கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்கி சின்னத்துரை மலர்

Page 1
|Kaki Sima
,
சிவக்கொழுந்து ஞாபகார்த்த
 

திரைறலி
TaMa

Page 2
எத்தனையோ நினைவலைகள் வந்து மோதி உங்களுடன் நாங்கள் வாழ்ந்த இன்பமான நாள்களை திரும்பத்திருப்ப நினைவூட்டுகின்றன. இந்த நினைவுகள் தான் எங்களுக்கு இனிமேல் வழிகாட்டியாக, உயிருட்டியாக, இருக்கப் போகின்றன. உங்களுடைய சாந்தமான குணத்தையும், சிரித்த முகத்தையும் எங்களிடம் காட்டிய அன்பையும் எங்களை வாழவைக்கத் தந்துதவியவற்றையும் எப்படி நாம் மறப்போம்.
உங்கள் நினைவு என்றும் நிலைக்க வேண்டும் என்னும் அவாவுடன் செய்யப்பட்ட இந்த நூலை இணுவை LILJUJITJ GEFGHIJF LTGGTGITTLI பாதகமலங்களிற் சமர்ப்பித்து வணங்குகின்றோம்.
ШтБайғаны மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
 

〔 L円,三山、
ü ■萤呜 வந்தின் னத்துரையின்
தி ஆடி அபரப் பிரதமை

Page 3

,\{,\cء حستع^=G) تحت چلتا ہوئے ۔ تمہ ہو یوc\<-)
கல்கி சின்னத்துரை மலர்
திருதி Саа, 8 *
・○。 --
தொகுப்பு கலாபூஷணம் பண்டிதர் சி. அப்புத்துரை
37 . .
சிவக்கொழுந்து சின்னத்துரை ஞாபகார்த்த வெளியீடு
2005-08-2 ||

Page 4
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார்
சிவக்கொழுந்து சின்னத்துரை சோதிப்பிள்ளை சின்னத்துரை
 
 

22 - சிவமயம்
உள்ளே செல்லுமுன்.
அமரர் சிவக்கொழுந்து சின்னத்துரை எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் உத்தமர். அவ்வள விற்கு அவர் உயர்ந்த பண்பாளர். இது யான் சொல்லும் வார்த்தையன்று. இந்த நூலுக்கான ஆக்கங்களைத் தந்தவர்களுஞ்சரி நேரே உரையாடியவர்களுஞ் சரி எல்லோரும், இதையேதான் சொல்லுகின்றார்கள்.
பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்ந்தல் அதனினு மிலமே
என்ற புறநானூற்றுப் பகுதியை அவர் வாழ்வுடனாக்கிப் பார்ப்பது முலம் மேலே ஒவ்வொருவர் உள்ளத்தும் தோன்றிய உண்மைக்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடியும். சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்னும் பகுதி மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கப்பட வேண்டியது. சின்னத்துரை பெரியதுரை ஆயினமைக்கான மூலம் இங்கேதான் கிடைக்கிறது.
சினி னத் துரை அவர்களின் அனுபவக் கல்வி எல்லோருக்குங் கிடைக்கக்கூடிய ஒன்றன்று. அது அவரால் அனுபவிக்கப்பட்டு அவரால் உணரப்பட்டது. தொழில் மகத்துவங் காண்பதற்கு அதுவே வாய்ப்பாக அமைந்து விட்டது. வர்த்தகத் துறையில் அவர் ஈட்டிய மகத்தான வெற்றிக்கு அத்திவாரம் இங்கேதான் இடப்படுகின்றது. அவருடைய உயர்வு - தனிமனித உயர்வு - வீட்டுயர்வாகி நாட்டுயர்வாகிப் பரிமளிக்கின்றது. அத்தகு மகான் நினைவை வாழ வைக்கக்கூடிய இறவாத புகழுடைய

Page 5
நூல் ஒன்று வெளிவரவேண்டுமெனப் பலரும் விரும்பினர். அந்த விழைவின் பயன்தான் கல்கி சின்னத்துரை மலர் என்றாகி உங்கள் கரங்களை அழகு செய்கின்றது.
இந்த நூலின் முதலாம் அத்தியாயம் திருமுறைச் செல்வம் என்றாகி ஐந்தெழுத்தின் பெருமை. திருநீற்றின் மகிமை, திருத்தொண்டர் சிறப்பு, கிரகச் சேட்டைத் தவிர்ப்பு என்னும் பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.
இரண்டாவது அத்தியாயம் விநாயகர் வழிபாடு முருக வழிபாடு, வயிரவர் வழிபாடு, சக்தி வழிபாடு, திருக்குற ளுண்மைகள் புறநானூற்றுண்மைகள் முதலானவற்றைத் தருகிறது.
மூன்றாவது அத்தியாயம் அமரர் தெய்வநிலை பற்றிய சிந்தனைகளை விரிவாகச் சிந்திக்க வைக்கின்றது.
நான்காம் அத்தியாயம் அமரர் பற்றிய சிந்தனைகளை அவரவர் வாயின்வழி அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது.
இந்த நூல் முப்பத்தோராவது நாளை நினைவிற் கொண்டு விரைவுபடுத்திச் செய்யப்பட்டது. சிவக்கொழுந்து சின்னத்துரை சிந்தனைகளை செயல்திறனை மையப்படுத்தி அரிய கருவூலங்கள் இனிமேற்றான் வெளிவரவேண்டும். பயனுள்ள கருத்துக்கள் எதிர்காலத்து நூலாகக்கூடி வாய்ப்பு நிறைவாக உண்டு.
இந்த நூல் அழகு லிவதொன்றாகி வெளி வருவதற்குக் காரணர்களாய் அமைந்த கொழும்பு கீதா பதிப்பகத்தினர்க்கு எம் இதயபூர்வமான நன்றி உரியது. குடும்பத்தினர் சார்பில்
சி. அப்புத்துரை

முதலாம் அத்தியாயம்
திருமுறைச்செல்வம்
முதலாந்திருமுறை:
தோடுடையசெவியன்
இரண்டாந்திருமுறை:
1. திருநீற்றுப் பதிகம் i. கோளறு பதிகம்
மூன்றாந் திருமுறை:
1. நமச்சிவாயத் திருப்பதிகம்
i. பஞ்சாக்கரத் திருப்பதிகம்
நான்காந்திருமுறை:
நமச்சிவா:) திருப்பதிகம்
ஐந்தாம் திருமுறை:
அன்னம்பாலிக்கும்
ஆறாந்திருமுறை:
அப்பன்நீ அபமைநீ
13
15
17
19
21

Page 6
7.
8.
10.
11.
12.
12.
ஏழாந்திருமுறை:
i. நமச்சிவாயத் திருப்பதிகம் i. திருத்தொண்டத் தொகை
எட்டாந்திருமுறை:
1. சிவபுராணம் i. திருவெம்பாவை i. திருப்பள்ளியெழுச்சி iv. திருப்பொற்சுண்ணம்
V. திருக்கோவையார்
ஒன்பதாந் திருமுறை:
i. திருவிசைப்பா
i. திருப்பல்லாண்டு
பத்தாந்திருமுறை:
திருமந்திரம்
பதினோராம் திருமுறை:
திருஈங்கோய்மலை எழுபது
பன்னிரண்டாந் திருமுறை:
பெரிய புராணம்
திருப்புகழ்
27
31
36
43
47
54
56
58
61
74

சிவழயம் முதலாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்புணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய புெம்மானிவனன்றே.
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே 2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஒருரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய புெம்மானிவனன்றே. 3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பிற பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவியு' பெம்மானிவனன்றே. 4
ஒருமைபெண்மையுடைய யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவியு பெம்மானிவனன்றே. 5
S

Page 7
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 6
சடைமுயங்குபுன லன்னனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலஊழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 8.
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 9
புத்தரோடுபொறி யில்சமனும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 10
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வின்ை தீர்தலெளிதாமே. 11
திருச்சிற்றம்பலம்

சிவமயம்
இரண்டாந்திருமுறை
திருநீற்றுப் பதிகம் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 1
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
2
முதுதி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 3
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
4
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
5
7

Page 8
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
6
எயிலதூ அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
7
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
8
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.
9
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே. 10
ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன லுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே, 11
திருச்சிற்றம்பலம்.
8

2சிவமயம்
இரண்டாந்திருமுறை
கோளறு திருப்பதிகம் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செல்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 1.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
ப்ொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதனெட் டொடாறு
முடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே 2
9

Page 9
உருவாளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டனெந்தை மடவாள்த னோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
10

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள்த னோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 6
செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 7
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள்த னோடு முடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தெ
னுளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடு
மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8
11

Page 10
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொ னெங்கும் நிகழ நான்முக னாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளு மடியாரை வந்து நலியாத வண்ண முரைசெய் ஆனசொல் மாலையோது மடியார்கள் வானில்
அரசாள்வ ராணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்.
12

°一 சிவமயம்
மூன்றாம் திருமுறை
நமச்சிவாயத் திருப்பதிகம் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்பொரு ளாவது நாதன் நாம நமச்சி வாயவே. 1
நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாம நமச்சி வாயவே. 2
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்க நாம நமச்சி வாயவே. 3
இயமன் தூதரு மஞ்சுவ ரின்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாம நமச்சி வாயவே. 4
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாம நமச்சி வாயவே. 5
13

Page 11
மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்தி நாம நமச்சி வாயவே.
நரக மேம்புக நாடின ராயினும் உரைசெய் வாயின ராயி னுருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாம நமச்சி வாயவே.
இலங்கை மன்ன னெடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர னுான்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை நலன்கொள் நாம நமச்சி வாயவே.
போதன் போதன கண்ணனு மண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி யலந்தவர் ஒது நாம நமச்சி வாயவே.
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
நந்தி நாம நமச்சிவா யவெனும் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாச மறுக்கவல் லார்களே.
திருச்சிற்றம்பலம்.
14
10
11

சிவமயம்
மூன்றாந் திருமுறை
பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம் துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ முததுமே. 1
மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ முத்துமே. 2.
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி யொண் சுடர் ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் தேனைவ பூழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ முத்துமே. 3
நல்லவர் தீயரெ னாது நச்சினர் செல்லல்கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்லந மன்றமர் கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன அஞ்செ முத்துமே. 4.
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில் தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை அங்கையி லைவிர லஞ்செ முத்துமே. 5
1S

Page 12
தும்ம லிருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ முத்துமே.
வீடுபி றப்பை யறுத்து மெச்சினர் பீடைகெ டுப்பன பின்னை நாள்தொறும் மாடுகொ டுப்பன மன்னு மாநடம் ஆடியு கப்பன அஞ்செ முத்துமே.
வண்டம ரோதி மடந்தை பேணின பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்ட மளிப்பன அஞ்செ முத்துமே.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வண மாவன அஞ்செ முத்துமே.
புத்தர்ச மண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன அஞ்செ முத்துமே.
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்ன லுன்னிய அற்றமில் மாலையீ ரைந்து மஞ்செழுத் துற்றன வல்லவ ரும்ப ராவரே.
திருச்சிற்றம்பலம்.
16

சிவமயம்
நான்காம் திருமுறை
நமச்சிவாயத் திருப்பதிகம் திருநாவுக்கரசர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. ་2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5
17

Page 13
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணரில்லையே. 10
திருச்சிற்றம்பலம்.
இது சமணர்கள் கற்றுானிற் கட்டிக் கடலிலே வீழ்த்தின போது ஓதி அருளப்பட்டது.
8

L
சிவமயம் ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. 1.
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. 2
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. 3
அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. 4.
ஊனில் ஆவி யுயிர்க்கும் பொழுதெலாம் நான் நிலாவி யிருப்பனென் னாதனைத் தேன் நிலாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. 5
19

Page 14
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே.
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே.
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்ணி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே.
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்ந்தவன் தில்லைவட் டத்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.
நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு விருக்கவே.
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
திருச்சிற்றம்பலம்
20
10
11

சிவமயம்
ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஒரு ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்னி இம்மணிநீ இம்முத் தும்நீ
யிறைவன்நீ ஏறுார்ந்த செல்வன் நீயே. 1
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்யவினைப் பகையும் பைய நையும் எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம் அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சம் ஆட்டு கந்த செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. 2
21

Page 15
ஆட்டுவித்தால் ஆரொருவ ராடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவ ரடங்கா தாரே ஒட்டுவித்தால் ஆரொருவ ரோடா தாரே
யுருகுவித்தால் ஆரொருவ ருருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 3
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே. 4
திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணி றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வுரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. 5
22

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே. 6
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேற் புகழ்தக்க பொருளே யுன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே. 7
அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியநீ யெளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே. 8
23

Page 16
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.9
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தோழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. 10
வட திசை காட்டுங் கருவியைப்போல் இருக்க வேண்டும். நீயே உனக்கு நண்பனும், பகைவனும்,
வேலையைச் செய்தம் செய்யாதவன் போலிருக்க வேண்டும்.
பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும்.
சுகமுந் தக்கமும் இரட்டைப்பிள்ளைகள்.
பிரமச்சரிய விரதத்தின் பெருமை பெரித.
- யோகர் சுவாமிகள்
24

சிவமயம்
ஏழாந்திருமுறை
நமச்சிவாயத் திருப்பதிகம் சுந்தரர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
மற்றுப்பற்றெனக் கின்றிநின்திருப் பாதமேமனம் பாவித்தேன் பெற்றலும்பிறந் தேன்இனிப்பிற வாததன்மைவந் தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே.
இட்டனும்மடி ஏத்துவாரிகழ்ந் திட்டநாள்மறந் திட்டநாள் கெட்டநாளிவை யென்றலால்கரு தேன்கிளர்புனற் காவிரி வட்டவாசிகை கொண்டடிதொழு தேத்துபாண்டிக் கொடுமுடி நட்டவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே.
ஓவுநாளுணர் வழியும்நாளுயிர் போகுநாளுயர் பாடைமேல் காவுநாளிவை யென்றலால்கரு தேன்கிளர்புனற் காவிரிப் பாவுதண்புனல் வந்திழிபரஞ் சோதிப்பாண்டிக் கொடுமுடி நாவலாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே.
எல்லையில்புகழ் எம்பிரானெந்தை தம்பிரானென்பொன் மாமணி கல்லைஉந்தி வளம்பொழிந்திழி காவிரியதன் வாய்க்கரை நல்லவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி வல்லவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே.
அஞ்சினார்க்கரண் ஆதியென்றடி யேனும்நான்மிக அஞ்சினேன் அஞ்சலென்றடித் தொண்டனேற்கருள் நல்கினாய்க்கழி கின்றதென் பஞ்சின்மெல்லடிப் பாவைமார்குடைந் தாடுபாண்டிக் கொடுமுடி நஞ்சணிகண்ட நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே.
25

Page 17
ஏடுவான்இளந் திங்கள்குடினை யென்பின்கொல்புலித் தோலின்மேல் ஆடுபாம்பத ரைக்கசைத்த அழகனேயந்தண் காவிரிப் பாடுதண்புனல் வந்திழிபரஞ் சோதிபாண்டிக் கொடுமுடிச் சேடனேயுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே. 6
விரும்பிநின்மலர்ப் பாதமேநினைந் தேன்வினைகளும் விண்டன நெருங்கிவண்பொழில் சூழ்ந்தெழில்பெற நின்றகாவிரிக் கோட்டிடைக் குரும்பை மென்முலைக் கோதைமார்குடைந் தாடுபாண்டிக் கொடுமுடி விரும்பனேயுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே. 7
செம்பொன்நேர்சடை யாய்திரிபுரந் தியெழச்சிலை கோலினாய் வம்புலாங்குழ லாளைப்பாகம் அமர்ந்துகாவிரிக் கோட்டிடைக் கொம்பின்மேற்குயில் கூவமாமயி லாடுபாண்டிக் கொடுமுடி நம்பனேயுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே. 8
சாரணன்றந்தை எம்பிரானெந்தை தம்பிரானென்பொன் மாமணியென்று பேரெணாயிர கோடிதேவர் பிதற்றிநின்று பிரிகிலார் நாரணன்பிர மன்தொழுங்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடிக் காரணாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே. 9
கோனியபிறை சூடியைக்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி, பேணியபெரு மானைப்பிஞ்ஞகப் பித்தனைப்பிறப் பில்லியைப் பாணுலாவரி வண்டறைகொன்றைத் தாரனைப்படப் பாம்பரை நாணனைத்தொண்ட லூரன்சொல்லிவை செர்ல்லுவார்க்கில்லை துன்பமே. 10
திருச்சிற்றம்பலம்.
விடயங்களிலே போகும் மனத்தை ஆத்மாவில் இலயிக்கச் செய்தல் வேண்டும். பற்றின்றிக் கருமத்தைச் செய்தால் அதவே யோகம், அதவே சந்தியாசமும் ஆகும்.
- யோகர் சுவாமிகள்
26

சிவமயம்
ஏழாந்திருமுறை
சுந்தரர் திருத்தொண்டர்தொகை தேவாரம்
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்ற னடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2
27

Page 18
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு கடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 3
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன் பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன் ஒருநம்பி அப்பூதி யாடியார்க்கு மடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலந்க்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி யாடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆருரி லாம்மானுக்கு காளே 4.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன் நம்பிரான் திருமூல னடியார்க்கு மடியேன்
நாட்டம்மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கு மடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 5
28

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுதொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன்
கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 6
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன் ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 7
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன் நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன் துறைக்கொண்ட செம்பவுளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 8
29

Page 19
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைத னடியார்க்கு மடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப்
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த் துணைக்குமடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 9
பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே. 10
மன்னியசீர் மறைநாவன் நின்றவுபூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூர னடிமைகேட் டுவப்பார்
ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே.
திருச்சிற்றம்பலம்.
30

சிவமயம்
எட்டாந்திருமுறை
மாணிக்கவாசகர் திருவாசகம்
திருச்சிற்றம்பலம்
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
O 1
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் த்ாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க! புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவார் உண்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க!
ஈசனடி போற்றி எந்தை யடிபோற்றி! தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி! நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி!
சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி!
31
05
1 0

Page 20
ஆராத இன்பம் அருளு மலைபோற்றி! சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
20
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பலவிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஆ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
32
25
30
35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமாளே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே!
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே!
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர் களேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்லினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
33
4 O
45
55.

Page 21
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே தேனா ரமுதே சிவபுரனே! பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே! நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே! ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே!
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே!
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
60
65
70
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
34

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே! காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே! வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
ப்ோற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப்புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே! நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
35
85
90
95

Page 22
சிவமயம்
எட்டாந்திருமுறை
மாணிக்கவாசகர் திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்
போதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார மளியின்மே னின்றும் புரண் டிங்ங் னேதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே
யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். (1
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகனாம்
பேசும்போ தெப்போ திப்போதார மளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ யிவையுஞ் சிலவோ விளையாடி யேசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்லைச்சிற் றம்பலத்து
ளிசனார்க் கன்பர்யா மாரேலோ ரெம்பாவாய். (2
36

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதி ரெழுந்தென்
னத்தனா னந்த னமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
வெத்தோநின் னன்புடமை யெல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை
யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (3
ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின் றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய். (4
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று றோல மிடினு முணரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். (5
37

Page 23
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவ னென்றலு நாணாமே
போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான்
றானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா
யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு
மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோரெம்பாவாய் (6
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். (7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
மேழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ வுழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய் (8
38

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
யுன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோ
முன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கேபாங்காவோ
மன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ
மின்ன வகையே யெமக்கெங்கோ னல்குதியே
லென்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். (9
பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலு மோத வுலவா வொருதோழம் றொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகா ளேதவனு ரேதவன்பே ராருற்றா ராரயலா
ரேதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். (1(
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி யையா வழியடியோம் வாழ்ந்தோங்கானா ரழல்போற்
செய்யா வெண்ணிறாடிச் செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
வையாநி யாட்கொண்டருளும் விளையாட்டி னுய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காட்பா யெமையேலோ ரெம்பாவாய் (11
39

Page 24
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன்மேல் வண்டார்ப்பப் பூத்திகளும் பொய்கை குடைந்துடையாள் பொற்பாத
மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். (12
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா
லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந் தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய். (14
40

ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும்வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந் துடையா
ளென்னத் திகழ் தெம்மையாளுடையா" விட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் (16
செங்கணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
யங்கண ரசை யடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் (17
41

Page 25
அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவிறற்றாற்போற் கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப் பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுாமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்(18
உங்கையிற்பிள்ளை யுனக்கே யடைக்கல மென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா லெங்கள் பெருமா னுணக்கொன் றுரைப்போம்கேள்
ளெங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய் (19
போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். (20
திருச்சிற்றம்பலம்
42

சிவமயம்
எட்டாந்திருமுறை
மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி
திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கினை துணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக் கருண் மலரு
மெழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யேற்றுயர் கொடியுடையா யெனை யுடையாய்
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (l
அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போ
யகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரிய னெழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந் திரணிரை யறுபத முரல்வன விவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யருணிதி தரவரு மானந்த மலையே
யலைகடலே பள்ளி யெழுந்தரு ளாயே. (2
43

Page 26
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்க
மோவின தாரகை யொளியொளி யுதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழற் றாளிணை காட்டாய்
メ திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரு மறிவரியா யெமக் கெளியா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ണru. (3
இன்னிசை வீணைய ரியாழின ரொருபா
விருக்கொடு தோத்திர மியம்பின ரொருபாற் றுன்னிய பிணைமலர்க் கையின ரொருபாற்
றொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபாற் சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபாற்
றிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யென்னையு மாண்டுகொண் டின்னருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (4
பூதங்க டோறும்நின் றாயெனி னல்லாற்
போக்கிலன் வரவில னெனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத லாடுத லல்லாற்
கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்மரி யாயெங்கண் முன்வந் தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (5
44

பப்பற வீட்டிருந் துணருநின் னடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரு மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றாரணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தனி வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யிப்பிறப் பறுத்தெம்மை யாண்டருள் புரியு
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (6
அதுபழச் சுவையென வமுதென் வறிதற்
கரிதென வெளிதென வமரரு மறியா ரிதுவவன் றிருவுரு விவனவ னெனவே
யெங்களை யாண்டுகொண் டிங்கெழுந் தருளு மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா வெதுவெமைப் பணிகொள்ளு மாறது கேட்போ
மெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (7
முந்திய முதனடு விறுதியு மானாய்
மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார் பந்தனை விரலியு நீயுநின் னடியார்
பழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி யந்தன னாவதுங் காட்டிவந் தாண்ட
யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே. (8
45

Page 27
விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கண் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோங் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியா ரெண்ணகத் தாயுல குக்குயி ரானா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. (9
புவனியிற் போய்ப்பிற வாமையி னானாம்
போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலா மவன்விருப் பெய்தவு மலரவ னாசைப்
படவுநின் னலர்ந்தமெய்க் கருணையு நீயு மவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லா
யாரமு தேப்ஸ்ளி யெழுந்தரு ளாயே. (10
திருச்சிற்றம்பலம்
நிவேதனம் செய்து சாப்பிடுதல்வேண்டும் ஒமகுண்டத்தில் அவிப்பாகமிடுவதுபோல உணவை உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தெய்வம். பிரகிருதியே சக்தி.
இன்பதுன்பமெல்லாம் முகிலைப்போல் வந்து போகட்டும்.
தன்னை அடக்கியாளுதல் வேண்டும்.
. யோகர் சுவாமிகள்
46

dish LDub
எட்டாந்திருமுறை
மாணிக்கவாசகர் திருப்பொற்சுண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்துநற் றாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபநற் றீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியுங்
கங்கையும் வந்து கவரிகொண்மி
னத்தனை யாறனம் மானைப்பாடி
யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (1
பூவியல் வார்சடை யெம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே
குனிமின் றொழுமினெங் கோனெங்கூத்தன் றேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. (2
47

Page 28
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி யிந்திரன் கற்பக நாட்டியெங்கு
மெழிற்சுடர் வைத்துக் கொடியெடுமி னந்தரர் கோணயன் றன்பெருமா
னாழியா னாதனல் வேலன்றாதை யெந்தர மாளுமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ண மிடித்துநாமே. (3
காசணி மின்களு லக்கையெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய வடியவர்க
ணின்று நிலாவுக வென்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. (4
அறுகெடுப் பாரய னும்மரியு
மன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோஞ் செறிவுடை மும்மதி லெய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கணப்பற்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (5
48

உலக்கை பலவோச்சு வார்பெரிய
ருலகமெ லாமுரல் போதாதென்றே கலக்க வடியவர் வந்துநின்றார்
காண வுலகங்கள் போதாதென்றே நலக்க வடியோமை யாண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ண மிடித்துநாமே. (6
சூடகந் தோள்வளை யார்ப்பவார்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்பவார்ப்ப
நாமு மவர்தம்மை யார்ப்பவார்ப்பப் பாடக மெல்லடி யார்க்குமங்கை
பங்கின னெங்கள் பராபரனுக் காடக மாமலை யன்னகோவுக்
காடற்பொற் சுண்ண மிடித்துநாமே. (7
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை யார்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
சோற்றெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (8
49

Page 29
வையக மெல்ா முரலதாக
மாமேரு வென்னு முலக்கைநாட்டி மெய்யெணு மஞ்ச னிறையவட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொ னுலக்கை வலக்கைபற்றி யையன னிதில்லை வாணனுக்கே
யாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (9
முத்தணி கொங்கைக ளாடவாட
மொய்குழல் வண்டின மாடவாடச் சித்தஞ் சிவனொடு மாடவாடச்
செங்கயற் கண்பணி யாடவாடப் பித்தெம் பிரானொடு மாடவாடப் பிறவி பிறரொடு மாடவாட வத்தன் கருணையொ டாடவாட
வாடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (10
மாடு நகைவா னிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
பாடுமி னந்தம்மை யாண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
தேடுமி னெம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
யாடுமி னம்பலத் தாடினானுக்
காடற்பொற் சுண்ண மிடித்துநாமே. (11
50

மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை ஐயனை ஐயர்பிரானை நம்மை
யகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோட் பையர வல்குன் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே (12
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீ ரென்னுடை யாரமு தெங்களப்ப
னெம்பெரு மானிம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
றமைய னெம்மையன் றாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (13
சங்க மரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை யிரைப்ப வராவிரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (14
51

Page 30
ஞானக் கரும்பின் றெளிவைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ண மிடித்துநாமே. (15
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேற் றேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவக னாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ண மிடித்துநாமே. (16
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்து மூனக மாமழுச் சூலம்பாடி
யும்பரு மிம்பரு முய்யவன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. (17
S2

அயன்றலை கொண்டு செண்டாடல்பாடி
யருக்க னெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலா லுதைத்தல்பாடி யியைந்தன முப்புர மெய்தல்பாடி
யேழை யடியோமை யாண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ண மிடித்துநாமே. (18
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மே லிட்டுநின் றாடு மரவம்பாடி
யிசற்குச் சுண்ண மிடித்துநாமே. (19
வேதமும் வேள்வியு மாயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச் சோதியு மாயிரு ளாயினார்க்குத்
துன்பமு மாயின்ப மாயினார்க்குப் பாதியு மாய்முற்று மாயினார்க்குப்
பந்தமு மாய்வீடு மாயினாருக் காதியு மந்தமு மாயினாருக்
காடப்பொற் சுண்ண மிடித்துநாமே. (20
திருச்சிற்றம்பலம்.
53

Page 31
சிவமயம்
எட்டாந்திருமுறை
மாணிக்கவாசகர் திருக்கோவையார்
திருச்சிற்றம்பலம்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோஅன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே.
நல்வினை யும்நயம் தந்தின்று
வந்து நடுங்குமின்மேல் கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல வல்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின் வெள்கித் தொல்வினை யால்துய ரும்என(து)
ஆருயிர் துப்புறவே.
54

கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு)
அ.தே குறைப்பவர்தம் சீலத் தன்கொங்கை தேற்றகி
லேம்சிவன் தில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால் சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.
தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்(கு)அந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண்
கற்பின் விழுமிதன்(று)ஈங் கோயில் சிறந்துசிற் றம்பலத்(து)
ஆடும்எம் கூத்தப்பிரான் வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே.
காரணி கற்பகம் கற்றவர்
நற்றுணை பாணர்ஒக்கல் சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர் தம்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று)
யாவர்க்கும் ஊதியமே.
திருச்சிற்றம்பலம்
55

Page 32
Φ -- ashudub
ஒன்பதாந்திருமுறை
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்,
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்டு) என்னுள்
இருட்பிழம்(பு) அறஎறிந்(து) எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதி! அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா! அயனொடு மாலறி யாமைப் படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
வண்டார் குழலுமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின் கண்டார் கவல வில்லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய்! என்னும் பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலைபல் பசுங்கண் கொண்டாய் என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
56

சேந்தனார் திருவிசைப்பா
ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை
என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வுபூர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை அன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர் மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை விழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின் பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.
பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காமபு ராந்தகன் சேலும் கயலும் திளைக்குநீர்த்
திருவா வடுதுறை வேந்தனோடு) ஆலும் அதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாயதே.
திருச்சிற்றம்பலம்
57

Page 33
S. சிவமயம்
ஒன்பதாந்திருமுறை
சேந்தனார் w திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம்
சொல்லாண் டசுரு திருப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளிர் சில்லாண் டிற்சிதை யும்கில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சேலுங் கயலும் திளைக்கும்
கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியாநெறி
தந்துவந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின்
றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
58

தாதையைத் தாளற வீசிய
சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவும் சென்று
விம்மி மிகுதிரு ஆரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
59

Page 34
சிவமயம்
பத்தாந் திருமுறை
திருமூலர் திருமந்திரம்
திருச்சிற்றம்பலம்
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார்இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.
ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை யாரறி வார்இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடுஒன்று ஆகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
திருச்சிற்றம்பலம்
60

சிவமயம்
நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருஈங்கோய்மலை எழுபது
திருச்சிற்றம்பலம்
அடியும் முடியும் அரியும் அயனும் படியும் விசும்பும் பாய்ந்(து) ஏறி - நொடியுங்கால் இன்ன(து) என அறியா ஈங்கோயே - ஓங்காரம் அன்னதென நின்றான் மலை.
அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக் கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின் இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு மலைவளைக்கை வில்லி மலை. 2
அம்பவள வாய் மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச் செம்பவளம் தாஎன்னச் சீர்க்குறத்தி - கொம்பின் இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல் மறுதலைநோய் தீர்ப்பான் மலை. 3
அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஒடப் பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும் கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே மையடுத்த கண்டன் மலை. 4.
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண்டு) ஏறிச் - சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம் திரியாமல் செற்றான் சிலம்பு. 5
61

Page 35
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடு தொடரும் மாக்குறவர் - கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேல் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று. 6
இடுதினைதின் வேழம் கடியக் குறவர் வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென நீண்டகழ்ை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி பூண்டகழை யேறி பொருப்பு. 7
ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி நான்றகறிக் கேறசலை நற்கிழங்(கு) - ஊன்றவைத்(து) என் அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல் நான்ற நறவத்தைத் தான்நனுகித் - தோன்ற விரலால்தேன் தோய்த்துாட்டும் ஈங்கோயே நம்மேல் வரலாம்நோய் தீர்ப்பான் மலை. 9
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப் பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே பூமயிலி தாதை பொருப்பு. ,ー 10
ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள் நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக் குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர் குணமருட்டும் கோளரவன் குன்று. 11

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக்(கு) ஏற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள் சென்றன்று வென்றான் சிலம்பு. 12
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ இணைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம் வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு. 13
ஏனம் உழுத புழுதி இனமணியைக் கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல் இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல் மறுக்கங்கள் தீர்ப்பான் மலை. 14
ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல் வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு. 15
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில் இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும் ஆளரிதான் ஒட அரிவெருவும் ஈங்கோயே கோளரிக்கும் காண்பரியான் குன்று. 6
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று. 17
63

Page 36
ஒடும் முகிலை உயிரால் இறவுன்றி மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே கோச்சீயம் காண்பரியான் குன்று. 18
கண்ட கணிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர் உண்டு குளிர்ந்திலஎன் றுாடிப்போய்க் - கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு மறைக்கீறு கண்டான் மலை. 19
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன் கைக்கொணரும் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே மைக்கொணரும் கண்டன் மலை. 20
கனைய பலாங்கனிகள் கலிலையர் தொக்க நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள் வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார் குருஅரும்பு செஞ்சடையான் குன்று. 21
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச் சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள் கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால் வேதம் தெரிந்துரைப்பான் வெற்பு. 22
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த விடமிடற்றி னான்மருவும் வெற்பு. 23
64

கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கி உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு. 24
கலவிக் களிறசைந்த காற்றெங்கும் காணா(து) இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று) ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு. 25
கன்னிப் பிடிமுதுகிற் கம்புருவம் உட்பருகி அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே ஏன்தருக்கி மாதவம்செய் ஈங்கோயே நீங்காத மான்தரித்த கையான் மலை. 26
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை கொள்ளென்(று) அழைத்த குரல்கேட்டுத் - துள்ளி இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம் மனக்கவலை தீர்ப்பான் மலை. 27
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக் கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள் பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும் கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று. 28
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே இதுந்துகிரால் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப் பொருந்தவராப் பூண்டான் பொருப்பு. 29
65

Page 37
கண்கொண்டு) அவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு) இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம் விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு 30
காந்தளம் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு. 31
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர் கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே மைந்நீட்டுங் கண்டன் மலை. 32
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு. 33
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுளை மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்டு) ஒல்லை இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய் வருங்கைக் களைவான் மலை. 34
கொவ்வைக் கனிவாய்க் குறமளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வை எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர் குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று. 35
66

கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள் கல்லுதல் பார்த்(து) அஞ்சி - நெடுநாகம் தண்டுன்றிச் செல்லும்சிர் ஈங்கோயே தாழ்சடைமேல் வண்டுன்றும் தாரான் மலை. 36
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு வரவதனைக் காப்பான் மலை 37
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு. 38
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின் வளமகளிர் பாகன் மலை. 39
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத் தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக் குமரன்முது தாதையார் குன்று. 40
தாயோங்கித் தாமடரும் தண்சாரல் ஒண்காணம் வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக் கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கொன்றைத் தாரான் வரை. 41
67

Page 38
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக்(கு) அஞ்சிப் பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற் பொன்னேர் அனையான் பொருப்பு. 42
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப் புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம் சென்னி அணிந்தான் சிலம்பு, 43
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து வந்தவிருந் தூடடும் மணிக்குறத்தி - பந்தியாத் தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே மாக்கலைகள் வைத்தான் மலை. 44
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள் இடம்புகுந்தங்(கு) இன்நறவம் மாந்தி - உடன்கலந்து மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே கோக்குரவை ஆடிகொழுங் குன்று. 45
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத் தாமரையில் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின் ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும் வாட்டங்கள் தீர்ப்பான் மலை. 46
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய் வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச் சேராமல் செற்றான் சிலம்பு. 47
68

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள் பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர் சீராட்ட நின்றான் சிலம்பு 48
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின் கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்(று) அருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர் வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு. 49
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல் ஒகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையில் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல் வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு. 50
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண ஏனம் இறவில் இயங்குவான் பார்த்துக் - குறவர் இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு. 51
நாக முழைநுழைந்த நாகம்போய் நல்வனத்தில் நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான் மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே ஓங்கியசெந் தீக்கையால் ஏந்தி சிலம்பு. 52
நாகங் களிறுநுங்)க நல்லுழுவை தாமரையின் ஆகந் தழுவி அசைவெய்த - மேகம் கருவிடைக்க ணர்சோரும் ஈங்கோயே ஓங்கு பொருவிடைக்க ஒனுார்வான் பொருப்பு 53
69

Page 39
பணவறிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை. 54
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக் கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர் மருவரியான் மன்னும் மலை. 55
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்டு) எல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும் வில்வே கொடுவெகுண்டான் வெற்பு 56
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப் படிமுகிலைப் பல்காலும் பார்த்திட்(டு) - இடரா இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர் குருவருட்குன் றாய்நின்றான் குன்று. 57
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத் தூநீரென்(று) எண்ணிக் - கருமந்தி முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈக்கோயே மூவெயிலும் திக்குகக்கச் செற்றான் சிலம்பு. 58
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம் இளவெயில்தீ அட்டுண்ணும் ஈங்கோயே மூன்று வளவெயில்தீ யிட்டான் மலை. 59
70

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈக்கோயே மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு. 60
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த புரையிதணம் பூக்கொடியார் புக்கு - நுரைசிறந்த இன்நறவுண்டு) ஆடி இசைமுரலும் ஈங்கோயே பொன்நிறவெண் ணிற்றான் பொருப்பு. 61
மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள் வருவனகள் கண்டு - சிலையை இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப் புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு. 62
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர் முத்தம் பணிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று. 63
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி இருந்து முறைமுறையே - நந்தி அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம் வளைந்தோடச் செற்றான் மலை. 64
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண் முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த் தேனாறு பாயும்கீர் ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை. 65
71

Page 40
முள்ளார்ந்த வெள்இலவம் ஏறி வெளியாது கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார் எரிநடுவுள் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே புரிநெடுநூல் மார்பன் பொருப்பு. 66
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல் எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான் வெற்பு. 67
வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு) இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல் வருந்துயரும் தீர்ப்பான் மலை. 68
வேய்வனத்துள் யானை திணைகவர வேறிருந்து காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயனைத்து மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைபரவு பூப்பிடிபொற் றாளான் பொருப்பு. 69
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகிய(து)என்(று) அஞ்சிமுது மந்தி - பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கள் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று 70
72

சிவமயம்
பன்னிரண்டாந்திருமுறை
சேக்கிழார் பெரிய புராணம்
மாற்றுநீ வன்மை பேசி
வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பின்
பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்
ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக என்றார்
தூ மறை பாடும் வாயார்
வேதியன் ஆகி என்னை
வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக்கு
உணர்வு தந்து உய்யக் கொண்ட கோதுஇலா அமுதே இன்றுஉன்
குணப் பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்துஎன் சொல்லிப்
பாடுகேன் என மொழிந்தார்
73

Page 41
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பு அரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லைஇல் தனிப்பெரும் கூத்தின் வந்த பேர்இன்ப வெள்ளந்துள் திளைத்து
மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
சிவமயம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
வேழமுண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக LDu 19[Tól; நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி.
நானு நைந்து விடாதருள் புரிவாயே; மாள அன்றம ணிசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி Duhsi)6.jj (T; காள கண்ட லுமாபதி தருபாலா
காசி கங்கையில் மேவிய பெருமாளே.
74

10.
1.
12.
இரண்டாம் அத்தியாயம்
திருவருட்செல்வம்
விநாயகர் அகவல் - ஒளவையார்
விநாயகர் திருவகவல் - நக்கீரர் பிள்ளையார் கதை - வரதபண்டிதர்
பிள்ளையார் வழிபாடு அருள்மிகு விநாயகர் 108 போற்றிகள்
சிவன் வழிபாடு - நூற்றெட்டுப் போற்றி
அருள்மிகு சிவபெருமான் 108 போற்றிகள்
கந்தரலங்காரம்
கந்தரனுபூதி
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
முருகவழிபாடு - நூற்றெட்டுப் போற்றிகள்
ழரீவைரவ தோத்திரக் கோவை
75
78
84
113
17
121
126
130
146
154
165
170

Page 42
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
2.
23.
24.
25.
26.
ரீவைரவர் அஷ்டோத்ரசத நாமாவளி 178 உமையம்மை வழிபாடு - நூற்றெட்டுப் போற்றிகள் 182
அபிராமியம்மை பதிகம் 187
அபிராமி அந்தாதி 193
சகலகலாவல்லி மாலை 219
சரஸ்வதி அந்தாதி 221
திருமகள் வழிபாடு - நூற்றெட்டுப் போற்றி 227
கலைமகள் வழிபாடு - நூற்றெட்டுப் பொற்றி 231
திருக்குறள் 235
அன்புடைமை,
விருந்தோம்பல்,
இனியவை கூறல்
செய்நன்றியறிதல்
நடுவு நிலமை
கண்ணன் என் சேவகன் 240
புறநானூறு 243
கல்வீசித் தலையிற் காயம் ஏற்படுத்தியவரையும் மன்னித்து நல்லது செய்வது மனிததர்மம் 245
தமிழில் அர்ச்சினை செய்வதேன் 247
LITLIT . 249

விநாயகர் அகவல் ஒளவையார் அருளியது
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசைபாடப் பொன்அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூவழிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
75

Page 43
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
76

சண்முக தூலமும் சதுர்முகச் சூசஷ்மும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற் கொன்றிடமென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து அருள்வழிகாட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
விநாயகர் அகவல் முற்றிற்று
77

Page 44
சிவமயம்
விநாயகர் திருவகவல்
நக்கீரதேவர் அருளியது
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை அறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி! சங்கர னருளிய சற்குரு விநாயக ஏழை யடியே னிருவிழி காண வேழ முகமும் வெண்பிறைக் கோடும் பெருகிய செவியும் பேழை வயிறுந் திருவளர் நுதலில் திருநீற் றழகுஞ் சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையுந் நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும் நவமணி மகுட நன்மலர் முடியும் கவச குண்டலக் காந்தியும் விளங்கச் சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும் ஐந்து கரத்தி னழகும் வீற்றிருக்கப் பாச வினையைப் பறித்திடு மங்குச பாசத் தொளியும் பன்மணி மார்பும் பொன்னா பரணமும் பொருந்துமுந் நூலும் மின்னா மெனவே விளங்குபட் டழகும் உந்திச் சுழியு முரோமத் தழகுந் தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற வேதனு மாலும் விமலனு மறியாப் பாதச் சதங்கை பலதொனி யார்ப்பத் தண்டைச் சிலம்புந் தங்கக் கொலிசும்
78

எண்டிசை மண்டல மெங்கு முழங்கத் தொகுது துந்துமி தொந்தோ மெனவே தகுதிகு திந்திமி தாள முழங்க ஆடிய பாத மண்டர்கள் போற்ற நாடிமெய் யடியார் நாளுந் துதிக்கக் கருணை புரிந்து காட்சிதந் தருள இருளைக் கடிந்தே யெங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத் திங்கள் முடியான் றிருவுள மகிழ வந்த வாரண வடிவையுங் காட்டிச் சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு இகபர சாதன மிரண்டு முதவி அகவினைத் துன்ப மகந்தை யறுத்து மூலா தார முச்சுடர் காட்டி வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப் பேணிப் பணியப் பீஜா' கூடிரமும் ஒமென் றுதித்த ஓங்காரத் துள்ளே ஆமென் றெழுந்த அசஷர வடிவும் இடைபிங் கலைக ளிரண்டி னடுவே கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து மண்டல மூன்றும் வாயுவோர் பத்துங் குண்டலி யசபை கூறிய நாடியும் பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும் வாதனை செய்யு மறிவையுங் காட்டி ஆறா தார அங்குச நிலையைப் பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப் பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த பஞ்ச சக்திகளின் பாதமுங் காட்டி நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில்
79

Page 45
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம் மைவிழி ஞான மனோன்மணி பாதமும் நைவினை நணுகா நாத கீதமும் கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து விண்டல மான வெளியையுங் காட்டி ஐம்பத் தோரெழுத் தசஷ்ர நிலையை இன்ப சக்கர விதிதனைக் காட்டிப் புருவ நடுவணை பொற்கம லாசனத் திருவிளை யாடலுந் திருவடி காட்டி நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப் போத நிறைந்த பூரணங் காட்டி உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப் பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச் சிவகயி லாயச் சேர்வையுங் காட்டிச் சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித் தத்துவந் தொண்ணுாற் றாறையும் நீக்கிக் கருவி கரணங் களங்க மறுத்து மருவிய பிறவி மாயை நீக்கி உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா அம்பர வெளியி னருளையுங் காட்டி சத்தி பராபரை சதாநந்தி நிராமய நித்திய ரூபி நிலைமையுங் காட்டி அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும் வடிவை யறியும் வழிதனைக் காட்டி நாசி நுனியில் நடக்குங் கலைகள் வாசிவா வென்று வாங்கிப் பிடித்து நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம் விண்மய மான விதத்தையுங் காட்டித்
80

தராதல முழுதுந் தானாய் நிறைந்த பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி என்னுட லாவி யிடம்பொரு வியாவுந் தன்னுடை வசமாந் தவநிலை காட்டி நானெனு மாணவம் நாசம தாகத் தானென வந்து தயக்கந் தீர ஆன குருவா யாட்கொண் டருளி மோன ஞான முழுது மளித்துச் சிற்பரி பூரண சிவத்தைக் காண நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து தானந்த மாகித் தற்பர வெளியில் ஆனந்த போத அறிவைக் கலந்து புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து மெளன முத்திரையை மனத்தி லிருத்திப் பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயை கனவெனக் காட்டிப் பாச பந்தப் பவக்கடல் நீக்கி ஈச னிணையடி யிருத்தி மனத்தே நீயே நானாய் நானே நீயாய்க் காயா புரியைக் கனவென வுணர்ந்து எல்லா முன்செய லென்றே யுணர நல்லா யுன்னருள் நாட்டந் தருவாய் காரண குருவே கற்பகக் களிறே வாரண முகத்து வள்ளலே போற்றி! நித்திய பூசை நைவேத் தியமும் பத்தியாய்க் கொடுத்துப் பரமனே போற்றி ஏத்தி யனுதின மெளியேன் பணியக்
8.

Page 46
கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து ஆசு மதுர வமிர்த மளித்துப் பேசு ஞானப் பேறெனக் கருளி மனத்தில் நினைத்த மதுர வாசகம் நினைவிலுங் கனவிலும் நேசம் பொருத்தி அருண கிரியா ரவ்வை போலக் கருத்து மிகுந்த கவிமழை பொழிய வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து நோக்கரு ஞான நோக்கு மளித்து இல்லற வாழ்க்கை யிடையூ றகற்றிப் புல்ல ரிடத்திற் புகுந்துழ லாமல் ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றிக் காப்ப துனக்குக் கடன்கண் டாய்ே! நல்வினை தீவினை நாடி வருகினுஞ் செவ்வினை யெல்லாஞ் செயலுன தாமால் தந்தையும் நீயே தாயும் நீயே எந்தையும் நீயே ஈசனும் நீயே போத ஞானப் பொருளும் நீயே நாதமும் நீயே நான்மறை நீயே அரியும் நீயே அயனும் நீயே திரிபுர தகனஞ் செய்தவன் நீயே சக்தியும் நீயே சதாசிவம் நீயே புத்தியும் நீயே புராந்தகன் நீயே
பக்தியும் நீயே பந்தமும் நீயே முத்தியும் நீயே மோகூஜமும் நீயே ஏகமும் நீயே என்னுயிர் நீயே தேகமும் நீயே தேவனும் நீயே உன்னரு ளன்றி யுயிர்த்துணை காணேன் பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
82

வேதன் கொடுத்த மெய்யிது தன்னில் வாத பித்தம் வருத்திடு சிலேட்டுமம் மூன்று நாடியு முக்குண மாகித் தோன்றும் வினையின் துன்ப மறுத்து நாலா யிரத்து நானுாற்றுநாற் பத்தெட்டு மேலாம் வினையை மெலியக் களைந்து அஞ்சா நிலைமை யருளியே நித்தம் பஞ்சா கூடிரநிலை பாலித் தெனக்குச் செல்வமுங் கல்வியுஞ் சீரும் பெருக நல்வர மேதரும் நான்மறை விநாயக சத்திய வாக்குச் சத்தா யுதவிப் புத்திர னேதரும் புண்ணிய முதலே வெண்ணி றணியும் விமலன் புதல்வா பெண்ணா முமையாள் பெறுகுஞ் சரனே அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா கரிமுக வாரணக் கணபதி சரணம்! குருவே சரணம் குணமே சரணம் பெருவயிற் றோனே பொற்றாள் சரணம் கண்ணே மணியே கதியே சரணம் விண்ணே யொளியே வேந்தே சரணம் மாத வாவி மலர்த்தடத் தருகில் தானத்தில் வாழுந் தற்பரா சரணம் உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ் சச்சி தானந்த சற்குரு சரணம்! விக்கின விநாயக தேவே ஒம்! அரகர சண்முக பவனே ஓம்! சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்!
முற்றிற்று
83

Page 47
A éls)/Louló
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய
பிள்ளையார் கதை
காப்பு
கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல் அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி வரும் அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
என்கதைக்கு நீஎன்றும் காப்பு.
விநாயகள் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை
84

ஒற்றை அணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனதில் எப்பொழுதும் கொண்டக்கால் வாராது கூற்று.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு சங்கத் தமிழ்மூன்றுந் தா.
சய்பாணி
எள்ளுப் பொரிதேன் அவல்அட்பம் இக்கும் பயறும் இளநீரும் வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப் பழமும் பலாப்பழமும் வெள்ளைப் பாலும் மோதகமும் விரும்பிப் படைத்தேன் சந்நிதியில் கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே வித்தகப் பெண்பிள்ளை நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ் செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய் தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே எக்காலமும் உனைத் தொழுவேன் இயல்இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன் சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடு வாயே.
85

Page 48
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித் தென்மலை இருந்த சீர்சால் முனிவன் கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச் செந்தமிழ் வகையால் தெளிவுறச் செப்பினன் அன்னதிற் பிறவில் அரில்தபத் திரட்டித் தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே
5ഞb
மந்திர கிரியில் வடபால் ஆங்குஓர் இந்து வளர்சோலை இராசமா நகரியில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக் கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும் தடநிழற் பள்ளியுங் தாம்பல சமைத்துப் புதல்வரைத் தருகெனப் பொருப்பு அரசு ஈன்ற மதர்விழி பாகனை வழிபடும் நாளில் மற்றவர் புரியும் மாதவங் கண்டு சிற்றிடை உமையாள் சிவன்அடி வணங்கிப் பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே அரனே மறையவர்க்கு அருள்புரிந்து அருளென அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில் மைந்தரில் லைஎன மறுத்துஅரன் உரைப்ப எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன் தப்பிலா மறையோன் தனக்குஅருள் செய்கென எமைஆ ளுடைய உமையாள் மொழிய
86

இமையா முக்கண் இறைவன் வெகுண்டு பெண்சொற் கேட்டல் பேதமை என்று பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் பேதாய் நீபோய்ப் பிறன்ன மொழிய மாதுமை அவளுள் மனந்தளர்வு உற்றுப் பொன்றிடும் மானிட புன்பிறப்பு எய்துதல் நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக் கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து பிறைநுதல் அவட்குநீ பிள்ளை யாகச் சென்றுஅவனன் வளர்ந்து சிலபகல் கழித்தால் மன்றல்செய்து அருள்வோம் வருந்தலை என்று விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும் பெடைமயிற் சாயற் பெண்மக வுஆகித் தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப் பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் மையார் கருங்குழல் வாணுதல் தன்னை மானுட மறையோர்க்கு வதுவை செய்திடக் கான்அமர் குழலியைக் கருதிக் கேட்பப் பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி அறத்தகு வதுவைக்கு அமையேன் யான்என மற்றவன் தன்னைஉன் மணமக னாகப் பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யான்எனக் கருந்தட நெடுங்கண் கவுரிஅங்கு உரைப்ப மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
87

Page 49
தருமலி நிழல்தவச் சாலையது அமைத்துப் பணியணி பற்பல பாங்கியர் சூழ அணிமலர்க் குழல்உமை அருந்தவம் புரிதலும் அரிவை தன்அருந்தவம் அறிவோம் யாம்என இருவரும் அறியா இமையவர் பெருமான் மான்இடம் ஏந்தும் வண்ணமது ஒழித்து மானிட யோக மறையவன் ஆகிக் குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு மடமயில் தவம்புரி வாவிக் கரையிற் கண்ணுதல் வந்து கருணை காட்டித் தண்நறுங் கூந்தல் தையலை நோக்கி மின்பெறு நுண்இடை மெல்லிய லாய்நீ என்பெறத் தவம்இங்கு இயற்றுவது என்றலுங் கொன்றைவார் சடையனைக் கூட என்று உரைத்தலும் நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக் காட்டினில் சுடலையிற் கணத்துடன் ஆடிப் பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை நச்சிநீர் செய்தவம் நகைதரும் நுமக்கெனப் பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச் சேடியர் வந்து செழுமலர்க் குழலியை வாடுதல் ஒழிகென மனம்மிகத் தேற்றிச் சிந்துர வாள்நுதற் சேடியர் சிலர்போய்த் தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி வாவிக் கரையில் வந்து ஒரு மறையோன் பாவைதன் செங்கையைப் பற்றினன் என்றலுந்
88

தோடுஅலர் கமலத் தொடைமறை முனியை ஆடக மாடத்து அணிமனை கொணர்களன மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி நீடிய புகழாய் நீ எழுந்து அருள்என மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில் அம்மனைப் புகுவன்என்று அந்தணன் உரைத்தலும் பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற நற்றவ முனியை நடத்திக் கொணர்கெனச் சிவனை இகழ்ந்த சிற்றறிவு உடையோன் அவனையான் சென்று இங்கு அழைத்திடேன் என்று சிற்றிடை மடந்தையுஞ் சீறின ளாகி மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் பொற்பமர் கொங்கை பொருத்துதற்கு அரிதால் மானிட வேட மறையவன் தனக்கு யான்வெளிப் படுவ தில்லைஎன்று இசைப்ப மனையிடை வந்த மாமுனி தன்னை இணைஅடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து தாய்சொல் மறுத்தல் பாவம் என்று அஞ்சி ஆயிழை தானும் அவன் எதிர்சென்று சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் வேதியன் பழைய விருத்தன்என்று எண்ணி ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாதழ சனைகள் பண்ணிய பின்னர்ப் போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
89

Page 50
ஆண்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து அந்தணன் தன்னை அமுது செய்வித்துச் சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத் தக்கோ லத்தொடு சாதிக் காயும் கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் ஒள்ளிய தட்டில் உவந்துமுன் வைத்துச் சிவன்எனப் பாவனை செய்து நினைந்து தவமுறை முனிவனைத் தாளினை வணங்கத் தேன்அமர் குழலி திருமுகம் நோக்கி மோனமா முனிபுன் முறுவல் காட்டிக் கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் நெற்றியில் நயனமும் நீல கண்டமும் மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் கூன்மதி நிலவு கொழித்திட முடிமேல் வரந்தரு முதல்வன் மடமயில் காணக் கரந்ததன் உருவங் காட்டிமுன் நிற்ப மரகத மேனி மலைமகள் தானும் விரைவொடுஅங்கு அவன்அடி வீழ்ந்துஇறைஞ் சினளே அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் கருடர் கின்னரர் காய வாசியர் ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் கணிக்கரும் பதினெண் கணத்தில்உள் ளவரும் மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் மன்றல்அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத் தென்றல்வந்து இலங்கு முன்றில் அகத்துப்
90

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி மாணிக் கத்தால் வளைபல பரப்பி ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் பத்திகள் தோறும் பலமணி பதித்துத் தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் திக்குத் தோறுந் திருவிளக்கு ஏற்றிப் பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் கன்னலுங் கமுகுங் கதலியும் நாட்டிப் பன்மலர் நாற்றிப் பந்தர்சோ டித்து நலமிகு கைவலோர் நஞ்சுஅணி மிடற்றனைக் குலவிய திருமணக் கோலம் புனைந்தார் வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும் உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் கடல்என விளங்குங் காவணந் தன்னிற் சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில் மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்துஉட னிருத்திப் பறைஒலி யோடு பனிவளை ஆர்ப்ப வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத் தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் அரிவலஞ் சூழ எரிவலம் வந்து பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் போதுஅணி கருங்குழற் பூவைதன் உடனே ஒதநீர் வேலைசூழ் உஞ்சைஅம் பதிபுக
91

Page 51
ஏரார் வழியின் எண் திசை தன்னைப் பாரா தேவா பனிமொழி நீஎன வருங்கருங் குழலாண் மற்றும்உண்டோஎனத் திருந்துஇழை மடந்தை திரும்பினள் பார்க்கக் களிறும் பிடியும் கலந்துவிளை யாடல்கண்டு ஒளிர்மணி பூனாள் உரவோன் உடனே இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென அவ்வகை அரனும் அதற்குஉடன் பட்டு மதகரி உரித்தோன் மதகரி யாக மதர்விழி உமைபிடி வடிவம தாகிக் கூடிய கலவியிற் குவலயம் விளங்க நீடிய வானோர் நெறியுடன் வாழ அந்தணர் சிறக்க ஆணினம் பெருகச் செந்தழல் வேள்விவேத ஆகமஞ் சிறக்க அறம்பல பெருக மறம்பல சுருங்கத் திறம்பல அரசர் செகதலம் விளங்க வெங்கரி முகமும் வியன்புழைக் கையோடு ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும் பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயுந் தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டுங் கோடிசூ ரியர்போற் குலவிடு மேனியும் பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் கற்றைச் சடையுங் கனகநீள் முடியுந் தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் ஐக்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும் பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் மங்கை மனமிக மகிழ்ந்துஉடன் நோக்கி விண்ணு ளோர்களும் விரிந்தநான் முகனும்
92

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க ஆங்குஅவர் தங்கட்கு அருள்சுரந்து அருளித் தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப் பாரன மாகப் பலகனி அருந்தி ஏரணி ஆலின்கீழ் இனிதிரு என்று பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக் காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் மைவளர் சோலை மாநகர் புகுந்து தெய்வ நாயகன் சிறந்து இனிது இருந்தபின் வானவ ராலும் மானுட ராலுங் கான்அமர் கொடிய சுடுவிலங் காலும் கருவிக ளாலும் கால னாலும் ஒருவகை யாலும் உயிர்அழி யாமல் திரம்பெற மாதவஞ் செய்துமுன் னாளில் வரம்பெறு கின்ற வலிமையினாலே ஐமுகச் சீயமொத்து அடற்படை சூழக் கைமுகம் படைத்த கயமுகத்து அவுணன் பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங் கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன் அஞ்சலீர் என்று அவர்க்கு அபயங் கொடுத்தே அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி ஆனை மாமுகத்து அவுணனோடு அவன்தன் சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி வென்றுவா என்று விடைகொடுத்து அருள
93

Page 52
ஆங்கு அவன் தன்னோடு அமர்பல உடற்றிப் பாங்குறும் அவன்படை பற்றுஅறக் கொன்றபின் தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற் கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் ஒற்றை வெண் மருப்பை ஒடித்துஅவன் உரத்திற் குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே சோர்ந்து அவன் வீழ்ந்து துண்ணென எழுந்து வாய்ந்தமூ டிகமாய் வந்துஅவன் பொரவே வந்த முடிகத்தை வாகனம் ஆக்கி எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் எறிந்தவெண் மருப்புஅங்கு இமைநொடி அளவிற் செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே ஒகையோடு எழுந்துஅங்கு உயர்படை சூழ வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் கருச்சங் கோட்டிற் கயல்கமுகு ஏறுந் திருச்செங்காட்டிற் சிவனைஅர்ச் சித்துக் கணபதீச் சரம்எனுங் காரண நாமம் பணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச் சங்கரன் பார்ப்பதி தனிமனம் மகிழ இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க் கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவர் யாவரும் வந்துஇவன் ஏவல்செய்திடுநாள் அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் விநாயகர்க்கு உரிய விரதம் என்று எண்ணி
94

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார் இப்படி நோற்றிட்டு எண்ணிய பெறுநாள் ஒப்பரும் விரதத்து உறும்ஒரு சதுர்த்தியில் நோற்றுநற் பூசை நுடங்காது ஆற்றிப் போற்றிசெய் திட்டார் புலவர் ஜங்கரனை மருமலர் தூவும் வானவர் முன்னே நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான் அனைவரும் கைதொழுது அடிஇணை போற்ற வணைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால் பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமும் தாழ்த்துளைக் கையுந் தழைமுறச் செவியுங் கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி என்னைக் கண்டு இங்கு இகழ்ந்தனை சிரித்தாய் உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற் பழியொடு பாவமும் பலபல விதனமும் அழிவும்ள்ய் துவரென்று அசனிபோற் சபித்தான் விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக் கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற் கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாண் மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ் சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று இதயத்து எண்ணி யாவரும் நோற்றார் இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம் குருமணி முடிபுனை குருகுலத் துதித்த தருமனும் இளைய தம்பியர் நால்வருந் தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி எண்ணிய விரதம் இடையூறு இன்றிப்
95

Page 53
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ் செருவினில் எதிர்த்த செறுநரை வென்று மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் எந்தத் தெய்வம் எவ்விர தத்தை வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் பாட்டளி துதையும் பசுந்துழாய் மார்பனுங் கேட்டருள் வீர்எனக் கிளத்துதல் உற்றான் அக்குநீ றணியும் அரன்முதல் அளித்தோன் விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி ஓடவைத் திடும்பொன் ஒத்தொளி விளங்குங் கோடி சூரியற்போற் குலவிய மேனியன் கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் தடவரை போலுஞ் சதுர்ப்புயம் உடையோன் சர்வ ஆபரணமுந் தரிக்கப் பட்டவன் உறுமதிக் குழவிபோல் ஒரு மருப்பு உடையோன் ஒரு கையில் தந்தமும் ஒரு கையிற் பாசமும் ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் உத்தம மாலையோன் உறுநினை வின்படி சித்திசெய் வதனாற் சித்திவி நாயகன் நன்றி தருந்திரு நாமம் படைத்தோன் புரவலர் காணப் புறப்படும் போதுஞ் செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும் உத்தியோ கங்க ளுஞற்றிடும் போதும் ஆங்குஅவன் தன்னை அருச்சனை புரிந்தால் தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண்டாகும் கரதலம் ஐந்துடைக் கணபதிக்கு உரிய விரதம்ஒன்று உளதுஅதை விரும்பிநோற் றவர்க்குச் சந்ததி தழைத்திடுஞ் சம்பத்து உண்டாம்
96

புந்தியில் நினைந்த பொருள்கைக் கூடும் மேலவர் தம்மையும் வென்றிட லாம்எனத் தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும் புகள்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும் விரித்து எமக்கு உரைத்திட வேண்டும் என்று இரப்ப வரைக்குடை கவித்தோன் வகுத்துஉரை செய்வான் தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் பூர்வ பக்கம் புணர்திடு சதுர்த்தியின் முந்தும் புலரியின் முறைநீர் படிந்து சந்தி வந்தனந் தவறாது இயற்றி அத்தினம் அதனில் ஜங்கரக் கடவுளைப் பக்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்றன் ஒள்ளிய அருள்திரு உருஉண் டாக்கிப் பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் ஆசிஇலா மண்ணால் அமைத்தலும் தகுமால் பூசைசெய் திடும்இடம் புனிதமது ஆக்கி வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக் கோடிகங் கோசிகங் கொடிவிதானித்து நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச் சிந்தையின் நினைந்து தியானம் பண்ணி ஆவா கனம்முதல் அர்க்கிய பாத்தியம் வாகா ராச மனம்வரை கொடுத்து ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக் கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால் ஈசர புத்திரன் என்னும்மந் திரத்தால் மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
97

Page 54
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால் திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப் பச்சறுகு உடன்இரு பத்தொரு விதமாப் பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் குமார குரவன் பாசஅங் குசகரன் ஏக தந்தன் ஈசுரன் புத்திரன் ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் சர்வகா ரியமுந் தந்துஅருள் புரிவோன் ஏரம்ப மூர்த்தி என்னும்நா மங்களால் ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி மோதகம் அப்பம் முதற்பணி காரந் தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம் வருக்கை கபித்த மாதுளங் கனியொடு தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம் விருப்புள சுவைப்பொருள் மிகவும்முன் வைத்து உருத்திரப் பிரியளன்று உரைக்கும்மந் திரத்தால் நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து நற்றவர் புகன்றநா னான்குஉப சாரமும் மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு உண்அறு சுவைசேர் ஒதனம் நல்கிச் சந்தனம் முத்துத் தானந் தக்கிணை அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் திருத்தகு விநாயகத் திருவுரு வத்தைத் தரித்தவத் திரத்துடன் தானமாக் கொடுத்து நைமித் திகம்என நவில்தரு மரபால் இம்முறை பூசனை யாவர்செய் தாலும்
98

எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர் திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர் அரன்இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப் புரம்ஒரு மூன்றும் பொடிபட எரித்தான் உருத்திரன் இவனை உபாசனை பண்ணி விருத்திரா சுரனை வென்றுகொன் றிட்டான் அகலிகை அவன் தான் அர்ச்சனை பண்ணிப் பகர்தருங் கணவனைப் பரிவுடன் அடைந்தாள் தண்ஆர் மதிமுகத் தாள்தம யந்தி அன்னாள் இவனை அர்ச்சனை பண்ணி நண்ணார் பரவும் நளனை அடைந்தாள் ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி வெங்கத நிருதரை வேர்அறக் களைந்து தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான் பகீரதன் என்னும் பார்த்திவன் இவனை மகிதலந் தன்னில் மலர்கொடுஅர்ச் சித்து வரநதி தன்னை வையகத்து அழைத்தான் அட்டதே வதைகளும் அர்ச்சித்து இவனை அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் உருக்குமணி என்னும் ஒண்டொடி தன்னைச் செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான் கொண்டுபோம் அளவிற்குஞ்சர னவனை வண்டுபண் மிழற்றா மலர்கொடுஅர்ச் சித்துத் தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் புகள்முகக் கடவுளைப் பூசனை புரிந்து மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார் இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால் அப்படி நீவிரும் அவனைஅர்ச் சித்தால்
99

Page 55
எப்பொருள் விரும்பினிர் அப்பொருள் பெறுவீர் என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப் பூசனை புரிந்துகட் புலன் இலான் மைந்தரை நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச் சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் ஈங்குஇது நிற்க இவ்விர தத்துஇயல் ஓங்கிய காதைமற்று ஒன்றுஉரை செய்வாம் கஞ்சநான் முகன்தருஞ் காசிபன் புணர்ந்த வஞ்சகமனத்தாண் மாயைதன் வயிற்றிற் சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும் புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும் நிரந்தரத் தீய நெறிநடத் துதலால் ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும் நீஇரங்கு எமக்குஎன நெடுங்கரங் கூப்பி இரசத கிரிஉறை இறைவனை வணங்கி வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச் சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும் புதல்வனைத் தருவோம் போமின் நீர்என அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச் சமர வேல்விழித் தையலுந் தானுங் கூடிய கலவியிற் கூடாது ஊடலும் ஒடிய வானோர் ஒருங்குஉடன் கூடிப் பாவகன்தன்னைப் பரிவுடன் அழைத்துச் சூரன் செய்யுந் துயரம் எல்லாம்
100

ஊர்அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக் காமனை எரித்த கடவுள்என்று அஞ்சிப் பாவகன் பயமுறப் பயம்உனக்கு ஏதென உற்றிடுங் கரதலத்து உன்னையே தரித்தான் நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற் குற்றம் அடாது கூறுநீ சென்றென வானவர் மொழிய மற்றவன் தானுந் தானும்அச் சபையில் தரியாது ஏகி எமைஆ ளுடைய உமையா ஞடனே அமையா இன்பத்து அமர்ந்துஇனிது இருந்த பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும் ஒள்ளிய மடந்தை ஒதுங்கிநா னுதலுந் தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே ஆறுமுகப் பிள்ளையை அவன்கையில் ஈதலும் வறியவன் பெற்ற வான்பொருள் போலச் சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து வாத ராசன் மலர்க்கையிற் கொடுப்ப நீதி யோடு நின்றுகை யேந்திப் போதநிள் வாயுவும் பொறுக்கஒண் ணாமல் தரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத் தரும்புனற் கங்கையும் தாங்க ஒண்ணாமற் பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் தண்ஆர் வதனத் தாமரை ஆறுங் கண்ஆ றிரண்டுங் கரம்ஈ ராறும் தூண்எனத் திரண்ட தோள் ஈராறும் மாண்அயில் ஆதி வான்படை யுங்கொண்டு அறுமுகக் கடவுள்அங்கு அவதரித் திடலும் மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி
101

Page 56
அறுமீன் களைப்பால் அளித்திர் என்று அனுப்ப ஆங்கவர் முலைஉண்டு அறுமுகன் தானும் ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில் விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து முருகுஅலர் குழல்உமை முலைப்பால் ஊட்ட இருவரும் இன்பால் எடுத்துஎடுத்து அணைத்துத் தேவர்தம் படைக்குச் சேனா பதியெனக் காவல் கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத் திசைஎலாஞ் செல்லுந் தேரும்ஒன்று உதவிப் பூதப் படைகள் புடைவரப் போய்நீ ஒதுறும் அவுணரை ஒறுத்திடுஎன்று அனுப்ப இருளைப் பருகும் இரவியைப் போலத் தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக் குருகுப் பேர்பெறுங் குன்றமுஞ் சூரன் மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே யாவரும் வியப்புற இந்திரன் மகளாந் தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு அமரர் கோனுக்கு அமருலகு அளித்துத் குமர வேளுங் குவலயம் விளங்க அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான் சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு அமரர் மாதர் அனைவரும் மயங்கி எண்டருங் கற்பினை இழந்தது கண்டே அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி மாதொரு பாகனை வந்துஅடி வணங்கி மருமலர்க் கடம்பன்எம் மாநகர் புகாமல் அருள்செய வேண்டும்நீ அம்பிகா பதியென
02

இமையவர் உரைப்ப இறையவன் தானுங் குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக் காவல் கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ் சேவலங் கொடியோன் தேசம் போகத் திருந்திளை உமையாள் அருந்துயர் எய்தி வருந்திமுன் நிற்க மங்கையைப் பார்த்து மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி அங்கையார் சூதெறிந்து ஆடுவோம் வாவென வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக் குன்றமென் முலையாள் கூறிய சமயம் புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காணஅங்கு உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற் சக்கர பாணியைச் சான்றெனக் குறித்து மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச் சாயக நேருந் தடநெடுங் கருங்கண் நாயகி வெல்ல நாயகன் தோற்ப இன்பவாய் இதழ்உமை யான்வென் றேன்என எம்பெரு மானும் யான்வென் றேன்என ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி இருவரும் சாட்சி இவனைக் கேட்ப மாமனை வதைத்த மான்முகம் நோக்கிக் காமனை எரித்தோன் கண்கடை காட்ட வென்ற நாயகி தோற்றாள் என்றுந் தோற்ற நாயகன் வென்றான் என்றும் ஒன்றிய பொய்க்கரி உடன்அங்கு உரைப்பக் கன்றிய மனத்தொடு கவுரிஅங்கு உருத்து நோக்கிநீ இருந்தும் நுவன்றிலை உண்மை வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய் மைக்கரி உரித்தோன் வதனம் நோக்கிப்
103

Page 57
பொய்க்கரி உரைத்த புன்மையி னாலே கனல்என வயிற்றிற் கடும்பசி கணற்ற நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் கடகரி முகத்துக் கடவுள்வீற்று இருக்கும் வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் முளரிகள் பூத்த முகில்நிறத்து உருப்போய்த் துளவு அணி மருமனுந் துணைவழி இழந்தே ஆண்டுஅரைக் கணத்தில் ஆயிரம் யோசனை நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல்வீற்று இருக்குங் கிளர்ச்சினை ஆலின் கீழ்க்கிடந்த தனனால் திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும் வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே எழில்பெறு வடமரத்தின் கீழ் இருந்தான் கம்பமா முகத்துக் கடவுள்தன் பெருமையை அம்புவி யோருக்கு அறிவிப் போம்என உம்பர் உலகத்து ஒரெழு கன்னியர் தம்பநூல் ஏணியில்தாரணி வந்து கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் நாளில் ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி இருபத் தோர்இழை இன்புறக் கட்டி ஒருபோது உண்டி உண்டுஒரு மனமாய் வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும் ஆதிவி நாயகற்கு ஆன எழுத்தும் மூன்றுஎழுத் ததனால் மொழிந்தமந் திரமும் தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே உரைதரு பதினாறு உபசா ரத்தால் வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
104

இருபது நாளும் இப்படி நோற்று மற்றநாள் ஐங்கர மாமுகன் பிறந்த அற்றைநாட் சதயமும் ஆறாம் பக்கமுஞ் சேரும்அத் தினத்தில் தெளிபுனல் ஆடி வாரண முகத்தோன் வருபெருங் கோயில் சீர்பெற மெழுகித் திருவிளக்கு ஏற்றிக் குலவுபொற் கலைகள் கொடுவி தானத்து மலர்பல தொடுத்திடு மாலைகள் நாற்றிக் கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப் பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச் சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச் செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு குருந்த மல்லிகை கோங்கொடு பிச்சி கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி மருவிரி ஞாழன் மகிழ்இரு வாட்சி தாமரை முல்லை தழைஅவிழ் கொன்றை பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை காந்தள் ஆத்தி கடம்புசெவ் வந்தி வாய்ந்தநல் எருக்கு மலர்க்கர வீரம் பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு முத்தலைக் கூவிளம் முதலிய சாத்தித் தூபதி பங்கள் சுகம்பெறக் கொடுத்தே அப்பம்மோதகம் அவல்எள் ஞருண்டை முப்பழந் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன் பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகம் கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன் பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
105

Page 58
நோற்பது கண்டு நோலாது இருந்த பாப்புரு வாகிய பஞ்சா யுதனும் யாப்புறு கொங்கையீர் யானும்நோற் பேனென ஆங்குஅவன் தனக்கும் வேண்டுவது அளித்துப் பாங்கொடுஇவ் விரதம் பரிந்துநோற் பித்தார் அண்டர்நா யகனாம் ஜங்கரன் அருளால் விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே உஞ்ஞைமா நகர்புகுந்து உமையொடு விமலன் கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும் பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின் வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி யான்இடுஞ் சாபம் நீங்கியது. ஏன் என மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப இறையவன் இதற்குக் காரணம் ஏதென மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான் பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளைஅன்று எனக்குத் தந்துஅருள் புரிந்த தவப்பயன் ஈதெனச் சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் பூங்கொடி அடைத்த பொன் தாழ் நீங்கச் சாங்குமுன் உரைத்த சக்கர பாணி இக்கதை சொல்ல அக்கணி சடையனும் மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின் மாதுமை அடைத்த வன்தாழ் நீக்கி நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான் நானோ வந்து நகையா னதுஎனத் தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
106

அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப் பெருஞ்சூர் அறவேல் போக்கிய குமரன் வரும்படி யானும் வருந்திநோற் பேனென இறைவன் கதைசொல் ஏந்திழை நோற்றபின் குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன் சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து தாதுமை வண்டுஉழுந் தாமத் தாமனும் மாதுமை யாளை வந்துகண் டனனே கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனத் தண்ணருங் குழல்உமை சாபம்இட் டதுவும் அக்குநீறு அணியும் அரன்முதல் அளித்த விக்கின விநாயகன் விரதம்நோற்று அதன்பின் சுடர்கதை ஏந்துந் துளவ மாலையன் விடப்பணி உருவம் விட்டுநீங் கியதும் பரிவுகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக் கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும் வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் தேசம் போகிய செவ்வேள் வந்ததும் வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து தடமுலைத் திலோத்தமை தனைமணம் புணர்ந்து மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக் கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் பரிவொடுஇவ் விரதம் பாரகந் தன்னில் விரைகமழ் நறுந்தார் விக்கிரமா தித்தின்
107

Page 59
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் மற்றவன் காதன் மடவரல் ஒருத்தி இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி மெத்தஅன் புடன்இவ் விரதம்நோற் பேனென அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் உற்ற நோன்பின் உறுதி மறந்து கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து வற்றிய கொவ்வையின் மாடே போட ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய் பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை இருந்த பூப்பயில் குழல்சேர் பொற்றொடி ஒருத்தி அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் கொவ்வை அடகு கொய்வாள் குறுகி இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக் குழைதவழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து பண்டையில் இரட்டிப் பதம்அவட்கு அருளக் கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள உக்கிர மான உடைமணி கட்டித் தண்டையுஞ் சிலம்புந் தாளினின்று ஒலிப்பக் கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் மனமிகக் கலங்கும் மன்னவன் தன்னிடங் கனவினில் வந்து காரண மாக இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற்
108

கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனக் துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக் கண்ணுறக் கண்ட கனவின் காரணம் அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் ஆனை குதிரை அவைபல மடிவுற மாநகர் கேடுறும் வகையது கண்டு இமைப்பொழுது இவள்இங்கு இருக்கலா காதுஎன அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப மணியும் முத்தும் வலியகல் லாய்விட அணியிழை தன்னை அவனும் அகற்ற உழவர்தம் மனையில் உற்றுஅவள் இருப்ய வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற அயன்மனை அவரும் அகற்றிய பின்னர் குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் குயக்கல முடைந்து கொள்ளை போக அயற்கடை அவனும் அகற்றிய பின்னர் தூசுதூய் தாக்குந் தொழிலோர் மனைபுகத் தூசுகள் எல்லாந் துணிந்துவே றாகத் தூசரும் அவளைத் துாரஞ் செய்ய மாலைக் காரன் வளமனை புகலும் மாலை பாம்பாம் வகையது கண்டு ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய் சாலவும் பாவிநீ தான்யார் என்ன வெம்மணம் மிகவும் மேவி முனிவுறா அம்மனை அவனும் அகற்றிய பின்னர் அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப அவ்வை செல்லும் அகங்கள் தோறும் வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
109

Page 60
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர் அவ்வை மீண்டுதன் அகமதிற் சென்று இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட மாத்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி எல்லார்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி சொல்லுவிக் கிரம சூரியன் மனையெனச் சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச் சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள் சாணியும் உழுத்துத் தண்ணிர் வற்றிப் பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு தானே சென்று சாணி எடுத்துத் தண்ணிர் கொணர்ந்து தரைமெழுக் கிட்டு மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின்று ஆட மெத்தஉண் நடுங்கி வீழ்ந்துஅவள் கிடப்பக் கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி அவ்வை தானே அகமதிற் சென்று புத்தகம் எடுத்துப் பொருந்தப் பார்த்து வித்தக நம்பி விநாயக மூர்த்தி கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென உத்தமி அவ்வை உணர்ந்துமுன் அறிந்து தவநெறி பிழைத்த தையலை நோக்கி நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக் கரத்துமு ஏழுஇழைக் காப்புக் கட்டி அப்பமும் அவலும் ஆம்பல பண்டமுஞ்
110

செப்பம தாகத் திருமுன் வைத்தே அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை வித்தக மாக விளங்கு இழை நோற்றுக் கற்பக நம்பி கருணைபெற்றதன் பின் சக்கர வாள சைனியத் தோடு விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று வெவ்விய தாக மிகப்பெரி தாகி அவ்வை தன்மனை அரசனும் அணுகித் தெண்ணிர் வேட்டுச் சிலர்தமை அனுப்ப உண்ணிர்க் கரகமும் ஒருபணி காரமும் கண்ணேர் இலக்கணை கையிற் கொடுக்கப் பண்நேர் மொழியாள் பர்த்தியற்கு உதவலும் ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் அப்பசி தீர அருந்திய பின்னர் ஆனை குதிரை அவைகளும் உண்டுந் தானது தொலையாத் தன்மையைக் கண்டே எவ்வகையாலும் இவள்நமக் காமென இவ்வகை சமைத்தநீ யாரென வினவ மெளவல்அம் குழலாள் மெளனமாய் நிற்ப அவ்வைதான் சென்று அரசற்கு உரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காண்இது குணமுடை இவள்உன் குலமனை யாட்டி நலந்தக வாக நங்கைதன் நாமம் இலக்கண சுந்தரி யாமென உரைப்பத் தீங்கற நன்மணஞ் செய்துதா வென்ன ஆங்கவள் வதுவைசெய் தரசனுக் களித்தபின் மங்கையை நோக்கி மனமிக மகிழ்ந்து திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
11

Page 61
கொண்டுஊர் புகுந்து கொற்ற வேந்தனும் ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே
நூற்பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளுட மன்னும் நவமணியும் வந்து அணுகும் - உன்னி ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின் திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
பொற்பணைக்கை முக்கண் புகள்முகத்துப் பொன்மவுலிக் கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் சொற்பெருகக் கற்றவரும் நோற்றவரும் காதலித்துக் கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி நோற்றர் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து கேட்டோர்க்கும் வாராது கேடு.
சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார் சாலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப் பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச் சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
112

பிள்ளையார் வழிபாடு
நூற்றியெட்டுப் போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி அகரம் முதலென ஆனாய் போற்றி அகர உகர ஆதி போற்றி மகரமாய் நின்ற வானவ போற்றி பகர்முன் னவனாம் பரனே போற்றி மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி நீர்திக் காற்றாய் நின்றாய் போற்றி கார் குளிராகக் கனிந்தாய் போற்றி பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி நிகர் மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி மழைபொழி இமய வல்லிசேய் போற்றி தழைசெவி என்தோள் தலைவ போற்றி திங்கட் சடையோன் செல்வ போற்றி எங்கட் கருளும் இறைவா போற்றி அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி செம்பொன் மேனிச் செம்மால் போற்றி உம்பர் போற்றும் உம்பர் போற்றி பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி முப்புரி நூல்மார்பு அப்பா போற்றி எள்ளுருண் டைபொரி ஏற்போய் போற்றி
113
10
15
20
25

Page 62
தெள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி தேவர்க் கரிய தேவா போற்றி மாலுக் கருளிய மதகரி போற்றி பாலெனக் கடல் நீர் பருகினாய் போற்றி பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி மாரதம் அச்சொடி மதவலி போற்றி மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி கரும்பா யிரங்கொள் கள்வா போற்றி அரும்பொரு ளேயெம் ஐயா! போற்றி திணைப்பால் கடந்த தேவே போற்றி புணையாய் இடர்க்கடல் போக்குவாய் போற்றி பேழை வயிற்றுப் பெம்மான் போற்றி ஏழைக் கிரங்கும் எம்மிறை போற்றி அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி திருநீற் றொளிசேர் செம்மால் போற்றி இருவே றுருவ ஈசா போற்றி உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி நம்பியாண் டார்க்கருள் நல்லாய் போற்றி எம்பிரானாக இசைந்தாய் போற்றி உருகுவோ ருள்ளத் தொளியே போற்றி பெருகருள் சுரக்கும் பெருமாள் போற்றி தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி உம்பர்கட் கரசே ஒருவ போற்றி பிள்ளையார் பெயர்கொண் டுள்ளாய் போற்றி வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி மூவா சாவா முத்தா போற்றி
114
30
35
40
45
50
55

ஆவா எங்களுக் கருள்வாய் போற்றி தமிழ்ச்சுவை சார்திருச் செவியாய் போற்றி அமிழ்தாய் எம்மகத் தானாய் போற்றி மழவிளங் களிறே மணியே போற்றி குழவியாய்ச் சிவன்மடி குலவுவோய் போற்றி பெருச்சா வியூரும் பிரானே போற்றி நரிச்செய லார்பால் நண்ணாய் போற்றி செந்தா மரைத்தாள் தேவா போற்றி நந்தா மணியே நாயக போற்றி இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி ஆங்கா ரம்முளை அறுப்பாய் போற்றி பாங்கார் இன்பப் பராபர போற்றி கற்றவர் விழுங்கும் கனியே போற்றி மற்றவர் காணா மலையே போற்றி சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி கல்லும் கரைக்க வல்லோய் போற்றி தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி ஐந்துகை யுடைய ஐய போற்றி ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி தருவாய் மணமலர்த் தாராய் போற்றி கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி மயலறும் இன்ப வாழ்வே போற்றி ஆணையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி பானை வயிற்றுப் பரமே போற்றி கடம் பொழி யானைக் கன்றே போற்றி மடம்ஒழி அறிவின் வளனே போற்றி பாலொடு தேனும் பருகுவோய் போற்றி
115
65
70
75
80
85

Page 63
மேலொடு கீழாய் மிளிர்வோய் போற்றி எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி மெய்ப்பொருள் வேழ முகத்தாய் போற்றி நல்லார்க் கெட்டும் நாதா போற்றி பொல்லா மணியே புராதன போற்றி 90 அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி குறிகுணங் கடந்த குன்றே போற்றி எட்டு வான்குணத் தெந்தாய் போற்றி கட்டறு களிற்று முகத்தோய் போற்றி மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி 95 அலர்கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி ஓங்கார முகத் தொருத்தல் போற்றி ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி பண்ணும் பயனுமாய்ப் பரந்தாய் போற்றி 100 அருவே உருவே அருவுரு போற்றி பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி செல்வம் அருள்க தேவா போற்றி 105 நல்லன எமக்கருள் நாயக போற்றி ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி ஆடுங் கணபதி உன் அடியிணை போற்றி
குழந்தையன்போடு கடவுளைக் கும்பிட்டால் இழந்துபோன தெல்லாம் வரும்.
அவசரப்படாதே, ஆத்திரப்படாதே.
- யோகர் சுவாமிகள்
116

ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம்
ஓம்
ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
அருள்மிகு விநாயகர் 108 போற்றிகள்
அகரமென நிற்பாய் போற்றி அங்குசக் கரத்தாய் போற்றி அடியார்க் கெளியாய் போற்றி அமரர்கள் நாதா போற்றி அறக் கருணையாய் போற்றி அறிவானந்த உருவே போற்றி அறுகு சூடிய அமலா போற்றி ஆதார கணபதி போற்றி ஆரண முதலே போற்றி ஆனை முகத்தனே போற்றி இடர்தனைக் களைவாய் போற்றி இடும்பை கெடுப்பாய் போற்றி இடையூறு நீக்குவாய் போற்றி இமயச் செல்வியின் சேயே போற்றி இளம்பிறை போலும் எயிற்றினாய் போற்றி ஈசானார் மகனே போற்றி உண்மையர் உள்ளொளியே போற்றி உத்தமி புதல்வா போற்றி உயிரினுக்குயிரே போற்றி உய்வருள் பெருமாள் போற்றி உலகெலாம் ஆனாய் போற்றி உலவாத இன்பமே போற்றி உலைவிலாக் களிறே போற்றி உள்ளமுயர்த்துவாய் போற்றி
117

Page 64
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
உள்ளத்தறியில் உள்ளாய் போற்றி
உள்நிறை ஒளியே போற்றி எண்டோளன் செல்வா போற்றி எண்ணிய ஈவாய் போற்றி எழில்வளர் சோதி போற்றி என்னுயிர்க் கமுதே போற்றி ஏழைக்கிரங்குவாய் போற்றி ஐந்து கரத்தனே போற்றி ஒளிபெற அருள்வாய் போற்றி ஒற்றைக் கொம்பனே போற்றி ஒமெனும் பொருளே போற்றி கங்கை வேனியா போற்றி கணநாத கற்பகா போற்றி கணபதிக் களிறே போற்றி கயமுகற் கடிந்தோய் போற்றி கருவிலும் காப்பாய் போற்றி கற்றோர் கருத்தே போற்றி கற்பக விநாயகர் போற்றி காங்கேயன் தமையா போற்றி காலங்கடந்தோய் போற்றி காவிரிதரு சீரோய் போற்றி கிளரொளி வடிவே போற்றி குஞ்சரக் குரிசில் போற்றி கூவின மாலையாய் போற்றி கைப்போதகமே போற்றி சக்கரந் தரித்தோய் போற்றி சங்கத்தமிழ் தருவாய் போற்றி சந்திர சேகரா போற்றி
118

53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
ஒம் ஒம்
ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம்
ஒம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
சித்தத் தேனே போற்றி சித்தி விநாயகா போற்றி சித்தி புத்தி மணாளா போற்றி சிவ கணபதியே போற்றி சீர்பெற அருள்வோய் போற்றி செல்வக் கணேசா போற்றி செல்வமருள்வோய் போற்றி செல்வ நீறு தருவாய் போற்றி சேமம் தருவோய் போற்றி ஞானக் கொழுந்தே போற்றி தத்துவ முதலே போற்றி தத்துவப் பேறுதருவாய் போற்றி தந்தி முகனே போற்றி தந்தையாக் காப்பாய் போற்றி தழைத்திட வருவாய் போற்றி தற்பர விநாயகா போற்றி தாரக மறையே போற்றி
துப்பார் மேனியனே போற்றி தொண்டர்தம் துணையே போற்றி நச்சினார்க்கினியோய் போற்றி நந்திமகனே போற்றி நாத முடிவே போற்றி நாவமர் பாட்டே போற்றி நான்ற வாயினை போற்றி நிறைவாழ்வருள்வாய் போற்றி நூற்பொருள் அளிப்பாய் போற்றி நெஞ்சநோய் தீர்ப்பாய் போற்றி பகையினைக் களைவாய் போற்றி
119

Page 65
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
107.
108.
ஓம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம்
ஒம் ஒம்
ஒம் ஒம் ஓம் ஒம்
ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
பண்ணிடைத் தமிழே போற்றி பண்பிலார்க்கு அரியாய் போற்றி பரம தயாளா போற்றி பரிதிபோல் மதிதருவாய் போற்றி பாதிமதி சூடி போற்றி பிணிகள் களைவாய் போற்றி பிரணவக் களிறே போற்றி பிள்ளைகள் தலைவா போற்றி புண்ணிய மூர்த்தி போற்றி பேழை வயிற்றினாய் போற்றி பையரவசைத்தாய் போற்றி போக நாயகா போற்றி போத வடிவே போற்றி மணிநீல கண்டா போற்றி மன்றாடி மைந்தா போற்றி மாசிலா மணியே போற்றி முக்கட் கரும்பே போற்றி முடியா முதலே போற்றி முத்தமிழ் முதல்வா போற்றி மெய்ப்பொருள் நீயே போற்றி மோதகக் கையினாய் போற்றி
யாவு மானாய் போற்றி யோகியர் தலைவா போற்றி வல்லமை வல்லவா போற்றி விகடசக்கர விநாயகா போற்றி விண்மழை தருவாய் போற்றி வெற்றித் திருவே போற்றி வைத்த மாநிதியே போற்றி போற்றி
20

சிவன் வழிபாடு நூற்றெட்டுப் போற்றி
ஆறாம் திருமுறை திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஒவாத சத்தத்து ஒலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி 9
பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
121

Page 66
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி 25
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
ஊராகி நின்ற உலகே போற்றி 33
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
122

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி 41
தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி 49
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்தும்சொல் லானாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
இமையாது உயிராது இருந்தாய் போற்றி 57
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாகம் ஆகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி சுமையாக நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
123

Page 67
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி 65 முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி ஆவாய் அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி 73
நீள அகல முடையாய் போற்றி அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி 81
ஒதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!
124

மணி வாசகர் திருவாசகம்
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 89 சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலைஎம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி ஏகம் பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 97 குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 102 அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ்இரு மூவரக்(கு) அத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
கல்லாடை புனைந்தருள் கபாலி போற்றி 108 நல்லார் முடிக்கணி நாதா போற்றி.
திருச்சிற்றம்பலம்
125

Page 68
அருள்மிகு சிவபெருமான் 108 போற்றிகள்
மூவர் தேவாரம், திருவாசகத்திலிருந்து தொகுத்தது
ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம்
அடியார் பெருமை அறிவாய் போற்றி (நா) அடியவர்க் காரமுது ஆனாய் போற்றி (நா) அண்டத்துக்கு அப்பாலாய் நின்றாய் போற்றி (நா) அதிபதியே ஆர்ஆமுதே ஆதி போற்றி (நா) அந்தியாய் நின்ற அரனே போற்றி (நா) அமரர் பதியாள வைத்தாய் போற்றி (நா) அருமையில் எளிய அழகே போற்றி (LDT) அருந்தவர்கள் தொழுதுஎத்தும் அப்பா போற்றி(நா) அனல் அங்கை ஏந்திய ஆநீ போற்றி (நா) ஆசை தீரக் கொடுப்பாய் போற்றி (F) ஆலமர நிழலில் அமர்ந்தாய் போற்றி (நா) ஆலாலம் உகந்துண்ட ஆதீ போற்றி (நா) ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி (நா) இடர்கடி கணபதிவர அருளினை போற்றி (8) இரவிடை ஒள்ளரி ஆடினாய் போற்றி (σ) ஈண்டுஒளி சேர்கங்கைச் சடையாய் போற்றி (நா) உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி (நா) உடலே உயிரே உணர்வே போற்றி (F) உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி (நா) உள்ஒளி வீசும் ஒருவ போற்றி (நா) ஊரும் அரவம் உடையாய் போற்றி (8) ஊனத்தை நீக்கும் உடலே போற்றி (நா) ஊன்உடைப் பிறவியை ஒழிப்பாய் போற்றி (af) எண்ணரிய திருநாமம் உடையாய் போற்றி (நா)
126

25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
37.
38.
39.
41.
42.
43.
45.
47.
48.
49.
50.
51.
52.
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி (LDT)
எரிசுடாரய் நின்ற இறைவா போற்றி (நா) எரியும் மழுவாள் படையாய் போற்றி (சு) எல்லாம் சிவன்என நின்றாய் போற்றி (நா)
ஏத்தாதார் மனத்து அகத்து இருளே போற்றி (நா) ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனாய் போற்றி (நா) ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி (நா)
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி (நா) ஒதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி (நா) கங்கையைச் சடையில் கரந்தாய் போற்றி (g) கண்ணாய் உலகுஎலாம் காத்தாய் போற்றி (நா) கம்பமா கரிஉரித்த கபாலி போற்றி (3) கலைமான் மறிஏந்தும் கையா போற்றி (நா)
கழல்அடைந்தார் செல்லும் கதியே போற்றி (நா) கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி (நா) கற்றஅறிந்த கலைஞானம் ஆனாய் போற்றி (நா) காப்புஅரிய ஐம்புலனும் காத்தாய் போற்றி (நா)
காலனைக் காய்ந்தஎம் கடவுள் போற்றி (GF) காவாய் கனகக் குன்றே போற்றி (LDT) குழைக்கும் பயிர்க்குஓர் புயலே போற்றி (θ) குறைஉடை யார்கறை தீர்ப்பாய் போற்றி (3) கொங்குஅலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி (நா) சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி (LDT) சிவலோக நெறிதந்த சிவனே போற்றி (நா) சிற்றம் பலம்மேய செல்வா போற்றி (éቻ) சுடர்ஒளியாய் விளங்கும் சோதி போற்றி (நா) சுண்ணவெண் ணிறு துதைந்தாய் போற்றி (3) ·
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி (நா)
127

Page 69
53.
54.
55.
56.
57.
58.
59.
61.
62.
63.
65.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
செந்துவர் வாய்உமை பங்கா போற்றி (σ)
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி (நா) செல்வாய செல்வம் தருவாய் போற்றி (நா) செற்றவர்தம் புரம்எரித்த சிவனே போற்றி (நா) சேவின் மேல்வரு செல்வா போற்றி (8) ஞாயிறாய் மதியமாய் நின்றாய் போற்றி (5) தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் போற்றி (நா) தன்ஒப்பு அறியாத் தழலாய் போற்றி (a)
தீராநோய் தீர்த்துஅருள வல்லாய் போற்றி (நா) தூநீறு சேர்ந்துஇலங்கும் தோளா போற்றி (நா)
தென்னாடு உடைய சிவனே போற்றி (LDT) நஞ்சுஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி (நா) நஞ்சே அமுதாய் நயந்தாய் போற்றி (LDT) நான்மறையோடு ஆறுஅங்கம் ஆனாய் போற்றி (நா)
நால்திசைக்கும் விளக்காய நாதா போற்றி (நா) நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி (நா) நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி (நா) நோக்கஅரிய திருமேனி உடையாய் போற்றி (நா)
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி (நா) பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி (நா) பண்துலங்கப் பாடல் பயின்றாய் போற்றி (நா) பலரும் பரவப் படுவாய் போற்றி (8F)
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி (நா) பற்றி உலகை விடாதாய் போற்றி (நா) பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி (bst) பாட்டுஅகத்து இசையாகி நின்றாய் போற்றி (d) பாரோர் விண்ஏத்தப் பாடுவாய் போற்றி (நா)" பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி (நா)
28

81.
82.
83.
85.
86.
87.
88.
89.
91.
92.
93.
95.
97.
98.
99.
101.
102.
03.
105.
106.
107.
108.
பிரமன்தன் சிரம்அரித்த பெரியோய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி பிறைஅணி செஞ்சடை பிஞ்ஞகா போற்றி புற்றுஅரவக் கச்சுஆர்த்த புனிதா போற்றி பூத நாதனே புண்ணியா போற்றி பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி பெரியாய் சிறியாய் பிறையாய் போற்றி பேர்ஆ யிரம்உடைப் பெம்மான் போற்றி பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
மந்திரமும் மறைப்பொருளும் ஆனாய் போற்றி
மயில்ஊர்தி முருகவேள் தாதை போற்றி
மருந்துஅமரர்க்கு அருள்புரிந்த மைந்தா போற்றி
மறைஉடைய வேதம் விரித்தாய் போற்றி
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் போற்றி
மன்னிய திருவின் மலையே போற்றி மிக்கோர்கள் ஏத்தும் விளக்கே போற்றி மூவாத் தமிழ்ச்சங்க முன்னவா போற்றி முன்னே தோன்றி முளைத்தாய் போற்றி முவா நான்மறை முதல்வா போற்றி மூவாய் பிறவாய் இறவாய் போற்றி மூவுலகும் தான்ஆய முதல்வா போற்றி மெய்சேரப் பால்வெண்நீறு ஆடீ போற்றி மேலோர்க்கும் மேலாய் போற்றி வண்ணம் ஆயிரம் உடையாய் போற்றி வானோர்க்கு அருளிய மருந்தே போற்றி வானோர் வணங்கப் படுவாய் போற்றி
வெள்ளிக் குன்றன்ன விடையாய் போற்றி
வேத விழும்பொருளே போற்றி போற்றி
41 εί3' "
29
(நா)
(நா)
(LDT) (நா) (நா) (சு)
(நா) (நா) (நா) (DT) (நா)
(நா)
(LDT)
(நா) (நா) (நா)
(நா)
(g)
(LDT)
(நா) (நா) : (uDT)

Page 70
36JLDulb
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம்
காப்பு அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில் தடபடெ னப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே
நூல பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னை பிரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமே லாற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்கிரு பாகரனே
அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பா லெழுத்துப் பிழையறக் கற்கின்றி லிரெரி மூண்டதென்ன விழித்துப் புழையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் தேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள் சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச் சோரநிட் டுரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே
திருந்தப் புவனங்க ளின்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே
130

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே 6.
சளத்திற் பிணிபட் டசட்டுக் கிரியைக்குட் டவிக்குமென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொ ரானந்தத் தேனை யநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே. 8.
தேனென்று பாகென் றுவமிக்கொ னாமொழித் தெய்வவள்ளி கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவன்றோ வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே 9.
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும் மாவிருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்ட வாவிகல் வேலனல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்.
செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத் தசைபடு கால்பட் டசைந்தது மேரு வடியிடவெண் திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்ப்பட்டதே 11.
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந் துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடல மிடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே 12.
131

Page 71
ஒருவரைப் பங்கி னுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சினை யீடேற்று வாயிரு நான்கு வெற்பு மப்பாதி யாய்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச் சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்று மிடுங்கோ விருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் துளைக்கவைவேல் விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச் சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ஒனுங்கட்கிங்ங்ண் வெய்யிற் கொதுங்க உதவாவுடம்பின் வெறு நிழல்போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் துளைத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே
132
13.
14.
15.
18. ,

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாதுங்க ளத்தமெல்லா மாழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே
மரணப்ர மாத மெமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள சரணப்ர தாப சசிதேவி மாங்கல்ய தந்துரகஷா பரணக்கிரு பாகர ஞான கரசுர பாஸ்கரனே.
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்க வெய்தான் மருக ஒறுமையாள் பயந்த விலஞ்சியமே.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவனேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச் சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே
நீலச் சிகண்டி யிலேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்மரிப் பார் வெறுங் கர்மிகளே
133
20.
2.
22.
23.
24.
25.
26.

Page 72
ஒலையுந் தூதருங் கண்டுதிண் டாடலொழித்தெனக்குக் காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேண்மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்ங்ண் காண்பதல் லான்மன வாக்குச்செய லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளையெவ் வாறுபுகல்வதுவே
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித் தடத்திற் தனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்றமயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங் னேமுத்தி காண்பதுவே
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த க்ழல்வீடு தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக் கக்கக் கிரியுரு வக்கதிர் வேறொட்ட காவலனே
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத் தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங்கண்ணார்க் கிளைத்துத் தவிக்கின்ற வென்னையெந் நாள்வந் திரட்சிப்பையே
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும் மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமா ளவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மான்திரு நாமம் புகல்பவரே
134
27.
28.
29.
3.
33.

பொட்டாக வெற்பைப் பொருதகந் தாதப்பிப் போனதொன்றற் கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.
பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே
சுழித்தோடு மாற்றிற் பெருக்கா னதுசெல்வந் துன்பமின்பங் கழித்தோடு கின்றதெக் காலநெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங் னேமுத்தி கிட்டுவதே
கட்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேல்மற வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடுடு(டு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிணன்டினன் டெனக் கொட்டி யாடுவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா விதித்தாண் டருடருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் றிருமரு காமயிலேறிய மாணிக்ககே
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழி றேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டறிந்தன வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
13S
34.
35.
39.
40.

Page 73
பாலே யனைய மொழியர்த மின்பத்தைப் பற்றியென்றும் மாலே கொண் டுய்யும் வகையறி யேன்மலர்த் தாடருவாய் காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ங்ண் வாய்த்ததுவே
கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட் செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர் புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன்முருகனைப் போற்றியன்பாற் குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ங்ண் கூடியவே
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கை நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு வேய்ந்த வகம்பிரிந்தால் வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிருபூ தவீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக் குருபூத வேலவ னிட்டுர சூர குலாந்தகனே
நீயான ஞான வினோதந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற் றேயா வுருகிப் பருகிப் பெருகித் துவஞமிந்த மாயா வினோத மனோதுக்க மானது மாய்வதற்கே
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண்டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ஞம்பர மானந்த சாகரத்தே
136
41.
43.
44.
45.
46.
47.

புத்தியை வாங்கிநின்பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் முத்தியை வாங்க வறிகின்றி லேன் முது சூர் நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னேவினையேற்கென் குறித்தனையே
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் றொண்டர்குழாஞ் சாரிற் கதியன்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த் தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்யின் நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர் இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வ மீபணி பாசசங் க்ராம பணாமகுட நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்குபகுமரா குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீனுக்கு மாய்ப்பவரே
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன் றிகைக் கெனை விதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப் போகைக்கு நீ வழி காட்டென்று போய்க்கட றிக்கொழுத வாகைச் சிலைவளைத் தான்மரு காமயில் வாகனனே
137
48.
49.
50.
51.
52.
53.
54.

Page 74
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக லுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய் யாரென் செய் வார்யம தூதருக்கே
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக் குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னுர்க்குச் செல்லும் வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
பொருபிடி யுங்களிறும்விளை யாடும் புனச்சிறுமான் தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவினை யோமிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய வுடம்பிதுவே
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன் பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே
பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ வெங்காயினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ் சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.
சிந்திக்கி லேனின்று சேவிக்கி லேன்றனிடைச் சிற்றடியை வந்திக்கி லேனொன்றும் வாழ்த்துகி லேன்மயில் வாகனனைச் சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே.
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் போதித்த வா! பஞ்ச பூதமுமற் றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
138
55.
56.
57.
58.
59.
6.

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் பேர்வே லனைச்சென்று போற்றியுய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ங்ண் சந்தித்ததே.
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.
வெட்டுங் கடாமிசைத் தோன்றிவெங் கூற்றன் விடுங்கயிற்றால் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி பட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.
நீர்க்குமி பூழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங்கேனு மெழுந்திருப்பார் வேற்கும ரற்கன் பிலாதவர் ஞான மிகவுநன்றே.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற்றி லேன்மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.
சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே ஒடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின் றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.
139
62.
63.
65.
66.,
67.
68

Page 75
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. 69.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே, 70.
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங் குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 7.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. 72.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து தாக்கு மனோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே. - 73.
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்தவன்பாற் குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங் கொடியவைவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பக லற்ற விடத்தே யிருக்கை யெளிதல்லவே. 74.
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. 75.
40

கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த தாடாள னேதென் றணிக்கைக் குமரநின் றண்டையந்தாள் சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. 76.
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரவெண்ணி மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கிப் பூங்கழல் நோக்குநெஞ்சே. 77.
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங் கொண்டாடுவீர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே 78.
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங் கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே. 79.
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந் தாலென்முன்னே தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்திக் யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யானிதன் பாலகனே. 80.
தாரா கணமெனுந் தாய்மா ரறுவர் தருமுலைப்பால் ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ் சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. 81.
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டுர சூர பயங்கரனே. 82.
141

Page 76
தேங்கிய வண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிபமிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந் தனிவேல் வாங்கி யனுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும்போய்ப் பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
வேலாயு தன்சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன்னறியாச் சூலா யுதன்தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென் பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே.
வணங்கித் துதிக்க வறியா மனித ருடனிணங்கிக் குணங்கெட்ட துட்டனை யீடேற்று வாய்கொடி யுங்கழுகும் பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய் நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட நிர்மலனே.
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோ னறியி னினினான் முகனுக் கிருவிலங்கே.
142
83.
84.
85.
86.
87.
88.
89.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90.
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேலனைக் கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. 91.
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானநறாத் தண்டையம் புண்டரி கந்தரு வாய்சண்ட தண்டவெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்" கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. 92.
மண்கமழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் கிண்கிணி யோசை பதினா லுலகமும் கேட்டதுவே. 93.
தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன்றாள் வேட்டிலைசிறு வள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே. 94
யான்றா னெனுஞ் சொல்லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. 95
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நி வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
143

Page 77
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க வதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே 97.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம்பாற் பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98.
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. 99.
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற் கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா கிரெளஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. OO.
சலங்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயனுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்கும் கந்தனன்னுால்
அலங்கார நூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே. 10. ,
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப் பொருவடி வேலுங் கடம்புந் தடம்புய மாறிரண்டும் மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங் குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே! 102.
இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந்தே துதிக்கக் குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்ட நாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. 103.
144

செங்கே ழடுத்த சிவனடி வேலுந் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளஞ் சொரியுருசெங் கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே. 104.
ஆவிக்கு மோசம் வருமாறறிந்துன் னருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய் வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. 105.
கொள்ளித் தலையி லெறும்பது போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடி முத்தந் தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவ னேமயி லேறிய மாணிக்கமே. 106.
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவரும் காலன் றனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த ஆலம் குடித்த பெருமான் குமார னறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே. 107.
மலையைப் பார்த்தால் மரமில்லை. மரங்களைப் பார்த்தால் மலையில்லை.
பாதையோ நீடித்தது. மெல்ல மெல்லமாகத்தான் போகவேணும். வழியிருக்க முள்ளுக்குள் போகக் கூடாது.
பிள்ளைகளை வளர்ப்பது போற் கடவுளையும் வளர்க்க
தேகம் கடவுளுக்கு ஓர் செருப்பு. பூரண ஞானம் பெறும்வரை குருடனாகவும் செவிடனாகவும் ஊமையனாகவும் இரு, மெளனம்.
- யோகர் சுவாமிகள் محصہ ܢܠ
145

Page 78
伞一 சிவமயம்
அருணகிரிநாதர் அருளிய' கந்தரநுபூதி
காப்பு நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.
நூல் ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனுநீ யலையோ? எல்லா மறவென்னை யிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே
வளைபட் டகைமா தொடுமக் களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே
மகமா யைகளைந் திடவல் லபிரான் முகமா றுமொழிந்துமொழிந் திலனே அகமா டைமடந் தையரென் றயருஞ் சுகமா யையுள்நின் றுதயங் குவதே
146

திரனியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந் தமரும் புமதோ பணியா யெனவள் விபதம் பணியும் தணியா வதிமோ கதயா பரனே
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா குமரன் கிரிரா சகுமா ரிமகன் சமரம் பொருதா னவநா சகனே
மட்டுர் குழன்மங் கையர்மை யல்வலைப் பட்டு சல்படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டு ரநிரா குலநிர்ப் பயனே
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார் பவலா ரிதலா ரியேனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே
147
ll.

Page 79
முருகன் றனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின்றதுவே
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம் ஜவாய் வழிச்சொல் லுமவா வினையே
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங் கவனனன் குணபஞ் சரனே
பேரா சையெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே லுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோ கதுரந் தரனே
யாமோ தியகல் வியுமெம் மறிவும் தாமே பெறவே லவர்தந் ததனாற் பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே நடவீர் நடவீ ரினியே
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா அனகா அபயா அமரா பதிகா வலகு ரபயங் கரனே
வடிவுந் தனமும் மனமுங் குணமும் குடியுங் குலமும் குடிபோ கியவா அடியந் தமிலா அயல்வே லரசே மிடியென் றொருபா விவெளிப் படினே
148
13
14.
5.
16.
17.
8.
19.

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதே சமுணர்த் தியவா விரிதா ரணவிக் ரமவே விமையோர் புரிதா ரகநா கபுரந்தரனே
கருதா மறவா நெறிகா ணவெனக் கிருதாள் வனசந் தரவென் றிசைவாய் வரதா முருகா மயில்வா கணனே விரதா சுரகு ரவிபா டணனே
காளைக் குமரே சனெனக் கருதிக் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல்வள் விபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே
அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே
கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும் போர்வே லபுரந் தரபூ பதியே
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றியசே வகனே
ஆதா ரமிலே னருளைப் பெறவே நீதா னொருசற் றுநினைந் திலையே வேதா கமஞா னவிநோ தமனோ தீதா சுரலோ கசிகா மணியே
149
20.
21.
22.
23.
24.
25.

Page 80
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே றியவா னவனே
ஆனா வமுதே யயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானா கியவென் னைவிழுங் கிவெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே
இல்லே யெனுமா யையிலிட் டனை நீ பொல்லே னறியா மைபொறுத் திலையோ மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே
செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொல்வா ததென வுணர்வித்ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வர் யெனவென் னைவிதித் தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரிவே டர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடுவா கையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்றுவிடப் பெறுவேன் மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணா கரனே
150
27.
28.
29.
30.
3.
32.
33.

சிங்கா ரமடந் தையர்தி நெறிபோய் மங்கா மலெனக் குவரந் தருவாய் சங்க்ரா மசிகா வலசண் முகனே கங்கா நதிபா லக்ருபா கரனே
விதிகா னுமுடம் பைவிடா வினையேன் கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்
மதிவா னுதல்வள் வியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியதெப் பொருடான் வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே
கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோ டுமகந் தையையே
ஆதா ளியையொன் றறியே னையறத் தீதா ளியையாண் டதுசெப் புமதோ கூதா ளகிரா தகுலிக் கிறைவா வேதா ளகணம் புகழ்வே லவனே
மாவேள் சனனங் கெடமா யைவிடா மூவே டணையென் றுமுடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவசங் கரதே சிகனே
வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன் மனையோ டுதியங் கிமயங் கிடவோ சுனையோ டருவித் துறையோ டுபசுந் தினையோ டிதணோ டுதிரிந் தவனே
151
34.
35.
36
37.
38.
39.
40.

Page 81
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயும்நாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதே சிகனே
குறியைக் குறியா துகுறித் தறியும் நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ் செறிவற்றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையுமற் றதுவே
தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் 丝° ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூ திபிறந்ததுவே
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே
கரவா கியகல் வியுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோ கதயா பரனே
எந்தா யுமெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே
ஆறா யையுநீத்ததன்மே னிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித்தவனே
152
4.
42.
43.
45.
46.
47

குறிப்பு :
அறிவொன்று அற நின்று அறிவோர் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரானலையோ? செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறிவென்று அவரோடு உறும் வேலவனே. 48
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே 49.
மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திரஞா னசுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே SO.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே 51.
கந்தரனுபூதியில் 43 பாடல்கள்தான் அருணகிரியார் வழங்கியவை என்றும், 51 பாடல்கள் உண்மையானவை என்றும், 101 பாடல்கள் அருணகிரியாரால் வழங்கப்பட்டவை என்றும் பல கருத்துக்கள் உண்டு. பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 51 பாடல்களே இங்கு பதிவாகி உள்ளன.
ஒரு கிழமைக்கு ஒரு தரம் விரதம் இருத்தல் வேண்டும்.
என்ன வந்தாலும் பொறுக்கக்கூடிய திறமை வேண்டும்.
தட்ட குணங்களைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும்.
அலைகிற மனத்தை அடக்கத் தேவாரம் படிக்கிறது ஒரு வழி தேவாரத்தை நல்லாய்ப் பெலத்தப் பாடல் வேண்டும்.
- யோகர் சுவாமிகள்
153

Page 82
01.
02.
03.
05.
07.
O8.
09.
Ο சிவமயம்
மறீ குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் - ஆதிநடு
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் தாரணியில்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் திரிகரணம்
154

10.
11.
13.
14.
15.
16.
17.
19.
20.
ஆகவரும் இச்சை அறிவுஇயற்ற லால் இலய போகஅதிகாரப் பொருளாகி ஏகத்து
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்த அத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி என்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போல்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால்
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியை கிரியா யோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்
155

Page 83
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்ற (அ)ருளி - உலவாது
அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஒர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்று - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்
அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்து உலவா இன்பம் - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒரு மலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு
156

33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்ற வரும்
யானெனதென்று அற்றஇடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம்
திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே, எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்
தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்தபைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டும் பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத்தடிந்து தெய்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
157

Page 84
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமடன்
வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஒவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
158

56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
நாதக் கழலும் நருமணிப்பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி
இளம்பருதி நூறாயிரங்கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே ஒதியஐந்து
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் பந்தனையால்
ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்களே சத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவுஅளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும் அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
159

Page 85
68.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்து ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் . வாய்ந்தசிவ
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஒவாது அளித்துயர்ந்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும்
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழிந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோ முகமும் - தந்து
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும்பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்
160

79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று 6TibLDIT6 கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுப்ப்பப் - போதொருசற்று
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் . தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் செய்ய
முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூக்க அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி
மங்கை சிலம்பின் மணிஒன்பதில்தோன்றும் தங்க மடவார் துயர்தீர்ந்து தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பி லுதித்து
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கடாஅதனைச் சென்று கொணர்ந்து . எங்கோன்
161

Page 86
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
விடுக்குதி என்று உய்ப்பஅதன் மீதிவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று ஒன்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங்ண் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீர வடிவேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
தெள்ளுதிரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத் தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்க இமையோர் வாழச் - சயேந்திரனாம்
சூரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு
பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலாய் - போரவுணன்
62

101.
O2.
103.
104.
105.
106.
107.
108.
109.
10.
11.
அங்கம் இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோற்றுதலும் - அங்கவற்றுள்
சீறும் அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு
சேவல் பகையைத் திறல்வேர் பதாகைஎன மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் கிறைவிடுத்து ஆட்கொண்டு அளித்த தேவே மறைமுடிவாம்
சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து
ஆறுதிருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும்
பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
163

Page 87
12.
113.
14.
15.
116.
17.
118.
19.
20.
121.
122.
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல் பூதமும் தீ நீரும் பொருபடையும் - தீது அகலா
வெவ்விடமும் துட்ட மிருக முதலாம் எவையும் எவ்விடம்வந்து எம்மை எதிர்த்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து உல்லாசமாக உளத்திலிருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப் பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
எழுத்துமுதலாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோகித்துத் - தம்மைவிடுத்து
ஆயும் பழைய அடியா ருடன் கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள்
164

முருக வழிபாரு நூற்றியெட்டுப் போற்றி
திருச்சிற்றம்பலம்
அருவாம் உருவாம் முருகா போற்றி திருவார் மறையின் செம்பொருள் போற்றி ஆறு முகத்தெம் அரசே போற்றி மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி
இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி 5 உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி ஈசற் கினிய சேயே போற்றி மாசறு திருவடி மலரோய் போற்றி உறுநர்த் தாங்கும் உறவோய் போற்றி
செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி 10 ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி கானில் வள்ளியின் கணவ போற்றி எழில்கொள் இன்ப வாரிதி போற்றி அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றி 15 கூறுமன் பர்க்குக் குழைவாய் போற்றி ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி செய்யமே னியனே தேவே போற்றி ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
165

Page 88
பருவம் முதிராப் பண்பே போற்றி ஒவற இமைக்கும் ஒளியே போற்றி மாமுதல் தடிந்த மறவ போற்றி ஒளவியம் அறுத்தோர்க் கருள்வோய் போற்றி தெய்வம் எலாந்தொழும் செய்யா போற்றி
அ.குதல் இல்லா அறிவே போற்றி வெ.குதல் அற்றார் விளக்கே போற்றி கந்தா மணமார் கடம்பா போற்றி நந்தா விளக்கே நாயக போற்றி காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
மூப்பீ றற்ற முதல்வா போற்றி கிள்ளை மொழியுமை பிள்ளாய் போற்றி கள்ளப் புலனைக் கிழவோய் போற்றி கீழறும் அடியர் கிழவோய் போற்றி ஏழுல குந்தொழும் இறைவா போற்றி
குன்றும் குழைதோட் குமரா போற்றி என்றும் இளைய ஏறே போற்றி - கூம்புகைத் தேவர் கோவே போற்றி பாம்பணி சிவனார் பாலக போற்றி கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
அண்டினர்க் கருளும் அங்கண போற்றி கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி வீடில் வீடருள் விமல போற்றி கைவேல் கொண்ட காவல போற்றி நைவேற் கருள்வாய் நாயக போற்றி
166
20
30

கொடைக் கடன் கொண்டகுழக போற்றி 45 படைக்கடல் தலைவ பரனே போற்றி கோதில் அமிழ்தே குருமணி போற்றி போதில் அமர்ந்த பொன்னே போற்றி சிவபிரான் கண்ணுரு சேயே போற்றி
நவசரவணத்தில் நகர்ந்தாய் போற்றி 50 அருவுரு அமைந்தே ஆடினாய் போற்றி அறுமீன் பாலுண் அமர போற்றி உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
நான்முக னைச்சிறை நாட்டினாய் போற்றி 55 மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி 60 பரங்குன் றமர்ந்த பரம்பர போற்றி திருச்செந்தில் வளர் சேவக போற்றி ஆவி னன்குடி ஆண்டாய் போற்றி மேவிஏ ரகம்வாழ் மிக்கவ போற்றி
குன்றுதோறாடும் குழந்தாய் போற்றி 65 துன்று பழமுதிர் சோலையாய் போற்றி திசைமுகம் விளங்கும் செம்முக போற்றி இசைபொரு வேள்வி இன்முக போற்றி செங்களம் ஒர்க்கும் திருமுக போற்றி
167

Page 89
மங்கல மான வானவ போற்றி வள்ளிபால் நகைகொள மாமுக போற்றி திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி சீர்வளர் அழகின், செல்வா போற்றி
மணிமுடி புனையா றணிமுடி போற்றி துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி செவியீ ராறுடைச் செம்மால் போற்றி கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி பொருவில் ஒருவனாம் புலவ போற்றி அருண கிரிக்கருள் அமல போற்றி நக்கீ ரற்கருள் நாதா போற்றி தக்கசங் கத்தமிழ் தந்தாய் போற்றி
குமர குருபர்ற் கருளினை போற்றி அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி கந்த புரிவாழ் வுகந்தோய் போற்றி தெய்வானை யம்மையைச் சேர்ந்தாய் போற்றி
பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி கோழி வெல்கொடிக் கோவே போற்றி ஊழிதோ றுழ் உள்ளாய் போற்றி செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி மெய்யெலாம் வெண்ணி றணிவோய் போற்றி
168
70

மேவலர் மடங்கலாம் விசாக போற்றி 95 மூவர்கள் போற்றும் முத்த போற்றி தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி சேவலும் மயிலும் சேர்த்தாய் போற்றி போர்மிகு பொருந புரவல போற்றி
ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி 100 தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
கல்வியும் செல்வமும் கனிந்தருள் போற்றி 105 பல்வகை வளனும் பணித்தருள் போற்றி இன்பார் இணைய ஏந்தால் போற்றி சிங்கார வேலனே உன் சீரடி போற்றி
திருச்சிற்றம்பலம்
N தியானம் செய்தால் அதவும் வேலை. சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப் பழகு. உள்ளதோடு திருப்தியடையாது அதிக ஆசைப்பட்டுக்கிடந் தலைகிறோம். மனக் குழப்பமில்லாமலிருக்கும் போது எந்தக் கருமமுஞ் சித்தியாகும். தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்வதனால் ஞானம் உண்டாகும்
- யோகர் சுவாமிகள்)
169

Page 90
றி வைரவர் தோத்திரக் கோவை
1. கந்த புராணம் பரமனை மதித்திடாப் பங்க யாசன னொருதலை கிள்ளியே யொழித்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்ட முன் புரிதருவடுகனைப் போற்றி செய்குவாம்
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடு அஞ்சனப் புகையென ஆல மாமெனச் செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம்
2. பழைய காஞ்சிப்புராணம். கொச்சையறிவுற்பவமாங் கொள்கையினா லரிபிரமர் கூடி வீனின் மெய்ச்சமரம் புரிந்திகலி யொருவரொரு வரை மிகவும் வெறுக்கு நாளி லச்சுறவுற்றவரகந்தை விடுமாறு நெருக்கி யினிதருளே செய்யுங்
3. திருவாவடுதுறைப் புராணம் காலன் மார்பிற்ல் காமலர் நீட்டிய சீலன் கோயிற் திறமிகழ்ந் தோர்களைச் சூல மேற்றுஞ் சுழல்விழிச் சேத்திர பாலன் பொற்பதம் பற்றிப் பணிகுவாம்
4. காஞ்சிப் புராணம் எளியாரை வலியர் வாட்டின் வலியரை யிருநீர் வைப்பி னளிவுறத் தெய்வம் வாட்டு மெனுமுரைக் கமைய வன்றே தெளியுமா வலியைச் சொற்றோற் செகுத்துரிக் கவயம் வளியுளர் கச்சி காவல் வயிரவர்க் கன்பு செய்வாம்
170

5. திருவானைக்காய் புராணம் உலக மளித்தல் சுதந்தர மன்றுவண
முயர்த்தோர் கெளவ வன்சே யிலகு முருவம் பொடித்த வன்பா
லெழுந்து படைப்புஞ் சுதந்தரமன் றலர்மெல் லணையாற் கெனவவனை
யரங்கத் திசைமாமு கனாக்கிப் பலரும் வெருடப் பொழிநெய்த் தோர்ப்பயிக்கம்
புகுந்தோம் பதம் பணிவோம்
6. திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் தருணமலர்க் கோயிலிறை யுச்சிமுடிக்
கபாலத்தைத் தளிர்க்கை யேந்தி பருணநீர் பலிக்கமையோர் நடுங்கவலம்
வந்து மாற்காவி நல்கி மருணனிசெய் மூவிலைவேண் மணிநாக
முடுக்கையிவை வயங்க வேந்திக் கருணைமதம் பூண்டெழில் செய் கடைஞாழல்
வயிரவரைக் கருதி வாழ்வோம்
7. திருச்செந்தூர் புராணம் கிஞ்சு கந்தரு வாய்க்கலைக் கிள்ளையா னஞ்சு கம்மிலொன் றற்றிடக் கிள்ளியே மிஞ்சு கந்தொறு மிக்குறுங் கார்திறக் களுசு கன்பொற் கழலிணை போற்றுவோம்
8. கடம்பவனப் புராணம் கருதரிய லளிதைபர னெற்றி யிற்றோன் றிச்சூல கபாலமேந்தி வருபிரள யஞ்சுவற்றிப் பயிரவனாயண்டதத்து பங்கண்மாற்றி பரிசரும கஞ்சு கியாய் வேதவெகி னுர்த்து முன்போலவுண்டாக்கி கிரு ତ • (3 a லன் (8 த்தல் G (3 171

Page 91
9. கடம்பர் கோயிற் புராணம் கயிரவ நாண்மலர்க் கவின்க ணார்மயற் செயிரவ நாடொறு மியற்றி யேதிரி யுயிரவ நானென வொறாது காத்தருள் வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவோம்.
10. புலியூர்ப் புராணம் விதிப்பால வினைதவிர்க்கும் வியாக்கிரமா புரத்தினிது மேவினோர்கண் மதிப்பாலிற் செய்வினைக்கு மூவிலைவேற் சூலத்தின் மருவ வைத்தே யுதிப்பாலன்னையர் முலைகண் மீட்டருந்தா வகை முத்தி யுதவுந்தில்லைப் பதிப்பால வயிரவன்றன் பாதசரோ ருகங்களென் றும்பரவி வாழ்வோம்
11. சீர்காழிப் புராணம் துங்க மாமணித் தூணில்வந் திரணியன் றோள்வலிதனை வாங்குஞ் சிங்கவேற்றுரி யரைக்கசைத்து லகெலாந் தேர்ந்தளந்த வன்மேனி யங்கம் யாவுமோர் கதையதாக் கொண்டத ளங்கியாப் புளைதாழிச்
சங்க வார்குழைச் சட்டை நாயகன்றுணைத் தாமரைச் சரண்போற்றி
12.திருப்பூவணப் புராணம் அரிபிரம ரகந்தை கெட வண்டங்க
ளுடைத் தெரியு மங்கிக் கோட்பட் டுரியபல வுலகமெலா மொழிந்திடுநா
னவர்கடம துடன் மேற்கொண்டு குருதிவாய் கொப்பளிக்குங் கூரயின்மூ விலைச் சூலங்கொண்ட திண்டோட் கருவரைநேர் தருவடுகக் கடவுளெமைப்
புரப்பக் கைகூப்பு வாமே.
172

13. அவிநாசிப் புராணம்
அஞ்சுகனை யாதிலகு மாடரவக்
கங்கணனை யகலும் வானில் விஞ்சுகனை மாரிநிகர் மேனியனை
வாசியெனவிரைந்து தாவும் பைஞ்சுகனை யேயெரித்த புக்கொளியா
ரெயில் காவல் பரிக்கும் வீரக் கஞ்சுகனை வேணிமலர்க் கிஞ்சுகனைப்
பரசுகனைக் கழறல் செய்வாம்
14. பவானி கூடற் புராணம் பொருதலை யுகளும் வேனிப் புனிதனே பரமென் றுள்ளங் கருதலை யயனி யென்னக் குடிலையுங் கழலத் தேறா வொருதலை யுகிராற் கிள்ளி யும்பர்மா லுதிரம் வாங்கும் விரிதலை சூலச் செங்கை விமலனை வணக்கஞ் செய்வாம்
15. திருவோத்தூர் புராணம் வேரிமலர்ப் பண்ணவன்றன் சிரமொன்றை
நகநுதியால் வீட்டி யுற்ற சோரிமலர் தலைநிலத்திற் பாயாதச்
சிரத்தேற்றுத் தொடர்ந்து போந்து வாரிமலர் கண்வளர்மா னெற்றி யெற்றிக்
குருதி கொடு மமதை நீக்குங் காரிமலர்க் கழலிரண்டுங் கரமிரண்டுங்
கூப்பி நிதம் கருதி வாழ்வாம்.
173

Page 92
16. மருதூர்ப் புராணம்
கோனிலவு பிறைபொருவுங் கூரெயிற்று
வாய்மூடுவற் குதிரை யானைப் பாணியிற்கங் கணம்புனைந்த வுரகமணி வெயில் விரிக்கும் பண்பினானை வேணியரன் றிருக்கோயில் காப்பானை
நிருவாண வேடத்தானை வாணிலவு முத்தலைவேல் வடுகனைச் செந்
தமிழ்பாடி வணக்கஞ் செய்வாம்.
17. ஆதித்த திரிப்புராணம் பரநாத வரைமணிகிண் கிணியொலிப்பய்
படமெடுத்துப் பார்க்குந் துத்தி வரநாக கங்கணத்தான் மாலகந்தை
யிருளகற்ற வந்த ஜோதி யுரனாரும் வித்துருமச் செஞ்சடையா
ளருளத்தி யுயரா தித்த புரமேவு மணிவரை வாழ் சட்டைநா
யகன் மலர்த்தாள் போற்றி வாழ்வோம்.
18. திருநெல்வேலி புராணம்
பகருமறைப் பணைவனத்திற் பண்டிருந்த தாபதர்க ணிகரிலவந் தவமெனவே நெறியிலவர் செயும் வேள்விப் புகர் முகவெங் கரியுரித்த புரிசடையோ னெல்வேலி நகரினிது புரந்த சட்டை நாதனிரு பதம் பணிவோம்.
174

19. மருதவனப் புராணம் மேலையோர் கற்பத் திருதியிற் கதிர்கண்
மேவுடுக் கணங்கள் கீழுறத்தீம் பாலையொத் திருசங் கின்ற முத்தினங்கள்
பரந்திடப் புவியிடத் தெழுந்த வேலையின் மிதந்த புகலியந் தோணி
விளங்கிட வடுகனாங் கடவுள் காலை மென்போதை யுச்சியிற் கொள்வாங்
கடுந்துயர் மாலைதீர்ந் திடவே
20. திருநல்லூர் பெருமணப் புராணம் யற்காரின் வருமகவான் பணிவள்ளல்
பணிவிடைகள் பொருந்தி நாளுந் ளயற்காக வெங்கள் குலந்தனை
யடிமைக் கொண்டு வளர்தேவதேவ னயற்காதி யமலனருள் செய்தபுர
மெனவுலக மனைத்துங் கூறும் வயற்காழி நகர்ச்சட்டை நாதனிரு
பதமலரை வணங்கி வாழ்வோம்
21. காசி ரகசியம் தளம்பொலிமலரோ னாதி வானவர் தாழ்ந்து போற்ற வுளம் பொலி காசி மேவு முயிர்கள் செய்பாவ மெல்லாங் களம்பொலியாது தண்டங் கண்டறலொழித்து முத்தி வளம்பொலிவகை செய்கால வயிரவற்கன்பு செய்வாம்.
22. திருநாகைக் காரோணய் புராணம் பெருகுதன் புகழுளேனோர் பிரதாப மடக்கி யாங்கு முருகுதங் கலரின் மேலான் முண்ட வெண்கபாலத் துடு கருகுபைங் கொண்டன் மேனி கவிழ்த்திடு செந்நீரேற்ற திருகு தீர் வடுகப் புத்தேன் சேவடி சென்னி சேர்ப்பாம்
175

Page 93
23. திருக்குடந்தைப் புராணம் எழுவகைத் தாதுங் கூடினிபங்கிடு முயிரென் றேனு கழுவிடி னியங்கா வென்று நவிறலை வெளிசெய் தாங்கு முழுவலி நெடியோ னாதி மொய்த்த வானவர்மெய் நெய்த்தோர் வழுவறக் கபாலத் தேற்ற வடுகனை வணங்கி வாழ்வோம்.
24. மாயூரப் புராணம்
ஓங்குநாற் படைமுன் னஞ்சு மொள்ளுகிர் படையுந் தேசு வீங்குசக் கரமுன்னான வெம்படை யஞ்சு மஞ்சுந் தாங்குசூற் படையுங் கொண்டோர் தலைக்கல நெத்தோரேற்ற பாங்குசேர் வடுகப்புத்தேள் பதமலர்க் கன்பு செவ்வாம்.
25. உறையூர் புராணம் SD *றினுக்குத்தானே யொ லெனத் தெரிந்தாய் கலகிறீப் பொறிக டும்பியலங்குமுத் தலைவே றாங்கி வலனுடை மாயனாதி வானவர் செருக்கு மாறப் பலருமுன்னஞ்ச நேயத்தோர் பலிக்கொண்டோன் சரணஞ் சார்வோம்
26. திருவம்பர்ய் புராணம் சுவைமுனந் தெரிந்து பின்புதற் குதவுந்
தூததவ வேட்டுவர் பொருவச் செவைமலர்கிழவன் றலைச்சுவை முன்னந்
தெரிந்து பின்னக் குதவுகிரு சுவை கொண்மா னெய்த்தோர்ச் சுவைமுனந் தெரிந்து
நயந்துபி னத்தலைக் குதவுங் சுவைபடு திறற்சூ லமுங்கரங் கொண்ட
கடவுடன் சேவடி போற்றி.
27. திருவாளொளிப்புற்றுார் புராணம் மறைமகழ் கபாலத் தோடு மாயவற் மேனிநெய்த்தோர் துறைகமழ் கொடிய வெந்தீச் சூலமுங்கரத்திற்றாங்கி முறைகம முலகில் யார்க்குமூடியபெருக்கு மாய்க்கு மிறைகமழ் வடுகப் புத்தேளிணையடிக்கன்பு செய்வாம்.
176

28. விளத்தொட்டிய் புராணம் இருட்பெரு நிரய மேவற்கேதுவாஞ் செருக்கு மேவில் வெருட்பெருந் தண்டமேவு மிகவுமென் றுணர்த்தி யாங்கு மிருட்பெருஞ் செயலி னிங்கா மாலுடம் புரித்துப் போர்த்த வருட்பெரு வடுகன் செம்பொ னம்புயப் பாதம் போற்றி
29. கோயிலூர்ப் புராணம் தெருட்பெரு நலன வாவித் தீவிர தரத்துற்றோர்க்கு மருட்பெரு மாயை நூறி வல்வினைப் ப்டலங்கீறிச் சுருட்பெருங் கொடியதுக்க நிவர்த்தியுஞ் சுகத்தின்சேறு மருட் பெருஞ்செயலானல்கும் வடுகனையடைந்து வாழ்வாம்
30. திருக்குறுக்கைப் புராணம்
ஆக்கும் வினைமலர வனதன் றென்றற
கவனுத் தமாங்க நான்குங் காக்கும் வினைமாய வனதன் றென்றற்
கவன் மேனி கழிநெய் தோரும் ஈர்க்கும் வினையாள ருந்தேர் சான்றுரைக்கக்
கூர்கொளு கிர்க்சாங்கத் தோடு போக்கும் வினைச்சூற் படையுபாங்கமுங்கொள்
வடுகனடி போற்றி வாழ்வாம்.
31. தனியூர்ய் புராணம் மறைபுகழ் தானேயோம்ப வயங்கு கேத்திரத்தி னெல்லை பொறையுடல் விடுத்தோர் பாவப் புணர்ப்பினுக் கேற்றதண்டங் குறையற வியற்று தண்டதரள் குறுகாது தானே முறையுறவுளுற்றிப் போக்கு முதல்வனை வணக்கஞ்செய்வாம்.
177

Page 94
றிவைரவர் அஷ்டோத்ர சத நாமாவளி
ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஒம் ஓம் ஒம் ஒம்
. ஓம் . ஓம் . ஓம் . ஓம்
ஒம்
. ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் . ஓம் ஓம்
பைரவாய
பூத நாதாய பூதாத்மனே
35UT6)bsTul ஷேத்ரதாய ஷேத்ரபாலாய ஷேத்ரக்ஞாய ஷத்ரியாய விராஜே ஸ்மசானவாஸிநே மாம்ஸாசிநே ஸர்ப்பராசயே ஸ்மராந்தக்ருதே ரக்தபாய
பானபாய ஸித்தாய ஸித்திதாய ஸித்தஸேவிதாய கங்காளாய
356)506TTU
856)TU
காஷ்டாய தநவே
கவயே த்ரிநேத்ரே பஹ"நேத்ரே
178
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
bLD
நம
நம
நம
நம
நம
நம
blD
blD
நம
நம

27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
பிங்களலோசனாய சூலபாணயே கட்கபாணயே கங்காளிநே தூம்ரலோ சனாய அபீரவே
60) UJ6JTuu
நாதாய
Ա5frԱ } யோகிநீபதயே
தநதாய தநஹாரிண தநவதே ப்ரீதிபாவனாய
நாகஹாராய
bsT85usTestuu 6jG3uJITLD (8856-Tu கபால ப்ருதே
ST6) கபாலமாலிநே கமநியாய கலாநிதயே த்ரிலோசனாய ஜ்வலந்நேத்ராய த்ரிசிகிநே g5j66oT85uTu த்ரிநேத்ர தநயாய
19LDLITuu
சாத்தாய
179
நம
bLD
நம
நம
நம
bLD
bLD
நம
நம
நம
நம
Blp
நம
நம
BLD
நம
நம
நம
BLD
நம
நம
bLD
நம
bid
நம
BLD
நம
நம

Page 95
56.
57.
58.
59. 60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
.7ך
78.
79.
80.
81.
82.
83.
84,
சாந்தஜனப்ரியாய வடுகாய வடுவேஷாய கட்வாங்க வரதாரகாய
45 TgbujöfOz (Tuu பசுபதயே பிசஷ தாய பரிசாரகாய தூர்தாய திகம்பராய
(ë,JTuj
6mpfg00TTuu unt60i (6(86u)T3F60TTu
ப்ரசாந்தாய சாந்திதாய ஸித்தாய சங்கராய ப்ரிய பாந்தவாய அஷ்ட மூர்த்தயே நிதிசாய க்ஞான ககூrஷே g5(SuTLDuurtu அஷடாதாராய
ஷடாதாராய ஸர்ப்பயுக்தாய சிகீஸகாய
495) (Tu பூதராதிசாய பூபதயே
180
நம
நம
நம
நம
நம
நம
bLD
நம
நம
நம
நம
bLD
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
நம
bLD
(bLD
நம
bud
நம
bLD

85. ஓம் பூதராத்மஜாய நம 86. ஓம் கங்காலதாரிணே நம 87. ஓம் முண்டிதே pRLD 88. ஓம் நாக யக்ஞோப வீதவதே நம 89. ஓம் ஜ்ரும்பணோ மோஹந:
ஸ்தம்பீ மாரண. சேஷாபணாய நம 90. ஓம் ஸத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம
91. ஓம் தைத்யக்நே நம 92. ஓம் முண்ட பூவிதாய நம 93. ஓம் பலிபுஜே நம 94. ஓம் பலிபுங்நாதாய BLD 95. ஓம் பாலாய நம 96. ஓம் அபால விக்ரமாய நம 97. ஓம் ஸர்வாபத் தாரணாய நம 98. ஓம் துர்க்காய bLD 99. ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம 100.ஓம் காமிநே நம 101. ஓம் கலாநிதயே நம 102.ஓம் காந்தாயே bLD 103. ஒம் காமிநீ வசக்குதே நம 104.ஓம் வசினே நம 105. ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய 106.9Lb 606g5ustu நம 107. ஓம் ப்ரபவே நம 108.ஓம் விஷணவே நம
181

Page 96
உமையம்மை வழிபாடு நூற்றெட்டுப் போற்றிகள்
திருச்சிற்றம்பலம்
திருநிலை நாயகி தேவி போற்றி கருத்தார்க் குழலுமை கெளரி போற்றி மங்கள நாயகி மாமணி போற்றி எங்கும் நிறைந்த இன்பொருள் போற்றி
இளமை நாயகி எந்தாய் போற்றி 5 வளமை நல்கும் வல்லியே போற்றி யாழைப் போல்மொழி யாயே போற்றி பேழை வயிற்றனைப் பெற்றோய் போற்றி பால்வளை நாயகி பார்ப்பதி போற்றி
சூல்கொண் டுலகெலாம் தோற்றினாய் போற்றி 10 அறம்வளர் நாயகி அம்மே போற்றி மறங்கடி கடைக்கண் மனோன்மணி போற்றி போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி பாகம் பிரியாப் பராபரை போற்றி
உலகுயிர் வளர்க்கும் ஒருத்தி போற்றி 15 மலர்தல் குவிதலில் மணமலர் போற்றி கத்து கடல்வரா முத்தே போற்றி நத்தும் அடியார் நட்பே போற்றி கற்றவர்க் கின்பக் கடலே போற்றி
182

மற்றவர்க் கெட்டா வான்வெளி போற்றி சிவகாமி யம்மைச் செல்வி போற்றி புவனப் பொருள்களிற் பொருந்தினாய் போற்றி வலிதா யத்தமர் வண்தாய் போற்றி கலிசூ ழாவகைக் காப்பாய் போற்றி
வண்டுவார் குழலி மாதா போற்றி செண்டாடும் விடைச் சிவையே போற்றி உண்ணா முலையெம் உயர்தாய் போற்றி கண்ணார் கமுகுக் கழுத்தாய் போற்றி பெருந்துறை அரசி பெண்கனி போற்றி
முருந்தேர் முறுவல் முதல்வி போற்றி வேற்கண் அம்மை மீன்கணி போற்றி நாற்பெரும் பயன்தரும் நங்காய் போற்றி மின்னொளியம்மையாம் விளக்கே போற்றி மன்னொளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
பச்சை நிறத்துப் பைங்கிளி போற்றி இச்சைக் கிசைந்த இன்பே போற்றி குவளைக் கண்மலர்க் கொம்பே போற்றி தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி பவள வரைமேற் பசுங்கொடி போற்றி
துவளிடை சிறுத்த துரயோய் போற்றி குயில் மொழி மிழற்றும் மயிலியல் போற்றி எயில்மூன் றெரித்த இலங்கிழை போற்றி தையல் நாயகித் தாயே போற்றி வையமின் றளிக்கும் வளத்தாய் போற்றி
183
20
25
30
35
40

Page 97
மெய்யுரு கடியர் விருப்பே போற்றி ஆவுடை நாயகி அன்னாய் போற்றி தேவிற் சிறந்த திருமகள் போற்றி தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி அண்டர் அருந்தா அமிழ்தே போற்றி
பனங்காட் டுருறை பவளே போற்றி அனங்காட் டும்நடை அழகி போற்றி தமிழினும் இனிமை சார்ந்தோய் போற்றி குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி அமர குமரி ஆனாய் போற்றி
இமவான் பெற்ற இளையாய் போற்றி மலையத் துவசன் மகளே போற்றி கலையாய்க் கனிந்த தலைமகள் போற்றி தக்கன் மகளாய்த் தரித்தாய் போற்றி முக்கட் சுடரின் முதல்வி போற்றி
அலைமகள் அடிபணி நலமகள் போற்றி கலைமகள் தலைபணி கருத்தே போற்றி திருவார் கூடலில் திகழ்வாய் போற்றி அருமறைப் பொருளாம் ஆதி போற்றி உயிருள் ஒவிய உருவே போற்றி
செயிரில் காட்சிச் சேயிழை போற்றி செந்தமிழ்ப் பாவின் தெளிவே போற்றி எந்தம் மனத்தில் இருப்பாய் போற்றி நீலி சூலி நெடுங்கணி போற்றி மேலை வினைகடி விமலை போற்றி
184
45
50
55
60
65

ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி நீல மேனி வாலிழை போற்றி கோலக் கொண்டல் நிறத்தாய் போற்றி மண்முதல் ஐம்பொருள் வளனே போற்றி
பெண் ஆண் அலியுருப் பெற்றோய் போற்றி ஆப்பனூர் மேவிய ஆத்தாள் போற்றி மூப்பிறப் பற்ற முதல்வி போற்றி எண்குணத் தொருவன் இடத்தோய் போற்றி பண்கனி மென்சொற் பாவாய் போற்றி
பச்சிளம் பெண்ணாய்ப் பகர்வோய் போற்றி எச்சம யத்தும் இசைந்தாய் போற்றி யாழிசைப் பண்ணர் யமர்ந்தாய் போற்றி ஏழிசைப் பயனாய் இருந்தாய் போற்றி அருள்மலி கண்ணுடை ஆயே போற்றி
மருளினர் காணாவான் பொருள் போற்றி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை போற்றி பற்றிலா நற்றவர் பற்றே போற்றி இழையாய் நன்மை இழைப்பாய் போற்றி குழையாய் அகத்தைக் குழைப்பாய் போற்றி
திருநணா மங்கைச் செல்வி போற்றி உருவும் திருவும் உடையாய் போற்றி அருந்தவர்க் குதவும் அருளே போற்றி அருந்துறைத்தமிழின் அமைபொருள் போற்றி கருநிற ஒளிவளர் கடலே போற்றி
185
70
75
80
85
90

Page 98
பருவரை மருந்தே பகவதி போற்றி 95 சூளா மணியே சுடரொளி போற்றி ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி மதுரை அரசியாய் வந்தோய் போற்றி குதிரைச் சேவகன் கொண்டாய் போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி 100 பலநல் லணநீ படைத்தருள் போற்றி உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி பயிர்கள் பயன்தரப் பரிந்தருள் போற்றி செல்வம் கல்விச் சிறப்பருள் போற்றி
நல்லன் பொழுக்கம் நல்குவாய் போற்றி 105 போற்றிஉன் பொன்னடிப் போது போற்றி போற்று புகழ்நிறை திருத்தாள் போற்றி கற்பக வல்லி யுன் கழலிணை போற்றி
திருச்சிற்றம்பலம்
யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று புதிய மதம் சொல்கிறத.
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டத.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
- சுவாமி விவேகானந்தர் محصہ۔ - ܢܠ
186

2
és duid
அபிராமிப்பட்டர் அருளிய
அபிராமியம்மை பதிகம்
காய்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதநால் வாயைங் கரன்றாள் வழுத்தவாம் - நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்களப்பி ராமவல்லி நண்ணும்பொற் பாதத்தில் நன்கு.
நூல் ஆசிரிய விருத்தம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்; அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 1
187

Page 99
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும் கர்ணகுண் டலமுமதி முகமண்டலம் நுதற் கத்துாரிப் பொட்டு மிட்டுக் கூரணிந் திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனிய தரமும் குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும் வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும் வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக வல்வினைய மாற்று வாயே ஆரமணி வானிலுறை தாரகைகள் போலநிறை
ஆதிகட வுரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 2
மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம்பெற்ற பேர்க ளன்றோ? செகமுழுமீ வொற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்தி லுற்றுச் செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகிநிரை
புத்தேளிர் வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில் புலோமிசை யொடுஞ்சு கிப்பர்; அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி அபிராமியே! 3
188

மறிகடல்கள் ஏழையுந் திகிரிஇரு நான்கையும்
மாதிறல் கரியெட் டையும் மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையு மோர் பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத் தையும் பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற் புலியாடை உடையா னையும் முறைமுறைக ளாயின்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்(று) அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய்; அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 4.
வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால் வருந்தா மலேய ணைத்துக் கோடாமல் வளர்ச்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுத லான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாம லேகொ டுத்து நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும் நின்மலி அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும் நீலியென்(று) ஒது வாரோ? ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 5
189

Page 100
பல்குஞ் சரந்தொட் டெறும்புகடை யானதொரு
பல்லுயிர்க் குங்கல் லிடைப் பட்டதே ரைக்கும்அன் றுற்பவித் திடுகருப் பையுறு சீவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும் மற்றுமொரு மூவர்க்கு மியாவர்க்கும் அவரவர் மனச்சலிப் பில்லா மலே நல்குந் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு
நவநிதி உனக்கி ருந்தும் நானொருவர் வறுமையிற் சிறியனா னால்அந் நகைப்புனக் கேஅல்லவோ? அல்கலந் தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! 6
நீடுல கங்களுக்(கு) ஆதரவாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய் நியமமுடன் முப்பத் திரண்டறம் வளர்க்கின்ற நீமனை வியாய்இ ருந்தும் வீடுவீ டுகடோறும் ஓடிப் புகுந்துகால்
வேசற்(று) இலச்சை யும்போய் வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண வேடமுங் கொண்டு கைக்கோர் ஒடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று)
உன்மத்த னாகி அம்மா! உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந் தேங்கி உழல்கின்ற தேது சொல்வாய் ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! 7
190

ஞானந் தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தி னிற்போய் நடுவி னிலிருந்துவந் தடிமையும் பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனதுநா னெனுமானம்
இல்லா மலேது ரத்தி இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்(சு) இருளற விளக்கேற் றியே
ஆனந்த மாணவிழி அன்னமே! உன்னைஎன்
அசுத்தா மரைப்போ திலே வைத்துவே றேகலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்;
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! 8
சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற
தாயா கினாலெ னக்குத் தாயல்ல வேரியான்உன் மைந்த னன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன் முலைசுரந் தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன்
முன்தானை யால்து டைத்து மொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளநிலா முறுவல் இன் புற்றரு கில்யான் குலவிளையாடல் கொண்டருண் மழைபொழிந்(து) அங்கை
கொட்டி வாவென்(று) அழைத்துக் குஞ்சரமு கன்கந்தனுக்(கு) இளையன் என்றெனைக் கூறினால் ஈனம் உண்டோ? அலைகடலி லேதோன்று மாறாத அமுதமே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமி யே! 9
191

Page 101
கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்; கண்போதி னாலுன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன் முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னிஉன் ஆல யத்தின் முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய்உ ழன்றேன்; மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும் அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! O
மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த s மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு வேதனை களுந் துரத்த பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்தப்
பசியென் பதுந்து ரத்தப் பாவந் துரத்த பதிமோகந் துரத்தப் பலகா ரியமுந் துரத்த நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்து வெகுவாய் நாவரண் டோடிக்கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்து வானோ? அகிலஉல கங்கட்கும் ஆதாரதெய்வமே!
ஆதிகட வுரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே! 1
Tufu நிகட் ni
92

சிவமயம்
அபிராமிப் பட்டர் அருளிய
அபிராமி அந்தாதி
காய்பு
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
நூல் ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!
பிரிந்தவர் ஒன்று சேர
துணையும் தொழுந்தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே
193

Page 102
குரும்பக் கவலையிலிருந்து விடுபட
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே
plufrussilsos T 2.0DLu
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
மந்திர சித்திபெற
சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே
194

மலையென வருந்துன்பம் பணியென நீங்க
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும்மாலும் வணங்கியென்றும் துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே 7
பற்றுகள் நீங்கிபக்தி பெருகிட
சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவ்ே 8
அனைத்தும் வசமாக
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கணகவெற்பிற் பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன முரலும் நீயும் அம்மே வந்தென் முன் நிற்கவே 9
மோட்ச சாதனம் பெற
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே 0
195

Page 103
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்த மான சரணாரவிந்தத் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே
தியானத்தில் நிலை பெற
கண்ணியதுன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்து பத்தி பண்ணியதுன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணிய துன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏதுஎன் அம்மே புவிஏழையும் பூத்தவளே 2
வைராக்கியம் நிலை எய்த
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே 3
தலைமை பெற
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே 4
196

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
முக்காலமும் உணரும் திறன் உண்டாக
கிளியே இளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே - அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே
கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனண சுந்தரவல்லி துணைஇரதி பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே
மரணபயம் நீங்க
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே
197
1 6
7

Page 104
பேரின்ப நிலையடைய
வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும் களிறின்ற வெள்ளம் கரைகண்ட தில்லைக் கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேவி உறைபவளே 19
வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே 20
அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே 2
இனிப்பிறவா நெறி அடைய
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே பணிமால் இமயப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே 22
198

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லா தன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே 2 3
நோய்கள் விலக
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே 24
நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனியுன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே 25
செல்வாக்கும் சொல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே 26
199

Page 105
மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே 27
இம்மை மறுமை இன்பங்கள் அடைய
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்க்ே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே 28
6 TestosoT சித்திகளும் 6)
சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பரா சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே 29
விபத்து ஏற்படாமல் இருக்க
அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல வென்கை நன்றே உனக்கினி நான் என்செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே ஒன்றே பல உருவே யருவே என் உமையவளே 30
200

மறுமையில் இன்பம் உண்டாக
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே 3
துர்மரணம் வராமலிருக்க
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின்பாதமென்னும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே 32
இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோரு இருக்க
இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் -எல்லாம் குழைக்கும் களபக்குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே 33
சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமனி ஆகமும் பாகமும் பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே 34
201

Page 106
திருமணம் நிறைவேற
திங்கள் பகவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக்கடலுள் வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே 35
பழைய வினைகள் வலிமை அழிய
பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் மருளே மருளில் வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன் அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே 36
நவமணிகளைப் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத் திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே 37
வேண்டியதை வேண்டியவாறு அடைய
பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பணிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 38
202

கருவிகளைக் கையாளும் வலிமை பெற
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றில் மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே 39
பூர்வ புண்ணியம் பலன்தர
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே 40
நல்லடியார் நட்புப்பெற
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே 4
உலகினை வசப்பருத்த
இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே 42 ‘虏安
203

Page 107
தீமைகள் ஒழிய
பரிபுரச்சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணியின் சொல் திருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் புரிபரவஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே 4 3
பிரிவுணர்ச்சி அகல
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே 44
உலகோர் பழியிலிருந்து விடுபட
தொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ மீண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேயின் வெறுக்கையன்றே 45
நல்நடத்தையோரு வாழ
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்டு
கறுக்குந் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே 46
204

யோகநிலை அடைய
வாழும் படியொன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே 47
உடல்பற்று நீங்க
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே 48
மரணத்துன்பம் இல்லாதிருக்க
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே 49
அம்பிகையை நேரில் கான
நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே 50
205

Page 108
மோகம் நீங்க
அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அசுரர்தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே I5
பெருஞ்செல்வம் அடைய
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த ஜயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே S 2
பொய்யுணர்வு நீங்க
சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத் தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே 53
கடன்தீர
இல்லாமை சொல்லி ஒருவர்தம்பாற் சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே 54
206

மோன நிலை எய்த
மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற(து) அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு முன்னாய் நடுவெங்குமாய் முடிவாய முதல்விதன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே 55
uT6)ldbrid 6l3LDTes
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருளறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே 56
வறுமை ஒழிய
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே 57
மன அமைதிபெற
அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே 58
207

Page 109
பிள்ளைகள் நல்லவர்களாக வளர
தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்றுஉன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும் அஞ்சுஅம்பும் இக்கு அலராக நின்றாய் அறியாரெனினும் பஞ்சுஅஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே 59
மெய்யுணர்வுபெற
பாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் 69(5. நாலினும் சால நன்றோ அடியேன்முடை நாய்த்தலையே 60
மாயையை வெல்ல
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே மலை மகளே செங்கண் மால்திருத்தங்கச்சியே 61
எத்தகைய அச்சமும் அகல
தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என்சிந்தையதே 62
208

அறிவு தெளிவோடு இருக்க
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக் கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே 63
பக்தி பெருக
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று மிக்கஅன்பு பூணேன் உனக்குஅன்பு பூண்டுகொண் டேன் நின் புகழ்ச்சியன்றிப் பேணேன் ஒருபொழுதும் திரு மேனிப்ர காசமன்றிக் காணேன் இருநில மும்திசை நான்கும் ககனமுமே 64
ஆண்மகப்பேறு அடைய
ககனமும் வானும் புவனமும் காணவில் காமன்அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின் மகனும்உண்டாயதன் றோ வல்லி நீ செய்த வல்லபமே 65
கவிஞராக
வல்லபம் ஒன்றறி யேன்சிறி யேன்நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றொன்றி லேன்பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல்அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே 66
209

Page 110
பகைவர்கள் அழிய
தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே 67
நிலம் வீடுபோன்ற செல்வங்கள் பெருக
பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் ஊரும் உருகு சுவையொளி ஊறுஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே
சாரும் தவம்உடை யார்படை யாத தனம்இல்லையே 68
சகலசெளபாக்கியங்களும் அடைய
தனம்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே 69
நுண்கலைகளில் சித்திபெற
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே 70
210

மனக்குறைகள் தீர
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் யே 7
பிறவிப்பிணிதீர
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின் நின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்கறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தமரையே 72
குழந்தைப்பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே 7 3
தொழிலில் மேன்மை அடைய
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே 74
211

Page 111
விதியை வெல்ல
தங்குவர் கற்பக தருவின் நிழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே 75
தனக்கு உரிமையானதைப் பெற
குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில் பறித்தேன் குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே 7 6
பகை அச்சம் நீங்க
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே 77
சகலசெல்வங்களையும் அடைய
செப்பும் கனக கலசமும் போலுந் திருமுலைமேல் அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே 78
212

கட்டுகளில் இருந்து விருபட
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே 7 9
பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை ஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம் காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே 80
நன்னடத்தை உண்டாக
அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்தபேரளியே 8
மன ஒருமைப்பாடு அடைய
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்னங் ங்னேமறப் பேன்நின் விரகினையே 82
213

Page 112
ஏவலர் பலர் உண்டாக
விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும் பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே 83.
சங்கடங்கள் தீர
உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்சஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்குநுண்ணுால் இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னையினிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே 84
துன்பங்கள் நீங்க
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பணிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும் முலை மேல்முத்து மாலையுமே 85
ஆயுத பயம் நீங்க
மால்அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே 86
214

செயற்கரிய செய்து புகழ்பெற
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திருமூர்த்தி என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படிஒரு பாகங் கொண்டாளும் பராபரையே 87
எப்போதும் அம்பிகை அருள்பெற
பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் தரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம் புரமன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன் சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே 88
யோக சித்திபெற
சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற உறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே 89
கணவன் மனைவிகருத்து வேற்றுமை நீங்க
வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே 9 0
215

Page 113
அரசாங்கச் செயலில் வெற்றிபெற
மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே 9
மனநிலை பக்குவமடைய
பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன் முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே 92
உள்ளத்தில் ஒளியுண்டாக
நகையே இட்திந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே 9 3
மனநிலை தூய்மையாக
விரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே 94
216

மன உறுதிபெற
நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக் குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே 95
எங்கும் பெருமை பெற
கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே 96
புகழும் அறமும் வளர
ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன் போதிற் பிரமன் புராரி முராரி பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே 97
வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே 9 8
217

Page 114
அருள் உணர்வு வளர
குயிலாய் இருக்கும் கடழிபா வியிடைக் கோலவியல் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதுஅன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கணங்குழையே 99
அம்பிகையை மனத்தில் கான
குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் ணகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே 100
நாற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக் காத்தாளை அங்குசம் பாசாங்குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு
- தீங்கில்லையே
நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
. சுவாமி விவேகானந்தர்
218

சகலகலாவல்லி மாலை
குமரகுருபரர் அருளியது
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கவென் - வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொலோசக மேழுமளித் துண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந்துன் அருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளம் கொண்டு - தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்து
அஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5
219

Page 115
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தல்நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பாலமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிரா மெய்ஞ்ஞானத்தின் - தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் - விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே 10
220

சரசுவதி அந்தாதி
காய்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்.
படிக நிறமும் பவளச்செவ் வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையும் - துடிஇடையும் அல்லும் பகலும் அனவரத மும்துதித்தாற் கல்லுஞ் சொல்லாதோ கவி?
நூல 1. சீர்தந்த வெள்இதழ்ப் பூங்கம லாசனத் தேவிசெஞ்சொல்
தார்தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதிஅம்போ ருகத்தாளை வணங்குதுமே.
2. வணங்கும் சிலைநுத லும்கழைத் தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன் அன்பால் உணங்கும் திருமுன் றிலாய்மறை நான்கும் உரைப்பவளே
3. உரைப்பார் உரைக்கும் கலைகள்எல் லாம்எண்ணில் உன்னை யன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல ரோதண் தரளமுலை
வரைப்பால் அமுதுதந்து இங்குஎனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்தா மரைப்பதி மெல்லியலே
221

Page 116
. இயலானது கொண்டு நின்திரு நாமங்கள் ஏத்துதற்கு முயலாமை யால்தடு மாறுகின்றேன் இந்த மூவுலகும் செயலால மைத்த கலைமக ளேநின் திருவருளுக்கு அயலா விடாமல் அடியேனை யும்உவந்து ஆண்டருளே.
. அருக்கோ தயத்தினும் சந்திரோத யம்ஒத்து அழகு எறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தால் இருக்கு ஒது நாதனும் தானும்எப் போதும் இனிது இருக்கும் மருக்கோல நாண்மல ராள் என்னை ஆளும் மடமயிலே,
. மயிலே மடப்பிடியே, கொடி யேஇள மான்பிணையே;
குயிலே, பசுங்கிளி யேஅன்ன மே,மனக் கூர்இருட்டு ஓர் வெயிலே, நிலவெழு மேனி மின்னே, இனி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொன் பாதங்களே.
. பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந் தமுத்தியும் தந்தருள் பாரதி வெள் இதழ்ப் பூஞ் சீதாம் புயத்தில் இருப்பாள்; இருப்ப, என் சிந்தையுள்ளே ஏதாம் புவியில் பெறலரிது ஆவது எனக்கு இனியே.
. இனிநான் உணர்வதுஎண் எண்கலை யாளை, இலகுதொண்டைக்
கனிநாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக், கமல அயன் தனிநா யகியை, அகிலாண் டமும்பெற்ற தாயை, மணப் பனிநாள் மலர்உறை பூவையை ஆரணப் பாவையையே.
. பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பா னிடம்விதி யின்முதிய நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப் பூவும் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே.
222

10. புந்தியில் கூர் இருள் நீங்கும் புதியமதியம் என்கோ,
அந்தியில தோன்றிய தீபம்என் கோநல் லருமறையோர் சந்தியில் தோன்றும் தபனன்என் கோ, மணித் தாமம் என்கோ, உந்தியில் தோன்றும் பிரான்புயந் தோயும் ஒருத்தியையே.
11. ஒருத்தியை ஒன்றும் இலாஎன் மனத்தின் உவந்து தன்னை இருத்தியை வெண்கமலத்து இருப்பாளைனண் ணெண்கலைதோய் கருத்தியை ஐம்புல னும்கலங் காமல் கருத்தையெல்லாம் திருத்தியை யான்மற வேன்திசை நான்முகன் தேவியையே.
12.தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவ ராகியுள் ளோரும் முனிவரரும் யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த பூவரு மாதின் அருள்கொண்டு ஞானம் புரிகின்றதே.
13. புரிகின்ற சிந்தை யினுாடே புகுந்து புகுந்து இருளை
அரிகின்ற தாய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத் தெரிகின்ற இன்பம் கனிந்துறி நெஞ்சம் தெளிந்து முற்ற விரிகின்றது எண்ணென் கலைமாது உணர்த்திய வேதமுமே.
14.வேதமும் வேதத்தின்அனந்தமும் அந்தத்தின் மெய்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்தவிந்து நாதமும் நாதவண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே.
15.நாயக மான மலரக மாவது ஞான இன்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையால் ஏயக மாறி விடுமக மாவதும் எவ்வுயிர்க்கும் தாயக மாவதும் தாதார் சுவேத சரோருகமே.
223

Page 117
16.சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாள் இணையும் உரோருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கு இருள்போல் சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும் ஒரோருகம் ஈரரை மாத்திரை யான வுரை மகட்கே.
17.கருந்தா மரைமலர் கண்தா மரைமலர் காமருதாள் அருந்தா மரைமலர் செந்தா மரைமலர் ஆலயமாத் தருந்தா மரைமலர் வெண்டா மரைமலர் தாவிலெழில் பெருந்தா மரைமணக் குங்கலைக் கூட்டப் பிணைதனக்கே.
18.தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைத்த அபிடேகம் என்னும் இமையவர்தாம் மனக்கே தமாற்றும் மருந்தென்ப சூடும்மலர் என்பன்யான் கனக்கே சபந்திக் கலைமங்கை பாத கமலங்களே.
19. கமலம் தனில் இருப்பாள் விருப் போடங் கரம்குவித்துக் கமலம் கடவுளர் போற்றும்மென் பூவைகண்ணில் கருணைக் கமலந்தனைக் கொண்டு கண்டொரு கால் தங்கருத்துள்வைப்பார் கமலம் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே.
20.காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத்திரு வும்ஒர் நான்மருப்பும் வாரணன் தேவியும் மற்றுமுள்ள தெய்வ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே.
21.அடிவேத நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவள முளரி மின்னேமுடி யாஇரத்ன வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் விடிவே, அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே.
224

22.
23.
24.
25.
26.
27.
வேறிலை என்றுஉன் அடியாரில் கூடி விளங்கு நின்பேர் கூறலை யானும் குறித்துநின் றேன்ஐம் புலக்குறும்பாம்
ஆறலை கள்வர் மயக்காமல் நின்மலர்த் தாள்நெறியில் சேறலை ஈந்தருள் வெண்டா மரை மலர்ச் சேயிழையே.
சேதிக் கலாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் சோதிக் கலாம் உறப் போதிக் கலாம் சொன்னதே துணிந்து சாதிக்கலாம் மிகப் போதிக் கலாமுத்தி தான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொன்தாளை அடைந்தவர்க்கே
அடையாள நாள்மலர் அங்கையி லேடும் அணிவடமும் உடையாளை நுண்ணிடை ஒன்றும் இலாளை உபநிடதப் படையாளை எவ்வுயிரும் படைப் பாளைப் பதுமநறுந் தொடையாளை யல்லது மற்றினி யாரைத்தொழுவதுவே.
தொழுவார் வலம் வரு வார் துதிப் பார்தம் தொழில்மறந்து விழுவார் அருமறை மெய்தெரி வார்இன்ப மென்புளசித்து அழுவார் இன்னும்கண் நீர்மல்கு வார் என்கண் ஆவதென்னை வழுவாத செஞ்சொல் கலைமங்கை பாலன்பு வைத்தவரே.
வைக்கும் பொருளும்இல் வாழ்கைப் பொருளும் மற்று எப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்லப் பூதலத்தின் மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப் பொருளும் உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே.
பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளே மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள்வந்து வந்தித்து அருளாய் விளங்கும் அவர்க்குஒளி யாயறி யாதவருக்கு இருளாய் விளங்கும் நலம்கிளர் மேனி இலங்கிழையே.
225

Page 118
28.இலங்கும் திருமுகம் மெய்யில் புளக மெழும் கண்கணிர் மலங்கும் பழுதற்ற வாக்கும் வலிக்கும் மனமிகவே துலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல் போல் கலங்கும் பொழுது தெளியும்சொல் மானைக் கருதினர்க்கே.
29. கரியார் அளகமும் கண்ணும் கதிர் முலைக் கண்ணும் செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும் புரியார்ந்த தாமரை யும்திரு மேனியும் பூண்பனவும் பிரியாது என் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே.
30.பெருந்திரு வும்சமய மங்கையு மாகிஎன் பேதை நெஞ்சில் இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில்எல் லாவுயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும் திருந்திய செல்வம் தருமழி யாப்பெருஞ் சீர்தருமே.
கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
r - N தாய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். எழுந்திருங்கள், விழித்துக்கொள்ளுங்கள், இனியும் தாங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா தன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவத தான் கல்வி முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்தசேரும்.
- சுவாமி விவேகானந்தர்
226

திருமகள் வழிபாரு நூற்றெட்டுப் போற்றி
திருச்சிற்றம்பலம்
திருமா மகளே செல்வீ போற்றி திருமால் உரத்தில் திகழ்வோய் போற்றி திருப்பாற் கடல்வரு தேவே போற்றி இருநில மக்கள் இறைவீ போற்றி அருளே உருவாய் அமைந்தோய் போற்றி மருநிறை மலரில் வாழ்வோய் போற்றி குருவென ஞானம் கொடுப்போய் போற்றி இருளொழித் தின்பம் ஈவோய் போற்றி அருள்பொழிந்தெம்மை ஆள்வோய் போற்றி தெருள்தரு அறிவின் திறனே போற்றி ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி ஊக்கம தளிக்கும் உயிரே போற்றி ஆக்கம் ஈயும் அன்னாய் போற்றி இறைவி வலப்பால் இருப்போய் போற்றி பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி அன்பினைக் காட்டும் ஆயே போற்றி வன்பினை என்றும் வழங்காய் போற்றி பனிமதி உடன்வரு பாவாய் போற்றி கனியினும் இனிய கமலை போற்றி நிமலனை என்றும் நீங்காய் போற்றி கமலம துதித்த கன்னி போற்றி குற்றம் ஒராக் குன்றே போற்றி
227

Page 119
செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி அன்னை யென்னை அணைப்போய் போற்றி தன்னிகர் தாளைத் தருவோய் போற்றி மாயனாம் மலர்க்கு மணமே போற்றி நேயமுற் றவனை நீங்காய் போற்றி இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றி மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றி சீலஞ் செறிந்த சீதா போற்றி அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றி இன்பம் அருளும் எந்தாய் போற்றி அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி எச்சுவை தனையும் ஈவோய் போற்றி பூதலத் தன்று போந்தாய் போற்றி தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி திரிசடிை நட்பைப் தேர்ந்தாய் போற்றி பரிவுடை யவர்பால் பரிவினாய் போற்றி குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றி இரக்கமாம் ஒன்றிற் கிருப்பிடம் போற்றி இராவணற் கிதமே இசைத்தோய் போற்றி இராமருக் குரிய இன்பே போற்றி கணவனை யடைந்து களித்தோய் போற்றி குணநிதி ஆகக் குலவினாய் போற்றி அரசியாய் அயோத்திக் கானாய் போற்றி முரசொலி அந்நகர் முதல்வி போற்றி
228

உருக்கும் மணியாய் உதித்தோய் போற்றி செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றி சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றி பசுநிரை மேய்ப்போன் பாரியே போற்றி பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி எத்திக் குந்துதி ஏய்ந்தாய் போற்றி மாலின் சினத்தை மறைப்போய் போற்றி மேலருள் புரிய விளம்புவோய் போற்றி மாதவ னோடு வாழ்வோய் போற்றி ஆதவன் ஒளிபோன் றமைந்தோய் போற்றி சேதனர் பொருட்டுச் சேர்வோய் போற்றி பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றி நாதனுக் கருஞ்சொல் நவில்வோய் போற்றி ஏதமில் பொன்னென இலங்குவோய் போற்றி தக்கன ஒதும் தாயே போற்றி மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றி பக்கலின் இருக்கும் பணிமொழி போற்றி துக்கம் ஒழியச் சொல்வோய் போற்றி அஞ்சலென் றருளும் அன்பே போற்றி தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி பங்கயத் துறையும் பாவாய் போற்றி செங்கணன் மார்பில் திகழ்வோய் போற்றி கண்ணருள் கொண்டுயிர் காப்போய் போற்றி எண்ணரு நலந்தரும் எம்மனை போற்றி நான்கிரு நாமம் நயந்தோய் போற்றி வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றி வெற்றியைத் தருமோர் விமலை போற்றி அற்றவர் அடையும் அரும்பொருள் போற்றி வரமளித் தூக்கும் வாழ்வே போற்றி
229

Page 120
உரமதை ஊட்டும் உறவே போற்றி செல்வமிக் காக்கும் தேவி போற்றி அல்லலை ஒழிக்கும் அருளே போற்றி வீரம் விளைக்கும் வித்தே போற்றி காரண பூதன் கருத்தே போற்றி பண்பினை வளர்க்கும் பயனே போற்றி நண்பாய் அறிஞர்பால் நண்ணுவோய் போற்றி எண்ணினுள் எண்ணே இசையே போற்றி கண்ணினுள் மணியே கருத்தே போற்றி அறிவினுள் அறிவாம் அன்னே போற்றி நெறியினுள் நெறியாம் நிலையே போற்றி உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றி குணத்தினுட் குணமாம் குன்றே போற்றி கருத்தினுள் கருத்தாய்க் கலந்தோய் போற்றி அருத்தியை ஆக்கும் அறிவே போற்றி தமிழினுக் கினிமை தருவோய் போற்றி அமிழ்தினும் இனிய ஆயே போற்றி பதின்மர். பாடலில் பதிவோய் போற்றி துதியாம் நூலினுள் துதைந்தோய் ப்ோற்றி தொண்டரின் தொண்டுளம் சேர்ப்போய் போற்றி அண்டர் போற்றும் அமலை போற்றி நாரணற் கினிய நல்லோய் போற்றி மாரனைப் பெற்ற மாதே போற்றி உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றி மங்கலத் திருநின் மலரடி போற்றியே.
திருச்சிற்றம்பலம்.
230

கலைமகள் வழிபாடு நூற்றெட்டுப் போற்றி
அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி ஆட்சிகொள் அரசரும் அறியாய் போற்றி காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி இல்லக விளக்கம் இறைவி போற்றி நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி ஈரமார் நெஞ்சினர் இடத்தோய் போற்றி ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி அலகில் உயிர்க்கறி வளிப்போய் போற்றி ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி காணக் குயில்மொழிக் கன்னியே போற்றி எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி ஏழுல குந்தொழும் இறைவி போற்றி சூழுநல் அன்பரின் துணைத்தாய் போற்றி ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி மைதீர் முத்து மாலையாய் போற்றி ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி ஒதுவார் அகத்துறை ஒளியே போற்றி போதுசேர் அருட்கண் பொற்கொடி போற்றி ஒளவைமு தாட்டியாய் ஆனாய் போற்றி கெளவையே இல்லாக் கலைமகள் போற்றி கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
231

Page 121
நல்விற் புருவ நங்காய் போற்றி செங்கையில் புத்தகம் சேர்த்தாய் போற்றி அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி சமைகுண் டிகைக்கைத் தாயே போற்றி அமைவகொள் ஞான அருட்கையாய் போற்றி அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி மடமறு நான்முகன் வாழ்வே போற்றி திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி மன்னரும் வணங்க வைப்போய் போற்றி உன்னரும் பெருமை உடையாய் போற்றி யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி பூரப் பரிவரு பொற்கொடி போற்றி வார நெஞ்சினர் வழித்துணை போற்றி சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி வள்ளைக் கொடிச்செவி மானே போற்றி பிள்ளை மொழித்தமிழ்ப் பிராட்டீ போற்றி அழகின் உருவே அணங்கே போற்றி பழகு தமிழின் பண்ணே போற்றி இளமை குன்றா ஏந்திழாய் போற்றி வளமை குளிர்மை மன்னினாய் போற்றி அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
232

வறணறு இன்பம் மலிந்தோய் போற்றி சொன்ன கலைமகளின் தொடர்பே போற்றி மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி கம்பர்க் கருளிய கருத்தே போற்றி நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி கிட்டற் கரிய கிளிமொழி போற்றி வெட்ட வெளியாம் விமலை போற்றி கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி ஆர்த்தியார் அன்பரின் அகத்தாய் போற்றி குமர குருபரர்க் குதவினோய் போற்றி அமரரும் வணங்கும் அம்மே போற்றி கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி கெடலரும் பாவின் கிழத்தி போற்றி விடலரும் அறிவின் வித்தே போற்றி கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி கையகக் கழுநீர்க் கலைமகள் போற்றி பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி வண்டமிழ் வடமொழி வளனே போற்றி கோதில் பலமொழிக் குருந்தே போற்றி போதில் உறையும் பொன்னே போற்றி சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி அங்கண் அருள்நிறை அம்மா போற்றி சாதலும் பிறத்தலும் தவிர்த்தோய் போற்றி போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
233

Page 122
சினமும் செற்றமும் தீர்த்தோய் போற்றி மனமும் கடந்த மறைபொருள் போற்றி சீரார் சிந்தா தேவியே போற்றி ஏரார் செழுங்கலை இன்பே போற்றி சுடரே விளக்கே தூயாய் போற்றி இடரே களையும் இயல்பினாய் போற்றி சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி ஏழுறும் இசையின் இசைவே போற்றி செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி பாவடிப் பயனே படைத்தருள் போற்றி சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி சொல்லொடு பொருளின் சுவையருள் போற்றி அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி தாயே நின்னருள் தந்தாள் போற்றி தூயநின் திருவடி தொழுதனம் போற்றி திருவுடன் கல்வித் திறனருள் போற்றி இருநிலத் தின்பம் எமக்கருள் போற்றியே.
திருச்சிற்றம்பலம்.
சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
- சுவாமி விவேகானந்தர்
234

திருக்குறள்
1. sisir LeopLGOLD அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்.
அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு
அன்பீனு மார்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றா ரெய்துஞ் சிறப்பு
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கு ம.தே துணை
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று
புறந்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு
அன்பின் வழிய துயிர்நிலை அ.திலார்க்கு என்புதோல் போர்த்த துடம்பு
235
10

Page 123
2. விருந்தோம்பல் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு 1
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று 2
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று 3
அகனமர்ந்து செய்யா ஞறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில் 4
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் 5
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு 6
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் 7
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் 8
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ஒனுண்டு 9
மோப்பக் குழையு மனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து 10
236

3. இனியவை கூறல இன்சொலா லிர மளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின் 2
முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். 3
துன்புறுTஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுநூஉம் இன்சொ லவர்க்கு 4
பணிவுடைய னின்சொல னாத லொருவற்கு அணியல்ல மற்றுப் பிற. 5
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் 6
நயனின்று நன்றி பயக்கும் பயனின்று பண்பின் தலைப்பிரியாச் சொல் 7
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும் 8
இன்சொ லினிதின்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. 9
இனிய வுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 10
237

Page 124
4. செய்ந்நன்றியறிதல் செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது 2
பயன்துக்கார் செய்த வுதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது 3
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் 4
உதவி வரைத்தன் றுதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து 5
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு 6
எழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு 7
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று 8
கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் 9
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லைச் செய்ந்நன்றி கொன்ற மகற்கு O
238

5. நருவுநிலைமை தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து 2
நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல் 3
தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் 4.
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி 5
கெடுவல்யா ணென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ யல்ல செயின் 6
கெடுவாக வையா துலக நடுவாக நன்றிக்கட் டங்கியான்றாழ்வு 7
சமன்செய்து சீரதுக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி 8
சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின் 9
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின் 10
239

Page 125
கண்ணன் - என் சேவகன்
கூலிமிகக் கேட்பார், கொடுத்த தெலாம் தாமறப்பார், வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ‘ஏனடா, நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை' என்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; 5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டா நாளென்பார்; ஓயாமற் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்; தாயாதி யோடு தனி இடத்தே பேசிடுவார்; உள்வீட்டுச் செய்தினலாம் ஊரம் பலத்துரைப்பார்; என்வீட்டில் இல்லைஎன்றால் எங்கும் முரசறைவார்; 10
சேவகரால்பட்ட சிரமம்மிக உண்டு கண்டீர். சேவகர்இல் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை. இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்; ‘இடைச்சாதி நான்’ என்றான்.
'மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன். சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன். சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி ஆனாலும், கள்ளர்பயம் ஆனாலும் 2O.
இரவில் பகலிலே எந்நேரம் ஆனாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பம்உறா மற்காப்பேன். கற்றவித்தை ஏதும்இல்லை. காட்டு மனிதன், ஐயே! ஆனபொழு தும்கோல்அடி குத்துப்போர் மற்போர் 25
240

நான் அறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன் என்றுபல, சொல்லிநின்றான், ‘ஏது பெயர்? சொல் என்றேன் 'ஒன்றும் இல்லை, கண்ணன் என்பார் ஊரில் உள்ளோர் என்னை என்றான். கட்டுறுதி உள்ளஉடல், கண்ணிலே நல்லகுணம், ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் - ஈங்கிவற்றால், 30
தக்கவன்என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், ‘மிக்கஉரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய் கூலிஎன்ன கேட்கின்றாய் கூறு கென்றேன். ‘ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை; நானோர் தனிஆள்; நரைதிரைதோன் றாவிடினும் 35
ஆன வயதிற்கு அளவில்லை, தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை' என்றான் பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு, மிகவும் களிப்புடனே நான் அவனை 40
ஆளாகக் கொண்டுவிட்டேன். அன்றுமுதற் கொண்டு நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன். கண்ணனால் பெற்றுவரு நன்மைஎலாம் பேசி முடியாது. கண்ணை இமைஇரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45
வண்ணமுறக் காக்கின்றான்; வாய்முணுத்தல் கண்டறியேன் வீதி பெருக்குகிறான்; வீடுசுத்தம் ஆக்குகிறான்; தாதியர்செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயம் காட்டுகிறான். ஒன்றும் குறைவின்றிப் 50
24

Page 126
பண்டமெலாம் சேர்த்துவைத்துப், பால்வாங்கி, மோர்வாங்கிப் பெண்டுகளைத் தாய்போல் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான் - இடைச்சாதி என்று சொன்னான்; 55
இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ண விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச் செல்வம் இளமாண்பு சீர்சிறப்பு நற்கீர்த்தி கல்வி அறிவு கவிதை சிவயோகம் 60 தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் ஒளிசேர் நலம்.அனைத்தும் ஓங்கிவரு கின்றனகாலன்.
ர்ைணனை நான்ஆட் கொண்டேன்!
கண் கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணன் எனை ஆட்கொள்ளக்
காரணமும் உள்ளனவே!
மகாகவி பாரதியார்
「一 N நீ தாய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால், எதற்குமே அஞ்சி நின்றவிடமாட்டீர்கள். நீங்கள் சிங்கக் குட்டிகளைப் போலத் திகழ்வீர்கள். மற்றவர்களுக்கு நன்மையைச் செய்வத புண்ணியம், தீமை செய்வத பாவம்.
- சுவாமி விவேகானந்தர் أص - ܠ
242

Bible)III.g
யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழுமூரே.
-பிசிராந்தையார்
யாது மூரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் பாடுஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
- கணியன் பூங்குன்றனார்
243

Page 127
ஓரி னெய்தல கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன் இன்னா தம்மவிவ் வுலகம் இனிய காண்கித னியல்புணர்ந் தோரே.
- பக்குடுக்கைநன்கணியார்
பல்சான் றீரே பல்சான் றீரே கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனில் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்மப்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே.
- நரிவெரூஉத்தலையார்
r N ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்துவா. வெற்றிக்கு இதுதான் வழி. மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம்.
எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ அததான் உண்மையான கல்வியாகும்.
- சுவாமி விவேகானந்தர்
الصر
244

கல் வீசித் தலையிற் காயம் ஏற்படுத்தியவனையும் மன்னித்து நல்லது செய்வது மனிததர்மம்
மன்னர் ஒருவர் ஊர் சுற்றிக் கொண்டு வரும் போது சோர்வின் காரணமாக வழியில் தென்பட்ட ஓர் அடர்ந்த மாமரத்தின் நிழலில் இளைப்பாறலானார். அவரது காவலர் களும் அங்கேயே தங்கி விட்டனர்.
எங்கிருந்தோ ஒரு கல்பாய்ந்து வந்து இளைப்பாறிக் கொண்டிருந்த மன்னரின் தலையைத் தாக்கிற்று. உடனே அரசர் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னர் காயத்திற்கு அரண்மனை வைத்தியசாலையிற் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
காவலர்கள் கல் எறிந்தவனைத் தேடலாயினர். அவர்கள் கண்களில் மாமரத்தின் பக்கம் மாம்பழத்தைத் தின்று கொண்டிருந்த ஒரு முதியவர் தென்பட்டார். அவரே கல்லை வீசியிருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெளிவாயிற்று.
காவலர்கள் அமைச்சரின் முன்கொண்டு வந்து அந்த முதியவரை நிறுத்தினார்கள். அவருக்கு மரண தண்டனை வழங்கினார் மந்திரி. முதியவரோ ஒன்றும் புரியாது திகைத்துக் கொண்டிருந்தார்.
மரண தண்டனை நிறைவேறும் முன் அரசரைச் சந்தித்துத் தண்டனையாளர் தன் குறையைச் சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அதன்படியே முதியவர் அரசர் முன்கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.
‘இந்த அந்தணரை ஏன் அழைத்து வந்தீர்கள்? என்று அமைச்சரிடம் வினாவினார் அரசர். ‘அரசே, தங்கள் தலையில் கல் வீசியவர்.’ என்று அறிவித்தார் அமைச்சர்.
245

Page 128
முதியவர் அரசரைப் பார்த்து ‘பெருமானே, நான் பசியால் வாடிக் கொண்டிருந்தேன். இந்த மாமரத்தில் பழங்கள் தொங்குவதைக் கண்டதும் தொலைவிலிருந்து கல் வீசினேன். அது தவறித் தங்கள் தலையைத் தாக்கியதற்காக மிகவும் வருந்துகிறேன். அறியாது செய்த இந்த பிழையைப் பொறுத்து என்னை மன்னிக்க வேண்டும்' என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
“மரத்தின் மீது நீர் வீசிய கல்லால் உமக்கு என்ன கிடைத்தது? என்று வினாவினார் அரசர். ‘மன்னர் பெருமானே! இரண்டு பழங்கள் கிடைத்தன என்று பணிவாகக் கூறினார் முதியவர்.
சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னர். பின்னர் அமைச்சரைப் பார்த்துச் சொன்னார்.
‘இந்த முதியவரைத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யுங்கள். அத்துடன் இவருக்கு நிறையச் செல்வத்தையும் கொடுத்து அனுப்பி வையுங்கள்
அரசரின் கட்டளையைக் கேட்ட அமைச்சர் திகைப்பில் மூழ்கி விட்டார். தன் தலையில் கல்லை வீசியவனுக்கு இத்தகைய மரியாதையா? மன்னருக்கு ஏதேனும் மூளைக் கோளாறா எனக் கூட நினைத்தார் அமைச்சர்.
அமைச்சரின் உள்ளத்தை உணர்ந்து கொண்ட அரசர் அவரிடம் ‘அமைச்சரே! அறிவே இல்லாத மரம் தன் மீது கல் வீசியவருக்கு இரண்டு பழங்களைக் கொடுத்துள்ளது. ஆனால் அதே கல் என் மீது விழுந்தது என்பதற்காக நான் இவருக்குத் தூக்குத் தண்டனையா கொடுப்பது? எனவே தான் என் முடிவை இப்படி மாற்றினேன். எனது முடிவை நிறைவேற்றும் எனக் கூறினார்.
- பத்திரிகைச்செய்தி
246

தமிழில் அர்ச்சனை செய்வதேன்?
இன்றைய மக்கள் பிரார்த்தனைகளை விடச் சடங்கு களிலே தான் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக் கிறார்கள். தாய்மொழி மூலம் செய்யப்படும் வழிபாடு தான் மனிதனை இறைவனோடு இணையச் செய்யக் கூடியது.கிரியைகள் எந்த மொழிகளிலுமே நடைபெற் றாலும் பரவாயில்லை. ஆனாற் பிரார்த்தனை தாய்மொழி மூலமாக நடைபெறவேண்டும் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் புங்குடுதீவில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தமிழில் அர்ச்சனையை ஆரம்பிப்பது குறித்து என்னிடம் e,60T.
தமிழில் அர்ச்சனை என்பது பற்றி அடிகளார் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.
வழிபாடு பிரார்த்தனை என்பன ஒரு உயிர் இறைவ னோடு ஒன்றிக் கலந்து அனுபவிப்பதே ஆகும். அத்தகைய உளங்கலந்த அனுபவத்தைப் பெரும்பாலும் மனிதர்கள் அவர்களுடைய தாய்மொழி வழியாகவே பெறமுடியும். பிரார்த்தனை என்பதும் அருளியல் சால்புடைய ஒரு அறிவியல் நுகர்ச்சியே. உயிர் தனது குறைகளை உணர்ந்து அவைகளிலிருந்து விலகி நிறைவாக இருக்கும் பொருளை இறைவன் அழைத்து ஒன்றித்து மகிழும் முயற்சியே பிரார்த்தனை. இந்தப் பிரார்த்தனையை திருக் கோவில்களில் வாய் விட்டுச் சொல்லுதலே அர்ச்சனை என்று சொல்லப்பெறும். அர்ச்சனையிற் சொல்லப்பெறும்
247

Page 129
நாமங்கள் இறைவனுடைய குணங்கள் கேட்பவர் செவி வழியாக நெஞ்சத்திற் புகுந்து நெகிழ்ச்சியைத் தந்து சிவம் என்ற பயிரை வளர்க்க வேண்டும். இதனை அடையக்கூடிய ஒரே வழி தாய்மொழி வழிபாடேயாகும்.
கிரியைகள் அர்ச்சகர்களுக்கும் மூர்த்திக்குமிடையே யுள்ள தொடர்பாகும். அவைகளுக்கும் பொதுமக்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. அதனால் அவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் தமது கிரியைகளைச் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவில்களில் தமிழில் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. அது இன்னமும் பொது மக்களிடம் வழக்கமாகி விட வில்லை. ஆனால் விரும்புகிறவர்களுக்குத் தமிழில் அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. இன்றைய மக்கள் பிரார்த்தனையை விட சடங்கில் தான் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.
' - தவத்திரு குனர்றக்குடி அடிகளார்.
அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும். அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு ஆகும். இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான், அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
- சுவாமி விவேகானந்தர்
248

WHAT BAGWAN BABA SAYS.......
Mathru DevO Bhava Pithru Devo Bhava Acharya Devo Bhava
Revere your mother as God: revere your father as God: revere your teacher as God. These three commands form the
keystones of Bharathiculture.
- Baba
Be like the Lotus. Born in sluch, in the floor of a tank, it struggles through the water, in order to bask in the Sunlight which it loves, which is its life. Spending its days and nights with the Soil below and the water above it, it does not allow both to soil its beauty or wet its joy. You too have to live like the Lotus in this world, in it, through it, but not, of it.
- Baba
Peace is the most priceless possession of man. It is the sign of a virtuous character, a willingness for Service, a readiness to renounce, a clean spirit of resignation, and awareness of the evancScence of the material wealth, of an agitation-less lake of joy in he heart.
-Baba
249

Page 130
Affection, attachment, reverence, adoration - these are the flowers; devotion and dedication are the fruits; when, they ripen, they fill themselves with the Sweet sustrainting juice, called jnana or Wisdom.
- Baba
A bar of iron sinks in water, but beat it into hollow vessel and it will float very well and even carry Some weight!
So, man's mind sinks easily in the sea of senses beatithollow, hammering it with the name of the Lord and it will float safely
on a Sea of trubles.
- Baba
How can a man run fast, and reach the goal, if he has thorns sticking to the soles of his feet? Why? Even a single thorn is a difficult handicap. The man who yearns to reach the spiritual goal has to remove the thorns of slot, anger, greed, doubt and hatred from his heart, so that he too may journey fast and
reach the goal.
— Baba
250

1.
மூன்றாம் அத்தியாயம் வாழ்வியற் செல்வம்
கல்கி சின்னத்துரை வாழ்க்கை வளம்
- நா.சிவராஜா 25
AN INDOMITABLE ENTERPRENEUR
- S. Somanathan 260

Page 131


Page 132
அமரர் சிவக்கொழுந்து சிவஞானம்
தோற்றம் : 1924-02-18 மறைவு : 1962-09-22
SqSqSTSTSTSMSMSMSMSMS
 

羲
蚤
கல்கி சின்னத்துரை அவர்கள் வாழ்க்கை வளம்
யாழ்ப்பாணம் தாவடியூரைச் சேர்ந்த சிவக்கொழுந்து கனகம் மா தம்பதியரின் இரண்டாவது மகனாகச் சின்னத்துரை அவர்கள் 1920ம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி பிறந்தார். அண்ணனாக மயில்வாகனத்தையும், தம் பியாகச் சிவஞானத்தையும் , சகோதரியாக மகேஸ்வரியையும் பெற்றவர். சின்னத்துரை அவர்களுக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையார் சிவக்கொழுந்து சிவபதமடைந்து விட்டார். மலேசியாவில் அரசாங்க உத்தியோகங்களிலிருந்த சிறிய தந்தையாருடன் வளர்ந்த அணி னண் மயில் வாகனம் பொறியியலாளராகிப் போணியோவில் (Norneo) பணிபுரியும் வேளையில் இலங்கை திரும்பி மணமுடித்துச் சென்றவர் 1942ல் உலகப் போரின் போது உற்றார் உறவினர் அவரை இழக்க நேர்ந்தது.
அதன்பின், தாயார் கனகம்மா அவர்களின் அரவ ணைப்பில் வாழ்ந்துவந்த பிள்ளைச் செல்வங்களில் முத்தவரான சின்னத்துரை அவர்களுக்கு ஏதாவது தொழிலில் சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பதுளை தெமோதரையில் வணிகத்தொழில் செய்துவந்த மாமனா ரான தம்பிஐயா அவர்களின் ஸப்தாபனத்திற்சேர்ந்து தொழில் பயின்றார். இந்தக் காலத்தில் இளவல் சிவஞானம் பதுளையில் கல்வி கற்றார்.
வியாபார நுட்பங்களைக் கற்ற சகோதரர் இருவரும் யாழ் திரும்பி யாழ்நகரில் கே.கே.எஸ். வீதியில் சிசின்னத்துரை அன்பிறதேர்ஸ் என்ற ஸ்தாபனத்தை 1945ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இந்த ஸ்தாபனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.
25

Page 133
அந்தக் காலத்தில் இறக்குமதிகளெல்லாம் இந்தியா, பர்மாவிலிருந்து நேரடியாகவே ஊர்காவற்துறைக்குச் செல்லக் கூடிய வசதியிருந்தது. இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட இவர்கள் அரிசி, நவதானியம் ஒடு ஆகியவற்றுடன் பலவிதமான வர்த்தக இலகூஜினை கொண்ட பீடிகளையும் விற்பனை செய்தார்கள்.
இப்படியான காலகட்டத்தில் இந்தியாவில் திருச்சி நகரில் இருந்த கல்கிபீடி ஸ்தாபனத்தாருக்குத் தமது உற்பத்திப் பொருளைச் சிறந்த முறையில் விநியோகம் செய்வதற்கு நல்ல விநியோகஸ்தர்கள் தேவைப்பட்டதால் அக்கம்பெனியின் நிர்வாகி திரு. A.E. நாராயணன் இலங்கை வந்தார். யாழ் நகரில் விசாரித்ததில் சின்னத்துரை அன்பிறதர்ஸ் ஸ்தாபனம் அவர்களின் தேவையைச் சிறந்த முறையில் நிறைவேற்றும் என்று பலரும் கூறியதற்கமையச் சின்னத்துரை அவர்களைத் தங்கள் திருச்சி ஆபீசுக்கு வரவழைத்தார்கள். அவர் அந்தக் கம்பெனியின் உரிமையாளரான G.M. யூசுப் அவர்களைச் சந்தித்துக் கல்கிபீடியின் ஏகவிநியோக உரிமையைப் பெற்றுக் கொண்டார்.
சிவக்கொழுந்து சின்னத்துரை அவர்கள் 1944ஆம் ஆண்டு சதாசிவம் வள்ளிப்பிள்ளை தம்பதியர் கனிஷ்ட புதல் வி சோதிப்பிள்ளையைத் திருமணஞ் செய்து பாலச்சந்திரன், புவனச்சந்திரன், சிவமலர், வசந்தமலர், இந்துமலர், ஞானச்சந்திரன் எனும் அறுவர் குழந்தை களுக்குத் தந்தை ஆயினார். வாசுகி, விமலாதேவி, சண்முகரத்தினம், கணேந்திரன், பூரீஸ்கந்தராஜா, ஜெயந்தி என்போரை மருமக்களாகவும் பெற்றுள்ளார். p
சின்னத்துரை அவர்களது வாழ்க்கையின் பெரு வெற்றிக்கு இது மூல காரணமாக அமைந்தது. துடிப்பும் கண்டிப்பும் மிக்கவரான தம்பி சிவஞானத்துடன் சேர்ந்து
2S2

இந்தியத் தயாரிப்பாளர்களே மெச்சவும் அதேநேரம் தயாரிப்பில் திணறவும் கூடிய அளவுக்கு இலங்கையின் நாலாபக்கமும் விற்பனை செய்தார்கள்.
தொழில் மிகவும் முன்னேற்றமடைந்து சிலவருடங் களிலேயே கொழும்பில் 44, மூன்றாம் குறுக்குத் தெரு விலும், நுவரெலியாவில் பசார் வீதியிலும் சின்னத்துரை அன்பிறதர்ஸ் ஸ்தாபனம் கிளைகளை நிறுவிவிட்டது. மிகவும் நேர்த்தியான தரத்தில் புதுப்புது விளம்பர உத்திகளையும் கையாண்டு வியாபாரம் பல் கிப் பெருகியது.
வியாபாரத்தில் வெற்றி கண்ட போது அவர் தமது வாழ்க்கையிற் சில வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. 1962ஆம் ஆண்டு இந்தியா வுக்குத் தீர்த்த யாத்திரை போயிருந்த போது சிவஞானம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அங்கு காலமானார். இந்தக் கையறு நிலையில் எல்லாவற்றையும் தனியாக நிர்வகிக்கவேண்டிய பொறுப்புச் சின்னத்துரை அவர்களைச் சார்ந்தது.
அந்தக் காலத்தில் உள்ளுர்க்காரருடன் இந்திய வம்சாவழியினர் பலரும் ஊழியர்களாக இருந்தனர். அவர்கள் எல்லோரும் தாங்கள் ஊழியர்கள் என்ற நினைப் பின்றித் தங்கள் சொந்த ஸ்தாபனத்துக்கு உழைப்பதான முனைப்போடு பணியாற்றினார்கள். இதன் காரணமாக ஸ்தாபனம் எவ்வித இடையூறுமின்றி மேலும் மேலும் முன்னேற்றம் கண்டது.
அன்றைய அரசியற் சூழ்நிலையில் அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சோதனைகள் சிலவற்றை ஏற்படுத்தின. முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பொருளாக இறக்குமதி செய்யப்பட்டு வந்த பீடியை இலங்கை பீடி உற்பத்தியாளர் சங்கம் என்ற அமைப்பின் மூலமாக
253

Page 134
மூலப்பொருளாகவே தருவித்து இலங்கையில் உற்பத்தி செய்யும்படி அரசாங்கம் ஆணையிட்டது. இதனால் பதப்படுத்தப்பட்ட புகையிலையை வேறாகவும் வெளியில் சுற்றப்பட்ட இலையைத் (Kendப Le:IVCS) தனியாகவும் இறக்குமதி செய்து உள்ளூரில் உற்பத்தி செய்யவேண்டிய கவர் டநிலை உருவாகியது. இதனை ஈடுசெய்யக் கைதேர்ந்த தொழிலாளர் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையின் நாலாபக்கமும் சென்று தொழிலைக் கற்பித்தனர்.
குடிசைத் தொழிலான இந்த அமைப்பின் கீழ் எத்த னையோ ஆயிரம் ஏழைக்குடும்பங்கள் வீட்டில் இருந்த படியே தொழில் புரியக் கூடிய அரியவாய்ப்பைப் பெற்றன. முக்கியமாக, பெண்கள் ஊதியம் பெற இத்தொழில் சந் தர்ப்பம் அளித்தது. இப்போதுபோல ஆடைக் கைத்தொ ழிலோ, வெளிநாட்டு வேலைவாய்ப்போ இல்லாத அக்கால கட்டத்தில் இது எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வாதா ரமாக அமைந்தது. முகவர் மூலமாகத் தயாரிப்பு நிலை யங்கள் இலங்கையின் நாலாபக்கமும், சுருங்கச் சொல்லின் பருத்தித்துறை தொடக்கம் தேவேந்திரமுனை வரை பரவின. தொழில் விருத்தி பெற்றதால் யாழ்நகரிலிருந்த தலைமையகத்தைக் கொழும்புக்கு மாற்ற வேண்டியதா யிற்று. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உற்பத்தியாகிப் பெறப்படும் பொருட்களைத் தரக்கட்டுப்பாடு மற்றும் பொதிப் படுத்தல் செய்வதற்கு மையமாகக் கொழும்பில் மெசெஞ்சர் வீதியில் புதிய மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டத்தில் அரசாங்கம் பீடிதயாரிக்க வேண்டிய புகையிலையை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் படிபணித்து இறக்குமதியைத் தடைசெய்தது. பீடிக்கு உபயோகிக்கப்படும் புகையிலை சுருட்டுப்புகையிலைக்குச் சிறிது வித்தியாசமானது. பீடி உற்பத்தியாளர் புகை
254
 

----------------------- , !W) ||-ዘዘዘዞዘ"*|『|]]]]言「 "Loos,|赢
||------------『W』|-|-| |||- |-|-#雪|s .TT|
**'']]] -|-响 를|||-흙: ----TT』|-
|W|
----|-|E A『T를|-』『卿 siis·| ||
|- 藏|-|- 「T
HEL
. . . . .
TԱեւks"
-!
FATITI
君|』』 疆]慧
|5)*H青慧|
se=No

Page 135
| |||-
*「후, //
|-|-----||-|- |- |-|||||| |- ·| |T!|-|-||
|}}} |}}}
言
 

யிலையை உள்ளூரில் உற்பத்திசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆயினும் சின்னத்துரை அவர்கள் மனம் தளரவில்லை. அவருடன் இருந்த ஊழியரின் கடின உழைப்பும் ஆதரவும் எதையும் சாதிக்கக்கூடிய மனோ திடத்தை அவருக்குக்கொடுத்தன. அதன் விளைவாகத் தம்புள்ளை, கலேவெலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்க ளில் டிபோக்கள் உருவாகிச் சிறந்த மேற்பார்வையாளரின் உதவியுடன் தரமான புகையிலை உற்பத்தி செய்யப் பட்டது.
சிறிது காலத்தின்பின் அரசாங்கம் வெளியில் உப யோகப் படுத்தும் இலையையும் (Kendu Leaves) உள்ளூ ரில் உற்பத்தி செய்யும்படி பணித்து, அதற்குவேண்டிய இலங்கை பீடி உற்பத்தியாளர் சங்கத்துக்கு பிபிலையில் காணியும் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இந்தியாவிற் கூட ஒரு பகுதி பபிலேயே இந்த இலை உற்பத்தியாகிறது. உலகின் வேறெந்தப் பகுதியிலும் இது வியாபார நோக்குடன் செய்கை பண்ணப்படுவதில்லை. உஷ்ண வலயமான ஒரிசா காட்டுப் பகுதியிலும் வட ஆந்திர மாநிலத்திலும் மட்டுமே செய்கை பண்ணப்பட்டும் பதப்படுத்தப்பட்டும் தொழில் நடைபெறும்,
ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்துச் சிறந்த முறையில் நடைபெற்றுவந்த பிடித் தொழில் 1970ஆம் ஆண்டளவில் தேசிய மயமாக்கப்பட்டது. இறக்குமதி, தயாரிப்பு, வர்த்தகம் யாவும் இலங்கைப் புகையிலை உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டு ஜனதாபீடி என்ற பெயருடன் சந்தைப் படுத் தப்பட்டது.
இது சின்னத்துரை அவர்களுக்குப் பேரிடியாக அமைந்தாலும் அவர் மனம் தளரவில்லை. பிடித் தொழில்
255

Page 136
நடந்து கொண்டிருக்கும் போதே, 1970ம் ஆண்டுகளில் அவர் தமது முயற்சிகளை வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்திக் கொண்டார்.
திரு. த. நீதிராஜா, திரு. R.J. குணரத்தினம், திரு. ச. இராஜரட்ணம், திரு. குஷி, சடுளானி ஆகியோ ருடன் கூட்டாகத் திருநெல்வேலியில் சீமா சில்க் இண் டஸ்ரீஸ் லிமிடெட் என்னும் துணி உற்பத்தி ஆலையை நிறுவி அதன் தலைவராக இருந்தார். இந்த ஸ்தாபனம் சின்னத்துரை அவர்களின் மருமகன் திரு. M. சண்முகரட்ணம் அவர்களாலும் திரு. சு.து. குணரட்னம் அவர்களாலும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இறக்குமதிக்கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால் நாட்டிற் குறிப்பிட்ட அளவு உற்பத்தி நிலையங்களே இயங்கிவந்தன. சீமாசில்க் நிறுவனம் தரமான புடவைகளை உற்பத்திசெய்து பெருவெற்றி கண்டது.
சீமாசில்க் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக நொவல்கோ லிமிடெட் என்னும் தைத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைப் பதிவு செய்து ஏற்றுமதி அனுமதி பெற்றுத் தொடர்ந்து அதற்கான கட்டடங்களை ஆரம்பித்த போதிலும் நாட்டு நிலைவரங்கள் காரணமாக வேலைகள் நிறுத்தப்பட்டன.
சின்னத்துரை அவர்கள் தமது மகன் புவனச்சந்திரனுட னும் தம்பி சிவஞானத்தின் மகன் சிவகுமாருடனும் இணைந்து பூரீராம் ரெக்ஸ்ரைல் புறோசிங் கம்பனி என்னும் துணி பதனிடும் ஸ்தாபனத்தை நிறுவினார். ஆரம்பத்தில் சின்னத்துரை அவர்கள் தலைமை வகித்தார். அவரைத் தொடர்ந்து அப்பொறுப்பை ஏற்ற சிவகுமாரன் அவர்கள் சிறந்த முறையில் நிர்வகித்தார். ஆயினும் மின்சார
256

மின்மை, போக்குவரத்துத் தடங்கல் என்பவற்றால் ஸ்தாபனம் முடக்கமடைந்தது.
சின்னத்துரை அவர்களும் அவரது இளையமகன் ஞானச் சந்திரனும் கூட்டாகச், சக்தி ரெக்ஸ்ரைல் என்னும் புடவை ஆலையைத் திருநெல்வேலியில் அமைத்தனர். எனினும் நாட்டின் அரசியற் சூழ்நிலை காரணமாக ஆலையின் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்தன
இது தவிரச் சின்னத்துரை அவர்கள் தமக்குப் பரிச்சயமான அரிசி ஆலைத் தொழிலை முன்னெடுத்து ஓமந்தையிலும் மட்டக்களப்பிலும் ஆலைகளை நிறுவினார். இத்துடன் யாழ்ப்பாணத்தில் முன்னேறி வரும் வர்த்தகர் பலர் யாழ்ப்பாணத்தில் அரிசி ஆலைகளை. நிறுவுவதற்கு அவர் பேருதவி நல்கினார்.
முதன்முதலில் யாழ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சின்னத்துரை அன் பிறதர்ஸ் நிறுவனம் 1978ல் புதிய மூன்று மாடிக்கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டது. இது இலங்கையில் உற்பத்தியாகும் மற்றும் இறக்குமதியாகும் பலபொருட்களின் விநியோகஸ்தாபனமாக இயங்கி வந்தது. எல்லாப் பொருள்களையும் ஒரே கூரையின் கீழ்ப் பெறக்கூடிய ஒரு ஸ்தாபனமாக அன்றே மிளிர்ந்தது. மேலும், யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் அமைந்துள்ள A.K.S. அன்சன்ஸ் என்ற தங்கமாளிகையும் அவரது நிறுவனங்களில் ஒன்றாகும்.
முத்தமகன் காலஞ்சென்ற பாலச்சந்திரனின் துணை யுடன் சின்னத்துரை அவர்கள் ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டவர். பெஸ்கோட்ஸ் (Beskorts) லிமிட்டட் என்று அவரின் தலைமையில் இயங்கிவந்த நிறுவனம், றால் பதனிட்டு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தின் முன்னோடி களில் ஒன்றாகும். ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா மற்றும்
257

Page 137
பலநாடுகளுக்குப் பதனிடப்பட்ட றால் பாரியளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
K. குணரட்ணம் அவர்கள் T. நீதிராஜா அவர்கள் ஆகியோரின் கூட்டுடன் சின்னத்துரை அவர்கள் புத்தளம் மாவட்டம் முந்தலில் வெள்ளைத்தும்பு (White Coir) உற்பத்தி ஆலையை நிறுவினார். இந்தியா, கேரளா மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட தொழில் நுட்பத்தைக் கொண்டு பச்சைத் தென்னை மட்டைகளை ஊறவைத்துப் பலமாதங்களின் பின் அதிலிருந்து பெறப்பட்ட தும்பில் தயாராகும் வெள்ளைக்கயிறு மேற்கு நாடுகளில் மிகுந்த கிராக்கி பெற்றிருந்தது. இந்தக் கயிற்றை மூலப்பொருளாக உபயோகித்து ஜேர்மனி ஸ்கான்டினேவிய நாடுகளிற் கயிற்றுப் பாய்கள் பெருமளவிற் செய்யப்பட்டன. முந்தலில் இவர்களின் நிறுவனமான இண்டர்நஷனல் கொயர் புறட்கஸ் ஸ்தாபனத்திற் செய்யப்பட்ட கயிறு ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
விவசாயத்துறையிலும் சின்னத்துரை. அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டினார். மன்னார் உயிலங்குளத்தில் * கல்கிபாம்’ என்ற பெயரில் கிளிநொச்சியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. பளையிற் காடுவெட்டி அவர் நடுவித்ததென்னங்கன்றுகளும் மாங்கன்றுகளும் அவர் யாழ்நகரில் வாழ்ந்த காலத்திலேயே பயன்தரத் தொடங் கின. கொழும்பில் இயங்கும் கம்பனிகள், உயர்சாதி மாம்பழங்களை அன்றன்று தகரத்தில் அடைப்பதற்கும் பழச்சாறு செய்வதற்குமாக லொறிகளை அனுப்பி வந்தன. துரதிர்ஷ்ட வசமாக நில உச்சவரம்புச் சட்டத்தினால், எவ்வாளவோ ஏக்கர் நிலங்கள் பறிபோயின.
பீடித் தொழிலுக்குப்பின் யாழ்நகரை மையமாக " வைத்துப் பல தொழில்கள் ஆரம்பித்த சின்னத்துரை அவர்களுக்கு நாட்டின் அரசியல் நிலபரங்கள் பலநெருக்
258

கடிகளைக் கொடுத்தன. போக்குவரத்துப் பிரச்சனை, மின்சாரமின்மை, மீன்பிடித்தடை என பல இடைஞ்சல்களை எதிர்நோக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக 1982க்குப்பின் அவர் குடும்பத்தாருடன் இரண்டு வருடங்களை இந்தியா வில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் அவரது பல நிறுவனங்களுக்கும் பெருஞ் சேதங்கள் உண்டாயின. 1985இல் நிலைமை சீரடைய அவர் நாடு திரும்பினாலும் தொடர்ந்து வந்த திருப்பங் களால் அவர் யாழ்ப்பாணத்தை விட்டுக்கொழும்பில் நிரந்தரமாகக் குடியேற வேண்டியதாயிற்று.
1985ல் இருந்து கொழும்பில் இருந்து கொண்டே இறக்குமதி வர்த்தகத்தைத் தமது கடைசிச்காலம் வரை மிகவும் நிதானமாகச் செய்து வந்தார். உற்பத்தித் துறைக்குச் செல்ல அவர்மனம் நாடவில்லை. ஓரிருவரைத் தவிர அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளிலேயே வாழ்கிறார்கள். இதன்விளைவாக வியாபாரத் துறையை மேலும் விரிவடை யச் செய்ய வேண்டிய ஆட்பலம் இருக்கவில்லை. வியாபாரத்துறையில் வெற்றியின் உச்சத்தை எய்திய சின்னத்துரை அவர்களுக்கு அதன் மேலும் விரிவடையச் செய்யும் தேவையும் இருக்கவில்லை.
உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்த சின்னத்துரை அவர்கள் தம்மிடம் வந்து பழகிய யாவருட னும் அன்பும் ஆதரவும் காட்டி, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தவர். திறமை மிக்க வியாபார ஸ்தாபகராகத்திகழ்ந்த வர் அவர். ஒரு சிறந்த தந்தையாராக, பேரனாராக, பாட்டனாராக விளங்கி, ஜூலை 20050822இல் சிவபதமெய்தினார்.
நா.சிவராஜா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் ஆலோசனைச்சபை உறுப்பினர். இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம்
259

Page 138
ANNDOMITABLE ENTREPRENEUR
Mr.Sivakolunthu Sinnathurai was born on 14 May 1920 in Thavadi, Jaffna, the second of four children of Mr. and Mrs. Sivakolunthu. Mr. Mylvaganam and Mr. Sivagnanam were his elder and younger brothers respectively, and Maheswary his only sister. Aged just seven, Mr. Sinnathurai lost his father and saw his brother, Mr. Mylvaganam move to Malaysia to live in the custody of his paternal uncles who were civil servants there. Mr. Mylvaganam subsequently became an engineer, returning to Sri Lanka for his wedding several years later. The family lost him in Borneo in 1942, during the height of the Second World War.
Mr. Sinnathurai and his remaining siblings were raised by their beloved mother Kanagamma. As the oldest in the family, Mr. Sinnathurai felt compelled to seek employmentat an early age. He joined as an apprentice in a business run by his uncle Mr.Thambiaiyah at Demodera in Badulla, while his brother Mr. Sivagnanam was studying in Badulla.
Having gained valuable expertise in trade, the two brothers returned to Jaffna to establish Sinnathurai & Brothers on KKS Road, Jaffna in 1945. Business growth was rapid, as well as it was steady. The port at Kayts had facilities to import goods directly from India and Burma at that time. The brothers who were involved in the import trade of rice, lentils and roof tiles also traded in different brands of beedi.
260

Meanwhile, the owners of the Kalki Beedi Company in Trichi, India were looking fora successful and reliable company to which they could hand over their distribution in Sri Lanka. When the Director of Kaki Beedi, Mr. A. E. Narayanan visited Sri Lanka for this purpose, his inquiries in Jaffna led him directly to Sinnathurai and Brothers. Mr. Sinnathurai was consequently invited to the Trichi Office. He was introduced to the proprietor, Mr.G.M. Yoosoof who granted him sole rights to the distribution of Kalki Beedi, a product that would prove to be the cornerstone of his successful business career.
Mr. Sinnathurai, along with his active and self-disciplined brother Sivagnanam succeeded in significantly expanding the distribution of Kalki Beedi in Sri Lanka. Within a few years of beginning operation, they had opened upbranches at 44, Third Cross Street, Colombo and on Bazaar Street, Nuwara Eliya. Sales grew rapidly aided by aggressive marketing campaigns. The brothers' entrepreneurship and drive for success won praise from the company's owners in India.
Sadly, Success in trade was accompanied by a personal tragedy for Mr. Sinnathurai. Brother Sivagnanam became ill while on a pilgrimage in India and died there. Deprived of his brother's assistance, Mr. Sinnathurai was left to administer the trade on his own. The Sri Lankan and Indian employees of the firm were cooperative and worked hard, treating the company as their own. The business grew uninterrupted.
261

Page 139
New government policies and the prevailing political environment caused problems for the business. Instead of importing manufactured beedi, the government decided to import the raw materials needed to produce beedi through the Ceylon Beedi Manufacturers' Association and manufacture beedi in Sri Lanka. This meant that processed tobacco and the exterior cover leaf (Kendu Leaf) had to be imported Separately for the manufacturing process. A major challenge was to train thousands of employees to roll up beedi. Experienced workers were brought to Sri Lanka from India and sent to different parts of the island in order to train local employees in the trade.
A cottage industry, beedi manufacturing provided thousands of poor families with the means to earn a living from home. In particular, it gave women the opportunity to earn an income. The beediindustry proved to be an important Source of income at a time when overseas employment and jobs in the local garment industry were virtually non-existent. It expanded all over country, from Point Pedro to Dondra through agents.
Rapid expansion of the company meant that the head office had to be transferred from Jaffna to Colombo.
industry were virtually non-existent. It expanded all over country, from Point Pedro to Dondra through agents.
Rapid expansion of the company meant that the head office had to be transferred from Jaffna to Colombo. The
262

new building constructed at Messenger Street, Colombo became the centre for ensuring quality control and effective packaging of the product brought from various parts of the country.
At this stage, the government banned the import of beedi tobacco leaf and ordered tobacco to be grown locally. There is a subtle difference between cigar tobacco and beedi tobacco. It became necessary for allbeedi producers to grow their own tobacco. Mr. Sinnathurai never lostheart. The support provided by his hardworking employees gave him the moral boost needed to achieve his ends. Depots were established in Dambulla, Galewela and Jaffna for growing and processing the high quality tobacco.
Sometimes later, the government directed that the exterior packing leaf (Kendu Leaf) should also be grown locally. To enable this, the governmentallocated land in Bibile to the Ceylon Beedi Manufacturers' Association. However, this Venture was a failure. Evenin India, this particularleafis grown Selectively. The leaf is not grown commercially anywhere in the world. Growing and processing of this type of tobacco leaf is restricted to the dry zone areas of North Andhra and forests of Orissa.
The industry which had made good progress and also provided job opportunities to thousands of people was unfortunately nationalised by the government in 1970. Ceylon Tobacco Manufacturing Corporation was granted monopoly
263

Page 140
over the import, production and trade of beedi and the product named Janatha Beedi.
Mr. Sinnathurai was shaken by the nationalisation of the industry but nevergave up. He continued the beeditrade while diversifying his efforts in other business ventures during the 1970s.
Ceyma Silks Industries Ltd, a textile-manufacturing factory was established at Thirunelveliin Jaffnain co-operation with Mr. T.Neethirajah, Mr. R.J. Gunaratnam, Mr.S. Rajaratnam and Mr. Kushi Chatulani. Mr.Sinnathurai headed the organisation. The company was ably managed by his son-in-law Mr.Sanmugaratnam and Mr.R.J.Gunaratnam. Due to restrictions in imports imposed at that time, only a few textile factories were in operation in the country. Ceyma Silks Industries Ltd manufactured high quality textiles and achieved great Success.
Novelco Ltd - a ready made garment factory was registered as a subsidiary of Ceyma Silks Industries Ltd for exporting garments. Although buildings were constructed for the purpose, work had to be suspended due to the political situation in the country.
Sri Rams Textiles Processing Company Ltd, a textil processing firm was established with the assistance of his son Mr. Bu vanachandran and Mr. Si vagnanamʼs son,. Mr.Sivakumaran. The firm initially headed by Mr. Sinnathurai was later successfully headed and managed by Mr.
264

Sivagnanam's son Mr. Sivakumaran. Unfortunately, a lack of Supply of electricity and transport difficulties caused disruptions to the trade.
Mr. Sinnathurai and his youngest son Mr.Gnanachandran founded another textile factory, Sakthi Textiles at Thirunelveli, Jaffna. Later, this factory ceased operations due to the political situation of the country.
Rice milling was one of Mr. Sinnathurai's favourite trade. He opened up rice mills at Omanthai and Batticaloa and assisted several up-coming Small businessmen to set up rice mills in Jaffna..
The building which housed Sinnathurai & Brothers, Mr. Sinathurai's first business venture in Jaffna was converted to a new three storey building in 1978. The organisation was the distributor of several products produced locally as well as imported. It also gained a reputation for Selling a wide range of goods under one roof.
A.KS & Sons, a jewellery shop at Kannathiddy in Jaffna was also owned by Mr. Sinnathurai.
Mr. Sinnathurai also commenced export trade with the help of his eldest son, the late Mr. Balachandran. Beskorts Ltd, which was headed by Mr. Sinnathurai, was a forerunner in the export of processed prawns. Large consignments of processed prawns were exported to Japan, USA and other countries from Sri Lanka.
265

Page 141
Mr. Sinnathurai, Mr. K.Gunaratnam and Mr.T.Neethirjah established a white coir factory at Mundel in Puttalam. The factory was under the efficient management of his son-in-law, Mr.Sanmugaratnam. Following a processing technique obtained from Kerala, India, raw coconut husks were soaked in water for several months and used to produce white coir. The white coir enjoyed great demand in the west. This was used as a raw material in Germany and Scandinavian countries to produce coir mats on a commercial scale. Rope manufactured by International Coir Products at Mundel was exported to Germany.
The keen interest Mr. Sinnathurai showed in agricultural Ventures made him engage in paddy farming at Uiyalankulam, Mannar at Kalki Farm and at Kilinochchi. Land was cleared at Palai for the plantation of coconut and mango. He was fortunate to enjoy the produce while he was living in Jaffna. Companies from Colombo had been sending lorries to collect the high bred mangoes on a daily basis for canning and producingjuice. It was sad to note that the Land Reform Act which came into effect deprived him of vast areas of land.
Following his successes in the beeditrade, Mr. Sinnathurai started numerous business Ventures centred around Jaffna Town. The political situation of the country posed many constraints such as the ban on fishing, lack of communication and restrictions in the supply of electricity. In addition, when Mr. Sinnathurai moved to India with his family in 1983, several of his business establishments suffered damages and setbacks.
266

Although he returned to Sri Lanka in 1985 when the situation improved, he shifted his permanent residence from Jaffna to Colombo in 1985.
From 1985 onwards, Mr. Sinnathurai continued to manage his import trade effectively from his base in Colombo but showed no furtherinterest in manufacturing.
With most of his children and grandchildren living abroad and a few remaining in Sri Lanka, Mr. Sinnathurai did not have the manpower to expand his business. Neither did he have the need to expand, having reached the pinnacle of a very Successful business career.
Mr.Sinnathurai travelled widely and lived a very contented life, bestowing kindness and affection on those who associated with him. A successful entrepreneur and a beloved father, grandfather and greatgrandfather, Mr. Sinnathurai passed away peacefully on 22 July, 2005.
S. Somanathan 81 -5/2, Windsor Tower, Ward Place Colombo 07
267

Page 142
குருபாதம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூர் யாழ்ப்பாணம் - இலங்கை
அனுதாபச் செய்தி
அன்புள்ளவர்களுக்கு ஆசிகள். திரு. சி. புவனச்சந்திரனுடைய அப்பா திரு. சி. சின்னத்துரை அவர் களின் மறைவை அறிந்து மனவேதனை அடைந்தோம். எல்லாரோடும் அன்பாகப் பழகும் சுபாவமும் அனை வரையும் மதித்து நடக்கின்ற பண்பும் உள்ளவர் சின்னத்துரை. எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் அவர். பல தர்மப் பணிகளையும் செவ்விதாஞ் செயல் களையும் நம் நாட்டிற் செய்த பெருமைக்குரியவர். எங்களோடும் ஆதீனத்தோடும் நிறைந்த பக்தியைக் கொண்டிருந்தவர். இவருடைய மறைவு எல்லோருக்கும் மன வேதனையைத் தந்தது. இவர் மறைவினால் துயருறும் சுற்றத்தவரது துயர நீக்கத்திற்கும் திரு. சி. சின்னத்துரை அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். தங்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
‘என்றும் வேண்டும் இன்ப அன்பு
‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’
பூனிலழறீ சுவாமிகள்
268

நான்காம் அத்தியாயம்
ததிபெறு செல்வம்
நல்லை ஆதினம்
- அனுதாபச் செய்தி 268
இரங்கலுரை
- பரராஜசேகரப்பிள்ளையார் பிரதம குரு 269
ஒளிவிளக்கு அமரர் சிவக்கொழுந்து சின்னத்துரை
- கந்தசாமி கோவில் பிரதமகுரு 270
சிவக்கொழுந்து சின்னத்துரை
சந்திரசேகரப்பிள்ளையார் பரிபாலனசபை 272
அஞ்சலியுரை
- சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி 274
HE was tall and he lood TALL
- Kandiah Neelakandan : 275 வரலாற்றுப் பணிகள்
- பேராசிரியர் சபா ஜெயராஜா 278

Page 143
10,
11,
12.
13,
14.
15.
16.
17,
18.
சின்னத்துரை என்னும் பெரியதுரை
- கம்பவாரிதி இ. ஜெயராஜ் 280
இணுவிற் கிராமத்தின் கலங்கரைவிளக்கு அணைந்தது - செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் 282
கல்கி என்னும் பெருமலை மறைந்தது.
- தமிழ்வேள் இ.க. கந்தசாமி 286
இரங்கற்செய்தி
கே.கே. சுப்பிரமணியம் 288
தருமத்தின் தவக்கொழுந்தாயுதித்த சிவக்கொழுந்து சின்னத்துரை - முதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம் 290
Atribute to our Boss
Staff (S. SNNATURA & BROS, SSB KAKENTERPRISES, KAKSONS 292
எங்கள் நினைவில்
தர்மலிங்க்ம் சுசீலா குடும்பத்தினர் 293
மறைந்தும் மறையாத பெரியர்
- கந்தையா குமாரசுவாமி . 295
பெருமதிப்புக்குரிய பெரியவர்
பொன்னுத்துரை வாத்தியார் குடும்பம் 297
பெரியவர்
- கமலா கணபதிப்பிள்ளை 30
உழைப்பிலும் உயர்விலும் கலந்த இனிய தொடர்பு - S. இராசரத்தினம் 303

சிவமயம்
இரங்கலுரை
இன்று இந்நாடு ஒரு கொடைவள்ளலை இழந்து நிற்கின்றது. ஆம் மிகப்பெரிய கொடை வள்ளல். அமரர் சின்னத்துரையை நாம் எல்லோரும் இழந்து நிற்கிறோம். சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் விடாமுயற்சியாலும் தன்நம்பிக்கையாலும் அயராத உழைப்பினாலும் இன்று வானுயரளவு வளர்ந்து எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் வாழ அனேகஸ்தாபனங்களை உருவாக்கினார். இன்று பலர் பெரிய தொழிலதிபர்களாக உருவாவதற்கு மூலகாரணமாக இருந்தவர். எண்ணற்ற ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரி கள், பொது ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்குத் தாராளமாக அள்ளி அள்ளிக்கொடுத்த பெருவள்ளல். இன்று எங்கள் கோவிலில் மிகப்பெரிய ராஜகோபுரமாக அமைவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். பலகாலமாக வீதிவலம் வர முடியாது இருந்த உலகப் புகழ்பெற்ற இணுவைக் கந்தன் திருமஞ் சத்தை புனரமைத்தும் அது வீதிவலம் வருகின்ற திருவிழா வையும் சிறப்பாக நடாத்தி வந்திருக்கின்றார். சமீபத்தில் இணுவிலில் இயங்கிவந்த வைத்தியசாலை இடமின்மையால் வேறு ஓர் இடத்திற்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது அவ் வைத்தியசாலைக்காக மிகப்பெரிய கட்டிடமும் காணியும் கொடுத்து அதனை மீண்டும் இயங்க வைத்ததுடன் மேலும் வளரப் போதுமான இட வசதியையும் செய்து தந்திருக்கிறார். இத்தகைய ஓர் கொடை வள்ளலை இழந்திருக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எல்லோருக்கும் ஆறுதலையும் மன அமைதியையும் தர எல்லாம் வல்ல பூரீ பரராஜசேகரப் பிள்ளையாரை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
வை. சோமாஸ்கந்த குருக்கள் பிரதம குரு - பரராஜசேகர பிள்ளையார் கோயில், இணுவில்
269

Page 144
2. d6JLDuuLib
ஒளிவிளக்கு அமரர் சிவக்கொழுந்து சின்னத்துரை
சைவமும் தமிழும் கமழும் சிவபூமியாம் யாழ்ப்பாண நன் னகரில் தாவடியை வசிப்பிடமாகக் கொண்ட சின்னத்துரை அவர்கள் அன்பு, கருணை, பக்தி, ஈகை, இரக்கம், உண்மை நெறிகள் வழி வாழ்ந்த பெருமைக் குரியவர். சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியுடையவர். அயராத உழைப்பினால் தனது வாழ்க்கையை வளம் பெறச் செய்தவர். தந்தையுடன் வாழ்ந்த காலத்தில் குடும் பத்தில் பல கஷடங்களை எதிர்கொண்டாலும் காலப் போக்கில் அவரது அயராத முயற்சியால் “திரைகடல் ஒடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க வியாபாரத் துறையில் பங்காளராகச் சிறியதந்தையுடன் இணைந்து செயற்பட்டுக் கால ஓட்டத்தில் அவரது அயராத முயற்சி அவரை மேன்மையடைய வைத்தது. உள்ளூராட்சி அமைச்சின் மந்திரியாக இருந்த முருகேசு திருச்செல்வம் அவர்களின் காலத்தில் இணுவையம்பதி கந்தசாமி கோவில் மஞ்சம் ஓடாதிருந்த வேளையில் அச்சாணியை இவரிடம் கொடுத்து அதனை ஒடவைக்க வேண்டும் என்று ஊக்கமளித்தவேளை சின்னத்துரை அவர்கள் அப்பணியை மிகஆர்வத்தோடு செய்து முடித்து அக்கோயில் திருவிழா வையும் சிறப்பாகக் கொண்டாடி வந்தார். இணுவில் தெற்கில் அரசினர் மருந்தகம் ஒன்றை நிறுவி அதன் மூலம் ஏழைமக்களின் நோய் பிணிகளைத் தீர்க்க உதவி புரிந்தார். அதுமட்டுமின்றி இணுவிற் சைவ மகாஜனா எனப்படும் மத்திய கல்லூரிக்கு ஓர் மாடிக்கட்டிடமும் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலைக்கு ஒர்
270

விஞ்ஞான ஆய்வு கூடமும் நிறுவுவதற்கு அரும்பாடுபட்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் வைத்தார்.
வணிகத்துறையில் மேன்மையுடன் வாழ்ந்துவரும் நாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்குப் பின்நிற்காத பேராளன். வசதியற்றிருக்கும் மக்களை ஊக்குவிக்கும் முகமாகப் பீடித்தொழில், நெசவுக் கைத் தொழில் கூடங்களையும் அமைத்து அதில் மக்களை ஈடுபடுத்தி வாழ வழிகோலிய பெருந்தகை.
*தோன்றிற் புகழொடு தோன்றுக அ.திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
என்ற வள்ளுவர் வாசகத்திற்கமையத் தோன்றிய அமரர் சின்னத்துரை என்பவரின் உடல் மறைந்தாலும் அவர் புகழ் என்றென்றும் பாரினில் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அவரது சேவை மகத்தான சேவை. அத்தகைய பேராளனின் இழப்புப் பேரிழப்பேயாகும். சிவக்கொழுந்து செய்த மாதவத்தால் உதித்த சின்னத்துரை வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார் என்று கூறுவதற்கு ஐயமில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்தனை செய்வதுடன் அவரது குடும் பத்தினருக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
9. БIEJ80тир
சிவழனி நடராச உருத்திமூர்த்திக் குருக்கள் இணுவில் கந்தசாமி கோவில் பிரதம குருக்கள்
271

Page 145
குருபாதம் நீத்தார் பெருமை
சிவக்கொழுந்து சின்னத்துரை
திருமூலராற் சிவபூமி எனப் போற்றப்பட்ட ஈழமணித் திருநாட்டின் வடபால் விளங்கும் பொண் சேர் யாழ்ப்பாணத்தில் சைவமும் தமிழும் செழித்தோங்கும் தாவடிப்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற சிவக்கொழுந்து சின்னத்துரை என்பவர் சிறுவயதில் இருந்து நற்பண்புகளோடு வளர்ந்து இளைஞனாகி இல்லற பந்தத்தில் இணைந்து வாழ்ந்து வரும் காலத்தில் புத்திர பாக்கியத்திற்காக எமது ஆலயத்தில் ஓர் சந்தான கோபாலரை ஸ்தாபித்தார். அதன் பயனாகச் சந்தான பாக்கியத்தை அடைந்தார். இதன் காரணமாக எமது ஆலயத்தில் மிகுந்த பற்றுடையவராக இருந்தது மட்டுமல்லாது ஆலயம் சீர்குலைந்து காணப்பட்டபோது ஊர்ப் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று 1965.03.05ஆந் தேதி எமது ஆலயத்தைப் பொதுக் கோயிலாக்கி ஓர் பரிபாலனசபையையும் உருவாக்கினார். அதன் பின் புனரமைக்கும் திருப்பணி நடைபெற்றது. இத்திருப்பணிகளை நடாத்த முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர். திருவெம்பாவை உபயத்தினையும் இவர் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னார் தனியாக வேலைகளைப் பொறுப்பேற்றுச் செய்த பெருமைக்குரியவர் ஆவார். 1973-1985 ஆண்டு காலப் பகுதியில் நடைபெற்ற ஆலய கும்பாபிசேகத்தை
272

முன்னின்று நடத்தினார். கும்பாபிசேக தினமாகிய ’சுவாதி” நட்சத்திரத்தை இறுதி நாளாகக் கொண்ட அலங்கார உற்சவத் திருவிழாவையும் அவரே செய்துவந்தார்.
இந்த ஆலயத்துக்குப் புதிய சித்திரத்தேர் செய்வதற்கு இவருடன் கலந்து ஆலோசனை செய்தபோது அதற்கு உறுதுணையாக இருந்து தனது பணத்தின் பெரும்பகுதி யைக் கொடுத்து இத்திருப்பணியை ஆரம்பித்து வைத்த தோடு மட்டுமல்லாது தேர்த்திருவிழாவினையும் வருடம் தோறும் இவரே செய்து வருகின்றார். இத்தகைய நல்லியல்புகள் வாய்க்கப்பெற்ற இப் பெரியார் மறைந்தமை எமது ஆலயத்திற்கும், ஊர்மக்களிற்கும் பேரிழப்பாகும். இவருடைய ஆலயத்திருப்பணியானது பொன் எழுத்துக் களாற் பொறித்து வைக்க வேண்டிய பொக்கிசம் ஆகும். எனவே இவருடைய ஆத்ம சாந்திக்காக அனைவரும் உப்புமடம் சந்திரசேகரப்பிள்ளையாரின் திருப்பாதங்களைப் பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஆலய பரிபாலனசபையும் கோண்டாவில் மேற்கு வாழ் மக்களும்
அருள்மிகு சந்திரசேகரப்பிள்ளையார் கோயில் உப்புமடம்
K.K.S. 65,
கோண்டாவில் மேற்கு.
273

Page 146
2. . dólLDub
அஞ்சலி உரை
கடவுள் பக்தியும் கருணை உள்ளமும் கொண்ட பெருமகன் அமரர் கல்வி சி. சின்னத்துரை அவர்கள். அன்னாரின் பிரிவுச் செய்தி கேள்வியுற்று மிகுந்த கவலையடைந்தேன். யாழ்குடா நாட்டில் அளப்பரிய அறப்பணிகளாற்றிய பெருந்தகையின் தொண்டுகள் இன்றும் மறக்க இயலாதவை. அமரரது குடும்பத்தவர்களுடன் 40 ஆண்டுகளாகப் பழகும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. உழைப்பால் உயர்ந்த உத்தமராகிய கல்கி சின்னத்துரை அவர்களது உதவிக் கரங்களைப் பல்வேறு பாடசாலைகள், ஆலயங்கள், சமூக நிறுவனங்கள் பயன்படுத்தின. தெல்லிப்பழை யூரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தோடு நீண்ட தொடர்புடைய அமரர் சின்னத்துரை ஐயா அவர்கள் ஆலயத் திருப்பணிக்கு மனமுவந்து பங்களிப்புச்செய்தமையை யாம் என்றும் நினைவுகூரத் தவறுவதில்லை. ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர் திருக்கோவில் ஐயாவை இன்றும் எமக்கு ஞாபகமூட்டும். கலைஞர்கள், சமயப் பிரமுகர்கள், சங்கங்கள் அனைவருக்கும் பெரு விருட்சமாக நின்று ஊக்குவித்த பெருந்தகை இவர். இவரது பிரிவுச் செய்தி பலரது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளது. எனினும் நிறைந்த வாழ்வு வாழ்ந்த பெருந்தகையின் வாழ்வு போற்றுதற்குரியது. தன் கடமைகளைச் சீராகச் செய்து குடும்பச் சிறப்பின் மகிழ்வையும் கண்டு இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு பாராட்டும் உலகு. என்ற வள்ளுவப் பெருமானின் கூற்றுக்கமைய அவர் பண்பை வாழ்த்துவதும் பின்பற்றுவதுமே நாம் செய்யக்கூடிய நன்றிக் கடனாகும். அன்னாரின் ஆத்மா ஆறுதலடைய எல்லாம் வல்ல துர்க்கை அம்பாளைப் பிரார்த்தித்து அமைகிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி தலைவர் . பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
274

AUM He was tail and he stood TALL".
I was fortunate to know Mr. S. Sinnathurai for more than tWO decades.
On several occasions I had joined teams of various Tamil and Hindu organisations in meeting him as one of the well known philanthropists in soliciting his financial patronage for several projects. He never disappointed us.
Every time I met him, the highesteem in which I held him had been growing. He was unique in several aspects. He was not only physically tall, but he stood tall' in our Community in every sense largely because of the affection respectand esteem he deservedly acquired by duly discharging his philanthropic obligations to all those who needed the same.
He was famous and well known in this country. He was a recognised business leader of this land. Nevertheless, always dressed in white, he moved with everyone with love and humility. Although he had to face various difficulties and obstacles in his business activities because of the unfortunate happenings in this country over the years, he remained calm and collected. He was modest despite his glory and he always maintained his dignity,
We are reminded of what Thiruvaluwar said in Thirukkurai.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு
திருக்குறள் 963
275

Page 147
(Cultivate modesty in days of prosperity but in the day of decline hold fast to thy dignity)
He always valued our rich cultural traditions and moral values and stood, as an Outstanding and independent leader, giving an exemplary example to others in the Society.
He was soft spoken and never wanted to hurt others' feelings. Nevertheless, he was never reluctant to be forthright and truthful. I had the pleasure of working with him on the Board of Trustees of Colombo Tamil Sangam when I was also a member of the Board as well as its Secretary and he was one of the trustees. I came to know his qualities closely and admired him as a great leader.
His enthusiastic energy and zeal as well as systematic diligence which co-existed with a powerful will are the hall marks of this leader.
உடைய ரெனப்படுவது ஊக்கம் அதில்லார் உடையது உட்டையரோ மற்று.
திருக்குறள் 391
( 77hose who possess energetic enthusiasm are alone to be called high, as all those that possess it do they really poSSeSS what they own?)
Hindu College, Colombo, is the first Tamil school to be declared a National School outside the North-East. Its growth beyond the dreams of its founders, Hindu Educational Society, was due to the continuing support given by the Tamil philanthropists in the City. The late Mr. S. Sinnathurai was one of those who will be remembered with gratitude by the
276

generations of students of that College. Of course, his name is engraved in one of the rooms he donated to the College.
Likewise, he also helped many projects of All Ceylon Hindu Congress of which he was one of the Vice Presidents in the early seventies
The late Mr. Sinnathurai's last journey was one of the memorable events witnessed by a very large gathering mainly consisting of the beneficiaries of this tallman's long' hand, including the Principal, the staff and the prefects of Hindu College Colombo, W
We have lost a great Soul, but we will not forget what he had done for the community.
Let us not be satisfied by just remembering those good deeds with gratitude, but let us take his life as an exemplary example and follow his footsteps. That is the best tribute we can pay to this great Periyavar' named Sinnathurai'.
In Conclusion I wish to say in Consolation that all of us share the said loss of his beloved family as ours too as his loSS is a great loss to the entire community.
AUM SHANTHI AUMSHANTHI
AUM SHANTHI
Kandiah Neelakandan
General Secretary, All Ceylon Hindu Congress Secretary, Hindu Educational Society Secretary, Hindu College, Colombo, Development Trust
277

Page 148
s குருபாதம்
வரலாற்றுப் பதிவுகள்
யாழ்ப்பாணத்து மருதவாணர் மரபு நெல்வயல்கள் நிரம்பிய கழனி நிலவுடைமையின் மரபாக வளர்ந்து வந்த வேளை, மருதநிலப்பயிர்ச்செய்கையும், மரபு வழி வர்த்தகமும், கல்வி நிலை ஆக்கமும் ஓங்கிய பாரம் பரியத்தில் வந்தவர் சண்முகனார் ஆவர்.
சண்முகனாரின் ஒரே மகன் ஆறுமுகம் என்ற பெரும் செல்வந்தர். ஆறுமுகம் அவர்கள் தமது மைந்தனுக்குத் தந்தையாரின் பெயரை நினைவு கூர்ந்து சண்முகம் எனப் பெயரிட்டார்.
சண்முகம் அவர்கள் சிவகாமி அம்மையாரை மணம் முடித்து, தமது தந்தையார் மேற்கொண்ட மலையாளம் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சிறப்புற நடத்தி, தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவு செய்தார். அவர் நிறுவிய திண்ணைப் பள்ளிக் கூடத்தில் புலவர் மயில்வாகனம், பண்டிதர் ஆறுமுகம் முதலியோர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
அமரர்கள் சிவசம்பு, சிவக்கொழுந்து, கனகரத்தினம், சுந்தரம், சபாரத்தினம், செல்லத்துரை, தம்பித்துரை ஆகி யோர் சண்முகம் சிவகாமி அம்மை ஆகியோரின் புதல்வர் களாவர். சண்முகம் அவர்களின் இறப்போடு அவரது வர்த் தக நடவடிக்கைகளும், திண்ணைப் பள்ளிக்கூடமும் செய லிழந்தன. சண்முகம் அவர்களது வர்த்தக மரபை அவரது மைந்தர் சிவக்கொழுந்து முன்னெடுக்க, அந்த மரபுக்கு உன்னத வடிவம் கொடுத்தவர் அமரர் சின்னத்துரை ஆவர்.
278

அமரர் சின்னத்துரை அவர்களது ஆளுமை பன்முகப்பரிமாணங்களைக் கொண்டது. அவரது கணிர் என்ற குரல் ‘தங்கக் குரல்’ எனப்பட்டது. அவரது உரை யாடல் வசீகர உரையாடல்’ எனப்பட்டது. அவரது கொடைச்சிறப்பு 'புகழ் விரும்பாத கொடைச் சிறப்பு' எனப்பட்டது. இந்தச் சிறப்புத் தொடர்கள் கிராமத்து மக்களால் வழங்கப்பெற்றன.
சமூகத்தின் அடிநிலயில் வாழும் ஊர் மக்கள் நிமிர்நிலைச் சமூக அசைவியத்தை (Vertical Social Mo- , bility) அடையவேண்டும் என்பது அமரர் சின்னத்துரை அவர்களது இலட்சியம். ஊர்மக்கள் புதிய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் இயக்குவதற்கும் நிதி வளங்களையும் துறைசார் ஆலோசனைகளையும் பிரதிபலன் கருதாது வழங்கினர்.
அழிவு நிலையில் இருந்த மாபெரும் கலைச் செல்வ மாக விளங்கிய இணுவைத்திருவூர்ப் பெருமஞ்சத்தைப் புதுக்கியமைத்தமை, தாம் நிருமாணித்த அழகிய இணுவை இல்லத்தை அரசினர் வைத்தியசாலை அமைப்பதற்கு இலவசமாக வழங்கியமை, ஏழைச்சிறார்கள் படித்துயரத் தொடர்ச்சியாக நிதி வழங்கியமை, வறிய முதியோர்க்கு வாழ்வாதாரங்களைத் தந்தமை, என்றவாறு அவரது சமூகப்பணிகள் நீண்ட தொடர்கதையாகும்.
அவரது நினைவுகள் கிராமத்து மக்களின் உள்ளங் களில் ஆழ்ந்த படிமங்களாகவுள்ளன.
சபா ஜெயராசா, யாழ். பல்கலைக்கழகம்.
279

Page 149
சிவமயம்
சின்னத்துரை என்னும் பெரியதுரை
உத்தமப் பெரியோன் ஓங்குயர் புகழோன் வித்தகம் பொங்க விளைந்த நன்மனத்தோன். சத்தியம், தர்மம், சாந்தியை வேண்டி, நித்தியம் அறங்கள் நேர்படச் செய்தோன். நெடியதன் உருப்போல் நிமிர்புகழ் கொண்டோன். கடிதென உழைத்துக் களம் பல வென்றோன். கலைபல வளரும் கந்தனின் பதியாம் நிலைபுகழ் இணுவில் நிமிர்பதி தன்னின் மைந்தனாய்ப் பிறந்து மாண்புகழ் கொண்டோன். பிறந்த மண்தனையும் பெற்றவர்தனையும், நிரந்தரப் புகழால் நிமிர்ந்திடச் செய்தோன் ஒப்பிலாக் 'கல்கி உயர்நிறு வனத்தை அற்பொடு பிள்ளையாய் ஆக்கியே வளர்த்தோன். தாய்மண் கடந்து தலைநகர் தன்னிலும், சாயாதமைத்துச் சரித்திரம் படைத்தோன். வென்ற தன்செல்வம் வீறடைந்திடவே, போகமாய், நல்அறப் புகழதாய் ஆக, தானமும் தர்மமும் தான் பல இயற்றி, மானமும் பெருமையும் மலையெனச் சேர்த்தோன். கலைகளால் உள்ளம் கனிந்திட என்றும், விலையிலாக் கலைபல விரும்பியே வளர்த்தோன். ஆலயத் திருப்பணி, அறப்பணி, தமிழ்ப்பணி, கலைப்பணி நிலைத்த கல்வியாம் பெரும்பணி, அத்தனை பணிகளும் ஆற்றியே மண்ணில், நித்தியப் புகழினை நிமிர்வொடு பெற்றோன். தக்கவர் தாம்என தரணிக்கு உரைத்துமே, மிக்க நற்புதல்வரை மேன்மையாய்ப் பெற்றோன். கண்ணெனப் புதல்வரைக் கருத்தினுள் புதைத்து, பொன்னெனப் போற்றிப் புகழ்பெறச் செய்தோன்.
280

பேரர்கள் எல்லாம் பெரும்புகழ்க் கல்வியால், ஆரிவர் என்று அகிலமே வியந்திட, உலகெலாம் சென்று ஒப்பிலாப் புகழ்பெற, நிறைந்த நன்நெஞ்சொடும் நீர்சொரி கண்ணொடும், அவர்தமை நெறிசெய்து அன்பினால் நினைத்தோன். பெற்றவர், உற்றவர் பேணிய நண்பர்கள், கற்றவர், உயர்ந்தோர், கலைஞர்கள் எனத் தினம், வற்றாது உறவுகள் வளர்த்த நன்மனத்தோன். வன்சொற் கலந்த வார்த்தைகள் தன்னால், என்றும் மற்றவர் இதயம் வருத்தும், தன்மை அறியாச் சான்றோன் சகத்தில், மற்றவர் தம்மை மதித்திடும் பண்பால், கற்றவர் நெஞ்சையும் கவர்ந்த நற்பெரியோன். மூப்பினை வென்று முதுமையைப் புறம்செய்து, தளரா நிமிர்வொடு தங்கமாய் வாழ்ந்த, வீரிய சிங்கம் வீழ்ந்ததாம் ஐயகோ! கம்பனுக்கென்று நாம் கைதனை நீட்டுமுன், தன்பங்கெனப் பெரும் தனங்களைத் தந்தவன். எங்களின் கழகம் ஏற்றமே கொள்ள, என்றுமே உழைத்த இனிய நற்பெருமகன். ஒவ்வொரு கம்பனின் உயர்ந்த நல்விழவிலும், மங்கல விளக்கினை மாண்பொடு ஏற்றி, ஒளிபெறச் செய்த உத்தமப் பெரியோன். உறவாய் எம்மை உளத்தினுள் இருத்திய, நிறைந்த பெருமகன் நிலம் கடந்தனனாம். கண்ணிரோடு கலங்கினோம் நாமெலாம். புண்ணியப் புகழோன் புவிதனை விடுத்து, மண்ணில் சாய்ந்தனன். மருண்டது உள்ளம். பொன்னாய்ப் போற்றி அப்புண்ணியர் தனையே, எண்ணியே உள்ளத்திருத்தி நாம் வாழ்வோம். நல்லார் சின்னத்துரையவர் நாமம், எல்லோர் உளத்திலும் என்றுமே வாழும்!
- கம்பவாரிதி இ. ஜெயராஜ்
28

Page 150
சிவமயம்
இணுவிற் கிராமத்தின் கலங்கரை விளக்கு அணைந்தது
இணுவில் கிராமத்தில் தனவந்தராக, தொழிலதிபராக, கொடை வள்ளலாகப் பெருமை தந்த கலங்கரை விளக்கு அணைந்துவிட்டது. கல்கி நிறுவன அதிபர் சின்னத்துரை ஐயா அவர்கள் அழகிய உயர்ந்த தோற்றம் மெல்லிய குறி வேட்டி, வெண்மைநிறச் சேட்டு அவரது தோற்றப் பொலிவை ரசிக்காதவர்கள் இல்லை. உயர் கல்வி கற்றுப் பட்டங்கள் பெறவில்லை. ஆனால் கல்விமான்கள், அரசியல் வாதிகள் அனைவர் முன்னிலையிலும் தனது ஆளுமை யால் சரியாசனம் இருந்து பெரும்புகழ் பெறும் பேறுபேற்ற வர் இவர். நிறைந்த கடவுள் பக்தி வீட்டு முற்றத்திலேயே ஞானவைரவப் பெருமான் திருக்கோவில் வழிபாடு செய்தே வெளியில் புறப்படுவார். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், இணுவில் கந்தசுவாமி கோவில், கோணடாவில் உப்புமட விநாயகர் திருக்கோவில் வளர்ச் சியில் தன்னை முற்றாக அர்ப்பணித்த இப் பெருந்தகையை மறக்க முடியாது. தனது அருமைச் சகோதரரோடு இணைந்து வாணிபத்தில் வள்ளல் தன்மையிலும் உயர்வு காட்டி வாரி வழங்கியவர். இவரது வாழ்க்கைத் துணை நலமாகிய திருமதி சோதி சின்னத்துரை அம்மா அவர்கள் சிறந்த மனையறத்தின் வேராக நின்று சின்னத்துரை ஐயா அவர்களின் வாழ்வைச் செழுமைப்படுத்தினார்கள். இவர்களது இணுவில் வீடு தெய்வச் சோலையாக விளங்கியது. ஆத்மீக ஞானம் மிக்க யோகர் சுவாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட அமரர் அவர்கள் அஞ்சா நெஞ்சம்
282

படைத்தவர். அவரது வீடு அடையாவாயிலாக எல்லோ ரையும் வரவேற்ற வண்ணமாக இருந்தது. எத்தனை தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர். ஆத்மீகத் தலைவர் கள் யாழ்ப்பாணம் வந்தால் சின்னத்துரை ஐயாவின் அரண்மனை போன்ற வீட்டில் தங்கிச் செல்வார்கள் அத்வைதானந்த சரஸ்வதி சுவாமிகள் முதல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரை பல மாதங்கள் இவர்கள் வீட்டில் தங்கியிருந்தனர். சுத்தானந்த பாரதியார், பூரீபால யோகி, கே.பி. சுந்தராம்பாள், மதுரை சோமு, பாலமுரளிகிருஸ்ணா, ரி.எம். செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள் இன்னும் எத்தனையோ நாதஸ்வர தவில் வித்துவான்கள் சின்னத்துரை ஐயா வீட்டு மனையில் தங்கி விருந்துண்டு மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை. இணுவிலில் முதல் முதல் தொலைபேசி இருந்த வீடு ஐயா வீடு தான். நான் சிறுவனாக இருக்கின்ற போது முதல் முதல் கண்ட வென்ஸ் கார் சின்னத்துரை ஐயாவினுடையது. ஜீப் வண்டியில் அவர் சுற்றி வரும் வேளை சிறுவர்களாகப் பார்த்து ரசித்தவர்களில் நானும் ஒருவன். அவர் வீடு எல்லா வேளையிலும் ஆரவாரமாகவே காட்சி தரும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி எவருடனும் இன்முகத்துடன் பேசும் சின்னத்துரை ஐயா அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் கொழும்பிலேயே தங்கிவிட்டார். ஆனால் அவர் செய்த திருப்பணிகள் அவரை எந் நாளும் ஞாபகப்படுத்திய வண்ணம் இருந்தன.
எங்கள் குல தெய்வமாகிய இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் இராஜகோபுரத் திருப்பணியின் போது அமரர் சீ. அப்பையா அவர்களுக்கும் திரு. அ. இராசநாயகம் அவர்களுக்கும் பெரும் ஒத்துழைப்பு
283

Page 151
வழங்கியவர் அமரர் அவர்கள். பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இணுவில் கந்தசுவாமி கோயில் உலகப் பெரு மஞ்சம் பழுதடைந்து பயனற்றுக் கிடந்தவேளை அதை மீள நிர்மாணம் செய்து ஒட வைத்த பெருமை அமரர் சின்னத்துரை ஐயா அவர்களையே சாரும். ஒவ்வொரு மஞ்சத் திருவிழாவின் போதும் சின்னத்துரை ஐயா அவர்களையும் மஞ்சத்தை உருவாக்கிய சந்நியாசியார் பெருமையோடு இணைந்து பேசத் தவறுவதில்லை.
அரச அதிபராக விளங்கிய ரீமான் ம. சிறீகாந்தா அவர்களது வேண்டுதலுக்கமைய இணுவில் கந்தசுவாமி கோயில் புனருத்தாரணப் பணிகளிலும் நாவலர் பெருமான் ஏற்படுத்திய திருப்பணிகளிலும் பெரும் அக்கறை காட்டிய அமரர் அவர்கள் பேருதவிகளைச் செய்து பேரறிஞர்கள் காட்டுகின்ற வழியில் செயற்பட்டார்.
இணுவில் மக்கள் என்றுமே மறக்க இயலாத பெரும்பணி தனது சொந்த வீட்டை வைத்தியசாலைக்கு அமரர் வழங்கிய பணியாம். அரசாங்க டிஸ்பென்சரி இணுவிலில் வாழும் ஏழை மக்களுக்குப் பிணி தீர்க்கும் நிலையமாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகத் தனது 80ஆவது வயது நினைவுப் பரிசாக இப்பணியை அவர்கள் செய்தமை என்றும் எவராலும் நன்றியோடு போற்றப்பட வேண்டிய விடயமாகும். 23 பரப்பு நிலத்தையும் பின்னர் பெரிய வீட்டையும் இணுவில் வாழ் மக்களுக்காக வழங்கிய ஈரநெஞ்சுடைய இவ் இனிய மனிதரை இணுவில் மக்கள் எளிதில் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு சித்திரை வருடப் பிறப்பின் போதும் சகல கலைஞர்களும் பெருந்தகை வீட்டில் கூடி கைவிசேடமும் பரிசும் பெற்று
284

வாழ்த்திய நாட்கள் இன்றும் கலைஞர்கள் சொல்லி மகிழ்வர். கொக்குவில் இந்துக் கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி என எத்தனை கல்லூரிகளுக்கு ஐயா அவர்கள் அன்று அள்ளிக் கொடுத்தார்கள். கல்லூரி விழாக்களின் போது கல்கி சின்னத்துரையின் நாமம் உச்சரிக்கப்படுகிறது. தலைநகர் கொழும்பிலும் ஐயாவின் தர்மப் பணிகள் தொடர்வதை யான் அறிவேன். கொழும்புத் தமிழ் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம், அகில இலங்கை கம்பன் கழகம், விவேகானந்தசபை யாவும் ஐயாவின் கொடை யைப் புகழ்ந்துரைத்த வண்ணம் உள்ளன. அவரது அருமைப் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் அவர் காட்டிய வழியில் ஊர்ப்பற்றுடன் உதவும் கரங்களாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. முதுமையிலும் செந்தழிப்புக் குறையாத மனிதராகத் தன்பணி தொடர்ந்தவர். 2 மாதங்களுக்கு முன்பு கம்பன் விழாவில் முன் வரிசையில் என்னருகே இருந்து பழைய நினைவுகளை இரைமீட்டதோடு இணுவிலில் வந்து இறுதிக் காலத்தில் இருப்போம் என்றார். ஆனால் இறைவன் அவரைத் திடீரென அழைத்துவிட்டான். அவரது இணுவில் வீட்டில் மீண்டும் மகிழ்வான ஆரவார மும் நிறைவும் தொடர வேண்டுமென வேண்டி அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இணுவில் பரராஜசேகரப் பிள்ளையாரை வேண்டி அமைகிறேன்.
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் இணுவில்
285

Page 152
குருபாதம்
கல்கி என்னும் பெருமலை மறைந்தது
இந்நாட்டிற் கல்கி என்னும் சிறப்புப் பெயருடன் திசையனைத்தும் புகழ்பரப்பி அனைத்து மக்களதும் பெருமதிப்புடன் வாழ்ந்தவர் சிவக்கொழுந்து சின்னத்துரை அவர்கள். வரலாற்றுப் புகழ்பெற்ற இணுவைப் பேரூரிற் புகழ்பெற்ற நற்பெரும் மரபில் தோன்றியவர். இளமையில் உரிய கல்வி அனைத்தும் பெற்றிருந்த இவர் வாணிகம் செய்வார்க்கு வாணிகம் எனத் திருவள்ளுவர் போற்றிய வணிகத் தொழிலை மேற்கொண்டார். தம் முயற்சியினால் இத்துறையில் பெரும் உயர்வுபெற்றார். தமிழகத்திலும் தொடர்புபெற்றுத் தமது தொழிலை வளப்படுத்தினார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் வல்லவரான இவர் வகுத்தலிலும் வல்லவராய் விளங்கினார். எவ்வகை வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் உதவினார். அமைதியும் அடக்கமுமாக இருந்து பெரும்பணிகள் செய்துள்ளார். பெரும் கொடை வள்ளலான இவர் பல பெரும் கல்வி நிலையங்களுக்கும் சமய சமூக தாபனங்களுக்கும் திருத்தலங்களுக்கும் பேருதவிகள் புரிந்துள்ளார். சமய இலக்கிய கலாசார நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அவற்றை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவராய் விளங்கினார்.
தமது தொழில் நிறுவனத்தை இந்நாட்டின் பல , பகுதிகளிலும் நிறுவிய இவர் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக விவசாய அபிவிருத்திப்
286

பணிகளைப் பல பகுதிகளில் மேற்கொண்டார். இவர் சிறந்த பண்பாளர். தம்பிள்ளைகளை உயர்வுபெறச் செய்து பண்பாளர்கள் ஆக்கிப் பெரும் வணிகத் தொழில்களில் ஈடுபடுத்தித் தம்மைப்போல அவர்களும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் உதவுபவர்களாக நெறிப்படுத்தினார். பல அருவிகள் ஊற்றெடுத்து நாற்றிசைகளிலும் செல்ல உதவும் பெரும்மலையாக இந்நாட்டில் விளங்கினார். இப்பெரியார் பெரும் சமயப்பற்று உள்ளவராக விளங்கியது போல் பெரும் தமிழ் மொழிப் பற்றும் உள்ளவர். இந் நாட்டில் தமிழ் வளர்ச்சிப்பெரும்பணிகளுக்காக அமைத்துப் பெரும்புகழ் பெற்று விளங்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் ஆகி இதன் வளர்ச்சிக்கும் பணிகளுக்கும் பெரும் ஆதரவை வழங்கினார். பலமுறை இதன் பெரும்பணிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார். இச்சங்க வளர்ச்சியிற் பெரும் ஆர்வம் கொண்டிருந்த இப்பெரியார் எதிர்பாராவகையில் உலகை நீத்தமை இச் சங்கத்திற்கு மட்டுமன்றி இந்நாட்டின் பெரும்பான்மையான சமய சமூக தாபனங்களுக்கும் பெரும் வேதனை தருவ தாகும்.
இச்சங்கம் இவர் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திப்ப தோடு இவர் மறைவால் வேதனைக்கு ஆளாகியுள்ள இவரது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தமது பெரும் அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
தமிழவேள் இ.க. கந்தசுவாமி
பொதுச்செயலாளர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
287

Page 153
D. சிவமயம்
இரங்கற் செய்தி
‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற அருள்வாக்கின் படி, தோன்றியவர் வள்ளல் கல்கி திரு. சி. சின்னத்துரை அவர்கள். 'கொடைக்குக் கன்னன்’ என்று பாரதத்திற் படித்தோம் இன்றைய இலங்கைத் திருநாட்டிலும் கன்னனாகப் பிறந்த அமரர் சின்னத்துரை அவர்களைப் பார்க்கிறோம். நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே? அப்பேற்பட்ட அவதார புருஷரான நாவலர் பெருமானுக்குச் சிலை உருவாக்கிக் கொழும்பில் இருந்து தேச பவனியாக அவரின் பிறந்த இடமான நல்லூருக்கு எடுத்துச் சென்றவர்கள் ரீலறி ஆறுமுக நாவலர் சபையினர்.
இச்சபையின் தலைவர் மறைந்த நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம், செயலாளர் அமரர் பூரீகாந்தா (C.C.S) நாவலர் சிலைத் தேச பவனிக்கும், யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற நாவலர் மாநாட்டுக்கும் அரும் தொண்டு ஆற்றியவர் அமரர் சின்னத்துரை அவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் செனட்டர் நீதிராசா, யாழ்ப்பாணம் சுபாஸ் கபே சங்கரன் என்போர் இம் மாநாட்டைச் சிறப்பாக நடாத்தத் தமிழகத்தில் இருந்து மதுரை ஆதீனம், பிரபல பாடகி சேலம் ஜெயலட்சுமி, கிளாரினெட் வித்துவான் A.K.C. நடராஜன் போன்றோரை அழைக்க அரும்பாடுபட்டவர்.
அமரர் சின்னத்துரை தமிழகத்திலும் எம் யாழ். மண்ணின் நாதஸ்வர, தவில் வித்துவான்களினதும் அன்பைப் பெற்றவர். அன்னார் பிறந்த மண்ணான இணுவிலிற் பல கலைஞர்களை உருவாக்கிய புகழ் மிக்கவர். இதனால் எனக்கும் அவருக்கும் 50 ஆண்டுகளிற்குமேல் பெரும் நட்பு, பெரும் பாசம் உண்டு. கலைஞர்களின் கலைக் காவலன் அமரர் சின்னத்துரை.
288

சிறந்த தொழில் அதிபர் என் அன்பிற்குரிய அமரர் சின்னத்துரை எங்கள் பல்லாண்டு காலக் குடும்ப நண்பர். 1981/82இல் அடியேன் திருகோணமலை சுங்கக் கலெக்டராகக் கடமையாற்றிய் போது அமரர் சின்னத்துரை மருமகன் சண்முகரத்தினம், குணரத்தினம் ஆகியோர் முதல்த் தரமான புடவைத் தொழிற்சாலையை யாழ்ப்பாணத்தில் திருநெல் வேலியிலும், சாவகச்சேரியிலும் நடாத்தினார்கள். அவர்களின் உற்பத்தி 15 லொறிகளில் ஏற்றிக் கொழும்பு வரும் பொழுது, அனுராதபுரம் பொலிசார் 15 லொறிகளிலும் உள்ள துணிகள் கடத்தற் புடவை என்று தடுத்து விசாரணை நடத்தியபின் உடன் விசாரணை செய்யுமாறு அனுராதபுரம் செல்லும்படி எனக்குப் பிரதம கலெக்டர் கொழும்பில் இருந்து உத்தரவிட்டார்.
அங்கு சென்று விரிவான விசாரணை செய்த பொழுது லொறிச் சாரதி, இவை யாழ். மண்ணின் உற்பத்தி என்றார். உடன் அனுராதபுரம் பொலிசுடன் யாழ். சென்று இதே துணி மெசினில் இருக்கப் பார்த்து உடன் 15 லொறிகளையும் துணிகளையும் மீண்டும் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தேன். இப்படியான தரமான துணிகள் உற்பத்தி பற்றி அமரர் ஆலாலசுந்தரம் M.P. அப்போது பாராளுமன்றத்தில் விமர்சித்தார். இப்படித் திறமையான உற்பத்தி செய்தவர்களான இவர்களைப் பாராட்டியவர் பலர். இவ்வாறாக அமரர் சின்னத்துரை அவர்கள் பெரும் தொழில் அதிபர் என்ற பாராட்டினைப்பெற்றார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர ஆடல் வல்லவரைப் பிரார்த்திப்போமாக!
சாந்தி சாந்தி!
‘யோகா சமஸ்த்தா சுகினோ பவந்து
கே.கே. சுப்பிரமணியம்
2005.08.18
முன்னாள் சுங்கத் திணைக்கள உதவி ஆணையாளரும் அகில இலங்கை இந்து மாமன்றம், ஹிர்லறி ஆறுமுக நாவலர் சபைத் துணைச் செயலாளரும், பரோபகார மணி
289

Page 154
l சிவமயம்
தருமத்தின் தவக்கொழுந்தாயுதித்த சிவக்கொழுந்து சின்னத்துரை
. ஆனைமுக னோடிளைய ஆறுமுகன் பாதம்
அனவரதம் மறவாது அன்பினராய் வாழ்ந்த தேனினிய சிவக்கொழுந்து கனகம்மா தவத்தால்
சேர்ந்து பெற்ற பிள்ளைகளில் சின்னத்துரை ஒருவர் ஞானமுறச் செந்தமிழும் ஆங்கிலமுங் கற்று
நற்குடுபந் தனைப்பேண நல்லவழி யொன்றாய் ஆனவியா பாரப்பணி ஆரம்பித் தேயதனில்
அரும்பயனால் மேன்மேலும் ஆதரவி லுயர்ந்தார்
தாரணியோர் போற்றினுவை சதாசிவத்தின் புதல்வி
தக்கநல்ல சோதிப்பிள்ளை தையலையே மணந்தும் பேரணியாய் யாழ்ப்பாணம் பெரியகடை யொன்றைப்
பெற்றுச்சில் லறைமொத்த வியாபாரஞ் செய்தும் வாரமுடன் விருத்தியுற மேலும்பயன் பெருக
வாய்த்தபெரி யோர்கள் சொல்லால் வல்லகொழும்பதனில் சீருடைய வியாபாரம் சிறப்படைய வதனால்
சிவக்கொழுந்து சின்னத்துரை உவப்படைந்தா ருலகில்
. காணிகொண்டு வீடுகட்டிக் கலாச்சாரம் பேணிக் கற்றவரும் மற்றவரும் கணிப்புடன்பா ராட்ட பேணிப்பல தருமங்கள் பிறங்கிடவே செய்தும்
பேதலித்த ஏழைகளைத் தாழாதுடன் கொடுத்தும் ஆணியெனப் பிள்ளைகளை யருங்கல்வி யூட்டி
அவரவர்க்குத் தக்கபடி அருமணஞ்செய் வித்தும் ஏணியெனக் குடும்பமென்றும் ஏற்றம்பெற வகுத்தும்
எல்லோரும் பாராட்ட இருந்தார் சின்னத் துரையாய்
290

இணுவையூர் மருந்தகத்துக் காகக்காணி யொன்றும்
எல்லோரும் படித்துயர நூலகத்துக் கொன்றும் அணையப்பெருந் தருமஞ்செய்தும் அனைவோரும் புகழ
அருளான கோயிலுறை ஆறுமுகற் காகத் தணியாத வேட்கையினால் மகோற்சவநன் னாளில்
தரணிபுகழ் பெருமஞ்சத் தனித்ததிரு விழாவைப் பணியாக நடந்துவரப் பதித்தொருகட் டளையும்
பண்ணிவைத்தார் உலகத்தினர் பாராட்டத் தானே.
. அரும்மனைவி மக்களுடன் மருகர்மரு கியரும்
அன்பான பேரர்களும் பேர்த்திமா ரன்றி உரிய அவர் துணைவருடன் துணைவிமார் பெற்ற
உள்ளார்ந்த பூட்டன்மார் பூட்டிமார் கண்டும் பெருமைதரும் பிறந்தகமும் புக்ககமும் வாழப்
பேரூரில் ஓங்கிவளர் பிறங்கிடும்கற் பகமாய்த் திருநிறைந்த பழமரமாய்ச் சிறந்து வாழ்ந்திருந்த திருவாளர் சின்னத்துரை திறம்பாட லரிதே.
. கோண்டாவில் முருகேசர் வடிவேலுச் சாமி
கோணாத பெருஞ்சாமி ஈங்கோய் மலையில் ஆண்டாளும் மடமுடைய அத்வைதா னந்தா
அனைவரதும் ஆசிபெற்ற சின்னத்துரை, துரையாய் நீண்டபுக ழோடுசுற்றம் நிலவுலகோ ரெல்லாம்
நினைந்திடவே கொழும்பதனில் நீண்டமாடி வீட்டில் ஆண்டவனின் திருவடியை அடைந்து சாந்தி பெற்றார்.
அவர் ஆத்மா சாந்திபெற அஞ்சலிப்போம் யாமே.
முதுபெரும் Lേ கலாபூஷணம், ஆசிரியர் வை.க. சிற்றம்பலவனார்.
முன்னாள் ஆசிரியர் இணுவில் சை.பி.வித்தி. (இந்து)
2005.08.10
291

Page 155
Staff.
A TRIBUTE TO OUR BOSS
The late mr. S. Sinnathurai (A sparkling Gem among the Industrialists)
Though our most revered boss is no more He'll ever remain etched on our memory A noble gentleman without any flaw in character Will always be a model, worthy of emulation
He was a guiding star to all of us Succour in time of adversities A philanthropist to the needy And a benevolent contributor for charities
Always Softspoken and pleasing in manners He led a life simple and methodical
Neither was he hot- tempered nor vindictive
Instead he maintained a close rapport with us.
Alas! all of a sudden cruel death has Snatched him Leaving a void that cannot be filled His majestic appearance and Pleasing manners Will always linger in out hearts
Farewell Sir Farewell We pray in Unison For your soul's repose In the blessed kingdom of heaven.
S. SNNATHURAI & BROS SSB KALKI ENTERPRISES
KALKSONS
292

குருபாதம்
எங்கள் நினைவில்.
பெரியவர். அன்புக்கு உகந்தவர்.! அறிவிலே சிறந்தவர்.! அறம்பல புரிந்தவர்.! அகமெல்லாம் நிறைந்தவர்.!
வரை புகழ் மேவிட வாழ்விலே ஒளிர்ந்தவர்! அனைவரும் அறிந்தவர்! அவருக்கு நிகர் எவர்?
எந்தைக்கு நண்பனாய் எமக்கெல்லாம் தந்தையாய். எம் வாழ்வும் உயர்ந்திட ஏணியாய் நின்றவர்!
கோயில்கள் கட்டவும் குடமுழுக் காற்றவும் ஆய தம் பங்கு பல்லாயிரம் செய்தவர்!
காலம் கருதியே. கடமைகள் ஆற்றினார்.! ஞாலம் புகழ்ந்திட நற்பெயர் ஈட்டினார்!
உழைப்பால் உயர்ந்தவர்! ஓய்விலா துழைத்தவர்! 'ஊருணி நீர் - பலர் உயர்வுக்கும் வேர் அவர்!
293

Page 156
மனைவியும் மக்களும் மருமக்கள் பேரரும் சுற்றமும் நண்பரும் சுற்றியே அணி செய்ய.
அறுபதும், எழுபதும், எண்பதும் கண்டவர். தொண்ணுாறும், நூறும் கண்டு மகிழ்ந்திட.
இன்னும் சிலகாலம் இங்கிருப்பர் என்றளம் எண்ணமும் பொய்த்ததுவோ..? எழுதி வைத்த விதி இதுவோ..?
மலையும் சாய்ந்ததுவோ..?
அலைகடலும் ஓய்ந்ததுவோ..? விலை மதிப்பில்லாத
மாணிக்கம் மறைந்ததுவோ..?
உறவை மதித்தெம்மோடு உரிமையாய்ப் பழகியவர்! சிரித்து மகிழ்ந்து எங்கள் சிந்தையிலே நிறைந்த அண்ணர்!
பழகும் அன்பினிலே பாசத்தைத் தந்த அவர். வழக்கம் போல் வாழ்த்திடவே வருவாரோ. இனி அவர்?
பெரியவர் ஆன்மா பெறுக சாந்தி!
அவர் பிரிவால் துயருறும் தர்மலிங்கம் சுசீலா குடும்பதார்
960)LuJITO) சென்னை-20
2.94

குருபாதம்
மறைந்தும் மறையாத பெரியார்
நிறைவான பெருவாழ்வு வாழ்ந்தபெரியார்; தனது இளமைப் பருவத்திலிருந்தே கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு, "யாவரிலும் அன்பு காட்டி விடாமுயற்சி யால் உயர்ந்த வள்ளல்; அமரத்துவம் அடைந்தும், எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்ட செயல்வீரர். கடுஞ்சொற் பேசத்தெரியாத பண்பாளர். எவரையும் அன்புடன் உபசரித்துத் தனது புன்னகையால் இன்சொல்லால், சீரிய புத்திமதியால், யாவரையும் வாழ வைத்து இன்பம் கண்டவர். விருத்தோம்பலில் ஒப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்தவர். மற்றையோர் மகிழ்ச்சியில், உயர்வில், ஆனந்தம் அடைந்தவர். எக்கருமத்தையும், நேர காலத்தில் நிறைவாகச் செய்ய, செய்விக்கத் தெரிந்த வல்லமை படைத்த கர்மவீரர். பொதுச்சேவைகளானாலும் சரி, ஆன்மீக தர்ம கைங்கரியங்களானாலும் சரி, எதிலும் தனது பெரும் பங்களிப்பைச் செய்து, பலரின் நன்றியை யும், பாராட்டையும் பெற்ற உத்தமர். இன்னும் சில காலமாவது வாழ்ந்தால் மேலும் பலரின் வாழ்வின் உயர்வுக்கு வித்திட்டிருப்பார். அவரின் செயல்களையும், குணாதிசயங்களையும் எண்ணி எண்ணி இதயக் குமுற லோடும், வேதனையோடும் வாடும் எண்ணற்ற இதயங்கள் எங்கும் உண்டு. அவரது திருமுகத்தை, நினைத்துப் பார்த்தாலே இன்பமும், அமைதியும், சாந்தியும் ஏற்படும். வாழ்க அவரது திருநாமம். அவரது ஆத்மா சாந்தியடைய எமதுபிரார்த்தனைகள்.
295

Page 157
சிவக்கொழுந்து கனகம்மா பெற்றெடுத்த செல்வர் சின்னத்துரையென்னும் திருநாமம் பெற்ற பெரியார் மங்கையர் திலகம் சோதிப்பிள்ளையைத் தாரமாய்க் கொண்டு பாலச்சந்திரன், புவனச்சந்திரன், ஞானச்சந்திரன் சிவமலர், வசந்தமலர், இந்துமலராகிய நன்மக்களையும் சண்முகரத்தினம், கணேந்திரன், சிறீஸ்கந்தராசா-வாசுகி, விமலா, ஜெயந்தி ஆகிய மருமக்களையும் சிவந்தன், சர்மிளா, சிந்துஜா, சசிதரன், சியாமா-கஜன், தர்சிகா, சுபத்திரா, பிரியா, சைலஜா, ரம்யா, செளம்யா, சரண்யா, சகின்யா ஆகிய பேரப்பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளை களாய்ப் பூஜிதா, துவாரகே, மீனாக்சி, கிரன், சந்தோசையும் இறையருளால், நிறைவாகப் பெற்று, மகிழ்ந்து வைய கத்தில் யாவரும் வாழ வழி வகுத்துப் பலருக்கு வழிகாட்டி, அவர் வாழ்வில் பெருமைபெற்று இறுதிவரை எதுவித குறைவுமின்றி நிறைவான பேரானந்தப் பெருவாழ்வு வாழ்ந்து என்றும் அகிலம் போற்றும் பெரியவராய் எவரும் மறக்க முடியாப் பெருந்தலையாய் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட எமது இதய தெய்வத்தின் பெயரும் புகழும் என்றும் நிலைக்கும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
கந்தையா குமாரசாமி
Vancouver CANADA.
296

பெரும் மதிப்புக்குரிய பெரியவர்
எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்தும் மறை யாது எங்கள் மனதில் என்றும் நிலைத்துவிட்ட சின்னத்துரை ஐயா இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டுப் பெரும் அதிர்ச்சியடைந்தோம்.
இறைவனின் அருங்கொடைகளான செல்வத்தையும், செல்வத்திற்கேற்பத் தன்னடக்கம், எளிமை பரோபகாரம் போன்ற சிறப்பான குணங்களால் இணுவையூர் மக்கள் அனைவரது மனங்களிலும் தனியிடம் பிடித்துக்கொண்டவர். ஐயாவின் தாராள மனப்பான்மையால் இரக்க சிந்தனை யால், என்றுமே இல்லை என்னாமல் அள்ளி அள்ளி வாரி வழங்கிய வள்ளல் குணத்தால் இறைவனும் 1950இற்கு முன்பதாகவே பெரும் செல்வத்தை வாரி வழங்கி னார். அன்று தொடங்கிய அவரது கொடைவள்ளற் குணம் இறக்கும் வரையும் அவரிடம் இருந்தது. அதேபோலச் செல்வமும் நிலைத்தே வருவதை நாம் காண்கிறோம்
நமது ஊர் அன்றைய காலங்களில் முன்னேற்றமின் றிக் காணப்பட்டது. கோயில்கள் கூடத் திருத்தம் செய்யப் படாமல் இருந்தது. அக்காலத்திலே கோயில் திருப்பணி கட்குப் பணமாக, பொருளாக எவ்வளவோ உதவிகளை இதுவரை காலமும் செய்து வந்த ஐயாவை ஊர் மக்கள் வாயாரப் புகழ்வது வழக்கம். கல்யாண மண்டபம் ஆரம் பத்தில் அமைப்பதற்குக்கூட ஐயாவே ஆரம்பகர்த்தா ஆவார். பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு மட்டும் அவர் உதவியதில்லை பரந்துபட்ட நோக்கில் உதவியென்று அவரிடம் சென்ற அனைத்துக் கோயில் திருப்பணியாளர்க்கும் உதவிய பெருந்தகை.
297

Page 158
ஒரு தடவை கந்தசுவாமி கோயிலின் திருமஞ்சம் உலகத்துப் ‘பெரும்மஞ்சம்' என்று போற்றப்பட்டாலும் தூசி படிந்து யாராலும் தீண்டப்படாமல் ஒதுக்கப்பட்டு நிற்பதைக் கண்டு மனங்கலங்கினார். அம்மஞ்சத்தைத் தீண்டும் தகுதியும் ஐயாவுக்கே இருந்தது. அந்தளவு பெரிய மஞ்சத்தை இந்த மண்ணில் ஒட வைக்க எவ்வளவு செலவானாலும் அதனை நான் செய்கிறேன் என்று மஞ்சத்தைச் சீரமைத்துக் கொடுத்ததால் இன்று நாம் மட்டுமல்லப் பல மாவட்டத்தவர்களும் வெளிநாட்டவர்களும் கண்டு களிப்புறுகிறார்கள்.
அந்தக்காலத்தில் நாங்கள் திரையரங்குகளில் பார்த்த, கேட்ட பாடகர்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக்களை எங்கள் ஐயா எமக்குச் செய்துதந்தார். சீர்காழி, பித்துக்குளி முருகதாஸ், செளந்தரராஜன், சுந்தராம்பாள் போன்றோரை நேரில் காணும் வாய்ப்பும் சில சமயம் எமது பரராஜ சேகரப்பிள்ளையார் கோயிலில் கச்சேரி பார்க்கவும் வாய்ப்புக்கள் கிடைத்தது. வீதிகள் புனரமைப்புகளும் செய்வது வழக்கம்.
இவைதவிர ஒவ்வொரு வருடமும் வருஷப் பிறப்புக்கு ஐயாவின் வீட்டுக்கு இன்னிசைக் குழுவினர் வந்து இன்னிசை விருந்துடன் பைலா ஆட்டமும் ஆடிப் பெரிய வரையும் ஊரவரையும் மகிழ்வித்துப் பெரியவரிடம் பரிசில்களும் பெற்றுச் செல்வது வழக்கம்.
நமது ஊர் பின்தங்கிய நிலையில் இருந்த ஊர்; இப்போ கல்வியாலும், செல்வத்தாலும் ஆன்மீகத் துறை யிலும் யாழ்ப்பாணத்தில் தனியான இடம் வகிப்பதற்குக் கூடக் காரணகர்த்தா சின்னத்துரை ஐயாதான்.
298

நமது ஊர் மக்கள் நோய் வாய்ப்பட்டால் தூர இடங்க ளுக்கு அலையாமல் நமது ஊரிலேயே வைத்தியம் செய்ய வைத்தியசாலையை நிறுவினார். அதற்காகவே பத்துப் பரப்புக்கு மேற்பட்ட காணியையும் கட்டடவசதியையும் ஏற்படுத்திக் கொடுத்ததை இணுவில் வாழ் மக்கள் மட்டு மல்லத் தாவடி, சுதுமலை, உடுவில், கொக்குவில், கோண்டா வில் எனப் பல ஊரவரும் நன்மைபெற்று வருகிறார்கள்.
இவைதவிர ஊரில் உள்ள ஏழை எளியவர்க்கும் என்றுமே உதவிவந்த வள்ளலை நாம் எப்படி மறப்போம். எனது சகோதரன் அருட்செல்வத்தைக் கூட 1970ஆம் அண்டுகளிலேயே நல்லூர் கோயிலுக்குத் தனது சொந்தக் காரில் தானே அழைத்து வந்து கோயில் திருவிழா காட்டி மகிழ்ந்ததை எனது ஐயா நினைவுகூர்ந்து பல தடவை கூறினார்கள். அண்மையில் 2004இல் எனது சகோதரர் அருட்செல்வம் அண்ணையைத் தன்னிடம் வரும்படி அன்பான கட்டளையிட்டார். அதன்படி அவரிடம் சென்ற அண்ணைக்குச் செல்வச்சந்நிதிக்கான நிதியைக் கொடுத்து உதவினார்.
அந்தக் காலத்தில்தான் இந்துவிடம் சென்றபோது என்னைச் சிறியசிறுமியாக எண்ணாமல் ஒரு பிரமுகரை வரவேற்பது போல் வரவேற்றுத் தேநீர், சிற்றுண்டி அளித் தார். யாவராலும் போற்றப்படும் இந்தப் பெரியவரை நேரில் காண்பதே பெரும்பாக்கியம் என்று எண்ணிய எனக்கு நேரில் அவர் வரவேற்க உடல் நடுநடுங்க உள்ளே சென்று சிற்றுண்டி தேநீர் அருந்தி வந்தேன். "மாஸ்ரரின் மகள்’ என்றே என்னைப் பாராட்டி அழைத்தார்.
எமது ஊரில் வண்டில்களையும், சயிக்கிள்களையும் கண்ட கண்களுக்குச் சின்னத்துரை ஐயாவின் விதவிதமான
299

Page 159
வெளிநாட்டுக்கார்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. பல மாவட்டத்து வர்த்தகப் பிரமுகர்களும் வருகைதரும் இல்லமாக ஐயாவின் வீடு மாறியது. அரசியல் பிரமுகர்கள், பாடகர்கள் ஆன்மீகவாதிகள், பல கல்விமான்கள், யாவரையும் காண வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறு ஆரம்பித்த தொடர்பே பின்னாளில் இணுவையம்பதியின் பெயர் ஊர் உலகெங்கும் சிறப்புப் பெறக் காரணமாயிற்று.
அன்று கண்ட பெரியவரை நாம் பின்பு எங்கேயும் கண்டதுமில்லைக் காண வாய்ப்புக் கிடைத்ததுமில்லை. பின்பு துரதிஸ்டவசமாக 22.07.05 தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் மரண அறிவித்தலில் புகைப்பட மாகப் பார்த்தோம். மிகுந்த வேதனை.
எம் ஊரவர் பெரியவருக்கு, அவர் ஆற்றிய சேவைக்கு ஒரு பாராட்டு விழா நடாத்தவில்லையே என்று கவலை. ஆனாலும் அதற்குப் பெரியவர் தற்புகழ்ச்சி விரும்பவும் மாட்டார். பெரியவரின் பிள்ளைகளோ அல்லது நெருங்கிய உறவினரோ மரணவீட்டையும் இங்கே கொண்டாடி யிருந்தால் பல் பாடசாலைகள், கோயில் தர்மகர்த்தா சபையினர், பொது நிறுவனத்தினர் யாவருமே தமது கவலைகளை, வேதனைகளை, கண்ணிரைக் காணிக்கை செலுத்தவும் மனதைத் தேற்றவும் முடிந்திருக்கும். யாரும் அச்சமயம் இல்லாததால் கொண்டாடவில்லை. பெரியவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
பொன்னுத்துரை வாத்தியார் குடும்பம்
(சி. அருட்செல்வி)
300

s dishul Dujib
பெரியவர்
என்னை, யாழ்பப்ாணம் K.K.S. வீதியில் உள்ள S. சின்னத்துரை & BIOS நிறுவனத்தில் 24 ஆண்டுகளுக்கு முன் அமரர் பெரியவர் முன் அறிமுகமாக்கியவர் காலஞ்சென்ற உயர் நீதிமன்றப் பிரதம நீதியரசர் திரு. பாலகிட்ணரின் மனைவி திருமதி லட்சுமி பாலகிட்ணர்,
அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற பல பிரச்சினை களாலும் பாதிக்கப்பட்ட நாங்கள் கொழும்பிற்கு வந்தவுடன் அன்றே கொழும்பில் உள்ள தனது பிரதான அலுவல கத்தில் எனக்கு வேலை தந்து இன்று எங்களைக் கொழும்பில் சொந்த இடத்தில், நிரந்தரமாக இருப்பதற்குப் பல வழிகளாலும், வழிகாட்டி உதவி புரிந்த என் அன்புத் தந்தையைப் போன்ற பெரியவரை இழந்தது எமக்குப் பேரிழப்பாகும்.
தனது வேலைகள், நோய்கள், தேவைகள் அவரது தனிப்பட்ட கணக்குகள் எல்லாம் தனது சொந்தப் பிள்ளை யிடம் கூறுவது போல என்னிடம் சொல்லுவார்.
எனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றங்களை மிகவும் அக்கறையுடன் விசாரிப்பார். எனக்கு மட்டுமின்றி, எமது ஸ்தாபனத்தில் பணிபுரிந்த பலருக்கும் அவர் பல வழிகளில் உதவிபுரிந்தவர்.
கடந்த மே மாதம் 14ம் திகதி அவரது 85வது, பிறந்த தினத்தை எமது அலுவலகத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினோம். அப்போது அவர் என்னிடம் கூறினார்
301

Page 160
இனி வரும் எனது பிறந்த தினத்தை நீங்கள் தான் ஞாபகம் வைத்து அலுவலகத்தில் செய்யவேண்டுமென்று. அதுவே அவரது கடைசிப் பிறந்த தினமாக முடிந்தது.
எமது அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் பாகுபாடின்றி அன்புடன் உபசரிப்பார். காலையில் நான் அலுவலகம் வந்தவுடன் என் முன்னிருந்து அரசியல், விலைவாசி, கணக்குகள் கேட்பதை என்னால் என்றுமே மறக்க முடியாது. இப்போதும் நான் காலையில் அலு வலகம் வரும்போது அவர் எனக்கு முன்பு வந்து என்னை எதிர்பார்த்து இருப்பது போலவே இருக்கும். அவர் எங்களை விட்டுச்செல்லவில்லை. செல்லவும் மாட்டார். எப்போதும் எங்களுடன் துணையாய் இருந்து எங்க ளுக்குத் துணை புரிவார் என நம்புகிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கமலா கணபதிப்பிள்ளை
18C, Pallidora Road, Dehiwela.
N
r நாளைக்கு என்ன என்ன தேவையென்பதைப் பற்றி ஆலோசியாமல்
இருத்தல் வேண்டும். மகாத்ம்ா காந்தியின் பின்வரும் சிறப்புக்களைப் பற்றிப் புகழ்தல்
(அ) பற்றின்றிக் கருமம் செய்தல்
(ஆ) பயமின்மை
(இ) தன்னையடக்கியாளல் காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின்றது. அதபோல் எல்லோரும் நல்லவர்கள்தான்.
- யோகர் சுவாமிகள்
302

உழைப்பிலும் உயர்விலும் கலந்த இனிய தொடர்பு
கடந்த அறுபத்தைந்தாண்டுகள் ஏற்பட்ட இனிய தொடர்பின் நாயகன், மதிப்பார்ந்த பெரியவர் திரு.சி. சின்னத்துரை ஐயா அவர்களின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. மிக இளம் வயதிலேயே வாணிபத்தில் உயர்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கிய பெரியாரின் நினைவுகளை மீள நினைந்து பார்க்கிறேன். எனது தந்தையார் அமரர் சங்கரப்பிள்ளை அவர்களோடு வாலிப வயதில் வியாபாரத் தொடர்பினால் உருவான நட்பு நீண்டு வளர்ந்தது. புன்னாலைக்கட்டுவன் செம்மண்ணும் இணுவிற் செம்மண்ணும் செழிப்பில் ஒப்பானவை போல் எமது வளவும் ஒப்பாகியது. 1970களில் எங்கள் மகள் வாசுகியின் திருமண உறவால் ஒரே குடும்பமானோம். அமரர் சின்னத்துரை ஐயா அவர்களிடம் நேரக் கட்டுப்பாடு, நிதானமாகக் காரியம் ஆற்றுவது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை யான் கண்டு பெருமைப்பட்டதுண்டு. கோவில் வழிபாட்டுக்கு என்றும் முதன்மை கொடுப்பார். விருந்தோம்பலில் அவருக்கு நிகர் அவரே. இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி பெரியவர்களோடு நட்புக் கொண்டு மிகுந்த செல்வாக்குடைய பிரமுகராக வாழ்ந்தார். இளையவர்கள் அவரிடம் கற்பதற்கு நிறைய விடயமுண்டு. சுறுசுறுப்பும் ஒவ்வொரு விடயத்திலும் உன்னிப்பான அக்கறையும் கொண்ட நிர்வாகியாக அவர் இறக்கும் வரை விளங்கினார். எத்தனையோ மக்களுக்குத் தொழில் வழிகாட்டியாக விளங்கிய அன்னாரின் பிரிவால் நல்ல வழிகாட்டியை இழந்து தவிக்கிறேன். இனிய உறவைப் பிரிந்து கலங்குகிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல ஆயக்கடவை விநாயகர் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
S. இராசரத்தினம் (SR) புன்னாலைக் கட்டுவன் தொழிலதிபர் கொழும்பு S.R. நிறுவனம்.
303

Page 161
சண்முகம் + சிவகாமி அம்மை
சிவசம்பு சிவக்கொழுந்து கனகரத்தினம் சுந்தரம்பிள்ளை சபாரத்தினம்
T மயில்வாகனம் சின்னத்துரை சிவஞானம் மகேஸ்வரி
பாலச்சந்திரன் புவனச்சந்திரன் சிவமலர்
| சிவந்தன் ஷர்மிளா சிந்துஜா باطل۔ சசிதரன் வழியாமா வித்யா கிருப்ரன் ரஜித்மேந்திர ഡ്ജ് சியாள سله பக் േ ܘܝܘܬܣ
துவாரகேஷ்
304

வம்சாவளி
é6i6oo6aTusT + Jenštátyp
செல்லத்துரை தம்பித்துரை சதாசிவம் + வள்ளிப்பிள்ளை
- தங்கம்மா கணபதிப்பிள்ள்ை இராசமணி ordhon
. வசந்தமலர் இந்துமலர் ஞானச்சந்திரன்
-- + -- கணேந்திரன் ரீஸ்கந்தராஜா తాజీ
கஜன் தர்ஷிகா பிரியா சைலஜா ரம்யா செளமிய சரண்யா சாகின்யா
305

Page 162
சிவமயம்
நன்றி
எங்கள் அன்புத் தெய்வம் அருமைத் தந்தைஅவர்களின் இறுதிக் கிரியைகளிற் கலந்து எங்கள் துன்பத்திற் பங்கு கொண்டவர்களுக்கு இறுதிக் கிரியைகள் ஒழுங்காக நடைபெற உதவிய வர்களுக்கு, இரங்கற் செய்திகளைத் தொலைபேசி மூலம் தந்தி மூலம் அஞ்சல்மூலம் நேரில் தெரிவித்தவர்களுக்கு, மலர், மாலை, மலர்வளையம் என்பவற்றுடனாகி அஞ்சலி செலுத்தியோர்க்கு, அந்தி'ே n சார்பான கிரியைகளிற் கலந்து கொண் டோரு” அமரரின் ஆத்மசாந்தியை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற மதிய போசனை விருந்திற் கலந்து கொண்ட்வர்களுக்கு எமது உளமார்ந்த நன்றி.
மனைவி
சி. சோதிப்பிள்ளை
மக்கள் மருமக்கள் பாலச்சந்திரன் வாசுகி புவனச்சந்திரன் விமலாதேவி சிவமலர் சண்முகரத்தினம் வசந்தமலர் கணேந்திரன் இந்துமலர் ழரீஸ்கந்தராஜா ஞானச்சந்திரன் ஜெயந்தி
27/2, 5வது லேன்,கொள்ளுப்பிட்டி, “ጋ‛ስ ..‛ ' , 8 -' கொழும்பு - 03. 3t 71 (BLT 6 2573627
306


Page 163

வாமி EEE