கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வல்லிபுரம் நடராஜா)

Page 1

SSRS
St.
வர்த்தகள் அம்பலாந்தோட்டை
மரர்
* HI-To“ (AVN)
ப்பேறு குறித்த
புமலர் "8。亨_。

Page 2

¬ܐܧܸܔ* ܣܛ
அமரர் திரு. A.V. நடராஜா (A.V.N.)
அவர்களது
வாழ்க்கை வரலாறு
ஈழவள நாட்டின் வடபால் அமைந்த வடமராட்சியிலே கரவெட்டி, கொத்தலாவோடை என்னும் பதியிலே உயர் சைவ வணிக குலத்திலே அம்பலவாணர் வல்லிபுரம் - சந்தனப் பிள்ளை அவர்களின் அருந்தவப் புதல்வனாக 1914 மார்கழி 14ஆம் திகதி அவதரித்தார்.
அன்னார் பாசமிகு சகோதரிகளாம் நாகரத்தினம், இறையடி எய்திய சிவபாக்கியம், புவனேஸ்வரி என்பவரோடு கிருஷ்ண ராஜா என்ற அன்புத் தம்பியையும் அடைந்து மகிழ்ந்தார்.
திரு இதயக் கல்லூரியிலே ஆசிரியர் போற்றும் மாண வனாகத் திகழ்ந்த அவர்தம் வாழ்விலே பேரிடியாக வந்த அன்னையின் மரணத்தால் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்தார். வேதனையாற் துடித்த மகனை விட்டுச் செல்ல மனமின்றித் தன்னுடனே அழைத்துச் சென்ற தந்தையார் தனது வர்த்தகத் தொழிலில் ஈடுபடச் செய்தார். தனது 15ஆவது அகவையில் வர்த்தகத்துறையில் காலடி பதித்தவர் அம்பாந்தோட்டை, அம் பலாந்தோட்டை ஆகிய இடங்களில் 92ஆவது வயது வரை ஓய்வு ஒழிவின்றி உழைத்து வெற்றிகரமான வர்த்தகராய் ஓர் சாதனை படைத்து யுகபுருஷன் ஆனார்.
காலஞ்சென்ற செல்வராஜா, செல்வலிங்கம், தர்மலிங்கம் என்போரைத் தனது மைத்துனர்களாகவும், அருந்தவமலரை
烹广 கொண்டு என்றும் அன்பு பாராட்டினார்.

Page 3
స్టీ اد வதிரியம்பதியிலே உயர் சைவ செட்டிய மரபிலே, சிங்கப் பூரிலும், இலங்கையிலும் அரச பணிபுரிந்த உத்தமராம் அமரர் வேலுப்பிள்ளை கந்தையா, நங்கை நல்லாள் தங்கம்மா என்ப வரின் சிரேஷ்ட புதல்வியான மங்கையர் மாமணியாம் மகேஸ்வரி அம்மாவை 1945ஆம் ஆண்டு கார்த்திகைத் தீப நன்நாளில் கரம் பற்றினார்.
இருவருட இனிய இல்வாழ்வில் இறைவனிடம் வரம் வேண் டிப்பெற்ற முதற் பெண் மகவிற்குத் தன் அன்னையின் பெயரை சந்தனாதேவி எனச் சூட்டி அகமகிழ்ந்தார். பின்னர் யோகேஸ் வரன், மணிஸ்வரன் என்ற இரு ஆண் மக்களைப் பெற்று அகமிக மகிழ்ந்தார்.
செல்வராஜா கனகசபையை தன் அன்பு மருமகனாகவும், உதயராணியை அருமை மருமகளாகவும் ஏற்று ஆனந்தமடைந் தார். பின்னாளில் அர்ச்சனா, நீருஜா, கெளசிகன், ரிஷிராம், சாருஜன், விஸ்வாமி என்ற பேரக்குழந்தைகளைக் கண்டு களிப்புற்று மன நிறைவு எய்தினார். மக்களும், பேரப்பிள்ளை களும் கல்வியிலும், கலைகளிலும் பாண்டித்தியம் பெற வேண்டுமென எண்ணி அவர்களை உயர்வடையச் செய்தார்.
வர்த்தகத் தொழிலை வாழ்வின் நெறியாகக் கொண்டு உழைப்பால் உயர்ந்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாடுகட்கோர் உதார புருஷராக விளங்கி நல் லோர் மனங்களிலெல்லாம் நிலைத்து நிற்கும் நற்பேறு பெற்றார்.
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
* என்ற குறளமுதிற்கிணங்க எந்நேரமும் இன்முகத்துடன், (ତ୍ୱ
察 /ぎ。
{ ፰ ( ̇ ̆ፉጇ
3. XX
•8&
 
 
 
 
 
 

s
நண்பர்களையும், உறவினரையும் உபசரிப்பதில் உயர்ந்து (نی நின்றார். கலவர காலங்களில் கூட அவர் ஆற்றிய தொண்டு கள் போற்றுதற்குரியன. அனைவரும் வியக்கும் வண்ணம் மூவின மக்களின் பெருமதிப்பிற்குமுரியவராயினார்.
தெய்வத் திருப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற பெரு நோக்குடையவர். தென் இலங்கையின் கதிர்காமக்கந்தன் ஆலயம் தொட்டு அம்பாந்தோட்டை முருகன் ஆலயம், கிளி விசிட்டி ஞானவைரவர் ஆலயம் வரை பல்வேறு ஆலயத் திருப்பணிகட்கு தளராது தொண்டு செய்யும் பேறுபெற்றவர். அண்மையில் வதிரி உல்லியன் ஒல்லை அம்பாள் ஆலயத்தின் விநாயகப் பெருமானின் அருளினால் சிறப்புச் சித்திரதேர் ஒன்றை உபயமாக்கி அம்பாளின் கடாட்சத்தைப் பரிபூரண மாகப் பெற்றார்.
என்றும் எளிமையாக வாழவேண்டும் என்று பிறருக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமன்றி எளிமையானதொரு வாழ்க் கையை வாழ்ந்து காட்டியவர் என்ற பெருமைக்கு உரியவர். தாய், தந்தையர் மீது பெருமதிப்பும், உறவினர் மீது அன்பும் கொண்டு வாழ்ந்தார். 92ஆவது வயதிலும் அனைவரது சுக துக்கங்களில் பங்குபற்ற அம்பாந்தோட்டையிலிருந்து வந்து செல்லும் அளவிற்கு மனோவலிமை பெற்றிருந்தார். இறுதி வரை தெளிந்த சிந்தையுடன் செயற்பட்ட அன்பு உள்ளம் என்றும், எங்களை விட்டு நீங்காது எங்கள் உள்ளங்களிலும்,
உணர்வுகளிலும் என்றும் வாழும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
冷

Page 4
2.
சிவமயம்
தோத்திரப்பாடல்கள்
விநாயகர் துதி
திருச்சிற்றம்பலம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம்
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
 
 
 
 
 

திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஅபூ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா வொன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்குந் தேனே! அளிவளர் உள்ளது ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே யிடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

Page 5
திருப்புராணம் இறவாத அன்பு வேண்டிப்
பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே
லுன்னை யென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ச்சி பாடி அறவாநி ஆடும் போதும னடியின் கீழ்
இருக்க வென்றார்.
திருப்புகழ் ஏறுமயில் ஏறி விளையாடு முகமொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசு முகமொன்றே கூறுமடியார்கள் வினை தீர்த்தமுகமொன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் மொன்றே மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணப்புணர வந்த முகமொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமானே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன் முறை யரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான் மறையறங்களோங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவறீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்.
 
 
 
 
 

பிள்ளைகள் தம் தந்தைக்கு நற்கதி அருளுமாறு )ܝ݇ܘܵܡܶ
அவரின் வழிபடு தெய்வங்களை வேண்டியவை
உல்லியன் ஒல்லை அம்மன்
சின்னஞ் சிறுவயதாம் பதினைந் தகவையில்
சிங்களத்தென் இலங்கைசென்று பொருள் தேடி தன்பெற்றோர் சுற்றம்மற்றோர் வாழ வைத்து
தந்தையாய் எமைப்பெற்ற தன்னல மில்லா பொன்மனத்து தியாகிநம் தெய்வம் உன்னை
பொழுதெல்லாம் சிந்தைவைத்து வாழ்ந்த பக்தன் இன்றிந்த உலகைநீத்து வருகின்ற அவரை
ஏற்றருள்செய் தாளுமம்மா உல்லியன் ஒல்லையனே.
கதிர்காமக்கந்தன்
அருள்மணக்கும் மாணிக்க கங்கை ஒரம்
அமர்ந்தருள்செய் கதிர்காமத் தையா உந்தன் கருணையினால் இளமைமுதல் இன்று மட்டும் கனதனமும் நல்வாழ்வும் பெற்ற தந்தை ஒருகணமும் உன்நாமம் மறந்தி டாத
உத்தமர் தந்தையின்று உலகை நீத்துன் திருவடியே சதமென்று வருமவரை ஏற்று
திவ்யகரம் நீட்டியருள் பாலிப் பாயே.
வல்லிபுர ஆழ்வார்
அல்லற்பட் டாற்றாது அழுத மக்கள்
ஆயிரம் ஆயிரம் உன்கோயில் வந்து தொல்லைவினை தீர்த்தருள்செய் கோவிந்தா என்று
தொழுதழவே வரதகரம் நீட்டி அருள்செய்

Page 6
வல்லிபுரத் தாழ்வாரே வாழ்க்கை முற்றும்
வந்துந்தன் கோயிலிலே அழுத தந்தை
பொல்லாவில் வுலகைவிட்டு பொன்னடி யேயினிப்
பொருளென்று வருமவரை ஏற்ற ருளுமே.
சந்நிதி முருகன்
ஆறுபடை வீடுகட்கு ஈழத்து மக்கள்
அனைவருமே வரவொண்ணா தென்றோ தொண்டை ஆறுபாய் கரைதனிலே கோயில்கொண் டடியார்க்(கு)
ஆறுதலைத் தருகின்ற ஆறுமுகத் தையா வீறுடைய வினைதீர்க்கும் விரதங்கள் அநுட்டித்து
வேலவனே உன்கருணை வேண்டி நின்ற மாறுபடா பக்திகொண்ட தந்தை இன்றுன்
மலரடிக்கே வருகின்றார் ஏற்ற ருளுமே.
கிளிவிசிட்டி ஞானவைரவர்
சூலாயுதந் தாங்கி கிளிவி சிட்டி
சூழலிலே கோயில்கொண்ட ஞான வைரவரே காலாதி காலமாய் துஷ்ட நிக்கிரக
சிஷ்டபரி பாலனம் புரியும் தேவே பாலாபிஷேகம் வடைமோ தகம் பொங்கல் பழமிளநீர் படைத்துமே தீபமிட்டு ஆலாபனஞ் செய்ததந்தை உலகை விட்டு
இணையடிக்கே வருமவரை ஆதரித் தருள்வாயே.
婆
10
 
 
 

அம்பாந்தோட்டை ஆறுமுகன்
ஆண்டாண்டு காலமாய் அம்பாந்தோட்டை
ஆலயத் தேயமர்ந்து ஆதரவற்றோர்க்கு வேண்டும் வரமீயும் வேலவனே முருகா
வேளை தவறாதுன் கோயில் வந்து மீண்டுமோர் தாய்வயிற்றில் பிறவா வரம்கேட்ட
மெய்யடியான் எம்தந்தை இன்று உந்தன் காண்டற்கரிய கழலிணைக்கு வருமவரை
கருணை மழைபொழிந்து காத்தருளு மையா.
இரங்கற்பாக்கள்
வாணிபத்தால் உயர்ந்தமகன் வதிரி மண்ணில்
வளமான வாழ்வுகண்டான் சுற்றம் தன்னை தேனிருக்கும் மொழியாலே அணைத்து வாழ்ந்தோன்
தேடரிய செல்வமென மக்கள் பெற்றோன் வானிருந்து வந்தபெரும் அழைப்பை ஏற்று
வானவர்க்கே விருந்தானான் நடராஜ அண்ணல் கூனிருக்கும் அறிவுடைய மக்கள் எல்லாம்
குளறியழு தேஎமனை ஏசி னாரே.
வண்ணமகள் சந்தான தேவி மற்றும்
வாண்மைமிகு ஆண்மக்கள் யோகேஸ் மணிஸ் கண்ணனைய மருமக்கள் பேரர் பேர்த்தியர்
காதல்மிகு சகோதர சகோ தரிகள் அண்ணல்நட ராஜாவின் ஆவி பிரிவேளை
அலறிமண் வீழ்ந்தழுத ஒல மந்த விண்ணினையும் முட்டிடவே ஊரார் எல்லாம்
வேதனையால் கண்கலங்கி அழுதார் அந்தோ.
11

Page 7
கந்தசஷ்டி கவசம்
காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பாலித்துக் கதித்தோங்கும் நிஷடையுங் கை கூடும் நிமலர் அருள்கந்தர் சஷடி கவசம் தனை.
V குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
நிலைமண்டல ஆசிரியப்பா
நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷடருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை ë5Lö UITL&5 &60örö160ön uuITL மையல் நடஞ்செயும் மயில்வா கனனார் கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருக வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக
A9 12
 
 
 
 
 

κ
ல் சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக
ரவன பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹன வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிர்ஐயுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு தின்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து, நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணை முழந் தாளும்
திருவடி யதனில் சிலம் பொலி முழங்க
13

Page 8
செககண செககன செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ffffffffff fffffff fffffffff ffffff (6(6(6G6 (6(6(606 (6(6(6(6 (6(606 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை ஆளும் ஏரகச் செல்வ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோ தனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்றனை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
14
*
 
 
 

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவேல் காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பனைத்தொடைஇரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபடப் பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷடிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
15

Page 9
--- به «میسر
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனகபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும் பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும், நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப்பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கைகால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல துவாக
16
 
 
 
 

விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்வி பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஒட நீ எனக்கு அருள்வாய் ஈர்ஏழு உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா(க) மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரஹண பவனே! சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே! பவம்ஒளி பவனே அரிதிரு முருகா! அமராபதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா! குகனே! கதிர் வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா! கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே! சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன்குடி வாழ் அழகிய வேலா செந்தின்மாமலை யுறும் செங்கல்வ ராயா
17

Page 10
சமராபுரிவாழ் சண்முகத்தரசே ଔର୍ତ୍ତ காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யான் னுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாசவினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க வென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்ததையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரியம வித்து மைந்தனென் மீதுன் மனம்மகிழ்ந் தருளித் தஞ்சம்மென்றடியார் தழைத்திடவருள்செய் கந்தர்சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந்துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர்சஷ்டி கவசமிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் (ତ୍ୱ
ές
^.م&x
$'} انیس&;%8
18
 
 
 

ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு ஒதியே ஜெபித்து உகந்து நீறணிய அஷடதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்த்தங் கருளுவர் மாற்றவரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாவாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்காரத் தடி அறிந்தென துள்ளம் அஷட லட்சுமிகளில் வீர லட்சுமிக்கு விருந்து ணவாகச் சூரபத்மாவைத் துணித்த கை யதனால் இருபத்தேழ்வர்க்குவந் தமுதளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட்கொள்ள என்றனதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகாபோற்றி இடும்பாயுதனே இடும்பாபோற்றி கடம்பாபோற்றி கந்தாபோற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் ரரசே மயில்நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
19

Page 11
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள் மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கிதம்பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொலோ
சகமேழு மளித்து உண்டா னுறங்க ஒழித்தான்
பித்தாகவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகலகலா வல்லியே.
20
 
 

நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.
அளிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் களிக்கும் படிகென்று கூடுங்கொ
லோவுளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகலகலா வல்லியே.
தூக்கும் பனுவற் றுரைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று காக்கும் கருணைக்கடலே
சகலகலா வல்லியே.
21

Page 12
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத்துவசமமுயர்த்தோன் செந்
நாவுமகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத்திருந்தாய்
சகலகலா வல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலுங் வெங்காலுமன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந்தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப்பேடே
சகலகலா வல்லியே.
22
 
 
 

சொல்விற் பனமு மவ தான
முங்கவி சொல்ல வல்ல நல்வித்தை யுந்தந் தடிமை கொள்
வாய்நளினாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதையாமை நல்குங் கல்விப்பெருஞ் செல்வப் பேறே சகலகலா வல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத்தாளே
சகலகலா வல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச் செய்
வாய் படைப்போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி யுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகலகலா வல்லியே.
23

Page 13
அன்புடையார் ஆற்றாது அழுத கண்ணிர் மகள் சந்தானதேவி
ஆசைக்கோர் மகளென்று என்னைப் பெற்று
அன்புத்தேன் மாரியிலே குளிக்க வைத்து பாசமுடன் வளர்த்தென்னைப் படிக்க வைத்து பட்டதா ரியாய்ஆக்கி பாரோர் போற்ற நேசமிகு கணவன்கைப் பிடிக்க வைத்து
நேரிழையாள் ஒருமகளை பேர்த்தியாய் கண்டாய் வாசமலர் என்வாழ்வின் துன்பங் கண்டு
வருத்தமுற்று இறந்தனையோ அறியே னப்பா.
மகன் யோகேஸ்வரன்
பிறந்தமண்ணில் எனக்கேற்ற தொழிலையே விட்டு
பிறர்காணாத தேசம்தேடி வாழச் சென்றேன் மறந்தும் பிறர்கேடு எண்ணா வுன்வாழ்வு
மலர்ந்தொளிரக் கேட்டுமனம் மகிழ்ந்தே னப்பா அறந்தழுவி வாழ்ந்தவுன் ஆருயிர்க்கு
ஆபத்து வருமென்று கனவிலுங் காணேன் இறந்துவிட்டாய் என்னப்பா என்ற செய்தி
இதயத்தே ஈட்டியெனப் பாய்ந்ததுவே.
மகன் மணிஸ்வரன்
கல்வியிலே நானுயர வேண்டு மென்று
கனவுகண்ட அப்பாவுன் கனவை நனவாக்கி எல்லோரும் அடையமுடி யாதசட்டத்
தரணியாய் நான்சித்தி யடையக் கண்டு பொல்லாத தொழிலென்று அதைவி லக்கி
போயெங்கள் வர்த்தகத்தை செய்யெனக் கூறி நல்லோர்வாழ் ஊருக்கு அனுப்பி விட்டு
நடந்துவிட்டாய் கையிலாயம் நியாயமோ அப்பா?
24
 
 
 
 

சகோதர சகோதரிகள்
அண்ணன் அருகிருக்க அஞ்சுவ தொன்றில்லை
இன்னல் நமக்கென்றால் எங்கிருந் தோகுதிப்பாய்
எண்ணமுடி யாவுதவி எம்மவர்க்குச் செய்தவனே
எங்குநீ சென்றனையோ ஏங்கித் தவிக்கின்றோம்
வண்ணச் சிரிப்பொன்றே எம்துயரைத் தீர்க்குமையா
வாய்த்த மருந்தென்று வாழ்ந்தவெமை விட்டுவிட்டு
கண்ணுக்கு எட்டாத ககனத்துள் மறைந்தாயே
காலமெல்லாம் இத்துயரால் கலங்கி மடியவிட்டாய்,
மருமகள்
மாமாவின் குரல்கேட்டால் மாங்குயிலாய்ப் பாடிடுவோம்
மல்லிகையில் வண்டுபோல் சொற்றேன் குடித்திடுவோம்
தேமாங் கனிநிகர்த்த தேசவுலாக் கேட்டிடுவோம்
தெள்ளமுதத் தமிழ்மொழியின் தித்திப்பை ரசித்திடுவோம்
ஏமாந்து நாம்கலங்க எம்மைவிட்டு மறைந்துவிட்டார்
இனியவரைக் காண்கின்ற இன்பநாள் வருவதில்லை
பாமாலை பாடியவர் பண்புகளை நினைவிருத்தி
பரமன் அருள்வேண்டி பராவி அமைந்திடுவோம்.
25

Page 14
மருமகள் உதயஇராணியின் இதயக் குமுறல்
உதயப் பொழுதில் உணர்வளித்து உருப்பெறு உதய சூரியன் இதயக்கமலம் மலர்ந்திடவே ~ அன்பு
இறைக்கை தனில் வாரி அணைத்திட்டீர் கதை ஒன்றில் வரும் காவிய பாத்திரம்
சீதைக்கோர் தசரதன் சீர்மலி பாஞ்சாலிக் கோர் குந்தி அதையெலாம் நினைவூட்டி அன்பு காட்டி நின்றீர்
அமிர்தம் மிகு தேனாய் வந்தீர் என்றீர்
செதில் களன்று சிறகு முளைத்து பரிதவித்து
செறிவர்ண பூவானம் பறந்த எண்ணங்கள் உதிர் முத்துக்கு உரமூட்டி நீரூற்றி
ஒப்பாரியோடு கூச்சலிட்டு கதிர் அறுக்க காத்திருந்த நோய் - ஆயுள்
கணக்கினை கணக்கிட்டு விரித்த பாய் தடித்தேன் நடுதாண் ஆனேன் விதித்தான்
வினையறுத்தான் வெல்லுமோ இறை அள்ளுவதை
கோதள மாதளை குலைத்தினை
குட்டானில் அடைக்கல மாணத போல் மாத நான் தீதுள பணத்தக்கோ
மந்திலுார் வெண்ணையாம் என் இறைத்துக்கோ ஏதும் கேட்டவில்லை ஏக்கமெலாம்
எம் மாமா ஆத்மா இறை அச்சம் போக்கிடவே போதும் போதும் இறைவா இந்த
புண்ணிய ஜென்மம் புகலிடத்துக்கு நீ தணை.
26
 
 
 

பேரர் பேர்த்தியர்
பெற்றவரும் காட்டாத பேரன்பைக் கொட்டி
பெருமையுடன் அணைத்துமுத்தம் தந்த தாத்தா நற்றவமே நாம்பெற்ற கல்வி பயன்கள்
நீதந்த ஊக்கமின்றி வேறில்லை ஐயா பற்றறுத்துப் போகமனம் எப்படித்தான் வந்ததுவோ
பாவியர்நாம் பதைபதைத்து அழுது துடிகின்றோம் குற்றமென்ன செய்தோம் கூறாயோ தாத்தா
கனவிலேனும் எமக்கதனை சொல்லிவிடு தாத்தா.
தேற்றம்
எதைநீ கொண்டுவந்தாய் இழப்ப தற்கு எதைநீ இழந்தாய் அழுவ தற்கு இதையே பூரீபரந்தாமன் பார்த்த னுக்கு
எடுத்துரைத்தார் அவன்தடு மாற்றம்திர கதையல்ல இதுவுண்மை நடராஜ அண்ணல்
கடவுள்சொத்து உடையவனே எடுத்துக் கொண்டான் பதைபதைத்து அழவேண்டாம் எமக்கும் அப்படியே
படிமீது கடமை செய்வோம் அந்நாள் வரைக்கும்.
ஆக்கம் : யதார்த்தன்
4
27

Page 15
நன்றி நவிலல்
எங்கள் அன்புத் தெய்வம் அமரர் திரு. A.V. நடராஜா அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்வுடன் நேரில் வந்து ஆறுதல் கூறி பல உதவிகளை முன்நின்று செய்தவர்களுக்கும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து தபால், தொலைத்தொடர்கள் மூலம் தமது தகவல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்த எம் சுற்றத்தோர், நண்பர்கள் அனைவருக்கும், இறுதி கிரியைகளில் கலந்து ஆத்ம அஞ்சலியை செலுத்திய எம் உணர்வின் உறவுகளுக்கும், மலர் வளையங்கள் தந்து அன்னாரின் திருவுடலுக்கு மேன்மை செய்த அன்பு உள்ளங்கள் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோருக்கும், இரங்கற்பாக்களை அன்புடன் யாத்தளித்த ஆசான் ቲs யதார்த்தனுக்கும், அந்தியேட்டி, சபிண்டீகரண நிகழ்ச்சிகளின் போதும் கலந்து கொண்டவர்களுக்கும், உதவிகள் பல புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் இதயபூர்வமான நன்றிகளை சிரம் தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இங்ாவனம் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
签
 
 
 
 


Page 16
எது நடக்க இருக்கிறதோ, அ உன்னுடையது எதை இழந்த
எதை நீ கொண்டு வந்தா எதை நீ படைத்திருக்கிறா எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
எதை கொடுந்தாயோ, அது ! எது இன்று உன்னுடையதோ, அது
மற்றொருநாள் அது வே
"இதுவே
எனது படைப்பில்
- பகவான்
Print by New Jet Prin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்றாகவே நடக்கிறது. துவும் நன்றாகவே நடக்கும். ாய் எதற்காக நீ அழுகிறாய்? ம், அதை நீ இழப்பதற்கு ம், அது வீணாகுவதற்கு அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
ங்கேயே கொடுக்கப்பட்டது. நாளை மற்றொருவருடையதாகிறது. றொருவருடையதாகும்.
உலக நியதியும்
சாராம்சமுமாகும்"
கிருஷ்ணர் -
callenbossessa