கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எடுத்துக்காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம்

Page 1


Page 2


Page 3

எடுத்துக்காட்டாக விளங்கும்
நாகேந்திரம் குடும்பம்
NEGENTHRAM FAMILY
Thantha i Illam
3.115 Sir. Pon. Ramanathan Road, Jafna Sri Lanka
எழுத்து - தொகுப்பு - உருவாக்கம்
வண்ணை தெய்வம்
Nanthine Publications 1- Allee Raoul Duffy Bat : - Bretagne 93420 - Villepinte France
Tele: a331,851A223

Page 4
இலங்கை விலை gl - 1 2C) . ( )()
Nagenthira III FIITıily எடுத்துக்காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம் குடும்ப உறவுகளின் விபரங்கள் அடங்கிய நூல்
எழுத்து - தொகுப்பு உருவாக்கம் வண்னை தெய்வம்
WANNAITHE WAMI 1 - Allee Raoul Duffy Bat : Bretagne, Res: Fontaine Mallet 93.420 - Willepinte, France Tele : Ol 486. 4 3
LéLL. August 2002
வெளியீடு நந்தினி பதிப்பகம்
எங்கள் சகோதரர் அமரர் மாணிக்கராஜா அவர்களின் முதல் வசந்த வாழ்வு 1980 ஆணித்திங்களில் இடம்பெற்றது.
தம்பிப்பிள்ளை தம்பதிகளின் மகள் நாகபூஷணிதேவி இவரின் வசந்த வாழ்வின்ெ ன்றலாக இணைந்து கொண்டார்.
17-03-84ல் அந்தி தென்றல்க்காற்று தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டது. அவர்கள் வாழ்ந்த அவரது உரிமைக் காணியில் ஒரு பகுதியை அவரின் நினைவாக அயவில் உள்ள கலைவாணி சன சமூக நிலையத்திற்கு நன்கொடையாகக் கொடுத்தார்கள்.
அந் நிலையத்தில் அமரத்துவமடைந்த திருமதி நாகபூஷணிதேவி அவர்களின் பெரிய அளவிலான உருவப்படத்த்ை வைத்து கெளரவித்து வருகின்றார்கள். இப்பொழுது அந்
டிருக்கின்றார்கள்,
C.
 
 

அமரர் - நாகேந்திரம். மாணிக்கராஜா
ர்கள்
விடாதீ
பூர்ன்
ன்திவிழ்நேசித்தவர்களே! ம் என்னை மறந்து
鑫〕
சீவியதி மரணத்திலு

Page 5

挪
Z

Page 6
சமர்ப்பணம்
எந்தக்காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையென்பது புல் வெளியில் நடந்து பூப்பறிப்பதாப் இருந்ததில்லை!
தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் ஒரு உயிர், இன்னொரு உயிருக்காக கவலைப்படுகின்றது! கஷ்டப்படுகின்றது!
எங்களது சகோதரர் அமரர் மாணிக்கராஜா அவர்களும் தாம் வாழ்ந்த காலங்களில் கூடுதலான காலங்களை நாகேந்திரம் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்களதும் உயர்விற்காக
456/6ope/t7LILL/Tifs கஷ்டப்பட்டார்!
வண்ணை தெய்வம்
 

தனக்காக யாரிடமும், எதையுமே கேட்டதில்லை
மரணிப்பதற்கு
சில நாட்களுக்கு முன்னர் 'நாகேந்திரம் குடும்பம்’ என்ற நூல் ஒன்று உருவாக்க வேண்டுமென்ற தமது விருப்பத்தையும், விபரத்தையும் என்னோடு தனியாகப் பகிர்ந்துகொண்டார்.
அவரது அந்த தணியாத ஆசையை நூலாக உருவாக்கி அவர் நேசித்த உறவுகளின் இல்லங்களில் எல்லாம் இடம்பெற வைக்கின்றேன்
வாடையிலும், கோடையிலும்
எங்கள் குடும்பத்திற்காகவே வாழ்ந்த
எங்கள் சகோதரர்
அமரர் மாணிக்கராஜா அவர்களுக்கே இந் நூல் சமர்ப்பணம்.
வண்ணை தெய்வம்
வண்ணை தெய்வம்

Page 7
பதிப்புரை
LDணிமேகலைப் பிரசுர நூல்களை ஆர்வமுடன் படித்து இரசிக்கும் அன்பார்ந்த வாசக நேயர்களே! உங்களுக்கு என் நன்றி!
தமிழ் மண்ணில் தமிழனாய்ப் பிறந்துள்ள ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி, தான் பிறந்த மண்ணுக்கும், தன் இல்லத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் என்பது என் அவா! அவர்கள் இதைக் கடமையாக நினைத்துச் செயல்படும்போது உண்மையில் இரட்டிப்புப் பெருமைக்கு உரியவர்களாவர்!
எல்லாத் தமிழர்களுமே இப்படிச் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுவிட முடியாதுதான். எனினும் முயற்சியாவது மேற்கொள்ளலாமே! முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்? அல்லவா?
இந்த வகையில், தமிழ் மண்ணில் பிறந்து, விதிவசத்தால் புலம் பெயர்ந்தாலும், பிறந்த மண்ணையும் பிறந்த குடும்பத்தையும் மறந்துவிடாமல் செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில், யாழ்ப்பாண மண்ணில் பிறந்து தற்போது பிரான்ஸ் நாட்டிற்குப் புலம் பெயர்ந்துள்ள திரு. வண்ணை தெய்வம் அவர்களையும் சேர்க்கலாம். நல்ல துடிப்பும், ஆர்வமும் மிக்க தமிழ் ஆர்வலர். திரு. வண்ணை தெய்வம் நடிகருக்குரிய தோற்றம் கொண்டவர். பழகுவதற்கு இனியவர். துணிச்சல் மிக்கவர். துன்பங்களைக் கண்டு துவளாமல் எதிர்கொண்டு செயல்படுபவர். கார்விபத்தில் காலில் அடிபட்ட போது அதை இவர் சமாளித்த விதம் பாராட்டிற்குரியது. மண்ணையும், இல்லத்தையும் மறக்கக்கூடாது என்ற உயரிய நோக்கோடு இவர்
வண்ணை தெய்வம்

தற்போது படைத்துள்ள ‘எடுத்துக்காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம்’ எனும் இந்த நூலை அச்சிட்டு வெளியிடும் பேற்றினை எமது மணிமேகலைப் பிரசுரம் அடைந்தமைக்குப் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த நூலில், திரு. வண்ணை தெய்வம் அவர்கள், தன் குடும்பத்து முன்னோர், அறிந்த ஊர் நண்பர்கள், மக்கள், கல்விக் கூடங்கள் பற்றி விவரித்திருப்பதோடு குடும்பத்தார் பெயர் - உறவுமுறைப் பட்டியலையும் வெளியிட்டிருப்பது புதுமை! இது முன்னோருக்கு ஆற்றிய கடமை என்பதோடன்றி, வருங்கால சந்ததிக்கும் இப்பொறுப்பினை அளித்து அவர்களும் இப்பட்டியலை மேலும் விரிவடையச் செய்வர் என்ற எதிர்பார்ப்புடன் நூலை இவர் முடித்திருப்பது பாராட்டுக்கு உரியதாகும்
திரு. வண்ணை தெய்வம் தாம் புலம்பெயர்ந்துள்ள பிரான்ஸ் நாட்டிலும் தமிழ் மணம் பரவ வேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னமேயே படைத்து எமது பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு, அவை: 1. பொல்லாத மனிதர்கள் 2. கொந்தல் மாங்காய். இரண்டு படைப்புகளுமே அருமையானவை.
தற்சமயம் பிரான்ஸ் நாட்டின் T.R.T. வானொலியில் பணியாற்றி வருகிறார். சிறந்த கலைத்தொண்டு நிகழ்த்தி வருபவர்.
இவரது கலைப் பணியும், மண் மறந்திடாத பண்பும் மேலும் வளம் பெற்று நீடிக்க எனது வாழ்த்துக்கள்! எடுத்துக்காட்டான இக் குடும்பத்தை பின்பற்றி நம் வாசகர்களும் முன்னுதாரணமாகக் கொண்டு தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்த என் வாழ்த்துக்கள்.
அன்பு நெஞ்சத்துடன்
ரவி தமிழ்வாணன்
வண்ணை தெய்வம்

Page 8
○5下) எடுத்துக்காட்டாக விளங்கும்
க்களின் ിങിങ് fait foGal பற்கள் விழுந்த பொக்குவாய்க் கிழங்களின் பேச்சினிலே
இப்படி. இப்படி. இதயத்தை நெகிழவைக்கும் எதனைப் பார்த்தாலும் உங்களது இனிய முகம் அங்கு தெரிகின்றது.
Mr. Nagewtyntraw - Ma wickarajan எங்களோடுஃ 31-12-1947 ஆண்டவனோடுஃ 04-08-2001
வண்ணை தெய்வம்
 

நாகேந்திரம் குடும்பம் -O 9 O
வண்ண வரிகள்
ரெலாற்றை நினைத்துப் பார்க்கின்றோம்! எங்கள் நினைவுகள் எல்லாம் வரலாறாகவே இருக்கின்றது.
ஆதலால் எங்கள் குடும்பத்தின் பதிவுகளையும் வரலாற்றுப் பதிவாக்கிக்கொள்கின்றோம்.
இந்தப் புத்தகத்தின் பிறப்பு எங்கள் குடும்ப விபரங்களைப் பறைசாற்றிக் கொள்வதற்காக அல்ல! இது சமகாலப் பதிவும் அல்ல! எமது கடந்த கால குடும்ப உறவுகளின் விபரங்களைப் பதிவாக்கி, இன்றைய தலைமுறையினருக்கும் வருங்காலத்தில் வரவிருக்கும் எமது சந்ததியினருக்குமாக 6 (5 பொக்கிஷமாக்கி வைத்திருக்கின்றோம், அவ்வளவுதான்.
எங்களுக்கே இரண்டு, மூன்று, தலைமுறைக்கு முந்திய உறவுகளின் விபரங்கள் சரியாகத் தெரியவில்லை! அப்படியிருக்கும்போது எதிர்காலத்தில் எமது சந்ததிகள் எமது சொந்தங்களின் விபரங்களைத் தெரியாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கின்றோம்.
இனவாத அடக்கு முறையின் கொடும் சுமைகளை சுமக்கமுடியாமல் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான மக்களின் எண்ணிக்கைக்குள் எங்கள் குடும்பத்துள் சில
வண்ணை தெய்வம்

Page 9
-C 10 )- எடுத்துக்காட்டாக விளங்கும் ,
அங்கத்தவர்களும், எங்களது உறவுகள் பலரும் அடங்கியிருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் புலம் பெயராவிட்டாலும் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
தாங்கள் பிறந்து, தவழ்ந்து, நடைபயின்று புழுதி விழையாடி வளர்ந்து வாழ்ந்த தங்களது சொந்த மண்ணை விட்டு வெளியேறி வன்னியிலும், திருக்கோணமலையிலுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இருந்தபோதும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த “தந்தை இல்லம்’ என்ற எங்கள் இல்லத்தையும் எங்களுடன் உறவுகளாக வாழ்ந்த சுற்றத்தவர்கள், நாங்கள் கல்வி கற்ற கல்விச் சாலைகள், எங்கள வணக்கத்திற்குரிய தெய்வங்கள் குடியிருக்கும் ஆலயங்கள், அயலில் வாழ்ந்த மதிப்பிற்குரிய பெரியவர்கள் இந்த நினைவுகளை எல்லாம் எங்கள் இதயங்கள் இன்னமும் சுமந்து கொண்டே இருக்கின்றது.
புலம் பெயர்ந்த எங்களின் இந்த வாழ்க்கையில் எங்களின் வாரிசுகளுக்கு இந்த விபரங்கள் எல்லாம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்த நூலை உருவாக்கியுள்ளோம்.
உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் தாய், தந்தையரின் உறவுகளின் விபரங்களைச் சேகரிப்பதற்கே நாங்கள் மிகவும் சிரமப் பட்டுள்ளோம்! அப்படியிருக்க எங்கள் பிள்ளைகள் எப்படி இந்த விபரங்களைத் தெரிந்து கொள்ள
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் | NہIIمحصC11 )
முடியும்? அவர்களுக்காகவும் கூட இந்தப் புத்தகம் என்றும் கூறலாம்.
கிறிஸ்துவிற்கு முன் - கிறிஸ்துவிற்குப் பின், - என்பது மானிட மீட்பிற்கு முன், மானிட மீட்பிற்குப் பின் என்பதுதான், என்கின்றது கிறிஸ்தவ ஆகமம். அதுபோல்த்தான் தமிழ் மக்களின் வரலாறும் ஏற்படப் போகின்றது.
அது விடுதலைப் போராட்டத்திற்கு முன், விடுதலைப் போராட்டத்திற்குப் பின் என எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும் சில பதிவுகள் சுமார் இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளையெல்லாம் இரைமீட்டிருக்கின்றோம்.
இந்த இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிந்திய எங்களின் ஊர் நினைவுகளை பதிவாக்க முடியவில்லைத்தான். இருந்தபோதும் ஊரில் இருந்து வரும் கடிதங்கள், தொலைபேசி மூலம் உறவுகள் தரும் செய்திகள் இன்றைய நிலமைகளை எமக்கு உணரவைக்கின்றது.
அடுத்துவரும் பக்கங்களில் செய்திகளாகவும், புகைப்படங்களாகவும், நாங்கள் வாழ்ந்த மண்ணின் நினைவுகளைப் பதியவைத்திருக்கின்றோம்.
காலம் சென்ற எங்களது சகோதரர் திரு. மாணிக்கராஜா அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த எண்ணத்தை அவரது முதலாவது சிரார்த்த நினைவுநாளில் வெளிட்டுவைக்கின்றேன்.
வண்ணை தெய்வம்

Page 10
C 12)- எடுத்துக்காட்டாக விளங்கும்
இதில் உள்ள பதிவுகள் எங்கள் நினைவிற்குத் தெரிந்த வரை தொகுக் கப்பட்டு 2002ம் ஆண்டு நடுப்பகுதியோடு நிறைவு பெறுகின்றது.
இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர் எங்கள் குடும்பத்தில் உதிக்கக் கூடிய யாராவது முன் வந்து இந்த நூலின் இரண்டாவது பாகத்தை எழுதி வைக்கலாம்! என்பது எனது எதிர்பார்ப்பு.
அந்த நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.
அன்புடன் வண்ணை தெய்வம்,
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C 13)
எங்கள் இஸ்ற்ற தெய்வம்
நயினை நாகபூஷணி அம்மன்
வண்ணை தெய்வம்

Page 11
எடுத்துக்காட்டாக விளங்கும்
வண்ணை தெய்வம்
 

ம்
கந்
நாே
|-|
』
*玖
வண்ணை தெய்வம்

Page 12
*G
வண்ணை தெய்வம்
 
 
 
 

17
நாகேந்திரம் குடு
qosiolog) prvo ortowo (ffurmaocooo
i
----
வண்ணை தெ

Page 13
எங்கும
କାଁଳ
!
隔 4는 必
月gar원日日cem山 李石영969田 &그日C예C헬土田 보정田편日3
_ __
sae |-
!
----**
வண்ணை தெய்வம்
 
 

நாகேந்திரம் குடும்பம்
g/sēņoo șos@gỗ quẹourīITổum
보sar점日日ce日山 李石영969出 &그日C예C헬土田 直提出편日月9
வண்ணை தெய்வம்

Page 14
எங்கள் சுற்றாடல்
m யாழ்ப்பாணம் இந்:
எங்கள் சுற்றாடல்
独
யாழ்ப்பாணம் இந்து
 
 
 

கல்விச் சாலயங்கள்
= எடுத்துக்காட்டாக விளங்கும்
து மகளிர் கல்லூரி
நாகேந்திரம் குடும்பம்
5F- 5FIGOTT TIPTT55 GT
கல்வி
LMTL FT60) é6)
ஆரமட்ட
町

Page 15
-G22)- எடுத்துக்காட்டாக விளங்கும்
எங்கள் சுற்றாடல் கல்விச் சாலயங்கள்
வண்ணை தெய்வம்
தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக் கழகம்
 

நாகேந்திரம் குடும்பம்
※藝圖鷺蠍
வண்ணை தெய்வம்

Page 16
எடுத்துக்காட்டாக விளங்கும்
எங்கள் சுற்றாடலில் உள்ள ஆலயங்கள், கல்விச் சாலயங்கள், பற்றிய சிறு குறிப்புக்கள்
01. (பக்கம் 13) நாற்புறமும் கடல் சூழ நடுவே குடிகொண்டிருக்கும் இந்த நாகபூஷணியம்மன் எங்கள் பெற்றோர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கையான குல தெய்வம்.
1. (பக்கம் 14) இந்த ஆலயத்தின் பூர்விகமான பெயர் நாச்சிமார் கோவில் என்பதுதான். இதன் இன்னொரு பெயரான “வண்ணை பூரீ காமாட்சி அம்மன்” ஆலயம் பிரபலமாகாமலேயே இருந்தது. இந்த ஆலயத்திற்கு நேர் எதிராக திருநெல்வேலி நோக்கி செல்லும் வீதிக்கு நாச்சிமார் கோவில் வீதி என்ற பெயரே நீண்ட காலமாக பாவனையில் இருந்து வந்தது.
இவ்வீதியில் சேர்-பொன்-ராமநாதன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு மிகப் புகழோடு விளங்கிவந்த பரமேஸ்வராக் கல்லூரி, பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டபோது இராமநாதன் அவர்களது பெயர் மறையக்கூடாது என்பதற்காக நாச்சிமார்கோவில் வீதி, சேர்-பொன் - ராமநாதன் வீதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வண்ணை தெய்வம்

2.
(பக்கம் 15) கலட்டி அம்மன் கோவில் - இந்த ஆலயமும், பாரம்பரியம் மிக்கதும் மக்களின் நம்பிக்கைக்குரியதுமான ஆலயமாகும். (பக்கம் 16) கலட்டி பிள்ளையார் கோவில் - இது மிகப் பழமை வாய்ந்த கோவிலாகும். இப்பொழுது புனரமைக்கப்பட்டுள்ளது. (பக்கம் 17) தலையாழி வைரவர் கோவில் எங்கள் இல்லத்தில் இருந்து கிழக்குப்பக்கமாக சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் வருடத்தில் ஒரு நாள் மிகச்சிறப்பாகத் திருவிழா நடைபெறும். எங்கள் தந்தையார் உயிருடன் இருந்த காலம்வரை அந்தத் திருவிழாவின் சிறப்பிற்கு இவரின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். (பக்கம் 18) எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள இந்த “கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி எங்களுக்கு விபரம் தெரிந்த காலத்தில்தான் கட்டப்பட்டது. இன்று யாழ் மாவட்டத்திலேயே உள்ள ஒரேயொரு தொழில் நுட்பக்கல்லூரி இதுவேயாகும். (பக்கம் 19) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விளக்கமே தேவையில்லை. யாழ்ப்பாணத்திற்குப் புகழ் சேர்க்கும் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. (பக்கம் 20) அதேபோன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியும் பெருமை வாய்ந்தது. எங்கள் சகோதரிகள் இங்கு கல்வி கற்றார்கள் என்பதில் எங்களுக்குப் பெருமை.
வண்ணை தெய்வம்

Page 17
C26 ) எடுத்துக்காட்டாக விளங்கும்
(பக்கம் 21) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், இந்து மகளிர் கல்லூரிக்கும் கல்வி கற்கச் செல்லும் மாணவ மாணவியருக்கெல்லாம் ஆரம்பப் பாடசாலையாக விளங்கியது. யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையாகும்.
9-10.(பக்கம் 22-23) சிவபாதசுந்தரம் என்னும் கல்விமானை
பிறின்சிப்பலாகக் கொண்டு சிறப்புடன் இயங்கிய பரமேஸ்வராக் கல்லூரிதான் இன்று யாழ் மண்ணுக்கு பெருமைசேர்க்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகும். இந்த பரமேஸ்வராக் கல்லூரியில்தான் நாமும் படித்தோம் என்னும் பெருமை எங்களுக்கும் உண்டு. 23ம் பக்கத்தில் காணப்படுவது பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியாகும்.
இன்னும் இங்கு புகைப்படமாகப் பதிவுசெய்யப்படாத,
முக்கியமான சில தகவல்களும் உண்டு; அவை:
1.
கலட்டி மெதடிசன் மிஷன் கலவன் பாடசாலை. இந்தப் பாடசாலையைச் சுற்றியுள்ள தொன்னூற்றியொன்பது வீதமானவர்களின் ஆரம்பக் கல்வியறிவைக் கொடுத்த பாடசாலை என்னும் பெருமை இதற்கு உண்டு.
கலட்டி சந்தியில் உள்ள ஐயனார் கோவில் - இந்தக் கோவில் சிறிதுதான். ஆனால் இதன் பூர்வீகம் நீண்டது. எங்கள் வீட்டிற்கு அருகில் தம்பையா என்பவரின் காணியில் சிறிய வயிரவர் கோவில் ஒன்றுளது. எங்கள் அயலில் உள்ள இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபடும் ஆலயம் இதுவாகும்.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C27)
ஊர் மணம் - 1
*uDTuDr” B6OL
Tெங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பலசரக்குக் கடை. அதற்குப் பெயர் “மாமா” கடை.
அங்கு “மாமா” கடை என்று பெரிதாக விளம்பரப் பலகை எதுவும் கிடையாது.
சிறிதாகத் தன்னும் கடைக் கதவில் கூட அப்படியொரு எழுத்தும் கிடையாது! ஆனாலும் எங்கள் அயலில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அங்கு மளிகைப் பொருட்களை வாங்குபவர்கள் எல்லோருக்கும் அது “மாமா” கடைதான்!
சிறு வயதில் விளையாடச் சென்று ஊர்ப் புழுதி மண்ணில் குழித்து வீடு திரும்பி அம்மாவிடம் அடி வாங்கினாலும், மறுநாளும் விளையாடச் சென்று மீண்டும் புழுதியில் குழிப்பது வழமையானதே! அந்த நினைவுகள் இன்று திரும்பும்போது எவ்வளவு ஆனந்தம்.
ஊர் மண்ணில் புரண்டு விளையாடும் அரிய பாக்கியம் எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காததை எண்ணும்போது எவ்வளவு மனக்கசங்கல்?
அதுபோலத்தான் இந்த ‘மாமா'கடை பற்றிய நினைவுகளும்.
வண்ணை தெய்வம்

Page 18
நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படி இந்த “மாமா” கடைக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு
இன்னமும் நினைவுகளில் இருந்து அகலாத இன்னும் இரண்டு கடைகள் எங்கள் அயலில் இருக்கின்றன. ஒன்று “சின்னக்குட்டி” கடை மற்றொன்று “சிவகுரு” கடை.
*சின்னக்குட்டி” கடை. எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் அந்தக் கடையை சின்னக்குட்டி என்பவர் நடத்தியதே இல்லை! இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக சின்னக்குட்டி என்பவர் ஸ்தாபித்த கூப்பன்கடை அது
பிற்பாடு அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், என அதைத் தொடர்ந்து நடாத்தி வந்தாலும் தொடர்ச்சியாக அந்தக் கடைக்கு “சின்னக்குட்டி”கடை என்றே பெயர்.
அந்தக் கடையை அண்டியிருக்கின்ற மூன்று, நான்கு அயல் மக்களுக்கு அதுதான் கூப்பன்கடை. அவ்வளவு பிரபலமானது"சின்னக்குட்டி” கடை
இந்தக் கடையிலிருந்து இருபத்தைந்து மீற்ரர் தூரம் தள்ளி இருக்கின்றது ‘சிவகுரு' கடை. இந்தக் கடையைப்பற்றி ஊர்ப்பெரியவர்கள் சொல்லுவார்கள், “யாழ்ப்பாணம் பெரியகடைக்குப் போனாலும் ஏளெட்டுக் கடையள் ஏறி இறங்கி வாங்கவேண்டிய சாமான்களை இந்தச் *சிவகுரு கடையிலை வாங்கலாம்” என்று.
இந்த வார்த்தைகளில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை என்பது வர்ணம் மெருகு பூசப்படாத உண்மையே.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
w ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட இந்த “மாமா” கடைக்கு அப்படி என்ன சிறப்பு?
வீட்டில் எவ்வளவுதான் சுவையாக சமைத்து வைத்தாலும் ஐந்து முச்சந்திக்குச் சென்று மொக்கன் கடையில் றொட்டியும், றோசும், உண்டு சுவைக்கும் அந்த இளவயதுக் காலத்திலும் காலை வேளையில் அம்மியில் அரைத்த தேங்காய்ச் சம்பலோடு அம்மாவின் கையால் தந்த பழஞ் சோத்துக் குழையலுக்கு நிகராக எதுவும் சுவைத்ததில்லை!
அந்த ஐந்து முச்சந்தி மொக்கன் கடைபோல, *சின்னக்குட்டி” கடை, “சிவகுரு” கட்ைகள் இருந்த போதும் அம்மாவின் கையால் குழைத்துத் தந்த பழஞ்சோத்துக் குழையல் போன்றதே இந்த “மாமா” கடையும்
எங்கள் அயலில் நடுத்தர வர்க்கத்தினரும், அன்று உழைத்தால்தான் வீட்டில் அன்று அடுப்பு எரியும் என்ற நிலையில் வாழ்ந்தவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் “மாமா” கடை ஒரு அமுதசுரபி என்றே கூறவேண்டும்!
இரண்டு சதத்திற்கு மல்லி, மூன்று சதத்திற்கு செத்தல் மிளகாய், இரண்டு சதத்திற்கு சீரகமும் மஞ்சளும், காக்கொத்து அரிசி, பாதித் தேங்காய், கால் இறாத்தல் பாண், இப்படியெல்லாம் ‘மாமா” கடையைத் தவிர வேறு எந்தக் கடையிலும் வாங்க முடியாது
ஒரு ரூபா, இரண்டு ரூபா, இருந்தாலும் “மாமா” கடையின் செளகரியத்தால் அந்த வீடுகளில் எப்படியோ
வண்ணை தெய்வம்

Page 19
C30)- எடுத்துக்காட்டாக விளங்கும்
அடுப்பு எரிந்து அன்றைய பொழுதை பசிபோக்கி வைப்பது “மாமா” கடைதான்.
*மாமா” என்று எல்லோராலும் அழைக்கப்படும் தம்பிப்பிள்ளை மாமாவிற்கு மனிதாபிமானம் அதிகம். கடையில் விற்பனைக்காக நேற்று வாங்கிய மரக்கறிவகைகள் இன்று பழுதடைவதைக் கண்டால் மிகவும் கஷ்டப்பட்டவர்களை அழைத்து இலவசமாகவே கொடுத்துவிடுவார்!
இந்த மனிதாபிமானத்தை நன்றியுள்ளவர்கள் மறந்திருக்கவே முடியாது.
இந்த ‘மாமா' கடையின் பிரபலத்தைச் சொல்வதற்கு இன்னுமொரு சிறிய உதாரணம் ஒன்றையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறிவைக்கின்றேன்.
பெரிய வருத்தங்களென்றால் யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலைக்குத்தான் நாங்கள் செல்ல வேண்டும். அதேநேரம் சிறிய வருத்தங்கள் என்றால் கொக்குவில் (பழைய புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த சிறிய வைத்தியசாலைக்குத்தான் எல்லோரும் செல்வது வழமை.
எங்கள் அயலில் வசிக்கும் “அழகன்” என்ற சிறுவன் தனது வைத்திய தேவைக்காக அந்த வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றான். பெயரை பதிவு செய்யும் போது ‘வசிக்கும் இடம் எங்கே??? என முகவரியைக் கேட்டதற்கு “மாமா' கடைக்குப் பக்கத்தில் என்று யதார்த்தமாக கூறியுள்ளான். அவ்வளவு பிரபலமானது இந்த ‘மாமா” கடை
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 31)
காலம் நல்ல மனிதர்களை மறந்துவிடுவதில்லை என்பதற்கு ஒரு சிறிய உதாரணமே “மாமா” கடையின் இந்த நினைவுகள்
நல்ல மனம் கொண்டவர்களையும், மனிதாபிமானம் உள்ளவர்களையும், எனது நினைவுகளில் பதிவு செய்து கொள்ள நான் தவறுவதில்லை. காலமும் நேரமும் சந்தித்துக் கொள்ளும்போது அந்த நினைவுகளை வெளிப்படுத்திக் கொள்வேன். திருவாளர் தம்பிப்பிள்ளை மாமா அமரராகிப் போன பின்பும் அவரையும் அவரது “மாமா”கடையையும் எங்களது நினைவுகளில் இருந்து அகற்றாமல் இன்னமும் இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதிலிருந்தே, மாமா எப்படிப்பட்ட மனிதாபிமானி என்பது உங்களுக்கும் புரிந்திருக்க வேண்டுமே!
தாம் வளரும் போது தம்முடன் இணைத்துப் பத்துப்பேரை வளர்த்துவிடுபவர்களை எப்படி மறக்க முடியும்?! நன்றி மறப்பது நன்றன்று அல்லவா?
“இந்த தம்பிப்பிள்ளை மாமாவும், மாமா கடையும் பத்துப் பேரை வளர்த்துவிட்டதா!” - என்னும் குதர்க்கமான கேள்விகளுக்கு இங்கு விவாதம் இல்லை
பத்துக்கும் மேற்பட்டவர்களின் நினைவுகளில் இந்த “மாமா” கடையும் இருக்கின்றதே! அதுதான் மனிதன் வாழ்ந்ததற்குரிய அடையாளம்.
ஊரை நினைக்கும் போது நாமும் அவர்களின் நினைவுகளில் வரவேண்டும் என்பது எனது ஆவல். அந்த வகையில்தான் எனது நினைவுகளில் இந்த “மாமா'கடையும் நிறைந்திருக்கின்றது.
வண்ணை தெய்வம்

Page 20
-C32) எடுத்துக்காட்டாக விளங்கும்
ஊர் மணம் - 2
எங்களது கலட்டிக்காணி.
Tெங்களது தந்தையாரின் சேமிப்புக்களில் ஒன்றுதான் இந்தக் கலட்டிக்காணி.
அது என்ன கலட்டிக்காணி?
அந்தக் காணியை சீர் செய்வதற்காக அந்த நிலத்தை கிழறி சமன் செய்தபோது அந்தக் காணிக்குள் மண்ணைவிட கல்லே அதிகமாகக் கிடைத்ததாம்!
எங்களது இல்லமான “தந்தை இல்லம்” கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு பின்பக்கம் அமைந்திருக்கின்றது. இந்தக் கலட்டிக்காணி தொழில் நுட்பக் கல்லூரியின் வடக்கு எல்லையோடு ஒட்டியே இருக்கின்றது.
ஆனாலும் எங்கள் இல்லம் மாநகரசபை வளாகத்துக்குள் அடங்குகின்றது. இந்தக் கலட்டிக்காணி கொக்குவில் கிராம எல்லைக்குள் அடங்குகின்றது.
இந்தக் காணியின் கதையே மிகச் சுவையானது நாங்கள் பிறக்கும் முன்னரே எங்கள் தந்தையாரரல் இந்தக்காணி வாங்கப்பட்டதாம்.
எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் எங்களது உறவுக்காரரான தம்பு மாமாவும் எங்களது தந்தையாரும்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 33)
இணைந்து நாற்பது பரப்புக் கொண்ட இந்தக் காணியை பரப்பு நூறுரூபா வீதமாக வாங்கி ஆளுக்கு இருபது பரப்பாக பங்கிட்டுக் கொண்டார்களாம்.
எங்களது தந்தை தமது உழைப்பிலேயே இந்தக் காணியை வாங்கியபோதும் அவரின் பெற்றோர்களுக்கு இந்தக் காணி வாங்கியதில் விருப்பமில்லையாம்.
காரணம், ஒன்று, வாங்கும் பொழுது இந்தக் காணிக்குள் செல்வதற்கு வழிப்பாதையே இருக்கவில்லை. (இந்தக் காணியைச் சுற்றியிருந்த காணிகளும் இப்படி வெட்டவெளியாக இருந்ததால் அந்த காணிகளுக்குள்ளால் நடந்தே இந்தக் காணிக்கும் செல்வார்கள்)
இரண்டாவது, இந்தக் காணி வாங்கப்பட்ட காலத்தில் புதரும், பத்தையும், கிடங்கும், பள்ளமுமாகவே இருந்தது. ஆதலால் இந்தக் காணிக்கு அண்மையில் வாழ்ந்தவர்களின் காலைக்கடன்களைக் கழிக்குமிடமாகவே இக்காணி இருந்து வந்திருக்கின்றது.
எங்களுக்கு விபரம் தெரிந்த காலத்தில் கொஞ்சம் சீர் செய்யப்பட்டிருந்தாலும் அப்பொழுதும் இந்தக் காணிக்குள் அன்னமுன்னாப் பத்தைகளும், நாயுண்ணி, நாதாளி போன்ற முள்ச்செடிகளுமே நிறைந்து கிடந்தன!
மேடும், பள்ளங்களும், கிடங்கும், திட்டிகளுமாக இருந்த இந்தக் காணியில் இவ்வளவு பத்தைகளும் சேர்ந்தே
இருந்ததனால் பார்ப்பதற்கு இது ஒரு காடு போலவே தோற்றமளிக்கும்.
வண்ணை தெய்வம்

Page 21
- -\
34 எடுத்துக்காட்டாக விளங்கும்
காடாகவே இருந்த இந்தக் காணிக்குள் தேடினாலும் கிடைக்காத அரிய செடிகளும் சேர்ந்தே இருந்தன!
இன்று ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி வகைகளைவிட அதிகவிலை விற்கும் கண்டம் கத்தரிக்காய், வட்டுக் கத்தரிக்காய், மரங்கள் காணி முழுவதும் நிறைந்தே இருந்தன.
தூதுவளை என்றொரு செடி இன்று பலருக்கு இதைத் தெரிந்தும் இருக்காது இந்தச் செடியின் இலையை வைத்து அம்மா அம்மியில் அரைத்துத் தரும் சம்பலின் சுவையே தனி சுவை மட்டுமல்ல; இது மருந்துத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் சத்து நிறைந்த ஒரு செடியும் கூட இதேபோன்று வல்லாரைச் செடியும் எவரும் விதைக்காமலேயே இங்கு விளைந்திருந்தன!
இதேபோன்று பூளைசாறி என்றொரு செடி - இதன் உண்மையான பெயர் தெரியவில்லை - இந்தச் செடியின் பூக்கள் பார்ப்பதற்கு நித்திரையில் கண்களில் உருவாகும் பூளையைப் போன்று இருப்பதனால் இதனை பூளைசாறிச் செடியெனச் சொல்லுவார்கள். இந்தச் செடியை அவித்து அதன் நீரைக் குடித்து வந்தால் வாதநோய் குணமாகுமாம்! சில நாட்டு வைத்தியர்கள் வந்து கட்டுக்கட்டாக புடுங்கிச் செல்வதை நானும் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு அரிதான செடி.
அத்தோடு இரண்டு பெரிய வேம்பு மரங்கள். அதன் அடிவாரத்தில் பாவட்டை மரங்கள்.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் - C35)-
பிள்ளை பெற்றெடுத்த தாய்மார்களின் உடம்பு வலியைத் தீர்ப்பதற்கு வேம்பு மரப்பட்டைகளும் பாவட்டையின் இலைகளையும் அவித்துக் குளிப்பது ஒரு மருத்துவம். ஏராளமான தாய்மார்களுக்கு எங்கள் கலட்டிக்காணியில் உள்ள இந்த மரங்கள் மருந்தாக இருந்திருக்கின்றன.
இது மட்டுமல்ல! இந்தக் காணிக்குள் ஏராளம் முருங்கை மரங்கள். இந்த முருங்கை மரங்களை தானே உண்டாக்கியதாக எங்கள் தாயார் சொல்லி அறிந்திருக்கின்றேன். மக்கி மண்ணில்த்தான் முருங்கை செழித்துக் காய்க்குமாம்! அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எங்கள் கலட்டிக்காணிக்குள் உள்ள முருங்கை மரங்கள் இலைதெரியாமல் குலை, குலையாக காய்த்திருக்கும் (அன்று காய்கணக்கிற்கு முருங்கைக்காய் வித்தபோதிலும் எங்கள் அம்மா நிறுத்து வித்த நாட்களும் உண்டு
இன்று ஐரோப்பிய நாடுகளில் அரிதாகக் கிடைக்கின்ற முருங்கையிலை அன்று எங்களது வீட்டில் நாங்கள் வெறுக்கும் அளவிற்கு தினமும் அதுவும் ஒரு உணவாக இருக்கும்
இந்த அருமை, பெருமைகள் எல்லாம் அன்று யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை! இவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஒரு தாயைப்போல
இருந்தது எக்கன்சூஜக்டிதரிச்சங்கம்
வண்ணை தெய்வம்

Page 22
C36) எடுத்துக்காட்டாக விளங்கும்
காடாகக் கிடந்த இந்தக் காணியை பயிர் விளையும் நிலமாக மாற்றுவதற்கு எங்கள் தந்தையும் தாயும் பட்ட கஸ்ற்ரங்கள் எழுத்தில் அடக்கிவிட முடியாதவை.
இன்னுமொரு சிறப்பு இந்தக் காணிக்கு இருக்கின்றது
தம்புமாமாவும் எங்கள் தந்தையும் தங்கள், தங்கள் காணிக்குள் ஒவ்வொரு கிணற்றை வெட்டிக் கொண்டார்கள். இந்தக் கிணறுகள் எவ்வளவுதான் இறைத்தாலும் நீர் வற்றியதே இல்லை! இரண்டு மெசின்களை ஒரே தடவையில் இணைத்தும் இறைத்துப் பார்த்திருக்கின்றார்கள்)
அது மாத்திரமல்ல! இந்தக் கிணறுகளின் நீரும் தனிச்சுவையானது தங்கள் காணிகளில் கிணறு உள்ளவர்கள் சிலர்கூட தங்களது குடிநீர்த் தேவைக்கு இந்தக் கிணற்றில் நீர் எடுத்துச் செல்வதும் உண்டு
தம்பு மாமாவின் பெரு முயற்சியும், எங்களின் இந்தக் காணியை ஒட்டியிருந்த இன்னும் இருவரின் ஒத்துழைப்பும் ஒன்றுசேர எங்களின் இந்தக் கலட்டிக்காணிக்கு ஒரு வழிப்பாதை உருவாகியது. (அவர்களின் காணிகளுக்கும் இந்தப் பாதை தேவையாக இருந்தது
பிரம்படி வீதியில் இருந்து கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக வந்து சேரும் இந்த வீதிதான் *அம்பகர் வீதி.”
கல்லுக்காணி எனப் பலராலும் பரிகசிக்கப்பட்ட இந்தக் கலட்டிக்காணி சீரமைக்கப்பட்ட பின்னர் வாழைத்தோப்பாகி குலை, குலையாக கனிகளைத்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 37 D
தந்திருக்கின்றது! சின்ன வெங்காயமும், இராசவள்ளிக் கிழங்கும் செழித்து விளைந்திருக்கின்றது.
இவையெல்லாவற்றையும்விட நாகேந்திரம் தம்பதிகள் பெற்றெடுத்த ஏழு பிள்ளைகளும் இன்று தங்களுக்கென ஒரு நிலம் இருக்கின்றது என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்தக் கலட்டிக்காணிதான்.
இன்று இடம்பெயர்ந்து திருக்கோணமலையில் வாழ்கின்ற எங்களது மூத்த சகோதரி கந்தசாமி - மனோன்மணி தம்பதிகள் பல காலம் வாழ்ந்த “அன்னை இல்லம்’ என்னும் அந்த இல்லம் இன்றும் நிலையாகவே இருக்கின்றது.
இந்தக் கலட்டிக்காணிக்கு இப்படி ஒரு சரித்திரமா?
என்றோ ஒரு நாள் மீண்டும் எங்கள் பாதங்கள் இந்த மண்ணில் தங்களது சுவடுகளைப் பதிக்கும்.
இது மழை வரும் என்ற நம்பிக்கையோடு வயல்களில் விதை விதைக்கும் விவசாயிகளின் நம்பிக்கையைப் போல.
SL్య>
வண்ணை தெய்வம்

Page 23
C38) எடுத்துக்காட்டாக விளங்கும்
கல்லும் புதரும் நிறைந்திருந்த எங்கள் கலட்டிக்காணி கதைக்கின்றது!
நான் நிலமாக இருப்பதால் காய்ந்து கிடக்கின்றேன்! - ஆனால் என்னிடம் வறட்சியில்லை! - என்ன? காய்ந்து கிடக்கின்றேன் வறட்சி இல்லையென்றால்! என்ன அர்த்தம் என்கின்றீர்களா?
வறட்சி என்னிடம் அல்ல! பார்ப்பவர்களின் கண்களில்தான்.
என்னிடம் என்ன இல்லை? நீர்ச்சுரங்கத்தை ஒளித்து வைத்திருக்கின்றேன்! மரம், செடி, கொடிகளையெல்லாம் வளர்த்துவிட்டிருக்கின்றேன்! சுமந்துகொண்டிருக்கின்றேன்.
எனது தலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் கள்ளிச்செடியிலும் நான்தான் பாலாகச் சுரக்கின்றேன்.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C 39)
நான் தேய்ந்து போவதில்லை! என் மதிப்பு என்றும் குறைந்து போவதில்லை பழையது என்று எவரும் என்னை ஒதுக்குவதில்லை!
எனக்கு மேலே இருக்கின்ற வானத்தில் இருந்து வருகின்ற மழையும், ஒளியும் எனக்கா உணவு? என்னில் வாழும் எனது பிள்ளைகளுக்கும் அதுதான் உணவு!
என்னைத் தோண்டுங்கள்! கல்லும், மண்ணும், மட்டுமல்ல! நீரும் நிறையவே வரும்.
நாதாளியும், நெருஞ்சியும் விளைந்த என்னில்த்தான் சுவைமிகு காய்களும், கனிகளும், விளைந்தன!
நான் மனிதனல்ல! வயது ஏற, ஏற தளர்ந்துபோவதற்கு நான் பொருளல்ல வருடம் செல்லச் செல்ல பழசாய்ப் போவதற்கு
வண்ணை தெய்வம் !

Page 24
C40) எடுத்துக்காட்டாக விளங்கும் நான் நிலம் காலம் செல்லச் செல்ல
எனது பெறுமதியும்
ஏறிக்கொண்டே செல்லும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு எனது விலை - பரப்பு வெறும் நூறுரூபாவாம்!
இன்று எனது விலை! எனக்கே தெரியாது?
நிலம் தாயைப் போன்றது! என்னை வெறும் மண்ணென்று கூறவேண்டாம் பெண்ணென்று பாருங்கள். தாயைப்போல் பாருங்கள்.
மண்ணை வணங்குங்கள். என்னை வணங்குங்கள்.
(S്ഠ'
வண்ணை தெய்வம்
 

'exsue“I WIS - euger -peosucippueue}}*UOd ’JIS 9/19 8JWYTTI I PYHÄINPYHL 작的
996 I ’90’I I696 I’90’I I996 Io t’0’9I Įueue KəTĮue Ioue W.KuuxnỊeầes/N Joosuírmã?!9·Joosuíu109901gırt,pasioon 2961°20'100961°80′221761°31'129,76||0|'GZ uueusųņuəțe(H.uIe-IIųļuƏA||3.JLqețeu byssueIWNĮueuuuoue W. ராஒரegயிடூquí@@írtsg)ņioloMissouffooyouuiJoosunię91/1999ơi įeuuuuuuuĮSuueusųụuəĝeN 伽Jujq11091ņ939 quosog), 衙)ĮųɔbuuļS - IeIIəS -!bubAsɔųL – nų}n IW 如popu1991ņ9ợ – pasq9oy91990 survspolo - sãoặđĩ) 迈× 伤,, § 47, a ozoyuećeyo qiqqig)? quiệsoous
வண்ணை தெய்வம்

Page 25
கந்தசாமி. மனோன்மணிதம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தையா - சுரேந்திரன் Kandya - Surenthiran கந்தசாமி - றெஜினி Kandasamy - Regini 22.11.1970
பிள்ளைகள் 1) அஸ்மிதன் 2) சதுஸ்ரிகா . Ashmithan - Sathustrika
28.06.1993
100 - Power House Road,
Trincomalee Sri lanka
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
கந்தசாமி- மனோன்மணி தம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தசாமி மனோன்மணி Kandasamy Manommani 09.07.1943 16.04.1956
கந்தசாமி - சாந்தகுமார் - (மோகன்) Kandasamy- Santhakumar - (Mohan) 08.10.1965
சாமி - லதாலஷ்மி Samy - Lathaluxmy
பிள்ளைகள் :
1. மோனலீஷா 2) அனிஸ்க்கான் Monalisha - Aniscaan
வண்ணை தெய்வம்

Page 26
C44) எடுத்துக்காட்டாக விளங்கும்
கந்தசாமி- மனோன்மணிதம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தசாமி - கர்ணகுமார் (பாபு)
Kandasamy - Karnakumar (Babu) 27.03.67
கணேஸ் - றாஜினி (பபி) Ganesh - Rajini (Baby) 17.03.71
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C45)
கந்தசாமி- மனோன்மணிதம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தசாமி - நந்தினி Kandasamy - Nanthini 06.08.1969
நீக்கலாப்பிள்ளை - றெஸ்லி Nicholapillai-Resley
09.02.1963
பிள்ளைகள்: (1) றெஷான் (2) நவீன் (3) றெய்வின் Reshan . Naveen Royvin
10.03.1993 12.03.1998 05.03.2001
12 - Impasse de La Clepsydre, Liusaint
France.
வண்ணை தெய்வம்

Page 27
O46) எடுத்துக்காட்டாக விளங்கும்
கந்தசாமி- மனோன்மணிதம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தசாமி - பிறேம்குமார்
Kandasamy - Premkumar 13.11.1972
தேவராஜா - ஷோபனா Thevarasa - Sopana
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C. 47)
கந்தசாமி- மனோன்மணிதம்பதிகளின் குடும்ப விபரம்
கந்தசாமி - சுதன்குமார் Kandasamy - Suthan Kumar 01.02.1974
கந்தசாமி - சுரேஸ்குமார் Kandasamy - Sureshkumar
கந்தசாமி - சுபாஸ்குமார் Kandasamy - Subashkumar
கந்தசாமி - நிராஜினி Kandasamy - Nirajini 19.12.1979
வண்ணை தெய்வம்

Page 28
C48) எடுத்துக்காட்டாக விளங்கும்
2
Nagenthiram - Manickrajah நாகேந்திரம் - மாணிக்கராசா 31.12.1947
சரவணை - சுகிர்தமலர் Sarawanai - Sukirthamalar
2A சோபியா Shobicka
26.01.1993
28 சோபானத்
Shobanath
01.10.1994
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C49)-
3
Nagenthiram - Theiventhiram (Vannai Theivam) நாகேந்திரம் தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) 22.08.1950
செல்லத்தம்பி - சண்முகரத்தினம் (வெள்ளையம்மா) Sellathambey-Shanmugarathnam (Vellaiamma)
01.04.1958
3A 3B 3C சண்முகதாஸ் தெய்சியா ஜென்சியா Shanmugathas Theysiya Jenciya
24.11.1977 17.7.1979 11.4.1983
1-Allee Raoull Duffy Bat: Bratagne Res: Fontaine Mallet 93420 - Villepinte
Frances
Tele: 048 isf4223
வண்ணை தெய்வம்

Page 29
C 50 D எடுத்துக்காட்டாக விளங்கும்
4. நாகேந்திரம் - ராஜேந்திரம்
Nagenthiram - Rajanthiram 01.03.1953
சின்னக்கிளி - ஜெயராணி Sinnakili - Jeyarani 13.09.1967
4A
செரீனா
Sherina 04.11.1988
4B
செரீன்சன்
Sherinshan
01.09.1993
Mr.N. Rajandram 12-Dorking Drive Ontario Bramption LL,6-Z4 L1 Canada Tele : OO1905 8405857
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 51)
5 செல்லக்கண்டு - ஜெயானந்தம் Sellakandu - Jeyanantham 20.08.1948
நாகேந்திரம் - மகாலக்ஷ்மி Negenthiram - Magaluxmy 16.04.1956
SA
ஜெராஜிதா Jeragitha 24.07.1980
SB ஜெலிஸ்ற்ரா Jelistha
O5.12.1984
வண்ணை தெய்வம்

Page 30
G 52 ) எடுத்துக்காட்டாக விளங்கும்
6 சின்னத்தம்பி - சந்திரலிங்கம் Sinnathamby - Shantralingam 07.08.1958
நாகேந்திரம் - மனோராணி Nagenthiram - Manorani 1 103.1959
6A
நிராஜன் Nirajan 04. 12.1981
6B
நிராஜா இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்)
6C நிலக்ஷன் Nilakshan 28.09. 1987
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 53)
7
செல்லக்கண்டு - பாக்கியநாதன் Sellakandu - Packyanathan 31.08.1966
நாகேந்திரம் - ஜெயராணி Nagenthiram - Jeyarani 11.06.1966
7A ஜெரோம் Jerome 05.03.1994
1-Av Victor Schoelcher
77176Savigny Le Temple Tele: 01 64 10 71 38
வண்ணை தெய்வம்

Page 31
எடுத்துக்காட்டாக விளங்கும்
A
எங்கள் அம்மாவின் உடன்பிறப்புகள்
1.
அன்னம்மா Annammah
சூரி Suri
அருளானந்தம் (ஆறுமுகம்) Arulanantham
சின்னம்மா (சின்னப்பிள்ளை) Sinnammah
அல்பிரட் சின்னையா (பெரியதம்பி) Alfred-Sinnaiya
பார்வதி (அக்கம்மா)
Parwathy
ஜோச் - கந்தையா (சின்னத்தம்பி) George Kandaiah
லூர்த்தம்மா (இராசம்மா) Lorthammah
சரவணமுத்து Saravanamuthu
வண்ணை தெய்வம்

A1
A4
A6
A7
As
A9
A10
A-1
செல்லையா Sellaiya செல்லர் - அன்னம்மா Sellar- Annammah
கனகமணி (அம்மாக்கா) Kanagamani அரசரட்ணம் Arasaratnam ,
ராசதரரை
Rajathurai
குணரட்ணம் Gunaratnam சீவரட்ணம் Seevaratnam இராசாத்தியம்மா (அம்மாச்சியக்கா) Rasathiyammah பூமணி
Poomani
affair
Sarasu
நேசம்மா
Nesammah சுப்பிரமணியம்
Subramaniyam
வண்ணை தெய்வம்

Page 32
எடுத்துக்காட்டாக விளங்கும்
A3 செல்லர் - அருளானந்தம்
(ஆறுமுகம்) Sellar - Arulanantham
சூசை - சபீனம்மா Soosaai-Sabinammah
1. மேரிராணி - அமிர்தநாதன் (மோகம்)
Merirani - Amirthanathan
2. மரியநாயகம்
Mariyanayagam
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -O57)-
A-7
ஜோச் - கந்தையா (சின்னத்தம்பி) George - Kandaiah
வல்லிபுரம் - திரேசம்மா Vallipuram - Thiresammah
1.
யேசுராசா (பயா) Jesurajah
சாந்தி
Shanthi
அன்ரன் Amran
அலன் Alan
ஜோன்சன் Johnshan
ரொபின்சன் Robinshan
வண்ணை தெய்வம்

Page 33
எடுத்துக்காட்டாக விளங்கும்
A-8 பொன்னர் - செல்லத்துரை Ponnar - Sellathurai
செல்லர் - ராசம்மா (லூர்த்தம்மா) Sellar - Rasammah
1. சிவராசா - புஸ்ப்பம் (மலர்) Sivarajah - Pushpam
2. இராசநாயகம் Rasanayagam
3. மரியநாயகம் - புஸ்ப்யராணி
Mariyanayagam - Pushparani
4. அன்ரனிதாஸ்
Antamithas
5. சிவகாந்தன் - மேரிறோஸ் (ந்ஸ்க்ராணி)
Sivaganthan - Merirosh.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
A-1
A-2
A-3
A-4
A-5
A-6
A-7, A-8
A-9
குறிப்புகள்
எங்கள் தாயாரது மூத்த சகோதரியின் குடும்பம். இவர் திருமணத்திற்கு முன்னரே காலமாகியதால் குடும்பம் இல்லை.
மூன்றாவது சகோதரரின் குடும்பம் இது எங்களது குடும்பம். இதன் விபரங்கள் உள்ளே பதியப்பட்டிருக்கின்றது. எங்களது தாயாரின் ஐந்தாவது சகோதரர். இவரின் மனைவியின் பெயர் இரத்தினம் என்பது மட்டும் தெரியும். பிள்ளைகளின் பெயர் விபரங்கள் தெரியவில்லை. இவர் திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர். இவருக்கும் குடும்பம் இல்லை. இந்த விபரங்கள் பதியப்பட்டிருக்கின்றது. எங்களது தாயாரின் கடைசிச் சகோதரர். இவரின் மனைவியின் பெயர் நல்லம்மா என்பது மட்டும் தெரியும். பிள்ளைகளின் பெயர் விபரங்கள் தெரியவில்லை.
வண்ணை தெய்வம்

Page 34
எடுத்துக்காட்டாக விளங்கும்
மறக்க முடியாதவர்கள்
நாங்கள் விபரம் அறியாத பருவத்திலேயே எங்களது தந்தையார் இந்த மண்ணுலக வாழ்வை விட்டுப் பிரிந்தபோது! எங்களது தாயார் “இந்த ஏழு பிள்ளைகளையும் நான் எப்படி வளர்த்தெடுக்கப்
போகின்றேன்’ என வழி தெரியாது நின்ற நேரமது
உற்றமும் சுற்றமும் எங்களை அனுதாபத்தோடே பார்த்தது A.
சிலர் நேரம் கிடைக்கின்ற சமயங்களில் எங்கள் இல்லம் வந்து ஆறுதலும், உதவிகளும், ஆலோசனைகளும் வழங்குவார்கள்.
ஆனால் எங்கள் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து எங்களைக் கண்காணித்து, சகலவிதத்திலும் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த மூன்று நல்ல இதயங்களை எங்களால் மறக்க முடியாது.
எங்கள் நினைவுகாலம் இருக்கும் வரைக்கும் இவர்களுக்கு எங்கள் இதயத்தில் இடமுண்டு.
அந்த மூவரையும் நாகேந்திரம் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றோம். ρ
அந்த வகையில் இந்த நூலில் அவர்களது பெயர்களையும் பதிவு செய்து வைக்கின்றோம்.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
தம்பையா - இராசு
இராசண்ணை என நாங்கள் அன்பாக அழைக்கும் இவர் எங்கள் வீட்டிற்குப் பின்னால் வாழ்ந்தவர்.
இன்று இந்த நல்ல மனிதர் உயிரோடு இல்லை!
அமரராகிப் போன இவரின் நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கின்றேன்.
சிறந்த முருக பக்தர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் அதிகாலை நான்கு மணிக்கு இடம்பெறும் முதலாவது பூசைக்கு தினமும் தவறாது சமூகமளிக்கும் பக்தர்களில் இவரும் ஒருவர்.
எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத இழகிய மனதுடையவர். அந்தக் காரணத்தால் உணவில்கூட உயிர்வகையின்றி மரக்கறி வகைகளையே உண்டு வாழ்ந்தவர்.
திருமணம் புரிந்து பலகாலத்தின் பின்பே இந்த இராசு - மகேஸ்வரி தம்பதிகளுக்கு பிள்ளைப் பாய்க்கியம் கிட்டியது.
முதல்ப் பிள்ளை சின்ன வயதிலேயே மரணித்துவிட்டது அதன் பின்னர் சிவா, குணா என இரண்டு ஆண்பிள்ளைகள்.
வண்ணை தெய்வம்

Page 35
-C 62.) எடுத்துக்காட்டாக விளங்கும்
சிவா என்று நாம் அழைக்கும் சிவசுப்பிரமணியம் வளர்ந்து வாலிபத்தை அடைந்து நண்பர்களுடன் வீதியில் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தபோது சீறிவந்த துப்பாக்கிக் குண்டு ஒன்றுக்குப் பலியாகி பரிதாபமாக மரணத்தைத் தழுவிக் கொண்டான்.
மகனின் இந்த எதிர்பாராத இழப்பு இவருக்கு, தான் தினமும் வணங்கிவந்த முருகன் மீதே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.
அன்று முதல் கோவிலுக்குச் செல்வதில்லை! முருகன் பெயரை உச்சரிப்பதில்லை! அது மாத்திரமல்ல; மாமிச உணவுகளையும் உண்ணத் தொடங்கினார்! இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றுபவர்கள் இவரின் மனதை மாற்றி வேத மதத்தில் இணைத்துக் கொண்டதாகவும் அறிந்து கொண்டோம்.
மதம் மாறுவதனால் மனக்கவலைகள் மாறிவிடுமா? மகனின் அகால மரணத்தின் தாக்கம் இவரது மனதை மட்டுமல்ல உட்லையும் வாட்டி எடுத்தது.
மகனை இழந்த ஆறு மாத காலத்திலேயே இவரும் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
இந்த நல்ல மனிதரின் இழப்பு எங்கள் குடும்பத்தவர்களுக்கு ஈடு செய்ய முடியாததாகும்.
தாம் வாழ்ந்த காலங்களில் தந்தை ஸ்தானத்தில் இருந்து எங்கள் ஒவ்வொருவரது வளர்ச்சியையும் அக்கறையோடு கண்காணித்து நல்வழி காட்டிவந்த அந்த நல்ல மனிதருக்கு எங்கள் இதய அஞ்சலிகள்.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
LLSLSL
நாகலிங்கம் கந்தசாமி
பூமியை நிராகரித்துவிட்டு எந்த நதிகளும் நகரமுடியாது
அதுபோல கந்தசாமி அண்ணரின் பெயர் பதியப்படாமல் *எடுத்துக் காட்டாக விளங்கும் நாகேந்திரம் குடும்பம்” என்றொரு நூலை உருவாக்கிவிட முடியாது.
கந்தசாமி என்பது இவரது இயற்பெயரானாலும் எங்களுக்கெல்லாம் இவர் சோக்கண்ணைதான்.
எப்படி இவருக்கு இந்தப் புனைப்பெயர் வந்தது என்னும் விபரங்கள் எனக்குத் தெரியாது. இவரது தாய் - தந்தையரைக்கூட சோக்கப்பா, சோக்கம்மா என்றுதான் அழைப்போம்.
சிறு பிராயத்திலேயே எங்கள் பெற்றோர்கள் இப்படி அழைக்கும்படி சொல்லித்தந்தார்கள். அப்படியே நாங்கள் எல்லோரும் அழைத்தோம். இதற்குரிய காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எமக்கு சொல்லித்தந்தவர்களும் இன்று உயிரோடு இல்லை.
சோக்கப்பா, சோக்கம்மா அந்த வரிசையில் இவரையும் சோக்கண்ணை என்றே அழைக்கின்றோம்.
வண்ணை தெய்வம்

Page 36
-C64)- எடுத்துக்காட்டாக விளங்கும்
சோக்கப்பா எங்கள் தந்தையின் தாயார் தெய்வானை அவர்களின் சகோதரர். சூரன் நாகலிங்கம் என்பது இவரது பெயர். சோக்கம்மாவின் இயற்பெயர் ஆசைப்பிள்ளை என்பதாகும்.
எங்கள் சோக்கண்ணர் உயர் கல்விவரை கற்றவர். இருந்தும் அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற நாட்டம் இருந்ததில்லை! தனது சொந்தக்காலிலேயே நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கட்டிட ஒப்பந்தக்காரராகி பத்துப்பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் அழவிற்கு உயர்ந்து நிற்கின்றார்.
*திருப்பரம் குன்றம்’ என்னும் பெயருடைய இவரது இல்லத்தில் இன்று இராணுவம் குடியிருக்கின்றது! இவர் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்கின்றார்.
பாசமும், நேசமும் காசினால் கிடைப்பதில்லை. மரியாதையும் அப்படித்தான். சோக்கண்ணை எங்கள் தந்தைமீது வைத்திருந்த மரியாதைக்கு அளவுகோல் வைக்க (փlգաnՑl.
எங்கள் தந்தையின் மரணம் எங்களைப் போலவே
இவருக்கும் இழக்கமுடியாத ஒன்றே.
எங்கள் தந்தை இறந்த நாளில் இருந்து எங்கள்
அக்கா திருமணம் செய்யும் நாள் வரை எங்கள் இல்லத்திலேயே எங்களுக்கு காவலாக வாழ்ந்தவர்.
எங்களுக்கு அண்ணனாக மட்டுமல்ல நண்பனாக, தந்தையாக, ஆசானாக, சுருங்கச் சொன்னால்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் பாண்டவர்களுக்கு கண்ணனைப்போல எங்களுக்கு சோக்கண்ணை.
எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் நல்ல நிலையில் அமைவதற்கு முன்னோடியாக இருந்தார்.
எங்கள் அயலில் ஒரு சனசமூக நிலையம் உருவாக மூலகர்த்தாவாக இருந்தார். ஆம். இவருடைய சமுதாயப்பார்வையும் விரிவானதே.
புலம்பெயர்ந்த வாழ்வில் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத காரணங்களால் இடைவெளி கொஞ்சம் அதிகமாகிவிட்டாலும் எங்கள் நலன்களில் இவர் காட்டும் அக்கறைகளில் தூரம் ஏற்பட்டதில்லை.
எங்கள் சகோதரரின் மறைவு இவருக்கு பெரும் மனத்தாக்கத்தை உண்டாக்கிவிட்டது.
அண்ணனுக்கு எழுதிய அஞ்சிலியில் குறிப்பிடுகின்றார்: “எனது ஆணிவேராக நின்ற உறவொன்று அறுந்து விட்டது” என்று
இன்று இடம்பெயர்ந்து, புலம் பெயர்ந்து, பல திசைகளில் நாங்கள் சிதறுண்டு வாழ்ந்தாலும்! நாகேந்திரம் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் சோக் கண்ணர் எங்கள்
இதயங்களில் என்றும் நிறைந்தே இருக்கின்றார்.
வண்ணை தெய்வம்

Page 37
எடுத்துக்காட்டாக விளங்கும்
சின்னத்தம்பி - பாலசிங்கம்
எங்கள் பாலண்ணரை நாங்கள் எப்படி அறிமுகப்படுத்துவது?
எங்கள் காயங்களுக்கெல்லாம் இவர் விருந்தாக இருந்திருக்கின்றார் Ο ”鸣,
எங்கள் வேர்களுக்கெல்லாம் இவர் மழையாகப் பொழிந்திருக்கின்றார்!
வாழ்ந்த காலங்களிலெல்லாம் சுமைதாங்கியாகவே இருந்து இன்று உயர்ந்து நிற்கின்றார்! ஆனாலும் எல்லாக் காலங்களிலும் நாகேந்திரம் குடும்பத்தினரின் இன்ப, துன்பங்களை இணைந்தே பகிர்ந்து கொண்டவர்.
இவரும் எங்களைப் போலவே இளவயதிலேயே தந்தையை இழந்த போதிலும் தன்னிலும் வலிதான றெயில் வண்டியை தாங்கும் தண்டவாளத்தைப்போல காலத்தோடு போராடி தனக்குக் கீழே இருந்த இரண்டு சகோதரிகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து இன்று தானும் சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றார் என்றால் அதற்கு முதல்க்காரணம் இவரிடம் இருக்கும் தன்னம்பிக்கைதான்.
வண்ணை தெய்வம்
 

நாகேந்திரம் குடும்பம் C 67 D
இவரின் பாடசாலைக்காலங்களை நினைவுபடுத்திக் கொண்டால் பரமேஸ்வராக் கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்களில் இவரும் ஒருவர் எண்ணற்ற அறிவு நூல்களை தன்னகத்தில் வைத்திருக்கின்ற நூலகம் அடக்கமாக மெளனமாக இருப்பது போல எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், தற்பெருமை பேசிக்கொள்ளாத பண்பாளர்.
எங்கள் பெற்றோரை அத்தான், அக்கா என இவர் அழைக்கும் அந்த மரியாதை.
நாங்கள் இன்று வயதில் பெரியவர்களாகிவிட்ட போது புலம் பெயர்ந்த வாழ்வில் பல வருடங்கள் பிரிந்து வாழ்ந் ,ாலும், இன்றும்கூட தொலைபேசியில் பாலண்ணரின் குரலைக்கேட்டதும் நேரில் கதைப்பதைப்போல ஒரு மரியாதை தானாகவே எமக்கு ஏற்படக் காரணம் இவர் எங்கள் மீது கொண்டுள்ள நேசமும், பாசமும் தான்.
இன்றளவும் நாகேந்திரம் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பாலண்ணர் ஒரு நிறைகுடம்,
என்றும் தழும்பியதில்லை.
வண்ணை தெய்வம்

Page 38
எடுத்துக்காட்டாக விளங்கும்
முன்னைய யாழ்ப்பாணத்தின் முத்தான நினைவுகள்
கடந்த இரு சகாப்த காலமாக இருண்டு போயிருந்த இலங்கையில் அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சமாதான ஒளிக்கீற்று சற்றே தென்படவுள்ள இவ்வேளையில் தமிழர்களின் தலைநகரான யாழ்ப்பாணத்திலும் அதை அண்டிய இடங்களிலும் அன்று நிலவிய சூழலையும் நிலைமையையும் சற்றே நாம் திரும்பிப் பார்ப்பது நல்லது. எதிர்காலத்திலாவது இப்படியான பயங்கர நிகழ்வுகள் ஏற்படாது இருக்க ஒரு படிப்பினையாக இருக்கும்.
அழகிய யாழ் மாநகரசபையின் நகர மண்டபமும், அதனை அலங்கரித்த சுப்பிரமணிய பூங்காவும், சரித்திரச்சான்றாக விளங்கிய டச்சுக்காரர்களின் அழகிய கோட்டையும், தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்து விளங்கிய நூல் நிலையமும் இன்று இருந்த இடம் தெரியாமல் போயுள்ளது. யாழ்ப்பாணத்தை அண்டிய கிராமங்கள் எல்லாம் நெல் வயல்களாகவும் புகையிலைத் தோட்டங்களாகவும் மரவள்ளி, தென்னை, பலா, மா போன்ற பயன்தரு மரங்களாலும் ஏனைய பயிர்ச் செய்கைகளாலும் நிரம்பி வழிந்த காலம் அக்காலம். இன்றோ இடிந்த கட்டிடழ் இடர்பாடுகளுடன் கூடிய வனாந்தரமாக அல்லவா இவ்விடங்கள் விளங்குகின்றன.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம்
அன்று ஒவ்வோர் கிராமத்திலும் உள்ள இரண்டு மூன்று கோவில்களில் மாதாமாத, வருடாந்தரத் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். இக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட மின் வெளிச்சத்துடனான முத்துச்சப்பறத்தில் வீதி உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தென் இந்தியாவிலிருந்தே அனேகமான மேளவாத்தியக்காரர்களும் சங்கீத மேதைகளும் வந்து தமது திறமையை அள்ளிக்கொட்டுவார்கள். இவற்றைக் கண்டு களிக்க கூடும் மக்களோ பல்லாயிரக்கணக்கில் சதிர்க்கச்சேரிகளோ ஏராளம்.
அதிலும் கல்வியங்காடு பிரசித்தி பெற்றது.
இவற்றைத்தவிர அன்று யாழ்ப்பாணத்திலிருந்து ரூ. 9.75 சதத்துடன் 12 மணித்தியாலப் பிரயாணத்தில் கொழும்பு வந்து சேரலாம். அதிலும் இன்ரர் சிற்றி என்ற அதிவேகப் புகையிரதத்தின் மூலம் ஆறே மணித்தியாலத்தில் கொழும்பு செல்லலாம். அது மாத்திரமல்லாது அரசாங்க ஊழியர்களாயின் தமது ரயில்வே வாறன்ரை கொடுப்பதன் மூலம் விமான ரிக்கற் பெற்று கொழும்பில் இருந்து பலாலிக்கு அரை மணித்தியாலத்தில் வர முடிந்தது.
இன்றோ கப்பல் மூலம் ஒருவர் பயணிக்க இரு வழிப்பயணத்திற்கு ரூ. 2000மும் விமானம் மூலம் பயணிக்க ரூ6,000மும் செலவாகின்றது. அது மாத்திரமல்லாது பயண அனுமதி பெறவோ மக்கள் வெய்யிலிலும் மழையிலும் அலைய பல மாதங்கள் செல்கின்றன. அதற்கிடையில் இடைத்தரகர்களின் தொல்லையே போதும் போதும் என்றாகிவிடும்.
வண்ணை தெய்வம் !

Page 39
C70) எடுத்துக்காட்டாக விளங்கும்
இத்தகைய கஷ்டங்களெல்லாம் தொடங்கியது 1983 வகுப்புக் கலவரத்தின் பின் பேயாகும். வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் எல்லாம் பழிவாங்கப்பட்டார்கள். அவர்களில் பலர் உயிருடன் எரியூட்டப்பட்டனர். அவர்களின் வீடு வாசல்கள் எல்லாம் எரிக்கப்பட்டன. உடைமைகள் எல்லாம் சூறையாடப்பட்டன. இவற்றையெல்லாம் அப்போதைய அரசு கண்டும் காணாததுமாயிருந்தது. தமிழ் மக்கள் கோவில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தனர். ஈற்றில் தமது தாயகமென பாதுகாப்பாக வாழக்கூடிய வட கிழக்கு மாகாணங்களுக்கு கப்பல் மூலம் கடல் வழியாக அனுப்பப்பட்டனர். அன்று தொட்டு இன்று வரை தமிழன் கடல் வழிப் பாதையையே நம்பியிருக்க வேண்டியவனாயுள்ளான்.
தமிழனின் கடல்வழிப்பாதைப் பிரயாணத்தில் எத்தனையோ இடையூறுகளும் கஷ்டங்களும் ஏற்பட்டன. முதலில் கச்சாய் பூநகரிக் கடல் வழிப்பாதையும் அதை அடுத்து கிளாலி - கிளிநொச்சி கடல்வழிப்பாதையென்று தமிழன் பட்ட கஷ்டங்களோ சொல்லுந்தரமன்று. மேற்படி பயணத்தில் எத்தனையோ அப்பாவிகள் கடலுக்கு இரையாகினர்.
1983இல் நடைபெற்ற இனக் கலவரத்திற்குக் கால்கோளாக அமைந்தது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடந்த கண்ணிவெடியில் சிக்கி உயிர் துறந்த 13 இராணுங் வீரர்களின் சடலங்கள் கொழும்பு கொண்டு வரப்பட்டமையும் அதை அரசியல் தேவைக்குப்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -O71)- பயன்படுத்திய துர்ப்பாக்கிய சம்பவமே. இதைத் தொடர்ந்தே தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்தே யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் எழுச்சி வளரத் தொடங்கியது. இதற்கு முந்திய சம்பவங்கள் சில இனமுரண்பாட்டுக்கு கால்கோள் நாட்டப்பட்தெனலாம். திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகியதும் அவர் கணவர் எப்படி சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களின் மொழி உரிமையைப் பறித்தாரோ அதிலும் மோசமான செயலைப் புரிந்தார். அவர்தான் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி முறையில் தரப்படுத்தலைக் கொண்டு வந்து தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்கு வேட்டு வைத்தார். அது மாத்திரமல்லாது தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தியபோது அதைக் குழப்பி அடிக்கும் நோக்கில் பொலிஸ்காரரை கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்வித்தது பத்து அப்பாவித் தமிழர்கள் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறக்கக் காரணமாக அமைந்தது. அது மாத்திரமல்லாது தமிழர்களுக்கான பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்திலா அல்லது திருகோணமலையிலா அமையவேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ்த் தலைவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டைப் பயன்படுத்தி தமிழ் மாணவர்கள் காலாகாலமாகக் கல்வி கற்றுவந்த மிகவும் திறமைவாய்ந்த இரண்டு பிரசித்திபெற்ற பாழ்ப்பாணக் கல்லூரியையும் பரமேஸ்வராக் கல்லூரியையும் இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினர். இதனால் யாழ்ப்பாண மாணவர்களின் கல்வியை வளர்த்த இருபெரும் பாடசாலைகள் இல்லாது ஒழிந்தன.
வண்ணை தெய்வம்

Page 40
o Ap 72 எடுத்துக்காட்டாக விளங்கும்
இது விடயத்தில் அமரர் அஷ்ரப்பின் பேரம்பேசும் ஆற்றலினால் ஒருவித பிரச்சினையுமின்றி மிகவும் இலகுவாக முஸ்லிம் மாணவர்களுக்கான பல்கலைக் கழகத்தைக் கிழக்கு இலங்கையில் ஸ்தாபித்தார். இந்த அரசியல் சாணக்கியம் நமது தமிழ்த் தலைவர்களிடம் இல்லாது போனது அதிசயமே! எமது தமிழ்த் தலைவர்கள் எல்லாம் காலாகாலம் ஏமாற்றப்பட்டவர்களே. இது விடயத்தில் காலம் சென்ற ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. அல்பிரட் தம்பியய்யாவின் அருஞ்சேவையை நினைவு கூருதல் நன்று. இன்று கொழும்புத் துறைமுகத்தில் எஞ்சியுள்ள இரண்டொரு தமிழர்கள் இருப்பார்களேயாயின் அது திரு. தம்பியய்யா கொழும்புத் துறைமுகத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை தன்கீழ் கொண்டிருந்தமையே. இவர் தனது f5 fi 6A IT ass காலத்தில் தீவுப் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு துறைமுகத்தில் வேலை பெற்றுக் கொடுத்தார். அது மாத்திரமல்லாது தீவுப் பகுதிக்கு இலங்கையின் மூன்று பிரதமர்களான திருவாளர்கள் டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேன நாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல போன்றவர்களை நேரடியாக அழைத்துச் சென்று தொகுதியின் தேவைகளைச் சுட்டிக்காட்டிய பெருமகனாராவார்.
இதேபோன்றே காலஞ்சென்ற தமிழ்க்காங்கிரஸ் தலைவரான திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் மிகவும் பொறுப்பு வாய்ந்த மந்திரிப்பதவியான கைத்தொழில், கடற்றொழில் அமைச்சர் பதவியைப் பெற்று ஓர் இரு வருடங்களில்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C73Dகாங்கேசன்துறையில் சீமேந்துத் தொழிற்சாலையையும், பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையையும் கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையையும், நிறுவி தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கினார். இதைப் பொறுக்க முடியாத பேரினவாதிகள் “பொன்னம்பலம் தொழிற்சாலைகளையெல்லாம் தமிழர் பகுதியில் கொண்டு சென்று நிறுவுகிறான்” என ஒப்பாளி
வைத்தனர்.
ஆனால் அதில் உண்மையும் இருக்கத்தான் செய்தது.
எப்படி எனில் திருவாளர் பொன்னம்பலம் அவர்களுக்குப் பின்னர் இலங்கைத் தமிழரக்க் கட்சியின் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சராக திருவாளர் மு. திருச்செல்வம் அவர்கள் பதவியில் இருந்தபோதும் நினைத்துச் சொல்லக்கூடிய வகையில் தமிழர் பிரதேசங்களில் எந்தவொரு நலத்திட்டங்களையும் செயற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகரசபையில் அல்பிறட் துரையப்பா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக யாழ்நகரை அழகுபடுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நவீன சந்தை உட்பட, யாழ் நகரில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற உருவச் சிலைகள் மட்டுமல்ல, கூட்டுறவுச் சங்கங்களைப் பரவலாக்கி ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியவர் அவர்.
வண்ணை தெய்வம்

Page 41
C74). எடுத்துக்காட்டாக விளங்கும்
இவை போல எங்களது நினைவுகளை விட்டு அகலாமல் இருப்பவை யாழ்ப்பாணத்தில் உயர்ந்து நிற்கும் மணிக்கூட்டுக்கோபுரம், யாழ் திறந்தவெளி கலையரங்கம், இனவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பொதுசன நூலகம், கல்வியன் காட்டில் உள்ள சங்கிலியன் தோப்பு உட்பட யாழ் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், செல்லச்சன்னதி ஆலயம், நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம், யாழ் பெரிய கோவில், அடைக்கலமா கோவில், பாசையூர் அந்தோனியார் ஆலயம், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைபோல கல்விக்கூடங்களான சென்-பற்றிக்ஸ், யாழ் மத்தியகல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, இன்று பல்கலைக்கழகமாக உள்ள பரமேஸ்வராக்கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி, உடுவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ் இந்து மகளிர்கல்லூரி, இப்படி இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.
இதில் மறக்கமுடியாத ஒரு பதிவு சென்றல் கொலிஜ் - சென் ஜோன்ஸ் கொலிஜ் கல்லூரிகள் சுமார் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடாத்திவந்த சினேகபூர்வமான மென்பந்தாட்டப் போட்டிகள்.
கல்லூரிகளுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தொடர்ந்து ஒன்பது வருடங்களாக சம்பியன் கிண்ணத்தை தன்வசம் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C75)- இடையில் சில வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக ա Tփ மக்களின் கொண்டாட்டங்களும், சந்தோஷங்களும் சிதைந்து போயின. மீண்டும் எங்கள் மண்ணில் சமாதானம் துளிர்க்கின்ற சூழ்நிலைகள் உருவாகி வருவதையிட்டு எங்கள் மனங்கள் குதூகலம் கொள்கின்றன.
முன்னைய யாழ்ப்பாணம் எங்கள் நினைவுகளில் மட்டும் இருந்துவிடாது! அதே போன்று மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பது எல்லோரதுமான ஆவல்.
அந்த நாட்களுக்காக காத்திருப்போம்.
வண்ணை தெய்வம்

Page 42
எடுத்துக்காட்டாக விளங்கும்
பொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம்
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சரஸ்வதி மஹால் உண்டாவதன் முன் யாழ்ப்பாணத்தில் தமிழரசர் நாயன்மார்கட்டு என்னும் குளக் கரையில் நூலகம் ஆரம்பித்திருந்தனர். சென்ற நூற்றாண்டில் 1842ஆம் ஆண்டில் நீதிமன்றக் காரியதரிசி கிறினியர் ஒரு நூலகத்தை ஆரம்பித்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்துச் சட்டத்தரணிகள் தங்கள் உபயோகத்துக்கென ஒரு சட்டநூலகத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
இந்த நூற்றாண்டில் 1933ஆம் ஆண்டில் நீதிமன்றக் காரியதரிசி க.மு. செல்லப்பா அவர்களின் சிந்தனையில் ஒரு நூலகம் வாசிகசாலையளவில் உதிப்ப அவர் கந்தமடத்து முதல் நூற்றுவர் என்னும் இளைஞர் முன்னேற்றச் சங்கத்தாரிடம் கருக்கொள்ளச் செய்தார். இளைஞர் வீடுகள் தோறும் சென்று நூல்கள் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
இதற்குள் செல்லப்பா அவர்கள் பட்டணப் பகுதியில் லங்காஹோம் என்னும் மனைக்கு இடம் பெயர்ந்தது, அங்கிருந்து 11.12.1933 ஆம் நாளில் உருக்கமான அறிக்கை விட்டார். அது செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C7)- Quigi Lu JiujQupps. A Central Free Tamil Library in Jaffna என்பதே அதன் பழைய பெயராயும் அமைந்தது.
முதற்கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி கனம் சீ. குமாரசுவாமி C.C.S. தலைமையில் 9.6.1934ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் கூடிய கூட்டத்திலே குடாநாட்டின் பெரியவர்கள் பலரும் பல துறைகள், பண்ணைகள், திணைக்களங்கள் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகளெனக் கருதும் அளவில் வந்திருந்து கருத்துப்
பரிமாறினார்கள்.
நீதிவான் குமாரசுவாமி அவர்கள் தலைவராயும் கலாநிதி வணக்கத்துக்குரிய ஐசாக் தம்பையா அவர்கள் உபதலைவராயும், அரியாலையூர் அப்புக்காத்தர் சீ. பொன்னம்பலம் அவர்களும் செல்லப்பா அவர்களும் இணைச் செயலாளராயும் தெரியப் பெற்றார்கள். காரியநிர்வாக சபையில் பெரியவர்கள் பலர் இடம் பெற்றிருந்தார்கள். கல்வித்துறையின் பெரியவரான அருள் நந்தியும் காரிய நிர்வாக சபையை அலங்கரித்தார்கள். கல்லூரிகளின் அதிபர்கள் சிலர் இடம் பெற்றிருந்தார்கள்.
உருக்கமான வேண்டுகோள் ஆக்கபூர்வமான முயற்சி
செல்லப்பா அவர்கள் தமிழ்ப் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு வசதி செய்தலையே அழுத்தமாகப் பேசி,
அதற்காகக் கிராமங்கள் தோறும் வாசிகசாலைகள் கிளம்ப வேண்டும். யாவும் மத்திய நிலையத்தோடு இணைதல்
வண்ணை தெய்வம்

Page 43
எடுத்துக்காட்டாக விளங்கும் வேண்டும். அங்கத்தவர்கள் மாதாந்தம் 25 சதமாவது கொடுத்துதவுதல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக அவருக்குக் கிடைத்த பணத்தில் 160 ரூபாவைத் தளபாடங்கள் செய்வதற்குக் கையளித்தார்.
வாசிகசாலை ஆரம்பம்
உயர்நீதிமன்றத்துப் பதிவாளராயிருந்து ஓய்வு பெற்ற பெரியார் R.C. புரொக்ரர் இளைஞர்களுக்கு வழிகாட்டியாயும் முகாமையாளராயும் கெளரவமான சேவை செய்வதற்கு முற்பட்டதும், முதல் நூற்றுவரின் முதலாம் இளைஞரான சி.எஸ். இராசரத்தினம் கெளரவ நூலகராகப் பணிபுரிவதற்கு முற்பட்டுத் தம் நண்பர்கள் சேகரித்து வந்த நூல்களைத் தூசுதட்டி வரிசைப்படுத்தி வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கே 01.08.1934ஆம் நாள் வாசிகசாலையை ஆரம்பித்தார்கள். பலர் குவிந்திருந்து படிக்க ஆரம்பித்தார்கள். இருக்கை வசதி போதாமையால் பக்கீஸ் பெட்டிகள் மீதும் இருந்து படித்தார்கள்.
உள்ளுராட்சிமன்றம் பொறுப்பேற்றல்
யாழ்ப்பாணம் கொழும்புக்கு அடுத்த பெரிய நகரமாயிருந்தும் அக்காலத்தில் லோக்கல் போட், ஏர்பன் டிஸ்ட்ரிக் கவுன்சில், ஏர்பன் கவுன்சில் என்று படிப்படியாக முன்னேறியே மாநகர சபையானது. நூலகம் ஆரம்பித்த காலத்தில் 1931ஆம் ஆண்டில் தோன்றிய ஏர்பன் டிஸ்ட்ரிக்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C79)-
கவுன்சில் (J.U.D.C.) இயங்கி வந்தது. அதன் முதல் தலைவர் அரியாலையூர் ஆ. கனகரத்தினம். அடுத்த தலைவர் ஆர்.ஆர். நல்லையா அவர்கள். இதில் அரியாலையூர் சட்டத்தரணி ஆர். சுப்பிரமணியம் ஒரு பெரியார். அவர் இந்த வாசிக சாலையை உள்ளூராட்சி மன்றத்திடம் ஒப்படைப்பதற்கான முயற்சியெடுத்தார்.
கையளிப்பு வைபவம் 01.01.1935ஆம் நாளில் கோலாகலமாக நடைபெற்றபோது, யாழ்ப்பாணத்து வரலாற்று நிபுணர் முதலியார் சி. இராசநாயகம், முகாமையாளர் புறொக்ரர், செயலாளர் செல்லப்பா ஆகியோர் தமிழர் கன்னிகாதானம் செய்த பாவனையில் வாசிக சாலையை உள்ளூர் ஆட்சி மன்றத் தலைவர் நல்லையா அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இங்ங்ணம் ஒப்படைத்த போது 844 தரமான நூல்களைக் கையளித்தார்கள். இவற்றுள் 694 நூல்கள் பொதுமக்கள் அன்பளிப்புச் செய்தவை. எஞ்சியவை அவ்வப்போது விலைக்கு வாங்கியவை.
உபகரித்த பெரியவர்கள்
நூல்களை ஒன்றிரண்டு எனத் தந்தவர் பெயர்களை விட்டு எட்டுப் பத்து பதினைந்து என அள்ளித்தந்தவர்கள் சிலரை இங்கே குறிப்பிடுதல் அமையும். வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்கள், நாயன்மார்கட்டு வைத்தியர் இராமநாதன், வித்தியாதரிசி நல்லூர் கந்தையா, வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாசர், ந.சி. கந்தையாபிள்ளை, சட்டத்தரணி T.H. சுப்பையா,
வண்ணை தெய்வம்

Page 44
C80 ) எடுத்துக்காட்டாக விளங்கும்
இவர்களோடு மன்றங்கள், சபைகள், சமயத்தாபனங்கள் கொடுத்த கொடையும் பெரிது. அதிமேற்றாணியார். கிறிஸ்தவ சேவாசங்கம், சென்னை பைபிள் சங்கம், வெஸ்லியன் சங்கம், கொழும்பு முஸ்லீம் சங்கம், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆகியோரை மறக்கலாகாது.
இடம் பெயர்ந்த வரலாறு
பெரியகடைச் சூழலில் தினமும் காலை 8.00 முதல் மாலை 7.30 மணி வரை திறந்திருந்த வாசிகசாலையில் தினமும் சராசரி ஐம்பதின்மர் நன்றாகக் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெற்றனர். இடவசதியின்மையால் வாசிக சாலையை உடனடியாகப் பறங்கித் தெருச் சந்தியிலுள்ள விசாலமான கடைக்கு மாற்றினார்கள். அங்கும் இடம் போதாமையால் விரைவில் வாடி வீட்டுக்குத் தெற்கில் அமைந்த மழவராயர் மனையின் மேல்மாடிக்கு மாற்றினார்கள். மேல்மாடியில் இரு பெரும் விசாலமான மண்டபங்களும் ஒரு நீளமான விறாந்தையும் அமைவாக இருந்தன. மழவராயர் கட்டடத்துக்கு மாறிய காலம் 1936ஆம் ஆண்டாகும். அன்று தொடக்கம் நீண்ட காலமாக நிலவி வந்த நூலகத்தின் முதுகெலும்பாக நின்று பிடித்தவர் முன்னர் கெளரவ சேவை செய்த இராசரத்தினம் ஆவார். உள்ளூராட்சியார் நிரந்தர நூலகர் தேவையென விளம்பரஞ் செய்த காலத்தில் விண்ணப்பித்த பட்டதாரிகள் பலர்ைப் புறக்கணித்தவர்கள் மெற்றிக்குலேசன் சித்தியெய்திய இராசரத்தினம் அவர்களையே நியமித்தார்கள். அவர் தனியொருவராய்க் காலை 7 மணி முதல் மாலை 7 மணி
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் வரை கடமையாற்றினார். நூலகத்தின் வளர்ச்சிக்கு நகரசபையாய் மலர்ந்த உள்ளூராட்சி மன்றத்துத் தலைவர்களும் காரியதரிசியாய்க் கடமையாற்றியவர்களும் கைகொடுத்து வந்தார்கள். நாளடைவில் தனியொருவர் நூலகத்தை நடத்துவது முடியாது எனக் கண்டவர்கள் ஜோர்ஜ் சுப்பிரமணியம் ஆகிய இரு இளைஞர்களை உதவியாளர்களாக நியமித்தார்கள்.
புதிய நூலகர்
இராசரத்தினம் அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வரை பணிபுரிந்தபின் 1.2.1947இல் புதிய நூலகர் க. நாகரத்தினம் அவர்களுக்கு இடங்கொடுத்து இளைப்பாறிக் கொண்டார். நாகரத்தினம் அவர்களின் முயற்சியும் பணியும் சுறுசுறுப்பானவை. இவர் பரமகுலசிங்கம் அவர்களின் உதவியால் வணக்கத்துக்குரிய ஐசாக் தம்பையா அவர்களின் நூல்கள் பலவற்றை நூலகத்துக்குப் பெற்றார். மேலும் பல பெரியார்கள் நூல்களை அன்பளிப்புச் செய்த வேளையில் நகரசங்கத்தார் ஆண்டு தோறும் நிதியொதுக்கி நூல்கள் வாங்கிக் குவித்தார்கள். தலைவர் சாம் சபாபதி அவர்களையும், காரியதரிசி பாலசுப்பிரமணியம் அவர்களையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
நூலகத்தின் அகலிப்பு வேலை
சுதந்திர இலங்கையில் யாழ்ப்பாண நகரம் மாநகர சபையினால் பரிபாலிக்கப் பெறத் தொடங்கிய வேளையில் நல்லதொரு நூலகம் தனியாக அழகாக எழும்புதல்
வண்ணை தெய்வம்

Page 45
C82) எடுத்துக்காட்டாக விளங்கும்
வேண்டும். யாழ்ப்பாணம் இலங்கை என்பனவோடு அமையாது, தென்கிழக்காசிய நாடுகள் புகழும் வண்ணம் அமைதல் வேண்டும் என்று நகரபிதா சாம் சபாபதி அவர்கள் நினைத்தபோது, அப்படியே ஆகுக என்று வணக்கத்துக்குரிய லோங் பிதா ஆசீர்வதித்தார்.
அடிக்கல் நாட்டு விழா
பாரிய நூலகத்தை மாடிக் கட்டடமாகக் கட்டுவதற்கான நல்லதொரு இடத்தை நகர் நிர்மாண நிபுணர் வீரசிங்கா, முனியப்பர் கோயில் முன்னுள்ள முற்றவெளியில் வகுத்ததைத் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்முன் ஒத்துக்கொண்டதும் நல்ல ஆரம்பமானது. நகர பிதா சபாபதியவர்கள் 16.05.1952 முதல் யாழ்ப்பாண மத்திய நூலகசபை என ஒரு ஆளுநர் சபையினை ஆரம்பித்தார்.
வண்ணை தெய்வம் !
 

நாகேந்திரம் குடும்பம்
நகரபிதா, வணக்கத்துக்குரிய லோங் பிதா, பிரித்தானிய தானிகர் செசில் சையேஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குறோஸ், இந்திய தானிகரின் முதற்காரியதரிசி சித்தாந்தசாரி ஆகிய ஐவரும் 29.05.54 மாலை அடிக்கல் நாட்டினார். ஆசிய அபிவிருத்திப்பணி நிதி மூலம் அமெரிக்கர் 104,000 ரூபா நன்கொடை நல்கும் வழிகண்டவர் லோங் பிதா, இந்திய தானிகரும் உடனடியாக 10,000 ரூபா உதவினார்.
கைகொடுத்த களியாட்ட விழாக்கள்
யாழ்ப்பாணம் கண்டிரா வகையில் களியாட்ட விழாக்கள் காலந்தோறும் நடைபெற்றன. அவை 1952, 1954, 1959, 1963 என்னும் ஆண்டுகளில் கலை விழாக்கள் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்புகள் முதலான வருமான வழிகளோடு நடைபெற்றன. வர்த்தகப் பிரமுகர்கள் பெரும் பரிசுகளாகப் புதிய மோட்டார் வண்டிகளை அன்பளிப்புச்
செய்திருந்தனர்.
புதுப் பொலிவும், பெயரும், திறப்பு விழாவும்
கட்டட வேலைகள் நடைபெற்ற காலத்திலேயே 17.10.1953 முதலாக யாழ்ப்பாண பொது சன நூல் நிலையம் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அதற்குப் பொதுமக்களின் உபகரிப்பு 26.11.1958 நடைபெற்ற கொடித்தினத்தில் அதிகமாயிற்று. அன்றி 1959ஆம் ஆண்டுக் களியாட்ட விழாவும் கைகொடுத்தது.
வண்ணை தெய்வம்

Page 46
எடுத்துக்காட்டாக விளங்கும்
நூலகத்தில் இடநெருக்கடி தவிர்க்க முடியாது போனபோது, கட்டிடம் முற்றாக மாடியிறாகக் கட்டி முடிக்கப் பெறுமுன்பே கீழ்மண்டபத்தில் 11.10.1959ஆம் நாளில் நகரபிதா அல்பிரெட் குடிபுகும் வைபவத்தை நடத்தினர். பாரிய நூலகத்துக்குப் பழம் பெரும் நூல்கள் பல கோப்பாய் வன்னியசிங்கம் அவர்களின் நினைவாகவும், வவுனியா பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குல சபாநாதனிடம் பல அரிய நூல்கள். விலைக்குக் கிடைத்தன.
பட்டம் பெற்ற நூலகர்
அமெரிக்காவில் அற்லான்ராப் பல்கலைக் கழகத்தில் நூலகப் படிப்பில் எம்.எஸ்.சி. என்னும் முதுகலைமானிப் பட்டம்பெற்ற வே.இ. பாக்கியநாதன் அவர்களின் சேவை 28.08.1964 முதல் கிடைத்தது. அவருக்குப் பின் சுறுசுறுப்பான இளைஞர் பலரும் சேவையில் இடம் பெற்றனர். நூலகம் நன்கு விசாலித்து பல்லாயிரம் அங்கத்தவர்களைக் கொண்டு நிலவியது. பாக்கியநாதன் பழந்தமிழ் ஏடுகள் பலவற்றை உள்ளூராட்சி மந்திரியார் திருச்செல்வம் அவர்கள் உதவியால் தேடிச் சேகரித்து வைத்தார்.
கட்டட வேலையில் திராவிட நாகரீகம் பொலிவு பெறப் பொறியியலாளர் இ. வைத்தியலிங்கம் பாடுபட்டார். ஆணையாளர் ஜெயசிங்கா தமிழறிந்தவராயிருந்து உதவி செய்தார். விசேட ஆணையாளர்கள் நடேசன், மாணிக்கவாசகர், நல்ல உதவியாயிருந்தார்கள். காலந்தோறும்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C85)
நகர பிதாக்களாயிருந்தவர்களான பெரியவர்கள் முயற்சியெடுத்தார்கள்.
அமெரிக்க நூலகம் சங்கமித்தது
இருவேறு நதிகள் கங்கை யமுனை ஒன்றிணைந்தாற் போல யாழ்ப்பாணத்தில் நிலவிய அமெரிக்க நூலகம் யாழ் நூலகத்தோடு இணைந்தமை பெரிய வரப்பிரசாதமாயிற்று. ஆயிரக்கணக்கான நூல்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் முதலானவை கிடைத்தன.
இன்னும் அனுபவம் வாய்ந்த நூலகர் ஒருவரும் வந்து வாய்த்தார். திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் கூட்டம். இதில் சரஸ்வதி அந்தர்வாகினியாக வடக்கில் உள்ளது. இங்கே சரஸ்வதி பிரத்தியட்சமாய் இரு நூலகங்களை இணைத்து நடுவே அழகிய திருவுருவில் காட்சி தருகிறது.
உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற ஒரு நூலகம்
உடம்பெங்கும் குருதி பாய்ச்சும் இதயத்தின் நான்கு அறைகள் போல நூலகத்தின் மேல் மாடி, கீழ் மண்டபம் ஆகியவற்றின் வட, தென் பாகத்து மண்டபங்கள் நான்கும் அறிவூட்டி வந்தன. ஆயிரக்கணக்கான தேனீக்கள் மலர்ந்த பூக்களில் தேன் திரட்டினாற் போல இளைஞர் யுவதிகள் விரித்த நூல்களில் அறிவைத் தேடிப் போயினர். நூல்களின் தொகை, சஞ்சிகைகளின் தொகை, தளபாட வரிசை, நூலகத்தாரின் பணிவான சேவை படிப்பார்வத்தை வளர்த்த பான்மை சொல்ல முடியாது. எழுத முடியாது.
வண்ணை தெய்வம்

Page 47
C86) எடுத்துக்காட்டாக விளங்கும்
நூலகர் பாக்கியநாதன் உத்தியோக உயர்வு பெற்று விரிவுரையாளராகப் போனதும், நாகரத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றதும், நகரபிதா அல்பிறெட் துரையப்பா அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முதுமானிப் பட்டதாரியும் பரமேஸ்வராக் கல்லூரி அதிபராய் ஓய்வு பெற்றவருமான சி. சிவபாதசுந்தரம் அவர்களின் மேற்பார்வை சிலகாலம் வரப்பிரசாதமாயிற்று.
இன்றைய வளர்ச்சி
மறுபிறப்பெடுத்து மலர்ந்து வரும் நூலகத்துக்கு உலகம் உபகரித்துள்ளது. விசேட ஆணையாளர் சிவஞானம் நல்ல முயற்சி எடுக்கிறார். நூலகப்பணியில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் நல்ல முறையாகப் பணிபுரிகிறார்கள். நூலகர் திருமதி ரூ. நடராசா தலைமையில் நூல்கள் பல்லாயிரக்கணக்காக வந்துள்ளன. தளபாட வரிசைகள் தயாராகின்றன. மெல்ல மெல்ல உய்தியும் உயர்வும் அடையும் நாள் நெருங்குகிறது. செல்லப்பரின் நினைவு நிலவுவதாக.
இக்கட்டுரை யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப் பெற்ற கட்டடத் திறப்புவிழா மலர் 04.06.1984இல் இருந்து மறுபிரசுரமாகின்றது. அமரர் க.சி. குலரத்தினம் அவர்களின் இச் சுருக்கக் கட்டுரையின் மூலப்பிரதி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழில் 20.07.1982 முதல் 19.08.1982 வரை
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் -C87)-
தொடர்ச்சியாக வெளிவந்தது. இத்தொடர் கட்டுரையே யாழ்ப்பாணப் பொது நூலக வரலாற்றை விரிவாகக் கூறும் ஒரே ஒரு ஆவணமாகும். இது பின்னர் யாழ்ப்பாணம் நூல்நிலையம் - ஓர் ஆவணம் என்ற தலைப்பில் கலாநிதி வே.இ. பாக்கியநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று அவுஸ்திரேலியா மித்ரா வெளியீட்டகத்தினூடாக பெப்ரவரி 1997 இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பற்றிய விமரிசனம் இவ்விதழில் தனியானதொரு கட்டுரையாகப் பிரசுரமாகியுள்ளது.
நன்றி : யாழ்ப்பான பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு
வண்ணை தெய்வம்

Page 48
எடுத்துக்காட்டாக விளங்கும்
யாழ் பொது நூலகத்தின் அமைப்பும் சேவைகளும்
யாழ்ப்பாணப் பொது நூலகம் தன் அறிவொளியினை எரிக்கப் பெற்ற பல்லாயிரக் கணக்கான விலை மதித்தற்கரிய நூல்களது சாம்பல் மேட்டிலிருந்து மீண்டும் கதிர்பரப்பத் தொடங்கியுள்ளது. அறிவுலகமே பெருமைப்படக் கூடிய முறையில் நவநூலகமொன்று உதயமாகி வருகின்றது. அறிவாலயங்களதும், அறிவாற்றல் பெற்ற பெரியோர்களது வரலாறும் என்றுமே முற்றுப் பெற்றதில்லை எனும் வாக்குக்கிணங்க நூலக அறிவு விருட்சம் வெட்டப்பெற்ற கிளைகளினின்றும், புதிய கிளைகளைத் தோற்றுவித்துப் பரந்த வளர்ச்சியினை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது. புதிய நூலக கட்டிடத்தின் நான்கு பெரும் மண்டபங்களும் நவீன நூலகங்களது செயற்பாடுகளைப் பின்பற்றியும், தமிழ் மக்களது பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை உலகறியச் செய்யும் வகையிலும் செயற்படவுள்ளது. மாநகர மக்களுக்கு மட்டுமன்றி யாழ் மாவட்ட எல்லை வரை தனது சேவையினைப் பரப்ப இந்நூலகம் முன்னிற்கின்றது.
உடைமைகள் பாதுகாப்பிடம்
நூலகத்தின் எப்பகுதியினையும் உபயோகிக்க விரும்பும் வாசகர்களது சொந்தப் பொருட்கள் யாவும் இவ்விடத்தில் வைத்துச் செல்ல வேண்டப்படுவர். இதற்குரிய அடையாளச் சின்னம் வழங்கப்படும். வெளியே செல்லும்
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 89)
பொழுது இச்சின்னத்தைக் கொடுத்து உடைமைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பிரதான நூலக வாயிலில் இப்பாதுகாப்பிடம் அமைந்துள்ளது.
நூல்கள் பாதுகாப்பிடம்
படிப்பகத்துக்குச் செல்பவர்கள் மட்டும் இப் பகுதியில் நூல்களைப் பதிந்து கொள்ளத் தேவையில்லை. நூலகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் எடுத்துச் செல்லும் நூலகத்துக்குச் சொந்தமான நூல்கள் யாவும் இப்பகுதியில் பதிந்து செல்ல வேண்டப்படுவர். நூலக பிரதான வாயிலில் இப் பாதுகாப்புப் பகுதி அமைந்துள்ளது.
உயரம் குறைந்த புத்தக இறாக்கைகள், வகுப்புப் பொருள்வாரியாக நிரைப்படுத்தப்பட்டுள்ளது. கண்கவர் வண்ண வட்ட மேசைகளும், கதிரைகளும் சிறுவர்களை மகிழ்விக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. சிறுவர் நூலகத்திற்கு அருகே அமைக்கப்படவிருக்கும் சிறுவர் பூங்கா எல்லையில்லா மகிழ்ச்சியைச் சிறுவர்களிடையே தோற்றுவிக்கவுள்ளது. அத்துடன் சிறுவர்களை நூலகத்திற்கு ஈர்க்குமுகமாக நடாத்தப் பெறும் விரிவு சேவைகளான சித்திர வேளை, கதை வேளை, கைப்பணி வேளை, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, பொது அறிவுப் போட்டி போன்ற ஏனைய போட்டிகள் யாவும் நடாத்தப்பெறும். நூலகத்தினை அறிவுக் கருவூலங்கள் மத்தியில் தோன்றியுள்ள கனவுலகமாகவே சிறுவர் கருதுவர்.
இரவல் வழங்கும் நூல்கள் மட்டுமன்றி, உடனுதவும் நூல்களான கலைக் களஞ்சியங்கள்,
வண்ணை தெய்வம் !

Page 49
C 90) எடுத்துக்காட்டாக விளங்கும்
அகராதிகள், பொது அறிவு நூல்கள் ஆங்கிலம், தமிழ் ; மொழிகளில் உண்டு.
சஞ்சிகைகளும், வார இதழ்களும் இப்பகுதியில் போடப்பட்டுள்ளன. வீடியோ படக் காட்சிகளும், சங்கீத மாலைகளும் சிறுவர்க்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதற்கான உபகரணங்கள் கிடைத்தவுடன் இச்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்.
வாசிகசாலைப் பகுதி
புதினப் பத்திரிகைகளும், வார மாத சஞ்சிகைகளும், அரசாங்க தனியார் ஸ்தாபன வெளியீடுகளும், ஸ்தானிகராலயங்களால் இலவசமாக அனுப்பப்பெறும் சஞ்சிகைகளும், இப் பகுதியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
1981-ம் ஆண்டு நடைபெற்ற வன்செயலின் பின்னர் தற்காலிகமாக வாசிக சாலைப் பகுதி மாநகரசபை அறையொன்றினுள் ஆரம்பிக்கப்பட்டது. எரிக்கப்பெற்ற பிரதான நூலக வடபகுதி புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பொதுமக்களது பயனுக்காகச் சேவையிலிடப்படும் வரை தற்காலிக அறையொன்றினுள்ளேயே இப்பகுதி சேவையினை ஆற்றியது. புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாக்கப் பட்ட பின்னர் நூலக நடுத்தரைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பொதுமக்கள் தினசரிகளைத் தினந்தோறும் வாசிக்கும் வண்ணம் வாரத்தின் எல்லா நாட்களிலும், அரசாங்க, பொது
வண்ணை தெய்வம்

நாகேந்திரம் குடும்பம் C 91 )
விடுமுறை தினங்களுட்பட 08.00 மணி முதல் 20.00 மணி வரை இப்பகுதி சேவைக்கு விடப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் இரு பிரதிகளில் புதினப் பத்திரிகைகள் போடப்படுவதுடன், ஜனரஞ்சகமான பொது, முக்கிய சஞ்சிகைகளும், அரசாங்க வெளியீடுகளும் சந்தா முறையில் பெறப்படுகின்றன.
பழைய சஞ்சிகைகள் வாசிக சாலைப் பகுதி அங்கத்தவர்களுக்குத் தவணை முறையில் இரவல் வழங்கப்படுகின்றன. இப்பகுதி புதிய கட்டிடத் திறப்பு விழாவுடன் கீழ்மாடி வடபாகத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. 2100 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இம்மண்டபம் பொதுமக்களுக்கு வசதி கொண்ட ஆசனங்களையும் இயற்கையான வெளிச்சமும், சுத்தமான காற்றோட்டத்தைக் கொண்டும் விளங்குமென்பதில் ஐயமில்லை.
கேட்போர் கூடம்
புதிய கட்டிடத்தின் கீழ்த்தளத் தென்பாகப் பகுதியில் இக் கேட்போர்கூடம் அமைக்கப்படவுள்ளது. 2100 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இம் மண்டபத்தின் சுவர்கள் மர வேலைப்பாடுகளைக் கொண்டும், நிலத்தளம் சரிவாகவும், 200 வசதியான ஆசனங்களைக் கொண்டும் விளங்கவுள்ளது. இப்பகுதி விரிவுரைகள், கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், படக்காட்சிகள் போன்ற ஏனைய தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்படும். பகல் வேளைகளிலும் படக்காட்சி காண்பிப்பதற்காகப் பல கரிைகளுக்குத் திரைகள் இடப்படும்.
வண்ணை தெய்வம்

Page 50
C 92) எடுத்துக்காட்டாக விளங்கும்
வலது குறைந்தோர்க்கு
வலது குறைந்தோர்க்கான வசதிகளையும் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்துள்ளோம். இதற்காகத் தாம் இயங்கும் வண்டிகளிலிருந்து நூலகத்துக்குள் உட்செல்ல, சற்றே சாய்வான நிலத்தளம் கொண்ட சாய்வளைவு அமைக்கப்படுகின்றது. இது காலப்போக்கில் வாசிகசாலைப் பகுதி, சிறுவர்பகுதி, இரவல் வழங்கும் பகுதி, கேட்போர் கூடம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும்.
விழிப்புலன் இழந்தோர்க்கு ஹெலன் கெல்லரது நாதம் என்றுமோர் வரப்பிரசாதமாகும். ஆகவே சிறிய அளவிலாயினும் பிரெய்ல் பகுதியொன்றினை ஆரம்பித்து விழிப்புலனற்றோர்களுக்கு வழங்குதல் எமது முக்கிய நோக்கமும் கடமையுமாகும்.
வண்ணை தெய்வம்
 

நாகேந்திரம் குடும்பம்
நன்றிகள்
ஒரே மாதிரி சுற்றும் பூமி
ஒரே திசையில் உதிக்கும் சூரியன்
ஒரே மாதிரியான தூக்கம்!
ஒரே மாதிரியான உணவு
இப்படி இன்னும் ஏராளம்.
ஆனால் வாழ்க்கை மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை?
தேதி பார்த்து வந்து போகும் வசந்த
காலங்களைப்போலவே வாழ்க்கையும்
வாழ்க்கை என்னும் சக்கரத்தில் விழுதுகளைப் போல எங்களோடு இணைந்து கொண்ட உறவுகள் பலரை நாங்கள் பிரிந்திருக்கலாம்! ஆனால் நினைவுகளில் இருந்து தொலைந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் எங்கள் சகோதரர் அமரர் மாணிக்கராஜா அவர்களின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட இந்த நூலில் இணைப்பதற்கு பல தகவல்களைத் தந்துதவியவர்களை நன்றியோடு நினைவுகூருகின்றேன்.
வண்ணை தெய்வம்

Page 51
எடுத்துக்காட்டாக விளங்கும்
திரு அலெக்ஷாண்டர் மாஸ்ற்ரர்
460V-s7
திரு. A. மரியநாயகம் afaraðiranu
திருமதி றெஸ்லி - நந்தினி ரிரான்ஸ் திருமதி பாக்கியநாதன் - ஜெயராணி Aførsöronu
ஆகியோருக்கும்,
எங்களது சகோதரரின் உருவப்படத்தை வரைந்து தந்த ஜேர்மனியில் வாழும் சுகந்தினி -சுதர்சன் அவர்கட்கும்,
யாழ்ப்பாணத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருந்த தேவி - ஈஸ்வரானந்தம் தம்பதிகளுக்கும்,
இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுத்தந்த சென்னையில் உள்ள மணிமேகலைப் பிரசுரத்தினர்க்கும்
எனது மனம் கனிந்த நன்றிகள்.
வண்ணை தெய்வம்
வண்ணை தெய்வம்


Page 52


Page 53