கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பின்னவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல்

Page 1
FUIT. G.
를 होता
eerscrevisions oppemeg a
GOESOTEL
 
 

நிதி
லை இலக்கியப் பேரவை
ய்வு வட்ட

Page 2


Page 3

பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்
கலாநிதி சபா.ஜெயராசா
வெளியீடு இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை 十 கைலாசபதி இலக்கிய வட்டம் 2007
கலாநிதி சபா.ஜெயராசா

Page 4
நூல்
ஆசிரியர் வெளியீடு
வெளியீட்டுத் திகதி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
: பின்னவீனத்துவத்தை
விளங்கிக் கொள்ளல்
: சபா. ஜெயராசா
: முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
11, இராஜசிங்க வீதி, கொழும்பு -06.
: lOO2.2OO6
lOO
: டெக்னோ பிறின்டர்ஸ்
55, Dr. E.A. (5GBy Lone libóOgb, கொழும்பு - 6. தொ.பே : O777-3O192O
: ᏫᏏl IIᎢ l25.OO
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

சமர்ப்பணம்
எல்லை நிலையில் உள்ள இளம் வாசகர்களுக்கு.
கலாநிதி சபா.ஜெயராசா

Page 5
-4-
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்.

முன்னுரை
பின்னவீனத்துவத்தைப் பல பரிமாணங்களினூடாக நோக்கல் இந்நூலாக்கத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தேவையை நண்பர்கள் நீர்வை பொன்னையன், தெ.மதுசூதனன், த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தியதுடன், பல மூலநூல்களையும் வாசிப்பதற்குத் தந்து உற்சாகமளித்தனர்.
பின்னவீனத்துவத்தை அறிவு நேர்மையுடன் நோக்க வேண்டியுள்ளது. சுயவிருப்பின் காரணமாக அதனை மிகைப்படுத்திக் கூறுதலோ அல்லது தாழ்த்தி மதிப்பீடு செய்தலோ பொருத்தமற்றது.
பல புதிய சொற்களஞ்சியங்களைப் பின்னவீனத்துவம் உலகின் அறிவுத் தேட்டத்துக்குத் தந்துள்ளது அவை தமிழ் மொழிக்கும் வளம் தந்துள்ளன. சமகாலக் கருத்து வினைப்பாடுகளை மேலெழச் செய்வதில் பின்னவீனத்துவத்தின் பங்கு நிதானத்துடன் நோக்குதற்குரியது.
1960 ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஐரோப்பாவின் அறிகை விசையாக மேலெழத் தொடங்கிய பின்னவீனத்துவச் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தமிழில் வேகமாகப் பரவத் தொடங்கின. ஒவ்வொருவரும் தத்தமது அகவயப் பாங்கோடு பின்னவீனத்துவத்தை அணுகுதல் தமிழிற் பழக்கமான பாடமாகியும் விட்டது.
சபா. ஜெயராசா
கலாநிதி சபா.ஜெயராசா -5-

Page 6
-6-
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவம் - தோற்றம், வளர்ச்சி மற்றும் தேக்கம்
ருபதாம் நூற்றாண்டின் பிற்கூற்றிலே அறிவுத்துறைகளில் அதிகமாக எடுத்தாளப்படும் எண்ணக்கருவாகப் பின்னவீனத்துவம் விளங்கு" கின்றது. சமகால நுண்மதி இயக்கத்தின் ஓர் அறிகை விசையாக இது அமைந்துள்ளது. அரசியல், பொருளியல், வரலாறு தொடர்பியல், கலைஇலக்கியங்கள், கல்வியியல், மெய்யியல், அறவியல், இறையியல், உளவியல் போன்ற பரந்துபட்டதுறைகளில் ஊடுருவிய அறிகை விசையாக அமையும் பின்னவீனத்துவம் மார்க்சிய வெளிச்சத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய அறிபொருளாகவும் அமைந்துள்ளது.
பின்னவீனத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கு முன்னதாக நவீனம் (Modern) நவீனத்துவம் (Modernity) முதலாம் எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ளல் வேண்டும். மரபு வழிகளில் இருந்து சமகாலத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு "நவீனம்" என்ற எணர்ணக்கரு பயன்படுத்தப்படுகின்றது. புதிய கட்டடக்கலை, புதிய வடிவமைப்பு, புதியபாதை, புதிய அணுகுமுறை முதலியவை மரபு நிலைகளில் இருந்து வேறுபடுவதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் சமகால நுண்மதிக் கருத்து வினைப்பாட்டில் “நவீனத்துவம்” என்பதற்குச் சிறப்பான பொருள் உண்டு. கடந்த பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவிலும் ஐ.அமெரிக்காவிலும் முகிழ்த்தெழுந்த புதிய நாகரிகத்தை இந்த எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. மனித வரலாற்றில் இது தனித்துவமானதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (நவீனத்துவத்தின் மேலெழுந்த வளர்ச்சி "நவ நவீனத்துவம்” (Neomodernism) ஆகின்றது)
மனிதரின் பொருணி மிய வாழ்க்கையை ஒரு விதத்தில் மாற்றமடையச் செய்த புதிய உற்பத்தி முறைமை, புதிய தொழில்நுட்பம், இயற்கையை ஆழ அறிந்து விளங்கிக் கொள்வதற்கான புதிய கல்விச் செயற்பாடுகள் முதலியவற்றின் தொகுப்பால் எழுந்த வாழ்க்கை
sam Fur.Gagupts ir -7-

Page 7
வினைப்பாட்டை நவீனத்துவம் குறிப்பிடுகின்றது. "நவீனத்துவம்" 67 6ðf Lugh/ GLO LÁó LV/76) (Development) 67 6ðfp @LV/7Ø56ð677 u/Ló (3F LLg. நிற்கின்றது. நவீனத்துவம் என்பது முதலாளியம், தாராண்மைச் சனநாயகம், தனிமனிதத்துவம், பகுத்தறிவுவாதம், மானிடவாதம், முதலியவற்றிலிருந்து திரட்டிய பண்புக் கூறுகளை உள்ளடக்கியதாக மேலைப்புல நாகரிகத்தில் முகிழ்த்தெழுந்துள்ளது.
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை நவீனத்துவம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த திணிப்பு நடவடிக்கையாக இருக்கின்றதேயன்றி அவர்களின் ஆழ்ந்த மரபுகளை அடியோடு மாற்றியமைக்கும் வகையில் அமையவில்லை.
நவீனத்துவம் என்பது வர்க்கநிலை ஆதிக்கத்தை மேலும் வலுவூட்டி வருகின்றது. தொழிலாளர்கள், உழைப்பு, வீடு, நுகர்ச்சி, கல்வி, பொழுதுபோக்கு தொடர்பாடல் என்ற அனைத்து நிலைகளிலும் சாமானியர்கள் கூடிய பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன தொழில் நுட்பச் சாதனங்கள் இதற்கு அனுசரணையாக அமைந்து வருகின்றன. இந்நிலையிலே உழைப்பவர்கள் முன்னரிலும் கூடுதலான தனிமைப்பாட்டுக்கு அல்லது அந்நியமாதலுக்குத் தள்ளப்படுகின்றனர். நவீனத்துவச் செயற்பாடுகள் கூடிய நிலையில் சூழலை மாசுபடுத்தி வருவதனால், தொழிலாளர்கள் முன் அனுபவித்திராத பல உடல் நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
மேலைநாடுகளின் மக்கள் வாழ்க்கையில் நவீனத்துவம் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும், இசை,நடனம், ஒவியம், சிற்பம், இலக்கியம் முதலாம் துறைகளில் தீவிர பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதலளித்தன. மொனெத்தின் மனப்பதிவுவாத ஒவியங்கள், பொல்லொக்கின் அருவ மனப்பதிவு வாத ஒவியங்கள், இசையில் அல்பன் பேர்க் உருவாக்கிய மாற்றுத் தொனிப்பியம், (Atonality) இலக்கியத்தில் எனெஸ்ற் கெமிங்வே அறிமுகப்படுத்திய பொருளுக்குரிய இலட்சியப் பரிசோதனை, கட்டடக் கலையில் கோபுசியர் உருவாக்கிய மாற்றுப் பரிசோதனை முதலிய பல எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடலாம். மனித இருப்பு உருவாக்கிய புதிய தேடல்களை இவை முன்னெடுத்தன. ஆனால் இந்தப் புதிய கலையாக்கங்கள் நவீனத்துக்கு அங்கீகாரம் வழங்கின என்று கூற முடியாது. அதே வேளை இந்தப் புதிய கலை வடிவங்கள் தமக்கு எதிராகத் தாமே புரட்சி செய்வதாகவும் அமைந்தன.
-8- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவத்தின் வரலாறு
ய்யியலாளர் நித்சேயின் (1844-1900) நம்பிக்கை இழப்பு
அணுகுமுறைகளின் இருப்பிலிருந்து பின்னவீனத்துவம் வேர்கொள்கின்றது என்று கூற முடியும். அறம், ஒழுக்கம், என்ற தலைப்புக்களையும் வன்முறைகளையும் வெளிப்படுத்திய நித்சே இருப்பின் அவலங்களைத் தெரியப்படுத்தினார். இருபதாம் நூற்றாண்டின் மேலைப்புலப் பண்பாட்டின் அவலங்களை நுணுகிநோக்கிய ஜேர்மனிய மெய்யியலாளர் றுதொவ் பன்விட்சு (Rudolf Pannwitz) இன்மைவாதத்தை (Nihilism) மேலெழச் செய்தார்.
நவீனத்திலிருந்து பின்னைய வளர்ச்சியை வேறுபடுத்தும் எண்ணக்கருவின் தேவை இவரால் 1917இல் வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறாக பின்னவீனத்துவம் என்ற எண்ணக்கரு படிப்படியாக வளர்க்கப்படலாயிற்று.
இவரை தொடர்ந்து 1934 ஆம் ஆண்டில் இஸ்பானிய இலக்கியத் திறனாய்வாளர் பிறெட்றிக்கோ டி ஒனிஸ் இத்தகைய ஒர் எண்ணக்கருவின் தேவையைப் புலப்படுத்தினார். ஆயினும் இந்த எண்ணக்கரு வேறுபட்ட பல வழிகளிலே முன்னெடுக்கப்பட்டு வளர்க்கப்பட லாயிற்று. இங்கிலாந்தின் இறையியலாளராகிய பேர்னாட் இடிங்ஸ்பெல் என்பார் 1939 ஆம் ஆண்டில் இப்புதிய எண்ணக்கருவை இறையியல் நோக்கில் முன்னெடுத்தார். நவீனத்துவத்தின் இறைசாராப் போக்கின் தோல்வியை எடுத்துரைத்த இவர் மீண்டும் சமயத்துக்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
இதே காலப்பகுதியில் தமிழகத்தில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார் புத்தம் புதிய கலைகளுக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும் சமயத்துக்குமிடையே இணக்கப்பாட்டினைத் தரிசித்தார். ஆனால் மகாத்மா காந்தி மற்றும் இரவீந்திரநாத் தாகூர் முதலியோர் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் அவலங்களாகத் தரிசித்தனர்.
கலாநிதி சபா.ஜெயராசா -9-

Page 8
முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து மேலும் வளர்ச்சியுறத் தொடங்கிய முதலாளித்துவத்தை இனங்காட்டுவதற்கும் திறனாய்வு செய்வதற்கும் அடிப்படையாக விளங்கிய மார்க்சிய அணுகுமுறைகளை இலக்கியத் திறனாய்வாளர்கள் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அழகியல் சார்ந்த நவீனத்துவம் இவர்களது தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கட்டடக்கலையிற் பழைமையை முற்றிலும் நிராகரிக்கும் புதுமைப் பகுத்தறிவு வாதம் மறுதலிப்புக்கும் தீவிர திறனாய்வுக்கும் உட்படுத்தப்படலாயிற்று.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தீவிர வளர்ச்சி கொள்ளத் தொடங்கிய கைத்தொழிற் கோலங்களை விளக்குவதற்கு "பின்கைத்625/7gélaibo/glib” (Post Industrialism) 676oigp 625/7L fi 625/7gélaig/L u foħhu/- லிலும் அறிவியலிலும் பயன்படுத்தப்படலாயிற்று. இதே வேளை சமூகவியலில் நவீனத்தவத்துக்குப் பின்னர் தோன்றிய சமூகத் தோற்றப்பாடுகளை விளக்குவதற்கு புதிய எண்ணக்கருவின் தேவை மேலெழுந்தது. இவ்வாறாக பின்னவீனத்துவம் என்ற எண்ணக்கரு பல நிலைகளிலே பல அறிவுப் புலங்களிலே பயன்படுத்தப்படலாயிற்று. ஆனால் பன்மைத்துவம் (Pluralism) என்பதை அங்கீகரித்தல் பின்னவீனத்தின்மையப் பொருளாயிற்று.
1960 ஆண்டுக்குப் பின்னர் பிரான்சின் சிந்தனை மரபுகளில் பல அதிர்வுகள் ஏற்படத் தொடங்கின. புதிய சிந்தனை அதிர்வுகளுக்கு உட்பட்ட புலமையாளர்கள் பிரான்சிய அரசியல் நிறுவனங்களையும் புலமைமரபுகளையும் திறனாய்வுக்கு உட்படுத்தினர். மார்க்சியம், இருப்பியம், உளப்பகுப்பு வாதம் முதலியவை அவர்களின் திறனாய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. அதேவேளை நடத்தை வாதம் பிரான்சிய இயற்பணி புவாதம் முதலியனவும் அவர்களின் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. மாமூலான பெருங்கோட்பாடுகள் அவர்களின் திறனாய்வு வீச்சுக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த நுண்மதியாளர் வரிசையில் தெலியுசு, (Deleuze) தெரிதா (Derrida) பூக்கோ (Focault) லொயித்தாத் (Loytard) முதலியோர் சிறப்பிடம் பெறுகின்றனர்.
நவீனத்துவம் ஏற்படுத்திய அதிர்வுகள் அமெரிக்க சிந்தனையாளர்களிடத்தும் தாக்கங்களை ஏற்படுத்தின. "பெரும் அமெரிக்க நகரின் gpillb 6 in p5605ulb" (The Death and Life of Great American Cities) என்ற நூலை எழுதிய ஜேன்ஜாக் கொப்ஸ் எதிர் நகரம் (Anti Urban) மற்றும் எதிர்மானிட குணவியல்புகளை விளக்கி நவீன நகர வளர்ச்சி உருவாகிய தாக்கங்களையும், தாராண்மை அணுகுமுறைகளின் அபத்தங்களையும் எழுதினார். கட்டடக்கலையில் நவீனத்துவத்தின்
- 10- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

எதிர்மறைப்பண்புகளை விளக்கி 1966ஆம் ஆண்டில் றொபேர்ட் வென்துரி “கட்டடக்கலையிற் சிக்கல் நிலைகளும் முரண்பாடுகளும்" (Complexity and Contradiction in Architecture Robert Venturi) 6T6ip நூலை எழுதினார். கட்டடக்கலை நிலைப்பட்ட தொடர்பாடலில், எளிமையன்றி சிக்கலும், முரண்பாடுகளும் முதன்மைப்படுத்தப்படல் வேண்டுமென்று குறிப்பிட்டார். “குறைந்தது போதும்" என்ற நவீனத்துக்கருத்தை மறுதலித்த அவர் "குறைந்தது சலிப்பூட்டும்" (LeSS is a Bore) 6760fp 5(53.60gs (up67626)/55/7i. -
மாணவர்களதும் இளைஞர்களதும் எழுச்சிப் போக்குகள் 1960 ஆம் ஆண்டைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விரிவடையும் செயற்பாடாக எழுந்தது. அதிகாரவலுவின் மேலாண்மை, அரசியல், பணம் முதலியவற்றால் மாணவரது எழுச்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. பின் கட்டுமானத்துக்கு வலுவூட்டிய மிசேல் பூக்கோவின் எழுத்தாக்கங்கள் அதிகாரத்தின் இருப்பையும் இயக்கத்தையும் பலநிலைகளிலே விளக்கின.
வளர்ச்சியுற்று வந்த மெய்யியல், சமூகவியல், கல்வியியல், கலைஇலக்கியச் சிந்தனைகளை ஒன்றிணைத்து 1971 ஆம் ஆண்டில் இகாப் ஹசன் பின்னவீனத்துவம் என்ற எண்ணக்கருவுக்கு முழுமை" ust 607 6JL96.15605 6 psildaoTTi (Ihab Hassan, (1971) The Dismemberment of Drpheus: Towards Postmodern Literature: Madison: University of Wisonsin Press) கட்டடக்கலையில் இந்த எண்ணக்கருவை 1975 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஜென்செக் பயன்படுத்தினார். ஐக்கிய அமெரிக்காவில் பின்னவீனத்துச் சிந்தனைகளை வளர்ப்பதற்கு றிச்சார்ட் றோத்தியின் எழுத்தாக்கங்கள் நுழைவாயில்களை அமைத்தன.
1980 ஆண்டைத் தொடர்ந்து ஆசிய நாடுகளின் நுண்மதியாளர். களிடத்தும் பின்னவீனத்துவக் கருத்துக்கள் பரவலாகி வளர்ச்சியடையத் தொடங்கின. சிறப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய எதிர்ப்பு நுண்மதியாளர்களுக்கு "வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போன்று" இந்நிலையிற் பின்னவீனத்துவக் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றன. பின்னவீனத்துவத்தின் அறிகைக் கட்டமைப்பையும் மட்டுப்பாடுகளையும் தீர அறிந்து கொள்ளும் தேவை எழுந்தது.
கலாநிதி சபா.ஜெயராசா -11

Page 9
பின்னவீனத்துவ எண்ணக்கரு விளக்கம்
பின்னவீனத்துவத்துக்கு தனித்த ஒரு நிலை விளக்கம் கொடுப்பது
கடினம். அதனை ஒரு கோட்பாடு என்றோ தத்துருவம் என்றோ பின்னவீனத்துவவாதிகள் வரிந்து கொள்ளவில்லை. ஒரு தத்துவச் சுருக்கத்தினுள் பின்னவீனத்துவத்தைக் கொண்டு வருதலையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
டபின்னவீனத்துவத்தின் சிறப்பார்ந்த அறிதலைப்புக்களாகப் பின்வருவன அமைகின்றன.
(1) தருகை (Presence). உடனடியான அனுபவங்களின் பண்பை தருகை என்ற எண்ணக்கரு உணர்த்துகின்றது. உடனடியாகக் கிடைக்கப் பெறும் அனுபவங்கள் மொழியாக, குறியீடாக, சைகை" களாக, எண்ணக்கருக்களாகக் கட்டுமான்ம் செய்யப்படுகின்றன. அதாவது பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இந்தப் பிரதிநிதித்துவப்படுத்தல் மனிதரது கண்டுபிடிப்புக்களின் விளைவுகளாக அமைந்துள்ளன.
தருகை என்பது யதார்த்த நிலையாகின்றது. இது பிரதிநிதித்துவப்படுத்தலுக்கு எதிரானது. பிரதிநிதித்துவப்படுத்தற் செயல்முறை நேர் அனுபவங்களைத் திரிபுபடுத்திவிடுகின்றது. அல்லது மாறுபடுத்தி விடுகின்றது என்பது இவர்களின் வாதம். அதாவது யதார்த்த நிலையை மொழி மாற்றியமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு விடுகின்றது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தும் அறி. தலைப்பாக (Theme)“தருகை" என்ற எண்ணக்கரு விளங்குகின்றது.
(2) அடுத்த அறிதலைப்பாக இவர்கள் “தோற்றுவாய்” (Orign) என்பதை முன்வைக்கின்றனர். தோற்றுவாய் என்பது தோற்றப்பாட்டு வாதத்துக்கு முரணானது. மனிதரின் தன்னிலையை (Self) அல்லது சுயத்தைக் கண்டறிய முயலும் தோற்றப்பாட்டுவாதம் இருப்பியம், உளப்பகுப்புவாதம், மார்க்சியம் முதலியவை அந்த
-2- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

இலக்கை அடைய முடியாத செயற்பாடுகள் என்பதை பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுகின்றனர். அதாவது தோற்றுவாயை அறிய முடியாத இருப்பற்ற நிலையை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கருத்தே "ஒவ்வொரு 276/7éffu(5lb (320igs (276/7(f) flus/7(576ip/Ti" (Every author is a dead author) என்பதாகும். தோற்றுவாயின் அல்லது மூலத்தின் இருப்பை நிராகரித்தல் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. தோற்றுவாயை நிராகரித்தல் (Denial of Orign) பின்னவீனத்துவத்தின் பிரதான கருத்துக்களுள் ஒன்றாக அமைகின்றது. இந்நிலையில் நூலியம் (Text) பல்வேறு விளக்கங்களுக்குரியதாக மாறுகின்றது.
(3) பின்னவீனத்துவவாதிகள் முன்னெடுக்கும் அடுத்த அறிதலைப்பாக அமைவது, "ஒருமைத்தன்மையும் அதற்கு எதிரான பன்மைத் g56760LOu/LO/7(5lb" (Unity Versus Plurality) 6?(560Loggs6760LOGu/6ion/ மற்றவர்கள் கூறும் இருப்பின் பன்மைநிலையே அடங்கியுள்ளது என்பது இவர்களின் வாதம். இந்நிலையில் அமைப்புவாதத்தின் செல்வாக்கு பின்னவீனத்துவவாதிகளிடம் காணப்படுதலைச் சுட்டிக்காட்டமுடியும். கட்டமைப்புச் செய்யப்பட்ட ஒருமைப்பாங்கின் உள்ளே பல சிறு சிறு அமைப்புகள் காணப்படுவதாக கட்ட" மைப்புவாதிகள் குறிப்பிடுதல் இங்கே இணைத்து நோக்குதற்குரியது. இதனை மேலும் விளக்குவதனால் பண்பாடு என்ற ஒர் அமைப்பில் மனிதர், சமூகம், மொழி, அனுபவங்கள் என்றவாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பன்மை நிலைகள் காணப்படுதலைச் சுட்டிக்காட்ட" லாம். ஒன்றுக்கும் மற்றையதற்குமிடையேயுள்ள தொடர்புகளும் ஒருமை நிலையில் அமையாது பன்மை நிலையில் அமைந்துள்ளன. இதே தளத்தில் நின்றவாறு அவர்கள் முன்னெடுக்கும் கருத்து என்னவென்றால் "எதுவும் எளிமையானதல்ல, உடனடியானதுமல்ல, முழுமைத் தொகுப்பானதுமல்ல” இந்நிலையில் எவற்றையும் பகுப்பாய்வு செய்தல் முடிந்த முடிபாக அடையமாட்டாது.
எடுத்துக்காட்டாக ஒரு நூலியத்தை (Text) பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தலாம். இக்கருத்தை மனிதருக்கும் பிரயோகிப்பதனால் ஒருவருக்கு ஒருதன்னிலை (Self) அல்லது சுயம் இருப்பதில்லை. பல பலதன்னிலைகளே பன்மயாகிக் காணப்படும்.
கலாநிதி சபா.ஜெயராசா -13

Page 10
(4) பின்னவீனத்துவத்தின் சாராம்சத்தை விளக்கும் அடுத்த அறிதலைப் Lust 5 au/LO/5/456faoi filadavl O/Toolb (Transcendence of Norms) அமைந்துள்ளது. உண்மை, நன்மை, அழகு, பகுத்தறிவுடைமை முதலியவை மாறிக் கொண்டு செல்லும் செயல்முறையின் விளைவுகளாக இருப்பதால் அவை மாறா நிலையில் உள்ளனவென்றும், நிலைத்துவமானதென்றும் கூறமுடியாது. குறிப்பிட்ட ஒரு கருத்துருவாக்கம் அதற்கு இயைபான குறிப்பிட்ட சமூக, பொருளாதார பண்பாட்டுச் சூழமைவிலும், நுண்மதிச் சூழமை" விலும் ஆக்கப்படுகின்றது. அது எல்லாச் சூழலுக்கும் பொருந்தும் என்று கூறுதல் பொருத்தமற்றது. இந்நிலையில் எத்தகைய கருத்துருவாக்கமும் பிரச்சினைக் கோடலுக்கு (Problematic) உரியதாக மாற்றமடைகின்றது. எந்த ஒரு கருத்தும், (பின்னவீனத்துவம் உட்பட) அதன் நியமமும் நிலைமாற்றத்துக்கு உட்பட்டதாகவே அமையும்.
இக்கருத்து மார்க்சிய இயங்கியலின் செல்வாக்கினை முற்றுமுழுதாக உள்வாங்காது அதனை ஒரு கோணத்திலே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதென்று கூற முடியும். (5) பின்னவீனத்துவம் முன்மொழியும் அடுத்த அறிதலைப்பாக "மற்றையதன் தொகுப்பமைவு" (Constitutive Otherness) விளங்கு" கின்றது. பல எடுத்துக்காட்டுக்களினால் இதனை விளக்கலாம். இலக்கியங்களில் அனுகூலம் மிக்க குழுவினரின் பண்புகளை விளக்கும் பொழுது பிரதிகூலம் அடைந்தவர்களுக்குக் கிடைக்கப்படாத நன்மைகள் வாய்ப்புமிக்க அனுகூலம் மிக்கோருக்குக் கிடைப்பதாகப் புனையப்படுகின்றது. Y
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்யும் பொழுது அன்றைய நிகழ்ச்சியில் தன்னிடமில்லாத "வேறுபணிபுகள்” இருந்தமையால் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றார். மனிதர்கள், எண்ணகருக்கள் கருத்துக்கள், மெய்யிற்றொகுதிகள், சமூக ஒழுங்கமைப்புக்கள் அனைத்தும் மற்றையவற்றை வேறுபடுத்தும் செயல்முறையின் வழி: யாகவும், நிரலமைப்பாக்கம் செய்யும் செயல்முறையின் வழியாகவுமே, தமது ஒருங்கிணைப்பை நிறுவிக்கொள்ளுகின்றன - இதனையே "மற்றையதன் தொடுப்பமைவு" என்ற தொடர் விளக்குகின்றது. தம்மை மற்றையதிலிருந்து மேம்படுத்திக் கொள்வதற்கும் இதுவே துணையாக விருக்கின்றது. இந்த அணுகுமுறை மார்க்சிய இயங்கியலை அடி" யொற்றிய பின்னவீனத்துவக் கருத்தாகவே அமைகின்றது.
-4- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவம் பற்றிய ஆய்வு பின்வரும் கிளைகளாகப் பிரிந்து செல்கின்றது.
(1) வரலாற்றியற் பின்னவீனத்துவம் (2) முறையியற் பின்னவீனத்துவம் (3) நேர்நிலைப் பின்னவீனத்துவம்.
(1) வரலாற்றுப் பின்னவீனத்துவம் தனது முக்கிய ஆய்வுப் புலங்களுள் ஒன்றாக நவீனத்துவத்தை எடுத்துக் கொள்கின்றது. நவீனத்துவம் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டதென்றும் இப்பொழுது நவ உலகம் (Novel World) முகிழ்த்து விட்டதென்றும் கூறுகின்றது. நவீனத்துவம் ஆழ்ந்த நிலையமாற்றச் செயல்முறை" களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது. சமூகம், கோட்பாடு, கலை இலக்கியங்கள் என்ற வகையில் இந்த நிலை மாற்றச் செயற்பாடு நிகழ்ந்த வண்ணமுள்ளது. நவீனத்துவம் தவறானது அன்று என இவர்கள் கூறுதல் ஏற்கனவே வரிந்து உரைத்த நியமங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளன.
(2) முறையியலைப் பொறுத்தவரை பின்னவீனத்துவம் முடிவான அடிப்படைகளையும், முடிவான உணர்மையையும் நிராகரிக்கின்றது. பாரம்பரியமான மெய்யியலாளர் விளக்கிய அகவயம் - புறவயம், உருவம் - உள்ளடக்கம், நடப்பியல் - வெளிப்பாட்டு வடிவம், நேர்வு " கோட்பாடு ஆகிய அனைத்தும் விசாரணைக்" குரியவை என்றும், பிரச்சினைக் கோடலுக்குரியவை (Problematic) என்றும் இவர்கள் கருதுகின்றார்கள். gavřes67ø/ (ypaðmpusolu/Giv 676lipsL - L'ÚL fluuGió (Anti Realistic) L/Gooi Ly கொண்டது. பொருள்களின் தொடர்பாடல் அறிவின் பொருண்மை. உருவாக்கப்படுதல் இல்லை என்பது இவர்களது வாதம். பயன்வழி இருப்பின் அடிப்படையிலேதான் அறிவு கட்டமைப்புச் செய்யப்படுகின்றது. பகுத்தறிவு சார்ந்த விசாரணைகள் இவர்களது முறையியலிலே பின் தள்ளப்பட்டு விடுகின்றது. முற்றிலும் எதிர்மறைப்பாங்கான அணுகுமுறைகளே இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருள்கள் கருத்துக்கள் தொடர்பான புதிய தரிசனங்களையும், மாறுபட்ட அணுகுமுறைகளையும் முன்னெடுத்தல் நேர்நிலைப் பின்னவீனத்துவம் (Positive Postmodernism) ஆகின்றது. இந்த வாதத்தை ஆதரிப்போர் நிலைபேறு கொண்ட கோட்பாடுகளைப் பின்னவீனத்துவம் விசாரணைக்கு உட்படுத்துகின்றதேயன்றி நிராகரிக்கவில்லை
கலாநிதி சபா.ஜெயராசா -1S

Page 11
என்று விளக்கம் தருகின்றனர். ஒரு வகையில் நேர் நிலைப் பின்னவீனத்துவமும் முறையியற் பின்னவீனத்துவத்துடன் முரண்பட்டுக் கொள்ளுகின்றது என்று கூறுதலும் தவறாகாது.
நேர்நிலைப் பின்னவீனத்துவத்தை வலியுறுத்துவோர் காலங்காலமாக நிலைபேறு கொண்டிருந்த மேலைத்தேய சிந்தனைச் செல்வத்தை தெரிதா (Derrida) தாழ்வுபடுத்திவிட்டார் என்ற கருத்தை முன் நிறுத்தியுள்ளனர். அதே வேளை அக்கருத்துக்கள் மாற்றீடு இல்லாதவை என்றும் கைநழுவ விட முடியாதுள்ளவை என்று தெரிதா பின்னொரு வேளையிற் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலைப்பாடு பின்னவீனத்துவத்தின் உள்ளமைந்த முரண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது.
நேர்நிலைப் பின்னவீனத்துவவாதிகளில் ஒருசாரார் பயனுள்ள பழைமைகளை அங்கீகரிப்புக்கு உள்ளாக்குகின்றனர். கட்டடக்கலைப் பின்னவீனத்தில் இந்தப் பண்பு காணப்படுகின்றது.
பின்னவீனத்துவத்தின் அறிகை விசைகள் பலதிசைகளில் கிளைகள் பரப்பிச் சென்ற வண்ணமுள்ளன. கல்வியியலில் அதன் நேர்த்தாக்கம் பல்பண்பாட்டு வாதத்தை (Multiculturalism) நோக்கி நகர்ந்துள்ளது. சமூகவியலில் அதன் எதிர்த்தாக்கம் பூர்சுவாக்களின் தளை நீக்கப்பின்னவீனத்துவமாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் பூர்சுவாக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அறிகைவிசையாக பின்னவீனத்துவம் எழுந்துள்ள பண்பினை இடதுசாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய அறிகை முறைமையிலும் சிந்தனைக் கோலங்களிலும் புதிய விசைகளை ஏற்படுத்திய பின்னவீனத்துவப் பரவல், காலங்காலமாக உருவாக்கப்பட்ட சிந்தனை மரபுகளில் வேர்பாய்ச்சியும் அதே வேளை அறிகை மரபுப் பிறழ்வுகளை உருவாக்கியும் வரும் தடங்களைப் பதித்துள்ளது.
-1 6- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவம் - மீள்நோக்கல்
இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த மாற்றுவகைச் சிந்தனைகளின் கதம்பமாக பின்னவீனத்துவம் அமைகின்றது. பின்னவீனத்துவம் தனித்த ஒரு கோட்பாடு அன்று. அதனைத் தனித்த ஒரு கோட்பாட்டுக் கட்டமைப்புக்குள்ளே கொண்டு வரும் நடவடிக்" கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு தனித்த ஒரு கோட்பாட்டுக் கோபுரமாக்குதல் அவர்களது கண்ணோட்டத்திலே தேவையுமற்றது. பின்னைய முதலாளித்துவத்தின் நேர், எதிர் அறிகை இயல்புகளைத் தெறித்துக் காட்டும் கருத்துக்களின் பதிவுகளாகப் பின்னவீனத்துவம் மேலெழுகின்றது.
புதிய புதியசெயல் வடிவங்களை முன்னெடுக்கும் சமகால உலக முதலாளியம் நுகர்வோரை பன்முக நிலைகளிலே தூண்டி விற்பனைப் பொருட்களைப் பன்முகமாக உற்பத்தி செய்யும் நவீன நுகர்வோர் ஆக்கத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. அதற்கு உவப்பான கருத்துக் கதம்பங்களைப் பின்னவீனத்துவம் முன்வைத்துள்ளது என்ற உரத்த கருத்தும் உண்டு. பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் முதலாளியத்தை மறுதலிக்கும் மார்க்சிய சிந்தனைகளை ஒரு புறம் உள்வாங்கியும் மறுபுறம் மார்க்சியத்தை எதிர்க்கும் கூட்டுக்களரியில் ஒன்றிணைவோராயும் பின்னவீனத்துவவாதிகள் விளங்குகின்றனர்.
முதலாளியமும் அதன் வெளிப்பாட்டு வடிவங்களில் ஒன்றாகிய
குடியேற்றவாதமும் உலகளாவிய அறிகை நிலையில் இரண்டு பெரும் சிந்தனைப் போக்குகளை உருவாக்கி வருகின்றன. ஒன்று இந்த வளர்ச்சியைத் தருக்க பூர்வமாகப் பகுப்பாய்வு செய்து, அதனை மாற்றியமைப்பதற்கான வழிவகைகளை முன்வைத்த மார்க்சியமும் அதனை அடியொற்றி வளர்ந்து வருகின்ற சிந்தனை மரபுகளும், மார்க்சிய சிந்தனை எல்லைகளை விரிவாக்குதல், மாற்றமுறும் புதிய சூழலுக்கு அதனைப் பிரயோகிப்பதற்குரிய வலுக்களை விசைப்படுத்துதல் என்றவாறு இந்த அறிகை வளர்ச்சிமேலோங்கி வருகின்றது.
asawmi pís? FunT.GguuprintFIT -17

Page 12
மற்றையது பின்னைய முதலாளியத்தின் பன்முனைத் தாக்கங்களினால், சிதைந்து, உருக்குலைந்து, அந்நியமாகி, நம்பிக்கை வரட்சியை நோக்கி இழுபட்டுச் செல்லும் சிந்தனைகள். இச்சிந்தனைகளில் இருப்பியத்தின் கணிசமான செல்வாக்கும், நனவிலி உளவியலின் ஊடுருவலும் காணப்படுகின்றன. இக்கருத்துக்கள் சமகாலத்தில் கட்புலனாகும் வகையிலும், வெளித்துலாங்கா வகையிலும் இயக்கமுறும் முதலாளிய விசைகளுக்கு மிருதுவான அரவணைப்பை வழங்குவதாக அமைந்து வருகின்றன. இந்தச் சிந்தனை மரபிலே தோன்றி வளர்ந்து வருவதே பின்னவீனத்துவம் என்பது மார்க்சியர்களின் கருத்து. மனித அவலங்களின் வேர்களைக் கண்டறிய முற்பட்ட மார்க்சிய சிந்தனைகள் பின்னவீனத்துவ அறிகையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமை மறுதலிக்க முடியாத கருத்தாகும். பின்னவீனத்துவத்தின் முன்னோடிகளுள் ஒருவராகிய லியோதார்த் (GFLyotard) மார்க்சிய இலக்கியங்களை வரன்முறையாகக் கற்றவர். மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டோரின் சமூக அந்தஸ்து நிலையில் மேல்நோக்கி மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சிலர் தமக்குரிய மார்க்சியப் புலக்காட்சியை (Marxian Perception) மாற்றிக் கொள்ளல் உலகெங்கணும் காணப்படும் ஒரு தோற்றப்பாடு. இந்தத் தோற்றப்பாடு லியோதார்த்திடமும் ஏற்பட்டது. இலங்கையிலும் இதற்குரிய எடுத்துக்காட்டுக்களைக் கூறமுடியும்.
லியோதார்த் மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தும், மறுதலித்தும் வெளியிட்ட கருத்துக்கள், பின்னைய முதலாளிய வளர்ச்சியை அனுகூலப்படுத்தியோருக்கு மிக்க உவப்பானவையாக இருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஐ.அமெரிக்காவிலும் இவரது எழுத்தாக்கங்கள் பெரும் வரவேற்புக்கு உள்ளாக்கப்பட்டன. தருக்க பூர்வமான கோட்பாடுகளை நிராகரித்தலும், அறிவின் மீது நிச்சயமற்ற நம்பிக்கைகளை ஏற்படுத்துதலும், உறுதியான இலக்குகளைப் பற்றிக் கொள்ள முடியாது மனிதரைத் தத்தளிக்க வைத்தலுமான லியோதார்தின் கருத்துக்கள் முதலாளியத்துவத்துக்கு எதிராக ஒன்றுதிரளும் வலுவைச் சிதற வைப்பதற்கு ஒரு வகையிலே உதவின.
பின்னவீனத்துவம் ஒரு தனித்த கோட்பாடு அன்று கட்டுமை செய்யப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளையும் நிராகரித்தலே அதன் தலையாய நோக்கம். இந்நிலையில் மார்க்சியம் உள்ளிட்ட அனைத்துக் கோட்பாடுகளையும் இது நிராகரிக்கின்றது. அதாவது தருக்கபூர்வமாக கட்டுமை செய்யப்பட்ட அனைத்துக் கோட்பாடுகைளயும் இது கேள்விக்குறியாக்கி நிற்கின்றது. எதையும் நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும் உருகிவிடும் பண்புடையதாகவும் பின்னவீனத்துவம்
- 18- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நோக்குகின்றது. நம்பிக்கையாகக் கொள்ளப்பட்டவற்றை நம்பிக்கை" யின்மையாக்கல் இவர்களின் அறிகைச் செயற்பாடாகவுள்ளது.
அளவை நெறிகளும், தருக்கமும் வன்முறைகள் என இவர்கள் முன் மொழிகின்றனர். அறிதலுக்குத் தருக்கம் ஒரு சிறந்த கருவியாக இருப்பினும், எல்லாவற்றையும் தருக்க வழிமுறைகளால் அறிந்து கொள்ள முடியாது என்பது இவர்களின் கருத்து. மார்க்சியத்தை நிராகரிக்க இந்த அணுகுமுறை இவர்களுக்குக் கைகொடுக்கின்றது.
தனிமனிதரின் தன்னிலையான அனுபவங்கள் அதாவது சுய அனுபவங்கள் வரையறுக்கப்பட்ட தருக்க முறைமையினுள் அடக்கப்படுவதில்லை. அகவயமான அறிவு (Subjective Knowledge) விஞ்ஞான முறையின் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.
பலரதும் அனுபவங்களின் பொதுமைப்பாட்டிலிருந்து "தருக்கம்" உருவாக்கப்படுகின்றது. இவ்வாறான தருக்க முறைகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்ற கட்டாயம் இல்லை. இந்நிலையில் ஏற்கனவே கட்டுமை செய்யப்பட்ட விதி ஒழுங்குகளை மீறி உண்மைகளைக் கண்டறிதலே பொருத்தமான தரிசனம் அல்லது உண்மையான அறிவு என்பது இவர்களின் வாதம்.
பெரும் கோட்பாடுகளையும் பெரும் உரையங்களையும் (Grand naratives) நிராகரித்தல் பின்னவீனத்துவத்தின் பிரதான பரிமாணங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பலம் பொருந்திய மார்க்சிய சிந்தனைக் கட்டுமானத்தை நிராகரிப்பதற்கு இவர்கள் இக்கருத்தை ஒருவகையில் முன்வைக்கின்றனர்.
விலக்கப்பட்டவற்றை, முக்கியமற்றவை என்று கருதப்பட்ட" வற்றை, நிராகரிக்கப்பட்டவற்றை, சமூக நியமங்களாலே பின்தள்ளப்பட்டவற்றை, எல்லை நிலையில் உள்ளவற்றைக் கருப்பொருளாக்கல் வேண்டும் என்பது இவர்களின் வாதம். பேசப் பொருளைப் பேச வேண்டுமெனவும் எழுதாப் பொருளை எழுத வேண்டுமெனவும் இவர்கள் வலியுறுத்துகின்றனர். பேசப்படாமலும் எழுதப்படாமலும் விடப்பட்ட விடயங்களே இவர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெறுகின்றன. எடுத்துக் காட்டு ஒன்றினைக் கூறுவதானால், ஒருபால் திருமணம் இவர்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான விடயம்.
இவர்களது கண்ணோட்டத்தில் முடிந்த முடிபு என்றோ, மாறாநிலையான முடிபு என்றோ எதுவுமில்லை. அனைத்தும் இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் உரியவை என்ற இவர்களின் கருத்து,
கலாநிதி சபா.ஜெயராசா -19

Page 13
இயக்கியல் தத்துவத்தின் ஒரு பரிமாணத்தோடு இணைந்து நிற்பதாக இக்கருத்து அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
ஒன்று திரட்டுதல் அல்லது திரட்டிப்பார்த்தல் (Total Ising) என்ற கருத்தும் இவர்களால் நிராகரிக்கப்பட்டு, உதிரிகளாகப் பார்த்தல், தனியனர்களாகப் பார்த்தல் என்ற காட்சியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. முதலாளிய சமூகத்திலே உடைந்து சின்னாபின்னமாகி அந்நியமாகிநிற்கும் மனித உணர்வுகள் மீது இவர்கள் கவனக்குவிப்பை ஏற்படுத்தியவேளை, சுரண்டலையும், பறிப்பையும் ஏற்படுத்தும் வலியகரங்களை மார்க்சியம் தரிசித்தமை போன்று இவர்களாலே தரிசிக்க முடியாமற் போய்விட்டது.
அறிவு வளர்ச்சியிலே திட்டடிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் திரட்டிப் பார்க்கப்பட்டவை மட்டுமன்றி மேலாதிக்கப் பண்பு கொண்டவை (Hegemonising) என்பதும் இவர்களின் வாதம்.
-20- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்புலமாக அமையும் விசைகள்
திய அறிகைத் தொழிற்பாடு முன்னை அறிகைத் தளங்களை
அடியொற்றியே மேலெழும். இந்தவகையில் பின்னவீனத்துவத்தின் முன்பு தோன்றிய மூன்று பெரும் சிந்தனை மரபுகள் விதந்து குறிப்பிடத்தக்கவை அவை:
1. மார்க்சியம் 2. இருப்பியம் 3. உளப்பகுப்பியம்
(1) மனிதம் தொடர்பான மரபுவழி அறிகைக் கோலங்களுக்கு மாற்று வகையானதும் மாறுபட்டவகையிலும் மார்க்சியக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனிதம் பற்றிய மார்க்சியக் கருத்துக்கள் மரபுவழி உலோகாயதக் கருத்துக்களிலும் வேறுபட்டவை என்பதை முதற்கண் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியம் மனிதரை வெறும் சடப் பொருளாக மட்டும் கருதவில்லை.
மனிதரின் இயல்பை “உழைப்பு" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சியம் விளக்குகின்றது. மனித சாராம் சமே உழைப்புத்தான் உயிரினங்களில் இருந்து வேறுபட்ட இயல்புகளைக் கொண்டு மனிதர் முகிழ்த்தெழுவதற்கு உழைப்பே ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்தமை ஏங்கெல்சினால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. முள்ளந்தண்டை நிமிர்த்தி மனித உடலாக்கம் வலிமை பெற்றமை, கைவிரல்களால் இலாவகமான திறன்களை ஆற்றக்கூடிய ஆற்றல்களைப் பெற்றமை, மூளையின் பன்முக ஆற்றல்களை வளர்த்துக்கொண்டமை முதலியவை மனித உழைப்போடு இணைந்த செயற்பாடுகளாகும். மொழியும், சிந்தனையும் தருக்க அறிமுறைகளும் உழைப்பின் பெறுபேறுகளாக மேலெழுந்தின.
உழைப்பினால் மனிதர் இயற்கையை மீளமைக்க முடிந்தமை, உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. உழைப்பினால் மனிதர்
Baumgg sum.Ggaugitar -21

Page 14
தம்மைத்தாமே மீளமைத்துக் கொள்ள முடிந்தமை மேலும் முக்கியத்" துவம் பெறுகின்றது.
உழைப்பு சமூகப் பண்பு கொண்டது. இவ்வாறு சமூகப் பண்பு கொண்டதாக இருப்பதன் காரணமாகத்தான், ஒருதலை முறையினர் உருவாக்கிய விளைவுகளை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்தச் சமூகப் பண்பே ஒருவரது உழைப்பு இன்னொருவரின் பறிப்புக்கு அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றது. இந்தப் பண்பே உழைப்புத் தொடர்பான ஆண் - பெண் வேறுபாடுகளையும் கட்டுமை செய்தது.
மனித உழைப்பும், உழைப்பினால் உருவெடுக்கும், கட்டமைப்புக்களும் இயங்கியற் பண்பு கொண்டவை. தரப்பட்ட சூழலை மாற்றி யமைக்கும் திறன் கொண்டதாக உழைப்பு அமைகின்றது.
உழைப்பும் சமூகச் செயல்முறையும் மனித சாராம்சமாக அமை" கின்றன. மீளமீளப் புதுப்பிக்கப்படும் எல்லையற்ற திறன்களை உழைப்பு உருவாக்கித் தருதலை மனிதர் நடைமுறைவாழ்க்கையில் அறிந்தும் உணர்ந்தும் கொள்கின்றனர்.
சுரண்டல் அல்லது பறிப்பு நிகழும் சமூகக்கட்டமைப்புக்களில் மனிதர் தமது சாராம்சத்தை இழந்து வாழும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறான சமூகக் கட்டமைப்பில் உழைப்புக் கருவிகளும் சாத" னங்களும் உழைப்பவர்களின் உடைமைகளாக இருப்பதில்லையாத" லால், உழைப்பவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் அவர்கள் உரிமை கொண்டாட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் மனித சாராம்சம் இழக்கப்படுகின்றது.
இந்த அவலமான நிலையை"அந்நியமாதல்" என்று மார்க்ஸ் குறிப்பிட்டார்.
அந்நியமாகிய மனிதர் உழைப்புத் தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும், குடும்பம் தொடர்பாகவும் "சிதைந்த” பார்வையை உருவாக்கிக் கொள்கின்றனர். உழைப்பின் மாண்பு வெறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. பல நிலைகளில் வெறுப்பையும், அதிருப்தி யையும், உளவியல் நிலைப்பட்ட அவலங்களையும் அந்நியமாதல் தூண்டிய வண்ணமிருக்கும். உளநிறைவும் உற்சாகமும் அற்ற ஏனோதானோ என்ற நிலையை அது ஏற்படுத்திவிடும். அனைத்திலும் ஏற்படும் வெறுப்பான உணர்வுகளும், நம்பிக்கை வீழ்ச்சியும் தன்மீது தானே வெறுப்புக் கொள்ளும் மனித சாரம்ச இழப்புக்குத் தள்ளி விடுகின்றது.
-22- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

மார்க்ஸ் முன்மொழிந்த அந்நியமாதல் என்ற எண்ணக்கரு பின் வந்த உளவியல், சமூகவியல், கல்வியியல், மெய்யியல், திறனாய்வியல் போன்ற பல துறைகளின் கவன ஈர்ப்புக்கு உள்ளானது. பால் நிலை ஆய்வுகளிலும் இந்த எண்ணக்கரு எடுத்தாளப்படலாயிற்று.
ஆனால் பின்வந்த ஆய்வாளர்களில் ஒருசாரார் அந்நியமயமாதலில் இருந்து விடுபடுவதற்கு மார்க்ஸ் முன்மொழிந்த சமூகச் செயல்முறை மீதும் சுரண்டல் மற்றும் பறிப்பை அடியோடு நீக்கும் வழிமுறை மீதும் தமது கவனத்தை நழுவ விட்டுச் சென்றனர்.
மார்க்சியம் இயங்கியல் பொருள் முதல்வாதத் தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. மாற்றங்களும் வளர்ச்சியும் இயங்கியல் அடிப்படையிலே நோக்கப்படுகின்றன. முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் இயங்கியலின் அடிப்படைகளாகின்றன. வரலாற்று நோக்கிலும் சமூக நோக்கிலும் இயங்கியல் பிரயோகிக்கப்படும் பொழுது வர்க்க வேறுபாடுகள் துல்லியமாக வெளிப்படுகின்றன. வர்க்க முரண்பாடே பல்வேறு முரண்பாடுகளிலும் தலையாய முரண்பாடாக மேலெழுகின்றது.
ஒன்றன் மீது மற்றையது தாக்கம் விளைவிக்கின்ற சமூக அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் ஆகிய கட்டுமான அமைப்புக்கள் பற்றிய அறிகையை உலக அறிவுத் தளத்தில் மார்க்சியம் முதன் முதலில் முன்வைத்தது. இந்தச் சிந்தனாவேரிலிருந்தே அமைப்பியல், பின்னமைப்பியல் முதலாம் சிந்தனைகள் மேலெழுந்தன.
(2) மனிதம் பற்றிய கருத்து வினைப்பாட்டில் உருவான இருப்பியமும் சமகாலத்துச் சிந்தனை யாக்கங்களிலே தாக்கங்களை ஏற்படுத்த" லாயிற்று.
உலகின் இருப்போடு இன்மையும் இணைந்துள்ளமை (Being and Nothingness) சார்த்தரால் விளக்கப்பட்டுள்ளது. பொருட்களின் உலகத் தைத் தன்னிலையில் உள்ள இருப்பாக (Being in Itself) அவர் விளக்கு" கின்றார். அதேவேளை உணர்வு கொண்ட மனிதரின் இருப்பை தனக்காகவுள்ள இருப்பு (Being for itself) என்று அவர் குறிப்பிடுகின்றார். இவை இரண்டும் ஒன்றிலிருந்து பிரிந்து தனித்திருக்க முடியாது என்பது அவரது கருத்து. உலகுக்கும் மனிதருக்குமிடையேயுள்ள உறவுகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு "அருவப்படுத்தல்" (Abstraction) என்ற உளச் செயற்பாடு தடையாகவுள்ளது. உலகு என்பது உணர்வு அற்றது என்றும் மனிதர் உணர்வு உள்ளவர் என்று கொள்ளும் அருவப்படுத்தல்
sampff sum.03 wgrafii -23

Page 15
என்ற அறிகை நிலையானது இரு கூறுகளும் இணைவதைத் தடுத்து விடுகின்றது.
இருப்பு என்பது இன்மையால் உணர்த்தப்படுவதாகவும் அவர் விளங்கினார். இன்மை என்பது மறுத்தலாகின்றது. நேர்மறைகளை அறிவதற்கு மறுத்தலே துணை நிற்கின்றது. இன்மை என்பதனால் மட்டுமே மனித உடன்பாட்டுத்தன்மை உடைக்கப்படுகின்றது.
காரணகாரியத் தீர்வுகளை “இன்மை" உடைத்துவிடுகின்றது. மனித இருப்போடு இன்மையும் குடிகொண்டுள்ளது. மனிதத்துவத்தோடும்
சுதந்திரத்தோடும் "இன்மை" இணைந்துள்ளது இன்மையே அனைத்தினதும் முதன்மையான பண்பு ஆகின்றது.
மனித சாராம்சம் என்பது “இன்மையே” ஆகும். இருப்பியத்தின் மையக்கருத்தாக மனிதம் அமைகின்றது. ஒன்றுமில்லா இன்மை நிலையில் இருந்துதான் மனிதர் தமது இருப்பைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிறப்பால் உருவாக்கப்பட்டு திணிக்கப்படும் எவற்றையும் மனிதர் ஏற்காது புறக்கணிக்கும் நிலையின் முக்கியத்துவம் இருப்பியத்தில் வலியுறுத்தப்படுகின்றது.
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் உலகின் பொருளாதார மாற்றங்கள் முதலாளியத்தின் பன்முகமாகயவடிவங்கள், தொடர்பாடல் வளர்ச்சிகள், முதலியவற்றின் அழுத்தங்கள் மனிதம் பற்றிய மரபு வழிச் சிந்தனைகளை மீளாய்வுக்கு உட்படுத்தின.
கார்ல் மார்க்ஸ் (1818-1883) மனிதசாராம்சத்தை மரபுவழிக் கண்ணோட்டங்களில் இருந்து விலகிப் புதிய நோக்கிலே தரிசித்தார். மணி தத்தை வியாக்கியானம் செய்வதோடு நின்று விடாது மாற்றியமைக்கும். வழிமுறைகள் பற்றிய வலுவான கருத்துக்களும் அவரால் முன்வைக்கப்பட்டன.
(3) உளப்பகுப்புவாதமும், அதனை அடியொற்றிய கருத்தாடல்களும் பின்னவீனத்துவசிந்தனை உருவாக்கத்திலே செல்வாக்குகளை ஏற்படுத்தின. சிக்மன்ட் பிராய்ட்டின் நனவிலி மனத்தின் செயற்பாடு பற்றிய ஆய்வுகளும் அவற்றை அடியொற்றிய லகானுடைய கருத்துக்களும் இவ்வகையிலே குறிப்பிடத்தக்கவை. பிராய்டின் மிகப் பெரியபங்களிப்பாக “நனவிலிமனம்" பற்றிய கருத்தாடல் அமைந்தது. நடப்பு வாழ்க்கையில் நிறைவேறாத இன்பங்களும் இச்சைகளும் நனவிலி மனத்திலே அடக்கியும் அழுத்தியும்
-24- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

வைக்கப்படுகின்றன. நனவிலி மனத்தின் சுதந்திரமான வெளிப்பாடுகளை நனவு மனம் அடக்கித்தடுத்தவண்ணமுள்ளது.
கனவில் நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளுக்கு இடமுண்டு ஆயினும் அதிலும் நனவு மனத்தின் ஆதிக்கம் இடம் பெறுதல் உண்டு. ஆழ்மன உணர்வுகள், உறைந்தும், இடம்பெயர்ந்தும் குறியீடுகளாகக் கனவிலே வெளிப்படுத்துதல் நனவு மனத்தினர் ஆதிக்கத்தை ஒருவகையிலே வெளிப்படுத்தும். இதனாலேதான் கனவுகளிலே சிதைந்த பண்புகளும் விநோதமான பண்புகளும் இடம் பெறுதல் உண்டு.
மொழி வெளிப்பாடுகள், கலை வெளிப்பாடுகள், மற்றும் கற்பனையாக்கங்களுக்கும் நனவிலி மனத்துக்குமுள்ள தொடர்புகளை பின்னைய பிராய்டிசவாதிகள் ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தினர்.
இவ்வகையில் ஜாக்ஸ் லகானுடைய ஆய்வுகள் (Jacques Lacan - 1901-1981) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. உளவியல், மொழி, இலக்கியம் தொடர்பான துறைகளில் இவரது ஆய்வுகள் வெளிவந்தன.
நனவிலிமனம் பற்றிய லகானுடைய கருத்து பிராய்ட்டின் கருத்துக்களிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது. நனவிலிமனம் இச்சை (Desire) மற்றும் மொழி ஆகியவற்றின் பொருத்தமற்ற இணைப்பால் உருவாக்கம் பெற்றதாக லகான் விளக்கினார். இதனை மேலும் விளக்குவதற்கு மொழிபற்றிய சசூரின் அணுகுமுறையினையும் பயன்படுத்தினார்.
ஒருபுறத்தில் பிராய்ட்டை இவர் மறுதலித்தாலும், மறுபுறம் பிராய்ட்டின் நனவிலி மன எண்ணக்கருவின் முக்கியத்துவத்தை இவரால் நிராகரிக்க முடியாதிருந்தது. இதனால் "பிராய்டுக்குத் திரும்புங்கள்" (Return To Freud) 6760io 5(53.625(p60.360// Cupéof 606A537 i.
சசூர் (Ferdinand Saussure) மொழிபற்றிய தமது கருத்தைப் பின்வருமாறு விளக்கினார். சொல்லுக்கும் அல்லது குறிப்பானுக்கும் (Signifier) அதன் பொருளுக்கும் அல்லது குறிப்பீட்டுக்கும் (Signified) உள்ள உறவு குறியீட்டுத் தன்மை கொண்டது என்பது சசூரின் கருத்து நனவுமனத்தின் தொழிற்பாட்டின் அடிப்படையில் சசூர் மொழிபற்றிய தமது கருத்துக்களை விளக்கினார். ஆனால் லகான் நனவிலி மனத்தின்
அடிப்படையில் மொழி விளக்குகின்றார்.
நனவிலியில்அமுக்கி அடக்கப்பட்டிருக்கும் சொல் அவ்வாறே வெளிப்பாடு கொள்வதில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தால் . அங்கீகரிக்கப்பட்ட வேறொரு சொல் வாயிலாகவே நனவிலிமனம்
கலாநிதி சபா.ஜெயராசா கொழும்பு தமிழ்ச் சங்கல் -25

Page 16
வெளிப்பாடு கொள்கின்றது. வெளிப்படாது நனவிலியில் அமுங்கியிருக்கும் சங்கிலித் தொடரான குறிப்பான்களின் (A Chain ofUncoscious Signifiers) பதிலீடாக வெளிப்படும் மொழியின் இயல்பை லகான் சுட்டிக்காட்டினார். மொழிமீது கொண்ட ஐயுறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இக்கருத்து பின்னவீனத்தவ வாதிகளுக்கு உதவியது.
மனித வளர்ச்சிப் படிநிலைகளில் மொழியும் கற்பனையும் வளர்ச்சி பெற்று வருமாற்றினை லகான் விரிவாக ஆராய்ந்துள்ளார் மனதரின் சுயநிலை அல்லது தன்னிலை என்பது "போதாமை" (Lack) என்பதனால் உருவாக்கப்படுகின்றது. பிறப்பின் போது குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்படும் பொழுது "போதாமை" என்ற குறைபாடு முதலில் ஏற்படத் தொடங்குகின்றது. பிறப்பைத் தொடர்ந்து குழந்தை தனது உடலையும் தாயின் உடலையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. வளர்ச்சியின் போது தான்வேறு, தாய் வேறு என்று அறியும் போது போதாமை மேலும் வலியுறுத்தலுக்கு உள்ளாகின்றது.
கற்பனா முறைமையில் இருந்த குழந்தை கண்ணாடிப் பருவத்தை (Mirror Stage) நோக்கி வளர்ச்சியடைகின்றது. குழந்தை கண்ணாடியில் தனது உருவத்தைக்காணல் கண்ணாடிப் பருவத்தில் (6 முதல் 18மாதம் வரை) நிகழ்கின்றது. கண்ணாடியில் சிறுவர் தமது உருவத்தைக் காணல் என்பது தவறான விளக்கநிலை (False understanding) என்பது அவரது கருத்து. தன்னிலையைக் கண்ணாடியிலே காணுதல் அந்நியமாதல் விளைவையே ஏற்படுத்துகின்றது. தன்னிலை, மற்றும் வேறுபட்ட நிலை என்பவை மொழிக்குறியீட்டிலும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
எடுத்துக் காட்டாக "தந்தை” என்ற குறிப்பானுக்கும் (சொல்லுக்கும்) உண்மையான தந்தை என்ற குறிப்பீட்டுக்கும் (பொருளுக்கும்) தொடர்பு இல்லாத நிலை காணப்படுகின்றது. வேறுபல தொடர்புகளின் அடிப்படையாகவும் உறவின் அடிப்படையாகவுமே உண்மையான தந்தையை இனங்காணவேண்டியுள்ளது. இந்நிலையில் குறிப்பான் (சொல்) மெய்மையுடன் இணைப்பின்றி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றை நோக்கும்பொழுது மொழி தனது இயல்பை மெய்ம்மையில் இருந்து பிரித்துக் கொள்ளுகின்றது.
மொழிபற்றிய மரபுவழிக்கருத்துக்களில் இருந்தும் விலகிய மாற்று வகையான கருத்துக்களை லகான்முன் வைத்துள்ளார். மனிதர்களின் தன்னிலை பற்றிய அறிவு மொழிக்குள் புகுதல் வாயிலாகவே தோற்றம் பெறுகின்றது என்பது இவரின் முன்மொழிவு. மொழிக்குள் புகுந்த
-26- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னர் அதிலிருந்து தப்பிச் செல்லலும் எளிதன்று என்று அவர் கருதுகின்றார்.
மொழியியல் ஆய்வில் நனவிலியின் செயற்பாடுகளைத் தொடர்புபடுத்தி மாற்றுவகையான கண்ணோட்டத்தை இவர் முன்னெடுத்துச் சென்றார்.
நனவிலி மனம் மிருக இயல்பூக்கங்களின் இருப்பிடமென்றும், இச்சைகளினால் இயக்கப்படுவதென்றும் மொழிக்கு முற்பட்டதென்றும் பிராய்ட் குறிப்பிட்டார். இதிலிருந்து மாறுபடும் லகான் "நனவிலிமனம் மொழி போன்று கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.” என்று விளக்கினார். லகானுடைய மொழி பற்றிய கருத்துக்கள் பின்னவீனத்துவவாதிகளின் உசாவல் விருப்பை அதிகரிக்கச் செய்தன.
கலாநிதி சபா.ஜெயராசா -27

Page 17
தெரிதாவை விளங்கிக் கொள்ளல்
Glgnarss, (Jacques Derrida) 6667 [sid:ld; 65ITGi GT as Liai 607வீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல் ஆகின்றது. 1930 ஆண்டு பிறந்த தெரிதாவின் வீரியம்மிக்க எழுத்தாக்கங்கள் 1960 ஆம் ஆண்டைத் தொடர்ந்து வெளிவரலாயின. "சோக்கிரதீஸ் பேசினாரே ஒழிய எழுதவில்லை” என்று ஒரு சமயம் நித்செ குறிப்பிட்டார். பேச்சுக்கும் எழுத்துக்குமிடையேயுள்ள இடைவீச்சினை இருப்பியநோக்கிலே நித்சே வெளிப்படுத்தினார். மொழிசார்ந்த இந்தப் பிரச்சினை தெரிதாவின் பின்னவீனத்துவச் சிந்தனைகளைத் தூண்டின.
y
"புத்தகத்தின் முடிவு", "நூலாசிரியனின் இறப்பு” “நூலியத்தின் பன்முக வெளிப்பாடுகள்” “வாசகரின் துலங்கல்" முதலாம் கருத்துக்கள் தெரிதாவிலிருந்து எழுந்து ஆட்சி கொள்ளத் தொடங்கின. இவரது கருத்தியல் பன்முக கருத்து வினைப்பாடுகளை (Discorses) வலியுறுத்தியது. மொழி விரிதற் கோலத்தைக் கொண்டுள்ளது. மொழியிலே வீக்க நிலைப்பண்பு (Inflation) காணப்படுகின்றது. சில சமயங்களில் குறித்தது ஏதோ குறிப்பிட்டது ஏதோ என்ற ஏமாற்றம் செயற்பாட்" டையும் கொண்டு இயங்குகின்றது.
99
குறித்த வரைபு எல்லைகளையும் மீறி மொழி சென்றுவிடுகின்றது. மொழியின் வரைபு எல்லை (Limit) ஒவ்வொருகணமும் தோற்றமிழந்து விடுகின்றது. ஆதரவற்ற நிலைக்குச் சென்று விடுகின்றது. தன்னளவில் நிறைவை அதனால் தர முடியாதுள்ளது.
சொற்கள் வேண்டுமென்றே தவறான வழிகளுக்கு எங்களை இட்டுச் செல்கின்றன. எழுத்தாக்கங்கள் கிரகித்தலையும் மீறிச் செயற்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாறாக, மொழிபற்றிய மரபு வழி அணுகுமுறைகளுக்கு மாறுபட்டவாறு மேற்கூறிய கருத்துக்களை தெரிதா முன்மொழிந்தார்.
-28- • பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

தெரிதாவின் சிறப்பார்ந்த ஆக்கங்களுள் ஒன்றாகிய "மானிட விஞ்ஞானங்களின் கருத்து வினைப்பாட்டில் குறிகள், அமைப்பு மற்றும் g/ / / b” (Signs, Structure and play in the discourse of Human science) மொழியும், கருத்துக்கையளிப்பும், பிரதிபலிப்பும் பற்றிய, மாற்று அதிர்வுகளை முன்வைத்தது. பின்னவீனத்துவத்தின் எழுத்தாக்கத் தோற்றுவாயாக இந்த ஆய்வேடு குறிப்பிடப்படுகின்றது.
மொழி பற்றிய மாறுபாடான கருத்துக்களை தெரிதா மேலும் முன்னெடுத்துச் செல்கின்றார். உண்மையான மொழி சொல்லப்படுதெல்லாம் "உச்ச அளவான" மனிதத்துவதிலிருந்து தோன்றுவதில்லை என்பது அவரது வாதம். எழுத்து மொழி என்பது எழுதுபவனின் மனத்திலிருந்து வெளிவரவில்லை. யாரோ உருவாக்கிய குறியீட்டு வடிவில் அது நிலைமாறி அமர்ந்து கொள்ளுகின்றது. எழுதியவரின் உளநோக்கத்தை அது தெரிவிக்கவில்லை. எழுத்தின் பெளதிகத் தன்மை அல்லது அதன் தொழில்நுட்பப்பண்பு எழுதியவரின் உள்ளத்தை வெளிப்படுத்துவதற்குத் தடையாகவுள்ளது.
இதனைமேலும் விரிவாகக் கூறுவதானால், எழுத்தாளரின் இலக்கினை அடைய முடியாத தடையாகவும், அவரின் நோக்கத்தை முறியடித்துவிடும் தடையாகவும் எழுத்து அமைந்து விடுகின்றது. மொழி வழியாக மனித உள்ளத்தை வெளிப்படுத்துதல் என்பது தோல்வியில் முடிவதாகவே அமைகின்றது.
மொழியின் அடிப்படைத்தளமாகிய பேச்சிலிருந்துதான் மேல்தளமாகிய எழுத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் எழுத்தை அடியாதாரமான வடிவமாகக் கொள்ள முடியாது. இவ்வாறான பலவீனமான நிலையில் உருவாக்கப்பட்ட எழுத்தைத்தான் நவீன மனித சமூகம் நம்பியுள்ளது. நவீன எழுத்துச் சமூகத்தில் மனிதநேயம் வீழ்ச்சியடைந்து பிளவுகளும், சிதைவுகளும், அந்நியமயப்பாடும் மேலோங்கியுள்ளன. எழுத்தைவிடப் பேச்சுக்கு முக்கியத்துவம் தருதல் "பேச் சொலி மையவாதம்” (Phonocentricism) என்று தெரிதா குறிப்பிடுகின்றார். இவ்வாறு மையங்களுக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாதிருக்கும் நிலையையும் தெரிதா சாடுகின்றார். ஒரு மையத்துக்குள் செல்லும் பொழுது அதனுடன் தொடர்புடைய சொற்களுக்குள் சிக்கி வெளிவர முடியாது தவிக்கும் நிலையைத் தான் வற்படுத்தும்.
ஏதோ ஒரு மையம் அல்லது நடுவன்நிலை கட்டாயமாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்துவோர் “தொடு குறிமைய வாதத்தை" (Logo
கலாநிதி சபா.ஜெயராசா 29 ۔-

Page 18
centricism) வலியுறுத்துகின்றனர் என்று கூறும் தெரிதா இவற்றிலிருந்து விடுபட்டு எந்த மையத்துக்கும் இடந்தராமலிருத்தலின் முக்கியத்துவத்தை முன்மொழிகின்றார்.
எல்லாக் கருத்து நிகழ்வுகளும் மையப் புள்ளியை ஆதாரமாக வைத்தே இயக்கப்படுகின்றன. மையத்தைத் தகர்ப்பதன் வாயிலாகவே அதன் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும்.
தெரிதாவின் ஆக்கங்களில் பேச்சு மொழிக்குள் சிக்கிக் கொள்ளுதலும் எழுத்து மொழிக்குள் சிக்கிக் கொள்ளுதலும், ஆழ்ந்து நோக்கப்படுகின்றன. மொழி பற்றிய மரபுவழி அணுகுமுறைகளை அவர் தலைகீழாக்கிவிடுகின்றார்.
பேச்சை விட எழுத்து எளிதில் அழிவற்ற நிலையைக் கொண்டுள்ளது. தேவைக்கேற்றவாறு எழுத்து மறுபதிப்பு ஆக்கத்துக்கு உட்படுத்தப்படுகின்றது. பேசும்பொழுது பேச்சாளரை நேரடியாக அளிக்கை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் எழுத்துக்கு நூலாசிரியரின் நேரடியான பங்குபற்றல் வேண்டியதில்லை. எழுத்துதிசை மாற்றும் பண்பினைக் கொண்டுள்ளது என்று கூறும்பொழுது, எழுத்துக்குரிய அணிகளும் அலங்காரக் கூறுகளும் பேச்சிலிருந்து பெறப்பட்டவை என்பதை மறந்துவிடலாகாது.
பேச்சை முதன்மையாகவும் எழுத்தை இரண்டாவதாகவும் அமைக்கும் ஒழுங்கமைப்பை தெரிதா "மூர்க்கத் தனமான நிரலாக்கம்" (Violent Hierarchy) என்று குறிப்பிட்டார். மேலைப்புல ஆய்வாளர்கள் இந்த “அடாத்தான செயலை" மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
பேச்சும் எழுத்தும் ஓரினப் பண்பு கொண்டவை என்று விளக்கிய தெரிதாவின் கருத்து கட்டுமானக்குலைப்பின் அல்லது கட்டுமானத் தகர்ப்பின் (Deconstruction) முதற்படியாகின்றது ஏற்கனவே எழுதப்பட்டதுதான் பேச்சு. தகர்ந்து போதல் அல்லது கட்டுடைத்துச் செல்லல் மொழியில் இயல்பாகவே உட்பொதிந்துள்ளது.
ஒர் எழுத்தாக்கம் சூழலை உள்வாங்கி எழுத்தாளரினால் வடிவமைக்கப்படுகின்றது. அதேவேளை அந்த எழுத்தாக்கம் குறிப்பிட்ட சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறொரு சூழலில் வைத்து வாசிக்கப்பட முடியும். இந்நிலையில் கட்டுமான உடைப்பு அல்லது தகர்ப்பு சாத்தியமாகின்றது.
எழுதப்பட்ட செய்திக்குறிமுண்னைய செய்திக்குறிகளுடன் தொடர்புபட்டே நிற்கும், அவற்றிலிருந்து முற்றாக விலகி அல்லது
-30- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

அறுபட்டுப் பிரிந்து நிற்பதில்லை. அதேவேளை அது தன்னை *னங்காட்டமுயலும் பொழுது முன்னைய செய்திக் குறிக் கட்டமைப்பி லிருந்து விடுபட்டு நிற்கின்றது. அதாவது ஒருபுறம் இணைந்து நிற்கின்றது. 1றுபுறம் அறுந்தும் நிறகின்றது. கட்டுமானச் செயற்பாடுக்கு இத்தகைய ைெலயும் பங்களிப்புச் செய்கின்றது.
சிக்மன்ட் பிராய்ட் உருவாக்கிய நனவிலிமனமும், நனவிலி: மனத்தின் மொழியும், பற்றிய கருத்துக்கள் தெரிதாவின் மொழி பற்றிய சிந்தனைகளிலே தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும் அவர் சிக்மன்ட்பிராய்டின் ஆழ்மனமொழிக் கோட்பாட்டினை நிராகரித்து அதனை மூளையின் செயல்முறையுடன் தொடர்படுத்தி உலோகாயத" நோக்கில் அணுகுகின்றார்.
தெரிதாவின் மொழிபற்றிய அணுகுமுறைகள் "நிச்சயமற்ற சார்புத்தன்மையை" வெளிப்படுத்துகின்றன. கட்டுமான உடைப்பு சாத்தியமாயிருப்பினும் தலைகீழான தகர்பு சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
ஆனாலும், மொழியின் மீது மிகையான நம்பிக்கை வைத்திருத்தல் தெரிதாவினால் தகர்த்து விடப்படுதல் குறிப்பிடத்தக்கது. மொழி தனக்குள் தானே தன்னைப் பற்றிய முரண்பாடுகளைத் தாங்கிய வண்ணமுள்ளது.
மொழியிலிருந்து உருவாக்கப்படும் நூலியமும் குறிப்பிட்ட பொருளை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக தன்னை அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளுகின்றது. வாசகர் தமக்குரிய அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வதற்கு மொழி தன்னைத்தானே சிதறிடித்துக் கொள்ளும் இயல்பு வாய்ப்பளிக்கின்றது வாசகனது சுதந்திரமான உளச் செயற்பாட்டை உள்வாங்கிக் கொள்வதற்குரிய இடைவெளிகள் அல்லது வெற்றிடங்கள் மொழியிலே காணப்படுகின்றன.
மொழியை இறுக்கமான வடிவம் என்று கருதுவதன் பொய்ம்மையை தெரிதா வெளிப்படுத்தினார். இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் அவரது கட்டுமான உடைப்பு மேலெழுகின்றது.
எதிர் எண்ணக்கரு உருவாக்மே (Anticoncepts) அவரது எழுத்தாக்" கங்களில் முனைப்புப் பெறுகின்றன.
தெரிதாவை மலினமாக விளங்கிக்கொள்ளும் விமர்சகர்கள் அவர் நூலாசிரியரின் ஆக்கப்பணியைச்துச்சமாக மதித்து அதனை நிராகரித்து விட்டார் என்று கூறுகின்றனர். "நூலாசிரியரின் இறப்பு” என்பதை இந்த
கலாநிதி சபா.ஜெயராசா -31

Page 19
விமர்சகர்கள் குரூரமாக விளங்கிக் கொண்டார்கள் என்பதே யதார்த்தம். நூலாசிரியரையும், நூலியத்தையும் அவர் புதிய அறிகைத் தளத்துக்கு (Cognitive Base) உயர்த்திச் சென்றுள்ளார் என்று கொள்ளுதலே பொருத்தமான அணுகுமுறையாகும். இந்தப் புதிய அறிகைத் தளம் விரிசிந்தனைகளை மேலும் விசைப்படுத்த உதவுகின்றது.
-32- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

இபாப் ஹசனின் பின்வீனத்துவ முன்னோடி விளக்கம்
ன்னவீனத்துவம் தொடர்பான முன்னோடி விளக்கங்களைக்
கொடுத்தவர்களுள் ஒருவராக பேராசிரியர் இபாப் ஹசன் அமைகின்றார். இலக்கியப் பேராசிரியராகிய இபாப் ஹசன் 1971 ஆம் ஆண்டில் வெளியிட்ட கட்டுரையொன்றில் நவீனத்துவத்திலிருந்து பின்னவீனத்துவத்தை நோக்கிய திருப்பத்தை விளக்கினார். நவீனத்துவத்தைத் தழுவிய எழுத்தாளர்கள் வேண்டுமென்றே உருவாக்கும் படைப்புக்களின் உட்பொதிந்த "விளையாட்டுத்தனங்களை"ஹசன் சுட்டிக் காட்டுவதுடன் பின்னவீனத்துவப் பாய்ச்சல் விரைந்து முகிழ்க்கத் தொடங்கியது.
பின்னவீத்துவத்தை எதிர்மறை நிலையில் விளக்காமை ஹசனின் தனித்துவமாகக் கொள்ளப்படுகின்றது. மனித விசாரணைகளின் எல்லைகளைக் காட்டுவதுடன் மட்டும் அவரது நிலைப்புக் கொள்ளவில்லை" எழுதப்படாதவற்றை எழுதும் முயற்சியை அவர் முன்னெடுத்தார் என்று குறிப்பிடப்படுகின்றது.
நவீனத்துவத்தின் எதிர்மானிடப்படுத்தல், எதிர் இயற்கைப்படுத்தல் (Denaturalisation) என்பவற்றின் தெறிப்பு ஹசனின் சிந்தனைகளை ஈர்க்கின்றது. இவற்றின் வெளிப்பாடுகளை நோக்காது எழுத்தாளர்கள் மெளனத்தின் மறுபக்கத்தை நோக்கிச் செல்கின்றனர் என்பது அவரது முன்மொழிவு.
நகரமயமாக்கல் என்று நவீனத்துவத்திலே குறிப்பிட்ட எண்ணக்கருவுக்கு பின்னவீனத்துவக் கண்ணோட்டத்தில் ஹசன் பின்வருமாறு விளக்கம் தருகின்றார். பிரபஞ்சமாகிய நகரம், கோளக்கிராமம், விண்வெளி ஒடமாகிய பூமி என்றவாறு விஞ்ஞானப் புனைககைளிலே குறிப்பிடப்படுகின்றன. ஆனால் பின்னவீனத்துவ நோக்கில் சொல்ல முடியாத் துண்டங்களாக உலகம் பிளவுபட்டுள்ளது. தேசங்கள், குலக்குழுக்கள், கட்சிகள், மொழிகள், வட்டாரங்கள், வலயங்கள், என்றவாறான பிரிவுகள்
கலாநிதி சபா.ஜெயராசா -33

Page 20
பல்கிப் பெருகியுள்ளன. சிதறிய நிலைகளும் எதேச்சிகாரமும் எங்கும் தலைவிரித்து ஆடுகின்றன. இவை ஒரு புதிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றனவா அல்லது ஒருமைப்பாட்டுச் சிதறலை வெளிப்படுத்துகின்றனவா என்ற வினாவை பின்னவீனத்துவம் சார்பாக இவர் எழுப்புகின்றார்.
நகரங்களிலே வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பாலியல் விகார வெளிப்பாடுகள் மேற்கிளம்புகின்றன என்றவாறு நகரமயமாக்கல் தொடர்பான அவதானிப்புக்கள் மேலும் விரித்துரைக்கப்படுகின்றன.
தொழில் நுட்பவியலின் வளர்ச்சி கலைகளின் பெளதிகப் பொருட்களிலே மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஊடகங்கள், புதியவடிவங்கள் முதலியவை தீவிர விசாரணைகளையே வேண்டி நிற்கின்றன. கணினிகள் மனித உணர்ச்சிகளின் பதவீடுகளா அல்லது நீட்சிகளா என்ற வினா எழுகின்றது. கலை என்பது அதிகார உருவுள்ளதாகவும் எதேசாதிகார உருவமாகவும் அதனை ஏற்க வேண்டுமென்ற வற்புறுத்தலாகவும் மாறி வருதலையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அருவப்படுத்தல் என்பது "புதிய உருவப்படுத்தலாக”மாறுகின்றது. எதிர்மானிடப்படுத்தல் என்பது திரிபுநிலைவாதத்தை (Illusinism)ச் சென்றடைந்துள்ளது. திரிபு நிலைவாதம் கலைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தடம்பதித்துவிட்டது. திரிபுநிலை வாதத்தை ஊடகங்கள் வேகமாகவும் ஆழமாகவும் முன்னெடுத்து வருகின்றன திரிபுநிலைவாதம் என்பது அரசியல் மற்றும் நவயதார்த்தத்துடனும், பிரபலக் கலை" யுடனும் கைகோர்த்து நிற்கின்றது.
பழைய நடப்பியலின் முடிவு மனிதத் தன்னிலை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீனத்துவமும், பின்னவீனத்துவமும் தோற்றுவித்துள்ள எதிர் மானிடப்படுத்தல் விடுதலை மற்றும் தன்னிலை தொடர்பான மீளாய்வை வேண்டி நிற்கின்றது.
பின்னவீனத்துவம் வலிமையும், நிச்சயமும் ஆட்சியுடையதுமான தன்னிலைத் தெறிப்புக்கு இலக்கியங்களிலே இடமளிக்கின்றது என்றவாறு விளக்கும் ஹசன், "புனைவும், நேர்வுகளும் இணைவதால்" இது சாத்தியப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொல்நிலை வாதம் (Primitivism) பற்றி இவர் குறிப்பிடும் பொழுது, சமகாலத்தில் அந்தக் கருத்தியலில் நிகழ்ந்துவரும் பெயர்ச்சியை அவதானிப்புக்கு உள்ளாக்கினார். ஹிப்பிஇயக்கம், றொக் இசையும், கொமியூன்ஸ் எனப்படும் கூட்டில்லம் முதலியவை
-34- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

தொல்நிலைவாதத்தின் நிலைமாற்றம் பெற்ற வெளிப்பாடுகளாகவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வாதம் புதிய பாலுறவுக் கோலங்களை உருவாக்கியுள்ளது. இவற்றைப் புனையும் இலக்கிய ஆக்கங்களும் மேலெழத் தொடங்கி புள்ளன. கலை இலக்கியங்களிலும், அரசியலிலும், பண்பாடுகளிலும், ஆடை தயாரிப்பிலும் கூட எதிர் நியமவாதங்கள் (Antinomianism) வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன. அந்நியமாதலையும் கடந்து தொடர்ச்சிச் சிதறல்களை ஏற்கும் உளநிலையும் முகிழ்த் தெழத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமான அழகியலில் வலியுறுத்தப்பட்ட 'அழகும்", தனித்துவமுடைமையும் முடிவுக்கு வந்து விட்டன என்பது இவரின் அவதானிப்பு.
பின்னவீனத்துவம் கூறும் அழகியல் குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட எந்த கட்டளைகளையோ நியமங்களையோ வலியுறுத்த" வில்லை. வாழ்க்கையில் உள்ள வேறுபட்ட எவற்றையும் தெரிவு செய்யலாம் என்பதுடன் "இலக்கை முன்னிலைப்படுத்தும்" என்ற இணைப்பின் இறுக்கத்தைத் தளர்த்திவிடுகின்றது. பேசாப் பொருளைப் பேசுதலும், எல்லை நிலையில் உள்ளவற்றின் மீதுகாட்சியை விரிவுபடுத்துதலும், பன்முகப்பாங்குகளைக் கண்டறிதலும் பின்னவீனத்துவ இலக்கிய நிலவரங்களாக வெளிப்படுகின்றன.
பின்னவீனத்துவம் பற்றிய கடப்புத்திறனாய்வு நூற் பட்டியலை (Para Criticalbiblio Graphy) & 560 -gólupub (pubofloou GlobGlastGoor - இபாப் ஹசன் மேற்கூறிய அவதானிப்புக்களை பொருத்தமான எழுத்தாக்களை அடியொற்றி முன்வைத்தார்.
daun d'A) Pun.Giguurrasit -35

Page 21
கட்டடக்கலை நோக்கிற் பின்னவீனத்துவம்
க ட்டடக்கலை நோக்கில் பின்னவீனத்துவத்தை 1975ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஜென்ஸ் வெளிப்படுத்தினார். கட்டடக்கலையைப் பொறுத்தவரை நவீனத்துவத்திலிருந்து பின்னவீனம் விலகி நிற்பதை அவர் தமது ஆய்வுகளிலே தெளிவாகக் குறிப்பிடத் துணிந்தார். 1977 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட "பின்னவீனக் கட்டடக் கலையின் மொழி” (The Language of Post Modern Architure) 6T6čip g5!TGSloö 5l · LL5560)Gvயில் நிகழ்ந்த மாற்றங்களையும் பின்னவீனத்துவத்தையும் தொடர்புபடுத்திக் காட்டினார். 1972 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் திகதி 3.32 மணிக்கு கட்டடக்கலையில் நவீனத்துவம் வீழ்ச்சியடைந்து பின்னவீனத்" துவம் எழுச்சி கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட “பின்னவீனத்துவம் என்றால் என்ன?” என்ற நூலில் பண்பாட்டு நிலையிலும் நுண்மதிச் செயற்பாட்டு நிலையிலும் பின்னவீனத்துவம் பற்றிய விரிந்த பொருளை விளக்கியுள்ளார். பின்னவீனக் கட்டுமானங்கள் இரண்டு கோடற்குறிகளை (Codes) அல்லது மொழி களைக் கொண்டவை என்பது இவரது கருத்து.
நவீன கட்டடக்கலை ஆரவாரமின்றி மறைந்து சென்று விட்டது. அதற்காக ஒருவரும் கவலைப்படவுமில்லை. அதன் மறைவு மிசோறியில் உள்ள சென்லுசியில் நிகழ்ந்தது. “எமது தவறுகளுக்கு அனுபவங்கள் என்று பெயரிட்டுள்ளோம்" என்று ஒஸ்கர் வைல்ட் ஒருசமயம் குறிப்பிட்டார். இதே நிலைதான் நவீன கட்டடக்கலைக்கு ஏற்பட்டுள்ளமையைத் தொடர்புபடுத்திக்காட்ட வேண்டியுள்ளது. சர்வதேச நவீன கட்டடக்கலைஞர்களின் மாநாட்டில் விதந்துரைக்கப்பட்ட இலட்சியங்களின் அடிப்படையில் புறுத்து லிகோ (Pruit Lgoe) கட்டடம் ஆக்கப்பெற்றது. 1951ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த வரைபுக்கு அமெரிக்க கட்டடக் கலை நிறுவகத்தால் பரிசும் வழங்கப்பட்டது. இக்" கட்டத்தின் பதிநான்காம் அடுக்கின் மேல் "வானத்தின் வழித்தடம்" அமைக்கப்பட்டது. அந்த வானத்து வழி வண்டிகளில் இருந்து
-36- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

மனிதர்களுக்குப் பாதுகாப்புத் தந்தது. ஆனால் குற்றச் செயல்களில் இருந்து அதனாற் பாதுகாப்புத் தரமுடியாமற் போய்விட்டது. இது நவினத்துவத்தின் இயல்பு.
நகரத்தின் அடிப்படை மகிழ்ச்சிச் சாதனங்களாக சூரிய வெளிச்சம், வெளி, பசுமை என்பவை கட்டடக் கலை நோக்கிற் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைக் கருத்திற் கொண்டு பழைய வடிவங்களுக்குப் பதி: லீடாக புதிய வடிவங்கள் ஆக்கப்பட்டன. தருக்க பூர்வமாக அமைக்" கப்பட்டதாகக் கருதப்பட்ட நவீன கட்டடக் கலையில் தருக்கமின்மையே இழையோடி நின்றது.
நவீன கட்டடக்கலை பல்வேறு வகைப்பாடுகளையும், உந்தல்களையும் கொண்டிருந்தாலும் அவற்றிடையே பதிலீட்டுத் தன்மை" களும், எதிர்த் தருக்க நிலைகளும் காணப்பட்டன. அவற்றின் காரணமாக அதன் வீழ்ச்சி கவலையை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் நவீனத் துவ வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்களும் இருக்கின்றார்கள்.
கட்டடக்கலை நோக்கிலே நவீனத்துவத்தின் பின்னடைவுகளை உற்று நோக்கிய வல்லுனர்களாகிய ஏர்க்சின் (Ralph Erskine) வெந்துரி (Robert Venturi) (56pm Giò (Lucien Kroll) af pólii SFG33SITg5giữ35Gir (Kroer Brothers) மற்றும் பத்த அணியினர் ஆகியோர் நவீனத்துவத்தை விட்டு விலகிச் செல்லலாயினர்.
நவீனத்துவக் கட்டடக்கலையால் அதனைப் பயன்படுத்துவோர் மீது வினையாற்றலுடன் உறவாட முடியவில்லை. வரலாற்றுடனும், நகரத்துடனும் அதனால் நேரானதும் உரிய முறையிலான தொடர்பை ஏற்படுத்த முடியாமற் போய்விட்டது என்று சாால்ஸ் ஜென்ஸ்க் தமது அவதானிப்பை வெளிப்படுத்தினார். பின்னவீனத்துவக் கட்டடக்கலை புதிய நுட்பங்களையும், பயன்தரும் பழைய நுட்பங்களையும், பயன்தரும் பழைய கோலங்களையும் ஒன்றிணைத்து நிற்கின்றது. இது இரண்டு கோடல்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதன் கருத்து என்னவென்றால், மேலோங்கிகளின் இயல்புகளையும் வெகுசன இயல்புகளையும் (Elite / Popular) ஒன்றிணைக்கின்றது அதேவேளை பழைமையையும், புதுமையையும் ஒன்றிணைக்கின்றது. சமகால சமூக நடப்பியலுக்கு முகம் கொடுத்தலும் பின்னவீனத்துவ கட்டடக்கலையில் முன்னெடுக்கப்படுகின்றது. ஒருவகையில் ஓர் ஒட்டுமை (Hybrid) கலை மொழி இங்கே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் பாணியை பின்னவீனத்துவ ஒவியர்களும் எழுத்தாளர்களும் முழுமையாகப் பின்பற்றினார்கள் என்று கூற முடியாது.
கலாநிதி சபா.ஜெயராசா • -37

Page 22
நவீனத்துவக் கட்டடக்கலை சமூகத் தோல்வியைக் கண்டுள்ளமை தெளிவானது. இதனால் நவீனத்துவ அடிப்படையிலே கட்டப்பெற்ற கட்டடங்கள் இடித்துத்தள்ளப்பட்டுள்ளன. தரங்குறைந்த மலினமான அதன் அமைப்புப் பாகங்களும் தனியாளுக்குரிய இட ஒதுக்கீட்டுப் போதாமையும், அந்நியமாக்கலை உருவாக்கும் வீட்டுத்திட்டங்களும் கட்டடக்கலையில் நவீனத்துவத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
பின்னவீனத்துவத்தின் "இரட்டைக் கோடல் முறைமையை” றொபேர்ட் வென்துரி, ஹான்ஸ் ஹேலின், சார்ல்ஸ்மூர், றொபேர்ட் ஸ்ரேன், மிசேல் கிறேவ்ஸ், அரதா இசோசாக்கி முதலாம் புகழ்பூத்த கட்டடக்கலைஞர்கள் தமது கட்டட ஆக்கங்களிலே இங்கிதமாக
வெளிப்படுத்தினர்.
இவர்களுடைய கட்டடவாக்கங்கள் பல்வேறு கட்டடப் பண்புக் கூறுகளிலே கவனம் செலுத்தும் பன்மையியல் (Pluralism) வெளிப்பாடு கொண்டது. இந்தப் பண்மையியல் பல்வேறு இயல்புகளைக் கோவைப்படுத்தும் சமூக நடப்பியலோடு இணைந்து இசைவாக்கம் பெற்றது.
வரலாற்றுப் போக்குகளை அனுசரித்து ரூசியாவும் சீனாவும் சந்தை நிலை சோசலிசத்தை உருவாக்கியமை போன்று கட்டடக் கலையில் பின்னவீனத்துவம் இரட்டைக் கோடல்களை இணைப்புச் செய்ததாக சார்ல்ஸ் ஜென்ஸ்க் கூறுதல் ஒருவிதத்திலே "மலினமாக்கப்பட்ட" பொதுமையாக்கலாகவும் கொள்ளத்தக்கது.
தொடர்பாடற் சாதனங்கள் மையநீக்கற் பரவலாக்கற் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடும் அவரது கருத்து பின்னைய முதலாளியத்துக்கு ஒருவகையில் வலுவூட்டுவதாகவும் அமைந்” துள்ளது. தொடர்புபாடற் சாதனங்கள் கருத்துக்களை இணைத்து “ஒட்டுமை” வேலையைச் செய்கின்றன. சீனாவின் தியான்மென்சதுக்க மாணவர் எழுச்சி இவரால் விதந்து பாராட்டப்படுதல் பின்னவீனத்" துவத்தின் பின்னால் உள்ள அரசியல் உந்தலைப் புலப்படுத்துகின்றது.
பின் சோசலிசம் (Post Socialism) என்ற சொல் 1980 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் முன்வைக்கப்பட்டாலும் அந்த எண்ணக்கரு இவரால் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
துண்டாடப்பட்ட முழுமை, நோக்கில் அறிவும் விஞ்ஞானமும் வளர்க்கப்படுதல் இவர்களின் நோக்கில் எதிர்ப்புக்கும் மறுதலிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றது. அறிவின் பண்பாட்டு இயல்பு "முன்னிலைப்
-38- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

படுத்தப்படல் வேண்டு"மென இவர் வற்புறுத்துகின்றார். உலகின் உயிர்ப்புபொருட்களும், ஏனைய பொருட்களும் ஏதோ ஒரு விதத்திலே ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்ப்ட்டுள்ளன அல்லது ஏதோ ஒருவிதத்தில் இவை இணைக்கப்படக்கூடியவை என்று பின்னவீனத்துவம் கருதுகின்றது. நவீனத்துவத்தின் சுருக்கி நோக்கலும், பகுப்பாய்வுகளும், சிறப்புத் தேர்ச்சிகளும் இந்தக் கருத்து வினைப்பாட்டில் அக்கறை செலுத்தத் தவறியுள்ளன. மெய்யியல் இறையியல், மற்றும் சமூகவியல், ஆகிய துறைகள் பகுதிகளின் தொடர்புகளை ஆழ்ந்து ஊடுருவி நோக்கிய அளவுக்கு நவீன விஞ்ஞானத்தினால் நோக்க முடியாமற் போய் விட்டது. இவற்றைக் கருத்திலே ஆழ்ந்து நோக்கிப் பின்னவீனத்துவ அறிகை முறை வழிநடத்தப்படுவதாக குறிப்பிடுகிறார்.
இவர் குறிப்பிடும் ஒட்டுமையும், ஒன்றிணைப்பு நோக்கும் ஏற்கனவே மார்க்சிய அறிகையில் ஆழ்ந்து வலியுறுத்தப்பட்டமையைப் புறக்கணித்துவிட முடியாது.
கலாநிதி சபா.ஜெயராசா -39

Page 23
லியோதாத் வழங்கிய பின்னவீனத்துவ நிலவரம்
1970 gyLb g60îlqGö GSIGu7575 (Jean Francois Lyotard) "L'îlaï607வீனத்துவ நிலவரம்: அறிவு பற்றிய ஓர் அறிக்கை" (The Postmodern Condition : A Report on Knowledge) 6T607 Lugg, Go Gifயிட்டார். , ,
வளர்ந்த சமூகங்களின் அறிவின் நிலவரம் பற்றிய தேடலை அவர் மேற்கொண்டார். அந்த அறிவுத் தேடலில் அவர் பெரும் உரையங்களை (Metanarratives) ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். பெரும் உரையங்களுடன் விஞ்ஞானம் முரண்பாடு கொண்டு நிற்பதை அவர் முதலிலே சுட்டிக் காட்டினார் ஆனால் விஞ்ஞானம் தனக்குரிய விதிகளினூடாக ஆடலை மேற்கொண்டதேயன்றி நிலவரங்களைக் கண்டறியவில்லை.
பெரும் உரையங்கள் ஒருபுறம் அரசியல் விளக்கங்களையும் மறுபுறம் மெய்யியல் விளக்கங்களையும் கொண்டுள்ளன. பெரும் வீரர்களை, பெரும் இலட்சியங்களை விளக்க வந்த உரையங்கள் தமது இருப்பை இழந்து வருகின்றன. ஆழ்ந்து பார்க்கும் பொழுதுமொழியிலே பல் வகைப்பட்ட தனிமங்களே பரக்கக் காணப்படுகின்றன. உண்மையையும் நீதிகளையும் கண்டறிவதற்கு பெரும் உரையங்கள் உதவமாட்டாது என்பது லியோதாத்தின் கருத்து பின்னவீனத்துவ அறிவு என்பது அதிகாரத்தில் உள்ளவர்களுக்குரிய கருவியாகமாட்டாது.
பெரும் உரையங்கள் சர்வாதிகாரப் போக்குடையவை என்பது இவரது வாதம். இவை பண்பாட்டு அளவு கோல்களை உருவாக்கியும் நெறிப்படுத்தியும் வருகின்றன. உலகம் சார்ந்ததும் கோட்பாடுகள் சார்ந்ததுமான விசாரணை மரபுகளை அவை உள்ளடக்கி நிற்கின்றன. பிரஞ்சுப் புரட்சியும் அதனை முன்னெடுத்த எழுத்தாக்கங்களும் உய்வுத் தூண்டலை (Emancipation) உள்ளடக்கிய பெரும் உரையங்களாக அமைகின்றன. இவரது கண்ணோட்டத்தில் மார்க்சியமும் ஒரு பெரும் உரையம் தான்.
-40- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

விஞ்ஞான மரபு மற்றும் பெரும் உரையங்கள் என்ற இருநிலைகளில் அறிவு முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டும் வருகின்றது. இந்த அடிப்படைகளில் அறிவுக்கையளிப்பு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்து வருகின்றன. இவற்றின் வழியாகச் சர்வாதிகாரப் போக்கே மீளவலியுறுத்தப்பட்டு வருகின்றன.
Awwyg sur.Ggugram -41 -

Page 24
றோலண்ட் பார்த்தின் வாசகர் பிறப்பு
ன்னவீனத்துவத்தின் பிறிதொரு பரிமாணத்தை றோலண்ட் பார்த் (1915-1980) எழுதிய "ஆசிரியரின் இறப்பு” (Roland Bartese The Death of the Author) என்ற கட்டுரை முன்னெடுக்கின்றது. நூலியத்தின் (Text) அதிகார மையமாகக் கருதப்பட்டு வந்த நூலாசிரியர் பற்றிய மரபுவழிச்சிந்தனை மையப்படுத்தலைத் தகர்க்கும் விதத்தில் பார்த் தந்த மாற்றுச்சிந்தனகள் அமைந்தன.
பிரான்சில் வளர்ச்சி பெற்று வந்த மார்க்சிய சிந்தனைகள் மரபு வழியாகக் கட்டமைப்புச் செய்யப்பட்ட அறிகை உளப்பாங்குகளை மீளாய்வுக்கு உட்படுத்தின. இதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக நூலியம் பற்றிய மரபுவழி அறிகைக்கட்டமைப்பும் மீளாய்வுக்கும், உசாவலுக்கும் உட்படுத்தியமையின் வெளிப்பாடாக "நூலாசிரியரின் இறப்பு" மேலெழுந்தது. பார்த்திடம் காணப்பெற்ற மார்க்சிய அறிவு, சமூகவியல் அறிவு, மொழியியல் மற்றும் பண்பாட்டு அறிவு முதலியவற்றின் திரண்டெழுந்த ஓங்கல் நூலியம் தொடர்பான புதிய புலக்காட்சியைத் தோற்றுவித்தது. மார்க்சியத்தின் வலுவூட்டல் அவரிடத்துக் காணப்பட்டாலும் மார்ச்சிய நிராகரிப்பும் ஏககாலத்தில் நிலைகொண்டுள்ளது. நூலாசிரியரின் ஒருதலைப்பட்சமான தொடர்பாடல் முறைமையின் அழுத்தங்களுக்குள், சிக்கிக்கொள்ளாது, வாசகரின் உள்ளம் பொதிந்த பொருள்கோடலை முன்னெடுப்பதற்குரிய மூடுபனி உடைப்பை பார்த் மேற்கொண்டார்.
ஓர் ஆக்கத்தின் ஒவ்வொரு முனைப்பிலும், ஒவ்வொரு விளிம்பிலும் பல விதமான கருத்துக் கோடல்களுக்குரிய பதிவுகள் காணப்படுகின்றன. பலவித அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அவற்றை அறிந்து கொள்வதற்கு ஆசிரிய மையப்பாட்டு ஆதிக்கம் தகர்க்கப்பட வேண்டியிருத்தலின் அறிவுறுத்தலாக "ஆசிரியரின் இறப்பு" என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது.
-42- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவ சிந்தனையாளர்கள் மொழி மற்றும் சொற்களின் நம்பகத்தன்மை பற்றிய பல்வேறு வினாக்களையும் ஐயப்பாடுகளையும் எழுப்பியுள்ளார்கள். அவற்றின் விரிவாக பார்தின் நோக்கல் அமைந்துள்ளது.
நூலாசிரியர் நூலுக்குள் நிற்கும் அதேவேளை நூலுக்கு வெளியில் எண்ணிறந்த உறவுகளைத் தொடர்புபடுத்தி நிற்கின்றார். ஒரே நேரத்தில் மொழி தனக்குரிய பலத்தையும் பலவீனங்களையும் தன்னகத்தே உள்ளடக்கி நிற்பதால் மாறுபட்ட கருத்தாக்கங்களுக்கும் எண்ணிறந்த கருத்தாக்கங்களுக்கும் வழியமைத்துக் கொடுப்பதால், நூலாசிரியருக்குரிய தனித்துவமான உறுதிப்பாடு செயலிழந்து விடுகின்றது. புற" மிருக்கும் வாசகர் நூலியத்தினுள் நுழைந்து சுதந்திரமாக உறவாடுவதற்குரிய நுழைவாயில் அனுமதியை "நூலாசிரியரின் இறப்பு” என்ற எண்ணக்கரு மேலும் உருவாக்கித் தந்துள்ளது. A.
ஒருவகையானவாசிப்பு, ஒரே வகையான பொருளைத் தெறித்தல் என்றவாறான "ஒருமை இயல்" தகர்க்கப்பட்டு வாசிப்பில் "பன்மை இயல்" ஆக்கம் பெறுகின்றது. பின்னவீத்துவ வாதிகளால் வலியுறுத்தப்படுகின்ற ஒரு பொதுவான எண்ணக்கருவாக "பண்மையியல்" அல்லது பன்மைநிலை அணுகுமுறை விளங்குகின்றது.
படைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அது ஆக்கியவரின் கைகளை விட்டு நழுவிச் சென்று விடுகின்றது. அவர் பயன்படுத்திய ஊடகம் அவரை மீறிச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. படைப்பை உருவாக்கும் பொழுது அந்த ஊடகம் முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் நின்றதா என்பதும் கேள்விக்குரியது. ஊடகம் பற்றிய மனம் பதகளிப்போடுதான் கலைப்படைப்பு மேலெழுகின்றது. ஊடகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கும்வேளை படைப்பாளியின் நம்பகத்தன்மையும் அதே திசையில் நகர்த்தப்படுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டாற் போன்று, பார்த் பல்வேறு அறிவுத்துறைகளிலே தம் ஈடுபடுத்திக் கொண்டவராக விளங்கினார். மொழியியல், மெய்யியல், இலக்கியத் திறனாய்வு தொடர்பியல் என்றவாறு அவரது அறிவுப் புலம் விரிவடைந்து சென்றது. அனைத்துப் பின்னவீனத்துவவாதிகளிடத்தும் பொதுவாக இவ்வகையான பலதுறை அறிவுப்பாங்கு காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சிறப்புக்கல்வியில் (Specific Specialisation) மூழ்கியிருந்தோரின் ஒடுங்கிய பார்வையில் இருந்து பின்னவீனத்துவாதிகள் விலகிச் சென்றமைக்கு பரந்ததுறை அறிவுப்பாங்கு ஒரு காரணமாக அமைந்தது.
கலாநிதி சபா.ஜெயராசா - 43

Page 25
ஒரே வகையான கல்வியைப் பின்பற்றச் செய்தல், ஒரேவகையான எழுத்து நடையைப் பின்பற்றச் செய்தல் முதலியவை பூர்சுவாக்களின் அடாத்தான நடவடிக்கை என்பது இவருடைய கருத்து. தன்னால் வெளிப்படுத்த முடியாதவற்றை பூர்சுவா சமூகம் இருப்பாகக் கொள்வதில்லை.
மொழி மற்றும் தொடர்பாடல் தொடர்பான இவரது கருத்துக்கள் "குறியியலின் மூலகங்கள்" (Elements of Semiolgy) என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளன. மொழியின் பொருள் வெளிப்படுத்தும் அமைப்புக்களை இவர் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தினார். மேற்பொருள் (Denotation) உட்பொருள்.(Connotation) என்ற இரண்டும் இணைந்த வகையிலே பொருட்கையளிப்பு இடம் பெறுகின்றது. இந்த இருவகை மொழிக்குமிடையேயுள்ள முரணி பாடுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. மொழியும், பொருள் கோடலும் ஒரு "திறந்த" செயல்முறை என்பது இவரது கருத்து.
எழுத்தாளர்களையும் எழுத்தாக்கங்களையும் இரு வகைகளாக வேறுபடுத்தும் நோக்கு இவரால் மேற்கொள்ளப்படுகின்றது. இலட்சியங்களை எழுத்தால் வரிந்து முன்னெடுத்துக் கொள்ளாது வெறுமனே எழுத்தைப் பயன்படுத்தும் "எழுத்துப்பதிப்போர்” (E Crivain) ஒரு வகையினர் பொருள்நோக்கி இலட்சியம் நோக்கி எழுதுபவர் “எழுத்தர்” (E* Crovant) என் போர் இன்னொரு வகையினர். இலட்சியத்தினைப் புறந்தள்ளி வெறுமனே எழுத்தைப் படைப்பவனை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது என்பது இவரது வாதம்.
இலக்கியங்களையும் இவர் இருவகைப்படுத்துகின்றார். ஒருவகை இலக்கியங்கள் வாசகரது பங்குபற்றலையும் பங்களிப்பையும் ஏற்படுத்தக் கூடியவை. மற்றைய வகையான இலக்கியங்கள், வெறும் நுகர்ச்சியாளராக சோம்பேறிகளாக வாசகரை மாற்றிவிடும் இல்கியங்கள் இவை நவீன வர்த்தகச் செயற்பாடுகளின் நேரடியான வெளிப்பாடுகளாகவுள்ளன. இவை பற்றிய விரிவான கருத்துக்கள் பார்தினுடைய S/Zநூலில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான நீண்ட ஆய்வுகளுக்குப் பின்னரே நூலாசிரியரின் இறப்பிலே வாசகரின் பிறப்புத் தோன்றுவதாக அவர் வெளியிட்டார். நூலாசிரியர், வாசகர், விமர்சகர் ஆகியோரிடம் தன்னுணர்வுடைமை இருத்தல் இவரது வலியுறுத்தலாகின்றது.
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல் = 44۔

மிசேல் பூக்கோவின் அறிகை முறைமை
ன்னவீனத்துவச் சிந்தனை முன்னெடுப்பில் மிசேல்பூக்கோ (19261984) தனித்துவமானவர். இளமைக்காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் அமைப்பியல் வாதியாகிய லுயி அல்துசரின் மாணவர். பிரான்சில் நிகழ்ந்த மாணவர் போராட்டங்களில் தீவிரபங்கு கொண்டவர். மார்க்சியம், இருப்பியம் பிராய்டிசம் முதலியவற்றின் செல்வாக்குகள் இவரது சிந்தனைகளில் ஊடுருவியுள்ளன. மெய்யியல், அரசியல், உளவியல், கல்வியியல், வரலாறு, பண்பாட்டியல் போன்ற துறைகளில் இவரது எழுத்தாக்கங்கள் மேலெழுந்தன பின் அமைப்புவாதம் மற்றும் பின்னவீனத்துவம் முதலாம் எழுபோக்குகளில் இவரது சிந்தனைப் பாய்ச்சல்கள் விரவி நிற்கின்றன.
9ig56,5676.5ITGiyasugi (The Archaeology of knowledge) -96bagi அறிவின் அகழ்வாய்வு, உளநோயும் பண்பாடும் (Madness and Civilization) Glu/TC56i 56lflai (Up60p60) LD (The order of things) egy6üGug5) பொருள்களின் ஒழுங்கு முறைமை, ஒழுக்காறும் ஒறுத்தலும் (Discipline and Punish) முதலாம்பல நூல்கள் வாயிலாகவும், ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாகவும் தமது கருத்துக்களை முன்னெடுத்தார். விடுதலை (Liberation) வார இதழின் ஆசிரியராக இருந்த காலத்திலும் இவரது முற்போக்கு எழுத்தாக்கங்கள் மேலெழுச்சி கொண்டன.
இவர் பயன்படுத்திய ஆய்வுமுறை மையமழித்தல் கருத்து வினைப்பாட்டு ஆக்கம் (Discursive formation) மற்றும் அறிவின் அகழ்வாய்வு ஆகியவற்றைத் தழுவி நின்றன. மனிதரின் தன்னிலை ஓங்கலையும் அதிகார வரிப்புக்களையும் தகர்த்தல், "மையம் அழித்தலா"கின்றது. கருத்து வினைப்பாட்டினை அதிகாரம், ஆதிக்கம் முதலியவற்றுடன் இணைத்து நோக்குதல் இவரது ஆய்வு முறையின் சிறப்புப் பரிமாணமாக ဦးနှီ/ကွ္ဆန္တိမ္ပိ நிலை பேறு கொண்ட கூட்டுத்தன்மை வாய்ந்த சிக்கலான செயல்முறைகளினால் கருத்து
கலாநிதி சபா.ஜெயராசா - 45

Page 26
வினைப்பாடு உருவாக்கம் பெறுகின்றது என்ற கருத்தை பூக்கோ முன்வைத்தார்.
கருத்து வினைப்பாட்டு ஆக்கம் என்பதற்கு பூக்கோ தனித்துவமான விளக்கம் தருகின்றார். சிக்கலான சமூகக் கருத்து வினைப்பாட்டு ஆக்கத்திலிருந்துதான். தனிமனிதரின் கருத்து வினைப்பாடு மேலோங்குதலையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதிக்க முறைமை,உலக நோக்கு, சிந்தனைக் கோலங்கள், மேலோங்கிய கருத்தியல்களின் செய்முறை முதலியவற்றிலிருந்து கருத்து வினைப்பாடு ஆக்கம் பெறுகின்றது. மேற்கூறிய உலக நோக்குக்குப் பதிலாக அவர் கருத்து வினைப்பாட்டு ஆக்கம் என்ற எண்ணக்கரு வினைப்பயன்படுத்தினார். அறிவின் ஆக்கம், கையளிப்பு, ஆகியவற்றை உட்கொண்ட பண்பாட்டு விதிகளும் அவற்றின் இயக்கங்களும் கருத்து வினைப்பாட்டில் அடக்கப்பட்டிருத்தல் அவரது அணுகுமுறையாகின்றது.
மொழி பற்றிய கண்ணோட்டம் மத்திய காலம்முதல் இன்றைய காலம் வரை மாற்றமடைந்து வருதலை "பொருள்களின் முறைமை" என்ற நூலிலே அவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். பின்னவீனத்துவத்தின் அதீத ஈடுபாட்டுக்குரிய பொருளாக மொழி அமைந்திருத்தல் இவ்வேளையிலே சுட்டிக் காட்டப்படத்தக்கது.
பிரான்சின் கமியூனிசக் க்ட்சி உறுப்பினராக இவர் இருந்த காலத்தில் பிரான்சில் உளவியலிலே அக்காலத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த உளப்பகுப்பியலில் (Psycho Analysis) இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இந்த ஈடுபாடுதான் "உளநோயும் நாகரிகமும்” மற்றும் "பாலியல் வரலாறு" முதலாம் நூலாக்கங்களை மேற்கொள்வதற்குத் தூண்டுதலாயிற்று.
ஒருவருக்குத் தண்டனை வழங்குவதிலும் பார்க்க தண்டனை பற்றிய குரூரமான பயமுறுத்தல்களே கூடிய உளத்தாக்கத்தை ஏற்படுத்தவதாக அவர் குறிப்பிடுகின்றார். உளநோய்க்கும் அதிகாரத்தின் அழுத்தங்களுக்குமுரிய தொடர்புகள் இவரால் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன.7
தாம் எடுத்துக் கொண்ட கருத்து, வினைப்பாட்டினை மருத்துவ அறிகையிலும் இவர் பயன்படுத்தினார். மருத்துவ வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை நோய் என்பது மனித வாழ்க்கைக்கு எதிராக உடலில் இருந்து எழும் தீய சக்தியாகக் கருதப்பட்டது. நவீன மருத்துவக் கண்ணோட்டம் அந்தப் பழைய அணுகுமுறையினைத் தகர்த்து நின்றது. நோயை எதிர்ப்பொருளாக
-46- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நோக்காது நேர்ப்பொருளாக நோக்கும் கருத்து வினைப்பாடு மேலெழந்தது.
புதிய கருத்து வினைப்பாட்டில் நோய் என்ற எண்ணக்கருவும் மரணம் என்ற எண்ணக்கருவும் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்தப் புதிய கருத்து வினைப்பாடு நோயை உடலில் இருந்து பிரித்து நோக்கும் புலக்காட்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இன்றைய மருத்துவம் வெற்றிகளை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்று கூறுவதற்குரிய பலம் அந்தக் கருத்து வினைப்பாட்டின் ஆக்கத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தக் கருத்துவினைப்பாட்டுக்கு உள்ளிருந்தவாறே அதன் வெற்றி பேசப்படுகின்றது.
கருத்து வினைப்பாடு என்பது தனக்குரிய பலத்தையும், பலவீனத்தையும் ஒரே நேரத்திலே கொண்டுள்ளது. ஒரு கருத்து வினைப்பாடு தன்னைத்தானே கணிப்பீடு செய்வதற்கான அடிப்படைகளை தானே பலவீனப்படுத்தும் இயல்பையும் கொண்டிருக்கும். குறித்த கருத்து வினைப்பாட்டுக் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அதன் பலவீனங்கள் மேலும் துலக்கமுறும்.
அதாவது மேலாதிக்க அதிகாரத்துக்கும் அறிவுக்குமுள்ள தொடர்பை பூக்கோ பல ஆதாரங்களினால் வெளிப்படுத்துகின்றார். ஒவ்வொருகால கட்டங்களிலும் அதிகாரத்திலுள்ளோர் இவ்வகை அறிகுவியங்களை உருவாக்கிக் கொள்வர். பூக்கோவின் "அறிவின் தொல்லியல்" மற்றும் "பொருள்களின் முறைமை" முதலாம் நூல்களில் அறிகுவியங்கள் பற்றிய அகழ்வாய்வு இடம் பெற்றுள்ளது.
மனித சிந்தனைப் போக்கு ஒர் அறிகுவியத்திலிருந்து இன்னோர் அறிகுவியத்துக்கு மாறிக்கொண்டேயிருக்கும். இந்த மாற்றங்கள் அதிகார நிலைப்பட்ட மாற்றங்களாகவே இருக்கும்.
மேலைத்தேய அறிகை முறைமைகளும், மெய்யியற் சிந்தனைகளும் ஒடுக்குமுறைப் பண்பையும், வன்முறைப் பண்புகளையும் உள்ளடக்கி உள்ளன. இந்த மேலைப்புலத்து ஓங்கிய சிந்தனைகளும் அணுகுமுறைகளும் உளநோயாளிகளை எவ்வாறு குரூரமாக நோக்கின என்பதைக் காணமுடியும்.
அதிகாரத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள, எல்லை நிலையிலுள்ள, உளநோயாளர்கள், கைதிகள், விலகல் நடத்தை கொண்டோர் முதலியோருக்காகக் குரல் எழுப்புதல் இவரது எழுத்தாக்கங்களிலே மேலெழுந்து வருகின்றன. அதிகாரம்மேலோங்கியோரது கைகளில்
கலாநிதி சபா.ஜெயராசா -47

Page 27
அறிவும், கல்வியும் வலுவுடன் செயற்படுகின்றன. கல்வியும், விஞ்ஞானமும் அதிகாரத்தின் வடிவங்களாகின்றன.
அறிகுவியங்களின் (Epistemes) தொடர்ச்சியான வரலாற்றை “பொருள்களின் ஒழுங்கு முறைமை"யில் விரிவாக விளக்கியுள்ளார். மறுமலர்ச்சிக் காலம், செந்நெறிக் காலம், நவீனத்துவக் காலம், பின்னவீனத்துவக்காலம், ஆகியவற்றில் அந்த அந்தக் காலங்களுக்குரிய அறிகுவியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையை பூக்கோ தெளிவுபடுத்துகின்றார். மறுமலர்ச்சிக்காலத்தில் இயற்கை விஞ்ஞானம் எழுச்சி பெறவில்லை. இக்காலத்தில் மனித நிலைக்கும் மனிதமற்ற நிலைக்கு" மிடையே வேறுபாடு காணப்படவில்லை. இந்நிலையில் இயற்கை விஞ்ஞானம் வளர்ச்சி பெறுவதற்குரிய அமைப்பாக்கம் ஏற்படாதிருந்தது.
செந்நெறிக்காலத்தில் இயற்கை விஞ்ஞானம் வளர்ச்சி பெறலாயிற்று. மனித நிலைக்கும் மனித மற்ற நிலைக்குமிடையே வேறுபாடு நோக்கப்படுகின்றது. மனித உள்ளம் புறவுலகை வேறுபடுத்தி ஆராய முற்பட்டது. அறியும் பொருள்களுக்குப் பெயரிடலும் எண்ணக் கரு” வாக்கம் செய்தலும் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் கருத்து வினைப்பாடே செந்நெறிக் காலத்திற் குவியப்படுத்தப்படலாயிற்று.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதுவும் மாற்றமடையத் தொடங்கிற்று. இயற்கை விஞ்ஞானமும் மானிட விஞ்ஞானமும் புறத்தோற்றங்களின் உள்ளமைந்த மறைபொருளைத் தேடின. இதன்விளைவாக உயிரினங்களின் கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி சார்ல்ஸ் டாவினாற் கண்டறியப்பட்டது.
மனித மொழி பிரதிபலிப்புத் தன்மை கொண்டதாக இருத்தல் மட்டுமன்றி, மொழியைப் பயன்படுத்துவோரால் அறிந்து கொள்ளப்படாத வலுவையும் கொண்டுள்ளமையால் அதன்தாக்கம் மனிதருக்கும் புறப்பொருளுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை ஒழித்து விடுகின்றது.
தனது அனுபவங்களில் வாழும் உளவியல் மனிதனைக் கண்டறிந்” தமையைத் தொடர்ந்து இயற்கைக்கும் மனிதருக்குமிடையேயான வேறுபாடு மேலோங்கத் தொடங்கியது. இருப்பியம் நான் (1) என்பதை வலியுறுத்திய மெய்யியலாயிற்று. இதனைத் தொடர்ந்து நான் என்பதை முதல் நிலைப்படுத்தலின் விளைவாக மனிதருக்குள்ளேயே பிளவுகள் ஏற்படலாயின.
இந்தப் புதிய புலப்பாடு பின்னவீனத்துவ காலத்திலே தோன்று
கின்றது. ஆயினும் பின்னவீத்துவத்தின் அறிகுவியம் முழுமையாக வெளிப்படவில்லை.
-48- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

ஒவ்வொருகாலத்திலும் உருவாக்கம் பெற்ற அறிகுவியங்கள் முன்னைய காலத்து அறிகுவியங்களின் அறைகூவல்களுக்கு விடை தருவதாக அமைந்தது. இந்த முன்னேற்றத்தை உண்மையை நோக்கிய முன்னேற்றம் என்று கொள்ள முடியாது. பூக்கோவின் ஆரம்ப காலத்தைய ஆய்வுகள் மொழிக்கட்டமைப்பின் மீதும் அறிவுக் கட்டமைப்பின் மீது ஆழ்ந்த கவனஈர்ப்பைக் கொண்டிருந்தன.
தொடர்ந்து எழுந்த அவரது ஆய்வுகளில் அதிகாரம் (Power) பற்றிய அறிகை மேலோங்கியது. அதிகார உறவுகள் மனித உடலின் மீது உடனடியானதும் நேரடியானதுமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மனித உடலை வதைக்கின்றன முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தில் மனித உடலுக்கு அப்பால் புறத்திலிருக்கும் செயற்பாடுகளே அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இருந்தது. மனித உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ளே அதிகாரத்தைச் செலுத்தி மனித உளப்பாங்குகளைக் கட்டுப்படுத்தும் தேவையை முதலாளித்துவ அதிகாரமுறைமை உண்டாக்கியது. இந்த உட்செலுத்துகையில் மொழியும் கருத்தேற்றமும் சிறப்பிடம் பெறுகின்றன.
மனித உடல் அதற்குச் சொந்தமான பற்றுதியையும் தன்னதிகாரத்" தையும் கொண்டுள்ளது. புறமிருந்து அதிகார வலுவை மனிதருக்குள்ளே செலுத்தும் பொழுது அது மறுதலிக்கின்றது. இந்த வலுவே புரட்சிகளுக்கு அடிநிலையாகின்றது.
“ஒழுக்காறும் ஒறுத்தலும்" (Discipline and punish) என்ற நூலிலே அதிகார வலுவை மேலும் விரிவுபடுத்திக் கூறியுள்ளார். மனித உடலைக் கீழ்ப்படிய வைப்பதற்கு அதிகாரம் மேற்கொண்ட நுட்பங்களை விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பிராய்டிசத்தின் வளர்ச்சி பாலியல் தொடர்பான கருத்துவினைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இவையும் சமூக அதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவுள்ளன. மானிடத்தை கையாளும் கருத்து வினைப்பாடாக இது வளர்ச்சியுற்றுள்ளது. உடல் மீதான ஆதிக்கம், உடலின் ஆதிக்கம் என்ற இரண்டு துருவப்பாடுகள் பற்றி பூக்கோ குறிப்பிடுகின்றார்.
பிரான்சியப் புரட்சி குற்றவியல் எண்ணக்கருக்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களுக்கு அரசியல் அர்த்தங்கள் கொடுக்கப்படலாயின. சட்ட மீறல்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதை உணர்ந்த முதலாளி வர்க்கம் அதிலிருந்து தப்புவதற்குப் புதிய சட்ட ஒழுங்குகளை உருவாக்கி வருகின்றது. இந்தப் புதிய சட்டங்கள்
கலாநிதி சபா.ஜெயராசா -49

Page 28
முன்னைய சட்டங்களைக்காட்டிலும் வெளித்தோற்றத்தில் மென்மையாகத் தோன்றினாலும் செயற்பாட்டில் அதிக தாக்கம் விளைவிப்பவை. இதனால் குற்றமிழைப்பவர்கள் திருந்தப் போவதில்லை. மாறாக அவர்களிடத்து வைராக்கியத்தையே வளர்த்து விடுகின்றது.
பூக்கோவின் அதிகாரம் பற்றிய சிந்தனைகள் மார்க்சிய முலாம் பூசப்பட்ட ஆனால், மார்க்சிய எதிர்ப்புச் சிந்தனைகளாகவே இருக்கின்றன. பின்னவீனத்துவச் சிந்தனைகளின் பொதுவான தளம் மார்க்சிய எதிர்பாகவும், திரிபுபடுத்தலாகவும் விளங்குகின்றது. மரபுவழி சிந்தனையாளர்களைப் போன்று பூக்கோவும் தோற்றப்பாடுகளை விளக்கியுள்ளார். ஆனால் புதிய புதிய சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தி விளக்கியுள்ளார். ஆனால் இருப்பை மாற்றியமைத்தல் தொடர்பாக பூக்கோவினால் நகர முடியாது.
ஒடுக்கப்பட்டவர்களை அரசியல் மயப்படுத்தலை பூக்கோ முன்னெடுத்துள்ளமை முன்னேற்றகரமாக இருப்பினும் மேற்கொண்டு அமையவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய திட்டங்களை அவர் முன்மொழியவில்லை. தனிமனித மையத்தை மறுப்பதில் இவரது சிந்தனைகள் மார்க்சியத்தை மீற முடியாமலிருக்கின்றன.
-50- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பூக்கோவும் பெண்ணியமும் பின்னவீனத்துவமும்
மகாலப் பாராளுமன்ற முறைமை பற்றிய அறிவு சார்ந்த
வினாக்களை முன்வைத்த மிசேல் பூக்கோ நவீன அரசியல் நடவடிக்கைகள் இருண்ட எதிர் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டு நிற்பதைச் சுட்டிக் காட்டினார். மனித உடலுக்கு எதிரான புதிய ஒழுக்காற்று முறைமை சமகாலத்தில் உருவாக்கப்பட்டுவருதலைத் தெளிவுபடுத்தினார்.
பாடசாலை, வைத்தியசாலை, சிறைச்சாலை, இராணுவம் முதலிய ஒழுக்காற்றுச் செயல்முறைகளால் மனித உடலின் பயனுடைமையை மேலோங்கச் செய்வதற்கான செயற்பாடுகள் குவியப்படுத்தப்பட்டுள்ளன மேற்கூறிய நிறுவனங்கள் வாயிலாக மனித உடல் பணிந்து நடக்கும் உடலாக, அதாவது "பணிவுடலாக” (Docile Body) மாற்றப்பட்டு வருகின்றது. தடையில்லாத உடலியக்கச் செயற்பாடுகளால் பணிவுடல் உருவாக்கப்படுகின்றது.
பாடசாலையிலே பணிவுடலாக்கச் செயற்பாடு பலவழிமுறைகளால் மேற்கொள்ளப்படுதலை பூக்கோ விளக்குகின்றார். குறித்த மாணவருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையிலே அமர்ந்திருத்தல் வேண்டும். அவருக்கு ஒதுக்கப்பட்ட மேசையிலும் குறிப்பிட்ட உடல் நிலையினை மேற்கொண்டு எழுதவும் வாசிக்கவும் வேண்டும். மாணவர்களுக்கிடையேயுள்ள இடைவெளியும் தூரமும் வரையறுக்கப்பட்டுள்ளன. மாணவர் நிமிர்ந்திருத்தல் வேண்டும். பாதங்கள் நிலத்திலே பதியவைக்கப்பட்டும், தலை நேராக வைக்கப்பட்டும் உயிரில்லா மேசைக்கும், கதிரைக்கும் ஏற்றவாறு இணைப்பு ஏற்படுத்தும் வகையில் உயிர்ப்புமிக்க மாணவரின் உடல் பணிய வைக்கப்படுகின்றது.
உடற்பயிற்சியின்போதும் அணிநடையின்போதும் உடலைப் பணியவைக்கும் தொழிற்பாடுகள் மேலும் மீள வலியுறுத்தப்படுகின்றன. அதிகாரத்தின் வலுவினால் "பணிவுடலாக" மாற்றும் செயற்பாடுகள்
கலாநிதி சபா.ஜெயராசா -5 le

Page 29
தீவிரமாக்கப்படுகின்றன. உற்பத்திக் கருவிகளோடு மனித உடல் இணைந்து தொடர்புறுமாறு "பணிவுடலாக்கம்" வலியுறுத்தப்படுகின்றது. பாடசாலை மணியும், தொழிற்சாலையின் ஊது குழலும் அதிகார அணியினால் உடற் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுதலை எடுத்துக் காட்டுகின்றன. நேரக் கட்டுப்பாடுகள் வாயிலாக உடல்மீது ஆதிக்க வலுவினர் செல்வாக்குச் செலுத்துதலை இவை எடுத்துக் காட்டுகின்றன.
நடுக்கோபுரத்தில் இருந்தவாறு சிறைக்கைதிகளைக் கண்காணிக்கக் கூடியவாறு சிறைச்சாலைக் கட்டட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும், மருத்துவ மனைகளிலும் கூட இதற்கு ஒப்புமை ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அதிகார அணியினர் மனித உடலை பணிவுடலாக மாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இவை எடுத்துக் காட்டுகின்றன. s
அதிகார அணி தந்தை வழி ஆதிக்கத்தை அல்லது ஆண் வழி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வண்ணம் வரலாற்று வளர்ச்சியிலே தொடர்ந்து செயற்பட்டு வந்ததாக பூக்கோ குறிப்பிடுகின்றார்.
பெண்களின் உடற்கட்டுமானக் கோலம் பற்றிய கருத்து காலத்துக்குக்காலம் மாறுபட்டு வந்துள்ளது. பண்பாட்டு வேறுபாடுகளுக்கு ஏற்பவும் மாறுபட்டு வந்துள்ளது. தமது உடற்கோலத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலும் சாதாரண நிகழ்ச்சியாகும். பெண்களுக்குரிய பிரபலமான சஞ்சிகைகளில் அவர்கள் எவ்வாறு தமது உடலை வாகாக (Sim) வைத்திருக்க முடியும் என்பதை அடியொற்றிய பல கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமது வயதுக்குரிய உடல் நிறையிலும் குறைந்த நிலையில் இருக்குமாறு பெண்கள் நெறிப்படுத்தப்படுகின்றார்கள். அதுவே அழகு என்றும் வற்புறுத்தப்படுகின்றது.
உடல் நிறையைக் கட்டுப்படுத்துமாறு ஆண்களும் தூண்டப்படுதல் அதிகார அணியில் உள்ளோர் மேற்கொள்ளும் பணிவுடலாக்கற் செயற்பாட்டினை வேறொரு வகையில் வெளிப்படுத்துகின்றது. ஆனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே மிகையான உடற்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
உடல்நிலை, உடலசைவு, உடற் சைககள் முதலியவற்றைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க பால்வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் மீதே தீவிர கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எல்லைகளை மீற முடியாத அளவுக்கு
-52- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

அவர்களின் இயக்கவெளி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண் என்ற நிலையை வலியுறுத்தும் வகையில் அந்த இயக்க வெளிகட்டுமை (ConStruct) செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் பெண் "கட்டவிழ்த்துச் சென்ற பெண்" (Loose Woman) என்ற பட்டத்துக்கு உள்ளாக்கப்படுதல் உண்டு. “தறிகெட்ட பெண்”, “ஒழுங்கற்ற பெண்”, என்றவாறான கட்டுமைகள் பெண்ணின் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜேர்மனிய படப்பிடிப்பாளராகிய மறியாணி வெக்ஸ் என்பவர் ஆண்களின் உடற்கட்டையும் பெண்களின் உடற் கட்டையும் வேறுபடுத்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொடர்நிழற்படங்களை வெளியிட்டுள்ளார். பொதுவிடயங்களிலும் தெருக்களிலும் அவர் இந்தப் படங்களை எடுத்துள்ளார். பெண்கள் புகைவண்டிநிலையத்து வாங்கிலே இருக்கும் பொழுது குறுகிய வெளியைப் பயன்படுத்தலும், ஆண்கள் பெண்களிலும் கூடுதலான வெளியைப் பயன்படுத்துதலும் அவரது நிழற்படங்களிலே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் இருகால்களையும் ஒடுக்கியவாறு அமர்ந்திருந்தனர். ஆண்கள் இருகால்களையும் விரித்தவாறு அமர்ந்திருந்தனர். நடக்கும்போது ஆண்கள், கைகளை விரித்து நடந்தனர். பெண்கள் கைகளை ஒடுக்கி நடந்தனர். ஆண்களின் பாதுகாப்புக்கு உட்பட்ட நடத்தைகளாகப் பெண்களின் நடத்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் கூடுதலான புன்சிரிப்பை வெளிப்படுத்துமாறு சமூகத்தாற் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தமக்குக்கிடைக்கும் மகிழ்ச்சி உள்ளிட்டிலும் பார்க்க கூடுதலான மகிழ்ச்சிச் சிரிப்புக்களை வெளிப்படுத்துமாறு பெண்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தொழில் நிலையங்களிலே வேலை செய்யும் பெண்கள் தமது மனத்திலே எவ்வளவு துன்பமிருந்தாலும் புன்சிரிப்பை வெளிப்படுத்துமாறு மேலதிகாரிகளினால் தூண்டப்படுகின்றனர். தொழில் நிலையங்களிலே பணிபுரியும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உடல் உறுப்புக்களே பிறரின் அதிகமான தொடுதல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இவை அனைத்தும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன.
பெண்கள் தமக்குரிய தனித்துவத்தை உடலழகினால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற போலிக்கட்டுமை உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல் அலங்காரத்துக்கு மிகைப்படுத்தப்பட்ட அளவில் அழகுசாதனங்களும் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கருவிகளினதும், சாதனங்களினதும் அழுத்தங்களில் இருந்து
கலாநிதி சபா.ஜெயராசா -53

Page 30
ஆண்கள் விடுவிக்கப்படும் சமூக ஏற்பாடே தலைதூக்கியுள்ளது. குறித்த அழகு சாதனங்களையும் கருவிகளையும் பயன்படுத்தாதவிடத்து ஒரு வித குற்றவுணர்ச்சி உளயவில் நிலைக்குச் சமூகத்தாலே பெண்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இத்தகைய தாக்கங்களுக்கு வறிய பெண்களே மிகக்கூடுதலாக உள்ளாக்கப்படுகின்றனர்.
தந்தை வழிப்பணி பாட்டில் பெண்கள் “கொள்கைக்குரிய பொருளாகவும்”, “கெளவி எடுக்கப்படும் இரையாகவும்" (Prey) மாற்றப்பட்டுள்ளனர். உடற்கட்டுமானத்தைப் பராமரிக்காத விடத்துப் பெண்கள் நகைப்புக்குரியவர்களாக மாற்றப்படுகின்றார்கள். பெண்கள் இவ்வாறு தள்ளிவிடப்படுவதற்குப் பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்து தொழிற்பட்ட வண்ணமுள்ளன.
பாடசாலைகள், தொழிற்சாலைகள், சிறைக்கூடங்கள் எவ்வாறு மனித உடல்மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்பவற்றை ஆராய்வதிலே பூக்கோ தீவிரகவனம் செலுத்தினார். அதிகார அணியில் உள்ளோர் இவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பொழுது சமச் சீர் அற்ற முறையிலும், ஒழுங்கற்ற முறையிலும் தொழிற்படுகின்றனர். ஆண்களுக்குக் கீழ்ப்படியக் கூடியவாறு பெண்களின் உடல், பணிவுடலாக மாற்றப்படுகின்றது. பலநிலைகளினூடாகவும், பல்வேறு சந்தர்ப்பங்கள் வழியாகவும் இந்தச் செயற்பாடு நிகழ்த்தப்படுகின்றது. போட்டிகளின் போது மற்றைய பெண்களை எவ்வாறு முறியடித்து முன்னேறலாம் என்பதும் கற்பிக்கப்படுகின்றது. அதிகார அடக்கு" முறையின் நலன்களை வலியுறுத்தும் கருவிகளாக பெண்கள் மாற்றப்படுகின்றனர். பெண்களை அடக்கி ஆள்வதற்கான தொன்மவாக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தனது உடலைப் பணிவுடலாக மாற்றிக் கொள்ளாத பெண் ஒருத்தி பலநிலைகளிலும் ஆண்களின் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றாள்.
வெளி உடலில் மட்டுமல்ல உள்ளார்ந்த மனத்திலும், "உள்நிலைப்படுத்து" மாறு பெண்கள் மீது ஆண் அதிகாரம் பிரயோகிக்கப்படுகின்றது. பழைய சமூகங்களில் இருந்து நவீனத்துவத்தை நோக்கி நிகழ்ந்த நிலைமாற்றம் அதிகாரத்தைச் செலுத்துதலோடு இணைந்த மாற்றமாக உள்ளது என்பதை பூக்கோ சுட்டிக்காட்டுகின்றார். அரசர்களை முன்னிலைப்படுத்திய சமூகங்களில் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு குரூரமான உடல்சார்ந்த தண்டனைகள் வழங்கப்பட்டன. சட்டங்களை மீறுதல் அரசன் என்ற தனிநபரை இழிவுபடுத்துதலாகக் கருதப்பட்டது.
-54- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நவீன சமூகங்களிலே சமூகக் கட்டுப்பாடுகள் வாயிலாகவும் உளவியற் கட்டுப்பாடுகள் வாயிலாகவும் அதிகாரம் நிலைநிறர் கப்படு: கின்றது. மிகவும் நுண்ணிதமான ஊடகங்கள் வாயிலாக கொl செலுத்துதல் மேற்கொள்ளப்படுகின்றது. அதிகாரத்தை நிலை நிறுத்தும் பொருட்டு மனிதமனம் நிலை மாற்றம் செய்யப்படுகின்றது. உடலின் நேரமும் அசைவுகளும் மிக நுண்ணிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்" றன. இவற்றுக்கு எடுத்துக் காட்டுக்களாக பாடசாலை, சிறைச்சாலை, தொழிற்சாலை மற்றும் பணியகங்களின் இறுக்கமான நேரசூசிகளைக் குறிப்பிடலாம். அதிகாரத்தை ஆழ்ந்து செலுத்துவதற்கு பணியாட்சி முறைமை நவீன சமூகத்தின் நுண்ணிய சாதனமாக அமைந்துள்ளது. யதார்த்த நிலையில் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதைக் கண்டு கொள்ளாத நிலையில் அதிகாரம் செலுத்தப்படுகின்றது.
ஒவ்வொருவரும் அவதானிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வைக்கப்படுகின்றனர். மனத்திலே உள்வாங்கி அடங்கிவாழுமாறு உள்மனம் கட்டுமானம் செய்யப்படுகின்றது. தனிமைப் படுத்தப்பட்ட தன்னிலை யாக்கம் இச்செயற்பாட்டை மேலும் மீள வலியுறுத்துகின்றது.
நவீன மயமாக்கப்பட்ட அதிகாரம் தொடர்பான தனித்துவமான அனுபவங்களைப் பெண்கள் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். பண்டைய சமூகங்களிலே பெண்களின் நடத்தைகள் இறுகிய கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தியமை போன்ற நிலைப்பாடு இப்போது இல்லை. பெண்களின் அசைவியக்கங்களிலே கூடுதலான நெகிழ்ச்சிப்பாங்கு இப்பொழுது காணப்படுகின்றது. பெண்கள்மீது இன்று செலுத்தப்படும் அதிகாரம் “புலப்படாத கரங்களாக”வுள்ளது. பெண்கள் மீது செலுத்தப்படும் அதிகாரத்தின் விளைவாகவே "பணிவுடலாக்கம்” இடம் பெறுகின்றது. இந்தச் செயற்பாட்டில் ஊடகங்கள் மிகுந்த வினைத்திற" னுடன் செயலாற்றுகின்றன. அதிகாரத்தை உள்வாங்குதலும் செயற்படுத்துதலும் தன்னியக்கமாக இடம்பெறத் தொடங்கியுள்ளன.
எவர்மீது அதிகாரம் செலுத்தப்படுகின்றதோ அவருள்ளே அதிகாரம் உட்பொதியப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் மத்தியில் பெண்ணிலை இயக்கங்கள் மேலோங்குதல் பின்னவீனத்துவவாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுவரை பேசாத பொருளைப் பேச வைத்தல் பின்னவீனத்துவத்தின் ஊக்குவிப்பாக இருத்தல் பூக்கோவின் எழுத்தாக்கங்களிலே துல்லியமாக வெளிப்படுகின்றன.
பின்னவீனத்துவ வாதிகள் வெளிப்பாடுகளின் மீது செலுத்திய
கலாநிதி சபா.ஜெயராசா 55۔--

Page 31
விரிவான பார்வையை வேர்கள் மிது செலுத்தவில்லை. வேர்களை ஆழநோக்க மார்க்சிய தருக்கத்தையே நாடவேண்டியுள்ளது.
கார்ல் மார்க்சினால் நுண்ணிதான அவதானிப்பு உட்பட்ட ஒடுக்குமுறையை தென் அமெரிக்க சூழலில் போலோ பிறேறியும், ஐரோப்பிய சூழலில் மிசேல் பூக்கோவும் மேலும் கூர்ம்மைப்படுத்தி முன்னெடுத்துச் சென்றார்கள் என்ற கருத்து உண்டு. கல்விமுறைமையால் ஒடுக்குமுறை எவ்வாறு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை போலோ பிறேறி விளக்கினார். அதேவேளை உளவியற் செயற்பாடுகளால் அதிகாரமும் ஒடுக்குமுறையும் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை பூக்கோ விரிவாக ஆராய்ந்துள்ளார்.
-56- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவ அழகியல்
ன்னவீனத்துவம் எவற்றையும் நித்தியமான, மாறாநிலை கொண்ட
பொருள்களாகக் கருதவில்லை, அழகும் உண்மையும் நித்தியமானவை என்று கருதப்பட்ட மரபு வழிச் சிந்தனைகளைப் பின்னவீனத்துவம் புறந்தள்ளிவிட்டது. அழகும் அறிவும் உண்மையும் நேரான இணைப்புக் கொண்டிருக்கவில்லை என்ற விடயத்தில் மார்க்சியத்துக்கும் பின்னவீனத்துவத்துக்குமிடையே ஒப்புமைகள் காணப்படுகின்றன. அறிவு, அழகு, மானிட தரிசனம் என்பவற்றில் வர்க்க நலன்கள் உட்பொதிந்திருத்தல் ஏற்கனவே மார்க்சிய அறிகையில் வெளிப்பாடு கொண்டிருந்தது. அறிவும் உண்மையும் அழகும் அதிகாரத்தின் வடிவங்கள் என்பதைப் பின்னவீனத்தும் சமகாலத்துக்குரிய மொழி நடையில் வெளிப்படுத்துகின்றது.
மேலையுலகில் நிகழ்ந்த தீவிர கைத்தொழிலாக்கம் முன்னர் அறியப்படாத மனித அவலங்களை உருவாக்கலாயிற்று. இந்த அவலங்களைக் கடப்பதற்கு அழகியலாக்கங்களை ஆக்கவல்லுனர்கள் நாடலாயினர். நவீனத்துவத்தின் தனிமனித நடுவப்படுத்தல் பின்னவீ. னத்துவத்தின் தருக்க முறைகளால் கேள்விக்குறியாக்கப்பட்டது.
அழகியல் தொடர்பான சொற்களஞ்சியங்களான, சுவை, அனுபவம், அழகியல் தீர்மானம் (Aesthetic Judgement) முதலியவை பெரும் உரையங்களாகி, அதிகாரமும் ஆக்கிரமிப்பும் கொண்டவையாக மேலெழுந்துள்ளன என்பது பின்னவீனத்துவத்தின் கருத்து, சுவை மற்றும் அனுபவங்களின் பன்முகப்பாடு, சிதறியபண்பு, தொடர்ச்சியற்ற பண்பு, விலகியபண்பு முதலியவை பின்னவீனத்துவ அழகியல் வரைபில் முன்வைக்கப்படலாயின.
பின்னவீனத்துவ அழகியலில் விளிம்பு நிலை அல்லது எல்லைநிலை (Marginal Position) சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. இது ஒருவகையில் அழகியலை அரசியல் மயப்படுத்தும் செயலாக அமைகின்றது. இந்தத் தளத்தில் மார்க்சியத்துக்கும் பின்னவீனத்துக்குமிடையே
கலாநிதி சபா.ஜெயராசா -S7

Page 32
ஒப்புமைகள் காணப்படுகின்றன. அரசியலை அழகியலுடன் கலக்கலாகாது என்று கூறுதல், பின்னவீனத்துவ மொழிநடையிலே கூறுவதானால் - ஒட்டுமொத்தப்படுத்தப்பட்ட பெரும் உரையமாகவே அமையும்.
இந்தப் பெரும் உரையங்கள், அதிகாரத்தின் அச்சாணியாகவும், மேலாதிக்க வன் நடத்தையுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.
மொழிக்கட்டுமானத்தின் மீது பின்னவீனத்துவ அழகியல் தீவிர கவனம் செலுத்துகின்றது. குறிப்பானுக்கும் (சொல்லுக்கும்) குறிப்பீட்டுக்கும் (பொருளுக்கும்) இடையே உள்ள தொடர்புகளை இவர்கள் கேள்விக்குறியாக்கியுள்ளனர். இரண்டையும் வேறு பிரித்துப் பார்க்கும் தேவை இவர்களால் உணர்த்தப்படுகின்றது. குறிப்பிடப்படும் பொருள் (Referent) ஒவ்வொரு மனிதரதும் அறிகை இயல்புக்கு ஏற்றவாறு வேறுபட்டுச் செல்லும். சூழலுக்கு ஏற்றவாறு இந்தமாறுபாடு மேலோங்கிச் செல்லும். இந்நிலையில் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கு" முள்ள தொடர்புநிலையானதாகவோ, நித்தியமானதாகவோ இருக்கமாட் டாது. ஒரு குறிப்பான் பல குறிப்பீடுகளைத் தொடர்புபடுத்தி நிற்றல் அழகியல் அறிகையிலே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமுள்ள உறவு சார்புத்தன்மை கொண்டதாக இருக்கும். ஆகவே, அழகியல் அடையாளங்கள் (Identity) நித்தியப் பொருள் குறிப்பவை அன்று. அனைத்து அழகியல் அடையாளங்களும் சார்புநிலைக்கு உட்பட்டவை. இந்நிலையில் அழகியல் அடையாளங்கள் பன்மைநிலை கொண்டவையாக மாற்றமுறுகின்றன. அழகியல் அடையாளங்கள் புறச்சூழலின் நெருக்குவாரங்களுக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாகும் நிலையில் இருப்பதனால் ஓர் அழகியல் அடையாளம் பன்மை நிலையை நோக்கி நகர்ந்த வண்ணமிருக்கும்.
மரபுவழியான அழகியல் ஆக்கத்தின் கருப்பொருள்களான காதல், வீரம், மனிதமாண்பு, முதலியவை நிறுவப்பட்ட பண்புகளைக் கொண்ட நிறுவன அமைப்பைக் கொண்டுள்ளது. முன்னிலைப்படுத்தி அவற்றை மேலுயுர்த்தும் பொழுது அவை வன்முறையாக அமைக்கப்படுகின்றன. அழகியல் வடிவங்கள் தம்மை இயற்கையானவை (Natural) என அடையாளப்படுத்தும் பொழுது அங்கே வன்முறையே மேலெழுகின்றது. அழகியலாக்கத்துடன் இணையம் இந்த வன்முறை அதிகாரம் துல்லியமாக அறியப்படவேண்டியுள்ளது.
அழகு காலங்கடந்த நித்தியமானது என்று கூறுதலும் அதிகாரத்தோடு தொடர்பு கொண்ட செயற்பாடுதான்.
-58- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவ அழகியற் சிந்தனைகள் நவீனத்துவத்தின் நெருக்கடிகளையும் ஒருதலைப்பட்சமான போக்கையும் தகர்த்து மேலெழுகின்றன. பழைமையை முற்றாக நிராகரிக்கும் நவீனத்துவ அழகியல் அணுகுமுறைகளின் நெருக்கடிகளைப் பின்னவீனத்துவம் வெளிப்படுத்தியது. பழைமைக்கு எதிரான தேடல்களை முன்வைத்த நவீனத்துவம் "திணறலுக்கு" உள்ளாகி நின்றமை பின்னவீனத்துவ வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
புதுமை, தரம், தனித்துவம் என்றவாறு நவீனத்துவம் முன்வைத்த
அழகியல் எண்ணக்கருக்களைப் பின்னவீனத்தும் கேள்விக்குறி. களாக்கியது.
புதுமையின் புதையலைத்
தேடப் போய்
சகாராவின் மணற்குழியிற்
சிக்கிய
ஆசாரப் பறவைகள். என்ற கவிதை வரிகள் ஒருவகையிலே மேற்கூறிய புதுமையின் அவலத்தை வெளிப்படுத்துகின்றது. பின்னவீனத்துவ அழகியல் நவனித்துவத்தை முற்றாக நிராகரிக்கவில்லை. அதன் எதிர்மறைப்பரிமாணங்களையே சாடியது.
நவீனத்துவ அழகியற் சிந்தனைகளின் ஏற்படுத்திய அதிர்வுகளை தமிழில் சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, க.நா.சுப்பிரமணியன், வெங்கட்சுவாமிநாதன், எஸ்.பொன்னுத்துரை, எ.ஜே.கனகரட்ணா, தேவன் - யாழ்ப்பாணம், வே.காசிநாதன் முதலியோரது ஆக்கங்களிலே " காணலாம். ஆனால் மேற்குறிப்பிட்ட அனைவரும் ஒரே தளத்தில் நின்று நவீனத்துவத்தைத் தரிசித்தவர்கள் அல்லர்.
கட்டடக் கலையிலே தோற்றம் பெற்ற பின்னவீனத்துவ அழகியல் பின்னர் படிப்படியாக இசை, நடனம், சிற்பம், ஒவியம், மொழி, இலக்கியம் என்றவாறு பல்வேறு அழகியல் துறைகளிலே விரிவாக்கம் பெற்றது.
பின்னவீனத்துவ அழகியல் பல இதழ்களைக் கொண்ட சிந்கனைகளை உள்ளடக்கித் தோற்றம் பெறுவதற்குப் பலர் பங்களிப்புச் செய்தனர். சிறப்பாக, ஹசன், லியோதாத், ஜில் டெல்யூஸ், உம்பர்டோ *கோ, ஹேபர்மஸ், றிச்சார்ட் ரோட்ரி, ரெறிஈகிள்டன், ஜேம்சன்,பூக்கோ, முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பின்னவீனத்துவ அழகியல், கலைப்படைப்புக்களின் மையமற்ற அமைப்பை வலியுறுத்துகின்றது. அதாவது, கலைப்படைப்புக்களில் இடம் பெறுவதாகக் கூறப்படும், மையம், முழுமை, ஒருங்கிணைப்பு
aara Furt. Gagaupinaft -59

Page 33
முதலியவை நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒரு கலைப்படைப்பின் உள்ளமைந்த அலகுகள் அல்லது கூறுகள் தமக்குள் தொடர்பு இல்லாமல் இயங்கமுடியும். ஒரு வகை மாதிரியாகப் பின்வரும் கவிதையைக் குறிப்பிடலாம்.
வேட்டுவனின் வலைக்குள் ஒரு பட்டச் சான்றிதழ். நட்டுவாங்கத் தாளத்தில் ஒரு மீன் குஞ்சின் குமுறல். தகவல் வலைப்பின்னல்
முட்டுக் கொடுக்கும் மாத்திரை.
ஒரே கவிதை பல தொனிகளையும், பலகுரல்களையும், பலமுகத் தோற்றங்களையும் வெளிப்படுத்தலாம் என்பது எடுத்துக்காட்டப்படுகின்றது.
அழகியல் தொடர்பாக காலங்காலமாகக் கையளிக்கப்பட்டுவந்த "உன்னதம்", "புனிதம்" என்பவற்றை கருக்களாகப் பின்னவீனத்துவம் கருதுகின்றது. அழகியலில் முன்வைக்கப்பட்டுள்ள "திணிப்பு" எண்ணக்கருக்கள் இங்கு நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வகையில் செவ்வியல், இலக்கியங்கள், இசை, நடனம் முதலியவை தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.
செவ்வியற் கலையாக்கங்கள் அனைத்தும் நன்கு வரையறை செய்யப்பட்ட இலக்கண விதிகளையும் ஆசாரங்களையும் தம்முன் அடக்கிய நிலையில் திணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருதல் குறிப்பிடத்தக்கது.
எத்தகைய அழகியல் வடிவங்களையும், கேள்விக்கு உட்படுத்துதல், பிரச்சினைப்படுத்தல் முதலியவை பின்னவீனத்துவத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக கனங்காத்திரமான அழகியல் வடிவங்கள் கேளிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
செவ்வியல் அழகியல் வடிவங்கள் மேலாதிக்கம், அதிகாரக் கட்டமைப்பு, நிறுவனத்தன்மை ஆகிய பரிமாணங்களைக் கொண்ட “மையம்” என்றவாறு கருத்து வினைப்பாட்டுக்கு உள்ளடக்கப்படுகின்றன மையத்துக்கு எதிரானதாகவும் மாறானதாகவும் அமைவது "விளிம்பு" என்ற எண்ணக்கரு. அதிகாரக்கட்டமைப்பு, மேலாதிக்கம், நிறுவனத்தன்மை ஆகியவற்றின் நிராகரிப்புக்கு உட்பட்டதாக "விளிம்பு" அமைகின்றது வறியவர்கள், உடல் உள்ளக் குறைபாடு கொண்டோர்,
-60- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

அலிகள், சாதிய ஒடுக்குமுறைக்கு உட்பட்டோர் முதலியோர் விளிம்பு நிலையில் உள்ளோராகக் கருதப்படுகின்றனர். "விளிம்பிலுள்ளவர்களுக்குப் பாராட்டுக்கள்” என்றவாறு அழகியற் படைப்புக்களில் அவர்களின் முக்கியத்துவம் பின்னவீனத்துவத்தினால் வலியுறுத்தப்படுகின்றது.
அழகியல் வடிவங்களின் எதிர்நிலைப்பண்பும், பதகளிப்பை உணி டாக்கும் தோற்றப்பாடுகளும், அமைதியைக் குலைக்கும் இயல்புகளும், பின்னவீனத்துவத்தாற் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதாவது, அழகியல் வடிவங்கள் எதிர்நிலை வடிவங்களாகவே இவர்களினால் நோக்கப்படுகின்றன.
கலை இலக்கியங்கள் முதலாம் அழகியல் தொடர்பாகப் பின்னவீனத்துவம் முன்வைத்த கருத்துக்கள் எற்கனவே நிறுவப்பட்ட அறிகை முறைமையிலிருந்து வேறுபட்ட, மாற்றுக்கருத்துக்களாக அமைந்தன. நியமமான வழிகளை விட்டு மாற்றுவழிகளைத் தேடியவர்களுக்கு அக்கருத்துக்கள் மிகுந்த கவர்ச்சியையும் ஈடுபாட்டையும் தருபவையாக அமைந்தன. ஆனால் பின்னவீனத்தினுள் அமைந்த முரணறு கருத்துத் தோற்றப்பாடுகள் குறிப்பிட்ட கட்டத்துக்குமேல் கடக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளன. அதாவது தோற்றப்பாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மார்க்சியம் போன்று மாற்றிக் கட்டமைப்புச் செய்வதற்குக் கொடுக்க முடியாதுள்ளது.
பின்னவீனத்துவச் சிந்தனைகள் மாற்றுவகையான சிந்தனைகளுக்கு வலிமைதருவதாக இருப்பினும், சமகால உலகின் பெரும் சுரண்டற் போக்கினைச் சிதறடிப்பதற்கோ, மாற்றியமைப்பதற்கோ உரிய வலுவான வழிமுறைகளை அவர்களாலே தரமுடியாமலுள்ளது.
1970 ஆம் ஆண்டிலிருந்து பின்னவீனத்துவம் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய வேளை அதற்குச் சமாந்தரமாக உலகின் பின்னைய முதலாளியம் மேலும் வலிமை பெற்று மேலோங்கி வருவதுடன், சுரண்டப்படுவோரை மேலும் பலவீனமாக்குவதற்குரிய கருத்தேற்றங்களைக் கூட்டுநிலை முதலாளியத்தின் (Corporate Capitalism) கரங்களிலே பலமாகவுள்ள தொடர்பியற் சாதனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பொருள் நுகர்ச்சியைப் பரவலாக்கி அவற்றை அதிகரிக்கச் செய்யும் “மாற்றுச் சிந்தனை"களை தொடர்பியற் சாதனங்கள் முன்னெடுத்து வரும்வேளை, சமூகத்தை மாற்றியமைப்பதற்கான சிந்தனைகள் பலவீனப்படுத்தப்படுகின்றன.
கலாநிதி சபா.ஜெயராசா -61

Page 34
பின்னவீனத்துவ ஆசிரியம்
| sl | ன்னவீனத்துவ ஆசிரியம் எல்லைநிலை ஆசிரியம் (Border Pedagog) முதலாம் எண்ணக்கருக்கள் பின்னவீனத்துவத்தின் வளர்ச்சியை அடியொற்றி மேலெழத் தொடங்கியுள்ளன. அந்தஸ்து நிலையிலும் இனக்குழுமநிலை, மற்றும் பால்நிலை முதலியவற்றிலும் ஒரங்கட்டப்பட்டவர்களைக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புக்களை பின்னவீனத்துவ ஆசிரியம் வலியுறுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்று மேலெழுந்துள்ள பன்முகப் பண்பாட்டு கல்வி நடைமுறைகள் (Multicultural Practices) பின்னவீனத்துவத்தை நோக்கிய கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புக்களாக அமைகின்றன.
சமகாலத்து அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளராகிய ஹென்றி ஏ.கிறொக்ஸ் (Henry A.Giroux) என்பார் பின்வீனத்துவக்கல்வி நடைமுறையிலே தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றார். தனது கருத்துக்களை வலியுறுத்துவதற்கு அவர் பின்வரும் மேற்கோள்களை (црGorolaОтG)54šlостртi. (Henrg.A.Giroux, (1991), Towards Postmodern Pedagogy, Al Bany, Stateuniversity of Newyork Press)
(அ) நாடக எழுத்தாளரும், ஒருகாலத்தில் சிறைக்கைதியாகவும், பின்னர் செக்கோசிலவாக்கியாவின் அதிபராகவும் இருந்த ஹேவல் (Havel) "மக்களாட்சிக்கோட்பாடு இலட்சிய வடிவில் நிறைவடைந்தது என்று கொள்ளப்பட்டாலும் அதனுள்ளே விடுதலைக்கும் மனித மாண்புகளுக்குமான நெருக்குவாரங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
(ஆ) வரலாற்றாசிரியரும் சமாதான வினைஞருமாகிய ஈ.பி.தோம்சன், "இருபத்து ஓராம் நூற்றாண்டில் மானிடம் எதிர் கொள்ளப்படவிருக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகைக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு வரலாற்றுப்பக்கங்களை மூடிவிடாது திறந்து வைக்கவேண்டியுள்ளது" என்று விளக்கியுள்ளார்.
-62- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

(இ) போலாந்தின் தொழிலாளர் காப்பு கழகத்தின் நிறுவுனராகிய அடம்மிச்னிக் (Adam Michnik) "மக்களாட்சி அரசியல் பற்றிய பயமும் மக்கள் தொகுதியிலே நிகழ்ந்து வரும் பெருநிலையான கூட்டுப் பரிதவிப்பு அவலமும் (Massive Collective Despair) ஒரே நேரத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். மக்களாட்சி மீது விடுக்கப்பட்டுள்ள இந்தக்கணைகளைப் புறந்தள்ளிவிடாமல் கருத்து வினைபாட்டுக்கு எடுக்க வேண்டிய தேவையை கிறொக்ஸ் வலியுறுத்துகின்றார். மக்களாட்சிக் கோட்பாடு தனிமைப்பட்டு விட்டது, செயலிழந்து விட்டது, திக்குமுக்காடுகின்றது என பின்னவீனத்துவ ஆசிரியம் கருதுகின்றது. பொருத்தமற்ற ஓர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாக எண்ணுகின்றனர். இந்நிலையில் மக்களாட்சிக்கு உயிர்ப்பூட்டுவதற்கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் கல்வியியலாளரிடத்து மேலோங்கியுள்ளது. வலுவிழந்து, இலட்சியங்களைச் சுற்றிப் பின்தள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் செயற்பாட்டினால் மட்டும் மாற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
இந்நிலையில் பின்னவீனத்துவக் கல்வி பற்றிய பின்வரும் முன்மொழிவுகளை கிறொக்ஸ் முன்வைக்கின்றார்.
(அ) அவரது முன் மொழிவுகளில் முதற்கண் திறனாய்வு அல்லது விமர்சன ஆசிரியம் (Critical Pedagogy) என்ற எண்ணக்கரு மேலெழுகின்றது. நல்ல பிரசைகளை உருவாக்குவதற்குரிய கற்பித்தல் நடைமுறை என்பவற்றைக் காட்டிலும், அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்கள் முதலியவற்றை விமர்சனப்பாங்குடன் அணுகச் செய்தல். நடைமுறையில் உள்ள சமூக அரசியல் முறைமைகளோடு இசைவுபட்டு இணங்கிச் செல்லாது நடைமுறையிலுள்ள சமூக அரசியல் வடிவங்கள் மீது அறைகூவல் விடுப்பதற்கும், அவற்றை நிலைமாற்றம் செய்வதற்குமான திறனாய்வுக் கொள்ளளவை கல்விச் செயற்பாடுகள் வாயிலாக வளர்த்தல். வரலாற்றில் தாம் எங்கே நிற்கின்றோம் என்பதை உணர்த்துவதுடன், மக்களாட்சி வெகுசன வடிவங்களுக்கு உரியதான குரலை வெளிப்படுத்துவதற்குமுரிய ஆற்றலை முன்னெடுத்தல் வேண்டும். மக்களாட்சிப் பொது வாழ்க்கைக்குரிய கருத்து வினைப்பாட்டில் உயிர்ப்புள்ள பங்குபற்று திறனாய்வு ஆசிரியம் மேற்கொள்ளும்
கலாநிதி சபா.ஜெயராசா -63

Page 35
வினைப்பாடு நடப்பியல் விவகாரங்கள் மீது பொருத்தமான வினாக்களை எழுப்புதலுடன் தொடர்புடையது.
(ஆ) பரந்த சமூகத்தை அணுகுவதற்குரிய பன்முக கருத்து வினைப்
பாடுகளை (Discourses) நன்கு விளங்கிக் கொள்வதற்கும், தமது தொடர்புகளை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வதற்குமுரிய ஏற்புடைமைகள் அவசியமாகின்றன. வேறுவேறுபட்ட அறக்" கருத்து வினைப்பாடுகளுடன் மாணவர்கள் தமது அனுபவங்களை எவ்வாறு பங்கீடு செய்து கொள்கின்றார்கள் என்பதும் அவதானிப்புக்கு உரியது. மனித அவலங்களையும் சுரண்டல்களையும் சமூக இடைவினைகள் தரைதட்டி நிற்றலையும் உணர்த்த வேண்டியுள்ளது. அதிகாரத் தொடர்புகள், சமூக நடைமுறைகள், அந்தஸ்து முதலியவற்றை அடியொற்றிய அறம் சார்ந்த உரைவினைப்பாடுகளே சமகாலத்தில் வேண்டப்படுகின்றன.
பின்னவீனத்துவ ஆசிரியம் பற்றிய கருத்துக்களை முன் மொழிந்தவர்களுள் சறொன் உவெல்ஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். (Sharon Welch, (1991) in Postmodernism, Feminism and Cultural Pilitics) பின்னவீனத்துவ ஆசிரியத்துவம் அறநிலையில் அறை கூவல் விடுப்பதாயும் அரசியல் நிலையில் நிலை மாற்றத்தை உள்ளடக்கியதாயும் இருத்தல் வேண்டுமென்பது அவரது கருத்து. பன்முகப்பட்ட நிலைகளிலும், முரண்பாடான நிலைகளிலும், மாணவர் தம்மை இனங்காணலையும் அகவய நிலைகளையும் எவ்வாறு கட்டுமை (Construct) செய்கிறார்கள் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டியுள்ளது. குழுக்களுக்கிடையே காணப்படும் தொடர்புகள் எவ்வாறு வளர்த்" தெடுக்கப்படுகின்றன என்பதும் எவ்வாறு அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் பராமரிக்கப்படுகின்றன என்பதும் விமர்சன ஆசிரியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
செறி ஹோம்ஸ் (Cherry Holms, 1988) என்பவர் பின்னவீனத்துக்குரிய திறனாய்வு, அதிகாரம், நீதி, போராட்டம், சமத்துவ அழிவு முத" லியவற்றை வெறுமனே ஏட்டுக்குள் சுருக்கிவிட முடியாத மொழியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கலைத்திட்ட உள்ளடக்கம் புனிதமானது என்ற ஆசாரங்கள் கைவிடப்பட்டு, பல்வேறு உரையங்களை (Narat lves) உருவாக்கும் வகையில் மீள வாசிக்கப்படவும் வேறுபட்ட அரசியலுக்குரியவாறு மீள் வடிவமைக்கப்படவும் வேண்டும் என்பது ஹோம் சின் கருத்து.
-64- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

மாணவர்களுக்குத் தகவலைக்கடத்தும் வடிவமாக அறிவைக் கருதாது, அதன் வரையறைகளும், தொழிற்பாடுகளும் தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தனி மனிதரதும் சமூகத்தினதும் விடுதலையை நோக்கி நகர்வதற்குரிய பொருண்மிய நிலவரங்களை திறந்த கருத்துப்பரிமாற்றம், கருத்து வினைப்பாடுகளை மக்கள் மயப்படுத்துதல் என்பவற்றால் ஏற்படுத்துதல் இன்றியமையாதது. பொதுவாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய மக்களாட்சிக் கட்ட" மைப்பை உருவாக்குவதற்குரிய பன்முக உரையங்களை ஏற்படுத்தல் வேண்டுமென பிறிதொரு பின்னவீனத்துவக் கல்வியியலாளராகிய லக்கிளவ் குறிப்பிட்டுள்ளார்.
பின்னவீனத்துவக் கல்வியில் வலியுறுத்தப்படும் திறனாய்வு ஆசிரியம் கற்கைநெறிகளைப் பிரித்து வைக்கும் எல்லைகளை உடைத்து விடுகின்றது. அது வெறுமனே அறிவாய்வியல் எழு கூற்றுக்களுடன் (s- Sues) அடங்கி நிற்கவில்லை. அதிகாரம், அரசியல், அறம் முதலியவற்றோடு இணைந்தவகையில் பின்னவீனத்துவ ஆசிரியம் கட்டுமை செய்யப்படுகின்றது.
இங்கே எதிர்நினைவு (Counter memory) ஆசிரியம் வலியுறுத்தப்படுகின்றது. ஒருவகைப்பட்டதும் கூட்டுமொத்தமாகத் திரட்டப்பட்டதுமான அழுத்தங்களின் மத்தியில் மெளனமாகி கூடியிருந்தோரின் குரல் எதிர் எதிர்நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்றது. அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அடியொற்றிய உரைவினைகளில் இருந்துதான் கல்வியும் பண்பாடும் விளக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேதான் பாடசாலைகள் உருவாக்கும் விழுமியங்களையும் இனங்காணல் வேண்டும். P
தனது வரலாற்றுக் கட்டமைப்பையும் கருத்தியலையும் மறுதலித்து நிற்கும் உண்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின்றது. கருத்து வினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாயித்தலை வலியுறுத்தல் பொருத்தமற்றது. சமூக இருப்பிலிருந்தும், தொடர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதன் மீது கல்வியிலாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவ வாதிகள் குறிப்பிடுவது அவர்கள்மீது மார்க்சியம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்துகின்றது.
கற்பித்தல் மொழிபற்றிய கவன ஈர்ப்பும் பின்னவீனத்துவ வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நோக்கி மொழி திருப்பவில்லை. மாறாக மனோரதியப் பழைமையை நோக்கிப் பின்னே நகர்ந்தவண்ணமுள்ளது.
கலாநிதி சபா.ஜெயராசா -65

Page 36
ஆசிரியர்கள் ஒடுங்கிய வாண்மை கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளிவரவேண்டியுள்ளது. இலட்சியங்களையும் சமூக நடைமுறைகளையும் உருவாக்கும் சமூக வேலையாட்கள் என்ற நடிபங்கை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் நுண்மதியாளர்களாக அவர்கள் மாற்றமடைய வேண்டியுள்ளது. கல்வித்துறையின் உள்ளார்ந்த திறனாய்வுகளுக்கு ஆசிரியர்கள் முகம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கையளிப்பவர்களாக ஆசிரியர்கள் தொழிற்படாது செயலுக்கமுள்ள அறிகைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோராய் இருத்தல் வேண்டும். ஒடுக்கு முறைகளை மீறி மேலெழுவதற்குரிய ஆசிரியமே சமகாலத்தில் வேண்டப்படுகின்றது.
தனியாள் நிலையும் அரசியல் தொடர்புகளும் வலுவான பண்புகளை உருவாக்குமேயன்றி கவிழ்ந்து விடும் வீழ்ச்சிகளை ஏற்படுத்தமாட்டாது. பாலியல் சார்ந்த, வர்க்கம் சார்ந்த, இனத்துவம் சார்ந்த சுரண்டல்களை முன்னெடுக்கும் நிறுவனச் செயற்பாடுகளைக் கண்டு பின்வாங்கிவிடாது செயற்படுவதற்கு மேற்கூறிய ஒன்றிணைப்பு அவசியமாகின்றது.
அரசியல் மயப்பாட்டின் அடிப்படைத்தளமாக தன்னிலை (SELF) முதற்கண் அமைகின்றது. வேறுபட்ட சமூக, பண்பாட்டு வரலாற்றுப் பின்புலங்களில் தன்னிலை இனங்காணல் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது பற்றிய பரந்த விளக்கம் வேண்டப்படுகின்றது. மேற்கூறியவற்றின் பின்புலத்தில் தன்னிலை என்பது பலவகையாகவும், மிகுந்த சிக்கலாகவும் கட்டுமை செய்யப்படுகின்றது. இவை பற்றிய தெளிவு கல்விச் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.
பலநிலை இனங்காணற் செயற்பாடுகள் மாணவர்களிடத்து இடம் பெறுகின்றன. மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் புறம் தள்ளி நீதி யானதும், சமத்துவத்தை நிலை நிறுத்தக் கூடியதுமான, அறம் சார்ந்ததும் அரசியல் சார்ந்ததுமான வலுக்கட்டமைப்பை மாணவர்களிடத்து ஏற்படுத்தக் கூடிய உரையாடலை ஆசிரியம் வழங்குதல் வேண்டும்.
பரந்த மக்கள்நிலை அரசியல் ஈடுபாட்டுக்குரியவாறு அனுபவங்களைக் கோட்பாட்டு நிலைக்கு மாற்றுவதன் மீது விமர்சனப்பாங்கான கவனFர்ப்பு அவசியமாகின்றது. பாதிப்பும் பழிவாங்கலும் பற்றிய கதைகளை ஒப்புவித்துக்கொண்டிருப்பதால் பயன் எதுவும் எட்டப்போவதில்லை. அவற்றைக் கோட்பாட்டு நிலையில் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவற்றைப் பொருத்தமான முறையிலே ஒருங்கிணைப்புச் செய்ய முடியும். -66- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவக் கல்வியியலாளர்கள் கல்வியலில் குறிப்பிட்ட சில குவியங்களை நோக்கிய மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றனர். எல்லை நிலையில் உள்ளானவர்கள், சுரண்டலுக்குள்ளானவர்கள், பெண்கள், இனத்துவநிலையிலும் பண்பாட்டு நிலையிலும் பின் தள்ளப்பட்டவர்கள் முதலியோரைக் குவியப்படுத்தும் கல்விச் செயற்பாடுகளை வலியுறுத்தியுள்ளனர். மேற்கூறிய துறைகளில் பலமிழந்து நிற்கும் மேலைப்புல கல்வி நடவடிக்கைகளுக்கு “இலட்சியச் சிகிச்சை" அவர்களால் வழங்கப்படுகின்றது. -
கலாநிதி சபா.ஜெயராசா -67

Page 37
உலகக் கல்விச்செயல் முறைகளில் பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு
மார்க்சியத்தின் பின்னர் உலக நாடுகளின் கல்விச் செயல்முறை
களிலே தீவிர செல்வாக்குச் செலுத்திய விசைகளில் பின்னவீ. னத்துவம் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. கல்விச் செயல்முறைகளில் "பன்மைத்துவம்" என்பது முன்னரிலும் கூடிய அங்கீகரிப்புக்கு உள். ளாக்கப்பட்டு வருகின்றது. பல்வேறுபட்ட பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்டவர்களை கல்விச் செயல்முறையிலே ஈர்த்தெடுப்பதற்குரிய பலபண்பாட்டு எழுகருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கலைத்திட்டத்தில் மேலோங்கியிருந்த ஒருமைப் பாங்கும், மையப்பாங்கும் தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. விருப்பத்துக்குரிய பாடங்களையும், தெரிவுப் பாடங்களையும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்குரிய வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக 2007ஆம் ஆண்டைத் தொடர்ந்து இலங்கையின் கலைத்திட்டச் செயற்பாடுகளில் பண்மைநிலைத் தெரிவுகளுக்குக் கூடிய இடம் தரப்படுகின்றது. பாடத்தெரிவுகளில் மட்டுமன்றி பாடநூல்களிலும் மையப்படுத்தல் தகர்க்கப்படுகின்றது. "ஒரே பாடநூல்" என்ற எண்ணக்கரு கைவிடப்பட்டு குறித்த ஒருவகுப்புக்குரிய பல பாடநூல்களைத் தெரிவு செய்வதற்குரிய ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
பாடசாலைக் கலைத்திட்டத்திலே பின்னவீனத்தின் மேலும் பல பிரதிபலிப்புக்களையும் தொடர்புபடுத்தமுடியும். இடைநிலையில் "ஒரு மொழி" அல்லது "இருமொழி” என்பவை மாற்றியமைக்கப்பட்டு பலமொழிகளைக் கற்பதற்குரிய வாய்ப்புக்கள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. பலமொழிகளைக் கற்பதற்குரிய ஆற்றல் மனித மூளைக்கு உண்டு என்பதும் கலைத்திட்டத்திலே எடுத்தாளப்படுகின்றது. கலைத்திட்டத்தில் உள்ளடங்கும் கணிப்பீட்டு முறையில் முன்னர் "நினைவுப் பதிவும் அதனை மீட்டெடுத்தலும்" என்ற அறிகை ஆற்றலே வலியுறுத்தப்பட்டது. இந்த "வன்முறை" ஏற்பாடு உடைக்கப்பட்டு
-68- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பல்வேறு ஆற்றல்களையும் திறன்களையும் கணிப்பீடு செய்வதற்குரிய பன்மைநிலை ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கூட ஒழுங்கமைப்பைப் பொறுத்தவரை 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேர்மனியில் நிகழ்ந்த மாற்றங்கள் ஆய்வாளர்களினாற் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஜேர்மனிப் பாடசாலை ஒழுங்கமைப்பு வர்க்கநிலை தழுவிய மூன்று கட்டுமானங்களைக் கொண்டிருந்தது.
1. உயர் வகுப்பினருக்குரிய ஜிம்னாசியம் பாடசாலைகள் (Gymna
sium Schools)
2. மத்திய தரவகுப்பினருக்குரியறியல் (Real School) பாடசாலைகள்
3. தாழ் வகுப்பினருக்கும் புலம் பெயர்ந்த குழுவினருக்குமான ஹேப்
(Hauptschule) LuIT_g-IT606v56r
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கூறிய பாடசாலை நிரலமைப்பு கைவிடப்படும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு அகல் விரிபண்புடைய பாடசாலைகள் (GeSamtschulen) உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் 1990 ஆம் ஆண்டில் குளோன் என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட ஹெல்வெய்ட் (Howeide) பாடசாலை குறிப்பிடத்தக்கதும் விளிம்பு நிலையில் இருந்த மாணவர்களை உயர்ந்த அடைவுகளை நோக்கி முன்னேற்றம் பெறச் செய்து வருவதாகவும் அமைந்துள்ளது.
கல்விச் செயல் முறையிலே பின் நவீனத்துவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தி வரும் செல்வாக்குகள் கல்விப் பணியாட்சிமுறை (Bureaucracy) தொடர்பான கூரியதிறனாய்வுகளுக்கு இட்டுச் செல்கின்றன. ஒன்ஸ் என்பவரின் ஆய்வுகள் இவ்வகையிலே dpll Inésă (5îll'il îl g5556o61. (O Wens, R.G (1995), Organizational Behaviour in Education, Need Ham Heights, Ma: Allyn and Becon) பணியாட்சி தொடர்பான அவரின் முக்கியமான கருத்துக்கள் வருமாறு:
l. நிலைக்குத்து அடிப்படையில் கல்வி நிர்வாகமும் அதிகாரமும்
இறுக்கமான முறையிலே கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2. நிலைக்குத்தின் கீழ்த் தளங்களில் உள்ளோர் மேலுள்ளோரால்
தீவிர அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
3. தொடர்பாடலும் நிலைக்குத்து அமைப்பிலே வலிமையாகக்
கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கலாநிதி சபா.ஜெயராசா -69

Page 38
4. அதிகாரத்தை வலுப்படுத்தும் கையேடுகளும் வழிகாட்டிகளிலும் தெளிவான கட்டுக்கோப்பினை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளன.
5. மாறும் சூழலுக்கு ஏற்றவாறு நிலைக்குத்துக் கட்டமைப்பை மேலும் வலிமையாக்குவதற்குரிய நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வி நிர்வாகம் அதிகார அணியினரின் இறுக்கமான பிடிகளுக்குள் இருந்து செயற்படுமாற்றைத் துல்லியமாகக் கண்டறிவதற்குப் பின்னவீனத்துவப் புலக்காட்சி துணை செய்கின்றது.
பாடசாலையின் கட்டடவமைப்பு, தளபாடங்களின் அமைப்பு, நேரகுசிகளின் அமைப்பு முதலியவற்றிலே காணப்படும் வன்முறைகள் ககர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு நெகிழ்ச்சிப்பாங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வரையறுக் கப்பட்ட வகுப்பறைக் கட்டுமானம் குலைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இவ்வகையில் பிறீஸ்டர் 955Llf (Brewster Academy in New Hampshire) 6T6ip Lust 3-f60Guuila) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இலங்கையிலும் ஒரு வித்தியாசமான வகுப்பறைக் கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பின்னவீனத்துவச் செல்வாக்கு ஊடுருவியுள்ளது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. இந்தக் கட்டுமானம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்து நடனத்துறையில் அமைந்துள்ள நடேசர் மண்டபத்திற் காணப்பட்டுள்ளது. பாரம்பரியமும் நவீனத்துவமும் இங்கே ஒட்டுமை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆடல் பயிலும் வகுப்பறையைச் சூழ்ந்து நீர்த்தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. மூடிய சுவர்கள் இல்லாத வெளிகொண்ட மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது. வலிய சோளகக் காற்றின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்டுத் தென் புறமாக வளைவு அறை அரணி அமைக்கப்பட்டுள்ளது. (இதன் கட்டுமான நிர்வாக முகாமையில் இந்நூலாசிரியரும் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது)
அமைப்புநிலைகளில் மட்டுமன்றி கல்வி தொடர்பான நோக்கு" களிலும் பின்னவீனத்துவம் பல செல்வாக்குகளை ஏற்படுத்தியுள்ளது. பாடம் அல்லது கற்கும் அலகு தொடர்பான கருத்து வினைப்பாடு எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்டிருத்தலை பின்னவீனத்துவம் வலியுறுத்துகின்றது. இந்நிலையில் பரீட்சைகளின் புள்ளியிடம் திட்டங்கள் (Marking Schemes) குறைபாடுகளைக் கொண்டிருத்தலை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
-70- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

ஒரு மாணவரிடத்து அல்லது ஒர் ஆசிரியரிடத்து. ஒரு "தன்னிலை” (Self) தான் உண்டு என்ற மரபுவழிக்கல்வி அணுகுமுறையை பின்னவீனத்துவம் தகர்த்துள்ளது. பல தன்னிலைகளையும் பல அகங்களையும் உள்ளடக்கிய மாணவரையே தரிசிக்குமாறு பின்னவீனத்துவம் தூண்டுகின்றது.
கல்விச் செயல்முறையாலும், இலக்குகளினாலும் அடையப்படாத அல்லது நழுவவிடப்பட்ட "மற்றையது" என்பதன் மீது கவனம் செலுத்தப்பட வேண்டியதன் விசையைப் பின்னவீனத்துவம் கல்வியுலகில் ஏற்படுத்தியுள்ளது.
ஒருமாணவரை ஆற்றல் கூடியவர் என்றோ இன்னொரு மாணவரை ஆற்றலிலே தாழ்ந்தவர் என்றோ கூறுதல் நிலையற்றது என்பதும் சிதறுண்டவை என்பதும், அலைந்து கொண்டிருக்கும் என்பதுமான பின்னவீனத்துவக் கருத்துக்கள் மாணவர் கணிப்பீட்டிலே புதிய புலக்காட்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலாநிதி சபா.ஜெயராசா -71 -

Page 39
பின்னவீனத்துவமும் இறையியலும்
ரிதாவின் சிந்தனைகளை அடியொற்றி பேராசிரியர் மார்க். சி.ரெயிலர் இறையியல் தொடர்பான தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இறைசார் பனுவல்களை அடியொற்றி எழுந்த சமயம் எனது உலகுபற்றிய உயிர்ப்புச் செயல் முறையையும், வாசிப்பையும், மீள் எழுத்தையும் தூண்டும் செயல்முறையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இந்தச் செயல்முறையில் ஒவ்வொரு மனிதரது தீர்மானிப்பும் வரையறைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. நிலைமாறுவ தாகவுமுள்ளது. உறுதியற்றதாகவுள்ளது. இறைசார் பனுவல்களில் சொல்லப்பட்டவற்றை முழுமையாக கிரகிக்க முடியாமலுமிருக்கின்றது. மேலைப்புல இறையியல் வலைப்பின்னலானது ஒருமைப்பண்பு கொண்டது என்றுகூறுதல் மலினமாக்கப்பட்ட எளிமையான அணுகுமுறையாக அமைகின்றது. இந்த வலைப்பின்னலில் இறைவன், தன்னிலை (SELF) வரலாறு, நூல் அல்லது பனுவல் ஆகியவை உள்ளடங்குகின்றன. இவற்றினூடேயுள்ள தொடர்புகள் ஆழ்ந்து நோக்குதற்குரியவை.
தொல்சீர் அறிகையில் இறைவன் ஒருவரே என்பதும் அனைத்தும் அவரது ஆட்சிக்கு உட்பட்டதெனவும் விளக்கப்படுகின்றது. தன்னிலை என்பது தனிமனிதரைமையமாகக் கொண்டது. தனிமனித உணர்வு தனியாளுக்குரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. பிறப்பு முதல் நிறைவு வரையான நீட்சியைக் குறிக்கும் வரலாறு இலக்குடைய செயல் முறையைப் புலப்படுத்தி நிற்கின்றது. மனிதருக்கும் தன்னிலைக்குமுள்ள இடைவினைகளைப் பனுவல் குறித்து நிற்கின்றது. இந்நிலையில், இறைவன், தன்னிலை, வரலாறு, பனுவல் ஆகியவை ஒன்றுடன் மற்” றையது தொடர்புபட்டு நிற்பதாகவும். ஒன்றையொன்று தெறித்துக்காட்டுவதாகவுமுள்ளது.
-72- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

இந்நிலையில் மேலைப்புல இறையியல் மரபு பன்முகப்பாங்கானது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ இறையியல் இருநிலையமைப்பை (Binary) க் கொண்டு கருத்து வினைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டுக்களாக கடவுள் - உலகம், நன்மை தீமை, நிலைத்துவம் - மாற்றம், ஒன்று - பல, மனம் - சடம், என்றவாறான இருநிலை அமைப்புக்களினூடாக கருத்து விளக்கம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் இந்த நேர் - எதிர் அமைப்புக்கள் சமமானவை அன்று. இந்தப் பாரம்பரியமான மேலைப்புலச் சிந்தனை தகர்க்கப்பட்டது. கட்டுமானக் குலைப்புத்திறனாய்வு ஒருவகையில் உதவி செய்யும் அணுகுமுறையாக அமையலாயிற்று முற்று முழுதான நிறைவான கருத்து ஒன்றில்லை என்பதைக் கட்டுமானக்குலைப்பு வலியுறுத்தியது. அதேவேளை சமயம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டி பன்முகத்தன்மைகளை வளர்ப்பதற்கும் பின்னவீனத்துவத்தின் கட்டுமானக் குலைப்பு அணுகுமுறை வழியமைதுள்ளது.
இறையியல் தொடர்பான கருத்து வினைப்பாடுகளை முன்னெடுப்பதற்கு “பல்லியம்பல்” (ERR) என்ற எண்ணக்கருவை பேராசிரியர் மார்க்.சி.ரெயிலர் பயன்படுத்துகின்றார். இந்த எண்ணக்கரு பல அடுக்களிற் பல பொருள் தர வல்லது. தவறு, பொருத்தமற்றது, குழப்பப்பட்டது, அலையவைப்பது, போன்ற பல பொருட்களை இந்த எண்ணக்கரு கொண்டுள்ளது. இவ்வாறு அலையவைக்கும் பல எண்ணக்கருக்கள் இறையியலிலே பயன்படுத்துகின்றன. இந்த எண்ணக்கரு தொடர்ந்து மாற்றமடையும் கருத்துக்களைக் கொண்டுள்ளது.
பின்னவீனத்துவத்தின் செல்வாக்கினால் இறையியலின் சொற்களஞ்சியம், குறிப்பான் - குறிப்பீடு ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் ஐயப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. "கடவுள் என்ற சொல்லின் கருத்து என்னவென்றால், கடவுள் என்ற சொல்லின் கருத்துத்தான்" என்று மார்க் ரெயிலர் குறிப்பிட்டுள்ளமை ஈண்டுநோக்கத்தக்கது.
வெவ்வேறு வழிகளிலே “கடவுள்" என்ற சொல்லை வாசித்தலின் உட்பரிமாணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமுள்ள தொடர்பு சமச்சீரற்ற நிலையில் இருத்தலை இவரால் இறையியலில் தெளிவாக முன்னெடுக்கப்படுகின்றது. "எழுத்துக்கள் யாதாயினும் ஒன்றைப் பற்றியதல்ல அது யாதாயினும் ஒன்றைப் பற்றியதுமேயாகும்” என்றவாறு அவர் தனது கணிணோட்டத்தை முன்வைக்கின்றார். இது ஒருவகையில் மொழியின் விளையாட்டை புலப்படவைத்தலாகின்றது.
கலாநிதி சபா.ஜெயராசா -73

Page 40
எழுத்து என்பது முடிவற்ற வேறுபாடுகளைத் தோற்றுவிக்கின்றது. அது பொருள்கள் பற்றிய சார்பு நிலைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்த வண்ணமுள்ளது என்று இவர் குறிப்பிடுதல் பின்னவீனத்துவத் தின் விசைகளை உள்ளடக்கிய செயற்பாடாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான சிக்கல் பொருந்திய தொடர்புகளைக் கொண்டதாகவே இறையியல் எழுத்தாக்கங்கள் அமைகின்றன. அது "கூட்டுமொத்தப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்படாத கூட்டு மொத்தப்படுத்தலாக” (Non Totalizable Totality) egy60) LDj516i GT51. egy5/ 515,5)L/LO/7607 வெளிப்பாட்டின் நித்தியமான அழிவாகவுள்ளது. எதுவும் முழுமையான தன்னியக்கப்பாட்டினைக் கொண்டதன்று. எதுவும் முழுமையான இறைமை கொண்டதுமல்ல.
முன்னர் எழுதப் பெற்ற சமய நூல்களைத் தற்கால வாசிப்புக்குக் கொண்டு வரும் பொழுது பல்வேறு திரிபுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இடம் பெறுகின்றன. சுருக்கமுடியாத பண்மைநிலைகளை நோக்கி அவை விரிவடைந்து விடுகின்றன. இறையியற் சொற்களில் இவரால் எடுத்துரைக்கப்படும் பன்மை நிலை பின்னவீனத்துவக் கண்ணோட்" டத்திலே சமய எண்ணக்கருக்களை அணுகுவதாகவுள்ளது. இந்தப் பின்புலத்திலே தான் அவர் இருப்பியலாளராகிய நிக்சேயின் "கடவுளின் இறப்பு” என்ற தொடருக்கும் விளக்கம் தருகின்றார். நித்சேயின் அந்த அறிவிப்பின் பின்னணியில் இறையியலை மீளாய்வுக்கு உட்படுத்தும் அறிகை முயற்சியை இவர் முன்னெடுத்துள்ளார்
மரபுவழியாகக் கையளிக்கப்பட்ட இறையியல் தொடர்பான அறிகைக் குறிப்புக்களையும் மனித வரலாற்றுப் பதிவுகளையும் மீளாய்வுக்கு உட்படுத்தினார். இறையியலில் "த சொல்" (The Word) இவரது சிறப்பார்ந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சொல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் மிது” கட்டுப்பட்டிருந்த இறையியலாளர்களுக்கு இவரது அறிகை முயற்சிகள் புதிய புலக்காட்சிதனை ஏற்படுத்தலாயின.
இறையியற் சொல் பற்றிய தீர்மானிக்கும் திறனில் மனித அறிவின் மட்டுப்பாடுகளை விளக்குவதற்கு இவர் பல்வகைப்பட்ட ஆதாரங்களை முன் வைத்துள்ளார். இவற்றின் அடிப்படையாக பல்லியம்பல் என்ற கருத்தைக் கட்டியெழுப்பி "ஒரு பின்னவீனத்துவம் ஒன்றின்கீழ் அமையும் இறையியல்" (A/ Theology) என்ற புதிய கருத்து வினைப்பாட்டுத் தளம் அமைத்தார்.
-74- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பரத நாட்டியமும் பின்னவீனத்துவமும்
ரத நாட்டியத்தில் "தூய்மை" பேணப்பட வேண்டுமென்ற கருத்து
மரபுவழி நாட்டிய ஆசிரியர்களால் முன்வைக்கப்படும் "அறிவிப்பாக” இருந்து வருகின்றது. இவ்வாறாக வலியுறுத்தப்படும் "தூய்மை" இன்று கட்டிக்காக்கப்படுகின்றதா என்பது ஆய்வாளர்களின் கேள்விக்குறியாகியுள்ளது. ஏ.வி. மெய்யப்பன் செட்டியார் அவர்கள் தாம் தயாரித்த திரைப்படங்களில் பரத நாட்டியத்துக்குத் திரை வடிவம் கொடுத்தவேளை அதன் தூய்மையையும் தனித்துவத்தையும் காப்பாற்ற முயன்றார். அதே முயற்சி ஜெமினி தயாரிப்புக்களிலும் ஆரம்ப காலத்திற் பின்பற்றப்படலாயிற்று.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்த் திரையுலகிலே சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கிய பின்னவீனத்துவ ஆளுகை பரத நாட்டியத்தின் மீதும் செல்வாக்கை ஏற்படுத்தலாயிற்று. இதனை விளங்கிக் கொள்வதற்கு பரத நாட்டியத்தின் தோற்றுவாயை நோக்கிப் பின்திரும்ப வேண்டியுள்ளது.
பரத நடனம் திடீரென்று தோற்றம் பெற்ற ஒரு கலை வடிவம் அன்று. அது தமிழர்களது நீண்ட பண்பாட்டுவரலாற்றோடு இணைந்து கூர்படைந்து செம்மை வடிவம் பெறலாயிற்று.
தொல்குடியினரது செயற்பாடுகள் அனைத்தும் நேரடியான உடற் பிரயோகங்களுடன் (Direct Physical Applications) இணைந்திருந்தன. உடலை அடிப்படையாக வைத்தே அவர்களது அறிகை ஆக்கங்கள் உருவாக்கம் பெற்றன. அந்த மக்கள் இயற்கையோடு நிகழ்த்திய போராட்டத்தில், “போலச் செய்தல்" அல்லது பாவனை செய்தல் என்ற செயற்பாடு சிறப்புப் பெறலாயிற்று. விலங்குகளைத் தம்வசப்படுத்தவும் விரட்டவும் இந்த உபாயங்கள் துணை செய்தன.
தொன்மையான வாழ்க்கை முறைமையோடு இணைந்த செயற்பாடாக "வளம் பெருக்கல்" அமைந்தது. மனித வளம், கால்நடைவளம்,
கலாநிதி சபா.ஜெயராசா -75

Page 41
பயிர் வளம் முதலியவற்றின் பெருக்கை வேண்டி மாயவித்தைகளும் வளச்சடங்குகளும் உருவாக்கம் பெறலாயின. இவற்றோடு இணைந்து மனச்சுகம் ஈட்டலுக்கான (Healing) நடனங்களும் வளம் பெருக்கல் (Fertility) நடனங்களும் வளரத் தொடங்கின. இவற்றின் பின்னணி யிலேதான் தமிழர்களின் “வெறியாட்டு” தோற்றம் பெற்றது. இதுவே பரத நடனத்தின் நிருத்தத்துக்குரிய தூய நடன (Pure dance) அடிப்படையாயிற்று.
கல்வி வளர்ச்சியின் போது, அசைவுகள் அறிவுக் கட்டுமானங்களுக்குள் கொண்டுவரப்பட்டு அடைவுகள் (அடவுகள்) உருவாக்கம் பெற்றன. அடைவுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஆடற்கோவைகள் (கோர்வைகள்) உண்டாக்கப்பட்டன. சமூக வளர்ச்சியோடு பன்முகமாகி வளர்ந்த மனவெழுச்சிகள் உடலசைவுகளோடு ஒன்றிணைக்கப்பட்டு மனவெழுச்சிகலந்த ஆடல் (நிருத்தியம்) ஆக்கம் பெறலாயிற்று. தமிழகப் பக்தி நெறிக்காலத்தில் ஆடலிற் பக்திமன வெழுச்சியே மேலுயர்த்தப்பட்டது.
நிறைபேறு கொண்ட அரசுகளின் வளர்ச்சிபண் மற்றும் பரதத்தை அதிகார அணிக்குள் கொண்டுவந்தது. அரச அதிகாரத்தோடு இணைந்திருந்த சம்ஸ்கிருத மொழியாட்சிக்கு உட்படுத்தப்பட்ட கல்விமுறைமை பரதத்தின் கட்டுமானத்தை சம்ஸ்கிருத எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி விளக்கலாயிற்று. எளிற்கை - ஹஸ்தம் என மாற்றப்பட்டது. சொல்லுக்கட்டு - ஜதி என உரைக்கப்பட்டது. இவ்வாறு பல தொடர்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
நிலமானிய அதிகாரக் கட்டமைப்பின் அழுத்தங்களால் பரத நாட்டியம் சீர்குலைவை அடைந்தது. பிரித்தானியர் ஆட்சியோடும் கல்விமுறைமையோடும் தமிழகத்துக்கு வந்த நவீனத்துவம் பரத நாட்டியத்தின் மீதும் செல்வாக்கினை ஏற்படுத்தியது. வழக்கறிஞராகிய இ.கிருஷ்ணயர் "சதிர்" என்று கூறப்பட்டு ஆலயங்களில் ஆடப்பட்ட பரத நாட்டியத்தை மீட்டெடுத்து நவீன திரையிட்ட மேடையில் ஒலி, ஒளிஏற்பாடுகளுடன் ஆடப்படும் நடனமாக மாற்றியமைத்தார். இந்தச் செயற்பாட்டினை மேலும் முன்னெடுத்த ருக்மிணி அருண்டேல் அம்மையார், "புனிதம்", "தூய்மை" முதலாம் "மையப்படுத்தலை" பரத நாட்டியத்திலே கட்டமைப்புச் செய்தார்.
இங்கு "புனிதம்" என்பது இறைமையப்படுத்தலை விட்டு வெளிநீங்கா திருத்தலைக் குறிப்பிடுகின்றது. "தூய்மை" என்பது நன்குகட்டமைப்புச் செய்யப்பட்ட அடவு விதிகளை மீறாது "அங்க
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல் -76س

சுத்தமாக" பிரதி பண்ணுதலும், பரத நடனத்தோடு இணைந்த விதிமுறைகளை மீறாதிருத்தலுமாகும். இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் பொழுது, பின்னவீனத்துவ மொழியிலே கூறுவதானால் கலை வடிவில் அது ஒரு "பெரும் உரையத்தின் பகுதியாக” உருவாக்கப்பட்டுள்ளது. உரையத்துக்குரிய அனைத்துப் பணி புகளையும் அது உள்ளடக்கியிருப்பதுடன், தமிழகத்து உயர்ந்தோர் கைகளிலே தடம்பதித்துள்ள நடனமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்து சினிமாவிலே ஊடுருவிய நவீனத்துவம் மற்றும் பின்னவீனத்துவம் ஆகியவற்றின் கருத்துக்கள் பரத நடனக் கட்டமைப்பிலே பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கி யுள்ளன. பரத நாட்டியத்துடன் வேறு நடனங்களும் கலக்கப்பட்டு “ஒட்டுமை” செய்யப்படும் வடிவங்களை சினிமா ஏற்படுத்திவருகின்றது. மேலும் பரத நடனத்தின் அடைவு ஒன்றின் பகுதியையும் இன்னோர் அடைவின் ஒரு பகுதியையும் இணைத்து ஆடும் ஒட்டுமையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரத நாட்டியத்தில் ஆழ்ந்து வலியுறுத்தப்பட்டுள்ள இறைமையப் பொருள் நீக்கப்படலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
பரத நாட்டியத்திலே மரபு வழியாகப் பயன்படுத்தப்பட்ட குயிலுவம் அல்லது அணிசேர் கருவிகளுக்குப்பதிலாக நவீன மேலைப் புலக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் பரத நாட்டியக் கட்டமைப்பைத் தளர்ச்சிவுடையச் செய்து விடுகின்றன. ஆயினும் சிறு உரையத்தோடு இணைந்த அதிகார அணி பரதநாட்டி" யத்தின் தூய்மையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்" கின்றது. v
savsT? FLunt. GlasguprfTFIT -77

Page 42
இலக்கியவுலகின் புதிய அறிகை வடிவங்கள்
ன்னவீனத்தவ சிந்தனைகளைத் தொடர்ந்து ஐரோப்பாவில்
பல்வேறு புதிய அறிகை மரபுகள் வளர்ச்சியடையத் தொடங்கி யுள்ளன. நவவரலாற்றியல் (New Historicism) பின்காலனியக் கோட்பாடு (Post Colonial Theory) follutai Goldá; 5(555, 6,560601, ILITG) (Minority Discourse) முதலியவை இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இந்தப் புதிய அறிகை வடிவங்களில் பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு பலநிலைகளில் ஊடுருவப் பெற்றுள்ளமை மறுக்க முடியாத் தரிசனமாகின்றது.
நவவரலாற்றியல் ஆய்வின் மீது பின்னவீனத்துவம் நேரடியான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. வரலாறு என்பது தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கு திரிபுபடுத்தப்பட்டே கையளிக்கப்படுகின்றது. அதாவது, மாசற்ற வகையில் அது கையளிக்கப்படுவதில்லை. உண்மையான நிகழ்வுகளைக் காட்டாத வெறும் மொழிப்பதிவுகளாகவே வழங்கப்படுகின்றன. வரலாறு இனம் பிரித்துக் காட்டும் காலகட்டங்களிலும் பொய்ம்மையே காணப்படுகின்றது. அகமுரண்பாடுகளைக் கொண்ட சித்திரிப்புக்களாகவும் வர்ணனைகளாகவும் வரலாற்றுக் காலகட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகார அணியினரின் நலன்களைப் பாதுகாப்பதற்குரிய புனைவுகளே வரலாற்றிலே தரப்படுகின்றன.
கடந்து சென்ற காலம் என்பது சுருக்கப்பட்டுக் கையடக்கமாக பிரதி வடிவிலே கொண்டுவரப்படக்கூடிய எளிதான பொருள் அன்று. (Text) பற்றிய மாற்றுக் கருத்தினையும் நவவரலாற்றியல் முன் வைக்கின்றது. ஒவ்வொரு நூலியமும் இன்னொரு நூலியத்தின் நோக்கில் அதன் பகுதியாகவே அமைகின்றது என்ற கருத்தையும் முன் வைக்கின்றது.
“நூலியம், கருத்து வினைப்பாடு, அதிகாரம், அகநிலையின் கட்டமைப்பு” ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளின் தேடல்
-78- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நவவரலாற்றியலில் முன்னெடுக்கப்படுகின்றது. மறுமலர்ச்சிக்கால இலக்கிய ஆவணங்களை மீளாய்வு செய்த நவவரலாற்றியல் ஆய்வாளர்கள் அக்காலத்தைய கருத்து வினைப்பாட்டுச் செயல் முறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையில் வரலாறு எவ்வாறு பின்னப்பட்டுள்ளதென்பதைக் கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினர்.
நவ வரலாற்றியல் வாதிகளின் தலையாய பிரச்சினையாக அமைவது பாழ்படுத்தலும் (Subversion) நிலை நிறுத்தி ஒன்றிணைத்தலும் (Containment) மாகிய இயங்கியல். இவர்கள் மார்க்சியத்தின் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மறுதலித்து பண்பாட்டுப் பொருள்முதல்வாதம் (Cultural Materialism) என்பதை முன்னெடுக்கின்றனர். மையநிலை சார்ந்த அனைத்து வடிவங்கள் பற்றியும் அவற்றை உருவாக்கும் சூழ்நிலை மற்றும் கருவிகள் பற்றியும் அவற்றுக்கு உள்ளிருந்து ஆராயும் செயற்பாடுகளே இங்குமேற்கொள்ளப்படுகின்றது. பண்பாட்டை உருவாக்கும் அடியாதாரங்கள் பற்றி மார்க்சியம் ஆழ்ந்து சென்ற அளவுக்கு இவர்களால் நுழைய முடியாமற் போய்விட்டது.
மறுமலர்ச்சி காலத்து இலக்கியங்கள் எந்த அளவுக்கு பாழ்படுத்தும் தன்மைகளைப் புலப்படுத்தின என்பதும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறையாக அவை எவ்வாறு அமைந்துள்ளன என்பதும் நவவரலாற்றியலாளரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பண்பாட்டு நிலமைகளால் நூலியங்களின் பொருள்கோடல் மாற்றமடைந்து செல்வதும் இவர்களது ஆய்வில் முன்னிலைப்படுத்தப்பட்டது. வரலாறு, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் இடைவினை ஆழங்களை வெளிப்படுத்துதலை நவவரலாற்றியல் வாதிகள் தமது சிறப்புநோக்கமாகக் கொண்டுள்ளனர்.
எந்த ஒரு காலகட்டத்துக்கும் தனித்த “ஒரே வரலாறு" இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் நிலையில் நவவரலாற்று வாதத்தின் மீது பின்னவீனத்துவம் செலுத்தும் கருத்து நிலைச் செல்வாக்கு தெளிவாகத் தெரிகின்றது. メ
பின்னவீனத்துவத்தின் தாக்கங்களுக்கு உள்ளாகி இலக்கிய ஆய்வுகளில் உருவாக்கம் பெற்றுள்ள பின் காலனியக் கோட்டுபாடு (Post Colonial Theory) தனித்துவமான அறிகை இயல்புகளைக் கொண்டுள்ளது. அரசியல், கலை இலக்கியம், கல்வி, மெய்யியல், சமூகவியல், அறிவியல் முதலாம் அனைத்துத் துறைகளிலும் மேலை
கலாநிதி சபா.ஜெயராசா - -79

Page 43
நாட்டுச் சிந்தனைகள் உருவாக்கும் ஆதிக்கத்தினை ஆய்வுக்கு உட்படுத்துதல் பின்காலனியக் கோட்பாட்டினால் முன்னெடுத்துள்ளது. இது ஒருவகையில் மேலை நாட்டுமையப்படுத்தலின் சமகால விளைவுகளைப் பகுத்தாராய்ந்து வெளிப்படுத்தும் அறிகைச் செயற்பாடுகளுக்கு வழியமைத்துக் கொடுக்கின்றது. மேலை நாடுகளின் அறிகை, கீழை நாடுகளை தாழ்த்தி நோக்குவதாகவே அமைந்துள்ளது. இதற்குக்கீழை நாட்டு அறிஞர்களும் துணை போகின்றனர். அரசியல், முகாமைத்துவம், கல்வி, கலை இலக்கியங்கள், கட்டடக்கலை முதலாம் துறைகளில் மேலைநாட்டு மாதிரிகைகளை (Models) அப்படியே பின்பற்றும் முறைமை அரசியற் சுதந்திரத்துக்குப் பின்னரும் கீழை நாடுகளிலே தொடர்ந்த வண்ணமுள்ளது.
கீழைநாடுகளின் அறிவுத் துறைகள் மீதும் பண்பாட்டின் மீதும் மேலைநாட்டினர் செலுத்தி வரும் மேலாதிக்கம் பின் காலனியக் கோட்பாட்டாளரால் வெளிப்படுத்தப்படுகின்றது.
பின் காலனியக் கோட்பாடு பிறிதோர் அறிகைக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றது. மேலைப்புல மேலாதிக்கம் போன்று கீழை நாடுகளின் உள்ளமைந்த மேலாதிக்கமும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. ஆட்சியில் உள்ள இனக்குழுமம், பிறதேசிய இனக்குழுமங்கள் மீது தமது மொழி, பண்பாடு, முதலாம் திணிப்புக்களை மேற்கொண்டுவருதலை ஆய்வு செய்தலும் பின் காலனிய ஆய்வுகளால் உற்சாகம் பெறத் தொடங்கியுள்ளன.
பின்னவீனத்தின் செல்வாக்கை ஒருவகையில் உள்வாங்கி மேலெழுந்த அறிவு இயக்கமாக சிறுபான்மைக்கருத்து வினைப்பாடு (Minority Discourse) அமைந்துள்ளது. எல்லைப்படுத்தலுக்கு உள்ளாக்" கப்பட்டவர்கள், மற்றும் விளிம்பு நிலைக்குத்தள்ளப்பட்டவர்கள் மீதான கவனக்குவிப்பைப் பின்னவீனத்துவவாதிகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. அவர்கள்மீது கவனக்குவிப்பை ஏற்படுத்தும் பொழுது ஒருமையும், மையமும்,
-80- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நீங்கிய பண்மைநிலை மேலெழத் தொடங்கும்
ତ୍ର ந்த நடவடிக்கையால் சிறுபான்மையினரின் அடையாளங்கள் இனங்காணப்படவும் வலுப்படுத்தப்படவும் கூடிய நிலை தோன்றும். மையப்படுத்தப்பட்ட அல்லது பெரும்பான்மைக் கருத்து வினைப்பாட்டை வெளிப்படுத்தவும் சிறுபான்மைக் கருத்து வினைப்பாடு துணை செய்யும்.
சிறுபான்மையினரின் சிந்தனைக்கோலங்கள், எழுத்துருவாக்கள் முதலியவற்றை ஆராய்வதன் வாயிலாக அவர்களது அடையாளத்தை மேலெழச் செய்து சமூகத்தின் பண்மைநிலைகளை மீளவலியுறுத்த முடியும். இதேவேளை இதற்கு முன்னதாக பண்பாட்டு மானிடவியலாளர் மேற்கொண்ட முயற்சிகளையும் இங்கே தொடர்புபடுத்தி நோக்க வேண்டியுள்ளது. மரபு வழிப்பண்பாட்டு மானிடவியலாளர், மேலைப்புல மேலாதிக்கத் தளத்தில் நின்று சிறுபான்மையினரை அணுகியமை குறிப்பிடப்படவேண்டியுள்ளது.
"சிறுபான்மையினர்" என்ற சொல்லைப் பயன்படுத்துதல் பெருபான்மையினரின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தி நிற்றலை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக "தேசிய இனங்களின் கருத்து வினைப்பாடு” என்ற எண்ணக்கருவைப் பயன்படுத்த முடியும்.
எல்லைநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மீது கவனக் குவிப்பை ஏற்படுத்துதல் வேண்டும் என்ற பின்னவீனத்துவத் தூண்டலின் இன்னொரு விளைவாக "குமைதற் கோட்பாடு" (Queertheory) உருவாக்கம் பெற்றுள்ளது. சமூகத்தின் பொது நியமங்களை அல்லது மையப் பணி பாட்டுக் கட்டுமானத்தை மீறும் செயற்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் "குமைதற் Ge5/7 L LV/7 L Lg2 Gó " முன்னெடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக சமூக மேலாதிக்கத்தின் பிறிதொரு பரிமாணத்தை விளக்கும் முயற்சிகள் மேலெழத் தொடங்கியுள்ளன. ஒருவரின் விலகல் நடத்தையை அங்கீகரிக்க
கலாநிதி சபா.ஜெயராசா -81 -

Page 44
வேண்டுமா அல்லது புறந்தள்ளிவிடவேண்டுமா என்பவைபற்றி ஆழ்ந்த ஆய்வுகள் குமைதற் கோட்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. உளவியலிலும், சமூகவியலிலும் இக்கோட்பாடு புதிய புலக்காட்சிகளைத் தூண்டியுள்ளது.
பின்னவீனத்துவத்தின் தேக்கநிலையைத் தொடர்ந்து வேறுபல கோட்பாடுகளும் மேலையுலகிலே தோற்றம் பெறலாயின. அவற்றுள் முதற்கள் "மீள் நவீனத்துவம்” (Remodernism) முதற் கண் குறிப்பிடத்தக்கது. ஆக, நவீனத்துவம் என்ற தளத்திலிருந்து மூன்று பெரும் கிளைகள் உருவாக்கம் பெற்றுள்ளமையைக் காணலாம்; அவை (1) நவ நவீனத்துவம் அல்லது புதிய நவீனத்துவம் (Neo Modernism) (2) LilooroorobioОТš5Јошђ (Postmodernism) (3) மீள்னவீனத்துவம் (Remodernism)
நவீனத்தின் அடிப்படை விதிகளைத் திரும்ப முன்னெடுக்கும் நடவடிக்கையாக மீள்னவீனத்துவம் அமைந்துள்ளது. நவீனத்துவத்தில் ஆழ்ந்து நின்று, மனித ஆன்மாவை மேம்பட்ட நிலையை நோக்கிமாற்று தலை மீள்னவீனத்துவம் சிறப்பார்ந்த நோக்ககாகக் கொண்டுள்ளது. நவீனத்துவத்தின் அடிச்சுவடுகளில் இருந்து ஆன்மிக மேம்பாட்டை நோக்கி நகர்ந்து, செல்லல், அந்நியமாதலை விலக்கிச் செல்லல், பின்னவீனத்துவத்தைப் புறந்தள்ளும் தளத்தில் நின்று இயங்குதல், நவீனத்துவம் விட்டுச் சென்ற இடைவெளிகளை நிரப்புதல் முதலானவை மீள்னவீனத்துவத்தில் வலியுறுத்தப்படுகின்றன. கலைஞனின் தன்னிலையை உயர்த்துதல் என்ற இவர்களின் முன்மொழிவு நூலாசிரியரின் இறப்புப் பற்றி வலியுறுத்தும் பின்னவீனத்துக்கு அடிப்படையில் மாறுபட்டதாக அமைகின்றது. கலைகளின் வாயிலாக மேம்பட்ட மனித விழுமியங்களை வளர்த்து இறையருளை மனித வீச்சுக்குள் வருவித்தல் இக்கோட்பாட்டின் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றது.
பின்னவீனத்துவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட பிறிதொரு கலைக் கோட்பாடாக "விரிநிலை அகநடப்பியல்"(MaSSuாealism) உரு" வாக்கம் பெற்றுள்ளது. குறியிட்டுவாதமும் அகநடப்பியலும் இணைக்" கப்பட்டு இந்தப் புதிய கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்" துக்கலை எண்ணக்கருக்களையும் அகல்விரிநிலையில் தழுவி, விரிநிலை அகநடப்பியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடப்பியலுக்கும் கற்பனைக்கும் இடையேயுள்ள அகப்பரிமாணங்களையும் புறப் பரி
-82- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

மாணங்களையும் முன்னெடுத்தல் இக்கோட்பாடிலே சிறப்பிடம் பெறுகின்றது.
பின்வீனத்துவத்தைத் தொடர்ந்து உருவான பிறிதொரு கலைக்கோட்பாடாக மீள் இயற்கைப் படலியல் (Recursionism) விளங்கு" கின்றது. உயிர்ப்பல்லினப் பாங்கை உள்ளடக்கிய இயற்கை விதிகளுக்கு வெளிப்பாட்டு வடிவம் கொடுத்தல் இங்கு மேலெழுந்துள்ளது. வேறுபாடுகள் பலவற்றைக் கொண்ட மனிதர்களுக்கு பலவகைப்ப்ட்ட பொருட்களை வழங்குதல் மீள் இயற்கைப்படல்வாதத்திலே சிறப்பிடம் பெறுகின்றது. பின்னவீனத்துவம் வலியுறுத்தும் பன்மைப்பாங்கு விரிவாக்கல் தளத்திலே இவ்வாதம் ஒன்றிணைந்து கொள்ளுகின்றது.
பின்னவீனத்துவத்தின் பின்னர் தோற்றம் பெற்ற கோட்பாடுகளுள் ஒன்றாக நவவாதம் (Neoism) விளங்குகின்றது. கலை இலக்கியத்துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய பரிசோதனைகளையும், புதிய கோட்பாட்டு வடிவங்களையும் தளர்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் வேண்டுமென நவவாதம் வலியுறுத்துகின்றது. சுதந்திரமானதும், கட்டற்றதுமான புதிய புதிய புத்தாக்கம் இங்கே ஊக்குவிக்கப்படுகின்றது. நவவாதத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் திறனாய்வுகள் கூட நவவாதத்தினுள்ளே அடக்கப்படலாம். என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகின்றது. தனியாள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளப்படல் வழியாக நவவாதம் விளக்கப்படலாம் என்று விபரித்தல் கட்டற்ற சுதந்திரமான சிந்தனைகளுக்கு அங்கீகாரம் வழங்குதலாக மேலெழுகின்றது. உண்மையின் சார்பு நிலையும் காலத்தைக் கடந்து செல்லலும் நவவாதத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நவவாதத்தைத் தொடர்ந்து தோற்றம் பெறும் பிறிதொரு வ்டிவமாக "afLO5/76.3 Gas/71 / 17(3)" (Contemporary Theory) 616 tiárdugol dairpg). கடந்த காலங்களின் சாராம் சமாக சமகாலம் உருவாக்கம் பெறுதல் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. அதே வேளை சமகால நிகழ்வுகள் எதிர்கால உதைப்புக்களையும் ஏற்படுத்தும் எனவும் சமகாலக் கோட்பாடு முன்மொழிகின்றது. மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை அடியொற்றிய கூர்ப்புடன் இக்கோட்பாடு மேலெழுந்துள்ளது. சமகாலத்தின் ஒவ்வோர் அசைவும் ஒவ்வொரு செயற்பாடும், நிதானத்துடனும் திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் சமகாலக் கோட்பாட்டினால் வலியுறுத்தப்படுகின்றது. சமகாலக் கோட்பாட்டைப் புனையும் ஒரு கவிதை வருமாறு:
கலாநிதி சபா.ஜெயராசா -83

Page 45
பனைமரங்கள் முகமூடி அணிவதில்லை - அவை காலத்தைச் சூடும் சோளகத்திற் சிரித்து, ஆழிப் பேரலையின் வானத்தை வேர்களால் உதைந்தன.
மார்க்சிய வரலாற்றியல் சிந்தனைகள் மீண்டெழுதல் காலத்தின் தொடர் சுவடுகளாக மட்டுமல்ல தேவையாகவுமுள்ளன.
-84- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

பின்னவீனத்துவம் - மறுமதிப்பீடு
|ru முதலாளியம் தோற்றுவித்த பன்முகமான சமூக அதிர்வுகளினதும், தனிமனித அதிர்வுகளினதும் உற்றுநோக்கலை அடிப்படையாகக் கொண்ட ஒர் அறிகை முறைமையாக (Cognitive Mode) பின்னவீனத்துவ சிந்தனை மேலெழுந்தது. சுரண்டலின் பன்மையான போக்குகள் குடும்பங்களைப் பலவீனப்படுத்தின. அதிகாரத்தின் கரங்களில் இருந்து நீதி (Justice) விடுபட முடியாத இறுகிய நிலைகள் தோன்றின. தனிமனித அந்நியமயப்பாடும் அவலங்களும் மாற்று வழிகளிலே வெளிப்பாடு கொண்டவேளை வன்நடத்தைகள் பலவாறு வெளிப்பட்டன. பலவைகப்பட்ட நுகர்ச்சிக் கோலங்களும், தொடர்பாடல் பெருக்கமும் மனித இருப்பின் மீது உளவியற் பதகளிப்பை (Anxiety) படிவு செய்யத் தொடங்கின. இந்நிலையில் விரைந்து விற்கும் உணவுப் பண்டங்களை (Fast Food) தயாரிப்பன போன்ற கருத்துக்கள் மேலைப்புலத்தில் வெளிப்பட்டனவாயினும், பின்னவீனத்துவ சிந்தனைகள் அந்த அளவுக்குக் கீழிறங்கவில்லை என்பதை முதற்கண் மனங் கொள்ளல் வேண்டும்.
அறிவுத்துறையில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான வளர்ச்சிப் பெருக்கமும், அதன் பின்னணியில் வலுப்பெற்று நிற்கும் பின்னைய முதலாளிய இயல்புகளும் அறிவில் புதிய புலக்காட்சிகளையும், கருத்துவினைப்பாடுகளையும் தோற்றுவித்தன. இவ்வாறு தோற்றம் பெற்ற கருத்து வினைப்பாடுகளில் பங்கேற்றவர்களுள் பின்னவீனத்துவவாதிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது கருத்து வினைப்பாடு இரண்டு நேர்க்கோடுகளாக மேலெழுந்தது. அவை:
1. புதுமை நோக்கிய பழைமை வாதப்பின்னவீனத்துவம் (Neo Con
servative Postmodernism)
2. பின்னமைப்பியல் நோக்கிய பின்னவீனத்தவம் (Post Structuralist
Post Modernism)
கலாநிதி சபா.ஜெயராசா -85

Page 46
(1)
(2)
புதுமை நோக்கிய பழைமைவாதப் பின்னவீனத்துவம் நவீனத்துக்கு எதிரான கருத்துவினைப்பாடுகளை முன்வைத்தது. அதாவது புதுமையை நோக்கிய நவீனத்துவத்தை இவர்கள் மறுதலிப்போராயிருந்தனர். இதைமேலும் விளக்குவதனால் இவர்கள் புதிய நவீனத்துவவாதிகளாக (Neo Modernist) இருக்க விரும்பாது பின் (Post) நவீனத்துவாதிகளாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
பின்னமைப்பியல் நோக்கிய பின்னவீனத்துவம் அதிகாரத்தின் கைகளில் அறிவு இருத்தலையும், அறிவே அதிகாரமாக மாறுதலையும் ஆய்வுக்கு உட்படுத்தியது. முதலாளியம் உருவாக்கிய அதிஉயர் மிருக நிலை இருப்பையும் (Super id) நவீனத்துவம் உருவாக்கிய அதி உயர் மனஇருப்பையும் (Super Ego) கேள்விக்குறியாக்கியது. அதிகாரத்துடன் இணைந்த விஞ்ஞான அறிவு வெகுமதிகளை ஈட்டுவதற்கான கபட நடவடிக்கைகளை மேற்கொண்டு உணர்மை என்பதைத் தந்திரோபாயங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது இவர்களின் கருத்து வினைப்பாடு. இவர்கள் மார்க்சியவாதிகள் அல்லர். ஆனால் மேலைப்புல பூர்சுவா சிந்தனையாளர்கள் "புதிய வடிவெடுத்த மார்க்சிய வாதிகளாகவே இவர்களைத் தரிசித்தனர்.
பின்னவீனத்துவம் பல்வேறு துறைகளில் அடிப்படை
வினாக்களையும் கருத்துவினைப்பாடுகளையும் முன்வைத்தது அவை:
(IJ)
(2)
(3)
-86
பகுத்தறிவுடைமை (Rationality) தொடர்பான பிரச்சினை: அதாவது பகுத்தறிவு நெறிமுறைகள் கேள்விக் குறியாக்கப்படுதலுடன், அகவயம், புறவயம் என்பவற்றுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தொன்மமாக்கிய நிலையும், உண்மை என்பதன் மாற்றமடையும் போக்குகளும் ஆழ்ந்து நோக்கப்படுகின்றன.
மொழி தொடர்பான பிரச்சினை: குறிப்பானாகிய சொல்லுக்கும் குறிப்பீடு ஆகிய பொருளுக்குமிடையே காணப்படும் இசைவுப் பிறழ்வுகள் இவர்களது ஆய்வுப் பிரச்சினைகளாக அமைகின்றன.
அழகியல் தொடர்பாடல் பகுத்தறிவுடைமை தொடர்பான பிரச்சினை: வாழ்க்கை வடிவமைப்பு என்பது, குடும்பம், பால்நிலை, இனத்துவம், தொழிற்கூடம் என்றவாறான நிறுவனக் கட்டமைப்புக்களுள் அடக்கப்பட முடியுமா அல்லது அவற்றுக்கு மாற்று வரைவிலக்கிணம் கொடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பான பிரச்சினை.
பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

(4) கருத்து வினைப்பாடுகள் (Discourses) தொடர்பான பிரச்சினைகள்: மனித வரலாற்றுக் காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட சிந்தனைத் தொகுதிகளில் இருந்து தோற்றம் பெற்ற கருத்து வினைப்பாடுகளின் நம்பகத் தன்மை தொடர்பான பிரச்சினைகளை ஆய்வுக்கு உட்படுத்துதல்.
கலாநிதி சபா.ஜெயராசா -87.-

Page 47
பின்னவீனத்துவமும் மார்க்சியமும்
பின்னவீனத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே உள்ள
தொடர்புகளை ஆராய்வதற்கு முன்னோடியாக மேலைப்புலத்தில் மார்க்சிய அறிகை தொடர்பாக உருவாக்கப்பட அபத்தநிலைகளைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியம் ஒடுங்கிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சுருக்கப்பட்ட வாதம் என்றும் சமூக வளர்ச்சியை ஒட்டு மொத்தப்படுத்தி பொறிமுறையாகச் சுருக்கிவிட்ட கருத்தியல் என்றும், மனித சுதந்திரத்துக்கு எதிரான பயமுறுத்தல் என்றும் மலினமாக்கப்பட்ட கருத்தேற்றம் மேலையுலகில் பல நிலைகளில் முன்னெடுக்கப்பட்டன. மார்க்சிய எதிர்ப்பை உன்னதமாகக் கொண்ட ஆய்வறிவாளர்களும் இவ்வகையான கருத்தேற்றங்களுக்குத் துணைநின்றனர். ஆய்வறிவாளர் சமூக நிரலமைப்பில் வகித்து வந்த இடமும், மேலைப்புல எதிர் அறிவோடு வியாபித்து நின்ற அந்நியமாதல் உளப்பாங்கும் பின்னவீனத்துவ உருவாக்கத்துக்குரிய புலமைச்சமூகச் சூழலின் பின்புலமாக அமைந்தன.
மார்க்சியத்தை நேர்நிலையாகவோ, எதிர்நிலையாகவோ தொடர்புபடுத்தாது அறிகைப் புலக்காட்சியை முன்னெடுக்கமுடியாத அறிவு நிலவரங்கள் இருபதாம் நூற்றாண்டில் வலுவடையத் தொடங்கின.
மார்க்சியத்தை எதிர்நிலையாகத் தரிசித்தவர்கள். இயங்கியலை வெறும் இயந்திரப்பாங்காகக் கருதினர். இயற்கை அறிவியலுக்குரிய அணுகுமுறைகள் சமூக அறிவியலுக்குப் பொருத்தமற்றதாக, ஆதாரங்கள் இன்றி மறுதலித்தனர். சமூக வினைப்பாட்டில் நிறுவனக் கட்ட" மைப்பின் முக்கியத்துவத்தை நிராகரித்தனர். அதன் தொடர்ச்சியாக அரசு என்ற கட்டமைப்பின் முதன்மையை மறுப்புக்கு உள்ளாக்கினர். இவை அனைத்தினதும் கூட்டுமொத்த வடிவமாக மார்க்சியத்தை மாயைப்படுத்தும் தோற்றமாகப் புனைய முயன்றனர். பூர்சுவா ஆய்வறிவாளர் மத்தியிலே தோற்றம் பெற்ற இந்த உரைகள் பின்னவீனத்துவ வாதிகளிடத்தும் தாக்கம் விளைவிக்கத்தவறவில்லை.
-88- v பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

மார்க்சியத்தைப் “பெரும் உரையமாக”க் கண்ட பின்னவீனத்துவவாதிகள், பெரும் உரையங்களின் ஆட்சி முடிவடைந்ததென்றும் சிறு உரையங்களின் காலம் தோற்றம் பெற்றுள்ளது என்றம் குறிப்பிட்டனர். ஆனால் சிறிய உரையங்களை முதன்மைப்படுத்துவதற்குரிய வலிமையான சமூகவியல் ஆதாரங்களையோ, அல்லது மெய்யியல் ஆதாரங்களையோ, உறுதியுடன் சமர்ப்பிக்க முடியாத நிலையில் "அறிவுப்புக்களை" மாத்திரம் அவர்களால் முன்வைக்க முடிந்தது.
முழுமையும், முழுமையை உருவாக்கும் ஒழுங்கமைப்பு நடவடிக்கையும் அதிகார, வன்மையுடனும், வன்நடத்தையுடனும் தொடர்புடையன என்பது பின்னவீனத்துவவாதிகளின் கருத்து. வன்மையின் நேர் இயல்பு மற்றும் எதிர் இயல்பு என்ற முரண்பட்ட பரிமாணங்கள் இருக்கும் நிலையும், தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தலும் பின்னவீனத்துவக் கண் - ணோட்டத்தில் பொருண்மை கொண்டவையாகப் புலப்படவில்லை.
முழுமைத்தன்மையில் இருந்து மையத்தன்மை உருவாகின்றது என்று மையத்தை விலக்கும் பின்னவீனத்துவம், மார்க்சியம் என்ற பெரும் உரையும் உரையத்தின்மீது கருத்து நிலை மறுதலைப்பை முன்வைக்கின்றது. இருப்பியத்தை உள்வாங்குதலும், மார்க்சியத்தை ஒதுக்குதலுமான அவர்களது செயற்பாட்டினை இது வெளிப்படுத்துகின்றது. -
6) /(}/ở 2-63)7u//573567 (Grand Narratives) 67637/O 6}7/7/ớ60/7/_/ĩ பின்னவீனத்துக்குரிய தனித்துவமான சொல்லாட்சியாக அவர்களாற் புனைப்பட்டது. பொதுவான பெரும் உரையங்கள் மீது அவர்கள் கண்டன அறிவுப்புக்களை முன்வைத்தாலும், சிறப்பாக மார்க்சியத்தை நோக்கிக் குறிவைப்பதாகவே அச்சொற்றொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்னவீனத்துவம் அறிகை நிலையில் தமது எதிர்ப்புக்குவியமாக பெரும் உரையத்தை எடுத்துக் கொண்டது. பெரும் உரையங்கள் அடித்தளம் ஒன்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும், மார்க்சியம், முதலாளியம், தேசியம், சர்வதேசியம், முதலிய அனைத்து வடிவங்களும் தத்தமது மேலோங்கலுக்குரிய வலுவான அடித்தளம் ஒன்றைச் சார்ந்து மேலெழும்.
அடித்தளத்துக்கும் அதனை அடியொற்றிய அறிகை இலக்கினுக்கு" மிடையே தீர்மானிப்பு நிலைப்பட்ட இடைத் தொடர்புகள் (Deterministic Relationships) காணப்படும் அடையப்படவேண்டிய இலக்கு,
கலாநிதி சபா.ஜெயராசா -89

Page 48
விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் பொருள், தீர்மானிப்புக்குரிய தருக்க ஒழுங்கமைப்பு, ஆகிய அனைத்தும் அடித்தளத்தினால் நிர்ணயிக்கப்படுவதாக பின்னவீனத்தவவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
மார்க்சிய தருக்க முறைமை பொருளாதாரமே அடித்தளமாக அமைவதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. தனிமனித இயல்பையும், நிறுவனங்களின் இயல்பையும், நாடுகளின் இயல் இயல்பையும் , நடப்பு நிலையில் ஆராயும் பொழுது வலுவான அடித்" தளமாக பொருளாதாரம் அமைதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆனால் பாலியல் முரண்பாடுகள், சாதியமுரண்பாடுகள், சமய முரண்பாடுகள், இனமுரண்பாடுகள், மொழி முரண்பாடுகள் முதலியவற்றில் பொருளாதாரம் வலிக்குன்றிய அடித்தளக் காரணியாக இருக்கும் பொழுது, மார்க்சிய அடித்தளத்தை மீளாய்வுக்கு உட்படுத்தல் வேண்டுமென்ற கருத்துக்கள் கடந்த நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து மேலெழத் தொடங்கின. ஆனால் அத்தகைய முரண்பாடுகள் பற்றிய தெளிவான அறிகைப்புலக்காட்சியை (Cognitive Perception) ஏற்படுத்துவதற்கு மார்க்சிய தருக்க முறைமையின் பயன்பாட்டை நிராகரிக்க முடியாதுள்ளது.
எத்தகைய சூழலிலும், எல்லா வரலாற்றுக் காலங்களிலும் ஆராயப்படக் கூடியதானே அடித்தளம் ஒன்றை வலியுறுத்தும் பொழுது கூட்டு மொத்தமாக்கல் (Totality) என்ற பண்பு உருவாக்கப்படுகின்றது. காலவோட்டத்தில் என்னென்றைக்கும் இந்தப் பண்பு நித்தியப் பொருளாக நீடித்து நிற்கும் என்றவாறு வலியுறுத்தப்படும் பொழுது அது பெரும் உரையம் என்று அழைக்கப்படும் என்று குறிப்பிடுகின்றனர்.
பின்னவீனத்துவவாதிகள் கருத்து வினைப்பாட்டுக்கு (Discourse) உட்படுத்தும் இந்தப் பெரும் உரையங்களின் இயல்பைக் குறைத்து மதிப்பீடு செய்தல் அறிகை நிலையில் பொருத்தமற்ற செயற்பாடாகும். மனித அறிவின் திரண்டெழுந்த வடிவங்களைாக இவை தோற்றம் பெற்றுள்ளன. இவற்றை அடியொற்றியே உப்பரிகைக் கருத்துக்கள் (Balcony Ideas)GLDGaGupdarpat.
இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு அறிகை உளவியலாளரின் கருத்துக்கள் இன்னொரு பரிமாணத்திலே துணை நிற்கின்றன. அறிவின் கூட்டுமொத்தப்படுத்தப்பட்ட திரண்டெழுந்த வடிவமாக உருவாகும் திரளமைப்பு (Schema) மேலும் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்குரிய கட்டுமானம் என்பதை பியாசே போன்ற அறிகை உளவியலாளர் வலியுறுத்தியுள்ளமை இவ்வேளையிற் குறிப்பிடத்தக்கது.
-90- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

அடித்தளம் என்பது ஒரமைதளம் (Monalyth) உடையதாகக் காட்சி கொள்ளப்படுகின்றது அதாவது அடிதளத்தினுடைய இலக்கு, இலக்கை அடைவதற்கான வழிமுறை ஆகிய அனைத்தும் ஒரே பரிமாணத்தைச் சுற்றி நிகழ்தல் இங்கே விளக்கப்படுகின்றது. எடுத்துக் காட்டாக மார்க்சியத்தின் குவிப்பு இலக்கு முதலாளியமாகக் கொள்ளப்படுகின்றது. முதலாளியத்தை வீழ்த்தி சோசலிசத்தை அடைவதற்கு ஒற்றை வழிமுறை அல்லது ஒரமை தளமே முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரமை தளத்தின் வீச்சுக்குள் அகப்படாத ஏனைய இயக்கங்கள், செயற்பாடுகள் என்பவை புறக்கணிக்கப்பட்டன. இந்த அடிப்படையிலேதான் சிக்மண்ட பிராய்டை அடியொற்றி எழுந்த உளப்பகுப்பு இயக்கம் புறக்கணிக்கப்பட்டதுடன், பிற்போக்குத் தனமானதாகவும் புனைந்துரைக்கப்பட்டது. மார்க்சியத்துக்கும், உளப்பகுப்புவாதத்துக்குமிடையே ஒப்புமை கண்டு எறிக்புறோம் (Erich Fromm) எழுதிய ஆக்கங்களை ரூசிய திறனாய்வாளர்கள் பலர் பிற்போக்குத் தனமானது என்று குறிப்பிட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட ஒற்றை வழி அணுகுமுறையால் வர்க்கத்தின் உள்ளமைந்த மொழிவேறுபாடுகள் பால்நிலை வேறுபாடுகள், இனக்குழும வேறுபாடுகள், சதிய வேறுபாடுகள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமை பலவீனமாகச் சுட்டிக் காட்டப்பட்டது. மார்க்சியத்தின் அகநிலைப்பட்ட திறனாய்வுக்கு இவற்றை உட்படுத்த வேண்டுமென்ற முன்மொழிவுகளும் மேலோங்கின. இந்த அகத்திறனாய்வு ஆசிய நாடுகளில் வினையாற்றலுடன் முன்னெடுக்கப்படாமையால் சுரண்டுவோர் இந்த முரண்பாடுகளைத் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்தத் தொடங்" கியுள்ளனர்.
மறுபுறம், இனத்துவ அடையாளம், பால்நிலை அடையாளம், மொழி நிலைப்பட்ட அடையாளம் முதலியவற்றை அழித்து வர்க்க அடையாளம் கட்டமைப்புச் செய்யப்பட வேண்டுமென்ற கருத்து உலகளாவிய முறையில் வலுவிழந்து வருதல் குறிப்பிடத்தக்கது. உலகில் உருவாக்கம் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி வர்க்க அரசுகள் மார்க்சிய அறிகையின் வழியாக நோக்கிய தரிசனங்களை நிறைவேற்ற முடியாமலிருந்தன. அரச இயந்திரத்தின் மேலாதிக்கமும், பணியாட்கி யும், பாட்டாளிகளின் இலட்சியங்களை இரண்டாம்பட்சமாக்கின. உற்பத்தித்துறைகளின் அறிவின் பிரயோகம் புறந்தள்ளப்பட்டு பணியாட்சியினர் அதிகாரம் மேலோங்கியமையால் முதலாளிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களோடு தரத்திலும் விலையிலும் போட்டியிட முடியாமலிருந்தது. இவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நுண்மதியாளர்களிடத்து மார்க்சிய மீளாய்வைத்தூண்டின.
கலாநிதி சபா.ஜெயராசா -91 -

Page 49
மேற்கூறியவற்றின் எழுச்சியிலேதான் அல்துஸ்ஸரின் அமைப்பியல், பூக்கோவின் பின்னமைப்பியல் மற்றும் கட்டுமானக் குலைப்புச் சிந்தனைகள் முதலியவை உயிர்ப்புக் கொண்டன. வேறுபட்ட அல்லது வித்தியாசமான அரசியல் பற்றிய சிந்தனைகள் முகிழ்த்தெழத் தொடங்கின.
பின்னவீனத்துவம், அரசியல், பொருளாதார, கலை இலக்கிய அணுகுமுறைகளிலே பன்மைத்தன்மையை வலியுறுத்தியுள்ளது. பன்மைத்தன்மையை முன்னெடுக்கும் பொழுது இலக்குகளும் வழிமுறைகளும் மாற்றமடைந்து செல்லும், ஒற்றை வழிமுறையிலும் இது கூடுதலான நலன்களை விளவிக்க வல்லது என்பது பின்னவீனத்துவவாதிகளின் கருத்து.
மார்க்சிய இயங்கியல் அணுகுமுறை இலக்கு மற்றும் அணுகுமுறை" கள் முதலியவற்றில் பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுதல் போன்று பன்மை நிலை நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சாதியத்துக்கு எதிரான போராட்டம், கல்வியிலே சமத்துவம் சம சந்தர்ப்பம் முதலியவற்றை வலியுறுத்திய போராட்டம், கலை இலக்கியங்களிலே மண்வாசனையின் வலியுறுத்தல், முதலியவற்றில் மார்க்சியத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் இலங்கையின் இனத்துவ முரண்பாடுகளைப் புலக்காட்சி கொள்வதில் மார்க்சியவாதிகள் தெளிவு கொள்ளவில்லை என்ற விமர்சனத்தை நிராகரிக்க முடியாது. இங்கு பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடும் கூட்டுமொத்தப்படுத்தலும், ஒற்றைபரிமாண அணுகுமுறை மேலோங்கியிருந்தன. வித்தியாசமான சிந்தனையும், வித்தியாசமான அரசியலும் புறக்கணிப்புக்கு உள்ளாகின.
கால வளர்ச்சியின் போது, பின்னைய முதலாளியம் தனது முகத்தோற்றங்களை மாற்றத் தொடங்கியுள்ளது. முதலாளியத்தின் மீது மார்க்சியம் விடுத்த பல அறைகூவல்களை உள்வாங்கி பின்னைய முதலாளியம் பல்வேறு சமூக நலன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தனக்குரிய தவிர்க்க முடியாத செயற்பாடாகிய சுரண்டலையும், பறிப்பையும் திரிபுக்காட்சிக்கு உள்ளாக்கக்கூடியவாறு தொழிலாளர் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தொழிலாளர் காப்புறுதி, சேமநலநிதி, குடியிருப்புத் திட்டங்கள், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் முதலியவை சுரண் டலை வெளித்தோன்றவிடாது மூட முயலும் கம்பளங்களாக விரிக்கப்பட்டுள்ளன.
பின்னைய முதலாளியத்தின் பிறிதொரு வடிவம் நுகர்ச்சியாளர் மீது தென்படாக்கரங்களாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டலும், உளவியல்
-92- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

நிலைப்பட்ட பதகளிப்புத் தூண்டலுமாகும். "இரட்டை நிலைத் தோற்றுவிப்பும்"பின்னைய முதலாளித்துவத்தின் வேறொருவடிவமாகும். எடுத்துக்காட்டாக சூழலைத் தீவிரமாகச் சுரண்டி மாசுப்படுத்தலை மேற்கொள்ளும் அதேவேளை சூழலைப் பாதுகாத்தல் தொடர்பான பரப்புரைகளை வழங்குதலும் "இரட்டை நிலைத் தோற்றுவிப்பு" ஆகின்றது. இந்தப் புதிய வளர்ச்சிகளை பின்னவீனத்துவம் முன்வைக்கும் நேர் மற்றும் எதிர்த் திறனாய்வுகளை எதிர்கொள்ளக் கூடிய அறிகை வலுவும், தருக்கவலுவும் மார்க்சியத்துக்கு உண்டு. ஏனைய தத்துவங்களுக்கும் மார்க்சியத்துக்குமுள்ள அடிப்படையான வேறுபாடுகளில் இருந்து அதனை விளங்கிக் கொள்ள முடியும். மார்க்சியம் குறிக்கும் முரண்பாடுகளின் ஐக்கியமும் மோதலும் ஒரு "மூடிய” செயல் முறை அன்று. காலவோட்டத்திலே தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படத்தக்க செயல்முறையாக அது அமைகின்றது.தொடர்ச்சி. யாகவும் புதிய புதிய வடிவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சுரண்டற் கோலங்களை விளக்குவதற்கும், மாற்றங்களை விசைப்படுத்துவதற்கும் மார்க்சியத்துக்கு பதிலீடுகள் இல்லா உயர்ச்சியையே காண முடிகின்றது.
பின்னைய முதலாளியம் சமூக நலன்கள் பலவற்றை முன்னெடுத்து வந்தாலும், சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்குமிடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளாவிய முறையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்லல் ஐ.ந.அமையத்தின் புள்ளிவிபரங்களில் இருந்து அறியக்கிடக்கின்றது. மேலும் அதிநவீன மருத்துவ வசதிகளும், அதிஉயர்ந்த தரத்தைக் கொண்ட கல்வியும் சாமானியர்களுக்கு எட்டாத பொருள்களாக மேலுயர்த்தப்பட்டுள்ளன. உலக மூலவளங்களின் சுரண்டல் பராமரிக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளில் மேம்பட்ட நாடுகளிலே வேலையின்மையும், கீழ் உழைப்பும், தனிநபர்களின் மனநலப் பாதிப்புகளும் வீக்கமடையத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் மீண்டும் மீளாய்வு செய்யப்படும் மார்க்சியத்தை நோக்கிய திருப்பு முனைக்கே அழைத்துச் செல்கின்றன.
கலாநிதி சபா.ஜெயராசா -93

Page 50
References - I General
Best, Stephen and Deglas Kellner, (1991), Post moden theory; critical
interrogations, New York: Guilford.
Descombes, Vincent (1980) Modern French Philosophy, New York: Cam
bridge University press.
Dews, Peter (1987) Logics of Disintegration, New York; verso.
Foster, Hal (1983) The anti aesthetic port townsend wash, Bay press
Harvey, David (1989) The condition of post modern Ilty, Oxford: Blackwell.
Jencks, Chrles (1992) The post modern reader, London: Academy Edi
tions,
Klotz, Heunrich (1988) The History of post modern architecture cambridge,
mitpress
Rose, Margaret (1991) The post modern and post industrial: a critical
Analysis, Cambridge, University press.
Rose nau, Pauline marie, (1992) post modernism and social sciences
princeton NJ. University press.
References - 2 Works of Historical Interest
Bell, Bernard Iddings, Religion for living: A Book for Postmodernists.
London: The Religious Book Club, 1939.
Bell Daniel. The Cultural Contradictions of Capitalism. New York: Basic
Books, 1976.
De Onis, Federico. Anhlogia de la Poesia espanola e hispanoamer cana;
1882 - 1932. Madrid: 1934.
Etzioni. Amitai, The Active Society: A Theory of Societal and Political
Processes. New York. Free Press, 1968.
"Fiedler, Leslie, 'The New Mutants.” in the Collected Essays of Leslie Fiedler, vol.II. Newyork. Stein and Day, 1971, pp.379-99.
Hassan, Ihab. The Dismemberment of Orpheus Toward a Postmodern
Literature,
Madison: University of Wisconsin Press, 1971.
-94- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்

Habdige, Dick Hiding in the Light: on Images and Things. New York.
Routledge, 1988.
Howe, Irving. The Decline of the New. New York: Harcourt, Brace and
World, 1970, pp. 190-207.
Hudnut, Joseph. "The Postmodern House", Architectural Record, 97,
May 1945 pp. 70-5
Jacobs, Jane. The Death and Life of Great American Cities. New York:
Random House, 1961.
Jencksm Charles, "The Rise of Post - Modern Architecture." Architectural Association Quarterly, Summer, 1976, 7.4, pp, 7-14.
Levin, Harry. "What was Modernism" in Refractions: Essays in Comparative Literature. New York: Oxford University Press, 1966, pp.271-95.
McLuhan, Marshall. Understading Media: the Extensions of Man. New
York. McGraw - Hill, 1964.
Mills, C. Wright. The Sociological Imagination. New York: Oxford University Press, 1959. Pannwitz, Rudolf Die Krisis der Europaeischen Kultur. Nurnberg: Hans Carl 1917. Panty, Arthur J. and Ananda K. Coomaraswamy. Essays in Post-Industrialism: A Symposium of Prophecy Concerning the Future of Society," London: 1914
Reisman, David. "Leisure and work in Post-Industrial Society" in Mass Leisure, ed. E. Larrabee and R. Meyershon. Glencoe, III. Free Press, 1958, pp. 363-85.
Touraine, Alaine. The Post- Industrial Society, trans, Leonard
F.X. Mayhew. New York: Random House, 1971: original, 1969.
References - 3
Aronowitz, S. and H.A. Giroux (1991) Postmodern Education. Politics, Culture and Social Criticism. Minneapolis: University of Minnesota Press.
Cherryholmes, C. (1988). Power and Criticism: Poststrucutal Investiga
tions in Education. New York. Teachers College Press.
கலாநிதி சபா.ஜெயராசா -95-س

Page 51
Fraser, N. (1989). Unruly Practices, Minneapolis. University of Minne
sota Press.
Giroux, H (1988a). Schooling and the Struggle for Public Life, Minne
apolis: University of Minnesota Press.
Grumet, M. (1988). Bitter Milk. Women and Teaching. Massachusetts:
University of Massachusetts Press.
Hooks, B. (1989). Talking Back. Boston: South End Press.
Hirsch Jr. E.D. (1987). Cultural Literacy: What Every American Needs to
Know. Boston. Houghton Mifflin.
Laclau, E (1988), Politics and the limits of modernity. In A. Ross (ed.), Universal Abandon? The politics of Postmodernism. Minneapolis: University of Mainnesota Press, 63-82.
Michnik, A. (March 11, 1990) Notes on the Revolution. The New York
Times Magazine.
Oreskes, M.(March 18, 1990). Ameruca's politics loses way as its vision changes world. The New York Times. Vol CXXXIX, No. 48, 178 (Sunday), 1, 16.
Penley, C. (1989). The Future of an illusion: Film, Feminism and Psy
choanalysis. Minneapolis: University of Minnesota
Popkewitz, T. (1988). Culture, pedagogy, and power, issues in the production of values and colonialization. Journal of Education, 170(2), 77-90.
Shapiro, S. (1990). Between Capitalism and Democracy, Westport: Bergin
and Garvey Press.
Simon, R. (forthcoming). Teaching against the Grain. Westport. Bergin
and Garvey.
Thompson, E.P. (January 29, 1990). History turns on a new hinge. The
Nation, 117-22.
Walzer, M. (1987). Interpretation and Criticism. Cambridge: Harvard
University Press.
-96- பின்னவீனத்துவத்தை விளங்கிக்கொள்ளல்


Page 52


Page 53

யர் சபா ஜெயராசா னப் பல்கலைக்கழகத்தின் ல்துறைப் பேராசிரியரான சபா
அவர்கள் ஆணித்தரமான ளைத் துணிவுடன் முன்வைப்பதில்
ானவர் இராமநாதன் நுண்கலைப் பாக இருக்கும் போது சார்ந்த புதிய பாடநெறிகளை
வெற்றிகண்டவர் மார்க்சியம் ளவியல் மானுடவியல் கல்வியியல் ல் கருத்துக்களை முன்னிறுத்தி பல Gororg LGGEFA ாளர் பல நூல்கள் அவரின்
குச் சான்றாக வெளிகொண்டு நிள்ளன. ஈழத்துப் பத்திரிகைளிலும்
ளிலும் இவரது இறுக்கமான கள் பல வெளிவந்துள்ளன. மையும் எழுத்தாற்றலும் மும் வாய்ந்த ஒரு அறிஞர் யாழ்
கழகத்தின் வளர்ச்சியில் பெரும் காட்டி கல்வியியல் துறையை
திவருகின்றார்.