கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவராஜ சாதனை

Page 1


Page 2

சிவராஜ சாதனை
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் 60வது அகவை நிறைவையொட்டிய ஒரு சமர்ப்பண மலர்
விழாக்குழு கொழும்பு 2OO6

Page 3
தலைப்பு :
வெளியீடு :
அச்சு
சிவராஜ சாதனை : பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் 60வது அகவை நிறைவையொட்டிய ஒரு சமர்ப்பண மலர்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா பாராட்டு விழாக்குழு
24/3, 1/1, பிராங்க்பேர்ட் பிளேஸ் கொழும்பு - 04 தொலைபேசி : 259 4204
குமரன் அச்சகம்
361 1/2, டாம் வீதி, கொழும்பு - 12

உள்ளே.
அறிமுகம்
வாழ்த்துச் செய்திகள்
i. Prof. Y. Ranjith Amarasinghe
ii. Prof. (Mrs). Kamala Liyaneke
i. பேராசிரியர் கா. சிவத்தம்பி
iv. பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
V. பேராசிரியர் எஸ். பத்மநாதன்
wi. பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் கல்வி வாழ்க்கை
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் எழுத்துக்கள்
і. கட்டுரைகள் - தமிழ்
i. நூல்கள் - தமிழ்
i. கட்டுரைகள் - ஆங்கிலம்
iv. * நூல்கள் - ஆங்கிலம்
புகைப்படங்கள்

Page 4

அறிமுகம்
பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞஞான துறைப் பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அவர்களின் "உயர் தர அரசியல்" என்ற நூலை வெளியிடுவதுடன் அவரின் அறுபது அகவைப் பாராட்டு விழாவையும் நடாத்துவதில் விழாக்குழு மகிழ்ச்சியடைகிறது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மாணவனான இவர் துணைப்பாடமாக அரசியல் விஞ்ஞானத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார். காலஞ்சென்ற பேராசிரியர் A.J.வில்சனின் நல்லபிப்பிராயத்துக்குரிய அரசியல் விஞ்ஞான மாணவனாகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே முதுகலைமாணி, கலாநிதி தேர்வுகளில் தேறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவராகவும் துலங்கியவர். அரசியல் பாட தமிழ்மொழி மாணவர்களின் தேவை கருதி க.பொ.த. (உயர்தரம்) தொடக்கம் முதுகலைமாணி வரையுள்ள மாணவர்களுக்காக அவர்களின் கலைத்திட்டத்திற்கு பொருத்தமான பத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளவர். ஆங்கில மொழி மூலமும் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளார். கனடா, அமெரிக்கா, இந்தியா போன்ற இடங்களில் பல ஆய்வுக்கட்டுரைகள் இவரால் வாசிக்கப்பட்டன. தமிழ் மொழியில் சிறுகதைகளும் பல எழுதியுள்ளதுடன், தமிழ் மொழி சார்ந்த பல கட்டுரைகளை எழுதி தமிழ் மொழி இலக்கிய புலமையையும் வெளிப்படுத்தியுள்ளார். தென் கிழக்குப்பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை ஆலோசகராகவும், தேசிய கல்வி நிறுவக மதியுரைச்சபை உறுப்பினராகவும் விளங்கும் இவர் பாண்டிச்சேரி உட்பட்ட பல இந்தியப் பல்கலைக்கழகங்களின் சிறப்பு வருகை தரு விரிவுரையாளராகவும், ஆய்வுநூல் ஆலோசகராகவும் திகழ்பவர்.
தனது நேர்மையான நடத்தையாலும், பக்கச் சார்பற்ற கற்பித்தல் நுட்பங்களாலும் இன்று இலங்கையிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களின் அரசியல் விஞ்ஞான ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் உள்ளங் கவர் பேராசானாக புகழ்பரப்பி நிற்கின்றார்.
அன்பான மனைவி, அறிவான பிள்ளைகள், நெஞ்சான விரும்பும் உலகம் பரந்த மாணவர்களைத் தன் சொத்தாகக் கொண்ட பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா, நூறாண்டு நோய் நொடிகளற்று வாழ வாழ்த்துகின்றோம். ;
விழாக்குழுவினர்

Page 5
MESSAGE FROM DEAN, FACULTY OF ARTS UNIVERSITY OF PERADNYA
Congratulations, Prof Sivarajah,
It is with great happiness that I write these few words on the occasion of felicitating Prof. Ambalavanar Sivarajah by his students, colleagues, friends and other well wishers.
I am very happy to note that I have had a long association with Prof Sivarajah for a period over thirty years in a variety of capacities. Prof Sivarajah had his undergraduate education under our respected teacher and senior colleague, Prof. A.Jeyaratnam Wilson and was recruited to the academic staff. He completed his Masters Degree at New Brunswick, Canada and returned to his teaching duties. For a long time Prof Sivarajah handled the responsibility of teaching Political Science in Tamil medium almost single handedly. Today it is mostly his students who carry that responsibility. After a spell of research with Prof. Urmila Phadnis at the JNU Prof Sivarajah completed his doctoral degree and continues to this day as a senior teacher in the Department of Political Science at Peradeniya. On the basis of his research and publications he was promoted as a professor in the department of political science. For a time he also headed the departnennt.
I also had a fruitful association with Prof Sivarajah as a fellow researcher in one of the research groups that we formed with some other colleagues. This led to the publication of two books which continue to be useful readers on the subject of security in Sri Lanka in the context of South Asia. Prof Sivarajah's own publications, in English as well as in Tamil are too numerous to mention. He has authored research works on Tamil Nationalism, US-Sri Lanka relations and contributed extensively learned papers on a range of subjects in the broad area of political science. Prof Sivarajah is widely consulted for his expertise in his subject area and much sought after for presentations at professional gatherings. In spite of the distance and the traveling diffi

culties, Prof Sivarajah in his keenness, never misses a seminar or a conference held in Colombo in his subject area.
As a senior member of the Faculty of Arts Prof Sivarajah actively participates in a variety of Faculty as well as in outside faculty activities. He served a number of years as a senior student counselor and has involved himself in student welfare work as well as in work related to the teachers' trade union.
I am glad Prof Sivarajah has many more years to serve his university, his students and our country. On the occasion of his sixtieth year celebrations I take this opportunity to wish him long years of excellent health and productive academic pursuits.
PROF. Y. RANJITH AMARASINGHE
Dean
Faculty of Arts
University of Peradeniya

Page 6
MESSAGE FROM HEAD, DEPARTMENT OF POLITICAL SCIENCE UNIVERSITY OF PERADINYA
It is with great pleasure that I extend heartiest congratulations and best wishes to Prof. A Sivaraja on this occasion.
This felicitation volume is being published in acknowledgement of the services rendered by Prof Sivaraja as a teacher, researcher and a writer this is a token of our immense admiration and gratitude for his Contributions to the advancement of the field of political science for last three decades.
Prof. Sivaraja was associated with the Department of Political Science, from the early 1970's as a teacher and researcher and made a valuable contribution to its progress. His major contribution as a scholar has undoubtedly been in the field of International Relations. Apart from his research Prof. Sivaraja disseminate his extensive knowledge of the subject not only through his lectures in the University of Peradeniya and elsewhere during a period of three decades.
During this period Prof. Sivaraja has proved himself as a dedicated teacher accomplished scholar and a charm and friendly colleague. Having known him for over three decades, when as a young assistant lecturer he supervised our year end examinations in the University of Peradiniya, I know him best for his compassionate heart and for the spontaneity of his friendship.
Prof Sivaraja, I expect will continue in his academic persuits for many more years to came. I take this opportunity on behalf of the Department of Political Science, University of Peradeniya to wish Professor Sivaraja and his wife Luxmi, long life, good health and happi
CSS.
PROF. (MRS) KAMALALIYANEKE Head
Department of Political Science University of Peradiniya

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வாழ்த்துரை
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அவர்களுக்கு அவரது அறுபதாவது ஆண்டு நிறைவின் பொழுது எடுக்கப் பெறும் இவ்விழா நமது புலமைப் பண்பாட்டினுள் மறைந்து கிடக்கும் ஒரு முக்கிய விடயத்தை மிகுந்த வலுவுடன் வற்புறுத்துகின்றது.
அம்பலவாணர் சிவராசா அரசறிவியல் துறையில் தொழிற்பட்டு வந்துள்ளவர், கடந்த இருபத்தைந்து முப்பது வருட காலமாக அரசறி. வியலை தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு அவர் கற்பித்த முறைமையின் புலமைச் செழுமை காரணமாக அவரிடம் பாடங்கேட்கும் பேற்றினைப் பெற்றிருந்த மாணவர்கள், இந்த விழாவினை ஒழுங்கு செய்துள்ளனர். ஒரு புலமையாளன் என்ற வகையில் சிவராசா அவர்களது ஆளுமையில் இத்தகைய விழாக்கள், வைபவங்கள் பற்றிய ஈடுபாடுகளை அவர் என்றுமே காட்டியதில்லை என்று நம்புகின்றேன். உண்மையில் அவர், அரசறிவியல் துறையின் தமிழ்மொழி வழிப் பேராசிரியர் என்ற தமது அந்தஸ்தினைப் பெரிதும் வளர்த்துக் கொள்ளாதவர் என்ற மனக்குறைபாடே மாணவர்கள் மத்தியில் நிலவி வந்துள்ளது எனலாம். ஆனால் பழத்தின் இனிப்பு ருசித்தவர்களுக்குத்தான் தெரியும். அம்பலவாணர் சிவராசா என்ற தன்னை அதிகம் கட்டிவளர்த்துக் கொள்ளாத ஒரு பேராசியருக்குத் தங்கள் நன்றியை மறைக்க மறக்க முடியாத மாணவர்கள் இந்த விழாவை நடத்துகின்றனர். இது தனிமனிதன் என்கின்ற வகையிலும் ஆசிரியன் என்கின்ற வகையிலும் அவருக்குக் கிட்டியுள்ள மதிப்பார்ந்த கெளரவமாகும்.
நண்பர் சிவராசா அவர்கள் தம்மிடத்துள்ள திறமைக்கும் நுண்ணறிவுக்கும் ஏற்ற அளவுக்கு புலமை வெளியீடுகளைக் கொண்டு வரவில்லை என்பது உண்மையென்றாலும் உள்ள அவரது எழுத்துக்களில் சிந்தனை ஆழமும், புலமைத் தெளிவும் காணப்படுகின்றன. மிகவும் நுட்பமான ஆய்வுகளைச் செவ்வையான முறையில் செய்துள்ளார். அவரது அந்த உயர்நிலைப்புலமை ஆக்கங்கள் தொகுக்கப்படல் அவசியம்.
நண்பர் சிவராசாவிடத்து நான்கண்டு சிலிர்க்கும் உன்னத பண்பு அவரது அறிவுப் பணிவுடைமையாகும். இந்த வளம் எல்லோருக்கும்

Page 7
கைவரக்கூடிய ஒன்றல்ல. ஒரு வகையில் நண்பர் சிவராசா தன் புகழின் ஆழ அகலங்கள் தெரியாதவர். அந்தப் பணிவினுரடேயே சிவராசா என்ற மனிதன் புலமைத் திறனுடைய ஒரு மாமனிதனாக என் கண்முன் நிற்கின்றார். அறுபது வயது பூர்த்தியாகின்ற புலமை விருட்சத்தினின்று கனிந்து பழுத்த ஆய்வுகளையும், படைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன். அவர் வாழ்க, அவர் புகழ் வளர்க, s
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப்பேராசிரியர்
யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர் சி. தில்லைநாதனின் வாழ்த்துரை
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அவர்கள் அறுபதுகளின் பிற்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்துள் நுழைந்தவர்; பொருளியலைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர்; அரசியல் விஞ்ஞானத்தையும் துறைதோய்ந்த ஆசிரியர்களிடம் கற்றுப் பின்னர் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக இணைந்தவர். தனது முதுகலைமாணிப் பட்டத்தை கனடாவிலும், கலாநிதிப் பட்டத்தைப் பேராதனையிலும் நிறைவு செய்தவர்; டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுநிகழ்த்தியவர், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியல் விஞ்ஞானத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் சிறந்த ஆளுமையுடையவராக விளங்கியவர். ið
அதுபோலவே ஆய்வறிவுத் துறையிலும் அவர் கணிப்பிடக்கூடிய பங்களிப்பைச் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அவர் மாணவர்களுடன், மாணவர் சங்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர். குறிஞ்சிக் குமரன் ஆலயத்துடன் அவருக்கு ஈடுபாடு இருந்தது. பல நாடுகளுக்கும் அவர் புலமைப்பரிசில் பெற்றுச் சென்று ஆய்வுகளும், உரைகளும் நிகழ்த்தியுள்ளார். மாணவர்கள் நலன் கருதி பல நூல்களையும் எழுதியுள்ளார். அவரை அவரது மாணவர்களும், நண்பர்களும் கெளரவித்து விழா எடுப்பது பாராட்டுக்குரியது. பேராசிரியர் அம்பலவாணர் சிவராசாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
பேராசிரியர் தில்லைநாதன்
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 8
பேராசிரியர் சி.பத்மநாதனின் வாழ்த்துரை
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே மாணவராக இருந்தகாலம் முதல் எனக்கு அறிமுகமானவர். காலப்போக்கில் எமக்கிடையில் உள்ள உறவுகள் மிகவும் நெருக்கமடைந்தன. அவருடைய சில குணநலன்களும் தகைமைகளும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. தனிப்பட்ட முறையிலும் சமூக விடயங்களிலும்அவர் நேர்மையை உறுதியாக கடைப்பிடிக்கும் பாங்குடையவர். தமிழ் மொழியிலும் தமிழர் சமுதாயத்திலும் மிகுந்த பற்றுக் கொண்டவர் அதன் காரணமாக அந்நாட்களில் தமிழரசுக் கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திற்கு வரும் தமிழ்மாணவர்கள் அச்சத்தின் காரணமாக ஒரு இரட்டைவேடம் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டனர். தங்களுடைய ஊர்களில் ஒருவிதமாகவும், பல்கலைக்கழகத்திலே வேறுவிதமாகவும் அரசியல் சம்பந்தமாக பேசிக் கொள்ளப் பழகிக் கொண்டனர். இது யாழ்ப்பாணத் தமிழர்களுக்குரிய குணாதிசயம் என்றும், ஆறுமுகநாவலரின் ஆசிரியரும் மெதடிஸ்மிஷன் சபையின் அதிமேதையுமாகிய பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் கருத்து என்றும் கூறுவார்கள். இந்தப் பண்பிற்கு விதிவிலக்காக நடந்துகொள்பவர்கள் மிகச் சிலர். அவர்களில் சிவராசா குறிப்பிடத்தக்கவர்.
அரசியல் துறையில் கல்வி கற்றதனால் சுதந்திர இலங்கையின் பிரச்சினைகளை அவரால் இளமைக் காலத்திலேயே தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் இளமைக் காலத்தில் தமிழ் மொழியில் ஒரு முன்னணிப் பேச்சாளராக பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியிலும் விளங்கினார். அவருடைய மொழி ஆட்சி போதனா சக்திக்கு வலுவூட்டியது. அதனால் கவரப்பட்டு பல மாணவர்கள் அரசியலை ஒரு பாடமாகப் பயின்றார்கள்.
தமிழ் மொழி மூலம் பல்கலைக்கழகத்திலே பயின்ற தமிழர்களில் அநேகமானோர் ஆங்கில மொழியில் போதிய பயற்சி பெறத் தவறிவிட்டனர். ஆனால் சிவராசா இளமைக்காலம் முதலாக ஆங்கில மொழியில் பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார். பல்கலைகழக மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்கு

களிலும் மாநாடுகளிலும் கலந்து கட்டுரை சமர்ப்பிக்கும் தகுதியினையும் துணிவினையும் பெற்றார்.
எந்தச்சபையிலும் எதுவித அச்சமுமின்றி தனது கருத்துக்களை முன்வைக்கும் தகுதியும் மனப்பாங்கும் அவருடைய சிறந்த குணாதிசயங்களில் ஒன்றாகும். ஆங்கிலமொழியிலும், தமிழ் மொழியிலும் பல பயனுள்ள நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றி அரசியல் ரீதியாக ஆராய்ந்து பலதரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளமை அவரது மற்றுமொரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அவரது சாதனைகளைப் பாராட்டி மேலும் பல்லாண்டு நற்பணிகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துவதிலே பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.
பேராசிரியர்சியத்மநாதன்
வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 9
பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் வாழ்த்துரை
பேராசிரியர் அ.சிவராஜா அவர்களைப் பாராட்டு முகமாக வெளியிடப்படும் இச்சஞ்சிகையில் அவருடைய பணிகளைப் பற்றி சில வார்த்தைகள் எழுதுவதற்குக் கிடைத்த இவ்வாய்ப்பினையிட்டுப் பெருமகிழ்வடைகின்றேன்.
எனது நோக்கில், முறைப்படி அரசறிவியலைப் பயின்று அத்துறையில் உயர்பட்டங்களைப் பெற்று ஏராளமான ஆய்வுகளைச் செய்து பணியாற்றிவரும் ஒரே தமிழ் அறிஞர் பேராசிரியர் சிவராஜா அவர்களாவர். இவ்வகையில் அரசறிவியல் துறையில் தமிழ் சமூகத்தில் ஒரு அறிஞர் தட்டுப்பாடு நிலவுவதையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். பேராசிரியர் அவர்களைத் தவிர்த்து நோக்குமிடத்து இரண்டாமவர் ஒருவரை இனங்காண முடியாதிருப்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.
பேராசிரியர் அவர்களை இளமை முதல் நான் நன்கு அறிவேன். இளம் விரிவுரையாளராக அவர் நியமனம் பெற்ற அன்று அவரைப் பாராட்டிய முதலாவதுநபர்நான் என்பதிலும் எனக்கு ஒரு பெருமை உண்டு. அவர் சார்ந்த துறையில் அவர் வல்லவர் என்பதோடு அவர் ஒரு நல்லவரும் கூட. எனது பார்வையில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிஞராக மட்டுமன்றி, ஆய்வாளராக மட்டுமன்றி மனிதநேயமுள்ளவராக, நட்புப்பாங்குடன் திகழ வேண்டும். சமூகத் தொடர்பு அறிஞர்களுக்கு முக்கியமானது. சமூக மேம்பாடுபற்றிச் சிந்திப்பதும் உழைப்பதும் மூன்றாம் உலக பல்கலைக்கழக அறிஞர்களின் பிரதான பணி என்பது எமது தாழ்மையான கருத்து. இக்கருத்துக்கு ஏற்பப் பணியாற்றி வருபவர் என்ற முறையில் பேராசிரியரிடம் எனக்குத் தனியான ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னோடு அவருக்குப் புலமை சார்ந்த தொடர்போடு ஒரு சகோதரப் பான்மையான தொடர்பும் உண்டு என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
பேராசிரியரின் அரசறிவியல் ஆய்வுப் பணி மேலும் தொடர வேண்டும்; சிறக்க வேண்டும் என்பதே எமது அவாவும் நம்பிக்கையும்.
சோ. சந்திரசேகரன் பேராசிரியர், கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் கல்வி வாழ்க்கை
பேராசிரியர் அ.சிவராஜாவின் கல்வி வாழ்க்கை இப்போது நாவற்குழி மகாவித்தியாலயம் என அழைக்கப்படும் அப்போதைய தமிழ்க் கலவன் பாடசாலையில் 1949இல் தான் ஆரம்பமாகியது. "விழையும் பயிரை முளையிலே தெரியும்" என்ற முதுமொழிக்கேற்ப ஆண்டு ஒன்றிலிருந்து ஐந்துவரையும் அங்கு கற்றபோது கல்வி, விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார். கல்விப் பெறுபேறுகளில் நான்கு முதல் மாணவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
மதிநுட்பம் மிகுந்த இவரது தாயார் தனது மகனுக்கு ஆங்கிலத்தில் கல்வி புகட்ட விரும்பி அப்போதும் இப்போதும் ஆங்கிலக் கல்விக்குப் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் இருக்கும் பரியோவான் கல்லூரியில் ஆண்டு ஆறில் சிறுவன் சிவராஜாவைச் சேர்ப்பதில் வெற்றி பெற்றார். 1954இல் ஆறாம் ஆண்டில் யாழ் பரியோவான் கல்லூரியில் சேர்ந்த சிவராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் வரை தனது இரண்டாம்தரக் கல்வியினை எவ்வித தங்கு தடையுமின்றி ஜி.சி.ஈ. சாதாரண தரத்திலும் குறிப்பாக ஜி.சி.ஈ. உயர்தரப்பரீட்சையிலும் மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றார். பரியோவான் கல்லூரியில் பயின்றபோது ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பெறுபேறுக்காக சான்றிதழ்கள் பெற்றதோடு கல்லூரி வெளியிடும் சஞ்சிகையிலும் கட்டுரை எழுதி வந்தார். விசேடமாக பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றுவந்தார். இதன் உச்சக்கட்டம் 1964 ஆம் ஆண்டு நடந்த சாம் சபாபதி தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் முதலிடம் பெற்றமையாகும்.
"இலக்கியமும் வாழ்வும்' என்ற விடயத்தில் முன் ஆயத்தமின்றி மூன்று மணி நேரத்தில் எழுதிப் போட்டியில் வெற்றி பெற்றமை பற்றியும் அவ்வாண்டு நடந்த பரிசளிப்பு விழாவில் இவர் ஆற்றிய உரை பற்றியும் இன்றுவரையும் பேசப்படும் அளவுக்கு பிரபல்யம் பெற்றது. பரியோவான் கல்லூரியின் தமிழ் விவாதக் குழுவின் தலைவராகவும் இருந்து பாடசாலைகளுக்கிடையிலான பல போட்டிகளில் தனது கல்லூரியினை வெற்றி பெறச் செய்தார். இக்குழுவில் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் புகழப்பட்ட ஏ.ஈ. மனோகரன், பா. சிவகடாசம், கை. திருச்செல்வம் என்போர் இடம் பெற்றிருந்தனர். 1964 ஜீசி.ஈ. உயர்தரப்பரீட்சையில் இவர் அரசாங்கம் என்ற பாடத்தில் அதிவிசேடமும் மற்றைய மூன்று

Page 10
பாடங்களில் சிறப்பு சித்தியும் பெற்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார். இச்சிறப்பான பெறுபேறுகளுக்கு ஆர். பாணுதேவன் ஆசிரியரும் இளையதம்பி ஆசிரியருமே காரணம் என்று நன்றியோடு சொல்லி வருகிறார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1965ல் பொதுக்கலைத் தகுதித் தேர்வில் பொருளியலில் மிக அதிகமான புள்ளிகளைப் பெற்றமையால் பொருளியலைச் சிறப்புப் பாடமாகத் கற்கத் தெரிவு செய்யப்பட்ட எட்டு மாணவர்களுக்குள் இவரும் ஒருவர். அப்போது அரசியல் விஞ்ஞானம் பொருளியலின் ஒரு பகுதியாகவே கற்பிக்கப்பட்டு வந்தது. 1969 ஆம் ஆண்டு இறுதித்தேர்வில் இரண்டாம் வகுப்பில் சித்தி யெய்தி 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொருளியல் துறை உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அதற்கு முன்னர் சுமார் ஆறு மாதங்கள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பட்டதாரிகள் பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கையில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற் துறையில் தற்காலிக விரிவுரையாளர் பதவி கிடைத்தது. 1973ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதிநிரந்தர விரிவுரையாளர் ஆக்கப்பட்டார். இவரது விரிவுரைகள் அப்போதைய மாணவ பரம்பரையினரை மிகவும் கவர்ந்திருந்தது. இக்கட்டத்தில் 1976 இல் இவருக்கு கனடாவிலுள்ள நியூ பிறண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது. கனடா பயணமானார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்ற இந்த காலத்துள் பேராசிரியர் வில்சன் தனது பதவியை இராஜினாமாச் செய்து கனடாவுக்கு பதவிபெற்று சென்று விட்டார். இவருக்கு அடுத்த சிரேஷ்ட விரிவுரையாளரான எம்.எல்.ஏ. காதர் அவர்கள் தனது முதுமாணிப்பட்டப் படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்று விட்டார். இந்நிலையில் பேராசிரியர் சிவராஜா அவர்களே தமிழ்மொழி மூல விரிவுரைகள் முழுவதையும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியிருந்தார். இல்லாவிட்டால் தமிழ் மொழியில் அரசியல் விஞ்ஞான கற்கை நெறி இடைநிறுத்தப்படக் கூடிய நிலை இருந்தது. கனடாவில் "இலங்கை அரசியலில் சமஷ்டிக் கட்சியின் பங்கு" என்பது பற்றி பேராசிரியர் வில்சனின் மேற்பார்வையில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து முதுமாணிப்பட்டம் பெற்று நாடு திரும்பினார். 1978இல் இவரது முதலாவது நூலான "அரசியலில் யாப்பு வளர்ச்சியும் மாற்றங்களும்" என்ற நூல் வெளியாகி மாணவர்களின் பாராட்டைப் பெற்றது. அக்கட்டத்தில் பல்வேறு சஞ்சிகைகளிலும்

புதினத்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். 1984 இல் இவர் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1978இல் இருந்து இவர் ஆங்கிலத்திலும் விரிவுரைகள் நடத்தத் தொடங்கினார். 1983இல் புதுடெல்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்று தனது கலாநிதியப்பட்டத்துக்கான ஆய்வினை உலக அளவில் புகழ்பெற்ற திருமதி ஊர்மிளா பட்னிசின் மேற்பார்வையில் "இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் அரசியல்" என்ற விடயத்தில் நிறைவு செய்து அதனைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமர்பித்து 1988இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
1992இல் "முரண்பாட்டுத் தீர்வும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதலும்" என்ற செயற்திட்டத்துக்காக சர்வதேச விருந்தினராக அமெரிக்காவுக்கு அழைக்கப்படார். 1993இல் ஃபுல்பிறையிற் சிரேஷ்ட ஆய் வாளராக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருட காலம் "1977இல் இருந்து அமெரிக்க இலங்கை உறவுகள்" என்ற விடயத்தில் ஆய்வு செய்து பாராட்டுப் பெற்றார். இவ்வாய்வு இப்போது நூலாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரித்த ஆய்வுகளை அடிப்படை யாகக் கொண்டு 1995இல் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு இணைப் பேராசிரியர் பதவியை வழங்கியது. 1999ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையும் இவர் பாண்டிச்சேரிப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகக் கடமையாற்றினார். 2000 ஆண்டில் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவராக அப்போதைய துணை வேந்தரினால் நியமிக்கப்பட்டார். 2002 இல் இவர் அமெரிக்க ரெக்சால் பல்கலைக்கழகத்திலுள்ள கரிநன்சம் மானிடவியல் ஆய்வுநிலையத்தின் வருகை தரு ஆய்வாளராகக் கடமையாற்றினார்.
அத்தோடு 1995இல் இருந்து இன்றுவரையும் வந்தாறு மூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மதியுரையாளராகவும் கடமையாற்றுகிறார். 1998 இல் இருந்து அட்டாளைச் சேனையிலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மதியுரையாளராகவும் கடமையாற்றி வருகிறார். இவரின் ஆய்வுகள், பிரசுரங்கள், பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகள் என்பவற்றைக் கவனத்துள் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் 1999 இல் இவருக்குப் பேராசிரியர் பதவியை வழங்கியது.
கல்வி துறையில் இவரது பங்களிப்புகளுள் முக்கியமானது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல விரிவுரையாளர்களின்

Page 11
முதுமாணி, முதுகலைமாணி ஆய்வுக்கட்டுரைகளை மேற்பார்வை செய்து அவர்களுக்கு முதுமாணிப் பட்டங்கள் பெற உதவியதோடு அவர்கள் பதவி உயர்வு பெறச் சேவை செய்தமையாகும்.
சுருக்கமாக பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் கல்வி வாழ்க்கை மற்றையோருக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமல்லாது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஓர் உதாரண புருஷராக விளங்கி வரும் பேராசிரியர் அரசியல் விஞ்ஞானத்துக்கப்பாலும் தமிழ் இலக்கியம் தமிழர் அரசியல் பண்பாடு கலாசாரம் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டு அவற்றுக்கும் பங்காற்றியுள்ளார்.
இவர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யூன் மாதம் வரை சுவீடனிலுள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் சமாதானமும் முரண். பாடும் பற்றிய ஆய்வுக்கான துறையில் உயர்தர சர்வதேச செயற்திட்டத்தினால் நடத்தப்பட்ட டிப்ளோமாவினை பூர்த்தி செய்தவராவார். எல்லாவற்றுக்கும் மேலாக 2003ம் ஆண்டு ஊவா மகாண இந்து கலாசார அமைச்சு கார்த்திகை மாதத்தில் நடத்திய தமிழ் சாகித்திய விழாவில் இவருக்கு கல்விக்கு வழங்கிய பங்களிப்புக்காக, குறிப்பாக மலையக மாணவர்களது கல்விக்கு ஆற்றிய பணிகளுக்காக 'வித்தியாயோதி என்ற பட்டத்தினை வழங்கியதோடு நினைவுச் சின்னம் பொன்னாடை என்பவற்றையும் வழங்கியது. இவ்வாறு பேராசிரியா சிவராஜா அரசியல் விஞ்ஞானத்துக்கு அப்பாலும் தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு என்பவற்றுக்கு பங்காற்றியுள்ளார். அறுபது அகவையை சென்ற வருடம் நிறைவு செய்துள்ள அவர் நீண்டகாலம் வாழ்ந்து கல்விக்குத் தொண்டாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன். இவர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகளுக்கு மகுடம் வைத்தாற் போல் 2004 ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தேசிய கல்வி நிறுவனத்தின் மதியுரை சபையின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்.
வே. சிவயோகலிங்கம் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா அவர்களின் எழுத்துக்கள்
கட்டுரைகள் - தமிழ்
1.
0.
11.
12.
13.
14.
15.
இலங்கையின் இனப்பிரச்சினையின் சமூக பொருளாதார காரணிகள், வீரகேசரி, 2.2.1986 அழகியல் வெளிப்பாடும் நோக்கமும் : மொழி பேதங்களைக் கடந்தது பரதம், வீரகேசரி, 2-8-1989 எம்.ஜி.ஆரின் மறைவும் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலமும், வீரகேசரி, 3.1.1988 மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவமும் இலங்கைத் தமிழர்களின், சாத்வீகப் போராட்டங்களும், வீரகேசரி 25.5.1986 இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் நிலைப்பாடு வீரகேசரி
1-10-1987 அறிவினை ஆத்மீகப் பாதையில் செலுத்தினால் அகங்காரம் குறையும், வீரகேசரி, 19-11-1989 தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியம் வளர்த்த தலைமுறையினர் வீரகேசரி, 26-5-1991. இலங்கை இனப்பிரச்சினையின் வெளிநாட்டுப்பரிமாணம்: இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு, வீரகேசரி. 24-5-1987 இலங்கையர் தேசீயவாதமும் இனரீதியான பேதங்களும், வீரகேசரி, 2-3- 1987 இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் சமீப காலப்போக்கு, வீரகேசரி இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் நிலைப்பாடு - வடக்குக் கிழக்கு இணைப்பால் அரசியல் ரீதியாக ஏற்படலாமென முஸ்லிம்கள் அஞ்சும் அம்சங்கள், வீரகேசரி, 18-10-1987 இந்து தர்மத்தின் உட்கிடக்கையும் சிவஞான போதத்தின் மகிமையும், தினகரன் 6-1-1991 சேக்கிழாரின் பெரிய புராணமும் உபமான்ய பக்த விலாசமும், தினகரன் 21-1-1991 சோவியத் யூனியனின் உறுதியான நிலைப்பாடே குவைத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், வீரகேசரி, 8-9-1990 சோவியத் யூனியனின் உறுதியான நிலைப்பாடே குவைத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், வீரகேசரி 10-9-1990

Page 12
16.
17.
18.
20.
21.
22.
23.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள், தினகரன், 7-4-1991 மலையகத் தமிழரின் வரலாறும் இலக்கியங்களும், தினகரன், 17-4-1991 மலையக இலக்கியமும் தொழிற்சங்கங்களும், தினகரன், 21-4-1991 மலையக இலக்கியமும் தொழிற்சங்கங்களும் தினகரன் 28-4-1991 சைவசித்தாந்தத்தின் உட்பொருளும் சைவ நூல்களும், தினகரன் 10-2- 1991 இலங்கையின் அரசியல் கட்சிகள்: அவற்றின் வளர்ச்சியும் மாற்றங்களும், வீரகேசரி,23-10-1988 இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளும் தலைமைத்துவமும், வீரகேசரி, 13-11-1988 இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுநிலைப்பாடுகள், வீரகேசரி 13-11-1988 1961 இல் சமஸ்டிக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகம் வீரகேசரி 8-6-1986 தமிழில் திறனாய்வும் மரபும் நவீன அணுகுமுறையும் வீரகேசரி , 2-9-1986 எதிர்கால பிரதிநிதித்துவத்தை நோக்கி, வீரகேசரி, 28-5-1989 இலங்கையின் தேசீயத்துவ இயக்கம்: ஒரு கோட்பாட்டு நோக்கு, ஆக்கம்,
1989
ஜனநாயகமும் சோசலிசமும், வானவில், 1991 மகாகவி பாரதியின் அரசியல் நோக்கு, வீரகேசரி 8-12-1986 தனிநாயக அடிகளாரின் தமிழ்ப்பணி, வீரகேசரி , 28-9-1986 வேலையில்லாப் பிரச்சினையின் போக்கு, ஊற்று (1) 1972 இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும். அல் இன் சிறாக் சிறப்புமலர். 1980-81 இளைஞர் தலைமையும் அபிவிருத்தியும் இளைஞர் அபிவிருத்தி கருத்தரங்கு அறிக்கை, இலங்கை மன்றக் கல்லூரி, 1979 தேசிய இனப்பிரச்சினையும் புரட்சிகரத்தத்துவமும், சோவியத்நாடு, 1987 இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கை அரசியலும், வீரகேசரி, 7-2- 1988 : இலங்கையின் அரசியல் கட்சிகள், வீரகேசரி, 22-10-1988 மண்வாசனை, சிறுகதைத் தொகுதி, ஒரு மதிப்பீடு
சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநிதித்துவம், விழா மலர், நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1976)

39.
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
இலங்கையில் தமிழ் மொழிக் கோரிக்கைகளும் மொழிச்சட்டங்களும், நாலாவது தமிழாராய்ச்சி மாநாட்டுநிகழ்ச்சிகள், (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1976) 1978ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதான அம்சங்கள், ஊற்று, 1978 காத்தவராயன் கூத்து தமிழர் தம் பாரம்பரிய கலை வடிவம் வீரகேசரி, 1984 தேசியத் தலைவர்களின் தவறுகளே இன்றைய நெருக்கடிகளுக்க வழிவகுத்தன, தினகரன் -1987 தேசிய விடுதலை இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பினை தனியாகவே ஆராய வேண்டும், வீரகேசரி, - 1988 இலக்கியத்துறையில் மலையக கவிதைகளுக்கு தனி இடம் உண்டு. வீரகேசரி, 1988. இனப் பிரச்சினையை வேகப்படுத்திய இலக்க தகட்டில் பூரீ எழுத்து, வீரகேசரி, 21-1-1990 சைவசித்தாந்தம் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள், இந்து தர்மம், 1991 1972 ஆம் ஆண்டின் அரசியல் திட்டம், பூரணி, 1973 கனக செந்திநாதன் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய விமர்சன மரபைத் தொடக்கி வைத்தார், (யாழ்ப்பாணம்: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1988) தேசீய விடுதலை இயக்கமும் தமிழர் பங்களிப்பும், இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, 30-09-1989 மலைகத்தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினர். மேர்ஜ், 1989 தென்னாசிய கலாசார சிறுபான்மையினர், இந்த சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, 1990 1989ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலும் மலையகத் தமிழர் பிரதிநிதித்துவமும், வீரகேசரி - 1990 இலங்கையில் அரசியற்திட்ட அபிவிருத்தியும் மாற்றங்களும்: 1833-1948 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், 1980)- இலங்கையின் அரசியல்திட்டங்கள், (1833-1978) (கைதடி சிவா பிறின்ரஸ், 1986) • அரசியல் மூலத்தத்துவங்கள் (யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 1989) நவீன அரசியற் கோட்பாடுகள், (யாழ்ப்பாணம் : பட்டப்படிப்புகள் கல்லூரி,
1988)

Page 13
57.
58.
59.
6.
62.
63.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
சைவசித்தாந்தத்தின் ஆசார முறைகளைப் பறைசாற்றும் குர்க்கு கல்வெட்டுக்கள், வீரகேசரி, 12-7-1992
இலங்கையில் இனமுரண்பாடும் மூன்றாம் தரப்புமத்தியஸ்தினுடாக தீர்வு காணலும், சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை - 5 (வந்தாறுமூலை: கிழக்குப்பல்கலைக்கழகம்) முரண்பாடும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணலும் பற்றிய கற்கை நெறியின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் கோட்பாடுகளும், (கொழும்பு குமரன் புத்தக இல்லம், 2001) அரசறிவியல் மூல தத்துவங்கள் (கொழும்பு:குமரன்புத்தக இல்லம், 2000) இலங்கை அரசியல் (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2002) இலக்கியமும் வாழ்வும். பரிசளிப்பு விழா மலர், பரியோவான் கல்லூரி, 1964 இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளுதல் (கொழும்பு:தமிழ்ச் சங்கம், 2001) "இலங்கைப் பிரதிநிதியின் முதல் திருத்தம்" தமிழாராச்சி மாநாடு மட்டகளப்புமார்ச் 19,2021 - 1976 இலங்கையின் இன முரண்பாட்டிற்கான சமூக , பொருளாதாரக் காரணிகள்" வீரகேசரி 29, 15, பெப்ரவரி - 1986 இலங்கை அரசியலில் முஸ்லிம்கள்: அன்றும் இன்றும், அல்இன் ஹிருஹற் முஸ்லிம் மஜ்லிஸ், பேராதனைப்பல்கலைக்கழகதும்பரை வளாகம் - 1981 இலங்கையர் தேசியவாதமும் இனரீதியான தேசியவாதங்களும், வீரகேசரி 2 மார்ச், 1986 மகாத்மாகாந்தியின் அரசியல் மெய்யியலும் இலங்கைத்தமிழர்களின் சாத்வீக போராட்டமும், வீரகேசரி 25, மே, 1986 சமஸ்டிக்கட்சியின் சத்தியகிரக போராட்டம் வீரகேசரி 8,22,29 யூன் 1977 தமிழ் ஆய்வுக்குத் தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு, வீரகேசரி 28 செய்டெம்பர் 1986 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும் கிழக்கிலங்கை முஸ்லிம்களும், வீரகேசரி 11,18,25, ஒக்ரோபர் 1987 எம்.ஜி.ஆரின் மறைவும் தமிழ்நாட்டின் எதிர்காலமும், வீரகேசரி2,ஜனவரி 1988 კ“ இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் வீரக்ேசரி 7,14, பெப்ரவரி 1988 இலங்கையின் அரசியற் கட்சிகள்: இடது சாரி இயக்கம் வீரகேசரி 22, ஒக்ரோபர் - 6,13, நவம்பர் 1988. "இளைஞர் தலைமைத்துவமும் அபிவிருத்தியம்" இளைஞரும் அபிவிருத்தியும் கருத்தரங்க அறிக்கை (கொழும்பு : இலங்கை மன்றக் கல்லூரி 1979)

76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
91。
92.
93.
பரதநாட்டியம் அழகியல் வெளிப்பாடும் நோக்கமும், கீதம் நான்காவது ஆண்டு மலர் (பேராதனை : சங்கீத நாட்டிய சங்கம்) சைவ சமயத்தின் வளர்ச்சியில் சோழப் பெருமன்னர்கள்", இந்துதருமம் (பேராதனை இந்து மாணவர் சங்கம, 1993-94) "மாஒ சே துங்கின் சிந்தனைகள்" " இளங்கதிர் (பேராதனை : தமிழ்சங்கதம்: 2003) " இலங்கையில் தமிழ்த் தேசீயவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" இளங்கதிர் (பேராதனை: தமிழ்ச்சங்கம், 1992-93) தமிழர்களின் பராம்பரியத் தாயகம் சார்பு எதிர்வாதங்கள், பேராதனை இனங்கதிர் : தமிழ்ச்சங்கம் சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணிகள் (வவுனியா சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை 1992) குரும்பசிட்டியின் வரலாற்றில் பொன். பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் இடம்" பரமானந்தர் நூற்றாண்டு நிறைவு மலர் )குரும்பசிட்டி 2001) தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள்" மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாசிறப்பு மலர், 1995) இலங்கையில் அரசயில் யாப்புகள் வரையப்படுதலும் சிறுபான்மை இனமக்களும், பல்கலை தொகுதி 1 இதழ் 3 (பேராதனைப் பல்கலைக்கழகம் கலைப்பீடம், 2002) "இலங்கை தமிழர்கள் தேசியவாத வளர்சசியில் பாரம்பரியத் தமிழர் தாயகம் என்ற எண்ணக்கரு", தொகுதி1 இதழ் 1,2 (பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடம், 2000) பிரான்சின் அரசியல்முறை, ஆய்வு தொகுதி 1, இதழ் 1 , (பேராதனை : சமூகவிஞ்ஞானமற்றம் 2000) சமஸ்டி முறையும் கூட்டுச் சமஸ்டிமுறையும், பிரவாதம் தொகுதி 2 (கொழும்பு : சமூகவிஞ்ஞானிகள் சங்கம், 2002) தேசிய இனப் பிரச்சினையும் புரட்சிகர தத்துவமும், சோவியத்நாடு (284 இல 11 1987) அரசறிவியலின் இயல்பு, அகிலம், தொகுதி 1, இல 1 யூன் 1994) "சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநிதித்துவம்" நாலாவது உலகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுமலர் (சுன்னாகம் திருமகள் அழுத்தகம் 1976) மகாகவி பாரதியின் அரசியல் நோக்கு, வீரகேசரி 1982 "விமர்சனத்துறை மேற்கின் இரவல்களாலும் வளர்கிறது", வீரகேசரி - 1982 தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணி வீரகேசரி 299-1986

Page 14
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105
106.
106.
"மலையகத் தமிழர் தனியானதொரு தேசிய சிறுபான்மையினரா? மலையக பிரதிநிதித்துவமும் மாறிவரும் கட்டங்களும், மலையக சமூக பொருளாதார ஆய்வகம் 2-05-1989 "கனக செந்திநாதன் தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய விமர்சன முறையைத் தொடக்கி வைத்தாரா" (குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1999) "தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல்", பிரவாதம் தொகுதி 4, யூலை 2005 ஐக்கிய அமெரிக்கா இந்தியா ஒரு ஒப்பீடு, ஆய்வு தொகுதி இதழ் 4,5, 2005. " மகாத்மா காந்தியின் அரசியற் சிந்தனைகள்" இளந் தென்றல் தமிழ்ச்சங்கம் (கொழும்புப் பல்கலைக்கழகம் 2002) "அதிகாரப் பகிர்வினுடாக சமாதானம்" சர்வதேச கற்கை நெறிகளுக்கான ஸ்தாபனம் - 1996 w "சைவ சித்தாந்த் பற்றிய சில அறிமுகக்குறிப்புகள்" இந்து தருமம் (பேராதனை: இந்து மாணவர் சங்கம், 1990-91) சமஸ்டி முறையும் கூட்டுச் சமஸ்டி முறைம் பிரவாதம், யூலை டிசம்பர் தொகுதி 2 (2002) "இலங்கையில் அரசியல் யாப்புகள் வரையப்படுதலும் சிறுபான்மை இன மக்களும்"பல்கலை தொகுதி 1, இதழ்3-2002 தென்னாசியாவில் இராணுவமும் அரசியலும் , அல்கின்சிராக் (முஸ்லிம் மஜ்லிஸ், 2004) "ஆனந்த குமாரசுவாமியின் இலங்கை வாழ்வும் பணிகளும்" தேசீயதமிழ் சாகித்திய விழா (சிறப்புமலர் 1991) "இலங்கையில் சமஸ்டி முறைமை" சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் (கொழும்பு:சமாதானத்தைக் கட்டியெழுப்பு வதற்கான செயற்திட்டங்கள் - 2005) இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, ஆய்வு தொகுதி 2 இதழ்1 2Χ12001
நூல்கள் - தமிழ்
1.
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங்களும் (சுன்னாகம் திருமகள் அழுத்தகம் 1980) அரசியல் மூல தத்துவங்கள் (யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி 1988) நவீன அரசியற் கோட்பாடுகள் (யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 1989)

O.
11.
12.
3.
14.
15.
அரசியல் மூலதத்துவங்கள் (கொழும்பு- சென்னை: குமரன் புத்தக இல்லம், 2001) இலங்கை அரசியல் (கொழும்பு - சென்னை: குமரன் இல்லம், 2002) முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணலும் பற்றிய கற்கைநெறி: தோற்றம் வளர்ச்சி பாடப்பரப்பு மற்றும் கோட்பாடுகள் (கொழும்பு - சென்னை : குமரன் புத்தக இல்லம் , 2001) முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணலும் பற்றிய கற்கை நெறி: கோட்பாடுகளும் நடைமுறையும் (கண்டி சண்பிறின்டர்ஸ்-2003) முரண்பாடும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணலும் பற்றிய கற்கை நெறி: கோட்பாடும் நடைமுறையும் (கொழும்பு - சென்னை : குமரன் புத்தக இல்லம், 2003) ஒப்பீட்டு அரசியல் (கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2004) இலங்கை அரசியல் (கைதடி சிவா பிறின்ரேஸ், 1987) இலங்கைத்தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் (கொழும்பு கொழும்புத் தமிழ்ச் சங்கம், 2003) இலங்கைத் தமிழர்களின் ஐம்பது வருட கால அரசியல்: சாத்வீகப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வரை (கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம் , 2003) மலையகத் தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியங்களும் (கண்டி: மலையக ஆய்வக வெளியீடு, 1992) மூன்றாம் தரப்புமத்தியஸ்தத்தினூடாக இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு (வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைகழகம், 2000) குரும்பசிட்டியின் இலக்கியப் பாரம்பரியம் (குரும்பசிட்டி சன்மார்க்கசபை வெளியீடு, 1988)
கட்டுரைகள் -ஆங்கிலம்
1.
"Indo-Sri Lanka Relations and Sri Lanka's Ethnic Crisis: The Tamil Nadu Factor", ed S.U. Kodikara, South Asian Strategic Issues (New Delhi: Sage Publications, 1990) "Intra - Regional Relations : South Asia in the 1990s", ed George A, Cooray, New Dimentions in Regional Security After the Cold War (Colombo: Institute of International Studies, 1997) "The Rise of Militancy in Tamil Politics", eds Mahind Werake and
P.V.J. Jeyasekara, Security Dilemma of a Small State, Part II (New Delhi: South Asian Publishers, 1995)

Page 15
10.
11.
12.
13,
14.
15.
16.
17.
"Mahathma Gadhi's Technique of Satya Graha and Political Change: A Study of the Prayer Campaign of the Ceylon Workers Congress of SriLanka in 1986", The Sri Lanka Journal of South Asian Studies, No2 (New Series) 1987/88.
"Indo - SriLanka Relations in the 1980's and the Ethnic Crisis in Sri Lanka", Sri Lanka Journal of Social Sciences, Vol 9, Nos 1X2 , 1986
"Implementation of the Indo-Sri Lanka Agreement and Tamil Nadu Politics", ed S.U. Kodikara, Indo SriLanka Agreement of July 1987 (Colombo: The International Relations Programme, 1983)
"Indo-Sri Lanka Relations in the Context of Sri Lanka's Ethnic Crisis", ed P.V.J. Jayasekara, Security Delemma of a Small State, Part I (New Delhi: South Asian Publishers, 1992)
"Under V.P. Singh: India and Its Neighbours", Lanka Guardian, Vol 13, No 17, January, 1991
Strategic Importance of South Asia to the USA in the Post Cold War Era" in ed A.V Manivasagam, South Asia Development Ideological Currents (Jaffna : South Asian Study Center, 1999)
"The Indra Doctrine, The Gujral Doctrine and Indo - Sri Lanka Relations Since 1983", The Sri Lanka Journal of South Asian Studies, No7, 2000/2001 Problems of Minorities in South Asia: An Overview in ed Bhabani Sen Gupta, Regional Cooperation and Development in South Asia (New Delhi: South Asian Publishes Ltd. 1986) "Ethnicity and Constitutional Reform in Sri Lanka: A Consociational Approach" ed Iftekharuz Zamar Ethnicity and Constitutional Reform in South Asia (Colombo Regional Center for Strategic Studies, 1998 Democracy and Problems of Governance in Sri Lanka (Colombo: Sri Lanka Foundation 2004) Is Sri Lanka Heading Towards a Multi Party System, Lanka Guardian, Vol 10, No 21 March 1988 The Role of the Federal Party in the Parliament (1965-1970)Sri Lanka Journal of Social Sciences Vol 5, No. 1, June 1982. Twealth Parliamentary Election Results: An Analysis, Faulty of Arts, Seminar Peradeniya University 2002
Need for Resolution Centres, Lanka Guardian, Vol 15, No 8, August 15, 1992

18.
19.
20.
21.
22.
23.
24.
25.
"Sri Lanka's Foreign Policy since 1994", 9th International Conference on Sri Lanka Studies 30-11-2003, University of Ruhuna, Matara
Gandhian Political Philosophy and Political change: a Case Study of Satyagraha - Campaign of the Tamil Federal Party of Ceylon in 1961" Paper Presented at the Fifth International Tamil Research Conference held at Madurai, January 1981
South Asia. Some Suggestions, Annual Research Sessions, University of Peradeniya, October 2002
Minorities and Making of Constitutions in Sri Lanka, A Paper Presented at the Annual Research Sessions, University of Peradeniya, 2001.
Peace Process in Sri Lanka: Role of India and Norway, Paper Presented at the Annual Research Sessions, 2004
Human Rights Conditions of Plantation Workers in Sri Lanka, A Paper Vk Presented at the Postgraduate Research Symposium, 2004
Changes in the Electoral System and Constitutional Reforms, A Paper Presented at the Annual Convention, Sri Lanka Foundation, December 2004
"SriLanka's Foreign Policy Trends Since 1977: Change and Continuity", Paper Presented at the National Seminar on Twenty Five years of Non - Alignment, International Relations Programme, University of Colombo, 1986
நூல்கள் ஆங்கிலம்
1.
Politics of Tamil Nationalism in SriLanka (New Delhi: South Asian Publishers, 1996)
US-Sri Lanka Relations in the 1980's (Kandy Institute of Higher Education, 1995)
Fifty Years of Tamil Politics in Sri Lanka (1949-1999): From NonViolent Resistance to Armed Struggle, 2000.
தொகுப்பு : என்.பி.எம். சைபுதீன் சிரேஸ்ட விரிவுரையாளர் அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 16
) || liį |į言 Š }言}|
LIEå)
 
 
 
 

|-
言
|
| || || |
||||||| |
|
|
|-
||言|
றபோது
த்திற்கு கனடா சென்
ப் பட்ட
முதுமாணி
우 :譜
கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது
னப் பல்

Page 17
E
ராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில்
----
摇
를
 
 
 

t-i]
Ud-Gಳಿ
ம்பத்
தடு

Page 18
பதிப்புகளும் 10 மீள் அச்சுக்களும் முதலாம் பதிப்பு
10,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள பேராசிரியரின் சில நூல்கள்
巫7a)* th
 


Page 19

SERVATETYTH