கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (திரு கந்தையா)

Page 1
s
SLSLSLSLSLSLSLS 曇*零..范
FGL.
அமரர் திரு
--յլall T
SALS SLS SLS SeSeSeSeS SeS SeeSS SeAS AAS MLSMSMSMS SLAS AAA S AAA AA ALS
MEM. LATE MR. TH
48, Deanstone Place. Cըltյիլին - 3.
 
 
 
 
 

│ │
|-
*廢曬劑: 義的的
கந்தையா
LLYYDLLTTTJTTTeTDeeDeTDeDLDD DDDS
[RU KANDIAH
? OIR
шију.

Page 2

ཟ
-- :
鞋
III
1
தோற்றம்: மறைவு: 9-8-39 5-4-89
திதி - அமாவாசை
356 (1.

Page 3

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப், பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்,
வேழ முகமும், விளங்குசிந் தூரமும், அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடி கொண்ட நீல மேனியும், நான்ற வாயும் நாலிரு புயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும், இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்,
திரண்ட முப்பரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூஷிக வாகன !
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயப் பிறவி மயக்க மறுத்தே, திருந்திய முதல் ஐந் தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தணிற் புகுந்து, குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்,
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக், கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்,
திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து, தலமொரு நான்குந் தந்தெனக் கருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

Page 4
ஆரு தாரத் தங்குச நிலையும் !
பேரு நிறுத்திப் பேச்சுரை யறுத்தே, இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி, மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் தாவில் உணர்த்திக், குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கரூத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச், சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப், புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக், கருத்தினிற் கபால வாயில் காட்டி,
இருத்தி முத்தி இனிதெனக் கருளி, என்னை அறிவித் தெனக்கருள் செய்து,
முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனுேலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து, இருள் வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில் எல்லை இல்லா ஆனந் தமளித்,
தல்லல் களைந்தே, அருள் வழி காட்டிச், சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்,
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்,
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத், தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரை கழல் சரணே.

பூனி லலிதா நவரத்தினமாலை
காப்பு ஆக்கும் தொழில் ஐந்தரனற்ற நலம் பூக்கும் நகையாள். புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கனநாயக வாரணமே (மாதா)
வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நிலையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிறப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமஞக எடுத்தவளே வற்ருத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே 1
நீலம் மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்ருத ஒளிக்குவையே சரணம் சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே 2
முத்து முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே முன் நின் றருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய நான் தனயன் தாய் நீ சாகாதவரம் தரவே வருவாய் மத்தேறு ததிக்கினை வாழ்வடையேன் மாதாஜெய ஒம் லலிதாம்பிகையே 3
பவளம் அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர் தேம் பொழிலாமிது செய்தவளாரோ எந்த யிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்

Page 5
மந்திர வேத மயப் பொருளானள் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே
மாணிக்கம்
காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக் கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவளே நாணித் திருநாமமும் நின்துதியும் நவிலாதவரை நாடாதவளே ! மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம் ம துரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் சுருதி ஜதி லயமே இசையே சரணம் அரஹர சிவ என்றடியவர் குழும் அவரருள் பெற அருளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே
கோமேதகம்
பூ மேவிய நான் புரியும் செயல்கள் டொன்ருது பயன் குன்ரு வரமும் தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர் வான் நிலவே குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே
பதும ராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாச வியாபினி அம்பா சஞ்சலரோக நிவாரணி வாணி கூாம்பவி சந்த்ர கலா தரி ராணி அஞ்சன மேனி அலங்ளுத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்யகல்யாணி மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜெய ஒம் லலிதாம்பிகையே
7

வைடூரியம் வலையொத்த வினை கலையொத்த மனம் மருளப் பறையாருெவி யொத்தவிதால் நிலையற்றெளியேன் முடியத் தருமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற் ற சைவற் றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையசத்து வசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பயன் எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய் திகழ்வாரவரே (LDrron) 9
தி ரு வா சக ம்
திருப்பெருந்துறையில் அருளிய சிவபுராணம் (சிவனது அநாதிமுறைமையான பழமை) கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க! ஆகமம் ஆகிநின்(று) அண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! s
வேகம் கெடுத்(து) ஆண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க ! புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ! கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க ! சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ! - 0
ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி! தேசனடி போற்றி! சிவன்சே வடிபோற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி! சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி! 15

Page 6
ஆராத இன்பம் அருளுமலை போற்றி! சிவன்அவன் என் சிந்தையுள் நின்ற அதனல் அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை - முந்தை வினைமுழுதும் ஒப உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்(கு) எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண் நிறைந்து மிக்காய்! விளங்(கு) ஒளியாய் ! எண்இறந்(து) எல்லை இலாதானே! நின்பெருஞ்சீர் பொல்லா வினயேன் புகழுமா(று) ஒன்றறியேன்; 25
புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்(து)இளைத்தேன்; எம்பெருமான் ! மெய்யேயுன் பொன்னடிகள் கண்(டு)இன்று வீடுற்றேன்! உய்யளன் உள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்யா 1 விமலா 1 விடைப்பாகா ! வேதங்கள் ஐயா, எனஓங்கி ஆழ்ந்(து)அகன்ற நுண்ணியனே! 35
வெய்யாய்! தணியாய் இயமான ஞம்விமலா ! பொய்யா யினால்லாம் போய் அகல வத் தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே ! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! 40
ஆக்கம் அள(வு)இறுதி இல்லாய் ! அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் நணரியானே! மாற்றம் மனம்கழிய நின்றமறை யோனே ! 45
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்(து) அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்(பு)அறுசகும் எங்கள் பெருமான் ! நிறங்கள்ஒர் ஐந்(து) உடையாய் 1 விண்ணேர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் ! வல்வினையேன் றன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப் புறந்தோல் போர்த்(து) எங்கும் புழு அழுக்கு மூடி மலம்சோரும் ஒன்பது வாயிற் குடிலை டிலுங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா ! உனக்குக் கலந்த அன் பாகிக் கசிந்(து)உள் உருகும் நலம்தான் இலாத கிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடத்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே! மாக)அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே ! சிவபுரனே! பாசமாம் பற்(று)அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சம்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ! ஆரா அமுதே! அள(வு)இலாப் - பம்மானே! ஓராதார் உள்ளத்(து) ஒளிக்கும் ஒளியானே! நிராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்ருனே! இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே!
அன்பருக்(கு) அன்பனே! யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே ! துன்இருளே! தோன்றப் பெருமையனே! ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே! ஈர்த்(து)என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்தமெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே ! நுணுக்கரிய நுண்ணுணர்வே! போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே ! காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே! ஆற்(று)இன்ப வெள்ளமே! அத்தா ! மிக் காய் ! நின்ற தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேறறனே! தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் உவற்ருன உண்ஆர் அமுதே உடையானே ! வேற்று விகார விடக்(கு)உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா! அரனே !ஒ வென்(று) என்று
போற்றிப் புகழ்ந்(து)இருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்(டு)இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்(டு)அழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்(று)ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பான டி நாட்டானே !
அல்லல் பிறவி அறுப்பானே ! ஓவென்று சொல்லற்(கு) அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவன்அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திச்சிற்றம்பலம்
70
75
80
85
95

Page 7
வரலாற்று பிரசித்தி பெற்ற ஊர்காவற்றுரையிலே கரம்பன் ஊரிலே பிறந்து, பிற்காலத்தில் தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந் தவர் வை. கந்தையா. இவர் வடமொழி, தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் பிரஞ்சு ஆகிய மொழிகளிற் பாண்டித்தியம் உடை ய வ ராய்த் திகழ்ந்தார். இவரது தம்பியார் வை. நவரத்தினம் இவ்வூர்ப் பாராளு மன்ற அங்கத்தவராய் விளங்கியவராவார்.
வை. கந்தையா இலங்கைச் சட்டசபை அங்கத்தவராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஸ்தாபகருள் ஒருவராகவும் விளங்கிய கெளரவ சபாபதிபிள்ளை அவர்களின் தங்கையின் பேர்த்தியும், கனகரத்தினம் சுவாமியின் பெருமளும், புகையிரதநிலைய அதிபர் சபாரத்தினத்தின் புதல்வியுமான மகேஸ்வரியைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மூத்த புதல்வரே திரு, இவருக்கு வாணி, பவானி, ரமா, மகேசன், நளினி ஆகியோர் சகோதரர். வாணி யாழ்ப்பாணத்திலும் ஏனையோர் இலண்டனிலும் வசிக்கின்றனர்.
வடமொழியை நன்கு கற்ற கந்தையா, தன் புதல்வனுக்கு சமஸ்கிருதப் பண்டிதரான ஆச்சாரிய பண்டிதர் ஜயசிங்க என்பவரின் தலைமையில் வட நாட்டு முறைப்படி, புதுமையானதும் விசேட மானதுமான சடங்குகள் செய்து மூன்று வயதிலே வித்தியாரம்பம் செய்தனர்.
முதலிற் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பின்னர் யாழ்ப்பாணம் புனித பரி. யோவான் கல்லூரியிலும் கல்விகற்ற திரு, தலைநகர் கொழும்பிலே அக்குவனஸ் கல்வித் தாபனத்தில் உயர்கல்வியை முடித்தார்.
திரு ** தினகரன் ” பத்திரிகையிலே 1967 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் முதலாம் திகதி ஆசிரியர் குழுவிலே பணிபுரிய ஆரம்பித்துப் பல காலம் சேவை செய்தார். அத்தோடு சோதிடக் கலையையும் இளவயதிலேயே நன்கு பயின்ருர்,
இவர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த ஆ. க. சுப்பையா அவர்களின் புதல்வி ஞானேஸ்வரியைத் தம் வாழ்கைத் துணைவியாகக் கொண்டனர். திரு அவரது குடும்பத்தை தூணுக நின்று தாங்கினர். தனது உடன் பிறந்தவர்களின் கல்வி சம்பந்தமாகவும், தொழில் சம்பந்த மாகவும் அயராதுழைத்து அவர்களே ஆக்கப்பாதையில் இட்டுச் சென்ருர், இல்லத்தரிசி ஞானேஸ்வரியும் இதற்கு உறுதுணை புரிந்தார்.

மாணவ பருவத்திலே பொழுது போக்காக ஆரம்பித்த கைரேகை சாஸ்த்திரமே நாளடைவில் சர்வதேசப் புகழ் பெற்ற சோதிட நிபுணராக்கியது. திருவருளால் கிடைக்கப்பெற்ற வாக்குச் சித்தியும் வாக்கு வன்மையுமே இவரைப் படித்தோர் மட்டு மன்றி பாமர மக்களிடையேயும் பிரபலமாக்கியது. அவர் முன்கூட்டியே கூறியவை பல நிகழ்ந்தன. 1982 இல் இலங்கையின் ஜனதிபதியாக ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் பதவியேற்பாரென்ருர், ஐக்கிய இராச்சியத்திலே திருமதி. மாக்றட் தட்சர் தேர்தலில் வெற்றியீட்டுவாரென்ருர், தற்போதைய அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ்புஷ் அதிகப்படி யான வாக்குகளால் பெரும் வெற்றியீட்டுவார் எனவும், பாக்கிஸ்தானில் பெனுசிர் பூட்டோ பிரதமராவார் எனவும் கூறினர். இவை யாவும் நடைபெற்றன. இவரது சோதிடத் திறனுக்காக ‘அமெரிக்க சோதிடர்களின் ஐக்கிய ஒன்றியம்’ (American Federation of Astrologers) 1987 இல் இவருக்கு M. A. R. A. என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. சோதிட வானிலே உதய சூரியனுக அவர் விளங்கினர் என்ருல் மிகையாகாது.
ஐம்பது வயது கூட நிரம்பாத திரு பிற்காலத்தில் சிற்சில நோய்களால் வருந்தலாஞர், ஆனல் படுகையிற் கிடந்தார் அல்லர். காலையில் வாட்டமுடன் இருந்தாலும் பிற்பகலில் மிக உற்சாகத்துடன் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு ஆலோசனைகளைக் கேட்கக் குழுமி யிருக்கும் வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிப்பார்.
திரு குறைவற்ற திருவாகவே வாழ்ந்தார். புன்சிரிப்பரும்பும் களையான முகமும், உயர்ந்த தோற்றமும், பேச்சிலே இனிமையும் உடையவர்.
கற்ருேருக்கு மதிப்பும், மற் ருெ ருக்கு அன்பும் காட்டுபவர். மாமிசம், மதுபானம், தவிர்த்துச் சைவராகவே வாழ்ந்தவர். இலங்கையிலே ஈடு இணையற்ற சோதிடராக விளங்கிய திரு அன்ருெரு நாள் சுகயினத்தால் இவ்வுலகை நீத்தார், பூதவுடல் நீத்தார், புகழுடம்பு எய்தினர். ஜகஜனனி, ஜனர்த்தன், ஜகலக்ஷி ஆகிய அவரது அன்புச் செல்வங்களையும், ஆருயிர் மனைவி “ஞான” என்ற ஞானேஸ்வரியையும் இவ்வுலகில் விட்டுச் சென்றுள்ளார்.
4 ° தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றமை நன்று”
என்ற பொய்யா மொழிக்கிணங்க தனது சோதிட வல்லமையை முத்திரையாகப் பதித்துச் சென்றுவிட்டார். இவரது சோதிடக் கலையாய்வு, நூல் வடிவில் வருதலை நாடு வரவேற்கும்.
அன்ஞரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக! ஓம் சாந்தி 1 சாந்தி 1 சாந்தி !

Page 8
அன்னையின் கண்ணிர்!
தவமிருந்து நான் பெற்ற தலைமகளுய் நீ வந்தாய் ! தானிழந்த செய்திதனை வானெலியில் கேட்பதற்கோ தள்ளாத இவ்வயதில் நானிருந்தேன் இது காலம்
தாங்கவே முடியுதில்லை தம்பீ! நீ எங்கு சென்ருய்!
பாலூட்டிச் சீராட்டி பார்புகழும் கோமானுய் பண்புடனே நான் வளர்த்தேன்! பகட்டமாய் நீ வாழ்ந்தாய்! அன்னத்தை வெறுத்தாலும் ஆவலுடன் நீ கேட்ட ஆகாரம் நான் தந்தேன்! ஆசையுடன் நான் வளர்த்தேன்!
தும்பிக்கையான் பாதம் தினமும் பணிந்திருந்தேன் நம்பிக்கையுடன் தானிருந்தேன்! என் கடமை செய்வாயென்று காணுத இடம் தன்னை நீ காணச் செலும்போதும் நானுன்னைக் காணுது நடையிழந்தேன்! வலியிழந்தேன்!
மனைவியின் கண்ணீர்!
மணமுடித்த நாட்தொட்டு மகாராணிபோல் எனக் காத்தீர் ஜனனி ஜகன் லக்ஷியுடன் ஞான நானும் உமது பிள்ளை சிங்கப்பூர் பயணமாக ச் சிரித்திருந்தீர் எங்களுடன் சிவன் எடுத்தான் அவனரங்கில் திரும்பாத பயணம்காண என்றென்றும் எம்முடனே இன்புடனே வாழ்ந்தீர்!
w -என் இதய வேந்தே ! ஏங்கியிருக்கும் எனப்பார்த்து எங்கிருந்து சிரிக்கின்றீர்!

For My Loving Husband
May tender memories Soften my grief May fond recollection Bring me relief May find peace and Comfort in the thought of the joy you gave me May I find happiness in knowing my loved one ls mot far away But with me in spirit Every hour of the day !!!
Gnana
For Our Loving Appah (Dad)
Although you are now far apart and so far from each other Our thoughts always return to the moments of the support, encouragement, kindness, generocity guidance and the fondest love You've given us. Thinking of you brings a smile to our face and a strong faith in our hearts. We are your loving children and You are our loving appah in this Birth And all the other births that follow Death cannot seperate us for We Love you Forever and Ever !
Janani, Jagan and Lakshi

Page 9
for Our Loving Anna (Brother)
God has taken you back to him As He first gave you to us So We have not lost you In returning you to him The memories of you are so fresh in our hearts
Life is Eternal
Love is immortal
Death is only a dream Wait for us in the sky, Anna We will meet you one day Thank you for being our Darling Anna
Vani, Bhavani, Rama, Mahesen and Nalini.
மைத்துனர், மைத்துணி கண்ணிர்
எத்துணை இருந்தாலும் நின் துணைக்கு நிகருண்டோ! இத்தனை காலமும் எமக்குத் துணை நீரன்ருே ! குடும்பத்தின் குலவிளக்காய் கடமைகள் பல செய்தீர்! வாய்விட்டுக் கேட்க முன்பே வந்திடுவீர் கோணுமல் எண் திசையும் உம்பெயரை நாம் சொல்லிப் பெருமையுற்ருேம் எம் நெஞ்சங்களைப் புண்ணுக்கி எங்கு நீர் சென்றனையோ !
நவராஜா,
தவராஜா, மகேந்திரன், லோகேஸ்வரி.

வஸந்தி, குமாரின் கண்ணிர்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமுண் சிரிப்பும் இனித்த வாய்ப்பேச்சும் இளகிய நின் நெஞ்சும் கணித்த அறிவும் காண்பவரைக் கவரும் காந்தமும் எமை மட்டும் எவ்வாறு கவராது இருந்திருக்கும்! நேரே நாம் காணவில்லை! ஆஞலும் நீரெம்மை அன்பான வார்த்தைகளால் அரவணைத்தீர்! ஆசி தந்தீர்! தொலைதூரம் இருந்தாலும் தொலைபேசியில் பேசி நின்முேம் ! திடீர் எனப்பிரிந்த செய்தி திடுக்கிட வைத்ததண்ணு! கணிரென்ற உமது குரல் கடுகதியில் போனதெங்கே காணுத இடம் காணச் சென்றனையோ கணேஷ பக்தா !

Page 10
THRU OUR BELOVED
It is a strange quirk of Fate that I am still alive to write this, while my dearest nephew Thiru has left us in the prime of his life. Memories crowd round in my mind of the fifty years of his sojourn in our midst. He was the first born of my brother the late Mr. V. Kandiah, just as the latter was the first born in our family. So when Thiru arrived he was the apple of our eye and pet of the whole family.
The week he was born also saw the start of World War II, so that his childhood was spent in the din of war. When he grew up he took to journalism as his career and joined the editorial staff of the Tamil daily Thinakaran. But it is in the field of the occult science of astrology that he will be remembered best by the thousands of his admirers and friends who have benifited from his predictions and counselling. It has always been a puzzling question to me, how he acquired this skill. Even as a young man in his twenties his forecasts were reported to be most extraordinary and dead accurate, almost Verging on the un canny.
Looking back, I have a feeling that it was possibly the blossoming of a psychological bud of knowledge that was unwittingly and unconsciously implanted in him at the tender age of three when he was put through the initiation ceremony of commencing education known as 'Vidyarambham'. It was somewhat different from the traditional ceremony of the Hindus. His father was a very learned man, and well versed in astrology. He had invited a friend of his from Siyane Korale to perform the ceremony and initiate his son's education. This friend Acharya Pan dit Jaya Singha, was an erudite Sanskrit scholar, widely travelled in Tibet and the Himalayan foothilis, and beside his specialization in buddhist philosophy he had also devoted much time to research in astrology. On the day in question the Acharya was making preparations for the initiation

ceremony, marking intricate patterns on the cement floor with red, yellow, white and black powder; they were probabily the houses' of the Zodiac. He placed water pots crowned with arecanut and Coconut flowers and fronds as symbols of the planets. Little Thiru walked into the room and stood watching with his hands Crossed behind him. Having taken in the whole scene, he asked 'What is this?' pointing to the water pot nearest him. 'It is Budha (Mercury)" said the Acharya, 'He will give you much learning.' 'This much?' Thiru stretched both his hands sideways to indicate his idea of lot of learning. 'Yes, even more than that' said the Acharya. 'And this?' It is Sani swara (Saturn)' replied the Acharya. Why is he on black powder?" persisted the future astrology whiz. 'Oh, he is a terrible fellow, you know. Besides, he is a nondiya; when he walks it is like this,' The little brat burst out giggling in sheer delight. That innocent giggling laughter is still indelibly written in my mind even to this day. As he grew up into manhood that same giggling laughter clung to him to the very last as the hallmark of his innocent character.
the Acharya mimicked a lame man walking.
How much of this early episode went into the making of the future counselor and astrologer, it is not for me to tell. Thiru, however, developed in Course of time an unshakable faith in the utilitarian aspect of astrology, provided, he held, it is scientifically applied. Men of Science may want to quarrel with the use of the word 'scientifically, but he was not concerned with any dialectical argument over the issue. To him it was the practical value of his work. that mattered. So long as his forecasts and predictions, his counselling and advice for remedia steps, contributed to the comfort and solace and the mental peace of those who sought his advice and guidance, that was enough for him. It is this, the comfort and mental peace of those who placed their trust in him, which gave him the greatest satisfaction in his service and happiness as long as he lived, and won him a legion of friends and admirers.
To me, however, it is for his quality as an honourable man, a dutiful and conscientious brother and Son, that I will always cherish his immortal memory. On the day of his marriage, Thiru

Page 11
was obliged to give an assurance to his father that should anything happen to the father he would be fully responsible for the care of his siblings and the invalid mother. True to his word, he never flinched from his obligation even though the burden fell on his shoulders when he was Cuite young. He saw to the proper education of his siblings, and had them fixed in secure employment. He was fortunate in being blessed with an understanding wife who gave him all the cooperation he needed. Selflessness is not something that is unknown to the family. He had before him the example of a great-grand-uncle on his mother's side which always inspired him. This illustrious ancestor was the well known philanthropist and educationist of Jaffna, the Hon'ble Sabapathy, Member of the Old Legislative Council.
May the Great God bless the sorrowing wife and the three innocent kids with Strength enough to bear up the terrible blow with fortitude.
ʼ V. NAVARATNAM
Formerly Member of Parliament, Kayts
Montreal, Canada. April 12, 1989

AN APPRECATION
The early death of the late Thiru Kandiah will be mourned by a those who came in contact with him. He had a genial disposition and had a large number of friends from all communities, both in Sri Lanka and outside. He was not only a journalist of great repute, but a devoted Hindu who practised religion in his daily life.
As an astrologer palmist, there was hardly anyone to equal him in Sri Lanka. Having been interested in this science my self, I have been in contact with many who professed these sciences and found many of them as false Prophets, but Thiru Kandiah was different. He was one of the best palmists who had obtained a reputation not onfly among the leading man of Sri Lanka, but also obtained fame among the leaders in the U.K., U.S.A., Canada and Australia. He has not only studied the occult sciences deeply but had intuition, which alone could help a person who is versed in these sciences to give correct predictions. Many of his predictions have been correct. He has been a source of encouragement and help to many a person who was in distress and who sought his advice. He was preparing a work on palmistry and he showed to me the manuscript which contained the palm prints of many leading people and his notes on some of the lines found in their hands. Unfortunately, he died without publishing this book.
He is a man of sterling character and his passing away at an early age is a loss not only to his friends and relations but also to the public of Sri Lanka and the outside world. Only recently he showed me the appreciations in the foreign papers praising him for the correct predictions he made regarding the present President of the U.S.A. and the Prime Minister of Pakistan. Many are the predictions he has made regarding the political leaders of Sri Lanka and which have come true. A large number of the leading men who were at his funeral shows the popularity he enjoyed in Sri Lanka.
May his soul rest in peace.
H. W. TAMBAH, Q.C., Ph.D., LL.D., London Former Justice of the Supreme Court of Ceylon and the Republic of Sierra Leone

Page 12
இரங்கற்பா
கலையெழில் சிறந்த கரம்பன் நகரிலே பலமொழி பயின்ற பண்பாளர் கந்தையா தலைய ள ஊரில் மகேஸ்வரி மங்கையை குலமனை யாட்டி யாய்க் கொண்டனர் வாழ்வில் இருவரும் இயற்றிய தவப் பயனுக திருநிறை சிரேட்ட புதல்வர் உதித்தார் திருவெனும் நாமம் திகழ இட்டே திருவென வளர்த்தனர் பெற்ருேர் தாமே வாணி, பவானி, றமா, மகேசன், நளினி என ஐவர் உடன்பிறப்பாளர் திருவுடைத் திருவும் கலை என வளர்ந்து கலை பல பயின் ருர் குவலயந் தன்னில் தலை நகர் நண்ணித் தினகரன் நாளேட்டில் பலர் உடை ஆசிரியக் குழுவிற் றனும் ஒருவராய்க் கடமை உயர்வுப் பெற்ருர் கோபுரம் உயர்ந்த கோயில் சிறந்த மாவையூர் மங்கை மாண்புறு பாவை ஞானேஸ்வரி யெனும் நங்கை நல்லாளை ஞாலம் போற்ற நன்கு கைப்பிடித்தார் ஜகஜனிை ஜனுர்த்தன் ஜகலக்ஷி என்றே ஜக கலம் போற்றக் குழந்தைகள் மூவர் செம்மலார் பெற்ருர் சிதைவிலா இன்பம் குலவித்தையாகவும் கலைக் கொடையாகவும் நுவலரும் சோதிட நுண்கலை தேர்ந்தார் குவலயத்துள்ளோர் மனக்குறை தீர்க்க கூடுவர் திருவின் கோயிலின் வாயில் பாக்கிஸ்தானியர், சிங்கையர், சீனர், மலாயா, அமெரிக்கர் மற்றுள நாட்டார் ஆகியோர் அறியப் புகழ்தனை ஈட்டினர் இணையிலாச் சோதிட நிபுணராஞர் இருந்துமென்? பலகால் சிற்சில நோயால் வருந்தி நலமது குற்றினர் உடற்பலங் குறைந்தனர் நடையது நலிந்தார் நமன் வரவு தெரிந்தார் அமாவாசை ஐந்தாம் தேதி அதிகாலை வைத்தியர் காண மனையாளுடன் சென்ருர் ஆருயிர் மனைவி ஆவி சோர்ந்திட ஐயாவென்றே அலறிடக் குழந்தைகள் அன்னையார் மைந்தா மைந்தா என்றரற்ற சகோதரர் எல்லாம் அண்ணு என்றலறிட மைத்துனர் மைத்துனியார் மயக்கம் எய்திட அயலார் அன்பர் ஐயகோ என்ன ஆதவன் போன்ற சோதிடத் தலைவன் அவனியார் ஏங்க ஏகினர் வானூர் ஓம் எனத் தந்துபி ஆர்த்தன எங்கும் ஒம் எனத் தேவர் உவந்தனர் உள்ளம் ஒம் எனச் சிவனர் பதமலர் எய்தினர் ஓம் எனச் சாந்தி அடைந்ததே ஆன்மா.
-திருமதி சந்தணு நல்லலிங்கம்

LEAVE YOU......
When I must leave you
For a little while -
Please do not grieve
And shed wild tears
And hug your sorrow to you
Through the years,
But start out bravely
With a gallant smile;
And for My sake
And in my name
Live on and do
All things the same,
Feed not your loneliness
On empty days
But fill each waking hour
in useful ways
Reach out your hand
in comfort and in cheer
And I in turn will comfort you
And hold you near; my loved ones;
And never, never
Be afraid to die
For I am waiting for you in the skyll
Forever Yours Thiru

Page 13
திடீர் இழப்பின் அதிர்ச்சியால் நாமிருந்த வேளையில் முன்வந்துதவிய அனைவருக்கும் , ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், அனுதாபச் செய்தி அனுப்பிய வர்களுக்கும் இறுதிச் சடங்குகளிலும் அந்தியேட்டி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டவர்களுக்கும் பல வழிகளில் எமக்குக் கை கொடுத்த உறவினர்கள் நண்பர்கள் ஆகிய யாவருக்கும் எங்கள் உள்ளங்கனிந்த
நன்கறிகள்.
திருமதி ஞானேஸ்வ ரி திரு. பிள்ளைகள்,
Our sincere thanks to all the relations and friends who shared with us the Sorrow, attended the funeral, sent floral tributes, messages of condolences and helped us in numerous ways.
MRS. GNANESWARY THIRU
8.
CHILDREN
United Merchants Ltd. (Colombo - 12.


Page 14