கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலச் சுவடுகள்

Page 1


Page 2


Page 3

H
காலச் சுவடுகள்
அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் எம்.ஏ.
இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு : 19

Page 4
Title
Author
Publisher
Printer
Available in India at :
First Edition
Number of Pages
Copyright
COver Design
Price
KALA CHUVADUGAL (Biographical notes on eleven personalities)
Alhaj S.H.M. Jameel B.A. (Econ. Sp.); Dip. Ed.; M.A., Advisor, Ministry of Cultural & Religious Affairs, Sri Lanka.
Islamic Book Publishing Centre, Sainthamaruthu, Kalmunai.
Threeyem Printers, 83, Angappa Naick Street, Chennai-600 001.
Basharath Publishers, 83, Angappa Naick Street, Chennai-600 001.
1998 October, 18
160
(R) Author
Piyaratne Hewabatage,
Heritage House,
G 16, Vipulasena Mawatha Colombo-10.
RS. 100.00

3.
உள்ளே.
சிறப்புரை: அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹரூப்
ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ்
முஸ்லிம் நேசன் முத்தமிழ் வித்தகரும்
முத்தலிபு வைத்தியரும்
கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர்
முன்னோடிகளுள் முதல்வர் ரி.எஸ். அப்துல் லத்தீப்
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள்
கலாநிதி அஸிஸின் கல்முனைக் காலம்
பித்தன் ஷா
பேராசிரியர் உவைஸின் தமிழ்த் தொண்டு பிறையன்பன் பேராசிரியர் சு. வித்தியானந்தன்
நாவலுக்கோர் இலக்கணம் இளங்கீரன்
பக்கம்
14
23
42
54
59
85
104
115
136
148

Page 5
இந்நூலாக்கத்தில் உதவிய பின்வருவோருக்கு நன்றிகள்:
சித்தி ஆரிபா ஜெமீல் அல்ஹாஜ் நஸில் எம். ஜெமீல் அல்ஹாஜ் எஸ்.எம். கமால்தீன் அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹரூப்
ஏ.கே.எம். நிஸார்
அல்ஹாஜ் அலி அஸிஸ்
டாக்டர் ஏ.எல்.ஏ. றஸாக் அல்ஹாஜ் மெளலவி எம்.எச்.எம். புஹாரி
மீலாத் கீரன்
நபீலா அலி
ஸமீனா சஹீட்
ஏ.எல். ஸ்பீனா

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நூலாசிரியரின் ஆசானும்: முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தின் ஒய்வுபெற்ற சிரேஷ்ட உதவிப் பணிப்பாளரும்; சர்வதேச பிரபல்யம் பெற்ற ஆய்வாளரும், எழுத்தாளருமான
அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹரூப் அவர்களின்
அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களால் எழுதப் பட்டுள்ள இந்நூல் இலங்கையில் வித்தூண்டியிருக்கும் பதினொரு முக்கியஸ்தர்களைப் பற்றியதாகும். அவர்களில் இருவர் தமிழர்; ஏனையோர் முஸ்லிம்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு தொழில்கள், இலக்கிய இலக்கண கண்ணோட்டங்கள், வாழ்க்கை முறைமைகள், ஆளுமை ஆகியவற்றைக் கொண்டிருந்த போதிலும் அவர்களுடைய புத்திஜீவிக் கோட்பாடுகளில் ஜெமீல் ஒருமைத்துவத்தை, ஒருமைப்பாட்டினைக் காண்கிறார். எனவே, இப்பதினொரு வரும் ஒரு நூலில் மட்டும் அடங்கிய தனிமனிதர்கள் அல்லர். ஒரு குறிப்பிட்ட புத்திஜீவி அமைப்பினைத் தரும் பலதரப்பட்ட சிந்தனா வல்லுனர்கள் எனலாம்.
இந்நூலிற் கூறப்படும் அனைவரும் முஸ்லிம் சிந்தனை சார்ந்த அபிவிருத்தியில் பங்கு பெறுகிறார்கள் என்பது ஜெமீல் அவர்களின் சூசகமான கருத்து எனக் கொள்வதிற் தவறில்லை. அதேவேளையில் அவர்கள் அத்தனை பேருடன் ஜெமீல் அவர்களுக்கு நேரடியான பரிச்சயம் இருந்திருக்கிறது; அல்லது பிற அறிஞர் மூலமாக மானசீகமான பரிச்சயம் ஏற்பட்டிருக் கிறது. எனவே, அவர்களின் சிந்தனா ஒட்டத்தை உள்வாங்கி, அவர்களின் சமுதாயத் தாக்கத்தை அவரால் கிரகிக்க முடிகிறது.
ஜெமீல் அவர்களின் பார்வை, 19ஆம் நூற்றாண்டின் கடைசி காலக் கட்டத்திலிருந்து தொடர்கிறது. அக்கால

Page 6
கட்டத்தில் இலங்கை வணிகத்தின் ஏற்றுமதி - இறக்குமதி நிலை வலுப்பெற்றுவிட்டது. உதாரணமாக, 1885 ஆம் ஆண்டில், ஒரு கோடி இருபது இலட்சம் இறாத்தல் கொய்னா பட்டை ஏற்றுமதியாகி இலங்கைக்கு நாற்பது இலட்ச ரூபாய் இலாபம் ஈட்டியது. (இன்றைய நாணய மாற்று விகிதத்தில் பார்க்க வேண்டுமென்றால் அத்தொகையை நூறு மடங்காகக் கூட்ட வேண்டும்.) தேயிலை உற்பத்தியைப் பொறுத்த வரையில், 1890 இல், ஏறக்குறைய மூன்று இலட்ச ஏக்கர் விளைச்சலிலிருந்து ஏழு கோடி இறாத்தல் ஏற்றுமதியாயின. அதேவேளையில், இறக்குமதிகளும் அமோகமாய் அதிகரித்தன. 1869 இல் ஏழு இலட்ச (ஸ்டர்லிங்) பவுண்டு பெறுமதியுள்ள பருத்தித் துணிகள் தருவிக்கப்பட்டன. அதே ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதியாகிய அரிசியின் பெறுமதி பதினொரு இலட்ச (ஸ்டர்லிங்) பவுண்டு ஆகும்.
இந்தப் பின்னணியில் ஒரு முஸ்லிம் மத்தியதர வகுப்பு மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அவ்வகுப்பினருக்கு, ஒர் இன அடையாளம், சமூக ஆளுமை, ஓர் இலாஞ்சனை தேவைப்பட்டது. அதை முன்வைப்பதற்கு ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் எத்தனித்தார். அந்தக் கைங்கரியத்துக்காக அஸிஸ் எடுத்த சகல முஸ்தீபுகளையும் ஜெமீல் அவர்கள் இந்நூலில் விளக்குகிறார். பத்திரிகை நடத்துதல், முஸ்லிம் பிரச்சினை களை ஆராய்ந்து முன்கொண்டு செல்ல பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய துரைத்தனத்தாரிடம் தூது செல்லல் என்பன அவற்றுட் சிலவாகும்.
ஜெமீல் அவர்கள் ஆராயும் ஏனைய பிரமுகர்கள் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹம்மூத் சாய்ந்த மருது முத்த லிபு வைத்தியர்; சுவாமி விபுலாநந்தர், கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர்; அல்ஹாஜ் ரி. எஸ். அப்துல் லத்தீப்; கலாநிதி ஏ. எம். ஏ. அஸிஸ் பித்தன் ஷா ; பேராசிரியர் எம். எம். உவைஸ்; இளங்கீரன் சுபைர்; உபவேந்தர் சு.வித்தியானந்தன் என்போர் ஆவர்.
6

தனது நீண்ட கால அரசியல் வாழ்வில் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹம்மூத் பல சாதனைகளைப் புரிந்தவர். அவை முஸ்லிம்களை மட்டும் கருத்தில் கொண்டவை அல்ல. சுகாதார அமைச்சராக அமர்ந்து இலங்கை செளக்கிய சேவையைப் புனருத்தாரணம் செய்தவர். ஒலிபரப்புத்துறை அமைச்சராகக் கடமையாற்றியபோது, பல சீர்த்திருத்தங்களை அதில் புகுத்தியவர்.
இங்கு, ஜெமீல் அவர்கள் அவரை நோக்குவது இஸ்லாமிய பரிணாமத்தில்தான். வசதிபடைத்த முஸ்லிம்கள் அக்கால கட்டத்தில், பிரித்தானியக் கல்விக் கூடங்களுக்குச் சென்று, பாரிஸ்டர்களாகவும், வைத்திய கலாநிதிகளாகவும், பரிணாமித்து வெள்ளைக்கார அந்தஸ்தில் இலயித்து, இலங்கைக்கு மீண்டபோது, கலாநிதி பதியுத்தீன், இந்திய உபகண்டத்தில் அலிகார் பல்கலைக் கழகத்திற்கே சென்றார். ஒருங்கே இங்கு பட்டப்படிப்பையும், சுதந்திரத் தாகத்தையும், இஸ்லாமிய உணர்வுகளையும் வளர்த்துக்கொண்டார் என கலாநிதி பதியுத்தீனின் சுதேச மனப்பாங்கினை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். அலிகார் வாசம் கலாநிதி பதியுத்தீனுக்கு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளை ஒரு பரந்த ஒப்புநோக்கின் அடிப்படையில் அணுக உதவி செய்தது. இலங்கை அரசியல் மட்டத்தில் முஸ்லிம்களுக்குத் தகுந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என உணர்ந்தார். முஸ்லிம் களுக்குக் கல்வி அவ்வகையில் இன்றியமையாதது எனக் கண்டார். கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றபொழுது அவர் கனவுகள் எவ்வாறு நனவாகின என்பதை இந்நூலாசிரியர் அச் சொட்டாக விளக்குகிறார். கலாநிதி பதியுத்தீனைப் பற்றிய அத்தியாயம் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலை தென் ஆசிய முஸ்லிம்களின் சமூகச் சூழலில் காண்கிறது.
சாய்ந்த மருது முத்தலிபு வைத்தியர் என மகுடமிடப் பட்ட அத்தியாயம் மண்வாசனைமிக்க, யதார்த்தமான, அருகி வரும் கிராமியச் சூழலை மீண்டும் உயிர்ப்பிக்கிறது எனலாம். சித்த வைத்திய செயல்பாடுகள் மிளிரும் இவ் வத்தியாயத்தில் நெருப்பு மஸ்தான் போன்ற பிரமுகர்கள் வலம் வருகிறார்கள்.

Page 7
முத்தலிபு வைத்தியருக்கும் சுவாமி விபுலாநந்தர் அவர் களுக்கும் இடையே எழுந்த நட்பை விஸ்தாரமாக நூலாசிரியர் விளக்குகிறார்.
கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பரை நூலாசிரியர் விபரமாக நோக்குகிறார். கேற் முதலியார் எவ்வளவுக் கெவ்வளவு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாழ்வுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டார் என்பதை நூலாசிரியர் மிக்க தெளிவாக விளக்குவதோடு, அவர் கொழும்பின் சமூக சூழலின் காந்த சக்தியை உதாசீனம் செய்து, அதன் நிமித்தம் பல எதிர்பார்ப்புகளை இழந்தார் எனவும் நினைவூட்டுகிறார். இவ்வத்தியாயத்தில் கேற் முதலியாரின் சமூக சிந்தனைகள் காரணகாரியத் தொடர்புகளுடன் நம் முன்வைக்கப்படு கின்றன.
கலாநிதி அஸிஸின் கல்முனைக்காலம் எனும் அத்தியா யம் பலருக்குப் புதிதாக இருக்கும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக, புகழ்பெற்ற கல்வி, சமூக சிந்தனை யாளராக, சர்வதேச மட்டத்து எழுத்தாளர், பேச்சாளராக, நாடறிந்த அரசியல் வாதியாக கலாநிதி அஸிஸ் அனேகரின் கருத்தை ஈர்த்திருப்பார். ஆனால் இங்குநூலாசிரியர் அவரைக் கல்முனை அரசாங்க அதிபராக, எவ்வாறு அரச காணி விநியோகித்தலைத் திறம்பட நடத்தினார் என சுட்டிக் காட்டுகிறார். கலாநிதி அஸிஸ் அவர்களின் நிபுணத்துவம், புலமை, தாராள தயாளக்குணம், மானிட நேயம் என்பன நூலாசிரியரின் பேனா மூலம் நிரூபணம் ஆகின்றன.
இலங்கையில் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றவர் வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரி.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள். அது நிகழ்ந்தது 1925 ஆம் ஆண்டு ஆகும். அக்கால கட்டத்தில் குறிப்பிட்ட சில விழுமியோரைத் தவிர கொழும்பு, கண்டி, காலி போன்ற பட்டணங்களில் கூட முஸ்லிம்கள் வாணிபமே சதம் என நம்பி அதில் சிலர் பிரகாசிக்க பலர் உழன்று கொண்டிருந்தார்கள். அப்துல் லத்தீப் அவர்கள் தனது ஆசிரியர்

பெருமையை அனாயாசமாகப் பெற்றும் சும்மா இருக்க வில்லை. தனது தமிழ் இலக்கிய, இலக்கண வித்துவத்தைப் பெருக்கிக் கொண்டார். இஸ்லாமிய நூல்களை வெளி யிட்டார். த ஹவா பணிகளில் தம்மை முழுமையாகப் பிணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வுகளை இரத்தினச் சுருக்கமாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
சென்ற வருடம் காலஞ்சென்ற பித்தன் ஷாவைப் பற்றி ஒர் அத்தியாயம் உள்ளது. ஷாவைப் பற்றிப் பலர் அறியாத அரிய தகவல்களை நூலாசிரியர் தருகிறார். இப்றாஹிம் கலந்தர் மீரா ஷா எவ்வாறு பித்தன் ஷாவாக மாறினார், அவருடைய கல்வி நிலை என்ன, அவர் செய்த தொழில்கள் யாவை என்ற பல விடயங்கள் நமக்குப் புலப்பட்டு ஷாவின் கதைகளின் உற்பத்தியும் அவற்றின் பின்னணியும் நமக்குத் தெளிவாகின்றன. ஷாவின் வெளிநாட்டுப் பிரயாணங்கள் அவருடைய கதைகளுக்கு ஓர் உள் சட்டம் அளிக்கின்றன.
ஷாவின் கதைகளை முதலில் சந்திக்கும் ஒரு வாசகனுக்கு அவர் கதைகள், புதுமைப் பித்தனின் கதைகளின் அத்திவாரத் திலிருந்து எழுந்த உபரி சங்கதிகள் என்ற பிரமையை எழுப்பக் கூடும். இந்நூலாசிரியர் தரும் தகவல்கள் அந்தச் சராசரி வாசகனின் அபிப்பிராயத்தைத் தடுத்து நிறுத்தி, ஷாவின் அனுபவத்திற்கும், புதுமைப் பித்தனின் அனுபவத்திற்கும் இடையே உள்ள பாரிய வித்தியாசத்தை நிறுவுகின்றன. புதுமைப்பித்தனுக்கு ஒரு குறிப்பிட்ட வாசகர் குழு இருந்தது. ஆதரிக்கவும், ஆலோசனை வழங்கவும் ஒரு படித்த எழுத்தாளர் வட்டம் அவரைச் சுற்றி வந்தது. அவர் கதைகளின் கருத்துக் களைத் தட்டிக் கேட்க இலக்கிய வணிக சஞ்சிகைகளும் அவற்றை ஒட்டிச் செல்ல சிற்றேடுகளும் இருந்தன. கானகத் தில் கதறும் குரலாகத் தொடங்கிய புதுமைப்பித்தன் படிப்படி யாக நாடாளும் பெரும் பத்திரிகைகளின் அரவணைப்பைப் பெற்றுக் கொண்டார்.
பித்தன் ஷா வின் இலக்கிய வாழ்வு இதற்கு எதிர் மாறானது. புதுமைப்பித்தனின் பாசறையாளர் என்ற முத்திரை

Page 8
குத்தப்பட்டு (இது ஷா தாமே வரிந்து தூக்கி வைத்துக் கொண்ட சுமையாகும்.) அவர் கதைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. தொகுதிகளில் சேர்க்கப்படவில்லை. கடைசி வரைக்கும் ஷா இலக்கியத் தனியனாகவே நடமாடி னார். குழுக்கள் இல்லை. கும்பல்கள் இல்லை. இலக்கியத் தை, கல்வியை ஒட்டிய தாபனத்திலிருந்தாலாவது ஷாவுக்கு ஏதாவது தத்துவ ஒத்தடம் கிடைத்திருக்கும். அதுவும் கிடையாது. ஷாவுடைய வியாபார ஏற்பாடுகள் எல்லாம் தோல்வியடைந்தன. அவருடைய மானிடநேயம் அப்படி. பல எழுத்தாளர்கள் தமது எழுத்தில் தம் வெள்ளை உள்ளத்தைத் தரிசித்து, தமது அன்றாட வாழ்க்கையில் கறார் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். இந்த வினோத உத்தி ஷாவுக்குத் தெரியவில்லை. அல்லது அவர் அதை ஒதுக்கித் தள்ளினார். எனவே, ஷா எழுத்தாளனாக நின்றுவிட்டார். அவர் வாழ்க்கை வெற்றிப் பாதையைத் தொடவில்லை.
பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்களின் இலக் கியப்பணி இன்னொரு அத்தியாயத்தை அலங்கரிக்கிறது. உவைஸ் அவர்களின் இலக்கிய முயற்சிகள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைத் தனிப்பெரும் தாபனமாக எழுப்பு வதில் தொடங்கின, வளர்ந்தன. அக்கால கட்டத்தில் ஏனை யோருக்கும் கிட்டாத சில ஆற்றல்கள் அவரிடம் இருந்தன. தமிழறிவு, சிங்கள மொழிப் பயிற்சி, ஆங்கில ஞானம், அறபு மொழித் தேர்ச்சி என்பன அவற்றுள் சில. அவற்றை ஏகாத்திர சிந்தையோ டு பா வித்து, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வு என்ற வித்வமாளிகையைக் கட்டினார். அதில் வெற்றியும் கண்டார். இந்தத் தனிமனித வைராக்கியத்தை, இந்நூலாசிரியர் சர்வ கோணங்களிலுமிருந்து நோக்கி, சுவையான பல தகவல்களைத் தருகின்றார்.
சுபைர் இளங்கீரன் அவர்களின் இலக்கிய வாழ்க்கை, பிறிதொரு அத்தியாயத்தின் தொனிப்பொருளாக அமைகிறது. அவருடைய இலக்கியப் பயணம், யாழ்ப்பாணத்திலிருந்து தொடங்கி மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் வியா
10

பித்து மீண்டும் இலங்கை வந்தடைகிறது. தமது 23வது வயதில் தமது முதல் நாவலை வெளியிட்ட அவர், தமது வாழ்நாள் முழுவதும் இலக்கிய உலகிலேயே அமைந்திருந்தார். நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம் என்பவற்றை அவர் பேனா அள்ளித் தந்தது. இலங்கையில் அதிகமாக நாவல் எழுதி வந்த பெருமை அவருக்கே சாரும். சாதாரணமாக கற்பனை இலக்கிய வாதிகளுக்கு ஒரு களம், ஒரு வாசகர் வட்டம், ஒரு ரசிகர் குழாம், கலந்தாலோ சிக்கவும் தர்க்கம், குதர்க்கம் செய்வதற்கு ஒரு நண்பர் அணி என்பன தேவைப்படுகின்றன. பிறவி நாவலாசிரியரான இளங்கீரனுக்கு இவை அத்தியா வசிய தேவையாகப் படவில்லை. இளங்கீரன் அவர்களின் இலக்கிய வாழ்வை, கச்சிதமாக விளக்குகிறார் இந்நூலாசிரியர்.
இந்த நூலில், முஸ்லிம் அல்லாத இருவர் அணி செய்து நிற்கிறார்கள் என்றேன். அவர்களுள் ஒருவர் விபுலாநந்த அடிகள், மற்றவர் வித்தியானந்தன் அவர்கள். அடிகளார் முத்த லிபு வைத்தியர் வாழ்விலும், கலாநிதி அஸிஸ் அவர்களின் இலக்கிய வாழ்க்கையிலும், எம்.எம். உவைஸ் அவர்களின் ஆய்வுகளிலும் பங்கு கொண்டவர். பல விடயங் களில் ஒருமித்த கருத்துடையவர்கள். தமிழ் இலக்கியத்தில் அவர்களுடைய நட்பு நிரந்தரமானது.
சு. வித்தியானந்தன் அவர்கள் கொழும்பு பல்கலைக் கழகத்திலும், பிற்பாடு பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த் துறைக்குப் பொறுப்பாக இருந்தவர். பின்னர், யாழ்ப் பாணப் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பதவி வகித்தவர். தமிழாசான் என்ற நிலையிலிருந்து மேலெழுந்து தமிழ் நாட கம், நாட்டார் இலக்கியம் போன்ற வெகுஜன ஊடகங்களில் தம்மை இணைத்துக் கொண்டவர். ஏனைய திராவிட மொழிகளிலும் அவரது கரிசனை சென்றது. முஸ்லிம்களின் பாரம்பரிய இலக்கியம், சமகால இலக்கிய முயற்சிகள் ஆகியவற்றில் அக்கறை காட்டி, முஸ்லிம் தமிழறிஞர்களுக்கு ஊக்கமும், உறுதுணையும் தந்தவர். அவருடைய இலக்கிய செல்வாக்கினை இந்நூலாசிரியர் உவந்து, பரிந்து இந்த நூலில்
:11

Page 9
தருகின்றார். (சு. வித்தியானந் தன் அவர்களிடம் இன்னொரு பண்பும் இருந்தது. அவர் புகை பிடிக்கும் சுங் கான்களை எங்கிருந்தாலும் கண்டு பிடித்து, விலைக்கு வாங்கிக் கொள்வார். எனவே அவரிடம்.நீண்ட, பருத்த, சுற்றிவளைந்த, சிறிய, மிகச் சிறிய என வெவ்வேறு அமைப்புகளில் பல சுங்கான்கள் அருமையாக பாதுகாப்புப் பெற்று வந்தன.)
இந்நூல் முஸ்லிம்களின் கலாசார பிதுர்ராஜ்யத்தை சுட்டிக்காட்டுவதாகும். கொழும்பு, பாணந்துறை, வெலிகாமம், யாழ்ப்பாணம், கல்முனை, சாய்ந்த மருது மட்டக்களப்பு எனப் பல திசைகளிலிருந்தும் இந்நூலின் காரண புருஷர்கள் வந்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகள் ஒரு முழுதான இஸ்லாமிய பிரக்ஞையை வெளிக் கொணர் வதாக அமைந்துள்ளன. மேலும், இந்நூல் கொண்டுள்ள காலகட்டம், தற்பொழுது மறைந்து வருவதாகும். அக்காலக்கட்டத்தில், இன்று o_6y95 $)JnT Loub (Global Village) 6TGOT அழைக்கப்படும் ‘வீடே உலகம், உலகமே வீடு” என்ற கலாசாரக் கலப்புப் பரிவர்த்தனை அன்று இல்லை. இயந்திர வாழ்க்கைக்குப் பதிலாக மனித நேயமும், விட்டுக் கொடுக்கும் தன்மையும், சிறிய விடயங்களில் திருப்திகாணும் மனப்பாங்கும் அன்று அரசோச்சின. அவ்வகையில், இந்நூல் மறைந்து வரும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்டும் தகவல் பேழையாக இருக்கின்றது.
இந்நூலாசிரியர், கல்வித் துறையிலும் நிர்வாகத்துறை யிலும் வெவ்வேறு அங்கங்களில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர். பல ஆய்வு நூல்களை வெளியிட்டவர். அவரது சமீபகால நூலான சுவடி ஆற்றுப்படை செயற்கரிய பாரிய கோவையாகும்.
தற்பொழுது, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
எம்.எம்.எம். மஹரூப்
12

ஐ.எல்.எம். அப்துல் அளிஸ்
13

Page 10
O
ஐ.எல்.எம். அப்துல் அளவீஸ் (1867.10.27 - 1915.9.11)
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண் டின் தொடக்கத்திலும் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை முன்னின்று வழிநடத்திச் சென்றோருள் முக்கியமான ஒருவர் ஐ.எல். எம். அப்துல் அஸிஸ் ஆவார். ஐதுரூஸ் லெப்பை மரிக்காரின் மகனான அப்துல் அஸிஸ், 1867 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் அரசாங்கத்தில் காசாளராகக் கடமையாற்றியவர். இவரது தந்தை சேகாதி மரிக்கார் என அழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதிர் மரைக்கார் ஆவார். 'முஹம்மதியர்களைப் பற்றிய சிறப்புச் சட்டங்கள் என்ற சட்டக் கோவையை 1806இல் அப்போதைய பிரதம நீதியரசர் சேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்ரன் முதன் முதல் கோவைப்படுத்தியபோது அதற்கான தகவல்களையும், ஆலோசனைகளையும் சேகாதி மரைக்காரிடமும் பெற்றார். 1818 ஜூன் 16இல் அப்போதைய ஆளுநர் சேர் றொபட் பிறெளன்றிக்கினால் கொழும்பினதும் சல்பிற்றிக் கோறளை யினதும் சோனகத் தலைமைக்காரராக அவர் நியமிக்கப் பட்டு, இதே பதவிக்கு 1824 மே 22ஆந் திகதி சேர் எட்வர்ட் பார்ஸின்னால் மீண்டும் நியமிக்கப்பட்டார். 1820இல் அவர் கிழக்கு மாகாண நடுவராக நியமிக்கப்பட்டதோடு, 1835இல் அம்மா காண முதலியாராகவும் நியமிக்கப் பட்டார். அவரது மூத்த மகனான கா ஸிம் லெப்பை மரைக்கார் அம்மாகாணத்தில் தங்கியிருந்து தந்தையின் அலுவல்களைக் கவனித்தார். 1840இல் கொழும்பு
14

பருதானை பள்ளிவாசலைப் புனரமைப்புச் செய்தவரும் இவரேயாவார். இவ்வாறு கெளரவம் பெற்ற சேகாதி மரைக்கா ரின் மகன் ஐது ரூஸ் லெப்பை மரைக்கா ரின் மகனான அப்துல் அஸிஸ் தனது இளம் பிராயத்திலிருந்தே சமூக, கல்வி, வரலாற்றாய்வு, பத்திரிகைத்துறை போன்ற வற்றில் ஈடுபட்டதில் வியப்பில்லை.
தனது ஆங்கிலக் கல்வியைப் புறக்கோட்டை அரசினர் ஆங்கிலப் பாடசாலையில் பெற்ற அப்துல் அஸிஸ், ஆறாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொண்டார். அவர் தொடர்ந்து உயர்கல்வியைப் பெற்றிருந்தால் இந்நாட்டின் தலைசிறந்த ஓர் அறிஞராக வந்திருப்பார் எனக் கருதப்படு கிறது. ஆயினும் அவ்வுயர் கல்வி இல்லாமலேயே அப்துல் அஸிஸ் பேரறிஞனாகவும், சிந்தனையாளனாகவும், செயல் வீரனாகவும் திகழ்ந்துள்ளார்.
தனது 20வது வயதிலேயே அல் ஜாமியத்துல் இஸ்லாமியா எனும் இயக்கத்தின் செயலாளர் ஆனார். இதுவே பின்னர் ‘சோனகர் சங்கம்' என 1900 ஆம் ஆண்டில் மாற்றமடைந்து, அதன் தலைவராக அப்துல் அஸிஸ் தெரிந்தெடுக்கப்பட்டார். 1903ல் மருதானைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளராகவும் தெரிவானார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை நிறுவுதல், துருக்கித் தொப்பிப் பிரச்சினையில் முஸ்லிம்களின் தனித் துவத்தை நிலைநாட்டல், தனது பத்திரிகைகள் மூலமும் உரைகள் மூலமும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்துதல் ஆகியவற்றில் அப்துல் அஸிஸ் ஆற்றிய சேவைகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியனவாகும்.
1891 இல் சித்திலெப்பை மருதானைப் பள்ளிவாசலில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து கொழும்பு கல்விச் சங்கம் நிறுவப்பட்டு, அதன் தலைவராகவும், பொருளாளராகவும்
15

Page 11
வாப்புச்சி மரைக்கார் அவர்களும், செயலாளராக அப்துல் அஸிஸ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கல்விச் சங்கமே மருதானை முஹம்மதிய ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையை நிறுவியது. அதுவே அல் மத்ரஸத்துஸ் ஸாஹிராவாக வளர்ந்து கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்நாட்டு முஸ்லிம்களின் தலையாய கல்வி நிலையமாக விளங்கிவரும் கொழும்பு ஸாஹிராவாகப் பரிணமித்தது.
அப்துல் அஸிஸின் முழுத் திறமையையும், மக்களை ஒர் இயக்கமாகத் திரட்டியெடுக்கும் வல்லமையையும் வெளிக் கொணர்ந்த விடயம் துருக்கித் தொப்பிப் பிரச்சினையாகும்.
இந்நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் இந் நாட்டு முஸ்லிம்களிடையே மொத்தமாக 2 அப்புக் காத்துகள், 5 புறக்டர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவர், எஞ்ஜினியர், அரச உயர் உத்தியோகத்தர் எவருமே இருக்க வில்லை. இவர்களுள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஹம்மது கரீம் அப்துல் காதர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பி சட்டக் கல்வியையும் முடித்து, 1904 ஒக்டோபர் 7ஆம் திகதி உயர் நீதிமன்ற அப்புக்காத்தாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பட்டதாரியாகவும் அப்புக்காத்தாகவும் விளங்கிய முதல் முஸ்லிம் இவரேயா வார். கடமையின்போது எப்போதும் துருக்கித் தொப்பி யணியும் வழக்கத்தையுடைய அப்துல் காதர் 1905 மே 2ஆந் திகதி வழமை போன்று நீதிமன்றத்துக்குச் சென்றபோது நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்று அப்போதுதான் நாடு திரும்பியிருந்த பிரதம நீதியரசர் சேர் சார்ள்ஸ் லேயார் டினால் நீதிமன்றத்துக்கு மரியாதை செலுத்துமுகமாக தொப்பியை அல்லது சப்பாத்தைக் கழற்ற வேண்டுமென்று உத்தரவிடப்பட்டார். இதனைச் செய்ய மறுத்த அப்துல் காதர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
16

தொப்பியைக் கழற்றுமாறு உத்தரவிட்டது ஒரு சமுதாயத்தையே அவமதித்ததாகக் கருதி இந்நாட்டு முஸ்லிம் மக்கள் அச்செயலுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர். இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கி அதனை முறை யான வழியில் ஆற்றுப்படுத்தி வெற்றி கண்டமை அப்துல் அஸிஸின் இடையறா முயற்சியேயாகும். நாடளாவிய ரீதியில் சுமார் 30 பூர்வாங்கக் கூட்டங்கள் நடைபெற்றதன் பின்னர் இலங்கையில் எல்லாப்பகுதிகளிலும் இருந்து 30,000 முஸ்லிம்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் 1905 டிசம்பர் 31ஆம் திகதி மருதானைப் பள்ளி வாசல் மைதானத்தில் சட்டவாக்கசபை உறுப்பினர் டபிள்யூ. எம். அப்துல் ரஹற்மான் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் பரிஸ்டரும் பிரிவிக் கவுன்சிலரும் நீதிமன்றங்களில் எப்போதும் தொப்பி அணிந்தே வழக்காடு பவருமான பம்பாயைச் சேர்ந்த மெளல வி ற பியுத்தீன் அஹமத் என்பாரும், ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ"மே பிரதம பேச்சாளர்களாவர்.
அடுத்தநாள் வெளிவந்த “டைம்ஸ் ஒப் சிலோன்” பத்திரிகை இக்கூட்டத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப் பிட்டது: “நேற்றைய தினத்துக்கு முன் கொழும்பில் கூட்டங் களும், பிரமாண்டமான பொதுக்கூட்டங்களும் நடை பெற்றிருக்கின்றன. பிரபல கொள்கைகளின் அடிப்படையி லும், பெயர் பெற்ற நிறுவனங்களினாலும் மக்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று திரட்டப்பட்டுள்ளனர். ஆயினும் வரலாற் றின் மிகப் பிரமாண்டமான கூட்டத்தை முஹம்மதியர்களே நடத்தியிருக்கிறார்கள்"
இவ்வாறான நடவடிக்கையின் விளைவாகவே துருக்கித் தொப்பியணிந்து நீதிமன்றத்துக்குச் செல்லலா மென 1906 மார்ச் 16 இல் உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
17

Page 12
இவ்விடயத்தில் தொடர்புபட்ட எம். ஸி. அப்துல் காதர் அவர்கள் கொழும்பில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முஸ்லிம் அப்புக் காத்து ஒருவரின் சேவை மிக அவசியமாகத் தேவைப்படு கிறது என அவரின் நண்பரும் சட்டவாக்க சபையில் சிறிது காலம் அங்கத்தவராய் இருந்தவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவருமான புறக்டர் கே. எம். ஷெரீப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்றார். சுமார் 40 வருட காலம் அங்கு தொழில் புரிந்த அப்துல் காதர், 1946 மே 21 இல் இறையடி சேர்ந்து அவரது ஜனாஸா காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சித்திலெவ்வை வெளியிட்ட ‘முஸ்லிம் நேசன்' பத்திரிகைக்கு 1899இல் அப்துல் அஸிஸ் ஆசிரியரானார். எனினும் புதிய முகாமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அதிணின்றும் விலகி “அஸ் ஸவாப் எனும் அறபுத் தமிழ்ப்பத்திரிகையை 1900 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1901 ஆம் ஆண்டில் அவரால் ஆரம்பிக் கப்பட்ட முஸ்லிம் பாதுகாவலன்' எனும் பத்திரிகை 1905 ஆம் ஆண்டு மே மாதம் வரை வெளிவந்து இடையில் நின்று மீண்டும் 1907ம்-8ம் ஆண்டுகளில் வெளிவந்தது. இதன் வருடாந்தச் சநீதா 5ரூபாவாகவும் தனிப்பிரதி 50 சதமாகவும் இருந்தன. “இப்பத்திரிகை முஸ்லிம் அரசர்களினதும் பாதுஷா மார்களினதும் மற்றும் பிரதானிகளினதும், முஸ்லிம் உலகத்திலுள்ள பிரதான கட்டிடங்களினதின் பிரதிவிம்பப் படங்களுடனும் முஸ்லிம்களுக்கு மிக்க பிரயோசனமுள்ளவைதீக, இலௌஹிக விஷயங்களோடும் மாதாந்தம் பிரசுரிக்கப்படுகிறது” என அவர் தனது பத்திரிகையிற் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கமும், ஆங்கிலம்
18

தெரிந்தோரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்காக இப்பத்திரிகையின் சில பக்கங்கள் "முஸ்லிம் கார்டியன்’ என ஆங்கிலத்தில் வெளியிடப் பட்டன.
அவர் தனது பத்திரிகையில் பின்வருமாறு கூறுகிறார்: 'கல்வியையும் கல்வியுடையாரையும் அவர்களின் பரோபகாரமான முயற்சியையும் மதிக்காதிருக்கும் குணம் கனவான்களில் மாத்திரமல்ல, இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலாரில் காணப்படுவதால் அவர்களது சீர்திருத்தத் தையும் அறிவை அல்லது அறிவீனத்தையும் பொதுவாய் கவனிக்கப்புகுந்தோம். கொஞ்சம் கொஞ்சமாவது அதற்குத் தக நூல்களையும், பத்திரிகைகளையும் வாசிக்க வேண்டும். இது அவர்களின் கடமையே. தேசத்தின் சொற்ப கல்வி கற்ற பல முஸ்லிம் வாலிபர்கள் தங்கள் வறுமை காரணமாய் தொழில் செய்யக்கூடிய அளவிற்கு தம் கல்வியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு கூடாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உயர்தரமான கல்வி கற்றுக் கொள்ள உதவியாய் இருக்கும் பொருட்டு ஸ்கொலர்ஷிப் களை தனவந்தர்கள் உருவாக்க வேண்டும்”
1907ஆம் ஆண்டில் அல் முஸ்லிம் எனும் தமிழ் ஆங்கிலப் பத்திரிகையைப் பிரசுரித்தார். சத்தின் ஞானார்த் தம் எனும் நூலையும் 1898 இல் வெளியிட்டார்.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தைத் தீர்க்கமாய் நிறுவுவதில் அப்துல் அஸிஸ் பெரும் பங்காற்றினார். 1880 களில் சட்டவாக்க சபையில் முஸ்லிம்களுக்குத் தனியான பிரதிநிதித்துவம் வேண்டுமெனும் வாதம் முன்வைக்கப் பட்டது. இதனையொட்டி 1885 ஆம் ஆண்டு சட்டவாக்க சபையில் முஸ்லிம்கள் தமிழ் மக்களில் ஒரு பிரிவினரே எனவும், அவர்களுக்குத் தனியான பிரதிநிதித்துவம்
19

Page 13
தேவையில்லை எனவும் பிறிதொரு குழுவினரால் கருத்து வெளியிடப்பட்டது. அரச ஆசியக் கழகக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைச் சோனகர் இன வரலாறு
எனும் ஆய்வுக் கட்டுரையிலும் இக்கருத்து வலியுறுத்தப் பட்டது. இக்கருத்துக்களை சித்திலெவ்வை மிக ஆணித்தர மாக மறுதலித்ததோடு, அப்துல் அஸிஸும் இப்பணியைத் தொடர்ந்தார்.
1889இல் முஸ்லிம்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவ்வருடம் ஒக்டோபர் 29ஆம் திகதி எம்.சி. அப்துர் ரஹற்மான் சட்டவாக்க சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்ட தோடு இவ்வாதப் பிரதிவாதம் சிறிது தணிந்ததாயினும், அப்துல் அஸிஸ் தமது ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு 1907 ஆம் ஆண்டில் தனது இலங்கைச் சோனகர் இன வரலாறுஒரு திறன் ஆய்வு எனும் நூலை வெளியிட்டார். இதன் மூலம் இலங்கைச் சோனகர் தனித்துவமான ஓர் இனம் என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்நாட்டிற் குடியேறிய அராபியரின் சந்ததியினரே என்றும் நிரூபித்தார்.
இவ்வாறு, ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ், 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி தமது 48வது வயதில் காலமாகும் வரை தமது வாழ்நாள் முழுவதையும் இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்தின் உயர்ச்சிக்காக அர்ப்பணித்த ஒரு பெருமகனாகத் திகழ்கிறார்.
தினகரன்: 1993 செப்டம்பர் 10
இலங்கை வானொலி: 1993 செப்டம்பர் 11
20

சுவாமி விபுலாநந்தர்
21

Page 14
முத்தலிபு வைத்தியர்
22
 

முஸ்லிம் நேசன் முத்தமிழ் வித்தகரும், முத்தலிபு வைத்தியரும்
(சுவாமி விபுலாநந்தர்: 1892.5.3 - 1947.7.19 முத்தலிபு வைத்தியர்: 1892.10.15 - 1973.5.15)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பல முஸ்லிம் அறிஞர்களோடு கொண்டிருந்த தொடர்புகளை நாம் அறிந்திருக்கிறோம். இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபருமான அறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்கள் விபுலாநந்த அடிகளாருடனான தமது நெருக்கத்தைப் பல கட்டுரைகளில் விளக்கியிருக்கிறார். மருத முனையைச் சேர்ந்த புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் கல்முனையில் சுவாமி நடாத்திய மதுரைத் தமிழ்ச் சங்க வகுப்பில் மாணவனாகக் கற்கும் பேறு பெற்றார். அதேபோன்று அல்லாமா பேராசிரியர் மஹமூத் முஹம்மது உவைஸ் அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின் இமயமாக உயர்வதற்குப் பல்கலைக் கழகத்தில் வழிகாட்டியவரும் துணையாயிருந்த வரும் சுவாமி அவர்களேயாவார். மற்றொரு அறிஞரான அல்ஹாஜ் எஸ்.எம். கமால்தீன் அவர்களும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலாநந்தரின் மாணவரே.
சுவாமி விபுலாநந்தரின் இளமைப் பருவத்தில் இருந்து அவரது பூதவுடல் கல்லடி உப்போடையிலுள்ள சமாதியினுள் வைக்கப்படும்வரை இன்னொரு முஸ்லிம் பிரமுகரும் அவருடன் தொடர்பாய் இருந்திருக்கிறார். அவர் தான் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த முத்தலிபு வைத்தியராவார்.
23

Page 15
கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களினதும், தமிழ்க் கிராமங்களினதும் புவியியல் அமைப்பு மிகவும் அன்னியோன்யமானது. அதிலும் குறிப்பாக மருதமுனை யில் இருந்து பொத்துவில் ஈறாக முஸ்லிம் கிராமங்களும் தமிழ்க்கிராமங்களும் அடுத்தடுத்து அமைந்திருப்பதைக் காணலாம். அதனால்தான் மிகச் சமீப காலம்வரை இக் கிராமங்களிடையே அப்பழுக்கற்ற இன நல்லுறவு நிலவி வந்ததையும் காணலாம். தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் என்ற இனவுணர்வு எதுவுமே இந்நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் இப்பிரதேசத்தில் எட்டிக் கூடப் பார்த்ததில்லை.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் காரைதீவுக் கிராமத்தில் சாய்ந்தமருது எல்லைக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் 1892 இல் சின்னத்தம்பி சாமித்தம்பி என்பவருக்கும், ராசகோபாலப் பிள்ளை கண்ணம்மை என்பவருக்கும் மயில் வாகனம் மகனாகப் பிறந்தார். இவருக்கு அமிர்தவல்லி, மரகதவல்லி எனும் இரு சகோதரிகளும் பிறந்தனர்.
இதே ஆண்டு ஐப்பசி 15 இலேதான் காரைதீவு எல்லைக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் சாய்ந்தமருது வில் பிற்காலத்தில் முத்தலிபு வைத்தியர் எனப் புகழ்பெற்ற அலியார் என்பவர் பிறந்தார். அக்கால வழக்கப்படி அலியார் என்பது பதிவுப் பெயர். வீட்டில் அழைக்கும் பெயர் முத்தலிபு. பின்னையப் பெயரே பிற்காலத்தில் நிலைத்து விட்டது.
இவருடைய பரம்பரையைப் பற்றி “பெரிய வாத்தி யார்” என்பவருடைய காலத்தில் இருந்து அறிய முடிகிறது. இஸ்மா லெப்பைப் பரிகாரி எனும் பெயருடையவரே “பெரிய வாத்தியார் என்றும் அழைக்கப்பட்டார். அப்பிர தேசத்தில் பாடசாலைகள் எதுவுமே ஆரம்பிக்கப்படாத காலம் அதுவாகும். ஓரளவு எழுத, வாசிக்கத் தெரிந்த
24

ஒருவர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வழக்கம். திண்ணையிலும், முற்றத்திலும் வகுப்புக்கள் நடைபெறும். தரையில் அமர்ந்து மணலில் தமது விரல் களால் மாணவர்கள் எழுதப் பழகுவர். மாணவர் என்போர் இன்றைய காலத்தைப் போன்று சிறுவர்கள் அல்லர். வாலிபப் பருவமுடையவர்களும் சில வேளைகளில் வளர்ந் தோர், வயோதிபருங்கூட எழுத, வாசிக்கப்பழகுவர். எதுவித சன்மானமும் எதிர்பாராது இலவசமாகவே பாடம் நடைபெறும். இவ்வாறான பணியைச் செய்த பெரிய வாத்தியார் ஒரு வைத்தியராகவும் இருந்தார்.
பெரிய வாத்தியாருக்கு ஆறு பிள்ளைகள். மூவர் ஆண்கள், மூவர் பெண்கள். சேவகனார் என்று அழைக்கப் பட்ட காசீம் பாவா, அலியார் பரிகாரி, அஹமது லெப்பைப் பரிகாரி ஆகியோர் ஆண் மக்களாவர். அஹமது லெப்பைப் பரிகாரி நிந்தவூரில் கலியாணம் செய்து வாழ்ந் தார். அவர் வட்ட விதானையார் தொழிலும் செய்தார்.
சேவகனாருக்கு 4 பிள்ளைகள். அவர்களின் வழிவந்த வர்களே யாசீன் விதானை குடும்பம், அஹமதுத்துரை குடும்பம், புதுலெவ்வைக் குடும்பம் என இன்று பிரபல்ய மாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பத்திலுள்ள அநேகரி டம் அறிவுத்திறனும் இலக்கிய ஈடுபாடும் புலமைத்துவமும் உண்டு.
இன்று, சாய்ந்த மருது ஜ"ம் ஆப் பள்ளிவாசலின் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றும் கே. முஹம்மது காசீம் என்பவர் பெரிய வாத்தியாரின் மகளான உம்மு குல்தூம் என்பவரின் பேரனாவார்.
தந்தையின் வைத்தியத் தொழிலைப் பாரம்பரியத் தொழிலாகச் செய்து வந்த அலியார் பரிகாரிக்கு 3 பிள்ளைகள். மூத்தவர், சுலைஹா உம்மா எனும் பெண்.
25

Page 16
இரண்டாமவர் மீராசாகிபு லெப்பை வைத்தியர். (இவர் பச்சைக் கொக்குப் பரிகாரி என்றும் அழைக்கப்பட்டார்.) மூன்றாமவர் பக்கீர் முஹிதீன்.
அபூபக்கர் என்பவரை மகள் சுலைஹா உம்மா விவாகம் செய்தார். அபூபக்கரும் கற்பித்தல் தொழிலையும், வைத்தியத்தையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் சற்று உயரம் குறைந்தவராகையால் “கொட்டான் வாத்தியார்” என அழைக்கப்பட்டார். சுலைஹா உம்மா பெண்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுப்பதோடு, வைத்தியமும் செய்தார்.
கொட்டான் வாத்தியாருக்கும் சுலைஹா உம்மாவுக் கும் 3 ஆண் மக்களும் 3 பெண் மக்களும் பிறந்தனர். அக்காலகட்டத்தில் பிள்ளைக்குப் பெயர் வைப்பதில் ஒரு மரபு இருந்தது. தமது பிள்ளைகளில் ஒன்றிரண்டிற்கு பெற்றோரின் பெயரையே வைப்பர். இம்மரபுக்கு ஏற்ப சுலைஹா உம்மாவின் தந்தையாரான அலியார் என்பதையே தமது மூத்த குழந்தைக்குச் சூட்டினர். அவரே பிற்காலத்தில் முத்தலிபு வைத்தியர் எனப் பிரபல்யம் பெற்றார். சுவாமி விபுலாநந்தரின் ஆப்த நண்பரும் ஆனார்.
இப்பெயர் வைக்கும் முறையை சுவாமியின் குடும்பத் திலும் காண்கிறோம். சுவாமியின் ஒரு சகோதரியின் குழந்தைக்கு அவரது தாயாரின் பெயரான கண்ணம்மை எனப் பெயர் வைக்கப்பட்டது. இவர் புகழ்பெற்ற பாட சாலை அதிபராக விளங்கி இன்று ஒய்வு பெற்றிருக்கிறார்.
முத்த லிபு வைத்தியர் ஆரம்பத்தில் வைத்தியத் தொழிலிலோ வாத்தியார் பணியிலோ ஈடுபடவில்லை; விவசாயத்திலேயே ஈடுபட்டிருந்தார். ஆயினும் அவரது மூத்த வாப்பாவான அலியார் பரிகாரியின் வைத்திய ஏட்டுக்கட்டுகளும் வாகடங்களும் இவர் வசமே இருந்தன.
26

ஒய்வு வேளைகளில் அவற்றைப் புரட்டிப் பார்ப்பார். தமது தந்தையும் மூத்த வாப்பாவும் வைத்தியர்களாக இருந்த காரணத்தினால் இவருக்கும் அத்துறையில் போதிய பரீட்சயம் இருந்தது. அதேபோன்று மாமாவான மீராசாகிபு லெப்பை வைத்தியர் எனப்படும் பச்சைக் கொக்குப் பரிகாரி யுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
இவ்வேளையில்தான் மருத்துவத்துறையிலும் ஞானப் போக்கிலும் ஈடுபட்டிருந்த நிந்தவூரைச் சேர்ந்த நெருப்பு மஸ்தான் என்பவருடன் நெருக்கமான தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. ஒருமுறை நெருப்பு மஸ்தானின் அழைப்பை யேற்றுத் தனது இளம் மனைவியையும் ஒரே மகனையும் விட்டு விட்டுத் தேசாந்திரம் கிளம்பிவிட்டார். கிழக்கு மாகாணத்தில் பாதைகளே இல்லாத காலமது. மிருகங்கள் நிரம்பிய அடர்ந்த காடுகளினூடே வண்டிப் பாதைகளே நடைபாதைகளாகவும் உபயோகிக்கப்பட்டன. அவ்வா றான ஒரு காலத்தில் நெருப்பு மஸ்தானுடனும், பக்கீர் பாவாக்களுடனும் அலியார் எனப்படும் இளைஞனும் பயணம் புறப்பட்டு விட்டான்.
நெருப்பு மஸ்தான் என்பவரைப் பற்றிப் பல கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு. உலகப்பற்று இல்லாமல் ஞான வாழ்க்கை வாழ்ந்தவர் இவர். ஏதாவது பற்ற வைக்க நெருப்பு மூட்ட வேண்டுமானால் முதலில் அடுப்பினுள் விறகை அடுக்கிவைப்பாராம். அதன் பிறகு தமது உமிழ் நீரை அதில் துப்பிவிட நெருப்புப் பற்ற ஆரம்பிக்குமாம். அதேபோன்று தனது வாயை 'ஆ வென்று விரித்து ஊதினா ரென்றால் வாயில் இருந்து தீச்சுவாலை வருமாம். அதனால் இவருக்கு நெருப்பு மஸ்தான் எனும் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
பயணம் புறப்பட்ட அலியார் ஒன்பது மாதங்களின்
பின்னர் திரும்பி வந்தார். சாய்ந்த மருதுவில் இருந்து
27

Page 17
புறப்பட்ட அவர்கள் கதிர்காமம், பாவா ஆதம் மலை, தப்தர் ஜெய்லானி, கொழும்பு, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய இடங்களுக்குக்குச் சென்று திரும்பினார். திரும்பி வந்தவுடன் தனது விவசாயத் தொழிலைக் கைவிட்டு முழுமையாக வைத்தியத் தொழிலையே ஆரம்பித்தார். நெருப்பு மஸ்தான் இவரை ஹக்கீம் அலிஷா என அழைப் பார். பிற்காலத்தில் எல்லா வைத்தியர்களும் அரசினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனும் நடைமுறை ஏற்பட்ட வுடன் இவர் சித்த வைத்தியராக அரசினால் அங்கீகரிக்கப் பட்டார். பதிவிலக்கம் 1635.
மிக விரைவில் மீண்டும் ஒருமுறை நெருப்பு மஸ்தானுடனும் பக்கீர் பா வாக்களுடனும் தேசாந்திரம் சென்று ஆறு மாதங்களின் பின்னர் திரும்பி வந்தார்.
இளம்பராயத்தில் மயில் வாகனாரின் வீடும் அலி யாரின் வீடும் அண்மையில் அமைந்திருந்த காரணத்தினால் அவர்களும் ஒத்த வயதினரும் ஒன்று கூடி விளையாடும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் முத்தலிபு வைத்தியர் தமது வைத்தியப் பணியை ஆரம்பித்த பின்னர் அவருக்கும் காரைதீவில் உள்ள பல குடும்பங்களுக்குமிடையே உறவு கள் அதிகரித்தன. அதனால் சுவாமியோ டும் அவரது குடும்பத்தினரோடும் உறவுகள் மேலும் வலுப்பெற்றன. இதனாற்றான் முத்தலிபு வைத்தியர் 1973மே 15ஆம் திகதி தமது 80ஆவது வயதில் இறக்கும்வரை காரைதீவில் உள்ள அநேக குடும் பங்கள் அவரிடமே தமது நோய்களுக்குப் பரிகாரம் செய்து வந்தனர்.
காலவோட்டத்துடன் மயில்வாகனார் பிரபோத சைத் தன்யர் ஆகி சுவாமி விபுலாநந்தர் ஆன பின்னர் தமது
பிறந்தகமான காரைதீவுக்கு அடிக்கடி வருவதுண்டு. அவர் வரும் வேளைகளில் இராமகிருஷ்ண சங்கம் நடத்திய
28

சாரதா வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள அநாதைகள் இல்லக் கட்டிடத்தில் ஓர் அறையில் தங்கியிருப்பார். அவ்வாறு அவர் அங்கு தங்கியிருக்கும் பொழுது அவரது தங்கச்சியின் மகளான கண்ணம்மா அவரது நலன்களைக் கவனித்துக் கொள்வார். இவ்வாறான வேளைகளில் முத்தலிபு வைத்தியர் சுவாமியைக் காணச் சென்று பல மணி நேரங்கள் மிக அந்நியோன்யமாகக் கதைத்துக் கொண்டிருப்
If II.
இந்நெருக்கத்தின் காாணமாகவே முத்தலிபு வைத் தியரின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும், ஆண் பாடசாலையிலும் கல்வி கற்றனா. சாரதா வித்தியாலயம் என அழைக்கப்பட்ட பெண் பாடசாலையின் தலைமை ஆசிரியையாக சுவாமியின் மருமகளான சாரதா கடமையாற்றிக் கொண்டிருந்தார். மற்றொரு மருமகளான கண்ணம்மாவும் அங்கு ஆசிரியையாகக் கடமையாற்றினார். இவர்கள் வைத்தியரின் பிள்ளைகள் மேல் என்றுமே மிகவும் அன்பு செலுத்துவதுண்டு.
இதே போன்று வைத்தியரின் பேரர்கள் காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் படித்தனர். அவ்வாறு படித்தவர்களுள் ஒருவர் பின்னர் நிந்தவூர் வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்ற பொழுது, தான் முதலாவது விஜயம் செய்யும் பாடசாலை தனக்கு ஆரம்பக் கல்வி வழங்கிய இடமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலைக்கே முதன் முதல் விஜயம் செய்தார்.
இதே போன்று முத்தலிபு வைத்தியரின் மகனான அப்துல் மஜீத் என்பவர் தமது இடைநிலைக் கல்வியை முழுமையாக மட்டகளப்பு கல்லடி உப்போடையிலுள்ள
29

Page 18
சுவாமியினால் ஆரம்பிக்கப்பட்ட சிவானந்தா வித்தியா லயத்திலேயே பெற்றார்.
சிவானந்தா வித்தியாலயம் 1929 இல் ஆரம்பிக்கப் பட்டது. மட்டக்களப்பு நகரைவிட்டு ஒதுக்குப்புறமாகக் காடு மண்டிக் கிடந்த ஒரு பிரதேசத்தில் இப்பாடசாலையை சுவாமி ஆரம்பித்ததற்கான காரணத்தைப் பின்னர் ஒரு காலத்தில் இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய கே. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அங்கு ஆரம்பிக்கப்படும் பாடசாலை மட்டக்களப்பு நகரத்தாருக்கு மட்டும் உபயோகப்படாது அருகேயுள்ள முற்றுமுழுக்க முஸ்லிம் களைக் கொண்ட காத்தான்குடிக்கும் உதவுதல் வேண்டும்; அது மட்டுமல்லாது மூதூரில் இருந்து பொத்துவில் ஈறாக உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும்; ஊவாவிலுள்ள சிங்கள வர்களுக்கும் அது உதவுதல் வேண்டும் என்றே சுவாமி ஆசைப்பட்டார்.
அவரது ஆசை வீண்போகவில்லை. ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் எல்லா முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் பெருந்தொகையான மாணவர் சிவானந்தா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்தே கல்வி கற்றனர். அங்கு ரமழான் காலத்தில் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் சுவாமியினால் செய்து கொடுக்கப்பட்டன. இஸ்லாமும் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதே போன்று சிங்களமும் பெளத்தமும் கற்பிப்பதற்கும் ஓர் ஆசிரியரையும் ஒரு பிக்குவையும் ஏற்பாடு செய்திருந்தார் சுவாமி.
இவ்வேளையில்தான் சிவானந்தா விடுதியில் ஐந்து அப்துல் மஜீதுகள் சமகாலத்தில் கல்வி கற்றனர். அவர்களை இனங்கண்டு கொள்வதற்காகப் பட்டப் பெயர்களும்
30

கட்டப்பட்டிருந்தன. முத்தலிபு வைத்தியரின் மகன் அப்துல் பrது சட்டத்தரணியானார். அடுத்தவர் பொத்துவில், சம்மாந்துறைத் தொகுதிகளில் 30 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல வருடங்கள் பிரதியமைச்சராகவும் கடமையாற்றிய அல்ஹாஜ் எம். ஏ. அப்துல் மஜீது ஆவார். மூன்றாமவர் சாய்ந்த மருதுவைச் சேர்ந்தவரும் பொத்துவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சரு மான முதலியார் எம்.எம். இப்றாஹீம் அவர்களின் மருமகனும், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் ஆயுட்காலத் தலைவராயிருந்த வருமான அல்ஹாஜ் பஸில் ஏ. மஜீத் ஆவார். அவரது சகோதரரும் உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், கல்முனை குவாசியாகவும் கடமையாற்றிய அல்ஹாஜ் அப்துல் மஜீது நான்காவது ஆளாவார். ஐந்தாமவர் பொத்துவில் தொகுதி முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மஜீது ஆவார்.
தமது மகன் சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்தில் முத்தலிபு வைத்தியர் வருடத்தில் ஒரிரு முறை மகனைப் பார்ப்பதற்காகச் செல்வார். அவ்வாறு போகின்ற வேளைகளில் சுவாமியுடன் மிக நீண்ட நேரம் அளவளாவி விட்டுத் திரும்புவார்.
அவர் வைத்தியஞ் செய்ய ஆரம்பித்த காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் அவரைப் பிரபல்யமாக்கின. ஒருமுறை அவரது மகளுக்குத் தலையில் சொறி - சிரங்கு ஏற்பட்டது. பலரிடம் வைத்தியம் பார்த்தும் அது குணமடையவில்லை. எனவே, தனது மூத்தவாப்பாவின் ஏடுகளில் இவ்வாறான வியாதிக்கு ஏதாவது மருந்துண்டா என ஆராய்ந்து பார்த்தார். நீலாவரிச்சாகத்தெண்ணெய்
31

Page 19
எனும் ஒரு மருந்து அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. ஐம்பதுக்கு மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு இதனைத் தயாரித்துத் தனது மகளின் தலையில் பூசினார். பல மாதங்களாகக் குணமடையாதிருந்த சொறி - சிரங்குகள் சில தினங்களுள் பூரண குணமடைந்தன. இதனைத் தொடர்ந்து இத்தகைய நோயுடைய பலரும் குணமாக்கப்பட்டனர்.
திருக்கோவிலில் பத்தினியர் சின்னத்தம்பி எனுமொரு பிரமுகர் வாழ்ந்தார். அவரும் வைத்தியரும் நெருக்கமான நண்பர்கள். அவரது மருமகன் ஒருவருக்குக் கழுத்தில் வருத்தம் ஏற்பட்டுப் பல இடங்களிலும் வைத்தியஞ் செய்யப்பட்டது. எல்லோராலுங் கைவிடப்பட்ட சமயத் தில் அந்நோயாளியை வைத்தியர் ஒப்பெடுத்தார். சாய்ந்த மருதுவிலுள்ள தனது வீட்டிலேயே வைத்துப் பல வாரங்கள் வைத்தியஞ் செய்து அவரைக் குணமாக்கினார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் டாக்டர் ஹன்ட் என்பவர் பிரதம வைத்தியராக இருந்தார். அவருக்கு ஒரு வகை சரும நோய் ஏற்பட்டது. கொழும்புக்குச் சென்று வைத்தியஞ் செய்தும் குணமடையவில்லை. முத்த லிபு வைத்தியரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார். கண்டக்கிரந்தி எண்ணெய், ஏரண்டாதி எண்ணெய் என்பன மூலம் அவரது சரும வியாதியினைப் பூரணமாகக் குணப் படுத்தினார்.
பிறிதொரு சம்பவம், மதுரப்பு எனும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் சம்பந்தமானதாகும். கிழக்குப் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளராகக் கடமை யாற்றிய மதுரப்பு என்பவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது மனைவி யாழ்ப்பாண்ம், கல்முனையில் வாழ்ந்து வந்த அவரது மனைவிக்கு தந்த வீக்கம் ஏற்பட்டது. கொழும்புக் குப் போய்த்தான் அதனைக் குணப்படுத்த முடியும் என
32

டாக்டர்கள் ஆலோசனை கூறிவிட்டனர். ஆனால் அதனைத் தன்னால் குணப்படுத்த முடியும் என வைத்தியர் உறுதியளித்து அவ்வாறே குணப்படுத்தினார்.
காரைதீவுத் தோட்டம், நிந்தவூர் தோட்டம் என்பன வற்றின் உரிமையாளராக ஒ கிரேடி எனும் ஐரிஷ்காரர் தமது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். கரடித்துரை என மக்கள் இவரை அழைப்பர். அவருக்கு ஒரு முறை காய்ச்சல் ஏற்பட்டது. கொழும்புக்குச் சென்று வைத்தியஞ் செய்தும் குணமடையவில்லை. இறுதியில் முத்தலிபு வைத்தியரின் மருந்துகளினாற் குணமடைந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமான நண்பராயினர். வேறு பல ஆங்கிலேயரையும் ஓ கிரேடி வைத்தியத்துக்காக இவரிடம் அழைத்து வருவார். ஒருமுறை இங்கிலாந்து சென்று வந்தபொழுது, பல தேர்மோமீட்டர்களை வாங்கிவந்து அன்பளித்தார். தாம் இறக்கும்வரை அவற்றை முத்தலிபு வைத்தியர் மிகப் பத்திரமாக வைத்திருந்தார். அது மட்டுமல்லாது கரடித்துரை ஒருநாள் தமது புகைப்படத் தைப் பிரேமிட்டுக் கொண்டு வந்து முத்தலிபு வைத்திய சாலையிற் தொங்கவிட்டு, தான் நாட்டைவிட்டுச் சென்ற பின்னரும் தமது ஞாபகார்த்தமாக அது அங்கிருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இன்றும் அப்படம் முத்த லிபு வைத்தியரின் மகனது வைத்தியசாலையிற் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் அவரது புகழ் பரவியது. ஒரு காலத்தில் முழுக் கிழக்கு மாகாணத்திலும் மூன்று வைத்தியர்கள் மிகப் பிரபல்யமாக இருந்தனர். ஒருவர் மட்டக்களப்பு கல்லடியில் வாழ்ந்த சரவணை என்கின்ற முறிவு வைத்தியர். அடுத்தவர், சாய்ந்தமருதுவில் வாழ்ந்த முஹம்மதுக்கனி பரிகாரியார். மூன்றாமவர்,
33

Page 20
முத்த லிபு வைத்தியர். இவர்களைத் தேடி வடக்கே மூதூரிலிருந்து தெற்கே பாணமை வரையான பகுதிகளில் இருந்து இன, மத, சாதி பேதமின்றி நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினசரி வருவார்கள். ஊவாப் பிரதேச சிங்கள மக்களும் அடிக்கடி வந்து இவர்களது வீடுகளிலேயே தங்கி வைத்தியம் பார்த்துச் செல்வர். சில தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த குறவர்கள் முத்தலிபு வைத்தியரையே தமது நிரந்தர வைத்தியராகக் கொண்டிருந்தனர். 25-30 குறவர்கள் ஆண், பெண், பிள்ளைகள் கூட்டமாக வருகின்ற நாட்களில் முத்தலிபு வைத்தியரின் வீட்டு வளவில் முழு ஊரே கூடிவிடும். எல்லாக் குறவர்களும் பாம்புப் பெட்டிகளுடன் வந்திருப் பர். ஒரே சமயத்தில் பத்துக்கு மேற்பட்ட பாம்புகளைப் படம் விரித்தாடவிட்டு முழு ஊரையே மகிழ்விப்பர்.
ஒருமுறை முத்தலிபு வைத்தியருக்கு அப்பண்டிக்ஸ் நோய் ஏற்பட்டது. கொழும்புக்குச் சென்று சத்திர சிகிச்சை மூலமே அதனைக் குணப்படுத்த வேண்டுமென டாக்டர்கள் கூறிவிட்டனர். எனினும் தனது நோயைத் தன்னால் குணப்படுத்த முடியும் என உறுதியாகக் கூறி 40 நாட்கள் தொடர்ந்து பெரிய ஏரண்டாதி எண்ணெய் அருந்தி வந்தார். அந்நாற்பது நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு தரம் உப்புக் கஞ்சி அருந்துவதைத் தவிர வேறு எதுவுமே அவர் சாப்பிடவில்லை. நோய் குணமடைந்தது.
முத்தலிபு வைத்தியர் தனது நோயாளிகளை உளவியல் ரீதியாகவும் அணுகினார். அவர் வைத்தியம் பார்த்த காலத்தில் மக்கள் பேய், பிசாசு, சூனியம், சேர்த்தி, வசியம் என்பனவற்றில் அதிதீவிர நம்பிக்கை கொண்ட காலம். யாராவது திடீரென இறந்துவிட்டால் பேயறைந்து இறந்ததாகவே கூறுவர். மாரடைப்பினால் அவர் கால
34

மானார் என்பது தெரியாது. தீராத நோய் ஏற்பட்டால் யாராவது சூனியம் செய்து விட்டார்கள் எனப் பலரைச் சந்தேகித்துத் தீராத குடும்பப் பகைகளும் ஏற்படுவதுண்டு. ஓர் இளைஞன் யாராவது ஒரு பெண்ணை விரும்பி விவாகம் செய்ய முயலும் போது பெற்றோர் அதனைத் தடுத்தும் அவன் விடாப்பிடியாக இருந்தால் பெண்வீட்டார் வசியம் செய்துவிட்டதாகக் கூறுவர்.
இவ்வாறான ஒரு சமுதாய அமைப்பில் நோயாளி களைக் கையாளும் போது உளவியல் ரீதியான அணுகு முறையும் அவசியப்பட்டது. அதனாற்றான் முத்தலிபு வைத்தியர் சிலவேளைகளில் பேய், பிசாசை ஒட்டுவதற்கும் வைத்தியம் பார்ப்பார். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்: “தம்மிடம் வரும் நோயாளி தனக்குப் பேய் பிடித்து விட்டது, தனக்கு யாரோ சூனியம் செய்து விட்டார் கள் என நம்பிக் கொண்டே வருவான். அந்நம்பிக்கையைப் போக்கும்வரை எத்தகைய மருந்தும் அவனது நோயைத் தீர்க்காது. எனவே அவனது நோய்க்கு வ்ைத்தியஞ் செய் கின்ற வேளையில் அவனது பேயையும் விரட்டினால்தான் அவன் பூரண குணமடைவான்.”
இதற்கு இரு உதாரணங்களை அவர் கூறுவார்: ஒருவனுக்குத் தனது வயிற்றினுள் ஒரு பல்லியைப் பேயின் மூலம் அனுப்பி விட்டார்கள் என நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனால் ஒவ்வொரு நாளும் பல்லி தனது உடலினுள் ஒடித் திரிவதாகவும் வலி தாங்க முடியவில்லை எனவும் அவன் அலறுவான். இது நடைபெற முடியாத அசாதாரண ஒரு காரியம் என எவர் கூறியும் அவன் ஏற்கவில்லை. நோயாளியை வைத்தியரிடம் கொண்டு வந்தார்கள். விடயத்தைக் கவனமாகச் செவியுற்ற வைத்தியர் அவனைத் தலைமுதல் கால்வரை நன்கு பரிசோதித்து விட்டுப் பல்லி ஒன்று உண்மையில் அவனது உடம்பினுள்
35

Page 21
ஒடித் திரிவதாகக் கூறினார். நோயாளிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தனது கூற்றுச் சரியென நிரூபிக்கப் பட்டு விட்டதை அவன் மிக மகிழ்ச்சியோ டு ஏற்றுக் கொண்டான். பல்லியை வெளியில் எடுப்பது என்பது சாதாரண விடயமல்ல; அதற்குப் பெரிய தோர் மடை வைத்துக் கழிப்பும் கழித்து வைத்தியஞ் செய்ய வேண்டு மென வைத்தியர் கூறி அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. குறிப்பிட்ட தினமன்று வைத்தியர் நேர்வாளக் குளிசை என்பதை நோயாளிக்குக் கொடுத்தார். இக்குளிசை பாரதூரமான வாந்தியையும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். வைத்தியந் தொடங்கிச் சிறிது நேரத்தில் நோயாளிக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டன. உறவினர்கள் அனைவரும் நோயாளியையும் வைத்தியரை யும் விட்டுத் தள்ளிச் சென்று விட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் உறவினரை அழைத்து நோயாளி எடுத்த வாந்தியினைக் கிளறிப் பார்க்கச் சொன்னார். அதற்குள் குற்றுயிராகப் பல்லி ஒன்று கிடந்தது. நோயாளிக்கு எல்லையில்லாத சந்தோஷம். அன்றுடன் அவனது நோயும் தீர ஆரம்பித்தது. தான் ஏற்கனவே குற்றுயிராக எடுத்துக் கொண்டு வந்திருந்த பல்லியை உறவினர்கள் அனைவரும் தூரத்தில் நிற்கும் பொழுது அவ்வாந்தியினுள் போட்ட இரகசியம் வைத்தியருக்கு மட்டுமே தெரியும்.
பிறிதொரு சமயம் ஒரு மிருகத்தின்மீது செய்வினை செய்து தன் மேல் ஏவிவிட்டதாக ஒருவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு அதனால் அவருக்கு அடிக்கடி பல வருத்தங்கள் ஏற்படத் தொடங்கிற்று. வைத்தியரிடம் நோயாளி கொண்டு வரப்பட்டார். நோயாளி கூறுவது உண்மையே என வைத்தியர் கூறினார். அதற்காக ஒருநாள் இரவு பேய் விரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 9 மணியளவில் ஆரம்பித்த பேய் விரட்டல் நள்ளிரவு நேரம் ஆனதும்
36

உச்சக்கட்டத்தை அடைந்தது. அவ்வேளையில் திடீரென்று வீட்டு ஒலைக்கூரையினுள் ஏதோ ஒடுகின்ற சரசர சத்தம் பலமாகக் கேட்டது. எல்லோரும் அத்திசையைப் பார்க்கும் போது கூரையில் இருந்து உடும்பொன்று பாய்ந்தோடியது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. நோயாளி தனது இருக்கையை விட்டுத் துள்ளி எழுந்து ஆனந்த மிகுதியால் வைத்தியரைக் கட்டிப் பிடித்து மகிழ்ச்சித் தாண்டவம் ஆடினார். அன்றுடன் அவரது நோயும் மருந்துகள் மூலம் தீர ஆரம்பித்து பூரண சுகம் அடைந்தது. வைத்தியரின் கையாள் ஒருவர் உடும் பொன்றினை உமல் ஒன்றினுள் மிக இரகசியமாகக் கொண்டு வந்து கூட்டத்தின் பின்புறம் சற்றுத் தொலைவில் நின்றிருந்தார். பேயாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து எல்லோர் கவனமும் நோயாளியின் மேல் இருக்கின்ற வேளையில் மெல்ல உடும்பினைக் கூரைக்குள் அவிழ்த்துவிட்டார். அதுதான் அங்கு பாய்ந் தோடியது. வைத்தியருக்கும் கையாளுக்குமே தெரிந்த இரகசியம் இதுவாகும்.
எனவே, இன்றைய உளவியல் ரீதியான வைத்திய முறைகள் அக்காலத்திலும் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். எத்தகைய மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் நோயாளி மனமாற்றம் பெற்று அவற்றை ஏற்றுக் கொள் ளும்வரை நோய் குணமாகிவிட்டது என அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோன்றியதே இதுவாகும்.
முத்தலிபு வைத்தியர் சுவாமி விபுலாநந்தரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததற்கான காரணம் அவர் அண்டை வீட்டார் என்பது மட்டுமல்ல, சுவாமிக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் வைத்தியஞ் செய்பவர் என்பது மட்டுமல்ல, அவர் அறிஞராயும் இருந்தார். குர்ஆன், ஹதீஸ் என்பவற்றிற்கு விளக்கம் கொடுப்பதில்
37

Page 22
மிகவும் அறிவுடையவராயிருந்தார். சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாடல்கள் என்பனவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாய்ந்த மருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையில் மிக நீண்டகாலம் தனது இறப்பு வரை முக்கிய அங்கத்தினராகக் கடமையாற்றியதோடு, அப்பள்ளிவாசலின் அதிகாரத் துக்குட்பட்ட குர்ஆன் மத்ரஸாக்கள் மேற்பார்வைக்குழு அங்கத்தவராகவுமிருந்தார். அவரது மருந்துச்சாலையில் மாலை நேரங்களில் பல ஆலிம்கள் ஒன்று கூடி அளவளாவிக் கொண்டிருப்பர். குறிப்பாக “பகனி ஆலிம் என்பவர் அவரது மிக நெருங்கிய நண்பராக இருந்தார். லங்கோர்ட் மஸ்தான், அட்டாளைச்சேனைப் புலவர் என்பவர்களும் அவரைக்காண அடிக்கடி வருவர்.
தர்வேஷ் ஹாஜியார் என வழங்கப்பெற்ற குருநாகல் மாவட்டம் பறகஹதெனியாவைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அல் பக்றி அவர்கள் 1949 வாக்கில் கல்முனைப் பிரதேசத்தில் தமது பணிகளை ஆற்றினார். சாய்ந்த மருது மாளிகைக் காட்டில் அவர் வாழ்ந்த பொழுது, அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளுள் முத்தலிபு வைத்தியரும் ஒருவராவார்.
அதேவேளை, சைவ சமய நூல்களையும் நன்கு அறிந்த வராக இருந்தார். ஆனைக்குட்டிச்சாமியார், அவரது சிஷ்யன் எதிர்மனசிங்க வாத்தியார், சாண்டோ சங்கரதாஸ், காரைதீவில் அப்போதிருந்த அறிஞரான வைத்தியலிங்கத் தேசிகர் என்பவர்களும் அவருடன் மாலை வேளைகளில் நீண்ட உரையாடுவர். ஆனைக்குட்டிச்சாமியார் இறப்பதற் குச் சிறிது காலத்துக்கு முன் கல்லில் கடைந்தெடுக்கப்பட்ட உரலொன்றினை அன்பளிப்பாக வழங்கினார். அவ்வுரல் இன்றும் அவரது வைத்தியசாலையில் உள்ளது.
38

இத்தகைய அறிஞர் தொடர்பே, கல்வியில் முஸ்லிம் சமூகம் அக்கறை இல்லாதிருந்த காலத்தில் அவர் தனது ஆண், பெண் மக்களை கல்வி கற்க வைத்தது. மூத்த மகன் முஹம்மத் இப்றாஹீம் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியிற் கற்று 1939 இல் பட்டம் பெற்று பிற்காலத்தில் தந்தையைப் போன்று பிரபலமான மருத்துவராக விளங்கினார். இரண்டாவது மகன் அப்துல் மஜீத் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர் சட்டத்தரணியானார். மூன்றாவது மகன் அப்துல் ரஸாக் தற்பொழுது தந்தையின் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரிய வாத்தியார் வைத்தியப் பரம்பரையின் தொடர்ச்சியான ஐந்தாவது வாரிசாக இவரைக் கொள்ளலாம்.
தனது பெண் மக்களுக்கும் அவர் கல்வி வழங்கினார். மூத்த மகள் முக்குலத்தும்மா (உம்மு குல்தூம் எனும் பெயரே இவ்வாறு மருவியது) அக்காலத்துப் பெண் பாடசாலையில் இருந்த ஆகக்கூடிய வகுப்பான மூன்றாம் வகுப்புவரை கற்றார். அதே போன்று அவருடைய ஏனைய பெண் மக்களான ஆயிஷா உம்மா, லத்தீபா உம்மா, கதீஜா உம்மா, மரியம் நாச்சி ஆகியோரும் கல்வி கற்றவர்களாவர்.
முத்தலிபு வைத்தியரிடம் இருபதுக்கு மேற்பட்ட தமிழரும், முஸ்லிம்களும் குருகுல முறையில் வைத்தியம் கற்றனர். அவர்களுட் சிலர் இன்றும் அத்தொழிலிற் பிரபலமாயுள்ளனர்.
சுவாமியும் வைத்தியரும் கடைசியாக சுவாமியின் இறப்புக்குச் சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்தனர். 1943 இல் இருந்து 1947 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக சுவாமி கடமை யாற்றினார். அவ்வேளையில் அவர் காரைதீவுக்கு வருவதுண்டு. அவ்வாறான தனது இறுதிப் பயணத்தின் பொழுது முத்தலிபு வைத்தியரையும் பார்க்கச் சென்றார். சுவாமி
: 39

Page 23
நடராஜா நந்தஜீ, பொன்னையா மாஸ்டர், பி. வேலுப் பிள்ளை ஆகியோர் சுவாமியுடன் காரில் வந்திறங்கினர். தனது நெருங்கிய நண்பர் தன்னைச் சந்திக்க வந்ததையிட்டு வைத்தியர் அளவிலர் மகிழ்ச்சி அடைந்தார். தான் சிறிது உடல் நலமின்றியிருப்பதைப் பற்றிச் சுவாமி பிரஸ்தாபித் தார். அதற்கு ஓரிரு நாள் மருந்துகள் போதாது என்றும் காரைதீவில் சில நாட்கள் தங்கியிருந்து தொடர்ச்சியாக மருந்துண்ண வேண்டுமென்றும் வைத்தியர் ஆலோசனை வழங்கினார். ஆனால் இம்முறை தான் கொழும்புக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதாகவும் மிக விரைவில் மீண்டும் திரும்பி வருவதாகவும் சுவாமி கூறிச் சென்றார். ஆனால் அதுவே அவரது கடைசிப் பயணமாகிவிட்டது. 19.07.1947 சனிக்கிழமை அன்று சுவாமி கொழும்பில் காலமானார். அவரது பூதவுடல் மட்டக்களப்பு கல்லடி உப்போடையிலுள்ள சிவானந்தா வித்தியாலய வளவினுள் நல்லடக்கம் செய்யப்பட்டு அவரது சமாதியும் அருகேயுள்ள மணி மண்டபமும் இன்று கம்பீரமாகக் காட்சியளிக் கின்றன.
சுவாமியின் நல்லடக்கத்தின் போது முத்த லிபு வைத்தியரும் சமாதியருகே முக்கியஸ்தர் வரிசையில் இருந்தார்.
இவ்வாறு சுவாமியோ டு நெருக்கமான உறவு கொண்டிருந்த வைத்தியர் 1973 மே 15 இல் சாய்ந்தமருதுவில் காலமானார்.
2.9.1997 இல் கல்முனையில் வெளியிடப்பட்ட பரீ இராம கிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலரில் வெளியான 'இராமக் கிருஷ்ண சங்கமும் முஸ்லிம்களின் கல்வியும்' எனும் கட்டுரையின் விரிவாக்கம்.
40

கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர்
41

Page 24
(3)
கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் (1899.4.29 - 1989.4.17)
கிழக்கு மாகாணத்தின் புகழ்பெற்ற வன்னியனாராக வும், பின்னர் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்தினராக வும், அமைச்சராகவும் தனது வாழ்நாளில் எழுபது வருடங்களை மக்களினதும், நாட்டினதும் நலனுக்காக அர்ப்பணித்தவர் எம்.எஸ். காரியப்பர் அவர்களாவார்.
மஹமூத் சம்சுதீன் காரியப்பர் 1899 ஏப்ரல் 29இல் பிறந்து, தனது 90 வது வயதில் 1989 ஏப்ரல் 17இல் காலமானார். தந்தையார் டாக்டர் இப்றாலெப்பை காரியப்பர்; தாயார் லைலத்துல் கத்ரியா ஆவார். இவரது முன்னோர் ஊவா மாகாணத்தில் வெல்லஸ்ஸ பகுதியைச் சேர்ந்தோ ராவர். ஹேர்பர்ட் வைட் என்பவரினால் எழுதப்பட்ட ஊவா வரலாற்று நூலின்படி, நெய்னா மரைக்கார் என்பவர் 1818 மார்ச் 7ஆம் திகதி காரியப்பராக (முஸ்லிம் தலைவர்) நியமனம் பெற்றார். அவரது சந்ததியினர் கரைவாகுப்பற்றில் (கல்முனைப் பிரதேசம்) குடியேறினர்.
தனது கல்வியை எம்.எஸ். காரியப்பர் கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலையிலும், கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும் பெற்றார். மெற்றிக்குலேஷன் பரீட்சையில் சித்தியடைந்து, இன்டர் விஞ்ஞான வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், வன்னியனார் (பிரதம தலைமைக்காரர்) வேலை அவருக்கு வழங்கப்பட்டது. அதனையேற்றுத் தமது 21ஆவது வயதில், 1921 ஜனவரி 1ஆம்
42

திகதி பாணமைப்பற்றில் பதவி ஏற்றார். அன்றிலிருந்து 1946 ஜூலை 1இல் வன்னியனார் எனும் பதவி ஒழிக்கப்படும் வரை பாணமை, அக்கரைப்பற்று, கரைவாகு-நிந்தவூர், சம்மாந்துறை, வேவகம் பற்று ஆகிய மட்டக்களப்பு தெற்கின் சகல பகுதிகளிலும் கடமையாற்றி, இலங்கையின் அதிசிரேஷ்ட முஸ்லிம் தலைமைக்காரர் என இளைப்பாறி னார். (மட்டக்களப்பு மாவட்டம் என்பது அக்காலகட்டத் தில் வடக்கில் வெருகல் ஆறு, தெற்கில் கும்புக்கன் ஒயா, மேற்கில் பிந்தனைப்பற்று என்பனவற்றை எல்லையாகக் கொண்டது.)
இக் கால் நூற்றாண்டு காலத்துள் காரியப்பர் வேறு பல மேலதிக பதவிகளையும், கெளரவங்களையும் பெற்றார். முழு மட்டக்களப்பு மாவட்டத்தின் குற்றவியல், மரண விசாரணை அதிகாரி (நியமனம்: 1921), இலங்கை வன பாதுகாப்புச் சங்க அங்கத்தினர் (1923), சமாதான நீதவான் (1931), முதலியார் (1938), உத்தியோகப் பற்றற்ற நீதவான் (1939), மட்டக்களப்பு மாவட்ட கல்விக் குழு அங்கத்தினர் (1940), கல்முனை கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் (1942), மத்திய விவசாய சபையின் மட்டக்களப்பு மாவட்ட அங்கத்தினர் (1944) கேற் முதலியார் (1944) என்பன அவற்றுட் சிலவாகும். இலங்கையின் ஒரேயொரு முஸ்லிம் கேட் முதலியார் இவரேயாவார்.
ஒரு பிரதேசத்துக்குரிய வன்னியனாராக இவர் கடமையாற்றிய போதிலும் தனது ஆரம்ப காலத்திலிருந்தே முழு மட்டக்களப்பு மாவட்டத்துக்குமான பிரதம பிரதிநிதி போன்றும், தலைவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக விளங்கினார். இயல்பான திறனும், பெற்ற கல்வியும், அத் துறைகளிலான இவரது அதீத அக்கறையும் அந்நிலையை ஏற்படுத்தின. தனது பாடசாலைக் காலத்திலிருந்தே வரலாறு, அரசியல், இலக்கியம் ஆகியவற்றில் மிகவும்
43

Page 25
அக்கறை கொண்டிருந்தார். வாழ்நாள் முழுவதும் மிகவும் ஒழுங்காகவும் நீண்ட நேரமும் வேலை செய்து பழகியவர். மிகச் சிறந்த சொந்த நூலகத்தை வைத்திருந்தார். 1978இல் சூறாவளி கிழக்கில் பேரழிவை ஏற்படுத்திய மறுதினம் அப்பிரதேச மக்களனைவரும் தமது வீடுகளின் இடிபாடு களுக்குள்ளிருந்து எஞ்சிய பொருட்களை மீட்டெடுப்பதில் ஈடுபட்டிருந்தனர். காரியப் பரோ அன்றையக் கடும் மழையில் நனைந்து போன தனது நூல்களையும், பத்திரிகை நறுக்குகளையும் மீட்டெடுத்து, வெய்யிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். அவ்வளவு தூரம் அறிவையும், அதனை வழங்கும் நூல்களையும் அவர் நேசித்தார்.
1940 ஜனவரி 12இல் "எமது பொருளாதாரத் தேவைகள் எனும் தலையங்கத்தில் காரியப்பர் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். மட்டக்களப்பு விவசாயிகள் சங்க மூன்றாம் வருட நிறைவு மகா நாடாக சாய்ந்த மருது பெரிய பள்ளி வாசல் முன்றலில் எம்.எம். கா ஸிம் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
காரியப்பரின் ஆழ்ந்த அறிவையும், அனுபவத்தையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்த அக்கறையையும் தூரதிருஷ்டிப் பார்வையையும், 46 பக்கங்களைக் கொண்ட இவ்வுரை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. நெல்லுற்பத்தியைப் பெருக்குதல், கல்லோயாத் திட்டத்தின் அனுகூலம், நெல்லுக்கான உத்தரவாத விலை, கால்நடை வளர்ப்பில் மேய்ச்சல் தரையினதும், நவீன வளர்ப்பு முறையினதும் முக்கியத்துவம், கூட்டுறவு இயக்கம், மீன்பிடி, நெசவு போன்ற தொழில்களின் அபிவிருத்தி என்பன அவர் ஆராய்ந்த விடயங்களிற் சிலவாகும். இதன் முக்கியத்துவம் யாதெனில் இவ்விடயங்களில் அவசியம் பலரால் உணரப்படுவதற்குப் பல தசாப்தங்கள் முன்ன தாகவே காரியப்பர் அவற்றைப் பற்றிச் சிந்தித்தும், கூறியும், செயற்படுத்தியும் வந்திருக்கிறார்.
44

‘சுகாதார, கல்வித் துறைகளை விருத்தி செய்ய அரசாங்கம் எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ அதே போன்ற கவனத்தை விவசாய, நீர்ப்பாசனத்துறை வளர்ச்சிக் கும் செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு சுங்கத் தீர்வை விதிக்கப்படுவதோடு, உள்ளூர் நெல்லுக்கு உத்தரவாத விலை வேண்டும். விவசாயி களுக்கு இலகுவான கடன் வசதிகள் வேண்டும். விவசாயி கள் தமது ஓய்வு நேரத்தைப் பிரயோசனப்படுத்துவான் வேண்டி, நெசவு, மீன்பிடி போன்ற தொழில்களை அபிவிருத்தி செய்தல் வேண்டும். இந்து மகா சமுத்திரம் கிழக்கின் ஒவ்வொரு கிராமத்திலும் அலையடிக்கிறது. அதனைப் பூரணமாகப் பிரயோசனப்படுத்த வேண்டும். நெசவுத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு முழு நாட்டிலும் மிகப் பொருத்தமான இடம் மருத முனை ஆகும்.’ இவ்வாறெல்லாம் காரியப்பர் தமது நீண்ட உரையில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார்.
காடாகக் கிடந்த பகுதிகளைக் களனியாக்கும் பணியில் காரியப்பர் பெரும் பங்கு வகித்திருக்கிறார். அப்போதைய மட்டக்களப்பு அரசாங்க அதிபராகவிருந்த சீ. வீ. பிரெய்ன் என்பார் இதற்கான ஊக்கத்தை வரைவின்றி வழங்கியதன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டு நிலம் வயல் வெளியாகியது. பாணமைப்பற்று வன்னியராயிருக்கும் பொழுது, செல்வி சோர்டெயின்ஸ் என்பாருக்குச் சொந்தமான நிலத்தைக் கொள்வனவு செய்து அப்பிரதேச சிங்கள மக்களுக்குக் காரியப்பர் பகிர்ந்தளித் தார். பொத்துவில் மக்களுக்குத் தலா 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு பகுதி இன்றும் பிரெய்ன் துரைக் கண்டம்' எனும் பெயரில் வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் பொத்துவில் நிலப் பிரதேசத்திற் பெரும் பகுதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
45

Page 26
மார்க்கண்டு முதலாளிக்கும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல வன்கானுக்கும் சொந்தமாயிருந்தன. விண்ணாங்கடி பாம் நிலப் பிரதேச அபிவிருத்தி, மகா கண்டியத் திட்டம் என்பன காரியப்பரின் முயற்சிகளினது பயன்களேயாகும். வீரமுனை சிந்தாத்துரை பிள்ளையார் கோவிலுக்கு 110 ஏக்கர் நிலமும், கல்லாறு பிள்ளையார் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலமும் கிடைக்கச் செய்தார். சாதி, மத, இன, பிரதேசப் பாகுபாடற்ற முறையில் அவர் தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளதைக் காண்கிறோம்.
கிழக்குப் பிரதேசத்தின் முதலாவது விவசாய விழா 1943இல் கல்முனையில் நடைபெற்றது. இதனை ஏற்பாடு செய்த குழுவின் தலைவராக கல்முனைக் கச்சேரிக்குப் பொறுப்பாயிருந்த உதவி அரசாங்க அதிபர் ஏ.எம். ஏ. அஸிஸ"ம், செயலாளராகக் காரியப்பரும் திறமையாகச் செயற்பட்டனர்.
பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் புனரமைப்பிலும் காரியப்பரின் பங்களிப்புப் பெருமளவு உண்டு. இப்பணி தொடங்கியவுடன் அதற்குப் போதிய தொழிலாளர்களைப் பொலநறுவைப் பிரதேசத்திற் பெறமுடியவில்லை. மலேரியாக் காடான அப்பிரதேசத்துக்கு வெளிமாவட்டத் தொழிலாளரும் வர மறுத்தனர். அதனால் தமது பகுதி யிலிருந்து போதிய தொழிலாளரை வழங்கி இத்திட்டம் நிறைவேற உதவினார்.
எனவே தனது அரசாங்கப் பதவிக் காலத்தில், வெறும் உத்தியோகத்தனாக மட்டும் அவர் விளங்கவில்லை. மக்களின் தொண்டனாக, விவசாய விருத்தி முன்னோடி யாக, அவர்களின் பிரதம பிரதிநிதியாக, நலன்களைக் காக்கும் தலைவனாகவெல்லாம் விளங்கினார். குறிப்பாக 1939 - 45 இரண்டாம் உலகப்போர் காலத்தில் கிழக்கின்
46

உணவுற்பத்தியை வழிநடத்தி; அப்பிரதேசத்தை நெற் களஞ்சியமாக்கியதோடு, பிறமாவட்டங்களுக்குத் தாராள மாக உணவை வழங்கும் விநியோகத்தளமாக அதனை மாற்றினார். அவரது காலத்து அரசாங்க அதிபர்கள், ஆளுநர்கள் அனைவரது பாராட்டுக்கும் ஆளானார்.
இத்தகைய பணிகளிலீடுபட்ட ஒருவரை அடுத்த அரை நூற்றாண்டு காலத்துக்குத் தமது அரசியல் தலைவராக அம்மக்கள் ஏற்றுக் கொண்டமை இயல்பானதே. இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அவர் தேசிய அரசியலுக்கு வந்தார். 1947இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய கல்முனைத் தொகுதி இன்றைய கல்முனை, சம்மாந்துறை, அம்பாரைத் தொகுதிகளை உள்ளடக்கியது. அம்முறை அத் தொகுதியில் இவரும், பிறிதொருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டனர். அதனாற்றான் பின்னொரு சந்தர்ப்பத்தில் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியமைக்காக விளக்கம் கோரப்பட்டபோது 'எனக்கு கட்சியின் அரை டிக்கட்டே கிடைத்தது; ஆகவே நான் அரைக் கட்சிக்காரன் எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பின்வரும் பதவிகளை வகித்துள் ளார். பாராளுமன்ற உறுப்பினர், உள்நாட்டலுவல்கள், கிராம அபிவிருத்தி அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் (நியமனம்: 1947); கல்முனைப் பட்டினசபைத் தலைவர் (1952); கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் (1956); நீதி அமைச்சின் பிரதி அமைச்சர் தபால், தந்தி அமைச்சர் (1959); கலாசார, சமூக சேவை அமைச்சர் (1960); பாராளுமன்ற அங்கத்தினர் (1960 மார்ச்); பாராளுமன்ற அங்கத்தினர் (1965).
47

Page 27
இந்நாட்டின் முதலாவது முஸ்லிம் அரசியல் கட்சியை ஆரம்பித்தவரும் காரியப்பரேயா வார். 1960 இல் அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணியை அவர் நிறுவினார். இதன் சின்னம் உதய சூரியனாகும்.
தனது நீண்ட, சிறப்பான அரசியற் பணியில் இந் நாட்டின் எல்லா அரசியல் தலைவர்களுடனும் காரியப்பர் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட அத்தனை பொறுப்புக்களையும் அவர் செவ்வனே நிறைவேற்றி எல்லோரினதும் ஏகோபித்த நம்பிக்கையை யும் பாராட்டையும் பெற்றார். டீ.எஸ். சேனநாயக்க, சேர் ஒலிவர் குணதிலக்க, டட்லி சேனநாயக்க , ஜே. ஆர். ஜயவர்த்தன, எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க, எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், ரீ.பி. ஜா யா , ராஸிக் பரீத், என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தன, பீட்டர் கெனமன் போன்ற பலருடன் அவர் உழைத்திருக்கிறார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற எல்லா முக்கிய விவாதங்களிலும் சிறப்பான உரையாற்றியிருக் கிறார். அவரது உரைகள் மிகவும் ஆழமானதும், அகன்றது மாகும். பாராளுமன்ற ஹன்சார்ட் இதற்குச் சான்று பகரும்.
அவர் தனது சேவைகளைத் தனது தொகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. கிழக்கு மாகாண மக்கள் அனைவரையும் தனது மக்களாகக் கருதிச் சேவை புரிந்தார். தனது அனுபவம், அரசியல் அதிகாரம், ஆளுமை அனைத் தையும் ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், தபாலகங்கள், நூல் நிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வீட்டுத் திட்டங்கள், மின்சார விநியோகம், வீதிகள், பாலங்கள் அமைத்தல், தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், கைத்தொழில் அபிவிருத்தி என்பனவற்றில் செலவிட்டார். அம்பாரை, நெய்னா காடு ஆகிய விடங்களில் உள்ள பள்ளிவாசல்களைக் கட்டுவதில் முன் நின்றார்.
48

கல்லோயாத் திட்டம் உருப்பெறுவதிலும், பூரணத்து வம் அடைவதிலும் பெரும் பங்கு செலுத்தினார். தேசபிதா டீ.எஸ். சேனநாயக்க 1951 ஜூன் 11ஆந் திகதி அம்பாரையில் வைத்து விடுத்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
‘‘1951 ஜூன் 10ஆந் திகதி கல்ஒயாப் பிரதேசத்திற்கு விஜயஞ் செய்து அபிவிருத்தி வேலைகளைப் பார்வை யிட்டேன்.
விரைவில் பூர்த்தியாகக் கூடியவாறு இத்திட்டம் வேகமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இதனை நிறைவேற்றுவதில் கேற் முதலியார் எம். எஸ். காரியப்பர் கொண்டுள்ள அதீத அக்கறையை நினைத்துப் பார்க்கிறேன். இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் அணை கட்டப்படும் இடத்தில் முதலாவது மரத்தினை நான் வெட்டி இன்று 10 வருடங்களாகின்றன. இப்பணியில் என்றுமே துயிலாத காரியப்பர், அது நிறைவேறுவதையிட்டு மிகவும் சந்தோஷ முடைய மனிதராய் இருப்பார். அவரும், நானும் இணைந்து எமது கனவினை நனவாக்கி விட்டோம்."
காரியப்பரின் இத்தகைய அரசியற் பணி இடையறாது தொடர்வதைக் காண்கிறோம். 1977ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்ட அமைச்சராயும், வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராயும் பதவி வகித்த அல்ஹாஜ் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இவரது மருமகன் ஆவார். பொத்துவில், நிந்தவூர்த் தொகுதிகளின் பாராளுமன்றப் பிரதிநிதியாயும், நிதி அமைச்சராயும் கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.எம். முஸ்தபா இவரது மற்றொரு மருமகன் ஆவார். கல்முனைத் தொகுதியின் பார்ாளுமன்ற உறுப்பினராயிருந்த அல்ஹாஜ் எம்.சி. அஹ்மத் இவரது சகோதரியின் மகனாவார்.
49

Page 28
அறிவுத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் அனுபவமும் கொண்டிருந்த கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் கல்வித்துறை வளர்ச்சியில் காட்டிய கரிசனை இயற்கையானதே. 1950களில் தமிழர் பெரும்பான்மைப் பாடசாலைகள், முஸ்லிம் பெரும்பான்மைப் பாடசாலை கள் எனும் பிரச்சினை தோன்றியது. இதனைத் தீர்க்குமுக மாக கல்வி அமைச்சர் டபிள்யூ. தஹநாயக்கா 1958 மார்ச் 27இல் முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகா நாடொன்றினைத் தனது அமைச்சில் நடத்தினார். இம்மகாநாட்டில் காரியப்பர் முஸ்லிம் தூதுக்குழுவின் பிரதம பேச்சாளராய் இருந்தார். இம்மகாநாட்டிலே முஸ்லிம் பாடசாலைகள் யாவை, தமிழ்ப் பாடசாலைகள் யாவை எனும் தீர்மானம் தீர்க்கமாகச் செய்யப்பட்டு இன்றுவரை அது நடைமுறையில் இருந்து வருகிறது.
இம்மகாநாட்டிலே முஸ்லிம் பாடசாலைகளை மேற்பார்வை செய்யப் போதிய பரிசோதகர்கள் நியமிக்கப் பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். அவர் பின்வருமாறு பேசினார்: "தற்போது 285 அரசாங்கத் தமிழ்ப் பாடசாலைகளை மேற்பார்வை செய்ய 35 பரிசோதகர் களும், 325 முஸ்லிம் பாடசாலைகளை மேற்பார்வை செய்ய 2 பரிசோதகர்களுமே உள்ளனர். இவர்களுள் ஒருவர் தலைமை அலுவலகத்தில் நிர்வாகப் பணியில் ஈடு பட்டுள்ளார். மற்றவர் விரைவில் ஒய்வு பெறும் வயதை அடைந்துள்ளார். எனவே உடனடியாகப் போதிய முஸ்லிம் பரிசோதகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.” இக்கோரிக்கை ஏற்கப்பட்டு அவ்வாறான பரிசோதகர் நியமனம் விரைவில் ஆரம்பம் ஆயிற்று.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் இவரேயாவார். தனது சொந்த நிலத்தை அன்பளிப்பாக வழங்கி சாய்ந்தமருது ஆங்கிலக் கனிஷ்ட பாடசாலையை
50

1949இல் நிறுவினார். இது பின்னர் மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1967 இல் இக்கட்டுரையாளர் அதன் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி எனும் நாமத்தைப் பெற்றது.
பெரிய நீலாவணை வித்தியாலயம், பெரிய நீலாவணை அ.மு.க. பாடசாலை, மருதமுனைப் பெண் பாடசாலை, பாண்டிருப்பு அ.மு.க. பாடசாலை, கல்முனைக்குடி ஆண், பெண், வடக்கு, தெற்குப் பாடசாலைகள், சாய்ந்தமருது வடக்கு, முதலாம் குறிச்சி, இரண்டாம் குறிச்சி, 4ஆம் குறிச்சி, 6ஆம் குறிச்சிப் பாடசாலைகள் என்பன யாவும் இவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். சம்மாந்துறை அல் மர்ஜான் மகாவித்தியாலயத்தையும் இவரே நிறுவினார். அத்துடன் சம்மாந்துறை மகாவித்தியாலயம், மருதமுனை அல் மனார் மகாவித்தியாலயம், நற்பிட்டிமுனை மகா வித்தியாலயம் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். குறிப்பாகப் பெண் கல்வியிலும் அக்கறை காட்டினார்.
கிழக்கில் ஆசிரியர் கலாசாலை ஒன்றை நிறுவுவதிலும் காரியப்பர் மிகவும் அக்கறை செலுத்தினார். இதனை முதலில் கல்முனையில் நிறுவுவதாகவே தீர்மானிக்கப் பட்டாலும் பின்னர் அட்டாளைச்சேனைக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டது. ஆசிரியர் கலாசாலை நிறுவுவதில் கேற் முதலியார் எம். எஸ். காரியப்பரின் பங்களிப்பினை அப்போதைய சட்டசபையின் மட்டக்களப்புத் தெற்கு அங்கத்தினராயிருந்த எஸ். தர்மரத்தினம் அவர்கள் 1.02.1941 இல் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் தெளிவாகக் காட்டுகின்றது.
கிழக்குப் பல்கலைக் கழகம் நிறுவுவது தொடர்பான அப்பாப்பிள்ளை ஆணைக்குழு தனது விசாரணைகளை
51

Page 29
நடத்தும் போது அக்குழு முன்பாக மிக விபரமான அறிக்கையை சமர்ப்பித்தவர் காரியப்பரே. கிழக்கில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதாயின், அதனைக் கல்முனைப் பிரதேசத்திலேயே நிறுவுதல் வேண்டுமென மிக ஆணித்தரமாக வாதிட்டார்.
மேற்போந்த வகைகளிலெல்லாம் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் ஏழு தசாப்தங்கள் தனது பிரதேசத்தின தும், அப்பிரதேச மக்களினதும், நாட்டினதும் நன்மைக் காகத் தனது வாழ்நாளைப் பூரணமாக அர்ப்பணித்தார். இலங்கையின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, சுபீட்சம் என்பவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாற்றான் 1940 ஆம் ஆண்டு மட்டக்களப்புத் தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தில் உரையாற்றும் போது இந்நாட்டு முஸ்லிம்கள் சிங்கள, தமிழ்ச் சமூகங்களுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
கிழக்கு மாகாண மக்களுடனேயே என்றும் அவர் வாழ விரும்பினார். அதனாற்றான் கொழும்பில் தனக்கென ஒரு வதிவிடத்தை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக அவருக்கு நியமனம் வழங்க அரசாங்கம் விரும்பியதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்குச் சேவை செய்யவே அவர் விரும்பினார். அதனாற்றான் அவரது நாமம் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது.
கட்டுரை : தினகரன் 1994 ஜனவரி 22,24 உரை : சம்மாந்துறை அல் மர்ஜான் மகாவித்தியாலயம் 1994 ஜனவரி 22
52

ரி.எஸ். அப்துல் லத்தீப்

Page 30
(4)
முன்னோடிகளுள் முதல்வர் ரி.எஸ். அப்துல் லத்தீப்
(1900.4.9 - 1977.3.10)
இலங்கையின் கல்விப் பணிப்பாளராயிருந்த எல். மக்கிறே என்பார் தமது 1923 ஆம் ஆண்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவரொருவர் இவ்வருடம் கோப்பாய் ஆசிரியர் கலா சாலையிற் பிரவேசித்தார். இந்நாட்டின் வரலாற்றிலேயே முஸ்லிம் மாணவரொருவர் ஆசிரியர் கலாசாலைக்கு அனுமதி பெறுவது இதுவே முதல் தடவையாகும்.”
இப்புகழைப் பெற்றவர் மாத்தறை மாவட்டம் வெலிகம, மதுரா கொடையைச் சேர்ந்த மர்ஹஜூம் அல் ஹாஜ் ரி.எஸ். அப்துல் லத்தீப் அவர்களாவார்.
1900 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பிறந்த அப்துல் லத்தீப் அவர்களின் தந்தையின் பெயர் தம்பி சாகிப் மத்திச்சம்; தாயார் அலிமா உம்மா. 1910ஆம் ஆண்டிலிருந்து தனது ஆரம்பக் கல்வியை வெலிகாமம் முஸ்லிம் வித்தியாலயத்திற் பெற்றார். முஸ்லிம்கள் கல்வியில் அவ்வளவு அக்கறையில்லாதிருந்த காலமது. அத்தகைய கால கட்டத்தில் தனது கல்வியைக் கைவிடாது தொடர்ந்து கற்று, 1921இல் இப்பாடசாலையிலேயே உதவியாசிரியரா னார். இரு வருடங்களின் பின்னர் 1923 ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு அனுமதி
54

பெற்றார். இச்சம்பவத்தினையே கல்விப் பணிப்பாளர் மக்கிறே தமது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிற் கற்கின்ற காலத்திற் தமது கல்விசார் படிப்பில் மட்டுமல்லாது தமது தமிழறிவிலும் மிகவும் சிறந்து விளங்கிய காரணத்தினால் தமிழிற் சூரியன்’ எனும் பட்டம் யாழ்ப்பாணத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இவரால் எழுதப்பட்ட நூல்களில் இவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையைக் காணக்கூடியதாகவுமுள்ளது.
1925 இல் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர், முதலில் காலி மல்ஹருஷ் சுல்ஹியா வித்தியாலயத்திலும்; 1928 இலிருந்து மாத்தறை முஸ்லிம் பாடசாலையிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த பின்; 1935 இல் வெலிகர்ம முஸ்லிம் வித்தியாலயத்தின் தலைமையாசிரியராகப் பதவியேற்றுப் பதினொரு வருடங்கள் அங்கு கடமையாற்றினார். இவரது காலத்திலேயே இப்பாடசாலையில் எஸ்.எஸ்.சி. வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனாற் பல அயலூர் மாணவர்களும் இங்கு வந்து கல்வி கற்றனர். அளுத்கமை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அங்கு முதன் முதல் அனுமதி பெற்ற இருபது பேருள் ஏழு பேர் வெலிகாமத்தைச் சேர்ந்தோராவர்.
1946 இல் இங்கிருந்து இடமாற்றம் பெற்று திக்குவெல்லை முஸ்லிம் வித்தியாலயத்திலும்; 1948 இலிருந்து களுத்துறையிலும் கடமையாற்றி 1.5.1958 இல் ஓய்வு பெற்றார். அவ்வருடமே தனது ஹஜ் கடமையையும் நிறைவேற்றினார். தனது ஒய்வு காலத்தைச் சமய, சமூக, எழுத்துத் துறைகளிற் செலவிட்ட அப்துல் லத்தீப் அவர்கள் 10.3.1977 இல் இறையடி எய்தினார்.
55

Page 31
ஆசிரியப் பணிபுரிந்த காலத்தில் மார்க்கத் தொண்டி லும் மிகுந்த அக்கறை காட்டினார். இவரது முயற்சியினால் ஜம்இய்யதுல் இஸ்லாமியத்துல் கைரியா சங்கம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டு, அச்சங்கத்தின் முயற்சியினால் மஸ்ஜித் ஒன்றும் கட்டப்பட்டது.
அப்துல் லத்தீப் அவர்களின் முதலாவது நூல் 1936இல் வெளிவந்துள்ளது. "நபிகள் நாதர் முகம்மது (ஸல்) உலக இரட்சக தூதர்” எனும் இந்நூலுக்கான மதிப்புரையில் ... யுத்த தர்மம், பலதார மணம், பொதுவுடைமைத் திட்டத்திலும் ஸ்க்காத் சிறந்ததென்பது, மற்றும் இஸ்லாமியக் கொள்கைகளுடன் ஏற்புழிக் கோடலாக அமைவது இவ்வப்பியாசத்தில் காலத்துக்கேற்ற திருத்த மாகும். இச்சிறு வெளியீடு முஸ்லிம்களுக்கு மாத்திர மல்ல, தமிழ் மொழியுடையார் யாவர்க்கும் பெரிதும் இன்பந் தருமென்பது எம் துணிபு. இத்தகைய பிரசுரங்கள் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்படின், அது சிங்களச் சகோதரர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்; மார்க்கத் தொண்டாகும்” என ஏ.ஆர்.எம். ஸகரிய்யா (பஹற்ஜி) யு.எல்.எம். ஹாமீம் (பஹற்ஜி), பீ.எம்.எஸ். ஹ"சைன் (பாகவி) மெளலவி பாளில் என் போர் கூட்டாகக் கூறியிருப்பது மிகப் பொருத்தமானதே.
R
1971 இல் வெளிவந்த திருக்குர்ஆனும் இயற்கையும் எனும் நூல் அப்துல் லத்தீப் அவர்களின் ஆழ்ந்த இஸ்லாமிய அறிவினையும் ஆய்வுத் திறனையும் தமிழ் மொழிப் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றது. 30 அத்தியாயங் களையும் 310 பக்கங்களையும் கொண்ட இந்நூல் சிறந்தவொரு ஆய்வு வெளிப்பாடாகும். இவ்வாய்வில் அவர் பல்லாண்டுகளைச் செலவிட்டிருக்க வேண்டும்.
'திருக்குர்ஆனும் இயற்கையும்’ எனும் இந்நூலை எழுதுவதற்கான ஆர்வம் 1942 ஆம் ஆண்டு தனக்கேற்பட்ட
56

தாக இந்நூலுக்கான முகவுரையில் அப்துல் லத்தீப் குறிப்பிடுகிறார். பிற மத நண்பரொருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அந்நண்பர் இஸ்லாத்தைப் பற்றிப் பல தவறான எண்ணங்களைக் கொண்டிருந்ததை அறிந்து, அவ்வாறானோர் இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் வண்ணம் நூலொன்றை வெளியிட வேண்டுமெனும் உந்துதலை இவருக்கு ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடே திருக்குர்ஆனும் இயற்கையும்'.
இந்நூலுக்கான ஆசிச் செய்தியில் காலி, கோட்டை அல் பஹ்ஜத்துல் இப்றாஹிமிய்யா அரபிக் கலாசாலையில் 1970 இல் அதிபராகக் கடமையாற்றிய செய்குல் பஹ்ஜி எச்.எல். அப்துல் ஹமீத் கூறுமாற் போன்று: திருக்குர்ஆன் ஆதாரங்களைக் கொண்டே அல்லாஹற்வையும் அவனது சிருஷ்டி கர்த்த நிர்வாகத்தையும் தெளிவாக விளக்குவதில் இந்நூல் பெரிதும் மதிக்கப்படத்தக்கது. விஞ்ஞானக் கூற்றுக்களும் வான சாஸ்திர விளக்கங்களும் புவியியல் மாற்றங்களும் இறைவனின் நாயகத்துவ ஆளுகையை நன்கு விளக்குவதற்கு குர்ஆனை அத்தாட்சிப் படுத்தி வரும் நவீன சான்றுகளாக இந்நூல் விளங்குகிறது.”
எனவே முஸ்லிம் சமூகத்தின் முதற் பயிற்றப்பட்ட ஆசிரியர் தலைசிறந்த ஆசானாக மட்டுமின்றி, இஸ்லாமிய ஆய்வாளனாகவும், எழுத்து வன்மை மிக்கவனாகவும், தமிழ்ப் புலமை வாய்ந்தவனாகவும், சமூக சேவையாள னாகவும் விளங்கியமை பெருமைக்குரியதே.
தினகரன்
1988 டிசம்பர் 7
57

Page 32
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்
58
 

(5)
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின்
கல்விப் பணிகள்
(1904.6.23 - 1997.6.16)
இலங்கையில் சமுதாயப் புரட்சியொன்றேற்பட்டு, பொதுமக்கள் யுகமொன்று மலர்ந்த ஆண்டாக 1956 கொள்ளப்படுகின்றது. முஸ்லிம்களின் கல்வித் துறையிலும் இதன் தாக்கத்தைக் காணலாம். அவ்வாண்டிலும் அதற்குப் பின்னரும் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட கல்வி விழிப்புக் கும் அதன் மூலமான சமுதாய மாற்றத்திற்கும் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹற் மூதும் முக்கிய காரணமாக அமைகிறார்.
பதியுத்தீன், 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாத்தறையிற் பிறந்தார். தந்தை எஸ்.எல்.எம். மஹமூத் நெய்னா மரிக்கார் மத்திச்சம்; தாயார்: செய்யது முஸ்தபா நொத்தாரிஸ் ஹாஜியாரின் மகள் பாத்தும்மா நாச்சியார். பன்னிரண்டு பிள்ளைகளுள்ள குடும்பத்தில் இவர் கடைசிப் பிள்ளையாவார். மாத்தறையை அண்மித்தாயுள்ள வெலிகமையில் இளம்பராயத்தைக் கழித்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கும், பின்னர் மாத்தறையிலும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பெற்றார். கொழும்பு ஸாஹிராவிற் கற்கும் காலத்தில் மாணவர் தலைவராகவும் (senior Prefect) கடமையாற்றினார்.
முஸ்லிம் வாலிப லீக் புத்துணர்வு
கல்வி, சமூக, அரசியல் துறைகளில் மிக இளம் வயதிலேயே பதியுத்தீன் மஹற்மூத் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
59

Page 33
இதற்கான தளமாக முஸ்லிம் வாலிப லீக் அவருக்குப் பயன்பட்டது. முஸ்லிம் வாலிப லீக் மூலம் அவர் சேவை யாற்ற ஆரம்பித்தது மட்டுமல்லாது, சோர்வுற்றுக்கிடந்த அவ்வியக்கமும் அவரது உத்வேகத்தினால் உற்சாகமடையத் தொடங்கியது.
1927 இல் பதியுத்தீன் முஸ்லிம் வாலிப லீக் செயலாள ரானார். சுமார் நான்காண்டுகள் அப்பதவியை வகித்த காலத்தில் பல முக்கிய மாற்றங்களை அவ்வியக்கத்தில் ஏற்படுத்தினார்.
முதலாவதாக, சமுதாயப் பொதுப் பிரச்சினைகள் தோன்றும் பொழுது, அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடித் தீர்வுகாணும் இடமாக முஸ்லிம் வாலிப லீக்கை மாற்றினார்.
இரண்டாவதாக, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நாட்டு மக்கள் இரு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தது போன்று, முஸ்லிம்களும் இரு வர்க்கங்களா யிருந்தனர். ஓரளவு ஆங்கிலங் கற்ற, வர்த்தகத்திற் பணம் ஈட்டிய, ஆங்கிலேயரோடு ஒத்துழைக்கும் வர்க்கத்தினர் மேல் மட்டத்தினராயிருந்தனர். சமுதாய சாதனங்கள் யாவும் இவர்களது கட்டுப்பாட்டிலேயேயிருந்தன. ஏனைய சாதாரண மக்கள் எவ்விதப் பலனும் அனுபவிக்கவில்லை. முஸ்லிம் வாலிப லீக்கும் மேல் மட்டத்தினரின் கட்டுப் பாட்டிலேயேயிருந்தது. இந்நிலை மாற வேண்டுமென பதியுத்தீன் விழைந்தார். அதனாலேயே,
'படித்த காற்சட்டைக்காரர்கள் மட்டுமன்றிச் சாரம் உடுத்திய சாதாரண மக்களுக்கும் லீக்கில் உயர் பதவிகள் வழங்கப்படல் வேண்டும்” என வாதிட்டார்.
மூன்றாவதாக, அக்காலக்கட்டத்தில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட மேல் மட்ட முஸ்லிம்கள்
60

மட்டுமே முஸ்லிம் வாலிப லீக்கைத் தமது கட்டுப்பாட்டி னுள் வைத்திருந்தனர். அவ்வாறின்றி நாடு முழுவதும் பரந்த இயக்கமாக அது மாற வேண்டுமெனத் திடசங்கற்பம் பூண்டு, கிளைகள் அமைப்பதிலும் அவர் தீவிரமாகச் செயற்பட்டார்.
இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்து வதற்காக, நிரந்தரக் காரியாலயம் ஒன்று கொழும்பு, பிரதான வீதி, முதலாம் இலக்க உம்பிச்சிக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. அங்கு கடமையாற்ற ஓர் அதிகாரியும், இலிகிதரும், தட்டெழுத்தாளரும் நியமிக்கப்பட்டதோடு டெலிபோன் வசதிகளும் செய்யப்பட்டன. கொள்கை விளக்க நூல் ஒன்று வெளியிடப்பட்டதோடு, ‘சரன்தீப் என்னும் சஞ்சிகையும் பிரசுரிக்கப்பட்டது.
இவ்வாலிப முஸ்லிம் லீக்கே காலக்கிரமத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக் என வளர்ச்சி பெற்றது.
அலிகாரில் உயர்கல்வி
இதே தீவிரத்தை அவர் அலிகார் பல்கலைக்கழக மாணவராயிருக்கும் பொழுதும் காணக்கூடியதாக விருந்தது. இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்நாட்டு மக்களின் ஆதர்ச கல்விப் பீடங்களாக பிரித்தானியா விலுள்ள ஒக்ஸ்போர்டும், கேம்பிரிஜ சமேயிருந்தன. அங்கு கற்றுத் திரும்புவதே சமுதாய அந்தஸ்தை வழங்கியது. அவ்வாறிருந்தும் வட இந்தியாவிலுள்ள அலிகார் பல்கலைக் கழகத்திலேயே தமது உயர்கல்வியைப் பெற பதியுத்தீன் விரும்பி அவ்வாறே செய்தார். அவ்வாறு அங்கு சென்ற முதல் இலங்கை மாணவன் எனும் பெருமை அவருக்குண்டு. அலிகார் பாடசாலையில் இவருக்கு முன் சில இலங்கை மாணவர் கற்றாலும் அவர்கள் பல்கலைக்
61

Page 34
கழகக் கல்வியைத் தொடராது திரும்பினர். அலிகார் செல் வதற்கான தூண்டுதலை வழங்கியவர் அப்போது கொழும்பு ஸாஹிராவிற் கடமையாற்றிய றவூப்பா ஷா ஆவார்.
அங்கு கல்வி கற்ற காலத்திலும் பல தேசிய எழுச்சி இயக்கங்களிற் தீவிர பங்கெடுத்தார். மாணவர் பேரவைத் தலைவராகவும் இருந்தார். இக்கால கட்டத்திலேயே பர்மா, மலேயா, சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிற் பரந்த சுற்றுலாக்களை மேற்கொண்டதோடு, ஆங்காங்கே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். சுதந்திர இயக்கங்களைப் பலமாக ஆதரிப்பதாகவும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகவுமே இவரது சொற்பொழிவுகள் அமைந்தன. இதன் காரணமாக பர்மா, மலேயா ஆகிய நாடுகளிலிருந்து இவர் உடனடியாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.
ரங்கூன் பத்திரிகையில் பேட்டி
1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி வெளி
யான ரங்கூன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான
பேட்டியொன்றில் பதியுத்தீன் பின்வருமாறு கூறுகிறார்:
‘நான் ஒரு வகுப்புவாதியல்ல, வகுப்புவாதியாக இருக்கப் போவதுமில்லை. எனது நாடு அப்படியான தொன்றை அங்கீகரிக்கவும் மாட்டாது. எனது நாட்டின் எதிர்கால நன்மையைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம் என்ற உயரிய நோக்கங்களைத் தைரியமாக மேற்கொண்ட ஓர் இளைஞனாகவே என்னை நான் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். இலங்கை அரசியல் சாசனத்திலும், சாதி அடிப்படையில் அல்லாமல் சனத்தொகை அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்று இலங்கை முஸ்லிம் லீக் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறது.
62

முஸ்லிம்கள் எப்பொழுதுமே சாதித்துவேசமற்றவர் கள். பிளவுகளை ஏற்படுத்த விரும்புகிறவர்களுமல்ல. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் அதனை வரவேற்றனர். எனினும் வியாபார சமூகத்தினரான முஸ்லிம்களுக்குச் சில தனிப்பட்ட விசேடமான அபிலாஷைகள் இருப்பதால் நியாயமான அளவுக்கு எமக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டு மென்பதே முஸ்லிம் லீக்கின் தற்போதைய முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது.”
அலிகாரிற் கல்வி கற்ற காலத்தில் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தில் அலிகாரின் பிரதிநிதியாகவிருந் தார். இச்சம்மேளனம் இந்தியாவின் எல்லாப் பல்கலைக் கழகங்களையும் உள்ளடக்கியது. 1936 இல் லக்னோவில் இச்சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மகாநாட்டுக்கு பதியுத்தீன் தலைமை தாங்கினார். ஜவஹர்லால் நேரு, முஹம்மதலி ஜின்னா ஆகிய இருவரும் இம்மகாநாட்டிற் கலந்து சிறப்பித்தனர்.
அலிகார் பல்கலைக்கழகச் சஞ்சிகையின் ஆசிரியராக வும் பதியுத்தீன் பணிபுரிந்தார். பிற்காலத்தில் சர்வதேசப் புகழ்பெற்ற அறிஞரான டாக்டர் பஸ் லுர் ரஹம் மான் அன்ஸாரி சஞ்சிகையின் துணையாசிரியராகக் கடமை யாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
a5sú6zílý Lu6ofi:
எம்.ஏ. பட்டதாரியாக நாடு திரும்பிய பின்னர், தமது சமுதாய, கல்விப் பணிகளை அவர் மேலும் விரிவாக்கிக் கொண்டார். 1939 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மாநாடொன்றைக் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிற் கூட்டினார். அக்கூட்டத் தில் அவர் பின்வருமாறு பேசினார்:
63

Page 35
“இத்தீவில் முஸ்லிம்கள் மாத்திரமே மற்றெல்லா இனங்களை விடவும் மிகத் தாழ்வான முறையிற் கணிக்கப்பட்டுள்ளனர். கவர்னர்களின் அறிக்கைகளில் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளால் நன்கு கவனிக்கப்பட்டு வரும் ஐரோப்பிய இனத்தவர்கள், தேவைக்கும் அதிகமான அளவு உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். முஸ்லிம்களிலும் பத்திலொரு பங்காக வாழ்கின்ற பறங்கிய மக்களுக்குத் தேவைக்கும் அதிகமான பிரதிநிதித்து வம் வழங்கப்பட்டுள்ளது. அங்குமிங்குமாக வாழுகின்ற இந்தியர்கள் நிரந்தரக்குடிகளான எம்மை விடவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.
நாங்கள் ஐரோப்பியர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. வர்த்தகத்திலும் ஐரோப்பியர்களை விட நாமே உயர்ந்தவர்கள். இந்த நாட்டு வரலாற்றிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். ஒரு சமூகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதன் பங்கை நிறைவேற்ற வேண்டுமானால் அந்தச் சமூகத்துக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது அவசியமாகும்.
ஒரு தனிப்பட்டவர் பெருமையுடையவராகவோ, திறமைசாலியாகவோ, தேசாபிமானமுடையவராகவோ இருக்கலாம். ஆனால் அவர் வாழும் சமூகத்திற்குத் தரப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டால், அந்தச் சமூகத்தில் வாழும் ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்த பொழுதிலும் அவர் அதனால் திருப்தி காண முடியாது. அரசாங்க சபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சமூகம், ஏனையத் துறைகளில் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த போதிலும் நாட்டின் ஏனைய மக்களோடு ஒன்றிணைந்த சமூகமாக வாழ முடியாது.
64

இந்த நாட்டு வருமானத்துக்கு எமது சமூகம் அளித்துள்ள பங்கானது, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் எந்தவிதத்திலும் குறைவானதல்ல. எமது முன்னோர் உலகச் சந்தையில் இலங்கையின் பெயரை அறிமுகப்படுத்தியதனால் இந்நாடு உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மற்றவர் களைப் போலன்றி நாம் இந்நாட்டிற்குச் சமாதான முறையில் வர்த்தகர்களாகவே வந்தோம். ஏனைய சமூகங்களைவிட நாம் இந்நாட்டுக்கு நட்பும், பணிவும் காட்டி சட்டத்திற்கு மதிப்பளித்து வந்துள்ளோம்.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர் எமது அராபிய முன்னோடிகள் இலங்கையுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தனர். அதனால் இந் நாட்டுடனான வரலாற்றுத் தொடர்பு சிங்கள மக்களைப் போன்றே மிகத் தொன்மையானதாகும். சிங்கள மக்களுடன் நாம் தோளோடு தோள் சேர்ந்து இந்நாட்டின் மூலைமுடுக்கு களிலெல்லாம் தேசியப் பற்றுடனும், ஒற்றுமை மனப் பான்மையுடனும் வாழ்ந்து வந்துள்ளோம். நம் முன்னோர் அளித்துள்ள அரும்பெரும் கலாசாரப் பெருமைகளை நாம் எப்பொழுதும் காப்பாற்றியாக வேண்டும். உலக ஜனநாயக வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் பங்கு மகத்தானதாகும். இஸ்லாமிய ஜனநாயக அடிப்படையிலேதான், உலக ஜனநாயகமும் சகோதரத்துவமும் உருவாகியுள்ளது.
எமது கலாசார, மத நம்பிக்கைகளினால் நாம் இந்நாட்டில் முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளோம். அதனால் நாட்டின் அரசியலிலும் நாம் முக்கியத்துவம் பெறுவது அவசியமாகும். அதற்காக விசேட கவனிப்பும் மேலதிகப் பிரதிநிதித்துவமும் நாட்டின் அரசியல் அமைப்பில் எமக்குக் கிடைத்தேயாக வேண்டும். அப்பொழுதுதான் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் எமது பங்கை உரிய முறையில் நிறைவேற்றி வைக்க முடியும். இதுவே எமது நம்பிக்கையும் உணர்வும் ஆகும்.”
65

Page 36
கம்பளை ஸாஹிரா
கல்வித்துறையிலும், சமூகத்துறையிலும் பதியுத்தீன் கொண்டிருந்த இவ்விலட்சியங்களை நிறைவேற்றுவதற் கான சந்தர்ப்பங்கள் இரு வழிகளில் அவருக்குக் கிடைத்தன. ஒன்று: கம்பளை ஸாஹிராக் கல்லூரி அதிபராகக் கடமை யாற்றியமை; இரண்டு: அரசியலில் ஈடுபட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபகர்களுள் ஒருவராகவும், சுமார் பத்து வருடங்கள் கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியமையுமாகும். "
இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பித்த பொழுது, கொழும்பில் வாழ்ந்த மக்கள் கிராமப்புறங்களுக்குக் குடிபெயர வேண்டியேற்பட்டது. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த வெளியூர் மாணவர்களும் தத்தம்து பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டியேற்பட்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அல்ஹாஜ் ரி.பி.ஜாயா, மாகாணங்களிலும் கொழும்பு ஸாஹிராவின் கிளைகளை ஆரம்பித்தார். அவ்வாறானதொரு கிளை கம்பளையில் 1942 மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கம்பளை நகர ஜூம்ஆப் பள்ளிவாசல் வழங்கிய ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஸாஹிராக் கல்லூரி இயங்கத் தொடங்கியது. இதனை ஆரம்பிப்பதில் எம்.எஸ். செய்யத் முஹம்மத், ஒமர் பாச்சா ஆகியோர் பெரிதும் துணையாயிருந்தனர். கொழும்பு ஸாஹிராவே பிரதானமானதும், ஏனையவை அவற்றின் கிளைகளே எனும் கொள்கைக்கேற்ப ரி.பி. ஜாயா வே இதன் அதிபராகவும்; பேராசிரியர் செய்யித் ரவூப் பாஷா உதவி அதிபராகவும் கடமையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தனதும், கொழும்பு ஸாஹிரா வினதும் புகழ்மிக்க மாணவனான பதியுத்தீனைத் தேர்ந் தெடுத்து 1944இல் கம்பளை ஸாஹிராவுக்குப் பொறுப்பாக ஜாயா அனுப்பிவைத்தார். 1945 இல் கொழும்பு
66

லாஹிராவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, மாகாண ஸாஹிராக்கள் அனைத்தும் பூரண சுதந்திர நிறுவனங்களாக இயங்கத் தொடங்கியதும், கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் முதலாவது அதிபராக பதியுதீன் பதவி வகிக்க ஆரம்பித்து, நீண்ட காலம் 1960 வரை அங்கு சேவை யாற்றினார். அத்துடன் கல்லூரிக்கு மிக அருகிலேயே தனது வாசஸ்தலத்தையும் கட்டினார். பொருளியல் ரீதியாக பதியுத்தீன் தன் வாழ்நாளில் தேடிய ஒரேயொரு சொத்து இவ் வீடேயாகும். அதனையும் பிற்காலத்தில் விற்று விட்டார். தனக்கென வாழாது, தனது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் களுக்கு இவரோரு சிறந்த உதாரணமாகும்.
கம்பளை ஸாஹிரா வைப் பொறுப்பேற்ற நாளி லிருந்து முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் நேரடியான பங்களிப்புச் செய்யக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத் தது. கல்லூரி எல்லாத் துறைகளிலும் பெரும் முன்னேற்றம் கண்டது.
இன்று இலங்கை எங்கணும் முஸ்லிம் மாணவி களினால் அணியப்படும் பஞ்சாபிய உடையை இந்நாட்டில் முதன்முதல் அறிமுகம் செய்தவர் பதியுத்தீனேயாவார். கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராய் இருந்த காலத்தில் தனது கல்லூரி மாணவிகள் அவ்வுடையை அணியும் பழக்கத்தினை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் அதனைப் பலர் எதிர்த்தனர். ஆனால் காலக்கிரமத்தில் சிறப்பான, ஒழுங்கான ஓர் உடையாக இது ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று நாடு முழுவதிலும் பொதுவான ஓர் உடையாகக் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சராய்ப் பதவியேற்ற பின்னருங்கூட கம்பளை ஸாஹிராக் கல்லூரி மீதான அவரது கரிசனையை மிக வலுவாக வைத்திருந்தார்.
67

Page 37
‘அவர் கம்பளை ஸாஹிராக் கல்லூரியை மிகவும் நேசித்தார். இதனால் இங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக் குள்ள குறைகளை நீக்கிவைப்பதிலும் இவர் கவனஞ் செலுத்தினார். அலிகார் பல்கலைக்கழகப் பாணியில் இதனை அமைத்துக் கொடுப்பதில் இவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. இதில் அவர் வெற்றி பெற்றார். அரபு நாடுகளும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவின. இங்கு ஒரு கலாச்சார நிலையம் உருவாக்கப்பட்டது. சிறந்த ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. பல முஸ்லிம் நாடுகளும் நூல்களை அன்பளிப்புச் செய்திருந்தன.”
இக்கல்லூரியிற் கடமையாற்றிய காலத்திலேயே, 1950 செப்டம்பரில் புனித மக்கா சென்று தனது ஹஜ்ஜ"க் கடமையை நிறைவேற்றினார்.
கல்வி அமைச்சர்
அரசியலில் ஈடுபட்டுக் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலேயே நாடளாவிய வகையில் முஸ்லிம் களின் கல்வித் துறையை முன்னேற்றக்கூடிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கல்வித்துறையிலும் ஏனைய துறைகளிலும் அவர்கள் பின்னடைந்திருப்பதை பதியுத்தீன் பின்வருமாறு கூறுகிறார்:
“கல்வித்துறை சம்பந்தமாக மற்றவர்கள் தீர்க்கமான முறையில் சிந்திக்கும் போது நாம் அதுபற்றி எவ்வளவு தூரம் சிந்திக்கிறோம் முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வி சம்பந்தமாக எந்தளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது? பெருவாரியாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் உள்ள மக்களின் நன்மைக்காகத் தொழில் நுட்பப் பாடசாலைகள் அமைக்கப்படுகின்றனவா?”
68

இத்தகைய சிந்தனை நீண்டகாலமாகவே பதியுத்தீ னுக்கு இருந்து வந்தது. இவற்றை உள்ளடக்கியதாகவே பத்தாண்டுத் திட்டமொன்றை 1957 இல் வெளியிட்டார். முஸ்லிம் சமூகத்தின் கல்வி, சமூக, சன்மார்க்க, கலாச்சார முன்னேற்றத்திற்கான வழிகளை இத்திட்டம் வெளி யிட்டது. 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கா தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் மூலம் முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்ற பதியுத்தீன் முற்பட்டார். மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மிக முக்கிய பிரிவான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக செயலாளர்களுள் ஒருவர் பதியுத்தீன் ஆவார். இதனால் அரசாங்கத்தில் மிகச் செல்வாக்குடையவராக இருந்தார். முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இருபத்தி ஆறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அப்போதைய கல்வி அமைச்சர் டபிள்யூ. தகநாயக்காவிடம் சமர்ப்பித்தார். அவற்றுட் சில 6) ICD5 DfT):
1. ஐம்பது வீதத்திற்கு அதிகமான முஸ்லிம்கள் கல்வி
பயிலும் பாடசாலைகளை முஸ்லிம் பாடசாலை களென அழைத்தல்.
2. முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம்களையே
தலைமையாசிரியர்களாய் நியமித்தல்
3. முஸ்லிம் அதிகாரி ஒருவரின் பராமரிப்பில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கல் முஸ்லிம் வித்தியாதரிசிகளின் தொகையை அதிகரித்தல்
5. கூடுதலான முஸ்லிம்களை ஆசிரிய பயிற்சிக்குத் தெரிவு
செய்தல்.
69

Page 38
6. முஸ்லிம் பெண் ஆசிரியைகள் நியமனத்தில் விசேட
சலுகை வழங்கல். 7. மூன்று மாதச் சேவையுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி
யின் போது முழுச் சம்பளம் வழங்குதல். 8. முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயங்களுக்கு அதிக அளவிலான மாணவ, மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளல். 9. பெரிய முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றுக்கு மேற்
பட்ட மெளலவி ஆசிரியர்களை நியமித்தல் 10. முஸ்லிம் பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகளை
அமைத்தல்.
இத்தகைய கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்பட்ட தோடு, காலக்கிரமத்தில் அமுல் செய்யவும்பட்டன.
1960 ஜூலையில் பதியுத்தீன் கல்வி, வானொலி அமைச்சரானார். அமைச்சரவையில் சுமார் மூன்றரை வருடங்கள் கல்வி, வானொலி அமைச்சராகவும் பின்னர் 1970 இல் இருந்து 77 வரை கல்வி அமைச்சராகவும் கடமையாற்றினார். இலங்கையில் இரு தடவைகள் கல்வி அமைச்சராகப் பதவி வகித்ததோடு, மிக நீண்ட காலம் கல்வி அமைச்சராக இருந்த பெருமையும் இவரையே சாரும். இவர் வானொலி அமைச்சராயிருந்த காலத்திலே யே அதன் முஸ்லிம் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இடை யில் சில வருடங்கள் சுகாதார, வீடமைப்பு அமைச்சராகவும் கடமையாற்றினார்.
நாடளாவிய மாற்றங்கள்
கல்வி அமைச்சு இவரின் கீழ் இருந்த கால கட்டங் களில் நாடு முழுவதற்கும் பொதுவான மூன்று மாற்றங்கள் இடம்பெற்றன:
70

பாடசாலைகள், ஆசிரியர் கலாசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டமை.
1
2. பாடசாலைப் பாடவிதானத்தில் மாற்றங்கள்
ஏற்படுத்தப்பட்டமை 3. பல்கலைக்கழகங்கள் புனரமைக்கப்பட்டமை
1960 இல் இந்நாட்டில் அரசாங்கப் பாடசாலைகள், உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் எனும் அமைப்புக்கள் இருந்தன. இப்பாட சாலைகளில் உள்ள கல்வி வசதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. இந்நிலையினை நீக்கி நாட்டின் சகல பிரதேசங்களிலுமுள்ள எல்லா மாணவர்களும் கல்வியில் சம வாய்ப்பினைப் பெறும் பொருட்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் அனைத்தும் அரக்டைமையாக் கப்பட்டன. இத்திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பிருந்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டது. இதற்கான சட்டம் 1960 அக்டோபர் 28 ஆந் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அதனை ஆதரித்து 101 வாக்குகளும் எதிர்த்து 44 வாக்குகளும் கிடைத்தன. தான் நீண்ட காலம் அதிபராய் இருந்து மிக நேசித்த கம்பளை ஸாஹிராக் கல்லூரியை அரசிடம் முதன் முதல் ஒப்படைத்தார்.
இரண்டாவது, 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் பாடசாலைப் பாடவிதா ன முறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் முக்கியமானவையாகும். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்நாட்டின் கல்வி முறையிற் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், மொத்தமான மாற்றமொன்று 72 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவது, பல்கலைக்கழகக் கல்வி முறையிலும் பெரும் புனரமைப்பொன்று இவர் கல்வி அமைச்சரா யிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
71
3

Page 39
“பல்லாண்டு கால பல்கலைக்கழக வரலாற்றின் முடிவில் 1970 ஆம் ஆண்டில் அரசாங்கம் எதனைக் கண்டது? அவ்வாண்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றிருந்தனர். இவர்களுள் 99 சதவீதமானோர் சிங்களம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களைக் கற்ற கலைப்பட்டதாரிகளாவர். மறுபுறத்தில் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்குப் பொருத்தமான பட்டதாரிகள் இல்லா திருந்தனர். இப்பட்டதாரிகளுள் பெரும்பாலா னோருக்குக் கல்வி அமைச்சு ஆசிரிய நியமனங்களை வழங்கியது. இவர்களின் பாடங்களைக் கொண்டு பாடசாலைகள் பெரும் நன்மையடையும் எனக் do D(pg-tu f1 g5. ..
உலகின் ஏனைய சில பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் தமக்கெனச் சில துறைகளில் நிபுணத்துவம் பெற்றுப் புகழுடன் விளங்குகின்றன. இருபத்தி ஐந்து வருட வளர்ச்சியின் பின்னருங்கூட எமது பல்கலைக் கழகங்கள் எதுவுமே அவ்வாறு பெருமை பாராட்ட முடியாது. திறமைக்குறைவினாலோ வளங்கள் தட்டுப்பாட்டினாலோ இது ஏற்பட்டதல்ல. இதற் கான முக்கிய காரணம் எல்லா வளங்களும், திறமைகளும் சிதறுண்டு கிடந்தமையேயாகும்.
கிராமப்புறங்களில் இருந்து பல்கலைக்கழகம் வரும் மாணவர்கள் சிங்களம், வரலாறு, பாளி போன்ற பாடங்களைப் பல்கலைக்கழகங்களிலே கற்று அக்கிராமப் பாடசாலைகளுக்குப் பட்டதாரி ஆசிரியர் களாகச் சென்று அதே பாடங்களையே கற்பிக்கின் றனர். இந்நிலை எப்போதோ ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
72

எமது பல்கலைக்கழகங்கள் இம்மாணவர்கள் பாட சாலைகளில் கற்ற அதே பாடங்களைத் தொடர்ந்து கற்பதற்குத் தாராளமாக இடம் வழங்கின. மாணவர் களும் அவ்வாறே செய்ய விரும்பினர். ஏனெனில் தமக்குப் பரிச்சயமான பாடங்களை நம்பிக்கையுடன் கற்கக்கூடியதாக இருந்தது. கிராமப்புறப் பாடசாலை கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே இக்கலைப்பட்ட தாரிகளுக்கு வேலை வழங்க முடிந்தது. காலக் கிரமத்தில் வேலையற்றோர் பட்டாளத்துடன் இப்பட்டதாரிகள் சேர வேண்டியேற்பட்டது. வேறு எங்கணுமே இவர்களது சேவை வேண்டப்பட வில்லை. திட்டமிடல் அமைச்சின் பட்டதாரிகள் வேலைப்பிரிவு மேற்கொண்ட ஓர் ஆய்வு இதனை வெளிப்படுத்துகின்றது.” எனக் கலாநிதி பதியுத்தீன் மஹம்மூத் குறிப்பிட்டார்.
இத்தகைய நிலைமையொன்றை மாற்றி அமைப்பதற் காகப் பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆயினும் 1977 இல் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தோடு இம்முறை கைவிடப்பட்டது.
இலங்கையின் இரண்டாவது மருத்துவக் கல்லூரி பேராதனையில் இவரது காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டது.
வித்தியோதயப் பல்கலைக்கழகம் 1960 ஆகஸ்ட் 7இல் நடத்திய முதலாவது பட்டமளிப்பு விழாவில் இவருக்கு டி.லிட். (கெளரவ இலக்கிய கலாநிதி) பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் கலாசாரப் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கான முயற்சிகளும் 1960களில் மேற்
73

Page 40
கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி ஆகிய விரண்டையும் இணைத்துப் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான திட்ட அறிக்கையை எஸ். நடேசன் தயாரித்தார்.
அதே போன்று முஸ்லிம் கலாசாரப் பல்கலைக் கழகத்தைக் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வளவினுள் நிறுவுவதற்கான திட்ட அறிக்கையை ஏ.எம். ஏ. அஸிஸ் தயாரித்தார்.
1958 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 45ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டமையே இதற்கான உத்வேகத்தை அளித்தது.
முஸ்லிம் கலாசாரப் பல்கலைக்கழகம் நிறுவுதல் தொடர்பான தனது திட்ட அறிக்கையை 1961 மார்ச் 11 ஆம் திகதி ஏ.எம்.ஏ. அஸிஸ் சமர்ப்பித்தார். ஆயினும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பெடுத்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத் தால், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிய வில்லை.
எனினும் கலாநிதி பதியுத்தீன் மீண்டும் கல்வி அமைச் சராயிருந்த காலத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 அக்டோபர் 5ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முஸ்லிம் கல்வி முன்னேற்றம்
கலாநிதி பதியுத்தீன் கல்வி அமைச்சராகப் பதவி
வகித்த காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவைகள் அவர்களது கல்வி வரலாற்றில் பெரும் திருப்பத்தை
74

ஏற்படுத்தின. கல்வியிற் பின்தங்கியிருந்த முஸ்லிம் சமுதா யம் துரிதமாக முன்னேறுவதற்கான வழிகள் பலவற்றினை அவர் அமைத்துக் கொடுத்தார்.
முதலாவது, கல்வித் திட்டத்தில் இஸ்லாமிய இலக்கியங்களுக்குத் தனிப்பாடத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முற்பட்ட காலத்தில் இஸ்லாமிய இலக்கியங்கள் எதுவுமே பாடத்திட்டத்தில் இருக்க வில்லை. ஆனால் இப்போது இஸ்லாமிய இலக்கியங் களும் பாடத்திட்டத்திற் புகுத்தப்பட்டு முஸ்லிம் மாணவர்கள் அவற்றைக் கற்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறபு, இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் ஆகிய பாடங்களும், பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளிலும் பிரபல்யம் அடையத் தொடங்கின.
இரண்டாவது, அறபு ஆசிரியர் நியமனத்தில் சடுதியான ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள அறபு மத்ரஸா க்களில் கற்று வெளியேறும் உலமாக்கள் எவ்விதத் தொழில் வாய்ப்பு மின்றி இருந்தனர். சேர் ராஸிக் பரீத் சட்டசபை அங்கத்தவராய் இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் மெளல விகளைப் பாடசாலை களில் அறபு ஆசிரியர்களாக நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னர் இவர்களுக்கு எத்தொழில் வாய்ப்பும் இருக்கவில்லை. போதிய பொருளாதார வசதி இவர்களுக்கு இல்லா திருந்த காரணத்தினால் சமுதாய அந்தஸ்த்தும் குறைவாகவே இருந்தது. அறபு ஆசிரியர் களாக இவர்கள் நியமிக்கப்படத் தொடங்கியவுடன் நிலையான தொழில் வாய்ப்பைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. பதியுத்தீன் மஹற் மூத் அமைச்சரானதும்
75

Page 41
பெருந்தொகையான மெளல விகள் அறபு ஆசிரியராக நியமனம் பெற்றனர்.
வெவ்வேறு மத்ரஸா க்களும் மாறுபட்ட பாடத் திட்டத்தைக் கொண்டிருந்த காரணத்தால் அவற்றிற் கிடையே சமன்பா டொன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காக அல் ஆலிம் பரீட்சை இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மெளல விமார் கற்பித்தல் பயிற்சி பெறுவதற்காக அறபுப் பாடநெறி அட்டாளைச்சேனை ஆசிரிய கலா சாலையிலும், அளுத்கமை ஆசிரிய கலாசாலையிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் மெளல விமார் சிறந்த ஆசிரியர்களாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்
• لقيا الا
மூன்றாவது, ஆசிரிய நியமனங்களிலும், கல்வி நிதி ஒதுக்கீட்டிலும் திட்ட வட்டமான முறையொன்று கையாளப்பட்டது. ஆசிரிய நியமனங்கள் செய்யப்பட்ட பொழுது சனத்தொகை விகிதாசார அடிப்படையில் சிங்களவருக்கு 80 வீதமும் தமிழருக்கு 12 வீதமும் முஸ்லிம்களுக்கு 8 வீதமும் வழங்கப்பட்டன. இதனால் முஸ்லிம்கள் பெருந்தொகையாக ஆசிரிய நியமனம் பெற முடிந்தது. அதனால் கல்வித் துறையில் அவர்களிடையே மலர்ச்சியும், புதிய உத்வேகமும் ஏற்பட்டன.
நான்காவது, ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்த காரணத்தினால் ஆசிரியப் பயிற்சியிலும் அவர்களின் தொகை அதிகரித்தது. தமிழ் மொழி மூலம் விசேட பாடநெறிகள் கற்பிக்கப்பட்ட ஒரேயொரு பயிற்சிக் கலாசாலையான பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இவ்வதி கரிப்பினை எடுத்துக்காட்டும்.
76

வருடம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை
1958 O1
1959 , 24
1960 11
1961 2O
1962 58
1963 . . . . " w SO
1964 39
1965 35
1966 20
1967 27
1968 21
1969 17
1970 24
1971 157
1972 123
1973 101
1974 137
1975 151
முஸ்லிம்களுக்கான அட்டாளைச் சேனை, அளுத்கமை ஆசிரிய கலாசாலைகள் அவற்றின் ஆரம்ப காலந்தொட்டுப் பொது நெறியைப் போதிப்பனவாக மட்டுமே இருந்தன. பதியுத்தீன் கல்வி அமைச்சராயிருந்த காலத்தில் விசேட பாடநெறிகளும் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. விஞ்ஞானம்,
77

Page 42
கணிதம், சமூகக்கல்வி, தமிழ், இஸ்லாம், அறபு, ஆங்கிலம் என்பன அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விசேட பயிற்சி நெறி களாகும். இவற்றைக் கற்பிப்பதற்கான கட்டிட, தளபாட, உபகரண, விரிவுரையாளர் வசதிகளும் அதிகரிக்கப்பட்டன.
ஐந்தாவது, கல்வி நிருவாகச் சேவையிலும் பெருந் தொகையான முஸ்லிம்கள் நியமனம் பெற்றது இவரது பதவிக் காலத்திலே யாகும். மகா வித்தியாலய அதிபர் களாகவும், கல்வி அதிகாரிகளாகவும், கல்விப் பணிப்பாளர் களாகவும், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளாகவும் முஸ்லிம்கள் பதவி உயர்வு பெற்றனர்.
ஆறாவது, பெண் கல்வியிலும் பதியுத்தீன் மிகுந்த அக்கறை செலுத்தினார்.
‘சமுதாயத்தின் முன்னேற்றம் பெண் கல்வியில்தான் தங்கியுள்ளது. ஆண்கள் கல்வி பயில்வது போன்று பெண் களும் சம உரிமையுடன் கல்வி பயில்வது அவசியமாகும். ஆண், பெண் இருபாலாரும் கல்வி பயில வேண்டியதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் கலாச்சாரப் பண்புகளுக்கு அமைவாக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி போதிப்பதற்கான சகல வசதிகளை யும் ஏற்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாகும். எனவே உங்களது ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் கல்வி கற்க வசதி செய்யுங்கள். கல்வி கற்காததனால் முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பெறக்கூடிய உயர் பதவிகளை இழந்து வருகின்றனர். அறியா மையும், பிற்போக்கு மனப்பான்மையும், மூடப்பழக்கவழக்கங் களும் குடிகொண்டிருந்ததனால், சீனா சென்றாயினும் கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற பெருமானாரின் உயரிய போதனைகளையே முஸ்லிம்கள் புறக்கணித்து விட்டனர்.”
78

என பதியுத்தீன் மிக ஆணித்தரமாகப் பல சந்தர்ப்பங் களிற் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் கல்வி அமைச்சரா யிருந்த காலத்தில் முஸ்லிம் பெண் கல்வி வளர்ச்சிக்கான எல்லா ஊக்கங்களும் அளிக்கப்பட்டன. குறிப்பாக கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் அவரால் ஆரம் பிக்கப்பட்ட மகளிர் மகா வித்தியாலயங்கள் இன்று மிகத் துரிதமாக வளர்ந்து வருகின்றன.
இத்தகைய கல்விப் பணிகள் மூலம் சமீபகால முஸ்லிம் வரலாற்றில் பதியுத்தீனின் நாமம் மிக முன்னணி யில் திகழ்கின்றது. 1974 அக்டோபர் 26 ஆந் திகதி காத்தான் குடியில் ‘காயிதே மில்லத் (சமூகத் தலைவன்) பட்ட மளித்துக் கெளரவிக்கப்பட்டார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி
பெண்களின் கல்வி முன்னேற்றத்தில் பதியுத்தீன் கொண்டிருந்த இலட்சியத்தினை நிறைவேற்றுவதில் முக்கிய இடத்தினை இன்று கல்முனை மஹமூத் மகளிர் கல்லூரி வகிக்கிறது. 1968 ஆம் ஆண்டு இஸ்லாமிய சோஷலிச முன்னணியின் மகாநாடு கல்முனையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. அம்மகா நாட்டில் தலைமை உரையை ஆற்றும் போது, தான் பதவிக்கு வந்தால் அம்மகாநாடு நடைபெறும் இடத் திலேயே பெண்களுக்கான கல்லூரி ஒன்று அமைக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். வாக்களித்தது மட்டு மல்லாமல் அதனை நிறைவேற்றியும் வைத்தார்.
1970 தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட அமைச் சரவையில் பதியுத்தீன் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட குறுகிய காலத்துள், 5-1-1971 இல் மஹமூத் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மகாநாடு நடைபெற்ற இடத்திலே
79

Page 43
சாய்ந்த மருது அல் அமான் வித்தியாலயம் என ஒரு பாடசாலை இருந்தது. அரை ஏக்கர் நிலத்தில் இரு சிறு கட்டிடங்கள், ஒரு கிணறு, ஒரே ஒரு மலசலகடம் என்பன வற்றைக் கொண்ட மிகச் சிறியவொரு பாடசாலை இது வாகும். இதுவே மஹமூத் மகளிர் கல்லூரியின் முதலாவது வள வசதியாகும்.
1971 ஜனவரி 5ஆந் திகதி கல்முனை ஸாஹிரா க் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த எல்லா மாணவிகளும்; இல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய இரு ஊர்களிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருந்த 6ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவிகளும் அப்பாடசாலைகளிற் கடமை யாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளும் அங்கு அனுப்பப்பட்டனர்.
ஸாஹிரா க் கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமை யாற்றிய எம்.சி. ஏ. ஹமீத் அவர்கள் அதிபராக நியமிக்கப் பட்டார். அன்றிலிருந்து 23.09.84 வரை தொடர்ச்சியாகக் கடமையாற்றி இக்கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்கான வழிகாட்டலையும் ஸ்திரத்தன்மையையும் கொடுத்தவர் அவரே ஆவார். அவரைத் தொடர்ந்து அதிபர் பதவியில் அமர்ந்த அல்ஹாஜ் ஏ.எச்.ஏ. பஷீர் அவர்கள் இன்றுவரை அவ்வளர்ச்சிப் பாதையில் கல்லூரியை வேகமாக வழிநடத்திச் செல்வது பாராட்டுக்குரியதே.
ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் 864 மாணவிகள் சேர்ந்துவிட்டனர். அவர்களுக்கான ஒலைக் கொட்டில்கள் உடனடியாக அமைக்கப்பட்டதோடு ஏனைய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. கல்முனைத் தொகுதியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.சி. அஹமத் அவர்களுடைய தலைமைத்துவத்தில் அப்பிரதேச மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கியதன் காரணமாக இக்கல்லூரி துரித முன்னேற்றம் அடைந்தது.
80

தன்னால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தைப் பார்ப்பதற்காக 1973 செப்டம்பர் 1ஆந் திகதி வருகை தந்த பதியுத்தீனுக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப் பட்டது. அவ்வேளையில் நிலைமைகளை நேரடியாக அவதானித்து மேலும் பல வசதிகளை அவர் வழங்கினார். அரை ஏக்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இன்று 5 ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதிகளையும் கொண்டு தலைசிறந்த அகில இலங்கைக் கல்வி நிறுவன மாக விளங்கி வருகிறது. இன்று 2700 மாணவிகளையும் 100 ஆசிரிய, ஆசிரியைகளையும் விடுதியில் 150 மாணவி களையும் கொண்டு விளங்கும் இக்கல்லூரி பதியுத்தீனின் பெண் கல்வி முன்னேற்றத்திற்கான பணிக்கு நிரந்தர சான்றாகும்.
மொழிக் கொள்கை
இவரது மொழிக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படு வதைக் காண்கின்றோம். தனது பொது வாழ்வின் ஆரம்ப காலத்தில் சிங்களமே முஸ்லிம்களின் கல்வி மொழியாய் இருக்கலாம் எனும் கொள்கையைக் கொண்டிருந்தார். காலக்கிரமத்தில் இதை முற்றாகக் கைவிட்டுத் தமிழ் மொழி மூலமே முஸ்லிம்கள் கல்வி பெற வேண்டும் என வலியுறுத்தினார். நாடெங்கனும் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களின் போதெல்லாம் இக்கொள்கையினை அவர் வலியுறுத்தத் தவறியதில்லை.
இலட்சிய நோக்கு
இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் பதியுத்தீனாகும். கல்வித் துறை மலர்ச்சியின் மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்பட்டு
81

Page 44
இந்நாட்டு முஸ்லிம்களும் சிறப்பான வாழ்வை அடைய வேண்டுமென்று அவர் விரும்பினார். அவர் கூறுகிறார்:
‘என்னுடைய முழுமையான நம்பிக்கை என்ன வென்றால் இலங்கைவாழ் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்குச் செய்ய வேண்டிய முக்கிய பணி புதிய குடியரசின் வாழ்க்கையில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஈடுபடுவதாகும். சிறுபான்மை மக்களின் நல்லெண்ணம் மிக முக்கியமானதாகும். நல்லெண்ணம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டும் நம்பிக்கை கொண்டும் நாம் சும்மா இருத்தல் கூடாது. நம் நாட்டின் பல்வேறு இன மக்களிடையே துவேஷம் பரப்பும் மனிதர்களை அகற்றி நல்லெண்ணம் உருவாக்கும் நல்ல சக்திகளை பலப்படுத்துவதற்காக நாம் தீவிரமாய்ப் பாடுபட வேண்டும். முந்திய நூற்றாண்டுகளில் முஸ்லிம் கள் இஜ்திஹாத்தை (கலந்துரையாடலும் முடிவு செய்த லும்) கதவடைத்து விட்டதால் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படாமல் போய்விட்டன. புதிதாக உருவாகிவரும் தற்கால உலகிற்கு ஏற்றவாறு நமது மார்க்க ஆசாரங்களை புனரமைப்புச் செய்யும் முயற்சிகள் தொடர்பற்றன வாகவும், பயனற்றனவாகவும் அமைந்து விட்டன.
உலக அரங்கில் கெளரவமான இடத்தைப் பெற ஒரேயொரு வழிதான் உண்டு.
இஸ்லாம் காட்டிய வழியில் நின்று இன்றைய சமுதாய வாழ்க்கைக்கு ஏற்ற நடைமுறைக் கோட்பாடு களை வகுத்தலாகும். மனித அறிவு, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் எல்லைகள் பரந்து விரிந்து கொண்டிருக்கும் வேளையில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை இந்த வளர்ச்சிக்கு ஏற்ப விளங்கிக் கொள்ள வேண்டும்.
82

முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் மனிதனின் அடிப்படைச் சுதந்திரத்திலும் அடிப்படைச் சமத்துவத்திலும் அடிப்படை சகோதரத்துவத்திலும் நம்பிக்கை உடையவர் கள். நமது பரிசுத்த குர்ஆன் நம்முடைய அலுவல்களை நாம் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதால் அது ஜனநாயகத்துக்கு வழிகாட்டுகிறது.
நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமை அடை கிறோம். 1400 ஆண்டுகளாக இஸ்லாத்தின் அரவணைப்பில் வளர்ந்த விலைமதிப்பற்ற ஓவியக் கலைக்கும், கட்டடக் கலைக்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும், கவின் கலைகளுக்கும், கவிதைகளுக்கும் உரிய வாரிசுகள் என்பதில் பெருமை அடைகிறோம். அதே சமயத்தில் நமது தாய் நாடானதும் நமது மூதாதையர்கள் 2600 ஆண்டுகள் வாழ்ந்ததுமான இலங்கைக் குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம். இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்க முடியா ஒற்றுமையின் ஓர் அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் சீரிய, உன்னத கடமை என்னவென்றால் இலங்கைக் குடியரசின் ஒற்றுமைக்கும், வலிமைக்கும், இறைமைக்கும் அச்சமின்றி, சுயநலமின்றி நேர்மையாக உழைத்தலாகும்.
தினகரன் 1997 ஜூன் 18,19,2123
83

Page 45
.எம்.எ. அளபீஸ்
கலாநிதி எ
84
 

டு)
கலாநிதி அளிளவின் கல்முனைக் காலம் (1911.10.4 - 1973.11.24)
யாழ்ப்பாணத்திற் பிறந்து, கொழும்பில் விவாகஞ் செய்து, பார்ன்ஸ் பிளேஸில் மெடோ சுவீற் இல்லத்தை வாசஸ்தலமாக்கிக் கொண்ட இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியான எ.எம்.எ. அஸிஸ், தான் கல்முனையில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலத்திலேயே இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குத் தன்னாலான பூரண பங்களிப்பை வழங்குதல் வேண்டும் எனும் எண்ணம் உறுதியானதாகப் பலவிடங்களிற் குறிப்பிட்டுள்ளார்.
1942 ஏப்ரலில் அஸிஸ் கல்முனை சென்றார். இரண்டா வது உலக மகா யுத்தம் உச்சக்கட்டத்திலிருந்த காலமது. இலங்கைக்கு அரிசியும், ஏனைய உணவு வகைகளும் இறக்குமதியாகும் வழிகள் யாவும் தடைப்பட்டுவிட்டன. ஜப்பானியர் எவ்வேளையும் இந்நாட்டைத் தாக்கலாம் எனும் பேரச்சமும் நிலவியது. எனவே உணவுற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டிய அவசியத் தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதற்குப் பொருத்தமான பிரதேசங்களுள் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிரதேசமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பாரிய பணியை முன்னெடுத்துச் செல்வதற்குப் பொருத்தமானவ ரென அஸிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வேளையில் அவர் மேலதிக சுங்கப் பணிப்பாளராக மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தார். அப்பதவியையும், கொழும்
85

Page 46
பையும் விட்டு, அக்காலை மிகத் தூரத்தேயுள்ள கல்முனை செல்ல உடன் சம்மதித்தமை அவரது சேவை மனப்பான் மைக்குச் சான்றாகும்.
வடக்கே வெருகல் கங்கையிலிருந்து தெற்கே குமுக்கன் ஒயா வரை மட்டக்களப்பு மாவட்டம் பரந்து கிடந்தது. மட்டக்களப்புக் கச்சேரியிலிருந்து நிர்வாகம் நடைபெற்றது. 1942 இல் எம்.கே. ரீ. சான்டீஸ் எனும் ஆங்கிலேயர் அரச அதிபராயிருந்தார். எனினும் இப்பரந்த மாவட்டத்தின் உணவுற்பத்திப் பெருக்கத்தை மட்டக் களப்பிலிருந்து நிர்வகிப்பது கஷ்டம் என உணர்ந்ததினால், கல்முனையில் அவசர காலக் கச்சேரியொன்று நிறுவப் பட்டு, எ.எம். எ. அஸிஸ் அதன் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
தனது மனைவி உம்மு குல்தூம், நான்கு வயது மகள் மறீனா சுல்பிகா, சமையலாள் எலிஸா, சாரதி கல்தேரா ஆகியோருடன் தனது ஸ்ரன்டார்ட் 14 காரில் கல்முனை சேர்ந்தார். மகன் அலி சிறுகுழந்தையாயிருந்ததினால் உடன் கொண்டு செல்லப்படவில்லை. உம்மு குல்தூமின் மூத்த சகோதரி ஜனாபா ஜாபிர் ஏ. காதரிடம் அவர் ஒப்படைக் கப்பட்டு, அவரின் பராமரிப்பில் வளர்ந்தார்.
கல்முனை கார்மேல் மகளிர் ஆங்கிலப் பாடசாலைக்கு எதிரில் அமைந்திருந்த ஜெம்ஸ்’ எனும் வீடே அவரது வாசஸ்தலமாயிற்று. நிந்தவூரைச் சேர்ந்த முதலியார் எம்.எம். இப்றாஹீம் அவர்களே வீட்டின் சொந்தக்காரர். கல்முனை மார்க்கட் வீதியிலிருந்த டாக்டர் எம். ஒஸ்மன் அவர்களுக்குச் சொந்தமான வீடே அலுவலகமாகப் பயன்பட்டது.
தனது முதல் அனுபவத்தை அஸிஸ் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு பிராந்தியத்தின் மக்களது வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் மத்தியில் வாழ்வதே
86

சிறந்த முறை எனலாம். பட்டினச் சூழலில் வாழ்ந்த எனக்கு கல்முனை முஸ்லிம் கிராமவாசிகளின் வாழ்க்கைநெறிகள், பழக்கவழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகள், எண்ணப் பாங்குகள் ஆகியவற்றை அவர்கள் மத்தியில் வாழ்ந்து, நேரில் நன்கு அறியும் வாய்ப்புக் கிடைத்தது. கல்முனை முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் நெற்செய்கையாளர் கள். அது யுத்த காலமானதால் இவர்களின் முக்கியத்துவம் எங்களைப் போன்றவர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாயிற்று. அதற்கு முன்னர் நான் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாசார வாழ்க்கையில் கிராமவாசிகள் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தார்களென்று அறியாதிருந்தேன்.”
உணவு உற்பத்தி
அவசர காலக் கச்சேரி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் உணவு உற்பத்தியைப் பெருக்குவதேயாகும். நாடே போற்றும் வண்ணம் அப்பணியை அஸிஸ், மிகத் திறமை யாகக் கையாண்டார். அது மட்டுமல்லாது அப்பிரதேச ஏழை விவசாயிகள் பலரை மிகக் குறுகிய காலத்துள் நிலச் சொந்தக்காரராக்கினார்.
கரைவாகு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை, வேவகம்பற்று என்பன அவரது அதிகாரத்திற்குள் வந்தன. இது இன்றைய முழுமையான அம்பாரை மாவட்டமா கும். கரைவாகுப்பற்றில் முதலியார் எம்.எஸ். காரியப்பர்; சம்மாந்துறைப்பற்றில் எம்.எம். அப்துல் மஜீத் அக்கரைப் பற்றில் டப்ளியூ.எச். கனகரத்தினம்; பாணமைப்பற்றில் ஏ. சின்ன லெவ்வை வேவகம் பற்றில் எம். பி. மதுராவ ஆகியோர் வன்னியமாராகக் கடமையாற்றினர். முழு மாவட்டத்துக்குமான விவசாய உத்தியோகத்தர் எம்.எம். இப்றாஹீம் அவர்களாவார்.
87

Page 47
உதவி அரசாங்க அதிபரின் முதலாவது கூட்டம் 1942 மே 6ஆந் திகதி காலை 9.30 மணிக்குக் கல்முனை வாடி வீட்டில் நடைபெற்றது. மேற்கூறிய உத்தியோகத்தர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அன்றையக் காலக்கட்டத்தில் தமது தலையாய பணி உணவு உற்பத்தியை அதிகரிப்பதே யெனவும்; அதற்காகவே அவசர காலக் கச்சேரி ஆரம்பிக்கப்பட்டதெனவும் அஸிஸ் விளக்கினார். ஏனைய அலுவல்கள் யாவும் இரண்டாம் பட்ச இடத்தை வகிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்ற கூட்டத்திற் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. காடு வெட்டி விவசாயம் செய்வதற்காக அரச நிலத்தைப் பங்கீடு செய்தல். எவ்வளவு விரைவாக எவ்வளவு நிலத்தைப் பங்கீடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்தல்.
2. நிலத்தைத் துப்பரவு செய்ய ஓர் ஏக்கருக்கு 20 ரூபாவும்; விதைநெல் 2% புசலும் இலவசமாக வழங்குதல்.
3. செய்கை பண்ணாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களில்
விவசாயம் செய்ய உற்சாகமளித்தல்.
4. நீர்ப்பாய்ச்சல் குளங்களையும், வாய்க்கால்களையும்
புனரமைத்தல்.
5. மல்வத்தை, நிந்தவூர், திருக்கோவில் ஆகிய விடங் களில் அரசாங்க ஆட்டுப்பண்ணைகளை ஆரம்பித் தலும்; பண்ணைகளை ஆரம்பிக்கத் தனியாருக்கு ஊக்க மளித்தலும்.
6. மருதமுனை, பாலமுனை, சாய்ந்தமருது எனுமிடங் களில் அரசாங்க கோழிப்பண்ணைகளை ஆரம்பித்த லும், பண்ணைகளை ஆரம்பிக்கத் தனியாருக்கு ஊக்கமளித்தலும்.
88

7. மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்கு ஊக்கமளித்தல். 8. மாதிரிப் பண்ணையொன்று ஆரம்பித்தல்.
கூட்டம் நடைபெற்ற அடுத்த வாரமே காணிக் கச்சேரிகள் நடைபெறத் தொடங்கின. முதலாவது காணிக் கச்சேரியில் பின்வருமாறு அரசாங்க நிலம் பகிர்ந்தளிக்கப் பட்டது:
பொட்டனா வெளி, இறக்காமம் 130 ஏக்கர் உசரவெளி, இறக்காமம் 50 ஏக்கர் ஆனைவிழுந்தான், சம்மாந்துறை 100 ஏக்கர் மொட்டையான்டவெளி, சம்மாந்துறை 60 ஏக்கர் பூரான்புரி, கரைவாகு 200 ஏக்கர் கயற்றையடி, நிந்தவூர் 100 ஏக்கர் பள்ள வெளி 50 ஏக்கர்
600 ஏக்கர்
இவ்வாறு ஆரம்பித்த நிலப்பங்கீடு ஒரு வருடத்தினுள் 12000 ஏக்கர்களைத் தாண்டியது. 1943 மார்ச் 29 ஆம் திகதிய டெய்லி நியூஸ் பத்திரிகையின் கூற்றுப்படி 12270 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இவற்றுள் அக்கரைப்பற்று, கோளா வில், தம்பிலுவில், திருக்கோவில் மக்களுக்கு 4000 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1520 ஏக்கர் மேட்டுநிலச் செய் கைக்கு வழங்கப்பட்டது. செய்கை பண்ணப்படாதிருந்த 30,000 ஏக்கர் நிலம் சாகுபடியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
விவசாயிகளுக்கான பயிற்சியை வழங்குவதற்காக செங்கற்படை எனுமிடத்தில் 475 ஏக்கர் மாதிரிப் பண்ணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்பண்ணையில்
89

Page 48
நெல், கரும்பு, வாழை, குரக்கன், சோளம், கம்பு, மரக்கறி வகை, நிலக்கடலை என்பன பயிரிடப்பட்டன. 1000 தொழிலாளர் அங்கு வேலை செய்தனர். யாழ்ப்பாண விவசாயிகளின் முறைகளை அறிமுகப்படுத்துவதற்கான தனிப்பிரிவொன்றும் இங்கு செயற்பட்டது. இப்பண்ணை யிலேதான் விவசாய விருத்தியின் உச்சக்கட்டமான அறுவடை விழா ஆரம்பமானது. விழாக் குழுவின் தலைவராக அஸிஸும், செயலாளராக எம்.எஸ். காரியப் பரும் செயற்பட்டனர்.
விவசாய விழா
கல்முனை மாவட்ட அறுவடை விழாவும், விவசாயக் கண்காட்சியும் 1943 மார்ச் 27 முதல் ஏப்பிரல் 2 வரை நடைபெற்றன. அறுவடை விழா செங்கற்படை மாதிரி விவசாயப் பண்ணையில் ஆரம்பமானது. விவசாய, காணி அமைச்சர் டி. எஸ். சேனநாயக்கா, உள்நாட்டமைச்சர்
ஏ. மகா தேவா, சட்டசபை அங்கத்தவர்களான டி. எச். கொத்தலா வலை, ஏ. ஆர். ஏ. ராஸிக், எ.எஸ். தர்ம ரெத்தினம், விவசாயப் பணிப்பாளர்
ஈ. றொட்ரிகோ, அரசாங்க அதிபர் வி. குமாரசுவாமி ஆகியோர் முக்கிய அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் இத்தகைய முதலாவது விழா இதுவேயாகும். அதனால் அக்காலை வெளிவந்த ஒப்ஸேவர், டெயிலி நியூஸ், ரைம்ஸ் பத்திரிகைகள் விழாவுக்கு மிகவும் பிரசாரம் கொடுத்ததோடு ஆசிரியர் தலையங்கங்களும் எழுதின. “கவனமான திட்டமிடல், உற்சாகமான வழிகாட்டல், தொடர்ச்சியான முயற்சி என்பன இந்நாட்டின் உணவு உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதற்குக் கல்முனையில் நடை
90

பெறும் அறுவடை விழாவும், விவசாயக் கண்காட்சியும் மிகச் சிறந்த உதாரணமாகும்” என ஒப்ஸேவர் பத்திரிகை ஆசிரியத் தலையங்கம் எழுதியது.
சட்டசபை உறுப்பினர் ஏ. எஸ். தர்ம ரெத்தினத்தின் யானை பூட்டிய வண்டியில் அக்கரைப்பற்றிலிருந்து டி.எஸ். சேனநாயக்கா செங்கற்படைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாட்டு வண்டில்கள் ஊர்வலத்திற் பங்குபற்றின. செங்கற் படைப் பண்ணையில், வெல்லங்குடா எனும் காணித் துண்டில் முற்றி விளைந்திருந்த நெல்லின் முதல் கற்றையை டி. எஸ். சேனநாயக்கா அறுவடை செய்து விழாவை ஆரம்பித்து வைத்தார். யுத்த முடிவில் இப்பண்ணை மூடப்பட்டுக் காணிகள் மீளளிக்கப்பட்டன. அவற்றுள் நெடுங்காலம் எனது தந்தையார் ஷாகுல் ஹமீத் அவர்கள் செய்கை பண்ணி இன்று எனது சகோதரிகளுக்குச் சொந்த மாயிருக்கும் வெல்லங்குடா எனும் காணித்துண்டிலேதான் இவ்வறுவடை விழா நடைபெற்றது என்பதை அறியவரும் பொழுது நெஞ்சம் புளகாங்கிதமடைகின்றது.
அறுவடை விழாவைத் தொடர்ந்து ஒரு வார காலம் விவசாயக் கண்காட்சி கல்முனைப் பொதுமைதானத்தில் நடைபெற்றது. அப்பிரதேசத்தின் விவசாய விளை பொருட்கள் மட்டுமல்லாது கைப்பணிப் பொருட்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏற்பாடு செய்த எ.எம்.எ. அஸிஸையும், வெற்றிக்கு அயராது பாடுபட்ட முதலியார் எம்.எஸ். காரியப்பரையும் டி.எஸ். சேனநாயக்கா வெகுவாகப் பாராட்டினார். விழாச் செய்தியினையும் டி.எஸ். சேனநாயக்காவின் பேச்சையும் மார்ச் 29ஆந் திகதிய டெய்லி நியூஸ் பத்திரிகை மிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்தது.
91

Page 49
எந்த நோக்கத்திற்காகக் கல்முனை அவசரகாலக் கச்சேரி ஆரம்பிக்கப்பட்டதோ, எதற்காக அஸிஸ் அங்கு அனுப்பப்பட்டாரோ அந்நோக்கம் பூரணமாக நிறை வேறியிருப்பதைக் காணலாம். அதனாற்றான் நன்றியுணர்வு நிரம்பப் பெற்ற கிழக்கு மாகாண விவசாயிகள் ஒரு தொகுதி நிலப்பரப்புக்கு அஸிஸ் துரைக்கண்டம்' எனப் பெயரிட்டு இன்று வரை அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அஸிஸ் துரைக்கண்டம் எனும் பிரதேசத்தில் காணிகளைப் பகிர்ந்தளிப்பதிலும், விவசாயத்தை ஊக்குவிப்பதிலும் எம்.எம். ஹ"ஸைன் விதானையார் மிகவும் முன்னின்று உழைத்தார். காடடர்ந்த அப்பிரதேசத்தைப் பகிர்ந்தளிக்கும் வேளையிலே அவர் பாம்பினால் தீண்டப்பட்டு ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாயிருந்தார். இவர் மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் தந்தையாராவார். இத்தகைய பலரின் தியாகத்தினாலும், பெரு முயற்சியினாலும், அஸிஸ் அவர்களுக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பினாலுமே கல்முனைப் பிரதேசம் இலங்கையின் நெற் களஞ்சியமானது.
கல்விச் சகாயநிதி
பன்னூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ ருக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கிவரும் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி அஸிஸ் அவர்களினால் 1945 இல் ஆரம்பிக்கப்பட்டதென்பதை எல்லோரும் அறிவர். ஆனால் இதன் முன்னோடி முயற்சியொன்றைக் கல்முனையிலேயே அவர் ஆரம்பித்துவிட்டார்.
கல்முனையிற் கடமைபுரிந்த காலத்திலேயே முஸ்லிம் கல்வித்துறை சார்ந்த கருத்துக்கள் தம்மில் உறுதியானதாக அஸீஸ் குறிப்பிட்டுள்ளார். கல்விக் குறைவினாலும், ஏழ்மையினாலும் அல்லலுறும் ஒரு சமுதாயத்தைக் கைதுக்கி விடுவதற்கான தலைசிறந்த வழி கல்வி
·亨
g2

வழங்குவதே யென அவர் உறுதியாக நம்பினார். வ்வெண்ணமே பூரணமடைந்து அவரைப் பிற்காலத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக்கியது.
இதனைப் பற்றிக் கவிஞர் அப்துல் காதர் லெவ்வை தனது ‘என் சரிதை' எனும் நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
**கல்முனைக்கருகேயுள்ள நற்பிட்டிமுனையில் ஆசிரியனாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அஸிஸ் அவர்களும் நானும் நெருங்கிப் பழகியதனால், கல்முனை யில் மாலை வேளைகளில் அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வோம். ஒருநாள் எங்களது உரையாடலின்போது, “நான் மாத்திரம் ஸி.ஸி. எஸ் ஆகவிருப்பதிற் பெருமையில்லை. நமக்குள் பலர் ஸி.ஸி. எஸ் ஸாக உருவாக வேண்டும். இதற்கு ஒரே வழி நமது மாணவர்கள் உயர்தரக் கல்வியில் முன்னேற வேண்டும். இதற்காக நமக்கு ஒரு தனிச் சர்வகலாசாலை இப்போது தேவையில்லை. இப்போதுள்ள சர்வகலா சாலையிலேயே எமது மாணவர்கள் நுழைய வேண்டும். இதற்கு நாம் செய்யக் கூடிய ஒரே வழி முஸ்லிம் கல்விச் சகாய நிதி ஒன்றை ஆரம்பித்து அவர்களை ஊக்குவிப்ப தாகும் என்று சொன்னார்.
இதற்கு என்ன வழி என்று இருவரும் யோசித்தோம். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தோம். 'முஸ்லிம் கல்விச் சங்கம்' என ஒரு சங்கத்தைக் கல்முனையில் உருவாக்கி அதன் மூலம் இந்தச் சகாய நிதியை அங்குரார்ப்பணம் செய்வோமென்று தீர்மானித்தோம்.
முஸ்லிம் கல்விச் சங்கத்திற்குச் செயலாளர்களாகச் சம்மாந்துறை டாக்டர் மீரா லெப்பை, காத்தான்குடி எம்.எம். முஹம்மது ஆகிய இருவரையும் தெரிவு செய்தோம்.
93

Page 50
இச்சங்கத்தின் கூட்டம் பாணமையிலிருந்து காத்தான் குடி வரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வன்னியமார் பிரிவிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்வாறு சங்கம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான், முஸ்லிம் கல்விச் சகாய நிதியை அங்குரார்ப்பணம் செய்வதற்காக ஜனாப் எம்.எஸ். காரியப்பரின் சகலனான ஜனாப் சரீப் விதானையின் வீட்டில் இராவிருந்துடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். இக்கூட்டத்திற்கு ஜனாப் எம்.எஸ். காரியப்பர் முதல் வேறு பலரும் சமூகமளித்திருந் தனர். கூட்டத்தின் நோக்கம் பற்றி நண்பர் ஜனாப். எ.எம்.எ. அஸிஸ் விளக்கினார். மற்றும் விரிவான விடயங்களைப் பற்றி என்னைப் பேசுமாறு ஜனாப் அஸிஸ் அவர்கள் கூறினார்கள். அதற்கிணங்க முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் தேவைகளைப் பற்றி விளக்கிக் கூறினேன். அவற்றைக் கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்த பலரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அன்றே முஸ்லிம் கல்விச் சகாய நிதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இவ்வாறு 1942 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை முஸ்லிம் கல்விச் சங்கத்துக்கு நிதியுதவி செய்யுமாறு அதன் தலைவரும், பொருளாளருமான அஸிஸ் பின்வரும் வேண்டுகோளை அச்சிட்டுப் பலருக்கு அனுப்பினார்.
“இலங்கை முஸ்லிம்களினதும், குறிப்பாக கல்முனை அவசரகால மாவட்ட முஸ்லிம்களினதும் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காகச் சமீபத்தில் இச்சங்கம் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது. பின்வரும் விடயங்களுக்குத் தற்போது நிதி தேவைப்படுகிறது: (1) சங்க நிர்வாகம்; (2) கல்முனைப் பகுதியில் ஆங்கில மொழி மூலமான உயர் பாடசாலை ஒன்றை நிறுவுதல் (அறபு/தமிழ்ப் பிரிவுகள் உட்பட); (3) கல்முனை மாவட்ட முஸ்லிம் மாணவர் இடைநிலைக் கல்வி உயர்கல்வி பெறுவதற்காக
94

இலவசமாகவோ/கடனாகவோ புலமைப்பரிசிலகள் வழங்கல்; (4) மேற்கூறியவற்றை அடைவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தல். போதிய நிதி சேர்ந்தவுடன் எத்தகைய பணிகளில் ஈடுபடுவது என்பதைப் பற்பச் சபையின் நிர்வாகக் குழு தீர்மானிக்கும்.
இக்குறிக்கோள்களை அடைவதற்காகச் சகலரும் நிதியுதவுமாறு வேண்டப்படுகின்றனர்.
நன்கொடைகளுக்கான பற்றுச் சீட்டுக்கள் தனித்தனி யாக என்னால் வழங்கப்படும்.”
எனினும் இத்திட்டத்தினை ஆரம்பித்துச் சில மாதங் களுள் கொழும்புக்கு அவர் இடமாற்றஞ் செய்யப்பட்ட காரணத்தினால் அவரது திட்டங்களை அங்கு நிறைவேற்ற முடியாது போயிற்று.
கொழும்புவில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பொழுது, அதன் முதலாவது நன்கொடை கல்முனைச் சங்கத்திலிருந்து வழங்கப்பட்ட ரூபாய் 2306/70 ஆகும்.
இதனைப் பற்றி அnஸ், 1946 ஜூலையில் வெளியான இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் இரண்டாம் ஆண்டு அறிக்கையிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இலங்கை முஸ்லிம்களினதும், குறிப்பாக கல்முனை அவசர கால மாவட்ட முஸ்லிம்களினதும் கல்வி மேம் பாட்டுக்கு உதவுமுகமாகவே கல்முனை முஸ்லிம் கல்விச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஆரம்பிக்கப் பட்டுள்ள இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி, அகில இலங்கை ரீதியாக விரிந்த நோக்கத்தைக் கொண்டிருப்ப தனால், தனது நிதியனைத்தையும் இதற்கே வழங்குவதென அச்சங்கம் தீர்மானித்தது."
95

Page 51
தொடர்பில் முகிழ்த்த உறவுகள்
கல்முனைப் பிரதேசத்தில் மிகக் குறுகிய காலமே அஸிஸ் வாழ்ந்தார். 1942 ஏப்பிரலில் அங்கு சென்றவர் 1944 ஜனவரி 10ஆந் திகதி இடமாற்றலாகிக் கொழும்பில் பிரதி உணவுக் கட்டுப்பாட்டாளராகக் கடமையேற்று, ஒரு மாதத்தின் பின்னர் கண்டி உதவி அரசாங்க அதிபராகச் சென்றார்.
குறுகிய காலமே அங்கு வாழ்ந்தாலும் , அவரது பெயர் நிலைக்கக் கூடியவாறு மக்களுடன் மிக அந்நியோன்ய மாகப் பழகினார். அழைக்கப்படும் கல்யாண வீடுகள் அனைத்துக்கும் போவார். நண்பர்கள், அறிஞர்களைக் காண அவர்கள் வீடு தேடிச் செல்வார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜ"ம் ஆத் தொழுகைக்கு வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வார். வீடு தேடி வரும் அனைவரையும் உபசரிப்பார். 1940 தசாப்தத்தில் இப்பழக்கங்கள் மக்களுக் குப் புதுமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. அரச அதிபர் என்றால் அவர் ஒரு “குட்டி ராசா', அவரது வாகனம் வீதியால் வருகிறதென்றால் மக்கள் அனைவரும் வீதியை விட்டிறங்கி ஒதுங்கி நின்று மரியாதை செலுத்திய காலம்; அரச அதிபர் முன் யாரும் அமர மாட்டார்கள் கைகட்டி, வாய்பொத்தி நிற்பர். அவருடன் கதைக்கப் பயப்படுவார் கள். இப்படியான காலகட்டத்தில் அஸிஸ் பெரும் புதுமையான ஒருவராக மக்களின் கண்களுக்குத் தென் பட்டார். அதனால் அவரது மதிப்புப் பெரிதும் உயர்ந்தது; மக்கள் அவரை மிகவும் நேசித்தனர்.
தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மூத்த சகோதரர்போல் விளங்கியதாக அவர்களிற் பலர் கூறுவர். கல்முனைக்குச் சென்று மூன்று மாதங்களில் காத்தான் குடியைச் சேர்ந்த இப்றாஹீம் என்பவர் இவரது கார்ச் சாரதியாகச் சேர்ந்தார். அஸிஸ் இறக்கும் வரை
96

அவருடனேயே பணியாற்றினார். அதற்குப் பின்னருங்கூட 1996 இல் தமது 80 ஆவது வயதில் இப்றாஹீம் இறக்கும் வரை, அஸீஸின் மூத்த புதல்வர் அலியின் பொல் கொடைவாவிப் பண்ணையிலேயே வாழ்ந்து வந்தார்.
அஸிஸ் அவர்கள் கல்முனைக்குச் செல்லும் பொழுது நான்கு வயதான மகள் சுல்பிகா மறீனாவும் கூடச் சென்றார். தனது ஆரம்பக் கல்வியை வீட்டிற்கு முன்னா லிருந்த கார்மேல் மகளிர் ஆங்கிலப் பாடசாலையிலேயே ஆரம்பித் தார். அங்கிருந்த கன்னியாஸ்திரிகளும், கல்முனைப் பங்குத் தந்தை அருட்திரு மெலிக்கன் அவர்களும் தம்மீது காட்டிய அன்பையும் பரிவையும் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறார். மகன் அலி மூன்று மாதப் பிள்ளையாகையினால் அங்கு கொண்டு செல்லப்படவில்லை. எனினும் தந்தையின் கல்முனைக் காலத்து ஆவணங்களை இன்றுவரை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.
கல்முனையில் உடன் பணிபுரிந்த நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம்; உதவியாளர் யூனுஸ், பொன்னுத்துரை; தோட்ட ஊழியர் பாக்கியநாதன் என்போர் இரண்டு வருடங்களுக்குக் குறைவாகவே அவருடன் பணிபுரிந் தாலும்; அடுத்த வீட்டில் வாழ்ந்த பொது மராமத்து இலாகாவில் பணிபுரிந்த ராஜதுரை, அவரது மனைவி டெய்ஸி ஆகியோர் அவரைச் சிறிது காலமே அறிந்திருந் தாலும், அவரது றுதிக்காலம் வரை தொடர்பறாது வைத்திருந்தனர். இது போன்றே அங்கு அறிமுகமான மருதமுனை வெள்ளைக் குட்டிக் காக்கா, பாலமுனை விதானையார், பாலமுனைப் புலவர் என்போர் தத்தமது இறுதிக் காலம் வரை குடும்பத்தோடு கொழும்புக்கு வந்து அஸிஸின் பார்ன்ஸ் பிளேஸ் இல்லத்தில் மிகுந்த உபசரிப்புடன் தங்கிச் செல்வர்.
அங்கு வாழ்ந்த காலத்தில் சில குடும்பங்களுடன் அஸிஸ் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். சம்மாந்துறை
97

Page 52
வன்னியனார் என அழைக்கப்பட்ட எம். எம். அப்துல மஜீதுடைய குடும்பம் அவற்றுள் ஒன்றாகும். சாய்ந்த மருதுவிலுள்ள அவரது வீட்டிலேயே கல்முனை முஸ்லிம் கல்விச் சங்கத்தையும் அதன் சகாய நிதியையும் ஆரம்பிப் பதற்கான பூர்வாங்க ஆலோசனைக் கூட்டங்கள் பல நடை பெற்றன. இன்றைய கப்பல் துறை, துறைமுகங்கள், புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் பெரிய தந்தையே எம்.எம். அப்துல் மஜீத் வன்னியனாராவார். அடுத்தது, பிற்காலத்தில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமாய்ப் பணிபுரிந்த நிந்தவூரைச் சேர்ந்த முதலியார் எம்.எம். இப்றாஹீம் அவர்களது குடும்பமாகும்.
இவற்றுடன், அஸிஸின் வாழ்வில் நீடித்து நிலைத்த இருவரது தொடர்புகள் கல்முனையிலேயே ஏற்பட்டன. ஒருவர் சுவாமி விபுலாநந்தர்; அடுத்தவர் கவிஞர் அப்துல் காதர் லெவ்வை.
சுவாமியுடனான தொடர்பைப் பற்றி அஸிஸ் பல கட்டுரைகளில் எழுதியுள்ளார். கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயத்தை நிறுவி சாதி, மத, இன பேதமற்ற முறையில் கல்வியை அள்ளி வழங்கியவர் சுவாமி விபுலாநந்தர். பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ், அறிஞர் எஸ். எம். கமால்தீன் ஆகியோர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவரது மாணாக்கராவர். மருத முனைப் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் சுவாமி யிடம் கல்முனையில் பாடங்கேட்டவர்; சாய்ந்த மருது முத்தலிபு வைத்தியர் சுவாமியின் மிக நெருங்கிய நண்பர்.
இதே வகையில் அஸீஸ் அவர்கள் 1939 இல் சுவாமியை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை சந்தித்தார். அதன் பின்னர் 1943 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று சின்னமுகத்து
98

வாரம் எனுமிடத்தில் சட்டசபை உறுப்பினர் வீ. நல்லையா வையும், சுவாமியையும் சந்தித்ததோடு ஆரம்பித்த நெருக்கமான உறவு சுவாமியின் இறப்புவரை மிகப் பலமாயிருந்தது. தனது பிறந்தகமான காரைதீவில் தங்கியிருக்கும் வேளைகளில் அல்லது மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கடி சென்று விபுலானந்தரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவார். சில மாலை வேளைகளில் ஐந்து மணிவாக்கில் சுவாமியின் அறையின் முன்னால் உள்ள வேப்ப மரத்தின் கீழ் இரு கதிரைகள் போடப்பட்டிருக்கும். அப்படிப் போடப் பட்டிருந்தால் அன்று மாலை சுவாமியைச் சந்திக்க உதவி அரசாங்க அதிபர் வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும் எனப் பேராசிரியர் பி. சந்திரசேகரம் குறிப்பிட்டுள் ளார். சிவானந்தா வித்தியாலய விஞ்ஞான சங்கத்தின் அழைப்பின் பேரில் 24.9.43 இல் அஸிஸ் அவ்வித்தியாலய மாணவரிடையே சொற்பொழிவாற்றினார். கே. கணபதிப் பிள்ளை கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சுவாமியுடனான தனது தொடர்பு பற்றி அலீஸ் பின் வருமாறு கூறுகிறார்: “நான் 1942-43 ஆம் ஆண்டுகளில் கல்முனை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய வேளையில் சுவாமி விபுலாநந்தரோடு தெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறிது காலம் கல்முனையில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள தனது பிறந்த ஊரான காரைதீவில் அவர் தங்கியிருந்தார். பின்னர் 1944இல் கண்டி உதவி அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான மெளன்ட் எயிறி’ எனும் வீட்டில் என்னுடன் பனிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். இவ் வேளையில் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியைத் துறந்து, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவியை ஏற்றிருந்தார். இப் பன்னிரு நாட்களும் சுவாமி விபுலாநந்தரை மிக
99

Page 53
அந்நியோன்யமாக அறிய முடிந்தது. அநேக விடயங் களையிட்டு மனந்திறந்து உரையாடினோம். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியை ஆரம்பித்துத் தளராது நடாத்திச் செல்வதற்கும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் பதவியை ஏற்று நடாத்துவதற்கும் இக் கலந்துரையாடலின் போது நான் உருவாக்கிய கருத்துக்கள் துணையாக இருந்தன. அறபு-தமிழ் அகராதி ஒன்றின் தேவையை வற்புறுத்தியும் அதை ஆக்குவதற்குத் தான் உதவி அளிக்க முடியும் என்றும் கூறினார். மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்களிடையே வழக்கில் இருந்து வரும் நாட்டார் பாடல்களின் சிறப்புத் தன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறினார். கிழக்கு மாகாணத்தைப் பற்றிய அவரது அறிவை யும் அனுபவத்தையும் கொண்டு, அப்பகுதி மக்களுக்கு மத, இன, சாதி வேறுபாடுகளின்றித் தமது சமய முன்னேற்றத் திற்கும், கல்வி வளர்ச்சிக்கும், சமுதாய எழுச்சிக்குமான அவசர உதவிகள் தேவைப்படுகின்றன எனக் கருதினார். இதற்கான தலைமைத்துவம் கல்வி அறிவுள்ள, சம்யப் பற்றுள்ள, தூய மனமுடையவர்களிடமிருந்தே வரமுடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.”
இதே போன்ற இன்னொரு தொடர்பு கவிஞர் அப்துல் காதர் லெவ்வையுடனாகும். அதனைப் பற்றிக் கவிஞரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘எனது கவிதைகள் தாருல் இஸ்லாத்தில் வெளி வருவதைக் கண்ட ஜனாப் எ. எம்.எ. அஸிஸ் அவர்கள் அதான் என்ற புனைப்பெயருட் புதைந்து கொண்டிருப்பது யார் என்று தேடிக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் முஸ்லிம்களுக்குள் ஸி.ஸி.எஸ். பதவி பெற்றவரும், சமூக சேவையில் ஆர்வமுள்ளவரும், தமிழ் அறிஞரும், கல்முனை முஸ்லிம்களால் மதிக்கப்பட்ட வருமாக ஜனாப் அஸிஸ் அவர்கள் இருந்தார்கள். இவர்
100

கல்முனையில் உதவி அரசாங்க அதிபராக (ஏ.ஜி.ஏ) இருக்கும் போது ஒருநாள் இவரைச் சந்திக்க இவரது வீட்டுக்குச் சாதாரணமாகச் சென்றேன்.
என்னைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்று 'நீங்கள் யார் என்று கேட்டார். நற்பிட்டிமுனைத் தமிழ்ப்பாடசாலையில் உதவியாசிரியராகச் சேவையாற்றிக் கொண்டு, கல்முனையில் தங்கியிருக்கிறேன் என்றேன். அன்று அவரது மேசையில் தாருல் இஸ்லாம் பத்திரிகை ஒன்று இருந்தது. அதில் எனது கவிதை ஒன்று முதற்பக்கத்தி லேயே காணப்பட்டது. அக்கவிதையைக் கண்டதும், அதான் என்ற புனை பெயரில் நானே இந்தக் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டேன்.
இதைக் கேட்டதும் அவர் ஆனந்தக் களிப்பால் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். இதை எழுதும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது. இதிலிருந்து எங்களுக்கிடையிலுள்ள தொடர்பு மிக நெருக்கமாக வளர்ந்து கொண்டு வந்தது. இதன் மூலம் எம்மிருவருக்கு மிடையில் சிந்தனைப் பரிமாற்றம் தொடர்ந்து நடை பெற்றது. அவர் காலமாவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர், இறுதியாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார் அப்துல் காதர் லெவ்வை.
அறிஞர் அஸிஸின் தன்னலங் கருதாச் சேவையினை யும்; கிழக்கு மாகாணத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நிலவிய சமய, இன நல்லுறவுப் பிணைப்புக்களையும் எடுத்துக்காட்டுவனவாக அவரது பிரியா விடை வைபவங்கள் அமைந்தன. அவர் மாற்றம் பெற்றுச் செல்லும் போது கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப் பற்று, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி எனுமிடங்களில்
101

Page 54
பிரமாண்டமான வைபவங்கள் நடைபெற்றன. பிரதான வைபவம் கல்முனை வாடி வீட்டில் சட்டசபை உறுப்பினர் வீ. நல்லையா தலைமையில் நடைபெற்றது. பிரியாவிடை உரையை சட்டத்தரணி ஈ. இராசையா நிகழ்த்தினார்.
அஸிஸின் துணைவியாருக்குப் பிரத்தியேகமான பிரியா விடை வைபவம் தடைபெற்றது. கல்முனை மெதடிஸ்த பெண்கள் விடுதிப் பாடசாலையில் திருமதி எஸ்.ஜே.டபிள்யூ. அளகையா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருமதி பி. கதிரவேலுப்பிள்ளை முக்கிய உரை நிகழ்த்தினார். அக்கால கட்டத்தில் அப்பிரதேசத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவிய அந்நியோன்ய நிலையை இந்நிகழ்ச்சிகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. சமீப காலத்து நிலையைப் பார்ப்பதற்கு அஸிஸ் வாழ்த்திருந்தால் எவ்வளவு மனவருத்தமடைந் திருப்பார்.
அஸிஸ் அவர்களின் கிழக்கு மாகாண வாழ்வு குறுகியதாயிருந்தாலும் அப்பிரதேச மக்கள் மேல் ஆழமான பாசத்தினை அவரில் ஏற்படுத்திவிட்டது. அதனாற்றான் போலும் பிற்காலத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிற் பயின்ற என்போன்ற அம்மாகாண மாணவர்கள் மேல் மிகுந்த அன்பு செலுத்தி, முறையாக வழிகாட்டினார். அதனாலேயே இன்றும் நாம் அவரை நினைவுகூர்கிறோம்.
தினகரன்
1996 நவம்பர் 24 டிசம்பர் 01
102

103

Page 55
@
பித்தன் வஷா (1921.7.31 - 1994.12.15)
1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆந் திகதி.
பித்தன் ஷாவுடனான் எனது மூன்றாவது சந்திப்பு அன்றுதான் நிகழ்ந்தது. முதலாவது சந்திப்பு அதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் கோட்டைமுனைப் பாலத்தடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஒரியண்ட் ஹோட்டல் மனேஜராக அவர் கடமையாற்றியபொழுது அங்கு நடைபெற்ற விருந்துபசாரமொன்றின் போது இரண்டாவது முறையாகச் சந்தித்தேன்.
இம்முறை பித்தனைத் தேடிச் சென்றதற்கான காரண மொன்றுண்டு.
1983ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தினை நிறுவினோம். இப்பணியகத் தின் மூலம் பித்தனுடைய சிறுகதைத் தொகுதியினை வெளியிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரை யாளராகக் கடமையாற்றிய மட்டக்களப்பைச் சேர்ந்த ரி. பொன்னம்பலம் என்பவர் மூலம் பித்தனை நாம் சந்திக்க வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட தினத்தில் எனது ஒன்று விட்ட சகோதரர் ஏ.கே.எம். நியாஸ், எனது மாணவன் மருதூர் அலிக்கான், நான் ஆகிய மூவரும் அங்கு சென்றோம்.
மட்டக்களப்பு நகரத்தின் வட எல்லையில் அமைந் துள்ள கல்வியங்காடு (வெட்டுக்காடு எனவும் அழைக்கப்
104

படும்) எனும் பகுதியிலுள்ள முஸ்லிம் கொலனியில் அவர் வசித்து வந்தார். காலை 9.00 மணியிலிருந்து நண்பகல் 1.00 மணிவரை அவருடன் அளவளாவினோம். ஆயினும் நாம் என்ன நோக்கத்திற்காக அவரைத் தேடிச் சென்றோமோ அது நிறைவேறவில்லை. ஏனெனில் அவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியோ அல்லது அச்சில் வெளிவந்த பிரதியோ எதுவுமே அவர் கைவசம் இருக்க வில்லை. அநேகமானவை 1978ஆம் ஆண்டு சூறாவளியில் அழிந்துவிட்டன. எஞ்சியிருந்த சிலவற்றினையும் சிறுகதைத் தொகுதி போடுவதாகக் கூறி ஒரிரு நண்பர்கள் கொண்டு சென்றுவிட்டனர். எமது நோக்கம் நிறைவேறாதுவிடினும் பித்தன் ஷாவோடு அளவளாவிப் பல தகவல்களைப் பெறக் கிடைத்தமை ஒரு வகையில் பயனுடைத்தே.
மட்டக்களப்பில் கோட்டைமுனை எனும் பகுதியில் 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதி ஷா பிறந்தார். தந்தையின் பெயர் இப்றாஹீம் கலந்தர்; தாயார் பெயர் உசன் பீவீ. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் மீராஷா அதுவே பிற்காலத்தில் ஷா எனச் சுருங்கியதோடு, "பித்தன் எனும் புனைப்பெயரும் ஷாவுடன் இணைந்து கொண்டது. உடன் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரிகள் நால்வர். அரசடியில் உள்ள சென் அன்ரூஸ் அங்கிலிக்கன் பாடசாலையிற் படித்தார். படிப்பில் ஆர்வமாயிருந்தாலும் துப்பறியும் கதைகள் வாசிப்பதில் அதைவிட அக்கறை காட்டினார். ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள், கோதைநாயகி அம்மையாரின் ஜெகன் மோகினி போன்ற கதைகள், பக்கிம் சந்தர், சரத் சந்தர், தாஹ"ர் ஆகியோரின் வங்காள நூல்களின் மொழி பெயர்ப்புகள், புதுமைப் பித்தனின் கதைகள், காண்டேகரின் எழுத்துக்கள் என்பனவற்றைத் தேடித் தேடிப் படித்தார். படிப்பிலுள்ள ஆர்வம் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும், நாவல்
105

Page 56
களையும் வாசிப்பதில் திரும்பிய காரணத்தினால் ஜே.எஸ்.ஸி. பரீட்சையில் சித்தியடையத் தவறிவிட்டார்.
பரீட்சையில் சித்தியடையத் தவறிய வெட்கத்தினால் வீட்டை விட்டுச் சில நாட்கள் வெளியே வரவில்லை. எங்காவது ஒடிப் போய்விட வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பார்க்க வேண்டும் எனும் அடிமனதில் கிடந்த எண்ணம் மேலோங்கி மீரா ஷாவை ஆக்கிரமித்தது. அதன் விளைவாய் தனது 18ஆவது வயதில், 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ந் திகதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இந்தியா
பயணமானார். W
AgligíluJú UILIszorút
அது ஒரு வெள்ளிக்கிழமை, தாயார் உசன் பீவி குளித்துக் கொண்டிருந்தார். வீட்டில் எவருமே இல்லை. பெட்டியிலிருந்து போதுமான பணத்தை எடுத்துக் கொண்டு பஸ்ஸேறினார். வாழைச்சேனை வரை பஸ்ஸில் சென்று அங்கிருந்து புகையிரதம் மூலம் கொழும்பை அடைந்தார். கொழும்பிலிருந்து மதுரை சென்று, அங்கிருந்து சென்னையை அடைந்தார்.
சென்னையில், அங்கப்ப நாயக்கன் தெருவில் வசித்துக் கொண்டு லிங்கிச் செட்டித் தெருவிலிருந்த ஸ்டார் பிரஸில் எடுபிடிப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். இங்கு தான் புதுமைப்பித்தனைச் சந்தித்து அவருடன் தனது நெருங்கிய நட்பினை வளர்த்துக் கொண்டார். இந்நட்பின் விளை வாகவே எழுத்துலகில் பிரவேசித்து ‘பித்தன்' எனும் புனைப் பெயரையும் சூடிக் கொண்டார். பி. எஸ். ராமையா, சீனிவாசன் போன்றவர்களின் தொடர்பும் இவ்வச்சகத்தி லேயே கிடைத்தது.
106

சில மாதங்களின் பின்னர், தான் இந்தியாவில் இருப்பதைப் பற்றித் தாயாருக்குக் கடிதம் அனுப்பினார். ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என ஆசி கூறித் தாயார் 30 ரூபா பணமும் அனுப்பி வைத்தார்.
ஒய்வு நேரங்களில் சென் ஜோர்ஜ் கோட்டைப்பக்கம் காலாறச் செல்வார். இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. இராணுவத்திற்கு ஆட்சேர்த்துக் கொண்டிருந்தனர். கோட்டையருகில் நடைபெறும் இராணுவப் பயிற்சிகளை யும், இராணுவத்தினரின் உடை, நடையின் மிடுக்கினையும் பார்க்கும் பொழுது ஏன் தானும் அதில் சேரக் கூடாது எனும் ஆவல் மே லிட்டது. அதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் வரிசையில் ஒரு நாள் காலை இவரும் போய் நின்றார். உடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெங்களூரில் ஒன்பது மாதம் பயிற்சியின் பின்னர் யுத்தமுனைக்கு அனுப்பப்பட்டார். ஈரான், எகிப்து, பலஸ்தீனம், தியுனிஸியா, ஈராக், சைப்பிரஸ் ஆகிய தேசங் களின் யுத்த முனைகளில் போரிட்டு லான்ஸ் கோப்பரல், சார்ஜன்ட் ஆகிய பதவி உயர்வுகளும் பெற்று யுத்த முடிவில் இராணுவத்திலிருந்து விலகி 1947 ஜனவரி 13 ஆந் திகதி
இலங்கை திரும்பினார்.
தொழிலில் ஈடுபாடு
நாடு திரும்பும் பொழுது கையில் போதிய பணமிருந்தது. அதனால் கார் வாங்கும் ஆசை ஏற்பட்டு ஆங்கிலப் பாதிரியார் ஒருவரிடம் 3250 ரூபா வுக்கு ஸ்டான்டர்ட் 8 எனும் காரை வாங்கினார். மட்டக்களப்பில் ஓரிரு கார்களே இருந்த காலமது. அதனால் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை (இன்றைய பெறுமதி மூன்று லட்சம் ரூபாவுக்கு மேல்) வெறுமனே ஒரு வாகனத்தில்
107

Page 57
முடக்கி வைக்காது அவ்வாகனத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாமே எனப் பலர் கூறிய ஆலோசனையின் பேரில், தானே சாரதியாக இருந்து வாடகைக்கு ஒடத் தொடங்கினார். ஓர் ஆசிரியரின் பாரிய பாய்க்கட்டு, பெட்டிகள் என்பனவற்றை ஏற்றிக் கொண்டு களுதாவளைக்குச் சென்றதே முதலாவது பயணமாகும். ஆனால் அதற்கான கூலி சரிவரக் கிடைக்கவில்லை. அடுத்ததாக அக்கரைப்பற்றுக்குப் பயணமானார். அங்கும் கூலியைப் பிறகு தருவதாகக் கூறிச் சென்றவர் பின்னர் வரவேயில்லை. இவர் ஓடிய ஒட்டத்திற்கெல்லாம் பணம் கிடையாமல் நட்டம் ஏற்பட்டதினால் பதினைந்தாவது நாளே காரை விற்றுவிட்டார்.
அதன் பின்னர் பைசிக்கிள் வாடகைக்கு விடும் தொழிலையும், படம் பிரேம் பண்ணும் தொழிலையும் ஒன்றாகவே ஆரம்பித்தார். வாடகைக்குப் போன இரண்டு சைக்கிள்கள் திரும்பி வரவில்லை. 9 மாதங்களாக நடை பெற்ற இத்தொழிலிலும் நட்டம் ஏற்பட்டதினால் கடை மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சப்பாத்து விற்பனைக் கடை ஒன்றினைத் தொடங்கி, அதனுடன் தையல் தொழி லையும் ஆரம்பித்தார். அதுவும் நட்டத்தில் முடிந்தது. வெளி நாட்டிலிருந்து கொண்டு வந்த பணம் முற்றாக முடிந்து, பணத்தட்டுப்பாடு தலையை நீட்டி எட்டிப் பார்த்தது.
தையல் தொழில் செய்யும் போது, கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இங்கினியா கலையில் தொழில் புரிந்த ஹேர்மன் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது. தனது மகளின் பொம்மைக்கு உடுப்புத் தைப்பதற்காக ஹேர்மன் இவரைத் தேடி வந்த தொடர்பு பின்னரும் நீடித்தது. இதன் மூலம் இங்கினியாகலையில் 1950ஆம் ஆண்டு பாரம் தூக்கும் எந்திரச்சாரதியாக வேலை கிடைத்தது. கையில் கொஞ்சம் பணமும் சேர்ந்தது.
108

இதே ஆண்டில் ஹஜ்ஜி உம்மா என்பவரை விவாகஞ் செய்தார். இவ்விவாகத்தின் மூலம் ஷாவுக்கு மூன்று ஆண்மக்களும் ஆறு பெண் மக்களும் உள்ளனர்.
கையில் சேர்ந்த காசைக் கொண்டு 1952 ஆம் ஆண்டில் கோட்டை முனையில் சில்லறைக் கடை ஒன்றினை ஆரம்பித்தார். சில மாதங்களுள் பங்குரோத்தானது. கடனுக்குப் பொருட்களைக் கொடுத்ததே காரணமாகும். அதனைத் தொடர்ந்து நீர்ப்பாசன இலாகாவில் இலிகிதராகச் சேர்ந்து அம்பாரை, கல்முனை, அனுராத புரம், மகாவில்லாச்சி எனும் இடங்களிற் பணிபுரிந்தார். ஆயினும் 1957இல் நடைபெற்ற வேலை நிறுத்தமொன்றில் பங்கு பற்றியதன் காரணத்தினால் பதவி பறிபோனது. 1957 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நகரம் பாரிய வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோது தோணியில் வீடு வந்து சேர்ந்தார்.
இலிகிதர் உத்தியோகம் பார்த்த காலத்தில் கொஞ்சம் பணம் சேர்ந்திருந்தது. சொந்தத்தில் தொழில் பார்க்கும் ஆசை மீண்டும் தலை தூக்கியது. அதனால் 1958 இல் மட்டக் களப்பிலிருந்த இளங்கோ அச்சகத்தைக் குத்தகைக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தார். திடீரென ஒருநாள் அரச விரோதப் பிரசுரங்கள் இவரது அச்சகத்தில் அச்சிடப்படுவதாகக் கூறிப் பொலிஸார் முற்றுகையிட்டனர். அச்சகம் சீல் வைக்கப் பட்டு ஆறு மாதங்கள் பூட்டிக் கிடந்தது. இவரும் சில நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். இதன் விளைவாக அச்சகத் தொழிலில் 6000/- ரூபா நட்டமேற்பட்டு அதுவும் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு கலைவாணி நூல் விற்பனை நிலையத்தில் ஒரு வருடமும், 1965 ஆம் ஆண்டு ஒரியன்ட் ஹோட்டல் மனேஜராகவுஞ் சேர்ந்து சில காலம் பணிபுரிந்தார்.
109

Page 58
1968ஆம் ஆண்டு மட்டக்களப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த தாஹிர் என்பவர் அங்கிருந்த உணவுச்சாலையை நடத்துமாறு கூறினார். ஆறு மாதங்களில் அங்கும் 1500/- ரூபா நட்டமேற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் வலையிறவுப் பாலத் திட்டத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணிபுரிந்தார். அத்துடன் தொழில் பார்க்கும் படலம் முடிந்தது.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொட்ட தொழில் கள் அனைத்தும் நட்டத்தில் முடிந்ததோடு பாடுபட்டுச் சேர்த்த பணமும் அவரை விட்டுப் போய்விட்டது. இவரது அளவுக்கு மீறிய இரக்க சிந்தையும், எல்லோரையும் பூரணமாக நம்பும் குணமுமே அதற்கான காரணங்களாகும்.
வாழ்வில் எவ்வளவுதான் இடர்ப்பாடுகள் ஏற்பட்ட போதும் ஷா மனந்தளரவில்லை. 1967 இல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் 6ஆம் வட்டாரத் தில் போட்டியிட்டார். 260 முஸ்லிம் வாக்காளர்களையும், 600 தமிழ் வாக்காளர்களையும் கொண்டது இவ்வட்டாரம். தேர்தல் செலவுகளுக்காக இவரின் தங்கை 1000- ரூபாவும், சாச்சா முறையானவர் 500/- ரூபாவும் பணவுதவி வழங் கினர். ஆயினும் இத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இலக்கியப் பணி
தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள், இவரின் இலக்கியப் பயணத்தைப் பாதித்ததாகத் தெரிய வில்லை. இளமைப் பருவத்தில் மணிக்கொடி, கலைமகள், சந்திரோதயம் ஆகிய சஞ்சிகைகளை விரும்பிப் படிப்பார். இலக்கியத்துறையில் பங்களிப்பைச் செய்வதற்கான தூண்டுதல்களை எஸ்.ரி. சிவநாயகம், பரமஹம்ஸதாசன், அன்புதாஸன் ஆகியோர் தொடர்ந்து வழங்கிக் கொண் டிருந்தனர்.
110

பக்கத்துத் தெருவில் வாழ்ந்த செ. இராசதுரை அவர்களின் தொடர்பு இவரது இலக்கிய ஆர்வத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. பிற்காலத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநகர சபை முதல்வர்ாகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய செ. இராசதுரை அவர்களும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையிற் பிற்காலத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய எம்.எஸ்.ஏ. அஸிஸ் அவர்களும் பித்தனும் சேர்ந்து 1949 ஒக்டோபர் 2 ஆந் திகதி "லங்கா முரசு’ எனும் சஞ்சிகையை வெளியிட்டனர். காந்தி ஜெயந்தியில் வெளிவரத் தொடங்கிய இப்பத்திரிகை ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆறு பிரதிகள் வெளிவந்ததோடு நின்றுவிட்டது.
எனினும் இலங்கையின் சிறுகதைத்துறையின் முன்னோடியான பித்தனின் பணி தொடர்ந்ததன் விளை வாகப் பின்வரும் சிறுகதைகள் தமிழிலக்கிய உலகுக்குக் கிடைத்துள்ளன. முதலாவது சிறுகதை 1948 ஜூலை தினகரனில் வெளிவந்த 'கலைஞனின் தியாகம்' என்பதா கும். இக்கதையை வாசித்த எஸ்.ரி. சிவநாயகம் அவர்கள் ‘தமிழகத்தின் புதுமைப்பித்தன் இறந்துவிட்டான். இனி நம் இலங்கையில் ஒரு பித்தன் பிறந்து விட்டான்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து வெளிவந்தவை வருமாறு: பயங்கரப் பாதை (1950); ஆண் மகன் (51); பாதிக் குழந்தை (52); அமைதி (52); தாம்பத்தியம் (52); பைத்தியக்காரன்(52); மயானத்தின் மர்மம் (52); அறுந்த கயிறு (52); இருட்டறை (53); நத்தார் பண்டிகை (53); சாந்தி (58); சோதனை (60); திருவிழா (61); ஊதுகுழல் (62); ஊர்வலம் (67); தாகம் (68); ஒருநாள் ஒரு பொழுது (81); மனச் சாந்தி; விடுதலை; தாலிக்கொடி. இக்கதைகள் தினகரன், சுதந்திரன், வீரகேசரி, கலைச் செல்வி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன.
111

Page 59
1984 ஆம் ஆண்டு பித்தனின் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிட வேண்டுமென நாம் மேற்கொண்ட முயற்சி நிறைவேறவில்லை. ஆயினும் 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அது நிறைவேறியிருக்கிறது. ‘பித்தன் கதைகள் எனும் பெயரில் மல்லிகைப் பந்தலின் 10 ஆவது வெளியீடாக அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டுள்ளது. டொமினிக் ஜீவா, மேமன் கவி, சிறீதரசிங் ஆகியோரின் கூட்டு முயற்சியே இதுவாகும். தொகுப் பினை அச்சிடத் தொடங்கும் பொழுது திஹாரி அகதி முகாமில் பித்தன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நூல் வெளி வருவதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லாமை துரதிருஷ்டமே.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வன்செயல்களின் விளைவாக அகதியாகித் திஹாரி அகதி முகாமில் 1990 ஆம் ஆண்டிலிருந்து அவர் வாழ்ந்து வந்தார். இக்கால கட்டத்தில்தான் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு 1991 ஆம் ஆண்டில் தாஜுல் அதீப் (இலக்கிய வேந்தர்) எனும் பட்டம், விருது, பணப்பரிசு, சான்றிதழ் என்பனவற்றை வழங்கி அவரைக் கெளரவித்தது.
இவ்வகதி முகாமிலிருந்தே 25.07.94இல் அவர் எனக்கு எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்களுக்கு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு அல்லாமா” பட்டமளித்துக் கெளரவித்தைைமயப் பாராட்டி எழுதிய கடிதம் இதுவாகும். “தமிழ் நாட்டில் சங்க கால இலக்கியங் களைக் கண்டெடுத்ததைப் போன்று, இஸ்லாமிய இலக்கியங்களைக் கண்டெடுத்த பெருமை உவைஸ் அவர்களுக்கே உரித்து. முன்னொரு காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்துக்கு சுவாமி விபுலாநந்த
112

அடிகளாரைத் தமிழ்த் துறைப் பேராசிரியராகத் தேர்ந்து எடுத்தனர். அதே போன்று ஏறக்குறைய 50 வருடங்களுக்குப் பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இஸ்லாமியத் தமிழ்த்துறைக்கு உவைஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தது பெருமைசால் ஒற்றுமை என்றே கருதுகிறேன். ஒருபுறம் ஒரு தமிழ்த் தாத்தா வுக்கு ஈடாக ஒரு இஸ்லாமியத் தாத்தாவாகவும், மற்றொருபுறம் பேராசிரியர் விபுலாநந்த அடிகளாருக்கு இணையாகப் பேராசிரியர் முஹம்மது உவைஸாகவும் இணைந்து நிற்கும் ஒரு மாபெரும் மனிதரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வெளிப்படுத்திக் காட்டிய உங்கள் அமைச்சின் செயற்பாடு மகத்தானது"
அகதி முகாமில் அல்லலுற்ற காலத்திலும் கூட மேற்கூறியவாறு உயர்வான இலக்கியச் சிந்தனைகளைக் கொண்டிருந்த பித்தன், 15.12.1994அன்று தனது பிறந்தகமான மட்டக்களப்பிலேயே காலமானார். எனினும் அவரின் இலக்கியத் தொண்டின் மூலம் அவரது பெயர் வெகுகாலம் நிலைத்து நிற்கும்.
தினகரன்
1997 பெப்ரவரி 23
113

Page 60
பேராசிரியர் எம்.எம். உவைஸ்
114
 

பேராசிரியர் உவைஸின் தமிழ்த் தொண்டு
(1922.1.15 - 1996.3.25)
தமிழ்த் தொண்டு எனக் குறிப்பிடும்போது அதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒருவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு. மற்றது தமிழ் ஒருவருக்கு ஆற்றிய தொண்டு. ஒருவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்கு அடிப் படையாக அமைவது தமிழ் அவருக்காற்றிய தொண்டு. தமிழ்த் தொண்டு புரிந்தோர் எனக் கணிக்கப்படுவோர் அதற்கான பயிற்சியை எங்ங்னம் பெற்றார் என அறிதல் வேண்டும். அவர்தம் ஆரம்பத் தமிழ் அறிவு எங்ங்னம்’ பெறப்பட்டது என்பதை அறிதல் வேண்டும்.
பேராசிரியர் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் பாணந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மேல் மாகாணத்திலுள்ள களுத்துறை மாவட்டத்தில் அமைந் துள்ளது பாணந்துறை நகர்.
பாணந்துறையில் ஒர் ஊர் 'ஊர்மனை". முஸ்லிம் மக்கள் அந்தக் கிராமத்தை அவ்வாறே அழைப்பர். ஏனை யோர் அந்தக் கிராமத்தை ஹேனமுல்லை என்பர். ஊர்மனை என்பது முஸ்லிம் மக்கள் நெருக்கமாக வாழும் ஒர் ஊர். பண்டையத் தமிழ் வழக்கில் ஊர்மனை என்றாலே கிராமம் என்பது பொருள்.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்கள் தோறும் இலங்கையின் பல பாகங்களில் தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. இன்றும்
115

Page 61
தொடர்ந்து இயங்கி வருகின்றன. அத்தகைய ஒரு தமிழ் மொழிப் பாடசாலை ஊர்மனையிலும் அமைந்து இருந்தது. உவைஸின் தந்தையாரின் பெரு முயற்சியாலேயே அந்தப் பாடசாலை உருவாகியது. பின்னர் அப்பாடசாலை அரசாங்கத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. 1918 முதல் அந்தப் பாடசாலை ஹேனமுல்லை அரசினர் தமிழ்ப் பாடசாலை யாகப் பணியாற்றி வருகின்றது. இன்று அது ஜீலான் மகா வித்தியாலயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஊர்மனை அரசினர் தமிழ்ப் பாடசாலையின் பாலர் வகுப்பில் சேர்ந்து தமிழ் பயிலத் தொடங்கினார் உவைஸ். அப்பொழுது ஆசிரியர் குழாத்தில் ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லோரும் யாழ்ப்பாணத்துக் கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர்களாக இருந்தனர். ஓர் ஆசிரியர் மாத்திரமே தென் இலங்கையைச் சேர்ந்த வலிகாமத்து முஸ்லிமாயிருந் தார். அந்த தமிழ் ஆசிரியர் மாணவருக்கு அறிமுகப்படுத்திய பாடம் ஆறுமுகநாவலரின் பால பாடங்களாகும். அதன் மூலம் அப்பொழுது பயின்ற மாணவருக்கு ஆறுமுக நாவலரின் வசனநடை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் முதலாம் பாலபாடம், இரண்டாம் பால பாடம், நான்காம் பாலபாடம் என்பன ஆறுமுக நாவலர் அவர்களால் இயற்றப்பட்டவை. மூன்றாம் பாலபாடத்தை இயற்றியவர் ஆறுமுகநாவலரின் மருமகரும், மாணவரு மான வித்துவான் ச. பொன்னம்பலப்பிள்ளை அவர்கள். ங்ங்னம் ஆறுமுகநாவலரின் பால பாட நூலறிவு உவைஸின் தமிழறிவுக்கு அத்திவாரமாக அமைந்தது. அதன் தாக்கம் அவருடைய பிற்காலத் தமிழ் அறிவில் பிரதிபலிப் பதைக் காணலாம். கனிஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சை யுடன் இவருடைய தமிழ்ப் பாடசாலைப் பயிற்சி முடிவடைந்தது.
பின்னர் அதே பகுதியில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படித்தார். துரித முன்னேற்றம் கண்ட உவைஸ்
116

பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து சிரேஷ்ட தராதரப் பத்திர பரீட்சைக்குத் தோற்றி தேர்ச்சி பெற்றார். பின்னர் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றினார். அன்று பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வும், உயர்தரப் பாடசாலைத் தராதரப்பத்திரப் பரீட்சையும் ஒன்றாய் நடைபெற்றன.
இம்மூன்று பரீட்சைகளிலும் தமிழை ஒரு பாடமாக எடுத்திருந்தார் உவைஸ். எந்த ஒர் ஆசிரியரினதும் உதவி யின்றி தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் பாடங்களை அவரே தயார் செய்து கொண்டார். பாடப் புத்தகங்களைத் தாமாகவே பயின்றார். அந்தக் கல்வி நிலையங்களில் வேறு எவரும் தமிழை ஒரு பாடமாக எடுக்கவில்லை. ஆதலினால் தமிழுக்கென அங்கு ஆசிரியர் இருக்கவில்லை.
அன்று பல்கலைக்கழகத்துக்குத் தேர்ந்தெடுப்பதற்குப் பரீட்சையில் சித்தி அடைவது மாத்திரம் போதியதாகக் கணிக்கப்படவில்லை. பரீட்சையில் சித்தி எய்தினோர் பல்கலைக்கழக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். 1945 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் நடைபெற்ற அத்தகைய பரீட்சையின் பின்னர் அங்ங்னம் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுள் உவைஸ"ம் ஒருவர். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர், முதுநிலை விரிவுரையாளர் அனைவரும் ஆற்றல் குழுவில் அங்கம் வகித்தனர்.
நேர்முகப் பரீட்சைக்கு சமர்ப்பிக்க வேண்டிய உவைஸின் முறை வந்தது. அன்றைய நேர்முகப் பரீட்சைக் குழுவில் அப்போதைய தமிழ்ப் பேராசிரியரான விபுலானந்த அடிகளாரும் இருந்தார். உவைஸ், குழுவின் முன்னர் சென்று அமர்ந்ததும் கேள்விகள் கேட்கப்பட்டன. விபுலானந்த அடிகள் உவைஸிடம் இஸ்லாமிய அடிப்
117

Page 62
படையில் தோன்றிய ஒரு செந்தமிழ் (Classics) நூலின் பெயரைக் குறிப்பிட முடியுமா எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கான விடையாக என்ன கூறுவதென்று உவைசர்ருக்குத் தெரியவில்லை. ஒன்றும் பேசாது இருந்து விட்டார் உவைஸ். அடுத்த கேள்வி விபுலானந்த அடிகளாரி டம் இருந்து வந்தது. சீறாப்புராணம் படித்திருக்கிறீரா என்று கேட்டார். அதற்கு உவைஸ் "ஆம்" என விடை கொடுத்தார். உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. அன்று சீறாப்புராணம் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு செந்தமிழ்க் காப்பியம் என்பதை உவைஸ் அறிந்திருக்கவில்லை என்பதையே இந்த உரையாடல் காட்டுகிறது.
அந்த ஆண்டு உவைஸ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1945 திசெம்பர் மாதம் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் சரியாகப் பதிலளிக்கவில்லை என்ற காரணத்தினால் உவைஸைப் பல்கலைக்கழகம் சேர்த்துக் கொள்ளவில்லை என முடிவு கட்டலாம். பிற்காலத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முழு மூச்சாக ஈடுபட இந்த உரையாடலில் தோல்வி கண்டமை மறைமுகமான ஒரு காரணமாக இருக்கலாம்.
1946 மே மாதம் மற்றொரு பரீட்சை நடைபெற்றது. நேர்முகப் பரீட்சை நடைபெறவில்லை. அந்தப் பரீட்சை க்குத் தோற்றிய உவைஸ் சித்தி பெற்று பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சை தொடக்கம் தமிழையும் சிங்களத்தையும் இரண்டு பாடங் களாக எடுத்தமையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒருவகையில் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி யிருந்தது. அப்போதைய எஸ்.எஸ்.ஸி. பரீட்சையில்
118

சிங்களப் பாடமும் தமிழ்ப் பாடமும் ஒரே நேரத்தில் நிகழ்வதாக பாடநேர அட்டவணை தயாரிக்கப்பட்டிருந் தது. அப்போதைய பரீட்சை ஆணையாளரின் விசேட அனுமதியைப் பெற்று சிங்களம், தமிழ் இரண்டு பாடங்களு க்கும் தோற்றும் வாய்ப்பை உவைஸ் பெற்றார். பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வில் சிங்களமும் தமிழும் வெவ்வே றாக பாட நேர அட்டவணையில் இடம் பெற்றிருந்தன.
பல்கலைக்கழகத்துச் சேர்ந்த பின்னரும் சிங்களத்தை யும் தமிழையும் இரண்டு பாடங்களாக எடுக்க முற்பட்டமையால் அதே பிரச்சினையை அங்கும் உவைஸ் எதிர்நோக்க வேண்டி இருந்தது. பல்கலைக்கழகத்திலும் பாடநேர அட்டவணை சிங்களம் அல்லது தமிழ் என இருந்தது. சிங்களத்தையும் தமிழையும் கற்க முற்பட்ட உவைஸ் அன்று தமிழ்த்துறைத் தலைவராகக் கடமை யாற்றிய பேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் ஆலோ சனையை நாடினார். பொதுவான பாடநேர அட்டவணை க்கு இணங்க சிங்களத்தைப் பயிலும்படி கூறிய அடிகளார் தமிழ் மொழியைப் பயில விசேட ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொடுத்தார். அதற்கென ஒரு நிபந்தனையையும் விதித்தார். முதலாம் ஆண்டுப் பரீட்சைக்குப் பின்னர் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்க வேண்டும் என்பதே விபுலானந்த அடிகளார் உவைஸ்"க்கு விதித்த நிபந்தனை யாகும். பிற்காலத்திலிருந்து பார்க்கும்பொழுது இவை அனைத்தும் தெய்வாதீனமாக நடந்த நிகழ்ச்சிகளாகவே புலப்படுகின்றன என உவைஸ் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.
பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கு ஆசிரியர் ஒருவரின் உதவி இன்றித் தமிழ்ப் பாடத்தைப் பயின்று சித்தி எய்திய உவைஸ், தொடக்கத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுப்பார் என்று நினைத்திருக்கவும் மாட்டார்.
119

Page 63
முதலாம் ஆண்டுப் பரீட்சையில் சித்தி எய்திய உவைஸ் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்ததோடு நின்று விடாது அதற்கான உபபாடமாக சிங்களத்தையும் பயின்றார். அங்ங்னம் தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உப பாடமாகவும் பல்கலைக்கழகத்தில் பயின்ற முதல் பட்டதாரி மாணவன் என்னும் சிறப்பையும் பெற்றார். 1948, 1949, 1950 ஆண்டுகளில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு கலைமாணித் தேர்வுக்குத் தோற்றிய ஒரே ஒரு மாணவன் என்னும் பேற்றையும் பெற்றார். தமிழ் மாணவர்கூட தமிழைச் சிறப்புப் பாடமாக எடுக்கத் தயங்கிய காலகட்டத்தில் உவைஸ் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இரண்டாந்தரக் கெளரவத்துடன் தேர்வில் சித்தி எய்தினார். உவைஸ் கலைமாணிப் பட்டப் பரீட்சைக்குத் தோற்றியது 1949 ஆம் ஆண்டில்; 1948 ஆம் ஆண்டிலும் 1950 ஆம் ஆண்டிலும் அந்தப் பரீட்சைக்கு எவருமே தோற்றவில்லை.
பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே எழுத்துத் துறையில் உவைஸ் பிரவேசித்தார். அப்பொழுது இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பில் மாத்திரம் இயங்கி வந்தது. ஒருநாள் ஓர் ஆங்கில மாலை இதழில் ஒரு சிறு சம்பவம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கொழும்பு மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் நிகழ்ந்ததாக விவரிக்கப்பட்டிருந்தது. அது வாசிப்போரின் சிந்தையைத் தூண்டும் அளவுக்கு முக்கியமானதாகத் தென்பட்டது. அதனை அடிப்படையாக வைத்து உவைஸ் ஒரு சிறுகதையையே எழுதிவிட்டார். ‘இன்னுமா சீதனம்” என்னும் தலைப்பில் அமைந்தது அந்தச் சிறுகதை. அது தினகரன் வாரமஞ்சரியில் 1947 இல் பிரசுரிக்கப்பட்டது. 1964 இல் வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் கதை மலர் என்னும் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றது.
: 120

சுவாமி விபுலானந்தர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் கடமை ஏற்றார். 1949 இல் கலைமாணிப்பட்டம் பெற்ற உவைஸ் முதுமாணிப் பட்டம் பெறும் வகையில் பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடருமாறு பேராசிரியர் கணபதிப் பிள்ளை ஊக்கமளித்தார். முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி ஆராயும்படி பணித்தார். அந்தக் கால கட்டத்தில் விரிவுரையாளராக இருந்த சு. வித்தியானந்தன் அவர்கள் பட்டப்பின் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந் தார். அங்கிருந்து கொண்டே உவைசுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அந்தக் கடிதங்களிலே முதுமாணித் தேர்வுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு எழுதிக் கொண் டிருந்தார். பொதுவாக ஒவ்வொன்றும் மூன்று மணித்தி யாலயங்களைக் கொண்ட ஒன்பது வினாப் பத்திரங்களுக்கு விடையளித்துத் தேர்ச்சி பெற்றால் முதுமாணிப்பட்டம் வழங்கப்படும். இலக்கிய வரலாறு சம்பந்தப்பட்ட ஒரு துறையில் ஒர் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தால் அத்துறையில் அமையும் மூன்று வினாப் பத்திரங்களுக்கு விடையளிக்கத் தேவையில்லை. உவைஸ் மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரை இலக்கியத்துறை பற்றியதாகும். முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றிய ஆய்வில் ஈடுபடும்படி உ ைவசுக்கு ஊக்கமூட்டி ஆக்கமளித்தவர் எ.எம்.எ. அஸிஸ் அவர்களாவார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது முதல் முதலில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையை ஓர் ஆய்வு நெறியாக அங்கீகரித்த பெருமை கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக் கழகத்தையே சாரும்.
இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கிய நூல்களை ஒன்று சேர்க்கும் பணியில் உவைஸ்
121

Page 64
ஈடுபட்டார். 1950 ஆம் ஆண்டு தமிழகத்துக்குச் சென்றார். முதலில் கீழக்கரைக்குச் சென்றார். அங்கே ஒரு பள்ளி வாசலில் தங்கியிருந்த செய்யது முஹம்மது ஆலிம் புலவரைச் சந்தித்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களின் பல பெயர்களை அவரிடமிருந்து பெற்றார். அவர் தமிழகம் சென்ற முக்கிய நோக்கம் அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையைச் சந்தித்தலேயாகும். அதற்கென அவரிடம் கையளிக்க பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றார். ஆனால் உவைஸ் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு சென்றபொழுது பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டதாக அறிந்தார். அங்கே வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் தீச்சிதர் அவர் களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். உவைஸ் அங்கு வந்த காரணத்தை அறிந்த பேராசிரியர் தீச்சிதர் அவர்கள், "முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளிர். சீறாப் புராணமும் மஸ்தான் சாகிபு பாடலும் தவிர்ந்த இஸ்லாமியத் தமிழ் நூல்கள் வேறேதும் உண்டோ? என்னும் வினாவை எழுப்பினார். அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகவே தமது வருகை அமைந்துள்ளது எனக் கூறிய உவைஸ், அடுத்து இஸ்லாமியப் பயிற்சி நெறித்துறைத் தலைவர் பேராசிரியர் ஹ"சைன் நயினாரைச் சந்தித்து தனது வருகையின் நோக்கத்தைக் கூறினார்.
அவர் இத்துறையில் ஆராய்ச்சி புரிந்துள்ளாராதலால் சென்னைப் பல்கலைக்கழகத்திலே சேர்ந்து இதே ஆய்வினை மேற்கொள்ளுமாறும் மாதமொன்றுக்கு
பரிசூதியமாக முப்பது ரூபா பெற்றுத் தருவதாகவும் கூறினார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத உவைஸ்
122

கீழக்கரைப் புலவர் கொடுத்த புத்தகப்பட்டியலை வைத்து இருநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியப் படைப்புக்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்.
பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞரே இத்தகைய எண்ணிக்கையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் உண்டென்பதை அறியாதிருந்தனர். அன்று இருநூறுக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை ஒன்று திரட்டியமை ஒரு பெருஞ் சாதனையாகக் கருதப்பட்டது. ஆய்வை முடித்துக் கொண்ட உவைஸ் முதுமாணிப் பரீட்சைக்குத் தோற்றி ஆய்வினையும் சமர்ப்பித்து முதுமாணிப்பட்டத்தை 1951 இல் பெற்றார்.
முதுமாணிப் பட்டத்தைப் பெற்ற பின்னர் தினகரன் வாரமஞ்சரியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றித் தொடர்ச்சியாக வாராவாரம் எழுதிவந்தார். இங்ங்னம் பத்திரிகையில் பிரசுரிக்கப் பெற்ற பல கட்டுரைகள் 'இஸ்லாமும் இன்பத் தமிழும்" என்னும் பெயரில் சென்னையில் வெளியிடப்பெற்றது. ‘முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு" என்னும் ஆங்கில நூல் தமிழ் மன்றத் தினால் பிரசுரித்து வெளியிடப்பட்டது. பின்னர் இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாசாரம், வரலாறு, பழக்கவழக் கங்கள், மொழி, இலக்கியம் பற்றிய சுருக்கமான விளக்கங் களைக் கொண்ட இஸ்லாமியத் தென்றல் என்னும் நூல் மணிக்குரல் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நம்பிக்கையின் கொப்புகள் என்பது அறயில் சுஅபில் ஈமான் எனப் பொருள்படும். இந்தப் பெயருடைய அறபுத் தமிழ் நூல் பற்றிய பல கட்டுரைகள் தினகரன் வாரமஞ்சரியில் வாரந்தோறும் வெளிவந்தன. அதனை நூலுருவாக்கி நம்பிக்கை' என்னும் பெயரில் பதிப்பித்து வெளியிட்டவர் நவலட்சுமி புத்தகசாலை அதிபர் முகியித்தீன் என்பவர்.
123

Page 65
அதே போன்று மஸ்தான் சாகிபு அவர்களின் பாடல்களைப் பற்றி எழுதப்பெற்ற கட்டுரைகளை ஒன்று சேர்த்து சென்னை யுனிவேர்ஸல் பதிப்பகத்தார் “ஞானச் செல்வர் குணங்குடி யார் என்னும் பெயரில் வெளியிட்டனர். ராதா என்னும் வாரஇதழில் வெளியான இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங் கள் சிலவற்றை நீதியும் நியாயமும்' என்னும் பெயரில் சென்னை சாகுல் ஹமீது அச்சகத்தார் வெளியிட்டனர். இந்த நூலில் நீதி பற்றிய கதைகள் பல இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சி நிலவிய சமயத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பல கதைகள் தினகரன் வாரமஞ்சரியில் கிழமை தோறும் ஒழுங்காக வெளிவந்தன. அவை அனைத்தும் ‘முஸ்லிம் ஜோன் ஒப் ஆர்க்' என்னும் தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளன. 1970 இல் ஹஜ் கடமையை நிறைவேற்றினார் உவைஸ்.
1968 ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. மாநாட்டு முடிவில் ஒரு சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. முதலாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு புகைவண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அது செல்லாத பகுதிகளில் பேரூந்துகள் ஒழுங்கு செய்யப் பட்டன. சென்னையில் இருந்து தொடங்கி சிதம்பரம், திருவாரூர், தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, குமரிமுனை, திருச்சிராப்பள்ளி ஆகிய ஏழு நகரங்களிலும் சஞ்சரித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தது. அதில் பங்கு பற்றியோர் இரவு நேரங்களைப் புகைவண்டியிலே கழித் தனர். முதலாம் வகுப்பு வண்டியின் படுக்கை வசதிகள் அந்தச் சிறப்புப் புகைவண்டியில் அமைந்திருந்தன. புகைவண்டியும் பிரயாணத்தை இரவு நேரங்களில் நடத்தியது. அந்த மாநாட்டில் உவைஸ் மனைவி மக்களுடன் பங்குபற்றினார்.
124

அந்தக் கலாச்சாரச் சுற்றுலா பற்றிய தமது அனுபவங் களையும் அந்தப் பிரயாணத்தில் தாம் கண்டவைகளையும் சுவைமிக்கப் பயணக் கட்டுரையாக வீரகேசரி வாரவெளி யீட்டில் ஓராண்டு பூராவும் எழுதி வந்தார். ‘நெஞ்சில் நிலைத்த சுற்றுலா என்னும் தலைப்பில் அந்தக் கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன. பொருத்தமான இடங்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து மேற்கோள்கள் இந்தப் பயண நூலில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
அகில உலக அடிப்படையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதைக் கண்ட முஸ்லிம் அறிஞர் தம்முடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக் கும் மறுமலர்ச்சிக்கும் மாநாடு எடுக்க வேண்டும் எனச் சிந்திக்கலாயினர். அதன் பெறுபேறு திருச்சியில் நடை பெற்ற முதலாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு. அம்மாநாடு 1973 இல் நடைபெற்றது. இலங்கையின் பேராளர்களும் பார்வை யாளர்களும் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ் அவர்களின் தலைமையில் அம்மாநாட்டில் பங்குபற்றினர். உவைஸ"ம் அந்த மாநாட்டில் பங்குபற்றினார். அஸிஸ"ம் உவைஸ "ம் அங்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர். அந்த மாநாடு பற்றியும், அதற்கு முன்னோடியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட பல்வேறு திருப்பங்கள் பற்றியும் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே 'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்' என்னும் நூல். இலங்கையில் பிரசுரிக்கப் பட்ட அந்த நூல் 1974 இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அல்ஹாஜ் கலாநிதி எ.எம்.எ.
: 125

Page 66
அஸிஸ் அவர்கள் இறையடி எய்திவிட்டார்கள். சென்னை யில் நடைபெற்ற மாநாட்டில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள் என்னும் பொருள் பற்றிய கட்டுரை ஒன்றை உவைஸ் சமர்ப்பித்தார். கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்ற உவைஸ் அதற்கு அடுத்தபடியான கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்காகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார். தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ள முஸ்லிம் காப்பியங்கள் (Muslim Epics in Tamil Literature) என்னும் பொருள் பற்றிய ஆய்வினை மேற் கொண்டார். கலாநிதி க. கணபதிப்பிள்ளை பேராசிரியராக இருந்த பொழுது பதிவு செய்யப்பட்ட போதிலும் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் மேற் பார்வையிலே ஆய்வு நிறைவேற்றப்பட்டது. அச்சியற்றப் பட்ட பிரதியாகவே ஆய்வின் பெறுபேறுகள் சமர்ப்பிக்கப் பட்டன. அதனை ஏற்றுக்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகம் உ ைவசுக்குக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. பண்டைய தமிழ் இலக்கியங்களுடனான ஒப்பீட்டாய்வாக அந்த நூல் அமைந்திருந்தது. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பதினான்கு காப்பியங்கள் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இந்த ஆய்வு நூல்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை 1975 முதல் 1980 வரையிலான கால எல்லையுள் வெளியான சிறந்த நூல்களுக்கு 1982 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார். தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு கே. அரங்கநாயகம்
126

அவர்கள் விழா விற்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் போது இலங்கையரான கலாநிதி அல்ஹாஜ் எம். எம். உவைஸ் அவர்களுக்கு இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மொழி இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்களுள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூலாக உவைஸின் 'இஸ்லாமும் இன்பத் தமிழும்' என்னும் நூல் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பரிசில் வழங்கப்பட்டது. தமிழ், தமிழ்ப்பண்பா டு பற்றிப் பிறமொழிகளில் 1976 இல் Gou Grîulun GT o GM au Gmớ76öy Muslim Epics in Tamil Literature' தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் காப்பியங்கள் என்னும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் அவ்வாண்டில் எழுதப்பட்ட சிறந்த நூலாகக் கருதப்பட்டுப் பரிசு வழங்கப் .lدgا نا لا
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தற்போது பன்னிரண்டு அறக்கட்டளைகளை நிறுவி உள்ளது. அவற்றுள் ஒன்று சீதக்காதி நிறுவனம் நிறுவிய சீதக்காதி அறக்கட்டளை. அந்த அறக்கட்டளைச் சொற்பொழிவாக 1984 ஜனவரி 30,31 ஆகிய நாட்களில் “இஸ்லாம் வளர்த்த தமிழ்” தலைப்பில் டாக்டர் ம. முகம்மது உவைஸ் அவர்கள் இரண்டு நாள் நிகழ்த்திய சொற்பொழிவு அதே தலைப்பில் இரண்டாவது நாளன்று நூலுருவாக்கி வெளியிடப்பட்டது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் 1978 இல் காயல்பட்டணத்திலும் 1979 இல் கொழும்பிலும் நடைபெற்றன. கொழும்பில் நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. பொதுமக்களிட மிருந்து எவ்வித பண உதவியோ நன்கொடையோ பெறப் படாமல் உவைஸ் முன்னின்று நடத்தியது அந்த மாநாடு.
127

Page 67
பல நூல்கள் வெளியிடப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி பொற் கிழி வழங்கி பலர் அந்த மாநாட்டில் கெளரவிக்கப்பட்டனர்.
இங்ங்னம் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பலவற்றில் மேற்கொண்ட தீர்மானங்களுக்கும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் செவிமடுத்த தமிழக அரசு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக் கும் ஆக ஒரு இருக்கையை உமறுப் புலவர் இருக்கை என்னும் பெயரில் உருவாக்கியது. அந்த இருக்கையில் பணியாற்ற ஒருவரைத் தேடும் முயற்சியில் இந்திய நாளிதழ்களில் விளம்பரம் பிரசுரமாகியது. இணைப் பேராசிரியர் தேவை என அந்த விளம்பரம் விண்ணப்பங் களைக் கோரியது. அந்த விளம்பரக் கோரிக்கைக்கு இணங்க உவைஸ் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். அவர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உவைஸ் அந்தக் கட்டத்தில் கொழும்பில் இருக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதிப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவிட்டு நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள வில்லை. எனினும் இணைப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த உவைஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். சுவாமி விபுலானந்தருக்குப் பிறகு இலங்கையிலிருந்து பேராசிரிய ராகக் கடமையாற்ற இந்திய நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுக்குச் சென்று பணியாற்றிய பெருமை உவைஸைச் சாரும். உவைஸ் பேராசிரியர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டமை அவர் அப்பொழுது இஸ்லாமியத் தமிழ்
128

இலக்கியத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றிருந்தமை யேயாம். அந்தக் கால எல்லையில் தமிழகத்தில் எவருமே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றிருக்கவில்லை. அதனாலேயே இந்தியன் ஒருவன் அல்லாத ஒருவனாக - இலங்கையனாக இருந்தும் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியைப் பெறும் வாய்ப்பை உவைஸ் பெற்றார்.
1979 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் நாள் உவைஸ் மதுரைப் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ் பேராசிரியர் பதவியின் பொறுப்புகளை ஏற்றார். ஒருநாள் அப்போதைய துணைவேந்தர் அறிஞர். வா. சுப. மாணிக்கம் அவர்களுடன் உரையாடும் பொழுது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள அறபுச் சொற்கள் காரண மாக அறபு அறிவு அற்றவர்களுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படு கின்றது என்றும் அத்தகைய இக்கட்டான நிலையைத் தவிர்த்தற்கு அத்தகைய அறபுச் சொற்களை விளக்கும் அகராதி ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும் என்றும் துணை வேந்தர் அவர்கள் வற்புறுத்தினார். அதன் விளைவாகத் தோன்றியது தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி. ஓராண்டுக்குள் அதனை உவைஸ் தயாரித்து முடித்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அதனை
வெளியிட்டுள்ளது.
தமிழிலக்கிய அறபுச் சொல்லகராதியைத் தொகுத்த தன் பின்னர் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றினை விரிவாக எழுத ஒரு திட்டத்தை வகுத்தார் உவைஸ். ஒவ் வொன்றும் அறுநூறு பக்கங்களைக் கொண்ட ஆறு தொகுதி களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுத முற்பட்டார். கி.பி. 1700 வரையிலான இரண்டு காப்பியங்
129

Page 68
களின் வரலாற்றுடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை முதலாம் தொகுதியாகவும்; இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களின் வரலாற்றினை இரண்டாந்தொகுதி யாகவும், இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களின் வரலாற்றினை மூன்றாந் தொகுதியாகவும், சூபி மெய்ஞ் ஞானிகள் பற்றிய வரலாற்றினை நான்காந் தொகுதி யாகவும், அறபுத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாற்றினை ஐந்தாம் தொகுதியாகவும், இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள், தற்கால கவிதை நூல்கள் பற்றிய வரலாற்றினை ஆறாந் தொகுதியாகவும் எழுதும் பணி இத்திட்டத்தில் அடங்கும். ஏற்கனவே பல தொகுதிகள் அச்சாகி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரலாற்று நூல்களை எழுத 1950 ஆம் ஆண்டு வரை வெளியான இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்களும் அறபுத் தமிழ் நூல்களும் பயன்பட்டன.
ஒரு காலகட்டத்தில் இரண்டு நூல்களைக் கொண்டது எனக் கருதப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 1951 இல் உவைஸின் ஆராய்ச்சியின் பயனாக இருநூறுக்கும் அதிகமாக அதிகரித்தது. இப்பொழுது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அமைந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக அமர்ந்த பேராசிரியர் உவைஸின் சலியாத உழைப்பின் காரணமாக இரண்டா யிரத்துக்கும் அதிகமாக பெருகி உள்ளன. இத்தகைய பெருக்கத்துக்குக் காரணம் தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் எழும்பூரில் அமைந்துள்ள சுவடிக் காப்பகத் தில் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள புத்தகப் பட்டியல்களை பேராசிரியர் உவைஸ் அவருடைய உதவியாளர் டாக்டர் அஜ்மல்கான் உடன் சென்று துருவி ஆராய்ந்து பெறப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய விரிவான
130

விவரங்களேயாம். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களைப் பற்றிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விவரத் திரட்டு ஒன்றினைத் தயாரித்துள்ளார் உவைஸ். அது நூல்கள் இயற்றப்பட்ட கால அடிப்படையிலும் நூல்களின் அகர வரிசையிலும் நூலாசிரியர் அகர வரிசையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இங்ங்னம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக எழுதியதனை தமிழகப் பேராசிரியர்களும் தமிழ்த் துறைத் தலைவர்களும் பெரிதும் பாராட்டி உள்ளனர். தமிழ் இலக்கியத்துக்கே இத்தகைய விரிவான வரலாறு அதுவரை எழுதப்படவில்லையே எனத் தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
1957 ஆம் ஆண்டில் முதன்முதல் சாகித்திய மண்டலம் அமைக்கப்பட்டபொழுது அதன் உறுப்பினர்களுள் ஒருவராக உவைஸ் நியமிக்கப்பட்டார். சிங்கள இலக்கியங் களைத் தமிழிலும், தமிழ் இலக்கியங்களைச் சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டும் என்பது சாகித்திய மண்டலம் மேற்கொண்ட தீர்மானங்களில் ஒன்றாகும். அதற்கிணங்க தலைசிறந்த சிங்கள நூலாசிரியர் மார்டின் விக்கிரம சிங்கவின் கம்பெரலிய என்னும் நாவலைத் தமிழில் மொழி பெயர்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டபொழுது அந்தப் பணியை உவைஸ் ஏற்று ‘கிராமப் பிறழ்வு” என்னும் பெயரில் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத் தார். தேவராஜன் என்பவரால் இயற்றப்பெற்ற 'வாணிக எண் கணிதம்” என்னும் நூலை அரச கரும மொழித் திணைக்களத்துக்காகச் சிங்களத்தில் மொழி பெயர்த்தார். பேராசிரியர் வீரவர்தனாவின் இரண்டு நூல்களை இலங்கையின் பொருளாதாரத் திட்டம், பிரித்தானிய யாப்பு என்னும் பெயர்களிலும்; பேராசிரியர் ஜயசூரியா
131

Page 69
வின் நூலைப் பொருளியல் பாகுபாடு என்னும் பெயரிலும் தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார். வேறு சில நூல்களை தமிழிலிருந்து சிங்களத்துக்கும், ஆங்கிலத்தி லிருந்து சிங்களத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார்.
கவிதை இயற்றுவதிலும் உவைஸ் தமது புலமையைக் காட்டி உள்ளார். நம்பிக்கையும் நடைமுறையும், அருள் மொழி அகவல், அருள் மொழி வெண்பா, திருமக்கா ஆற்றுப்படை என்பன அவரால் இயற்றப்பட்ட கவிதை நூல்களாகும்.
இலங்கை வானொலியில் உவைஸ் நடத்திய இரண்டு தொடர் பேச்சுக்கள் முறையே “வழியும் மொழியும்’ என்றும் ‘உமறுப் புலவர் ஒர் ஆலிமா” என்றும் இரண்டு நூல்களில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குரிய தமிழ் இலக்கியம் பாடத்திட்டம் உருவாவதற்கு அவருடைய பங்கு கொஞ்ச நஞ்சமன்று.
பழம் நூல்களைப் பதிப்பித்தலிலும் உவைஸ் ஈடுபட்டுள்ளார். அப்துல் மஜீதுப் புலவரின் ஆசாரக் கோவை, குலாம் காதிறு நாவலரின் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை, முகம்மதுப் புலவரின் புதுக் குஷ்ஷாம் வசன காவியம் என்பன அவரால் பதிப்பிக்கப் பெற்ற நூல்களாகும். ஜே.எம்.எம். அப்துல் காதிர் உரை வகுத்த புதுக்குஷ்ஷாம் காப்பியத்தின் முதலாம் காண்ட மானகாண்டம் முஹம்மதியா, இரண்டாம் காண்டமான காண்டம் சித்திக்கிய்யாவின் முதற் பாகம்; புலவர்மணி அ.மு. ஷரிபுத்தீன் உரை வகுத்த இரண்டாம் காண்டம் சித்தீக்கியாவின் இரண்டாம் பாகம், மூன்றாம் காண்ட மான ‘காண்டம் பாறுக்கியாவின் நான்கு பாகங்கள்
132

என்பவற்றையும் உவைஸ் பதிப்பித்துள்ளார். இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின், போது இலங்கையின் சார்பில் ஈழத்து முஸ்லிம் முதுசொம் என்னும் பெயரில் ஒரு சஞ்சிகையைத் தயாரித்துப் பதிப்பித்துள்ளார். நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக பிறைக் கொழுந்து என்பதனைச் சிறப்பு மலராகத் தயாரித்ததோடு பிறைப் பூக்கள் என்னும் பெயரில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் களின் சிறுகதைகளையும், பிறைத்தேன் எனும் பெயரில் கவிதைகளையும் வெளிக்கொணர ஆவன செய்துள்ளார்.
1992 இல் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கிய முதல் மாநாட்டிற்காக திருமக்காக் கோவை என்னும் அகப்பொருள் நூலைப் பதிப்பிக்க உதவியுள்ளார். அதற்கான நீண்ட ஒரு முன்னுரையையும் திருமக்கா க் கோவையில் இடம்பெற்றுள்ள கிளவித் தொகையையும், துறை வகையையும் தனித்தனியே எடுத்துக் காட்டும் அட்டவணையையும் அதன்கண் அமைந்துள்ள அகப் பொருள் கிளவித் தொகை வகைகளின் விரிவான விளக்கத்தையும் திருமக்காக் கோவையின் புதிய பதிப்பில் இடம்பெறச் செய்துள்ளார். அதே மாநாட்டுக்காக மர்ஹகும் எ.எம்.எ. அஸிஸ் அவர்களின் பெரிய தந்தைய ரான யாழ்ப்பாணத்து சு. அசனா லெப்பை அவர்களின் கையேட்டுப் பிரதியாக இருந்த சப்த ரத்ன திருப்புகழ், பஞ்சரத்னத் திருப்புகழ் என்னும் இரண்டையும் புகழ்ப் பாவணி என்னும் நூலில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள நவரத்தினத் திருப்புகழுடன் சேர்த்து விரிவான திருத்திய பதிப்பாகத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
சிங்களம் பெரும்பான்மையாகப் பயிலப்படும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் எம்.எம்.
133

Page 70
உவைஸ் தொடக்க நிலையில் தமிழைப் பயின்று இடை நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் தமிழ் பயிற்சி பெறாமல் பின்னர் உயர்நிலையில் பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆழ்ந்த புலமையும் பயிற்சியும் பெற்று அடை யாளங் காணமுடியாது மறைந்திருந்து அழிந்து கொண் டிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை அகழ்ந்து எடுத்து அவற்றிற்கு மெருகூட்டி அவை மேலும் அற்றுப் போகாமல் அவற்றைப் பாதுகாத்து அறிமுகப் படுத்தி அவற்றை மறுமலர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையைப் பெற்றுள்ளார் எனின் அது மிகையாகாது. 1953ஆம் ஆண்டில் அவருடைய முஸ்லிம்கள் g55) (göGgi şey.jpg5), Lu Gpg|T 6ösı GS) (Muslim Contibutions to Tamil Literature) என்னும் ஆங்கில நூல் அச்சேறி வெளிவந்ததும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் அந்நூலைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் அந்நூல் வெளிவந்ததன் மூலம் தமிழ் இலக்கியம் ஒரு படி உயர்ந்து விட்டது எனக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு கருத்திற்கொள்ளத்தக்கது.
அணையா விளக்கு விபுலானந்தர் சிறப்பு மலர் கார்மேல் பாத்திமாக் கல்லூரி, கல்முனை
1992
134

မွို.်
န္တိမ္ပိ ဒွိႏွစ္ထိ #
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
135

Page 71
(9)
பிறையன்பன் பேராசிரியர் சு. வித்தியானந்தன்
(1924.5.8 - 1989.1.22)
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் பல துறைகளில் சிறப்புற்று விளங்கிய ஒரு மாமனிதர் ஆவார். நல்லாசிரியர், மனிதாபிமானி, தமிழியல் ஆய்வாளன், நாட்டுக்கூத்து, நாட்டார் பாடற் துறைகளுக்குப் புத்துயிர் அளித்தோன், இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு உற்ற துணைவன் எனப் புகழ் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் முதலாவது தமிழ் உபவேந்தர் என உயர்ந்து நின்றவருமாவார்.
1924 மே 8 ஆந் திகதி பிறந்த வித்தியானந்தன் 1941 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு தமிழை விசேட பாடமாகக் கற்று 1944 இல் பட்டதாரியாகி அப்பல்கலைக்கழகத்திலேயே உதவி விரிவுரையாளரு மானார். 1946 இல் எம்.ஏ. பட்டத்தையும், 1950 இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்று, 1970 இல் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் நியமனம் பெற்றார். இறுதியாக 1979 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார்.
(LupTrøflifluumflar பணிகள்
சில பேராசிரியர்களின் பல்கலைக்கழக விரிவுரைகள் அநேக மாணவர்களால் விரும்பப்படாது சிலவேளை கடினமானதெனக் கருதப்படுவதுண்டு. ஆனால் பல்கலைக்
136

கழகத்தில் வித்தி அவர்கள் இலக்கணம் கற்பிக்கும் பாங்கு அத்தகைய கருத்துக்களையெல்லாம் அடியோடு மாற்றி அதனை மிக இலகுவான ஒன்றாகவும், விரும்பப்படும் ஒன்றாகவும் ஆக்கிவிடும். மாணவர் அனைவரும் விரும்பும் நல்லாசிரியனாகவும், அறிவு பரப்புவோனாகவும் அவர் வாழ்ந்தார்.
ஆனால் அவரது பணி பல்கலைக்கழகத்துக்கு மட்டு மென வரையறுக்கப்படாது ஊருக்கும் உலகுக்கும் பயன் பட்டது. கலை, இலக்கியம், நாடகம், நாட்டார் பாடல், சமுதாயம், சமயம் என அது வியாபித்தது. இலக்கியத்தில் புதுமை, தேசியம், யதார்த்தம், மண்வாசனை எனும் இயல்புகள் இன்று சாதாரணமானவை. ஆனால் சில தசாப்தங்களுக்கு முன் இச்சொற் பிரயோகங்கள் புதுமையா யிருந்தன. அப்புதுமையான காலத்திலே இவ்வியல்புகளின் ஆரம்பத்தை வித்தியானந்தனின் எழுத்துக்களிலும் பேச்சுக் களிலும் நாம் காணலாம். சுவாமி விபுலாநந்தரதும், பேராசிரியர் கணபதிப்பிள்ளையினதும் தலைமாணாக்கன் எனும் பேறு பெற்ற சு.வி. அவர்கள், தனது ஆசான்களது இவ்வழிகளைப் பின்பற்றியது இயல்பே.
சுவாமி விபுலாநந்தர் தமிழ் மொழி வளர்ச்சியிலும், இந்நாட்டுக் கல்வி முன்னேற்றத்திலும் தலையாய இடம் பெறுபவராவார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராயமர்ந்து தமிழையும் கல்வியையும் வளர்த்தார். அதனிலும் மேலாக கிழக்கு மாகாண கல்வி விழிப்புக்கான மூலபிதா அவரேயாவார். அவரால் தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சில தசாப்தங்கள் கொட்டியாரத்திலிருந்து பொத்துவில் ஈறாகவுள்ள முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நிலைக்களமாய் அமைந்தது. அத்தகைய பெருமகனாரின்
137

Page 72
தலையாய மாணவன் அதே வழிகளில் உயர்ந்து நின்றமை பெருமைக்குரியதே.
ஆரம்ப காலத்திலிருந்து இறுதி வரைக்கும் மாணவர் நலனே வித்தியில் எப்போதும் மேலோங்கி நின்றது. யார் யார் எவ்வேளைகளில் எத்தகைய உதவிகள் கேட்டாலும் தம்மாலியன்ற வரை அவ்வுதவிகளைச் செய்தல் பேராசிரி யரின் இயல்பு. மட்டக்களப்புப் பல்கலைக்கழகக் கல்லூரி இயக்குநர் பேராசிரியர் எஸ். இராசரெத்தினம் தமது 'சமூக உதவியாளனாக' எனும் கட்டுரையிற் கூறுவது போன்று வித்தியானந்தனுக்குப் பல நல்ல மாணவர்களும், கூடாத மாணவர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவருக்கோ நன்றியில்லாத மாணவர் எவரும் இருந்ததில்லை. இம்மானுட நேயத்தைச் சில சம்பவங்களின் மூலம் செம்பியன் செல்வன் தனது 'வித்தியானந்தன் என்ற மனிதன் எனும் கட்டுரையில் விளக்கியுள்ளார். இப்பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளதினாலேயே கற்றோர் உலகும் மற்றோர் உலகும் மதிக்கும் மக்கள் பேராசிரியராக அவர் விளங்கினார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: “பல்கலைக்கழகப் புலமை யாளரின் பிரதான பணி பாடம் சொல்லிக் கொடுப்பதன்று. பல்கலைக்கழகப் புலமையாளரின் சிறப்பு தனது துறையின் அறிவுத் தோற்றுவிப்புக்கும், ஒழுங்கமைப்புக்கும் எந்தளவு பங்களிப்புச் செய்துள்ளார் என்பதிலேயே தங்கியுள்ளது. பல்கலைக்கழகப் புலமையாளரின் மேம்பாடு இதுவாயின் அதற்கு உதாரணமாக வித்தியானந்தனைக் கொள்ளலாம்.”
நாட்டாரியல் நண்பன்
நாடக வளர்ச்சி, நாட்டுக்கூத்து மீட்பு, நாட்டார் பாடல் பாதுகாப்பு என்பனவற்றில் அவர் ஆற்றிய
138

தொண்டே வியாபித்ததாகும். அழிந்து போகும் நிலை யிலிருந்த நாட்டுக் கூத்தைப் பேணிப் பாதுகாத்த மை; அதனைக் கிராமத்திலிருந்து நகருக்குக் கொணர்ந்து நகரத்தாரும் இரசிக்கும் வண்ணம் மெருகூட்டியமை; ஆட்டம், பாடல், ஒப்பனை, உடை, ஒலி, ஒளி, மத்தள அடி, நடிப்பு என்பவற்றில் புதிய யுத்திகளைக் கையாண்டமை; கூத்துத் தயாரிப்பு; நூற் பிரசுரம், அண்ணா விமார் கெளரவம்; இத்துறைகளில் ஆராய்ச்சி; தாளக்கட்டுகளை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன், பிற நாட்டுக்கு அறிமுகஞ் செய்தமை என அவை பலபாற்படும்.
கலாநிதி சி. மெளனகுரு தமது ‘ஈழத்துத் தமிழ் நாடக உலகுக்குப் பேராசிரியரின் பங்களிப்பு, எனும் கட்டுரை யில், 1952 இல் இருந்து அவரது நாடகப் பணிகளைப் பின் வருமாறு வகுக்கிறார்.
நவீன நாடகங்களை இயக்கி மேடையிட்டமை கிராமிய நாடகங்கள் வளர ஊக்கமளித்தமை தாளக்கட்டுக்களை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன் பிற நாட்டாருக்கு அறிமுகஞ் செய்தமை 4. நாட்டுக்கூத்து நூல்களைப் பதிப்பித்தமை 5. கிராமியக் கூத்துக்களை நகரத்தாருக்கு அறிமுகஞ்
செய்தமை 6. கிராமியக் கலைஞர்களைத் தேசிய மட்டத்தில்
அறிமுகஞ் செய்தமை 7. ஈழத்தில் வழக்கிலிருந்த நவீன நாடகம் வளர
உதவியமை
8. நாடகப் போட்டிகளை மன்றங்கள், பாடசாலைகள் மட்டத்தில் நடத்தி இறுதியில் விழாவில் மேடை யிட்டமை.
139

Page 73
9. நாடக எழுத்துப் போட்டி நடத்தி பரிசு பெற்ற
நூல்களை அச்சிட்டமை
10. நாடகக் கருத்தரங்குகள் நடத்தியமை
11. அண்ணாவிமார் மாநாடுகள் நடத்தியமை
12. கூத்துக்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியமை
13. நாட்டுக் கூத்துக்களைப் பல்கலைக்கழக மாணாக் கரைக் கொண்டு பழக்கி, அரங்கேற்றி அதனை
இலங்கை வாழ் சிங்க ள, தமிழ் மக்கள் மத்தியில்
பரப்பியமை.
இவ்வாறு பல்கலைக்கழக மாணவரைக் கொண்டே 1960-68 காலப் பகுதியுள் கர்ணன் போர்; நொண்டி நாடகம்; இரா வணேசன், வாலிவதை என்பன மேடையேற்றப் பட்டன. மெளனகுரு, சண்முகதாஸ், பேரின் பராசா, தர்மலிங்கம், குசுணா ஹம்சவல்லி போன்றோர் இவற்றில் முக்கிய பாகமேற்றனர்.
1960 களில் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர மனமே, சிங்ஹபாகு போன்ற நாடகங்கள் மூலம் சிங்களக் கலை யுலகுக்குப் புதிய பரிமாணங்களை வழங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், வித்தியானந்தன் மூலம் தமிழ்க் கலைத்துறை புதிய பரிமாணங்களைப் பெற்றது.
அலங்கார ரூபன் நாடகம் (1962), என்றிக் எம்பிரதோர் நாடகம் (1964) மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞானசெளந்தரி (1967) என்பன பேராசிரியர் மூலம் அச்சிடப் பட்டன. நாட்டார் பாடல்களும் வெகு சிரமத்துடன் திரட்டப்பட்டு மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் (1960), மன்னார் நாட்டார் பாடல்கள் (1964) எனப் பிரசுரமாகின. இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகத்துறைத் தலைவரா யிருந்து அவர் நடத்திய ஆய்வுகளும், கருத்தரங்குகளும் ஏராளமாகும.
140

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் யாவற்றி லும் பங்குபற்றிய பெருமை இவருக்குண்டு. கோலா லம்பூர், சென்னை, பாரிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற மகா நாடுகளில் கலந்து கொண்டதோடு, நாலாவது மகாநாட்டை முன்னின்று இலங்கையில் நடத்தினார். பிரதேச தமிழாராய்ச்சி மகாநாடுகளையும் நடத்தினார். அத்தகையவை 1976 இல் மட்டக்களப்பிலும், 1983 இல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மட்டக்களப்பு மகாநாடு 1976 பங்குனி 19,20, 21 ம் திகதிகளில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் முன்னின்று இம்மகாநாடு வெற்றி பெறக் காரணமாக இருந்தார். பேராசிரியருக்கு ஏற்கனவே இருந்த மட்டக்களப்புப் பிரதேச மக்களின் அந்நியோன்ய உறவுகள் அவரது பணிகள் பலவற்றை இலகுவாக்கியது. மகாநாட்டுச் செலவுக்கான நிதியுதவிகளை அப்பிரதேச மக்கள் தாராளமாக வழங்கினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெருந் தொகையான கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுக் கருத்தரங்கு களும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அப்பிரதேச இலக்கிய, கலை, கலாசாரப் பாரம்பரியங்களை வெளிக் கொணரும் ஒரு மாபெரும் வாய்ப்பினை இவ்விழா வழங்கியது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு திறந்த வெளியரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு இந்நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது. அன்று அவராற்றிய உரையினையே 21 ஆம் திகதி வெளியான வீரகேசரிப் பத்திரிகை முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
141

Page 74
முஸ்லிம் தொடர்பு
இஸ்லாமிய இலக்கியத் துறையில் பேராசிரியரின் பங்களிப்பு மிகவும் கணிசமானது. முஸ்லிம்களுடனான அவரது தொடர்பு மிக நெருக்கமானது. இஸ்லாமிய இலக்கியத் துறையின் இமயமான பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்கள் அத்துறையில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பைக் கொடுத்தவர்களுள் முக்கியமானோர் சுவாமி விபுலாநந்தரும், பேராசிரியர் வித்தியானந்தனுமே ஆவர். உவைஸ் அவர்கள் எம். ஏ. ஆய்வினை மேற் கொண்டிருந்த வேளையில் வித்தியானந்தன் இங்கிலாந்து சென்றிருந்தார். ஆயினும் அங்கிருந்து கொண்டே உவை ஸின் ஆய்வுகளை கடிதமூலம் ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். உவைஸினால் சமர்பிக்கப்பட்ட “முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு” எனும் நூலிலும் வித்தியானந் தனின் வழிகாட்டல் முக்கிய இடம் வகித்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலே கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் முதலாவது வெளியீடாகும்.
அல்ஹாஜ் எஸ். எம். ஹனீபா வை நிறுவனராகக் கொண்ட கல்ஹின்னைத் தமிழ் மன்றத்திற்கும், பேராசிரியர் வித்தியானந்தனுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அவரது முதலாவது நூலான ‘இலக்கியத் தென்றல்” என்பதனை 1953 ஆம் ஆண்டு இத்தமிழ் மன்றமே பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து அவரது கலாநிதிப் பட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வும் 1954இல் ‘தமிழர் சால்பு” எனும் நூலாக இந்நிறுவனத்தினாலேயே பிரசுரிக் கப்பட்டது. பேராசிரியரின் 60 வயதுப் பூர்த்தி மணிவிழா நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பொழுது அவரின் வாழ்க்கை வரலாற்றினைக் கலாநிதி அ. சன்முகதாஸ் அவர்களைக் கொண்டு எழுதுவித்து துணைவேந்தர்
142

வித்தியானந்தன்' எனும் பெயரில் நூலை வெளியிட்டதும் தமிழ் மன்றமே. இவை மட்டுமல்லாது பேராசிரியர் இறந்த பின்னர் அவரது கடைசி நூலான “எனது நோக்கில் இஸ்லாம்” என்பதையும் ஹனீபா வே பிரசுரித்து வெளி யிட்டார். எனவே பேராசிரியர் வித்தியானந்தன் அவர் களுடைய முதலாவது நூலையும் கடைசி நூலையும் பிரசுரித்த பெருமை கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தையே சாரும். இப் பிரசுராலயத்திற்கு இப்பெயர் கூட வித்தியானந்தனாலேயே சூட்டப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியிட்ட சஞ்சிகையில் தொடராகப் பல கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் சில வருமாறு:
1954 : இஸ்லாத்தின் திருத்தூதர் காட்டிய வழி 1955 : இஸ்லாத்தின் தொழுகையும் நோன்பும் 1956 : இஸ்லாமியரும் தமிழும் 1958 : இஸ்லாமியர் தமிழில் பாடிய புதிய பிரபந்த வகைகள்
1959 : இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்
இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாசார, இலக்கிய மேம்பாட்டினைக் கூறும் கலையும் பண்பும் எனும் நூலினை எழுதிய பெருமை இவருக்குண்டு. இஸ்லாத்தின் சிறப்பியல்புகள், தோற்றமும் வளர்ச்சியும், ஈழமும் முஸ்லிம்களும், புவியியலும் வர்த்தகமும், கலைகளும் விஞ்ஞானமும், சட்டமும் சமுதாயமும், இஸ்லாமியர் தமிழுக்காற்றிய தொண்டு எனும் அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. பிறையன்பன் எனும் பெயரில் இவரால் எழுதப்பட்டு 1961 இல் வெளிவந்த இந்நூல் மிகப் பிரபல்யம் பெற்று 1962 இல் 2ஆம் பதிப்பாகவும், 1963 இல்
143

Page 75
3 ஆம் பதிப்பாகவும் வெளிவந்தது. இலங்கை அரசாங்கத் தின் சாஹித்திய மண்டலப் பரிசையும் இந்நூல் இவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
நாட்டில் பல பகுதிகளிலும் நடைபெற்ற மீலாத் விழாக்களிலும் இஸ்லாமிய இலக்கிய விழாக்களிலும் இவர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பான சொற் பொழிவுகளை ஆற்றினார். குறிப்பாக 1962 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நடைபெற்ற பிரமாண்டமான மீலாத் விழா ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து இவர் ஆற்றிய சொற்பொழிவு இன்றும் நினைவு கூரப்படுகிறது.
இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மகாநாடுகளில் இவர் மிகவும் அக்கறை செலுத்தினார். திருச்சியில் நடைபெற்ற மகாநாட்டில் இவரால் கலந்துகொள்ள முடியவில்லை யாயினும் 'இஸ்லாமியரும் தமிழில் புதிய பிரபந்த வகைகளும்”, “இஸ்லாமியக் கலையும் பண்பும்” ஆகிய இவரது இரு கட்டுரைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. காயல்பட்டணத்தில் நடைபெற்ற விழாவில் பங்குபற்றிய தோடு அங்கு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கும் தலைமை தாங்கினார்.
மானுட நேயம்
பேராசிரியர் பேராதனையில் வாழ்ந்த காலமே அவரது திறமை பூரணத்துவமடைந்து பரிணமித்த கால கட்ட மாகும். நூல்கள் வெளியீடு, நாட்டுக்கூத்துக்கள் மேடை யேற்றம், நாட்டார் பாடல் தொகுப்பு எனும் பாரிய பணிகள் இங்கு இருந்தபோதுதான் நிறைவேறின.
பேராதனை வளாகத்துள் பழைய கலஹா வீதியில் புளியமரத்தடியில் அமைந்திருந்த அவரது இல்லம்
144

பட்டதாரி மாணவரால் என்றும் நிரம்பி வழியும், அவர்கள் உரிமையுடன் வந்து சேரும் மத்தியதலமாக அது விளங்கியது. அவரது துணைவியார் கமலாதேவி அத்தகை யோர் அனைவரது பெயரையும் அறிந்திருந்து அன்புடன் பெயர் சுட்டிப் பழகியமை பேராசிரியருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தது. அவரது பணிகள் அனைத்திலும் அவர் உற்ற துணையாயிருந்தார். கமலாதேவியை (எல்லோரும் அன்புடன் அழைக்கும் கமலா அக்காவை) அவர் சடுதியாக இழந்தமை அவருக்கு மாபெரும் கைசேதமேயாகும்.
அங்கிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகச் சென்றார். அங்கு அவர் ஆற்றிய பணிகளை மதிப்பீடு செய்யும் போது பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி) கூறும் வரையறை மிகப் பொருத்தமானது. "யாழ் பல்கலைக்கழகம் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான கல்வி நிலையம். அதன் முதல் உபவேந்தராகத் தமிழர் சார்பில் திளைத்த ஒருவர், தமிழ் பேசும் சகோதரரின் கலையையும் பண்பையும் மதிக்கும் ஓர் அன்பன், தமிழ் இலக்கியத் தென்றலில் மூழ்கிய தமிழ் மனத்தோன் வாய்த்தது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். காலத்தின் உறுதியின்மையால் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தாக்குப்பிடித்து பல்கலைக் கழகம் சீர்குலைந்து போகாமல் தனித்துவத்துடனும் கட்டுக்கோப்புடனும் காப்பாற்றி வருகிறார். அவரையும் அவர் பதவியேற்ற காலத்தையும் அறிந்தால்தான் அவரது பணிகளை உணர முடியும்.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரா யிருந்த காலத்திலேயே நாடளாவிய ரீதியில் அவரது மணிவிழா கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில்
145

Page 76
தமிழரும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்தினர். 1984 ஒக்டோபர் 13ஆம் திகதி மட்டக் களப்பு நகர மண்டபத்தில் மகாவித்துவான் எப். எச். ஸி. நடராசா தலைமையிலும்; அதற்கடுத்த நாள் 14 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மண்டபத்தில் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையிலும் இவ்விழாக்கள் நடைபெற்றன. மணிவிழா மலர்களும் வெளியிடப்பட்டன. இப்பயணத்தின்போது அட்டாளைச் சேனை ஆசிரியர் கலாசாலை, கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை, ஸாஹிராக்கல்லூரி, மஹமூத் மகளிர் கல்லூரி, நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலயம் என்பனவற்றிலும் பேராசிரியருக்குப் பெரும் வரவேற்புக்கள் அளிக்கப் பட்டன.
எனவே, இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் அறிவுத் துறையிலும் ஊக்குவித்தவர் என்ற வகையில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களை ஒரு முஸ்லிம் நேசராகக் காண்கிறோம்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர் பற்றி 1984 ஜூலை 15 இல் தினகரன் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் திருத்திய ஆக்கம்.
146

கயைர் இளங்கீரன்
147

Page 77
நாவலுக்கோர் இலக்கணம் இளங்கீரன்
(1927.1.4 - 1996.9.12)
1947 ஆம் ஆண்டில் ஒருநாள்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபைர் என எல்லோராலும் பிரியமாக அழைக்கப்பட்ட முஹம்மது கலீல் எனும் இளைஞன் மலாயா நோக்கித் தன் பயணத்தை ஆரம்பித் தான். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தனது தந்தை யாரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதே அப்பயணத்தின் நோக்கமாகும்.
தந்தையோ மகனோ நாடு திரும்பவில்லை. மாறாக சுபைர் எனும் அந்த இளைஞன் இளங்கீரன் எனும் புனை பெயரில் மலாயாவில் பத்திரிகை இலக்கியப் பிரவேசம் செய்தார். சில வருடங்களின் பின்னர் பிரித்தானிய அரசாங் கத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 1950 பிற்பகுதி யில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் சில வருடங்கள் இலக்கியப் பணி புரிந்ததன் பின்னர் இலங்கை திரும்பி காலக்கிரமத்தில் எஸ். இளங்கீரன், சுபைர் இளங்கீரன் எனும் புனை பெயர்களில் சுமார் அரை நூற்றாண்டு காலம் தீவிர அரசியல் - பத்திரிகை - இலக்கியப் பணி புரிந்ததன் பின்னர் 1996 செப்டம்பர் 12ஆந் திகதி வியாழக்கிழமை காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.)
மலாயா வாழ்க்கை
1927 ஜனவரி 4 ஆம் திகதி பிறந்த சுபைர் இளங்கீரன் 1947 ஆம் ஆண்டு முற்பகுதியில் மலாயா சென்றார். அங்கு
148

தான் அவர் தனது எழுத்துப் பணியை முதன் முதலில் ஆரம்பித்தார். மலாயா வின் ஈப்போ மாகாணத்தில் அவருக்குக் கிடைத்த களமும், நண்பர்களும், அத்துடன் இயற்கையாகவே அவரது உணர்வில் ஊறியிருந்த முற்போக்குச் சிந்தனைகளும் அநீதியைக் கண்டால் பொங்கியெழும் போக்கும் அவரது எழுத்து முயற்சிக்கு அமைந்த முதற் காரணிகள் எனலாம். “இரண்டாம் உலகப் போரின் பின் உலகம்” என்ற கட்டுரையே அவரது முதலாவது ஆக்கமாகும். “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தனது கருத்தினைத் துணிந்து கூறிய நக்கீரனின் துணிச்சலே, தன்னை இளைய கீரன் என்ற கருத்தில், இளங்கீரன்’ எனப் புனைப் பெயரிட்டுக் கொண்டதற்குக் காரணமாகும்.
அதனைத் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதிய தோடு, 1949 இல் இனமணி எனும் பத்திரிகையின் ஆசிரியரானார். இவர் எழுதிய கட்டுரைகளும், இனமணி பத்திரிகையும் பிரித்தானிய ஆட்சிக்கு விரோதமானவை யாயிருந்தன. இதனால் அவ்வாட்சியினரின் பகைமையைத் தேடிய காரணத்தினால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுச் சென்னை வந்தடைந்தார்.
இந்திய வாழ்க்கை
இந்தியா வந்தடைந்த இளங்கீரன் தமிழ் நாட்டில் தமது அரசியல் - இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தார். தி.மு.க. மற்றும் புரட்சிகர இயக்கங்களால் கவரப்பட்டு தமிழ் நாட்டின் பல கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அப்படியொரு சுற்றுப் பயணத்தில்தான் திருச்சிப் பக்கத்தில் தான் மலாயாவில் இருந்து கொண்டு வந்த புத்தகப் பொக்கிஷங்கள் தீக்கிரையாகின. இக்காலகட்டத்தில் பெருந்தொகையான நாவல்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கின. அவரது நாவல்கள் சமூக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விமர்சனச் சித்திரங்களாக இருந்தமை
149

Page 78
வினால் வாசகரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனால் வெளியீட்டாளர்களும் அவற்றை விரும்பிப் பிர்கரித்தனர்.
23.08.94 இல் சுபைர் இளங்கீரன் தனது கைப்பட எனக்கு அனுப்பிய ஐந்து பக்கக் கடிதமொன்றில் தனது 195155 ஆம் ஆண்டைய இந்திய வாழ்க்கையைப் பற்றிப் பின்வரு மாறு குறிப்பிட்டார்:
"குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் இந்திய வெளியீட்டாளர்களினால் நூல் வடிவம் பெறுவ தில்லை. அவர்களைத் தெரியாது. பிரபலம் பெறவும் இல்லை. அப்போதைய நிலையிலேயே எனது ஆக்கங்கள் அங்கு வெளிவந்தமையினால் நான் இந்தியாக்காரன் ஆகிவிட்டேன்.
எனது ஆக்கங்கள் நூல்களாக வெளிவரும் சாத்தியம் இந்தியாவில் காணப்பட்டது. அதனால் வருடத்தில் ஏழெட்டு மாதங்கள் இந்தியாவில் இருக்க வேண்டி யிருந்தது. எனது பேச்சும் எழுத்தும் இந்தியப் பாணியில் அமைந்திருந்தன. அப்போது வெளிவந்த எனது படைப்புக் களும் இந்தியப் பின்னணியில் அமைந்திருந்தன. இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் பொதுவாக இந்தியச் சஞ்சி கைகளிலோ நூலாகவோ வெளிவருவதில்லை. இந்திய எழுத்தாளர்களைப் போல் இலங்கை எழுத்தாளர்களுக்கு எழுத வராது என்ற கருத்து அங்கு நிலவியது.
இத்தகைய காரணத்தினால் இலங்கையனான என்னை இந்தியாக்காரன் எனக் கருதி விட்டனர். 1954 - 55 இற்குப் பிறகு தான் என்னை இந்நாட்டவன் என அறிந்து கொண்டனர்.”
இவரது முதலாவது குறுநாவல் ‘பைத்தியக்காரி என்பது. சூரி பிரசுரிப்பாளர்களினால் சென்னையில் 1950 இல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பின்வரும் நாவல்கள்
150

நூல்களாக வெளிவந்தன. பரணக்குழி (1951); கலா ராணி (51); மீண்டும் வந்தாள் (51); காதல் உலகிலே (51); ஒரே அணைப்பு (51); பொற்கூண்டு (51); பட்டினித் தோட்டம் (52); அழகு ரோஜா (52); வண்ணக்குமரி (52); மாதுளா (52); ஆணும் பெண்ணும் (க3); காதலன் (33); நீதிபதி (53); எதிர்பார்த்த இரவு (55); மனிதனைப் பார் (55).
இக்காலகட்டத்துள் துரதிருஷ்டவசமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. திருச்சியில் உள்ள புத்தக வெளியீட்டாளர்களில் ஒருவர் இவரது நாவல்களைப் பிரசுரிக்கக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவற்றில் ஒன்று கூடப் பிரசுரமாவதற்கு முன்னர் அவர் மரணமாகிவிட்டார். அதன் பின்னர் எவ்வளவோ முயற்சித்தும் அவற்றின் கையெழுத்துப் பிரதிகளைக் கூடத் தேடிப் பெற முடியாமல் போய்விட்டது. இன்றுள்ளதைப் போல் தட்டச்சு வசதிகளோ, புகைப்படப் பிரதிகளோ எடுத்து வைக்கக்கூடிய காலமல்ல அது. அதனால் இவற்றின் மூலப் பிரதிகளும் இளங்கீரன் வசம் இல்லாமல் போய்விட்டன. அவ்வாறு இழந்த நாவல்கள் வருமாறு:
காதலில் கத்தி; வேண்டாத முத்தம்; தடுமாறும் தலை விதி; காதலும் காமமும்; சாவே நீ வா; நீதி தேவன் சந்தி ப்பு; பாடகன்; ஊமைப்பெண்; அகல்யாவின் முடிவு; தங்கத்
தோணி, சிங்கார ராணி, வெள்ளிக் கதவு; சமூக விஞ்ஞானி.
தமிழ் நாட்டில் அவர் வாழ்ந்த போது தமிழ்ச் சினிமா மீது அவருக்கு ஆர்வமேற்பட்டிருந்தது. சேலத்திலிருந்த ‘மார்டன் தியேட்டர்ஸ்’ நிர்வாகிகளுடன் இவருக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு, ‘காதலன் "மரணக்குழி போன்ற தனது நாவல்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதும் பணியை மேற்கொண்டார். இதற்காக மார்டன் தியேட்டர்ஸ் குவார்ட்டஸில் 2 மாதங்கள் வரை தங்கியிருந்தார். என்ன காரணமோ பின்னர் இப்பணி இடையில் நின்றுவிட்டது.
151

Page 79
  

Page 80
தடயம் - வானொலி நாடகங்கள் (92); பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் (92); நிறைவைத் தேடி - சிறுகதைத் தொகுதி (92); தேசிய இலக்கியமும் மரபுப் பேராட்டமும் (93); வெறுங் கனவல்ல - வானொலி நாடகங் கள் (93); ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் (94). இவற்றில் ‘ஈழத்து முற்போக்கு இலக்கியமும் யக்கமும்' எனும் நூலுக்கு இலங்கை அரசாங்கத்தின் சாஹித்திய விருது கிடைத்தது.
“பாரதி கண்ட சமுதாயம்' எனும் நூலைப் பற்றி எனக் கெழுதிய கடிதத்தில் அவர் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்:
*எனது இலக்கிய ஆக்கங்களில் ஆகக்கூடுதலான பிரதிகள் வெளியானது ‘பாரதி கண்ட சமுதாயம்' எனும் நூலாகும். 1956 இல் இந்தியாவில் வெளியான இந்நூலுக்கு முன், பாரதி கவிதைகளில் காணப்படும் சமுதாய நோக்கு, ஆழமான விடுதலை வேட்கை, அரசியல், பொருளாதார, கலாசார இலட்சியங்கள், புதுமையும் புரட்சியும் பொதிந்த கருத்துக்கள் முதலியவற்றைத் துலக்கமாக எடுத்துக்காட்டும் முழுமையான நூல் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி வெளிவந்ததில்லை. இதனால் இரு நாடுகளிலும் இந்நூலுக்குப் பெரும் வரவேற்பிருந்தது.” Lig/LLL LIGOflas6ir
சுபைர் இளங்கீரன் தமிழ் மொழியில் தலைசிறந்த நாவலாசிரியராகப் புகழ் பெற்றிருந்த அதே வேளையில் சிறந்த ஒரு பத்திரிகையாளர், பேச்சாளர், சிறுகதையாளர், நாடகாசிரியருமாவார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க ஸ்தாபகர்களுள் ஒருவர். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் க. கைலாசபதி, ஏ.எம். சமீம், சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, டொமினிக் ஜீவா, அபுதா லிப் அப்துல் லத்தீப், வரதர், பிரேம்ஜி
154

ஞானசுந்தரம், எஸ். சோமகாந்தன் போன்றவர்களுடன் இணைந்து முற்போக்கு இலக்கியத் தத்துவங்களைப் பல தசாப்தங்களாக முன்னெடுத்துச் சென்றார்.
1961 இல் இவரை ஆசிரியராகக் கொண்டு மரகதம்' எனும் சஞ்சிகை வெளிவந்தது. அவர் நம்பிய சிலர் கை விட்டதினால் பொருளாதாரச் சிக்கல் உருவாகி இடையில் நின்றுவிட்டது. நாலு இதழ்கள் மட்டுமே அது வெளிவந் தாலுங்கூட இன்று வரை சிலாகித்துப் பேசப்படுகின்ற ஒரு வெளியீடாக அது தனது தடத்தைப் பதித்துச் சென்றுள்ளது. 1960 களின் ஆரம்பத்தில் தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராகவும், 65-70 களில் “தொழிலாளி எனும் பத்திரி கையினதும்; 74-77 இல் ஜனவேகம்' எனும் பத்திரிகை யினதும் ஆசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
பாரதி நூற்றாண்டு விழாக் காலத்தில் இவர் தயாரித்தளித்த நாடகம் பெருவெற்றியைப் பெற்றது. 1982 இல் கொழும்பு டவர் மண்டபத்திலும் அதற்கு அடுத்த வருடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்திலும் மேடையேறியது. இவரது "பலஸ்தீன் என்ற நாடகம் நவீன உத்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு 1978 இல் மேடையேறத் தயாரான நிலையில் இருந்தபோது தணிக்கை சபையின் அனுமதி மறுப்பினால் மேடையேறாம லேயே அந்நாடக முயற்சி நின்று போனது.
மருதமுனை வாழ்க்கை
1970 களின் முற்பகுதியில் ஒருநாள், சாய்ந்தமருதுவில் உள்ள எனது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. முன்வாச லுக்குச் சென்று ஆச்சரியங்கலந்த அன்புடன் வரவேற்றேன். அடிக்கடி என்னைச் சந்திக்கும் மருதூர்க்கனி, மருதூர்க் கொத்தன் ஆகியோருடன் அன்று சுபைர் இளங்கீரன் அவர்களும் வந்திருந்தார். தாம் தம் மனைவி மக்களுடன் மருத முனையில் வசிப்பதற்கு வந்திருந்த விடயத்தைக்
155

Page 81
கூறினார். 1970 ஆம் ஆண்டிலிருந்து 73 ஆம் ஆண்டு வரை மருதமுனையில் அவர் வாழ்ந்த காலத்தில் கிழக்கு மாகாண எழுத்தாளர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைத் தமது வசிப் பிடமாக அவர் தேர்ந்தெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹ"ஸைன் தம்பி என்பவர் ஏற்கனவே மருத முனையில் விவாகம் செய்து வாழ்ந்து வந்தார். இவர் மருதூர்க்கனி யூ.எம். ஹனிபா அவர்களின் மாமனார். ஹ"ஸைன் தம்பிக்கும் இளங்கீரனுக்கும் ஏற்கனவே நெருக்கமான தொடர்பிருந் தது. இரண்டாவது, கிழக்கு மாகாணத்தின் எக்கிராமத்தைத் தெரிவு செய்வது எனும் பொழுது மருதமுனையிலுள்ள எழுத்தாளர்களுடன் கீரனுக்கு ஏற்கனவே நெருங்கிய தொடர்பிருந்தது. அதனால் அங்கு தம்மை நிலைப்படுத்திக் கொள்வது அவருக்கு இலகுவாயிருந்தது. மூன்றாவதாக, தாமும் தமது குடும் பத்தினரும் ஜீவனோபாயத்திற்காக நெசவுத் தொழிலைச் செய்யலாம் எனும் எண்ணமும் அவருக்கிருந்தது. அதனால் சில வருடங்கள் மருதமுனை யைத் தமது வசிப்பிடமாக்கிக் கொண்டார்.
அவரது ஆறு பிள்ளைகளுள் மூத்தவரான மீலாத்கீரன் நான் அதிபராக அப்போது கடமையாற்றிக் கொண்டிருந்த கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மருதூர்க்கனி அவர்கள் மீலாத் கீரனை அழைத்து வந்து அங்கு அனுமதித்தமை இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
1973 இல் இருந்து 1987 வரை கொழும்பில் வாழ்ந்த இளங்கீரன், 1987 இல் நீர்கொழும்புக்கு தனது மூத்த மகளுடன் இடம்பெயர்ந்தார்.
1969 இல் அல்பேனியா நாட்டுக்கும் பயணஞ் செய்துள்ளார்.
156

யாழ்ப்பாணத்தில் பிறந்து, மலாயாவில் இலக்கியப் பணியைத் தொடங்கி, தமிழ் நாட்டில் பிரபல்யமாகி, இலங்கை மீண்டு, யாழ்ப்பாணம், மருதமுனை, கொழும்பு ஆகியவிடங்களில் வாழ்ந்து நீர்கொழும்பில் மரணமாகி அங்கு அடக்கஞ் செய்யப்பட்டார்.
விருதுகள்
அரை நூற்றாண்டு இலக்கியப் பணிக்கான பாராட்டுக் கள் பல சுபைர் இளங்கீரனுக்குக் கிடைத்துள்ளன. 1992இல் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தாஜ"ல் அதீப் எனும் பட்டத்தையும், சான்றிதழ், விருது, பணப்பரிசு என்பனவற்றையும் வழங்கிக் கெளரவித்தது. அதே ஆண்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ‘இலக்கியச் செம்மல் விருதினை வழங்கியது. 1993 இல் சுதந்திர இலக்கிய விழாவில் கெளரவிக்கப்பட்டார். ‘ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்” எனும் அவரது நூலுக்கு 1995 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாஹித்திய விருது, சான்றிதழ், பணப் பரிசு என்பன கலாசார, சமய அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டது. பிரதமர் மாண்புமிகு சிறிமாவோ ஆர்.டீ. பண்டாரநாயக்கா அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 1996 இல் விஷ்வபிரசாதினிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
தினகரன் 1996 அக்டோபர் 27
157

Page 82
இலங்கை அரசாங்க கலாசார, சமய அலுவல்கள் அமைச்சகத்தில் ஆலோசகராகக் கடமையாற்றும் அல்ஹாஜ் ஷாஹ"ல் ஹமீத் முஹம்மத் ஜெமீல், கிழக்கு மாகாணத் திலுள்ள சாய்ந்தமருதுவில் பிரபல்ய குடும்பமொன்றில் 1940 ஆம் ஆண்டு பிறந்தவர். காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல் - பாத்திமாக் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றார்.
அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவில் விசேட சித்தியையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டத்தையும் பெற்றார். கல்விப்பீடம் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றஞ் செய்யப்படு வதற்கு முன்பு, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் ஒரு வருடம் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்காக இவர் மேற்கொண்ட ஆய்வினை வட மாகாணத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகத் தொடர முடியாமல் போய்விட்டது.
கல்வித் துறையின் சகல படித்தரங்களிலும் அல்ஹாஜ் ஜெமீல் கடமையாற்றி உள்ளார். ஆசிரியர், கல்லூரி முதல்வர், கல்வி உயர் அதிகாரி, உதவிப் பரீட்சை ஆணை யாளர், ஆசிரியர் கலாசாலை முதல்வர், பல்கலைக்கழகப் போதனாசிரியர், பல்கலைக்கழக விடுதி உபவார்டன், கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவச் சபை உறுப்பினர், அப்பல்கலைக்கழகத்தின் முதற் பதிவாளர்,
158

பாடநூல் மொழிபெயர்ப்பாளர், கல்வி டிப்ளோமா வெளிவாரி மாணவரின் மேற்பார்வையாளர் எனக் கடமை யாற்றியதோடு; கல்முனை மாவட்ட அதிபர்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும்; அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு கல்வித் துறையின் எல்லாப் படித்தரங்களிலும் கடமையாற்றியவர்கள் இலங்கையில் மிகச் சிலரேயாவர்.
ஐந்து வருடங்கள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல் கள் இராஜாங்க அமைச்சத்தில் செயலாளராகவும்; கல்வி, கலாசார, தகவல்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாள ராகவும் கடமையாற்றிய பின்; கலாசார, சமய அலுவல்கள் அமைச்சகத்தில் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான கூடுதல் செயலாளராகக் கடமையாற்றித் தற்போது அவ்வமைச்சகத்தின் ஆலோசகராகக் கடமை புரிகிறார்.
கல்விமான், நிர்வாகி, இலக்கியவாதி, நாட்டுப்புறப் பண்பாட்டியல், வரலாற்று ஆய்வாளரான அல்ஹாஜ் ஜெமீல், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பல குழுக்களில் கடமையாற்றியுள்ளார். இருபது நூல்களின் ஆசிரியர். ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘கிராமத்து இதயம்' எனும் இவரது நூலுக்கு 1995 ஆம் ஆண்டின் சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான சாஹித்திய விருது கிடைத்தது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் 1995 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசும் இந்நூலுக்குக் கிடைத்தது.
அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின்போது 19.07.1997 இல் நஜ்முல் உலூம் (கல்விச் செம்மல்) பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். திருச்சியில் நடைபெற்ற விழா வொன்றிலும் 19.01.1995 அன்று கெளரவிக்கப்பட்டார்.
159

Page 83
பிறரது முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் பிரசுரிக்கத் துணையாயிருந்துள்ளார்.
இவரது துணைவியார் சித்தி ஆரிபா, மகன் அல்ஹாஜ் நஸில் எம். ஜெமீல் ஆகியோர் இவரது ஆய்வுகளில் பெரிதும் துணைபுரிகின்றனர்.
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்காற்றும் இவர், சிறந்த பேச்சாளருமாவார்.
பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக இங்கிலாந் தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள ஜெமீல், சவுதி அரேபியா, ஈராக், அபுதாபி, ஷர்ஜா, துபாய், குவைத், பஹ்ரைன், இந்தியா, லிபியா, மோல்டா ஆகிய நாடுகளுக்கும் விஜயஞ் செய்துள்ளார்.
160


Page 84


Page 85
============== = = == عي
/ஆசிரியரின்
ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களின்
கல்விச் சிந்தனைகளும் ஸேர், றாஸிக் பரீத் அவர்களி சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி துவான் புர்ஹானுத்தின் ஜாயா கல்விச் சிந்தனைகள் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்: நினைவில் நால்வர் கலாநிதி ஜாயாவின் கல்விப் அல்லாமா உவைஸ் (தொகுப் சுவடி ஆற்றுப்படை - முதலா சுவடி ஆற்றுப்படை - இரண்ட கிராமத்து இதயம் - நாட்டார் இஸ்லாமியக் கல்வி கல்விச் சிந்தனைகள் 2ஆம் L சுவடி ஆற்றுப்படை - மூன்றா அம்பாரை மாவட்ட முஸ்லிம்க கலாநிதி பதியுத்தின் மஹ்மூதி
|SLAM |N |NDEPENDENT SI
SR || LANIKA, UDAMIA (CC-Edii
காலச் சுவடுகள்
N H H - - - - - - - -

= = = = = = = = = = )
வெளியீடுகள்: 7
ம், பங்களிப்பும்
iT ES süstill LL5Cf
வாசல் வரலாறு
(மொழிபெயர்ப்பு)
கள் (தொகுப்பு)
Eரிகள்
|)
in LJ T ĈI, Li
ாம் பாகம்
பாடல்கள்
பதிப்பு
|LTL
ள் (தொகுப்பு)
ன் கல்விப் பணிகள்
RI LANKA (Edited}-
ied)
1ցB[]
1984
199
1ցց ()
199()
1992
1993
1994
1994
1gg.
1995
1995
1996
1995
1997
1ց ցT
1ցg7
1E ԳB ,
1ցgE
-1998 -1
محہ =================