அதன் ஞாபகார்த்தமாக ஒரு சிறு மலரும் வெளியிடப்பட்டது. 1965, 1966 களில் பாலர் பாடசாலைக் கட்டிடமும் தண்ணிர்த் தொட்டியும் கட்டி முடிக்கப்பட்டன. அரசாங்க உதவிப் பணம் பெற்றுப் பெரிய பாடசாலைக்கு ஓடும் போடப்பட்டது.
திருப்பணிகள்
சித்தாந்த சாஸ்திரம் கற்கும் அவா உந்தவே பன்னாலை சித்தாந்த வித்தகர் திரு.வி. சங்கரப்பிள்ளை ஆசிரியர் அவர்களிடம் முறைப்படி சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலாய சாஸ்திர நூல்களைக் கற்றார். இன்றும் அவரையே தமது குருவாகப் போற்றி வருகின்றார். மேலும் சித்தாந்த சாகரம் பண்டிதர் திரு.மு.கந்தையா அவர்களிடத்தும் சித்தாந்த சாஸ்திர நூல்களையும் கற்றுத் தேறி அவற்றில் விற்பன்னரானார்.
தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு மிக்குடைய இப்பெரியார் கூட்டுப் பிரார்த்தனையை 1938ல் முதன் முதலாகப் பன்னாலை மயிலையம்பதி ஞானவைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து வைத்த பெருமையுடையவர். கொழும்புக்கு இடம் பெயரும் வரை அப்பிரார்த்தனையைத் தொடர்ந்து நடத்தியதுடன் அவ் வாலயத்திலும் மற் றைய ஆலயங்களிலும் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். 1939 மார்கழியில் திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார். ஆலயங்களிலும் பன்னாலை அடியார் தொண்டர் மடாலயத்திலும் புராண படனப் படிப்பிலும் ஈடுபட்டார்.
செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலங் கழி, அன்பரோடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே
-8-

என்னும் சிவஞான போதத்தின்படி ஒழுகி அப்பாடலை மேற்கோள் காட்டி மற்றவர்களையும் ஒழுகச் செய்தவர்.
செம்பொருள் அறிவும் சிவநெறியே போற்றி வாழும் வாழ்வும்கொண்ட இவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த திருவாளர்கள் திருமுருக கிருபானந்த வாரியார், வெள்ளை வாரணர் சத்தியமூர்த்தி, வச் சிரவேலு முதலியார் முதலானவர்களின் உரைகளைக் கேட்கத் தவறமாட்டார். அதனோடு அமையாது அவர்களைப் பாடசாலைக்கு அழைப்பித்து உரையாற்றுவித்துக் கெளரவித்துமுள்ளார்.
1961 தொடக்கம் பன்னாலை ஞானவைரவர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராணத்திற் கூறப்பட்ட அறுபத்து மூவரைப் பற்றித் தொடர் பிரசங்கம் செய்து வந்தார். பிரசங்கப் பூர்த்தி 1964ல் சேக்கிழார் விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கு மகாஜானாவின் சிற்பி திரு. தெ.து. ஜெயரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாலை நிகழ்ச்சிகள் சேர். கந்தையா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றன. அப்பகுதியில் சேக்கிழார் பெருமானுக்கு முதன் முதலாக எடுக்கப் பெற்ற விழா அதுவேயாகும். அவ்விழாவின் போதுதான் அளவையூர் நாதஸ்வர வித்துவான் திரு. நா. பத்மநாதன் அவர்களுக்கு நாதஸ்வர கான கலாநிதி என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
கிராம அபிவிருத்தி
எமது கிராமத்து அபிவிருத்திக்காக எந்நேரமும் சேவை செய்தவர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்கள். முன்னேற்ற திட்டங்கள் பல அவரால் தீட்டப்பட்டன. அக்காலத்தில் துடிப்பு மிக்க இளைஞனாக இருந்த போதே பன்னாலை வாழ் விவசாயப் பெருங்குடி மக்களின் பொருளாதார வளத்தினை உயர்த்தும் சிந்தனை உள்ளத்தில் முளைவிட்டது.
-9-

Page 10
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்
என்னும் தமிழ் மறைக்கேற்ப பன்னாலையில் ஐக்கிய நாணய சங்கம் ஒன்றை 1940ஆம் ஆண்டு ஆரம்பித்து, அதில் அனேக விவசாயிகளை அங்கத்தவராக்கி அதன் தலைவராகவும் பின்னர் செயலாளரகவும் பதவிகள் வகித்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். அப்பகுதியில் வேறு நாணயச் சங்கங்கள் தோன்றுவதற்கும் இச்சங்கம் முன்னோடியாக அமைந்தது. கொழும்புக்கு இடம் மாறும்வரை அந் நிறுவனத்தைப் பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியன. பன்னாலை சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கமாக இன்றும் அது இயங்கி வருகின்றது.
1943ல் பன்னாலையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை ஆரம்பிக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அதன் செயலாளராகவும் பொருளாளராகவும் பதவிகள் வகித்து அதன் செயற்பாடுகளுக்கும் முன்னேற்றத்துக்கும் உழைத்தவர்.
இச் சங்கத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து. பிற மாவட்டங்களில் விற்பனை செய்து அவர்களின் பொருளாதாரத்தைப் பெருக்கவும் இவர் காரணமாக இருந்தார். இவ்வாறாகக் கிராமத்தின் ஐக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்த பண்பாளர் திரு. கதிர்காமத்தம்பி அவர்கள்.
வலிவடக்கு உதவி அரசாங்கப்பகுதியில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிக்கும் நோக்குடன் பன்னாலைக் கிராமத்து எல்லையை மறு சீரமைக்க அரசினர் எண்ணினர். பன்னாலைப் பாடசாலையைக் கூறு போடும் வகையில் மாதிரிப் படம் ஒன்றைச் சிலர் வரைந்து அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தனர். அதனை எதிர்த்து வாதாடி எல்லை எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு மாதிரிப் படம் ஒன்றை வரைந்து காட்டிய
-10

ஊர்ப் பெருமக்களில் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இங்ங்னமாக கிராமத்தின் முன்னேற்றத்துக்குத் திரிகரண சுத்தியோடு தம்மை அர்ப்பணித்த பெரியார் திரு. கதிர்காமத்தம்பி அவர்கள்.
கூட்டுப் பிரார்த்தனைகள்
1939ல் முதன்முதலாக இந்திய யாத்திரை செய்தார். தொடர்ந்து பல யாத்திரைகளை மேற்கொண்டு திருத்தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களையும் பல தடவைகள் அழைத்துச் சென்று திருத்தலங்களை வழிபட உதவியாக இருந்தார். சிதம்பரத்திலே உள்ள கனகசபையிலே மார்கழி மாதத் திருவாதிரை ஆருத்திரா தரிசனத்தைக் கண்ணுற்ற அவர் அதன் மகிமையைப் பலவாறு எடுத்தியம்பிப் புளகாங்கிதம் கொண்டு பரவசப்படுவார். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின்ை சிரிப்பும். என்ற அப்பர் சுவாமிகளின் திருவிருத்தப் பாவினைக் கண்ணிர் மல்க ஒதுவார்.
தென் இந்தியாவிலே மார்கழித் திருவெம்பாக் காலங்களில் ஆலயங்களைச் சார்ந்த கிராம வீதிகள் தோறும் பெரியோர் நெறிப்படுத்தச் சிறுவர் சிறுமியர் திருவெம்பாவைப் பாடல்களை விடியற் காலையில் ஒதிக் கொண்டு செல்வதைக் கண்ணுற்று அதனாற் கவரப்பட்ட இவர் எமது ஊர்களிலும் இவ்வித தொண்டில் இளைஞரை ஈடுபடுத்தக் கருதினார். திருவெம்பாவைக் கூட்டுப் பிரர்த்தனைச்சபை என்ற ஒரு சபையையும் தோற்றுவித்தார். திருவெம்பாவை பத்து நாட்களிலும் பன்னாலையில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் விடியற் காலையில் இளைஞர்கள் ஒன்று கூடித் திருவெம்பாப் பாடல்களை இசையுடன் சங்கு சேமக்கலம் மணி முதலிய மங்கல இசைக் கருவிகள் சகிதம் வீதிகள் தோறும் ஒதிக் கொண்டுவந்து தொடங்கிய ஆலயத்தில் முடிப்பர். பத்தாம் நாள் திருவெம்பாவைப் பூர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். ஆரம்ப காலத்தில் இதனைச் சிலர் எதிர்த்தாலும் காலகதியில் அதன் மகத்துவத்தை அறிந்து ஊர்மக்கள் ஆதரவும்
-11

Page 11
ஒத்தாசையும் நல்கினர். இடைவிடாது தொடர்ந்து நடத்தியும் வந்தனர். தொணி னுாறுகளின் ஆரம்ப காலங்களில் நோயுற்றிருந்த போதும் கூட, சைக்கிளை ஒரு கையால் பிடித்தவாறு நடந்து, திருவெம்பாப் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்.
1966ல் கொம்பனித் தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதலியார் சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் இவரது பிரசங்கம் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். 1971ம் ஆண்டு தமது 57வது வயதில் பாடசாலைத் தொழிலிருந்து ஓய்வு பெற்றார்.
திருபெம்பாவைக் கூட்டுப் பிரார்த்தனையின் பொன்விழா 1989ம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்வமயம் ஆசிரியர் அவர்களின் சேவையைப் பாராட்டி நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு மாகசந்நிதானம் ரீலறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப் பெற்றமை அன்னார் சைவத்துக்கு ஆற்றிய தொண்டின் பெருமைக் கோர் எடுத்துக்காட்டாகும். பொன்விழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. திருமுறை ஒதுதல், திருவெம்பாவை மனனம், கோலம் போடுதல், மாலை கட்டுதல் முதலிய நிகழ்ச்சிகளில் மாணவர் மத்தியில் போட்டிகள் வைத்து வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இல்லறமாய நல்லறம்
இவரது வாழ்க்கைத் துணைவியார் வரதலட்சுமி, பன்னாலை வைரமுத்து - விசாலாட்சியின் தம்பதிகளின் மகள். பொன்னுத்துரை, இராசேந்திரம், அன்னம்மா, செல்லம்மா ஆகியோரின் சகோதரியார். கதர்காமத்தம்பி - வரதலட்சுமி திருமணம் 1938ல் நடைபெற்றது. இவர்களது இல்லறமாகிய நல்லறத்திலே துரைசிங்கம் (1939), விசாகப் பெருமாள் (1943), அம்பிகாதேவி (1946), சரோஜாதேவி (1950) ஆகிய மக்கட் செல்வங்களைப் பெற்று இன்புற்றனர்.
-12

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். கதிர்காமத் தம்பி அவர்களின் இல் லறமும் ஒரு பல்கலைக்கழகமேதான். அவருடைய வீடு என்றும் கலகலப்பாக இருக்கும். மனைவி மக்களுடன் கூடிக் குலாவும் போதும் உறவினருடனும் நண்பர்களுடனும் அளவளாவும் போதும் ஆசிரியர் பெரிய புராணம், பன்னிரு திருமுறைகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டிப்பேசுவார். ஊரில் உள்ள முதியோரும் இவருடன் உரையாடி அறவின்பம் பெறும் பொருட்டு இவரது வீட்டுக்குச் செல்வர். தெய்வீக உணர்வுடன் திரும்புவர். முற்றத்துக் கோலமும் தெய்வீக உணர்ச்சியை ஊட்டும்.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதற்கிணங்க, இவரது மனைவி மக்களும் கல்வி அறிவும் சமய அறிவும் மிகுந்து விளங்குவர். பெற்ற அறிவின் சிறப்பினால் நெறியான வாழ்க்கை நடத்துகிறார்கள். தெளிந்த அறிவு செம்பொருள் காண்பதன்றோ. பிறப்பறுக்கும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு என்பது பொய்யாமொழி, மற்றுமொரு திருக்குறள் இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை
என்பது இதற்கேற்ப ஆசிரியர் மாண்புடைய இல்லாளைப் பெற்றிருக்கிறார். அவர் வர(த)லட்சுமியேதான். அதனால் அவரது மனயிைல் இல்லாதது ஒன்றுமில்லை. விருந்தோம்பலுக்குக் குறைவில்லை. வீட்டுக்கு வருவோர் வெறுங் கையோடு திரும்புவதில்லை. மனம் நோகப் பேசும் பேச்சும் இல்லை. தற்காத்துத் தற்கொண்டார்ப் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாத பெண்ணாக விளங்குபவர் இவரது இல்லத்தரசி. நாயகனின் குறிப்பறிந்து ஒழுகும் பண்பு மிக்கவர். ஆம் பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை, மக்களும் அறிவறிந்த மக்களாகத் திகழ்வதால் அவர்களுக்கு இனிப் பெற வேண்டியது என்ன இருக்கிறது?
-13

Page 12
ஆசிரியரின் நண்பர் ஒருவர் அவரது தலை நரைக்கவில்லையே என ஒருமுறை வியப்பு எய்தினார். அதற்கு ஆசிரியர் நல்லதொரு பதிலைக் கொடுத்தமை என் ஞாபகத்துக்கு வருகிறது. எனக்கு ஒரு கவலையும் இல்லை. மனைவியோ, மக்களோ, மருமக்களோ, என்னைச் சார்ந்தவர்களோ ஒரு கஷ்டமும் தருவதில்லை எனக் கூறி,
யாண்டு பலவாகியும் நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைப் பாடிக் காட்டினார்.
குன்றின் மேல் தீபம்
ஆசிரியர் அவர்கள் குன்றின் மேல் தீபமாக விளங்குகின்றார்கள். அவரது உள்ளம் உயர்ந்த உள்ளம். அவர் உள்ளுவதெல்லாம் உயர்ந்ததே. அரை நூற்றாண்டு காலப்பன்னாலையின் வளர்ச்சியும் அவரது உள்ளத்து உயர் நினைவுகளின் விளைவேயாகும். வெள்ளைத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
என்பது தமிழ்மறை. அவர் உள்ளத்தைப் போன்று வாழ்வும் உயர்ந்தது. பல துறைகளிலும் ஜொலித்துப் பிரகாசிக்கின்ற ஒரு மேதை. அவர் ஒரு சிறந்த ஆசிரியர் சிறந்த சிந்தனையாளர். சிறந்த சமயசீலர். சிறந்த சொற்பொழிவாளர். சிறந்த சமூக சேவையாளர். சிறந்த சமயத் தொண்டர். சிறந்த பண்பாளர். கிராமத்து மக்களின் அன்புக்கும் மதிப்புக்குமுரிய மாமனிதர்.
இந்நாளிலி கனடாவில் வதியும் மூத்த மகன் துரைசிங்கம் குடும்பத்தினர் போற்ற கொழும்பில் மனைவி மக்களுடன் இறைவனை மறவாத சிந்தையினராய் இடையறாது ஐந்தெழுத்தை ஒதிக் கொண்டும் திருமுறைகளை ஒதிக் கொண்டும் அமைதியான சமய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். 14

எனது மாணவப் பருவம் தொடக்கம் என் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அத்திவாரமிட்டு வாழ்வாங்கு வாழ வழி சமைத்த குருநாதரை சிரந் தாழ்த்தி வாழ்த்துகின்றேன். இலண்டனுக்கு யான் புறப்படும் போது ஐந்து எழுத்து ஒது. அரன் பணி தொடர். அருமறையாம் திருமுறைகளைப் பாராயணம் செய் என்று அவர் உபதேசித்த மந்திரத்தைச் சிரமேற் கொண்டுள்ளேன்.
அவரும் அவரது அருமை மனைவியாரும் நோய் நொடி இன்றி மேலும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல சிவகாமி சமேத நடராசப் பெருமானுடைய குஞ்சித பாதங்களை
வணங்கி வாழ்த்துவோமாக!
வாழ்க பல்லாண்டு வளர்க அவர்தம் பணி
வை. பொன்னையா முன்னாள் அதிபர் சேர். கனகசபை வித்தியாசாலை
நன்றி - திருமண சஷ்டியப்த மலர்
elet(3fruir 1998
-15

Page 13
ஆன்ம சாந்தி உரை
பன்னாலை காசிப்பிள்ளை கதிர் காமத்தம்பி அவர்கள் தொண்ணுறு ஆண்டுகளுக்கு மேல் இப்பூவுலகில் புகழுடன் வாழ்ந்த உத்தமர். தலைமுறை தலைமுறையாக நகுலேஸ்வரப் பெருமானின் பல உபயங்களை பக்தி சிரத்தையுடன் செய்து வருபவர்கள் நான் சிறுவனாய் இருக்கும் காலத்தில் அவருடைய தந்தையார் மாட்டுவண்டியில் பூசைக்குரிய பொருட்களுடன் ஆசார அனுட்டான சீலராய் குடும்பத்துடன் வந்து வழிபட்ட காட்சி என் உள்ளத்தில் இன்றும் பசுமையாய் இருக்கின்றது.
அமரர் அவர்கள் தந்தையைப் போல் சைவ சமய தீட்சை பெற்று சைவ ஆசார அனுட்டானம் மிக்கவராய் சமய அறிவும் ஒழுக்கமும் உடையவராய் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் வாழ்ந்தவர். நான் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயத்தில் படிக்கும் காலத்தில் இவர் அங்கு ஆசிரியராய் இருந்தவர். பின் புகழ் பூத்த அதிபராய் விளங்கியவர்.
சைவ ஆலயங்களிலும் விழாக்களிலும் சைவச் சொற்பொழிவுகள் நற் சிந்தனைகள் நிகழ்த்தி மக்களை நல்வழிப்படுத்துவதில் முன்னின்றவர். தன்னைப்போல் தன் பிள்ளைகளையும் படிப்பித்து உலகு போற்றும் ஒழுக்க சீலர்களாக்கி பெருமை பெற வைத்தவர்.
தந்தை வழி நின்று பிள்ளைகளும் நகுலேஸ்வரப்பெருமானில் அன்பு பூண்டு பல உபயங்களையும் செய்து திருப்பணிகளிலும் பங்கு பற்றி உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்தாலும் சிவனை மறவாத சிந்தையுடையவர்களாய் வாழகின்றார்கள்.
அமரர் கதிர்காமத்தம்பி அவர்கள் தம் வாழ்நாளிற் செய்த தர்மங்கள் சிவ புண்ணியங்களின் பேறாக இப் புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து நற்கதி அடைந்துள்ளார்கள்.
-16

“இந்த உடம்பு எமக்குக் கிடைத்தது நாம் சிவனை வணங்கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாகும்” எனும் நாவலர் பெருமானின் பொன் மொழிக்கிணங்க வாழ்ந்த அமரரின் ஆன்மா நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப் பெருமானின் திருவடி நீழலில்
அமைதி பெறுமாக.
கு. நகுலேஸ்வரக்குருக்கள்
நகுலேஸ்வர ஆதீனகர்த்தா கீரிமலை
-17

Page 14
தெல்லிப்பழை - பணினாலை
aprgágs sob aspbuassipsruas d தேவஸ்தானம் ஆதீனகர்த்தா
சிவழுநீ. இ. சபாரத்தினக்குருக்கள்
96andrassit enigmá afuu
ஆனிமசாந்திப் பிரார்த்தனை
ஆலயச்சிறப்புக்களையும், கற்றோரையும் சைவச் சான்றோர்களையும், உயர் குடிமக்களையும் இயற்கை வளங்களையும் கொண்டு விளங்கும் பழம்பெருமை வாய்ந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சார்ந்த பன்னாலைக் கிராமத்திலே பிரபல சைவவேளாண்மரபினில் தோன்றிற் புகழோடு தோன்றுக என்ற திருவள்ளுவநாயனாரின் திருக்குறட்பாவிற்கு இலக்கணமாகத் தோன்றியவர் சைவப்பெரியார் அதிபர் காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள் ஆவார். -
திரு. கதிர்காமத்தம்பி அவர்கள் வரத்தலம் கற்பக விநாயகர் தேவஸ்தான நித்தியநைமித்தியத் தொடர்பு பூண்டவர். இவர் கடவுள் பக்தி குருபக்தி, சைவ அனுஷ்டானம் நிரம்பியவர். இப்பெரியார் சைவ அனுஷ்டான நியமங்களுடன் தேவஸ்தானத்திற்கு வருகை தரும் கோலம் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்யும் தன்மையதாக விளங்கியது. இவர் இவ்வாலயத்தில் ஒதுவாராகவும், சைவப் பிரசாரகராகவும், பெளராணிகராகவும் விளங்கியதுடன் தேவஸ்தான வளர்ச்சிக்கு எனக்கு உற்றுழி உதவியாக விருந்து உதவிகள் புரிந்தமை என்னால் என்றும் மறக்கவியலாது. இப்பெரியாரின் மறைவு அனைவருக்கும் ஓர் பேரிழப்பாக அமைந்துள்ளது.
-1.8-

சைவப்பெரியார் கதிர்காமத்தம்பி அவர்களின் குணவியல்புகளை உற்று நோக்குங்கால் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தம் ஆகும். அவையாவன பூசுநீறு போல் உள்ளும் புனிதர், ஐந்தெழுத்தை நாவில் அருங்கலமாகக் கொண்டவர், மாதோர் பாகத்தர் மலர்த்தாள் மறக்கிலர் ஈர அன்பினர்.
கேட்டார் பிணிக்குந் தகையவாயாற் கேளாரும் வேட்பமொழியும் சொல்வன்மையுடையவர் எல்லோரதும் அன்பையும் நன்மதிப்பையும் ஒருங்கே பெற்ற பெரியார் தன்னைப் போன்று மற்றவர்களும் சீரும் சிறப்பும் பெற்று பலி லாணர் டு நல வாழ்வு பெறவேணி டும் என்ற பெருவிருப்புக்கொண்டவர். சுருங்கக் கூறின் இப்பெரியாரின் வரலாறு எழுதுவதென்றால் எழுத்தில் வடிக்க இயலாது. சொல்லுவதென்றால் சொல்லி முடிக்க இயலாது.
அதிபர். கதிர்காமத்தம்பி அவர்களின் பிரிவால் கலங்கி நிற்கும் மனையாள், புத்திரர்கள், புத்திரிகள், மருமக்கள், மருகியர்கள், பேரர்கள், பீட்டார்கள், மைத்துணி பெறாமக்கள், சுற்றம், சூழலர் ஆகிய அனைவருக்கும் ஆறுதல் கூறுவதுடன் அமரரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல வரத்தலம் கற்பக விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
“நெருந லுளநொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”
- திருவள்ளுவர்
இ. சபாரத்தினக் குருக்கள்
ஆதீன கர்த்தா
--soke-ee--
-19

Page 15
ஆயிரம் பிறைகண்டு அமரர் உலகடைந்த அதிபர்
பன்னாலை வாழ்மக்களின் பொன்னான இதயங்களில் நீக்க மற நிறைந்த கதிர்காமத்தம்பி தனது தொண்ணுாறாவது அகவையை பூர்த்தி செய்த ஓரிரண்டு தினங்களிலேயே தனது இவ்வுலகுக் கடமை முடிந்ததென்று கருதி மீளாத் துயரில் எம்மையெல்லாம் ஆழ்த்திவிட்டு அமரர் உலகிற்கு சென்று விட்டார்.
அமரர் அவர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும், அடக்கத்துக்கும், பண்புக்கும், அவருக்குப்பின்னால் பல பதவிகள் தேடிவந்தன. அவரால் அப்பதவிகள் பெருமை பெற்றன என்றே கூறலாம்.
பதவிகள் பல வந்த போதும் அவற்றின் நிலை பெருமை ஏதும் கொள்ளாது அடக்கத்துடன் அவர் வாழ்ந்ததை அகிலமே அறியும்.
அமரர் அவர்கள் வரத்தலம் கற்பக விநாயகர் மீது மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டு மாதம் தோறும் 17ம் திகதிப் பூஜையை பெருவிருப்புடன் குறைவில்லாது செய்து வந்த செம்மல்.
அத்துடன் சிவபூதவராயர் ஆலயத்தின் இரண்டாம் நாள் அலங்காரத் திருவிழாவை வெகு சிறப்பாகவும் அதே சமயம் பக்தி பூர்வமாக செய்த பக்திமான். அது மட்டுமல்ல சமயத்தின் மீது கொண்ட விருப்பு காரணமாக சமயம் தழைக்க வேண்டுமென்ற நோக்குடன் சமயச் சொற்பொழிவாற்றி சமயம் தழைக்க அவர் அயராது உழைத்தவர்.
-20

அன்னாரின் சிறப்பு பன்னாலை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல சைவத்துக்கும் தமிழுக்குமே இழப்பு என்று கூறலாம். அன்னாரின் இடத்தை ஈடு செய்ய இன்று எவருமே இல்லை. என்ற வகையில் அவரின் இழப்பு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
பிறந்தவர் இறப்பது நியதி மாற்ற இயலாது. இந்த நியதிக்கு வருந்துவதில் பயனில்லை எனினும் அவர் காட்டிய வழி நின்று அவர் தம் பேர் விளங்கச் செய்வதே அவரின் ஆத்ம சாந்தியடைய நாம் செய்யக் கூடியது என்று கூறி அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் நிறைவான மனச் சாந்தியை அருள வேண்டுமென்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
ம. மகேந்திர சர்மா வரத்தல கற்பக விநாயகர் கோவில் பன்னாலை,
தெல்லிப்பழை.

Page 16
பன்னாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்களின் மறைவை முன்னிட்ட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
தெல்லிப்பழையில் பன்னாலை கிராமம் சைவமும் தமிழும் வளர்ப்பதில் முன்னணியைக் கொண்ட பல் ஆசிரியர்களை தன்னகத்தே கொண்டது. இந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுபவர் கடந்த 28-02-2004 ல் சிவபதமடைந்த திரு. கா. கதிர்காமத்தம்பி ஆவார். இவர் ஆசிரியராக அதிபராக பணியாற்றி சிறந்த கல்வித் தொண்டைச் செய்தவர் தனது இறுதிக் காலத்தில் பணி னாலை சேர். கனகசபை வித்தியாசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இக் கிராமத்துக்கு மட்டுமல்லாது தாம் சென்ற இடமெல்லாம் சைவத்தையும் தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டார். அவர்களின் பிள்ளைகள் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்து தந்தையாருக்கு பெருமையைத் தேடிக் கொடுத்தவர்கள். அன்னாரின் மறைவினால் துயரம் அடைந்திருக்கும் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறி அஞ்சலியைத் தெரிவித்து திரு. கா. கதிர்காமத்தம்பி ஆசிரியர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ரீ துர்க்கா தேவியின் திருவருளைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
கலாநிதி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
சமாதான நீதிபதி
தலைவர் ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை.
-22

உபாத்தியாரின் குல தெய்வத்தைப்பற்றி பூதராயர் - ஒரு நதி மூலம்
பூதராயர் வழிபாடு யாரைக்குறித்த வழிபாடு? இது சைவ சமயிகளுக்கு உரிய வழிபாடுதானா? அதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? இல்லையேல் இது வெறும் சிறுதெய்வ வழிபாடுதானா? பூதராயர் என்ற தெய்வத்தின் தோற்றம் எவ்வாறு திகழ்ந்தது? - இவை சுவாரஸ்யமான வினாக்கள்.
ராஜா என்பது ஆரியச் சொல். ராயர் என்பது தமிழ் உருவம் பெற்றதால் ஆன சொல் - வடசொல். எனவே பூதங்களின் தலைவர் என்பதே பூதராயர் என்ற தொடரின் பொருள்.
பூதராயர் என்ற மறக்கருணை நதியினுடைய மூலம் கந்தபுராணம் என்ற மேருமலையிலேதான் உள்ளது. அது
இது.
சிவனை வழிபடக் கயிலங்கிரி சென்றான் இந்திரன். அவனுக்கோ உள்ளங்காலிலிருந்து உச்சி பரியந்தம் அகந்தை. பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு அவர்தமை நாணி நக்கு நிற்பவன் அல்லவா சிவன். அவன் பூத வடிவம் எய்தினான். கயிலையங்கிரியின் முதற்பெருந்தோரணவாயில் முகப்பில் நின்றான்.
விரைந்து உள்ளே புகவென வந்த இந்திரன் புதியதோர் பூதம்குறுக்கே நிற்பது கண்டான். மிகுந்த அலட்சியத்தோடு யார் நீ? அருள் வள்ளலாகிய சிவனைத் தொழ வந்தேன். சொல் பெருமானைத் தொழற்கான தக்ககாலம் (செவ்வி) தானே இது என்று உறுமினான். பூதமோ பதில் எதுவுமே கூறவில்லை.
அளவிறந்த வன்மை படைத்தவன் தான் என்ற தருக்கினால் வச்சிராயுதத்தை ஏவினான் இந்திரன். அப்படைக்கலமோ நுண்துகள்களாகச் சிதறியது. பூதம் நின்ற இடத்திலே
-23

Page 17
உருத்திரன். இந்திரனது அகந்தைத் தீயை அணைக்கவெனச் சிவன் சடைக் கங்கைதான் பிரவாகித்ததோவென உருத்திரனின் உரோமத்துவாரந்தோறும் வியர்வை பொங்கியது. இந்திரன் உயிரைக் கொள்வேன் என உள்ளுறு காற்று எழுந்ததோவென மூச்சுக்காற்றுப் புகையோடும் எழுந்தது. நெறித்த புருவங்கள் நெற்றியைச் சேர்ந்தன. மதனனை எரித்த விழித்தீ இதுதான் எனும்படி விழி சிவந்தன. உருத்திரன் நின்ற இடத்திலே அயன் முதலிய தேவர் அனைவரும் அஞ்சி நடுங்கும் வண்ணம் பேருரு ஒன்று எழுந்தது.
அஞ்சி நடுங்கிய இந்திரன் உண்மையை உணர்ந்தவனாய், அகந்தை ஒழிந்தவனாய், எனக்குன்மாயம் தெரியுமோ? அயனும் அரியுமே இன்னும் தெரிந்திலரே! மேருவை வில்லாய் வளைத்தவரே செய்பிழை பொறுத்தருள்க என்று பலவாறு துதித்தான். காலில் வீழ்ந்து கதறினான். இந்திரன் பன்முறை இவ்வாறு பணித்தெழலும் தன் சீற்றமாகிய தீயைத் திரட்டிக் கடலிலே வீசினான் சிவன். மேற்கிலே அஸ்தமிக்கும் சூரியனோ இதுவெனும்படி கடலிலே வீழ்ந்தது, அது. அஞ்சல் என அன்புடன் இந்திரனுக்கு அபயமளித்து விடையளித்து செல் என்றபின் கயிலை புக்குத் கெளரியோடும் வீற்றிருந்தான் கண்ணுதல்.
சிவனது சீற்றம் வருணனை அடைந்ததும் சிறுவனானது. அந்தச் சிறுவனைத் தன் திருக்கரங்களாலே வருணன் தழுவினான். யான் அவரது யார் தவம் செய்தார்? என்று மகிழ்ந்தான். உலகு பேரினும் ஊழி நீ வாழ்க! என்று தன்வாயார மனமார வாழ்த்தினான். அந்தச் சிறுவனோ அழ ஆரம்பித்தான். விண் மண் எண்டிசை என்று எல்லாமே அதிர்ந்தன. செவி படைத்தவை செவிடுபட்டன.
அழுகுரல் ஒசையொன்று வானளாவுகின்றதே! எங்கிருந்து இவ்வொலிவருகுவதோ என்று நூலறிவு மிக்க நான்முகனே திகைத்தான். கடலிலே இருந்துதான் இந்தக் கத்துங்குரலோசை வருகிறதென்பது புரிந்ததும் கடலை நோக்கி ஓடினான்.
-24

கடலைப் பிரமன் அடைதலும் வருணன் மிக்க அன்போடு ஆசனம் ஒன்றை இட்டான். இவ்வாசனத்திரு பாலன் இவனைப் பார்! என்றான். கையில் அச்சிறுவனை எத்தி நீட்டினான். நீட்டுதலும் பிரமன் விரைந்து வாங்கினான். மடிமீது கிடத்தினான். பிரமனின் தூய புல்லொத்த தாடிகளைக் கடலின் புதல்வன் ஒவ்வொன்றாய்த் தொடர்ந்து பற்றினான். நான்கு தாடிகளையும் நாரைத்தொடுத்ததுபோல் ஆக்கினான். அவற்றைப் பற்றித் தொங்கினான். நான்முகனின் புகழே கீழிறங்குவதுபோல அவன் கண்களினின்றும் நீர் கீழே வழிந்து பெருகியது. மற்றொரு கடலாகிக் கடலுட் கலந்தது. முக்கண்ணன் கோபம்புகுந்ததும் கடல் வெப்பமுற்று வற்றியது. நான்முகன் கண்ணிர் புகுந்ததும் தான் முன்புற்ற வறுமையும் நீங்கியது. வளமுற்றது.
சிறுவனின் கைகளினின்றும் மிகுந்த சிரமத்தின் பின் தன் தாடிகளை விடுவித்துக் கொண்டான் பிரமன். மெல்லச் சிறுவனைக் கடலுள் விடுத்தான். வருணனை நோக்கி “கொன்றை சூடிய சிவனின் கோபத்திலே தோன்றியவன் இவன். ஒருவரையும் ஒரு பொருட்டால் இவன் மதியான். வரபலம் என்று எதுவும் இவனுக்கு வேண்டாம். எவராலும் இவன் அழிவும் எய்தான். தீயும் நின் சேயின் வெம்மையாலே தீயும். அங்கனமாயின் தேவரின் சாபம் இவனுக்கு எம்மாத்திரம். இவனை நானும் அஞ்சுவேன்; மாலும் அஞ்சும்; யமனும் அஞ்சும்; உலகும் அஞ்சும், இந்திரன் முதலிய தேவர் இவன் முன் நிற்கவும் வல்லரோ? நீண்ட காலம் இவன் கொடுங்கோல் செலுத்துவான். ஈசன் அன்றி யார் இவனை வீட்டுவார்?’ என்றான். பிரமன் இவ்வாறு கூறியதும் “இவனுக்கோர் பேர்சூட்டு என்றான்” வருணன் “இவன் பேர் சலத்தரன்’ என வழங்கட்டும் என்றான் பிரமன் சலத்திலே (கோபம்) தோன்றியவன் இவன். சலத்திலே (நீர்) வளர்பவன் இவன் என்றெல்லாம் எண்ணித்தான் பிரமன் அவ்வாறு பெயரிட்டான் போலும்.
பாலகனான சலந்தரன் வளர்ந்தான். காளைப்பருவம் எய்தினான். உலகின் திசையனைத்தும் வென்றான். “அமராவதி (இந்திரன் நகர்) அனையதொரு நகர் அமை” எனத் தானவர் (அவுனர்) தச்சனைப் பணித்தான். தச்சனும் அமைத்தான்.
-25

Page 18
காலநேமி என்ற அவுணன் புதல்வி விருந்தை. அவள் அழகிலும் கற்பிலும் அறிவிலும் சிறந்தவள். சலந்தரன் விருந்தையைத் திருமணம் புரிந்தான். தன் தலைநகரிலிருந்து ஆட்சி புரிந்தான். தேவரை வெல்லும் ஆசை எழுந்தது. போர் புரியப் புறப்பட்டான். போருக்கு வந்தான் சலந்தரன் என்றதும் தேவர்கள் அரியேறு கண்ட ஆனையாயினர். பாற்கடலிலே துயிலும் பரந்தாமனைச் சரண் புகுந்தனர். கருடன் மீது இவர்ந்து கண்ணெதிரே தோன்றினான் கரிய திருமால்.
சலந்தரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் போர் தொடங்கியது. இருபதாயிரம் ஆண்டுகள் இப்போர் நீடித்தது. இத்தனை ஆண்டுகளின் பின்பும் திருமால் சலந்தரனைப் புறங்கண்டிலன். போருக்காற்றாது இளைத்துச் சலந்தரனைப் போற்றிப் புழ்ந்தான் புறமுதுகிட்டான்.
கொண்டல் வண்ணன் கொடியவானான சலந்தரனோடு போரிடத் தொடங்கியபோதே அஞ்சிய அமரர் அனைவரும் கயிலையங்கிரிச் சாரல் புக்கு ஒளிந்தனர். கற்றோரேத்துங் கயிலயங்கிரி புக்கார் தேவர் என்று அறிந்ததும் சலந்தரன் அங்கே செல்லத் துணிந்தான். சேனையோடும் இவன் எழுதலும் “வேண்டாம்! வேண்டாம் நித்தனுடன் நீ போர் செய்தால் மாண்டாய்! மாண்டாய்!” என்று அவன் மனைவி விருந்தை தடுத்தாள். குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங்குறிக்கொண்டான் அல்லன் சலந்தரன்.
சோனாமாரிபோற் படைமாரி சொரிகின்ற சேனாயூகம் சூழச் சலந்தரன் தென் கயிலைப்புறம் வருதலும் இந்திரன் அஞ்சினானேனும் இவன் தன் உயிர் முடிவுறவே இங்கு வந்தானென்று எண் ணிக் களிப்பும் எயப் தினான். கயிலையங்கிரியின் வாயிலை எய்தி நந்திதேவரை வணங்கித் தன் பரிதாப நிலையை உரைத்தான். நந்தி தேவர் இயங்கி இந்திரன் உள்ளேபுக அனுமதித்தார். உட்புகுந்த இந்திரன், தன் உள்நடுக்கத்தை உலக காரணளான உமாபதிக்கு உரைத்தான்.
-26

“சலந்தரனுக்கு அஞ்சி மேருமலை புக்கேன். அங்கும் வந்துவிட்டான். திருமாலிடம் தஞ்சம் புகுந்தேன். திருமாலோ தோற்றோடிவிட்டார். ஈங்கு வந்தெய்தினேன். இங்கும் வந்துவிட் டானி எண் துயர் தீர்த் தருள்” என்று கயிலைக்கிறைவனைக் கைகூப்பி இறைஞ்சினான் இந்திரன். “உன் துயர் ஒழிதி” என்று இந்திரனுக்கு அபயம் அளித்த அரன் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுளம் கொண்டான்.
ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலான் குண்டிகையும் விசிறியும் கோலும் ஏந்திய முனிவனாய்க் கயிலையின் புறத்தே வந்து தோன்றினான்.
சலந்தரனை நோக்கி எங்கிருப்பவன் நீ? இங்கு நீ எய்திய காரணம் என்ன?’ என்றான். “திலத்தில் வாழ்பவன், சலந்தரன் என் போர், தேவர் அனைவரும் தோற்றோடினர். நுதல் விழியோனுடன் போரிடவென வந்தேன்’ என்றான் சலந்தரன்.
உன்னெண்ணம் அருமையானது அற்புதமானது என்னதான் தடையிருக்கிறது இதற்கு? என்று புகழ்வதுபோலக் கூறி இகழ்ந்தான் அந்தணமுனிவனான அரன். “கயிலயங்கிரிப் பிரானோடு போர்புரியின் நீ தொலைந்தாய். வேண்டாம் மீண்டுவிடு” என்று எச்சரிக்கையும் விடுத்தான் அவ்வளவுதான்.
“எளியவன் என்றென்னை எண்ணிவிட்டீர். இன்னும் சிறிது நேரம் இங்கே நிற்பீரானால் என் வன்மை எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்வீர்” என்று நெருப்பெழச் சீறினான் சலந்தரன்.
“நானும் உன் வன்மை காணவே வந்தேன்” என்ற சிவன் தன் திருவடியினாலே சக்கரம் ஒன்றைத் தரையிலே கீறினார். “தலையினாலே இந்தச் சக்கரத்தைத் தாங்கவல்லையோ” என்று கேட்டார். “புங்கவர் யாவரையும் புறங்கன்ைடேன். கங்கையை அடைத்தேன். கடலின் நடுவிலுள்ள வடவாமுகாக்கினியை அவித்தேன். அரியை வென்றேன். இந்தச் சக்கரத்தைத்
-27

Page 19
தாங்குவது அரிதோ?’ என்று எள்ளி நகையிாடிய சலந்தரன் கனமிக்க அந்தச் சக்கரத்தைக் கைளினால் எடுத்து மார்பிலும் புயத்திலும் பெருமூச்செறிந்து தாங்கிப் பின்பு தலையிலே வைத்தான். சக்கரம் தலையிலே ஏறியதுதான் தாமதம் உச்சிமுதல் உள்ளங்கால் வரை அவன் உடலை இரு கூறாகப் பிளந்தது; பின் இறைவனிடம் சென்று சேர்ந்தது. தம் விழிபொழி கனலால் அவுணன் சேனையை அழித்தொழித்த பின் தந்தொன்மைத் திருக்கோலத்தைச் சிவன் காட்டியருளினார். அரி. பரமன் இந்திரன் முதலாந்தேவர் “எம் துயர் துடைத்தாய்” என்று நெக்குருகிச் சிவனைத் துதித்தனர்.
இந்திரனது அகந்தையை ஒழிக்கவெனச் சிவன் தாங்கிய திருவுருவே பூதாராயர் என்னும் திருவடிவாம். எனவே, பூதராயர் சிவனே! சிவபூதராயர் என்ற வழக்கும் இங்கே நினைவு கூரத்தக்கது. சிவபூதராயரெனும் திருவடிவிலே எழுந்தருளும் சிவபெருமானை வழிபடும் பேறு படைத்தோர் அகந்தையெனும் ஆணவம் ஒழிந்து பேரானந்தப் பெருவாழ்வெய்துவர் என்பதே கந்தபுராணம் தமக்குணர்த்தும் செய்தியாம்.
பண்: புறதீர்மை
சம்பரற் சுருளிச் சலந்தரன் வீய தழலுமிழ் சக்கரம் படைத்த எம்பெரு மானார் இமையவர் ஏத்த இனிதினங் குறைவிடம் வினவில் அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும் உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
க. உமாமகேசுவரன் தெல்லிப்பழை

ஆசிரியர் கதிர்காமத்தம்பி ஆயிரம் பிறைகண்ட சமுகசோதி
கதிர்காமத்தம்பி என்ற பெயரோடு தொண்ணுறு ஆண்டு காலம் வாழ்ந்து சமூக சேவையில் ஒளிவிட்டுப் பிரகாசித்தவராதலினால் அவ்வாறு கூறுகின்றோம். மாதம் ஒருபிறை தொண்ணுாறு ஆண்டுகளில் ஆயிரத்துக்கதிகமான பிறை தெரியும் எனினும் தோராயமாக ஆயிரம் பிறை கண்டாராகக் கூறப்படுகிறது.
உயிர் அனாதியானது. அது என்று முள்ளது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை அதற்குக் கேவலம், சகலம் சுத்தம் என்ற மூன்று அவஸ்தைகளுண்டு. கேவலத்தில் ஆணவமல்விருளினால் மூடுண்டு அதன் அறிவு இச்சை செயல்கள் வெளிப்படாது கச இருட்டில் விழித்திருப்பது போன்றது. இருளில் இருப்பவர்க்கு ஒரு விளக்கு உபயோகப் படுவது போல இறைவனாலி நுணி னுடம் பு கொடுக்கப்படுகிறது. இது சகலநிலை - இச்சகலநிலையில் பருவுடம்பு பெற்று உயிரின் அறிவு, இச்சை, செயல்கள் விருத்தியாகி இருவினை ஒப்புகை கூடிய மலப்பரிபாகம் ஏற்படும் இது சுத்தநிலை. சுத்தநிலை (முத்தி நிலை) ஏற்படும் வரையும் நுண்ணுடம்பு இருந்தும் அந்த நுண்ணுடம்புடனே உயிர்கள் மலத்துக்கீடாகப் போக்கு வரவு செய்யும் நுண்ணுடம்பு ஊனக்கண்ணுக்கு தெரியாது. வரவு பிறப்பு போக்கு இறப்பு.
பன்னாலை கிராமத்தின் சைவவேளாண் மரபினரான காசிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை இருவரினதும் தவப்பயனால் மூன்றாவது மகனாக கதிர்காமத்தம்பி பிறந்தார். அவர் சகோதரர் சண்முகம்பிள்ளை, விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மூவருமாவர். அவர்கள் காலமாகிவிட்டார்கள்.
கதிர்காமத்தம்பி சிறுபராயந் தொட்டு முகமலர்வுடையவராயும் எவரிடத்தும் இன்சொற் பேசுவராயும் நற்பழக்க வழக்கமுடையவராயும் காணப்பட்டார். அவர் எமது அயலவர். அவரும் யானும் 1914 ஆம் ஆண்டு பிறந்த ஒரே வயதினராவோம். இருவரும் கூடி விளையாடுவதும், படிப்பதும் புரிவோம். இருவரும் பன்னாலை
-29

Page 20
சேர்.கனகசபை வித்தியாசாலையின் ஒரே சாலை மாணவராவோம் அங்கு ஆசிரியாராயும் ஈற்றில் அவர் அதிபராயும் யான் உப அதிபராயும் பணிபுரிந்து 1971 ஜனவரி முதலாந்திகதி ஒய்வு பெற்றோம்.
எம்மால் நடாத்தப்பட்ட சைவசித்தாந்த வகுப்புகளில் பங்கு கொணர்டு சிந்தாந்த அறிவுடையவராய் சித்தாந்தக் கோட்பாட்டுக்கியையச் சொற்பொழிவாற்றியும் ஊடகங்களுக்குக் கட்டுரை எழுதியும் வந்தார். இளமையில் மார்கழி மாத விடுமுறையில் தமிழ்நாட்டுத் தலங்களுக்கு கூடி யாத்திரை புரிவோம். இவையே எங்களிருவரினதும் சகவாழ்வு.
சி பா வி த (SSC) வகுப்பு சித்தியெய்திய பின் அவர் திருநெல்வேலிச்சைவாசிரியர் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்று வெளியேறி பன்னாலையில் முதற் பயிற்சி பெற்ற ஆசிரியர் என்ற முதன்மையும் பெற்றார்.
பன்னாலை வயிரமுத்துவின் இரண்டாவது மகள் வரதலட்சுமியை வாழ்க்கைத்துணையாகக் கொண்டார். வரதலட்சுமி தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து இல்லறம் புரிந்தார். இவர்களின் இல்லறவாழ்க்கையின் அறப்பயனாக துரைசிங்கம், விசாகப்பெருமாள் என்ற மகனாரையும் அம்பிகாதேவி, சறோஜாதேவி என்ற மகளாரையும் பெற்றனர். அவர்கள் வளர்ந்து கல்வி அறிவொழுக்கங்களிற் சிறந்து அரச,தனியார் ஸ்தாபனங்களில் உயர்பதவி வகிக்கின்றார்கள். துரைசிங்கம் தெல்லிப்பழை முருகேசம்பிள்ளை மகள் ஆசிரியை பூமணியை மணந்து மக்களையும் பேரர்களையும் கண்டபாக்கியத்தைப் பெற்றுள்ளனர். அப்பிகாதேவி சிறுப்பிட்டி கந்தையா மகன் Dr. சிவஞானசூரியரை மணந்து மக்கள் பேறுடையவர்களாக விளங்குகின்றார்கள்.
விசாகப்பெருமாள் கருகம்பனை தண்டிகை நடராசாவின்
மகள் நளினாவையும், சறோஜாதேவி மகன் ஸ்கந்தராசாவையும் மணம்முடித்துள்ளனர்.
-30

ஆசிரியர் கதிர்காமத்தம்பி அவர்கள் பரோபகாரியாய் நன்மைகளைக் கடைப் பிடிப்பார். நாடொப்பன செய்வார். பன்னாலையிலுள்ள சமூக சமய ஸ்தாபனங்கள்யாவற்றிலும் அங்கம் வகித்து சேவை புரிந்துள்ளார். கிராமத்திலுள்ளவர்களது சுபாசுப கருமங்களில் பங்குகொண்டு தன்கருமம் போல் செயலாற்றுவார். கிராமவாசிகளின் தகராறுகளை நடுநின்று தீர்த்துவைப்பார்.
இவரது சேவை கல்விச்சேவை சமூகசேவை சமயச்சேவை என்ற மூன்று பிரிவில் உள.
இவரால் தாபிக் கப்பட்ட திருவெம் பாவை கூட்டுப் பிராத்தனைச் சபை வளர்ந்து அணி மையில் வைரவிழாக்கண்டுள்ளது. இவ்வாறே இவராற்தாபிக்கப்பட்ட சபைகளெல்லாம் பொன் விழா, வைரவிழா காணும் நிலமையிலுள்ளன.
சேக்கிழார் மகாநாடு, பன்னாலையில் பாடசாலை நூற்றாண்டுவிழா என்பன போற்றுஞ் சிறப்புடையன. இவ்வாறு பன்னாலையில் வாழ்க்கை நடத்தும் போது இராணுவ நடவடிக்கையாலும் தமக்கேற்பட்ட சுகவீனத்தாலும் 1992இல் கொழும்பு வந்து மக்களுடன் வாழ்வாராயினர். 28-02-2004 சனிக்கிழமை அதிகாலை முகங்கழுவி சந்தியவந்தனம் முடித்து மீளாத் துயிலெய் தினார். தமது பருவுடம் பைவிட்டு ஆன்மநாயகராகிய நடராஜப்பெருமானின் திருவடியை நாடினார் “வகுத்தான் வகுத்த வகையது” சுற்றம் சூழலர் துன்பர்க்க திருவடியிற் கலந்து இன்புறப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி!
வி. சங்கரப்பிள்ளை
ஆசிரியர் பன்னாலை
--esk-ee-ee-- -31

Page 21
வானுநையுந் தெய்வம்
ஒழுக்கத்தின் மூச்சு ஓய்ந்துவிட்டது! விழுப்பத்தின் இமயம் சாய்ந்துவிட்டது!
கதிர்காமத்தம்பி அவர்கள் கதிபெற்றுவிட்டதால் விதிமுறைகளும் வீழ்ந்து புலம்புகின்றன!
ஆம் -
விதிமுறைகள் - இப்படித்தான் வாழவேண்டும் என்னும் கட்டுப்பாட்டு நியமங்கள் அவரது வாழ்வின் - வாழ்வின் வளர்ச்சியின் படிமுறைகள்!
கந்தபுராணக் கலாச்சார உழவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையிடம் கற்றவர் -
கற்றவற்றுக்குத் தக
வாழ்ந்தவர் - கற்பித்த மாணவர்களையும் கவினுற வாழ வைத்தவர்!
ஊருக்கு உழைத்த உத்தமர் உலகத்தை உணர்ந்த வித்தகர்! அடக்கத்தின் குன்றேறி நின்றவர் ஐம்புல வேடரை வென்றவர்!
-32

சைவமும் தமிழும் இவரது உள்ளமும் உயிரும். ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க்கையை இயக்கிய இயந்திரம்!
பயனில சொல்லமாட்டார் எழுதவும் துணிய மாட்டார். எழுதிய கட்டுரைகள் அறிவினைத் தீட்டுவன - நம்பிக்கையை ஊட்டுவன - நல்வழிகளைக் காட்டுவன!
பெற்றெடுக்கத் தவஞ் செய்தது பன்னாலை கைப்பிடிக்க வரம் பெற்றவர் வரதலட்சுமி.
பெற்ற பதியும் உற்ற மனையும் இல்லற வாழ்வாற் பெற்ற செல்வங்களும் சுற்ற உலகும் கல்வி உலகும் சைவநன்னெறியும்
வருந்தி அழ
96JT ' ” வானுறையுந் தெய்வமாகிவிட்டார்!
வாழ்வாங்கு வாழும்முறையை வாழ்ந்து காட்டிய கதிர்காமத்தம்பி ஐயா அவர்களை கைகூப்பித் தொழுவோமாக!
கவிஞர் வி. கந்தவனம்
856 TT
-33

Page 22
கண்ணிர் காணிக்கையும் இரங்கல் செய்தியும்
பன்னாலை, தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலையில் பல ஆண்டுகளாக ஆசிரியராகவும், அதிபராகவும் கடமைபுரிந்தவரும் பன்னாலை வாழ் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட சமூக சேவையாளருமாகிய பெரியார் உயர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்கள் 28-02-2004 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார் ஆவார். அன்னார் அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின் தனது சமூகத்திற்கு பல தொண்டுகள் புரிந்து இன்புற்றிருந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக தான் வாழ்ந்த மண்ணாகிய பன்னாலையை விட்டு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து கொழும்பில் பல ஆண்டுகள் வாழ்ந்த காலத்தும் தனது சொந்த மண்ணை மறவாத நற்பண்பினராக வாழ்ந்து வந்தார். இவ்வாறாக தன் மண்ணின் மீது அளவற்ற பற்றுக்கொண்ட பெரியார் இவ்வுலக வாழ்வை நீத்தது அவர் தம் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக பன்னாலை வாழ் சமூகத்திற்கே பெரும் பேரிழப்பாகும்.
அன்னாரின் இழப்பால் துன்புற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருடன் நாமும் துன்புறுவதுடன், அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதத்திற் சேர்ந்து சாந்தி அடைவதாக,
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பாடசாலைச் சமூகம் சார்பாக, நா. ஆனந்தராசா (அதிபர்) பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை
-34

ஊரறிந்த உபாத்தியாயர்
ஒவ்வொரு கிராமத்திலேயும் உள்ளுர் வாசிகளான பல ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களில் ஓரிருவரை மாத்திரமே ஊரவர் எல்லோரும் அன்பொழுகத் தனித்துவமான முறையிலே உபாத்தியாயர் என அழைப்பார்கள்.
அவ்விதம் அவர்கள் அழைப்பதற்குரிய காரணம் தான் என்ன? அவர்கள் இளைய தலைமுறையினருக்கு, ஏன் சில சமயங்களிலே இரண்டு தலைமுறைகளுக்கும் கூட கல்வி புகட்டி நல்வழிப்படித்தியதால் மட்டுமா? அவர்களது அறிவுப் பசிக்குத் தீனி போட்டதன் காரணமாகவா? இல்லை! இல்லை! அந்தக் கிராம வாசிகளின் வாழ்விலே அவர்கள் நன்மை தீமைகள் ஒவ்வொன்றிலும் பங்கெடுத்து, அவர்களின் அல்லல்களிலும் அவலங்களிலும் கை கொடுத்து, அவர்களின் இன்ப துன்பங்களில், ஈடு கொடுத்து, அவர்களின் ஆசாபாசங்களிலும் ஆதங்கங்களிலும் உறுதுணையாய் நின்ற கோமானையே தான் அன்பொழுக ஊரவர் உபாத்தியாயர் என்பர்.
பன்னாலையைப் பொறுத்த மட்டிலே உபாத்தியாயர் என அழைக்கப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர் அங்கே தனிக் காட்டு இராஜா.
காணி விற்க வேண்டுமா அதனை அளக்க வேண்டுமா, விலை மதிக்க வேண்டுமா, எல்லை போட வேண்டுமா, அங்கே சிறு பிரச்சனையாகூப்பிடு உபாத்தியாரை. அவர் எல்லாமே சரி செய்து விடுவார். அவர் சொன்னால் மறு பேச்சு இல்லை. அவர் சமன் செய்து சீர்தூக்கும் கோலாக நின்று ஒரு பக்கமும் சாராமல் நடுநிலையில் நின்று தீர்ப்பளிப்பார். இரு சாராரும் அதனை அங்கீகரிப்பர்.
-35

Page 23
ஊரெல்லாம் ஒரு சமய நெறி தாண்டவமாடுதே வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஞானவயிரவர் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடை பெறுகிறதே, மார்கழி மாதம் திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலையில் மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை ஊரெல்லாம் ஒலிக்கிறதே பன்னாலைக் கிராமம் மற்றைய கிராமங்களிலும் வித்தியாசமான தோற்றம் தருகிறதே அது எப்படி?
எல்லாம் அந்த உபாத்தியாயர் கைங்கரியம். அவர் புலம் பெயர்ந்து கொழும்பு சென்று தனது பிள்ளைகளுடன் வசிக்கச் செல்லும் வரை இக்கிராமத்தின் சமயவளர்ச்சியில் பெரும் சிரத்தை கொண்டு வாழ்ந்தார். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளையிடம் தமிழும் சைவமும் நன்கு கற்றவர். தானே சிவ தீட்சையும் பெற்று அதன் வழி நடந்தவர். திருவெம்பாவைக் கூட்டுப் பிராத்தனைச் சபை ஒன்றினை நிறுவி அதில் இளைஞர்களை தொண்டர்களாக்கி பன்னாலையெங்கும் வீதிதோறும் திருவெம்பாவையைச் சங்கு சேமக்கலங்களுடன் ஒதச் செய்தார்.
அதே போன்று 1938 ஆம் ஆண்டு தொடக்கம் மயிலையம்பதி ஞானவையிரவர் ஆலயத்தில் வாரவாரம் வெள்ளிக் கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனையை ஆரம்பித்து இத்தனை வருடங்கள் தொடர்ந்து நடத்தி வந்தார். இத்தனை வருடங்களா? வியக்காதீர்கள். கருமமே கண்ணாயினார் மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்ச மாட்டார் என்பது பழைய இலக்கியம். உபாத்தியாயர் இலக்கியத்தை இலட்சியமாகக் கொண்டவர். அவருக்குத் தெரியாததா?
அட சமய வாழ்வு போகட்டும். பன்னாலைச் கிராமத்தின்
சமூக வாழ்வு எப்படி? அது ஒரு மிகவும் சிறு கிராமமாச்சே, அதனை தனித்துவத்துடன் இயங்க வைப்பது கடினமாச்சே,
-36

ஆம்! அங்கே ஒரு உண்மையைச் சொல்லியே தீர வேண்டும். வலிவடக்கு உதவி அரசாங்கப் பகுதியில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிக்க எண்ணி அரசினர் பன்னாலைக் கிராமத்தின் எல்லையை மறு சீரமைக்க முயன்றனர். நம் உபாத்தியாயர் இதனைக் கண்டு கொதித்தெழுந்தார். ஊராரின் ஆதரவுடன் வெற்றியும் கண்டார்.
உபாத்தியாயரின் சமூகப் பணி 1940 களிலேயே ஆரம்பித்துள்ளது. அவர் இளைஞராக இருந்த அக்காலத்திலேயே ஐக்கிய நாணய சங்கம் ஒன்றினை உருவாக்கி அதில் ஊர் விவசாயிகளை அங்கத்துவாரக்கி அவர்கள் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப் பட்ட பன்னாலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பிக்க முன்நின்று உழைத்தோரின் முதன்மையானவர் உபாத்தியாயர்.
கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பதவியை பல் வருடங்கள் சுமந்து விவசாயிகளின் பொருளாதார மேம் பாட்டுக்கு அயராது உழைத்த பெரும் தகை உபாத்தியாயர். ஊருக்கு உழைப்பவர், வீட்டினைச் சிலசமயங்களிலே மறந்து விடுவதும் உண்டு. இங்கே எப்படி? அவரின் இல்லம் நல்ல குடும்பம். உபாத்தியாயரின் மனைவி வரதலட்சுமி அம்மாள் மனைவிக்கு இலக்கணம். உபாத்தியாயர் குடும்பப் பொறுப்பை என்றுமே மறந்ததில்லை. அவரது நான்கு செல்வங்களும் இன்று நல்ல நிலையில் இருப்பது அவரின் சீரிய வழிகாட்டலால்தானே. கனடாவில் வாழும் புதல்வன் துரைசிங்கம் தந்தைக் கேற்ற மகனாய் இங்கே சமூக சமயப் பணிகளில் பெரிதும் உழைத்து வருகிறார். அவரது மற்றைய பிள்ளைகள் கொழும்பில் வாழ்கின்றனர் தந்தையின் நற்பெயரைப் பேணி நிற்கின்றனர்.
-37

Page 24
கதிர்காமத்தம்பி எனும் இயற் பெயரிலும் பார்க்க ஊரவரின் அன்புக்கும் ஏன் பக்திக்கும் பாத்திரமான உபாத்தியாயர் என்ற சொற்றொடரையே இது நேரம் வரை நான்பாவித்து வந்தேன். அந்த உபாத்தியாயர் நாமம் பன்னாலை வாழ் மக்களின் வாயில் என்றும் முணுமுணுக்கப்படும் பெயராக விளங்கும் என்பதில் எள்ளத்தனையும் சந்தேகம் இல்லை.
உபாத்தியாயர் நாமம் என்றும் வாழட்டும்.
பொ. கனகசபாபதி
is 6. (முன்னாள் அதிபர்) மகாஜனா - தெல்லிப்பழை
一哈一关@4兴4@兰→一一
-38

அமரர். கா. கதிர்காமத்தம்பி 96 si6i இேளைப்பாறிய அதிபர்)
சிந்தையில் வாழும் குருவே! என் தந்தையின்பால் கொண்ட நட்பால் எந்தனை ஆட்கொண்ட நிறைவே! காலமறிந்து, கரந்தந்து, துன்மறிந்து, தயர்தடைத்த காம்மை ஆளாக்கிய அறிவே! மீண்டும் எம்முள் மலர்க கதிராய் கணினுள் ஒளிர்க!
சண்முகம் குடும்பம் இலணர்டன்
-39

Page 25
நிறைவாழ்வு பற்றியதோர் வினா
எனது பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் உயர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்களுக்கு,
உங்களுக்கு உங்கள் மாணவியாகிய யான் இறுதியாகஇல்லை. நிறைவாக ஒரு கடிதம் எழுத விரும்புகிறேன். நீங்கள் இப்பூவுலக வாழ்வை நீத்து இறைவனிடம் சென்றுவிட்டதாய் அறிந்தேன். உடல், உள, சமூக ஆன்மிக ஆரோக்கியத்துடன் தொண்ணுாறு வருடங்கள் வாழ்ந்து தொண்ணுாறாவது பிறந்த நாளையும் மகிழ்வுடன் கொண்டாடி, நிறைவு நாளிலும் வழக்கம் போலக் காலைச் சந்தியாவந்தனம் வழிபாடு முடித்து, மிகுந்த நிறைவுடன் யாருக்கும் கஷ்டம் தராமல் நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பித்தாய் அறிந்தேன்.
6Tiflä 67 fais6ş6 (Erik Erikson) 676öp D -6T6îuu6oT6Tr பேசுகிற அந்த நிறைவான முதுமையும், அர்த்தம் பொதிந்த அமைதியான மரணமும் உங்களுக்குச் சாத்தியமாகி உள்ளன. அப்படியாயின் மாஸ்லோலின் தேவைக்கூம்பின் உச்சியில் உள்ள சுயதிறன் நிறைவுத் தேவையும் உங்கள் வாழ்வில் பூர்த்தியாகி உள்ளது. இவற்றின் அடியிலுள்ள இரகசியத்தை மூன்றாம் வகுப்பில் எமக்குக் கணிதம் கற்பித்தது போலத் தெளிவாகச் சொல்லித் தந்துவிட்டுப் போக மாட்டீர்களா?
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
என்ற கவிதை உங்களுக்கு நன்கு தெரியும் விழிசிட்டி பன்னாலை,
கொல்லங்கலட்டி, தையிட்டிப்புலம், மயிலங் கூடல், பொற்கலந்தம்பை ஆகிய கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்
س-40

குழந்தைகளுக்குக் கஷ்டமான கணித்தைக் கரும்பாக ஊட்டிய கருமத்துக்கும் இந்த நிறை வாழ்வுக்கும் தொடர்பு உண்டா உபாத்தியாயரே!
உங்கள் வீடு பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலைக்கு அருகில் இருந்தது. இடைவேளை நேரத்தில் நாங்கள் எல்லாருமே உங்கள் வீட்டிற்குத் தண்ணிர் அருந்த வருவோம். சிறு குழந்தைகளின் தாகம் தீர்த்த தர்மத்திற்கும் இந்த நிறை வாழ்வுக்கும் உறவு உண்டா ஆசிரியரே!
af Duu ajë சொற் பொழிவு, புராண படனம் , ஆலயத்திருப்பணி, மார்கழி மாதத் திருவெம்பாவைப்பஜனை என்று நீங்கள் செய்த சமய சமூகப்பணிக்கும் இந்த அமைதியான புறப்பாட்டுக்கும் பந்தம் உண்டா ஐயா!
ஊர் மக்களின் பிணக்குகளைத் தீர்த்தல் ஐக்கிய நாணய சங்கத்தின் மூலம் கிராமத்து, விவசாயிகளுக்கு உதவுதல். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கிராமப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புதல், எப்போதும் வெள்ளை உடையில் தூய்மையாக இருத்தல், நாவலரைப் பின்பற்றி வாழ்தல் என்ற பல பண்புகளில் எனது தந்தையாரை நினைவூட்டி சொந்தத் தந்தையே போன்று பரிவும் பாசமும் காட்டி வந்த பண்புக்கும் இந்த வகை விடைபெறலுக்கும் இணைப்பு உண்டா பிதாவே!
பன்னாலை என்ற செழுமை மிக்க கிராமத்தில் முளைத்து செடியாகி, மரமாகி விழுதோடிய நீங்கள் தந்த நாலு பழங்களும் மிக இனிமையானவை. கடைசிச் சரோஜாப் பழம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதன் அன்புச் சுவையைக் கடந்த ஐம்பது வருடமாகிச் சுவைக்கும் குயில் நான். அதனால் உங்கள் மர நிழலுக்கு அடிக்கடி வருவேன்.
-41

Page 26
இவ்வருடம் ஜனவரி மாதத்தில் வந்தபோதும் வானொலி கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் இருந்தீர்களே! அடுத்து ஏப்ரலில் இளைப்பாற மரநிழலுக்கு நான் வரமுதல் அவசரப்பட்டதென்ன தந்தையே!
உங்கள் உன்னத ஆளுமையின் கூறுகளைப் பிள்ளைகளில் பார்க்கின்றோம் நாம், “மித்ர' என்ற சொல்லின் அர்த்தத்தை நன்குணர்ந்தார் என்று துரைசிங்கம் அண்ணர் பற்றி எஸ். தி. கூறுகிறார். சரோவுக்கும் அது பொருத்தமானது என்று திடமாய்ச் சொல்வேன் நான். எனது மகன் கொழும்பில் வசித்த காலத்தில் அவரது இடர்களை தாய் போலக் கைகொடுத்து, சரோவும் நானும் ஒன்றே என்ற உணர்வை எனக்குக் தோற்றுவித்தவர் அவர், “ஆளுமைக் கூறுகளைப் பிள்ளைகளிடம் விட்டேன்’ என்ற திருப்தியா இந்த ஆழ்ந்த அமைதியின் அர்த்தம்?
வாழும் போதே சிவறர். நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களால் “சிவஞானச் செல்வர்” என்று போற்றப்பட்டவர் நீங்கள் . உங்களுக்கென்ன? சிவஞானப் பேறு சர்வ நிச்சயம் ஆனால் நான் இனிமேல் கொழும்பு வரும்போது “யார் வந்திருப்பது, கோகிலாவா? “ என்று கேட்டுவிட்டு, பன்னாலையில் நடந்த சேக்கிழார் மகாநாடு பற்றி விரிவாகச் சொல்லப் போவது யார் உபாத்தியாயரே!
உங்கள் பணிவுள்ள மாணவி கோகிலா மகேந்திரன்
-42

மக்கள் சேவை மாமணி
ஈழ மணித்திருநாட்டில் வடபால் கடலுக்கு அண்மித்த நீர்வளம், நிலவளம், கார்வளம் கொண்டபதி பன்னாலை, சேர்கனகசபை அவர்கள் வாழ்ந்த மண், கார்காத்த உயர் இந்து வேளாண்குடியில், பார்புகழும் சீர்பெற்ற குடும்பத்தில் உதித்தவர் “வாத்தியார்” சீலமுடைய குடும்பமாதலால் வாத்தியாரை ஞாலம் புகழவைத்தது. ஆசிரியராய், அதிபராய், சமூக சேவகனாய், சித்தாந்த செம்மலாய், பொது நலவாதியாய், சிந்தனையும் வந்தனையும் கொண்ட பலபரிமாணங்களுக்குள் தன் ஆளுமையை விருத்தி செய்து உரித்தாக்கிக் கொண்ட பெருந்தகை. உடம்பின் உயரம், உடல் உள உணர்வின் வெள்ளைத்தன்மை, ஆடையும் வெள்ளை சோடை போகா உரை, நீரைப் படுத்திய கடமைகள் எண்ணியவாறான கண்ணியம், விட்டுக் கொடுக்காத கட்டுப்பாடு, இவையனைத்தும் அமரரில் பொருந்தியவையே. குருவருள் இன்றித் திருவருளிலில்லை என்பதற் கொப்ப என்னை உரிமையுடன் சீடனாக வரித்துக் கொண்டவர். அவரது வரையறைக்குள் இருந்தமையினால் நிரையான வளர்ச்சி கண்டேன். இறுதி வரை உறுதியுடன் சிவநாமம் உச்சரித்ததால், பூவுடனும் நீருடனும் வழிபாடு இயற்றி நீரருந்தி, சரோ எனப்புத்திரியை அழைத்து மாய உலகிலிருந்து சாந்தியடைந்தார். எவர் இப்பேறுபெறுவர்? பண்ணிய பயிரிலும் புண்ணிய உயிரிலும் கண்ணியமான பலனும் நலனும் தெரியும் என்பதை இறையை உணர்ந்தவர்க்கே புரியும். பாயில் கிடவாமல் நோயில் வாடாமல் பரமனடி அணைந்தாரே! மனிதர்களைப் புனிதர்களாக்கிய செம்மலுக்குக் கிடைத்தபேறே இதுவென ஆறுதலடைவோம்.
வாத்தியாரைப் பெயர் சொல் லியாரும் அழைப்பதில்லை. எமது கிராமத்தில் எதிர்பாராமல் தொல்லைகள் குடும்பங்களிலும் மக்களிடேயும் எல்லை
-43

Page 27
மீறுவது வழமை. இந்நிகழ்வுகளில் முதல் ஒலி “எங்கே வாத்தியார்” “வாத்தியாரைக் கூப்பிடு” என்பதே. காரணம் பஞ்சாயத்து முதல்வரிவர். நீதிமன்ற செலவு மிச்சமாகும். கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிக் காத்து ஏற்றி வைத்த பெருமைக்குரியர். எட்டுவயதிலிருந்தே என்னை பஜனைக்கு அழைத்துச் சென்றவர். அவர் அயல்வீடு எனது. எம்நாடு முழுவதிலும் என்பரிமாணங்களை வளர்க்க உதவியது இதுவே. பாரத யாத்திரைகள் பல சோர்விலா நிகழ்த்தியவர். கணிணனடிகள், குனி றக் குடியடிகள் , திருமுருக கிருபானநீதவாரியார் போன்ற பெரியார்களைப் பாடசாலைக்கழைத்து, சிவபூசை நிகழ்த்தி உணவருந்தச் செய்தவர். வடபால் முதலில், சேக்கிழார் விழா எடுத்த பெருமைக்குரியவர். இதனால் கிராமம் வளர்ந்தது. இறையுணர்வு தெளிந்தது. கிராமமக்கள் மகிழ்ந்தனர், புகழ்ந்தனர், இறை உணர்வால் உளம் நெகிழ்ந்தனர். எல்லாச் செயல்களிலும் சிகரம் திருவெம்பாவைப் பஜனையும் பூர்த்தி விழாவுமேயாகும். 65 வருடங்கள் அயராது நடத்தி உயர்வு பெற்றவர். பூதவுடல் மறையினும் புகழுடம்பு நிலைக்கின்றது. பரிவு காட்டிய உள்ளம் பிரிவின் துயரே. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறையுடன் திண்ணமானநிலை பெற்றார் என ஆறுதல் பெறுவோமாக. மங்கையர்க்கரசிகொப்பான மனைவியையும், தொல் லைகளற்று எல்லையிலா மகிழ் வெய்தியிருந்த பிள்ளைகளைவிட்டுப் பிரிந்ததும் வேதனையே. எனினும் இறப்பை எவரும் துறக்க முடியாதெனும் குறிப்பில் ஊறி, நாம் அனைவரும் தேறிவாழ்வோமாக. ஓம் சாந்தி.
சைவப்புலவர், கலைமாமணிபொன். தெய் வேந்திரன்
முன்னாள் ரீ. ல. க. நி. சே 11, பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை.
-44

நேரிற் காணாத நெறியாளன்
பெருமைக்குரிய பெரியார் ஆசிரியர் கதிர்காமத்தம்பி அவர்கள் கொழும்பில் இயற்கை எய்திய தகவல் அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியுற்றேன்.
பெரியார் கதிர்காமத்தம்பி அவர்களை நான் ஒருபோதும் நேரில் கண்டதில்லை. கனடாவில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பராகிய துரைசிங்கம் அவர்களின் தந்தையாதலால் அவர் பற்றி நிறைய அறிந்துள்ளேன். அவர்தம் கல்விப் பணி, சைவப் பணிகள் பற்றி பல்வேறு தளங்களால் கேள்வியுற்றுள்ளேன். அவரால் எழுதப் பெற்ற பல சைவநெறிக் கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஓரிரு தடவைகள் அவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவரது பேச்சொழுக்கும், பண்பான உரைநடையும், உற்சாகமளிக்கும் வார்த்தைப் பிரயோகங்களும் என்னை மிகக் கவர்ந்தன. இதனால் எனது மனதில் மிக உயர்ந்த இடத்தினை அவர் வகித்து வருகின்றார்.
இதன் காரணமாக, நண்பர் துரைசிங்கம் அவர்களுடன் அளவளாவும் வேளைகளில் அவர்தம் தந்தை தாயார் சுகசேமம் பற்றிச் சிரத்தையுடன் விசாரித்துக் கொள்வேன்.
பெரியார் கதிர்காமத்தம்பி - வரதலட்சுமி தம்பதிகளின் திருமண சஷ்டியப்த பூர்த்தி 1998 ஆம் ஆண்டில் மிக அடக்கமாகவும் பக்தி பூர்வமாகவும் மதவழிபாட்டுடன் இணைந்ததாகக் கொழும்பில் கொண்டாடப்பட்டது. அதற்கான ஒரு சிறப்பு மலர் தயாரிக்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை, நண்பர் துரைசிங்கம் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது அதனை மிகவும் மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.

Page 28
பெரியார் கதிர்காமத்தம்பி அவர்கள் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், அவரால் எழுதப்பட்ட சில கட்டுரைகள், சஷ்டியப்த தம்பதிகளுக்கான ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களைத் தாங்கியதாக அறுபது பக்கங்களில் அறுபதாண்டுத் திருமண மலர் மலர்ந்தது. இதனைப் பார்த்தபின்னர் அவர் தமது கைப்பட எழுதிய நன்றிக் கடிதத்தினை பெரும் பொக்கிஷமாக நான் வைத்திருக்கின்றேன்.
பெரியார் கதிர்காமத்தம்பி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்பதும், அவர் உயிருடன் வாழ்ந்த வேளையில் அவர் பெருமைகளைத் துலக்கும் ஒரு மலரினைத் தயாரிக்கக் கொடுத்து வைத்தோமே என்பதும், இன்று எனக்குப் பெரும் நிறைவுணர்வை ஏற்படுத்துகின்றன.
இவ்விடத்தில், இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன்:
2000 ஆம் ஆண்டில் நண்பர் துரைசிங்கத்தின் மணிவிழாவினை அவருக்கு முற்கூட்டியே தெரிவிக்காது நடத்த ஏற்பாடு செய்தோம். அதற்காக உருவான மணிவிழா மலரினில் தமது மகன் பற்றி தந்தையார் கதிர்காமத்தம்பி அவர்கள் ஒரு கட்டுரை எழுத வேணர் டுமென்பது எனது விருப்பமாகவிருந்தது. அதனை நண்பர் துரைசிங்கத்துக்குத் தெரியாமலே பெற வேண்டுமென்ற சிக்கலும் இருந்தது.
கனடாவிலிருந்து தொலைபேசியில் பெரியாருடன் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கிச் சொன்னேன். மிகுந்த மனவிருப்போடு, கட்டுரையை அனுப்பி வைத்தார். தமது இயலாமையையும் பொருட்படுத்தாது தாம் சொல்லச் சொல்ல தமது மகள் மூலம் எழுதுவித்து அதனை ஒப்பேற்றினார். இறுதிவரை மகனுக்கு அதனைக் கூறாது இரகசியம் பேணினார். மணிவிழா மலரைப் பார்த்தபின் அவர் எனக்கு எழுதிய கடிதமும் என்னிடம் பக்குவமாக இருக்கின்றது.
-46

ஆசிரியப் பெருந்தகை இயற்கையடைந்து விட்ட செய்தி அறிந்ததும் இந்த நல்ல நினைவுகள் என்னுள் மீட்டெழுகின்றன. நோய் நொடியில் கிடந்துழலாது தொண்ணுாறு வயதுவரை வாழ்வாங்கு வாழ்ந்து இன்று தென்திசை சென்றுவிட்ட ஆசிரியரின் வாழ்க்கை பலருக்கும் முன்மாதிரியாக அமைவது.
நான்கு தலைமுறைகளைக் கொண்ட தமது குடும்பப் பரம்பரையினை மட்டும் உருவாக்காது, மாணவப் பரம்பரை, சைவப் பரம்பரை எனப் பல பரம்பரைகளுக்கு வித்திட்ட இப்பெருமகனாரின் வாழ்வு பலருக்கும் வழிகாட்டியாக நிற்பது.
அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது இல்லத் துணைவி வரதலட்சுமி அம்மையார், புத்திரர்கள், புத்ல்விகள் மற்றும் சகல குடும்பத்தினரினதும் சோகத்தில் பங்கேற்பதுடன், இறைபாதம் பற்றியுள்ள ஆசிரியப் பெருந்தகை கதிர்காமத்தம்பி அவர்களின் ஆத்மா பேரின்பப் பெருவாழ்வு பெற எனது மனைவி, தாயார், மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து இறையருளை இறைஞ்சுகின்றேன்.
திரு எஸ். திருச்செல்வம்
s
-سسسسسسحسgسھج8346eچههجسمهسس----------
-47

Page 29
அமரர் கா. கதிர்காமத்தம்பி அவர்கள்
(இளைப்பாறிய அதிபர், பன்னாலை சேர் கனகசபை அ, த. க. பாடசாலை)
எமது கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் பன்னாலை திருவெம்பாவை கூட்டுப் பிராத்தனைச் சபையை ஆரம்பித்து வைத்து, அதன் தலைவராக இருந்து வீதிப் பஜனை வழிபாட்டை வழிநடத்தி, மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உழைத்தவரும் காலமாகும் வரை காப்பாளராக இருந்து எமக்கு நல்வழி காட்டியவருமான அமரர் கா. கதிர்காமத்தம்பி அவர்களின் பிரிவை அறிந்து சொல்லொணாத் துயரமடைந்தோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அணி னாரின் ஆத்தா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்.
பன்னாலை திருவெம்பாவை கூட்டுப்பிரார்த்தனைச் சபை. பன்னாலை, தெல்லிப்பழை.
-48

அமரர் கா. கதிர்காமத்தம்பி அவர்கள்
(இளைப்பாறிய அதிபர், பன்னாலை சேர் கனகசபை அ. த. க. பாடசாலை)
28-02-2004 காலமானதையிட்டு பன்னாலை ஐக்கிய நாணய சங்க அங்கத்தவர்களாகிய நாங்களும் பன்னாலை வாழ் மக்களும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம். அன்னார் பன்னாலை மண்ணின் மைந்தனும் பன்னாலை ஐக்கிய நாணய சங்கத்தின் ஸ்தாபகரும் 30 ஆண்டு கால முன்னைநாள் தலைவரும் சிறந்த சமூக சமய சேவையாளரும் சிறந்த சமய சொற்பொழிவாளரும் முன்னாள் சேர். கனகசபை வித்தியாலய அதிபரும் ஆவார். அன்னாரின் பிரிவில் ஆழ்ந்திருக்கின்ற குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனப் பிரார்த்திக்கின்றோம்.
ஐக்கிய நாணய சங்கம் பன்னாலை
28-02-2004

Page 30
திரு. காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி
சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பணி புரிந்த ஆசிரியப் பெருந்தகை இவ்வுலக வாழ்வை நீத்தமை எமக்கும் பன்னாலை பெருவூருக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நேற்றுக் கதைத்தார் நேயம் நிறைந்த வாழ்த்துக்கள் சொன்னார்
கூற்றுவன் வந்ததும்குவலயம் மறந்தார் கூடிச் சென்றுவிட்டார் அவர் சாற்றித்தந்த அகரமத னோசை அகமதில் அழுந்திநிற்க ஐயா
காற்றிலே உமது பெயர் பன்னாலையென்று சொலும் நீர் வேற்றுடல் எடுத்தாலும் தமிழ்வேந்த நீரெங்கள் பன்னாலைப்
பெருவூரில் மீண்டும் பிறந்தெமக்குப் பெருங்கல்வி தருவீர் கற்றுக்கொடுக்கின்ற கதிர்காமத்தம்பிச் செம்மலே கண்ணெல்லாம்
மாற்றுக் குறையாத கண்ணிரைப் பொழிந்தாலும் பாதமே படுக்கையாகும்
உங்கள் பிரிவால் துயருறும் பிரித்தானியா வாழ் பன்னாலை மக்கள் ஓம் சாந்தி
-50

என்னென்று அழைக்க ?
செழிப்பும் வனப்பும் நிறைந்த கிராமம் பன்னாலை. இங்கே வெற்றிலைக்கொடி உயர்ந்து வளர நிலத்தைப் பண்படுத்திய கடின உழைப்பாளிகள் சாதாரண மனிதர். இம்மாந்தரின் அறிவும் இதயமும் உயர்ந்து வளர அவர்களைப் பண்படுத்தியவர். அவரை என்னென்று அழைக்க?
முதலனுவலாக அந்த உயர்ந்த உழைப்பக்குத் தன்னைப் பண்படுத்திக் கொண்டார் கதிர்காமத்தம்பி “வாத்தியார்”.
ஊரறிந்த ஆசான் கதிரித்தம் பிப் பணி டிதரிடம் தமிழைக்கற்றார். சைவ ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கலாசலையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் மாணவரானார் பெரும் பேறு பெற்றார். கிராமத்தின் பாடசாலையில் ஆசிரியரானார். அதிபராக உயர்ந்தார். கிராமத்தவரின் இதயத்தில் நிறைந்தார். பெயரை மறந்தனர் ஊரார் “வாத்தியார்’ நிமிர்ந்து தனித்தார்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவனின்றிக் கிராமத்தில் எது அசைந்தது?
பாடசாலைக் கட்டிடங்கள் விரிந்தன. கல்வி நிலை உயர்ந்தது. சைவ நெறி பொலிந்தது. கிராமம் எழுச்சியுற்றது.
மார்கழி மாதத்தின் வைகறைகளில் கிராமம் எங்கும் திருப்பள்ளி எழுச்சி ஒலித்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தள்ளாத வயது வரை தழும்பாது நடாத்திவந்தார். இதன் பொன் விழாக்கொண்டாட்டத்தில் நல்லை ஆதீன முதல்வரின் பொன்னாடை இவரின் புகழ்பாடி மகிழ்ந்தது.
கூட்டுறவுச் சங்கத்தை நிறுவினார் வளர்த்தார், நிலைக்கவைத்தார். (கல்விநிலை குறைந்த கிராமத்தின் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் நுகர்ச்சிப் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் சுலபவழி
காட்டினார்)
-51

Page 31
கடன் வசதிகளுக்கு வாய்ப்பற்ற ஏழைக்கமக்காரர்களுக்கு முதலீட்டுக்கு வழிகாட்டி ஐக்கிய நாணய சங்கத்தை நிறுவினார், வளர்த்தார், இன்றுவரை நிலைக்க வைத்தார்.
கிராமத்தில் பிணக்குகள் தோன்றும் போதெல்லாம் சமரசம் செய்து வைத்துச் சுமூகநிலை நிறுவினார்.
காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் நவீன கருவிகள் எதுவுமின்றி ஒரு நில அளவையாளராகப் பணியாற்றினார்.
இவ்வகையில் தனது கிராமத்தின் வாழ்க்கையில் கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம், நீதி எனப் பல்துறைகளில் பின்னிப் பிணைந்து திறமை மிடுக்குடன் பணியாற்றியவர் “வாத்தியார்” தனி ஒரு துறையில் பணியாற்றுமிடத்தில் கூடச் சில்லெடுப்போர் மத்தியில் இநீதப் பணி முகப் பணித் திறன் பெரும் மலைப்புக்குரியதன்றோ!
(ஆங்கிலக் கவிஞன், ஒலிவர், கோல்ட்சிமித் எழுதிய “ஒரு கிராமப்புறப் பாடசாலை ஆசான்” என்ற கவிதையை வாசிக்க வல்லவர்கள் இந்த மலைப்பின் சுவையைப் பெரிதும் சுவைக்கமுடியும்)
புறத்தே இத்துணை பணிகளையும் ஆற்றவதற்கு அவருக்கு வீட்டில் இலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டுமே! வீட்டுக்குள் இருந்ததோ வரத இலட்சுமி கொடுத்து வைத்தவர் புண்ணியஞ்செய்தவர்.
இல்வாழ்க்கையில் இருபாலரிலும் இருவர் இருவராக நாலு பிள்ளைச் செல்வங்களின் தந்தை. இடம் பெயர்ந்தும் கொழும்பு வரவிரும்பாதவர் பிள்ளைகளுக்கு வசதியீனம் ஏற்படுத்தக் கூடாது என்ற பாசத்தில் தன்னையே கொழும்புக்குக் கொண்டுவந்தவர் பிள்ளைகள் மத்தியில் வாழ! பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மூத்தவன் இருந்து மென்ன முற்றத்தில் நிற்பவன் போல் அவனது குரல் என்றும் கணிரிடுமே! குசலம் விசாரிக்குமே!
-52

பிள்ளைகுட்டிகள் மத்தியில் இறுதி மூச்சுவரை இனிது வாழ்ந்தார், மனைவி மக்களோ மருமக்களோ என்னைச் சுற்றியள்ளவர்களோ எனக்கு ஒரு கஷ்டமும் தருவதில்லை என்று மனநிறைவுடன் கூறினார்.
“அவர் நோயுற்று அடரவில்லை, நொந்து மனம் வாடவில்லை. பாயிற் கிடக்கவில்லை, ஒரு நொடிக்குள் காயத்தை நீக்கினார்’ சிவஞான முனிவரின் கூற்றுப்படி,
ஊருக்கும் உலகத்துக்குமென உள்ளம் நிரம்ப வாழ்ந்தவர் தன் ஆளுக்குமான வாழ்க்கையிலும் உள்ளம் நிறைந்தார், உத்தம மானுடன் ஆனார்.
வாழும்பொழுது வாழ்ந்த இந்த மனஅமைதியுடன் வானுலகம்
மீளும் பொழுதும் பேரமைதியுடன் பிரியாவிடை கூறினார் இந்த மானுடன்.
மனிதருள் “வாத்தியார்” ஓர் IDT மனிதன்
கூத்தஞ்சீமா செ. குமாரசாமி அளவெட்டி பாராளுமன்ற
இணைவேக உரைபெயர்ப்பாளர்
一令一关°4米°@兴→一一
-53

Page 32
அவர் வாழ்ந்த முழுமையான வாழ்க்கை
ஒரு நிறைகுடம்
சிவஞான முனிவர் அருளிய பொன் வாக்கியத்துக்கமைய
“நோயுற்றொடராமல் நொந்துமணம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் - காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி ஒண்போ நுராநின் சீர் அடிக்குள் வைப்பாய் சிறந்து”
என்றதற்கமைய அமரத்துவம் பெற்ற நமது பெரியார் எனது குருநாதர் கதிர்காமத்தம்பி வாத்தியார் ஐயா அவர்களுடைய அமைதியான ஆடம்பரமற்ற இனிய ஈகையுணர்வுள்ள உறுதியான ஊக்கமான எளிமையான ஏற்றமிகு ஐக்கியமான ஒற்றுமையான ஒர்த்துள்ளத்தவராய் ஒளவை மொழியைப் போற்றி வாழ்ந்த சீரிய வாழ்க்கை எமக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவருடன் மிகவும் நெருக்கமாக பழகவும் பேசவும் வாய்க்கப் பெற்ற குடும்பங்களுள் எமது குடும்பம் ஒரு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது என்பது மிகைபடாக் கூற்றாகும். இவரும் சரி இவரது அருமைப் பாரியாரும் சரி மக்களும் சரி எங்களுடன் - தேனுடன் கலந்த பாலாக - பரிவுடன் இதுவரை வாழ்ந்து வந்துள்ளமை இரு குடும்பமும் பெற்ற பெரிய வெற்றியாகும்.
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்லபிற” என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கிற்கமைய இவர் குடும்பத்தில் உதித்த மக்கள் யாபேரும் ஒவ்வொரு துறையில் ஒளிவிளக்காக திகழ்வது பெரியார் தம் வாழ்வில் பெற்ற மிகப்பெரிய சிறப்பாகும்.
யான் அவர் இல்லம் செல்லும் போதெல்லாம் பெரும்பாலும் தமது இல்லத்தின் நுழைவாயிலை திறந்து வரவேற்பார். என்னைக் கண்டதும் பவா என்பர். யானும் வாத்தியார் என்பேன். “நீரும் சமய சமூகப்பணிகளும் தானே” என்று ஒரு தேற்றேகாரங் கொடுத்து சொல்லுவார். அவரது சொல்வன்மையைப் பற்றி சிந்திப்பேன், அப்பொழுத எனக்கு

"கேட்டார்ப்பிணிக்குந் தகையலாய்க் கேளாரும் வேட்ப மொழிவதா சொல்”
என்ற திருக்குறட்பா நினைவுக்கு வரும். எனது குருநாதர் அவர்களுடைய சொல்லானது நட்பாயேற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமற் பிணிக்கும் வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல், என்றில்லை முதலிய குணங்களை அவாவி மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப் பகையை ஒழிந்த நட்பினை விரும்பும் வண்மை வன்மையுடையது.
இவர் சிவ பக்கியுடையவர், பன்னாலையில் வாழ்ந்த காலம் முழுவதிலும் பன்னாலை மயிலையம் பதி ஞானவைரவர் ஆலயத்திற்கு தினந்தோறும் சென்று வைரவப் பெருமானை மனமுருகி வழிபட்ட காட்சி இன்றும் என் மனக்கண்முன் தோன்றி மறைகிறது. இப்படிப்பட்ட சிவபக்தர் அமரத்துவம் அடைய இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் யான் அவரை வாழ்த்தி அவரது நல்லாசிகளைப் பெறும் பாக்கியம் பெற்றேன். இத்தனை சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற எனது குருநாதரின் மறைவு அவர் குடும்பத்திற்கும் எனக்கும், பன்னாலைப் பெருவூர் மக்களுக்கும் ஒரு மாபெரும் இழப்பாகும்.
இவருடைய ஆத்மா சாந்தியடைய இவர் தினமும் வழிபட்ட வைரவப் பெருமானையே பிரார்த்திப்போம்.
வ.இ. இராமநாதன் (பவா)
இலண்டன்
-55

Page 33
எங்கள் உபாத்தியாயர் மாமா
தொன்னூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து தனது தொன்னூறாவது பிறந்த தினத்தை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர்களுடன் வியாழக்கிழமை கொண்டாடி சனி காலை குளித்து, கும்பிட்டு. அனுஷ்டானம் செய்து வானொலியில் சமயச் சொற்பொழிவுகளைக் கேட்ட வண்ணம் இறைவனடி சேர்ந்தது எங்கள் உபாத்தியாயர் மாமா அவர்கள் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.
அவர்கள் பூதவுடல் மறைந்தாலும் அவர்களின் கம்பீரமான தோற்றம் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது. அவர் எம்மக்களுக்கு ஒளி விளக்காக இருந்து கல்வியையும் இறை உணர்வையும் சிறு வயதிலே ஊட்டி வளர்த்தார். சாந்தமும் அமைதியும் அன்பும் பண்பும் அறிவும் ஆற்றலும் தன்னகத்தே கொண்டு எம் மக்களின் ஒரு சகாப்தத்தின் அணையாத விளக்காக உயர்ந்த சைவப் பெரியார்.
வெள்ளை வேட்டி நீட்டுக்கை தேசிய உடை கரைமடிப்புச் சால்வை, நெற்றியில் திருநீறு, முகத்தில் புன்சிரிப்புக் கூடிய கம்பீரமான தோற்றத்துடன் எமது சேர். கனகசபை பாடசாலையில் நிற்கும் காட்சி இன்றும் மனதில் நிற்கிறது.
எங்களுக்கெல்லாம் படிப்பித்த உன்னத ஆசான் அவர் ஊரறிந்த கணித மேதை. அவர் கணித விளக்கங்கள் மிகவும் சுலபமாகவும் தெளிவாகவும் கூறுவார்.
அவரிடம் படித்தோர் இன்று பார் போற்றும் சிறந்த கல்விமான்களாக, பொறியியல் வல்லுனர்களாக, வைத்தியர்களாக, எழுத்தாளர்களாக, புலவர்களாக உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
-56

உபாத்தியாயர் மாமா எனது அயலவ்ர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர். அவர் முற்றத்தில் தான் நான் சின்ன வயதில் தினமும் விளையாடுவேன். வெள்ளிக்கிழமை தோறும் அயலில் உள்ள ஞானவயிரவர் பெருமான் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் அவர் தேவாரம் சொல்லித்தர நாமும் சேர்ந்து பாடுவோம். திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலையில் எழும்பி இவருடன் சேர்ந்து எமது கிராமத்தை சுற்றி திரு வெம்பாவை பாடி வருவோம். உபாத்தியாயர் அவர்கள் மற்றப் பெரியோர்களுடன் சேர்ந்து ஞான வைரவ கோவிலில் அறுபத்து நான்கு நாயண் மார்களின் வாழ்க்கை வரலாற்றை வெள்ளிக்கிழமை தோறும் சமயப் பிரசங்கங்கள் மூலம் வெளிப்படுத்தியும் சேக்கிழார் மாநாட்டையும் சிறப்பாக நடத்தியும் எங்களுக்கெல்லாம் சிறு வயதிலே சைவ சமய தத்துவங்களை விளங்கச் செய்து இறையுணர்வை ஏற்படச் செய்த பெருமை அவரையே சாரும்.
ஆண்டவனை நம்பினோர் கைவிடப்படமாட்டார் என்ற திருவாக்கை நம்பி வாழ்ந்தார். இப்படி எல்லாம் எங்களை வளர்த்த எங்கள் உபாத்தியாயர் மாமாவை சென்ற வருடம் சித்திரை மாதம் கொழும்பில் சந்தித்துக் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மேல் கொண்ட பாசம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் செய்த விருந்தோம்பலை எப்படி மறக்க (Մ)Iգամ),
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிப், பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி!
வே. நந்தீஸ்வரர்
56
-57

Page 34
தெல்லிப்பளை மகாஜானக்கல்லூரி LJбориЈ ШDráróJћ சங்கம் ~ கொழும்புக்கிளை அனுதாப அஞ்சலி
உங்கள் அன்புத் தந்தையார் திரு. காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள் இறந்த செய்தி அறிந்து நாம் அதிர்ச்சியடைந்தோம். அன்னாரது மறைவு உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அளப்பரிய துயரத்தில் ஆழித் தியிருப்பது அறிந்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம். இந்தப் பேரிழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.
அன்னார் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பலரால் நினைவுகூறப்படுவது அவரது இழப்பு எம்மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற வெற்றிடத்தையும் பாதிப்பையும் பிரதிபலிக்கின்றது.
எமது நிர்வாக சபை உறுப்பினர்கள் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை இத்தால் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றோம்.
நன்றி
இங்ங்ணம்
இ. கிருபானந்தன் தலைவர்
-0-52 kics-be--
-58

தர்மவழியில் உயர்ந்த உத்தமர் எனக்கும் வழிகாட்டிய குரு
மானிடப்பிறவி எடுத்தவர்களின் மறைவு தாங்க முடியாத ஒரு நிகழ்வு எனினும் மரணம் என்பது ஜனனத்தின் பொழுதே நிச்சயிக்கப்பட்டது.
அமரர் கதிர்காமத்தம்பி வாத்தியாரின் திடீர் மரணச் செய்தி கேட்டு நான் ஆறாத கவலை அடைந்தேன். எங்கள் ஊராகிய பன்னாலையில் அளப்பரிய சமூக, கல்வி, சமயத் தொண்டாற்றி இப்போ கொழும்பு மாநகரிலும் ஒரு பெரியவராக இருந்து என் போன்று பலருக்கு புத்திமதி சொல்லி தேவாரங்கள் திருவாசகம் இராமாயணக்கதைகள் சொல்லி அறிவூட்டிய குரு அமரராகி விட்டார். இனி எப்போ இத்தகைய ஒரு பெருந்தகையைக் காண்போம். எனது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பிறந்த நாள் தொடக்கம் என்னை அவருக்கத் தெரியும். என் அப்பா அவருக்கு மாணவராகவும் அயலவராகவும் இருந்தார். நான் அவரைச் செல்லமாக வாத்தியார் மாமா என அழைப்பேன். அவர் என்னையும் தன் பேரப்பிள்ளைகளில் ஒருவராகவே கருதி நடந்தவர். நான் சிறுவயதாக இருக்கும் போது தங்கள் வீட்டில் வளவில் உற்பத்தியாகும் பழங்களை எங்கள் வீடு தேடிக் கொண்டு வந்து தருவார். எனது மனதில் இப்போதும் பசுமையான நினைவு இருக்கிறது அவர் எங்கு சென்று தேவார திருவாசகம் பாடினாலும் அவர் அருகில் நின்று அவரின் பண்ணிசையை இரசிப்பேன். அவரின் வழிகாட்டலில் கோவில்களில் தேவாரம் பாடியுள்ளேன். இங்கு இலண்டன் வந்தும் அவரின் பணியைத் தொடர்கிறேன். நான் சிறுவயதில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ்பாடி அவரின் அன்புக்கரங்களால் பரிசுகள் பல வாங்கி உள்ளேன்.
-59

Page 35
அவர் அத்தகைய பெரியார். எதைச் செய்ய மறந்தாலும் எனக்கு புதுவருடம் தோறும் கைவிசேஷம். தந்து என்னை உங்களில் ஒருவராக்கி விட்டீர்களே. நான் இலண்டனுக்குப் படிக்கப் போகும் போது நாலுவருடம் படிக்கப் போகிறாய் அடுத்த வருடம் கைவிசேஷம் தரச்சந்திக்குமோ தெரியாது என்று சொல்லி நாலுவருடக் கைவிசேஷமும் ஒன்றாகத் தந்தீர்களே. 2002ல் நான் விடுமுறையில் இங்கு வந்து உங்களைச் சந்தித்த வேளை அன்புடன் ஆரத் தழுவி ஆதரித்தீர்களே ஐயா. இவ்வளவு செய்த உங்களுக்கு நான் எவ்வுதவியும் செய்யச்சந்தர்ப்பம் தராமலே போய் விட்டீர்களே.
இனி உங்களைப் போன்ற ஒரு உத்தமரை எப்பிறப்பில் காண்பேன். விதியை வென்றவர் எவரும் இல்லை என ஆறுதலடைவோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய வறுத்தலைப்பிள்ளையாரை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
g
ஏரம்பமூர்த்தி ரமணன் இலண்டன் 12-03-2004
--S2-ket-9- -

முறையுள் அடங்காத உறவு
எனது பெரியதந்தையார் மறைந்த கதிர்காமத்தம்பி ஆசிரியர் அவர்கள் எனது பெரியம்மாவாகிய திருமதி. வரதலட்சுமியை திருமணம் முடித்த போது எனது தாயார் உட்பட சகோதரர்கள் யாவரும் தமது பெற்றோர்களை சிறு வயதில் இழந்திருந்தனர்.
அன்றுமுதல் யாவருக்கும் தந்தையாக இருந்து எமது தாயாருக்கு ஆசிரியராகவும் இருந்து அவருக்கு ஏற்ற மணமகனைத் தெரிவு செய்து பொறுப்போடு ஒப்படைத்து எமக்கு பராயம் தெரிந்த வயது முதல் யாவருக்கும் திருக்குறள், தேவாரம், திருவாசகம் பாடி விளக்கவுரை சொல்வதுதான் எம்முள் படிந்த இவர் தோற்றம். சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்கள் அவரைத் தேடிவரும் விருத்தினர்கள் நண்பர்கள் பொதுச் சேவைகளில் தொடர்புள்ள வட்டம் யாவரும் மயங்கிய நிலையில் விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். வந்தவர்கள் சிலர் ஆசிரியர் அவர்களைத்தாம் தேடிவந்த விடயத்தை மறந்து விடுவார்கள். அவரது பொழிப்புரை சில நிமிடங்களுக்குள் யாவரையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்து விடும்! அதனால் தானி அவரைத் தலைமை ஆசிரியராக நியமித்திருந்தார்கள், என்பதைப்பின் உணர்ந்து கொண்டேன்.
அவரது ஆசிரியர் சேவை பாடசாலையோடு முடிவடையவில்லை. எனது தாய்வழி, தந்தைவழி சொந்தச் சகோதரங்களின் பிள்ளைகள் கூட நிச்சயம் அவர் மூலம் திருக்குறளும் பயனும் மனனம் செய்து வைத்திருப்பார்கள் ஆகவே மொத்தத்தில் பாடசாலை முடிந்து வீடும் நமக்குப் பாடசாலைதான் யாவற்றையும் கூட்டிக் கழித்துப்பார்த்தால் ஒரு வரியில் எமது உறவு முறையினைக் கூறிவிட முடியாது.
-61

Page 36
அவர் ஓர் ஆல விருட்சம் அதனால்தான் முறையுள் அடங்காத உறவு என்று குறிப்பிட்டு இருந்தேன். அதனால் நாம் எந்தக் கடமையைச் செய்தாலும் முழுமை பெற முடியாது அவரின் விழுதுகள் எம்முடன் மட்டும் நிற்கவில்லை ஊரில் உள்ள கோவில் நிர்வாகங்கள், திருவெம்பாவைக் கூட்டுப் பிரார்த்தனைகுழு, ஐக்கிய நாணயசங்கம், வாசிகசாலை யாவற்றிலும் தலைமுறையாக பங்காற்றி தொண்டாற்றி வந்தமையினை உணர முடியும். இவையாவையும் தாண்டி ஊரில் குடும்பத் தலைவர் இல்லாமல் நற்கருமமோ துற்கருமமோ செய்ய முடியாமல் எவராவது அநாதரவாக நின்றால் அந்த இடத்தில் ஆசிரியர் அவர்கள் பொறுப்பெடுத்து கருமங்களை நடத்திக் கொண்டு இருப்பார்.
இவ்வளவையும் எப்படிச் செய்து முடிக்கிறார் என்று அவதானித்தேன் இரவுப் போசனத்தின் பின் ஒரு கொப்பிவைத்து காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணிவரை நிகழ்ச்சி நிரல்களை எழுதி வைத்திருப்பார். ஒவ்வொன்றும் முடிய சரி போட்டுவிடுவார். தொடர்ந்து லீவு உள்ள இரவுகளில் நடத்தி முடிக்க வேண்டியனவற்றை எழுதி வைப்பார். கொழும்பு வரும்வரை அவர் இளைஞராகவே வாழ்ந்தார். வாழ்ந்த காலத்தின் புண்ணியங்களும் சிவத் தொண்டுகளும் அவருக்கு இம்மியளவும் துன்பம் இல்லாத சுகவாழ்வுடன் இறையடி சேர உதவி உள்ளது.
எனது குடும்பம் தாய் சகோதரர்கள்
சார்பாக சுவிஸில் இருந்து
Baba

பல்துறை விற்பன்னர்
அமரர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்களைப்பற்றி யான் எனது இளமைப் பருவம் முதல் நன்கறிவேன். அவர் ஒரு பல்துறை விற்பன்னராக விளங்கியமையை யாவரும் நன்கறிவர்.
அவர் படிக்கும் காலத்தில் கல்வியைத் திறமையுடன் நன்கு கற்றுத் தேறினார். அத்துடன் விவசாயத்தையும் மேற்கொண்டு விளங்கினார். தமிழ், இலக்கிய அறிவை அவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் சிறந்த மாணவர்களில் ஒருவராகிய பண்டிதர் சி.கதிரிப்பிள்ளை அவர்களிடம் பெற்றார். சைவத்துறையை தமிழ் நாட்டுப் பெரியார் திரு. வச்சிரவேலு முதலியாரிடம் கற்றுத்தேறினார்.
சிறந்த ஆசிரியராக நீண்ட காலம் விளங்கினார். தனது மாணவர்களைக் கல்வியில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கச் செய்த பெருமை இவரையே சாரும். விளையாட்டு, சங்கீதம், விவசாயம் போன்ற துறைகளிலும் பயிற்றித் தேர்ச்சியடைய வைத்தார். கைத்தொழில் ஒன்றைக்கற்றுவிடுவீர் கவலையைப் போக்கிடுவீர் என்ற முது மொழிக்கிணங்கத் தும்புத் தொழிலை முறையாகத் தான் கற்றதுடன் மாணவர்களுக்கும் அத்துறையிற் பயிற்றிய பெருமை இவரையேசாரும். பற்பொடி தயாரித்தல் துறையிலும் மாணவரை ஈடுபடச் செய்தார்.
கூட்டுறவு நாட்டு உயர்வு என்னும் முதுமொழிக்கிணங்க கூட்டுறவுத்துறையை எமது கிராமத்து மக்களிடையே புகுத்தினார். சிக்கன சேமிப்பு கடனுதவி சங்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்து அதனை வழிநடத்தினார்.
சமயத்துறையில் மிகுந்த நாட்டத்துடன் பணியாற்றினார். அவரின் சமயத்துறைப்பணிகளில் பன்னாலை திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனைச் சபையின் தலைவராக பல ஆண்டுகள் முன்னின்று வழிநடத்திய பெருமை இவரையே சாரும். அத்துடன் பன்னாலையில் மிகச்சிறந்த முறையில் சேக்கிழார் மாநாட்டை
-63

Page 37
நடத்திய பெருமையும் இவருடையதே. தமது வீட்டிற்கு அருகே அமைந்துள்ள ஞான வைரவர் ஆலயத்தை மையமாகக் கொண்டு அரும்பணி ஆற்றினார்.
நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவரின் சிறப்பையும் கண்டு பேரானந்தம் அடைந்தார். இவரின் மூத்த மகன் துரைசிங்கம் அவர்களின் முயற்சியால் இவரின் திருமணவாழ்வில் 60ஆண்டுகள் பூர்த்தி குறித்து சிறப்பான மலர் ஒன்றும் வெளியிடப்பெற்றுள்ளது.
அத்துடன் ஆயிரம் பிறை கண்ட பெருமைக்குரியவரானார் அன்னாரின் ஆத்மா சிவபதம் எய்தும் என்பதற்குச் சந்தேகம் இல்லை எனலாம். நிறைவான வாழ்வு வாழ்ந்த அமரர் எமது ஊரில் வாழ்ந்த பயன் மரம் போன்றவர்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்வோம். அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
ச. விநாயகரத்தினம்
ஒய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களம்
-64

மகன் தந்தைக்கு.
கனடாவிற்கு புலம் பெயர்ந்து குடியுரிமை பெற்ற பின்னரும் எனது பெற்றோரை கனடாவிற்கு அழைப்பதை நானோ எனது குடும்பமோ விரும்பவில்லை. தான் இருக்கும் வீட்டில் இமை கண்ணைக் காப்பது போல் பெற்றோரை கவனிக்கும் சரோ, மாமன், மாமியின் அபிமானத்தைப் பெற்று அவர்களுக்கு பணிவிடை செய்யும் கணவர் ஸ்கந்தா; எனது இடத்திலிருந்து பெற்றோரை கண் காணிக்கும் தம்பி விசாகப் பெருமாள், உறுதுணையாக கணவருக்கு பூரண சுதந்திரம் கொடுத்து உதவும் மனைவி நளினா, ஒய்வு பெற்றும் பெற்றோருக்கு உதவி செய்யும் நோக்குடன் அருகிலுள்ள Royal Hospitalல் பணிபுரிந்து அன்றாடம் மேற்பார்வை செய்யும் அம்பிகா, பெற்றோரின் சுகயினங்களை பொறுமையாகக் கேட்டு அனுபவமும் திறமையும் நிரம்பிய உடனுக்குடன் வைத்திய சேவைகளை கவனிக்கின்ற Dr. சிவஞானசூரியர், அவரின் பிள்ளைகள், சுற்றத்தவர் பலரின் அரவணைப்பு இவை எல்லா வசதிகளும் நிரம்பிய சூழலை என்ன செலவு செய்தும் என்னால் அமைக்க முடியாது, மேலும் கனடா சுவாத்தியம் பெற்றோரை வீட்டுடன் கட்டிப் போட்டு விடும்.
ஒரு மாதத்திற்கு குறைந்தது இரு தடவையாவது பெற்றேருடன் தொலை தொடர்பு கொள்வது எனது வழக்கமாக இருந்தது. பெப்ரவரி 22ம் திகதி தொடர்பு கொண்ட பொழுது “எனது 90 வது பிறந்த தினம் வருகிறது தெரியுமோ” என்று என் தந்தை கேட்டார். என்ன புதிதாக இந்த ஆண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்றேன். “இல்லை முன்புபோல சிந்திக்க இப்ப என்னால் முடியவில்லை, நீர் எல்லாம் ஞாபகத்தில் வைத்திருப்பீர்,” என்றார். அப்பு, தனது பிறந்த நாளை கிட்டிய
-65-.

Page 38
உறவினர்களுடன் சிறிதளவில் கொண்டாட விரும்புகிறார் என்று தங்கை சரோஜா சொன்னார். அப்புவுக்கு இது தான் தனது கடைசி பிறந்ததினம் என்று புரிந்திருக்க வேண்டும். அவரின் மற்றைய தேவைகள் போல் அவரின் விருப்பப்படி இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். நாங்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் 26ம் திகதி காலை அவரை வாழ்த்தி உரையாடினோம் மாலையில் நடந்த கொண்டாட்டம் பற்றியும் அறிந்தோம். வெள்ளி கனடாவில் அவரின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வந்த தொலைபேசி அழைப்பு அவர் அவ் உலகம் சென்றதை அறிவிப்பதாக அமைந்தது. ஒரு கணம் அதிர்ச்சி, மறு கணம் கவலை, அதற்கிடையில் பயனுள்ள வாழ்வு வாழ்ந்தார், நீண்ட ஆயுசுடன் எவருக்கும் கஷ்டம் கொடுக்காமல் அவர் விரும்பிய வாழ்வுடனும் விரும்பிய மரணம் கிடைத்து சென்ற சீமான் என்ற ஆறுதலுடன் நாம் இருவரும் அவரின் அபரக் கிரிகைகளை முறைப்படி செய்யும் பாக்கியம் கிடைக்கின்றதே என்ற திருப்பதியுடன் கொழும்பு வந்து செய்து முடித்தோம்.
எனது ஆரம்பகால திறமை, நான் ஒரு வைத்திய கலாநிதியாக வேண்டும் என்று அவரை எண்ண வைத்தது. அவருடைய ஆசையை முழுதாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் உதவி வைத்தியராகி பின்னர் அவர் எண்ணிய பட்டமும் பெற்றேன். எனது சேவையை ஆரம்பிக்கச் செல்லும் போது அவர் கூறியது “அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் ஊதியம் உமக்கு போதும், நோயாளிகளிடமிருந்து உன் சேவைக்கு ஊதியம் பெறவேண்டாம் உனது வாழ்வு சிறப்பாக அமையும்”. அவர் சொன்னபடி நடந்தேன். அவர் கூற்றும் பலித்தது. எங்கள், நால்வர் திருமணங்களையும் தனியாக நின்று கம்பீரமாக எல்லோரும் வியக்கும் வண்ணம் செய்து முடித்தார்.
-66

பேரப் பிள்ளைகள் நால்வர், பூட்டப்பிள்ளைகள் மூவர் என்று மூன்று தலைமுறை கண்டார். கணவனுக்கு சேவை செய்வதும், பிள்ளைகளை பராமரிப்பதும், பேரப்பிள்ளைகளை கவனிப்பது மட்டுமே தொழிலாகவும், கடமையாகவும் கொண்ட மனைவியின் அரவணைப்பில் 66 ஆண்டுகள், பன்னாலையில் படித்த பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும் 36 ஆண்டுகள் சேவை, அவர் ஆரம்பித்த திருவெம்பா கூட்டுப்பிரார்த்தனை சபை, ஐக்கிய நாணய சங்கம், ஸ்தாபிக்க உதவிய பல நோக்கு கூட்டுறவு முதலியவற்றில் தொடர்ச்சியாக 50 ஆண்டு சேவை இறக்கும் வரை சமயப் பணி, சமூகப்பணி - இந்தச் சாதனையை எவரும் எட்டிப் பிடிக்க முடியாது.
இருக்கும் பொழுதே ஒருவரினி சேவை பாராட்டப்படவேண்டும், ஒருவர் கெளரவிக்கப்படவேண்டும். என்ற நல்ல எண்ணம் எனது நண்பர்கள் மூலம் எனக்கு கனடாவில் தோன்றியது.
எனது தந்தையின் சஷ்டியப்த பூர்த்தி ஆண்டில் அவர் எழுதிய சமயக் கட்டுரைகளும், அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் மலராக வெளிவந்தது. தன்னைப் பற்றி தானே வாசித்து அகமகிழ்ந்தார் என் தந்தை.
எனது தந்தையின் மரணச் சடங்கில் கலங்குவதில்லை என்று திடமாக இருந்தேன். ஆனால் தாயார் தாலியைக்கழட்டி வைக்கும் சம்பவம் என்னை கலங்க வைத்தது. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் அவர்தானே. அன்று ஐந்து வயதுப் பிள்ளை முதல் 80-85 வயது வரை பலர் எதையோ இழந்த சோகத்தில் கண்கலங்குவது தொடக்கம் கட்டிப்பிடித்து அ(மது புலம்பும்

Page 39
கோலங்களை பார்த்து அதிசயித்தேன், வியந்தேன், எனக்குத் தெரிந்தவைகளைவிட மேலாக ஏதோ ஒரு காந்த சக்தி அவரிடம் இருந்தது. புரியாத புதிர். என்னை நான் என்பதை விட கதிர்காமத்தம்பி வாத்தியாரின் மகன் என்றே பலருக்குத் தெரியும்
“சிவகாமி சமேத நடராஜப் பெருமானை தினமும் இவ்வுலக வீட்டில் வழிபட்டு வந்த தந்தை அவ்வுலக வீட்டில் அரனுடன் சங்கமமாக சென்று விட்டார் என்ற திருப்தியில் இருப்போம்”
க. துரைசிங்கம் குடும்பம்
56
-68

6THidbel (DTDM
எனது மாமாவை எனக்குச் சிறுவயதிலிருந்தே தெரிந்திருந்தாலும், அவர் ஆரம்பித்த திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனை பஜனையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய போதுதான் அவரின் சமயத்தொண்டு, சமூகத் தொண்டு கல்விப்பணி எனக்குப் புரிந்தது.
என்னைச் சமயவாழ்வில் ஈடுபடுத்திய பெருந்தகை எனது மாமாவே. திருவெம்பாவை கூட்டுப் பிரார்த்தனை சபையின் 50வது ஆண்டில் திரு. கதிர்காமத்தம்பி அவர்களைக் கெளரவிக்கும் குழுவில் நானும் இருந்தேன் என்று கூறுவதிற் பெருமைப்படுகிறேன். அதே சபையின் வைரவிழாவில் என்னைக் கெளரவித்தார்கள். எனக்குச் சித்திரத்தில் இருந்த திறமையை வெளிக்கொணந்தவர்களில் மாமா முக்கிய இடத்தை வகிக்கிறார். ஓவியக்கலையில் எனக்கு "ஓவியக்கலை வாரிதி” என்ற பட்டம் கிடைக்கப்பெற்றேன். இப்பொழுது பல அமைப்புக்களில் பல பதவிகளில் உள்ளேன் என்றால் அது அவரின் வழிநடத்தலால் கிடைத்தவை என்று சொல்வது மிகையாகாது.
தனியாக இருந்த போதும், திருமணம் ஆனபின்னரும் எங்கள் குடும்பநலனில் மிகவும் அக்கறை காட்டி வந்தார். இறுதியில் அவர், எனது சகோதரி பரமேஸ்வரியின் நினைவு மலருக்கு எழுதிய கட்டுரை தான் இறுதி நினைவு அஞ்சலி என்று நினைக்கிறேன். பன்னாலையில் அஞ்சலி எழுதயாரிடம் இனிச் செல்வேன்!
எங்கள் குடும்ப குலதெய்வம் சிவபூதவராயர் திருவடி சேர்ந்த மாமாவை எம்முடன் கிராமமும் என்றும் நினைவு கூறும்
சி. சிவபாலசுப்பிரமணியம்
ஓவியக்கலை வாரிதி
-69

Page 40
அன்பு மனையாள் நினைவினிலே!
கைத்தலம் பற்றிய அந்தக் கனிவான நாள்
முதலாய் - கண்ணா! நித்தலும் நின் நிழலினிலே நிம்மதியாய்
வாழ்ந்த வென்னை நித்திலமனைய நிழல்கள் நினக்கு நான்குண்டு இனி மேல் நான் அத்தலம் இருக்கும் அவனோடிணைவேன்.
என்றா சென்றீர்?
எண்ணுகிறேன் எண்ணுகிறேன் எண்ணித்தான்
பார்க்கின்றேன் யான்
மண்ணுலகிலகில் நீர் வாழ்ந்த அக்காலமதில்
மனதார ஒரு நாளும்
பண்புடனும் பாங்குடனும் பரிவாக “நான்
போய் வாரேன்”, என்றியம்பா
கண்ணிமைக்கும் காலம் தன்னும் எனைப் பிரிந்து
நீர் சென்றதில்லை
அன்றந்தக் கயவனவன் காலன் நமைப்
பிரித்த காலை
மன்றாடி “என்னப்பு செய்கிறது” உமக்கென்று
கேட்டும் நீர்
ஒன்றாகிலும் கூறாது சென்றிரே! அதை
நான் நம்புகிறேன்.
“என்றும் நான் உன்னுடன்தான் சூக்குமத்தில்”
1 என்ற உம் சைகையாக
-70

காலையும் மாலையும் கருத்துடன் நாளும்
பிசகாமல் நீர் பாலிற்கண்னல் கலந்ததுபோல் பாடுகையில்
திருமுறைகள் தனை சோலைக்குயில்களெல்லாம் கூனிக்குறுகிடுமே,
லயித்து நானிருப்பேனே! காலை வாரிவிட்டுச் சென்றிட்டீர் அதை அங்குபாட,
யாரைக் கேட்பேனதை இங்குபாட!
-71 -

Page 41
Dðföö6Ír LGOÍDILIGò
இவர் தான் எமது தந்தை என்று கூறிக் கொள்ளும் போது நாம் எவ்வளவு உவகையும் திருப்தியும் அடைந்தோம்! இன்று எங்கள் தந்தை இவர்தான் என்று கூறிக் கொள்ள அந்தத் தெய்வத்தை எங்கள் கண்முன் இல்லாமல் செய்து விட்டதே “எல்லாம் வல்ல தெய்வம்". அவன் குத்துவிளக்கெரிய எண்ணெய் ஊற்றிய தங்களுக்கு தங்கள் விளக்கிற்கு ஊற்றும் எண்ணெய்யை ஊற்றாமல் விட்டுவிட்டானே. தாங்கள் எங்களுடன் இல்லையே என்று ஏம்பலிக்கும் எங்களுக்கு தாலியிழந்து பரிதவிக்கும் தாயைப் பார்க்கையில் எமது சோகம் எல்லையற்று நிற்கின்றதே கண்கண்ட தெய்வமே!
வயது தொண்ணுாறை அடைந்த போதும் தழம்பாமல், எமை வழிநடாத்துவீர்கள், பக்கத்துணையாக இருப்பீர்கள், எமது குடும்பத்தலைவர் என்று கூறிக் கொள்ள, தெய்வமே! நீங்கள் இன்றும் பல ஆண்டுகள் இருப்பீர்கள் என எண்ணியிருந்தோமே! எங்கள் எண்ணங்களைச் சிதறடித்துச் சென்று விட்டீர்களே, உங்கள் தெய்வத்துள். எமக்கு ஆற்றியது போதும், இனி அத்தெய்வத்திற்கு அங்கு சென்று ஆற்ற வேண்டும் என்றா சென்றீர்கள்? எங்களிற்கு எடுத்தியம்ப முடியாதளவிற்கு ஆற்றியுள்ளிர்கள் தான், ஆனால் இந்தப் பேதைகள் மனம், இன்னும் எங்களுடன் இருந்து எமக்கு ஆற்றினால் என்ன வென்று அல்லவா நப்பாசை கொள்கிறது. ஏனெனில் உலகம் போற்றும் உத்தமனாகவும், கற்றுணர்ந்த மகானாகவும் , கணிணியம் படைத்த கனவானாகவும் , கடமையுணர்ச்சியும் எல்லையில்லா பாசமும், முழுமனதும் கொண்ட, எவருக்கும் கிடைக்க முடியாத ஒரு தந்தையாகவும் தாங்கள் இருந்து ஆற்றுவது போல இனி எவராலும் எங்களுக்கு ஆற்ற முடியமா தெய்வமே!
இருந்தும் நாம் ஒரு நம்பிக்கையிற்றான் வாழ்கிறோம். அதாவது, புராணங்களிலும், இதிகாசங்களிலும் மிகப்பழைய கால செய்திகளிலும் நாம் அறிந்ததுண்டு, “காலையில் எழுந்து கடமைகள்
-72

முடித்து, சந்தியா வந்தனம் செய்து, திருமுறைகள் ஓதி தெய்வ சிந்தனையுடன் ,மனைவி, மக்கள், சுற்றம் சூழநின்று அன்போடு பணிவிடை செய்யப் பெற்று, திருவைந்தெழுத்து காதினிலே ஒதப்பெற்று, கண்கண்ட தெய்வத்தின் பதிகம் பாடப் பெற்று, அவனடியிற் சேர்ந்தார்” என்று கூற. அதற்கமைய இம்மியும் பிசகாது அப்படியே அவ்வண்ணமே இன்றைய காலத்தில் இறையடி சேரக் கொடுத்து வைத்துள்ளிர்கள் என்றால், அது தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பயனே.
அவனடியில் இருந்து என்றும் முன்போல் ஏதோ ஒரு வழியில் எம்மை வழிநடாத்துவீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் எங்கள் குடும்ப தெய்வத்தை எனர் றென்றும் நினைவு கூறிக் கொண்டேயிருப்போம்.
பிள்ளைகள்
மருமக்களின் ஆதாங்கம்
காலத்தால் அழியாத உங்கள் வாழ்வு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது என்னவோ! மாமா என்றழைத்திடவும் மகனே! என்றும், மகளே! என்றும் விழித்திடவும் தாங்கள் இங்கு இல்லையே. வஞ்சமிலா நெஞ்சு எமது மாமாவிற்கு என்று கூறிடுவோம். இனி அந்த வஞ்சமில்லா நெஞ்சை எங்குதான் காண்போமோ! எமக்குறுதுணைகளை உருவாக்கித்தந்த தங்களை, அருவுருவனிடம் செல்லவிடாது தங்களுக்கு ஆற்றல் மிக்க வைத்தியங்கள் செய்தும், விரும்பிய ஆனால் விரும்பவிடாத பொருட்களை விருப்போடு உண்ணட்டும். அனுபவிக்கட்டும் என்று கொடுத்தும் பணி விடைகள் பல புரிந்தும் பெருமுயற்சி செய்தும், அந்த அருவுருவன் உங்கள் உருவை எடுத்தே விட்டானே! அவனடியில் பேரின்பப் பேறு பெற்று வாழ்வீர்களாக.
அன்பு மருமக்கள்
-73

Page 42
பேரப்பிள்ளைகளின் புலம்பல்
பாட்டா பாட்டா என்று போட்டி போட்டு அழைத்த எங்களை டாட்டா காட்டி விட்டு போய் விட்டீர்களே பரிதவிக்கவிட்டு பாட்டாவே! பெருநாளோ, திருநாளோ, பிறந்தநாளோ
வந்துவிட்டாலே போதும் பாட்டோடு தங்கள் தங்கத்தமிழால் வாழ்த்துவீர்கள் வாயார
எங்களை
பட்டாசு கொழுத்து பத்திரமாக என்று பரிசில்கள் பிரியமாக
கொடுப்பீர்கள் பட்டாடை வாங்கவென்று பணமும் தந்திடுவீர்கள் பலமடிப்பாக காட்டாமல் வைத்துக் கொள் இந்தா கைவிசேஷம் என்றும்
தருவீர்கள் பாட்டோடுங்களைப் பிரித்துவிட்டார்களே பாட்டுப்பாடிக் கொண்டே! வாட்டமோடிருக்கின்றோம் வந்தெமக்காறுதல் கூறுங்கள்
எங்கள் பாட்டாவே
அன்பு பேரப்பிள் ளைகள்
-74-.

பெறாமக்கள் நினைவினிலே
சொந்தங்கள் என்று தமைச் சூழ்ந்து நிற்கும்
அந்தப் பந்தங்கள் பல நூறு பலவடிவாய்
பரந்திருக்கையிலே முந்துங்கள் முனையுங்கள் என்று சொல்லி
முண்டியடித்தும்பால்
வந்தனங்கள் கூறுகின்றோம் “வளர்ந்த
உங்கள் பெறாமக்கள்”
“வளர்ந்த” உங்கள் எனச் சொன்னால்
உடலால் மட்டுமில்லை அப்பு அளந்த தங்கள் கைகளினால் ஆக்கி விட்டீர்
எமையுயர, அதையே பிறந்த வாய் பிளந்து நிற்க பாரிடையோரவர்
முன்னிலையில் களைந்தெம்மைக் காட்டினிரே தம் மக்கள்
போல் நாமென்று
திரு நாளா! எது வரினும் தீம்பாக
எமை அழைப்பீர் ஒரு நாளும் நாம் இல்லா அந்நாள் அதுவல்ல
என்பீர் வருநாளும் காத்திருப்போம் வாஞ்சையுடன்
உமை திருப்திக்க பெருநாளாம் புதுவருடத்தின் கைவிசேடம்
குறித்தேயாம்
பெற்றபிள்ளை பெறாப்பிள்ளை என்ற பெயர்
நீர் வைக்கவில்லை குற்றமற்ற நெஞ்சத்தாற் குறுகியதும் நாம்
கண்டதில்லை “கற்ற நாம்” எனக் கூறின் அப்பெருமை சாரும்
உமையே தான், திக்கு அற்ற தோணியானோம் திசை காட்ட இன்று
அப்பு இல்லாமல் -75

Page 43
தொண்ணுாறாம் திருநாளதனில் சொந்த மொன்று
கூறியது - அக் கண்ணுறும் இடைக்கிடையே கவலைப்பட
வைத்திட்டாலுமந்த ஒரு நூறைக் காணத்தமக்கென்ன குறை சிதம்பரத்தான்
அருகிருக்கையிலென்று
வல்லூறு கவர்ந்தது போல் கவர்ந்தானே, “அவன்”
அருகில் வைக்கதானோ!
நம்புகிறோம் நம்புகிறோம் நயமாக
நாம் நம்புகிறோம் உம்பிறப்பு இம்மண்ணில் ஒய்ந்திட்டாலும்
அப்பு - உங்கள் அம்பலத்தான் அருகினிலே அருவாகி நின்று
ஞான்றும் நீர் உம்பலத்தால் ஊக்கிவைப்பீரெமை நாளும்
உயர்கலென்று
திருமணமோ சடங்கோ அங்கே
ஓர் வாழ்த்துப்பா கணமேனும் மறந்திடாமல் பிறந்த நாளுக்குமோர்
வாழ்த்துப்பா குணமான பரீட்சை தனில் சித்திக்குமோர் சிறப்புப்பா
தரும் தகைக்கு மணம் வாய்ந்த தம் நினைவாக வடிக்கின்றோம்
நாம் இந்தப்பா.
ஏங்கும் பெறாமக்கள்
-76

மைத்துணியின் கண்ணிர் அஞ்சலி விடியலில் தொலைபேசி அடித்ததும் மனம் அச்சத்தோடு எடுத்தோம் தங்கள் மறைவைக் கேட்டதும் மனம் பதறியது பேச நாவெழவில்லை காலைக்கடன் முடித்து இறைவனைக் கும்பிட்டபலனோ! எம்மையெல்லாம் இங்குவிட்டு தனிமையிற் செல்ல, எப்படி மனந்துணிந்ததோ! பாடசாலைத் தலைவர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்திற்கே ஆணி வேராக, வழி காட்டிய உத்தமனே! தெய்வமே! தாங்கள் காட்டிய அன்பை வரிகளில் எழுதமுடியாது வாயால் கூறவும் முடியாது இவை எண்ணில் அடங்காதவை. வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து இறைவன் வழி பாட்டையும் செய்யத் தவறாது சென்றீர்கள் வீரனைப் போரில் தெரியும் நல்லவரைச் சாவிலே தெரியும் என்பது போல் தங்கள் மரணம் விளக்குகிறது நாம் கதறியழும் குரல் காதில் விழவில்லையோ! போனவர் போனவர்தான் வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இங்கே இடமேது மானிடனே பிறப்பு ஒன்று உண்டேல் இறப்புக்கும் இடமுண்டு இது தான் உலக நியதி உடம்பைப் பேணி வளர்த்தோம் அது இன்று ஒரு பிடி சாம்பல் ஆனால் உயிர் மட்டும் அழியாது எல்லாத் தத்துவங்களையும் அறிந்த உத்தமனே! இவ்வேளையில் தங்கள் பிரிவைத் தாங்கும் சக்தியைத் தந்து தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!
துயருறும் மைத்துணி, திருமதி. தனலட்சுமி வினாயகமூர்த்தி
-77.

Page 44
பெறாமக்கள் புலம்பல்
எங்கள் அருமையும் பெருமையும் கொண்ட குஞ்சியப்புவே! தங்கள் பிரிவைக் கேட்டதும் இதயம் நின்று விடும்போல்
தோன்றியது தந்தையையும், தனயனையும் விட்டுத் தவிக்கும் போது எமக்குக் கைகொடுத்த தெய்வமே! வழிகாட்டிய அன்புத் தலைவனே துாரக்கடல் தாண்டி வாழ்ந்தாலும் இதுவரை உங்களை மறக்கவில்லை இதுவரை மறக்க முடியாது தங்கள் கல்வியின் ஆற்றலும் கடவுள் வழிபாடும் எமக்கு ஒரு வழிகாட்டி மனைவி, மக்களின் கடமைகளை முடித்துக் கொண்டு வெகு துாரம் கேட்டு வெகுதுாரம் சென்று விட்டீரே! தங்கள் துயர் கேட்டு எல்லோருடனும் கதைத்தோம் குஞ்சியப்பாவுடன் மட்டும் கதைக்க முடியவில்லையே! எம் துயரத்தை யார் தான் ஆற்றுவார் தனியே நடமாட முடியாத தாங்கள் தனிவழியே போக எவ்விதம் முடிந்தது தேருக்கு அச்சானிபோல் எல்லோருக்கும் வழி காட்டினீர்கள் இனி தங்கள் திருமுகத்தைக் காணமுடியாத பாவிகளாகி விட்டோம் மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
பெறாமக்கள் : வசந்தகுமாரி சாந்தகுமாரி மோகன மூர்த்தி ரவிச்சந்திரமூர்த்தி முரீராஜமூர்த்தி
-78

உதித்த திங்களில் உதிர்ந்த உத்தமனே எங்கள் குருவே குலவிளக்கே குஞ்சியப்பாவே
இன்று நீங்கள் உலகை விட்டு சென்றாலும் எம் உள்ளத்தை விட்டு நீங்காது உலா வருகின்றீர்கள்.
நான் தந்தையை பார்த்தில்லை அவர் அன்பு சுக துக்கங்கள் யாவும் அனுபவித்தவன் அல்ல. இவை யாவற்றையும் நீங்கள் தந்ததோடு மேலும் எம் குடும்ப நற்கருமங்களில் தந்தையின் இடத்தை நிவர்த்தி செய்து எம் எல்லோரையும் அன்பால் அரவணைத்து வந்தீர்கள்.
நீங்கள் எமக்கு மட்டும் அல்ல ஊருக்கு கதிராகவும் கல்வி செல்வத்தை கொடுப்பதில் காமதேனுவாகவும் என் தந்தைக்கு தம்பியாகவும் இருந்தீர்கள். நீங்கள் ஆலயங்களிலும் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் ஆற்றுகின்ற சொற்பொழிவுகள் எமக்கு யார் ஆற்றுவார்கள்.
நாம் இவ்வாண்டு ஆடிமாதம் வந்து உங்களிடம் ஆசி பெறவென குடும்பத்துடன் குதூகலித்திருந்தோம். ஆடிவரப் பாத்திருந்தேன் அதற்குள் நீங்கள் ஆத்மா ஆகிவிட்டீர்கள் இத் துயர் செய்தி கேட்டு நாம் எல்லாம் துயர் அலையில் துவண்டு போனோம்.
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழியென்ன என ஒருகணம் ஆறுதல் பெற்று உங்கள் ஆத்மா சாந்திக்கு இறையருள் வேண்டி நிற்கிறோம்
பெறாமகன் ராசன் குடும்பம் டென்மார்க்
-79

Page 45
சமுகச் செம்மலுக்கு அஞ்சலி
பன்னாலைச் சமூகத்தை துன்பக்கடலில் விட்டுச்சென்ற அமரர் உயர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்களுக்கு பன்னாலைச் சமூகமாகிய, யா/பன்னாலை சேர்கனகசபை அ.த. பாடசாலை பன்னாலை திருவெம்பாவைச் சபை, பன்னாலை விவசாய சம்மேளனம், பன்னாலை கிராமிய மாதர் அபிவிருத்திச் சங்கம், பன்னாலை மகளிர் சிக்கன கூட்டுறவுச் சங்கம், பன்னாலை கணேசா சனசமூகநிலையம் பன்னாலை சேர்கனகசபை பழைய மாணவர்சங்கம், பன்னாலை சேர் கனகசபை அபிவிருத்திச் சங்கம் ஆகியன ஒன்று சேர்ந்து நடாத்திய கண்ணிர் அஞ்சலிக் கூட்டம்.
மேற்படி அஞ்சலிக்கூட்டம் 3.3.2004 (புதன்கிழமை) மு.ப. 11.00 மணியளவில் யா/பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு. நா. ஆனந்தராசா அவர்கள் தலையிைல் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அமரரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு அமரரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி 2நிமிட மெளனப் பிரார்த்தனை நடைபெற்றது.
பின்பு அஞ்சலி உரைகளை பாடசாலைசார்பாக அதிபர் திரு.நா. ஆனந்த ராசா அவர்களும், திருவெம்பாவை சபை சார்பாக திரு. சி. வேலாயுதம் அவர்களும், விவசாய சம்மேளனம் சார்பாக திரு. நா. கிருபாலசிங்கம் அவர்களும், மாதர் அபிவிருத்திச்சங்கம் சார்பாக திருமதி. க.கதிர்காமத்தம்பி அவர்களும், சிக்கன கூட்டுறவுச்சங்கம் சார்பாக திருமதி. ந. கணபதிப்பிள்ளை அவர்களும், கணேசா சனசமூகநிலையம் சார்பாக திரு. க. விக்னேஸ்வரன் அவர்களும், பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக திருமதி. ச. ஜெயக்குமார் அவர்களும், பாடசாலை அபிவிருத்திசங்கம் சார்பாக திருமதி. இ . ஈஸ்வரானந்தம்
-80

அவர்களும் ஆசிரியர் சார்பாக திரு. க. சிவபாலன் அவர்களும் கண்ணிர்மல்க உரையாற்றினார்கள். எல்லோரது உரைகளும் அமரரின் பிறப்பு, கல்வி, ஆசிரியவன்மை, அதிபர் ஆளுமை, சமூகசேவை, நடத்தைப் பண்பாட்டுக் கல்வி என்பனவற்றை அடி நாதமாகக் கொண்டு உரைக்கப்பட்டன.
ஈற்றில் சபையோரினால் அமரர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்வதென்றும், அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் துன்பங்களையும் தெரிவிப்பதென்றும் ஏக மனதாக பிரேரித்து வழி மொழியப்பட்டது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பாடசாலைச் சமூகம் சார்பாக நா. ஆனந்தராசா(அதிபர்)
-(-520-0-0--
-81 -

Page 46
மக்கள் மனதில் நிறைந்த எங்கள் திரு கா. கதிர்காமத்தம்பி வாத்தியார்
திரு. கா. கதிர்காமத்தம்பி ஆசிரியர் அவர்கள் பன்னாலை சேர் கனகசபை அ. த. க. பாடசாலையில் பல வருடங்கள் கணித ஆசிரியராகவும் பின் அதிபராகவும் கடமை புரிந்து இளைப்பாறி இருந்தாலும் ஆசிரியத்துறையில் தனி முத்திரை பதித்திருந்தமையால் அவரை கதிர்காமத்தம்பி வாத்தியார் என்றே மதிப்புடன் அழைத்து வந்தனர்.
அவர் கல்விச் சேவையுடன் நிற்காது ஊர் மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டிருந்தார். எமது மக்களின் ஆன்ம முன்னேற்றம் கருதி 1939ம் ஆண்டு மார்கழி மாதம் முதல் திருவெம் பாவை தினங்களில் அதிகாலை வீதி வழி கூட்டுப்பிரார்த்தனையை அயல் கிராமங்களான விழிசிட்டி, தையிட்டிப்புலம் இளைஞர்களையும் இணைத்து ஆரம்பித்து திறம்பட நடாத்தி வந்தார். அது இன்றைய கால சூழ்நிலைக் கேற்ப பன்னாலை கிராமத்தடன் கட்டுப்படுத்தி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அன்னார், கிராமத்தில் உள்ள ஆலயங்களில் ஒழுங்காக பூசை வழிபாடுகள் செய்வதுடன் கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு மூலமும் சமய அறிவூட்டும் சொற்பொழிவுகள் மூலமும் சிவ சிந்தனையை கிராம மக்களிடையே வளர்த்து வந்தார்.
எமது கிராம மக்களில் பலர் விவசாயிகள் என்றமையால் அவர்களின் தேவைக்கேற்ப கடன் வசதி செய்து கொடுப்பது அவசியம் என்று கருதி ஐக்கிய நாணய சங்கம் ஒன்றினை ஆரம்பித்து திறம்பட செயற்படுத்தி வந்தார். அதனை அறிந்த பலர் சங்கத்தில் இணைய முற்பட்டனர்.
பாடசாலையில் பெறும் கல்வி மாத்திரம் போதாது என்ற நிலையில் எமது சிறுவர்களினதும் மக்களினதும் அறிவை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற அவா மிகுதியினால் பன்னாலை கணேச சனசமூக நிலையத்தின் வளர்ச்சியில் கணக்காய்வாளராகவும் பின் தலைவராகவும் இறுதியில் போஷகராகவும் தன்னை ஈடுபடுத்தி
-82

ஆரம்ப காலம் முதல் பல வழிகளிலும் செயற்பட்டு வந்தார். அவர் வழிகாட்டலில் நின்று அவரது மகன் திரு. விசாகப்பெருமாள் அவர்களும் பன்னாலை கணேச சனசமூக நிலைய வளர்ச்சியில் முன்னின்று உழைத்து பல அறிவுட்டும் புத்தகங்களை சேகரித்து நிலைய பொக்கிஷமாக வைத்ததை நினைவு கூராமல் இருக்க முடியாது.
ஊர் மக்களிடையே பொதுவாக நிலவுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் அமரர். கா. கதிர்காமத்தம்பி ஆசிரியர் ஓர் நடமாடும் நீதிபதியாக செயற்பட்டு வந்தார். வாத்தியார் அவர்கள் சொல்வதை மக்களும் சரி என்றே ஏற்றுக் கொள்வார்கள்.
அன்னாரின் இறுதி யாத்திரை தினத்தன்று (03-03-2004) காலை 11.00 மணிக்கு பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை மண்டபத்தில் பன்னாலையில் செயற்படுகின்ற பொது அமைப்புகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரங்கல் கூட்டத்தில் கலந்து பொண்ட் மக்களின் எண்ணிக்கையில் இருந்து, அமரர். கா. கதிர்காமத்தம்பி ஆசிரியர் மீது பன்னாலை மக்கள் வைத்திருந்த நிறைந்த அன்பையும் நன்மதிப்பையும் காணக்கூடியதாக இருந்தது.
எமது கிராமத்தின் வளர்ச்சியை இறுதிவரை நினைவில் வைத்து இம் மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்த அமரர்.கா. கதிர்காமத்தம்பி வாத்தியாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவருடைய இழப்பால் துயருற்றிருக்கும் குடும் பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
செ. சிவபாலன் தலைவர் பன்னாலை கணேச சனசமூக நிலையம்
-83

Page 47
எங்கள் அன்பான உபாத்தியாயர்
இயற்கை வளங்களையும், வனப்பையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் பன்னாலைக் கிராமத்தில் தோன்றியவர் அமரர் காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி அவர்கள். பன்னாலை சேர் கனக சபை வித்தியாசாலையில் ஆசிரியராகவும் பின் பல காலம் அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். அவரிடம் கல்வி கற்ற மாணவர்களில் நானும் ஒருவன் அத்துடன் நான் அவரின் அயலவன். நாங்கள் அவரை மதித்து நடப்போம். அவரை எல்லோரும் உபாத்தியாயர் என்றே அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைக்கத் தேவையில்லை. உபாத்தியாயர் என்ற சொல் எங்களைப் பொறுத்தவரையில் அவரையே குறிக்கும், நாங்கள் எது செய்தாலும் அவருடன் கலந்தாலோசித்தே செய்வோம். அவர் மிகவும் தெய்வ பக்தியுள்ளவர். எங்கள் குலதெய்வம் மயிலையம்பதி ஞானவைரவர் ஆலயத்தின் செயற்பாடுகளில் மிகவும் ஆர்வமாகவும் அக்கறையுடனும் செயல்படுவார். வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பஜனைக் கு தவறாது வருகை தந்து கூட்டுப்பிரார்த்தனையிலும் கலந்து கொள்வார். கூட்டுப்பிரார்த்தனை முடிவில் பூசை தொடங்குமுன் சில நிமிஷங்கள் சமயச் சொற்பொழிவாற்றுவார். மிகவும் தெளிவாகவும் கலைநயத்துடனும் அவர் ஆற்றும் சொற்பொழிவை மக்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்பார்கள்.
அவரின் செயற்பாடுகளில் பன்னாலை மக்களால் என்றும் மறக்க முடியாத செயலாக 1939 ம் வருஷம் பன்னாலை திருவெம்பா கூட்டுப்பிரார்த்தனை சபையை ஆரம்பித்து தனது தலைமையில் திருவெம்பாவை பத்து நாட்களும் அதிகாலையில் வீதிப் பஜனையை சிறப்புற நடாத்தினார். அவருக்கு உறுதுணையாக ஆசிரியமணி அமரர் வைத்தியலிங்கம் பொன்னையா அவர்கள் இயங்கினார்.
அன்று எங்கள் உபாத்தியாயரால் ஆரம்பித்து வைத்த பன்னாலை திருவெம்பா கூட்டுப்பிரார்த்தனை சபை இன்றும் 64 வருடங்கள் நிறைவு செய்து மிகவும் சிறப்பான முறையில் இயங்குகிறது. இத் திருவெம்பா சபை இயங்கும் காலம் முழுவதும்
-84

உபாத்தியாயரின் ஞாபகம் மக்களை விட்டகலாது அவர் தன் வாழ் நாளில் மக் களால் விரும் பப் பட்டவராகவும் தெய்வபக்தியுள்ளவராகவும் நல்ல பேச்சாளராகவும் திகழ்ந்தார். அன்னார் சிறந்த நல் ஆசியராகவும் நல்ல அதிபராகவும் செயற்பட்டு தன்னைப் போல் நல் மாணவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கித்தந்துள்ளார். அவர் புகழ் என்றும் நிலைக்கும்
அன்னாரின் ஆன்மா சாந்தி பெற மயிலையம் பதி ஞானவைரவப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!
சி. வேலாயுதம்
தலைவர். பன்னாலை திருவெம்பா கூட்டுப்பிரார்த்தனைச்சபை
-(-5bek-e-0---
-85

Page 48
நா 6)]])II நிலையில்
எங்கள் இதயத் தெய்வத்தின் கீழ்க்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளைங்கள் வைத்து மலர்தூவி மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும் உள்ளுர் வெளிநாடுகளிலிருந்து அனுதாபுச் செய்திகள் அனுப்பி வைத்தவர்களுக்கும் , கணிணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும் உள்ளுர் வளிநாடுகளில் எமதெமது இல்லங்கள் வந்து அனுதாபங்கள், தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், சேமக்கிரியைகளின் போதும் அதைத் தொடர்ந்தும் பல்வேறுவழிகளில் உதவி நல்கியவர்களுக்கும், அந்தியேட்டி சபிண்டிகரணக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும்,சகல கிரியைகளையும் நடாத்தி வைத்த ரப் பெரியோர்களுக்கும், கிரியைகளின் போது’பரமன் புகழ் பாடியவர்களுக்கும் உற்ற ர் உறவினர் நண்பர்கள்
அனைவர்க்கும் எமது ஆற்றொணர்த்துயர மத்தியில் நாவெழர
LLLLS LLLL S S aSS S 0
நிலையில் பணிவுடன் நன்றிநவில்கி ன்றோம். تب
ஓம் சாந்தி!"ஓம் சாந்தி ஓம் சாந்தி!
કું ? ఫ్యే
இங்ங்ணம்
ప్లేస్ట్ g
மனைவி; பிள்ளைகள் , மருமககள
D/4/20 နူရှ်မှူးချူးဟူး தொடர்மாடி, ஹம்டன் லேன்,
7விள்ைளவத்தை.
-86
 
 
 
 
 
 
 
 


Page 49
துரைசிங்கம்
பூமணி
umı6kofu
சதேஷ்
ரவீனா
விசாகப்பெருமாள்
十 நளினா
அம்பிகாதேவி
十 சிவஞானகுரியர் | செளமியா பிரசன்னருபன்
~~~~
十
ஸ்கந்தராசா |
* - ©lıdsjñ856sı
 

வம்சாவழி
* காசிப்பிள்ளை
十 tổ&miri, &#lůıílsů obsm为ຄ ໍາສາບໍ່ມີຕໍ່ຫon*obĩamosisissions,
|? முத்துப்பிள்ளை||||* பொன்னுத்துரை : இராசேந்திரம் அன்னலட்சுமி
十|
சின்னத்தம்பி* சண்முகம்பிள்ளை * விநாயகமூர்த்தி * கதிர்காமத்தம்பி * கிருஷ்ணபிள்ளை ------メøst, * 6.ajo što o பரமேஸ்வரி| சிவபாலசுப்பிரமணியம்* கணேசமூர்த்தி அன்னபூரணிவசந்தகுமாரி சாந்தகுமாரி மோகனமூர்த்தி ரவிச்சந்திரமூர்த்தி சிறீராசமூர்த்தி}
* வைரமுத்து 十 * விசாலாட்சி
வரதலட்சுமி 十十中 சிவகாமிப்பிள்ளை * வயிரவப்பின்ளை கதிர்காமத்தம்பி
சண்முகசுந்தரம்| * கணேசமூர்த்தி| செளபாக்கியலட்சுமி|
செல்வலட்சுமி
十 sk* @JIT&ıdaoû கதிர்காமநாதன் விமலநாதன் கலாநிதி

Page 50


Page 51
PARANLAN ASSOC 403 1/1, Galle Road T.P.: 011-2507932, 25 Web : W

Printed By :
ELAES PRRVATE LAMITED l, Wellawatta, Colombo - 06. 51241 Hotine:O77-737O292. WW.paranan.com