கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊரடங்கு வாழ்வு

Page 1


Page 2

ஊரடங்கு வாழ்வு

Page 3

ஊரடங்கு வாழ்வு
1984ஆம் ஆண்டு ஈழநாடு' பத்திரிகையில் வெளியான ஆசிரியத் தலையங்கங்கள் சில
க. சபாரத்தினம்
தமிழியல் : 1985

Page 4
First Edition: June 1985
Copyright : Author
Sri lanka : Rs. 25-00
India . Rs. 15-OO
Other Countries US Dolars : 4 - OO
Title: Uratanku Valvu (Tamil); Selected editorials of 1984, from the Jaffna Tamil daily 'Ilanatu"; Author: Mr. N. Sabaratnam, B.A. (Lond.) P. G.T.
Publisher: Dr. P. Ragupathy on behalf of Tamiliyal; Printer: Blaze Printers 8 Co., Madras - 600 020; Cover designed by: S. Bhavani Shankar; Cover Printed at: Sudarsan Graphics, Madras - 600 017; Copies available at : Cre-A: 268, Royapettah High Road, Madras - 600 014.

அறிமுகம்
*ஏசுவார்கள்; எரிப்பார்கள்; அஞ்சவேண்டாம்,
உண்மையை எழுதுங்கள்; உண்மையாய் எழு துங்கள்' - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ‘ஈழநாடு’ பத்திரிகை தொடங்கிய பொழுது, யாழ்ப்பாணத்துச் சித்தர், யோகர் சாமி வழங்கிய ஆசியுரை இது. **உண்மை புனிதமானது, விமரிசனம் விரும்பியபடி செய்ய லாம்' என்பது பத்திரிகா தர்மக் கோட்பாடு. செய்தியில் உண்மை " என்பதன் சார்பு நிலையை உணர்த்தும் வாசகங்கள் இவை எனக் கொள்ளலாம்.
ஈழத் தமிழருக்கு இடுக்கண் ஏற்பட்டிருக்கும் இக் காலகட்டத்தில், உண்மையை உண்மை யாய் எழுதுவதில் ஈழநாடு பத்திரிகையின் பங் களிப்பு பாரியது. சில ஆண்டுகளுக்கு முன்னர், *சிவிலுடை அணிந்தோரால் இப்பத்திரிகை அலுவலகம் எரியூட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. ‘ஈழநாடு’ ஆசிரியராக விளங் குபவர் திரு ந. சபாரத்தினம் அவர்கள்.

Page 5
ν
பலருக்கு, உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறு வதுடன் பொதுவாழ்க்கை முடிவடைகின்றது. அசாதாரண ஆத்ம பலமுடைய மிகச் சிலருக்கே ஓய்வுகாலத்திலும் பொதுவாழ்வு மேலும் அர்த்த முள்ளதாகின்றது. இதில் இரண்டாவது வகை யைச் சேர்ந்தவர் எனது ஆசிரியர் திரு. ந. சபாரத்தினம். யாழ்ப்பாணக் குடாநாட்டை ஒட்டிய தீவுகளில் ஒன்ருன காரைநகரில் பிறந்த இவர், எழுபத்தைந்து வயதை எட்டு கிருர், - . . .
சென்ற நூற்ருண்டில், கல்வி மறுமலர்ச்சி யாளர்களால் தோற்றுவிக்கப்பட்டது யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரி. இதன் அதிபராக விளங்கி, 1970-ஆம் ஆண்டு இளைப்பாறியவர் திரு. ந. சபாரத்தினம். இந்துக் கல்லூரியும், ஈழநாடும் ஒரு சமூகம் உருவாக்கிய உயர்ந்த நிறுவனங்கள். இவற்றிற்கூடாக இவரது பணி கள் சமூகத்தால் மதிப்பிடப்படவேண்டியவை.
பன்மொழிப் புலமையூடாகப் பெறப்பட்ட பரந்த அறிவு, பல தசாப்த சமூகப் பிரக்ஞையால் கிடைத்த அனுபவம், அனைத்திலும் மேலாக,

w
*உள்ளொளி ; இவற்றிலிருந்து பிறந்த வாச கங்கள் இவரது தலையங்கங்கள். இவர், பிரகட னப்படுத்தப்பட்ட எழுத்தாளர் அல்லர். எழுத் துலகில் இடம் பிடித்துக்கொண்டவர். தனக்கே உரித்தான தனிநடை தொடர்பற்றுத் தோன் றினுலும் கருத்தின் வலிமையால் உரம்பெற்ற வாக்கியங்கள்; அபாயகரமான நெருக்கடியுள் ளும் வியப்பூட்டும் அஞ்சாமையுடன் மண் ணின் குரலாக எழுதப்பட்ட பத்திகள் : எழுத் துலகில் இத்தன்மைகளுடன் எழுந்த படைப்புக் கள் மிகச் சிலவே. தமிழ்ப் பத்திரிகை எழுத் தில் தனியிடம் இவற்றிற்கு உண்டு. ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் "உண் மையாய் எழுதப்பட்ட பதிவேடுகள் இவை. இக்கட்டுரைகளின் ஆழத்தையும் சமூகப் பின் னணியையும், விரிவாக ஆராய்ந்து அச்சிடக் கூடிய நிலை இன்றில்லை. அது வருங்காலத் திற்குரியது.
கலாநிதி பொ. இரகுபதி சென்னை ஆனி, 1985

Page 6
viii
20-2-84
23-2-84
1-8-84.
2-3-84
20-3-84
23-3-84
24-3-8驻
2-4-84
கலங்கிய (கண், தண்) நீரில் அதிகார மீன்பிடி அவசியமா
இலவசக் கல்வி
வட்டமேசையும் வடபகுதியும
மக்கள் விஞ்ஞானம்
மயான காண்டம் (2)
தமிழ் இளைஞர்களுக்கு சுயவேலைப் பயிற்சி
எல்லாம்நன்மைக்கே
ஒடுக்கப்படும் இனம்?
10
13
16
19
21

10-4-84
16-4-84 17-4-84
18-4-84
19-4-84
24-4-84
30-4-84
2-5-84
யாழ்ப்பாண நன்னுடு
வன்செவியோ நின்செவி
அமைதி ஏற்பட ராணுவத்தை அகற்றுக
வாழும் தத்துவம்
சித்தவைத்தியமும், சைவசித்தாந்தமும்
காணுமல் போனவர்கள்
நிக்ஸன்-பிங்பொங்; றிகன்-புன்னகை
தீ(மை)யணைக்கும் படை
24
27
29
31
33
35
38
41

Page 7
3-5-84
8-5-84
9-5-84
18-5-84
19-5-84
21-5-84
26-5-84
28-5-84
யாழ்ப்பாணமெனும் பாலைவனம்
தீர்வு தேடிநிற்கும் தேசியப் பிரச்சனை
இலங்கையும் இந்துமாகடலும்
கிரிக்கட் مننه
மருத்துவத் துறையில் சிந்தனை மாற்றம்
"செத்துக்கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம் பிணங்கள்’
போர்க் கோலமும் பிரிவுறும் தலைமையும்
இருபது வருடங்களுக்குப் பின்
43
46
49
52
55
58
61
64

5-6-84
31-5-84
15-6-84
20-6-84
22-6-84
25-6-84
29-6-84
2-8-84
இலங்கை - இந்திய ஊடல்
பூதம் கிளம்புவதற்கு இடந்தரலாமா?
ஆங்கிலத்தின் அந்தஸ்து
பயனற்ற பிரசாரம்
வினை, தினை, வெங்காயம்
யாழ் விவசாய பீடம் :
திட்டத்துக்கு நடந்ததென்ன?
ஜனநாயகங்கள்: மேற்கிலும் கிழக்கிலும்
விடுதலைக்கு வழி
xi
67
7O
73
74
77
80
83
86

Page 8
хіі
11-8-84
17-8-84
20-8-84
21-8-84
24-8-84
30-8-84
31-8-84
21-9-84
24-9-84
முடிவு எவ்வாறிருக்கும்
ஆனந்த சுதந்திரம் அடைவோம்
இன ஒதுக்கலுக்கு ஒரு புதுவேடம்
யாகாவாராயினும் நாகாக்க
தமிழர் பிரச்சனைக்குத் தீவிர சிகிச்சை
ஜனநாயகத்தின் காவலர்கள்
இலாச்சிக்குள்ளிருக்கும் எலும்புக்கூடுகள்
மதச்சார்பற்ற அணுகுமுறை
நாட்டின் பாதுகாப்பு
89
92
95
98
101
104
106
1 09
112

26-9-84
28-9-84
9-10-84
10-0-84
2-10-84
18-10-84
22-10-84
25-10-84
26-10-84
தனிச்சிங்கள நினைவு தினம்
திரிசங்கு சுவர்க்கம்
ஐந்து வருட அர்த்தமற்ற போர்
பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை
ஹாட்லியும் ருேயலும் இடைத்தேர்தலும் தமிழர் ຕົກ ສບຸລີ
மனித உரிமை மீறல் : இதிலும் இரண்டாட்டம்
அணுவாயுதப் பாதுகாப்புக் குடை
பொற்ருலியோடெவையும்போம்
xiii
115
118
121
124
127.
130
133
136
139

Page 9
xiv
29-10-84
12-i-84
14-1-84
9-11-84
20-i-84
21-i-84
24-1-84
5-12-84
7-12-84
காவற்படையும் கள்ளத்தோணியும்
மயிலே மயிலே இறகு போடு
அணிசேராச் சித்தாந்தம்
பிறந்ததின வாழ்த்து
ஆபிரிக்காவில் பட்டினி அழிவு
யாழ்ப்பாணத்தில் "உர" வாரம்
"ஊரடங்கு" வாழ்வு
தீர்ப்பென்ன
ஒரு மனிதனின் உறுதி
142
145
148
151
154
157
16O
163
166

8-12-84 புது வீடு
16-12-84 மனித உரிமைகள் : கேலிச்சித்திரம்
17-12-84 இராணுவ பலாத்காரம் : உள்நாட்டுப் பிரச்சனை?
18-12-84 திரும்பிப் பார்
பிழை திருத்தம்
Listb 80 : 28-8-84 - 25-6-84
Lui alb 124 : 12-10-84 - 10-10-84
பக்கம். 67 : 5-6-84 கட்டுரை அதற்கு அடுத்த பக். 70 : 31.5-84 கட்டுரையுடன் இடம் மாறியுள்ளது.
XV
168
170
172
174

Page 10

கலங்கிய (கண், தண்) நீரில் அதிகார மீன்பிடி அவசியமா ?
* பசி வரப் பத்தும் பறந்துபோம் ' என்பார்கள். ஆங்கில அறிஞன் ரொபட் லூயி ஸ்டீவன்சன் "பசி வரக் காதலே பறந்து போம்" என்கிருர், நாமென்ன சொல்கிருேம் ? பதவிப் பசி வரப் பதினென்றும் பறந்துபோம். உணவுப் பசி பொல்லாதது. இருப்பினும் அதுவும் மற்றைய பத்தும் அதிகார வேட்கைக்கு ஈடு கொடுக்குமா?
ஆடிக் கலவரம் ஏற்படுத்திய கண்ணிர் வெள்ளம் யாழ்ப்பாணத்தையே நாடியது; மிக அதிசயமான வெள்ளப் பெருக்கு. கண்ணிர் வெள்ள மானதால் அது மேடேறவும் முடிந்தது. இன்னும் வடிந்தபாடில்லை. இன்று ஆறு மாதங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தை பெருமளவு பாதித்தது இயற்கை அன்னையின் கண்ணிர்-தண்ணிர் வெள்ளம்.
ஆடிக் கலவர விபரங்கள் இந்த நாட்டில் சரிவர அறிதல் கடினம்; வெளிநாடுகளில் புனிதமான புள்ளி விபரங்களுடன் வெளிவந்திருக் கின்றன. உண்மை தானுகவே வெளிவருமென்ற வாசகத்தில் நாம் உறுதி கொண்டுள்ளோம். எனவே கண்ணிர் வெள்ளம் முற்ருய் வற்ற முன் உரிய விபரங்கள் வரலாறு வரைய உதவுமென நம்புகின்ருேம்.
அவ்வாருக இன்றைய பெருமழையின் பெருவெள்ளம் பட்ட انتق9Hیک காலிலே படுவது சிந்தனைக்குரியது. பூர்வகர்மம் போன்ற தத்துவ சிந்தனையை நாம் இங்கு கருதவில்லை.
கொழும்பிலிருந்து அள்ளுப்பட்ட மனித பட்டாளத்தை வடக்கிலும் கிழக்கிலும் இன்றைய குரோதக் கொந்தளிப்பில் எவ்வாறு பாது காப்பாக வைக்கலாமென்ற நிலையில் வெள்ளமும் 'கள்ளமும் பாம் பாட்டுகின்றன.

Page 11
2 ந. சபாரத்தினம்
அறுவடை கழிய உண்ண உணவுக்காவது தட்டுப்பாடு இருக்காது என்ற மனக்கோட்டையை வெள்ளம் அள்ளிவிட்டது. அடகுவைத்த நகைகள் கள்ளத்தால் அள்ளுப்பட்டன.
யாழ். செயலகத்தில் இந்த வெள்ளக் கண்ணீரின் விபரத்தை அரச அதிபர் தேவநேசன் நேசையா பத்திரிகையாளர் மாநாட்டில் விளக்கியுள்ளார். இது எவ்வாறும் திரிக்க முடியாத தெளிவுடைய தாகக் காணப்படுகிறது.
நாற்பது ஆயிரம் ஏக்கர் நெல்லு, 2590 ஏக்கர் வெங்காயம், 1800 ஏக்கர் உருளைக்கிழங்கு முற்றும் நாசம். நெல் வேளாண்மை 80 வீதம் அழிவு; மீதி 20 வீதம், தொடர்ந்து மழை பெய்யாவிடில் தப்பலாம். வெங்காயத்தில் 90 வீதம் அழிவு. உருளைக்கிழங்கு முற்றும் அழிவு. இந்த அறிக்கையைத் தலைநகருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கிறது. மட்டக்களப்பின் வெள்ளக்காடு, திருகோண மலையில் வெள்ளத் திருவிளையாடல் யாழ்ப்பாணத்துக்கும் மேலான வை. இப்பகுதி மக்களின் அகதி வாழ்வு எப்போது முடிவடையு மென்பது சொல்ல முடியாது. இன்று திருகோணமலையின் சொத் துரிமையே பிரஸ்தாபிக்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களாக இடைவிடாது தொடர்ந்து நடை பெறும் வெள்ள நாடகம் பத்திரிகைகளுக்கும், வானுெலிக்கும் பசி தீர்க்கும் செய்திகள். இவற்றை நேரில் பார்வையிட அரசாங்கம் என்ன பொறுப்பான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? மத்திய அரசின் உயர்மட்டக்குழு நேரில் மதிப்பீடு எதுவும் எடுத்திருக்கிறதா? எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் என்ற கோட்பாடா ? அல்லது *தனித்தமிழ்" வெள்ளமென்ற தப்பபிப்பிராயமா?
1956-ல் தனிச்சிங்களத்தைத் தமிழ்மக்கள் மீது திணித்த காலஞ் சென்ற பண்டாரநாயக்கா அதற்கொரு மாற்றுமருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் வேளையில், 1957-ல் ஒரு பெருவெள்ளம் தமிழ்ப் பகுதிகளைத் தாக்கியது; இவ்வளவு பெரிதுமல்ல, இவ்வளவு நீண்ட காலமுமல்ல. தமிழ் மாநிலங்களில் அடியெடுத்து வைக்கும் வாய்ப் பைத் தேடியிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. (S.W.C.R.D. என்றும் அவரைச் சொல்வதுண்டு) மிக அமைதியாக இவ்விடங்கள் அனைத்

ஊரடங்கு வாழ்வு 3
தையும் விமானத்தில் சுற்றிப் பார்த்து, யாழ்ப்பாணக் கச்சேரியில் ஒரு திடீர் மாநாடும் நடத்தியிருந்தார். அது அந்தக்காலம்.
இன்று கண்ணிர், தண்ணீர் என்ற இருபெரும் வெள்ளத்தில் சுளியோடும் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுகாண சர்வகட்சி மாநாடு செயற்படுகின்றது.
இந்தச் சர்வகட்சி மாநாடு இவ்விரு வெள்ளத்தையும் பயன் படுத்தி, சமூக உறவை ஏற்படுத்துவது சாலச்சிறந்தது. சமூக நட்பு அரும்பாவிடில் மாநாட்டு முடிவுகள் பயன் தரா.
ஆணுல் நடப்பதென்ன ? ஆளும்கட்சித் தலைவர்களும், எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்தப் பெருவெள்ளத்தில், சிங்கள மக்களின் ஆதரவைத் தட்டி எழுப்பி, கலங்கிய நீரில் அதிகார மீன்பிடிக்கப் போட்டியிடுகின்றனர். இது இந்தக்காலம்.
அதிகார வேட்கை மிகப் பொல்லாததென்பதை உணர்ந்த மகாத்மா காந்தி தன்னை மிஸ்ரர் (Mr ) காந்தியாக வைத்துக்கொண்ட ஞானம் பரம ஞானம்.
20-2-84

Page 12
இலவசக் கல்வி
காசா இலேசா ? என்ருெரு நாடோடி வாசகம் உண்டு; எதனையும் எவரையும் காசுக்கு வாங்கிவிடலாம் என்ற மனத்திமிரில் எழுந்த வாசகம் இது. படித்தவன், பதவியில் உயர்ந்தவன், சமூகத்தில் செல்வாக்குடை யவன், எவனுயிருந்தாலும் காசு, பணம், சொத்துபத்து உள்ளவனு கவே இருக்க வேண்டும்; இந்த அடிப்படைக் கொள்கை இன்றுதான் மேடேறிவிட்டதா?
உப்பில்லாப் பண்டம் குப்பையில் என்றவாறு, பணமில்லாப் படிப்பு என்ன செய்யுமென்ற எண்ணம் மீண்டும் தலைவலியை ஏற்படுத்து வதுபோல தோன்றுகிறது.
இன்றைய சமுதாய நோக்கு இத்தகைய பிற்போக்குக்கு ஊக்கமளிக்கிறது. இ. போ. ச. வை நம்பியா பயணத்தில் வெளிக் கிட்டீர்?" என்ருெரு கிண்டல். "அரசாங்க ஆஸ்பத்திரியில் நோயாளி சிசிச்சை பெறுவதானுல் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்". இவ்வாறு, பேசத் தெரிந்தவர் பேரம் பேசும் காலம் இது
இதற்கு மறுத்தான் விடக்கூடியவர்கள் மெளனம் சாதிக்கின்றனர்.
இன்னுெரு வகையில் இன்றைய போக்கை விளக்க வேண்டு LDIT(606); பாடசாலைக்கெதிரே அப்பாடசாலையின் திறமையான ஆசிரியர்கள் காசுக்குப் பாடஞ் சொல்கின்றனர். இ. போ. ச. பஸ் நிலையத்துக்கெதிராக தனியார் பஸ் சேவை துரிதமாக செயல் படுகின்றது. அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அணித்தாய் தனியார் மருத்துவமனை திறம்பட நடைபெறுகின்றது. காசா இலேசா? போக்குவரத்தைப் பொறுத்தளவில் இரண்டிலும் காசு ஒன்றில் போவது சங்கடம்; மற்றதில் போவது வேகம்; சில சமயம் அபாயம். இவ்வாறு இந்நாட்டின் பகிரங்க சேவைகள் பிளவுபட்டிருக்கின்றன.

ஊர்ட்ங்கு வாழ்வு 5
அரசாங்கம் உண்மையில் மக்கள் சேவை மகத்தானதாக நடக்க வேண்டுமென்று எண்ணுகிறது; சொல்கிறது; செயற்பட எத்தனிக் கிறது; எவ்வளவு தூரம் வெற்றிப் பாதையில் செல்கிறது? அதுதான் முக்கிய கேள்வி.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து- இம்மூன்றையும் ஒருங்கு சேர்த்து அரசாங்க நிர்வாகத்தைக் குட்டிச்சுவராக்கும் சக்திகள் உள்ளும் புறமும் அநேகம்.
அநேகம் என்று சொல்லும்போது வாய் விடாச் சீவன்களான வாக்காளர் பெரும்பான்மையரென்பதை நாம் மறக்கவில்லை; நடு மட்டத்தினரின் குமுறல்களே பிரபலம் பெறுகின்றன.
முதலாளித்துவ கூட்டமும் அதற்கு வால் பிடிக்கும் சமூகப்பிரமுகருமே இந்த முற்போக்குச் சாதனங்களை கண்டிக்கும், திசை திருப்ப முற்படும் கூட்டத்தினர்.
இலவசக் கல்வி' என்ற 40 ஆண்டு வயதடைந்த கல்வி முறை இன்றும் ஒரு பரிகாசமான கருத்துக்கு இடங்கொடுத்துவருகிறது. இதனை எதிர்த்தவர், எதிர்ப்பவர், யாரென்று இனங்காண்பது கடினமல்ல; சமுதாயப் போக்கை புரிய முடியாத பேதையர்.
இவர்கள் மறந்து விடுவது நேர்முகமாகவும், மறைமுகமாகவும் நினைவூட்டப்பட்டு வருகிறது.
அரசாங்கம் வசதியற்ற பிள்ளைகளுக்கு ஸ்தாபித்த மத்திய மகாவித்தியாலயங்கள், முகாமை செலுத்தும் தேசியபாடசாலைகள், ! அனைத்திலும் வழங்கும் இலவசக் கல்வி நாடளாவிய வகையில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி உயர்வை வழங்கியிருக் கிறது. சமுதாயத்தில் கணிசமான முற்போக்கை விருத்தி செய்கிறது. பேராசிரியரும், சந்திரமண்டல ஆய்வாளரும் விஞ்ஞானியுமாகிய டாக்டர் பொன்னம் பெருமா, மாகோ மத்திய வித்தியசாலையின் தாய்மொழிக் கல்வியின் படைப்பெனப் பெருமையடைகிருர்.
அண்மையில் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரியப்பட்ட திரு. றன் பண்டா இலவச கல்வியின் பெரும் படைப்பு:

Page 13
6 ந. சபாரத்தினம்
இப் பதவியை முதன் முதல் வகிக்கும் மத்திய மகா வித்தியாலயத் தின் பழைய மாணவர்; அநுராதபுர மாவட்டத்துக்கு பெருமை தேடியிருக்கிருர்,
யாழ்ப்பாணத்தில் இலவசக் கல்வியின் சாதனைகள் ஏட்டில் அடங்கா ! தனி மாணவர் மட்டுமல்ல, கிராமிய பாடசாலைகளின் தரம் உயர்ந்தவாறென்னே ! w
** பெற்ருேரின் பண பலத்தில் பிள்ளையின் கல்வி தங்கியிருக்கலாகா தென்ருர் " அமரர் கன்னங்கரா. ** சிறுவர் எல்லோரும் பெரிய வீரராக வருதல் வேண்டும் ' என்ருர் சாரணர் படையை நிறுவிய பெருவள்ளல் பேடன் பவல் பிரபு.
இவ்விரண்டையும் பயன்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் இடமும் அகில இலங்கையில் இரண்டாவது இடமும் பெற்ற பாடசாலை வட்டக்கச்சி மகா வித்தியாலயம். அதன் சாரணர்குழு ஆற்றிய சாதனை பொன்னுற் பொறிக்கப்பட வேண்டும்.
அவசரமென்ருல் சோதிடம் பார்த்துவிட்டு தனியார் வானில் பயணம் செய்யுங்கள். காணியை விற்றும் தனியார் மருத்துவ மனையில் வைத்தியம் செய்து படுக்கையிலேயே ஆண்டவனுடன் இரண்டறக் கலவுங்கள்.
இலவசக் கல்விக்கும் தேசிய பாடசாலைகளுக்கும் உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதீர் - . . .
23-2-84

வட்டமேசையும் வடபகுதியும்
A. தேசிய நலனைக் கருதி, தமிழ் மக்களின் தொல்லைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசியல் அணுகுமுறையே சிறந்ததென்பது எமது தெளி வான, திருத்தமான அபிப்பிராயம்.
நீண்டகால ‘நெருக்கடிகள்’ இந்த முடிவை ஏற்படுத்தியதையிட்டு நாம் மட்டுமல்ல நாட்டிலுள்ள சகல கட்சிகளும், சமுதாய, சமய நிறு வனங்களும் மகிழ்ச்சி தெரிவித்தன.
சர்வகட்சியென்று ஆரம்பித்து அது வட்டமேசையாக மாறியபோது ஒரு சந்தேகம் கிளம்பியபோதும், நாடளாவிய அடிப்படையில் பொதுஜன அபிப்பிராயம் திரள அது வழிகோலுமென்ற கருத்து வலுப் பெற்றது.
இம்மாநாட்டுக்கு இருந்த முட்டுக்கட்டையை நீக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைவி அளித்த மிக நியாயமான ஆலோசனை, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை அழைக்கப் பெரிதும் உதவியது குறிப்பிடித் தக்கது.
வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்ததுபோல சிறிலங்கா சுதந்திரக் கட்சி இம்மாநாட்டில் பங்குபற்ற விரும்பாதிருந்ததும், பங்கு பற்றிப் பின் வெளியேறியதும் பெரும் வேதனைக்குரியது.
அடுத்த தேர்தலைக் காத்திருக்கும் அரசியல் லாபம் தேச நலனை மறப்பதில் அதிசயமில்லை; ஆனல் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகுறிப்பாக அதன் தலைவியும், அவருடைய அருமை மகன் எதிர்க் கட்சித் தலைவர் அனுராவும் கொடுத்த விளக்கம், பொதுமக்களைத் திசை திருப்ப முடிந்தாலும் நியாயமற்றதென்பதில் எவ்வித ஐயமு மில்லை.

Page 14
8 ந. சபாரத்தினம்
இந்தக் கோணல்வழி மிக வசீகரமாகத் தோன்றியபோதும் நிச்சயம்
நன்மை பயக்காது.
வடபகுதியில் அதிகரிக்கும் வன்செயல்களைப் பணயம் வைத்துச் சிங்கள மக்களின் ஆதரவுக்குப் போட்டியிடுவது, குளிக்கப் போய் சேறு பூசுவது போலிருக்கிறது. எவ்வளவு விரைவில் இம்மாநாடு வெற்றி யடைகிறதோ, அவ்வளவு விரைவில் நாட்டின் பல குழப்பங்களும் முடி வடையும். V
அடுத்த தேர்தலை நம்பி, அல்லது ஆட்சியில் ஒரு மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தாம் முன்னர் கூறிய ஆலோசனைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி காற்றில் விடுவது ஆளுங்கட்சிக்கு ஏமாற்றம் மட்டு மல்ல, ஒரு அச்சத்தையும் உண்டுபண்ணியிருப்பது போலிருக்கிறது: எனவே, அதன் காற்றும் மாறி வீசத் தொடங்கிவிட்டது; இன்று பெய் யும் பேய்மழை போல் அரசியலும் பருவம் கெட்டு நிற்கிறது.
பாராளுமன்றத் தொடக்கக் கூட்டத்தில் 'தமிழர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எல்லாக் கட்சிகளினதும் தலைவர்களினதும் ஒத் துழைப்பை மிகக் கண்டிப்பாக கோரியிருந்தார் ஜனுதிபதி. நாட்டுக்கு ஒரு புதிய திருப்பம் ஏற்படலாமென்று நாமும் எண்ணினுேம்.
இன்று பார்த்தால், பொலநறுவை தேசிய இளைஞர் முகாமில் வட.
பகுதி பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தையே
மீண்டும்:ஐற்புறுத்தியிருப்பது.ஆச்சரியமல்ல; ஆனல். இது சடுதி மன
ம்ாற்றத்தைக் குறிக்கிறது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை காரணமாயிருக்கலாம்.
26 வருடத்துக்கு முன் நடந்த நாடகம் இன்று மீண்டும் நடிக்கப் படுவதாகத் தெரிகிறது.
செல்வா-பண்டா ஒப்பந்தம் அன்று நியாயமான தீர்வு என்ற போது அது கிழிபட்டது. இன்று எத்தனை ஆண்டு அனுபவம், எத் தனை துன்பங்கள், நட்டங்கள், எத்துணை தேசிய வீழ்ச்சி-இவற்றிற் குப் பின்னும் பழைய குருடி என்ற போக்கில் ஒரு நல்ல தீர்வு தடைப் படுகிறது. அன்றைய பழி இன்னும் தொடர்கின்றதே!

ஊரடங்கு வாழ்வு 9
வடபகுதி பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்படவேண்டும்; இராணு வத்தினுல், பொலிஸாரால், அமெரிக்க ஸ்டைல் தொண்டர் படை யால், இராணுவ ஆட்சியால் மக்களை அடக்கலாம், பயங்கரவாதி களைத் தானும் ஒழிக்கலாம்; சிங்கப்பூர் பொருளாதாரம் போல் இது வும் நாட்டுக்கு உகந்ததல்ல.
இந்த நாட்டு மக்கள் என்ற பண்பில், தமிழ் மக்கள் நாட்டில் எங்கு வசித்தாலும் நிம்மதியாகவும் சட்டத்தின் பாதுகாப்பிலும் வாழ அது வழி கோலாது. M
இன்றைய பெருவெள்ளமும் "பயங்கரவாதமும் இருதரப்பட்ட அழிக்கும் சக்திகள். மக்களைப் பாதுகாத்து, அவற்றை வடியப் பண்ணு வதிலேயே வெற்றி தங்கியுள்ளது.
1-3-84

Page 15
மக்கள் விஞ்ஞானம்
கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் வாழும்போது தூய விஞ்ஞான ஆராய்ச்சியில் பெருந்தொகை பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வது நியாயமா? என்ற கேள்வி இன்று நொபல் பரிசு பெற்ற டாக்டர் சந்திரசேகருக்கு விடுக்கப்பட்டது.
*மனிதன் உண்டு, உடுத்து, மகிழ்ச்சி கொள்வது திருப்தியாகாது. விஞ்ஞான ஆராய்ச்சியால் அடையும் விளைவுகள் காலகதியில் சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கியமானவை” என்று பதிலளித்தார் விஞ்ஞான மாமேதை சந்திரசேகர்.
இந்த உலகப்புகழ்பெற்ற மேதாவி ஒரு தமிழன்! தமிழ்நாட்டு மொழி, கலை, கலாசாரத்தில் ஊறியவர். அதுமட்டுமல்ல, அவருடைய குடும்பத்தில் விஞ்ஞானம் குலவித்தையென்பதற்கு அவருடைய சிறிய தந்தையார் நொபல் புகழ்பெற்ற சேர். சி.வி. ராமன் நல்ல உதாரணம். is floofsir F.R.S. ulid, (Fellow of the Royal Society) மேதைகளின் மிகப்பெரும் கெளரவம். இந்தியாவில் மிகச் சிலரே இதனைப் பெற்றிருக்கின்றனர். சிறிய தகப்பனும் பெருமகனும் இதனைப் பெற்றனரென்ருல் இந்தக் குடும்பத்தின் சிறப்பும், தமிழரின் ஆதாரக் கல்வி கண்ட அற்புதமும் ஓரளவிற்குப் புலப்படும்.
டாக்டர் சந்திரசேகர் இளைஞராகவே இந்தியாவை விட்டு இங்கி லாந்து அமெரிக்கா செல்ல வேண்டிய வசதி கிடைத்ததால் இன்று உலகின் மிகப்பெரும் விஞ்ஞான மேதைகளில் ஒருவராக வளர்ச்சி யடைந்திருக்கிருர்,
நாடு, மதம், மொழி, கலாசாரம் தானும் விஞ்ஞான உச்சியில் எவ்வித பாகுபாட்டையும் அனுமதிப்பதில்லை. தூய விஞ்ஞானம் உலகை ஒன்று படுத்தும் சக்தி. மனிதன் அதனைத் துர்ப்பிரயோகம் செய்கிருன்.

ஊரடங்கு வாழ்வு 11
மண்ணுலக - விண்ணுலக அமைப்புகளின் அடிப்படை உண்மை யை ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஒன்றுபட்ட குடும்பம் என்ற கருத்தை வற்புறுத்தி வருகிருர் டாக்டர் சந்திரசேகர்.
சிறிய தந்தையார் சேர்.சி.வி. ராமன், ஒளியின் ஒரு அற்புதவிளைவைக் (Raman Effect) கண்டுபிடித்ததற்கு நொபல் பரிசு பெற்ருர், டாக்டர் சந்திரசேகர், நட்சத்திரங்களின் அழிவில் ஏற்படும் அமைப்பு - சூரியன் அளவு பரந்த கும்பம் ( Chandrasekar Mass Limit) என்ற கோட் பாட்டின் தந்தையெனச் சென்ற ஆண்டு நொபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது. விஞ்ஞான நூல்களில் இது இடம்பெற்றுவிட்டது.
டாக்டர் சந்திரசேகரின் படிப்பறையில் வெள்ளைச் சுவரில் தூங்கும் மூன்று படங்கள்-அல்பேட் ஐன்ஸ்டைன், ஐசாக் நியூட்டன், இந்திய கணித மாமேதை ராமானுஜன் ஆகிய மும்மூர்த்திகளுமே!
வெள்ளை மாளிகையில் ஜனுதிபதி லின்டன் ஜோன்சன் அளித்த உயர் அமெரிக்க விருதுவைபவத்தில், இம்முப்பெரும் விஞ்ஞானிகளுக்கு சரிநிகர் சமானமானவரே சந்திரசேகரென்று புகழ்மாலை சூட்டினுர், சேர் பி. சி. ராய், ஜகதீஸ் சந்திரபோஸ், சேர். சி.வி. ராமன், ராமாநுஜன், டாக்டர் சந்திரசேகர் போன்ற மாமணிகள் இந்திய மண்ணில் விளைந்து வளர்ந்த விஞ்ஞானப் பயிர்கள். இவற்றில் தமிழுக்கும் இந்து கலாசாரத்துக்கும் தக்க பின்னணி உண்டு.
மாமேதைகளாக, உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவ மேனுட்டுப் பயிற்சியும் பரிசோதனை வசதிகளும் அவர்களுக்கு அத்தியாவசிய மாயின; கிடைத்தன. . • > . . . . . . .
இந்த வளர்ச்சிக்கு ஆதாரமானவை, விஞ்ஞானக் கல்வி : விஞ்ஞானப் பயிற்சி, தொழில் நுட்ப திறமையல்ல; அவைக்கேற்ற சிந்தனைத் , திறன் சொந்த மண்ணில் தளைத்து வளராவிடின் விஞ்ஞானத்தால் உலகம் முன்னேறுவது விபரீதக் கருத்தாகிவிடும்.
இன்று உலகில் எந்தநாட்டிலும் கட்டுப்பாடற்ற இளைஞர் களிடம் விஞ்ஞானப் பிரயோகத்தால் உற்பத்தி செய்யப்படும் அழிவுக் கருவிகளை சட்டைப் பாக்கெட்டிலேயே காணமுடிகிறது.
எனவே, விஞ்ஞானம் தெரிவிக்கும் தெய்வீக உண்மைகளில் மாணவர் பயிற்சி பெறுவது வீட்டிலேயே ஆரம்பமாக வேண்டும். வீட்டிலும்,

Page 16
12 ந. சபாரத்தினம்
பாடசாலையிலும், சூழலிலும் வாழ்க்கையை மேம்படுத்தும் விஞ்ஞானக் கருத்துக்கள், எங்கள் அன்ருட வாழ்க்கையை சொகு சாகவோ, ஆடம்பரமாகவோ ஆக்குவதில் மேன்மையில்லை; சிந்தனை ஆற்றலுடைய சமூகத்துக்கு உதவும் நற்பிரஜைகளே நோக்கம். கல்வி மூலமும், தொழில் மூலமும் வேலைவாய்ப்பளிக்கும் உற் பத்தி, வறுமையை நீக்கவல்ல உணவு உற்பத்தி; அதன் நேர்மை யான விநியோகம்-இவ்வித வாழ்வுக்கு ஆதாரமான தேவைகள், அதற்கப்பால் ஆத்மீக உணர்வுக்குரிய விசாரணைகள், யாவற்றை யும் காரணகாரிய ரீதியில் பயிலும் ஆற்றல் தாய்மொழிக்குரித்தான தென்பதே கல்விமான்களின் முடிந்த முடிபு.
மக்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவல்ல விஞ்ஞான அறிவு மக்கள் பேசும்மொழியில் உயர்ச்சியடைந்தாலொழிய அது ஒரு தனிப்பட்ட கூட்டத்தினரின் ஏகபோக உரிமையாய்விடும். அதற்குரித்தான மண்ணில் அது வளர்ச்சியடையாது.
இந்த வகையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆற்றிவரும் பாரிய பணி எங்கள் நேற்றைய பத்திரிகையில் 'குறுகிய காலத்தில் நீண்ட பயணம்" என்ற செய்தித் தலைப்பில் மிகப் பிரபலமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்வித துணிச்சலான தொண்டுகளை தமிழ்மக்களுக்கு மகாகவி பாரதியார் இந்நூற்ருண்டின் தொடக்கத்திலேயே பணித்திருந்தார். சிங்களத் தீவுக்குப் பாலம் அமைப்பதிலும் இன்று அதிகம் தேவை யானது இவ்வித தேசிய கல்வித் திட்டம். தஞ்சாவூரைப் பின்பற்ற பல தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் முன்வருமென நம்புகின்ருேம்.
தமிழுக்குரிய இந்த அடிப்படை ஆற்றலையும் அதன் வளர்ச்சியின் மையால் தமிழர்களின் பங்களிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் உத்வேகமற்ற நிலையையும் கவனத்திற் கொள்வது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இன்றைய அவசிய பொறுப்பு.
விவசாயம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், வர்த்தகம், சமுதாயத் தின் பின்தங்கிய போக்கை மாற்றுவதற்கு உதவவேண்டும். இன்றேல் இன்றைய வெள்ளமும் வறட்சியும் விதியின் சதியென்ற தத்துவம் நிலைக்கும்.
2-3-84

மயான காண்டம் (2)
இலங்கை வரலாற்றில் இன்று யாழ்ப்பாணம் முக்கிய இடம் வகித்திருப்பது எவ்வாறு என்பதை வரலாற்று ஆசிரியர்கள் விளக்கக் காலமுண்டு. இன்று வயதடைந்தவர்களுக்கு இதனைப் படிக்கும் பாக்கியம் கிடைக்குமோவென்பது கேள்விக்குறி.
காலத்தால் விடயங்களும் விபரங்களும் திரிக்கப்படுமென்பதை நாம் அஞ்சவில்லை. பொருத்தமான விளக்கம் காலப்போக்கில் கிடைக்குமென்பது எமது நம்பிக்கை.
இன்று யாழ்ப்பாணம் காணும் மயான காண்டம் இரண்டாவது பாகம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டு முடிவில் நடந்த அசம்பாவிதங்கள் கல்லில் வடிக்கப்பட்ட போதும் அதனை இன்று ராணுவம் நடத்தும் கொலை நாடகத்துக்கு ஒப்பிடுதல் பொருத்தமற்றது.
1977ல், 1981ல் இங்கு நடைபெற்ற கொடுமைகள் தானும் உக்கிரத்தில் குறைந்தவையல்ல; ஆனுல் நாம் கருதும் மயான காண்டம் அரசாங்கம் அனுப்பிவைக்கும் ராணுவ வீரர்களின் அசாதாரண சாமர்த்தியத்தைக் குறிப்பதே!
சென்ற வருடம் ஆடி 23ல், 13 ராணுவ வீரர் இங்கு கொல்லப்பட்ட தற்காக பழி வாங்கும் நோக்குடன் மொத்தம் 51 பேர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அரசாங்கம் ஏற்றிருக்கிறது.
புள்ளி விபரங்கள் யாழ்ப்பாணத்தின் திக்கற்றநிலையைத் தெளிவுபடுத்த
DIT L.L.T.

Page 17
14 ந. சபாரத்தினம்
கொழும்பிலும் மற்றைய இடங்களிலும் அன்று நடைபெற்ற கலவரங்கள் இராணுவம் இங்கு நடத்திய கொலை நாடகத்தின் *சிறப்பை மங்கவைத்தன.
இன்று விடயம் வேறு" என்று அரசு மட்டுமல்ல, நாமும் முன் னறிவித்தல் கொடுத்தோம்.
அந்த அறிவித்தலில் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இதயநோயின் மோசநிலையை ஆட்சியோ நாமோ பிரித்து விளக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் "யாழ்ப்பாணம்" என்ருெரு "அபாயம் நீக்கப்பட் டால் நாடு குணமடைய நல்ல சாத்தியக் கூறு உண்டென்பதே தேசிய பந்தோபஸ்து அமைச்சின் ஆரம்பத்துக்குக் காரணம்.
அமைச்சர் லலித் கண்டிக்கு புனித யாத்திரை செய்ததும் யாழ்ப்பாண பாதுகாப்பு நிலையைப் பார்வையிட உடனே வந்ததும், இந்த ஸ்தானமே அட்டமம் என்பது அர்த்தம்.
இதனைப் புரியாத மக்கள் இங்கில்லையென்று நாம் சொல்லும் போது இதன் விளைவை அறியாத தீவிரவாதிகள் உண்டென்று சொல்லலாமா?
எனவே, தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் ஏற்படும் போர் கெரில்லாவாக இருக்கலாம் அல்லது நேரடிப் பீரங்கிச் சமராக விருக்கலாம்.
இதில் எது, எங்கு, எந்நேரம், எவ்விதம் நடைபெறுமென்பது பொது மக்கள் கணக்கிட முடியாத புதிர். எனவே, இன்று நாம் காணும் மயான காண்டம் இரண்டாவது முறை பாடல் பெற்றிருக்கிறது. உண்மையில் என்ன நடந்ததென்பதை, நேரிற்கண்டவர் பலர் எங்கள் பத்திரிகைக்கு அளித்த விபரங்கள் மூலம் யூகித்தறியலாம். இது நாகரிக உலகத்தை நடுங்க வைக்கும்.
யாழ்ப்பாணத்துக்கெதிராகச் சிங்கள மக்களை ஒற்றுமைப்படுத்தும் அரசியல், இங்கு பயங்கரவாதம் ஒழியவோ அதனை முறியடிக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியடையவோ உதவாதென்பது எமது திடமான கருத்து.

ஊரடங்கு வாழ்வு 15
இன்றைய சட்டத்தில் எவரையும் இராணுவம் கைது செய்ய வோ தடுப்புக் காவலில் வைக்கவோ, தேவை ஏற்படின் கொல்ல வோ இடமுண்டு. வழக்கு விசாரணை எதுவும் இல்லாத 15A சட்டத்தின்படி எந்தப் பகுதியிலும் ஜனத்தொகையை மட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு. குழப்பம் ஒழிக்கப்படுவதே கூறும் காரணம்.
யாழ்ப்பாண விடயம் நீண்டகால விவகாரமாகலாம்; அது ஆட்சி யின் செளக்கியத்தில் தங்கியிருக்கிறது.
நீதித்துறை, நிதித்துறை, போக்குவரத்து, இளைஞர் விவகாரம், கல்வி, போதையின் பேரபாயம், வெளிநாட்டுத் தலையீடு போன்ற பல பாதிப்புக்கள் நாட்டின் இதயத்தை தாக்கி வருகின்றன; மூச்சைத் திணற வைக்கின்றன.
இந்த நிலையில், யாழ்ப்பாண மக்களுக்குண்டான பேராபத்தில் நாகரிக உலகம் அக்கறை கொள்வதில்லையென்று நாம் கருதவில்லை; இருப்பினும் நாட்டின் அபாய நிலையிலிருந்து எம்மைப் பிரித்துப் பார்க்கும் கட்டம் இன்றில்லை. ஒருயிர், பல உறுப்புக்கள்.
நாடு பூரண குணமடைய, தேசிய பந்தோபஸ்து மீண்டும் பரிசீலனைக்குரியது. ஆடியில் அங்கு, பங்குனியில் இங்கு என்று திட்டம் வகுப்பது பெரும் பேதமை மட்டுமல்ல, நாட்டின் ஆத்மீகத்துக்கு அபாயமுமாகும்.
நாடு வாழ, நாம் வாழ, இராணுவ வீரர்கள் ஓய்வெடுப்பது
நலமென எமக்குப்படுகிறது.
20-3-84

Page 18
தமிழ் இளைஞர்களுக்கு சுயவேலைப் பயிற்சி
விசர் முறிந்ததும் நியாயம் பிறக்கும் அந்த நம்பிக்கையில் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அநியாயம் தொடர்ந்தாலும் அசை வற்று முன்னேற வழி தேட வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களில் யாழ். மாவட்டம் அனுபவித்த அல்லோலகல்லோல வாழ்விலும் மக்கள் மதியிழக்கவில்லை. அரசாங்க தனியார் சேவை ஸ்தம்பிக்கவில்லை. மனித வளர்ச்சிக்கு அவசிய மான தினசரி அலுவல்கள் கைவிடப்படவில்லை.
இதற்கொரு முக்கிய எடுத்துக்காட்டு யாழ் கல்வித் திணைக்களம். யாழ் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் சுயவேலை வாய்ப்புக்கான திட்டமொன்று திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மரவேலைக்கென தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஒன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி. இதன் சாதனை இன்று நாட றிந்ததாகும்.
நூல் நிலையத்தின் உபயோகத்துக்காக வாங்குகள், மேசைகள்: சங்கீத வகுப்புக்கு இரண்டு மேசைகள்; ஏனைய வகுப்புக்களுக்கென 10 மேசைகளை மாணவர்கள் மின்வேகத்தில் உருவாக்கியிருக் கின்றனர். ஆக்கும் சக்தியின் அதிசயம்!
இந்த மகத்தான சாதனைக்கு நாம் எழுந்து நின்று இரண்டு நிமிடமாவது கரகோஷம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
தச்சுவேலையின் மேன்மை தெரியாத மக்கள், இது பல்கலைக் கழகம் உள்ளிட உதவுமா? என்று பரிகசிக்கும் காலம் மலையேறு கின்றது.

ஊரடங்குவாழ்வு 17
பாடசாலைகளுக்குள் - மிகப்பெரிய பிரபல கொழும்புப் பாடசாலை களுக்குள்ளே போதைவஸ்து உள்ளிட்டு நடத்தும் நாடகங்கள் ஆடிக்கல வரத்திலும் நடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.
ஆங்கிலேயனுடைய அருமந்த கிரிக்கட் விளையாட்டு என்னென்ன கோரங்களை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. வருடமுழுதும் ருேயல்தோமியன் கிரிக்கட் போட்டிக்கு தவம் கிடக்கும் பெரியோர், பழைய மாணவர், அபிமானிகள்: மிக நல்ல மனிதர். அரசியல் ரீதியில் இப்பெரும் பாடசாலைகளே நாட்டின் ஜனதிபதி, பிரதமர்களை உற்பத்தி செய்வன, என்ற புகழும் இவற்றிற்கு உண்டு.
ஆனல், கடந்த வாரம் போட்டியில் நடந்த ஆக்கிரமிப்புக்கு விளக்கம் இன்னும் வெளிவரவில்லை. இது இன்னுெரு வெளிநாட்டுப் போட்டிக்கும் தொத்தியிருந்தது. காவற்படையின் பாதுகாப்பில் கிரிக்கட் இன்பம் விநியோகிக்கப்படுகிறது.
இன்று, தச்சு வேலையில்லாது, வேலைக்குரிய பயிற்சியற்று கிரிக்கெட்டிலும் மது போதை ‘பாட்டிகளிலும் காலம் போக்கும் இளைஞர்கள் - கல்லூரி மாணவர்கள், அங்கிருந்து வெளியேறின வர்கள்-படித்தால் பல்கலைக்கழகம் அல்லது " தெருச் செல்வங்கள் " என்ற நிலையில் காணப்படுகின்றனர்.
நெடுங்காலமாக, தொழிலுக்குரிய கல்வி - தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி-கல்வியல்ல, அது பயிற்சியே என்ற மயக்க நிலை நீடித்துவந்தது. படிக்க இயலாதவன், தோட்டம் தொழில் படிக்க வல்லவனுக்கு மேசை கதிரை போன்ற வசதிகள்.
இன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி தனக்குத் தேவையான தள பாடங்களை உற்பத்தி செய்யும் பயிற்சியில் வெற்றி கண்டிருக்கிறது.
இந்தத் தளபாடங்களில் "கதிரையின் கதை" நாம் காணவில்லை. கதிரை உற்பத்தி மிக்க அவதானமாக நடைபெறவேண்டிய விடயம்.
பாடசாலைக்கு மட்டுமல்ல, அரசாங்க திணைக்களத்துக்கும் கதிரைகள் அவசிய தேவையானபடியால், இரும்பா, மரமா மூலப்பொருள் என்பது திடமான தீர்மானமாக வேண்டும். எங்கள் அலுவலகத்தில் இரும்புக்குப் பிரியம் உண்டு; காரணமும் உண்டு.

Page 19
18 ந. சபாரத்தினம்
முன்னுெருகால், கொழும்பில் ஒரு கல்வி அதிபதியைக் காணவந்த எம். பி. ஒருவர் சடாரெனத் தானிருந்த கதிரையால் அதிபதியைத் தாக்கியதும், அவர் உடனடி சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரும் எம்.பி.யும் தப்பிக் கொண்டனர். கதிரையின் (மர) கதி பற்றி நாம் வினவியபோது நிலைமை கவலைக்குள்ளானதாக அறிந்தோம்.
பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்ல. வெளியேறிய இளைஞர் களுக்கும் தத்தம் பாடசாலைகளில் பகுதி நேரத் தொழில்நுட்பக் கல்விநெறி ஒழுங்கு செய்ய சில கல்லூரிகள் முன்வந்திருக்கின்றன. மோட்டார் பொறியியல், வானுெலி, இயந்திரவியல், 2-6). தைத்தல் போன்ற பலவித தொழிற்பயிற்சிகள் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அழிவுக்கு மாருன ஆக்கம்.
கல்லூரிகள் இவ்வித அவசிய பணிகளில் தம்மை அர்ப்பணித்தலே இன்று இங்கு நிலவும் இளைஞர் அமைதியின்மைக்கு சாந்தமளிக்கும் சாதனங்களில் மிக முக்கியமானது.
வடமாநில அதிபதியும் அவருடைய திணைக்களமும் இந்த முயற்சியில் வெற்றி காண வேண்டும்.
23-3-84

எல்லாம் நன்மைக்கே
ஆடிக் கலவரத்தின் அமளியை ஓரளவு குறைத்திருந்தது சர்வகட்சி மாநாடு. ஆரம்பத்திலும், இடை நடுவிலும் அதன் செயற்பாடு வெற்றி அளித்திடுமோவென்று அச்சங்கொண்ட சக்திகள் நொண்டிச் சாட்டில் அதைக் குழப்ப முயன்றது குழந்தைக்கும் புரியும். "நாய்கள் குரைக்கட்டும், நாம் பயணத்தைத் தொடருவோம்" ஒரு நல்ல முடிவுக்கு வருவோமென்று கங்கணங் கட்டியவர்களைத் தவிடுபொடியாக்க இடைவிடாதெழுந்த குரல்கள் நாட்டின் பாது காப்புச் சார்பில் எழுப்பப்பட்டன. ஒரு நிழல் போராட்டம் (shadow boxing) தொடர்ந்து நடந்த போதும் விடயம் முன்னேற்றம் காணுத நிலை ஏமாற்றத்துக்கும் ஆத் திரத்துக்கும் இடமளித்து வந்தது.
இந்தப் பரிதாப நிலைக்கு பரிகாரம் காணும் நோக்கமோ என்னவோ, விண்ணிலிருந்து விழுந்ததுபோல வந்தது "இந்தியா ருடே' என்ற சஞ்சிகையில் இன்று எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் கட்டுரை. "பேரும் சொல்லித் தருகிறேன், ஊரும் சொல்லித் தருகிறேன் கொள்ளடா மச்சான் கொள்ளு" என்ருெரு நொடி நினைவுக்கு வருகிறது.
இந்த நொடியை அவிழ்க்க முடியாதவர்கள் அநேகம். அதேபோல இன்று அந்தக் கட்டுரை எழுப்பிய போர் "தேநீர்க் கோப்பையில் எழுந்த புயல்” என்று சொல்லித் தட்டிக்கழிக்க முடியாத நிலையில் பெருத்துவிட்டது. சுற்றி வளைக்காது சுருங்கச் சொல்லின், இந்நாட்டில் ஓர் உள் ளூர்ப் போருக்கு இடமிருக்கிறது; அது பெரும் போராக மூண்டு நாட் டின் சுதந்திரத்தைப் பறித்துவிடும். அது வடக்கிலிருந்து, தமிழ் இளை ஞர்கள் மூலம் கொண்டுவரப்படவிருக்கிறது. பயங்கரவாதம், அதன் வெளித் தோற்றம். இதனை ஒழித்துக்கட்ட நாடு ஒற்றுமைப்பட வேண்டும்.

Page 20
20 ந. சபாரத்தினம்
பத்திரிகைகள்-ஈழநாடு உட்பட - இன்று மிகப்பிரசித்திபெற்ற *இந்தியா ருடே'யின் கட்டுரையைப் பிரசுரித்தபோதும் அதனை வாசிக்க எமக்கு மனம் எழவில்லை.
தாமறிந்த பாரதூரமான உண்மை ஒன்றை ஒரு பத்திரிகையில் படித்ததும், அவ்வளவும் போதும்; எடுப்போம் நடவடிக்கை கள்; என்ருெரு மனிதன் விடயத்தில் இறங்கும்போது அது எவ்வளவு மூடத்தனம் என்பதை உணர்வது கடினமல்ல. பத்திரிகையில் என்ன எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல, நமக்கு ஓரளவு தெரிந்ததுதானே! ஏன் அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது; அதுதான் முக்கியம்.
அதனை உணராது நீதிமன்றம் போவதானுல் இருந்த பொருளை வழக்கில் இழந்துபோவதுடன் மானமும் கெட்டுப் போமல்லவா?
எனவே இந்தக் கட்டுரை இங்கு ஒரு புதிய அமைச்சுக்கே இட மளித்திருப்பதென்ருல், அத்திபாரமில்லாத வீடு எவ்வளவு உயரத்துக் குக் கட்டுப்படுகிறதென்பதை விளக்குகிறது.
தேசிய பந்தோபஸ்து வடக்கில் தொழிற்படும்போது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமென்பதை நாம் கவலையுடன் கணிக்க வேண்டியிருக்கிறது.
இங்கொரு போராட்டம் உருவானுல் அதில் பாதிக்கப்படுகிறவர் கள் பயங்கரவாதிகளும் இராணுவமுமென்று நாம் மனந்தேற முடியாது. தமிழ் மக்கள் உரிமைப் போராட்டம் இன்று இந்தக் கட்டத்தில் இருப்பது, ஆட்சிக்குச் சவாலும் சிக்கலும் உண்டாக்கும்.
தெற்கில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று வற்புறுத் தப்படுவது வெளியே உள்ள தமிழ் மக்களுக்கு ஒருவித ஆறுதல்.
ஆட்சியின் தலைமைக்குப் போட்டியிட்டுப் போராடும் சக்திகள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி வடபகுதி மக்களைப் பணயம் வைக்க
முயன்ருல், நாமெடுக்கும் முயற்சி நாட்டின் வருங்காலத்துக்கே உலை வைத்திடுமென உணர வேண்டும்.
24-3-84

ஒடுககபபடும் இனம்?
**இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் செய்திருப்பதைப் போல வேறு எந்த இந்திய சமூகத்தினரும் அவ்வளவு செய்திருக்கவில்லை. எனவே எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க தமிழ்ப் புத்தகங்களை நான் சரியாகப் படித்தாக வேண்டும்’ என்று தமது தென்ஆப்பிரிக்க போராட்டத்தையிட்டு இவ்வாறு கூறியவர் மகாத்மா காந்தி.
மீண்டும் அவர் கூறியது: "தமிழ் கவர்ச்சி தரும் இனிய மொழி. இந்தியா ஒரே தேசிய இனமாக இருக்க வேண்டுமானுல் சென்னை மாகாணத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமிழைக் கற்றுத் தெரிந் திருக்க வேண்டும்.”*
இந்தியா சுதந்திரமடையும் காலத்தில்-குறிப்பாக 1945ல் கூடிய முதலாவது ஐ.நா. மாநாட்டுக்கு இந்தியப் பிரதிநிதியாக அனுப்பி வைத்த திருமதி விஜயலட்சுமி பண்டிற் அவர்களுக்கு மகாத்மா அளித்த அறிவுரை: **தென் ஆப்பிரிக்காவில் இந்தியர், கறுப்பர்கள் அனுபவிக்கும் அட்டூழியங்களுக்கு குரல் கொடுக்கும் திறமை உமக்கே உண்டு; அப்படியே செய்க" என்ருர் .
திருமதி விஜயலட்சுமியின் பிரேரணை ஆசிய நாடுகளின் ஆதரவுடன் வெற்றி கண்டபோதும், தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கல் (Apartheid) என்ற உக்கிர உருவம் அதன்பின் தாண்டவமாடி வரு வதை நாமறிவோம்.
இத்தகைய இனஒதுக்கல் எங்கு தலைவிரித்தாடுகின்றதோ அங்கெல்லாம் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென்ற கருத்து இந்தியப் பிரதமர் இந்திராவின் இரத்தத்தில் ஒடுகின்றது. பீ.எல் ஒ. நல்ல உதாரணம். அமெரிக்க ஆயுதமோ ரஷ்ய ராஜதந்திரமோ இந்திராவின் இக் கொள்கைக்கு ஈடுகொடுக்க மாட்டாதென்பது, உலக விடயங்களை

Page 21
22 ந. சபாரத்தினம்
சமநோக்குடன் அணுகும் ஆற்றல் உடையவர்களுக்கு நன்கு புலப்படும்.
இன்று இலங்கை வாழ் தமிழ் மக்கள் இவ்வித இன ஒதுக்கலுக்குப் பலியாகின்றனர் என்பது மிகைப்பட்ட கூற்றெனலாமா ? தமிழ் மக்கள் படுந்துயர் பெரிதென்ருலும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படக்கூடிய மக்கள் அல்ல என்பது தெளிவு.
போதிய திறமையும் பயிற்சியும் அற்ற ராணுவம் இரண்டாவது தடவை அப்பாவி மக்களைக் கொன்றதும் காயப்படுத்தியதும், கடந்த ரெஸ்ற் கிரிக்கட் ஆட்டத்தில் அடைந்த இன்னிங்ஸ் தோல்வி போல், சந்தையில் கண்ட கூட்டத்துக்கஞ்சி நடந்த "வீரச் செயல்களே. இத் தகைய தேசிய பந்தோபஸ்து நாட்டை எவ்வாறு பாதிக்குமென் பதை உணர இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
தமிழர் உரிமை இழந்து வாழும் நிலைமை உண்மை; அதற்காக 36 வருடங்களாகப் போராடுவதும் உண்மை. அப்போரில் வெற்றி காணுத கட்டத்தில் தமிழ் இளைஞர் எதிர்ப்பு இன்றைய நிலையை உருவாக்கியுள்ளது.
ஆணுல், இங்கு வாழும் தமிழர் இன்ருே என்ருே ஒடுக்கப்படக்கூடிய வர் அல்லர் என்பது கடந்தகால, நிகழ்கால, வருங்காலமாகிய மூன்று காலங்களுக்கும் பொருத்தமான உண்மையாகும்.
இந்த உண்மையை இங்குள்ள தலைவர்கள் முற்ருக உணர முடியாத போதும் இந்தியப் பிரதமர் அறிந்திருக்க வரலாற்றுத் தொடர்பான மரபு அந்நாட்டில் உண்டு.
**தனித்துவமாக வாழவல்ல இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு எள்ளளவும் இடம்கொடுக்கவில்லையே; ஒரு நாடாக இருந்தா லும், தட்டாமல் முட்டாமல் வாழும் வாய்ப்பு எமக்கு அவசியம்" என்பதை நீண்டகாலமாகச் சொல்லி வந்தவர் காலஞ்சென்ற கோப்பாய் எம்.பி., சி. கதிரவேலுப்பிள்ளை அவர்கள்.
இதனை விளங்கவல்ல உலக அரசியல் தலைவர் இந்திராவே என்று தமது கடைசிப் பயணத்தைப் புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்ததை நாமறிவோம்.

ஊரடங்கு வாழ்வு 23
இன்றைய தமிழ்த் தலைவர்கள் அந்த உண்மையைப் பின்பற்றுவது மறைந்த தலைவருக்கு அவரின் மூன்ருவது சிரார்த்த தினத்தில் கெளரவமளிக்கின்றது.
அது அவ்வாருக, அவருடைய உறுதிகொண்ட நம்பிக்கை, தமிழ் மக்களின் அழியாப் பெருமையிலும் ஆண்மையிலும் தங்கியிருக்கிற தென்பதை நாமனைவரும் நினைவிற் கொள்ளும் அவசியம் ஏற்பட்டிருக் கின்றது.
மாற்ருர்க்குப் புறங்கொட்டாது மார்பிலே புண்பட்டு இறந்த மைந் தனது மேனியைக் கண்ட நிலையில், பெற்றபோதினும் பெரியதோர் இன்பமடைந்த தாய் பற்றிப் பண்டைய இலக்கியம் கூறுகிறது. கணவனை இழந்தபோது, தமையனை அனுப்பி, தமையனை இழந்த போது குடும்பத்தில் ஒரே ஒரு பையனை அனுப்பிய வீரமங்கையைப் பற்றி அறியாத தமிழர் எங்குமுண்டா?
கல்வியிலும் வீரத்திலும் புகழ்பெற்ற தமிழினத்தைக் காகத்தைச் சுட் டெறிவது போல் எவரும் அழித்துவிட முடியாது.
என்றும் எவராலும் அடக்கி ஒடுக்க முடியாத தமிழ் மக்கள் இலங்கை தேசிய பந்தோபஸ்துக்கு இன்றியமையாத சமூகம் என்ற ஞானம் பிறக்கும் வரை இந்நாடு முன்னேறது.
2-4-84

Page 22
யாழ்ப்பாண கன்னடு
புதுவருட கொண்டாட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தோரும் அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளும் தங்கள் சொந்தநாடு, பிறந்த பொன்னுடு யாழ்ப்பாணம் என்று நினைக்க உந்துவது அவர்களின் வெளிநாட்டு வாசம்.
எமது தலையங்கம் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் சொத்து: அதனை விபரிக்க அமரரின் ஆசியை வேண்டி நிற்கின்ருேம்.
*யாழ்ப்பாண நன்னுடு” என்ற தலைப்பில் பாடிய புலவர் மணி,
**பலதிசையும் சென்று முயன்றீட்டு பெரும்பொருளார்
பரமனடித் தொண்டு புரிந்தேத்து திருவருளார் மலையென நின்றுயர்ந் தோங்கு தன்மானமுடையார் மானமழிந்தெய்தவரு வருமானமடையார்'
என்று யாழ்ப்பாண மக்களை இவ்வாறு உயர்த்தியிருக்கிருர், தகுதியான உயர்ச்சி தானே.
சுவாமி விபுலாநந்தர், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற சான்ருேர் தங்கள் சொந்த நாடாகிய மட்டக்களப்பை எவ்வளவு நேசித் தனரோ அவ்வளவு யாழ்ப்பாண மக்களில் பேரன்பும் பேரபிமானமும் உடையவர்களென்பது தமிழ் மக்கள் நன்கறிந்ததே.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, எமக்கு இன்றைய அரசியலில் இரு மாவட்டங்களாகத் தோன்றும்; அதில் ஒரு பொல்லாப்புமில்லை.
தமிழ் மக்கள் பண்டைக் காலம் தொட்டு வாழையடி வாழையென வாழ்ந்துவந்த இடங்களாகையால் அவை இரு நாடுகளென்று நாம் குறிப்பிடுவதில் பெருமையடைகின்ருேம். தேசிய ரீதியில் அவை ஒன்றுபட்டவையே!

ஊரடங்குவாழ்வு 25
புவியியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல்-இவையெல்லாம் காலத்தால் மாற்றத்துக்குரியவை. மாற்றங்கள் எத்துணை பெரிதா யினும், மக்கள் மக்களாய் வாழ, மனிதாபிமானமென்ற பெரும்பண்பு நிலைத்திருக்க, பிறந்த பொன்னூடு என்ற தேசப்பற்று இன்றியமை யாதது.
‘எங்கள் தந்தையர் நாடு’ என்று தாய் நாட்டைப் பாடிய பாரதியார் அதில் ஒரு சக்தி பிறப்பதை விளக்கியுள்ளார்.
இது வெறும் புலமையா? அல்லது எம்போன்ற சாதாரண மக்கள் காண முடியாததைக் கவிஞன் கண்டானு?
இன்று பிறந்த பொன் நாட்டைவிட்டு, தொழில், உத்தியோகம் காரணமாக வெளியூரில் வாழும் யாழ்ப்பாண மக்கள் அநேகம். சுமார் நூற்றுக்கு எட்டு வீதம், இப்பகுதி மக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனரெனலாம்.
புதுவருட கொண்டாட்டத்தில் "பரமனை ஏத்தும் மானமுடைய மக்கள் இன்றைய இருப்பிடங்களைவிட்டு யாழ்ப்பாணம் வரவிரும்பிய போதும் முடியாத நிலையில் இருப்பவர்கள் பலர். இன்றைய அரசியல் மட்டும் காரணமல்ல.
இந்த வெளிநாட்டு வாசம் யாழ்ப்பாணத்தவருக்கு நேற்று இன்று தொடங்கியதல்ல; திரைகடலோடித் திரவியம் தேட வழிகாட்டிய ஒளவையாரைப் பின்பற்றியவர்கள் ஆங்கிலம் கற்று, கடந்த நூற் ருண்டின் கடைக்கூற்றிலே மலேசியா சென்று, பொருளிட்டிப் புகழ் பெற்றவர்கள். இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அளித்த செழிப்பை நாம் இன்றும் காணலாம்.
இன்றைய காலத்தில், கடந்த 25 வருட எல்லைக்குள், பல யாழ்ப் பாண வாசிகள், உயர் தொழிலுக்குரிய படிப்புடையவர்கள், இங்கி லாந்து, ஆபிரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலண்ட், மத்திய அமெரிக்க நாடுகள் சென்று பெரும் வருமானமுடைய தொழில் பார்க்கின்றனர். இவர்களுள் சிலர் குடும்பத்தோடு அவ் விடங்களில் வாழ்ந்தபோதும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புடையவர் களாகவே இருக்கின்றனர்.

Page 23
26 ந. சபாரத்தினம்
போதிய கல்வியில்லாதவர், தொழில் திறமையுடையவர்கள், இல் லாதவர்கள் தானும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து நன்ருய் உழைக்கின்றனர். இவர்கள் எவரும் அந்த நாடுகளில் நிரந்தரமான தொழிலையோ வாழ்வையோ பெறும் வசதியற்றவர்.
இவ்வாறு வெளிநாடு சென்று பொருள் தேடும் திறமையும் விடா முயற்சியும் உடைய எமது மக்கள், யாழ்ப்பாணத்தை, தமது சுற்றத் தாரை மறந்து வாழ்பவர்களல்லர். குடும்பப்பாசமும் சுற்றத்தாரின் ஒருமைப்பாடும் யாழ்ப்பாணத்தவரின் பொருளாதார சமுதாய வாழ் வின் அணிகலன்கள்.
இன்று இப்பண்புகள் இருந்தவாறிருக்கின்றனவா அல்லது தேய்ந்து வருகின்றனவாவென்று அடித்துக் கூற முடியாத நிலை அரும்புகின்றது. திரவியந் தேடியவர்கள் திரைகடலோடுகின்றனர். தமிழ்த் தேசியம் இந்தநாட்டில் வாழும் வேறெந்த மக்களுக்கும் மாருனதல்ல. எனவே இன்று இதுதான் எங்கள் நாடென்று கொள்ளும் மக்கள், வேரற்ற மரம் போல் வெளிநாட்டு வாழ்வில் நிரந்தர விருப்பம் கொண்டால், அவர்களுக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ அது நன்மையளிக்காதெனத் திடமாகக் கூறலாம்.
10-4-84

வன்செவியோ நின்செவி !
கடந்த செவ்வாய்க்கிழமை (10-4-84) பிரசுரத்துக்கு எழுதிய தலையங் கத்தின் அச்சுமை காயும் முன்னரே யாழ்ப்பாணத்தின் உயிர் நிலையங்களில் முதலாகக் கணிக்கப்படும் யாழ் ஐக்கிய வியாபாரச் சங்கம் எரிந்து சாம்பலாயிற்று.
இதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவின் உண்மை விபரமும் முற்ருக வெளிவருமோ என்பது சந்தேகம்.
இன்றைய புத்தாண்டு தொடக்கம், யாழ்ப்பாண நன்மக்கள்--ஏன் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், தமிழ் கூறும் நல் லுலகம் தானும் ஏப்ரல் 13ம் தேதியை பாரதம் எவ்வாறு நினைவு கொள்கின்றதோ அவ்வாறு நினைவு கொள்ளும் .
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் நடைபெற்ற அமறிற்சார் படுகொலை யைக் கேள்விப்படாதார் எவரும் இல்லை. அண்மையில் “மகாத்மா காந்தி’ பேசும்படம் பார்த்தவர்கள் இக் கொலையைத் தெளி வாகப் பார்த்திருப்பார்கள். இந்திய தேசியம் வலுப்பெற்ற நாள் அந்நாள்.
குதிரைகளில் வந்த இராணுவ வீரர்கள், குதிரைகள் செய்ய மறுத்த கொலைச் செயலை - ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை - ஈனமிரக்க மின்றிச் செய்து முடித்தனர்.
வருட முடிவில் துன்பங்கள் தலைதூக்க இட முண்டென்றும், புதிய தேசிய பந்தோபஸ்து அமைச்சு நியமிக்கப் பெற்றதும், பொது மக்களைப் பாதுகாப்போர் இதற்கு அமைச்சராகப் பணிபுரிவதானுல் வடக்கில் பேரழிவு ஏற்படுமென்றும் எச்சரித்திருந்தோம். கேட்டாரா?

Page 24
28 ந. சபாரத்தினம்
சுன்னுகம், மல்லாகம் முதலிய இடங்களில் பல ஏழைமக்கள், பெண்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டதும், காயப்பட்டதும், குடாநாடு முழுவதும் கலங்கியதும், எமது அச்சம் மெய்ப்பிக்கப்பட்டது. "இராணுவத்தை மட்டுப்படுத்துங்கள்" என்ருேம். கேட்டாரா? இன்றைய உண்மை நிலைபற்றி அறிய இப்பகுதி மக்கள் இலங்கை வானுெலியை நம்பியிருக்கவில்லை; உலக வாயை உலை மூடியால் மூட எடுத்த பிரயத்தனம் ஆடிக் கலவரத்தில் தண்ணீர் கண்டு விட்டது. 'இது எவ்வாறு முடியும்?’ இதுவே சாதாரண மக்கள் இன்று எழுப்பும் கேள்வி; விடை தேடியல்ல. விடை கிடைத்தாலும் அதனை நம்பச் சித்தமில்லாத இவர்கள் பகைமையும் வெறுப்பும் நிறைந்த மன முடையவர்கள். ஆனல் விரக்தி நிலை கழிந்து ஒரு அமைதியான வீரம் பெற்றவர்கள். இப்பகைமையும் வெறுப்பும் மரணத்தைக் கண்டு அஞ்சாத நிலையை உருவாக்கும் வாய்ப்புடையது. மக்கள் அந்த நிலையை அணுகி விட்டனர். இந்தியப் பிரதமரைத் தேடிச் சென்றிருக்கும் இலங்கை பந்தோபஸ்து அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைபெறும் ராணுவக் கொலையை அனுமதித்தாரே! இங்கு பேச்சு வார்த்தை நடக்கும் போதும், யாழ்ப்பாண மக்கள் கொல்லப்படுகிருர்களே என்ற ஆத்திரக் குரல் தமிழகத்தின் முதலமைச்சரால் எழுப்பப்பட்டிருக்கிறது. மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்ட எந்த நாடும், எந்த சர்வ தேச ஸ்தாபனமும் இன்று இக் குடாநாட்டில் வாழும் மக்களின் தல்ைவிதியை எவ்வாறு மாற்றுவதென்றே விசனப்படுவார்கள். இந்த நாட்டின் ஊழ்தான் இக்கொடுமைக்குக் காரணமென்ருலும் ஊழின் வலியை முயற்சியால் வெல்லலாம். அந்த நம்பிக்கை அவசியம். அன்று "யாழ்ப்பாண நன்னுடு’ பற்றி ஒரு கருத்தின ஆராய்ந்தோம். நடந்ததென்ன? எனினும் அது வீண் போகாது. இன்று யாழ்ப்பாண மக்கள் யார்? என்ருெரு உருக்கமான கேள்வியை மக்கள் முன் வைக்கின்ருேம். கேள்வி சிறிது, ஆணுல் அதற்கான விடைகாணும் முயற்சி மாபெரும்
தொடர்கதையாகவே இருக்கும்.
16-4-84

அமைதி ஏற்பட ராணுவத்தை அகற்றுக
தேனிலாவை விடுதியில் கழித்த காதற்சோடி ஒன்று தங்கள் இன்ப அனுபவத்தைப் பேசிக் கொண்டிருந்த வேளையில், தன்னுடைய ஒரே ஒரு பசுமாட்டைக் காணுது தேடி அலைந்த கிழவி ஒருத்தி குறுக்கிட்டாளாம்.
விண்ணுலக அனுபவத்தை விரித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணைப் பார்த்து 'தங்கச்சி என்றை வெள்ளைச்சியை உங்கள் பயணத்தில் எங்கும் கண்டிரா?” என்று கேட்டாளாம்.
கொல்லெனச் சிரித்த காதலி, கிழவியின் ஏமாற்றத்தைப் புரியும் நிலையில் இருக்கவில்லை.
இலங்கை தேசிய பந்தோபஸ்து பொது மக்கள் பாதுகாப்பு" அமைச்சர் இந்திராவுடன் நடத்திய பேச்சில் யாழ்ப்பாணம் பற்றி ஏதும் உண்டா? என்பது பசுவை இழந்த கிழவியைப் போல யாழ்ப்பாண மக்கள் விடுக்கும் விஞ? இலங்கை - இந்திய விவகாரங்கள் மேம்பட்ட நிலையில் பேசப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு ஏது இடம்? அது தமிழக "ஸ்டன்ட்” என்பதே இதற்குரிய விடை போலிருக்கிறது.
யாழ்ப்பாணத்தை ஒதுக்கி, தனிக்கப் பிடிக்கும் முயற்சிகள் 1979ல் 1981ல் நடை பெற்றதை எவரும் மறக்கவில்லை. இவற்றை உருவாக்கிய கொழும்புத் தினசரிகள் முக்கியமாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பத்திரிகைகள், அந்த முயற்சியை இன்றும் தொடர்ந்து நடத்துகின்றன,
இன்று யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாட்டில்லாத பொருள்கள் இங்கு இறக்குமதியாகும் இவ்வித பத்திரிகைகள்.

Page 25
30 ந. சபாரத்தினம்
இனத்துவேஷத்தைக் கிளறி விடுவதோடு நில்லாது யாழ்ப்பாண மக்களின் மனுேபலத்தை முறியடிக்கக் கனவு காணுகின்றன. இன்றைய யாழ்ப்பாணப் போர், வெற்றியில் முடிந்ததாக தென் னிலங்கை மக்களுக்கு ‘டானிக்’ அளிக்கின்றன.
இன்றைய கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தில் யாழ்ப்பாணத்தில் இறக்குமதியாகும் இந்த நச்சுப் பதார்த்தங்கள் பற்றி பாவனையாளர் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
*இந்திய ருடே’ என்ற இந்திய சஞ்சிகையின் ஆழநீளம் இன்று இப்பகுதி மக்களுக்கு நன்கு புரியும்.
இன்றைய படுகொலையின் விதை இவ்வளவு வேகத்தில் விளைவை ஏற்படுத்தியதானுல் அது ஏவுகணைகளிலும் மிக்க பலமுடையது. உண்மையில் பத்திரிகைகள் ஏவுகணைகளாக மாறுவது ஒரு அதிசயமல்ல.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மக்கள், இலங்கை வாழ் தமிழ் மக்கள், பல களம் கண்டவர்கள்; ஆண்டவன் அருளால் 1958 தொடக்கம் இன்று வரைக்கும் இம்மக்கள் பட்டபாடும் கெட்டகேடும், 1984ல் அவர்களை, அவர்களின் படைப்புகளை கோழைகளாக்குமா? கிளி நொச்சிமட்டும் கொழும்பு றெயில் வருவதையும் அதுவே தமிழ் மக்களின் புதிய தலைநகராவதையும் எவர் விரும்பார் ? பாம்புக்குத் தலைகாட்டி மீனுக்கு வால் காட்டுவதும், தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவதும் போன்ற சில்லறை அரசியல் தந்திரங்களால் மதிப்புள்ள மக்களின் எதிர்ப்பை எவரும் வெல்ல முடியாதென்பது திண்ணம்.
பயங்கரவாதிகள் யார் ? அவர்களை வென்று அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எவ்விதமென்பதை கடந்த பத்து வருடங்களில் புரிய முடியாத தமிழ் மக்கள் எங்கும் உண்டா ?
நிச்சயம் யாழ்ப்பாணத்தில் எவருமிலர். அமைதியை நிலைநாட்ட அரசு விரும்பினுல் உடனடியாக ராணுவத்தை இங்கிருந்து அகற்றட்டும்.
17-4-84

வாழும் தத்துவம்
படை பலமில்லாத அடிமை இந்தியாவிற்கு மனித பலமே சிறந்த ஆயுத மென அதனைப் புடம்போட்டுத் தீட்டப்பட்டதே சத்தியாக்கிரகமென்றும் அஹிம்சையென்றும் கூறப்படும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தத்துவம். தனித்துவமான இந்தத் தத்துவத்தை பரீட்சித்து வெற்றி கண்டவர் மகாத்மா காந்தி.
அதேபோல் ஏழை மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் மக்க ளுக்கு அத்தியாவசியமான தேவைகளை உற்பத்தி செய்ய ஊக்கவும் உற்பத்திப் பொருட்களை எவ்வித முட்டுமின்றி சமத்துவ முறையில் விநியோகிக்கவும், கூட்டுறவு முறையே சிறந்ததென்பதை இலங்கைக்கு எடுத்துரைத்தவர்கள் யாழ்ப்பாணப் பெருமக்கள்.
*ஒவ்வொருவரும் எல்லார்க்கும், எல்லோரும் ஒவ்வொருவர்க்கும்" என்கின்ற கூட்டுறவின் குறிக்கோள் இன்று சர்வதேச இயக்கம். இதனைத் தன் முன்னுணர்வால் எவ்வித போதனையும் பயிற்சியுமின்றி, இயற்கை ஆற்றலோடும் வியாபார அனுபவத்துடனும் உணர்ந்த யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதி ஸ்தாபகர்கள், இத்துறை யின் முன்னுேடிகள். அவர்கள் இட்ட அத்திபாரத்திலேயே இன்று இலங்கை மக்களை வியப்படைய வைத்த யாழ்ப்பாணக் கூட்டுறவு சங்க ஸ்தாபனம் இந்த நிலைக்குக் கட்டி எழுப்பப்பட்டது. தியாகபுருடரின் இதிகாசம் இது.
கடந்த 9-4-84ல் இதற்கு இட்ட தீ, இக் குடா நாட்டின் வாழ்வுக்கு உரமளித்த உன்னத நிறுவனத்தை எரித்துச் சாம்பலாக்கிற்று; இதன் தாற்பரியம் வரலாறு விளக்கும்.
யாழ்ப்பாண மக்களின் உயிர் நிலையம் சத்தப்படாமல் சடுதியில்
சாய்ந்த துயரம் மூளாத் தீ போல் உள்ளே கனன்று கொண்டிருப்பது மக்களின் முக வாட்டத்தில் பளிச்செனத் தெரிகிறது.

Page 26
32 ந. சபாரத்தினம்
பல லட்சம் பெறுமதியான பொருட்கள், தளவாடங்கள், நகரத்துக் கொளி வீசும் கம்பீரமான கட்டிடங்கள்--இவை அனைத்தும் ஒரு பிடி சாம்பராய்ப் போய்விட்டன. நவீன நாகரிகத் தீ எத்தன்மையதென மக்கள் புரிந்து கொள்வார்கள்.
1981ல் பொதுஜன நூல் நிலையம் எரிக்கப்பட்டபோதே மக்கள் அறிவுப் பசி தீர்க்கும் பண்டசாலை அழிந்ததே என்று ஏங்கினுேம், நாகரிக உலகம் அந்த ஏக்கத்துக்கு தக்க மதிப்பளித்தது. சர்வதேச அனுதாபம் எமக்கு உதவியது.
1984ல் யாழ்ப்பாண மக்களைப் பட்டினிப் பட்டாளமாக்கும் வழி ஒன்று உண்டானுல் இந்த மகத்தான நிறுவனத்தை நிலமட்டமாக்குவதே சிறந்த வழி என்ற சிந்தனை செயலாய்விட்டது. ஆணுல் விடயம் அத் துடன் முடிந்ததல்ல.
அழிந்தது என்ன? நம் முன்னுேர் அளித்த அருஞ்செல்வத்தின் வளர்ச்சி யல்ல; வளர்ச்சியின் தோற்றமே இந்த நிறுவனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டுவந்த ஆற்றலும், அனுபவமும், தியாக சேவை உணர்வும் மாற்ருனுல் அளிக்கக் கூடிய பொருட்களா?
சிறந்த நாடு ஒன்றின் சுதந்திர சிற்பிகள் பலர் தங்கள் வாழ்வில் அரைப் பகுதியை சிறையில் கழித்தவர்களே! நலிவுற்றபோதும் நாட்டை மீட்க வாழும் தத்துவம்’ ஒன்றை சிறையிலே உருவாக்கிய உண்மைக் கதையை நாமறிவோம்.
என்றுமில்லாதவாறு இன்று நொந்திருக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு விடிவு காண, இங்குள்ள வியாபாரப் பெருமக்கள் அனைவரும் அழிந்த நிறுவனத்தின் கொள்கையைக் கடைப்பிடித்து, அதன் சகாக்களாகக் கடமை புரிய வேண்டுமென்று வினயத்துடன் கேட்கின்ருேம்.
அதேசமயம், யாழ்ப்பாண வியாபாரச்சங்கம், என்றும் அழிவற்ற மக்கள் மன்றம்-வருகிற பெரிய வெள்ளியின் உட்கருத்தை மனத்தில் இருத்தி உயிர்த்தெழ உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். பொது மக்கள் வேண்டிய ஆதரவு நல்க ஆவலுடன் இருக்கின்றனர்.
t8-4二84

சித்தவைத்தியமும் சைவசித்தாந்தமும்
எமது தலையங்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் தன்மையது. காணுமற் போனவர்கள் பற்றியும், கலவரங்களாலும், ராணுவ அட்டூழியங்களா லும் கலக்குண்டிருக்கும் வேளையில், மண்ணிலிருந்து விண்வெளிப் பயணமா என்பதே நாம் குறிப்பிடும் தடுமாற்றம்.
இன்று நாடனைத்திலும், எங்கள் பகுதி உட்பட மக்களின் வாழ்க்கை பல வகைகளிலும் சீர்குலைந்திருக்கிறது. இந்தப் பயங்கரநிலையை அரச நிர்வாகத்தால் மட்டும் நிமிர்த்திவிட முடியாது. இதனை மக்கள் உணர்ந்தபோதும் அரசாங்கம் அதற்கு ஆவன செய்ய ஆற்றல் அற் றிருக்கின்றது.
கலவரங்களாலும் ஆட்சியின் கொடுமைகளாலும் நன்மை வராமற் போவதில்லை. கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தின் தயவில் இயங்கிவந்த சித்த (தமிழ்) வைத்தியப் பிரிவு, வேண்டாப் பெண்டிர் போன்று சில வருடமாகக் கூதல்காய்ந்து கொண்டிருந்தது; வந்தது ஆடிக்கலவரம்; வீடுவந்து சேர்ந்தது சித்த வைத்தியம். பல அவஸ்தைக்குள்ளாகி ஈற்றில் கைதடி சித்தவைத் தியக் கல்லூரியில் குடி புகுந்திருக்கிறது; நடத்தப்பட வேண்டிய பரீட் சைகள் நடந்தேறிவிட்டன; முடிவுகள் எங்கள் நேற்றைய பிரசுரத்தில் வெளிவந்திருக்கின்றன.
சித்தவைத்திய மருத்துவ பிரிவு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமென்ற கேள்வி முக்கியம். பல்கலைக்கழக விலாசம் மட் டும் போதுமானதல்ல; பல்கலைக்கழக பீடத்தின் அங்கமென்ருல் எத் துணை பாடஅமைப்பு, ஆராய்ச்சி, அதற்குரிய போதனை, ஆசிரியர்கள்இவையெல்லாம் இத்துறைக்கு உடனடியாகக் கிட்டுமென்று நாம் நினைக்கவில்லை.

Page 27
34 ந. சபாரத்தினம்
இன்றைய மனித வாழ்வுக்கு அத்தியவசியமான ஆன்மீகபலம் எங்கள் நாட்டில் மிகவேகமாக அருகிவருகின்றது. இத்தகைய பலத்தில் உருவானதே இந்த பண்டைய மருத்துவமுறை. **மருத்துவ சாத் திரம் என்பது செப்படி வித்தையைப் பிழிந்தெடுத்த ரசமேயாகும். உயர்ந்த வைத்தியத் திறமை என்று கொள்வதைவிட அரைகுறை வைத்தியமே மிகவும் மேலானது’’ என்ற மகாத்மா காந்தியின் கண் டனம், அறிஞர் ஷா ஆங்கில வைத்தியத்துக்கு அடிக்கடி போட்ட * குண்டு’ போன்றது. மேனுட்டு வைத்தியத்தின் குறை குற்றங்களை ஆராய முற்படுவது எமது விடயத்துக்குப் பொருத்தமற்றது.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்வோம்; ஆன்மிக தத்துவத்தில் உருவானதே தமிழர்களின் பண்டைய சித்தவைத்தியமுறை. மனிதன் இயற்கையோடு ஒத்து வாழும் முறையில் உருவான இவ்வைத்திய முறை, சைவசித்தாந்தக் கருத்துக்களில் அமைக்கப்பட்டதை இன்று பலர் அறியார். −
இந்த முறையை அனுசரித்து, ஒரு திறமைவாய்ந்த, பரம்பரைச் சித்த வைத்தியத்துறை யாழ்ப்பாணத்தில் நன்ருக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வாறு தமிழ்க் கலை, கலாசாரம், சைவநெறி அன்னிய ஆட்சியில் குன்றிப் போனதோ அவ்வாறு இந்த தெய்வீக வைத்திய முறையும் வீழ்ச்சியடைந்தது.
அன்று விட்ட அந்த இடத்தில் நாம் இன்று தொடங்க வேண்டுமென்ப தல்ல. மக்கள் மனத்தில் உண்டான மயக்கத்தை மாற்றுவதற்கு சமய நெறியும் சைவசித்தாந்த அறிவும் அனுபவமும் வளர வேண்டும். அதேபோன்று அந்த நெறியில் உருவான சித்தவைத்திய முறையை யாழ் பல்கலைக்கழகம் விஞ்ஞானரீதியில் வளர்த்தெடுப்பதற்கு பிரம் மாண்டமான பிரயத்தனம் செய்யவேண்டும்.
எங்கள் நல்லகாலம், சைவசித்தாந்த துறை ஒன்றை யாழ் பல்கலைக்கழ கத்தில் அமைக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் வளர்ச்சி சித்தவைத்தியத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுபோல இன்று மக்கள் மதிப்பிழந்திருக்கும் இவ்வைத்திய முறை, மக்கள் வாழ்வில் நோயைத் தடுக்கவும், அதற்குரிய சிசிச்சை முறையில் முன் னேறவும் போதிய ஆராய்ச்சி, பரிசோதனை ஆகிய பகுதிகள் வளர்ச்சி யடையவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் துரித முன்னேற்றம் காண வேண்டும்.
19-4-84

காணுமல் போனவர்க
செத்தாரைத் துஞ்சினுரென்று குறிப்பிடுவது மங்கலம் என்று தமிழில கணம் கூறுகிறது.
அதேபோல், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ராணுவத் தாக்கத்தில் பலர் காணுமற் போய்விட்டனர். திரும்பி வரக்கூடியவர் எத்தனைபேர் என்பதே எமது விசனம்.
இவர்களின் விபரத்தைச் சேகரிப்பதில் யாழ் பிரஜைகள் குழு காட்டி வரும் அக்கறை இன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாத நிலைமை யில் பெரிதும் பாராட்டத்தக்கது.
எங்கள் நேற்றைய பிரசுரத்தில் காணுமற்போன 71 பேரின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மை நிலை அறிய பொதுமக்கள் பொறுப்புடன் உதவ வேண்டும். இந்தப் பட்டியலைப் படித்ததும், **ஆண்டவனே! இதில் எவரும் ராணுவம் வீட்டுக்குள் புகுந்து சுட்ட தால் இறந்தவரல்லர்?’ என்பதே முதலில் பட்டது.
கடந்த ஆடிக் கலவரத்தில் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாகச் சென்று துப்பாக்கி நாடகம் நடத்திய ராணுவம் இம்முறை அந்தக் கட்டத்துக்கு இறங்கவில்லை.
பாதுகாப்பாகவிருப்பதற்கு வீடே “அரண்’ என்பது அர்த்தமல்ல. துப் பாக்கியின் தொடர் சூட்டுக்கு அணித்தாகக் குடியிருந்த பல குடும்பங் கள் முதல் வெடி கேட்பதற்கு முன்னரே அகதிகளாக அயலூர்களுக்கு ஓட்டம் எடுத்தனர்.
தவிர்க்கமுடியாத நிலையில், வீடே தஞ்சமென்று, பசிபட்டினியைப் பாராது மூன்று நாட்களுக்குமேல் பூட்டிக் கொண்டிருந்தவர்கள் பலர் எந்தநேரமும் காணுமற்போக தயாராகவிருந்தவர்கள்.

Page 28
36 ந. சபாரத்தினம்
இது இவ்வாருக, ராணுவத்தினரின் அக்கிரமத்துக்கு தெருக்களில் சென்ற பல அப்பாவி மக்கள் பலியானுர்கள். யாழ்ப்பாண மக்களின் இன்றைய நிலைக்குக் காரணமான பயங்கரவாதப் "புலிகள்’ என்று வர் ணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் யாரும் கொல்லப்பட்டனரா?
இதுவரையில் எவருடைய பெயரும் குறிக்கப்படவில்லை. யாழ் அரச அதிபர் வெளியிட்ட செய்தியில் "புலி’ என்ற இனத்தைச் சேர்ந்த எவ ரும் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. பாவம் பூனைகள். ஆணுல் பூனைக்கொரு காலம் உண்டென்பது பழமொழி.
எனவே "புலிகள்' யுத்தத்தை ஆரம்பிக்க இலங்கை ராணுவம் சாதாரண பாதுகாப்பில்லாத இலங்கைப் பிரஜைகளைக் கொன்று குவிக்கின்றது என்பதே விளக்கம்.
குவிக்கின்றதென்று நாம் மிகைபடக் கூறவில்லை. செய்திகளை எப்பக் கம் திரித்தாலும் அதைத் திரிப்பவர்களுக்கே அதனுல் கேடு விளைகின் றது. ஆடிக் கலவரம் ஆழமான உதாரணம்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நான்கு எரிந்த சடலங்கள், இராசாவின் தோட்ட வீதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட் டன. நாகவிகாரை மதகுக்குக் கீழ் 14 எரிந்த சடலங்கள். நாகவிகா ரைக்கு அருகிலுள்ள கராச்சில் கார் ஒன்றுக்குள் இரு எரிந்த சடலங் கள் (பெயர் எதுவும் கிடைக்கவில்லை).
கொன்று குவிக்கப்பட்டதற்கு மேற்கூறிய விபரங்கள் சான்று பகரும். ஐம்பத்தாறு பேரின் விபரங்களில் திடமாக அறிந்த தகவல்கள் எதனை விளக்குகின்றன.
எவ்வித தயவு தாட்சணியமுமின்றி கண்ணுக்ககப்பட்டவர்கள், வயோ திபர், இளைஞர், யுவதிகள், கடமையில் உள்ள ஊழியர்-தொழிற்சாலை யிலும், வாசலிலும் சுடப்பட்டது வெளியாகின்றது.
எவரும் எதிர்பாராத இன்னுெரு புதுமை ஹெலிகாப்டரிலிருந்து சுடப் பட்டதாகக் குறிக்கப்படும் தகவல்,
கடலில் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் பயங்கரவாதிகளாகவிருக்கலாம். கடற்படைப் பலமில்லாமல் என்ன "பயங்கரவாதம்?

ஊரடங்கு வாழ்வு 37
தரையில், ராணுவம் இவ்வித அட்டூழியத்தைப் புரிவது யாழ்ப் பாணத்தை ஒழித்துக்கட்டும் திட்டமோவென்று மக்கள் சந்தேகப்படு கின்றனர். இந்த நிலையில் ஆகாயத்திலிருந்து சூடுகள் வீழ்வதானுல் இதனைப் புரிபவிர்களை மக்கள் திட்டத் தயங்குவார்களா?
யாழ்ப்பாண மக்களைப் பாதுகாப்பது பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிப்பது; இவ்விரு நோக்கங்களை நிறைவேற்றுவதே தேசிய பந்தோ பஸ்து அமைச்சரின் மிகப் பொறுப்பான கடமை. இக்காலத்தில் நடத் தப்படவிருக்கும் அற்புதம். b
இச்சிறு காலஎல்லைக்குள், பயிரை வளர்க்கவும், களையை ஒழிக்கவும் எடுத்த முயற்சி சிறுபிள்ளை வேளாண்மையாய்விட்டதை அரசு நன்கு
உணர வேண்டும்.
புல்லைப் பிடுங்க வயலுக்குள் சென்ற மாணவர் கூட்டம் நெல்லைப் பிடுங் கின நினைவு வருகின்றது. வேளாண்மையின் விபரீதம் இன்றைய யாழ்ப்பாண வரலாறு.
"பயங்கரவாதிகள்" விடுதலை வீரராகவும் இலங்கை அரசாங்கம் மக்கள் அரசாங்கமாகவும் மாற, மனமாற்றம் ஏற்படுத்த முயல்வதே தேசிய பந்தோபஸ்தின் உண்மைத் தத்துவமென்பதை வற்புறுத்த விரும்பு கின்ருேம்.
24-4-84

Page 29
நிக்ஸன் - பிங்பொங் ரீகன் . புன்னகை
** மக்கள் தம்மைத் தாமே கொன்று ஒழித்துக்கொள்ளாமல் காப்பது சுதந்திர மனிதர் யாவருக்கும் உள்ள முதற்கடமை ! அவர்களுடைய தலைவர்களுக்கும் அதுவே முதன்மையான கடமையாகும்’ என்று முன்னைநாள் அமெரிக்க ஜனதிபதி ஐசனுேவர் கூறியிருக்கிருர், இரண்டாவது உலகமகா யுத்தத்தில் நேசநாடுகளின் ராணுவத்துக்குத் தலைமை தாங்கி மனித அழிவை நேரில் அவதானித்த அமெரிக்க வீரர் ஐசனுேவர் யுத்தத்தின் ஆக்கத்தையும் நன்கறிந்தவர். அமெரிக்க மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இந்த அதிமனிதன் இந்தியப் பிரதமர் நேருவை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழக மான (Columbia) கொலம்பியாவில் வரவேற்று உரையாற்றியபோது சமாதானம் பற்றிக் குறிப்பிட்டது இன்றைய அமெரிக்க விவகாரங் களுக்குக்கெதிரான கண்டனம் போல் தோன்றும்.
*ஒரு நாடு மற்ற நாடுகளோடு போட்டியிட்டு ஆயுதங்களைப் பெருக்குவதால் சமாதானம் நிலைக்காது. மற்ற நாடுகளைப் பற்றி உண்மையாய் அறிந்து நீதியான முறையில் அவற்ருேடு நடந்து கொண்டால் சமாதானம் நிலைக்கும்’ என்பதே அன்றைய ஜனதிபதி யின் தெளிவான கருத்து.
இரண்டாவது உலக யுத்தத்தில் நேசநாடுகளுக்கு ஐரோப்பாவில் வெற்றி கிட்டியதும் ஆங்கிலமக்கள் வெற்றிக்குப் பெரிதும் பொறுப் பான பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலை வீட்டுக்கனுப்பினர். யுத்தம் முடிவடையுமுன் நடந்த பொதுத் தேர்தலின் முடிவு இது.
யுத்தத்துக்கு உதவும் வீரம் சமாதானப் பணிகளுக்குத் தடையா யிருக்குமென்ற காரணத்தால் தொழிற் கட்சிக்கு ஆதரவளித்து, அட்

ஊரடங்குவாழ்வு 39
லியைப் (Atlee) பிரதமராக்கினர்கள். அதன் விளைவே இந்திய சுதந் திரம்; ஆங்கில மக்களின் அரசியல் ஞானம் முதிர்ந்த நிலை இது.
ஜெர்மனியும், இத்தாலியும், பின்பு ஜப்பானும் சேர்ந்து உலக சுதந்திரத்துக்கு உலைவைக்கப் போகின்றனர் என்ற பேரச்சத்தில் உருவான அமெரிக்க - ரஷ்ய ஒற்றுமை, யுத்தம் முடியத் தொப்பென வீழ்ந்தது.
அன்று தொட்டு இன்று வரைக்கும் சுமார் முப்பது வருடங்களாக இழுபறிப்படும் அமெரிக்க - ரஷ்ய பிணக்கு, இக்காலஎல்லையில் உலக அரசியல் அரங்கில் பெரும் திருகுதாளங்களைக் கண்டுவருகிறது.
ஆயுதப் பரிகரணப் பேச்சுக்கள் ஒருபுறம்; ஆயுதப் பெருக்கம் மறு புறம். ஆசியாவில் நடைபெறும் ஆதிக்கப் போட்டி மூன்ரும் உலகுக்கு மர்மமாகவே இருக்கிறது.
அரசியல் தத்துவத்தில் அமைந்த முதலாளித்துவ - கம்யூனிஸ் போராட் டம் பல அரசியல் தந்திரங்களுக்கு வழிவகுத்தது கண்கட்டி வித்தை களில் ஒன்று.
கலப்பற்ற சுத்த கம்யூனிஸம் என்ருல் அது மாசேதுங் விளக்கி வரும் வேதமென்று செஞ்சீனு சொல்லி வந்தது. சீன தேசத்தை விட்டு வெளியே என்றும் செல்லாத நவசீன சிற்பி மாசேதுங் ரஷ்ய ஜனதிபதி ஸ்டாலினின் மரணச்சடங்குகளில் கலந்துகொள்ள மாஸ்கோ சென்றதை ரஷ்ய - சீன கம்யூனிஸ்ட் உறவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக 1953ல் பேசப்பட்டது.
பொதுவுடைமை கொள்கையை உலகில் பரப்புவதற்கு இரு வல்லமை படைத்த தேசங்கள் -ஐரோப்பாவில் ரஷ்யாவும், ஆசியாவில் சீனுவும் ஆவன செய்யுமென்ற நம்பிக்கை நிலவியது. இது சொற்ப காலம். இந்த நம்பிக்கை இன்று மோசம் போய் விட்டது. ரஷ்ய - சீனப் பிணக்கு அதிகரித்து வந்த போது அமெரிக்க ஜனதிபதி நிக்ஸன் ಜ್ಷಣ அரசியல் தந்திர நிபுணர் கீஸிங்கர் (Kissinger) உதவியுடன் சீனி உறவை பிங்பொங் விளையாட்டில் ஆரம்பித்தார்.
விளையாட்டில் உதயமான நட்பு தீவிரவாத கம்யூனிஸ்ட் மாசேதுங் ஆட்சியில் விளையாட்டாகவே முடிந்தது.

Page 30
40 ந. சபாரத்தினம்
இன்று, சீனுவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட ஜனதிபதி நீகன் ஒரு பெரும் நடிகராகையால் சீனுவின் முக்கிய தலைவரான டெங்சியாபிங் அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் உதவ முன் வந்துள்ளார். தலைகீழான மாற்றம் இது.
பாகிஸ்தானுக்கு நவீன அமெரிக்க ஆயுதங்கள்; சீனுவுக்கும் ஆயுதக் கொடை தென் கொரியாவும் அதன் சகாக்களும் றிகனின் பொக் கெட்டில்; அயல் நாட்டின் வெருட்டுகளுக்கு ஒரு பாதுகாப்பாக இலங்கை ஜனுதிபதியின் சீன விஜயம் !
இந்த குத்துக்கரண நாடகத்தில் பேச்சுவார்த்தையும் புன்னகையும் எதனைக் குறிக்கின்றதோ? ஆண்டவனுக்குச் சமர்ப்பணம்.
30-4-84

தீ( மை )யணைக்கும் படை
முற்றும் துறந்த பட்டினத்தடிகள், தாயார் இறந்தபோது, அத்துன் பத்தைத் துறக்கமுடியாத நிலையில் நான்குவிதமான தீயைக் குறிப் பிட்டு, 'யானும் இட்ட தீ முழ்க மூழ்கவே' என்று பாடினுர். அந் நான்கில் ஒன்று "தென்னிலங்கையில் இட்ட தீ’. தீமைகளை எரித்து விடவுே தீ உதவ வேண்டியது. தென்னிலங்கையில் இட்ட தீ அதனைத்தான் குறிப்பிடுகிறது.
மண்ணுலக வாழ்வில் இன்பம் காணும் நாம், அடிகளின் துறவு நிலைக்கு உயரமுடியாவிட்டாலும், நெருப்புச் சுடும் என்று நெருப்பைக்கண்டு அஞ்சுகின்ருேம்; அதேபோல் பாவச்செயல்களைக்கண்டு அஞ்சவேண்டு மென்று தெரியாது தடுமாறுகின்ருேம்.
இது எமது நாடு, நாமெல்லோரும் இந்நாட்டு மக்கள் என்பது இன்று ஒரு கடினபாடமாகிவிட்டது. பட்டினத்தார் குறிப்பிட்ட தென்னிலங் கைத் தீ வேறு ; ஆடிக்கலவரத்தில் தென்னிலங்கையில் சுவாலித்த தி வேறு. −
முந்தியது தீமையை அழித்தது; பிந்தியது உயிரையும் உடைமை யையும் அழித்தது. தீக்கும் தீமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அழித்தல் இரண்டிற்கும் பொதுவான சக்தி. ஆனல் தீயை அணைக்க முடியும், பாவச்செயலை இலகுவில் அணைக்க முடியாது. பாவச்செயல் கர்ம விதியால் தொடர்ந்து செல்லும். அணைக்க முடியாது என்பதை உணர்ந்து தீயைவிட பாபத்துக்கு அஞ்சவேண்டுமென்று இந்தியாவில் அவதரித்த இருபெரும் ஞானிகள் போதித்திருக்கின்றனர். வடக்கில் புத்தபெருமானும் தெற்கில் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் உலகப் பிரசித்தம் பெற்ற இரு தீ(மை)யணைக்கும் படைகளென்பதை நம்மவர் இன்னும் உணரவில்லை; எனவே விமோசனமில்லை.

Page 31
42 ந. சபாரத்தினம்
இலங்கையின் தெற்கிலும் வடக்கிலும் அண்மையில் இட்டதீ உலகனைத் தையும் பிரமிக்கச் செய்திருக்கிறது. திட்டமிடப்பட்ட தீயென்பதை நினைக்கும்போது இதன் விளைவு எவ்வாறிருக்கப்போகுதென்பது அறத் தில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வேதனை அளிக்கிறது. தீமை அவ்வாறிருக்க, இன்றைய உலகில் தீ, நாடு, நகரத்தை அழித்து விடுமளவிற்கு, நாகரிக வாழ்வு, தொழில்நுட்பத் திறமை விருத்தி யடைந்திருக்கிறது, நோய்க்கு மருந்து, மருந்தால் ஏற்படும்கெடுதிக்கு
மாற்று மருந்து; விருத்தியடைந்த நாகரிகத்தின் வர்ணனை இது. யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய பொது நிறுவனங்கள் எரிக்கப்பட்டு விட்டன. மிகப் பாரதூரமான தீங்கு இது. சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்தனைப்போல் நெருப்புடன் விளையாடும் இலங்கை அரசு போக்கில் வேறுபட்டிருக்கிறது. தில்லை நடராஜர் தீமையைப் போக்கத் தீயுடன் ஆடுகின்ருர், எங்கள், "அரசர்கள்’ தீமையை விருத்தி செய்ய ஓமம் வளர்க்கின்றனர். நாட்டிலும் நகரி லும் எழும் தீ எங்கிருந்து வந்தாலும் அதனை அணைப்பது ஆட்சியின் கடன், ஆட்சியே அவ்வித தீக்கு பொறுப்பேற்கும் நிலையில் மக்கள் அப் பணியில் தீவிரமாக ஈடுபடுதல் அவசியம். * படமுடியாதினித் துயரம் ; பட்டதெல்லாம்போதுமென்று யாழ்ப்பாண நகர ஆணையாளர் தீயணைக்கும் இயந்திரம் ஒன்று யாழ்ப்பாணத்துக்கு 13 அல்லது 14 கிழமைக்குள் வந்து சேரும் என்று அறிவித்திருக்கிருர், இதற்கு வேண்டிய ஆதரவை ஒவ்வொரு நகர பிரஜையும் உதவ வேண்டுமென்று சொல்லவும் வேண்டுமா?
இயந்திரம் வந்ததும் காரியம் முடிந்தது என்று நினைப்பது பெருந்தவறு. நாம் முன்னே கூறியதுபோல் ஒரு படை தயாராக வேண்டும்-நெருப்பு வைக்க ஒரு படைதயாராவதானுல்; அணைக்கும் படை இயந்திரத்துக்கு உயிர் கொடுத்த வண்ணம் இருக்க வேண்டும்.
திட்டமிடப்படும் தி மீண்டும் தொடருமென்பதால் புலன் விசாரணைப் பகுதி இப்படைக்கு அவசியம். உதாரணமாக யாழ்ப்பாண நகரில் அடுத்த "கிடாய்” பட்டியலில் எதுவென்றறிந்தால் நெருப்புப் புகைக்க முன் அவ்விடத்துக்கு விரைவது விவேகம். நீர் வசதி அத்தியாவசியம். தீ மட்டுமல்ல, தீமைகள் பல அஃணக்கத் தொண்டர் படை திரள வேண்டும். தமிழ் மக்களின் பெருமைக்கு இருப்பிடமான யாழ்ப் பாணத்தை எவ்வகையிலும் காப்பாற்ற படை திரட்டவேண்டும்.
2-5-84

யாழ்ப்பாணமெனும் பாலைவனம்
யாழ்ப்பாணத்தில் அடியெடுத்து வைக்காத புவியியல் நிபுணர், ஸ்கொத்லன்ட் தேசத்து மக்ருெபின்சன் ( Mac Robinson ) தமது ஆராய்ச்சி மூலம் யாழ்ப்பாணம் ஒரு சிறு பாலைவனமென்று முடிவு கட்டி அவ்வாறே நம்பியிருந்தார்.
கொழும்பு ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் சிரேட்ட விரிவு ரையாளராகவும் பின்பு கல்வி மாஅதிபதியாகவும் கடமையாற்றிய திரு. ருெபின்சன் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டபோது தம் முந்திய கருத்தை சற்றே மாற்றிக் கொண்டாராம். சகாரா போன்ற தல்லவென்பது அவருடைய கருத்துப் போலும்.
இது அரை நூற்ருண்டுக்கு முன் நடைபெற்ற சம்பவம். யாழ்ப் பாணக் குடாநாட்டின் பல பாகங்களில் மலைவேம்பு போன்ற பெரு விருட்சங்கள் நெடுஞ்சாலைகளையும் பூங்காக்களையும் அழகு படுத்திய காலம் அது. அன்னிய ஆட்சியானுலும் போர்த்துக்கேயர், ஒல்லாந் தர், பிரிட்டிஷார் மரம் நட்டு நாட்டையும் நகரையும் சிறப்புறச் செய்வதில் நம்பிக்கை கொண்டவர்கள்.
கிறிஸ்த்தவமிஷன் பாடசாலைகளை - கிராமங்களில் தானும் - இலகுவில் இனம் காண்பது இத்தகைய விருட்சங்களின் அழகாலென்பது எவரும் அறிந்த விடயம். மலைவேம்பின் நிழலில் விளையாட்டு நிலையம் அமைத்த பிரபல மிஷன் கல்லூரி ஒன்று பலதரப்பட்ட போட்டிகளில் சாதனை நிகழ்த்தியதற்கு மரத்தின் நிழல் மட்டுமல்ல, அதன் கம்பிர மும் ஒரு பெரும் காரணமென்று கொள்ளப்பட்டது.
சுதந்திர இலங்கையில் அந்நியர் செயல்களை அழிப்பது ஒரு ஆக்க வேலை என்று நினைக்கின்ருேமா ? இவ்வித பல விருட்சங்கள் வெட்டப்

Page 32
44 ந. சபாரத்தினம்
பட்டு விட்டன. அந்த இடங்களில் புது மரங்கள் நாட்டுகின்ருேமா? மலைவேம்பில் தயாரித்த தளபாடத்தில் எமக்கு பெருவிருப்பம். செல்வர்கள் வீட்டின் உபசார அறையில் அவற்றைக் காணலாம். உயிர்மரத்தை, ஆறு, மலை, இல்லாத இவ்வறண்ட பிரதேசத்தில் இன்று காண்பது அரிதினும் அரிது.
எங்கள் பண்டைய பண்பாடு என்ன சொல்கிறது?
வாழை, மா, பலா ஆகிய மூன்றையும் முக்கனி என்கிருேம். இவைகளுள் ஒவ்வொன்றும் தன்னளவில் சுவையும் சத்தும் உடை யது. பின்பு மூன்றுஞ் சேருங்கால் சுவையிலும் உணவுச் சத்திலும் பன்மடங்கு மேலோங்குகின்றன. கடவுளுக்குப் படைக்க அவை முற்றிலும் பொருத்தமானவை என்பதற்கு அதுவே காரணம்.
யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் இக்கனிகளுக்கு தென்னிலங்கையில் இருக்கும் மதிப்பு என்னவென்பது எமக்குத் தெரியாதா?
* கறுத்தக் கொழும்பான ' சுவைத்த மனிதனின் கை யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வித அழிவையும் ஏற்படுத்த ஏலாதென்று திடமாகச் சொல்லலாம்.
இஃதிங்ங்னமாக, கடந்த டிசம்பரில் நல்லூரின் செம்மணி ருேட்டில் சில தனியார் காணிகளில் உள்ள பல மரங்கள் - தென்னை, பனை, பலா, மா, இன்னும் பல்வேறு பழ மரங்கள், மின்சாரம் அமைப் பதற்காக வெட்டப்படுமென்று பிரசித்தம் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்துப் போராடிய கதையும் “சற்றடே றிவியூ" பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. மக்கள் சிந்தனைக்குரிய விடயம் இது.
அந்தச் செய்தி, எமது நாகரிக வாழ்வு இன்று பல அடிப்படைக் கொள்கைகளை வேரோடு வெட்டிச் சாய்க்கும் தன்மையது, என்ற விளக்கத்தை அளிக்கிறது.
இயற்கையின் செயலும் இறைவன் செயலும் ஒன்றே என்று உணர்ந் தவர்களில் எத்தனை பேர் பொறியியலாளர்கள்?
மின்சாரம் வேண்டும்; இயற்கையை அழித்துத்தான் அத்தேவையை பூர்த்தியாக்க வேண்டுமா?

ஊரடங்கு வாழ்வு 45
வேறு வழி உண்டா என்று சிந்திக்கவைக்க, இயற்கையில் பெரும் நம்பிக்கை கொண்ட சான்ருேர், பொறியியல் விஞ்ஞானிகளுடன் கலக்க வேண்டும். விஞ்ஞானிகள் பரந்து விரிந்து அறிவைத் தேடவேண்டும்.
மரங்களை மனிதாபிமானமின்றி வெட்டிக்கொட்ட அனுமதிப்பது உயர்ந்த விஞ்ஞானமாகாது.
குடியானவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகின்றன்; பூமியைத் திருத்தித் தோட்டஞ் செய்கின்ருன்; அவனுடைய உயிருக்கு உயிராக இருப்பது இயற்கை; அதன் சுயரூபமே மரங்கள். மனிதப் பண்பின் சின்னமே மனிதன் நாட்டும் ஒவ்வொரு மரமும்.
இயற்கையில் வைக்கும் நம்பிக்கையும் தெய்வத்திடம் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றென உணர்ந்து மரங்களை தறிக்காது, தறித்த மரத்துக்குப் பதில், மரம் நாட்டுவது, எங்கள் தலையாய கடனென் பதை உணர்வோமாக.
3-5-84

Page 33
தீர்வு தேடிநிற்கும் தேசியப் பிரச்சனை
இன்று நாட்டை எதிர் நோக்கும் தேசியப் பிரச்சனை வேறு; தேசிய பந்தோஸ்பது வேறு.
வட்டமேசை கூட்டப்பட்ட வேகத்தை நாம் மறந்துவிட்டோம். தமிழ் மக்கள் பிரச்சனைக்கு ஒரு முடிவு காண சர்வகட்சிகள், மதத்தலைவர்கள் அவசரப்பட்டுக் கூடினர்.
இதொரு சீரியஸ் நோய் என்றும், நோயாளி அவசர பிரிவிற் சேர்க்கப் பட்டு ஒக்சிஜின் கொடுக்கப்பட்டு சலைன் ஏற்றப்பட்டுக் குணப்படுத்த வேண்டுமென்ற தீவிரம் ஆரம்பத்தில் காணப்பட்டது.
நோய் குணப்படலாமென்ற அச்சங்கொண்டவர் இடைவழியில் மருத் துவத்தைக் குழப்பிவிட்டனர்.
இதனையடுத்து, இதற்குப் பொறுப்பான ஆளுங்கட்சியும் பல சுற்று மாற்றுப் பேச்சுக்களிலும் குழுக்கள் அமைப்பதிலும் காலம் தாழ்த்தி யது. அடிக்கடி, குழப்பமான பேச்சுக்களும், பத்திரிகை விமர்சனங் களும், இவைக்கு உருக்கூட்டும் வன்செயல்களும் நீண்ட விடுமுறைக்கு வழி தேடின.
பத்திரிகைகளின் பத்துவிதமான திரிப்புக்கள் பாரதூரமான நடவடிக் கைகளுக்கு வழிகோலின.
இந்தியா ருடே, எங்கள் நாட்டில் அண்மையில் நடந்த சம்பவங்களுக்கு எவ்வாறு உதவினதென்பதை எத்தனை பேர் அறிவார்கள்?
இதற்கு அடிகோலியவர் யார்? இவ்வித உத்திகள் யாருக்கு உதவு கின்றன? விடயத்துக்குத் தீர்வுகாண யார் துடிக்கின்றனர்?

ஊரடங்கு வாழ்வு 47
இந்த நிலையில் உருவானதே தேசிய பந்தோபஸ்து அமைச்சு. என் னென்ன சாதனைகளை இந்தக் குறுகிய காலத்தில் இந்த அமைச்சு நிலைநாட்டிவிட்டது. V
இலங்கை இந்தியாவை ஆக்கிரமிக்காதென்ற உறுதி மொழியை பந்தோபஸ்து அமைச்சர் புதுடில்லி சென்று நேரில் வழங்கியதோடு இந்தியாவும் அவ்வாறு இலங்கையை எவ்விதத்திலும் ஆக்கிரமிக்காது என்ற வாக்குறுதியையும் இந்தியப் பிரதமரிடம் பெற்றிருக்கிருர்.
எனவே தேசீய பந்தோபஸ்து பற்றி ஏன் இந்தப் பரபரப்பு? காலந் தாழ்த்தவா?
வடபகுதி பயங்கரவாதம் தமிழ் மக்களின் அடிமை நிலையில் உருவாகி வளர்ந்திருக்கிறது.
இதனை ஒழிக்கவே வட்டமேசை ஆரம்பமானது.
துடிதுடிப்புடன் ஆரம்பமான வட்டமேசை மகாநாடு வேகம் குன்றி,
பலம் குறைந்து, நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டது. தேசியப் பிரச்சனையான தமிழர் பிரச்னை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடங்கி
விட்டது.
பேசப்படுவதெல்லாம் வடபகுதிப் பயங்கரவாதம் பற்றியே. நாட்டில் பல்வேறு தொல்லைகளும் துயரங்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்த போதும் தமிழர் பிரச்சனையே முதன்மையானதென்பதை மறந்து, அதற்குத் தீர்வு கண்டால் மற்றவை தாமாகவே மறைந்துவிடுமென் பதை உணர மறுப்பதே இன்றைய இக்கட்டான நிலை.
எதிர்க் கட்சிகளின் கருத்தை நாம் முற்ருகத் தள்ளிவிட முடியாதிருக் கிறது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அத்திபாரமாகக் கொண்டதே தமிழ்ப் பிரதேசங்களின் சுயநிர்ணயம். இதனை மழுப்பி பல தாமதங்களும் தடைகளும் உருவாக்கப்படுவது மக்கள் கவனத்தை திசைதிருப்பவே என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் உறுதியான நம்பிக்கை.
நாம் அதனை முற்றும் ஆதரிப்பது தர்மம் அல்லவென்ருலும், சர்வகட்சி மகாநாடு, சர்வமத மகாநாடு, கூடிக் கூடிப் பேசிப் பேசி ஒரு

Page 34
48 ந. சபாரத்தினம்
நல்ல முடிவுக்குவர உற்சாகமும் பலமும் அளிப்பது அரசின் கடமை; அவசிய பொறுப்பு.
அமைதி வாழ்வில் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை; அதே சமயம் கடந்த 36 வருடங்களில் தமிழ் மக்கள் அடுத்தடுத்து அடைந்துவரும் தோல்விகள் இந்தச் சூழ்நிலையை உருவாக்கி வந்ததை தெளிவாக உணர்கின்றனர்.
எரியும் நெருப்புக்குத் தண்ணீர் உற்ற மறுக்கும் ஞானம் என்ன விளைவை ஏற்படுத்தும் ?
நாளை கூடும் சர்வ கட்சி மகாநாடு, எமது மனதிற்படும் ஒரு திடமான உண்மையை கவனத்தில் கொள்ளவேண்டுமென விரும்புகின்ருேம்.
சமாதான வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு உரித்தான எங்களை எத்தனை நாட்களுக்குத் தான் வதைக்க முடியும்? இவ்வளவு கொடுமைகளை அனுபவித்த மக்களை, மரணத்தை நேரில் அடிக்கடி கண்ட மக்களை எப்படிக் கொல்ல முடியும்?
தம்மைத் தாமே ஆளும் உரிமையை எவ்வளவு காலம் மறுக்கமுடியும்?
8-5-84

இலங்கையும் இந்துமாகடலும்
உலகின் பல பாகங்களிலும் பதற்றநிலை காணப்படுகின்றது.
மூன்ருவது உலக யுத்தம் பருவகாலத்தில் நடைபெருதது ஒரு காரணமெனலாம்.
உலக யுத்தம் என்ருல் உலக அழிவு என்று இன்று சொல்லப்படு கின்றது.
கடந்த காலத்தில், பருவகால மழைபோல் சுமார் இருபது வருட இடைவெளியில் அவ்வித யுத்தம் ஏற்பட்டு வந்ததால் நல்லதெல் லாம் அழிந்து விட்டதென்று சொல்ல முடியாது.
இரண்டாவது உலகயுத்தம் இன்றேல் *இந்திய சுதந்திரம்’ எவ்வளவு காலத்துக்குப் பின் போடப்பட்டிருக்கும்?
தர்க்கரீதியில் இவ்வித யுத்தம் உருவாக வேண்டுமென்று எவரும் இன்று நினைக்கமாட்டார். யுத்தம் தவிர்க்கப்பட வேண்டியது இன்று அவசியம்; அது உருவாகிற அச்சம் அதிகரிக்கிறது.
ஐரோப்பிய அரங்குக்குச் சொந்தமாயிருந்த யுத்த மரபு இன்று ஆசிய பிராந்தியத்திற்கு மாற்றம் பெற்றிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் யுத்த நெருக்கடி பற்றிக் கூச்சலிடுகின்றன. & Libu6D- புனரமைப்பு, நீர்முழ்கிக்கப்பல் அமைக்கும் திட்டம்-இவையெல்லாம் மகாத்மாகாந்தி வளர்த்தெடுத்த சுதந்திர இந்தியாவில் பிரதமர் இந்திராகாந்தி எடுக்கும் யுத்த நடவடிக்கைகள் என்ருல் அது உலக விவகாரங்களில் ஏற்பட்ட பெருமாற்றத்தை விளக்குகின்றது.

Page 35
50 ந. சபாரத்தினம்
தேசபிதாவின் அஹிம்சைக்கும் பிரதமர் இந்திராவின் இன்றைய பாதுகாப்பு ஆயத்தங்களுக்கும் எவ்வித முரண்பாடும் இல்லையென்றே கொள்ள வேண்டும்.
பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சீசெல்ஸ்தீவு, மொஸாம்பிக், அங்கோலா, மடகாஸ்கர், மொரிஷியஸ், எதியோப்பியா போன்ற நாடுகளிலும் அரசியல் குழப்பங்கள் தலையெடுத்துள்ளன.
இந்த நிலையில், எந்த நாடும் தனது அலுவல்களைத் தானே சீரமைக்க, எவ்வித தலையீடுமின்றி உதவும் மனப்பான்மை, வல்லரசுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடு களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஆசிய பிராந்தியம் மூன்ருவது உலக யுத்தத்துக்கு ஆளாகுமோ என்று சந்தேகப்படுபவர் பலர்; அந்த துரதிர்ஷ்ட நிலை ஏற்படுமானுல் இலங்கையின் எதிர்காலம் என்னவென்று இச் சிறு நாட்டில் வாழும் மக்கள் நினைப்பதும், கற்பனை செய்வதும் இக்காலத்தில் இயற்கையே! இங்கும் ஒரு பதற்ற நிலை; விரலுக்கேற்ற வீக்கம்; அது மட்டுமல்ல இந்து சமுத்திரத்தில் உருவாகும் யுத்தம் இலங்கையை பிரதான ஸ்தானமாகக் கொள்ள வாய்ப்புண்டு. வல்லரசுகளின் நடமாட் டத்துக்கு தேவைப்படும் கட்டம் ஏற்படலாம்.
இச் சிறு உண்மைக்குப் பெரும் உருவகம் அமைத்துப் பல விபரீத மான ஆராய்ச்சிகளையும் அச்சங்களையும் பரப்புவதில் இங்கு வாழும் * கிணற்றுத் தவளைகள்' பெரும் நிபுணர்களாக நடிக்கின்றனர்.
சிங்கள - தமிழ் உறவு, தமிழர்கள் இந்த நாட்டில் வாழும் உரிமை, இவற்றை நியாயமான முறையில் சீரமைக்கும் பொறுப்பு, உலக விவகாரங்களிலும் உலக யுத்தத்திலும் ஓரளவிற்குத் தங்கியிருக்கலாம்; ஆனல் அதனை மிகைப்படுத்தி பகற் கனவு காணுது, எங்கள் பலத்தை உறுதிபடுத்த வெளியூர் உதவி தேவையானுலும் அதில் எச்சரிக்கை யாயிருப்பது உசிதம்.
இந்து சமுத்திரத்தின் அமைதியின்மை இந்தியாவுக்குப் பேரச்சம் அளிக்கிறது. அது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளால் அதிகரிப்பது நியாயமெனலாம்; அதே சமயம் இந்தியாவை பாது

ஊரடங்கு வாழ்வு 51
காக்க என்றும் தயாராகவுள்ள சோவியத் ரஷ்யா இந்து சமுத்திரத்தை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதை மண்டல சார்பற்ற நாடுகள் விரும்பமாட்டா; நியாயம்தானே!
நூற்ருெரு மண்டல சார்பற்ற நாடுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா, இவ்விடயத்தில் தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டது. ஆணுல் அமெரிக்கா இந்த அணிசேராக் கொள்கைக்குப் பெரும் எதிரி. a
இந்தியா, தனது பாதுகாப்புக்கு சோவியத் ரஷ்யா இன்றியமையாத தென்று கொள்கிறது. அமெரிக்கா, பாகிஸ்தான் மூலமும் மற்றும் பல தென்கிழக்காசிய நாடுகள் மூலமும் தனது வலிமையையும் செல்வாக்கையும் வளர்க்க தீவிரமாக இறங்கியுள்ளது; அதற்கு இந்து சமுத்திரம் இடம் கொடுக்கலாமா?
இலங்கைக்கு தமிழர் பிரச்சனை மூலம் மட்டுமல்ல, பலம் படைத்த பருத்த அயலவர் என்ற காரணத்தாலும் இந்தியாவில் பெரும் சந்தேகம்.
சங்கடமான நிலையென்று கற்பனை செய்ய இடமிருந்தாலும் அயலவரை அவமதித்து, ஆபத்துக்கு உதவ முடியாத ஏகாதிபத்திய உறவில் நம்பிக்கை வைத்தல் அரசியல் தற்கொலையாகும்.
9-5-84

Page 36
கிரிக்கட் ஆட்சி
எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கும் தீர்மானம், ஜனதிபதி ஜெயவர்த்தணுவின் "பலத்த எதிர்க்கட்சி இன்று இல்லையே? என்ற வேதனையுடன் தொடர்புடையதெனக் கொள்ளலாம்.
இன்றைய பாராளுமன்ற ஆட்சி பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு. அதற்கு அத்திபாரமிட்டது அவர்கள் விரும்பும் கிரிக்கட் விளையாட்டு என்பது பலருக்குத் தெரியாமலிருக்கும்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டதற்கு ஈற்றன் (Eton) விளை யாட்டு மைதானத்தில் ஆங்கில இளைஞர் பெற்ற கிரிக்கெட் பயிற்சியே காரணமென்ற வேதாந்தம் நீண்ட காலம் நிலவியது.
இதற்கு பதிலடி கொடுத்தவர் பிரிட்டிஷ் தத்துவ மேதை பேட்ரன்ட் ரஸல் பிரபு ஆவார். பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கட்டப்பட்டது அவ்வித பயிற்சியாலென்ருல் அது இன்று கவிழ்ந்ததும் அதால்த்தான் என்று இறுக்கியிருந்தார். அது உண்மையே.
அது என்னவானுலும், பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தின் ஆசன அமைப்பு முறையே கிரிக்கெட் போட்டிக்கு விளையாட்டு மைதானம் அளிக்கும் காட்சி போன்றது.
அரசாட்சி ஒருபுறம்; எதிர்க்கட்சி மறுபுறம். வேறென்ன திறமை இல் லாதபோதும் எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வது அவசியம். அங்கத்தவர் குறட்டை இழுத்து நித்திரை கொண்டாலும் வாக்கெடுப்பு மணி அடித்ததும் எழுந்து அல்லது எழுப்பப்பட்டு வாக்களிக்க, விடயம் விளங்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்திருக்கும் கைகளை கவ னித்து அவ்வாறே செய்வதற்கு இந்த ஆசன அமைப்பு உதவும்.

ஊரடங்கு வாழ்வு 53
பிரிட்டிஷ் பாராளுமன்ற ஆட்சிமுறையைக் கேலி செய்வது மடமை. ஆனல் அதன் அடிப்படை விளக்கம் புரிந்துகொண்டால் அது வேற்று நாடுகளுக்கு எவ்வாறு பொருத்தம், பொருத்தமில்லை என்பது இலகு வில் விளங்கும்.
எங்கள் பாராளுமன்ற விவகாரங்களில் முன்னுெரு முறை கிரிக்கட் பற்றி பேசப்பட்டது; சந்தர்ப்பம் வேறுபட்டது; இருப்பினும் திரு. அனுரா பண்டாரநாயகா மாணவனுயிருந்தபோது அந்த நாடகத்திலும்
பங்கு கொண்டவர்.
டாக்டர் என். எம். பெரேரா, அனுராவின் தாயார் சிறிமாவோ அம் மையார் நடத்திய ஆட்சியில், 1963இல் சேருவதற்கு முன்னுேடியாக இருந்தது, டாக்டர் பெரிதும் விரும்பிய கிரிக்கட் என்றும், அதனை அனுராவுடன் பொழுதுபோக்குக்கு விளையாடி சிறிமாவின் ஆட்சியில் சேர்ந்தவரென்றும் அன்று பேசப்பட்டது.
இன்று உருவாகும் எதிர்க்கட்சித் தலைவரின் உயர்ந்த (அமைச்சர்) அந்தஸ்து ஜனுதிபதியின் ஆசிபெற்றதால், பாராளுமன்ற கிரிக்கட் அந்த விளையாட்டுக்குரிய நியாயமும் நீதியும் கொண்டதாயிருக்குமென லாம். விதிகளுக்கு அமைய விளையாட்டு நடைபெற வேண்டும்.
ஆனல் எதிர்க்கட்சி விளையாட்டு வீரர் தொகை மிகக் குறைவாக இருக் கின்றதே ஆக்கபூர்வமான பணியே எதிர்க்கட்சிக்குரியதானுல் விளை யாட்டுக்குரிய சமபலம் கிடைப்பதெங்ங்ணம்?
கடந்தகால அனுபவம் பலனளிக்கலாம்; கடந்த காலத்தில் எதிர்க் கட்சித்தலைவர், விடுதலை கோரும் தமிழர் கூட்டணித்தலைவராக இருந்த தால் நிலைமை வேறுபட்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது. கொள்கை வேற்றுமையில் நிறுவப்படும் ஆரோக்கியமான ஆட்சிமுறை தேவைப்படுவதால், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மிகப் பொருத்த மானவர்; அவ்வித ஆட்சியில் தமிழ் எம்.பி.க்கள் பங்கு கொள்வதும் மிக அவசியம்.
இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் தேசிய பிரச்சனையாகிய தமிழர்பிரச்சனைக்கு நியாயமான முடிவுகள் ஏற்படுமாயின்பாராளுமன்ற

Page 37
54 ந. சபாரத்தினம்
ஆட்சி பலமடையும் சாத்தியமுண்டு. வகுப்புவாதம் நீங்க உதவும். கட்சி ஆட்சி, சிங்களவர் தமிழர் என்ற பிரிவினையை அகற்றவல்லது.
அரசியல், பொருளாதாரக் கொள்கை, தேசியரீதியில் அமைய இன் றைய சர்வகட்சி மாநாடு கட்டாயம் உதவ வேண்டும். சிறிலங்கா சார்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு நல்ல முடிவுக்குத் தலைவர் அனுரா முயற்சி செய்தால், சிங்கள மக்கள் மனதில் மன மாற்றம் உண்டாகும். w
அந்த வாய்ப்பான கட்டத்தில் ஆளுங்கட்சி அங்கத்தவர் சிலரையே எதிர்க்கட்சிக்குப் பலமளிக்க, அதில் சேர்வதற்கு ஆட்சியே அனு மதிக்கலாம்.
இந்நிலை கைகூடுமானுல் "கிரிக்கட் ஆட்சி உண்மையில் சிறந்ததே!
18-5-84

மருத்துவத் துறையில் சிந்தனை மாற்றம்
'மனித உடலைக் குறித்துச் சரியான அக்கறை எடுத்துக் கொள் ளாத தவறுக்காக வருடந்தோறும் ஐரோப்பிய டாக்டர்கள் பல்லா யிரக்கணக்கான மிருகங்களைக் கொல்கின்றனர். அவற்றை உயிரோடு அறுத்துச் சோதிக்கின்றனர். எந்த மதமும் இதை அனுமதிக்க வில்லை’’.
இதனை வேறு யார் கூறியிருப்பார் ? மேனுட்டு வைத்தியத்தில் நம்பிக்கையற்று இயற்கை வைத்திய முறையில் பல சாதனைகளை நிகழ்த்தியதற்குப் பொறுப்பான மகாத்மா காந்தியே இவ்வாறு கூறியிருக்கிருர்,
இன்று மேனுட்டு வைத்திய முறையில் புத்தம் புதிய கண்டுபிடிப்புக்கள் மெத்த அதிகரித்து விட்டதால் வைத்திய முறை என்ருல் "டாக்டர்" . தான் கடவுளுக்கு அடுத்தவரென்று நாம் கணிக்கிருேம்.
இது தவருண எண்ணமென்ருலும் அதனைத் தகர்த்தெறிய முடியாத நிலை, நாட்டிலும் எங்கள் சமூகத்திலும் வேரூன்றி விட்டது.
மகாத்மா காந்தி போல், அறிஞர் பெர்னட்ஷா இவ்வித தீவிர கருத்தைக் கொண்டு டாக்டர்களைச் சாடியிருப்பது உலகறிந்த செய்தி.
இவர்களிருவரும் இவ்விடயத்தில் தீவிரவாதிகள் என்று நாம் அலட் சியம் செய்ய நேரிடலாம். ஆணுல் கீழைத்தேய வைத்திய முறை: சீனு இன்று உலகுக்களித்தபெருங்கொடை ‘அக்குப்பங்ஷர்' போன்ற வைத்தியத்தின் பெருமை தெரியாதார் ஒன்றும் தெரியாதவரே !
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் செவ்வாய், புதன், ஞாயிறு, தினங் களில் நடை பெறும் "அக்குப் பங்ஷர்' வைத்தியம் நோயாளிகளைப்

Page 38
56 ந. சபாரத்தினம்
பெரிதும் கவர்ந்திருக்கிறதாக அதற்குப் பொறுப்பான டாக்டர் திருமதி பெரேரா தெரிவிக்கிருர்.
மிகப் பிரபலமான கொழும்பு சத்திர வைத்திய நிபுணர் ஒருவர், வைத்திய நிபுணர் இன்னுெருவர், அங்கு மிக ஒழுங்காக வந்து சிகிச்சை பெறுவதாஞல் மருத்துவ முறையில் சிந்தனை மாற்றம் அவசியமென்பதை உணரவேண்டுமல்லவா ?
பலதுறைகளில், குறிப்பாக வணிகத்திலும் போரிலும் மேனுடுகள் முன்னிற்கின்றன. விஞ்ஞானமென்ருல்" இந்த கத்தரிக்காய்களுக்கும் கீரைகளுக்கும் என்ன தெரியுமென்ற இறுமாப்பு இன்னும் இருந்து வருகின்றது.
தாவர வர்க்கத்துக்கு உயிருண்டு என்று முதன்முதல் உலகுக்கு விளக்கியவர் சேர் ஜெகதீஸ் சந்திர போஸ். இருந்தும் இந்திய சாதுக்கள், ஞானிகள் சீன விஞ்ஞானிகள் பல்லாயிரம் வருடங் களுக்கு முன் கண்டறிந்த வைத்திய முறையின் தத்துவத்தை நாம் இன்றும் எட்டிப் பார்க்க விரும்பவில்லை.
இவ்விடத்தில் சிங்கள ஆயுர்வேத முறை வேகமாக முன்னேறுவதை நாம் குறிப்பிடாது விடமுடியாது.
நமது நாட்டு பழம் பெரும் சித்தர்கள், மனித உடலை நன்கு வளர்த்து வாழும் வகைகளை விவரித்துக் கூறியிருப்பவை உலகிலேயே மிகவும் சிறந்ததாகவும் மிகவும் உயர்ந்த விஞ்ஞானமாகவும் கருதப் படுகின்றது.
சித்த வைத்தியத்தில் மிக முக்கியமானது நோய் வராமல் தடுக்கும் மருந்துகள். மேனுட்டு வைத்திய முறை இதனைப் பரிகாசமாக எவ் வளவிற்குக் கருதுகிறதோ, அவ்வளவிற்கு இன்று எமக்கு அது முக்கிய மென்பதை நாம் உணர வேண்டும்.
சித்தவைத்திய முறை உச்ச நிலையில் இருந்த காலத்தில் யாழ்ப் பாணம் தொடக்கம் ஏனைய தமிழ்ப் பகுதிகளில் மிகப் பிரபலமான வைத்தியர்கள் அற்புத மருந்து வகையால் மாருத நோய்களை மாற்றியிருந்தமை வரலாற்றுக்கமைந்த செய்தியாகும்.

ஊரடங்கு வாழ்வு 57
இந்திய சித்தமருத்துவ ஓலைச்சுவடிகள், சோதிட நூல்கள் அழிந்து போனதும், எஞ்சியவை அயல் நாட்டவர்களால் - ஜெர்மனி போன்ற மேனுடுகளில் வாழ்ந்த வைத்திய நிபுணர்களால் வாங்கப் பட்டு நாட்டை விட்டு வெளியே போனதும் இதன் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
இப்போது எமது அரசாங்கம் இதைப்பற்றி ஓரளவு சிந்திக்கத் துவங்கியிருக்கிறது. உள்நாட்டு வைத்தியமுறை அமைச்சு, ஆயுர் வேதம் என்ற சிங்களப் பிரிவுக்கு ஓரளவிற்கு ஊக்கமளித்து வருகிறது; ஆணுல் மேனுட்டு நாகரிக வாழ்வில் உறுதி கொண்ட ஆட்சித் தலைவர்கள் இந்தச் சிந்தனைப்புரட்சி வேண்டி நிற்கும் தலைமையை முழு ஆர்வத்துடன் அளிக்க முன் வருவார்களா என்பது சந்தேகம்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஆங்கிலம் கற்று உயர்கல்வி மூலம் வெளிநாட்டு உத்தியோகங்களை நம்பி வாழ்பவர் இந்தத் துறையை எட்டியும் பார்க்கார்.
காலத்தின் சூழ்ச்சியால், இது தவறென உணரும் தருணம் வரும் வரைக்கும், இந்த வைத்திய முறையை, ஒரு "ஏழை இனத்தவன்" (Poor relation) என்ற மனப் போக்குடன் அணுகுவது நன்மை பயக்காது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சித்த வைத்திய கல்வித்துறை இதனை எச்சரிக்கையாகக் கொள்வது நலம். 19-5-84

Page 39
"செத்துக்கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம் பிணங்கள்"
துறவறத்தில் முன்னின்ற பட்டினத்தடிகள் பாடிய பாட்டின் ஒரு அடியே நாம் மேலே கொடுத்திருக்கும் தலையங்கம்.
அடிகள் யாக்கை நிலையாமையை விரித்துப் பாடிய பாட்டுகள் அனேகம், புலமைக்கும், கருத்துப்பொலிவுக்கும் சாதாரண மக்களின் உணர்வைத் தூண்டும் சக்திக்கும் பட்டினத்தடிகளின் பாட்டுகள் சிறந்த இலக்கிய
மெனக் கொள்ளலாம்.
நாம் குறிப்பிட முயலும் தொல்லைக்கும் இத் தலையங்கம் பொருத்தமா கிறது. மனிதன் பிறக்கிருன் சீராக வாழ முயல்கிருன்; என்னவான லும் வாழ்கிருன் இறுதியில் இறக்கிருன். இறந்தால் அவனுடைய உடம்பு பிணமென்பதை யார் ஆட்சேபிப்பார்?
எப்படி வாழ்கிறயோ அவ்வாறே இறப்பாயென்று கூறப்படுகிறது: வாழத் தெரிந்தவன் சாகத் தெரிந்தவன் என்பதும் அதே கருத்து.
இன்று இவ்வித தத்துவத்தைத் தாண்டிநிற்கும் கட்டத்தையே நாம் இந்நாட்டில் காண்கிருேம்,
நாட்டின் பல நகர்களில் குறிப்பாகக் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அவமிருத்தால்-வன்செயல், விபத்து போன்ற செயல்களுக்கு பலி யானவர் பெரியாஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்குக் கொண்டு வரப் படுகின்றனர். இத்தொகை நாளுக்கு நாள் வேகமாய் அதிக ரித்து வருகிறது.

ஊரடங்கு வாழ்வு 59
கொழும்பில் இவற்றை வைத்திருக்கும் நிலையத்தில் 48 குளிர் சாதன வசதியுள்ள காம்பறைகள் உள; ஆனுல் அரைவாசிக்கு மேற்பட்டவை தக்கநிலையில் இயங்கவில்லை. பிரேதபரிசோதனை, பொலிஸ் விசாரணை, மேலும் பரிசீலனைக்காக பிரேதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் உயிருள்ளதும் சில வேளைகளில் காணப்படுகிறது.
பிரேதங்கள் உரியவர்களுக்கு ஒப்படைக்கும் வேகத்திலும் பார்க்க மேலும் மேலும் புதியவை வந்து சேர்வது இன்று சாதாரணமாகி விட்டது.
தலைநகரிலே குளிர்சாதன வசதிகள் சீர்கெட்டிருப்பதால் பிரேதங்கள் ஒன்றின்மேல் ஒன்ருக அடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வரு கிறது. பிரேத பரிசோதனை, பொலிஸ் விசாரணை, எவ்வளவு வேகமாக நடக்குமென்பது எவரும் அறிந்த விடயம்.
ஜனப்பெருக்கத்தில் இடவசதியின்மை, இன்றைய வாழ்க்கையில் பொது அம்சம். எத்துறையிலும் இடநெருக்கடி, வீடுகளில், ஹோட்டல்களில், றெயிலில், பஸ்ஸில் நெருக்கடி; இது உயிர்வாழும் மனிதர்களால் ஏற் பட்ட நெருக்கடி இயற்கையானது. -
உயிரில்லாப் பிணங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடநெருக்கடி விசித்திர மானது. இறந்தவர்களைக் கனம் பண்ணும் கலாசாரத்துக்குரித்தான நாம் இந்த இழிவான நிலையை நீக்க முயலாதிருப்பதேன்?
யாழ்ப்பாணத்தின் கதை கொழும்பைவிட மோசமானது. பிரேத பரிசோதனை அறை, பிரேதங்கள் வைக்கப்பட்டிருக்கும் ‘காம்பறை" மக்கள் நடமாடும் வீதிக்கு அருகேயுள்ளது. அவ்வீதிக்கணித்தாய் குடியிருப்போர், பல்லாண்டு காலமாக அங்கு வசிப்போர்; நூற்றுக் கணக்கானுேர். இவர்களின் கதி என்ன?
இங்கு வாழ்வோர் ஜனத்தொகை அதிகரிக்கின்றது. ஆணுல் பக்கத்தி லுள்ள பிரேத அறையில் "தடுப்புக் காவலில் இருக்கும் பிணங்கள் தொகையும் கூடுதலாகி வருகின்றது; இருந்தும் விளக்கமறியல், இறந்தும் விளக்கமறியல்!

Page 40
60 ந. சபாரத்தினம்
இன்றைய ராணுவ ஆட்சியில், பொலிஸ் - "பயங்கரவாதிகள் மோத லில், விபத்துக்குரித்தான வீதி நாடகங்களில், பல்வகைப்பட்ட அசம்பா விதங்களில் உயிரிழந்தோர் அனைவருக்கும் அந்த இடமே தஞ்சம்.
எத்தனை அறைகள், குளிர்சாதன வசதிகள்? கொழும்பில் இல்லாதது *பயங்கரவாத யாழ்ப்பாணத்துக்குக் கிடைக்குமா?
"இறந்தவன் வாயில் மண் இருப்பவன் வாயில் சோறு’ என்ற நாடோடி வாசகமே இன்று பொய்த்துவிட்டது; அயலவர் சோருக்க முடியுமா இந்த நிலை நீடித்தால்?
கே.கே.எஸ். சமுத்திரக் கரையில் வந்தடைந்த ஒரு டசின் பிரேதங் கள்-இவைக்கு புகலிடம்? யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி வளவு, இவர்கள் யார்? இனங்காண முடியாத பிரேதங்கள்; உரிமை கோர எவருமில்லை; இக்காரணங்களால் பல நாட்களாக பிரேதக் குவியல் நாற்றமெடுக்கும் நிலை; எவருக்கும் எளிதில் புரியும்.
சோழகக் காற்றை காத்திருப்பவர் இப்பகுதி நோயாளிகள் பலர்; நாம் குறிப்பிட்ட வீதியில், அதன் அக்கம்பக்கத்தில், தொலைவிலுங்கூட வாழும் மக்களை இந்தச் சர்வரோக நிவாரணியாகிய சோழகக் காற்று நிச்சயம் குடியெழுப்பும் நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணப் போகின்றது. அரசாங்கத்தின் காதுக்கு இச் செய்தி எட்டினுல் 'எல்லாம் வென்று தருகிருேம்; தமிழ் மக்களே! வடக்கின் பயங்கரவாதத்தை நிறுத்துங் கள்’’ என்பர். அவ்வளவுதான்,
சுகாதார அமைச்சர். ‘இது ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் அடங்கவில்லை" என்பார். காற்று மாற்றத்தை எவரும் நிற்பாட்ட முடியாது.
சுயநிர்ணயத்துக்குக் காத்திராமல் நாமே நமது குறைகளைத் தீர்க்க முன்வர வேண்டும்.
21-5-84

போர்க் கோலமும் பிரிவுறும் தலைமையும்
உயிரை ஓம்புவது பலம்; உயிரை அழிப்பது பலமின்மை. நலத்தைக் கொடுப்பது பலம்; தீங்கைக் கொடுப்பது பலமின்மை. ஒற்று மையை உண்டுபண்ணுவது பலம்; வேற்றுமையை வளர்ப்பது பல மின்மை. பலத்தில் பிறப்பது தூய அன்பு; பலவீனத்தில் பிறப்பது வெறுப்பு.
இவற்றை நாம் உண்மையென்று ஒப்புக் கொண்டால் எமது நாடு பலமுடையதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. எக்காரணம் பற்றியும் ராணுவத்தால் "பயங்கரவாதத்தை" வடக்கி லிருந்து ஒழித்துவிடும் எத்தனத்தை நாகரிக உலகம் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வரலாறு யாழ்ப்பாணத்துக்கு எவ்வாறு பொருந்தும்? ஒரு பெரு நாட்டில் கிளம்பிய குழப்பத்தை அடக்க எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு குக்கிராமத்துக்குப் பொருத் தமா? பருத்த மின்யந்திரங் கொண்டு பாக்கு வெட்டுவதுண்டா?
அதேசமயம் வடக்கின் "பயங்கரவாதம்" இன்றைய பிரச்சனையென்றும் அதனை ஒழிக்க சிங்கள மக்கள் ஒற்றுமைப் படவேண்டுமென்றும் எழும்பும் கோஷம் உண்மைக்குப் புறம்பானது; ஒருபோதும் வெற்றி யடைய மாட்டாது.
உலகெலாம் ஆதரவுதேடி, தமிழரின் இன்றைய நிலையைத்தோற்கடிக்க "பயங்கரவாதம்" என்ற பிசாசை கிளப்பிவிட்டு அந்தப் பொருளற்ற பிரயாசத்தில் காலங் கழிப்பதால் ஆட்சியில் தொடரலாமென்று எண்ணு வதும் மடமை.

Page 41
62 ந. சபாரத்தினம்
இவற்றை நாம் அறுதியிட்டுக் கூறும் துணிவு அரசியல் ஞானத்தால் அல்ல ; சத்தியத்தில் கொண்ட அசையாத நம்பிக்கையாலெனக் கொள்க. ஆடிக்கலவரத்தின் பின் அமைதியை வளர்த்தெடுக்க சர்வ கட்சி மாநாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் இன்று அது பிசுபிசு துப்போகும் தறுவாயில், அதன் காரணத்தை ஆராயாமலிருக்கலாகாது.
ஐ. தே. கட்சியும், சுதந்திரக் கட்சியும் இவ்விடயத்தில் ஒற்றுமை கொள்ளுமென்ற கணுவும் ஈற்றில் பலிக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் குத்துக்கரணம் அதன் அரசியல் பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவுக்கும் இந்திராவுக்கும் சார்பான கட்சியென்று சாயம் பண்ணியபோதும் இன்று அதன் எதிர்ப்பு ஐ. தே. கட்சியுடன் உண்டான போட்டியால் மட்டுமல்ல, தன்சொந்தச் செல்வாக்கின்மை யாலும் எழுந்ததெனலாம்.
சிங்கள - தமிழ் யுத்தம் என்றளவிற்குப் பிரசாரம் செய்யும் ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் கூட சர்வகட்சி மகாநாடு வெற்றியடை வதை விரும்பாதவர்களே!
இவ்விரு பெரும் சமூகங்கள் பிரிந்து பிணக்குறுவதை நன்மனம் படைத்த பொதுமக்கள் என்றும் விரும்பார் : இவர்களைப் பிரித்து வைக்க முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள் உதவுவாரென்பதும் இன்னுெரு கனவு.
இலங்கைத் தமிழர்களே, அடிப்படை உரிமைக்கு வாதாடும் வேளையில் நூற்றுக்குநூறு ஒற்றுமையைக் காணமுடியாத அபூர்வ பிறவிகள். இருப்பினும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் கிட்டக் கூடிய ஒரு தீர்வை, மற்றைய சிறுபான்மைச் சமூகத்தினர் எவரும் எதிர்க்க மாட்டாரென்பது திண்ணம்.
இன்று அரசியல் கட்சிகள் எல்லாம், இன, மத, மொழி அடிப்படையில் வீறுகொண்டு செயற்படுகின்றன. "நாடனைத்திலும் என்ற அடிப் படைக் கொள்கை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டமை துரதிர்ஷ்டம். இனவேறுபாடு எங்கும் காணப்படுவதை நம்பமுடியவில்லையென்ருலும் அச்சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஊரடங்கு வாழ்வு 63
1934ல் வடக்கில் நடைபெற்ற அரசாங்கசபைப் பகிஷ்கரிப்பு முற்றுப் பெற்று, இடைத் தேர்தலில் அமரர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் வெற்றியோடு ஆரம்பமான ஒரு சகாப்தம், ஐம்பது வருடம் ‘தமிழர் களின் உரிமைகள் பாதுகாப்பு" என்ற சுலோகத்துடன் நீடித்து வந்திருக்கிறது.
இன்று, 1984ல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றப் பிரதி நிதிகளே சட்டமாற்றத்தால் பதவி இழந்துவிட்டனர். ’
பாராளுமன்றம் போனுல் எல்லாம் போய்விட்டதல்ல; சிங்கள மக்களின் நல்லெண்ணத்தையும் மகாசங்கத்தினரின் ஆதரவையும் பெற முடியு மானுல் சமாதான தீர்வு நிச்சயம். இம் முயற்சியில் இரு சமூகங்களின் பிரமுகர்கள் விடாப்பிடியாக தொடரவேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்க் காங்கிரசும் ஒற்றுமைப்பட்டது இந்த இருளில் ஒரு ஒளி. இதனைத் தொடர்ந்து சுமூகமான தீர்வைக்
காணமுடியுமானுல் இன்றைய இளஞ் சந்ததியினரைக் காப்பாற்ற வழி பிறக்கும்.
26-5-84

Page 42
இருபது வருடங்களுக்குப் பின்
"அவருடைய பெருமை முழுமையாக உணரப்பட்டு விட்டதாக நான் நம்பவில்லை. இந்த மனித சமுதாயம் நீடித்து வாழ அனுமதிக்கப் படுமானுல், அவருடைய பெருமைக்கேற்ற வகையில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்குமென்பது உறுதி" என்று இருபது வருடத்துக்கு முன் (17,5,64) மறைந்த இந்தியப் பிரதமர் நேரு பற்றி பேரறிஞர் பேர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுகிருர், WW
1963ல் கியூபாவில், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் மூண்ட யுத்தம், ஆசியாவில் சீனுவுக்கும் இந்தியாவுக்கும் நடந்த போர்; இரண்டையும் ராணுவ உதவியின்றி அணைத்து வைத்த ரஸ்ஸல் பிரபு இந்தியப் பிரதமரின் பெரும் சாதனைகளைக் குறிப்பிடும் போது 'மனித இனத்துக்கே சொந்தமாகி விட்ட அவர் என்றென்றும் பசுமை மாருமல் கட்டாயம் வாழ்ந்திருப்பார்' என்று புகழ்ந்திருக்கிருர் .
பிரதமர் நேருவை பெரிதும் கலக்கிய இந்திய-சீன யுத்தம் அவரு டைய சடுதி மரணத்துக்கு காரணம் என்று சொல்பவர் பலர்; நவ சீனத்தை ஐ. நா. வில் சேர்ப்பதற்கும், அதனை அங்கீகரித்து மதிப் பதற்கும் நேருவின் தலைமையிலான இந்தியாவே முன்னின்றது. இது வரலாறு கூறும் உண்மை.
பெருந்தேசங்கள் சிறிய நாடுகளை விழுங்கிவிடலாமா என்ற வினுவை எழுப்பும் இவ்வேளையில் உலகின் முதற் பெண் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கா இந்திய - சீன பிணக்கைத் தீர்த்து வைக்க பெரும் பாடுபட்டதை எவரும் மறந்து விடக் கூடாது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் உலகு இருந்த நிலையை இன்று திரும்பிப் பார்ப்பதற்கு நேரு சகாப்தமும் (17 வருடம்), அதன்பின் இன்று பூர்த்தியான 20 வருட காலத்துடன் அதனை ஒப்பிடுவதும், இன்றைய நிலையில் பயனளிக்கும்.

ஊரடங்கு வாழ்வு 65
"புலிகள் வந்து விட்டன! "யூதர்கள் வந்து விட்டார்கள் !" "தென் னிந்திய திராவிடர் போர் தொடுக்கின்றனர் 1 இந்தியா, இலங்கை யை ஆக்கிரமிப்பதானுல் ஒளித்து விளையாட வேண்டாம்; வெளியே வரட்டும் !" "சரணடைய மாட்டோம் இவை போன்ற கோஷங்கள் பொறுப்புடைய தலைவர்களால் பொறுப்பற்ற முறையில் எழுப்பப் படுகின்றன.
எங்கள் சிறுமையை வெளிப்படுத்தும் இக்கோஷங்கள் வரலாற்றுப் பின்னணியில் எவ்வாறு பொருத்தமானவை?
இந்தியப் பிரதமர் நேரு அனுராதபுரத்தில் கண்ட புத்தரின் சிலையால் பரவசப்பட்டு அதன் படத்தைப் பல வருடங்களாகத் தம் படுக்கை அறையில் வைத்திருந்ததாக "டிஸ்கவரி ஒவ் இந்தியா' என்ற நூலில் வியந்தெழுதியிருக்கிருர்,
அவருடைய பதினேழு ஆண்டு தலைமையைக் கண்ட இந்திய உப கண்டம் இன்று அவருடைய புதல்வி இந்திரா காந்தியின் தலைமை யில் பதினுறு ஆண்டு தந்தையின் கொள்கை தளம்பாமல் முன் னேறுகிறது. அமைதிப் பறவைகள் இருவருமென்பதை மறுக்க எவரும் துணிவாரா?
அதேசமயம், இந்து சமுத்திரத்தில்-ஏன் பசிபிக் பிராந்தியத்திலேயேஇந்தியாவுக்கு இருபக்கங்களிலுமுள்ள ஈராக், ஈரான், ஆப்கானிஸ் தான், இலங்கை, பர்மா, மலேஷியா, இந்தோசீனம், ஜாவா போன்ற நாடுகள் ஒரு பிராந்திய அடிப்படையில் வளர்ச்சியடையு மென்ற கனவும் கண்டிருந்தார் நேரு,
இன்று, அது வெறும் கனவென்று முடிவுகட்டுபவர்கள், ஆசிய நாடு கள் பலமடைவதற்குத் தடையான சக்திகளைப் புரியாதவர்கள். "சிறு நாட்டின் சுதந்திரம்’ என்ற கோஷம் தூரநோக்கில் தமது நாட்டுக்கு ஆபத்தானுலும் தங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற குறுகிய நோக்குடையது என்று சொல்லலாம்.
ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தலை நிமிர்த்துவதை, இன்று வரைக்கும் அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்தி வந்த மேஞடுகள் ஒருபோதும் விரும்பா.
5

Page 43
66 ந. சபாரத்தினம்
எனவே எங்கள் சின்ன நாட்டின் பெரிய பிரச்சனைகளை எல்லாம் உலக அரங்கில் வைத்து அணுகும் சர்வதேச நோக்கு, பிரதமர் நேரு மூன்ரும் உலக நாடுகளுக்கு விட்டுச் சென்ற அரசியல் ஞான மென்பதை நாம் இன்று நினைவு கூர்வது அவசியமாகிறது.
இந்த நேரு யார்?
கேள்வி சிறியது. அதற்கு விடைகாணும் முயற்சி எங்கள் நாட்டு மக்களுக்கு இன்று நற்பயனளிக்கும். e
ஒரு பெரும் ஏன் பல பெரும் ஆராய்ச்சி நூல்களுக்குரிய விடயத்தை சுருக்க முடியுமானுல் எவ்வாறு கூறலாம்?
ஏழை மக்கள் ; விவசாயமே அத்திவாரமாகக் கொண்ட நாடு; பல நூற்ருண்டுகளாக அடிமை ஆதிக்கத்திலிருந்த நாடு விடுதலைக்காகப் போராடி, அரசியல் ஸ்திரமும்பெற்று, ஜனநாயக அமைப்பில் திட்டமிட்ட பொருளாதார வாழ்வைப் பெற்றதென்ருல்-அத்தனையும் செய்து முடித்த மாவீரன் நேரு,
இருபதாம் நூற்ருண்டின் இணையற்ற புருஷர். இன்று அவருடைய வாரிசால் எங்கள் நாட்டுக்கு ஒரு கெடுதியும் வராது.
28-5-84

இலங்கை - இந்திய ஊடல்
காதலர் இருவருக்கும் உண்டாகும் சிறு பிணக்கே ஊடல் என்று சொல்லப்படுகிறது.
இன்று, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே அரும்பிவரும் பிணக்கு, ஊடலா என்ற சந்தேகம் கிளம்புவது நியாயமே.
வேறென்னவென்று நாம் விடையளிப்பதும் நியாயமே 1 இலங்கைஇந்திய விவகாரங்களில் இந்தியா ரூடே ஆசிரியர் போலவோ அல்லது கொழும்பு ஆங்கில தினசரிகள் போலவோ ஆழமில்லாத போதும் அகலமாக எழுதும் ஆற்றல் எமக்கில்லை.
ஒன்று சொல்ல வேண்டும்; இக்காலத்தில் நினைக்க முடியாத சம்பவங்கள் எத்தனை நடந்தேறி விட்டன? என்பது மறுப்பாக எழுந்தால் அதற்கும் மதிப்பளிக்க வேண்டும்.
வியட்நாமில் அமெரிக்கா என்ன பாடுபட்டது ? கியூபா என்ற சிறு கம்யூனிஸ நாடு இந்தப் பிரம்மாண்டமான அமெரிக்காவுடன் சரிநிகர் சமானமாகப் போட்டியிடவில்லையா? கேணல் கடாபியின் லிபியா, இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்க வில்லையா ?
இந்த உதாரணங்கள், சிறுநாடு ஒன்றை வல்லரசு அல்லது உப வல்லரசு இலகுவில் மடக்கிவிட முடியாதென்பதை நிரூபிக்கின்றன. ஆணுல் இலங்கை - இந்திய விவகாரங்கள் ஓரளவிற்கு தனித்துவம் பெற்றவை. இந்தியா பெற்றெடுத்த மிகப் பெரிய இந்திய மனிதர் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் மதத்தலைவர். பெளத்தம் என்ற மதத்தின் புராதன கலாசாரம் இலங்கையில் காணப்படுவதால் அதன் பிறந்த நாடு நேசநாடகவே கணிக்கப்படுகிறது.

Page 44
68 ந. சபாரத்தினம்
இந்திய தென்னகம் இலங்கைத் தமிழரின் தாய்நாடு என்று கொண்டால் வட இந்திய பெளத்த தலங்கள் சிங்கள பெளத்த மக்களுக்கு உயிருக்கு உயிரானவை.
எனவே, இன்றைய அரசியல் வாக்குவாதம் எவ்வாறிருந்த போதும் வேற்றுமையும், வேறுபாடும் மாறுபாடாவது கற்பனைக்கப்பாற்பட்டது. இன்றைய கருத்து வேற்றுமை முற்றிவிடாது தடுத்து நிறுத்துவது ஆட்சியின் கடமை மட்டுமல்ல; நாட்டு மக்கள் அனைவரின் பொறுப் பென்று நாம் வற்புறுத்துகின்ருேம். a.
ஒரு நெருப்புப் பொறி பெரும் தீயை உண்டாக்கிவிடுகிறது ; அதே போன்று பொறுப்பற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் துரும்பை எடுத்து தூணுக்கிவிடுகின்றன.
அது மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் இரு நாடுகளிலும் தத்தம் பிரச்சனைகளுக்கு சார்பாக, அவற்றை மையமாகவைத்து இவ்வித பிணக்கைப் பயன்படுத்த முயன்ருல் நிச்சயம் போர் மூளாவிட்டாலும், கெடுபிடி யுத்தம் ஆசிய சமபலத்தை நன்ருகப் பாதிக்கும். நமக் கென்ன, ஒரு போர் மூளுமானுல் எங்கள் நீண்டகால துன்பத்துக்கு நிவாரணம் கிடைக்குமென மனக்கோட்டை கட்டும் மதியீனர் எங்கள் மத்தியில் இல்லாமலில்லை.
சீனு எங்கள்பக்கம், தென்கிழக்கு நாடுகள் எமக்கு எதிர்ப்பில்லை, ஜப்பான் சினேக நாடு, பாகிஸ்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு தன்னை அர்ப்பணிக்காது; பொதுவாக இவையெல்லாம் ஜனுதிபதி றிகனின் செல்வாக்கை ஏற்றுக் கொள்கின்றன என்ற பாங்கில் சிந்தனை விரிவடைகிறது.
அமெரிக்க - இந்திய உறவு சிலகாலம் பழுதுபட்டிருக்கிறது. சீனுவுடன் நட்புக் கொண்டாடும் இலங்கை ஜனதிபதி தமது சொந்த அரசியல் சாணக்கியத்தால் அமெரிக்க ஜனதிபதியின் நட்பைப் பலப்படுத்தியிருக்கிருர் எதிர்வரும் சந்திப்பில் வாஷிங்டன் என்ற பெரிய கைக்குட்டை இலங்கையின் சின்ன பாக்கெட்டில் காணப்படும். இவ்வாறு சிந்தித்து, மிகச் சிக்கலான வெளி விவகாரங்களை நாட்டுத் தவளைகள் மிகச் சிம்பிளாக்கி, முடிவுகட்டும் போக்கில், இந்தியா மீது மிண்டினுல் என்ன? என்று பேரம் பேச முந்துகின்றன தவளைகள்.

ஊரடங்கு வாழ்வு 69
இந்த வரிசையில் பிரதமர் பிரேமதாசாவை நாம் குறிப்பிடவில்லை; அனுபவம், ஆற்றல் நிறைந்த தலைவர். இன்றைய தமிழர் பிரச்னை யில் "பயங்கரவாதம்" என்ற பிசாசு அவரை மயக்குகிறது; அதனை ஒழிக்க இலங்கை, இந்தியாவுடன் ஒப்புக் கொண்ட ஒழுங்கில் அவர் புறக்கணிக்கப்பட்டதே இந்த அட்டகாசத்தின் இரகசியம்.
இந்தியப் பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானதானுலும் இலங்கைப் பிரதமர் அவற்றிற்குப் புறம்பான நிலை மிகவும் வேதனைக் குரியது.
பிரதமர் ஆத்திரப்படுவதற்கு நியாயம் உண்டு; ஆணுல் இந்த இடைஞ்சல் எங்கள் உள்நாட்டு அரசியலின் திருகுதாளம்; அடுத்த ஜனதிபதி யாரென்பது இன்று, இவ்விடயத்துடன் தொடர்பான தென்று நினைப்பதில் என்ன தவறு ?
எனவே, ஜனுதிபதி ஜெயவர்த்தணு மிகச் சாதுரியமாக வெளியிட்ட கருத்தை பிரதமர் பிரேமதாசா பச்சைப்படியே அள்ளி வீசிவிட்டார். அதென்னவானுலும் இஸ்ரேலிய பயங்கரவாத “பிறைவேட் டியுசனும், அமெரிக்க கடற்படையும், சீனு, ஜப்பான், தென் கொரியா நட்பும், இந்தியாவுக்கெதிராக ஒரு யுத்தம் கிளப்ப, இலங்கை அதற்குக் காரணமாக சந்தர்ப்பம் ஒருபோதும் கிடைக்காதென அறிக.
ஊடல் நீடித்தாலும் கூடிய உறவிலே முடியும் என்பது எமது சாத்திரம்.
5-6-84

Page 45
பூதம் கிளம்புவதற்கு இடங் தரலாமா ?
தாகம் கொண்ட நரி ஒன்று குளத்தங்கரையில் இறங்கி நீர் அருந்திக் கொண்டிருந்தது. பசியால் தவித்துக் கொண்டிருந்த முதலை, நரியின் கால்களில் ஒன்றைக் கவ்விப்பிடித்து நீருக்குள் இழுக்க ஆரம்பித்தது. வசமாகச் சிக்கிக் கொண்டு விட்ட நரி வழமையான தனது மூளையைப் பாவித்து "ஐயோ பாவம் எனது கால் என்று நினைத்துக் கொண்டு ஆலமரத்தின் வேரையல்லவா பிடித்து இழுக்கிறது இந்த முதலை!" என்று பரிகசித்தது. இந்தப் பேச்சை நம்பிய முதலை, நரியின் காலை விடுத்து பக்கத்தில் நீரில் நீட்டிக் கொண்டிருந்த ஆலமரத்தின் வேரைப் பற்றிக்கொண்டது. அன்று முதலையிடமிருந்து தப்பிச் சென்ற நரி அதன் பிறகு அந்தப் பக்கமே தலைகாட்டுவதில்லையாம்!
தமிழர் பிரச்சனையைத் தீர்த்துவைத்து, இந்த நாட்டை மீண்டும் ஒரு செளபாக்கியமுள்ள நாடாக மாற்றுவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் இலங்கை அரசின் இன்றைய போக்கையும், நடவடிக்கைகளையும் பார்க்கையில் மேலே நாம் குறிப் பிட்ட கதையைப் போன்று நிலைமை மாறிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
அரசுத் தலைவர்கள், எவரைப் பார்த்தாலும் வடபகுதி பயங்கர வாதம் பற்றித்தான் பேசுகிருர்கள். ஜனதிபதி அவர்கள் சர்வ தேசப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவை நாடி ஜனுதிபதி றிகனுக்கு கடிதம் எழுதுகிருர் ; தென்கொரிய ஜனதிபதியுடன் ஆலோசனை நடத்துகிறர்.
உலகப் பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனநாயக நாடுகள் எல்லாம் ஒன்று பட வேண்டும் என பிரதம மந்திரி ஆலோசனை வழங்குகிருர், வடபகுதி பயங்கரவாதிகளை ஒழித்தே தீருவோம். அதைவிட வேறு ஜோலியே இல்லை என்று தேசிய பந்தோபஸ்து அமைச்சர் சூளுரைக்கிருர்,

ஊரடங்கு வாழ்வு 71
வடபகுதியில் இன்று நிலவும் நிலைமைக்கு மூலகாரணம் என்ன? இந்த அளவுக்கு அதனை வளரவிட்டதற்கு யார் பொறுப்பு? இனிமேலும் இது நீடிக்காமல் தடுக்க வழியென்ன? என்பவைகளை சாங்கோபாங்கமாக ஆராய்ந்து தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சனைகளை விரைந்து தீர்க்க முயற்சியாமல், “வடபகுதி பயங்கரவாதம் - சர்வதேசப் பயங்கர வாதம்' என்ற வகையில் தொடந்தும் குட்டையைக் குழப்புவதாயின் முதலை நரியின் காலை விடுத்து மரத்தின் வேரைப் பிடித்துக்கொள்ள நரி தப்பிச் சென்ற கதையாகவே மாறிவிடும்.
தமிழ்ப் பகுதிகளில் இயங்கிவரும் தீவிரவாத இளைஞர் இயக்கங்களுக்கு சில வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்பொழுது மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை அரசு உணரவேண்டும். இதற்குக்
காரணம் என்ன?
"பயங்கரவாதத்தை அழிப்பதற்கென மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகளை இப்பகுதி மக்கள் நேரில் கண்ணுல் காண்கிருர்கள்; காதால் கேட்கிருர்கள்; சில சமயம் அவர்களே பாதிப்புக்குள்ளாகிருர்கள். அது மட்டுமல்ல, இப்படியான அட்டூழியங்களுக்குள்ளாகும் இளைஞர்கள் இப்பிரதேச மக்களின் "இரத்தத்தின் இரத்தம்" என்ற உணர்வும் மேலோங்கி நிற்கின்றதல்லவா?
எனவே அவர்களை அழித்தொழிப்பது என்று அரசு கிளம்புவதணுல் பொதுமக்களின் ஆதரவையே இழந்து வருகின்றது.
இவ்வாறு நாம் சுட்டிக் காட்டுவது தமிழர் என்ற காரணத்தினுல் என்று மட்டும் கருதுவது தவருகும். யதார்த்த நிலைமையை உணர்ந்து, அரசு செயல்பட வேண்டும். நிரந்தரமாக இப்பிரதேசங்களில் அமைதி தோற்றுவிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதே முக்கிய காரணம் என்க.
சர்வதேசப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப் படும் போது, அது சில நாடுகளின் அரசுகளினுல் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கூட உள்ளடக்கவேண்டும். சில ஆபிரிக்க நாடுகளில், அமெரிக்காவின் சில பகுதிகளில் எல்லாம் அரச பயங்கரவாதங்களின் நிலைமை குறித்து உலக மன்னிப்புச்சபை போன்ற இயக்கங்கள் தெளிவாக விளக்கி வருகின்றன. அரபு நா டுகளினுலும்,

Page 46
72 ந. சபாரத்தினம்
வேறும் பல ஜனநாயக, சோஷலிஸ் நாடுகளினுலும் சர்வதேசப் பயங் கரவாதிகள் என வர்ணிக்கப்படும் இஸ்ரேலிய அரசுக்கு, இலங்கையில் இடம் தருவது என்ற முடிவும் கூட, இன்றைய நிலைமைகளைத் திசை திருப்புவதாகவே அமையும், அமெரிக்காவிடமிருந்து பெறப்படும் உதவிகளுக்காக இதுவரை காலமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மாற்றிக்கொண்டுவிடுவது, உள்நாட்டில் கொந் , தளிக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக மாட்டாது.
சர்வதேசப் பயங்கரவாதத்துடன் இப்பகுதித் தீவிரவாத நடவடிக்கை களைப் பிணைத்துப் பெரிதாக்குவது நம் நாட்டுக்கு மட்டுமல்ல இப்பிர தேசத்துக்கே ஆபத்தாக முடியலாம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாற இடந்தரலாகாது.
எனவேதான் தமிழர் பிரச்சனையை முழுமனதுடன், இதயசுத்தியுடன் தீர்த்து வைக்க அரசும், அதன் தலைவர்களும் ஈடுபடுவார்களானுல், அதன் பெறுபேறுகள் நியாயமான தீர்வாகவும் அமையுமானுல், "பயங் கரவாதம்" என்று அரசும் அதன் தலைவர்களும் அடிக்கொரு தடவை உச்சாடனம் செய்யவேண்டிய அவசியமே இல்லாமல் போகும்.
31-5-84

ஆங்கிலத்தின் அந்தஸ்து
**பதினுெரு வயதுவரைக்கும் இங்கிலிஸ் ‘தூள்' ஒரு கொஞ்சமும் என்னிடம் இருக்கவில்லை' என்கிருர் இலங்கையின் மிகச் சிறந்த சத்திர வைத்திய நிபுணர் டாக்டர் பீ. ஆர். அந்தனிஸ் அவர்கள்.
கொழும்புப் பல்கலைக்கழக வேந்தராகப் பணி புரியும் இப்பெரியார் தமது சிரேட்ட கல்வி ஆரம்பமானபோதே ஆங்கிலம் கற்கத் தொடங் கினதாக அண்மையில் ஒரு வைபவத்தில் உரையாற்றியிருக்கிருர்,
பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைத் தமது அற்புத சாதனையால் தப்பவைத்த பிரபல நிபுணர் அந்தனிஸ், தங்கள் காலத்தில் மாணவர் பட்ட கஷ்டங்களைக் குறிப்பிட்டிருக்கிருர்,
பதினுெரு வயதில்தான் ஆரம்பமான ஆங்கிலம் அவருடைய மருத்துவ சாதனைகளுக்குப் பாதகமாகவிருக்கவில்லை என்பதை அறிக.
இந்த நிலையில், அதுவும் இன்று, ஒன்பது வயதில் ஆங்கிலம் கற்பது, கற்பிப்பது எவ்வாறு என்று ‘கல்வி வியாபாரிகள் கருத்தரங்குகள் நடத்திக் காலத்தை வீணுக்குகின்றனர்.
ஆங்கிலம் தேவை; அதிலும் கூடியதேவை அறிவு. அறிவு வளர்ச்சி யடைவது தாய்மொழியிலே. அதற்குரிய வேறு சாதனங்களில் ஆங்கிலம் இன்று மிக அவசியம். அதனை உணராது ஆங்கிலத்தைக் கட்டி அழுபவர்கள் அறிவிலிகள்! வேந்தர், டாக்டர் அந்தனிஸ் ஆற்றிய உரையின் சாராம்சம்: எந்தக் கஷ்டநிலையிலும் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுவது "ஊக்குவித் தல்’ என்பதேயாகும்.
15-6-84

Page 47
பயனற்ற பிரசாரம்
இன்றைய உலகில் எந்த நாடும் ஒதுங்கிவாழ இயலாது. அகில உலகுமே ஒரு சிறு நாடளவிற்கு சுருங்கிவிட்டது.
ஒன்றரை நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறங்கிக்கிடந்த மின்சக்தி, வெள்ளை மாளிகையில் இலங்கை ஜனுதிபதி தம்பதிகளுக்கு அளிக்கப் பட்ட வரவேற்பை நாம் கண்டு கேட்டறிவதற்கு உரிய நேரத்தில் உயிர்த்தெழுந்தது.
இந்நாட்டில் இராக் காலம், அமெரிக்காவில் பட்டப்பகல்; இருப்பினும் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளை உடனடியாகக் காணவும் கேட்கவும் முடியுமென்ருல் இன்றைய விஞ்ஞானத்தின் உயர்ச்சியை உணர முடிகிறது.
இத்தகைய உலகில், உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் என்று
கோடிட்டு, இது நமக்குரியது; அது வெளிநாட்டு ஏற்றுமதிக்கு என்ற போக்கில் பிரசாரம் நடத்துவது வீண்முயற்சி.
சம்பவங்களை நேரில் காண முடியாதவர்களுக்கு உடனுக்குடன் தொலைக் காட்சி சேவை அதிநுட்பமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறது. அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட வானெலி சொல்வதை அந்த நாட்டு மக்களே நம்புவதில்லையென்ருல் பிறநாடுகளைப் பற்றிப் பேச வேண்டுமா ?
பத்திரிகைகளில் தக்க பலனை எதிர்பார்க்க முடியாத நிலையில் அரசாங்கம் தனது கருத்துக்களையும், அவற்றை விளக்கும் சம்பவங் கள், புள்ளி பற்றிய விபரங்களையும் அச்சிட்டு விநியோகிக்க நிர்ப் பந்தித்துள்ளது.

ஊரடங்கு வாழ்வு 75
அரசாங்க சார்புற்ற பத்திரிகைகள் ஆட்சிக்கு ஆதரவென்ற போக்கில் வெளியிடும் செய்திகளும் பிரசாரக் கட்டுரைகளும் உப்பில்லாப் பண்ட மென வாசகர்கள் மதிப்பது கண்கூடு.
இம்மதியற்ற செயல் மக்களின் கவனத்தை தவருன வழியில் திசை திருப்புவதோடு, ஆட்சியில் நம்பிக்கை இழக்க உதவுவது ஆட்சி யாளருக்குத் தெரிவதில்லை.
அந்த உண்மை தெரிந்திருந்தால் அவர்களின் (அரசாங்கத்தின்) பிரசுரங்கள் படுமோசமாகவிருக்க வேண்டியதில்லை.
அண்மையில் எமது கைக்கெட்டிய மூன்று பிரசுரங்களைப் படித்துச் சிரித்த அனுபவம் வாசகர்களுடன் பரிமாற வேண்டியதொன்று. முதலாவதும் முக்கியமானதும்: "சிறிலங்கா இன்னுெரு பார்வையில்" என்ற ஆங்கில வெளியீடு-ராஜாங்க அமைச்சால் வெளியிடப்பட்டது. இதன் நோக்கம் : ஐரோப்பிய நாடுகளில் இங்கு நடந்த இனக் கலவரம் பற்றி ஆட்சிக்கு மாருன வகையில் அறிக்கைகள், செய்திகள் வெளிடப்பட்டிருக்கின்றன ; இவ்வித பரபரப்பான, சமநிலையற்ற பிரசாரத்தை முறியடிப்பதே. இது அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்பிரசுரத்தின் மூன்ருவது பந்தி சொல்வது "சுதந்திரத்துக்குப்பின் நடந்த பொதுத் தேர்தல்களில், இன்றைய (ஐ.தே.க) ஆளுங்கட்சி, ஒரு முறையைத் தவிர மற்றெல்லாவற்றிலும் தோல்வி அடைந்தது"- தவருண செய்தி, ஆட்சிக்கு மாருன செய்தி : கவனயீனமே காரண மெனலாம்.
இன்னுெரு வெளியீடு Mission of Violence *. யாழ்ப்பாணத்தில் ஏப்றில் 13ம் தேதிக்கு முன் நடந்த வன்செயல்களின் விபரங்கள். *அமைதி வாழ்வை விரும்பும் யாழ்ப்பாண மக்கள் பயங்கர வாதத் தின் காரணமாக புதுவருட கொண்டாட்டத்தில் வழக்கம் போல் ஈடுபட முடியவில்லை. வன்செயல்களை அடக்க அரசாங்கம் எடுத்த ராணுவ நடவடிக்கை வெற்றியீட்டியது' என்று சொல்லப்பட்டிருக் கிறது. வன்செயல் விபரங்களில் யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்க நிலையம் எரிக்கப்பட்டது இடம் பெறவில்லை.

Page 48
76 ந. சபாரத்தினம்
மூன்ருவது வெளியீடு : 'அரசு சமாதானம் பேசுகிறது. பயங்கர வாதம் தொடர்ந்து நடக்கிறது" என்ற தலைப்பு.
ஆங்கிலத்தில் பிரசுரமாகும் பத்திரிகைகள் : டெய்லி நியூஸ், சன், வீக்கென்ட், ஐலன்ட், டெய்லிமிரர், வெளியிட்டிருந்த வடபகுதி * பயங்கரவாதிகளின் வன்செயல்கள் பற்றிய செய்திகளே இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
தாராளமான ஏற்றுமதிக் கொள்கைக்கேற்ற முறையில் உருவாக்கப் பட்ட இப்பிரசுரங்கள் தரமானவையா என்று கணிப்பது கடினமல்ல. வெளிநாட்டு நிதி உதவிக்கு நாட்டின் ஆட்சி ஸ்திரமுடையதாக வேண்டும்; ஆனுல் பெறும் உதவியைக் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்த முயன்ருல் அதுபோன்ற முரண்பாடு வேறென்ன ? ஒருதலைப்பட்ட உண்மை நிலைக்குப் புறம்பான செய்திகளையும் கருத்துக்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்படு வது சகஜம். ஒருசிலர் இதனைக் கண்மூடிக்கொண்டு விழுங்கிவிட லாம்; அது தூரநோக்கில் தீமையென்பதை உணர வேண்டும்.
வருடக்கணக்கில் இழுபறிப்படும் பிரதான விடயம் இவ்வித பிரசாரத் தால் என்ன பலன் பெறும் ? அவ்விடயம் மறக்கப்பட்டுவிடுமா?
எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற கட்டத்தில் எழுவது "பயங்கரவாதம்” எனக் குறிப்பிடப்படுகிறது. அது நாகரிகமுடைய மக்களுக்கு ஒவ்வாத முறையென்றும் சொல்லப்படுகிறது. யார், எதனை, எவ்வளவிற்கு விட்டுக்கொடுத்து சமாதான தீர்வைக் காண முடியுமென்பதற்கு இவ்வித பிரசாரம் எள்ளளவிற்கும் உதவாது.
20-6-84

வினை, தினை, வெங்காயம்
* எனப்பகை உற்ருரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும்’
என்பது பொய்யா மொழி.
இந்நாட்டில் வாழும் பெரும்பகுதி மக்களாகிய பெளத்தரும், இந்துக் களும் கர்மவிதியைப் பொதுக் கொள்கையாகக் கொண்டவர்கள்.
வள்ளுவர் இதனை எதிர் மறையாக சொல்கின்ருர், எந்தச் சத்துரு வைச் சம்பாதித்துக் கொண்டாலும் அந்த விரோதத்தினுல் உண் டாகும் துன்பத்தினின்று தப்பலாம். ஆணுல், நாம் செய்யும் செயலே நமக்குச் சத்துருவாகிப் பின் தொடரும். அந்தப் பகையின் தண்டனை யிலிருந்து தப்புதல் முடியாது.
வினை விதைப்பவன் வினை அறுக்கிருன் தினை விதைப்பவன் தினை அறுக்கிருன் என்றும் நாம் இதனை விளக்கிக் கொள்வது வழக்கம். எங்கள் நாட்டின் வெங்காயம், தினையை விட்டு வினையை நாடுவ தால் வருடா வருடம் வெங்காயப் பஞ்சம் ஏற்படுகிறது.
வெங்காயம் வினையுடன் சேர்வதென்ருல் என்ன அர்த்தம் ?
1956ல், டாக்டர் என். எம். பெரேரா தலைமையில் லங்கா சமசமாஜ கட்சி ஆட்சியேறுவதாக யாழ்ப்பாணத்தில் ஒரு சப்தம்; டாக்டர் பெரே
ராவுக்கு தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெங்காயமாலை.
அது சறுக்கி விட்டது. யாழ்ப்பாணத்தவருக்குரிய ஆருவது உணர்வு வெற்றியில்லை என்பதை நேரகாலத்துக்கு அறிய வைத்தது.

Page 49
78 ந. சபாரத்தினம்
சிறிமாவோ அம்மையார் ஆட்சியில் அரசியல் கோளாறுகள் பல இருந்த போதும் வெங்காயம், மிளகாய் வடபகுதி விவசாயியை எழுப்பி வைத்தது. யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைஞர் தமது முன்னுேரைப் போல் சிக்கனமாக அமைதியாகப் பணத்தை வைத்து தொழிலை-இன்றைய தமிழில் வேலையை கொண்டு போகவில்லை. அணுவசியமாக "பென்ஸ்" போன்ற அலங்காரக் காரில் பவனி செய்து சாதனையை விளம்பரப்படுத்தினுர்கள்.
அம்மையார், ஆட்சி முடிவடைந்து, அரசியல் உரிமை இழந்து யாழ்ப் பாணம் வந்தபோது அனுதாப நோக்கில் அவருக்கு மிளகாய், வெங்காய மாலை கழுத்தில் விழுந்தது.
பொதுவாக தமிழ்மக்கள் நன்றி மறவாத சமுகமென்பதால் என்றும் உய்யவழி உண்டு என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இது ஒரு உதாரணம்.
கலவரத்துடன் வந்து, அடிக்கடி கலவரம் கண்ட, காண்கின்ற, இன் றைய ஆட்சியின் சர்வதேச புகழ்பெற்ற சாதனை ; கட்டுப்பாடற்ற திறந்த பொருளாதாரம். வடபகுதி வெங்காய உற்பத்தி செழிப்படை வதற்கு, பெரும்பான்மை மக்கள் நெருப்பு விலை கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.
கட்டுப்பாடற்ற இறக்குமதி சொன்னது கேட்கும். * வெங்காய விளைச்சல் கம்மி; விலையேற்றம்" என்றதும் கப்பல் கணக்கில் வந்தது வேண்டிய வெங்காயம்; முடிந்தது வடபகுதி வெங்காயச் செய்கை; வெளிநாட்டுத் தொழிலுக்கு ஒட்டமெடுத்தனர் விவசாய இளைஞர், வெங்காய விவகாரம் சுமுகமாக முடிந்ததா?
பம்பாய் வெங்காய்ம் இன்று ஒரு கிலோ 90 ரூபாய்க்கு கறுப்புச் சந்தையில் விலைப்படுகிறது. அரசும் அமைச்சர்களும் 15 அல்லது 20 ரூபாய்க்கு தங்கள் ஏற்பாட்டில் விலைப்படுகிறதெனக் கனவு கண்டு கொண்டிருந்தனர். W
இறக்குமதி போதாது; அளவுக்குமிஞ்சி இறக்குமதி செய்தாலும் அதனைப் பேணும் வசதி இங்கில்லை; அத்துடன் கதை முடியவில்லை. இங்கு வந்து சேரும் "ஸ்ரொக் நேரில் கூட்டுறவு மொத்த விற்பனை

ஊரடங்கு வாழ்வு 79
ஸ்தாபனத்துக்குப் போனுலும், ஈற்றில் தனியார் விற்பனை நிலையங் களில் வந்து பதுக்கிப் பாதுகாக்கப்படும்.
கப்பல் வரத் தாமதித்தால், தனியார் நிறுவனங்கள் பெருந்தொகை சீதனத்துக்கு தயார்ப்படுத்துவதில் என்ன தவறு ?
இங்கும் வடபகுதியில், இன்னுெரு பகுதி உயர இடமுண்டு: விவசாயிகள் அல்ல.
இன்றைய நெருக்கடியில் தனியார் துறையினருக்கும் வெங்காய இறக்குமதிக்கு உத்தரவு கிடைத்துள்ளது.
பட்டகாலிலே படுமென்ற பாங்கில் வெங்காயக் கப்பல்கள் காணுமற் போனதும் கடலில் மூழ்கினதும் நெருக்கடிக்கு இன்னுெரு காரணம். யாரைக் குறை சொல்வது ? சென்ற மாதம் ஆயிரம் தொன் வெங் காயம் - 50 லட்ச ரூபாய் பெறுமதி - வைப்பிடமில்லாது, அழுகி உதவாமற் போனது.
வெங்காயம் மிக அருமையான, அவசியமான உணவுப் பொருள்; இதற்காகவே ஆங்கிலேயர் தம் பிள்ளைகளுக்கு Onions என்று பெயரிடு கின்றனர். அது மட்டுமல்ல; "விடயத்தை செவ்வனே புரிந்துகொள்' என்பது ஆங்கிலத்தில் * Know your Onions " என்று சொல்லப் படுகிறது.
நம்முடைய போக்கு முழுமாருனது. வெங்காயத்துக்கு இக்கதி ஏற்பட்டது. "வெங்காய அரசியலால்' என்ற கேலியுடன் முடித்து விடுகிருேம்.
22-6-84

Page 50
աnփ 6ճl6)/Ժրա ւմւլն : திட்டத்துக்கு கடந்ததென்ன ?
இரண்டாவது உலக மகா யுத்தம் பிரிட்டனைக் கலக்கிய கட்டத்தில், சமாதானம் ஏற்பட்டதும் நடந்தேறவேண்டிய, அவசிய, சிவில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன.
பிரிட்டிஷ் மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு இன்னுெரு உதாரணம்: யுத்தம் முற்ருய் முடிவடையுமுன் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிக்குக் காரணமாயிருந்த பிரதமர் சேர்ச்சிலை வீட்டுக்கனுப்பியது. யுத்தம் வெற்றியில் முடிய வேண்டுமென நூற்றுக்கு நூறு ஒத்துழைப் பை நல்கிய பிரிட்டிஷ் மக்கள் அதே நேரத்தில் நாட்டைப் புனரமைக் கும் நடவடிக்கைகளுக்கு யுத்த முடிவைக் காத்திருக்கவில்லை. புனருத் தாரணத்துக்கு எந்தக் கட்சியின் ஆட்சி தேவையென்பதையும் முடி வெடுக்கத் தாமதிக்கவில்லை.
இன்று இந்தக் "குட்டித் தேசத்தில் நடைபெறுவது யுத்தமா? வெளி நாடு எதுவும் எம்மைச் சண்டைக்கு இழுக்கவில்லை. எமக்கும் அந்த எண்ணமில்லை. எங்கள் போட்டிகளைப் பிரபலப்படுத்த சிலவேளை களில் கொடுக்கிழுத்துக் கட்டுகிருேம். வாலைச் சுருட்டவேண்டிய காலம் வராமற் போவதில்லை.
அது என்னவானுலும், வடக்கில் "பயங்கரவாதம் தெற்கில் "தீவிர வாதம் ஆட்சிக்கு ஒரு (இரு) சவால் எனலாம். அதற்கென்ன? ஜன நாயக நாடு இலங்கை என்பதால் இதன் விளைவு மக்களைப் பொறுத் ததே ; ராணுவத்தையல்ல.
பல்கலைக்கழகங்களில் கலகம் உற்பத்தியாவதற்குப் பல காரணங்கள் உள; அவற்றைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்

ஊரடங்கு வாழ்வு 81
அரசாங்கம் அகங்காரத்தைக் கைவிடவேண்டும். உள்வீட்டுப் போட்டி ஏதும் இருந்தால் அதனை வீட்டுக்குள்ளே பூட்டிவைப்பது மிக அவசியம்.
அரசியல் நிலைமை குழம்பியிருந்தபோதும், நாட்டின் ஆட்சி தளம்பாது நடக்கவேண்டும். பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்; பகிஷ்காரம் முடிவடையும்; இந்த நம்பிக்கையில் நெடுங்காலம் தாமதப்பட்ட திட்டங்கள் தீவிரமாகத் தொழிற்பட வேண்டும். V
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மத்தளம்போல இரண்டு பக்கத்திலும் அடிபடுகின்றது; வடபகுதிப் பயங்கரவாதமென்ற பாம்பைத் தேடி கலைக்கோயிலின் புனிதம் மாசுபடும் வகையில் கருடன் உள்ளிடுகின்றது. பல்கலைக்கழக விருத்திக்கு அவசரமான விடயங்கள் மறக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக்குழு அவற்றை மறைக்கின்றது என்று சொல் வதோ கொள்வதோ நியாயமாகாது.
யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவசியம் தேவையான விவசாயபீடம் பற்றிய அறிக்கை ஒரு பூரணப்பட்ட இலக்கியம்போல் தெரிகிறது. இதனைப் படித்தவர்கள் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் பீடத்தை நேரில் பார்க்க ஆசைப்படுவது இயல்பு.
என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ற வினுக்களுக்குப் பதில் 6T6irer ?
கடந்த வருடம் பேராதனையில் நடந்த கலவர காலத்தில், யாழ் விவசாயபீடம் இதோ வந்துவிட்டதென்ற பேச்சு காதில் அடிபட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
அந்தப் பேச்சுக்கு என்னுச்சு? என்று கேட்கவே நாம் மறந்துவிடுகிருேம். ஐந்து வருடத்துக்கு முன் ஆரம்பமான முயற்சி இன்றும் அறிக்கை யுடன் நின்றுவிட்டது பெரும் ஏமாற்றம்.
கிளிநொச்சியில் கட்டப்படவேண்டிய பீடத்தின் பூரண அமைப்பு முடிவதற்கு சுமார் நான்கு வருடங்கள் தேவைப்படுமெனச் சொல்லப் பட்டிருக்கிறது. -

Page 51
82 ந. சபாரத்தினம்
அதனைக் காத்திராமல் தற்காலிகமாக திருநெல்வேலியில் பட்டப்படிப் பின் முதல் வருடத்தை 1983ல தொடங்கவேண்டுமென்பது அறிக்கை யின் முக்கிய சிபாரிசு.
கிளிநொச்சியே பீடத்துக்குத் தரமான இடமென்பது முடிவாயிற்று. ஆணுல் நீண்டகால கட்டிடவேலை தவிர்க்கமுடியாததானதால் திரு நெல்வேலியில் பீடத்தை உடனடியாகத் தொடங்குவதற்கு சுமார் 12 லட்சம் தேவை. w
தற்காலிகமாகத் தொடங்கிவிட்டு இரண்டாவது வருடப் படிப்பு கிளிநொச்சிக்கு மாற்றப்படும் சாத்தியமில்லாவிட்டால் மாணவர் நட்டாற்றிலென்பது தெளிவு.
பல்கலைக்கழக மானியக்குழு இன்று இதனை முக்கிய தேவையாகக் கருதுமா? ஏன் கருதக்கூடாது என்றுதான் நாம் கேட்கிருேம் பாகுபாடு இருக்குமென்பதை நாம் ஒத்துக்கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தின் சிறப்புரிமைகளைக் கொண்ட பீடமாய் அமைய வேண்டுமென்ற ஆசி வழங்கிய மானியக்குழு இதனைத் தட்டிக்கழிக்க முயன்ருல் விடயம் அவ்வளவில் முடிந்துவிடவில்லை.
யாழ்ப்பாணத்தின் நியாயமான தேவைகளுக்கு இன்றும் வெளிநாடு களின் உதவி கிட்டும். யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு பிரிட்டிஷ் ஆட்சி உதவி வழங்குகிறது.
அரசியல் பேதங்களையும் நாட்டின் ஒருபகுதி முன்னேறும் முயற்சி களையும் கலந்து நாடனைத்திலும் ஒரு தயக்க நிலைமையை நாம் தினசரி வளர்த்து வருகின்ருேம்.
திருநெல்வேலியில் விவசாயபீடம் தற்காலிகமாகவும், கிளிநொச்சியில் நிரந்தரபீடத்தின் அமைப்பு வேலை திட்டமிட்டபடி ஆரம்பமாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உதவி நல்குவது அரசாங்கத்தை மட்டும் பொறுத்ததல்ல. இது 1985ல் ஆவது தொடங்க வேண்டும். ஜனுதிபதி ஜெயவர்த்தணு பேசும் பாணியில் சொல்லுவதானுல் எந்தப் பிசாசுடனும் உறவாடி இந்த உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
28-8-84.

ஜனநாயகங்கள் : மேற்கிலும் கிழக்கிலும்
"ஒரு நாட்டை மற்ருெரு நாடு அடிமைப்படுத்துவதைப் போன்ற கொடுமை உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. பெரிய வல்லரசுகள் சிறிய நாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்தும் வரையில் உலகில் அமைதி ஏற்படாது."
இது, ஜனநாயகத்திற்கு வரைவிலக்கணம் வழங்கிய ஆபிரகாம் லிங்கனின் கருத்து; சிறுநாடுகள் பெரிய வல்லரசுகளை நாடித் தங்கள் ஆட்சிக்கு ஆதரவு தேடுவதும் அமைதிக்குப் பங்கமென நாம் கொள் கிருேம்.
பாரத தேசத்துக்கு விஜயம் செய்பவர்கள் டில்லியின் "ராஜ்காட்" என்ற புனித இடத்தில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்து வது எத்துணை முக்கியமோ, அது போன்றதே வாஷிங்டனில் உள்ள 65) is sit 52.0T 63dfa (Lincoln Memorial).
இலங்கை ஜனதிபதி ஜெயவர்த்தணு இதனைப் பார்த்து பரவசமடைந் திருப்பாரென்பது நிச்சயம். இலங்கை ஜனநாயகம் பற்றி அவர் விசனமடைந்திருக்கும் இவ்வேளையில் லிங்கனின் மணிவாக்கு பெரும் உற்சாகமளிக்க வல்லது.
எங்கள் பத்திரிகைகள் இவ்வித கருத்தை மதிக்கும் மரபைப் பேணத் தவறுவதால் வாசகர்கள் சிறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தி பெருநோக்குகளை அலட்சியம் செய்கின்ருேம்.
200 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஜனநாயக அமெரிக்காவிற்கு இன்று உலகத்தின் தலைமை ஏற்பட்டிருப்பதை நாம் உற்றுநோக்கவேண்டும். எங்களைப்போல ஆங்கிலேயர் ஆட்சியில் சிக்குண்டு சுதந்திரத்துக்காக

Page 52
84. ந. சபாரத்தினம்
இரத்தம் சிந்தி உருவான சுதந்திர அமெரிக்கா, தனிமனிதனின் சுதந்திரத்தையும் தேசத்தின் கெளரவத்தையும் பாதுகாக்க மக்கள் தம்மை அர்ப்பணிக்கும் மரபை நிரந்தரமாக்கிவிட்டது.
"மிஸ்டர் பிறகிடென்ற் (Mr. President) என்று ஜனதிபதியை அமெரிக்க மக்கள் அழைக்கும் வழக்கம் இதனை நிரூபிக்கின்றது. இன்று, நாட்டின் ஜனதிபதியாகத் தெரிந்தெடுக்கப்படுபவர் மக்கள் ஆதரவினுல் தலைமைத்துவம் பெறுகின்ருர், ஆட்சிக்காலத்தில் முடி சூடா மன்னர் போன்ற அதிகாரம் பெற்றிருக்கிருர்,
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் அப்பதவியை நினைக்க முடியா தென்ற நம்பிக்கையை முறியடித்தவர் ஜனதிபதி கெனடி. மரவீட்டி லிருந்து வெள்ளை மாளிகைக்கு உள்ளிட்டவர் லிங்கன். இன்று பணம்,
செல்வாக்கு பெருமிடம் வகித்தாலும், சாதாரண மனிதன் தனது, திறமையாலும் தொண்டாலும் நாட்டின் தலைவராக உயரலாம். கறுப்பர் ஒருவரை உபஜணுதிபதியாக்க இன்று முயற்சிகள் நடைபெறு வது இதற்குச் சான்ருகும். . . . . .
வெள்ளை மாளிகையில் கூடிக்குலாவியிருந்த ஜனதிபதிகள் றிகனும் ஜெயவர்த்தனவும் இவ்விரு நாடுகளும் பொன்னெனப் போற்றும் ஜனநாயகம்பற்றி மனம்விட்டுப் பேசியிருப்பார்கள்.
எமக்குக் கிடைக்கும் செய்தி சர்வதேச பயங்கரவாதம் பற்றியே! சில இலங்கைத்தமிழர் அச்சமயத்தில் ஏதும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக் கலாம்; அதற்கு நியாயமுண்டு; அதனைப் பிரபலப்படுத்தும் செயல், அந்நாட்டில் ஜனநாயகம், துள்ளி விளையாடுகிறதென்பதை விளக்கு கிறது. . . . . . .م، .ن : خ . . . . . . . . . : - |
இங்கிலாந்தின் ஜனநாயகம் பழம்பெருமை வாய்ந்தது; படிப்படியாக, மன்னர் ஆதிக்கத்தின் அட்டூழியங்களை ஒழித்து மக்கள் ஆட்சியை நல்ல அத்திபாரத்தில் நிறுவிய வரலாறு உள்ளத்தைக்கவரும் இதிகாசம்.
முடியாட்சியை முற்ருக ஒழித்த போதும் மன்னர் பரம்பரை பேணப்பட வேண்டுமென்ற பண்பு ஆங்கில ஜனநாயகத்துக்கு அசாதாரண அழகு

ஊரடங்கு வாழ்வு 85
ஊட்டுகின்றது; அவர்கள் விரும்பி விளையாடும் கிரிக்கட் அதற்கு உறு துணையாக உள்ளது.
இரண்டாவது மகாராணி எலிஸபெத், அண்மையில் ஜனதிபதி றிகனை மதிய போசனத்திற்கு அழைத்தபோது, ஜனதிபதியின் படக்காரன் அங்கு வருவதை விரும்பவில்லையென்ருல் ஜனநாயகத்தின் நுட்பமான கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. −
அமெரிக்க ஜனநாயகத்திற்குக் காவல் நாய் திருவாளர் பொதுஜன் அபிப்பிராயம். இவரின் தினசரி ஆரோக்கியத்தைக் காட்டும் வெப்ப மானி அமெரிக்க தினசரிப் பத்திரிகைகள். வெட்டு ஒன்ருனுல், விழு வது இரண்டு துண்டுகள்.
இங்கிலாந்தின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது பாராளுமன்றம்: அதனைத் திசைதிருப்ப எவராலும் முடியாது; எந்த வணங்கா முடியனை யும் அது வீழ்த்திவிடும். செத்தைக்குள் இருக்கும் எவரையும் மெத் தைக்குக் கொண்டுவர வல்லது. ஆட்சித் தலைவராக திருமதி தட்சர் நிமிர்ந்த கதை இதனை மிகச் சுவையுடன் விளக்கும்,
இன்று ஜஞ்திபதி ஜெயவர்த்தன, ஆங்கில ஜனநாயகத்தின் இரு பெரும் தூண்களான மகாராணியையும், பிரிட்டிஷ் பிரதமர் தட்சரையும் சந்தித்துக் கருத்துப் பரிமாறியிருக்கிருர், அமெரிக்க, ஆங்கில ஜனநாயகங்களை நேரில் தரிசித்து அனுபவித்த ஜனதிபதி ஜெயவர்த்தணுவிற்கு இலங்கை ஜனநாயகம் பற்றிய கவலை இங்குள்ள வடபகுதி "பயங்கரவாதத்தைப் பற்றியே! 'ஒரு தமிழர் ஜனதிபதியாகவும் வரலாமென்ற வசதியிருந்தும்’ இந்தத் துர்ப் பாக்கிய்நிலை ஏற்பட்டிருப்பது அவருக்குக் கவலை அளிக்கிறது. இலங்கையைப் போல் பாராளுமன்ற ஆட்சி முறையைப் பேணும் எங்கள் அண்டை நாடாகிய இந்தியா, கவலை கொண்ட ஜனுதிபதியுை அழைத்திருக்கிறது. இந்திய ஜனநாயகம் (காந்தி-நேரு), நிச்சயம் இத்துயரைத் துடைக்க வேண்டும்; துடைக்க முடியும்.
29-6-84

Page 53
விடுதலைக்கு வழி
இன்று, நாட்டில் நடைபெறும் மூடுவிழாக்கள் எல்லாம் தமிழ் மக் களுக்கு எதிரானதென்று கொள்ளமுடியாது.
"இன்ரர்சிற்றி கோபித்தால் கிளிநொச்சியில் நங்கூரம் போடுவதும், மண்டை தீவு வானெலி அஞ்சல் நிலையம் மூடப்படுவதும், தமிழ் மக்களுக்குப் பேராபத்து என்ற வகையில் பத்திரிகைகள் செய்தி தீட்டுகின்றன; அப்படியொன்றும் இல்லை.
மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள்பற்றி நாம் மறந்து விடுகின்ருேம். தென்னிலங்கையில் சாதாரண சிங்களக் குடும்பங்கள் நன்ருக உண்டு உடுத்து உயிர் வாழ்கின்றனவா? அரசு என்னதான் சொன்னுலும், செய்தாலும் நாட்டில் வறுமை வளர்கின்றது. ஆடிக் கலவரம் போன்ற சம்பவங்கள் எவ்வளவு காலம் இதனை மறைக்க முடியும் ? எனவே,- விடுதலையடைந்த ஒரு நாடு பீடுநடை போடுவதானுல், அதில் ஒருபகுதி மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதும் விசேட கவனத் திற்குரியது; அப்படியல்ல, மக்கள் இதனை உணர்த்தவேண்டிவரும். இன்று, தமிழ் மக்களின் பிரச்சனையை இவ்வளவு தூரம் பெருக்கி விட்டது, ஆட்சியாளர்களின் ஆற்றலின்மை என்று கூறுவது முற்ருன உண்மையல்ல. ஆற்றலின்மை பல துறைகளில் காணப்படுகிறது. கொள்கை உறுதியற்ற செயல்வாதம் இவ்வாறு பரிணமிக்கிறது.
கடந்த ஆடிக் கலவரத்தில் ஆட்சிக்கு எதிரானவருக்குப் பெரும்பங்கு இருந்தது. ஆட்சியில் உள்ளவர்களே இதில் சம்பந்தப்பட்டதான சந்தேகம் இன்றும் உண்டு.
இந்தத் தர்மசங்கடத்தில் அகப்பட்டு அல்லற்படுபவர்கள் தமிழர்கள் என்ருலும் அதிருப்தியுடன் வாழ்பவர்கள் பரவலாக நாட்டின் பொது

ஊரடங்கு வாழ்வு 87
மக்கள். பொருளாதாரம், கல்வி, வேலை, வீடு, சமுதாய மதிப்புப் போன்ற பல அம்சங்களில் சாதாரண, விடிவற்ற மக்களுக்கு வழி காட்டுவதில் அரசு வெற்றி காணவில்லை. ...
இந்தப் பெரும் போராட்டம் மூளாத் தீப்போல் வளர்ந்து வருவது இன்று எளிதில் புலப்படுவதில்லை. அதற்கு மேலே எழுந்திருக்கும் புகைப்படலமே தமிழர் பிரச்சனை ‘தேசியப் பிரச்சனை’ இதுவென்று பட்டம் சூட்டியதால் நாம் தேற்றமடைவதற்கு நியாயமில்லை.
பாராளுமன்ற ஆட்சியில் நீண்டகாலம் தமிழர் பிரச்சனை பாராளுமன்ற விவாதமாகவே நீடித்துவந்தது. ஒப்பந்தங்கள் எழுதுவதும் கிழிப்பதும், பேச்சுவார்த்தைகள் நடப்பதும் நிற்பதும் கடந்தகால முயற்சிகள். இன்று, இவை வீண்வேலைபோல் தோன்றும்.
தமிழர் பிரச்சனையைத் தனிப்படுத்திய தமிழர் விடுதலைக்கூட்டணி இதுகாறும் நடந்த போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டதை மறுப் பவர் நாட்டு வளப்பம் தெரியாதவரே. ஆனல், இவ்வித போராட்டத் தில் - ஒருவித கிரிக்கட் ஆட்டத்தில்-வெற்றி காண, துடுப்பெடுத்து ஆடவும் வேண்டும்; எதிரியின் ஆட்டத்துக்கு விரைவில் முடிவு காண வும் வேண்டும்.
துடுப்பெடுத்து ஆடுவதானல், எத்தனை ஓட்டங்கள் என்பதை நாம் * ஸ்கோர் போர்டில்’ (Score Board) பார்க்கலாம். எதிரியை வெளி யேற்றும் திறமை பந்தெறிவீரர்களைப் பொறுத்தது. بسته ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
தேசிய ரீதியில் பார்த்தால், முன்னைநாள் பிரதமர் திருமதி பண்டார நாயக்க பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியபோது, எதிர்க்கட்சித் தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த போது, அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்தின் சாதனை கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
பந்தெறிவது பிரம்மாதமென்ருலும் ஓட்டங்களின் தொகை என்ன? வெற்றிக்கு அது முக்கியம். ஆருவது சட்டத்திருத்தம் அமுலாக்கப் பட்ட முறை, பாராளுமன்ற சித்தாந்தத்துக்கு முழு மாருணதாலுைம், தமிழர் விடுதலைக் கூட்டணி எம், பி. க்கள் தத்தளிக்கும்போது காக்க வந்த கடவுளே அந்தத் திருத்தம் என்று நினைக்க இடமில்லையா?

Page 54
88 ந. சபாரத்தினம்
பாராளுமன்றம் போகட்டும்; மாநகரசபை ஆட்சி போகட்டும்; இவர்களே தமிழ்மக்கள் பிரதிநிதிகள்: அந்த முத்திரை - செல்லாத முத்திரை, போனுலும், இவர்கள் மக்கள் தலைவர்களென்று பலமடைய ஆற்ற வேண்டிய பணிகள் பல. அப்பொறுப்பை இழப்பதானுல் அது சங்கட மான நிலையை வளர்க்க வல்லது. இன்று, எந்தக் கட்சி பேதத்துக்கும் இயக்கப் பிரிவினைக்கும் இடமில்லை; பேராபத்து இனித்தான் வர விருக்கிறதென்று கொள்வதும் தவறென்று மக்கள் கருதுகிருர்கள்; தங்கள் சார்பில் தலைவர்கள் ஆற்றிய சேவையை அவமதிக்கத் துணியார்கள்.
இந்த நீண்டகால அரசியல் ‘வியாபாரத்தில் நட்டமடைந்த மக்கள், வேறு வழி இருக்குமோ என்று கணுக் காண்பது இயல்பு. தமிழர் அரசியலின் பலவீனத்தைக் குறிக்கும் நிலை இது.
இளைஞர் பொறுமை இழந்து புதுவழியை நாடியது இன்று உலகின் கண்ணைத் திறக்க வைத்துள்ளது. அரசும் அதனை அலட்சியம் செய் வதற்கில்லை. அரசியல் தீர்வுக்கு ஒன்றுபட்ட தலைமை அவசியம்.
தீவிரவாதமென்று எதனையும் தள்ளிவிட முடியாத நிலையில், நமக்கு இளைஞர்களின் சக்தியை வெற்றிப்பாதையில் திருப்புவதற்கு வேண்டிய அரசியல் ஞானமும் தீர்க்கதரிசனமும் தேவைப்படுகின்றது .
விரக்தியடைந்து ஒதுங்காமல், கருத்து வேற்றுமை பாராட்டாது, புத்துயிர் பெற்று, தொகுதிவாரியாக, ஆக்க் வேலைகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஒன்றுபட்ட தலைமையில் தொடருவது இன்றியமையாதது.
2-8-84

முடிவு எவ்வாறிருக்கும்
வானுலகும் மண்ணுலகும் சேர்ந்து பரந்த உலகை நவீன விஞ் ஞானம் சுருக்கி விட்டது. எனினும் இலங்கை அதில் ஒரு சிறு துளியே. அதனிலும் மிகச் சிறியது இன்று எங்கும் பேசப்படும் யாழ்ப்பாணம். ஆறு நாளாக யாழ்ப்பாணம் வெறிச்சோடிக் கிடக் கிறது; கடைகள் பூட்டப்பட்டிருப்பதும், ஒற்றைக் கதவில் நடப் பதும், அங்காடியில் அமைதியும், போக்குவரத்துச் சீர்குலைந்ததும், எல்லா வகையிலும் யாழ்ப்பாண மாவட்டமே பதற்றத்தின் படமென மக்கள் பரிதவிக்கின்றனர்.
இருப்பினும், இன்றைய உலகச் செய்தியில் இது இடம்பெறுவது பகற்கனவு. ஆனல், இப்பகுதி மக்களுக்கு இந்தப் போர்’ யாழ்ப்பாணம் காணுத புதுமையே. " " " " ." “
உணவுக்குத் தட்டுப்பாடு என்ற குரல் எழுந்திருக்கும் வேளையில் வட பகுதியில் வானெலிய்ைத் தெளிவாகக் கேட்பதற்கு ஆலோசன் கூறும் நீரோ மன்னர் இருப்பது சிந்தனைக்குரியது. .م *
எம்மிற் பலர் படித்தும் கசடறக் கல்லாதவர்; இன்றைய யாழ்ப்பாண நிலைமையைப் புரியாதிருப்பது அதிசயமல்ல. இன்றைய அரசு புரிந்த நன்மைகளில் இலங்கை வானெலியின் யாழ் அஞ்சல் நிலையத்தை மூடியது, மிகச் சிறந்ததும் அவசியமானதுங்கூட. -
புளுகால் காதுப் புளிப்பு ஏற்படாதவர்கள் அனைவரும் செவிப்புலன் இழந்தவர்களே தெய்வாதீனமாக இங்கு வாழும் மக்கள் இலங்கை வானுெலியின் வஞ்சனையற்ற வீண்புளுகிலிருந்து தற்காலிகமாக வாவது காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். . . .

Page 55
90 ந. சபாரத்தினம்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் "போரில் பல அப்பாவி மக்கள் தொடர்ந்தும் வீர சுவர்க்கம் அடைகின்றனர். எங்கள் மண்ணுலகத் துக்கு இது எதிர்பாராத அழிவு. இதனை எவ்வாறு ஒழிப்பது? இப் *போரின்" முடிவு எவ்வாறிருக்கும்? என்ற வினுக்களுக்கு விடை காணும் தீர்க்கதரிசனம் இன்று எவருக்கும் உண்டா?
பருப்போல வந்தவினை பாரவினையாகாதா?
முதலாவது உலக யுத்த முடிவில், ரஷ்யா, ஜெர்மனி தலையெடுக்கும் என்று யாரும் நினைத்தாரா? இரண்டாவது உலகயுத்தத்தின் தலைவர் களில் ஒருவரான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஜெர்மனி யையும் அதன் தேச நாடுகளை யும் முறியடித்த பின் உலகம் ஒருசில சிறு மாற்றங்களுடன் இருந்தவாறே பாதுகாக்கப்படுமென நினைத் திருந்தார்.
சேர் பட்டம்பெற்று ஜனநாயகத்தைக் காப்பாற்றிய வீரன் என்ற புகழ்பெற்றவர், போர் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கு மென்ற கனவே கண்டிருக்கமாட்டார்.
நெடுங்காலம் வாழ்ந்த இப்பெரியார் போரின் கொடுமைகளை மட்டு மல்ல அதன் விளைவையும் உணரக்கூடிய ஞானம் பெற்ருர்,
அவர் எதிர்பாராதது இந்திய சுதந்திரம் மட்டுமல்ல; இங்கிலாந்து உலக சமுதாயத்தின் தலைமையை இழந்ததையும் கண்மூட முந்திப்
ப்ார்த்துக் கவலைப்பட வேண்டியிருந்தது.
இந்த விதமான மாற்றங்களைப் போர் நிச்சயிப்பதால், போர் என்ற பேரச்சமே பல தீராத தொல்லைகளைத் தீர்க்கமுடிகிறது.
உலகம் இன்றிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பெரியகடையில் கலவரம் தொடருமானல், ஆஸ்பத்திரி, வங்கிகள், மரக்கறி, மீன் வியாபாரம் தொடர்ந்தும் முடங்கிவிட்டால் இது ஒரு சிறு விடயமென்று நினைக்கமுடியாது. உலக விவகாரங்களின் ஒரு சுடர் இதுவெனக் கொள்ளலாம்.
புத்தருக்கும் காந்திக்கும் பிறகு இந்தியா கண்ட மிகப்பெரிய ஞானச் சுடரொளி நேரு என்றும், அசோகனுக்கும் அக்பருக்கும் பிறகு

ஊரடங்கு வாழ்வு 91
இந்தியா கண்ட மிகப்பெரிய அரசியல் தீர்க்கதரிசி நேரு என்றும் அவருடைய அரசியல் எதிரிகளே ஒத்துக் கொண்டனர்; அவர் என்ன சொன்னுர்?
வருங்கால உலகின் போக்கைக் கணித்த நேரு 'உலகம் ஒரு சில வல்லரசுகளின் ஆதிக்கத்தில் வாழ்வதை நான் விரும்பவில்லை. மனிதன் தன் மதியீனத்தால், ஒன்றுபட்டு வாழமுடியாது, ஐக்கிய உலகமன்றம் ஒன்றில் நம்பிக்கை இழப்பதானுல், வல்லரசுகளின் பிடியில் அகப்பட்டு வாழவேண்டிய நிலை உருவாகும்' என்று அடித்துக் கூறியிருக்கிருர், -
அதுமட்டுமா? "இந்தநிலை பூரணப்படுமாயின் சிறுநாடுகள் தங்கள் சுயாதீனத்தை இழக்கநேரிடும். தங்கள் கலை கலாசாரம் கொண்ட சுயநிர்ணயமுள்ள நாடுகளாக வாழலாம்; ஆணுல் சுதந்திரமுடைய நாடென்ற நிலை ஒழிந்துவிடும்’ என்றும் எச்சரித்திருக்கிருர், இது 37 வருடங்களுக்கு முன் சொன்ன சாத்திரம்.
இன்று யாழ்ப்பாணத்தைப் பீடித்திருக்கும் "பயங்கரவாதப் போருக்கும்" *உலக பயங்கரவாதப் போர்” என்று உருவாகக்கூடிய பெரிய போருக்கும் தொடர்பிருக்கலாம்.
எனவே, முடிவு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு விடை இன்றைய துன்பியல் நாடகத்தின் கத்ாநாயகர்கள் கையில் இல்லாமற்போகலாம்: எல்லரம் துன்புத்திலே முடியுமென்ற-மருள்நோக்கு எமக்குக் கிடையாது. வல்லரசுகளை இருத்தி எழுப்பவல்ல சக்தி மண்டலசார்பற்ற' நாடு களுக்கு ஏன் கிடைக்க முடியாது? பொது எதிரிகளின் அழிவிலிருந்து தப்புவதற்கு வேண்டியது ஒற்றுமையே.
அவற்றிற்குத் தலைமை தாங்கும்இந்தியா சமாதானத்துக்கும் சகவாழ்வு க்கும் தலைமைதாங்க ஏன் முடியாது?
இருளில் உறங்கும் எங்கள் மக்கள், உலகப்பார்வையில் இன்றைய விவகாரங்களை விளங்க முடியுமாளுல், எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையைப் பாதுகாக்க முன்வருவார்கள்
11-8-84

Page 56
ஆனந்த சுதங் திரம் அடைவோம்
சுயமரியாதை இல்லாதவனுக்கு எம்மதமும் இல்லை என்று ஓர் அரபு நூல் கூறுகிறது. அரபு மக்களின் மதப்பக்தி மிக அசாதாரணமானது. சுயமரியாதை என்பது கர்வமோ அல்லது அகம்பாவமோ அல்ல. பயத் தினுலோ அல்லது சோம்பேறித்தனத்தினுலோ உரிமைசள் இழந்து போய்விட அனுமதிப்பதில்லை என்ற ஒரு மனநிலையே சுயமரியாதை யாகும. *
உரிமை இழந்து, உடைமை இழந்து, உயிர் இழந்து தவிக்கும் இந் நாட்டுத் தமிழ் மக்கள், குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சோம்பேறிகள் என்று எவரும் கனவிலும் நினைக்க மாட்டார்; அவர்களின் தீவிர உறக் கமே தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது. "~ " ...
ශුම් ல் தமிழர்கள், சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் பயந்தவர்கள் என்று நினைக்க அவர்கள் சிறுபான்மையரென்பது இடழ் அளித்
சுதந்திரத்துக்குப் பின் உருவான அரசியல், இந்தத் தவருன கருத்துக்கு வலிமை அளித்து வந்திருக்கிறது. இதனை அத்திபார மாகக் கொண்ட ஆட்சிமுறை, இன்று நாட்டை இவ்வாறு சீர்குலைத் திருக்கிறது.
தமிழர்கள் வாழ்ந்துவரும் தமிழ் நிலப்பகுதியில் மட்டுமே தமிழர் இரத்தம் ஓடுகிறது. பிணமலைகள் குவிகின்றன. அங்கேதான் அவர் கள் அடிபட்டும் நசுங்கியும் நெரிபட்டும் அல்லற்படுகிருர்கள். குறிப் பாக வடக்குத்தான் இன்று போர்க்களம். எனவே, நாடு எவ்வாறு
சீரழிந்திருக்கிறதென்ற கேள்விக்கு இடமுண்டு.

ஊரடங்கு வாழ்வு 98
கடந்த வருடம் ஆடிக் கலவரம் வேறு விடயம்; அன்றுதானும் சிங்கள் நாகரிகத்தின் மிகச்சிறந்த பெரஹரா விழா மிகச்சிறப்பாக நடைபெற வில்லையா என்ற வாதம் எழலாம்.
இன்று டில்லி செங்கோட்டையில் இந்திரா கண்ணிர் சிந்த, சென்னை ராஜ்பவன் சுதந்திர தின விருந்து இரண்டாவது தடவை ரத்து செய்யப் பட, தமிழ்நாடு பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்பட்டிருக்க, இலங்கை யில் என்ன சீரழிவு உண்டு என்ற குதர்க்கம் கிளம்பலாம்
ஒரு சிறுகூட்டம் யாழ்ப்பாணத்தில் தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் நாடு கெட்டுப் போவதில்லை. இதொரு பயந்த சமூகம் என"வரலாறு காட்டுகின்றதென்று நினைப்பதாலே, தவருகக் கொள்வதாலே, இந்த நிலை உண்டாயிற்று.
அது தவருன கருத்தென்ருலும், இலங்கைவாழ் தமிழ்மக்கள் பேரில் உருவாகி வளர்ந்துவந்த உரிமை இயக்கம், விடுதலை இயக்கமாக விரிந்துவந்த கால வரையில், நடைபெற்ற சம்பவங்கள் இந்தப் பெரும் தவறுக்கு இடமளித்திருக்கின்றன.
1956ஆம் ஆண்டு பருப்போல தொடங்கின வினை இது. காலிமுகத் திடலில் ஆரம்பமானது; ஆணுல் சாமணியமானதல்ல.
அதற்குமுன் தோட்டத் தொழிலாளர்களாகிய பல்லாயிரம் தமிழர் களுக்கு குடியுரிமை கிடையாதென்ற சட்டம்.
1958இல் உண்டான இனக்கலவரத்தில், கணிசமான தமிழர்கள் தாக் கப்பட்டு உயிரிழந்தால் அடங்குவார்கள் என்ற நம்பிக்கை, இதற்குத் தடையானவர் அன்றைய மகாதேசாதிபதி சேர் ஒலிவர்.
1972ஆம் ஆண்டு தமிழர்களின் உரிமைப் பாதுகாப்புப் பற்றிய அர சியல் சாசனம் 29-ம் சரத்து ரத்துச் செய்யப்பட்டது. யார் இதனைக் கேட்க முடியும் என்ற துணிபு.
10-1-74இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் கடைசித் தினத்தில் நடைபெற்ற அட்டூழியம்! இதற்கு வேதனை தெரி விக்கவே அன்றைய பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா மறுத்து விட்டார், ر

Page 57
94. ந. சபாரத்தினம்
இன்றைய ஆட்சி ஆரம்பமான அக்கணத்திலே 1977ல் நாடு முழுவதி லும், குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் கோரச்சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து, இன்றைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
1956-1977 காலத்தில்: "தமிழ் மக்கள் நீண்ட போராட்டம் என்ன செய்ய முடியும்; குனியக் குனியக் குட்டலாம்; நிரந்தரமாகக் குனிந்து விட்டால் குட்டவேண்டிய தேவையில்லை" என்ற நம்பிக்கை. 1977 தொடக்கம் இன்றுவரைக்கும் நடைபெறும் கொடுமைகள் நிச்சயம் நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தித்தான் விட்டன.
தமிழ்மக்கள் சோம்பேறிகள் அல்ல, பெரும் பிரயாசிகள்; சிங்களமக்கள் அன்னிய ஆட்சியில் மிகவும் ஒதுக்கப்பட்டவர்கள்; உண்மை. இன்று அவர்கள் வேகமாக முன்னேறத் தமிழர்கள் தம் ஊக்க உணர்வைத் தற்காலிகமாகப் பொத்திவைக்க வேண்டும்; நியாயமா?
இதனை எதிர்த்துப் போராடினுல், இவர்களை அடக்கிவிடலாமென்ற பூரண நம்பிக்கை இன்று நாட்டை இந்நிலையில் கொண்டுவந்திருக் கிறது. -
தமிழ் தீவிரவாதிகள் களைத்துப் போயினர், ஒழிந்துவிடுவார்கள் என்று பந்தோபஸ்து அமைச்சர் கூறுவதை நாம் கேலி செய்யவில்லை. இன்று உலகனைத்திலும், குறிப்பாகப் பாரதத்தில் தமிழர் விவகாரம், அவர்களின் நீண்ட போராட்டம், மதிப்பிடமுடியாத தியாகம் வெட்ட வெளிச்சமாய் விட்டது. உதயத்துக்குமுன் நிலவும் காரிருளில் வாழ்கின் ருேம்.
17-8-84

இன ஒதுக்கலுக்கு ஒரு புது வேடம்
சூரபன்மன் சுப்பிரமணியரை எவ்வகையிலும் வென்று விடலாமென்று போராடினன். தோல்விக்குப் பின் தோல்வியென்ருலும் அவனுடைய அகங்காரம் இலகுவில் குறைவில்லை. ஈற்றில் மாமரமாய் வந்ததை "சூரன்போர்" திருவிழாவில் நாம் பார்க்கின்ருேம்.
மிகப் பிரயோசனமான வடிவம் அது; இன்று யாழ்ப்பாணத்தில் மாம்பழம் விற்கும் விலையைக் கணிப்பதானுல் மனிதனிலும் பார்க்க மாமரம் மிக மதிப்பான பிறவி.
ஆஞல், எந்தக் கட்டத்திலும் சுப்பிரமணியர் ஏமாறவில்லை. அவருடைய வேல் (மந்திரமல்ல) மாங்காய் பிடுங்கிற்று. ஏமாற்ற முயன்ற சூர பன்மன் தோல்வியில் உண்மைச் சங்கதியை உள்ளவாறு வெளியிடு கின்ருன்.
மயில்வாகனத்தின் மீது ஏறிவரும் குமரனை ஒரு பாலன் என்று தவருக எண்ணிவிட்டான்; இவ்வித வீரம் படைத்த பேர்வழி என்பதை அவரின் அற்புதச் செயல்களால் அநுமானித்து அடிபணிந்து அர்ச்சிக் கின்ருன்.
கறுத்தவர்கள், நிறத்தவர்கள்; ஆசிய ஆப்பிரிக்கக் கண்டத்தவர், பிறப் பிலேயே குறைந்தவர்கள் என்ற எண்ணம், சூரபன்மனின் மாயா சாலங்கள், போலி வெற்றிகள் போல் இன்றும் உலகில் நிலவுகின்றது. தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கல் என்ற அசுரக் கொள்கையை உலகில் பல நாடுகள் - இலங்கை உட்பட-கண்டித்து வருகின்றன. ஆணுல் வெள்ளையரின் வெறிகொண்ட ஆட்சி, தென் ஆபிரிக்காவில் கறுத்தவரை, தமது சொந்த நாட்டிலேயே ஒதுக்கிவைக்கும் திமிரில் கொஞ்சமும் நெகிழவில்லைபோல் தெரிகிறது.

Page 58
96 ந. சபாரத்தினம்
பழையபிடி பிடிக்க முடியாதபோதும், அவர்கள் இரண்டரைக் கோடி கறுத்த மக்களுக்கு தங்கள் தாய்நாட்டில் அரசியல் அதிகாரம் எதுவு மில்லாதவாறு அரசியல் சாசனம் அமைத்து வருகின்றனர்.
நிலைமையில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டபோதும் இனத்துவேஷம் வெள்ளையரின் நெஞ்சத்தில் குடிகொண்டிருப்பதால், தென் ஆபிரிக்கா விற்கு உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு, ஜனநாயக, இன வேற்றுமையற்ற ஆட்சியை நிறுவுவதற்கு உதவாது.
இந்த அபிப்பிராயம் ஆபிரிக்க நாடுகள் ஐம்பது கொண்ட சம்மேளனத் தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆபிரிக்க - ஆசியநாடுகள் பல, இதனைக் கண்டித்து, கடினமாக எதிர்த்து ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு குரல் எழுப்பியிருக்கின்றன.
செப்டம்பர் மாதம் 3ம் தேதி இந்தப் புதிய சாசனம் ஏற்றுக்கொள்ளப் படவிருப்பதால், இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமென்பதே ஐ.நா. விவாதத்தின் நோக்கமாகும்.
இனத்துவேஷம் வடிவெடுத்தாற்போல் தொழிற்படும் தென்ஆபிரிக்க
அவுணர்கோன், இது ஒரு உள்நாட்டு விடயம்; 15 அங்கத்தவர்
கொண்ட ஐ.நா. பாதுகாப்புச்சபைக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்ல்ை என்று வாதாடியிருக்கிருர்,
*உள்நாட்டு விடயம்’ என்பதின் அடிமுடியை இன்று உணரவல்ல மூர்த்தி இந்தியாவென்பது எமது நம்பிக்கை. அது என்ன சொல்கிறது? ஆபிரிக்க மக்கள் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும். இன ஒதுக்கல், இனத்துவேஷம், இனப்பாகுபாடு, எந்த விதத்திலும், எந்த வேடத்திலும் மனித நாகரிகத்துக்கு முரணுனது; இவ்வித அட்டூழியமே” மனிதாபிமானத்துக்கும் சர்வதேச சமாதானத்துக்கும் பேரெதிரியென்று வெளுத்து வாங்கியிருக்கிறது. பாரதம் ஒரு பாலஞ?
101 நாடுகள் திரண்டிருக்கும். அணிசேரா இயக்கத்தின் தலைவர் இந் தியப் பிரதமர் இந்திரா இந்தத் தோரணையில் அவருடைய சொல் செல்லுந்தன்மையது; அதனை அலட்சியம் செய்வது அபாயம்; தென் ஆப்பிரிக்காவிற்கு இன்றும் ஆதரவு மறைமுகமாகத்தானும் அளிக்கின்ற

ஊரடங்கு வாழ்வு 97
வெள்ளையர் கூட்டத்துக்கு பெரும் சவால் எழுப்பியிருக்கிருர் இந்திரா. எங்கள் நாட்டுப் பிரச்சனையை தென் ஆபிரிக்காவின் இன ஒதுக்கலுக்கு ஒப்பிடுவது நியாயமாகாது.
இங்கு வாழும் மக்கள் இந் நாட்டவரே. அந்த உண்மையை மறைக் கவும் மறுக்கவும் சூழ்நிலை இடம் கொடுப்பதே எங்கள் துரதிர்ஷ்டம்; ஒரு சிறுபுண் புற்றுநோயாக மாறும் ஆபத்து இருந்துவருகிறது.
பகைமைக்கு அண்ணன் அதிகாரமோகம்; அது தலைக்கேறினல் திக்குத் திசை தெரியாது திண்டாடும் நிலை ஏற்படுவது சகஜம்.
தென் ஆபிரிக்காவின் படிப்பினை எமக்கு உதவவேண்டும். தடுக்க வல்ல நோயை முற்றவிடுவது உயிருக்கே அபாயம்.
20-8-84

Page 59
* யாகாவாராயினும் நாகாக்க"
பரிகாசம் பாம்பையே கடிக்கும் என்பார்கள்.
காலமறிந்து இடமறிந்து தருணம் அறிந்து, பேச்சை அளந்து பேசு வது பெரும் பொறுப்புடைய தலைவர்களுக்கு இன்றியமையாத பண்பு.
ஜனதிபதி ரீகன் சோவியத் யூனியனைப் பரிகாசம் செய்தமை பெரும் கண்டனத்துக்குள்ளானது இதற்கு நல்ல உதாரணம்.
வானுெலிப் பேச்சை ஆரம்பிக்க முன் நடிகர் என்ற காரணத்தால் * மைக் சரிபார்க்கும்போது விட்ட பகடி அகில உலகிலும் மெல்லிய பரபரப்பை ஏற்படுத்தியது.
** ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை விடும்படி கட்டளை யிட்டிருக்கிறேன். ஐந்து நிமிடங்களில் அலுவல் முடிந்துவிடும்' என்ருர், சுத்த கேலிப் பேச்சு அது,
இதனை எவரும் பேருண்மையாகக் கருதவில்லை; ஆனுல் பரிகாசமான லும் மக்கள் மனதில் அச்சம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விடயத்தில், இன்று நிலவும் அமைதியின்மையில் இதனைத் தொடவேண்டிய
அவசியம் என்ன?
நிச்சயம் இவ்வித சேட்டைப் பேச்சை விரும்பாதவர்கள் இது ஒருவித ஹாஸ்யம் என்று கொண்டாலும், இதற்கு உள்ளமே இருப்பிடமென்று நினைக்க இடமுண்டு. எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் நெருங்கிய உறவிருப்பதால் சிரிப்பில் மட்டுமல்ல, களுவிலும் எமது நினைவுகள் முனைத்து நிற்பது இயல்பு.

ஊரடங்கு வாழ்வு 99
அது அமெரிக்காவில் நிகழ்ந்தது; உலகப் பிரசித்தி பெற்ற "ஐந்து நிமிட வேலை" என்ருல், எங்கள் நாட்டில் இன்றைய சாதனைகள் அதற்கு அவ்வளவு சளைத்ததல்ல.
இன்று எமது நாட்டைப் பீடித்திருக்கும் தர்மசங்கடம் சாதாரணமான தல்ல. இதனை ஜனதிபதி ஜெயவர்த்தணு சமாளிக்க முடிவது வியப் பானது. புத்த தர்ம தத்துவம் அவருக்கு சமத்துவ மனேநிலையை நல்கிவருவது மெய்; அவருடைய தெளிவான பேச்சில் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவை இயல்பாகவே இடம் பெறும்.
மிகச்சிக்கலான சூழ்நிலையில் தானும் சிரித்து மக்களையும் சிரிக்கவைக் கும் ஆற்றல் அவருக்கு அதிகம் உண்டு. ஆணுல் ஆனையும் அறுகம் புல்லில் சறுக்கும் என்பர்.
சில காலமாக ஜனதிபதி ஜெபித்துவரும் மந்திரம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டெனலாம். 'எனக்கு தமிழ்மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கோ வேறெந்த தமிழ் அரசியல் கட்சிக்கோ கிடையாது' என்பதே.
சாதாரண காலத்தில் இலங்கை ஜனதிபதிக்கு எந்தச் சமூகத்திலும் நியாயமான மதிப்பும் மரியாதையும் இருப்பது இயற்கை.
இன்று இவ்வாறு நகைச்சுவை நிரம்பிய கருத்தொன்றை வெளிப்படுத் தும்போது, தமிழ்மக்கள் தங்கள் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற அரசின் பிரசாரத்திற்கு இது பலமளிப்பதாக முடியும்.
ஆட்சித் தலைவர்கள், நாட்டின் முதல்வர்கள் அமைதியற்ற வாழ்வுக்கு தம்மை அர்ப்பணிக்கிறவர்கள். நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்ருக நேரிடுமானுல் சிரிக்கும் சக்தியே அவர்களின் மனநிலையை சமப்படுத்த முடியும். ஆணுல் எந்த நிர்ப்பந்தத்திலும் வெளிப்படும் கருத்து புண் ணுற்ற இதயங்களில் புளிவிடுவதாக இருக்கலாகாது.
பத்திரிகை வானெலிப் பிரசாரமே "வடபகுதி போர்க்களம்" என்ற தலைப்பை பிரபலப்படுத்தி வருகிறது. இரண்டாவது உலகமகா யுத் தத்தில் ஹிட்லரின் பிரசார அமைச்சர் கீபல்ஸ் (Goebels) எவ்வாறு

Page 60
100 ந. சபாரத்தினம்
துரிதமாக ஜெர்மனியின் ராணுவ அற்புதங்களை வெளியிட்டாரோ அவ் வாறு "யாழ்ப்பாண யுத்தம் வருணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 1940. யூன் மாதம், இங்கிலாந்து தன்னந்தனியணுக நின்று போர்புரிந்த சமயத்தில் ஹிட்லரின் பிரசார அமைச்சர் "இங்கிலாந்து களைத்துவிட்டது. அப்பாவி மக்கள் சமாதானத்தை விரும்பி போர் நிறுத்தம் கோருகின்றனர்" என்று அடிக்கடி பேசினர். நான்கு வரு டத்தில் ஜெர்மனி மண் கவ்வியது மட்டுமல்ல ஹிட்லரும் கம்பனியும் இருந்த இடம் தெரியாது மாயமாய் மறைந்தனர்.
பயங்கரவாதிகளை முறியடிக்க முயலும் இலங்கை ராணுவத்துக்கு இந் தப் பெரும் எடுப்பு அவசியமில்லை.
இன்று யாழ்ப்பாணத்தில் பல தொல்லைகள் தலையெடுத்தபோதிலும் தமிழ் மக்கள் அரசின் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. தலைவர்களைத் திட்டவோ தூக்கி எறியவோ முன்வரவில்லை. எனவே அரசு ராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டாலும், எண்ணம் நாவின் வழி வாகனம் ஏறிச் செல்வதைத் தடுத்தல் விவேகம்.
2-8-84

தமிழர் பிரச்சனைக்கு தீவிர சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கே தமிழர் பிரச்சனையின் இன்றைய நிலைமை விளங்கும். *
அரசாங்கம் எந்த விதத்திலும் சென்ற ஆண்டு நடந்த ஆடிக்கல வரத்தை அனுமதியாது. அரசாங்கத்தைக் கேட்டுத்தான் அந்தக் கலவரம் தொடங்கினதென்று நாம் கருதவில்லை.
இது மறுதலிக்காத விதத்தில் அரசாங்கம் பல திட்டங்களைத் திறமாக வகுத்து வருகிறது. யாழ்ப்பாணத்தில், வடபகுதியில் நடைபெறும் சம்பவங்களுக்கு அங்கேயே தீர்வு காணவேண்டுமென்ற தீர்க்கமான முடிவு ஒன்று, அதே சமயம் இந்தப் பிரச்சனை ஒழிவதற்கான அரசியல் தீர்வு இழுபறிப்படாது துரிதப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் மற்றது.
அரசியல் தீர்வு= ராணுவத் தீர்வு என்று பச்சைப்படியாகச் சொல்வதி லும் அதிகம் தவறில்லை.
இன்று தமிழர் பிரச்சனையின் தீவிர நிலையை விளங்கவைப்பது யாழ்ப் பாணத்திலும் மற்றும் தமிழ் மாவட்டங்களிலும் இடைவிடாது நடை பெறும் அழிவு. இது ராணுவத் தீர்வின் அறிகுறியாகக் கருதப்படு கிறது. யாழ்ப்பாணம் இலங்கையின் ராணுவ தலைமைப் பீடமாக மாறுமோ என்ற சந்தேகத்தையும் இது கிளப்பவல்லது. ஆனல் அதற்கு இடமிராது.
கொழும்பில் நடைபெறும் சர்வகட்சி மகாநாடு, ஒரு பேய்க்கூத்தென்று நாம் கருதவில்லை. அதொரு கோடைகாலக் கருத்தரங்கு போல் செயற் படுவதும், நீண்டகால வருத்தத்துக்குரிய (chronic) பரிகாரத்தில் ஈடு

Page 61
102 ந. சபாயத்தினம்
படுவதும் நோய்க்குதவாது. ஊசிமருந்துபோல உடனடி நிவாரணம் வழங்காது.
அரசாங்கம் இதனை மாற்ற இரண்டு வழிகளிலும் நம்பிக்கை கொண் டிருக்கிறது. சித்தவைத்தியம், சத்திர வைத்தியம், போன்றவை.
ராணுவ தீர்வு நோயைக் குணப்படுத்தும் திறமையுள்ளதானுலும், நோயாளி உயிர் பிழைப்பது சந்தேகத்திற்குரியது.
ஒவ்வொரு முறையும் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படும் மக்கள் எல்லோ ரும் "பயங்கரவாதிகள்' அல்ல; கைது செய்யப்படும் நூற்றுக்கணக் கான இளைஞர்கள் எல்லோரும் பயங்கரவாதத்தில் தொடர்போ அல்லது வேட்கையோ கொண்டவரல்லர்.
மன்னுரில், வல்வெட்டித்துறையில் நடந்தேறிய அழிவுகளுக்கு பெரு மளவிற்கு ராணுவமே பொறுப்பென்று தீர்க்கமான முடிவு எடுக்கப் பட்டுள்ளது. ராணுவத் தீர்வின் விபரீதப்போக்கு இது.
யாழ்ப்பாணம் உலகில் ஒரு சிறுதுளி என்கிருேம். இன்று அது உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய மத்திய நிலையமாய் விட்டது.
புதுமையான நோய், அதுவும் அரசியல் நோய்; உலக அரசியல் அரங் கில் பேசப்படுவது இயற்கை. .
டில்லியிலிருந்து இந்தியப் பிரதமர் இதுகுறித்துப் பெருங்கவலை கொள் வதாகவும், தேவை ஏற்பட்டால் தக்க நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் தெரிவித்திருக்கிருர்.
இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு கூலிப்படைகளையும் இஸ்ரேலிய முகவர்களையும் திருப்பி அனுப்பவேண் டும். தமிழர் பிரச்சனை தீர்வதற்கு நியாயமான புதிய கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென்று திட்டவட்டமாக இந்திரா கேட்டிருக் கிருர், கிரக மாற்றமோ? 8
இந்தக் கோரிக்கையில் ஒரு புதுவித அவசரம் தென்படுகின்றது. இத் துடன் நிற்கவில்லை. உலக நாடுகளுக்கு, குறிப்பாக ரீகனுக்கும் தாட்சருக்கும் இதுபற்றி எழுதியிருக்கிருர் இந்திரா.

ஊரடங்கு வாழவு 103
இம்மும்மூர்த்திகளை நினைக்கும்போது அவர்களின் இன்றைய நிலைமை
பொதுவாக இக்கட்டானது.
இந்திராவுக்கு ஆந்திரா நெருக்கடி வருட முடிவில் பொதுத்தேர்தல். தாட்சருக்கு செல்வாக்குக் குறைந்த நிலை; அத்துடன் அயர்லாந்தி லிருந்து பிரிட்டிஷ் துருப்புகள் வெளியேற வேண்டுமென்று லண்டனில் ஆர்ப்பாட்டம். றிகனுக்கு பொதுத்தேர்தல் அமளி.
இருப்பினும் இம்மூவரும் சாதுர்யமும், நெருக்கடியில் தலைநிமிர்ந்து நிற்கும் வல்லமையுமுடையவர்கள். குறிப்பாகப் பெண் பிரதமர்கள் இருவரும் ஆண்மை மிக்க அனுபவசாலிகள்.
யாழ்ப்பாணத்தில் சுவாலிக்கும் தீ, இந்த நெருக்கடியில் ஒரு உலக யுத் தம் ஆரம்பமாக உதவுமென்று நினைக்க இடமில்லை.
யாழ்ப்பாணம் என்பது ஆகுபெயர்; தமிழர் பிரச்சனை என்பதைக் குறிக்கிறது. நாம் குறிப்பிட்ட முடிசூடா மன்னர் மூவரும் இலங்கை விடயத்தில் அரசியல் தீர்வையே நாடுகின்றனர். நிச்சயம் அதற்கே ஆதரவு நல்குவர்; இதற்கு மாருனதெல்லாம் வெறும் பிரசாரமே.
பயங்கரவாதம் விரைவில் ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை ஜனுதிபதி ஜெயவர்த்தணுவிற்கு உண்டு. தமிழ்மக்கள் ஒருமுகமாக அதனை விரும்புவதோடு தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்குமென்று திடங் கொண்டுள்ளனர்.
இது இன்று உள்நாட்டுப் பிரச்சனையல்ல. உலக நாடுகளின் பிரச்சனை யாகத் தீவிரமடைந்துவிட்டது.
24-8-84

Page 62
ஜனநாயகத்தின் காவலர்கள்
அமெரிக்க ஜனதிபதி ருெணுல்ட் றிகன் தேவாலயத்துக்கு ஒழுங்காகச் செல்வதில்லையாம். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனதிபதித் தேர்தலில் போட்டியிட நியமனம் கோரி தோல்வியுற்ற ஜெஸ்ஸே ஜெக்சன் இவ்வாறு குறைபட்டுக்கொள்கிருர்.
மனித உரிமை இயக்கத் தலைவரும் பாப்திஸ்த் சபையைச் சேர்ந்த
மதகுருவுமான ஜெக்சன் திரு. றிகனின் சமயச் சம்பிரதாயங்கள் பற்றி
சற்று நகைச்சுவையாக மட்டுமல்ல காரசாரமாகவும் கண்டித்துள்ளார்.
'நீகனின் ஆட்சியின் போது யேசுநாதர் இருந்தாராணுல் நல்லமுறை யில் நடத்தப்பட்டிருக்கமாட்டார். பகுதிநேர தச்சரான ஜோசப்பு, சோம்
பேறி என இகழப்பட்டு, தொழிற்சங்கத்தில் சேரவும்கூட அனுமதிக்கப்
பட்டிருக்கமாட்டார்’ என்று குறிப்பிட்டுள்ள ஜெக்சன், "மேரிக்கு ஒரு
தாயருக்கான பராமரிப்பும் கிடைத்திருக்காது, ஏதாவது கொட்டிலில்
தான் அவர்களின் வாழ்வு நடந்து கொண்டிருக்கும்" என்று
சாடியுள்ளார்.
இதோடு விடவில்லை; நீகன் ஒரு நல்ல கிறிஸ்தவர் அல்ல; குறிப்பிட்ட அரசியல் நன்மைக்காக சமயத்தை அவர் பயன்படுத்துகிருர் என்று மேலும் தொடர்கிருர்,
குடியரசுக்கட்சியின் சார்பில் அடுத்த ஜனுதிபதி தேர்தலில் திரு. றிகன் மீண்டும் போட்டியிட கட்சியின் அனுமதியைப் பெற்றிருப்பதைத் தொடர்ந்து, எதிர்கட்சி ஒன்றின் பிரமுகர் ஒருவர் இவ்வாறு விமர்சனம் செய்வது ஒன்றும் அதிசயமல்ல. ஆனல், அந்த நாட்டில் வெள்ளையர் அல்லாத மக்கள் இன்னமும் ஏனையவர்களைப் போன்று சம உரிமை களுடன் நடத்தப்படவில்லை என்பதை இடித்துக் காட்டுவதே மனித

ஊாடங்கு வாழ்வு 105
உரிமை இயக்கத் தலைவரான ஜெக்சனின் அடிப்படை நோக்கம் என்று கொள்ளவேண்டும். א
உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் காவலர்களாகத் தம்மைப் பாவனை செய்து கொள்ளும் அமெரிக்க நிர்வாகம் இன்னமும் உள்ளூர் நிர்வாகத் தில் கறுப்பர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் சமத்துவம் கிடைக்க வழிசெய்யாதிருப்பதையே ஜெக்சனின் கிண்டலும் கேலியும் எடுத்துக் காட்டுகின்றன.
குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வோல்டர் மொன் டேலும் கூட தமது பிரசார ஊழியர்களில் அதிகளவு கறுப்பர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்திவரும் ஜெக்சன், மொன்டேல் வெற்றி பெற்ருல் கறுப்பர்களுக்கு முக்கிய பதவிகளில் அதிக இடம் ஒதுக்கும்படியும் வற்புறுத்துவார் என்பதில் சந்தேக மில்லை. நாகரிகத்தின் உச்சத்தை எட்டிவிட்ட அமெரிக்கர்கள் இன்னமும் கறுப்பு இனத்தவர்களின் பிரச்சனையைத் தம் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதும், அதை முடிமறைத்துக்கொண்டு வெளி உலகில் நீதி நியாயம் பற்றிப் பேசுவதும் விசித்திரமான நிலையாகும்.
யேசுநாதர் இப்பொழுது அமெரிக்காவில் இருந்தால், அவர் ஒரு ஏழைக் குடும்பத்தவர், வெளிநாட்டவர் என்ற நிலையில் எவ்வளவு தூரம் பாரபட்சமாக நடத்தப்படுவார் என்பதை ஜெக்சன் எடுத்தியம் பியிருப்பது அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தெளிவுபடுத்த வேண்டும். . . . . . . . . "
30-8-84

Page 63
இலாச்சிக்குள்ளிருக்கும் எலும்புக் கூடுகள்
சமாதானம் வேண்டுமென்று, ஊரவரும், உலகத்தவரும் ஓலமிடுகின்ற னர். ஆனல், அவர்கள் உள்ளத்தைப் பார்க்க முடியுமானல் ஓங் காளமே எடுக்கும்.
சனநாயகம் என்று கோஷம் போடும் நாடுகளில் ஆட்சியாளரின் உள்ளத்தில் பொங்கியெழுந்து கொண்டிருப்பது போராட்டமும் சஞ்சல முமேயாம்.
*எனது நாடு, எனது ஆட்சி, எனது கட்சி; என்ன வந்தாலும் இவற் றைப் பாதுகாத்தேயாக வேண்டும்; சட்டங்கள் இவற்றிற்கே ஆதரவு அளிக்க வேண்டும்! இந்தக் கோட்பாடு பலம் பெற்றிருக்கும் வரை, போர் என்னும் பேரச்சம் உலகையும் நாட்டையும் பீடித்திருக்கும்.
"சட்டத்தின் முன் எல்லோரும் சமம்" என்ற சித்தாந்தத்தின் பலம் பேசுபவர்கள் அதன் பலவீனத்தை மறைத்துவிடுகிருர்கள்.
சட்டம் என்னும் கழுதையை காசு மடக்கமாட்டாதா? செல்வத்தில் மிதக்கின்றவன் எந்தச் சட்டத்தையும் புரட்டவல்ல பாரிஸ்டர் சிங்கத் தைப் பெற முடியாதா? நீதிமன்றத்தில் அம் 'மிருக’ மன்னன் எழுப் பும் கர்ச்சனை எந்தச் சட்டத்தையும் தவிடுபொடியாக்குவதை நாம் காணவில்லையா?
காசின் பக்கம் மட்டுமல்ல. பெரும்பான்மையின் பக்கத்துக்கும் நீதி சாயும். பெரும்பான்மையின் வாக்கினுலே சனநாயகம் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு 'சனிநாயகமாக மாறி விட்டது. அடுத்த சனி மாற்றம் எவ்வாறிருக்கும் என்பதே இன்றைய விவகாரங்கள் முடிவுகட்ட வேண்டியது.

ஊரடங்கு வாழ்வு 107
சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு இதுகாறும் கண்ட மாற்றங் களை அவதானித்துப் படித்தால் ஆளுங்கட்சிக்கே இந்தநாடு சொந்த மானதென்ற மனுேபாவம் தென்படும்.
இன்றைய ஆட்சியில் அரசியலமைப்பு வேண்டியபோதெல்லாம் திருத்தப்பட்டு வந்தது, ஆளுங்கட்சியின் மிதமிஞ்சிய பலத்தைக் காட்டுகிறது. அது, நாட்டின் பரிபாலனத்துக்கு அத்தியாவசியமான தென்று கொள்ள முடியாது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆடிக்கலவரம் ஆருவது திருத்தத் தைப் பிறப்பித்து தமிழ் மக்களின் வாக்குரிமையை உடனடியாகப்
பறித்துவிட்டது.
கடந்த ஆட்சியின் சாபக்கேடு அவசரகாலச் சட்டமென்று பழி கூறி வரும் இன்றைய ஆட்சியாளர் இதனையே மாதம் மாதம் அமுலுக்குக் கொண்டுவருகின்றனர்.
இன்று அவசரகாலச் சட்டம் ஏன் நீடிக்கப்பட வேண்டுமென்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்போது வடக்கு - கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்செயல் பட்டியல் சமர்ப்பிப்பதே ஒரு கைதேர்ந்த உபாயமாய்விட்டது.
எதிர்க்கட்சியினர் அவசரகாலச் சட்டத்தை அப்பகுதிகளிலேயே அமுல்படுத்த வேண்டுமென்று வாதாடுவது நியாயமாகும்.
ஆணுல் உண்மைநிலை என்ன? பாழ் செய்கின்ற உட்பகையும், கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, தீ வைத்தல், குண்டெறிதல் போன்ற குறும்புச் செயல்களும் நாட்டில் எங்கும் மலிந்து காணப்படுகின்றன. “பல்கழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு’ - இக்குறளை அளவுகோலாகக் கொண்டு எமது நாட்டின் இன்றைய நிலைமையைக் கணித்தால் இன்று சட்டமாக்கப்பட்ட ஆரும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் திருத்தங்களின் இரகசியம் புலப்படும். நாட்டில் குழப்பக்காரர் அதிகம். குறிப்பாக வடபகுதி பயங்கரவாதம்” இவ்வித திருத்தச் சட்டங்களால் முறியடிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆட்சிக்கு உண்டென்று தோன்றுகிறது.

Page 64
108 ந. சபாரத்தினம்
பெரும்பான்மை வாக்கு உண்டானுல் எதனையும் செய்து முடித்துவிட லாமா? இலங்கை ஒரு தனித்துவமான படைப்பா? கடந்த காலத்தில் பல சாதனைகள் இவ்வாறு புரியப்பட்டன.
தமிழர் அனைவரையும் நாடுகடத்த வேண்டுமென்ற தீர்மானம் பாராளு மன்றத்தில் நிறைவேறினுல் அரசியலமைப்புக்கு அது முரண்பட்ட தல்ல என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தால் நடப்பதென்ன?
சனநாயகத்தின் சாபக்கேடல்லவா இது?
கடந்த ஆட்சிகளின் இலாச்சிகளை, இன்றைய ஆட்சியின் இலாச்சி யைத் திறந்து பார்த்தால் எத்தனை எலும்புக் கூடுகள் அங்கு காட்சி யளிக்கும்?
யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கம், எரிந்தபோது அந்தச் செய்தி பிரபலப்படுத்தப்படவில்லை. அன்று அந்தக் கட்டிடத்தின் இடிபாடு களில் கண்டெடுத்த எலும்புக்கூடுகள், மனித எலும்புக் கூடுகளா இல்லையா என்ற பரிசோதனை நடத்தப்பட்டது. சட்ட வைத்திய நிபுணர் அவை மனிதனின் எலும்புக் கூடுகள் என்று முடிவு வழங்கியிருக்கிருர், இது வெளிப்புற எலும்புக் கூடுகள்; நாம் கருதுவது அகப்புறத்தினது. Skeletons in the Cupboard 6T6&T so glida Gafiti)6(5li gp52sor அழகாக வர்ணிக்கிறது. . . . ܙܚ ܟ• ."
சட்டித்துக்கும்.கன(னி). நாயகத்துக்கும் மேலாக, மனச்சான்று “ளன்ற ஒன்று உண்டு. . எலும்புக்கூடுகள் அனைத்தையும் அகற்றவல்ல அந்தப் பேரொளி பிரகாசித்தாலன்றி நாட்டுக்கு உய்வில்லை என்பது திண்ணம்,
31-8-84

மதசார்பற்ற அணுகுமுறை
இலங்கையில் சிங்கள மக்கள் - குறிப்பாக சிங்கள பெளத்தர் மாத் திரமே ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்று சிங்கள மக்கள் நம்பு வதாயின், அவர்கள் கனவுலகத்தில் வசிப்பவர்களே ஆவர்.
இலங்கையைத் தங்கள் நாடாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியவரும் இந்நாட்டு மக்களே. இவர்கள் யாவரும் தங்களுடைய சொந்த நன்மையை முன்னிட்டாவது
ஒன்றுபட்டிருந்து வாழ்ந்தாக வேண்டும்.
உலகத்தின் எப்பகுதியிலும் ஒரே தேசியச் சமுதாயம் என்பது ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம் என்று பொருள் கொண்டிருந்த தில்லை. இலங்கையிலும் இவ்விதம் இருந்ததில்லை. வரலாற்றைத் திரிப்பதில் பயனில்லை.
இது ஒரு சிறு நாடு; இந்தியா போன்ற பெருநாடு அல்ல. பலதரப் பட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வாழ்கிருர்கள் என் பதினுல் ஒரே தேசியச் சமுதாயமாக இந்தியா இல்லாது போக வில்லை; இன்றும் இந்தியாவில், பாகிஸ்தானிலும் பார்க்க அதிகமான முஸ்லிம்கள் இருப்பதைப் பலர் அறியார்.
அதேபோன்று இந்தச் சின்ன நாட்டில் சிங்கள மக்களுக்கு அயலவர் களாகத் தமிழர் இருப்பதினுல் தேசியச் சமுதாயம் பாழடைய வேண்டிய தில்லை; ஆனல், இவ்விரு சமூகங்களும் (இனங்களல்ல) ஐக்கியமாக வேண்டும்; இத்தகைய நிலைமை இருக்கும்போது தான் ஒருநாடு, ஒரே தேசியச் சமுதாயம் ஆகிறது. இன்று பேசப்படும் தேசிய ஒற்றுமை தமிழ் மக்கள் நன்கறிந்த “ஒற்றுமை’.
எனவே, ஐக்கியப்படுத்திக் கொள்ளும் சக்தி எங்கிருந்து கிடைக்கும்? வானத்திலிருந்து விழாது; அண்டை நாடாகிய இந்தியாவோ, தூர

Page 65
110 ந. சபாரத்தினம்
நாடுகளாகிய அமெரிக்காவோ, ரஷ்யாவோ, சீனவோ, ஜப்பானுே தங்கள் செல்வாக்கிலிருந்து உதவியாக வழங்க முடியாது.
நாம் முன்னே கூறினது போல் இந்த நாட்டில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற அசையாத உண்மை, ஆட்சியிலிருப் பவர்களுக்கும் அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் பெரும்பான்மை மக்களுக் கும் அடிப்படை உணர்வாக அமையவேண்டும். குறிப்பாக, சிங்கள பெளத்த மக்கள் நாட்டின் சுதந்திரத்துக்கு இடர் விளைக்கும் கருத்துக் களைக் கைவிடவேண்டும்.
அது இலகுவான காரியமா? இல்லையென்பதை நீண்ட காலமாக நாட்டை வருத்தும் பிணிநிலை இன்று தெளிவாக்கிவிட்டது.
இந்தப் பிணிநிலை, "போர் நிலையாக மாறி, நாம் நம்பக்கூடாத அளவிற்கு நாட்டுக்குத் தீங்கு விளைக்குமென்பதை ஆட்சியாளர் மட்டு மல்ல பொதுமக்கள் உணர்ந்தபாடில்லை. பொதுமக்கள் தாமே சிந்திக்குமளவிற்கு கட்சி ஆட்சி அமைந்திருக்கவில்லை.
இது ஒரு தமிழனின் அல்லது தாக்கப்பட்ட சமூகத்தினரின் வெறும் வெருட்டல்ல.
இன்று நடைபெறும் சம்பவங்களை நிதானமாகப் புரிந்து கொண்டால், தமிழ் மக்களுக்கு எதுவித பாதுகாப்பும் இல்லையென்பதும், அவ்வித அச்சத்தாலும், ஆத்திரத்தாலுமே இந்த அழிவுப்பாதை திறக்கப் பட்டிருப்பதும் தெளிவாகும்.
இப்பாதையில் சிங்கள இளைஞர்கள், தமிழ் இளைஞர்கள், தமிழ் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் அழிவதை நிறுத்த முடியாது திண்டாடும் நிலை பரிதாபமானது.
அது நிற்க, விடயம் என்னவென்ருல் வாசாலமாகப் பேசப்படும் சம உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது; அதனுல் எழுந்த குழப்பமே இன்று முற்றியிருக்கிறது.
ஆளும் சமுதாயம் ஒன்று; மற்றவை ஆளப்படும் சமுதாயங்கள். * தமிழ் மக்கள் உரிமை' என்ற போராட்டம் இந்த அடிப்படைப் பாகு பாட்டில் எழுந்தது. இன்று விசித்திரநிலை அடைந்திருக்கிறது.

ஊரடங்கு வாழ்வு 111
இந்தப் பாகுபாடு சமய, அரசியல் தலைவர்களின் போதனையால், சாதனையால் முற்ருக நீங்கிவிடும் பண்டமல்ல. “தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து போகட்டும்’ என்ற மனப்போக்கு இனிமேல் உதவா தெனலாம்.
இலங்கையில் ஒரேஒரு சமுதாயம், அது சிறிலங்கன் சமுதாயம் என்று பேசிவரும் ஜனதிபதி, பிரதமர், பந்தோபஸ்து அமைச்சர் போன்ற சிங்களத் தலைவர்கள் எதனைக் கருதுகின்றனர்? சிறிலங்கன் சமுதாய மென்ருல் சிங்களச் சமுதாயம் என்பதே. சத்தியத்திற்கு மாருன இக் கொள்கை எவ்வாறு வெற்றியடையும்?
இதனை நிரூபிக்கும் பொறுப்பு எமதல்ல. எங்கு பார்த்தாலும் இதனை நாம் காணும்போதும் கேட்கும்போதும் இது இலகுவில் புலப்படும். இந்த நிலைமை முற்ருக மாறவேண்டும்.
தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அபாயநிலை, அவர்களின் எவ்வித பாதுகாப்புமற்ற கொடுமைநிலை, ஆட்சியாளருக்கு அனுதாபம் ஏற் படுத்துமானுல் இராணுவம் உடனடியாக இப்பகுதியிலிருந்து எப்பவோ திருப்பி அழைக்கப்பட்டிருக்கும்.
பேச்சைவிடக் காரியம் சிறந்தது. குழப்பத்தைப் பெருப்பிக்கும் பேச்சைக் கைவிட்டு பத்திரிகைகளின் கோளையும் குள்ளப்போக்கையும் மட்டுப்படுத்தி, சமாதானத்திற்குதவும் திடமான முடிவில் இறங்க வேண்டும். அதற்கு மதசார்பற்ற அணுகுமுறை நல்ல பலனளிக்கும். பெளத்த மதத்தினருக்கும், சங்கத்துக்கும், ஏனைய தலைவர்களுக்கும் தமிழ் மக்களில் அணுவசியமான சந்தேகம் இருக்கவேண்டியதில்லை.
மதரீதியில் மொழிப்பாகுபாட்டில் இவ்விரு சமூகங்களுக்கும் இனிமேல் மோதல் ஏற்பட நியாயமில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய உறை விடங்களை தாமே விருத்தி செய்யவும் பாதுகாக்கவும், உரிமையும் அதிகாரமும் உண்டென்ருல் நாடு பூரண சுகமடையும்.
21-9-84

Page 66
நாட்டின் பாதுகாப்பு
பகையின்றி வாழ்வதே மக்கள் சமுதாயத்தில் உயர்ந்த லட்சியமாகும். அதுவே அச்சமின்றி மக்கள் இன்பமாக வாழ்வதற்கு துணையாகும். பகைவனையும் தன்வசப்படுத்தும் பண்புடையாளன் சொல்லின்படி நடந்தால்தான் உலகம் அமைதியாக வாழமுடியும் என்பது தமிழ் மறையின் கருத்து.
எங்கள் நாட்டின் இன்றைய நிலைமைக்குப் பொருத்தமான இன்னுெரு கருத்தையும் தமிழ் முனிவர் மிக அழகாகக் குளிகைபோல் உருட்டி யிருக்கிருர்,
இளைதாக முள்மரம் கொல்க : களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து இலங்கையின் பாதுகாப்புக்கு, வருகிற வருட வரவு செலவுத் திட்டத்
தில் முந்நூறு கோடி ரூபா ஒதுக்கப்படவிருக்கிறது. இதனை நிதி அமைச்சர் ருெனி டி மெல் முன்கூட்டியே அறிவித்திருக்கிருர்,
ஏழு வாரங்களில் வெளியாகவிருக்கும் பட்ஜெட்டில் உத்தேசச் செலவு சுமார் 6000 கோடி ரூபா என்றும் வரவு 3000 கோடியென்றும்; எனவே துண்டு விழும் தொகை 3000 கோடியென்பது நிதி அமைச்சரின் திட்ட மாகவிருக்கிறது.
இடைவெளியை நிரப்புவதில் அமைச்சருக்கு அதிக சிரமம் இருக்கு மென நினைப்பதற்கு இடமில்லை; வழக்கம்போல வெளிநாட்டு நிதி உதவி, கடன் உதவி, உள்நாட்டுக்கடன், மற்றும் வரிகள் சொன்னது கேட்குமென்பது அமைச்சரின் துணிவாகலாம். ஆண்டாண்டு தோறும் நடக்கும் பயிற்சி.
இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடியது, இன்றும் அரசு சொல் லிக் கொண்டுவரும், "உள்நாட்டுப் பிரச்சனை’-தமிழர் பிரச்சனை.

ஊரடங்கு வாழ்வு 113
அரசுக்கு இன்ருெரு பிரபல மூதறிஞர் பலமளிக்கிருர், தள்ளாத வய திலும் மிகத் தைரியமாக "இலங்கைத் தமிழர் பிரச்சனை அதன் உள் நாட்டு அலுவல்; இந்தியா எவ்வகையிலும் தலையிடக்கூடாது' என்று மொழிந்திருக்கிருர் முன்னுள் இந்தியப் பிரதமர் மொருஜி தேசாய் அதுவும் தமிழ்நாட்டில் இவ்வாறு கூறியிருக்கிருர்,
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இவ்வாறு கருதுபவர்கள் இவரைத் தவிர வேறெவரும் இல்லையெனலாம்; துணிவாக, இத்ததைய கருத்தை ஆதரிக்காத சமூகத்தில் திரு. தேசாய் கூறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; எதிர் நீச்சல் போடுவதில் இன்று இந்தியாவில் அவருக்கு நிகர் அவரென்ருல், பாம்புக்கடிக்கு முதல் உதவியாகப் பருகும் மருந்து, அன்ஞரின் தினசரி பானமென்பது, அவருடைய உடல், மன வலிமையின் ரகசியமாகும்.
இன்று, இந்த ஒரு தனி மனிதனின் கருத்தை, தண்ணிரில் விழுந்து தத்தளிப்பவன் கையில் அகப்பட்ட துரும்பைப்போல் எங்கள் கொழும்புத் தினசரிகள் சில, தலையங்கமாகத் தீட்டுகின்றன.
இந்த நாடே இன்று, அல்லோலகல்லோலப்பட்டு நாகரிக உலகின் அவமதிப்பைத் தாங்கொணுத கட்டத்தில், பொதுஜன அபிப்பிராயத் தாலும், இந்தியாவின் நட்பு நெருக்குதலாலும், இதனைத் தீர்த்து வைக்கப் பாடுபடுகிறது.
இந்தப் பிரச்சனை குறித்து, இந்திய அரசின் போக்குபற்றி இங்கு மட்டுமல்ல இந்தியாவிலுமே தெளிவற்ற கருத்து நிலவுகிறது.
இது உங்கள் பிரச்சனை, நாங்கள் தலையிடமாட்டோம். இதனைத் தீர்க் காது தமிழர்கள் கொலை தொடருமாயின் சும்மா கைகட்டிக் கொண் டிருக்கமாட்டோம் என்பது இந்தியப் பிரதமரின் தெளிவான பேச்சு. தெளிவான பேச்சென்ருலும் அதில் சந்தேகமிருப்பது கேட்போரின் மனுேபாவத்தைப் பொறுத்தது. மனிதஉரிமை மீறப்படுவது என்ருல் இங்கு வாழும் தமிழர் உயிருக்கு உலைவைக்கிறதென்ற கருத்து உரம் பெற்றிருக்கிறது.
இந்தச் சின்னஞ்சிறிய, வறிய நாட்டில் கடனில் ஒடும் அரசு; "பாது காப்புக்கு 300 கோடி ரூபா தேவைப்படுவதென்ருல்"; முனிவர் கூறும் முட்செடி முற்றி வைரம் ஏறிவிட்டதாக எண்ணவருகிறது.

Page 67
114 ந. சபாரத்தினம்
இதில் நாம் பெரும் பொறுப்புடன் அவதானிக்கும் சிக்கல் ஒன்று உண்டு.
இலங்கை அரசு பயங்கரவாதம் என்று பாடம் பண்ணிவரும் இயக்கத் தின் அடித்தளம் இந்தியாவென்பது இன்று பகிரங்க ரகசியம்.
அன்றுதொட்டு இன்றுவரைக்கும் இலங்கையின் போர்க்கொடி இவ் விடயத்தில் இந்தியாவிடம் என்ன சலுகை பெற்றிருக்கிறது?
இன்ருவது எங்கள் நாட்டின் நலன் கருதி இந்திய அரசின் கருத் தொன்றை நாம் புரிந்தேயாக வேண்டும்.
தமிழர் "பயங்கரவாதம் பயங்கரவாதமல்ல; அது ஒருவித விடுதலைப் போர் என்ற கருத்து, இந்திய அரசின் நடவடிக்கைகளில் புலனுகிறது. இந்த முரண்பாடே இன்று இலங்கைக்குத் தர்மசங்கடமாகிறது.
இன்று, யாழ்ப்பாணத்தில் நிலவும் பயங்கரக்குழப்பம், ஒரு யுத்தமாக விருத்தியடைய வேண்டுமா? அதனைத் தடுப்பதற்கு இந்தியா என்றும் உதவத் தயாராகும்.
இந்து சமுத்திரத்தில் எவ்வித போரையும் விரும்பாத இந்தியாவைப்
பகையாகக் கொண்டால் தமிழர் பிரச்சனையில் சமாதானத் தீர்வை எதிர்பார்க்கலாகாது. . ܫ
புல்லறிவாண்மை நீங்கியவிடத்து, பகைவரை இனங்காணும் அரசியல் ஞானம் உதயமாகும்.
24-9-84

"தனிச்சிங்கள" நினைவுதினம்
இலங்கையின் நான்காவது பிரதமர், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்கா நினைவுதினமென்ருல், தமிழ் மக்களுக்கு தனிச் சிங்களச் சட்டமே முதல் நினைவாக வரும்.
அந்தச் சட்டம் ஏட்டில் இடம்பெற்றபோது தமிழ் மக்கள் விட்ட கண்ணிர் கூரிய வாளாகவே இன்றும் இருக்கின்றது.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும், வளர்ந்துவரும் தமிழ்த்தேசியம், தமிழின ஒற்றுமை, ஆட்சியாளரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலி யாகவில்லை. -
தேசத்துக்கு எதிராகத் திரண்ட எதிர்ப்பல்ல இது. தமிழ் மக்களைப் பாதுகாக்கவல்ல போர்க்கவசம் எனலாம். எனவே இன்று அமரருக்கு அஞ்சலி உரித்தாகுக.
தமிழரைப் பெளத்தராக மதமாற்றம் செய்யும் முயற்சியும் பெளத்தமே நாட்டின் அரசமதமென்ற சட்டம் இயற்றவேண்டுமென்ற எத்தனமும் அமரர் பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களச் சட்டத்தின் எதிரொலிகள்! இவ்வித தனித்துவ சட்டமும் அது விளைத்த அனர்த்தங்களும் யாரைப் பாதித்தன? இங்கு அனுதியிலிருந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களையே! 1956-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இச்சட்டம், பாராளுமன்றத்தில் வாதத்திற்கு வந்தபோது, இராப்பகலாக இதனை எதிர்த்துப் பேசிய பெரியோர்களில், அமரர் ஜி. ஜி. பொன்னம்பலம் வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் இன்று உண்மையான உருவம் எடுத்திருக்கிறது. ”
தமிழ்மக்கள் எத்தனை நூற்ருண்டுகள் கழிந்தாலும், சந்ததி சந்ததி யாக இதனை நிராகரிப்பார்கள் என்ருர் பொன்னம்பலம்.

Page 68
116 ந. சபாரத்தினம்
சொற்பொழிவு வேறு; கருத்துரை வேறு; மாரிபோல் ஓயாமற்பேசக் கூடியவர்கள் பலரை நாம் காண்கின்ருேம்; ஆணித்தரமான கருத்தை மக்கள் முன்வைக்கும் சொல்வன்மையில் சக்தி பிறக்கின்றது. இதனை நாம் இன்று ஏற்கவேண்டியிருக்கிறது.
தனிச்சிங்களம் இன்று பல விதமான பக்க நோய்களை வருவித்துக் கொண்டது; தமிழ்ச் சமுதாயத்தையே ஒழித்துக்கட்டுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது; அர்த்தமற்ற சந்தேகம் என் பதை நிரூபிக்கும் பொறுப்பு எமக்குண்டு.
அதற்காக, பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி போல, ஒக்ஸ்போர்ட்டில் படித்து, பேச்சாளராகப் பிரபலம் பெற்று, பின்பு நாட்டின் பிரதமராகத் திகழ்ந்து, சடுதியில் மறைந்த பெரியவரே இன் றைய துன்பியல் நாடகத்தின் கர்த்தா எனலாமா?
அது தவறென்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத் தெளிவாகும்.
தவருே சரியோ, என்று திட்டவட்டமாகக் கூறும் துணிவு வரலாற்று நிபுணருக்கே இவ்வளவு விரைவில் முடியாத காரியம்.
ஒன்று மட்டும் சொல்லலாம், அமரர் பண்டாரநாயக்காவின் ஆட்சி தேசிய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது; ஆணுல், தமிழ் மக்கள், இச்சட்டத்தை எவ்வாறு, எவ்வளவு காலம் எதிர்ப்பார்களென்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது இன்று நிச்சயமாகின்றது.
புத்தகப்படிப்பிலும் பல்கலைக்கழக ஆராய்ச்சி முறையிலும் பாண்டித் தியமடைந்த அவருக்கு, இயற்கை சாதுர்யம், ஆளுந்திறம் மத்திம மென்பது முதற் பிரதமருடன் ஒப்பிடும்போது தெரிகிறது.
அன்று ‘டி. எஸ். அவர்களை, அவருடைய குதிரை ஆட்சியிலிருந்து நீக்கியிராவிட்டால், இலங்கையின் இன்றைய வரலாறு இவ்வா றிருக்காது.
எமக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் வெகுதூரம்; எட்டியளவிற்கு தெரிந்ததையே இன்று நினைவுகூரவேண்டி இருக்கிறது.

ஊரடங்கு வாழ்வு 117
தமிழ்மக்களின் பாரம்பரிய பலம், பலவீனம் முதற் பிரதமர் நன்கறிந் தவை; எனவே "ஹெமிங் ஹெமிங்" என்பது அவருடைய மந்திரம்.
போர்த்துக்கேயர் ஆட்சியில், திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமி கள், அன்றைய அதிகாரியின் உணவுக்கு, பசு கொடுக்க மறுத்து, சிதம்பரம் போய், சிவஞானபோதத்துக்கு அரிய உரை எழுதிய சாதனை தமிழரின் பாரம்பரிய பலத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்.
தகப்பனுக்குப் பின் தனயன்” என்ற ரகசியம் வெளிவந்ததும், முதற் பிரதமரின் அமைச்சரவையை விட்டு வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு அத்திபாரமிட்டவர், அமரர் பண்டாரநாயக்கா. அப்போது அது எம். ஈ. பி. என்ற பெயர் கொண்டது.
ஆட்சிபீடம் ஏறுவதற்கு வழி 'தனிச் சிங்களம்” விரும்பிய மக்களைத் திருப்திப்படுத்தல், "அதுவும் 24 மணி நேரத்தில்'; அதற்கு எதிர்ப்பு என்ருல், "தமிழின் நியாயமான உபயோகம்’ என்ற புஸ்வாணம், இவை, இன்றைய இடர்களின் தொடக்கம்.
ஆட்சித்திறன், ஒரு விஞ்ஞானப் போக்குடைய அருங்கலை. கல்வி, ஆராய்ச்சி அவசியமானுலும், மதிநுட்பம் அவற்றிலும் மேலாகத் தேவை. எவ்வகையிலும் நாம் பெற்ற சுதந்திரம் நமக்கேயுரியதென்று சிங்களத் தலைவர்கள் எண்ணிவிட்டார்கள்.
ஆட்சி அதிகாரத்துக்காக, பொதுமக்களைத் தட்டிவிட்டு அரசியல் అనీని வழிகளைக் கையாண்டதின் விளைவே இன்றைய அபாய லெ.
இதற்கு ஒருவரோ, ஒரு கட்சியோ பொறுப்பென்று சொல்வது பொருந் தாது. அமரர் பண்டாரநாயக்காவின் ஆட்சியில் உதயமான 1958 இனக்கலவரம், இன்று வரைக்கும் தொடர்ந்திருப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கொள்ளவேண்டும்.
இதற்கு மறுபக்கம், இன்னெரு முக்கிய திருப்பம் இந்தியாவுக்கு முடித் தப்பிய இன்றைய "ஞானப்பிரகாசங்கள்". இவர்கள் திரும்பு வார்களென்பது, திடமளிக்கின்றது.
26-9-84

Page 69
திரிசங்கு சுவர்க்கம்
தற்போது நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இலங் கையைப்பற்றி, இரு வேறுபாடான கோரிக்கைகள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசின் பெயரில், வெளிநாட்டமைச்சர், சர்வதேச பயங்கர வாதத்தை ஒழித்துக்கட்ட அங்கத்துவ நாடுகள் ஒத்துழைக்கவேண்டு மெனக் கோரியுள்ளார்; சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமே இலங்கையைத் துன்புறுத்துவதென்பது அவருடைய வாதம் : இலங்கை அரசின் பிடிவாதம்.
இலங்கையரசு, இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அங்குவாழும் சிறுபான்மை இனமான தமிழர்கள் கொல்லப்படுவதால் மனித உரிமை படுமோசமாக மீறப்படுகிறதென்றும், அதனைத் தடுத்து நிறுத்த ஐ. நா. உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டு மென்பது ஐ. நா. மனித உரிமை உபகமிட்டியின் கோரிக்கை.
இவ்விரு முரண்பட்ட முறைப்பாடுகள் ஒரு நாட்டைப்பற்றிய்ே என் பது பலருக்கும் வியப்பாகும். சிலர், இலங்கை ஒரு புெரும் தேத மல்லவே; எனவே இந்த்ப் பிணக்கு இந்தச் சிறுநாட்டில் நிலைத்திரும், பது எவ்வாறு என்றும் நினைக்கலாம். . . . .
ஐ. நா. என்ற சர்வதேச மன்றத்துக்கு இதுபோன்ற பல பூசல்களும் *போர்களும் பழம்பாடம்; ஆணுல் இதனைப் புறக்கணிக்கவோ அலட்சியம் செய்யவோ அதன் அமைப்பும், ஒழுங்கு முறையும் இட மளிக்காது.
பலவிதமான பரிசீலனைகள், விளக்கங்கள், வியாக்கியானங்கள் கடந்த நிலையில், “பழங்கஞ்சியான" பக்குவத்தில், தீர்வு ஒன்று கிட்டலாம். அதற்கிடையில், நினைக்க முடியாத மாற்றங்கள் ஏற்படலாம்; எதனையும் நிசமென்றுகூற இயலாது.

ஊரடங்கு வாழ்வு 119
இப்பிரச்சனையின் உடனடி அபாயம் யாழ்ப்பாணத்தை பீடித்திருக் கிறது. சிறிமா அம்மையார் கூறியதுபோல 'வடக்கில் நிலைமை மோசம் போல் தெரிகிறது. உண்மையை அறிய முடியவில்லை.”*
இங்குவாழும் மக்களுக்கே இதன் அடிப்படைக் காரணம் தெரிந்த போதும், இன்றைய யாழ்ப்பாணச் சம்பவங்கள் எத்திசையை நாடு கின்றன என்பது தெரிவதில்லை.
பந்தோபஸ்து அமைச்சரின் நேரடிக் கூற்றுக்களைப் புரியமுடியுமானுல் உண்மைநிலை ஓரளவிற்கு விளங்கும்.
"இந்தப் போர் எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல; இதனை, நான் ஒருவனே துணிவாகத் தென்பகுதியில் சொல்லி வருகிறேன்’ என்று பெருமை கொள்கிருர் லலித். சந்தையில் அடி பட்டவனுக்கு சாட்சி வேண்டுமென்பது போல, வவனியாப் படுகொலை யைப் பரிசீலித்திருக்கிருர் பந்தோபஸ்து அமைச்சர்.
*"பயங்கரவாதத்தை ஒழிப்பதே நோக்கம், இதற்காகவே பாதுகாப்புப் படையினரை நாம் பாவிக்க வேண்டியிருக்கிறது; பயங்கரவாதம் தலையெடுத்தால் நாடு முழுவதும் நெருப்பில்தான்' என்பதும் அவர் *இந்து பத்திரிகைக்களித்த பேட்டியில் காணப்படுகிறது. இது காணி வழக்கென்பது மறைக்கப்பட்டது.
"பயங்கரவாதம்’ என்ற சிங்கத்தின் தாடியை, அதன் குகையிலே பிடித் தாட்டும் பெரும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் லலித், இந்தச் சிறு காலனல்லையில் எவ்வித அற்புதத்தை நிலைநாட்டுவா ரென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. சிங்கங்கள் (புலிகள்) இருந்த வாறிருக்க, சிறு பிராணிகள் வேட்டையாடப்படுகின்றன. சிறிமாவோ அம்மையார் காலங்கடந்தாவது கண்ட உண்மையை பந்தோபஸ்து அமைச்சர், ஏற்கனவே அறிந்திருக்கிருர், நோய் வேறு; அதன் குணம் வேறு: "பயங்கரவாதம்' என்று தவருக எண்ணிக் காலங் கடத்துவது பலனளிக்காது.
குடாநாட்டின் குட்டி யுத்தங்களின் முடிவை அறிவித்துவரும் அமைச்சர் லலித், இதுகாறும் "எமது எதிரிகள் ஒரு அங்குலக் காணியையும் கைப்பற்ற முடியவில்லையே' என்று பெருமிதங்கொள் வது சிந்தனைக்குரியது.

Page 70
120 ந. சபாரத்தினம்
* யூரெக்கா’ (கண்டு விட்டேன்) இது காணி வழக்கு? இது உண்மை யில் பயங்கரவாதப் போரல்ல" என்பது இதனுல் வெளிப்படுகிறது. அன்று, கிரேக்கத் தத்துவஞானி குளிப்பறையிலிருந்து ‘கண்டு விட்டேன்’ என்று கதறிக் கொண்டு வெளியே வந்த நிருவாணக் கோலம் நினைவுக்கு வருகிறது.
காணி வழக்கு இலகுவில் தீராது; யாழ்ப்பாணம் பெரிய கோட்டின் பண்டைய ஆவணங்கள் இதற்குச் சான்ருகும். *காணியில் குடி யிருக்க விட, அவன் சொந்தம் பேசுகிருன்" என்பது வழக்காளியின் வாதம.
ஆனல் ஆவணங்களில், உறுதிகளில் கூறப்பட்டிருப்பதை விளங்கி முடிபறிய ஊழிகாலம் எடுக்கும்.
காணி வழக்கை யாழ்ப்பாணத்தவர் விடுவதில்லை; இந்த நோய் தென்பகுதிக்கும் தொற்றிவிட்டது.
*திரிசங்கு சுவர்க்கம்" என்ற பெருமூச்சு வருகிறது.
28-9-84

ஐந்து வருட அர்த்தமற்ற போர்
உங்கள் கணவனுக்கு எது விருப்பம்; யுத்தமா? சமாதானமா? என்று திருமதி நான்சி ரீகனை சோவியத் வெளிவிவகார அமைச்சர் குரோமிக்கோ கேட்டார்.
‘சமாதானம்" என்ற விடை கிடைத்தது. 'நல்லது ஒவ்வொரு இரவும் அந்தச் சொல்லை அவர் காதினில் ஜெபித்துவிடும்.'
'தங்களுடைய காதினிலுமே அப்படிச் செய்கிறேன்" என்று சுடச் சொன்னர் நான்சி.
இச்சம்பாஷணை ஒரு தேநீர் உபசாரத்தில் நடந்ததெனினும், அதில் மறைந்திருக்கும் தத்துவம், உணராத உலகில் அமைதி நிலவாது.
இதனைத் தெளிவாக ஆராய்ந்து, அரிய கருத்துரை வழங்கியிருக்கிருர் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைத்திட்டக் கமிட்டித் தலைவர், அமைச்சர் அந்தஸ்துடைய திரு. ஜி. பார்த்தசாரதி.
அணிசேரா நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டை, ஐ. நா. வில் கூட்டித் தலைமைவகித்துப் பேசிய திரு. பார்த்தசாரதி உலகின் அபாய நிலையங்கள் அனைத்தையும் விரிவாக ஆராய்ந்திருக் கிருர்,
குறிப்பாக, மூன்ரும் உலக நாடுகள் - இரு சகோதரர்கள் ஈராக், ஈரான் ஒருவரையொருவர் கொல்லும் சாதனை, ஐந்தாவது வருடத் தில் தொடர்கின்றது. இந்தியாவும் அதன் நேச நாடுகளும் இதனை நிறுத்த பல நடவடிக்கைகள் எடுத்த போதும், இது இன்னும் நின்ற பாடில்லை என்ற கவலை பார்த்தசாரதியின் பேச்சில் முக்கிய இடம் பெறுகின்றது.

Page 71
122 ந. சபாரத்தினம்
தொடக்கத்தில் நாம் குறிப்பிட்ட சம்பாஷணை, ஒரு அடிப்படை உண் மையை விளக்குகிறது. போகும், சமாதானமும் மனிதர் மனத்தில் எழும் உணர்வில் உருவாகிறது.
ஈராக் - ஈரான் யுத்தம் இதற்கு நல்ல உதாரணமாகிறது.
நான்கு வருடங்களுக்குமுன் (செப்டம்பர் 22, 1980) போரைத் தொடங் கினது ஈராக். இன்று அதனை முடிக்க வேண்டுமென்று அந்தரப் படுவதும் அந்த நாடே. ஆதியில் தோல்வியடைந்த, ஈரான் எந்தவிதத் திலும் போரைத் தொடரவேண்டும் என்ற வெறிபிடித்திருக்கிறது.
போர் என்ற பேரழிவு தொடங்கிவிட்டால், அதனை முடிவுகட்ட ஒரு பக்கத்துக்கு வெற்றிகிட்ட வேண்டும்; அல்லது பேச்சு வார்த்தை மூலம் யுத்த நிறுத்தம் அமுலாக்கப்படவேண்டும்.
இவ்விரண்டும் கிட்டாத நிலையில் வளைகுடா யுத்தம், எவ்வித அழிவைத் தொடர்ந்து உருவாக்குகிறது?
இதுவரையும் இரண்டு லட்சம் மானிடப்பிறவிகள் உயிரிழந்திருப்பதாக மதிப்பீடு குறிக்கிறது. இரு நாடுகளின் பொருளாதாரம், பலகோடி ரூபாக்கள் நட்டம் கண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் ஈரர்க் ஒரு சில மாதங்களில் ஈரானை முடித்துவிடலா மென்று நம்பியிருந்திருக்கலாம். எடுத்த எடுப்பில் ஈரானின் எண், ணெய் உற்பத்தியின் கேந்திர ஸ்தானங்களுக்கு பலத்த அடிகொடுத்து பெரு வெற்றி பெற்றது. 1982-ன் ஆரம்பத்தில் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியதும் எதிரியைத் தனது சொந்த நாட்டுக்கே புறங்காட்டுமளவிற்குத் துரத்திவிட்டது.
கடந்த இருவருடங்களில் தொடரும் யுத்தம், அர்த்தமற்ற, உயிரும் உடைமையும் வீண்விரயமாகும், வெற்றிதோல்வி இல்லாப் போரா
கவே இருக்கின்றது.
இன்றைய செய்தியைப் பார்த்தால் ஈரானின் புரட்சியரசு என்ன
வந்தாலும் ஈராக்குடன் தொடர்ந்து போராடி ஒரு முடிவுகாண வேண்டுமென்று, பிடிவாதம் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

ஊரடங்கு வாழ்வு 123
மேற்கு ஜெர்மனியின் பிராங்பேட் விமான நிலையம் ஊடாக, இஸ்ரேல் ஈரானுக்கு யுத்த ஆயுதம் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
இச்செய்தியை ஈரான் மறுத்தபோதும், இத்தகைய தர்மசங்கடம் போரில் எழுவது சகஜம்.
ஹிட்லரை ஒழிக்க அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் இணைந்ததை இன்று பார்க்கும்போது, ஒரு நம்ப முடியாத நிகழ்ச்சியல்லவா?
ஈராக் தேசத்துக்கு, ஆரம்பத்தில் வளைகுடா நாடுகள் பணத்தாலும், ஆயுத பலத்தாலும் உதவின. சோவியத் ரஷ்யாவே தரமான ஆயுதங்கள் கொடுத்கு உதவிற்று. பிரான்ஸ் மிக உயர்தரமான போர் விமானங்களை உதவியது. . . . .
இவற்றையெல்லாம் எதிர்த்து, தனித்துநின்று போராடிய ஈரான் மனித பலத்தில் தங்கிநின்றது. போரின் நோக்கம் எவ்வகையிலும் நிறைவேறவேண்டுமென்ற தீவிரம் கொண்டிருக்கிறது. நோக்கம், போர் தொடங்கிய எதிரியை முடித்துவிடுவதே.
நியாயமான முறையில் ஒரு சமாதானத் தீர்வு ஏற்படுவதற்கு, இந்த மனுேபாவம் பெருந்தடையாகின்றது.
இஸ்ரேல், இந்தநிலையில் போரைத் தொடர ஈரானுக்கு உதவுவதும், கற்ப்னைக் கெட்ட்ாத செய்தியாக, ஈரான் அதனை ஏற்கலாமென்பதும் ப்ோரின் விபரீதமென அறிக . . . . . .
9-10-84

Page 72
பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை
புல்லர் (Fuller) என்ற பிரதம நீதியரசர் பற்றி அமெரிக்க மக்க% பெருமை பேசும் கதை உண்டு. அவர் பிரபல வழக்குரைஞராக பணிபுரிந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிக்கு சட்டம் தெரியா தென வாதாடினுர்.
*ஒவ்வொருவருக்கும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும்" என்று உறைப் பாக நீதிபதி பதிலளித்தார்.
*அது எனக்குத் தெரியும்; கொல்லன், தச்சன், கட்டாடி, நாவிதன், எழுத்தறிவில்லாத தொழிலாளி எல்லாருக்கும் சட்டம் தெரிய வேண்டும் பிரபு 1 ஆணுல் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்குத் தெரியத் தேவை யில்லை; அவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காகவே அப்பீல் உயர்நீதிமன்றம் இருக்கிறது" என்ருர் புல்லர். இம்மாதம் 22ம் தேதி ஒய்வுபெறும் பிரதம நீதியரசர் நெவில் சமரக் கோன் இத்தகைய துடிதுடிப்பும், துணிவுமுடைய வழக்கறிஞர் என்பது இன்று நாடனைத்திலும் தெரிந்த விடயம்: அவருக்குப் பிரியாவிடை யென்ருல் நீதிக்குப் பிரியாவிடை என்பது அர்த்தமல்ல.
அவருடைய உயர்நீதிமன்றக் கடமைகளில் சட்டம் பற்றிய தில்லு முல்லை சுதந்திரமாகவும் அஞ்சாநெஞ்சுடனும் ஆராயும் திறமை பெற்றவர் அவரென்பது இன்று உறுதியாகிறது.
இன்று அவருக்கு நடக்கவிருக்கும் பிரியாவிடை விருந்தும், அதனைத் தொடரவிருக்கும் நீதிமன்ற உபசாரமும் ஒருவகையில் தனித்துவ மானவையென்று கூறப்படுகின்றது.
காரணம் கண்டுபிடிப்பது கடினமல்ல. நாட்டின் நிர்வாகத்தில் மிகப் பெரிய பதவி வகிக்கும் ஒருவர், கடந்த ஆட்சி முறையில் மகா

ஊரடங்கு வாழ்வு 125
தேசாதிபதிக்கு அடுத்த இடத்தை எடுத்து, அவரில்லாதபோது அரச தலைவராகப் பொறுப்பெடுக்கும் பேர்வழி தமது பதவியை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் நிலவியதை யாரறிவார் ?
வருகிற திங்கட்கிழமைக்கு முன், அது நினைத்தாலும் நிறைவேரு தென்ற மனநிறைவு மக்கள் மத்தியில் நன்கு புலப்படுகிறது.
இந்த அனுதாபத்தைப் பிரதிபலிப்பதே வழக்குரைஞர் சங்கம் எடுக்கும் இன்றைய பெருவிருந்து. அரசனுக வீற்றிருந்த உய்ர்நீதிமன்றத் திலும் அவருக்கு மிக மேம்பாடான பாராட்டுக் கிடைக்குமென்பதில் ஐயமில்லை.
பிரதம நீதியரசரின் தனிப்பட்ட ஆளுமையையோ, குணநலனையோ ஆராய்ந்து பாராட்டுவது எமது நோக்கமல்ல.
நாட்டின் நீதித்துறைக்குத் தலைமை வகித்த ஒருவர், அரசின் விசாரணைக் குட்பட்டு, பதவி நீக்கம் செய்யப்படும் அவல நிலைக்குள்ளாவது ஒரு பாரதூரமான நிகழ்ச்சி.
இலங்கை, இதுகாறும் கண்டிராத அனுபவம். சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை பிரதம நீதியரசர் கடைப் பிடித்ததோடு, அவருடைய தலைமையில், அவருடைய சகாக்கள் நீதி தளம்பாது கடமையாற்றவும் அவர் சாதகமாக இருந்ததை நாடறியும். பிரதம நீதியரசர் மற்றெவரைப் போலவும் நாட்டின் பிரஜை. எனவே எவருக்குமுரிய சுதந்திரம் அவருக்கும் உண்டு. w
அவ்வகையில், அவருடைய பேச்சு ஒன்றில் ஜளுதிபதியைத் தாக்கும் கருத்திருந்தால், அது ஒரு நீதியரசருக்குப் பொருத்தமான செயல் அல்ல, ஆட்சியின் மதிப்பைக் குறைக்கும் செயல் என்று வாதாடப் பட்டது.
அதில் உண்மை உண்டு. தனிப்பட்ட அல்லது உத்தியோக தோரணை யில் ஜஞதிபதியில் மனக்கசப்பு இருந்தாலும் பதவிக்கேற்ற பண்பு அவசியம்.
அதற்கு பங்கம் ஏற்பட்டால் பதவிநீக்கமா மருந்து? நோயினும்
கொடிய மருந்து என்பது தெய்வாதீனமாகவே விலக்கப்பட்டுள்ளது. அது விலக்கப்பட்டதால், அவ்வாறு கருதவேண்டியிருக்கிறது.

Page 73
126 ந. சபாரத்தினம்
மக்கள் இறைமை பற்றி அதிகம் பேசும் ஆட்சியாளர், அதனைப் பேண, நீதித்துறையின் சுயாதீனத்தை எவ்வகையிலும் பாதுகாக்க வேண்டும். நாட்டின் நன்மைக்கு மட்டுமல்ல, ஆட்சியின் பாதுகாப்புக் குமே அது அவசியமாகின்றது.
"சட்டம் இயற்றும் அதிகாரம் எமது கையில்" என்ற அகங்கார்ம், நீதியைக் கொலை செய்யும் ஆயுதம். அரசியல் தலையீடே அந்த ஆயுதம்.
இன்று, நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் பற்றி, நாம் இங்கு விரிப்பது பொருத்தமற்றது. அது எவ்வளவு தூரம் அரசியலுக்கு பலியாகிறதென்பது எவருக்கும் தெரிந்ததே.
ஆட்சியாளரின் ஆக்கப்பணிகளுக்கு, நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை யாக இருக்கலாகாது. அதனை நாம் ஒப்புக்கொள்கிருேம்.
அதே சமயம் எந்தச் சட்டத்தையும் ஆராய்ந்து, அதனை விமர்சிக்கும் அதிகாரமும் சுதந்திரமும், உயர்நீதிமன்றத்துக்கே உண்டு என்பதை பிரதம நீதியரசர் தெளிவாக வெளிப்படுத்தியதோடு அதற்கேற்ற முறையில் நடந்திருக்கிருர்.
அவருக்கெதிரான வழக்கை, அரசு கைவிடுதல் நாட்டுக்கே நலமளிக் கும். அவர் சாதித்த பண்புகள் தொடர்ந்து பேணப்படுவதே அவரு டைய பெருமைக்கு அர்த்தம் ஊட்டும் செயலாகும்
12-10-84

ஹாட்லியும் ருேயலும்
ருேயல் கல்லூரி உப அதிபராக இருந்த ஆங்கிலேயர் திரு. சாம்சனை அக்காலத்து மாணவன் சோமிஸ், "சேர், கடந்த யுத்தத்தில் (முதலாவது உலக மகாயுத்தம்) நீங்கள் கழுதை வண்டி விட்டதாகச் சொல்கிருர்கள் மெய்யா!' என்று கேட்டானம்.
மாணவன் துணிவைக் கிழித்தெறியும் பாங்கில் திரு. சாம்சன், **ஆம் தம்பி, நான் இன்றும் அதே வேலையில் ஈடுபட்டிருக்கின் றேன்’ என்ருராம்.
பைபிள் குறித்த எழுபது வயதைக் கடந்த, 51 ருேயல் கல்லூரி மாணவர்கள் கடந்த சனிக்கிழமை நடத்திய கொண்டாட்டத்தில் இச்சம்பாஷணை நினைவு கூரப்பட்டது.
நாட்டின் ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தணு உட்பட இந்த மூதறிஞர் கூட்டம், தங்கள் கலைக்கோயிலின் பெருமை பேசி இன்புற்றதில் ஒரு பொல்லாப்புமில்லை.
சுதந்திர இலங்கைக்கு சுக்கான் பிடிப்பது, ருேயலா அல்லது புனித தோமையரா என்ற போட்டி பேசப்பட்டதொரு காலம். இன்றைய பிரதமர், புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர் என்றதால், அதற்கும் கடவுச்சீட்டுக் கிடைத்திருக்கின்றது.
சாம்ராச்சிய ஆதிக்கத்தின் பிரதிபிம்பங்கள் இக்கல்லூரிகள் என்ற எதிர்ப்பு இயக்கத்தில், நாட்டின் தேசியக் கல்லூரியென கொழும்பு ஆனந்தாக் கல்லூரி பிரபலம் அடைந்ததும், அதன் பிரதிநிதி டாக்டர் என். எம். பெரேராவின் நிதித்துவமும், கிரிக்கெட்டும் ஆனந்தாவின் பெருமைக்கு அழகு ஊட்டின.

Page 74
128 5. FUTr55isorb
ஜனதிபதியையும் பிரதமர்களையும் சிரேஷ்ட அமைச்சர்களையும் உற் பத்தி செய்த கல்லூரிகள், கல்வியின் அடிப்படையான பலவீனத்தைத் துலக்கவும் உதவின; அது என்ன ?
வருடா வருடம், வடக்கிலிருந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்கள் தொகை இதுவானுல், நாட்டின் ஏனைய பகுதிகளின் பாடென்ன?
*டெயிலி நியூஸ்” போன்ற, கொழும்புப் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில், முதற் பக்கத்தில் பாடசாலைப் பெயர்கள், புள்ளி விபரங்கள் அதிர்ச்சிக் கேள்விகள் விளாசப்பட்டன. இதனுல் ஏற்பட்ட கொந் தளிப்பு; இதன் விளைவான தரப்படுத்தல், விகிதாசாரம் போன்ற பல அநீதிகள், உயர்நீதிமன்றங்களில் அலசப்பட்டன; பயனற்ற முயற்சிகள்.
**இந்த வழி நியாயமற்றதென்று எனக்குத் தென்பட்டாலும், இவ்
வாறு ஒரு விகிதாசார முறையைக் கடைபிடிக்கச் சட்டம் இடங்
கொடுக்கின்றது. சட்டத்தின் அநீதியை நீக்க எனக்கு அதிகாரமில்லை"
蠶 ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்று ஏட்டில் இடம் பெற்றிருக்
AD35.
வடக்கில் உயர்கல்வி செழித்திருந்தபோது பல்கலைக்கழகப் பிரவே சத்தில் முதல் இடம் பெறும் கல்லூரிகளில் ஹாட்லி ஒன்று. இன்றும் இந்த விகிதாசார முறையிலும் அது தலைநிமிர்ந்து நிற்பதானுல், நாட்டின் ஒருபகுதி மக்களுக்கு நேர்ந்த அதோகதியை விளக்கு வதற்கு, ஹாட்லியை நாம் ஆகுபெயராக இங்கு குறிப்பிட்டோம். இதனுல் எழுந்த குழப்பம் நாளடைவில் ஒரு தேசிய பிரச்சனையானதை, ஆட்சிக்கு வந்த அரசுகள் செவ்வனே புரிய முடியாததால், இன்றைய நிலை உருவானது. இதனைத் தீர்க்கவல்ல தீர்க்கதரிசனமும், தேசிய தலைமையும், "ருேயல்’ கிரிக்கெட்டிலும் அது ஊட்டிவந்த சாம்ராச்சிய மனப்போக்கிலும் உருப்படமாட்டாது. "சமத்துவ சந் தர்ப்பம்', வெறும் சொற்ருெடர் அல்ல.
நாடளாவிய பரந்த, தேசிய போக்குத்தான் இந்த நெருக்கடிக்கு மிக அவசியம். சமுதாய அநீதி, ஏற்றத்தாழ்வு, வறுமை, பசி பட்டினி, வேலையில்லாமை போன்ற சமுதாய நோய்கள், சிலகாலம் 'கிருெனிக்" நிலையிலிருக்கலாம்; சடுதியில் தீவிரமாகலாம்.

ஊரடங்கு வாழ்வு 129
இன்று அந்த நிலை, வடக்கில் "பயங்கரவாதம்’ என்று ரூபம் எடுத் திருக்கிறது. வடக்கில் இதனை ஒழித்து விட்டால், இந்த நாட்டை ஆள்வதற்கு வேறெவருக்கும், எந்தக் கட்சிக்கும் இடமில்லை என்பது நனவாகலாம்.
ஆனல் ஒழிப்பது எவ்வாறு ? இன்று பந்தோபஸ்து அமைச்சரைச் சந்திக்கும் "அதிபர்குழு", ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறை வேற்றவேண்டும் என்று கேட்கிறது; ஆணுல் பிரம்மாதமான கேள்வி இதில் பதுங்கியிருக்கிறது.
அந்தக் கோரிக்கையின் அடிப்படை விளக்கமும், அதன் பின்னணி யுமே நாம் விமர்சிக்கும் விடயம்.
பல்லாயிரக்கணக்கான இப்பகுதி மாணவர்கள், இன்று பாதுகாப்பற்று, கல்வியை இழந்து பரிதவிக்கிருர்கள்; உண்ணுவிரதம் இருக்கின்றனர்; இவர்களின் பெற்றேர் உண்டு உடுத்து வாழ்கின்றனரா? இவர்கள் கையிலா இதற்குப் பரிகாரம் உண்டு ?
நீண்டகாலம் கோரிக்கை விட்டு, மகஜர் சமர்ப்பித்து, எதிர்ப்பு ஊர் வலம், ஆர்ப்பாட்டம் போன்ற பயனற்ற வழிகளில் காலங்கழித்த இளைஞர், இன்று வேறுவழிகளில் இறங்கி, தங்கள் வருங்காலத்தை அடகு வைத்துவிட்டனர்; இதனை, வீண் சூதாட்டம் என்று வர்ணிப்பது நியாயமா ?
ஆரம்பத்தில் ஒரு ஆவேசம், செயற்சவாலாகக் கருதப்பட்ட நிகழ்ச்சி, இன்று இந்த நிலைக்குப் பெருத்துவிட்டது. இதனைத் தீர்த்து வைக் கும் சாமர்த்தியம் எங்கிருந்து வரும் ?
ஒக்ஸ்போர்ட்டில் படித்து உயர்ந்த, பந்தோபஸ்து அமைச்சர், இதன் அடிப்படைக் காரணத்தை இனியாவது உணர இன்றைய சந்திப்பு உதவ வேண்டும்.
அரசியல் ஞானம், அழிவிலிருந்தாவது பிறக்க வேண்டும்.
மக்கள் ஆதரவில் உருவான எதிர்ப்புக்கு இராணுவத் தீர்வென்பது நோயின் குணமறியாது செய்யப்படும் சத்திரசிகிச்சை போன்றது.
12-10-84 -

Page 75
இடைத்தேர்தலும் தமிழர் பிரச்சனையும்
மின்னேரிய, குண்டசாலை ஆகிய இரு தேர்தல் தொகுதிகளுக்கு மான, இடைத்தேர்தல் பிரசாரங்கள், இப்போது சூடுபிடிக்கத் தொடங் கியுள்ளன.
வழமைபோல், ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யும், தமிழர் பிரச்சனையை எப்படித் தீர்த்துவைக்கப் போகிருர்கள் என்ப தைப் பற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக்கூற ஆரம்பித்து விட்டார்கள்.
நாட்டின் மென்னியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும்விட, இப்போது வடக்குக் - கிழக்கில் உருவாகியுள்ள தீவிரவாதம்தான், தேர்தல் மேடைகளில் பெரும்பாலும் பேசப்படு கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்தால், திருமதி சிறிமா பண் டாரநாயக்கா, தமக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி யுடனிருக்கும் நட்புறவைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் இருந்து வரும், தமிழ்த் தீவிரவாதிகளை இங்கு தருவித்து, நாட்டில் "பயங்கர வாதத்தை முற்ருக ஒழித்துக்கட்டிவிடுவார் என்று பேசி வருகிருர், எதிர்க்கட்சித்தலைவர் திரு. அநுரா பண்டாரநாயக்கா.
தனிப்பட்ட உறவுகள், சர்வதேசக் கொள்கைகளை மாற்றி அமைத்து விடுமா என்று கிண்டல் செய்கிருர் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் திரு. லலித் அத்துலத் முதலி.
இதற்கிடையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள, தமிழ்த் தீவிரவாதிகளின்
பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்கு, இந்திய அரசு ஒத்துழைக்கவில்லை யென்றும், தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தீவிரவாதிகளை இலங்கைக்குத்

or TLies 6. The 13i.
திருப்பியனுப்பினுல், இன்று தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிடுமென்றும் பிரதம மந்திரி திரு ஆர். பிரேமதாச கூறிவருகிருர்,
பாவனைப் பொருள் விலையேற்றம், அரிசிக் கூப்பனை ஒழித்தமை, வேலை யில்லாத் திண்டாட்டம், பல்கலைக்கழக மாணவர் பிரச்சனை, விவசாயி கள், தொழிலாளர்கள் பிரச்சனைகள்; இவை எல்லாம் இப்போது வட பகுதித் தீவிரவாதத்தில் மறைக்கப்பட்டுவிட்டன.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் சரியாகப் பலன்தராது போனுலும் கூட, வடபகுதித் தீவிரவாதமே அதற்கும் காரணமாகப் போகிறது.
சுதந்திரத்திற்குப் பின், ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழர் பிரச் சனையே முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. தமிழர் பிரச்சனைகளைத் தீர்ப்பதாகக் கூறிச் சிங்கள மக்கள்முன் சென்று, வெற்றிபெற்ற ஒவ் வொரு கட்சியும், அடுத்த தேர்தலுக்கு முன், ஏதாகிலும் தமிழர்க்குப் பாதகமாகச் செய்தாகவேண்டும் என்ற நிலைமை, அங்கு உருவாக்கப் பட்டுவிட்டது.
மலையகத் தமிழர் உரிமை பறிபோனமை; தமிழ்ப் பிரதேசங்களில் திட்ட மிட்ட குடியேற்றங்களைப் புகுத்தியமை; சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றியமை: தமிழ் அரச ஊழியர்கள், சிங்களத்தைப் படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியமை; பல்கலைக்கழகப் பிரவேசத் தில், தமிழ் மாணவர்களைப் பூதாகாரமாகப் பாதித்துவிட்ட தரப்படுத் தலைப் புகுத்தியமை; இவ்வாறு சகல மட்டங்களிலும், தமிழ் மக்கள் ஏற்கனவே அனுபவித்துவந்த உரிமைகள், படிப்படியாகப் பறிபோவ தற்கும் அதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கும் பொதுத்தேர்தல் களும், உபதேர்தல்களுமே உதவிபுரிந்துள்ளன.
சம அந்தஸ்துக் கொள்கையைப் பின்பற்றி வந்த, சில இடதுசாரிக் கட்சிகளும்கூட, அரசியல் லாபம் கருதித் தம் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கு, இந்தத்தேர்தல்களே காரணமாக அமைந்தன. தமிழருக்கு உரியவகையில் உரிமைகளை வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பிய கட்சிகள், உருத்தெரியாமல் மறைந்துபோயின. கொள்கை களை மாற்றிக்கொண்டவை, வடக்குக் - கிழக்கில் இருந்த செல்வாக் கையும் இழந்துவிட்டன.

Page 76
132 ந. சபாரத்தினம்
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல், நாடு சகலவிதங்களிலும், ஒருமைப்பாட்டு உணர்வை இழந்துபோனமைக்கு, நம் நாட்டு அரசி யலும், அரசியல் பதவிக்காக ஏற்பட்ட போட்டிகளும், மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, இலகுவில் பதவியில் அமர்வதற்கு எடுக்கப்பட்ட குறுக்கு வழிகளுமே காரணம்.
இன்று ‘வடக்குப் பயங்கரவாதம்" பற்றிப் பேசியும் சூளுரைத்தும் கர்ச்சனை புரியும் சிங்களத் தலைவர்கள், இந்த நிலைமைக்கான காரணங் களை இன்னமும் கூட உணராமல் போனது, நமது துரதிர்ஷ்டம்.
சிங்கள மக்களின் இன உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, வாக்குகளைப் பெற்று பதவியில் அமர்ந்துவிடுவது பெரியகாரியமல்ல; இந்த நாட்டு மக்கள் நல்லுறவோடும், தன்மானத்தோடும் வாழ்வதற்கான வழி வகைகளை மக்கள்முன் வைத்து, எதிர்கால சுபீட்சத்துக்கு வழி காண் பதே பெரிய காரியம்.
எப்பொழுதோ செய்திருக்க வேண்டியது. இப்போது மட்டும் யார் செய்யப்போகிருர்கள்?
18-10-84

மனித உரிமை மீறல்: இதிலும் இரண்டாட்டம்
இங்கிலாந்தில், 1973ம் ஆண்டு நடந்த பொதுநல நாடுகள் சட்ட மந்திரிகள் மகாநாட்டில், ஆபிரிக்கப் பிரதிநிதிகள் நிறத்துவேஷம் பற்றி முறையிட்டனர்.
அதற்கு, இங்கிலாந்தின் லோட் சான்ஸ்லர் (Lord Chancellor) பதிலளித்துப் பேசியபோது, 'விரைவில் வெள்ளையர்கள் தங்களுக்கு எதிராகத் துவேஷம் காண்பிக்கப்படுகிறதென்று முறையிடுவார்கள்' என்ருர்,
கறுப்பர்களுடைய முறையீட்டின் மூலவேரை ஆராயாது அளித்த பதில் அதுவென்ருலும், லோட் சான்ஸ்லர் தம்மை அறியாமலே கொண்ட அச்சத்தை வெளியிட்டிருக்கிருரென்று எண்ணலாம்.
அமெரிக்காவின் கறுத்த சமுதாயத்தின் வரலாறு எவ்வாறு, தொடங்கு கிறதென்பதைப் படித்தால், கடந்த 20 வருடங்களில் இந்தச் சமூகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றது என்பதை மதிப்பிடலாம்.
அமெரிக்க மனிதனின் அசைவுடைய சொத்து என்று கருதப்பட்ட ஆபிரிக்க அடிமைகள், இன்று நாட்டின் உப ஜனதிபதிப் போட்டிக் குத் தயாராக முடியுமானுல், மகாத்மா காந்தியை நூற்றுக்கு நூறு பின்பற்றி வாழ்ந்து, அவ்வாறே மடிந்த மாட்டின் லூதர் கிங் போன்ற மாபெரும் தலைவர்களின் சாதனையே காரணம்.
இனத்துவேஷம், நிறத்துவேஷம் என்ற மனித அடிப்படை உரிமை மீறல்கள், வெள்ளையர்கள் இயற்கையின் நியதிப்படி, அவர்களுக்கெதி ராக உருவாகும் என்று அஞ்சுவது நியாயமே.
ஐரோப்பிய நாகரிகம் நிலைகுலையாமலும், அதற்கு எதிராக, ஆசிய ஆபிரிக்க நாடுகள் தங்கள் பண்டைய பெருமையை நிலைநாட்டத் தலையெடுக்காமலும் நசித்துவிடும் ரகசிய நாடகங்கள் பல.

Page 77
134 ந. சபாரத்தினம்
சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பது இவற் றுள் ஒன்று; சின்ன ஆசிய நாடுகளைக் கோமாளிகளாகக் கொண்டு கூத்தாடலாமென்ற நம்பிக்கை, மேற்கத்திய குபேர நாடுகளுக்கு உண்டு.
బ్లిళ్లి பின்னணியில் ஒரு உற்சாகமான செய்தியை நாம் குறிப்பிட
வண்டும்.
தென் ஆபிரிக்க கறுத்தவரான பிஷப் டெஸ்மன் ரூற்று (Tutu) சமாதானத்துக்குரிய இவ்வருட நோபல் பரிசு பெற்றிருக்கிருர்,
தென் ஆபிரிக்காவில், நீண்ட காலமாக நிலவி வரும் இன ஒதுக் கலுக்கு எதிராக, சாத்வீக முறையில் போராடிவரும் புகழ்பெற்ற பேராயர் இவர்.
இந்த நற்செய்தியைக் கேட்டு மனப்பூரிப்படைந்த 53 வயதுடைய பிஷப், அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பும்போது, லண்டன் விமான நிலையத்தில், ஆறரைக்கோடி அங்கிளிக்கன் திருச்சபை மக்களின் தலைவரான கன்டபரி பேராயர் ருெபட் றன்சியைச் சந்தித்து ஒன்றரை மணிநேரம் உரையாடினுர்,
விடயம் என்ன? நாற்பது நாட்களாக டர்பன் (தென் ஆபிரிக்கா) பிரிட்டிஷ் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் இன ஒதுக்கல் போராளிகளை பிரிட்டிஷ் அரசு வெளியேற்றப்படாதெனக் கோரியுள் ளார். R • -
ஏற்கனவே அங்கு புகுந்த ஆறுபேரில், மூவர் மாயமாக வெளியேறி காவற்படையின் கையில் சிக்கிவிட்டனர். எஞ்சிய மூன்று பேரைப் பற்றி விவாதம் மிகப் பெரிதாகிவிட்டது.
அரசியல் அகதிகள் ஆட்சியாளரின் கையிலகப்பட்டால், விளக்கமில் லாமலே சிறையில் இடப்படுவார்; ஆகையால், பிரிட்டிஷ் அதி காரிகள் அவர்களைக் கைவிடமாட்டாரென்று சொல்லி வந்திருக் கின்றனர்.
தென் ஆபிரிக்காவின் சிறுபான்மை வெள்ளையர் அரசு, அங்கு வாழும் பெரும்பான்மை கறுப்பர்களுக்கு கூடிய சுயநிர்ணயம் வழங்குமென்று

ஊரடங்கு வாழ்வு 135
சொன்னபோதும் கடந்த தேர்தலின்பின், பொறுப்பெதுவுமில்லாத அமைச்சர் பதவியை இரண்டு கறுப்பர்களுக்கே வழங்கியது.
சிறுபான்மையினர் வெள்ளையராகையால், பெரும்பான்மையினரின் மனித உரிமைகளைப் பறிக்கலாமென்பதற்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பிரிட்டிஷ் தூதரகச் சம்பவம், இன்று திருமதி தாட்சரின். ஆட்சியில், தென் ஆபிரிக்க வெள்ளையர் தலைவர் திரு. போதாவுக்கு ஆதரவாக லாம்.
தங்கள் வர்த்தகம், முதலீடு போன்ற தொடர்புகளுக்கு இது தடை யென்பதால் அடைக்கலம் புகுந்திருக்கும் மூவரை வெளியேறும்படி கேட்கலாம்.
இதனைத் தடுப்பதே நோபல் பரிசு வீரர், பேராயர் ரூற்றுாவின் அவசரக் கடமை. :
கிறித்தவத்தின் பேரால், பிரிட்டனின் எந்த ஆட்சியும் தென் ஆபிரிக் காவுடன் உறவுகொள்ளப்படாதவாறு மக்கள் திரளவேண்டுமென் கிருர் பேராயர்.
வெள்ளையருக்கு ஒரு சட்டம், நிறத்தவருக்கு இன்னென்று; இந்தப் பாகுபாடு என்றுதான் தொலையுமோ? இவ்விதப் பாகுபாட்டுக்கு மிண்டு
கொடுக்கும் நயவஞ்சக நாடுகள் இருக்கும்வரை, லோட் சான்ஸ்லரின் அச்சம், அச்சமாகவே இருக்கும்.
22-10-84

Page 78
அணுவாயுதப் பாதுகாப்புக் குடை
*" குடை நிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர் நடை மெலிந்து ஓரூர் நண் ணினும் நண்ணுவர்' என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு.
வேகமாக மாற்றமடையும் நவீன உலகிலும் இத்தொன்மை ததும் பும் அருளுரை உண்மையாகவே காணப்படுகிறது.
அன்று, அரசர்கள் போரில் தோல்வியடைந்தபோது, நாட்டின் ஆட்சி கைமாறுவதும் முடிதுறந்த மன்னர் தேடுவாரற்று இழிநிலையடைவ தும் சாதாரணமாயிருந்தது.
அணு ஆயுதத்தால் நிர்ப்பந்திக்கப்படும் இன்றைய உலகில், மக்கள் ஆட்சியோ சர்வாதிகார அல்லது ராணுவ ஆட்சியோ நிலைத்திருப்பது சங்கடமாகின்றது.
வல்லரசுகளின் ராணுவ பலமே, அகில உலகையும் ஆட்டிப்படைக் கும் ஆற்றல் பெற்றிருப்பதை ஒளவைப்பிராட்டி அறிந்திருக்கிருர் என்ருல், எங்கள் நீதிநூல்கள் எக்காலத்துக்கும் நல்வழிகாட்டிகளே! இன்று நாட்டில் நடைபெறும் இடைத்தேர்தல்கள், எங்கள் ஜன நாயக சோஷலிச ஆட்சியின் கொள்கைகளுக்கு என்ன அர்த்தம் ஊட்டுகின்றன என்பது விவாதத்துக்குரிய விடயமாகலாம்.
நாளை மறுநாள் (27-ம் திகதி) கொழும்பில் நடைபெறவிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமெரிக்கத் தூதர்களின் கூட்டம் உலகின் இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு மிகமுக்கியமானதென் பது விவாதத்துக்குரியதல்ல. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேஷியா இக்கூட்டத்தில் பங்குபற்றுகின்றன.

ஊரடங்கு வாழ்வு 137
இதன் முக்கியத்துவமோ அல்லது இக்கூட்டத்தின் செய்தியோ எங் கள் தினசரிகளில் இன்னும் பிரபல்யம் பெறவில்லை. என்ன மர்மம்?
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, எங்கள் நாட்டின் பாதுகாப்புக்குரிய விடயமல்லவென்று யாரும் வாதாடுவாரா?
இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் றிச்சார்ட் மேர்பி (Murphy) கொழும்புக்கு வரும் வழியில் இந்தியா வந்தடைந்திருக்கிருர்,
திரு. றிச்சார்ட் மேர்பி, இந்திய உபகண்ட விவகாரங்களில் அனுபவம் பெற்ற ராஜதந்திர திறமைசாலி. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்த காலத்தில், அமெரிக்க அரச திணைக்களத்தில் இத்துறைக்குத் தலைமை வகித்தவர் இவரென்ருல் இக்கூட்டத்தின் முக்கியத்துவம்
சொல்லாமலே விளங்கும்.
இந்தியா வந்தடைந்த துணையமைச்சருக்கு எதிர்பாராத * குண்டு ' ஒன்று காத்திருந்தது.
அது என்ன? பாகிஸ்தான் அமெரிக்க தூதுவர் திரு. டீன் ஹின்டன் லாகூரில் போட்ட "குண்டை நாம் குறிப்பிடுகின்ருேம்."
“பாகிஸ்தானை இந்தியா தாக்கினல், அமெரிக்கா, பாகிஸ்தான் உத விக்கு விரையும்’ என்று அவர் குறிப்பிட்ட கருத்து இந்தியாவில் பெரும் அமளி ஏற்படுத்தியிருக்கிறது.
இது ஒரு புதிய அல்லது தனிப்பட்ட அச்சுறுத்தல் அல்ல என்பது இந்திய ஆட்சியாளரின் கருத்து.
இதனை விமர்சித்த திரு. மேர்பி, வழக்கம்போல் இதில் எவ்வித உண்மையும் இல்லையென மறுத்திருக்கிருர்,
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அணுவாயுதப் பாதுகாப்புக் குடை அளிப்பதாக வெளிவந்த செய்தியைக் கருத்தில்கொண்டு, இந்தக் * குண்டை மதிப்பிடுவதால், இதனை நிராகரிக்க துணை அமைச்சர் மேர்பிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Page 79
138 lb. &Fu Tg5#560Tib
"பாதுகாப்புக் குடை" என்பதை மறுத்தாலும், ராணுவ ஆட்சியில் காலம் கழிக்கும் பாகிஸ்தானுக்கு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பெடுத்த நீகன் நிர்வாகம் என்ன உதவி வழங்குகின்றது?
மிகத்திறமான ஈ2-சீ ஹோக்கி விமானங்கள் போன்ற ராணுவ உத வியை பாகிஸ்தானுக்கு அளிப்பது, இந்தியாவுக்கு ஏக்கத்தைக் கொடுப்பது நியாயமே. நவீன போர்முறையில் இத்தகைய விமானங் கள், போன்ற நவீன ஆயுதங்கள் பாகிஸ்தானுக்குக் கிடைப்பதா ஞல், அது இந்தியாவின் ஆட்சி ஸ்திரத்துக்கு அவலமாய் முடியும்.
இந்தக் குண்டைப் போட்ட திரு. ஹின்டன், எல்சல்வடொரில், றிகன் நிர்வாகத்துக்கு, இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் திருவிளையா டல்கள் புரிந்த தூதுவரெனக் குறிப்பிடப்படுகிறது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்க ஜனுதிபதி யின் ஆட்சிக் கொள்கை, மத்திய கிழக்கிலோ அல்லது தென்கிழக்கு ஆசியாவிலோ, அமைதியை உண்டுபண்ண உதவாது. கம்மியூனிசம் பரவாது தடுக்கும் பணியில், தனக்கு உகந்த தலைவர்களைப் பாது காக்க முயல்வது வெளிப்படை. ஆனல் பாதுகாப்புக் குடை, பரந்த நிழல் அளிப்பது சந்தேகமானது. உழுத்துப்போகும் பிலிப்பைன்ஸின் மார்க்கஸ் ஆட்சிக்கு மிண்டுகொடுக்க முன்வருவதுபோல, மற்றைய நாடுகளிலும், மக்கள் நலம் கருதாது, தமது செல்வாக்குக்கேற்ப தலைவர்களைப் பாதுகாக்கும் பயனற்ற முயற்சி, கொழும்பில் நடை பெறும் மகாநாட்டில் தலைதூக்கலாம். -
25-10-84

"பொற்றலியோடெவையும்போம்"
விஞ்ஞான மாமேதை அல்பேட் ஐன்ஸ்டின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அளித்த சிபாரிசு : a =x+y+2. a என்பது வாழ்க்கை யில் வெற்றியானுல் X உழைப்பு, y விளையாட்டு என்று விளக்கினுர். பொறுமை இழந்த பெண்மணி ஒருவர், z என்னவென்று உரத்த தொனியில் கேட்டார்.
"அதுதான் வாயை இறுக்கி மூடிவைத்திருத்தல்" என்று சிரித்தார் அல்பேட்.
இளைப்பாறிய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனுக்கு நடத்திய பிரம்மாண்டமான இராப்போசன வைபவத்தில், நெவில் சமரக்கோன் குறிப்பிட்ட கருத்து, இதற்கு மாருனது.
தமது பாரியார், தமக்கு அன்றையதினம் இட்ட கட்டளை 'உங்கள் வாயைத் தங்குதடையின்றித் திறந்து விடாதீர்' என்ருர்,
அக்கட்டளைக்குத் தாம் மதிப்பளித்தபோதும், முதற்தடவையைாக அதனை மீறவேண்டி இருக்கிறதென்று பரிகாசமாகப் பேசினர்,
நாம் முன்னெருமுறை குறிப்பிட்டதுபோல, இந்த வைபவம் அகில இலங்கையிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அறுநூறு பேர் பங்குபற்றிய இவ்விருந்தில் "ஹோட்டல் ஒபெராய்" என்றும் காணுத குதூகலத்தின் காரணத்தை நாம் முன்னரே குறிப் பிட்டிருக்கின்ருேம்.
இதனை மிக உறைப்பாக விளக்கியவர், பிரதம விருந்தினரைப் பாராட்டிய, இன்னுெரு சட்ட வித்தகர் டாக்டர் கொல்லின் ஆர். டி. சில்வா. கருத்து நிறைந்த பேச்சில் டாக்டர் கொல்வினின் பாராட்டு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

Page 80
140 ந. சபாரத்தினம்
'பெருமை படைத்த பரம்பரைக்கு உரித்தான திரு. நெவில் சமரக் கோன், எந்தப் போருக்கும் பின்னிற்கார் என்று சொன்ன டாக்டர் கொல்வின், ‘கடந்த காலத்தில் அரசுடன் மோதிய பிரதம நீதியரசர் கள், தங்கள் மோதலை திரைமறைவில் தீர்த்துக் கொண்டனர்; இன்று நிகழும் இழுபறியில் சுதந்திர சமரக்கோனை வெல்வது அரிது’ என்ருர்,
இன்று நாட்டில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை பத்திரிகையில் படிக்கும் வாசகர், தினசரி "போரில் யாருக்கு வெற்றி என்பதையே கவனித்துப் படிக்கின்றனர்.
வடக்கிலோ, இந்த மனப்போக்கு வலிமையடைந்து வருகிறது. வன் செயல்களும், கொள்ளைகள், குண்டு வெடிப்புகளும் இல்லாவிட்டால், இந்த வாசகர் கூட்டத்துக்கும் அவர்களுக்கு "உணவு பரிமாறும் பத்திரிகைகளுக்கும் அதோகதி என்பது நிச்சயம்.
இச்சம்பவங்கள் முக்கியமற்றவை என்று நாம் கூறவில்லை. ஆனல், இந்தக் காட்டு மரங்களை இனங்கண்டு கணக்கெடுக்கும் நாம், காட்டின் முழுமையை மதிப்பிடத் தவறிவிடுகிருேம்.
ஆங்கிலத்தில் சொல்வது போல் "மூக்குக்கு அப்பாலே பார்க்க முடியாத கண்களால் பயன் என்ன?”
அன்று ஆனைக்கோட்டையில் வெற்றி, இன்று அராலியில் தோல்வி; அன்று அம்பலாங் கொடையில் வெற்றி, இன்று அம்பிட்டியாவில் தோல்வி என்று கணக்கிடும் அப்பியாசம், நாட்டுக்குயிரான, நாட் டின் உயிருக்கு உயிரான பெருவிடயங்களை அலட்சியம் செய்ய உதவுகிறது.
* ஆட்சியின் ஆன்மா - நீதி தளம்பினல், சட்டம், ஒழுங்கு நாட்டில் நிலவா; ஒழுங்கும் கட்டுப்பாடும் இன்றேல், நாகரிகவாழ்வு மறைந்து விடும்' இவ்வாறு சுருங்கச்சொல்லி விளங்கவைத்த, திரு. நெவில் சமரக்கோன், ஆணித்தரமாக வற்புறுத்திய கருத்து, ஜனநாயக ஆட்சியில் வாழும் மக்கள் சிரமேற்கொள்ள வேண்டியது.
**சட்டங்களாலும் அரசியல் சாசனங்களாலும் நீதியை நிலைநாட்ட முடியாது. இவை அதற்கு உதவும் சாதனங்களே!

ஊரடங்கு வாழ்வு 141
** சுதந்திரமாக தம் சொந்தக் கால்களில் நின்று, நீதிக்கு வாதாடும் வழக்கறிஞர்களும், நடுநிலைமையில் நின்று, நீதிவழங்கும் நீதிபதி களுமே நீதியின் காவலர்' என்று காச்சித்தார், நீதியின் காவலர் நெவில்.
வாழ்க்கையில் வெற்றிபெற வாய்மூடவேண்டிய கட்டங்கள் உண்டு. ஆணுல், நீதிக்குப் பங்கமென்ருல், அதற்கு வெளுத்து வாங்கவேண்டிய அவசியமும் உண்டு.
அரச நீதியே சைவரீதி என்று நாம் கொள்ளுவது வழக்கம். நாட் டிலே கல்வியறிவு, ஒழுக்கம் குன்றுவதும்; சமய பக்தி அருகுவதும்; பருவமழை தவறுவதும்; பஞ்சம், பட்டினி, தொற்றுநோய் கொடுமை கள் மலிவதும்; கன்னம், களவு, கொலை முதலிய தீத்தொழில்கள் பெருகுவதும்; அரசநீதி தளம்புவதைக் குறிக்கின்றன.
எந்தச் சமுதாயத்திலும், எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய so-6T60) D.
நாட்டின் வருங்காலத்திலும் நீதிக்குச் சவால் ஏற்படுமாயின், அதனைப் பாதுகாக்கச் சட்ட வல்லுநர் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக சமூகம் முழுவதுமே தோளோடு தோள் கொடுத்தல், இன்றியமை யாதது.
மனித வாழ்வுக்கு அடிப்படைப் பலமளிக்கும் நீதி போஞல், அது *தாலியை இழந்த நிலையென்பது தெளிவு.
26-10-84

Page 81
காவற்படையும் கள்ளத்தோணியும்
நடுச்சாமத்தில், யாழ்ப்பாண மண்ணில் தாழப்பறக்கும் ஹெலிகாப் டர்கள், தூக்கம் குறைந்திருக்கும் இப்பகுதி மக்களுக்கு ஏக்கம் அளிக்கின்றன.
கடற்படை யுத்தம் ஆரம்பித்து விட்டதா என்று பாமரமக்கள் அஞ்சு வது இயற்கை. வடபகுதியில் வாழும் மக்களுக்கு, இவ்வித ஏக்கத் தை உண்டுபண்ணுவது நியாயமென்று, பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி நினைப்பதற்கு, காரணமிருக்கலாம்.
அமைச்சரின் சொற்பகால ஆட்சியில், "பயங்கரவாதம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. காவற்படைகள் காயப்பட்டால், அல்லது
கொல்லப்பட்டால் அதற்கு எதிராக, எத்தனை அப்பாவிமக்கள் கொல்
லப்படுகின்றனர்; விகிதம் நாமறியோம். ஆணுல், சர்வதேச மன்னிப்
புச்சபை ஊர், பேர், வயது, விலாசம் உட்பட பகிரங்கமாக,
விபரங்களையும், புள்ளிகளையும் காலத்துக்குக் காலம் வெளியிட்டு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுகிறது.
தமிழருக்கு எதிராகவல்ல, தமிழ்ப் "பயங்கரவாதிகளுக்கு எதிராக நடக்கும் போர் இது, என்பதை அடிக்கடி நினைவூட்டும் பந்தோ பஸ்து அமைச்சர், ‘இன்று யாழ்ப்பாணத்து நிலைமை திருப்தியுடை யது; பயங்கரவாதிகள் பின்வாங்கி, கொழும்பு சென்றிருக்கின்றனர்"; என்கிருர். இதனை நம்புபவர் எத்தனைபேர் ?
அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணப் பிரமுகர்கள், பயங்கரவாதத்துக்கு எதி ராக தகவல் தர முற்பட்டிருக்கின்ருர்கள் என்பதும் இந்தப் பிரகடனப் படுத்தாத "போரில் முக்கிய கட்டம்,

ஊரடங்கு வாழ்வு 143
இவ்வித கட்டத்தைப் போரில் வெற்றிபெற ஆசைப்படுபவர் காண முயல்வது தந்திரம். இரண்டாவது உலக மகாயுத்தத்தில் இலங்கை மக்களை ஆளப்போகிறவர் ஜெர்மனியரே என்ற அளவிற்கு, ஹிட்ல ரின் யுத்தசாதனம் வெற்றிக்குமேல் வெற்றியீட்டியது.
24 மைல் கடலைக் கடந்து, இங்கிலாந்துக்கு போகமுடியாத நிலையில், *ஆங்கிலேயர் போர் நிறுத்தத்தை விரும்புகிருரென்றும், சரணடைந்த பிரெஞ்சு ஆட்சி ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவாக இயங்குமென்றும்" செய்திகள் வெளிவந்தன. நம்பக்கூடிய அவலநிலை அப்போதிருந்த போதும் ஆங்கிலேயரைப் பற்றிய மதிப்பீடு ஏமாற்றக்கதை எனத் தெளிவாயிற்று. பிரான்ஸின் பெருமையை மாசுபடுத்த ‘விச்சி’ ஆட்சி என்ற துரோகக் கூட்டத்தின் பெயரில் ஆரம்பமானது; டிகால் என்ற சூரியனைக் கண்டதும் மறைந்தது.
எங்கள் நாட்டில் நடப்பதை, ஒரு யுத்தம் என்று மதிப்பிடுவதற்குத் தூபமிடுவது "பந்தோபஸ்து அமைச்சு’ என்ற புதிய அமைச்சு.
"பயங்கரவாதம் என்ற சாபம் நாட்டுக்கு இருந்தால், இந்தப் புதிய அமைச்சு அதனை வளர்த்து வருவது தெளிவாகிறது. தமிழ்ப் பகுதி களில், அரும்பெரும் வீரச்செயல்களை நிலைநாட்டி, வீடு வீடாக ராணுவ சோதனை நடத்துவதால், நாம் எல்லோரும் 'கள்ளத்தோணி? களாய் விட்டோமா என்ற ஐயம் ஏற்படுகிறது.
திருமதி சிறிமா பண்டாரநாயக்கா, தமது அரசியல் உரிமைகளை
இழந்தபோது, " ஒரு கள்ளத்தோணியின் ” அந்தஸ்து தமக்குக் கிடைத்திருப்பதாகக் கவலை தெரிவித்தார்.
அதன் அர்த்தம், இன்று வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு நன்ருகப் புரிகின்றது.
ஒரு யுத்தம் என்ற நிர்ப்பந்தம்; கடற்படை மோதல்; எதுவும் தயாரானுல் அது இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்குப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும்; நிச்சயம் இங்கு வாழும், அமைதி விரும்பும் மக்களுக் குக் காலத்துக்குக்காலம் வேண்டிய அறிவித்தல் கொடுத்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆட்சிக்கு உண்டு.

Page 82
144 ந. சபாரத்தினம்
மிகப் பொறுப்பான, பாரமான புதிய பணி ஒன்று, இளமையும்,
அழகுமுடைய அமைச்சர் லலித் தோள்களிலுண்டு. தோல்விகளால்
பொறுமை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல. ஒரு புறத்தில்
* இந்தியாவின் குடியேற்ற நாடா நாம் ' என்ற கண்டனக் குரல்;
இன்னுெரு பக்கத்தில் "சிகரட் பற்றிப் புகைத்து முடியுமுன், இந்திய போர் விமானங்கள் இலங்கை வந்து சேரும்” என்று வெருட்டு.
இவையெல்லாம், கள்ளத்தோணிக் கதைக்குச் சுவையூட்டும், பின்ன ணிப் பாடல்கள்; அமைச்சரின் பாரம் பெரிதென்ருல் இதற்குப் பாத்திரமாகும் அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாப்பவர் யார்?
* கள்ளத்தோணி’களின் விபரம் திரட்டும் காவற்படையினரா? அல்லது காட்டிக்கொடுக்கும் காக்கை வன்னியர் என்ற வசைக்காளாகும் ஐந்தாம் படையினரா?
ஒன்று நிசமாகச் சொல்வோம்; இங்கு வாழையடி வாழையென வாழும் தமிழ் மக்கள், அரசின் காவற்படையினரின் ஆக்கிரமிப்புக்கோ அல்லது தீவிரவாத இளைஞரின் போர்க்கோலத்துக்கோ கட்டுப்பட்ட வர்கள் அல்லர்.
இவ்விரு பகுதியினரில், எங்கு தர்மம் உண்டு என்பதை நன்கறிந்
தவர்கள். எனவே, தீவிரவாதத்தை அடக்க முன்வருவார்கள் என்பது விவேகமாகாது.
"கள்ளத்தோணி விவகாரங்களைக் கடற்படையால், காவற்படையால் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டு, நீதியான அரசியல் தீர்வில் நாட்டம் வேண்டும்.
29-10-84

மயிலே மயிலே இறகு போடு
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறுவது என்ன என்பது தெரியாத நபர் எவருமுண்டா ?
திருகோணமலை, மன்னர், வவனியா போன்ற பிரதேசங்களில் நடந்து முடிந்தது என்னவென்பதும், இன்று தூக்கமின்றி வாழும் தமிழ் மக்கள் நன்கறிந்த விடயம்.
வடபகுதி முழுவதிலும், முக்கியமாகக் கடலோரப் பகுதிகளில் வீதி வலம் வரும் ராணுவத்தேர் இன்று யாழ்ப்பாணத்தில் இருப்புக்கு” வருமென்று எண்ணுபவர்கள் பலர். "பயங்கரவாதம் ஒழியும் ; மிதவாதிகள் அரசியல் தீர்வுக்கு ஆமாச் சொல்லுவர் என்றும் பேசப் படுகிறது.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பெரும் பணியில் ஈடுபட்டிக்கும் ராணுவத்தேர், சாரதி வகுத்த வழியை நோக்கிச் செல்கிறது.
சாரதியின் வழி எது? இது இன்று பலருக்குப் புதிராக இருக் கின்றது. محر
"பயங்கரவாதத்தின் பெயரால், இன்று இங்கு உயிரிழந்த அப்பாவி மக்கள் தொகை என்ன ? உடைமையின் விபரமென்ன ? இதனை அரசுக்கு வெளிப்படுத்துவது அவசரமானது. கடந்த வருட யூலை சம்பவத்தில், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட, உயிர், உடைமை நட்டத்துக்கு மேலான நட்டம், இதுவரை இப்பகுதி கண்டிருப்பதைப் புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கும் பொறுப்பு, உடனடி யாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த நட்டம் ஒருபுறம்; சாதாரணமாக, இப்பகுதியில் சச்சரவு மத்தி யில் அமைதி நிலவுவதாக எண்ணி, அரசாங்க தொழிலுக்கோ,
1 O

Page 83
146 ந. சபாரத்தினம்
தனியார் சேவைக்கோ வீட்டைவிட்டு வெளியேறப் பாதுகாப்புச் சூழ்நிலை நிலவுகிறதா ? வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாமா ?
பாடசாலைக்கு, தொழில் நிலையத்துக்கு, கடைத்தெருவுக்கு, மருத்துவ மனைக்கு, இதற்கும் மேலாக அரசாங்கப் பொறுப்பிலுள்ள பஸ் வண்டியிலோ, தனியார் வாகனத்திலோ செல்வதற்கு பாதுகாப்பு எத்தகையது என்பதைக் கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் அம்பலப்படுத்தின.
குண்டுகள் வெடிப்பதும், பொதுமக்கள் சுடப்படுவதும், கட்டிடங்கள் தாக்கப்படுவதும் தொடர்பாக நடைபெறுகின்றன. இது ஒரு திட்ட மாக - யாழ்ப்பாணத்தை அழிக்கும் திட்டமாக உருவெடுத்திருக் கின்றது.
கடந்த வியாழன் போயா தினமாகையால், ஒரு நாள் இடைநேரம் மக்களுக்குக் கிடைத்தது என்றும் , "குண்டு வெடிப்பும் ராணுவத் துப்பாக்கித் தாக்குதலும் ஒரு புதுவிதப் போர், பொதுமக்களையே முடிவு கட்டுகிறது என்றும் பேசப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் அணுதைகளென்ற தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதா?
உலகையே அதிரவைக்கும் இச்சம்பவங்கள் - அப்பாவி மக்களைக் கண்ட இடமெல்லாம் சுட்டுத்தள்ளும் மிருகத்தனம், யாரைப் பாது காக்க உதவுகிறது.
பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் சாதனையில், அப்பேர்வழிகள் தப்பி விடுவதும், அப்பாவி மக்கள் துப்பாக்கிக்கு இரையாவதும் இப் பகுதி மக்களின் நீண்டகால அனுபவங்கள். இதனை வெளி உலகுக்கு எவ்வாறு திரித்துச் சொன்னபோதும், தமிழ் மக்களும் அவர்கள் உடைமையும் அழிக்கப்படுவது இன்று வரைக்கும் இடைவிடாது தொடரும் நாடகம். அப்பாவிமக்கள் சாவதால், அரசின் பிரச்சனை தீர்ந்து விடுவதில்லை; தமிழ் மக்களுக்கும் விடிவு கிடைப்பதில்லை. நேற்று இன்ன தொகை, இன்று இன்னது; நாளைக்கு என்னவோ என்ற புள்ளிகளாகவே, கொல்லப்படும் பொதுமக்கள் கணிக்கப்

ந. சபாரத்தினம் 147
படுகின்றனர். இந்த அழிவு ஒரு ஆக்கபூர்வமான கிளர்ச்சிக்கு உதவ வேண்டும். ܫ
இன்று யாழ்ப்பாணத்துக்கு உண்மை நிலை காணவரும் வெளியிடத்து ஒருவர், என்ன கொந்தளிப்பைக் காணமுடியும்? "செத்தவர் வாயில் மண். ’ என்ற வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பந்தோபஸ்து அமைச்சர் போர் இடங்களைப் பார்வையிட்டு, புள்ளி விபரத்தைத் தகவல் திரட்டுவதால், தென்னிலங்கையில் நிலவும் கொந்தளிப்புக்குச் சாந்தம் அளிக்கலாம். இங்கு நாம் என்ன செய்கின்ருேம். குண்டுக்கும் துப்பாக்கிக்கும் சமரசம் காணும் வகையில் உயிரை விரும்பியா விடுகின்ருேம் ?
எமக்குத் தலைவர்கள் எம்மைவிட வேறே யார் ? மக்களின் அவலத்தை நீக்க பிரதிநிதிகள் முன்வரவேண்டாமா ?
எனவே ஆட்சிக்குப் பொறுப்பானவரிடம் "மயிலே, மயிலே இறகு போடு” என்று பாடும்வகையில் செயற்படும் நேரம் இதுவல்ல. வீட்டிலோ வெளியிலோ பாதுகாப்பாற்ற நிலையில் வாழும் நாம், இந்த நிலையை வெளிப்படுத்த ஒருங்கு திரளவேண்டாமா ? சுக வாழ்வுக்கு இடம் ஏது ?
கொலைக்காரனின் துப்பாக்கிச் சூட்டால் விடுதலை பெற்ற அன்னை இந்திரா கணப் பொழுதில் மறைந்த போது, நாட்டின் பாரத் தைச் சுமக்க முன்வந்த பிரதமர் ரஜீவ் காந்தி, தமது அருமைத் தாயாரின் பூதவுடலைத் தகனம் செய்ய முன்னரே, நாட்டுக்குஉபகண்டத்துக்கு விடுத்த வாக்குறுதி, 'இங்குவாழும் ஒவ்வொரு உயிருக்கும் உடைமைக்கும், எவ்வித வேறுபாடின்றி உத்தரவாதம் அளிக்கின்றேன்' என்பதே.
இன்று. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சமத்துவம் காணும் துணிவு பெற்ற வான்கோழிகள், கான மயிலைக் காணுதவர்களே !
ஆங்கில ஆட்சியில் மயிலின் இறகை நாடி நின்ற இந்திய மித வாதிகளுக்கு, முற்றுப்புள்ளிவைத்தவர் ஜவஹர்லால்நேரு, அது 1913ல். 1984ல் சுதந்திர நாடென்று சொல்லப்படும் இலங்கையில், நாம் என்ன செய்கிாேம் ?
12-11-84

Page 84
அணிசேராச் சித்தாந்தம்
"ஒரு படையின் தலைவனைக் கைப்பற்றலாம். ஆணுல் எந்த ஒரு படை வீரனின் மனத்திட்பத்தையும் பறித்துவிட முடியாது’ என்று சீன தத்துவமேதை கொன்பூவழியஸ் சொல்லியிருக்கிருர்,
இன்று, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அதிகாரத்தை எவ்வாறு தனதாக்கிக் கொள்ளலாம் என்ற பேரவா, நாடுகளை மட்டுமல்ல நாட்டின் அரசியல் கட்சிகளையும் பீடித்திருக்கிறது.
இந்தப் பேராசை, மேலே கூறப்பட்ட உண்மையை மறைத்து விடுகிறது.
கடந்த வருட ஆடிக்கலவரத்தில் இந்த நாடு என்ன செய்வ தென்று தெரியாது தத்தளிக்கும் போது, அண்டை நாடாகிய இந்தியாவைப் புறக்கணித்து வேற்று நாட்டு உதவியை நாடியதென்ற குற்றச்சாட்டு, ஆட்சிமேல் செலுத்தப்பட்டது.
இதனை அறிந்த, காலம் சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜனதிபதி ஜெயவர்த்தணுவிற்கு திட்ட வட்டமாகக் கூறியதை இந்திய லோகசபையில் வெளியிட்டிருந்தார்.
*"எவ்வித அந்நிய நாட்டின் தலையீடும், இன்று இலங்கையில் உரு வான கொந்தளிப்பில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்; இந்தப் பிராந் தியத்தில், எங்கள் நாடுகளின் ஆட்சியை நிலை குலைத்துவிடும் சக்திகள் நடமாடுகின்றன; இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள், இந்தியா வைப் பாதிக்கும். எனவே, இந்தியா ஒரு அந்நிய நாடு என்ற ரீதியில், பாதகமானது எதனையும் செய்துவிடாதீர்கள்’’.
சுமார் ஒருவருடம் மூன்று மாதங்களுக்குப் பின், இக்கூற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஒரே ஒரு மாற்றத்தையே காண்கின்

ஊரடங்குவாழ்வு 149
ருேம். இப்பேச்சாளர் இன்று இல்லை. அது பெரும்குறை; ஆணுல், பேச்சின் வீறு குறைந்து விட்டதாகக் கொள்ளலாமா ? உழைக்கும் படை (ராணுவமல்ல) ஒன்றிருந்தால், அதன் படைத் தலைவர் மறைந்துவிட்டாரென்ற காரணத்தால், அதன் பணியைக் கைவிடலாமா? கைவிட்டுவிடுமா? இந்திரா இல்லாத இந்தியா, காந்தியை இலகுவில் மறந்துவிடுமா ?
இல்லை என்று சொல்வதற்கு, தத்துவ ஞானமோ அரசியல் நிபுணத் துவமோ அவசியமில்லை; ஒரு சாதாரண குடும்பத்தின் தலைவர், சடுதியில் மறைந்து விட்டால், குடும்பம் தலையெடுக்காது என்று வாதாடலாமா ? விதவைகளின் வெற்றி வரலாறு தினசரி அனுபவம்.
எனவே, மறைந்த இந்தியப் பிரதமர் மறைமுகமாகக் குறிப்பிட்டது என்னவென்பது, இலங்கை ஜனுதிபதிக்கோ அல்லது இந்திய - இலங்கை மக்களுக்கோ தெரியாததல்ல. அதனை வஞ்சிக்கும் எந்த நடவடிக்கையும், இந்தப் பிராந்தியத்திற்கு அமைதியை அளிக்காது. இந்தியாவைச் சுற்றிவளைத்துத் (balkanize) தனிக்கப் பிடிக்க வேண்டுமென்று, ஒரு சதி நிகழ்வதாக அடிக்கடி இந்திரா கூறி வந்தார்; அவருடைய அரசியல் எதிரிகள், இதெல்லாம் தேர்தல் திருகுதாளம் என்று சொல்லி வந்தனர். அவர்கள் நாட்டின் வருங் காலத்தை தூரநோக்கிப் பார்க்கும் ஆற்றல் அற்றவர்.
இன்று இந்திரா தமது உயிரையே அர்ப்பணித்ததின் அர்த்தம் ஆழமானது; அதனை நாம் அறிந்து விட்டோமென்று பெருமை பேச வில்லை. அதனை அறிய முயல்வதில் வாசகர்களை ஊக்குவிப்பதே எமது தனி நோக்கம். சீக்கியர் கொன்றுவிட்டார் என்று சிம்பிளாகச் சொல்லிவிடலாகாது.
தந்தை நேருவின் மந்திரத்தை, நன்ருக அறிந்தவர் தவப்புதல்வி இந்திரா. வறிய நாடுகளுக்கு ஆசிய, ஆபிரிக்க கண்டங்களில், சுதந்திரம் பெற்ற, சுதந்திரத்துக்காகப் போராடும் நாடுகளுக்கு, அமெரிக்க, ஐரோப்பிய நாகரிக நாடுகள் அதிகம் உதவமாட்டா. உலகிற்கு பெரிதும் உதவக் கூடிய செல்வம் கொழிக்கும் அமெரிக் காவும் கம்யூனிஸ்ட் ரஷ்யாவும், வருங்கால உலகின் வளர்ச்சிக்கு

Page 85
150 ந. சபாரத்தின்ம்
பெரும் பங்களிக்க் வல்லவை. ஆனல், அவ்விரு நாடுகளின் பகை மை வளரும் சாத்திய்ம் இன்று அதிகரிக்கிறது; இப்பகைமையில் சிக்குண்டு தவிக்காமல், தனித்துவம் பெற்ற மண்டல சார்பற்ற குழுவே, மூன்ரும் உலக நாடுகள் உய்யும் வழி என்பது, நேருவின் உறுதியான கொள்கை. அவரின் தீர்க்க தரிசனம் என்றும் சொல் லலாம்,
w . . . . . . .. -܀ **
இதனைக் கடைப்பிடிப்பது, கடந்த 20 ஆண்டு காலம் உலகம் கண்ட மாற்றத்தில் எவ்வளவு கடினமாயிருந்ததென்பதை, உலக விடயங் களை ஊன்றிப் படிப்போர் அவதானித்திருப்பார்கள். பாகிஸ்தானு டன் மூன்று தடவை போர் செய்த இந்தியாவுக்கு - குறிப்பாக, பங்களாதேஷ் போரில் - எத்துணை சாமார்த்தியம் தேவைபட்டதென் பதை, அதன் அணிசேராக் கொள்கை விளக்கியது.
கிழக்கில் இருபெரும் நாடுகளான சீனுவும் இந்தியாவும், தத்தம் வழிகளில் விரைவாக வளர்ச்சியடைவதால், ஆன்மீகபலத்தால் உலகுக்கு வழிகாட்டிய ஆசியக்கண்டம், மீண்டும் தன் பெருமையை நிலைநாட்ட முடியுமென்பது நேருவின் கனவு.
அதில் ஏற்பட்ட சங்கடத்தைச் சமாளித்து, ரஷ்யாவின் ஆதரவை நாடி, அதேசமயம் அமெரிக்காவுடனுே சீனுவுடனுே பகைக்காமல் நட்பை வளர்க்க முயன்ற இந்திரா, இந்தியாவின் செல்வாக்கையும் அதன் மூலம் மண்டல சார்பற்ற கொள்கையின் பலத்தையும் பெருமளவிற்கு உறுதிப்படுத்திவிட்டார்.
14-11-84

பிறந்த தின வாழ்த்து
லால்பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் இரண்டாவது பிரதமராக நிய மனம் பெற்றதுபற்றி, ஒரு சுவையான புனைகதை உண்டு.
பிரதமர் நேரு சடுதியில் மறைந்தபோது, மக்கள் சோகக்கடலில் மூழ்கியது ஒருபுறம்: மறுபுறம் கூடிய தலைவர்கள் பிரமித்த குரலில் அடுத்த பிரதமர் யார் என்று கவலைப்பட்டனர். இது ஒரு சிறு கூட்டம். காமராஜ் தலைமையில் நடந்தது.
இன்றைய நிலையில், தெய்வம்தான் வழிகாட்ட வேண்டுமென்று எழுந்த குரல் ஒன்று, "ஜோதிடம் என்ன சொல்கிறது என்று அறிதல் நலம்" என்றது.
**ஆகட்டும் பார்க்கலாம்' என்ற காமராஜ், அருகில் நின்ற காப்பாள ருக்கு (ஒரு) சாஸ்திரியாரை அழைத்து வா என்று பணித்தார்.
அந்த ஆசாமி, 'ஒரு' என்றதைக் கவனியாது, அக் கூட்டத்தில் பிரசன்னமாக இருக்கவேண்டிய லால் பகதூரையே அழைத்து வந்தான்.
நாமொன்றை நினைக்க தெய்வம் வேருென்றை நினைத்துவிட்டது. அப்படியே ஆகட்டும்' என்றவாறு, லால்பகதூர் சாஸ்திரி அடுத்த நிமிடத்திலேயே பிரதமராக நியமிக்கப்பட்டாரென்று கதை முடிகிறது.
இந்தப் பெருவெளியை நிரப்பவந்த லால் பகதூர் ஒரு சிறு மூர்த்தி: ஆணுல், நேருவின் பெரு நம்பிக்கைக்கு ஆளானவர்.
'நேருவின் சோஷலிசக் கொள்கையைச் செயற்படுத்துவதில் தங்களுக்குத் தயக்கம் உண்டா?" என்று பத்திரிகையாளர், சாஸ்

Page 86
14 ந. சபாரததினம்
திரியைக் கேட்டபோது, "எள்ளளவும் இல்லை' என்று விடை யளித்தவர், இரு வருடங்களில் சடுதியாக மறைந்தார். அடுத்தாள் யார் ? எவ்வித சோதிடமுமின்றி இந்திராவை "முடி’ சூட்டினுர் காமராஜ்.
*முடி’ என்ற எமது அணி இலக்கணத்தைப் புரியமுடியாத தீய "சக்திகள், "இதென்ன பரம்பரை மன்னர் ஆட்சியா?" என்று கண்
டிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர்; பரவாயில்லை. மன்னர்
ஆட்சியை முற்ருக ஒழித்த பெருமை இந்திர்ாவையே சாரும்.
ஜவஹர்லாலின் தந்தை மோதிலால், 1931, பெப்ரவரி 6-ல் இறந்த போது, யாழ்ப்பாணம் முற்றிலும் பாடப்பட்டது, 'பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே" என்ற பாட்டு.
சுதந்திரப் போரில் தகப்பனைத் தீவிரப்படுத்தியவர் ஜவஹர்லால். இவ்விருவருக்கும் வழிகாட்டி மகாத்மா காந்தி. காந்தி கொல்லப் பட்டபோது, உலகுக்கு அச்செய்தியைச் சோகக்குரலில் வெளியிட்ட வர் பிரதமர் நேரு.
*அந்த ஒளி இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும், எங்களுக்கு வழிகாட்டும்", என்ற நம்பிக்கையை, அந்தப் பேச்சில் வெளிப்படுத்தி ஞர். அது பொய்த்து விட்டதா?
மகாத்மா காந்தி நூற்ருண்டு நிறைவு விழாவைத் தக்க முறையில் கொண்டாட, இந்தியாவுக்கு இந்திராவின் தலைமை கிடைத்தது.
1969 அக்டோபர் 2ம் தேதியை, நாம் காந்தி யுகம் முடிந்ததாகக் கொண்டால் 1989 நவம்பர் 14ம் திகதி வரைக்கும் நேரு யுக மெனக் கொள்ளலாம். வரலாற்று ஆசிரியர்களுக்கு, நாம் புகட்டும் புத்தியல்ல இது. எம் போன்ற சாதாரண மக்கள், யாழ்ப்பாணம் உட்பட, உலகெங்கிலும் வாழும் மக்கள், இத்தேதிகளின் கருத்தை உணரவல்லவர்கள். 'இந்த ஆலாபரணம் எல்லாம், இந்திரா யுகத்துக்கு வழி காணவா’’ என்று வாசகர் கேட்பது நியாயம்.
மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா பற்றிய கடைசிச் செய்தி வாசகர்களுக்கு பெரும் விபரீதமாகத் தோன்றும். சென்னை உயர் நீதிமன்றத்தில், பகுத்தறிவாளர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும்

ஊரடங்கு வாழ்வு 153
ஒருவர், சென்றவாரம் இந்திய அரசின்மேல் குற்றஞ்சாட்டி தாக்கல். செய்த மனுவையே குறிப்பிடுகின்ருேம். ܫ
அமரர் இந்திராகாந்தியின் அஸ்தியை, நாடெங்கும் கொண்டு சென்று, மக்களின் அஞ்சலிபெறும் பணியில் செலவாகும் பணம், நியாயமற்ற செலவென்றும், மதசார்பற்ற ஆட்சி, இவ்வித அர்த்த மற்ற முறையில் நடந்துகொள்வது தடைசெய்யப்பட வேண்டுமென் றும் கேட்டிருந்தார்.
இதற்கு தக்க பதிலளித்த நீதியரசர் திரு. எஸ். நடராஜன், மனு தாரின் அறிவினத்தைக் கண்டித்து, அவருக்கு பூரண அறிவு உதயமாகும்போது, தம்முடைய செயல் ஒரு தெய்வநிந்தைக்குச் சரியாகுமென்று உணர்வாரென விளக்கமளித்து, மனுவைத் தள்ளி விட்டார். மாயமாய் மறைந்த இந்திரா வாழ்கின்ருரென்பதும், அவருடைய நாமம் பல்லாண்டு வாழுமென்பதும் இந்தச் சம்பவத்தில் வெளியாகின்றது.
** அச்சமும் வெறுப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று எமது குருநாதர் மகாத்மா கூறியிருக்கிருர், அவருடைய தலைமை இந்திய தேசத்துக்குக் கிடைத்த காலம் தொட்டு, இந்திய மக்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக மாறிவிட்டனர்' என்று, இந்திரா உலகின் பல பாகங்களிலும், காந்தியுகத்தின் மகிமையை விளக்கி யிருக்கிருர், நாம் குறிப்பிட்ட சென்னை வழக்குப்பற்றி, இந்திராவே மகிழ்ச்சியடைவார்.
மூட நம்பிக்கைகளைத்தகர்த்தெறிந்து, இந்தியப் புண்பாட்டின் அத்தி வாரத்தில், ஒரு விஞ்ஞான நோக்குடைய சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதில், தந்தை செய்த பணியைத் தைரியமாகத் தெரிடர்ந் தவர் இந்திரா.
அவருடைய ஆட்சியில், ஜனநாயகத்துக்கு ஆபத்து இருந்தது; மயிரிழையில் தப்பியதென்றும் சொல்லலாம்; ஆணுல், வகுப்புவாதம் என்ற நச்சுப் பாம்பின் கடிக்குப் பலியான இந்திராவின் பணி ஜனநாயக முறையில் தொடர, அவருடைய நாமம் என்றும் வாழ, இன்று ஆட்சிக்கு வந்திருக்கும் ரஜீவ் காந்திக்கு ஆண்டவன் அருள் புரிவாராக.
19. 1184

Page 87
ஆபிரிக்காவில் பட்டினி அழிவு
நாமிந்தச் சிறு குடாநாட்டில், துப்பாக்கி அழிவின் தொடர் கதை யை நிறுத்த முடியாது திகைக்கிருேம்.
திகைப்பு மட்டுமல்ல; அதனைப்பற்றி ஓயாது பேசிக் கொண்டிருக் கிருேம்; இதற்கு முடிவு எட்டத்தில் என்று நினைக்க வேண்டியிருக் கிறது.
கொழும்புப் பாராளுமன்றம் விடயத்துக்கு உதவாததால், வேறு வழி என்ன என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
எமது இளைஞர்களின் எதிர்காலத்தை நாம் சிந்தியாமல் இருக்க வில்லை ; ஆணுல், தவருன வழியில் திசை திருப்பப்படுகிறவரை எவ்வாறு தப்பவைப்பது?
போராட்டம் முலமே எமது வாழ்வின் மேம்பாடு கிட்டுமென்று, சத்தியம் செய்து கொண்டவரை, இங்கு வாழும் பொதுமக்கள் எவ்வாறு கணிக்கின்றனர்? - ' ' .
அரசாங்கம், "பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று சங்கற்பம் செய்துகொண்டு, அத்திசையில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பு, அவர்களின் நல்வாழ் வுக்குரிய தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப்படலாம் என்ற ஆலோ சனைக்குத் தக்க தலைமைத்துவம் தேவை.
இந்த நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்துக்கு, ஆபிரிக் காவில் லட்சக்கணக்கான மக்கள், பட்டினியால் மடிந்து கொண்டி
ருப்பது, ஒரு வெறும் வெளிநாட்டுச் செய்தி போல் தோன்றும்.

ஊரடங்கு வாழ்வு 155
அந்த நிலையிலிருந்து நாம் ஒருபடி உயர்ந்து, ஒரு சமுதாய மனச் சான்றுடைய மக்களாக மதிப்புப் பெற்ருல், எங்கள் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் விடிவு உண்டு.
ஆபிரிக்க நாடுகள் இன்றைய ஆராய்ச்சியின்படி, பண்டைக்காலத் தில் பண்பட்ட மக்களாக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.
இதனை நம்புவதற்கு இந்தியாவே சான்றளிக்கின்றது. வறுமையால் உருக்குலைந்த மக்களின் கண்களில், ஒரு தூரகால ஒளி இருப்பதை ஆராய்ச்சி நிபுணர் ஏற்றுக்கொள்கின்றனர்.
நாம் குறிப்பிடும் பண்பாடு, இன்றைய விஞ்ஞான உலகுக்கேற்ற, மேனுட்டு நாகரிக சாயலைக் கொண்டதல்ல; இயற்கையோடு இசைந்த வாழ்வில் ஈடுபட்ட ஆபிரிக்க மக்கள், வேறு இடங்களில் கிடையாத விலைமதிப்புடைய மூலப் பொருள்களைத் தம் நாட்டில்
கண்டனர்.
மேனுட்டுத் தொழிற் புரட்சி, ஏகாதிபத்தியப் போர், இவை போன்ற தாக்கங்களுக்கு அடிமையான ஆபிரிக்க நாடுகள், செல்வத்தின் மத்தி யில் ஏழைகளானுர்கள்.
இன்று சுதந்திரம் கண்ட, இன்னும் பூரண சுதந்திரத்துக்குப் போராடும் நாடுகள், வெள்ளையரின் ஆதிக்கத்தில் மட்டுமல்ல, சுதந்திர ஆட்சியிலேயே வறுமை வாழ்வில் தொடர்கின்றன.
பட்டினி ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஐ. நா. வின் கிளை ஸ்தாபனங்கள், ஆபிரிக்க நாடுகள் கடும் வறட்சியால் பீடிக்கப் பட்டிருக்கும் போதே, உணவுத் தட்டுப்பாடு அங்கு வாழும் கோடி மக்களை வாட்டும் என்பதை அறிந்திருக்கவேண்டும்.
எனவே, இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பட் டினி மரணம், தக்கநேரத்தில் தடுத்து நிறுத்தப்படாதது, உலக சமு தாயத்தின் மனச்சான்றுக்கு மாருத இழுக்கென்பதில் ஐயமில்லை.

Page 88
156 ந. சபாரத்தினம்
குறிப்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் எதியோப்பியாவும் சுடானுமா கும். உதவிகிட்டு முன், சுமார் எழுபது லட்சம் மக்கள் பட்டினி யாலும், நோய் தாங்க முடியாக் குளிர் காரணத்தாலும் பெருந் தொகையில் மடிகின்றனர்.
உலகின் பல பாகங்களில், இன்றைய தொழில் நுட்ப முன்னேற் றம், எண்ணற்ற குபேரர்களை உற்பத்தி செய்திருக்கிறது. விருத்தி யடைந்த நாடுகள், இந்தக் கண்ராவிக்கு உதவ முன்வரவில்லை.
எங்கள் நாட்டை எண்ணிப் பார்த்தால், சுதந்திர ஆட்சியில் பெரும் பான்மை மக்கள் வறுமையில் வாடுவதும், ஒரு சிறுகூட்டத்தினர் ஆடம்பர வாழ்க்கையில் இன்புறுவதும் நன்ருகப் புரியும்; இந்தப் "பிரபுத்துவக் கூட்டமே, ஜனநாயக ஆட்சியின் பலவீனங்களைப் பயன்படுத்தி, தமது ஆதிக்கம் தொடர்வதற்கு, காலாகின்றனர்.
இந்த நாட்டில் பட்டினியால் எவரும் சாவதில்லை என்று பாராளு மன்றத்தில் பலத்துப் பேசப்பட்டிருக்கிறது; அதில் உண்மை உண்டு. ஆணுல், வறுமை வாழ்வில் வாடும் மக்கள் விடிவுகாண்பது எவ் வாறு என்று தத்தளிக்கின்றனர்.
ஆபிரிக்க பிரதேசங்களில் ஏற்பட்ட வறட்சி, இங்கு நிகழுமானல் அந்தத் துன்பியல் நாடகம் விடாது நடத்தப்படும்.
20-11 -84

யாழ்ப்பாணத்தில் "உர" வாரம்
யாழ்ப்பாணத்தின் இன்றைய ஆபத்து நிலையில், இதென்ன *உழவாரம்’ என்று வாசகர்கள் கிண்டல் செய்வது எமது அகக்
கண்களுக்கு அகப்படுகிறது.
ஆபத்து நிலை, மனித வரலாற்றில் எக்காலத்தும் காணப்பட்டதாக, வரலாற்று நிபுணர்கள் கருதுகிருர்கள். ஆதாமின் காலத்திலேயே ஜன ஒடுக்கம் என்ற பிரச்சனை.
இவ்வாறு, காலம் செல்லச் செல்ல, அபாயத்தின் வடிவம் மாறு படுவதொழிய, அபாயம், அச்சம் என்றும் இருக்கத்தான் செய்யும்; அதற்காக, மக்கள் கைகட்டிக் கொண்டிருந்ததாக எங்கும் குறிப்பிடப் படவில்லை.
அதிக தூரம் போகத்தேவையில்லை கடந்த வாரம் தொட்டு இன்று வரைக்கும் விடாமழை போல், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அபாயமான "குண்டு வெடிப்பு - துப்பாக்கிச்சூடு” என்ற புதுவித போரில், பொதுமக்கள் எவ்வாறு தம்மைப் பாதுகாக்க வேண்டு மென்று சுயபயிற்சி பெறுகின்றனர்! வாழ்க்கை முற்ருக ஸ்தம்பித்து விடுவதில்லை.
‘போர் நிலையத்தைத் தவிர்த்து, சாவதானமாக தங்கள் தினசரி வாழ்விற்கு அத்தியாவசியமான முயற்சியில், மக்கள் ஈடுபடுகின்றனர். * சாவின் மத்தியில் வாழ்வு' என்ற வாக்கியத்துக்கு மிகப் பொருத்த மான எடுத்துக்காட்டான யாழ்ப்பாணத்தில், இவ்வாரம் "உர வார
மாக” அனுஷ்டிக்கப்படுகிறது. அமைதிக்கு அவசியமான பணி.
"யாழ் விவசாயிகளும் உர பாவனையும்’ என்பது பற்றிய அரிய புதிய கருத்துக்கள் நன்கு விதைக்கப்படும். "நிலம் பண்பட்டதானுல்

Page 89
158 ந. சபாரத்தினம்
இம்முயற்சி நல்ல பலனளிக்கும்; நிலம் என்பது உழவரின் மனம். உரமான மனமுடையவரே சிறந்த உழவராவர்.
உழவுத் தொழில் செய்யாது, வேறு தொழில் செய்து வாழ்பவர் எல்லோரையும் தாங்கும் பொறுப்பு உழவர் கையில் இருப்பதால், உழவர் தேரைத் தாங்கும் அச்சாணி போல் மனஉறுதி உடையவர் என்பது குறள். ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ དུ་
யாழ்ப்பாணத்தவருக்கு, வேளாண்மையின் விரிவான கருத்தை விளக்க முயல்வது, கொல்லர் தெருவிற்கு ஊசி விற்கப்போன கதை போல் முடியும்.
ஆணுல், இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், பரம்பரைக் கமக்காரர் நாட்டைவிட்டு ஒட்டம் எடுக்கின்றனர். எங்கள் இளைஞர் எத்தனை பேர் வேற்று. நாடுகளில் தொழில் புரிகின்றனர், தஞ்சம் தேடு கின்றனர்; பிறந்த பொன் நாட்டில் ‘வேலை இல்லை’ என்று கருதி, அதனை மீட்கும் பணியில் தீவிரப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும், இங்கு கல்வி பயின்றவர் பலரும், விவசாயத் தை ஒரு மதிப்புடைய துறையாகக் கொள்வதில்லை. இதற்கும் காரணமுண்டு.
ஒரு நொடிப் பொழுதிலே, ஆயிரக்கணக்கில் உழைப்பவரைக் கண்டு மயங்குபவரும், வேற்று நாடுகளில் தலையைக் கிறு கிறுக்க வைக்கும் மாதச் சம்பளத்தில் மோகங் கொண்டு படை எடுப்பவரும், விவசாயத்தின் பெருவிருத்தியை உணரமுடியாத பேதைகள்; உணர்ந்தவர்களைப் பயித்தியக்காரர் என்று நினைப்பவர்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, விவசாயபீடமே மிக அவசர மானது. வயித்தியம் படித்து முடித்து யாழ்ப்பாணத்திலேயே வேலை தேட வேண்டிய "டாக்டர்களுக்கு’, போதிய போஷாக்கு உணவு தேவைப்படுகிறது; வீட்டுத்தோட்டம் உதவாதா?
அக்கால கிராம வாழ்க்கையும் கமத்தொழிலும், இன்று வறுமைக்கே வழிதேடுமென்பது உண்மை. இதனை ஒழிக்கவே விஞ்ஞானமயமான

ஊரடங்கு வாழ்வு 159
பயிர்ச் செய்கையும், மட்டுப்படுத்திய விளைநிலத்தில், மக்களுக்கு உணவளிக்க விளைச்சலை எவ்வாறு அதிகரிக்க முடியுமென்பதும் இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள். இதில் ஜப்பான் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதைப் பெருந்தொகை மக்கள் நெருங்கி வாழும் யாழ்ப்பாணம் அவசியம் அறிய வேண்டியது.
இந்த வகையில், இந்த உரவாரம் ஒரு உண்மையான எழுச்சியை உண்டு பண்ணவல்லதா? யாழ் திட்டமிடல் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பை ஈர்ப்பதில் கவர்ச்சியான முறைகளைக் கையாள வேண்டும். அரசின் "ஸ்ரன்ற் என்று இருக்கப்படாது.
திருச்சி வானுெலியை கட்டாயமாகக் கேட்கும் பாக்கியம், எம்மிற் பலருக்கு இன்று கிடைத்திருக்கிறது. உழவர்களுக்கு மிக ஒழுங்காக, தெளிவாக, செயல்முறை ரீதியாக வழங்கப்படும் பணிப்புரை அந்த வானெலியில் இடம்பெறும் சுவையான சங்கீதம் போல், ஆண்டவன் படியளக்கும் காலை நேரத்தில் இடம் பெறுகின்றது.
யாழ்ப்பாணத்தவருக்கு, இங்கு இந்த வசதி கிடைக்கும் வரைக்கும், இவ்வித கருத்தரங்குகள், மக்களின் மூடநம்பிக்கைகளை அகற்றவும் அவர்களின் தேவைக்குதவவும் பயன்பட வேண்டும்.
தொழுதுண்டு நாம் முற்ருகக் கெட்டுப் போகவில்லை. சிங்கப்பூர் தொடக்கம் ரிறினிடாட் வரைக்கும், இக்கூட்டம் இன்றும் தொடர் கிறது; மானத்தைக் காப்பாற்றினுலும் மதிப்பை வளர்க்கவில்லை. நிலத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தத் தெரியாது திண்டாடுகிறவர்களைப் பூமி பரிகசிப்பதில் என்ன பிழை ?
21-11-84

Page 90
"ஊரடங்கு" வாழ்வு
"பச்சைத் தண்ணிப் பட்ஜெட்டிற்கு எத்தனை வாக்கெடுப்புக்கள் நடத்தினுலும், மக்கள் பரவாய் பண்ணுவதில்லை என்ற நிலை, நாடெங் லும் பரவலாய் காணப்படுகிறது.
சபையிலேயே, அமைச்சர்கள் அரசதரப்பு எம்.பி.க்கள் மெலிந்த தொகையுடைய எதிர்க்கட்சி உறுப்பினர், சமுகமளிக்கவோ விவா தத்தில் பங்குபற்றவோ மனமற்றிருக்கும் போது, இதற்கு வேறென்ன சான்று தேவை?
இதனைக்கூட ஒரு பிரமாதமான சாதனையென்று அரசபத்திரிகைகள் சொல்வதானுல், இவற்றை வாசித்து நம்பும் மனிதப் பதர்கள் இந்த நாட்டில் உண்டென்று நினைக்கவேண்டியிருக்கிறது.
கடந்த இரண்டாவது உலக மகாயுத்தத்தில் உணவுப் பங்கீடுமுறை ஆரம்பமாவதற்கு நாம் இறக்குமதிக் கப்பல்களை நம்பி வாழ்ந்ததே காரணம்.
சுமார் 30 வருடங்களுக்குப்பின், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட் டிருக்கிறது. உணவுப் பொருள்களில் முற்ருகத் தன்னிறைவுகாண முடியாவிட்டாலும், மிக அத்தியாவசியமான தேவைகள் ஓரளவிற்கு நாட்டில் கிடைக்குமளவிற்கு, விவசாய - உணவு அமைச்சுக்கள் செயற்பட்டிருக்கின்றன.
தாராளமான பொருளாதாரக் கொள்கையின் நன்மை தீமை பற்றி நாம் இங்கு வாதாடவில்லை. அதன் காரணமாக, எங்கள் பொருளா தாரம் இன்றும் இறக்குமதியில் பெருமளவு தங்கியிருப்பதைக் குறிப் பிட வேண்டும்; கண்டிக்கவும் வேண்டும்.

ஊரடங்கு வாழ்வு 161
* கப்பலிலிருந்து வாய்க்கு எட்டும் பொருளாதாரத்தின் அபாயம் குறைய, அதிலும் மோசமான 'ஊரடங்கு வாழ்வு சிலவருடங்களாகத் தலையெடுத்திருக்கிறது.
இந்தப் புதிய துன்பமே மக்களுக்கு இன்று பழம் பாடமாகிவிட்டது. ஆணுல், இதன் படிப்பினையை மக்கள் உணர்ந்தபாடில்லை.
ஒருநாள் ஊரடங்கானுலும், அடுத்தநாள் விடியற் காலை, ஒவ்வொரு சிறுகடையிலும் கூடும் மக்கள், ஒரு பெரும் தேர்த்திருவிழா காணும்
கூட்டம்.
இந்தநிலை - ஊரடங்கு வாழ்வு - இன்னும் நெடுங்காலம் நீடிக்க லாம்; ஆனல், இதில் வெளியாகும் எங்கள் அவலநிலை நீடிக்கப் போகிறதா?
மனிதப்பிறவியை மேனுட்டாருமே ஒரு ஞானப்பிறவி (homo sapiens) என்று கருதிவந்திருக்கின்றனர்.
தொழிற்புரட்சி என்ருெரு சனியன் பிடித்த காலம் தொட்டு இன்று வரைக்கும், ஒரு தொழில்நுட்ப யுகம் பற்றி ஓயாது பேசப்படுகிறது; மேனுட்டின் 'நன்கொடை இது.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலம், உலகம் எத்தனையோ அற்புத சாதனைகளைக் கண்டிருக்கிறது.
அதில் ஒன்று தான், நாம் குறிப்பிடும் மனிதப்பிறவியில் ஏற்பட்ட தீவிரமாற்றம். -
'புத்தி ஜீவியாக வாழ வேண்டிய இன்றைய சாதாரண மனிதன் ஒரு பொருளாதார ஜீவியாக (homo economicus) மாறி விட்டான்' என்கிருர் இன்றைய பிரபல சமுதாயதத்துவ மேதை ஐவன் இல்லிக் (ivan Illick) 6Tsirugui.
தாம் செய்யும் தொழிலே தெய்வமென்றும், ஊதியம் மட்டுமல்ல, ஆன்மீக திருப்தியும் உண்டாக வேண்டுமென்றும் இன்றைய மனிதன் எண்ணுவதில்லை; எமக்கு அத்தியாவசியமான பொருள்களை உண்

Page 91
162 ந. சபாரத்தினம்
டாக்குவதில் எவ்வித சிரமமும் எடுப்பதில்லை என்கிருர் இப்புதுவித சிந்தனையாளர்.
கல்விமுறையிலேயே எவ்வாறு மனித தேவைகளை அதிகரிக்கலாம், அவைக்கேற்ற தொழில்களை அதிகரிக்கலாம், அதன் மூலம் பெரிய உத்தியோகங்களை வகிக்கலாம் என்ற அத்திபாரக்கல் நாட்டப்பட்டி ருக்கிறது. இன்றைய பாடசாலைக் கல்வி மட்டுப்படுத்தப்பட்டு, அதன் பல அம்சங்கள் தேவையற்றதாகக் கருதப்புட வேண்டுமென்பது அவ ருடைய தீவிரவாதம்.
எமக்கு இன்று பொருத்தமான சிந்தனை ஒன்றை மிகச் சிம்பிளாக" விளக்குகிருர்,
"நான் வீட்டில் ஒரு சிறு தோட்டம் செய்கிறேன்; தக்காளி மட்டு மல்ல, வேறுசில பழவகைகள் அதில் உண்டு. ஒரு பழுத்த நிறத்த சிவத்தப் பழத்தைப் பிடுங்கி, அதன் அழகை ரசித்து இது என் படைப்பென்ற மனத் திருப்தியுடன் அதனைச் சாப்பிடுகிறேன்.'
"பொருளாதார நிபுணர் ஒருவர், என்னுடைய முயற்சி இத்தனை ரூபாய் இத்தனை சதம் நட்டம் பேசுகிறதென்கிருர், கடையில் ஒரு பழத்தின் விலை சில சதங்களே! நாம் புசிக்கும் பழம் ரூபாய்க்கணக் கில் முடிகிறது.'
இந்த மனுேபாவமே இன்று நாம் எல்லோரும் பாவனையாளர்களாகக் கடையில் தஞ்சம் புகவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
24-11-84

தீர்ப்பென்ன?
சிக்கலான பிரச்சனையில் நாடு தடக்கி விழும் அபாயம் எங்கும் காணப்படுகிறது.
நாம் வாழும் யாழ்ப்பாணத்தில் நிலவும் நெருக்கடி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை; ஆணுல், இன்று நாடு முழுவதையும் குழப்பிவிடும் சூழ்நிலைக்கு யாழ்ப்பாணமே தலையகமெனக் கருதப்படுகிறது; பிரச்சனையின் ஆணிவேர் இக்கருத்து.
சாவகச்சேரியில், அண்மையில் நடந்த தாக்குதலும், நாவாந்துறைக் கடலில் வீழ்ந்த ஹெலிக்கொப்டரின் சோகக்கதையும் பற்றி, எங்கள் பத்திரிகையைப் படித்த வாசகர்கள், ஒரு பேருண்மையைக் காணமுடியும்.
ஒருவர் ஆபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நிலையில், அவரைக் காப்பாற்றத் தன் உயிரையே துச்சமெனக் கருதும் மக்கள் இங்கு உண்டு. சிங்களமோ, தமிழோ, நண்பனுே, பகைவணுே என்று பாகுபாடு அந்த நேரத்தில் எள்ளளவும் இருக்காது.
ஒரு பகைவன் போரில் கைதியாகி விட்டால், அவனை எந்த விதத் திலும் துன்புறுத்தலாகாது. வருத்தப்பட்டவர், காயப்பட்டவர், மறியற்காரர் போன்ற திக்கற்றவர்களைப் பாதுகாக்க வேண்டியது போர்வீரனின் கடமை. பொதுமக்கள் நிராயுத பாணிகளென்பதால், அவர்களைத் தாக்குவதோ, இம்சைப் படுத்துவதோ தவிர்க்கப்பட்ட செயல்கள்.
இன்றைய அதிதீவிர தொழில்நுட்ப யுகத்தில், போரின் வீறு நாச கருவிகளில் தங்கியிருக்கிறது. எங்கள் நாட்டை இந்தக் கொடுமை

Page 92
164 ந. சபாரத்தினம்
பீடிக்குமோ என்று கலங்க வேண்டிய கட்டத்தில் நாம் வாழ்கின் ருேம்.
இது ஒரு சிறுநாடு; ஓரளவிற்கு தனித்துவமாக, உலகச் சச்சரவு களிலும், வல்லரசுப் போட்டிகளிலும், அகப்படாது தப்பி வாழ வசதி படைத்த நாடு.
இந்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல், இன்று அநியாயமாக வளர்ந்து வரும் யுத்த அபாயத்தை சிங்கள - தமிழ் யுத்தமாகத் திசை திருப்பியும், இன்றைய அவல நிலைக்குப் பெரிதும் உதவக்கூடிய அயல் நாடாகிய இந்தியாவை, இப்போரில் அணுவசியமாக இழுத் தும் நிலைமையை மோசமாக்க முயற்சிக்கிறவர்களை நாம் என்னென்று சொல்வது ?
இருட்டில் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றுள் விழும் பேதை யரை யார் தப்ப வைக்கமுடியும் ?
கடந்த ஆடிக்கலவரம் வேருெரு விதமான போர்; இனக்குரோதத்தை வளர்த்து, ஒரு பாரிய திட்டத்தில் அமைந்த, தனியார் படையின் தாக்குதல். தனிச் சிங்களச் சட்டம் தமிழரையே பலி எடுத்தது; ஆணுல், எத்தனை தமிழ்க் குடும்பங்கள் சிங்களப் பெருமக்களால் காப்பாற்றப்பட்டு இன்று உயிர் வாழ்கின்றன.
இந்த நற்பண்பு இன்றும், இந்த இக்கட்டிலும் இரு சமூகங்களிலும் நூர்ந்து போகவில்லை; இந்த ஒளியைத் தூண்டாது, "நாட்டுக்கு ஆபத்து; எல்லோரும் திரண்டு இதனைக் காப்பாற்ற முன் வாருங்கள்’ என்றும், யாழ்ப்பாணத்தில் உயிர் வாழும் மக்கள், உயிர்தப்ப வெளி இடங்களில் சிலகாலம் வாழ்வது நலமென்றும் பொறுப்புடைய அமைச்சர்கள் கூறுவதானுல், போர் ஒன்று உருவாகிறதென்பது விளக்கம். இந்த நிலைமைக்கு தமிழ் தீவிரவாதிகளின் பங்கு என்ன?
தமிழ் இளைஞர்கள் ராணுவப் பயிற்சி பெற்று, பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் இலக்கு தமிழ்ப் பகுதிகளில் நிலவும் ஆட்சி: இங்கு நடந்த கொள்ளைகளிலும், கொலையிலும், சிங்கள அப்பாவி மக்கள் எவரும் பலியாகவில்லை.

ஊரடங்கு வாழ்வு 165
இவ்விதத் தாக்குதலால், இங்கு வடபகுதியில் ஆட்சி புரியும் அரசை அகற்றி விடலாமென்ற நோக்கம், தமிழ் தீவிரவாதிகளைத் தூண்டுகின்றதெனலாம்.
இந்த எத்தனத்துக்கு இந்தியா உதவுமென்ற அச்சம், இன்று நாம் அனுபவிக்கும் எண்ணிறந்த துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம்.
தமிழ் - சிங்கள மக்கள் அநியாயமாக உயிர் இழப்பதைத் தடுப்பதை
விட்டு, இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விட்டு, மூளும் போரில் குதித்து வெற்றி காண்போம் என்பது வீண்பேச்சு.
இருபகுதிகள் சண்டையிட்டால் அதனைத் தடுத்து நிறுத்த, இருவருக் கும் பொதுவான நண்பர் தலையிடலாம்; அல்லது இவ்விரு பகுதி யினரே பித்தம் தெளிந்து சமாதான மேசைக்கு உடன்படலாம்.
வேற்று நாடுகளின் தலையீட்டை நம்பினுல், கடன் உதவிக்கு நாட்டின் சுதந்திரத்தை அடகு வைப்பதாய் முடியும்.
5-12-84

Page 93
ஒரு மனிதனின் உறுதி
இரண்டாவது உலகமகாயுத்த முடிவில், இந்திய சுதந்திரமே யுத்தத் தில் வெற்றி பெற்ற பிரிட்டிஷாருக்கு மிகச் சிக்கலான பிரச்சனை.
போரில் அனுபவித்த அழிவைக்கண்டு, வெற்றி பெற்ற போதும், சமாதான வாழ்வுக்கென தொழிற்கட்சி ஆட்சியை அமோக ஆதர வுடன் நிறுவி, போரில் புகழ் பெற்ற பிரதமர் சேர்ச்சிலைப் பதவி நீக்கம் செய்தனர்.
புதிய தொழிற்கட்சிப் பிரதமர் கிளெமெண்ட் அட்லி, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பெப்ரவரி 1947ல் பகிரங்க அறிக்கை விடுத்தார்.
அரசருடன் ஆலோசித்து, அரச குடும்பத்தில் பிரபலம் பெற்ற மவுண் பாட்டன் பிரபுவை அழைத்து, என்ன வகையிலும் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகப் பணி ஏற்று, இந்திய மக்களுக்கே ஆட்சி உரிமை வழங்கிவர வேண்டுமென்று பணித்தார்.
ஆகஸ்டு 15, 1947-ல் பிரிட்டன் வெளியேறும் என்றும், அந்நாளே இந்தியாவின் சுதந்திரமெனக் கொள்ளப்படும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.
இதற்குள் உண்டான இந்து முஸ்லிம் கலவரம், இரத்தப் பெரு வெள்ளத்தை உண்டாக்கியது; தலைவர்கள் தலைகுத்தி புரவியாடிய போதும் தடுக்க முடியாத பிரிவினை, இந்தியாவென்றும், பாகிஸ் தானென்றும் இரு சுதந்திர நாடுகளை உருவாக்கியது.
பிரிட்டனின் திடமான தீர்மானத்துக்கு, பிரதமர் அட்லி (பின்பு அவர் பிரபு) யின் சொந்த மன உறுதியே காரணம் என்று வரலாறு வற்புறுத்துகிறது.

ஊரடங்கு வாழ்வு 167
அன்று அவர் அந்தத் தீர்மானத்தை எடுத்திராவிட்டால் இன்றைய உலக வரலாறு வேறுபட்டிருக்கும்.
இலங்கையின் சுதந்திரம், இன்று இந்தக்கொடிய நிலைமையைக் கொண்டு வந்திராது; பூரண சுயராச்சியத்தில் தாகம் கொண்டிராத இந்நாடு, வெள்ளையர் ஆட்சிக்கும் ஆதரவாகவிருந்து, குறிப்பிட்ட ஒரு குழுவினர் "சுய ஆட்சி" என்ற போர்வையில், இந்நாட்டு மக் களை அடிமைத்தனத்தில் நீடிக்க வைக்கலாமென்று நடந்தனர்.
இந்தியாவைவிட்டு வெளியேறிய பிரிட்டன், அந்த மகான் அட்லி யின் பரந்த நோக்கால், பல குடியேற்ற நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
36 ஆண்டு கடந்த சுதந்திர இலங்கையில், தமிழர்களின் துயரையும் துன்பத்தையும் வளர்த்து வந்த ஆட்சியாளர், இன்று நாட்டில் - ஒரு சிறு நாட்டில் - இரத்த வெள்ளத்துக்கு பொறுப்பானவர் என்ற பழிக்கு வழிதேடுகின்றனர். இதனைத் தவிர்க்கவல்ல ஒரு மனிதனின் உறுதி இன்று தேவைப்படுகிறது.
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் நச்சுவாயுவால் ஆயிரத்துக்கு மேல் இறந்தும், பல ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுமிருக்கின் றனர்; எம்மைப் பீடித்திருக்கும் நச்சுவாயு, மனிதனை மனிதன் கொல்லும் வாயு. அங்கு அது நிறுத்தப்பட்டதுபோல, இங்கும் இது நிறுத்தப்படவேண்டும்.
இதற்கு வழிகாணத் தவறினல், இதன் விளைவு ஒரு இனத்துக்கல்ல நாடனைத்துக்கும் அழிவு தேடுவதாக முடியுமென்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும்.
7-12-84

Page 94
புது வீடு
காரிருள் அடர்ந்திருந்தால், அது சூரியோதயம் கிட்டி நிற்கிறதென் பார்கள். மணிக்கூடில்லாக் காலத்தில் பிறந்த உள்ளுணர்வு இது. உடைந்த, எரிந்த சமுதாயத்தில் வாழும் நாம், இன்றைய அழிவில் உயிர்பிழைக்க முடியுமானுல், வீட்டைத் திருத்துவது முடியாத காரியம். எந்த உரிமையும் ஒரு இனத்துக்கு பிரத்தியேகமான தல்ல. புதிய வாழ்க்கைமுறை பிறக்க வேண்டும்.
"சிறுகக் கட்டி பெருக வாழ்க’ என்ற குறிக்கோளைச் சிரித்துக் கேலி செய்ததனுல், இன்று அதற்குரிய தண்டனைக்குள்ளாகின்ருேம்.
குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாதவர், வீடு வாசல் இல்லாதவர், சமூகத் தால் ஒதுக்கப்பட்டவர் கொல்லப்படுவார்களானுல், அந்த அழிவுக்கு வசதிபடைத்த சமூகமே பொறுப்பு.
சித்தாந்தம் வலதோ இடதோ என்று தர்கித்துக் காலம் கழிப்பது அணுவசியம். ༤ འ ---, - , -༨༥
வேற்று நாட்டில் படையெடுத்து, மக்களைக் கொன்று, பொன்னையும் மணியையும் கொள்ளையடித்து உள்நாட்டுப் பிரஜைகளைத் துன் புறுத்திய மன்னர் ஆட்சி அகற்றப்பட்டது.
மக்கள் ஆட்சி என்ற பேரில் இன்று என்ன நடக்கிறது? மக்களின் ஆட்சி, மக்களையே கொன்று குவிக்கிறது ஏன்? இன வேறுபாடுதான் காரணமா? ஒழுங்காக வாழாது, திட்டமான எண்ணம் இல்லாது, சிங்காரத்திலும் ஆடம்பரத்திலும் ஆசைகொண்டு, சீரழிந்துபோகும் சமூகம், அது எந்த இனமானுலும், இன்றைய கட்டத்தைத் தவிர்க்க முடியாது.

ஊரடங்கு வாழ்வு 169
உயிருக்கு - எந்த உயிருக்கு, யார் பாதுகாப்பளிப்பது. வீடுவிட்டு வெளியேறினுல் என்ன நடக்கும், பல வசதிகளும் படைத்த பட்ட ணம் - ஏன் கிராமத்திலும் பாதுகாப்பாக வாழ வழி கண்டிருக் கிறதா?
ஒரு பலமான அத்திவாரம் கொண்ட வீட்டுக்கு உரித்தான மக்கள், வீட்டை பழுதுபோக விட்டது மட்டுமல்ல; அத்திவாரத்தையும் ஈடாட விட்டுவிட்டோமே. உயிரைத் தியாகம் செய்யும் எமது இளைஞர், இதனை உணர்வாரென்பது நிச்சயம்.
கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கும் பண்பு எங்கிருந்து வந்தது? எனவே, நெருக்கடி வராமல் என்ன செய்யும்? குடும்பம் சிதைய, பொன்னுக்கும் மணிக்கும் பேராசை, திரைகடல் ஒடத்துாண்ட, பிறந்த பொன் நாட்டில் மிஞ்சி இருக்கவேண்டிய சக்கையே விபரீத மான தொழில் தேடி பிறந்த மண்ணைவிட்டு, “பாதுகாப்பு’ என்ற காரணம் காட்டித் தப்பியோட முயல்கின்றது.
இங்கு பிறந்து, இங்கு உயிர் நீக்கவேண்டுமென்ற கருத்துக் கொண்டவர்கள், நம்முன்னுேர் அளித்த அருஞ் செல்வமான சிக் கனம் என்ற சிறந்த வாழ்க்கை முறையில் புதுவீடு அமைக்க அத்தி வாரமிடவேண்டும்.
இது வறுமையில் பிறந்த பண்பாயிருக்கலாம். ஆணுல், செல்வத்தில் தனது சமூகத்துக்கு உதவ வழி காட்டுவதும் அதுவே. வாய்க்கால் வரவும், ஆற்று (மகாவலி)ப் போக்கும் மதிகெட்ட வாழ்வுக்கு அடையாளம் என்பதை, இன்றைய மக்கள் ஆட்சி புகட்டுகின்றது.
8-12-84

Page 95
மனித உரிமைகள் : கேலிச்சித்திரம்
மனிதனின் அடிப்படை உரிமைகள் யாவை என்று ஐ. நா. பிரகடனப்படுத்திய தினம் டிசம்பர் 10, 1948.
அது ஒரு திவ்விய தினமென்பதால், 36 ஆண்டுகளுக்குப் பின் எமது நாட்டில், அத்தினத்தில் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதோ, எழுதுவதோ ஒரு கேலிச் சித்திரம் போலிருக்குமென நினைத்து, அன்று மெளனம் சாதித்தோம்.
"1984 என்ற நூலை எழுதி, அவ்வருடம் உலகம் அழிந்துவிடுமென்று கூறியவர், ஆங்கில நாவலாசிரியர் ஜோர்ஜ் ஒர்வெல்; அதனை எழுதும்போது, அவர் பயங்கர நோயால் பீடித்திருந்தார். சில நாட்களில் இறந்து விட்டார்; எனவே அவருடைய "சாத்திரம்" பொய்த்துவிடுமென்று கருதப்பட்டது.
உலக அரங்கை எடுத்துக் கொண்டாலும், எங்கள் நாட்டைப் பார்க்குமளவிலும் மனித உரிமைகள் பேசும்போதெல்லாம், நூலா சிரியர் ஜோர்ஜ் ஒர்வெல்லின் இன்னுெரு நூல் நினைவுக்கு வரு கின்றது. மன உடைவின் சிகரத்தில் நின்று அவர் எழுதிய நூல் * 6 (55u67&OOT' (Animal Farm).
'இப்பண்ணையில் வாழும் மிருகங்கள் எல்லாம் சமத்துவமுடையவை; ஆணுல் சில மற்றவையிலும் பார்க்க கூடிய சமத்துவமுடையவை' என்கிருர் ஒர்வெல்.
எனவே, "சில கூடிய சமத்துவமுடையவை" என்ருல், மற்றவை கட்டாயமாகச் சமத்துவத்தில் குறைந்தவையென்பது சொல்லாமலே விளங்கும்.

ஊரடங்கு வாழ்வு 171
இலங்கையைத்தான் கருத்தில் கொண்டார் நூலாசிரியர் என்று சொல்ல எமக்குப் பேரவா உண்டு; ஆணுல், மிருகப் பண்ணைகள் வேறு எத்தனை நாடுகளில் உண்டென்பதை நாமறியோம். இருப் பினும், இங்கு நடைபெறும் அழிவு, உலக அழிவு எவ்வாறிருக்கு மென்பதை உணர்த்துகிறது. உலக நாடுகளில் நிரம்பிவழியும் ராணுவ ஆயுதங்கள், இங்கு வந்திறங்குவதால் நிலைமை திருந்துமா? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற காப்புடன் தொடங்கி, மூன்ருவது ஷரத்தில், மனிதன் உயிர்வாழும் உரிமையுடையவன் என்ற பாட்டுப் பாடுகின்றது; வாழ்வின்றேல் உரிமைகள் பற்றி
என்ன பேச்சு?
“எனக்கு வாழும் உரிமை உண்டு; ஆணுல், என்னேடு வாழும் நீ என்னை வாழவிட வேண்டும்."
இதன் அர்த்தம் இன்று தான் இந்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் உணரக் கூடியதாகவிருக்கிறது. வாழமட்டுமல்ல, சாகவே உரிமையில்லை. இந்த நிலை மாறுவதற்கு ஆண்டவனைவிட வேறு யாருமில்லை.
இதனை எம்முடைய ஆன்மீக மரபில், "உயிர்ப் பிச்சை” என்று சொல் வது வழக்கம். அகால மரணத்திலிருந்து காப்பாற்றும் இறைவ னுக்கு, உயிர்ப் பிச்சை தந்துதவும் ஆண்டவனுக்கு நாம் "நேர்த்திக் கடன்' செய்யும் வழக்கம், இன்றும் சமூகத்தில் மறைந்து விடவில்லை. ஆணுல், இறைவனுடைய அதிகாரத்தை - மனித உரிமை என்று பிரகடனப் படுத்தியபோதும் - மனிதன் அபகரித்திட முடியுமானுல், அது உலக அழிவின் அறிகுறி என்று சொல்லவேண்டாமா?
இவ்வருட முடிவுக்கு முன் எங்கள் நாட்டைப் பொறுத்தளவில், நூலாசிரியரின் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா?
16-12-84

Page 96
இராணுவ பலாத்காரம் : உள்நாட்டுப் பிரச்சனை?
எட்டு வருடம் நிதி அமைச்சராக, அரும்பெரும் சாதனைகள் இயற்றிய நிதி அமைச்சர் ருெனி டி மெல் சென் தொமஸ் (குருத்தலாவ) பரிசளிப்பு விழாவுக்குப் பிரதம அதிதி.
இன்று, இந்தநாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக அரும்பெரும் சாதனைகள் இயற்றிவரும் அமைச்சர் அத்துலத் முதலி சென் தொமஸ் (கொழும்பு) பரிசளிப்பு விழாவுக்கு அதிதி.
கடந்த ஆறு வருடங்களாக, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனுதிபதியாகவும் இரண்டாவது தடவை ஜனுதிபதியாக அமர்ந் திருக்கும் உரிமையை மக்களிடம் பெற்றவருமான, ஜனுதிபதி ஜெயவர்த்தணு , வழக்கம்போல் தம்முடைய ருேயல் கல்லூரியின் பரிசளிப்பில் கலந்து கொண்டார்.
மூவரும் வழங்கிய கருத்துரையில், நாட்டை இன்றைய அபாயத்தி லிருந்து பாதுகாக்கும் பொறுப்பு பற்றி பிரஸ்தாபித்திருக்கின்றனர். மாணவர்களுக்கு ஆபத்தின் ஆழம் விளங்குமென்று நம்புவதற்கில்லை. ஆணுல், பிரதம அதிதிகள், குறிப்பாக நிதி அமைச்சரும், பாது காப்பு அமைச்சரும் ராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டுள்ளனர். வறுமை என்ன என்பதை அறியாத மாணவருக்கு, வறுமையை ஒழிக் கும் பணியில் ஆறுவருடமாகத் தொடரும் அமைச்சர், பேசவேண்டி யிருந்த விடயம் வேருென்ருயிருந்தது வியப்பல்ல; ஆனுல் நாட்டில் நிகழும் ஒருவிதமான சிவில் யுத்தத்தில் ராணுவம் மும்முரமாகப் பங்குபற்றுவதை வற்புறுத்தி வெற்றியிலும் நம்பிக்கை தெரிவித் திருக்கிருர்,
அமைச்சர் ருெனிக்கு ஆதாரமானது, ஜனதிபதி லிங்கனின் அமெரிக்க சிவில் யுத்தம். அப்பெருமகன், ஜனநாயகத்தை நிறுவ, ஒரு சிவில்

ஊரடங்கு வாழ்வு 173
யுத்தத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே, நாம் தயங்கலாமா! என்பது போலிருக்கிறது அவருடைய பேச்சு.
லிங்கனின் உதாரணம் ஒரு பொருத்தமான கருத்தை நினைவூட்டு கிறது! ஜனுதிபதியாக வெள்ளை மாளிகையில் அங்குரார்ப்பணம் நடந்தபோது, பொதுமக்கள் அவரை எட்டத்திலிருந்து தரிசித்துப் போவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தனது மகனுடன் வந்த ஒரு தகப்பன், லிங்கனுடன் கைகுலுக்கும் கனவு நனவாக முடிய வில்லையென்பதை அறிந்ததும், வெளியேறும்போது கியூவில் நின்று, " "மிஸ்ரர் பிறெசிடென்ற் இந்த நாட்டை ஆண்டவனும் நீங்களும் பாதுகாக்க வேண்டும்" என்ருர். ஜனுதிபதியின் பதில் ஹாஷ்ய மாயிருந்த போதும், மிக ஆழமான உண்மையை, இன்று இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உரைக்கிறது. 'நன்றி! நீங்கள் சொல் வதில் ஒரு பாதிதான் உண்மை’ என்ருர் லிங்கன்.
இன்று இங்கு வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்? குறிப்பாக கடந்த சில தினங்களாக, நினைக்க முடியாத அட்டூழியங்களுக் காளான யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் குடும்பங்கள் யாரை நம்பி வாழ முடியும்?
லிங்கன் என்றும் பணிவுடனும் தெய்வபக்தியுடனும் கடமையாற்றிய உலகச் சான்ருேன்; அவருடைய விடையில், அமெரிக்கா தன்னில் தங்கவில்லையென்றும் ஆண்டவன் கிருபையால்தான் மக்களைப் பரி பாலிக்க முடியுமென்றும் கருதிர்ை. இன்று இங்கு என்ன நடை பெறுகிறதென்பதை, ஜனதிபதியும் அவர்களுடைய பொறுப்புள்ள அமைச்சரும் நேரில் வந்தறிய முடியாததேன்?
ஆயிரக்கணக்கில் இளைஞர், வயோதிபர், பெண்கள், யுவதிகள் இம்சைப்படுவதும், இங்குள்ள சிவில் வாழ்க்கைக்கு எவ்வித உத்தர வாதமுமில்லாமலிருப்பதும், உள்நாட்டுப் பிரச்சனையென்று அரற்றும் காலம் கடந்துவிட்டது. ராணுவத்தின் பலாத்காரத்தைத் தடுப்ப தில்தான் மக்கள் சுதந்திரம் தங்கியிருக்கிறது. தம்மைப் பாதுகாக்க முயல்பவரையே ஆண்டவன் பாதுகாப்பான்.
17-12-84

Page 97
5?oub5ub L9?lʻi Lumrif
பேரிடர், துன்பம், தொல்லை நிறைந்த வாழ்வைத் துணிந்து வாழ்வ தன் வழியாகத்தான், அச்சம் என்ற பேயிடமிருந்து நாம் விடுதலை பெற முடியும்.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்றுபடும் இன்னல்கள் போல், நாமறிந்த அளவில் என்றும் பட்டதாகத் தெரியவில்லை. இதில் தவறிருந்தால் அதனை ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோருகின்ருேம்.
அந்நியர் ஆட்சியில் பட்ட துன்பங்கள், நாம் கேட்டறிந்தவை என்பதால், இன்றைய நிலையை நாம் இவ்வாறு கூறுகின்ருேம்.
இன்று, எம்மைத் தாக்கிவரும் பேரழிவு, சுமார் பதினுெரு வரு டங்களுக்கு முன் தொடங்கினதென்ருல், 1974-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இரவு நடந்த கொலைகளை ஆரம்பமாகக் கொள்கின்ருேம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததும், கடைசி நாளில் நிகழ்ந்த கொலை நாடகமே தமிழ் மக்களின் உண்மை நிலையைப் பளிச்சென உணர உதவியது.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நடந்த பயங்கரவாதத்துக்கு யார் பொறுப்பு? எத்தனை தமிழர் இதுவரை கொல்லப்பட்டனர்; உடைமை எரிக்கப்பட்டது; கொள்ளையடிக்கப்பட்டது. இம்சைக்கும் பலாத்காரத்துக்கும் பலியானவர் எத்தனை பேர் - இவை போன்ற உண்மையான சம்பவங்கள், அவற்றிற்குரிய காரணங்கள், இவற்றை எஜ்வாறு மக்கள் எதிர்த்து வந்தனர்; சமரசம் காண முயன்றனர்.

ஊரடங்கு வாழ்வு 175
சிறப்பாக கல்வி, தொழில் விடயத்தில், இளைஞர் எவ்வாறு பாதிக்கப் பட்டனர். ஆட்சிக்கு வந்த அரசுகள், எவ்வளவு தூரம் இங்கு நடைபெற்ற ஹர்த்தால், வன் செயல்கள் என்பன்வற்றிற்கு காரண மாயிருந்தன. இவற்றை நன்கு பரிசோதித்து சித்த புத்தியுடனும் ஆராய்ச்சித்திறமையுடனும் ஒரு அரிய பெரிய நூலாக்க வேண்டும். இன்று இதுதானு தேவை என்று கேட்பவர், வரலாற்றின் திறனை யும் சமுதாய உணர்வையும் அறியாதவர்கள், அனுபவியாதவர்கள்: திரும்பிப்பார்க்கும் திறமையற்றவர்கள்; அத்தகைய மனிதர் முன் னேறமாட்டார்.
11 வருடங்களுக்குப்பின், இவ்வித பேதையர் பச்சோந்திகள் எம்மத் தியில் காண்பதரிது. இந்த மாற்றம் இளைஞரால் ஏற்பட்ட புரட்சி
கரமாற்றம்: பயங்கரவாதமல்ல.
விடுதலை இயக்கம் ஒன்று அரசியல் கட்சியாகச் செயற்பட்டு சாதனை கள் நிகழ்த்தியது உண்மை. ஆணுல், அரசியல் ரீதியில் அடிக்கடி ஏமாற்றப்பட்டு, இருந்த உரிமைகளையும் இழந்து விட்டோம்; எங்கள் வருங்காலம் சூனியம் என்று ஆவேசப்பட்டுக் கொதித்தெழுந்த இளை ஞர்கள், ஆயுதப் போரில் நம்பிக்கை கொண்டனர். நாம் இதனை ஆதரிக்கவில்லை. இன்று இவர்களில் அனுதாபம் கொள்ளாதவர் எங்குமுண்டா?
இன்று எவ்வாறிருக்கிறதென்பதை நேரடியாக காண்பவர்களில், பாதுகாப்பு அமைச்சர் முன்னணியில் நிற்கின்ருர்,
"தமிழர் விடுதலை’ என்ருெரு சாமான் உண்டு என்பது தெளிவாகி விட்டது. இதற்கு இறைக்க இறைக்க இருக்கும் கண்ணிரும், செந் நீரும் விழலுக்கு இறைத்த நீரென்ருல், பாதுகாப்பு அமைச்சர் ஆயுதப் போராட்டம் மூலமே இந்தப் போரில் வெற்றி காண முடி யுமென்று நினைப்பது சரியாகும். தமிழர் விடுதலைப் போருக்கு அரசின் வரைவிலக்கணம் "பயங்கரவாதம்’. அமைச்சரின் துணி வான இந்த நம்பிக்கை தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத் துக்கு முரணுனது. தமிழரெல்லாம் பயங்கரவாதிகள் என்ற தவறில் விளைந்த துணிவு அது.

Page 98
176 ந. சபாரத்தினம்
இளைஞர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் அவர்களின் ஆற்றலிலே தங்கியிருக்கிறது. இதற்குக் கிடைக்கும் ஆதரவை யார் தடுக்க முடியும்? அரசின் கொள்கை மாற்றத்தால் முடியும்.
இதனை அடக்கி - வேண்டுமானுல் ஒடுக்கி - தமிழ் அரசியல் தலை வர்களை மதித்து, நியாயமான தீர்வை காணமுடியாது திண்டாடும் அரசு, ஆயுதப் போரில் நம்பிக்கை வைக்க என்ன சாதனை முன்னிற்கிறது? w
பதினுெரு வருடம் பொறுமையாக, தொடர்ந்து போராடும் சாதாரண தமிழ்மக்கள் நினைப்பிலும் துணிச்சல், சொல்லிலும் துணிச்சல், செய லிலும் துணிச்சல் நிறைந்தவர்களானுல்; ஒழுக்கம் குன்ருதவர்களா ணுல்; ஒருபோதும் வழுக்கி விழமாட்டார்.
18-12-84


Page 99